தலைசொல் | பொருள் |
---|---|
சூ | சூ1 cū, பெ. (n.) சகரமெய்யும் ஊகார நெடிலும் சேர்ந்து பிறந்த உயிர்மெய் யெழுத்து; the compound of 3 and pom. [ச் + ஊ = சூ] சூ2 cū, பெ. (n.) 1. நாயை ஏவும் ஒலிக்குறிப்பு; sound uttered in setting dogs on. 2. வெறுப்பு முதலியவற்றை உணர்த்தும் ஒலிக்குறிப்பு; sound uttered to express disgust or aversion. 3. பன்றி முதலிய விலங்குகளையும், காகம், கோழி முதலிய பறவைகளையும் விரட்டப் பயன்படுத்தும் ஒலிக்குறிப்புச் சொல்; sound uttered in setting pigs and some birds like crow, cock, ete. சூ3 cū, பெ. (n.) 1. பனங்கதிர் முதலியவற்றைக் கருக்கிப் பொடித்துத் துணியிற்கட்டியமைக்கும் வாணவகை; a kind of home – made firework encased in cloth. ‘கார்த்திகையில் சூவிடுதல் வழக்கம்’ (இ.வ.);. 2. சுளுந்து (நாஞ்,);; a kind of torch. |
சூகரை | சூகரை cūkarai, பெ. (n.) குளத்தில் உடைப்பு நீர் வெளிப்போகாதபடி இடும் அணை (Rd.);; ring-bound, a temporary bund preventing escape of water through breaches. [சூழ் + கரை → சூகரை] |
சூகை | சூகை1 cūkai, பெ. (n.) 1. சுழற்சி; whirling 2. தலைச்சுழற்சி; reeling of the head. [சூழ்கை → சூகை] சூகை2 cūkai, பெ. (n.) 1. கரிய சிற்றெறும்பு வகை; small black ant. 2. யானை; elephant. 3. நீர் அட்டை; a kind of irritating water leech (சா.அக.); சூகை3 cūkai, பெ. (n.) வீட்டின் பின்புறம்; back part of the house. “சூகையொண்டிக் கேட்டான்” (யாழ்ப்.);. சூகை4 cūkai, பெ. (n.) வற்றியுலர்ந்தது; that which is withered or shrunken. ‘சூகை முலை’. |
சூகைக்கண் | சூகைக்கண் cūkaikkaṇ, பெ. (n.) 1. கிட்டப் பார்வை (யாழ்ப்.);; shorted sight-ness, as causing one to keep the eyes nearly shut. 2. சுழற் கண்; whirling eye. மறுவ. கூச்சக்கண் [சூகை + கண்] |
சூகைக்கை | சூகைக்கை cūkaikkai, பெ. (n.) சூம்பியகை; withered arm (சா.அக.);. [சூகை + கை] |
சூகைமுலை | சூகைமுலை cūkaimulai, பெ. (n.) வற்றிப் போன முலை; shrunken breast of a female (சா.அக.);. [சூகை4 + முலை] |
சூகையாடு-தல் | சூகையாடு-தல் sugai-y-adu-, 5 செ.கு.வி. (v.i.) கிறுகிறுத்தல், தலை சுற்றுதல் (யாழ்ப்.);; to be dizzy. [சூகை1 + ஆடு-,] |
சூக்காட்டு-தல் | சூக்காட்டு-தல் su-k-kattu-, 5 செகுன்றாவி (v.t.) 1. நாயை ஏவுதல்; to set dogs on. 2. எவற்றையும் ‘சூ’ வென்று ஒசையிட்டு வெருட்டுதல்; to drive away with the sound su, as dogs. (செ.அக.);. [சூ (ஒலிக்குறிப்பு); + காட்டு-,] |
சூக்காய் | சூக்காய் cūkkāy, பெ. (n.) கடுக்காய் நண்டு (யாழ்ப்.);; a kind of small crab. 2. கடுக்காய்; gall-nut, one of the tiri palai (சா.அக.);. |
சூக்கீடம் | சூக்கீடம் cūkāṭam, பெ. (n.) கம்பளிப்பூச்சி (யாழ்ப்.);; hairy caterpillar. |
சூக்கொட்டு-தல் | சூக்கொட்டு-தல் su-k-kottu-, 5 செகுவி (v.i.) 1. ‘சூ’ வொலியிட்டு இசைவு காட்டுதல்; to express assent with the sound- ‘Su’. 2. வெறுப்புக் குறி காட்டுதல்; to hiss in aversion or dissent. [சூ + கொட்டு-,] |
சூங்குமம் | சூங்குமம் cūṅgumam, பெ. (n.) வேலிப்பருத்தி (மலை);; a hedge-twiner. மறுவ. உத்தாமணி, சூக்குலம் |
சூசம் | சூசம் cūcam, பெ. (n.) செம்மறியாட்டுக் கடா (வின்.);; a species of ram. |
சூசாக்கிரம் | சூசாக்கிரம் cūcākkiram, பெ. (n.) ஊசி மல்லிகை; needle jasmine. (சா.அக.);. |
சூசி | சூசி cūci, பெ.(n.) பரதத்தில் பின்பற்றப்படும் ஒரு வகையான ஒற்றை முத்திரை நிலை; single hand pose in dance. [சூழ்-குழ்சி-குசி] |
சூசியப்பலகை | சூசியப்பலகை cūciyappalagai, பெ.(n.) பூ வேலைப்பாடுடைய பலகை; flower designed plank. [சூசி+ஆம்பலகை] |
சூச்சனி | சூச்சனி cūccaṉi, பெ.(n.) திருவாடானை வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Tiruvādānai Taluk. [சூழ்-சூச்சனி] |
சூச்சம் | சூச்சம் cūccam, பெ.(n.) எந்திரம் விசை: machine power. [குழ்-குச்சம்] |
சூச்சான் | சூச்சான் cūccāṉ, பெ. (n.) கிட்டிப் புள் (யாழ்ப்,);; game of tipcat. |
சூச்சூவெனல் | சூச்சூவெனல் cūccūveṉal, பெ. (n.) 1. ஒலியை (சத்தத்தை); அடக்கும் குறிப்பு; onom.expr of silencing. 2. நாய், பன்றி, பறவை போன்றவைகளை விரட்டும் ஒலிக்குறிப்பு; onom. to drive dog, pig, birds. |
சூடகம் | சூடகம் cūṭagam, பெ. (n.) கைவளை; bracelet. ‘பாடகத் தரவமுஞ் சூடகத் தோசையும்’ (பெருங். வத்தவ. 12:210);. தெ. குடிகமு; க. சூடக;து. சூடக [சூடு → சூடகம்] |
சூடங்கேட்டுப்போ-தல் | சூடங்கேட்டுப்போ-தல் sudan-gttu-p.po-, செ.கு.வி. (v.i.) நிலைகெட்டு முடிவடைதல்; to come to an end. “அவன்பாடு சூடங்கேட்டுப் போயிற்று” (நாஞ்.);. [சுடங்கெட்டு + போ-,] |
சூடசத்திரி | சூடசத்திரி sūṭasattiri, பெ. (n.) சுவையுணர்வு இல்லாமற் செய்யும் ஒரு வகை மூலிகை; a plant that destroys the sense of taste (சா.அக.);. |
சூடடி-த்தல் | சூடடி-த்தல் sudadi, 4 செ.குன்றாவி (v.t.) கதிரைக் கடாவிட்டுழக்குதல் (வின்);; to thresh sheaves of corn by treading with cattle. மறுவ. சூட்டடி |
சூடனி | சூடனி cūṭaṉi, பெ. (n.) சிற்றரத்தை; lessar galangal (சா.அக.);. |
சூடனிந்து | சூடனிந்து cūṭaṉindu, பெ. (n.) சூடன்செயநீர்; a pungent water prepared with camphor as chief ingredient (சா.அக.);. [சூடன் + இந்து] |
சூடனுப்பு | சூடனுப்பு cūṭaṉuppu, பெ. (n.) கருப்பூரவுப்பு; camphor salt; preparing from a mixture salts (சா.அக.);. [சூடன் + உப்பு] |
சூடன் | சூடன் cūṭaṉ, பெ. (n.) 1. கருப்பூரவகை; prepared camphor (சிலப். 14: 109, உரை);. 2. மீன்வகை (யாழ்.அக.);; a kind of fish. |
சூடன்கருப்பூரம் | சூடன்கருப்பூரம் cūṭaṉkaruppūram, பெ. (n.) கருப்பூர வகை (வின்.);; prepared camphor. ம. சூடன் கர்ப்பூரம் [சூடன் + கருப்பூரம்] |
சூடன்வைப்பு | சூடன்வைப்பு cūṭaṉvaippu, பெ. (n.) வாழைக் கிழங்கு நீர் வெடியுப்பு, கருவாப்பட்டை நெய் (தைலம்); போன்ற சரக்குகளைச் சேர்த்துச் செய்யப்படும் சூடம்; a medicine it is prepared from plantain bullouspart, nitre, karuvappassai etc. (சா.அக.);. [சூடன் + வைப்பு] |
சூடமூலி | சூடமூலி cūṭamūli, பெ. (n.) கற்பூரவல்லி; thick leaved lavender (சா.அக.);. [சூடம் + மூவி] |
சூடம் | சூடம்1 cūṭam, பெ. (n.) சூடன், பார்க்க;see Sudan, 1. [சூடு → சூடம்] சூடம்2 cūṭam, பெ. (n.) தலையின் உச்சி; crown of the head. “புரவிசயன் சூடந்தரு பாகீரதி” (பாரத. அருச்சுனன்றீர்.7);. [சூடு → சூட்டு → சூடம்] சூடம்3 cūṭam, பெ. (n.) சூளம் (நெல்லை); பார்க்க;see Sulam. [சூளம் → சூடம்] |
சூடறுத்தல் | சூடறுத்தல் cūṭaṟuttal, பெ. (n.) கண்ணில் சூட்டினால் வளர்ந்த தசையை, அறுவை மருத்துவம் செய்தோ, சுனையுள்ள இலையினால் தேய்த்தோ நீக்குகை; the scraping of an affected part of the eye due to growth of flesh with a scraping knife or rough leaf (சா.அக);. [சூடு + அறுத்தல்] |
சூடவல்லி | சூடவல்லி cūṭavalli, பெ. (n.) சூடமூலி பார்க்க;see suda-muli (சா.அக.);. [சூடம் + வல்லி] |
சூடா | சூடா1 cūṭā, பெ. (n.) 1. கைவளை; bracelet. 2. கழுத்திலணியும் பொற்கொடியிற் கோத்த அக்கமணி (உருத்திராக்கம்);; sacred eleocarpus bead enclosed in gold and hung round the neck in a gold band. 3. குடுமி; tuft of hair in the head. த. சூடு → H., U. chudi சூடா2 cūṭā, பெ. (n.) ஒருவகைத் தின்பண்டம்; an eatable cake (சா.அக.);. [சூடு → சூடா] |
சூடாகரணம் | சூடாகரணம் cūṭākaraṇam, பெ. (n.) ஒன்று, மூன்று, ஐந்தாம் அகவையில் குழந்தைகட்குக் குடுமிவைக்கும் விழா (சடங்கு); (சங்.அக.);; tonsure – ceremony of a child performed in its first, third or fifth year. [சூடு → சூடா + கரணம்] |
சூடாகருமம் | சூடாகருமம் cūṭākarumam, பெ. (n.) சூடாகரணம் பார்க்க;see sili-karanam. [சூடா + கருமம்] |
சூடாக்கல் | சூடாக்கல் cūṭākkal, பெ. (n.) சூடாலைக்கல் பார்க்க;see Sudalai-k-kal. |
சூடாதிக்கம் | சூடாதிக்கம் cūṭātikkam, பெ. (n.) உடம்பின் சூடு அல்லது வெப்பம்; increase of heat in the system (சா.அக.);. [சூடு → ஆதிக்கம்] Skt. adhikya → த. ஆதிக்கம் |
சூடாமணி | சூடாமணி cūṭāmaṇi, பெ.(n.) சிவகங்கை வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Sivaganga Taluk. [குளாமணி – சூடாமணி] சூடாமணி1 cūṭāmaṇi, பெ. (n.) வடமொழியில் எழுதிய அமரகோசத்தைப் போல், தமிழில் சமணத்துறவிகளால் விலங்குத்தொகுதி, மரத்தொகுதி முதலியவற்றை வரிசை முறையாய்ச் செய்த மூன்றுவகை நிகண்டுகளில் ஒன்று; a poetical lexicon on the plan of Sanskrit Amarakosam written by a Jainya ascetic. It is one of the three classical diction aries, consisting the names of beasts, plants cte. together with explanations of the 64 sciences (சா.அக.);. [சூடா + மணி] சூடாமணிநிகண்டு பார்க்க சூடாமணி2 cūṭāmaṇi, பெ. (n.) 1. குன்றிமணி: jeweller’s bead. 2. வெட்பூலா; white poolah (சா.அக.);. சூடாமணி3 cūṭāmaṇi, பெ. (n.) 1. முடிமணி; jewel in a crest or diadem. “சூடாமணிப் படலம்” (கம்பரா.);. 2. தெய்வ மணிவகை (பிங்.);; a celestial gem. ம. சூடாமணி [சூடா + மணி] |
சூடாமணிக்கயிறு | சூடாமணிக்கயிறு cūṭāmaṇikkayiṟu, பெ. (n.) மணிக்கட்டை அளந்து, பிறகு அதைக் கொண்டு விரற்கடை அளவுக்கு ஒத்துப் பார்த்து, அதன் வேறுபாட்டால் நோய்களை விளக்கும், ஒரு தமிழ மருத்துவநூல்; a treatise in Tamil describing the several diseases indicated by the various differences caused in the calculation of lengths of strings with which wrist and fingers are measured according to rules mentioned there in (சா.அக.);. [சூடாமணி + கயிறு] |
சூடாமணிக்குளிகை | சூடாமணிக்குளிகை cūṭāmaṇigguḷigai, பெ. (n.) வேதமுனி முறைப்படி செய்து குளிர்க் காய்ச்சல், இசிவு, பிதற்றி சிவு முதலிய நோய்களுக்குக் கொடுக்கப்படும் மாத்திரை; a pill prepared as per process of Vedamuni and used for ague apoplexy delirium etc. (சா.அக.);. [சூடாமணி + குளிகை] |
சூடாமணிநிகண்டு | சூடாமணிநிகண்டு cūṭāmaṇinigaṇṭu, பெ. (n.) 16ஆம் நூற்றாண்டில் மண்டல புருடன் என்ற சமண ஆசிரியரால் மண்டிலச் செய்யுளால் இயற்றப்பட்ட நிகண்டு; a Tamil lexicon in verse, by Mandalapurudan, a Jaina of 16th c. [சூடாமணி + நிகண்டு] |
சூடாமணியுள்ளமுடையான் | சூடாமணியுள்ளமுடையான் cūḍāmaṇiyuḷḷamuḍaiyāṉ, பெ. (n.) 12ஆம் நூற்றாண்டில் திருக்கோட்டி நம்பியால் இயற்றப்பெற்ற ஒரு கணியநூல்; an astronomical work by Tiru-k-kotti-nambi, 12th c. [சூடாமணி + உள்ளம் + உடையான்] |
சூடாலம் | சூடாலம் cūṭālam, பெ. (n.) சனல்விதை (தைலவ. தைல. 74);; seed of sunn-hemp. |
சூடாலைக்கல் | சூடாலைக்கல் cūṭālaikkal, பெ. (n.) ஒருவகைக் காந்தக்கல் (வின்.);; a kind of magnetic Stone. [சூடாலை + கல்] |
சூடி | சூடி1 cūṭi, பெ. (n.) எரியுப்பு; sal ammoniac (சா.அக.);. சூடி2 cūṭi, பெ. (n.) சீலை (பிங்.);; cloth. [சூடு1 → சூடி] |
சூடிகம் | சூடிகம் cūṭigam, பெ. (n.) கள்; toddy (சா.அக);. மறுவ, சொல்விளம்பி |
சூடிகை | சூடிகை1 cūṭigai, பெ. (n.) 1. மணிமுடி (பிங்.);; crown bejewelled dia dem. 2. கோயில் முதலியவற்றிலுள்ள கோபுரக்கும்பம்; ornamental rounded crest, as of temple tower. “சூட னீத்தன சூடிகை சூளிகை” (கம்பரா. பள்ளி 24);. [சுடிகை → சூடிகை] சூடிகை2 cūṭigai, பெ. (n.) பாம்பின் படத்திலுள்ளதாகச் சொல்லப்படும் மணி; fabulous gem on a cobra’s hood. “படத்தெடுத்த சூடிகை பறித்துமே” (தக்கயாகப். 362);. [சூடு → (சூட்டி →); சூடிகை] சூடிகை3 cūṭigai, பெ. (n.) சூலிக்கு உண்டாகும் நோய்; a disease to the pregnant ladies. கருப்பக் காலத்தில் செரிமானக் கோளாறும் காய்ச்சலும் பிறகு நாளுக்கு நாள் அரத்தக் கேட்டினால் சோர்வும் உண்டாக்கும் எனச் சாஅக கூறும். |
சூடிக்கயிறு | சூடிக்கயிறு cūṭikkayiṟu, பெ. (n.) சூடுகயிறு (யாழ்ப்.);;பார்க்க;see Sudu-kayiru. [சூடு → சூடி + கயிறு] |
சூடிக்கை | சூடிக்கை cūṭikkai, பெ. (n.) சூட்டிக்கை பார்க்க;see Suttikkai. |
சூடிக்கொடுத்தநாச்சியார் | சூடிக்கொடுத்தநாச்சியார் cūḍikkoḍuttanācciyār, பெ. (n.) தான் சூடிய பூமாலையைத் திருமால் சூடக்கொடுத்த ஆண்டாள்; Andal, a female devotec of Thirumāl, as one who offered to God wreaths worn by her. [சூடி + கொடுத்த + நாச்சியார்] |
சூடிக்கொடுத்தாள் | சூடிக்கொடுத்தாள் cūḍikkoḍuttāḷ, பெ. (n.) சூடிக்கொடுத்தநாச்சியார் பார்க்க;see sudi-k-kodutta-nacciyar; [சூடி + கொடுத்தாள்] |
சூடிச்சி | சூடிச்சி cūṭicci, பெ. (n.) வெடியுப்பு (வின்);; salt petre. மறுவ, யவட்சாரம் [சூடு → சூடிச்சி] |
சூடிணர் | சூடிணர் cūṭiṇar, பெ. (n.) கோங்கிலவு (மலை.);; false tragaeanth. [சூடு1 + இணர்] |
சூடிறக்குருவி | சூடிறக்குருவி cūṭiṟakkuruvi, பெ. (n.) சோள வயலிற் கூட்டங்கூட்டமாய்க் காணப்படும் குருவி வகை; rose coloured starling, found in flocks on the cholam fields, pastor roscus (M.M. 181);. [சூறை + குருவி] |
சூடு | சூடு1 sudu-, 5 செ.குன்றாவி, (v.t.) 1. அணிதல்; to wear, especially on the head. “கோட்டுப் பூச் சூடினுங் காயும்” (குறள், 1313.);. 2. பெயர் முதலியன சூட்டிக்கொள்ளுதல்; to be invested, as with a title. தமிழர்கள் தம் பிள்ளைகளுக்குத் தமிழ்ப் பெயர் சூடுதலே தகவாகும். [சூட்டு → சூடு-,] சூடு2 sudu-, 5 செ.கு.வி (v.i.) 1. பரவுதல்; to spread. 2. வளைந்துபோதல்; to become bent. warped. “வண்டிப் பாதை குடியிருக்கிறது”. (நாஞ்.);. 3. கவிதல்; to surround, envelope. “வானஞ் சூடிய மலர்தலை யுலகத்துள்ளும்” (பெரும்பாண். 409); 4. உண்ணுதல்; to cat. “பிரசாதத்தைச் சூடி” (ஈடு, 2.7.5.);. சூடு3 cūṭu, பெ. (n.) 1. சுடப்பட்டது; that which is heated, burnt, roasted. “கடலிறவின் சூடுதின்றும்” (பட்டினப். 63);. 2. சுடுபுண்; burn, scald. 3. வெப்பம்; heat. ‘உடம்பு சூடாயிருக்கிறது’ (உ.வ.);. 4. ஒத்தடம்; fomentation. 5. சின முண்டாக்குவது; that which provokes. அவன் பேசுவது சூடாக இருக்கிறது. 6. சினம்; anger. ‘அவன் சூடாக இருக்கிறான்’ (உ.வ.);. 7. உணர்ச்சி; feeling, sensibility. ‘எவ்வளவு சொன்னாலும் அவனுக்குச் சூடில்லை’ (உ.வ.);. 8. விலையேற்றம்; increase or enhancement, as of prices. விலை சூடாயிருக்கிறது 9. கண்ணோய்வகை; opthalmia, கண்ணில் சூடு வளர்ந்திருக்கிறது. 10. சூட்டுக்குறி; brand, “கருநரைமேற் சூடேபோல்” (நாலடி, 186.);. 11. வடு; scar, callosity “பாடகஞ் சுமந்த சூடுறு சேவடி” (பெருங். மகத. 8:14);. ம. சூடு; க. தூடு; தெ. சூடு;து. சூடு. [சுடு → சூடு] சூடு4 cūṭu, பெ. (n.) அரிக்கட்டு; bundle of sheaves. “கவய விளநெல் கரிகாற் சூடு” (பரிபா. 7:27);. ம. சூட்டு; க. சூடு;து. சூடி சூடு5 cūṭudal, பெ. (n.) சூடுபோடுதல்; to brand, as cattle; to cauterise. ‘மாட்டைச்சூடினான்’ (சென்னை.);. க. சூடு;தெ. கூடு [சுடு → சூடு-,] சூடு6 cūṭu, பெ. (n.) 1. குடுமி; hair-tuft. “கானிறை குஞ்சிச் சூட்டில்” (திருவிளை. யானையெய். 25); 2. உச்சிக்கொண்டை; crest, comb. [சூட்டு → சூடு] சூடு7 cūṭu, பெ. (n.) கண்டனம்; condemnation;strong protest. ‘ஆங்கில நாளோட்டிற்குத் தமிழறிஞர்கள் சூடு’ (உ.வ.);. [சூட்டு → சூடு] |
சூடுகயிறு | சூடுகயிறு cūṭugayiṟu, பெ. (n.) வரிச்சல் கட்டும் தென்னைநார்க் கயிறு (யாழ்ப்);; coir used for tying bamboo laths in tiling a roof. [சூடு1 + கயிறு] |
சூடுகாட்டு-தல் | சூடுகாட்டு-தல் Sudu-kattu-, 5 செ.கு.வி. (v.i.) 1. ஒத்தடங்கொடுத்தல்; to apply fomentation. 2. சூடாக்குதல்; to warm, heat. 2. உடம்பு சூடுகாட்டுகிறது. 3. சுரக்குறி தோற்றுதல்; to feel hot, as in fever, 4. கடுமைக்குறி காட்டுதல்; to warn, show severity, give deterrent punishment. [சூடு + காட்டு-,] |
சூடுகுத்தல் | சூடுகுத்தல் cūṭuguttal, பெ. (n.) சூடறுத்தல் பார்க்க;see sudaruttal (சா.அக.);. [சூடு + குத்தல்] |
சூடுகுத்து-தல் | சூடுகுத்து-தல் cūṭuguddudal, பெ. (n.) நோய் வகை (M.L.);; conjunctivitis. [சூடு + குத்து-,] |
சூடுகொள்ளல் | சூடுகொள்ளல் cūṭugoḷḷal, பெ. (n.) 1. உடம்பு வெப்பங்கொள்ளுகை; becoming heated in ansitution. 2. உடம்பு அனலுகை; becoming feverish (சா.அக.);. [சூடு + கொள்ளல்] |
சூடுசுடு-தல் | சூடுசுடு-தல் Sudu-Fudu-, 18 செ.குன்றாவி (v.t.) சூடு போடுகை; branding. காமாலைக்குச் சூடுசுட வேண்டும். [சூடு + சுடுதல்] |
சூடுசுரணை | சூடுசுரணை sūṭusuraṇai, பெ. (n.) உணர்ச்சி; feeling or sensibility (சா.அக.);. [சூடு + சுரணை] |
சூடுசுள்ளாப்பி-த்தல் | சூடுசுள்ளாப்பி-த்தல் Sudu-sullappi, 4 செ.கு.வி. (v.i.) களத்தில் கடாவிட்டு உழக்குதற்கு முன், கதிர்க்கற்றைகளை விரித்துப்பரப்புதல் (யாழ்ப்.);; to loosen and spread sheaves on the threshing-floor preparatory to treading out the grain. [சூடு + சுள்ளாப்பி-,] |
சூடுசெய்-தல் | சூடுசெய்-தல் sūṭuseytal, பெ. (n.) வெப்பம் கொள்ளும்படிச் செய்தல்; causing warmth. உணவை சூடு செய் [சூடு + செய்-,] |
சூடுண்டா-தல் | சூடுண்டா-தல் sudunda-, 5 செ.குன்றாவி (v.t.) உடம்பு சூடு கொள்ளுதல்; to get increased in warmth of body (சா.அக.);. [சூடு + உண்டாகு-,] |
சூடுதாவு-தல் | சூடுதாவு-தல் cūṭudāvudal, பெ. (n.) சூடு உறை (வின்.);; radiation of heat. ‘காலைக் கதிர் மலை மீது பட்டு அடிவாரம் எங்கும் சூடு தாவிற்று’ (உ.வ.);. [சூடு + தாவு-,] |
சூடுதுரத்தி | சூடுதுரத்தி cūṭuduraddi, பெ. (n.) சூடுபோக்கி பார்க்க;see sugu-pokki (சா.அக.);. [சூடு + துரத்தி] |
சூடுபறக்கத்தேய்-த்தல் | சூடுபறக்கத்தேய்-த்தல் sudu-parakka-t-tey-, செ.கு.வி. (v.i.) உடம்பில் மருந்தெண்ணெய் பூசிச் சூடு உண்டாகும்படித் தேய்த்தல்; rubbing with hand forcibly after applying ointment to the affected part so as to create heat, the act of anointing or of applying oil with friction Inunction (சா.அக.);. சுளுக்கு விழுந்த இடத்தில் எண்ணெய் தடவி சூடுபறக்கத் தேய். [சூடு + பறக்க + தேய்-,] |
சூடுபிடி-த்தல் | சூடுபிடி-த்தல் sudu-pidi- 4 செ.கு.வி (v.i.) நீர்க்கடுப்பு உண்டாகுதல்; to be attacked with strangury. ‘வெயிலில் அலைந்ததால் அவனுக்குச் சூடுபிடித்தது’ (உ.வ.);. [சூடு + பிடி-,] |
சூடுபொறுக்காமை | சூடுபொறுக்காமை cūṭuboṟukkāmai, பெ. (n.) சூடு தாங்காமை; extreme sensitiveness to heat (சா.அக.);. [சூடு + பொறுக்காமை] |
சூடுபோக்கி | சூடுபோக்கி cūṭupōkki, பெ. (n.) உடம்பின் வெப்பத்தைத் தணிக்கும் மருந்து; antipyretic (சா.அக.);. [சூடு + போக்கி] |
சூடுமிதி-த்தல் | சூடுமிதி-த்தல் Sudu-midi-, 4 செ.கு.வி. (v.i.) கதிர்ச்சூட்டித்தல்; to tread sheaves of corn. [சூடு + மிதி-,] |
சூடுறல் | சூடுறல் cūṭuṟal, பெ. (n.) உடம்பு காய்தலின் உணர்ச்சி; feeling feverish (சா.அக.);. [சூடு + உறல்] |
சூடுவளர்த்தி | சூடுவளர்த்தி cūṭuvaḷartti, பெ. (n.) சூட்டினால் கண்ணில் சதை வளருதல்; granular ophthalmia (சா.அக.); மறுவ. சூடுவளர்க்கை, சூடுவளர்தல [சூடு + வளர்த்தி] |
சூடை | சூடை cūṭai, பெ.(n.), ஒரு வகைச்சிறு கடல் மீன்; fire spot. [சூடு-சூடை] சூடை1 cūṭai, பெ. (n.) 1. தலை; head. “சூடையின் மணி” (கம்பரா. சூளா. 88);. 2. குடுமி; hair-tuft. “சூடை விளங்கு மாமணி” (சேதுபு. சேதுவந்த. 15);. [சூடு → சூடை] சூடை2 cūṭai, பெ. (n.) 1. பசிய நிறமுள்ள மீன் வகை; sardine, bluish-green, clupea fimbriata. 2. நான்குவிரல நீளமும், பொன் நிறமும் உள்ள மீன்வகை; sardine, with purple colour growing upto four inches. 3. இருபது விரல நீளம் வளரக்கூடிய வெண்ணிறமுள்ள கடல்மீன் வகை; silvery sea fish growing upto twenty inches. |
சூடைக்காசு | சூடைக்காசு cūṭaikkācu, பெ. (n.) சூடாமணி (இலக்.அக.);. பார்க்க;see Suda-mani. [சூடை + காசு] |
சூடைப்பொடி | சூடைப்பொடி cūḍaippoḍi, பெ. (n.) சூடை2,1 (யாழ்ப்.); பார்க்க;see Sudai,2,1. [சூடை + பொடி] |
சூடோன் | சூடோன் cūṭōṉ, பெ.(n) சோளப்பயிர் வகையிலொன்று; a type of maize. [குடன்-குடோன்] |
சூட்சம் | சூட்சம் cūṭcam, பெ. (n.) 1. பெருவழுதலை; big brinjal. 2. வெள்ளைக்காக்கணம்; white mossel shell creeper. 3. குக்கில்; குங்கிலியம்; Indian bedellium (சா.அக.);. |
சூட்சி | சூட்சி1 sutsci-, 4 செ.குன்றாவி (v.t.) ஆராய்ந்து அறிதல்; to understand thoroughly. “சூட்சித்துப் புத்ரசங்கை சொல்லுவது தானே” (சாதகசிந். 1704);. [சூழ் + சி – சூழ்ச்சி → சூட்சி] சூட்சி2 cūṭci, பெ. (n.) 1. கலந்தாய்வு; counsel, deliberation. “சூட்சியின் கிழவரை நோக்கிச் சொல்லினான்” (கம்பரா. உயுத்த. மந்திர. 11);. 2. வழி; means, device. ‘இச்சிக்கலுக்கு மீளும் சூட்சி யாது?’ (உ.வ.);. 3. ஏய்ப்பு: deceit. “சூட்சி சிறிது மிலாதாய் போற்றி” (தேவா. 1164, 4);. [சூழ்ச்சி → சூட்சி] |
சூட்சியன் | சூட்சியன் cūṭciyaṉ, பெ. (n.) 1. அமைச்சன், (மந்திரி);; minister as skilled in deliberation. “நல்லோர் யாரென நலங்கிளர் சூட்சியன்” (ஞானா. 26:17);. [சூட்சி → சூட்சியன்] |
சூட்டடி | சூட்டடி cūḍḍaḍi, பெ. (n.) 1. அடித்த கதிரைக் கடாவிட்டு உழக்குகை (நெல்லை.);; beating or treading of sheaves for the second time. 2. முதன் முறையாக நெற்களத்தில் கதிர்ச்சூட்டை அடிக்கை (வின்.);; beating sheaves for the first time. [சூடு + அடி] |
சூட்டடுப்பு | சூட்டடுப்பு cūḍḍaḍuppu, பெ. (n.) அடுப்புவகை; a kind of domestic oven. “சூட்டடுப்பிற் செழுந்தாட் பவளத் துவரடுக்கி” (குமர. பிர. மீனாட். பிள்ளைத். 23);. ம. சூட்டடுப்பு [சூட்டு + அடுப்பு] |
சூட்டளவை | சூட்டளவை cūṭṭaḷavai, பெ. (n.) வெப்பமானி; an instrument to measure the temperature;thermometre (சா.அக.);. [சூடு + அளவை. உடல் சூட்டை, வெப்பத்தை அளக்கும் கருவி] |
சூட்டாங் காய் | சூட்டாங் காய் cūṭṭāṅgāy, பெ.(n.) தேய்த்தால் விரைவில் சூடு உண்டாகும் காய், a nut which get hot easily when it is rubbed. [குடு:ஆம்+காய்) |
சூட்டாணி | சூட்டாணி cūṭṭāṇi, பெ. (n.) சூட்டுக்கோல் பார்க்க;see Suttu-k-kol. “செவிச் சூட்டாணியிற் புகையழல் பொத்தி” (சிலப். 23:44);. [சுடு → சுடு + ஆணி] |
சூட்டிக்கை | சூட்டிக்கை cūṭṭikkai, பெ. (n.) 1. அறிவுக்கூர்மை; ingenuity, ‘சிறுவயதிலேயே அவன் சூட்டிக்கையாக இருந்தான்’ (உ.வ);. 2. சுறுசுறுப்பு; Smartness. ‘வேலைசெய்வதிலே அவன் படு சூட்டிக்கை’ (உ.வ.);. க. சூடி |
சூட்டிஞ்சி | சூட்டிஞ்சி cūṭṭiñji, பெ. (n.) ஏவறைகளை கொண்ட மதில்; crenelated wall. “இடு சூட்டிஞ்சியி னேணி சாத்தின்று” (பு.வெ. 6:18, கொளு);. [(சூடு → அ); சூட்டு + இஞ்சி] |
சூட்டிப்பு | சூட்டிப்பு cūṭṭippu, பெ.(n) சுறுசுறுப்பு: active [குடு-குட்டிப்பு] |
சூட்டிறைச்சி | சூட்டிறைச்சி cūṭṭiṟaicci, பெ. (n.) சுட்ட இறைச்சி (பிங்.);; roasted-meat. [சுடு → சூடு + இறைச்சி] |
சூட்டிவிடு-தல் | சூட்டிவிடு-தல் suttiividu-, 18 செ.குன்றாவி (v.t.) 1. பெண்ணை மணம்செய்து கொடுத்தல்; to give a girl in marriage. 2. அமர்த்துதல்; to appoint, destine. 3. ஒப்படைத்தல்; to assign make over, transfer, as property. 4. பட்டங் கட்டி விடுதல், மகுடம் சூட்டுதல்; to offer royal title or to crown a person as king. [சூட்டு → சூட்டி + விடு-,] |
சூட்டு | சூட்டு1 suttu-, 5 செ.குன்றாவி (v.t.) 1. அணிவித்தல்; to adorn, as with garlands, chain-ornaments, etc. “பாதமலர் சூடுகின்றிலை, சூட்டுகின்றதுமிலை (திருவாச.5:31);. 2. ஒருவரை பாமாலையாற்புனைத்தல்; to honour, as with a poem. 3. மணிமுடி புனைவித்தல்; to crown, as with diadem. “தொன்னெடு முடி சூட்டுகின்றான்” (கம்பரா. அயோத். மந்திரப். 90);. மன்னன் தன் மகனுக்கு மணிமுடி சூட்டினான” (உ.வ.);. 4. பட்டம் முதலியன கொடுத்தல்; to confer, as title, பாவாணருக்குப் பாவலரேறு மொழி ஞாயிறு’ என்று பட்டஞ் சூட்டினார். 5. பரப்புதல்; to spread over, as an army. “நிலவரை சூட்டிய நீனெடுந் தானை” (புறநா. 228:6);. 6. ஆணை முதலியன செலுத்துதல்; to extend, as one’s sway. ‘நீரக விருக்கை யாழிசூட்டிய…… முன்னோர்போல (புறநா. 99:3);. 7. சுமத்துதல் (யாழ்ப்.);; to attribute. 8. சூட்டிவிடு-தல் பார்க்க;see sutti-vidu-, 9. இயலாத ஒன்றை மேற்கொள்ளும்படி தூண்டுவிடுதல் (இக.வ.);; to encourage one in undertaking a task beyond his means, yoke a person to a difficult task. [சூடு → சூட்டு-,] சூட்டு2 cūṭṭu, பெ. (n.) 1. சூட்டுகை; investing adorning, as with crown, head-dress. முடிசூட்டு. 2. பூமாலை; wreath, garland. “மல்லிகை நறுஞ்சூட்டு வெள்ளிதின் விளங்க” (பெருங். உஞ்சைக். 46:233);. 3. பெண்களுக்குரிய துதலணி (பிங்.);; நெற்றிச்சூட்டு; ornament for women’s forehead. 4. நெற்றிப்பட்டம்; a golden plate worn on the forehead, as ornament or badge of distinction. 5. மயில், கோழி முதலியவற்றின் உச்சிக்கொண்டை; pcacock’s crest, cock’s comb. “காட்டுக்கோழிச் சூட்டுத் தலைச்சேவல்” (பெருங். உஞ்சைக். 52:62);. 6. பாம்பின் படம்; Snakes hood “செங்கணாயிரஞ் சூட்டராவினறிதுயிலமர்ந்து” (கூர்மபு. வருணாச். 3. 7. வண்டிச்சக்கரத்தின் விளிம்பைச் சூழ அமைக்கப்பட்ட வளைவுச் சட்டம்; felloe of a wheel. “கொழுஞ் சூட்டருந்திய திருந்துநிலை யாரத்து” (பெரும்பாண். 46);. 8. ஏவறை; a kind of casemate in a fortress for shooting arrows from “இடுகுட் டிஞ்சியின்” (பு.வெ.6:18 கொளு);. [சூடு → சூட்டு] சூட்டு3 cūṭṭu, பெ. (n.) 1. சுடப்பட்டது; that which is burnt or cooked. சூட்டிறைச்சி, சூட்டாங்கறி. 2. ஒலை, நாணல் முதலியவற்றால் ஆன தீவட்டிவகை (நாஞ்.);; a kind of ola torch. ம. சூட்டு; க. சூடெ; தெ. சூடு; து. சூடெ, தூடெ;குட. துடி Pkt. cuduli; Mar. cud [சுடு → சூட்டு] சூட்டு4 cūṭṭu, பெ. (n.) தூணின்தலைக்கல் (இ.வ.);; capital of a pillar. சூட்டு5 cūṭṭu, பெ. (n.) சூட்டிக்கை பார்க்க;see suttikkai. |
சூட்டுக்கணம் | சூட்டுக்கணம் cūṭṭukkaṇam, பெ. (n.) கழிக்கணம்; ஒருவகைக் கணநோய்; atroply due to excess of heat in the system resulting in diarrhoea (சா.அக.);. [சூடு + கணம் = சூட்டுக்கணம்] |
சூட்டுக்கத்திகை | சூட்டுக்கத்திகை cūṭṭuggattigai, பெ. (n.) பூமாலை வகை (இறை. 2, பக். 42, உரை);; a kind of garland. [சூட்டு + கத்திக்கை] |
சூட்டுக்கறி | சூட்டுக்கறி cūṭṭukkaṟi, பெ. (n.) முகமதியரின் பக்கிரீத்துப் பண்டிகையில் வழங்கப்படும் இறைச்சி; Bakri-id, the Muhammadan festival, as time for meat. [சூட்டு + கறி] |
சூட்டுக்காரன் | சூட்டுக்காரன் cūṭṭukkāraṉ, பெ. (n.) திறமையாகவும், சுவையாகவும், சிரிப்பாகவும் பேசுபவன் (வின்.);; wittly person. க. சூடுக்காற [(சூடு → ); சூட்டு + காரன்] |
சூட்டுக்குச்சூடுகொடுத்தல் | சூட்டுக்குச்சூடுகொடுத்தல் cūḍḍugguccūḍugoḍuttal, பெ. (n.) தமிழ்மருத்துவ முறையில் சிலபோது, சூட்டுக்குச் சூடுகொடுத்தால் உடம்பு குளிர்ச்சி ஆகும் எனுங் கொள்கை; in Tamil medicine the principle of treating with a remedy apparently hot for internal heat on the theory that such treatment would result in rendering the system cool (சா.அக.);. [சூட்டுக்குச்சூடு + கொடுத்தல்] |
சூட்டுக்குத்தல் | சூட்டுக்குத்தல் cūṭṭukkuttal, பெ. (n.) சூட்டினால் கண்சதை வளர்ந்து கண்ணில் ஏற்படும் குத்தல்நோய்; irritation due to abnormal growth of flesh in the eye arising from constitutional heat-ophthalmia (சா.அக.);. [சூடு + குத்தல்] |
சூட்டுக்கோலிடு-தல் | சூட்டுக்கோலிடு-தல் suttu-k-kolidal, 5 செ.குன்றாவி (v.t.) வலிப்புவந்த குழந்தைகளுக்கு ஊசி அல்லது இரும்புக்கம்பியினால் சூடு போடுதல்; cauterising with a red hot needle or rod children suffering from convulsion (சா.அக.);. [சூட்டுக்கோல் + இடு-,] |
சூட்டுக்கோல் | சூட்டுக்கோல் cūṭṭukāl, பெ. (n.) 1. மாடு முதலியவற்றின்மேல் அடையாளச் சூடு இடுதற்குரிய கம்பி (உ.வ.);; branding iron. instrument for cauterising. 2. குழந்தைகளின் சில நோய்களுக்காகச் சூடுபோடும் ஊசி அல்லது இரும்புக்காம்பு; heated branding iron used as a treatment in children suffering from convulsions for fits accompanying diseases (சா.அக.);. ம. சூடுகோல், சூட்டுக்கோல் [சூடு → சூடு → சூட்டு + கோல்] |
சூட்டுடம்பு | சூட்டுடம்பு cūḍḍuḍambu, பெ. (n.) வெப்பம் கொண்ட உடல்; body, which is over heated. ‘அவனுக்குச் சூட்டுடம்பு’ (உ.வ.);. [சூடு + உடம்பு] |
சூட்டுத்தலைவி | சூட்டுத்தலைவி cūṭṭuttalaivi, பெ. (n.) உடம்பின் வெப்பத்தால் ஏற்படும் தலைவலி; head-ache due to excess of heat in the body (சா.அக.);. [சூடு → சூட்டு + தலைவலி] |
சூட்டுப்பாய் | சூட்டுப்பாய் cūṭṭuppāy, பெ. (n.) சூடடித்த நெற்குவியலைப் போர்த்துவைத்தற்குரிய பாய் (யாழ்.அக.);; mat used to cover the threshed corn. [(சூடு); → சூட்டு + பாய்] |
சூட்டுப்புண் | சூட்டுப்புண் cūṭṭuppuṇ, பெ. (n.) 1. சுட்டபுண்; burns. 2. வெப்பத்தினால் ஏற்பட்ட புண்; boil arising from the internal heat in the system (சா.அக.);. [சூடு → சூட்டு + புண்] |
சூட்டுமணல் | சூட்டுமணல் cūṭṭumaṇal, பெ. (n.) கருமணல்; black sand (சா.அக.);. [சூடு → சூட்டு + மணல்] |
சூட்டுமாலை | சூட்டுமாலை cūṭṭumālai, பெ. (n.) தோளணி மாலை (யாழ்.அக.);; a kind of garland. [சூட்டு + மாலை] |
சூட்டுமிதி | சூட்டுமிதி cūṭṭumidi, பெ. (n.) நெற்சூட்டைக் கடாவிட்டு மிதித்து உழக்குகை (யாழ்.அக);; threshing sheaves of corn by treating with cattle. [சூட்டு + மிதி] |
சூட்டுவடு | சூட்டுவடு cūḍḍuvaḍu, பெ. (n.) சூட்டுக் கோலிட்ட வடு; a scar or cicatrix left after cautcry (சா.அக.);. [சூட்டு + வடு] |
சூட்டுவலி | சூட்டுவலி cūṭṭuvali, பெ. (n.) 1. வெப்பத்தால் உடம்பில் ஏற்படும் நோவு; ache in the body due to heat in the system. 2. பிள்ளைப்பேற்று நோவு (இ.வ.);; labour, pains of child-birth. [சூடு + வலி] |
சூட்டெண்ணெய் | சூட்டெண்ணெய் cūṭṭeṇīey, பெ. (n.) 1. எரித்து வடிக்கும் வேப்பெண்ணெய்; margosa oil cxtracted from the seeds of margosa by boiling them. 2. உடற்சூட்டைத் தணித்துக் குளிர்ச்சி தரும் எண்ணெய்; a medicated oil prescribed for reducing the heat in the body (சா.அக.);. [சூடு + எண்ணெய்] |
சூட்டோடுசூடாக | சூட்டோடுசூடாக cūṭṭōṭucūṭāka, பெ. (n.) Suttodu-sudaga, கு.வி.அ.(adv.); 1. முந்தைய செயல் செய்த வேகத்திலேயே அல்லது நடந்த விரைவிலேயே; the speedy velocity with which prior work or speech has happencd. 2. தொடர்ச்சியாக அல்லது உடனடியாக; continuously or immediately. ‘வீட்டுமனை வாங்கிய கையோடு, சூட்டோடு சூடாக அவன் வீட்டையும் கட்டிமுடித்தான்’ (உ.வ.);. மறுவ. சூட்டோடு சூடாய். [சூடு + ஓடு + சூடு + ஆக] |
சூணம் | சூணம் cūṇam, பெ. (n.) கண்ணின் கருவிழிச் சவ்வு; the dark brown vascular of the eye between the sclera and the retina (சா.அக.);. [சூண் + அம்] |
சூணித்துச்சொல்(லு)-தல் | சூணித்துச்சொல்(லு)-தல் sunittu-c-col, 8 குன்றாவி (v.t.) 3 செ.கு.வி (v.i); குறைகூறுதல் (இ.வ.);; to criticise, expose defects. [சூணித்து + சொல்] |
சூதடி | சூதடி1 sudadi-, 4 செ.குன்றாவி (v.t.) ஏமாற்றுதல்; to cheat, decieve, “வீட்டிற் சூதடித்து நாமிருக்கிற்போமோ” (குருகூர்ப்.);. சூதடி2 cūtaḍi, பெ. (n.) வஞ்சகம் (உ.வ.);; ஏய்ப்பு; deception, trick. [சூது + அடி] |
சூதன் | சூதன் cūtaṉ, பெ. (n.) 1. சூதாடுபவன் (சூடா);; gambler. 2. தந்திரக்காரன்; cunning person, deep. [சூது → சூதன்] |
சூதர் | சூதர் cūtar, பெ. (n.) 1. அரசன் முன்பு நின்றேத்துவார்; bards whose duty was to praise kings standing in their presence, encomiasts. “சூதரேத்திய துயிலெடை நிலையும்” (தொல். பொருள். 91);. 2. பாணர் (அக.நி.);; a caste of singers, lute-players. |
சூதாடி | சூதாடி cūtāṭi, பெ. (n.) சூதாடுவோன் (உ.வ.);; gambler. [சூது + ஆடி] |
சூதாடு-தல் | சூதாடு-தல் Sudadu, 5 செ.கு.வி (v.i.) 1. பணம், பொருள் ஈடாகவைத்து ஆடுதல்; gamble by betting money or materials. ‘தருமன் நாடுநகரம் மனைவியை வைத்துச் சூதாடித் தன்பெருமைக்கு இழுக்குச் சேர்த்தான்’ (உ.வ.);. [சூது + ஆடு-,] |
சூதாடுகருவி | சூதாடுகருவி cūtāṭugaruvi, பெ. (n.) 1. தாயம் உருட்டும் பாய்ச்சிகைக் கவறு (யாழ்.அக);; dice. 2. சூதாட்டக்கட்டத்தில் வைக்குங்காய் (புறநா. 52, உரை);; conical pieces moved on the chessboard according to the throw of dice. [சூது + ஆடு + கருவி] |
சூதாட்டம் | சூதாட்டம் cūtāṭṭam, பெ. (n.) 1. சூதாடுகை; gambling. 2. தந்திரம், கரவு; trick. [சூது + ஆட்டம்] |
சூதானம் | சூதானம் cūtāṉam, பெ.(n.) பாதுகாப்பு sate [சூந்து-சூதானம்] |
சூதாளி | சூதாளி cūtāḷi, பெ. (n.) சூதன், 2 பார்க்க;see sudan. 2. க. ஜுடாலி, ம. சூதாளி [சூது → சூதாளி] |
சூது | சூது1 cūtu, பெ. (n.) ஏமாற்றுகை; cheat. சூது2 cūtu, பெ. (n.) 1. சூதாட்டம்; gambling. “வேண்டற்க வென்றிடினுஞ் சூதினை” (குறள், 931);. சூதுக்கட்டத்தில் வைக்குங்கருவி; conical pieces in dice-play. “சூதும் பங்கய முகையுஞ் சாய்த்து” (பெரியபு. தடுத்தாட். 21); 3. வழி; means, .device. “களவு கடனாகக் கடிந்திடுதல் சூதே” (சீவக. 2870); 4. வெற்றி; victory, success. “வெல்வது சூதென வேண்டி” (சீவக. 879);. 5. மந்தனம்; Secret. 6. தந்திரம்; trick. இந்தச் சூது எங்கிருந்து கற்றான்? க., ம. சூது |
சூது தாயம் | சூது தாயம் cūtutāyam, பெ.(n.), by சோழிகளைக் குலுக்கிப்போட்டு விளையாடும் ஆட்டம்; a play with six cowries. [சூது+தாயம்] |
சூதுகருவி | சூதுகருவி cūtugaruvi, பெ. (n.) பார்க்க;(புறநா. 52, உரை);;see sudadu-karuvi. [சூது + கருவி] |
சூதுகளி | சூதுகளி cūtugaḷi, பெ. (n.) சூதாட்டம் (நாஞ்.); பார்க்க;see Sudattam. [சூது + களி] |
சூதுகாரன் | சூதுகாரன் cūtukāraṉ, பெ. (n.) தந்திர முள்ளவன்; Cunning person. ‘சூதுகாரன் கை சும்மா இராது’. ம. சூதுகாரந், க. சூதுகார [சூது + காரன்] |
சூதுக்காரன் | சூதுக்காரன் cūtukkāraṉ, பெ. (n.) சூதுகாரன் (இ.வ.); பார்க்க: See Sudu-karan. [சூது + காரன்] |
சூதுபாய்ச்சிக்கை | சூதுபாய்ச்சிக்கை cūtupāyccikkai, பெ. (n.) தாயம் உருட்டுஞ் சொக்கட்டான்காய் (வின்.);; dice. [சூது + பாய்ச்சிகை → பாய்ச்சிக்கை] |
சூதுபொரு-தல் | சூதுபொரு-தல் sudu-poru, 4 செ.கு.வி. (v.i.) சூதாடுதல்; to gamble. “சூதுபொரு கழகத் தருகலும்” (பெருங். இலாவாண 8: 62);. ம. சூதுபொருக [சூது + பொரு-,] |
சூதுமாதவம் | சூதுமாதவம் cūtumātavam, பெ. (n.) ஒரிதழ்த் தாமரை; viola suffruticosa (சா.அக.);. |
சூதுமுத்து | சூதுமுத்து cūtumuttu, பெ. (n.) போலிமுத்து (தஞ்சை.);; artificial pearl. [சூது + முத்து] |
சூதுவாது | சூதுவாது cūtuvātu, பெ. (n.) கள்ளங்கபடு; Cunning. ‘அவள் குதுவாது தெரியாதவள்’ (உ.வ.);. [சூது + வாது] |
சூதுவென்றி | சூதுவென்றி cūtuveṉṟi, பெ. (n.) சூதாட்டத்தில் பெற்ற வெற்றியைக் கூறும் புறத்துறை (புவெ. 12:16);; theme describing success in gambling. [சூது + வென்றி] |
சூத்தழகி | சூத்தழகி cūttaḻki, பெ. (n.) ஒரு வகை மாம்பழம் (இ.வ.);; a kind of mango. மறுவ, குரங்குச் சூத்து மாம்பழம் [சூத்து + அழகி] |
சூத்தாங்கரடு | சூத்தாங்கரடு cūttāṅgaraḍu, பெ. (n.) எருவாயின் தடிப்பு (யாழ்ப்.);; roughness of the anus or perineum. [சூத்து + ஆம் + சுரடு. ஆம் = சாரியை] |
சூத்தாட்டி | சூத்தாட்டி cūttāṭṭi, பெ. (n.) 1. வேலை கழப்புகிறவன் (இ.வ.);; an indolent, shirking workman;eye-servant. 2. தகுதிகடந்து உடன்பட்டு அருள் ஈட்டுபவன்; one who curries favour by unworthy complaisance. [சூத்து + ஆட்டு → சூத்தாட்டி] |
சூத்தாட்டிக்குருவி | சூத்தாட்டிக்குருவி cūttāṭṭikkuruvi, பெ. (n.) சூத்தாட்டியுள்ளான் பார்க்க;see suttatti-y-ullan [சூத்தாட்டி + குருவி] |
சூத்தாட்டு-தல் | சூத்தாட்டு-தல் suttattu-, 5 செ.கு.வி. (v.i.) 1. வேலைகழப்புதல்; to make a show of working. 2. தகுதிகடந்து உடன்பட்டுக் கருணை ஈட்டுதல்; to acquire favour by unworthy means. [சூத்து + ஆட்டு-,] |
சூத்தாம்பட்டை | சூத்தாம்பட்டை cūttāmbaṭṭai, பெ. (n.) பிட்டம் (உ.வ.);; buttocks. மறுவ. புட்டம், புட்டாணி [சூத்து + (ஆம்); + பட்டை] |
சூத்திரகண்டகாரி | சூத்திரகண்டகாரி cūttiragaṇṭagāri, பெ. (n.) சிறுகண்டங்கத்திரி; dwarf prickly night shade (சா.அக.);. |
சூத்திரகாட்டேரி | சூத்திரகாட்டேரி cūttirakāṭṭēri, பெ.(n.) வந்தவாசி வட்டத்திலுள்ள சிற்றுர்; a village in WandewashTaluk. [குத்திரம்+காட்டேரி (காளி); காட்டாளிகாட்டேரி] |
சூத்திரகுட்டம் | சூத்திரகுட்டம் cūttiraguṭṭam, பெ. (n.) 1. சாந்தகுட்டம்; a mild form of leprosy. 2. ஒருவகைத் தோல்நோய்; itch thyosis cruptions in the form of fish scales (சா.அக.);. |
சூத்து | சூத்து cūttu, பெ. (n.) 1. எருவாய் (மலவாயில்);; anus. 2. புட்டம்; buttocks, rump. ‘சூத்திலடித் தானாம், பல்லுப் போச்சாம்’ (பழ.);. ம. சூத்து;கூ. சுதி H. cut (பெண்குறி);; Mar. cutat (பெண்குறி);; Skt. Cuta [சூறு → சூற்று → சூத்து. சூல் (சூலுதல்); = தோண்டுதல். சூறு = துளை, எருவாயில் (வே.க. 247);] |
சூத்து சூத்தாட்டியுள்ளான் | சூத்து சூத்தாட்டியுள்ளான் cūttucūttāṭṭiyuḷḷāṉ, பெ. (n.) வாலை எப்பொழுதும் ஆட்டிக்கொண்டிருக்கும் சிறுபறவை; வலியன்குருவி; pied wagtail. மறுவ. வலியன் [சூத்தாட்டி + உள்ளான்] |
சூத்தை | சூத்தை cūttai, பெ. (n.) கேடுற்றது (சங்.அக.);; that which is decayed. [சொத்தை → சூத்தை] |
சூத்தைப்பல் | சூத்தைப்பல் cūttaippal, பெ. (n.) சொத்தைப் பல்; decayed tooth (சா.அக.);. [சூத்தை + பல்] |
சூத்தைப்பாக்கு | சூத்தைப்பாக்கு cūttaippākku, பெ. (n.) சொத்தைப்பாக்கு, worm eaten arecanut (சா.அக.);. [சூத்தை + பாக்கு] |
சூத்தொட்டல் | சூத்தொட்டல் cūttoṭṭal, பெ. (n.) புட்டம் வற்றிப் போதல்; a slang for atrophy of buttocks (சா.அக.); [சூத்து + ஒட்டல்] |
சூத்தொட்டி | சூத்தொட்டி cūttoṭṭi, பெ. (n.) இளைத்துப் போனவன்; a slang or contemptuous term for an emaciated person ove one with skin and bones (சா.அக.);. [சூத்து + ஒட்டி] |
சூத்தொட்டிப்போதல் | சூத்தொட்டிப்போதல் cūttoṭṭippōtal, பெ. (n.) புட்டம் ஒட்டிப்போகை; shrinking or diminution in bulk of the buttocks found in an emaciated person (சா.அக.);. [சூத்து + ஒட்டிப்போதல்] |
சூநாறி | சூநாறி cūnāṟi, பெ. (n.) ஒரு வகைப் பிசின்மரம் (L.);; umbelled yellow flowered resin seed. |
சூந்து | சூந்து cūndu, பெ.(n.) நளி ஒளி (கார்த்திகை சோதி); திரு விழாவின் போது வளையத்தில் தீப்பந்தம் சுருட்டி சுற்றுதல் afire ball play. பட குன்க [சூளுந்து-சூந்து] |
சூனன் | சூனன் cūṉaṉ, பெ. (n.) 1. பெருவயிற்றோன்; man with a big belly. 2. நோயால் வயிறு பெருத்தோன்; a patient with distended abdomen (சா.அக.); [குன் → சூனன். சூன் = பிதுக்கம்]’ |
சூனம் | சூனம்1 cūṉam, பெ. (n.) மான் (பிங்.);; deer. சூனம்2 cūṉam, பெ. (n.) முழுவதும் மலந்த மலர் (யாழ்.அக.);; full blown flower. சூனம்3 cūṉam, பெ. (n.) வயிற்றுவிக்கம் (தஞ்சை.);; swelling of the abdomen. |
சூனம்வயிறு | சூனம்வயிறு cūṉamvayiṟu, பெ. (n.) 1. பெரு வயிறு; a distanded abdomen. 2. குழந்தைக்கு உண்டாகும் (கல்லீரல் வீக்கம்); பெருவயிறு; pot belly in children. [சூனம் + வயிறு] |
சூனர் | சூனர் cūṉar, பெ. (n.) ஊன்விற்போர்; dealers in meat. [சூன் + அர்] சூனன் 317 |
சூனாம் வயிறு | சூனாம் வயிறு cūṉāmvayiṟu, பெ. (n.) சூனம்வயிறு பார்க்க;see sunam-vayiru [சூனாம் + வயிறு] |
சூனாவயிறு | சூனாவயிறு cūṉāvayiṟu, பெ. (n.) பெருவயிறு (இ.வ.);; swollen abdomen, as of diseased children. [சூனம் + வயிறு → சூனவயிறு → குனாவயிறு] மறுவ. வஞ்சகன், ஏமாற்றுக்காரன், ஏய்ப்பவன். [சூன் – சூனி] |
சூனை | சூனை1 cūṉai, பெ. (n.) 1. சிறுமூளைக்குள் உண்ணாக்கைப் போற் புதைந்துகிடக்கும்; a lobe or small fleshymass சூனைவிழு-தல் found demarcated in the little brain, intertonsillar lobe or uvula of the cerebellum (சாஅக.);. 2. வயிற்று வீக்கம்; swelling of abdomen. 3. குற்றம்; fault. 4. சொத்தை; that which is decayed சூனை2 cūṉai, பெ. (n.) ஆடு வெட்டப்படும் இடம்; slaughter – house. “சொன்ன க்ஷனைத் துறந்த வற்றட்டன்ன” (நீலகேசி.314);. சூனை3 cūṉai, பெ. (n.) மகள்; daughter |
சூனைப்பற்று-தல் | சூனைப்பற்று-தல் cūṉaippaṟṟudal, செ.கு.வி (v.i.) வயிறு வீக்கமடைதல்; to swell as of the abdomen (சா.அக.);. [குனை பற்று-,] |
சூனைவயிறு | சூனைவயிறு cūṉaivayiṟu, பெ. (n.) சூனம் வயிறு பார்க்க;see sunam-vayiru (சா.அக.); மறுவ. பானைவயிறு [குனை + வயிறு] |
சூனைவிழு-தல் | சூனைவிழு-தல் cūṉaiviḻudal, 2 செ.கு.வி (v.i.) சொத்தை விழுதல்; to be rotten at the core as teeth. [குனை விழு-,] |
சூன் sun, | சூன் sun, cūṉ, பெ. (n.) 1. பிதுக்கம்; swelling. 2. வளைவு; crookedness, bend, irregular-shape. சூன்நிலம், 3. கை முதலியன சூம்பியிருத்தல்; whithering, as of a limb. 4. குற்றம்; defect. 5. கவடம்; guile. “அவன் மனத்திலிருக்கும் சூனுக்கு அளவில்லை”. 6. கமுக்கம் (இரகசியம்);; secret, inner meaning. “காரியத்தின் சூனெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும்.” 7. இரண்டு வீட்டுச்சுவர்களின் இடைச்சந்து (இ.வ.);; narrow lane between the walls of adjacent houses. 8. புறம்போக்குநிலம்; a piece of unoccupied land. [சுல் → சுன் → சன் – சூன் (வே.க. 244] |
சூன்பிடித்தவன் | சூன்பிடித்தவன் cūṉpiḍittavaṉ, பெ. (n.) வயிறு பெருத்தவன்; one with swallow (சா.அக.); [சூன் + பிடித்தவன்] |
சூன்மி | சூன்மி cūṉmi, பெ. (n.) கற்பழித்தவரை, காய்ந்து கொதிக்கும் இருப்புப்பாவையைத் தழுவும் படிச் செய்து, வருத்தும் நிரயவகை (சேதுபு. தனுக்கோ. 3);; a hell where immortal people are punished by being forced embrace red-hot iron Status. |
சூன்றல் | சூன்றல் cūṉṟal, பெ. (n.) தோண்டுகை (திவா.);: scooping out. [சூல் – சூன்றல்] |
சூன்றிடு -தல் | சூன்றிடு -தல் cūṉṟiḍudal, செ.கு.வி. (v.i) பனங்காயின் உள்ளிட்டுக் குழியிலுள்ள நுங்கினைக் குடைந்தெடுத்தல்; to take the inner pulp of the tender palm fruit ‘நுங்கு சூன்றிட்ட கண்’ (நாலடி44); [சூல்-குன்றிடு] |
சூப்பல் | சூப்பல் cūppal, பெ. (n.) சூப்பு-தல் பார்க்க;see suppu- (சா.அக.);. [சூப்பு → சூப்பல்] |
சூப்பாங் கட்டை | சூப்பாங் கட்டை cūppāṅgaṭṭai, பெ.(n.), குழந்தை விரலைச் சூப்பிக் கொண்டிருக்க உருவாக்கப் பட்ட கட்டை; a small stick designed for the child to suck instead of finger. |குப்பம்சகட்டை) |
சூப்பான் | சூப்பான் cūppāṉ, பெ. (n.) சூப்பி பார்க்க;see suppi. [சூப்பு + சூப்பான்] |
சூப்பி | சூப்பி cūppi, பெ. (n.) 1. குழந்தைகள் வாயில் வைத்துச் சுவைத்தற்கு முலைக்காம்பு போல் அமைந்த குமிழ்க்கருவி; artifical nipple fora child to suck. 2. குழந்தைகள் உண்ணும் சிற்றுண்டி வகை; a sweetmeat in the form of a stick chewed by children. 3. இரந்துண்ணி (யாழ்ப்.);; one who sponges on others. 4. கைவிரலைச் சப்பும் சிறுகுழந்தை; a child sucking its finger (சா.அக.);. [சூப்பி → சூப்பி] |
சூப்பிடி | சூப்பிடி cūppiḍi, பெ. (n.) நாட்டுக்கோட்டைச் செட்டிமார்தம் திருமணத்திற்கு முன் நிகழும் ஒருவகை நிகழ்வு; a preliminary ceremony in marriage among Nattu-k-kottai Chetti people. |
சூப்பியகால் | சூப்பியகால் cūppiyakāl, பெ. (n.) துவண்ட கால்; atrophied leg (சா.அக.);. [சூம்பு → சூப்பு → சூப்பிய + கால்] |
சூப்பியம் | சூப்பியம் cūppiyam, பெ. (n.) பாம்பு கொல்லி (மலை.);; snake killer, common rue (சா.அக.);. |
சூப்பு-தல் | சூப்பு-தல் suppu, 5 செ.கு.வி. (n.) சப்புதல்; to suck, sip. க. சீபு |
சூமந்திரம்போடு-தல் | சூமந்திரம்போடு-தல் su-mandiam-podu-, 20 செ.கு.வி. (v.i.) 1. நோய், அச்சம் முதலின தீங்குவதற்கு மந்தரித்தல்; to exorcise. 2. கமுக்கமாகக் கெடுமதிகூறல்; to exercisc evil influence in secret. [சூ = ஒலிக்குறிப்பு. சூ + மந்திரம் + போடு-,] |
சூம்படை | சூம்படை1 sumbadai-, 4 செ.கு.வி (v.i.) நிலைகெடுதல் (வின்.);; to be reduced in circumstances to be ruined. “அவனுடைய வணிகம் சூம்படைந்தது” (உ.வ.);. [சூம்பு + அடை-,] சூம்படை2 sumbadai, 4 செ.கு.வி. (v.i.) சோம்பல்கொள்ளுதல் (நெல்லை.);; to be indolent. [சோம்பு → சூம்பு → அடை-,] |
சூம்படைந்தவன் | சூம்படைந்தவன் cūmbaḍaindavaṉ, பெ. (n.) 1. சுறுசுறுப்பற்றவன் (நெல்லை.);; one who is gloomy and indolent. 2. நிலைகெட்டவன் (வின்.);; ruined person, one whose hopes have been blasted. [சோம்பு → சூம்பு + அடைந்தவன்] |
சூம்பு | சூம்பு1 sumbu-, 5 செ.கு.வி. (v.i.) மெலிந்து வாடுதல்; to wither, as hand to be blighted, as fruit; to be shrunk as countenance by sorrow. “மல்லாரும் புயுமென்றேன் சூம்பற் றோளை” (தனிப்பா. 1, 274, 16);. [சோம்பு → சூம்பு-,] சூம்பு2 simbu-, 5 செ.குன்றாவி (v.t.) சவைத்தல் (இ.வ.);; to suck, fondle with lips. [சோம்பு → சூம்பு-,] சூம்பு3 sumbu, 5 செ.குன்றாவி (v.t.) 1. கை கால் முதலிய உறுப்புகள் குச்சியாகமெலிதல்; limb becoming thin as a stick. ‘அவளது வலது கால் சூம்பியிருக்கிறது’ (உ.வ.);. 2. (முகத்தைக் குறிக்கும்போது); சிறிதாதல், குறுகுதல்; shrunken face. ‘செய்தித்தாளில் தேர்வில் அவன் தோல்வியுற்றான் என்று கண்டதும் அவன் முகம் கும்பிவிட்டது’ (உ.வ.);. [சோம்பு → சூம்பு-,] சூம்பு4 sumbu-, 5 செ.குன்றாவி, (v.t.) 1. நீர் அல்லது அரத்தம் சுண்டிச்சிறுத்து வாட்டமடைதல்; wasting or diminution in the size of a part or sliphy of the eye due to leed of blood circulation. 2. உறுப்புஉலர்தல்; drying up or withering as wasting of a part of the organism ss whole as limbs (சா.அக.);. மறுவ. சூம்பல், வாடுதல், கூம்புதல் [சோம்பு → சூம்பு-,] |
சூர நாற்றம் | சூர நாற்றம் cūranāṟṟam, பெ.(n.) முடை வீச்சம் (துர் நாற்றம்);; a fowl smell. [குரல்+நாற்றம்] |
சூரகாசிதம் | சூரகாசிதம் cūrakācidam, பெ. (n.) சிறுகடலை; small bengal gram. (சா.அக.);. |
சூரசூதன் | சூரசூதன் cūracūtaṉ, பெ. (n.) கதிரவனின் தேரோட்டியாகிய அருணன் (சங்.அக);; Sun’s charioteer. [சூரன் (கதிரவன்); → சூரசூதன்] |
சூரசேனம் | சூரசேனம் cūracēṉam, பெ. (n.) ஐம்பத்தாறு நாடுகளில் வடமதுரையைச் சூழ்ந்துள்ள நாடு (சங்.அக.);; the country around vada Mathurai one of the 56 countries. |
சூரடி-த்தல் | சூரடி-த்தல் Suradi, 4 செ.கு.வி. (v.i.) மயிர் முதலியன தீப்படுதலால் கருகல் நாற்றம் வீசுதல் (யாழ்ப்.);; to emit offensive smell, as burning hair or wool. [சூர் + அடி-,] |
சூரணக்கிழங்கு | சூரணக்கிழங்கு cūraṇakkiḻṅgu, பெ. (n.) கரனைக்கிழங்கு; elephant yam (சா.அக);. [சூரணம் + கிழங்கு] |
சூரணஞ்சனி | சூரணஞ்சனி cūraṇañjaṉi, பெ. (n.) 32 பரங்கி வைப்புநஞ்சுகளில் ஒன்றான செய்ந்நஞ்சு; one of the thirty two kinds of prepared poisons (சா.அக);. |
சூரணஞ்சம் | சூரணஞ்சம் cūraṇañjam, பெ. (n.) காட்டுக் கரணை; wild foot yam (சா.அக.);. [சூரணம் → சூரணஞ்சம்] |
சூரணத்தண்டு | சூரணத்தண்டு cūraṇattaṇṭu, பெ. (n.); கரணைக்கிழங்கின் தண்டு; stem of elephant yam (சா.அக.). [சூரணம் + தண்டு] |
சூரதாரு | சூரதாரு cūratāru, பெ. (n.) தேவதாரு; deodar cedar (சா.அக.);. |
சூரத்ததிவிடயம் | சூரத்ததிவிடயம் cūraddadiviḍayam, பெ. (n.) மருந்துப்பண்டம்; a medicinal drug. [சூரத்து2 + அதிவிடயம்] |
சூரத்தனம் | சூரத்தனம் cūrattaṉam, பெ. (n.) சூரம்1 பார்க்க;see suram1. [சூரம் + தனம்] |
சூரத்தாவிரை | சூரத்தாவிரை cūrattāvirai, பெ. (n.) சூரத்து நிலாவிரை பார்க்க;see surattu-nilavirai, srican senna, as from surat. [சூரத்து2 + ஆவிரை] |
சூரத்து | சூரத்து1 cūrattu, பெ. (n.) சூரம்1 பார்க்க;see suram1. மிகவும் சூரத்துக் காட்டுகிறான் (இ.வ.);. [சூரம் → சூரத்து] |
சூரன் | சூரன்1 cūraṉ, பெ. (n.) 1. மறவன் (பிங்.);; warrior, man of valour, hero. “துறப்பில ரறமெனல் சூர ராவதே” (கம்பரா. தைவமாட்டு. 30);. 2. சூரபதுமன் (பிங்.); பார்க்க;see sura-paduman. “சூரனென் றுரைபெற்றுள்ள தொல்லையோன்” (கந்தபு. இரண். சூரபன்மன். 248);. 3. நாய் (பிங்);; dog. மறுவ. வீரன் [சுள் → சுர் → சூர் → சூரன்] சூரன்2 cūraṉ, பெ. (n.) 1. ஞாயிறு; Sun. “காதற் சூரனை யனைய சூரா” (பாரத. பதினேழாம் 49);. 2. நெருப்பு (பிங்.);; fire. [/சுள் → சுர் → சுரம் → சுரன் → சூரன்] சூரன்3 cūraṉ, பெ. (n.) 1. ஒருவகைச் செய்ந்நஞ்சு; a prepared arsenic. 2. மீன்; fish. 3. அரிமா; lion. 4. மூஞ்சூறு; musk rat. 5. எரியுப்பு; sal ammoniac. 6. சேவல்; cock. 7. மாமரம்; mango tree. 8. கரடி; bear (சா.அக.);. |
சூரன்கனி | சூரன்கனி cūraṉkaṉi, பெ. (n.) 1. மாம்பழம்; mango fruit. 2. மாங்காய்; raw mango fruit. [சூரன் + கனி] |
சூரன்பாசாணம் | சூரன்பாசாணம் cūraṉpācāṇam, பெ. (n.) கொச்சிவீரம்; a corrosive sublimate formerly prepared at Cochin. [சூரன் + பாசாணம்] |
சூரன்பாடு | சூரன்பாடு cūraṉpāṭu, பெ.(n.) சூரனைக் கொல்லும் காட்சிகள் கலைநயத்துடன் so; enacting the play of killing the demon Curan. [சூரன்+பாடு] |
சூரபதுமன் | சூரபதுமன் cūrabadumaṉ, பெ. (n.) முருகக் கடவுளாற் போரில் இருகூறாக்கப்பட்ட அகர வேந்தன் (கந்தபு.);; an Asuraking slained in battle by Lord Murugan. [சூரன் + பதுமன்] |
சூரபன்மன் | சூரபன்மன் cūrabaṉmaṉ, பெ. (n.) சூரபதுமன் பார்கக;see Sura-paduman. “துண்ணென மீள்வனாற் சூரபன்மனே” (கந்தபு. இத்திரன்க.4);. |
சூரபற்பன் | சூரபற்பன் cūrabaṟbaṉ, பெ. (n.) சூரபதுமன் (சங்.அக.); பார்க்க;see Sura-paduman. |
சூரப்பட்டைச்சத்து | சூரப்பட்டைச்சத்து cūrappaṭṭaiccattu, பெ. (n.) சுரப்பட்டைச்சத்து பார்க்க;see Sura-p-pattai-c-cattu (சா.அக.);. [சூரம் + பட்டை + சத்து] |
சூரப்பத்திரி | சூரப்பத்திரி cūrappattiri, பெ. (n.) ஒருவகைச் சாதிப்பத்திரி; myristica attenanata available (சா.அக.);. |
சூரப்பழம் | சூரப்பழம் cūrappaḻm, பெ. (n.) சூரைப்பழம் பார்க்க;see Stirai-p-palam (சா.அக.);. |
சூரப்பானு | சூரப்பானு cūrappāṉu, பெ. (n.) ஒருவகைச் சாதிக்காய்; Travance or nutmeg (சா.அக.);. [சூரை + பானு] |
சூரப்புத்தி | சூரப்புத்தி cūrapputti, பெ. (n.) அறிவாற்றல் (யாழ்ப்.);; ingenuity, intellectual ability. [சூரன் + புத்தி] |
சூரப்புலி | சூரப்புலி cūrappuli, பெ. (n.) அஞ்சா மறவன் (வீரன்); (உ.வ.);; dauntless hero, generally used in contempt. [சூரன் + புலி] |
சூரமானம் | சூரமானம் cūramāṉam, பெ. (n.) சூரத்தனம் (யாழ்.அக.);. பார்க்க;see Sura-t-tanam. [சூரம் + மானம்] |
சூரம் | சூரம்1 cūram, பெ. (n.) மறம் (சூடா.);; valour, bravery, heroism. [சுள் → சுர் → சூர் → சூரம்] சூரம்2 cūram, பெ. (n.) 1. கொண்டைக்கடலை; Bengal gram. 2. வால்மிளகு; tail pepper (சா.அக.);. [சூர் → சூரம்) சூரம்3 cūram, பெ. (n.) ஒருவகை மரம் (M.M. 787);; evergreen cyprus tree. சூரம்4 cūram, பெ. (n.) அச்சம் (அக.நி.);; fear, terror. [சூர் → சூரம்] |
சூரம்புளி | சூரம்புளி cūrambuḷi, பெ.(n.) திருவாடானை வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Tiruvadana Taluk. [சூரல்-சூரம்+புளி] |
சூரரமகளிர் | சூரரமகளிர் cūraramagaḷir, பெ. (n.) தெய்வப் பெண்கள் (பிங்.);; celestial maidens. [சூர்1 + அர + மகளிர்] |
சூரல் | சூரல்1 cūral, பெ. (n.) சுழித்தடிக்கை; whirling, as of wind. “சூரலங் கடுவளியெடுப்ப யெடுப்ப” (அ.க.நா.1.);. [சூர் → சூரல்] சூரல்2 cūral, பெ. (n.) 1. பிரம்பு; common rattan. “வள்ளியும் வகுந்துஞ் சுள்ளியுஞ் சூரலும்” (பெருங். உஞ்சைக். 46:276.);. 2. செடி வகை; oblique-leaved jujube. “விரிமல ராவிரை வேரல் சூரல்” (குறிஞ்சிப். 71);. 3. நரியிலந்தை; small lround-errate-obtuse leaved jujube. ம. சூரன் [சூர் → சூரல்] |
சூரளம் | சூரளம் cūraḷam, பெ. (n.) கரணைக்கிழங்கு; elephant foot yam (சா.அக.);. |
சூரவிதளம் | சூரவிதளம் cūravidaḷam, பெ. (n.) செழுமலர்க் கொன்றை; a kind of cassia. |
சூராட்டி | சூராட்டி cūrāṭṭi, பெ. (n.) a female devil-dancer “மற்றவன்றன் மொழிகேட்ட வரைச் சூராட்டி” (பெரியபு. கண்ணப்ப. 51.);. [சூள் → சூர் + ஆட்டி] |
சூராதியூடு | சூராதியூடு cūrātiyūṭu, பெ. (n.) அழுகண்ணி; Indian weeping tree (சா.அக.);. [சூராதி + பூடு] |
சூரி | சூரி1 cūri, பெ. (n.) 1. நத்தைச்சூரி; bristly button weed. 2. புளிச்சை; Indian brown hemp. [சூரி → சூரி] சூரி2 cūri, பெ. (n.) 1. மறக்குடி மகள்; heroic woman. 2. மாகாளி (பிங்.);; goddess Durga. “நான்முகன் வணங்கு மலர்த்தாட் சூரி” (அரிச்.பு.பாயி.9);. 3. காடுகாள் (பிங்.);; goddess of the forest. [சூரன் → சூரி] சூரி3 cūri, பெ. (n.) 1. ஞாயிறு (அக.நி.);; Sun. 2. எருக்கு (மலை.);; madar plant. [சூர் → சூரி] சூரி4 cūri, பெ. (n.) 1. சூரிக்கத்தி பார்க்க;see Suri-k-katti. 2. எழுதும் ஓலையில் துளையிட உதவுங்கருவி; a small double-pointed iron style for boring olai leaves. ம., க., து. சூரி;தெ. ச்சூரி [சுள் → சுர் → சூர் → சூரி] சூரி5 cūri, பெ. (n.) வெப்பு நோய்; small – pox. [சூர் → சூரி] |
சூரிகை | சூரிகை cūrigai, பெ.(n.) சிற்பங்களில் காணப்பெறும் ஒரு போர்க்கருவி; a weapon shown in the sculpture. [குர்-குரிகை] |
சூரிக்கத்தி | சூரிக்கத்தி cūrikkatti, பெ. (n.) கூர்மையான ஒரு ஒருவகைக் கத்தி (உ.வ.);; a kind of sharp knife. க. சூரிக்கத்தி;தெ. சூரிக்கத்தி [சூரி + கத்தி] |
சூரிக்காயளவு | சூரிக்காயளவு cūrikkāyaḷavu, பெ. (n.) இளகிய மருந்தின் அளவைச் சுட்டிக்காட்டக் கூறப்படும் ஒப்பளவு; a measure of medicine about the size of Suri-k-kay (சா.அக.);. ஒ.நோ. கழற்சிக்காயளவு [சூரிக்காய் + அளவு] |
சூரிக்காய் | சூரிக்காய் cūrikkāy, பெ. (n.) புளிச்சைக்காய்; acid cucumber tree (சா.அக.);. [சூரி + காய்] |
சூரிக்கிளிஞ்சல் | சூரிக்கிளிஞ்சல் cūrikkiḷiñjal, பெ. (n.) பிளவுக் கிளிஞ்சில்; bivalve shell. [சூரி + கிளிஞ்சல்] |
சூரிக்கொழுந்து | சூரிக்கொழுந்து cūrikkoḻundu, பெ. (n.) புளிச்சைக்கீரைத் துளிர்; young shoot or tender leaves of hemp leaved hibiscus (சா.அக.);. [சூரி + கொழுந்து] |
சூரினர் | சூரினர் cūriṉar, பெ. (n.) தெய்வப் பெண்கள் (கந்தபு. மலை. 47);; celestial maidens. [சூர் → சூரி → சூரினர்] |
சூரிபத்திரம் | சூரிபத்திரம் cūribattiram, பெ. (n.) புளிச்சைக் கீரையிலை; leaves of hibiscus (சா.அக.);. [சூரி + பத்திரம்] |
சூரிப்பட்டை | சூரிப்பட்டை cūrippaṭṭai, பெ. (n.) கூரையின் முகவாய்ப்பட்டை; cave board. ம. சூருப்பட்டெ [சூரி + பட்டை] |
சூரிப்பலகை | சூரிப்பலகை cūrippalagai, பெ. (n.) கதவு நிலையின் தலையிற் பொருத்தும் பார்வைப் பலகை; plank placed on the transom of a door. [சூரி + பலகை] |
சூரிப்புகை | சூரிப்புகை cūrippugai, பெ. (n.) ஒட்டடை; smoky deposit on the spider web (சா.அக.);. [சூரி + புகை] |
சூரிமீன் | சூரிமீன் cūrimīṉ, பெ. (n.) கடல்மீன் வகையுளொன்று; a kind of sea fish. [சூரி + மீன்] |
சூரிமுள்ளு | சூரிமுள்ளு cūrimuḷḷu, பெ. (n.) சூரையிலந்தை; jujube (சா.அக.);. [சூரி + முள்ளு] |
சூரியமூலை | சூரியமூலை cūriyamūlai, பெ.(n.) குடமூக்கு (கும்பகோணம்); வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Kumbakonam Taluk. [சூரியன்+மூலை] |
சூரியானி | சூரியானி cūriyāṉi, பெ. (n.) 1. கத்தியைக் கொண்டு செய்யப்படும் அறுவைமருத்துவம்; surgical operation. 2. முரட்டு மருத்துவம்; barbarous way of treating diseases (சா.அக.);. [சூரி → சூரியானி] |
சூரியிண்டு | சூரியிண்டு cūriyiṇṭu, பெ. (n.) கழற்சிக்காய்; seed of caesalpinia bonducella (சா.அக.);. [சூரி + இண்டு] |
சூரியிலந்தை | சூரியிலந்தை cūriyilandai, பெ. (n.) ஒருவகை இலந்தை; a kind of jujube (சா.அக.);. [சுள் (முள்); → சுர் → சூர் → சூரி] |
சூரிவித்து | சூரிவித்து cūrivittu, பெ. (n.) நத்தைச்சூரி விதை; seed of the button weed plant (சா.அக.);. [சூரி (முள்); + வித்து] |
சூருக்கத்தி | சூருக்கத்தி cūrukkatti, பெ. (n.) சூரிக்கத்தி (இ.வ.); பார்க்க;see Suri-k-katti. [சூரி → சூரு + கத்தி] |
சூருசரக்கல் | சூருசரக்கல் sūrusarakkal, பெ. (n.) சுக்கான்கல்; lime stone (சா.அக.);. [சூரி → சூரு + சரக்கல்] |
சூருமகந்தம் | சூருமகந்தம் cūrumagandam, பெ. (n.) தருப்பைப்புல்; sacrificial grass (சா.அக.);. மறுவ. நாணல் [குரு + மகந்தம்] |
சூருமம் | சூருமம் cūrumam, பெ. (n.) 1. கருப்பூரப்புல்; lemon grass. 2. சூருமகந்தம் பார்க்க;see Surumagandam (சா.அக.);. [சூர் → சூருமம்] |
சூருறை | சூருறை cūruṟai, பெ. (n.) கத்தியால் அறுக்கும் மருத்துவம்; surgical operation (சா.அக);. [சூர் + உறை] |
சூரேகம் | சூரேகம் cūrēkam, பெ. (n.) பேய்ப்புடல்; wild snake gourd, devils gourd (சா.அக.); |
சூரை | சூரை cūrai, பெ.(n.) மதுராந்தகம் வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Madurandagam Taluk [சூர்+சூரை(செடி);] சூரை cūrai, பெ. (n.) 1. இலந்தை; oblique leaved jubube. “கான்றையுஞ் சூரையுங் கள்ளியும் அடர்ந்து” (மணிமே. 6:81);. 2. தூது வளை (மலை.);; three lobed nightshade. 3. கருஞ் சூரை (K.R.);; hedge coper shrub. 4. மணி பிடியாப்பயிர் (வின்.);; growing grain not eared. 5. பயிரில் விழும் நோய்வகை (இ.வ.);; a blight affecting growing corn. 6. மீன்வகை; tunny species of fish. 7. இரண்டடி நீளமும் நீலநிறமுமுள்ள மீன்வகை; tunny-fish, bluish, attaining 2ft. in length. [சூர் → சூரை] |
சூரைக்காரை | சூரைக்காரை cūraikkārai, பெ. (n.) 1. முடி மயர்; tuft of hair on the crown of the head. 2. சூரைப்பழம்; a fruit (சா.அக);. [சூரை + காரை] |
சூரைக்காற்று | சூரைக்காற்று cūraikkāṟṟu, பெ. (n.) சூறைக்காற்று (வின்); பார்க்க;see surai-k-karru. [சூரை + காற்று] |
சூரைமான் | சூரைமான் cūraimāṉ, பெ. (n.) பொன்னாங் கண்ணி; water olive (சா.அக.);. [சூரை + மான்] |
சூரைமுள்ளி | சூரைமுள்ளி cūraimuḷḷi, பெ. (n.) சூரையிலந்தை; oblique leaved jujubi (சா.அக.);. மறுவ. சூரைமுள்ளு [சூரை + முள்ளி] |
சூர் | சூர்1 cūr, பெ. (n.) 1. அச்சம்: fear. “சூருறு மஞ்ஞையிற் சோர்ந்த கூந்தலர்” (பெருங். உஞ்சைக். 44:22);. 2. துன்பம்; suffering. “சூர்தான்வந் தழிவேன்றனை” (இரகு. சீதைவ. 133);. 3. நோய் (பிங்.);; disease. 4. கடுப்பு; pungency. ‘சூர்நறா வேந்தினாள்’ (பரிபா. 7:62);. 5. ஏய்ப்பு (அக.நி.);; deceit, guile. 6. கொடுமை; cruelty. சூரரமகளிர் ஆடுஞ்சோலை (திருமுரு. 41);. 7. கொடுந்தெய்வம்; malignant deity. “உருமுஞ்சூரும்” (குறிஞ்சிப். 255);. 8. தெய்வ மகளிர்; celestial maidens. “சுனைவாய் நிறைக்குஞ் சூருடைச் சிலம்பில்” (பெருங். உஞ்சைக். 50:40);. 9. மிளகு (மலை);; black-pepper. 10. வால்மிளகு (மலை.);; cubeb. ம. சூர். [சுள் → சுர் → சூர் (வே.க.);] சூர்2 sur, 4 செ.குன்றாவி, (v.t.) அச்சுறுத்தல்; to frighten. “சூர்த்துக் கடை சிவந்த சுடுநோக்கு” (சிலப். 5:84);. [சூர்1 – சூர்2] சூர்3 Sur, 4 செ.கு.வி. (v.i.) 1. கொடுமை செய்தல் (திருமுரு. 48, உரை);; to be cruel. 2. சூழலுதல்; to revolve, whirl round. “சூர்த்த நோக்கு” (அக.நி);. [சூர்1 → சூர்3] சூர்4 Sur, 4 செ.குன்றாவி (v.t.) கவர்தல் (யாழ்ப்.);; to get by unfair means, as property. [சூர்1 → சூர்4] சூர்5 Sur, 4 செ.குன்றாவி (v.t.) 1. தனிமைப் படுத்துதல், பொறுக்குதல்; to pick, separate. 2. வகிர்தல், பிளத்தல்; to bore, to pierce, scoope out. ‘பழம் நல்லதா என்று சூர்ந்து பார்’ (இ.வ.);. ம. சூருக [சுள் → சுளி → சகி (சுகிர்); → சூர்-,] சூர்6 cūr, பெ. (n.) சூரபதுமன் பார்க்க;see surapaduman. “சூர்நவை முருகன்” (புறநா. 23:4);. [சுள் → சுர் → சூர்] சூர்7 cūr, பெ. (n.) 1. ஆண்மை; valour. “வான் பகையின் சூர்ழிந்திட” (கம்பரா. பிரமாத். 76);. 2. அஞ்சாமை (சூடா.);; fearlessness, courage. [சூர்6 → சூர்7] சூர்8 cūr, பெ. (n.) சூரன்2, 1 பார்க்க;see suran2,1. “சூர்புகலரியது…தொன்மதில்” (கம்பரா. கவந்த.21);. [சுள் → சுர் → சூர்] |
சூர்க்கத்தி | சூர்க்கத்தி cūrkkatti, பெ. (n.) சூரிக்கத்தி பார்க்க;see suri-k-katti. [சூர் + கத்தி] |
சூர்க்கோடரி | சூர்க்கோடரி cūrkāṭari, பெ. (n.) ஈட்டி எனப்படும் படைக்கருவி; pole-axe. [சூர் + கோடரி] |
சூர்த்தநோக்கு | சூர்த்தநோக்கு cūrttanōkku, பெ. (n.) கொடுமை (அக.நி);; cruelty. [சூர்2 + நோக்கு → சூர்த்ததோக்கு] |
சூர்த்தம் | சூர்த்தம் cūrttam, பெ. (n.) நடுக்கம் (திருமுரு. 48, வேறுரை);; trembling. [சூர் → சூர்த்தம்] |
சூர்ப்பகை | சூர்ப்பகை cūrppagai, பெ. (n.) சூரபதுமனின் பகைவனான முருகக்கடவுள்; Lord Murugan, as the foe of Suran. ‘சூர்ப்பகை தொட்ட தோரார்” (கந்தபு. வள்ளியம். 154);. [சூர் + பகை] |
சூர்ப்பு | சூர்ப்பு cūrppu, பெ. (n.) 1. கொடுந்தொழில்; cruel, ferocious deed. “விறல் விளங்கிய விழுச் சூர்ப்பின்” (மதுரைக். 33);. 2. சுழற்சி (சங்.அக);; whirling, revolving. 3. கைக்கடகம்; bracelet “சுடர்விடு பசும்பூட் சூர்ப்பமை முன்கை” (புறநா. 153:3); [சூர் → சூர்ப்பு] |
சூர்ப்புகா | சூர்ப்புகா cūrppukā, பெ. (n.) கழற்கொடி; bonduc nut creeper (சா.அக.);. |
சூர்மகள் | சூர்மகள் cūrmagaḷ, பெ. (n.) வீராங்கனை; amazon. [சூர் + மகள்] சூர்மகள் cūrmagaḷ, பெ. (n.) 1. கொற்றவைக்கு ஏவற்றொழில் புரியும் இடாகினி அல்லது ஒகினி என்ற பெண்பேய் (பிங்);; ldakini or Yögini, the female attendant of Korravai. 2. ஏமாற்றுப்பெண் (அக.ந.);; deceitful, woman. [சூர் + மகள்] |
சூர்மிளகு | சூர்மிளகு cūrmiḷagu, பெ. (n.) வால்மிளகு; pepper (சா.அக.);. [சூர் + மிளகு] |
சூர்வு | சூர்வு cūrvu, பெ. (n.) வகிர்தல் (சங்.அக);; piercing, boring. [சூர்3 → சூர்வு) |
சூறன் | சூறன் cūṟaṉ, பெ. (n.) மூஞ்சுறு (பிங்.);; grey musk – shrew. [சூறு + அன்] |
சூறல் | சூறல் cūṟal, பெ. (n.) தோண்டுகை; scooping digging out. ம. குறல் [சூல் → சூறல்] |
சூறாவளி | சூறாவளி cūṟāvaḷi, பெ. (n.) சுழற்காற்று, கடுங்காற்று; whirlpool, tempest “சூறாவளிபோற் சுழற்றுஞ் சிறுபுன்றுரும்பு”[நன்னெறி. 11). ம. சூறாவளி; தெ. சூரகருவலி;பட சுற்றிகாயி [சூறா + வளி] |
சூறாவளிக்கிணறு | சூறாவளிக்கிணறு cūṟāvaḷikkiṇaṟu, பெ. (n.) உள்ளுறைடக கிணறு (இ.வ.);; under-well inside a well. [சூறாவளி + கிணறு] |
சூறாவளிச்சட்டம் | சூறாவளிச்சட்டம் cūṟāvaḷiccaṭṭam, பெ. (n.) கிணற்றினடியில் வைக்கும் நெல்லிமரச் சட்டம் (வின்.);; frame of nelli wood place at the bottom in constructing a well. [சூறா + வளி + சட்டம்] |
சூறாவாரி | சூறாவாரி cūṟāvāri, பெ. (n.) சூறாவளி பார்க்க: see Súrávali [சூறா + வாரி] |
சூறு | சூறு cūṟu, பெ. (n.) எருவாய்: anus. [சூத்து → சூற்று → சூறு] |
சூறு-தல் | சூறு-தல் cūṟudal, 5 செ. குன்றாவி (v.t.) சூழ்தல்; to surround, cncompass. “சூறிய விமையோர்” (பாரத காண்டவ.31);. |
சூறை | சூறை1 cūṟai, பெ. (n.) 1. நெற்றி; forehead 2. தூதுவனை; three lobed noght shade (சா.அக.);. சூறை2 cūṟai, பெ. (n.) கழுத்தின் பின்குழி (பிங்);: hallow in the nape of the neck. சூறைகொள்(ளு);தல் சூறை cūṟai, பெ. (n.) 1. சுழல்காற்று; whirl wind. “சூறைமாருதத்து” (திருவாச. 3:10);. 2. கொள்ளை (திவா.);; decoity 3. பயிரில் விழும் நோய்வகை; a blighting disease of crops. 4. பனிச்சை என்ற மயிர்முடிவகை; a kind of dressing the hair in a knot. “வட்டச் சூறையர்” (சீவக. 632);. 5. சல்லடம் (சீவக. 632 விசேடக் குறிப்பு);; loin cloth 6. இரண்டடி நீளமும் கருநீல நிறமுமுள்ள கடல் மீன்; tunny fish bluish attaining 2 ft. in length. 7. சூறைக்கருவி (பதார்த்த. 894); பார்க்க;see surai-k-kuruvi. ம. சூற [சூறு + ஐ] |
சூறைகொள்(ளு)-தல் | சூறைகொள்(ளு)-தல் cūṟaigoḷḷudal, 7 செ.குன்றாவி. (v.t.) சூறையாடுதல்; “சோதியான் சூழ் பனிநீர் சூறைகொளு மாறே போல்” (பட்டினத் திருப்பா, தெஞ்சொடு. 32); [சூறை + கொள்-,] சூறைகோட்பறை |
சூறைகோட்பறை | சூறைகோட்பறை cūṟaiāṭpaṟai, பெ. (n.) வழிப்பறி செய்வோர்க்குரிய பாலைப்பறை (தொல். பொருள். 18. உரை);; robber’s drum. [குறை + கொள் + பறை – குறை கோட்பறை] |
சூறைக்காய் விடுதல் | சூறைக்காய் விடுதல் cūṟaikkāyviḍudal, பெ. (n.) ஊர்வலத்தின் போது நிலக்கடலை, முந்திரிக்கொட்டை முதலியவற்றை வாரி இறைத்தல்; to throw edibles during processed. 2. சிற்றுார்த் தெய்வங்களுக்கு நேர்த்திக்கடன் பொருட்டு சிதறு தேங்காய் உடைத்தல்; to break coconut on a vow to village deity. [குறை+காய்+விடு] |
சூறைக்காரன் | சூறைக்காரன் cūṟaikkāraṉ, பெ. (n.) கொள்ளையடிப்பவன்; robber, plunderer. “நிருதர்புரச் சூறைக்காரப் பெருமாளே” (திருப்பு., 170);. [சூறை + காரன்] |
சூறைக்காற்று | சூறைக்காற்று cūṟaikkāṟṟu, பெ. (n.) சுழல் பாற்று (இ.வ.);; Whirlwind [சூறை + காற்று] |
சூறைக்குருவிக்கறி | சூறைக்குருவிக்கறி cūṟaikkuruvikkaṟi, பெ. (n.) குட்டம், சோகை, குன்மம், வீக்கம், ஆறாப்புண் இவற்றைப் போக்கும் சூறைக் குருவியின் கறி; the flesh of the Šurai kuruvi controls leprosy, worms, severe rheumatic affections (சா.அக.);. [சூறைக்குருவி + கறி] |
சூறைச்சின்னம் | சூறைச்சின்னம் cūṟaicciṉṉam, பெ. (n.) கொள்ளையிடுவோர்க்குரிய ஊதுகொம்பு; robber’s horn. “ஆறெறி பறையுஞ் சூறைச் சின்னமும்” (சிவப்.12.10);. [சூறை + சின்னம்] |
சூறைத்தேங்காய் | சூறைத்தேங்காய் cūṟaittēṅgāy, பெ. (n.) நேர்த்திக் கடனாகத் தெய்வத்தின் முன்னிலையில் உடைக்கும் சிதறுதேங்காய்; coconuts dashed on the ground before a shrine in fulfilment of vow. [குறை + தேங்காய்] |
சூறையர் | சூறையர் cūṟaiyar, பெ. (n.) பரத்தையர்; prostitute “தயங்கு குழற் சூறையர்” (தஞ்சைவா. 377);. [சூளை2 → குறை → குறையர்] |
சூறையாடு | சூறையாடு1 cūṟaiyāṭudal, 5 செ.குன்றாவி. (v.t.) கொள்ளையடித்தல்; to plunder, pillage “அறிவினைச் சூறையாட” (கம்பரா. நகர்நீ.200.);. [சூறை + ஆடு-,] |
சூறையாடு-தல் | சூறையாடு-தல் cūṟaiyāṭudal, 18 செ. குன்றாவி (v.t.) தலைசுற்றல்; to be dizzy from disease, from hunger (செ.அக.);, [சூறை + ஆடு-,] |
சூறைவிடு-தல் | சூறைவிடு-தல் cūṟaiviḍudal, 18 செ.குன்றாவி. (v.t.) 1. கொள்ளையிடச் செய்தல்; to permit plunder. 2. சொத்தைப் பிறர்க்கு வாரிவிடுதல்; to give one’s things to be appropriated promiscuousiy. தெ. சூரவிடுச்சு;க. குறெவிடு. [சூறை + விடு-,] |
சூறைவேடன் | சூறைவேடன் cūṟaivēṭaṉ, பெ. (n.) சுறாமீன் வகையுளொன்று; a kind of shark sea-fish (சா.அக.);. [சூறை + வேடன்] 316 சூனர் |
சூற்கருப்பை | சூற்கருப்பை cūṟkaruppai, பெ. (n.) கருப்பந் தாங்கிய பை; the pregnantuterus-graviduterus (சா_அக.);. [சூல் + கருப்பை] |
சூற்காப்பு | சூற்காப்பு cūṟkāppu, பெ. (n.) முதன்முறையாக கருக்கொண்ட கருப்பிணிகட்கு ஐந்தாவது அல்லது ஏழாவது மாதங்களில் அணிவிக்கப்படும் வளைகாப்பு; bracelets put ceremonially on the arms of pregnant lady in the 5th or 7th month after conception (செ.அக.);. [சூல் + காப்பு] |
சூற்கொள்ளல் | சூற்கொள்ளல் cūṟkoḷḷal, பெ. (n.) கருப்பங் கொள்ளுகை; to conceive, to be pregnant (சாஅக.);. [சூல் + கொள்ளல்] |
சூற்கொள்ளாமை | சூற்கொள்ளாமை cūṟkoḷḷāmai, பெ. (n.) கருத்தலிக்காமை; absence of pregnancy (சா.அக.);. [சூல் + கொள்ளாமை] |
சூற்சராயு | சூற்சராயு cūṟcarāyu, பெ. (n.) சூற்கருப்பை பார்க்க;see Stir-karuppai (சா.அக.);. [சூல் + சராயு] |
சூற்சாதம் | சூற்சாதம் cūṟcātam, பெ. (n.) முதன்முறையாக கருக்கொண்ட பெண்ணுக்குச் சுற்றத்தார் இடும் விருந்து (தஞ்சை,);; feast given by relatives to a woman in her first pregnancy. [சூல் + சாதம்] |
சூற்பிபாசம் | சூற்பிபாசம் cūṟpipācam, பெ. (n.) நிரய (நரக); வகை (சி.போ.பா. 2, 3, பக். 204);: a hell. [சூல் + பிபாசம்] சூற்பெண்டு |
சூற்பெண்டு | சூற்பெண்டு cūṟpeṇṭu, பெ. (n.) சூலி; pregnant woman. ‘சூற்பெண்டுகள் கரமேறுமாபோலே’ (ஈடு, 2.10: 2);. [சூல் + பெண்டு] |
சூலகக்கேசரி | சூலகக்கேசரி cūlagagācari, பெ. (n.) எல்லா வகைச் சூலைநோய்களும் தீரக்கொடுக்கும் ஆயுள்வேத மருந்து; an Ayurvedic preparation for all stabing pain, colic pain etc. (சா.அக.);. [சூலகம் + கேசரி] |
சூலகிருது | சூலகிருது cūlagirudu, பெ. (n.) பெருங்காயம் (மூ.அ.);; as a foetida. [சூலம் + கிருது] |
சூலக்கல் | சூலக்கல் cūlakkal, பெ.(n.) பொள்ளாச்சிவட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Pollachi Taluk. [குலம்+கல்] சூலக்கல் cūlakkal, பெ. (n.) 1. சிவன் கோயில்களுக்கு விடப்பட்ட நிலங்களின் எல்லையில் நடப்படும் சூலக்குறியுள்ள கல் (கல்.);; boundary-stone bearing trident mark for lands granted to Sivan temples. 2. அளவைக்கல் (இ.வ.);; survey stones. [சூலம் + கல்] |
சூலக்கால் | சூலக்கால் cūlakkāl, பெ. (n.) சூலக்குறி பொறிக்கப் பெற்ற சிவன் கோயில் அளவை மரக்கால் (தெ.க.தொ.5,8);; measure of capacity marked with trident, used in Sivan temples. [சூலம் + கால்] |
சூலக்கால்வண்டி | சூலக்கால்வண்டி cūlakkālvaṇṭi, பெ. (n.) சிவன்கோயிலில் பயன்படும் கட்டைவண்டி வகை (இ.வ.);; a kind of strong rough-made cart, used generally in Sivan temples. [சூலம் + கால் + வண்டி] |
சூலக்காளை | சூலக்காளை cūlakkāḷai, பெ. (n.) 1. சிவன் கோயிலுக்காகச் சூலம்பொறித்து விடப்பட்ட காளை; bull brandcd with trident mark and dedicated to Sivan shrine. 2. மனம் போன போக்கில் திரிபவன்; loafer. [சூலம் + காளை] |
சூலக்கினி | சூலக்கினி cūlakkiṉi, பெ. (n.) 1. பேய்ப்புல்; devil grass. 2. கருஞ்சீரகம்; black cumin (சா.அக.); |
சூலக்குறடு | சூலக்குறடு cūlakkuṟaḍu, பெ. (n.) சூட்டுக் கோல் (யாழ்ப்.);; branding instrument. [சூலம் + குழி] |
சூலக்குழி | சூலக்குழி cūlakkuḻi, பெ. (n.) ஈமக்கடன் செய்தற்குரிய பிணக்கற்குழி (பிராமன);; pit for stones set up in funeral ceremonies. [சூலம் + குழி] |
சூலசத்துரு | சூலசத்துரு sūlasatturu, பெ. (n.) ஆமணக்கு வித்து; castor seed. [சூலம் + சத்துரு] |
சூலதாபனம் | சூலதாபனம் cūlatāpaṉam, பெ. (n.) சூல வடிவினைப் பொறித்த கற்களை நிலையாக நடுகை; creeting permancntly border stones embossed trident. [சூலம் + தாபனம்] |
சூலத்திசை | சூலத்திசை sūlattisai, பெ. (n.) சிவனது சூலம் நிற்பதால் இன்ன இன்ன திக்கு இன்ன கிழமையில் செல்கைக்கு ஆகாதென்று விலக்கப்பட்ட திக்கு; the direction believed to be affected by varasulai as inauspicious. [சூலம் + திசை] |
சூலத்தீபம் | சூலத்தீபம் cūlattīpam, பெ. (n.) கோயில் விளக்கு வகை (பரத ஒழிவி. 41-43);; a kind of temple lamp. [சூலம் + தீபம்] |
சூலத்தீவர்த்தி | சூலத்தீவர்த்தி cūlattīvartti, பெ. (n.) சூலம் போன்று, மூன்றுகவருள்ள தீப்பந்தம் (வின்);; torch with three prongs in the form of trident, used in temples. [சூலம் + தீவர்த்தி] |
சூலநட்டம் | சூலநட்டம் cūlanaṭṭam, பெ. (n.) வரிக்கூத்து வகை (அபி.சிந்.);; a masquerade dance. [சூலம் + நட்டம்] |
சூலநாசனம் | சூலநாசனம் cūlanācaṉam, பெ. (n.) கருவையழிக்கும் ஒருவகையுப்பு: a kind of Sal causing abortion (சா.அக.);. [சூலம் + நாசனம்] |
சூலநாமா | சூலநாமா cūlanāmā, பெ. (n.) செழுமலர்க் கொன்றை; a kind of cassia an unknown plant (சா.அக.); |
சூலனாதி | சூலனாதி cūlaṉāti, பெ. (n.) சிறுதும்பை; small tombay (சா.அக.);. |
சூலபாணி | சூலபாணி cūlapāṇi, பெ. (n.) சூலப்படையைக் கையிலுடைய சிவன் (சூடா.);; sivan as holding the trident. [சூலம் + பாணி (கை);] |
சூலபீங்கா | சூலபீங்கா cūlapīṅgā, பெ. (n.) நாய்வேளை; wild or dog mustard (சா.அக.);. |
சூலப்பிராந்தம் | சூலப்பிராந்தம் cūlappirāndam, பெ. (n.) நிரயவகையுளொன்று (சேதுபு. தனுக்கோ. 4);; a hell. [சூலம் + பிராந்தம்] |
சூலமருது | சூலமருது cūlamarudu, பெ. (n.) பேய்க் சுடுக்காய்; Travancore myrobalan (சா.அக.);. [சூலம் + மருது] |
சூலம் | சூலம்1 cūlam, பெ. (n.) 1. முக்கவரான வேல்; trident, the three-pronged dart of Sivan. “ஊனக மாமழுச் சூலம் பாடி” (திருவாச. 9:17);. 2. இடிதாங்கி; lightning rod, as three-pronged. “ஒள்ளிலைச் சூல ….. மாடம்” (சீவக. 2527);. 3. கூரியமுனையுள்ள கழு (வின்.);; impaling stake. 4. சூலவேல் வடிவில் மாட்டுக்கு இடுஞ் சூட்டுக்குறி; brand-mark on cattle, usually trident-shaped. 5. தோணி (இரேவதி); விண்மீண் (பிங்.);; the 27th naksatra. 6. சூலை; supposed position of Sivan’s trident during week-day, considered inauspicious. வ. சூல. சூலம் வேல்வகைகளுள் ஒன்றென்பது “உருகெழு குலவேல் திரித்து” (சங்.அக.); என்னும் தொடரால் அறியப்படும். “சூல வேலைப் போல மூன்று வழி” (சிலப். 11:73, உரை.); வேல்,முருகனது சிறப்புப்படைக்கலமாகக் கொள்ளப்பட்டதுபோல், குலவேல் சிவனது சிறப்புப் படைக்கலமாகக் கொள்ளப்பட்ட தனால், சிவன்கோயிலுக்கு விடப்பட்ட நிலங்களின் எல்லைகளில் நடப்படும் சூலக்குறியுள்ள கல், ‘சூலக்கல்’ என்றும், சூலக்குறி பொறிக்கப்பெற்ற சிவன்கோயில் அளவைமரக்கால், ‘சூலக்கால்’ என்றும், சூலக்குறியிடப்பெற்ற சக்கரமுள்ள சிவன் கோயில் வண்டி, சூலக்கால்வண்டி என்றும், சிவன்கோயிலுக்காகச் சூலவடிவிற் சூடிட்டு விடப்பெற்ற காளை ‘சூலக்காளை’ என்றும், பெயர்பெறும் (வே.க.204);. “சிவபிரானது சூலம் குறுக்கே நிற்பதால் இன்னின்ன திசை, இன்னின்ன கிழமைகளில் வழிப்போக்கிற்கு ஆகாதென்றும் விலக்கப் பட்ட கிழமைக்குற்றம், கிழமைச்சூலம் எனப்படும். அஃது இன்று வாரசூலை என இலக்கியத்தில் வழங்குகிறது. ‘சூலம்’ என்பதே உலக வழக்கு “திங்கள் கிழமை தெற்கே சூலம்” என்றே மக்கள் கூறுதல் காண்க (வே.க.204);. [சூல் → சூலம்] சூலம்2 cūlam, பெ. (n.) சதுரக்கள்ளி; square spurge (சா.அக.);. சூலம்3 cūlam, பெ. (n.) 1. குத்தலுங் குடைச்சலுமுள்ள பல்வகைச் சூலைநோய்; a severe colic pain in the region of abdomen. 2. குத்தல்; pricking pain. [சூல் → சூலம்] |
சூலம்பிரி-தல் | சூலம்பிரி-தல் sulam-piri, 4 செ.கு.வி (v.i.) நீர்கட்டப் பெறுதலால் பயிர் கிளைவிட்டுத் தோன்றுதல் (இ.வ.);; to branch out and grow luxuriantly, as plant when well-watered. [சூலம் + பிசி-,] |
சூலவரி | சூலவரி cūlavari, பெ. (n.) பழைய வரிவகை (I.M.P.N.A. 255);; an ancient tax. [சூலம் + வரி] |
சூலவாசனம் | சூலவாசனம் cūlavācaṉam, பெ. (n.) ஒரு வகை உப்பு; a kind of salt (சா.அக.);. |
சூலவிளக்கு | சூலவிளக்கு cūlaviḷakku, பெ. (n.) சூல வடிவிலான விளக்குவகை (யாழ்ப்);; temple lamp in the form of trident. [சூலம் + விளக்கு] |
சூலவேல் | சூலவேல் cūlavēl, பெ. (n.) சூலப்படைக்கலம்; the trident weapon. ‘உருகெழு குலவேல் திரித்து’ (சங். அக.);. [சூலம் + வேல்] |
சூலாக்கினி | சூலாக்கினி cūlākkiṉi, பெ. (n.) நச்சுப்பாலைக் கொடி; a poisonous creeper of the mimusops genus (சா.அக.);. [சூலம் → சூலா + அக்கினி] |
சூலாடு குத்துதல் | சூலாடு குத்துதல் cūlāṭuguddudal, பெ.(n.), நாட்டுப்புறச்சடங்குகளில் ஒன்று a ritual in village. [குலாடு+குத்துதல்] |
சூலாதவிருத்தி | சூலாதவிருத்தி cūlātavirutti, பெ. (n.) சிவப்பாமணக்கு; red castor seed (சா.அக.);. |
சூலானோன் | சூலானோன் cūlāṉōṉ, பெ. (n.) வழலைக்கட்டி; soар. |
சூலாய்தம் | சூலாய்தம் cūlāytam, பெ. (n.) நீண்டதண்டின் நுனியில் மூன்றுகூரிய முனைகளையுடைய ஒருவகை வேல்; rident. ‘கையில் சூலாய்தத்துடன் நிற்கும் காளியின் உருவம், அச்சமூட்டுவதாக உள்ளது’ (உ.வ.);. [சூல் + ஆய்தம்] |
சூலி | சூலி1 cūli, பெ. (n.) கருவுற்றவள் (சூடா);; pregnant woman. “சூலி முதுகிற் சுடச்சுட” (திருக்கை வமுக்கம், கண்ணி,12);. [சூல் → சூலி] சூலி2 cūli, பெ. (n.) 1. சூலமேந்திய சிவன்; lord Sivan, as holding the trident. “சூலி தன்னருட் டுறையின் முற்றினான்” (கம்பரா. நட்புக். 37);. 2. சூலப்படை கொண்ட காளி; Kali, as holding the trident. “சூலி நீலி மாலவற் கிளங்கிளை” (சிலப். 12:68);. [சூல் → சூலம் → சூலி (வே.க.205);] |
சூலிகணம் | சூலிகணம் cūligaṇam, பெ. (n.) சூலைக்கணம் பார்க்க;see Sulai-k-kanam. [சூலி + கணம்] |
சூலிகம் | சூலிகம் cūligam, பெ. (n.) கோழி; fowl (சா.அக);. [சூல் → சூலிகம்] |
சூலிகை | சூலிகை cūligai, பெ. (n.) இடிதாங்கி; lightening rod, as three-pronged. “மாட நெடுமுகட்டின் சூலிகை” (திவ். பெரியதி. 8.3.:3);. [சூல் → சூலம் → சூலிகை] |
சூலினி | சூலினி1 cūliṉi, பெ. (n.) சூலத்தையேந்திய மலைமகள் (அபிரா.50);; goddess Parvati as holding the trident. [சூல் → சூலம் → சூலினி] சூலினி2 cūliṉi, பெ. (n.) வெற்றிலை (தைலவ. தைல. 70);; betel leaf. [சூலம் → சூலி → சூலினி] சூலினி3 cūliṉi, பெ. (n.) முதல் பண்களுள் (மேளகர்த்தாக்களுள்); ஒன்று (சங்.சந்.47);; a primary raga. [சூல் → சூலினி] சூலினி4 cūliṉi, பெ. (n.) வழலை (வின்.);; soap. |
சூலியா | சூலியா cūliyā, பெ. (n.) பிள்ளைத்தாய்ச்சி மரம்; an unknown trec (சா.அக.);. [சூல் → சூலியா] |
சூலிலை | சூலிலை cūlilai, பெ. (n.) வெற்றிலை; betel leaf (சா.அக.);. [சூல் + இலை] |
சூலுண்டா-தல் | சூலுண்டா-தல் sul-undi, 6 செ.கு.வி. (v.i.) கருப்பிணியாய் இருத்தல்; to conceive (சா.அக);. [சூல் + உண்டா-,] |
சூலுளை-தல் | சூலுளை-தல் sululai, 4 செ.கு.வி. (v.i.) 1. மகப்பேற்றுத் துன்பப்படுதல்; to travail in labour. “சங்கு சூலுளைந் தலறிய தடம்பணை” (நைடத. நாட்டுப்.5);. 2. சூலைக்குடைச்சல்; a boring pain experienced in arteritis (சா.அக.);. [சூல் + உளை-,] |
சூலெலியன் | சூலெலியன் cūleliyaṉ, பெ. (n.) ஒருவகை எலிக்கடி நச்சு நோய்; a disease due to the poison of rat bite (சா.அக.);. [சூல் + எலியன்] |
சூலேதம் | சூலேதம் cūlētam, பெ. (n.) புன்னை; a flowering tree – Alexandrian laural (சா.அக.);. |
சூலை | சூலை cūlai, பெ. (n.) காலந்தவறி நிகழும் மாதவிடாயால் ஏற்படும் மூட்டுவலி நோய், முடக்குவலி நோய், வயிற்றுளைவு நோய் முதலிய நோய்கள்; a clan of diseases including arthritic complaints, stiffness or contraction of the muscls or nerves, scrofula, rheumatism, gout, colic, spasmodic pain, complaints from irregular menses. “அன்னவனை யினிச்சூலை மடுத்தாள்வன்” (பெரியபு. 4, திருநாவுக். 48);. [சூல் → சூலை] |
சூலைகரப்பான் | சூலைகரப்பான் cūlaigarappāṉ, பெ. (n.) குழந்தைகளுக்கு உடல் முழுவதும் வெடித்துப் புண்ணாகி முகம் வாடி, கைகால் முடக்கிச் சூலத்தாற் குத்துவதைப் போல் குத்தலை உண்டாக்கும் ஒரு வகைக் கரப்பான் நோய்; a kind of cruption in children marked by cracked sores all over the body – with unbearable pain (சா.அக.);. [சூலை + கரப்பான்] |
சூலைகிருது | சூலைகிருது cūlaigirudu, பெ. (n.) பெருங்காயம்; assafoetida. மறுவ. சூலகிருது [சூலை + கிருது] |
சூலைகிருமி | சூலைகிருமி cūlaigirumi, பெ. (n.) ஊதை பிடிப்பில் காணப்படும் நீளப்பூச்சி; a long shaped bacillus found in the effusion of articular rheumatism (சா.அக.); [சூலை + கிருமி] |
சூலைக்கடுப்பு | சூலைக்கடுப்பு cūlaikkaḍuppu, பெ. (n.) சூலைவலி; piercing pain (சா.அக.); [சூலை + கடுப்பு] |
சூலைக்கட்டி | சூலைக்கட்டி cūlaikkaṭṭi, பெ. (n.) 1. தாங்க முடியாத குத்தலை உண்டாக்கும் ஒரு வகைக் கட்டி; a small kind of abscess attended with an unbearable excruiating pain. 2. அளவுக்கு அதிகமான புணர்ச்சியினால் உண்டாகும் கட்டி; venereal bubo (சா.அக.);. [சூலை + கட்டி] |
சூலைக்கட்டு | சூலைக்கட்டு cūlaikkaṭṭu, பெ. (n.) ஊதையினால் கெட்ட காற்று, அரத்தம் மூலம் மூட்டுகளிற் பரவி நடக்க முடியாத அளவிற்குக் குத்தலைத் தரும் ஒரு நோய்; a disease of metabolism dependent on the morbid vayu which by the spread of blood, makes pain in the bone-joints so much as to make painful movement (சா.அக.);. [சூலை + கட்டு] சூலைக்கடுப்பு 3. |
சூலைக்கணட் | சூலைக்கணட் cūlaikkaṇaṭ, பெ. (n.) குழந்தைகளுக்கு வாய்முதல், நெஞ்சுவரை புண்ணாகி, மூச்சுடன் இருமல்காணும் ஒரு வகைக் கணநோய்; an affection of congenital heat in children marked by inflamation of the oesophagus hard breath and cough (சா.அக.); [சூலை + கணம்] |
சூலைக்கிராணி | சூலைக்கிராணி cūlaikkirāṇi, பெ. (n.) மிகு கழிச்சலில் காணும் (தாங்க முடியாத); வயிற்றுவலி; an acute and unbearable darting pain in the stomach in an attack of chronic diarrhoca (சா.அக.); [சூலை + கிராணி] |
சூலைக்கிருது | சூலைக்கிருது cūlaikkirudu, பெ. (n.) சூலைகிருது பார்க்க: see sulai-kirudu (சா.அக.);. |
சூலைக்குச்சம் | சூலைக்குச்சம் cūlaikkuccam, பெ. (n.) நோய்வகை (கடம்ப. இலீவா 110);; a kind of discase. [சூலை + குச்சம்] |
சூலைக்குடைச்சல் | சூலைக்குடைச்சல் cūlaikkuḍaiccal, பெ. (n.) சூலைநோயில் உண்டாகும் திருகுவலி (வின்);: writhing pain in certain arthritical diseases. [சூலை + குடைச்சல்] |
சூலைக்குத்து | சூலைக்குத்து cūlaikkuttu, பெ. (n.) மாதவிடாய் தடைபடுவதால் பெண்களுக்குப் பிறப்புறுப்பினுள் உண்டாகும் ஒரு வகைக் குத்தல் நோய்; acute pain in the vagina in a female due ot the obstruction of menstrual discharge (சா.அக.);. [சூலை + சூத்து] |
சூலைக்குன்மம் | சூலைக்குன்மம் cūlaikkuṉmam, பெ. (n.) பித்தத்தில் வெப்புதோன்றி அதனால் வறட்சி கண்டு வீங்கி, அந்திநேரத்தில் குடலுாதை யோடி அனற்றுமொருவகைக் குன்மநோய்: chronic dyspepsia of acute type. [சூலை + குன்மம்] 09 சூலைநிவாரணசூரணம் |
சூலைச்சத்துரு | சூலைச்சத்துரு cūlaiccatturu, பெ. (n.) ஆமணக்கு; castor plant (சா.அக.);. [சூலை + சத்துரு] |
சூலைத்திரட்சி | சூலைத்திரட்சி cūlaittiraṭci, பெ. (n.) சூலை நீரின் திரட்சி; an accumulation of morbid fluid-sebum (சா.அக.);. [சூலை + திரட்சி] |
சூலைநாசனி | சூலைநாசனி cūlainācaṉi, பெ. (n.) 1. பெருங்காயம்; asaafoetida 2. குக்கில்; bedellium. 3. மூக்கிரட்டை; spreading hog weed. 4. சூலைநோயைத் தீர்க்கும் மருந்து; any medicinc for the relief of acute pain in gout rheumatism. 5. செம்பை; bastard sensitive plant. 6. நறுங்குறிஞ்சா; naruń-kuriñjå. மறுவ. சுற்றத்தி [குவை + நாசினி] |
சூலைநிவாரண சூரணம் | சூலைநிவாரண சூரணம் cūlainivāraṇacūraṇam, பெ. (n.) சூலை, குன்மம் இவற்றிற்குக் கொடுக்கும் ஒருவகை ஆயுள்வேத மருந்து; an ayurvedic medicine for relief of Sulai (சா.அக.);. [சூலை + நிவாரணம் + சூரணம்] சூலைநீர் |
சூலைநீர் | சூலைநீர் cūlainīr, பெ. (n.) 1. பால்வினை நோயால் பிறப்புறுப்பிலிருந்து வெளிவரும் சீழ்; whites, diseased discharge from the urethra. 2. மேகநீர் (யாழ்ப்.);; ill-humours of the body causing sülai diseases. [சூலை + நீர்] |
சூலைநோய் | சூலைநோய் cūlainōy, பெ. (n.) சூலத்தாற் குத்துவது போன்று உடம்பின், பக்கம், வயிறு, பொருத்து முதலிய பல உறுப்புகளில் காணும் வலி; on affection of a very acute shooting pain experienced, as if inflicted or caused with a trident in any part of the body such as sides, stomach, joints, etc. (சா.அக.);. [சூலை + நோய்] |
சூலைபூபதி | சூலைபூபதி cūlaipūpadi, பெ. (n.) சூலை, இசிவு, கீல்பிடிப்பு ஆகியவற்றைச் சீர்படுத்தும் ஒர் ஆயுள்வேத இதளியக்குளிகை, an ayurvedic mercurial pill prescribed for contraction of the joints such as arthritis rheumatism, gout etc attended with acute pain and apoplexy. [குவை + பூபதி] 510 சூழ்-தல் |
சூலைப்பிடிப்பு | சூலைப்பிடிப்பு cūlaippiḍippu, பெ. (n.) சூலையினால் கைகால் பொருத்துகளில் உண்டாகும் பிடிப்பு; arthritis due to gout (சா.அக.);. [சூலை + பிடிப்பு] |
சூலைப்பித்தரோகம் | சூலைப்பித்தரோகம் cūlaippittarōkam, பெ. (n.) கொப்பூழில் குத்தல், மிகுநீர் வேட்கை, வியர்வை, தினவு, நடுக்கம், குத்தல் போன்ற அறிகுறிகளுடன் உள்ளங்கை, உள்ளங்கால் எரிச்சலையும், தலை சுற்றலையும் உண்டாக்கும் பித்தநோய்; a bilious disease marked by burning sensation of the palm and the sole and whirling of the head. [சூலை + பித்தநோய்] |
சூலைப்ஹபகைச்சல் | சூலைப்ஹபகைச்சல் cūlaibhabagaiccal, பெ. (n.) சூலைநோய்களுக்குக் கொடுக்கம் மருந்துப்புகை; fumigation applied in cases of Šulai diseases (சா.அக.);. [சூலை + புகைச்சல்] |
சூலைவாயு | சூலைவாயு cūlaivāyu, பெ. (n.) 1. சூலையை உண்டாக்கும் காற்று; flatulence giving rise to sülai diseases such as colic, iliac passium gout. 2. முடக்குநோய்; rheumatism (சாஅக);. [சூவை + வாயு] |
சூல் | சூல்1 sul-, 3 செ.கு.வி. (v.i.) கருக் கொள்ளுதல்; to become pregnant. “சூலாமை சூலிற் படுந்துன்பம்” (சிறுபஞ். 75);. [சுல் → சூல்] சூல்2 sul-, 8 செ.குன்றாவி (v.t.) 1. தோண்டுதல்; to scoop, dig out, pierce. “நுங்கு சூன்றிட்டன்ன கண்ணீர்மை” (நாலடி.44);. 2. அறுத்தல்; to cut off. [சுல் → சூல்] சூல்3 cūl, பெ. (n.) 1. கருப்பம்; conception, pregnancy. “இளம்பிடி ஒரு சூல் பத்தீ னும்மோ” (புறநா.1301,2);. 2. முட்டை; egg. “ஞமலி தந்த மனவுச் சூலுடும்பின்” (பெரும்பாண். 132);. 3. முகில் நீர் நிரம்பியிருக்கை; wateriness of clouds. “சூன்முதிர் முகில்” (பரிபா. 20:3);. ம. சூல்; க. சூல்;தெ. சூலு [சுல் → சூல்] சூல்4 cūl, பெ. (n.) சூலம்; trident of sivan. “குலிசங் கதைசூல்” (சேதுபு. தேவிபுர. 27);. [சுல் → சூல்] சூல்5 cūl, பெ. (n.) யானை, குதிரை முதலியவற்றிற்கு இடும் அழகணிப் போர்வை: ornamental cloth cover for elephants, horses ete. U. Jhul [சூழ் → சூல்] |
சூல் கதிர் | சூல் கதிர் cūlkadir, பெ.(n.), கறுத்து நிற்கும் நெற்கதிர்; a ripened corn of paddy. [சூல்+கதிர்] |
சூல்கலியாணம் | சூல்கலியாணம் cūlkaliyāṇam, பெ. (n.) சீமந்தம் (இ.வ.); பார்க்க;see simandam. [சூல்2 + கலியாணம்] |
சூல்காண்(ணு-தல் | சூல்காண்(ணு-தல் sul-kan(nu)-, 16 செ.குன்றாவி, (v.t.) முதல் கருப்பம் கொண்டிருக்கும் பெண்ணைப் பணியாரங்களோடு சென்று பார்த்தல் (இ.வ.);; to visit a woman in her first pregnancy with presents of savoury eatables. [சூல்2 + காண்-,] |
சூல்காப்பு | சூல்காப்பு cūlkāppu, பெ. (n.) சூற்காப்பு (இ.வ.); பார்க்க;see sur-kappu [சூல் + காப்பு] |
சூல்சாதம் | சூல்சாதம் cūlcātam, பெ. (n.) சூல்விருந்து பார்க்க;see Sulvirundu. [சூல் + வாதம்] |
சூல்வயிறு | சூல்வயிறு cūlvayiṟu, பெ. (n.) கருப்பிணியாய் இருக்கும் போது வயிறு அதிகமாகப் பருத்துக் காணல்; abnormal enlargemcnt of the abdomen during pregnancy (சா.அக.);. [சூல் + வயிறு] |
சூல்விருந்து | சூல்விருந்து cūlvirundu, பெ. (n.) கருக்கொண்டவள் பொருட்டுச் சமைக்கும் பல்சுவை விருந்து; feast given in honour of pregnant woman. [சூல் + விருந்து] |
சூளம் | சூளம் cūḷam, பெ. (n.) சீழ்க்கை (நாஞ்.);; whistle ம. சூள [சூள் + அம்] |
சூளரவு | சூளரவு cūḷaravu, பெ. (n.) சூளுறவு பார்க்க;see siluravu. “இன்னோர் சான்ற சூளரவு சாற்றி” [சூள் + அரவு] 513 சூளுரை-த்தல் |
சூளாமணி | சூளாமணி cūḷāmaṇi, பெ. (n.) 1. முடிமணி; chief gem in a crest or diadem. “சூளாமணி சிந்தித்திரியுமன்றே” (சீவக 786);. 2. தேவர்கோன் (இந்திரன்); அணியும் மணி (பிங்);; gem worn by Indra. 3. திவிட்டனைக் காப்பியத் தலைவனாகக் கொண்டு தோலாமொழித் தேவர் இயற்றிய தொடர்நிலைச் செய்யுள்; a Jaina poem with Tivittan-as hero by Tölá molit-têvar. ம. சூளாமணி [சூடாமணி → சூளாமணி] |
சூளி | சூளி cūḷi, பெ. (n.) சூழியம், 1 (யாழ்.அக.); பார்க்க;see stiliyam,I |
சூளிகம் | சூளிகம் cūḷigam, பெ. (n.) அப்பவகை (சங் அக.);; flour cakes cooked in ghee. [சூள் → குளிகம்] |
சூளிகை | சூளிகை1 cūḷigai, பெ. (n.) 1. நீர்க்கரை; shore. “நன்னீர்ச் சூளிகைதோறும்” (அரிச். பு. விவாக. 46);. 2. செய்குன்று; an artificial mound. “கோபுர மன்றஞ் சூளிகை” (கந்தபு. வரைபுனை. 7);. (இலக்.அக.);. [சூழ2 → சூழிகை – சூளிகை] சூளிகை2 cūḷigai, பெ. (n.) 1. யானைச் செவியடி (பிங்.);; the root of elephant’s ear. 2. நிலாமுற்றட் (பிங்.);, மொட்டைமாடி, openterracc. “மாடமலி சூளிகையிலேறி மடவார்கள் பாடலொலி செய்ய” (தேவா. 324, 2);. 3. தலை அணிகலன்களில் ஒன்று; an ornament for the head. “சூளிகையுஞ் சூட்டும் … மின் விலக” (ஆதியுவா.68);. [சூடிகை → சூளிகை] |
சூளுதல் | சூளுதல் cūḷudal, தொ.பெ. (vl.n.) குடைகை; boring pain (சா.அக.);. [சூள் + சூளுதல்] |
சூளுரை | சூளுரை cūḷurai, பெ. (n.) பூட்கை; vow ‘தன் சூளுரை நிறைவேறுமா நிறைவேறாதா என்று அவனுக்குத் தெரியாது’ (உ.வ.);. [சூள் + உரை] |
சூளுரை-த்தல் | சூளுரை-த்தல் cūḷuraittal, 4 செ.குன்றாவி (v.t.) சூளுறு-தல் பார்க்க: see Siluru. சூளுறவு |
சூளுறவு | சூளுறவு cūḷuṟavu, பெ. (n.) ஆணையிடுகை; oath. “தோழி குளுறவாகக் கருதினாள்” (இறை. 18. பக். 107, உரை);. [சூள் + உறு → உறவு] |
சூளுறு-த ல் | சூளுறு-த ல் cūḷuṟudal, 20 செ.கு.வி. (v.i.) 1. ஆணையிடுதல்; to swear, to take oath. 2. வஞ்சினம் கூறுதல்; to take vow. “உண்ணா நோன்பி தன்னொடுஞ் சூளுற்று” (மணிமே.3:102);. க. சூருளிசு [சூள் + உறு-,] |
சூளை | சூளை1 cūḷai, பெ. (n.) 1. செங்கல் முதலியன சூடுங்காளவாய்; kiln, furnace. “அகலிரு விசும்பினூன்றுஞ் சூளை”(புறநா. 228: 3);. 2. ஈமவிறகு funeral pile. ம. சூள. Pkt. Culli; H. culliya; Mar. cun; Skt. Culli (உலை); சூளை2 cūḷai, பெ. (n.) கணிகை; prostitute. “பலர்ப் புணர்ந்து முயங்கு சூளையாய் முடிந்தனள்” (உபதேச உருத்திரா. 113);. ம. சூள., க., து. குட, பட குளெ கோத. சூள். Skt. sula [சூள் → சூளை] |
சூளைக்கல் | சூளைக்கல் cūḷaikkal, பெ. (n.) 1. செங்கல்; brick. 2. சுண்ணாம்புக்கல்; lime stone. 3. ஒரு வகைக்கல்; a kind of stone (சா.அக.);. [சூனை + கல்] |
சூளைச்சக்கரம் | சூளைச்சக்கரம் cūḷaiccakkaram, பெ. (n.) 1. பானையோடு; piece of broken pot. 2. அகல் விளக்கு; an earthern lamp (சா.அக.);. [சூளை + சக்கரம். சருக்கரம் → சக்கரம்] 314 சூற்பிபாசம் |
சூளைதிரை | சூளைதிரை cūḷaidirai, பெ. (n.) பரத்தையர் செலுத்தும் வரி; tax for whores. [சூளை+திரை] |
சூளைபிரி-த்தல் | சூளைபிரி-த்தல் cūḷaibirittal, 4 செ.குவி (v.i.) கருப்பத்துடன் இறந்தவள் பொருட்டுச் சூளையினின்று மட்கலம் வாங்கிப் பிறர்க்கு அளித்தல் (இ.வ.);; to purchase pots from a kiln and distribute them to the poor in memory of a woman who died in pregnancy. [குளை பிரி-,] |
சூள் | சூள்1 cūḷtal, 5 செ.கு.வி. (v.i.) 1. ஆணையிடுதல்; to take an oath. “ஐய சூளி னடிதொடு குன்றொடு” (பரிபா, 8: 70);. 2. வஞ்சினங்கூறுதல்; to vow “சூட்கின்ற வீரம்” (கம்பரா. நிகும்ப. 82);. [உள் → சுள் → சூள்] சூள்2 cūḷ, பெ. (n.) 1. பூட்கை (சபதம்);; vow. “சூள் பேனான் பொய்த்தான் மலை” (கவித்.41);. 2. ஆணை; oath. “இன்னாத் தொல்சூ ளெடுத்தற் கண்ணும்” (தொல் பொருள். 147);. 3. சாவிப்பு (சாபம்);; malediction, curse. “கருப்பமோடிருத்திர் பல்காலம் …. என்று சூளிசைத்தாள்” (கந்த, துணைவ. 10);. ம. சூழ்: க. குருள்; தெ. குசு; து. சூலு; கூ சூள; பர். சூள்; E.jury [உள் → சுள் → சூள்] சூள்3 cūḷ, பெ. (n.) தீப்பந்தம் (யாழ்ப்);; torch, flambeau. |
சூழ | சூழ cūḻ, கு.வி.எ. (adv.) 1. கூட்டமாகப் பின் தொடர; to accompany. ‘இக்கால அரசியலார் பலர் புடைசூழ வருவதில்தான் மகிழ்ச்சி கொள்கின்றனர். 2. வெள்ளம் போன்று சூழ வருதல்; encircling like flood water ‘வெள்ளம் சிற்றுாரைச் சூழ்ந்தது’. [சூழ் → சூழ] |
சூழகம் | சூழகம் cūḻkam, பெ. (n.) வெள்ளைக்கடலை; Bengal gram (சா.அக.);. H., Ur: Chenna. [சூழ் + அகம் |
சூழகழிருக்கை | சூழகழிருக்கை cūḻkaḻirukkai, பெ. (n.) தோணாமுகம் (பிங்.);; a fortified capital. [சூழ் + அகழ் + இருக்கை] |
சூழல் | சூழல் cūḻl, பெ. (n.) 1. சூழ்கை; surrounding. 2. இடம் (பிங்);; place, locality. 3. மணற்குன்று; sand-hill. “விளையாடு சூழல்” (தி.வி திருவாய். 6, 2, 4, பன்னீ.);. 4. கூட்டம்; company crowd. 512 சூழியல் “வானவர் சூழலோடு” (கந்தபு. மேருப். 48);. 5. கலந்தாய்வு; counsel. 6. சூழ்ச்சி4 பார்க்க: see silcci, “சூழல்கள் சிந்திக்கில்” (திவ். திருவாய் 5, 5);. 7. தோற்றரவு; incarnation. “சூழலென்று அவதாரத்தைச் சொல்லக் கடவதிறே” (ஈடு. 2, 7, 6); 8. தந்திரம்; trick, stratagem. ம. சூழல் [சூழ் + அல். ‘அல்’ தொ.பெ.ஈறு.] |
சூழவரினி | சூழவரினி cūḻvariṉi, பெ. (n.) பொற்சீந்தில்: moon crcepcr (சா.அக.);. [சூழ + வரினி] |
சூழி | சூழி1 cūḻi, பெ. (n.) 1. சேணம் (பிங்);; saddle. 2. யானையின் முகபடாம்; ornamental covering for the elephant’s face. “யானைச் சூழியிற் பொலிந்த” (மலைபடு. 228);. 3. நீர்நிலை; pool in hilly tracts, tank, pond. “அலங்கு கதிர் சுமந்த கலங்கற் சூழி” (புறநா. 375);. 4. கடல் (அக.நி.);;see, ocean. 5. சூழியல் பார்க்க (யாழ்ப்.);;see suiliyal [சூழ் → சூழி. ‘இ’ பெயராக்க ஈறு] சூழி2 cūḻi, பெ. (n.) 1. உச்சி (பிங்);; crown of the head. 2. சூழியம் பார்க்க (இ.வ.);;see suliyam. 3. மேலிடம்; top portion. “நெடுமதிற் குழி” (பு. வெ. 6. 15);. |
சூழிகணம் | சூழிகணம் cūḻigaṇam, பெ. (n.) சூலிகணம் (பை ஷஜ.209); பார்க்க;see suliganam. [சூம் → சூழி + கணம்] |
சூழிகை | சூழிகை cūḻigai, பெ. (n.) கள் (அக.நி.);; toddy மறுவ. மது, சொல்விளம்பி, |
சூழியப்படை | சூழியப்படை cūḻiyappaḍai, பெ. (n.) சூழியற் படை பார்க்க;see suliyar-padai. [சூழியம் + படை] |
சூழியம் | சூழியம் cūḻiyam, பெ. (n.) 1. உச்சிக்கொண்டை; hair-knot on the crown of the head (திருவிருத் 60, வியா.பக் 330);. 2. உச்சிக்கொண்டையில் அணியும் அணிகலன்; ornament worn on the crown of the head. “விட்டிலகு சூழியம் விழுங்கு சிறுகொண்டை” (திருவினை. தடாதகை.16);. [சூழி2 → சூழியம்] |
சூழியற்கம்பு | சூழியற்கம்பு cūḻiyaṟkambu, பெ. (n.) சூழியல் (வின்.); பார்க்க;see suliyal. [சூழலியல் + கம்பு] |
சூழியற்படை | சூழியற்படை cūḻiyaṟpaḍai, பெ. (n.) வீட்டுச் சுவரின் எடுத்துக்கட்டி; sloping cornice of a house-wall [சூழியல் + படை] |
சூழியற்படைதட்டு- தல் | சூழியற்படைதட்டு- தல் cūḻiyaṟpaḍaidaḍḍudal, 5 செ.கு.வி. (v.i.) பிறரது பாட்டைச் சிறிது மாற்றித் தன்னதாக்குதல்; lit. to knock off cornice and slightly raise the wall, to adopt another’s composition as one’s own, making slight alterations, to plagiarise. சூழியற்படையை இடித்துச் சுவரையெழுப்புதல். [சூழியல் + படை + தட்டு-,] |
சூழியல் | சூழியல் cūḻiyal, பெ.(n.) விளவங்கோடு வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Vilavancode Taluk. [சூழ்+இயல்] சூழியல் cūḻiyal, பெ. (n.) வீட்டிறப்புத் தாங்கும் (யாழ்ப்.);; supporting stakes in wall or the eaves of a house. ம. சூழிக [சூழ்2 – சூழலியல்] சூழியற்கம்பு |
சூழ் | சூழ்1 cūḻttal, 4 செ.குன்றாவி (v.t.) 1. சுற்றுதல்; to wind, wrap round. “பூப்பால் வெண்டுகில் சூழ்ப்ப” (பரிபா. 10. 80);. 2. சுற்றிமொய்த்தல்; to surround, hover about. “சூழ்த்து மதுகர முரலும்” (திருவாச. 5:16);. [சுள் → சுழ் → சூழ்-,] சூழ்2 cūḻtal, 2 செ.குன்றாவி (v.t.) 1. சுற்றியிருத்தல்; to encompass, surround, envelope “அறைகடல் சூழ்வையம்” (நாலடி, 230);. 2. சுற்றி வருதல்; to go round, as in temple from left to right, hover about, flow around. “சூழ்கதிர் வான் விளக்கம்” (பு.வெ. 9:16);. 3. ஆராய்தல்; to consult, to deliberate. “நின்னொடு சூழ்வ றோழி” (கலித் 54);. 4. கருதுதல்; to intend, to think over. “புலைசூழ்வேள்வியில்” (மணிமே. 13 : 28);. சூழ் 5. தீயசூழ்ச்சிக்குத் திட்டமிடல்; to conspirc. “கொடியவன் கடிய சூழ்ந்தான்” (சீவக. 261. 6. தேர்ந்தெடுத்தல்; to select. “சூழ் புரவித்தேர்” (பு.வெ. 9 16);. 7. அறிதல் (சங்.அக);; to know. 8. பண்ணுதல்; to construct, to create. ” பாவை சூழ்ந்தும்” (பட்டினப் 102);. 9. எழுதுதல்; to draw. “தொய்யில்குழிளமுலை” (கலித். 125);. 10, தாக்குதல் (யாழ்க்.);; to encounter. ம. குழுக; க. சொழல்; தெ. சுடியு; து. சுயிபுனி, சுலிபினி, துட. துட்ய; கூ. டொட்க;குவி. துர்லிகியாலி [சூள் → சுழ் → சூழ்-,] சூழ்3 cūḻ, பெ. (n.) 1. கலந்தாய்வு; deliberation, counsel. 2. ஆராய்ச்சி; investigation. “கற்றார் சூழ் சொல்லுமாங்கண்டு” (சி.போ. 8. 1:1);. 3. சுற்று; surrounding. “சூழா மெட்டே யாயிரவேதி” (கந்தபு. அசுரர்யா. 61);. 4. தலைக்கணி மாலை; wreath of flowers for head. “மென்பூச் சூழு மெழுதி” (திருக்கோ. 79);. 2. 5. கடலை (மலை.);; Bengal gram. |
சூழ்-தல் | சூழ்-தல் cūḻtal, செ.குன்றாவி (v.t) கண்ணால் பார்த்தல், நோக்குதல்; to see with the eyes. தெ. சூடு (சூப்பு – பார்வை); [சூழ்_கருதுதல், நினைத்தல் பொருட்பாட்டுப் புடை பெயர்ச்சியால் பார்த்தல் பொருள் பெற்றது]. |
சூழ்கிளை | சூழ்கிளை cūḻkiḷai, பெ.(n.) சுற்றம்; relatives. ‘சூழ்கிளையும் சொற் பொருளும் சோர்வு ஆகும்”(ஜீவ:46);. [சூழ்+கிளை] |
சூழ்ச்சம் | சூழ்ச்சம் cūḻccam, பெ. (n.) சூழ்ச்சி, 2,4 பார்க்க (யாழ்.அக.);;see sulcci, 2,4 [சூழ் → சூழ்ச்சம்] |
சூழ்ச்சி | சூழ்ச்சி cūḻcci, பெ. (n.) 1. பரப்புகை; spreading. “சூழ்ச்சி ஞானச் சுடரொளியாகி” (தி.வி திருவாய். 3.2 :4);. 2. கலந்தாய்வு; counsel, consultation. “போற்றார் பொறுத்தலுஞ் சூழ்ச்சிய தகலமும்” (புறநா.2:7);. 3. நுண்ணறிவு; Wisdom, “கருமக் கிடக்கையுங் கலங்காச் சூழ்ச்சியும்” (பெருங். உஞ்சைக். 46:117);. 4. செய்வழி; plan means. “சொல்லா யானுன்னைச் சார்வதோர் சூழ்ச்சியே” (தி.வி திருவாய். 3. 2:3);. 5. மனத் தடுமாற்றம்: mental disturbance. “மைம்மிக னலிதல் சூழ்ச்சி” (தொல். பொருள்.260);, ம. சூழ்ச்ச [சூழ் → சூழ்ச்சி) |
சூழ்ச்சித்துணைவர் | சூழ்ச்சித்துணைவர் cūḻccittuṇaivar, பெ. (n.) அமைச்சர்கள்; counsellers. Ministers. “சூழ்ச்சித் துணைவராகிய அமைச்சரோடு கூட விருந்து” (சி. போ. சிற். 4, பக்.90);. [சூழ்ச்சி + துணைவர்] சூழ்வளி |
சூழ்தாழை | சூழ்தாழை cūḻtāḻai, பெ. (n.) தாமரை (மலை);; lotus flower. [சூழ் + தாழை. தாழ் → தாழை] |
சூழ்த்து-தல் | சூழ்த்து-தல் cūḻddudal, 5 செ.குன்றாவி (v.t.) சூழச் செய்தல்; to cause to to cause to surround, to involve. ‘உனைப்பாடாதவர்களைப் பல்வினைக்கே சூழ்த்துதி” (திருநூற்.20);. [சூழ்2 → சூழ்த்து_,] |
சூழ்நிலை | சூழ்நிலை cūḻnilai, பெ. (n.) . 1. செய்தி அல்லது நிகழ்ச்சிக்குப் பின்னணி, நிலைமை: circumstances, conditions. மாணவடன தேர்வு எழுதமுடியாத சூழ்நிலைக்காக ஆசிரியர் வருந்தினார். 2. மாந்தர் வாழும் இடத்தைச் சுற்றியிருக்கும் இயற்கைப்பொருள்களின் தொகுதி; surroundings. [சூம் + நிலை] |
சூழ்ந்து | சூழ்ந்து cūḻndu, பெ. (n.) சுளுந்து பார்க்க: see sulundu (சா.அக.);. |
சூழ்போ-தல் | சூழ்போ-தல் cūḻpōtal, 9 செ.குன்றாவி (v.t.) 1. சுற்றிப்போதல்; to go round. “சுடுமண்ணேற்றி யரங்கு சூழ்போகி” (மணிமே 18: 33);. 2. வலம் வருதல்; to go round from left to right as in temple. “தோகையோர் பங்கன்றாளி லுவகையின் வணங்கிச் சூழ்போந்து” (கூர்மபு. தக்கன்வேன். 18);. 3. வளைத்தல் (திவா.); to surround, hover about. 4. சுற்றிக்கிடத்தல்; to lie around. “சுணங்குந் திதலையுஞ் சூழ்போந்து’ ‘(ஆதியுலா.177);. 5. ஆராய்தல்; to deliberate. “மன்னு நரகன் றன்னைச் சூழ்போகி வளைத்தெறிந்து” (திவ். பெரியாழ். 4. 3:3);. [சூழ் + போ-,] |
சூழ்வல்லோர் | சூழ்வல்லோர் cūḻvallōr, பெ. (n.) அமைச்சர்; ministers. எதிராடா திருந்தாரச் சூழ்வல்லோர்கள்” (திருவினை பரிநரி.41);. [சூழ் + வல்லோர்] |
சூழ்வளி | சூழ்வளி cūḻvaḷi, பெ. (n.) சுழல்காற்று, சூறாவளி; whirlwind, cyclone. “சூழ்வளி சுழற்ற வாழ்கயத் தழுந்தினன்” (பெருங் நரவாண 1,24); .ம. சூழ்வல்லோர் [சூழ் + வளி] சூழ்வார் |
சூழ்வார் | சூழ்வார் cūḻvār, பெ. (n.) சூழ்வோர் பார்க்க: see sulvor. “சூழ்வார் கண்ணான ஒழுகலான்” குறள். 445). [சூழ் + ஆர். ‘ஆர்’ பலர்பாலீறு] |
சூழ்வினை | சூழ்வினை cūḻviṉai, பெ. (n.) சூழ்ச்சி, 4 பார்க்க;see sulcci, 4. “தோழர்க் குணர்த்துஞ் சூழ்வினை தொடங்கி (பெருங்கி” (பெருங் . இலாவாண, 10,84); (செ.அக.); [சூழ் + வினை] |
சூழ்வு | சூழ்வு cūḻvu, பெ. (n.) 1. சூழல்1 பார்ப்ப;see sulal “சூழ்வுற வமரர் துதைந்தனர்” (கோயிர், பதஞ்சலி, 45.);. 2. சூழ்ச்சி,2 பார்க்க;see sulcci.2. 3. சூழ்ச்சி,4 பார்க்க: see silcci, 4. “ஏகாதொழிவது சூழ்வன்று” (கந்தபு, ஏமகூட 2);. [சூழ் → சூழ்வு] |
சூழ்வோர் | சூழ்வோர் cūḻvōr, பெ. (n.) 1. அமைச்சர் (பிங்.);; counsellors, ministers. 2. உறவினர் (வின்.);; relations; friends. 3. சூழ்ந்து நிற்பவர்; spectators, neighbours. [சூழ் + ஏர் → சூழ்வேர்] |
சூவானம் | சூவானம் cūvāṉam, பெ. (n.) அட்டில் (யாழ்.அக.);; a kind of fish மறுவ. அடுமனை, அடுக்களை. தெ. சுவாரமு [சூடு → சூ + வானம்] |
சூவாரை | சூவாரை cūvārai, பெ. (n.) ஒரு வகை மீன் (யாழ்ப்.);; a kind of fish. |
சூவி | சூவி cūvi, பெ. (n.) நெல்குத்தும்போது ‘சூவி’ என்று முடித்துப்பாடும் உலக்கைப்பாட்டு (இ.வ);; song used when pounding grain, in which every line ends with the sound of süvi. தெ., க. சுவ்வி [சூ + இ. மூச்சுவிடற் குறிப்பு] |
சூவிடு-தல் | சூவிடு-தல் cūviḍudal, 18 செ.குன்றாவி, (v.t.) நாயைப் பாய ஏவுதல்; to set on, as dogs to attack. [சூ + விடு-. ‘சூ’ ஒலிக்குறிப்புச் சொல்] |
சூவிளையாட்டு | சூவிளையாட்டு cūviḷaiyāṭṭu, பெ.(n.) சிறுவர் விளையாட்டு; a children’s game. [சூ+விளையாட்டு] உட்கார்ந்திருப்பவரின் பின்னால் நின்று கொண்டு’சூ’என்று சொல்லும் விளையாட்டு. |
சூவெனல் | சூவெனல் cūveṉal, பெ. (n.) நாயைப் பாய ஏவுதற்குறிப்பு; onom. expr. of urging dogs to attack. [சூ + எனன். ‘சூ’ ஒலிக் குறிப்புச் சொல்] |