செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை வெளியீடு
31 தொகுதி 12000 பக்கங்கள் கொண்ட பேரகரமுதலி


1

10838

2769

3111

538

3554

677

1093

620

189

1004

402

2
க்
1

8212
கா
2579
கி
564
கீ
222
கு
4598
கூ
780
கெ
615
கே
391
கை
1101
கொ
2417
கோ
1754
கௌ
110
ங்
1

2
ஙா
2
ஙி
1
ஙீ
1
ஙு
1
ஙூ
1
ஙெ
1
ஙே
1
ஙை
1
ஙொ
5
ஙோ
1
ஙௌ
1
ச்
1

5235
சா
1186
சி
2424
சீ
439
சு
1261
சூ
420
செ
1529
சே
470
சை
23
சொ
409
சோ
365
சௌ
1
ஞ்
1

15
ஞா
44
ஞி
3
ஞீ ஞு ஞூ ஞெ
34
ஞே
5
ஞை
2
ஞொ
3
ஞோ
2
ஞௌ
1
ட்
1

1
டா
1
டி
1
டீ
1
டு
1
டூ
1
டெ
2
டே
1
டை
1
டொ
1
டோ
1
டௌ
ண்
1

1
ணா
1
ணி
1
ணீ ணு
1
ணூ
1
ணெ
2
ணே
1
ணை
1
ணொ
1
ணோ
1
ணௌ
த்
3113
தா
1530
தி
2203
தீ
393
து
1238
தூ
411
தெ
694
தே
856
தை
39
தொ
878
தோ
459
தௌ
ந்
1

2789
நா
204
நி
1860
நீ
1161
நு
14
நூ
18
நெ
892
நே
318
நை
89
நொ
210
நோ
159
நௌ
2
ப்
1

4560
பா
1824
பி
492
பீ
25
பு
2224
பூ
1133
பெ
1064
பே
483
பை
127
பொ
1218
போ
478
பௌ
2
ம்
4760
மா
1422
மி
535
மீ
268
மு
3016
மூ
949
மெ
396
மே
751
மை
152
மொ
284
மோ
242
மௌ
ய்
1

119
யா
426
யி
1
யீ
1
யு
46
யூ
20
யெ
9
யே
1
யை
1
யொ
1
யோ
98
யௌ
1
ர்
87
ரா
107
ரி
11
ரீ
7
ரு
24
ரூ
20
ரெ
6
ரே
16
ரை
10
ரொ
8
ரோ
23
ரௌ
ல்
117
லா
44
லி
8
லீ
5
லு
8
லூ
3
லெ
13
லே
21
லை லொ
20
லோ
63
லௌ
3
வ்
1

3800
வா
1329
வி
1638
வீ
515
வு
1
வூ
1
வெ
2164
வே
834
வை
229
வொ
1
வோ
3
வௌ
ழ்
1

1
ழா
1
ழி
1
ழீ
1
ழு
6
ழூ
1
ழெ
1
ழே ழை ழொ ழோ
1
ழௌ
ள்
1

2
ளா
1
ளி
1
ளீ
1
ளு
1
ளூ
1
ளெ
2
ளே
1
ளை
1
ளொ
1
ளோ
1
ளௌ
ற்
1

1
றா
1
றி
1
றீ
1
று
1
றூ
1
றெ
2
றே
1
றை
1
றொ
1
றோ
1
றௌ
ன்
1

1
னா
1
னி
1
னீ
1
னு
1
னூ
1
னெ
2
னே
1
னை னொ
1
னோ
1
னௌ
தலைசொல் பொருள்
சீ

சீ2 cī, பெ. (n.)

   1. சீழ்; pus.

     “சீயார்ந் திமொய்த்து” (திருவாக.25: 3.);

   2. சளி; mucous matter, as of the nose.

     “குமிழ்மூக் குவைகாணுமிழ்சீ யொழுக்குவ” (மணிமே 20:48);.

   3. விந்து; semen.

   4. மகளிர்தம் அரத்தப் போக்கு; menstrual blood.

   5. புண்ணில் வடியும் நீர்; fluid oozing out from wound or ulcer.

   6. அரத்தமுறிவு; purulance.

   7. நஞ்சு; poison.

   ம. சி;   க. சீவு, கீவ, கீமு, கீ;   தெ. சீ.மு;   து. சீவு;   குட. சீய்;   கோத. சிவ்;   துட. கிதில்;   கூ. சிவெஞ்சி;   குவி. சீவச்சி;   நா. சீம;   கொலா. சீம்;   குரு. கீத்த்னா, மா. கி.தொ. கித்ரொ, ஜ;பிரா. கீழ் பட. கீவு

   சீ3 இடை (int);. இகழ்ச்சி வெறுப்புகளின் குறிப்பு; an exclamation of contempt, disgust, repudiation.

சீ என்கிற வீட்டில் ஈயும் நுழையாத

 சீ4 cī, பெ. (n.)

   பாராமுகம் (அலட்சியம்);; disdain, sprun.

     “சீயேதுமில்லாதென் செய்பணிகள் கொண்டருளும்” (திருவாச. 10: 12);.

ம. க., தெ. து. சீ

 Mar. ci

 சீ5 cīttal,    4 செகுன்றாவி (v.i.)

   1. கீறிக் கிளறுதல்; to scratch, as fowls;

 to tear up earth, as pigs;

 to scrape.

   2. துடைத்தல்; to sweep off, brush away, wipe off.

     “மென்பூஞ் செம்மலொடு நன்கலஞ் சீப்ப” (மதுரைக் 685);.

   3. போக்குதல்; to expel, remove, root out.

     “இருள் சீக்குஞ் சுடரேபோல்” (கலித். 100:24);.

   4. தூயதாக்குதல் (சூடா.);; to cleanse, purify.

   5. கூர்மையாகச் சீவுதல்; to sharpen.

     “கணிச்சிபோற் கோடு சீஇ” கலித் 101:8). ம. சீ;

க. சீ

சீக்கட்டு-தல்

கிளறுதற் பொருள் துடைத்தலுக்கும், துடைத்தற் பொருள் துடைத்துப் போக்குதலுக்கும், புடைபெயர்ந்தது. துடைத்துப் போக்கிய பின் தூயதாதலும், கூர்மையாதலுமென விரிந்தது.

சீகஞ்சாறு

 சீகஞ்சாறு cīkañjāṟu, பெ. (n.)

   சிறுகீரையிலைச்சாறு; juice of pigs green (சா.அக.);.

சீகா

சீகா1 cīkā, பெ. (n.)

   ஐம்பொன் (இராட்);; the five metals.

 Skt. Sisadi

 சீகா2 cīkā, பெ. (n.)

   சீயக்காய்; soap-nut powder (சா.அக.);.

க. சீகெ

     [சீகை → சீகா]

சீகாமரம்

சீகாமரம்1 cīkāmaram, பெ. (n.)

   மருத யாழ்த் திறங்களுள் ஒன்று (பிங்.);; an ancient secondary melody type of the marudam class.

 சீகாமரம்2 cīkāmaram, பெ. (n.)

   சீயக்காய் மரம்; soap-pod tree (சா.அக.);.

     [சிகை → சீகா + மரம்]

சீகாரம்

 சீகாரம் cīkāram, பெ. (n.)

   பண்வகை (சங்அக);; a melody type.

சீகு

சீகு cīku, பெ. (n.)

   1. சீகம்புல்; broom-grass.

   2. கருப்பு வாகை; black sirissa.

மறுவ. சீகுப்புல்

   தெ. சீபுரு;க. சீபரி

     [சீழ்கு → சீகு]

சீகுபத்தி

 சீகுபத்தி cīkubatti, பெ. (n.)

அருப்புக்கோட்டை வட்டத்திலுள்ள சிற்றுார்,

 a village in Aruppukkottai Taluk.

     [ஒருகா சிங்கன்+பட்டி]

சீகை

சீகை cīkai, பெ. (n.)

   1. வழலையைப் போல் குளியலுக்கு உதவும் காயைத் தரும் மரம்; a tree the pods of which are used the soap for washing the hair, etc.

க. சீபரி

     [சீத்தல் = துடைத்தல், கழுவுதல். சீ → சீகு]

சீகைக்காய்

 சீகைக்காய் cīkaikkāy, பெ. (n.)

   சீக்காய்; soap pod (சா.அக.);.

   ம. சீக்காயி, சீயக்காயி;   க. சீகெகாயி;தெ. தீகாயி, சீகாயி,

     [சிகைக்காய் → சிகைக்காய்]

சீக்கட்டு-தல்

சீக்கட்டு-தல் cīkkaṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   சீழ்பிடித்தல்; to suppurate.

     [சிம்கட்டு → சிக்கட்டு-,]

சீக்கராம்பட்டை

 சீக்கராம்பட்டை cīkkarāmbaṭṭai, பெ. (n.)

   உசிலப்ட்டை; albizzia amara barks (சா.அக.);.

     [சீக்கிராம் + பட்டை]

சீக்கல்

சீக்கல்1 cīkkal, பெ. (n.)

சீழ்க்கை (யாழ்.அக.); பார்க்க;see Silkkai. க. சிள்ளு

     [சீம்க்கை → சிக்கை → சிக்கல்;ஒ.நோ. வாழ்க்கை → வாக்கை → வாக்கன் அவனது வகைதொகையில்லா வாக்கவைப் பற்றிப் பேசிப் பயனென்ன எனும் உலக வழக்கு இன்றுமுள்ளது]

 சீக்கல் cīkkal, பெ. (n.)

   கல்வகை (நாஞ்.);; laterite.

ம. சீக்கல்லு

 சீக்கல்2 cīkkal, பெ. (n.)

   காது; car (சா.அக.);.

சீக்காச்சா

 சீக்காச்சா cīkkāccā, பெ. (n.)

   நாய்ப்புடல் எனும் கொடிவகை; wild snake gourd.

சீக்காது.

 சீக்காது. cīkkātu, பெ. (n.)

சீழ்க்காது பார்க்க;see Sis-k-kädu.

ம. சீக்காது

     [சீழ்க்காது → சிக்காது]

சீக்காயன்

சீக்காயன் cīkkāyaṉ, பெ. (n.)

   வெளிறின முகமுள்ளவன் (யாழ்.ப்);; man with a sallow countenance, like the unripe palmyra fruit.

     [சீக்காய்2 → சீக்காயன்]

சீக்காய்

சீக்காய்1 cīkkāy, பெ. (n.)

சீழ்க்கை (யாழ்ப்); பார்க்க;see Silkkai.

     [சீழ்க்கை → சீக்கை → சிக்காய்]

 சீக்காய்2 cīkkāy, பெ. (n.)

   பழுக்காத பனங்காய் (யாழ்ப்.);; unripe palmyra fruit.

 சீக்காய்3 cīkkāy, பெ. (n.)

சீயக்காய் (இ.வ.); பார்க்க; sec šīya-k-kãi.

   ம. சீவய்க்க, சீகக்காய்;   க. சீகெகாயி;   தெ. சீகாய்;து. சீகெகாயி: துட. சிங்கு.

     [சீயக்காப் – சிக்காய்]

சீக்காய்ச்சடங்கு

சீக்காய்ச்சடங்கு cīkkāyccaḍaṅgu, பெ. (n.)

சில இனத்தாருள் ஒரளவு அரிசியில் சீயக் காயும் எழுத்தாணியும் வைத்து மணமகன் முகத்துக்கு நேராகக் காட்டிக் கண்ணேறு கழிக்கும் மணச்சடங்கு (இ.வ.);;169

சீக்கிராம்பட்டை

 ceremony in marriage among certain castes for warding off the evil eye, which consists in holding up to the face of the bride-groom a measure full of rice with a piece of soap-pod and a writing style in it.

     [சீக்காய் + சடங்கு]

சீக்காய்ச்சி

சீக்காய்ச்சி cīkkāycci, பெ. (n.)

   வெளிறின முகமுள்ளவள்; woman with a sallow countenance.

     [சிக்காப்2 – சீக்காய்ச்சி = பழுக்காத பனங் காப் போன்ற வெளிறின முகமுடையவன்]

சீக்காய்நிறம்

சீக்காய்நிறம் cīkkāyniṟam, பெ. (n.)

   வெளிறின நிறம் (யாழ்.அக.);; dull green colour.

     [சிக்காய்2 + திறம்]

சீக்கிதாவிகம்

 சீக்கிதாவிகம் cīggitāvigam, பெ. (n.)

   நரிப்புடலை; ordinary sanke-gourd (சா.அக.);.

சீக்கிரவீரணம்

 சீக்கிரவீரணம் cīkkiravīraṇam, பெ. (n.)

   பெரிய முள்ளங்கி; a variety of radish-large (சா.அக.);.

சீக்கிராந்தி

 சீக்கிராந்தி cīkkirāndi, பெ. (n.)

 Indian spinach (சா.அக.);.

சீக்கிராந்துள்

 சீக்கிராந்துள் cīkkirānduḷ, பெ. (n.)

   உசிலம் பொடி; powder of the washing tree (சா.அக.);.

     [சிக்கிராம் + தூள்]

சீக்கிராம்

சீக்கிராம் cīkkirām, பெ. (n.)

   ஒருவகை மரம்; black sirissa.

மறுவ. சீக்கிரி

 சீக்கிராம்2 cīkkirām, பெ. (n.)

   சவர்க்காரத்திற்குப் பதிலாகப் பயன்படுத்தும் சீக்காய்ப்பொடி; soap-nut powder (சா.அக.);.

     [சீக்காய்3 → சீக்கிராம்]

சீக்கிரி

சீக்கிரி cīkkiri, பெ. (n.)

   1. உசிலமரம்; albizzia amara.

   2. வெட்டுப்பாக்கு; sliced arecanut (சா.அக.);.

சீக்கிரியன்

சீக்கிரியன் cīkkiriyaṉ, பெ. (n.)

சிக்கிரி,-1 (யாழ்.-அக.); பார்க்க; see Sikkiri,-1.

     [சிக்கிரி + சிக்கிரியன்]

சீக்கிரியான்

சீக்கிரியான் cīkkiriyāṉ, பெ. (n.)

சிக்கிரி,-1 சீக்கிரி,-1 (மலை.); பார்க்க;see šikkiri,-1.

     [சீக்கிரி – சீக்கிரியான்)

சீக்கிரிவேர்

 சீக்கிரிவேர் cīkkirivēr, பெ. (n.)

காசினிவேர்,

 chicori root (சா.அக.);.

     [சீக்கிரி + வேர்]

சீக்கு

 சீக்கு cīkku, பெ. (n.)

   செத்தை, குப்பை (யாழ்.அக.);; rubbish.

     [சீ → சிக்கு]

சீக்குச்சி

 சீக்குச்சி cīkkucci, பெ. (n.)

   துடைப்பக் குச்சி; broom Stick.

     [சீ+குச்சி]

சீக்குரி

 சீக்குரி cīkkuri, பெ. (n.)

   கோழியவரை; fowl’s bean.

மறுவ. தம்பட்டையவரை.

சீக்குரு

 சீக்குரு cīkkuru, பெ. (n.)

   முருங்கை (மலை.);; horse-radish tree.

     [சிக்குரு → சீக்குரு]

சீக்கூட்டு-தல்

சீக்கூட்டு-தல் cīkāṭṭudal,    5 செ.குவி (v.i.)

சீக்கட்டு- (வின்); பார்க்க;see sikkattu-.

     [சீக்கட்டு → சிக்கூட்டு. கூட்டு = சேர்]

சீக்கூட்டுவிரியன்

 சீக்கூட்டுவிரியன் cīkāṭṭuviriyaṉ, பெ. (n.)

   ); தன் கடியால் சீழை உண்டாக்கும் விரியன் பாம்புவகை (இ.வ.);; pus-viper, as causing pus to form by its bite.

     [சீக்கூட்டு + விரியன். விரி → விரியன் = பாம்பு வகை]

சீக்கை

சீக்கை cīkkai, பெ. (n.)

   கோழை; phlegm.

     “சீக்கை விளைந்தது” (திருமந்.147);.

சீக்கொள்(ளு)-தல்

சீக்கொள்(ளு)-தல் Sikkolu,    16 செ.கு.வி (v.i.)

சீழ்கட்டுதல் பார்க்க;see Silkaliu.

     [சிம் + கொன்-,]

சீங்கட்டான்

 சீங்கட்டான் cīṅgaṭṭāṉ, பெ. (n.)

   முள் வேங்கை; spinous kino tree (சா.அக.);.

சீங்கண்ணி

 சீங்கண்ணி cīṅgaṇṇi, பெ. (n.)

   முதலைவகை (நாஞ்);; a species of crocodile.

ம. சிங்கண்ணி

     [சீ= புண்ணினின்று வடியும் நீர் கண்ணி, சீ கண்ணி]

சீங்காய்

 சீங்காய் cīṅgāy, பெ. (n.)

   இண்டு (L.);; eight pinnate, soap-pod

     [சீத்தல் = துடைத்தல், தூயதாக்குதல், கழுவுதல். சீ + காப் – சீங்காய் = உடம்பைத் து யதாக்குவதற்குப் பயன்படும் காய்)

சீங்குழல்

சீங்குழல் cīṅguḻl, பெ. (n.)

   குழல் வகை; a kind of flute.

     “தித்தி சிறுமுகவீணை சீங்குழல்” (குற்றா. தல. துருமசாமி.54);.

ம. சீங்குழல்

     [தீங்குழல் → சீங்குழல்]

சீங்கை

 சீங்கை cīṅgai, பெ. (n.)

   வேலமர வகையுள் ஒன்று; acacia pennata (சா.அக.);.

சீச

சீச  sisi,  இடை (int.)

சீச்சி பார்க்க;see si-c-ci.

     “சீசியிவையுஞ் சிலவோ” (திருவாச. 7:2);

     [சீச்சி → சீசி (செய்யுள் வழக்கு);]

சீசமங்களம்

 சீசமங்களம் cīcamaṅgaḷam, பெ. (n.)

   வேலூர் மாவட்டத்தில் ஆரணிக்கு அருகில் உள்ள ஓர் ஊர்; a village in Vellore, near the Arani.

     [சியன்+மங்கலம்].

சீசீ

 சீசீ cīcī, பெ. (n.)

சீச்சீ பார்க்க;see si-c-ci

து. சீச

     [சீச்சீ → சீசீ]

சீசு

 சீசு cīcu, பெ. (n.)

   கருங்காலி மரவகையுள் ஒன்று; a kind of rose-wood (சா.அக.);.

சீச்சீ

 சீச்சீ  si-c-ci  இடை (int.)

   இகழ்ச்சிக்குறிப்பு (பிங்.);; an exclamation of contempt, abhorrence.

     ‘சீச்சி என்கிறதும் இந்த வாய்தான் சிவசிவ என்கிறதும் இந்த வாய்தான்’ (பழ.);.

து. சீசீ

     [சீ = இகழ்ச்சின் குறிப்பு. சீ + சீ – சிச்சி – அடுக்குத் தொடர்]

சீடகாபி

 சீடகாபி cīṭakāpi, பெ. (n.)

   இலவமரம்; silk cotton tree (சா.அக.);.

சீடிமண்

 சீடிமண் cīṭimaṇ, பெ. (n.)

   அப்பிரமண்; talc earth (சா.அக);.

சீடு

சீடு1 sidu,     5 செ.குன்றாவி (v.t)

   மூடுதல்; to cover.

     “பொடிசீடின தணல்போலே யிருக்கை” (திவ். திருச்சந்த. 9, வியா, ப. 29);.

 சீடு2 cīṭu, பெ. (n.)

   நெசவில் பயன்படுத்தும் எட்டுக்குஞ்சவளவு நீளமுள்ள நூற்கண்டு; skein of thread =

   8. kunjam.

தெ. சீடு, க. சிடகு

     [சீர் = துலை, அளவு, சீர் → (சீட்); → சீடு]);

சீடை

சீடை cīṭai, பெ. (n.)

   1. உருண்டை வடிவான சிறுநொறுவை வகை; small ball cakes of rice flour.

     “சீடைகாரெள்ளினுண்டை” (திவ். பெரியாழ். 2.99);,

   2. நருங்கல் (யாழ்ப்);; stunted

 growth, as of tree, child, etc.

   3. நான்கு விரல நீளமும் மஞ்சள் கலந்த நீலநிறமுமுள்ள மீன்வகை; sardine, golden shot with purple, attaining 4 in. in length.

   ம. சீட;   க. சீடெ, சீடெ;தெ. சிடெலு, சீட, சீடெ.

     [சீல் → சிறு → சிடு → சீடு → சீடை]

சீடைபாய்ச்சல்

 சீடைபாய்ச்சல் cīṭaipāyccal, பெ. (n.)

   களை படர்ந்த காடுகளில் நீர் பாய்ச்சுதல்; watering the dryland.

     [சீடை+பாய்ச்சி].

சீடைப்புழு

 சீடைப்புழு cīṭaippuḻu, பெ. (n.)

   செடிகளிலுள்ள புழுவகையுளொன்று; a worm foundin plants (சா.அக.);.

க. சீடெகுளு

     [சீடை + புழு]

சீடையாய்ப்போ-தல்

சீடையாய்ப்போ-தல் sidai-yiy-p-po-    8 செ.கு.வி. (v.i.)

   அதிர்ச்சியால் வளர்ச்சி குன்றல்; to be stunted in growth (சா.அக.);.

     [சீடையாய் + போ. சிட்டு → சீட்டு → சீடை. சிட்டு = சிறியது, குட்டையானது, வளர்ச்சியற்றது]

சீட்டஞ்சேரி

 சீட்டஞ்சேரி cīṭṭañjēri, பெ. (n.)

   காஞ்சிபுரம் வட்டத்தில் சிற்றுார்; a village in Kanchipuram Taluk.

     [சிட்டன்+சேரி].

சீட்டனுப்பு-தல்

சீட்டனுப்பு-தல் Silanuppu,    5 செகுவி (v.i.)

சீட்டுக்கொடு-த்தல் பார்க்க;see situ-k-kodu-

     [சீட்டு + அனுப்பு-,]

சீட்டாடு-தல்

சீட்டாடு-தல் Sidiu,    5 செ.கு.வி (v.i.)

   சீட்டு விளையாடுதல்; to play at cards (செ.அக.);

   க. சீடாடு;பட. சீட்டாடு

     [சீட்டு + ஆடு-]

சீட்டாட்டம்

சீட்டாட்டம் cīṭṭāṭṭam, பெ. (n.)

   54 அட்டைகளைக் கொண்டு விளையாடும் விளையாட்டு; cards play.

ம. சீட்டுகளி, சீட்டுக்கச்சேரி

     [சீட்டு + ஆட்டம்]

சீட்டாள்

 சீட்டாள் cīṭṭāḷ, பெ. (n.)

மடல் கொண்டு செல்லும் வேலைக்காரன்,

 servant, as carrying letters.

   சீட்டாளுக்கொரு மூட்டாளா? ‘ஆட்டாளுக்கொரு சீட்டாள்;அடைப்பக் காரனுக்கொரு துடைப்பக்கட்டை’ (பழ.);

     [சீட்டு + ஆள். சீட்டு = நறுக்கோலை, ஓலைச்சிட்டு, மடல்]

சீட்டி

சீட்டி cīṭṭi, பெ. (n.)

   1. சீழ்க்கை; whistling.

   2. ஊதுகுழல் (வின்.);; toy whistle.

 Mhr.siti

     [சீழ்க்கை → சிட்டி]

சீட்டியடி-த்தல்

சீட்டியடி-த்தல் siti-y-ali,    4 செ.கு.வி (v.i.)

   சீழ்க்கைஅடித்தல் (இ.வ.);; to whistle.

     [சீழ்க்கை → சீக்கை → சீட்டி + அடி-,]

சீட்டு

சீட்டு cīṭṭu, பெ. (n.)

   1. எழுத்துக்குறிப்பு; note, letter, scrap of paper or ola containing a memorandum.

   2. ஆவணம்; bond, document, promissory note.

   3.கூட்டுச்சீட்டு வைப்பு (நிதி);; association chit fund where the sum total of the premiums in each instalment is assigned cither to the lowest bidder or to one whose name is decided by drawing lots.

   4. விளையாடும் சீட்டு; playing cards.

   5. பட்டியல்; list.

     “நூற்றொரு பேதமாய் விரியுமென்று பாடியகாரர் சீட்டுக் கொடுப்பர்” (பி.வி.17,உரை);.

   6. ஓலை நறுக்கு; palm-leaf.

   7. சிற்றோலை; letter, small piese of paper.

   8. உசீட்டு; ticket.

   9. நுழைவுச் சீட்டு; pass.

   10. பற்றுச்சீட்டு; voucher.

   ம., பட. சீட்டு;   க. சீடு, சீடி;   து. சீட், சீடி; H. citthi – small;

 E. chit – a baby, a piece of paper;

 AS. cith – a young, lander shoot.

     [சுள் = சிறுமை, சுள்ளாணி = சிறிய ஆணி. சுள் → சுண்டு = சிறியது. சுள் → (சுட்டு); → சிட்டு → சீட்டு = ஒலைநறுக்கு (மு.தா.140); (சு.வி.19);]

சீட்டுக் கச்சேரி

 சீட்டுக் கச்சேரி cīṭṭukkaccēri, பெ. (n.)

   சீட்டாட்டம்; game with cards.

ம. சீட்டுகச்சேரி

     [சீட்டு + கச்சேரி]

சீட்டுக்கட்டு

சீட்டுக்கட்டு1 cīṭṭukkaṭṭu, பெ. (n.)

   விளையாடுஞ் சீட்டுத்தொகுதி; pack of playing cards (செ.அக);.

     [சீட்டு + கட்டு. சீட்டு = விளையாட்டு அட்டை. குல் → குள் → கள் → கட்டு = தொகுதி, சேர்க்கை]

 சீட்டுக்கட்டு2 situ-k-katu,    5 செ.கு.வி (v.i.)

   கூட்டுச்சீட்டிற் சேர்ந்து பணங்கட்டி வருதல்; to subscribe to a chit fund (செ.அக.);.

     [சீட்டு + கட்டு-. சீட்டு = கூட்டுச் சீட்டு வைப்பு (நிதி);. கட்டுதல் = சேர்த்தல், செலுத்துதல்]

சீட்டுக்கரைசுவான்

 சீட்டுக்கரைசுவான் sīṭṭukkaraisuvāṉ, பெ. (n.)

   ஏலச் சீட்டு நடத்துபவன் (இ.வ.);; foreman of a chit transaction.

க. கரெ (அழைத்தல்);

     [சீட்டு + கரைசுவான். கரைதல் சரைசுதல், ஏலத் தொகையை உரக்கக் கூவுதல்]

சீட்டுக்கவி

சீட்டுக்கவி cīṭṭukkavi, பெ. (n.)

   ஒலைப்பா; epistle or letter written in verse.

     “சேரற்குச் சீட்டுக்கவி பாடிக்கொடுத்த சொக்கே” (திருவிளை. பயகர.55);.

     [சீட்டு + கவி. சீட்டு = ஓலை நறுக்கு, சிற்றோலை]

சீட்டுக்கிழி-த்தல்

சீட்டுக்கிழி-த்தல் situ-k-kili,    5 செ.கு.வி. (v.i.)

   ஒருவரைப் பணியிலிருந்து நீக்குதல்; to sake one from service.

     ‘ஒழுங்காய்ப் பணி செய்யாவிடில் சீட்டைக் கிழித்து விடுவேன்’ (உ.வ.);.

சீட்டுக்கிழிதல்

 சீட்டுக்கிழிதல் cīṭṭukkiḻidal, பெ. (n.)

   இறக்கை (ஒருவனது வாணாள் வரையப்பட்ட சீட்டுக் கிழிகை);; lit., tearing of one’s life record, death.

க. சீழபரு

     [சீட்டு + கிழிதல். சீட்டு = ஒலைநறுக்கு, ஏடு, சிற்றோவை, மண்ணில் பிறந்த மாந்தருவி ஒவ்வொன்றிற்கும் தனித் தனியேட்டில் கணக்கெழுதி வைக்கப் பட்டிருக்கிறது என்பதும் குறித்த தான் முடிந்ததும், தன் கணக்கு முடிவுறும் என்பதும், மக்களின் தம்பிக்கை அந்த வகையில், ஒருவனது சாவைக் குறிக்கும் போது, அவன் கணக்கு முடித்து விட்டது என்றும், அவன் சீட்டு கிறுவித்தாயிற்று என்றும் கூறுதலை இன்றும் காணலாம். கடும் தோயிலிருந்தும், ஏதத்திவிருத்தும் தப்பிப் பிழைத்தோரை ‘அவன் கணக்கு முடியவில்லை போலும்’ என்பர் சாவுக்கு ஏங்கும் முதியவரும், தோபரும், என் ஏட்டை எப்போது பார்ப்பானோ எனப் புலம்புவர்]

சீட்டுக்கீறு-தல்

சீட்டுக்கீறு-தல் sittu-k-kiru-,    5 செ.கு.வி. (v.i.)

   ஒருவனைக் கெடுக்கச் சூழ்தல் (இ.வ.);; to contrive or resolve upon one’s ruin.

ம. சீட்டுசிறுக

     [சீட்டு + கீறு. சிட்டு = இறைவனால் பேணப்படும் வாழ்வுக்கணக்கு, வாழ்வு, வாழ்க்கை. கீறு = கிறுக்கு, கிழவி, சீரழிவு, கேடு]

சீட்டுக்குலுக்கு-தல்

சீட்டுக்குலுக்கு-தல் sittu-k-kulukku-,    5 செ.கு.வி (v.i.)

   திருவுளச்சீட்டுக் குலுக்கிப் போடுதல்; to cast lots (செ.அக.);.

     [சீட்டு + குலுக்கு. இருவேறு வினைகளின் எதைச் செய்வதென மனத்தடுமாறும் வேளையிலும், சம வாய்ப்புள்ளோரில் யாரைத் தெரிவு செய்வது எனும் நிலையிலும், ஒரு கூட்டத்தாருள் ஒருவரைத் தெரிவுசெய்ய வேண்டிய நிலையிலும், சீட்டுக்குலுக்கித் தெரிவு செய்யும் பழக்கம் இன்றுமுளது. சீட்டாவது துண்டுச்சீட்டு. அதில் தெரிவு செப்ய வேண்டிய வினைகளையோ, பெயர்களையே தனித்தனியே எழுதிச் சுருட்டி இரு உள்ளங்கைக்குள்ளுமிட்டுக் குலுக்கிப்பேட்டு, இளமகவொன்றினைக் கொண்டு ஒரு சீட்டை எடுக்கச்சொல்லி, அச்சீட்டிலுள்ளதே தெரிவுபெற்றதாக அறிவிப்பார். தேர்தல் போன்ற போட்டிகளின் சமவளவு நேரிபெற்ற வேட்பானாருவரு ளொருவரைத் தெரிவு செய்ய இம்முறை கையாளப்படுவதை இன்றும் காணலாம்)

சீட்டுக்கொடு-த்தல்

சீட்டுக்கொடு-த்தல் situ-k-kolu-,    4 செ.கு.வி. (v.i.)

   1. மூலாவணம் முதலியன கொடுத்தல் (வின்.);; to tender a bond, voucher, draft, etc.

   2. வேலையினின்று விலகக் கட்டளையிடுதல்(உ.வ.);; to dismiss, as giving written order to stop work.

அவன் நடத்தை சரியில்லை சீட்டுக் சொடுத்து வீட்டுக்கன்பு

   3. குறிப்பை யுணர்த்துதல்; to send a piece of paper with a message.

பேச்சை முடித்துக் கொள்ளுமாறு சீட்டுக் கொடுத்தார்.

     [சீட்டு + கொடு. சீட்டு = மடல், ஆணை,துண்டுத்தாள்]

சீட்டுதறு-தல்

சீட்டுதறு-தல் sittu-daru-,    2 செ.கு.வி. (v.i.)

சீட்டுக்குலுக்கு-தல் (இ.வ.); பார்க்க;see Sittu-k-kulukku

     [சீட்டு + உதறு-,]

சீட்டுத்தட்டு-தல்

சீட்டுத்தட்டு-தல் situ-t-tattu-,    5 செ.கு.வி. (v.i.)

சீட்டுக்குலுக்கு-தல் (நெல்லை.); பார்க்க;see Sittu-k-kulukku.

     [சீட்டு + தட்டு-,]

சீட்டுநாட்டு

சீட்டுநாட்டு cīṭṭunāṭṭu, பெ. (n.)

   1. ஆதரவுமுறி (உ.வ.);; note, bond.

   2. கூட்டுச்சீட்டு முதலியன; chit or similar profit-earning transaction.

     ‘சீட்டுநாட்டிற் சேர்ந்தால் பணம் பெருகும்’ (நெல்லை);,

     [சீட்டு + நாட்டு. மரபிணை மொழி]

சீட்டுநெல்

 சீட்டுநெல் cīṭṭunel, பெ. (n.)

   கூட்டுச்சீட்டுப் பொருளு(நிதி);க்குப் பிறன்மூலமாக வேனும் பிறனுக்கு அப்பொருள் (அந்நிதி); மூலமாக வேனும், சேரவேண்டிய நெல் (இ.வ);; paddy due from, or to, a chit transaction.

     [சீட்டு + நெல்]

சீட்டுப்பணம்

 சீட்டுப்பணம் cīṭṭuppaṇam, பெ. (n.)

   கூட்டுச் சீட்டுப்பொருளு (நிதி);க்குப் பிறன் மூலமாக வேணும், பிறனுக்கு அப்பொருள் (அந்நிதி); மூலமாகவேனும், சேரவேண்டிய பணம்; money due from, or to, a chit fund (செ.அக.);.

     [சீட்டு + பணம்]

சீட்டுப்பிடி

சீட்டுப்பிடி1 situ-p-pi,    4 செ.கு.வி. (v.i.)

   1. கூட்டுச்சீட்டு ஏற்படுத்துதல் (இ.வ.);; to organise a chit transaction.

   2. சீட்டில் ஏலமெடுத்தல் (இ.வ.);; to bid, as a subscriber in a chit transaction.

     [சீட்டு + பிடி. பிடி = பற்றுதல், வெல்லுதல்]

 சீட்டுப்பிடி2 situ-p-pii,    4 செ.கு.வி. (v.i.)

   சீட்டு விளையாட்டில் பிறர் சீட்டை வென்றெடுத்தல்; to win a trick in card-play.

     [சீட்டு + பிடி-,]

சீட்டுப்புள்ளி

 சீட்டுப்புள்ளி cīṭṭuppuḷḷi, பெ. (n.)

   சீட்டுச் சேர்ப்பில் பணங்கட்டுவோன் (இ.வ.);; subscriber to a chit-fund.

     [சீட்டு + புள்ளி. புள்ளி = ஆள் (காரண வாகுபெயர்);. ஒ.நோ. பெரும்புள்ளி, நல்லபுள்ளி]

சீட்டுப்போடு-தல்

சீட்டுப்போடு-தல் situ-p-polu,    20 செ.கு.வி. (v.i.)

   1. சீட்டுக்குலுக்கு-தல் பார்க்க;see Sittu-k-kulukku-

   2. கூட்டுச்சீட்டு வைப்பில் (நிதியில்); பங்கெடுத்தல்; to take up shares in a chit fund.

   3. சீட்டுவிளையாடுதல்; to play at cards.

   4. சீட்டாடுபவருள், ஒருவர் மற்றவர்க்குச் சீட்டுகளைக் கலைத்துப் பிரித்துப்போடுதல்; to shuffle and distribute the cards.

ம. சீட்டிடுக

     [சீட்டு + போடு. சீட்டு = நறுக்குச்சீட்டு, சிற்றோலை, விளையாட்டுச்சீட்டு (நிதியம்);. போடு = நழுவவிடு, அடி, செலுத்து, சேர் ‘போடு’ து.வி போகவிடு – போடு]

சீட்டுவட்டமறுதி

 சீட்டுவட்டமறுதி cīṭṭuvaṭṭamaṟudi, பெ. (n.)

   சீட்டு முடிவு (நாஞ்.);; close or end of a chit transaction.

     [சீட்டு + வட்டம் + அறுதி]

சீட்டுவாங்குதல்l-தல்

சீட்டுவாங்குதல்l-தல் Sittu-Vangu-,    5 செ.கு.வி.(v.i.)

   1. தள்ளப்படுதல்; to receive dismissal order.

   2. இறத்தல் (எமனுடைய சீட்டுப்பெறுதல்);; to die as receiving Yama’s mandate (செ.அக.);.

     [சீட்டு + வாங்கு-,]

சீட்டுக்கிழி-தல் பார்க்க

சீட்டுவாசகம்

 சீட்டுவாசகம் cīṭṭuvācagam, பெ. (n.)

   கடிதத்தில் அடங்கியுள்ள பொருள் (யாழ்ப்);; tenor or contents of a letter.

     [சீட்டு + வாசகம்]

சீட்டுவிழு-தல்

சீட்டுவிழு-தல் sittu-Wilu,    2 செ.கு.வி. (v.i.)

   திருவுளச்சீட்டு முதலியன ஒருவன் சார்பாக உரிமையாதல்; to fall to one’s lot, as a lottery, chit (செ.அக.);.

     [சீட்டு + விழு-,]

சீட்டுகுலுக்கு-தல் பார்க்க

சீட்டை

சீட்டை1 cīṭṭai, பெ. (n.)

சீட்டி (இ.வ.); பார்க்க;see Sitti2.

     [சீட்டி → சீட்டை]

 சீட்டை2 cīṭṭai, பெ. (n.)

சீட்டைக்கதிர் (யாழ்ப்); பார்க்க;see Sittai-k-kadir

     [சிட்டு → சீட்டு → சீட்டை]

சீட்டைக்கதிர்

சீட்டைக்கதிர் cīṭṭaikkadir, பெ. (n.)

   1. மறுகாம்பில் (இரண்டாம் அறுவடையில்); விளையுங்கதிர் (யாழ்ப்.);; ear of corn in the second growth.

   2. ஏழைகள் பயன்பாட்டிற்கு விடப்பட்ட கதிர்; gleanings left for the poor.

மறுவ மறுதாம்புப்பயிர்

     [சிட்டு → சீட்டு → சீட்டை + கதிர்]

சீட்டைவாங்கு-தல்

சீட்டைவாங்கு-தல் sitai-wigu-,    5 செ.கு.வி. (v.i.)

   மறுகாம்பில் (இரண்டாம் அறுவடையில்); கதிர்பரிதல்; to shoot for the ear of corn in the second growth (செ.அக.);.

     [சீட்டை + வாங்கு-,]

சீண்டரம்

 சீண்டரம் cīṇṭaram, பெ. (n.)

   தொந்தரை (உ.வ.);; teasing, vexing

தெ. சீண்டரமு

     [சீண்டு → சீண்டரம்]

சீண்டல்

 சீண்டல் cīṇṭal, பெ. (n.)

விழல்நாற்றம் bad or rancid smell (சா.அக.);.

     [சீ → சீண்டு → சீண்டல். சீ = இகழ்ச்சிக் குறிப்பு, இழிவானது]

சீண்டிரம்

சீண்டிரம்1 cīṇṭiram, பெ. (n.)

சீண்டரம் பார்க்க;see singaram.

ம. சீண்ரம்

     [சீண்டரம் → சீண்டிரம்]

 சீண்டிரம்2 cīṇṭiram, பெ. (n.)

   1. அழுக்கு (சுசுமாலம்); (வின்.);; filthiness, nastiness, stench.

   2. இகழ்வுரை (யாழ்.அக.);; word of contempt.

     [சீண்டு2. → சிண்டிரம்]

சீண்டு

சீண்டு1 Singu-    5 செ.குன்றாவி (v.t.)

   1. தீண்டியுணர்த்துதல்; to tap, touch gently, as in drawing one’s attention.

   2. தொந்தரவு செய்தல்; to tease, vex.

ம. சீண்டுக

     [தீண்டு → சீண்டு]

 சீண்டு2 cīṇṭu, பெ. (n.)

   தயிர் முதலியவற்றின் கெட்டவாடை; stench, as of rancid curd.

     “சீண்டு நாறுவது முதலிய குற்றங்கள் இல்லாத தயிர்” (சிவதரு. பரமதரு. 35 உரை);.

 Tu, sintelu

     [சீ → சீண்டு. சீ – இகழ்ச்சிக்குறிப்பு, இதுவொனது, தாழ்ந்தது]

சீதக்கடுப்பு

 சீதக்கடுப்பு cītakkaḍuppu, பெ. (n.)

   சீதக்கட்டால் மலவாயிலில் தோன்றும் வலி; sharp, straining pain in dysentery (செ.அக.);

     [சீதம் + கடுப்பு]

சீதக்கட்டு

 சீதக்கட்டு cītakkaṭṭu, பெ. (n.)

   சீதவழும்பு (நெல்லை.);; slimy, mucous matter voided in dysentery.

     [சீதம் + கட்டு]

சீதக்கழிச்சல்

 சீதக்கழிச்சல் cītakkaḻiccal, பெ. (n.)

   வயிற்றுப் போக்கு (வின்.);; dysentery.

மறுவ, சீதக்கழிவு

     [சீதம் + கதுவிச்சல்]

சீதக்காதி

சீதக்காதி cītakkāti, பெ. (n.)

   17-ம் நூற்றாண்டில் கீழக்கரையில் வாழ்ந்தவரும் புலவர்களைப் பெரிதும் போற்றி வந்தவருமாகிய ஒரு முகமதியச் செல்வர் (Rd. M. 228);; Syed Kadir, a Muhammadan nobleman of Kilakkarai near Râmnād and a great patron of learning, 17th century.

     ‘சையத்காதிர்’ எனும் முகமதியப்பெயர் தமிழ் மரபிற்கேற்பச் சீதக்காதி என்றானது.

சீதநாடு

சீதநாடு cītanāṭu, பெ. (n.)

   கொடுந்தமிழ் நாடு பன்னிரண்டனுள் கோயமுத்துார், (நீலமலை); மாவட்டப் பகுதிகளைக் கொண்ட நாடு (நன். 273, உரை);; the region where a dialect of Tamil was spoken, corresponding to portions of Coimbatore and Udaga-mandalam, one of 12 koduntamil-nadu.

ம. சீதநாடு

     [சீதம் + நாடு]

சீதம்

சீதம் cītam, பெ. (n.)

   குளிர்ச்சி; coolness.

     ‘சொற்படு சீதத்தொடு சுவை உடைத்தாய்” (மணிமே.27:121);

     [சீது-சீதம்]

சீதவெக்கை

 சீதவெக்கை cītavekkai, பெ. (n.)

   மாட்டிற்கு வரும் ஒரு வித நோய்; a disese affecting COWS.

சீதேவி

 சீதேவி cītēvi, பெ. (n.)

   திருக்கோயிலூர் வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Tirukoyilur Taluk.

     [திரு→சீ+தேவி].

சீதைப்பாண்டி

 சீதைப்பாண்டி cītaippāṇṭi, பெ.(n.)

   பல்லாங் குழியின் வகை; an indoor game of pallāňkuli.

     [சீதை+பாண்டி].

சீத்தடி-த்தல்

சீத்தடி-த்தல் sittali,    4 செ.குன்றாவி. (v.t.)

   காற்று வாரிவீசுதல்; to sweep away, as wind.

     “பொடியைச் சூறை சீத்தடிப்ப” (கலிங்.78);.

     [சீய் → சீய்த்து + அடி → சீத்தடி-,]

சீத்தபுழுதி

சீத்தபுழுதி cīddabuḻudi, பெ. (n.)

   உழுதும் விதைக்காத நிலம் (M.Sm. D.i. 279);; land ploughed but not sown.

     [சி5 → சீ-த்தல் + புழுதி]

சீத்தலை

சீத்தலை cīttalai, பெ. (n.)

   1 ஓர் ஊரின் பெயர்; a place name.

   2. வன்மையான நிலப்பகுதி:

 a hard Soiled land.

     [சீத்தம்( வன்மை, திறமை); சீத்தம்+தலை].

சீத்தலைச்சாத்தனார்

சீத்தலைச்சாத்தனார் cīttalaiccāttaṉār, பெ. (n.)

   1. கடைக்கழகப் புலவர்; a poet of the last Sangam grain merchant of Madura.

   2. மணிமேகலையாசிரியர்; the author of Manimegalai.

     [சீத்தவை + சாத்தனார்]

சீத்தி

 சீத்தி cītti, பெ. (n.)

   இளப்பம்; inferiority.

     ‘அவனிலும் நான் சீத்தியா’ (வின்.);.

சீத்தியம்

 சீத்தியம் cīttiyam, பெ. (n.)

   சிறுதவசம் (யாழ்.அக);; grain.

சீத்தியோணான்

 சீத்தியோணான் cīttiyōṇāṉ, பெ. (n.)

   ஒரு வகை சிற்றோந்தி (வின்.);; a kind of bloodsucker.

     [சீத்தி + ஓணான்]

சீத்திரை

 சீத்திரை cīttirai, பெ. (n.)

   அம்மான்பச்சரிசி; raw rice plant (சா.அக.);.

சீத்து

 சீத்து cīttu, பெ. (n.)

   மூங்கில்வகையுள் ஒன்று; a kind of bright green bamboo (சா.அக.);.

சீத்துப்பூத்தெனல்

சீத்துப்பூத்தெனல் cīttuppūtteṉal, பெ. (n.)

   1. மூச்சுத்திணறுதற் குறிப்பு; onom expr. of short, quick breathing.

   2. பாம்பு சீறுதற்குறிப்பு; hissing, as of an irritated serpent.

   3. முறு முறுத்தற் குறிப்பு; scolding, querulousness.

சீத்துவம்

சீத்துவம்1 cīttuvam, பெ. (n.)

   1. வளம்; prosperity.

     “சித்துவமாய் வாழ்வதுவும்” (பணவிடு.158);.

   2. தூய்மை (வின்.);; cleanliness, decency.

   ம. சீத்தந; Skt. Sri-tva

     [சீர் → சீர்த்தி → சீத்தி → சீத்துவம்]

 சீத்துவம்2 cīttuvam, பெ. (n.)

   1. ஊட்டச்சத்து; nutritiousness.

     “சீத்துவமில்லாத சாப்பாடு” (யாழ்ப்.);.

   2. திறன்; strength, energy.

     “சீத்துவங் கெட்டவன்” (நெல்லை.);.

   3. உயிர் வாழ்வதற்கு இன்றியமையாதது; anything that is necessary for life.

     “சீத்துவமிதார்க்குந் தெரியாதோ” (பஞ்ச. திருமுக. 1406);.

 Skt. jiva-tva

     [சீத்துவம்1 – சீத்துவம்3]

சீத்தை

சீத்தை cīttai, பெ. (n.)

   1. குணமின்மை (பிங்.);; want of character, lowness, badness.

   2. கைவிடப்பட்டவன்; lost person.

     “சீத்தையாங்…. கடியவும்…. பாய்ந்தான்” (கலித். 86);.

   3. கீழ்மகன் (திவா.);; low, base person.

   4. அசடன் (அக.நி.);; fool, dolt.

   5. பதனழிவு (வின்.);; decay, rottenness, unhealthiness.

   6. சீத்தைப்பூரான் (யாழ்ப்); பார்க்க;see Sittai-p-puran.

ம. சீத்த

     [சீ3 → சீத்தை. சீ = இகழ்ச்சி]

சீத்தைக்கண்

 சீத்தைக்கண் cīttaikkaṇ, பெ. (n.)

   புளிச்சைக் கண் (வின்.);; blear eyes.

ம. சீக்கண்ணு

     [சத்தை + கண்]

சீத்தைக்காடு

 சீத்தைக்காடு cīttaikkāṭu, பெ. (n.)

   அடர்ந்த காடு (வின்.);; jungle, thicket.

     [சீத்தை + காடு]

சீத்தைத்தகன்

 சீத்தைத்தகன் cīttaittagaṉ, பெ. (n.)

   சீத்தைப் பூரான் (வின்.);;பார்க்க;see sittai-p-puram.

சீத்தைப்பூரான்

 சீத்தைப்பூரான் cīttaippūrāṉ, பெ. (n.)

   கெட்டுப்போன பனந்தகன் (யாழ்ப்);; rotten kernel of a palmyra stone.

சீந்தலான்

 சீந்தலான் cīndalāṉ, பெ.(n.)

   உயரத்தில் நெடுந்தொலைவு விரைந்து பறக்கும் குறுங்கண் பறவை; a bird flying to long distance.

     [சீந்தல்-ஆன்]

சீந்தல்

சீந்தல்1 cīndal, பெ. (n.)

   1. மழைத்துாறல் (வின்.);; drizzle.

   2. மூக்குச்சளி; mucous matter of the nose.

     “உய்க்குமிழுஞ் சிந்த லுளதேயோ”‘ (அருட்பா. 1, நெஞ்சறி, 320);.

     [சிந்து → சீந்து → சீந்தில்]

 சீந்தல்2 cīndal, பெ. (n.)

   குளிர்ச்சி; coldness, chillness.

     [சீ → சீந்தில்]

சீந்தி

சீந்தி cīndi, பெ. (n.)

சிந்தில்1 (இ.வ.); பார்க்க;see šindil1.

 Skt. jivanti.

சீந்திரம்

 சீந்திரம் cīndiram, பெ.(n.)

   இராசிபுரம் வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Rasipuram Taluk.

சீந்திற்சருக்கரை

 சீந்திற்சருக்கரை cīndiṟcarukkarai, பெ. (n.)

   சீந்திற்கொடியிலிருந்து எடுக்கப்படும் மருந்துப்பு (மூ.அ.);; a medicinal salt prepared from gulancha stalk.

     [சீந்தில் + சருக்கரை. சருவுதல் = சாய்தல். சரிதல் → சருவு → சருகு. சருகுதல் = சரிதல். சருகு → சருக்கு → சருக்கரம் → சருக்கரை]

சீந்திலுப்பு

 சீந்திலுப்பு cīndiluppu, பெ. (n.)

சீந்திற்சருக்கரை (மூ.அ.); பார்க்க;see Sindir-Sarukkarai.

     [சீந்தில் + உப்பு]

அவையல் கிளவியாக உப்பைச் சருக்கரை என வழங்கும் மரபு, இன்றுமுளது. அதனடிப் படையில் சருக்கரையை உப்பு என வழங்குவது மருத்துவக் குழுஉக்குறி போலும்.

சீந்தில்

சீந்தில் cīndil, பெ. (n.)

   படர்கொடி வகை; gulancha,

     “வீழ் என்பது ஆல்….. சீந்தில்கட் குரித்து” (நன். 873, மயிலை);.

     [தெல் → தென் → தென்பு = தெளிவு, தென் → தேன் = இனிமை, இனிய மனம் தென் → தேம் → தீம் = இனிமை, தீம் → சிம் → சீந்தில் = இனிப்புச் சுவையுடையது. ஒ.நோ.க.சீ.சீயி (இனிமை);]

சீந்து

சீந்து1 indu.5 செ.குன்றாவி (v.t.)

   சினத்தல்; to be angry with.

     “சீந்தாநின்ற தீமுக வேலான்” (சீவக. 1055);.

     [சீறு → சீந்து-,]

 சீந்து2 indu,    5 செ.கு.வி. (v.i.)

   சீறுதல்; to hiss as a serpent.

     “பைத்துச் சீந்திய வரவம்” (வாயுசங். கிரியாபூ.40);.

     [சீறு → சீந்து-.]

 சீந்து3 indu-,    5 செ.குன்றாவி (v.t.)

   1. சிந்துதல்; to cast, scatter.

   2. மூக்குச் சிந்துதல் (வின்.);; to blow, as the nose.

   ம. சீந்துக, சீற்றுக;   க. சீன், சீந்து, சீந்த்;   தெ. சீந்து, சீது;   து. சீந்த்ருனி, இம்புனி;   கோண். ஈசானா;   கூ. ச்ரீந்து;   குவி. சிந்தலி, பர். சீந்த், தீத்;   கட. சீந்த்;   குரு. சீர்னா;   மா. இன்செ;பட சீன்சு

     [சிந்து → சீந்து-,]

 சீந்து4 sindu-,    5 செ.குன்றாவி, (v.t.)

   1. மதித்தல்; to have, regard for, respect.

யார் உன்னைச் சீந்துவார்கள் (சென்னை);.

   2. விரும்புதல் (யாழ்.அக);; to desire

     [சிண்டு → சீந்து-,]

 சீந்து5 sindu-,    5 செ.குன்றாவி, (v.t.)

   தீண்டுதல்; to touch.

     “அக்குமணியைக் கொடுத்தா லார்சீந்துவார்கள்” (பஞ்ச. திருமுக. 1998);.

     [தீண்டு → சீந்து-,]

சீனந்தல்

 சீனந்தல் cīṉandal, பெ.(n.)

   போளுர் வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Pölur Taluk.

     [ஒருகா சின்னன்-ஏந்தல் (ஏரி);].

சீனாகாலா

 சீனாகாலா cīṉākālā, பெ.(n.)

   ஒருவகைச்சிறு கடல் மீன்; Indian salomon row hall thread fins.

     [சின்னன்+சகலாl].

சீனாங்குடி,

 சீனாங்குடி, cīṉāṅguḍi, பெ.(n.)

   திருவாடானை வட்டத்திலுள்ள ஊர்; a village in Tiruvadani Taluk.

     [சின்னன்+குடி].

சீனி

சீனி cīṉi, பெ. (n.)

   1. சேணம் ; saddle.

   2. மர நங்கூரம் (வின்.);; wooden anchor made heavy with stones.

 U.zin

     [சேணம் → சேணி → சீனி]

சீனிகட்டு-தல்

சீனிகட்டு-தல் sini-kattu-,    5 செ.கு.வி. (v.i.)

   குதிரைக்குச் சேணமிடுதல்; to saddle a horse (செ.அக.);.

     [சேணம் → சீனம் → சீனி + கட்டு-,]

சீனிக்கட்டை

 சீனிக்கட்டை cīṉikkaṭṭai, பெ. (n.)

   சேணஞ் செய்தற்குரிய மரவச்சு (புதுவை);; Saddle-tree.

     [சேணம் → சேணி. சீனி + கட்டை]

சீனிக்கயிறு

 சீனிக்கயிறு cīṉikkayiṟu, பெ. (n.)

   மரநங்கூரக் கயிறு (வின்.);; cable of wooden anchor.

     [சேணம் → சேணி. சீனி + கயிறு]

சீனிக்கற்கண்டு

 சீனிக்கற்கண்டு cīṉikkaṟkaṇṭu, பெ.(n.)

   ஒரு வகைக் கற்கண்டு; crystal sugar with rough edges.

     [சீனி+கற்கண்டு].

சீனிச்சட்டி

 சீனிச்சட்டி cīṉiccaṭṭi, பெ. (n.)

   வறுத்தற்குரிய இருப்புச்சட்டி (இ.வ.);; frying pan.

     [சில் → சின் → சினி → சீனி]

சீனிப்பாய்

சீனிப்பாய் cīṉippāy, பெ. (n.)

   பாய்வகை; a kind of mat.

     “மெத்தைத் தலையணையும் சீனிப்பாயும் போட்டுக் கொடுத்து” (தமிழறி.57);.

     [சீனி + பாய்]

சீனிமிளகாய்

சீனிமிளகாய் cīṉimiḷakāy, பெ. (n.)

   மிளகாய் வகை (வின்.);; a kind of chilli.

     [சீனி1 + மிளகாய்]

சீனியவரை

 சீனியவரை cīṉiyavarai, பெ. (n.)

   கொத்தவரை; cluster-bean.

     [சீனி + அவரை]

சீனிவெடி

 சீனிவெடி cīṉiveḍi, பெ. (n.)

   சிறிய பட்டாசு; a kind of small crackers.

     [சீனி + வெடி]

சீனை

 சீனை cīṉai, பெ. (n.)

   வன்னி (மூ.அ.);; Indian mesquit.

சீபன்னம்

சீபன்னம் cīpaṉṉam, பெ. (n.)

   குமிழ்மர வகை (சிவதரு. சிவஞானதா. 58);; a kind of kumil tree.

சீபம்

 சீபம் cīpam, பெ.(n.)

   ஒசூர் வட்டத்தில் சிற்றுார்; a village in HosurTaluk.

 சீபம் cīpam, பெ. (n.)

சரகாண்டச்செய்ந்நஞ்சு (யாழ்.அக.); பார்க்க;see Sarakanda-c-ceynnanju.

சீபலம்

சீபலம் cīpalam, பெ. (n.)

   வில்வம்; bael.

     “வில்வந்தானுஞ் சீபலமென்றே சாற்று நாமமும் புணரும்” (சிவதரு. பரமதரு. 32);.

 Skt. sri-phala

     [சீ1 + பலம்]

சீப்பங்கோரை

 சீப்பங்கோரை cīppaṅārai, பெ. (n.)

   கோரைவகை (யாழ்.அக.);; clubrush, bulrush.

     [சீப்பு + அம் + கோரை]

சீப்பான்

 சீப்பான் cīppāṉ, பெ.(n.)

களையெடுக்கும் களைக் கொட்டு; hoe.

     [சீத்தல்-சிப்பான்].

     [P]

சீப்பால்

 சீப்பால் cīppāl, பெ. (n.)

சீம்பால் (வின்.); பார்க்க;see SimbaI.

     [சீம்பால் → சீப்பால்]

சீப்பி

 சீப்பி cīppi, பெ. (n.)

   குழந்தைகளுண்ணும் சிற்றுண்டிவகை; a sweet meat in the form of a stick chewed by children.

     [சூப்பு → சூப்பி → சீப்பி (கொ.வ.);]

சீப்பிடு-தல்

சீப்பிடு-தல் sippidu,    18 செ.குன்றாவி (v.t.)

   மயிர் சீவுதல் (யாழ்.அக.);; to comb the hair.

சீப்பு

சீப்பு cīppu, பெ. (n.)

   1. மயிர்வாருங் கருவி; comb.

     “பெருவெண் சீப்பிற் றிருவுற வாரி” (பெருங். உஞ்சைக். 34:190);.

   2. வாழைக்குலைச் சீப்பு (உ.வ.);; small cluster or bunch of plantain fruits.

   3. கதவின்தாழ் (பிங்.);; bolt.

   4. கதவுக்கு வலியாக உள்வாயிற்படியில் நிலத்தே வீழ விடும் மரம்; wooden brace to a door, driven into the ground in bolting.

     “எழுவுஞ் சீப்பும்” (சிலப். 15:215);.

   5. மதகிலுள்ள அடைபலகை (நாஞ்.);; Shutter of a sluice.

   6. விலாவெலும்பு (யாழ்ப்.);; rib.

   7. தோட்சீப்பு (வின்.);; bones of the shoulder joint.

   8. நெசவுக்கருவியின் ஒர் உறுப்பு; weaver’s reed frame having parallel flat strips of metal or reed between which the warp threads pass.

   9. சீப்பங்கோரை (மூ.அ.); பார்க்க;see sippangorai.

   10. பாளம் (நெல்லை.);; lamina, flat piece.

   11. காற்று முதலியவற்றால் அடித்துக் கொண்டு வரப்படுவது; that which is wafted, as fragrance by wind.

     “நாற்றம் . . . மலிர்கால் சீப்பு” (பரிபா.8:54);.

   ம. சீப்பு, சீர்ப்பு;   தெ. சிபு, து. சீப்பு, கீபு;   கோத. சீபி;   துட. கிச், பர். கீடாத்;பட. சீப்பு.

     [சீர் → சீர்ப்பு → சீப்பு]

 சீப்பு2 sippu-,    5 செ.குன்றாவி (v.t.)

   சப்புதல் (உ.வ.);; to suck.

தெ., க. சீபு

     [சப்பு → சிப்பு → சீப்பி-,]

சீப்புக்கோரை

சீப்புக்கோரை cīppukārai, பெ. (n.)

   1. பயிரோடு முளைக்குங் களைவகை (வின்.);; a parasitic plant.

   2. சீப்பங்கோரை பார்கக;see sippangorai.

     [சீப்பு → கோரை]

சீப்புசவாய்

 சீப்புசவாய் sīppusavāy, பெ. (n.)

   கப்பலின் முகப்புக்கட்டையிற் கட்டுங்கயிறு; jib-stay.

சீப்புச்சிப்பி

 சீப்புச்சிப்பி cīppuccippi, பெ. (n.)

   சீப்பின் வடிவுடைய சிப்பி (வின்.);; a comb- like shell.

     [சீப்பு + சிப்பி]

சீப்புச்சுறாண்டி

 சீப்புச்சுறாண்டி cīppuccuṟāṇṭi, பெ. (n.)

சீப்புச்சரட்டை பார்க்க;see sippu-c-carattai.

     [சீப்பு + கறாண்டி. கறா → சுறாண்டி]

சீப்புநூல்

 சீப்புநூல் cīppunūl, பெ. (n.)

   பட்டைநூல் (இ.வ.);; thread wound on a card.

ம. சீப்புநூல்

     [சீப்பு → நூல்]

சீப்புப்பணிகாரம்

 சீப்புப்பணிகாரம் cīppuppaṇikāram, பெ. (n.)

   பணிகாரவகை (யாழ்ப்.);; a kind of pastry.

     [சீப்பு + பணிகாரம்]

சீப்புப்போடு-தல்

சீப்புப்போடு-தல் Sppu-p.pdit-,    5.செ.கு.வி(v.i.)

   அடைபலகையால் மதகையடைத்தல் (நாஞ்.);; to close down the shutter of a sluice.

     [சீப்பு2 + போடு-,]

சீப்புரச்சரட்டை

 சீப்புரச்சரட்டை cīppuraccaraṭṭai, பெ. (n.)

   முதுகுப்புறத்தில் சீப்புப்போன்ற செதிலுடைய மீன்வகை (வின்.);; a kind of fish with comblike fins on the back.

     [சீப்பு → சரட்டை]

சீமணல்

 சீமணல் cīmaṇal, பெ. (n.)

   நாகமணல் (யாழ்.அக.);; sand containing lead ore.

 Skt. sisa

சீமாட்டுக்கல்

 சீமாட்டுக்கல் cīmāṭṭukkal, பெ.(n.)

   சுமை யடைக்கல்; platform erected on the roadside to rest burden.

சீமாறு

 சீமாறு cīmāṟu, பெ.(n.)

   துடைப்பம்; broom stick.

     [சீ+மாறு]

சீமூதை

 சீமூதை cīmūtai, பெ. (n.)

   திராட்சை (மூ.அ.);; common grape vine.

சீமூத்திரம்

 சீமூத்திரம் cīmūttiram, பெ. (n.)

   சீயாக வடியும் சிறுநீர்நோய் வகை (M.L.);; chyluria.

     [சீம் → சீ + மூத்திரம். மோள்திரம் → மோட்டிரம் → மூத்திரம்]

மூத்திரம் பார்க்க

சீமூலம்

 சீமூலம் cīmūlam, பெ. (n.)

சீழ்மூலம் பார்க்க;see Si-Imulam.

     [சீம்மூலம் → சீமூலம்]

சீமை

சீமை cīmai, பெ. (n.)

   1. எல்லை; boundary, limit.

   2. நாட்டின் பகுதி; country, territory, province, district,

     “சீமைக்கணக்கு” (பணவிதி 20);.

   3. மேலை நாடு (உ.வ.);; western country, especially England.

     ‘ஊசி மலிவு என்று சீமைக்குப் போகலாமா?’ (பழ.);.

   ம. சிம;   க. சீமெ, சீமா, சீம;பட. சீமெ

     [ஏய் → உயர்ச்சி, பெருமை. ஏ. பெற்றாகும் (தொல், உரி. 7);. ஏ → ஏண் = உயர்ச்சி. ஏண் → சேண் = உயர்ச்சி. ஏ → (ஏய்); → சேய் → சேய்மை = தொலைவு, நீளம், சேய்மை → சேமை → சீமை]

த. சீமை → Skt. Siman

சீமைக் கொஞ்சி

 சீமைக் கொஞ்சி cīmaikkoñji, பெ. (n.)

   கறிவேப்பிலை (L.);; China box.

     [சீமை + கொஞ்சி]

சீமைக்கத்தரி

 சீமைக்கத்தரி cīmaikkattari, பெ. (n.)

   செடி வகை; egg plant (செ.அக.);.

     [சேய்மை → சீமை. சீமை + கத்தரி]

சீமைக்கமலம்

 சீமைக்கமலம் cīmaikkamalam, பெ. (n.)

   மேல்நாட்டில் பட்டை தீர்ந்த வயிரமணி (உ.வ.);; rose diamond, as cut in foreign countries.

     [சீமை + கமலம்]

சீமைக்கரி

 சீமைக்கரி cīmaikkari, பெ. (n.)

   நிலக்கரி (இ.வ.);; coal.

     [சீமை + கரி]

சீமைக்கருப்பூரம்

 சீமைக்கருப்பூரம் cīmaikkaruppūram, பெ. (n.)

   காட்டுக்கஞ்சாங்கோரை (M.M.);; Sage tea plant.

     [சீமை + கருப்பூரம்]

சீமைக்கற்றாழை

 சீமைக்கற்றாழை cīmaikkaṟṟāḻai, பெ. (n.)

   தாழை வைகை (L.);; giant Mexican lily.

     [சீமை + கற்றாழை]

சீமைக்கள்ளி

 சீமைக்கள்ளி cīmaikkaḷḷi, பெ. (n.)

   சாதிக்காய் மரம் (இ.வ.);; nutmeg-tree.

     [சீமை + கள்ளி]

சீமைக்காசான்

 சீமைக்காசான் cīmaikkācāṉ, பெ. (n.)

   மரவகை (L.);; ellisduranta.

சீமைக்காடி

 சீமைக்காடி cīmaikkāṭi, பெ. (n.)

   சீமையிலிருந்து இறக்குமதி செய்யப்படுங்காடி; vinegar imported from the western countries.

     [சீமை + காடி]

காடி பார்க்க.

சீமைக்காவிக்கல்

 சீமைக்காவிக்கல் cīmaikkāvikkal, பெ. (n.)

   செந்நிறக்கல் (காவிக்கல்); (வின்.);; armenianbole, a soft clayey earth of bright red colour.

     [சீமை + காவிக்கல்]

சீமைக்கிச்சிலிக்கிழங்கு

 சீமைக்கிச்சிலிக்கிழங்கு cīmaikkiccilikkiḻṅgu, பெ. (n.)

   கிச்சிலிக்கிழங்கு (L.);; camphor zedoary.

     [சீமை + கிச்சிலி + கிழங்கு]

சீமைக்கிழங்கு

 சீமைக்கிழங்கு cīmaikkiḻṅgu, பெ. (n.)

   சருக்கரை வள்ளிக்கிழங்கு; swect-potato.

ம. சீமக்கிழங்ஙு

     [சீமை + கிழங்கு]

சீமைக்கொட்டைக்களா

 சீமைக்கொட்டைக்களா cīmaikkoṭṭaikkaḷā, பெ. (n.)

   மரவகை; thornless, long-leaved, sweet thorn.

     [சீமை + கொட்டைக்களா]

கொட்டைக்களா பார்க்க

சீமைக்கொன்றை

 சீமைக்கொன்றை cīmaikkoṉṟai, பெ. (n.)

   கொன்றைவகை (L.);; red Indian laburnum.

     [சீமை + கொன்றை]

சீமைக்கொய்யா

 சீமைக்கொய்யா cīmaikkoyyā, பெ. (n.)

   கொய்யா வகை (L.);; Chinese guava.

     [சீமை + கொய்யா]

சீமைச்சணல்

 சீமைச்சணல் cīmaiccaṇal, பெ. (n.)

   சணல் வகை (புதுவை);; a kind of sunn-hemp.

     [சீமை + சணல்]

சீமைச்சரக்கு

சீமைச்சரக்கு cīmaiccarakku, பெ. (n.)

   1. வெளிநாட்டுச்சரக்கு; foreign goods.

   2. கிடைத்தற்கரியசரக்கு; rare valuable commodity, often used ironically.

     ‘இதென்ன சீமைச்சரக்கா?’ (உ.வ.);.

     [சீமை + சரக்கு]

சீமைச்சாமந்தி

சீமைச்சாமந்தி cīmaiccāmandi, பெ. (n.)

   சாமந்திவகை (M.M. 63);; chamomile, flowering shrub.

     [சீமை + சாமந்தி]

சீமைச்சிவதை

 சீமைச்சிவதை cīmaiccivadai, பெ. (n.)

   ஒரு கொடிவகை (மூ.அ.);; a kind of ipomaea, climber.

     [சீமை + சிவதை]

சீமைச்சீரகம்

 சீமைச்சீரகம் cīmaiccīragam, பெ. (n.)

   ஒருவகைப் பிளப்புச் சீரகம்; a species of cumin seed (சா.அக.);.

     [சீமை + சீரகம்]

சீமைச்சுண்ணாம்பு

 சீமைச்சுண்ணாம்பு cīmaiccuṇṇāmbu, பெ. (n.)

   கரும்பலகை முதலியவற்றில் எழுதப் பயன்படும் சுண்ணாம்புக்கட்டி; chalk – European lime (செ.அக.);.

     [சீமை + சண்ணாம்பு. சுள் → சுண் → சுண்ணம் = பொடி, நீறு. சுண்ணம் → சுண்ணம்பு → சுண்ணாம்பு = காரக்கன் நீறு]

சீமைச்செம்பை

 சீமைச்செம்பை cīmaiccembai, பெ. (n.)

சீமைவேல் (L.);;see simai-vel.

     [சீமை + செம்பை]

சீமைச்சோம்பு

சீமைச்சோம்பு cīmaiccōmbu, பெ. (n.)

   செடி வகை (M.M.128);; caraway.

     [சீமை + சோம்பு]

சீமைத்தக்காளி

சீமைத்தக்காளி cīmaittakkāḷi, பெ. (n.)

   தக்காளிவகை (M.M. 107);; tomato variety.

     [சீமை + தக்காளி]

சீமைத்துணி

 சீமைத்துணி cīmaittuṇi, பெ. (n.)

   வெளி நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் துணி; foreign cloth.

     [சீமை + துணி]

சீமைத்துத்தி

சீமைத்துத்தி cīmaittutti, பெ. (n.)

   துத்திச்செடி வகை;(M.M.914);; Marsh mallow.

     [சீமை + துத்தி]

சீமைத்தேவதாரு

 சீமைத்தேவதாரு cīmaittēvatāru, பெ. (n.)

   நீண்டமர வகை (L.);; long-leaved pine.

     [சீமை + தேவதாரு]

சீமைநன்னாரி

சீமைநன்னாரி cīmainaṉṉāri, பெ. (n.)

   நன்னாரி வகை (M.M. 364);; sarsaparilla China root.

     [சீமை + நன்னாரி]

சீமைநாபி

 சீமைநாபி cīmaināpi, பெ. (n.)

   ஒரு வகை மருந்துச்செடி (இங்.வை);; aconite

     [சீமை + நாபி]

சீமைநாய்விருஞ்சி

 சீமைநாய்விருஞ்சி cīmaināyviruñji, பெ. (n.)

   நீண்டசெடி வகை (L.);; aaron’s-rod.

     [சீமை + நாய்விருஞ்சி]

சீமைநிலவாகை

 சீமைநிலவாகை cīmainilavākai, பெ. (n.)

   செடிவகை (வின்.);; African senna.

     [சீமை + நிலவாகை]

சீமைநிலவேம்பு

 சீமைநிலவேம்பு cīmainilavēmbu, பெ. (n.)

   நிலவேம்பு வகை; a bitter species of French chiretta.

     [சீமை + நீலவேம்பு]

சீமைநிலாவிரை

 சீமைநிலாவிரை cīmainilāvirai, பெ. (n.)

சூரத்தாவிரை செடிவகை (L.);

 African senna.

     [சீமை + நிலாவிரை]

சீமைநீலி

 சீமைநீலி cīmainīli, பெ. (n.)

   அவுரிவகை (M.M);; West Indian Indigo.

     [சீமை + நீலி]

சீமைநூக்கு

 சீமைநூக்கு cīmainūkku, பெ. (n.)

   அயல் நாட்டுமரவகை (L.);; true mahogany.

     [சீமை + நூக்கு]

சீமைநெல்லி

சீமைநெல்லி cīmainelli, பெ. (n.)

   1. சிறு மரவகை; barbadoes cherry.

   2. நெல்லி மரவகை; box-leaved barbadoes cherry.

     [சீமை + நெல்லி]

சீமைப்பச்சைமிளகாய்

 சீமைப்பச்சைமிளகாய் cīmaippaccaimiḷakāy, பெ. (n.)

   மிளகாய்வகை (L.);; cayenne pepper.

மறுவ. சீனி மிளகாய்

     [சீமை + பச்சை மிளகாய்]

சீமைப்பனை

 சீமைப்பனை cīmaippaṉai, பெ. (n.)

   பனை வகை (L.);; chocolate – margined and stalked Mauritius palm.

     [சீமை + பனை]

சீமைப்பருத்தி

 சீமைப்பருத்தி cīmaipparutti, பெ. (n.)

   அயல்நாட்டுப் பருத்திவகை (L.);; barbadocs cotton.

     [சீமை + பருத்தி]

சீமைப்பற்று

 சீமைப்பற்று cīmaippaṟṟu, பெ. (n.)

   அதிகாரத்திற்குட்பட்ட நாட்டின் எல்லை (R.T.);; territorial jurisdiction of government.

     [சீமை + பற்று]

சீமைப்பலா

 சீமைப்பலா cīmaippalā, பெ. (n.)

   ஈரப்பலா; bread-fruit.

     [சீமை + பலா]

சீமைப்பிரதானி

 சீமைப்பிரதானி cīmaippiratāṉi, பெ. (n.)

சீமையதிகாரி பார்க்க;see Simas-y-adgari.

     [சீமை + பிரதானி]

சீமைப்பிரப்பமரம்

 சீமைப்பிரப்பமரம் cīmaippirappamaram, பெ. (n.)

   இலங்கை மரவகை (வின்.);; Ceylon oak.

     [சீமை + பிரப்பமரம்]

சீமைப்புளியன்

 சீமைப்புளியன் cīmaippuḷiyaṉ, பெ. (n.)

   ஆனைப்புளி (இ.வ);; baobab (செ.அக);.

     [சீமை + புளியன். புளி → புவியன்]

சீமைப்பூசனி

சீமைப்பூசனி cīmaippūcaṉi, பெ. (n.)

   1. சருக்கரைப்பூசனி (M.M. 129);; squash gourd.

   2. பூசனிவகை (M.M. 130);; vegetable marrows.

     [சீமை + பூசனி]

சீமைமகிழ்

 சீமைமகிழ் cīmaimagiḻ, பெ. (n.)

   மகிழமர வகை (L.);; iron wood of the cape.

     [சீமை + மகிழ்]

சீமைமணத்தக்காளி

சீமைமணத்தக்காளி cīmaimaṇattakkāḷi, பெ. (n.)

சீமைத்தக்காளி (M.M.107); பார்க்க;see simai-t-takkali.

     [சீமை + (மணித்தக்காளி); மணத்தக்காளி (கொ.வ.);]

சீமைமாடு

 சீமைமாடு cīmaimāṭu, பெ.(n.)

   வெளிநாட்டு மாட்டு வகை; non native breed of cow

     [சீமை+மாடு].

சீமைமாதுளை

 சீமைமாதுளை cīmaimātuḷai, பெ. (n.)

   மர வகை (L.);; common quince.

     [சீமை + மாதுளை]

சீமைமிளகாய்

 சீமைமிளகாய் cīmaimiḷakāy, பெ. (n.)

   நேபாளத்து மிளகாய் (L.);; Nepal chilly.

     [சீமை + மிளகாய்]

சீமையகத்தி

 சீமையகத்தி cīmaiyagatti, பெ. (n.)

   செடி வகை (L.);; large-leafletted eglandular senna.

     [சீமை + அகத்தி]

சீமையதிகாரி

 சீமையதிகாரி cīmaiyadikāri, பெ. (n.)

   நாட்டையாளும் அதிகாரி (வின்.);; administrator or ruler of a country.

     [சீமை + அதிகாரி]

சீமையதிமதுரம்

 சீமையதிமதுரம் cīmaiyadimaduram, பெ. (n.)

   சீமைக்குன்றிமணி (இங்.வை);; liquorice,

     [சீமை + அதிமதுரம்]

சீமையத்தி

 சீமையத்தி cīmaiyatti, பெ. (n.)

   அத்தி வகை (L.);; common cultivated fig.

     [சீமை + அத்தி]

சீமையலரி

 சீமையலரி cīmaiyalari, பெ. (n.)

   மஞ்சளலரி வகை (L.);; yellow oleander.

     [சீமை + அலரி]

சீமையழவனம்

சீமையழவனம் cīmaiyaḻvaṉam, பெ. (n.)

   மருதோன்றி வகை (M.M.340);; harmal

     [சீமை + அழவனம்]

சீமையவரை

 சீமையவரை cīmaiyavarai, பெ. (n.)

   அவரை வகை (A.);; field gram.

     [சீமை + அவரை]

சீமையாமணக்கு

சீமையாமணக்கு cīmaiyāmaṇakku, பெ. (n.)

   1. ஆமணக்குவகை; bronze-leaved physic nut.

   2. காட்டாமணக்கு; red physic nut.

     [சீமை + ஆமணக்கு]

சீமையால்

 சீமையால் cīmaiyāl, பெ. (n.)

   ஆல்வகை (L.);; Assam rubber (செ.அக.);.

     [சீமை + ஆல்)

சீமையாவிரை

 சீமையாவிரை cīmaiyāvirai, பெ. (n.)

   பிரம்புக் கொன்றை (L.);; siamese tree (செ.அக.);.

     [சீமை + ஆவிரை]

சீமையிஞ்சு

 சீமையிஞ்சு cīmaiyiñju, பெ. (n.)

   ஈஞ்சுவகை (L.);; common Indian fern palm.

     [சீமை + ஈஞ்சு]

சீமையிந்துப்பு

 சீமையிந்துப்பு cīmaiyinduppu, பெ. (n.)

   கழிச்சலையுண்டாக்கும் உப்பு (இங்.வை.);; epsom salt.

     [சீமை + இந்துப்பு]

சீமையிலந்தம்பழம்

 சீமையிலந்தம்பழம் cīmaiyilandambaḻm, பெ. (n.)

   இலந்தைவகை (M.M.);; apple.

மறுவ. இரத்தி

     [சீமை இலந்தம்பழம்]

சீமையிலுப்பை

 சீமையிலுப்பை cīmaiyiluppai, பெ. (n.)

   ஒரு வகை மரம் (L.);; sapodilla.

மறுவ. இருப்பை

     [சீமை + இலுப்பை. இருப்பை → இலுப்பை]

சீமையூமத்தை

 சீமையூமத்தை cīmaiyūmattai, பெ. (n.)

   வெள்ளூமததை (L);; white-flowered thorn apple.

     [சீமை + ஊமத்தை]

சீமையெண்ணெய்

 சீமையெண்ணெய் cīmaiyeṇīey, பெ. (n.)

   மண்ணெண்ணெய் (இ.வ.);; kerosene

க. சீமெயெண்ணி

     [சீமை + எண்ணெய்]

சீமைவாகை

 சீமைவாகை cīmaivākai, பெ. (n.)

   தூங்குமூஞ்சி மரம் (L.);; rain tree.

     [சீமை + வாகை]

சீமைவாத்து

சீமைவாத்து cīmaivāttu, பெ. (n.)

   வாத்துவகை (M.M.942);; domestic duck.

     [சீமை + வாத்து]

சீமைவெள்ளரி

 சீமைவெள்ளரி cīmaiveḷḷari, பெ. (n.)

   வெள்ளரிவகை (வின்.);; a kind of melon.

     [சீமை + வெள்ளரி]

சீமைவெள்வேல்

 சீமைவெள்வேல் cīmaiveḷvēl, பெ. (n.)

   பேய்க் கருங்காலி; tamarind-like cutch.

     [சீமை + வெள்வேல்]

சீமைவேலம்பட்டை

சீமைவேலம்பட்டை cīmaivēlambaṭṭai, பெ. (n.)

   1. பெரியவேல மரவகை; black wattle.

   2. சிறியவேல மரவகை; common wattle.

   3. செடிவகை; mimosa wattle.

     [சீமை + வேலம்பட்டை]

சீமைவேல்

 சீமைவேல் cīmaivēl, பெ. (n.)

   மரவகை (L.);; Jerusalem – thorn.

     [சீமை + வேல்]

சீம்பால்

 சீம்பால் cīmbāl, பெ. (n.)

   ஆவின் ஈன்றணிமைப்பால் (உ.வ.);; beestings, especially of cow as impure.

   ம. சீம்பால்;க. கிண்ணி

     [தீம் + பால – தீம்பால் → சீம்பால்]

சீயகு

 சீயகு cīyagu, பெ. (n.)

புளியீண்டு (L.);

 rosyflushed white brasiletto.

சீயக்காய்

 சீயக்காய் cīyakkāy, பெ. (n.)

சீக்காய் பார்க்க;see Sik-kay.

     [சிக்காய் → சீயக்காய் (கொ.வ.);]

சீயக்காய்ச்சடங்கு

 சீயக்காய்ச்சடங்கு cīyakkāyccaḍaṅgu, பெ. (n.)

சிக்காய்ச்சடங்கு பார்க்க;see Sikkiy-c-cadangu.

சீயங்கணக்கு

 சீயங்கணக்கு cīyaṅgaṇakku, பெ. (n.)

மூன்றா முறை அணியஞ்செய்யப்பட்ட கணக்கு (வின்);:

 accounts prepared for the third time.

சீயங்காய்

 சீயங்காய் cīyaṅgāy, பெ. (n.)

சிக்காய் (யாழ்.அக); பார்க்க;see Sik-kay.

சீயன்

சீயன் cīyaṉ, பெ. (n.)

சீயான் பார்க்க;see Siyan.

     “சிறுமுனிவன் சீயனம் போதிகடைந்தான்” (கந்தரத்.19);.

     [சீயான் + சீயன்]

சீயமுத்தரையன்

சீயமுத்தரையன் cīyamuttaraiyaṉ, பெ.(n.)

   இரண்டாம் இராசராசனுடைய 4ஆம் ஆட்சியாண்டில், வாழ்ந்தவன் (கி.பி.167ஆம் ஆண்டு திருவோத்துர் கல்வெட்டு);; a man who lived during the fourth ruling year of the king Rasarasan II.

     [சீயன்+முத்தரையன்]

சீயம்

 சீயம் cīyam, பெ. (n.)

   எருக்கம்பால் (மூஅ);; madar juice.

சீயம்பாக்கு

 சீயம்பாக்கு cīyambākku, பெ. (n.)

   தாழ் தரமான பாக்கு (இ.வ.);; boiled areca-nut of inferior quality.

     [சீயம் + பாக்கு]

சீயா

 சீயா cīyā, பெ. (n.)

சீக்காய் (யாழ்.அக);. பார்க்க;see Sik-kay

     [சிக்காய் → சிகைக்காய் → சீயக்காய் → சிக்காய் → சிகாய் – சீயா (கொ.வ.);]

சீயாக்காய்

 சீயாக்காய் cīyākkāy, பெ. (n.)

சிக்காய் (யாழ்ப்); பார்க்க;see Sik-kay (செ.அக.);

     [சீக்காய் → சீயக்காய் → சீயாக்காய் (இ.வ.);]

சீயான்

சீயான்1 cīyāṉ, பெ. (n.)

   மூன்றாம்பாட்டன் (வின்.);; great grandfather.

     [சேய்யான் → சீய்யான் → சீயான்]

 சீயான்2 cīyāṉ, பெ. (n.)

   செம்பூரான்; reddish venomous centipede (செ.அக.);.

     [செய்யான் → சீயான்]

சீயாப்பாடி

 சீயாப்பாடி cīyāppāṭi, பெ.(n.)

   சிதம்பரம் வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Chidambaram Taluk.

     [சீயான்+பாடி].

சீயாள்

 சீயாள் cīyāḷ, பெ. (n.)

   மூன்றாம்பாட்டி (வின்);; great grandmother.

     [சோயன் → சீய்யாள் → சீயான்]

சீயெனல்

சீயெனல் cīyeṉal, பெ. (n.)

   வெறுப்புக்குறிப்பு; onom. expr. signifying disgust.

     [சீ3 → எனல்]

சீய்

சீய்1 siy-,    4 செ.குன்றாவி, (v.t.)

   1. பெருக்குதல்; to sweep.

     “கடைத்தலை சீய்க்கப் பெற்றால்” (திவ். திருவாய். 10.2:7);

   2. வெட்டுதல்; to cut down, cut with adze.

     “பாவக்காட்டைச் சீய்த்து” (திவ். பெரியாழ். 5, 4, 7, வியா);.

   3. போக்குதல்; to destroy, remove.

     [சீ → சீய்-,]

 சீய்2 siy,    4 செ.குவி (v.i.)

   உரைசுதல் (யாழ்.அக.);; to rub.

சீய்க்காய்

 சீய்க்காய் cīykkāy, பெ. (n.)

சீக்காய் பார்க்க;see sik-kay.

சீய்க்காய்ச்சடங்கு

சீய்க்காய்ச்சடங்கு cīykkāyccaḍaṅgu, பெ. (n.)

சீக்காய்ச்சடங்கு பார்க்க;see Sikkiy-cadangu.

 சீய்க்காய்ச்சடங்கு cīykkāyccaḍaṅgu, பெ. (n.)

   13ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நன்னூல் செய்வித்த ஒரு கங்கவரசன்; a Ganga prince under whose patronage Nannul was written early in the 13th C.

     “திருந்திய செங்கோற் சீயகங்கன்” (நான். பாயி,);

சீரகக்கோரை

 சீரகக்கோரை cīragagārai, பெ. (n.)

   கோரை வகை (சங்.அக.);; a kind of sedge.

 Skt.jiraka

     [சீரகம் + கோரை]

சீரகச்சம்பா

சீரகச்சம்பா cīragaccambā, பெ. (n.)

   1. மடங்கல் (ஆவணி);, கன்னி (புரட்டாசி); மாதங்களில் விதைக்கப்பெற்று ஐந்து மாதங்களிற் பயிராகுஞ் சம்பாநெல் வகை (பதார்த்த. 814);; a superior kind of paddy sown in September and maturing in five months.

   2. ஒருவகைச் செந்நெல்; a variety of red paddy.

     [சீரகம் + சம்பா]

சீரகத்தாமன்

சீரகத்தாமன் cīragattāmaṉ, பெ. (n.)

   1. சீரகத்தாரோன் (வின்); பார்க்க;see Siraga-t-taron.

   2. வணிகன் (R.);; member of the Vaisya Caste.

     [சீரகம் → சீரகத்தாமன்]

சீரகத்தாரோன்

 சீரகத்தாரோன் cīragattārōṉ, பெ. (n.)

   சீரகமாலையணிந்த குபேரன் (பிங்.);; Kuberan, as wearing a garland of Siragam.

     [சீரகம் + தாரோன். தார் = மாலை, தார் → தாரோன்]

சீரகபாடி

 சீரகபாடி cīragapāṭi, பெ. (n.)

   கோட்டம் (மலை.);; Arabian costum.

     [சீரகம் + பாடி]

சீரகம்

சீரகம்1 cīragam, பெ. (n.)

   1. செடிவகை (பதார்த்த;1032);; cumin.

   2. ஒரு நிறையளவு (தொல். எழுத்து. 170, உரை);; a small measure of weight.

 Skt. Jiraka

     [சீர் → சீரம் → சீரகம்]

சீரம் → சீரகம்.

உலகில் முதன்முதற் சிறந்தமுறையில் சமையல் தொழில் தொடங்கியதும், அதற்குச் சீரகத்தைப் பயன்படுத்தியதும், தமிழகமே.

     “சிறுபிள்ளை யில்லாத வீடும் சீரகமில்லாத கறியும் செவ்வையாயிரா” என்பது தொன்று தொட்டு வழங்கும் பழமொழி.

சீரகக்கோரை, சீரகச்சம்பா, சீரகவள்ளி என்பன ஒப்புமைபற்றிப் பெயர்பெற்ற நிலைத்திணை வகைகள்.

பொன்னளவையிற் சீரகம் என்பது ஒர் அளவு. 5 கடுகு = 1 சீரகம், 5 சீரகம் = 1 நெல்

     “அளவிற்கும் நிறையிற்கும் மொழிமுதலாகி யுளவெனப்பட்ட வொன்பதிற் றெழுத்தே அவைதாம்.

கசதப வென்றா நமவ வென்றா

அகர உகரமோ டவையென மொழிப” (தொல். எழுத்து. 170);

என்னும் தொல்காப்பிய எழுத்ததிகார நூற்பா வுரையில்,

     “கழஞ்சு சீரகம், தொடி, பலம்,

நிறை, மா, வரை, அந்தை” என்று இளம்பூரணரும்

     “கழஞ்சு சீரகம் தொடி, பலம், நிறை, மா, வரை, அந்தை இவை நிறை” என்று நச்சினார்க்கினியரும், கூறியிருத்தலையும், நோக்குக. செரி → செரியகம் → சீரகம்.

வடவர் மூலம் காட்டும் வகை: – ஜீரக = ஜீரண ஜ்ரு = ஜீரண ஜ்ரு – கிழமாக்கு, கட்டுக்குலை, கரை, செரிக்கச் செய். ஜ்ரூ என்பது கிழ என்னும் தென்சொற்றிரிபே. (வ.மொ.வ.153);.

 சீரகம்2 cīragam, பெ. (n.)

   பன்றி (யாழ்.அக.);; hog.

சீரகரை

சீரகரை cīragarai, பெ. (n.)

   அரைச்சீரக அளவு (தொல்.எழுத்து.171, உரை);; a measure of weight = half a Siragam.

     [சீரகம் + அரை]

சீரகர்

 சீரகர் cīragar, பெ. (n.)

   புத்த மதத்தவர் (மரப் பட்டை தரித்தோர்);; Buddhist, as clad in bark.

 Skt. Siraka

     [சீரை = மரவுரி மரப்பட்டை. சீரை → சீரையர் → சீரகர்]

சீரகவள்ளி

சீரகவள்ளி cīragavaḷḷi, பெ. (n.)

   1. காட்டுக்காய் வள்ளி (L.);; cultivatcd yam.

   2. காட்டுச் சீரகவள்ளி (M.M. 463);; Malacca yam.

     [சீரகம் + வள்ளி]

சீரங்கச்சம்பா

சீரங்கச்சம்பா cīraṅgaccambā, பெ. (n.)

   நெல்வகை (மதி.க.,6);; a kind of paddy.

     [சீரகச்சம்பா – சிரங்கச்சம்பா]

சீரங்கராயன்

சீரங்கராயன் cīraṅgarāyaṉ, பெ. (n.)

   பழைய காசு வகை (பணவிடு.117);; an ancient coin.

     [சீரங்கம் + அரையன் → ராயன்]

சீரங்கி

 சீரங்கி cīraṅgi, பெ. (n.)

   ஒருவகை நெல்; a kind of paddy.

சீரணன்

 சீரணன் cīraṇaṉ, பெ. (n.)

   கிழவன் (யாழ்.அக);; old man.

சீரணி

சீரணி1 cīraṇi, பெ. (n.)

   ஓமம் (மலை.);; bishop’s weed.

 சீரணி2 cīraṇi, பெ. (n.)

   1. காடு (திவா.);; jungle, forest.

   2. கூத்தின் வேறுபாடு; quick step in dancing

   3. பந்தத்தில் எரிதற்குச் சுற்றுந் துணி; fuse-cloth in a torch.

     [சீர்2 + அணி]

 சீரணி3 cīraṇi, பெ. (n.)

   ஒரு பணியாரம் (வின்.);; a kind of pastry.

 U. sira

 சீரணி4 cīraṇi, பெ. (n.)

   ஒழுங்கான அணி; systamatic parade.

     ‘சீரணி கெட்டால் கோரணி’ (பழ.);.

     [சீர் + அணி]

சீரணிபோடு-தல்

சீரணிபோடு-தல் Sirami-pogu-,    20 செ.கு.வி. (v.i.)

   கூத்தில் விரைந்து அடியெடுத்துவைத்தல் (வின்.);; to move with quick steps in dancing.

     [சீரணி + போடு-,]

சீரணை

சீரணை cīraṇai, பெ. (n.)

   பழக்கம் (யாழ்.அக);; habit, custom, constant use.

     [சீர்2 + அணை]

சீரத்துவசன்

 சீரத்துவசன் sīrattuvasaṉ, பெ. (n.)

மேழிக்

   கொடியையுடைய சனகன் (அபி.சிந்);; King Janaga, as having a plough as his flag.

     [சீர் = மேழி. சீர் – சீரத்துவசன்]

சீரந்தாதி

சீரந்தாதி cīrandāti, பெ. (n.)

   பாட்டில் ஒரடியின் இறுதிச்சீர் அடுத்த அடியின் முதற்சீரோடு தொடுத்து வருவது (தொல். பொருள். 411, உரை);; repetition of the final foot of a line as the initial foot of the following line.

     [சீர் + அந்தாதி. அந்தாதியை ஈறு தொடங்கி என்பது செந்தமிழ் வழக்கு]

சீரப்பள்ளி

 சீரப்பள்ளி cīrappaḷḷi, பெ.(n.)

   இராசிபுரம் வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Răsipuram Taluk.

     [சீரான்+பள்ளி].

சீரமம்

 சீரமம் cīramam, பெ.(n.)

   சிவகங்கை வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Sivaganga Taluk.

     [ஒருகாசீராமன்-சீராமம்].

சீரமோடா

சீரமோடா1 cīramōṭā, பெ.

   1. வீழி (மலை.);; a straggling shrub with simple oblong leaves and greenish flower.

   2. நார்ச்சீலை (வின்.);; cloth made of fibres.

     [சீரம்1 → சீரமோடா]

 சீரமோடா2 cīramōṭā, பெ. (n.)

   காட்டெருமைப் பால் (வின்.);; milk of the wild buffalo.

     [சீரம்3 → சீரமோடா]

சீரம்

சீரம்1 cīram, பெ. (n.)

   மரவுரி; bark of a tree, used as clothing.

     “தீரா மனத்தாள் தரவந்தன சீரம்” (கம்பரா. நகர்நீ. 147);.

 Skt. sira

     [சீரை1 – சீரம்]

 சீரம்2 cīram, பெ. (n.)

   கலப்பை; plough.

     “சீரங்கராக மறமோது திகிரி செங்கை” (கந்தரந்.98);.

 Skt. sira

     [சீர் → சீரம்]

 சீரம்3 cīram, பெ. (n.)

   பால் (வின்.);; milk.

 Skt. Ksira

 சீரம்4 cīram, பெ. (n.)

   இலாமிச்சை (மலை);; cuscuss grass.

 Skt. Usira

 சீரம்5 cīram, பெ. (n.)

சீரகம்,1 (மூ.அ); பார்க்க;see Siragam,1 (செ.அக.);.

     [சீரகம் → சீரம்]

சீரம்பாம்பு

 சீரம்பாம்பு cīrambāmbu, பெ.(n.)

   விலாங்கு மீன் வகை; long finned eel

     [சீரம்+பாம்பு].

     [P]

சீரலைவாய்

சீரலைவாய் cīralaivāy, பெ. (n.)

   அலைவாய் என்னும் பெயருடைய திருச்செந்துார்; Tiruccendur, in Tinnevelly district, as situate in the sea-shore.

     “விழுச் சீரலைவாய்ச் சேறலும்” (திருமுரு. 125);.

     [சீர் + அவைவாய்]

அலைவாய் பார்க்க

சீரளவு

 சீரளவு cīraḷavu, பெ. (n.)

   நேர்மையாக அளக்கை (இ.வ.);; measuring properly.

     [சீர் + அளவு]

சீரழி

சீரழி1 Sir-ali-    4 செ.குன்றாவி, (v.t.)

   1. ஒழுங்குலைத்தல்; to cause, disorder;

 to disarrange.

   2. கற்பழித்தல்; to ravish, as a woman.

   3. நிலைகெடுத்தல் (வின்.);; to ruin.

     [சீர்2 + அழி-,]

 சீரழி2 siali,    2 செ.கு.வி. (v.i.)

சீர்குலை பார்க்க;see Sir-kulai-.

     [சீர் + அழி-,]

சீரவட்டம்

 சீரவட்டம் cīravaṭṭam, பெ. (n.)

   ஈயம் (மலை.);; lead.

சீரா

சீரா1 cīrā, பெ. (n.)

   தலைச்சீரா; helmet.

     “கிடந்த பேராக சீரா” (திருவாலவா. 45:9);.

 Skt. sirsa

     [சீர் → சீரா]

 சீரா2 cīrā, பெ. (n.)

   புரசமரம் (மலை.);; palas tree.

மறுவ, பலாசம்

 சீரா3 cīrā, பெ. (n.)

   கவசம் (வின்.);; armour, coat of mail.

 U. Zirah

 சீரா4 cīrā, பெ. (n.)

   சிற்றுண்டிவகை; a confection.

 U. sira

சீராகம்

 சீராகம் cīrākam, பெ. (n.)

   ஒருவகைப் பண் (பிங்.);; a specific melody-type.

 Skt. sri-raga

     [சீர் + ராகம், அராகம் → ராகம்]

சீராங்கம்

சீராங்கம் cīrāṅgam, பெ. (n.)

   1. கலப்பை (யாழ்.அக.);; plough.

   2. கொழு; ploughshare.

     [சீரம் → அங்கம்]

சீராடிக்கொண்டுபோகை

 சீராடிக்கொண்டுபோகை cīrāṭikkoṇṭupōkai, பெ. (n.)

   கணவன்வீட்டில் சிறுசண்டையிட்டுக் கொண்டு அது காரணமாக மனைவி தன் பிறந்தகஞ் செல்லுகை (இ.வ.);; going of a married girl from her husband’s house to her father’s on the pretext of a petty quarrel.

     [சீராடிக்கொண்டு + போகை]

சீராடிச் சட்டம்

 சீராடிச் சட்டம் cīrāṭiccaṭṭam, பெ.(n.)

   தறி சீராக இயங்கும் சட்டம்; wooden frame in handloom.

     [சீர்+ ஆடி+ சட்டம்].

சீராடு-தல்

சீராடு-தல் Siridu-,    5 செ.கு.வி. (v.i.)

   சிறு சண்டையிடுதல்; to pick petty quarrels.

     “ஏன் ஓயாமல் சீராடுகிறாய்?” (நெல்லை);.

     [சீர் + ஆடு-,]

சீராட்டு

சீராட்டு1 Sirattu-,    5 செ.குன்றாவி (v.t.)

   1. செல்லம்பாராட்டுதல்; to caress, pet.

     “பேராட்டி சீராட்டும் பிள்ளையார்” (கோயிற்பு. பாயி.7);.

   2. கொண்டாடுதல்; to extol, applaud;

     “கரத்தாற் றைவந்து சீராட்டி யுரைத்தாள்” (சிவரக. தேவியுடன். 24);.

     [சீர் + ஆட்டு-,]

 சீராட்டு2 cīrāṭṭu, பெ. (n.)

   செல்லம் பாராட்டுகை; caressing, fondling.

     “பாலர்க்குரிய சீராட்டுப் பண்ணி (சேது. அநுமகுண்.12);.

 சீராட்டு3 cīrāṭṭu, பெ. (n.)

   சிறுசண்டை, ஊடல் (இ.வ.);; petty quarrel.

     [சீராடு → சீராட்டு]

சீராமமாடை

சீராமமாடை cīrāmamāṭai, பெ. (n.)

   பழைய பொற்காசு வகை; an ancient gold coin.

     “ஒரு சீராம மாடையுங் கொடுத்து” (கோயிலொ. 143);.

சீராளதேவன்

சீராளதேவன் cīrāḷatēvaṉ, பெ. (n.)

   பெற்றோராற் கொன்று, கறியாகச் சமைத்து அடியார்உருவில் வந்த சிவனுக்குப் பரிமாறப் பட்டுப் பின், அவனருளால் உயிர் பெற்றெழுந்த சிறுத்தொண்ட நாயனாரின் மைந்தன்; the son of Siruttondar who was cut up cooked and served to Śivan by his parents, but miraculously broughtback to life by Him.

     “சீராள தேவரெனுந் திருமைந்தரவதரித்தார்” (பெரியபு. சிறுத்தொண். 17);.

     [சீராளன் + தேவன்]

சீராளன்

சீராளன் cīrāḷaṉ, பெ. (n.)

   1. சிறப்புற்றவன்; distinguished person.

     “மனக்கினிய சீராளன்” (பதினொ. அற்புத. 44);. சீராளனைப் பெற்றபிறகு திருச்சீலைத்துணிக்கு வருத்தமாச்சுது’ (பழ.);

   2. சீராளா வாராய்” (பெரியபு. சிறுத்தொண். 81);.

     [சீர்2 + ஆளன்]

சீரி

சீரி1 Siri,    4 செ.கு.வி (v.i.)

   சிறப்புறுதல்; to be magnificent.

     “சீரித்த வேலவன் யாரையென்று” (தணிகைப்பு. களவு. 494);.

     [சீர்3 → சீரி-,]

 சீரி2 cīri, பெ. (n.)

   முக்காடு (யாழ்.அக);; veil.

     [சீரை1 → சீசி]

சீரிகை

 சீரிகை cīrigai, பெ. (n.)

சிள்வண்டு (யாழ்.அக.); பார்க்க;see Silvangu.

ம. சீரி

     [சீர் → சீரிகை]

சீரிடம்

சீரிடம்1 cīriḍam, பெ. (n.)

   வாய்த்த இடம்; suitable place or opportunity.

     “சீரிடங்காணி னெறிதற்குப் பட்டடை” (குறள். 821);.

     [சீர்3 + இடம்]

 சீரிடம்2 cīriḍam, பெ. (n.)

   தலை (யாழ்.அக.);; head.

 Skt. Sirsa

 சீரிடம்3 cīriḍam, பெ. (n.)

   வாகைமரம் (மலை.);; siris tree.

 Skt. Sirisa

சீரிப்பு

 சீரிப்பு cīrippu, பெ. (n.)

சீரனை (வின்.); பார்க்க;see Siramai.

     [சீர் → சீரிப்பு]

சீரிமரம்

 சீரிமரம் cīrimaram, பெ. (n.)

   புளியமரம் (மலை.);; tamarind tree.

     [சீரி + மரம்]

சீரிய

சீரிய Siriya, கு.பெ.எ. (adj.)

   சிறப்பான; of surpassing excellence.

     “சீரிய சிங்காதனத் திருந்து” (திவ். திருப்பா.23);.

     [சீர்2 → சீரிய]

சீரியர்

சீரியர் cīriyar, பெ. (n.)

   பண்பார்ந்த செயல்களாற் சிறந்தவர்; the noble, the great.

     “சீரியர் கெட்டாலுஞ் சீரியர் சீரியரே” (மூதுரை, 18);.

     [சீர்2 → சீரியர். ‘அர்’ உடைமைப் பெயரீறு]

சீரியார்

சீரியார் cīriyār, பெ. (n.)

சிரியர் பார்க்க;see siriyar.

     “சீரியார் கேண்மை” (நாலடி. 232);.

     [சீரியர் → சீரியார்]

சீருகை

 சீருகை cīrugai, பெ. (n.)

சீரிகை (யாழ்.அக.); பார்க்க;see Sirigai.

     [சீரிகை → சீருகை]

சீருடை

 சீருடை cīruḍai, பெ.(n.)

நிறுவனப்பணியாளர் ஒரு குழுவினர், மாணவர் ஆகியோர் உடுத்தும் ஒரே வகையான உடை

 uniform

மறுவ. ஒப்பாடை

     [சீர்+உடை],

சீருடையாள்

 சீருடையாள் cīruḍaiyāḷ, பெ.(n.)

   திருநள்ளாற்று சிவன் கோயில் கல்வெட்டில் காணப்படும் பெண்ணின் பெயர்; name of a woman.

     [சீர்+உடையாள்].

சீருணம்

சீருணம் cīruṇam, பெ. (n.)

   செம்பு (திவா.);; copper.

     “சீருணத் தசும்ப ரொன்றில்” (கந்தபு. வில்வவன் வாதாவி வதை. 13);.

     [சீர்2 + உண்(மை); = சீருண். சீருண் → சீருணம். ‘அம்’ சொல்வாக்க ஈறு]

சீருணி

 சீருணி cīruṇi, பெ. (n.)

சீருணம் (வின்.); பார்க்க;see Sirunam.

     [சீருணம் → சீருணி]

சீருத்திரர்

சீருத்திரர் cīruttirar, பெ. (n.)

   1 சிவனடியார்; devotee of Siva.

   2. ஆளவ (நிர்வாக);க்குழு; executive or managing committee. (தெ.கோ.சா. 3:2);.

     [சீரு + உத்திரர்]

சீருளியம்

 சீருளியம் cīruḷiyam, பெ. (n.)

சீருணம் (அக.நி.); பார்க்க;see Sirunam.

     [சீருள் → சீருளி + அம். ‘அம்’ = சொல்லாக்க ஈறு]

சீருள்

சீருள் cīruḷ, பெ. (n.)

   1. ஆக்கம் (பிங்.);; prosperity, wealth.

   2. செம்பு; copper.

   3. ஈயம்; lead.

   4. வெள்ளீயம்; pewter.

     [சீர்2 – சீதள்]

சீரெடு-த்தல்

சீரெடு-த்தல் Siredu,    4 செ.கு.வி (v.i.)

சீர்செய் பார்க்க;see Sir-Sey-.

     [சீர் + எடு-,]

சீரெழுத்தாளர்

சீரெழுத்தாளர் cīreḻuttāḷar, பெ.(n.)

   மெய்யுணர்வூட்டும் ஆசான்; agreat sage or teacher who enlightens his disciples.

     “ஓரெழுத்தொருபொரு ளுணரர்க் கூறிய சீரெழுத் தாளர்”(திருமந்:514);

     [சீர் +எழுத்து-ஆளர்.]

சீரை

சீரை1 cīrai, பெ. (n.)

   1. செதுக்கப்பட்ட மரவுரி; bark of a tree, used as clothing.

     “சீரை தைஇய வுடுக்கையர்” (திருமுரு. 126);.

   2. சீலை (பிங்.);; cloth.

   3. கந்தை; rags, tatters.

     “செடிபடுந் துணியுடைச் சீரை சுற்றினான்” (திருவாலவா. 54:19);.

   ம. சிரெ;க. கெரெ

     [சிரை → சீரை (வ.மொ.வ 153);]

 சீரை2 cīrai, பெ. (n.)

   துலைத்தட்டு; scale-pan.

     “சீரைபுக்க வரையா வீகை யுரவோன்” (புறநா.43:7);.

     [சீர் → சீரை]

சீர்

சீர்1 Sir-,    4 செ.கு.வி (v.i.)

   சினத்தல்; to be angry.

     “கந்தரி பொறாளாய்ச் சீர்த்திடலும்” (கந்தபு. தெய்வயா.34);.

     [சீறு → சீர்-,]

 சீர்2 Sir,    4 செ.குவி (v.i.)

   1. சிறத்தல்; to beexcellent, to be superior.

     “பொருள் மற்றெனக்குமோர் பொருடன்னிற் சீர்க்கத் தருமேல்” (திவ். திருவாய். 8.7:6);.

   2. காலம் வாய்த்தல்; to be suitable, fitting, as an opportunity.

     “குத்தொக்க சீர்த்த விடத்து” (குறள், 490);.

   3. ஒசை நயம்படநிற்றல்; to fall into rhythmic movement.

     “சொற்சீர்த் திறுதல்” (தொல். பொருள். 324, உரை);.

ம. சீர்க்குக

     [சீ → சீர்]

 சீர்3 Sir,    4 செ.கு.வி. (v.i.)

   நிகழ்தல், நேரிடுதல்; to happen, occur.

     “புலந்தலைப் பெய்தலறிவுடன் சீர்க்குமன்றே” (நீலகேசி.509);.

     [சீ → சீர்-,]

 சீர்4 cīr, பெ. (n.)

   1. செல்வம் (பிங்.);; wealth.

     “சீர் அற்றார் கையில் செம்பொன் விளை பெறா” (பழ.);.

   2. அழகு; beauty, gracefulness.

     “சீர்கெழு சிறப்பின்” (மலைபடு. 570);.

   3. நன்மை (திவா.);; goodness.

   4. பெருமை; greatness, excellence, superiority.

     “சீர்கெழு கொடியும்” (புறநா.1.);

   5. தலைமை; paramount importance.

     “ஊரூர் கொண்ட சீர்கெழு விழவினும்…” (திருமுருக.220);.

   6. மதிப்பு; esteem, regard.

     “வணக்கருஞ்சீர்….. மன்னன்” (பு.வெ.9, 22);.

   7. புகழ்; reputation, fame.

     “ஆனாச்சீர்க் கூடலுள்” (கலித். 30);.

   8. இயல்பு; naturc, characteristic.

     “கழற்பெய் குடத்தின் சீரே” (நன். பொது. 32);.

   9. நேர்மை; good, normal condition.

அவன் சீராக இருக்கிறானா? (உ.வ.);.

   10. செம் பொருள் (அக.நி.);; literal meaning.

   11. சமம்; equilibrium, evenness.

     “உலகுசீர்பெற விருந்தான்” (கம்பரா. அகத். 40);.

 Skt. Sri

     [சீ6 → சீர்]

 சீர்5 cīr, பெ. (n.)

   1. சீர்தூக்குங்கோல் (தராசு); (பிங்.);; balance.

   2. அளவு; measure, quantity.

     “விரிசீர்த் தெரிகோல்” (புநா. 6:8);.

   3. எடை; heaviness.

     “விழுச்சீ ரையவி” (பதிற்றுப்.22);.

   4. துலையோரை (சூடா.);; libra of the Zodiac.

   5. காவடித்தண்டு (திவா.);; shoulder-staff for

 carrying burden.

     “யானைகோடு சீராக” (மலைபடு.154);.

   6. தண்டப் படைக்கலம் (பிங்.);; club, bludgeon.

     [சீ → சீர்]

 சீர்6 cīr, பெ. (n.)

   1. தாளம்; time-measure.

     “தண்குரவைச் சீர்” (புறநா. 24, 6);.

   2. பாட்டு; song.

     “சேயுய ரூசற்சீர்” (கலித். 131:24);.

   3. செய்யுளின் ஒருறுப்பு; metrical foot.

     “யாத்த சீரேயடியாப்பெனா” (தொல். பொருள்.313);.

   4. இசைக் கருவியாலெழும் ஒலி (திவா.);; sound of musical instruments.

   5. ஓசை (அக.நி);; sound.

   6. சீர் சிறப்பு2 (உ.வ.); பார்க்க;see sir-sirappu.

   7. காலிலணிவதற்குரிய தண்டை (வின்.);; tinkling ornaments for the feet.

ம. சீலு

     [சீ → சீர்-,]

 சீர்7 cīr, பெ. (n.)

   தளர்வு (அக.நி.);; weak condition

     [சீ → சீர்-,]

சீர் உருளை

 சீர் உருளை cīruruḷai, பெ.(n.)

   இரு பக்கங்களிலும் இருக்கும் வண்டிச் சக்கரம்; cart

     [சர்+உருளை]

சீர் கயிறு

 சீர் கயிறு cīrkayiṟu, பெ.(n.)

கொரங்காட்டியையும் அச்சையும் சேர்க்கும் கயிறு,

 a connecting горе.

     [சேர்→ சீர்+கயிறு]

சீர்குலை-தல்

சீர்குலை-தல் sir-kulai-,    4 செ.கு.வி. (v.i.)

   1. ஒழுங்கு முறைகெடு; to be in disorder, to be deranged.

   2. ஒழுக்கங்கெடுதல்; to lose one’s character, chastity, as a woman.

   3. நிலை கெடுதல்; to be ruined in circumstances.

சீர்கெடு-தல்

சீர்கெடு-தல் Sir-kedu-,    20 செ.கு.வி. (v.i.)

சீர்குலை- பார்க்க;see Sir-kulai-

     [சீர் + கெடு-,]

சீர்கேடி

 சீர்கேடி cīrāṭi, பெ. (n.)

   மூதேவி (பிங்.);; goddess of Misfortune.

     [சீர்கெடு → சீர்கேடு → சீர்கேடி]

சீர்கேடு

சீர்கேடு cīrāṭu, பெ. (n.)

   1. ஒழுங்கின்மை (உ.வ.);; disorder, irregularity.

   2. அழகிலி, அருவருப்புள்ளது (வின்.);; ugliness, clumsiness.

   3. நிலை குலைவு (வின்.);; misfortune.

     [சீர் + கேடு. கெடு → கேடு]

சீர்கோடிகம்

சீர்கோடிகம் cīrāṭigam, பெ. (n.)

   பாலைப் பண்ணின் திறங்களில் ஒன்று (சிலப். 14: 160, உரை.);; ancient secondary melody-type of the palai class.

சீர்க்கடை

 சீர்க்கடை cīrkkaḍai, பெ.(n.)

   கொங்கு வேளாளர் இனத்தில் நிகழும் வேளாண் Qom flool usulfils); an agricultural ritual of Kongu Vellalar community.

     [சர்+கடை.]

சீர்க்கம்

சீர்க்கம் cīrkkam, பெ. (n.)

   மண்டபத்தில் அமைக்கப்படும் சிற்ப வகை; an ornamental structure in a hall.

     “கொடுக்குஞ் சீர்க்கமு மடுத்து” (பெருங். மகத. 9:36);.

     [சீர் → சீர்க்கம்]

சீர்க்காரம்

 சீர்க்காரம் cīrkkāram, பெ. (n.)

எதிரொலி (யாழ்.அக.);: echo.

 Skt. Silkara

     [சிம்க்கை → சீர்க்கை → சீர்க்கா → சிர்க்காரம்]

சீர்க்காரர்

 சீர்க்காரர் cīrkkārar, பெ.(n.)

   அருமைக்காரைச் சுட்டும் வேறு பெயர்; another name of Arumaikkāraŋ.

     [சீர்+காரர்].

சீர்க்கோழி

 சீர்க்கோழி cīrkāḻi, பெ. (n.)

   நரைக்கொள்ளு (மலை.);; a kind of gram.

சீர்சிறப்பு

சீர்சிறப்பு cīrciṟappu, பெ. (n.)

   1. மிகுசெழிப்பு (வின்.);; prosperity.

   2. பொருட் கொடை (இவ.);:

 gifts to a girl given by her parents on the occassion of her marriage.

     [சீர் + சிறப்பு]

சீர்செய்-தல்

 சீர்செய்-தல் Si-sey, செ.கு.வி (v.i.)

   திருமணம் முதலியவற்றில் உறவின் முறையார் செய்யும் சீர்வரிசை; to give presents, as to a daughter, on the occasion of her marriage and other ceremanies.

     [சீர் + செய்-,]

சீர்தட்டுதல்

 சீர்தட்டுதல் cīrdaṭṭudal, பெ. (n.)

   தூய்மை யற்றோர் நெருங்குதலாலேனும், தொடுதலா லேனும், குழந்தைக்கு நோய்மிகுகை (இ.வ.);; sickness of a child caused or aggravated by the touch or approach of impure persons.

     [சீர் + தட்டுதல். தட்டுதல் = மோதுதல், கெடுதல், தீண்டுதல்]

சீர்தண்ணிர்

 சீர்தண்ணிர் cīrtaṇṇir, பெ.(n.)

   கொங்கு திருமணச் சடங்குகளில் ஒன்று; ritual in marriage of Kongu Vēllalar community.

     [சீர்+தண்ணி].

சீர்தாங்கி

 சீர்தாங்கி cīrtāṅgi, பெ.(n.)

   திருவாடானை வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Tiruvādānai Taluk.

     [சீர்+தாங்கல் (ஏரி);].

சீர்திருத்தத்திருமணம்

சீர்திருத்தத்திருமணம் cīrtiruttattirumaṇam, பெ. (n.)

   மரபான சடங்குகளை முற்றுந் தவிர்த்துச் செய்யும் மணமுறை; marriage conducted according to one’s self-respect rejecting all the traditional rites.

     [சீர்திருத்தம் + திருமணம்]

சடங்கு திருமணங்களே சட்டப்படிச் செல்லும் என்ற நிலையை மாற்றிச் சீர்திருத்தத் திருமணமும் செல்லும் என்று 1969-ஆம் ஆண்டு தமிழக அரசு சட்டம் நிறைவேற்றியது.

சீர்திருத்தம்

 சீர்திருத்தம் cīrtiruttam, பெ. (n.)

   செவ்வைப் படுத்துகை, சீர்படுத்துகை; reform, reformation, correction.

     [சீர் + திருத்தம்]

சீர்திருத்து-தல்

சீர்திருத்து-தல் si-diruttu.5 செ.குன்றாவி (v.t.)

   செவ்வைப்படுத்துதல்; to correct, rectify, reform.

     [சீர் + திருத்து-,]

சீர்திருந்து-தல்

சீர்திருந்து-தல் si-dirundu.5 செகுன்றாவி (v.t.)

   செவ்வைப்படுதல்; to be corrected, rectified, reformed.

     [சீர் + திருந்து-,]

சீர்தூக்கு-தல்

சீர்தூக்கு-தல் Sirdikku-,    5 செகுன்றாவி (v.t.)

   1. நிறையளவை வரையறுத்தல்; to determine the weight of.

     “சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல்” (குறள், 118);.

   2. ஆராய்தல்; to weigh in the mind, consider.

     “சீர்தூக்காக் கொடையும்” (பு.வெ.9:1, கொளு, உரை);.

   3. ஒப்புநோக்குதல்; to compare.

     “மன்னனு மாசறக் கற்றோனுஞ் சீர்தூக்கின்” (வாக்குண். 26);.

     [சீர்3 + தூக்கு-,]

சீர்தைத்தல்

 சீர்தைத்தல் cīrtaittal, பெ. (n.)

சீர்தட்டுதல் (இ.வ.); பார்க்க;see Sirdattudal.

     [சீர் + தைத்தல்]

சீர்த்தவர்

சீர்த்தவர் cīrttavar, பெ. (n.)

சிரியர் பார்க்க;see siriyar.

     “சீர்த்தவர் செய்யத்தக்க கருமமே” (கம்பரா. களியாட்டு. 9);.

     [சீர் → சீர்த்தவர்]

சீர்த்தி

சீர்த்தி cīrtti, பெ. (n.)

   மிகுபுகழ் (தொல். சொல். 313);; great reputation, renown.

     ‘சீவன் போனாலும் சீர்த்தி போகாது’ (பழ.);.

     [சீ3 → சீர் → சீர்த்தி]

சீர்த்துழாய்

 சீர்த்துழாய் cīrttuḻāy, பெ. (n.)

துளசி (மலை.); பார்க்க;see dulasi.

     [சீ → சீர் + துழாய்]

சீர்நிருவாகம்

 சீர்நிருவாகம் cīrniruvākam, பெ. (n.)

   நிலைமை; condition, circumstances.

     ‘இந்தச் சீர் நிருவாகத்தில் என்ன செய்வது’ (வின்.);.

     [சீர் + நிருவாகம்]

சீர்பாடல்

 சீர்பாடல் cīrpāṭal, பெ. (n.)

   திருமணத்தில், பெரும்பாலும் நான்காம் நாள் நடக்குந் திருமண நிகழ்ச்சியில், மணமக்களின் பெற்றோர்களைப் புகழ்ந்துபாடுகை (மாலியம்);; extolling or recounting the excellences of wedding partics, usually on the fourth day of marriage.

     [சீர் + பாடல்]

சீர்போடு-தல்

சீர்போடு-தல் sir-bodu-,    19 செ.கு.வி. (v.i.)

   காற்றாடிப் பட்டத்துக்குக்கயிறு கட்டுதல் (யாழ்ப்.);; to tie the balance-string to a paper kite

     [சீர் + போடு-,]

சீர்ப்படு-தல்

சீர்ப்படு-தல் Sirp-padu-,    20 செ.கு.வி (v.i.)

   1. செம்மைப்படுதல்; to reform, improve.

   2. அளவிற்படுதல்; to be moderate.

     “சீர்ப்படவுண்ட சிறுகளி யேருண்கண்” (கலித். 97);.

     [சீர் + படு-,]

சீர்ப்படுத்து-தல்

சீர்ப்படுத்து-தல் si-p-paluttu-,    5 செ.குன்றாவி, (v.t.)

   குணப்படுத்துதல் (இ.வ.);; to bring round, cure.

     [சீர் + படுத்து-,]

சீர்ப்பாடு

சீர்ப்பாடு cīrppāṭu, பெ. (n.)

   மேம்பாடு; greatness.

     “திருமுனைப்பாடித் திறம்பாடுஞ் சீர்ப்பாடு” (பெரியபு. திருநாவுக்.11);.

     [சீர் + பாடு]

சீர்ப்பிழை

சீர்ப்பிழை cīrppiḻai, பெ. (n.)

   1. குற்றம் (வின்.);; mistake, defect.

   2. தடை; impediment, obstacle, untoward circumstance.

     [சீர் + பிழை]

சீர்ப்பு

சீர்ப்பு cīrppu, பெ. (n.)

   சிறப்பு; excellence.

     “சீர்ப்பமை சிகழிகை” (பெருங். உஞ்சைக். 42, 148);.

ம. சீர்ப்பு (தடிப்பு);

     [சீர் → சீர்ப்பு]

சீர்மடக்கு

 சீர்மடக்கு cīrmaḍakku, பெ. (n.)

   செய்யுளுள் சீர் இடைமடக்கி வருகை (வின்.);; repetition of a foot in a metrical line.

     [சீர் + மடங்கு]

சீர்மரபினர்

 சீர்மரபினர் cīrmarabiṉar, பெ.(n.)

   பரங்கியர் களால் வகைப்படுத்தப்பட்டதொரு பட்டியலி லிருந்து பின்னர் நீக்கப்பட்டு மிகவும் பின்தங்கிய இனத்தவராக இனங்கானப் பட்டோர்; communities once listed by the (British); and later transferred to the list of most backward communities.

     [சீர்+மரபினர்.]

சீர்மரம்

சீர்மரம் cīrmaram, பெ. (n.)

   படமரம் என்னும் நெசவுக்கருவி (வின்.);; weaver’s beam.

     [சீர்4 + மரம்]

சீர்மானம்

 சீர்மானம் cīrmāṉam, பெ. (n.)

   ஓர் இயங்கியின் எந்திரம் உள்ளிட்ட அனைத்து உறுப்புகளும் நன்கு செயற்படுதற்கு ஏற்ற வகையில் அனைத்துப் பகுதிகளையும் (நீராட்டு, நெய்யாட்டு உட்பட); செப்பம் செய்து ஒழுங்குபடுத்துத்ல்; servicing a vehicle examinating of a vehicle or machine followed by any work that is necessary to keep it operating well.

சீர்மானம் செய்தல்

 சீர்மானம் செய்தல் cīrmāṉamceytal, செ.கு.வி. (vi.)

சீர்மானம் பார்க்க;see cirmanam stick.

     [சீ+மாறு]

சீர்மை

சீர்மை1 cīrmai, பெ. (n.)

   1. சிறப்பு; greatness, excellence, eminence.

     “செறிவறிந்து சீர்மை பயக்கும்” (குறள்.123);.

   2. புகழ்; reputation, renown.

     “குடிமைக்குஞ் சீர்மைக்கும்” (தஞ்சைவா. 241);.

   3. நிறை; weight.

     “மென்மை, சீர்மை, நொய்ம்மை” (மணிமே. 27:254);

   4. அளவிற் படுகை; moderateness.

     “நின்னை மிகாமற் சீர்மைப்பட நுகர்ந்த சிறிய களிப்பு” (கலித். 97, உரை);.

   5. நன்னடை; decorum, good behaviour.

     “”சீர்மை சிறிதுமிலி” (திருப்பு. 109);.

   6. வழவழப்பு (வின்);; smoothness, evenness, polish.

ம. சீர்ம்ம

     [சீர் → சீர்மை]

 சீர்மை2 cīrmai, பெ. (n.)

சீமை (வின்); பார்க்க;see simai

     [சீமை → சீர்மை (இ.வ.);]

சீர்வண்டு

 சீர்வண்டு cīrvaṇṭu, பெ. (n.)

   நெய்வார்கருவியி லொன்று (வின்.);; a weaver’s instrument.

     [சீர் + வண்டு)

சீர்வரிசை

 சீர்வரிசை sīrvarisai, பெ. (n.)

சீர்செய்தல் பார்க்க;see Sirsey.

     [சீர் + வண்டு]

சீறடி

சீறடி cīṟaḍi, பெ. (n.)

   அழகிய சிறியகால்; small foot, considered beautiful.

     “சிலம்புங் கழலும் புலம்புஞ்சீறடி” (சிலப். 12:64);.

     “அஞ்செஞ் சீறடி யணிசிலம் பொழிய” (சிலப். 4:47);.

     [சிறு(மை); + அடி = சிற்றடி → சீறடி]

சீறல்

சீறல்1 cīṟal, பெ. (n.)

   பெருஞ்சினம் (திவா.);; tury, rage.

ம. சீறல்

     [சீறு → சீறல்]

 சீறல்2 cīṟal, பெ. (n.)

   பெருங்காயம் (மூ.அ.);; asafoetida.

சீறல்போக்கல்

 சீறல்போக்கல் cīṟalpōkkal, பெ. (n.)

   மருந்தின் வேகம்தணித்தல்; to root out or eradicate the virulence of medicine (சா.அக.);.

     [சீறல் + போக்கல்]

சீறளவு

 சீறளவு cīṟaḷavu, பெ. (n.)

   தலைகட்டாமல் அளக்கும் அளவு (இ.வ.);; measuring grain without heaping it above the top of the measure.

     [சிறு(மை); + அளவு. சிற்றளவு சீறளவு]

சீறாப்புராணம்

சீறாப்புராணம் cīṟāppurāṇam, பெ. (n.)

   முகமது நபியின் வரலாறு பற்றி 17ஆம் நூற்றாண்டில் உமறுப்புலவர் இயற்றிய தொன்ம (புராண); இலக்கிய நூல்; a poem on the life of Muhammad, by Umaru-p-pulavar, 17th C.Arab. sirat.

சீறியகற்பு

சீறியகற்பு cīṟiyagaṟpu, பெ. (n.)

   மறக்கற்பு; chastity militant which actively guards and upholds its dignity, dist. fr. ariya-karpu.

     “ஆறிய கற்புஞ் சீறியகற்பு மெனக் கற்பு இருவகை” (சிலப். பதி. 42, அரும்);.

     [சீறு + கற்பு]

சீறியழு-தல்

சீறியழு-தல் Siri-y-alu-,    1 செ.கு.வி. (v.i.)

   குழந்தை அலறியழுதல் (இ.வ.);; to scream out loudly, as a child.

     [சீறி + அழு-,]

சீறியாழ்

சீறியாழ் cīṟiyāḻ, பெ. (n.)

   சிறிய யாழ்; a small lute.

     “கருங்கோட்டுச் சீறியாழ்” (புறநா.1270.

     [சிறு(மை); + யாழ். சிறுயாழ் → சீதயாழ்]

சீறில்

சீறில் cīṟil, பெ. (n.)

   சிறுவீடு; small house.

     “சீறின் முன்றி லிருந்த முதுவாய்ச்சாடி” (புறநா.319);.

     [சிறு(மை); + இல், சிற்றில் → சீறில்]

சீறிவிழு-தல்

சீறிவிழு-தல் siri-vilu-,    2 செ.கு.வி. (v.i.)

   1. மிகு சினத்தால் ஒசையிட்டுக் கொண்டு ஒருவன் மேற் பாய்தல்; to fall into a rage and attack.

     [சீறி + விழு-,]

சீறு

சீறு2 Siru-,    5 செ.குன்றாவி (v.t.)

   1. சினத்தல்; to get angry with.

     “சிறுபேரழைத்தனவுஞ் சீறியருளாதே” (திவ்.திருப்பா. 28);.

   2. அழித்தல்; to destroy.

     “எயில்கண் மூன்றுஞ் சீறு மெந்தைபிரான்” (தேவா. 45,2);.

 சீறு3 siru-,    5 செகுவி (v.i.)

ஆந்தைபோல்

   கத்துதல்; to hoot like an owl.

     “ஆந்தை சீறல் அறியும் பலன்” (கவுளிசா. 16);.

 சீறு4 cīṟu, பெ. (n.)

   சீற்றம்; anger.

     “சீறில்லான்” (ஏலாதி, 34);.

சீறு-தல்

சீறு-தல் siru-,    5 செ.கு.வி. (v.i.)

   1. பாம்பு முதலியன சீற்றத்துடன் வெகுளுதல்; to hiss, as a serpent.

   2. குதிரை முதலியன மூச்செறிதல் (வின்);; to snort, as a horse;

 to sniff.

   3. மிகுசினங் கொள்ளுதல்; to be infuriated, to swell with rage.

   4. தீ முதலியன முழங்கியெரிதல்; to roar and blaze forth, as a flame.

சீறுசீறெனல்

சீறுசீறெனல் cīṟucīṟeṉal, பெ. (n.)

   1. அலறியழுதற்குறிப்பு; onom. expr. signifying vehemence in crying.

     “பிள்ளை சீறுசீறென றழுகிறது”.

   2. சினமிகுதிக் குறிப்பு; violent anger.

     [சீறு + சீறு + எனல்]

சீறுபாறெனல்

சீறுபாறெனல் cīṟupāṟeṉal, பெ. (n.)

   முரண்படுதற் குறிப்பு; onom. expr. Signifying quarelling.

     “பூவோடே சீறுபா றென்னுங் கண்” (திவ். திருப்பா.13, வியா. 140);.

     [சீறு + பாறு + எனல்]

சீறுபூறெனல்

சீறுபூறெனல் cīṟupūṟeṉal, பெ. (n.)

   1. மிகுசினத்தோடு தாக்குதற்குறிப்பு; onom. expr. signifying quarelling with another, attacking with fury.

   2. பெருங்குறட்டைவிடுதற் குறிப்பு; hard snoring.

   3. இரைச்சற்குறிப்பு; roaring, as an approaching storm.

     [சீறு + பூறு + எனல்]

சீறுமாறு

சீறுமாறு cīṟumāṟu, பெ. (n.)

   1. தாறுமாறு; confusion.

   2. சரியாய் நடத்தாமை (வின்.);,

 illtreatmen.

     [சீறு + மாறு]

சீறுள்

சீறுள் cīṟuḷ, பெ. (n.)

   1. ஈயம்; lead or tin.

   2. செம்பு;соррег.

சீறுவாணம்

 சீறுவாணம் cīṟuvāṇam, பெ. (n.)

   வெடிக்காமற் சீறிச்செல்லும் வாணம்; rocket.

     [சீறு + வாணம்]

சீறூர்

சீறூர் cīṟūr, பெ. (n.)

   1. சிறிய ஊர்; small village, hamlet.

     “சீறூர்க் கோளிவண் வேண்டேம் புரவே” (புறநா. 297);.

   2. குறிஞ்சி நிலத்தூர் (பிங்.);; village in hilly tracts.

     “தழங்கு மருவியெஞ் சீறூர் பெருமவிது” (திருக்கோ. 127);.

     [சிறு(மை); + ஊர் = சீறூர்]

சீறெலி

 சீறெலி cīṟeli, பெ. (n.)

   கண்டெலி (பிங்.);; mouse, as a small species of rat.

     [சிறு + எலி = சீறெலி]

சீற்காரம்

சீற்காரம் cīṟkāram, பெ. (n.)

   1. மூச்சை உள்வாங்குதலால் எழுமொலி (கந்தபு. இந்திர. 45);; sound made by drawing in the breath.

   2. சீழ்கை (இ.வ.);; whistling.

 Skt. Sil-kara

     [சீழ்2 + காரம்]

சீற்றம்

சீற்றம் cīṟṟam, பெ. (n.)

   மிகுசினம்; anger, fury.

     “சீற்றமொ டாருயிர் கொண்ட ஞான்று” (கலித். 103);.

ம. சீற்றம்

     [சீறு → சீற்றம்]

சீலக்கேடு

 சீலக்கேடு cīlakāṭu, பெ. (n.)

   தீயநடத்தை (இ.வ.);; bad manners;

 ill-behaviour.

     [சீலம் + கேடு]

சீலங்கா-த்தல்

சீலங்கா-த்தல் silai-gi-,    4 செ.கு.வி. (v.i.)

   நோன்பு முதலியவற்றை மேற்கொள்ளுதல் (சிலப். 14:11, உரை);; to observe austerities.

     [சீலம் + கா-,]

சீலப்பந்தல்

 சீலப்பந்தல் cīlappandal, பெ.(n.)

   திருவண்ணா மலை வட்டத்தில் உள்ள சிற்றுார்; a village in Thiruvaŋŋamalai Taluk.

     [சிலம்+பந்தல்].

சீலப்பேர்

சீலப்பேர் cīlappēr, பெ. (n.)

   ஒழுக்கத்தால் ஒருவர்க்கு வழங்கும் பெயர்; name given to a person on account of his noble conduct.

     “சீலப்பேர் வீரப்பேர் அநேகமா யிருக்குமிறே” (ஈடு, 2.5:6);.

     [சீலம் + பேர். பெயர் → பேர்]

சீலம்பாயறுகு

 சீலம்பாயறுகு cīlambāyaṟugu, பெ. (n.)

   அறுகு வகை (யாழ்ப்.);; a species of cynodon grass, as spreading like a mat.

சீலம்பாய்

 சீலம்பாய் cīlambāy, பெ. (n.)

   கிழிந்தபாய் (யாழ்ப்.);; worn-out mat.

     [சிதிலம் → சீலம் + பாய்]

சீலா

சீலா cīlā, பெ. (n.)

   1. ஐந்து அடிநீளமுள்ள கடல் மீன் வகை; a fish attaining 5 ft. in length.

   2. படசின் இறைகூட (வின்.);; a basket or bag for baling out bilge-water from a boat.

   3. நீர்வாழ் பறவைவகை (வின்);; a water-bird.

ம. சீலாவு

     [சீல் → சீலா]

சீலாந்தி

சீலாந்தி cīlāndi, பெ. (n.)

பூவரசு பார்க்க;see puvarasu.

ம. சிலாந்தி

     [சீரா2 → சிலாந்தி]

சீலாப்புட்டி

சீலாப்புட்டி cīlāppuṭṭi, பெ. (n.)

சீலா,-2 (வின்.); பார்க்க;see Sila,-2.

     [சீலா + புட்டி. புட்டி = மூங்கில்கடை, கூடைகலன்]

சீலாப்பூட்டை

சீலாப்பூட்டை cīlāppūṭṭai, பெ. (n.)

சீலா2 (யாழ்.அக.); பார்க்க;see sila2.

     [சீலா + பூட்டை]

சீலி

சீலி1 sili,    4 செ.குன்றாவி, (v.t.)

   1. நல்லொழுக்கத்தில் நிறுத்துதல்; to lead one in the path of virtue.

     “சீலிக்கு முறுதியாலே தேடரு நட்புமாகும்” (ஞானவா. தாமவி. 15);.

   2. பழகுதல் (யாழ்ப்);; to practise, accustom oneself to.

     “உலக்கல் சீலிக்கப்பட்ட தோளினை யுடையான்” (பு.வெ. 11, ஆண்பாற். 2, உரை);.

     [சீலம் → சீலி-,]

 சீலி2 sili,    4 செ.கு.வி (v.i.)

   சிலிர்த்தல்; to become cool.

     “மேனியெல்லாஞ் சீலித்து ரோமஞ் சிவீரென்ன” (நெல்விடு.தூது.293);.

     [சில் → சிலிர் → சீலி-,]

 சீலி3 cīli, பெ. (n.)

   வழக்கமுள்ளவன்; person who has fallen into a habit.

     “பிறர் பின்செலுஞ் சீலிகட்கு” (தேவா. 859, 8);,

     [சீர்2 → சீல் → சீலி]

சீலை

சீலை cīlai, பெ.(n.)

   கைத்தறி நெசவில் பாவுக்கு நூலை முரடாக்க உதவும் பணி; a method of making the thread rough in handloom weaving.

 சீலை1 cīlai, பெ. (n.)

   1. துணி; cloth, garment.

     “சீலைக் குதம்பை யொருகாது” (திவ். பெரியாழ். 3.3:1);.

     ‘ஈரச்சீலையைப் போட்டுக் கழுத்தறுப்பான்’ (பழ.);.

   2. புடைவை; woman’s cloth.

     ‘சீலை இல்லையென்று சின்னாயிiட்டுக்குப் போனாளாம்;

அவள் ஈச்சம்பாயைக் கட்டிக்கொண்டு எதிரே வந்தாளாம்);’. (பழ.);

   3. இரண்டேகால் முழத் துணி; cloth of 21/4 cubits.

   4. நீர்ச்சீலை (கோவணம்); (இ.வ.);; man’s forelap.

   ம. சீல;   க. சேல, சீலெ;   சீரெ;   தெ. சீர;   து. சீரெ;   துட. சீல்ய;பட சேலெ

     [சீரை → சீலை]

த. சீலை → Skt. Ciram

 சீலை2 cīlai, பெ. (n.)

   1. செந்நிறக்கல் (மனோசிலை);; red ochre.

   2. வெண்காரம்; borax.

     [சிலை → சீலை]

 சீலை3 cīlai, பெ. (n.)

சிலைவாகை பார்க்க;see Silai-vagai.

சீலைகொடு-த்தல்

சீலைகொடு-த்தல் silai-kodu-    4 செ.கு.வி (v.i.)

   கைம்பெண்ணிற்குப் புடைவை கொடுத்து அவளை மணம் புரிதல்; to present a cloth to a widow in taken of marrying her.

     ‘அவளைச் சீலை கொடுத்துக் கொண்டுபோனான்’ (நாஞ்.);.

     [சீலை + கொடு-,]

சீலைத்துணி

சீலைத்துணி cīlaittuṇi, பெ. (n.)

   1. சிறுதுண்டு (வின்.);; piece of cloth.

   2. ஆடை; clothes.

   3. அழகுபடுத்தப் பயன்படுந்துணி (இ.வ);; cloth for decoration.

     [சீலை + துணி]

சீலைநாட்டு-தல்

சீலைநாட்டு-தல் silai-hittu-,    5 செ.கு.வி (v.i.)

   குட்டி, பால் குடியாதிருக்கும் பொருட்டு ஆட்டுமடியில் துணிகட்டுதல் (இ.வ);; to cover the udder of a goat with cloth, preventing its kid from sucking.

     [சீலை + நாட்டு-,]

சீலைப்பாம்பு

 சீலைப்பாம்பு cīlaippāmbu, பெ. (n.)

   நஞ்சில்லாததும், வெண்புள்ளியுள்ளதுமான ஒருவகைப் பாம்பு; carpet snake non-poisonous Russell’s viper with white spots.

     [சீலை + பாம்பு]

சீலைப்பாய்

 சீலைப்பாய் cīlaippāy, பெ. (n.)

சிலம்பாய் (யாழ்ப்.); பார்க்க;see.silam-bay

     ‘சீலைப்பாய் ஈழம் போய்ச் சீனி சக்கரை கட்டுமா’ (பழ.);.

     [சீலம்பாப் → சீலைப்பாய்]

சீலைப்பிள்ளை

 சீலைப்பிள்ளை cīlaippiḷḷai, பெ. (n.)

   சீலையினாற் செய்த பொம்மை (நாஞ்);; a doll made of cloth, dist. fr. olai-p-pillai.

     [சீலை + பிள்ளை. சீரை → சீலை = துணி, புடவை]

பண்டைக்காலத்தில் சிறுபிள்ளைகளின் விளையாட்டிற்குதவும் வகையில் சீலையாலும், ஒலையாலும் பொம்மைகள் செய்தளித்தனர். அடுத்த நிலையில் மரத்தாலான பொம்மைகளைக் கொடுத்தனர். சீலையாற் செய்த பொம்மை, சிறுபிள்ளைகட்குத் தீங்கு விளைவிக்காது. இன்றும் soft toys என்னும் பெயரில் துணிப் பொம்மைகளைப் பிள்ளைகட்குக் கொடுப்பதைக் காணலாம்.

சீலைப்புடம்

சீலைப்புடம் cīlaippuḍam, பெ. (n.)

   மருந்துப் புட வகை (தைலவ. தைல. 12, உரை);; a.mode of calcination of medicines.

     [சீலை + புடம்]

சீலைப்புல்

 சீலைப்புல் cīlaippul, பெ. (n.)

   புல்வகை (வின்.);; a kind of grass.

     [சீலை + புல்]

சீலைப்பேன்

சீலைப்பேன் cīlaippēṉ, பெ. (n.)

   சீலையிற் பற்றும் பேன்; lice in cloths.

     “பாழுந்துணி சீலைப்பே னொருநாண் மாறா” (அரிச்.பு.சூழ்வினை.91);

     ‘சிரிப்பாணிக் கூத்து சிரிப்பாய்ச் சிரித்துச் சீலைப்பேன் குத்துகிறது’. (பழ.);.

   ம. சீலப்பேன்;தெ. சீரபேது

     [சீலை + பேன்]

சீலைமண்

 சீலைமண் cīlaimaṇ, பெ. (n.)

   மருந்துச்சட்டி வாயினிற் சுற்றுந் துணிமேலிடும் மண்பூச்சு; coat of clay on cloth spread over the mouth of a calcinatory pot.

தெ. சீலமந்து

     [சீலை + மண்]

சீலையுஞ்சை

 சீலையுஞ்சை cīlaiyuñjai, பெ. (n.)

   கருவாகை எனும் மரவகை; fragrant sirissa.

     [சீலை + உஞ்சை]

சீலைவாகை

 சீலைவாகை cīlaivākai, பெ. (n.)

   பீலிவாகை (L.);; stipulate sirissa.

சீலைவாங்கியுடு-த்தல்

சீலைவாங்கியுடு-த்தல் silai-wigi-y-ulu-    4 செ.கு.வி. (v.i.)

   கைம்பெண்ணொருத்தி, ஒருவனிடமிருந்து புடைவைபெற்று, அவனை மணம் புரிதல் (நாஞ்);; to accept a cloth from a man in token of marrying him, as a widow.

     [சீலை + வங்கி + உடு-,]

சீலைவாளை

சீலைவாளை cīlaivāḷai, பெ. (n.)

   ஒன்றரையடி நீளமுள்ள சொட்டைவாளை மீன்; butterfish, fresh-water, silvery shot with purple, attaining 11/2 ft. in length (செ.அக.);.

     [சீலை + வாளை. வாளைமீன் வகையுள் நீண்டதாயிருப்பது]

சீல்

சீல்1 cīl, பெ. (n.)

   பருந்து (M.M.170);; kite.

 U. cilla

 சீல்2 cīl, பெ. (n.)

   நல்லொழுக்கம்; good conduct.

     “சீலுறு தெக்கனை கேளா” (உபதேசகா. சிவநாம. 123);.

     [சீர் → சீல்]

சீளைப்பறவு

சீளைப்பறவு cīḷaippaṟavu, பெ. (n.)

   ஆறுவிரல நீளமும், நீலநிறமுமுள்ள கடல்மீன் வகை; sea-fish, steel-blue, attaining 6 in. in length.

சீழ்

சீழ்1 cīḻ, பெ. (n.)

   புண்ணின் சீ; pus.

   தெ. சீமு;க. கீவு

     [சீ → சீம்]

 சீழ்2 cīḻ, பெ. (n.)

சீழ்க்கை (வின்.); பார்கக;see silkkai.

     [‘சீ’ ஒவிக்குறிப்புச் சொல். சீ → சீழ்]

சீழ்கட்டு-தல்

சீழ்கட்டு-தல் sil-kattu-,    5 செ.கு.வி. (v.i.)

   சீழ்ப்பிடித்தல்; to suppurate.

     ‘உதைத்த கால் புழுக்கிறதுக்கு முன்னே அடிவயிறு சீழ் கட்டுகிறது’ (பழ);.

     [சீழ்1 + கட்டு-,]

சீழ்கு

சீழ்கு2 cīḻku, பெ. (n.)

   துடைப்பப்புல் (தொல். எழுத்து.415, உரை);; broom-grass.

     [சீகு → சீழ்கு]

சீழ்கு-தல்

சீழ்கு-தல் sigu-    7 செ.குவி (v.i.)

   விம்முதல்; to fetch, heave a sob.

     “சீழ்கிச் சீழ்கி யாழுதல்” (ஈடு, 32:7);.

     [சிழகு → சிழ்கு-,]

சீழ்கோ-த்தல்

சீழ்கோ-த்தல் Silko-,    17 செ.கு.வி (v.i.)

சீழ்கட்டு-, பார்க்க;see Silkattu.

     [சீழ்1 + கோ-,]

சீழ்க்கட்டி

 சீழ்க்கட்டி cīḻkkaṭṭi, பெ. (n.)

   சீழ்ப்பிடித்த புண்கட்டி; abscess, boil, as having pus.

     [சீழ் + கட்டி]

சீழ்க்காது

சீழ்க்காது cīḻkkātu, பெ. (n.)

   காதிலிருந்து சீழ் வடியும் நோய்வகை; purulent discharge from the ear (செ.அக.);.

     [சீழ்1 + காது]

சீழ்க்கை

சீழ்க்கை cīḻkkai, பெ. (n.)

நாவின்நுனியை மடித்து எழுப்பும் ஒலி,

 whistling.

     “கொக்கரிப்பையும் சீழ்க்கையையு மெழுப்பினார்” [சீவக. 447, உரை]

க. சிள்ளு

     [சீ → சீழ்2 → சீழ்க்கை]

சீழ்க்கைக்கூத்து

சீழ்க்கைக்கூத்து cīḻkkaikāttu, பெ. (n.)

   சீழ்க்கையெழுப்பி ஆடுங்கூத்து; a mode of dancing accompanied with whistling.

     “இளையவர் சீழ்க்கைக் கத்தோடு நெருங்குதலால்” (சீவக. 120. உரை);.

     [சீழ்க்கை + கூத்து]

சீழ்க்கைவிடு-தல்

சீழ்க்கைவிடு-தல்  Silkkai-vidu-,     20 செ.கு.வி. (v,i.)

   நாவை மடித்து ஒலியெழுப்புதல் (வின்);; to whistle, give a signal by whistling.

     [சீழ் → சீழ்க்கை + விடு-,]

சீழ்நோய்

சீழ்நோய் cīḻnōy, பெ. (n.)

   படைநோய் வகை (பைஷஜ.282);; gonorrhaea.

     [சீழ் + தோய்]

சீழ்மரம்

 சீழ்மரம் cīḻmaram, பெ. (n.)

   மாமரவகை (இ.வ.);; a species of mango.

சீழ்மலடு

சீழ்மலடு cīḻmalaḍu, பெ. (n.)

சீதமலடு (மூ.அ.); பார்க்க;;see Sida-malagu.

     [சீழ்1 + மலடு]

சீழ்மூலம்

 சீழ்மூலம் cīḻmūlam, பெ. (n.)

   சீழ்வடியும் மூலநோய் (வின்);; piles attended with discharge of pus.

     [சீ (→ சீழ்); + மூவம்]

சீவகசிந்தாமணி

 சீவகசிந்தாமணி sīvagasindāmaṇi, பெ. (n.)

   சீவகனைத் தலைவனாகக் கொண்டதும் திருத்தக்கதேவரால் இயற்றப்பெற்றதும், சமணஞ்சார்ந்ததும் ஐம்பேரிலக்கியங்களுள் ஒன்றுமான ஒரு தொடர்நிலைச் செய்யுள்; a Jaina epic poem of which Jivaga is the hero, composed by Tiruttakka dévar, one of Iimperun-kappiyam.

     [சீவகன் + சிந்தாமணி]

சீவகன்

சீவகன் cīvagaṉ, பெ. (n.)

   சீவகசிந்தாமணியின் பாட்டுடைத்தலைவன்; the hero of the epic – Sivaga-sindåmani.

 Skt. jivaka.

 சீவகன்2 cīvagaṉ, பெ. (n.)

   ஆசீவகன்; member of the Ajivaga sect among the jains.

     “சீவகனுக் கீரைந்தோ டிருமூன்றாம்” (சி.சி. முகவுரை, தனிப்பா.);.

 Skt. ajivaka.

சீவடம்

 சீவடம் cīvaḍam, பெ. (n.)

   இழைப்பு (வின்.);; planning, polishing.

தெ. சீவுடா

     [சீவு → சீவுடம் → சீவடம்]

சீவணி

 சீவணி cīvaṇi, பெ.(n.)

   ஒரு நெய்தற்பண்; a musical note.

     [தீரைம்-சீவணி].

சீவரத்தார்

சீவரத்தார் cīvarattār, பெ. (n.)

சிவரர் பார்க்க;see Siyarar:

     “உடையிலார் சீவரத்தார்” (தேவா. 64.10);.

     [சீவரர் → சீவரத்தார்]

சீவரம்

சீவரம் cīvaram, பெ. (n.)

   புத்தத்துறவிகள் அணியும் துவரூட்டின ஆடை; Salmon. coloured dress of Buddhist monks.

     “சீவரம் போர்த்தல்” (சீவக. 142, உரை.);

     [செவ் → செவ → சிவ = சிவப்பு. சிவ → சீவம் → சீவரம் = செவ்வாமை (காவியுடை);]

சீவரர்

 சீவரர் cīvarar, பெ. (n.)

   புத்தத்துறவியர் (சீவரம் அணிந்தோர்);; Buddhist monks as wearing sivaram (செ.அக.);.

 Skt. Sivara

     [சீவரம் → சீவரர்]

சீவலப்பேரி

 சீவலப்பேரி cīvalappēri, பெ.(n.)

   நெல்லை மாவட்டத்தில் உள்ள ஓர் ஊர்; a village in Tirunelvélidistrict.

     [சிவலப்பன்+ஏரி].

சீவலம்

 சீவலம் cīvalam, பெ. (n.)

   நீர்ப்பூடுவகை (யாழ்.அக.);; an aquatic plant.

சீவலாத்தி

 சீவலாத்தி cīvalātti, பெ.(n.)

   திருவாடானை வட்டத்திலுள்ள சிற்றுார் ; a village in Tiruvāgāņai Taluk.

     [சீவலன்+ஆத்தி],

சீவல்

சீவல் cīval, பெ. (n.)

   1. செதுக்கப்பட்டது (வின்);; parings, shavings.

   2. பாக்குச்சீவல்; parings of areca-nut for use with betel.

   3. மெலிவு; thinness, leanness of body.

   4. நெகிழ்ச்சியானது; that which is loosely woven.

   5. மெலிந்தவ-ன்-ள்; thin person.

   6. தலைமுடி ஒப்பனை; hairstyle.

   ம. சீவல்;   க. சிகுர், சிகுரு, சிவரு;   தெ. சிச்ச;   கொலா. சிவ்வ;நா. சிவ்வ (மரம்);

     [சீவ → சீவல்]

சீவல்வெற்றிலை

 சீவல்வெற்றிலை cīvalveṟṟilai, பெ. (n.)

   வெற்றிலைபாக்கு (தஞ்சை);; betel with parings of arcca-nut for chewing.

     [சீவல் + வெற்றிலை]

சீவளி

 சீவளி cīvaḷi, பெ.(n.)

மரத்தைச் சீவப் பயன்படுத்தும் கருவி

 carpenters tool.

     [சிவு+உளி].

சீவாடி

 சீவாடி cīvāṭi, பெ.(n.)

   மதுராந்தகம் வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in MaduranthagamTaluk,

     [சிவன்-பாடி].

சீவாளம்

 சீவாளம் cīvāḷam, பெ. (n.)

   தம்பூருவின் நுண்ணிதாக அளவுபடுத்தற்கு அதன் நரம்பில் தொடுக்கும் சிறுநூல் (வின்);; piece of cord or wire attached to the strings of tampuru to regulate its sound.

தெ. ஜவாளமு: க. ஜீவாலி

     [சீவு → சீவி + கட்டு-,]

சீவாளி

 சீவாளி cīvāḷi, பெ.(n.)

   நாதசுரம் என்னும் ஒலகத்தில் பொருத்தப்பெறும் தக்கை, மட்டை முதலியவற்றால் செய்யப்பட்ட சிறு துண்டு; reed in certain windpipe instruments.

     [தூ-தி-சி+வாளி].

நீண்ட குழல் வடிவிலான இசைக்கருவி. இதில் சீவாளி பொருத்தியே வாசிக்கவியலும்,

சீவிக்கட்டு-தல்

சீவிக்கட்டு-தல் sivi-k-katu-,    5 செகுன்றாவி, (v.t.)

   1. தலைவாரி முடித்தல்; to comband tieup the hair.

   2. பாளையைச் சீவிக் கள்ளுக் கட்டுதல் (யாழ்ப்.);; to pare off the spathes of a palm and attach a pot for drawing toddy.

     [சீவு → சீவி + கட்டு-,]

சீவிடம்

 சீவிடம் cīviḍam, பெ. (n.)

சீவடம் (வின்.); பார்க்க;see sivagam.

     [சீவடம் → சீவிடம்]

சீவீர்க்கு

 சீவீர்க்கு cīvīrkku, பெ. (n.)

   சீவியஈர்க்கு (இ.வ.);; ribs of palm leaves.

     [சீவு + ஈர்க்கு]

சீவு-தல்

சீவு-தல் sivu,    5 செகுன்றாவி (v.i.)

   1. செதுக்கிக் கழித்தல்; to pare off, shave or scrape off.

     “புலவு சீவாப் புதுப்போர்வை” (காசிக. பிரமன்வே.8);.

   2. மரமிழைத்தல்; to smooth or polish by planing.

   3. தலைவாருதல்; to comb or brush the hair.

     “சீவிய கூந்தல்” (இராமநா. பாலகா.19);.

   4. பெருக்குதல்; to sweep clean, as floor

     ‘களஞ்சீவித் தயாராயிருக்கிறது’ (இ.வ.);

   5. பல் முதலியவை துலக்குதல்; to clean, as tecth.

     “பற்சீவுங் கோல்” (சூடா.7:62);.

   ம. சீவுக;   க. சிவ்வு;   தெ. சிவ்வு;பட சீவு.

சீவுபுழுக்கொடியல்

 சீவுபுழுக்கொடியல் cīvubuḻukkoḍiyal, பெ. (n.)

   புழுக்கி உலர்த்தின பனங்கிழங்கு (யாழ்ப்);; palmyra roots, boiled, pared and dried.

     [சீவு + புழுக்கு + ஒடியல். புழுக்கு = வேகவை]

சீவுளி

சீவுளி cīvuḷi, பெ. (n.)

   1. இழைப்புளி வகை; block-plane

   2. மெருகிடுங் கருவி வகை (வின்.);; burnishing stick.

     [சீவு + உளி]

 சீவுளி2 cīvuḷi, பெ. (n.)

   பலகை சுரண்டி என்ற கருவி (இ.வ.);; scraper.

சீவுளிக்கூடு

 சீவுளிக்கூடு cīvuḷikāṭu, பெ. (n.)

   இழைப்புளிக் கட்டை (வின்.);; wooden stock of a plane.

     [சீவுளி + கூடு]

சீவை

 சீவை cīvai, பெ. (n.)

   கூத்து (அகநி);; dance.

சீவையர்

 சீவையர் cīvaiyar, பெ. (n.)

கூத்தியர் (அகநி);:

 dancing girls.

     [சீவை → சீவையர்]