செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை வெளியீடு
31 தொகுதி 12000 பக்கங்கள் கொண்ட பேரகரமுதலி


1

10838

2769

3111

538

3554

677

1093

620

189

1004

402

2
க்
1

8212
கா
2579
கி
564
கீ
222
கு
4598
கூ
780
கெ
615
கே
391
கை
1101
கொ
2417
கோ
1754
கௌ
110
ங்
1

2
ஙா
2
ஙி
1
ஙீ
1
ஙு
1
ஙூ
1
ஙெ
1
ஙே
1
ஙை
1
ஙொ
5
ஙோ
1
ஙௌ
1
ச்
1

5235
சா
1186
சி
2424
சீ
439
சு
1261
சூ
420
செ
1529
சே
470
சை
23
சொ
409
சோ
365
சௌ
1
ஞ்
1

15
ஞா
44
ஞி
3
ஞீ ஞு ஞூ ஞெ
34
ஞே
5
ஞை
2
ஞொ
3
ஞோ
2
ஞௌ
1
ட்
1

1
டா
1
டி
1
டீ
1
டு
1
டூ
1
டெ
2
டே
1
டை
1
டொ
1
டோ
1
டௌ
ண்
1

1
ணா
1
ணி
1
ணீ ணு
1
ணூ
1
ணெ
2
ணே
1
ணை
1
ணொ
1
ணோ
1
ணௌ
த்
3113
தா
1530
தி
2203
தீ
393
து
1238
தூ
411
தெ
694
தே
856
தை
39
தொ
878
தோ
459
தௌ
ந்
1

2789
நா
204
நி
1860
நீ
1161
நு
14
நூ
18
நெ
892
நே
318
நை
89
நொ
210
நோ
159
நௌ
2
ப்
1

4560
பா
1824
பி
492
பீ
25
பு
2224
பூ
1133
பெ
1064
பே
483
பை
127
பொ
1218
போ
478
பௌ
2
ம்
4760
மா
1422
மி
535
மீ
268
மு
3016
மூ
949
மெ
396
மே
751
மை
152
மொ
284
மோ
242
மௌ
ய்
1

119
யா
426
யி
1
யீ
1
யு
46
யூ
20
யெ
9
யே
1
யை
1
யொ
1
யோ
98
யௌ
1
ர்
87
ரா
107
ரி
11
ரீ
7
ரு
24
ரூ
20
ரெ
6
ரே
16
ரை
10
ரொ
8
ரோ
23
ரௌ
ல்
117
லா
44
லி
8
லீ
5
லு
8
லூ
3
லெ
13
லே
21
லை லொ
20
லோ
63
லௌ
3
வ்
1

3800
வா
1329
வி
1638
வீ
515
வு
1
வூ
1
வெ
2164
வே
834
வை
229
வொ
1
வோ
3
வௌ
ழ்
1

1
ழா
1
ழி
1
ழீ
1
ழு
6
ழூ
1
ழெ
1
ழே ழை ழொ ழோ
1
ழௌ
ள்
1

2
ளா
1
ளி
1
ளீ
1
ளு
1
ளூ
1
ளெ
2
ளே
1
ளை
1
ளொ
1
ளோ
1
ளௌ
ற்
1

1
றா
1
றி
1
றீ
1
று
1
றூ
1
றெ
2
றே
1
றை
1
றொ
1
றோ
1
றௌ
ன்
1

1
னா
1
னி
1
னீ
1
னு
1
னூ
1
னெ
2
னே
1
னை னொ
1
னோ
1
னௌ
தலைசொல் பொருள்
சு

சு1 cusu,     சகரமெய்யும் உகரவுயிருங் கூடிய உயிர் மெய்யெழுத்து; syllable formed by adding the short vowel ‘u’ to the consonant ‘c’/’s’

 சு2 cu, பெ. (n.)

   1. அதட்டும் ஓசை; warning Sound.

   2. நாய் முதலியவற்றைத் துரத்தும் ஒலி; driving sound of dog etc.

சுஃஃறெனல்

சுஃஃறெனல் cuḵḵṟeṉal, பெ. (n.)

   பனையோலை போன்றன எரியும்பொழுது ஏற்படுவது போன்ற ஒர் ஒலிக்குறிப்பு; onom. Expr. of rustling, as of palmyra leaves, spreading fire, etc.,

     “சுஃஃறென்னுந் தண்டோட்டுப் பெண்ணை” (தொல். எழுத்து. 40, உரை);.

சுஃறு

சுஃறு cuḵṟu, பெ. (n.)

சுஃஃறெனல் பார்க்க;see sukkrcial

     “சுஃறொலி வேத்திரப் படைக்கை” (திருவிளை. எல்லாம்.5);.

சுஃறெனல்

சுஃறெனல் cuḵṟeṉal, பெ. (n.)

சுஃஃறெனல் பார்க்க;see sukkremal.

     “சுஃறெனுந் தோட்டுப் பெண்ணை” (திருவிளை. வலைவீ. 48);.

சுகட்டான்

சுகட்டான் cugaṭṭāṉ, பெ. (n.)

   1. நாணற்புல்; kaus.

   2. முடக்கொற்றான்; balloon vine, smooth leaved heart pea (சா.அக.);.

சுகட்டிகம்

 சுகட்டிகம் cugaṭṭigam, பெ. (n.)

   பெருங்குமிழ மரம்; Cashmere tree (சா.அக.);.

சுகட்டிகா

 சுகட்டிகா cugaṭṭigā, பெ. (n.)

   நாணற்புல்; kaus (சா.அக.);.

     [சுகட்டான் → சுகட்டிகா]

சுகட்டிரா

 சுகட்டிரா cugaṭṭirā, பெ. (n.)

   பேய்ப்புல்; a kind of poisonous grass full of little clots (சா.அக.);.

சுகண்டி

 சுகண்டி cugaṇṭi, பெ. (n.)

   ஒருவகை உயர் மணி (அரத்தினம்);; a gem (சா.அக);.

சுகந்திக்கல்

 சுகந்திக்கல் cugandiggal, பெ. (n.)

   ஒருவகைச் செவ்வந்திக்கல்; a semi precious stone (சா.அக.);.

     [சுகந்தி + கல்]

சுகந்திப்பாலை

சுகந்திப்பாலை cugandippālai, பெ. (n.)

   1. நற்பாலைவேர்; the root of fragrant palay milky plant.

   2. நன்னாரிவேர்; Indian sarasaparilla (சா.அக.);.

சுகம்பலம்

 சுகம்பலம் cugambalam, பெ. (n.)

   பூனைக் காலி; cowhage plant (சா.அக.);.

சுகம்பல்

 சுகம்பல் cugambal, பெ. (n.)

   புளிநறளை (மலை);; bristly trifoliate vine.

சுகியன்

சுகியன் cugiyaṉ, பெ. (n.)

   ஒரு வகை இனிப்புப் பண்ணியம்; a kind of sweet pastry ball.

     “அவல்பொரி சுகியன்.ஃ” (திருப்பு. 426);.

   ம. சுகியன்;   தெ. சுகிய;க. சுக்ய

     [சுழலியன் → அகியன் (வேக. 220);]

சுகிர்

சுகிர்2 cugir, பெ. (n.)

   உட்டுளை (சூடா);; tubularity.

 Skt. susira.

சுகிர்புரி-தல்

சுகிர்புரி-தல் sugirpuri-,    2 செ.குன்றாவி (v.t.)

   யாழ் நரம்பினை வடித்து முறுக்குதல்; to rub clean and tighten the strings of a lute.

     “சுகிர்புரி நரம்பின் சீறியாழ் பண்ணி” (புறநா. 109);.

     [சுகிர்1 + புரி-,]

சுக்கங்கீரை

 சுக்கங்கீரை cukkaṅārai, பெ. (n.)

   தோட்டங்களில் பயிர் செய்யப்படுவதும், உடம்பிற்குக் குளிர்ச்சியைத் தருவதும், மலத்தை இளக்குவதும், சிறுநீரைப் பெருக்குவதுமாகிய புளிக் கீரை வகை; country sorrel, it is commonly cultivated in gardens and it is cooling and aperient and diuretic to some extent (சா.அக.);.

மறுவ. புளிச்சக்கீரை

தெ. சுக்க கூர

     [சுக்கன் + கீரை]

சுக்கச்சீலை

 சுக்கச்சீலை cukkaccīlai, பெ. (n.)

   வங்கக்கல்; lead ore (சா.அக.);.

     [சுக்கான் → சுக்கன் + சீலை]

சுக்கஞ்செட்டி

 சுக்கஞ்செட்டி cukkañjeṭṭi, பெ. (n.)

   கடுஞ்செட்டுள்ளவன்; miser; hard-fistal person.

ம. சுக்குச்செட்டி

     [சுக்கு + அம் + செட்டி. செட்டு → செட்டி]

சுக்கடித்தம்

 சுக்கடித்தம் cukkaḍittam, பெ. (n.)

   அழுத்தமாக நெய்யப்பட்ட புடைவை (வின்.);; linen closely woven.

   தெ. சுக்கடிதமு; Skt. su-gha!ita

     [சுள் → சுக்குதல் = காய்தல், வறளுதல். சுட்டு → சுக்கு. சுக்குதல் = உலர்தள், சுக்கு → சுக்கடி = நெருங்கியிருத்தல்]

சுக்கடித்தல்

சுக்கடித்தல் cukkaḍittal, பெ. (n.)

   1. ஆடவர் விளையாட்டு; a boys game.

   2. பலீன்சடுகுடு பார்க்க;see palinsadukudu.

     [சுக்கு + அடித்தல்]

சுக்கடைப்பஞ்சு

சுக்கடைப்பஞ்சு cukkaḍaippañju, பெ. (n.)

   1. காதுவலிக்குப் பயன்படும் மருந்து; ear drops for pain in the ear.

   2. சுக்கையிடித்துப் பஞ்சுக்குள் பொதிந்து காதில் அடைத்துக் கொள்ளும் பஞ்சு; cottonin which his conccaled powdered dried ginger inserted into ear as a remedy in certain diseases of the ear.

     [(சுக்கு + அடை); கக்கடை + பஞ்ச]

சுக்கம்

சுக்கம்1 cukkam, பெ. (n.)

   1. நாட்டு வெள்ளரிக்காய், தும்மட்டி; country cucumber.

   2. வெள்ளரி; mottled.

 சுக்கம்2 cukkam, பெ. (n.)

   களவு (யாழ்ப்.);; steeling, pilfering.

     [சுக்கு → சுசக்கம்]

சுக்கம்பார்

 சுக்கம்பார் cukkambār, பெ. (n.)

சுக்கான் பாறை (இ.வ.); பார்க்க;see sukkan-parai.

     [சுக்கான் → சுக்கம். பாறை → பார்;

சுக்கம் + பார்]

சுக்கம்வைத்-தல்

சுக்கம்வைத்-தல் sukkam-vai,    4 செ.கு.வி. (v.i.)

   காளவாயைக் கைப்பற்றுதல்; capturing of kiln.

     [சுக்கம் + வை-,)]

சுக்கல்

சுக்கல்1 cukkal, பெ. (n.)

   சிறுதுண்டு; bit;

 small piece.

கண்ணாடியை அவன் சுக்கலாய் நொறுக்கி விட்டான்.

ம. சுக்கிரி

     [சுள் → சுண்டு = சிறியது, சிறிய முகவைக் கருவி. சுண்டு → சுண்டை = சிறிய காய் வகை. சுன் → சுட்கு → சுக்கு = சிறியது, சிறு துண்டு சுக்கு → சுக்கல்]

 சுக்கல்2 cukkal, பெ. (n.)

   கண்ணில் பூவிழும் நோய்வகை; opacity of cornea.

   க. சுக்கி;தெ. சுக்கலமு.

சுக்காங்குழல்

 சுக்காங்குழல் cukkāṅguḻl, பெ. (n.)

   குருவி முதலிய சிறுபறவைகளை உண்டைவைத்து அடிக்கும் ஊதுகுழாய் (இ.வ.);; a long tube through which pellets of clay are shot.

     [சுக்கான் + குழல்]

சுக்காஞ்செட்டி

 சுக்காஞ்செட்டி cukkāñjeṭṭi, பெ. (n.)

சுக்கஞ் செட்டி (இ.வ.); பார்க்க;see Sukkanjetti.

     [சுக்கான் + செட்டி]

சுக்கானீறு

 சுக்கானீறு cukkāṉīṟu, பெ. (n.)

   தாளித்த சுண்ணாம்பு, கற்சுண்ணாம்பு; slaked lime.

மறுவ, கற்கண்ணாம்பு

     [சுக்கான் + (நீற்று); நீறு]

சுக்கான்

சுக்கான் cukkāṉ, பெ. (n.)

   1. சுக்கான்கல், 1 (தைலவ.பாயி.26); பார்க்க;see sukkan-kal,

   2. சுக்கம்1, (பதார்த்த.718); பார்க்க;see sukkam1

     [சுள் → சுள்கு → சுட்கு → சுக்கு = காய்ந்த இஞ்சி. சுக்குதல் = காய்தல். சுக்கு → சுக்கான் = சுண்ணாம்புக்கல்]

சுக்கான்கல்

சுக்கான்கல் cukkāṉkal, பெ. (n.)

   1. சுண்ணாம்புக்கல்; kunkur limestone, impure concretionary carbonate of lime.

     “சுக்கான் கல்லாகிய பகையாலே” (பொருந. 44, உரை);.

   2. ஒரு வகைக்கட்டி மண் (M.M.748);; pipe clay.

   3. உருக்குச் செங்கல் (இ.வ.);; overburnt brick.

ம. சுக்கான் கல்லு

     [சுக்கான் + கல்]

சுக்கான்கல்குரு

 சுக்கான்கல்குரு cukkāṉkalkuru, பெ. (n.)

   செம்பின் ஊறலைப் போக்கும் ஒரு குரு மருந்து; lime stone quintessence prepared through alchemical process and used for purifying copper (சா.அக.);.

     [சக்கான் + கல் + குரு]

சுக்கான்கல்சுண்ணம்

சுக்கான்கல்சுண்ணம் cukkāṉkalcuṇṇam, பெ. (n.)

   1. செம்புக்களிம்பு நீக்கி; copper rust remover.

   2. நீற்றிய கற்சுண்ணாம்பு; slaked lime (சா.அக.);.

     [சுக்கான்கல் + சுண்ணம்]

சுக்கான்காய்

சுக்கான்காய் cukkāṉkāy, பெ. (n.)

   தும்மட்டிக்காய் (பதார்த்த.718);; unripe cucumber.

     [சுக்கான் + காய்]

சுக்கான்கீரை

 சுக்கான்கீரை cukkāṉārai, பெ. (n.)

சுக்கங்கீரை (மலை.); பார்க்க;see Sukkah-girai.

     [சுக்கான் + கீரை]

சுக்கான்சுண்ணாம்பு

 சுக்கான்சுண்ணாம்பு cukkāṉcuṇṇāmbu, பெ. (n.)

   சுக்கான்கல்லை நீற்றியெடுத்த சுண்ணாம்பு; kunkur lime.

மறுவ. சுட்ட சுண்ணாம்புக்கல்

     [சுக்கான் + சுண்ணாம்பு]

சுக்கான்தண்ணிர்

சுக்கான்தண்ணிர் cukkāṉtaṇṇir, பெ. (n.)

   1. சுண்ணாம்பு கரைந்துள்ள தண்ணீர்; lime-stone beds.

   2. சுண்ணாம்பு கரைந்துள்ள தண்ணிர்; limewater.

   3. சுண்ணாம்பு உப்புள்ள தண்ணிர்; water containing calcium salts;

 calcic water.

     [சுக்கான் + தண்ணீர்]

சுக்கான்தரை

 சுக்கான்தரை cukkāṉtarai, பெ. (n.)

   சுண்ணாம்பு நிலம்; soil of lime stone.

     [சுக்கான் + தரை]

சுக்கான்பருவதம்

 சுக்கான்பருவதம் cukkāṉparuvadam, பெ. (n.)

   சிலாவங்கம் அல்லது வங்கக்கல்; lead ore (சா.அக.);.

     [சுக்கான் + பருவதம்]

சுக்கான்பழம்

 சுக்கான்பழம் cukkāṉpaḻm, பெ. (n.)

   கொம்மட்டிப்பழம்; fruit of Bryonia (சா.அக.);.

     [சுக்கான் + பழம்]

சுக்கான்பார்

சுக்கான்பார் cukkāṉpār, பெ. (n.)

   1. சுக்கான் கரை; lime stone bed or bank.

   2. சுக்கான் பாறை; lime stone quarry.

     [சுக்கான் + பார்]

சுக்கான்பாறை

சுக்கான்பாறை cukkāṉpāṟai, பெ. (n.)

   சுக்கான் மயமான பாறை (பதார்த்த.37);; kunkur ledge.

     ‘சுக்கான் பாறைத் தண்ணிர் கடுக்கும்’ (உ.வ.);.

     [சுக்கான் + பாறை]

சுக்கான்பாறைநீர்

 சுக்கான்பாறைநீர் cukkāṉpāṟainīr, பெ. (n.)

   சுக்கான் தரையிலுாறும் தண்ணீர்; water comes from calcium quarry.

     [சுக்கான் + பாறை + நீர்]

சுக்கான்பிடி

 சுக்கான்பிடி cukkāṉpiḍi, பெ.(n.)

   தலைமைப் பதவி; helm of office.

     [சக்கான்+பிடி].

சுக்கான்மண்

சுக்கான்மண் cukkāṉmaṇ, பெ. (n.)

   1. சுக்கான் நிலம்; lime stone soil.

   2. சீமைச்சுண்ணாம்புத் தரை; soil largely impregnated with carbonate of lime (சா.அக.);.

     [சுக்கான் + மண்]

சுக்காம்பார்

 சுக்காம்பார் cukkāmbār, பெ. (n.)

சுக்கான் பாறை (இ.வ.); பார்க்க;see sukkan-parai.

     [சுக்கான் + (பாறை); பார்]

சுக்காரம்

 சுக்காரம் cukkāram, பெ. (n.)

   அரிமாமுழக்கம் (யாழ்.அக.);; roar, as of a lion.

ம. சுக்காரம்

 Skt. Sukkära

சுக்கிகை

 சுக்கிகை cuggigai, பெ. (n.)

   புளியாரை (சங்.அக.);; yellow wood-sorrel.

மறுவ. சுக்கான் வருத்தியம்

     [சுக்கு → சுக்கி → சுக்கிகை]

சுக்கிலான்

 சுக்கிலான் cukkilāṉ, பெ. (n.)

   வெட்பாலை; tellicherry bark (சா.அக.);.

சுக்கிலை

 சுக்கிலை cukkilai, பெ. (n.)

   புளியமரம்; tamarind tree (சா.அக.);.

     [சுக்கு + இலை. மரப்பட்டை உவர்ந்திருத்தலால் இப்பெயர் வந்தது போலும்]

சுக்கு

சுக்கு1 sukku-,    5 செ.குன்றாவி (v.t.)

   1. புணர்தல்; கூடுதல்; to copulate.

   2. செய்தல்; to perform, execute (சா.அக.);.

தெ. சொக்கு

     [சுள் → சுள்கு → சுட்கு → சுக்கு (வே.க.211);]

 சுக்கு2 cukku, பெ. (n.)

   1. உலர்ந்த இஞ்சி (திவா.);; dried ginger,

சுக்கு அறியாத கியாழம் உண்டா? (பழ.);.

   2. சிறுதுண்டு; துணுக்கு (கொ.வ);; Small piece;

 bit;

 fragment;

 small particle.

     ‘கண்ணாடி சுக்குச் சுக்காய் உடைந்து போயிற்று’ (உ.வ.);.

   3. பயனற்றது; worthless thing.

     “அங்கு சுக்குத் தான் இருக்கிறது” (நாஞ்.);.

   ம. சுக்கு. க. சுண்டி;   பட. சுட்டி; pkt. sukkha;

 Skt. Suska

     [சுள் → சுட்கு → சுக்கு. ஒ.நோ. வெள் → வெள்கு → வெட்கு (வே.க. 211);]

 சுக்கு3 sukku-,    5 செ.குவி (v.i.)

   1. உலர்தல் (நாஞ்.);; to get dry.

   2. உணக்குதல்; to cause to dry, to dry in the sun.

   ம. சுக்குக;   க. சுக்கு;   தெ. சுருக்கு;   து. சிர்க்குனி;   கோத. சுக்;   துட. சுர்;   கொலா. சுக்;   பர். சுர்க்;கோண். சூர்

     [சுள் → சுங்கு → சுக்கு]

சுக்குக்களி

 சுக்குக்களி cukkukkaḷi, பெ. (n.)

   சுக்குச் சேர்த்து மருந்தாகச்செய்யப்படும் களிவகை; a pasty preparation of which dried ginger forms the main ingredient chiefly given to women in confinement.

     [சுக்கு + களி]

சுக்குச்சுக்காய்

 சுக்குச்சுக்காய்  sukku-c-cukkiy,  வி.அ. (adv.)

   துண்டுதுண்டாய்; in pieces; shattered to pieces.

மறுவ. சுக்குச்சுக்காக, சுக்கு நூறாக, சுக்கல் சுக்கலாக

     [சுக்கு + சுக்கு + ஆய்]

சுக்குச்சூரணம்

சுக்குச்சூரணம் cukkuccūraṇam, பெ. (n.)

   1. சுக்கையிடித்துச் சலித்தபொடி; powdered and sieved dried ginger.

   2. சுக்கை முதன்மையாகக் கொண்டு பல மருந்துச் சரக்குகளைச் சேர்த்துச் செய்த சுக்குப்பொடி; powder prepared with dry ginger as cheif ingredient (சா.அக.);.

     [சுக்கு + சூரணம்]

சுக்குச்செட்டி

 சுக்குச்செட்டி cukkucceṭṭi, பெ. (n.)

சுக்கஞ் செட்டி (இ.வ.);. பார்க்க;see Sukkan-Setti.

     [சுக்கு + செட்டி]

சுக்குச்செட்டு

 சுக்குச்செட்டு cukkucceṭṭu, பெ. (n.)

   இவற்ற்றன்மை; misarliness;

 stinginess.

     [சுக்கு + செட்டு]

சுக்குச்செட்டுப்பண்ணு-தல்

சுக்குச்செட்டுப்பண்ணு-தல் sukku-c-cettu-p-pannu-,    5 செ.கு.வி (v.i.)

   1. அதிகப்படியான சிக்கனம் கொள்ளுதல் (இ.வ.);; to be Stingy.

   2. சிறுவணிகம் செய்து ஆதாயம் பிடித்தல் (வின்.);; to make profit by trading, in small articles.

     [சுக்கு + செட்டுப்பண்ணு-,]

சுக்குட்டிச் செடி

 சுக்குட்டிச் செடி cukkuḍḍicceḍi, பெ.(n.)

   மணத்தக்காளிச் செடி; a plant.

     [சுக்குட்டி+செடி]. சு

சுக்குத் தண்ணீர்

சுக்குத் தண்ணீர் cukkuttaṇṇīr, பெ. (n.)

   1. சுக்கிட்டுக் காய்ச்சிக் கொதிக்க வைத்த நீர்; boiled ginger water.

   2. சுக்கும் வெல்லமுமிட்டுக் காய்ச்சியிறக்கி வடிகட்டிய பருகம்; a favourite and in vigorating beverage made by boiling dried ginger and jaggery and then filtered milk can be added and taken as coffee (சா.அக.);.

     [சுக்கு + தண்ணி]

சுக்குத்தான்

 சுக்குத்தான் cukkuttāṉ, பெ. (n.)

சுங்குத்தான் குழல் பார்க்க;see Sungu-t-tan-kulal.

சுக்குநாறி

 சுக்குநாறி cukkunāṟi, பெ. (n.)

   சுக்கு மணமுடைய சாலிமரம்; a tree having the odour of dried ginger (சா.அக.);;

     [சுக்கு + நாறி. நாற்றம் = மணம். நாற்றம் → நாறி]

சுக்குநாறிப்புல்

சுக்குநாறிப்புல் cukkunāṟippul, பெ. (n.)

   1. ஒருவகைப்புல்; spice or dry ginger grass.

   2. சுன்னாறிப்புல்; orange grass.

   3. மாந்தப்புல்; roussa grass.

   4. எலுமிச்சம்புல்; rusa oil plant.

   5. கருப்பூரப்புல்; andropogon citratis (சா.அக.);.

ம. சுக்கு நாறிப்புல்லு

     [சுக்குநாறி + புல்]

சுக்குநாறிப்புல்தைலம்

 சுக்குநாறிப்புல்தைலம் cukkunāṟippultailam, பெ. (n.)

   சுக்குநாறிப் புல்லிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்; oil extracted from the ginger grass (சா.அக.);.

     [சுக்குநாறிப்புல் + தைலம்]

சுக்குநாறிப்பூடு

 சுக்குநாறிப்பூடு cukkunāṟippūṭu, பெ. (n.)

   எல்லாவகைப் புண்களையும் ஆற்றும் குணமுடைய மூலிகை; a plant supposed to cure all kind of ulcers.

மறுவ. வெட்டுப்புண் ஆற்றி, காயமாற்றி

     [சுக்குநாறி + பூடு]

சுக்குப்பாணிதம்

 சுக்குப்பாணிதம் cukkuppāṇidam, பெ. (n.)

   சுக்கு நீரில் சருக்கரையிட்டு மீண்டும் காய்ச்சி எடுத்த பாகு; a strong medicated solution of sugar from the extract of dried ginger (சா.அக.);.

 Skt. pani

     [சுக்கு + பாணிதம்]

சுக்குப்பால்

சுக்குப்பால் cukkuppāl, பெ. (n.)

   கண்ணோய்க்காகச் சுக்கைப் பாலில் இழைத்து கண்ணிற் பிழியும் ஒருவகைக் கலிக்கமருந்து (இ.வ.);; a medicinal preparation for some kind of eye diseases from the dried ginger rubbed with milk (சா.அக.);.

     [சுக்கு1 + பால்]

சுக்குப்பொடி

சுக்குப்பொடி cukkuppoḍi, பெ. (n.)

   சுக்குத் தூள்; dried ginger powder.

     [சுக்கு + பொடி]

 சுக்குப்பொடி2 cukkuppoḍi, பெ. (n.)

   சொக்குப்பொடி (பேச்சு வழக்கு);; a kind of magic powder (சா.அக.);.

தெ. சொக்குப்பொடி

     [சுக்கு + பொடி]

சுக்குமத்தண்டுலம்

 சுக்குமத்தண்டுலம் cukkumattaṇṭulam, பெ. (n.)

   திப்பிலி; long-pepper (சா.அக);.

     [சுக்குமம் + தண்டுலம்]

சுக்குமம்

 சுக்குமம் cukkumam, பெ. (n.)

   சிற்றேலம் (மூ.அ);; small cardamom.

 Skt. suksma

சுக்குமாத்தடி

சுக்குமாத்தடி1 cukkumāttaḍi, பெ. (n.)

   1. துறவிகள் கையில் கொண்டு செல்லும் கழி (வின்.);; staff carried by mendicants as imbued with the power or energy of a deity.

   2. சிறு தெய்வங்கள் கையில் அமைக்கப்படுஞ் சிறு

   தண்டம் (இ.வ.); a club with which some inferior dcities are armed.
   3. மந்திரக்கோல் (இவ); magic wand.
மறுவ. சுக்குமாந்தடி

     [சொக்கு → கக்கு + மா + தடி]

சுக்குமாந்தடி

 சுக்குமாந்தடி cukkumāndaḍi, பெ. (n.)

சுக்கு மாத்தடி பார்க்க;see sukku-ma-t-tadi.

     “சுக்குமாந்தடி கொண்டு நொக்கி விடுவான்” (நந்த கீர்த்);.

     [சக்குமாத்தடி → சக்குமாந்தடி]

சுக்குமி

 சுக்குமி cukkumi, பெ. (n.)

   கொத்தவரை; cluster bean (சா.அக.);.

மறுவ. சீனியவரை

சுக்கும்பல்

 சுக்கும்பல் cukkumbal, பெ. (n.)

   சிலந்தி; spider (சா.அக.);.

சுக்குயிளகியம்

சுக்குயிளகியம் cugguyiḷagiyam, பெ. (n.)

   சுக்கு 25 பலத்திற்கு 2 1/2 படி கியாழமிறக்கி, அதனோடு வெல்லம் 2 1/2 பலம் ஒமம் 1 1/2 பலம் நெய் 1/2 படி என இவற்றையும் சேர்த்து இளகியமாக (லேகியம்); ஆக்குதல்; an electuray prepared with the decoction of dry ginger, jaggery, ajown, curry leaves and cow’s ghee. It cures diarrhoea, chronic diarrhoea indigestion, wind swelling, etc.,

     [சக்கு + இளகியம்]

இவ்விளகியம் சாப்பிட்டால், மிகு கழிச்சல், செரியாமை, மூலம், வீக்கம், முதலானவை போகுமெனச் சாம்பசிவம் பிள்ளை மருத்துவ அகரமுதலி குறிக்கின்றது.

சுக்குலகந்தம்

சுக்குலகந்தம் cuggulagandam, பெ. (n.)

   1. வசம்பு; sweet flag.

   2. அதிவிடயம்; Indian atees.

சுக்குவெல்லம்

சுக்குவெல்லம் cukkuvellam, பெ. (n.)

   சுக்குப் பொடி கலந்த வெல்லம் (உவ);; jaggery mixed with pulverised dried ginger, used as a digestive.

ம. சுக்குவெல்லம்

     [சக்கு1 + வெல்வம்]

சுக்குவெள்ளம்

 சுக்குவெள்ளம் cukkuveḷḷam, பெ. (n.)

   சுக்குக் கலந்த வெந்நீர் (நாஞ்.);; ginger-water a stimulant.

ம. சுக்குவெள்ளம்

     [ஈக்கு + வெள்ளம்]

சுக்கெலும்பு

 சுக்கெலும்பு cukkelumbu, பெ. (n.)

   மார்பு ஏலும்பு; bones of the chest (சா.அக.);.

மறுவ விலாவெலும்பு, நெஞ்செலும்பு

     [சுக்கை (வரி); + எலும்பு]

சுக்கை

சுக்கை1 cukkai, பெ. (n.)

   முசுமுசுக்கை (மலை.);; bryony or bristly.

     [முகமுகக்கை → சக்கை]

 சுக்கை2 cukkai, பெ. (n.)

   வீண்மீன்; star.

   தெ. சுக்க cf.ulka;   க. சுக்கெ;நாய்க். சுக்க

   பாலி. சுக்க கோண்ட் சுக்கம்;   கோண்டா. சுக;குவி. ஹுக

 சுக்கை3 cukkai, பெ. (n.)

   பூமாலை; garland.

     “சுக்கைப் பிற்கற்றியும்” (திருப்பு.161);.

 சுக்கை4 cukkai, பெ. (n.)

   கப்பற்கங்கம் (யாழ்ப்.);; passage money;freight.

     [சங்கம் → சக்கம் → சக்கை]

சுங்கடி

 சுங்கடி cuṅgaḍi, பெ. (n.)

   முடிச்சுக்கட்டிச் சாயமிடப்பெற்ற ஒருவகைச் சீலை; a kind of dyed saree with undyed spots.

தெ. சுங்கடி

சுங்கம்

சுங்கம்1 cuṅgam, பெ. (n.)

   கஞ்சத்தனம்; misserlyness.

     [சுள் → சுட்கு → சுக்கு → சுக்கம் → சுங்கம்]

 சுங்கம்2 cuṅgam, பெ. (n.)

   1. ஆடுதின்னாப் பாலை (மலை.);; worm killer.

   2. கடுகு; mustard.

 Skt.junga

 சுங்கம்3 cuṅgam, பெ. (n.)

   1. கீழறுக்கை; undermining.

   2. திருட்டு; stealing, pilfering.

சுங்கம்பிடி-த்தல்

சுங்கம்பிடி-த்தல் suligam-pidi-,    4 செ.கு.வி.(v.i.)

   கடுஞ்சிக்கனம் செய்து பொருள் சேர்த்தல். (இ.வ.);; to save money, as a miser.

     [சுங்கம் + பிடி-,]

சுங்கல்

சுங்கல்1 cuṅgal, பெ. (n.)

   விளையாட்டில் மேலும் ஓர் ஆட்டம்; an extra turn in game.

 சுங்கல்2 cuṅgal, பெ. (n.)

சுங்கு,1 பார்க்க;see sungu.

மறுவ. சுங்கு

   தெ. சுங்கு;க: சுங்கு

     [சுங்கு → சுங்கல்]

சுங்கான்

 சுங்கான் cuṅgāṉ, பெ.(n.)

   அழகற்ற பங்கரை தோற்றமுடையவன்; a person of ugly appearance (மீனவ.);

மறுவ: பங்கடை, பங்கரை

     [சோங்கு-கங்கு-சுங்கான்].

 சுங்கான் cuṅgāṉ, பெ. (n.)

   புகை பிடிக்கும் குழாய் (யாழ்.அக.);; tobacco pipe.

   க., து. சுங்கானி;ம. சுங்கா U.cunga

     [சுருங்கை → சுங்கை → சுங்கான்]

சுருங்கை என்பது சிறுவழி புகையிலையைப் போட்டுத் தீமூட்டிச் சிறுகுழாய் வழியே புகையை உறிஞ்சுதலால் சுங்கான் என்று பெயர் பெற்றது.

சுங்கான்களி

 சுங்கான்களி cuṅgāṉkaḷi, பெ. (n.)

   புகை பிடிக்கும் சுங்கான் செய்வதற்கேற்ற துாய, பொடியான களிமண்; pure and nice powdered clay to be used to manufacture the tobacco pipes.

     [சுங்கான் + களி]

சுங்கான்புகையிலை

 சுங்கான்புகையிலை cuṅgāṉpugaiyilai, பெ. (n.)

   சுங்கானில் போட்டுப் புகை பிடிப்பதற்கு அணியமாக்கப்பட்ட புகையிலை; tobacco prepared for the pipe.

     [சுங்கான் + புகை + இலை]

சுங்கு

சுங்கு cuṅgu, பெ. (n.)

   1. ஆடையில் தொங்க விட்டுக் கட்டும் மூலை; end of a cloth left hanging out in dressing.

   2. ஆடையின் கொய்சகம் (வின்.);; pleat or fold of a garment.

     “சுங்குவிட்டுக் கட்டுகிறாள்” (வின்.);.

   3. சடைக் குச்சு; silken tassel used in plaiting girl’s hair.

   தெ. சுங்குலு;   க. சுங்கு;கொலா. இதன

சுங்குடு

 சுங்குடு cuṅguḍu, பெ. (n.)

   சிறுபாக்கி; trivial balance, trifling amount in arrears.

   தெ. சுங்குடு;   க. சுங்கடி;து. சுங்குடி

சுங்குத்தான்குழல்

 சுங்குத்தான்குழல் cuṅguttāṉkuḻl, பெ. (n.)

   பறவை முதலியவற்றை வீழ்த்த உண்டை எறியுங்குழல் (வின்.);; long tube through which pellets of clay are shot at birds.

 U. congs

மறுவ. சுக்குத்தான்

     [சுங்குத்தான் + குழல்]

சுசியம்

சுசியம் susiyam, பெ. (n.)

சுழியம் பார்க்க: See suliyam.

     [சுழியம் – கசியம் (வே.க. 228);]

சுச்சி

 சுச்சி cucci, பெ.(n.)

   பெரிய சக்கரத்தைச் சுற்றும் கருவி; a device used to rotate the big wheel.

     [சுழற்றி-சுழத்தி-சுத்தி-சுச்சி].

சுச்சு

சுச்சு1 cuccu, பெ. (n.)

   1. சுக்கு (மூ.அ);; dried ginger.

   2. இஞ்சி; ginger-plant.

   3. வறட்சுண்டி (பிங்.);; floating sensitive plant.

 Skt. Suska

     [சுக்கு → சுச்சு]

 சுச்சு2 cuccu, பெ. (n.)

   பறவைமூக்கு (பிங்);;   அலகு; beak of a bird.

 Skt. Canju

சுடகத்தி

 சுடகத்தி cuḍagatti, பெ. (n.)

   பேய்க்கடலை; wild bitter gram.

சுடகமாமிசம்

 சுடகமாமிசம் suḍagamāmisam, பெ. (n.)

   கருவாடு; dried fish (சா.அக.);.

     [சூடு → சுடு → சுடகம். சுடகம் + மாமிசம்]

சுடக்கு

சுடக்கு1 sudakku-,    5 செ.குன்றாவி (v.t.)

சொடக்கு-, (உ.வ.); பார்க்க;see sodakku-.

     [சொடக்கு → சுடக்கு-,]

 சுடக்கு2 cuḍakku, பெ. (n.)

சொடக்கு பார்க்க;see Sodakku.

     [சொடக்கு → சுடக்கு]

சுடக்குடித்தவன்

 சுடக்குடித்தவன் cuḍakkuḍittavaṉ, பெ. (n.)

   பதட்டக்காரன் (உ.வ.);; hasty man.

     ‘அவன் எப்போதும் சுடக்குடித்தவன் தானே’ (உ.வ.);

     [சுடு → சு. + குடித்தவன்]

சுடங்கமூலி

சுடங்கமூலி cuḍaṅgamūli, பெ. (n.)

   நிலத் துளசி; holy basil (சா.அக.);.

     [சுடங்கம் + மூலி]

சுடச்சுட sula-c-cula, வி.அ. (adv.);

   1. சூடு குன்றாமல்; right hot.

     “சுடச்சுட இட்டலி சாப்பிட்டால் அதன் சுவையே தனி!”

   2. உடனடி யாகவும், மனத்தில் பதியும்படியாகவும்; immediately and impressively.

     “குறும்பு மாணவர்கள் கேட்ட வினாக்களுக்கு ஆசிரியர் கடச்சுட மறுமொழி கொடுத்தார்”

     [சுள் → சுடு → சுட + சுட]

சுடரவன்

சுடரவன் cuḍaravaṉ, பெ. (n.)

   ஒளியுடைப் பகலவன் (திவா.);; sun, as emitting light.

ம. சுடரவன்

     [சுடர் → சுடரவன் (வே.க.210);]

சுடரார்

சுடரார் cuḍarār, பெ. (n.)

   ஒளியுடையவரான கடவுள்; God as lustrous.

     “என்னகத் திருந்த சுடரார்” (திருநூற்.26);.

ம. சுடராள்

     [சுடு → சுடர் → கடரார் (வே.க. 210);]

     ‘ஆர்’ உடைமைப் பொருளீறு.

சுடராவிரை

 சுடராவிரை cuḍarāvirai, பெ. (n.)

சூழலாவிரை (இ.வ.);;பார்க்க;see Sulalavirai.

     [சுடர் + ஆவிரை]

சுடரெண்ணெய்

சுடரெண்ணெய் cuḍareṇīey, பெ. (n.)

   1. சுடரிலிருந்து விழும் எண்ணெய்த்துளி; drops of burning oil dripping from lamp, torch etc.

   2. ஒரு வகை மருந்தெண்ணெய்,

 a kind of medicinal oil.

   3. மருந்துச்சரக்குகள் கூட்டி வடிக்கப்பட்ட வேப்பெண்ணெய்; margosa oil prepared with medicinal drugs.

     [சுடர் + எண்ணெய்]

சுடரொளி

 சுடரொளி cuḍaroḷi, பெ. (n.)

   கதிரவன், நெருப்பு, திங்கள் போன்றவற்றின் கதிர்; lusture of the sun, fire, moon etc.

ம. சுடரொளி

     [சுடர் + ஒளி]

சுடரோன்

சுடரோன் cuḍarōṉ, பெ. (n.)

சுடரவன் (பிங்.); பார்க்க;see sudaravan.

     “கதிராயிரம் விரிக்குஞ் சுடரோன்” (திருக்கருவை. கலித். 11);.

ம. சுடரோன்

     [சுடு → சுட. சுடர் → சுடரவன் → சுடரோன் (மு.தா.132);]

சுடர்

சுடர்1 cuḍar, பெ. (n.)

   1. ஒளி, வெளிச்சம், சுவாலை; light, brilliance, lustre.

     “தெறுசுட ரொண் கதிர் ஞாயிறு” (புறநா. 6:27);.

   2. ஞாயிறு; Sun,

     “சுடர் சுட்ட சுரத்தேறி” (புறநா. 136:18);.

   3. வெயில்; sunshine.

     “வல்லிருள் புதைப்பச் செல்சுடர் சுருக்கி” (பெருங். உஞ்சைக். 33:155);.

   4. நிலா; moon.

     “சுடரொடு சூழ்வரு தாரகை” (பரிபா. 19:19);.

   5. கோள்; planet.

     “சுடர்நிலை உள்படுவோரும்” (பரிபா. 19:7);.

   6. நெருப்பு; fire.

     “சுரும்பு மூசாச் சுடர்ப்பூங் காந்தள்” (திருமுரு. 43);.

   7. விளக்கு; burning lamp.

     “இரவின் மாட்டிய விலங்கு சுடர்” (பெரும்பாண். 349);.

   8. தீக் கொழுத்து; flame.

     “விளக்கினுளொண் சுடரே போன்று” (நாலடி. 189);.

   9. தீப்பொறி (அக.நி.);; spark.

   10. சுடரெண்ணெய், பார்க்க;see Suder-enney.

   ம. சுடர்;   க. சுடு, சொடர், சொட்ரு சொடலு;   தெ. சுடு;து. சுடரு, தடறு, துடரு (விளக்கு);

 Pkt. cuduli (torch);;

 Mar. cudi torch of wisps or twigs)

     [சுடு → சுடர் (வே.க.210);]

 சுடர்2 sudar,    2 செ.கு.வி. (v.i.)

   1. ஒளி விடுதல்; to give light;

 to burn brightly;

 to shine, as a heavenly body;

 to sparkle, as a gem;

 to gleam.

     “சுடச்சுடரும் பொன்போல்” (குறள், 267);

     [சுள் → சுடு → சுடர் (மு.தா.147);]

சுடர்க்கடை

சுடர்க்கடை cuḍarkkaḍai, பெ. (n.)

   1. மின்மினி; fire fly.

   2. மயிர்; peacock.

     [சுடர் + கடை]

சுடர்க்காசம்

 சுடர்க்காசம் cuḍarkkācam, பெ. (n.)

   ஈளை (காச); நோய் வகை; a kind of asthma (சா.அக.);.

     [சுடர் + காசம்]

சுடர்க்காரி

 சுடர்க்காரி cuḍarkkāri, பெ. (n.)

சுடர்க்கடை பார்க்க;see Sugar-k-kadai (சா.அக.);.

     [சுடர் + காரி]

சுடர்க்காளை

 சுடர்க்காளை cuḍarkkāḷai, பெ. (n.)

சுடர்க் கொடி பார்க்க;see Sugar-k-kodi (சா.அக.);.

     [சுடர் + காளை]

சுடர்க்கொடி

 சுடர்க்கொடி cuḍarkkoḍi, பெ. (n.)

   ஆலத்திக் கருப்பூரம் (வின்.);; incense of camphor.

     [சுடர் + கொடி]

சுடர்ச்சக்கரம்

சுடர்ச்சக்கரம் cuḍarccakkaram, பெ. (n.)

   ஞாலமுனைச் சக்கரம்; the great bear, polar circle.

     “சுடர்ச்சக்கரத்தைப் பொருந்திவரும் ஆதித்தன் முதலாக வருங் கோள்களது நிலைமையை” (பரிபா. 19,46, உரை);,

     [சுடர் + சக்கரம்]

சுடர்ச்செலவு

 சுடர்ச்செலவு cuḍarccelavu, பெ. (n.)

   ஒரையை இரண்டாகப் பகிர்கை (வின்.);; division of the rising sign into two equal parts for casting horoscopes.

     [சுடர் + செலவு]

சுடர்நிலை

சுடர்நிலை cuḍarnilai, பெ. (n.)

   1. விளக்குத் தண்டு (பிங்.);; lampstand.

   2. விளக்கணி; a figure of speech.

ம. சுடர்நிலை

     [சுடர் + நிலை]

சுடர்நிலைத்தண்டு

சுடர்நிலைத்தண்டு cuḍarnilaittaṇḍu, பெ. (n.)

   சுடர்நிலை,1 பார்க்க;     [சுடர்நிலை + தண்டு]

சுடர்நேமி

சுடர்நேமி cuḍarnēmi, பெ. (n.)

சுடர்ச்சக்கரம் பார்க்க;see Sugar-c-cakkaram.

     “சுடர்நேமி யொன்றிய சுடர்நிலை” (பரிபா. 19:46);.

     [சுடர் + நேமி]

சுடர்பலதோன்றுதல்

 சுடர்பலதோன்றுதல் cuḍarpaladōṉṟudal, பெ. (n.)

   ஒளியால் ஏற்படும் ஒருவகைக் கண்ணோய்; an eye disease casused by seeing bright lamp’s light (சா.அக.);.

     [சுடர் + பல + தோன்றுதல்]

சுடர்ப்பொடி

 சுடர்ப்பொடி cuḍarppoḍi, பெ. (n.)

   கருப்பூரம்; camphor (செ.அக.);.

     [சுடர் + பொடி]

சுடர்மணிக்கோவை

சுடர்மணிக்கோவை cuḍarmaṇikāvai, பெ. (n.)

   யானையின் அணிவகை; an ornament put on elephants.

     “சூழியு மோடையுஞ் சுடர் மணிக் கோவையும்” (பெருங்.இலாவண. 2:2);.

     [சுடர் + மணி + கோவை]

சுடர்முடி

 சுடர்முடி cuḍarmuḍi, பெ.(n.)

   சிற்ப நூல்கள் கூறும் மகுட முடிவகை; a feature in sculpture.

     [சுடர்+முடி].

சுடர்மௌலியர்

 சுடர்மௌலியர் cuḍarmauliyar, பெ. (n.)

   ஒளிவிடுஞ் சென்னியராகிய தேவர்கள் (யாழ்.அக.);; celestials or Devas, as having a bright halo about their heads.

     [சுடர் + மௌலியர்]

சுடர்விடு-தல்

சுடர்விடு-தல் sugar-vidu-,    20 செ.கு.வி. (v.i.)

சுடர் விட்டெரி-தல் பார்க்க;see Sudar-vitteri-.

     [சுடர் + விடு-,]

சுடர்விட்டெரி-தல்

சுடர்விட்டெரி-தல் sular-witeri,    2 செ.கு.வி. (v.i.)

   கொழுந்துவிட்டு எரிதல்; to burn brightly;blaze forth.

     [சுடர் + விட்டெரி-,]

சுடர்விளக்கு

சுடர்விளக்கு cuḍarviḷakku, பெ. (n.)

சுடர் நிலை, 2 (திவா.); பார்க்க;see sudar-nilai.2.

     [சுடர் + விளக்கு]

சுடற்காளை

 சுடற்காளை cuḍaṟkāḷai, பெ. (n.)

   கருப்பூரம்; camphor (சா.அக.);.

     [சுடர் + காளை]

சுடற்கொடி

 சுடற்கொடி cuḍaṟkoḍi, பெ. (n.)

சுடர்க்கொடி பார்க்க;see Sudar-k-kodi (சா.அக.);.

     [சுடர் + கொடி]

சுடலன்

 சுடலன் cuḍalaṉ, பெ. (n.)

   ஒருவகைப் பூடு; phoelin paniculata (சா.அக.);.

     [சுடல் → கடலன்]

சுடலாவிரை

 சுடலாவிரை cuḍalāvirai, பெ. (n.)

சுழலாவிரை (இ.வ.); பார்க்க;see Sulala-virai.

     [சுழலாவிரை → சுடலாவிரை (இ.வ.);]

சுடலை

சுடலை1 cuḍalai, பெ. (n.)

   1. சுடுகை; baking.

   2. சமைக்கை; cooking.

   3. கொல்லுகை; killing.

   4. அழிக்கை; destroying.

   5. போர்செய்கை; quarrelling.

     [சுடு → சுடலை]

 சுடலை2 cuḍalai, பெ. (n.)

   1. சுடுகாடு பார்க்க;see Sugu-kadu.

     “இவ்வழல்வாய்ச் சுடலைத் தின்னக் கண்டும்” (மணிமே. 6:101);.

   2. சுடலையாடி,2 (மூ.அ.); பார்க்க;see Sudalas-y-adi,2.

   ம. சுடல;து. சுடலெ.

     [சுடு → சுடர் → சுடல் → சுடலை (மு.தா.132);]

சுடலைகுத்தியாடு-தல்

சுடலைகுத்தியாடு-தல் Sudalai-kutti-y-adu-,    5 செ.குன்றாவி, (v.t.)

செடில்குத்தியாடு-தல் பார்க்க;see Sedil-kutti-y-adu- (சா.அக.);.

     [சுடலை + குத்தியாடு-,]

சுடலைக்கரை

 சுடலைக்கரை cuḍalaikkarai, பெ. (n.)

சுடுகாடு (இ.வ.); பார்க்க;see sudu-kadu.

     [சுடiy + கரை]

சுடலைக்காடு

 சுடலைக்காடு cuḍalaikkāḍu, பெ. (n.)

சுடுகாடு பார்க்க;see Sudu-kadu.

ம. சுடலக்களம், சுடலக்காடு

     [சுடலை + காடு]

சுடலைக்கான்

சுடலைக்கான் cuḍalaikkāṉ, பெ. (n.)

சுடுகாடு பார்க்க;see sudu-kadu.

     “சுடலைக் கானிற் றொடுகுழிப் படுத்து” (மணிமே. 16:25);.

     [சுடலை + கான்]

சுடலைக்குருவி

 சுடலைக்குருவி cuḍalaikkuruvi, பெ. (n.)

   சுடுகாட்டுக் குருவி;   சாக்குருவி; a species of owl.

     [சுடலை + குருவி]

சுடலைதனில்நிருத்தன்

 சுடலைதனில்நிருத்தன் cuḍalaidaṉilniruddaṉ, பெ. (n.)

   சிவனார்வேம்பு; Sivan’s necm (சா.அக);.

சுடலைநீறு

 சுடலைநீறு cuḍalainīṟu, பெ. (n.)

   பிணம் சுட்ட சாம்பல்; ashes left after burning the dead (சா.அக.);.

     [சுடலை + நீறு]

சுடலைநோன்பிகள்

சுடலைநோன்பிகள் cuḍalainōṉpigaḷ, பெ. (n.)

   காபாலிகச் சமயத் துறவிகள்; a sect of Saiva ascetics holding kabaligam doctrines.

     “கடலை நோன்பிகள் … மடைதியுறுக்கும் வன்னி மன்றமும்” (மணிமே. 6:86);.

     [சுடலை + நோன்பிகள்]

சுடலைப்பூச்செடி

 சுடலைப்பூச்செடி cuḍalaippūcceḍi, பெ. (n.)

   ஆற்றலரி; a kind of flower plant with tubular stipules (சா.அக.);.

     [சுடலை + பூ + செடி.]

சுடலைப்பூண்டு

 சுடலைப்பூண்டு cuḍalaippūṇḍu, பெ. (n.)

   சுடுகாட்டில் முளைக்கும் பலவகைச் செடிகள்; various plants grown generally in the cremation ground (சா.அக.);.

     [சுடலை + பூண்டு]

சுடலைமாடன்

சுடலைமாடன் cuḍalaimāḍaṉ, பெ. (n.)

   சுடலையிலுள்ள ஒருவகைப் பேய் (G.Tn.D.1. 118);; evil spirit haunting burning-grounds.

ம. கடலப்பேய், சுடலமாடன்

     [சுடலை + மாடன்]

சுடலைமுத்து

சுடலைமுத்து cuḍalaimuttu, பெ. (n.)

   ஊர்ச் சிறு தெய்வம்; a village deity.

     “மனச்சோபத்தை தீர்க்குஞ் சுடலை முத்து” (பஞ்ச. திருமுக. 651);.

     [சுடலை + முத்து]

சுடலையாடி

சுடலையாடி cuḍalaiyāḍi, பெ. (n.)

   1. சுடுகாட்டில் ஆடுவோனாகிய சிவன் (திவா.);; Sivan as dancing in burning ground.

   2. சவர்காரம் (வின்.);; soap.

   3. சிவனார்வேம்பு; Siva’s neem.

ம. சுடலயாடி

     [சுடவை + ஆடி.]

சுடலையாவாரை

 சுடலையாவாரை cuḍalaiyāvārai, பெ. (n.)

   சுடுகாட்டில் விளையும் ஆவாரஞ் செடி; tanners cassia found grown in the grave-yard (சா.அக.);.

     [சுடலை + ஆவாரை]

சுடலையூர்தி

 சுடலையூர்தி cuḍalaiyūrti, பெ. (n.)

   கருமருது; brown-hard-felted-backed-leaved winged Myrobalam.

     [சுடவை + ஊர்தி]

சுடலையோன்

சுடலையோன் cuḍalaiyōṉ, பெ. (n.)

   1. மயில் துத்தம்; blue vitrol.

   2. கள்; toddy (சா.அக.);.

     [சுடலை → சுடலையோன்]

சுடல்

சுடல் cuḍal, பெ. (n.)

   1. சுடரெண்ணெய்,1 பார்க்க;see sudar-enney,

   2. திரியின் எரிந்த முனை முடிச்சு; charred end of a burning wick.

     ‘விளக்கெரியும்படி சுடலைத் தட்டி விடு’ (உ.வ.);

   ம. சுடல்;க. சொடல்

     [சுடு → சுடல் (வே.க. 210);]

சுடவாலமல்லி

 சுடவாலமல்லி cuḍavālamalli, பெ. (n.)

   பவள மல்லிகை; coral jasmine (சா.அக.);.

     [சுடவாலம் + மல்லி]

சுடவை-த்தல்

சுடவை-த்தல் sulavai,    4 செ.குன்றாவி (v.t.)

   சூடுண்டாக்குதல்; to heat any thing in fire (சா.அக.);.

     [சூடு → சுடு → சுட. சுட + வை-,]

சுடாரி

 சுடாரி cuṭāri, பெ. (n.)

   கவசம்; coat of mail.

     [சடாரி → சுடாரி]

சுடிகை

சுடிகை1 cuḍigai, பெ. (n.)

   பனங்கள் (வின்.);; palmwine; palm toddy.

     [சுடு → சுடிகை]

 சுடிகை2 cuḍigai, பெ. (n.)

   1. தலையுச்சி (திவா.);; crown of the head.

   2. மகுடம் (திவா.);; crown, crest, diadem.

   3. நெற்றிச் சுட்டி (திவா.);; ornament worn by women and girls on the forchead.

   4. நெற்றியில் இட்டுக் கொள்ளும் பொட்டு (திவா.);; a mark worn on the forehead.

   5. மயிர்முடி (திவா.);,

 hair-knot on the top of the head, hair tuft on the head.

   6. சூட்டு, கொண்டை (திவா.);; crest as of a peacock.

   7. பாம்புப்படம்; hood of a cobra.

     “பஃறலைச் சுடிகை மாசுணம்” (கந்தபு. திருநாட்டுப். 29);.

த. சுடிகை → Skt.jutika

     [சுட்டி → சுட்டிகை]

சுடிநார்

 சுடிநார் cuḍinār, பெ. (n.)

   மஞ்சள் பூக்களையுடைய காட்டிலவமரம்; yellow flowered silk cotton (சா.அக.);.

சுடீகை

சுடீகை cuṭīkai, பெ. (n.)

   1. உச்சி; crown of the head.

   2. கள்; fermented liquor.

   3. பனங்கள்; palm toddy.

   4. பிள்ளைப்பேறு; parturition, child birth (சா.அக.);.

     [சூடு → சுடு → சுடி → சுடிகை → சுடீகை]

சுடீரம்

சுடீரம்1 cuṭīram, பெ. (n.)

   பொந்து;   துளை (சீவரட்);; of hole, cavity.

     [(சொள்ளை → சொள்); → சுள் → சுடீரம்]

 சுடீரம்2 cuṭīram, பெ. (n.)

   பீநாறி என்னும் மூலிகை; fetid trce (சா.அக);.

சுடு

சுடு1 sullu-,    20 செ.கு.வி (v.i.)

   காய்தல்; to be hot;to burn.

     “வெம்பிச் சுடினும் புறஞ்சுடும்” (நாலடி. 89);.

   க., து. சுடு;ம. சுடு

     [சுள் → சுடு-,]

 சுடு2 sulu-,    8 செ.குன்றாவி (v.t.)

   காயச் செய்தல்; to warm, heat.

     “சுடச்சுடரும் பொன்போல்” (குறள், 267);.

   2. எரித்தல்; to burn up.

   3. பணியாரம் முதலியன கட்டுச் செய்தல்; to roast, toast, bake, fry, cook in steam.

     “பிட்டுச் சுட்டுக் கொடுத்தனள்” (திருவாலவா. 30, 20.);

   4. காளவாயில் வேகவைத்தல்; to burn, as bricks in kiln.

     ‘மழை வருமுன் செங்கல்லைச் கட்டுவிட வேண்டும்’ (உ.வ.);

   5. மருந்து நீற்றுதல்; to calcine, as medicine.

   6. சூடிடுதல்; to cauterise, brand.

   7. வெடிசுடுதல்; to fire, as gun, fire works.

   8. வருத்துதல், துன்புறுத்துதல்; to mortify, as the flesh;

 to injure as one’s feclings.

     “துன்பஞ் சுடச்சுட நோற்கிற்பவர்க்கு” (குறள், 267);.

   9. காயப் படுத்துதல்; to inflict pain.

   10. கெடுத்தல், அழித்தல்; to destroy, ruin.

     “குலஞ்சுடுங் கொள்கை பிழைப்பின்” (குறள், 1019);.

   11. நெருப்பில் வாட்டுதல்; to roast.

     “சங்கு சுட்டாலும் வெண்மை தரும்” (மூதுரை, 4);.

   ம. சுடுக;   க., பட. சுடு;   தெ. சுடியு. சுட;   து. சுடுபுனி, சுட்பினி, துடுபுனி;   கோண். கர்ரானா;   குவி. குதலி;   கொலா. சுட், சுடு;குரு. குக்னா மா. குடெ

     [சுள் → சுடு-, (வே.க. 209);]

 சுடு3 cuḍu, பெ. (n.)

   சுடுகை; burning, heating, scalding.

     “சுடுவிற்றேனுடைந்த வண்ணமே” (சீவக. 416);.

     [சுள் → சுடு]

 சுடு4 cuḍu, பெ. (n.)

   சும்மாடு (பிங்.);; a kind of load-pad for the head.

     [சூடு → சுடு]

சுடுகஞ்சி

சுடுகஞ்சி cuḍugañji, பெ. (n.)

   சூடுள்ளகஞ்சி (பதார்த்த. 1381);; hot gruel.

     [சுடு + கஞ்சி]

சுடுகடு-த்தல்

சுடுகடு-த்தல் sudu-sudu-    4 செ.கு.வி (v.i.)

   சிடுசிடு; to frown.

     [சிடுசிடு → சுடுசுடு-,]

சுடுகண்

 சுடுகண் cuḍugaṇ, பெ. (n.)

   கொள்ளிக்கண்; evil eуe.

     [சுடு + கண்]

சுடுகண்ணம்

சுடுகண்ணம் cuḍugaṇṇam, பெ. (n.)

   1. தாளித்த சுண்ணாம்பு; slaked lime

   2. புடமிட்ட மருந்துச் சுண்ணம்; a calcincid calcium compound (சா.அக.);.

     [சுடு + சுண்ணம்]

சுடுகலம்

 சுடுகலம் cuḍugalam, பெ. (n.)

   சுடப்பட்ட மட்பாண்டம்; earthen vessel.

     [சுடு + கலம்]

சுடுகளாத்தி

 சுடுகளாத்தி cuḍugaḷātti, பெ. (n.)

சுடுதுரத்தி பார்க்க;see Sugu-duratti (சா.அக.);.

சுடுகாடு

சுடுகாடு cuḍukāḍu, பெ. (n.)

   சுடலை; burning ground; crematorium.

     “மக்கட் பிணத்த சுடுகாடு” (நாலடி.121);.

   ம. சுடுகாடு;   க., து. சுடுகாடு;   குட. சுடிகள;கோத. சுட்கட்

     [சுடு + காடு]

சுடுகாடுநக்கி

சுடுகாடுநக்கி cuḍukāḍunakki, பெ. (n.)

   1. ஏதிலி (இ.வ.);; lit. one who licks the burning ground forsaken wretch, forlorn person.

   2. மூக்கில் வெள்ளைப்பொறியுள்ள (ஆ); (இ.வ.);; cow having a white spot on its nose.

   3. மேல்வாய், கீழ்வாய் இதழ்களில் ஒன்று கருமையாகவும் மற்றது வெண்மையாகவும் உள்ள மாடு (இவ.);; bullock having one of its lips black and the other white.

     [சுடுகாடு + நக்கி]

சுடுகாடுமீட்டான்

 சுடுகாடுமீட்டான் cuḍukāḍumīḍḍāṉ, பெ. (n.)

   முடக்கொற்றான் (மலை.);; balloon vine.

     [சுடுகாடு + மீட்டான்]

சுடுகாடுமீட்டான்குழம்பு

 சுடுகாடுமீட்டான்குழம்பு cuḍukāḍumīḍḍāṉkuḻmbu, பெ. (n.)

   பாம்புகடித்தவரின் உடலில் ஏறிய நஞ்சை முறிக்கும் மருந்து; a medicine for snake-bite (சா.அக.);.

     [சுடுகாடு + மீட்டான் + குழம்பு]

சுடுகாடுறையன்

 சுடுகாடுறையன் cuḍukāḍuṟaiyaṉ, பெ. (n.)

   முடக்கொற்றான்; paly carcr (சாஅக);.

     [சுடுகாடு + உறையன்]

சுடுகாட்டுக்கோட்டம்

சுடுகாட்டுக்கோட்டம் cuḍukāḍḍukāḍḍam, பெ. (n.)

   சக்கரவாளக்கோட்டம்; a place in the ancient city of Kaviri-p-pum-pattinam.

     “சுடுகாட்டுக் கோட்டத்துத் துரங்கிருளிற் சென்று” (சிலப்.9:20);/

     [சுடுகாடு + கோட்டம்]

சுடுகாட்டுச்சித்தர்

 சுடுகாட்டுச்சித்தர் cuḍukāḍḍuccittar, பெ. (n.)

   சுடுகாட்டிலிருந்து மந்தரம் செய்தும், இறந்தோர் எலும்பு கொண்டு மாயக்கலை செய்தும், குறி சொல்லியும் வாழும் ஒருவகைச் சித்தர் கூட்டத்தார்; a kind of Sittars who are jugglers and fortune-tellers by practising their austerities in the burning-ground and carry about human bones for working charms and in cantations.

     [சுடுகாடு + சித்தர்]

சுடுகாட்டுப்பாட்டம்

சுடுகாட்டுப்பாட்டம் cuḍukāḍḍuppāḍḍam, பெ. (n.)

   சுடலை வரி, சுடுகாட்டு வரிவகை (I.M.P.C.m. 147);; fee collected in the burning ground.

     [சுடுகாடு + பாட்டம்]

சுடுகாட்டுப்புகை

 சுடுகாட்டுப்புகை cuḍugāḍḍuppugai, பெ. (n.)

   பிணம் சுடும்புகை; smoke from the burning dead body (சா.அக.);.

     [சுடுகாடு + புகை]

சுடுகாட்டுப்பூ

 சுடுகாட்டுப்பூ cuḍukāḍḍuppū, பெ. (n.)

   ஒருவகைக் காட்டுச் செடியில் மலரும் பூ; periwinkle, as graveyard flower, vinca.

     [சுடுகாடு + பூ]

சுடுகாட்டுப்பேய்

 சுடுகாட்டுப்பேய் cuḍukāḍḍuppēy, பெ. (n.)

   சுடுகாட்டில் திரியும் பேய்; spirit of dead persons hovering about the graveyard-Goblin.

     [சுடுகாடு + பேய்]

சுடுகாட்டுமணிபொறுக்கி

சுடுகாட்டுமணிபொறுக்கி cuḍukāḍḍumaṇiboṟukki, பெ. (n.)

   1. கொண்டையுள்ள ஒரு வகைப் பறவை; a kind of bird with crest on its head hovering around the burial ground.

   2. காட்டுப்புறா; wild dove (சா.அக.);.

     [சுடுகாடு + மணி + பொறுக்கி]

சுடுகூத்தன்

 சுடுகூத்தன் cuḍuāttaṉ, பெ. (n.)

   கருப்பட்டி வாகை; a kind of Sirissa tree.

     [சுடு + கூத்தன்]

சுடுகை

 சுடுகை cuḍugai, பெ. (n.)

   சூடுகாட்டல்; process of heating calcification (சா.அக.);.

     [சுடு → சுடுகை]

சுடுகைக்கஞ்சி

 சுடுகைக்கஞ்சி cuḍugaiggañji, பெ. (n.)

   சூடான கஞ்சி; hot-gruel (சா.அக.);.

     [சுடுகை + கஞ்சி]

சுடுகோல்

சுடுகோல் cuḍuāl, பெ. (n.)

   1. குறியிடப் பயன்படும் சூட்டுக்கோல்; a red hot burning iron rod used for marking purpose.

   2. பற்றுக்கோல்; soldering iron.

   3. சுடுகாட்டு நெருப்பைக் கிளறுங்கோல் (வின்);; rod for stirring funeral fire.

     [சுடு + கோல்]

சுடுங்கரிநாள் suduń-karinal,

   கரிசுக் கோள் நின்று நீங்கிய விண்மீன்; the particular naksatran from which an inauspicious planet has just left.

     “கொடுங்கோள் விடுநாள் …. சுடுங் கரிநாள்” (விதான. குணாகுண.94);.

     [சுடும் + கரிநாள்]

சுடுக்கு

சுடுக்கு1 sudukku-,    5 செ.குஙனறாவி. (v.t.)

   1. நெட்டிவாங்குதல்; to crack the joints and knuckles.

   2. பேன் முதலியவற்றை நெரித்தல்; to crack lice, bugs etc.,

மறுவ. சொடுக்குதல், நெரித்தல், சொடக்குப் போடுதல்

     [சொடக்கு → சுடக்கு → சுடுக்கு-,]

 சுடுக்கு2 cuḍukku, பெ. (n.)

   நெட்டிவாங்குகை; cracking the joints and knuckles.

     [தொடக்கு → சுடுக்கு]

சுடுசாப்பாடு

 சுடுசாப்பாடு cuḍucāppāḍu, பெ. (n.)

சுடுசோறு பார்க்க;see sudu-soru.

     [சுடு + சாப்பாடு]

சுடுசாம்பல்

 சுடுசாம்பல் cuḍucāmbal, பெ. (n.)

   ஒத்தடம் கொடுக்கவுதவுஞ் சூடான அடுப்புச் சாம்பல்; hot ashes direct from oven used in fomantation.

     [சுடு + சாம்பல்]

சுடுசுடெனல்

சுடுசுடெனல் suḍusuḍeṉal, பெ. (n.)

   1. விரைவுக் குறிப்பு; onom, expr. singifying hurry.

   2. சினக்குறிப்பு; onom expr. signifying irritability.

     [சுடுசுடு + எனல்]

சுடுசுண்ணச்சாந்து

 சுடுசுண்ணச்சாந்து suḍusuṇṇassāndu, பெ. (n.)

   நீற்றின சுண்ணாம்பு (திவா.);; white wash.

     [சுடு + சுண்ணம் + சாந்து]

சுடுசெங்கற்குகை

 சுடுசெங்கற்குகை suḍuseṅgaṟgugai, பெ. (n.)

   சுட்ட செங்கல்லை அரைத்துப் பண்ணிய குகை; crucible made of powedered burnt brick (சாஅக.);.

     [சுடு + செங்கல் + குகை]

சுடுசொல்

சுடுசொல் suḍusol, பெ. (n.)

   வசை, துன்புறுத்தும் மொழி; caustic remarks.

     “சீறிச் சுடுசொலால் இகழ்வோர்” (கூர்மபு. 32 : 34);.

க. சுடுநுடி

     [சுடு + சொல்]

சுடுசோறு

 சுடுசோறு cuḍucōṟu, பெ. (n.)

   புதிதாகச் சமைத்த சோறு; fresh, cooked rice, opposite to palan-joru (செ.அக.);.

     [சுடு + சோறு]

சுடுதண்ணீர்

 சுடுதண்ணீர் cuḍudaṇṇīr, பெ. (n. சுடுநீர் பார்க்க;see Sudumir.

     [சுடு + தண்ணீர்]

சுடுதண்ணீர்க் கொப்புளம்

 சுடுதண்ணீர்க் கொப்புளம் cuḍudaṇṇīrkkoppuḷam, பெ. (n.)

சுடுநீர்க்கொப்புளம் பார்க்க;Sugu-nîr-k-koppulam.

     [சுடு + தண்ணீர் + கொப்புளம்]

சுடுதழும்பு

சுடுதழும்பு cuḍudaḻumbu, பெ. (n.)

   1. சுட்ட வடு; scar formed by healing of wounds caused by burning or cauterization.

   2. காரத்தினால் சுட்ட தழும்பு; scar caused by the application of caustics (சா.அக.);.

     [சுடு + தழும்பு]

சுடுதி

 சுடுதி cuḍudi, பெ. (n.)

   விதைகளின் மேற்றோலினின்று வடிக்கும் மருந்தெண்ணெய் (இ.வ.);; medicinal oil extracted from the husk of seeds.

சுடுதிமடுதி

 சுடுதிமடுதி cuḍudimaḍudi, பெ. (n.)

   விரைவு; haste.

     [சுள் → சுடு → சுடுதி;

சுடுதி + மடுதி]

சுடுதிமடுதி – எதுகை குறித்து வந்த இணைமொழி.

சுடுதுரத்தம்

 சுடுதுரத்தம் cuḍuduraddam, பெ. (n.)

   அம்மான் பச்சரிசி (மலை);; an annual with erect branches.

சுடுதுரத்தி

 சுடுதுரத்தி cuḍuduraddi, பெ. (n.)

   பாலாடை; euphorbia thymifolia or hyperici folia (சா.அக.);.

சுடுதொரட்டி

 சுடுதொரட்டி cuḍudoraḍḍi, பெ. (n.)

சூரை முள்ளி பார்க்க;see Surai-mulli (சா.அக);.

சுடுநாற்றம்

 சுடுநாற்றம் cuḍunāṟṟam, பெ. (n.)

   மயிர், பிணம் முதலியன சுடுதலால் உண்டாகும் நாற்றம் (உ.வ.);; bad odour produced by burning hair or corpse.

ம. சுடுநாற்றம்

     [சுடு + நாற்றம்]

சுடுநிலம்

 சுடுநிலம் cuḍunilam, பெ. (n.)

சுடுகாடு (தி.வா.); பார்க்க;see sudu-kadu.

மறுவ. சுடலை

     [சுடு + நிலம்]

சுடுநீர்

 சுடுநீர் cuḍunīr, பெ. (n.)

   வெந்நீர்; hot water.

     [சுடு + நீர்]

சுடுநீர்க்கொப்புளம்

 சுடுநீர்க்கொப்புளம் cuḍunīrkkoppuḷam, பெ. (n.)

   கொதிநீர் உடலில் படுவதால் உண்டாகும் கொப்புளம் (M.L.);; scald caused by pouring boiling water on the body.

     [சுடு + தண்ணீர் + கொப்புளம்]

சுடுநோக்கு

சுடுநோக்கு cuḍunōkku, பெ. (n.)

   1. சுடுகண் பார்க்க;see sudu-kan.

   2. கடும் பார்வையுடைய கண்; fierce-looking eyes.

     “சூர்த்துக் கடைசி வந்த கடுநோக்கு” (சிலப். 5:84);

     [சுடு + நோக்கு]

சுடுபடை

சுடுபடை cuḍubaḍai, பெ. (n.)

சுடுகோல், 1 பார்க்க;see sudukol,l.

     “கழுவொடு சுடுபடை சுருக்கிய தோல்” (கலித்’. 106);.

     [சுடு + படை]

சுடுபுண்

 சுடுபுண் cuḍubuṇ, பெ. (n.)

   சுட்டதனால் உண்டான புண் (உ.வ.);; scald, burn.

     [சுடு + புண்]

சுடுபொன்

சுடுபொன் cuḍuboṉ, பெ. (n.)

   புடமிட்ட பொன்; refined gold, as burnt by fire.

     “சுடுபொன் வளைஇய…. சுற்றொடு” (கலித். 85);

     [சுடு + பொன்]

சுடுமடியைப்பிடியெனல்

 சுடுமடியைப்பிடியெனல் cuḍumaḍiyaippiḍiyeṉal, பெ. (n.)

   விரைவுக்குறிப்பு; expression of haste, quickness.

     “வேலை சுடுமடியைப் பிடியென்று நடந்துவிட்டது (நாஞ்);

சுடுமட்பலகை

சுடுமட்பலகை cuḍumaḍpalagai, பெ. (n.)

   செங்கல்; burnt brick.

     “சுடுமட் பலகை (பெரியபு. ஏயர்கோன்.49);,

     [சுடுமண் + பலகை]

சுடுமண்

சுடுமண் cuḍumaṇ, பெ. (n.)

   1. சுடுமட்பலகை பார்க்க;see Sudu-mat-palagai.

     “சுடும ணோங்கிய நெடுநகர் வரைப்பில்” (பெரும்பாண். 405);.

   2. சுட்ட ஒடு; burnt tile.

     “சுடுணேறா வடுநீங்கு சிறப்பின்” (சிலப். 14 : 146);

   3. மட்பாண்டம் (சிலப். 14:146, அரும்.);; earthen vessel.

     [சுடு + மண்]

சுடுமருந்து

சுடுமருந்து cuḍumarundu, பெ. (n.)

   1. நீறுசெய்த மருந்து (வின்.);; medicine prepared by calcination.

   2. புண்ணைச் சுடும் மருந்து; caustic.

     [சுடு + மருந்து]

சுடுமூஞ்சி

 சுடுமூஞ்சி cuḍumūñji, பெ. (n.)

   சினமேறிச் சிவந்த முகம்; frowning face.

     ‘அவன் ஒரு சுடுமூஞ்சி’ (உ.வ.);

மறுவ. சிடுமூஞ்சி

ம,, து. சுடுமோனெ.

     [சுடு + மூஞ்சி. முகம் → மூஞ்சி]

சுடுமூஞ்சித்தனம்

 சுடுமூஞ்சித்தனம் cuḍumūñjittaṉam, பெ. (n.)

   சிடுசிடுத்த முகக்குறி; angry face;irritated face or temperament (சா.அக.);.

     [சுடுமூஞ்சி + தனம்]

சுடுரத்தம்

 சுடுரத்தம் cuḍurattam, பெ. (n.)

   சித்திரப்பாலை; species of euphorbia (சா.அக.);.

     [சுடு + அரத்தம்]

சுடுவனம்

சுடுவனம் cuḍuvaṉam, பெ. (n.)

   1. சுடு அரத்தம்; warm blood.

   2. சுடுநீர்மம்; hot fluid.

   3. அனல் வீசும்காற்று; a forest throwing hot wind.

   4. பாலை நிலம்; desert (சாஅக);.

     [சுடு + வனம்]

சுடுவன்

சுடுவன் cuḍuvaṉ, பெ. (n.)

சுடுவல் (பிங்); பார்க்க;see Suduval.

     [சுடுவல் → சுடுவன் (வே.க. 210);]

சுடுவல்

சுடுவல் cuḍuval, பெ. (n.)

   குருதி, அரத்தம் (திவா.);; blood, as warm.

     [சுடு → சுடுவல் (வே.க. 210);]

சுடுவளர்த்தி

 சுடுவளர்த்தி cuḍuvaḷartti, பெ. (n.)

சூடு வளர்த்தி பார்க்க;see sudu-valartti (சாஅக);.

     [சூடுவளர்த்தி → சுடுவளர்த்தி]

சுடுவள்ளி

 சுடுவள்ளி cuḍuvaḷḷi, பெ. (n.)

தலைச்சூடுவள்ளி பார்க்க;see talai-c-cudu-Valli (சா.அக.);.

     [சுடு + வள்ளி]

சுடுவான்

 சுடுவான் cuḍuvāṉ, பெ. (n.)

   மரக்கலத்துள்ள சமையலறை; galley, caboose (naut.);.

     [சுடு → சுடுவான்]

சுடுவு

சுடுவு cuḍuvu, பெ. (n.)

   சுடு4 பார்க்க;     [சுடு → சுடுவு]

சுட்கமூலம்

சுட்கமூலம் cuṭkamūlam, பெ. (n.)

   1. முளை சுருங்கிய ஒருவகை மூலநோய்; a kind of pile disease.

   2. வறட்சி மூலம்; a kind of hemorrhoid due to the dry condition of the lower end of the rectum.

   3. உலர்ந்துசுருங்கி இருப்பது; that which is dried and shrinked.

   4. உலர்ந்தவோ; dried root.

   5. உலர்ந்தகிழங்கு; dried bulb orrhyzome (சா.அக.);.

     [சுட்கம் + மூலம்]

சுட்கம்

சுட்கம் cuṭkam, பெ. (n.)

   1. வறட்சி; dryness.

   2. வறண்டது; that which is dried up.

   3. ஒரு நோய்; a disease.

   4. பணம் முதலியவற்றின் குறைவு (இ.வ.);; shortage, as of funds, provisions.

   5. கஞ்சத்தனம்; stinginess.

     ‘சுட்கஞ் செய்யாதே’ (உ.வ.);.

 Skt. suska

     [சுள் → சுட்டு → சுட்கம் ஒ.நோ. வெட்கு → வெட்கம் (வே.க.]

சுட்கள்

 சுட்கள் cuṭkaḷ, பெ. (n.)

கள்ளுச்சுள்ளெனல் பார்க்க;see Sulu-c-culenal.

சுட்கு-தல்

சுட்கு-தல் sul-ku,    5 செ.குவி (v.i.)

   1. வறளுதல்; to grow dry.

   2. மெலிதல்; to get reduced as emaciated.

     [சுள் → கட்கு-,]

சுட்சுருதிரிசபம்

 சுட்சுருதிரிசபம் suṭsurudirisabam, பெ.(n.)

   பதினாறு (சோடக); சுரங்களுள் ஒன்று;     [Skt.sat-{}+rsbaha → த.சட்சுருதி ரிசபம்.]

சுட்டகரி

சுட்டகரி cuṭṭagari, பெ. (n.)

   1. எரித்தகரி; burnt charcoal, carbon.

   2. சுடுவதனாலுண்டாகும் கரி; charcoal derived by burning wood fuel.

   3. காந்திப்போன நிலக்கரி; the refuse of the burned coals; a hot coal that ceased to flame.

     [சுட்ட + கரி]

சுட்டகல்

 சுட்டகல் cuṭṭagal, பெ. (n.)

சுட்டசெங்கல் பார்க்க;(இ.வ.);;see sutta-Sengal

ம. சுடுகல்லு

     [(சுடு); சுட்ட + கல்]

சுட்டசாம்பச்சி

 சுட்டசாம்பச்சி cuṭṭacāmbacci, பெ. (n.)

   எவட்சாரம்; saltpetre.

சுட்டசுண்ணாம்பு

சுட்டசுண்ணாம்பு suṭṭasuṇṇāmbu, பெ. (n.)

   1. சுட்ட சுண்ணாம்புக்கல்; burnt lime stone;quick lime.

   2. நீற்றிய சுண்ணாம்பு; slacked lime.

     [சுட்ட + சுண்ணாம்பு]

சுட்டசெங்கல்

 சுட்டசெங்கல் suṭṭaseṅgal, பெ. (n.)

   சூளையிற் சுடப்பட்ட செங்கல்; burnt brick in kiln.

     [சுட்ட + செங்கல்]

சுட்டடிக்கொள்கை

சுட்டடிக்கொள்கை cuḍḍaḍikkoḷkai, பெ. (n.)

ஒருமொழிச் சொற்களெல்லாம் சுட்டுகளினின்று

   கிளைத்து வளர்ந்தன என்னும் கோட்பாடு; deietic theory.

     [சுட்டடி + கொள்கை]

மொழியின்கண் பல்கிப்பெருகிக் காணப் படுகின்ற சொற்களெல்லாம் மிகச்சிறிய அளவிலான வேர்களினின்று வளர்ந்து வந்துள்ளன. அவ்வேர்களுக்கும் மூலமாகச் சுட்டடிகள் இருந்துள்ளன என்பது பாவாணரின் ஆய்வு முடிவு.

சேய்மை, அண்மை, முன்மை ஆகிய மூவிடங்களையும் முறையே சுட்டக்கூடிய ஒலிகள் ஆ, ஈ, ஊ என்னும் மூன்றாய்த்தான் இருக்கமுடியும் வாயை ஆவென்று விரிவாகத் திறந்து சேய்மையைச் சுட்டும் போது ஆகார

வொலியும் ஈயென்று பின்னோக்கியிழுத்துச் சேய்மைக்குப் பின்மையாகிய அண்மையைச் சுட்டும்போது ஈகாரவொலியும், ஊவென்று முன்னோக்கிக் குவித்து முன்மையைச் சுட்டும்போது ஊகாரவொலியும் பிறத்தல் காண்க. நெடிலின் குறுக்கம் குறிலும் குறிலின் நீட்டம் நெடிலுமாதலின் ஆ, ஈ, ஊ எனினும் அ, இ, உ எனினும் ஒன்றே குறிலினும் நெடில் ஒலித்தற் கெளிதாகலானும் குழந்தைகள் குறில்களைப் பெரும்பாலும் நெடிலாகவே யொலித்தலானும் குழந்தை நிலையிலிருந்த முந்தியல் மாந்தன் வாயில் நெடில்களே முந்திப் பிறந்திருத்தல் வேண்டும் (முதா. 18);.

சுட்டணி

சுட்டணி cuṭṭaṇi, பெ. (n.)

   வீரசோழியத்தில் கூறப்பட்ட நிதரிசனம் என்னும் ஒருவகை அணி (வீரசோ. அலங்.12);; a kind of figure of speech as in Vira coļiyam.

     [சுட்டு + அணி]

சுட்டபுண்

சுட்டபுண் cuṭṭabuṇ, பெ. (n.)

   1. நெருப்பினால் சுடப்பட்ட புண்; injury caused by fire-burns.

     “தீயினாற் சுட்டபுண் உள்ளாறும்” (குறள், 129);.

   2. வெந்தபுண்; wound caused by hot substances – scalds (சா.அக.);.

     [சுட்ட + புண்]

சுட்டபுண்ணாற்றி

 சுட்டபுண்ணாற்றி cuṭṭabuṇṇāṟṟi, பெ. (n.)

   தீச்சுட்ட புண்களை ஆற்றும் மருந்து; an agent that cures burns antipyrotic (சா.அக.);.

     [சுட்ட + புண் + ஆற்றி]

சுட்டபுளி

 சுட்டபுளி cuṭṭabuḷi, பெ. (n.)

   நெருப்பிலிட் டெடுத்த புளி; burnt tamarind used in diet (சா.அக.);.

     [சுட்ட + புளி]

சுட்டபூக்கல்

 சுட்டபூக்கல் cuṭṭapūkkal, பெ. (n.)

   ஒருவகை உப்பு, வழலை; a kind of salt (சா.அக.);.

     [சுட்ட + உப்புக்கல்]

சுட்டறிவு

சுட்டறிவு cuṭṭaṟivu, பெ. (n.)

சுட்டுணர்வு, 2 பார்க்க;see suttunarvu, 2.

     “சுட்ட றிவாவது அசத்தேயாகலின்” … (சி.சி. 6:2 சிவஞா.);

     [சுட்டு + அறிவு]

சுட்டல்

சுட்டல் cuṭṭal, பெ. (n.)

கட்டுணர்வு, 1 பார்க்க;see suttunarvu,

   1.”சுட்டறிரிதல்” (மணிமே. 27:22);.

     [சுட்டு → சுட்டல்]

சுட்டவெண்காரம்

 சுட்டவெண்காரம் cuṭṭaveṇkāram, பெ. (n.)

   வெப்பத்தால் நீர்க்கூறகற்றிய வெண்காரம்; roasted borax, dehydrated borax (சா.அக.);.

     [சுட்ட + வெண்காரம்]

சுட்டாமுட்டி

சுட்டாமுட்டி cuṭṭāmuṭṭi, பெ. (n.)

   சுட்டுவிரல் (சிலப். 3:58, அரும்.);; index finger, forefinger.

     [சுகட்டு + ஆ முட்டி]

சுட்டாவிரல்

 சுட்டாவிரல் cuṭṭāviral, பெ. (n.)

கட்டுவிரல் பார்க்க;see Suttu-Viral (சா.அக.);.

     [சுட்டு + ஆ + விரல்]

சுட்டி

சுட்டி1 cuṭṭi, பெ. (n.)

   1. குழந்தைகளும் மகளிரும் அணிந்து கொள்ளும் நெற்றியணி; a small designed ornament worn by children and women on the forehead.

     “சுட்டி சிதையக் குட்டத்துக் குளித்து” (பெருங். உஞ்சைக். 40:102);.

   2. மாட்டின் நெற்றியிலுள்ள வெண்கழி; white curl on the forehead of bull or cow.

     “சுட்டியை நெற்றியிலேயுடைய கரிய எருது” (கலித். 101 : 2, உரை.);.

   3. பாம்பு முதலிய உயிரிகளின் உச்சி வெள்ளை (வின்.);; white spot on the head of a beast or serpent.

   4. சிறுபட்டி (நாஞ்);; short striped border of a cloth.

   5. மயிர்முடி (அக.நி);;   குடுமி; tuft of hair.

   6. நெற்றிப்பட்டம் (அக.நி.);; a plate of gold worn on the forehead, as a mark of distinction.

   ம. சுட்டி;   க. சுட்டி;து. சிட்டி

 Skt. cudiya

     [சுள் → சுட்டி (வே.க. 230);]

 சுட்டி2 cuṭṭi, பெ. (n.)

   1. துடிப்பானவன்; an active fellow.

   2. குறும்புத்தனம் உள்ளவன்; a mischievous fellow.

   3. ஆகூழற்றவன் (இ.வ.);; luckless fellow;ill-fated person.

   4. அறிவுக் கூர்மையுள்ளவன் (இ.வ.);; intelligent person.

   ம. சுட்டி;   க., தெ. சூடி;து. சுடி

 Skt. dusta

     [சுடு → (சுட்டு); → சுட்டி (மு.தா.62);]

 சுட்டி3 cuṭṭi, பெ. (n.)

   பொருட்டு; for the sake of.

     “எனக்குச் சுட்டி ஒன்றுஞ் செய்ய வேண்டாம்” (நாஞ்.);.

     [சுட்டு → சுட்டி]

 சுட்டி4 cuṭṭi, பெ. (n.)

   நாக்கு (அக.நி);; tongue.

     [சுட்டு → சுட்டி]

சுட்டிகை

சுட்டிகை cuṭṭigai, பெ. (n.)

   மகளிர் நுதலணி; an ornament worn by women on the forehead.

     “குளிகையுஞ் சுட்டிகையும்……” (பதினொஆதியுலா.68);.

     [சுட்டி + கை]

சுட்டிக்காட்டு-தல்

சுட்டிக்காட்டு-தல் sutti-k-kattu,    5 செ.குன்றாவி, (v.t.)

   1. சுட்டு1-தல் பார்க்க;see suttu-,

   2. அடையாளங்காட்டுதல்; identity.

     “உன்னையே சுட்டிக் காட்டுங்காண்” (திவ். பெரியாழ். 1.4:4);.

     [சுட்டி + காட்டு-,]

சுட்டிசுட்டியாக

 சுட்டிசுட்டியாக Sutti-Sutti-y-aga, வி.அ. (adv.)

   வட்டம் வட்டமாக; in round patches.

     ‘அவன் உடலில் சுட்டிசுட்டியாக வெள்ளை விழுகிறது’ (உ.வ.);.

     [சுட்டி + சுட்டி + ஆக]

சுட்டிச்சுண்ணம்

சுட்டிச்சுண்ணம் cuṭṭiccuṇṇam, பெ. (n.)

   உடம்பைத் துய்மை செய்தற்குரிய நறுமணப் பொடி; scented or aromatic powder used in bathing.

     “சுந்தரப் பொடியுஞ் சுட்டிச் சுண்ணமும்” (பெருங். உஞ்சைக். 42 : 73);.

     [சுட்டி + சுண்ணம்]

சுட்டிட்டிகை

சுட்டிட்டிகை cuṭṭiṭṭigai, பெ. (n.)

சுட்டோடு பார்க்க;see suttodu.

     “சுட்டிட்டிகையால் மாடமாளிகை எடுக்கப் பெறுவதாகவும்…” (தெ.க.தொ.521,35);.

     [சுட்ட + இட்டிகை]

சுட்டித்தனம்

 சுட்டித்தனம் cuṭṭittaṉam, பெ. (n.)

   துடுக்குத் தனம்; mischievousness, turbulence.

     [சுட்டி + தனம்]

சுட்டித்தலை

சுட்டித்தலை cuṭṭittalai, பெ. (n.)

   1. சுட்டித் தனம் (யாழ்.அ.க.); பார்க்க;see sutti-t-tanam.

   2. சுட்டித்தலையன்1 (இ.வ.); பார்க்க;see sutti-t-talaiyan1.

   3. சுட்டியுள்ள தலை; head which have a curl.

     [சுட்டி + தலை]

சுட்டித்தலையன்

சுட்டித்தலையன்1 cuṭṭittalaiyaṉ, பெ. (n.)

   குறும்பு செய்பவன், கெட்டவன்; mischievous fellow.

     [சுட்டி + தலையன்]

 சுட்டித்தலையன்2 cuṭṭittalaiyaṉ, பெ. (n.)

   உச்சி வெள்ளையுடைய விலங்கு (யாழ்ப்.);; animal with a white spot on its forehead.

     [சுட்டி1+ தலையன்]

சுட்டிப்பயல்

 சுட்டிப்பயல் cuṭṭippayal, பெ. (n.)

சுட்டிப் பையன் பார்க்க;see Sutti-p-раiyan.

     [சுட்டிப்பைன் → சுட்டிப்பன் பையன் →பையன் – பயல்]

சுட்டிப்பேசு-தல்

சுட்டிப்பேசு-தல் sutti-p-pesu-,    5 செ.குன்றாவி. (v.t)

   குறிப்பாகச் சொல்லுதல் (இ.வ);; to hint, allude to in discourse.

     [சுட்டி + பேச-,]

சுட்டிப்பையன்

சுட்டிப்பையன் cuṭṭippaiyaṉ, பெ. (n.)

   1. குறும்புசெய்யும் பையன்; mischevous boy;

   2. கூர்த்த அறிவுடையோன்; brilliant boy.

     [சுட்டி2 + பையன்]

சுட்டிமுகடு

 சுட்டிமுகடு cuḍḍimugaḍu, பெ. (n.)

   மகளிர் அணியும் தலையணி (இ.வ.);; set of ornaments worn by women on the head.

     [சுட்டி + முகடு]

சுட்டியன்

சுட்டியன் cuṭṭiyaṉ, பெ. (n.)

சுட்டி2 பார்க்க;see sutti2.

     [சுட்டி + சுட்டியன்]

சுட்டு

சுட்டு1 suttu-,    5 செ.குன்றாவி (v.t.)

   1. குறிப்பிடுதல்; to point out;indicate.

     “துன்னுநர் சுட்டவும்” (பரிபா. 19, 54);.

   2. நோக்கமாகக் கொள்ளுதல், குறிக் கோளாய்க் கொள்ளுதல்; to have in view, aim at, desire.

   3. நினைத்தல், உன்னுதல்; to think, consider.

     “சுட்டினும் பனிக்கும்” (மலைபடு. 398);.

   4. நன்குமதித்தல்; to honour.

     “இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி” (திருமுருகு.178);.

   ம. சுட்டு;க., தெ., சுட்டு

     [சுள் → சுட்டு-,)

 சுட்டு2 cuṭṭu, பெ. (n.)

   1. குறிப்பிடுகை; to indication, reference.

     “சுட்டுத்தலை போகாத் தொல்குடி” (சிலப். 12 : 21);.

   2. கருதப்படும் பொருள்; that which is intended, designated.

     “உயர்திணை யென்மனார் மக்கட் சுட்டே” (தொல். சொல்.1);.

   3. நன்மதிப்பு; honour.

     “பிறராற் பெருஞ்சுட்டு வேண்டுவான்” (நீதிநெறி. 20);.

   4. சுட்டெழுத்து பார்க்க;see Sutteluttu.

     “அ இ உ அம்மூன்றுஞ் சுட்டு” (தொல். எழுத்து.31);.

   5. கட்டணி பார்க்க;see suttani.

   ம. சுட்டு;   க. சுட்டு;   தெ. சூட்டி;   து. சூடி;   குய். சூட்டா;குவி. ஹுடாலி.

     [சுள் → சுட்டு]

சுட்டுக் கோல்

சுட்டுக் கோல் cuṭṭukāl, பெ. (n.)

   1. உலையாணிக்கோல்; smith’s poker.

     “சுட்டுக்கோல் போல வெரியும் புகுவரே நீட்டாரெனப் படுவார்” (நாலடி, 208);.

   2. தீயோன் (யாழ்ப்.);; mischievous person.

     [சுட்டு + கோல்]

சுட்டுக்குருவி

 சுட்டுக்குருவி cuṭṭukkuruvi, பெ. (n.)

சிட்டுக்குருவி (இ.வ.); பார்க்க;see Sittu-k-kuruvi.

     [சிட்டுக்குருவி → சுட்டுக்குருவி. சுள் → (சுட்டு); → சிட்டு = சிறியது. குள் → குரு → குருவி = சிறு பறவை]

சுட்டுக்குவி

சுட்டுக்குவி cuṭṭukkuvi, பெ. (n.)

   பிணங்களைச் கட்டுக்குவி எனப் பொருள்படும்படி அமைந்ததாகக் கருதப்படும் ஆந்தையின் ஒலிக்குறிப்பு; screeching of an owl fancied to resemble the word suttu-k-kuvi and indicate that the corpses should be burnt and heaped.

     “சுட்டுக் குவியெனச் செத்தோர்ப் பயிருங் கள்ளியம் பறந்தலை” (புறநா. 240);.

     [சுட்டு + குவி]

சுட்டுக்கொட்டைபரப்பு-தல்

சுட்டுக்கொட்டைபரப்பு-தல் suttu-k-kottaiparappu-,    5 செ.கு.வி. (v.t.)

   ஊரைச் சுட்டு விதைத்தல், முற்றும் அழித்தல்; lit, to burn down a city and sow it with castor seeds. To destroy completely, devastate.

     [சுட்டு + கொட்டை + பரப்பு-,]

சுட்டுணர்வு

சுட்டுணர்வு cuṭṭuṇarvu, பெ. (n.)

   1. போலி யளவைகளெட்டனுள் பொருளுண்மை மாத்திரை காணும் அறிவு (மணிமே. 27 : 6);:

 knowledge of the mere existence of a thing without knowing its nature, one of eight piramanapasam.

   2. புலன்களால் உய்த்துணரும் அறிவு; cognition by the senses.

     “சுட்டுணர் வின்றி நின்றறியப்படுஞ் சிவசத்தின் முன்னர்” (சி.போ.பா.பக்.154);.

     [சுட்டு + உணர்வு]

சுட்டுநட்டவேப்பங்கன்று

 சுட்டுநட்டவேப்பங்கன்று cuṭṭunaṭṭavēppaṅgaṉṟu, பெ. (n.)

   பெருங்கொடுமையன் (நெல்லை);; extremely mischievous person.

     [சுட்டு + நட்ட + வேப்பங்கன்று]

சுட்டுப்பெயர்

சுட்டுப்பெயர் cuṭṭuppeyar, பெ. (n.)

   1. சுட்டெழுத்தை முன்பெற்ற பெயர்; demonstrative pronoun, as அவன்,

இவன். ‘சுட்டுப்பெயர்க் கிளவி முற்படக் கிளவார்’ (தொல். சொல். 38);.

   2. சுட்டுமாத்திரையாய் நிற்கும் பெயர்; noun used in the place of pronoun.

     “கூற்றம் நமன் என்பன சுட்டுப்பெயர்” (சீவக. 1487, உரை);.

     [சுட்டு + பெயர்]

அ, இ, உ என்னும் சுட்டெழுத்துகளுடன் பால்ஈறுகள் சேர்ந்து உருவாகும் சுட்டுப் பெயர்கள், படர்க்கைப்பெயர்களாக ஆளப்படுகின்றன. பழந்தமிழில் கட்டெழுத்துகள் நெடிலாக இருந்தன (இன்றளவும் தமிழின மொழிகளான மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளில் சுட்டு நெடில்களாக இருக்கின்றன. பின்னர், அவை குறில்களாகக் குறுக்கம் பெற்றன.

 I need not call attention to the beautiful and philosophical regularity of this quadruple set of remote, proximate and intermediate demonstrative and interrogatives. In no other language or family of languages in the world shall we find its equal, or even its second. In addition to which, the circumstance that the demonstrative vowels are not only used in these languages with an invariable and exact discrimination of menaing which is not found in the Indo-European tongues (with the solitary and partial exception of the new persian); but are also associated with a corresponding interrogative vowel of which the Indo-European tongues are totally

 ignorant, tends to confirm the supposition which I have already expressed, that the Dravidian family has retained some presanskrit elements of immense antiquity;

 and, in particular, that its demonstratives, instead of being borrowed from Sanskrit, represent those old Japhetic bases from which the demonstrative of Sanskrit itself, as well as of various other members of the Indo-European family, were derived. (C.G.D.F.L. 422);.

சுட்டுப்பொருள்

சுட்டுப்பொருள் cuṭṭupporuḷ, பெ. (n.)

   1. கருதிய பொருள்; intended meaning, object aimed at.

   2. ஊழ்கத்துக்காக (தியானத்துக்காக); மனத்தில் அமைக்கப்படும் முழுத்தம் (வின்.);; image of the object of worship formed in the mind for meditation.

   3. ஊழ்கத்தில் நினைத்த படி கடவுள் குருவாக எழுந்தருளல்; god appearing in the form of a Guru in meditation.

     [சுட்டு + பொருள்]

சுட்டுறுகோல்

சுட்டுறுகோல் cuṭṭuṟuāl, பெ. (n.)

சுட்டுக் கோல்,1 பார்கக;see suttu-k-kol, 1.

     “கட்டழற் புகூஉஞ் சுட்டுறுகோல் போல்” (பெருங். இலாவாண. 8:155);.

     [சுட்டுறு + கோல்]

சுட்டுவிடை

சுட்டுவிடை cuḍḍuviḍai, பெ. (n.)

   எண்வகை விடைகளுள், இது இவன் முதலிய சுட்டுப் பெயர்களாற் கூறும் விடை (நன். 386, உரை);; answer in the form of demonstrative pronouns, one of en-vagai-vidai.

     [சுட்டு + விடை]

சுட்டுவிரல்

சுட்டுவிரல் cuṭṭuviral, பெ. (n.)

   ஆட்காட்டி விரல்; forefinger.

     “சுட்டு விரறனை மாசற நீட்டி …” (பரத.பாவ.30);.

   ம. சுண்டந் விரல்;தெ. சட்டு வேலு.

     [சுட்டும் + விரல்]

சுட்டுவை-த்தல்

சுட்டுவை-த்தல் suttu-vai,    4 செ.குன்றாவி (v.t.)

   1. ஒருவரை நினைத்த வண்ணமாய் இருத்தல் (யாழ்.);; to think intently about a person.

   2. ஊழ்கத்தில் தான்நினைத்த தெய்வத் திருமேனியிலேயே மனத்தை நிறுத்துதல்; to fix one’s mind on the image of the object of worship, in meditation.

     [சுட்டு + வை-,]

சுட்டெரி-த்தல்

சுட்டெரி-த்தல் sutteri,    4 செகுன்றாவி (v.t.)

   1. நெருப்பு அல்லது வெப்பம் கடுமையாகக் காய்தல்; fire or sun shine heating hardly.

     ‘சுட்டெரிக்கும் இந்த வெயிலில் அலைந்து திரிந்தால் சூட்டுக்கடுப்பு வரும்’ (உ.வ.);

   2. கடுந் தீயால் எரித்தல்; burning by fire.

     “சிறுவர்கள் விளையாட்டாய் மூட்டிய தீ வீட்டையே சுட்டெரித்து விட்டது”

   3. உடலையும் மனத்தையும் புண்படுத்துதல்; hurting one’s body and mind.

     “அவருடைய சினம் அவளைச் சுட்டெரித்தது.”

ம. சுட்டெரிக்குக

     [சுட்டு + எரி-,]

சுட்டெழுத்து

சுட்டெழுத்து cuṭṭeḻuttu, பெ. (n.)

   சுட்டி உணர்த்தும் அ, இ, உ என்ற எழுத்துகள்; the demonstrative sounds a, i, u.

     “சுட்டெழுத்தினை முதலாகவுடைய வகர வீற்றுப் பெயர் மூன்றும்” (தொல். எழுத்து. 378, உரை.);.

ம. சுட்டெழுத்து

     [சுட்டு + எழுத்து]

சுட்டொலி

சுட்டொலி cuṭṭoli, பெ.(n.)

சுட்டிக்காட்டும் ஒலி,

 deitic sound.

     [கட்டு+ஒலி].

 சுட்டொலி cuṭṭoli, பெ. (n.)

   சுட்டிக்காட்டும் ஒலிகள்; deictic sounds.

     [சுட்டு + ஒலி]

சேய்மையைச் சுட்டுதற்கேற்ப வாயை விரிவாய்த் திறந்தொலிக்கும் ஆகாரமும், சேய்மைக்குப் பிற்பட்ட அண்மையைச் சுட்டுதற்கேற்ப வாயைப் பின்னுக்கிழுத் தொலிக்கும் ஈகாரமும், சேய்மைக்கும் அண்மைக்கும் இடைப்பட்ட முன்மையைச்

சுட்டுதற்கேற்ப இதழ்களை முற்படக் குவித்தொலிக்கும் ஊகாரமும், முறையே சேய்மை யண்மை முன்மைச் சுட்டொலிக ளாயின. இச்சுட்டொலிகளின் தோற்றமே தமிழ்க் கருநிலையாம். இவையே முதன் முதல் தமிழில் தோன்றிய உயிர்கள்.

முதற்கண் மூவிடச்சுட்டு கைச்சைகையினால் மட்டும் நிகழ்ந்தது. பின்பு கைச்சைகையோடு கூடிய வாய்ச்சைகையினால் நிகழ்ந்தது. அதன்பின், வாய்ச்சைகையினால் மட்டும் நிகழ்ந்து வருகின்றது. ஆயின், அவ்வாய்ச் சைகைத் தன்மை இன்று மறைந்துள்ளது. முச்சுட்டொலிகளும் வாய்ச்சைகை யொலிகளாயிருப்பதனாலேயே, அவை தமிழில் எக்கரணியத்தையிட்டும் பிற மொழிகளிற் போல் இடமாறிச் சுட்டுவ தில்லை. இதனால், தமிழொடு சிறிதும் பெரிதும் தொடர்புள்ள பிறமொழிச் சுட்டுச் சொற்கட்கெல்லாம். தமிழ்ச்சொற்களே மூலமென்பதைத் தெற்றென தெரிந்து கொள்ளலாம்.

எ-டு: இடம்மாறாதன

சமற்கிருதம்

தமிழ்

ஆங்கிலம்

தமிழ்

தத்ர

அங்கு

 that

அது

இக

இங்கு

 this

இது

இடம் மாறியன

அத்ர

இங்கு

 it

அது

அதுனா

இப்பொழுது

 thus

இப்படி (த.வ. 66, 67);

சுட்டோடு

சுட்டோடு cuṭṭōṭu, பெ. (n.)

   கட்டசெங்கல்; burnt brick.

     “சுட்டோட்டால் மாட மாளிகை எடுக்கப் பெறுவதாகவும்” (தெ. க. தொ. 2, 509:58);.

     [சுட்டு + ஒடு]

சுணக்கன்

சுணக்கன் cuṇakkaṉ, பெ. (n.)

   1. சுணங்கன் (சங்அக); பார்க்க;see sunangan.

   2. நாய் போலத் திரிபவன் (வின்.);; one who wanders about as street dog, loafer.

   3. இழிந்தோன் (வின்.);; mean person, one who performs mean offices.

   க. சொனக்;த. சுணக்கன்

     [சுணங்கன் → சுணக்கன்]

 Skt. Sunaka

சுணக்கம்

சுணக்கம்1 cuṇakkam, பெ. (n.)

   1. காலத்தாழ்வு; delay.

     ‘இப்படி நடந்தால் பள்ளிக்குச் சுணக்கமாகும்’ (உ.வ.);.

   2. வாட்டம்; depression of spirits; fatigue emaciation.

     ‘இந்தச் சுணக்கம் தீர்ந்தால் மடமடவென்று நடக்கலாம் (உ.வ.);.

   3. இன்பவிளையாட்டு; dalliance.

அவளோடு கணக்கம் தகுமா? (உ.வ.);.

     [சுள் → சுணங்கு → சுணக்கம்]

 சுணக்கம்2 cuṇakkam, பெ. (n.)

   முடை; tightness, as of market.

     “பண்டு போலில்லை பணச் சுணக்கம்” (பஞ்ச. திருமுக. 445);.

     [சுணக்கம்2 → சுணக்கம்3]

சுணக்கு

சுணக்கு1 sunakku-,    5 செ.குன்றாவி (v.t.)

   காலந்தாழ்த்துதல்; to dellay.

     ‘வேலையைச் சுணக்காதே’ (நெல்லை);.

     [சுணங்கு → சுணக்கு-,]

 சுணக்கு2 cuṇakku, பெ. (n.)

   வேலை தொடங்குவதை அல்லது செய்யும் வேலையைக் காலந்தாழ்த்துகை; delay in starting or doing delay in the work.

     [கணக்கம்1 → சுணக்கு]

சுணக்குமுத்திரை

 சுணக்குமுத்திரை cuṇakkumuttirai, பெ. (n.)

   அரக்குமுத்திரை (வின்.);; seal put upon one’s property with sealing wax.

     [சுணக்கு + முத்திரை]

சுணங்கத்திசை

 சுணங்கத்திசை suṇaṅgattisai, பெ. (n.)

   தென்மேற்குத் திசை (வின்);; the South West quarter.

 Skt. Sunaka

சுணங்கன்

சுணங்கன்1 cuṇaṅgaṉ, பெ. (n.)

   1. சோர்வுற்றவன்; tired person.

   2. மெலிந்தவன்; slender person.

ம. சுணங்ங்ன்

     [சுணங்கு → சுணங்கன்]

 சுணங்கன்2 cuṇaṅgaṉ, பெ. (n.)

   நாய் (திவா.);; dog.

 Skt. Sunaka

சுணங்கன்புல்

 சுணங்கன்புல் cuṇaṅgaṉpul, பெ. (n.)

   மஞ்சள் நிறக் கிழங்குள்ள ஒருவகைப்புல்; a kind of a grass having yellow coloured bublous root (சா.அக.);.

     [சுணங்கன் + புல்]

சுணங்கன்மரம்

 சுணங்கன்மரம் cuṇaṅgaṉmaram, பெ. (n.)

   நோய்களைத் தீர்க்கும் மருத்துவப் பண்புடைய நாய்க்குட்டி மரம்; a rare kind of tree called as nay-k-kutti. (சா.அக.);.

     [சுணங்கன் + மரம்]

சுணங்கன்மூலி

சுணங்கன்மூலி cuṇaṅgaṉmūli, பெ. (n.)

   கற்பமூல பெருமூலி 23 வகைகளில் ஒன்றான நாய்க்குட்டிச் செடி; a kind of medicinal plant which is one of the 23 varieties of karbamula maga-muli (சா.அக.);.

     [சுணங்கன் + மூவி]

சுணங்கம்

சுணங்கம் cuṇaṅgam, பெ. (n.)

கணங்கன் பார்க்க;see sunangan.

     “அந்தமில்லச் சுணங்கம தாயினாள்” (யசோ.3:4);.

சுணங்கறை

சுணங்கறை cuṇaṅgaṟai, பெ. (n.)

   புணர்ச்சி; Sexual union.

     “சுணங்கறைப் பயனு மூடலுள் ளதுவே” (பரிபா. 9:22);.

     [சுணங்கு + அறு – சுணங்கறு. சுணங்கறு → சுணங்கறை]

சுணங்கல்

சுணங்கல்1 cuṇaṅgal, பெ. (n.)

   1. சுணக்கம் பார்க்க;see Sunakkam.

   2. சோம்பேறி; மடியாளன்; lazy person.

     ‘போடா சுணங்கலே’ (இ.வ.);.

   3. மெலிவு; emaciation.

ம. சுணங்ங்வு

     [சுணக்கம் → சுணங்கல்]

சுணங்கழி-தல்

சுணங்கழி-தல் sunangali-,    2 செ.கு.வி (v.i.)

   செருக்குக்குறைதல் (ஈடு);; to have one’s pride reduced.

     [சுணங்கு3 + அது-,]

சுணங்கி

 சுணங்கி cuṇaṅgi, பெ. (n.)

   சோம்பேறி; sluggard, idler.

     [சுணங்கு → சுணங்கி]

சுணங்கிப்போ-தல்

சுணங்கிப்போ-தல் sunangi-p-po-,    8 செ.கு.வி (v.i.)

   மெலிந்துபோதல்; to grow weak and thin (சா.அக.);.

     [சுணங்கி + போ-,]

சுணங்கிவிழு-தல்

சுணங்கிவிழு-தல் sunangi-vilu-,    2 செ.கு.வி. (v.i.)

   களைத்துவிழுதல்; to fall by exhaustion or over exertion (சா.அக.);.

     [சுணங்கி + விழு-,]

சுணங்கு

சுணங்கு1 sunangu-,    5 செ.கு.வி. (v.i.)

   1. வினையிற் சோர்தல்; to be fatigued;

 jaded;

 to be emaciated.

   2. காலந்தாழ்த்தல்; to delay; loiter, linger.

     ‘இந்த இளவயதில் இப்படிச் சுணங்குதல் சரியா? (உ.வ.);.

   3. தடைப்படுதல்; to hindered, interrupted.

   4. பொந்திகையடையா திருத்தல்; to be dissatisfied.

     ‘அவன் தன் திருமண முயற்சியில் சுணங்கிக் கொண்டிருக்கிறான்’ (உ.வ.);.

   5. கெஞ்சுதல் (வின்.);; to cringe, persistin requesting.

   6. இன்ப விளையாட்டுப் புரிதல் (இ.வ.);; to dally, make amorous advances.

   7. சினங்கொள்ளுதல்; to get angry.

   8. ஊடுதல்; to feign displeasure, as a wife for her husband.

   ம. சுணங்ஙுக;   க. சுணுகு;தெ. சுடுகு, சுணுகு

 E. slack;

 AS. sleak;

 Su. slak;

 Ice. Slakr-

     [சுள் → சுண் → சுணங்கு (வே.க. 215);]

 சுணங்கு2 cuṇaṅgu, பெ. (n.)

   மெலிவு (வின்.);; reduction, emaciation.

     [சுள் → சுண் → சுணங்கு]

 சுணங்கு3 cuṇaṅgu, பெ. (n.)

   1. அழகுத்தேமல்; yellow spreading spots on the body of women, regarded as beautiful.

     “மின்னுறழ் சாயற் பொன்னுறழ் சுணங்கின்” (பெருங். மகத. 16:5);.

   2. பசலை; sallow complexion of a love-lorn woman.

   3. படர்புண் வகை (இ.வ.);; a spreading skin-disease, especially of animals.

   4. பூந்தாது; pollen-dust.

     “பசுமலர்ச் சுணங்கின்” (ஜங்குறு. 76);. (செ.அக);.

ம. சுணங்ஙு

     [சுணம் → சுணங்கு]

 சுணங்கு4 cuṇaṅgu, பெ. (n.)

கணங்கன் பார்க்க;see sunangan.

     “சுணங்குபல பணிங்கு பெருங் குரைப்பினாலும்” (அரிச்.பு.மயான.35);.

ம. சுணங்கி

     [சுணங்கன் → சுணங்கு]

சுணங்குபடர்-தல்

சுணங்குபடர்-தல் sunangu-balar,    2 செ.கு.வி. (v.i.)

   உடம்பில் தேமல் படர்தல் (சிறுபாண்.);; to spread as yellow patches or spots on the skin especially of the woman (சா.அக.);.

     [சுணங்கு + படர்-,]

சுணங்குபூ-த்தல்

சுணங்குபூ-த்தல் sunangu-bu,    4 செ.கு.வி. (v.i.)

சுணங்குபடர்-தல் பார்க்க;see Sunangu-bagar (சா.அக.);.

     [சுணங்கு + பூ-,]

சுணங்கை

சுணங்கை cuṇaṅgai, பெ. (n.)

   துணங்கை; a kind of devil-dancing.

     “ஆடுங்கள்ளும் பராய்ச் சுணங்கை யெறிந்து” (திவ். திருவாய். 4,6:7);

     [துணங்கை → சுணங்கை]

சுணச்சி

சுணச்சி cuṇacci, பெ. (n.)

   1. பவளப்புற்று நஞ்சு; a kind of prepared arsenic.

   2. பேய்க்கடலை; a kind of bitter wild gram.

   3. பேய்த்தும்பை; devil tumbay.

   4. நாகசிங்கி; a medicinal plant available in tanks (சா.அக.);.

சுணம்

சுணம்1 cuṇam, பெ. (n.)

   அழகுத்தேமல்; yellow

 spreading spots on the body of women.

     “சுண நன் றணிமுலை யுண்ண” (திவ்.பெரியாழ்.2.3:4);.

     [கள் → சுண் → சுணம்]

த. கணம் – Skt. svarna

 சுணம்2 cuṇam, பெ. (n.)

சுண்ணப்பொடி பார்க்க;see sunna-p-podi.

     “புரிந்த பூவொடு பொற்கணங் கழும” (பெருங். உஞ்சைக். 39:46);.

     [சுள் → சுண் → சுண்ணம் → சுணம்]

சுணவு

 சுணவு cuṇavu, பெ. (n.)

சுணைவு பார்க்க;see sunaivu (சா.அக);.

     [சுணைவு → கணவு]

சுணை

சுணை1 sunai-,    4 செ.கு.வி. (v.i.)

   1. தினவெடுத்தல்; to itch severely.

   2. நமைச்சல்; to tingle, as tongue after eating something pungent.

   3. அரிப்பெடுத்தல்; to be inflamed, as from the touch of a micro thorn plant, nettle.

   4. அரித்தல்; to be inflammed, as from the hairs of a caterpillar.

ம. சுணய்க்குக

 Mhr. Sunasuna

     [சுனை → சுணை-,]

 சுணை2 cuṇai, பெ. (n.)

   சுரணை, நெஞ்சகத்திற் குத்தும் மானவுணர்ச்சி; sense of shame; sensibility.

     “துகிலு மிழந்து சுணையு மழிந்து” (பட்டினத். உடற் கூற்று வண்ணம். 249);.

   2. கூரிய அறிவு; sense.

   3. கூர்மை; keenness, sharpness.

     ‘சுணையில்லாக் கத்தி’ (உ.வ.);.

   4. தினவு; itching, tingling, smarting

   5. அம்மைநோய் கண்ட காலத்தில் உடம்பில் உள்ளிடமாகத் தங்கி முட்குத்துப் போன்ற உணர்ச்சியுள்ள அம்மைக்கொப்புளம் (உ.வ);; pustules, as in the alimentary canal, formed when a person is attacked with small-pox.

   6. இலை, காய் முதலியவற்றின் மேலுள்ள சிறுமுள்; prickle, as in leaves stalks etc., down on fruits.

   ம. சுண, சுனை (முள்.);;தெ. சொந

     [சுல் → கர் + சுரணை = குத்தும் மான வுணர்ச்சி. சுரணை → சுணை]

     “செ.ப. அகரமுதலி… நினைவு அல்லது தன்னுணர்ச்சி என்று மட்டும் பொருள்படும் ஸ்மரண என்னும் வடசொல்லை, சுரண என்னும் சொற்கு மட்டுமின்றிச் சுணை யென்னும் சொற்கும் மூலமாகக் காட்டியுள்ளது. சுனை, சுரணை என்னும் தென்சொற்கள், குத்தற்கருத்தை அடிப் படையாகக் கொண்ட, ‘கள்’ என்னும்

வேரினின்றும், ஸ்மரண என்னும் வடசொல் நினை என்று பொருள்படும் ஸ்ம்ரு என்னும் வினை முதனிலையினின்றும், பிறந்துள்ளன என வேறுபாடறிக (வேக.206-7);.

சுணைகழியாப்பிடஞ்சு

 சுணைகழியாப்பிடஞ்சு cuṇaigaḻiyāppiḍañju, பெ. (n.)

   அப்பொழுது பறித்த பிஞ்சு; a fresh downy fruit (சா.அக.);.

     [சுணை + கழியா + பிஞ்சு]

சுணைகெட்டவன்

 சுணைகெட்டவன் cuṇaigeṭṭavaṉ, பெ. (n.)

   மானவுணர்ச்சியில்லாதவன்; person of blunted sensibilities.

ம. சுண கெட்டவன்

     [சுணை + கெட்டவன்]

சுணைக்கரந்தை

 சுணைக்கரந்தை cuṇaikkarandai, பெ. (n.)

   சுணையுள்ள கரந்தை; sharp sweet basil (சா.அக.);.

     [சுணை + கரந்தை]

சுணைக்காணம்

 சுணைக்காணம் cuṇaikkāṇam, பெ. (n.)

   பேய்க் கொள்; wild horse-gram (சா.அக.);.

     [சுணை + காணம்]

சுணைக்காது

 சுணைக்காது cuṇaikkātu, பெ. (n.)

   காது மடலின்கீழ்த் தொங்கிக் கொண்டிருக்கும் மெதுவான சதைப்பாகம்; the lower termination of the ear (சா.அக.);.

     [சுணை + காது]

சுணைக்குறிஞ்சா

 சுணைக்குறிஞ்சா cuṇaikkuṟiñjā, பெ. (n.)

   சொரசொரப்புள்ள குறிஞ்சா; rough swallow wort (சா.அக.);.

     [சுணை + குறிஞ்சா]

சுணைக்கேடன்

சுணைக்கேடன் cuṇaikāṭaṉ, பெ. (n.)

   வெட்கம் கெட்டவன்; person of blunted sensibilitics.

     “தானும் ஒக்க மடலெடுப்பான் ஒருசுணைக் கேடன்” (திவ். திருப்பா. 1:20, வியா.);.

     [சுணை + கேடன்]

சுணைக்கொடி

 சுணைக்கொடி cuṇaikkoḍi, பெ. (n.)

   முசுமுசுக்கை; bryonia scabra (சா.அக.);.

     [சுணை + கொடி]

சுணைக்கோரை

 சுணைக்கோரை cuṇaikārai, பெ. (n.)

   ஒரு வகைக் கோரை (மலை);; a kind of rough grass.

     [சுணை + கோரை]

சுணைச்சி

 சுணைச்சி cuṇaicci, பெ. (n.)

   சிறுகாஞ்சொறி; small climbing nettle (சா.அக.);.

     [சுணை + ச்சி. ‘இ’ உடைமைப் பொருளீறு]

சுணைத்தழும்பு

 சுணைத்தழும்பு cuṇaittaḻumbu, பெ. (n.)

   சுணை உடம்பிற்படுவதனால் நமைச்சல் எடுத்துத் தடித்துத் தழும்புண்டாதல்; nettle rash (சா.அக.);.

     [சுணை + தழும்பு]

சுணைநெரிஞ்சி

 சுணைநெரிஞ்சி cuṇaineriñji, பெ. (n.)

   ஒருவகை முள்நெரிஞ்சி; a kind of nettle (சா.அக.);.

     [சுணை + தெரிஞ்சி]

சுணைப்பு

சுணைப்பு cuṇaippu, பெ. (n.)

   1. குத்தும் மானவுணர்ச்சி; sense of shame, sensibility.

     “ஒருதரஞ் சொன்னால் தெரியாதா? உனக்குச் சுணைப்பு இல்லையா?” என்பது நாஞ்சில் நாட்டு வழக்கு

   2. கூரியஅறிவு; Sense.

     [சுணை + பு. ‘பு’ பண்புப் பெயர் ஈறு]

சுணைப்புல்

சுணைப்புல் cuṇaippul, பெ. (n.)

   1. சுணையுள்ள புல்; any grass with rough surface.

   2. கோரைப் புல்; reed sedge grass (சா.அக.);.

     [சுணை + புல்]

சுணையுறுகாணம்

 சுணையுறுகாணம் cuṇaiyuṟukāṇam, பெ. (n.)

   பேய்க்கொள் என்னும் தவசம்; wild horsegram (சா.அக.);.

     [சுணையுறு + காணம்]

சுணையுறுகொத்து

 சுணையுறுகொத்து cuṇaiyuṟugottu, பெ. (n.)

சுணையுறுகாணம் பார்க்க;see sunai-y-urukanam.

     [சுணையுறு + கொத்து]

சுணைவண்டு

 சுணைவண்டு cuṇaivaṇṭu, பெ. (n.)

   ஒருவகை வண்டு; a kind of beetle.

     [சுணை + வண்டு]

சுணைவு

 சுணைவு cuṇaivu, பெ. (n.)

   பேய்க்கடலை(மலை.);; wild bitter bengal gram.

சுணைவெள்ளரி

 சுணைவெள்ளரி cuṇaiveḷḷari, பெ. (n.)

   நரி வெள்ளாரி; downy cucumber (சா.அக.);.

     [சுணை + வெள்ளரி]

சுண்ட

 சுண்ட Sunda, வி.அ. (adv.)

   முற்றும்; completely to the last drop.

     ‘சுண்டக் கறந்ததினால் கன்றுக்குப் பால் இல்லை.’ (இவ.);

     [சுள் → சுடு → சுண்டு. சுண்டு → சுண்ட]

சுண்டகன்

 சுண்டகன் cuṇṭagaṉ, பெ. (n.)

   கள்ளிறக்கு வோன் (யாழ்.அக.);; toddy-drawer.

சுண்டகம்

சுண்டகம் cuṇṭagam, பெ. (n.)

   1. கள்; toddy.

   2. மூஞ்சூறு; musk rat (சாஅக);.

சுண்டக்கட்டுதல்

சுண்டக்கட்டுதல் sunda-k-kattu,    5 செ.குன்றாவி (v.t.)

   1. இழுத்துக்கட்டுதல் (யாழ்ப்);; to strctch tight and fasten as a rope tied to posts.

   2. இறுகக்கட்டுதல்; to be hardended after boiling.

     [சுண்ட + சுட்டு-,]

சுண்டக்காய்-தல்

சுண்டக்காய்-தல் Sunda-k-kay,    2 செ.கு.வி. (v.i.)

   இறுகும்படிக் காய்தல்; to dry in the sun till it completely drics (சா.அக.);.

     [சுண்ட + காய்-,]

சுண்டக்காய்ச்சு-தல்

சுண்டக்காய்ச்சு-தல் sunda-k-kayeeu-,    5 செ.குன்றாவி (v.t.)

   நீர்வற்றும்படி காய்ச்சுதல்; to eat till it completing dries (சா.அக.);

     [சுண்ட + காய்ச்சு-,]

சுண்டக்கீரை

 சுண்டக்கீரை cuṇṭakārai, பெ. (n.)

   நீர்ச் சுண்டி; floating sensitive plant (சா.அக.);.

     [சுண்டை + கீரை]

சுண்டங்காய்

சுண்டங்காய் cuṇṭaṅgāy, பெ. (n.)

   1. சிறுகாய்; small fruit.

   2. சுண்டைக்காய் பார்க்க;see Sundai-k-kay (சா.அக.);.

     [சுண்டைக்காய் → சுண்டங்காய்]

சுண்டன்

சுண்டன்1 cuṇṭaṉ, பெ. (n.)

   அறிவிலி (சது.);;   முட்டாள்; ignorant, stupid person.

 Skt. Suntha

     [சுண்டு → சுண்டன்]

 சுண்டன்2 cuṇṭaṉ, பெ. (n.)

   மூஞ்சூறு; musk rat.

   2. சுண்டெலி; mouse.

   ம., தெ., க. சுண்ட; Skt. sundia-musika

 சுண்டன்3 cuṇṭaṉ, பெ. (n.)

   1. 24ஆம் விண்மீனாகிய குன்று (சதயம்); (பிங்);; the24th star.

   2. கருக்குவை; holy-leaved berried spindle tree (செஅக);.

சுண்டபற்றிவிளை

 சுண்டபற்றிவிளை cuṇṭabaṟṟiviḷai, பெ.(n.)

   அகத்தீச்சுரம் வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Agastheeswaram Taluk.

     [சுண்டன்+பற்று+விளை].

சுண்டப்பிடி-த்தல்

சுண்டப்பிடி-த்தல் supia-p-pidi,    4 செ.கு.வி. (v.i.)

   1. ஆடையை அளக்க இழுத்துப் பிடித்தல்; to hold tight, as in measuring cloth.

   2. வயிற்றில் பிடித்துக்கொள்ளுதல்; to be affected with colic pains.

   3. கஞ்சத்தனம் செய்தல்; to be niggardly in expenditure.

     [சுண்ட + பிடி-,]

சுண்டம்

சுண்டம் cuṇṭam, பெ. (n.)

   1. கள் (மூ.அ.);; toddy.

   2. நொதிப்படைந்த நீர்மம்; fermented liquor.

   3. யானைத்துதிக்கை; elephant’s trunk.

     “புரு சுண்டந் தாங்குந் தன்மையால்…. (விநாயகபு. 46:44);.

 Skt. Sunda

     [சுண்டு → சுண்டம்]

சுண்டற்கறி

 சுண்டற்கறி cuṇṭaṟkaṟi, பெ. (n.)

   எரித்த பழங்கறி (இ.வ.);; a warmed up dish of the remnants of the day’s curry.

     ‘சுண்டற்கறியின் சுவையே தனிச்சுவை’ (உ.வ.);

     [சுண்டல் + கறி]

சுண்டலி

 சுண்டலி cuṇṭali, பெ. (n.)

   மரவகை (L.);; axillary cymed false holly.

     [சுண்டு → சுண்டல் → சுண்டலி]

சுண்டல்

சுண்டல்1 cuṇṭal, பெ. (n.)

   சுண்டுகை; getting evaporated or dried.

     [சுண்டு1 → சுண்டல்]

 சுண்டல்2 cuṇṭal, பெ. (n.)

   1. சுண்டற்கறி பார்க்க;see Sundar-kari.

   2. பயறுகளின் சுண்டல்; boiled and spiced pulse.

     “பேதமாகிய பல்சுண்டல்” (விநாயகபு. 39:38);.

ம. சுண்டல்

     [சுண்டு → சுண்டல்]

சுண்டவை-த்தல்

சுண்டவை-த்தல் Sunda-vai,    4 செ.கு.வி. (v.i.)

   1. குழம்பு, கறி மறுநாளும் கெடாதிருக்குமாறு நெருப்பெரித்து நீர்வற்றவைத்தல்; to heat till it completely dries the remnants of the day’s curry.

   2. நீர் வற்றும் வரை நெருப்பெரித்தல்; to evaporate, to dry up.

     ‘பாலைச் சுண்டவை’ (உ.வ.);

     [சுள் → சுண்டு → சுண்ட + வை-,]

சுண்டாங்கி

சுண்டாங்கி cuṇṭāṅgi, பெ. (n.)

   1. கறியோடு சேர்ப்பதற்காக அரைத்த சம்பாரம்; seasoning

 stuffs pounded and used with curry.

   2. குறைவு; small matter, trifle.

   3. அளவிற்குறைவு; scantiness in measure or quantity.

     [சுண்டு1 → சுண்டாங்கி]

சுண்டாங்கியார்

 சுண்டாங்கியார் cuṇṭāṅgiyār, பெ. (n.)

   சிக்கனக்காரி, கடுஞ்செட்டுக்காரி; stingy woman (செ.அக.);.

     [சுண்டாங்கி → சுண்டாங்கியார்]

சுண்டாங்கொள்ளி

சுண்டாங்கொள்ளி cuṇṭāṅgoḷḷi, பெ. (n.)

   குழந்தைகள் தீக்கொளுத்தி விளையாடுங் குச்சி (இ.வ.);; stick ignited at one end, used by children, as a firework.

     [சுண்டான்2 → கொள்ளி]

சுண்டான்

சுண்டான்1 cuṇṭāṉ, பெ. (n.)

   கள்; toddy (சா.அக);.

     [சுண்டு → சுண்டான்]

 சுண்டான்2 cuṇṭāṉ, பெ. (n.)

   கள்விற்போர் வழங்கும் ஒரு மட்பாண்டச் சிற்றளவு (யாழ்ப்.);; small earthen measure used by toddy-sellers.

 Skt. Sunda

     [சுண்டு → சுண்டான்]

 சுண்டான் cuṇṭāṉ, பெ. (n.)

   சுண்டாங்கொள்ளி பார்க்க; Sungam-kolli.

     [சுள் → சுண்டு → சுண்டான்]

சுண்டான்கொளுத்து-தல்

சுண்டான்கொளுத்து-தல் sungan-koluttu-,    5 செ.கு.வி. (v.i.)

   குழந்தைகள் விளையாட்டாகக் குச்சியைத் தீயிற் கொளுத்துதல் (இ.வ.);; to ignite small sticks at one end as a firework by children.

     [சுண்டான் + கொளுத்து-,]

சுண்டாயம்

சுண்டாயம் cuṇṭāyam, பெ. (n.)

   விளையாட்டு; sport.

     “இவையென்ன கண்டாயங்களே” (திவ். திருவாய். 7.8:7);.

     [சுண்டு + ஆயம்]

சுண்டாலம்

 சுண்டாலம் cuṇṭālam, பெ. (n.)

   யானை (யாழ்.அக.);; elephant.

சுண்டாலி

 சுண்டாலி cuṇṭāli, பெ. (n.)

சுண்டாலம் (பிங்); பார்க்க;see Sundalam.

     [சுண்டாலம் → சுண்டாலி]

சுண்டி

சுண்டி1 cuṇṭi, பெ. (n.)

   1. கள்; toddy.

   2. புளித்த மது; any fermented, liquor.

   3. சுக்கு (அக.நி.);; dried ginger.

   4. ஒருவகைக் கண்நோய்; a kind of eye disease.

   5. தொட்டால் வாடி (மலை.);; sensitive plants, mimosa pudica.

   6. சுண்டிக் கீரை (மூ.வ.); பார்க்க;see sundi-k-kirai.

   7. வறட்சுண்டி (வின்.);; floating sensitive plant.

   8. இஞ்சி, ginger.

   9. சுண்டை பார்க்க (யாழ்.அக);;see Sundai.

   10. கருஞ்சுண்டி; mimosa rubicaulis (சாஅக.);.

     [சுள் → சுண்டு → சுண்டி]

 சுண்டி2 cuṇṭi, பெ. (n.)

   குறும்புக்காரன்; Smart, mischievedus fellow.

     ‘சுண்டிப்பயல்’ (செ.அக.);.

     [சுட்டி → சுண்டி]

சுண்டிகை

சுண்டிகை cuṇṭigai, பெ. (n.)

   1. உண்ணாக்கு; uvula.

   2. சுண்டைக்காய் பார்க்க;see Sungai-k-kay.

   3. வண்டின் நாக்கு; tongue of beetle (சா.அக.);.

சுண்டிக்கிருதம்

 சுண்டிக்கிருதம் cuṇṭikkirudam, பெ. (n.)

   பாண்டுவீக்கம், குளிர்க்கழிச்சல் போன்ற வற்றைச் குணமாக்கும் ஒருவகை மருந்து; a medicine prepared to cure dysentry (சா.அக.);.

     [சுண்டி + கிருதம்]

சுண்டிக்கீரை

சுண்டிக்கீரை cuṇṭikārai, பெ. (n.)

   நீர்ச் சுண்டி; water mimosa (செ.அக.);.

     [சுண்டி1 + கீரை]

சுண்டிப்போ-தல்

சுண்டிப்போ-தல் suppli-p-po-,    8 செ.கு.வி (v.i.)

   சுருங்கல்; to be reduced by boiling or evaporation (சா.அக.);.

     [சுண்டி1 + போ-,]

சுண்டியம்

சுண்டியம் cuṇṭiyam, பெ. (n.)

   1. சுக்கு; dried ginger.

   2. சுண்டி1 பார்க்க;see sundi1 (சா.அக.);.

     [சுண்டி → சுண்டியம்]

சுண்டியாதிக்கருக்கு

 சுண்டியாதிக்கருக்கு cuṇṭiyātikkarukku, பெ. (n.)

   சுக்கு முதலியவற்றால் அணியமாக்கப் படும் ஒருவகைக் கருக்கு; a kind of decoction prepared out of dry ginger and other materials (சா.அக.);.

மறுவ. கசாயம், கியாழம்

     [சுண்டி + ஆதி + கருக்கு]

சுண்டியாதிச்சூரணம்

 சுண்டியாதிச்சூரணம் cuṇṭiyāticcūraṇam, பெ. (n.)

   ஒருவகை ஆயுள்வேத மாத்திரை செய்யப் பயன்படும் மருந்துப்பொடி; a kind of Ayurvedic powder to make tablet (சா.அக.);.

     [சுண்டியாதி + சூரணம்]

சுண்டியிலை

 சுண்டியிலை cuṇṭiyilai, பெ. (n.)

   தொட்டால் வாடி இலை; leaves of mimosa pudica (சா.அக.);.

     [சுண்டி + இலை]

சுண்டியுண்டை

 சுண்டியுண்டை cuṇṭiyuṇṭai, பெ. (n.)

   சதுரக்கள்ளி, சித்திரகம், கொஞ்சி இவற்றின் வேர்ப்பட்டையாலும், சீரகத்தாலும் செய்யப் பட்டுச் சோறு முதலியவற்றைப் புளிக்க வைப்பதற்குப் பயன்படுத்தும் குளிகை (வின்);; a pill prepared from the bark of the roots of sadura-k-kalli, sittiragam, konji and cumin seed used to produce fermentation in rice and other food.

     [சுண்டு → சுண்டி. சுண்டி + உண்டை. உருண்டை = உண்டை]

சுண்டிலி

சுண்டிலி cuṇṭili, பெ. (n.)

   1. மயில்; peacock.

   2. மூஞ்சூறு; musk rat (சா.அக.);.

     [சுண்டின் → சுண்டிலி]

சுண்டில்

 சுண்டில் cuṇṭil, பெ. (n.)

   தொட்டால் வாடி (மலை);; sensitive plant.

     [சுண்டு → சுண்டில்]

சுண்டு

சுண்டு1 sundu-,    5 செ.கு.வி. (v.i.)

   1. நீர் முதலியவை வற்றுதல்; to dry up, to be evaporated by heat.

   2. குன்றிப்போதல்; to look small.

     ‘அச்செய்தியைக் கேட்டதும் அவள் முகம் சுண்டிப் போயிற்று’ (உ.வ.);

     [சுள் → சுண்டு-,]

 சுண்டு2 Sundu-,    5 செ.குன்றாவி (v.t.)

   வேகவைத்தல்; to boil, stew, simmer (செ.அக.);

     ‘அவள் கீரையைச் சுண்டினாள்’ (உ.வ.);

     [சுள் → சுண்டு-,]

 சுண்டு3 sudu-,    5 செ.கு.வி. (v.i.)

   1. நோவுண்டாகும்படி நரம்பு முதலியன இழுத்தல்; to be tight, as a string, to contract, as a muscle in cramp.

   2. வயிறு இசித்தல் (வின்.);; to pinch internally, gripe.

 சுண்டு4 Sundu-,    5 செ.கு.வி. (v.i.)

   1. விரலால் காசு முதலியவற்றைத் தெறித்தல்; to shoot with the thumb or a finger, as marble;

 to flip up a coin for testing its ring;

 to tap with;

 the thumb or finger;

 coconut.

   2. நாண் முதலியவற்றை இழுத்து; தெறித்தல்; to jerk, as reins;

 to snap, as a ball with a bow or a carpenters like on a plant.

   3. இழுமம் (ரப்பர்); முதலியவற்றை இழுத்து விடுதல்; to draw out an elastic body and let it recoil with a jerk.

     [சுள் → சுண்டு → சுண்டு-,]

 சுண்டு5 cuṇṭu, பெ. (n.)

   தெறிக்கை; jerking.

     [சுள் → சுண்டு]

 சுண்டு6 cuṇṭu, பெ. (n.)

   1. மிகக்குறைவு (யாழ்.அக.);; smallness, trifle.

   2. சிறு ஏனவகை; a small vessel.

   3. ஒரு சிற்றளவு; a small measure.

     “ஒரு சுண்டு பால்” (உ.வ.);

   4. தலைப் பொடுகு; dandruff.

   5. காய்ச்சுகையில் ஏனத்தடியிற் பற்றியது (யாழ்ப்.);; sediment that which adheres to a pot when boiling.

   க. சொண்டு;தெ. கண்டு

     [சுள் → சுண்டு]

 சுண்டு7 cuṇṭu, பெ. (n.)

   1. மூக்கு;   பறவை அலகு (இ.வ.);; bill;

 beak.

   2. கீழ்உதடு; lower lip.

   ம. சுண்டு;   க், சுண்டு;   பர். சொண்டு;   கூய். சுட்;பிரா. சுண்டு Skt. Tunda

     [சுள் → சுண்டு]

சுண்டு கயிறு

 சுண்டு கயிறு cuṇṭugayiṟu, பெ.(n.)

பொம்மலாட்ட பொம்மைகளில் இணைக்கப் படும் கயிறு,

 a interwinned slender rope in puppetry

     [கண்டு+கயிறு].

சுண்டுகட்டை

சுண்டுகட்டை cuṇṭugaṭṭai, பெ. (n.)

   ஒரு நெசவுக்கருவி (இ.வ.);; weaver’s instrument for driving the shuttle.

     [சுண்டு3 + கட்டை]

சுண்டுகாரம்

 சுண்டுகாரம் cuṇṭukāram, பெ.(n.)

   குழந்தை பிறந்ததும் தாய்க்குச் சுக்கு, மிளகு போன்ற வற்றை அரைத்துக் கொடுக்கும் காரவகை; curry paste given to the mother of justborn baby.

     [கண்டு+காரம்]

சுண்டுகால்

 சுண்டுகால் cuṇṭukāl, பெ.(n.)

   நரம்புப் பிடிப்பால் காலை இழுத்து நடத்தல்; limping back because of convulsion.

     [சுண்டு+கால்].

சுண்டுசாதம்

 சுண்டுசாதம் cuṇṭucātam, பெ. (n.)

சுண்டு சோறு பார்க்க;see Sundu-Soru.

     [சுண்டு + சாதம்]

சுண்டுசொல்

 சுண்டுசொல் suṇṭusol, பெ. (n.)

சுடுசொல் பார்க்க;see Sudu-Sol.

     [சுண்டு + சொல்]

சுண்டுசோறு

 சுண்டுசோறு cuṇṭucōṟu, பெ. (n.)

   மயக்கத்தைத் தரும் புளிப்பேற்றிய சோறு; fermented rice, intoxicating food.

     [சுண்டான் + சோறு]

சுண்டுதலை

 சுண்டுதலை cuṇṭudalai, பெ. (n.)

   சொறித் தலை; head with scurf.

     [சுண்டு + தலை. சுண்டு = பொடுகு, சொறி]

சுண்டுமணி

சுண்டுமணி cuṇṭumaṇi, பெ. (n.)

   சிறந்தமணி (கட்டபொம். பக். 56);; ruby of the finest quality.

     [சுண்டு + மணி. மள் → மண் → மணி = விளங்கும் கல்]

சுண்டுவாதம்

 சுண்டுவாதம் cuṇṭuvātam, பெ. (n.)

   நரம்பு முதலியன வெட்டி வெட்டி உள்ளிழுக்கப் படும் ஒரு முடக்கி நோய் (இவ);; a disease marked by contraction of muscles, cramp.

     [சுண்டு + வாதம். சுண்டு = தெறி, இழு.]

 Skt. vata → த. வாதம்

சுண்டுவிரற்கண்ணி

 சுண்டுவிரற்கண்ணி cuṇṭuviraṟkaṇṇi, பெ. (n.)

   மகளிர் கால் விரலணி; a kind of ring, worn by women on the toe.

     [சுண்டுவிரல் + கண்ணி]

சுண்டுவிரல்

சுண்டுவிரல் cuṇṭuviral, பெ. (n.)

   சிறுவிரல், குறுவிரல்; little finger.

     [சுண்டு6 + விரல், விர் → விரி → விரல்]

சுண்டுவில்

சுண்டுவில் cuṇṭuvil, பெ. (n.)

   விளையாட்டுக்கு உதவும் ஒருவகை வில்; a toy bow for shooting

 stones orpellets.

     “தெறி வில்லாவது சுண்டுவில்” (திவ். பெரியாழ். 3.4:3, வியா.);

ம. சுண்டுவில்லு

     [சுண்டு3 + வில்]

சுண்டெலி

 சுண்டெலி cuṇṭeli, பெ. (n.)

   சிற்றெலிவகை;   சிறியஎலி; mouse.

   ம. சுண்டெலி;   க. சுண்டிலி, குஞ்சிலி, கொண்டிலி;   தெ. சுண்டெலுக, சுஞ்செலுக;   து. சுண்ட் எலி;   குட. சிண்ட எலி;பட சுண்டெலி

     [சுண்டு + எலி]

சுண்டை

சுண்டை1 cuṇṭai, பெ. (n.)

   1. கள் (பிங்.);; toddy;

 an intoxicating drink.

   2. யானைத் தும்பிக்கை; elephant’s trunk.

     [சுள் → சுண்டு → சுண்டை]

 சுண்டை2 cuṇṭai, பெ. (n.)

   நீர்நிலை (யாழ்.அக);; reservoir, tank.

 Skt. Kunda

 சுண்டை3 cuṇṭai, பெ. (n.)

   1. செடிவகை; turkey berry.

   2. சுண்டைவகை (L.);; indian currant tomato.

   3. காட்டுச்சுண்டை; Indian tree-potato.

 Skt. Sunda;

ம. சுண்ட

     [சுண்டு6 → சுண்டை]

 சுண்டை4 cuṇṭai, பெ. (n.)

   நீர்யானை (புதுவை.);; hippopotamus.

சுண்டைக்காய்

 சுண்டைக்காய் cuṇṭaikkāy, பெ. (n.)

   மருந்தாகப் பயன்படும் ஒருவகைக்காய்; a medicinal product from Sundai plant which controls many body diseases.

     [சுண்டை + காய்]

 சுண்டைக்காய் cuṇṭaikkāy, பெ. (n.)

   மதிப்பற்றவன் (உ.வ.);; an insignificant person.

     ‘அவன் கிடக்கிறான், சுண்டைக் காய்ப் பயல்’ (உ.வ.);

     [சுண்டை + காய் + அன்]

சுண்டை அளவிற் சிறியது என்னும் பொருள் பற்றி, இவ்வழக்கு வந்ததாகலாம்.

சுண்டைக்கீரை

 சுண்டைக்கீரை cuṇṭaikārai, பெ. (n.)

   கீரை வகை; a kind of greens (செ.அக.);.

     [சுண்டை + கீரை]

சுண்டைச்செடி

சுண்டைச்செடி cuṇḍaicceḍi, பெ. (n.)

   சுண்டைக்காய்ச் செடி அல்லது மரம்; Sundai-k-kay is a plant as a tree (சா.அக.);.

     [சுண்டை + செடி]

சுண்டை வகைகள்

   1. ஆனைச்சுண்டை

   2. மலைச்சுண்டை

   3. இராமேசுவரச் சுண்டை

   4. முட்சுண்டை

   5. கருஞ்சுண்டை

   6. காட்டுச்சுண்டை

   7. பேய்ச்சுண்டை

   8. நஞ்சுண்டை

   9. இலைச்சுண்டை

   10. குத்துச்சுண்டை

   11. முள்ளிலாச்சுண்டை

சுண்டைப்பிரமாணம்

 சுண்டைப்பிரமாணம் cuṇṭaippiramāṇam, பெ. (n.)

   சுண்டைக்காய் அளவு இளகியம், மெழுகு போன்றன;   குறிப்பிட்ட வடிவ அளவு; the size of sundai for prescribing the intake (சா.அக.);.

     [சுண்டை + பிரமாணம்]

சுண்டைவற்றல்

 சுண்டைவற்றல் cuṇṭaivaṟṟal, பெ. (n.)

   சுண்டைக்காய் வற்றல்; dried unriped fruits of solanum pubescens (சா.அக.);.

     [சுண்டை + வற்றல்]

சுண்டைவேர்

 சுண்டைவேர் cuṇṭaivēr, பெ. (n.)

   தும்மலை யுண்டாக்கும் கண்டைச்செடியின் வேர்; the root of solanum pubescens, causes sneezing (சா.அக.);.

     [சுண்டை + வேர்]

சுண்ணகக்குற்றி

சுண்ணகக்குற்றி cuṇṇagagguṟṟi, பெ. (n.)

நறுமணப்பொடி வைக்கும் சிமிழ்:

 a small casket for keeping aromatic bathing powder.

     “சுட்டிக்கலனுஞ் சுண்ணகக் குற்றியும்” (பெருங். உஞ்சைக். 38:168);.

     [சுண்ணகம் + குற்றி]

சுண்ணகம்

 சுண்ணகம் cuṇṇagam, பெ. (n.)

சுண்ணப் பொடி பார்க்க;see Summa-p-podi.

     [சுண்ணம் → சுண்ணகம்]

த. சுண்ணகம் → Skt. Surnaka

சுண்ணக் கூர்மை

 சுண்ணக் கூர்மை cuṇṇakārmai, பெ. (n.)

   நாகரவண்டு; beetle supposed to carry snake holes (சா.அக.);.

     [சுண்ணம் +கூர்மை]

சுண்ணக்கரி

 சுண்ணக்கரி cuṇṇakkari, பெ. (n.)

   கண்ணாம்பு சேர்த்த கரி; heep of calcium stones and carbon pieces (சா.அக.);.

     [சுண்ணம் + கரி]

சுண்ணக்கல்

 சுண்ணக்கல் cuṇṇakkal, பெ. (n.)

சுக்கான்கல் பார்க்க;(யாழ்.அக.);;see Sukkan-kal.

     [சுண்ணம் + கல்]

சுண்ணக்குகை

 சுண்ணக்குகை cuṇṇaggugai, பெ. (n.)

   சுண்ணாம்புக்கல்லினால் செய்த குகை; crucibles made of slaked lime (சா.அக.);.

     [சுண்ணம் + குகை]

 Skt. guha → த. குகை

சுண்ணக்குகையிலுது-தல்

சுண்ணக்குகையிலுது-தல் suppa-k-kugaiyl.    5 செ.குன்றாவி. (v.t.)

   மருந்தைச் சுண்ணாம்புக் குகையில் வைத்து ஊதுதல்; to blow with belows the lime crucible containing the medicine which is to be calcified (சா.அக.);.

     [சுண்ணம் + குகையில் + ஊது-,]

சுண்ணக்குரு

 சுண்ணக்குரு cuṇṇakkuru, பெ. (n.)

   சுண்ணாம்பு நீர் மற்றும் சில பொருட்கள் மூலம் உருவாக்கப்படும் மருந்துப்பு; a salt prepared from quicklime and other ingredients (சா.அக.);.

     [சுண்ணம் + குரு]

சுண்ணச்சத்து

சுண்ணச்சத்து cuṇṇaccattu, பெ. (n.)

   1. சுண்ணாம்புச்சத்து; essence of lime.

   2. எலும்பிலுள்ள சுண்ணச்சத்து; calcium phosphate found in bones.

   3. சுண்ணாம்பில் உள்ள மாமழைச்சத்து; the metalic basis of lime Calcium.

   4. சுண்ணக்குரு பார்க்க;see sunna-k-kuru (சா.அக.);.

     [சுண்ணம் + சத்து]

சுண்ணச்சாந்து

 சுண்ணச்சாந்து cuṇṇaccāndu, பெ. (n.)

   சுண்ணாம்புக்காரை; plaster, mortar (செ.அக.);.

     [சுண்ணம் + சாந்து]

சுண்ணச்சிறுநீர்

 சுண்ணச்சிறுநீர் cuṇṇacciṟunīr, பெ. (n.)

   அதிக சுண்ணாம்புச்சத்துள்ள சிறுநீர்; excess of calcium salt in the urine.

     [சுண்ணம் + சிறுநீர்]

சுண்ணச்சீனிநீர்

 சுண்ணச்சீனிநீர் cuṇṇaccīṉinīr, பெ. (n.)

   சருக்கரை கலந்த சுண்ணாம்புத்தெளிவு; saccharated solution of lime (சா.அக.);.

     [சுண்ணம் + சீனி + நீர்]

சுண்ணச்சீலை

 சுண்ணச்சீலை cuṇṇaccīlai, பெ. (n.)

   கண்ணாம்பு தடவிய சீலைத்துணி; a piece of cloth luted with lime and used for packing the container of medicine which is to be exposed to fire (சா.அக.);.

     [சுண்ணம் + சீலை, சீரை → சீலை]

சுண்ணச்சீலைசுற்று-தல்

சுண்ணச்சீலைசுற்று-தல் sunna-c-cilai-surru-,    7 செ.குன்றாவி (v.t.)

   சீலைச்சுண்ணம் சுற்றுதல்; to pack by winding the piece of cloth luted with lime over the container of medicine (சா.அக.);.

     [சுண்ணச் சீலை + சுற்று-,]

சுண்ணத்துக்குயிர்

 சுண்ணத்துக்குயிர் cuṇṇattukkuyir, பெ. (n.)

   முட்டை; egg, supposed to posses life giving virtue to lime (சா.அக.);.

     [சுண்ணத்துக்கு + உயிர்]

சுண்ணத்துக்கூர்மையோன்

 சுண்ணத்துக்கூர்மையோன் cuṇṇattukārmaiyōṉ, பெ. (n.)

   நாகரவண்டு; a beetle supposed to carry water to snake holes (சா.அக.);.

     [சுண்ணத்து + கூர்மையோன்]

சுண்ணத்தோன்

 சுண்ணத்தோன் cuṇṇattōṉ, பெ. (n.)

   கருப்பூரக் கல்மதம்; foliated crystallized gypsum (சா.அக.);.

     [சுண்ணம் → சுண்ணத்தோன்]

சுண்ணநீர்

 சுண்ணநீர் cuṇṇanīr, பெ. (n.)

   சுண்ணாம்பு தெளிந்த நீர்; lime water (சா.அக);.

     [சுண்ணம் + நீர்]

சுண்ணநீறு

சுண்ணநீறு cuṇṇanīṟu, பெ. (n.)

   1. நீற்றிய சுண்ணாம்பு; slaked lime.

   2. நீற்றிய சுண்ண மருந்து; a calcium compound (சா.அக.);.

சுண்ணப்பூச்சவுடு

சுண்ணப்பூச்சவுடு cuṇṇappūccavuḍu, பெ. (n.)

   1. உவர்மண்; dhoby’s earth.

   2. உவர் மண்காரம்; impure carbonate of soda (சா.அக.);.

     [சுண்ணம் + பூச் + சவுடு]

சுண்ணப்பூமி

 சுண்ணப்பூமி cuṇṇappūmi, பெ. (n.)

   நில (பூ); நீறு எடுக்கும் நிலம்; soil of fuller’s earth (சா.அக.);.

     [சுண்ணம் + பூமி]

 Skt. Bhumi → த.பூமி

சுண்ணப்பொடி

சுண்ணப்பொடி cuṇṇappoḍi, பெ. (n.)

   1. நறுமணப்பொடி; an aromatic powder.

   2. சுண்ணாம்புத்தூள்; lime powder or dust.

   3. சுண்ணநீறு பார்க்க;see sunna-niru.

   4. சுண்ண மருந்து; calcined medicine.

   5. விழா முதலிய காலங்களில் மக்களின்மேல் துவும் நறுமணப் பொடி (வின்.);; aromatic powder mixed with saffron and gold or silver dust, used for spirnkling over guests or friends on festive occasions (சா.அக.);.

     [சுண்ணம் + பொடி]

சுண்ணமண்

சுண்ணமண் cuṇṇamaṇ, பெ. (n.)

   1. சுண்ணாம்பு மண்; sand mixed with lime.

   2. உவர்மண்; fuller’s earth (சா.அக.);.

ம. சுண்ணாம்பு மண்ணு

     [சுண்ணம் + மண்]

சுண்ணமாடு-தல்

சுண்ணமாடு-தல் sunna-madu-,    5 செ.கு.வி (v.i.)

   விழா முதலிய காலங்களில் மணப்பொடி தூவுதல் (வின்.);; to spirinkle scented powder on festive occasion, etc.,

     [சுண்ணம் + ஆடு-,]

சுண்ணமானோன்

 சுண்ணமானோன் cuṇṇamāṉōṉ, பெ. (n.)

   கொடுக்காய்ப்புளி; sweet babool (சா.அக.);.

     [சுண்ணம் + ஆனோன். சுன்னம் = சுழி, வட்டம், வளைவு, சன்னம் – கண்ணம்]

சுண்ணமொழிமாற்று

சுண்ணமொழிமாற்று cuṇṇamoḻimāṟṟu, பெ. (n.)

   கண்ணமாக அமைந்த செய்யுளை ஏற்றபடி மொழிமாற்றிப் பொருள் கொள்ளுகை (நன்.412, மயிலை);; construing a Sunnam verse by suitable transposition of words.

     [சுண்ணம் + மொழிமாற்று]

சுண்ணம்

சுண்ணம் cuṇṇam, பெ. (n.)

   1. பொடி; powder, dust.

     “செம்பொற் சுண்ணம்” (பெருங். உஞ்சைக் 33:120);.

   2. சுண்ணப்பொடி பார்க்க;see sunna-p-podi.

     “பலதொகு பிடித்த தாதுகு கண்ணத்தர்” (மதுரைக்.399);.

   3. பூந்தாதுத்தூள், மகரந்தத் தூள், pollen dust.

     “தாழைக் கொழுமட லவிழ்ந்த… சுண்ணம்” (மணிமே. 4:18);.

   4. மலர் (பிங்);. flower.

   5. 24ஆம் வீண்மீன் குன்று (சதயம்);; the 24th star in the celestial area ‘satayam’.

   6. சுண்ணாம்பு; lime, oxide of calcium.

   7. ஈரடி எண்சீரைப் பொருள் முறையின்றித் துணித்துச் செய்யுளியற்றும் முறை (தொல். சொல். 406);; a mode of constructing a stanza in which the word in a pair of four-footed lines are transposed their natural order.

   8. சொல்வகை நான்கனுள் நான்கு அடியாக வரும் இசைப் பாட்டு (சிலப் 3:12, பக். 88);; a stanza of four lines set to music, one of four col-vagai.

   9. பட்டு வகை (சிலப் 14 : 108, உரை);; a variety of silk.

 Pkl. sunna;

ம. சுண்ணம்

     [சுள் → சுண். சுண்ணித்தல் = நீற்றுதல். சுண் → கண்ணம் (வே.க. 211);]

த. சுண்ணம் → curna

 சுண்ணம்2 cuṇṇam, பெ. (n.)

   ஒன்பான் மணிகளும் பொன்னும் சந்தனமும் கருப்பூரம் முதலியனவும் புனுகிலும் பனிநீரிலும் நனைய வைத்திடித்தல்; bounding of nine jewells, gold, sandal wood and camphor wetted in the punugu and snow water.

சுண்ணவட்டு

சுண்ணவட்டு cuṇṇavaṭṭu, பெ. (n.)

   சுண்ணங் கலந்த நீரை வீசுங்கருவி; a kind of syringe for spirnkling water mixed with aromatic powder.

     “சுண்ண வட்டுஞ் சுழிநீர்க் கோடும்” (பெருங். உஞ்சைக். 38:107);.

     [சுண்ணம் + வட்டு]

சுண்ணவரத்தம்

 சுண்ணவரத்தம் cuṇṇavarattam, பெ. (n.)

   சுண்ணாம்பு அதிகமுள்ள குருதி; blood having more calcium percentage.

     [சுண்ணம் + அரத்தம்]

சுண்ணவாசி

 சுண்ணவாசி cuṇṇavāci, பெ. (n.)

   முல்லை (மலை);; wild jasmine.

   த. வாசம்; Skt. vasa

     [சுண்ணவாசி + வாசி. வாசம் → வாசி. ‘இ’ உடைமைப் பொருளீறு]

சுண்ணவுப்பு

 சுண்ணவுப்பு cuṇṇavuppu, பெ. (n.)

   சுண்ணாம்பிலிருந்து எடுக்கப்படும் உப்பு வகைகள்; lime salt (சா.அக);.

     [சுண்ணம் + உப்பு]

சுண்ணவைப்பு

சுண்ணவைப்பு cuṇṇavaippu, பெ. (n.)

   1. சுட்டசுண்ணாம்பு; burnt lime stone.

   2. புடமிட்டெடுத்த மருந்துச் சுண்ணம்; a kind of calcium salt obtained through calcination etc.,

   3. சுண்ணாம்பு வண்டல்; calcium deposits.

   4. தமிழ்மருந்து முறைப்படியான மாழைச் சுண்ணம்; compound of calcium, carbonate prepared as prescribed in Tamil medicine.

     [சுண்ணம் + வைப்பு]

சுண்ணாம்படி-த்தல்

சுண்ணாம்படி-த்தல் sunnambadi-,    4 செ.குன்றாவி (v.t.)

   வெள்ளையடித்தல்; towhite wash (செ.அக);.

     [சுண்ணாம்பு + அடி-,]

சுண்ணாம்படைதல்

 சுண்ணாம்படைதல் cuṇṇāmbaḍaidal, பெ. (n.)

   பதநீரில் கண்ணாம்பு வண்டல் படிகை (வின்);; setling of lime in sweet toddy.

     [சுண்ணாம்பு + அடைதல்]

சுண்ணாம்பு

சுண்ணாம்பு cuṇṇāmbu, பெ. (n.)

   1. சுட்ட சுண்ணாம்புக்கல்; lime burnt in the kiln, quicklime.

   2. நீற்றின சுண்ணாம்பு; slaked lime.

     “விரைப்பாகு வெள்ளிலை சுண்ணாம் பினொடு” (வாயுசங்கிரியா.23);

   3. சன்னச்சாந்தாக அரைத்த சுண்ணாம்பு; macerated lime specially prepared as fine plaster.

   ம. சுண்ணாம்பு; Skt. sunna;

 Pkt. cunna

     [சுண்ணம் → சுண்ணம் → சுண்ணாம்பு = காரக்கன் நீறு]

சுண்ணாம்புகுத்து-தல்

சுண்ணாம்புகுத்து-தல் sunnambu-kuttu-,    5 செ.கு.வி (v.i.)

   சுண்ணாம்பை மணல் கலந்து இடித்தல்; to pound lime with sand and water and make it into mortar-paste.

     [சுண்ணாம்பு + குத்து-, குற்று → குத்து-,]

சுண்ணாம்புக்கம்பி

 சுண்ணாம்புக்கம்பி cuṇṇāmbukkambi, பெ. (n.)

சுண்ணாம்புக்கரடு பார்க்க;see sunnambu-k-karagu (சா.அக.);.

சுண்ணாம்புக்கரடு

சுண்ணாம்புக்கரடு1 cuṇṇāmbukkaraḍu, பெ. (n.)

   கண்ணாம்பு மண் நிறைந்த குன்று; hill of lime-stone.

     [சுண்ணாம்பு + கரடு]

 சுண்ணாம்புக்கரடு2 cuṇṇāmbukkaraḍu, பெ. (n.)

   சுண்ணாம்புக்கல்லில் சேர்ந்த தண்ணீரில் கரையாத, கரடான பொருள்; impurity of limestone containing magnesite (சா.அக.);.

     [சுண்ணாம்பு + கரடு]

சுண்ணாம்புக்கரண்டகம்

 சுண்ணாம்புக்கரண்டகம் cuṇṇāmbuggaraṇṭagam, பெ. (n.)

   அடைகாய்க்காக (வெற்றிலை போடுவதற்காக);ச் சுண்ணாம்பு வைக்கும் மூடுசெப்பு; small casket for lime.

     [சுண்ணாம்பு + கரண்டகம்]

சுண்ணாம்புக்கல்

 சுண்ணாம்புக்கல் cuṇṇāmbukkal, பெ. (n.)

   கண்ணாம்புச்சத்துள்ள சுக்கான்கல்; lime stone (சா.அக.);.

ம. சுண்ணாம்புக்கல்லு

     [சுண்ணாம்பு + கல்]

சுண்ணாம்புக்காய்

சுண்ணாம்புக்காய் cuṇṇāmbukkāy, பெ. (n.)

சுண்ணாம்புக்கரண்டகம் பார்க்க;see sunnambu-k-karapdagam.

     ‘கண்ணாம்புக் காய் முள்ளிடுக்கி முதலிய இன்றியமையாத பொருள்களிலே’ (எங்களூர், 30);.

     [சுண்ணாம்பு + காய்]

சுண்ணாம்புக்காரன்

சுண்ணாம்புக்காரன் cuṇṇāmbukkāraṉ, பெ. (n.)

   1. சுண்ணாம்பு நீறு விற்கும் ஆள்; person who sells lime stone etc.,

   2. சுண்ணாம்பு நீறுவிற்கும் வகுப்பான்; person belonging to lime-selling caste.

     [சுண்ணாம்பு + காரன்]

இவர்கள் தனி இனத்தவராகக் கருதப் பட்டதும் உண்டு திருச்சிராப்பள்ளி போன்ற நகரங்களில் சுண்ணாம்புக்காரத் தெரு எனத் தெருப்பெயர் அமைந்துள்ளமை காண்க.

சுண்ணாம்புக்காரை

சுண்ணாம்புக்காரை cuṇṇāmbukkārai, பெ. (n.)

   1. கட்டடத்திற்கு உரிய கண்ணாம்புச் சாந்து; mortar.

   2. காய்ந்த சாந்து; dried plaster of chunnam (செ.அக.);.

     [சுண்ணாம்பு + காரை]

சுண்ணாம்புக்காளவாய்

 சுண்ணாம்புக்காளவாய் cuṇṇāmbukkāḷavāy, பெ. (n.)

   சுண்ணாம்பு நீற்றுஞ் சூளை; line-kiln.

ம. சுண்ணாம்பு சூள

     [சுண்ணாம்பு + காளவாய்]

காளவாய் பார்க்க

சுண்ணாம்புக்கிளிஞ்சில்

 சுண்ணாம்புக்கிளிஞ்சில் cuṇṇāmbukkiḷiñjil, பெ. (n.)

சுண்ணாம்புச்சிப்பி பார்க்க;see sunnambu-c-cippi.

     [சுண்ணாம்பு + கிளிஞ்சல்]

சுண்ணாம்புக்கீரை

சுண்ணாம்புக்கீரை cuṇṇāmbukārai, பெ. (n.)

   1. ஒருவகைக்கீரை (வின்.);; a kind of greens.

   2. சிறுபூனை; a common wayside weed.

     [சுண்ணாம்பு + கீரை]

சுண்ணாம்புக்குட்டான்

 சுண்ணாம்புக்குட்டான் cuṇṇāmbukkuṭṭāṉ, பெ. (n.)

   பதனீர் இறக்குவோர் கண்ணாம்பு வைக்குஞ் சிறுகூடை (யாழ்ப்);; toddy drawer’s small basket for lime.

     [சுண்ணாம்பு + குட்டான். கொட்டான் → குட்டான்]

கொட்டான் பார்க்க

சுண்ணாம்புச்சத்து

 சுண்ணாம்புச்சத்து cuṇṇāmbuccattu, பெ. (n.)

   கண்ணம்; calcium (சா.அக);.

     [சுண்ணாம்பு + சத்து]

சுண்ணாம்புச்சிப்பி

 சுண்ணாம்புச்சிப்பி cuṇṇāmbuccippi, பெ. (n.)

   கண்ணாம்பு நீற்ற உதவும் முத்துச் சிப்பிக் கூடு (இ.வ.);; lime-shells.

     [சுண்ணாம்பு + சிப்பி]

சுண்ணாம்புச்சூளை

 சுண்ணாம்புச்சூளை cuṇṇāmbuccūḷai, பெ. (n.)

கண்ணாம்புக்காளவாய் பார்க்க;see sunnambu-k-kalavay.

ம. சுண்ணாம்புசூள

     [சுண்ணாம்பு + சூளை, சுள் → கள்ளை → சூளை]

சுண்ணாம்புதடவு-தல்

சுண்ணாம்புதடவு-தல் Sunnambu-tadavu,    5 செ.குன்றாவி, (v.t.)

   1. வெற்றிலை முதலிய வற்றிற்குச் சுண்ணம் தடவுதல்; to dabu with lime, as betal leaves.

   2. ஏமாற்றுதல்; to play the hypocrite.

     ‘அவன் சிரித்துக்கொண்டே சுண்ணாம்பு தடவுகிறான்’ (உ.வ.);.

     [சுண்ணாம்பு + தடவு-,]

சுண்ணாம்புதாளி-த்தல்

சுண்ணாம்புதாளி-த்தல் sunnambu-dali-,    4 செ.கு.வி (v.i.)

   சுண்ணாம்பு நீற்றுதல் (சென்னை.);; to slake lime.

     [சுண்ணாம்பு + தாளி-,]

சுண்ணாம்புத்தண்ணீர்

சுண்ணாம்புத்தண்ணீர் cuṇṇāmbuttaṇṇīr, பெ. (n.)

   1. ஆடை, காகிதக்கூழ் முதலியனவற்றை வெளுக்கவும், மருந்து, வண்ணம் முதலியன உண்டாக்கவும் பயன்படும் சுண்ணாம்பு கலந்த தெளிநீர்; lime-water used in bleaching and washing lines, in paper making, in dyeing and in dressing leather.

   2. வீட்டுச்சுவர்க்கு அடிக்க உதவும் சுண்ணாம்பு நீர்; white-wash solution.

     [சுண்ணாம்பு + தண்ணீர்]

சுண்ணாம்புத்தித்திப்பு

 சுண்ணாம்புத்தித்திப்பு cuṇṇāmbuttittippu, பெ. (n.)

   சுண்ணாம்பு, சருக்கரை, தண்ணிர் கொண்டு உருவாக்கப்படும் குழந்தை நோய்க்கான ஒருவகை மருந்து; a medicine for children prepared from lime liquor and sugar (சா.அக.);.

     [சுண்ணாம்பு + தித்திப்பு]

சுண்ணாம்புத்துடுப்பு

 சுண்ணாம்புத்துடுப்பு cuṇṇāmbuttuḍuppu, பெ. (n.)

   வெற்றிலை போடுவதற்காகக் கரண்ட கத்திலிருந்து சுண்ணாம்பு எடுக்கும் சிறுகருவி (யாழ்ப்.);; a small metal rod for taking slaked lime from its casket.

     [சுண்ணாம்பு + துடுப்பு]

சுண்ணாம்புத்தெளிவு

 சுண்ணாம்புத்தெளிவு cuṇṇāmbutteḷivu, பெ. (n.)

   தெளிந்த சுண்ணாம்புத்தண்ணிர்; aqua calcis or liquor calcis used for some medical preparations (சா.அக.);.

     [சுண்ணாம்பு + தெளிவு]

சுண்ணாம்புநீற்று-தல்

சுண்ணாம்புநீற்று-தல் sunambu-nirru-,    5 செ.கு.வி. (v.i.)

சுண்ணாம்புதாளி-த்தல் பார்க்க;see Sunnambu-dali-.

     [சுண்ணாம்பு + நீற்று-,]

சுண்ணாம்புபதநீர்

 சுண்ணாம்புபதநீர் cuṇṇāmbubadanīr, பெ. (n.)

   பனையின் பாளையிலிருந்து வடித்துச் சுண்ணாம்பு கலந்தெடுக்கப்பட்ட இனிய சாறு; sweet toddy prepared with lime.

   மறுவ. அக்காரநீர் (நெல்லை);;சுண்ணாம்புப் பதனி

     [சுண்ணாம்பு + பதநீர்]

சுண்ணாம்புப் பட்டை

சுண்ணாம்புப் பட்டை cuṇṇāmbuppaṭṭai, பெ. (n.)

   1. விழாக்காலங்களிலும், நற்காலங்களிலும் சுவர், திண்ணை முதலியவற்றில், செம்மண் பட்டையை இடையிட்டு அடிக்கும் சுண்ணாம்புக்கோலம்; stripes of white wash alternating with red on the side-walls, as of temples, raised platform at the entrance of houses, etc., made on festive occasions.

   2. ஒடு விலகாதிருக்கப் போடும் சாந்துப் பட்டை; chunnam border over the tile roofing.

     [சுண்ணாம்பு + பட்டை]

சுண்ணாம்புப்பரவர்

 சுண்ணாம்புப்பரவர் cuṇṇāmbupparavar, பெ. (n.)

   ஒருவகைப் பரவர்; a sub-sect among Parava caste.

     [சுண்ணாம்பு + பரவர்]

சுண்ணாம்புப்பறையர்

 சுண்ணாம்புப்பறையர் cuṇṇāmbuppaṟaiyar, பெ. (n.)

   சுண்ணாம்பு நீற்றி விற்போர்; culamsellers.

ம. சுண்ணாம்புபரவன்

     [சுண்ணாம்பு + பறையர்]

சுண்ணாம்புப்பற்று

 சுண்ணாம்புப்பற்று cuṇṇāmbuppaṟṟu, பெ. (n.)

   இஞ்சிச் சாற்றிற் படியும் சுண்ணாம்பு வண்டல் (வின்.);; sediment of lime in ginger-juice.

     [சுண்ணாம்பு + பற்று]

சுண்ணாம்புலக்கை

 சுண்ணாம்புலக்கை cuṇṇāmbulakkai, பெ. (n.)

   சுண்ணாம்புச்சாந்து இடிக்கும் உலக்கை; chuņņam beater.

     [சுண்ணாம் + உலக்கை, உல் → உவம் → உலக்கை]

சுண்ணாம்புவல்லி

 சுண்ணாம்புவல்லி cuṇṇāmbuvalli, பெ. (n.)

   காட்டுக்கொடிமுந்திரிகை; jungle angoor (சா.அக.);.

     [சுண்ணாம் + வல்லி]

சுண்ணாம்போர்

சுண்ணாம்போர் cuṇṇāmbōr, பெ. (n.)

   கண்ணாம்பு நீற்றி விற்போர்; chunnam sellers.

     “பான்மதிக்குச் சுண்ணாம்போர்” (சினேந். 141);.

     [சுண்ணாம்பு + விற்போர். சுண்ணாம்பு விற்போர் → சுண்ணாம்போர்]

சுண்ணி

சுண்ணி1 sunni,    4 செ.குன்றாவி (v.t.)

   1. நீற்றுதல் (சங்.அக.);; to slake, as lime.

   2. புடமிட்டுச் சுண்ணமாகச் செய்தல்; to calcinate a metal in air as contemplated in Tamil medicine (சா.அக.);.

     [உள் → சுள் → சுண் → சுண்ணி-,]

 சுண்ணி2 suppi, செ.கு.வி. (v.i.)

   பூசுதல்; to daub.

 சுண்ணி3 cuṇṇi, பெ. (n.)

   ஆண்குறி (கொ.வ.);; male genital.

   ம. சுண்ணி;   க. துண்ணி, துண்ணெ;   தெ. கல்லு, கல்லி;   பட. துண்ணெ; Pkt.cunna.

சுண்ணு

சுண்ணு cuṇṇu, பெ. (n.)

   1. புனுகு (இ.வ.);; civet.

   2. ஆமணக்கு; castor seed.

 u. jund

சுதமதி

 சுதமதி cudamadi, பெ. (n.)

   மணிமேகலையில் மாதவியின் தோழியாக வருபவள்; a female character, Madavi’s friend in Manimegalai еріс.

சுதர்ச்சி

 சுதர்ச்சி cudarcci, பெ. (n.)

   சதுரக்கள்ளி; Square spurge (சா.அக.);.

சுதாகு

 சுதாகு cutāku, பெ. (n.)

   கடம்பு மரம்; cadambo tree.

சுதாச்சி

 சுதாச்சி cutācci, பெ. (n.)

   சதுரக்கள்ளி (மலை.);; triangular spurge.

சுதாதாளி

 சுதாதாளி cutātāḷi, பெ. (n.)

   கிச்சிலிக் கிழங்கு; orange root (சா.அக.);.

சுதுப்பணங்கரை

 சுதுப்பணங்கரை cuduppaṇaṅgarai, பெ.(n.)

அழகு (அலங்கார); மீன் வகை

 silver belies.

     [கதுப்பணி+காரை].

சுதுப்புநாங்காறல்

சுதுப்புநாங்காறல் cuduppunāṅgāṟal, பெ. (n.)

   1. பத்துவிரல நீளமும் வெண்ணிறமுமுள்ள மண்டைக்காறல் மீன்; horse-mackerel, silvery, attaining 10 in. in length, ascending rivers for above tidal reach.

   2. நீலவெள்ளை நிறமுடைய காறல் மீன் வகை; horse mackerel, bluish-silver (செ.அக.);.

சுதும்பு

சுதும்பு cudumbu, பெ. (n.)

   பத்துவிரல நீளமும் சாம்பல் நிறமும் உள்ள பால் மீன்வகை; milkfish, leaden, attaining 10 in. in length (செ.அக.);.

சுதை

சுதை1 cudai, பெ. (n.)

   1. அமிழ்தம்; ambrosia.

     “சுதையனைய வெண்சோறு” (கம்பரா.குலமுறை.18);

   2. பால் milk.

     “சுதைக் கணுரையைப் பொருவு துரசு” (கம்பரா. வரைக். 16);.

   3. சுவை (வின்.);; taste, savour, sweetness.

   4. சுண்ணாம்பு; lime, plaster.

     “வெள்ளி வெண்சுதை யிழுகிய மாடத்து” (மணிமே. 6:43);.

   5. வெண்மை (சூடா.);.

 whiteness.

   6. விண்மீன் (அக.நி.);; star.

   7. மின்னல் (சங்.அக);; lightning.

     [சொது → சுது → சுதை]

     “ஒளியார் முன் ஒள்ளியராதல் வெளியார் முன் வான்கதை வண்ணங் கொளல்” (குறள், 714); என்று திருவள்ளுவரும்,

     “வெள்ளி வெண்சுதை யிழுகிய மாடத்து” (மணிமே 6:43); என்று சீத்தலைச்சாத்தனாரும் கூறுவதால், ‘கதை’ என்பது தென்சொல்லே (வே.க.243);.

 சுதை2 cudai, பெ. (n.)

   உதைகால் ஆன் (பிங்,);; kicking cow,

     “வருகன் றூட்டாப் புன்சுதை” (குற்றா.தல. தக்கன் வேள்விச். 117);.

 சுதை3 cudai, பெ. (n.)

   கேடு; destruction.

     “சுதையொன்றி யக்களத்தே விழ” (கந்தபு. அக்கினிமு. 85);.

சுதைக்குன்று

சுதைக்குன்று cudaikkuṉṟu, பெ. (n.)

   சுண்ணாம்பு பூசிய செய்குன்று; an artificial hillock plastered with sunnam.

     “கூத்தாடிடமுங் கொழுஞ் சுதைக் குன்றமும்” (பெருங். வத்தவ. 15:109);.

     [சுதை + குன்று]

சுதையம்

 சுதையம் cudaiyam, பெ. (n.)

   கண்ணாம்புச் சத்து; calcium (சா.அக);.

     [சுதை → சுதையம்]

சுத்தம்

 சுத்தம் cuttam, பெ.(n.)

   சிற்ப முத்திரை வகையினுள் ஒன்று; a feature in sculpture,

     [தாய்-துய்-சுய்-சுத்தம்].

சுத்தல்சம்பா

 சுத்தல்சம்பா cuttalcambā, பெ. (n.)

   சம்பா நெல்வகை (வேளாண்.);; a kind of paddy.

சுத்தி

சுத்தி1 cutti, பெ. (n.)

   1. சிப்பி (பிங்.);; oystershell.

     “சுத்தியின் கருப்போல்” (பிரபோத. 2:26);.

   2. சங்கு (பிங்.);; conch.

   3. கும்பிடு கிளிஞ்சில் (தைலவ.);; a species of cackle, a bivalve.

   4. இப்பி வடிவாகத் தலை ஒட்டால் அமைக்குந் திருநீற்றுக் கலம்; Skull used as receptacle for sacred ashes.

     “சுத்திய பொக்கணத்து …”திருக்கோ. 242)

   5. அகல் (சூடா.);; shallow earthen vessel.

   6. நெய் முதலியன ஊற்றுஞ் சிறு ஏனம் (வின்.);; Small vessel for pouring ghee, oil etc.

 Skt. Sukti

     [சுறு → (சுற்று); → சுத்து → சுத்தி (வே.க.208.);]

 சுத்தி2 cutti, பெ. (n.)

   குத்துவதுபோல் தட்டும் சிறு சம்மட்டி; small hammer.

   ம. சுத்தி;து. சுத்தி

     [சுறு → (சுற்று); → சுத்து → சுத்தி (வே.க.208.);]

சுத்தியல் பார்க்க

 சுத்தி3 cutti, பெ. (n.)

   அரைப்பலம் (தைலவ.);; half a palam.

 சுத்தி4 cutti, பெ. (n.)

   வயிரத்தின் பண்புகளுள் ஒன்று (சிலப்.14:181, உரை);; a quality of diamond.

சுத்திகெந்தி

 சுத்திகெந்தி cuttigendi, பெ. (n.)

சிவப்புக் கெந்தகம்,

 red sulphur (சா.அக);.

சுத்திகை

சுத்திகை cuttigai, பெ. (n.)

   1. கிளிஞ்சல்;சிப்பி; shell, oyster shell.

   2. அகல் (பிங்.);; pan as of a lamp.

   3. உட்கூடான தட்டு;கிண்ணம்; shallow dish.

     [சுத்தி → சுத்திகை]

சுத்தியம்

 சுத்தியம் cuttiyam, பெ. (n.)

   நல்லாடை வகை (திவா.);; a kind of cloth of superior quality.

 Pkt. katta;

 U. katna.

சுத்தியல்

சுத்தியல் cuttiyal, பெ. (n.)

   ஒங்கியடிக்க உதவும் கம்மாளர் கருவி வகை; small hammer.

மறுவ. தட்டுங்கருவி, சிறு சம்மட்டி

     [சுத்து2 → சுத்தி → சுத்தியல் (மு.தா.117, வே.க.208);]

சுத்திரப்பலகறை

 சுத்திரப்பலகறை cuttirappalagaṟai, பெ. (n.)

   கடலில் உண்டான ஒரு வகைச் சோழி; a kind of gowri grown in the ocean (சா.அக.);.

சுத்திலப்பரணி

 சுத்திலப்பரணி cuttilapparaṇi, பெ. (n.)

   ஏழிலைப் புன்னை என்னும் மூலிகை; Seven leaved milky plant (சா.அக.);.

சுத்திலாட்டம்

 சுத்திலாட்டம் cuttilāṭṭam, பெ. (n.)

   நாணல்; reed (சா.அக.);.

சுத்திவில்முடுக்கி

சுத்திவில்முடுக்கி cuttivilmuḍukki, பெ. (n.)

   ஒரு பக்கம் அடிப்பதற்கும் மறுபக்கம் ஆணியின் கொண்டையைப் பற்றி திருகிப் பிடுங்குவதற்கும் உதவுங் கருவி; wrench and hammer.

மறுவ. ஆணிபிடுங்கிச் சுத்தியல்

     [சுத்தி2 + வில் + முடுக்கி]

சுத்து-தல்

சுத்து-தல் suttu,    5 செ.கு.வி. (v.i.)

சுற்று-தல் பார்க்க;see surru-.

     [சுறு → (சுற்று); → சுத்து → சுத்து-தல் (மு.தா. 117);]

சுத்துக்குழி

 சுத்துக்குழி cuttukkuḻi, பெ.(n.)

   சிதம்பரம் வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Chidambaram Taluk.

     [சுற்று+குழி]

சுத்துப்பொலி

 சுத்துப்பொலி cuttuppoli, பெ.(n.)

நெற்குவியலின் சுற்றுப்பகுதி:

 surrounding place of paddy heap.

     [சுற்று+பொலி]

சுத்துமுடிச்சு

 சுத்துமுடிச்சு cuttumuḍiccu, பெ. (n.)

சுற்று முடிச்சு பார்க்க; see curru mudiccu,

     [சுற்று+முடிச்சு]

சுத்துரு

 சுத்துரு cutturu, பெ. (n.)

   கண்டங்கத்திரி (மலை.);; a thorny plant.

சுந்தனுடைப்பு

 சுந்தனுடைப்பு cundaṉuḍaippu, பெ.(n.)

   சிவகங்கை வட்டத்திலுள்ள சிற்றுர்; a village in Sivagangai Taluk.

     [சுந்தன்+உடைப்பு].

சுந்தரத்தாது

 சுந்தரத்தாது cundarattātu, பெ. (n.)

   ஒரு வகைச் செய்ந்நஞ்சு (சங்.அக.);; a mineral poison.

சுந்தரப்பொடி

சுந்தரப்பொடி cundarappoḍi, பெ. (n.)

   சிந்தூரப்பொடி; aromatic powder.

     “சுந்தரப் பொடி தெளித்த” (சீவக. 1956);.

     [சிந்தூரம் → சுந்தரம் + பொடி]

சுந்தரம்

சுந்தரம் cundaram, பெ. (n.)

   சிந்தூரம்; red paint.

     “சுந்தரம் பெய்த யானைத் தூமருப்பு” (சீவக. 3048);.

     [சிந்தூரம் → சுந்தரம்]

சுனக்குடம்

 சுனக்குடம் cuṉakkuḍam, பெ. (n.)

   சதுரக் கள்ளி (மலை.);; square spurge.

     [சுன் → சுனம் + குடம்]

சுனை

சுனை1 sunai-,    4 செ.கு.வி. (v.i.)

   1. குழைதல் (பிங்.);; to be soft and pulpy to be mashed.

   2. வாடுதல்; to fade, droop.

     [சுள் → சுன் → சுனை]

 சுனை2 sunai,    4 செ.கு.வி. (v.i.)

   தினவெடுத்தல்; to tingle, itch.

     “சுனைத்தெழுதல் காமுறுவர்” (நாலடி, 313);.

ம. சுனெக்க

     [சுல் → சுன் → சுனை-,]

 சுனை3 cuṉai, பெ. (n.)

   1. தினவு; itching.

     “நாத்தின்னு நல்ல சுனைத்து” (நாலடி, 335);.

   2. சுரசுரப்பு; roughness, sharpness.

   3. கரும்பு, சோளம் போன்றவற்றின் தோகைகளிலும், கம்பு சோளம் போன்றவற்றின் கதிர்களிலும் காணப்படும் முட்போன்ற பகுதி; prickle. as in leaves, stalks, etc., down on fruits.

   ம. சுன;   க. டொணெ, தொணெ;தெ. தொன

 சுனை4 cuṉai, பெ. (n.)

   1. நீருற்று; spring.

   2. நீர்நிலையும் நிழல் மரமுமுள்ள பசும்புல் தரை; grassy.

   3. மலைச்சுளை; mountain spring.

     “பூவமன் றன்று சுனையுமன்று” (கலித்.55);.

சுனைக்கரந்தை

சுனைக்கரந்தை cuṉaikkarandai, பெ. (n.)

   மேனியில் பட்டால் அரிக்கும் ஒருவகைக் கரந்தைச்செடி; a kind of basil coming in contact with the body causes itching sensation (சா.அக.);.

மறுவ. திருநீற்றுப்பச்சை

     [சுணை → சுணை3 + கரந்தை]

சுனைக்காஞ்சொறி

 சுனைக்காஞ்சொறி cuṉaikkāñjoṟi, பெ. (n.)

   செந்தொட்டி; stinging nettle (சா.அக);.

     [சுனை + காஞ்சொறி]

சுனைக்கொடி

 சுனைக்கொடி cuṉaikkoḍi, பெ. (n.)

   முசு முசுக்கை; rough bryony (சா.அக.);.

     [சுனை + கொடி.]

சுனைக்கோரை

 சுனைக்கோரை cuṉaikārai, பெ. (n.)

   நமைச்சலை உண்டாக்கும் ஒருவகைக் கோரை; a kind of bristly sedge grass causing itching when touched bristly koray (சா.அக.);.

     [சுனை + கோரை]

சுனைத்தவம்

 சுனைத்தவம் cuṉaittavam, பெ. (n.)

   பூலாங் கிழங்கு; poolah root (சா.அக.);.

சுனைத்தவிடு

 சுனைத்தவிடு cuṉaittaviḍu, பெ. (n.)

   உமித் தவிடு; bran (சா.அக);.

     [சுனை + தவிதி]

சுனைத்துளசி

 சுனைத்துளசி suṉaittuḷasi, பெ. (n.)

   எலிக்கடி நஞ்சைப் போக்கும் முள்துளசி; thony basil, it cures rat bite (சா.அக.);.

     [சுனை + துளசி]

சுனைத்தேவதாரி

 சுனைத்தேவதாரி cuṉaittēvatāri, பெ. (n.)

   முள்ளுத்தேவதாரு; a kind of bristly deodar. (சா.அக.);.

     [சுனை + தேவதாரி]

சுனைத்தோரிதம்

 சுனைத்தோரிதம் cuṉaiddōridam, பெ. (n.)

   பூனைக்காஞ்சொறி; a small climbing nettle jragia involucrate (சா.அக.);.

     [சுனை + தோரிதம்]

சுனைப்பாசி

 சுனைப்பாசி cuṉaippāci, பெ. (n.)

   கொடிப் பாசி; moss creeping upon water (சா.அக.);.

     [சுனை + பாசி]

சுனைப்புன்கு

 சுனைப்புன்கு cuṉaippuṉku, பெ. (n.)

   மணிப்புன்கு; rusty soapnut (சா.அக.);.

     [சுனை + புன்கு]

சுனைப்புல்

 சுனைப்புல் cuṉaippul, பெ. (n.)

   ஒருவகைப் புல்; a coarse grass (சா.அக.);.

     [சுனை + புல்]

சுனைமேலாதி

 சுனைமேலாதி cuṉaimēlāti, பெ. (n.)

சுனைக் கொடி பார்க்க;see sunai-k-kodi (சா.அக.);.

     [சுனை + மேலாதி]

சுனைவள்ளி

 சுனைவள்ளி cuṉaivaḷḷi, பெ. (n.)

   முள்வள்ளி; the root of a winding plant of the Dioscorea genus (சா.அக.);.

     [சுனை + வள்ளி]

சுனைவாகினி

 சுனைவாகினி cuṉaivākiṉi, பெ. (n.)

   முகட்டை; clove scented creeper (சா.அக.);.

சுனைவீரம்

 சுனைவீரம் cuṉaivīram, பெ. (n.)

   கொச்சிவீரம்; corrosive sublimate prepared formerly in Cochin.

     [சுனை + வீரம்]

சுனைவு

சுனைவு1 cuṉaivu, பெ. (n.)

   பேய்க்கடலை (மலை.);; bitter bengal-gram.

 சுனைவு2 cuṉaivu, பெ. (n.)

   சுனைநீர் (வின்.);; rock Water.

     [சுனை → சுனைவு]

சுனைவெண்டை

 சுனைவெண்டை cuṉaiveṇṭai, பெ. (n.)

   முள்வெண்டை; rough lady’s finger (சா.அக.);.

     [சுனை + வெண்டை]

சுனைவெப்பிலி

 சுனைவெப்பிலி cuṉaiveppili, பெ. (n.)

   கரும்புத் தோகை; the tail portion of sugar cane (சா.அக.);.

     [சுனை + வெப்பிலி]

சுனைவெள்ளரி

 சுனைவெள்ளரி cuṉaiveḷḷari, பெ. (n.)

   முள்வெள்ளரி; common cucumber (சா.அக.);.

     [சுனை + வெள்ளரி]

சுனைவேப்பிலை

 சுனைவேப்பிலை cuṉaivēppilai, பெ. (n.)

   மலைவேப்பிலை; mountain neem (சா.அக.);.

     [சுனை + வேப்பிலை]

சூ

சுன்

சுன் cuṉ, பெ. (n.)

   1. வெண்மை; whiteness.

   2. பாழ்; சுன்னம்; சுழி; zero, cipher (சா.அக);.

சுன்னக்குகை

சுன்னக்குகை cuṉṉaggugai, பெ. (n.)

   1. சுண்ணாம்பினாற் செய்த மூசை; crucible made of lime stone.

   2. சுண்ணமருந்தால் செய்து பொன்னாக்கத்திற்குப் பயன்படுத்தப்படும் மூசை; a crucible made of alkaline salts and used in alchemy (சா.அக.);.

     [சுன்னம் + குகை]

சுன்னச்சி

 சுன்னச்சி cuṉṉacci, பெ. (n.)

   சத்திசாரம்; an acrid salt (சா.அக.);.

     [சுன்னம் + சி]

சுன்னப்புச்சவுடு

 சுன்னப்புச்சவுடு cuṉṉappuccavuḍu, பெ. (n.)

   உழமண்; fuller’s earth (சா.அக.);.

     [சன்னப்பு + சுவடு]

சுன்னமேகம்

 சுன்னமேகம் cuṉṉamēkam, பெ. (n.)

   சிறுநீரில் சுன்னச்சத்து அதிகமாகவரும் ஒருவகை நோய்; a kind of mega disease in which the urine comes with plenty of calcium salts (சா.அக.);.

     [சன்னம் + மேகம்]

சுன்னம்

சுன்னம்1 cuṉṉam, பெ. (n.)

   1. சுண்ணாம்பு; lime

   2. மாழைகளைப் புடமிட்ட தமிழ் மருந்து; a calcium compund prepared from metals (சா.அக.);.

     [சுன் → சுன்னம்]

 சுன்னம்2 cuṉṉam, பெ. (n.)

   சுழி, பாழ்; Zero, cipher, circular mark.

     [சுல் → சுன் → சுன்னம் (வே.க.);]

த. சுன்னம் → Skt. sunnya

 Pkt. sunna

 சுன்னம்3 cuṉṉam, பெ. (n.)

   வெண்மையான மருந்துச் சரக்கு; a kind of white medicine (சா.அக.);.

     [சுன் → சுன்னம்]

சுன்னாகம்

 சுன்னாகம் cuṉṉākam, பெ. (n.)

   வெண்ணாவல்; white jamoon.

சுன்னாரிப்புல்

 சுன்னாரிப்புல் cuṉṉārippul, பெ. (n.)

   சுக்குநாறிப்புல்; ginger grass spice grass, citronella grass or roussa oil grass (சா.அக.);.

   மறுவ. காவட்டம்புல்;மாந்தப்புல்

     [சுன்னாரி + புல்]

சுன்னிதம்

சுன்னிதம் cuṉṉidam, பெ. (n.)

   நுண்மை; very minute (சா.அக.);.

     [சுன்னம்2 → சுன்னிதம்]

சுன்னுக்கட்டி

சுன்னுக்கட்டி cuṉṉukkaṭṭi, பெ. (n.)

   1. பாற் கட்டி (வின்.);;   கட்டி (வின்.);; cheese (சா.அக);.

   2. திரட்டுப்பாற் கட்டி; condensed milk.

     [சுல் → சுன் → சுன்னு + கட்டி. சுல் → சுன் = வெண்மை]

சுபத்தி

 சுபத்தி cubatti, பெ. (n.)

   பவளப்புற்று செய்ந் நஞ்சு; a kind of arsenic (சா.அக.);.

சுபத்திரம்

சுபத்திரம் cubattiram, பெ. (n.)

   1. வெள்வேல்:

 white acacia.

   2. காட்டாத்தி; bauhnia purpurea (சா.அக.);.

சுபரணி

 சுபரணி cubaraṇi, பெ. (n.)

ஏழிலைப் புன்னை:

 a medicinal herb named seven leaved milky plant.

மறுவ. ஏழிலைப்பாலை

சுப்பல்

சுப்பல் cuppal, பெ. (n.)

   சுள்ளி; dry things, especially for fuel.

     ‘சுள்ளி சுப்பல்’ என்பது உலக வழக்கிணை மொழி (வே.க.212);

     ‘சுப்பலெடுத்துப் பல் குத்துகிறான்’

     [சும்பு → சுப்பு → சுப்பல் (மு.தா. 150);

சுப்பி

சுப்பி cuppi, பெ. (n.)

   1. கப்பல் பார்க்க;see Suppal.

   2. சுப்பிவிறகு(வின்.);, உருட்டைக்குச்சி; thin fire wood.

     [சுப்பு → சுப்பி]

சுப்பிவிறகு

சுப்பிவிறகு cuppiviṟagu, பெ. (n.)

   கள்ளிவிறகு (வின்.);;   காய்ந்தசுள்ளி, கட்டைவிறகு; small sticks of firewood.

     [சுள் → சுட்பு → சுப்பு. சுப்பெனல் = விரைந்து நீர்வற்றுதல், சுப்பு → சுப்பல் = சுள்ளி. சுப்பு → சுப்பி = சுள்ளி. சுள்ளி சுப்பல் (சப்பி); என்பது உவகவமுக்கினை மொழி. சுப்பி + விறகு (வே.க. 212);]

சுப்பு

சுப்பு cuppu, பெ. (n.)

   நீர்வற்றற்குறிப்பு; onom. expr. quick absorbtion of liquid.

     [சுள் → சுட்பு → சுப்பு (வே.க.212);]

சுப்பெனல்

சுப்பெனல் cuppeṉal, பெ. (n.)

   நீர் முதலியவற்றை, விரைவில் உள்ளிழுத்தற் குறிப்பு (வின்.);; onom. expr. signifying quick absorption of liquid.

     [சுள் → சுட்பு → சுப்பு + எனல் – கப்பெனவ் (வே.க.212); சூப்பு = Ger. suppe, Fr. soupe, E. sup. சுப்பு = AS. supan, Ice. supa;Ger. saufen – to drink]

சும

சும1 suma-,    3 செ.குவி (v.i.)

   1. சுமையாதல்; to become heavy, as accumulated debt, interest;

 to be burdened.

     ‘இன்றைய உணவால் வயிறு சுமந்து விட்டது’ (உ.வ.);.

   2. சார்தல்; to devolve on, press upon.

     ‘அவனது ஈட்டமும் இழப்பும் என்பேரிற் சுமந்தன (உ.வ);.

   3. மிகுதல்; to increase, swell.

     ‘பழிபாவங்கள் சுமந்தன’ (உ.வ.);.

     ‘சுமந்த தலையும் சும்மாடாய்த் திரிகிறது’. (பழ.);.

     [சுமை → சும-,]

 சும2 suma-,    3 செ.குன்றாவி (v.t.)

   1. தாங்குதல்; to bear;

 to support;

 to carry a burdern, as a beast, to bearin the womb

     “பவழம் புனைந்த பருதி சுமப்ப” (கலித். 80);

   2. மேற் கொள்ளுதல்; to take upon oneself.

     “முயற்றி சுமந்தெழுந்து” (திவ். இயற். பெரியதிருவந்.1);.

   3. பணிதல்; to submit to humble.

     “செறுநரைக் காணிற் சுமக்க” (குறள், 488);,

     ‘சுமந்தவன் தலையிலே சும்மாடு பத்து’ (பழ.);.

   4. சூல் கொள்ளுதல்; to pregnant.

   ம. சும;தெ. போசு

     [சுமை → சும-,]

சுமக்க

சுமக்க Sumakka, குவி.எ. (adv.)

   1. சுமந்திட; to carry.

   2. மிகவும்; in abundance, plenty.

     ‘பண் சுமக்கப் பாடி’ (ஈடு, 3.5:2);.

     [சும → சுமக்க]

சுமங்கை

சுமங்கை cumaṅgai, பெ. (n.)

   1. ஆடு தின்னாப்பாலை; a medicinal plant, worm killer.

   2. வறட்சுண்டி; sensitive plant (சா.அக.);.

சுமஞ்சரி

 சுமஞ்சரி cumañjari, பெ. (n.)

   துளசி; holy basil (சா.அக.);.

சுமடன்

சுமடன் cumaḍaṉ, பெ. (n.)

   1. கீழ்மகன் (திவா.);; mean, vulgar, person.

   2. அறிவில்லாதவன்; ignorant, illiterate person.

     “உள்ளமிலாத சுமடர்கள்” (தேவா.604.5);.

     [சுமடு → சுமடன்]

சுமடம்

சுமடம் cumaḍam, பெ. (n.)

   அறிவின்மை, முட்டாள்தனம்; ignorance, folly.

     “சுமடதாய் வம்பு மால் கொளுந்திய” (திருப்பு. 460);.

     [சுமடு → சுமடம்]

சுமடு

சுமடு cumaḍu, பெ. (n.)

   1. சும்மாடு பார்க்க;see Summadu.

     “புகர்வாய்க் குழிசி பூஞ்சுமட் டிரீஇ” (பெரும்பாண். 159);.

   2. சுமை; load, burden.

     “இவடான் திருந்தாச் சுமட்டினள்” (கலித். 109);.

ம. சுமடு

     [சுமை + அடு → சுமடு]

சுமடை

 சுமடை cumaḍai, பெ. (n.)

சும்மாடு (அக.நி.); பார்க்க;see summadu.

     [சுமடு → சுமடை]

சுமணா

 சுமணா cumaṇā, பெ. (n.)

   சிறுசண்பகம்; Small sampak flower (சா.அக.);.

சுமதலை

சுமதலை cumadalai, பெ. (n.)

   1. சுமைதலை பார்க்க;see sumai-dalai.

   2. விலை முதலியவற்றின் ஏற்றம்; excessiveness, as of price.

     ‘சுமதலையான விலை’ (உ.வ.);. (செ.அக.);.

     [சும் → சுமை → சும + தலை]

சுமதாகம்

 சுமதாகம் cumatākam, பெ. (n.)

   சிற்றகத்தி; common sasban (சா.அக.);.

     [சும + தாகம்]

சுமதாசா

 சுமதாசா cumatācā, பெ. (n.)

   செம்பை; foreign sesban.

சுமதி

சுமதி1 cumadi, பெ. (n.)

   1. பொறுப்பு; responsibility, duty.

     ‘அது உன்மேற் சுமதி’ (உ.வ.);.

   2. சுமை (பாரம்); (சங்.அக.);; load, burden.

     ‘குடும்பச் சுமதி அவனுக்கு அதிகம்’ (உ.வ.);.

   4. மிகுதி; large quantity, abundance.

     ‘சரக்குச் சுமதியாய் வந்ததா?’ (உ.வ.);.

     [சும் → சும → சுமதி (மு.தா.175);]

 சுமதி2 cumadi, பெ. (n.)

   பேராமல்லி; long tubed arabian jasmine (சா.அக.);.

சுமத்தி

சுமத்தி cumatti, பெ. (n.)

   1. சுமதலை, 2 பார்க்க;see sumadalai,

   2. ‘சுமத்தியான விலை’ (உ.வ.);. மிகுதி; abundance.

     ‘அங்கே பண்டங்கள் சுமத்தியாயிருக்கின்றன’. (உ.வ.);.

   3. கெட்டி; solidity; firmness.

     ‘இது சுமத்தியான வேலை’ (உ.வ.);. (செ.அக);.

     [சுமத்து → சுமத்தி]

சுமத்து-தல்

சுமத்து-தல் Sumattu-,    5 செ.குன்றாவி (v.t.)

   1. சுமையேற்றுதல்; to burden, to load.

     “சோற்றைச் சுமத்தி நீ பந்தித்து வைக்க” (தாயு. 74/ பெரியநாயகி.1.);.

ம. சுமத்து.

   2. கடன் முதலியன பொறுக்க வைத்தல்; to impose, as a debt, obligation;

 to make one liable.

   3. குற்ற முதலியன ஏற்றுதல்; to impute, as fault.

     [சும் → சுமை → சுமத்து]

சுமந்த

சுமந்த sumanda, பெ.அ (adj.)

   1. அதிகமான; abundant, numerous.

     ‘சுமந்த சனம் வந்தார்கள்’ (நெல்லை);.

     [சும → சுமந்த]

சுமர்-தல்

சுமர்-தல் sumar,    3 செ.கு.வி (v.i.)

   கனமாகுதல்; to become heavy.

     ‘சாமான் சுமருகிறது’ (உ.வ.);.

     [சும் → சும → சுமர்-,]

சுமி

 சுமி cumi, பெ. (n.)

   செம்மரம்; coromandel redwood, soymida febrifuga (சா.அக.);.

சுமூகம்

சுமூகம் cumūkam, பெ. (n.)

   1. கஞ்சாங்கோரை; white-basil.

   2. துளசி; holy basil (சா.அக.);.

சுமை

சுமை cumai, பெ. (n.)

   1. சுமக்கை; bearing, carrying.

     “சுமைக்கடாத மெய் விடுத்தலே நன்று” (பிரபுலிங். அக்கமா. துறவு 21);.

   2. கனம்; weight, load, burden.

   3. தொகுதி; collection.

     “வார்சுமைப் பூக்கொண்டு” (திருமந். 1834);.

   4. கடமை, பொறுப்பு; duty, responsibility.

   5. ஒரு விரல மழை; one inch of rain.

   6. 60 படி கொண்ட ஓர் அளவை; a measure equal to 60 measures.

   7. 180 தேங்காய்கொண்ட அளவு (G.Tj.D.i.134);; a bundle of 180 coconuts.

   8. 270 கவளி கொண்ட வெற்றிலைக் கட்டு; a bundle of 270 kavali of betel-leaves.

     ‘சுமை எடுப்பவனுக்கு சுமைப் பளுவுத் தெரியும்’ (பழ.);.

     [சும → சுமை]

சுமைக்காரன்

சுமைக்காரன் cumaikkāraṉ, பெ. (n.)

   1. மூட்டைத் துரக்குவோன் (யாழ்.அக.);; porter, carrier.

   2. குடும்பச் சுமைமிக்கவன் (உ.வி.);; man of large family.

     [சுமை + காரன்]

சுமைக்கூலி

சுமைக்கூலி cumaikāli, பெ. (n.)

   1. மூட்டைத் தூக்குவதற்கு கொடுக்கும் கூலி (யாழ்.அக);; porterage, wage for carrying a load.

     ‘சுமை காற்பணம்; சுமைக்கூலி முக்காற்பணம்’ (பழ.);.

     [சுமை + கூலி]

சுமைதலை

 சுமைதலை cumaidalai, பெ. (n.)

   பொறுப்பு கடமை (இ.வ.);; responsibility, burden.

     [சுமதலை → சுமைதலை]

சுமைதாங்கி

சுமைதாங்கி cumaitāṅgi, பெ.(n.)

   வாலாசா வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Walaja Taluk.

     [சுமை+தாங்கி].

 சுமைதாங்கி cumaitāṅgi, பெ. (n.)

   சுமையை இறக்கித் தலைச்சுமை ஆற்றுதற்கு உதவியாக உயர்த்தி நிறுத்தப்பட்ட கற்கட்டு; elevated stone platform erected on the roadside to rest burdens.

     “சுமை தாங்கி மேற் சாத்துவர்” (திருவிளை. விறகு. 16);.

     ‘அவன் குடும்பத்திற்கு அவன் சுமைதாங்கியானான்’ (உ.வ.);.

     ‘சுமைதாங்கி ஆயந்தீர்க்காது’ (பழ.);. (செ.அக);.

     [சுமை + தாங்கி]

சுமைதாங்கிபோடு-தல்

 சுமைதாங்கிபோடு-தல் Sumai-tangipódu- செ.கு.வி. (v.i.)

   பெற்றெடுக்காமல், வயிற்றுக் குழந்தையுடன் இறந்தவள் பொருட்டு, அவள் வயிற்றுச் சுமையாலுண்டான வருத்தம் நீங்குமாறும், அவள் ஆதன் அமைதியுறும் பொருட்டும், சுமைதாங்கிக்கல் நாட்டுதல்; to erecta sumai-tangi of tentimes in memory of a woman who has died in pregnancy, the belief being that by such erection she will be relieved of her burden in the womb.

     [சுமைதாங்கி + போடு-,]

சுமைதி

சுமைதி cumaidi, பெ. (n.)

சுமதி1 பார்க்க (சங்.அக.);;see sumati1

     [சும் → சும → சுமதி → சுமைதி]

சுமைத்தயிர்

சுமைத்தயிர் cumaittayir, பெ. (n.)

   1. ஆடைத் தயிர் (சீவக. 468, நச். உரை.);; curd with cream; a layer on the top of curd.

   2. கட்டித் தயிர்; solid curd.

     “சுமைத்தயிர் வேய்ந்த சோற்றின்” (சீவக. 2617);.

     [சுமை + தயிர்]

சுமையடை

சுமையடை cumaiyaḍai, பெ. (n.)

சும்மாடு பார்க்க;see Summadu.

     “சுமையடை மேற் கூடை கவிழ்த்து” (திருவிளை. மண்சுமந்.16);.

     [சுமை + அடை (சு.வி.101);]

சுமையன்

சுமையன் cumaiyaṉ, பெ. (n.)

   சுமையாள்; porter, carrier.

     “சுமையராயிருப்பார் சும்மாட்டுக் குள்ளே தாழைமடலைச் சொருகுமர்போலே” (திவ். அமலனாதி, 6, வியா. பக். 73);.

     [சுமை → சுமையன்]

சுமையாள்

சுமையாள் cumaiyāḷ, பெ. (n.)

சுமைக்காரன் பார்க்க;see sumai-k-karan.

     “எமைச் சுமையாளு மாக்கி” (தாயு. சச்சிதா. 4);.

     [சுமை + ஆள்]

சுமையிறக்கி

 சுமையிறக்கி cumaiyiṟakki, பெ. (n.)

சுமைதாங்கி (யாழ்ப்.); பார்க்க;see sumai-tangi

     [சுமை + இறக்கி]

சும்பு-தல்

சும்பு-தல் sumbu-,    5 செ.கு.வி. (v.i.)

   வாடிச் சுருங்குதல்; to wither (சா.அக);.

     [கும்பு → சம்பு-,]

சும்புகா

 சும்புகா cumbukā, பெ.(n.)

   கூரான பற்களைக் கொண்ட கொடுக்கு மீன்; pale edged sting ray. –

     [கும்பு-சும்புகா].

சும்புளி-த்தல்

சும்புளி-த்தல் sumbuli-,    4 செ.கு.வி. (v.i.)

   பேரொளி முதலியவற்றால் கண்கூசுதல்; to be dazed, dazzled, as the cyes.

     “சுமந்தநாகமுங் கண் சும்புளித்தவே” (கம்பரா. மிதிலை. 132);.

ம. சிம்பு

     [கூம்பு → சூம்பு → சும்பு → சும்புளி]

சும்மா

சும்மா Summa, கு.வி.எ. (adv.)

   1. தொழிலின்றி, வெறுமனே; leisurely; without any occupation or work.

     “வாகனமேறிச் சேணிற் சும்மா திரிமூர்த்தியல்லாமல்” (தனிப்பா. 2, 246, 581);.

   2. இயல்பாய்; in normal condition, in health.

உடம்பு சும்மா இருக்கிறான் (உ.வ.);.

   3. அமைதியாய்; silently, quietly, in perfect peace and rest.

     “சும்மா விருக்கு மெல்லையுட் செல்ல வெனைவிட்டவா” (கத்தரலங். 10);.

   4. வறிதாக; bare.

     “அவள் கழுத்துச் சும்மா இருக்கிறது” (உ.வ.);.

   5. காரணமின்றி; without any reason.

     ‘சும்மா போவானேன்’.

   6. பயனின்றி; uselessly.

     ‘போய்ச் சும்மா வந்தான்’.

   7. கருத்தின்றி; vaguely; unintentionally, at random.

     ‘சும்மா சொன்னேனோ?

   8. விளையாட்டாய்; as a joke; playfully,

     ‘கம்மா சொன்னேன்’.

   9. இலவயமாய்; freely; gratuitously gratis.

     ‘சும்மா கொடுப்பானா?

   10. தடையின்றி; freely, unhesitatingly unceremoniously.

இம்மாநாட்டிற்குச் சும்மா வரலாம்.

   11. அடிக்கடி; continously, repeatedly.

சும்மா வந்து கொண்டிருக்கிறான்.

   ம. சும்ம;க. சும்மனெ

     [சும் → சும்மா. சும் = மடிமை]

இக்கருத்துகளையெல்லாம்

     “சும்மா யிருத்தல்” என்னும் மரபுச்சொல், உணர்த்துதல் காண்க கொண்முடிபு (சித்தாந்த நூலாரும், மெய்ப் பொருள் (தத்துவ நூலாரும், இச்சொல்லை இருவகைப் பற்றுமறுத்து முற்றத்துறந்த முழு முனிவரான ஓகியர், இருவினையும் செய்யாது இறைவன்மேல் எண்ணத்தை நிலையாக நிறுத்தி, அமைதியாயிருக்கும் இணையற்ற இன்ப நிலைமையைக் குறிக்கப் பயன்படுத்தி யுள்ளனர்.

மெளனகுருவடிகள் தாயுமானஅடிகளுக்குச் ‘கம்மாயிரு’ என்று செவியறிவுறுத்தியதையும், அதை நினைந்து தாயுமான அடிகள்,

சந்ததமு மிளமையோ டிருக்கலா மற்றொரு சரீரத்தினும் புகுதலாம்

சலமே னடக்கலாம் கனன்மேலிருக்கலாம் தன்னிகளில் சித்தி பெறலாம்

   சிந்தையை யடக்கியே கம்மா யிருக்கின்ற திறமளிது;சத்தாகியென்

சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோ மயானந்தமே.”

என்று பாடியிருத்தலையும், நோக்குக

வெப்பத்தினால் மந்தமும் மடிமையும் உண்டாகுமாதலால், வெப்பக்கருத்தில் சோம்பற்கருத்துத் தோன்றிற்று வெப்பக் காலத்திலும், வெப்பநாட்டிலும், வினை முயற்சி குன்றுவதையும், குளிர்காலத்திலும் குளிர்நாட்டிலும் அது மிகுவதையும் உலகியலை நோக்கிக் காண்க (வே.க.215);.

     “சும்மா கிடக்கிற சங்கை ஊதிக்கெடுத்தான

ஆண்டி” (பழ.);.

     “கம்மா இருந்த அம்மையாருக்கு அாைப் பணத்துத் தாலி போதாதா?” (பழ.);.

சும்மாடு

சும்மாடு cummāṭu, பெ. (n.)

   1. சுமையைத் தாங்க உதவும்படி தலையில்கொள்ளும் சுமையடை (துணிப்புரியணை);; load-pad for the head.

     ‘கம்மா டம்மா மதியாக்கி’ (திருவாலவா. 30:9);.

   2. தவசமாகக் கொடுக்கும் உரிமை (R.T.);; perquisites in grain.

     ‘சும்மாட்டுக்கும் சும்மா இருப்பவனுக்கும் என்ன தெரியும்?’ (பழ.);.

ம. சும்மாட்டு.

     [சுமடை → சுமடு → சும்மாடு (சு.வி.101);]

சும்மாடுகோலு-தல்

சும்மாடுகோலு-தல் Summadu-kolu-,    15 செ.கு.வி. (v.i.)

   துணியைத் தலைக்குச் சும்மாடாகச் சுற்றிக்கட்டுதல்; to coil a cloth as load-pad for the head.

     [சும்மாடு + கோலு-,]

சும்மாது

சும்மாது summadu, வி.அ. (adv.)

சும்மா பார்க்க;see summa.

     “சும்மாது சிரந்தூக்கி யெதிராடா திருந்தார்” (திருவிளை. பரிநரி.41); (செ.அக);.

     [சும்மா → சும்மாது]

சும்மி

 சும்மி cummi, பெ. (n.)

   பெருங்குமிழி; gmeilina arborea (சா.அக.);.

சும்மெனல்

சும்மெனல் cummeṉal, பெ. (n.)

   ஒலிக் குறிப்பு; மூச்சுவிடுதற் குறிப்பு; onom. expr. signifying breathing.

     “சும்மெனாதே கைவிட் டோடி” (திவ். பெரியாழ். 5.4.:3);.

     [சும் + எனல்]

சும்மை

சும்மை1 cummai, பெ. (n.)

   1. சுமை (பிங்.);; burden;charge.

     “சும்மையா லுயிர்கொள” (கம்பரா. விபீடண.62);.

   2. தொகுதி; group, gathering, as of rays, bundle.

     “சுடரின் சும்மை விசும்புற” (கம்பரா. இலங்கைகாண்.33);

   3. நெற்போர் (பிங்.);; stack or rick of reaped paddy.

   4. ஊர் (பிங்.);; village, town.

   5. நாடு (பிங்.);; country, district.

   6. ஆவிரை (மலை.);; tanner’s senna.

   7. நெற்பொரி; fried paddy.

   8. ஆளிவிதை; linseed (சா.அக.);.

ம. சும்மல்

     [சும் → சும்மை (மு.தா. 175);]

 சும்மை2 cummai, பெ. (n.)

   1. ஓசை; sound, noise, clamour.

     ‘இழுமென் சும்மை யிடனுடை வரைப்பின்’ (பொருந.65);.

   2. யாழ்நரம்பின் ஒசை (பிங்.);; musical note.

     [சும் → சும்மை]

 சும்மை3 cummai, பெ. (n.)

   சும்மாடு; load-pad for the head.

     “சும்மையாகவே கடைகளை நெருக்கியே” (திருவிரிஞ்சைப். கெளரீ.6);.

     [சும் → சும்மை]

சும்மோதகம்

 சும்மோதகம் cummōtagam, பெ. (n.)

   கொழுக்கட்டைத் தேக்கு; bastard teak (சா.அக.);.

சுர

சுர1 Sura,    3 செ.குவி (v.i.)

   1. ஊறுதல்; to spring forth to stream out.

     “ஆழியா னவனை நோக்கி யருள் சுரந்து” (கம்பரா. விபீடண. 142);.

   2. உடலில் நீர் முதலியன பெருகி வீங்குதல் (இ.வ.);; to swell morbidly with secretion.

   3. நிறைதல், பெருகுதல்; to increase by steady accumulation, as wealth.

     “விருப்பஞ் சுரந்த சிலந்தி முடிசூட்டும் பெருமான்” (திருவானை. உலா, 60);.

   ம. சுரத்து;க. ஒசர்

     [சுல் → (சர்); → சுர → சுர-. (வே.க. 245);]

 சுர2 Sura-,    3 செ.குன்றாவி (v.t.)

   1. பால் முதலியன சுரத்தல்; to secrete as milk.

     ‘கன்றைக் கண்டதும் பசுவிற்குப் பால் சுருந்தது’ (உ.வ.);.

   2. இடைவிடாது சொரிதல்; to pour forth continuously.

     “மேனின்று தான் சுரத்தலான்” (சிலப். 1,9, உரை);.

   3. மிக அதிகமாகக் கொடுத்தல்; to give abundantly.

     “நெடுந்தேர் களிறொடு சுரக்கும்…. முகண்டை” (அகநா. 249);.

     [சுல் → (சுர்); → சுர → சுர-. வே.க. 245]

சுரகணரோகம்

 சுரகணரோகம் curagaṇarōgam, பெ. (n.)

   பிறவிக் குற்றத்தினால் குழந்தைகளுக்கு வரும் காய்ச்சல்; chronic fever by children due to congenital causes (சா.அக.);.

     [சுரகண(ம்); + ரோகம்]

சுரகரகாரி

 சுரகரகாரி curagaragāri, பெ. (n.)

   காய்ச்சலை நிறுத்தும் ஒரு மருந்து; a remedy that dispels fever (சா.அக.);.

     [சுரம் + க ரம் + காரி]

சுரகரி

 சுரகரி curagari, பெ. (n.)

   பேய்த்தும்பை; devil toombay (சா.அக.);.

சுரகாமலிகம்

 சுரகாமலிகம் curagāmaligam, பெ. (n.)

   செருந்தி; golden champak (சா.அக.);.

     [சுரம் + காமலிகம்]

சுரகுயிலம்

 சுரகுயிலம் curaguyilam, பெ. (n.)

   பிசின்; gum (சா.அக.);.

சுரகுரு

சுரகுரு curaguru, பெ. (n.)

   1. வியாழன் (திவா.);. தேவர் குரு; jupiter, as the preceptor of gods.

   2. இந்திரன் (சூடா);, தேவர்க்குத் தலைவன்; indira as the chief of gods.

   3. பண்டைச் சோழர்குலத் தலைவருள் ஒருவன்; an ancient Cola king.

     “பொன்னி நன்னாடன் சுரகுருவின் வழியோன்” (நன். 296, மயிலை.);.

     [சுரர் + குரு]

குரவன் → குரு

 Skt. Guru

சுரகை

சுரகை curagai, பெ. (n.)

   1. சுண்ணாம்பு; slaked lime.

   2. வசம்பு; sweet flag (சா.அக.);.

சுரக்கட்டி

 சுரக்கட்டி curakkaṭṭi, பெ (n.)

   வயிற்றுக் கட்டி; enlargement of the spleen.

     [சுரம் + சுட்டி]

இவ் வயிற்றுக்கட்டி காய்ச்சலினால் ஏற்படும் மண்ணிரல் வீக்கம் என்று சாஅக கூறும்.

சுரக்கணை

 சுரக்கணை curakkaṇai, பெ (n.)

   காய்ச்சலுடன் வாய் நீரூற்றங் காணும் ஒருவகைக் கணைச் சூடு; congenital heat in children accompanion by fever and salivation (சா.அக.);.

     [சுரம் + கணை]

சுரக்கரந்தை

சுரக்கரந்தை curakkarandai, பெ (n.)

   1. சிவ கரந்தை; fever basil.

   2. கொழும்புச் சிவகரந்தை; Ceylon toolsy.

     [சுரம் + கரந்தை]

சுரக்கள்ளி

 சுரக்கள்ளி curakkaḷḷi, பெ (n.)

   செம்மரம்; red cedar (சா.அக.);.

     [சுரம் + கள்ளி]

சுரக்கழிச்சல்

 சுரக்கழிச்சல் curakkaḻiccal, பெ (n.)

   எளிதில் பண்டுவத்திற்கு வயப்படாத காய்ச்சலோடு கூடிய கழிச்சல்நோய்; diarrhoea with fever (சா.அக.);.

     [சுரம் + கழிச்சல்]

சுரக்காமலிகம்

 சுரக்காமலிகம் curaggāmaligam, பெ (n.)

   செருந்தி; golden champak (சா.அக.);.

சுரக்காய்ச்சல்

சுரக்காய்ச்சல் curakkāyccal, பெ (n.)

   1. கடுமையானகாய்ச்சல்; a high degree of fever.

   2. உடம்பில் எரிச்சலை உண்டாக்கும் காய்ச்சல்; fever causing burning sensation over the body (சா.அக.);.

     [சுரம் + காய்ச்சல்]

சுரக்காலிக்கம்

 சுரக்காலிக்கம் curakkālikkam, பெ (n.)

   காய்ச்சல், இசிவு முதலிய நோய்களுக்காகக் கண்ணிலிடும் மருந்து; an eye salve used on the eyelids in cases of fever (சா.அக.);.

     [சுரம் + காலிக்கம்]

சுரக்கினி

 சுரக்கினி curakkiṉi, பெ. (n.)

   காய்ச்சலைத் தணிக்கும் மருந்து; remedy for dispelling as reducing fever (சா.அக.);.

சுரக்கினிநோய்

 சுரக்கினிநோய் curakkiṉinōy, பெ. (n.)

   ஊதையினால் உண்டாகிச் சளிக்கோளாறு அடைவதனால் காணும் தொண்டைக் கம்மல், மூச்சுத் திணறல், வறட்சி போன்ற பண்புகளைக் காட்டும் நோய்; a throat disease caused by gas and kabam making hard of speech, breathing trouble etc. (சா.அக.);.

     [சுரம் + அக்கினி + நோய்]

சுரக்கியானம்

 சுரக்கியானம் curakkiyāṉam, பெ. (n.)

   பாடுகையில் பண்புகளை (கரங்களை);த் தனித் தனியாய் எடுத்துக் கூறவல்ல இசையுணர்ச்சி (சங்.அக.);; intimate knowledge of the musical notes involving the ability to identify each of them as it occurs.

சுரக்குடாரம்

 சுரக்குடாரம் curakkuṭāram, பெ. (n.)

   காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் மாத்திரை; a medicine for fever (சா.அக.);.

     [சுரம் + குடாரம்]

சுரக்குடிநீர்

 சுரக்குடிநீர் curakkuḍinīr, பெ. (n.)

   காய்ச்சலுக்கான கியாழம்; a decoction given for fever (சா.அக.);.

     [சுர(ம்); + குடிநீர்]

சுரக்குளிர்

 சுரக்குளிர் curakkuḷir, பெ. (n.)

   குளிர்க் காய்ச்சல்; shivering accompanied fever an intermitent fever (சா.அக.);.

     [சுரம் + குளிர்]

சுரக்கேசரிக்குளிகை

 சுரக்கேசரிக்குளிகை curagācarigguḷigai, பெ. (n.)

   குழந்தைகளுக்கு பலவகைக் குற்றங்களினால் வரும் காய்ச்சலுக்குரிய மருந்து; pill used for fevers of children (சா.அக.);.

     [சுரம் + கேசரி + குளிகை]

சுரக்கோடாரி

 சுரக்கோடாரி curakāṭāri, பெ. (n.)

சுரக்கோடாலி பார்க்க;see sura-k-kodali (சா.அக.);.

     [சுர(ம்); + கோடாரி]

சுரக்கோடாலி

 சுரக்கோடாலி curakāṭāli, பெ. (n.)

   காய்ச்சலைப் போக்கும் இணையில்லா மருந்து; an infalliable medicine for any kind of fever (சா.அக.);.

     [சுரம் + கோடாரி → கோடாலி]

சுரக்கோது

 சுரக்கோது curakātu, பெ. (n.)

   காய்ச்சற் குற்றம்; vitiation caused by fever (சா.அக.);

சுரங்கக்காரன்

சுரங்கக்காரன் curaṅgakkāraṉ, பெ. (n.)

   1. வெடி மருந்தால் பாறைகளைப் பிளப் போன் (இ.வ.);; one whose occupation is rockblasting.

   2. சுரங்கம் தோண்டுவோன்; one who dugsmine.

   3. சுரங்கத்தில் பணியாற்றுவோன்; one who works in a mine (செ.அக.);.

     [சுரங்கம் + காரன்]

சுரங்கப்பாதை

சுரங்கப்பாதை curaṅgappātai, பெ. (n.)

   1. சாலைகளைக் கடக்க நிலத்திற்கடியில் அமைக்கப்படும் பாதை; sub-way.

     “சென்னையில் சுரங்கப்பாதைகள் பலவுள்ளன.

   2. மலையைக் குடைந்து அமைக்கப்படும் பாதை; tunnel.

     “புனலூர் அருகே சுரங்கப்பாதை ஒர் அயிரமாத்திரி (கிலோமீட்டர்); நீளமுடையது.”

     [சுரங்கம் + பாதை]

சுரங்கமறு-த்தல்

சுரங்கமறு-த்தல் surangam-aru-,4 செ.கு.வி. (v.i.)

சுரங்கம்வை-, (வின்.); பார்க்க;see surangamvai- (செ.அக.);.

     [சுரங்கம் + அறு-,]

சுரங்கம்

சுரங்கம்1 curaṅgam, பெ. (n.)

   1. நிலவறை (வின்.);; under ground cellar.

   2. நிலவறைப் பாதை; subterraneous passage.

   3. கீழறுக்கும் அறை; mine, trench.

   4. கனிமங்கள் தோண்டி யெடுக்கும் போது ஏற்படும் பெரும் பள்ளம்; a large under-ground excavation dug minerals and oares.

   5. திருடுவதற்காக வீட்டுச்சுவரில் கள்வரிடுங்கன்னம்; hole cut through or under a wall to break into a house.

     [சுள் → சுர → சுரங்கு → சுரங்கம் (வே.க.245);]

 சுரங்கம்2 curaṅgam, பெ. (n.)

   1. இங்கிலிகம்; cinnabar.

   2. சிந்தூரம்; red powder.

   3. தேன்; honey.

   4. தோடம்பழம்; citrus fruit (சா.அக.);.

சுரங்கம்வை-த்தல்

சுரங்கம்வை-த்தல் surangam-vai,    4 செ.கு.வி. (v.i.)

   1. பாறைகளை மருந்து வைத்து உடைத்தல் (வின்);; to blast rocks.

   2. கீழறுத்தல்; to lay mines under, open a subterraneous passage.

   3. கன்னமிடுதல்; to break into a house through a hole cut in its wall.

   4. வஞ்சகத்தால் கெடுதி செய்தல்; to undermine, ruin by insidious means, sap.

     [சுரங்கம் + வை-,]

சுரங்கவூற்று

 சுரங்கவூற்று curaṅgavūṟṟu, பெ. (n.)

சுரங்கங்களிலிருந்து வரும் மாழைகளின்

முதற்பொருள் கலப்பான நீர்,

 spring issuing out from mines containing minerals (சா.அக.);.

     [சுரங்க(ம்); + ஊற்று]

சுரங்கவெடி

சுரங்கவெடி curaṅgaveḍi, பெ. (n.)

   1. நிலத்தில் உள்ள பெரும்பாறைகளை உடைத்துக் கிணறோ, பெரிய அகழ்வோ ஏற்படுத்தப் பயன்படும் வெடி; to blast rock or to excavate to make a mine, a kind of detornators are used, such detonators are called ‘suranga vedi’.

     [சுரங்கம் + வெடி]

சுரங்குன்று-தல்

சுரங்குன்று-தல் suran-guru- செ.கு.வி. (v.i.)

   1. பேச்சுதாழ்தல் (உ.வ.);; lowering of the voice in speaking.

   2. பாட்டின் உச்சத்திலிருந்து கீழிறக்குதல்; to lower the high pitch into a low pitch.

     [சுரம் + குன்றுதல், சுரம் = பண், ஓசை]

சுரசகசாயம்

 சுரசகசாயம் surasagasāyam, பெ. (n.)

   மிகுதியான சிறுநீர் பிரிதலைக் கட்டுப்படுத்துவதற்காக நீரிழிவு நோயாளர்க்குக் கொடுக்கும் கருக்குநீர்; a decoction prescribed for diabetes (சா.அக.);.

     [சுரசம் + கசாயம்]

சுரசபிருதம்

 சுரசபிருதம் surasabirudam, பெ. (n.)

   வேளைத் தாவரம்; velaiplant (சா.அக);.

     [சுரசம் + பிருதம்]

சுரசமணி

 சுரசமணி surasamaṇi, பெ. (n.)

   ஆடாதோடை; Malabar nut (சா.அக.);.

     [சுரசம் + மணி]

சுரசமான

சுரசமான surasamana, பெ.அ.(adj.)

   1. சுவையுள்ள; delicious.

   2. தித்திப்புள்ள; sweetish (சா.அக.);.

சுரசம்

சுரசம் surasam, பெ. (n.)

   1. அரத்தை; galangal.

   2. நறும்பிசின்; a fragrant resin (சா.அக.);.

சுரசம்மாரி

 சுரசம்மாரி surasammāri, பெ. (n.)

   காய்ச்சலைப் போக்கும் மருந்து; medicine eradicating fever (சா.அக.);.

     [சுரம் + சம்மாரி]

சுரசவாகுதிரசம்

 சுரசவாகுதிரசம் surasavākudirasam, பெ. (n.)

   ஒரு வகைத் துளசி; a varity of holy basil (சா.அக.);.

     [சுரசம் + வாகுதி + ரசம்]

சுரசா

 சுரசா curacā, பெ. (n.)

   துளசி (மலை);; sacred basil.

சுரசி

சுரசி surasi, பெ. (n.)

   வெண்ணொச்சி (தைலவ. தைல. 135, 14);; five leaved chaste tree.

சுரசு

 சுரசு surasu, பெ. (n.)

   வேளைப்பூடு; five leaved cleome (சா.அக.);.

சுரசுர-த்தல்

சுரசுர-த்தல் surasura-,    4 செ.கு.வி. (v.i.)

   சருச்சரையாதல் (இ.வ.);; to be rough to have a rough surface.

     [சுள் → சுர் → சுர. சுரசுர = கரடுமுரடாய் இருத்தல்]

சுரசுரப்பு

சுரசுரப்பு surasurappu, பெ. (n.)

   சருச்சரையாக இருக்கை (இ.வ.);; roughness as of woollen cloth.

     [சுரசுர → சுரசுரப்பு (வே.க. 206);]

சுரசுரா

சுரசுரா surasurā, பெ. (n.)

   சிறுபிள்ளைகள் கொளுத்தி விளையாடும் வாணவகை; a kind of small crackers handled by the children. (வே.க.212);.

     [சுர் → சுரசுரா]

சுரசூடாமணிமாத்திரை

 சுரசூடாமணிமாத்திரை curacūṭāmaṇimāttirai, பெ. (n.)

 a pill given for fevers (சா.அக.);.

     [சுரம் + சூடாமணி + மாத்திரை]

சுரசூலை

சுரசூலை curacūlai, பெ. (n.)

   வெப்புநோய் வகை (சீவரட்.123);; a fever, ague.

     [சுரம் + சூலை]

சுரசை

சுரசை surasai, பெ. (n.)

சிற்றரத்தை (தைலவ. தைல.98);.

 lesser galangal.

சுரச்சதி

 சுரச்சதி curaccadi, பெ. (n.)

   இசைவகை (வின்.);; a variety in tunes.

     [சுரம் + கதி]

சுரஞ்சனம்

 சுரஞ்சனம் curañjaṉam, பெ. (n.)

   கமுகு (மலை);; areca-palm.

மறுவ. பாக்கு மரம்

சுரஞ்சா

 சுரஞ்சா curañjā, பெ. (n.)

   துளசி; holy basil (சா.அக);.

சுரஞ்சி

 சுரஞ்சி curañji, பெ. (n.)

   உசிலைமரம்; sirissaticle from its clearing rancidity (சா.அக.);.

சுரடி

 சுரடி curaḍi, பெ. (n.)

   பண்வகை (யாழ்.அக);; a musical mode.

     [சுருட்டி → சுரடி]

சுரணை

சுரணை curaṇai, பெ. (n.)

   1. உணர்ச்சி; sensitiveness, consciouness.

     “சுரணை கெட்டவன்” (உ.வ.);.

     “அதிக நித்திரை கொடுக்கச் சுரணைகெட்டு” (இராமநா. உயுத். 33);

   2. அறிவு; sense, intelligence.

     “அவன் மிக்க சுரணையுள்ளவன்” (செ.அக.);.

   ம. சுரண;க. சுரளெ

     [சுள் → சுர் → சுரி → சுரனை (மு.தா.130);]

சென்னைப் பல்கலைக்கழக அகரமுதலி நினைவு அல்லது தன்னுணர்ச்சி என்று மட்டும் பொருள்படும் ‘ஸ்மாண’ என்னும் வடசொல்லை, சுரனை என்னும் சொற்கு மட்டுமின்றிச் சுணை யென்னும் சொற்கும் மூலமாகக் காட்டியுள்ளது. அணை, கானை என்னும் தென்சொற்கள் குத்தற்கருத்தை அடிப்படையாகக் கொண்ட ‘கள்’ என்னும் வேரினின்றும், ஸ்மான’ என்னும் வடசொல் ‘நினை’ என்று பொருள்படும், ஸ்ம்ரு’ என்னும் வினை முதனிலையினின்றும் பிறந்துள்ளன என வேறுபாடறிக

சுரணைமரணை

சுரணைமரணை curaṇaimaraṇai, பெ. (n.)

   மானவுணர்ச்சி; self-respect.

     ‘சுரனை மரணை கெட்டு அலையாதே’.

     [சுரணை + மரணை]

சுரணைமரணை என்னும் இணை மொழியிலுள்ள இரண்டாம் சொல்லே வடசொல்லாகும். அஃது ஒலியொப்புமையும் இற்றைத் தமிழரின் மொழியுணர்ச்சி யின்மையும் பற்றி இணைந்ததென அறிக (வேக. 207);.

சுரணைமரம்

 சுரணைமரம் curaṇaimaram, பெ. (n.)

   மாவகை; a speces of mango.

மறுவ. கரணை

     [சுரணை + மரம்]

சுரண்டி

சுரண்டி1 curaṇṭi, பெ. (n.)

   1. புண்சுரண்டும் கருவி; a sharp instrument used for scraping wounds.

   2. சட்டுவம் (கரண்டி);; an iron instrument to scrap anything (சா.அக.);

     [சுரண்டி → சுரண்டி]

 சுரண்டி2 curaṇṭi, பெ. (n.)

   1. தவறான வழியில் பொருள்களைக் கவருபவன்; one who misappropriatcs.

   2. சிறிது சிறிதாகப் பொருள் சோர்ப்பவன் (உ.வ.);.

 one who scraps up money.

   3. சுரண்டினபொருள் (இ.வ.);; scrapings.

     [சுரண்டு → சுரண்டி]

சுரண்டு

சுரண்டு3 surangu- செ.குன்றாவி (v.t.)

   1. உகிர் முதலியவற்றால் பிறாண்டுதல் (வின்.);; to scratch, scrape with finger’s-nail.

   2. உகிர் அல்லது விரல் நுனியால் உடம்பைத்தீண்டிக் குறிப்பித்தல் (வின்.);; to scratch a person with the tip of the finger to draw his attention.

   3. தூண்டிவிடுதல் (வின்.);; to instigate.

   4. சண்டைக்கிழுத்தல் (வின்.);; to pick up a quarrel.

   5. செலவாற் கரைத்தல்; to drain away one’s property.

     “அவன் தன் சொத்தை யெல்லாம் சுரண்டி விட்டான்”.

   6. கவர்தல்; to misappropriate by slow degree.

     “என் பொருளை யெல்லாம் கரண்டி விட்டான்”.

   ம. சுரண்டுக;   க. கொண்டுக, கெரெ;   தெ. கீறு;   து. கெரெபுனி;   கோத, கெக்ர்வ்;   துட. கெர்வ்;   பர். கிர், கிர்வ், கிர்ப் குரு. கெர்ச்;   மா. க்வெர்செ;பிரா. கர்கிங்.

     [சுள் → சுர் → சுரடு → சுரண்டு]

 சுரண்டு4 surandu-,    5 செ.கு.வி. (v.i.)

   1. பணத்திற்காகப் பலரோடு உடலுறவு கொள்ளல் (வின்.);; to commit adultery,prostitution.

   2. இரத்தல்; to crave, solicit meanly.

     ‘என்னிடம் வந்து சுரண்டுகிறான்’ (உ.வ.);.

     [சுர் → சுரடு → சுரண்டு]

சுரதரு

 சுரதரு curadaru, பெ. (n.)

   தேவதாரு; deoder tree (சா.அக.);.

சுரதாகநாசினி

 சுரதாகநாசினி curatākanāciṉi, பெ. (n.)

   இருவேலி என்னும் வெட்டிவேர்; cuscuss root (சா.அக.);.

மறுவ. இருவேரி

சுரதாக்கு

 சுரதாக்கு curatākku, பெ. (n.)

   அரத்தை; galangal (சா.அக.);.

சுரதாக்கும்

 சுரதாக்கும் curatākkum, பெ. (n.)

   பேரரத்தை; greater galangal (சா.அக.);.

சுரதாபதைலம்

 சுரதாபதைலம் curadāpadailam, பெ. (n.)

   காய்ச்சலுக்குக் கொடுக்கும் ஒருவகை மருந்தெண்ணெய்; a medicinal oil for burning fever (சா.அக.);.

சுரதாரம்

 சுரதாரம் curatāram, பெ. (n.)

   புண்களுக்குச் செய்யும் ஒருவகைப் பண்டுவம்; a treatment for ulcers (சா.அக.);.

சுரதாரு

சுரதாரு curatāru, பெ. (n.)

   1. செம்பரத்தை; red shoe flower.

   2. தேவதாரு; deodar (சா.அக.);.

சுரதுருமம்

 சுரதுருமம் curadurumam, பெ. (n.)

   தேவதாரு; deodar (சா.அக.);.

     [சுரம் + துருமம்]

சுரத்திருமம்

 சுரத்திருமம் curattirumam, பெ. (n.)

   நேயமரம்; a kind of medicinal tree (சா.அக.);.

சுரத்து

சுரத்து curattu, பெ. (n.)

   1. மிக அதிகமாகப் பால்தரும் கறவையினத்தின் இயல்பு; quality of a cow which gives milk in abundant.

     ‘இந்தப் பசுமாடு நல்ல சுரத்துடையது (உ.வ.);.

   2. தெம்பு; valour, strength.

நோய்வாய்ப்பட்ட பின் பையன் சுரத்தில்லாமல் இருக்கிறான்.

   3. ஆர்வம், ஈடுபாடு; eagerness, interest, involvement.

தேர்வில் தோற்றதால், அவன் எதிலும் சுரத்தின்றி காணப்படுகிறான்.

சுரத்துக்காதி

 சுரத்துக்காதி curattukkāti, பெ. (n.)

   திப்பிலி மூலம்; root of long pepper (சா.அக.);.

     [சுரத்துக்கு + ஆதி]

சுரத்துய்த்தல்

சுரத்துய்த்தல் curattuyttal, பெ. (n.)

   வீரர் தாம் கவர்ந்த ஆனிரையை அரியவழியில் நோவு படாதபடி நடத்திக்கொண்டு செல்லுதலைக் கூறும்புறத்துறை (பு.வெ.1:11);; theme of a warrior leading the captured cattle safe through a baren tract fraught with dangers.

     [சுரம் → சுரத்து + உய்த்தல்]

சுரத்தை

 சுரத்தை curattai, பெ. (n.)

   முந்திரிப்பழம்; cashew nut fruit (சா.அக.);.

சுரநடை

சுரநடை curanaḍai, பெ. (n.)

   அருஞ்சுரத்தில் தலைவியையிழந்து நின்ற தலைவனிலையைக் கூறும் புறத்துறை (பு.வெ.10:2);; theme describing the desolate condition of a hero who lost his wife in a desert.

     [சுரம் + நடை]

சுரநதி

சுரநதி curanadi, பெ. (n.)

   தெய்வ ஆறென வழங்கப்படும் கங்கை; the Ganges, as the river of Gods.

     “சுரநதிக்கனுரையென மிதக்கவே” (கலிங். 342);

     [சுரம் + நதி]

சுரந்தா

 சுரந்தா curandā, பெ. (n.)

   தேவதாருமரம்; deodar tree (சா.அக);.

சுரனாசி

 சுரனாசி curaṉāci, பெ. (n.)

   மால் கரந்தை; Visnu karanthai (சா.அக.);.

சுரனாசினி

 சுரனாசினி curaṉāciṉi, பெ. (n.)

   திருநாமப் பாலை; a palai tree (சா.அக.);.

     [சுரன் + நாசினி]

சுரனுவா

 சுரனுவா curaṉuvā, பெ. (n.)

   பேராமல்லி; big jasmine (சா.அக.);.

சுரன்

சுரன் curaṉ, பெ. (n.)

   1. ஞாயிறு; Sun.

   2. காய்ச்சல், fever.

   3. ஒருவகைச் சிறுமீன்; a small fish (சா.அக.);.

     [சுள் → சுர் → சுரன் (ஞாயிறு);]

சுரபத்து

 சுரபத்து curabattu, பெ. (n.)

   நரம்பு வாச்சிய வகை (உ.வ.);; a kind of stringed instrument played with a plectrum of ivory.

சுரபரணி

 சுரபரணி curabaraṇi, பெ. (n.)

   முறைக் காய்ச்சல்; intermittent fever (சா.அக.);.

     [சுரம் + பரணி]

சுரபாசாணம்

 சுரபாசாணம் curapācāṇam, பெ. (n.)

   காய்ச்சற் செய்ந்நஞ்சு; a kind of prepared native arsenic (சா.அக.);

     [சுரம் + பாசாணம்]

சுரபாண்டம்

 சுரபாண்டம் curapāṇṭam, பெ. (n.)

   கருக்குழியில் இருக்கும் பனிக்குடம் என்னும் பை; foetal membrane forming the bag of water in the womb (சா.அக.);

சுரபாத்திரி

 சுரபாத்திரி curapāttiri, பெ. (n.)

சுரப்பி பார்க்க;see Sura-pattiri (சா.அக.);.

சுரபானம்

சுரபானம் curapāṉam, பெ. (n.)

   1. சாராயம்; arrack.

   2. கள்; toddy (சா.அக.);.

     [சுரம்3 + பானம்;சுரம் = கள்]

சுரபி

 சுரபி curabi, பெ. (n.)

சுரப்பி பார்க்க;see surappi (சா.அக.);.

     [சுரப்பி → சுரபி]

சுரபிகா

 சுரபிகா curabikā, பெ. (n.)

   தேள்கொடுக்குச் செடி; scorpion plant (சா.அக.);.

சுரபிகாசி

 சுரபிகாசி curabikāci, பெ. (n.)

   வரிக்கற்றாழை; a kind of striped aloe (சா.அக.);

சுரபிகோசம்

 சுரபிகோசம் curabiācam, பெ. (n.)

சுரபிபத்திரை;see Surabipattirai (சா.அக.);.

     [சுரபி + கோசம்]

சுரபிசேகம்

 சுரபிசேகம் curabicēkam, பெ. (n.)

   வரி கொம்மட்டி; striped colocynth (சா.அக.);.

சுரபிதானி

 சுரபிதானி curabitāṉi, பெ. (n.)

   சண்பகம்; champak (சா.அக.);.

சுரபின்னை

 சுரபின்னை curabiṉṉai, பெ. (n.)

சுரபுன்னை பார்க்க;see Sura-punnai (சா.அக.);.

சுரபிபத்திரை

 சுரபிபத்திரை curabibattirai, பெ. (n.)

   சம்பு நாவல்; jambu tree, Malay apple tree.

சுரபிமணி

 சுரபிமணி curabimaṇi, பெ. (n.)

   இதளியமணி; mercurial pill (சா.அக.);.

     [சுரபி + மணி. மண் → மண்ணு → மணி]

த. மணி → Skt. Mani

சுரபிமன்றாடி

சுரபிமன்றாடி curabimaṉṟāṭi, பெ. (n.)

   ஆக்களைப் பாதுகாப்பவர், மாட்டிடையர்; protect of cow-herds.

     “இந்நாயனார் சுரபி மன்றாடிகளில் கலையன் குற்றி திருவகம்படிக் கோன்கைக் கொண்டு நாளொன்றுக்கும் அளக்கும் பால்” (தெ.க.தொ.8 கல், 73);.

     [சுரபி + மன்றாடி]

சுரபிமுத்திரை

 சுரபிமுத்திரை curabimuttirai, பெ. (n.)

   பூசையில் ஆவின்மடிபோற் காட்டும் முத்திரை (சங்.அக.);; a pose of the fingers in the form of cow’s udder, assumed in worship.

     [சுரபி + முத்திரை]

சுரபிமேற்புல்லுருவி

 சுரபிமேற்புல்லுருவி curabimēṟbulluruvi, பெ. (n.)

   மருதமரத்தின் புல்லுருவி; a parasite found grown on marudha tree (சா.அக.);.

     [சுரபி + மேல் + புல்லுருவி]

சுரபியாங்கம்

சுரபியாங்கம் curabiyāṅgam, பெ. (n.)

   வெண்கடம்பு; white cadamba tree (சா.அக.);.

 சுரபியாங்கம் curabiyāṅgam, பெ. (n.)

   ஆக்களை வளர்த்துப் பயன்கொள்பவர்; cowherds.

     ‘இக்கோயில் சுரபி இடையற் குனாயகம் கைக்கொண்ட பால்பசு பத்தும் (தெ.க.தொ.கல்.822);.

மறுவ. கோவலர், கோபாலர், மாட்டிடையர்

     [சுரபி + இடையர்]

சுரபியில்

 சுரபியில் curabiyil, பெ. (n.)

   கோயிற்குப் பாலுதவும்படி அரசர்களால் அமைத்துக் காக்கப்பட்ட ஆ மடம்; cow stall maintained for the supply of milk to a temple.

ஸ்ரீ ராஜீஸ்வரமுடையார் சுரபியில் அடுத்த பசு பன்னிரண்டினால்.” (அடுத்த = சேர்த்த, கூடிய);

     [சுரபி → சுரபியல்]

சுரபில்லை

 சுரபில்லை curabillai, பெ. (n.)

   சுரக்கட்டி; enlargement of spleen (சா.அக.);.

     [சுரம் + பில்லை]

சுரபு

சுரபு curabu, பெ. (n.)

   1. இலவம்பிசின்; gum of silk cotton tree.

   2. துளசி; holy basil.

   3. மல்லிகை; jasmine.

   4. இலவு; silk cotton (சா,அக);.

சுரபுகி

 சுரபுகி curabugi, பெ. (n.)

   துளசி; holy-basil (சா.அக);.

     [சுரபு → சுரபுகி]

சுரபுங்கு

 சுரபுங்கு curabuṅgu, பெ. (n.)

   சுனைப்புங்கு; rusty soapnut (சா.அக.);.

சுரபுன்னை

சுரபுன்னை curabuṉṉai, பெ. (n.)

   நாக சம்பங்கி என்ற மூலிகையின் பண்பையும், கரும்பச்சை நிற இலையையும், வெண் பூவையுமுடைய சிறிய மரம்; a small tree having dark green leaves and flowers are white and its fruit pulp is medicinal properties equal to naga champak

     “கரையன சுரபுன்னையும்”(பரிபா.11:17); (சா.அக.);

   ம. சுரப்புன்ன;   க. சுரகொன்னெ;தெ. சுரபொன்ன

 Skt. Surapunnagam

சுரபேதம்

சுரபேதம் curapētam, பெ. (n.)

   1. காய்ச்சல் வகைகள்; different kinds of fever.

   2. கரகரத்த தொண்டை; hoarse throat (சா.அக.);.

     [சுரம் + பேதம்]

சுரப்படுத்து-தல்

சுரப்படுத்து-தல் sura-p-paputtu,    5 செ.குன்றாவி. (v.t.)

சுரம்போடு-தல் பார்க்க;see Suram-podu-

     [சுரம் + படுத்து-,]

சுரப்பட்டை

 சுரப்பட்டை curappaṭṭai, பெ. (n.)

   காய்ச்சலை நீக்கும் மர (கொய்னா);ப்பட்டை; Cinchona tree bark, used to avoid fever mainly Malaria (சா.அக.);.

     [சுரம் + பட்டை]

சுரப்பட்டைச்சத்து

 சுரப்பட்டைச்சத்து curappaṭṭaiccattu, பெ. (n.)

   மர (சின்கொய்னா);ப் பட்டையில் இருந்து செய்யப்படும் காய்ச்சலைப் போக்கும் ஒரு சாறு; Quinine is prepared from Cinchona bark, used for all kinds of fever.

     [சுரம் + பட்டை + சத்து]

சுரப்பாலை

 சுரப்பாலை curappālai, பெ. (n.)

   ஒரு வகைப்பாலை; a land of Paulay much resembling downy Oleander.

     [சுரம் + பாலை]

சுரப்பி

சுரப்பி curappi, பெ. (n.)

   1. கந்தகத்தூள்; sulphur powder.

   2. கள்ளி; milk spurge.

   3. சாதிக்காய்; nutmeg.

   4. பனங்கள்; toddy of palmyra.

   5. துளசி; holy basil.

   6 மது; arrack.

   7. மல்லிகை; jasmine.

   8. பல்லி; lizard.

   9. ஆ; cow.

   10. நறுமணம்; fragrance.

   11. பிரமி (மலை.);; a prostrate herb.

   12. இலவம் பிசின்; gum of silkcotton tree.

   13. இருவாட்சி; Tuscan jasmine.

   14. பசி; hunger.

   15. தேள் கொடுக்கி,

 Indian turnsole.

   16. மருத மரம்; Terminatia arjuna.

   17. ஒருவகை இதளியக் குளிகை; a kind of mercurial pill.

   18. மாட்டுக்

   கொம்பு; cow’s horn.

   19. பால்மிகுதியாய்ச் சுரக்கும் ஆ (திவா.);; white cow,

   20. சண்பகம்:

 champak flower.

   21. வெண்கடம்பு; white cadamba.

   22. குந்துருக்கம்; aIndian frank in cense.

   23. தேவருலக ஆ; celestial cow.

   24. உடம்பிலிருந்து வெளியேறுவதும் அரத்தத்தில் கலப்பதுமான நீர்மங்களைச் சுரக்கும் உள்ளுறுப்பு; gland.

உமிழ்நீர்ச் சுரப்பி, நாளமில்லாச் சுரப்பி.

   25. அதிமதுரம்; liquorice.

     [சுர → சுரப்பு → சுரப்பி]

     “வடவர் ஸு + ரப் (bh.); எனப் பகுத்து, ‘இனிதாய்த் தாக்குதல்’ (affecting pleasantly); என்று வேர்ப்பொருளுரைப்பர். இருக்கு வேதத்தில் நறுமணங்கமழ்தல், வசியம் செய்தல்,இன்புறுத்தல், அழகாயிருத்தல் என்னும் பொருள்களிலேயே சுரபி என்னுஞ் சொல் ஆளப்பெற்று இருப்பதாகவும், பிற்கால வட நூல்களிலேயே அது காமதேனு என்னும் ஒரு கற்பனை ஆவைக்குறித்ததாகவும், மாவி அகர முதலியினின்று அறியக் கிடக்கின்றது” (.வ.மொ.வ.);.

 Skt. Surabhi

சுரப்பு

சுரப்பு curappu, பெ. (n.)

   1. சுரக்கை; welling out, flowing, gushing out.

     “சுரப்புறு சிறைப்புனல்” (அரிச்.பு.விவாக.107);.

   2. ஊற்று; fountain, spring.

   3. வீக்கம்; swelling.

     ‘காலிற் சுரப்பு உண்டாகி இருக்கிறது’ (உ.வ.);.

சுரப்புத்தண்ணீர்

 சுரப்புத்தண்ணீர் curapputtaṇṇīr, பெ. (n.)

   ஊற்றுத்தண்ணீர்; spring water, fountain water.

     [சுரப்பு + தண்ணீர்]

சுரப்புவடிவு

 சுரப்புவடிவு curappuvaḍivu, பெ. (n.)

முலைமேற்றிரள்;(சா.அக);.

     [சுரப்பு + வடிவு]

சுரப்புவிடு

சுரப்புவிடு1 surappu-vidu-    20 செ.கு.வி. (v.i.)

   கறத்தற்கு ஏற்ப, மாட்டின் மடியினின்று, பால் சுரக்கத் தொடங்குதல் (உ.வ.);; to start secretion of milk in the udder.

     ‘மாடு சுரப்பு வடட்தா?’

     [சுரப்பு + விடு-,]

 சுரப்புவிடு2 surappu-vidu-,18 செ.குன்றாவி (v.t.)

   கன்றை ஊட்டவிட்டுப் பால்சுரக்கச் Garugou; to start the flow of milk by letting the calf suck cow’s udder.

மாட்டைச் சுரப்பு விட்டாயிற்றா?

     [சுரப்பு + விடு-,]

சுரமகம்

 சுரமகம் curamagam, பெ. (n.)

   செருந்தி; golden champak (சா.அக.);.

மறுவ. சுரகாமலிகம்

சுரமகளிர்

 சுரமகளிர் curamagaḷir, பெ. (n.)

   தெய்வப் பெண்டிர் (பிங்.);; celestial damsels.

மறுவ. தேவமகளிர், அரம்பையர்

     [சுரர் + மகளிர்]

சுரமணிமாத்திரை

 சுரமணிமாத்திரை curamaṇimāttirai, பெ. (n.)

   நேர்வாளத்துடன் கடைச்சரக்குகள் சேர்த்து அணியம் செய்த, கழிச்சல் மாத்திரை; a purgative pill prepared with croton sced as a chief ingredient along with other bazaar drugs and prescribed for fever gravel or urinary calculus dyspepsia testicular complaints, etc. (சா.அக.);.

     [சுரம் + மணி + மாத்திரை]

இம்மாத்திரையினால் சுரம், கல்லடைப்பு, குன்மம், அண்டவூதை ஆகியன நீங்குமெனக் குறிக்கிறது.

சுரமண்டலம்

 சுரமண்டலம் curamaṇṭalam, பெ. (n.)

   வகை வாச்சியம்; harp.

     [சுரம் + மண்டிவம் → மண்டலம்]

சுரமதில்

 சுரமதில் curamadil, பெ. (n.)

   சிந்தில் கொடி; moon creeper (சா.அக.);.

     [சுரம் + மதில்]

சுரமயக்கம்

 சுரமயக்கம் curamayakkam, பெ. (n.)

   காய்ச்சலினால் வரும் மயக்கம்; giddiness from fever (சா.அக.);.

     [சுரம் + மயக்கம்]

சுரமருந்து

 சுரமருந்து curamarundu, பெ. (n.)

   காய்ச்சலைப் போக்கும் மருந்து; a medicine for the cure of fever (சா.அக.);.

     [சுரம் + மருத்து]

சுரமலி

 சுரமலி curamali, பெ. (n.)

சுரமலிகம் பார்க்க;see suramaligam (சா.அக.);.

சுரமலிகம்

சுரமலிகம் curamaligam, பெ. (n.)

   1. உடம்பில் பலவிடங்களில் வரும் அக்கி; cruptions of a fiery acrid humour in different parts of the body.

   2. செருப்படை; a low spreading plant.

   3. செருந்தி; golden champak (சா.அக.);.

மறுவ. செந்திக் கரப்பான், கரகாமலிகம்

     [சுரம் + மலிகம். சுரம் = வெப்பம். இங்கு வெப்பக் = கொப்புளம், மிகுதல் = நிறைய இருத்தல்.]

சுரமாத்திரை

 சுரமாத்திரை curamāttirai, பெ. (n.)

சுரத்திற்கு கொடுக்கும் மருந்துக்குளிகை,

 fever pill.

     [சுரம் + மாத்திர]

சுரமாந்தம்

 சுரமாந்தம் curamāndam, பெ. (n.)

   செரியாமை, மந்தம் போன்றவற்றால் குழந்தைக்கு வரும் காய்ச்சலுடன் கூடிய கழிச்சல்நோய்; diarrhoea in children attended with fever due to indigestion and other disorders of bowel (சாஅக.);.

     [சுரம் + மாந்தம். மந்தம் → மாந்தம்]

சுரமாந்தை

 சுரமாந்தை curamāndai, பெ. (n.)

   அதிக உடற்சூட்டுடன் இருமல், களைப்பு, சோற்று வெறுப்பு போன்ற பண்புகள் உள்ள ஒரு வகை மாந்தநோய; a kind of tuberculosis marked by excess of fever, cough, fatigue, loss of appetite, etc. (சா.அக.);.

     [சுரம் + மாந்தை]

சுரமாய்கிடத்தல்

 சுரமாய்கிடத்தல் curamāykiḍattal, பெ. (n.)

   காய்ச்சலினால் படுத்தபடுக்கையாகக் கிடக்கை; to be laid up with fever (சா.அக.);.

     [சுரம் + ஆய் + கிடத்தல்]

சுரமாறாட்டம்

 சுரமாறாட்டம் curamāṟāṭṭam, பெ. (n.)

   காய்ச்சற் கடுமையினால் அறிவு மயங்கிப் பிதற்றல் போன்ற மாறுபாடுகள்; several bad symptoms such as loss of senses, incoherent talk etc., due to excess of fever (சா.அக.);.

     [சுரம் + மாறாட்டம்]

சுரமாலிபை

சுரமாலிபை curamālibai, பெ. (n.)

   காய்ச்சல், இசிவுநோய் இவற்றைப் போக்குவதற்காக அகத்தியர் மருத்துவ காவியம் 1500ல் சொல்லியுள்ள ஒரு மருந்து; a medicinal preparation contemplated in the Agastiyar work 1500 on medicine for curing fever, apoplexy etc. (சாஅக.);.

     [சுரம் + மாலிகை]

சுரமுண்டாக்கல்

 சுரமுண்டாக்கல் curamuṇṭākkal, பெ. (n.)

   காய்ச்சல் வரும்படிச் செய்தல்; causing or giving room for fever – may be by irregularity or excess in diet (சா.அக.);.

     [சுரம் + உண்டாக்கல்]

சுரமுண்டாக்கி

 சுரமுண்டாக்கி curamuṇṭākki, பெ. (n.)

   காய்ச்சல் உண்டாக்கும் மருந்து; anything causing or producing fever (சா.அக.);.

     [சுரம் + உண்டாக்கி]

சுரமுதல்

 சுரமுதல் curamudal, பெ. (n.)

   உடம்பில் காய்ச்சல் உண்டாதல்; getting feverish (சா.அக.);

     [சுரம் + முதல்]

சுரமும்முரம்

 சுரமும்முரம் curamummuram, பெ. (n.)

   காய்ச்சலின் கடுமை; severity or intensity of fever (சா.அக.);.

     [சுரம் + மும்முரம்]

சுரமுறுசூலை

 சுரமுறுசூலை curamuṟucūlai, பெ. (n.)

   காய்ச்சல், தலைவலி, உடம்பு வீக்கம் போன்ற பல வகைத் துன்பங்களைத் தரும் ஒருவகைச் சூலை நோய்; a kind of acute arthritis or gout marked by febrile symptoms head-ache, swelling and weakness (சா.அக.);.

     [சுரம் + உறு + சூலை]

சுரமெழுப்பி

சுரமெழுப்பி curameḻuppi, பெ. (n.)

   1. காய்ச்சல் உண்டாக்கும் பொருள்; any substance which excites fever.

   2. சுரமுண்டாக்கி பார்க்க;see Suram-undikki (சா.அக.);.

     [சுரம் + எழுப்பி]

சுரமேற்று

சுரமேற்று1 suramtru.5 செ.குன்றாவி (v.t.)

   காட்டிற்குத் துரத்தி அடியோடு ஒழித்தல்; to drive into the forest and dispel, remove, as darkness.

     “திக்குக்களில் உண்டான இருளைச் சுரமேற்றா நிற்பதும்” (திருவிருத். 31, வியா, 194);.

     [சுரம் + ஏற்று-. சுரம் = காடு]

 சுரமேற்று2 suram-erru-,    5 செ.குன்றாவி. (v.t.)

   தூண்டுதல்; to instigate, egg on (செ.அக.);.

     [சுரம் + ஏற்று-,]

சுரம்

சுரம்1 curam, பெ. (n.)

   1. காய்ச்சல் (உ.வ.);; fever,

   2. பாலைநிலம்; descrt tract.

     “சுரமென மொழியினும்” (தொல். பொருள். 216);.

   3. காடு; jungle.

     “வெங்க லழற்சுரந்தாம் படர்ந்தார்” (பு.வெ. 2:3);.

   4. அருநெறி (திவா.);; narrow and difficult path.

   5. வழி (பிங்.);; way.

ம. சுரம்

     [சுள் → சுர் → சுரம் (வ.வ.);]

சுரம் என்னும் சொல் முதுவேனிற் காலத்தில் கடுமையாய்ச் சுடும் பாலைநிலத்தைக் குறிக்கப் பயன்பட்டமையால் சுரநோயைக் காய்ச்சல் என்றே சொல்ல வேண்டும் (வவ.);

 சுரம்2 curam, பெ. (n.)

   கள்; toddy.

     [சுரர் → சுரம்]

 சுரம்3 curam, பெ. (n.)

   உப்பு (மூ.அ);; salt.

 சுரம்4 curam, பெ. (n.)

   1. நகத்தின் அடி; quick tender, flesh below nail.

   2. உட்டுளை; hollow, as of horn, quill.

     [கரை → கரம்]

சுரம்போக்கு

சுரம்போக்கு curambōkku, பெ. (n.)

   தலைவனுடன் தலைவி பாலைவழியில் செல்லும் உடன் போக்குத் துறை; theme describing the elopement of a maiden with her lover.

     “தோயமும் நாடுமில்லாச் சுரம் போக்குத் துணிவித்தவே” (திருக்கோ.207);.

     [சுரம் + போக்கு]

சுரரிடம்

 சுரரிடம் curariḍam, பெ. (n.)

   வீட்டுலகம், கரர் வாழும் உலகம் (பிங்.);; heaven, as the world of gods.

     [சுரர் + இடம்]

சுரர்

சுரர் curar, பெ. (n.)

   தேவர், வானோர்; celestials.

     “சுரரறிவரு நிலை” (திவ். திருவாய்.1.1:8);.

மறுவ. அமரர், விழியார்

சுரர்குருநாள்

சுரர்குருநாள் curarkurunāḷ, பெ. (n.)

   கொடிறு என்னும் எட்டாவது விண்மீன் (பூசம்); (திவா.);; the 8th naksatra.

     [சுரர் + குருநாள்]

சுரர்துருமம்

 சுரர்துருமம் curarturumam, பெ. (n.)

   தேவதாரு; deodar tree (சா.அக.);.

சுரளம்

 சுரளம் curaḷam, பெ. (n.)

   புன்னைமரம் (மலை.);; common poon tree (சா.அக.);.

சுரளிகை

 சுரளிகை curaḷigai, பெ. (n.)

   பாலைமரம்; iron wood tree (சா.அக.);.

சுரழ்

 சுரழ் curaḻ, பெ. (n.)

இலவம்பிசின் (மலை);,

 gum arabic, gum of silk cotton tree (சா.அக.);.

சுரவன்பாக்கு

சுரவன்பாக்கு curavaṉpākku, பெ. (n.)

   ஒர் உயர்ந்த வகைப் பாக்கு; a kind of superior arcca-nut

     ‘திருவாலி நாடுதாஸர் நல்லன சில சுரவன் பாக்குக்களைப் பட்டருக்குக் கொடுவந்து கொடுத்தாராய்’ (ஈடு. 10.2:2);.

     [சுரர் → சுரவன் + பாக்கு]

சுரவல்லி

 சுரவல்லி curavalli, பெ. (n.)

   அப்பிரகம் எனும் செய்ந்நஞ்சு; a kind of mineral poison (சா.அக.);.

சுரவி

சுரவி curavi, பெ. (n.)

   1. சண்பகம்; champaka flower.

   2. ஆ; cow.

     [சுரபி → சுரவி]

சுரவிகாரநாசினி

 சுரவிகாரநாசினி curavikāranāciṉi, பெ. (n.)

   பாதிரி; sterospermum suaveolens (சா.அக.);.

சுரவினாசி

 சுரவினாசி curaviṉāci, பெ. (n.)

   மாம்பிசின், பனம்பிசின், கிராம்பு முதலியவற்றால் செய்யப்படும் காய்ச்சலைப் போக்குகின்ற ஒரு மருந்து; a medicine for fever prepared from the gum of mango tree, the gum of palmyra tree and clove (சா.அக.);.

மறுவ. இடவகம்

     [சுரம் + வினாசி]

சுரவின்பால்

 சுரவின்பால் curaviṉpāl, பெ. (n.)

   ஆவின் பால்; cow’s milk (செ.அக.);.

     [சுரபி → சுரவி → சுரவின் + பால்]

சுரவீக்கம்

 சுரவீக்கம் curavīkkam, பெ. (n.)

   காய்ச்சலிற் காணும் உடம்பு, கை கால் வீக்கம்; swelling due to fever (சா.அக.);.

     [சுரம் + வீக்கம்]

சுரவெப்பம்

 சுரவெப்பம் curaveppam, பெ. (n.)

   காய்ச்சலினாற் ஏற்படும் உடல்வெப்பம்; temperature of the body during fever (சா.அக.);.

     [சுரம் + வெப்பம்]

சுரவேகம்

 சுரவேகம் curavēkam, பெ. (n.)

   காய்ச்சலின் கடுமை; a high degree of fever (சா.அக.);.

     [சுரம் + வேகம்]

சுரவை

 சுரவை curavai, பெ. (n.)

   வீக்கம்; swelling (சா.அக.);

     [சுரப்பு → சுரவை]

சுராகாரம்

 சுராகாரம் curākāram, பெ. (n.)

   ஒரு வகையுப்பு; a kind of salt (சா.அக.);.

சுராங்கிசக்குளிகை

சுராங்கிசக்குளிகை surāṅgisagguḷigai, பெ. (n.)

   அகத்தியர் வல்லாதி 600இல் சொல்லியபடி பலவகைக் காய்ச்சல்களுக்கும் உரிய மாத்திரை; a medicinal pill described in Agasthiyar vallathi 600 and prescribed for different kinds of fever (சா.அக.);.

     [சுரம் → சுராங்கிசம் + குளிகை]

சுராசமுத்திரம்

 சுராசமுத்திரம் curācamuttiram, பெ. (n.)

   ஏழு கடல்களுள் ஒன்றாகிய கட்கடல்; ocean of toddy (செ.அக.);.

     [சுரா + சமுத்திரம்]

சுராட்டு

சுராட்டு curāṭṭu, பெ. (n.)

   நான்கு அடியுள்ள செய்யுளில் இரண்டெழுத்து ஒரடியுள் மிக்குச் சீரொத்து வருவது (யாப். வி. 95, பக். 482);; a four lined stanza of equal metrical quantity, with two extra letters in one of the lines (செ.அக);.

சுராதி

சுராதி curāti, பெ. (n.)

   1. துளசி; holy basil.

   2. வட்டத்திருப்பி; Indian pareira cissampeloe pareira (சா.அக.);.

சுராதிராசன்

சுராதிராசன் curātirācaṉ, பெ. (n.)

சுரர்குரு:

 Jupiter, as the preceptor of Gods.

     “சுராதிராசன் முதலாகவரு சோழன்” (கலிங். 178);.

     [சுரர் + அதி + (அரசன் →); அராசன்]

சுராபகம்

 சுராபகம் curāpagam, பெ. (n.)

   சுண்டைக் காய்; Turkey berry (சா.அக.);.

சுராலயம்

 சுராலயம் curālayam, பெ. (n.)

   தேவர்கள் வாழிடமான மேருமலை (சூடா);; Mount Meru, as the abode of Gods.

     [சுரர் + ஆலயம் = சுராலயம்]

சுராலை

சுராலை curālai, பெ. (n.)

   சாம்பிராணி (நறுமணப் புகைப்பொருள்); (தைலவ.தைல. 3);; frankincense.

சுரி

சுரி1 suri-,    2 செ.கு.வி (v.i.)

   1. கழிதல்; to be spiral, as conch,

     “வெள்ளைச் சுரி சங்கொ டாழியேந்தி” (திவ். திருவாய். 7.3:1.);

   2. மடிப்பு விழுதல்; to wrinkle.

   3. கடைகுழலுதல்; curl.

     “சுரியிரும் பித்தை” (பொருந. 160);.

     [சுழி → சுரி]

 சுரி2 suri,    4 செ.கு.வி. (v.i.)

   1. சுழிதல் (சங்.அக.);; to wind spirally.

   2. திரைதல் (யாழ்.அக.);; to wrinkle.

   3. சுருளுதல்; to curl.

   4. வளைவாய்க் கிடத்தல்; to lie in a circle.

     “சுரிக்கு மண்டலந் துரங்குநீர்” (கம்பரா. தேரேறு. 30);,

   5. மனஞ்சுழலுதல்; to be perturbed.

     “கரிச்சிராது நெஞ்சே யொன்று சொல்லக் கேள்” (தேவா. 369:3);.

     [சுழி → சுரி]

 சுரி3 suri,    4 செ.கு.வி (v.i.)

   1. வற்றுதல்; to get dried.

     “நெருப்பிடைச் சுரிக்க நீட்டும்” (கம்பரா. இரணிய. 137);.

   2. சுருங்குதல்; to shrink.

   3. சேறாதல் (யாழ்ப்);; to muddy, miry,

   4. சேற்றிற் புதைதல் (யாழ்ப்.);; to sink, as foot in mire.

 சுரி4 suri-,    4 செ.குன்றாவி. (v.t.)

   1. உள்ளொடுக்குதல்; to draw in.

     “ஆமை தலைபுடை சுரிப்ப” (கம்பரா. நாட்டுப். 18.);.

   2. முகஞ்சுளித்தல்; to frown.

     ‘சுரித்த மூஞ்சி’ (வின்.);.

   3. ஒலை முதலியவற்றில் துளையிடுதல் (யாழ்ப்.);; to bore as in an da leaf.

     [சுழி → சுரி]

 சுரி5 curi, பெ. (n.)

   1. சுழற்சி (சங்.அக.);; whirling.

   2. சுழி; spiral, curl, screw.

     “கரியேறு சங்கினாய்” (திவ்.இயற்.3:49);.

   3. எருத்தின் நெற்றி வெள்ளைச் சுழி; white curl on the forehead of bulls.

     “சுரிநெற்றிக் காரி” (கலித். 101);.

   4. அணியுறுப்பு வகை; part of an ornament.

     “உருத்திராக்ஷத் தாழ்வடம் ஒன்றிற் பொன்னின் சுரி” (தெ.க.தொ. 2, 156);.

   6. நரி, (அக.நி.);; jackal.

     [சுழி → சுரி]

 சுரி6 curi, பெ. (n.)

   சேறு (யாழ்ப்.);; thin mud, mire.

 சுரி7 curi, பெ. (n.)

   1. துளை (திவா.);; hole, aperture.

   2. ஏட்டுத்துளை (வின்.);; perforation through the leaves of an ola book. (ம.சுரி);.

   3. ஏட்டில் துளையிடுங்கருவி; instrument for boring ola leaf or book.

     [சுரை → சுரி]

சுரிகுழல்

சுரிகுழல் curiguḻl, பெ. (n.)

   1. சுருண்ட கூந்தல்; curling hair.

   2. சுருண்ட கூந்தலுடைய பெண் (பிங்.);; woman as having curly hair.

     [சுரி + குழல்]

சுரிகை

சுரிகை1 curigai, பெ. (n.)

   கவசம் (திவா.);; coat of mail.

     [சுரி → சுரிகை]

 சுரிகை2 curigai, பெ. (n.)

   1. உடைவாள்; dirk,

 short sword:

     “சுரிகை நுழைந்த சுற்றுவீங்கு செறிவுடை” (பெரும்பாண்.73);

   2. கத்தி; knife.

     “கற்கம் வழித்தற்குட கைச்சுரிகை” (தைலவ. தைல.);.

     [சுரி → சுரிகை;

சுர் → சுரி. சுரித்தல் = துணைத்தல், வட மொழியின் ‘சரிகா’ என்பதன் அடி ‘சுர்’. ஆயின் மா.வி.அ. ‘க்ஷுர்’ என்பதை மூவமாகக் காட்டும். இவையிரண்டும் ‘

சுரி’ என்பதன் திரிபே.

     ‘சுரி’ என்பது உவகவமுக்கு. ‘சுரிகை’ என்பது செய்யுள் வழக்கு.

ஏட்டின் துனையிடுங்கருவியைச் ‘சுரியூசி’ என்பது யாழ்ப்பான வழக்கு (வ.வ.157);.]

 kt. Swika, skhur;E. Sword

சுரிஞ்சான்

 சுரிஞ்சான் curiñjāṉ, பெ. (n.)

   பழுப்புநிறமான கிழங்கைப் போன்ற உனானி (unani); மருந்துச் சரக்கு; a yellowish brown bulbous root known as mercury’s finger – an unani drug (சா.அக.);.

சுரிஞ்சான்மிகிரி

 சுரிஞ்சான்மிகிரி curiñjāṉmigiri, பெ. (n.)

   சுரிஞ்சான் பார்க்க; sce surinjan (சா.அக);.

     [சுரிஞ்சான் → சுரிஞ்சான் மிசிரி]

சுரிஞ்சி

சுரிஞ்சி curiñji, பெ. (n.)

   தனக்கு (M.M.367);; small ach root (செ.அக.);.

சுரிதகம்

சுரிதகம்1 curidagam, பெ. (n.)

   கலிப்பா வகையின் இறுதியுறுப்பு (காரிகை, செய். 12, உரை.);; short final lines of certain kinds of kali verse.

சுரிதகம் எனினும், அடக்கியல் எனினும்

வாரம் எனினும், வைப்பு எனினும்,

கோக்கியல் எனினும் ஒக்கும் (யாப்.82);.

ஆசிரிய இயலானாதல் வெண்பா இயலானாதல் பாட்டிற் கருதிய பொருளை முடித்து நிற்பது.[தொல்.செய்.117).

உள்ளுறுப்பின் பொருளினைத் தன் கண் வைக்கப்படுவது சுரிதகம் (தொல். பொருள். 4, பேரா.);.

 சுரிதகம்2 curidagam, பெ. (n.)

   1. கூத்தில் சொல் நிகழும் வகையில் வரும் எட்டடிப்பாட்டு (சிலப்.3:13, உரை,);; eight line stanza in dialogues of drama.

   2. ஒருவகைத் தலையணி; an ornament fastened to the hair with a screw.

     “சுரிதக வுருவினதாகி” (நற். 86);.

     [சுரி + அகம்]

சுரித்தமுகம்

சுரித்தமுகம் curittamugam, பெ. (n.)

   1. மூப்பினால் திரைந்த முகம்; wrinkled face.

   2. வெறுப்பை அல்லது சினத்தைக் காட்டும் முகம்; face contorted in frowning.

     [சுரித்த + முகம்]

சுரித்தமூஞ்சி

 சுரித்தமூஞ்சி curittamūñji, பெ. (n.)

சுரித்த முகம் பார்க்க;see Suritta-mugam.

     [சுரித்த + (முகம்); மூஞ்சி]

சுரிந்து

சுரிந்து curindu, பெ. (n.)

   1. நீர்ச்சுழல், நீர்ச்சுழி; eddy, whirl-pool.

     ‘நீர் . . . சுரிந்தோடு மதனைச் சுரிந்தென்றும் சுழியென்றும் வழங்குவது போல’ (யாப்.வி.81.பக்.282);.

     [சுரி → சுரித்து]

சுரிபோடு-தல்

சுரிபோடு-தல் Suri-pடிdu-,    8 செ.கு.வி. (v.i.)

   தமரிடுதல் (யாழ்.அக.);; to bore a hole, as in a plank.

     [சுரி + போடு-,]

சுரிப்புறம்

சுரிப்புறம்1 curippuṟam, பெ. (n.)

   1. சங்கு; conch.

   2. நத்தை; snail.

ம. சுரிப்புறம்

     [சுரி + புறம்]

 சுரிப்புறம்2 curippuṟam, பெ. (n.)

   பனை ஏடுகளின் ஒட்டையுள்ள இடது புறம் (வின்.);; left side of an ola leaf or book, as perforated.

     [சுரி + புறம்]

சுரிமண்

 சுரிமண் curimaṇ, பெ. (n.)

   புதைமணல் (யாழ்ப்.);; a kind of quick sand.

     [சுரி + மண்]

சுரிமுகம்

சுரிமுகம்1 curimugam, பெ. (n.)

   1. சுழிந்த முகமுடைய சங்கு (திவா.);; conch, as having a spiral head.

     “முரசுடன் சுரிமுகந் தழங்க” (பாரத. அருச்சுனன்றீ.77);.

   2. நத்தை (திவா.);; Snail.

 சுரிமுகம்2 curimugam, பெ. (n.)

   துளையுள்ள பக்கம்; that portion having the hole (சா.அக.);.

ம. கரிமுகம்

     [சுரி + முகம்]

சுரியகுழல்

சுரியகுழல் curiyaguḻl, பெ. (n.)

   1. சுருண்ட கூந்தலை உடைய பெண்; woman having curly hair.

   2. பெண்கூந்தல்; female’s hair.

     [சுரி + குழல்]

சுரியல்

சுரியல் curiyal, பெ. (n.)

   1. வளைவு; curling.

     “சுரியற் றாடி” (மணிமே. 3:116);.

   2. குழன்ற மயிர்; curiy hair.

     “தென்றல்… சுரியற் றுற்றும்” (அகநா. 21);.

   3. மயிர் (திவா.);; lack of hair.

   4. நீர்ச்சுழி; whirlpool, eddy.

   5. இளையோர் மயிர்; hair of the young.

   5. பெண்மயிர்; hair of the female (சா.அக.);.

     [சுரி → சுரியல்]

சுரியாணி

 சுரியாணி curiyāṇi, பெ. (n.)

   முறுக்காணி (இ.வ.);; screw.

ம. கரியாணி, சிரியாணி

     [சுரி + ஆணி. ஆழ் → ஆழி → ஆணி = ஆழ்ந்திறங்குவது]

சுரியூசி

 சுரியூசி curiyūci, பெ. (n.)

   பனையேட்டில் துளையிடுங்கருவி; instrument for boring ola leaf or book.

     [சுரி + ஊசி. சுள் → சுர் → சுரி. உள் → உளி → உசி – ஊசி]

சுரீரெனல்

சுரீரெனல் curīreṉal, பெ. (n.)

   1. கடுமையாகச் சுடுதற் குறிப்பு; onom. expr, signifying the sensation of piercing hot.

சுழிரெனச் சுட்டது.

   2. கடும்வலியுடன் ஏற்படும் உணர்வு எறும்பு, பூச்சி, தேனீ, தேள் முதலியன கடிப்பதால் ஏற்படும் கூர்மை மிகுந்த கடுமையான வலியுணர்வு; a sharp pain,

     ‘தேள் கொட்டியது போலச் கரீரென்றது’

   3. கடுமையான சொல், செய்தி போன்றவை மனத்தில் குத்துவது போன்ற ஊறுபாட்டையேற்டுத்துகை; harsh remark, news etc., give a pang feel touched to the quick.

பாவாணர் மறைந்த செய்தி தமிழர்களின் மனத்தில் சுரீரெனத் தைத்தது (உ.வ.);

   4. காய்ந்த இரும்பில் நீர் சுண்டும்போது உண்டாகும் ஒலிக்குறிப்பு; onom. expr. of hissing, as of heated iron in contact with water.

     [‘சுல்’ சுடுதற் கருத்துவேர். சுல் → சுள் → சுர் → சுரீர் + எனல்]

சுருகரெனல்

சுருகரெனல் curugareṉal, பெ. (n.)

   1. வேகத்தோடு தீப்பற்றுதற் குறிப்பு; expr. signifying rapid burning as of dry combustibles.

   2. வலித்தற் குறிப்பு; twitching with pain.

   3. உடல் சுடுதற் குறிப்பு; feeling hot in the body.

     ‘உடம்பு சுருகரென்றிருக்கிறது’ (உ.வ.);.

     [சுருசுரு + எனல்]

சுருக்க

சுருக்க surukka, குவி.எ. (adv.)

   1. விரைவாய்; quickly, hastily.

     ‘சுருக்க வா’.

   2. சுருக்கமாக; briefly, shortly.

     [சுருங்க → சுருக்க]

 சுருக்க curukka, வி.எ. (adv.)

   விரைவாக; fast.

     ‘வெளியில் போனால் சுருக்கவந்திடு”(பேவ);.

     [சுரு-சுருக்க]

சுருக்கங்கோரை

 சுருக்கங்கோரை curukkaṅārai, பெ. (n.)

   கோரைவகையுள் ஒன்று; a kind of sedge.

     [சுருக்கம் + கோரை]

சுருக்கணாம்காரை

 சுருக்கணாம்காரை curukkaṇāmkārai, பெ.(n.)

   அழகு (அலங்கார); மீன் வகை; silver bellies.

     [சுகுக்கணம்+காரை.]

சுருக்கம்

சுருக்கம் curukkam, பெ. (n.)

   1. குறுக்கம்; brevity, conciseness.

   2. குறுக்கமானது; abbreviation, epitome, abstract, gist.

   3. சிறுமை (வின்.);; smallness, shortness.

   4. குறைவு; diminution, decrease, contraction.

     “சுருக்கமுற்றனரரக்கர்” (கம்பரா. முதற்போ. 189);.

   5. வறுமை; poverty, want.

     “சிறிய சுருக்கத்து வேண்டு முயர்வு” (குறள். 963);.

   6. கஞ்சத்தனம்; miserliness.

   7. ஆடை முதலியவற்றின்சுருக்கு (இ.வ.);; fold or pucker in a garment, crease.

ம. சுருக்கம்

     [சுருங்கு → சுருக்கு → சுருக்கம்]

 சுருக்கம்2 curukkam, பெ. (n.)

   1. ஒடுக்கம்;ஒடுக்கல்; contracting

   2. எருவாய்ச்சுருக்கம்; anal stricture.

   3. தட்டுப்படு, பற்றாக்குறை; shortage.

     ‘பணச்சுருக்கம் ஏற்பட்டு விட்டதால், வணிகம் மந்தமாக உள்ளது’ (உ.வ.);.

     [சுருங்கு → சுருக்கு → சுருக்கம்]

சுருக்கல்

சுருக்கல்3 curukkal, பெ. (n.)

   1. ஒடுக்கல்; contracting.

   2. குறைத்தல்; diminution as food (சா.அக.);.

     [சுருங்கு → சுருக்கு → சுருக்கல்]

சுருக்களஞ்சி

சுருக்களஞ்சி curukkaḷañji, பெ. (n.)

   1. குழைச்சு; sliding knot.

   2. கண்ணி; noose, trap, snare.

   3. கட்டு; tying.

     [சுருக்கு → சுருக்களஞ்சி]

சுருக்காங்கண்ணி

 சுருக்காங்கண்ணி curukkāṅgaṇṇi, பெ.(n.)

   முடிச்சுவகை; a kind of knot

     [கருக்கம்+கண்ணி]

சுருக்காங்கி

 சுருக்காங்கி curukkāṅgi, பெ. (n.)

சுருக்களஞ்சி பார்க்க;see Suru-k-kasaiji.

சுருக்காமுடி

 சுருக்காமுடி curukkāmuḍi, பெ.(n.)

இலகு வாக அவிழ்க்கும்படி போடும் முடிச்சு

 a knot easily unfastened

     [சுருக்காத+முடி]

சுருக்கி

சுருக்கி1 curukki, பெ. (n.)

   1. ஆமை; tortoise.

   2. சிறுகீரை; piggrcens.

   3. தொட்டாற்சுருங்கி; sensitive plant; touch me not plant.

   4. இங்குலிகம்; variety of cinnabar.

   5. கசப்புப் பசளை; bitter purslane (சா.அக.);

     [சுருக்கு → சுருக்கி]

சுருக்கிக்காய்ச்சல்

 சுருக்கிக்காய்ச்சல் curukkikkāyccal, பெ. (n.)

   சுண்டக்காய்ச்சுவை; boiling down to reducible quantity (சா.அக.);.

     [சுருக்கி + காய்ச்சல்]

சுருக்கிக்கூறு-தல்

 சுருக்கிக்கூறு-தல் curukkikāṟudal, பெ. (n.)

சுருக்கிச்சொல்லு-தல் பார்க்க;see surukki-c-col-.

     [சுருக்கி + கூறு-,]

சுருக்கிச்சொல்(லு)-தல்

சுருக்கிச்சொல்(லு)-தல் surukki-c-col,    13 செ.கு.வி. (v.i.)

   சொல்லுவதை, பேசுவதைச் சுருக்கமாகக் கூறுதல்; speak abruptly.

     ‘அவையில் சுருக்கிச் சொல்லக் கற்றுக் கொள்ளவேண்டும்’ (உ.வ.);.

     [சுருக்கி + சொல்-,]

சுருக்கிடல்

சுருக்கிடல் curukkiḍal, பெ. (n.)

   1. சுருக்குப் போடுகை; to strangulate.

   2. உருக்குமுகத்தில் மாழைகளுக்கு மூலிகைக்குடிநீர் அல்லது சாறுவார்த்து அதன் சாரத்தை இழுக்கும்படி செய்கை; in medicine pouring the juice or decoction of drugs in small quantities from time to time to metals in melting state in the process of calcination so as to absorb the essence of drugs. (சா.அக.);.

     [சுருக்கு → சுருக்கிடல்]

சுருக்கிடு

சுருக்கிடு1 surukkidu,    20 செ.கு.வி. (v.i.)

   1. சுருக்குப் போடுதல்; to make a noose on cord

   2. சுருக்கில் மாட்டுதல்; to noose

     “கழுத்திற் சுருக்கிட்டிழுக்கு மன்றோ” (கந்தரலங்.2);.

 சுருக்கிடு2 surukkiiu,    20 செ.கு.வி. (v.i.)

சுருக்குக்கொடு2 பார்க்க;see surukku-k-kogu2.

     [சுருக்கு + இடு-,]

சுருக்கிட்டுக்கொள்ளு-தல்

சுருக்கிட்டுக்கொள்ளு-தல் surukkiiu-k-kol.    16 செ.கு.வி. (w.i.)

சுருக்குப்போட்டுக்கொள் பார்க்க;see Surukku-p-pottu-k-kol.

     [சுருக்கு + இட்டுக்கொள்-,]

சுருக்கினதகடு

சுருக்கினதகடு curuggiṉadagaḍu, பெ. (n.)

   செம்பு, பித்தளை ஆகிய மாழைகளினாலான பொருள்களின் மேல் வடிவோடு இரண்டறப் பொருந்துமாறு அமைக்கப்பெறும் பொற்ற கடு (கலை);; the golden plate which is fitted upon the statue plate made by copper brass alloy.

     “செப்புக்குடம் ஒன்று நிறைமூவாயிரத்து எண்பத்து முப்பலத்தில் சுருக்கின தகடு பல பொன் . .” (தெ.க.தொ. 2, கல்.1);.

     [சுருக்கின + தகடு]

சுருக்கிப்பிடி-த்தல்

சுருக்கிப்பிடி-த்தல் Surukki-p-pidi-,    4 செ.குன்றாவி, (v.t.)

   1. செலவு முதலியன குறைத்தல்; to curtail, as expenses;

 to effect rctrenchement.

   2. வேலை முதலியவற்றைக் குறைத்து முடித்தல்; to minimise, as labour.

     [சுருக்கு → சுருக்கிப்பிடி-,]

சுருக்கு

சுருக்கு1 surukku-,    5 செ.குன்றாவி (v.t.)

   1. குறைத்தல்; to curtail, reduce.

     “முன்னிக் கடலைச் சுருக்கி” (திருவாச. 7:16);.

   2. உள்ளிழுத்தல்; to compress, to contract, to draw in, as the tortoise its head.

   3. ஆடை முதலியன சுருக்குதல்; to pucker, tuck in.

   4. வலை, பை முதலியன சுருக்குதல்; to draw tight, as noose, net, string of a purse.

     “கழுவொடு கடுபடை சுருக்கிய தோற்கண்” (கலித். 106);.

   5. குடை முதலியவற்றையொடுக்குதல்; to close, as umbrella to fold.

   6. கட்டுதல்; to tie, as an old book, to make up into a bundle.

     “நல்யா ழாகுளி பதலையொடு சுருக்கி” (புறநா. 64);.

   7. திரண்ட கருத்து வரைதல்; to epitomise, summarise.

   8. ஒலை முதலியன அணிதல்; to wear, as ear-ring.

     “செம்பொனோலை சேடுபடச் சுருக்கி” (பெருங். மகத. 22:225);.

   9. முலாம் பூசுதல்; to gild.

     “இத்தேவர் பிரபையிற் சுடர்களிற் சுருக்கின பொன்” (தெ.க.தொ. 2, 419);.

க. சுர்க்கு ம. சுருக்கு

     [சுருங்கு → சுருக்கு-,]

 சுருக்கு2 surukku-,    5 செ.குன்றாவி (v.t.)

   1. சுருங்கச்செய்தல்; causing anything to shrdink.

   2. வற்றச்செய்தல்; causing to be reduced as decocdtion.

   3. உருகிய மாழைக்கு மூலிகைச்சாற்றைவிடுதல்; administering juice of drugs to metals infusion.

   ம. சுருக்குக;   க. சுர்கு, சுக்கு;   தெ. சுருக்கு;   து. சிர்க்காவுனி;   கோத. சுர்க்;   துட. துரட்;பர். கர்க்கிப்

     [சுருங்கு (த.வி.); → சுருக்கு (பி.வி.);-,]

 சுருக்கு curukku, பெ. (n.)

   1. சுருங்குகை; contraction, reduction

     “பெரும்படை …… பாப்புஞ் சுருக்கும்” (பெருங். மகத. 20, 135);.

   2. ஆடை முதலியவற்றின் மடிப்பு; wrinkle fold, crease.

   3. குழைச்சு; slipknot, sliding knot.

அந்தத் தாம்பிற் சுருக்கு நெகிழ்ந்திருக்கிறது.

   4. கண்ணி; noose, snare, trap-

     ‘வேடன் கண்ணிவைத்துப் பறவைகளைப் பிடிப்பதில் வல்லவன்’ (உ.வ.);.

   5. கட்டு; tying.

     “குழற்சுருக் குடைந்து” (இரகு. இரகுவுற், 17);.

   6. குறைவு; deficiency.

   7. சுருக்கம்; shortness.

     ‘விடை சுருக்கமாக இருக்கட்டும்’ (உ.வ.);.

   8. கஞ்சத்தன்மை; miscrliness.

     “அவர் சுருக்கிலாது தூவினார்” (இரகு. இரகுவுற். 19);.

   9. ஒன்றன் பிழிவு; gist, summary.

     “மாதவன் பேர் சொல்லுவதே யோத்தின் சுருக்கு” (திவ். இயற். 2:39);.

   10. விரைவு; haste, speed.

     ‘அவன் வந்த சுருக்கு வியப்பானது’. (உ.வ.);.

   11. அக்கறை; care, attcntion, eagerness.

     “பையன் சுருக்காய்ப் படிக்கிறான்” (உ.வ.);.

   12. சுரணை; sensitiveness, sense of shame.

     ‘நான் அவனை வைதால் உனக்கென்ன சுருக்கு’ (உ.வ.);.

   13. ஒட்டணி (வீரசோ. அலங் 24);.

 a figure of speech.

   ம. சுருக்கு;க. சுலுக்கு

     [சுருங்கு → சுருக்கு-,]

 சுருக்கு4 curukku, பெ. (n.)

   அடி சவுக்கடி; whipping.

     ‘அவனுக்குச் சுருக்கு விழுந்தது’ (உ.வ.);.

     [சுருக்கெனல் → சுருக்கு]

 சுருக்கு5 curukku, பெ. (n.)

   1. பூமாலை வகை; a kind of garland.

     “தண்சுருக்குப் பைந்தொடை” (திருக்காளத். பு. 7, 54);.

   2. வில்வம் மலை; bael.

 சுருக்கு6 curukku, பெ. (n.)

   வேள்வியில் உதவும் நெய்த்துடுப்பு (திவா.);; a ladle made of mango leaves wood or metal used for pouring clarified butter on the sacred fire.

     “சோதிசேர்தருஞ் சுருக்குச் சுருவமும்” (சிவ.ரக.நைமி.44);.

 சுருக்கு7 curukku, பெ. (n.)

   கயிற்றின் ஒரு முனையை மடக்கிக் கயிற்றிலேயே நகரும் வகையில் போடப்படும் முடிச்சு ஒன்றைப் பிணைப்பதற்காகக் கயிற்றில் போடப்படும் முடிச்சு; noose knot.

அவன் கழுத்தில் சுருக்குப் போட்டுக் கொண்டிறிருக்கிறார்கள்.

     [சுருங்கு → சுருக்கு]

சுருக்குகொடு

சுருக்குகொடு3 Surukku-k-kodu-,    4 செ.குன்றாவி, (v.t.)

   ஒடும் சரக்குகளைக் கட்டுவதற்காக அச்சரக்கை ஒட்டிலிட்டு அடுப்பில் வைத்து, மூலிகைச் சாற்றைச் சிறுகச்சிறுக அதில் விட்டுக் கட்டியைப் புரட்டிக் கொடுத்துக் கொண்டு வருதல்; the process used to purify or consolidate such substances as cinnabar, sulphur, arsenic etc.

     [சுருக்கு + கொடு-,]

சுருக்குக்கஞ்சிகை

சுருக்குக்கஞ்சிகை curugguggañjigai, பெ. (n.)

   வேண்டியபொழுது சுருக்கிக் கொள்ளு தற்குரிய திரை; roller curtain.

     “சுருக்குக் கஞ்சிகை விரித்தனர்” (பெருங். மகத. 13:54);.

     [சுருக்கு + கஞ்சிகை]

சுருக்குக்கொடு

சுருக்குக்கொடு1 Surukku-k-kodu,    4 செ.கு.வி. (v.i.)

   மாழைகளைப் புடமிடும் பொழுது மருந்துநீர் சேர்த்தல்; to add aliquid preparation in the process of calcinating a metallic substance.

     “ஏறச் சுருக்குக்கொடுத் ததைச் சிந்துாரித்து” (பணவிடு. 230);.

     [சுருக்கு + கொடு-,]

சுருக்குச்சதை

 சுருக்குச்சதை curukkuccadai, பெ. (n.)

   வட்ட வடிவச் சதை ஒரு துளையுடன் இயற்கையாக முடிவடைவது; ring like muscle which closes a natural orifice sphincter muscle.

     [சுருக்கு + சதை]

சுருக்குத்தாக்கல்

 சுருக்குத்தாக்கல் curukkuttākkal, பெ. (n.)

சுருக்கிடல் பார்க்க;see surukkidal (சா.அக.);

     [சுருக்கு + தாக்கல்]

சுருக்குத்தைலம்

 சுருக்குத்தைலம் curukkuttailam, பெ. (n.)

   தலைவலிக்குப் பயன்படுத்தும் ஒருவகை மருந்தெண்ணெய் அல்லது களிம்பு; a medicated oil or ointment applied to headache.

     [சுருக்கு + தைலம்]

 Skt. taila → த. தைலம்

சுருக்குப்பை

 சுருக்குப்பை curukkuppai, பெ. (n.)

   வாயைச் சுருக்கக்கூடிய தையற்பை (உ.வ);; a small bag or purse drawn together at the mouth with a thong or string.

     ‘கிழவியின் சுருக்குப்பையில் வெற்றிலைச் சருகும் சில்லறைக் காசும் இருக்கும்’ (உ.வ.);.

     [சுருக்கு + பை]

சுருக்குப்பைக்காரன்

 சுருக்குப்பைக்காரன் curukkuppaikkāraṉ, பெ. (n.)

   குறைந்த வளவு உண்பதாகப் பாசாங்கு செய்பவன் (இ.வ.);; one who pretends to take only a small quantity of food.

     [சுருக்கு + பைக்காரன்]

சுருக்குப்போட்டுக்கொள்ளு-தல்

சுருக்குப்போட்டுக்கொள்ளு-தல் surukku-ppittu-k-kol,    6 செ.கு.வி (v.i.)

   கழுத்தில் உருவு கயிறிட்டுத் தற்கொலை புரிந்து கொள்ளுதல்; to commit suicide by hanging.

     ‘வறுமையால் அவன் சுருக்குப் போட்டுக் கொண்டான்’ (உ.வ.);

மறுவ. நாண்டுகொள்ளுதல்

     [சுருக்கு + போட்டுக்கொள்-,]

சுருக்குவலை

சுருக்குவலை curukkuvalai, பெ. (n.)

   ஒரு வகை வலை; a kind of net.

     “சுருக்குவலைப் படுத்து” (மணிமே. 18:106);.

ம. சுருக்குவல

     [சுருக்கு + வலை]

சுருக்குவழி

சுருக்குவழி curukkuvaḻi, பெ. (n.)

   1. குறுக்குப் பாட்டை (பாதை);; cross cut, short cut.

   2. கணக்கிற்கு விடை காணும் எளிய முறை; short or easy method in solving a problem.

     ‘சுருக்குவழி தெரிந்ததால் அவன் கணக்கில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் வாங்கினான்’ (உ.வ.);

     [சுருக்கு + வழி]

சுருக்குவார்

சுருக்குவார் curukkuvār, பெ. (n.)

   விலங்குகளைப் பிடிப்பதற்குரிய கருவி வகை (நற். 82, உரை);; a long rope or leather strap provided with a noose used in capturing animals.

சுருக்குவிழு-தல்

சுருக்குவிழு-தல் curukkuviḻudal, பெ. (n.)

   1. கயிறு முதலியவற்றில் முடிச்சு விழுகை; becoming knotted as string.

   2. முதியவர், மடிப்பு விழுதல்; becoming wrinkled as old man’s body;becoming creased.

   3. ஏமாறுகை, மோசத்துக் குள்ளாகை (வின்.);; becoming ensnared or deceived.

மறுவ திரை

     [சுருக்கு + விழு + தல், ‘தல்’ தொ.பெ.ஈறு,]

சுருக்குவை-த்தல்

சுருக்குவை-த்தல் surukku-vai-,    4 செ.கு.வி. (v.i.)

.

   1. கண்ணி வைத்தல்; to seta Share.

     ‘நரிக்குறவன் சுருக்குவைத்தான்’ (உ.வ.);.

   2. செருக்கை ஒடுக்க வழிதேடுதல் (வின்.);; to take measures for humbling a person.

     [சுருக்கு + வை-,]

சுருக்கெனல்

சுருக்கெனல் curukkeṉal, பெ. (n.)

   1. எறும்பு, பூச்சி, தேள், தேனி போன்றவை கடித்தவுடன்/ கொட்டியவுடன் கடுமையான வலி ஏற்படுகை; cause a sharp pain.

கட்டெறும்பு கடித்த வலி அவனுக்குச் சுருக்கென்றது.

   2. கடுமையான சொல், செய்தி முதலியன மனத்தில் குத்துவது போன்ற நிலையை உணர்கை; feeling when one is insulted.

     ‘நீ கூட உன்பெற்றோரைப் பேணாமலிருக்கிறாயே என்று அவர் கேட்டதும் அவனுக்குச் சுருக்கென்றது’ (உ.வ.);.

     [சுருக்கு + எனல்]

சுருக்கெழுத்தர்

 சுருக்கெழுத்தர் curukkeḻuttar, பெ. (n.)

   சுருக்கெழுத்தில் குறித்துக்கொண்டு பின் முழுமையாகத் தட்டச்சு செய்து தரும் பணியாளர்; stenographer.

ம. சுருக்கெழுத்துகாரன்

     [சுருக்கு + எழுத்தர்]

சுருக்கெழுத்து

 சுருக்கெழுத்து curukkeḻuttu, பெ. (n.)

   குறியீடுகளைப் பயன்படுத்தி வேகமாகப் பேச்சை எழுத்தில் பதிவு செய்யும் முறை; short-hand.

தாளிகைச் செய்தியாளர்களுக்குச் சுருக்கெழுத்து தெரிந்திருந்தால் பெரிதும் உதவியாயிருக்கும்.

ம. சுருக்கெழுத்து

     [சுருக்கு + எழுத்து]

சுருக்கேற்று

சுருக்கேற்று1 suru-k-kru-,    5 செ.கு.வி (v.i.)

   1. மேலும் மேலும் சுருக்குக் கொடுத்துக் கொண்டே போதல்; increasing the imparting of juice of drugs to substances to increase their

 potency (சா.அக.);.

   2. சுருக்குக்கொடு1-த்தல் பார்க்க;see Surukku-k-kogu1-

     “பூரத்துக்குச் சுருக்கேற்றுவது போலவே” (பைஷஜ.127);.

     [சுருக்கு + ஏற்று-,]

 சுருக்கேற்று2 suru-k-kru.5 செ.குன்றாவி (v.t.)

   தூண்டிவிடுதல்; to incite egg on.

     [சுருக்கு + ஏற்று-,]

சுருக்கை

சுருக்கை curukkai, பெ. (n.)

சுருக்கு5 பார்க்க;see Surukku5.

     [சுருக்கு → சுருக்கை]

சுருக்கொடு

சுருக்கொடு2 Surukku-k-kodu, செ.கு.வி.(v.i.)

   1. அடிகொடுத்தல்; to administer cuts, as punishment.

     ‘ஆசிரியர் அவனுக்குச் சுருக்குக் கொடுத்தார்’ (உ.வ.);.

   2. கண்டிப்புக் காட்டுதல்; to rebuke.

     [சுருக்கு + கொடு-,]

சுருங்ககம்

 சுருங்ககம் curuṅgagam, பெ. (n.)

   ஒருவகை நச்சுக்கிழங்கு; an unknown drug said to resemble aconite (சா.அக.);

சுருங்கச்சொல்லணி

சுருங்கச்சொல்லணி curuṅgaccollaṇi, பெ. (n.)

   அணியிலக்கண வகை சுருக்கமாகச் சொல்வதனால் ஏற்படும் நயந்தரும் அணி; a figure of speech (அணியி.23);.

     [சுருங்கு → சுருங்க + சொல் + அணி]

சுருங்கச்சொல்லல்

சுருங்கச்சொல்லல் curuṅgaccollal, பெ. (n.)

   நூலழகு பத்தனுள் விரிவின்றிச் சுருக்கமாகக் கூறுகை (நன்.13);; brevity, terseness of expression one of ten literary – beauty (nul-alagu);.

     [சுருங்கு → சுருங்க + சொல்லல்]

சுருங்கண்

 சுருங்கண் curuṅgaṇ, பெ. (n.)

   புண்ணாகி நாளுக்கு நாள் கண்சுருங்கும் ஒருவகைக் கண்ணோய்; an eye disease (சா.அக.);.

     [சுருங்கு + கண் – கருங்குகண் → சுருங்கண்]

சுருங்கம்

 சுருங்கம் curuṅgam, பெ. (n.)

   பீச்சுங்குழல்; an instrument expelling the fluid contained in it with some force, syringe (சா.அக.);.

     [சுள் → சுர் → சுரு → சுருங்கு = உட்டுனையுடையது. சுருங்கு + அம்]

சுருங்கல்

சுருங்கல்1 curuṅgal, பெ. (n.)

   1. குறைகை; to reducing.

   2. பட்டினியாயிருக்கை; starving.

   3. திரைவு அதாவது தோல் சுருங்குகை; formation of wrinkles on the body due to old age.

   4. ஒடுங்குகை; shrinking.

   5. சுருங்கினது; anything shurnk, wrinkled.

   6. மடிப்பு; wrinkle, crcase.

சரீரத்தில் சுருங்கல் விழுந்தது.

     [சுருங்கு + அல். ‘அல்’ தொ.பொ.ஈறு]

 சுருங்கல்2 curuṅgal, பெ. (n.)

சுருங்கை, 2 பார்க்க;see Surungai, 2 (வின்.);.

     [சுருங்கு → சுருங்கள்]

 சுருங்கல்3 curuṅgal, பெ. (n.)

   சுருக்கு பூமாலை வகை; a kind of garland.

     [சுருங்கு → சுருங்கல்]

சுருங்கில்

சுருங்கில் curuṅgil, பெ. (n.)

   சிறுவிடு; small house.

     “ஐந்து பூதங்கூடுஞ் சுருங்கிலை” (தாயு. சச்சிதா.2);.

மறுவ. குடிசை, குடி, சிற்றில்

     [சுருங்கு + இல்]

சுருங்கு-தல்

சுருங்கு-தல் surunigu-,    5 செ.கு.வி. (v.i.)

   1. ஒடுங்குதல்; to shrink;

 to wrinkle.

     “வாளரப் பார்த்திறை பைத்துச் சுருங்க” (திருவாச.6:42);

   2. சிறுகுதல்; to lessen, dwindle.

     “சுருங்கு மருங்குல்” (திருக்கோ.115);.

   3. சுருக்கமாதல்; to be epitomised, summarised.

   4. ஆடை முதலியன சுருக்கங்கொள்ளுதல்; to be puckered, creased.

   5. உள்ளடங்குதல்; to close, as flower, umbrella;

 to be furled, drawn in, as the limbs of tortoise.

   6. ஒழுக்கம் முதலியவற்றினின்று தவறுதல்; to fail, as in duty.

     “சொல்லின பரிசிற் சுருங்கலன்” (பதினொ. திருக்கண்ணப்ப. திருமறம். வரி, 52);.

   ம. சுருங்குக;   க. சுர்கு;   தெ. சுருண்கு;   து. சுருண்டினி, சுருட்டனி;   கோத. சுர்க்;   துட. தூட்;   கொலா. சுக்;   பர். சுர்க்;பட. சுருங்கு

     [சுள் → சுர் → சுரு → சுருங்கு-,]

சுருங்குகண்

சுருங்குகண் curuṅgugaṇ, பெ. (n.)

   1. சுருங்கண் பார்க்க;see surungan,

   2. முதுமையில் ஏற்படும் கண் சுருக்கம்; shrunken eye due to old age.

     [சுருங்கு + கண்]

சுருங்குசதை

 சுருங்குசதை suruṅgusadai, பெ. (n.)

   உடம்புத் துளையை அடைப்பதற்கு ஏதுவான சுற்றிலுமுள்ள சதைகள்; the circular muscles which contract and close the natural apertures orifices- sphincter muscle- constrictor muscle (சா. அக.);.

     [சுருங்கு + சதை]

சுருங்குதசை

 சுருங்குதசை suruṅgudasai, பெ. (n.)

சுருங்கு சதை பார்க்க;see Surungu-Sadai.

     [சுருங்கு + தசை]

சுருங்கை

சுருங்கை curuṅgai, பெ. (n.)

   1. நீர் முதலியன செல்லுதற்கு நிலத்துள் கற்களால் கரந்து படுத்தவழி; subterranean passage, underground channel, covered gutter, sewer.

     “பெருங்குள மருங்கிற் சுருங்கைச் சிறுவழி” (மணிமே. 12,79);.

   2. கோட்டையிற் கள்ளவழி (சூடா);; Secret passage in a fortress.

   3. நுழைவாயில் (பிங்.);; creep-hole, low entrance to creep through.

   4. மாளிகையின் சாளரம்; window-like opening in walls of big buildings.

     “மாடமேற் சுருங்கையிலிருந்து மாநகரணி பார்த்திடும்” (சீகாளத்.பு.நக்கீர. 30);.

     [சுருங்கு → சுருங்கை]

சுருசி

 சுருசி surusi, பெ. (n.)

   நாவல் மரம்; jambu tree.

சுருசுரு-த்தல்

சுருசுரு-த்தல் surusuru-,    4 செ.கு.வி. (v.i.)

   1. ஒலித்தல் (தொல். சொல். 48. சேனா);; to hiss, as dry combustibles when ignited.

   2. ஊக்கமாதல்; to be active.

து. சுருசுரு.

சுருசுருப்பு

சுருசுருப்பு surusuruppu, பெ. (n.)

   1. ஊக்கம் (கொ.வ.);; diligence;

 activity.

   2. தளராத விறுவிறுப்பு; brisk activity.

     [சுருசுரு → சுருசுருப்பு]

சுருட்காய்

 சுருட்காய் curuṭkāy, பெ. (n.)

சுண்டைக்காய் பார்க்க;see Sungai-k-kay.

     [சுருள் + காய்]

சுருட்கொண்டை

 சுருட்கொண்டை curuṭkoṇṭai, பெ. (n.)

   மயிர் முடிவகை; hair dressed in a particular way.

     [சுருள் + கொண்டை]

சுருட்கொள்ளு-தல்

சுருட்கொள்ளு-தல் urlt-kal,    16 செ.கு.வி (v.i.)

   சுருண்டு விழுதல்; to faint from weakness;

 to wilt, as vegetation.

     “சோலையும் வெஞ்சுருட் கொண்டது வெப்பால்” (திருவாலவா. 37:41);.

     [சுருள் + கொள்-,]

சுருட்டல்

 சுருட்டல் curuṭṭal, பெ. (n.)

சுருட்டிக்கொள்ளல் பார்க்க;see surutti-k-kollal.

ம. சுருட்டல்

     [சுருட்டு + அல். ‘அல்’ தொ.பெ.ஈறு]

சுருட்டி

சுருட்டி curuṭṭi, பெ. (n.)

   1. மயிர்ச்சிகைப்பூடு (மலை.);; peacock’s crest plant;

 sickle leaf.

   2. எடுபிடி வகை; an item of royal paraphernahia borne in procession.

     “சந்திரோதயம் போற் றயங்குஞ் சுருட்டி வர” (கூளப்ப. 69.);.

   3. மரியாதையாகப் பெரியோர் திருமுன் சுருட்டி வீசப்படும் பாவாடை (இ.வ.);; cloth waved before great persons to serve as fan.

   4. பட்டுச் சீலைச்சுருட்டு (சங்.அக);; roll of silk.

   5. ஒருவகைப் பண்; a kind of tune.

ம. சுருட்டி

     [சுருட்டு → சுருட்டி]

சுருட்டிக்காரன்

சுருட்டிக்காரன் curuṭṭikkāraṉ, பெ. (n.)

   அரசர் முதலியோரது உலாவில் சுருட்டி விருது எடுப்பவன் (T.A.S. 1.150);; one who carries surutti in processions.

     [சுருட்டி + காரன்]

சுருட்டிக்கொள்(ளு)-தல்

சுருட்டிக்கொள்(ளு)-தல் surui-k-kol(lu)-,    6 செ.குன்றாவி (v.t.)

   தந்திரமாய்க் கைப்பற்றுதல் (வின்.);; to carry off, remove by stratagem.

     [சுருட்டி + கொள்(ளு);-,]

சுருட்டிக்கொள்ளல்

சுருட்டிக்கொள்ளல் curuṭṭikkoḷḷal, பெ. (n.)

   1. சுருண்டு கொள்ளுகை; winding into round folds coiling reptiles do.

   2. களைப்படைகை; to be fatigued;lying tired (சா.அக.);.

     [சுருட்டி + கொள்ளல்]

சுருட்டிப்பிடி

சுருட்டிப்பிடி2 surutti-p-pidi,    4 செ.கு.வி. (v.i.)

   வலியுண்டாகும்படி பசியால் குடல் சுருட்டப்படுதல்; to experience wringing sensation, as stomach with excessive hunger.

     [சுருட்டி + பிடி-,]

சுருட்டிப்பிடி-த்தல்

சுருட்டிப்பிடி-த்தல் surulti-p-pidi,    4 செ.குன்றாவி. (v.t.)

   1. வயிற்றில் சுருட்டி வலித்தல்; twisting and gripping pain as in the bowls.

     ‘வயிறு சுருட்டிப் பிடிக்கிறது’ (உ.வ.);.

   2. நோய் முதலியன உடலை மெலிவித்தல்; to prostrate, reduce to extreme physical weakness, as disease,

     ‘நோய் இவனைச் சுருட்டிப் பிடித்து விட்டது’ (உ.வ.);

     [சுருட்டி + பிடி-,]

சுருட்டிமடக்கு-தல்

சுருட்டிமடக்கு-தல் surutti-madakku-,    5 செ.குன்றாவி, (v.t.)

   1. சுருட்டிக்கொள்-தல் பார்க்க;see Surutti-k-kol-.

   2. சொற்போர் மற்போர் முதலியவற்றில் பிறரைக் கீழ்ப்படுத்துதல்; to overthrow as in debate, wrestling, etc.

     [சுருட்டி + மடக்கு-,]

சுருட்டிமூலி

 சுருட்டிமூலி curuṭṭimūli, பெ. (n.)

   பொன் முசுட்டை; Indian pareira gravel plant.

     [சுருட்டி + மூலி]

சுருட்டியடி-த்தல்

சுருட்டியடி-த்தல் surui-y-ali,    4 செ.குன்றாவி. (v.t.)

   1. சுழற்றித்தள்ளுதல்; to rush on violently, as whirlwind;

 to rage, as epidemic.

   2. சுருட்டி மடக்கு, 2 பார்க்க;see Surussi-magakku, 2.

     [சுருள் → சுருட்டு → சுருட்டி + அடி-,]

சுருட்டியிழுத்தல்

 சுருட்டியிழுத்தல் curuṭṭiyiḻuttal, பெ. (n.)

   நரம்பிழுப்பு நோய்; twitching of the nerve.

     [சுருட்டு → சுருட்டி + இழு-,]

சுருட்டிவாங்கு

சுருட்டிவாங்கு1 suruli-vangu-,    5 செ.கு.வி. (v.i.)

   1. மூச்சு இழுப்போடு வெளிவருதல்; to be convulsive;

 spasmodic, as breathing.

     ‘அவனுக்கு மூச்சு சுருட்டி வாங்குகிறது’ (உ.வ.);.

     [சுருட்டி + வாங்கு-,]

 சுருட்டிவாங்கு2 surutti-vangu.5 செ.குன்றாவி (v.t.)

   1. வருத்துதல் (வின்.);; to oppress, to tyrannise over.

   2. சுருட்டிப்பிடி (இ.வ.); பார்க்க;see Surulti-p-pidi-.

     [சுருட்டி + வாங்கு-,]

சுருட்டு

சுருட்டு1 suruttu-,    5 செ.குன்றாவி (v.t.)

   1. சுருளச்செய்தல்; to roll up, coil, curl.

     “பைந்நாகப் பாய்சுருட்டிக்கொள்” (குருபரம். 19, ஆறா.);.

   2. கவர்தல், திருடுதல்; to take away, steal.

     ‘என் பொருட்களைச் சுருட்டப் பார்க்கிறான்’.

   ம. சுருட்டு;   க. சுருடு, சுருண்டு;தெ. தொரல்க

     [சுருள் → சுருட்டு]

 சுருட்டு2 curuṭṭu, பெ. (n.)

   1. சுருட்டுகை; curling, coiling.

   2. சுருள்; anything rolled up.

   3. புகையிலைச் சுருட்டு; cheroot, cigarette.

   4. சுருட்டுப் பட்டு (இ.வ.); பார்க்க;see suruttu-p-pattu.

   5. தந்திரம் (யாழ்); சூழ்ச்சி; shrewdness, cunning.

   ம. சுருட்டு;தெ. சுட்டலு

     [சுருள் → சுருட்டு]

சுருட்டுக்கிடங்கு

 சுருட்டுக்கிடங்கு curuḍḍukkiḍaṅgu, பெ. (n.)

   புகைச்சுருட்டு செய்யும் தொழிற்சாலை. (உ.வ.);; cigar factory.

     [சுருட்டு + கிடங்கு]

சுருட்டுக்குடி-த்தல்

சுருட்டுக்குடி-த்தல் Suruttu-k-kudi-,    4 செ.கு.வி. (v.i.)

   சுருட்டுப்புகையை உட்கொண்டு வெளியிடல் (உ.வ.);; to smoke cigar, cigarette, etc.

     [சுருட்டு + குடி-,]

சுருட்டுக்கொழுக்கட்டை

 சுருட்டுக்கொழுக்கட்டை curuṭṭukkoḻukkaṭṭai, பெ. (n.)

   ஒருவகைக் கொழுக்கட்டைப் பணியாரம் (யாழ்.);; a kind of pastry.

     [சுருட்டு + கொழுக்கட்டை]

சுருட்டுத் தட்டி

 சுருட்டுத் தட்டி curuṭṭuttaṭṭi, பெ.(n.)

   மெல்லிய தப்பையால் பின்னப்படும் தட்டி; bamboo splint-side screen.

     [சுருட்டு+தட்டி].

சுருட்டுப்பட்டு

 சுருட்டுப்பட்டு curuṭṭuppaṭṭu, பெ. (n.)

   உயர்ந்த வகைப்பட்டு (உ.வ.);; a kind of superior silk.

     [சுருட்டு + பட்டு]

சுருட்டுப்பாசி

 சுருட்டுப்பாசி curuṭṭuppāci, பெ. (n.)

   கடற்பாசி; sea moss.

     [சுருட்டு + பாசி]

சுருட்டுவாதம்

 சுருட்டுவாதம் curuṭṭuvātam, பெ. (n.)

   கை கால்களை முடக்கும் ஒருவகை முடக்குநோய்; a chronic inflammation of the joints of arms and legs with deformity.

     [சுருட்டு + வாதம்]

 Skt. vata → த. வாதம்

சுருட்டுவாள்

 சுருட்டுவாள் curuṭṭuvāḷ, பெ. (n.)

   சுருளும் வாள் வகை (சங்.அக.);; a kind of sword with rollable blade.

     [சுருட்டு + வாள்]

சுருட்டை

சுருட்டை curuṭṭai, பெ. (n.)

   1. சுருண்டமுடி; curly hair.

   2. சுருட்டை மயிருள்ள பிள்ளை; curly haired boy or girl.

   3. மிளகாய்ச்செடிக்கு வரும் இலை சுருண்டு கொள்ளும் நோய்; a disease attacking the chilly plant, mainly in leaves.

ம. சுருட்ட

     [சுள் → (சுரு); → சுருள் = சுருண்ட பொருள். சுருள் → சுருட்டு → சுருட்டை]

சுருட்டை மயிர்

 சுருட்டை மயிர் curuṭṭaimayir, பெ. (n.)

   சுருள்முடி; curly hair.

மறுவ அலைமுடி சுருட்டை முடி சுருட்டை

     [சுருட்டை + மயிர்]

சுருட்டைக் கொம்பு

 சுருட்டைக் கொம்பு curuṭṭaikkombu, பெ.(n.)

   மாட்டின் கொம்புவகை; a horm shape of cow.

     [சுருட்டை+கொம்பு]

சுருட்டைக்கழலை

 சுருட்டைக்கழலை curuṭṭaikkaḻlai, பெ. (n.)

   சுருட்டிக் கொண்டிருப்பதைப் போலக் காணப்படும் ஒருவகைக் கழலை; skin tumour having the look of coil of intestine.

     [சுருட்டை + கழலை]

சுருட்டைத்தலை

 சுருட்டைத்தலை curuṭṭaittalai, பெ. (n.)

   சுருள்சுருளாகத் தலைமுடியுள்ள தலை; head having curly hair.

     [சுருட்டை + தலை]

சுருட்டைநரம்பு

 சுருட்டைநரம்பு curuṭṭainarambu, பெ. (n.)

   முடிச்சுகள் போலக் காணப்படும் கருநிற அரத்த நாளங்கள் தளர்ந்து சுருண்டு கிடக்கும் நோய் வகை; enlarged veins appearing like knots; varicore veins (சா.அக.);.

     [சுருட்டை + நரம்பு]

சுருட்டைப்பாம்பு

 சுருட்டைப்பாம்பு curuṭṭaippāmbu, பெ. (n.)

   ஒருவகை நச்சுப்பாம்பு (வின்);; a kind of venomous snake.

ம. சுருட்டப்பாம்பு

     [சுருட்டை + பாம்பு]

சுருட்டையட்டை

 சுருட்டையட்டை curuṭṭaiyaṭṭai, பெ. (n.)

   தொட்டால் சுருட்டிக்கொள்ளுவதும் அரத்தம் உறிஞ்சுவதுமாகிய ஒருவகை அட்டை; a leech which curls when touched.

     [சுருட்டை + அட்டை]

சுருட்டைவிரியன்

சுருட்டைவிரியன் curuṭṭaiviriyaṉ, பெ. (n.)

   விரியன் பாம்புவகை (M.M.);; carpet snake.

     [சுருட்டை + விரியன்]

இது சிறியதாயும் புகர் (கபில); நிறமாயும், ஒரத்தில் கருப்பாயுள்ள வெண்புள்ளிகளை உடையதாயுமிருக்கும். சீறிப்பாயும் குண முடையது. விரியன் பாம்புகளில் மிகவும் கொடிய நஞ்சுண்டு.

சுருட்டைப் பாம்பு வகைகள்

   1. இரத்தச்சுருட்டை

   2. அரணைவாற்சுருட்டை

   3. நெடுஞ்சுருட்டை

   4. செஞ்சுருட்டை

   5. குறுஞ்சுருட்டை

   6. ஊதுசுருட்டை

   7. விரல (அங்குல);ச்சுருட்டை

சுருட்பட்டை

 சுருட்பட்டை curuṭpaṭṭai, பெ. (n.)

   பப்பிளி (L.);; red creeper.

தெ. சுருகுதுப்பட்ட

     [சுருள் + பட்டை]

சுருட்பள்ளம்

 சுருட்பள்ளம் curuṭpaḷḷam, பெ. (n.)

   காதின் மேல் வளைவின் பள்ளம்; the margin of the pinna of the ear, helix.

     [சுருள் + பள்ளம்]

சுருணி

சுருணி curuṇi, பெ. (n.)

   1. தொழுகண்ணி; unidentified plant.

   2. யானைத்தோட்டி (சங்.அக.);; elephant goad (செ.அக.);.

சுருணை

சுருணை curuṇai, பெ. (n.)

   1. சுருட்டி வைத்த பொருள்; anything rolled up.

     ‘இலைச் சுருணை’ (நெல்லை.);.

   2. கணக்கு எழுதப்பட்ட ஒலைச் சுருள் (திவ். பெரியாழ். 5, 2, 2, வியா);; roll of ola accounts.

   3. சாணிச் கருணை; rags for mopping the floor, especially with cow-dung mixture.

   4. தீப்பற்றுதற்குரிய பந்தம்; ball of cloth twisted in torch for lighting.

     “நெருப்பானது சுருணையை வேவப்பண்ணி” (ஈடு. 5, 4, 6);.

   5. பூண்; ferrule, metallic cap.

     “கனையிருஞ் சுருணைக் கனிகாழ் நெடுவேல்” (அகநா.113);.

   6. கட்டட வளைவு வகை (வின்.);; a kind of curve in architecture.

     [சுருள் → சுருள் → சுருணை]

சுருணைகட்டு-தல்

சுருணைகட்டு-தல் suruai-kattu-,    5 செ.குன்றாவி, (v.t.)

   நெல்விதையைக் கோட்டையாகக் கட்டி வைத்தல் (இ.வ.);; to store in straw bundles, as paddy seeds.

     [சுருணை + கட்டு-,]

சுருணைவெள்ளை

 சுருணைவெள்ளை curuṇaiveḷḷai, பெ. (n.)

   புன்செய்யில் பயிராகும் நெல்வகை; a kind of paddy raised on dry land.

     [சுருணை + வெள்ளை]

சுருண்டுபோ-தல்

சுருண்டுபோ-தல் surundu-po,    8 செ.கு.வி (v.i.)

   1. சோர்வடைதல்; to get exhausted.

   2. வலிமை குன்றல்; to become weak.

   3. ஒடுங்குதல்; a state of extreme prostration and depression.

தோல்வி, இந்திய அணியின் பந்து வீச்சுத் தாளாமல் இலங்கை அணி சுருண்டு போனது.

   4. வாடியொடுங்குதல்; to droop, as under scorching sun;

 to be weakened, as by disease.

   5. இறத்தல்; to die.

     [சுருள் → சுருண் → சுருண்டு + போ-,]

சுருண்டுவிழல் surungu-Vilal, தொ.பெ.(vbl.);

   மெலிவினால் மயங்கி விழுகை; drooping down from fatigue.

     [சுருண்டு + விழல். ‘அல்’ தொ.பெ.ஈறு]

சுருண்டைக்காய்

 சுருண்டைக்காய் curuṇṭaikkāy, பெ. (n.)

சுண்டைக்கய் பார்க்க;see Sungai-k-kay.

     [சுருண்டை + காய்]

சுருபவேர்

 சுருபவேர் curubavēr, பெ. (n.)

   அந்திமல்லிகை; a flower which blossoms in the evening twilight (சா.அக.);.

மறுவ. அந்தி மந்தாரை, அந்திப்பூ

சுருமா

 சுருமா curumā, பெ. (n.)

   ஈயத்தைப்போல் சாம்பல்நிறமாய் இருக்கும் கருநிமிளை; native sulphide of antimony (சா.அக.);.

மறுவ. சுக்கான்கல், சுருமாக்கல்

 Persn. Surma

சுருமாரம்

 சுருமாரம் curumāram, பெ. (n.)

   சாரணை; purslane-leaved trianthema (சா.அக.);.

சுருமாலாடு

சுருமாலாடு curumālāṭu, பெ. (n.)

   ஒருவகைப் பணியாரம் (இந்து பாக. 379);; a confection ball.

மறுவ. சுருமாலட்டு

சுரும்பர்

சுரும்பர் curumbar, பெ. (n.)

   1. வண்டு, சுரும்பு (சூடா);; bee.

   2. ஆண்டு வண்டு; male bee, drone.

     [சுரும்பு → சுரும்பர்]

சுரும்பாநோய்

 சுரும்பாநோய் curumbānōy, பெ. (n.)

   மூளைக்கோளாறினால் அடிக்கடி முறுக்குக் கொட்டாவி விடும் நோய்; the act of stretching and yawning frequently by the disorder in the cerebral system (சா.அக.);.

     [சுரும்பா + நோய்]

சுரும்பாயன்

 சுரும்பாயன் curumbāyaṉ, பெ. (n.)

கரும்பாவன் (சங்.அக.); பார்க்க;see surumbavan.

சுரும்பாவன்

 சுரும்பாவன் curumbāvaṉ, பெ. (n.)

   வண்டாகிய வின்னாணை உடைய காமன் (யாழ்.அக);; Kama, the Hindu Cupid, as having bees for his bow-sting

மறுவ, மதன், மாறன்

     [சுரும்பு → சுரும்பாவன்]

சுரும்பி-த்தல்

சுரும்பி-த்தல் surumbi-,    4 செ.கு.வி. (v.i.)

ஒலித்தல், to hum, as bees.

     “சுரும்பித்த வண்டினங்கள்” (தேவா.969,4);.

     [சுரு → சுரும்பி-,]

சுரும்பு

சுரும்பு1 curumbu, பெ. (n.)

   1. வண்டு; bee.

     “சுரும்பு மூசாச் சுடர்ப்பூங்காந்தள்” (திருமுரு. 43);.

   2. ஆண்டு வண்டு (திவா.);; male bee, drone.

   3. மலை (சூடா.);; mountain.

     “சுரும்பறை மணித்தோள்” (மணிமே. 20:107);.

     [சுரு → சுரும்பி → சுரும்பு]

 சுரும்பு2 curumbu, பெ. (n.)

   1. சுதும்பு பார்க்க;see Sudumbu.

   2. மலைவண்டு; mountain beetle (சா.அக.);.

     [சுதும்பு → சுரும்பு]

சுருளட்டை

 சுருளட்டை curuḷaṭṭai, பெ. (n.)

   சுருண்டு கொள்ளும் ஒருவகை அட்டைப்பூச்சி; a leech capable of coiling round.

     [சுருள் + அட்டை]

சுருளமுது

சுருளமுது curuḷamudu, பெ. (n.)

   வெற்றிலைப் பாக்கு; betel and areca-nut, a term of respectful offering.

     “சுருளமுது முதலானதும்” (கோயிலொ.62);.

     [சுருள் + அமுது]

 சுருளமுது curuḷamudu, பெ. (n.)

தாம்பூலம்,

 betel nut. (தெ.கோ.சா. 3:2);

     [சுருள்+அமுது]

சுருளல்

 சுருளல் curuḷal, பெ. (n.)

   மயிர் முதலியவற்றின் சுருள் (வின்.);; ringlet, coil.

     [சுருள் → சுருளல்]

சுருளவதக்கல்

 சுருளவதக்கல் curuḷavadakkal, பெ. (n.)

   பச்சிலையைச் சுருங்கும்படி வாட்டல்; roasting leaves for medicinal purposes till they are completely shrunk (சா.அக.);.

     [சுருள் → சுருள + வதக்கல்]

சுருளவாட்டு-தல்

சுருளவாட்டு-தல் surula-vattu-,    5 செ.குன்றாவி. (v.i.)

   1. வருந்தவேலை வாங்குதல்; to exacthard work from.

   2. சுருட்டிப்பிடி- பார்க்க;see Surutti-p-pid-.

     [சுருள் → சுருள + வாட்டு-,]

சுருளி

சுருளி curuḷi, பெ. (n.)

   1. தலைச்சுருளி; Indian birth wort.

   2. தொழுகண்ணி (சங்.அக.);; telegraph plant.

   3. சந்தவேம்பு; sandal neem.

   4. சாவக நாட்டுப் பூமரம்; Java flower tree (சா.அக.);.

     [சுருள் → கருளி]

சுருளிமாமுனி

 சுருளிமாமுனி curuḷimāmuṉi, பெ. (n.)

   செடிவகை, குறிஞ்சிப்பூடு; wing stemmed cone head (சா.அக.);.

     [சுருளி + மாமுனி]

சுருளுப்பட்டை

 சுருளுப்பட்டை curuḷuppaṭṭai, பெ. (n.)

   செங்கத்தாரிப்பட்டை; bark of the false peacock’s foot tree.

மறுவ, வெம்பாடம்பட்டை, வேட்பாடம்

பட்டை சாயப்பட்டை

     [சுருள் → சுருளு + பட்டை]

சுருளுப்பூலா

 சுருளுப்பூலா curuḷuppūlā, பெ. (n.)

   நச்சுப் பூலா என்னும் மூலிகை; poisonous poolah (சா.அக.);.

     [சுருள் → சுருளு + பூலா]

சுருளெடு-த்தல்

சுருளெடு-த்தல் surul-edu-    4 செ.கு.வி. (v.i.)

   மணமக்கள் பரிசுப்பொருளை ஏற்றுக் கொள்ளுதல்; to accept presents given on one’s marriage occasion.

     [சுருள் + எடு-,]

சுருளை

சுருளை curuḷai, பெ. (n.)

   1. சுருள்; coil, roll.

   2. குருத்து; tender shoot.

     “வாழையுள்ளெழு சுருளை வாங்கி” (சூளா. சுயம். 87);.

   3. காதணி வகை; an car ornament.

     “செம்பொன் செய் சுருளை மின்ன” (சூளா. சுயம். 79);.

க. சுருளை

     [சுருள் → சுருளை]

சுருள்

சுருள்1 surul-,    16 செ.கு.வி. (v.i.)

   1. சுருளாதல்; to become coiled;

 to roll;

 to curl, as hair.

     “நீண்டு குழன்று . . . கடைசுருண்டு” (கம்பரா. உருக்காட்டு. 57);.

   2. சுருங்குதல்; to shrivel, shrink, as leaf.

   3. சோர்தல்; to droop, as from heat, hunger.

   4. துன்பத்திற்குள்ளாதல்; to be reduced to severe straits.

     [சுள் → (சுரு); → சுருள் (மு.தா.247);]

 சுருள்2 curuḷ, பெ. (n.)

   1. சுருட்டை; curl;

 coil.

   2. தாமரை உட்சுருள்; the inner fold of the young lotus flower.

     “தாமரை மென் சுருள்” (சூளா. நாட்டுப் 18);.

   3. சுருள்பட்டை பார்க்க;see suru-pattai.

   4. பெண்மயிர் ஐம்பான் முடிகளுள் ஒன்று;   கூந்தல், அளகம்; female hair curled and tied up.

     [சுள் → (சுரு); → சுருள்]

 சுருள்2 curuḷ, பெ. (n.)

   1. சுருளுகை; rolling.

   2. சுருண்ட பொருள்; roll, scroll, curl.

   3. கட்டு; bundle, as of leaves.

     ‘இலைச் சுருள்’ (உ.வ.);.

   4. ஓலைச்சுருளின் மடிப்பு; fold of an ola roll.

     “சுருள்பெறு மடியை நீக்கி” (பெரியபு. தடுத்தாட். 58);.

   5. மகளிர் காதணி வகை; women’s ear ornament.

     “செம்பொன் செய் சுருளுந் தெய்வக் குழைகளும்” (கம்பரா.பூக்கொய். 5);.

   6. வெற்றிலைச் சுருள்; roll of betel leaves.

     “சுருளைச் சேடியர் செப்பொடு மேந்த” (சீவக. 197, உரை);.

   7. திருமணத்தில் மணமக்களுக்கு வெற்றிலைத் தட்டுடன் கொடுக்கும் பரிசு (இ.வ.);; presents with betel given to bride and bride-groom.

   க. சுருளி;   ம. சுருள்;து. சுருள்

     [சுரு → சுருள்]

சுருள்கத்தி

 சுருள்கத்தி curuḷkatti, பெ. (n.)

   அகலம் குறைந்த நீண்ட இரும்புத் தகடுகள் பொருத்திய கைப்பிடியுள்ள போர்க்கருவி; whirling blade weapon.

சுருள்கத்தியைச் சுழற்றினால் அதில் பொருத்தப்பட்ட தகடுகள் பல கோணங்களில் சுழன்று எதிரிலிருப்ப வரைத் தாக்கும்.

     [சுருள்+கத்தி]

சுருள்கல்

 சுருள்கல் curuḷkal, பெ. (n.)

   ஒருவகைக் கல்; ring stone.

     [சுருள் + கல்]

சுருள்தங்கம்

 சுருள்தங்கம் curuḷtaṅgam, பெ. (n.)

   இழைப்பிற் குதவும் மெல்லிய தங்கத் தகடு (உ.வ.);; gold leaves.

     [சுருள் + தங்கம்]

சுருள்தேவதாரு

 சுருள்தேவதாரு curuḷtēvatāru, பெ. (n.)

   சீமைச் செம்மரம்; long-leaved pine.

     [சுருள் + தேவதாரு]

சுருள்நாரி

 சுருள்நாரி curuḷnāri, பெ. (n.)

   மலையில் வளர்வதும், காயகற்பத்திற்கேற்றதுமான மயிர் மரம் என்னும் பெருமூலிகைகள் இருபத்து மூன்றில் ஒன்று; an unknown tree said to be rarely found on mountain tops, as one of the twenty three all healing drugs of high potency, capable of rejuvenating the system (சா.அக.);

     [சுருள் + நாரி]

சுருள்பட்டை

 சுருள்பட்டை curuḷpaṭṭai, பெ. (n.)

   சாயப் பட்டை; dye root of red creeper bark or felse, peacock’s foot tree (சா.அக.);.

மறுவ. வேட்பாடம் பட்டை, செங்கத்தாரிப்

பட்டைக்கொடி

     [சுருள் + பட்டை]

சுருட்டுப்பட்டை பார்க்க

சுருள்பட்டைக்கொடி

 சுருள்பட்டைக்கொடி curuḷpaḍḍaikkoḍi, பெ. (n.)

சுருள்பட்டை பார்க்க;see surul-pattal (சா.அக.);.

     [சுருள் + பட்டை + கொடி]

சுருள்பலகாரம்

 சுருள்பலகாரம் curuḷpalakāram, பெ. (n.)

   சீப்புப்பணியாரம்; a kind of pastry.

     [சுருள் + பலகாரம்]

சுருள்பாக்கு

 சுருள்பாக்கு curuḷpākku, பெ. (n.)

   கொட்டைப் பாக்கிலிருந்து எந்திரத்தால் சீவப்பட்ட சுருள் வடிவச் சீவல்; curled shavings of areea-nut

     [சுருள் + பாக்கு]

சுருள்பீலி

 சுருள்பீலி curuḷpīli, பெ. (n.)

   மகளிர் தம் காலின் மூன்றாம் விரலில் அணியும் ஆழி; ring worn by women on the third toe.

மறுவ. மிஞ்சி

     [சுருள் + பீ.வி]

சுருள்பூச்சி

 சுருள்பூச்சி curuḷpūcci, பெ. (n.)

   நிலக்கடலைச் செடியை அரித்துக் கெடுக்கும் இலைப் பூச்சி வகை; insect which blights groundnut plant.

     [சுருள் + பூச்சி]

சுருள்வீச்சு

 சுருள்வீச்சு curuḷvīccu, பெ.(n.)

விரத்தை வெளிப்படுத்தும் நாட்டுப்புறக்கலை

 almartial play.

     [சுருள்+வீச்சு]

சுருள்வை-த்தல்

சுருள்வை-த்தல் suru-vai,    4 செ.குவி (v.i.)

   மணமக்களுக்கு வெற்றிலைப் பாக்குடன் பரிசுப் பொருள் அளித்தல் (இ.வ);; to offer presents with betel to bride and bridegroom.

     [சுருள் + வை-,]

சுருவம்

சுருவம்1 curuvam, பெ. (n.)

   1. வேள்விகளில் பயன்படுத்தும் நெய்த் துடுப்பு; a ladle used to pour clarified butter in sacrificial fire.

     “சீரைச் சுருக்குச் சுருவமெலாம்” (உத்தரரா. அனுமப். 41);.

   2. ஒருவகை அகப்பை (அக.நி.);; a kind of ladle.

 சுருவம்2 curuvam, பெ. (n.)

   வடிம்; image.

     “நரசிங்கமெனுஞ் சுருவத்தொடு” (பிரபோத. 19:16);.

     [உருவம் → சுருவம்]

சுருவவாசனி

 சுருவவாசனி curuvavācaṉi, பெ. (n.)

கற்றாழை aloes (சா.அக);.

சுருவை

சுருவை curuvai, பெ. (n.)

சுருவம், 1 பார்க்க;see suruvam,1.

     “அந்தணாளர்க்குச் சுருவையும் சமிதை குறைக்குங் கருவியு முதலாயின.” (தொல். பொருள். 629, உரை);.

     [சுருவம் → சுருவை]

சுரே

 சுரே curē, பெ. (n.)

   கொத்தான்; green thread creeper.

   மறுவ. முடக்கொற்றான்;முடக்கறுத்தான்

சுரை

சுரை1 curai, பெ. (n.)

   1. சுரக்கை; streaming, flowing, as of milk.

     “கடுஞ்சுரை நல்லான்” (குறுந்.132);.

   2. பெற்றம் முதலியவற்றின் மடி; udder, teat of cow and other animals.

     “வருடை மான்மறி கரைபொழி தீம்பால்” (குறுந்.187);.

   3. கறவை ஆன் (திவா.);; milch cow,

     “சுரைமலி யமிர் தீம்பால் (சூளா. தூது. 90);.

   4. ஒருவகைக் கொடி; calabash, climber.

     “சுரைவித்துப் போலுந்தம் பல்” (நாலடி, 315);.

   ம. சுர;க. சொரெ

     [சுர → சுரை]

 சுரை2 curai, பெ. (n.)

   1. கள் (திவா.);; toddy.

     “புரையுற்றிடு கரையூன் றுய்யுற்றவள்” (கந்தபு. / அசமுகிப். 7);.

   2. தேன்; honey.

     “வாவிக் கமலச் சுரைதேக்கி” (கம்பரந்.72);.

     [சுர → சுரை]

 சுரை2 curai, பெ. (n.)

   1. குழிந்த இடம்; hollowness, hollow interior of a vessel.

     “பாத்திரத் தகன்கரைப் பெய்த வாருயிர் மருந்து” (மணிமே. 11:117);.

   2. உட்டுளை (பிங்.);; tubularity, cavity.

   3. மூங்கிற்குழாய்; bamboo tube.

     “அகன்சூ லஞ்சுரைப் பெய்த வல்சியர்” (அகநா. 113);.

   4. திரிக்குழாய்; a kind of oil-can.

     “சொரிசுரைக வருநெய்” (பதிற்றுப்.47);.

   5. திருகாணியைச் செலுத்தும் சிறுகுழாய்; female screw.

   6. மூட்டுவாய்; joint.

     “சுரையம்பு மூழ்க” (கலித். 6);

   7. அம்புத்தலை. (அக.நி.);; head of an arrow.

   8. பூண்; terrule.

     “செறிசுரை வெள்வேல்” (அகநா. 216);.

   9. கூரான கடப்பாரை வகை; a kind of sharp crow – bar,

     “உளிவாய்ச் சுரையின் மிளிர மிண்டி” (பெரும்.பாண்.92);.

     [சுர → சுரை]

 சுரை4 curai, பெ. (n.)

சுரைக்கொடி பார்க்க;see Surai-k-kodi (சா.அக.);.

சுரைவகைகள்:

   1. கற்கரை

   6. காட்டுச்சுரை

   2. பேய்ச்சுரை

   7. கும்பச்சுரை

   3. காய்ச்சுரை

   8. கருஞ்சுரை

   4. கறிச்சுரை

   9. கின்னரச்சுரை

   5. காட்டுக்காய்ச்சுரை

   10. பாத்திரச்சுரை.

சுரைக்கந்தகம்

 சுரைக்கந்தகம் curaiggandagam, பெ. (n.)

   ஒரு வைப்புச்சரக்கு, நாற்றமில்லாத கந்தகம், நெருப்பிற்கு இளகி ஓடாத தன்மையுடையது; brim stone in round pieces or sticks, prepared sulphur, which is odourless and not melting or affected by fire (சா.அக.);.

     [சுரை + கந்தகம்]

சுரைக்கந்தி

சுரைக்கந்தி curaikkandi, பெ. (n.)

   1. சுரைக் கந்தகம் பார்க்க;see Surai-k-kandagam.

   2. வாணகந்தி; sulphur used in fire works.

   3. மச்சமுனி 800இல் கூறியபடியான துருக, நாகம், இரசம், வீரம், இலிங்கம், மனோசிலை, அரிதாரம், சத்திசாரம் ஆகியவற்றினாலாகிய மருந்துப் பொடி; it is a kind of prepared sulphur copper sulphate, zinc, mercury, corosire sublimate, cinnabar, red orpiment, yellow orpiment and sathi sarnam powdered and burnt, as told by Matcha muni 800. The resultant is surai-k-kehdi (சா.அக.);.

     [சுரை + கந்தி]

சுரைக்கரந்தை

 சுரைக்கரந்தை curaikkarandai, பெ. (n.)

   கரந்தைவகை (வின்.);; fever basil.

மறுவ. சுரக்கரந்தை

     [சுரை + கரத்தை]

சுரைக்கருவி

 சுரைக்கருவி curaikkaruvi, பெ. (n.)

   நெஞ்சாங்குலை; the heart.

     [சுரை + கருவி]

சுரைக்காய்

 சுரைக்காய் curaikkāy, பெ. (n.)

   வயிற்று வலியை ஆற்றுவதும், நுண்ணுயிரிகளை அழிப்பதும், உருண்டையான தடித்த அடிப் பகுதியையும் சிறுத்த மேற்பகுதியையும் உடைய வெளிர்பச்சை நிறக்காய்; fruit of bottle gourd which reduces the stomach pain, kills germs.

     [சுரை + காய்]

சுரைக்காய்க்கந்தகம்

 சுரைக்காய்க்கந்தகம் curaiggāyggandagam, பெ. (n.)

சுரைக்கந்தகம் பார்க்க;see Surai-k-kandagam.

சுரைக்காய்முலை

 சுரைக்காய்முலை curaikkāymulai, பெ. (n.)

   தளர்ந்த்முலை; a loose breast (சா.அக.);.

     [சுரை + காய் + முலை]

சுரைக்குடம்

சுரைக்குடம் curaikkuḍam, பெ. (n.)

   சுரைக் காயால் அமைந்த குடம்; a pitcher-like vessel made of the shell of bottle-gourd.

     “சுரைக்குட மெடுத்து … தெளிபுன லுண்டும்” (கல்லா.12);.

     [சுரை + குடம்]

சுரைக்குடுக்கை

 சுரைக்குடுக்கை curaikkuḍukkai, பெ. (n.)

   சுரைக்காய் ஒட்டுக்குப்பி; bowl made of the shell of bottle-gourd.

     [சுரை + குடுக்கை]

சுரைக்குடுக்கைக்கின்னரம்

 சுரைக்குடுக்கைக்கின்னரம் curaikkuḍukkaikkiṉṉaram, பெ. (n.)

   சுரைக்குடுக்கையால் அமைந்த, வாச்சிய வகை (வின்.);; lute with calabash of bottle-gourd shell.

     [சுரை + குடுக்கை + கின்னரம்]

சுரைக்குழல்

 சுரைக்குழல் curaikkuḻl, பெ. (n.)

   சிறுநீர்க் குழல்; the coiled corticle portion of the urinary tube-spiral tubule (சா.அக.);.

     [சுரை + குழல்]

சுரைக்கெந்தி

 சுரைக்கெந்தி curaikkendi, பெ. (n.)

   வாணகெந்தி; sulphur used in fire works (சா.அக.);.

     [சுரை + கெந்தி]

சுரைக்கொடி

 சுரைக்கொடி curaikkoḍi, பெ. (n.)

   குடுவை வடிவத்தில் காய் தரும் ஒருவகைப் படரும் கொடி; bottle-gourd climber.

     [சுரை + கொடி]

சுரைச்செப்பு

 சுரைச்செப்பு curaicceppu, பெ. (n.)

சுரைக் குடுக்கை பார்க்க;see surai-k-kudukkai.

     [சுரை + செப்பு]

சுரைபவனி

 சுரைபவனி curaibavaṉi, பெ. (n.)

   கள்; toddy.

     [சுரை + பவனி]

சுரைப்பரணி

 சுரைப்பரணி curaipparaṇi, பெ. (n.)

   சுரையிலை; leaf of bottle gourd creeper (சா.அக.);.

     [சுரை + பரணி]

சுரைப்பழம்

சுரைப்பழம் curaippaḻm, பெ. (n.)

   1. பழுத்த சுரைக்காய்; riped fruit of bottle gourd.

   2. பயனற்றவன்; worthless person.

     ‘தம்பி சுரைப்பழம்’ (வின்.);.

     [சுரை + பழம்]

சுரையிலந்தை

 சுரையிலந்தை curaiyilandai, பெ. (n.)

   ஒருவகை யிலந்தைப் பழம்; gourd jujube (சா.அக.);.

     [சுரை + இலத்தை]

சுரையிலை

 சுரையிலை curaiyilai, பெ. (n.)

   கீரையாக உண்ணப்படுவதும், உடம்புவீக்கம், முக்குற்றம் போக்குவதும், மலத்தை இளக்குவதும் சிறுநீர்ப்பெருக்கியுமான சுரையின் இலை; bottle gourd leaf useful in cases of anemia, swelling due to dropsy derangement of the three humours in the system which is used as laxative and digestive (சா.அக.);.

     [சுரை + இலை]

சுரையிலைச்சுவரம்

சுரையிலைச்சுவரம் curaiyilaiccuvaram, பெ. (n.)

   1. சூரல் இனச் சிறுமர வகை; spleen tree.

   2. செம்மரம்; red tree (சா.அக);.

     [சுரையிலை + சுவரம்]

சுரைவிளக்கு

 சுரைவிளக்கு curaiviḷakku, பெ. (n.)

   மருந் தெரிக்கப் பயன்படும் விளக்கு; lampused for heating medicine (சா.அக.);.

     [சுரை + விளக்கு]

சுற

சுற cuṟa, பெ. (n.)

   சுறா; shark.

     “சுறவழங்கு மிரும்பெளவத்து” (பொருந. 203);.

     [சுற → சுறா]

சுறட்டன்

 சுறட்டன் cuṟaṭṭaṉ, பெ. (n.)

   தொந்தரைக்காரன் (யாழ்ப்.);; abstinate person, one who creates trouble.

     [சுறட்டு → சுறட்டன்]

சுறட்டு

சுறட்டு cuṟaṭṭu, பெ. (n.)

   1. இணக்கமின்மை; stubbornness, pertinacity, obstinacy.

   2. தொந்தரை; troublesomeness, quarrelsome ness.

   3. சிக்கு; difficulty, intricacy.

   4. தலையிடுகை; meddling, interference.

     [ஒருகா துறட்டு → சுறட்டு]

சுறட்டுக்கோல்

 சுறட்டுக்கோல் cuṟaṭṭukāl, பெ. (n.)

   துறட்டுக் கோல்; an iron crook.

     [சுறட்டு + கோல்]

சுறட்டுப்பிடி

சுறட்டுப்பிடி cuṟaḍḍuppiḍi, பெ. (n.)

   1. முரட்டுப் பிடி; holding tightly and roughly.

   2. முரட்டுத் தனம்; stubborness, obstinacy (சா.அக.);.

     [சுறடு + பிடி]

சுறட்டுவலி

சுறட்டுவலி cuṟaṭṭuvali, பெ. (n.)

   1. தொந்தரவான வலி; persistent pain giving much trouble.

   2. குறட்டைவலி; cram.

   3. குறண்டல்வலி; spasmodic pain.

   4. விடாப்பிடி; stubbornness (சா.அக.);.

     [சுறடு + வலி]

சுறட்டை

 சுறட்டை cuṟaṭṭai, பெ. (n.)

   பசையற வறண்டது; that which is dried up.

     “சுறட்டைத்தலை” (சங்.அக.);.

     [சுறண்டு → சுறட்டு → சுறட்டை]

சுறட்டைத்தலை

 சுறட்டைத்தலை cuṟaṭṭaittalai, பெ. (n.)

   தலைப்பொடுகு; dandruff (சா.அக);.

     [சுறட்டை + தலை]

சுறணகி

 சுறணகி cuṟaṇagi, பெ. (n.)

   காட்டுக்கரணை; wild suran (சா.அக.);.

சுறணம்

 சுறணம் cuṟaṇam, பெ. (n.)

   காறாக்கரணை; white yam (சா.அக.);.

சுறண்டி

 சுறண்டி cuṟaṇṭi, பெ. (n.)

   ஒருவகைக்கரண்டி; a kind of spoon for scraping;

 a scraper (சா.அக.);.

     [சுறண்டு → சுறண்டி]

சுறண்டு-தல்

சுறண்டு-தல் surandu-,    5 செ.குன்றாவி (v.t.)

   சுரண்டியெடுத்தல்; removing by scraping as in wound (சா.அக.);.

   ம. சுரண்டு;க. கெரண்டு

     [சுரண்டு → சுறண்டி]

சுறவம்

சுறவம் cuṟavam, பெ. (n.)

   1. சுறவு பார்க்க;see Suravu.

     “எயிற்றிறப் பாய்ந்தது சுறவம்” (திருவிளை. வலைவீசி, 37);.

   2. தமிழாண்டின் முதல் மாதம் (தை);; the first month of the Tamil year.

     [சுறவு → சுறவம்]

சுறவு

சுறவு cuṟavu, பெ. (n.)

   1. சுறாமீன்; shark-fish.

   2. சுறாவினம்; fish of shark family.

     “சுறவினத் தன்ன வாளோர் மொய்ப்ப” (புறநா. 13:7);.

     [சுற → சுறவு]

சுறவுக்குழை

 சுறவுக்குழை cuṟavukkuḻai, பெ. (n.)

   சுறவுமீன் வடிவாகச் செய்த காதணி (இலக்.அக);; an car ornament shaped like fish.

     [சுறவு + குழை]

சுறவுக்கோடு

சுறவுக்கோடு cuṟavukāṭu, பெ. (n.)

   நெய்தல் நில மக்கள், தெய்வமாகவைத்து வணங்கும் சுறாமீன்கொம்பு (பட்டினப், 86, 87, உரை);; jawbone of the swordfish, worshipped by the people of the coastal regions.

     [சுறவு + கோடு]

சுறவுவாய்

சுறவுவாய் cuṟavuvāy, பெ. (n.)

   சுறவுவாய் என்னுந் தலைக்கோலம்; an ornament shaped like a shark’s mouth, worn by women on the head.

     “சுறவுவா யமைத்த” (பெரும்பாண். 385);.

     [சுறவு → வாய்]

சுறவை

சுறவை cuṟavai, பெ. (n.)

   1. சுரப்பு அல்லது வீக்கம்; swelling.

   2. உணர்ச்சி; sensitiveness.

   3. சுறுசுறுப்பு;, diligence.

   4. வேர்க்குரு; prickly heat (சா.அக.);.

மறுவ. கள்ளக்கம்

     [சுர → சுற → சுறவை]

சுறா

சுறா1 cuṟā, பெ. (n.)

   1. கடல்மீன்களில் பெருங்கேடு தரும் பேரின மீன்வகையான சுறாமீன்; shark fish.

   2. சுறவவோரை; capricorn of the zodiac.

   3. கோலாமீன்; flyingfish, sword fish.

   4. நாய்மீன்; dog fish.

   5. கொட்டை வாளை; two spotted shark-butter fish (சா.அக.);.

   ம. சுறா;   க. கொற;தெ. சொற

சுறா வகைகள்

   குரங்கன்சுறா;   2 வழுவன்சுறா;   3. செஞ்சுறா;   4. புள்ளிச் சுறா;   5. கொம்பன் சுறா;   6. வெள்ளைச் சுறா;   7, பால்சுறா;   8 மணிச் சுறா;   9. ஓங்கிற்கறா;   10 மட்டிச்சுறா:;   11. வெண்ணெய்ச்சுறா;   12. கோலாச்சுறா;   13. வெள்ளைக்கோலாச்சுறா;   14 காலன்சுறா;   15. நெளிஞ்சுறா;   16. ஆரணிச்சுறா;   17. பேய்ச் சுறா;   18. மேயுஞ்சுறா;   19 ஒரு கொம்பன்சுறா;   20. புடுக்கன்சுறா;   21. புலிச்சுறா;   22. பறங்கிச் சுறா;   23. பருவாய்ச்சுறா.

 சுறா2 cuṟā, பெ. (n.)

   1. உடம்பின் அழுக்கு; filth or dirt of the body.

     “கறாப் பிடித்திருக்கிறது”

   2. உடம்பிற் பூக்கும் உப்பு; a kind of eezema giving white saltish appearance to the skin.

     [சிராய் → சிரா → சுறா]

சுறாக்களிறு

 சுறாக்களிறு cuṟākkaḷiṟu, பெ. (n.)

   ஆண் சுறா; male-shark.

     [சுறா + களிறு]

சுறாக்கவடி

 சுறாக்கவடி cuṟākkavaḍi, பெ. (n.)

   சிறுவர் விளையாட்டு வகை (யாழ்.அக);; a kind of boy’s game.

     [சுறா + சுவடி]

சுறாக்கொம்பு

 சுறாக்கொம்பு cuṟākkombu, பெ. (n.)

சுறவுக் கோடு பார்க்க;see suravu-k-kogdu.

     [சுறா + கொம்பு)

சுறாச்சிறை

 சுறாச்சிறை cuṟācciṟai, பெ. (n.)

   சுறாமீன் இறகு; shark fins.

     [சுறா + சிறை]

சுறாத்துருமம்

 சுறாத்துருமம் cuṟātturumam, பெ. (n.)

   தேவதாரு; deodar tree (சா.அக.);.

     [சுறா + துருமம்]

சுறாத்தைலைக்கல்

 சுறாத்தைலைக்கல் cuṟāttailaikkal, பெ. (n.)

   மந்திரக் கலைக்குப் பயன்படும் சுறாமீன் தலையிலிருந்து எடுக்கப்படும் கல்; a stone from the shark’s head, used in magic (சா.அக.);.

     [சுறா + தலை + கல்]

சுறாநெய்

 சுறாநெய் cuṟāney, பெ. (n.)

   வழவழப்பும் வெகுட்டலும் உடையதாகவும், ஊதைநோய், இருமல் போன்றவற்றை நீக்கி, உடம்பிற்கு வலுவைக் கொடுப்பதுமான ஒருவகை நெய்; shark oil used as a substitute for codliver oil (சா.அக);.

மறுவ. திருவிதாங்கோட்டுநெய், மங்காரநெய்

     [சுறா + நெய்]

சுறாப்பாரை

சுறாப்பாரை cuṟāppārai, பெ. (n.)

   1. ஒருவகைக் கடல்மீன் (யாழ்ப்.);; a sea fish, shark pauray.

   2. குமரப்பரை என்னும் கடல் மீன்; a kind of sea fish (சா.அக.);.

     [சுறா + பாரை]

சுறாமீனெய்

 சுறாமீனெய் cuṟāmīṉey, பெ. (n.)

சுறாநெய் பார்க்க;see Sura-ncy (சா.அக.);.

     [சுறா + மீன் + நெய்]

சுறாமீன்செப்பட்டை

 சுறாமீன்செப்பட்டை cuṟāmīṉceppaṭṭai, பெ. (n.)

சுறாமீன்சிறகு

 shark’s fin (சா.அக.);

     [சுறா + மீன் + செப்பட்டை]

சுறாமுள்

 சுறாமுள் cuṟāmuḷ, பெ. (n.)

   சுறாமீன் எலும்பு; shark bones (சா.அக.);.

     [சுறா + முள்]

சுறாளம்

சுறாளம் cuṟāḷam, பெ. (n.)

   1. சினம்; anger.

   2. வேகம்; swiftness, as of horse.

     [சுறு + ஆலாம்]

சுறாவிழுந்துார்

 சுறாவிழுந்துார் cuṟāviḻunr, பெ.(n.)

சிதம்பரம் வட்டத்திலுள்ள சிற்றுார்,

 a Village in chidambaram Taluk.

     [ஒருகா சிறை(ஏரி);+ விழுந்த ஊர்]

சுறாவேறு

 சுறாவேறு cuṟāvēṟu, பெ. (n.)

சுறாக்களிறு பார்க்க;see Sura-k-kalir (சா.அக.);.

     [சுறா + ஏறு]

சுறிமுகத்தந்தம்

 சுறிமுகத்தந்தம் cuṟimugattandam, பெ. (n.)

   யானைக்கொம்பு; elephant’s tusk (சா.அக.);.

     [சுறி + முகம் + தந்தம்]

சுறீரெனக்கடி-த்தல்

சுறீரெனக்கடி-த்தல் surir-ena-k-kadi-,    4 செ.கு.வி. (v.i.)

   1. கொட்டுதல்; to sting as a scorpion, or ant or honey bee etc.

   2. கடுமையான வலியுண்டாகும்படிக் கடித்தல்; to bitting vehamently so as to cause acute pain.

   3. கடுத்தல்; to sting pain.

     [சுறீர் + என + கடி-,]

சுறீரெனல்

சுறீரெனல் cuṟīreṉal, பெ. (n.)

   1. கடுத்தற்குறிப்பு; stinging, smarting excessively.

     ‘எறும்பு சுறீரென்று கடித்தது’ (உ.வ.);.

   2. ஒர் ஒலிக்குறிப்பு; hissing, as water when in contact with fire.

   3. அச்சக்குளிப்பு; being struck with fear or horror.

க. சறீரென

     [சுறீர் + எனல்]

சுறீரெனவலி-த்தல்

சுறீரெனவலி-த்தல் surir-enavali,    4 செ.கு.வி. (v.i.)

   கடுத்துவலித்தல்; to shoot as quick darting pain (சா.அக.);.

     [சுறீர் + என + வலி-,]

சுறு

சுறு cuṟu, பெ. (n.)

   மயிர் முதலியன, தீயிற் பொகங்குதலால் உண்டாகும் நாற்றம்; stench, as of burning hair

     “கூந்தலின் சுறு நாறுகின்றது” (கம்பரா. இராவணன். மந்திர. 13);.

     [சுள் + சுறு]

சுறுக்கன்

சுறுக்கன் cuṟukkaṉ, பெ. (n.)

   1. சுறுசுறுப் புள்ளவன்; active, diligent person.

   2. சினமுடையவன்; hasty, irritable person.

     [சுருக்கு → சுறுக்கன்]

சுறுக்கு

சுறுக்கு cuṟukku, பெ. (n.)

   1. விரைவு; quickness, rapidity.

   2. சுறுசுறுப்பு; diligence, briskness.

   3. பரபரப்பு; haste, hastiness.

   4. கடுமை; irritableness, severity.

   5. கூர்மை; sharpness, keenness.

   6. காரம்; pungency, poignancy.

   7. விலையேற்றம்; high-price.

     ‘புதுநெல் இப்போது சுறுக்காயிருக்கிறது’ (உ.வ.);.

   8. சந்தை விலை; demand, as in market.

     ‘சம்பாவுக்கு இப்போது சுறுக்குண்டு’ (உ.வ.);.

   ம. சுறுக்கு;   க. சுறுகு;   தெ. சுருக்கு;   து. சுருக்கு;   கோத. சுர்கு;குட. சுரிகி

     [சுள் → சுறு → சுறுக்கு]

சுறுக்குக்காட்டு-தல்

 சுறுக்குக்காட்டு-தல் surukku-k-kattu-, செ.கு.வி. (v.i.)

   அடிகொடுத்து அச்சங்காட்டுதல்; to give warning cut, as to a school boy.

     [சுறுக்கு + காட்டு-,]

சுறுக்குத்தாக்கு-தல்

சுறுக்குத்தாக்கு-தல் Surukku-t-takku-,    5 செ.கு.வி (v.i.)

சுறுக்குக்காட்டு-, பார்க்க;see Surukku-k-kattu-.

     [சுறுக்கு + தாக்கு]

சுறுக்கெனல்

சுறுக்கெனல் cuṟukkeṉal, பெ. (n.)

   1. விரைவுக் குறிப்பு; onom. expr. signifying, quickness.

   2. கடுத்தற்குறிப்பு; onom. expr. signifying stinging, smarting.

     “பாந்தள்சீறிச் சுறுக்கெனவே கடிக்க” (சிவரக. அபுத்திபூ. 13);.

   3. திடீரென்று குத்துதற்குளிப்பு; onom. Expr. signifying sudden prick.

க. சுருக்கெனெ

     [சுறுக்கு + எனல்]

சுறுக்கொள்ளு)-தல்

சுறுக்கொள்ளு)-தல் suru-k-kol(lul)-,    16 செ.கு.வி. (v.i.)

   1. மயிர்க்கூச்செறிதல், மயிர்ச்சிலிர்த்தல்; stand on end as hair to get the goose-skin.

     “மீசை சுறுக்கொள” (பிரபோத. 25:34);.

   2. தீய்ந்து போதல்; to become chared or scorched.

     “மாலைவண்டொடுஞ் சுறுக்கொண்டேற” (கம்பரா. அட்ச.1);.

     [சுறு + கொள்(ளு);-,]

சுறுசுறு-த்தல்

சுறுசுறு-த்தல் suru-suru-,    4 செ.கு.வி. (v.i.)

   விரைவுபடுதல்; to be in a hurry;

 to be very active (செ.அக);.

     [சுறு + சுறு-,]

சுறுசுறுப்பு

சுறுசுறுப்பு suṟusuṟuppu, பெ. (n.)

   1. ஊக்கம்; diligence industry.

   2. மிகுவிரைவு (வின்.);; bustling, hurrying.

   ம. சுறுசுறுப்பு, சுறுகுறுக்கு;   க. சுருகுருக;தெ. காட்சுர

     [சுறுசுறு → சுறுசுறுப்பு]

சுறுசுறெனல்

சுறுசுறெனல் suṟusuṟeṉal, பெ. (n.)

   1. தீயில் தண்ணிர் பட்டாற் போன்ற ஒர் ஒலிக்குறிப்பு; onom. expr. signifying hissing, as water when in contact with fire.

   2. விரைவுக் குறிப்பு; quick rising, as of anger;rapid spreading as of fire, poison in the system.

   3. உட்செல்லுதற்குறிப்பு; penetrating, going down with ease, as in quicksand.

   4. கடுத்தற்குறிப்பு; stinging, asthorn.

க. சுறுசுரெனெ

     [சுறுசுறு + எனல்]

சுறுதி

 சுறுதி cuṟudi, பெ. (n.)

   மிகுவிரைவு; swiftness, quickness, alacrity.

     ‘சுறுதியா யோடு’ (வின்.);.

ம. சுறுதி

     [சுறு + தி → சுறுதி]

சுறுமாக்கல்

 சுறுமாக்கல் cuṟumākkal, பெ. (n.)

   அஞ்சனக் கல்; black antimony (சா.அக.);.

மறுவ. கருமாக்கல்

 U. surma

     [சுறுமா + கல்]

சுறை

 சுறை cuṟai, பெ. (n.)

   கொற்றான் (மலை);; parasitc leafless plant.

     [சுறு → சுறை]

சுறோணிதம்

 சுறோணிதம் cuṟōṇidam, பெ. (n.)

   நாகமல்லி (பச்.மூ.);; ringworm root.

சுறோணிதவழலை

 சுறோணிதவழலை cuṟōṇidavaḻlai, பெ. (n.)

   இந்துப்பு; rock salt (சா.அக.);.

     [சறோணிதம் + வழலை]

சுற்கம்

சுற்கம் cuṟkam, பெ. (n.)

   பெண்கொள்வோன் பெண்ணின் தந்தைக்குக் கொடுக்கும் பரிசம், (விவகார. சங். சிறப்.89);; marriage fee paid to the father of a maid by her suitor

   2. பெண்ணுக்குக் கொடுக்குஞ் சீர்வரிசை; dowry.

   3. வரி; tax, duty.

     “சுற்கத்தில் வரு செம்பொன்னும” (திருக்காளத். பு. 11, 23);.

சுற்பம்

சுற்பம் cuṟpam, பெ. (n.)

   செம்பு; copper

     “கற்பம் பூரிசந்திரம் பொருவ” (ஞானா.68:15);.

     [சுல் → சுல்லம் = செம்பு, சுல்லம் → கற்பம்]

சுற்றத்தார்

சுற்றத்தார் cuṟṟattār, பெ. (n.)

   1. உறவினர்; kinsmen, relations.

     “கணங்கொண்டு சுற்றத்தார் கல்லென் றலர” (நாலடி, 25);.

   2. அரசனோடு எப்போதும் உடனிருக்கும் அரசு அலுவலர்கள்; officials, attendants.

     “அரசர்க் குறுதிச் சுற்றத்தார்”. (சூடா.);.

ம. சுற்றத்தார்

     [சுற்றம் → சுற்றத்தார்]

சுற்றந்தழால்

சுற்றந்தழால் cuṟṟandaḻāl, பெ. (n.)

   கிளைஞரை அனைத்துக் கொள்ளுகை (குறள். அதி.53);; cherishing one’s kindred.

     [சுற்றம் + (தழுவு →); தழால்]

சுற்றம்

சுற்றம் cuṟṟam, பெ. (n.)

   1. சுற்றத்தார் பார்க்க;see Surrattar.

     “நகைப்புறனாக நின் சுற்றம்” (புறநா. 29:25);.

   2. அரசர்க்குறுதிச் சுற்றம்; confidential servants of kings.

   3. ஆயத்தார்; friends, attendants.

     “தொடிமாண் சுற்றமு மெம்மு முள்ளாள்” (அகநா. 17);.

   4. கூட்டம்; crowd, gathering.

     “”ஓவியச் சுற்றத் துரையவிந் திருப்ப” (சிலப். 22:11);.

   ம. சுற்றம்;தெ. த்ச்கட்டமு

     [சுற்று → சுற்றம்]

சுற்றறிக்கை

 சுற்றறிக்கை cuṟṟaṟikkai, பெ.(n.)

   அலுவலகம் போன்ற இடங்களில் செய்திகளைத் தொடர்புள்ளவர்களுக்குத் தெரிவிக்கக் கொடுக்கும் அறிக்கை; circular

     [கற்று+அறிக்கை]

 சுற்றறிக்கை cuṟṟaṟikkai, பெ. (n.)

   ஒர் அலுவலகத்தில் அல்லது அமைப்பில் செய்திகளைத் தொடர்புடைய அனைவருக்கும் தெரிவிக்க அனுப்பும் அறிக்கை; circular in an office or department etc.

சுற்றறிக்கை வந்த பின்பே அயல்நாட்டுச் செல்கை பற்றித் தெரிய வந்தது.

     [சுற்று + அறிக்கை]

சுற்றலடைவு

 சுற்றலடைவு cuṟṟalaḍaivu, பெ.(n.)

   கழன்றாடும் அடைவு வகைகள்; a fast twisting movement in dance.

     [சுற்றல்+அடைவு]

சுற்றளவு

 சுற்றளவு cuṟṟaḷavu, பெ. (n.)

   வட்டவளவு; circumference, perimeter, girth.

ம. சுற்றளவு

     [சுற்று + அளவு]

சுற்றாடை

சுற்றாடை cuṟṟāṭai, பெ. (n.)

   1. கட்டுத்துணி; a strip of cloth used in dressing bandage.

   2. மாதவிடாயின்போது பெண்கள் உள்ளாகச் சுற்றிக் கொள்ளும் பழஞ்சீலை; a strip of old cloth, used by females as an underwear during menustrual period.

   3. பிள்ளைப்பேறான பெண்டிர்க்கு ‘வயிறு விழாமலிருக்க’ வயிற்றைச் சுற்றி இறுகக்கட்டும் சீலை; a tight bandage used round the abdomen of a women immediately after delivery (சா.அக.);.

     [சுற்று + ஆடை]

சுற்றாலை

 சுற்றாலை cuṟṟālai, பெ. (n.)

   திருச்சுற்றாலை; temple enclosure.

க. சுட்டாலெ

     [சுற்று → ஆலை]

சுற்றிக்கட்டு

சுற்றிக்கட்டு1 surri-k-kattu-,    5 செ.கு.வி. (v.i.)

   1. எழுத்துச்சுழி வரைத; to write the curls of alphabetic letters.

   2. தீச்செயலுக்கான கலந்தாய்வு செய்தல், சூழ்ச்சிசெய்தல்; to form a conspiracy.

     [சுற்றி + கட்டு-,]

 சுற்றிக்கட்டு2 surri-k-kallu-,    5 செ.குன்றாவி (v.t.)

   1. நீரை வேறுவழியில் திருப்புதல்; to divert water into a new channel.

   2. பொய்யாகக் கற்பித்தல்; to fabricate.

   3. கையூட்டுக் கொடுத்தல்; to bribe.

     [சுற்றி + கட்டு-,]

சுற்றிச்சுழற்றி

சுற்றிச்சுழற்றி surri-c-cularri. வி.எ. (adv.)

   1. ஒரு மிக்க; altogether.

   2. நேரின்றி; indirectly, in a circumlocutory fashion (செ.அக.);.

     [சுற்றி + சுழற்றி]

சுற்றிச்சுழற்று-தல்

சுற்றிச்சுழற்று-தல் surri-c-cularru-,    5 செ.குன்றாவி (v.i.)

   விளக்கமின்றி வளர்த்துப் பேசுதல்; to be vague, indirect or circumlocutory, as in speech.

     [சுற்றி + சுழற்று-,]

சுற்றிச்சுழல்(லு)-தல்

சுற்றிச்சுழல்(லு)-தல் Surri-c-culal-,    7 செ.குன்றா.வி. (v.t.)

சுற்றுக்காலிடு- பார்க்க;see surru-k-kalidu-.

     “என்னைச் சுற்றிச் சுழன்று போகானால்” (திவ். நாய்ச்.13:5);.

     [சுற்றி + சுழல்-,]

சுற்றித்திரி-தல்

சுற்றித்திரி-தல் surri-t-tiri-,    2 செ.கு.வி, (v.i.)

   1. அங்குமிங்கும் சென்று வருதல்; roam, wander

     ‘மேய்ப்பாரின்றி ஆடுமாடுகள் அங்கு மிங்கும் சுற்றித் திரிந்தன’.

   2. ஒரு பற்றுக்கோட்டிற்காக அலைதல்; wandering for a purpose.

வேலைக்காக அவன் பலவிடங்களில் சுற்றித் திரிந்து இன்று ஒரு நல்ல வேலையில் அமர்ந்து விட்டான்.

     [சுற்று → சுற்றி + திரி-,]

சுற்றிப்பார்-த்தல்

சுற்றிப்பார்-த்தல் surri-p-par,    4 செ.கு.வி (v.i.)

   1. நேரில்சென்று பார்வையிடுதல்; to inspect.

     ‘தீப்பிடித்த குடிசைகளை அமைச்சர் சுற்றிப் பார்த்தார்’.

   2. பொழுதுபோக்காகச் சென்று பார்த்தல்; to visit, to go on a tour, sight see.

     ‘குற்றாலத்தைச் சுற்றிப்பார்க்க இன்றளவும் எனக்கு வாய்ப்புக் கிட்டவில்லை’.

     [சுற்று → சுற்றி + பார்-,]

சுற்றிப்பிடி

சுற்றிப்பிடி1 surri-p-pidi,    4 செ.கு.வி (v.i.)

   வயிறு மிகவும் நோதல்; to suffer from colic, to have acute, griping pain in the stomach.

     [சுற்றி + பிடி-,]

 சுற்றிப்பிடி2 suri-p-pidi,    9 செ.குன்றாவி (v.t.)

   பற்றிக் கொள்ளுதல்; to hold in one’s grip. (பாவம்);

கரிசு அவனைச் சுற்றிப்பிடிக்கும்.

     [சுற்ற + பிடி-,]

சுற்றிப்போடு-தல்

சுற்றிப்போடு-தல் surri-p-pdu.    9 செ.குன்றாவி (v.t.)

   1. மிளகாய், உப்பு, சந்திமண், கிழிந்த துணி இவற்றை நோயாளி தலைமேற் சுற்றிப் பின் நெருப்பிலிட்டுக் கண்ணேறுகழித்தல்; to avert the effects of evil eye by waving round the affected person by chillies, salt, earth from cross roads and rags and throwing.

   2. சுற்றியெடு-, பார்க்க;see Surri-y-edu.

     [சுற்றி + போடு-,]

சுற்றியெடு-த்தல்

 சுற்றியெடு-த்தல் surri-y-edu- செகுன்றா.வி. (v.t.)

   மணமக்கள் முதலியோரின் தலை முடியைச் சுற்றிப் பணியாரம் முதலியவற்றை எறிந்து கண்ணேறு கழித்தல்; to wave cakes and other things round a newly married couple for averting evil eye.

     [சுற்ற + எடு-,]

சுற்றியெறி-தல்

சுற்றியெறி-தல் suriy-eri-,    2 செ.குன்றாவி (v.t.)

சுற்றிப்போடு,1 பார்க்க;see surri-p-pddu, 1-

     [சுற்றி + எறி-,]

சுற்றிலும்

 சுற்றிலும் surrilum. வி.அ. (adv.)

   சுற்றுமுற்றும், எங்கும்; on all sides; around.

     ‘வீட்டைச் சுற்றிலும் தீப்பிடித்தபோது தெருக்காரர்கள் தீயை அனைத்தனர்’.

     [சுற்று → சுற்றிலும்)]

சுற்றிலை

 சுற்றிலை cuṟṟilai, பெ. (n.)

சுருட்டுப் புகையிலையைச் சுற்றும் இலை (வின்.);:

 wrapper or cover-leaf of cigar.

     [சுற்று + இலை]

சுற்றிவரு-தல்

சுற்றிவரு-தல் surri-varu-,    18 செ.கு.வி. (v.i.)

   1. உலா வருதல்; go round as a pleasure tour or as an excursion

     ‘உலகைச் சுற்றிவர எல்லாருக்கும் ஆசைதான்’.

   2. பணிவுடன் அல்லது பத்தியுடன் சுற்றுதல்; to go around due to obedience or prayers.

கோயிலையோ கடவுள் திருவுருவையோ மூன்று முறை சுற்றிவருவது உலக நடைமுறை.

   3. சுற்றிலும், சுற்றுமுற்றும்; on all side, around.

     [சுற்று → சுற்றிவரு-,]

சுற்றிவலி-த்தல்

சுற்றிவலி-த்தல் surri-wali,    4 செ.குன்றாவி (v.t.)

   வஞ்சனை முதலியவற்றால் வலிந்து கொள்ளுதல்; to extort by fraud or stratagem.

     [சுற்று + வலி-,]

சுற்றிவளை-த்தல்

சுற்றிவளை-த்தல் surri-valai,    4 செ.கு.வி (v.i.)

   1. நாலாப்பக்கமும் சூழ்ந்து கொள்ளுதல்; to encircle on all sides.

     “படைகள் எதிரியின் கோட்டையைச் சுற்றி வளைத்தன.

   2. செய்தியை நேரிடையாகக் கூறாது தேவையற்ற பிறவற்றையும் சேர்த்து விரிவாக்கிக்கூறுதல்; to beat about the bush.

     ‘தன் தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் சுற்றி வளைத்துப் பேசினான்’.

     [சுற்று → சுற்றி + வளை-,]

சுற்றிவாங்கு

சுற்றிவாங்கு cuṟṟivāṅgu, பெ. (n.)

   கூத்திற்குரிய கால்வகை (சிலப்பக். 90, உரை); (natya.);; a kind of leg pose.

     [சுற்றி + வாங்கு]

சுற்று

சுற்று1 surru-,    5 செ.கு.வி (v.i.)

   1. சுழன்று செல்லுதல்; to revolve, circulate, turn around, spin, whirl.

     ‘சக்கரம் சுற்றுகிறது’.

   2. சுற்றிப் போதல்; to take a circuitous orindirect course, meander, wind about.

     “அவன் நேர்வழியிற் போகாமற் சுற்றிப்போகின்றான்.”

   3. அலைதல்; to move here and there, roam, wander about.

     “அவன் கம்மா சுற்றுகிறான்”

   4. வளைந்தமைதல்; to be coiled, to lie encircling.

     “காலிற் சுற்றிய நாகமென்ன” (கம்பரா.நீர்விளை.11);.

   5. கிறு கிறுத்தல்; to be giddy, dizzy.

     “பித்தத்தினால் தலை சுற்றுகிறது”.

   6. மனங் கலங்குதல்; to be perplexed with difficulties.

   ம. சுற்றுக;   க. சுற்று;   தெ. சுட்டு;   து. சுத்துளி;   கோத. சுச்;   துட. தூத்;   குட. சுதித்;   கொலா. சுட்;   நா. சுட்டி;   பர். சுத்த;   கட. சுடட்;   குவி. சுத்தலி;பட சுத்து

     [சுல் → சுர் → சுற் → சுற்று]

 சுற்று2 surru-,    5 செ.குன்றாவி (v.i.)

   1. சுற்றி வருதல்; to go round, to circle.

     “போகா தெறும்பு புறஞ்சுற்றும்” (நாலடி, 337);.

   2. தழுவுதல்; to entwine, embrace.

     “கொடிகள் ஒன்றையொன்று சுற்றிக்கிடக்கின்றன”

   3. விடாதுபற்றுதல்; to follow unceasingly.

     “அவன் அவனைச் சுற்றிக் கொண்டே இருக்கிறான்”

   4. சூழ்ந்திருத்தல்; to encompass, surround.

     “தோகை மாதர்கள் மைந்தரிற் றோன்றினர் சுற்ற” (கம்பரா. பிணவீ. 45);.

   5. வளையச் சூடுதல்; to wear around.

     “குடர் நெடுமாலை சுற்றி” (திருவாச. 6:30);.

   6. உடுத்துதல் (திவா.);; to tie around the waist, invest, gird.

     “கூறையரைச் சுற்றி வாழினும்” (நாலடி, 281);.

   7. வளையக்கட்டுதல்; to coil up, as rope.

     “சுற்றுஞ் சடைக் கற்றைச் சிற்றம்பலவர்” (திருக்கோ.134);.

   8. சுருட்டுதல்; to roll up, as mat.

     “பாயைச் சுற்றுக”.

   9. சுழற்றுதல்; to wave, whirl, brandish.

     “சிலம்பஞ் சுற்றுகிறான்”.

   10. கம்பி கட்டுதல்; to string, fasten with fine wire, as coral beads, pearls.

     “பவழ மாலையைச் சுற்றிக் கொண்டு வா”.

   11. சுவர்தல்; to grasp, appropriate, steal.

     “அவனுடைய பொருளை யெல்லாம் சுற்றிக் கொண்டான்” (தெ.க.தொ.2, 194);.

   12. வஞ்சித்தல்; to circumvent, accomplish by trickery.

     [சுல் → சுர் → சுற் → சுற்று]

 சுற்று3 cuṟṟu, பெ. (n.)

   1. வட்டமாய்ச் செல்லுகை (சூடா.);; passing round in an orbit, moving around.

   2. அச்சின் மேற்சுழற்சி; whirling on an axis, revolving, spinning.

   3. சுருளுகை; rolling, coiling.

   4. சுற்றுவட்டம்; circumference, periphery, bounding space.

     “ஏழுமுழச் சுற்றுடைய பிரபை”.

   5. சுற்றளவு; circuit, compass, range, girth.

     “இதன சுற்று மூன்றரைக் கல்”.

   6. சுற்றுவழி; circuitous run, round about way zigzag route.

     “இந்தவழி சுற்று”.

   7. சுற்றிடம்; regions on the border;neighbourhood.

     “சுற்றுறு முனிவர்யாரும்” (கம்பரா. மிதிலை. 113);.

   8. கற்றப் பட்ட பொருள்; coil, roll,

   9. கால் விரலணி; toering.

     “சுடுபொன் வளைஇய வீரமை சுற்றொடு” (கலித். 85);.

   10. மதில் (பிங்.);; fortification, compound wall.

   11. கோயிலின் திருச்சுற்று; surrounding arcade of a temple.

     “அந்த வாலயச் சுற்றெலாந் தெற்றிகள்” (சிவரக. மேரு. 10);.

   12. சொற்பொருள்களின் சிக்கல்; complication in thought and expression.

     “இந்தப் பாட்டின் கருத்துச் சுற்றாயிருக்கிறது”

க. சுட்டு., ம. சுற்று

     [சுல் → கர் → கற் → சுற்று]

சுற்று வட்டாரம்

 சுற்று வட்டாரம் cuṟṟuvaṭṭāram, பெ. (n.)

சுற்றுவட்டகை பார்க்க;see Surru-Vattagai.

     [சுற்று +வட்டாரம்]

சுற்றுக் கோயில்

 சுற்றுக் கோயில் cuṟṟukāyil, பெ. (n.)

   பெருங்கோயிலின் சுற்றாலையில் உள்ள சிறு தெய்வக் கோயில்கள்; subordinate shrines connected with a main temples.

     [சுற்று + கோயில்]

சுற்றுக்கடிதம்

 சுற்றுக்கடிதம் cuṟṟukkaḍidam, பெ. (n.)

சுற்றுத் தரவு (இ.வ.); பார்க்க;see surru-t-taravu.

     [சுற்று + கடிதம்]

சுற்றுக்கடுக்கன்

 சுற்றுக்கடுக்கன் cuṟṟukkaḍukkaṉ, பெ. (n.)

   கடுக்கன் வகை; a kind of ear-ring.

     [சுற்று + கடுக்கண்]

சுற்றுக்கட்டு

சுற்றுக்கட்டு cuṟṟukkaṭṭu, பெ. (n.)

   1. வீட்டைச் சுற்றியுள்ள புறக்கட்டு (இ.வ.);; verandahs adjoining main house.

   2 சுற்றுப்புறம் பார்க்க;see surru-p-puram.

   3. உறவினர்களின் கூட்டம்; large circle of relations.

   4. கட்டுக்கதை; fabrication, fiction.

   5. கையூட்டு; bribery.

     [சுற்று + கட்டு]

சுற்றுக்கட்டை

 சுற்றுக்கட்டை cuṟṟukkaṭṭai, பெ. (n.)

   பணியாசிக் கட்டை (தஞ்சை.);; mason’s plastering plane.

     [சுற்று + கட்டை]

சுற்றுக்கண்

 சுற்றுக்கண் cuṟṟukkaṇ, பெ. (n.)

   சுழற்கண்; whirling eye (சா.அக.);.

சுற்றுக்கல்

 சுற்றுக்கல் cuṟṟukkal, பெ. (n.)

   கொப்பு முதலிய அணிகலன்களைச் சுற்றி வட்டமாக அமைக்கும் மணிகள்; precious stones set circularly on the fringe of koppu and similar ornaments.

சுற்றுக்கற் கொப்பு.

     [சுற்று + கல்]

சுற்றுக்காரியம்

 சுற்றுக்காரியம் cuṟṟukkāriyam, பெ. (n.)

சுற்றுவேலை பார்க்க;see sugu-velai (செ.அக);.

     [சுற்று + காரியம்]

சுற்றுக்காலிடு-தல்

சுற்றுக்காலிடு-தல் surru-k-kalidu-. செ.குன்றாவி (v.t.)

   1. விடாதுபற்றித் தொடர்தல்; to cling to one’s legs.

   2. விடாதுகெஞ்சுதல்; to importune.

     [சுற்றுக்கால் + இடு-,]

சுற்றுக்கால்

சுற்றுக்கால் cuṟṟukkāl, பெ. (n.)

   1. சுற்றுப்புறம் பார்க்க;see surru-p-puram,

     “சுற்றுக்காலில் கேட்டால் தெரியும்” (இ.வ.);.

   2. பக்கங்களிலிருந்து கசியும் நன்னிரையொதுக்கி விடுவதற்காக உப்பளத்தைச் சுற்றியெடுக்கப்படும் கால்வாய்; ring-channel round a salt pan for keeping off fresh water.

     [சுற்று + கால்]

சுற்றுக்குடல்

 சுற்றுக்குடல் cuṟṟukkuḍal, பெ. (n.)

   வயிற்றுக்குள் சுற்றிக் கொண்டிருக்கும் குடல்; the position of the intestine attached to the abdominal wall by the fold of peritonium (சா.அக.);.

     [சுற்று + குடல்]

சுற்றுக்குடுமி

 சுற்றுக்குடுமி cuṟṟukkuḍumi, பெ. (n.)

   குடுமியைச் சுற்றி வளர்க்கும் மயிர்; short hair growth round the tuft.

     [சுற்று + குடுமி]

சுற்றுக்குலைவு

 சுற்றுக்குலைவு cuṟṟukkulaivu, பெ. (n.)

   இமை மயிர் உதிர்ந்து, கண்ணில் நீர்வடிதல், வீக்கம், வலி இவற்றையுண்டாக்கும் ஒருவகைக் கண்ணோய்; a disease of the eyelids an ulcerous form of margiral blepharitis marked by chornic inflammable of hair fedlicles and sebaceous glands of the margin of the eyes.

     [சுற்று + குலைவு]

சுற்றுக்கொடி

 சுற்றுக்கொடி cuṟṟukkoḍi, பெ. (n.)

   நஞ்சுக் கொடி; naval card, umbilical cord (சா.அக.);.

     [சுற்று + கொடி]

சுற்றுக்கொழுப்பு

 சுற்றுக்கொழுப்பு cuṟṟukkoḻuppu, பெ. (n.)

   கொழுப்புக்குடல்; the lower part of the intestine or colon the outer part of which is covered with fat.

     [சுற்று + கொழுப்பு]

சுற்றுக்கோல்

 சுற்றுக்கோல் cuṟṟukāl, பெ.(n.)

   அள்ளுதறி யில் பாவைச் சுற்றி இழுத்துக் கட்டியிருக்கும் கோல்; a stick used in handloom.

     [சுற்று+கோல்]

சுற்றுக்கோள்

சுற்றுக்கோள் cuṟṟukāḷ, பெ. (n.)

   சுற்றிக் கொள்ளுகை; surrounding, enclosing.

     “நடுவூருள் வேதிகைச் சுற்றுக் கோட் புக்க” (நாலடி. 96);,

     [சுற்று + கோள்]

சுற்றுச்சுழற்சி

சுற்றுச்சுழற்சி cuṟṟuccuḻṟci, பெ. (n.)

   1. சுற்று வழி; meandering, zigzag route.

   2. செயலில் வரும் முட்டுப்பாடு; intricacy, as of an affair.

   3. குறித்த செய்தியை நேராகக் கூறாது வளர்த்துக் கூறுகை; circumlocutory expression; confused complicated treatment of a subject.

     [சுற்று + சுழற்சி]

சுற்றுச்சுழல்

 சுற்றுச்சுழல் cuṟṟuccuḻl, பெ. (n.)

சுற்றுச் சுழற்சி பார்க்க;see Surru-c-cularcci.

சுற்றுச்சுவர்

 சுற்றுச்சுவர் cuṟṟuccuvar, பெ. (n.)

   சுற்றுப்புற மதில்; compound wall.

     [சுற்று + சுவர்]

சுற்றுச்சூழல்

 சுற்றுச்சூழல் cuṟṟuccūḻl, பெ. (n.)

   உயிரினங்கள் வாழும் பகுதியில் உள்ள காற்று, நீர் போன்றவை அடங்கிய இயற்கைச் சூழ்நிலை; environment.

     ‘தொழிற்சாலைகள் பெருக்கத்தால் சுற்றுச்சூழல் கெட்டுவிட்டது’.

     [சுற்று + சூழல்]

சுற்றுஞ்சுழற்றுமாய்

 சுற்றுஞ்சுழற்றுமாய் surrun-Sularrumay. எ.வி. (adv.)

   நேரின்றி வளைந்து; in a zigzag or indirect manner.

     ‘வழி சுற்றுஞ்சுழற்றுமாயிருக்கிறது’ (கொ.வ.);.

     [சுற்றும் + சுழற்றும் + ஆய்]

சுற்றுடைமை

சுற்றுடைமை cuṟṟuḍaimai, பெ. (n.)

   வட்டவடிவு; roundness, plumpness

     “சுற்றுடைமைக்குஞ் செவ்வைக்கும் மூங்கில் போலே இருந்துள்ள தோள்” (ஈடு,2,5);.

     [சுற்று + உடைமை]

சுற்றுத்தரவு

 சுற்றுத்தரவு cuṟṟuttaravu, பெ. (n.)

   பலரும் ஒரே நேரத்திலறியும்படி அதிகாரிகள் பிறப்பிக்கும் ஆணை; circular order (C.G.);

     [சுற்று + தரவு]

சுற்றுத்தேவதை

சுற்றுத்தேவதை cuṟṟuddēvadai, பெ. (n.)

   1. திருக்கோயில்களின் திருச்சுற்றுகளிலுள்ள உடன்சுற்றத் தெய்வம்; group of subordinate deities surrounding the chief deitics of a temple.

   2. பெரியோரை அடுத்திருப்பவர் (கொ.வ.);; satellites of greatmen.

     [சுற்று + தேவதை]

சுற்றுப்பக்கம்

 சுற்றுப்பக்கம் cuṟṟuppakkam, பெ. (n.)

சுற்றுப்புறம் பார்க்க;see Surru-p-puram.

சுற்றுப்படாகை

 சுற்றுப்படாகை cuṟṟuppaṭākai, பெ. (n.)

சுற்று வட்டகை பார்க்க (நாஞ்);;see surruvattagai.

     [சுற்று + படாகை]

சுற்றுப்பட்டு

 சுற்றுப்பட்டு cuṟṟuppaṭṭu, பெ. (n.)

சுற்றுப்புறம் பார்க்க;see Surru-p-puram.

தெ. த்ச்சுட்டுப் பட்டு

     [சுற்று + பட்டு]

சுற்றுப்பயணம்

சுற்றுப்பயணம்1 cuṟṟuppayaṇam, பெ. (n.)

   1. அதிகார முறையில் அதிகாரிகள் பல வூர்களுக்கும் சென்று வருகை; circuit, tour, as of an officer.

     “சுற்றுப்பயணம் வந்து ஜகந்நிர்வாகம் பண்ணுகை” (ஈடு. 4,5,1);.

   2. சுற்று வழி பார்க்க;see surruvali

     [சுற்று + பயணம்]

 சுற்றுப்பயணம்2 cuṟṟuppayaṇam, பெ. (n.)

சுற்றுலா பார்க்க;see surrula.

சுற்றுப்பலி

சுற்றுப்பலி cuṟṟuppali, பெ. (n.)

   1. கோயிலைச் சுற்றித் திக்குத்தேவதைகளுக்கு இடும் படையல்; offerings to the regents of the eight cardinal points, made round a temple in the respective directions.

   2. கீழதிகாரிகளுக்குக் கொடுக்கும் கையூட்டு; bribe offered to persons in subordinate position.

     [சுற்று + பலி]

சுற்றுப்பாண்டி

 சுற்றுப்பாண்டி cuṟṟuppāṇṭi, பெ.(n.) –

பல்லாங்குழி ஆட்டவகையில் ஒன்று

 a type of pallāňkuli.

     [சுற்று+யாண்டி]

சுற்றுப்பாதை

சுற்றுப்பாதை cuṟṟuppātai, பெ. (n.)

   1. சுற்றுவழி;நேர்பாதையல்லாத வழி; way which is not short-cut.

   2. மாற்றுவழி; by-pass.

   3. விண்வெளியில் கோள் அல்லது செயற்கைக் கோள் சுற்றி வரும் நீள்வட்டப் பாதை; orbit.

     ‘இந்தியா பறக்கவிட்ட செயற்கைக்கோள் சுற்றுப் பாதையை விட்டு விலகிவிட்டது’.

     [சுற்று + பாதை]

சுற்றுப்பிரகாரம்

 சுற்றுப்பிரகாரம் cuṟṟuppirakāram, பெ. (n.)

   கோயிற்றிருச்சுற்று; surrounding arcade of temple.

     [சுற்று + பிரகாரம்]

சுற்றுப்புடை

சுற்றுப்புடை cuṟṟuppuḍai, பெ. (n.)

   1. பக்க வீக்கம்; swelling at the sides or in the surroundings.

   2. பக்கம் புடைத்தல்; protruding at the sides. (சா.அக.);.

     [சுற்று + புடை]

சுற்றுப்புடைகொள்ளு-தல்

சுற்றுப்புடைகொள்ளு-தல் surru-p-pupai-kol-. செ.கு.வி. (v.i.)

   பக்கம் புடைத்திருத்தல் (சிலப். 13, 162, அரும்.);; to be pretruding at the sides.

     [சுற்று + புடைகொள்ளு-,]

சுற்றுப்புறம்

சுற்றுப்புறம் cuṟṟuppuṟam, பெ. (n.)

   1. அயலிடம்; adjacent place, neighbourhood, vicinity

   2. குறிப்பிட்ட இடத்தை ஒட்டியுள்ள அல்லது சார்ந்த பகுதி; surroundings.

     ‘நம்முடைய சுற்றுப்புறத்தை நாம்தான் துய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்’.

     [சுற்று + புறம்]

சுற்றுப்பூசை

சுற்றுப்பூசை cuṟṟuppūcai, பெ. (n.)

   1. சுற்றுக் கோயில்களில் செய்யும் பூசை; worship in surru-k-koil.

   2. சுற்றுப்பலி பார்க்க;see surru-p-pali.

     [சுற்று + பூசை]

சுற்றுப்பேழை

சுற்றுப்பேழை cuṟṟuppēḻai, பெ. (n.)

   பேழைபோற் சுருண்டுகிடக்கும் பாம்பின் உடம்புமண்டலம்; coils of the lower part of snake’s body, as basket-shaped.

     “நாபிக்குக் கீழ் மூன்று சுற்றுப் பேழை செய்துகொடு ரீ பதஞ்சலி தேவர்”. (தெ.க.தொ.2,119);.

     [சுற்று + பேழை]

சுற்றுமணி

 சுற்றுமணி cuṟṟumaṇi, பெ. (n.)

   மகளிர் கழுத்திலணியும் அணிவகை; an ornament worn by women round the neck.

     [சுற்று + மணி]

சுற்றுமண்

சுற்றுமண் cuṟṟumaṇ, பெ. (n.)

   1. ஓலை முடங்கலில் இடும் முத்திரை மண்; clay cover of an olai-letter for impressing stamp.

     “சுற்றுமண் மூடுதோட்டின் முடங்கல்” (கம்பரா. பள்ளி.6);

   2. வார்ப்புக்கருவின் புறம்பூசிய மண்; outer coating of the clay-mould for receving molten metal, as in casting brass.

     [சுற்று + மண்]

சுற்றுமதில்

சுற்றுமதில் cuṟṟumadil, பெ. (n.)

   கோயில் முதலியவற்றைச் சூழ்ந்துள்ள மதில் (சிலப். 10, 31, அரும்.);; surrounding wall, as of temple.

     [சுற்று + மதில்]

சுற்றுமுடிச்சு

 சுற்றுமுடிச்சு cuṟṟumuḍiccu, பெ.(n.)

   முடிச்சு வகை; a kind a knot.

     [சுற்று+முடிச்சு]

சுற்றுமுற்றும்

சுற்றுமுற்றும் surru-murrum, கு.வி.எ. (adv.)

   நான்கு பக்கமும்; all around, on all sides.

     “சுற்றுமுற்றும் புதை நின்னை” (திருக்கோ.43);.

   தெ. சுட்டுமுட்டு;க., து. சுட்டுமட்ட

     [சுற்றும் + முற்றும்]

சுற்றும்

சுற்றும் surrum, கு.வி.ஏ. (adv.)

   சூழ; all around.

     “காலவான் கடுங்கனை சுற்றுங் கவ்வலால்” (கம்பரா. வருணனை.55);.

ம. சுற்றும்

     [சுற்று → சுற்றும்]

சுற்றும்பிற்றும்

 சுற்றும்பிற்றும் cuṟṟumbiṟṟum, கு.வி.எ. (adv.)

சுற்றுமுற்றும் பார்க்க;see surrumurum.

     [சுற்றும் + பிற்றும்]

சுற்றுலா

 சுற்றுலா cuṟṟulā, பெ. (n.)

   பொழுது போக்காகவோ, ஒய்வாகவோ, பிறவற்றிற்காகவோ மேற்கொள்ளும் சுற்றுச் செலவு; tour, excursion.

     ‘வழக்கம் போல இந்த ஆண்டும் பள்ளிமாணவர்கள் குற்றாலத்திற்குச் சுற்றுலா சென்றுள்ளனர்’.

     [சுற்று (ம்); + உலா]

சுற்றுலாத் தலம்

 சுற்றுலாத் தலம் cuṟṟulāttalam, பெ. (n.)

   சுற்றுலா மேற்கொள்ளுமிடம்; place of tourist importance.

     [சுற்றுலா + தலம்]

சுற்றுலாத்துறை

 சுற்றுலாத்துறை cuṟṟulāttuṟai, பெ. (n.)

   சுற்றுலா மேற்கொள்ளும் அயல் நாட்டவரையும், உள்நாட்டவரையும் ஆற்றுப்படுத்தும் ஒர் (அரசுத்); துறை; a department intended to increase the tourism from the people as well as foreigners.

     ‘இந்த ஆண்டு சுற்றுலாத்துறை மூலம் அரசிற்கு ஐநூறுகோடி உருபா வருமானம் கிட்டியுள்ளது’.

     [சுற்றுலா + துறை]

சுற்றுலாப்பயணிகள்

 சுற்றுலாப்பயணிகள் cuṟṟulāppayaṇigaḷ, பெ. (n.)

   சுற்றுலாச் செல்வோர்; tourists,

     ‘இந்தியாவிற்கு இந்த ஆண்டு ஐம்பது இலக்கம் சுற்றுலாப்பயணிகள் வந்துள்ளனர்’.

     [சுற்றுலா + பணிகள்]

சுற்றுலாமாளிகை

 சுற்றுலாமாளிகை cuṟṟulāmāḷigai, பெ. (n.)

   சுற்றுலாச் செல்வோர் தங்கும் விடுதி, விருந்தினர் விடுதி; tourist lodge or hotel, government’s guest house.

     [சுற்றுலா + மாளிகை]

சுற்றுலாவிடுதி

 சுற்றுலாவிடுதி cuṟṟulāviḍudi, பெ. (n.)

சுற்றுலாமாளிகை பார்க்க;see surrula-maligai.

     [சுற்றுலா + விடுதி]

சுற்றுவட்டகை

 சுற்றுவட்டகை cuṟṟuvaṭṭagai, பெ. (n.)

   சுற்றுப்புறச் சிற்றூர்கள்; surrounding country or villages.

     [சுற்று + வட்டகை]

சுற்றுவட்டம்

 சுற்றுவட்டம் cuṟṟuvaṭṭam, பெ. (n.)

சுற்றுவட்டகை பார்க்க;see Surru-vattagai.

     [சுற்று + வட்டம்]

சுற்றுவரவு

சுற்றுவரவு cuṟṟuvaravu, பெ. (n.)

 I. சூழ்ந்து வருகை;

 moving in a circle, passing around.

   2. வட்டமிட்டோடும் குதிரைச்சாரியை வகை; running of a horse in a circular course.

     “பதினெட்டு வகைப்பட்ட சுற்றுவரவினையும்” (பு.வெ.12, வென்றிப்.13.உரை);.

   3. விழாக் காலங்களில் வரும் மேல்வரும்படி; extra income, as at festival.

     [சுற்று + வரவு]

சுற்றுவளையம்

சுற்றுவளையம்1 cuṟṟuvaḷaiyam, பெ. (n.)

   1. உருட்டி விளையாடும் சக்கரம்; hoop trundled along by children.

   2. வட்டம்; round, circuit.

     “இந்தச் சாமான்கள் ஒரு சுற்று வளையத்திற்குக் கூடக் காணாது”.

   3. தெருவிற் சுற்றிக் கொண்டிருக்கை; wandering in the street.

     “ஊரைச் சுற்றுவளையம் போடுகிறான்”.

   4. கை கட்டிப் பணிபுரிதல்; dancing attendance, as at Court.

     [சுற்று + வளையம்]

 சுற்றுவளையம்2 cuṟṟuvaḷaiyam, பெ. (n.)

   கருப்பை நழுவாமல் இருக்கும்படி அல்குலிற் புகட்டும் வளையம்; a ring pessary placed in thc vagina to support the uterus (சா.அக.);.

     [சுற்று + வளையம்]

சுற்றுவழி

சுற்றுவழி cuṟṟuvaḻi, பெ. (n.)

   1. நேரற்ற பாதை; roundabout or circuitous way, indirect course.

   2. தந்திரச்செயல், கீழறுப்பு; secret, underhand method.

     [சுற்று + வழி]

சுற்றுவாடை

 சுற்றுவாடை cuṟṟuvāṭai, பெ. (n.)

   சுற்றுப்புறம்;   அண்டையயல் பகுதிகள; nearby places.

     ‘சாத்துார் சுற்றுவாடையில் தீப்பெட்டித் தொழிற்சாலைகளே உள்ளன’.

     [சுற்று + வாடை]

சுற்றுவாரி

சுற்றுவாரி cuṟṟuvāri, பெ. (n.)

   கவருக்கப்பால் நீண்டுள்ள கூரை; projecting roof of a house, eaves.

     [சுற்று + வாரி]

 சுற்றுவாரி cuṟṟuvāri, பெ. (n.)

கல்லூரி,

 college.

     ‘கல்வி கற்றுவாரி கல்லூரி ஆகும்” (நிகபி.4:223);

     [கற்று+வாரி]

சுற்றுவீதி

சுற்றுவீதி cuṟṟuvīti, பெ. (n.)

   1. கோயிலைச் சுற்றியுள்ள தெரு; streets surrounding a temple.

   2. வளைந்து செல்லும் தெரு; winding street.

     [சுற்று + வீதி]

சுற்றுவேலை

 சுற்றுவேலை cuṟṟuvēlai, பெ. (n.)

   உதவித் தொழில்; minor work, as of household.

     [சுற்று + வேலை]

சுற்றொத்தி

 சுற்றொத்தி cuṟṟotti, பெ. (n.)

சிற்றொத்தி பார்க்க;see Sirrotti.

சுற்றோட்டம்

சுற்றோட்டம் cuṟṟōṭṭam, பெ. (n.)

   1. வட்டமாகச் சுற்றிவரல்; movementina regular or circuitous course

   2. அரத்தம் நாடிநாள வழியாக உடம்பினுள் சுற்றி வரல்; the blood circulation in the body (சா.அக.);.

     [சுற்று + ஒட்டம்]

சுலவடை

 சுலவடை culavaḍai, பெ. (n.)

   சொலவடை;   பழமொழி; proverb.

     [சுலவம் + அடை]

சுலவம்

 சுலவம் culavam, பெ. (n.)

சொலவம் பார்க்க;see šolavam.

     [சொலவம் → சுலவம்]

சுலவு

சுலவு1 sulavu.5 செ.கு.வி. (v.i.)

   1. சுழலுதல்; move round to revolve, hover about.

     “சுலவுற் றெதிர் போகிய துரவியனம்” (நைடத.அன்னத்.45);.

 சுலவு2 sulavu.    5 செ.குன்றாவி (v.t)

   1. சுழலச் செய்தல் (யாழ்ப்.);; to coil round as a cord, to Surround.

     “அரவூறு சுலாய்மலை தேய்க்கும்” (திவ்.திருவாய்.7.4:2);.

     [சுல் → சுலவு-,]

சுலாவு

சுலாவு3 sulivu,    5 செ.குன்றாவி (n.)

சுலவு பார்க்க;see sulavu.

     “விரைகமழ் சோலை சுலாவி யெங்கும்” (தேவா. 418:1);.

     [சுலவு → சுலாவு-,]

 சுலாவு4 culāvu, பெ. (n.)

   காற்று; wind.

     “சுலாவாகி” (தேவா.1227,3);.

     [சுலவு → சுலாவு]

சுல்லம்

சுல்லம் cullam, பெ. (n.)

   செம்பு (மலை);; copper,

     “சுல்வதிதா லமைத்த நெடுங்களத்தின்” (சேதுபு.தனுக்கோ.9);.

     [சுல் → சுல்லு → சுல்லம்]

சுல்லி

சுல்லி culli, பெ. (n.)

   1. அடுப்பு (திவா.);; oven

     “சுல்லி யுரலுலக்கை” (சைவச.பொது.266);.

   2. மடைப்பள்ளி (இலக்.அக);; kitchen.

     [சுல் → கல்லி]

சுல்லு

 சுல்லு cullu, பெ. (n.)

   வெள்ளி (சூடா);; silver.

     [சுல் → சுல்லு]

சுல்வம்

சுல்வம் culvam, பெ. (n.)

கல்லம் பார்க்க;see sullam,

     “கல்வதீதா லமைத்த நெடுங்களத்தின்” (சேதுபு.தனுக்கோ.9);.

     [சுல் → சுல்லு → சுல்வம்]

சுளகம்

 சுளகம் cuḷagam, பெ. (n.)

   உள்ளங்கை (பிங்.);; hollow of the palm.

     [சுளகு + அம்]

சுளகு

சுளகு cuḷagu, பெ. (n.)

   1. முறவகை; a kind of winnowing fan for separating chaff from grain.

     “சுளகிற் சீறிட நீக்கி” (புறநா. 249);.

   2. சுளகைப் போன்ற பதினாராவது (விசாக); விண்மீன் (பிங்.);; the 16th naksatra, as resembling fan.

சுளகுகட்டு-தல்

சுளகுகட்டு-தல் sulagukattu-,    5 செ.கு.வி (v.i.)

   சுளகுமுடைதல்; to braid a winnowing fan.

     [சுளகு + கட்டு-,

சுளகுக்கொழுக்கட்டை

 சுளகுக்கொழுக்கட்டை cuḷaguggoḻuggaṭṭai, பெ. (n.)

   கொழுக்கட்டைப் பணியார வகை (யாழ்ப்);; a kind of pastry.

     [சுளகு + கொழுக்கட்டை]

சுளகுப்பின்னல்

சுளகுப்பின்னல் cuḷaguppiṉṉal, பெ. (n.)

   1. ஒலை முதலியவற்றிற் பின்னும் ஒருவகை முடையல்; a kind of braiding with coconut leaves, rattan, etc.

   2. ஒருவகைத் தலைப் பின்னல்; loose and wide plaiting of hair.

     [சுளகு + பின்னல்]

சுளி

சுளி1 suli,    2 செ.கு.வி (v.i.)

   சினத்தல்; to be angry.

     “கழை காண்டலுஞ் சுளியுங் களியானை” (திருக்கோ. 111);.

     [சுள் → சுளி-,]

 சுளி2 suli-,    4 செ.குன்றாவி (v.t)

   1. சினத்தல்; to be angry with.

     “சுளிமுகக் களிறனான்” (சீவக. 298);.

   2. காலால் துகைத்தல்; to treador trample upon in fury.

     “கொலை வேழம். . . . நிழலையுந் தான் சுளிக்கும்” (பு.வெ.12, வென்றிப். 8);.

   3. வெறுத்தல் (சைவச. மாணாக். 33);; to dislike, detest.

     [சுள் → சுளி-,]

 சுளி3 suli,    4 செ.கு.வி. (v.i.)

   வருந்துதல்; to feel pain.

சுளிக்கச் சொல்லேல்.

     [சுள் → சுளி-,]

 சுளி4 cuḷi, பெ. (n.)

   புளியாரைக்கீரை; sour sorrel (சா.அக);.

சுளிகா

 சுளிகா cuḷikā, பெ. (n.)

   வாகை; sirissa tree (சா.அக.);.

சுளிகாமேற்புல்லுருவி

 சுளிகாமேற்புல்லுருவி suliga-mer-pulluruvi,    வாகை மரத்துப் புல்லுருவி; a parasite on sirissa tree (சா.அக.).

     [சுளிகா + மேல் + புல் + உருவி]

சுளிகை

சுளிகை1 cuḷigai, பெ. (n.)

   1. முருங்கை; drum stick tree.

   2. பாலை; iron wood tree (சா.அக.);.

 சுளிகை2 cuḷigai, பெ. (n.)

   அணிவகை; a kind of ornament.

     “சுளிகையும் சுட்டிகையும்” (ஆதியுலா, 68);.

சுளிக்கு

 சுளிக்கு cuḷikku, பெ. (n.)

   முனை கூர்மையான ஒருவகைக் கைக்கோல் (வின்.);; pikestaff, sharp pointed stick carried by travellers.

க. சுளிக்கெ

சுளிசனம்

சுளிசனம் suḷisaṉam, பெ. (n.)

சுளிகை1 பார்க்க;see Suligai1 (சா.அக.);.

சுளியன்

 சுளியன் cuḷiyaṉ, பெ.(n.)

   சேட்டை செய்பவன் (நெ.வ.வ.சொ.);; trouble some person.

     [கள்-சுளி+அன்]

சுளிவு

சுளிவு1 cuḷivu, பெ. (n.)

   சினம்; anger,

     “மகிபதி சுளிவின்றி” (பாரத. பதினாறாம் போ.77);.

ம. சுளிவு

     [சுளி → சுளிவு]

 சுளிவு2 cuḷivu, பெ. (n.)

சுளுவு பார்க்க;see suluvu.

     [சுளி → சுளிவு]

சுளீரென்று

 சுளீரென்று sulir-enru, வி.அ. (adv.) (

   வலி, வெயில் முதலியவை உடலைத் தாக்கும் போது) கடுமையாக; சுரீரென்று; a term denoting the severity or acuteness of pain or hotsun-shine etc.

     ‘வெயில் சுளிரென்று முகத்தில் அடித்தது’.

     [சுளீர் + என்று]

சுளுகன்

சுளுகன் cuḷugaṉ, பெ. (n.)

   1. சதுரப்பாட்டுப் பேச்சாளன் (யாழ்.அக.);; clever ready-witted person.

ம. சுளுகன்

     [சுளுகு → சுளுகன்]

சுளுகு

சுளுகு1 cuḷugu, பெ. (n.)

   1. நுட்பவறிவு; keen intellect.

   2. சதுரப்பாட்டுப் பேச்சு; clever talk

   3. வலக்காரப்பேச்சு; enticing speech, cunning Speech.

     “சுளுகுகள் விவரமொ டுரையிடுவார்” (திருச்செந்பு. செயந்திபுர.55);.

 சுளுகு2 cuḷugu, பெ. (n.)

சுளுவு பார்க்க;see suluvu.

சுளுக்கு

சுளுக்கு1 sulukku-,    5 செ.கு.வி. (v.i.)

   நரம்பு பிசகிக் கொள்ளுதல்; to be sprained;

 to be deranged, dislocated.

ம. சுளுக்குக

     [சுளி → சுளுக்கு-,]

 சுளுக்கு2 sulukku-,    5 செ.குன்றாவி (v.i.)

   வெறுப்புக்குறியாக முகத்தைச் சுருக்குதல்; to screw one’s face in dissatisfaction, frown.

     [சுளி2 → சுளுக்கு-,]

 சுளுக்கு3 cuḷukku, பெ. (n.)

   நரம்புப்பிறழ்ச்சி (பதார்த்த.289);; sprain.

   ம., க., சுளுக்கு;   தெ. இளுக்கு;   து. உளுக்கு;பட. சிக்கு

சுளுக்குக்காய்ச்சல்

 சுளுக்குக்காய்ச்சல் cuḷukkukkāyccal, பெ. (n.)

   எலும்புமுறிவு அல்லது சுளுக்கினால் ஏற்படும் ஒருவகைக் காய்ச்சல்; fever following the sprain or fracture (சா.அக.);.

     [சுளுக்கு + காய்ச்சல்]

சுளுக்குச்சுரம்

 சுளுக்குச்சுரம் cuḷukkuccuram, பெ. (n.)

சுளுக்குக்காய்ச்சல் பார்க்க;see sulukku-k-kayccal (சா.அக.);.

சுளுக்குத்தசை

சுளுக்குத்தசை suḷukkuttasai, பெ. (n.)

   1. நரம்பு பிசகுதல்; Sprain.

   2. மூட்டுப்பிசகி மென் தோலில் காணும் வீக்கம்; the wrenching of a joint with inflamation of the mucous membrane (சா.அக.);.

     [சுளுக்கு + தசை]

சுளுக்குநாயகம்

சுளுக்குநாயகம் cuḷuggunāyagam, பெ. (n.)

   நரம்புச்சுளுக்கைப் போக்கும் மருந்துச்செடி வகை (பதார்த்த. 289);; a medicinal plant capable of removing or curing all kinds of sprain.

     [சுளுக்கு + நாயகம்]

சுளுக்குப்பார்-த்தல்

சுளுக்குப்பார்-த்தல் sulukku-p-par,    4 செ.கு.வி. (v.i.)

   சுளுக்கு நீங்க மந்திரித்தல் (யாழ்ப்.);; to utter magic spell for curing sprain.

     [சுளுக்கு + பார்-,)]

சுளுக்குப்பிடித்தல்

சுளுக்குப்பிடித்தல் Sulukku-p-pidi-,    4 செ.கு.வி. (v.i)

சுளுக்கேறு-தல் பார்க்க;see Sulukkeru-,

     [சுளுக்கு + பிடி-,]

சுளுக்குருவு-தல்

சுளுக்குருவு-தல் sulukuruvu-,    5 செ.கு.வி. (v.i.)

சுளுக்குவழி பார்க்க;see Sulukku-vali

மறுவ. சுளுக்கு வழித்தல்

     [சுளுக்கு + உருவு-,]

சுளுக்குவழி-த்தல்

சுளுக்குவழி-த்தல் Sulukku-vali,    4 செ.குன்றாவி. (v.i.)

   எண்ணெய் முதலியவற்றால் சுளுக்கு நீங்கும்படி மந்திரித்து உருவுதல் (உ.வ.);; to masage a sprained limb with oil, ashes, leaves, etc., by way of cure.

     [சுளுக்கு + வழி]

சுளுக்கெடுப்போன்

 சுளுக்கெடுப்போன் cuḷukkeḍuppōṉ, பெ. (n.)

   எலும்புமுறிவு, சுளுக்கு முதலியவ்ற்றைத் தீர்ப்பவன்; an authorised person who professes skill in treating fractures and dislocations (சா.அக);.

     [சுளுக்கு + எடுப்போன்]

சுளுக்கேறு-தல்

சுளுக்கேறு-தல் sulukkeru-,    5 செ.கு.வி (v.i.)

   சுளுக்கிக்கொள்ளுதல் (வின்.);; to be sprained.

     [சுளுக்கு + ஏறு-,]

சுளுக்கேற்றிவிடல்

 சுளுக்கேற்றிவிடல் cuḷukāṟṟiviḍal, பெ. (n.)

   சுளுக்கினை அதிகப்படுத்துதல்; causing sprain to grow worse by improper handling or massage (சா.அக.);.

     [சுளுக்கு + ஏற்றிவிடல்]

சுளுந்து

சுளுந்து cuḷundu, பெ. (n.)

   1. தீப்பந்தமாகப் பயன்படும் சுளுந்துக்கோரான் அல்லது வெள்ளை வெட்சி எனப்படும் ஒரு சிறிய மரம்; a kind of small tree its branches can be used as orch.

   2. சுள்ளி முதலியவற்றாலான தீப்பந்தம்; torch made of dired twigs and leaves.

     [சுள்ளி → சுளு → சுளுந்து]

சுளுந்து சுற்றல்

 சுளுந்து சுற்றல் suḷundusuṟṟal, பெ.(n.)

நுனியில் தீயைப் பற்றவைத்து விளையாடல்:

 fireball play.

     [சுளுந்து+கற்றல்]

சுளுந்துக்கட்டை

 சுளுந்துக்கட்டை cuḷundukkaṭṭai, பெ. (n.)

   சுளுந்து மரக்கழியில் எரிக்கும் தீப்பந்தம் (வின்);; torch of ixora sticks.

     [சுளுந்து + கட்டை]

சுளுந்துக்காரன்

சுளுந்துக்காரன் cuḷundukkāraṉ, பெ. (n.)

   1. தீப்பந்தக்காரன்; torch-bearer.

   2. தீப்பந்தம் பிடிக்கும் வலையன்; person of Valaiyan sub caste whose occupation is torch-bearing

     [சுளுந்து + காரன். காரன் உடைமைப் பெயரீறு]

சுளுந்துக்கோல்

 சுளுந்துக்கோல் cuḷundukāl, பெ. (n.)

சுளுந்து பார்க்க;see Sulundu (சா.அக.);

     [சுளுந்து + கோல்]

சுளுவு

சுளுவு cuḷuvu, பெ. (n.)

   1. எளிமை; ease, facility.

   2. இலேசு; lightness.

சுமை சுளுவானது.

   3. தணிவு; cheapness, as of price.

விலை சுளுவாயுள்ளது.

தெ., க. சுளுவு

     [சுள் → சுளுவு]

சுளை

சுளை cuḷai, பெ. (n.)

   பலாப்பழ முதலியவற்றின் சதைப்பற்று; the pulp as of jack fruit.

     “சாரற் பலவின் சுளையொடு” (அகநா.2.);.

சுளைப்பிடாம்

 சுளைப்பிடாம் cuḷaippiṭām, பெ. (n.)

   கம்பளி; woollen stuff.

     [சுளை + படாம் → பிடாம்]

சுளையமாடு-தல்

சுளையமாடு-தல் sulaiyam-adu-,    5 செ.குன்றாவி (v.t.)

   திருடுதல் (இ.வ.);; to steal, defraud

     [சுளையம் + ஆடு]

சுளையம்

 சுளையம் cuḷaiyam, பெ. (n.)

   திருட்டு (இ.வ);; thieft, fraud.

சுளையாக

 சுளையாக sulai-y-aga. வி.அ. (adv.)

   மொத்தமாக, கணிசமாக; a good lumpsum or round sum.

     ‘இந்தச் சேலைக்குச் சுளையாக ஐந்நூறு ரூபாய் பெற்றுக் கொண்டார்’ (உ.வ.);.

     [சுளை → சுளையாக]

சுள்

சுள்1 cuḷ, பெ. (n.)

   1. உறைப்பு; pungency; acrimony.

   2. சுள்சுள்ளெனல் பார்க்க;see sulsullena;   3. கருவாடு; dried fish.

     “சுள்ளிணைக் கறித்தனர்” (கந்தபு. அசமுகிநகர்.18);(சா.அக);.

க. சுள்

     [சுல் → கள்]

 சுள்2 cuḷ, பெ. (n.)

   சிறுமை (இலக்அக);; littleness, smallness.

ம. சுள்ளு

சுள்ள

சுள்ள cuḷḷa, பெ. (n.)

   1. அனிச்சப்பூடு; pimpernel

   2. ஆச்சாமரம்; Ceylon cbony tree.

     “எரிபுரை யுறழுஞ் சுள்ளி” (குறிஞ்சிப்.66);.

   3. ஞாழல் (திணைமாலை. 2);; a species of fragrant tree.

   4. கதம்பம்; different shrubs used in perfumes and unguents.

   5. மாமரம்; mango tree.

   6. மல்லிகை; Jasmine.

   7. மயிற் கொன்றை (மலை.);; peacock’s crest.

   8. மாந்துளிர்; tender leaves of mango tree.

   9. நாகதாளி; snake charmingroot.

   10. குங்குமம் (அக.நி.);.; saffron.

   11. எலும்பு; bone.

     “கள்ளி யியற்றிய குரம்பை” (பதினொ. ஆளு. திருக்க. 37);

   12. நாகமல்லி (மலை.);; ring-worm root.

   13. கருப்பூரவகை; cinnomum genus.

   14. மரக்கிளை; branch, bough

     “சுள்ளியி னிருந்துறை குரங்கு” (கம்பரா. யுத் மந்திரப் 25);.

   15. உலர்ந்த சிறுகொம்பு; dry twigs, especially for fuel.

     “சுள்ளிக்கேன் கோடாலி” (தனிப்பா. 1, 227:20);.

   16. சிறுமை; smallness.

     “சுள்ளி வெள்ளிப் பற்கொண்டும்” (கம்பரா.யுத். முதற்போ 139.);.

   17. மாமரம் (மலை.);; mango tree.

   ம. சுள்ளி;   க. சுள்க்கு;தெ. சிடுகு

     [சுள் → சுள்ளி]

சுள்ளக்கம்

சுள்ளக்கம் cuḷḷakkam, பெ. (n.)

   1. வேர்க்குரு (சங்அக.);; prickly heat.

   2. சினம் (யாழ்.அக.);; anger, fury.

   3. மேட்டிமை (சங்.அக.);; haughtiness, affectation.

ம. சுள்ளம்

     [சுள் → சள்ளக்கம்]

சுள்ளக்காய்

சுள்ளக்காய் cuḷḷakkāy, பெ. (n.)

   மிளகாய் (யாழ்ப்);; red-chilly.

     [சுள்1 → சுள்ளம் + காய். சுள் = உறைப்பு]

சுள்ளனி

 சுள்ளனி cuḷḷaṉi, பெ.(n.)

அறந்தாங்கி வட்டத்திலுள்ள சிற்றூர்

 a village in Arantangi Taluk.

     [ஒருகா குளாமணி-கள்ளணி]

சுள்ளம்

 சுள்ளம் cuḷḷam, பெ. (n.)

சுள்ளக்கம் பார்க்க;see Sullakkam.

ம. சுள்ளம்

     [சுள் → சுள்ளம்]

சுள்ளற்கோல்

சுள்ளற்கோல் cuḷḷaṟāl, பெ. (n.)

   1. வளையும் தடி (வின்.);; flexible stick or rod.

   2. சாட்டை (சவுக்கு);; whip.

     “குதிரை மேலிருந்து கோல்தா” என்றால்… கள்ளற் கோலாம் ஆகலானும்” (தொல். சொல்.53, இளம்.);/

     [சுள்ளல் + கோல்]

சுள்ளலன்

 சுள்ளலன் cuḷḷalaṉ, பெ. (n.)

   மெலிந்தவன் (யாழ்ப்.);; an emaciated person.

     [சுள்ளல் → சுள்ளலன். சுள் = மென்மை]

சுள்ளலி

சுள்ளலி cuḷḷali, பெ. (n.)

   1. மெலிந்தவள்; உயரத்திற்கேற்ற பருமனில்லாத பெண்; a thin girl, slender woman.

   2. மெல்லிதான மரம்; thin, slender tree (சா.அக.);.

     [சுள்ளல் → சுள்ளலி. சுள் = மென்மை]

சுள்ளல்

 சுள்ளல் cuḷḷal, பெ. (n.)

   மென்மை (யாழ்ப்.);; tenderness, flexibility.

     [சுள் = சிறுமை, மென்மை, சுள் → சுள்ளல்]

சுள்ளாக்காய்

சுள்ளாக்காய் cuḷḷākkāy, பெ. (n.)

கள்ளக்காய் பார்க்க;see Sulla-k-kay

     [சுள்1 → சள்ளக்காய் → சுள்ளாக்காய்.

சுள் = உறைப்பு]

சுள்ளாணி

சுள்ளாணி cuḷḷāṇi, பெ. (n.)

   சிறிய ஆணி (மலைபடு. 27, உரை);; small nail.

ம. சுள்ளாணி

     [சுள் (சிறுமை); + ஆணி]

சுள்ளான்

சுள்ளான் cuḷḷāṉ, பெ. (n.)

   1. சுள்ளெறும்பு பார்க்க;see sullerumbu.

   2. ஒரு வகைக் கொசு (இ.வ.);; a kind of mosquito.

     [சுள் → சுள்ளான்]

சுள்ளாப்பி-த்தல்

சுள்ளாப்பி-த்தல் sulti-p-pi,    4 செ.குன்றாவி (v.t.)

   1. சூடுகாட்டல்; to renderhot.

   2. அடித்தல்; to beat, lash, strike.

     [சுள்ளாப்பு + சுள்ளாப்பி-,]

சுள்ளாப்பு

சுள்ளாப்பு cuḷḷāppu, பெ. (n.)

   1. உறைப்பு; pungency.

   2. முனைப்பு; hastiness, quickness.

   3. மழையின்பின் அடிக்கும் கடுவெயில்; piercing heat of the sun after rain.

   4. அடி; cut.

   5. பழிச்சொல்; cutting, sarcasm

     ‘சுள்ளாப்பெல்லாம் பொல்லாப்பு’ (உ.வ.);.

   6. வெப்பம்; heat.

     [சுள் + சுள்ளாப்பு]

சுள்ளிக்கோல்

 சுள்ளிக்கோல் cuḷḷikāl, பெ. (n.)

   குதிரைச்சாட்டை; whip.

     “மாமேலிருந்தொரு கோறாவெனிற் சுள்ளிக்கோல் தரலும்” (சி.சி. அளவை.);.

     [சுள்ளி + கோல்]

சுள்ளிடு-தல்

சுள்ளிடு-தல் sullidu-,    20 செ.கு.வி. (v.i)

   1. உறைத்தல்; being pungent totaste.

   2. வலித்தல்; paining.

   3. மனம் வருந்துதல்; being troubled in mind, to be stung to the quick.

     [சுள் + இடு-,]

சுள்ளிடுவான்

சுள்ளிடுவான் cuḷḷiḍuvāṉ, பெ. (n.)

   1. சுள்ளெனக் கடிக்கும் ஒருவகைப் பூச்சி தெள்ளுப்பூச்சி; a kind of insect flea.

   2. மிளகு; pepper.

   3. மிளகாய்; chilly (சா.அக);.

     [சுள் + இடுவான்]

சுள்ளிவிறகு

 சுள்ளிவிறகு cuḷḷiviṟagu, பெ. (n.)

   காய்ந்த மிலாறு; dry twigs for fuel.

ம. சள்ளிவிறகு

     [சுள்ளி + விறகு]

சுள்ளு

சுள்ளு cuḷḷu, பெ. (n.)

   1. கள்; toddy.

   2. வெப்பம்; heat.

   3. உறைப்பு; pungency.

     [சுள்1 → சுள்ளு]

சுள்ளுக்கருவாடு

 சுள்ளுக்கருவாடு cuḷḷukkaruvāṭu, பெ. (n.)

   ஒருவகைச் சிறிய கருவாடு; a kind of small dried fish. (சா.அக.);.

     [சுள் → சுள்ளு + கருவாடு]

சுள்ளுச்சுள்ளெனல்

சுள்ளுச்சுள்ளெனல் cuḷḷuccuḷḷeṉal, பெ. (n.)

   1. வளி (வாயு); முதலிய தொல்லைகளால் உண்டாகும் குத்தல் நோய்; a minute pain experienced at times due to deranged Vayu in the body system (சா.அக.);.

   2. கடுப்புக் குறிப்பு; expr. signifying sharp pricking sensation.

சுள்ளுப்பூச்சி

சுள்ளுப்பூச்சி cuḷḷuppūcci, பெ. (n.)

கள்ளிடுவான்,1 பார்க்க;see sulliduwan,1(சா.அக.);.

     [சுள் → சுள்ளு + பூச்சி]

சுள்ளெறும்பு

 சுள்ளெறும்பு cuḷḷeṟumbu, பெ.(n.)

திண்டுக்கல் வட்டத்திலுள்ள சிற்றூர்

 a village in Dindigul Taluk.

     [கள்(சிறு+எறும்பு]

 சுள்ளெறும்பு cuḷḷeṟumbu, பெ. (n.)

   சிவப்புக் கொள்ளியெறும்பு; a species of red ant.

மறுவ. செவ்வெறும்பு

     [சுள் + எறும்பு]

சுள்ளை

சுள்ளை cuḷḷai, பெ. (n.)

   1. மட்கலஞ்சுடுஞ் சூளை (தொல்.சொல்.449, உரை);; potter’s kiln.

   2. காளவாய்; kiln, furnace.

ம. சூள

     [சுள் → சுள்ளை]

சுள்ளைபிரி-த்தல்

சுள்ளைபிரி-த்தல் sullaipiri,    4 செ.கு.வி. (v.i.)

   கருப்பத்துடன் இறந்தவள் பொருட்டுச் சூளையைப் பிரித்து மட்பாண்டம் ஏழைகட்கு வழங்குதல்; to purchase and distribute to the poor a kilnful of baked pots for propitiating the spirit of a woman deceased in pregnancy.

     [சுள் → சுள்ளை + பிரி-,]

சுழணோய்

 சுழணோய் cuḻṇōy, பெ. (n.)

சுழல்நோய் பார்க்க;see Sulal-noy (சா.அக.);.

     [சுழல் + நோய்]

சுழனி

 சுழனி cuḻṉi, பெ. (n.)

   குழந்தைநோய்களைத் தீர்க்கவுதவும் வலம்புரிக்கொடி; a kind of creeper whirling on to the right side. It is used in children’s diseases (சா.அக.);.

     [சுழல் → சுழனி]

சுழன்மரம்

சுழன்மரம் cuḻṉmaram, பெ. (n.)

   தவசங்களைத் திரிக்கும் மரவெந்திரம்; wooden machine for grinding corn.

     “சுழன்மரஞ் சொலித்த … வெண் காழ்” (அகநா.39.3);.

     [சுழல் + மரம்]

சுழன்மாறி

சுழன்மாறி cuḻṉmāṟi, பெ. (n.)

   தந்திரமாய் ஏமாற்றுபவ-ன்-ள்; a skilful cheat.

     “எனை யிக்கோலங் கண்ட சுழன்மாறி” (விறலிவிடு. 901);.

     [சுழல் + மாறி]

சுழற்கண்

 சுழற்கண் cuḻṟkaṇ, பெ. (n.)

சுற்றுக்கண் பார்க்க;see Surru-k-kan.

     [சுழல் + கண்]

சுழற்கத்தி

 சுழற்கத்தி cuḻṟkatti, பெ. (n.)

   கண்ணின் படலத்தை அறுப்பதற்காகப் பயன்படுத்தும் ஒருவகைகக் கத்தி; a kind of knife used in a circular extraction of cataract (சா.அக.);.

     [சுழல் + கத்தி]

சுழற்காய்

 சுழற்காய் cuḻṟkāy, பெ. (n.)

சுண்டைக்காய் பார்க்க;see Sungai-k-kay.

     [சுழல் + காய்]

சுழற்கேடயம்

 சுழற்கேடயம் cuḻṟāṭayam, பெ. (n.)

 a shield or trophy only for one year to the winner.

     [சுழல் + கேடயம்]

சுழற்கோப்பை

 சுழற்கோப்பை cuḻṟāppai, பெ. (n.)

 a gold or silver cup only for one year to the winner.

     [சுழல் + கோப்பை]

சுழற்சி

சுழற்சி cuḻṟci, பெ. (n.)

   1. சுழல்கை; whirling, spinning, rotating, brandishing.

   2. அலைகை; wondering, moving to and fro.

   3. மனக்கலக்கம்; trouble, agitation.

ம. சுழல்

     [சுழல் → சுழற்சி]

சுழற்பந்துவீச்சு

 சுழற்பந்துவீச்சு cuḻṟpanduvīccu, பெ. (n.)

   மட்டைப் பந்து விளையாட்டில் தரையில் பட்டு எழும்போது திசைமாறிப் பாயத்தக்கதாக மெதுவாகப் பந்துவீசுகை; spin bowling in cricket.

     [சுழல் + பந்து + வீச்சு]

சுழற்றல்

 சுழற்றல் cuḻṟṟal, பெ. (n.)

   கிறுகிறுப்பு; giddiness.

தலை சுழற்றலாயிருக்கிறது (உ.வ.);

     [சுழல் + தல் = சுழற்றல்]

சுழற்றி

சுழற்றி1 cuḻṟṟi, பெ. (n.)

   1. கருவண்டு; a black beetle.

   2. சுழற்கத்தி பார்க்க;see Sular-katti.

     [சுழல் → சுழற்றி]

 சுழற்றி2 cuḻṟṟi, பெ. (n.)

   1. சுழற்றுகருவியின் கைப்பிடி (வின்.);; handle, as of a spinning wheel.

   2. துளையிடுங்கருவி (உ.வ.);; brace and bit.

ம. சுழற்றி

     [சுழல் → சுழற்றி]

சுழற்றிடுபில்லம்

 சுழற்றிடுபில்லம் cuḻṟṟiḍubillam, பெ. (n.)

   விழியழற்சியால் சதைவளர்ந்து கருவிழி குவிந்து சிறுக்கும் ஒருவகைக் கண்ணோய்; an eye disease causing inflammation of the eye growth flesh and shrinking of the blackportion of the eye (சா.அக.);.

     [சுழற்றிடு + பில்லம்]

சுழற்றித்துரப்பணம்

 சுழற்றித்துரப்பணம் cuḻṟṟitturappaṇam, பெ. (n.)

   துளையிடுங்கருவி; gimlet(C.E.M.);.

     [சுழற்றி + துரப்பணம்]

சுழற்றியடி-த்தல்

சுழற்றியடி-த்தல் sularri-y-adi,    4 செ.கு.வி (v.t.)

   1. பெருவாரி நோய்களில் உயிரைக் கொள்ளை கொண்டுபோதல்; to sweep away of innumerable lives in epidemics.

   2. புறற் காற்றடித்தல்; to fierce blowing to wind in stormy weather

   3. சுழன்றுவீசுதல்; to blow violently, to devastate, as whirlwind.

     ‘காற்றுச் சுழற்றியடிக்கிறது’ (உ.வ.);.

     [சுழற்றி + அடி-,]

சுழற்று

சுழற்று1 sularru-,    5 செ.கு.வி (v.i.)

   1. சுழலச் செய்தல்; to whir, spin, swing round, turn;

 to roll.

     “நமுசியை வானிற் சுழற்றிய மின்னுமுடியன்” (திவ்.பெரியாழ். 1,8,8);.

   2. சுற்றியாட்டுதல்; to brandish, flowish, wave.

     ‘சிலம்பக் கழியைச் சுழற்றுகின்றான்’ (உ.வ.);

   3. கிறுகிறுக்கச் செய்தல்; to cause dizziness, make giddy.

     ‘பித்தம் தலையைச் சுழற்றுகின்றது’ (உ.வ.);.

ம. சுழற்று

     [சுழல் → சுழற்று-,]

 சுழற்று2 cuḻṟṟu, பெ. (n.)

   சுழற்றுகை; whirling, wheeling, spinning.

     ‘அவனை ஒரு சுழற்றுச் சுழற்றினான்’ (உ.வ.);.

ம. சுழற்று

     [சுழல் → சுழற்று]

சுழற்றுதடி

 சுழற்றுதடி cuḻṟṟudaḍi, பெ. (n.)

   சிலம்பத்தடி; a kind of fencing staff, quarter-staff.

     [சுழற்று + தடி]

சுழலமாடு

சுழலமாடு1 Sulalamadu-,    5 செ.கு.வி.(v.i.)

   தலைசுற்றல்; to reel of the head;swim of the head (சா.அக.);.

     [சுழல(ம்); + ஆடு-,]

 சுழலமாடு2 sualamadu-,    5 செ.கு.வி. (v.i.)

   1. ஒன்றைப் பெறுவதற்கு இடைவிடாது முயலுதல்; to make persistent effort for a thing.

   2. அடிக்கடி போய் வணங்குதல் (இ.வ.);; to frequent;dance attendence on.

     [சுழல் → சுழலம் + ஆடு-,]

 சுழலமாடு3 sulalamagu-,    5 செ.கு.வி. (v.i.)

   1. ஒன்றைப் பெறுவதற்கு இடைவிடாது முயலுதல்; to make persistent effort for a thing.

   2. அடிக்கடி போய் வணங்குதல் (இ.வ);; to frequent;dance attendence on.

     [சுழல் → சுழலம் + ஆடு-,]

சுழலரை

 சுழலரை cuḻlarai, பெ.(n.)

   ஒரு வகையான ஆடல் இயக்கம்; a dance movement.

     [சுழல்+அரை (இடுப்பு);].

சுழலல்

சுழலல் cuḻlal, பெ. (n.)

   1. பொறிமயங்கல்; being dizzy.

   2. கிறுகிறுத்தல் அல்லது கற்றல்; reeling of head.

   3. அலைவுபடுதல்; being restless (சா.அக.);.

     [சுழல் → சுழலல்]

சுழலவெரி-த்தல்

சுழலவெரி-த்தல் sulala-y-cri,    4 செ.குன்றாவி. (v.t.)

   நான்கு பக்கமும் தீப்படும் படியாக எரித்தல்; to burn rotating the material so that the fire or heat is extensively affected all the parts of the thing (சா.அக.);.

     [சுழல + எரி-,]

சுழலாரை

 சுழலாரை cuḻlārai, பெ. (n.)

சுழலாவிரை பார்க்க;see sulal-avirai (சா.அக.);.

     [சுழல் + (ஆவிரை→); ஆரை]

சுழலாவிரை

 சுழலாவிரை cuḻlāvirai, பெ. (n.)

   பொன்னா விரை; rounded poded cassia (சா.அக.);.

ம. சுழலாவர

     [சுழல் + ஆவிரை]

சுழலி

 சுழலி cuḻli, பெ. (n.)

   மாந்தத்தினால் வரும் வலிப்பு; convulsions or fits from fever due to digestive disorders (சா.அக.);.

     [சுழல் → சுழலி]

சுழலை

சுழலை1 cuḻlai, பெ. (n.)

   ஆடுமாடுகள் தலைசுற்றிச் சோர்வுற்றுத் திடீரெனவிழும் ஒருவகை நோய; a disease a sort of giddiness causing cattle to fall down fatigued suddenly without apparent cause (சா.அக.);.

மறுவ. சுழல் நோய்

     [சுழல் → சுழலை]

 சுழலை2 cuḻlai, பெ. (n.)

   1. கொள்கலம்; receptacle.

     “துக்கச்சுழலையை” (திவ். பெரியாழ். 53:1);.

   2. ஏய்ப்பு; deception, fraud.

     “சுழலை பெரிதுடைத்துச் சோதனனை (திவ்.பெரியாழ். 185);.

சுழலையாடு

சுழலையாடு1 sulalai-y-adu-i,    5 செ.கு.வி (v.i.)

   களைப்பினால் சோர்ந்துவிழுதல்; களைத்துப் போதல்; to be fatigued, to faint (சா.அக.);.

     [சுழலை + ஆடு-,]

 சுழலையாடு2 sulalai-y-adu,    5 செ.குன்றாவி (v.i.)

   1. அலைக்கழித்தல்; to harass as a person.

   2. வீணாகச் செலவழித்தல்; to waste, as property.

     [சுழலை + ஆடு-,]

சுழல்

சுழல்2 cuḻl, பெ. (n.)

   1. சுழற்சி; whirling, revolving.

     “சுழற்கண் வேதாளமானான்” (சேதுபு. வேதாள. 72);.

   2. வளைவு; curl.

     “சுழலிடு கூந்தலும்” (கம்பரா. மிதிலை. 43);.

   3. சுழிநீர்; eddy, whirlpool.

   4. சுழல்காற்று பார்க்க;see Sulal-karru.

   5. காற்றாடி (சூடா.);; machine on an axle turned by the wind, whirliging, kite.

   6. பீலிக்குடை (பிங்.);; umbrella made of peacock’s feathers.

   7. சுழல்படை (வின்.); பார்க்க;see sulalpagai.

   8. கலக்கம்; agitation.

     “சுழலார் துயர்” (தேவா. 294:19);.

   9. ஏமாற்று (வின்);; deception, frau.

ம. சுழல்

சுழல் வேகமானி

 சுழல் வேகமானி cuḻlvēkamāṉi, பெ.(n.)

   கடலில் ஏற்படும் சுழற்சி கண்டறியும் அளவை கருவி; lyroscope.

     [சுழல்+வேகம்மானி].

சுழல்காற்று

 சுழல்காற்று cuḻlkāṟṟu, பெ. (n.)

   சுழன்று வீசும் காற்று; whirl-wind

ம. சுழலிகாற்று, சுழல்க்காற்று

     [சுழல் + காற்று]

சுழல்நாற்காலி

 சுழல்நாற்காலி cuḻlnāṟkāli, பெ. (n.)

   சுற்றிடும் நாற்காலி; rotating chair.

     [சுழல் + நாற்காலி]

சுழல்நோய்

 சுழல்நோய் cuḻlnōy, பெ. (n.)

   ஆடுமாடுகள் திடீரெனச் சுழன்றுவிழும் ஒருவகை நோய்; a disease in cattle causing them to swing and fall down suddenly (சா.அக.);.

     [சுழல் + தோய்]

சுழல்படை

 சுழல்படை cuḻlpaḍai, பெ. (n.)

   வளைதடி (சூடா.);; a kind of boomerang.

     [சுழல் + படை]

சுழல்மரம்

 சுழல்மரம் cuḻlmaram, பெ. (n.)

   கட்டைத் திருகாணி (வின்.);; winding screw made of wood.

     [சுழல் + மரம்]

சுழல்மாறித்தனம்

 சுழல்மாறித்தனம் cuḻlmāṟittaṉam, பெ. (n.)

   ஏமாற்று (உ.வ.);; deceit, fraud.

     [சுழல்மாறு → சுழல்மாறி + தனம்]

சுழல்மாறு-தல்

சுழல்மாறு-தல் sulal-maru-,    5 செ.குன்றாவி (v.t.)

   திருடுதல்; to sted.

     “சாமானைச் சுழல் மாறிவிட்டான்” (நாஞ்);.

     [சுழல் + மாறு-,]

சுழல்வண்டு

 சுழல்வண்டு cuḻlvaṇṭu, பெ. (n.)

   எப்போதும் நீரில் சுழன்றுகொண்டிருப்பதும், மந்திர வித்தைக்கு உதவுவதுமான ஒருவகை வண்டு; an insect found whirling in water;water beetle (சா.அக.);

     [சுழல் + வண்டு]

சுழல்வண்டெரி

 சுழல்வண்டெரி cuḻlvaṇṭeri, பெ. (n.)

   விழித்திருக்கும் நிலையிலும் துரங்கும்போதும் பூச்சிபறப்பது போன்று கண்கூச்சம் கண் புகைச்சல் முதலிய பண்புகளோடு விளக்கைப் பார்க்கப் பலவகையாகக் காணப்படுவதுமான ஒரு வகைக் கண்ணோய்; a disease of the eye in which the vision is severely affected due to a derangement of the muscular coordination of the eye. It is marked by a condition of a subjective appearance in which mote appears to be floating, where ever seen both in a waking state and in sleep, extreme sensitiveness to light dullness of vision, etc.,

     [சுழல் + வண்டு + எரிவு]

சுழல்வண்டெரிவு

 சுழல்வண்டெரிவு cuḻlvaṇṭerivu, பெ. (n.)

சுழல்வண்டெரி பார்க்க;see Sulal-vangeri (சா.அக.);.

     [சுழல் + வண்டெரிவு]

சுழல்விழியெரிவு

 சுழல்விழியெரிவு cuḻlviḻiyerivu, பெ. (n.)

   கண்களில் எரிச்சலெடுத்து நேராகப் பார்க்க வொட்டாமலும், இமைகனத்துக் கீழ் தொங்கி மிகுந்த அரிப்பும் வலியும் தருவதும், பீளை பிடித்து நீர்வடிந்து துாக்கந்தராத ஒருவகைக் கண்நோய்; an affection of the eye marked by varied sensation of burning in ability to look straight at an object, thickening and drooping of the eye-lids, itching and slight pain muco purulent and watery discharge, sleeplessness etc., (சா.அக.);.

     [சுழல் + விழி + எரிவு]

சுழல்வு

சுழல்வு sulalvu,    5 செ.கு.வி. (v.i.)

சுழற்சி பார்க்க;see Sularcci (சா.அக.);.

சுழாரை

 சுழாரை cuḻārai, பெ. (n.)

சுழலாவிரை பார்க்க;see Sulalvirai (சா.அக.);.

சுழாவிரை

 சுழாவிரை cuḻāvirai, பெ. (n.)

சுழலாவிரை பார்க்க;see Sulala-virai (சா.அக.);.

     [சுழல் + ஆவிரை]

சுழி

சுழி1 suli-,    4 செ.கு.வி. (v.i.)

   1. சுழிபோல் வளைவாதல்; to become curved, curled, involved, to form eddies, as on the surface of water.

     “சுழியுங் குஞ்சிமிசை” (கம்பரா. எழுச்சி. 34);.

   2. வெறுப்பு முதலியவற்றின் குறியாக முகஞ் சுருங்குதல்; to be contracted, screwed up as one’s face in disgust.

     “தழலுமிழ்ந்தும் மதம் பொழிந்தும் முகஞ்சுழிய” (தேவா. 1148, 7);.

   3. கவடமாதல்; to be cunning, guileful. சுழியப்

பேசினான் (யாழ்ப்.);.

   4. மனங்கலங்குதல்; to be distracted, agitated.

     “வரிவிழிகொண்டு சுழிய வெறிந்து” (பட்டினத். திருப்பா. உடற். 3);.

   5. இறத்தல்; to die.

     ‘அவன் சுழிந்து விட்டான்’ (இ.வ);.

   ம. சுழி;   தெ. சுடியு;க. களி

     [சுளி → சுழி-,]

 சுழி2 suli-,    4 செ.கு.வி. (v.i.)

   1. சுழற்காற்றுப் போல் சுழலுதல்; to whirl, as whirlwind.

     “சண்டமாருதஞ் சுழித்தடித் தாஅர்த்து” (திருவாச.4:55);.

   2. நீர்ச் சுழியுண்டாதல்; to form whirlpools eddies.

     “சுழித்துநீர் வருதுறை யாற்றை” (கம்பரா. குகப். 63);.

   3. உடற்சுழியுண்டாதல்; to form curls;

 to have curl-marks, as on the head or body.

   4. கண்குழிதல் (வின்.);; to be sunk, as eyes by age.

   5. வேறிடத்தின்றி யொருங்கே திரண்டுநிற்றல்; to be gathered in one place, concentrated.

     “சுழித்து நின்றறாத கற்பிற் சுநந்தை” (சீவக. 2551);.

   6. அடிபடாமல் ஒதுங்குதல்; to shrink, recoil, as from blows.

     ‘அவனடிக்குச் சுழித்துக் கொண்டான்’ (உ.வ.);.

   7. தவறிப்போதல்; to fail, as rain in drought, as candidate in examination.

     ‘இவ்வாண்டு மழை சுழித்து விட்டது’ (உ.வ.);.

   ம. கழிக்குக;   க. சுழிடு, களி;தெ. சுடியு

     [சுல் → சில் = சக்கரம். சுல் → சுள் → சுழி = வட்டம், சுழித்தல் = வட்டம் வரைதல்]

சுழி3-த்தல் suli, 4 செ.குன்றாவி (v.tr);

   1. சுழி உண்டாக்குதல்; to curl, incurve, curve,

     “சுழித்த செம்பொனின் றொளை புரை யுந்தி” (கம்பரா. சித்திர. 21);.

   2. அலையச்செய்தல்; to cause to roam.

     “வெங்கானென்கான்முளையைச் சுழிக்கும் வினையால்” (கம்பரா.நகர்.நீங்கு.49);.

   3. தேர்வில் தேறாதபடிச் செய்தல்; to plough cause to fail in examination.

     “ஆசிரியர் மாணவனை இந்த ஆண்டுத்தேர்வில் சுழித்துவிட்டார்”

   4. செலவினங்களைக் குறைத்தல்; to curtail, as expenses.

     “உள்ளதற்கேற்பச் செலவைச் சுழிக்க வேண்டும்”.

   5. மறைத்தல்; to conceal, deposit, to hide.

     ‘பணத்தை எங்கேயோ சுழித்துவிட்டான்’ (உ.வ.);.

   6. சினத்தல்; to be angry

     “எமை யெமர்கள் சுழியாரோ” (தேவா. 1148, 7);.

     [சுள் → சுழி-,]

 சுழி4 cuḻi, பெ. (n.)

   1. சுழலுகை; whirling.

     “சுழிக்காற்று” (உ.வ.);.

   2. நீர்ச்சுழி; whirl, wortex, eddy.

     “கங்கையின் சுழியிற் பட்ட” (சீவக. 1096);.

   3. எழத்துச்சுழி; incurvature, curl in the formation of letters, circlet, as in ண் (n);, ன்r (n); etc.

   4. சுழியம்; cipher, zero.

   5. மயிர்ச்சுழி; curl of the hair.

   6. ஆகூழ் அல்லது போகூழைக் குறிப்பதாகக் கருதப்படும் உடற்சுழி; circular or curved marks on the head or body indicating one’s luck.

     “சுழிகொள் வாம்பரி” (கம்பரா. எழுச். 32);.

   7. ஊழ்வினை; fate.

     ‘அவன் சுழியால் அலைகிறான்’ (உ.வ.);.

   8. உச்சி (திவா.);; crown of the head.

   9. உச்சிப்பூ (இ.வ.);; a kind of ornament for child’s head.

   10. சூழ்ச்சியறிவு; wickedness.

     “சுழியுடைத் தாயுடைக் கொடிய சூழ்ச்சியால்” (கம்பரா. பள்ளி. 74);.

   11. 21/2 அணா (15 புதுச்சல்லி); கொண்ட சிறு காசுவகை; a small coin = 21/2 annas.

   12. மழையின் ஒரு விரல அளவு; an inch, a unit of rainfall.

   13. கடல்; sea.

     “கொண்ட சுழியுங் குலவரை யுச்சியும்” (திருமந். 2966);.

   14. சுழிமுனை1 பார்க்க;see suli-munai1.

   ம. சுழி;   க. சுழி, சுளி;   தெ. சுடி;   து. சுளி;   கோத. சுளி;   துட. தூன்ய;பட. சுயி

     [சுள் → சுளி → சுழி]

சுழிகணநோய்

 சுழிகணநோய் cuḻigaṇanōy, பெ. (n.)

   ஒருவகைக் கண்ணோய்; a kind of eye disease. (சா.அக.);.

மறுவ. சுழிக்கணம்

காய்ச்சல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகளுடன் இந் நோய் காணப்படும்.

சுழிகணம்

சுழிகணம் cuḻigaṇam, பெ. (n.)

   குழந்தைகளின் விலாவைச் சுழிக்கச்செய்யும் கணைநோய்(unravour. 40);; a variety of taber mesenterica causing twitching of the sides, in children.

     [சுழி + கணம்]

சுழிகுற்றி

 சுழிகுற்றி cuḻiguṟṟi, பெ. (n.)

சுழியாணிக்கட்டை பார்க்க;see Suli-y-ani-k-kattai

ம. சுழிக்குற்றி, சுழுக்குற்றி

     [சுழி + குற்றி]

சுழிகுளம்

சுழிகுளம் cuḻiguḷam, பெ. (n.)

   ஒரு செய்யுளை எவ்வெட்டெழுத்தாய், நான்குவரியாக எழுதி மேனின்று கீழிழிந்தும் கீழ்நின்று மேலேறியும், புறநின்று வந்து உள்முடிய பலுக்கினாலும், அவ் வரி நான்குமே ஆகி, அச்செய்யுளாலேயே முற்றுப்பெறும் மிறைக்கவி (தண்டி. 98);; a four lined stanza of eight letters each, so composed that the letters are arranged in a series of incurving loops, one with in another.

     [சுழி + குளம்]

எ-டு :

     “கவிமுதி யார் பாவே

விலையரு மா நற்பா

முயல்வ துறுநர்

திருவ திந்து மாயா (தண்டி 98, விளக்);.

சுழிகை

 சுழிகை cuḻigai, பெ. (n.)

கள் toddy (சா.அக);.

     [சுடு → சுடிகை = கள். சுடிகை → சுழிகை]

சுழிகோதை

 சுழிகோதை cuḻiātai, பெ. (n.)

   மூக்கடைப்பு நோய் நீக்கும் புல்வகை; a kind of grass (சா.அக.);.

     [சுழி + கோதை]

சுழிக்காற்று

 சுழிக்காற்று cuḻikkāṟṟu, பெ. (n.)

   சூறைக்காற்று; whirl-wind.

க. சுழிகாளி

     [சுழி + காற்று]

சுழிக்கு-தல்

சுழிக்கு-தல் sulikku-,    5 செ.குன்றாவி, (v.t.)

கழித்துவாங்கு-தல் பார்க்க;see Sulittu-Vargu-. (சா.அக.);.

     [சுழி → சுழிக்கு-,]

சுழிச்சக்கரம்

 சுழிச்சக்கரம் cuḻiccakkaram, பெ. (n.)

   மதுரையில் வழங்கிய பழைய பொற்காக வகை; an ancient gold coin of Madurai.

     [சுழி + சக்கரம்]

சுழித்துவலி-த்தல்

சுழித்துவலி-த்தல் sulittu-vali,    4 செ.கு.வி (v.i)

   மூச்சுவிடுங்காலை இசிவுடன் வலித்தல்; to have stitches or spasms in breathing.

     [சுழித்து + வலி-,]

சுழித்துவாங்கு-தல்

சுழித்துவாங்கு-தல் sulittu-vangu-,    5 செ.குன்றாவி (v.t.)

   1. கண்சுழலல்; to whirl as of the eyes.

   2. மூச்சைச்சுழற்றி, உள்ளேயிழுத்தல்; to draw in as whirlpool, eddy, to engulf.

   3. மடக்கிவிடுதல் (இ.வ.);; to over throw, prostrate.

     [சுழிவித்து + வாங்கு-,]

சுழித்தோடல்

 சுழித்தோடல் cuḻittōṭal, பெ. (n.)

   சாக் குறியைக் காட்டும் நாடியோட்டம்; whirling and drawing in of the pulse-this is a death sign.

     [சுழித்து + (ஓடு); → ஓடல்]

சுழிபார்-த்தல்

 சுழிபார்-த்தல் cuḻipārttal, செ.கு.வி. (v.t.)

   மாடுகள் வாங்கும் போது அதன் மயிர்ச் சுழியைப் பார்த்து வாங்குதல்; to look at the marks on cattle.

     [சுழி+பார்]

சுழிபுத்தி

 சுழிபுத்தி cuḻibutti, பெ. (n.)

   தீக்குணம் (யாழ்ப்);; wickedness, knavery.

     [சுழி + புத்தி]

 Skt. buddhi → த. புத்தி

சுழிபேதம்

 சுழிபேதம் cuḻipētam, பெ. (n.)

   ஏய்ப்பு, (மோசம்);; cheating fraud.

     ‘அவன் என்னைச் சுழிபேதம் பண்ணிவிட்டான்’ (வின்.);.

     [சுழி + பேதம்]

 Skt. bheda → த. பேதம்

சுழிப்பணம்

சுழிப்பணம் cuḻippaṇam, பெ. (n.)

   இரண்டனாவையொத்த பழைய காசு வகை; an ancient coin = 2 annas (செ.அக.);.

     [சுழி + பணம்]

சுழிப்பிழையன்

சுழிப்பிழையன் cuḻippiḻaiyaṉ, பெ. (n.)

   1. தீய சுழியுள்ள வலிங்கு; any domestic animal having unlucky curl-marks.

   2. ஆகூழ் கெட்டவன்; ill-fated person.

     [சுழி + பிழையன்]

சுழிமாந்தக்கழிச்சல்

 சுழிமாந்தக்கழிச்சல் cuḻimāndakkaḻiccal, பெ. (n.)

   குழந்தைகளுக்குச் செரியாமையால் வரும் கழிச்சல்நோய்; purging or distortion of bowels in children due to indigestion marked by whirling of the eyes (சா.அக.);.

     [சுழி + மாந்தம் + கழிச்சல்]

சுழிமாந்தம்

 சுழிமாந்தம் cuḻimāndam, பெ. (n.)

   கண்களின் சுழற்சியோடு கூடிய மாந்த நோய்வகை; colic attended with rolling of the eyes, one of eight mandam.

     [சுழி + மாந்தம்]

சுழிமின்னல்

 சுழிமின்னல் cuḻimiṉṉal, பெ. (n.)

   கவருள்ள மின்னல் (யாழ்.அக.);; forked-lightning

க. கழிமின்சு

     [சுழி + மின்னல்]

சுழிமுனை

சுழிமுனை cuḻimuṉai, பெ. (n.)

   1. சுழுமுனை பார்க்க;see Sulumunnai.

   2. பெண்குறி; a misnomer for clitoris (சா.அக.);.

     [சுழி + முனை]

சுழிமுனைக்கோளம்

சுழிமுனைக்கோளம் cuḻimuṉaikāḷam, பெ. (n.)

 I. அமுதநிலை;

 elemal bless.

   2. நாளமில் சுரப்பிகளுள் ஒன்று; pitiutary gland. (சா.அக.);.

     [சுழி + முனை + கோளம்]

சுழிமுனைமூளையன்

 சுழிமுனைமூளையன் cuḻimuṉaimūḷaiyaṉ, பெ. (n.)

   மூளையின் அடிப்பாகம் பருத்தவன்; a large headed idiot having swollen lower brain (சா.அக.);.

     [சுழி + முனை + முனையன்]

சுழிமை

 சுழிமை cuḻimai, பெ. (n.)

   காற்று உள்ளே பூரித்தல்; inhalation of the vital air. (சா.அக.);.

     [சுழி → சுழலிமை]

சுழியச்சு

 சுழியச்சு cuḻiyaccu, பெ. (n.)

   பொன்னை உருக்கி வார்க்கும் அசசு (யாழ்.அக.);; gold-smith’s matrix.

     [சுழி + அச்சு. அட்டுதல் = வார்த்தல், உருக்கி வார்த்தல். அட்டு → அச்சு]

சுழியன்

சுழியன் cuḻiyaṉ, பெ. (n.)

   1. ஏமாற்றுக்காரன், (வஞ்சகன்);. (யாழ்.அக.);; cunning schemer, deceitful person.

   2. அறிவாளி; intelligent person.

   3. எதற்கும் சினம்கொள்பவன்; irritable man.

   4. கொடிய குறும்பன் (இ.வ.);; wicked, mischievous man.

   5. சுழற்காற்று; whirlwind

     “சித்திரைச் சுழியன்” (சங்.அக);.

     [சுழி → சுலியன்]

சுழியப்பேசு-தல்

சுழியப்பேசு-தல் stiliya-p-pesu-.5 செ.குன்றாவி, (v.t.)

   வருந்தச்சொல்லுதல் (யாழ்ப்.);; to speak wounding words (செ.அக.);.

     [சுழியா + பேசு-,]

சுழியம்

சுழியம்1 cuḻiyam, பெ. (n.)

   மகளிர்தலையணி வகையுளொன்று; a kind of ornament worn by women on the head.

     “சுழியம் சூடி” (கம்பரா. கடிமணப். 52.);.

ம. சுழியம்

     [சுழி → சுழியம்]

 சுழியம்2 cuḻiyam, பெ. (n.)

   ஒருவகை இனிப்புத் தின்பண்டம்; a kind of sweet pastry cake.

     [சுழி → சுழியம்]

சுழியல்

சுழியல்1 cuḻiyal, பெ. (n.)

   1. தலைமுடி; hair (சா.அக.);.

   2. கழிந்திருக்கை; curling, as of hair.

   3. சுருளாக மயிரை முடிகை; a mode of dressing the hair.

     [சுழி → சுழியல்]

 சுழியல்2 cuḻiyal, பெ. (n.)

 agir, toddy (சா.அக.);.

     [சுழி → சுழியல்]

சுழியாணி

 சுழியாணி cuḻiyāṇi, பெ. (n.)

   கதவுக்குடுமியின் முள்ளாணி; projecting-pin of a door serving as pivot to move on.

ம. சுழியாணி

     [சுழி + ஆணி]

சுழியாணிக்கட்டை

 சுழியாணிக்கட்டை cuḻiyāṇikkaṭṭai, பெ. (n.)

   குடுமிக்கதவின் முள்ளாணியைத் தாங்கும் கட்டை; block or stone to receive the projecting pin of a door.

     [சுழி + ஆணி + கட்டை]

சுழியாணிக்கதவு

 சுழியாணிக்கதவு cuḻiyāṇikkadavu, பெ. (n.)

   குடுமிக்கதவு (யாழ்.அக.);; door moving on projecting pins instead of wings.

     [சுழி + ஆணி + கதவு]

சுழியிலெழுத்து

 சுழியிலெழுத்து cuḻiyileḻuttu, பெ. (n.)

   ஊழ்வினை; fate, destiny,

     ‘சுழியிலெழுத்தைத் தான் நோவ வேண்டும்’ (வ.வ.);

     [சுழி → சுழியில் + எழுத்து]

சுழியோடு-தல்

சுழியோடு-தல் suli-y-odu-,    5 செ.கு.வி (v.i.)

   1. முக்குளித்தல் (யாழ்.அக.);.

 to dive into water.

   2. மனத்தை ஆராய்தல் (சங்.அக);; to study one’s mind.

     [சுழி + ஒடு-,]

சுழிவு

சுழிவு cuḻivu, பெ. (n.)

   1. மறைவு; concoalment, seclusion;circumvention.

     ‘சுழிவு பார்த்து வந்துவிட்டான் (வின்.);.

   2. மனக்கவலை; anxiety Solicitude, care.

     “சுழிவுறேன் மன்ன வென்றான்” (பெரியபு. திருஞான. 693);.

     [சுழலி → கழிவு]

சுழிவோகம்

சுழிவோகம் cuḻivōkam, பெ. (n.)

   சிவவோகம், 64 ஒகங்களில் ஒன்று, மற்ற ஒகங்களைக் காட்டிலும் மிகச்சிறந்ததும், மேன்மையானதும் ஆகும்; this is one of the 64 yogas and is by far superior to other kinds of yoga (சா.அக.);.

     [சுழி + ஓகம்]

சுழுகு

 சுழுகு cuḻugu, பெ. (n.)

சுளுவு (யாழ்ப்.); பார்க்க;see Suluvu.

சுழுத்தி

சுழுத்தி cuḻutti, பெ. (n.)

   1. நினைவுகெட்டுத் தன்னை மறந்து உறங்கும் காலத்தில் உயிர், வளி, ஒசை ஆக இரண்டு கருவிகளைக் கொண்டு ஆதன் நெஞ்சாங்குலையின்று உடம்பைப் பாதுகாக்கும் நிலை; in the yogi philosophy it is a state of insensibility to one’s surroundings, when the soul is said to take its a stand in the region of the heart with the aids of vital power and sound and guard the human body trance.

   2. ஏழு நிலைமைகளில் (அவத்தைகளில்); ஒன்று; in the Agama philosophy an intellectual faculty that argues future events from the present circumstances.

   3. ஆழ்ந்தவுறக்கம்; deep sleep; a state of deep thought or abstraction-Reverie.

   4. மூன்றாவது நிலைமை (அவத்தை);; the third stage dreamless slumber.

   5. புலன்கள் செயலற்றுத் தன்னை யறியாமல் ஆழ்ந்தவுறக்கத்தில் இருக்கும் ஒரு நிலைமை; cosmic dreamless state (சா.அக.);.

சுழுந்து

 சுழுந்து cuḻundu, பெ. (n.)

சுளுந்து பார்க்க;see sulundu.

     [(சுள்ளி → சுளு-); சுளுந்து → சுழந்து]

சுழுனா

 சுழுனா cuḻuṉā, பெ. (n.)

சுழிமுனை பார்க்க;see suli-munai (சா.அக);.

சுழுனை

 சுழுனை cuḻuṉai, பெ. (n.)

சுழிமுனை பார்க்க;see Suli-munai (சா.அக.);.

சுழுமுணா

 சுழுமுணா cuḻumuṇā, பெ. (n.)

கழிமுனை பார்க்க;see Sull-munai (சா.அக.);

     [சுழு + முணா]

சுழுமுனை

 சுழுமுனை cuḻumuṉai, பெ. (n.)

சுழிமுனை பார்க்க;see suli-munai (சா.அக);.

     [சுழு + முனை]

சுவடன்

சுவடன் cuvaḍaṉ, பெ. (n.)

   சுவைஞன்; person of refined taste.

     “சுவடர் பூச்சூடும்போது புழுகிலே தோய்த்துச் சூடுமா போலே” (திவ்.திருப்பல்.9 வியா.); (செ.அக.);.

     [சுவடு1 → சுவடன், சுவடு = சுவை]

சுவடி

சுவடி1 cuvaḍi, பெ. (n.)

   1. ஏட்டுப் புத்தகம்; olai book.

     “பாட்டுப்புற மெழுதிய கட்டமை சுவடி” (பெருங். மகத.1:121);.

மறுவ. ஒலைச்சுவடி.

   2. பொத்தகம்; book in general.

   3. கோவையாக அமைத்த ஆவணத் தொகுதி; fill bundle, as of records.

     “எங்கள் ஆவணங்களைச் சேர்த்துச் சுவடியாக வைத்திருக்கிறேன்”. (நாஞ்);.

     [சுவடு1 → சுவடி]

 சுவடி2 suvadi, செ.குன்றாவி, (v.t.)

   தின்னுதல்; to cat, devour.

     “கர்க்கடகத்தைச் சுவடிச் சியங்கும் குனரி” (பதினோ. ஆளு. திருமும். 25);.

     [சவடு → சுவடு → சுவடி-. சவட்டுதல் = மெல்லுதல், விழுங்குதல்]

 சுவடி3 suvali-,    4 செ.குன்றாவி (v.t.)

   ஒப்பனை செய்தல்; to decorate.

     “கோயிலில் இப்பொழுது வாகனஞ் சுவடிக்கிறார்கள்” (நாஞ்);.

     [சோடி → சுவடி-,]

சுவடிசேர்-த்தல்

சுவடிசேர்-த்தல் suvadi-ser-,    4 செ.கு.வி. (v.i.)

   பிள்ளைகள் படிக்க ஏடுசேர்த்தல் (வின்.);; to make up an ola book for a child.

     [சுவடி + சேர்-. சுவடி → எழுது-,]

சுவடிப்பு

 சுவடிப்பு cuvaḍippu, பெ.(n.)

   மத்தளத்தை முழக்கும் முறைப்பாடு; method of playing ‘mattalam’.

     [சுவடு+வடிப்பு].

சுவடியெழுது-தல்

சுவடியெழுது-தல் suvadi-y-eludu-,    5 செ.கு.வி. (v.i.)

   எழுத்து எழுதப் பழகுதல்; to practise writing of the alphabet.

     [சுவடி + எழுது-,]

சுவடியைக்கட்டு-தல்

சுவடியைக்கட்டு-தல் suvadiyai-k-kattu-,    5 செ.கு.வி. (v.i.)

 Lit., to tie-up olai books. (ஏட்டைக் கட்டுதல்);.

   1. படிப்பைநிறுத்துதல்; to discontinue one’s study.

   2. பேச்சு முதலியவற்றை நிறுத்திவிடுதல்; to stop. close, as one’s argument, action.

     ‘மேல் பேச வேண்டாம், சுவடியைக் கட்டு’ (உ.வ.);.

     [சுவடி + கட்டு-,]

சுவடு

சுவடு1 cuvaḍu, பெ. (n.)

   1. அடித்தடம்; track;

 foot stop.

     “பூவா ரடிச்சுவடென் றலை மேற் பொறித்தலுமே” (திருவாச. 11:7);

   2. அடிச் சுவட்டின் ஒலி; noise caused by foot-fall.

     “செல்வர் வருகின்ற சுவட்டை யோர்ந்தான் செவிகளால்” (கம்பரா. மருத்து மலைப். 17);.

   3. ஒன்று பதிதலால் உண்டாகுங் குறி; impression

     “கண்கடோய் சுவடு…. தங்குமார் பினனே” (திருவாச. 29:5);

   4. அடையாளம்; Sign, indication.

     ‘அன்னமிவை யுள்ள சுவடில்லை (கம்பரா. பிலநீங்கு 40);.

   5. தழும்பு (பிங்.);; Scar, cicatrice.

   6. ஆற்றல் (தொல், பொருள். 558);; strength, power.

   7. பழக்கம் (பெருங். உஞ்சைக், 34:79, உரை);; practice, experience.

   8. வழிவகை; means, method.

     “வினவுஞ் சுவடுதனக் கின்மையின்” (பெருங். உஞ்சைக். 34:79);.

   9. வயிரக்கவசம் (சூடா.);; impenetrable armour.

   10. சுவட்டிலக்கம்

 table of grain measures.

   11. 360 நெற்கொண்ட அளவு (நாஞ்);; a unit of grain measure, containing 360 paddy grains.

   12. கட்டுதற்குக்கருவியான கயிறு முதலியவை (வின்.);; tie;

 strap, as of harness;

 band, as of the ridge of a house.

   13. அடிதாங்கி (வின்.);; stir up.

 சுவடு2 cuvaḍu, பெ. (n.)

   சுவை; taste, sweetness.

     “அடிமையிற் சுவடறிந்த” (ஈடு, 2. 6:5);.

     [சுவை → சுவடு]

சுவட்டவர்

சுவட்டவர் cuvaṭṭavar, பெ. (n.)

   காடையைப் பழக்கிப் போர் மூட்டுபவர்; those who train quails to fight.

     “சொல்லுஞ் சுவட்டவர் சொல்லுக” (பு.வெ.12, வென்றிப்.9); (செ.அக);.

     [சுவடு → சுவட்டு → சுவட்டவர்]

சுவட்டிலக்கம்

சுவட்டிலக்கம் cuvaṭṭilakkam, பெ. (n.)

   நெல்லிலக்கம்; table of grain measure.

     [சுவடு1,7 + இலக்கம்]

சுவணம்

சுவணம்2 cuvaṇam, பெ. (n.)

   1. ஒருபறவை; a bird.

   2. கருடன் (சங்.அக.);.

   3. கழுகு (யாழ்);; eagle.

     “கலுமுனும், கழுகும் உயரப் பறக்கும் பருத்தினத்தைச் சேர்ந்தனவாகவின் அப்பொ பெற்றன”.

     “உயரவுயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா?” என்னும் பழமொழியை நோக்குக.

உவணன் = கலுழன் (திவா.);

     [உவணம் → கவணம்]

ஒ.நோ. உதை → சுதை. உருள் → சுருள். உழல் → சுழல்

வடவர் கவனம் என்பதை, ஸு-பர்ண என்று திரித்தும், ஸூ+பர்ண என்று பிரித்தும் அழகிய இலை, அழகிய இவையுடையது, இவைபோன்ற அழகிய சிறகுகளை உடையது, பெரும்பறவை, கலுழன் என்று பொருள் விரித்தும், தம் ஏமாற்றுத்திறத்தின் பேரெல்வையைக் காட்டியுள்ளனர்.

     [ஸு = நல்ல, பர்ண = இலை (வ.வ);]

சுவண்டிலை

 சுவண்டிலை cuvaṇṭilai, பெ. (n.)

   திருகோண மலைச் செம்மரம்; Tirukkonamalai red wood.

மறுவ, சவண்டிலை, சவண்டலை

     [சுவண்டு + இலை]

சுவண்டு

சுவண்டு cuvaṇṭu, பெ. (n.)

   பொருத்தம்; propriety;

 fitness

     “பேய்கள்சூழ நடமாடிச் சுந்தரராய்த் தூமதியஞ் சூடுவது சுவண்டே” (தேவா. 677. 4);.

     [சுவடு2 → சுவண்டு]

சுவண்டை

 சுவண்டை cuvaṇṭai, பெ. (n.)

   இன்சுவை; taste.

     ‘சுவண்டையாய்த் தின்னத் திரிகிறான்’ (உ.வ.);.

     [சுவண் → சுவண்டு → சுவண்டை (வ.வ.);]

சுவதாசிகள்

 சுவதாசிகள் cuvatācigaḷ, பெ.(n.)

   குடமுழுக்கு போன்ற நிகழ்ச்சிகளில் பரதம் ஆடுபவர்கள்; temple dancers.

     [சுவயம்+தாசிகள்].

சுவத்துமுள்ளங்கி

 சுவத்துமுள்ளங்கி cuvattumuḷḷaṅgi, பெ. (n.)

சுவர்முள்ளங்கி பார்க்க;see Suvar-mullangi.

     [சுவர் + முள்ளங்கி]

சுவரக்ழ்கருவி

 சுவரக்ழ்கருவி cuvarakḻkaruvi, பெ. (n.)

   கன்னல்கோல் (பிங்.);; iron crow-bar used in house breaking

     [சுவர் + அகழ் + கருவி]

சுவரம்

 சுவரம் cuvaram, பெ. (n.)

   காய்ச்சல் (சங்.அக);; fever (செ.அக.);.

   ம. சுரம்;   தெ. கன்;து., வ.இ.மொ. H., U. јvara

     [சுரம் → சுவரம்]

சுவரறை

 சுவரறை cuvaraṟai, பெ. (n.)

   சுவர்ப்பேழை; cupboard;

 shelved recess in wall.

     [சுவர் + அறை]

சுவருத்தரம்

 சுவருத்தரம் cuvaruttaram, பெ. (n.)

   சுவரின் மேல் வைக்கும் உத்தரம் (இ.வ.);; wall plate.

     [சுவர் + உத்தரம்]

சுவரொட்டி

சுவரொட்டி1 cuvaroṭṭi, பெ. (n.)

   1. சுவர்முள்ளங்கி (வின்.); பார்க்க;see Suvar-mullangi.

   2. சுவரில் மாட்டும் சிறு கைவிளக்கு (இ.வ);; Small wall lamp.

   3. காப்பாகச் சுவரில் மாட்டும் ஆட்டீரல் (யாழ்ப்.);; the liver of a sheep stuck to a wall, as a charm.

   4. பிறரை ஒட்டியிருக்கும் பண்புடையவன்-ள் (இ.வ.);; one who sticks like a burr.

   5. ஒற்றுக்கேட்போன் (இ.வ.);; eaves dropper.

   6. சுவர்தாங்கி பார்க்க;see suvar-dingi.

     [சுவர்1 + ஒட்டி]

 சுவரொட்டி2 cuvaroṭṭi, பெ. (n.)

   பலரும் புரிந்து கொள்ளும் வகையில் பொது இடத்தில் ஒட்டி வைக்கப்படும் அச்சடிக்கப்பட்ட அல்லது எழுதப்பட்ட பெரிய அளவுத்தாள்; wall poster.

     ‘திரைப்படங்களின் வெற்றிக்கு வண்ண வண்ணச் சுவரொட்டிகளும் ஒரு கரணியம்’. (உ.வ.);.

     [சுவர் + ஒட்டி]

சுவர்

சுவர் cuvar, பெ. (n.)

   1. மேற்கூரையைத் தாங்கி நிற்பதற்கோ, காப்பு ஏற்படுத்துவதற்கோ, அறைகள் ஆக்குவதற்கோ கருங்கல், செங்கல், மண் போன்றவற்றால் எழுப்பப்படும் தடுப்பு: wall.

     “மரத்தினுஞ் சுவரினுங் கண்ணிய தெய்வம்” (மணிமே. 21:125);.

   2. தேரின் ஒருறுப்பு; fence round the seat of war-chariot.

     “நெரிந்தன தடஞ்சுவர்” (கம்பரா. சம்புமாலி. 27);.

   ம. சுமர், சுவர், சுமரு;   பழங். க. கேர்;   துட. கோல்;   குட. கெவன்; H., U. divar;

 Heb: shur;

 Pers: divar.

     [உல் → உலவு → உலாவு. உலாவுதல் = சூழ்தல். உல் → சுல் → சுற்று → சுற்றம். சுற்றுதல் = சூழ்தல். சுல் → சுள் → சூழ். சூழ்தல் = நாற்புறமும் வளைதல், சுல் → சுவல் → சுவர் = சூழநிற்றல், மறைப்பை ஏற்படுத்தும் தடுப்பு]

சுவர்க்கடிகாரம்

 சுவர்க்கடிகாரம் cuvarkkaḍikāram, பெ. (n.)

   சுவரில் மாட்டக்கூடிய பெரிய கடிகாரம்; wall clock.

     [சுவர் + (கடிகை + ஆரம்); கடியாரம்]

சுவர்க்கருவிலி

சுவர்க்கருவிலி cuvarkkaruvili, பெ. (n.)

சுவர்நாகம் (யாழ்ப்.); பார்க்க;see suvar-nagam.

     [சுவர்1 + கருவிலி]

சுவர்க்காயம்

 சுவர்க்காயம் cuvarkkāyam, பெ. (n.)

   உறுப்பு அல்லது உட்கிளையின் சுவர்; walls of an organ or cavity- parietes (சா.அக.);.

     [சுவர் + காயம்]

சுவர்க்கால்

சுவர்க்கால் cuvarkkāl, பெ. (n.)

   1. சுவரடி, அடிச்சுவர்; bottom of the wall.

   2. சுவர்மேல் கட்டும் நீர்க்கால் (இ.வ.);; water way on the wall.

     [சுவர் + கால்]

சுவர்க்கோழி

சுவர்க்கோழி cuvarkāḻi, பெ. (n.)

   1. சுவர் இடுக்கில் வாழ்வதும் இறக்கைகளை வேகமாக ஒன்றோடொன்று உரசுவதால் ஒருவகை ஒலி எழுப்பக்கூடியதுமான சிறிய பழுப்பு நிறப்பூச்சி, cricket.

மறுவ உறைவி, (வெண்பழுப்பு நிறமாய் உள்ளது); வெள்ளைப்பாய்ச்சான் (கரு நிறமாக உடல் வலுப்பெற்றிருப்பது); கரும்பாய்ச்சான், பாய்ச்சல் (தஞ்.);

     [சுவர் + கோழி]

சுவர்ச்சாதி

 சுவர்ச்சாதி cuvarccāti, பெ. (n.)

   ஒருவகைக் கார உப்பு (சத்தி சாரம்);; a kind of acid salt.

     [சுவர் + சாதி]

சுவர்தாங்கி

 சுவர்தாங்கி cuvartāṅgi, பெ. (n.)

   அணைசுவர்; buttress.

மறுவ: அணைப்புச் சுவர், தடுப்புச் சுவர்

     [சுவர் + (தாங்கு →); தாங்கி]

சுவர்நாகம்

 சுவர்நாகம் cuvarnākam, பெ. (n.)

   நச்சுப்பாம்பு வகை (வின்.);; a kind of poisonous snake.

     [சுவர் + நாகம்]

சுவர்ப்பலகை

சுவர்ப்பலகை cuvarppalagai, பெ. (n.)

   1. பெட்டியின் சுற்றுப்பலகை (வின்);; upright boards of a box, especially of a wardrobe.

   2. எழுதுபலகையாகப் பயன்படுத்தப்படும் சுவர் (இ.வ.);; wall black-board.

     [சுவர் + பலகை]

சுவர்மாடம்

சுவர்மாடம் cuvarmāṭam, பெ. (n.)

   1. சுவர்ப் புரை (வின்.);; niche, vaulted recess in house walls.

   2. மாடக்குழி, ஒளி வழிபாட்டிற்காகவும் முன்னோர் வழிபாட்டிற்காகவும் வீட்டுச் சுவரில் அகல்விளக்கு வைப்பதற்கான இடம்; a planed niche on the wall intended to light a small lamp for the sake of light-worship and forefather’s-worship.

மறுவ. புரை

     [சுவர் + மாடம்]

சுவர்முள்ளங்கி

 சுவர்முள்ளங்கி cuvarmuḷḷaṅgi, பெ. (n.)

   சுவரில் பற்றிப் படரும் ஒருவகைப் பூடு (வின்.);; parasitic plant growing on the walls.

     [சுவர் + முள்ளங்கி]

சுவர்மேற்பிதுக்கம்

 சுவர்மேற்பிதுக்கம் cuvarmēṟpidukkam, பெ. (n.)

   சுவரின் எழுதகவகை; String course (C.E.M.);.

     [சுவர் + மேல் + பிதுக்கம்]

சுவர்மேற்பூனை

சுவர்மேற்பூனை cuvarmēṟpūṉai, பெ. (n.)

   1. ருமனத்தனாக இருப்பவன்; person sitting on the fence, person of dubious attitude.

   2. அதுவோ இதுவோ என்ற ஐயநிலை; uncertain state.

     [சுவர் + மேல் + பூனை]

சுவர்வளையன்

 சுவர்வளையன் cuvarvaḷaiyaṉ, பெ. (n.)

சுவர் நாகம் பார்க்க;see Suvar-nagam.

     [சுவர் + வளையன்]

சுவர்விரியன்

 சுவர்விரியன் cuvarviriyaṉ, பெ. (n.)

சுவர் நாகம் (வின்.);;see Suvar-nagam.

     [சுவர் + விரியன்]

சுவறக்குழை-த்தல்

சுவறக்குழை-த்தல் Suvara-k-kulaittal,    4 செ.கு.வி. (v.i.)

ஊறும்படி கலத்தல், mixingso as to soak well (சா.அக.);.

     [சுவறு → சுவற + குழை-,]

சுவறப்பூசு-தல்

சுவறப்பூசு-தல் suvara-p-pusu,    5 செ.குன்றாவி, (v.t.)

   மருந்தெண்ணெய் முதலியவற்றைச் சூடுபெறத் தேய்த்தல்; rubbing with pressure on the surface of the body so as to create heat, as is done with ointment or medicated oil. (சா.அக.);.

     [சுவறு → சுவற + பூசு-,]

சுவறிநில்!ற்)-(ற)தல்

 சுவறிநில்!ற்)-(ற)தல் suvarinil, செ.கு.வி. (v.i.)

   உடம்பில் நோய் ஊறியிருத்தல்; continuing a long time as a disease in the system.

மறுவ. சுவறியிருத்தல்

     [சுவறு → சுவறி + நில்-,]

சுவறு-தல்

சுவறு-தல் suvaru,    5 செ.கு.வி (v.i.)

   1. வற்றுதல்; to dry up, evaporate.

     “கடல் கவறின தோற்றம்” (கம்பரா. முதற்போர்.191);.

   2. உறிஞ்சப்படுதல்; to be imbibed absorbed.

     ‘வறண்ட நிலத்தில் நீர் சுவறிவிடும்’ (உ.வ.);.

சுவற்று-தல்

சுவற்று-தல் suwarru-,    5 செகுன்றாவி (v.t.)

   1. வற்றச்செய்தல்; to dry up, absorb, cause to subside.

     “துயர்க்கடல் சுவற்றினை” (கந்தபு. அக்கினி. 229);.

   2. முற்றும்அழித்தல்; to extipate destroyutterly.

     “வீரஞ் சுவற்றிய பின்” (காஞ்சிப்பு. வீரரா.28);.

     [சுவறு → சுவற்று-,]

சுவற்றுப்பல்லி

 சுவற்றுப்பல்லி cuvaṟṟuppalli, பெ. (n.)

   சுவரில் சத்தமிடும் ஒருவகைப் பல்லி; wall lizard (சா.அக.);

     [சுவர் + பல்லி]

சுவற்றுப்பாசி

 சுவற்றுப்பாசி cuvaṟṟuppāci, பெ. (n.)

   சுவரில் படரும் பாசி; the yellow wall lichen;

 the stone crop;

 wall moss (சா.அக.);.

     [சுவர் + பாசி]

சுவற்றுப்பூ

 சுவற்றுப்பூ cuvaṟṟuppū, பெ. (n.)

   சுவரில் முளைக்கும் மஞ்சள்நிற நறுமண மலர்; plant with yellow flowers in its wild state on old walls (சா.அக.);.

     [சுவர் + பூ]

சுவற்றுப்பேன்

 சுவற்றுப்பேன் cuvaṟṟuppēṉ, பெ. (n.)

   மூட்டைப் பூச்சி; bug (சா.அக);.

     [சுவர் + பேன்]

சுவற்றுமுள்ளங்கி

 சுவற்றுமுள்ளங்கி cuvaṟṟumuḷḷaṅgi, பெ. (n.)

சுவர்முள்ளங்கி பார்க்க;see suwar-mullangi.

சுவலை

 சுவலை cuvalai, பெ. (n.)

அரசமரம் (மலை);.

சுவலொட்டி

சுவலொட்டி cuvaloṭṭi, பெ. (n.)

சுவரொட்டி1, 3 பார்க்க;see Suvar-otti1.3

     [சுவரொட்டி → சுவவொட்டி]

சுவல்

சுவல் cuval, பெ. (n.)

   1. பிடர் (பிங்.);; nape of the neck.

   2. தோட்கட்டு; upper part of the shoulder.

     “கூழை சுவன்மிசைத் தாதொடு தாழ” (கலித். 56);

   3. முதுகு; back.

     “சுவலோடு வாரலையப் போவார்” (பெரியபு, திருநாளைப். 18);.

   4. குதிரைப் பிடரி;கழுத்துமயிர்; horse’s mane.

     “பன்மயிர்க் கொய்சுவல்” (கலித் 96);.

   5. மேடு (பிங்.);; hillock

     “வேங்கைச் செஞ்சுவல்” (புறநா. 120);.

   6. தொல்லை (அக.நி.);; trouble, hardship

ம. சுவல்

சுவவு

சுவவு cuvavu, பெ. (n.)

   1. பறவைமூக்கு; bird’s beak.

   2. மூஞ்சூறு; grey musk-shrew.

சுவாக்கீரை

 சுவாக்கீரை cuvākārai, பெ. (n.)

   ஒரு வகைப்பூண்டு; a plant.

     [சுவை → சுவா + கீரை]

சுவாத்தன்

 சுவாத்தன் cuvāttaṉ, பெ.(n.)

   முதுகுளத்தூர் வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in MudukulatturTaluk.

     [ஒருகா.சிவத்தன்-கவாத்தன்].

சுவாலை மகுடம்

 சுவாலை மகுடம் cuvālaimaguḍam, பெ.(n.)

சிற்பங்களில் வடிவமைக்கப்படும் ஒரு மகுடம்,

 crown design seen in statues.

     [சுவாலை+மகுடம்].

சுவை

சுவை1 suvai-,    4 செ.குன்றாவி (v.t.)

   1. சுவையறிதல்; to taste.

   2. உண்ணுதல்; to eat, chew, suck.

     “சுவைத்தொறழூஉந்தன் மகத்துமுக நோக்கி” ([புறநா. 164);.

   3. முத்தமிடுதல்; to kiss.

     “புல்லுதல் சுவைத்திடல்” (கந்தபு. இந்திரபுரி. 38);.

   4. புணர்ச்சியின்பம் நுகர்தல் (சங்.அக.);; to experience, enjoy.

   ம. சுவய்க்குக;   க. சவி;   தெ. சவிகொனு;   து. சம்பி, சவி;   கோத, சய்வ்;   நா. சவத்;கொலா. சவ்வி (இனிப்பு);

     [அகைத்தல் = கூறுபடுத்துதல், அறுத்தல். அகை → சகை → சவை. ச.வைத்தல் = மெல்லுதல், மென்று உண்ணுதல், சவை = சுவை சுவைத்தல் = மெல்லுதல், மென்று உண்ணுதல், உண்டு சுவையறிதல்]

 சுவை2 suvai-,    4 செ.கு.வி. (v.i.)

   சுவையாதல்; to be palatable, agreeable, pleasing.

     “இக்கரும மென்றனுக்குச் சுவைப்பதிலை” (திருக்காளத்புஞானயோ1);.

 சுவை3 cuvai, பெ. (n.)

   1. சுவையும் மணமும்; taste and flavour.

     “அறுசுவையுண்டி” (நாலடி.1);.

   2. இனிமைத்தன்மை (பிங்.);; Sweetness, deliciousness.

   3. இனிமையானது (சூடா);; that which is pleasing or gratifying to the senses.

   4. புலன்களுள் நாவின் உணர்வு; the sense of taste, one of ai-m-pulan.

     “சுவையொளி யூறோசை நாற்றம்” (குறள், 27);.

   5. அறுசுவையும்

   தோன்றுவதற்குக் காரணமான உமிழ்நீர்ச் சுரப்பு; the subtle matter from which water is said to have evolved.

   6. செய்யுளின் சாரத் தன்மை (இலக். வி. 665);; poetic sentiment.

   7. பதினாலாவது விண்மீனான நெய்ம்மீன் (சித்திரை); (திவாr.);; the 14th naksatra.

   8. அறிவால் உணரப்படும் மெய்ப்பாடு; taste which is understood by brain.

     “சுவை என்பது காணப்படும் பொருளால் காண்போரகத்தின் வருவதோர் விகாரம்” (இளம் தொல். பொருள். 245);.

   ம. சுவ;தெ., க. சவி.

சுவைகமம்

 சுவைகமம் cuvaigamam, பெ. (n.)

   மலை ஆமணக்கு; hill castor plant (சா.அக.);.

சுவைகாணல்

 சுவைகாணல் cuvaikāṇal, பெ. (n.)

   சுவையறிகை; to taste by the tongue and palate (சா.அக.);.

     [சுவை + காணல்]

சுவைக்காட்டு-தல்

சுவைக்காட்டு-தல் suvai-k-kattu,5 செ.குன்றாவி, (v.t.)

   1. சுவையாதல்; to be tasteful.

   2. சுவை தருதல்; to give a taste.

   3. ஆசை காட்டுதல்; to entice, allure, decoy.

   4. இனிப்புப் காட்டல்; to make agreeable.

     [சுவை + காட்டு-,)]

சுவைக்கேடு

 சுவைக்கேடு cuvaikāṭu, பெ. (n.)

   சுவை இழக்கை; loss of sensation of taste (சா.அக.);.

     [சுவை + கேடு. கெடு → கேடு]

சுவைஞர்

 சுவைஞர் cuvaiñar, பெ. (n.)

   இலக்கியம், கலை ஆகியவற்றை ஆழ்ந்து நுகரும் பண்புடையவர்; connoisseur of literature.

சுவைதட்டு

சுவைதட்டு1 suvai-tattu,    5 செ.கு.வி (v.i)

   சுவை தோன்றல்; finding agreeable to taste.

     ‘கூட்டில் கொஞ்சம் உப்புச்சேர்த்த பின்னரே சுவை தட்டுகிறது’ (உ.வ.);. (சாஅக);.

     [சுவை + தட்டு-,]

சுவைநரம்பு

 சுவைநரம்பு cuvainarambu, பெ. (n.)

   சுவை அறியும் நரம்பு; nerve pertaining to the sense of taste-Gustatory nerve (சா.அக.);.

மறுவ. சுவையரும்பு

     [சுவை + நரம்பு]

சுவைப்படுத்து-தல்

சுவைப்படுத்து-தல் suwai-p-paduttu-,    5 செ.குன்றாவி (w.t.)

சுவைக்காட்டு-தல் பார்க்க;see Suvai-k-kattu-.

     [சுவை + படுத்து-,]

சுவைப்பரீட்சை

 சுவைப்பரீட்சை cuvaipparīṭcai, பெ. (n.)

   சுவைத்து அறிதல்; examination by the sense of taste (சா.அக.);.

 Skt. parikṣa → த. பரீட்சை

     [சுவை + பரீட்சை]

சுவைப்பொருள்

 சுவைப்பொருள் cuvaipporuḷ, பெ. (n.)

   சிற்றுண்டி;   தின்பண்டபம்; catables (சா.அக);.

     [சுவை + பொருள்]

சுவைமிகுதி

 சுவைமிகுதி cuvaimigudi, பெ. (n.)

   அறுசுவைப் பண்டங்களை முறையாகக்கொள்ளாமல் அதிகமாக ஏற்பது; instead of eating substances of each taste in equal measure to eat substances of certain taste in excess (சா.அக.);

     [சுவை + மிகுதி]

சுவைமூலம்

 சுவைமூலம் cuvaimūlam, பெ. (n.)

   நாவில் சுவையறியும் பகுதி; end of the gustatory nerve in the papillae of the tongue (சா.அக.);.

     [சுசவை + மூலம்]

சுவைமை

சுவைமை cuvaimai, பெ. (n.)

   சுவைத்தன்மை; taste, flavour.

     “சுவைமை யிசைமை” (பரிபா.1314);.

     [சுவை → சுவைமை]

சுவையணி

சுவையணி cuvaiyaṇi, பெ. (n.)

   உண்ணிகழுந் தன்மை வெளிப்பட்ட எண்வகை மெய்ப் பாட்டினாலும் விளங்கும் அணியழகு (தண்டி-68);; a figure of speech which consists in describing the eight sentiments.

     [சுசவை + அணி]

சுவையாதீதம்

 சுவையாதீதம் cuvaiyātītam, பெ. (n.)

   சோற்றுப்பு; common salt (சா.அக.);.

     [சுவை + அதீதம்]

சுவையின்மை

 சுவையின்மை cuvaiyiṉmai, பெ. (n.)

   சுவை யில்லாமை; tastelessness; inspidity (சா.அக.);.

     [சுவை + இன்மை]

சுவையிலசுவரம்

 சுவையிலசுவரம் suvaiyilasuvaram, பெ. (n.)

   செம்மரம்; amoora rohituka (சா.அக.);,

சுவையுள்ள

சுவையுள்ள Suvai-yulla, பெ.எ.(adj.)

   சுவையுடைய; palatable;

 sapid savoury (சா.அக.);.

     [சுவை + உள்ள)

சுழல்1(லு);-தல் sulal(lu);-, 13 செ.கு.வி. (v.i);

   1. உருளுதல்; to whirl, spin, rotate, roll, turn on anaxis, as wheel.

     “தேர்க்காலாழியிற் சுழன்றவை” (பெருங். வத்தவ. 12:205);.

   2. வட்டமாகச் சுற்றுதல்; to revolve in an orbit.

     “சுழன்றிலங்கு வெங்கதிரோன்” (திவ். பெரியதி. 9, 4:6);

   3. சுற்றித் திரிதல்; to roam, wander.

     “குழலின்படி சுழலும்” (கம்பரா. கங்கைப். 3);.

   4. அலைவுபடுதல்; to be tossed about, driven to and fro.

     ‘காற்றால் கப்பல் சுழல்கின்றது’ (உ.வ.);.

   5. மனங்கலங்குதல்; to be agitated, troubled, distressed in mind.

     “சுழலுஞ் சுராசுர்க ளஞ்ச” (திவ். இயற். 1, 48);.

   6. சோர்தல்; to droop, faint, languish.

     ‘அவன் பசியினாற் சுழன்று போனான்’ (உ.வ.);.

   7. பொறிமயங்குதல்; to be dizzey to swim, as eyes.

     “கண்ணுஞ் சுழன்று பீளையோடு” (திவ். பெரியதி. 7. 4:1);.

   ம. சுழலுக;தெ. சுடியு