செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை வெளியீடு
31 தொகுதி 12000 பக்கங்கள் கொண்ட பேரகரமுதலி


1

10838

2769

3111

538

3554

677

1093

620

189

1004

402

2
க்
1

8212
கா
2579
கி
564
கீ
222
கு
4598
கூ
780
கெ
615
கே
391
கை
1101
கொ
2417
கோ
1754
கௌ
110
ங்
1

2
ஙா
2
ஙி
1
ஙீ
1
ஙு
1
ஙூ
1
ஙெ
1
ஙே
1
ஙை
1
ஙொ
5
ஙோ
1
ஙௌ
1
ச்
1

5235
சா
1186
சி
2424
சீ
439
சு
1261
சூ
420
செ
1529
சே
470
சை
23
சொ
409
சோ
365
சௌ
1
ஞ்
1

15
ஞா
44
ஞி
3
ஞீ ஞு ஞூ ஞெ
34
ஞே
5
ஞை
2
ஞொ
3
ஞோ
2
ஞௌ
1
ட்
1

1
டா
1
டி
1
டீ
1
டு
1
டூ
1
டெ
2
டே
1
டை
1
டொ
1
டோ
1
டௌ
ண்
1

1
ணா
1
ணி
1
ணீ ணு
1
ணூ
1
ணெ
2
ணே
1
ணை
1
ணொ
1
ணோ
1
ணௌ
த்
3113
தா
1530
தி
2203
தீ
393
து
1238
தூ
411
தெ
694
தே
856
தை
39
தொ
878
தோ
459
தௌ
ந்
1

2789
நா
204
நி
1860
நீ
1161
நு
14
நூ
18
நெ
892
நே
318
நை
89
நொ
210
நோ
159
நௌ
2
ப்
1

4560
பா
1824
பி
492
பீ
25
பு
2224
பூ
1133
பெ
1064
பே
483
பை
127
பொ
1218
போ
478
பௌ
2
ம்
4760
மா
1422
மி
535
மீ
268
மு
3016
மூ
949
மெ
396
மே
751
மை
152
மொ
284
மோ
242
மௌ
ய்
1

119
யா
426
யி
1
யீ
1
யு
46
யூ
20
யெ
9
யே
1
யை
1
யொ
1
யோ
98
யௌ
1
ர்
87
ரா
107
ரி
11
ரீ
7
ரு
24
ரூ
20
ரெ
6
ரே
16
ரை
10
ரொ
8
ரோ
23
ரௌ
ல்
117
லா
44
லி
8
லீ
5
லு
8
லூ
3
லெ
13
லே
21
லை லொ
20
லோ
63
லௌ
3
வ்
1

3800
வா
1329
வி
1638
வீ
515
வு
1
வூ
1
வெ
2164
வே
834
வை
229
வொ
1
வோ
3
வௌ
ழ்
1

1
ழா
1
ழி
1
ழீ
1
ழு
6
ழூ
1
ழெ
1
ழே ழை ழொ ழோ
1
ழௌ
ள்
1

2
ளா
1
ளி
1
ளீ
1
ளு
1
ளூ
1
ளெ
2
ளே
1
ளை
1
ளொ
1
ளோ
1
ளௌ
ற்
1

1
றா
1
றி
1
றீ
1
று
1
றூ
1
றெ
2
றே
1
றை
1
றொ
1
றோ
1
றௌ
ன்
1

1
னா
1
னி
1
னீ
1
னு
1
னூ
1
னெ
2
னே
1
னை னொ
1
னோ
1
னௌ
தலைசொல் பொருள்
சி

சி ci,      ‘ச’கர மெய்யும் ‘இ’கர உயிரும் சேர்ந்த உயிர்மெய்மெயழுத்து;

 syllable formed by adding the short vowel ‘i’ to the consonant ‘c’s’.

     [ச் + இ]

 சி2 ci, இடை (part.)

   1. தொழிற்பெயரீறு; suff. of vbl. nouns.

எழுச்சி, வளர்ச்சி, அழற்சி.

   2. பெண்பாலீறு; a feminine suffix, as in ஆய்ச்சி.

சிகட்டி

 சிகட்டி cigaṭṭi, பெ. (n.)

   இருள்; darkness.

தெலு. சீகட்டி

     [சீகு-சிகட்டி]

சிகண்டி

சிகண்டி1 cigaṇṭi, பெ. (n.)

   1. துருபதனுக்குப் பெண்ணாகப் பிறந்து பின் தேவன் ஒருவனால் ஆணுருவடைந்து பாரதப்போரில் வீடுமன் உயிர் நீங்குதற்குக் காரணமாயிருந்த கதை மாந்தர்; a character as son of Drupada who, originally a female exchanged sex with a Yaksa and brought about the death of Bhisma in the Bharata war.

   2. அலி; hermaphrodite.

 சிகண்டி2 cigaṇṭi, பெ. (n.)

   1. பாலைப்பண்ணுள் ஒன்று (பிங்.);; a secondary melody-type of the palai class.

   2. இசை நுணுக்கம் என்ற நூலின் ஆசிரியர் (சிலப். உரைப்பாட்டு மடை);; a sage, author of Isai-nunukkam.

   3. தொல்லை கொடுப்பவன்; troublesome, obstinate person.

   4. கஞ்சன்; miser.

 சிகண்டி3 cigaṇṭi, பெ. (n.)

   சிற்றாமணக்கு (மலை);; castor plant.

 சிகண்டி4 cigaṇṭi, பெ. (n.)

   மயில்; peacock.

     “நீலச் சிகண்டியிலேறும் பிரான்” (கத்தரலங். 26);.

   2. கொண்டையுடன் கூடிய திருமால் (இலக்.அக.);; Tirumal, as having a knotted tuft of hair on his head.

சிகண்டிகை

 சிகண்டிகை cigaṇṭigai, பெ. (n.)

   கருங்குன்றி (மூ.அ.);; a black species of bead vine.

சிகதம்

சிகதம் cigadam, பெ. (n.)

சிகதை பார்க்க: See sigadai.

     “சிகதத்தினா லிலிங்கமு மாற்றி” வேதாரணி மணவாள.19

     [சிகதை → சிகதம்]

சிகதாமூத்திரம்

 சிகதாமூத்திரம் cigatāmūttiram, பெ. (n.)

   சிறுநீரில் கல்விழும் நோய் (இங்வை.);; gravel, a disease of the kidneys.

சிகதை

சிகதை cigadai, பெ. (n.)

   1. வெண்மணல்; white sand.

     “சிலையி னீரிற் சிகதையில்” (சிவதரு. பாவவி 60.);

   2. மணற்குன்று; sand-hill.

சிகத்துப்புழுதி

 சிகத்துப்புழுதி cigadduppuḻudi, பெ. (n.)

சிக்கத்துப்புழுதி (R.T.); பார்க்க: See Sikkattu-p-puludi.

     [சிக்கத்துப்புழுதி → சிகத்துப்புழுதி]

சிகனேந்தல்

 சிகனேந்தல் cigaṉēndal, பெ. (n.)

   அருப்புக் கோட்டை வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Aruppukkottai Taluk.

     [சிங்கன்+ஏந்தல் (ஏரி);].

சிகப்பகில்

 சிகப்பகில் cigappagil, பெ. (n.)

   மலைக் கொன்றை (L.);; shingle tree.

     [சிவப்பு → சிகப்பு + அகில்]

சிகப்பு

 சிகப்பு cigappu, பெ. (n.)

சிவப்பு பார்க்க sec Siyappu.

ம. சிகப்பு, செமப்பு: க. கெம்பு பட கெப்பு

     [செவ் → செவ → சிவ → சிவப்பு → சிகப்பு]

சிகப்புக்கலவாய்

சிகப்புக்கலவாய் cigappuggalavāy, பெ. (n.)

   மூன்றடிக்குமேல் வளரக்கூடியதும் உடலில் வெள்ளைப்புள்ளிகளைப் பெற்றதுமான கடல்மீன் வகை; a species of white-spotted sea – fish attaining more than 3 ft. in length.

     [சிகப்பு + கவவாப்]

சிகரியந்தம்

 சிகரியந்தம் cigariyandam, பெ. (n.)

   புல்லுருவி (மலை);; species of loranthus.

சிகல்

சிகல்1 cigalludal,    13 செ.கு.வி. (v.i.)

   1. குறைதல்; to diminish, decrease.

   2. கெடுதல்; to perish.

     [சிதை → கெடு சிதை → சிகை → சிகன் → சிகல்_,]

 சிகல்2 cigal, பெ. (n.)

   1. குறைவு:

 want.

   2. கேடு:

 ruin.

     [சிறுகுதல் → சிகல்]

 சிகல்3 cigal, பெ. (n.)

   தொழில்; action, deed.

     “அச்சிகலாலேட நாதனானவன்” (திருவிருத்.68. பக்.3581);

     [செயல் → சியன் → கிகள்]

சிகிர்

 சிகிர் cigir, பெ. (n.)

   துளிர்; sprout.

கன். சிகுரு

     [துளிர்-துகுர்-சிகுர்]

சிகுவை

 சிகுவை ciguvai, பெ. (n.)

உண்ணாக்கு நரம்பு

 a nerve in uvula.

     [சிகுல்-சிகு-சிகுவை]

சிகை

சிகை1 cigai, பெ. (n.)

   1. எஞ்சியது; that which is left;remainder.

     “சிகை கிடந்த வூடலில்” (பரிபா.7:70);

   2. வட்டி; interest on money lent.

     “இவனிட்ட காசு………..சிகைக்கு அடிப்பிக்கும்” (ஈடு, 49.6);.

     [இகை → சிகை]

 சிகை2 cigai, பெ. (n.)

   1. தொடர்பு; wordly ties.

     “பிறவிச் சிகையறவே” (கந்தரர். 50);.

   2. உண்டிக் கவளம்; mouthful of cooked rice.

     “மறுசிகை நீக்கி யுண்டாரும்” (நாலடி.1);,

     [சிக்கு → சிகை]

 சிகை3 cigai, பெ. (n.)

   நிலுவை; arrears.

     “கீழாண்டைச்சிகை வாசியா நின்றார்” (ஈடு,1.4:7);

சிகைக்காய்

சிகைக்காய் cigaiggāy, பெ. (n.)

   1. சீயக்காய் மரம் (பதார்த்த.721);; soap pod wattle.

   2. சீயக்காய் பார்க்க;see Siya-k-kay.

ம. சீக்கக்காய், சீவக்காய், சீவய்க்க, சீனிக்கா, சீயக்கா, சீக்கக்காயி, க, சீகெகாயி, தெ. சீகாய: து. சிகெகாயி, சீகெ துட. சிங்க்.

     [சிப்க்காப் → சிகைக்காப்]

சிகையறு-தல்

சிகையறு-தல் cigaiyaṟudal,    4 செ.கு.வி (v.i.)

   முற்றும் அழிதல்; to be ruined or destroyed completely.

     “ப்ராரப்த பாபவிசேஷஞ் சிகையறுகிறதென்கிற ஸந்தோஷமும் நடையாடிற் றாகில்” (ரஹஸ்ய.478);.

சிகையானகாசு

சிகையானகாசு cigaiyāṉagācu, பெ. (n.)

   1. மொத்தமாகச் சேர்ந்த காசு; accumulated money.

   2. ஒரு தொகையாகத் தங்கி நின்ற காசு:

 the accumulation of money to the required amount.

     “கணக்கு கெட்டு, இப்பெயரால் சிகையான காசு தண்ட” (தெ.க.தெ.12,க.199);

சிக்க

சிக்க cikka, கு.வி.ஏ. (adv.)

   1. சுருக்கமாக; in brief, in a nut-shell.

     “சிக்க வுரைத்தேம்” (கம்பரா. நிந்த லல்லதை யுண்மை செப்பான்” திருவினை. பழயெஞ் 261.

   ம. சிக்க (சிறிய, முதிராத, செக்க, செறுக்க;   க. சிக்க (சிறிய);, தெ. சிக்கசிக (சிறிய, சிறிதளவு);;   து. சிக்க (சிறிய); குட. சிக்க (இளைய);; Pkt. Cikka

     [சிறு → சிறுக்கு → சிக்கு → சிக்க]

சிக்கங்கோல்

 சிக்கங்கோல் cikkaṅāl, பெ. (n.)

   சிடுக்கு வாரி; forked comb for dressing the hair.

     “சீப்பு சிக்கங்கோலுந் தேன்மொழிக்கு வாங்கலுற்றாள்” (கோவ. கSS);

மறுவ. சிக்குவாரி: மயிர்கோதி, சிறுக்கணி, ஈர்கொல்லி.

     [சிக்கு + அம் + கோல்]

சிக்கடம்

சிக்கடம் cikkaḍam, பெ. (n.)

 | பறவையைப் பிடிக்கும் வலை;

 share.

     “பறவை சிக்கடத்திற் பட்டவெனத் தேய்ந்தனவே” (பஞ்ச. திருமுக.167);.

     [சிக்குதல் = ஒன்றனுள் அகப்படுதல். சிக்கு → சிக்கடம்]

சிக்கடி

சிக்கடி1 cikkaḍi, பெ. (n.)

   அவரை (பிங்.);; fieldbean.

தெ. சிக்குடு

 சிக்கடி2 cikkaḍi, பெ. (n.)

சிக்கல்1 பார்க்க (வின்.);;see Sikkal1.

     [சிக்கு3 → சிக்கல் → சிக்கலி → சிக்கடி]

 சிக்கடி3 cikkaḍittal,    4 செ.கு.வி. (v.i.)

   சிக்கு நாற்றமடித்தல் (வின்.);; to give out bad smell, as of oily stink.

     [சிக்கு = நாற்றம் சிக்கு5 + அடி-]

 சிக்கடி4 sikkadi-,    4 செ.கு.வி. (v.i.)

   குழறுபடி செய்தல்; to complicate, confuse.

     [சிக்கு1 + அடி-,]

சிக்கடிமுக்கடி

சிக்கடிமுக்கடி cikkaḍimukkaḍi, பெ. (n.)

சிக்கல்1 பார்க்க;see Sikkal1.

     [சிக்கடி2 + முக்கடி]

சிக்கட்டி

சிக்கட்டி cikkaṭṭi, பெ. (n.)

   அவரை; country bean (சாஅக.);

     [சிக்கடி1 → சிக்கட்டி]

சிக்கணப்பதம்

 சிக்கணப்பதம் cikkaṇappadam, பெ. (n.)

சிக்குப்பாகம் பார்க்க;see Sikku-p-pagam.

ம. சிக்கணபதம்

     [சிக்கணம் + பதம்]

சிக்கணப்பாகம்

 சிக்கணப்பாகம் cikkaṇappākam, பெ. (n.)

சிக்குப்பாகம் பார்கக;see Sikku-p-pagam.

ம. சிக்கணபாகம்

     [சிக்கணம் + பாகம்]

சிக்கணம்

சிக்கணம்

சிக்கணம் cikkaṇam, பெ. (n.)

   மழமழ வென்றுள்ளது (நன். 273, மயிலை.);; that which is glossy or slippery.

   ம. சிக்கணம்; Skt. Cikkanam.

     [சிக்கு → சிக்கணம். ‘அணம்’ சொஆ, ஈறு]

சிக்கத்துப்புழுதி

 சிக்கத்துப்புழுதி cikkadduppuḻudi, பெ. (n.)

   உழுதும் விதைக்கப்படாதுள்ள நன்செய் (C.G.);; wet land ploughed but not sown.

     [சிக்கறுத்தபுழுதி → சிக்கறுத்துப்புழுதி → சிக்கத்துப்புழுதி (மரூஉ.); பூழ்தி = மண் துகள், பூழ்தி → புழுதி]

சிக்கனப்பாகம்

சிக்கனப்பாகம் cikkaṉappākam, பெ. (n.)

சிக்குப்பாகம் (பைஷஜ. 6); பார்க்க: See Sikku-ppagam.

ம. சிக்கணபாகம்

     [சிக்குப்பாகம் → சிக்கனப்பாகம்]

 சிக்கனப்பாகம் cikkaṉappākam, பெ. (n.)

   கல்கத்தைத் திரட்டும்போது கையில் ஒட்டாமல் மாத்திரை உருட்டுவதற்குப் பதமாகவிருக்கும் நிலை; that stage to which a thick consistence of medicine is so rendered as to be free from being sticky with a view to make them into pills.

     [சிக்கனம் + பாகம்]

சிக்கனம்

சிக்கனம் cikkaṉam, பெ. (n.)

   செட்டு (உவ.);; thrift.

     [சிக்கு1 + அனம்]

 சிக்கனம்2 cikkaṉam, பெ. (n.)

   கஞ்சத்தனம்; niggardness.

     [சிக்கு + அனம்]

 சிக்கனம்3 cikkaṉam, பெ. (n.)

   பாக்கு; arecanut (சாஅக.);.

ம. சிக்க, சிக்கணி, சிக்கனம்

     [சிக்கு + அணம் = சிக்கணம் → சிக்கனம்]

சிக்கனவு

சிக்கனவு cikkaṉavu, பெ. (n.)

   1. திண்மை (ஈடு, 5.8:3);;வலிமை; hardness, strength.

   2. மனவன்மை; hardness of heart.

     “அஞ்சத்தக் கதுன் சிக்கனவே” (திருக்கே. 343);.

   3. மனவுறுதி; firmness of mind.

     “சிக்கனவுடனே நின்று” (திருவாலவா. 56:8);.

   4. சிக்கனம்1 பார்க்க;see sikkanam1.

     [சிக்கனம் → சிக்கனவு]

சிக்கபாவிலி

 சிக்கபாவிலி cikkapāvili, பெ. (n.)

   தருமபுரி வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in DharmapuriTaluk.

     [சின்ன-சிக்க+[வாவில்+இ]பாவிலி]

சிக்கம்

சிக்கம்1 cikkam, பெ. (n.)

   சீப்பு; comb,

     “சிகைத்

தொழிற் சிக்கமும்” (பெருங் உஞ்சைக் 57:36);.

   க. சிக்கடி;தெ. சிக்கண்டெ

     [சிக்கு3 → சிக்கம்]

     [ஒ.தோ அக்கு – அக்கம்]

 சிக்கம்2 cikkam, பெ. (n.)

   மெலிவு (திவா.);;  emaciation, waste.

     [சிக்கு2 – சிக்கம்]

 சிக்கம்3 cikkam, பெ. (n.)

   சிறைச்சாலை (வின்.);; prison.

     [சிக்கு1 – சிக்கம்]

 சிக்கம்4 cikkam, பெ. (n.)

   1. ஈயம்; lead.

   2. வெள்ளி; silver.

   3. செம்பு; copper.

 சிக்கம்5 cikkam, பெ. (n.)

   உறி; a net-work of rope or a string-loop for suspending pots.

     “தூதையிற் சிக்கங் கரஞ்சேர்த்து” (பதினொ. ஆளு. திருவந். 66);.

   2. வலை; net,

   3. வலைப்பை முதலியன (வின்.);; net-work, bag of net-work.

   4. பின்னல்; net of hair.

   5. வால்மிளகு; tailpepper, cubeb,

   5. மூக்கணாங் கயிற்றுக்கு மாறாகக் கன்றுக்குட்டியின் வாயைச் சுற்றிக் கட்டும் கயிறு; rope tyed around the face of calf.

மறுவ. முகரைக் கயிறு

க. சிக்க

     [சிக்கு1 → சிக்கம்]

 சிக்கம் cikkam, பெ. (n.)

   1. குடுமி. (பிங்.);;  tuft of hair on the crown of the head.

   2. உச்சி (அக.நி.);; crown of the head.

     [சிக்கு3 → சிக்கம்]

சிக்கம்பலகை

 சிக்கம்பலகை ciggambalagai, பெ. (n.)

சிக்குப் பலகை (இ.வ.); பார்க்க;see Sikku-p-palagai.

     [சிக்குப்பலகை → சிக்கம்பலகை]

சிக்கம்போடு

சிக்கம்போடு1 cikkambōṭudal,    18 செ. குன்றாவி (v.t.)

   ஒகப்பயிற்சியில், காலினையும் கழுத்தையும் அசையா வண்ணம் இணைத்து முடிச்சுப்போடல்; a string-hoop fastening to the legs and the neck with a view to restrict the movements of the body so as to support the posture in yoga practice.

     [சிக்கம்5 + போடு-,]

 சிக்கம்போடு2 cikkambōṭudal,    14 செகுன்றாவி, (v.t.)

   மூக்கணாங் கயிற்றுக்கு மாறாகக் கன்றுகுட்டியின் வாயைச் சுற்றிக் கயிறு கட்டுதல்; to tie a rope around the face of calf.

     [சிக்கம்5 + போடு-,]

சிக்கரத்தெளியல்

சிக்கரத்தெளியல் cikkaratteḷiyal, பெ. (n.)

   உசிலம்பட்டையிலிருந்து இறக்குங்கள்; toddy cxtracted from sirissa bark.

     “உக்கிர வூறலுஞ் சிக்கரத் தெளியலும்” (பெருங்.இல7வாண. 2:180);

     [சிக்கர் + தெளியல். தெளி – தெளிவு, தெளியல் = பதநீர்]

சிக்கரத்தெளிவு

 சிக்கரத்தெளிவு cikkaratteḷivu, பெ. (n.)

சிக்கரத்தெளியல் பார்க்க;see Sikkara-t-tellyal.

     [சிக்கரத்தெளியல் → சிக்கரத்தெளிவு]

சிக்கர்

சிக்கர்1 cikkar, பெ. (n.)

சிக்கரத்தெளியல் (திவா.); பார்க்க;see Sikkara-t-teliyal.

ம. சிக்கிர்

     [சீக்கிரி → சிக்கர். சீக்கிரி = ஒருவகை மரம்]

 சிக்கர்2 cikkar, பெ. (n.)

   தலைநோவுடையார்; persons suffering from headache.

     “சிக்கர் சிதடர்” (சிறுபஞ். 70);

     [சிக்கல்3 → சிக்கர். ‘அர்’ – பலர்பாலீறு]

சிக்கறு-த்தல்

சிக்கறு-த்தல் cikkaṟuttal,    4 செகுன்றாவி (v.t.)

   1. நூல் முதலியவற்றிற் சிக்குவிடுத்தல்; to unite a knot, disentagle.

   2. சிக்கலானதைத் தீர்த்தல்; to settle an intricate business;

 to cut the gordian knot.

   3. துறவறம்புகுதல் (வின்.);; to give up wordly attachment;

 to become an ascetic.

     [சிக்கு3 + அறு-,]

சிக்கறுக்கி

சிக்கறுக்கி cikkaṟukki, பெ. (n.)

   சிடுக்குவாரி (வின்.);; a kind of comb.

   ம. சிக்கறுக்கி;   க. சிக்கடிகெ, சிக்கணிகெ, சிக்கடி;தெ. சிக்கண்டு, சிக்கண்டெ

     [சிக்கு3 + அறுக்கி]

சிக்கறுப்பான்

சிக்கறுப்பான் cikkaṟuppāṉ, பெ. (n.)

சிடுக்குவாரி பார்க்க;see Sigukku-viri.

     [சிக்கு3 + அறுப்பான்]

சிக்கறுப்பு

 சிக்கறுப்பு cikkaṟuppu, பெ. (n.)

   முடிவு; decision.

     [சிக்கு + அறுப்பு. அறு → அறுப்பு = அறுத்தல், தீர்வு, முடிவு]

சிக்கலாட்டம்

சிக்கலாட்டம் cikkalāṭṭam, பெ. (n.)

சிக்கல்1 (இ.வ.); பார்க்க;see Sikkal1.

     [சிக்கல் + ஆட்டம்]

சிக்கல்

சிக்கல் cikkal, பெ. (n.)

   நாகப்பட்டினம் வட்டத்தில் 15 கல் மாத்திரி அளவு உள்ள ஓர் ஊர்; a village 15km from Nagappattinam.

     [சிக்கு-சிக்கல்]

 சிக்கல்1 cikkal, பெ. (n.)

   1. தாறுமாறு; tangle.

   2. பின்னல்; plaiting.

   3. கோளாறு; complication.

   4. அருமைப்பாடு;முட்டுப்பாடு; difficulty,

   5. குழப்பம், தடுமாற்றம்; embarrassment.

ம. சிக்கல்

     [சிக்கு1 → சிக்கல்]

 சிக்கல்2 cikkal, பெ. (n.)

   இளைக்கை (சூடா);; leanness, emaciation.

     [சிக்கு2 → சிக்கல்]

 சிக்கல்2 cikkal, பெ. (n.)

   காந்தக் கல்வகையைச் சேர்ந்த காக்கைக்கல் (யாழ்.அக);; a kind of black load-stone.

 சிக்கல்4 cikkal, பெ. (n.)

   தலைநோய்; head ache.

     [சிக்கு6 → சிக்கல்]

 சிக்கல்5 cikkal, பெ. (n.)

   மாட்டிக்கொள்ளல் (கழ.அக.);; entangling, ensnaring.

     [சிக்கு1 → சிக்கல்]

சிக்கல்நெய்

சிக்கல்நெய் cikkalney, பெ. (n.)

   நாட்பட வைத்திருப்பதால் சிக்குநாற்றம் ஏற்பட்ட நெய்; stale-ghee from age or long keeping.

     [சிக்கு5 → சிக்கல். சிக்கு + தெய்]

சிக்கல்பிக்கல்

சிக்கல்பிக்கல் cikkalpikkal, பெ. (n.)

சிக்கல்1 (இ.வ.); பார்க்க;see Sikkal1 .

     [சிக்கல் + பிக்கல்]

சிக்கவுரை-த்தல்

சிக்கவுரை-த்தல் cikkavuraittal,    4 செகுன்றாவி (v.t.)

   சுருக்கமாகக் கூறுதல்; to speak shortly.

     [சிக்கம் + உரை-,]

சிக்கவை-த்தல்

சிக்கவை-த்தல் cikkavaittal,    4 செகுன்றாவி (v.t.)

   மாட்டச் செய்தல்; to cause oncself to be caught, to be caught.

வகையாகச் சிக்கவைத்து வேடிக்கை பார்க்கிறார்.

க. சிக்கிசு

     [சிக்கு → சிக்க + வை-,]

சிக்காடு

 சிக்காடு cikkāṭu, பெ.(n.)

   திருக்கோயிலூர் வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Tirukkoyilur.Taluk.

     [சிங்கை+காடு]

சிக்காய்

 சிக்காய் cikkāy, பெ.(n.)

பழுக்காத பனங்காய்

 unripened palmyrah fruit.

     [கிக்கன்+காய்]

சிக்காரம்

 சிக்காரம் cikkāram, பெ. (n.)

   அழுகை (சாஅக);; lamentation, weeping.

     [சிக்கு → சிக்கம் + ஆரம் = சிக்காரம்]

சிக்கி

 சிக்கி cikki, பெ.(n.)

   குழந்தைகள் விளையாட்டு; a childrens game.

     [சிக்கு-சிக்கி]

சிக்கிமுக்கி

 சிக்கிமுக்கி cikkimukki, பெ. (n.)

   நெருப்புண்டாக்குங் கல்; flint used in producing fire.

மறுவ. தித்தட்டி

     [சக்கிமுக்கி → சிக்கிமுக்கி]

சிக்கு

சிக்கு1 cikkudal,    5 செகுவி (v.i.)

   1. சிக்குப் படுதல்; to become entangled, complicated.

   2. இறுகுதல்; to be tightened, as a knot.

     “புயஞ்சிக்கயாத்தபின்” (பாரத வாரணா5);.

   3. ஒன்றனுள் அகப்படுதல்; to be caught, ensnared.

     “பொதிந்து சிக்க… மறையக்காப்பின்” (சீவக. 1890);.

   4. கிடைத்தல்; to be obtained.

     “தரிப்பிடந்தான் __ தெருவாச் சிக்கினதும்” (தனிப்பா. 1,323,18);

   ம. சிக்குக;   க. சிக்கு, சிகு, சிர்கு, சிலிகு, சிலுகு;   தெ., கோத, சிக்கு;   து. சிக்குனி, திக்குனி;   பட;   குவி., சிக்கு;   துட. திக்க்;   கூ. செக்ப;   கொண். சிர்கானா, கொலா. சிக்க் (தொங்குதல்);;பர். சிர்ங்க்

     [சிலுக்கு → சிக்கு-,]

 சிக்கு2 cikkudal,    5 செ.கு.வி. (v.i.)

   இளைத்தல் (சூடா.);; to become lean or emaciated.

தெ. சிக்கு

 சிக்கு3 cikku, பெ. (n.)

   1. நூல் முதலியவற்றின் சிக்கு, முறுக்கு; tangle, twist.

     “சிக்கறத் தெரிந்த நூல்” (கம்பரா. சித்திர. 32);.

   2. சிக்கலாயிருப்பது; intricry, complication.

   3. கண்ணி (இ.ல.);; snare, entanglement.

   4. மாட்டிக் கொளளுகை; being caught or entangled.

   5. தடை; obstacle, impediment.

ம. தெ. சிக்கு க. து., பட. சிக்கு

     [சிலுக்கு → சிக்கு]

 சிக்கு4 cikku, பெ. (n.)

   1. ஐயம்; doubt.

     “சிக்கறத் தெளிந்தேன்” (கம்பரா. அனுமப். 21);.

   2. உறுதி; firmness.

     “சிக்குறச் சேமஞ் செய்தாள்” (கம்பரா. சடாயு.69);.

 சிக்கு5 cikku, பெ. (n.)

   1. எண்ணெய்ச்சிக்கு; stickiness of hair, due to oil.

   2. சிக்குநாற்றம்; rancid smell of oil or ghee on clothes, etc.,

     “கூந்தறானுஞ் சிக்குமே னாறுமே” (திருவாலவா. 16:23);.

   3. மாசு (யாழ்ப்);; stain.

     [சிலு → சிலுத்தல் = சோறு பதனதுரிதல், பதனழிதல். சிலு → சிலுக்கு → சிக்கு = பதனழிதலினின்று தோன்றும் முடை நாற்றம்)

 சிக்கு6 cikku, பெ. (n.)

   வெட்கம் (இ.வ.);; modesty, shame.

   க., பட. சிக்கு;தெ. சிக்கு

     [வெட்கு → வெக்கு → எக்கு. க. எக்கு = நாணம். எக்கு → (செக்கு); → சிக்கு]

சிக்கு வலை

 சிக்கு வலை cikkuvalai, பெ. (n.)

   வலை வகையுளொன்று (மீனவ.);; a kind of trap net.

     [சிக்கு + வலை]

சிக்கு = அகப்படு, பிடி கிட்டு.

சிக்குக்கழித்தல்

 சிக்குக்கழித்தல் cikkukkaḻittal, பெ. (n.)

   திருமணக்காலத்தில் மணமகனுக்குச் செய்யும் மயிர்கழி சடங்கு; ceremony of shaving the hair of the bridegroom, preliminary to marriage.

     [சிக்கு + கழித்தல்]

சிக்குச்சிறகு

சிக்குச்சிறகு ciggucciṟagu, பெ. (n.)

   சிக்கல்; tangle.

     “மேலேயிருக்கிற சிக்குச் சிறகெல்லாம் அறுத்துவிட்டு” (தமிழறி.38.);.

     [சிக்கு + சிறகு. மோனை நோக்கி வந்த இணைமொழி]

சிக்குச்சிலுகு

சிக்குச்சிலுகு cigguccilugu, பெ. (n.)

   1. தொல்லை (தொந்தரவு);; hindrance, trouble.

   2. தடை (வில்லங்கம்);; encumbrance.

   3. சிக்கலானது; intricacy.

தெ. சிலுகு

     [சிக்கு3 + சிலுகு, மீமிசைப் பொருள் மரபிணை மொழி]

சிக்குச்சிலுவு

சிக்குச்சிலுவு cikkucciluvu, பெ. (n.)

சிறு தொடர்பு (இ.வ.);

 slight connection.

     [சிக்கு3 + சிலுவு]

சிக்குண்(ணு)-தல்

சிக்குண்(ணு)-தல் cikkuṇṇudal,    12 செ.கு.வி (v.i.)

   1. படுமுடிச்சுப்படுதல்; to be entangled;

 to form into an inextricable knot.

   2. அகப்படுதல்; to be caught.

     [சிக்கு + உண்_,]

சிக்குண்டாக்கு_தல்

சிக்குண்டாக்கு_தல் cikkuṇṭākkudal,    5 செகுன்றாவி (v.t.)

   சிக்கு ஏற்படுத்துதல்; to cause to become entangled or ensured, to entangle, ensnare.

க. சிக்குக

     [சிக்கு + உண்டாக்கு-,]

சிக்குத்தலை

சிக்குத்தலை1 cikkuttalai, பெ. (n.)

   முடை நாற்றமுள்ள தலை; rancid smell of hair.

     [சிக்கு + தலை]

ஈரத்தோடு எண்ணெய்யைத் தடவுதலாலும் பதனழிந்து எண்ணெயைத் தடவுதலாலும் அளவுக்கதிகமாக தலையில் வேர்வை சுரந்து அதனை உரிய முறையில் தூய்மைப்படுத்திக் கொள்ளாமையாலும் ஏற்படும் முடைநாற்றம், சிக்கு நாற்றமாகும்.

 சிக்குத்தலை2 cikkuttalai, பெ. (n.)

   1. சிக்குப் பிடித்த தலை; an entangled head of lair.

   2. சடைமுடி; matted locks of hair.

க. சிக்குதலெ

     [சிக்கு + தவை]

சிக்குப்படு-தல்

சிக்குப்படு-தல் cikkuppaḍudal,    20 செகுவி (v.i.)

   வெட்கப்படுதல்; to be ashamed, to beshy or bascful.

தெ., பட. சிக்கு படு

     [சிக்கு + படு_,]

சிக்குப்பலுகை

 சிக்குப்பலுகை cigguppalugai, பெ. (n.)

   பொத்தகத்தைப் பிரித்து வைத்துப் படிப்பதற்கு ஏந்தாகவிருக்கும் பலகைச் சட்டம்; wooden folding frame for keeping book while reading.

     [சிக்கு + பவகை]

இரு பலகைகளை ஒன்றுடனொன்று நடுவில் சிக்கவைத்து அமைக்கப்பட்ட பலகை. மேலானதெனக் கருதும் நூலைத் தரையில் வைத்துப் படிப்பது குற்றமெனக் கருதி, இப் பலகையின் மீது வைத்துப் படிப்பர். இங்ங்னம் செய்வது, நூலின் கட்டுகோப்புக் குலையாமலிருக்கவும் உதவும்.

சிக்குப்பாகம்

சிக்குப்பாகம் cikkuppākam, பெ. (n.)

   மருந்தெண்ணெய்ப் பக்குவத்துள் கையில் ஒட்டிக் கொள்ளக்கூடியதான பக்குவம் (தைலவ. பாயி.க்ஷ43);; viscous condition, as of a medicinal preparation.

ம. சிக்கணபாகம்

     [சிக்கு3 + பாகம்]

சிக்குப்பாடு

சிக்குப்பாடு cikkuppāṭu, பெ. (n.)

சிக்குப்பிக்கு (இ.வ.); பார்க்க;see sikku-p-pikku.

     [சிக்கு3 + பாடு]

சிக்குப்பிக்கு

சிக்குப்பிக்கு cikkuppikku, பெ. (n.)

   1. சிக்கலாயிருப்பது (இ.வ.);; complication.

   2. விளங்காப்புதிர்; intricacy.

     [சிக்கு3 + பிக்கு. எதுகை நோக்கி வந்த இணைமொழி)

சிக்குமுக்கி

 சிக்குமுக்கி cikkumukki, பெ. (n.)

சிக்கிமுக்கி பார்க்க;see Sikki-mukki.

   ம. சக்குமுக்கி, சக்கிமுக்கி, சக்குமுக்கு;   க. சக்கமுக்கி, தெ. சக்கிமுக்கி; Turk. cakmuk.

     [சக்கிமுக்கி → சிக்குமுக்கி]

சிக்குமுக்கி = தேய்த்துத் தீமூட்டிப் பயன் படுத்தப்படுஞ் சிக்கிமுக்கிக்கல், தொல்பழங்காலத்திலேயே புழக்கத்திலிருந்தது.

சிக்குயத்தி

 சிக்குயத்தி cikkuyatti, பெ. (n.)

சதகுப்பி,

 bishop’s weed (சா.அக.);.

சிக்குரு

 சிக்குரு cikkuru, பெ. (n.)

   முருங்கை (பிங்,);; drum stick tree (சா.அக.);.

சிக்குருப்பூ

 சிக்குருப்பூ cikkuruppū, பெ. (n.)

   முருங்கை மலர்; flowers of drum-stick tree (சா.அக.);.

சிக்குவாங்கி

சிக்குவாங்கி cikkuvāṅgi, பெ. (n.)

சிக்குவாரி (வின்.); பார்க்க;see Sikku-Vari.

     [சிக்கு3 + வாங்கி. வாங்கு → வாங்கி. ‘இ’ வினை முதல]

சிக்குவாங்கு-தல்

சிக்குவாங்கு-தல் cikkuvāṅgudal,    5 செகுன்றாவி (v.t.)

   1. மயிர் முதலியவற்றிற் சிக்கலெடுத்தல் (வின்.);; to disentagle.

   2. முடிச்சவிழ்த்தல் தளர்த்துதல்; unravel, untie.

   க. சிக்குபிடிசு;பட. சிக்குபுடிசு

     [சிக்கு3 + வாங்கு-,]

சிக்குவாரி

சிக்குவாரி cikkuvāri, பெ. (n.)

   ஒரு வகைக் சீப்பு; a kind of comb.

     [சிக்கு3 + வாரி. வாரி = வாகருவி]

சிக்குவை

சிக்குவை1 cikkuvai, பெ. (n.)

   1. தண்ணீர் விட்டான் விட்டான் கிழங்கு (தைலவ, தைவ 73);; climbing as paragus.

     [சிகுவை → சிக்குவை]

சிக்கெடு-த்தல்

சிக்கெடு-த்தல் cikkeḍuttal,    4 செகுன்றாவி (v.t.)

சிக்குவாங்கு_ see sikkuvangu-.

   க. சிக்குபிடிசு;பட. சிக்கெந்து, சிக்குபுருசு

     [சிக்கு + எடு-,]

சிக்கென

சிக்கென cikkeṉa, குவி.எ. (adv.)

   1. உறுதியாக; firmly tenaciously.

     “எய்ப்பிடத் துன்னைச் சிக்கெனப் பிடித்தேன்” (திருவா. 37:5);

   2. இறுக; tightly, closely.

     “கண்ணெனும் புலங்கொள் வாயுஞ் சிக்கென வடைத்தேன்” (கம்பரா. உலா.14);.

   3. கையிறுக்கமாக (கருமியாக);; niggardly.

     “பெரும் பொருளை……….. பிறர்க்கு வழங்காதே சிக்கெனக் கட்டிவையா தொழிமின்” (பு.வெ. 10: காஞ்சிப். 2, உரை);.

   4. விரைவாக; quickly, promptly.

     “அக்கமுங் காசுஞ் சிக்கெனத் தேடு” (கொன்றைவே.);

   ம. சிக்கனெ, சிக்கனே;   க. சக்கன, செக்கனெ, சக்கனை;   தெ. செச்ச. து. சக்க;துட, திக்ச்ன் (எதிர்பாராமல்); Pkt. sigkh

     [சிக்கு3 + என]

சிக்கெனப்பிடி_த்தல்

சிக்கெனப்பிடி_த்தல் cikkeṉappiḍittal,    4 செகுன்றாவி. (v.i.)

   1. உறுதியாகப் பிடித்தல்; to catch firmly, tenaciously.

   2. இறுக்கமாகப் பிடித்தல்; to catch tightly.

     ‘சிலவேளைகளில் பழமையை நாம் சிக்கெனப் பிடித்துக் கொள்ளுகிறோம்’ (உ.வ.);.

     [சிக்கு3 + என + பிடி ,]

சிக்கெனவு

சிக்கெனவு cikkeṉavu, பெ. (n.)

   1. உறுதி; firmness, tenacity.

   2. கையிறுக்கம்; niggardliness, closefistedness.

   க. சிகணி;தெ. சிக்கனி

     [சிக்கு3 + எனவு]

சிக்கென்(னு)-தல்

சிக்கென்(னு)-தல் Sikkennu,    2 செ.கு.வி. (v.i.)

   இறுகுதல்; to become hardened, as the ground.

     “நிலனாய்ச் சிக்கென்பதுவும்” (மணிமே.27:143);

     [சிக்கு3 + என்_,]

சிக்கோளிக்குழல்

 சிக்கோளிக்குழல் cikāḷikkuḻl, பெ. (n.)

   ஆதொண்டை; Ceylon caper (சாஅக);.

     [சிக்கோளி + குழன்]

சிங்கங்குன்றப்போழன்

 சிங்கங்குன்றப்போழன் ciṅgaṅguṉṟappōḻṉ, பெ. (n.)

   பாண்டிய நாட்டுச்சபையாரில் ஒருவர்; a person in the assembly of pandya kingdom.

     “ஒமாயனாடு கிழவனாயின சிங்குன்றப்போழன் எழுத்து”

     [சிங்கம் + குன்றம்+ போழன்]

சிங்கசல்லியம்

 சிங்கசல்லியம் siṅgasalliyam, பெ. (n.)

   கருங்காலி மரவகை; lack sundara tree (சா.அக.);.

சிங்கடாபருப்பு

 சிங்கடாபருப்பு ciṅgaṭāparuppu, பெ. (n.)

   ஒரு கொட்டையின் பருப்பு; the pulp in the seed of the plant trapa bispinosa (சா.அக.);.

சிங்கடியப்பன்

சிங்கடியப்பன் ciṅgaḍiyappaṉ, பெ. (n.)

   சிங்கடியென்ற பெண்ணுக்குத் தந்தையாகக் கொள்ளப்பட்ட சுந்தரமூர்த்தி நாயனார்; Sundaramurtti-nayanar, as the foster-father of Sigadi.

     “சித்தம் வைத்த புகழ்ச் சிங்கடி யப்பன்” (தேவா.735,11);.

     [சிங்கடி + அப்பன்]

சிங்கட்டான்

 சிங்கட்டான் ciṅgaṭṭāṉ, பெ. (n.)

   முள் வேங்கை (L);; thorny blue-druped featherfoil.

சிங்கணம்

சிங்கணம் ciṅgaṇam, பெ. (n.)

   வீரராசேந்திரன் வென்ற நாடுகளுள் ஒன்று; இந்நாடு கங்க நாட்டிற்குக் கீழ்த்திசையிலிருந்தது; a country conquered by the Chola king Virarajendra, which is located by the east of ‘Ganga nadu’.

     “சேரனைச் சிறைகொண்டு சிங்கன தேசம் அடிப்படுத்து” (தெ.க.தொ. 17, க. 301);.

சிங்கனி

 சிங்கனி ciṅgaṉi, பெ.(n.)

   சிவகங்கை வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Sivaganga Taluk.

     [சிங்கை +அணி]

சிங்கன்

 சிங்கன் ciṅgaṉ, பெ. (n.)

   குறவன் குற்றா.குற.); man of the fowler tribe.

தெ. சிங்கடு

சிங்கன்வாழை

 சிங்கன்வாழை ciṅgaṉvāḻai, பெ. (n.)

   சிங்கள நாட்டிலிருந்து வந்த வாழை வகை; a variety of plantain introduced from Ceylon.

     [சிங்கனம் + வாழை]

சிங்கமெழுது_தல்

சிங்கமெழுது_தல் ciṅgameḻududal,    5 செ.கு.வி. (v.i.)

   உடம்பில் தோன்றும் வெப்பு நோயான அக்கியைப் போக்க குயவரால் செம்மண் பூசப்பெறுதல்; to paint with red ochre on the herpes as a cure, generally done by a potter.

     [செக்கர் → செங்கா → செங்கம் → சிங்கம் + எழுது_,]

சிங்கரந்தகம்

 சிங்கரந்தகம் ciṅgarandagam, பெ. (n.)

   இருமலையும் நாட்பட்ட சளியையும் போக்கும் தூதுவளை என்னும் மூலிகை; three-lobed night shade.

சிங்கலாட்டம்

சிங்கலாட்டம் ciṅgalāṭṭam, பெ. (n.)

சிக்கல்1 பார்க்க;see Sikkal1.

     [சிக்கல் + ஆட்டம் – சிக்கவாட்டம் –

சிங்கவாட்டம்]

சிங்கலை

 சிங்கலை ciṅgalai, பெ. (n.)

   தொல்லை, தடை, சொத்துரிமையிலுள்ள தடை முதலியன (இ.வ.);; incumbrance;tangle of difficulties.

     [சிக்கன் → சிக்கவை → சிங்கவை]

சிங்கல்

சிங்கல்1 ciṅgal, பெ. (n.)

   1. குறைகை; diminishing, drooping.

     “சிங்கலி வருமறை” (கம்பரா. கடிமண. 48]);

   2. இளைப்பு (பிங்.);; weakness, exhaustion.

     [சிக்கு → சிக்கல் → சிங்கள்]

செங்காரித்தல் பார்க்க

 சிங்கல்2 ciṅgal, பெ. (n.)

   1. இளைத்தல்; fainting, drooping.

   2. இளைப்பு நோய்; exhaustion (சாஅக.);.

     [சிங்கு → சிங்கள். ‘அல்’ தொ.பெ.சறு]

சிங்களத்தி

 சிங்களத்தி ciṅgaḷatti, பெ. (n.)

   சிங்கள நாட்டவள்; Sinhalese woman.

     [சிங்கனம் → சிக்கனத்தி]

சிங்களன் (ஆபா.); – சிங்களத்தி (பெ.பா.);

சிங்களன்

 சிங்களன் ciṅgaḷaṉ, பெ. (n.)

சிங்களவன் (வின்); பார்க்க;see Singalavan.

     [சிங்களவன் → சிங்கனன்]

சிங்களமருந்து

 சிங்களமருந்து ciṅgaḷamarundu, பெ. (n.)

   சிங்கள மருத்துவர் செய்து தரும் மருந்து வகை (யாழ்ப்.);; a medicine prepared by Sinhalese physicians, said to be very effective, dist. for Tamil-marundu.

     [சிங்களம் + மருந்து]

சிங்களம்

சிங்களம் ciṅgaḷam, பெ. (n.)

   1. இலங்கை நன். 272, மயிலை); Ceylon.

   2. பதினெண் மொழிகளுள் ஒன்றாகிய சிங்களமொழி (தி வா.);; Sinhalese language.

   3. சிங்களவர்க்குரியதாய்த் தமிழில் வழங்குங் கூத்துவகை (சீவக. 672, உரை.);; a mode of dancing with gesticulation peculiar to the Sinhalese.

சிங்களர்

சிங்களர் ciṅgaḷar, பெ. (n.)

   சிங்களத் தீவில் வாழ்வோர்; the Sinhalese.

     “சிங்களர் வங்களர்” (கவிங். 318);.

     [சிங்கனம் → சிங்கனா. ‘அர்’ பலர்பாலீறு]

சிங்களவன்

 சிங்களவன் ciṅgaḷavaṉ, பெ. (n.)

   சிங்கள நாட்டான்; man of Sinhala country.

     [சிங்களம் → கிங்களவன். ‘அன்’-ஆண் பாலீறு]

சிங்களாந்தகன்

 சிங்களாந்தகன் ciṅgaḷāndagaṉ, பெ. (n.)

   ஈழத்தை வென்ற சோழமன்னன்; name of the Cola king.

சிங்கவரம்

 சிங்கவரம் ciṅgavaram, பெ.(n.)

   செஞ்சி வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Senji Taluk.

     [சிங்கன்+புரம்]

சிங்கவல்லி

சிங்கவல்லி ciṅgavalli, பெ. (n.)

   தூதுவளை (தைலவ.பாயி.57);; three-lobed night shade.

     [சிக்கு → சிங்கு + வன்வி]

சிங்கவாழை

 சிங்கவாழை ciṅgavāḻai, பெ. (n.)

சிங்கன் வாழை (யாழ்ப்); பார்கக;see Singan-Valai.

     [சிங்கன் வாழை → சிங்கவாழை]

சிங்கா

சிங்கா ciṅgā, பெ. (n.)

   அகவையைக் குறிப்பதாய்க் குதிரைப் பற்களிலுண்டாம் நிற வேறுபாடு (அசுவசா.6);; change in the coloration of horse’s teeth indicating its age.

சிங்காடி

 சிங்காடி ciṅgāṭi, பெ. (n.)

சிங்காணி (வின்.); பார்க்க;see sirigani.

   ம. சிங்காடி;க. சிங்காடி

     [சிங்காணி → சிங்காடி]

சிங்காடிக்காய்

 சிங்காடிக்காய் ciṅgāṭikkāy, பெ. (n.)

   வேங்கைக்காய்; the fruit of kino tree.

     [சிங்காடி + காய்]

சிங்காணகம்

சிங்காணகம் ciṅgāṇagam, பெ. (n.)

   1. மூக்குச் சளி; mucous from the nose.

   2. மாழைகளின் மாசு; the scoria of molten metals (சா.அக.);.

     [சிங்காணம் → சிங்காணகம்]

சிங்காணசில்லி

சிங்காணசில்லி siṅgāṇasilli, பெ. (n.)

   1. குடல், வயிறு முதலியவற்றில் உள்ளுறையாய்க் காணப்படும் ஊரற்சவ்வு; the serous membrance which lines the intestines and other internal viscera of the abdominal cavity.

   2. மூக்கினுளிருக்கும் சவ்வு; the mucous membrane of the nose (சா.அக.);

     [சிங்காணம் + சில்வி]

சிங்காணம்

 சிங்காணம் ciṅgāṇam, பெ. (n.)

   மூக்குச்சளி (யாழ்.அக.);; mucous.

     [சிக்கு → சிக்கனம் = மழமழ வென்றிருப்பது சிக்கணம் → சிங்கனம் → சிங்கானம்)

சிங்காணி

 சிங்காணி ciṅgāṇi, பெ. (n.)

   உண்டை வைத்து அடிக்கும் ஒருவகை வில் (வின்.);; bow for shooting small balls, pellet-bow.

மறுவ. சுண்டுவில்

   ம. சிங்காடி;   க. சிங்காடி;   தெ. சிங்காணி, சிங்கிணி;   து. சிங்காணி பிரு. சிங்கணி பிரு; Skt. Sinjini

     [சிலும்பு = மரச்சிறாய். சிலும்பு, → சிலுங்கு → சிங்கு → சிங்காணி]

சிங்காய்

 சிங்காய் ciṅgāy, பெ. (n.)

பழுக்காத பனங்காய்,

 unripened palmyrah fruit.

     [சிக்கல்+காய்]

சிங்காரக்கிழக்கு

 சிங்காரக்கிழக்கு ciṅgārakkiḻkku, பெ. (n.)

   சருக்கரை வள்ளிக்கிழங்கு; swect potato.

     [சிங்காரம் + கிழங்கு]

சிங்காரக்கும்மி

 சிங்காரக்கும்மி ciṅgārakkummi, பெ.(n.)

   அண்ணாமலைக் கவிராயர் இயற்றிய கும்மிப்பாடல்; a kummiplaywritten by Annamalaik-kavirayar.

     [சிங்காரம்+கும்மி]

சிங்காரக்கொட்டை

சிங்காரக்கொட்டை ciṅgārakkoṭṭai, பெ. (n.)

   1. வேங்கைமரத்தின் கொட்டை; the nut of a kino tree.

   2. முந்திரிக்கொட்டை; cashew nut.

     [சிங்கரம் + கொட்டை]

சிங்காரக்கோட்டை

சிங்காரக்கோட்டை ciṅgārakāṭṭai, பெ. (n.)

   இளமஞ்சள் மலர்ச்செடிவகை;(M.M. 995);; primrose willow.

     [சிங்காரம் + கோட்டை]

சிங்காரக்கோளி

 சிங்காரக்கோளி ciṅgārakāḷi, பெ. (n.)

   வெளுத்த அரளி; common caper.

     [சிங்காரம் + கோணி]

சிங்காரம்

 சிங்காரம் ciṅgāram, பெ. (n.)

   செந்நிறம்; red colour.

     [சும் → செம்பு – செப்பு. செம் → செவ் → செவப்பு → சிவப்பு, செம் + காரம் → செங்காரம் → சிங்காரம். ‘காரம்’ ஒரு ஈறு. ஒ.நோ. வெண்காரம், அதிகாரம்]

சிங்காரவல்லிக்கொடி

 சிங்காரவல்லிக்கொடி ciṅgāravallikkoḍi, பெ. (n.)

   கரும்பசுமை நிறமுள்ள கம்மாறு வெற்றிலை வகை; a kind of betel leaf, dark green and pungent.

சிங்கி

சிங்கி1 ciṅgi, பெ. (n.)

   பின்னல்; that which is woven or plaited.

     “சிங்கிசெய் கூட்டின்” (ஞானவா.தாம.4);.

     [சிங்கு → சிங்கி]

 சிங்கி2 ciṅgi, பெ. (n.)

   1. கடுக்காய் (மூஅ);; gall nut.

   2. நன்னீரில் வாழ்வதும் ஒரடி நீளம் உடையதுமான மீன்வகை; a fresh-water fish, leaden, attaining more than one fl. in length.

   2. நஞ்சு; poison

     “கோளரா வெயிற்றுச் சிங்கி” (உபதேசகா. சிவ புண்ணிய. 348);.

 சிங்கி3 ciṅgi, பெ. (n.)

   1. குறத்தி (குற்றா.குற.);; woman of the fowler tribe.

   2. துணங்கைக் கூத்து (சிலப். 5:70, உரை.);; a mode of dancing.

   3. இராகுவின் தாய் (இலக்அக.);; mother of Rahu, the ascending node.

   4. நாணமற்றவள், forward, immodest woman.

 சிங்கி4 ciṅgi, பெ. (n.)

   1. வல்லாரை (மலை);; Indian pennywort.

   2. மான்கொம்பு (மூஆ.);; stag’s horn.

 சிங்கி5 ciṅgi, பெ. (n.)

   1. கட்டியினின்று ஊனீர் கசியும் தசை நோய்; an ulcer or sorc with a serious discharge.

   2. நாவில் வரும் புண் வகை; ulceration of the tongue.

   3. மகிழம்பூ; ape-face flower.

   4. முப்பத்திரண்டு வைப்பு நஞ்சு வகையுளொன்று; a chemically prepared compound with lead and salpetre as ingredients (சாஅக);.

     “கலக்குகின்ற வங்கத்தில் இணங்கன் சேர்த்துக் கலந்ததினால் சிங்கி யென்ற பேருமாச்சு” (உரோமரிஷி.சூத்.100);

   ம. சிங்கி (நஞ்சு);;து. சிங்கி (நஞ்சு);

 சிங்கி ciṅgi, பெ.(n.)

   கச்சேரியில் தட்டும் ஒரே வகை இசைக்கருவி; a musical instrument.

     [சிங்-சிங்கி]

சிங்கி கொள்ளு)-தல்

சிங்கி கொள்ளு)-தல் ciṅgigoḷḷudal,    7 செகுன்றாவி (v.t.)

   வயப்படுத்தி, மகிழ்ச்சிக் கூத்தாடச் செய்தல்; to make one dance with joy, to fascinate, charm.

     “தேராத சிந்தையரைச் சிங்கி கொளுமல்லாமல் (பிரபோத. 27,14);.

சிங்கிகம்

சிங்கிகம் ciṅgigam, பெ. (n.)

   1. கறிமுள்ளிக்கீரை; prickly greens (சா.அக.);.

   2. சிறுவழுதலை (மலை);; Indian nightshade.

சிங்கிக்கணமாந்தம்

 சிங்கிக்கணமாந்தம் ciṅgikkaṇamāndam, பெ. (n.)

   குழந்தைகளுக்குச் சரிவரச் செரியாமையினால் ஏற்படும் மாந்தநோய்; aphthac in children tongue due to indigestion.

     [சிங்கி + கனம் + மாத்தம்]

சிங்கிக்குரு

 சிங்கிக்குரு ciṅgikkuru, பெ. (n.)

   செம்பின் களிம்பை அகற்றித் தங்கமாக்க, பொன்னாக்க முறைப்படி உருவாக்கப்பட்ட மருந்து; litharage quintessence prepared by an alchemical process. It removes verdigria from copper and as such, can very easily transmute copper into gold (சா.அக.);

சிங்கிச்செம்பு

 சிங்கிச்செம்பு ciṅgiccembu, பெ. (n.)

   பொன்னாக்க முறைப்படி மிருதார சிங்கியினின்று எடுக்குஞ் செம்பு; copper extracted form litharage by alchemical process (சா.அக.);.

     [சிங்கி + செம்பு]

சிங்கிச்செயநீர்

 சிங்கிச்செயநீர் ciṅgicceyanīr, பெ. (n.)

   தாரம், வீரம் முதலானவற்றையரைத்து ஈயத்திற்குப் பூசி மலர்ந்த பின், இவ்வெடைக்குக்காரஞ் சேர்த்து இறக்குஞ் செயநீர்; a strong pungent liquid prepared by exposing lead coated with orpiment and corrosive sublimate to night’s dew after adding to it a sufficient quantity of borax.

     [சிங்கி + செயநீர்]

சிங்கிட்டம்

 சிங்கிட்டம் ciṅgiṭṭam, பெ. (n.)

   குடசப்பாலை (மூ.அ);; green wase-flower.

சிங்கித்தைலம்

 சிங்கித்தைலம் ciṅgittailam, பெ. (n.)

   மிருதார சிங்கியுடன் கெந்தகம், நீலம், இதளியம், படிகாரம், பால்துத்தம், நாலி, பரங்கிப் பட்டை, கடுக்காய், வசம்பு, வெங்காரம், துத்தம் முதலியவற்றைச் சமனெடை சேர்த்து இவற்றுடன் புங்கம்பால், ஒதியம்பால், தேங்காய் எண்ணெய் முதலானவற்றைக் கூட்டிக் காய்ச்சி வடிக்கும் எண்ணெய்; a healing balm prepared with litharge, sulphur, indigo, mercury, alum, white vitriol, aconite, china-bark, gall-nut, sweet flag, borax etc., by grinding the mixture with the juices of poongam, and Indian ash trees together with a sufficient quantity of coconut oil (சா.அக.);

     [சிங்கி + தைவம்]

சிங்கினி

சிங்கினி1 ciṅgiṉi, பெ. (n.)

   1. வில் (வின்);; bow.

   2. வில்லின் நாண் (யாழ்ப்);; bow string.

     [சிங்காணி → சிங்கனி → சிங்கினி]

 சிங்கினி2 ciṅgiṉi, பெ. (n.)

   1. கண்டங்கத்திரி; yellow berried night shade.

   2. ஒதியமரம்; odinawodier.

   3. கொள்ளுப் பயறு (காணப் பயறு);; jungle horse-gram (சா.அக.);.

சிங்கிபற்பம்

 சிங்கிபற்பம் ciṅgibaṟbam, பெ. (n.)

   நெஞ்செரிவு, உட்காய்ச்சல், நீர் எரிப்பு முதலான நோய்களைப் போக்கும் சிங்கி பற்பம்; the calcined singi powder is prescribed for burning of chest, internal fever, high coloured urine, etc.

சிங்கிப்பிளவை

 சிங்கிப்பிளவை ciṅgippiḷavai, பெ. (n.)

   தசைப் பிளவை நோய் வகையுளொன்று; a kind of anthurax in men;carbuncle (சா.அக.);.

     [சிங்கி + பிளவை]

சிங்கிமாதழுவாள்

 சிங்கிமாதழுவாள் ciṅgimātaḻuvāḷ, பெ. (n.)

   கவிழ்தும்பை; stooping leucas (சா.அக.);.

சிங்கிமாந்தக்கணை

 சிங்கிமாந்தக்கணை ciṅgimāndakkaṇai, பெ. (n.)

   குழந்தைகளது உடம்பை இளைக்கச் செய்யும் கணைநோய் வகையுளொன்று; a kind of congenital heat affecting children. It is a wasting disease (சா.அக.);.

     [சிங்கி + மாத்தம் + கணை]

சிங்கிமாந்தசுரம்

 சிங்கிமாந்தசுரம் siṅgimāndasuram, பெ. (n.)

   குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் நோய் வகை; a kind of convulsive fever of children (சா.அக.);.

     [சிங்கி + மாத்தம் + கரம்]

சிங்கிமார்க்கம்

 சிங்கிமார்க்கம் ciṅgimārkkam, பெ. (n.)

   பொன்னாக்கத்திற்கு மந்தன முறையில் சிங்கிவைப்பு நஞ்சைக் கொண்டு செய்யும் மருந்து; a secret process of alchemical preparation with the aid of litharge (சா.அக.);.

     [சிங்கி + மார்க்கம்]

சிங்கிமுப்பு

 சிங்கிமுப்பு ciṅgimuppu, பெ. (n.)

   சிங்கிவைப்பு நஞ்சைக் கொண்டு மந்தண முறையிற் செய்யப்படும் உப்பு வகை; a quintessence salt prepared out of litharge by a secret process (சாஅக.);.

     [சிங்கி + உப்பு. உப்பு → முப்பு]

சிங்கியடி-த்தல்

சிங்கியடி-த்தல் ciṅgiyaḍittal,    4 செகுவி (v.i.)

   1. முடக்கிய இருகைகளாலும் விலாப் புறங்களை அடித்துக் கொண்டு கூத்தாடுதல்; to beat the sides with the elbows and dance.

   2. வறுமையால் முட்டுப்படுதல்; to be in straightened circumstances;

 to suffer from poverty.

சோற்றுக்குச் சிங்கியடிக்கிறான்.

   3. பெண்மைக் குணமின்றியொழுகுதல் (வின்.);; to behave shamelessly, as a virago.

   4. கோலி விளையாட்டிற் கோலியைக் கைமுட்டியால் குழியில் தள்ளுதல் (இவ.);; to push marbles with knuckles, in the children’s game of marbles.

ம. சிங்கியடிக்குக

     [சிங்கி3 + அடி]

சிங்கியடித்தல் = இரப்போன் தாளம் தட்டி இரப்பது போல் திண்டாடுதல் (செல்வி 1943, சுறவம் பக். 108);. சிங்கி = தாளம்.

சிங்கிரம்

 சிங்கிரம் ciṅgiram, பெ. (n.)

   குடசப்பாலை (மலை.);; green wax flower.

சிங்கிறால்

சிங்கிறால் ciṅgiṟāl, பெ. (n.)

   ஈர்க்கிறால் (M.M.);; lobster.

     [சிங்கி2 + இறான்]

சிங்கிலி

சிங்கிலி ciṅgili, பெ. (n.)

   1. குன்றி (மலை.);; crab’seye.

   2. புலிதொடக்கி (மலை.);; Mysore thorn.

   3. இண்டு; a species of sensitive tree.

   4. விளையாட்டில் மிகையாக ஒருமுறை ஆடும் ஆட்டம் (இ.வ.);; extra turn which a person is entitled to in games.

சிங்கில்பாடி

 சிங்கில்பாடி ciṅgilpāṭi, பெ.(n.)

   திருப்பெரும்புதுர் வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in SriperumbudurTaluk.

     [சிங்கை-சிங்கில்பாடி]

சிங்கிவிளையாட்டு

 சிங்கிவிளையாட்டு ciṅgiviḷaiyāṭṭu, பெ. (n.)

   மாய விளைவுகளை உருவாக்கும் விளையாட்டு வகையுளொன்று; a kind of magic (சாஅக.);.

     [சிங்கி + விளையாட்டு]

சிங்கிவைப்பு

 சிங்கிவைப்பு ciṅgivaippu, பெ. (n.)

சிங்கிவைப்புநஞ்சு, பார்க்க; see singi-vaippu-naniju, (சாஅக);.

     [சிங்கி + வைப்பு]

சிங்கிவைப்புநஞ்சு

சிங்கிவைப்புநஞ்சு1 ciṅgivaippunañju, பெ. (n.)

   மச்சமுனி 800இல் சொல்லியபடி அரிதாரம், பச்சை, சிவலிங்கம், வெள்ளை, வீரம், நாகம், சிலை, காரம், சாரம், சூதம் ஆகியவற்றை ஒன்றாய்ப் பொடித்துச் செய்யும் வைப்பு;  spoo, a poisonous compound prepared as per process of machamuni as dealt within his work ‘800’ (சாஅக);.

     [சிங்கி + வைப்புநஞ்சு]

 சிங்கிவைப்புநஞ்சு2 ciṅgivaippunañju, பெ. (n.)

   மிருதார சிங்கி வைப்பு நஞ்சு; impurc oxide of lead or litharge. (சாஅக);.

     [சிங்கி + வைப்பு:தஞ்சு]

சிங்கு

சிங்கு1 ciṅgudal,    5 செகுவி (v.i.)

   1. குன்றுதல்; to diminish, wane, decrease.

     “சிங்கா வண்புகழ்ச் சிங்கபுரத்து (சிலப். பதி. 47);.

   2. இளைத்தல் (பிங்.);; to faint, fail, droop.

   3. அழிதல்; to decay, perish.

     “சிங்காமைத் தங்கள் கவசமாய்” (கம்பரா. சரபங்க.26);

   4. கழிந்து போதல்; to elapse, pass away, as time.

     “சிங்குமாற் காலம்” (கம்பரா. மருத்து,63);.

ம. சிங்கு (பதர்);, து. சிங்கு

     [இங்குதல் = அழுத்துதல், துன்புறுதல் இங்கு → சிங்கு]

 சிங்கு2 ciṅgudal,    5 செ.குவி (v.i.)

   சிக்கிக் கொள்ளுதல்; to be caught.

     “சிங்கினா ரிரு முதுகுரவ ரென்பவே” (சீவக. 2832);

     [சிக்கு → சிங்கு_,]

 சிங்கு3 ciṅgu, பெ. (n.)

   நாக்கு; tongue (சாஅக);.

சிங்குவை

சிங்குவை ciṅguvai, பெ. (n.)

   1. உள்நாக்கு; root of the tongue.

   2. ஐம்பொறியிலொன்று; one of the five sensory organs, the mouth including the tongue.

     [சிங்கு3 → சிங்குவை]

சிங்குவைநோய்

 சிங்குவைநோய் ciṅguvainōy, பெ. (n.)

   நாக்கில் ஏற்படும் புண் முதலான நோய்கள்; a term applied to all diseases, wounds or ulcers etc., of the tongue.

     [சிங்குவை + தோய்]

சிங்கை

சிங்கை ciṅgai, பெ. (n.)

   1. இண்டு; prickly brasilletta climber.

   2. சிங்கை முள்; rusty mimosa.

சிங்கையாரியர்

 சிங்கையாரியர் ciṅgaiyāriyar, பெ. (n.)

   யாழ்ப்பாணத்தை ஆண்ட தமிழரசர்கள்; ancient rulers of Jaffna.

     [சிங்கை + ஆரியர்]

இரகுவமிசம் இயற்றிய அரசகேசரி, தட்சினை கைலாச புராணம் பாடிய செகராசசேகரன், அந்தகக் கவி வீரராகவ முதலியாரால் புகழப்பெற்ற பரராசசேகரன் ஆகியோர் இம்மரபினரே.

சிசுகம்

சிசுகம் sisugam, பெ. (n.)

   1. மரவகை; a kind of tree.

   2. முதலமை; crocodile.

   3. திமிங்கலம்; whale (சா.அக.);.

சிசுபாலன்

சிசுபாலன் sisupālaṉ, பெ. (n.)

   1. இடை வள்ளல்களெழுவருள் ஒருவன்; a liberal chief, one of seven idai-vallalkal.

   2. கண்ணனால் கொல்லப்பட்ட ஒரு மன்னன்.

     “தெழித்துரப்புஞ் சிசுபாலன்” (கவிங். 580);.

இடைவள்ளல்கள் எழுவர்: அக்குரன், சந்திமான், அந்திமான், சிசுபாலன், தந்தவக்கிரன், கன்னன், சந்தன்.

சிசுமரம்

 சிசுமரம் sisumaram, பெ. (n.)

   நூக்க மரம்; sissum tree (சா.அக.);.

சிசுமாரம்

சிசுமாரம் sisumāram, பெ. (n.)

   1. முதலை; crocodile, the gangetic dolphin.

   2. முதலமையைப் போன்று வடிவுள்ள பெரிய மீன் வகையுளொன்று; a large fish of the species of whale (சா.அக.);

சிசுமூலிகம்

சிசுமூலிகம் sisumūligam, பெ. (n.)

   1. நூலாஞ் செடி,

 cotton tree.

   2. நூலிலைச் செடி,

 doodooga (சா.அக.);.

     [சிச + மூவிகம்]

சிசுமூலிகா

 சிசுமூலிகா sisumūlikā, பெ. (n.)

சிசுமூலிகம் பார்க்க;see sisu-muligam (சா.அக.);.

     [சிசமூவிகம் → சிசமூவிகா]

சிச்சி

சிச்சி cicci, இடை (int.)

சிச்சீ பார்க்க;see Sicci.

     “சிச்சியெனத் தன்மெய்ச் செவி பொத்தி” (கம்பரா. மாரீச.76);

து. சிச்சி (மலம்);

சிச்சிரம்

 சிச்சிரம் cicciram, பெ. (n.)

   மீன்கொத்தி (சங்.அக.);; king-fisher.

சிச்சிலி

சிச்சிலி1 ciccili, பெ. (n.)

   1. மீன்கொத்தி (சீவக. 2499, உரை);; king-fisher.

   2. பறவை வகை; a species of partridge.

     “அருமறையைச் சிச்சிலிபண் டருந்தத் தேடும” (திருமுறைகண்.17);.

ம. சிச்சிலி, த. சிச்சிலி → Skt.tittri

 சிச்சிலி2 ciccili, பெ. (n.)

   கோப்பிரண்டைக் கொடி; a species of adamantine creeper (சா.அக.);.

சிச்சிலிப்பான்

 சிச்சிலிப்பான் ciccilippāṉ, பெ. (n.)

சிச்சிலிர்ப்பான் பார்க்க;see Siccilirppan (சாஅக);.

     [சிச்சிவிப்பான் → சிச்சிவிப்பான்]

சிச்சிலிப்பொறி

சிச்சிலிப்பொறி ciccilippoṟi, பெ. (n.)

   சிச்சிலி வடிவாகச் செய்து கோட்டை மதிலில் அமைக்கப்படுவதும் பகைவரை அழித்தற் குரியதுமான எந்திர வகை (சிலப்.15:24, உரை);; a destructive machine in the form of a kingfisher, mounted on the walls of a fortress for defence.

     [சிச்சிலி + பொறி]

சிச்சிலியாதனம்

சிச்சிலியாதனம் cicciliyātaṉam, பெ. (n.)

   ஒகநிலை (தத்துவம் 109, உரை.);; a yogic posture.

சிச்சிலிர்ப்பான்

சிச்சிலிர்ப்பான் ciccilirppāṉ, பெ. (n.)

   1. தட்டம்மை; measles

   2 நீர்க்கொள்ளுவான்; chicken pox (சா.அக.);.

சிச்சிலுப்பான்

சிச்சிலுப்பான்1 cicciluppāṉ, பெ. (n.)

   மீன் கொத்திப்பறவை; king-fisher (a sparrow); (சா.அக.);.

   மறுவ. சிரற்புள்;   பொன்வாய்ப்புள், சிச்சிரம்;சிச்சிலி.

ம. சிச்சிலி

     [சிச்சிலி → சிச்சிலுப்பான்]

 சிச்சிலுப்பான்2 cicciluppāṉ, பெ. (n.)

சிச்சிலுப்பை (வின்.); பார்க்க;see siccilluppai.

சிச்சிலுப்பை

 சிச்சிலுப்பை cicciluppai, பெ. (n.)

   அம்மை வகை; chicken-pox or measles.

சிச்சீ

சிச்சீ ciccī, இடை (int.)

   இகழ்ச்சிக் குறிப்பு; expr. meaning fie! used in contempt

     “சிச்சீ வயிறு வளர்க்கைக்கு மானமழியாது” (நல்வழி,14);.

   ம. சிச்சி;க., தெ., சிசீ

சிஞ்சபாகம்

 சிஞ்சபாகம் ciñjapākam, பெ. (n.)

சிஞ்சுபாகம் பார்க்க;see sinju-bagam (சா.அக.);.

     [சிஞ்சபாகம் → கிஞ்சபாகம்]

சிஞ்சம்

சிஞ்சம் ciñjam, பெ. (n.)

   1. புளி (வின்.);; tamarind.

   2. புளிமா (மலை.);; Indian hog-plum.

   ம.சிஞ்ச; Skt. cinca

புளியம்பழம் வற்றிச்சுருங்கும் இயல்புடைமையால் இஞ்சு என்னும் சொல் சு-சிஞ்சம் என்று திரிந்தது. இஞ்சுதல் – வற்றுதல். ஒ.நோ. இறப்பு → சிறப்பு.

சிஞ்சல்

 சிஞ்சல் ciñjal, பெ. (n.)

   நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஓர் ஊர்; a village in Nagapattinam.

     [செஞ்சு-செஞ்சல்-சிஞ்சல்]

சிஞ்சாதிஇளகியம்

 சிஞ்சாதிஇளகியம் ciñjātiiḷagiyam, பெ. (n.)

   இரும்புத்துாள் முதலியவற்றையும் பல மூலிகைகளையும் சேர்த்துக் காய்ச்சிப் பாண்டுநோயினுக்குக் கொடுக்கும் ஆயுள் வேத மருந்து; an ayurvedic medicine prepared with iron dust as a chief ingredient mixed with other herbs and prescribed for dropsy (சா.அக.);.

     [சிஞ்சாதி + கூழ்]

இதனைச் சிஞ்சாதி லேகியம் என சாஅக குறித்துள்ளது.

சிஞ்சாரி

 சிஞ்சாரி ciñjāri, பெ. (n.)

சிஞ்சாரிகம் பார்க்க;see šinjarigam (சா.அக.);.

     [சிஞ்சாரிகம் → சிஞ்சாரி]

சிஞ்சாரிகம்

 சிஞ்சாரிகம் ciñjārigam, பெ. (n.)

   புளியமரம்; tamarind tree (சா.அக.);.

சிஞ்சிகம்

 சிஞ்சிகம் ciñjigam, பெ. (n.)

   இசைபாடும் கேகயப் புள்; a bird charmed by music (சா.அக.);.

சிஞ்சிகாநீர்

 சிஞ்சிகாநீர் ciñjikānīr, பெ. (n.)

   காடி; vinegar;

 any fermented liquid (சா.அக.);.

     [சிஞ்சிகம் + நீர்]

சிஞ்சினி

 சிஞ்சினி ciñjiṉi, பெ. (n.)

   புளிகரணை; a plant probably of the vitex genus (சா.அக.);.

சிஞ்சிமாரம்

 சிஞ்சிமாரம் ciñjimāram, பெ. (n.)

   முதலை; crocodile (சா.அக.);.

சிஞ்சிரணி

 சிஞ்சிரணி ciñjiraṇi, பெ. (n.)

   மிளிறை என்னும் அரிவாள் மூக்குப் பூண்டு; sickle plant (சாஅக);.

சிஞ்சிரம்

 சிஞ்சிரம் ciñjiram, பெ. (n.)

சிஞ்சிகம் பார்க்க;see sinjigam (சா.அக.);.

சிஞ்சிரி

 சிஞ்சிரி ciñjiri, பெ. (n.)

   கஞ்சிரா எனும் தோற்கருவி; a percussion instrument.

     [சிஞ்+சிரி (ஒலிக்குறிப்பு);]

சிஞ்சிலி

சிஞ்சிலி ciñjili, பெ. (n.)

   மரவகை; a kind of tree.

     “சிஞ்சிலிவேலியோடும்” (தெ.க.தொ.vii.62);.

சிஞ்சுகம்

சிஞ்சுகம் ciñjugam, பெ. (n.)

   1. சிஞ்சிகம் பார்க்க;see sinjigam.

   2. கலியாண முருக்க மரம்; Indian coral tree.

சிஞ்சுபாகம்

 சிஞ்சுபாகம் ciñjupākam, பெ. (n.)

   மஞ்சள் காமாலை நோயகற்றும் செடி; an unidentified plant supposed to cure jaundice (சா.அக.);.

சிஞ்சுமாரம்

சிஞ்சுமாரம் ciñjumāram, பெ. (n.)

   1. ஒரு பெண் தெய்வம்; a Goddess.

   2. முதலை (பிங்.);; crocodile.

சிஞ்சுவாடி

 சிஞ்சுவாடி ciñjuvāṭi, பெ.(n.)

   பொள்ளாச்சி வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Pollach Taluk.

     [செஞ்சு-சிஞ்ச+வாடி]

சிஞ்சைவித்துரி

 சிஞ்சைவித்துரி ciñjaivitturi, பெ. (n.)

   புளியங்கொட்டைத் தோல்; the outer skin of the tamarind seed (சா.அக.);.

     [சிஞ்சைவித்து + உரி]

சிடம்

 சிடம் ciḍam, பெ. (n.)

   சாதிக்காய் (மூ.அ.);; nutmeg.

     [சிதம் → சிடம்]

சிடிகை

 சிடிகை ciḍigai, பெ. (n.)

   ஒருசார் நோயின் மருத்துவமாகச் சூடு இடுகை (C.G.);; Cauterigation.

க. சி.டி.கெ.

     [சுடுகை → சிடுகை → சிடிகை]

சிடிகைவேதை

 சிடிகைவேதை ciḍigaivētai, பெ. (n.)

   வெடியுப்பைக் கட்டிப் பொன்னாக்கம் செய்யும் வழி; the alchemical method usually adoped by consolidating nitre. (சா.அக.);.

     [சிடிகை + வேதை]

சிடிமுகிவேர்

 சிடிமுகிவேர் ciḍimugivēr, பெ. (n.)

   இன்னதென அறியப்படாத ஒருவகை மருந்துச் செடியின் வேர்; the root of an unknown plant (சா.அக.);.

     [சிடி + முகிவேர்]

சிடுக்கு

சிடுக்கு1 ciḍukku, பெ. (n.)

   1. சிக்கு; tangle.

   2. மகளிர் அணிவகை; a kind of ornament for women.

     “முத்தின் சிடுக்கு ஒரணையிற் கோத்த முத்து” (தெ.க.தொ.2,211);.

     [சிக்கு3 → சிதிக்கு]

 சிடுக்கு2 ciḍukku, பெ. (n.)

சிடுசிடுப்பு1 பார்க்க: see Sidu-Siduppu1.

சிடுக்குப்பிடுக்கு

 சிடுக்குப்பிடுக்கு ciḍukkuppiḍukku, பெ. (n.)

சிடுசிடுப்பு பார்க்க;see Sidu-Siduppu.

சிடுக்குவாரி

சிடுக்குவாரி ciḍukkuvāri, பெ. (n.)

   மயிர்ச் சிக்கலெடுக்குங் கருவி; forked comb for disentangling the hair.

     [சிடுக்கு1 + வாரி]

சிடுசிடு-த்தல்

சிடுசிடு-த்தல் siḍusiḍuttal,    4 செகுவி (v.i.)

   சினக் குறிப்புக் காட்டுதல்; to knit the brow in anger, scowl, frown.

     “சிடுசிடுத்த ராட்சதர் தம்மை” (இராமநா. உயுத்.16);

சிடுசிடுப்பு

சிடுசிடுப்பு siḍusiḍuppu, பெ. (n.)

   1. சினக்குறி; knitting the brow in anger, frowning.

   2. காய்ச்சும் எண்ணெய்யில் நீரிருப்பதை உணர்த்தும் ஒலிக்குறிப்பு (தைலவபாயி. 56, உரை);; onom. expr. of hissing noise, as of a burning wick when it contains particles of Water.

     [சிடுசிடு → சிடுசிடுப்பு]

சிடுமூஞ்சி

சிடுமூஞ்சி ciḍumūñji, பெ. (n.)

   1. கடுகடுத்த முகம்; frowning face.

   2. கடுகடுத்த முக முடையவன்; one having a frowning face.

     [சிரு + மூஞ்சி முகம் → மூஞ்சி (உ.வ.);]

சிட்டக்கல்

 சிட்டக்கல் ciṭṭakkal, பெ. (n.)

   செங்கற்கிட்டம்; over-burnt brick (சா.அக.);.

     [சிட்டம் + கல்]

சிட்டங்கட்டு-தல்

சிட்டங்கட்டு-தல் ciṭṭaṅgaṭṭudal,    5 செகுவி (v.i.)

   1. செங்கல் உருகி உருக்குக் கல்லாதல்; to be overburnt as a brick.

   2. திரி எரிந்து கருகிப் போதல்; to be burnt up, as wick.

     [கிட்டம் → சிட்டம் + கட்டு_,]

சிட்டப்பட்டார்

சிட்டப்பட்டார் ciṭṭappaṭṭār, பெ. (n.)

   அடியார்; devotees.

     “சிட்டப்பட்டார்க் கெளியான்” (தேவா.33,6);.

     [சிட்டு → சிட்டம் + பட்டார்]

சிட்டம்

சிட்டம்1 ciṭṭam, பெ. (n.)

   1. 2520 அடி நீளமுள்ள நூலை 4 1/2 அடி நீளமுள்ள சுற்றளவில் சுற்றிய வட்டநூற் சுருள்; hank

   2. நூல் சுற்றப்பயன்படும் மரத்தாலான சட்டகம்; a wooden instrument for hank.

 சிட்டம்2 ciṭṭam, பெ. (n.)

   1. இரும்பூறல்,

 iron rust

   2. உருக்கு அல்லது கற்சிட்டம்; over-burnt brick, charred brick.

   3. இருப்புக்கிட்டம்;   இரும்பை நெருப்பிற் காய்ச்சுவதால் உதிரும் பொடி; the extraneous matter thrown off in the process of heating or melting iron (சா.அக.);.

     [கிட்டம் → சிட்டம்]

 சிட்டம்3 ciṭṭam, பெ. (n.)

   1. பெருமை; eminence, greatness.

     “சிட்ட மார்ந்த மும்மதிலும்” (தேவா. 540, 8);.

   2. மதிப்பானது, மரியாதைக்குரியது; that which is estimable, sacret.

     “சிட்டமாஞ் சிவசின்னங்கள்” (சிவாக சிவரகசியவாலா.9.);

ம. சிட்டம்

     [சிட்டு → சிட்டம்]

த. சிட்டம் → Skt. sista

சிட்டவட்டி

 சிட்டவட்டி ciṭṭavaṭṭi, பெ. (n.)

   வாரம் தோறும் வட்டி பெறுவது; interest levied weekly.

     [கிட்டம்+வட்டி]

சிட்டாய்ப்பற-த்தல்

சிட்டாய்ப்பற-த்தல் ciṭṭāyppaṟattal,    3 செ.கு.வி. (v.i.)

   சிட்டுக்குருவி போல விரைந்தோடிப் போதல் (இ.வ.);; to run or fly like a house sparrow.

     [சிட்டு1 + ஆய் + பற_,]

சிட்டி

சிட்டி1 ciṭṭi, பெ. (n.)

   1. சிறுமட்கலம்; a small carthern vessel.

   2. ஒர் அளவுக் கருவி (வின்.);; a small measure.

   3. சூது கருவியை உருட்டுஞ் செப்பு (வின்.);; small dice-case.

க. சிட்டி தெ. சிட்டி

     [கள் = சிறுமை. சன் → சன்னாணி = சிறிய ஆணி. சள் → (சுட்டு); → சிட்டு = சிறியது, சிறுகுருவி சிட்டு → சிட்டி (மு.தா.129);]

 சிட்டி2 ciṭṭi, பெ. (n.)

   சீழ்க்கை (இ.வ.);; whistle.

     [சீம்க்கை → சிக்கை → சிக்கி → சிட்டி → சிட்டி]

 சிட்டி3 ciṭṭi, பெ. (n.)

   சிற்றிலைச் செடியெனப்படும் நெய்ச்சிட்டி; fleabanc (சாஅக);.

 சிட்டி4 ciṭṭi, பெ. (n.)

   1. நொடி; snap of fingers.

   2. இரண்டு விரலின் நடுக்கொண்ட அளவு; as much as is taken with the finger and the thumb-pinch, said of medical powder and snuff (சாஅக.);.

து. சிடுகு

     [சிள் → சிட்டி]

சிட்டிகை

சிட்டிகை ciṭṭigai, பெ. (n.)

   1. கைந்நொடி; snap of the fingers.

   2. கைந்நொடிப் பொழுது; moment, as measured by snap of the finger.

   3. விரற்பிடியளவு; a pinch, as of snuff.

     ‘ஒரு சிடடிகைப பொடி கொடு’ (உ.வ.);.

   க. சிடிகெ;   தெ. சிடிக;   து. சிடிகி;   பட. சிடுகு;குட. செடி

     [சிட்டி → சிட்டிகை]

 சிட்டிகை ciṭṭigai, பெ. (n.)

   சிறிய திரிபோட்டு எரியும் விளக்கு; a lamp of small fire.

     [சிட்டி-சிட்டிகை]

சிட்டிதட்டு-தல்

சிட்டிதட்டு-தல் ciṭṭidaṭṭudal,    5 செ.குவி (v.i.)

   கைப்பெரு விரலையும் நடுவிரலையும் அழுத்தி உராயச் செய்து ஒலியுண்டாக்குதல்; to snap of the fingers.

   து. சிடுகு பாடுனி;   பட. சிடகு ஆகு;     [சிட்டி + தட்டு_,]

சிட்டிதும்மியிலை

 சிட்டிதும்மியிலை ciṭṭidummiyilai, பெ. (n.)

   தும்பியிலை; leaves of river ebony (சா.அக.);.

     [சிட்டி + தும்மியிவை]

சிட்டிப்பாம்பு

 சிட்டிப்பாம்பு ciṭṭippāmbu, பெ. (n.)

   பாம்பு வகையுளொன்று; a species of snake (சா.அக.);.

     [சிட்டி + பாம்பு]

சிட்டிப்பால்

 சிட்டிப்பால் ciṭṭippāl, பெ. (n.)

   ஆடை கட்டிய பால்; cream milk (சா.அக.);.

     [சிட்டி + பால்]

சிட்டிமந்தாரம்

 சிட்டிமந்தாரம் ciṭṭimandāram, பெ. (n.)

   மயிற்கொன்றை (இங்.வை.);; peacock’s crest (சா.அக.);

     [சிட்டி + மத்தாரம்]

சிட்டிமந்தாரை

 சிட்டிமந்தாரை ciṭṭimandārai, பெ. (n.)

சிட்டி மந்தாரம் பார்க்க;see Sitti-mandaram (சா.அக.);.

     [சிட்டி + மத்தாரை]

சிட்டிலிங்கி

 சிட்டிலிங்கி ciṭṭiliṅgi, பெ.(n.)

   கரூர் வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Harur Taluk.

     [சிற்றிலிங்கம் (மரம்); – சிட்டிலிங்கி]

சிட்டிலிங்கு

 சிட்டிலிங்கு ciṭṭiliṅgu, பெ. (n.)

   காட்டு மரவகை (வின்.);; a forest tree.

     [சிட்டு + இலிங்கு]

சிட்டு

சிட்டு1 ciṭṭu, பெ. (n.)

   பெருமை; eminence.

     “சிட்டாய சிட்டற்கே” (திருவாச. 10:27);.

ம. சிட்டு (பெரிய, மேலான);

     [சுள் → (சூர்); → சீர் → சிற → சிறப்பு (மு.தா.217); சுள் → சிள் → சிட்டு]

 சிட்டு2 ciṭṭu, பெ. (n.)

   1. சிறியது (வின்.);; anything little, that which is small.

   2. சிட்டுக்குருவி பார்க்க;see sittu-k-kuruvi.

   3. சிலுப்பாக்குடுமி (வின்.);; hair grown about the ears.

   ம., க. சிட்டு;   து. சிட்டெ;தெ. சிட்டா

     [கள் = சிறுமை. கள்ளாணி = சிறிய ஆணி. சுள் → சுண்டு = சிறியது, சிறிய முகவைக் கருவி (வீசம்படி); சுள் → (சுட்டு); → சிட்டு (மு.தா.140);]

சிட்டுக்குடுமி

 சிட்டுக்குடுமி ciḍḍukkuḍumi, பெ. (n.)

உச்சியிலுள்ள சிறுகுடுமி (வின்);,

 small hairtuft on the crown of the head.

   ம., தெ. சுட்டு;   து. சிட்டு;கொலா. சுட்டி.

     [சிட்டு + குடும]

சிட்டுக்குருவி

சிட்டுக்குருவி ciṭṭukkuruvi, பெ. (n.)

சிறுகுருவி வகை (பதார்த்த.882);:

 a kind of sparrow.

     ‘சிட்டுக் குருவியின் தலையில் பனங்காய் வைத்தது போல’ (பழ.);.

   ம. சிட்டுகுருவி;து. சிட்டெபக்கி

     [சுள் → (கட்டு); → சிற்று → சிட்டு + குருவி]

சிட்டு வகைகள்

   1. சிட்டு

   2. மஞ்சள் சிட்டு

   3. மஞ்சள் தொண்டைச் சிட்டு

   4. பச்சைச் சிட்டு

   5. நீலச் சிட்டு

   6. கருஞ் சிட்டு

   7. கருப்பு வெள்ளைப் புதர்ச்சிட்டு

   8. சின்ன மின்சிட்டு

   9. மின்சிட்டு

   10. தேன் சிட்டு

   11. ஊதா தேன் சிட்டு

   12. தையச் சிட்டு

சிட்டுக்குருவியிளகியம்

 சிட்டுக்குருவியிளகியம் ciṭṭugguruviyiḷagiyam, பெ. (n.)

   உடல் வலிமைக்கும் சிற்றின்ப நுகர்ச்சிக்கும் சிட்டுக்குருவியைப் பதப்படுத்திக் கடைச்சரக்குகளுடன் சேர்த்துச் செய்யும் இளகியம்; an electuary prepared with the flesh of house sparrow as chief ingredient amongst other bazaar drugs it also improves bodily beauty and invigorates the system (சா.அக.);.

     [சிட்டுக்குருவி + இளகியம். உள் → (இள்); → இள இளகு → இனகியம்]

சிட்டுக்குருவிலேகியம்

 சிட்டுக்குருவிலேகியம் ciṭṭukkuruvilēkiyam, பெ. (n.)

சிட்டுக்குருவியிளகியம் பார்க்க see Sittu-k-kuruvi-ilagiyam (சா.அக.);

த.இளகியம் → Skt. lehya

     [சிட்டுக்குருவி + லேகியம்]

சிட்டுணம்

 சிட்டுணம் ciṭṭuṇam, பெ. (n.)

   ஆதொண்டை; climbing caper (சா.அக.);.

சிட்டுலா

சிட்டுலா ciṭṭulā, பெ. (n.)

   காடை; quail (சா.அக);.

     [சிட்டு → சிட்டுவன. சிட்டு = சிறுகுருவி]

சிட்டு2 பார்க்க

சிட்டுலொட்டி

 சிட்டுலொட்டி ciṭṭuloṭṭi, பெ.(n.)

   திருமங்கலம் வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Tirumangalam Taluk.

     [சிற்றிலி+ஓட்டி]

சிட்டை

சிட்டை1 ciṭṭai, பெ. (n.)

   ஆடைக் கரைவகை (இ.வ.);; short striped border of a cloth.

து. சிட்டெபட்டி (கூத்தாடுவோர் தலையில் கட்டும் துணி);

     [சிட்டு → சிட்டை. சிட்டு= சிறிய, குறுகிய]

 சிட்டை2 ciṭṭai, பெ. (n.)

   1. நாள்வழி வரவு செலவுக் கணக்கிற்கான சிற்றேடு;  day book.

   2. வரவு செலவு விளத்தம் காட்டும் தனிக் анал ћg, ili Gurržg, sto; memorandum of account containing details of major items of expenses.

மறுவ, கைசிட்டை.

   ம. சிட்ட;து. சிட்டெ

 சிட்டை3 ciṭṭai, பெ. (n.)

   கேட்போர்க் கினிமையாகச் செய்திகளைத் தொகுத்துப் பாடம் பண்ணிக் கோவையாகக் கூறும் முறை (உ.வ.);; set mathodical style in singing, speaking, etc.

 சிட்டை4 ciṭṭai, பெ. (n.)

சிட்டம்1, பார்க்க;see sittam1.

சிட்டைக்கரி

சிட்டைக்கரி ciṭṭaikkari, பெ. (n.)

   சிறிய கரித்துண்டு; small piece of charcoal.

     “ஊதழலிற் சிட்டைக் கரியை யிட்டு” (பஞ்ச. திருமுக. 1280);

     [சிட்டை + கவி. சிட்டி = சிறுகலம், சிறிய அளவு, சிற்றனவை;

சிட்டி → சிட்டை]

சிட்டைமரம்

 சிட்டைமரம் ciṭṭaimaram, பெ. (n.)

   இருவரால் துக்கியெடுத்துச் செல்லப்பெறும் காவடிமரம் (யாழ்ப்);; yoke for load carried on the shoulders between two persons, dist. fr. ka-maram carried by a single person.

சிட்டையிசை

 சிட்டையிசை siṭṭaiyisai, பெ. (n.)

   நிறவாளத்தி; an elaboration of musical modes.

சிணாட்டிப்பார்- த்தல்

சிணாட்டிப்பார்- த்தல் ciṇāṭṭippārttal,    4 செ.குவி (v.i.)

   சண்டைக்கிழுத்தல் (வின்);; to create mischief;

 to attempt a quarrel.

     [சிணாட்டி + பார்]

சிணாட்டு

சிணாட்டு1 ciṇāṭṭudal,    5 செகுன்றாவி (v.t.)

   நோய் திரும்பவும் வருதல்; to relapse, as a disease.

நீங்கின நோய் இவனைச் சிணாட்டிக் கொண்டிருக்கிறது (இ.வ.);

     [சில் → சிள் + ஆட்டு = சினாட்டு = சிணாட்டு]

 சிணாட்டு2 ciṇāṭṭu, பெ. (n.)

சிணாறு (இ.வ.); பார்க்க;see Sinaru.

சிணாறு

 சிணாறு ciṇāṟu, பெ. (n.)

   அடர்ந்த சிறு கிளை (இ.வ.);; small close-set branch of trees and bushes.

     [சிள் → சிண் + அறு = கிணறு → கிணறு]

சிணாற்றைக்கழி-த்தல்

சிணாற்றைக்கழி-த்தல் sinarrai-k-kali,    4 செ.கு.வி. (v.i.)

   1. மரத்தினின்று சிறு கிளைகளை வெட்டுதல்; to prune, lop off branches.

   2. வழக்குத் தீர்த்தல்; to settle a dispute.

     [சிணாறு + கழி_,]

சிணி

 சிணி ciṇi, பெ. (n.)

   கெட்ட நாற்றம் (வின்.);; unpleasant or of fensive smell.

சிணுக்கன்

சிணுக்கன் ciṇukkaṉ, பெ. (n.)

   பயனற்றவன்; worthless person, as always whining.

     “அம்பலத்தாடிக் கல்லாச் சிணுக்கரை” (திருவிசை. திருமா.4;4,);.

     [சிணுங்கு → சிணுக்கன்]

சிணுக்கம்

சிணுக்கம் ciṇukkam, பெ. (n.)

   1. மூக்கால் அழுகை (வின்.);; whining, whimpering.

   2. சுருக்கம் விழுகை (இ.வ.);; shrinking, as of cloth;becoming wrinkled.

   3. உடன்பாடன் றென்பதையுணர்த்தும் முகக்குறி (உவ.);; facial expression of disapproval or protest.

ம. சிணுக்கம்

     [சிணுங்கு → சிணுக்கம்]

சிணுக்கறுக்கி

சிணுக்கறுக்கி ciṇukkaṟukki, பெ. (n.)

சிடுக்குவாரி (இ.வ.); பார்க்க;see Sidukku-vari.

     [சிணுக்கு3 + அறுக்கி]

சிணுக்காட்டம்

சிணுக்காட்டம் ciṇukkāṭṭam, பெ. (n.)

   மூக்காலழுகை; whining, whimpering.

     “சிந்தை யுமக்கேன் சிணுக்காட்டம்” (பஞ்ச.திருமுக. 493);.

ம. சிணுங்ஙாட்டம் (இன்பக் கேளிக்கை யாட்டம்);

     [சிணுக்கு + ஆட்டம்]

சிணுக்கிருமல்

சிணுக்கிருமல் ciṇukkirumal, பெ. (n.)

   1. அடிக்கடி வரும் இருமல்; a short, frequent and feeble cough.

   2. சிற்றிருமல்; slight cough (சாஅக.);.

     [சிணுக்கு + இருமல்]

சிணுக்கு

சிணுக்கு1 ciṇukkudal,    5 செகுன்றாவி. (v.t.)

   1. சிக்குப்படுத்துதல்; to complicate, entangle.

   2. உடன்பாடன்மையையுணர்த்த முகத்தைக் கோட்டுதல்; to show facial signs of dis approval or protest.

   3. பிள்ளையைத் திருடுதல்; to kidnap.

ம. சிணுக்குக

     [சிக்கு → சினுக்கு_]

 சிணுக்கு2 ciṇukkudal,    5 செகுன்றாவி (v.t.)

   1. சீண்டுதல்; to be mischieveous.

   2. சிறிது சிறிதிகத் தருதல்; to yield in small quantities.

தெ. சிறுகு

 சிணுக்கு3 ciṇukkudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. விட்டுவிட்டு வருதல்; to linger, relapse, as intermittent fever.

   2. துளித்தல் (வின்.);; to ooze, issue in drops;

 to drizzle.

 சிணுக்கு4 ciṇukku, பெ. (n.)

   சீண்டுகை; playful or wanton mischief.

     ‘சிணுக்கெல்லாம் பிணக்குக் கிடம்’ (வின்);.

 சிணுக்கு5 ciṇukku, பெ. (n.)

   சிக்கு (சங்அக.);; tangle, intricacy.

     [சிக்கு → சிணுக்கு]

 சிணுக்கு6 ciṇukku, பெ. (n.)

   1. உழலைமரம் (யாழ்அக);; block of wood to the neck of straying cattle.

   2. விரல் முதலியவற்றின் நொடிப்பு (புதுவை);; fillip.

 சிணுக்கு7 ciṇukku, பெ. (n.)

   அழுகிப் போகை; decaying.

சிணுக்குச்சிணுக்கெனல்

சிணுக்குச்சிணுக்கெனல்1 ciṇukkucciṇukkeṉal, பெ. (n.)

   சிறிதுசிறிதாக வெளிவருதற் குறிப்பு; onom. expr. of issuing in drops.

     [சிணுக்கு + சிணுக்கு + எனல்]

 சிணுக்குச்சிணுக்கெனல்2 ciṇukkucciṇukkeṉal, பெ. (n.)

   1. சிடுசிடுப்புக் குறிப்பு; onom. expr. of scowling.

   2. அடிக்கடி அழுது தொந்தரவு செய்தற் குறிப்பு; worrying with frequent crying.

     [சிணுக்கு + சிணுக்கு + எனல்]

சிணுக்குவலி

சிணுக்குவலி1 ciṇukkuvali, பெ. (n.)

   1. சிடுக்கு வாரி (நெல்லை.);; forked comb or dressing the hair.

     [சிணுக்குவாரி → சிணுக்குவாலி → சிணுக்குவலி (கொச்சை);]

 சிணுக்குவலி2 ciṇukkuvali, பெ. (n.)

   குழந்தை பெறுவதற்கு முன்பு ஏற்படும் சிறு வலி (இ.வ.);; slight pains at the commencement of child-birth.

     [சிணுக்கு + வலி]

சிணுக்குவாங்கி

 சிணுக்குவாங்கி ciṇukkuvāṅgi, பெ. (n.)

சிடுக்குவாரி (இ.வ.); பார்க்க;see sigukkuvari.

     [சிணுக்கு + வங்கி]

சிணுக்குவாதம்

 சிணுக்குவாதம் ciṇukkuvātam, பெ. (n.)

   குளிர்ச்சியால் மூட்டுகளுக்கு அடிக்கடி ஏற்படும் ஊதை (வாத); நோய்; a kind of recurrent rheumatism due to exposure (சாஅக.);.

 Skt. vadam – த. ஊதை.

     [சிணுக்கு + வாதம்]

சிணுக்குவாரி

 சிணுக்குவாரி ciṇukkuvāri, பெ. (n.)

சிடுக்குவாரி (இ.வ.); பார்க்க;see sigukkuvari.

     [சிணுக்கு + வாரி]

சிணுங்கி

சிணுங்கி ciṇuṅgi, பெ. (n.)

   1. அழும் குழந்தை; crying child.

   2. சிணுங்கும் பெண்; she who whines or whimpers.

   3. தொட்டாற்சுருங்கி; a sensitive plant as tottar-sinungi, ninrar sinungi, etc., plants that are sensitive to mere touch or by standing near it (சாஅக.);.

ம. சிணுங்கி

     [சிணுங்கு → சிணுங்கி]

சிணுங்கு_தல்

சிணுங்கு_தல் ciṇuṅgudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. மூக்காலழுதல்; to whine, whimper.

     “ஏங்கியிருந்து சிணுங்கி விளையாடும்” (திவ். பெரியதி.105:1);.

   2. விட்டுவிட்டு மழை தூறுதல் (இ.வ.);; to drizzle, intermittingly.

   3. கொஞ்சுதல் (சங்அக.);

 to caress, fondle.

   ம. சினுக்குக, சிணுங்ஙுக;   க. சினுகு (முணுமுணுத்தல்);;தெ. சனுகு

சிணுசிணு_த்தல்

சிணுசிணு_த்தல் siṇusiṇuttal,    4 செ.குவி (v.i.);சிணுங்கு_பார்க்க;see sinungu-.

     [சிணுங்கு → சிணுசிணு ,]

சிண்

சிண்1 ciṇ, பெ. (n.)

   கையாள் (யாழ்.அக);; personal attendant.

     [சில் → சின் → சிண்]

 சிண்2 ciṇ, பெ. (n.)

   1. சூதாட்டத்திற் கூட்டாளி; mate, partner in playing dice.

   2. கூட்டாளி; substitute in a game.

   3. விளையாட்டிற் பின்னும் ஒருமுறை ஆடுகை; extra turn which a person is entitled to in a game.

சிண்டா

 சிண்டா ciṇṭā, பெ. (n.)

சிண்டு பார்க்க;see sindu.

     [சிண்டு → சிண்டா]

சிண்டி

 சிண்டி ciṇṭi, பெ. (n.)

   செம்முள்ளி; created purple nail-dye (சா.அக.);.

சிண்டு

சிண்டு1 ciṇṭu, பெ. (n.)

   குடுமி (உ.வ.);; hair-tuft.

ம. சிண்டி

     [கண்டு → சுண்டான் = சிறுமொத்தை, சுண்டெலி சுண்டுவிரlல் முதலிய புணர்ப் பெயர்களில், கண்டு என்பது சிறுமையைக் குறிக்கும். சுண்டு → சுண்டை = சிறிய காய்வகை கண்டு – சிண்டு= சிறிய குடுமி)

 சிண்டு2 ciṇṭu, பெ. (n.)

   1. ஒரு சிற்றளவு (வின்.);; a small measure of capacity.

   2. சிறு ஏனவகை; a small narrow – necked vessel.

எண்ணெய்ச் சிண்டு.

ம. சிண்டு

     [சுள் – சுண்டு = சிறியது, சிறுமுகவைக் கருவி (வீசம்படி); சுண்டு → சிண்டு (மு.தா.128);

 சிண்டு3 ciṇṭudal,    5 செ.குவி (v.i.)

   சருவுதல்; to touch with mischievous intention.

     [சீண்டு → சிண்டு-]

சிண்டுமுடி

சிண்டுமுடி1 ciṇḍumuḍidal, செகுன்றாவி (v.t.)

   அவிழ்ந்த கூந்தலை முடிச்சுப்போடுதல்; totic, fasten, to make into a knot, as of hair.

     ‘தலையைச் சிண்டு முடிந்து கொண்டு வேலையைச் செய்’ (உ.வ.);

 சிண்டுமுடி2 ciṇḍumuḍidal,    4 செகுவி. (v.i.)

   சண்டை மூட்டுதல் (உ.வ.);; to incite persons to a quarrel.

     ‘இவன் சிண்டுமுடிதலில் கைதேர்ந்தவன்’ (உ.வ);.

     [சிண்டு + முடி_,]

சிண்டுமுடி-தல்

சிண்டுமுடி-தல் ciṇḍumuḍidal, பெ.(n.)

   பாய் நெசவுசெய்தபின்னர் அதன் ஓரங்களைச்சீவி மடித்துக் கட்டுவது; folding and tying knot of the mat.

   2. வேண்டாத இருவரைப் பற்றி புறங்கூறி சண்டையிட்டுக் கொள்ளும்படி செய்தல்; to set persons by ears.

     [சிண்டு+முடி]

சிண்டூரி

 சிண்டூரி ciṇṭūri, பெ. (n.)

   சிறுகீரை; pig greens (சா.அக.);.

சிதகம்

 சிதகம் cidagam, பெ. (n.)

   தூக்கணாங்குருவி (பிங்.);;  weaver-bird.

சிதகலை

சிதகலை cidagalai, பெ. (n.)

   1. வெட்டை; venereal heat.

   2. பெண்களுக்குண்டாகும் வெட்டை நோய்; whites peculiar to woman.

சிதகு

சிதகு1 cidagudal,    5 செ.குன்றாவி, (v.t.)

   1. உருவுதல் (பிங்.);; to strip off, rub or draw gently.

   2. எழுதியதையழித்தல் (வின்.);; to erase, strike off.

     [சிதை → சிதகு]

 சிதகு2 cidagu, பெ. (n.)

   குற்றம்; fault.

     “தன்னடியார் திறத்தகத்துத் தாமரையாளாகிலுஞ் சிதகுரைக்குமேல்” (திவ். பெரியாழ். 49:2);

     [சிதை → சிதகு]

சிதடன்

சிதடன் cidaḍaṉ, பெ. (n.)

   1. குருடன்; blind man.

     “துஞ்சுபுலி யிடறிய சிதடன் போல” (புறநா.73:7);

   2. அறிவிலி; ignorant person.

     “செம்மை நலமறியாத சிதடரொடும்” (திருவாச. 51:9);.

   3. பித்தன்; insane person.

     “சிக்கர் சிதடர்” (சிறுபஞ்.76);

     [சிதடு → சிதடன்]

சிதடி

சிதடி1 cidaḍi, பெ. (n.)

சிதடு, 2 பார்க்க;see sidagu2,

     “சிதடியிற் றுவ்வாது” (முதுமொழி.35);.

     [சிதடு → சிதடி]

 சிதடி2 cidaḍi, பெ. (n.)

சிள்வண்டு பார்க்க;see silvandu.

     “சிதடி கரையப் பெருவறங் கூர்ந்து” (பதிற்றுப்.23:2);

சிதடு

சிதடு cidaḍu, பெ. (n.)

   1. குருடு; blindness.

     “சிறப்பில் சிதடும்” (புறநா.28);

   2. பேதைமை (அக.நி.);; ignorance, folly.

   3. உள்ளீடின்மை; emptiness, hollowness.

     “சிதட்டுக்கா யெண்ணின்” (குறுந்.261);.

     [சிதர்2 → சிதடு]

சிதண்டி

 சிதண்டி cidaṇṭi, பெ.(n.)

   மதுராந்தகம் வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Madurantakam Taluk.

     [சிதள்+அண்டி]

சிதனம்

 சிதனம் cidaṉam, பெ. (n.)

   கோடகசாலை (மலை.);; a very small plant.

சிதன்

சிதன்1 cidaṉ, பெ. (n.)

   வெண்மையான நிறமுடைய வெள்ளி (சுக்கிரன்); (பிங்.);; the planet Sukkiran, as white.

     [சிதம் → சிதன்]

 சிதன்2 cidaṉ, பெ. (n.)

   அச்சமுள்ளோன் (பிங்.);; timid man.

சிதப்பூரம்

 சிதப்பூரம் cidappūram, பெ. (n.)

   பொன்னாங் காணி (மலை.);; species of alternanthera.

சிதமருசம்

 சிதமருசம் sidamarusam, பெ. (n.)

   வெண்மிளகு (மலை.);; white pepper.

     [சிதம் + மருசம். மரிசம் → மருசம் – மிளகு]

சிதமை

சிதமை cidamai, பெ. (n.)

   வெள்ளாடு (தைலவ.தைல.4);; goat.

     [சிதம் → சிதமை]

சிதம்

சிதம்1 cidam, பெ. (n.)

   1. வெண்மை; whiteness.

     “சிதம்படு நற்றுகில்” (ஞானவா. வைரா.53);.

   2. வெள்ளி (சங்.அக.);; silver.

   3. வெண்சிவதை (மலை.);; white bind weed.

   4. விண்மீன் (பிங்.);; Star.

     [சுதை = வெண்மை. சுதம் → சிதம்]

 சிதம்2 cidam, பெ. (n.)

   வெல்லப்பட்டது (பிங்.);; that which is subdued or conquered.

     [சித்தி → சித்தம் → சிதம்]

 சிதம்3 cidam, பெ. (n.)

   மனைவாயில் (பிங்.);; door, entrance to a house.

 சிதம்4 cidam, பெ. (n.)

   அறிவு (பிங்.);; wisdom, intelligence, knowledge.

     [சித்தம் = கருத்து, மணம், அறிவு. சித்தம் → சிதம் = மணம், அறிவு]

 சிதம்5 cidam, பெ. (n.)

   1. புளியாரை (மலை.);; yellow wood sorrel.

   2. மால்கரந்தை (மலை.);; Indian globe-thistle.

   3. சாதிக்காய் (L);; true nutmeg.

சிதம்பரச்செய்யுட்கோவை

 சிதம்பரச்செய்யுட்கோவை cidambaracceyyuṭāvai, பெ. (n.)

   குமரகுருபர முனிவரால் இயற்றப்பட்டதும் யாப்பிலக்கணத்திற் கூறப்படும் பாவும் பாவினமுமாகிய பல்வகை யாப்புகளுக்கும் எடுத்துக்காட்டுச் செய்யுள்களை யுடையதுமான நூல்; a work by Kumarakurupara-munivar illustrating the various metres of Tamil prosody.

     [சிதம்பரம் + செய்யுள் + கோவை]

சிதம்பரன்

 சிதம்பரன் cidambaraṉ, பெ. (n.)

   சிவன்; lord sivan.

ம. சிதம்பரன்

     [சிதம்பரம் → சிதம்பரன்]

சிதம்பரப்பதம்

சிதம்பரப்பதம் cidambarappadam, பெ. (n.)

   34 விரலம் அளவுள்ள கோல் (சர்வா.சிற்.21);; a measuring rod of 34 inches in length.

     [சிதம்பரம் + பாதம் → பதம்]

சிதம்பரப்பாட்டியல்

சிதம்பரப்பாட்டியல் cidambarappāṭṭiyal, பெ. (n.)

   செய்யுளமைதிகளைக் கூறுவதும் 16ஆம் நூற்றாண்டினரான பரஞ்சோதியார் இயற்றியதுமான ஒர் இலக்கண நூல்; a treatise on prosody by Paranjodiyar 16th C.

     [சிதம்பரம் + பாட்டியல்]

சிதம்பரம்

சிதம்பரம்1 cidambaram, பெ. (n.)

   கடலூர் மாவட்டத்தில் உள்ளதும் பாடல் பெற்ற சிவன் கோயில் உள்ளதுமான ஊர்; a celebrated saiva shrine in Cuddalore district.

ம. சிதம்பரம்

     [சிற்றம்பவம் → சித்தம்பவம் → சிதம்பவம் → சிதம்பரம்]

தில்லையிற் சிற்றம்பலம் பேரம்பலம் என ஈரம்பலங்களுண்டு. அவற்றுள் சிற்றம்பலமே இறைவன் திருக்கோயில்

     “இறைவன் புனற்றில்லைச் சிற்றம்பலத்தும்” (திருக்கோ); வடவர் திரிவு வடிவை இயல்பு வடிவாகக் கொண்டு அறிவுவெளி (ஞானாகாசம்); என்று பொருள் புணர்க்க முயல்வர். அம்பலம் (மன்றம்); வேறு அம்பரம் (வானம்); வேறு. மேலும் சித்’, ‘அம்ர’ என்னும் இரு வடசொற்களும் தென்சொற்றிரிபே சித்து → சித்;

அம்பரம் → அம்ர (வ.வ.149,150);.

த. சிதம்பரம் → Skt. Cidambara

 சிதம்பரம்2 cidambaram, பெ. (n.)

   1. இடகலை நாடிக்கும் பிங்கலை நாடிக்கும் நடுவில் அமைந்துள்ள சுழிமுனை நாடி; human microcosum is the region of šulimunai, between idagalai, pingalai nadis playing a central part.

     “சேர்த்தே பிடித்துச் சிதம்பரம் பூமடி” (சட்டமுனி. 800);.

 சிதம்பரம்3 cidambaram, பெ. (n.)

   தில்லைமரம்; tiger’s milk spurge.

     [சிற்றம்பவம் → சிதம்பரம்]

தில்லை மரம் மிகுதியாக இருந்த ஊரான தில்லை சிவன் சிற்றம்பலம் என்னும் அடிப்படையில் சிதம்பரம் எனப்பட்டது. பின்னர்ச், சிதம்பரம் தில்லை மரத்தைக் குறித்தது தில்லையில் தில்லை மரங்கள் நெடுங்காலம் இருந்தமையை வலியுறுத்தி நிற்றல் காண்க.

சிதம்பரவெலுமிச்சை ¬

 சிதம்பரவெலுமிச்சை ¬ cidambaravelumiccai, பெ. (n.)

   பேரெலுமிச்சை (யாழ்ப்);; lemon.

     [சிதம்பரம் + எலுமிச்சை]

சிதம்பர்

சிதம்பர் cidambar, பெ. (n.)

   இழிந்தோர்; base persons.

     “செத்தற் கொத்தைச் சிதம்பரை” (திருவிசை. திருமாளிகைத். 4:4);.

     [சிதம்பு → சிதம்பர்]

சிதம்பல்

 சிதம்பல் cidambal, பெ. (n.)

   பதனழிகை; being softened by soaking or spoiled by too much moisture.

     [சிதம்பு → சிதம்பல்]

சிதம்பு

சிதம்பு1 cidambudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. பதனழிதல்; to be spoilt by too much moisture;

 to become rotten.

   2. நீரில் நெடுநேரம் கிடத்தலால் கைகால்கள் வெளுத்தல்; to be whitened, as the hands or feet by being dipped in water for a long time.

     ‘கை சிதம்பிப் போயிற்று’ (உ.வ.);

   3. நீர்ச்சாவியாதல்; to be damaged or injured by excess of water, as crops, vegetation.

     [சிதை → சிதைவு → சிதம்]

 சிதம்பு2 cidambu, பெ. (n.)

   1. தன்மையினழிவு (பிங்.);; debasement in quality, spoilt condition.

   2. இழிவு; baseness, meaness.

     “சிதம்ப நாயேன்”(தேவா.996,1);.

   3. பதனழிவு (யாழ்ப்.);; excessive maceration.

     [சிதை → சிதைவு → சிதம்]

 சிதம்பு cidambu, பெ. (n.)

   இழிவான செயல்; baseness.

     “சிதம்புகள் செய்தாருண்டால்” (IPS.176);

     [சிதை → சிதைவு→ சிதம்பு]

சிதரம்

சிதரம் cidaram, பெ. (n.)

   1. மழைத்துளி (பிங்.);; rain drop.

   2. உறி (யாழ்.அக.);; rope – loop for suspending pots.

     [சிதர் → சிதரம்]

சிதரல்

சிதரல் cidaral, பெ. (n.)

பாண்டியர் காலத்தில் சமணரின் பல்கலைக் கழகமாகவும், சமணப்பள்ளியாகவும் இருந்த குன்று

 a hillock cave centre of Jain monks.

     [சிதர்-சிதரல்]

 சிதரல் cidaral, பெ. (n.)

   சிதறுகை; splashing, bespattering.

     “சிதரற் பெரும்பெயல்” (மதுரைக் 244);.

     [சிதர் → சிதரல்]

சிதர்

சிதர்1 cidardal,    2 செ.குன்றாவி (v.t.)

   1. சிதறுதல்; to scatter, strew.

   2. பரக்கச் சொல்லுதல்; to dilate upon, narrate, expound in detail.

     “சிந்தாமணியின் சரிதஞ் சிதர்ந்தேன்” (சீவக.3144);.

   3. காலாற்கிளைத்தல்; to scratch, as a fowl.

     “சிதர்கால் வாரணம்” (நற்.389);.

     [சிதை → சிதர்]

 சிதர்2 cidardal,    2 செ.குவி (v.i.)

   1. பரத்தல்; to spread over, to be diffused.

     “ஓடரி சிதரிய வொள்ளரி மழைக்கண்” (பெருங்.இலாவாண.16:16);.

   2. சிதறி வீழ்தல்; to be scattered, strewn

     “ஆரஞ் சிதர்ந்து போகச் சிந்துவார்” (சீவக. 1106);.

   3. நைதல்; to be worn out, as cloth.

     “சிதரின சீரை” (பெரும்பாண். 468, உரை);

   ம. சிதறுக;   க. கெதர், சதறு, செகறு;   தெ. செதறு;   து. சதருனி;கோத கித்

     [சிதை → சிதர்]

 சிதர்3 cidarddal,    4 செ.குன்றாவி (v.t.)

   1. பிரித்தல்; to separate, split.

     “சொற்சிதர் மருங்கின்” (தொல். எழுத்து. 132);,

   2. வெட்டுதல்; to cut, hack.

     “வாளினாற் சிதர்த்தல் வேண்டும்” (விநாயகபு. 1:18);

   3. சிந்துதல் (சூடா);; to shed, scatter.

     [சிதை → சிதர்]

 சிதர்4 cidar, பெ. (n.)

   1. மழைத்துளி; rain drop.

     “தண்சிதர் கலாவப் பெய்யினும்” (புறநா.105:3);.

   2. பூந்தாது (பிங்.);; pollen of flowers.

   3. பொடி (பிங்.);; powder.

   4. துணி (பிங்.);; cloth

   5. கந்தை; rag.

     “அழுக்கு மூழ்கிய சிதரசைத்து” (திருவிளை. விறகு.12);.

   6. உறி (சூடா.);; rope-loop for suspending pots.

   7. வண்டு; bee, beetle.

     “கொம்பின்மேற் சிதரின மிறைகொள” (கலித்.34);.

   8. மெத்தனவு; gentleness, softness.

     “சிதர்வர லசைவளி (முல்லைப்.52);.

   9. சிந்துகை; spilling, shedding.

     “சிதர்நனை முருக்கின்” (சிறுபாண்.254);.

   10. சிச்சிலிப்பறவை வகை (சிறுபாண். 254, உரை.);; a kind of kingfisher.

சிதர்வு

 சிதர்வு cidarvu, பெ. (n.)

   வீணாகச் செலவழிக்கை (Pond.);; squandering.

     [சிதர் → சிதர்வு]

சிதர்வை

சிதர்வை cidarvai, பெ. (n.)

   நைந்து அற்றுப்போன சீரை; cloth worn out or reduced to rag.

     “பாசியன்ன சிதர்வை நீக்கி” (பெரும்பாண்.468);.

     [சிதர் → சிதர்வை]

சிதறடி_த்தல்

சிதறடி_த்தல் cidaṟaḍiddal,    4 செ.குன்றாவி. (v.t.)

   1. கவங்கச் செய்தல்; to scatter, disperse.

   2. முறியடித்தல்; to put to rout.

     [சிதறு + அடி_,]

சிதறவடி-த்தல்

சிதறவடி-த்தல் cidaṟavaḍiddal,    4 செகுன்றாவி. (v.t.)

சிதறடி_ பார்க்க;see sidaragi_.

     [சிதறடி → சிதறவடி_,]

சிதறால்

 சிதறால் cidaṟāl, பெ.(n.)

   விளவங்கோடு வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Vilavancode Taluk.

     [சிதறல்-சிதறால்]

சிதறி

சிதறி cidaṟi, பெ. (n.)

   1. மழை (திவா.);; rain.

   2. மூங்கில் (பிங்.);; bamboo.

   3. பாதிரி (மலை.);; trumpet flower.

ம. சிதரி

     [சிதறு → சிதறி]

சிதறிப்போ_தல்

சிதறிப்போ_தல் cidaṟippōdal,    8 செகுன்றாவி. (v.t.)

   1. கூட்டம் கலைந்தோ தவசம் போன்றவை தனித்தனியாகப் பிரிந்தோ பொருள் உடைந்தோ போதல்; to disperse as of a crowd, scatter as of grams etc., break or disintegrate as of solid matters etc.,

வெடியொலியைக் கேட்ட காக்கைக் கூட்டம் சிதறிப்போனது. சாக்கு பிய்ந்ததால் நெல் மணிகள் சிதறிப் போயின. சிதறிப் போன கண்ணாடித் துண்டுகளைப் பொறுக்கியெடு,

   2. நோய் உடம்பைவிட்டகலல்; to leave or quit from the body, as disease.

     [சிதறி + போ. ‘போ’ து.வி.]

சிதறியோடு

சிதறியோடு2 cidaṟiyōṭudal,    5 செகுன்றாவி. (v.t)

   மூன்று நாளுள் இறப்பு நிகழுமென்பதன் அறிகுறியாகப் பித்தநாடி நிலைகுலைதல்; disturb to the equilibrium in the pulsation indicating bile, a symptom of death within three days.

     [சிதறி + ஒடு_,]

சிதறியோடு-தல்

சிதறியோடு-தல் cidaṟiyōṭudal,    5 செகுன்றாவி. (v.t.)

சிதறிப்போ-தல் பார்க்க;see sidari-p-pd

சிதறு

சிதறு1 cidaṟudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. இறைத்தல்; to fall in different places, disperse, scatter, as grain.

     “செந்நூல் யாத்து வெண்பொரி சிதறி” (திருமுருகு.231);

   2. சிறிய பொருள்களாய்த் தெரித்தல்; to be strewn in small particles, to spill, pour, shed.

தரையில் சிந்திய இதளியம் (பாதரசம்); சிதறியோடியது.

   3. சிறுதுண்டுகளாக உடைந்து போதல்; to be broken into pieces, to explode.

   4. மிகுதியாகக் கொடுத்தல்; to give liberally, bountifully.

     “மாசித றிருக்கை” (பதிற்றுப். 76);.

   ம. சிதறுக;   க. கெதர், சதறு, செதறு;   தெ. செதறு;   து. சதறுணி;   கோத கித் (தெளித்தல்);;துட கித்

     [சிதை → சிதறு]

 சிதறு2 cidaṟudal,    5 செ.குவி (v.i.)

   1. கலைதல்; to be shed, strewn, scattered, as a flock;

 to disperse, as a company.

   2. அழிதல்; to be squandered, wasted.

   3. பயன்படாது போதல்; to prove fruitless, become unprofitable.

     “பதறாத காரியஞ் சிதறாது” (பழ.);

   4. களைதல்; removing.

க. கெதறு

     [சிதை → சிதறு_,]

சிதறுதேங்காய்

 சிதறுதேங்காய் cidaṟudēṅgāy, பெ. (n.)

   குறைத் தேங்காய் (வேண்டுதலுக்காகத் துண்டாகத் தெறிக்கும்படி உடைக்கும் தேங்காய்; coconut dashed on the ground and broken, on special occasions in fulfilment of a vow.

மறுவ. விடலைத்தேங்காய்

     [சிதறு + தேங்காய். தெங்கங்காம் → தேங்காய்]

சிதறுமணி

 சிதறுமணி cidaṟumaṇi, பெ. (n.)

   நெற்களத்திற் கதிரடிக்கும்போது தெறித்து விழுந்த தவசம் (இ.வ.);; grains that fall scattered on the threshing – floor, while threshing, dist. fr. சிந்துமணி.

     [சிதறு + மணி. முள் → (மள்); → மணி = சிறியது, சிறியதான தவசம்]

சிதறை

 சிதறை cidaṟai, பெ. (n.)

   கறையான் நோய்; a skin disease due to the bite of white – ants (சா.அக.);.

     [சிதலை – சிதறை]

சிதலம்

சிதலம் cidalam, பெ. (n.)

   1. தளர்வு; loosening.

   2. கீல் (மூட்டு); தளரல்; loosening of joints.

   3. சிதைவு,

 spoil.

     “சிதரற் பெரும் பெயல்” (மதுரைக் 244);.

     [சிதிவம் → சிதவம்]

சிதலரி-த்தல்

சிதலரி-த்தல் cidalariddal,    4 செகுன்றாவி (v.t.)

   கறையான் சிறிது சிறிதாகக் கடித்து அல்லது குடைந்து குறைத்தல்; to be gnawed by white ants.

அரிய நூல்களைச் சிதலரித்துவிட்டது.

ம. சிதலிக்குக, சிதலரிக்குக

     [சிதல் + அரி_,]

சிதலை

சிதலை cidalai, பெ. (n.)

   1. கறையான்; termite.

     “நுண்பல சிதலை” (புறநா.51:9);.

   2. துணி (பிங்.);; small piece of cloth, rag.

   3. நோய்; disease.

     “சிதலைச்செய் காயம் பெறேன்” (திருவாச.6:41);.

     [சிதர் → சிதல் → சிதலை]

சிதல்

சிதல் cidal, பெ. (n.)

   1. வெண்ணிறமானதும் அரித்துணும் இயல்பினதும் வெப்ப நாட்டில் வாழ்வதும் எறும்பினத்தைச் சார்ந்ததுமான சிற்றுயிர்; termite.

     “சிதல் மண்டிற் றாயினும்” (நாவடி, 147);.

   2. சிறகு முளைத்த கறையான் (பிங்.);; flying white ant.

மறுவ, கறையான், ஈசல்

   ம. சிதல்;   க. கெதல், கெத்தலு, கெத்தலி;   தெ. செதலு, செத;   து. உதலு, உதால்;   குட கெதெ;   துட. செகல்;   கொலா. செத, செதல் நா. கெதல்;கோத கெசல்

     [சிதர் → சிதல்]

சிதல்தின்னி

 சிதல்தின்னி cidaldiṉṉi, பெ. (n.)

   கறையானை உண்ணும் பறவை; a kind of bird that eats white ant.

ம. சிதல்தின்னி

     [சிதல் + தின்னி]

சிதல்தின்னு-தல்

சிதல்தின்னு-தல் cidaldiṉṉudal,    14 செகுன்றாவி (v.t.)

சிதலரி-த்தல் பார்க்க;see sidalari_.

ம. சிதல் தின்னுக

     [சிதல் + தின்ன_,]

சிதல்புற்று

 சிதல்புற்று cidalpuṟṟu, பெ. (n.)

   கறையான் ஈர மண்ணைக் கொண்டு உண்டாக்கும் கூடு; termitarium, termitary, ant-hill.

மறுவ, கறையான் புற்று

ம. சிதல் புற்று

     [சிதல் + புற்று]

சிதல்மண்

 சிதல்மண் cidalmaṇ, பெ. (n.)

   கறையான் கூட்டும் மண், புற்று மண்; termite soil.

ம. சிதல் மண்ணு

     [சிதல் + மண்]

சிதள்

சிதள் cidaḷ, பெ. (n.)

   1. மீன்செதிள் (யாழ்.அக);; fish-scales.

   2. புண்ணின் அசடு (யாழ்ப்.);; scab of a sore.

   3. எலும்பு முதலியவற்றின் துண்டு (வின்.);; small bit of bone, chip, splinter.

     [செதிள் → சிதன்]

சிதவலிப்பு

சிதவலிப்பு cidavalippu, பெ. (n.)

   மனவுறுதி; firmness of mind.

     “சிதவலிப் பீவார்” (சிறுபஞ.64);.

     [சித்தம் = கருத்து, மனம், அறிவு. சித்தம் → சிதம் = மனம் சிதம் + வலிப்பு. வலி → வலிப்பு = உறுதி]

சிதவல்

சிதவல்1 cidaval, பெ. (n.)

   1. சீலைத் துணி; strip of cloth.

     “தண்டுடைக் கையர் வெண்டலைச் சிதவலர்” (குறுந்.146);.

   2. கந்தைத்துணி; rag, torn piece of cloth.

     “சிதவல் சுற்றி” (பதினொ.பொன்வண்.12);.

   3. கிழிந்த துண்டு; torn piece.

     “சிதவற் றுணியொடு சேணோங்கு நெடுஞ்சினை” (மணிமே. 3:106);.

   4. வெட்டுகை cutting off, cropping.

     “சிதவல் கொண்டிடு செம்மயிர்க் கொய்யுளை” (கந்தபு. நகரழி.64);

   5. தேரின்கொடி (வின்.);; flag of a car orchariot.

   6. புரையோடிய புண். (யாழ்ப்.);; running sore.

     [சிதை → சிதைவன் → சிதவள். ‘அல்’ தொ. பெ. ஈறு]

 சிதவல்2 cidaval, பெ. (n.)

   மண்சட்டி முதலியவற்றின் உடைந்த துண்டு; broken piece, as of a pot.

     “சிதவலோடொன் றுதவுழி” (பதினொராந். திருவிடைமும். 7);.

     [சிதை → சிதைவன் → சிதவல். ‘அல்’

தொ.பெ. ஈறு]

சிதாரம்

 சிதாரம் citāram, பெ. (n.)

   தேர்க்கொடி. (யாழ்.அக.);; flag of a car or chariot.

     [சிதார் → சிதாரம்]

சிதாரி

சிதாரி citāri, பெ. (n.)

   புகை போடும் பண்டம் (I.M.P. Tj. 55);; incense.

சிதார்

சிதார் citār, பெ. (n.)

   1. சீலை; cloth, rag.

     “பாறிய சிதாரேன்” (புறநா.150);.

   2. மரவுரி (வின்.);; thin bark of certain trees, used as clothing.

     [சிதர் → சிதார்]

சிதிலம்

 சிதிலம் cidilam, பெ. (n.)

   சிதைவு (வின்.);; crumbling, decaying.

     [சிதைவு → (சிதவு); → சிதவம் → சிதிவம்]

சிதுமலர்

 சிதுமலர் cidumalar, பெ. (n.)

   தண்ணீர் விட்டான் என்றழைக்கப்பெறும் கொடி வகை (மலை.);; climbing asparagus.

சிதுரம்

 சிதுரம் ciduram, பெ. (n.)

   நேர்வாளம் (மலை.);; croton.

சிதேகி

 சிதேகி citēki, பெ. (n.)

   கடுக்காய் (யாழ்.அக);; chebulic myrobalan.

சிதேக்கதிரம்

 சிதேக்கதிரம் cidēkkadiram, பெ. (n.)

   வெள்ளைக்கருங்காலி (மலை.);; egg-fruited ebony.

சிதை

சிதை1 cidaidal,    2 செ.குவி (v.i.)

   1. தன்மை கெடுதல்; to be injured, spoiled;

 to deteriorate, decay.

     “கூம்புவிடு பன்மலர் சிதைய” (அகநா.36);.

   2. சிதறுதல்; to be scattered, dispersed.

     “ஆன்பொருநை வெண்மணல் சிதைய” (புறநா. 36.5);.

   3. அறுபடுதல்; to be sundered, broken, cut to pieces.

     “கவசம் பூம்பொறி சிதைய” (புறநா.13:2);.

   4. சினத்தல்; to be angry.

     “நீ யுண்டக்காற் சிதையாரோ வுன்னோடு” (திவ்.நாய்ச்.7:9);.

   5. சொற்சிதைந்து வழங்குதல்; to become corrupt, degenerate by lapse of time, as words.

     “சிதைந்தன வரினும்” (தொல். சொல். 402);.

   6. பொய்யாதல்; to prove untrue.

     “அவனுரையுஞ் சிதைந்ததால்” (கம்பரா. ஊர்தேடு. 232);.

   7. வரம்பழிதல்; to exceed limit or propriety.

     “பேதை யுரைப்பிற் சிதைந்துரைக்கும்” (நாலடி.71);.

   8. குலைதல் (வின்.);; to disperse, scatter, as an army.

   9. இசை முதலியன கெடுதல் (வின்.);; to become out of tune, as music;

 to go wrong, as rhythm.

   ம. சிதயுக, சிதெயுக;   க. சிதகு சிதுகு;தெ.

சிதுகு

 சிதை2 cidaiddal,    4 செ.குன்றாவி. (v.t.)

   1. கெடுதல்; to injure, waste.

     “பூங்கண் மகளிர் புனைநலஞ் சிதைக்கும்” (கலித். 75:31);

   2. குலைத்தல்; to disperse. scatter.

     “சிறந்த நண்பரைக் கொன்றுதன் சேனையைச் சிதைக்க” (கம்பரா. பிரமாத்திர. 187);.

   3. அழித்தல்; to destroy, ruin, demolish, kill.

     “தீவளி சென்று சிதைத்தாங்கு” (நாலடி,179);.

   4. சிரைத்தல் (யாழ்ப்.);; to shave, shear.

   5. சுளைதல் (பிங்.);; to pluck out, uproot.

   6. தேய்த்தல் (பிங்.);; to rub.

   7. ஒலித்தல் (திவா.);; to sound.

   8. நசுங்குதல்; crushing as plants.

ம. சிதய்க்குக.

 சிதை3 cidai, பெ. (n.)

   1. சிதைவு1, பார்க்க;see sidaivu, 1.

     “கொழுமணிச் சிகா கோடி சிதைபட” (திருவிளை, மாயப்.20);.

   2. கப்பற்பாய்; sail.

     “தெய்வநீறு மைந்தெழுத்துமே சிதைக்கல னாக” (திருவிளை. திருநகர. 88);.

   3. இழிசொற்கள்; Vulgar words.

     “சிதையுரையான்” (ஏலா.34);.

 சிதை4 cidai, பெ. (n.)

   ஈமவிறகு (யாழ்.அக);; funeral pile, pyre.

 சிதை5 cidai, பெ. (n.)

   கீழ்மக்கள் (அக.நி);; low persons.

     [சீத்தை → சிதை]

சிதைகுற்று

சிதைகுற்று cidaiguṟṟu, பெ. (n.)

   1. செக்கு; oil press.

   2. ஆலை; sugar-cane press.

   3. சக்கரம்; wheel.

     [சிதை1 + சுற்று]

சிதைக்கரு

 சிதைக்கரு cidaikkaru, பெ. (n.)

   அழிகரு; foetus brought forth in an immature state.

     [சிதை + கரு]

சிதைந்தவேடு

 சிதைந்தவேடு cidaindavēṭu, பெ. (n.)

   செல்லரித்த ஒலையேடு (யாழ்ப்.);; ant-eatanola book.

     [சிதை → சிதைந்த + ஏடு]

சிதையர்

சிதையர் cidaiyar, பெ. (n.)

   கீழ்மக்கள் (அக.நி.);; low, mean people.

     [சிதை5 → சிதையர்]

சிதைவு

சிதைவு cidaivu, பெ. (n.)

   1. கேடு,

 injury, degeneracy, ruin, defeat.

     “செப்ப முடையவனாக்கஞ் சிதைவின்றி” (குறள், 112);.

   2. குற்றம்; fault, defect.

     “சிதைவெனப் படுபவை வசையற நாடின்” (தொல். பொருள். 664);

     [சிதை → சிதைவு]

சித்தகத்தி

சித்தகத்தி cittagatti, பெ. (n.)

   1. சிற்றகத்தி பார்க்க;see Sirragatti.

   2. வெண்செம்பை; white sesbane (சாஅக.);.

     [சிற்றகத்தி → சித்தகத்தி]

சித்தகம்

 சித்தகம் cittagam, பெ. (n.)

   மஞ்சள் மெழுகு; yellow wax.

சித்தகற்பம்

 சித்தகற்பம் cittagaṟpam, பெ. (n.)

சித்தர்கள்

   உண்ணும் உடலுக்கு வலிமை தரும் மருந்து (காயகற்பம்);; rejuvenating drug or medicine taken by Sittar (சாஅக.);.

     [சித்த + கற்பம்]

சித்தகல்பம்

 சித்தகல்பம் cittagalpam, பெ. (n.)

சித்தகற்பம் பார்க்க;see Sitta-karbam.

     [சித்தகற்பம் → சித்தகல்பம்]

சித்தகாயகற்பம்

 சித்தகாயகற்பம் cittagāyagaṟpam, பெ. (n.)

சித்தகற்பம் பார்க்க;see Sitta-karbam (சாஅக);.

     [சித்த + காயகற்பம்]

சித்தக்கல்

சித்தக்கல் cittakkal, பெ. (n.)

   1. குறுஞ்சிலைக் கல் (வின்);; a red stone.

   2. நாகக் கல்வகையுள் ஒன்று; a kind of zinc stone.

   3. ஈரற்கல்; gall Stone (சாஅக.);.

     [(செந்தூள் → செந்தூளம் → செந்தூரம் → சிந்தூரம் = செந்நீறு, செம்பொடி, சிவப்பு. சிந்தூரம் → சிந்தூரம் = சிவப்பு. சிந்து → சித்து → சித்த = சிவப்பு, சித்த + கல்]

சித்தநாதி

 சித்தநாதி cittanāti, பெ. (n.)

   முருங்கை; drumstick tree (சாஅக.);.

சித்தநூற்றெளிவு

 சித்தநூற்றெளிவு cittanūṟṟeḷivu, பெ. (n.)

   சித்த மருத்துவ நூலில் சொல்லியவாறு, ஊடுருவத் தெளிந்து குறிக்கப்பட்ட வழலை அல்லது முப்பு; the mystic three salts expounded with great care and caution as mentioned in Sittar’s science (சாஅக.);.

     [சித்தநூல் + தெளிவு]

சித்தநெறி

சித்தநெறி cittaneṟi, பெ. (n.)

   சிவவழி பாடியற்றும் சித்தர்கள் மேற்கொண்டதும், தென்பாண்டி நாட்டிலுண்டாகியதுமான சிவநெறி; the Sittar’s school of thought in respect of the affairs relating to worship of God Sivan. It started from southern part of Pandiya-nadu.

   2. அறிவுக் கொள்கை வழி; way of Sittar’s concept.

     [சித்தர் + நெறி]

சித்தன்

சித்தன்1 cittaṉ, பெ. (n.)

   1. நுண்ணறிவு பெற்றவன்,

 mystics.

   2. அருள் பெற்றோன்; one endowed with supernatural powers and capable of performing miracle.

   3. முருகன் (திருமுரு. 176, உரை);; Murugan.

   4. வைரவன் (பிங்.);; Bhairava.

   5. அருகன் (பிங்.);;  Arhat.

   6. சிவன் (சங்அக);; Sivan,

   7. பிள்ளையார்; Lord Ganesh.

     [சித்து → சித்தன்]

வடவர் சித்தன் என்னும் சொல்லை. ஸாத் (dh); என்பதன் திரிபான ஸித் (dh); என்பதனொடு தொடர்புபடுத்தி ஸித்த (Siddha); என்றும், சித்தியை எபித்தி (Siddhi); என்றும் காட்டுவர்.

எலித் = முடி கைகூடு ஸித்தி = முடிவு, முடிபு. கைகூடல் எபித்த = அரும்பேறு பெற்றவன்.

சித்தன் ஆற்றலைத் தமிழிற் சித்து என்பதே மரபு. சித்து விளையாடல் என்பது உலக வழக்கு கலம்பகவுறுப்பும் சித்து என்றே பெயர் பெற்றிருத்தல் காண்க. (வவ. 148);,

 சித்தன்2 cittaṉ, பெ. (n.)

   வியாழன் (பிங்.);;  Jupiter.

     [சித்து → சித்தன்]

 சித்தன்3 cittaṉ, பெ. (n.)

   நேர்மையுள்ளவன்(வின்.);; upright man.

     [சித்து → சித்தன்]

 சித்தன்5 cittaṉ, பெ. (n.)

   கரடி; bear.

சித்தன்’

 அஅன்ன ஆவன்னா aaṉṉaāvaṉṉā, பெ. (n.)

   அரிவரி யென்னும் தமிழ் வண்ணமாலை (குறுங்கணக்கும் நெடுங்கணக்கும்);;  Tamil Alphabet.

   எழுத்துகளைக் கல்லா மக்கள், சிறப்பாகச் சிறுவர் சிறுமியர், எளிதாக ஒலித்துக் கற்கும் பொருட்டு, பண்டைத் தொடக்கப்பள்ளி யாசிரியர் உயிரும் உயிர்மெய்யுமாகிய இருவகைக் குறிலுக்கும்’அன்ன’ச் சாரியையும், இருவகை நெடிலுக்கும் அன்னா’ச் சாரியையும் ஏற்படுத்தினர்;     ‘அஆ’ என்னும் ஈரெழுத்தும் தமிழ் வண்ணமாலையின் முதலெழுத்துகளாதலின், அவை முதற்குறிப்பாகி, அம் முதற்குறிப்பே’அஅன்ன ஆவன்னா’ என்று வண்ணமாலைப் பெயராயிற்று. இது ‘alpha’, ‘beta’ என்னும் கிரேக்க இரு முதலெழுத்துகளும் சேர்ந்து”alphabetum’ என்று இலத்தீனிலும், ‘alphabet’ என்று ஆங்கிலத்திலும், வண்ணமாலைப் பெயராக வழங்குவது போன்றது;

   அ, இ, க, கி என்று ஒரு மாத்திரை யொலிக்குங்குறிலெழுத்துகளை விட்டொலிப்பது, சிறுபிள்ளைகட்குச் சற்று வருத்தமுற மூச்சு வாங்குவதால்,’அஅன்ன’ என்பது”ஆனா” என்றும் இஅன்ன என்பது’ஈனா’ என்றும், மாணாக்க நிலையிலும் பின்னும் ஒலிக்கப்பட்டுவந்தன. இவ்வொலிப்புமுறை குறில்களின் உண்மையான ஒலியளவை உடனே தெரிந்துகொள்ளத் தடையாயிருந்தமையின், இந்நூற்றாண்டுத் தொடக்கத்தில் அரசியற் கல்வித்துறையறிஞர், சாரியையின்றி ஒலிநூன் முறைப்படி அ, ஆ, இ, ஈ,… என்று ஒலித்துப் பயிலும் முறையைப் புகுத்திவிட்டனர். அதனால், இன்று ‘அஆ’ என்பது வண்ணமாலைப் பெயராக வழங்கி வருகின்றது. இது புணர்ச்சியில்’அவ்வா’ என்றாகும்;

சித்தன்சாபக்கல்

 சித்தன்சாபக்கல் cittaṉcāpakkal, பெ. (n.)

   தவளைக்கல் (யாழ்.அக.);; laterite slab of iron stone.

     [சித்தன் + சாபக்கல்]

சித்தன்வாழ்வு

சித்தன்வாழ்வு cittaṉvāḻvu, பெ. (n.)

   முருகக் கடவுள் வாழ்விடமான திருவாவினன்குடி (திருமுருகு.176,உரை.);; Thiru-v-avinan-kugi, as the abode of Murugan.

     [சித்தன் + வாழ்வு]

சித்தபத்திரி

 சித்தபத்திரி cittabattiri, பெ. (n.)

   கஞ்சா; ganjah leaves used by Sittars (சாஅக.);.

சித்தப்பா

 சித்தப்பா cittappā, பெ. (n.)

சிற்றப்பன் பார்க்க;see Sirrappan.

     [சிற்றப்பன் → சித்தப்பன் → சித்தப்பா]

சித்தமணி

சித்தமணி cittamaṇi, பெ. (n.)

   1. பொன்னாங் கண்ணி; sessile.

   2. இதளிய மணி; consolidated mercurial pill.

   3. பத்து வகை இதளிய ஆற்றல்களுள் ஒன்றான கிளர்ச்சியூட்டும் தன்மை தீர்ந்த குளிகை; one of the ten animated mercurial pills (சா.அக.);.

சித்தமருத்தவம்

 சித்தமருத்தவம் cittamaruttavam, பெ. (n.)

   சித்தர்கள் கையாண்ட மருத்துவ முறை; a kind of healing art ascribed to Sittar.

மறுவ. தமிழ் மருத்துவம், மூலிகை மருத்துவம், வீட்டு மருத்துவம், நாட்டு மருத்துவம், பாட்டி மருத்துவம், கை மருத்துவம்

     [சித்தர் + மருத்துவம்]

சித்தமருத்துவமுறை

 சித்தமருத்துவமுறை cittamaruttuvamuṟai, பெ. (n.)

   சித்தர்தம் நூலின் துணையுடன், வைப்புச் சரக்குகளைக் கொண்டு செய்யும் மருந்துகள்; the following are the medicine and medical preparations, according to Sitta system (சா.அக.);.

     [சித்தமருத்துவம் + முறை]

சித்தமருந்து

சித்தமருந்து cittamarundu, பெ. (n.)

   சித்த முறைப்படி 212 மூலப் பொருள்களினின்று செய்யும் மருந்துகள்; medicines in Sitta system are prepared from out of the mineral substances which are 212 in number (சா.அக.);.

     [சித்தர் + மருத்து]

சித்தமலம்

 சித்தமலம் cittamalam, பெ. (n.)

அறியாமை,

 ignorance

சித்தமல மறுவித்துச் சிவமாக்கி யெனையாண்ட அத்தன்'(திருவா.);

     [சித்தம்+மலம்]

சித்தமல்லி

 சித்தமல்லி cittamalli, பெ.(n.)

   மாயூரம் வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Mayuram Taluk.

     [சிறு-சிற்று+மல்லி]

சித்தமார்க்கம்

 சித்தமார்க்கம் cittamārkkam, பெ. (n.)

சித்தநெறி பார்க்க;see sitta-neri.

     [சித்தர் + மார்க்கம். மார்க்கம் = தெறி]

 Skt. marga → த. மார்க்கம்

சித்தம்

சித்தம்1 cittam, பெ. (n.)

   1. மனம்; mind, will.

     “பத்தர் சித்தம்” (திவ்.திருச்சந்.110);

   2. முடிவான மனக்கொள்கை; determination, firm conviction.

     “தெய்வமென்பதோர் சித்தமுண்டாகி” (திருவாச. 4,42);

   3. அகக்கருவி (அந்தக்கரணம்); நான்கனுள் உறுதிப்படுத்தும் தொழில் உடையது; determinative faculty, one of four anta-k-karanam.

     “சிந்தித்தாய்ச் சித்தம்” (சி.போ.சிற். 4,1,2);.

   4. திடம் (சூடா);; courage firmness.

     [செத்தல் = கருதுதல். செ → செத்து = கருத்து, அறிவு செத்து → சித்து = கருத்து, அறிவு, சித்து → சித்தம் = கருத்து, மனம், அறிவு]

த. சித்தம் → Skt. Sitta

 சித்தம்2 cittam, பெ. (n.)

   1. உப்பு வகை; any kind of salt.

   2. முருங்கை; drum stick tree.

   3. 28 தோன்றிய (ஆகம);ங்களில் ஒன்று; one of 28 saiva-agamás (சா.அக.);.

சித்தரகசியம்

 சித்தரகசியம் sittaragasiyam, பெ. (n.)

சித்தர்மந்தணம் பார்க்க;see Sittar-mandanam.

     [சித்தர் + ரகசியம்]

 Skt. rahasya → த. இரகசியம்

சித்தரத்தை

 சித்தரத்தை cittarattai, பெ. (n.)

சிற்றரத்தை பார்க்க;see Sirrarattai.

     [சிற்றரத்தை → சித்தரத்தை]

சித்தராருடம்

சித்தராருடம் cittarāruḍam, பெ. (n.)

   நஞ்சு பற்றிய மருத்துவ நூல் (சீவக. 1287, உரை.);; a treatise describing poisonous snakes, effect of their bite and remedies there of.

     [சித்த + ஆருடம்]

சித்தரி

 சித்தரி cittari, பெ. (n.)

   சிறுகுளம் (W.G.);; a small tank.

     [சிற்றோ → சித்தேரி → சித்தரி]

சித்தரி_த்தல்

சித்தரி_த்தல் cittarittal,    4 செ.கு.வி. (v.i.)

சித்திரி-த்தல் பார்க்க: see sittiri-.

சித்தருண்ணுங்கற்பத்தி

 சித்தருண்ணுங்கற்பத்தி cittaruṇṇuṅgaṟpatti, பெ. (n.)

திருகுக் கள்ளியின் வேர்,

 twist spurge (சா.அக.);.

     [சித்தருண்னும் + கற்பத்தி]

சித்தருண்ணுங்கற்பம்

 சித்தருண்ணுங்கற்பம் cittaruṇṇuṅgaṟpam, பெ. (n.)

சித்தர்கற்பம் பார்க்க;see sittar-karbam.

     [சித்தர் + உண்னும் + கற்பம்]

சித்தருண்ணுமூலி

 சித்தருண்ணுமூலி cittaruṇṇumūli, பெ. (n.)

   தம் வாணாளை நீட்டிப்பதற்காகச் சித்தர் உட்கொள்ளும் மூலிகைகள்; the drugs taken in by Sittars for purposes of rejuvenation (சா.அக.);.

     [சித்தருண்ணும் + மூவி]

சித்தருண்ணும்புகைமூலி

 சித்தருண்ணும்புகைமூலி cittaruṇṇumbugaimūli, பெ. (n.)

   கஞ்சா; Indian hemp (சா.அக.);.

     [சித்தருண்ணும் + புகைமூலி]

சித்தரேவு

 சித்தரேவு cittarēvu, பெ.(n.)

   திண்டுக்கல் வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Dindigul Taluk.

     [சித்தர்+துறவு]

சித்தர்

சித்தர் cittar, பெ. (n.)

   1. ஒகத்தின்மூலம் உலகை உணரும் நுண்ணறிவு பெற்றவர்; mystic.

   2. பதினெண்கணத்துள் ஒருசாரார் (கம்பரா. நிந்தனை.10);; supernals unhabiting the inter mediate region between the earth and the sun, one of padine-kanam.

   3. முழு அருளையடைந்தோர்; perfected ones.

   4. எண் பெரும் பேரறிவுடையோர் (அஷ்டமா சித்தியுடையோர்);; mystics who have acquired the asta-ma-sitti.

     “ஏறுயர்த்தோர் சித்தராய் விளையாடிய செயல்” (திருவிளை. என்வரம் வல்ல.1);

மறுவ. அறிவர், பெற்றியர்

     [சித்து → சித்தர். உண்மை கண்டவிடத்து மரபையும் மீறும் இயல்பினா]

சித்தர் தமிழ்

 சித்தர் தமிழ் cittartamiḻ, பெ. (n.)

   பொன்னாக்கம், மருத்துவம், ஒகம், மெய்யறிவு, கணியம் பற்றித் தெளிவான நடையில் இலக்கணப் பொருத்தத்துடன் எழுதப்பெற்ற பாடல்கள்; Sittar Tamil usually deals with medicines, yoga, philosophy and astrology in highly grammatic form with clearly understandable verses (சா.அக.);.

     [சித்தர் + தமிழ்]

சித்தர்கற்பம்

 சித்தர்கற்பம் cittarkaṟpam, பெ. (n.)

   சித்தர்கள், நலமுடனும், வலிவுடனும் நீடுழிக் காலம் வாழ்வதற்காக உட்கொண்ட சாகா மருந்து; a very rare medicinal preparation taken generally by Sittars for rejuvenation and for prolonging life it is also known ambrosial medicine (சா.அக.);

மறுவ. காயகல்பம்

     [சித்த + கற்பம்]

சித்தர்கல்வி

 சித்தர்கல்வி cittarkalvi, பெ. (n.)

   பண்டைக் காலத்தில், இந்தியாவிலிருந்த குரு மாணவத் தொடர்பிலமைந்த மரபுவழிக் கல்வி முறை; the Sitta system of education in ancient India followed hereditary (சா.அக.);.

     [சித்த + கல்வி]

சித்தர்களஞ்சியம்

 சித்தர்களஞ்சியம் cittarkaḷañjiyam, பெ. (n.)

   சித்தர் தம் மந்தணச் செயல்முறையையும், அறிவுத்திறனையும் விளக்கமுறவுரைக்குந் தமிழ்நூல் திரட்டு; a full and exhaustive treatise in Tamil revealing all about Sittar’s secrets and their activities (சா.அக.);.

     [சித்த + களஞ்சியம்]

சித்தர்காடு

சித்தர்காடு cittarkāṭu, பெ. (n.)

   மயிலாடு துறைக்கு 6 அயிரிமாத்திரிதொலைவில் உள்ள ஓர் ஊர்; a village 6km from Mayiladuthurai.

     [சித்தர்+காடு]

சித்தர்காலம்

சித்தர்காலம் cittarkālam, பெ. (n.)

   சித்த மருந்துகளைப் பயன்படுத்திய காலமான கி.மு. 10,000 முதல் கி.மு. 4,400க்கும் இடைப்பட்ட காலம்; the period 10,000 B.C. to 4,400 B.C. in which siddha medicines were used by ancient people (சா.அக.);.

     [சித்தர் + காலம்]

சித்தர்குடியிருப்பு

 சித்தர்குடியிருப்பு cittarkuḍiyiruppu, பெ. (n.)

   இரவெரி மரம் (இருளில் ஒளிவிடும் மரம்);; a luminous tree in the dark like burning bush (சாஅக.);.

மறுவ. சோதி மரம்

     [சித்தர் + குடியிருப்பு]

சித்தர்குளிகை

 சித்தர்குளிகை cittarguḷigai, பெ. (n.)

   சித்தர் வானவெளியில் பறப்பதற்குப் பயன்படுத்தும் இதளியக் (பாதரச); குளிகை; the animated mercurial pill used for travelling in the serial regions. These pills were prepared and used by the Sittars in various ways (சா.அக.);

     [சித்தர் + குளிகை]

சித்தர்கூட்டம்

 சித்தர்கூட்டம் cittarāṭṭam, பெ. (n.)

   ஒரு பொருள் குறித்துச் சித்தர்கள் பலர் ஒரே இடத்தில் கூடும் கூட்டம்; the meeting of several Sittars to form an assembly for some object in view.

     [சித்தர் + கூட்டம்]

சித்தர்கூனி

 சித்தர்கூனி cittarāṉi, பெ. (n.)

   கட்டுக் காடை; a bird of large size of the coracidae family (சா.அக.);.

     [சித்தர் + கனி]

சித்தர்கொள்கை

 சித்தர்கொள்கை cittarkoḷkai, பெ. (n.)

   பொன்னாக்கம், மருத்துவம், ஒகம், மெய்ப் பொருளியல் (தத்துவம்); முதலானவை பற்றித் தெளிவாக அமைந்த சித்தர் கோட்பாடுகள்; every one of Sittars has written clearly in their works on four subject viz, alchemy, medicine, yoga, and philosophy (சா.அக.);

     [சித்தர் + கொள்கை]

சித்தர்சமாதி

 சித்தர்சமாதி cittarcamāti, பெ. (n.)

   சித்தர்கள் தங்கள் உயிரை நீத்து, இலிங்க வடிவமாகி நிலைபெற்ற இடம்; Sittars who attained success metamosphosed their bodies into linga (phallus); form (சா.அக.);.

     [சித்தர் + சமாதி]

சித்தர்சிகிச்சை

 சித்தர்சிகிச்சை cittarcigiccai, பெ. (n.)

சித்த மருத்துவம் பார்க்க;see Sitta-maruttuvam.

     [சித்தர் + சிகிச்சை]

சித்தர்சூரணம்

 சித்தர்சூரணம் cittarcūraṇam, பெ. (n.)

சித்தர் பொடி பார்க்க;see sittar-podi.

   வ. சூரணம்;த. பொடி, தூள்

     [சித்த + குரணம்]

சித்தர்ஞானம்

 சித்தர்ஞானம் cittarñāṉam, பெ. (n.)

   தன்னைத் தானறியும் சித்தர்தம் பேரறிவு; Sittars wisdom insisted on self-knowledge (சா.அக.);.

     [சித்தர் + ஞானம்]

சித்தர்தங்கம்

 சித்தர்தங்கம் cittartaṅgam, பெ. (n.)

   பொன்னாக்கத்தினாலுண்டான தங்கம்; the synthetic gold obtained through alchemical process (சா.அக.);.

     [சித்தர் + தங்கம்]

சித்தர்நாடி

 சித்தர்நாடி cittarnāṭi, பெ. (n.)

   மருத்துவமும் கணியமும் (சோதிடம்); இணைந்து வருமாறு சித்தர்களால் பாடப் பெற்ற நூல்கள்; poetics composed by Sittars dealing with medicines and astrology (சா.அக.);

     [சித்தர் + நாடி]

சித்தர்நுட்பம்

 சித்தர்நுட்பம் cittarnuṭpam, பெ. (n.)

   சித்தர்தம் நுண்மாண் துழைபுலத்தினால், பல் திறப்பட்ட பொருள் பற்றி எழுதப்பட்ட நூற் சுருக்கம்; synopsis or summary exhibiting only the principle and intricate points of several subjects on a general view such a kind of keen compilation is possible only by siddhars endowed with spiritual knowledge (சா.அக.);

     [சித்தர் + துட்பம்]

சித்தர்நூற்சிறப்பு

 சித்தர்நூற்சிறப்பு cittarnūṟciṟappu, பெ. (n.)

   சித்தர்கள் தங்கள் முறைப்படி இயற்றிய நூல்களும், அவற்றின் மேம்பட்ட கொண் முடிபுகளும்; the superiority of thesience under the Siddha system in all its branches, as composed with the other science leading one to the following higher conclusions (சா.அக.);.

     [சித்த + நூற்சிறப்பு]

சித்தர்நூல்

 சித்தர்நூல் cittarnūl, பெ. (n.)

   பதினெண் சித்தர்கள் இயற்றிய ஊதை (வாத); மருத்துவம், ஒகம், கணியம் குறித்த நூல்கள்; the several treatises compiled by Sittars on alchemy, medicine, yoga, philosophy, astrology etc. (சா.அக.);.

     [சித்தர் + நூல்]

சித்தர்நெறி

 சித்தர்நெறி cittarneṟi, பெ. (n.)

சித்தநெறி பார்க்க;see Sittaneri.

சித்தர்நோக்கம்

 சித்தர்நோக்கம் cittarnōkkam, பெ. (n.)

   மக்களுக்காக இவ்வுலகின் கண் வரையறுத்த பொருள் பற்றியும், அவர்கள் யாதோர் இடையூறுமின்றி உயிர் வாழ்வதற் குண்டான பொருள்கள் பற்றியும், சித்தர்கள் கொண்ட கருத்துகள்; the following are the end and aims of Siddhars regarding the positive assertions towards the welfares of mankind to enable them to live in this world without any hindrance (சா.அக.);.

     [சித்த + நோக்கம்]

சித்தர்பட்டை

 சித்தர்பட்டை cittarpaṭṭai, பெ. (n.)

   சித்திர மூலம்; black flowered lead wort (சா.அக.);.

     [சித்தா + பட்டை]

சித்தர்பதினெண்மர்

 சித்தர்பதினெண்மர் ciddarpadiṉeṇmar, பெ. (n.)

   திருமூலர், நந்திதேவர், இடைக்காடர், புலத்தியர், அகத்தியர், புண்ணாக்கீசர், போகர், புலிக்கீசர், கொங்கணவர், அழுகண்ணி, பாம்பாட்டி, குதம்பை, கருவூரார், அகப்பேய், தேரையர், சட்டைமுனி, பூனைக்கண்ணர், காலாங்கி ஆகிய பதினெட்டுச் சித்தர்கள்; the eighteen Sittars viz., Thirumular, Nandidevar, Idaikkadar, Pulatutiyar, Agattiyar, Punnakkicar, Bogar, Pulikkicar, Konganavar, Aluganni, Pambatti, Kudambai, Karuvurar, Aagappey, Teraiyar, Sattaimuni, Punaikkannar, Kalangi (சா.அக.);.

     [சித்தர் + பதினெண்மா]

சித்தர்பொடி

 சித்தர்பொடி cittarpoḍi, பெ. (n.)

   சித்த மருந்துத் தூள்; medicinal powder of Sittars.

     [சித்த + பொடி]

சித்தர்போக்கு

 சித்தர்போக்கு cittarpōkku, பெ. (n.)

   சித்தர்கள் தங்கள் நூல்களில், ஒவ்வொரு பொருள் பற்றியும் விளக்குங்கால், மேற்கொள்ளும் முறை; the method or ways adopted by the Sittars on every subjects in their works (சா.அக.);

     [சித்தர் + போக்கு]

சித்தர்மந்தணம்

 சித்தர்மந்தணம் cittarmandaṇam, பெ. (n.)

   குருவருளின் துணையுடன் சித்தர் இயற்றிய நூலில் அமைந்துள்ள மந்தனச் செய்திகள்; the secret methods which ought to be learn through the inspiration of a guru on several matters contained in the works (சா.அக.);.

     [சித்த + மந்தணம்]

சித்தர்முறை

 சித்தர்முறை cittarmuṟai, பெ. (n.)

   தவறாகப் பயன்படுத்தப்பட்டுவிடக் கூடாதென்று கருதித் தகுதியுடையார்க்கன்றி ஏனையோர் எளிதில் கைக்கொள்ளவும் கடைப்பிடிக்கவும் முடியாதவாறு சித்தர்களால் மறைக்கப்பட்ட நூல்களும் மருத்துவச் செய்முறைகளும்; the several sciences and scientific methods of preparing medicine of high repute (சா.அக.);.

     [சித்தா + மறைப்பு]

 சித்தர்முறை cittarmuṟai, பெ. (n.)

   மக்கள் வாழ்விற்கு இன்றியமையாத, சித்தர்களால் இயற்றப்பட்ட மருத்துவமுறைகள்;  the Sittar’s medical system can be learnt from the works compiled by them they have mentioned all that is required for a man’s career in life (சா.அக.);.

     [சித்தா + முறை]

சித்தர்மூலம்

சித்தர்மூலம் cittarmūlam, பெ. (n.)

சித்திர மூலம்,1 பார்க்க;see Sittiar-mulam.

     [சித்தர் + மூலம்]

சித்தர்மூலி

சித்தர்மூலி cittarmūli, பெ. (n.)

சித்திரமூலம்,1 பார்க்க;see sittara-mulam.1.

     [சித்த + மூலி]

சித்தர்வர்க்கம்

சித்தர்வர்க்கம் cittarvarkkam, பெ. (n.)

   சித்தர் வகுப்பைச் சார்ந்த நவநாத சித்தர், மூல வர்க்க சித்தர் என்ற இரு பிரிவினர்; the two schools of sittars viz

   1. Navanada[nine siddhar].

   2. the eighteen Mulavarkka-Sittars (சா.அக.);.

     [சித்தா + வாக்கம்]

சித்தர்வாக்கியம்

 சித்தர்வாக்கியம் cittarvākkiyam, பெ. (n.)

   சித்தர்தம் அறிவுரைகள்; the sacred sayings of Sittars (சா.அக.);

     [சித்தர் + வாக்கியம்]

சித்தர்விளையாட்டு

 சித்தர்விளையாட்டு cittarviḷaiyāṭṭu, பெ. (n.)

   சித்தர்கள் புரியும் எண்வகை விளையாட்டுகள் (சித்துகள்);; the eight miracle or supernatural powers played by Sittars (சா.அக.);

     [சித்தர் + விளையாட்டு]

சித்தர்வேதியல்நூல்

 சித்தர்வேதியல்நூல் cittarvētiyalnūl, பெ. (n.)

   சரக்கு வைப்பின் வேதிம இயல்பை விளக்கும் நூல்; science of Sittars describing the chemical nature of substances (சா.அக.);.

     [சித்த + வேதியநூல்]

சித்தலை

 சித்தலை cittalai, பெ. (n.)

   சிற்றலை; wavelet.

     [சிற்றவை → சித்தவை]

சித்தல்

 சித்தல் cittal, பெ. (n.)

   சிலை (வின்);; cloth.

சித்தவைத்தியம்

 சித்தவைத்தியம் cittavaittiyam, பெ. (n.)

சித்த மருத்துவம் பார்க்க;see Sitta-maruttuvam.

     [சித்தர் + வைத்தியம்]

சித்தாசனம்

 சித்தாசனம் cittācaṉam, பெ. (n.)

   இடக்குதி காலை உள்ளடக்கி வலக்குதி காலை எதிரில் வைத்து உட்கார்ந்து புருவத்தின் நடுவில் நாட்டம் வைத்திருக்கையாகிய ஒகவகை (சங்.அக.);; yogic posture which consists in placing the left heel under the body and the right heel in front of it and fixing the sight between the eyebrows in meditation.

     [சித்து + ஆசனம்]

சித்தாச்சிரமம்

 சித்தாச்சிரமம் cittācciramam, பெ. (n.)

   வாமனனாகப் பிறப்பெடுத்த திருமால் தவஞ்செய்த இடம்; a hermitage where Thirumal-performed penance during His Dwarf-incarnation.

     [சித்தன் + ஆசிரமம்]

சித்தாடு-தல்

சித்தாடு-தல் ciddāṭudal,    5 செ.குவி (v.i.)

சித்து விளையாடு_தல் பார்க்க;see Sittu-Vilai-y-agu.

சித்தாந்தத்தொகை

சித்தாந்தத்தொகை cittāndattogai, பெ. (n.)

   தமிழ்மொழியிற் செய்த ஒரு புத்த நூல் (சி.சி. பர.சௌத்.2, உரை);; a treatise in Tamil on Buddhism.

     [சித்தாத்தம் + தொகை]

சித்தாந்தன்

 சித்தாந்தன் cittāndaṉ, பெ. (n.)

   சிவன் ( யாழ்.அக.);; sivan.

சித்தாந்தப்பஃறொடை

 சித்தாந்தப்பஃறொடை cittāndappaḵṟoḍai, பெ. (n.)

அம்பலவாண

   தேசிகரியற்றிய நூல்; a Saiva Siddhanda treatise by Ambala-vanaDesigar.

     [சித்தாத்தம் + பஃறொடை]

சித்தாந்தம்

சித்தாந்தம் cittāndam, பெ. (n.)

   1. முடிந்த முடிபு; well-established conclusion, settled opinion or doctrine, received or admitted truth.

     “மறையின் வைத்த சித்தாந்த வருத்தமதாலே” (திருக்காளத்.பு.29:37);. (வின்.);;

 astronomical treatise.

   3. சிவக்கொண்முடிபு (சைவ சித்தாந்தம்);; saiva siddhanda.

   4. சிவனறிவு நூல் (சிவாகமம்);; saiva agamas.

     “சிவாகமங்கள் சித்தாந்தமாகும்” (சி.சி.8:15);. விடாப்பிடி (பிடிவாதம்);;

 obstinacy.

இந்தச் சித்தாந்தம் ஆகாது.

     [சித்து → சித்தாந்தம்]

சித்தாந்தி

சித்தாந்தி cittāndi, பெ. (n.)

   1. தன் கொள்கையை நாட்டுபவன் (சங்.அக.);; one who establishes or proves his theory logically.

   2. வானநூலார்; astronomer.

   3. கணக்கியலார்; mathematician.

   4. சிவக்கொண்முடிபைச் சார்ந்தவன் (உ.வ);; a follower of the Saiva Siddhanda system, dist. fr. Vedandi.

   5. விடாப்பிடியன்; an obstinate person.

     [சித்தாந்தம் → சித்தாந்தி]

சித்தாமணக்கு

 சித்தாமணக்கு cittāmaṇakku, பெ. (n.)

சிற்றாமணக்கு பார்க்க;see Sirramarakku (சா.அக.);.

     [சிற்றாமணக்கு → சித்தாமணக்கு]

சித்தாமல்லி

 சித்தாமல்லி cittāmalli, பெ. (n.)

சிற்றாமல்லி பார்க்க;see Sirramalli (சா.அக.);.

     [சிற்றாமல்வி – சித்தாமல்லி]

சித்தாமுட்டி

 சித்தாமுட்டி cittāmuṭṭi, பெ. (n.)

சிற்றாமுட்டி பார்க்க;see Sirramust (சா.அக.);.

     [சிற்றாமுட்டி → சித்தாமுட்டி]

சித்தாரம்

 சித்தாரம் cittāram, பெ. (n.)

அழகு,

 grace, beauty.

     ‘சின்னச்சித்தாரம் போலக்குழந்தை”

     [சித்திரம்-சித்தாரம்]

சித்தாள்

 சித்தாள் cittāḷ, பெ. (n.)

சிற்றாள் பார்க்க;see sirrl.

     [சிற்றான் → சித்தான்]

சித்தாவனம்

 சித்தாவனம் cittāvaṉam, பெ.(n.)

   அறந்தாங்கி வட்டத்திலுள்ள சிற்றுர்; a village in | Arantangi Taluk.

     [சித்தர்+வனம்]

சித்தி

சித்தி1 cittittal,    4 செகுவி (v.i.)

   1. கைகூடுதல்; to be gained, accomplished, to be realised.

     “சித்தாந்தத்தே நிற்பர் முத்தி சித்தித்தவர்” (திருமந். 2394);.

   2. மருந்தினை முழுமையாகச் செய்து முடித்தல்; to succeed in the preparation of medicine of high repute.

     [சித்து → சித்தி; சித்து = அறிவு, முழுமை. சித்தி → சித்தித்தல்]

 சித்தி2 citti, பெ. (n.)

   சிறிய தாய் சித்தப்பாவின் மனைவி, தாயின் தங்கை; mother’s younger sister;father’s younger brother’s wife.

     [சிற்றாப் → சிற்றாப்த்தி → சித்தி]

 சித்தி3 citti, பெ. (n.)

சித்தியா (தஞ்சைமாலியஅந்); பார்க்க;see sittiya.

     [சித்தியா → சித்தி]

 சித்தி4 citti, பெ. (n.)

சித்தை1 பார்க்க;see Sittai.

     [சித்தை → சித்தி]

 சித்தி5 citti, பெ. (n.)

   செடில்; hook – swinging festival.

 சித்தி6 citti, பெ. (n.)

   நிலக்குமிழ்; Small Cashmere tree.

சித்திக்கண்

 சித்திக்கண் cittikkaṇ, பெ. (n.)

   அறிவுக்கண்; the eye of wisdom (சா.அக.);.

     [சித்து → சித்தி + கண்]

சித்திக்கண்ணன்

 சித்திக்கண்ணன் cittikkaṇṇaṉ, பெ. (n.)

   துறவி; Sage (சா.அக.);.

     [சித்து → சித்தி + கண்ணன்]

சித்திக்கலை

 சித்திக்கலை cittikkalai, பெ. (n.)

சித்திக்கல் பார்க்க;see sitti-k-kal (சா.அக.);.

சித்திக்கல்

சித்திக்கல் cittikkal, பெ. (n.)

   1. செடி லாட்டத்திற்காக நாட்டப்பட்ட துண் (G.Sm.D..I.i,122);; stone or wooden pillar set up for hook – swinging

   2. குறுஞ்சிலைக்கல் (வின்.);; kind of red stone.

     [சித்தி4 + கல்]

சித்திக்குறி

 சித்திக்குறி cittikkuṟi, பெ. (n.)

   எட்டிக் கொட்டை; nux vamica nut (சா.அக.);.

சித்திக்குளிகை

 சித்திக்குளிகை cittigguḷigai, பெ. (n.)

   எண் வகை இறும்பூதுகளை (அற்புதங்களை); நிகழ்த்தும் குளிகை; a magic pill peculiar to Tamil Sitta medicine prepared to enable one to attain success in the performance of eight miracles (சா.அக.);.

     [சித்தி + குளிகை. குள் → குளிகை = உருண்டை மாத்திரை]

சித்திடு

சித்திடு cittiḍu, பெ. (n.)

சித்துடு2 (மலை); பார்க்க;see sittugu.

     [சித்துடு2 → சித்திடு]

சித்திநெறி

சித்திநெறி cittineṟi, பெ. (n.)

சித்தநெறி பார்க்க;see Sittaneri,1.

     [சித்ததெறி → சித்திதெறி]

சித்தினி

சித்தினி cittiṉi, பெ. (n.)

   நால்வகைப் பெண்களுள் பதுமினிவகைக்கு அடுத்த தரத்தவள் (கொக்கோ.1710);; woman of the class inferior only to padumini, one of four pen.

சித்தின்பம்

சித்தின்பம் cittiṉpam, பெ. (n.)

   அறிவால் விளையும் பேரின்பம்; perfect bliss, as the result of true knowledge.

     “நித்தியானந்த மாகயி சித்தின்பம்” (சி.போ.பா.6:2,பக்.330);.

     [சித்து + இன்பம்]

சித்திமல்லி

 சித்திமல்லி cittimalli, பெ. (n.)

   வெதுப்படக்கி; stinking plant (சா.அக.);.

சித்திமூலம்

சித்திமூலம் cittimūlam, பெ. (n.)

   1. கொடுவேலி; Ceylon lead-wort.

   2. நிலப் பனையின் கிழங்கு; moosly root.

ம. சித்திரமூலம்

     [சித்திரமூலம் → சித்திமூவம்]

சித்தியம்

 சித்தியம் cittiyam, பெ. (n.)

   கோரி (யாழ்.அக);; turret.

சித்தியர்

சித்தியர்1 cittiyar, பெ. (n.)

   தெய்வமங்கையர் வகையினர்; a class of celestial women.

     “சித்தியரிசைப்பத் தீஞ்சொல்” (கம்பரா. ஊர்தேடு. 186.);

     [சித்தன் (ஆ.பா.); – சித்தி (பெ.பா.); ‘இ’ பெ.பா.ஈறு]

 சித்தியர்2 cittiyar, பெ. (n.)

   சித்திபெற்றவர்கள்; one who attained spiritual power.

சித்தியா

 சித்தியா cittiyā, பெ. (n.)

   சிற்றப்பன்; தந்தையின் தம்பி, அம்மாவின் தங்கை கணவர் (மாலிய அந்தணர்);; father’s younger brother; mother’s younger sister’s husband.

     [சிற்றையா → சித்தையா → சித்தியா]

சித்தியாகு-தல்

சித்தியாகு-தல் ciddiyākudal,    5 செ.கு.வி. (v.i.)

   பயன்படல்; to become useful (சா.அக.);

     [சித்தி + ஆகு]

சித்தியார்

சித்தியார் cittiyār, பெ. (n.)

   சிவஞான சித்தியார்; a treatise on saiva siddhanta.

     “உந்திகளி றுயர் போதஞ் சித்தியார்” (திராவிடப்.384);

     [சித்தி → சித்தியா]

சித்திர வரைவு

 சித்திர வரைவு cittiravaraivu, பெ. (n.)

   கையிலுள்ள வரைவு (ரேகை);; streaks or lines on the palms.

     [சித்திரம் + வரைவு]

சித்திரகம்

சித்திரகம் cittiragam, பெ. (n.)

   1. கொடுவேலி (மலை.);; Ceylon leadwort.

   2. ஆமணக்கு (சூடா.);; castor plant.

சித்திரக் கடம்

 சித்திரக் கடம் cittirakkaḍam, பெ. (n.)

   பெருங்காடு (வின்.);; wild jungle, wilderness.

     [சித்திரம் + கடம்]

சித்திரக்கண்டகம்

 சித்திரக்கண்டகம் cittiraggaṇṭagam, பெ. (n.)

சித்திரகண்டம் பார்க்க;see Sittira-kangam (சா.அக.);

     [சித்திரகண்டம் → சித்திரகண்டகம்]

சித்திரக்கண்டம்

சித்திரக்கண்டம் cittirakkaṇṭam, பெ. (n.)

   1. அழகிய கழுத்து; beautiful neck.

   2. பல வண்ணக் கழுத்துடைய மாடப் புறா; house pigeon.

     [சித்திரம் = ஒவியம், அமுகு, கண்டம் = கழுத்து, சித்திரம் + கண்டம்]

சித்திரக்கம்மம்

சித்திரக்கம்மம் cittirakkammam, பெ. (n.)

   அழகிய நுண்கலை வேலைப்பாடு; artistic workmanship.

     “செந்நூ னினந்த சித்திரக் கம்மத்து” (பெருங், உஞ்சைக். 35:98);

     [சித்திரம் + கம்மம்]

சித்திரக்கம்மி

சித்திரக்கம்மி cittirakkammi, பெ. (n.)

   ஒவியத் தொழிலமைந்த ஆடைவகை (சிலப். 14:108,உரை.);; a kind of cloth.

     [சித்திரம் + கம்மி]

சித்திரக்கருங்கல்

 சித்திரக்கருங்கல் cittirakkaruṅgal, பெ. (n.)

   கோடுகளுள்ள கருங்கல் வகை; graphic granite.

     [சித்திரம் + கருங்கல்]

சித்திரக்கவி

சித்திரக்கவி cittirakkavi, பெ. (n.)

   1. நால்வகைப் பாக்களுள் சித்திரத்தில் அமைத்துப் பாடும் மிறைப்பா (பிங்);; a variety of metrical composition filled into fanciful figures, one of nar-pa.

   2. சித்திரப்பா பாடுவோன் (சங்.அக.);; one claver in composing Sittira-p-pa.

     [சித்திரம் + கவி]

சித்திரக்கா

சித்திரக்கா cittirakkā, பெ. (n.)

   சித்திரக்கவி வகை; a kind of Sittira-k-kavi.

     “சித்திரக்காவே விசித்திரக்காவே” (யாப்.வி.96);.

     [சித்திரம் + கா]

சித்திரக்காரன்

சித்திரக்காரன் cittirakkāraṉ, பெ. (n.)

   1. ஒவியம் எழுதுவோன்; painter, portraitpainter.

     “சித்திரகாரருஞ் செய்கெனச் சொல்லி” (பெருங். வத்தவ. 3:28);.

   2. சிற்பி (சூடா);; sculptor, engraver.

ம. சித்ரக்காரன், சித்ரகான்

     [சித்திரம் + காரன்]

சித்திரக்காரை

 சித்திரக்காரை cittirakkārai, பெ. (n.)

   புள்ளிகளையுடைய மீன் வகை; a kind of fish (சேரநா);.

     [சித்திரம் + காரை.]

சித்திரக்காலி

சித்திரக்காலி cittirakkāli, பெ. (n.)

   1. காரத் தன்மையுள்ள கொடிவகை; an unknown pungent creeper.

   2. நெல்வகை (சங்.அக.);; a kind of paddy.

சித்திரக்கிழங்கு

 சித்திரக்கிழங்கு cittirakkiḻṅgu, பெ. (n.)

   கொடுவேலிக் கிழங்கு; the root of plumbago zeylarica (சேரநா.);.

ம. சித்திரக்கிழங்ஙு

சித்திரக்குண்டலி

சித்திரக்குண்டலி cittirakkuṇṭali, பெ. (n.)

   கூத்து வகை (கல்லா. 27, உரை, பக்.222);; a kind of dance.

     [சித்திரம் + குண்டவி]

சித்திரக்குத்தன்

சித்திரக்குத்தன் cittirakkuttaṉ, பெ. (n.)

   கூற்றுவரினிடம் உயிர்களின் நல்வினை தீவினைகளைக் கணக்கெழுதிப் படிப்போனாகக் கருதப்படுவான்; one who believes Yama’s officer who records the good end evil deeds of human beings.

     “சித்திரகுத்த னெழுத்தால்” (திவ். பெரியாழ்.5.2:2);.

சித்திரக்குள்ளன்

 சித்திரக்குள்ளன் cittirakkuḷḷaṉ, பெ. (n.)

   உடற் குறையோடுகூடிய குள்ளன்; chandroplatic dwarf with bodily defects (சா.அக.);.

     [சித்திரம் + குள்ளன். சித்திரம் = குறைவு]

சித்திரக்கூடக்கல்

 சித்திரக்கூடக்கல் cittirakāṭakkal, பெ. (n.)

   நாக வடிவாகச் செய்யப்பட்ட கல்; a stone idol of serpent god (சேரநா.);

ம. சித்ரகூடக்கல்லு

     [சித்திரம் + கூடம் + கல்]

சித்திரக்கூடம்

சித்திரக்கூடம்1 cittirakāṭam, பெ. (n.)

   1. ஒவியச் சாலை; decorated or painted hall, hall hung with pictures.

     “செல்வப் பொற்கிடுகு சூழ்ந்த சித்திரக்கூடம் (சீவக. 2139);

   2. தெற்றியம் பலம் (திவா.);; raised platform.

   3. தில்லைத் திருமால் கோயில்; a Tirumal shrine in Chidambaram.

     “தில்லைத் திருச்சித்திரக்கூடஞ் சென்று சேர்மின்களே” (திவ். பெரியதி. 3:2);.

     [சித்திரம் + கூடம்]

 சித்திரக்கூடம்2 cittirakāṭam, பெ. (n.)

   இராமன் காட்டில் வாழ்ந்த போது தங்கியிருந்த ஒரு மலை; a mountain in Bundlekh and where Raman stayed during his exile.

     “சித்திர கூடத் திருப்பச் சிறுகாக்கை முலை தீண்ட” (திவ்.பெரியாழ்.3.10:6);

     [சைத்ரம் → சித்திரம் + கூடம்]

சித்திரக்கொடி

 சித்திரக்கொடி cittirakkoḍi, பெ. (n.)

   கொடுவேலி (பிங்.);;  ceylon leadwort.

     [சித்திரம் + கொடி]

சித்திரக்கோலம்

சித்திரக்கோலம் cittirakālam, பெ. (n.)

   1. நச்சுப் பல்லி (யாழ்.அக.);; a kind of poisonous lizard.

   2. பாம்பு; cobra (சா.அக.);

     [சித்திரம் + கோவும்]

சித்திரச்சபை

சித்திரச்சபை cittiraccabai, பெ. (n.)

   திருக் குற்றாலத்துச் சிவன் நடனமாடும் கோயில் (குற்றா. தல. கடவுள் வண.3);; dancing – hall of Națraja at Tiru-k-kurralam in Tirunelveli district.

     [சித்திரம் + சபை, அவை → சவை → சபை]

சித்திரச்சாலை

சித்திரச்சாலை cittiraccālai, பெ. (n.)

சித்திர மண்டபம் பார்க்க;see Sittira-mandabam.

     “பத்தியிற் குயிற்றிய சித்திரச் சாலையும்” (பெருங், மகத.4:15);.

     [சித்திரம் + சாவை]

சித்திரச்சிலந்தி

 சித்திரச்சிலந்தி cittiraccilandi, பெ. (n.)

   ஒரு வகைச் சிலந்தி; a kind of spider (சா.அக.);

     [சித்திரம் + சிவந்தி]

சித்திரச்சூடகம்

சித்திரச்சூடகம் cittiraccūṭagam, பெ. (n.)

   அழகிய வேலைப்பாடமைந்த விரற்செறி. (குற்றா.குற.51);; a ring of fine workman ship.

     [சித்திரம் + சூடகம், சூடு → சூடகம் = கைவளை]

சித்திரச்சோறு

சித்திரச்சோறு1 cittiraccōṟu, பெ. (n.)

   புளிச்சோறு, சருக்கரைச் சோறு, எட்சோறு முதலியன கலந்து செய்த பலவண்ணச் சோறு (சங்.அக.);; boiled rice mixed with spicy condiments, as tamarind, sesamum, suger, etc.

     “சித்திரச் சோற்றிற் செருக்கினேன்” (அருட்பா, vi. அவாவறுப்பு.7);

மறுவ. சித்திரான்னம்

     [சித்திரம் + சோறு]

சித்திரத்தண்டகம்

 சித்திரத்தண்டகம் cittirattaṇṭagam, பெ. (n.)

   பருத்தி (யாழ்.அக.);; cotton.

     [சித்திரம் + தண்டகம்]

சித்திரத்தாரணை

சித்திரத்தாரணை cittirattāraṇai, பெ. (n.)

   ஒன்பதுவகை ஆற்றல்களுளொன்று (யாப்.வி.96.பக்.516);; one of nava-taraṇai (சா.அக.);.

சித்திரத்தாளம்

சித்திரத்தாளம் cittirattāḷam, பெ. (n.)

   ஒன்பது வகை தாளத்தொன்று (பாததாள. 6);; a variety of time-measure one of nava-talam.

     [சித்திரம் + தாளம்]

சித்திரத்தையல்

 சித்திரத்தையல் cittirattaiyal, பெ. (n.)

   ஆடைகளில் பூ வேலைப்பாடுகள் அமைந்த தையல்; embroidary (சேரநா.);.

மறுவ. சித்திரத் துன்னல்

ம. சித்ரத்தய்யல்

     [சித்திரம் + தையல்]

சித்திரநாடி

 சித்திரநாடி cittiranāṭi, பெ. (n.)

   நடு முதுகிலோடும் சுழிமுனை நாடி;  one of the passages of nerve-centre at the top of the vertebral column running down the spinal cord (சாஅக.);.

சித்திரநோய்

 சித்திரநோய் cittiranōy, பெ. (n.)

   குடல் நோய்; a disease of the intestines (சா.அக.);.

சித்திரன்

சித்திரன் cittiraṉ, பெ. (n.)

   1. ஒவியன்; painter,artist.

   2. தச்சன்; carpenter.

     [சித்திரம் → சித்திரன்]

சித்திரப் பணி

சித்திரப் பணி cittirappaṇi, பெ. (n.)

   1. வியப்பிலாழ்த்தும் வேலைப்பாடு; decorative or ornamental work.

   2. ஒவியம் (சிலப்.6:169,அரும்.);; painting.

ம. சித்ரப்பணி

     [சித்திரம் + பணி]

சித்திரப் பெண்

சித்திரப் பெண் cittirappeṇ, பெ. (n.)

   1. வெற்றிலை; betel leaf.

   2. வெற்றிலைக் கொடி; betel vine (சா.அக.);

     [சித்திரம் + பெண். சித்திரம் = அமுகு]

சித்திரப்படம்

சித்திரப்படம் cittirappaḍam, பெ. (n.)

   1. எழுதிய ஒவியம்:

 picture.

     ‘சித்திரத்துக் கொக்கே ரத்தினத்தைக் கக்கு’ (பழ.);

   2. பூந்துகில்; variegated, painted or printed cloth.

   3. யாழ் முதலியவற்றில் பல நிறமுள்ள அல்லது பூத்தொழிலமைந்த உறை; decorated clothcover.

     “சித்திரப்படத்துட் புக்கு” (சிவப்.7:1);

ம. சித்ரபடம்

     [சித்திரம் + படம்]

சித்திரப்பலகை

 சித்திரப்பலகை cittirappalagai, பெ. (n.)

   ஒவியம் வரையப் பயன்படும் பலகை; a board used for painting a picture, painted board or plank (சேரநா.);.

ம. சித்ரப்பலக

     [சித்திரம் + பவகை]

சித்திரப்பா

 சித்திரப்பா cittirappā, பெ. (n.)

சித்திரக்கவி (திவா.); பார்க்க;see Sittira-k-kavi.

     [சித்திரம் + பா]

சித்திரப்பாடம்

சித்திரப்பாடம் cittirappāṭam, பெ. (n.)

சித்திரப்படம்,2. பார்க்க (யாழ். அக.);;see Sittira-p-pagam, 2.

     [சித்திரம் + படாம். படம் → படாம்]

சித்திரப்பாலடை

சித்திரப்பாலடை cittirappālaḍai, பெ. (n.)

   1. பூடுவகை; painted-leaved tailed tick-trefoil.

   2. அம்மான்பச்சரிசி (சங்.அக);; species of euphorbia.

     [சித்திரம் + பால் + அடை. அடை = இலை]

சித்திரப்பாலாடை

 சித்திரப்பாலாடை cittirappālāṭai, பெ. (n.)

சித்திரப்பாலடை பார்க்க;see Sittira-p-pilagai.

     [சித்திரம் + பாலாடை]

சித்திரப்பாலாவி

 சித்திரப்பாலாவி cittirappālāvi, பெ. (n.)

   அம்மான்பச்சரிசி; species of euphorbia.

மறுவ. சித்திரவல்லாதி, சீதேவியார்

     [சிற்றிவைப் பாவாவி → சித்திரப்பாவாவி]

சித்திரப்பாலை

சித்திரப்பாலை cittirappālai, பெ. (n.)

   சிற்றம்மான் பச்சரிசி (பாலவா. 364);; species of euphorbia.

     [சித்திரம் + பாலை]

சித்திரப்பாளை

 சித்திரப்பாளை cittirappāḷai, பெ. (n.)

   கேரளத்துத் தெய்யம், கோலம், துள்ளல் முதலிய ஆட்டங்களில் பாக்குமரப் பட்டைகளில் வண்ணந்தீட்டி அணியப்படும் முகமூடி; a painted mask made of spathe of the areca nut palm (worn by actors in teyyam and kolam tullal); (சேரநா.);.

ம. சித்ரப்பாள

     [சித்திரம் + பாளை]

சித்திரப்பாவை

சித்திரப்பாவை cittirappāvai, பெ. (n.)

   சித்திரத்தில் தீட்டப்பட்ட பெண் வடிவம்; picture, portrait, carved image, especially of a woman.

     “சித்திரப் பாவையி னத்தக வடங்கி” (நன். 41);.

     [சித்திரம் + பாவை. பார்ப்பு = பறவைக் குஞ்சு, மக்கட்குமுவி பார்ப்பு → பாப்பு. ஒ.நோ. கோர்வை → கோவை. பார்வை → பாவை = கண்ணில் தோன்றும் உருவம் பாவை = படிமை, பொம்மை, அழகிய உருவம், பெண் வடிவம்]

சித்திரப்பிரதிமை

 சித்திரப்பிரதிமை ciddirappiradimai, பெ. (n.)

சித்திரப்பாவை (யாழ்ப்); பார்க்க;See sitia-ppaivai.

     [சித்திரம் + பிரதிமை]

 Skt. Pratima → த. பரிதிமை

சித்திரப்புடைவை

சித்திரப்புடைவை cittirappuḍaivai, பெ. (n.)

   1. அச்சடிவேலை (இ.வ.);; printed cloth, chintz.

   2. பல வண்ண ஒவிய வேலைப்பாடுடைய புடவை;  damask.

     [சித்திரம் + புடைவை]

சித்திரப்புணர்ப்பு

சித்திரப்புணர்ப்பு cittirappuṇarppu, பெ. (n.)

   இசை கொள்ளும் எழுத்துகளின் மேல் வல்லெழுத்து வந்தபோது மெல்லொற்று போலப் பண்ணிர்மை நிறுத்துகை (சிலப். 3:56, உரை.););; nasalising the hard consonants in singing a musical piece.

     [சித்திரம் + புணர்ப்பு. புணர் → புணர்ப்பு]

சித்திரப்புதவு

 சித்திரப்புதவு ciddirappudavu, பெ. (n.)

   சித்திரங்களையுடைய வாயில; a decirated door.

     [சித்திரம்+புதவு]

சித்திரப்புறா

சித்திரப்புறா cittirappuṟā, பெ. (n.)

   புள்ளிப்புறா (சீவக.564,உரை);; spotted dove.

     [சித்திரம் + புறா]

சித்திரப்புல்

 சித்திரப்புல் cittirappul, பெ. (n.)

   ஒவியத் தூரிகையிற் பயன்படுத்தும் ஒருவகைப் புல்; a kind of grass or reed used as a painter’s brush.

ம. சித்ரப்புல்லு

     [சித்திரம் + புல்]

சித்திரப்பூச்சு

 சித்திரப்பூச்சு cittirappūccu, பெ. (n.)

   ஒவிய வேலைப்பாடமைந்த வெள்ளி அல்லது தங்கப் பூச்சு; decorative plating (சேரநா.);.

ம. சித்ரப்பூச்சு

     [சித்திரம் + பூச்சு]

சித்திரப்பூமி

சித்திரப்பூமி cittirappūmi, பெ. (n.)

   அழகும் வியப்பும் நிறைந்த சோலை, செய்குன்று முதலிய இடங்கள்; beautiful landscape.

     “சித்திரப்பூமி வித்தக நோக்கி” (பெருங் உஞ்சைக் 33:7);.

     [சித்திரம் + பூமி]

 Skt.bhumi → த. பூமி

சித்திரப்பேச்சு

சித்திரப்பேச்சு1 cittirappēccu, பெ. (n.)

   அழகான பேச்சு; rhetorical utterance.

     [சித்திரம் + பேச்சு]

 சித்திரப்பேச்சு2 cittirappēccu, பெ. (n.)

   தந்திரப் பேச்சு; artful speech.

     [சித்திரம் + பேச்சு]

சித்திரமண்டபம்

சித்திரமண்டபம் cittiramaṇṭabam, பெ. (n.)

   1. ஒவியச்சாலை; painted chamber, hall decorated with pictures, picture-gallery.

   2. ஒலக்க மண்டபம் (சீவக.2370);; royal audience – hall.

     [சித்திரம் + மண்டபம், முள் → முண்டு → மண்டு. மண்டுதல் = கூடுதல், மண்டு → மண்டகம் → மண்டபம்]

சித்திரமண்டலச்சிலந்தி

 சித்திரமண்டலச்சிலந்தி cittiramaṇṭalaccilandi, பெ. (n.)

   நச்சுத் தன்மையுள்ள சிலந்தி; a kind of poisonous spider (சா.அக.);.

     [சித்திரம் + மண்டலம் + சிவந்தி]

சித்திரமண்டலம்

 சித்திரமண்டலம் cittiramaṇṭalam, பெ. (n.)

   நச்சுப் பாம்பு வகைகளுள் ஒன்று; a venamous kind of snake (சேரநா.);.

     [சித்திரம் + மண்டலம். மண்டுதல் = வளைதல். மண்டு → மண்டலம் = வட்டம், வட்டவடிவம், வட்டமாய்ச்சுற்றி வருகை]

சித்திரமாடம்

சித்திரமாடம் cittiramāṭam, பெ. (n.)

   ஒவிய வேலைப்பாடமைந்த, அணியழகு செய்யப்பட்ட மாளிகை; beautiful hall or palace artistically decorated with pictures and paintings.

     “சித்திர மாடத்துத் துஞ்சிய நன்மாறன்” (புறநா.59);

     [சித்திரம் + மாடம்]

சித்திரமூலப்பற்று

 சித்திரமூலப்பற்று cittiramūlappaṟṟu, பெ. (n.)

   கடைச் சரக்குகளாற் செய்யப்படுவதும் வீக்கத்தைப் போக்குவதுமாகிய களிம்பு; an ointment prepared from the bazar ingredients. It is used for reducing swelling for purposes of cure.

     [சித்திர மூலம் + பற்று]

சித்திரமூலம்

சித்திரமூலம் cittiramūlam, பெ. (n.)

   1. கொடுவேலி; Ceylon leadwort.

   2. செங்கொடுவேலி; rosy-flowered leadwort.

   3. நீலக்கொடுவேலி; blue lead-wort.

   4. நிலப்பனை; groundpalm.

   5. காட்டாமணக்கு; English physic nut (சாஅக.);

ம. சித்திரமூலம்

     [சித்திரம்4 + மூலம்]

சித்திரமூலி

சித்திரமூலி cittiramūli, பெ. (n.)

சித்திரமூலம்2, (மலை.); பார்க்க;see sittira-milam,2.

     [சித்திரம் + மூவி]

சித்திரமெழுதுமண்

சித்திரமெழுதுமண் ciddirameḻudumaṇ, பெ. (n.)

   1. செம்மண்;  red ochre.

   2. செம்மணல்:

 red sand.

     [சித்திரம் + எழுதும் + மண்]

சித்திரமேகத்தடாகம்

 சித்திரமேகத்தடாகம் cittiramēkattaṭākam, பெ. (n.)

   மகேந்திரவர்மன் மாமண்டுரில் உண்டாக்கிய ஒர் ஏரி; a lake made by the Pallava king Mahendravarman.

     [சித்திரம் + மேகம் + தடாகம்]

சித்திரமேகலை

 சித்திரமேகலை cittiramēkalai, பெ. (n.)

   மயில்; pea-cock (சா.அக.);.

     [சித்திரம் + மேகலை]

சித்திரமேழி

சித்திரமேழி cittiramēḻi, பெ. (n.)

   1. கலப்பைக் குறி; a plough-emblem cutin stone.

     “திருவாழியும் சித்திர மேழியும் இட்ட கல்நட்டு” (தெ.க.தெ.5, 199);.

   2. ஊரவை (I.M.P.N.A.149);; village assembly.

     [சித்திரம் + மேழி]

மேழி பார்க்க

சித்திரம்

சித்திரம்1 cittiram, பெ. (n.)

   1. ஓவியம்; picture, painting.

     “சித்திரம் பயின்ற செம்பொன் விதானத்து” (பெருங். உஞ்சைக் 37:14);. ‘சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்’ (பழ.);.

   2. சிறப்பு (பிங்.);; excellence.

   3. அழகு; beauty.

     “சித்திரமாக…… செய்த……… பூங்காவின்” (பெருங் வத்தவ. 7:149);.

   4. அணியழகு; decoration, embelishment.

   5. வியப்பானது; object of wonder, surprise.

     “சித்திர மிங்கிது வொப்பது” (கம்பரா.கார்முக.19);

   6. சித்திரப்பேச்சு1 பார்க்க;see sittira-p-peccu1.

   7. சித்திரக்கவி (பிங்.); பார்க்க;see Sittira-k-kavi.

   8. ஒரு சிற்பநூல்; a treatise on architecture.

   9. காடு (பிங்.);; forest.

ம. சித்திரம்

     [செத்தல் = ஒத்தல் செத்து = ஒத்து போல, (தொன்.பொருள் 286 உரை.); செ + திரம் – செத்திரம் →- சித்திரம் = ஒப்பு, ஒவியம், பலவண்ணம், திறமை, புதுமை. ஒ.நோ. செந்தூரம் – சிந்தூரம் செத்தல் = ஒத்தல் ‘திரம்’ தொழிற் பொறு. எ.டு மாத்திரம், மோட்டிரம் → மோத்திரம் = முத்திரம் வடவர் சித்ர என்பதைச் சித் என்பதன் திரிபாகக் கொண்டு, தெளிவாய்த் தெரிதல், விளக்கமான திறம், வண்ண வேறுபாடு வண்ணப்படம் என்று வலிந்து பொருத்தின் காட்டுவர் (வ.வ.149/);]

த. சித்திரம் → Skt. Citra

 சித்திரம்2 cittiram, பெ. (n.)

   புலி; tiger, panther.

     “கதியில் வந்த சித்திரமென” (பாரத. பதின்மு. 125);.

 சித்திரம்3 cittiram, பெ. (n.)

   1. ஓட்டை; hole, slit, opening.

   2. குறைவு; ignominy, blot.

     “மெலிவு தோன்றிய சித்திரம் பெறுதலில்” (கம்பரா. கும்பகரு 293);,

   3. வெளி (மாறனலங் 261. உதா. 626);; void.

   4. பொய்; unreality.

     “சித்திரமிக் கனவில் வாழ்வென” (கந்தரத் 50);.

   5. மந்தணம்; secret

     “பகைவெல் சித்திரம் பலதிறம் பயிற்றி” (பெருங், உஞ்சைக் 37:43);.

   6. சித்திரப்பேச்சு2 பார்க்க;see sittira-p-péccu2.

   7. உட்கலகம்; discord, as in a family.

     [இல் இல்லி-துளை, சிறுதுளை.இன்சில் – சில்லி = ஓட்டை. சில் → சின் → சிந்திரம் → சித்திரம்

 சித்திரம்4 cittiram, பெ. (n.)

   1. கொடுவேலி; Ceylon leadwort.

   2. சிறுகுறிஞ்சா; species of gymnema.

   3. ஆமணக்கு; castor plant.

 சித்திரம்5 cittiram, பெ. (n.)

   1. புதுமைப் பொருள்; novelty.

   2. பல நிறம்; varied colours.

சித்திரம்பேசு-தல்

சித்திரம்பேசு-தல் ciddirambēcudal,    5 செ.கு.வி. (v.i.)

   போலியாகப் பேசுதல், பொய்யாகச் சொல்லுதல்; to utter false with rhetorical style to speak falsehood (சா.அக.);

     [சித்திரம் + பேசு_,]

சித்திரம்வெட்டு-தல்

சித்திரம்வெட்டு-தல் ciddiramveṭṭudal,    5 செகுவி. (v.i)

   கல்லில் ஒவியவேலை செய்தல் (C.E.M.);; to engrave on stones.

     [சித்திரம்1 + வெட்டு]

சித்திரரதன்

 சித்திரரதன் ciddiraradaṉ, பெ. (n.)

   அழகிய தேரையுடைய கதிரவன் (சங்அக);; Sun, as riding in a beautiful chariot.

     [சித்திரம் + இரதன்]

சித்திரர்

சித்திரர் cittirar, பெ. (n.)

   கலகம் விளைப்போர், குழப்பம் விளைப்போர்; quarrelsome, factious people.

     “சித்திரர்க்கெளி யேனலேன்” (தேவா. 859,3);

சித்திரவண்ணச்சேலை

சித்திரவண்ணச்சேலை cittiravaṇṇaccēlai, பெ. (n.)

   வண்ணந்தீட்டிய புடைவை வகை (பஞ்ச.திருமுக. 1160);; a kind of saree.

     [சித்திரம் + வண்ணம் + சேவை]

சித்திரவண்ணம்

சித்திரவண்ணம் cittiravaṇṇam, பெ. (n.)

   நெடிலும் குறிலும் ஒப்பவிரவிய சந்தம் (தொல். பொருள். 534);; a rhythmic verse characterised by euphonic alternation of long and short syllables.

     [சித்திரம் + வண்ணம்]

சித்திரவரி

 சித்திரவரி cittiravari, பெ. (n.)

   கண்விழி; pupil of the eye.

     [சித்திரம் + வரி]

சித்திரவல்லாரி

 சித்திரவல்லாரி cittiravallāri, பெ. (n.)

   சேங்கொட்டை; common marking-nut.

     [சித்திரம் + வல்வாரி]

சித்திரவல்லி

 சித்திரவல்லி cittiravalli, பெ. (n.)

   கசப்பு வெள்ளரி வகை; a species of bitter cucumber.

     [சித்திரம் + வல்லி]

சித்திரவிதழ்

 சித்திரவிதழ் ciddiravidaḻ, பெ. (n.)

   துத்தி (மலை.);; country mallow.

     [சித்திரம் + இதழ்]

சித்திரவிதை

 சித்திரவிதை ciddiravidai, பெ. (n.)

   ஆமணக்கு, முத்துக்கொட்டை; castor seed (சாஅக);.

     [சித்திரம் + விதை]

சித்திரவெழுத்து

 சித்திரவெழுத்து cittiraveḻuttu, பெ. (n.)

   ஒவியக் கலை; the art of painting (சேரநா.);.

     [சித்திரம் + எழுத்து]

சித்திரவேளாகொல்லி

 சித்திரவேளாகொல்லி cittiravēḷākolli, பெ. (n.)

   யாழ்த்திறவகை (திவா.);; a secondary melody-type.

     [சித்திரம் + வேளாகொல்லி]

சித்திரவேளாவளி

சித்திரவேளாவளி cittiravēḷāvaḷi, பெ. (n.)

   பண்வகை (பரத.ராக.104);; a specific melodytype.

சித்திரவோடாவி

 சித்திரவோடாவி cittiravōṭāvi, பெ. (n.)

   ஒவியம் எழுதுவோன் (யாழ்.அக);; painter

     [சித்திரம் + ஓடாவி]

சித்திரவோரை

 சித்திரவோரை cittiravōrai, பெ. (n.)

   உள்ளங்கை வரிகை (ரேகை);களுள் ஒன்று (வின்.);; a line in palm of hand significant in palmistry.

     [சித்திரம் + ஒரை]

சித்திராங்கதை

சித்திராங்கதை ciddirāṅgadai, பெ. (n.)

   அருச்சுனன் மனைவியான பாண்டியன் மகள்; the Pandiayan princess who married Aruccuman.

     “சித்திராங்கதை யென்னுஞ் செஞ்சொல் வஞ்சி” (பாரத அருச்சுனன்றீர்.26);

சித்திராசனம்

சித்திராசனம் cittirācaṉam, பெ. (n.)

   1. ஏந்தாக இருத்தலாகிய ஒக வகை (காசிக. யோக. 15);; a yógic posture which consists in sitting as best suits one’s comfort.

   2. உட்காரப் பயன்படும் சிறிய அரத்தினக் கம்பளம் (சி.சி. 8, 33, நிரம்ப);; small coloured corpet for sitting.

     [சித்திரம் + ஆசனம்]

சித்திரான்னம்

 சித்திரான்னம் cittirāṉṉam, பெ. (n.)

சித்திரச்சோறு பார்க்க;see sittira-c-coru.

     [சித்திரை + அன்னம்]

சித்திரி

சித்திரி1 cittirittal,    4 செகுவி (v.i.)

   1. சித்திர மெழுதுதல்; to paint, make fancy work.

   2. வண்ணித்துப் (அழகாகப்); பேசுதல் (வின்.);; to paintin words, use rhetorical tricks in speech.

   3. கற்பனை செய்தல்; to fashion, invent, as arguments;

 to fabricate.

     “வஞ்சனை தெரிந்து

சித்திரிப்பார்” (பெரியபு. திருதாவுக். 82);.

   4. ஒப்பனை செய்தல்; to beautify.

     “திகழொளி தோன்றச் சித்திரித் தியற்றிய” (பெருங். வத்தவ. 17:76);;

     [சித்திரம் → சித்திரி → சித்திரித்தல்]

வடவர் ‘சித்ர’ என்பதைச் ‘சித்’ என்பதன் திரிபாகக்கொண்டு தெளிவாய்த் தெரிதல், விளக்கமான நிறம், வண்ணவேறுபாடு, வண்ணப்படம் என்று வலிந்து பொருத்திக் காட்டுவர். சித்திரித்தல் என்னும் வினை வடமொழியில் இல்லை (வவ149);.

 சித்திரி2 cittiri, பெ. (n.)

   கெந்தலவணம் (யாழ்.அக.);; mineral salt.

சித்திரிகத்திரி

 சித்திரிகத்திரி cittirigattiri, பெ. (n.)

   மகப்பேற்றிற்குப் பயன்படும் கருவி வகையுளொன்று; an instrument or scissors used for removing the child. (சா.அக.);.

     [சித்திரி + கத்திரி]

சித்திரிகன்

சித்திரிகன் cittirigaṉ, பெ. (n.)

   ஒவியன்; artist.

     “வரைவுறு சித்திரிகன் சித்திர சக்தியைப் போல்” (வேதா.சூ. 26);.

     [சித்திரம் → சித்திரி → சித்திரிகன்]

சித்திரிகை

சித்திரிகை cittirigai, பெ. (n.)

   1. வீணை வகை (பரத.ஒழிபி.15);; a kind of lutc.

   2. நல்லாடை வகை (திவா.);; good, valuable clothes.

     [சித்திரி1 – சித்திரிகை]

சித்திரை

சித்திரை cittirai, பெ. (n.)

   1. பதினான்காம் விண்மீனாகிய நெய்ம்மீன் (பிங்.);; the l4th naksatra, part of Virgo.

   2. தமிழாண்டின் முதல் மாதமாகக் கருதப்படும் மேழம்; known as the first month of the Tamil year, April–May.

     “சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தென” (சிவப். 5:64);.

   சுறவமே தமிழாண்டின் தொடக்கம்;மேமுத்தைக் கொள்வது பொருத்தமன்று

 சித்திரை2 cittirai, பெ. (n.)

   அம்மான்பச்சரிசி (வின்.);; species of euphorbia.

 சித்திரை3 cittirai, பெ. (n.)

   நாகணவாய்ப் புள்; common myna.

சித்திரை திருநாள்

 சித்திரை திருநாள் ciddiraidirunāḷ, பெ. (n.)

   திருவிதாங்கூரை ஆண்ட கடைசிமன்னன்; name of a last king Tiruvidangur.

     [சித்திரை+திரு+நாள்]

சித்திரைக் குழப்பம்

 சித்திரைக் குழப்பம் cittiraikkuḻppam, பெ. (n.)

   மேழ (சித்திரை); மாதத்துப் பெருங்காற்று (வின்.);; stormy weather of Sittirai, the fore-runner of the S.W. monsoon.

     [சித்திரை + குழப்பம்]

சித்திரைக்கஞ்சி

சித்திரைக்கஞ்சி cittiraikkañji, பெ. (n.)

   வெள்ளுவா (சித்திரா பெளர்ணிமை); நாளில் சித்திரகுத்தன் மனநிறைவடையும் பொருட்டு வழங்கும் கஞ்சிய (யாழ்ப்.);; rice gruel distributed on the fullmoon – day of sittirai to propitiate sitragupta.

     [சித்திரை1 + கஞ்சி]

சித்திரைக்கடப்பு

 சித்திரைக்கடப்பு cittiraikkaḍappu, பெ. (n.)

   சீகாழிவட்டத்தில் பெரும்பாலும் கோடையில் விளைவிக்கப்படும் பெருநெல் வகை (இ.வ.);; a kind of paddy generally cultivated in summer in Sirkäli taluk.

     [சித்திரை + கடப்பு]

சித்திரைக்கதை

 சித்திரைக்கதை ciddiraikkadai, பெ. (n.)

   மேழவெள்ளுவா நாளில் கோயில்களிலும் வீடுகளிலும் படிக்கப்படுவதும் நன்மை தீமைகளைக் கூறுவதுமான சித்திரகுப்தன் கதை (யாழ்ப்.);; story of Sitragutta describing rewards and punishments for various good and bad actions, read in temples and houses on Šittirapuranai.

     [சித்திரை + கதை]

சித்திரைக்கரந்தை

 சித்திரைக்கரந்தை cittiraikkarandai, பெ. (n.)

சித்திரைக்கருந்தலை (நெல்லை); பார்க்க;see Sittirai-k-karundalai.

     [சித்திரை + கரந்தை]

சித்திரைக்கருந்தலை

 சித்திரைக்கருந்தலை cittiraikkarundalai, பெ. (n.)

   விளைச்சல் (சாகுபடி); முற்றுப் பெற்றதும் பின்னேற்பாடுகளை நடத்தற்குரிய மேழ (சித்திரை); மாத முடிவு; the closing part of Śittirai when the agricultural season ends and plans are made for cultivation in the ensuing season.

     [சித்திரை + கருத்தலை. கருத்தலை = முடிவு]

சித்திரைக்கார்

சித்திரைக்கார் cittiraikkār, பெ. (n.)

   மேழ (சித்திரை); மாதத்தில் அறுவடையாகும் நெல்வகை (G.T.D. I.94);; a kind of coarse paddy harvested in sittirai.

     [சித்திரை + கார்]

சித்திரைக்காலி

 சித்திரைக்காலி cittiraikkāli, பெ. (n.)

   நெல் வகை (யாழ்ப்.);; a kind of paddy.

     [சித்திரை + காலி]

சித்திரைச்சிலம்பன்

 சித்திரைச்சிலம்பன் cittiraiccilambaṉ, பெ. (n.)

   காவிரியில் உண்டாம் மேழ (சித்திரை);ப் பெருக்கு (இ.வ.);; April freshes in the Kaviri.

     [சித்திரை + சிவம்பன். சிவம்பன் – புதுவெள்ளம்]

சித்திரைச்சுழி

 சித்திரைச்சுழி cittiraiccuḻi, பெ. (n.)

   மேழ மாதத்துச் சுழல் காற்று (இ.வ.);; wind-storm occurring in April.

     [சித்திரை + சுழி]

சித்திரைச்சுழியன்

சித்திரைச்சுழியன் cittiraiccuḻiyaṉ, பெ. (n.)

   1. சித்திரைச்சுழி பார்க்க;see sittirai-c-culi.

   2. குறும்பன் (இ.வ.);; mischievous urchin.

     [சித்திரை + சுழலியன்]

சித்திரைப்பால்

சித்திரைப்பால் cittiraippāl, பெ. (n.)

   1. ஆவிரை; tanners cassia.

   2. அம்மான் பச்சரிசி; species of euphorbia (சா.அக.);.

     [சித்திரை + பால்]

சித்திரைப்பூ

 சித்திரைப்பூ cittiraippū, பெ. (n.)

   மே (சித்திரை);த் திங்களில் முழுநிலாவன்று நிலத்தில் பூக்கும் நீறு; the salt found on the soil of fuller’s earth on the full moon night in the month of Sittirai (சா.அக.);.

     [சித்திரை + பூ]

சித்திரைமுழுநிலவு

 சித்திரைமுழுநிலவு cittiraimuḻunilavu, பெ. (n.)

   மேழ மாதத்து முழு நிலவில் நிகழுந் திருவிழ; festival celebrated on the fullmoon day in the month of Sittirai.

     [சித்திரை + முழுநிலவு]

சித்திரையன்நெல்

 சித்திரையன்நெல் cittiraiyaṉnel, பெ. (n.)

   நெல்வகை (A);; a kind of paddy.

சித்திரைவெயில்

 சித்திரைவெயில் cittiraiveyil, பெ. (n.)

   சுட்டெரிக்கும் மேழ (சித்திரை); மாதத்துக் கடும் வெயில்; burning April Sun (சா.அக.);.

     [சித்திரை + வெயில்]

சித்திரோடாவி

 சித்திரோடாவி cittirōṭāvi, பெ. (n.)

   கல்லில் சிலை முதலியன செய்யும் சிற்பி (யாழ்ப்.);; sculpture, artisan who carves images, statues, etc.

     [சித்திரம் + ஓடாவி]

சித்திலி

 சித்திலி cittili, பெ. (n.)

   சிற்றெறும்பு (யாழ்.அக);; a species of ant.

     [சில் = சிறுமை. சில் → சித்து → சித்தில் → சித்திலி]

சித்திலிகை

 சித்திலிகை cittiligai, பெ. (n.)

   அச்சடிசீலை (வின்.);; printed or painted cloth.

சித்திலைச்செடி

 சித்திலைச்செடி cittilaicceḍi, பெ. (n.)

குன்றி மணி,

 crab’s eye (சாஅக);.

     [சிற்றிலை → சித்திலை. சித்திலை + செடி]

சித்தில்

 சித்தில் cittil, பெ. (n.)

   அறிவு (R);; knowledge.

     [சித்து → சித்தல் → சித்தில்]

சித்திவலை

 சித்திவலை cittivalai, பெ. (n.)

சித்திவலையம் பார்க்க;see Sitti-Valaiyam (சா.அக.);.

சித்திவலையம்

 சித்திவலையம் cittivalaiyam, பெ. (n.)

   அம்மான் பச்சரிசி; an annual with erect or procumbent branches (சா.அக.);.

     [சித்தி + வலையம்]

சித்து

சித்து1 cittu, பெ. (n.)

   1. அறிவு; intellect, intelligence.

     “சித்தென வருமறைச் சிரத்திற் றேறிய” (கம்பரா. இரணியன். 60);.

   2. அறிவுடைப் பொருள் (சூடா.);; intelligent being.

   3. ஆதன்; soul.

     “சித்த சித்தொ டீசனென்று” (பாரத. பதினைந்தாம்.1);

     [செ → செத்து → சித்து (மு.தா.202);. ஒ.நோ: செந்தூரம் → சிந்துரம்]

செத்தல் =

   1. கருதுதல்.

     “அரவுநீருணன் செத்து” (கவித்.45);

   2. அறிதல்

     “துதிக்கா வன்னந் துணைசெத்து” (ஐங்.106);.

சித்து = கருத்து, அறிவு, கருதியதை அடையும் திறம்

 சித்து2 cittu, பெ. (n.)

   1. மாயவித்தை; magic.

   2. கலம்பகத்தின் உறுப்புகளுள் ஒன்று. (பன்னிருபா.211);; a constituent theme of kalambagam appearing to be a magician’s brag but really signifying ordinary things.

   3. வேள்வி (பிங்.);; sacrifice.

   4. வெற்றி (சூடா.);; success.

   5. ஒருவகை வரிக்கூத்து (சிலப். 3:13, உரை.);; a masquerade dance.

 சித்து3 cittu, பெ. (n.)

   கொத்தனுக்கு உதவி செய்யும் சிற்றாள்; assisting hand of a brick layer.

     [சிற்றாள் → சித்தான் → சித்து]

சித்துக்காரன்

சித்துக்காரன் cittukkāraṉ, பெ. (n.)

   மாயவித்தை கற்றவன்; magician.

     [சித்து2 → சித்துக்காரன்]

சித்துடு

சித்துடு1 cittuḍu, பெ. (n.)

   நேர்வாளம்; croton.

 சித்துடு2 cittuḍu, பெ. (n.)

   கிலுகிலுப்பை (மலை.);; laburnum- leaved rattlewort.

சித்துநீர்

சித்துநீர் cittunīr, பெ. (n.)

   இதளியம் (பாதரசம்);; mercury.

     “சீருணஞ் சித்துநீர் செறிந்த தொத்தும்” (ஞானா.45:13);

     [சித்து + நீர்]

சித்துப்பொருள்

சித்துப்பொருள் cittupporuḷ, பெ. (n.)

   அறிவுடைப் பொருள்; intelligent, sentient being, opp. to cada-p-porul.

     [சித்து1 + பொருள்]

சித்துரு

சித்துரு citturu, பெ. (n.)

   அறிவு வடிவான கடவுள்; god, as the embodiment of intelligence.

     “மெய்ச் சித்துரு வென்றறி” (காஞ்சிப்பு. வயிர. 9);.

     [சித்து1 + உரு]

சித்துருபம்

 சித்துருபம் citturubam, பெ. (n.)

   சிறுமரவகை, நேர்வாளம் (மலை.);; croton.

சித்துவித்தை

சித்துவித்தை cittuvittai, பெ. (n.)

   செப்படி வித்தை, புரட்டு, ஏமாற்றுவித்தை, மாய வித்தை; magic, jugglery, miracle.

     [சித்து2 + வித்தை]

சித்துவிளையாடு_தல்

சித்துவிளையாடு_தல் cidduviḷaiyāṭudal,    5 செ.கு.வி.(v.i.)

   1. சித்திகள் செய்தல்; to exhibit supernatural powers.

   2. இயற்கையிறந்தன செய்தல், மாயவித்தை செய்தல்; to perform magic.

     [சித்து2 + விளையாடு_,]

சித்துவிளையாட்டு

 சித்துவிளையாட்டு cittuviḷaiyāṭṭu, பெ. (n.)

   மாயவித்தை; magic.

சித்தூர்மட்டம்

 சித்தூர்மட்டம் cittūrmaṭṭam, பெ. (n.)

தேரின் அடிப்பாகத்தை அடுத்துள்ள பகுதிகள்:

 lower parts of the temple car.

     [சிற்று+ஊர்மட்டம்]

சித்தேரி

 சித்தேரி cittēri, பெ. (n.)

சிற்றேரி பார்க்க;see sirreri.

     [சிற்றே → சித்தேரி]

சித்தை

சித்தை1 cittai, பெ. (n.)

   1. எண்ணெய்த்துருத்தி (வின்.);; leather case for ghee or oil.

   2. எண்ணெய் முதலியன வைக்கும் தகர ஏனம் (சென்னை);; tin can for oil.

தெ. சித்தே

 சித்தை2 cittai, பெ. (n.)

   மலைமகள் (சிவரக. தாருக. 30);; Parvati.

     [சித்து1 → சித்தன் (ஆ.பா.); → சித்தை (பெ.பா);]

சித்தோடு

 சித்தோடு cittōṭu, பெ.(n.)

   ஈரோடு வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Erode Taluk.

     [சிறு+[தோடு]ஓடை]

சிந்தகம்

சிந்தகம்1 cindagam, பெ. (n.)

   புளியமரம்; tamarind tree.

     “சிந்தகத்துக் கீழமர்ந்து” (பாகவ. சிறப்புப்பாயி.2);.

புளியின் செந்நிறம் பற்றிப் புளியமரத்தைக் குறித்தது.

 சிந்தகம்2 cindagam, பெ. (n.)

சிதகம் (சது.); பார்க்க;see Sidagam.

 சிந்தகம்3 cindagam, பெ. (n.)

   1. வெள்ளை வெப்பு நஞ்சு; white arsenic.

   2. சிறுநாகப்பூ; iron wood of Ceylon.

சிந்தகி

 சிந்தகி cindagi, பெ. (n.)

   சொத்து (வின்.);; property. Persn. zindagi

சிந்தடி

சிந்தடி1 cindaḍi, பெ. (n.)

   இருசீரடி (குறள்);க்கும் நாற்சீரடி (அளவு);க்கும் இடைப்பட்ட முச்சீரடி (தொல்.பொருள்.349);; metrical line of three feet.

     [சிந்து + அடி. ஏழும் எட்டும் ஒன்பதும் ஆகிய எழுத்தினான் மூன்று சிராப் வருவது சித்தடி]

சிந்ததியம்

 சிந்ததியம் cindadiyam, பெ. (n.)

   கருங்கொள்; black horse-gram.

சிந்தனை

சிந்தனை cindaṉai, பெ. (n.)

   1. எண்ணம்; thought, idea.

     “சிந்தனை யுரைசெய்வான்” (கம்பரா. கங்கை. 53);.

   2. படித்த பாடத்தை மீண்டும் நினைக்கை; revision of lessons.

     ‘படித்தவற்றைச் சிந்தனை செய்யவேணும்’ (உ.வ.);

   3. ஊழ்கம் (தியானம்);; meditation.

     ‘அதே சிந்தனையா யிருக்கிறான்’ (உ.வ.);

   4. கவலை; care, concern, grief.

     “சிந்தனை முகத்திற் றேக்கி” (கம்பரா. குகப். 35);.

   5. கவனம். (வின்.);; attention, consideration.

   6. குறி கேட்கும் செய்தி; subject about which a person consults a soothsayer.

     “நட்டமுட்டி சிந்தனை” (சூடா.உள்.);

     [சித்து → சித்து → சிந்தை → சிந்தனை. சித்து = அறிவு, கருத்து, கருதியதை அடையும் திறம் (மு. தா. 184]

த. சிந்தனை → Skt. cintana

சிந்தன்

சிந்தன்1 cindaṉ, பெ. (n.)

   குறளனிலும் சிறிது நெடியவன் (தொல். பொருள். 349, உரை);; dwarfish person.

     “சேயனாய் வந்தொரு சிந்தன் போன்றுலாய்” (கந்தபு. அவைபுகு. 75);.

     [சிந்து2 → சிந்தன். மக்களுள் மிகக் குன்னமானவனு (குறளன்);க்கும் அளவாக வளர்த்தவனு (அளவன்);க்கும் இடைப் பட்ட உயரமானவன் சித்தன்]

 சிந்தன்2 cindaṉ, பெ. (n.)

சிதகம் (பிங்.); பார்க்க;see Sidagam.

சிந்தம்

சிந்தம்1 cindam, பெ. (n.)

   புளியமரம்.(பிங்.);; tamarind tree.

தெ. சிந்த

 சிந்தம்2 cindam, பெ. (n.)

சிதகம். (சது); பார்க்க;see sidagam.

 சிந்தம்3 cindam, பெ. (n.)

   பாவகை; a kind of metre.

     “அறிவுடைநம்பியார் செய்த சிந்தம்”. (யாப்.வி.93, பக்.352);.

சிந்தாக்கட்டிகை

சிந்தாக்கட்டிகை cindāggaṭṭigai, பெ. (n.)

   அட்டிகை வகை;- a kind of necklace.

     [சித்தாக்கு1 + அட்டிகை]

சிந்தாக்கு

சிந்தாக்கு1 cindākku, பெ. (n.)

சிந்தாக்கட்டிகை பார்க்க;see sindikkattigai.

     “சிந்தாக்கையிருமுலையாட் கேன்கழுத்தி விட்டேன்” (விறலி விடு. 695);

   க. சிந்தாக;தெ. சிந்தாகு: து. சிந்தாகு

 சிந்தாக்கு2 cindākku, பெ. (n.)

   சிறுவர் விளையாட்டு வகை (வின்.);; a child’s game.

மறுவ. தொளாக்கு

சிந்தாதேவி

சிந்தாதேவி cindātēvi, பெ. (n.)

மதுரையில்

   பழங்காலத்தில் வணங்கப்பட்டு வந்த கலைமகள்; goddes Sarasvadi worshipped in ancient Madurai.

     “சிந்தாதேவி செழுங்கலை நியமம்” (மணிமே 14:17);.

     [சித்து = அறிவு, சித்து → சிந்து + தேவி]

சிந்தானி

 சிந்தானி cindāṉi, பெ.(n.)

   திருவாடானை வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Tiruvadanai Taluk.

     [சிந்தாமணி-சிந்தாணி]

சிந்தாமணி

சிந்தாமணி cindāmaṇi, பெ. (n.)

தென்னார்க் காடு மாவட்டத்தில் உள்ள ஓர் ஊர்

 name of the village in South Arcot.

     [சிந்தா+மணி (ஒளி குன்றாதமணி]

 சிந்தாமணி1 cindāmaṇi, பெ. (n.)

   1. விரும்பிய வனைத்துங் கொடுக்கவல்ல தெய்வமணி; a mythical gem believed to yield to its possessor everything that is desired.

     “சிந்தாமணி தெண்கடலமிர்தம்” (திருக்கோ. 12);.

   2. சீவகசிந்தாமணி பார்க்க;see sivaga sindamani.

     “சிந்தாமணி யோதியுணர்ந்தார்” (சீவக. 3143);

   3. ஒருவகை மருந்து (வின்.);; a compound medicament.

   4. குளம்புக்கு மேலுள்ள குதிரைச் சுழி (அசுவசா.12);; auspicious curl-mark just above horse’s hoofs.

ம. சிந்தாமணி

     [சித்து + மணி. மண்ணுதல் = கழுவுதல். மண் → மண்ணி → மணி = கழுவப்பெற்ற ஒளிக்கல்]

 சிந்தாமணி2 cindāmaṇi, பெ. (n.)

   பண்வகை (பரதராக 103);; a specific melody- type.

 சிந்தாமணி3 cindāmaṇi, பெ. (n.)

   1. சமணர் காலத்தில் தென்னகத்தில் தமிழர் கையாண்டு வந்த சிறந்த மருத்துவ நூல்களின்று திரட்டி எழுதிய உயர்ந்த மருத்துவ நூல்; an excellant treatise on medicine consisting purely of selections from the medical works of Siddars compiled by the Jains of Southern India.

   2. தமிழ்ச் சித்த மருத்துவ நூல்களினின்று வடமொழியில் மொழிபெயர்த்த நூல்; a work translated from the Tamil Sittars medical works into Sanskrit.

   3. அகத்தியர் செய்த தமிழ் மருத்துவ நூல்களிலிருந்து திரட்டி மலையாளத்தில் இப்போது கையாளப்பட்டு வரும் மருத்துவ நூல்; an abridged edition of the supposed Agattiyar’s work on Tamil medicines, used at the present day by the Malayalam.

   4. இழிந்த மாமழையைப் பொன்னாக்குங் கல்; philosopher’s stone capable of transmuting inferior metals into gold.

சிந்தாமணிக்குளிகை

 சிந்தாமணிக்குளிகை cindāmaṇigguḷigai, பெ. (n.)

   நாட்பட்ட மலச்சிக்கல், மிகுவெப்பம், களைப்பு, உடல்வலி முதலானவற்றை அகற்றும் ஆயுள்வேதமாத்திரை (சா.அக);; a pill prepared according to the process of Ayurvèda and prescribed for removing constipation rheumatism through excess of heat all weariness and pain in the system.

     [சித்தாமணி + குளிகை. குள் → குளிகை]

சிந்தாமணிச்சாறு

 சிந்தாமணிச்சாறு cindāmaṇiccāṟu, பெ. (n.)

   ஈளை, எலும்புருக்கி, நீர்க்கோவை, மேகம் முதலான பெரிய நோய்களுக்காக, வெள்ளி, தாம்பிரம் அயம், பொன், முத்து முதலான வற்றின் பொடிகளுடன், இஞ்சி, கரிசாலைச் சாறு விட்டு அரைத்துச் செய்யப்படும் ஆயுள் மருத்துவ மருந்து; a medicine prepared as per process of Ayurveda by grinding the calcined oxides of silvercopper iron, pearland prescribed for great diseases as asthma, consumption, dropsy, venerel complaints etc.

     [சிந்தாமணி + சாறு]

சிந்தாமணிமருத்துவன்

 சிந்தாமணிமருத்துவன் cindāmaṇimaruttuvaṉ, பெ. (n.)

   அகத்தியர் மருத்துவ நூலில் கூறியவாறு மலையாள மருத்துவத்திற்கு மாறாக நெஞ்சாங்குலை (இருதய); மருத்துவஞ் செய்யுந் தமிழ் மருத்துவன்; the Tamil physicians who follow Agattiyar’s work on medicine in opposition to Malayalam physicians.

     [சித்தாமணி + மருத்துவன்]

சிந்தாமணிமருத்துவம்

 சிந்தாமணிமருத்துவம் cindāmaṇimaruttuvam, பெ. (n.)

   தமிழ்நாட்டில் வழங்கி வந்த மருத்துவ முறை. பின்பு மலையாளத்தில் மொழி பெயர்க்கப்பட்டு, அங்குள்ள சரகசு சுருத மருத்துவமுறைக்கு மாறாகக் கையாளப்படும் மருத்துவ முறை; a translation of Tamil Sitta medical works in Malayalam and practised by some of the physicians in Malabarin opposition to Sanskrit Ayurveda Saraka and Susuruda.

     [சித்தாமணி + மருத்துவம்]

சிந்தாமணிமாத்திரை

சிந்தாமணிமாத்திரை cindāmaṇimāttirai, பெ. (n.)

சிந்தாமணிக் குளிகை பார்க்க;see Sindá mani-kuligai.

     “பிறங்கு சிந்தாமணி மாத்திரையல்லவோ” (தனிப்பா. ii, 149: 375);.

     [சிந்தாமணி + மாத்திரை]

சிந்தாமணிவிளக்கு

சிந்தாமணிவிளக்கு cindāmaṇiviḷakku, பெ. (n.)

சிந்தாவிளக்கு-2 பார்க்க;see Sindavilakku-2.

சிந்தாரிப்பேட்டை

 சிந்தாரிப்பேட்டை cindārippēṭṭai, பெ. (n.)

   சென்னையில் உள்ள ஓர் ஊர்; an area in Chennai city.

த.சிந்தாதிரிப்பேட்டை

 E. Saint Andrew’s pet).

சிந்தார்மணி

 சிந்தார்மணி cindārmaṇi, பெ. (n.)

   தென்னிந்தியாவில் குறிப்பாக மலையாளத்தில் வழங்கி வரும் மருத்துவ முறை; a system of medical treatment prevalent in South India (சேரநா.);.

ம. சிந்தாமணி

     [சிந்தாமணி – சிந்தார்மணி]

சிந்தார்மணியன்

 சிந்தார்மணியன் cindārmaṇiyaṉ, பெ. (n.)

   ஒரு வகை நெல்; a varicty of paddy (சேரநா.);.

ம. சிந்தாமணியன்

     [சிந்தார்மணி → சிந்தார்மணியன்]

சிந்தாவிளக்கு

சிந்தாவிளக்கு cindāviḷakku, பெ. (n.)

   1. சிந்தையை விளக்கமாக்கும் கலைமகள்; Sarasvadi, as mind – illuminator.

     “சிந்தா விளக்கின் செழுங்கலை நியமத்து” (மணிமே.13:106);.

   2. அணையாவிளக்கு; ever burning lamp.

     [சிந்தை + விளக்கு]

சிந்தி

சிந்தி1 cindittal,    4 செ.குன்றாவி (v.t.)

   1. நினைத்தல்; to think of, consider.

     “மறுமையைச் சிந்தியார் சிற்றறிவினார்” (நாலடி, 320);.

   2. மனனம் பண்ணுதல்; to reflect, ponder.

     “பொது வியல்பு……கேட்டல் சிந்தித்த லென்னும் இருதிறத்தா னுணரப்படும்” (சி.போ.சிற்.பாயி. பக்.4);

   3. ஓகம் செய்தல்; to meditate.

     “எம்பெருமானென் சொல்லிச் சிந்திக்கேனே”(திருவாச. 5:25);

   4. கேட்ட பாடத்தை மீண்டும் நினைத்தல்; to revise lessons.

   5. விரும்புதல்; to desire.

     “நம்மிறுதி சிந்தியாதவர் யார்” (கம்பரா. யுத்த. மத்திரப். 106);

ம. சிந்திக்குக

     [சித்து → சித்து → சித்தி-,]

 சிந்தி2 cindittal,    4 செ.குவி (v.i.)

   கவலைப்படுதல்; to be concerned, sorrowful.

     ‘கழிந்ததைக் குறித்துச் சிந்திக்கலாகாது’ (உ.வ.);.

     [சித்தி1 → சித்தி2]

 சிந்தி3 cindi, பெ. (n.)

   தலையணி வகையைச் சார்ந்த சுட்டி என்னும் அணி; an ornament forming part of talai-ani.

 சிந்தி4 cindi, பெ. (n.)

   1. உப்பு; salt in general.

   2. வாதமடக்கி; wind killer

   3. எலுமிச்சம்பழச் சாறு; lime-juice.

சிந்திதம்

 சிந்திதம் cindidam, பெ. (n.)

   நினைக்கப்பட்டது (சங்.அக.);; that which is thought of or considered.

     [சித்தி → சித்திதம்]

சிந்தினர்

சிந்தினர் cindiṉar, பெ. (n.)

   குள்ளர்; dwarfs.

     “நெடியர் சிந்தினர் குறியினர்” (கந்த. படையெழு.7);.

     [சித்து → சித்தினர்]

சிந்திபிந்தி

சிந்திபிந்தி cindibindi, பெ. (n.)

   சின்னா பின்னம்; shred, shattered bit.

     “கட்டுக்குலைந்து சிந்தி பிந்தியாய்ப் போயிற்றிறே” (திவி. பெரியாழ். 2.1:5 வியா – பக். 224);.

மறுவ. சின்னாபின்னம்

     [சிந்துதல் = சிதறுதல் சிந்து → சிந்தி. சிந்திபிந்தி = எதுகை நோக்கி வந்த இணைமொழி]

சிந்திப்பு

 சிந்திப்பு cindippu, பெ. (n.)

   நினைப்பு; thought.

     [சிந்தி → சிந்திப்பு]

சிந்தியம்

சிந்தியம் cindiyam, பெ. (n.)

   1. நினைக்கத்தக்கது (சங்.அக.);; that which is worthy of consideration.

   2. சிவத் தோன்றியங்கள் (சிவாகமம்); இருபத் தெட்டனுளொன்று (சைவக.பொது.331, உரை);; an ancient saiva scripture in Sanskrit, one of 28 sivagamam.

     [சிந்தி → சிந்தியம்]

சிந்தியல்வெண்பா

சிந்தியல்வெண்பா cindiyalveṇpā, பெ. (n.)

   மூன்றடியாலமைந்த வெண்பா வகை (காரிகைசெய். 5, உரை);; venba verse of three lines.

     [சிந்து3 + இயன் + வெண்பா]

சிந்திராபதி

 சிந்திராபதி cindirāpadi, பெ. (n.)

   ஆகாசக் கருடன் கிழங்கு;  sky root.

சிந்து

சிந்து1 cindudal,    5 செகுவி (v.i.)

   1. சிதறு படுதல்; to be strewn, spilled.

   2. சொட்டி யொழுகுதல்; to trickle, stream.

கண்ணீர் சிந்தியது.

   3. அழிதல்; to be destroyed.

     “இடர்தொடரா வினையான சிந்தும்” (தேவா.37:1);

   தெ. சிந்து;ம. சிந்துக.

 சிந்து2 cindudal,    5 செ.குன்றாவி (v.t.)

   1. சிதறுதல்; to scatter or strew.

     “தூயபொன் சிந்தி” (திருவாச. 9:3);

   2. நீக்குதல்; to remove.

     “மறுக்கஞ் சிந்தினார்” (கம்பரா. மருத்து. 105);.

   3. தெளித்தல்; to spill, sprinkle, shed.

   4. செலவழித்தல்; to spend, waste.

     “சிந்து நெறிகளகலாமல்” (விநாயகபு. 2:66);.

   5. பரப்புதல்; to cast on all sides, expand.

     “கண் சென்றுலாய்ப் பிறழச்சிந்தி………..ஆடும்” (சீவக. 2287);.

   6 மூக்கைச் சிந்துதல்; to blow the nose.

   7. அழித்தல்; to destroy.

     “புர மூன்றும் . . . மூரல் கொடு சிந்தி” (காஞ்சிப்பு. இருபத்.131); (க. சிந்து);.

   8. களைதல் (பிங்.);; to pluck up, root out.

   9. பயனிலவாகச் செய்தல்; to render futile.

     “பண்டு தானுடை வரங்கள் சிந்துவன்” (கம்பரா. ஒற்றுக். 64);.

   10. வெட்டுதல்; to cut off.

     “வாளாற் செறுநர் தங்களுடல் சிந்துவர்” (கந்த, இரண்டா. நாட். சூர. உயுத்.341);

தெ. சீது, க. சிந்து

     [உல் → இல் → இல்லி = துளை, சிறுதுளை. இல்லிக்குடம் = துனையுள்ள குடம். உல் → உள் → உரை → உகு. உகுதல் = உள்ளிருந்து ஒழுகுதல், தத்தல், சிந்துதல் இல் → சில் ஒழுகுதல். ஒ.நோ. இல்லி மூக்கு → சில்லிமூக்கு = குருதி ஒழுகும் மூக்கு. சில் → சின் → சிந்து]

 சிந்து3 cindu, பெ. (n.)

   1. குறளினுஞ் சிறிது நெடியனாய் மூன்றடியுயரமுள்ளவன்; dwarf, about 3ft. high, dist. fr. kural.

     “குறள் சிந்தினொ டோரு நடந்தன” (சீவக. 631);

   2. சிந்தடி (காரிகை, உறுப். 12); பார்க்க;see sindagi.

   3. இசைப்பா வகை. (சிலப். 6:35, உரை);; a kind of musical composition.

   4. ஒருவகை வரிக்கூத்து (சிலப். 3: 13, உரை);; a masquerade dance.

     [சில் → சின் → சித்து. சித்துதல் = நீங்குதல், களைதல், குறைதல், சிந்து(தல்); → சிந்து → அளவிலிருந்து சற்றுக் குறைவான நிலை] இசைத் தமிழ்ப் பாட்டு வகைகளுள் ஒன்று அடிக்குறுமை பற்றிச் சிந்து எனப்பெயர் பெறும்.

 சிந்து4 cindu, பெ. (n.)

   1. கடல்; sea, ocean.

     “தேர்மிசைச் சென்றதோர் சிந்து” (கம்பரா. ஆற்றுப். 32);.

   2. நீர் (பிங்.);; water.

   3. ஆறு (பிங்.);; river.

   4. சிந்து ஆறு; the river Indus.

     “கிளர்சே ணிமயமுங் கெங்கையுஞ் சிந்துவும்” (பெருங். நரவாண. 4:122);.

   5. ஐம்பத்தாறு நாடுகளுள் ஒன்று; Sindh, as the country of the Indus, one of 56 desam.

   6. பதினெண்மொழிகளுள் சிந்து நாட்டில் வழங்கும் மொழி (திவா.);; the language of Sindh, one of the 18 languages referred to in Tamil works.

     [சிந்துதல் = துனிசிதறுதல், நீ தெளித்தல், நீர் ஒழுகுதல் சிந்து(தல்); → சிந்து]

ஆரியர் வருமுன்பே தமிழரும் திரவிடரும் பனிமலை வரை பரவியிருந்ததால், சிந்தாற்றைத் தமிழர் முன்னரே அறிந்திருத்தல் வேண்டும்.

வடவர் ஸித் (dh); என்னுஞ் சொல்லை மூலமாக ஐயுற்றுக் கூறுவர். ஸித் = செல் (வ.வ.150);.

த.சிந்து → Skt. sindhu

 சிந்து5 cindu, பெ. (n.)

   பண்; musical note.

     “சிந்தொக்குஞ் சொல்லினார்” (கம்பரா. இராவணன் சோகப்.38);.

ம. சிந்து

     [செந்து → சித்து. செந்து = பெரும் பண்களுள் ஒன்று]

 சிந்து6 cindu, பெ. (n.)

   கொடி, பதாகை; flag, banner.

     “தீமதலை சிந்தா” (கந்தரந்.21);.

 Mhr. Jhenda

 சிந்து7 cindu, பெ. (n.)

   1. சிந்துப்பு; Sindh salt.

   2. வைடூரியம்; a precious gem – cat’s eye.

 சிந்து8 cindu, பெ. (n.)

   இருவாட்சி (வின்.);; Tuscan jasmine.

 சிந்து9 cindu, பெ. (n.)

   கால்நடைகளின் மேற்றோலில் காணப்படும் ஒரு வகை வெள்ளைப் புள்ளி; a kind of spot on the skin of cattle (சேரநா.);.

ம. சிந்து

வெள்ளைப் புள்ளிகளையுடைய ஆடு, மாடுகளையும் ‘சிந்து’ என்ற சொல் காலப்போக்கில் குறிக்கலாயிற்று.

சிந்துகம்

சிந்துகம்1 cindugam, பெ. (n.)

   நொச்சி (மலை);; stalked leaflet chaste-tree.

     [சிந்து → சிந்துகம்]

 சிந்துகம்2 cindugam, பெ. (n.)

   மூக்கு; nose.

     [சிந்து → சித்துகம் = சளி சித்தும் உறுப்பு]

சிந்துகி

 சிந்துகி cindugi, பெ. (n.)

   சீமையகத்தி; ringworm shrub.

சிந்துக்காணி

 சிந்துக்காணி cindukkāṇi, பெ. (n.)

   அசையும் சொத்து (வின்.);; goods, chattels, movables.

 u. zindagani

     [சிந்து + காணி]

சிந்துக்கொடி

 சிந்துக்கொடி cindukkoḍi, பெ. (n.)

சீந்தில் பார்க்க;see Sindil.

     [சிந்து + கொடி]

சிந்துசம்

 சிந்துசம் sindusam, பெ. (n.)

   உப்பு; salt.

     [சிந்து → சிந்துசம்]

சிந்துசாரம்

சிந்துசாரம் cinducāram, பெ. (n.)

   கடலுப்பு (வின்.);; sea-salt.

     [சிந்து3 + சாரம்]

சிந்துநீர்

சிந்துநீர் cindunīr, பெ. (n.)

   மூக்குச்சளி; mucous from the nose.

     [சிந்து1 + நீர்]

சிந்துபலம்

 சிந்துபலம் cindubalam, பெ. (n.)

   இந்துப்பு; sindu salt.

சிந்துபாலவம்

 சிந்துபாலவம் cindupālavam, பெ. (n.)

   கடல் நுரை; cuttle-fish bone.

சிந்துபுட்பகம்

 சிந்துபுட்பகம் cindubuṭbagam, பெ. (n.)

   சுரபுன்னை; soora poon.

சிந்துப்பிழுக்கை

சிந்துப்பிழுக்கை cinduppiḻukkai, பெ. (n.)

   வரிக்கூத்து வகை (சிலப்.3: 13, உரை.);; a masquerade dance.

     [சிந்து + பிழுக்கை]

சிந்துப்பு

சிந்துப்பு cinduppu, பெ. (n.)

   சிந்து நாட்டிலுள்ள மலை, பாறை முதலானவற்றில் பனியினால் இயற்கையாய் விளையும் உப்பு; இருபத்தொரு உப்பு வகைகளுள் இதுவும் ஒன்று; வெங்காரமுடையதும், சித்த மருத்துவத்தில் மிகுதியாகப் பயன்படுவதுமான இவ்வுப்பு, பெருங்கட்டிகளாயிருக்கும்; Sindh salt It is one of the 21kinds of salt. It is formed naturally on mountains and rocks being soldified from the felling dew. It is an impure chloride of sodium. It occurs in large masses and is used in siddha medicine for binding borax.

     [சித்து + உப்பு]

சிந்துப்பூ

 சிந்துப்பூ cinduppū, பெ. (n.)

   கடலில் தோன்றும் பூவாகிய சங்கு (மூஅ);; conch, as flower of the ocean.

     [சிந்து + பூ]

சிந்துமணி

 சிந்துமணி cindumaṇi, பெ. (n.)

களத்தில் உதிர்ந்து கிடக்குந் தவசம் (இ.வ.);:

 stray grains that lie strewn on the threshing-floor, dist. fr. sidarumani.

     [சிந்து + மணி. முன் → (மள்); → மண் → மணி = தவசமணி.]

சிந்துரக்கட்டி

சிந்துரக்கட்டி cindurakkaṭṭi, பெ. (n.)

   செங்காவி; lump of lead ochre.

     “சந்தனக் குறையுஞ் சிந்துரக் கட்டியும்” (சிவப் 25:39);

     [சிந்துரம் + கட்டி]

சிந்துரதம்

சிந்துரதம் cinduradam, பெ. (n.)

   இந்துப்பு (மூ.அ.);; rock-salt.

     [சித்து3 + ரதம். அரத்தம் → ரத்தம் → ரதம்]

சிந்துரத்தம் பார்க்க

சிந்துரத்தம்

 சிந்துரத்தம் cindurattam, பெ. (n.)

   சிந்து நாட்டில் விளையுஞ் சிவப்பு நிறமுள்ள உப்பு; a red salt obtained from Sindh.

     [சிந்து + அரத்தம். அர் → அரக்கு = சிவந்த மெழுகு. அர் → அரத்தம் = சிவப்பு, சிவப்பு நிறவுப்பு)

சிந்துரத்தாதிகம்

 சிந்துரத்தாதிகம் cindurattātigam, பெ. (n.)

   எலுமிச்சை மரம்;  lime tree.

சிந்துரம்

சிந்துரம்1 cinduram, பெ. (n.)

   1. சிந்தூரம், பார்க்க;see sinduram1.

     “சிந்துரச் சேவடியானை” (திருவாச. 18:5);.

   2. சிந்துாரம்1, 3 பார்க்க;see sinduram1,

   3. ‘சிந்துர மிலங்கத் தன்றிருநெற்றி மேல்’ (திவ். பெரியாழ். 3.4:6); நெற்றியில் வைக்கும் பொட்டு; round coloured mark put on the forehead, usually of saffron.

     “சிந்துர வாதித்த வித்தார முடையார்” (கந்தரந். 5);.

தெ. சிந்துரமு

     [சித்துரம் → சித்துரம்]

 சிந்துரம்2 cinduram, பெ. (n.)

   யானை (சூடா.);; elephant.

     “கார்கொள் சிந்துரங் காயத்திடை யிடைச் சோரி சோர்தார” (கந்தபு. நகரழி.61);.

ம. சிந்துர்

     [செத்துரம் → சிந்தூரம் → சிந்துரம்]

த. சிந்துரம் → Skt. sindhura

புகர் முகம் (செம்புள்ளியுள்ள முகம்); என்பது சினையாகு பெயராய் யானையைக் குறிப்பது போன்றே சிந்துரம் என்பதும் யானையைக்குறிக்கும்.

 சிந்துரம்3 cinduram, பெ. (n.)

   1. புளியமரம். (சூடா.);; tamarind tree.

   2. வெட்சிச் செடிவகை; scarlet ixora.

சிந்துரம் என்பது புளியின் செந்நிறம் பற்றிப் புளியமரத்தைக் குறிக்கும்.

 சிந்துரம்4 cinduram, பெ. (n.)

   செவ்வியம்; root of black pepper plant.

 சிந்துரம்1 cinduram, பெ. (n.)

   1. சிவப்பு (பிங்.);; redness.

   2. செங்குடை. (பிங்.);; red umbrella.

   3. நெற்றியில் அணிதற்குரிய ஒருவகைச் செம்பொடி (பிங்.);; vermilion, red paint, red powder for tilaka.

     “மதகரியைச் சிந்தூரிமப்பிய போல்” (கம்பரா. மதிலைக். 151);.

   4. செந்நிறமுள்ள பொடி வகை; red metallic oxide, precipitate of mercury, any chemical or metallic compound used medicinally.

     “சிந்தூரத்தாது கொடுத்திலரேல்” (உபதேசகா. உருத்திரா. 67);.

   5. யானைப் புகர்முகம் (பிங்.);; elephant’s face, as spotted red.

   6. வெட்சி. (திவா.);; scarlet ixora.

   7. சேங்கொட்டை. (மலை.);; marking – nut tree.

   8. மாவகை; a kind of mango.

செந்தூர மாம்பழம்.

     [சும் → செம் → செம்பு → செப்பு. செம்பு → கெம்பு = சிவந்த கல். செந்தூள் = செம்பொடி, செந்நீறு. செந்தூரள் → செந்தூளம் → செந்தூரம் → சிந்தூரம் (மு.தா.153);]

த. சிந்தூரம் → Skt. sindura

சிந்துரவிதி

 சிந்துரவிதி cinduravidi, பெ. (n.)

   சிந்துாரம் செய்யும் முறை; rules relating to calcination of metals into red oxides.

     [சிந்தூரம் + விதி]

சிந்துரி-த்தல்

சிந்துரி-த்தல் cindurittal,    4 செ. குன்றாவி (v.t.)

சிந்துரி -, (சங்.அக.); பார்க்க;see sinduri-.

     [சிந்தூரி → சிந்துரி]

சிந்துருணி

 சிந்துருணி cinduruṇi, பெ. (n.)

   புளியம் பட்டை; tamarind bark.

சிந்துருமாக்கு-தல்

சிந்துருமாக்கு-தல் cindurumākkudal,    5 செ.கு.வி. (v.i.)

   சிவப்பு வண்ணமாக்குதல்; to make into a red colour.

     [சிந்தூரம் + ஆக்கு-,]

சிந்துரை

சிந்துரை cindurai, பெ. (n.)

   இந்திரன் யானையால் வளர்க்கப்பட்டவளாகிய தெய்வ யானை; Teyvayanai, consort of Murugan, as brought up by Indra’s white elephant.

     “சிந்துரைபாக” (கந்தரத்.39);.

     [சிந்துரம்2 – சிந்துரை]

சிந்துவாரம்

சிந்துவாரம்1 cinduvāram, பெ. (n.)

   1. நொச்சி (சூடா.);; stalked leaflet chaste – tree.

   2. கரு நொச்சி; three-leaved chaste – tree.

     “வஞ்சி பித்திகஞ் சிந்துவாரம்” (குறிஞ்சிப்.89);

 சிந்துவாரம்2 cinduvāram, பெ. (n.)

   கடல் (அக.நி.);; sea.

     [சிந்து + வாரம். வாரி → வாரம். வாரி → கடல், நீர்திவை]

 சிந்துவாரம்3 cinduvāram, பெ. (n.)

வில் (பிங்.);

 bow.

சிந்துவாரி

 சிந்துவாரி cinduvāri, பெ. (n.)

   பெருங்கடல்; ocean.

     [சிந்து + வாரி]

சிந்துவெளி

 சிந்துவெளி cinduveḷi, பெ. (n.)

   சிந்து ஆறு பாயும் பகுதி, சிந்து பள்ளத்தாக்கு; river belt, Indus valley.

     [சிந்து + வெளி]

சிந்துவெளி நாகரிகம்

சிந்துவெளி நாகரிகம் cinduveḷināgarigam, பெ. (n.)

   சிந்து ஆறு பாய்ந்த பகுதியில் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு நிலவிய பழந்தமிழர் நாகரிகம்; an ancient Tamilian civilization which prevailed about 5000 years ago in Sindu river belt, Indus valley civilization.

     [சிந்துவெளி + நாகரிகம்]

சிந்தூகம்

 சிந்தூகம் cindūkam, பெ. (n.)

   சேங்கொட்டை; dhoby’s nut.

சிந்தூமரம்

சிந்தூமரம் cindūmaram, பெ. (n.)

   1. செங்கடம்பு;  red Indian oax tree.

   2. புளிய மரம்; tarmarind tree.

     [சிந்தூரம் + மரம்]

சிந்தூரச்சிலை

சிந்தூரச்சிலை cindūraccilai, பெ. (n.)

   1. மாக்கல்; pot stone.

   2. சிகப்புக்கல்; any red stone.

   3. சிகப்புத்தாதுமண்; any red ore such as, red zinc ore.

   4. செம்மண்; ochre.

     [சிந்தூரம் + சிலை. செந்தூளம் → செந்தூரம் → சித்துரம் = சிவப்பு]

சிந்தூரத்திலகம்

சிந்தூரத்திலகம்2 cindūrattilagam, பெ. (n.)

சிந்துாரப்பொட்டு பார்க்க;see Sindia-p-pottu.

     “தெறிக்குந் திவலை யழிக்குஞ் சிந்துாரத் திலகத்தையே” (தனிப்பா. ii, 129:327);.

     [சிந்தூரம் + திவகம்]

சிந்தூரத்திலதம்

 சிந்தூரத்திலதம் cindūraddiladam, பெ. (n.)

   நாதவுப்பு; a kind of negative salt.

சிந்தூரப்புடம்

 சிந்தூரப்புடம் cindūrappuḍam, பெ. (n.)

   சிந்துார மருந்து செய்வதற்காகப் போடும் புடம்; calcination of metals with a view to obtain red extraneous oxides.

     [சிந்தூரம் + புடம்]

சிந்தூரப்பூடணம்

 சிந்தூரப்பூடணம் cindūrappūṭaṇam, பெ. (n.)

   இசிவு, சுரம், மகப்பேறடைந்தோர்தம் நோய்கள் முதலானவற்றைப் போக்கும் ஆயுள்வேத மாத்திரை; an Ayurvedic red pill prescribed for diseases of pregnant women and for curing ailments and other evils as apolexy, fever etc.

     [சிந்தூரம் + பூடணம்]

சிந்தூரப்பொட்டு

சிந்தூரப்பொட்டு cindūrappoṭṭu, பெ. (n.)

   குங்குமப்பொட்டு (வின்.);; vermilion mark on the forehead.

மறுவ. செந்துாரம்

     [சிந்தூரம்1 + பொட்டு. சிந்தூரம் = சிவப்பு]

சிந்தூரமணி

 சிந்தூரமணி cindūramaṇi, பெ. (n.)

   ஆண்குறியின் மேற்புறமும் நுனியும் வீங்கியுந் தோல் சிவந்தும் காணப்படும் பால்வினை நோய்; inflammation and swelling of the glans penis and perpuce due to venereal affections or other causes.

     [சிந்தூரம் + மணி. சிந்தூரம் = சிவப்பு. மணி = ஆண்குறியின் நுனி]

சிந்தூரமருத்துவம்

 சிந்தூரமருத்துவம் cindūramaruttuvam, பெ. (n.)

   தேவ மருத்துவம்; devas treatment.

     [சிந்தூரம் + மருத்துவம்]

சிந்தூரம்

சிந்தூரம் cindūram, பெ. (n.)

சிந்துரம்2 (பிங்.);;பார்க்க;see Sinduram2.

 சிந்தூரம் cindūram, பெ. (n.)

சிந்துரம்3 பார்க்க;see Sinduram3.

 சிந்தூரம்4 cindūram, பெ. (n.)

   செவ்வீயம் (வின்.);; red lead, minium.

 சிந்தூரம்5 cindūram, பெ. (n.)

   பறைவகை (பிங்.);; a kind of drum.

 சிந்தூரம்6 cindūram, பெ. (n.)

   1. பகவளம்; coral.

   2. சாதிலிங்கம்; vermilion.

   3. பாறையுப்பு; rocksalt.

     [செந்தூள் → செத்தூளம் → செந்தூரம் → சிந்தூரம்]

சிந்தூரி

சிந்தூரி1 cindūrittal,    4 செகுன்றாவி (v.t.)

   மாழைகளைச் (உலோகங்களை); செந்துள்ள மாக்குதல்; to calcine, prepare powders of metals or minerals by the agency of fire.

     “சுருக்குக் கொடுத்ததைச் சிந்தூரித்துஞ (பணவிடு.23);.

ம. சிந்தூரிக்குக

     [செந்தூளம் → சிந்தூளம் → சிந்தூரம் → சிந்தூரி]

 சிந்தூரி2 cindūrittal,    4 செ.கு.வி. (v.i.)

   சிவப்பாக்குதல்; to convert into a red colour.

     [சிந்தூரம் → சிந்தூரி-. ‘இ’ வினையாக்க ஈறு]

 சிந்தூரி3 cindūri, பெ. (n.)

   சிறுபுள்ளடி; bird’s feet plant.

சிந்தூரிகை

 சிந்தூரிகை cindūrigai, பெ. (n.)

   செவ்வியம்; black pepper root.

     [சிந்தூரி → சிந்தூரிகை]

சிந்தை

சிந்தை cindai, பெ. (n.)

   1. மனம்; mind, intellect.

     “கெடுக சிந்தை கடிதிவள் துணிவே” (புறநா.);.

   2. அறிவு; knowledge.

     “இரவு பகலுணர்வோர் சிந்தை” (சி.சி.பாயி. விநாயகர்துதி, சிவஞா.);.

   3. எண்ணம்; thought, idea, intention.

     “நாகேச்சரம் வலங்கொள் சிந்தையுடையார்” (தேவா.439,8);.

   4. ஊழ்கம் (தியானம்);; meditation, contemplation.

     “சிந்தை செய்து” (திவ்.திருவாய். 2.6:5);.

   5. கவலை; solicitude, care.

     “செதுமகப் பலவும் பெற்றுச் சிந்தைகூர் மனத்தையாகி” (சீவக.1124);.

     [சித்து → சிந்து → சிந்தை]

சிந்தைகல_த்தல்

சிந்தைகல_த்தல் cindaigalattal,    3 செ.குவி (v.i.)

   மனமொத்தல்; to be of one mind.

     “சிந்தைகலந்த சகியாகச் சேர்ந்து” (உத்தரரா. அனுமப்.45);,

     [சிந்தை + கல_,]

சிந்தைகூரியன்

சிந்தைகூரியன் cindaiāriyaṉ, பெ. (n.)

   1. அறிவுக் கூர்மையுள்ளவன்; sharp, keenwitted person.

   2. அறிவன் (புதன்); (சூடா.);; the planet Mercury.

     [சிந்தை + கூரியன்]

கூரியன் பார்க்க

சிந்தைசெய்-தல்

சிந்தைசெய்-தல் sindaiseytal,    2 செகுன்றாவி (v.t.)

   1. நினைவலி வைத்தல்; to remember, bear in mind.

   2. ஊழ்கம் (தியானம்); செய்தல்; to meditate upon, reflect.

     “உன்னைச் சிந்தைசெய்து” (திவ்.திருவாய்.2.6:6);.

   கவலை கொள்ளுதல்; to care for, to be anxious about.

     “எம்மையுமாள்வரோ வென்று சிந்தைசெயும்” (தேவா.743 II);.

     [சிந்தை + செய்_,]

சிந்தையடக்கு_தல்

 சிந்தையடக்கு_தல் cindaiyaḍakkudal,    மனத்தை ஒருவழிப்படுத்துதல்; concentration of mind.

     [சிந்தை + அடக்கு_,]

சிந்தையின்மை

சிந்தையின்மை cindaiyiṉmai, பெ. (n.)

   1. மனம் ஒன்றாமை; absence of mind.

   2. புறப் பொருட்களில் பற்றற்ற நிலை; in attention to external impressions.

     [சிந்தை + இன்மை]

சின

சின1 ciṉattal,    3 செ.குன்றாவி. (v.t.)

   வெகுண்டு கடிதல், சீற்றமுறுதல்; to be enraged, to be very angry.

   ம. சினக்குக;   க. கினிம்பு;   தெ. கினுக;து. கெணகு

     [சில் → சின் → சின-,]

 சின2 ciṉattal,    3 செ.கு.வி (v.i.)

   புண் முதலியன வீங்கச் சிவத்தல் (இ.வ.);; to become red with inflammation, as tumour.

சினம் = பொங்கு. புண் பொங்கிற்று எனும் வழக்குண்மை கொண்டு, இச்சொல் சில் → சின் → சின → சினம் எனவாகியிருத்தல் கூடும். சினத்தொடு எழுந்தவனைப் பொங்கி எழுந்தான் என்றும், சீறிவரும் புனலைப் ‘பொங்கிவரும் புதுப்புனல் என்றும், அலை ஆர்ப்பரிக்கும் கடலைப் பொங்குமாங்கடல் என்றும் இருவகை வழக்கிலும் உரைத்தல் கொண்டு இதன் பொருளை உணரலாம்.

சினக்கடம்

 சினக்கடம் ciṉakkaḍam, பெ. (n.)

   வெண்கடுகு; white mustard (சா.அக.);.

சினக்குவாதம்

சினக்குவாதம் ciṉakkuvātam, பெ. (n.)

   பற்களால், தன் உடலையே அடிக்கடி கடித்துக் கொள்ளச் செய்யும் குதிரை முடக்குநோய் வகை (அசுவசா. 69);; rheumatic disease of horse in which it often bites itself.

     [சிணுக்கு1 + வாதம்)

சினுக்கு = சிக்குப்படுத்துதல், உடன்படாத தன்மையையுணர்த்த முகத்தைக் கோட்டுதல். நோயுற்ற குதிரை, தன்னுடலின் உடன் படாமையை, அதாவது இயல்பான நிலைக்கு மாறான நிலையை வெளிப்படுத்தும் போது நிகழும் நிகழ்வுகள் எனக்கொள்வது தகும்.

சினக்கூவை

சினக்கூவை siṉagāvai, பெ. (n.)

   கூகை மஞ்சள்; violen arrow root. (சா.அக.);

   164 சினம்பு

சினப்புக்கிள்ளு-தல்

 சினப்புக்கிள்ளு-தல் ciṉappukkiḷḷudal, செ.குன்றாவி (v.t.)

சினப்புக்கிள்ளு-தல் பார்க்க;see Sinaippu-k-killu

     [சினைப்பு + கிள்ளு-,]

சினப்புக்குத்து-தல்

சினப்புக்குத்து-தல் ciṉappukkuddudal,    5 செகுவி (v.i.)

   1. சிறுசிரங்கு குத்துதல்; to prick small cutaneous eruptions.

   2. வீண்காலம் போக்குதல் (உ.வ.);; to waste time, as in pricking pimples.

     [சினப்பு + குத்து-,]

சினப்புக்கொள்(ளு)-தல்

சினப்புக்கொள்(ளு)-தல் ciṉappukkoḷḷudal,    16 செ.கு.வி. (v.i.)

   1. கொப்பளித்தல்; to rise as boil.

   2. விம்முதல்; to distend with matter such as pusetc.

   3. சீழ்கொள்ளுதல்; to suppuruate, (சா.அக.);.

     [சினப்பு + கொள்(ளு);-,]

சினப்புண்

 சினப்புண் ciṉappuṇ, பெ. (n.)

   அழற்புண்; சீழ்ப்புண்; inflamed ulcer.

     [சினம் + புண்]

சினம்

சினம்1 ciṉam, பெ. (n.)

   1. சீற்றம்;   வெகுளி; anger, fury.

     ‘சினத்தால் அறுத்த மூக்குச் சிரித்தால் வருமா (பழ.);.

     “செறிதீநெஞ்சத்துச் சினநீடினோரும்” (பரிபா. 5:73);.

   2. நெருப்பு; fire.

     “எரிசினந் தவழ்ந்த விருங்கடற்று” (அகநா75);.

போர் திவா.:

 battle, war.

   ம. சிநம்., சினப்பு;   க. கிநிசு;தெ. கிநுக.

     [சுள் = சுடுதற்கருத்து வேர். சுள் → சிள் → சில் → சின் → சினம், (ஒ.மொ.307);]

சினம் நெருப்பையொத்த குணமாதலின், நெருப்பைக் குறிக்குஞ்சொல் சினத்தையுங் குறித்தது. எரிதல் என்னுஞ்சொல் சினத்தலைக் குறித்தலையும், ‘சினமென்னும் சேர்ந்தாரைக் சொல்லி என்று திருவள்ளுவர் கூறியிருத்தலையும் நோக்குக (வே.க.214);.

 சினம்2 siṉam, பெ. (n.)

   1. பரு; wart (சா.அக.);.

 சினம்3 ciṉam, பெ. (n.)

   வெம்மை; heat.

     “சென்று சென்றிறைஞ்சிய சினந்தீர் மண்டிலம்” (பெருங். உஞ்சைக் 33.40);.

     [சில் → சின் → சினம்]

 சினம் ciṉam, பெ. (n.)

   1. அருகன்;   2. புத்தன்; Buddhan.

 Skt. jina

சினம் கொள்(ளு)-தல்

சினம் கொள்(ளு)-தல் ciṉamkoḷḷudal,    16 செகுன்றாவி (v.i.)

சின’-த்தல் பார்க்க;see sina-

ம. சினகொள்ளுக

     [சினம் + கொள்-,]

சினம்பு

 சினம்பு ciṉambu, பெ. (n.)

   மிகச்சிறிது; a little (சேரநா.);.

     [சில் → சின் → சின்னம் → சினம்]

சினவரன்

சினவரன் ciṉavaraṉ, பெ. (n.)

   சினத்தை யடக்கியவன் (சிலப். 10: 180, உரை);; one who has subdued his anger.

     [சினம் – சினவரன்]

சினவர்

 சினவர்  sinawar  பெ. (n.)

   சினவுநர் (வின்);; foe.

ம. சினவா

     [சினம் → சினவர்]

சினவல்

 சினவல் ciṉaval, பெ. (n.)

   போர் சூடா); battle.

     [சினம் → சினவல்]

சினவு-தல்

சினவு-தல் ciṉavudal,    5 செ.கு.வி (v.i.)

   1. சினத்தல், வெகுளுதல்; கடிதல்; to be angry, indignant.

     “நீங்கிச் சினவு வாய் மற்று’ (கலித். 116);.

   2. வெஞ்சினத்தால் வீறுகொண்டெழுதல்; to rise in anger or fury.

     “இருளுமுண்டோ ஞாயிறு சினவின” (புறநா. 90);.

   3. பொருதல் (ஆ.நி.);; to fight, wage war.

   ம. சினியுக;   க. கினிசு;தெ. கினியு. துட. சினிம்

     [சின → சினவு]

சினவுநர்

சினவுநர் ciṉavunar, பெ. (n.)

   1. பகைவர்; enemies.

   2. எதிரி; adversaries.

     “சினவுநர்ச் சாய்த்தவன்” (பெருங். மகத. 14:174);

ம. சினவர்

     [சினவு → சினவுநர்]

சினா

சினா1 ciṉā, பெ. (n.)

   1. வட்டத்திருப்பி (வின்);; Indian pareira.

   2. பங்கம்பாளை; worm-killer.

 சினா2 ciṉā, பெ. (n.)

   சாலாம்பிசின்; gum of common saul shorea robusta (சா.அக.);.

சினாசிகா

 சினாசிகா ciṉācikā, பெ. (n.)

   மராமரம்; tree of tree (சா.அக);.

சினாடி

 சினாடி ciṉāṭi, பெ. (n.)

சினாடிகா பார்க்க;see sinadiga.

சினாடிகா

 சினாடிகா siṉāṭikā, பெ. (n.)

   மூக்கிரட்டை (யாழ்.அக.);; pointed – leaved hogweed.

 Skt. dvinäsikä

சினாதாக்கு

சினாதாக்கு ciṉātākku, பெ. (n.)

சாதிக்காய்,

 nutmeg (சா.அக.);.

   65 சினேந்திரமாலை

சினாது

சினாது ciṉātu, பெ. (n.)

   1. மெலிந்தது; that that which is emaciated.

   2. மெலிவு; emaciation; leanness, as of body.

     [சின்னது → சினது → சினாது. ஒ.நோ. தன்னது → தனது → தனது]

சினாம்பு

சினாம்பு ciṉāmbu, பெ. (n.)

   மீனின் செதிற் பகுதி(நெவ.வ.சொ.155);; fin.

     [சிதாம்பு-சினாம்பு]

சினாயு

 சினாயு ciṉāyu, பெ. (n.)

   இழைநார்; fibrous tissue ligaments, tendons (சா.அக);.

சினாவட்டம்

 சினாவட்டம் ciṉāvaṭṭam, பெ. (n.)

   வட்டத் திருப்பி; cissampelos parcira (சா.அக.);.

     [சினா + வட்டம்)

சினாவில்

 சினாவில் ciṉāvil, பெ. (n.)

   தும்பை (மலை.);; white dead nettle.

சினாவு

 சினாவு ciṉāvu, பெ. (n.)

   தகரை; ringworm plant (சா.அக.);.

சினிக்கிருமல்

 சினிக்கிருமல் sāagasiṉiggirumal, பெ. (n.)

   விட்டு அடிக்கடி வரும் இருமல்; a short, frequent and feeble cough (சா.அக.);.

சினித்தகாரி

 சினித்தகாரி ciṉittakāri, பெ. (n.)

   மென்மையை யுண்டாக்கும் மருந்து வகை (இங்.வை.);; demulcent emollient.

 Skt. snigdha – kårin

சினித்தம்

 சினித்தம் ciṉittam, பெ. (n.)

மான்செவிக்கள்ளி:

 spiral leafy milk hedge (சா.அக.);.

சினிபம்

 சினிபம் ciṉibam, பெ. (n.)

   வாகை (மலை.);; sirissa.

சினுக்கு

 சினுக்கு ciṉukku, பெ. (n.)

   இழைகள் தாறு மாறாக இருத்தல் (நெ.தொ.க.);; improper thread line.

     [சிலு-சினுக்கு]

மகளிர் தம் கூந்தலிற் சிக்குக் களைதற்குப் பயன்கொள்ளும் இரும்பொன் ஊசி

சினுக்குவலி

 சினுக்குவலி ciṉukkuvali, பெ.(n.)

தலைமுடியைக் கோதவும் சிக்கு எடுக்கவும் பயன்படுத்தும்குச்சிபோன்ற பெரிய ஊசி,

 hair pin like tool used by women for trimming the hair.

     [சினுக்கு+வலி]

சினுப்பு-தல்

 சினுப்பு-தல் ciṉuppudal, செகுன்றாவி (v.t)

   தயிர் போன்றவற்றைக் கடைதல்; to churn curd,

     [சிலுப்பு-சினுப்பு]

சினேகதாரு

 சினேகதாரு ciṉēkatāru, பெ. (n.)

   சாதிக்காய் மரம்; nutmeg trec (சா.அக.);.

     [சினேகம் → சினேகதாரு]

 சினேகதாரு ciṉēkatāru, பெ. (n.)

   சாதிக்காய் மரம்; nutmeg tree (சா.அக.);.

     [சினேகம் → சினேகதாரு]

சினேகம்

 சினேகம் ciṉēkam, பெ. (n.)

   சாதிக்காய்; nutmeg (சா.அக.);.

சினேகயம்

 சினேகயம் ciṉēkayam, பெ. (n.)

   சீமையிலந்தை; pyrus genius (சா.அக.);.

சினேந்திரநாசன்

 சினேந்திரநாசன் ciṉēndiranācaṉ, பெ. (n.)

   நச்சுப்பாலை; minusops genus. (சா.அக.);.

சினேந்திரன்

சினேந்திரன் ciṉēndiraṉ, பெ. (n.)

   1. அருகன் (திவா.);; Aruhan.

   2. புத்தன்; Buddhan

     “ஆதிசினேந்திர னளவை யிரண்டே” (மணிமே. 29:47);.

     [சைனேந்திரன் → சினேந்திரன்]

சினேந்திரமாலை

சினேந்திரமாலை ciṉēndiramālai, பெ. (n.)

   உபேந்திராசிரியர் செய்த தமிழ்க் கணிய (ஆரூட); நூல்; a treatise on horary astrology by Upēndirāširiyar.

சினேந்திரன் 16

சினை

சினை ciṉai, பெ. (n.)

   கருத்தரிப்பு; conceive-ment.

     [சில்-சின்-சினை].

 சினை2 ciṉai, பெ. (n.)

   1. கொழுப்பு; fat

   2. சோலை; flowers-garden, grove (சா.அக.);.

 சினை3 ciṉai, பெ. (n.)

   1. விலங்கு முதலியவற்றின் சூல்; embryo or foctus of animals; pregnancy.

     “சினைவளர் வாளையின்” (பரிபா.7 : 38);.

   2. முட்டை (பிங்.);

 eggs.

   3. பூமொட்டு (திவா.);; flower-bud.

   4. மரக்கிளை; branch of a tree.

     “குலவுச்சினைப் பூக்கொய்து” (புறநா. 11 : 4);.

   5. உறுப்பு (திவா.);; member, component part, limb.

   6. மூங்கில் (மலை.);; bamboo.

   ம. சின, சனெக்கு;   க. ஜனெ, தான;து. தனெ, சனெ தெ. ஜென

     [சுன் → சின் → சினை (வே.க. 226);]

 சினை4 ciṉai, பெ. (n.)

   பெண்களின் கருப்பையில் அமைந்துள்ள சவ்வால் இணைக்கப்பட்ட அரத்த நாளம்; vesicular graffinac – ovary consisting of a close and compact Taxture united by cellular structure (சா.அக.);.

சினை கொள்(ளு)-தல்

சினை கொள்(ளு)-தல் ciṉaigoḷḷudal,    13 செ.குன்றாவி, (v.t.)

   1. கருக்கொள்ளுதல்; கருவுண்டாதல்; to conceive.

   2. கொழுத்தல்; to be fattered.

   3. சினைவளர்தல்; becoming heavy with pregnancy (சா.அக.);.

     [சினை + கொள்-,]

சினை’-த்தல்

 அஅன்ன ஆவன்னா aaṉṉaāvaṉṉā, பெ. (n.)

   அரிவரி யென்னும் தமிழ் வண்ணமாலை (குறுங்கணக்கும் நெடுங்கணக்கும்);;  Tamil Alphabet.

   எழுத்துகளைக் கல்லா மக்கள், சிறப்பாகச் சிறுவர் சிறுமியர், எளிதாக ஒலித்துக் கற்கும் பொருட்டு, பண்டைத் தொடக்கப்பள்ளி யாசிரியர் உயிரும் உயிர்மெய்யுமாகிய இருவகைக் குறிலுக்கும்’அன்ன’ச் சாரியையும், இருவகை நெடிலுக்கும் அன்னா’ச் சாரியையும் ஏற்படுத்தினர்;     ‘அஆ’ என்னும் ஈரெழுத்தும் தமிழ் வண்ணமாலையின் முதலெழுத்துகளாதலின், அவை முதற்குறிப்பாகி, அம் முதற்குறிப்பே’அஅன்ன ஆவன்னா’ என்று வண்ணமாலைப் பெயராயிற்று. இது ‘alpha’, ‘beta’ என்னும் கிரேக்க இரு முதலெழுத்துகளும் சேர்ந்து”alphabetum’ என்று இலத்தீனிலும், ‘alphabet’ என்று ஆங்கிலத்திலும், வண்ணமாலைப் பெயராக வழங்குவது போன்றது;

   அ, இ, க, கி என்று ஒரு மாத்திரை யொலிக்குங்குறிலெழுத்துகளை விட்டொலிப்பது, சிறுபிள்ளைகட்குச் சற்று வருத்தமுற மூச்சு வாங்குவதால்,’அஅன்ன’ என்பது”ஆனா” என்றும் இஅன்ன என்பது’ஈனா’ என்றும், மாணாக்க நிலையிலும் பின்னும் ஒலிக்கப்பட்டுவந்தன. இவ்வொலிப்புமுறை குறில்களின் உண்மையான ஒலியளவை உடனே தெரிந்துகொள்ளத் தடையாயிருந்தமையின், இந்நூற்றாண்டுத் தொடக்கத்தில் அரசியற் கல்வித்துறையறிஞர், சாரியையின்றி ஒலிநூன் முறைப்படி அ, ஆ, இ, ஈ,… என்று ஒலித்துப் பயிலும் முறையைப் புகுத்திவிட்டனர். அதனால், இன்று ‘அஆ’ என்பது வண்ணமாலைப் பெயராக வழங்கி வருகின்றது. இது புணர்ச்சியில்’அவ்வா’ என்றாகும்;

சினைகரை-த்தல்

சினைகரை-த்தல் ciṉaigaraittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   கருவழித்தல்; to miscarry, to abort (சா.அக.);.

     [சினை + கரை-,]

சினைக் கொழு-த்தல்

சினைக் கொழு-த்தல் ciṉaikkoḻuttal,    4 செ.குன்றாவி, (v.t.)

   சினைவள மாடுதல்; fertilization of ovum (சா.அக.);.

     [சினை + கொழு-,]

சினைக்காலம்

 சினைக்காலம் ciṉaikkālam, பெ. (n.)

சினைப்பருவம் பார்க்க;see Sinai-p-paruvam.

     [சினை + காலம். கோல் → கால் → காலம்]

சினைப்படு-தல்

சினைக்குழல்

 சினைக்குழல் ciṉaikkuḻl, பெ. (n.)

   சினை செல்லும் பாதை; fallopian tube (சா.அக);.

     [சினை + குழல்]

சினைக்கோளம்

 சினைக்கோளம் ciṉaikāḷam, பெ. (n.)

   கருவறை; ovary-gland (சா.அக.);.

     [சினை + கோளம்]

சினைத் தண்ணீர்

 சினைத் தண்ணீர் ciṉaittaṇṇīr, பெ. (n.)

சினைநீர் பார்க்க;see Sinai-nir.

சினைத்தாரை

 சினைத்தாரை ciṉaittārai, பெ. (n.)

சினைக்குழல் பார்க்க;see Sinai-k-kulal

     [சினை + தாரை]

சினைநண்டு

 சினைநண்டு ciṉainaṇṭu, பெ. (n.)

   முட்டை கொண்ட நண்டு; crab crab pregnated with eggs (சா.அக.);.

     [சினை + நண்டு]

சினைநீர்

சினைநீர் ciṉainīr, பெ. (n.)

   1. புண்ணினின்று வடியுந்தண்ணீர்; a thin colourless discharge from wounds ulcers etc.

   2. சினைப்பையினின்று வடியும் நீர்; secretion from ovary (சா.அக.);.

     [சினை + நீர்]

சினைப்படு-தல்

சினைப்படு-தல் ciṉaippaḍudal,    18 செகுன்றாவி, (v.t.)

   மாவினம் கருக்கொள்ளுதல்; to be cow in calf (சா.அக.);.

     [சினை + படு-,]

சினைப்படுத்து-தல்

சினைப்படுத்து-தல்

சினைப்படுத்து-தல் ciṉaippaḍuddudal,    5 செ.குன்றாவி (v.t.)

சினையாக்கு-தல் (இ.வ.); பார்க்க;see Sinai-y-ākku-,

     [சினை + படுத்து- படுத்து- துணைவினை]

சினைப்பருவம்

சினைப்பருவம்1 ciṉaipparuvam, பெ. (n.)

   நெற்கதிரில் மணிபிடிக்கும் பருவம் (வின்);; earing stage in the growth of paddy.

     [சினை + பருவம்]

 சினைப்பருவம்2 ciṉaipparuvam, பெ. (n.)

   கருக்கொள்ளுங்காலம்; period of gestation. (சா.அக.);.

     [சினை + பருவம்]

சினைப்பாதை

 சினைப்பாதை ciṉaippātai, பெ. (n.)

   சினைக்குழல் பார்க்க; Sinai-k-kulal (சா.அக.);.

மறுவ. சினைத்தாரை

     [சினை + பாதை. பதி → பதம் = நிலத்திற் பதியும் காலடி. பதம் → பாதம் → பாதை = பாதம் பட்டு உண்டாகும் வழி]

சினைப்பி-த்தல்

சினைப்பி-த்தல் ciṉaippittal,    4 செகுன்றாவி (v.t.)

   கருக்கொள்ளச் செய்தல்; to in pregnate (சா_அக.);.

     [சினை → சினைப்பி-,]

சினைப்பு

சினைப்பு ciṉaippu, பெ. (n.)

   1. வெப்பத்தால் உடலில் உண்டாகும் வியர்க்குரு; prickly heat.

   2. கருக்கொள்கை; becoming pregrnant.

   3. கொழுப்பு; fatness.

     [சினை → சினைப்பு]

சினைப்பூ

சினைப்பூ ciṉaippū, பெ. (n.)

   கோட்டுப்பூ; flowers on branches.

     “சினைப்பூப் போற்றளை விட்ட” (கலித். 118);.

     [சினை + பூ]

சினைப்பெயர்

சினைப்பெயர் ciṉaippeyar, பெ. (n.)

   1. உறுப்பைக் குறிக்கும் பெயர் (நன். 132);:

 noun denoting part of the whole, askan.

   2. உறுப்படியாகப் பிறந்த பெயர் (நன். 281);; name formed

   57 சினையறை

 from noun, denoting part of the whole, as Kannan

     [சினை + பெயர். கண் உறுப்புப்பெயர். கண்ணன் உறுப்படியாகப் பிறந்த பெயர்]

சினைப்பை

 சினைப்பை ciṉaippai, பெ. (n.)

சினை முட்டைகள் உருவாகும் கருக்கூடு:

 ovary the organ in which the eggs or their elemantary or essential parts are found developed (சா.அக.);.

     [சினை + பை]

சினைப்பையொழுக்கு

 சினைப்பையொழுக்கு ciṉaippaiyoḻukku, பெ. (n.)

   சினைத்தாரையடைபட்டுக் கருக் கூட்டினின்று ஒழுகும், கருப்பை நீர்ம வொழுக்கு; a condition in which the fallopian tube is closed and consequently the tube is filled with serum until pressure causes it to escape through unterine opening (சா.அக.);.

     [சினைப்பை + ஒழுக்கு]

சினைமுற்றிவெளிப்படு-தல

சினைமுற்றிவெளிப்படு-தல ciṉaimuṟṟiveḷippaḍudala,    18 செ.குன்றாவி (v.t.)

   பெண்ணின் சினை முட்டை முதிர்ந்து பருவமடைந்து கருக் கூட்டினின்று வெளிப்படுதல்; formation and discharge of ova from the ovary ovulation.

     [சினைமுற்றி + வெளிப்படு-,]

சினையம்புலிநோய்

 சினையம்புலிநோய் ciṉaiyambulinōy, பெ. (n.)

   மகளிர்தம் பிறப்புறுப்பினின்று பால்போன்று வெண்மையாக வடியும் வெட்டை நீரொழுக்கு; discharge of a milk white fluid from the uterus or vagina(சா.அக.);.

     [சினை + அம்புலி + நோய்]

சினையறை

 சினையறை ciṉaiyaṟai, பெ. (n.)

   கருப்பை; ovarium (சா.அக.);.

     [சினை + அறை]

சினையழிவு

சினையழிவு ciṉaiyaḻivu, பெ. (n.)

   1. கருத்திரளாமை, அஃதாவது கருப்பைக்குள் விந்து விழுவதற்கு முன்பே, உண்டாயிருக்கும் அழிவு; tubal abortion occuring from the ampulla of the oviduct-Tubal abortion.

   2. கருக் கூட்டினுள், சினைமுட்டை முதிராது இளங் கருவாயிருக்கும் போது ஏற்படும் அழிவு:

 foetus expelled in its embryonic state (சா.அக.);.

     [சினை + அழிவு]

சினையாகு-தல்

சினையாகு-தல் ciṉaiyākudal,    6 செ.கு.வி (v.i.)

   சூலுறுதல்; impregnate.(சா.அக.);

     [சினை +ஆகு-,]

சினையாகுபெயர்

சினையாகுபெயர் ciṉaiyākubeyar, பெ. (n.)

   சினைப்பெயர் அதன் முதலுக்கு ஆகும் பெயர் (நன். 290, உரை.);; synecdoche in which part is put for the whole as வெற்றிலை நட்டான்.

     [சினை + ஆகுபெயர்]

சினையாக்கு

சினையாக்கு2 ciṉaiyākkudal, பெ. (n.)

   5 செ.குன்றாவி, (v.t.);

   மிகுதியாகத் துன்பம் தருதல்; குழப்பஞ்செய்தல்; to cause excessive trobule, annoy.

     ‘அவன் ஆட்களைச் சினையாக்கி விடுகிறான்’ (இ.வ.);.

     [சினை + ஆக்கு-,]

சினையாக்கு-தல்

சினையாக்கு-தல் ciṉaiyākkudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   கருவுண்டாக்குதல்; to impregnate.

     [சினை ஆக்கு-, ஆக்கு – து.வி.]

சினையாறுபடுகை

சினையாறுபடுகை ciṉaiyāṟubaḍugai, பெ. (n.)

   வெள்ளம் வருதற்குறியாக ஆற்றுநீர் பொசினை; oozing of water in a river – bed indicative of the coming freshet.

     “சினையாறு படுகையாவது ஆறுநீர்வர அணித்தானால் பொசிந்து உள்ளே ஜலமுண்டாயிருக்கை” (ஈடு. 1.6: 2, ஜீ);

     [சினை + ஆறு + படுகை]

சினையிட்டலி

 சினையிட்டலி ciṉaiyiṭṭali, பெ. (n.)

சூலுற்ற பெண்களுக்குக் கொடுக்கும் இனிப்புச் சுவைமிக்க இட்டலிவகை (நெல்லை);.

 a kind of sweetenedittali offered to pregnant women.

     [சினை + இட்டலி]

சினையெடு-த்தல்

சினையெடு-த்தல் ciṉaiyeḍuttal,    4 செகுன்றாவி (v.t.)

   கருப்பையிலிருந்து சினைப்பையை அறுவை மருத்துவ முறையில் அகற்றல்; hystertomy (சா.அக.);.

     [சினை + எடு]

சினைவினை

சினைவினை ciṉaiviṉai, பெ. (n.)

   உறுப்பு உணர்த்தும் பெயரின் தொழிலைக் காட்டும், வினைச்சொல் (புறநா. 9, உரை);; verb relating to part of the whole, dist, fr. mudal – vinai, as kāl murindadu.

     [சினை + வினை]

சீ-த்தல்

சீ

   சீ cisi, தமிழ் நெடுங்கணக்கில் ச் என்ற மெய்யும் ‘ஈ’ கார வுயிரும் சேர்ந்துருவான உயிர்மெய் எழுத்து; the compound of c/s andi.

     [ச் + ஈ → சி]

சின்

சின்1 ciṉ, பெ. (n.)

   சினம்; anger,

     “மறையவர் பால் சின்பற்றி யென்பயன்” (இரகசிய. 1379);.

     [சினம் → சின்]

 சின்2 ciṉ, பெ. (n.)

இடை (part.);

   ஒர் அசைச்சொல்; an expletive generally used in poetry.

     “காப்பும் பூண்டிசின்” (தொல். சொல். 277);.

சின்சாசாங்குமாத்திரை

 சின்சாசாங்குமாத்திரை ciṉcācāṅgumāttirai, பெ. (n.)

   வயிற்றிலேற்படும் அனைத்து வகையான வலியினையும் போக்கும் ஆயுள் வேத மருந்து மாத்திரை; an Ayulvedic medicine in the form of pill given for all sorts of pain in the body and stomach disorders (சா.அக.);.

சின்ன

சின்ன1 ciṉṉa, பெ. (n.)

   1. சிறிய; small, little.

     “சின்னத் துணி (சீவக. 222);.

   2. இழிந்த; mean, low,

சின்ன மனிதன்.

   3. தாழ்ந்த; inferior.

சின்ன பயல், சின்னக்குலம்

   4. இளைய; young.

     ‘என் சின்னத்தம்பி’.

     [சின் → சின்ன]

 சின்ன2 ciṉṉa, பெ. (n.)

பூண்டின் முதற்பெயர்:

 plant first term often indicating the size of the plant, or of its leaves, flowers or fruits.

ம. சின்ன

சின்ன பின்னம்

சின்ன பின்னம் ciṉṉabiṉṉam, பெ. (n.)

   1. கண்டதுண்டம் (திவா.);; mangled, hacked pieces.

     “தோளுந் தாளுஞ் சின்னபின்னங்கள் செய்தவதனை” (கம்பர. நிந்தனை. 57);.

   2. கணக்கதிகாரத்திற் கூறப்படும் மிகமிகச் சின்னம் 15 சிறிய கடைக்கோடிக் கீழ்வாய் அளவு = 1/3, 22,56,000; the smallest fraction as mathematics prevalent in Tamilnādu as per the book Kaņakkadikāram.

தமிழகத்தில் வழங்கிய கீழ்வாய் இலக்க வாய்பாடு

முந்திரி = 1/320

கீழ் முந்திரி = 1/320 x 1/320

   10 சின்னம் = ஒரு துண்மை முந்திரி

   101/2 இம்மி முந்திரி = ஒரு கீழ் முந்திரி

ஒரு சின்னம் = 1/325,56,000

ஒரு நுண்மை முந்திரி = 1/32,25,600

ஒரு இம்மி முந்திரி = 1/10.75,200

இது 1/10,00,000 அளவுக்குச் சமம்.

இங்கிருந்து ஒரு இம்மியளவு கூட எடுத்துச் செல்ல இயலாது, என்பது உலகவழக்கு.

     [சின்னம் + பின்னம்]

சின்ன வல்லுறு

 சின்ன வல்லுறு ciṉṉavalluṟu, பெ. (n.)

   அரசாளிப் பருந்து; falcon.

     [சின்ன + வல்லூறு)

சின்னகை

சின்னகை ciṉṉagai, பெ. (n.)

   புன்னகை; smile,

     “முளையேர் முறுவன் முகிழ்த்த சின்னகை” (பெருங் மகத 6;49);.

     [சில் + நகை)

சின்னக் குத்துழுவன்

 சின்னக் குத்துழுவன் ciṉṉakkuttuḻuvaṉ, பெ. (n.)

   சிற்றுருவமுடையதும் அலகடியில் முள்போன்ற மயிர்க் கொத்துடையதும் பச்சை நிறமுடையதுமான பறவைவகை;  the small green barbet (சேரநா);.

சின்னக் கூனி

 சின்னக் கூனி ciṉṉakāṉi, பெ. (n.)

   சிறிய இறால் வகை; a kind of fish, Senna-k-kunni.

சின்னக் கொக்கு

 சின்னக் கொக்கு ciṉṉakkokku, பெ. (n.)

   காளையின் கதறலைப் போன்ற ஒலியெழுப்பும் நாரையினப் பறவை வகை; the Indian little green bittern (சேரநா.);.

ம. சின்னக்கொக்கு

     [சின்ன + கொக்கு. கொள் → (கொட்கு); – கொக்கு → கொக்கு = வளைந்த கமுத்துன்ன பறவையினம்]

சின்னக்கரடி

 சின்னக்கரடி ciṉṉakkaraḍi, பெ. (n.)

   விண்மீன் தொகுதி (புதுவை);; the constellation Little Bear.

     [சின்ன + கரடி]

சின்னக்காக

சின்னக்காக ciṉṉakkāka, பெ. (n.)

   1/5 காசு மதிப்புள்ள பழைய சிறிய காசு (நாணய); வகை (M.M.);; an ancient small coin = 1/5 pie.

     [சில் → சின் → சின்ன + காக]

சின்னக்குடல்

சின்னக்குடல் ciṉṉakkuḍal, பெ. (n.)

சிறுகுடல் பார்க்க;see Siru-kudal.

     [சின்ன + குடல். குழல் → குடல் = குழல் போன்ற உறுப்பு]

   156 சின்னச்சம்பா

சின்னக்குறிஞ்சி

 சின்னக்குறிஞ்சி ciṉṉakkuṟiñji, பெ. (n.)

   குறிஞ்சி (L.);; a species of conehead.

     [சின்ன + குறிஞ்சி]

சின்னக்குள்ளக்கெண்டை

 சின்னக்குள்ளக்கெண்டை ciṉṉakkuḷḷakkeṇṭai, பெ. (n.)

   கெண்டை மீன்வகையு ளொன்று; barbus vittatus.

     [சின்ன + குள்ளக்கெண்டை]

சின்னக்கொடுக்கன்

 சின்னக்கொடுக்கன் ciṉṉakkoḍukkaṉ, பெ. (n.)

   நச்சுப் பூச்சி வகையுளொன்று; a kind of poisonous insect.

     [சின்ன + கொடுக்கன்]

சின்னக்கொழுஞ்சி

 சின்னக்கொழுஞ்சி ciṉṉakkoḻuñji, பெ. (n.)

சீனக் கொழுஞ்சி

 Triphasier trifoliata.

சின்னசிற்கருகு

 சின்னசிற்கருகு siṉṉasiṟgarugu, பெ. (n.)

   வெள்ளாடு; goat (சா.அக);.

சின்னச்சக்கரம்

சின்னச்சக்கரம் ciṉṉaccakkaram, பெ. (n.)

   பழைய திருவிதாங்கூர் அரசாட்சியில் புழக்கத்திலிருந்த காசு வகை; a coin prevalent in old Tiruvidāṁgūr (T.S.M. (vel); iv. 64); (சேரநா);

     [சின்ன + சக்கரம்]

சின்னச்சம்பா

 சின்னச்சம்பா ciṉṉaccambā, பெ. (n.)

   நாலுமாதத்திற் பயிராகும் சம்பா நெல்வகை;  a variety of Samba maturing in four months.

     [சின்ன + சம்பா]

சின்னச்சலபாதை

 சின்னச்சலபாதை cēranāciṉṉaccalapātai, பெ. (n.)

சின்னச்சலவாதை பார்க்க see sinna-c-calavādai (சா.அக.);.

     [சின்னசவம் + உபாதை → பாதை]

சின்னச்சலவாதை

 சின்னச்சலவாதை ciṉṉaccalavātai, பெ. (n.)

   சிறுநீர்விடுகை (இழி.வ);; urination.

     [சின்ன + சவம் + உபாதை → வாதை]

சின்னச்சாதி

 சின்னச்சாதி ciṉṉaccāti, பெ. (n.)

   கீழ்க்குலம்; low caste.

சொன்னபடி கேட்பானா சின்னச்சாதி பயல்? (உ. வ.);.

     [சின்ன + சாதி]

 Skt.jåti → த. சாதி

சின்னச்சிலப்பன்

 சின்னச்சிலப்பன் ciṉṉaccilappaṉ, பெ. (n.)

   நீண்ட கால்களையுடைய இன்னிசைப் பறவை வகை; a kind of bird babbler (சேரநா.);.

சின்னஞ்சிறய

சின்னஞ்சிறய ciṉṉañjiṟaya, பெ. (n.)

   பென்னம்பெரிய என்னுஞ்சொல்லின் எதிர் மறைச் சொல், மிகச்சிறிய; very small, opp. to pennam periya.

     “சின்னஞ்சிறிய மருங்கினிற் சாத்திய செய்யபட்டும்” (அபிரா.53);.

மறுவ. சின்னஞ்சிறு.

     [சின்னம் + சிறிய]

சின்னஞ்சிறு

 சின்னஞ்சிறு ciṉṉañjiṟu, பெ.எ. (adj.)

சின்னஞ் சிறிய பார்க்க;see Sinnatijiriya.

     [சின்ன + சிறு]

சின்னட்டி

சின்னட்டி1 ciṉṉaṭṭi, பெ. (n.)

   1. சின்னது (யாழ்ப்);; little thing.

   2. பூடுவகை; a kind of small herb.

     [சின்ன → சின்னட்டி]

 சின்னட்டி2 ciṉṉaṭṭi, பெ. (n.)

   நெல்வகை; a kind of paddy.

     “சின்னட்டி பொன்னாயன்” (பறானை பள்ளு 23.);.

     [சின் → சின்னட்டி]

சின்னதாளம்

 சின்னதாளம் ciṉṉatāḷam, பெ. (n.)

   குறத்தியாட்டத்தில் இடம்பெறும் இசைக் கருவி; a musical instrument.

     [சின்ன+தாளம்]

சின்னது

 சின்னது ciṉṉadu, பெ. (n.)

சிறியது:

 little child, animal or thing.

பட. குன்னது

     [சில் → சின் → சின்னது]

சின்னத்தட்டு

சின்னத்தட்டு2 ciṉṉattaṭṭu, பெ. (n.)

   பொற் கொல்லர் துலை (தராசு);த்தட்டு (திவா.7: 223);; scale-pan used by goldsmiths.

     [சின்ன + தட்டு]

   57 சின்னப்பட்டம்

சின்னத்தனம்

சின்னத்தனம் ciṉṉattaṉam, பெ. (n.)

   1. சின்மை; meanness, petty-mindedness.

   2. சிறுபிள்ளைத் தனம் (இ.வ.);; childishness.

தெ. சின்னத்தன

     [சில் → சின் → சின்னம் + தனம்]

சின்னத்தானம்

சின்னத்தானம் ciṉṉattāṉam, பெ. (n.)

   ஒரு வகை மீன்; a kind of fish.

     “சின்னத்தானங் கறுத்த கெளிற்று மீன்” (பறானள. பள்ளு. 16);.

     [சின்ன + தானம்]

சின்னத்தாரை

 சின்னத்தாரை ciṉṉattārai, பெ. (n.)

   ஒருவகையான இசைக்கருவி; a musical instrument.

     [சின்ன+தாரை]

சின்னத்திரை

 சின்னத்திரை ciṉṉattirai, பெ. (n.)

தொலைக் காட்சி, கம்பி வடத்தொலைக்காட்சி,

 television, cable television.

     [சிறிய → சின்ன+திரை]

சின்னத்தும்பி

 சின்னத்தும்பி ciṉṉattumbi, பெ. (n.)

   பழுப்பு நிறமுள்ள கடல்மீன் வகை;  a marine fish, brown.

     [சின்ன + தும்பி]

சின்னநண்டு

சின்னநண்டு ciṉṉanaṇṭu, பெ. (n.)

   1. சிறிய நண்டு; small crab.

   2. தேள்; scorpion.

     [சின்ன + நண்டு]

சின்னன்

சின்னன்1 ciṉṉaṉ, பெ. (n.)

   1. இளமையானவ-ன் -ள்-து,

 one who is young.

   2. குள்ளமான வடிவுடையவன்; a dwarf, one who is of short stature (சேரநா.);

   ம. சின்னன்: க. சிண்ண;   தெ. சின்னவாடு;பிரா. சுனா (குழந்தை);

     [சில் → சின் → சின்ன → சின்னன்]

 சின்னன்2 ciṉṉaṉ, பெ. (n.)

   சிறு குழந்தை, விலங்கு அல்லது பொருள் (யாழ்ப்.);; little child, animal or thing.

க. சிந்த

     [சில் → சின் → சின்ன → சின்னன்]

சின்னாருகை

சின்னன்பின்னன்

 சின்னன்பின்னன் ciṉṉaṉpiṉṉaṉ, பெ. (n.)

   சிறியதும் பெரியதும் (யாழ்.அக);; small as well as large.

     [சின்னன் + பின்னன்]

சின்னன்பேரி

 சின்னன்பேரி ciṉṉaṉpēri, பெ. (n.)

   இன்னிசை பாடும் பறவை; a kind of bird (சேரநா.);.

சின்னப்படி

 சின்னப்படி ciṉṉappaḍi, பெ. (n.)

   அரைப்படி; half of a standard measure.

     [சின்ன + படி]

சின்னப்படு

சின்னப்படு1 ciṉṉappaḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   1. உடைப்டுதல்; to be broken, discomfited.

   2. ஊனப்படுதல்; to be wounded, maimed, mutilated.

   3. சிதைவடைதல் (வின்.);; to be injured, as fruit;

 to be deflowered, as a woman.

     [சின்னம் + படு ‘படு’ து.வி.]

 சின்னப்படு2 ciṉṉappaḍudal,    20 செ.கு. வி. (v.i.)

   இகழ்ச்சிப்படுதல்; to be derided, disgraced.

     ‘அந்தச் செயலைச் செய்ததால் சின்னப்பட்டுச் சீரழிந்து போனான்’ (உ. வ.);.

     [சின்னம் + படு-,]

சின்னப்பட்டம்

சின்னப்பட்டம் ciṉṉappaṭṭam, பெ. (n.)

   பெரிய மடத்துத் தலைவர்க்கு அடுத்தபடியான மடத்துத் தலைவர்; person who is second in authority and is the successor – designate of the head of a mutt.

மறுவ. இளைய பட்டம்

     [சின்ன + பட்டம்]

பட்டுதல் = தட்டுதல், அடித்தல் பட்டு → பட்டம் = பட்டையான பொருள், துணி, பெயரும் பதவியும் பொறித்து அரசன் நெற்றியிலணியும் தகடு, பதவிப் பெயர். மடத்சின்னப்படி 15

தலைவருக்குப்பின், பதவிமாற்றம் சிக்கல் இல்லாமல் நடைபெறுவதற்கும் தலைவருக்கு உதவுவதற்கும், தலைவருக்கு அடுத்து அப் பதவி வரவிருப்பவரை அணியமாக்குவதற்கும், கட்டப்படுவது சின்னப்பட்டம். ‘சின்ன’ என்னும் அடை இளமைப்பொருளைக் குறிக்கும்.

சின்னப்பணம்

சின்னப்பணம்1  ciṉṉappaṇam, பெ. (n.)

   1. அரைப்பணம் அல்லது ஒன்றே காலணா மதிப்புள்ள பழைய காலத்துக் காசு:

 an ancient coin equivalent to fifteen paise.

   2. பழைய திருவிதாங்கூர் அரசாட்சியில் புழக்கத்திலிருந்த காசுவகை; a coin prevalent in old Tiruvitähgür (சேரநா.);.

   ம. சின்னப் பணம்;க. சிக்ககண

     [சின்ன = சிறிய, குறைந்த, மிகக் குறைவான சின்ன + பணம்)

சின்னப்பயல்

சின்னப்பயல் ciṉṉappayal, பெ. (n.)

   1. சிறு பையன்; little fellow.

     “காந்திமதி நாதனைப்பார் அதிசின்னப்பயல்” (பாரதியார்);.

   2. கீழ்மகன்;   இழி குணத்தன்; mean, petty-minded fellow.

     [சின்ன + பயல்]

சின்னப்பாகல்

 சின்னப்பாகல் ciṉṉappākal, பெ. (n.)

   மிதிபாகல்; balsam apple, climber.

     [சின்ன + பாகல்]

சின்னப்பிசானம்

சின்னப்பிசானம் ciṉṉappicāṉam, பெ. (n.)

   நெல்வகை (விவசா.1.);; a kind of paddy.

     [சின்ன + பிசானம்]

   8 சின்னபின்னம்

சின்னப்பிள்ளையாண்டான்

சின்னப்பிள்ளையாண்டான் ciṉṉappiḷḷaiyāṇṭāṉ, பெ. (n.)

   அரண்மனை ஊழியன்; palace employee. (தெ.கோ.சா.3:2);.

     [சின்னப்பிள்ளை+ஆண்டான்]

சின்னப்புடையன்

 சின்னப்புடையன் ciṉṉappuḍaiyaṉ, பெ. (n.)

புடையன்பாம்பு வகையுளொன்று:

 a kind small wart snake.

     [சின்ன = சிறிய சின்ன + புடையன்)

சின்னப்புத்தி

சின்னப்புத்தி ciṉṉapputti, பெ. (n.)

   1. சிற்றறிவு; meanness, low-mindedness.

   2. பிள்ளைப்புத்தி; shallow wit.

     [சின்ன + புத்தி]

 Skt. buddhi → த. புத்தி

சின்னப்பூ

சின்னப்பூ1 ciṉṉappū, பெ. (n.)

   நூறு, தொண்ணுாறு எழுபது, ஐம்பது, முப்பது இவற்றுள் ஒரெண்கொண்ட நேரிசை வெண்பாக்களால், அரசனின் பத்து உறுப்புகளையும் சிறப்பித்துப் புகழ்ந்து கூறும், சிற்றிலக்கிய வகை (இலக். வி. 846);; poem celebrating the tašāngam of a king in 100, 90, 70, 50 or 30 nérisai-venbā verses.

     [சின்ன + பூ]

மன்னர்தம் சின்னங்களின் சிறப்பெல்லாம் தோன்றக்கூறுவதனால் ‘சின்னப்பூ’ என்ற பெயராயிற்று என்பர் அறிஞர் மு.அருணாசலம் தமிழிலக்கிய பரப்பினுள் தத்துவராயர் செய்த ‘சின்னப்பூ வெண்பா’ என்ற நூல் தவிர இப்பெயர் கொண்ட வேறு சிற்றிலக்கியம் ஏதும் காண்பதற்கில்லை.

 சின்னப்பூ2 ciṉṉappū, பெ. (n.)

   1. விடுபூ; loose, untied flowers.

     “சின்னப்பூ வணிந்த குஞ்சி” (சிவக 2251);.

   2. சின்னம்3,-5 பார்க்க;see Sinnam3,-5.

     [சின்னம் + பூ]

சின்னப்பூக்கொட்டைக்கரந்தை

 சின்னப்பூக்கொட்டைக்கரந்தை ciṉṉappūkkoṭṭaikkarandai, பெ. (n.)

   பெண்களின் மாதவிடாய்த் தொல்லையைப் போக்கி, நோயெதிர்ப்பு ஆற்றலை அளிக்கும் மாசிப்பத்திரி; Madras absinth, Madras wormwood. It cures obstructed menses and hysteria. It is used as antiseptic (சா.அக.);.

     [சின்னபூக் + கொட்டை + கரத்தை]

சின்னமனிதன்

 சின்னமனிதன் ciṉṉamaṉidaṉ, பெ. (n.)

   காட்டுமாவிலங்கம்; round berriedlingam tree.

     [சின்ன = சிறிய, சின்ன + மரவிவங்கம்]

சின்னமரம்

 சின்னமரம் ciṉṉamaram, பெ. (n.)

   பெரிய கட்டுமரத்திற்குத் துணையாகப் போகுஞ் சிறிய கட்டுமரம்; small cattamaram.

     [சின்ன + மரம்]

சின்னமலர்

சின்னமலர் ciṉṉamalar, பெ. (n.)

   1. சின்னப்பூ2 , 1 பார்க்க;see Šinnappu2, | 1.”சின்னமலர்க் கோதை” (சிவக 2369);.

     [சின்ன + மலர்]

சின்னமுண்டி

 சின்னமுண்டி ciṉṉamuṇṭi, பெ. (n.)

   நாரையினப் பறவை; a kind of stork, little egret (சேரநா.);

சின்னமுத்து

சின்னமுத்து ciṉṉamuttu, பெ. (n.)

சின்னம்மை2 (வின்.); பார்க்க;see Šinnammař.

     [சின்ன + முத்து]

அம்மைநோய் கண்டவரின் உடம்பில், சிறு சிறு கொப்புளங்கள் உண்டாகும். அவை பார்ப்பதற்கு முத்துப் போன்றிருக்கும். அம்மை நோயுற்றவரை, அவருக்கு ‘முத்துப் போட்டுள்ளது’ யாரும் அணுகவேண்டாம் எனும்வழக்கு இன்றுமுளது.

சின்னமுள்ளங்கி

 சின்னமுள்ளங்கி ciṉṉamuḷḷaṅgi, பெ. (n.)

   சுவற்று முள்ளங்கி; blumea amplectens.

     [சின்ன + முள்ளங்கி]

சின்னமூங்கில்

 சின்னமூங்கில் ciṉṉamūṅgil, பெ. (n.)

   கெட்டி அல்லது கல் மூங்கில்; solid bamboo.

     [சின்ன + மூங்கில் சின்ன = குறைந்த, தெருங்கிய, அடர்த்தியான, கெட்டியான]

சின்னமூச்சு

சின்னமூச்சு ciṉṉamūccu, பெ. (n.)

   வயிற்றுப் பிசம், சிறுநீர்ப்பை எரிச்சல் முதலியவற்றில் 60 சின்னராவுத்தன்வெட்டு வலியுண்டாகிச் சிறிதளவாகப் பொறுத்துப் மூச்சுவிடல்; short breath, due to some diseases of the abdomen like ascites, enlarged liver and spleen (சா.அக);.

     [சின்ன= சிறிய, குறைந்த சின்ன + மூச்சு)

சின்னமூதி

சின்னமூதி1 ciṉṉamūti, பெ. (n.)

   சின்னமூதிக் கொண்டு அரசாணையைப் படைக்குச் சாற்றுவோன் (சிலப். 8:13, உரை);; royal herald who proclaims by trumpet the king’s commands to his army.

     [சின்னம்’ + ஊதி]

 சின்னமூதி2 sinna.midi,  பெ. n.

பீடையுடையவள்

என வையுஞ்சொல் (நெல்லை.);:

 abusive language.

     [சின்ன + முதி. மூதேவி → முதி]

சின்னமூளை

 சின்னமூளை ciṉṉamūḷai, பெ. (n.)

சிறுமூளை பார்க்க;see Siru-milai.

     [சின்ன + மூனள]

சின்னமேளமோகரா

சின்னமேளமோகரா ciṉṉamēḷamōkarā, பெ. (n.)

   திருநெல்வேலியில் வழங்கிய பொற்காசுவகை (M.M.);; Thirunelveli gold coin = 3 pagodas 34 fanams 7 cash.

     [சின்ன + மேளம் + மோகரா]

 U.mohur.

சின்னமேளம்

 சின்னமேளம் ciṉṉamēḷam, பெ. (n.)

   தண்ணுமை (மத்தளம்);, துருத்தி முதலிய இன்னியங்களுடன் ஆடல் மகளிர் பாடிக் கொண்டு ஆடுதற்குரிய சதிர் மேளம் (உ.வ);; nautch music, with the accompaniment of tabor, pipe and cymbals, dist. fr. periya-mēļam.

     [சின்ன + மேளம்]

சின்னம்

சின்னம்1 ciṉṉam, பெ. (n.)

   1. புன்மை (அற்பம்);; smallness.

   2. நுண்மை; minuteness.

     “சின்னமானுஞ் சின்னவுற்பவம்” (ஞானா 59: 16);.

   3. சிறியது (யாழ்ப்.);; anything small.

   4. முறம் (பிங்.);; winnowing fan.

   5. மழைத்துாறல் (அக.நி);; drizzling.

   6. இகழ்ச்சி (இ,வ.);; derision, slight.

     [சில் → சின் → சின்னம்]

 சின்னம்2 ciṉṉam, பெ. (n.)

   1. அடையாளம் (பிங்);; sign, insignia.

   2. குறி,

 mark, token.

   3. பெண்குறி (பிங்.);; pudendum mulibre.

   4. காளம்;   &rronib; a kind of trumpet.

     “சின்னங்கள் கேட்பச் சிவனெடனறே வாய் திறப்பாய்” (திருவாச. 7:7);. L. signum;

 E. assign

     [சில் → சின் → சின்னம் = சிறியது]

 சின்னம்3 ciṉṉam, பெ. (n.)

   1. துண்டு; piece

     “வாளி…. சின்னமாக வீர்ந்திட” (திருவாலவா,36:8.);.

   2. முறிவுற்றது; anything broken.

     “கார்முகஞ் சின்னமென்றும்” (கம்பரா.கரன்,177);.

   3. பொடி (பிங்.);; powder, pollen.

     “சின்னப்படுங் குவனை” (திருக்கே 334);.

   4. சின்னப்பூ2, 1 பார்க்க;see Singappu2.l.

     “நனை சின்னமு நீத்த நல்லார்” (கம்பரா. பூக்கொய். 12);,

   5. கிள்ளுப்பூ; petal – pieces of flowers.

     “நன்னுதலப்புஞ் சின்னம்” (கம்பரா.வனம்.14);.

   6. காசு; coin, as a piece of

சின்னம்மை

 metal.

     “நாலு சின்னங் கைப்பட்ட வாறே” (ஈடு, 4.9: 2);.

   7. போர்க்களம் புகுங்காடல வீரர்கள், தம் வாயிலிட்டுக் கொள்ளும் பொற்றகடு (சீவக. 2303, உரை);; gold piece put by a warrior into his mouth when starting for battle.

   ம. சின்னம்;க. சின்னனெ

     [சில் → சின் → சின்ன

 Skt. chinnam

 சின்னம்4 ciṉṉam, பெ. (n.)

   சீந்தில்; gulancha.

     “சின்னமானுஞ் சின்னவுற்பவம்” (ஞானா.59:16);.

 சின்னம்5 ciṉṉam, பெ. (n.)

   சில்வானம்; odd.

     “முந்நூற்றுச் சின்னம் நாள்” (தெ. கல் தொ.4, எண். 140.);.

     [சில் → சின் → சின்னம்]

 சின்னம்6 ciṉṉam, பெ. (n.)

   பயன்பாடற்றது, பழுதுற்றது; being worn out or decayed.

     “சின்னச்சீரை துன்னற் கோவணம்” (பதினொ. திருவிடை மும்.7.);.

 Pali, jinno;

 Skt. Jirņa.

 சின்னம் ciṉṉam, பெ. (n.)

   நாட்டுப்புற இசைக் கருவியினுள் ஒன்று; a musical instrument.

     [சன்னம்+சின்னம்]

சின்னம்படு-தல்

சின்னம்படு-தல் ciṉṉambaḍudal,    20 செ.கு.வி (v.i.)

சின்னப்படு2 பார்க்க;see Sinna-p-padu

     “சின்னம்பட வருத்தஞ் செய்தாலும்” (நீதிவெண்.64);.

     [சின்னம்1 + படு-,]

சின்னம்மா

 சின்னம்மா ciṉṉammā, பெ. (n.)

சின்னம்மாள் பார்க்க;see Sinnammā].

     [சின்னம்மாள் – சின்னம்மா]

சின்னம்மாள்

சின்னம்மாள் ciṉṉammāḷ, பெ. (n.)

   சிறியதாய்; mother’s younger sister; wife of father’s younger brother.

   2. திருமகள் (இ.வ,);; Goddess of Wealth.

ம. சின்னம்ம

     [சின்ன + அம்மாள்]

சின்னம்மை

சின்னம்மை1 ciṉṉammai, பெ. (n.)

சின்னம்மாள்1 பார்க்க;see sinnammal1.

     [சின்ன = சிறிய, அம்மை = அம்மா. சின்ன + அம்மை]

 சின்னம்மை2 ciṉṉammai, பெ. (n.)

   அம்மை நோய் வகை; chicken – pox.

     [சின்ன + அம்மை]

சின்னமரம்

சின்னய்யா

 சின்னய்யா ciṉṉayyā, பெ. (n.)

சின்னையா பார்க்க;see sinnaiya (சேரநா.);.

     [சிற்றப்பா → சின்னய்யா]

சின்னராவுத்தன்வெட்டு

சின்னராவுத்தன்வெட்டு ciṉṉarāvuttaṉveṭṭu, பெ. (n.)

   பழைய காசுவகை (பணவிடு.144);; an ancient coin.

     [சின்னராவுத்தன் + வெட்டு]

சின்னறிதாரு

சின்னறிதாரு ciṉṉaṟitāru, பெ. (n.)

   1. கணைத் தேவதாரு; prickly deodar, a variety of deodar.

   2. காட்டுத்தேவதாரு; deccany deodar (சா.அக);.

சின்னறு

 சின்னறு siṉṉaṟu, பெ. (n.)

   கொடிச் சிணுங்கி; a sensitive creeper (சா.அக.);

சின்னலபுரம்

 சின்னலபுரம் ciṉṉalaburam, பெ. (n.)

   வேலூர் மாவட்டத்தில் உள்ள ஓர் ஊர்; a village in Vellore.

     [சின்ன+ஆலம்+புரம்].

சின்னலைசூரி

சின்னலைசூரி ciṉṉalaicūri, பெ. (n.)

சின்னம்மை2 பார்க்க: See Šinnammai (சா.அக);

சின்னல்

 சின்னல் ciṉṉal, பெ. (n.)

   பகட்டு (வின்);; foppery, extravagance.

தெ. சின்னெலு

சின்னவிறால்

 சின்னவிறால் ciṉṉaviṟāl, பெ. (n.)

   பொடிமீன் வகையுளொன்று; a kind of Virāl fish.

     [சின்ன + விறால். சின்ன = சிறிய]

சின்னாஞா

 சின்னாஞா ciṉṉāñā, பெ. (n.)

சிற்றப்பன் (இ.வ);:

 father’s younger brother.

     [சின்ன + ஆஞா. ஆஞா → தந்தை]

சின்னாஞ்சான்

 சின்னாஞ்சான் ciṉṉāñjāṉ, பெ. (n.)

   கப்பற் கயிறு வகை; backstay rope.

     [சின்ன + ஆஞ்சான்]

சின்னாணி

 சின்னாணி ciṉṉāṇi, பெ. (n.)

சிறியது (இ.வ.);:

 little thing, a term of endearment applied to little children.

     [சின் → சின்ன → சின்னன் → சின்னரணி]

சின்னாத்தாள்

 சின்னாத்தாள் ciṉṉāttāḷ, பெ. (n.)

சின்னம்மா பார்க்க;see Sinnamma.

     [சின்ன + ஆத்தாள். ஆத்தாள் – அம்மா]

சின்னாந்திரம்

 சின்னாந்திரம் ciṉṉāndiram, பெ. (n.)

   அறுபட்ட குடல்; bowels parted or separated by violence or force (சா.அக.);.

சின்னான்

சின்னான்1 sinnan, பெ. (n.)

   சிறியவன்; younger (சா.அக.);.

     [சில் → சின் → சின்னான் (மு.தா. 140);]

 சின்னான்2 ciṉṉāṉ, பெ. (n.)

   சிறு கொண்டையோடு கூடிய கருந்தலையும் மணற்பழுப்பான செதிள் தோற்றமுமுடைய உடலும் கொண்டதும் மாந்தர் வாழ் விடங்களைச் சார்ந்து வாழ்வதுமான குருவி வகை; red vented bulbul.

     [சின் → சின்னான்]

சின்னான் குருவிவகை

   1. சாம்பல் தலைச் சின்னான்

   2. கருங்கொண்டைச் சின்னான்

   3. சிவப்பு மீசைச் சின்னான்

   4. மஞ்சள் தொண்டைச் சின்னான்

   5. வெண்புருவச் சின்னான்

   6. மஞ்சள் புருவச் சின்னான்

   7. கருஞ்சின்னான்

சின்னாபின்னம்

சின்னாபின்னம் ciṉṉāpiṉṉam, பெ. (n.)

சின்னபின்னம், 1 பார்க்க;see sinnapinnam, .

     [சின்னம் + பின்னம்]

சின்னாமாவிலிங்கை

 சின்னாமாவிலிங்கை ciṉṉāmāviliṅgai, பெ. (n.)

   மரவகை (L.);; a species of garlic-pear.

     [சின்ன + மாவிவங்கை]

சின்னாயி

 சின்னாயி ciṉṉāyi, பெ. (n.)

சின்னம்மாள் பார்க்க;see Šinnammāl.

ம. சின்னாய

     [சின்ன + (ஆய் →); ஆயி. ஆயி = அம்மா);

சின்னாரியம்

சின்னாரியம் ciṉṉāriyam, பெ. (n.)

   கேழ்வரகு வகை, (M.M. 735);; small rāgi.

     [சின்ன + ஆரியம், ஆரியம் = கேழ்வரகு]

ஆரியம் பார்க்க

சின்னாருகம்

 சின்னாருகம் ciṉṉārugam, பெ. (n.)

   சீந்தில் (மலை);; gulancha.

சின்னாருகை

சின்னாருகை ciṉṉārugai, பெ. (n.)

சின்னாருகம் பார்க்க;see šimnārugam.

   2. மூலிகை வகை; சின்னாருகைக்கியாழம்

 a kind of drug capable of turning sub-kingdom of minerals into a liquid oil (சா.அக.);.

     [சின்னருகம் → சின்னருகை]

சின்னாருகைக்கியாழம்

 சின்னாருகைக்கியாழம் ciṉṉārugaiggiyāḻm, பெ. (n.)

   குட்டம், மூலம், உள்மூலம், இருமல் போன்ற கொடிய நோய்களுக்குக் கொடுக்கப்படும் கியாழம், கருக்குநீர்;Šinnärugai-k-kiyālam is prescribcd for leprosy, piles, fistula, consumption, urinary and venerul diseases (சா.அக.);

     [சின்னாருகை + கியாழம்)

சின்னாருதம்

 சின்னாருதம் ciṉṉārudam, பெ. (n.)

சின்னாருகை பார்க்க;see Sinnärugai (சா.அக.);.

சின்னி

சின்னி ciṉṉi, பெ. (n.)

   1. சிறியது; small child, little thing.

   2. முகத்தலளவைக் கருவி; a small measure.

     ‘இரண்டு சின்னிப் பூ’ (நெல்லை.);.

   3. சின்னிபொம்மை பார்க்க;see šinni-pommai.

   4. புரட்டுக்காரி (இ.வ.);; tricky woman.

   5. மருந்துச்செடி வகை (மூஅ.);; Indian Shrubby copper leaf.

   6. கிராம்பு (மலை.);; cinnamon.

   7. குன்றிமணி,

 crab’s eye.

   8. தண்டங்கிழங்குச் செடி வகை (வின்.);; a bulbous plant.

   ம. சின்னி;க. சிட்டி

   62 சின்னியிலை

     [கல் → கில் = சிறியது, துண்டு சில் → சின் → சின்னான் = சிறியவன். சில் → சின் – சின்னி = சிறியது, சிறிய முகத்தவனவை, குன்றிமணி சிறுமதியுடைய புரட்டுக்காரி)

சின்னிக்காய்

 சின்னிக்காய் ciṉṉikkāy, பெ. (n.)

சீயக்காய்:

 soap-pod wattle (சேரநா.);.

ம. சின்னிக்காய்

சின்னிக்கிழங்கு

சின்னிக்கிழங்கு ciṉṉikkiḻṅgu, பெ. (n.)

   1. சிறு சின்னிச்சாறு; juice of the leaves of brich leaved acalypha

     [சின்னி + கிழங்கு]

சின்னிசன்னி

 சின்னிசன்னி siṉṉisaṉṉi, பெ. (n.)

   குன்றிச் செடி; crab’s eye (சா.அக.);.

     [சின்னி + சன்னி]

சின்னிச்சாறு

சின்னிச்சாறு ciṉṉiccāṟu, பெ. (n.)

   1. சிறு சின்னிச்சாறு; juice of the leaves of brich leaved acalypha.

   2. சிறுநீர்; urine (சா.அக.);.

     [சின்னி + சாறு]

சின்னிபொம்மை

 சின்னிபொம்மை ciṉṉibommai, பெ. (n.)

   பின்னல் மயிருள்ள தலையும், மரத்தால் செய்யப்பட்ட கரங்களும், நீண்டு தொங்குஞ் சட்டையுங் கொண்டதாய், ஒரு சார் இரவலர் தம் மனம் போன போக்கில் தாளமிடும்படிச் செய்து, கையில் வைத்தாட்டும் ஒருவகைப் பொம்மை; small wooden doll carried by itinerant beggar-women, who make the doll dance and clap its hands to the accompaniment of music.

     [சின்னி + பொம்மை]

சின்னிமாமுனி

 சின்னிமாமுனி ciṉṉimāmuṉi, பெ. (n.)

   சிருகுறுங்கை மூலிகைச்செடி; a variety of conehead plant (சா.அக.);.

     [சின்னி + மாமுனி]

சின்னிமார்

 சின்னிமார் ciṉṉimār, பெ. (n.)

   சிறுசின்னிச் செடி; a species of copper leaf (சா.அக.);.

சின்னியிலை

சின்னியிலை ciṉṉiyilai, பெ. (n.)

   சிறுசின்னிக் கீரை (பதார்த்த.536);; a species of copper leaf.

     [சின்னி + இலை]

சின்னியுரு

 சின்னியுரு ciṉṉiyuru, பெ. (n.)

   வெள்ளைக் குன்றி; white bead vine (சா.அக.);.

     [சின்னி + உரு]

சின்னிர்

சின்னிர் ciṉṉir, பெ. (n.)

   1. கலங்கலான நீர் (சீவக. 2381, உரை.);; muddy water.

     “துடியடிக் கயந்தலை வழக்கிய சின்னீரை” (கலித்.);.

   2. சிறுநீர் (வின்);; urine.

     [சில் + நீர் சில் = சிறிதளவு, சின்னது, குறைந்தது, கலங்கியது, இழிந்தது]

சின்னிலுட்டை

 சின்னிலுட்டை ciṉṉiluṭṭai, பெ. (n.)

   திண்டுக்கல் வட்டத்திலுள்ள சிற்றுர்; a village in Dindigul Taluk.

     [சின்ன-(இலுப்பை);இலுட்டை]

சின்னிவிரல்

 சின்னிவிரல் ciṉṉiviral, பெ. (n.)

   கண்டுவிரல் (யாழ்.அக.);; little finger.

     [சின்னி + விரல்]

சின்னிவைப்புநஞ்சு

 சின்னிவைப்புநஞ்சு ciṉṉivaippunañju, பெ. (n.)

   வைப்புநஞ்சு வகையுளொன்று; a prepared arsenic (சா.அக.);.

     [சின்னி + வைப்புநஞ்சு]

சின்னீரவின்பம்

சின்னீரவின்பம் ciṉṉīraviṉpam, பெ. (n.)

   1. சிற்றின்பம்; camal pleasure.

   2. கலவியின்பம்:

 sexual pleasure (சா.அக.);

     [சின்னீரம் + இன்பம். சில் → சின்;

நேரம் → நீரம்]

சின்னுக்கோழி

 சின்னுக்கோழி ciṉṉukāḻi, பெ. (n.)

சிறிய புள்ளிகளை உடைய கோழி:

 ahen.

     [சின்னு+கோழி]

சின்னூல்

சின்னூல் ciṉṉūl, பெ. (n.)

   1. சிறுநூல்; small treatise

     “சின்மையைச் சின்னூல் என்றது போல்” (பதிற்றுப் 76, உரை.);.

   2 நேமிநாதம்:

 a tamil grammar, Nēminadam.

     “சின்னூ லுரைத்த குணவீர பண்டிதன்” (தொண்டை சத. 32);.

     [சில் + நூல்]

சின்னெறி

சின்னெறி ciṉṉeṟi, பெ. (n.)

   கள்ளச்சிறுவழி; secret-passage.

     “திமிரம் போன சின்னெறி போலு மென்பார்” (பாரத இந்திர.31);.

     [சில் + நெறி]

சின்னை

சின்னை ciṉṉai, பெ. (n.)

   பெரிய கடல்மீன் வகை; large sea-fish.

     “கடல் வழிச் சுறவு சின்னை” (கந்தபு. ஏம. 25);.

சின்னையா

சின்னையா ciṉṉaiyā, பெ. (n.)

   1. சிற்றப்பன்; father’s younger brother; mother’s younger sister’s husband.

   2. தலைவனின் மகன்; leader’s son.

ம. சின்னய்ய

     [சின்ன + ஐயா]

   3 சினக்கூவை

சின்னோக்கு

சின்னோக்கு ciṉṉōkku, பெ. (n.)

   1. சிறுபார்வை; glance.

   2. அமைந்த பார்வை அல்லது கிட்டப் பார்வை; short sight.

     [சில் + நோக்கு]

சின்னோய்

சின்னோய் ciṉṉōy, பெ. (n.)

   1. சிறு நோய்; minor complaints.

   2. எளியநோய்; Grafluorruit; simple diseases without complication.

   3. சிலநோய்; some diseases (சா.அக.);.

     [சின் + நோய்]

சின்மதி

சின்மதி ciṉmadi, பெ. (n.)

   சிற்றறிவு; poor understanding.

     “பெரிய பேதைமைச் சின்மதிப் பெண்மையால்” (கம்பரா. சூளா.12);,

     [சில் → சின், சின் + மதி]

சின்மயன்

சின்மயன் ciṉmayaṉ, பெ. (n.)

   தூயவறிவுப் பிழம்பான ஆதன் அல்லது இறைவன்; individual soul or god, as pure intelligence.

     “மலின மறு சின்மயன்” (கைவல். சந். 120);.

சின்மயம்

சின்மயம் ciṉmayam, பெ. (n.)

அறிவுக்கடல்:

 embodiment of pure intelligence.

     “சின்மயவுள்ளொளியே” (பிரபோத.1, 2);.

     [சித்து → சின் + மயம்]

சின்முத்திரை

சின்முத்திரை ciṉmuttirai, பெ. (n.)

   அறவுரைக் குறியாகச் சுட்டுவிரல் நுனியைப் பெருவிரல் நுனியுடன் சேர்த்துக் காட்டும் அறிவு முத்திரை; hand-pose assumed by a guru while giving spiritual instruction.

     “மோன ஞானமமைத்த சின்முத்திரைக்கடலே” (தாயு.பன்மாலை.1);

     [சித்து → சின் + முத்திரை]

சின்மை

சின்மை

சின்மை ciṉmai, பெ. (n.)

   1. எண்ணிக்கையின் சிறுமை; smallness, fewness.

     “எழுத்தின் சின்மை மூன்றே” (தொல். பொருள். 358);,

   2, இழிவு (சிலப்.10:130, உரை.);; coarseness, vulgarity, as of language.

   3. குரலின் மென்மை; Softness, lowness, as of voice.

     “சின்மொழி நோயோ” (திவ் இயற், திருவிருத் 20);.

     [சில் → சின் → சின்மை]

சிபி

 சிபி cibi, பெ. (n.)

   வள்ளன்மையிற் பேர் பெற்ற கதிரவகுல மன்னன்; a king of the solar race, renowned for his liberality.

சிப்பமுத்து

சிப்பமுத்து cippamuttu, பெ. (n.)

   செயற்கை முத்து; artificial pearl.

தெ. சிப்பமுத்தமு

     [சிப்பம்3 + முத்து]

சிப்பம்

சிப்பம்1 cippam, பெ. (n.)

   1. பொட்டலம்; parcel.

   2. சிறுமூட்டை;  bundle.

   3. ஒருவன் சுமக்கும் அளவுள்ள கட்டப்பட்ட சுமை (வின்.);; a man’s load of tobacco leaves.

   ம. சிப்பம்;தெ. சிப்பமு

     [சுள் → (சுட்டு); → சிட்டு (மு.தா.140);. சிட்டு → சிறியது. சிட்டு → சிட்டம் → சிப்பம்]

 சிப்பம்2 cippam, பெ. (n.)

   சிறுமை (யாழ்ப்,);; a little, trifle.

ம. சிம்மி

     [சில் → சிறு → சிற்பம் → சிப்பம்]

 சிப்பம்3 cippam, பெ. (n.)

 statuary art, artistic fancy work.

     “கடிமலர்ச் சிப்பமும்” (பெருங். உஞ்சைக். 34:167);.

     [சில் → சில்பு → சிற்பு → சிற்பம் (வ.வ. 154);. சிற்பம் →சிப்பம்]

த. சிற்பம் → Skt. silpa.

சிப்பற்றட்டு

 சிப்பற்றட்டு cippaṟṟaṭṭu, பெ. (n.)

சிப்பல் பார்க்க;see Sippal.

     [சிப்பல் + தட்டு]

சிப்பலித்தட்டு

 சிப்பலித்தட்டு cippalittaṭṭu, பெ. (n.)

சிப்பல் பார்க்க;see Sippal.

     [சிப்பல் → சிப்பலி + தட்டு]

சிப்பல்

சிப்பல் cippal, பெ. (n.)

   1. மூங்கில் சிம்பினாலான மூடி; bamboo lid.

   2. கஞ்சி வடித்தல் முதலியவற்றிற்குதவும் தட்டு; colander, perforated rice-strainer.

   தெ. சிம்பி;க. சிப்பலு, சிப்பல, சிப்பில், சிப்புல்

     [சிம்பு = மூங்கிற்சிம்பு, சிம்பு → சிப்பு → சிப்பல் = மூங்கிற் சிம்புகளால் முடையப் பெற்ற சிறுதட்டு, அதைப்போல் மாழையாலான துளைகளுள்ள தட்டு]

 சிப்பல் cippal, பெ.(n.)

   கஞ்சி வடிக்க உதவும் மூங்கில் தட்டு; a bamboo plate used as a Strainer.

மறுவ தட்டுக்கூடை, வடிதட்டு

     [சிலுப்பு-சிப்பு-சிப்பல்]

சிப்பாதிமூலி

 சிப்பாதிமூலி cippātimūli, பெ. (n.)

   தைவேளை (மலை.);; species of cleome.

சிப்பி

சிப்பி cippi, பெ. (n.)

   உண்கலமாகிய மண்தட்டு; a flat earthen pottery used for eating purposes.

     [சிறு-சிறுப்பி-சிப்பி]

 சிப்பி1 cippi, பெ. (n.)

   1. சிற்பி பார்க்க;see sirpi.

   2. தையற்காரன், துன்னக்காரன் (சிலப். 5:32, அடிக்குறிப்பு);; tailor.

     [சிற்பி → சிப்பி]

 சிப்பி2 cippi, பெ. (n.)

   1. முத்து முதலியவை பொதிந்திருக்கும் ஓடு; pearl-oyster, oystershell.

   2. சிப்பியோடு கூடிய நீர்வாழ் உயிரி; shell-fish.

     “நண்டு சிப்பி வேய்கதலி” (நல்வழி, 36);.

   3. தயிர் அளந்துவிடும் கொட்டாங்கச்சி; coconut-shell for measuring out curds.

   ம. சிப்பி;   க. சிப்பு, சிப்பு, சிம்பு, சிம்பி, சிம்பெ;   தெ. சிப்ப; Pkt., Pali. sippi;

 Skt. sukti;

 Port. Chipo

     [சிம்பு → சிப்பு → சிப்பி]

 சிப்பி3 cippi, பெ. (n.)

   1. உவர்மண்; a secret term used for fullers earth.

   2. நச்சுப்பல்; poisonus fang of a serphent.

சிப்பிக்கோடாலி

 சிப்பிக்கோடாலி cippikāṭāli, பெ. (n.)

   இலை தழைகளை வெட்ட உதவும் கருவி; hook knife pole.

     [சிப்பி+கோடாலி]

சிப்பிச்சி

 சிப்பிச்சி cippicci, பெ. (n.)

   துத்தம்; white vitriol.

சிப்பிச்சுண்ணாம்பு

சிப்பிச்சுண்ணாம்பு cippiccuṇṇāmbu, பெ. (n.)

   கிளிஞ்சிலை நீற்றியெடுத்த சுண்ணாம்பு. (வின்.);; shell-lime.

     [சிப்பி2 + சுண்ணாம்பு, சுள் → சுண் → சுண்ணம் → சுண்ணாம்பு]

சிப்பித்தட்டு

சிப்பித்தட்டு cippittaṭṭu, பெ. (n.)

சிப்பல் (இந்துபாக.62); பார்க்க;see Sippal.

     [சிப்பல் + தட்டு – சிப்பத்தட்டு → சிப்பித் தட்டு]

சிப்பித்தான்பழம்

 சிப்பித்தான்பழம் cippittāṉpaḻm, பெ. (n.)

   சீமை நறுவிலி; foreign sebesten.

     [சிப்பித்தான் + பமும்]

சிப்பித்தைலம்

 சிப்பித்தைலம் cippittailam, பெ. (n.)

   புழுக்கடி வெட்டு, ஊறல் போன்றவற்றின் தொல்லை யகல உடம்பின் மேற்பூசும் மருந்தெண்ணெய்; a medicated oil extracted probably from molluse and used cxternally for scold head and itching (சாஅக.);.

     [சிப்பி + தைலம்]

 Skt. taila → த. தைலம்

சிப்பிநீறு

சிப்பிநீறு cippinīṟu, பெ. (n.)

சிப்பிச்சுண்ணாம்பு (வின்.); பார்க்க;see Sippi-c-cunnambu.

     [சிப்பி2 + நிறு]

சிப்பிநீற்று-தல்

சிப்பிநீற்று-தல் cippinīṟṟudal,    5 செகுவி (v.i.)

   கிளிஞ்சிலைச் சுண்ணாம்பாகத் தாளித்தல்; to roasting or reducing shell into a lime powder (சா.அக.);.

     [சிப்பி + நீற்று_,]

சிப்பிப்பாறை

 சிப்பிப்பாறை cippippāṟai, பெ. (n.)

   சிப்பிப் படுகை; an oyster-bed.

ம. சிப்பிப்பாற

     [சிப்பி + பாறை]

சிப்பிமீன்

சிப்பிமீன் cippimīṉ, பெ. (n.)

   1. கிளிஞ்சலின் ஒட்டிற்குள் இருக்கும் மீன் இனம்; a species of shell fish.

   2. நூற்றுக்கண் மீன் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுவதும், அழகான புள்ளிகளமைந்ததுமான கடல் மீன் இனம்; a kind of sea-fish commonly known as hundredeyed fish in English because of its innumerable spots on the body.

     [சிப்பி + மீன்]

சிப்பிமுத்து

 சிப்பிமுத்து cippimuttu, பெ. (n.)

   சிப்பியில் விளையுந் தரங்குறைந்த முத்து; an inferior kind of pearl obtained from oysters – mother of pearls.

     [சிப்பி + முத்து முள் → (மள்); → மண் → மணி = உருண்ட கூவம் அல்லது விதை உருண்ட பாசி]

சிப்பிமெட்டி

 சிப்பிமெட்டி cippimeṭṭi, பெ. (n.)

   கிளிஞ்சல் வகையுளொன்று; a kind of shell.

     [சிப்பி + மெட்டி]

சிப்பியச்சு

 சிப்பியச்சு cippiyaccu, பெ. (n.)

   தொடரியில் (சங்கிலியில்); கோத்தற்குரிய மணிகள் செய்ய உதவும் கம்மியர் அச்சு; goldsmith’s mould for making shell – shaped pendants.

     [சிப்பி + அச்சு]

சிப்பியன்

சிப்பியன் cippiyaṉ, பெ. (n.)

   கம்மியன் (வின்.);; fancy-worker, engraver.

   2. துன்னக்காரன், தையற்காரன் (யாழ்.அக);; tailor.

   தெ. சிப்பெவாடு;க. சிப்பிக, து. சிப்பிக.

     [சிற்பி → சிப்பி → சிப்பியன்]

சிப்பியம்

 சிப்பியம் cippiyam, பெ. (n.)

   கத்தியாலறுத்து அரத்தத்தை வெளியேற்றும், அரத்தக்கட்டி வகை; an abcess bleeding on incision (சா.அக.);

சிப்பியவேலை

 சிப்பியவேலை cippiyavēlai, பெ. (n.)

   அழகிய வேலை (வின்.);; any curious workmanship, fancy needle-work.

சிற்பம் = நுண்டொழில், நுட்பத்தொழில்.

     [சிற்பி → சிப்பி → சிப்பியம் + வேவை]

சிப்பியுயிரி,

 சிப்பியுயிரி, cippiyuyiri, பெ. (n.)

கடலில் வாழும் மீன் வகைகளுள் ஒன்று

 shelfish.

     [சிப்பி+உயிரி].

சிப்பிரகருப்பம்

 சிப்பிரகருப்பம் cippiragaruppam, பெ. (n.)

   பூடுவகையுளொன்று; a kind of plant (சா.அக.);

சிப்பிலி

சிப்பிலி1 cippili, பெ. (n.)

   கழிமுகங்களில் வந்துசேரும் கடல்மீன் வகை; sea-tish in backwaters.

ம. சிப்பிலி

 சிப்பிலி2 cippili, பெ. (n.)

சிப்பல் பார்க்க;see Sippal.

   ம. சிப்பிலி;   க. சிம்பலு;தெ. சிம்பி

     [சிப்பல் → சிப்பவி → சிப்பிவி]

சிப்பிலித்தட்டு

 சிப்பிலித்தட்டு cippilittaṭṭu, பெ. (n.)

சிப்பல் பார்க்க;see Sippal.

     [சிப்பிலி + தட்டு]

சிப்புரதிமூலி

 சிப்புரதிமூலி cippuradimūli, பெ. (n.)

   வேம்பு; margosa tree.

     [சிப்பிரதி + மூலி]

சிம

 சிம cima, பெ. (n.)

ஆண்மக்களின் குடுமி (பிங்);:

 hair-tuft of men.

     [உம் → சும் → சும. சுமத்தல் = தலைமேற்பொறை கொள்ளுதல். சும → சுமை → சிமை → சிமி

சிமட்டி

 சிமட்டி cimaṭṭi, பெ. (n.)

   பேய்க் கொம்மட்டி (மலை.);; colocynth, climber.

சிமந்தாதி

 சிமந்தாதி cimandāti, பெ. (n.)

   பச்சைப் பாக்கு; raw of green areca-nut (சா.அக);.

சிமந்தாரிகம்

 சிமந்தாரிகம் cimandārigam, பெ. (n.)

   சிறுபுள்ளடி; species of desmodium. (சா.அக.);.

சிமந்தூரி

 சிமந்தூரி cimandūri, பெ. (n.)

   சிறுபுள்ளடி (மலை);; species of desmodium.

சிம்பத்தை பார்க்க

சிமம்

 சிமம் cimam, பெ. (n.)

   எல்லாம் (யாழ்.அக);; all

சிமயம்

சிமயம் cimayam, பெ. (n.)

   1. பனிமலை (பிங்.);; the Himlayas.

   2. பொதியமலை (சூடா.);; the mount Podigai in Tirunelveli District.

     [சிமையம் → சிமயம்]

சிமையம் பார்க்க

சிமரகம்

 சிமரகம் cimaragam, பெ. (n.)

   சுவர் முள்ளங்கி; wild country radish(சா.அக.);.

சிமலி

 சிமலி cimali, பெ. (n.)

   பூளை; malabar semul (சா.அக);.

சிமான்

சிமான் cimāṉ,    1. அவுரிவித்து; seeds of indigo plant.

   2, கந்தகம்; sulphur (சா.அக);.

சிமாளம்

 சிமாளம் cimāḷam, பெ. (n.)

சிம்மாளம் (வின்); பார்க்க;see Simmālam.

சிமாளி-த்தல்

சிமாளி

சிமாளி1 cimāḷittal,    4 செ.கு.வி (v.i)

   மிகழ்தல் (யாழ்.அக,);; to rejoice greatly.

     [சிமாளம் → சிமாளி-,]

 சிமாளி2 cimāḷittal,    4 செ.குன்றாவி (v.t.)

சமாளி பார்க்க;see Samáli.

     [சமாளி → சிமாளி-,]

சிமிகம்

 சிமிகம் cimigam, பெ. (n.)

   கிளி; parrot (சா.அக);.

சிமிக்கி

 சிமிக்கி cimikki, பெ. (n.)

   பூச்செடி வகையுள் ஒன்று; a kind of Bounapart is passion flower.

சிமிக்கிப்பூ

சிமிக்கிப்பூ cimikkippū, பெ. (n.)

   1. சீமை மல்லிகைக் கொடி; foreign jasmine creeper.

   2. மலைச்சிமிக்கி; mountain foreign jasmine (சாஅக.);.

     [சிமிக்கி + பூ]

சிமிங்கி

 சிமிங்கி cimiṅgi, பெ. (n.)

   கடுக்காய்; gallnut (சா.அக.);.

சிமிட்டி

சிமிட்டி1 cimiṭṭi, பெ. (n.)

சிமிட்டுக்கள்ளி பார்க்க;see Simittu-k-kalli.

     [சிமிட்டு – சிமிட்டி]

 சிமிட்டி3 cimiṭṭi, பெ. (n.)

   பேய்க்கொம்மட்டி; colocynthis (யாழ்.அக);

     [சிமிட்டி → சிமிட்டி]

 சிமிட்டி4 cimiṭṭi, பெ. (n.)

   பேய்த் திமிட்டி; bitter apple (சா.அக);.

மறுவ. சிமிட்டிக் கள்ளி

சிமிட்டு

சிமிட்டு1 cimiṭṭudal,    5 செகுன்றாவி (v.t.)

   1. கண்ணிமைத்தல்; to blink, wink.

     “இருகண்ணுஞ் சிமிட்டாமுன்” (இராமநா. உயுத்.107);.

   2. சாடை தோன்றக் கண்சிமிட்டுதல்; to make a signal with the eyes;

 to wink.

     “சிமிட்டிக் கண்களினால்” (திருப்பு.553);.

   தந்திரஞ்செய்து சிமிட்டுப்பால் ஏமாற்றுதல் (வின்.);; to deceive artfully, impose upon by stratagem.

   ம. சிமிட்டுக;க. சிமிடு, சிவடு, சிவிடு:

து. சிமுடு

     [சிமிழ் → சிமிட்டு-,]

த. சிமிழ் → Skt. Siml

 சிமிட்டு3 cimiṭṭu, பெ. (n.)

   1. இமைப்பு; blinking of the eyes.

   2. கண்சைகை; significant wink.

     “விழிக்கொரு சிமிட்டும்” (குற்ற குற.);.

   3. சிமிட்டு வித்தை பார்க்க;see simittu-vittai.

   4. கள்ள வேலை; scamped or dishonest work.

   5. கைந்நொடி; snap of the finger.

ம. சிமிட்டு

     [சிமிழ் → சிமிட்டு]

 சிமிட்டு4 cimiṭṭu, பெ. (n.)

   கவர்ச்சி; bewitchery (சா.அக.);.

சிமிட்டுக் கண்

 சிமிட்டுக் கண் cimiṭṭukkaṇ,    பெ. (n.);   கொட்டுங்கண் (இ.வ.); blinking-eyes.

     [சிமிட்டு + கண்)

சிமிட்டுக்கண்ணன்

 சிமிட்டுக்கண்ணன் cimiṭṭukkaṇṇaṉ, பெ. (n.)

அடிக்கடி கண்சிமிட்டும் இயல்பினன்.

 a person who constantly blinks or has bad eyes (சா.அக.);.

     [சிமிட்டு + கண்ணன்)

சிமிட்டுக்கண்ணி

 சிமிட்டுக்கண்ணி cimiṭṭukkaṇṇi, பெ. (n.)

   கண்சிமிட்டிப் பூடு; a sensitive plant.

   மறுவ. கண்சிமிட்டி;தொட்டாற்சுருங்கி

     [சிமட்டு + கண்ணி]

சிமிட்டுக்கள்ளி

சிமிட்டுக்கள்ளி cimiṭṭukkaḷḷi, பெ. (n.)

   1. தந்திரக்காரி (வின்.);;  artful woman.

   2. கற்புக்குன்றியவள்; a woman of loose character, fallen woman.

சிமிட்டுப்பார்வை

 சிமிட்டுப்பார்வை cimiṭṭuppārvai, பெ. (n.)

   மருட்டு அல்லது மயக்குப்பார்வை; bewitching look (சா.அக.);.

     [சிமிட்டு + பார்வை]

சிமிட்டுப்பால்

 சிமிட்டுப்பால் cimiṭṭuppāl, பெ. (n.)

   சிமிட்டுக் கள்ளிப்பால்; spurge milk (சா. அக.);.

     [சிமிட்டு + பால்]

சிமிட்டுப்போக்கு

சிமிட்டுப்போக்கு

 சிமிட்டுப்போக்கு cimiṭṭuppōkku, பெ. (n.)

   கண் சைகை; sign by movements of the eye (சா.அக);

     [சிமிட்டு + போக்கு]

சிமிட்டுவித்தை

சிமிட்டுவித்தை cimiṭṭuvittai, பெ. (n.)

   1. மயக்கு வித்தை; witchcraft.

   2, தந்திர வித்தை; magic.

மறுவ. கண்கட்டு வித்தை

   த. விச்சை;   ச = த, வித்தை;வ. வித்தை

     [சிமிட்டு + வித்தை வித் → வித்தை]

த.வித்தை → Skt. vidya

சிமிட்டுவேலை

சிமிட்டுவேலை cimiṭṭuvēlai, பெ. (n.)

   1. கள்ள வேலை; scamped, dishonest work.

   2. வியக்க வைக்கும் வேலைப்பாடு (வின்,);; curious piece of e of workmanship, dexterous workman ship.

     [சிமிட்டு + வேலை]

சிமிண்டல்

 சிமிண்டல் cimiṇṭal, பெ. (n.)

   கிள்ளல்; pinching (சா.அக.);.

     [சிமிண்டு → சிமிண்டல், ‘அல்’ தொ.பெ. ஈறு]

சிமிண்டு

சிமிண்டு1 cimiṇṭudal, செ.குன்றாவி (v.t.)

   நிமிண்டுதல்; to tickle, pluck, pinch, prod.

     “கக்கத்திற் சிமிண்டுகிற கை நமனல்லவோ” (யாழ்.அக);.

     [நிமிடு → நிமிட்டு → நிமிண்டு → சிமிண்டு-,]

 சிமிண்டு2 cimiṇṭudal,    5 செகுன்றாவி (v.t.)

சிமிட்டு பார்க்க;see simittu-.

 சிமிண்டு3 cimiṇṭu, பெ. (n.)

   தடி (வின்.);; stick, post.

சிமியம்

 சிமியம் cimiyam, பெ. (n.)

   ஒரு வகைக் கெட்டி மூங்கில்; a kind of hard bamboo (சேரநா.);.

ம. சிமியம்

சிமிரி

 சிமிரி cimiri, பெ. (n.)

   அறுகம்புல் வகை; a kind of synodon grass(சா.அக.);

சிமிறு

 சிமிறு cimiṟu, பெ. (n.)

   அறகு; synodon grass (சா.அக.);.

சிமையம்

சிமிறுகை

 சிமிறுகை cimiṟugai, பெ. (n.)

மத்தளத்தை முடிக்கும் செயற்பாடுகளில் ஒன்று

 ending phase of beating mattalam.

     [சிமிறு+கை]

சிமிலம்

 சிமிலம் cimilam, பெ. (n.)

   மலை (பிங்);; hill, mountain.

 Skt. saila

     [சிமயம் → சிமிலம்]

சிமிலி

சிமிலி1 cimili, பெ. (n.)

   1. உறி; rope – loop for suspending pots.

     “பல்புமரிச் சிமிலி நாற்றி”55

சிமிட்டுப்பால்(மதுரைக் 483); ஆண்மக்களின் குடுமி (திவா.);:

 hair-tuft of men.

   3. சிள்வீடு (பிங்);; cricket.

   4. தோணி (யாழ்.அக);; boat.

   5. கருந்தேனீ; a blackbee (சேரநா.);.

   ம. சிமிலி;   க. சிமண்டி, சிம்மண்டெ;தெ. சிமட, சிமிட சிம்மட, சிம்மெட

 சிமிலி2 cimili, பெ. (n.)

   வெல்லங்கலந்த எள்ளின் (இ.வ.);; sesamum powder mixed with jaggery.

     [சிம்மிலி → சிமிலி]

சிமிலியுண்டை

சிமிலியுண்டை cimiliyuṇṭai, பெ. (n.)

   சருக்கரை, தேங்காய் முதலியவை சேர்த்துச் செய்யும் எள்ளுருண்டைப் பண்ணியம் (இ.வ.);; a sweetmeat made of fried sesamum seeds with scrapings of coconut kernal and sugar.

     [சிமிலி3 + உண்டை]

உருண்டை → உண்டை

சிமிளல்

 சிமிளல் cimiḷal, பெ. (n.)

   கண்சிமிட்டல்; twinkling of the eye (சா.அக.);

சிமிளி

சிமிளி1 cimiḷi, பெ. (n.)

சிமிலி3 பார்க்க;see šimili3

     [சிமிளி → சிமிலி]

 சிமிளி2 cimiḷittal,    4 செ.கு.வி. (v.i.)

சிமிழ்2_ (வின்.);. பார்க்க;see Simil.

/

     [சிமிழ் → சிமிள் → சிமிளி]

சிமிளிகம்

 சிமிளிகம் cimiḷigam, பெ. (n.)

   பூளைச்செடி; malabar semul (சா.அக.);.

சிமிளிப்பு

 சிமிளிப்பு cimiḷippu, பெ. (n.)

   கண்கொட்டுகை ((சா.அக.);; winking of the eyes.

     [சிமிழ் → சிமிள் → சிமிளி → சிமிளிப்பு]

சிமிள்வித்தை

 சிமிள்வித்தை cimiḷvittai, பெ. (n.)

   மைதடவிச் செய்யும் கண்கட்டுவித்தை; the art of fascinating the eyes of the spectators in the performance of jugglery with the aid of magic paint (சா.அக.);.

மறுவ. மயககுவததை

     [சிமிள் + வித்தை]

சிமிழி

 சிமிழி cimiḻi, பெ.(n.)

   நன்னிலம் வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Nannilam Taluk.

     [குமிழ்-சிமிழ்-சிமிழி]

சிமிழிவட்டம்

 சிமிழிவட்டம் cimiḻivaṭṭam, பெ. (n.)

பனை ஒலையால் செய்யப்பெற்ற கவிப்புக்குடை: a hat umbrella made of palm leaves (சேரநா.);

சிமிழிவட்டம்

சிமிழ்

சிமிழ்1 cimiḻttal,    4 செ.குன்றாவி. (v.t.)

   1. கட்டுதல் (பிங்.);; to tic, bind.

     “பாசப் பிணிப்பினாற் சிமிழ்ப் புண்டு” (பிரபோத 5:5);.

   2. அகப்படுத்தல்; to entrap, catch.

     “வேட்டுவன் புட்சிமிழ்த் தற்று” (குறள்.274);.

     [இமிழ்2 – சிமிழ்-,]

 சிமிழ்2 cimiḻttal,    4 செ.குன்றாவி (v.t.)

   கண்கொட்டுதல் (பிங்);; to wink, blink.

மறுவ. சிமிட்டுதல்

     [இமை → சிமை → சிமிழ்-,]

 சிமிழ்3 cimiḻ, பெ. (n.)

   1. செப்பு; small round jewel box, small caskat.

     “தட்டா னடித்த சிமிழ்போல்”

   2. திமில் (இ.வ.);; hump.

ம. சிமுழ்

     [திமில் → திமிழ் → சிமிழ்]

சிமிழ் வகைகள்

   1. மருப்புதந்த)ச்சிமிழ்

   2. கொம்புச்சிமிழ்

   3. மரச்சிமிழ்

   4. செம்புச்சிமிழ்

   5. வெள்ளிச்சிமிழ்

   6. மாவிலிங்கச்சிமிழ்

சிமிழ்ப்பு

சிமிழ்ப்பு

 சிமிழ்ப்பு cimiḻppu, பெ. (n.)

பிணைப்பு: bondage, tic.

     “காதலில் வரு சிமிழ்ப் பனைத்தும்”

     [இமிழ் → சிமிழ் → சிமிழ்ப்பு]

சிமுக்கம்

சிமுக்கம் cimukkam, பெ. (n.)

   1. கைமுட்டியால் குத்துதல்இ அடித்தல்; a beat (with the fist);.

   2. அச்சம்; fear.

   3. வலிமை; strength

   4. பேச்சு; speech.

   5. அசைவு; movement (சேரநா.);

சிமுக்கிடு-தல்

சிமுக்கிடு-தல் cimukkiḍudal,    20 செகுவி (v.i.)

   1. எச்சரிக்கைசெய்தல் (வின்.);; to give alarm, utter a warning, used only in the negative.

   2. அசைதல் (சங்.அக);; to move.

ம. சிமுக்கு.

     [சிமுக்கு இடு-,]

சிமுக்கு

 சிமுக்கு cimukku, பெ.(n.)

   சிறுகுச்சி, சிறுவளார்; splint.

     [சீள்-சிமுக்கு]

சிமுடிகம்

 சிமுடிகம் cimuḍigam, பெ. (n.)

   பயற்றங்கொடி என்னும் தட்டைப்பயற்றுக்கொடி; creeper of chinese dolichos (சா.அக.);.

சிமுட்டி

 சிமுட்டி cimuṭṭi, பெ. (n.)

கீழாநெல்லி (மலை);:

 a small plant.

ம. சிமுட்டி

சிமுதை

 சிமுதை cimudai, பெ. (n.)

   கொடிமுந்திரி; sweet berry (சா.அக);.

சிமை

சிமை cimai, பெ. (n.)

   1. மலையுச்சி; summit of a mountain.

     “தோய்வருஞ் சிமைதொறும்” (பரிபா 7,13);

   2. குடுமி. (வின்.);; hair-tuft.

     [உம் → சும் → சும. சுமத்தல் = தலைமேற் பொறை கொள்ளுதல். சும → சுமை → சிமை (வேக. 36);]

 ME., AF.,OF. summe, somme;

 L. summa, summur (highest);;

 E. sum.

 ME., OF. sohmet, sommcttc, som (top);;

 L. summum;

 E. summit.

சிமையம்

சிமையம் cimaiyam, பெ. (n.)

   1. உச்சி; top

     “ஒளிர்கொள் சிமைய வுரவுமலர் வியன்கா” (நெடுநல்.27);.

   2. மலையுச்சி; summit of a mountain.

   3. கொடுமுடி; peak.

     “சிமையத், திமையமும்” (சிலப் 6, 28);.

   4. மலை; mountain, hill.

     “பணிவார் சிமையக் கானம் போகி” (மதுரைக் 148);

     [சிமை → சிமையம்]

 E: summit;

 Fr. sommet;

 L: summum;

 Sp: šima mountain;

 E: sum;

 Fr: sume;

 some;

 Fr: somme;

 L: summa.

சிம்பட்டை

 சிம்பட்டை cimbaṭṭai, பெ. (n.)

சிம்பத்தை பார்க்க;see Simbattai (சா.அக.);

     [சிம்பத்தை → சிம்பத்தை → சிம்பட்டை]

சிம்பதை

 சிம்பதை cimbadai, பெ. (n.)

சிம்பத்தை (மலை); பார்க்க;see Simbattai.

     [சிம்பத்தை → சிம்பதை]

சிம்பத்தை

 சிம்பத்தை cimbattai, பெ. (n.)

   சிறுபுள்ளடி (மலை.);; species of desmodium.

     [சிம்பதை → சிம்பத்தை]

சிம்பதை

சிம்பர்

 சிம்பர் cimbar, பெ. (n.)

   துமுக்கி (துப்பாக்கி); யிலிடும் தக்கை (யாழ்.அக.);;  ramrod.

     [சிம்பு → சிம்பர்]

சிம்பல்

சிம்பல்1 cimbal, பெ. (n.)

ஒலிக்கை யாழ். அக.):

 sounding.

     [சிம்பு3 → சிம்பல்]

 சிம்பல்3 cimbal, பெ. (n.)

துள்ளுகை (உ.வ.);:

 frisking labout.

     [சிம்பு1 → சிம்பல்]

 சிம்பல்3 cimbal, பெ. (n.)

   சிம்பு (யாழ்.அக.);; splinter, grain of boards, rough nap on the surface of coarse cloth or of paper.

     [சிம்பு6 → சிம்பன்]

சிம்பல்சிலும்பல்

சிம்பல்சிலும்பல் cimbalcilumbal, பெ. (n.)

   கந்தை (வின்);; tatters, shreds.

     [சிம்பல்3 + சிலும்பல், மீமிசைப் பொருள் மரபினைமொழி)

சிம்பி1

 simbi,

பெ. (n.);

   வாழையிலைத் துண்டு. (இ.வ.);; piece of a plantain leaf.

     [சிம்பல்3 → சிம்பி]

சிம்பி

சிம்பி2 cimbi, பெ. (n.)

சிறுவிடுகொள்:

 horse, gram; it is opposed to peruvidukol (சா.அக.);.

     [சிம்பு → சிம்பி]

சிம்பிகம்

சிம்பிகம் cimbigam, பெ. (n.)

   1. கருங்கொள்:

 black horse-gram.

   2. அவரை; Indian bean.

   3. மொச்சை; country bean.

   4. உளுந்து; blackgram.

சிம்பித்தானியம்

 சிம்பித்தானியம் cimbittāṉiyam, பெ. (n.)

இரண்டு பிரிவுகளாகப் பகுக்கப்படும், பருப்பு வகைகளைச் சார்ந்த தவசவகைகள்:

 pulse of dolichos genus (சா.அக.);.

     [சிம்பு → சிம்பி + தானியம்]

 Skt. dhänya → த.தானியம்

சிம்பிலி

 சிம்பிலி cimbili, பெ. (n.)

   சருக்கரையும் தேங்காயும் கேழ்வரகு மாவுஞ் சேர்த்துச் சிம்பு செய்த பிட்டு; comestibles made of ragi flour mixed with jaggery and coconut.

     [சிம்பு → சிம்பிலி]

சிம்பிளி-த்தல்

சிம்பிளி-த்தல் cimbiḷittal,    4 செ.கு.வி. (v.i.)

சிம்புளி- (வின்); பார்க்க: see simbul.

சிம்பிளிபொன்

 சிம்பிளிபொன் cimbiḷiboṉ, பெ. (n.)

   கண்ணிமையும் கருவிழியும் ஒட்டிக் கொள்வதால் ஏற்படும் கண்னோய். (இங்.வை.);; a disease of the eye-lids characterised by the adhesion of the eye-lids to the eye-balls.

 E. symblepharon

சிம்பு

சிம்பு cimbu, பெ. (n.)

   கைத்தறியில் புனிக்குப் பயன்படும் மெல்லிய கொம்பு; an implement in handloom weaving.

     [கிள்-சிம்-சிம்பு]

 சிம்பு2 cimbudal,    5 செகுன்றாவி (v.t.)

   1. சுண்டி யிழுத்தல் (உ.வ);; to pull hard.

உன்னாலான மட்டுஞ் சிம்பிப்பார் (கொ.வ.);

   2. ஒன்று கூட்டுதல்; to gather together.

     ‘விளக்கு மாற்றை நன்றாய்ச் சிம்பிக்கொள்’ (இ.வ.);

   3. நன்றாய்த் தேய்த்தல்; to rubwell.

     ‘இவ்விடத்தை நன்றாய்ச் சிம்பு’ (இ.வ.);

 சிம்பு3 cimbudal,    5 செகுவி (v.i.)

   ஒலித்தல் (வின்);; to sound, make noise.

ம. சிம்பல்

     [சிலம்பு → சிம்பு]

 சிம்பு4 cimbu, பெ. (n.)

   எலும்பையொட்டியசவ்வு; M.Mf membrane sticking to the bone (சா அக.);.

 சிம்பு5 cimbu, பெ. (n.)

   கண்டியிழுக்கை; pull.

     ‘ஒரு சிம்புச் சிம்பினான்’ (உ.வ.);.

 சிம்பு6 cimbu, பெ. (n.)

   1. சிராய்; small splinter or fibre rising on a smooth surface of wood or metal.

   2. இரும்பு முதலியவற்றின் தெறிப்பு (வின்);; chip, strip, flake from beaten iron; any small mass breaking off in flakes, in scales or in chips.

   3. செதும்பு; fibre, frayed ends of a worn cord.

     “சிம்பறத் திரண்ட நரம்பு” (சீவக 559, உரை.);.

   4. மூங்கிற்சிம்பு (இ.வ.);; bamboo splints

சிம்புக்கட்டு

   5. இளம்விளாறு (வின்.);; twig, young stalk.

   6. குற்றம் (சீவக. 666, உரை.);; fault, defect.

ம. சிம்பு தெ. சிம்பி

     [சிதம்பு → சிம்பு]

 சிம்பு cimbu, பெ. (n.)

   பனங்கட்டையின் நரம்புத் தொகுதி; fibre of palmyral.

     [சில்-சிம்பு]

சிம்பு-தல்

சிம்பு-தல் cimbudal,    5 செ.குவி (v.i.)

   1. துள்ளுதல்; to frisk about.

மாடு சிம்புகிறது.

   2. சினக்குறி காட்டுதல்; to be restive, to show signs of anger.

     “தாராரைச் சிம்பித் துரத்துவார்” (விறலிவிடு.315);.

     [சிலம்பு → சிம்பு]

சிம்புகட்டு-தல்

சிம்புகட்டு-தல் cimbugaṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   ஒடிந்த உறுப்புக்குப் பத்தைவைத்துக் கட்டுதல் (இ.வ.);; to bandage fractured limbswith splints.

     [சிம்பு5 + கட்டு]

சிம்புக்கட்டு

 சிம்புக்கட்டு cimbukkaṭṭu, பெ. (n.)

   ஒடிந்த எலும்பையொட்டுவதற்காக மூங்கிற் பத்தை வைத்துக் கட்டும் கட்டு; splint bandage for fractured bones.

     [சிம்பு + கட்டு]

சிம்புக்கட்டு

சிம்புதெறி-த்தல்

சிம்புதெறி-த்தல் cimbudeṟiddal,    4 செகுவி (v.i.)

   கிராய்த்தல் (வின்);; to splinter, break into small flakes.

     [சிம்பு6 + தெறி-]

சிம்புபற-த்தல்

சிம்புபற-த்தல் cimbubaṟattal,    4 செகுவி (v.i.)

   கிராய் கிளம்புதல் (இ.வ.);; to rise into splinter or fibre.

     [சிம்பு5 + பற-,]

சிம்புரி

 சிம்புரி cimburi, பெ. (n.)

   கலம் அசையாதபடி அதன்கீழிடும் புரிமனண, சும்மாடு முதலியன (வின்);; coil of straw used for keeping steady a vessel, load etc., as on the ground or head.

க. சிம்பி

     [வைக்கோற் புரியாவான சம்மாடு, சம்மாடு + புரி = சம்மாட்டுப்புரி → சிம்மாட்டுப்புரி → சிம்பு]

சிம்புறுகண்

சிம்புறுகண்

சிம்புறுகண்1 cimbuṟugaṇ, பெ. (n.)

   கண்ணிற் படலம் உரிவதாகிய நோய் வகை(வின்.);; M.Mf disease of the conjunctivea which causes it to become sealy.

     [சிம்பு5 + உறு + கண்]

சிம்புறுகண்

 சிம்புறுகண்2 cimbuṟugaṇ, பெ. (n.)

   கண்ணிற் சிராய் பாய்வதினாலுண்டாகும் நோய்; irritation of the eyes due to flakes from a beaten iron striking against cornea of the eye (சா.அக.);.

     [சிம்புறு + கண்]

சிம்புளானோன்

சிம்புளானோன் cimbuḷāṉōṉ, பெ. (n.)

   எண்காற்புள் (சரபம்); வடிவமெடுத்த வீரபத்திரன் (பிங்.);; Virabattiran, as one who assumed the form of Šimpul.

     [சிம்புள்3 + ஆனோன்]

சிம்புளி

சிம்புளி1 cimbuḷittal,    4 செ.கு.வி. (v.i)

   1. கண்ணை மூடிக்கொள்ளுதல்; to close or shut the eyes, as in joy, terror, etc.

     “சிம்புளித்துச் சிந்தையினில் வைத்துகந்து” (தேவா 195.1);.

   2. கண்ணிமை கொட்டுதல்; to flutter the eyelids.

   ம. சிம்முக, சிம்புக, சீம்முக;   க. சிமுடு;தெ. சிமுடு

 சிம்புளி2 cimbuḷi, பெ. (n.)

செவ்வாடை (பிங்.);:

 red cloth.

     [செம்பு + உள் (மை); → சிம்புளி]

 சிம்புளி3 cimbuḷi, பெ. (n.)

கம்பளி (வின்);:

 woollen cloth, blanket.

     [சிம்பு6 → சிம்புளி)

சிம்புள்

சிம்புள்1 cimbuḷ, பெ. (n.)

   எட்டுக்காற் பூச்சி; spider (சா.அக.);

 சிம்புள்2 cimbuḷ, பெ. (n.)

   அரிமாவைக் கொல்லும் ஆற்றலுடையது எனப்படும் எண்காற்புள் (சரபம்);; a fabulous eight-legged bird.

     “பறந்து செல் சிம்புள் பையென வைத்தலும்” (பெருங். இலாவாண. 11:65);. சிம்புட் பறவையே சிறகை விரி! எழு! – பாவேந்தர்.

சிம்புவிடு-தல்

சிம்புவிடு-தல் cimbuviḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   மரக்கன்று தளிர்த்தல் (வின்,);; to shoot forth tender leaves.

சிம்புவெடி-த்தல்

சிம்புவெடி-த்தல் cimbuveḍittal,    4 செ.குவி (v.i.)

சிம்புவிடு-, (வின்.); பார்க்க;see Simpu-vidu-.

     [சிம்புவிடு → சிம்புவெடி-,]

சிம்பை

 சிம்பை cimbai, பெ. (n.)

   அவரை (சூடா);; fieldbean.

சிம்ம விட்டுணு

 சிம்ம விட்டுணு cimmaviṭṭuṇu, பெ. (n.)

   காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு பல்லவ நாட்டையாண்ட மகேந்திரவர்மனின் தந்தை; father of Mahendravarman, a Pallava king, who ruled over from Kancipuram.

நாட்டுக்கு அரசனாய்த் திகழ்ந்ததோடு கலைகளுக்கும் அரசனாய்த் திகழ்ந்தான். கற்கோயில்களைக் கட்டினான்; குகைக் கோயில்களையும் உருவாக்கினான்.

சிம்மதம்

 சிம்மதம் cimmadam, பெ. (n.)

   பாம்பு; snake (சாஅக.);.

சிம்மது

 சிம்மது cimmadu, பெ. (n.)

சிம்பத்தை பார்க்க: see simbattai (சா.அக.);.

சிம்மமுகி

சிம்மமுகி cimmamugi, பெ. (n.)

   ஆடாதோடை (தைலவ. தைல.16);; malabar nut.

     [சிம்மம் + முகி]

சிம்மா-த்தல்

சிம்மா-த்தல் cimmāttal,    6 செ.கு.வி. (v.i.)

   இறுமாத்தல்; to be elated with pride.

     [செம்மா → சிம்மா]

சிம்மாங்கவாதம்

 சிம்மாங்கவாதம் cimmāṅgavātam, பெ. (n.)

   ஊதைநோய் வகையுளொன்று; a kind of rheumatism (சா.அக.);.

 Skt. väta → த. ஊதை

சிம்மாங்கவாதாங்குசாறு

 சிம்மாங்கவாதாங்குசாறு cimmāṅgavātāṅgucāṟu,    சிம்மாங்க ஊதை நோயைப் போக்கும் ஆயுள்வேத மருந்து; an Åyurvédic medicinefor rheumatism (சா.அக.).

சிம்மாடு

சிம்மாடு cimmāṭu, பெ. (n.)

   சும்மாடு (மதிகள. ii, 73);; load-pad for the head

ம. சிம்மாடு

     [சம்மாடு → சிம்மாடு]

சிமாளம்

சிம்மாளம்

 சிம்மாளம் cimmāḷam, பெ. (n.)

   மகிழ்ச்சி (சங்.அக.);; exhilaration, mirth.

க. சுமான தெ. சுமாளமு

     [கும்மாளம் → கிம்மாளம் → சிம்மாளம்]

சிம்மு

சிம்மு1 cimmudal,    5 செ.குன்றாவி (v.t.)

   கொப்புளங் குத்தி விடுதல் (இ.வ.);; to open a blister.

தெ. சிம்மு

     [செம்மு → சிம்மு-,]

 சிம்மு2 cimmudal,    5 செ.குன்றாவி (v.t.)

சிம்பு1-2 பார்க்க;see Simpu-2.

 சிம்மு3 cimmu, பெ. (n.)

   எல்லை (யாழ்.அக);; limit, border.

சிம்மை

 சிம்மை cimmai, பெ. (n.)

   அவரி; indigo plant (சா-அக.);.

சியகு

 சியகு ciyagu, பெ. (n.)

   ஏறுகொடி வகையுள் ஒன்று; a kind of climber (சா.அக.);.

சியச் சினிகம்

சியச் சினிகம் ciyacciṉigam, பெ. (n.)

   உத்தாமணி; hedge cotton plant (#m-23, );

சியச்சினி

 சியச்சினி ciyacciṉi, பெ. (n.)

வேலிப்பருத்தி (மலை); பார்க்க;see Véli-p-parutti.

 Skt. srihastini

சியண்டி

 சியண்டி siyani. பெ. (n.)

சருக்கரை

 sugar (சா_அக.);.

சியத்தாவி

சியத்தாவி Siyattivi, பெ. (n.)

   பவள மல்லிகை; coral jasmine (+7-913.);

சியத்துத்தம்

சியத்துத்தம் siyattuttam, பெ. (n.)

   கடுக்காய்; Indian gallnut (&m-2/3..);.

சியநாகம்

சியநாகம் siyanagam, பெ. (n.)

   துத்தச்செய்ந் ; spon; a kind of prepared arsenic (or 913.);.

சியநாயகம்

சியநாயகம் siyanayagam, பெ. (n.)

சியநாகம் ;see siyanāgam (&m-23.);.

     [சியதாகம் – சியதாயகம்]

சியபங்கம்

சியபங்கம் Siyabaigam, பெ. (n.)

வத்தேக்கு:

 sappan wood (&m-23, );.

சியம்

சியம் siyam, பெ. (n.)

சிப்பியாகம் என்னும்

 lodh tree (ørr-2/3);.

சியாமரம்

சியாமரம் siyamaram, பெ. (n.)

   செழுமலர்க்; a species of cassia yielding luxuriant flowers (arrr-23.);.

சியாமலதை

சியாமலதை siyamaladai. பெ. (n.)

   1. வேலியிற் ul–(bub susirgif&#G3 14-; dark-blue creeper.

   2. Lunévaudiwoo, milk creeper (=m-23, );.

சியாலம்

 சியாலம் ciyālam, பெ.(n.)

   வந்தவாசி வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Wandiwash Taluk.

     [சேய்+ஆலம்]

சியெட்டி

 சியெட்டி ciyeṭṭi, பெ. (n.)

   காஞ்சிபுரம் வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Kanchipuram Taluk.

     [தீ-சீ+ன்ட்டி]

சிய்யான்

 சிய்யான் ciyyāṉ, பெ. (n.)

   தாய்வழிப் பாட்டன் (இ.வ.);; maternal grandfather (சா.அக.);

     [சேயோன் → சீமோன் → சியன் → சிய்யான்]

சிர-த்தல்

சிர-த்தல் cirattal, செ.குன்றாவி (v.t.)

   1. தேய்த்தல்; to crush, grind.

   2. அழித்தல் (வின்.);; to destroy.

சிரகசிதம்

 சிரகசிதம் siragasidam, பெ. (n.)

   பல்லிப் பூண்டு; lizard plant (சா.அக.);.

சிரகம்

சிரகம்1 ciragam, பெ. (n.)

   1. மழைத்துளி; rain drops.

   2. தூய்மைப்படுத்திய சருக்கரை; refined sugar (சா.அக.);

மறுவ தூறல், சாரல்

 சிரகம்2 ciragam, பெ. (n.)

   1. திவலை (திவா.);:

 water drop.

   2. கரகம்; water-pot, ever.

     “அடர்பொற் சிரகத்தால் வாக்கு” (கலித்.51);.

     [கரகம் → கிரகம்]

சிரகரிதம்

 சிரகரிதம் ciragaridam, பெ. (n.)

   பல்லிப் பூண்டு; lizard plant (சா.அக.);.

சிரகாதி

 சிரகாதி cirakāti, பெ. (n.)

   பறங்கிப்பட்டை; china root (சா.அக.);.

சிரகாமணக்கு

 சிரகாமணக்கு sāagasiragāmaṇaggu, பெ. (n.)

   வெள்ளை ஆமணக்கு; croton oil plant (சாஅக.);.

சிரகு

 சிரகு ciragu, பெ. (n.)

   புடவை தலைப்பு; lore Sołsee.

க.சொகு, பட செரங்கு

     [சிறகு-சிறகு].

சிரகெந்தா

 சிரகெந்தா ciragendā, பெ. (n.)

   நீர்த்திப்பிலி; water long pepper (சா.அக.);

சிரக்குழி

 சிரக்குழி cirakkuḻi, பெ. (n.)

நத்தைச் சூரி:

 bristly button-weed (சா.அக.);.

சிரக்கொழி

சிரக்கொழி cirakkoḻi, பெ. (n.)

   1. வசம்பு;  sweet flag ((சா.அக.);

சிரக்கோரை

 சிரக்கோரை cirakārai, பெ. (n.)

   கடலாத்தி; fragrant trumpet tree (சா.அக.);

சிரக்கோழி

சிரக்கோழி cirakāḻi, பெ. (n.)

   1. வசம்பு (மலை);; sweet flag.

   2. குழலாதொண்டை (மலை.);; common caper.

சிரங்கரடி

 சிரங்கரடி ciraṅgaraḍi, பெ. (n.)

   திருநாமப் பாலை; seven-leaved plant (சா.அக.);.

சிரங்காய்

சிரங்காடு

 சிரங்காடு ciraṅgāṭu, பெ. (n.)

   அடர்ந்த காடு (வின்.);; thick forest, imperetrable jungle.

     [சுரம் → சிரம் + காடு]

 சிரங்காடு ciraṅgāṭu, பெ.(n.)

   திண்டுக்கல் வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Dindigul Taluk.

     [சேரம்+காடு]

சிரங்காய்

சிரங்காய் ciraṅgāy, பெ. (n.)

   தேங்காய்; coconut (சா.அக.);.

 சிரங்காய்2 ciraṅgāy, பெ. (n.)

சிறங்கை (வின்); பார்க்க;see Sirangai.

சிரங்காற்றிச்சூரணம்

 சிரங்காற்றிச்சூரணம் ciraṅgāṟṟiccūraṇam, பெ. (n.)

அரிப்பு, சிரங்கு முதலானவற்றைப் போக்கும் கழிச்சல் சூரணம்:

 a medicinal powder curing itch and other, cutaneous affections through purgation (சா.அக.);

     [சிரங்கு + ஆற்று + சூரணம்]

சிரங்கி

 சிரங்கி ciraṅgi, பெ. (n.)

   வங்கதும், இலிங்கமும் சேர்ந்த கலப்புமருந்து; a compound of lead and vermilion as in.

     “கலிக்கின்ற வங்கத்தில் இலிங்கஞ்சேர்த்துக் கலக்கினால் சிரங்கி என்ற பேருமாச்சு” (உரோமரிஷி-முப்பு.சூத்); (சா.அக.);.

சிரங்கிரா

 சிரங்கிரா ciraṅgirā, பெ. (n.)

   பேய்ககுமட்டி; bitter apple (சா.அக.);.

சிரங்கிவித்தை

 சிரங்கிவித்தை ciraṅgivittai, பெ. (n.)

   சிரங்கியைக் கொண்டு அணியமாக்கும் பதங்கத்தைப் பொன்னாக்த்திற்கப் பயன்படுத்தும் கலை; in alchemy, the art of employing the sublimated compound lead and vermilion in the transmutation of metals (சா.அக.);

த. வித்தை → வ. வித்யா

     [சிரங்கி + வித்தை]

சிரங்கு

சிரங்கு ciraṅgu, பெ. (n.)

   1. பரு; eruption, pimple.

   2. தோலில் அரிப்புக்காணும் ஒருவகை நோய்; itch, scat.

   ம. சிரங்ஙு;   க. கெரகு;   து. கேரெ, இரணி;பட செரங்கு.

   1. ஆனைச்சிரங்கு; scabby itch.

   2. சொறிசிரங்கு; itch with scaly red patches.

   3. கமுட்டுச்சிரங்கு; itch with scaly red patches

   4. தொடர்சிரங்கு; confluent itch.

   5. பெருஞ்சிரங்கு; itch with a wide vesiculation.

   6. பரங்கிச்சிரங்கு; syphiliticitch.

சிரசோன்

சிரங்குகிள்ளு-தல்

சிரங்குகிள்ளு-தல் ciraṅgugiḷḷudal,    5 செ.குன்றாவி (v.t.)

   சினைப்புக்கிள்ளுதல்; pinching off the end of a pimple (சா.அக.);.

     [சிரங்கு + கிள்ளு-,]

சிரங்குகுத்து-தல்

சிரங்குகுத்து-தல் ciraṅguguddudal,    5 செகுன்றாவி

   1. புண்ணைக் குத்திவிடுதல்; to scratch open pimples with nails for relief from itching.

   2. வீண் காலங்கழித்தல்; to waste one’s time.

     [சிரங்கு + குத்து-.]

சிரங்குச்சொறி

 சிரங்குச்சொறி ciraṅguccoṟi, பெ. (n.)

   சொறி சிரங்கு; itch attended with scaly affections (சா.அக.);.

     [சிரங்கு + சொறி]

சிரங்குப்புண்

 சிரங்குப்புண் ciraṅguppuṇ, பெ. (n.)

   புண்ணான சிரங்கு; itch developedinto a sore (சா.அக.);.

     [சிரங்கு + புண்]

சிரங்கை

சிரங்கை1 ciraṅgai, பெ. (n.)

   1. உள்ளங்கையளவு; palmful.

   2. பால்வல்லி; milk creeper (சா.அக.);

 சிரங்கை2 ciraṅgai, பெ. (n.)

சிறங்கை (வின்.); பார்க்க;see sirangai.

     [சிறு + அங்கை → சிறங்கை → சிரங்கை]

சிரசன்

 சிரசன் sirasaṉ, பெ. (n.)

   ஒருவகைச் செய்நஞ்சு; a mineral poison.

சிரசாலம்

 சிரசாலம் ciracālam, பெ. (n.)

   வெள்விழியில் சிவப்புத் தழும்புகள், அகலமாய்ப் பரவி வலையைப் போன்று காணப்படும் கண்ணோய்; red and extensive patches of hardened veins spreading over the white coat of the eye and looking like a network (சா.அக.);.

சிரசின்னு

 சிரசின்னு sirasiṉṉu, பெ. (n.)

   மலை வேம்பு; hill neem (சா.அக.);.

சிரசுவாது

 சிரசுவாது sirasuvātu, பெ. (n.)

இலவங்க மரம்:

 clove tree (சா.அக.);

     [சிரசு + வாது]

சிரசோன்

 சிரசோன் ciracōṉ, பெ. (n.)

   சீர்பந்த வைப்பு நஞ்சு; kind of native arsenic (சா.அக.);

சிரஞ்சனம்

சிரஞ்சனம்

 சிரஞ்சனம் cirañjaṉam, பெ. (n.)

   அன்னச் சாற்றை இயல்பிற்கு மாறாக விரைவாகச் செரிமானஞ் செய்யும் பொருள்; that which hurries the chyle or other material for digestion before the usual time (சா.அக.);.

சிரடகம்

 சிரடகம் ciraḍagam, பெ. (n.)

   பூவா மாமரம்; mango tree not bearing flowers (சா.அக.);.

சிரட்குச்சி

 சிரட்குச்சி ciraṭkucci, பெ. (n.)

   நிலவேம்பு; ground neem (சா.அக.);.

சிரட்சி

 சிரட்சி ciraṭci, பெ. (n.)

   இலந்தை; indian plum (சாஅக.);.

சிரட்டகப்பை

 சிரட்டகப்பை ciraṭṭagappai, பெ. (n.)

   தேங்காய் ஒட்டாலான அகப்பை; coconut shell spoon.

ம. சிரட்டக்கயில

     [சிரட்டை + அகப்பை]

சிரட்டை

சிரட்டை ciraṭṭai, பெ. (n.)

   1. தேங்காய்ப் பருப்பினை மூடியிருக்கும் ஒட்டின் மேற்பாதி, கண்ணுள்ள பகுதி; the upper half of the coconut shell.

   2. தேங்காய்ப் பருப்பினை மூடியிருக்கும் கெட்டியான ஒடு (யாழ்.அக);; coconut shell.

   3. இரக்குங்கலம், திருவோடு; begging bowl, the hard shell of the coconut.

மறுவ, கொட்டங்கச்சி

   ம. சிரட்ட;   க. கர;   பட கரட்டலு;குட. செரடெ

     [சுர் → சுர → சுரசுர → சுரசுரப்பு. சுர் → சர் → சரு → சருசரு → சருச்சரை. சர் → சரள் = கரட்டுமண். → (சுரடு); – சுரட்டை → சிரட்டை = கரடான கொட்டாங்கச்சி (மு.தா.122);]

சிரட்டைக்கருப்பட்டி

 சிரட்டைக்கருப்பட்டி ciraṭṭaikkaruppaṭṭi, பெ. (n.)

   கருப்பட்டி வகை நாஞ்);; a kind of jaggery (செ.அக.);.

     [சிரட்டை + கருப்பட்டி]

சிரட்டைக்கைச்சி

 சிரட்டைக்கைச்சி ciraṭṭaikkaicci, பெ. (n.)

   கொட்டாங்கச்சி (வின்.);; half of a coconut shell.

மறுவ. சிரட்டைக் கையில்

ம. சிரட்டக்கயில், சிரட்டக்கய்யில்

     [சிரட்டை + கைச்சி]

சிரந்தை

சிரட்டைக்கையில்

 சிரட்டைக்கையில் ciraṭṭaikkaiyil, பெ. (n.)

சிரட்டைக்கைச்சி (வின்); பார்க்க: see Sirattaik-kaicci.

ம. சிரட்டக்கய்யில்

     [சிரட்டைக் கைச்சி → சிரட்டைக் கையில்]

சிரட்டைச்சங்கு

 சிரட்டைச்சங்கு ciraṭṭaiccaṅgu, பெ. (n.)

   இரவலர் பயன்படுத்தும் பெரிய அளவிலான சங்கு; a big size of conch which is used by beggars.

     [மறுவ, திருவோட்டுச் சங்கு]

     [சிரட்டை + சங்கு]

சிரட்டை பார்க்க

சிரணி

 சிரணி ciraṇi, பெ. (n.)

   ஒமம் (மூ.அ.);; bishop'(செ.அக.); bishop’s weed.

சிரத்தகாழகம்

 சிரத்தகாழகம் cirattakāḻkam, பெ. (n.)

சிரத்தக்காளகம் (வின்); பார்க்க: See Siratta-kKálagam.

சிரத்தக்காளகம்

 சிரத்தக்காளகம் seagasirattaggāḷagam, பெ. (n.)

   மருக்காரை (மலை);; emetic -nut.

சிரத்தியார்

 சிரத்தியார் cirattiyār, பெ. (n.)

சிறியதாயார்:

 father’s younger brother’s wife; mother’s younger sister.

     [சின்னதாயார் → சிறுதாயார் → சிறத்தயார் → சிரத்தியார் (கொ.வ);]

சிரத்து-தல்

சிரத்து-தல் ciraddudal,    5 செ.கு.வி. (v.i & v.t.)

சிரற்று-(வின்.); பார்க்க;see sirarru-.

சிரத்தை

 சிரத்தை cirattai, பெ. (n.)

   காழகம்;   மருக்காரை; a thorny shrub (சா.அக.);.

சிரநோய்

 சிரநோய் ciranōy, பெ. (n.)

தலைநோய்,

 head ache (சா.அக.);.

     [சிரம் + நோய்]

சிரந்துகம்

 சிரந்துகம் cirandugam, பெ. (n.)

நொச்சி மரம்:

 five leaved chaste tree (சா.அக.);.

சிரந்தை

சிரந்தை cirandai, பெ. (n.)

   உடுக்கை; small x-shaped drum.

     “நுண்ணுாற் சிரந்தை யிரட்டும் விரலன்” (தொல் பொருள். 81, உரை);.

     [சிரற்று → சிரற்றை → சிரத்தை → சிரத்தை]

சிரநோய்

சிரபுரம்

சிரபுரம் ciraburam, பெ. (n.)

   சீர்காழி; sikali.

     “சித்தர் வந்து பணியுஞ் செல்வச் சிரபுர மேயவனே” (தேவா.99,10);.

     [சிரம் + புரம்]

சிரப்பலம்

 சிரப்பலம் cirappalam, பெ. (n.)

   தேங்காய்; coconut (சா.அக.);

     [சிரம் + பவம்]

சிரப்பாறை

 சிரப்பாறை cirappāṟai, பெ.(n.)

   பெரியகுளம் வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Periyakulam Taluk.

     [சிரா+பாறை]

சிரப்புள்

 சிரப்புள் cirappuḷ, பெ. (n.)

   சிச்சிலிக் குருவி; a kind of king fisher (சா.அக.);.

     [சிரல் + புல் – சிரற்புள் → சிரப்புள்]

சிரமச்சாலை

சிரமச்சாலை ciramaccālai, பெ. (n.)

சிலம்பம் முதலிய படைக்கலப் பயிற்சி செய்யுமிடம்:

 place for military exercise and for practice of arms.

     “காமவேள் சிரமச்சாலையை யொக்கும் (பரிபா. 18,29, உரை);,

     [சிலம்பம் → சிரம்பம் → சிரமம் + சாலை]

சிரமஞ்செய்-தல்

சிரமஞ்செய்-தல் ciramañjeytal,    1 செ.குவி (v.i.)

   சிலம்பம் முதலிய பழகுதல் (சூடா);; to practise arms, fencing, etc.

     [சிலம்பம் → சிரம்பம் → சிரமம் + செய்-,]

சிரமடக்கி

 சிரமடக்கி ciramaḍakki, பெ. (n.)

சிரம்

சிரம்1 ciram, பெ. (n.)

   நெடுங்காலம் (சூடா);; a long tim

 சிரம்2 ciram, பெ. (n.)

   1. ஆமணக்கு (சங்அக);; castor plant.

   2. கமுகு (சங்,அக);; areca-palm.

   3. ஊதையடக்கி (வாதமடக்கி);,

 wind killer.

   4. கூகை நீறு (மூ.அ.);; arrow root flour.

   5. சீரகம்; cuminseed.

சிரயசி

 சிரயசி sirayasi, பெ. (n.)

ஆனைத் திப்பிலி:

 elephant long pepper (சா.அக.);.

சிரறு-தல்

சிரறு-தல் ciraṟudal,    5 செ.குவி (v.i.)

   1. மாறு படுதல்; to sulk, disagree.

     “சிரறுபு சீறச் சிவந்த நின் மார்பு” (கலித். 88,13);.

   2. சிதறுதல்; to scatter.

     “சிரறு சிலவூறிய நீர்வாய்ப் பத்தல்” (பதிற்றும். 22, உரை);.

சிரற்புள்

சிரற்புள் ciraṟpuḷ, பெ. (n.)

பொன்வாய்ப்புள்:

 a kind of king fisher (#m-235);.

சிரற்று-தல்

சிரற்று-தல் siarய-,    5 செ.குவி (v.i.)

   உரக்க வொலித்தல்; to shout, call loudly.

     “சிரற்றின பார்ப்பினின்…. வெய்துயிர்த் தரற்றின” (கம்பர7. கும்பக 268);.

சிரல்

சிரல்1 ciral, பெ. (n.)

   சிச்சிலி); kingfisher.

     “புலவுக் கயலேடுத்த பொன்வாய் மணிச்சிரல்” (சிறுபாண்.181);.

 சிரல்2 ciral, பெ. (n.)

   முடிவிடம் (யாழ்.அக);; top, end.

சிரவஞ்சம்

 சிரவஞ்சம் ciravañjam, பெ. (n.)

   எலிப்பயறு; rat pulse (சா.அக.); .

சிரவணி

சிரவணி ciravaṇi, பெ. (n.)

   1. நீர்த்தாரை வழியாய்ச் சிறுநீர்ப்பைக்குப் போக விடும் குழாய்க் கருவி வகையுளொன்று; a kind of tubular instrument to be introduced through the urethra into the bladder.

   2. கொட்டைக் கரந்தை; Indian globe thistle (சா.அக.);.

சிரவணியிடு-தல்

சிரவணியிடு-தல் ciravaṇiyiḍudal,    8 செ.கு.வி. (v.i.)

   சிறுநீர்த் துளை வழியாகக் குழாயூசியைச் செலுத்துதல்; to pass catheter as in cases of obstruction of urine (சா.அக.);.

சிரவம்

 சிரவம் ciravam, பெ. (n.)

கவுதாரி (பிங்.);:

 partridge.

சிரவல்

சிரவல் ciraval, பெ. (n.)

   1. கவுதாரி (பிங்,);; partridge.

   2. அதிமதுரம்:

 honey creeper (சாஅக);.

சிராகம்

 சிராகம் cirākam, பெ. (n.)

   பல தெருக்கள் கூடுமிடம் (பிங்.);; crossings, junction of many roads.

     [சிறகம் → கிரகம் → கிராகம்]

சிராநெய்

 சிராநெய் cirāney, பெ. (n.)

   சுறாமீனின் கொழுப்பு; shark’s fat (சத.அக.);.

சிராபத்திரம்

 சிராபத்திரம் cirāpattiram, பெ. (n.)

   விளாமரம்; wood-apple tree (சா.அக.);.

சிராப்பள்ளி

சிராப்பள்ளி cirāppaḷḷi, பெ. (n.)

   திருச்சிராப் பள்ளி; Tiruchirappalli.

     “சிராப்பள்ளிக் குன்றுடை யானை” (தேவா.367,1);.

சிராயம்பட்டு

 சிராயம்பட்டு cirāyambaṭṭu, பெ. (n.)

   காஞ்சி புரம்மாவட்டத்தில் செய்யாற்றிலிருந்து ஆரணி செல்லும் சாலையில் அமைந்துள்ள ஓர் ஊர்; a village in Kanchipuram, way to Ceyyaru Aranisālai.

     [சிராயம்+பட்டு]

சிராய்

சிராய்1 cirāytal,    4 செ.குவி (v.i)

   உராய்ந்து ஊறுபடுதல்; to get scratched, as in the skin.

 சிராய்2 cirāy, பெ. (n.)

   1. மரச்சக்கை; splint, splinter, shivered chip of palmyra or other timber.

   2. பனஞ்சிறாம்பு; fibres of palmyra timber.

   3. பருவின் முளை; hard and indurated part in a bubo or cancer.

சிராய்ப்பாக்கு

சிராய்ப்பாக்கு1 cirāyppākku, பெ. (n.)

   முற்றாத பாக்கு (வின்.);; unripe areca -nut.

 சிராய்ப்பாக்கு2 cirāyppākku, பெ. (n.)

   சீவிய பாக்கு; parings of areca nut for use with betel (சா.அக.);.

     [சிராய் + பாக்கு]

சிராய்விழு-தல்

சிராய்விழு-தல் cirāyviḻudal, செ.கு.வி. (v.i.)

   நார்ப் பழமாதல் (வின்.);; to be fibrous, as blighted mangoes and other fruits.

     [சிராய்2 + விழு_,]

சிராவகயானம்

சிராவகயானம் cirāvagayāṉam, பெ. (n.)

   புத்தசமய வகை; a school of Buddhism (நீலகேசி, 342, உரை);.

சிராவசம்

சிராவசம் sirāvasam, பெ. (n.)

   நான்கு திங்களில் அழியும் கரு (சி.சி. 2, 93, மறைஞா. பக். 1347);; foetus which is aborted in four months.

சிரி

சிரி1 cirittal,    4 செ.கு.வி. (v.i.)

   1. ஒலியெழுப்பியோ முகக்குறிப்பின் மூலமோ பல் தெரிய உதடுகளை விரிப்பதன் மூலமோ மகிழ்ச்சி, ஏளனம் முதலியவற்றை வெளிப் படுத்துதல்; to laugh.

     “சிரித்தது செங்கட் சீயம்”(கம்பரா.இரணியன்.127);.

   2. கனைத்தல்; to neigh, as a horse.

     “வாசி சிரித்திட” (கம்பரா.சம்புமா.8);.

   3. மலர்தல்; to blossom.

     “சிரித்த பங்கய மொத்த செங்கண்” (கம்பரா. கைகேசி 50);.

   ம. சிரிக்குக;   க. சிரிசு;   தெ. சிரு, கெரு;துட. சிர்ய (மகிழ்ச்சி);

     [சில் → சிர் → சிசி]

 சிரி2 cirittal,    4 செகுன்றாவி (v.t.)

   ஏளனம் செய்தல் (பரிகசித்தல்);; to ridicule.

     “சகம்பே யென்று தம்மைச் சிரிப்ப” (திருவாச. 4:68);.

     [சில் → சிர் → சிரி]

 சிரி3 ciri, பெ. (n.)

   மகிழ்ச்சி, ஏளனம் முதலியவற்றை வெளிப்படுத்தும் மெய்ப்பாடு, நகைப்பு (சேரநா.);; laughter, smile.

ம. சிரி

     [சிர்1 → சிரி]

 சிரி4 ciri, பெ. (n.)

   1. அம்பு; arrow

   2. வாள்; sword.

   3. கொலை செய்வோன்; murderer.

   4. வெட்டுக்கிளி; locust.

     [சில் → சிறு → சிறாய் = மரச்சில்லு, சில் → சிர் → சிரி = சில்லு]

 சிரி5 ciri, பெ. (n.)

   1. புளியமரம்; tamarind tree.

   2. கருக்குவாமரம்; deccany olive-wood (சா.அக.);.

சிரிகாலகண்டம்

 சிரிகாலகண்டம் cirigālagaṇṭam, பெ. (n.)

   குடியோட்டிப் பூடு; yellow thistle (சா.அக.);.

சிரிகாலக்கொல்லி

 சிரிகாலக்கொல்லி cirikālakkolli, பெ. (n.)

   சூரையிலந்தை; oblique – leaved jujube (சா.அக.);.

மறுவ. சூரைச்செடி

சிரிகிவிதை

 சிரிகிவிதை cirigividai, பெ. (n.)

   காக்கட்டான் விதை; kaladana seed (சா.அக.);.

     [சிரிக்கி → கிரிகி + விதை]

சிரிக்கி

 சிரிக்கி cirikki, பெ. (n.)

   காக்கட்டான் கொடி; smaller morning glory (சா.அக.);.

சிரிங்கசியம்

 சிரிங்கசியம் siriṅgasiyam, பெ. (n.)

   இசங்கு மரம்; small – leaved glory tree (சா.அக.);

சிரிங்காடகம்

சிரிங்காடகம் ciriṅgāṭagam, பெ. (n.)

   1. முக்கோண வடிவம்; a triangularorpyramidal figure (சாஅக);.

   2. ஒருவகைப்பூடு; a plant.

சிரிங்கிநஞ்சு

 சிரிங்கிநஞ்சு ciriṅginañju, பெ. (n.)

   வசனாவி என்னும் நச்சுச் செடி; aconite (சா.அக);.

மறுவ. பிச்சநாவி

இதை ஆவின் கொம்பில் கட்டி வைக்கப் பால் செந்நிறமாகும்.

சிரிஞ்சிப்பூ

 சிரிஞ்சிப்பூ ciriñjippū, பெ. (n.)

   வண்ண மேற்றப் பயன்படுத்தப்படும் செந்நிறப்பூ; a plant with red flowers used by dyers (சா.அக.);.

சிரிடம்

சிரிடம் ciriḍam, பெ. (n.)

   1. வாகைமரம்; common sirissa.

   2. குன்றி; Indian liquorice (சா.அக.);.

சிரிட்டம்

 சிரிட்டம் ciriṭṭam, பெ. (n.)

   விளாம்பட்டை (யாழ்.அக.);; the bark of the wood-apple tree.

சிரித்தபிழைப்பு

 சிரித்தபிழைப்பு cirittabiḻaibbu, பெ. (n.)

   ஏளனம் செய்யத்தக்க வாழ்க்கை (உ.வ.);; contemptible, ridiculous life.

     [சிரித்த + பிழைப்பு]

சிரிபரணி

சிரிபரணி ciribaraṇi, பெ. (n.)

   1. பேராமல்லி; long tubed Arabian jasmine.

   2. குமிழ்; coom teak (சா.அக.);.

சிரிபலம்

சிரிபலம் ciribalam, பெ. (n.)

   1. நெல்லிக்காய்; indian gooseberry.

   2. வில்வம்; bael fruit tree (சா.அக.);.

சிரிபாசம்

 சிரிபாசம் ciripācam, பெ. (n.)

   பிசின் வகையுளொன்று; resin of pine tree (சா.அக.);.

சிரிபில்லகம்

 சிரிபில்லகம் ciribillagam, பெ. (n.)

   ஆவில் புங்கு; an unknown plant (சா.அக.);.

சிரிப்பாணி

சிரிப்பாணி cirippāṇi, பெ. (n.)

   1. அடங்காச் சிரிப்பு; excessive or irrepressible laughter.

   2. பகடி; jest, fun.

   3. ஏளனம்; ridicule.

     [சிரி → சிரிப்பாணி]

சிரிப்பாணிப்படு-தல்

சிரிப்பாணிப்படு-தல் cirippāṇippaḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   1. சிரிப்புக்கிடமாதல்; to become a laughing stock.

   2. சிறுமைப்படுதல்; to suffer shame, degradation.

     [சிரிப்பாணி + படு_,]

சிரிப்பாய்ச்சிரி_த்தல்

சிரிப்பாய்ச்சிரி_த்தல் cirippāyccirittal,    4 செ. குன்றாவி (v.t.)

   இகழ்தல்; to laugh at.

     [சிரிப்பாய் + சிரி]

 சிரிப்பாய்ச்சிரி_த்தல் cirippāyccirittal,    4 செ.கு.வி (v.i.)

   1. மலிந்து கிடத்தல்; to be abundant and cheap, to be so common as to be despised.

   2. நிலை கெட்டுத்திரிதல்; to lead a despicable life.

     ‘அவன் ரிப்பாய்ச் சிரிக்கிறான்’ (தஞசை.);.

     [சிரிப்பு → சிரிப்பாய் + சிரி_,]

சிரிப்பு

சிரிப்பு cirippu, பெ. (n.)

   1. நகைப்பு; laughter.

     “கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும்” (தேவா.11,4);

   2. ஏளனம்; ridiculc.

     “அன்பர்க்கு மல்லாதவர்க்குஞ் சிரிப்பல்லவோ” (தனிப்பா.i, 198;12);.

   3. குதிரைக் கனைப்பு; neigh of horse.

     “தேரதிர்ப்பினும் புரவியஞ்சிரிப்பினும்” (உ.ப. தேசகா. சிவபுண். 74);.

   4. பகடி. (வின்.);; jest, fun.

     [சிரி → சிரிப்பு]

சிரியக்கிபழஞ்சலாகையச்சு

சிரியக்கிபழஞ்சலாகையச்சு ciriyakkibaḻñjalākaiyaccu, பெ. (n.)

   பழைய நாணய வகை; an ancient coin (M.E.R.117 of 1915);.

மறுவ. சிரியக்கியச்சு

சிரியக்கியச்சு

 சிரியக்கியச்சு ciriyakkiyaccu, பெ. (n.)

சிரியக்கிபழஞ்சலாகையச்சு பார்க்க;see siriyakki-palasicalākai-y-accu

மறுவ. சிரியக்கியச்சு

சிரியத்தி

 சிரியத்தி ciriyatti, பெ. (n.)

   உத்தாமணி; hedge Cotton (சா.அக.);.

சிரியத்தினி

 சிரியத்தினி ciriyattiṉi, பெ. (n.)

சிரியத்தி பார்க்க;see Siriyatti (சா.அக.);.

     [சிரியத்தி → சிரியத்தினி]

சிரியம்

 சிரியம் ciriyam, பெ. (n.)

   வெண்டாமரை; white lotus.

சிரீடம்

சிரீடம் cirīṭam, பெ. (n.)

   1. வாகை (பிங்.);; sirissa.

   2. குன்றி (மலை);; crab’s eye.

சிரு

 சிரு ciru, பெ. (n.)

   தோட்பொருத்து (யாழ்.அக);; shoulder-joint (சா.அக.);.

சிருகண்ணி

 சிருகண்ணி cirugaṇṇi, பெ. (n.)

   அழுகண்ணி மரம்; Indian weeping tree (சா.அக.);.

சிருகம்

சிருகம் cirugam, பெ. (n.)

   1. அம்பு (யாழ்.அக);; arrow.

   2. காற்று; wind.

   3. தாமரை; lotus.

சிருகாரிடம்

 சிருகாரிடம் cirukāriḍam, பெ. (n.)

   சாதிக்காய்; nutmeg (சா.அக.);.

சிருகாலன்

 சிருகாலன் cirukālaṉ, பெ. (n.)

   நரி; fox, jackal (சாஅக.);.

சிருகாலி

சிருகாலி cirukāli, பெ. (n.)

   1. சந்தனம்; sandal.

   2. காவட்டம் புல்; citronella (சா.அக.);.

சிருகுமி

 சிருகுமி cirugumi, பெ.(n.)

   திருத்தணி வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in TiruttaniTaluk.

     [சிறு+குமிழ்]

சிருகுலி

 சிருகுலி ciruguli, பெ. (n.)

   புளியாரை; soursorral (சா.அக.);.

சிருக்கி

 சிருக்கி cirukki, பெ. (n.)

   கற்றாழை; aloe (சா.அக);.

சிருக்கு

சிருக்கு cirukku, பெ. (n.)

   1. வேள்வியிற் பயன்படுத்தும் நெய்த்துடுப்பு; wooden ladle for pouring ghee on sacrifical fire.

     “கிஞ்சுகபத்திரமே கிட்டுஞ் சிருக்காக” (தேவை.175);.

   2. எண்ணெய் காய்ச்சுவதற்குப் பயன் படுத்தும் துடுப்பு; wooden ladle used in the preparation of medicated oil (சா.அக.);.

 சிருக்கு cirukku, பெ.(n.)

   சிற்பக் கலையில் இறையின் தொழிற் கருவியாகச் சுட்டப் பெறுவது; a feature in sculpture.

     [சிறு-சிருக்கு]

சிருக்குமுத்திரை

சிருக்குமுத்திரை cirukkumuttirai, பெ. (n.)

   பூசைக்காலத்துக் காட்டுங் கை முத்திரை வகை (சைவாநு.வி.20);; a hand-pose, in worship.

சிருங்கி

சிருங்கி1 ciruṅgi, பெ. (n.)

   நச்சுத்தன்மையைப் போக்கும் மருந்து; an antidote for poison.

     “தீற்றுதுஞ் சிருங்கி யென்பார்” (சீவக. 1277);.

 சிருங்கி2 ciruṅgi, பெ. (n.)

   பொன் (யாழ்.அக.);; gold.

சிருங்கை

சிருங்கை ciruṅgai, பெ. (n.)

   1. கண்விழியின் முற்பகுதியிலுள்ள மெல்லிய கருந்திரை; the horny transparant membrane in the fore-part of the eye.

   2. உள்ளங்கையளவு; handful (சா.அக.);

   மறுவ. ஆணிச் சவ்வு;கருவிழி

சிருங்கைக்கத்தி

 சிருங்கைக்கத்தி ciruṅgaikkatti, பெ. (n.)

கண்விழியின் மேற்றோலை அறுக்கப் பயன்படுத்தப்படும் சிறிய கத்தி,

 knife used for operating the cornea of the eye (சா.அக.);.

     [சிருங்கை + கத்தி]

சிருணமல்லி

 சிருணமல்லி ciruṇamalli, பெ.(n.)

   அரக்கோணம் வட்டத்திலுள்ள சிற்றுார்; avillagein Arkonam Taluk.

     [சிருணம்+மல்லி]

சிருணியம்

 சிருணியம் ciruṇiyam, பெ.(n.)

   பொன்னேரி வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Ponneri Taluk.

     [கிருணம்-சிருணியம்]

சிருணை

 சிருணை ciruṇai, பெ.(n.)

   திருவள்ளூர் வட்டத்திலுள்ள சிற்றூர்; a villageinTiruvallurTaluk.

     [சிருணம்-சிருணை]

சிருதி

சிருதி3 cirudi, பெ. (n.)

   பிறப்பு; birth (சா.அக);.

சிருந்துரமம்

 சிருந்துரமம் cirunduramam, பெ. (n.)

   பொட்டிலுப்பு; nitre (சா.அக);.

சிருபரணி

சிருபரணி1 cirubaraṇi, பெ. (n.)

   1. பெருங்குமிழ்; coomteak.

   2. முன்னை மரம்; Indian head achetrec (சா.அக.);.

சிருபாடிகை

 சிருபாடிகை cirupāṭigai, பெ. (n.)

   பறவை மூக்கு; bird’s beak (சா.அக.);.

சிருபாணி

சிருபாணி2 cirupāṇi, பெ. (n.)

   மருள்; hyacinth aloe (சா.அக.);.

சிரும்பவாதம்

 சிரும்பவாதம் cirumbavātam, பெ. (n.)

   காலிலுண்டாகும் வலி நோய்; rheumatism affecting the knee cap (சா.அக.);

சிரும்பிதம்

 சிரும்பிதம் cirumbidam, பெ. (n.)

   கொக்கோக முனியால், தமிழிற் கூறப்பட்ட கலவிமுறை களுலொன்று; it is an attitude in tight of it union as described in the Tamil erotic science of Kokkoga Muni (சா.அக.);.

சிருவம்

 சிருவம் ciruvam, பெ.(n.)

   சிற்பங்களில் காணப்பெறும் தொழிற்கருவி; a feature in sculpture.

     [கடு-கடும்பு]

சிரை

சிரை1 ciraittal,    4 செகுன்றாவி (v.t.)

   1. மயிர் கழித்தல்; to shave.

     “காம்பறத் தலை சிரைத்து” (திவ். திருமாலை. 38);.

   2. செதுக்குதல்; to cut with a sickle.

     “புற்சிரைத்தல் செய்ய மாட்டீர்களோ” (ஈடு.3,9, 6);.

   ம. சிரய்க்குக;   க. கெரெ, கிரி;   தெ. கொருகுட;   து. கெரெபுனி;   பட கெரெ;   கொலா. க்வர்க்;மா. க்வெரெ

 AS: sceren;

 OE: schere, shere;

 E: shear : L.G.: scheren;

 Du: scheeren;

 Ice: shera;

 Dan: shere;

 Yer: scheren.

     [சில் → சிறு → சிறாப், சில் → சிலும்பு → சிலாம்பு → சினாம்பு → சிறாம்பு = மரத்திலும் மீனிலுமுள்ள நுண்பட்டை. சில் → சி → சிராய், சிராய்த்தல் = உராய்ந்து, ஊறுபடுதல். சின் → சிர் → சிரை. சிரைத்தல் மேலுள்ளதை நீக்குதல், செதுக்குதல், மதுவித்தன்]

 சிரை2 cirai, பெ. (n.)

   நரம்பு (திவா.);; nerve, vein. Skt. sira

 சிரை sirai, பெ. (n.)

   குரங்கு (அகநி);; monkey. Skt. šira

 சிரை3 cirai, பெ. (n.)

   தாதுக்களினின்று கழிவுப் பொருட்களை வெளியேற்றும் அரத்தக் குழாய்கள்; any tube or vessal through which waste matters or secretions are discharged-duct (சாஅக.);.

சிரைத் தொழில்

சிரைத் தொழில் ciraittoḻil, பெ. (n.)

   1. சிரைக்கும் வேலை (யாழ்ப்.);; shaving.

   2. வீண்வேலை (கொ.வ.);; unprofitable task.

     [சிரை + தொழில்]

சிரைப்பாசி

 சிரைப்பாசி ciraippāci, பெ. (n.)

   கடுக்காய்; gallnut (சா.அக.);.

சிரைப்புண்

 சிரைப்புண் ciraippuṇ, பெ. (n.)

   முடிதிருத்து வோன் சிரைக்குங்காலேற்பட்ட புண்; barber’s itch (சா.அக.);.

     [சிரை + புண்]

சிரையன்

 சிரையன் ciraiyaṉ, பெ. (n.)

   மயிர் சிரைப்போன் (பிங்);; barber.

ம. சிரயன்

     [சிரை → சிரையன்]

சிரைவேலை

சிரைவேலை ciraivēlai, பெ. (n.)

   1. சிரை தொழில் (யாழ்ப்.);:

 shaving.

   2. அரை குறைப்பணி; infinished work.

     [சிரை + வேலை]

சிற-த்தல்

சிற-த்தல் sia-,    3 செ.குவி (v.i.)

   1. மேன்மையுடையதாதல்; to be eminent, illustrious.

     “சிறந்த நான்மறை முனிவர்” (புறநா. 6:19);.

   2. மேற்படுதல்; to surpass, excel.

     “தாயிற் சிறந்த தயாவான தத்துவனே” (திருவாச.1,61);.

   3. அளவிற்கதிமாகக் கனத்தல்; to be unbearable heavy.

     “சிறியோன் பெறினது சிறந்தன்று மன்னே” (புறநா.75:5);.

   4. மிகுதல்; to be abundant.

     “பெரும் பெயல் சிறத்தலின்” (மதுரைக். 244);.

   5. இன்றியமையா திருத்தல்; to be indispensable.

     “கற்பார்க்குச் சிறந்தது செவி” (தொல். சொல்.76, சேனா.);.

   6. மங்கலமாதல்; to be auspicious, lucky.

   7. அன்பாதல்; to be dear.

     “சிறந்தானென் றேவற்பாற் றன்று” (குறள்,515);.

   8. மகிழ்தல்; to rejoice.

     “உளஞ்சிறந்து புகலுவான்” (கந்தபு. யுத்தகாண். ஏமகூ.31);

   9. அழகாதல் (வின்.);; to be graceful.

   10. நனிநாகரிகமாதல்; to be elegant.

   11. பிறங்கொளி வாய்ந்ததாதல்; to be splendid.

ம. சிறக்குக

     [சுள் → (சூர்); → சீர் → சிற]

த. சிற → Skt. Sras

சிறகடி-த்தல்

சிறகடி-த்தல் Siragadi,    4 செ.கு.வி. (v.i.)

சிறகடிக்கொள்ளு)-தல் பார்க்க;see sirakaik-kol-.

     [சிறகு + அடி-,]

சிறகடிக்கொள்(ளு)-தல்

சிறகடிக்கொள்(ளு)-தல் ciṟagaḍiggoḷḷudal,    13 செ.கு.வி. (v.i.)

   பறத்தற் பொருட்டுச் சிறகடித்தல் (பு.வெ.9;19, உரை);; to flap the wings as birds commencing flight.

     [சிறகு + அடித்துக் கொள்ளு-;சிறகடித்துக் கொள்ளு → சிறகடிக் கொள்ளு-]

சிறகம்

 சிறகம் ciṟagam, செ.கு.வி. (v.i.)

   வளாகத்தின் பகுதி; wings of a complex. i.e., south wing, east wing.

     [சிறகு → சிறகம்]

சிறகர்

சிறகர் ciṟagar, பெ. (n.)

சிறகு பார்க்க;see siagu.

     “சேவலாய்ச் சிறகர்ப் புலர்த்தியோ” (பரிபா. 3:26);.

     [சிறகு → சிறகர்]

சிறகறு-தல்

சிறகறு-தல் ciṟagaṟudal,    4 செ.கு.வி. (v.i.)

   1. வலியழிதல் (இ.வ.);; to lose strength.

   2. முட மாக்குதல், தளர்வுறச் செய்தல்; to be disabled.

     ‘அவன் சிறகறுந்தான்’ (உ.வ.);

     [சிறகு + அறு. சிறகு = உறுப்பு, வலிமை, பிரிவு]

சிறகாற்று-தல்

சிறகாற்று-தல் ciṟakāṟṟudal,    5 செ.கு.வி. (v.i.)

   சிறகினை விரித்தடித்து இளைப்பாற்றிக் கொள்ளுதல் (வின்.);; to-flap the wings gently and rest, as birds.

     [சிறகு + ஆற்று-,]

சிறகி

சிறகி1 ciṟagi, பெ. (n.)

   கிளுவை (வின்.);; common teal.

     [சிறகு → சிறகி. இ = உடைமைப் பொருள் பின்னொட்டு]

 சிறகி2 ciṟagi, பெ. (n.)

   நீர்ப்பறவை; a water bird (சா.அக.);.

     [சிறகு → சிறகி]

சிறகிமீன்

 சிறகிமீன் ciṟagimīṉ, பெ. (n.)

   பறவை மீன் (வின்.);; a flying fish.

     [சிறகி + மீன். சிறகு → சிறகி]

சிறகு

சிறகு ciṟagu, பெ. (n.)

   தாலியில் சேர்க்கப் பட்டிருக்கும் சிறுபொன் தகடு; ornamental piece in tali.

     [சிறு→ சிறுகு-சிறகு]

 சிறகு1 ciṟagu, பெ. (n.)

   1. பறவை, வெளவால், பூச்சி முதலியன பறப்பதற்கு ஏதுவாக அமையும் உறுப்பு; one of the limbs or organs by which the flight of a bird, bat, insect etc., is efferted, wing.

     ‘சிறகு பறி கொடுத்த பறவை போல’ (பழ.);.

   2. பறவை யிறகுகளின் தொகுதி; plumage.

     “ஈச்சிற கன்னதோர் தோலறினும்” (நாலடி. 41);.

   3. மீன் சிறகு fin.

   ம. சிறகு;   க. எறகெ, எக்கி, எறங்கெ, றக்கெ, றெக்கெ;   தெ. எறக, ரெக்க;   து. எதிங்கெ, றெங்கெ;   பட. றக்கெ;   குட. றெக்கெ, தெறகெ;   கோத. ரெக்;   துட. தெர்க்ய்;   கோண். ரெக;   நா. றெப்ப, ரெக்க;   கொலா. றெப்பா;பர். ரெக்க.

     [சில் → கிற → சிறகு]

 சிறகு2 ciṟagu, பெ. (n.)

   1. படை கட்டடம் முதலியவற்றின் உறுப்பு (இ.வ);; wing of an army or building.

   2. தெருப்பக்கம்; row of houses, side of a street.

     “தெற்குத் தளிச்சேரி தென்சிறகு” (தெ.க.தொ. 2.216);.

   3. தெரு; street.

   4. கிளைவாய்க்கால் (வின்.);; branch channel for

 irrigation.

   5. பனையோலையிற் பாதி (யாழ்ப்.);; half of a palmyra leaf.

   6. கதவு முதலியவற்றின் இலை (யாழ்ப்.);; leaf of a door, shutter.

     [சில் → சிற → சிறகு, சிறகு = உறுப்பு, பிரிவு, கிளை]

சிறகு கட்டிப்பற-த்தல்

 சிறகு கட்டிப்பற-த்தல் Siragu-kalti-p-para, செ.கு.வி (v.i.)

   விரைந்து செல்லுதல்; to move with great swiftness, be in great haste.

     [சிறகுகட்டி → பற-,]

பறவையினம் பறந்து செல்வதை விரைவாய்ச் செல்வதாயுணர்ந்தவர்கள், மாந்தனது விரைந்த செலவினையும் பறப்பதாய்க் கூறினர். இது, மிகைப்படுத்துதல் பொருளிலும் வருதலை, ஆலாய்ப் பறக்கிறான், பறவாய்ப் பறக்கிறான் எனும் உலக வழக்கு நோக்கி யறிக.

சிறகு கோழி

 சிறகு கோழி ciṟaguāḻi, பெ. (n.)

   காட்டுக் கோழி வகை; red spurfowl.

     [சிறகு + கோழி]

சிறகு = பறக்கும் உறுப்பு வீட்டுக் கோழிகளை நோக்க, காட்டுக் கோழிகட்குப் பறக்குமாற்றல் மிகுதியாயிருத்தல் கருதி இவ்வாறமைந் திருக்கலாம்.

சிறகு தெரி-த்தல்

சிறகு தெரி-த்தல் siagu-deri,    4 செ.குவி (v.i.)

   சிறகுலர்த்துதல் (யாழ்.அக.);; to dry or air the wings, as a bird.

     [சிறகு + தெரி-, தெரி = தெளி, பரப்பு]

சிறகுகதவு

 சிறகுகதவு ciṟagugadavu, பெ. (n.)

   இரட்டைக் கதவு (யாழ்ப்.);; folding ‘door, two-leaved door.

     [சிறகு + கதவு. சிறகு = உறுப்பு, பிரிவு]

சிறகுகுடில்

 சிறகுகுடில் ciṟaguguḍil, பெ. (n.)

   தூக்குங் குடிசை (யாழ்ப்.);; small movable hut.

     [சிறகு + குடில். சிறகு = மென்மை]

மென்மையானது இயங்கற்கும் எடுத்துச் – செல்லற்கும் இயைபாயது.

சிறகுநீண்டோன்

 சிறகுநீண்டோன் ciṟagunīṇṭōṉ, பெ. (n.)

   நீண்ட சிறகையுடைய வௌவால்; long-winged bat (சா.அக.);

     [சிறகு + நீண்டோன். ஒன் = உடைமை குறித்த ஈறு]

சிறகுமுறி-தல்

 சிறகுமுறி-தல் Siragu-muri, செகுவி (v.i.)

சிறுகறு-தல் பார்க்க;see Siragaru.

     [சிறகு + முறி – முறி = அறு, பிரி, ஒடி]

சிறகுமுளைத்தல்

சிறகுமுளைத்தல் ciṟagumuḷaittal, பெ. (n.)

   1. தற்காத்துக் கொள்ளும் வலி பெறுகை; being capable of maintaining oneself.

   2. வெளியேறி விடுவகை (உ.வ.);; disappearance;

 tendency towards waste, as wealth (சா.அக.);.

     [சிறகு + முனைத்தன். சிறகு = பறக்கும் உறுப்பு, ஆற்றல்]

பறவையினம் பிறக்கும்போதே சிறகுடன்தான் பிறக்கும். எனினும் அவ்வுறுப்பு போதுமான வளர்ச்சியடைந்து, பயிற்சி பெற்றுப் பறக்கும் ஆற்றலையுணர்ந்து கொள்ளும் நிலையைச் ‘சிறகு முளைத்தல் என்பர். மாந்தவினத்திலும் பெரியோரைப் பிரியும் இளையோரைச் சிறகு முளைத்ததும் பறந்துவிட்டது’ எனும் வழக்கால் குறிப்பதைக் காணலாம்.

சிறகை

 சிறகை ciṟagai, பெ. (n.)

   உண்பவர்க்குச் சொறியினையுருவாக்குந் தன்மையுள்ள பறவை வகை; a bird, the flesh of which causes itching when eaten (சா.அக.);.

சிறகொடிந்தபறவை

சிறகொடிந்தபறவை ciṟagoḍindabaṟavai, பெ. (n.)

   1. துணையிழந்தவள்; widow.

   2. துணையிழந்தவன்; widower.

   3. நட்பினை இழந்தவர்; one who loose friendship.

     [சிறகொடித்த + பறவை]

சிறகினை இழந்த பறவை பறக்க இயலாதது போன்றது துணை இழந்தாரின் ஆற்றல் என்பதைக் குறிக்கும் கூட்டுச் சொல்.

சிறக்கணி-த்தல்

சிறக்கணி-த்தல் sirakkani,    4 செ.கு.வி (v.i.)

   1. சிறங்கணி பார்க்க;see Siraigali-,

     “சிறக்கணித் தாள் போல நகும்” (குறள், 1025);.

   2. கடைக்கண்ணாற் பார்த்தல் (சூடா.);; to cast a side look.

     [சிறங்கணி → சிறக்கணி-,]

சிறக்கணித்தல்

 சிறக்கணித்தல் ciṟakkaṇittal, தொ.பெ. (vbl.n.)

   குறைத்தல்; to diminish (சா.அக.);.

சிறக்கணிப்பு

 சிறக்கணிப்பு ciṟakkaṇippu, பெ. (n.)

   பக்கப் பார்வை; side look (சா.அக.);.

சிறக்கிமுத்து

 சிறக்கிமுத்து ciṟakkimuttu, பெ. (n.)

   முத்துவகையுளொன்று; solid pearl.

     [சிறக்கி + முத்து]

சிறங்கணி-த்தல்

சிறங்கணி-த்தல் Siraigali,    4 செகுன்றாவி (v.i.)

   1. கண்ணைச் சுருக்கிப் பார்த்தல்; to squint one’s eyes and glance.

     “குவளைமாலைப் போது சிறங்கணிப்பப் போவார்” (சிலப். கானல்வரி, 1. பாடல், 7.);.

   2. இழிவாய்க் கருதுதல்; to despise.

   3. மதியாதிருத்தல், சிறுமையாய்க் கருதுதல்; to disregard.

     [சிறுமை → சிறு → சிற, சிற + கண் → கணி]

வியப்பானதைக் காணும் போது விரித்துப் பார்த்தலும், இழிவானதைக் காணும் போது சுருக்கிப் பார்த்தலும் அனிச்சைச் செயலாய் அமைந்துளதை அறிக.

சிறங்காடு

 சிறங்காடு ciṟaṅgāṭu, பெ. (n.)

   சிறுகாடு; low jungle.

     [சிறுமை → சிறு + காடு = சிறுகாடு → சிறங்காடு]

சிறங்கி

சிறங்கி1 Siraigi,    4 செகுன்றாவி (v.t.)

   மதியாதிருத்தல், இகழ்ச்சி செய்தல்; to despise.

     [சிறங்கணி → சிறங்கி]

 சிறங்கி2 Siraigi,    4 செகுன்றாவி (v.t.)

   சிறங்கையாலளத்தல் (யாழ்ப்.);; to measure in the hollow of the hand.

     [சிறங்கை → சிறங்கி]

சிறங்கை பார்க்க

சிறங்கை

சிறங்கை ciṟaṅgai, பெ. (n.)

   கைந்நிறையளவு; quantity that can be held in the hollow of the hand;palmful, as a measure.

     “முன்னாழி முச்சிறங்கை நெல்லளந்து கொடுவா” (குமர. பிர. மீனா. குற. 26);

     [சிறு + அங்கை. அகம் + கை – அகங்கை]

சிறஞர்

 சிறஞர் ciṟañar, பெ. (n.)

நாகப்பட்டின மாவட்டத்தில் உள்ள ஓர் ஊர்.

 a village in Nagappațțiņam.

     [ஒருகா.சிறை (ஏரி அதர் (வழி);]

சிறட்டை

 சிறட்டை ciṟaṭṭai, பெ. (n.)

சிரட்டை பார்க்க;see Sirattai.

ம. சிரட்ட

     [சிரட்டை → சிறட்டை]

சிறந்த கற்பகம்

 சிறந்த கற்பகம் ciṟandagaṟpagam, பெ. (n.)

   நாகச் செய்ந்நஞ்சு (மூ.அ.);; a prepared arsenic.

சிறந்தோர்

சிறந்தோர் ciṟandōr, பெ. (n.)

   1. உயர்ந்தோர்; the great, the renowned, the illustrious.

   2. கடவுளர், தேவர்; Gods, Devas.

     “சிறந்தோ ருலகம் படருநர் போல” (பரிபா. 19:11);.

   3. உறவினர் (திவா.);; relatives.

   4. துறந்தோர் (வின்.);; ascetics.

ம. சிறந்தோர்

     [சிற + ந் + த் + ஓர். சுள் → (சூர்); → சிற, சிற → சிறப்பு (பெருமை);]

சிறப்பசை

சிறப்பசை siṟappasai, பெ. (n.)

   நேரசைகட்கும் நிரையசைகட்கும் ஒதிய எழுத்துகள் மொழியாய் நின்றால் சிறப்பசையாகும் (யாப்.8);; a metrical special syllable.

     [சிறப்பு + அசை]

சிறப்பணி

சிறப்பணி ciṟappaṇi, பெ. (n.)

   1. இனம், குணம், செயல் என்பவற்றால் ஒரு பொருளைச் சிறப்பித்துக் கூறும் அணி; figure of speech which consists in magnifying the excellence of an object.

   2. ஒப்புமையாற் பொதுமையுற் றிருந்த இரண்டு பொருள்களுக்கு ஒரு கரணியத்தால், வேறுபாடு தோன்றுவதைக்கூறும் அணி (அணியி.82);; figure of speech in which a reason is given for differentiating two similar objects taken up for comparison.

     [சிறப்பு + அணி]

சிறப்பாங்கல்

 சிறப்பாங்கல் ciṟappāṅgal, பெ. (n.)

   குருந்தக்கல் (வின்.);; corundum emery.

     [சிறப்பு + ஆம் + கல்]

சிறப்பாடு

சிறப்பாடு ciṟappāṭu, பெ. (n.)

   மேம்பாடு, சால்பு; excellence, splendour.

     “சிறப்பாடுடையர்” (தேவா.500,4);.

     [சிறப்பு + பாடு – சிறப்புப்பாடு → சிறப்படு]

சிறப்பியற்பெயர்

சிறப்பியற்பெயர் ciṟappiyaṟpeyar, பெ. (n.)

   இனத்தி (சாதியில்);லுள்ளோர் சிறப்பினால் தமக்குத்தாமே வழங்கும் பெயர் (பன்னிருபா. 151);; titles assumed by members of a community as a mark of special distinction.

     [சிறப்பு + இயற்பெயர்]

சிறப்பிலசை

சிறப்பிலசை siṟappilasai, பெ. (n.)

   நேரசை கட்கும் நிரையசைகட்கும் ஒதிய எழுத்துகள் மொழிக்கு உறுப்பாய் நிற்பின் சிறப்பிலசை எனப்படும் (யாப்.8);; an unwanted metrical syllable.

     [சிறப்பு + இல் + அசை]

சிறப்பிலாதாள்

 சிறப்பிலாதாள் ciṟappilātāḷ, பெ. (n.)

   மேம்பாடில்லாதவள், மூதேவி (சூடா);; goddess of ill-luck, as being graceless.

     [சிறப்பு + இவாதாள்]

சிறப்பில்சீர்

சிறப்பில்சீர் ciṟappilcīr, பெ. (n.)

பாட்டில் வகையுளி சேர்ந்து நிற்பரும் சீர்கள் (யாப்.வி.10.);.

     [சிறப்பு + இல் + சிர்]

சிறப்பு

சிறப்பு1 ciṟappu, பெ. (n.)

   1. தலைமை, தன்னேரில்லாத் தன்மை; pre-emience.

     “மேவிய சிறப்பின்” (தொல். பொருள்.அகத். 28);.

   2. மேம்பாடு, உயர்வு; superiority

   3. பகட்டு (ஆடம்பரம்);, ஆரவாரம்; pomp.

     “விழா சிறப்பாக நடை பெற்றது”

   4. பேராற்றல், உயர்நிலை; grandeur.

   5. நயப்பண்பு; courtesy.

   6. விருந்தோம்பும் பண்பு; hospitality.

     “விழுமியோர் காண் டொறுஞ் செய்வர் சிறப்பு” (நாலடி, 159);

     [சிற → சிறப்பு]

 சிறப்பு2 ciṟappu, பெ. (n.)

சிறப்பணி,1 (வீரசோ. அலங்.12); பார்க்க;see sirappani,1.

     [சிற → சிறப்பு]

 சிறப்பு3 ciṟappu, பெ. (n.)

   1. மிகுதி (பிங்.);; abundance, plenty.

   2. செல்வம்; wealth.

   3. வளமை; prosperity.

     “தகைப்பெருஞ் சிறப்பிற் குடுமிக்கோமான்” (புறநா. 64, 5);.

   4. இன்பம்; happiness.

     “காதலர் செய்யுஞ் சிறப்பு” (குறள், 1208);.

   5. வரிசை, நன்மதிப்பு; honours, privileges.

     “தென்னவன் பெயரொடு சிறப்புப் பெற்ற” (சிலப். 16: 109);.

   6. மதிப்பு; regard, esteem.

     “சீர்மை சிறப்பொடும்” (குறள், 195);.

   7. மேன்மை; superiority, greatness.

   8. நன்கொடை; present, gift.

     “சிறப்பறிய வொற்றின்கட் செய்யற்க” (குறள், 590);.

   9. துறக்கம், பேரின்பம், உம்பருலகம்; heaven, heavenly bliss.

     “சிறப்பீனுஞ் செல்வமு மீனும்” (குறள், 31);.

   ம. சிறப்பு;க. செறபு

     [சிற → சிறப்பு]

 சிறப்பு4 ciṟappu, பெ. (n.)

   1. வாலாயமான திருவிழா; periodical festival in a temple.

     “சிறப்பொடு பூசனை செல்லாது” (குறள், 18);.

   2. நகரத்தார் கொண்டாடும் ஒரு சடங்கு; ceremony observed by Nattukkottai Nagarattar.

     [சிற → சிறப்பு]

சிறப்புக்கட்டளை

சிறப்புக்கட்டளை ciṟappukkaṭṭaḷai, பெ. (n.)

   கோயிலில் ஏற்படுத்தப்பட்ட படையலுக்கான படித்தரம் (தெ.க.தொ.4,103);; institution of naivettiyam in a temple.

     [சிறப்பு + கட்டளை]

சிறப்புச்செய்

சிறப்புச்செய்1 Sirappu-c-cry,    1 செ.கு.வி. (v.i.)

   1. ஒப்பனைசெய்தல், அழகுபடுத்துதல் (வின்.);; to embellish.

   2. வரவேற்று முகமன் கூறுதல், விருந்தோம்பல்; to welcome, show hospitality.

     [சிறப்பு + செய். ‘செய்’ து.வி.]

 சிறப்புச்செய்2 sirappu-c-cey,    1 செ.கு.வி (v.i.)

   கோயில் திருவிழாவைக் கொண்டாடுதல் (யாழ்ப்.);; to celebrate, as a temple festival.

     [சிறப்பு + செய்-,]

சிறப்புடைக்கிளவி

சிறப்புடைக்கிளவி ciṟappuḍaikkiḷavi, பெ. (n.)

   முகமன் மொழிந்து விருந்தோம்புகை; words of hospitality.

     “சிறப்புடைக்கிளவி செவ்விதிற் பயிற்றி” (பெருங். உஞ்சைக். 34:44);.

     [சிறப்புடை + கிளவி]

சிறப்புடையரசியல்

சிறப்புடையரசியல் siṟappuḍaiyarasiyal, பெ. (n.)

   மடிந்த உள்ளத்தோனையும், மகப்பெறாதோனையும் அடிப்பிறக் கிட்டோனையும், பெண் பெயரோனையும், படையிழந்தோனையும், ஒத்த படையோடா தோனையும், பிறவும் இத்தன்மை உடையோரையும், கொல்லாது விடுதலும் கூறிப்பொருதலும் முதலியன. (தொல். பொருள். 238. நச்);; grandeur of politics.

சிறப்புப்பாயிரம்

 சிறப்புப்பாயிரம் ciṟappuppāyiram, பெ. (n.)

   ஆக்கியோன்பெயர் வழி, எல்லை, நூற்பெயர், யாப்பு, நுதலியபொருள், கேட்போர், பயன், காலம், களம், காரணம் முதலான பொருள்களைப் பற்றிப் புகலு முகத்தான் ஒரு நூலுக்குச் சிறப்பாக அமைக்கப்பட்ட முன்னுரை (தொல். பாயி. உரை.);; introduction to a book, giving particulars of the author, title of the work, subject-matter, etc., opp. to podu-p-payiram.

     [சிறப்பு + பாயிரம்]

சிறப்புப்பெயர்

சிறப்புப்பெயர் ciṟappuppeyar, பெ. (n.)

   1. பொதுப்பெயருக்கு எதிரிடையாக வொன்றற்கே, சிறப்பாக வரும் பெயர் (நன்.62, உரை.);; specific, name, opp. to podu-p-peyar.

   2. திணை, நிலம், சாதி, குடி உடைமை, குணம், தொழில், கல்வி என்ற எண் வகையானும், பொருள்களுக்குச் சிறப்பாகக் கூறும்பெயர் (நன்.393);; descriptive names of cight kinds, viz., tiai, nilam, šadi, kudi, udaimai, kuņam, tolil, kalvi.

   3. வேந்தன் கொடுக்கும் பட்டப்பெயர் (பன்னிருபா. 150);; title given by a king.

     [சிறப்பு + பெயர்]

சிறப்புமொழி

 சிறப்புமொழி ciṟappumoḻi, பெ. (n.)

சிறப்பணி (திவா.); பார்க்க;see Sirappali.

     [சிறப்பு + மொழி]

சிறப்பும்மை

சிறப்பும்மை ciṟappummai, பெ. (n.)

   குறவரு மருளுங் குன்றம் அல்லது புலையனும் விரும்பாத யாக்கை என்று சிறப்பாக வரும் உம்மை (புறநா.212, உரை);; connective particle implying superiority or inferiority.

     [சிறப்பு + உம்மை]

சிறப்புலிநாயனார்

சிறப்புலிநாயனார் ciṟappulināyaṉār, பெ. (n.)

   நாயன்மார் அறுபத்துமூவருள் ஒருவர் (பெரியபு.);; a canonized Saiva saint one of 63.

     [சிறப்பு + புவி + நாயனார்]

சிறப்புழகரம்

 சிறப்புழகரம் ciṟappuḻkaram, பெ. (n.)

   தமிழுக்குச் சிறப்பாயுள்ள ழகரம்; the letter l, as peculiar to Tamil language.

     [சிறப்பு + ழகரம், ‘கரம்’ சாரியை]

ழகரம் தமிழில் சிறப்பாகவுள்ளது எனக் குறிப்பிட்டாலும் தமிழின் இனமொழியான மலையாளத்தில் இன்றும் வழக்கில் இருக்கிறது. பழங்கன்னடம், பழந்தெலுங்கு போன்ற மொழிகளில் ழகரம் இருந்துள்ளது. ழகரம் இடம்பெற்றிருந்த சொற்களை ஒப்பு நோக்கினால் அது சில இடங்களில் முழுவதுமாக மறைந்துள்ளது. பிறவிடங்களில் க, ட, ண, த, வ போன்றனவாகத் திரிந்துள்ளது.

சிறப்புவிதி

சிறப்புவிதி ciṟappuvidi, பெ. (n.)

   ஒன்றற்கே தனித்துக் கூறும் நெறி (நன்.165, உரை);; special rule, dist. fr. podu-vidi.

     [சிறப்பு + விதி]

சிறப்பெடு-த்தல்

சிறப்பெடு-த்தல் Sirappedu,    4 செ.குவி (v.i.)

   திருவிழாக் கொண்டாடுதல்; to celebrate a festival.

     “பேய்க்கே சிறப்பெடுப்பார்” (அருட்பா, 1. நெஞ்சறி.388);.

     [சிறப்பு + எடு]

சிறப்பெழுத்து

சிறப்பெழுத்து ciṟappeḻuttu, பெ. (n.)

   ஒரு மொழிக்கே சிறப்பாக உரித்தான எழுத்து (நன். 274);; alphabetic letter peculiar to a language.

     [சிறப்பு + எழுத்து]

சிறப்பை

 சிறப்பை ciṟappai, பெ. (n.)

   மரத்தினாற் செய்யப்பட்டதும், பறவைகளைத் துரத்த வேனும், மாடுகளை அடையாளம் கண்டு பிடிக்குமாறு அவற்றின் கழுத்திற் கட்டுதற் கேனும், பயன்படுத்தப்படுவதுமான ஒரு வகை மணி (வின்.);; a kind of bell or clapper, sometimes made of wood, used to scare away birds or tied to a bullock’s neck for identification.

     [சிறப்பு → சிறப்பை]

சிறவி

சிறவி ciṟavi, பெ. (n.)

சிறகி (பதார்த்த. 899); பார்க்க;see Siragi.

     [சிறகி → சிறவி]

சிறவு

சிறவு ciṟavu, பெ. (n.)

   சிறந்தசெயல்; meritorious deed.

     “சிறவேசெய்து வழிவந்து” (திருவாச. 5:86);.

     [சிற → சிறப்பு → சிறவு]

சிறாங்கணி-த்தல்

சிறாங்கணி-த்தல் sirigami,    4 செகுன்றாவி, (v.t.)

சிறக்கணி-த்தல் பார்க்க;see sirakkani

     ” தோற்றமை தோற்றச் சிறாங்கணித்துப் பார்த்து” (திவ். பெருமாள். 6:3, வியா.);.

     [சிறக்கணி → சிறங்கணி → சிறாங்கணி]

சிறாங்கி-த்தல்

சிறாங்கி-த்தல் Sirigi,    4 செகுன்றாவி (v.t.)

   1. உள்ளங்கையளவாக்குதல்; to reduce to the size of the hollow of one’s palm.

     “கண்களைச் சிறாங்கித்துப் பருகலாயிருந்தபடி” (திருவிருத். 11, வியா, 81);. to get into one’s power or control.

     “அவனைச் சிறாங்கிக்கும் ஸம்சிலேஷ தசையில்” (ஸ்ரீவசன,25);.

   3. இரத்தல்: to beg.

     “தன்னைச் சிறாங்கித்து இருக்கிற நம்மை அறிகிறதில்லை” (ஈடு. 6:10, அவ.);.

   4. கெஞ்சுதல்; to beg, entreat.

     [சிறங்கை → சிறாங்கை → சிறாங்கி-,]

சிறாங்கு

 சிறாங்கு ciṟāṅgu, பெ. (n.)

சிராங்கு பார்க்க;see siringu.

     [சிராங்கு → சிறாங்கு] ‘

சிறாங்கை

சிறாங்கை ciṟāṅgai, பெ. (n.)

சிறங்கை பார்க்க;see sirangai

     “எனக்கும் ஒரு சிறாங்கை யிடவல்லி கோளே” (திவ். திருமாலை. 19, வியா. 72);.

     [சிறங்கை – சிறாங்கை]

சிறான்

 சிறான் ciṟāṉ, பெ. (n.)

   சிறுவன்; boy.

     [சிறுவன் → சிறான்]

சிறாமீன்

 சிறாமீன் ciṟāmīṉ, பெ. (n.)

   சிறிய மீன், வகைகளுள் ஒன்று; tope.

     [சிறுமை→சிறு→சிறா+ மீன்]

சிறாம்பி

சிறாம்பி1 sirimbi,    4 செகுன்றாவி (v.t.)

   ஒரு சேரத் திரட்டுதல்; to gather up in a mass.

     “சிறாம்பித் தனுபவிக்கலாயிருக்கை” (ஈடு, 69;2, ஜீ);.

     [சேர்த்தல் → சிறத்தல் → சிறாம்பி]

 சிறாம்பி2 ciṟāmbi, பெ. (n.)

   காவற்பரண் (யாழ்ப்.);; a loft or platform for keeping watch.

ம. சிறாம்பி

சிறாம்பு

சிறாம்பு1 sirambu-,    5 செ.கு.வி. (v.i.)

   1. குறுகுதல்; to shrink, look small.

     “சிறாம்பி இரப்பாளனாய் நின்ற நிலை” (ஈடு, 2.6:1);.

   2. இளைத்தல்; to grow lean, become emaciated.

     “இத்தலையைப் பிரிந்து வந்த சிறாம்புத லெல்லாம்” (ஈடு, 6.1:11);.

     [சிறுமை → சிறு → சிறா → சிறாம்பு-,]

 சிறாம்பு2 Sirimbu-,    5 செ.கு.வி. (v.i.)

   உராய்தல் (வின்.);; to graze, as a ball when passing.

     [சிறாய் → சிறாம்பு-,]

 சிறாம்பு3 Sirimbu-,    5 செகுன்றாவி (v.t.)

   பிறாண்டுதல் (வின்.);; to scratch with a splinter or thorn.

     [சிறாய் → சிறாம்பு-,]

 சிறாம்பு4 ciṟāmbu, பெ. (n.)

   மரச்சிலும்பு (வின்.);; fibre risings in wood shiver.

     [சில் → சிலும்பு → சிவாம்பு → சினாம்பு → சிறரம்பு = மரத்திலும் மீனிலுமுள்ள நுண்பட்டை (மு.தா.130);]

சிறாயத்துக்குச்சி

 சிறாயத்துக்குச்சி ciṟāyattukkucci, பெ. (n.)

   நிலவேம்பு (யாழ்.அக.);; Himalayan chiretta.

 U. chiraita

சிறாய்

சிறாய்1 siriy,    4 செகுன்றாவி (v.t.)

சிராய் (உ.வ.); பார்க்க;see Siray-.

     [சிறாய் → சிறாய்]

 சிறாய்2 ciṟāy, பெ. (n.)

   மரத்துண்டு; chip, Splinter.

     “ஒரு சிறாயை விசுவசித்து” (ஈடு, 35:8);.

     [சிறு → செறா → சிறா]

சிறார்

சிறார் ciṟār, பெ. (n.)

   சிறுவர்; children.

     “திதியின் சிறாரும் விதியின் மக்களும்” (பரிபா.3:6.);

     [சிறுமை → சிறு → சிறார். ‘அா’ ப.பா. ஈறு]

சிறார்பணி

 சிறார்பணி ciṟārpaṇi, பெ. (n.)

   சிறுவர்களைப் பணிக்கமர்த்தல்; child labour.

     [சிறார் + பணி. பண் → பணி]

சிறிகட்டுக்கொடி

 சிறிகட்டுக்கொடி ciṟigaḍḍuggoḍi, பெ. (n.)

   உப்புக்கட்டியென்னுங் கொடி (மலை.);; a kind of milky medicinal creeper.

     [சிறு + கட்டுக்கொடி)]

சிறிக்கி

சிறிக்கி1 ciṟikki, பெ. (n.)

சிறுக்கி பார்க்க;see sirukki.

     [சிறுக்கி – சிறவிக்கி (கொ.வ.);]

 சிறிக்கி2 ciṟikki, பெ. (n.)

   கொடிக்காக்கட்டான்; sky-blue bindweed.

சிறிசு

சிறிசு siṟisu, பெ. (n.)

   1. சிறிது (உ.வ.); பார்க்க;see Siridu.

   2. சிறுவன் அல்லது சிறுமி; young boy or girl.

     [சிறிது → சிறிசு. ஒ.நோ. கடிது – கடிசு ‘து’ ஒ.பா.ஈறு]

சிறிஞன்

சிறிஞன் ciṟiñaṉ, பெ. (n.)

   சிறுவன்; small insignificant boy.

     “அறிஞருஞ் சிறிஞரு மாதியந்தமா” (கம்பரா. ஆறுசெல்ப.45);.

     [சிறியன் → சிறிஞன், ‘ன்’ ஆ.பா.ஈறு]

சிறிட்டம்

 சிறிட்டம் ciṟiṭṭam, பெ. (n.)

   விளாம்பட்டை (இராட்);; bark of the wood-apple.

 Skt. slista.

சிறிதாக்கு-தல்

சிறிதாக்கு-தல் Siridikku-,    5 செகுன்றாவி (v.t.)

   அளவு, வடிவு போன்றவற்றில் குறைத்தல்; to make small, reduce.

ம. சிறியிக்குக

     [சிறிது + ஆக்கு – ஆகு (த.வி.); – ஆக்கு (பி.வி.);]

சிறிது

சிறிது ciṟidu, பெ. (n.)

   பொருட்படுத்தத்தக்க தல்லாதது, சிறப்பிலாதது; that which is small, trifling or insignificant.

     “இறப்பச் சிறிதென்னாது” (நாலடி,99);.

   ம. சிறிது, செறிது;   க. கிரி, கிரிது;   தெ. சிறுத;   து. கிர்து;   குட. செர்யெ;கோத., துட. கிர்

     [சிறுமை → சிறு → சிறி → சிறிது]

சிறிதுரை-த்தல்

சிறிதுரை-த்தல் iridurai,    4 செகுன்றாவி (v.t.)

   இகழ்ந்து பேசுதல், பழித்துரைத்தல்; to belittle, despise, speak contemptuously or disparagingly of.

     “சேர்ந்தாரை யெல்லாஞ் சிறிதுரைத்து” (பழ. 123);.

     [சிறுமை → சிறிது. சிறிது + உரை. சிறுமை = கீழ்மை, இகழ்ச்சி. உரை = பேச்சு]

சிறிபலம்

 சிறிபலம் ciṟibalam, பெ. (n.)

   வில்வம் (மலை.);; bael.

 Skt. Sri-phala

சிறிய

சிறிய ciṟiya, பெ.எ.(adj.)

   1. குறைந்த; small, little.

   2. இளைய; younger in age.

   3. தாழ்ந்த, இழிந்த; base, inferior.

   ம. செறிய, சிரிய;   க. கிறுது;   தெ. சிறுத;குட. செய்யெ

சிறியசிந்தையர்

 சிறியசிந்தையர் siṟiyasindaiyar, பெ. (n.)

   கீழோர் (சூடா.);; base petty – minded persons.

     [சிறுமை – சிறிய. சிறிய + சிந்தையர்]

சிறியதகப்பன்

 சிறியதகப்பன் ciṟiyadagappaṉ, பெ. (n.)

   தந்தைக்கு இளையவன் சிறிய தாயின் கணவன்; father’s younger brother;

 mother’s younger sister’s husband.

     [சிறிய + தகப்பன். தம் + அப்பன் → தமப்பன் → தவப்பன் → தகப்பன்]

சிறியதாயார்

 சிறியதாயார் ciṟiyatāyār, பெ. (n.)

சிறியதாய் பார்க்க;see Siriya-say.

     [சிறியதாய் → சிறியதாயார். ஆர் = உயர்வுப் பன்மையீறு]

சிறியதாய்

சிறியதாய் ciṟiyatāy, பெ. (n.)

   தாய்க் கிளையவள், சிற்றப்பன் மனைவி, இளைய மாற்றாந்தாய; mother’s younger sister, father’s younger brother’s wife, junior step-mother.

     “சிறியதாய் சொன்ன திருமொழி” (கம்பரா. பாசப்.41);.

க. சிக்கதாயி

     [சிறிய + தாய்]

சிறியதிருமடல்

 சிறியதிருமடல் ciṟiyadirumaḍal, பெ. (n.)

   நாலாயிரத் தெய்வப் பனுவலைச் சார்ந்ததும், திருமங்கையாழ்வாரால் செய்யப்பட்டதுமான ஒரு சிற்றிலக்கியம்; a poem by Tirumangai-y-alvar forming part of Nalayirativviya-p-pirabandam.

     [சிறிய + திருமடல்]

சிறியதிருவடி

 சிறியதிருவடி ciṟiyadiruvaḍi, பெ. (n.)

   அனுமன்; hanuman.

     [சிறிய + திருவடி]

மாலியர் கருடனை பெரியதிருவடி என்றும், அனுமனைச் சிறியதிருவடி என்றும் அழைப்பர். திருவடி பார்க்க.

சிறியது

சிறியது ciṟiyadu, பெ. (n.)

   1. வடிவத்திலோ தரத்திலோ தாழ்வானது; that which is small in size or imperior in quality.

   2. இளையது; that which is young.

ம. செறியது

     [சிறு → சிறியது]

சிறியதைலம்

சிறியதைலம் ciṟiyadailam, பெ. (n.)

   தேவைக் கேற்பக் காய்ச்சிப் பயன்படுத்தும் மருந்தெண்ணெய் (பைஷஜ.7);; medicinal oil prepared as occasion requires.

     [சிறுமை = குறைவு, சிறிது. சிறிய + தைலம்]

 Skt. taila → த. தைலம்

சிறியத்தினி

 சிறியத்தினி ciṟiyattiṉi, பெ. (n.)

   வேலிப்பருத்தி (மலை.);; hedge cotton.

 Skt. siri hastini

சிறியநோக்கு-தல்

சிறியநோக்கு-தல் siriya-nokku-,    5 செ. குன்றாவி (v.t.)

   கடைக்கணித்துப் பார்த்தல்; to casta benignant glance to ogle.

     “சிறிய நோக்கா ……… நகை முகங் கோட்டி நின்றாள்” (சீவக. 1568);.

     [சிறிய + நோக்கு]

சிறியன்

சிறியன் ciṟiyaṉ, பெ. (n.)

   1. சிறுவன்; small, insignificant person, boy.

     “சிறியனென்றென்னிளஞ் சிங்கத்தை யிகழேல்” (திவ். பெரியாழ். 14:8);.

 mean person.

     “சிறியர் செயற்கரிய செய்கலாதார்” (குறள், 26);.

ம. செறியவன்

     [சிறியவன் → சிறியன். ‘ன்’ ஆ.பா.ஈறு]

சிறியபேயத்தி

 சிறியபேயத்தி ciṟiyapēyatti, பெ. (n.)

   அத்தி வகை (இங்வை);; wild-fig.

     [சிறிய + பேயத்தி]

சிறியமனம்

சிறியமனம் ciṟiyamaṉam, பெ. (n.)

   1. சிறுமைப் பண்பு (யாழ்ப்);; pettiness.

   2. கஞ்சத்தனம்; meanness.

     [சிறிய + மனம். முன் = மனக்குறிப்பு. முன் → முன்னம் → முனம் → மனம்]

சிறியமரத்தி

 சிறியமரத்தி ciṟiyamaratti, பெ. (n.)

   சிற்றகத்தி (மலை.);; common sesban.

சிறியர்

சிறியர் ciṟiyar, பெ. (n.)

   இழிதகவுடையவன்; low, mean person.

     “தேயம்வைத் திழந்தான். சீச்சி! சிறியர் செய்கை செய்தான்” (பாஞ்.ப.378);.

     [சிறியன் → சிறியர். ‘அர்’ ப.பா.ஈறு.]

சிறியவன்

சிறியவன் ciṟiyavaṉ, பெ. (n.)

சிறியன் பார்க்க;see siriyan.

     “செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை” (குறள், 815);.

க. சிக்கவ

     [சிறுமை → சிறு → சிறிய → சிறியன் → சிறியன்]

சிறியாணங்கை

 சிறியாணங்கை ciṟiyāṇaṅgai, பெ. (n.)

சிறியாநங்கை (வின்.); பார்க்க;see siriyanamgai.

     [சிறியாநங்கை → சிறியாணங்கை]

சிறியாநங்கை

 சிறியாநங்கை ciṟiyānaṅgai, பெ. (n.)

   பூடுவகை; a species of small milkwort.

சிறியார்

 சிறியார் ciṟiyār, பெ. (n.)

சிறியர் பார்க்க;see sriyar.

     ‘சிறியாரோடு இணங்காதே;சேம்புக்குப் புளிவிட்டுக் கடையாதே’ (பழ.);

சிறியிலை

சிறியிலை ciṟiyilai, பெ. (n.)

சிற்றிலை பார்க்க;see sirrilai.

     “சிறியிலை நெல்லி” (புறநா.91);

     [சிறுயிலை → சிறியிலை]

சிறிவில்

 சிறிவில் ciṟivil, பெ. (n.)

   அகில் (மலை.);; eaglewood.

சிறு

சிறு1 Siru-    4 செகுவி (v.i.)

   1. சிறுகு1-தல் பார்க்க;see siugu.

     “சிறுத்த செலுவதனுளிருந்து” (திருப்பு.227);.

     [சில் → சிறு-,]

 சிறு2 Siru-,    4 செகுன்றாவி (v.t.)

   1. முட்டுக் கட்டையிடுதல்; to hinder.

   2. தடுத்தல் (நாஞ்.);; to resist.

     [சில் → சிறு-,]

 சிறு3 siru, பெ.எ. (adj.)

   1. குறைந்த, சிறிய; small, little.

   2. இளைய அகவையில் குறைந்த; young.

   ம. செறு, செரிய;   க. கிறி, கிற, கிறு, கிறிது;   தெ. சிறு, சிறுத;   து. கிளி, கிறு;   குட. கிர்கெ, கெர்யெ;கோத. துட. கிர்.

     [சில் → சிறு-,]

சிறு சணல்

 சிறு சணல் siṟusaṇal, பெ. (n.)

   சணல்வகை; linseed and flax plant.

ம. செறுசணம்

     [சிறு + சணல்]

சணல் பார்க்க

சிறு பறைப்பருவம்

 சிறு பறைப்பருவம் ciṟubaṟaibbaruvam, பெ. (n.)

   தலைவன் சிறுபறை வைத்துக் கொண்டு அடித்து விளையாடும் பருவத்தைச் சிறப்பிக்கும் ஆண்பாற் பிள்ளைத்தமிழ்ப் பகுதி; section of anpar-pillai-t-tamil, which describes the stage of childhood, in which the hero plays on a small drum, one of ten.

     [சிறுபறை + பருவம்]

பறையைப் போன்ற வடிவினதாகிய தோற்கருவியையும், தோற்கருவி போன்றே ஒலியெழுப்பும் பிறவற்றையுங் கொண்டு, ஒலியெழுப்பியாடும் பருவம்.

சிறு பீங்கா

 சிறு பீங்கா ciṟupīṅgā, பெ. (n.)

   நாட்டு வாதுமை; wild almond myrobalan.

     [சிறு + பீங்கா]

சிறு மரம்

 சிறு மரம் ciṟumaram, பெ. (n.)

   சிறிய பாய்மரம்; jigger.

     [சிறு + மரம்]

மீனவ வழக்கில் மரம் என்பது பொதுவில் கட்டுமரத்தையும் சிறப்பில் பாய் மரத்தையும் குறிக்கும்.

சிறு விரியன்

 சிறு விரியன் ciṟuviriyaṉ, பெ. (n.)

நச்சுத் தன்மை கொண்ட விரியன்பாம்பு (M.M.);:

 small viper.

     [சிறு + விரியன்]

சிறு விலை நாள்

சிறு விலை நாள் ciṟuvilaināḷ, பெ. (n.)

   வற்கடக்காலம்; times of scarcity, famine.

     “சிறுவிலை நாண் முந்தீந்ததொருணவின்பயன்” (கம்பரா. இராவணன் வதை 52);.

     [சிறுவிவை + தான்]

சிறுகஞ்சாங்கோரை

 சிறுகஞ்சாங்கோரை ciṟugañjāṅārai, பெ. (n.)

கஞ்சாங்கோரை (வின்); பார்க்க;see kanjangorai.

     [சிறு + கஞ்சாங்கோரை]

கஞ்சாங்கோரை வகைகளுள் வேறு பாடறிதற்காகச், ‘சிறு’ முன்னொட்டானது.

சிறுகடலாடி

 சிறுகடலாடி ciṟugaḍalāḍi, பெ. (n.)

   நாயுருவி (மலை.);; dog – prick.

ம. செறுகடுகு

     [சிறு + கடவாடி]

நாயுருவி வகைகளுளொன்றை இனம் பிரித்துக் காட்டச் ‘சிறு’ முன்னொட்டானது.

சிறுகடுகு

சிறுகடுகு1 ciṟugaḍugu, பெ. (n.)

   கடுகு; Indian mustard.

     “மஞ்சளும் இஞ்சியும் செஞ்சிறு கடுகும்” (பெருங். மகத. 17:142);.

ம. செறுகடுகு

     [சிறு + கடுகு]

 சிறுகடுகு2 ciṟugaḍugu, பெ. (n.)

   எட்டு நுண்=மணல் கொண்ட சிற்றளவு; a small unit of weight, 8 fine grains of sand.

     [சிறு + கடுகு]

சிறுகடுக்காய்

 சிறுகடுக்காய் ciṟugaḍuggāy, பெ. (n.)

   கடுக்காய் வகை (வின்.);; a variety of chebulic myrobalan.

     [சிறு + கடுக்காய்]

சிறுகண்ணாகம்

 சிறுகண்ணாகம் ciṟugaṇṇāgam, பெ. (n.)

   நச்சுப்பாம்புவகை (யாழ்.அக);; a kind of venomous serpent.

     [சிறுகண் + நாகம்]

சிறுகத்திரி

 சிறுகத்திரி ciṟugattiri, பெ. (n.)

   சூரை; hedge caper shurb.

     [சிறு + கத்திரி]

சிறு = சிறிது, கீழ், தாழ்வு, பயனற்றது.

சிறுகம்பில்

 சிறுகம்பில் ciṟugambil, பெ. (n.)

   திக்காமல்லி; dikmali gum-plant.

சிறுகம்மான்பச்சரிசி

 சிறுகம்மான்பச்சரிசி siṟugammāṉpassarisi, பெ. (n.)

சிற்றம்மான்பச்சரிசி (நாஞ்.); பார்க்க;see Sirsamman-paccarisi.

     [சிற்றம்மான்பச்சரிசி → சிறுகம்மான் பச்சரிசி]

அம்மான்பச்சரிசி பார்க்க

சிறுகருந்தும்பி

 சிறுகருந்தும்பி ciṟugarundumbi, பெ. (n.)

பூச்சியினத்தில் ஒன்று

 an insect.

     [சிறு+கரு+தும்பி]

சிறுகரையான்

 சிறுகரையான் ciṟugaraiyāṉ, பெ. (n.)

   கறையான் வகை; a species of small white ants.

     [சிறு + கரையான்]

கறையான் பார்க்க

சிறுகறி

 சிறுகறி ciṟugaṟi, பெ. (n.)

   பச்சடி முதலிய கறி வகை (விஞ்.);; minor curry preparation.

     [சிறு + கறி]

சிறுகற்றாழை

 சிறுகற்றாழை ciṟugaṟṟāḻai, பெ. (n.)

   கடற் கரையில் வளருங் கற்றாழை; sea side aloe.

ம. செறுகற்றாழ

     [சிறு + கற்றாழை. கல் + தாழை = கற்றாழை]

சிறுகல்லூரி

 சிறுகல்லூரி ciṟugallūri, பெ. (n.)

   கல்லுருவி (சங்.அக.);; blistering plant.

     [சிறு + கல்லுரரி. கல்லுருவி → கல்லுரி → கல்லூரி]

சிறுகளஞ்சி

 சிறுகளஞ்சி ciṟugaḷañji, பெ. (n.)

   ஈரோடு வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Erode Taluk.

     [சிறு+காளஞ்சி]

சிறுகளம்பூர்

 சிறுகளம்பூர் ciṟugaḷambūr, பெ. (n.)

   வேலூர் வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Vellore Taluk.

     [சிறு+களம்பூர்]

சிறுகளர்வா

 சிறுகளர்வா ciṟugaḷarvā, பெ. (n.)

   களர்வா மரம்; tooth-brush tree.

     [சிறு + களர்வா]

சிறுகளா

 சிறுகளா ciṟugaḷā, பெ. (n.)

   முட்கள் செறிந்த களாக்கீரை வகை (சங்.அக.);; a low spreading spiny evergreen shrub.

ம. செறுகளாவு

     [சிறு + களா]

சிறுகளி

 சிறுகளி ciṟugaḷi, பெ. (n.)

சிறுகளா (வின்.); பார்க்க;see Siru-Kala.

     [சிறுகளா → சிறுகளி]

சிறுகாக்கைபாடினியார்

சிறுகாக்கைபாடினியார் ciṟukākkaipāṭiṉiyār, பெ. (n.)

   சிறுகாக்கைபாடினியமென்னும் யாப்பிலக்கணஞ் செய்த பழம்புலவர் (தொல். பொருள். 650, உரை.);; author of the siru-kakkaipadiniyam, an ancient work on prosody.

சிறுகாசா

 சிறுகாசா ciṟukācā, பெ. (n.)

   காசா மரம் (திவா.);; iron wood tree.

     [சிறு + காசா]

சிறுகாஞ்சொறி

 சிறுகாஞ்சொறி ciṟukāñjoṟi, பெ. (n.)

   உடலிற் பட்டால் தினவேற்படுத்தும் இலையைக் கொண்ட செந்தொட்டிச் செடி; small climbing nettle.

ம. சிறுகாஞ்சொறி

     [சிறு + காஞ்சொறி]

சிறுகாடு

 சிறுகாடு ciṟukāṭu, பெ. (n.)

   தூறடர்ந்த காடு (வின்.);; low jungle, thicket.

     [சிறு + காடு. சிறு = அடர்த்தி, நெருக்கம்]

சிறுகாப்பியம்

 சிறுகாப்பியம் ciṟukāppiyam, பெ. (n.)

   பெருங்காப்பியவுறுப்புக்களிற் சிலகுறைந்து வரும் நூல்வகை; short narrative poem, wanting in some of the requistes of perun-kappiyam.

     [சிறு + காப்பியம் சிறு = சிறுமை, குறைபாடு.]

சிறுகாய்

 சிறுகாய் ciṟukāy, பெ. (n.)

   சாதிக்காய் (மலை.);; nutmeg.

     [சிறு + காய்]

சிறுகாரிடம்

 சிறுகாரிடம் ciṟukāriḍam, பெ. (n.)

சிறுகாய் (மலை.); பார்க்க;see sirukay.

சிறுகாலே

சிறுகாலே ciṟukālē, வி.எ. (adv.)

   புலர் பொழுதில், நாட்காலையில், விடியலில்; early in the morning, in the small hours of the morning.

     “சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்து” (திவ்.திருப்பா.29.);.

     [சிறு + காவே. சிறு = சிறிது, குறைவு. கல் → கால் = ஒளி, வெளிச்சம். காலே = காலை – காவையிலே]

சிறுகாலை

சிறுகாலை ciṟukālai, பெ. (n.)

   1. புலர்பொழுது, விடியல்; early morning, dawn.

     “சிறுகாலையட்டில் புகாதா ளரும்பிணி” (நாலடி, 363);.

   2. இளம்பருவம்; early lifetime.

     “சிறுகாலையே …….. தோட் கோப்புக் கொள்ளார்” (நாலடி, 328);.

ம. சிறுகாலம்

     [சிறு + காலை]

சிறுகாலைச்சந்தி

சிறுகாலைச்சந்தி ciṟukālaiccandi, பெ. (n.)

சிறுகாலை,-1 பார்க்க;see Sirukalai,

     “சிறுகாலைச்சந்திக்கு வைத்த திருவிளக்கு” தொ.க.தொ.3:88).

     [சிறு காலை + சந்தி, அந்தித்தல் = தெருங்குதல், கூடுதல், அந்தி → சந்தி]

காலையும் பகலும் சந்திக்கும் வேளையைக் காலைச்சந்தி எனவும், மாலையும் இரவும் சந்திக்கும் வேளையை மாலைச்சந்தி எனவும் வழங்குகிறோம். அந்த வகையில் சிறுகாலை யாகிய புலர் பொழுதும், காலைவேளையும் சந்திக்கும் பொழுது சிறுகாலைச்சந்தியாகும்.

சிறுகால்

சிறுகால் ciṟukāl, பெ. (n.)

   1 சிறிய நீரோடை,

 brook.

   2. விடியற்காலம்:

 dawn

சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்தோம்.

     [சிறு+கால்].

 சிறுகால்1 ciṟukāl, பெ. (n.)

   தென்றல் (சூடா);; south wind.

     [சிறு(மை); + கால், கால் = காற்று. சிறு = சிறுமை, மென்மை, குறைவு]

குறைந்த வேகத்தில் வீசும் காற்று இயல்பான வேகத்தினின்றும் சற்று மாறுபட்டாலே தென்றல் எனும் பெயர் மாறி, காற்று என்றழைக்கப்படுவதையும், சுழன்றடிக்கும் காற்றைச் சூறைக்காற்று என்றழைக்கப் படுவதையும் நினைத்தல் நலம்.

 சிறுகால்2 ciṟukāl, பெ. (n.)

   காவட்டம்புல் (மலை.);; citronella grass.

     [சிறு + கால்]

சிறுகினர்

 சிறுகினர் ciṟugiṉar, பெ. (n.)

   தாராபுரம் வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Tharapuram Taluk.

     [சிறு+கிணறு]

சிறுகிராமம்

சிறுகிராமம் ciṟugirāmam, பெ. (n.)

   நூறு குடியுள்ள ஊர் (சூடா.);; hamlet of 100 families, opp. to perun-kiramam.

     [சிறு + கிராமம்]

சிறுகிழங்கு

சிறுகிழங்கு ciṟugiḻṅgu, பெ. (n.)

   செடிவகை (பதார்த்த. 438);; Goa potata.

ம. செறுகிழங்ஙு

     [சிறு + கிழங்கு]

சிறுகீரை

சிறுகீரை ciṟuārai, பெ. (n.)

   1. கீரைத்தண்டு வகை; a species of amarnath.

   2. கீரைவகை (யாழ்.அக.);; a pot-herb.

ம. செறுகீர

     [சிறு + கீரை]

சிறுகு

சிறுகு1 sirugu-7 செ.கு.வி (v.i.)

   1. சிறிதாதல்; to be small, short.

   2. வளர்ச்சிகுறைதல்; stunted in growth.

   3. சுருங்குதல்; to shrink, diminish.

     “சீறிற் சிறுகுந் திரு” (குறள், 568);.

   4. நிலைதாழ்தல்; to be impoverished, to sink low.

ம. செறுகுக

     [சிறுமை → சிறு → சிறுகு-,]

 சிறுகு2 ciṟugu, பெ. (n.)

சிலுகு-1,2,6 (யாழ்.அக.); பார்க்க;see silugu 1,2,6.

     [சிலுகு → சிறுகு]

சிறுகுடல்

 சிறுகுடல் ciṟuguḍal, பெ. (n.)

   இரைப்பைமுதல் பெருங்குடல் வரையுள்ள உணவுக்குழாயின் பகுதி; small intestines.

ம. செறுகுடல், செறியகுடல்

     [சிறு + குடன், குமுன் = துனையுன்னது. குழல் → குடல் = குழல் போன்ற உறுப்பு]

சிறுகுடி

சிறுகுடி ciṟuguḍi, பெ. (n.)

   1. குறிஞ்சிநிலத்து ஊர்; village in a hilly tract.

     “மறைவரைச் சாரற் சிறுகுடி” (பெருங். உஞ்சைக். 4130);.

   2. சிற்றுார்; small village.

   3. ஏழைக்குடும்பம் (வின்.);; poor family.

     [சிறு + குடி. குள் → குட → குடி]

சிறுமை = குறைவு, வறுமை.

முதற்காலத்தில் வீடுகளெல்லாம் வட்டமாய்க் கட்டப்பட்டிருந்ததால் வீடு குடியெனப் பட்டது. ஒரு கால் வழியினர் பல இல்லங்களில் குடியிருந்தாலும் ஒரே இல்லத்தைச் சார்ந்தவராகக் கருதும் மரபும் முதற்காலத்தில், பெரும்பாலும் ஒரு சிற்றுாரில் ஒரு கால்வழியினர் இருந்ததனாலும் வீட்டைக் குறிக்கும் குடி சிற்றுரைக் குறித்தது.

மலையும் மலைசார்ந்ததும் குறிஞ்சி. குறிஞ்சியில் சமதளப்பகுதி குறைவு. அதனால் குடியிருப்பு அமைத்துக் கொளலரிது. ஒரு சில குடியிருப்புகளையே, ஊராகக் கருதிக் கொள்வர்.

 சிறுகுடி ciṟuguḍi, பெ. (n.)

   1. குட்டை; small pond.

     [சிறு + குளம்]

சிறுகுடில்

சிறுகுடில் ciṟuguḍil, பெ. (n.)

   சிறுகுடிசை, சிற்றில்; small-hut, hovel.

     “சிறுகுடி லங்க ணிருமி னீரென” (சிலஙப.16:124);.

     [சிறு + குடில். குள் → குட → குடி → குடில்]

சிறுகுன்று

 சிறுகுன்று ciṟuguṉṟu, பெ. (n.)

சிறுதிட்டை பார்க்க;see Siru-tittai.

     [சிறு + குன்று]

சிறுகுரீஇயுரை

சிறுகுரீஇயுரை ciṟugurīiyurai, பெ. (n.)

   நகைவிளைப்பதும், வழக்கு வீழ்ந்ததுமான ஒரு பழைய நூல் (தொல். பொருள். 485, உரை);; a humourous story-book of ancient times, not now extant.

     [சிறு + குருவி + உரை]

சிறுகுரு

 சிறுகுரு ciṟuguru, பெ. (n.)

   உவர்மண் (வின்.);; alkaline earth.

சிறுகுரும்பை

 சிறுகுரும்பை ciṟugurumbai, பெ. (n.)

   உயர்தர நெல்வகையுளொன்று (வின்);; a kind of fine paddy.

     [சிறு(மை); + குரும்பை]

சிறுகுறட்டை

 சிறுகுறட்டை ciṟuguṟaṭṭai, பெ. (n.)

   குறட்டை வகை (யாழ்.அக.);; a species of snake – gourd.

     [சிறு + குறட்டை]

சிறுகுறிஞ்சா

சிறுகுறிஞ்சா ciṟuguṟiñjā, பெ. (n.)

   நீரிழிவு நோயை நீக்கும் பண்புடைய மருந்துக்கொடி வகை (பதார்த்த.126);; a medicinal climber.

     [சிறு + குறிஞ்சா]

சிறுகுறிஞ்சி

சிறுகுறிஞ்சி ciṟuguṟiñji, பெ. (n.)

   1. நேர்வாளம்; croton.

   2. புளியாரை; yellow wood-sorrel.

     [சிறு + குறிஞ்சி]

சிறுகுறுங்கை

 சிறுகுறுங்கை ciṟuguṟuṅgai, பெ. (n.)

   கூம்பு வடிவிலமைந்த செடிவகை; a species of conchead.

     [சிறு + குறுங்கை]

சிறுகுறுவை

 சிறுகுறுவை ciṟuguṟuvai, பெ. (n.)

   குறுவை நெல்வகையுளொன்று; a kind of kuruvai paddy.

     [சிறு + குறுவை]

சிறுகுழி

சிறுகுழி ciṟuguḻi, பெ. (n.)

   1. கீழ்வாயிலக்கப் பெருக்கம்; multiplication of fractions, opp. to perui-guli.

   2.36 சதுரஅடி கொண்ட அளவை (இ.வ.);; a superficial measure = 36 sq. ft.

     [சிறு + குது. குள் → குழி. குழித்தல் = குழித்தெழுதுதல்]

சிறுகூவரகு

 சிறுகூவரகு ciṟuāvaragu, பெ. (n.)

   தவசப் புல்வகை; kora millet.

     [சிறு + (கூழ்வரகு); → கூவரகு]

சிறுகேசரம்

 சிறுகேசரம் ciṟuācaram, பெ. (n.)

   சிறுநாகப்பூ (சங்.அக.);; iron-wood of Ceylon.

     [சிறு + கேசரம்]

சிறுகொட்டைக்கரந்தை

 சிறுகொட்டைக்கரந்தை ciṟugoṭṭaiggarandai, பெ. (n.)

   பறவைகள் விரும்பியுண்ணும் கொட்டைக் கரந்தைவகை; a kind of chickweed.

     [சிறு + கொட்டைக்கரந்தை]

சிறுகொன்றை

சிறுகொன்றை ciṟugoṉṟai, பெ. (n.)

   தரங் குறைந்த கொன்றை மரவகை (பதார்த்த. 205);; a variety of small-sized cassia tree.

ம. செறு கொன்ன

     [சிறு + கொன்றை]

சிறுகொம்மட்டி

 சிறுகொம்மட்டி ciṟugommaṭṭi, பெ. (n.)

   வடிவிற் சிறிய, புளிப்புச்சுவைமிக்க காய்காய்க்கும் கொம்மட்டி வகை (யாழ்.அக);; a variety of small-sized cucumber.

     [சிறு + கொம்மட்டி]

சிறுகொய்யா

 சிறுகொய்யா ciṟugoyyā, பெ. (n.)

   வடிவிற் சிறிய கொய்யா வகையுளொன்று; dwarf guava.

     [சிறு + கொய்யா]

சிறுகோரை

 சிறுகோரை ciṟuārai, பெ. (n.)

   கோரைவகை (வின்.);; a kind of sedge.

     [சிறு + கோரை.]

சிறுகோல்

சிறுகோல் ciṟuāl, பெ. (n.)

   4 முழங்கொண்ட அளவுகோல் (யாழ்.அக.);; a measuring rod = 4 cubits.

     [சிறு + கோல்]

சிறுக்கன்

சிறுக்கன் ciṟukkaṉ, பெ. (n.)

   சிறுவன்; boy, youngster, a term of endearment.

     “ஆலினிலை வளர்ந்த சிறுக்கன்” (திவ். பெரியாழ். 1.4:7);.

ம. சிறுக்கன், செறுக்கன்.

     [சிறு → சிறுவன் → சிறுக்கன். ‘ன்’ ஆ.பா. ஈறு]

சிறுக்கம்

சிறுக்கம் ciṟukkam, பெ. (n.)

   1. சிறுபிள்ளைத் தனம்; trific.

   2. புன்மை (அற்பம்);; triff.

   3. இழிவு; baseness.

     [சிறு → சிறுக்கு → சிறுக்கம்]

சிறுக்காம்பன்சேலை

சிறுக்காம்பன்சேலை ciṟukkāmbaṉcēlai, பெ. (n.)

   ஒரு வகை எழுத்துச்சிற்றாடை; a kind of printed saree (திவ்.பெரியாழ்.13:8, வியா.பக். 64);.

     [சிறு + காம்பு + அன் + சேவை]

சிறுக்கி

சிறுக்கி1 ciṟukki, பெ. (n.)

   1. இளம்பெண்; girl, wench.

     “சிறுக்கிகளுற வாமோ” (திருப்பு. 145);.

   3. வேலைக்காரி; maidservant.

     “கோசலை வீட்டுச் சிறுக்கிக்குஞ் சிறுக்கி” (இராமநா. அயோத். 7.);.

ம. செறுக்கி

     [சிறுக்கன் → சிறுக்கி. _’இ’ பெ.பா.ஈறு]

 சிறுக்கி2 ciṟukki, பெ. (n.)

   இழிநடத்தையுடையவள்; woman of meniel behaviour.

     ‘செல்லிக்குச் சிறங்கு, சிறுக்கிக்கு அரையாப்பு, பார்க்க வந்த பரிகாரிக்கும் பக்கப் பிளவு’ (பழ.);.

     [சிறு → சிறுக்கி]

 சிறுக்கி3 ciṟukki, பெ. (n.)

   பகட்டாரவார மிக்கவள்; ostentatious woman.

     [செறுக்கி → சிறுக்கி]

சிறுக்கீரை

சிறுக்கீரை ciṟukārai, பெ. (n.)

சிறுகீரை பார்க்க;see siru-kirai.

     “சிறுக்கீரை வெவ்வடகும்” (தமிழ்நா. 57);.

     [சிறுகீரை → சிறுக்கீரை]

சிறுக்கு-தல்

சிறுக்கு-தல் sirukku-,    5 செ.குன்றாவி (v.t.)

   1. சிறுகச்செய்தல் (தைலவ. தைல. 1.);; to reduce in size or quantity, lessen.

   2. சினத்தல் (யாழ்.அக.);; to be angry with.

     [சில் → சிறு → சிறுக்கு]

சிறுக Siruga, கு.வி.எ.(adv.);

   1. சிறிதாக; a little.

   2. செட்டாக, சுருக்கமாக; sparingly.

     “சிறுகக் கட்டிப் பெருக வாழ்” (பழ.);.

     [சிறு → சிறுக]

சிறுங்குறுந்தொட்டி

சிறுங்குறுந்தொட்டி ciṟuṅguṟundoṭṭi, பெ. (n.)

   சிற்றாமுட்டி (இங்.வை.52);; yellow sticky mallow.

     [சிறும் + குறும் + தொட்டி]

சிறுசண்பகம்

 சிறுசண்பகம் siṟusaṇpagam, பெ. (n.)

சிறுசெண்பகம் (திவா.); பார்க்க;see sirusenbagam.

     [சிறு + சண்பகம்]

சிறுசவளம்

சிறுசவளம் siṟusavaḷam, பெ. (n.)

   குந்தப்படை (பிங்.);; dart, javelin.

     [சிறு + சவளம்]

     [சுவள் → சவள் → சவளம் (மு.தா.250);]

சிறுசவுக்கு

 சிறுசவுக்கு siṟusavukku, பெ. (n.)

   கோடைச் சவுக்கு (L.);; tamarisk.

     [சிறு + சவுக்கு]

சிறுசானல்விரை

சிறுசானல்விரை ciṟucāṉalvirai, பெ. (n.)

   ஆளிவிரை (இங்.வை. 52);; linseed.

     [சிறு + சானல்விரை]

சிறுசாமம்

 சிறுசாமம் ciṟucāmam, பெ. (n.)

   மூன்றே முக்கால் நாழிகைகொண்ட பொழுது (வின்.);; minor watch of an hour and a half.

     [சிறு + சாமம். யாமம் – சாமம்]

சிறுசாமை

 சிறுசாமை ciṟucāmai, பெ. (n.)

   சாமைவகை (சங்.அக.);; a kind of little millet.

     [சிறு + சாமை. சமை → சாமை]

சிறுசிட்டாஞ்சி

 சிறுசிட்டாஞ்சி siṟusiṭṭāñsi, பெ. (n.)

   நெல் வகை; a kind of paddy.

     [சிறு + சிட்டாஞ்சி]

சிறுசின்னம்

 சிறுசின்னம் siṟusiṉṉam, பெ. (n.)

ஊதுகுழற்

   கருவிவகையி லொன்று (பிங்.);; a kind of clarionet.

     [சிறு + சின்னம்]

சிறுசின்னி

சிறுசின்னி siṟusiṉṉi, பெ. (n.)

   செடிவகை (பதார்த்த.536);; a species of copper leaf.

ம. செறுசின்ன

     [சிறு + சின்னி]

சிறுசிவிங்கி

 சிறுசிவிங்கி siṟusiviṅgi, பெ. (n.)

   சிறுத்தை வகையுளொன்று; a kind of small-sized panther.

     [சிறு + சிவிங்கி]

சிறுசுங்கம்

 சிறுசுங்கம் siṟusuṅgam, பெ. (n.)

   வரிவகை; a kind of tax (செ.அக.);.

     [சிறு + சங்கம்]

சிறுசுரப்பி

 சிறுசுரப்பி siṟusurappi, பெ. (n.)

   நுண்கழலை; glandule.

     [சிறு + சுரப்பி]

சிறுசுளகு

சிறுசுளகு siṟusuḷagu, பெ. (n.)

   சிறுமுறம்; a kind of small-sized winnowing fan.

     “சிறு சுளகும் மணலுங் கொண்டு” (திவ். நாய்ச்.2:8);.

     [சிறு + சுளகு]

சிறுசூடு

 சிறுசூடு ciṟucūṭu, பெ. (n.)

   இளஞ்சூடு (இ.வ.);; gentle heat, luke-warm.

     [சிறு + சூடு. சுள் → சுடு → சூடு]

சிறுசூலி

 சிறுசூலி ciṟucūli, பெ. (n.)

   அகச்சூலி; a kind of tree.

     [சிறு + சூலி]

சிறுசெங்குரலி

சிறுசெங்குரலி siṟuseṅgurali, பெ. (n.)

   கருந்தாமக்கொடி; a mountain creeper.

     “சேடல் செம்மல் சிறுசெங்குரலி” (குறிஞ்சிப். 82);.

     [சிறு + செங்குரலி]

சிறுசெண்பகம்

சிறுசெண்பகம் siṟuseṇpagam, பெ. (n.)

   சண்பக மரம்; cananga flower tree.

     “சிறு செங்குரலியுஞ் சிறு செண்பகமும்” (பெருங். இவரவாண:12.29);.

     [சிறு + செண்பகம், செம் → செண் → செண்பகம்]

சிறுசெய்

சிறுசெய் siṟusey, பெ. (n.)

   1. பாத்தி (சூடா.);; garden bed.

   2. பயிர் செய்வதற்காகப் பண்படுத்திய நிலக்கூறு; small cultivated plot.

     [சிறு + செய்]

சிறுசெருப்படி

 சிறுசெருப்படி siṟuseruppaḍi, பெ. (n.)

   செருப்படி வகை (வின்.);; a species of seruppadi with small leaves.

     [சிறு + செருப்படி]

சிறுசெருப்படை

 சிறுசெருப்படை siṟuseruppaḍai, பெ. (n.)

   கொடிவகை; a prostrate shrub.

     [சிறு + செருப்படை]

சிறுசொறிக்குட்டம்

சிறுசொறிக்குட்டம் siṟusoṟikkuṭṭam, பெ. (n.)

   தொழுநோய்வகையு ளொன்று (இராசவைத். 101, உரை.);; a kind of leprosy.

     [சிறு + சொறி + குட்டம்]

சிறுசொல்

சிறுசொல்1 siṟusol, பெ. (n.)

   1. இழிசொல்; slighting language, word of contempt.

     “சிறுசொற் சொல்லிய சினங்கெழு வேந்தரை” (புறநா.72);.

   2. பழிச்சொல், திட்டு; censure, reproach.

     ‘இந்தச் சிறுசொல் நமக்கு வேண்டுமா’ (நெல்லை); ‘சிறுசொல் சொல்லிச் சின்னபுத்தியைக் காட்டாதே’ (உ.வ.);.

   3. குறிப்பிடத்தக்கதல்லாத பேச்சு; an insignificant word.

ம. சிக்கமாது

     [சிறு + சொல். சிறு = சிறுமை, இழிவு,பழி]

 சிறுசொல்2 siṟusol, பெ. (n.)

   குறுமொழி (சிலப். 16:64, உரை);; gentle speech, as of women.

சிறுமை → சிறு

     [சிறு + சொல். சிறு = சிறிய, அழகிய, மென்மையான]

சிறுசோறடுதல்

 சிறுசோறடுதல் ciṟucōṟaḍudal, பெ. (n.)

   பெண்பாற் பிள்ளைத் தமிழில் வரும் பத்துப்பருவங்களுள் தலைவி மணற்சோறு சமைக்கும் பருவத்தைப் புனைந்து கூறும் பகுதி (பிங்.);; section of pen-par-pillai-t-tamil, which describes the stage of childhood in which the heroine of the poem cooks toy food of sand, one of ten.

     [சிறுசோறு + அடு. உடு → அடு. அடுதல் = சுடுதல், எரித்தன், சமைத்தல்]

சிறுசோறு

சிறுசோறு ciṟucōṟu, பெ. (n.)

   1. பிள்ளைகள் விளையாட்டாகச் சமைக்கும் மணற்சோறு; toy food of sand, in children.

     “சிறுசோறமைத்தருந்த” (திருவானைக்கா உலா, 222);.

   2. கலவைச்சோறு; a kind of rice-preparation flavoured with spices.

     “சிறுசோற்றுப் பெருஞ்சிறப்பும்” (பெரியபு, சேரமான்.155);.

     [சிறு + சோறு, சிறு = சிறிய, குறைந்த]

சிறுசோற்றுவிழவு

சிறுசோற்றுவிழவு ciṟucōṟṟuviḻvu, பெ. (n.)

   சோற்றைத் தயிர் முதலியவற்றோடு கலந்து உருண்டைகளாக்கி அவற்றை வருவோர்க்குக் கொடுத்து மகிழுங் கொண்டாட்டம் (புறநா. 33, உரை.);; a festive celebration in which balls of cooked rice mixed in curd and some other ingredients are distributed.

     [சிறு + சோறு + விழவு]

சிறுச்சிறிது

சிறுச்சிறிது ciṟucciṟidu, பெ. (n.)

   கொஞ்சங் கொஞ்சமாக; little by little, gradually.

     “செங்கண் சிறுச்சிறிதே யெம்மேல் விழியாவோ” (திவ்.திருப்பா. 22);.

     [சிறு + சிறிது]

சிறுச்செய்

 சிறுச்செய் ciṟuccey, பெ. (n.)

சிறுசெய் (யாழ்.அக.); பார்க்க;see Siru-Sey.

     [சிறு + செய்]

சிறுட்டாட்டி

 சிறுட்டாட்டி ciṟuṭṭāṭṭi, பெ. (n.)

   சிறுசட்டி வகை (இ.வ.);; a small earthen vessel.

சிறுதகரை

 சிறுதகரை ciṟudagarai, பெ. (n.)

   தகரை (L.);; fetid cassia.

     [சிறு + தகரை]

சிறுதகை

சிறுதகை ciṟudagai, பெ. (n.)

   தலைவணக்கம்; humility.

     “பெரும்பூட் சிறுதகை………… வெண் குடையான்” (பு.வெ.8:24);.

     [சிறு + தகை. சிறு = சிறப்பு]

சிறுதகைமை

சிறுதகைமை ciṟudagaimai, பெ. (n.)

சிறுதகை பார்க்க;see Siru-dagas.

     “பெரியார் பெருமை சிறுதகைமை” (நாலடி, 170);.

     [சிறு + தகைமை]

சிறுதக்காளி

சிறுதக்காளி ciṟudakkāḷi, பெ. (n.)

   1. மணித்தக்காளி (மலை.);; black nightshade.

   2. பிள்ளைத்தக்காளி (M.M.);; small Indian winter-cherry.

     [சிறு + தக்காளி]

சிறுதடி

சிறுதடி ciṟudaḍi, பெ. (n.)

   பாத்தி; small plot of land, small salt – pan.

     “காயற் சிறுதடி” (அகநா.366);.

     [சிறு + தடி. சிறு = சிறுமை. தடி = வயல், பாத்தி, வெட்டு]

சிறுதனம்

சிறுதனம்1 ciṟudaṉam, பெ. (n.)

   சிறுபிள்ளைத் தன்மை (இ.வ.);; childishness.

     [சிறு + தனம்]

 சிறுதனம்2 ciṟudaṉam, பெ. (n.)

   1. சொந்தப் பொருள் (நிதி);; private treasure.

     “உடையார் ஸ்ரீ இராஜராஜ தேவர் சிறுதனத்துக் கொடுத்த பொன்னின் தட்டம்” (தெ.க.தொ. 2:3.);

   2. சில்வானம்; small savings.

     “சிறுதனந்தேடுவள்” (தண்டலை.95);.

     [சிறு + தனம். தனம் = செல்வம்]

 சிறுதனம்3 ciṟudaṉam, பெ. (n.)

   1. பண்டைக் காலத்திருந்த ஒருவகைப் பணியாளர் (M.E.R.p.97,1913);; an inferior grade of officials, in olden days.

   2. ஆடல்வல்ல மகளிருள் ஒரு பிரிவினர் (சிலப். 14:167, உரை);,

 a class of dancing girls.

     [சிறுமை → சிறு. சிறு + தனம்]

சிறுதரம்

சிறுதரம் ciṟudaram, பெ. (n.)

   1. சிறிய அளவு;  small size.

   2. இளம்பருவம்; boyhood, youth.

     “சிறுதரத்துப் பிள்ளைகள்” (இ.வ.);.

     [சிறு + தரம்]

சிறுதருப்பம்

 சிறுதருப்பம் ciṟudaruppam, பெ. (n.)

   நாணல் (இ.வ.);; lalong grass.

     [சிறு + தருப்பம்]

சிறுதவசம்

 சிறுதவசம் siṟudavasam, பெ. (n.)

   புன்செய் கூலம்; dry сrop.

     [சிறு + தவசம்]

சிறுதானியம்

 சிறுதானியம் ciṟutāṉiyam, பெ. (n.)

சிறுதவசம் பார்க்க;see Siru-tawasam.

     [சிறு + தானியம்]

 Skt. dhanya → த. தானியம்

சிறுதாயார்

 சிறுதாயார் ciṟutāyār, பெ. (n.)

   சிறியதாயார் பார்க்க;see Siriya-tayar;க. சிக்கதாயி

     [சிறு + தாயார். ‘ஆர்’ உயர்வுப் பன்மையீறு]

சிறுதாரை

 சிறுதாரை ciṟutārai, பெ. (n.)

   நீர்வீசுந் துருத்தி (திவா.);; syringe or instrument to discharge water in jets.

     [சிறு + தாரை]

சிறுதாலி

சிறுதாலி ciṟutāli, பெ. (n.)

   1. சிறியதாலி வகை; a kind of small tăli or ‘marriage badge’.

     “நல்லோன் புனைந்த நெற்சிறு தாலி” (பெருங். வத்தவ. 16:29.

   2. கணவனது வாழ்நாள்வரை மகளிர் கழுத்தில் சரட்டுடன், எப்பொழுது முள்ள தாலி; a small tali worn by married women and removed only on widowhood.

   3. காமக்கிழத்திக்குக் கொடுக்கும் தாலி (இ.வ.);; tali given by a paramour to his concubine.

ம. செறுதாலி

     [சிறு + தாலி]

சிறுதாலிக்கட்டு

சிறுதாலிக்கட்டு ciṟutālikkaṭṭu, பெ. (n.)

   கைக் கோளரில் மனத்திற்கிசையாத மாமன்மகள் அல்லது அத்தைமகளை விரும்பிய ஒருவன், அவள் தன்னை மணமுடித்தற் பொருட்டு, தாலியையேனும், துணியையேனும், துங்கும் பொழுது அவள் கழுத்திற்கட்டும் மரபு (E.T.iii.40);; a custom among the Kaikkolars by which an unwilling maiden, usually one’s maternal uncle’s daughter or paternal aunt’s daughter is forced into marrying by a tâli or a piece of cloth being tied around her neck while asleep, a form of surreptitious marriage.

     [சிறுதாலி + கட்டு]

சிறுதாளி

 சிறுதாளி ciṟutāḷi, பெ. (n.)

   தழுவுகொடியைச் சார்ந்த தாளிவகை (மூ.அ.);; hairy-leaved creamy-white bindweed.

ம. சிறுதாளி

     [சிறு + தாளி]

சிறுதிகை

சிறுதிகை ciṟudigai, பெ. (n.)

சிறுதிசை பார்க்க;see Siru-disai,

     ‘ஆழியு மாரும்போற் கீறிச் சிறுதிகைக் கண்’ (சிலப். 17, பக். 443, அரும்.);.

     [சிறு + திகை. துகு → (திகு); → திகை = முடிவு, எல்லை, பக்கம்]

சிறுதிசை

 சிறுதிசை siṟudisai, பெ. (n.)

   வடகிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு எனப்படும், கோணத் திசைகள் (உவ);; the four intermediate directions, N.E., N.W., S.E., S.W.

     [சிறு + திசை. திகை → திசை = முடிவு, எல்லை, பக்கம்]

குணக்கு, குடக்கு, தெற்கு, வடக்கு என்பன நான்குதிசைகள் இவையே முதன்மையானவை எஞ்சிய நான்கும் நான்கு கோணங்களைக் குறிக்குந் திசைகள். எனவே முதன்மையான வற்றைத் திசைகள் என்றும், பிறவற்றைச் சிறுதிசைகள் என்றும் குறித்தனர். ஒநோ. சிறு பொழுது, சிறுதொழில், சிறுபயிர், சிற்றுண்டி.

சிறுதிடர்

 சிறுதிடர் ciṟudiḍar, பெ. (n.)

சிறுதிட்டை பார்க்க;see Siru-tittai.

     [சிறு + திடர். திடம் → திடன் → திடன் = மேட்டு நிலம், பொட்டல், திடல் → திடர் = புடைப்பு, மேட்டுநிலம்]

சிறுதிட்டை

 சிறுதிட்டை ciṟudiṭṭai, பெ. (n.)

   சிறுமேடு (திவா.);; hillock, mound.

மறுவ. சிறுதிடர், பொற்றை, திடல்.

     [சிறு + திட்டை, தில் → திள் → திண் திண்ணை = திரண்ட மேடு, திண் → திண்டு = பருமன், சிறு திண்ணை. திண்டு → திட்டு = சிறுமேட்டு நிலம். திட்டு → திட்டை. மேடு, மண்மேடு, சிறுகுன்று]

சிறுதிண்டி

 சிறுதிண்டி ciṟudiṇṭi, பெ. (n.)

சிற்றுண்டி பார்க்க;see Sirrungi.

தெ. சிருதிண்டி

     [சிறு + திண்டி. தின் → தின்றி → திண்டி = உணவு)

க. திண்டி (உணவு);

தீனி = உணவு, சிற்றுண்டி, உண்டி தின்பது தீனி அதிகமாய் உண்டு பயனற்றிருப்பாரைத் ‘திண்டி’ என்றும் திண்டிப்பயல்’ என்றும் வழங்கும் வழக்குண்மையைக் காண்க.

உடல் வளர்ந்து, உயிர் வாழ்ந்திட உணவு தேவை. அதை உணவுவேளையி லுண்டனர். உணவு வேளைக் கிடையிலுண் பதை ச் சிற்றுண்டி என்றனர். அளவிற்குறைந்த உணவும் அவ்வாறே சொல்லப்பட்டது.

சிறுதிண்ணை

 சிறுதிண்ணை ciṟudiṇṇai, பெ. (n.)

   வாயிலின் முன் அமைந்திருக்கும் திண்ணை; a narrow projection at the base of a verandah.

ம. செறுதிண்ண

     [சிறு + திண்ணை. தில் → திள் → திண் → திண்ணை = திரண்டமேடு]

சிறுதிப்பலி

 சிறுதிப்பலி ciṟudippali, பெ. (n.)

   திப்பலி வகை (வின்.);; a species of long pepper.

ம. செறுதிப்பலி

     [சிறு + திப்பிலி]

சிறுதுகில்

 சிறுதுகில் ciṟudugil, பெ. (n.)

   கந்தை (பிங்.);; tatters.

     [சிறு + துகில்]

துகில் = நல்லாடை நல்லாடை நைந்தும்

கிழிந்தும், துண்டாயும், தன்னியல்பில்

திரிந்தும் இருப்பதைக் குறிக்கும் வகையில்

இவண் சிறு முன்னொட்டானது.

சிறுதுடி

சிறுதுடி ciṟuduḍi, பெ. (n.)

   1. கிலுகிலுப்பை; rattle.

   2. சிறிய உடுக்கை வகை (வின்);; a kind of clapper.

     [சிறு + துடி]

துடி = உடுக்கைவகை

ஒ.நோ. சிறுபறை, சிறுமுழவு.

சிறுதுண்டு

சிறுதுண்டு ciṟuduṇṭu, பெ. (n.)

   1. சிறிது; little, small quantity.

   2. சிறியபகுதி; small parts.

     [சிறு + துண்டு. துல் → துள் → துண்டு = சிறியது, சிறுபகுதி]

சிறுமைப் பொருள் அடை ‘சிறு’, சிறியது என்னும் பொருள்படும் துண்டுக்கு வந்தது. துண்டிலும் சிறியது அதாவது மிகச்சிறியது எனப் பொருள் உணர்த்துதற்காம் எனினும் சிறு துண்டுக்கு மீமிசைப் பொருள் உணர்த்தும் அடைமொழியாகியுள்ளது.

சிறுதுத்தி

சிறுதுத்தி ciṟududdi, பெ. (n.)

   1. மெல்லிழைச் செடிவகை; membraneous carpelled evening mallow.

   2. துத்திச்செடிவகையு ளொன்று; five-winged capsule rose-mallow.

     [சிறு + துத்தி]

சிறுதுத்திரி

சிறுதுத்திரி ciṟududdiri, பெ. (n.)

   இரட்டைச்சின்னம் என்ற ஊது கருவி (தக்கயாகப். 344, உரை.);; clarionet.

     [சிறு + துத்திரி]

சிறுதும்பை

 சிறுதும்பை ciṟudumbai, பெ. (n.)

   மருந்துச்செடி வகை; a kind of medicinal plant.

ம. செறுதும்ப

     [சிறு + தும்பை]

சிறுதுருமம்

 சிறுதுருமம் ciṟudurumam, பெ. (n.)

   பொட்டிலுப்பு (மூ.அ.);; saltpetre.

     [சிறு + துருமம்]

சிறுதுளசி

 சிறுதுளசி siṟuduḷasi, பெ. (n.)

   மருந்துச் செடிவகை (மூ.அ.);; a kind of medicinal plant.

ம. செறுதுளசி

     [சிறு + துளசி. துளவு = துளசி. துளவு → (துளசு); → துளசி]

த. துளசி → Skt. Tulasi

சிறுதூறல்

 சிறுதூறல் ciṟutūṟal, பெ. (n.)

சிறுமழை பார்க்க;see Sirumalai.

     [சிறு + தூறல். தூறு + அல். ‘அன்’ தொ.பொ.ஈறு]

சிறுதூறு

சிறுதூறு ciṟutūṟu, பெ. (n.)

   1. மரஞ்செடிகளின் சிறுசெறிவு (திவா.);; thicket.

   2. புதர்; bushes.

   3. சிறுசெடி (வின்.);; small shrub.

   4. இளம்வேர்; tender root.

     [சிறு + தூறு]

சிறுதெய்வம்

 சிறுதெய்வம் ciṟudeyvam, பெ. (n.)

   சிற்றூர் தெய்வம்; village deity.

     [சிறு + தெய்வம். தேய் → தே = தெய்வம். தேய் → (தெய்); தெய்வு → தெய்வம்]

சிறுதேக்கு

சிறுதேக்கு ciṟutēkku, பெ. (n.)

   1. பூடுவகை; bushy fire brand teak.

   2. மரவகை; beetle-killer.

ம. செறுதேக்கு

     [சிறு + தேக்கு]

சிறுதேங்காய்

 சிறுதேங்காய் ciṟutēṅgāy, பெ. (n.)

   சிறிய தேங்காய் அளவினதான மருத்துவப் பண்புடைய பழம் (சமுத்திராப் பழம்); (மூ.அ.);; a medicinal fruit resembling a coconut.

     [சிறு + தேங்காய். தெங்கங்காய் → தேங்காய்]

சிறுதேட்கொடுக்கும்

சிறுதேட்கொடுக்கும் ciṟutēḍkoḍukkum, பெ. (n.)

   ஒளிநோக்கிச் சாயும் தேட்கொடுக்குச் செடி வகை (பதார்த்த.265);; a species of heliotropium.

     [சிறு + தேள் + கொடுக்கு]

சிறுதேட்டு

சிறுதேட்டு ciṟutēṭṭu, பெ. (n.)

   நிலவுடைமை யாளர், பெருந்தனத்தார் முதலியோருக்குரிய பண்ணைநிலங்கள்; private property in land, as of Zamindars.

     “ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்” (பழ.);

     [சிறு + தேட்டு. தேடு → தேட்டு]

 சிறுதேட்டு2 ciṟutēṭṭu, பெ. (n.)

   வீட்டுச் செலவுக்குக் கொடுக்கும் பணத்தில் சொந்தச் (சிறுதனமாக); சிறுசேமிப்பாக மீத்து வைக்கும் பணம்; savings effected from the sum allotted for household expenses.

     [சிறு + தேட்டு. தேடு → தேட்டு]

சிறுதேனி

 சிறுதேனி ciṟutēṉi, பெ. (n.)

   தேனி வகையு ளொன்று; small flower bee.

ம. செறுதே நீச்ச

     [சிறு + தேனீ]

சிறுதேன்

சிறுதேன் ciṟutēṉ, பெ. (n.)

   1. கொசுகுத்தேன் (யாழ்.அக.);; honey gathered by species of small bees.

   2. சிறுதேனீ பார்க்க;see Siru-teni.

ம. செறுதேன்

     [சிறு + தேன்]

சிறு = சிறிது, கொஞ்சம், கொசுறு

சிறுதேர்

சிறுதேர் ciṟutēr, பெ. (n.)

   1. விளையாட்டு வண்டி; child’s toy cart.

     “விளையாடு சிறு தேரீர்த்து” (மணிமே. 7:55);.

   2. சிறுதேர்ப்பருவம் (இலக்.வி.806); பார்க்க;see siru-ter-p-paruvam.

     [சிறு + தேர். சிறு = சிறிய. தில் → திர் → தேர் = தேர் வடிவினதான வண்டி.]

இங்குச் சிறு என்பது, அளவிற் சிறிய என்னும் பொருளிலமைந்தாலும் போல என்னும் உவம உருபுப்பொருளையே உணர்த்துகின்றது.

சிறுதேர்ப்பருவம்

 சிறுதேர்ப்பருவம் ciṟutērpparuvam, பெ. (n.)

   தலைவன், சிறியதேரைச் செலுத்தும் பருவத்தைச் சிறப்பிக்கும், ஆண்பாற் பிள்ளைத்தமிழ்ப் பகுதி; section of anparpillai-t-tamil, which describes the stage of childhood in which the hero plays with a toy cart, one of ten.

     [சிறுதேர் + பருவம்]

சிறுதேவபாணி

சிறுதேவபாணி ciṟutēvapāṇi, பெ. (n.)

   இசைப்பாவகை (சிலப். 6:35, உரை);; a kind of song in praise of a deity, set to music, opp. to peru-n-devapani.

     [சிறு + தேவபாணி]

சிறுதையல்

 சிறுதையல் ciṟudaiyal, பெ. (n.)

   நுண்ணிய தையற்றொழில் (வின்.);; fine stitching.

     [சிறு + தையல். சிறு = சிறுமை, நுண்மை, நுண்ணிது]

சிறுதொழில்

சிறுதொழில்1 ciṟudoḻil, பெ. (n.)

   இகழத்தக்க செயல்; base deed.

     “சிறுதொழிற் கீழோய்” (கம்பரா. முதற்போர். 253);.

     [சிறு + தொழில். சிறு = சிறிது, குறைவு, இழிவு, இகழத்தக்கது.]

 சிறுதொழில்2 ciṟudoḻil, பெ. (n.)

   வரையறுக்கப் பட்ட குறைந்த முதலீட்டில், குறைந்த ஆட்களின் உழைப்பைப் பயன் கொண்டு செய்யும் தொழில்; small scale industries comparatively little size or strength or power or number, consisting of minute units.

     [சிறு + தொழில். சில் → சிறு. சிறு = சிறிய, குறைந்த]

சிறுத்தாயார்

சிறுத்தாயார் ciṟuttāyār, பெ. (n.)

   1. சிறியதாய்; father’s younger brother’s wife.

   2. சித்தி; mother’s younger sister (செ.அக.);.

     [சிறு + தாயார்]

சிறுத்தை

 சிறுத்தை ciṟuttai, பெ. (n.)

   சிறுபுலி வகை; panther.

   க. சிறதெ, சிர்ச;தெ. சிறுதெ சிறுதபுலி, சிறுபுலி

     [சிறு → சிறுத்தை]

சிறுத்தொண்ட நல்லூர்

 சிறுத்தொண்ட நல்லூர் ciṟuttoṇṭanallūr, பெ. (n.)

திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் ஊர்,

 a village in Thriunelveli

     [சிறுத்தொண்டன்+நல்லூர்]

சிறுத்தொண்டநாயனார்

சிறுத்தொண்டநாயனார் ciṟuttoṇṭanāyaṉār, பெ. (n.)

   நாயன்மார் அறுபத்துமூவரில், பல்லவ அரசனது தானைத்தலைவரும், திருஞான சம்பந்தர் காலத்தவருமான சிவனடியார் (பெரியபு.);; a canonized Saiva Saint, commanderin-chicf of a Pallava king and contemporary of Tiru-fiana-Sambandar one of 63.

     [சிறுத்தொண்டார் + நாயனார்]

சிறுநகை

சிறுநகை1 ciṟunagai, பெ. (n.)

   புன்சிரிப்பு; smile.

     “திருமுகத் தழகுறு சிறுநகை” (திருவாச. 2:143);.

     [சிறு + நகை. சில் → சிறு. சிறு = சிறிய, குறுகிய]

 சிறுநகை2 ciṟunagai, பெ. (n.)

   ஏளனச்சிரிப்பு; mockery laugh.

     ‘சித்திராபதிதான் சிறுநகை எய்தி’ (மணிமே.18:86);.

     [சிறு + நகை. சிறு = சிறிய, குறைந்தது, இழிந்த, ஏளனமானது.]

சிறுநங்கூரம்

 சிறுநங்கூரம் ciṟunaṅāram, பெ. (n.)

   சிறு படகுகள் நங்கூரமாய் பயன்படுத்தும் கல்; killick.

     [சிறு + நங்கூரம்]

சிறுநணி

சிறுநணி  sit-nami.  வி.எ. (adv.)

   சிறிதுநேரம்; a little while.

     “சிறுநணி வரைந்தனை கொண்மோ” (ஐங்குறு. 180, இரண்டாம் பதிப்பு);.

     [சிறுநனி → சிறுநணி]

 சிறுநணி  sit-nami.  வி.எ. (adv.)

   1. சிறிதுநேரம்; fora shorttime, a little while.

     “சிறுநனி நீதுஞ்சி” (கலித்.12);.

   2. விரைவாக; quickly, expeditiously.

     “சிறுநனி வரைந்தனை கொண்மோ” (ஐங்குறு.180);.

     [சிறு + நனி]

சிறுநன்னாரி

 சிறுநன்னாரி ciṟunaṉṉāri, பெ. (n.)

   நன்னாரி வகை (L.);; a species of sarsaparilla swallow wort.

     [சிறு + நன்னாரி]

சிறுநறளை

 சிறுநறளை ciṟunaṟaḷai, பெ. (n.)

   கொடி வகை (மூ.அ.);; large woolly-lobed vine.

     [சிறு + நறளை]

சிறுநறுவிலி

 சிறுநறுவிலி ciṟunaṟuvili, பெ. (n.)

   நறுவிலி வகை (மூ.வ.);; a kind of common sebesten.

     [சிறு + நறுவிலி]

சிறுநாகப்பூ

சிறுநாகப்பூ ciṟunākappū, பெ. (n.)

   1. மரவகை (பதார்த்த.1011);; iron wood of Ceylon.

   2. பெரிய இலங்கப்பட்டை (L.);; cassia cinnamon.

     [சிறு + நாகப்பூ]

சிறுநாகம்

சிறுநாகம் ciṟunākam, பெ. (n.)

   1. இருள்மரம்; iron wood of Ceylon.

   2. மலர்களிற் காணப்படுவதும், மிகச்சிறிய வடிவினதும், நச்சுத் தன்மை மிக்கதுமான பூநாகம்; a species of very small snake found among flowers, considered to be very poisonous.

ம. செறுநாகம்

     [சிறு + நாகம். நகர் → நாகம் = பாம்பு. நகாதல் = ஊர்ந்து செல்லுதல்]

சிறுநாக்கு

 சிறுநாக்கு ciṟunākku, பெ. (n.)

   உண்ணாக்கு (பிங்.);; uvula.

   ம. செறுநாக்கு;   க. கிரிநாலி, தெ. சிறுநாலுக, சிறுநாக;பட. கிரு நாலங்கே

     [சிறு + நாக்கு]

சிறுநான்கெல்லை

 சிறுநான்கெல்லை ciṟunāṉkellai, பெ. (n.)

   பெருநான்கெல்லைக்கு எதிராக ஊர்த் தனிநிலங்களிலமைந்த நாற்புறத்தெல்லை (இ.வ.);; boundaries of small plots or sites. opp. to perunangellai.

     [சிறு + நான்கெல்லை]

நான்கெல்லையாவது, குறித்த இடத்தைச் சுற்றி நாற்புறமும் அமைந்துள்ள குறியீட்டைக் குறிப்பது. அஃதொரு தனி நிலமாயின் நாற்புறத்தமைந்த தனியார் நிலங்களையோ, பாதை போன்றவற்றையோ குறிப்பர். அது சிறுநான்கெல்லையெனப்படும் ஒர் ஊரைக் குறிப்பதாயின், நாற்புறத்து மமைந்துள்ள ஊர்களைக் குறிப்பர். அது பெருநான்கெல்லையெனப்படும்.

சிறுநார்

 சிறுநார் ciṟunār, பெ. (n.)

   கல்நார் (யாழ்.அக);; asbestos.

     [சிறு + நார்]

சிறுநாளிகம்

 சிறுநாளிகம் ciṟunāḷigam, பெ. (n.)

   காலாட் படை குதிரைப்படைகள் தாங்கிச் செல்வதற் குரிய, துமுக்கி போன்ற கருவி; a kind of machine-gun used by infantry and cavalry.

     [சிறு + நாளிகம்]

சிறுநாவல்

 சிறுநாவல் ciṟunāval, பெ. (n.)

   செங்கறுப்பான சிறியமரவகை (மூ.அ.);; ruddy black plum.

     [சிறு + நாவல்]

சிறுநிம்பம்

 சிறுநிம்பம் ciṟunimbam, பெ. (n.)

   மலைவேம்பு (மலை.);; Persian lilac.

     [சிறு + நிம்பம்]

 Skt. nimba → த. நிம்பம்

சிறுநிலம்

சிறுநிலம்1 ciṟunilam, பெ. (n.)

   நாகரிகமற்றோர் நாடு; the Mleccha country.

     “தீவின் சிறுநிலத்தார்” (நீலகேசி.83);.

     [சிறு + நிலம். இங்குச் ‘சிறு’ என்பது இழிவை, நாகரிக மற்ற தன்மையைக் குறிக்குஞ் சொல்லாப் வந்துள்ளது]

 சிறுநிலம்2 ciṟunilam, பெ. (n.)

   துண்டுநிலம், தீவு; island.

     [சிறு + நிலம். நில் → நிலம்]

சிறுநீருப்பு

 சிறுநீருப்பு ciṟunīruppu, பெ. (n.)

   சிறுநீரிலுள்ள உப்புவகை; uric acid.

     [சிறுநீர் + உப்பு]

சிறுநீர்

சிறுநீர் ciṟunīr, பெ. (n.)

   1. மூத்திரம்; urine.

     “ஒண் சிறுவர் தஞ்சிறுநீர்” (அருட்பா,1,நெஞ்சறி 1.371);.

   2. குறைந்த நீர்; littll water.

சிறுநீர் பாசனம்.

ம. செறுநீரு

     [சிறு + நீர். சிறு = சிறிது, இழிவு, தாழ்வானது.]

சிறுநீர்ப்பெருக்கி

 சிறுநீர்ப்பெருக்கி ciṟunīrpperukki, பெ. (n.)

   சிறுநீர்ப் பெருகச்செய்யும் மருந்து வகை; medicine with diuretic properties.

     [சிறுநீர் + பெருக்கி. பல் → பரு – பெரு → பெருகு → பெருக்கு → பெருக்கி ‘இ’ வினை முதலீறு]

சிறுநுண்மை

சிறுநுண்மை ciṟunuṇmai, பெ. (n.)

   அம்பெய்தற்குரிய, நால்வகை இலக்குகளுள் மிகவும் சிறியதான இலக்கு; very small target foran arrow, one of four ilakku.

     “பெருவண்மை சிறுதுண்மை சலம் நிச்சலம் (பாரத வாரணா. 56);.

     [சிறு + நுண்மை. சிறு = சிறிது. நுல் → (நுற்பு); → நொற்பு → நொற்பம் = நுட்பம் நூல் → நுள் → நுண் → நுண்மை]

சிறுநெருஞ்சி

 சிறுநெருஞ்சி ciṟuneruñji, பெ. (n.)

   நெருஞ்சி வகை (யாழ்.அக.);; a prostrate herb found in waste places.

     [சிறு + நெருஞ்சி]

சிறுநெறி

சிறுநெறி ciṟuneṟi, பெ. (n.)

   1. அருநெறி; narrow path.

     “நிரம்பாச் செலவி னீத்தருஞ் சிறுநெறி”(பெருங். உஞ்சைக் 49:31);.

   2. இழிவான வழி; despicable ways.

     “செல்லாரு மல்லர் சிறுநெறி”(நாலடி, 303);.

   3. தீயவழி; path of evil.

     “சிறுநெறிகள் சேராமே” (திருவாச. 51:2);.

     [சிறு + நெறி. சிறு = சிறிது, குறுகியது, இதுத்தது.]

சிறுநெல்லி

 சிறுநெல்லி ciṟunelli, பெ. (n.)

   நெல்லிவகை; otaheite gooseberry.

ம. செறுநெல்லி

     [சிறு + நெல்லி]

சிறுநொச்சி

 சிறுநொச்சி ciṟunocci, பெ. (n.)

   கருநொச்சி (L.);; three leaved chaste tree.

     [சிறு + நொச்சி]

சிறுநோக்கம்

சிறுநோக்கம் ciṟunōkkam, பெ. (n.)

   அருகிய நோக்கம்; rare look.

     “கண்களவுகொள்ளும் சிறுநோக்கம் காமத்தில் செம்பாகம் அன்று பெரிது”(குறள்.1092);.

     [சிறு+நோக்கம்]

சிறுநோக்கு

சிறுநோக்கு ciṟunōkku, பெ. (n.)

   ஏளனப் பார்வை; look of contempt, scornful look.

     “செல்வர் சிறுநோக்கு நோக்குங்கால்” (நாலடி. 298);.

     [சிறு + நோக்கு. சிறு = சிறிது, குறைவு,

தாழ்வு, இகழ்ச்சி ஏளனம்]

சிறுபகன்றை

 சிறுபகன்றை ciṟubagaṉṟai, பெ. (n.)

   பூடுவகை (மூ.அ.);; a species of water – thorn.

     [சிறு + பகன்றை]

சிறுபசளை

 சிறுபசளை siṟubasaḷai, பெ. (n.)

   பசலை வகை (A);; large-flowered purslane.

     [சிறு + பசளை]

சிறுபஞ்சமூலம்

சிறுபஞ்சமூலம் ciṟubañjamūlam, பெ. (n.)

   1. சிறுவழுதுணை, சிறுநெருஞ்சி, சிறுமல்லிகை, பெருமல்லிகை, கண்டங்கத்தரி என்ற ஐந்தன் வேர்களும் சேர்ந்த கூட்டு மருந்து; compound medicine prepared from the roots of five herbs, viz., siruvaludunai, sirunerunji, siru-malligai, perumalligai, kandangattari.

   2. ஐந்து சிறந்த மூலிகைகளைப் போன்ற, ஐந்தைந்து அரிய அறக்கருத்து (நீதி);களைத் தன்னகத்தே கொண்ட 100 செய்யுள்களால், காரியாசான் இயற்றியதும், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுளொன்றுமாகிய அறநூல்:

 anancient didactic work of 100 stanzas by Kari-y-asan, each stanza inculcating five virtues, one of padin-en-kil-k-kanakku.

     [சிறு + பஞ்சமூலம்]

 Skt. paica → த. பஞ்ச (ஐந்து); மூலம் = வேர்.

சிறுபடப்பு

 சிறுபடப்பு ciṟubaḍabbu, பெ. (n.)

   குட்டான்;   சிறுவைக்கோற்போர்; small heap.

     [சிறு + படப்பு]

சிறுபடுகண்

சிறுபடுகண் ciṟubaḍugaṇ, பெ. (n.)

   அணியுறுப்பு வகை (தெ.க.தொ.2,396);; a pendant in an Ornamcnt.

     [சிறு +படுகண்]

சிறுபட்டி

சிறுபட்டி ciṟubaṭṭi, பெ. (n.)

   கட்டுக்கடங்காத இளைஞன்; unruly youngster.

     “நோதக்க செய்யுஞ் சிறுபட்டி” (கலித்.51);.

     [சிறு + பட்டி]

பட்டி = கொட்டில், கொண்டித்தொழு. இங்கு பட்டி என்பது பட்டிக்குள் அடைக்கப் பட வேண்டியது என்னும் பொருளில் கட்டுக்கடங்காத, கட்டுப்பாடற்ற, காவலற்ற இளையோனைக் குறித்தது. கட்டுக்கடங்கா மாட்டைப்பட்டிமாடு என்றும், தளையறுத்துச் செல்லுதலைப் பட்டி முறித்தல் எனவும், பொலி யெருதைப் பட்டிக்கடா என்றும் வழங்கும் வழக்க முண்மையைக் காண்க.

சிறுபண்ணை

 சிறுபண்ணை ciṟubaṇṇai, பெ. (n.)

   கோழிக் கீரை வகை (புதுவை);; a kind of greens.

     [சிறு + பண்ணை]

சிறுபதம்

சிறுபதம்1 ciṟubadam, பெ. (n.)

   வழி (திவா.);; path, foot-path.

     [சிறு + பதம். பதி → பதம் = நிலத்திற் பதியும் காலடி. பதம் → பாதம் → பாதை = பாதம் பட்டு உண்டாகும் வழி பாதம் → பதம்]

 சிறுபதம்2 ciṟubadam, பெ. (n.)

   தண்ணீராகிய உணவு; water, as food.

     “வேளாண் சிறுபதம்” (புறநா.74);.

     [சிறு + பதம்]

சிறுபயறு

சிறுபயறு ciṟubayaṟu, பெ. (n.)

   1. பாசிப்பயறு; green gram.

     “சிறுபயறு நெரித்துண்டாக்கிய பருப்பு” (திவ். பெரியாழ். 2.9:7. வியா.);

   2. பனிப் பயறு (பதார்த்த.839);; field-gram.

ம. செறுபயறு

     [சிறு + பயறு]

சிறுபயல்

சிறுபயல் ciṟubayal, பெ. (n.)

   1. பிசுக்கி, இவறன்; miser.

   2. குழந்தை; child.

     [சிறு + பயல்;

அறிவிற் குறைபாடுடையவன். சிறியவன், குழந்தை]

சிறுபயிர்

 சிறுபயிர் ciṟubayir, பெ. (n.)

   குறைவான காலத்தில் விளையும் பயிர் (நாஞ்);; minor crop that can be raised in a short period.

     [சிறு + பயிர். சிறு = சிறிய, குறுகிய, குறைந்த]

சிறுபருப்பு

சிறுபருப்பு ciṟubarubbu, பெ. (n.)

   பச்சைப் பயற்றம்பருப்பு; green gram, pulse.

     “செந்நெலரிசி சிறுபருப்புச் செய்த வக்காரம்” (திவ். பெரியாழ். 2.9:7);.

ம. செறுபரிப்பு

     [சிறு + பருப்பு]

சிறுபருவம்

 சிறுபருவம் ciṟubaruvam, பெ. (n.)

   இளமைக் காலம்; childhood, youth.

க. சிக்கப்ராய

     [சிறு + பருவம். ‘சிறு’ இளமைப் பொருளடை]

சிறுபறை

சிறுபறை ciṟubaṟai, பெ. (n.)

   1. தோற்கருவி

   வகை; Small drum.

     “யாழுங் குழலு மரிச்சிறு பறையும்” (பெருங், உஞ்சைக். 37:90);.

   2. சிறுபறைப்பருவம் (இலக். வி. 806); பார்க்க;see Siru-parai-p-paruvam.

ம. சிறுபற

     [சிறு + பறை]

பறை = தோற்கருவி. பறையைப் போன்ற வடிவினதாகிய சிறிய தோற்கருவியும் தோற் கருவி போன்றே ஒலியெழுப்பும் பிறவும் சிறுபறை எனப்பட்டன.

சிறுபாகல்

 சிறுபாகல் ciṟupākal, பெ. (n.)

   காஞ்சிபுரம் வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Kanchipuram Taluk.

     [சிறு+ [வாயில்]பாகல்]

சிறுபாடிகாவல்

சிறுபாடிகாவல் ciṟupāṭikāval, பெ. (n.)

   வரிவகை (தெ.க.தொ.7,30);; a kind of tax.

     [சிறு + பாடி + காவல்]

சிறுபாடு

சிறுபாடு1 ciṟupāṭu, பெ. (n.)

   கோயிலுக்குக் கொடுத்த சிறியகொடை (தெ. க. தொ. 3, 477);; small gift, as to a temple.

     [சிறு + பாடு. பாடு = உழைப்பு, உழைப்பிற்கேற்ற ஊதியம், செல்வம்]

 சிறுபாடு2 ciṟupāṭu, பெ. (n.)

 small Savings.

     “உம்முடைய சிறுபாட்டு வகையிலிருந்து ஒன்றுந் தரவேண்டாம்” (நாஞ்);.

     [சிறு + பாடு. படு → பாடு = உழைப்பு, கடமை. ‘பாடுபடுதன்’ என்னும் வழக்குண்மையை நோக்குக உழைப்பில் கிடைக்கும் ஊதியத்திற் சிறுபகுதியையும் பாடு என்னும் சொன் குறித்தது. சிறுபாடு= சிறுசேமிப்பு – சிறுபாடு, சிறுவாடு எனவும் வரும்)

சிறுபாணாற்றுப்படை

 சிறுபாணாற்றுப்படை ciṟupāṇāṟṟuppaḍai, பெ. (n.)

   ஒய்மா நாட்டு நல்லியக்கோடனென்ற தலைவன் மேல் நல்லூர் நத்தத்தனார் பாடியதும், பத்துப்பாட்டினுள் ஒன்றாய்த் திகழ்வதுமான கழக நூல்; an idyll by Nallür Nattattanar on the chief Nalliyakkodan of Oyma-nadu one of pattuppattu.

     [சிறு + பாணர் + ஆற்றுப்படை]

யாழ் இசைத்துப் பாடும் மரபினர் பாணர் அவருள் சிறியயாழ் இசைப்பவர் சிறுபாணர் ஆறு – ஆற்று + படை படு → படை ஆற்றுப்படை = பரிசில் பெற்றவன், அது பெறக்கருதியவனுக்கு வழிப்படுத்துவதாகப் பாடப்பெறும் இலக்கிய வகை.

சிறுபாண்டரங்கன்

சிறுபாண்டரங்கன் ciṟupāṇṭaraṅgaṉ, பெ. (n.)

   இடைக்கழகக் காலப் புலவருள் ஒருவர் (இறை. 1:5);; a poet of the middle Tamil Sangam.

     [சிறு + பாண்டரங்கன்]

சிறுபான்மை

சிறுபான்மை1 siru-panmai,  வி.எ. (adv.)

   சில நேரங்களில்; sometimes, occasionally, opp. to perumpanmai.

     “சில சிறுபான்மை வருமே” (பன்னிருபா. 264);.

     [சிறு + பான்மை. பால் = பகுப்பு, பகுதி,

பண்பு, தன்மை. பால் → பான்மை]

 சிறுபான்மை2 ciṟupāṉmai, பெ. (n.)

   சில; a few

     ‘இவற்றுட் சிறுபான்மை யிங்ங்னம் வரும்’ (உ.வ.);.

     [சிறு + பான்மை]

சிறுபாம்பு

 சிறுபாம்பு ciṟupāmbu, பெ. (n.)

   அரிப்புத் தழும்பை உண்டாக்கக் கூடிய நச்சுயிரி வகை; a kind of small venomous reptile producing ringworm.

     [சிறு + பாம்பு. பாம்பு = ஊர்ந்து செல்லும் உயிரி தோற்றத்தில் அஃதொத்த புழுவடிவினதான நச்சுயிரியும், பாம்பெனப்பட்டது]

சிறுபாலடை

 சிறுபாலடை ciṟupālaḍai, பெ. (n.)

   பூடுவகை (யாழ்.அக.);; a plant.

     [சிறு + பாவடை. பாலடை = ஆடுவகை]

சிறுபாலம்

 சிறுபாலம் ciṟupālam, பெ. (n.)

   சிறிய மதகு (C.E.M.);; culvert.

     [சிறு + பாலம்]

சிறுபாலா

 சிறுபாலா ciṟupālā, பெ. (n.)

   பேய்ப்புடல் (மலை.);; wild snake-gourd.

     [சிறு + பாலா]

சிறுபாலி

 சிறுபாலி ciṟupāli, பெ. (n.)

   கள்ளி; milk-hedge.

     [சிறு + பாலி. பால் + இ = பரலி. பாலி =பாலுடைய கன்விச் செடி. ‘இ’ உடைமைப் பொருளீறு]

சிறுபாளைச்சம்பா

 சிறுபாளைச்சம்பா ciṟupāḷaiccambā, பெ. (n.)

   சம்பா நெல்வகை; a kind of samba paddy.

     [சிறு + பாளை + சம்பா]

சிறுபிள்ளை

சிறுபிள்ளை ciṟubiḷḷai, பெ. (n.)

   1. குழவி;குழந்தை; child, infant.

     ‘சிறுபிள்ளை இட்ட வெள்ளாமை வீடு வந்து சேராது’ (பழ.);.

   2. இளைஞர், சிறுவர்; youngster.

     “என்கண் சிறுபிள்ளாய் வருகென்றே” (திருப்போ. சந். வண்ணத்தாழிவிசை,1);.

     [சிறு + பிள்ளை]

சிறுபிள்ளைத்தனம்

 சிறுபிள்ளைத்தனம் ciṟubiḷḷaittaṉam, பெ. (n.)

   முதிர்ச்சியின்றியும், பொறுப்பின்றியும் குழவியைப் போன்று செயற்படுந்தன்மை; childness.

     [சிறு + பிள்ளை + தனம். ‘தனம்’ பண்புணர்த்தும் இடைச்சொல்]

சிறுபுடையன்

சிறுபுடையன் ciṟubuḍaiyaṉ, பெ. (n.)

   பாம்பு வகை (M.M.700);; small wart-snake.

     [சிறு + புடையன்]

சிறுபுன்னை

 சிறுபுன்னை ciṟubuṉṉai, பெ. (n.)

   புன்னை வகை; small poon.

ம. செறுப்புன்ன, செறுபுன்ன

     [சிறு + புன்னை]

சிறுபுறம்

சிறுபுறம் ciṟubuṟam, பெ. (n.)

   1. பிடர்; nape, back of the neck, as the small side.

     “செயத்தகு கோவையிற் சிறுபுற மறைத்து” (சிலப். 6:102);.

   2. முதுகு; back.

     “நின் னணிமாண் சிறுபுறங் காண்கம்” (அகநா.261);.

   3. சிறுகொடை; small gift.

     “சிறுபுறமென நூறாயிரங் காணம் கொடுத்து” (பதிற்றுப். 72 பதி.);.

     [சிறு + புறம். புறம் = முதுகு]

சிறுபுறம்பேசு-தல்

சிறுபுறம்பேசு-தல் irupuram.pdsu,    4 செ.கு.வி. (v.i.)

   காணாவிடத்துத் தூற்றுதல்; to backbite.

     “செப்பிள மென்முலையார்கள் சிறுபுறம் பேசித்திரிவர்” (திவ். பெரியாழ். 2.4:5); (செ.அக.);.

     [சிறுபுறம் + பேச. முகத்துக்கெதிரே பேசாமல், முதுகுப்பக்கம் பேசுதல், புறம்பேசுதல்]

சிறுபுலமீன்கொத்தி,

 சிறுபுலமீன்கொத்தி, ciṟubulamīṉkotti, பெ. (n.)

   நீர்நிலைகளில் வசிக்கும் பறவை; a water bird.

     [சிறு+புலம்+மீன்+கொத்தி]

     [P]

சிறுபுள்ளடி

சிறுபுள்ளடி ciṟubuḷḷaḍi, பெ. (n.)

   ஒற்றை யிலைச் செடிவகை (பதார்த்த. 366);; scabrous ovate unifoliate tick-trefoil.

ம. சிறுப்புள்ளடி

     [சிறு + புள்ளடி. புள் + அடி = புள்ளடி. பறவைகளின் காலடி போன்ற இவைகளையுடைய செடி]

சிறுபுள்ளுநோய்

சிறுபுள்ளுநோய் ciṟubuḷḷunōy, பெ. (n.)

   மாட்டுநோய் வகை (மாட்டுவா.121);; a kind of cattle disease.

     [சிறு + புள்(ளு); + நோய். புள் = வண்டு. வண்டுகடி போன்ற நோயாயிருக்கலாம்]

சிறுபூச்சி

 சிறுபூச்சி ciṟupūcci, பெ. (n.)

   புழுவகை (இ.வ.);; Worm.

     [சிறு + பூச்சி]

பெரும்பாலும், முட்டையிலிருந்து தொடங்கும் பூச்சிப்பருவங்களில், பூச்சிக்கு முந்தைய பருவம் புழு. கூட்டுப்புழு எனும் வடிவு பெற்றுப் பின் பூச்சிப்பருவம் எய்துவது முறைமை. எனவே பூச்சிக்கு முந்தைய புழுப் பருவத்தை, சிறுபூச்சி என வழங்கும் மரபுள்ளது.

சிறுபூனைக்காலி

சிறுபூனைக்காலி ciṟupūṉaikkāli, பெ. (n.)

   காதணிபோல் பூக்கும் கொடிவகை, சிமிக்கிப் பூக்கும் கொடிவகை, சிமிக்கிப் பூ (பதார்த்த. 577);; mountain leschenault’s passion – flowered.

     [சிறு + பூனை + காலி]

சிறுபூலா

 சிறுபூலா ciṟupūlā, பெ. (n.)

புதர்ச்செடி வகை:

 a shrub.

     [சிறு + பூலா]

சிறுபூளை

சிறுபூளை ciṟupūḷai, பெ. (n.)

நடைவழியில் முளைக்கும் ஒருவகைப் பூடு,

 a common wayside weed.

     “அறுகு சிறுபூளை நெல்லொடு தூஉய்ச் சென்று” (சிலப்.9:43);.

ம. செறுபூள

     [சிறு + பூளை]

சிறுபொழுது

சிறுபொழுது ciṟuboḻudu, பெ. (n.)

   மாலை, இடையாமம், விடியல், காலை, நண்பகல், எற்பாடு (தொல், பொருள். 6, உரை..); என அறுவகையாகவும், மாலை, யாமம், வைகறை எற்பாடு, காலை, நண்பகல் (நம்பியகப். 12); என ஐவகையாகவும் கூறப்படும் நாட்பிரிவு; divisions of the day, six in number, viz., malai, idai-yamam, vidiyal, kalai, nanpagal, erpadu. or five in number, viz., malai, yamam, vaigarai, erpadu kalai, nanpagal, dist. fr. perum-poludu.

மறுவ அறுபொழுது

     [சிறு + பொழுது]

பெரும்பொழுதின் மறுதலை, யாண்டின் (பருவ காலப்); பிரிவுகளைப் பெரும்பொழுது என்றும், நாளின் (காலப்); பிரிவுகளைச் சிறு பொழுது என்றும், பிரித்தமைத்து வழங்கினர் பண்டைத்தமிழர் பொழுது சிறுபொழுது பெரும்பொழுது என இருபாற்பட்டு ஒவ்வொரு பாலும் அறுவகை கொண்டிருக்கும் நம்பியகப் பொருள் ஏற்பாட்டினையும் காலையையும் ஏற்படுகாலெ என ஒன்றாகக்கொண்டமையால் சிறுபொழுது ஐந்து எனக் குறித்துள்ளது. கதிரவன் தோற்றம் முதல் பப்பத்து நாழிகை கொண்ட நாட் பிரிவுகளாகக் கொள்ளும் மரபும் பெரும்பொழுது அறுவகையாய் இருப்பதும் சிறுபொழுது அறுவகையாவதை இயல்பாயக் காட்டுகிறது.

சிறுபோகம்

 சிறுபோகம் ciṟupōkam, பெ. (n.)

   கம்பு, கேழ்வரகு போன்ற சிறுதவச விளைவு (வின்.);; harvest of the inferior kinds of grain.

     [சிறு + போகம்]

சிறுப்பனை

சிறுப்பனை ciṟuppaṉai, பெ. (n.)

   1. இழிவு (வின்.);; baseness.

   2. கஞ்சத்தனம்; meanness.

   3. வறுமை (வின்.);; indigence.

   4 மதிப்புக்கேடு; disrespect.

   என்னிடத்தில் சிறுப்பனை பட வேண்டுமோ? (வின்.);;   5. கவலை,

 worry.

   6. குழப்பம், தொல்லை; trouble.

     ‘இந்தக் குழந்தை படுத்துஞ் சிறுப்பனை பொறுக்க முடியவில்லை’ (நெல்லை.);.

     [சிறு → சிறுப்பனை. ‘சிறு’ தாழ்வுப் பொருளடை]

சிறுப்பம்

 சிறுப்பம் ciṟuppam, பெ. (n.)

   இளமை (நாஞ்.);; youth, early life.

ம. செறுப்பம்.

     [சிறுமை (சிறு); → சிறுப்பம். ஒ.நோ: வளமை → வளப்பம். ‘சி’ இளமைப் பொருள் அடை முன்னொட்டு]

சிறுப்பி-த்தல்

சிறுப்பி-த்தல் siruppi,    4 செ.குன்றாவி (v.t.)

   1. சிறுகப்பண்ணுதல், குறைத்தல்; to reduce, diminish.

   2. மதிப்புக்குறைவு காட்டுதல் (யாழ்.அக.);; to show scant courtesy to, to treat disrespectfully.

     [சிறு → சிறுப்பி-,]

சிறுப்பிள்ளை

சிறுப்பிள்ளை ciṟuppiḷḷai, பெ. (n.)

   வேலையாள்; servant.

     “வீரசோமீசுவர தேவர் சிறுப்பிள்ளை” (M.B.R.242 of 1929-30);.

     [சிறு + பிள்ளை]

சிறுப்பெரியார்

சிறுப்பெரியார் ciṟupperiyār, பெ. (n.)

   சிறுமைக்குணங்கொண்டு பெரியார்போலத் தோன்றுபவர்; small persons affecting greatness.

     “சினந்திருத்துஞ் சிறுப்பெரியார் குண்டர்” (தேவா, 321, 6);,

     [சிறு(மை); + பெரியார்]

சிறுமகன்

சிறுமகன் ciṟumagaṉ, பெ. (n.)

   1. அறிவில்லாதவன், பேதை, முட்டாள்; fool, ignoramus.

     “தீத்திற மொழிகெனச் சிறுமக னுரைப்போன்” (மணிமே 16:117);.

   2. சிறியன் பார்க்க;see siriyan.

ம. செறுமகன் (பேரன்);

     [சிறு + மகன். சிறு = சிறிய, குறுகிய, தாழ்த்த இழிவான]

சிறுமட்டம்

சிறுமட்டம்1 ciṟumaṭṭam, பெ. (n.)

   1. சிறு குதிரை; pony, nag.

   2. யானைக்கன்று; young elephant.

     [சிறு + மட்டம். முள் → மள் → மடு = பள்ளம். மடு → மட்டு → மட்டம் = தாழ்ந்தது, சிறியது. மட்டம் = குதிரைக் குட்டி, யானைக் குட்டி]

 சிறுமட்டம்2 ciṟumaṭṭam, பெ. (n.)

   1. சிற்றளவு; small measure.

   2. சிறுவாழை; young plantain.

   3. குள்ளமானவ-ன்-ள்; short young man or woman.

     [சிறு + மட்டம். மட்டம் = கரும்பு, வாழை போன்றவற்றின் கன்று, அளவு, குள்ளம்.]

சிறுமணி

சிறுமணி1 ciṟumaṇi, பெ. (n.)

   சலங்கை (சூடா,);; tiny bell tied in a string around a child’s waist or foot.

ம. செறுமணலி

     [சிறு + மணி. மண்ணுதல் = கழுவுதல். மண் → மண்ணி → மணி = கழுவப்பெற்ற ஒளிக்கல்]

 சிறுமணி1 ciṟumaṇi, பெ. (n.)

   ஆறு மாதத்திற் பயிராகும் சம்பாநெல் வகை; a kind of samba paddy maturing in six months.

ம. செறுமணி

     [சிறு + மணி. முள் → முட்டு = சிறியது. முள் →- மள் → மண் → மணி = சிறியது, தவசமணி]

சிறுமணிக்கொட்டுவான்

 சிறுமணிக்கொட்டுவான் ciṟumaṇikkoṭṭuvāṉ, பெ. (n.)

   நீர்ப்புள் வகை (யாழ்.அக);; a water bird.

     [சிறு + மணி + கொட்டுவான்]

சிறுமணிச்சம்பா

 சிறுமணிச்சம்பா ciṟumaṇiccambā, பெ. (n.)

   சம்பா நெல்வகை; a kind of paddy.

ம. செறுமணிச்சம்ப

     [சிறு + மணி + சம்பா]

சிறுமணிப்பயறு

 சிறுமணிப்பயறு ciṟumaṇippayaṟu, பெ. (n.)

   காராமணி வகை; asparagus bean.

     [சிறு + மணி + பயறு]

சிறுமணியன்

 சிறுமணியன் ciṟumaṇiyaṉ, பெ. (n.)

   சம்பா நெல்வகையுள் ஒன்று (தஞ்சை);; a variety of Samba paddy.

ம. செறுமணியன்

     [சிறு + மணியன், சிறுமணி = நெல்வகை. சிறுமணி → சிறுமணியன்]

சிறுமயிற்கொன்றை

 சிறுமயிற்கொன்றை ciṟumayiṟkoṉṟai, பெ. (n.)

   மயிற்கொன்றை மரம்; peacock-flower tree.

     [சிறு + மயில் + கொன்றை]

சிறுமலை

சிறுமலை1 ciṟumalai, பெ. (n.)

   1. பொற்றை (சூடா.);; hill.

   2. சிறுகுன்று; hillock.

     [சிறு + மலை]

 சிறுமலை2 ciṟumalai, பெ. (n.)

   திண்டுக்கல் மாவட்டத்தில், சுவைமிக்க இனிய வாழைப் பழத்திற்குப் பெயர்பெற்ற மலை; a mountain range in Dindugal district noted for its plantain fruits.

     “தென்னவன் சிறுமலை திகழ்ந்து தோன்றும்” (சிலப். 11:85);.

மறுவ, செறுமலை.

     [சிறு + மலை]

சிறுமலையரியன்

 சிறுமலையரியன் ciṟumalaiyariyaṉ, பெ. (n.)

   நெல்வகை; a kind of paddy.

     [சிறு + மலை + அரியன்]

சிறுமல்

 சிறுமல் ciṟumal, பெ. (n.)

   தண்ணீர் விட்டான் கிழங்குக்கொடி (மலை.);; a common climber with many thickened fleshy roots.

சிறுமல்லி

 சிறுமல்லி ciṟumalli, பெ. (n.)

சிறுமல்லிகை (சங்.அக.); பார்க்க;see Siru-mallgai.

     [சிறு + மல்லி]

சிறுமல்லிகை

 சிறுமல்லிகை ciṟumalligai, பெ. (n.)

   மல்லிகை வகை (சங்.அக.);; wild jasmine.

ம. செறுமுல்ல

     [சிறு + மல்லிகை]

சிறுமழை

 சிறுமழை ciṟumaḻai, பெ. (n.)

நுண் திவலைகளாகப் பெய்யுந் தூறல்,

 drizzle.

மறுவ, சிறுதுாறல்

ம. செறுமழ

     [சிறு + மழை]

சிறுமாரோடம்

சிறுமாரோடம் ciṟumārōṭam, பெ. (n.)

   செங்கருங்காலி (குறிஞ்சிப், 78);; red catechu.

     [சிறு + மாரோடம்]

சிறுமி

சிறுமி ciṟumi, பெ. (n.)

   1. இளம்பெண்; maiden, girl.

     “சிறுமி தந்தையும்” (சீவக. 1458);.

   2. மகள் (பிங்.);; daughter.

ம. செறுமி

     [சிறு → சிறுமி]

சிறுமியம்

 சிறுமியம் ciṟumiyam, பெ. (n.)

   சேறு (சது.);; mud, mire.

சிறுமீன்

சிறுமீன் ciṟumīṉ, பெ. (n.)

   1. அருந்ததி விண்மீன் புரைங்கற்பி னறுநுதல்” (பெரும்பாண்.303);.

   2. நொய்ம் மீன் (பிங்.);; loach.

ம. செறுமீன்: க. சிக்க

     [சிறு + மீன்]

சிறுமுட்டி

 சிறுமுட்டி ciṟumuṭṭi, பெ. (n.)

   சிறுசுத்தியல் (C.E.M.);; small hammer.

     [சிறு + முட்டி]

சிறுமுதுக்குறைமை

சிறுமுதுக்குறைமை ciṟumudukkuṟaimai, பெ. (n.)

   இளமையிற் பேரறிவுடைமை; precociousness.

     “இனிய சொல்லாள் சிறுமுதுக்குறைமை கேட்டே” (சீவக. 1051);.

     [சிறு + முதுக்குறைமை. முதுக்குறைமை = இளம் + பருவத்திலேயே பேரறிவுடைமை]

சிறுமுதுக்குறைவி

சிறுமுதுக்குறைவி ciṟumudukkuṟaivi, பெ. (n.)

   இளம்பருவத்தே பேரறிவுடையவள்; precocious girl, a term of endearment.

     “சிறுமுதுக் குறைவிக்குச் சிறுமையுஞ் செய்தேன்” (சிலப்.16,68);.

     [சிறு + முதுக்குறைவி. ‘இ’ பெண் பாலீறு.]

சிறுமுத்தன்

சிறுமுத்தன் ciṟumuttaṉ, பெ. (n.)

   ஆண் பொம்மை; male toy – baby.

     “சிறுமுத்தனைப் பேணி” (கலித்.59);.

 Skt. mugdha

     [சிறு + முத்தன்]

சிறுமுறி

சிறுமுறி ciṟumuṟi, பெ. (n.)

   கைச்சீட்டு; small note or chit.

     “பரமபதம் தங்கள் சிறுமுறிப்படி செல்லும்படி” (ஈடு, 4.3:11);.

     [சிறு + முறி)]

சிறுமுள்ளி

 சிறுமுள்ளி ciṟumuḷḷi, பெ. (n.)

   முள்ளிவகை (யாழ்.அக.);; a kind of nail dye.

ம. செறுமுள்ளி

     [சிறு + முள்ளி]

சிறுமுழவு

 சிறுமுழவு ciṟumuḻvu, பெ. (n.)

   தோற்கருவி வகை; a kind of drum.

     [சிறு + முழவு]

சிறுமூங்கில்

 சிறுமூங்கில் ciṟumūṅgil, பெ. (n.)

   மூங்கில் வகை; swollen node – ringed semi-solid medium bamboo.

ம. செறுமுள

     [சிறு + மூங்கில். சிறு = மெல்லிய]

சிறுமூசை

 சிறுமூசை ciṟumūcai, பெ. (n.)

   மாழைகளை யுருக்கப் பயன்படுத்தும் சிறிய மண்குகை (C.E.M.);; small crucible.

     [சிறு + மூசை]

சிறுமூர்

 சிறுமூர் ciṟumūr, பெ. (n.)

   வேலூர் மாவட்டத்தில் உள்ள ஓர் ஊர்; a village in Vellore,

     [சிறு+ஆமூர்].

சிறுமூலகம்

சிறுமூலகம் ciṟumūlagam, பெ. (n.)

   1. அரிசித் திப்பிலி; common long pepper.

   2. பூடுவகை (அக.நி.);; a small plant.

     [சிறுமூலம் → சிறுமூலகம்]

சிறுமூலம்

சிறுமூலம் ciṟumūlam, பெ. (n.)

   1. திப்பிலி (பிங்.);; long pepper,

   2. சிறுகிழங்கு (மலை); பார்க்க;see Siru-kilangu.

     [சிறு + மூலம். மூலம் = வேர், கிழங்கு]

சிறுமூளை

 சிறுமூளை ciṟumūḷai, பெ. (n.)

   மூளையின் பகுதி; cerebellum.

     [சிறு + முளை]

சிறுமை

சிறுமை1 ciṟumai, பெ. (n.)

   1. இழிவு, புன்மை; lowness, meanness, insignificance.

     “ஆண்டு கொண்டானென் சிறுமை கண்டும்” (திருவாச. 5:9);.

   2. நுண்மை (வின்.);; minuteness.

   3. குறைபாடு; diminution.

     “சிறுமையுஞ் செல்லாத் துனியும்” (குறள், 769);.

   4. வறுமை; poverty, indigence.

     “சிந்தைநோய் கூருமென் சிறுமை நோக்கி” (சிலப். 8:85);.

   5. வறட்சி; scarcity.

   6. துன்பம்; sorrow, misery.

     “சிறுமை பலசெய்து சீரழிக்குஞ் சூதின்” (குறள், 934);.

   7. பிறர்மனத்தை வருத்துகை; offencc.

     “சிறுமையுணிங்கிய வின்சொல்” (குறள், 98);.

   8. இளப்பம்;  disgrace.

     “தீர்ந்ததெஞ் சிறுமை” (கம்பரா. திருவவ.25);.

   9. குற்றம்; fault.

     “உள்ளந் திகைத்திந்தச் சிறுமை செய்தேன்” (கம்பரா. ஊர்தே 93);.

   10. நோய்; disease.

     “பையுளுஞ் சிறுமையும் நோயின் பொருள” (தொல். சொல். 341);.

ம. செறும

     [சில் → சிறு → சிறுமை]

 சிறுமை2 ciṟumai, பெ. (n.)

   1. இளமை (இ.வ.);; youth, minority.

   2. கழிகாமம்; lust.

     “சினமுஞ் சிறுமையு மில்லார்” (குறள். 431);.

   3. கயமை; baseness.

     “சிறுமை தீரா வெவ்வழி மாயை” (கம்பரா. மாயாசனக.1);

     [சில் → சிறு → சிறுமை]

சிறுமைத்தனம்

சிறுமைத்தனம் ciṟumaittaṉam, பெ. (n.)

   சிறுமை2,3,4 (இ.வ.); பார்க்க;see sirumai,2,3,4. 2. இளமை; youth.

     [சிறுமை + தனம். ஒ.நோ. இவறன்மை → இவறற்றனம் அடிமை → அடிமைத்தனம். வள்ளன்மை → வள்ளற்றனம். தனம் = பண்புணர்த்தற்குப் பெயரின் பின்வரும் ஈறு.]

சிறுமையர்

 சிறுமையர் ciṟumaiyar, பெ. (n.)

   கீழ்மக்கள் (திவா.);; mean, vulgar persons.

     [சிறு → சிறுமை → சிறுமையர். சிறு = தாழ்ந்த, இழிவான]

சிறுமொழி

சிறுமொழி ciṟumoḻi, பெ. (n.)

சிறுசொல்2 பார்க்க;see Siru-sol2.

க. சிக்கமாது

     [சிறு + மொழி]

சிறுலவங்கம்

 சிறுலவங்கம் ciṟulavaṅgam, பெ. (n.)

   சன்னக் கறாம்பூ (லவங்கப்பட்டை);; Ceylon cinnamon.

     [சிறு + இலவங்கம். சிறு = சிறிய, மெல்லிய]

சிறுவடம்

சிறுவடம் ciṟuvaḍam, பெ. (n.)

சிறுவட்டம்1 (இ.வ.); பார்க்க;see Siru-vassam.

     [சிறு + வடம். வட்டம் → வடம்]

சிறுவட்டமணி

 சிறுவட்டமணி ciṟuvaṭṭamaṇi, பெ. (n.)

   குழந்தைகள் அரையிற் கட்டுஞ் சிறுமணி; tiny bells worn round the waist, by children.

     [சிறு + வட்டம் + மணி]

சிறுவட்டம்

சிறுவட்டம்1 ciṟuvaṭṭam, பெ. (n.)

   இளமை, இளம் பருவம்; youth, boyhood.

மறுவ. இளவட்டம்

     [சிறு + வட்டம். சுற்று, மண்டிவம், பருவம்]

 சிறுவட்டம்2 ciṟuvaṭṭam, பெ. (n.)

   பூடுவகை (வின்.);; a shrub with scarlet flowers in clusters, the juice of which is pressed and given in gingelly oil to children for cutaneous cruptions.

     [சிறு + வட்டம்]

குழந்தைகளின் தோல்நோய்க்கு, இதன் சாற்றினை நல்லெண்ணெய்யில் இழைத்துக் கொடுப்பர்.

சிறுவதும்

சிறுவதும்  Siruvadum,  வி.எ.(adv.)

   சிறிதும்; even a little, even a bit, used only with neg. verbs.

     “சிறுவது மஞ்சிலன்” (கந்தபு, தானப். 2].

     [சிறிதும் → சிறுவதும்]

இஃது எதிர்மறைவினையில் வரும்

சிறுவத்தி

 சிறுவத்தி ciṟuvatti, பெ.(n.)

   திருவாடானை வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Thiruvādānai Taluk.

     [சிறு+அத்தி]

சிறுவன்

சிறுவன் ciṟuvaṉ, பெ. (n.)

   1. இளைஞன்; boy.

     “மால்பெருஞ் சிறப்பையச் சிறுவனும் பெற்று” (பாரத நிரைமீட் 46);.

   2. சிறியன்; lad.

     “உறுவருஞ் சிறுவரும்” (புறநா. 381);.

   3. மகன்; son.”உலகாளுஞ் சிறுவர்ப் பயந்து” (சீவக. 2606);

   4. சிறுபுள்ளடி வகை (மலை);; species of desmodium.

ம. சிறுவன்

     [சிறு → சிறுவன். ‘அன்’ ஆண்பாலீறு]

சிறுவம்

 சிறுவம் ciṟuvam, பெ. (n.)

சிறுப்பம் (வின்.); பார்க்க;see Siruppam.

     [சிறுப்பம் → சிறுவம்]

சிறுவயது

 சிறுவயது ciṟuvayadu, பெ. (n.)

   இளம்பருவம் (உ.வ.);; non-age, youth.

     [சிறு + வயது. சிறு = குறைவு]

 Skt. vayas → த. வயது

சிறுவரை

சிறுவரை1 ciṟuvarai, பெ. (n.)

   1. சிறிதுநேரம்; short time, a little while.

     “சிறுவரைத் தங்கின் வெகுள்வர்” (கலித்.93);.

   2. சிறுதொலைவு; short distance.

     “சிறுவரை சென்று நின்றோர்க்குந் தோன்றும்” (புறநா.);.

     [சிறு + வரை. வரை = காலம், தொலைவு]

 சிறுவரை2 ciṟuvarai, பெ. (n.)

   சிறுமூங்கில்; small bamboo.

     [சிறு + வரை. சிறு – சிறிய, இளைய. வரை – மூங்கில்]

 சிறுவரை3 ciṟuvarai, பெ. (n.)

   இழிவு, சிறுக்கம், சிறியபொருள்; trifle, small thing.

     [சிறு + வரை]

சிறுவலி

 சிறுவலி ciṟuvali, பெ. (n.)

   குழவி முதிரா நிலையில், பருவந்தவறிப் பிறப்பதாலுண்டாகும் நோவு (வின்.);; premature labour pains.

     [சிறு + வலி. சிறு = முதிர்வின்மை, முதிராதிலை]

சிறுவல்

சிறுவல்1 ciṟuval, பெ. (n.)

   1. குழந்தை (யாழ்ப்.);; little child.

   2. இளம்பருவம் (இ.வ.);; childhood.

     [சிறு → சிறுவன். ‘அல்’ சொல்லாக்க ஈறு]

 சிறுவல்2 ciṟuval, பெ. (n.)

   1. தடை (நாஞ்.);; obstacle.

   2. இடையூறு; hindrance.

{சிறு → சிறுவல்]

சிறுவளி

 சிறுவளி ciṟuvaḷi, பெ. (n.)

   திருவாடானை வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Thiruvadanai Taluk.

     [சிறு+வெளி]

சிறுவள்ளி

சிறுவள்ளி ciṟuvaḷḷi, பெ. (n.)

   சிறுகிழங்கு (பதார்த்த. 438);; Goa potato.

ம. செறுவள்ளிக் கிழங்ஙு,

     [சிறு + வள்ளி. வள்ளி = கொடி, கிழங்கு]

சிறுவள்ளிக்கிழங்கு

 சிறுவள்ளிக்கிழங்கு ciṟuvaḷḷikkiḻṅgu, பெ. (n.)

சிறுவள்ளி பார்க்க;see Siru-Valli.

ம. செறுவள்ளிக் கிழங்ஙு

     [சிறு + வள்ளிக்கிழங்கு]

சிறுவழுதலை

 சிறுவழுதலை ciṟuvaḻudalai, பெ. (n.)

சிறுவழுதுணை (L.); பார்க்க;see siru-valudunai

     [சிறுவழுதுணை → சிறுவழுதலை]

சிறுவழுதுணை

சிறுவழுதுணை

சிறுவழுதுணை ciṟuvaḻuduṇai, பெ. (n.)

   1. இரவில் மலருஞ் செடிவகை (வின்);;  Indian nightshade.

   2. கண்டங்கத்திரி; species of solanum.

ம. செறுவழுதின

     [சிறு வழுதுணை வழுதுணை = கத்திரிக் காப், சிறுவமுதுணை = கத்திரிக்காயைப் போன்ற வடிவிலிருக்கும் கண்டங்கத்திரி]

இங்கும் சிறு, போல எனும் உவமஉருபுப் பொருளில் வந்தது. சிறுதேர் பார்க்க

சிறுவாடு

சிறுவாடு ciṟuvāṭu, பெ. (n.)

   1. சிறுசேமிப்பு (வின்.);; small savings in money.

   2. சிறுதேட்டு (நாஞ்); பார்க்க;see Siru-têttu.

   3. பற்றடைப்பு சிறுவியர் நிலம் (C.G.);; reclaimed land enjoyed by a tenant for a certain period in requital of his labour for so reclaiming it.

     [சிறுபாடு → சிறுவாடு]

 சிறுவாடு ciṟuvāṭu, பெ. (n.)

கணவனுக்குத் தெரியாமல் மனைவி சேர்க்கும் பணம்,

 small savings of wife.

     [சிறு+[படு-பாடு]வாடு]

சிறுவாத்தி

 சிறுவாத்தி ciṟuvātti, பெ. (n.)

திருவாத்தி (L.);:

 holy mountain ebony.

     [சிறு + ஆத்தி]

சிறுவாய் உளி

 சிறுவாய் உளி ciṟuvāyuḷi, பெ. (n.)

   துளை போடுவதற்குப் பயன்படும் அரை அங்குல அகலமுள்ள உளி; a small chisel.

     [சிறு+வாய்+உளி]

சிறுவாய்க்கயிறு

சிறுவாய்க்கயிறு ciṟuvāykkayiṟu, பெ. (n.)

   குதிரையின் கடிவாள வார்; reins.

     “பிடித்த சிறுவாய்க் கயிறும்” (ஈடு, 7.4: 5);.

     [சிறு + வாய் + கயிறு]

சிறுவாலுழுவை

 சிறுவாலுழுவை ciṟuvāluḻuvai, பெ. (n.)

   வாலுழுவைக் கொடிவகை (L.);; climbingstaff – plant.

     [சிறு + வாலுமுவை]

சிறுவாள்

 சிறுவாள் ciṟuvāḷ, பெ. (n.)

கைவாள் (பிங்.);:

 hand-saw.

     [சிறு + வாள். வார் → வால் → வாள் = நீண்ட கத்தி]

சிறுவாழை

 சிறுவாழை ciṟuvāḻai, பெ. (n.)

இளம்வாழை,

 young plantain.

     [சிறு + வாழை, வழு → வாழை = வழு வழுப்பான மரம்]

சிறுவி

 சிறுவி ciṟuvi, பெ. (n.)

   மகள் (சூடா.);; daughter.

     [சிறு → (சிறுமி); → சிறுவி. ‘இ’. பெ.பா.ஈறு]

சிறுவிடாகம்

 சிறுவிடாகம் ciṟuviṭākam, பெ. (n.)

   வாலாசா வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in wallajah Taluk.

     [சிறு+விடாகம்]

சிறுவிடு

 சிறுவிடு ciṟuviḍu, பெ. (n.)

கொள்ளு (மலை);:

 horse-gram.

சிறுவித்தம்

சிறுவித்தம் siṟuvittam, பெ. (n.)

   சூதாட்டத்தில் ஒட்டமாக வைக்கப்பட்ட சிறுதொகை; stake – money, as in gambling.

     “சிறுவித்த மிட்டான் போல்” (கலித். 136);.

     [சிறு + வித்தம்]

சிறுவியர்

சிறுவியர் ciṟuviyar, பெ. (n.)

   குறுவியர்; light or mild perspiration.

     “திங்கள் வாண்முகஞ் சிறுவியர் பிரியஞ (சிலப் 4:52);.

க. கிறுபெமர்

     [சிறு + வியர்]

சிறுவிரல் 15

சிறுவிரல்

சிறுவிரல் ciṟuviral, பெ. (n.)

   சுண்டுவிரல்; little finger.

     “சிறுவிரன் மோதிரங் கொடுத்தனன்” (பெருங். வத்தவ. 13:180);.

   ம. செறுவிரல்;க. கிறும், பிரலு

     [சிறு + விரல். விரி → விரல்]

சிறுவிலை

சிறுவிலை ciṟuvilai, பெ. (n.)

   1. அருவிலை:

 high price.

   2. சிறுவிலைநாள் பார்க்க;     “சிறு விலை யெளியவ ருணவு சிந்தினோன்” (கம்பரா. பள்ளி. 111.

   3. இளைத்துள்ளது; that which is lean or slender.

     “சிறுவிலை மருங்குல்” (கம்பரா. தைலமாட்டு.53);.

     [சிறு + விலை. சிறு = சிறியது, அருமைப்பாடுடையது]

சிறுவிளையாட்டு

 சிறுவிளையாட்டு ciṟuviḷaiyāṭṭu, பெ. (n.)

   கடற்கரையில் நண்டுகள் அடிக்கடி மறை தலைக் காண்பது; a children’s play.

     “செப்பேர் ஈரளை அலவற் பார்க்கும் சிறு விளையாடல்”

     [சிறு+விளையாட்டு]

சிறுவீடு

சிறுவீடு1 ciṟuvīṭu, பெ. (n.)

   கறப்பதற்கு முன் மாடுகளைப் புலர்பொழுதில் மேயவிடுகை; letting out cattle in the early morning to graze before they are milked.

     “எருமை சிறுவீடு மேய்வான பரந்தனகாண்”(திவ். திருப்ப.8.);

     [சிறு + விடு சிறு = சிறிது காவம் வீடு = மேய்ச்சலுக்கு விடுதல் விடு → விடு]

 சிறுவீடு2 ciṟuvīṭu, பெ. (n.)

சிற்றில் 1,2 பார்க்க see Sirril’ 1,2.

     [சிறு + வீடு]

   2 சிறை-த்தல்

 சிறுவீடு ciṟuvīṭu, பெ. (n.)

அப்பா அம்மா விளையாட்டு, சோறாக்கி விளையாடுதல் பொண்ணு மாப்பிள்ளை விளையாட்டு என்று அழைக்கப்படும் பெற்றோர் தம் வாழ்க்கை யினைக் கவனித்தறிந்து ஆடும் விளையாட்டு:

 a children’s play.

     [சிறு+வீடு]

சிறுவீட்டுப்பொங்கல்

 சிறுவீட்டுப்பொங்கல் ciṟuvīṭṭuppoṅgal, பெ. (n.)

   சுறவ (தை);த்திங்களில் சிறுமியர் சிறு வீடு கட்டிப்பொங்கலிடும் பண்டிகை (இ.வ.);; a festival in the month of Šuravam in which rice is boiled and offered to God by girls, in front of the toy-houses, prepared for the occasion.

     [சிறு + வீடு + பொங்கள்]

சிறுவுடை

 சிறுவுடை ciṟuvuḍai, பெ. (n.)

   நீருடைமரம்; buffalo thorn cutch.

     [சிறு + உடை. உடை = உடைமரம்]

சிறுவுமரி

 சிறுவுமரி ciṟuvumari, பெ. (n.)

   பவளப்பூண்டு (யாழ்.அக);; coral plant.

     [சிறு + உமரி]

சிறுவெண்காக்கை

சிறுவெண்காக்கை ciṟuveṇkākkai, பெ. (n.)

   கழுத்திற் வெண்மையுடைய காகம்; crow having a greyish neck.

     “பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை” (ஐங்குறு 170);.

     [சிறு + வெண் + காக்கை. கரியதிறமுன்ன காக்கையின் கழுத்தில், சிறிது வெண்ணிற முடைமையைக் குறிக்கச் ‘சிறுவெண்’ என வந்தது

சிறுவெள்ளரி

 சிறுவெள்ளரி ciṟuveḷḷari, பெ. (n.)

   வெள்ளரி வகை (வின்);; a species of cucumber.

ம. செறுவெள்ளரி

     [சிறு + வெள்ளரி]

சிறுவேங்கை

 சிறுவேங்கை ciṟuvēṅgai, பெ. (n.)

   வேங்கை மரம்; thorny blue – draped feather foil.

     [சிறு +வேங்கை]

சிறுவேடல்

 சிறுவேடல் ciṟuvēṭal,    பெ. (n.) காஞ்சிபுரம் வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Kanchipuram Taluk.

     [சிறு+ஏடல்]

சிறுவேட்டி

 சிறுவேட்டி ciṟuvēṭṭi, பெ. (n.)

   துண்டு; towel.

     [சிறு + வேட்டி. வெட்டி → வேட்டி]

சிறுவேட்டை

சிறுவேட்டை ciṟuvēṭṭai, பெ. (n.)

   வரிவகை (M.E.R. 134 of 1924);; a kind of tax.

     [சிறு + வேட்டை]

சிறுவேர்

சிறுவேர் ciṟuvēr, பெ. (n.)

   மருந்துவேர் வகையுளொன்று (இங்.வை.234);; a kind of medicinal root.

     [சிறு + வேர்]

சிறுவை

 சிறுவை ciṟuvai, பெ. (n.)

   விழுப்புரம் வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Villupuram Taluk.

     [சிறு+வயல்]

சிறுவோர்

சிறுவோர் ciṟuvōr, பெ. (n.)

   1. சிறுபிள்ளைகள்; children, little boys.

     “ஆனாவறு சிறுவோர்தமையளித்தோன்” (கந்தபு. சரவண 32);.

   2. இளைஞர்; youngsters.

     [சிறு → சிறுவோர்]

சிறை

சிறை1 ciṟaittal, செ.குன்றாவி (v.t.)

   1. சிறை செய்தல்; to restrain, imprison.

     “தன் வயிற்சிறைப்பினும்” (தொல்.பொருள். 147);.

   2. நீரைத்சிறை-த்தல் 15 தடுத்தல்; to dam up.

     “கீழ்மடைகள் சிக்கெனச் சிறைத்து” (தணிகைப்பு திருநா.91].

     [இறு → சிறு → சிறை-,]

 சிறை2 ciṟaittal,    4 செ.குன்றாவி (v.t.)

   சுழல விழித்தல்; to see rolling one’s eyes.

     “சிதரரி மழைக்கணுஞ் சிறைக்கும்” (நீலகேசி, 72);.

 சிறை3 ciṟaidal,    2 செ.குவி (v.i.)

   நிறங்கெடுதல்; to turn pale, lose colour.

     “பொருமுரண் சீறச்சிறைந்து” (கலித். 91);.

ம. சிறயுக

     [சிதை → சிறை-,]

 சிறை4 ciṟai, பெ. (n.)

   1. காவல்; guard, watch.

     “வீங்குசிறை வியலருப்பம்” (புறநா.17:28);.

   2. அரண், காப்பு; defence.

   3. காவலில் அடைக்கை; confinement, restraint.

   4. சிறைப் படுத்துகை; incarceration.

     “உன் சிறை விடுக்கற் பாலார் யாருளர்” (கம்பரா.மாயாசன.38);.

   5. சிறைச்சாலை; prison, jail.

     “சிறையிற் போகென்று” (திருவாலவா. 33:8);.

   6. அடிமைத் தனம் (வின்);; captivity, slavery.

   7. அடிமையாள்; captive, slave.

     ‘அவன் சிறை கொள்ள வந்தான்’ (உ.வ.);.

   8. பெண்டாகச் சிறைப் பிடிக்கப்பட்ட இளம் பெண் (உ.வ.);; young woman take captive to marry ot to keep.

   9. சிறைகொள்ளத்தக்கவள் (இ.வ.);

 beautiful young woman worth taking captive.

   க., பட செறெ, தெ. செர;ம. சிற

     [இறு → சிறு → சிறை]

 சிறை5 ciṟai, பெ. (n.)

   1. அணை; dam, bank.

     “சிறையு முண்டோ செழும்புனன் மிக்குழி” (மணிமே. 5: 19);

   2. நீர்நிலை (பிங்.);; tank.

     “வான் சிறை மதகுகள்” (கம்பா அகவிகை 64);

   3. இடம் (பிங்);; place, location.

   4. பக்கம்; side of a street.

     “மறுகுசிறை” (பதிற்றுப். 29.9);.

   5. கரை, bank, shore.

     “உறைசிறை வேதியர்” (பரிபா. 11:84);. 26. போட்டைமதில்;

 fort-wall.

     “சிறையை வளைத்திடு தெண்ணிரே” (இரகு நகர 12);.

   7. மதிற்சுற்று; surrounding wall of a city.

   8. வரம்பு; boundary.

     “சாலி நெல்லின் சிறை கொள்வேலி (பொருத 246);.

சிறைக்கூடம்

   ம. சிற, செறு க, பட கெரெ;   தெ. செறுவு;   து. கெறெ, கிறெ;   குட கெரெ;   கோத, கெரீ: துட. கெர்வ்;கொலா., பர். சொறு

     [இறு → சிறு –→ சிறை]

 சிறை6 ciṟai, பெ. (n.)

   1. இறகு; wing, feather.

     “திருந்துசிறை வளைவாய்ப் பருந்து” (புறநா.3.22);

   2. ஒலியெழாமல் தடைப்படுத்தி வைக்கும் யாழ்நரம்புக் குற்றம் (பதிற்றுப். 43: 21, உரை.);:

 flaw of tonelessness in a lute string.

   ம. இறகு, கொ, ரெக;   க. எறகெ;   து. றெங்கெ, தெ. எறகு, ரெக்கு;கொலா. ரெடப, ரெப்பா: கோண்ட் றெக்க

     [இற(கு); → சிதை → சிறை]

 சிறை ciṟai, பெ. (n.)

   தோற்று நிரப்பப்படாத வெற்றுக் குழிக்குப் பெயர்; an empty pot.

     [செறு-சிறை]

சிறைகொள்(ளு)-தல்

சிறைகொள்(ளு)-தல் sirai-kolul-,13 செ.குன்றாவி (v.t.)

   காவற்கூடத்து அடைத்தற்பொருட்டுப் பிடித்துப்போதல்; to take captive.

பெருந்திறல் வேந்தனெம் பெருமாற் சிறைகொள” (பெருங். இலாவாண, 1: 51);.

க. சொறெகொள்

     [சிறை + கொன்-,]

சிறைக்கணி-த்தல்

சிறைக்கணி-த்தல் ciṟaikkaṇittal, பெ. (n.)

   பாத்தி; parterre in a field.

     “ஓங்கு மணற் சிறுசிறை” (குறுந். 149);,

     [இறு → சிறு → சிறை]

 சிறைக்கணி-த்தல் ciṟaikkaṇittal,    4 செ.குன்றாவி, (v.t.)

   புறக்கணித்தல்; to ignore,neglect.

     “அருள் செய்திட லன்றியே சிறைக்கணித்தனை” (கந்தபு. மீட்சி.4);.

சிறைக்களம்

சிறைக்களம் ciṟaikkaḷam, பெ. (n.)

   சிறைக் கூடம்; prison-house.

     “வெய்ய சிறைக்களத்துச் சென்றனனே (கந்தபு, மீட்சி.4);,

     [சிறை + களம், கள் → களம் = இடம், அறை, கூடம்]

சிறைக்காடு

சிறைக்காடு ciṟaiggāḍu, பெ. (n.)

   அரசிற்குரிய காவலுள்ள காடு (எங்களூர்.174);; reserved forest

     [சிறை + காடு. கடு → காடு]

சிறைக்காவல்

சிறைக்காவல் ciṟaikkāval, பெ. (n.)

   நிறை காவலுக்கெதிராயமைந்த சிறையிலிட்டுக் காக்குங் காப்பு (இறை 29, பக். 134);; physical restraint, confinement, opp. to nirai-käval.

     [சிறை + காவல்]

சிறைக்கோட்டம்

சிறைக்கோட்டம் ciṟaikāṭṭam, பெ. (n.)

சிறைக்கூடம் பார்க்க;see Sirai-k-küdam.

     “சிறைக் கோட்டம் விருப்பொடும் புகுந்து (மணிமே. 19.49);.

ம. சிறைக்கோட்டம்

     [சிறை + கோட்டம். கோட்டம் = வளைவு, வளைந்த மதில்;வளைந்த மதிவையுடைய சிறைக்கூடம்].

சிறைக்சுடம்

சிறைக்சுடம் ciṟaikcuḍam, பெ. (n.)

   காவற்கூடம் (இ,வ,);; place of captivity, prison – house.

ம. சிறகூடம், சிறைகூடம்: க. செறெமனெ

     [சிறை + கூடம்]

சிறைக்கோட்டம் 15

சிறைசெய்-தல்

சிறைசெய்-தல் siṟaiseytal,    1. செ.குன்றாவி (v.t.)

   1. சிறையில்வைத்தல்; to imprison, restrain.

     “ஆயிழை தன்னைச் சிறைசெய் கென்றலும்” (மணிமே பதி 79 – 80);

   2. நீரைக்கட்டுதல்; to dam up, as watcr.

     “செம்புனலோ டூடார் மறுத்துஞ் சிறை செய்வர்” (நாலடி, 222);.

க, செறெகாகு

     [சிறை + செய்-,]

சிறைசெல்(லு)-தல்

சிறைசெல்(லு)-தல் siṟaiselludal, செ.குன்றாவி (v.i)

   சிறையில் அடையடுதல்; to be enclosed, to grow captive, to be made prisoner, to get into prison.

க. செறெகாகு

     [சிறை + செய்-,]

 சிறைசெல்(லு)-தல் Sirai-sel, செ.குன்றாவி (v.i.)

   சிறையில் அடையடுதல்; to be enclosed, to grow captive, to be made prisoner, to get into prison.

க. செறெயாகு

     [சிறை + செல்-,]

   54 சிறைப்புறம்

சிறைச்சாலை

 சிறைச்சாலை ciṟaiccālai, பெ. (n.)

சிறைக் கூடம் (உ.வ.); பார்க்க;see Sirai-k-kiidam.

க. செறெசாலெ, செறெமனெ, பட செரெமனெ

     [சிறை + சாலை]

சிறைச்சோறு

சிறைச்சோறு ciṟaiccōṟu, பெ. (n.)

   1. முப்பத்திரண்டு வாழ்வியல் அறங்களுள் சிறைப்பட்டார்க்கு உணவளிக்கும் செயல் (திவா.);; distributing food to prisoners, a form of charity, one of muppattirandaram.

   2. சிறையிலிருப்பவருக்குக் கிடைக்கும் சோறு:

 prisoner’s food.

     [சிறை + சோறு]

சிறைத்திமிங்கிலத்

 சிறைத்திமிங்கிலத் ciṟaittimiṅgilat, பெ. (n.)

   திமிங்கிலவகை; whale.

சிறைத்தீர்வை

 சிறைத்தீர்வை ciṟaittīrvai, பெ. (n.)

   அடிமை வரி (இராட்);; tax on slaves.

     [சிறை + தீர்வை]

சிறைநோய்

சிறைநோய் ciṟainōy, பெ. (n.)

சிறைத்துன்பம்:

 miseries of imprisonment.

     “செறிந்த சிறைநோய் தீர்க்கென் றிறைசொல” (மணிமே. 23: 34);.

     [சிறை + நோய்]

சிறைபிடித்தல்

சிறைபிடித்தல் ciṟaibiḍittal,    4 செகுன்றாவி (v.t.)

   1. அடிமையாக்குதல் (வின்);; to take captive enslave.

   2. மனைடிவயாகவேனும், கிழத்தியாகவேனும், கொள்ளுமாறு பெண்ணைச் சிறைப்படுத்திக்கொண்டு போதல் (உ.வ.);; to take a woman captive, for the purpose of marrying or keeping her.

க. கெறெபிடி, செறெவிடி

     [சிறை + பிடி-,]

சிறைப்படு-தல்

சிறைப்படு-தல் ciṟaippaḍudal, பெ. (n.)

   20 செ.கு.வி. (v.i.);

   1. சிறையில் அடைபடுதல்; to be imprisoned;

 to be impounded, as stray cattle.

   2. அகப்படுதல்;  to be enslaved; taken captive, to be ensnared, encaged, as birds oranimals.

   3. மறக்கப்படுதல் (யாழ்ப்);; to be mislaid to be forgotten.

க. செறெயாகு

     [சிறை + படு. ‘படு’ து. வி.]

சிறைப்பள்ளி

சிறைப்பள்ளி ciṟaippaḷḷi, பெ. (n.)

சிறைக் கூடம் பார்க்க;see Sirai-k-kudam.

வெஞ்சிறைப் பள்ளியாக” (சீவக. 1538);.

     [சிறை + பள்ளி]

சிறைப்பாடு

சிறைப்பாடு ciṟaippāṭu, பெ. (n.)

   பக்கம்; side.

     “ஒரு சிறைப்பாடு சென்றனைதலும்” (மணிமே 23: 50);.

   2. சிறை (யாழ்ப்.);; captivity.

   3. தடை (யாழ்ப்,);; restraint hindrance.

   4. jதவறி விழுந்த இடத்திற் பண்டங்கிடக்கை (யாழ்ப்.);; being dropped on the ground and lying untouched, as a thing lost.

     [சிறை + பாடு]

சிறைப்புறம்

சிறைப்புறம் ciṟaippuṟm, பெ. (n.)

   1. ஒதுக்கிடம்,

 secret place,

     “ஒற்றிற் றெரியா சிறைப்புறத்து” (நீதிநெறி. 32);.

   2. தோழி தலைவியர்க்குள் நிகழும் செய்திகளைத் தலைவன் மறைந்தறிதற்கு ஏதுவாகக் காவல் மனைப் புறத்தமைந்த இடம் தொல் பொருள் 114, உரை.);   3. சிறைச்சாலை; prison-cell.

     “சிறைப்புறங் காத்துச் செல்லு மதனனை” (சீவக. 1142);.

     [சிறை + புறம்]

சிறைமீட்டான்

சிறைமீட்டான் ciṟaimīṭṭāṉ, பெ. (n.)

நெல் வகை a kind of paddy.

     “கறுத்த நிறவாலன் சிறை மீட்டான் வளர்பூசைப் பாடிவெள்ளை” (நெல்விடு. 186);.

     [சிறை + மீட்டான்]

சிறைமீள்

சிறைமீள்1 ciṟaimīḷḷudal,    16 செ.கு.வி. (v.i.)

   சிறைநீங்குதல்; to be freed from slavery;

 to be released from prison.

     [சிறை + மீள்-,]

 சிறைமீள்2 sirai-mil,    13 செகுன்றாவி (v.t.)

சிறையிலிருந்து விடுவித்தல்:

 to rescue from slavery or captivity.

க. செறெபிடிசு

     [சிறை + மீள்-,]

சிறையா

சிறையா ciṟaiyā, பெ. (n.)

மூன்றடி வரை வளரக்கூடிய சாம்பல்நிறமுள்ள கடல்மீன் வகை,

 grey mullet, attaining 3 ft. in length.

சிறையெடு-த்தல்

சிறையெடு-த்தல் ciṟaiyeḍuttal,    4 செ.குன்றாவி, (v.t.)

சிறைபிடி-2 பார்க்க;see Sirai-pidi-2.

     [சிறை + எடு-]

சின்முத்திரை

சிறைவன்

சிறைவன் ciṟaivaṉ, பெ. (n.)

   காவற்பட்டவன்; a captive, slave, prisoner.

     “தன்னைச் சிறைவனாச் செய்வானுந் தான்” (அறநெறி, 67);.

     [சிறை → சிறைவன்]

சிறைவீடு

சிறைவீடு ciṟaivīṭu, பெ. (n.)

   சிறையினின்று வெளிவிடுகை; release from prison.

     “சிறை வீடு செய்தலும்” (மணிமே பதி 80);.

     [சிறை + விடு. விடு → விடு]

சிற்குணன்

சிற்குணன் ciṟkuṇaṉ, பெ. (n.)

   கடவுள்; God as pure intelligence.

     “சிற்குணனுடைய னிருப்பன்” (சேதுபு. இராமநா. 43);.

     [சித்து + குனன் → சிற்குணன்]

சிற்குணம்

சிற்குணம் ciṟkuṇam, பெ. (n.)

   இறைவன் அல்லது ஆதனுக்கு (ஆன்மா); அறிவாகிய இயல்பாகவுள்ள பண்பு; attribute of intelligence either of God or individual souls.

     “காரண சிற்குணரூப” (பாரத. மூன்றாம் போர்.17);.

     [சித்து + குனம் → சிற்குணம்]

சிற்குரு

சிற்குரு ciṟkuru, பெ. (n.)

   பளு, பாரம் (நாமதீப. 794);; weight.

சிற்சத்தி

சிற்சத்தி ciṟcatti, பெ. (n.)

   ஐவகையாற்றல்களி லொன்றாய், ஆதன் இருவினைப் பயன்களைத் துய்த்துத் தொலைத்து, முத்தியெய்துமாறு செய்யும் சிவபிரானது ஆற்றல்; Sivan’s energy of wisdom which has the virtue of liberating the souls from the bondage of karma and establishing them in bliss one of ai-vagi-c-catti.

     “சிற்சத்தியா லுணர்ந்து” (தாயு. பரசிவ. 2);.

     [சித்து + சத்தி → சித்சத்தி → சிற்சத்தி]

சிற்சபை

சிற்சபை ciṟcabai, பெ. (n.)

   சிற்றம்பலம்; hall of wisdom, the sacred dancing – hall at Chidambaram,

     “கருதரிய சிற்சபையில்” (தாயு. கருணாகர.1.);

த. சபை / Skt. Sabha

     [சிறு + சபை. அவை → சவை → சபை]

சிற்சில

 சிற்சில ciṟcila, பெ.அ. (adj.)

   அளவில் குறைவான; slight or minor.

     ‘அமைச்சரவையில் சிற்சில மாற்றங்கள் வரவிருக்கின்றன’ (உ.வ.);

     [சில + சில]

சிற்சிலிர்ப்பான்

 சிற்சிலிர்ப்பான் ciṟcilirppāṉ, பெ. (n.)

சிச்சிலுப்பை (யாழ்ப்.); chickenpox.

     [சில் + சிலிர் = சில்சிலிர் → சிற்சிலிர் → சிற்சிலிர்ப்பான்]

சிற்சுகம்

சிற்சுகம் ciṟcugam, பெ. (n.)

   இறையின்பம்; spiritual enjoyment.

     “செல்லுவே னந்தச் சிற்ககத்தே” (தாயு. பாயப்.44);.

     [சித்து + சுகம் → சிற்கம்]

சிற்சுடர்த்தைலம்

சிற்சுடர்த்தைலம் ciṟcuḍarttailam, பெ. (n.)

   வெளிப்புறப் பயன்பாட்டிற்குரிய கூட்டு எண்ணெய் (தைலவ.தைல.100);; a compound medicinal oil for external application.

     [சில் + சுடர் + தைவம்]

சிற்சொரூபம்

 சிற்சொரூபம் ciṟcorūpam, பெ. (n.)

   அறிவின் திருவுருவம்; embodiment of pure intelligence.

     [சித்து + சொரூபம் = சிற்சொரூபம்]

சிற்சோமன்

 சிற்சோமன் ciṟcōmaṉ, பெ. (n.)

   சீர்பந்தச் செய்நஞ்சு (மூ.அ.);; a mineral poison.

சிற்பக்கயிறு

சிற்பக்கயிறு ciṟpakkayiṟu, பெ. (n.)

சிற்ப சாத்திரம் பார்க்க;see Sirba-Sittiram.

     “யாத்த சிற்பக் கயிற்றின் வாழ்நரும் (பெருங். வத்தவ. 2:51);.

     [சிற்பம்1 + கயிறு]

சிற்பசாத்திரம்

 சிற்பசாத்திரம் ciṟpacāttiram, பெ. (n.)

   கட்டடக்கலை, சிற்பக்கலை தொடர்பான கல்வி; science of architecture sculpture and other branches of art.

     [சிற்பம் + சாத்திரம்]

சிற்பசாத்திரி

 சிற்பசாத்திரி ciṟpacāttiri, பெ. (n.)

   சிற்பாசாரி, பெருந்தச்சன், கலைஞன்; architect, headmason.

     [சிற்பம் + சாத்திரி. சாத்திரம் → சாத்திரி. ஒ. நோ. பரிகாரம் → பரிகாரி]

சிற்பசாலை

 சிற்பசாலை ciṟpacālai, பெ. (n.)

   சிலை செய்யுமிடம்; mechanic’s shop, manufactory.

     [சிற்பம் + சாலை. சாலுதல் = நிறைதல், கூடுதல். சால் → சாலை = கூடம், பட்டறை,தொழிலகம்]

சிற்பத்தொழிற்குறுப்பு

 சிற்பத்தொழிற்குறுப்பு ciṟpattoḻiṟkuṟuppu, பெ. (n.)

   கல், மாழை, செங்கல், மரம், மண், கதை, மருப்பு, வண்ணம், கண்டசருக்கரை, மெழுகு என்னும் சிற்பவேலைக்குரிய உறுப்புகள் (பிங்.);; materials required for art production ten in number, viz., stone, metal, brick, wood, soil, lime, ivory, colour, sugarcandy, wax.

     [சிற்பம் + தொழில் + உறுப்பு]

சிற்பநூல்

 சிற்பநூல் ciṟpanūl, பெ. (n.)

   சிற்பக்கலை பற்றிய நூல்கள்; ancient treatises on architecture and allied arts.

     [சிற்பம் + நூல்]

சிற்பன்

சிற்பன் ciṟpaṉ, பெ. (n.)

   படைத்தல் தொழிலில் வல்லவனான நான்முகன்; Nanmugan as one skilled in the art of creation.

     “சிற்பனை யெலாஞ் சிருட்டித்த” (திருமந்.628);.

     [சிற்பம் → சிற்பன்]

சிற்பம்

சிற்பம்1 ciṟpam, பெ. (n.)

   1. தொழிலின்திறமை; artisticskill.

     “செருக்கயல் சிற்பமாக” (சீவக. 2716);.

   2. நுட்பமானதொழில்; fine or artistic workmanship.

     “சிற்பந் திகழ்தரு திண்மதில்” (திருக்கோ. 305);.

   3. சிற்பநூல் பார்க்க;see sirpanul.

     “தெளிதரு சிற்ப நன்னூல்” (திருவாலவா. 1:24);.

ம. சில்பம்

     [சில் → சிற் → சிற்பு → சிற்பம்]

 சிற்பம்2 ciṟpam, பெ. (n.)

   சிந்திக்கை; thinking.

     “அவர்தஞ் சிற்பங்க டரும் புகழும்” (கோயிற்பு. பாயி.21);.

     [சிற் → சிற்பி → சிற்பம்]

 சிற்பம்3 ciṟpam, பெ. (n.)

   குறைவு; fewness, shortness, as of duration.

     “சிற்பங்கொள் பகலென” (கம்பரா. சடாயுகாண். 8);.

     [சிற் → சிற்பு → சிற்பம் → Skt. Svalpa (வ.வ.152);]

சிற்பரக்கூர்மை

 சிற்பரக்கூர்மை ciṟparakārmai, பெ. (n.)

   கந்தகவுப்பு (வின்.);; salt produced from sulphur.

     [சிற்பரம் + கூர்மை]

சிற்பரன்

சிற்பரன் ciṟparaṉ, பெ. (n.)

   அறிவிற்கு எட்டாத கடவுள்; God as transcending human understanding.

     “எப்பொருளினுமாஞ் சிற்பரன்” (திருவாத. பு.திருப்பெருந்.21);.

     [சிற்பரம் → சிற்பரன்]

சிற்பரம்

சிற்பரம் ciṟparam, பெ. (n.)

   1. கந்தம்; fragrance.

   2. கடல்; ocean, sca.

   3. அறிவு; wisdom.

சிற்பரவுப்பு

 சிற்பரவுப்பு ciṟparavuppu, பெ. (n.)

   இந்துப்பு (மூ.அ.);; sea-salt.

     [சிற்பரம் + உப்பு]

சிற்பரி

சிற்பரி ciṟpari, பெ. (n.)

   1. பொன்னிமிளை; bismuth.

   2. வெண்காரம்; borax.

     [சிற்பரம் → சிற்பரி]

சிற்பரை

சிற்பரை1 ciṟparai, பெ. (n.)

   மலைமகள்; Parvadi.

     “சிற்பரை யிங்கெமையாளு முமையாள்” (கந்த.சு. பாயி.3.);.

     [சித் + பரை → சிற் + பரை]

 சிற்பரை2 ciṟparai, பெ. (n.)

   1. வழலைக் கட்டி (வின்.);; soap.

   2. சிற்பரி (வின்.); பார்க்க;see Silpari.

சிற்பர்

 சிற்பர் ciṟpar, பெ. (n.)

   கம்மியர், கலைஞர் முதலான சிற்பிகள் (வின்.);; mechanics, artisans, stone-cutters.

     [சிற்பம் → சிற்பர்]

சிற்பவியல்

 சிற்பவியல் ciṟpaviyal, பெ. (n.)

   சிற்பஞ்சார் தொழில்; architecture, as an art.

     [சிற்பம் + இயல்]

சிற்பாசாரி

 சிற்பாசாரி ciṟpācāri, பெ. (n.)

சிற்பி (யாழ்.அக.); பார்க்க;see sirpi.

     [சிற்பம் + ஆசாரி]

சிற்பி

 சிற்பி ciṟpi, பெ. (n.)

   கம்மியன் (சூடா.); கல் தச்சன், கைவினைஞர்; mechanic, artisan, stone-cutter.

ம. சில்பி

     [சிற்பிடம் → சிற்பி

சிற்பிடம்

சிற்பிடம் ciṟpiḍam, பெ. (n.)

   பிறர் காணாமல் இருக்கை; being invisible.

     “சிற்பிடத்தாற் புக்கு” (நீலகேசி, 236);

சிற்பியல்

சிற்பியல் ciṟpiyal, பெ. (n.)

   சிற்பநூல்; architecture, as an art.

     “மாசில் கம்மத்துச் சிற்பியற் புலவர்” (பெருங். இவரவண. 4:50);.

     [சிற்பம் + இயல் → சிற்பவியல் → சிற்பிவியல் → சிற்பியல்]

சிற்பிரதானம்

சிற்பிரதானம் ciṟpiratāṉam, பெ. (n.)

   அறிவின் விளக்கம்; effulgence of wisdom.

     “பொலிந்த சிற்பிரதானமதனால்” (வேதா. சூ. 49);.

சிற்றகத்தி

 சிற்றகத்தி ciṟṟagatti, பெ. (n.)

   செடிவகை (L);; common sesban.

     [சிறு(மை); → சில் + அகத்தி]

சிற்றகவை

 சிற்றகவை ciṟṟagavai, பெ. (n.)

   இளம்பருவம்; nonage, youth.

     [சிறு(மை); + அகவை]

சிற்றச்சிறுகாலே

சிற்றச்சிறுகாலே ciṟṟacciṟukālē, வி.எ. (adv.) சிற்றஞ்சிறுகாலே பார்க்க;see Sirraa-Siru-kalé.

     “சிற்றச் சிறுகாலே முனிசென்றான்” (பிரமோத் 10:10);.

     [சிற்றம் சிறு + காலை → சிற்றச்சிறு + காலே]

சிற்றஞ்சிறுகாலே

சிற்றஞ்சிறுகாலே ciṟṟañjiṟukālē, வி.எ. (adv.)

   புலர்காலையில்; early in the morning, in the small hours of the morning.

     “சிற்றஞ்சிறு காலே வந்துன்னைச் சேவித்து” (திவ். திருப்பா.29);.

     [சின்னஞ்சிறிய → சிற்றஞ்சிறிய → சிற்றஞ் சிறு + காலே → சிற்றஞ்சிறு காலை → சிற்றஞ்சிறுகாலே]

சிற்றடி

சிற்றடி ciṟṟaḍi, பெ. (n.)

   சீறடி; small foot, considered beautiful.

     “பெருமான் மருகன்றன் சிற்றடியே” (கந்தரலங்.15);.

     [சிறு + அடி]

சிற்றடிசில்

சிற்றடிசில் siṟṟaḍisil, பெ. (n.)

சிறுசோறு பார்க்க;see siru-stru.

     “செய்தபூஞ் சிற்றடிசி லிட்டுண்ண வேற்பார்” (பரிபா.10105.);

     [சிறுமை + அடிசில்]

சிற்றடிப்பாடு

சிற்றடிப்பாடு ciṟṟaḍippāḍu, பெ. (n.)

   ஆள் நடமாட்டம் அதிகமில்லாத ஒற்றையடிப் பாதை; unfrequented foot path.

     “காட்டில் சிற்றடிப்பாடான வழிகளிலே” (திவ். பெரியாழ். 3, 2:4, வியா. பக். 542);.

     [சிற்றடி + பாடு]

சிற்றணுக்கன்

சிற்றணுக்கன் ciṟṟaṇukkaṉ, பெ. (n.)

   விசிறி அல்லது ஈச்சோப்பியாகிய அரசச் சின்னம் (சீவக. 437, உரை);; fan orfly-whisk waved before a king.

     [சிறு(மை); + அணுக்கன்]

சிற்றண்டம்

 சிற்றண்டம் ciṟṟaṇṭam, பெ. (n.)

   முட்டை (மூ.அ.);; egg.

     [சிறு(மை); + அண்டம்]

சிற்றன்னை

 சிற்றன்னை ciṟṟaṉṉai, பெ. (n.)

   சித்தி; father’s second wife.

ம. சிற்றச்சி, சிற்றம்ம

     [சிறு + அன்னை]

சிற்றப்பன்

சிற்றப்பன் ciṟṟappaṉ, பெ. (n.)

   1. தகப்பனின் தம்பி; father’s younger brother.

   2. தாயின் தங்கை கணவன்; mother’s younger sister’s husband,

சிற்றப்பன் வீட்டுக்குச் சிற்றாடை வாங்கி வரலாம் என்று போனாளாம் சிற்றப்பன் பெண்சாதி ஈச்சம்பாயைக் கட்டிக் கொண்டு எதிரே வந்தாளாம் (பழ.);.

   ம. சிற்றப்பன்;க. சிக்கப்ப

     [சிறு(மை); + அப்பன்]

சிற்றப்பா

 சிற்றப்பா ciṟṟappā, பெ. (n.)

சிற்றப்பன் பார்க்க: see Sirrappan.

சிற்றமட்டி

 சிற்றமட்டி ciṟṟamaṭṭi, பெ. (n.)

   சிற்றாமுட்டி (யாழ்ப்.);; rose-coloured sticky mallow.

     [சிறு(மை); ஆமுட்டி – சிற்றாமுட்டி → சிற்றாமுட்டி → சிற்றாமட்டி → சிற்றமட்டி]

சிற்றமட்டியெண்ணெய்

 சிற்றமட்டியெண்ணெய் ciṟṟamaṭṭiyeṇīey, பெ. (n.)

   சிற்றாமட்டிவேரைக் கூடுதலாகச் சேர்த்து வடிக்கப்படும் மருந்தெண்ணெய் (யாழ்ப்.);; a medicinal oil in which the root of Sirra-matti forms the chief ingredient.

     [சிற்றமட்டி + எண்ணெய்]

சிற்றம்பலம்

சிற்றம்பலம் ciṟṟambalam, பெ. (n.)

   சிற்சபை; hall of wisdom, the sacred dancing hall at Chidambaram.

     “செற்றார்வாழ் தில்லைச் சிற்றம்பல மேய” (தேவா.1, 1.);.

ம. சிற்றம்பலம்

     [சித்து + அம்பவம் → சித்தம்பவம் → சிற்றம்பவம்]

சிற்றம்பலவன்

சிற்றம்பலவன் ciṟṟambalavaṉ, பெ. (n.)

   தில்லையில் திருநடமாடுஞ் சிவபெருமான்; Siva, as dancing in the sacred Hall at Chidambaram.

     “தென்பா லுகந்தாடுந் தில்லைச் சிற்றம்பலவன்” (திருவாச. 12:9);.

     [சித்து + அம்பவவன் – சித்தம்பவைன் → சிற்றம்பலவன்]

சிற்றம்மான்பச்சரிசி

சிற்றம்மான்பச்சரிசி siṟṟammāṉpassarisi, பெ. (n.)

   1. செடிவகை; thyme leaved spurge.

   2. செவ்வம்மான் பச்சரிசி; red spurge.

     [சிறு(மை); + அம்மாண்பச்சரிசி]

சிற்றரசன்

 சிற்றரசன் siṟṟarasaṉ, பெ. (n.)

   ஒரு பேரரசின் மேலாண்மையை ஏற்று அதற்குக் கீழ்ப்பட்டுக் தண்டம் (கப்பம்); செலுத்தி ஒரு நிலப்பகுதியை ஆளும் அரசன்; chieftain (who accepts the overlordship of a king);;feudatory.

ம. சிற்றரசன்

     [சிறு + அரசன்]

சிற்றரத்தை

சிற்றரத்தை ciṟṟarattai, பெ. (n.)

   அரத்தை வகை (பதார்த்த. 985);; lesser galangal.

ம. சிற்றரத்த

     [சிறு + அரத்த]

அரத்தை பார்க்க

சிற்றரிவாள்

 சிற்றரிவாள் ciṟṟarivāḷ, பெ. (n.)

   கையளிவாள்; small sickle.

     [சிறு(மை); + அரிவாள்]

அரிவாள் பார்க்க

சிற்றரும்பு

 சிற்றரும்பு ciṟṟarumbu, பெ. (n.)

   காயரும்பு (பிங்.);; bud.

     [சிறு(மை); + அரும்பு]

அரும்பு பார்க்க

சிற்றறிவன்

 சிற்றறிவன் ciṟṟaṟivaṉ, பெ. (n.)

   ஆதன்; jiva or individual soul, as having limited knowledge.

     [சிறு(மை); + அறிவன்]

சிற்றறிவு

சிற்றறிவு ciṟṟaṟivu, பெ. (n.)

   1. புல்லறிவு; unsound, imperfect knowledge or understanding.

   2. சுருங்கிய அறிவு; limited knowledge.

     [சிறு(மை); + அறிவன்]

சிற்றறுகு

 சிற்றறுகு ciṟṟaṟugu, பெ. (n.)

   அறுகம்புல் வகை (வின்.);; a kind of grass.

     [சிறு(மை); + அறுகு]

அறுகு பார்க்க

சிற்றலை

 சிற்றலை ciṟṟalai, பெ. (n.)

அலைகாலப்பருவம்,

 halftide.

     [சிறு+ அலை]

 சிற்றலை ciṟṟalai, பெ. (n.)

   வானொலியில் நூறிலிருந்து பத்துமீட்டர் நீளத்துக்குட்பட்ட ஒரு மின்காந்த அலை; shortwave.

     [சிறு + அவை]

சிற்றல்லி

சிற்றல்லி ciṟṟalli, பெ. (n.)

நீலநிற அல்லி;(M.M. 368);.

 blue Indian water-lily.

     [சிறு(மை); + அல்லி]

சிற்றழிஞ்சில்

 சிற்றழிஞ்சில் ciṟṟaḻiñjil, பெ. (n.)

   அழிஞ்சில் வகை; privet.

     [சிறு(மை); + அழிஞ்சில்]

சிற்றவரை

 சிற்றவரை ciṟṟavarai, பெ. (n.)

   அவரை வகை (வின்.);; a kind of small bean.

     [சிறு(மை); + அவரை]

சிற்றவை

சிற்றவை ciṟṟavai, பெ. (n.)

   சிற்றாத்தாள்; mother’s younger sister.

     “சிற்றவை பணியால் முடிதுறந்தானை” (திவ். பெரியதி. 2.3:1);.

     [சிறு(மை); + அவ்வை = சிற்றவிவை; சிற்றன்வை → சிற்றவை]

சிற்றாசா

 சிற்றாசா ciṟṟācā, பெ. (n.)

சிற்றாச்சா பார்க்க;see Sitracca.

     [சிற்றாச்சா → சிற்றாசா (கொ. வ.);]

சிற்றாச்சா

 சிற்றாச்சா ciṟṟāccā, பெ. (n.)

   அத்திமரம்; common mountain ebony.

     [சிறுமை → சிறு + ஆச்சா]

சிற்றாடை

சிற்றாடை ciṟṟāṭai, பெ. (n.)

   1. சிறிய ஆடை; small garment.

     “சிற்றாடையுஞ் சிறுப்பத்திரமும் (திவ். பெரியாழ்.3.3:5.);

   2. சிறுபெண்ணின் ஆடை; cloth made for girls.

     “நற்சிற்றாடைக் காரி” (தனிப்பா.ii 132, 334);.

ம. சிற்றாட

     [சிறு(மை); + ஆடை]

சிறுமை – அளவிற்சிறிய, வயதிற் சிறிய.

சிற்றாட்புள்ளி

 சிற்றாட்புள்ளி ciṟṟāṭpuḷḷi, பெ. (n.)

சிற்றாளன் (நாஞ்.); பார்க்க;see Sirralan.

     [சிற்றாள் + புள்ளி]

சிற்றாதாயம்

சிற்றாதாயம் ciṟṟātāyam, பெ. (n.)

   1. சில்லரை வரும்படி; small income from miscellaneous sources.

   2. கள்ளச்சிறுதேட்டு (வின்.);; money gained by embezzlement or fraud.

     [சிறு(மை); + ஆதாயம்]

ஆதாயம் பார்க்க

சிற்றாத்தாள்

 சிற்றாத்தாள் ciṟṟāttāḷ, பெ. (n.)

சிறியதாய் பார்க்க;see Siriya-tay.

ம. சிற்றம்ம, சிற்றச்சி

     [சிறு(மை); + ஆத்தான்]

சிற்றாமணக்கு

சிற்றாமணக்கு ciṟṟāmaṇakku, பெ. (n.)

   ஆமணக்கு(பதார்த்த.154.);; castor-plant.

     [சிறு(மை); + ஆமணக்கு]

சிற்றாமரைப்பூ

சிற்றாமரைப்பூ ciṟṟāmaraippū, பெ. (n.)

   முளரி மலர் (ரோசா மலர்); (பதார்த்த. 644.);; rose, as a small lotus.

     [சிறு(மை); + தாமரைப்பூ]

முளரிமலர் தாமரையை ஒருபோகு ஒத்திருத்தலால் இவ்வாறழைக்கப்பட்டது.

சிற்றாமல்லி

 சிற்றாமல்லி ciṟṟāmalli, பெ. (n.)

   காட்டு மல்லிகை; wild jasmine.

     [சிறு(மை); + ஆ + மல்வி]

சிற்றாமுட்டி

சிற்றாமுட்டி ciṟṟāmuṭṭi, பெ. (n.)

   1. மெல்லிலைத் தண்டுகளுடன் கூடிய மஞ்சள்வண்ணச் செடி; yellow sticky mallow.

   2. செவ்வண்ணப் பூச்செடி (பதார்த்த.470);; rose coloured sticky mallow.

     [சிறு(மை); + ஆ + முட்டி]

சிற்றாம்பல்

 சிற்றாம்பல் ciṟṟāmbal, பெ. (n.)

   நீலநிறமுள்ள அல்லி; blue Indian water lily.

     [சிறு(மை); + ஆம்பல்]

ஆம்பல் பார்க்க

சிற்றாயம்

சிற்றாயம் ciṟṟāyam, பெ. (n.)

   சிற்றுார் வரிவகை (தெ.க.தொ. iii 35);; a village cess.

     [சிறு(மை); + ஆம்]

சிற்றாய்

 சிற்றாய் ciṟṟāy, பெ. (n.)

சிறியதாய் பார்க்க;see Siriya-tay.

     [சிறு(மை); + தாய்]

சிற்றாரால்

சிற்றாரால் ciṟṟārāl, பெ. (n.)

   சிறியவகை ஆரல் மீன் (பதார்த்த.920);; a species of small lamprey.

     [சிறு(மை); + ஆரல்]

சிற்றாறு

சிற்றாறு ciṟṟāṟu, பெ. (n.)

   1. சிறு ஒடை; rivulet.

   2. துணை ஆறு (இ.வ.);; tributary stream.

ம. சிற்றாறு

     [சிறு(மை); + ஆறு]

சிற்றாலவட்டம்

சிற்றாலவட்டம் ciṟṟālavaṭṭam, பெ. (n.)

   பீலிவட்ட விசிறி (சீவக. 839, உரை);; small circular fan or fly whisk, made of peacock’s feathers.

     [சிறு(மை); + ஆவவட்டம்]

சிற்றால்

 சிற்றால் ciṟṟāl, பெ. (n.)

   முட்டைவடிவ இலையினையுடைய அத்திமரம்; jointed ovate-leaved fig.

ம. சிற்றால்

     [சிறு(மை); + ஆல்]

சிற்றாளன்

 சிற்றாளன் ciṟṟāḷaṉ, பெ. (n.)

   சீட்டுப்புள்ளி (நாஞ்.);; subscriber in a chit transaction.

ம. சிற்றாளன்

     [சிறுமை + ஆளன்]

சிற்றாள்

சிற்றாள் siri, பெ. (n.)

   1. சிறுவன் (பிங்);; boy.

     ‘சிற்றாள் எட்டாளுக்குச்சரி’ (பழ.);

   2. ஏவலாள்; servant.

     “சிற்றாளில்லாதான் கைம்மோதிரமும்” (திரிகடு.66);

   3. கொத்தனுக்கு உதவி புரியுங் கூலியாள்; mason’s assistant, boy or girl cooly.

     “சேர்ந்து சுமக்கின்ற சிற்றாளை” (திருவாலவா. 30:3);.

   4. சிற்றாளன் (இ.வ.); பார்க்க;see Sirralan.

ம. சிற்றாள்

     [சிறு(மை); + ஆள். ஆள் → ஆளன்]

சிற்றாழாக்கு

சிற்றாழாக்கு ciṟṟāḻākku, பெ. (n.)

   1. ஒரு நிறுத்தலளவு; bazaar weight = ½ tola.

   2. ஒரு முகத்தலளவு; measure of capacity = 1/16 pucka seer.

     [சிறு(மை); + ஆழாக்கு]

சிற்றி

சிற்றி1 ciṟṟi, பெ. (n.)

   பசலை (மலை.);; Indian spinach.

     [சிறு(மை); + இலை → சிற்றிலை;சிற்றிலை → சிற்ற]

 சிற்றி ciṟṟi, பெ. (n.)

சிற்றாத்தாள் பார்க்க;see sirraittal.

     [சிறு(மை); + ஆய் → சிற்றாய் → சிற்றி]

சிற்றிசை

சிற்றிசை1 siṟṟisai, பெ. (n.)

   இசையைப் பற்றிக் கூறும் கடைக்கழக நூல் (இறை. 1, பக். 5.);; a treatise of the last Sangam, bearing on music.

     [சிறு(மை); + இசை]

சிறுமையாவது நுணுக்கம். இசையின் துணுக்கம், நுட்பம் கூறும் நூல்.

 சிற்றிசை2 siṟṟisai, பெ. (n.)

   வெண்டுறைச் செந்துறையுளொருவகை (யாப். வி. 538);; a sub-division of vendurai-c-cendurai.

     [சிறு(மை); + இசை]

சிற்றிசைச்சிற்றிசை

சிற்றிசைச்சிற்றிசை siṟṟisaissiṟṟisai, பெ. (n.)

   வெண்டுறைச் செந்துறையுளொருவகை (யாப். வி.538);; a sub-division of vendurai-c-cendurai.

     [சிற்றிசை + சிற்றிசை]

சிற்றிதழ்

சிற்றிதழ்1 ciṟṟidaḻ, பெ. (n.)

   1. தாமரை மலரின் உள்ளிதழ் (வின்.);; corolla, inner petal, as of the lotus.

   2. நேர்த்தியான பின்னல் (யாழ்ப்.);; fine plaiting, as in mats, baskets, etc.,

     [சிறு(மை); + இதழ்]

 சிற்றிதழ்2 ciṟṟidaḻ, பெ. (n.)

   குறிப்பிட்ட துறைகளில், குறைந்தஅளவு படிப்பாளிகளுக்காக நடத்தப்படும் இதழ்; journal with limited circulation for limited readers.

     [சிறு(மை); + இதழ்]

சிற்றினம்

சிற்றினம் ciṟṟiṉam, பெ. (n.)

   நல்லறிவில்லாத தாழ்ந்தோர்; company of low people.

     “செய்ந்நன்றியறிதலுஞ் சிற்றின மின்மையும்” (சிறுபாண்.207);.

     [சிறு(மை); + இனம்]

சிறுமை = தாழ்ந்தது, இழிந்தது, வளர்ச்சி யற்றது, தன்னினும் தாழ்ந்த அறிவுடையாரைச் சிற்றினம் என்பர். இங்குத் தாழ்வு என்பது இனத்தாலோ, குலத்தாலோ அன்று பண்பால், ஒழுக்கத்தால், செயற்பாட்டால், அறிவால் தன்னினும் சிறியர் என்க.

சிற்றினவாழ்

 சிற்றினவாழ் ciṟṟiṉavāḻ, பெ. (n.)

   பாபநாசம் வட்டத்தில் உள்ள ஓர் ஊர்; a village in Papanasam.

     [சித்தன்+வாழ்+ஊர்]

இவ்வூர் இப்போது ‘சித்தன்வாலூர் என்று அழைக்கப்படுகிறது.

சிற்றின்பநூல்

 சிற்றின்பநூல் ciṟṟiṉpanūl, பெ. (n.)

   கொக்கோக நூல்; sexual science (சா.அக.);.

     [சிற்றின்பம் + நூல்]

சிற்றின்பப்போகி

 சிற்றின்பப்போகி ciṟṟiṉpappōki, பெ. (n.)

   உடலின்பத்தில் மிகையான நாட்டமுடையோன்; one who indulges in sexual enjoyments and pleasures (சா.அக.);.

     [சிற்றின்பம் + போகி]

சிற்றின்பம் பார்க்க

சிற்றின்பம்

சிற்றின்பம்1 ciṟṟiṉpam, பெ. (n.)

   1. இம்மை நலம்; earthly pleasures.

     “சிற்றின்பம் வெஃகி” (குறள்.173);.

   2. மெய்யுறுவின்பம், காமவின்பம்; Sexual pleasure, carnal pleasure.

     “இவடர வந்தவின்பஞ் சிற்றின்ப மென்பது” (சிவப். பிர. வெங்கைக்கோ. 137);. அறுக்க ஊறும் பூம்பாளை, அணுக ஊறும் சிற்றின்பம் (பழ.);

ம. சிற்றின்பம்

     [சிறு(மை); + இன்பம்]

 சிற்றின்பம்2 ciṟṟiṉpam, பெ. (n.)

   உப்புக் கட்டிக் கொடி; a kind of milky medicinal creeper (சா.அக.);.

சிற்றியாறு

சிற்றியாறு ciṟṟiyāṟu, பெ. (n.)

   சிறுநதி; small river.

     “சிற்றியாற் றடைகரை” (மணிமே. 15, 82);.

     [சிறு(மை); + யாறு]

சிற்றியாற்றுர்

 சிற்றியாற்றுர் ciṟṟiyāṟṟur, பெ. (n.)

   செய்யாறு வட்டத்தில் பில்லாந்தாங்கல் அருகே அமைந்துள்ள ஊர்; a village in Seyyaru, near the Pillanthangal.

     [சிறு-ஆற்று+ஊர்]

சிற்றிராசிப்பணம்

சிற்றிராசிப்பணம் ciṟṟirācippaṇam, பெ. (n.)

   பழைய காசு (நாணய); வகை (புதுக் கல். 71.);; an ancient coin.

     [சிறு + இராசி + பணம்]

சிற்றிரு

 சிற்றிரு ciṟṟiru, பெ. (n.)

   கிலுகிலுப்பைச் செடி (மலை.);; laburnum – leaved rattlewort.

சிற்றிரை

சிற்றிரை ciṟṟirai, பெ. (n.)

   1. சிறுவிலங்கினுணவு; prey or food of small animals.

   2. மிகச் சிறு அளவு உணவு; small quantity of food, morsel.

     [சிறு(மை); + இரை]

சிற்றிரைப்பு

 சிற்றிரைப்பு ciṟṟiraippu, பெ. (n.)

   குறுமூச்சு; shortness of breath.

     [சிறு(மை); + இரைப்பு]

சிற்றிறால்

 சிற்றிறால் ciṟṟiṟāl, பெ. (n.)

   பூச்சியிறால்; common shrimp (சா.அக.);.

     [சிறு(மை); + இறால்]

சிற்றிற்பருவம்

 சிற்றிற்பருவம் ciṟṟiṟparuvam, பெ. (n.)

   சிறுமியர் இழைத்த மணற் சிற்றிலைத் தலைவன் சிதைக்கும் பருவத்தைப் புனைந்து கூறும் ஆண்பாற் பிள்ளைத்தமிழ்ப் பகுதி; section of anpar-pillai-t-tamil, which describes the stage of childhood in which the hero of the poem tramples down the toy houses built by little girls, one of ten.

     [சிற்றில் + பருவம்]

சிற்றிலக்கம்

 சிற்றிலக்கம் ciṟṟilakkam, பெ. (n.)

   கீழ்வாயிலக்கம்; fraction.

     [சிறு(மை); + இலக்கம்]

சிற்றிலக்கியம்

 சிற்றிலக்கியம் ciṟṟilakkiyam, பெ. (n.)

   உள்ளடக்கத்தின் அடிப்படையிலும் செய்யுள் வடிவ அடிப்படையிலும் பாகுபடுத்தப்பட்ட இலக்கிய வகை; minor literary genre.

     [சிறு(மை); + இலக்கியம்]

சிற்றிலிழைத்தல்

 சிற்றிலிழைத்தல் ciṟṟiliḻaittal, பெ. (n.)

   சிறுமியர் மணல்வீடு கட்டி விளையாடுகை; a play in which girls built toy houses with sand.

     [சிற்றில் + இழைத்தன்]

இழைத்தல் = தேய்த்தல்,தேய்த்து மெருகூட்டுதல், மெருகூட்டி அழகுபடுத்துதல். நான் இழைத்து இழைத்துக் கட்டியவீடு என்னும்வழக்கு இன்றுமுளது. சிறுமியர் தம் ஆற்றல் முழுதையும் பயன்படுத்தி அழகாய்க் கட்டுவதாய் எண்ணிக் கொள்வர்.

சிற்றிலுப்பை

 சிற்றிலுப்பை ciṟṟiluppai, பெ. (n.)

   இலுப்பை வகை (மலை.);; a species of mahwa.

     [சிறு(மை); + இலுப்பை]

சிற்றிலை

சிற்றிலை1 ciṟṟilai, பெ. (n.)

   சிறியஇலை; tiny leaf.

     [சிறு + இவை]

 சிற்றிலை2 ciṟṟilai, பெ. (n.)

   1. நெய்ச்சிட்டி (மலை.);; purple fleabane.

   2. குன்றிமணி; crab’s eye.

   3. கடுக்காய்; chebulic myrobalan.

     [சிறு(மை); + இலை]

 சிற்றிலை3 ciṟṟilai, பெ. (n.)

   1. நிலவாகை; medicinal senna.

   2. காட்டுச்சீரகம்; vernonia authelmintica.

   3. கொழுந்து; tender leaves (சா.அக.);.

     [சிறு(மை); + இலை]

சிற்றிலைக்கள்ளி

 சிற்றிலைக்கள்ளி ciṟṟilaikkaḷḷi, பெ. (n.)

   சிறிய இலைக்கள்ளி; small leaf spurge (சா.அக.);.

     [சிற்றலை + கள்ளி]

சிற்றிலைக்கிரியம்

 சிற்றிலைக்கிரியம் ciṟṟilaikkiriyam, பெ. (n.)

   நீர்ப்பாசம்; duck weed plant (சா.அக.);.

     [சிற்றிலை + கிரியம்]

சிற்றிலைக்கொடி

 சிற்றிலைக்கொடி ciṟṟilaikkoḍi, பெ. (n.)

   மயிர் மாணிக்கம்; common balah (சா.அக.);.

     [சிற்றிலை + கொடி]

சிற்றிலைச்சீரகம்

 சிற்றிலைச்சீரகம் ciṟṟilaiccīragam, பெ. (n.)

   காட்டுச்சீரகம்; wild cumin, vernonia anthelmintica (சா.அக.);.

     [சிற்றலை + சீரகம்]

சிற்றிலைத்தளை

 சிற்றிலைத்தளை ciṟṟilaittaḷai, பெ. (n.)

   விடத்தளை; ashy babul (சா.அக.);.

     [சிற்றிலை + தளை]

சிற்றிலைநங்கை

 சிற்றிலைநங்கை ciṟṟilainaṅgai, பெ. (n.)

   சிறியாணங்கை என்னும் பூடு; a kind of small milkwort.

     [சிற்றிலை + நங்கை]

சிற்றிலைநரம்பு

 சிற்றிலைநரம்பு ciṟṟilainarambu, பெ. (n.)

   இலைக்காம்பு; pedicle.

     [சிற்றிலை + காம்பு]

சிற்றிலைப்பருவம்

 சிற்றிலைப்பருவம் ciṟṟilaipparuvam, பெ. (n.)

   இளம்பருவம்; juvenile period.

     [சிற்றிலை + பருவம]

சிற்றிலைப்பாதம்

 சிற்றிலைப்பாதம் ciṟṟilaippātam, பெ. (n.)

   படர்கொடியினத்தைச் சார்ந்த செருப்படை; a diffuse prostrate herb.

     [சிற்றலை + பாதம்]

சிற்றிலைப்பாலாடை

 சிற்றிலைப்பாலாடை ciṟṟilaippālāṭai, பெ. (n.)

   மருந்துப் பூடுவகையுளொன்று (சங்.அக);; a kind of medicinal herb.

     [சிற்றிலை + பாலாடை]

சிற்றிலைப்பாலாவி

 சிற்றிலைப்பாலாவி ciṟṟilaippālāvi, பெ. (n.)

   மருந்துச் செடி வகை (சங்.அக);; a medicinal herb.

மறுவ. அம்மான் பச்சரிசி

     [சிற்றிலை + பாலாவி]

பாலாவிச் செடி இருவகை. ஒன்று சிறிய இலையையுடையது. மற்றது பெரிய இலையையுடையது.

சிற்றிலைப்பிலவு

சிற்றிலைப்பிலவு ciṟṟilaippilavu, பெ. (n.)

   1. மரவகை; creamy – leaved lancewood.

   2. நீண்ட மரவகை; rusty-leaved lance wood (சா.அக.);.

     [சிற்றிலை + பிலவு]

     [சிற்றிலைப்பிளவு → சிற்றிலைப்பிலவு (கொ.வ.);

சிற்றிலைப்புல்

 சிற்றிலைப்புல் ciṟṟilaippul, பெ. (n.)

   மலையாளத்தில் காணப்படும் கொச்சிலிச்சியெனும் மூலிகை; medicinal grass – reputed drug of Malabar (சா.அக.);.

     [சிற்றிலை + புல்]

சிற்றிலைப்பூ

 சிற்றிலைப்பூ ciṟṟilaippū, பெ. (n.)

   முருங்கைப் பூ; drum stick flower (சா.அக.);.

     [சிற்றிலை + பூ]

சிற்றிலைப்பூடு

 சிற்றிலைப்பூடு ciṟṟilaippūṭu, பெ. (n.)

   காட்டுக்களைச்செடி; iron weed.

     [சிற்றிலை + பூடு]

சிற்றிலைப்பொலவு

சிற்றிலைப்பொலவு ciṟṟilaippolavu, பெ. (n.)

   1. வண்டி அடிக்கட்டைக்குப் பயன்படுத்தப்படுங் கெட்டியான மரவகை; creamy-leaved lance – wood.

   2. தூண்டிற்கோல் முதலியன செய்யப்பயன்படும் நீண்ட மரவகை; rustyleaved lance wood.

     [சிற்றிலை + பிளவு → பெரளவு → பொலவு]

சிற்றிலைப்போளம்

சிற்றிலைப்போளம் ciṟṟilaippōḷam, பெ. (n.)

   1. நீண்ட மரவகை; rusty-leaved lance wood.

   2. சிற்றிலைப்பிலவு பார்க்க;see Similar-p-pilavu.

     [சிற்றிலை + போளம்]

சிற்றிலைமடக்கு

 சிற்றிலைமடக்கு ciṟṟilaimaḍakku, பெ. (n.)

   நெய்க்கொட்டை; butterfly soap nut (சா.அக.);.

     [சிற்றிலை + மடக்கு]

சிற்றிலைமடுக்கு

 சிற்றிலைமடுக்கு ciṟṟilaimaḍukku, பெ. (n.)

சிற்றிலைமடக்கு பார்க்க;see Sirrilai-madakku.

     [சிற்றிலை மடக்கு → சிற்றிலை மடுக்கு]

சிற்றிலைவாகை

 சிற்றிலைவாகை ciṟṟilaivākai, பெ. (n.)

   கருவாகை; fragrant sirissa.

     [சிற்றிலை + வாகை]

சிற்றில்

சிற்றில் ciṟṟil, பெ. (n.)

   1. சிறுகுடில், குடிசை; hut, hovel.

     “சிற்றி னற்றூண் பற்றி” (புறநா.86.);

   2. சிறுமியர் கட்டியாடும் மணல்வீடு; toyhouse of sand built by little girls in play.

     “நீயாடுஞ் சிற்றில் புனைகோ சிறிதென்றான்” (கலித். 111);.

   3. சிற்றிற்பருவம் பார்க்க;see sirrir-paruvam.

     “சிறுபறை சிற்றில் சிறுதேரென்ன” (இலக். வி. 806);.

     [சிறு(மை); + இல்]

 சிற்றில்2 ciṟṟil, பெ. (n.)

   கந்தை (பிங்.);, பீற்றல், துணிக்கீறல்; rags.

   2. கிழிசல், கீற்று; tatters.

     [சில் → சிற் → சிற்றில்]

சிற்றில்சிதைத்தல்

சிற்றில்சிதைத்தல் ciṟṟilcidaiddal, பெ. (n.)

   சிறுமியரிழைத்த மணல்வீட்டைக் குலைத் தாடும் ஆண்மகன் விளையாட்டு (இலக்.வி. 806, உரை.);; boy’s play of trampling down the toy house of sand built by little girls.

     [சிற்றில் + சிதைத்தல்]

சிற்றிளைப்பு

 சிற்றிளைப்பு ciṟṟiḷaippu, பெ. (n.)

   மெலிதாக இளைத்த நிலை; slight emaciation (சா.அக.);.

     [சிறு(மை); + இளைப்பு]

சிற்றீச்சங்குருத்து

 சிற்றீச்சங்குருத்து ciṟṟīccaṅguruttu, பெ. (n.)

   பெண்களது வயிற்றில் தேங்கியுள்ள அரத்தக் கட்டினைப் போக்கும் சிற்றிச்ச மரத்தினது வெள்ளைக்குருத்து; tender black dates – Phoenix farinifera which is opposed to large date phoenix a caulis (சா.அக.);.

     [சிற்றீச்சம் + குருத்து]

சிற்றீச்சை

 சிற்றீச்சை ciṟṟīccai, பெ. (n.)

   சிற்றீச்ச மரம்; tender block dates – Phoenix farnifera.

     [சிறு(மை); + ஈச்சை]

சிற்றீஞ்சு

 சிற்றீஞ்சு ciṟṟīñju, பெ. (n.)

சிற்றீச்சை பார்க்க;see Sirriccai.

     [சிறு(மை); + ஈஞ்சு]

சிற்றீந்து

சிற்றீந்து ciṟṟīndu, பெ. (n.)

   ஈந்து வகை (பதார்த்த. 753);; dwarf wild date – palm.

ம. சிற்றீந்து

     [சிறு(மை); + ஈந்து]

சிற்று-தல்

சிற்று-தல் Sirru-,    5 செ.கு.வி. (v.i.)

   மனத் துயரடைதல்; to be troubled in mind perplexed.

     “மாநிலத் தெவ்வுயிர்க்குஞ் சிற்ற வேண்டா” (திவ். திருவாய். 9.1:7);.

     [சுற்று → சிற்று-,]

சிற்றுடுக்கை

 சிற்றுடுக்கை ciṟṟuḍukkai,    பெ.(n,) உடுக்கை வகையினுள் ஒன்று; musical instrument.

     [சிறு+உடுக்கை]

     [P]

சிற்றுடுப்பை

 சிற்றுடுப்பை ciṟṟuḍuppai, பெ. (n.)

   மூலிகை வகையுளொன்று; a kind of medicinal herb (சா.அக.);.

     [சிறு + உடுப்பை]

சிற்றுடை

 சிற்றுடை ciṟṟuḍai, பெ. (n.)

   வேலம் முள்; thorn of babul tree (சா.அக.);.

சிற்றுணவு

சிற்றுணவு ciṟṟuṇavu, பெ. (n.)

   1. பொரிக்கறிக் குழம்பு, கூட்டுவகை முதலியன; curry preparations added to give relish to the main food.

     “பொரிக்குஞ் சிற்றுணவு” (திவா. 6:86);.

   2. சிற்றுண்டி-1 பார்க்க;see sirrundi,-1

     “இனிய சிற்றுண வேதேனு மின்றிநீ வருவாய் கொல்லோ” (குசேலோ. குசே. தந்நகர். 275);.

     [சிறுமை = அளவிற் குறைந்த;சிறுமை +. உணவு]

சிற்றுண்டி

சிற்றுண்டி ciṟṟuṇṭi, பெ. (n.)

   1. அப்ப வகை, பண்ணிகாரம் (பிங்.);; pastry, cake.

   2. தித்திப்புள்ளதாய், உருண்டை வடிவில் அரிசி அல்லது கோதுமை மாவிற் செய்த பண்ணிகார வகை; sweet pastry-ball made of rice or wheat flour.

     “அப்பங்கலந்த சிற்றுண்டி” (திவ். பெரியாழ். 2.4:5);.

   3. அயர்வாற்றுஞ் சிற்றுணா; light refreshment.

   4. அளவிற் சிறியவுணவு; abstemious meal.

ம. சிற்றுண்டி

     [சிறு(மை); + உண்டி. சிறுமை = சிறிய, அளவிற் குறைந்த]

சிற்றுண்டிச்சாலை

 சிற்றுண்டிச்சாலை ciṟṟuṇṭiccālai, பெ. (n.)

   சிற்றுண்டியும் கானீர், தேநீர் முதலிய பருகங்களும் சாப்பிடக் கிடைக்குமிடம்; snack restaurant, canteen.

     [சிற்றுண்டி + சாலை]

சிற்றுதடு

 சிற்றுதடு ciṟṟudaḍu, பெ. (n.)

   அல்குலின் இரு மருங்கிலுமுள்ள வுதடு; the internal lips of the female genital organ (சா.அக.);.

     [சிறு(மை); + உதடு]

சிற்றுந்து

 சிற்றுந்து ciṟṟundu, பெ. (n.)

   பயணிகளுக்குப் போக்குவரத்துக்குதவும் சிறிய இயங்கி; mini bus.

     [சிறு(மை); + உந்து;சிறுமை = அளவிற் சிறிய]

சிற்றுப்புளி

 சிற்றுப்புளி ciṟṟuppuḷi, பெ. (n.)

   சிறிதளவான புளி; a small quantity of tamarind.

     “கறிக்குச் சிற்றுப்புளி சேர்க்க வேண்டும்” (நாஞ்.);

     [சிறு(மை); + புளி]

சிற்றுமரி

சிற்றுமரி ciṟṟumari, பெ. (n.)

   1. உவர்நிலப்புதர்ச்செடி (வின்.);; marsh samphire.

   2. பவளப் பூண்டு; coral plant.

     [சிறு(மை); + உமரி]

சிற்றுயிரிலக்கணம்

 சிற்றுயிரிலக்கணம் ciṟṟuyirilakkaṇam, பெ. (n.)

   பூச்சி புழுக்களின் அமைப்பு, தன்மை, பழக்க வழக்கங்களைப் பற்றிக் கூறும் நூல்; the part of zoology, which treats of the structure habits of insects – entomology.

     [சிற்றுயிர் + இலக்கணம்]

சிற்றுயிர்

சிற்றுயிர் ciṟṟuyir, பெ. (n.)

   1. சிறிது காலம் வாழும் விலங்கு; short-lived being.

   2. மிகச் சிறிய உயிர் (வின்.);; minute insect, animalcule.

     [சிறு(மை); + உயிர். சிறுமை = சிறியது, குறைந்த அளவுடையது]

சிற்றுரகம்

 சிற்றுரகம் ciṟṟuragam, பெ. (n.)

   சிறுகடுகு; Indian mustard (சா.அக.);.

சிற்றுரு

சிற்றுரு ciṟṟuru, பெ. (n.)

   1. சிறிய உருவ முடையது; small person or object, miniature.

     “அண்டங்கள் சிற்றுருவமைந்து” (கந்தபு. திருநகரப். 9);.

   2. தாலியுடன் கோக்கும் உரு; ornamental pieces appended to the tali.

ம. சிற்றுரு

     [சிறு(மை); + உரு]

உரு = உருவுடையது, உருண்டையானது.

சிற்றுருவிளக்கி

 சிற்றுருவிளக்கி ciṟṟuruviḷakki, பெ. (n.)

   உருப்பெருக்கியாடி (பூதக்கண்ணாடி);; microscope (சா.அக.);.

மறுவ. உருப்பெருக்கி

     [சிற்றுரு + விளக்கி. விளக்கு → விளக்கி. ‘இ’ வினை முதலீறு]

சிற்றுரை

 சிற்றுரை ciṟṟurai, பெ. (n.)

   சிறிய அளவில் தெரிவிக்கும் கருத்து; a short statement or comment.

     [சிறு + உரை]

சிற்றுர்

சிற்றுர் ciṟṟur, பெ. (n.)

   1. சிறிய ஊர் (சூடா);; small village, hamlet.

     ‘சிற்றூரிலே பாரிக்கூத்தா’ (பழ);.

   2. குறிஞ்சி நிலத்தூர்; village in the hilly tracts.

     [சிறு(மை); + ஊர்]

குறிஞ்சி நிலம், மலையும் மலை சார்ந்த பகுதியுமாதலால், பரந்துபட்ட ஊர் தோன்றும் வாய்ப்பு குறைவு. எனவே குறிஞ்சி நிலத்தமைந்த ஊரும் சிற்றுரெனப்பட்டது.

சிற்றுளம்

சிற்றுளம் ciṟṟuḷam, பெ. (n.)

   குறுகிய மனம்; stunted mind.

     “சிற்றுள மிலேச்சர் பொல்லா நற்கதிநவையை நூக்கி”(நரி. 33);.

     [சிறு+உள்ளம்]

சிற்றுளி

சிற்றுளி ciṟṟuḷi, பெ. (n.)

   கல், மரம் போன்றவற்றைத் தகர்க்கும் தச்சுக்கருவி; small chisel used for cutting stones and wood.

     “சிற்றுளியாற் கல்லுந் தகரும்” (நீதிநெறி.14);.

   ம. சிற்றுளி;க. கிட்டுளி

     [சிறு(மை); + உளி]

உளியின் வகையைப் பிரித்துக் காட்டவே ‘சிறுமை’ சேர்க்கப்பட்டது.

சிற்றுள்

 சிற்றுள் ciṟṟuḷ, பெ. (n.)

   வீட்டிலுள்ள சரக்கறை (உ.வ.);; store-room in a house.

     [சிறு(மை); + உள். உள் = அகம், வீடு]

சிற்றுள்ளங்கி

 சிற்றுள்ளங்கி ciṟṟuḷḷaṅgi, பெ. (n.)

   உட்சட்டையின் மேல் இடுஞ் சிறுசட்டை; vest.

     [சிறு + உள் + அங்கி]

சிற்றுள்ளாடை

 சிற்றுள்ளாடை ciṟṟuḷḷāṭai, பெ. (n.)

   உள்ளாடை வகையுளொன்று; akind of under vest.

     [சிறு + உள்ளாடை]

சிற்றுள்ளான்

 சிற்றுள்ளான் ciṟṟuḷḷāṉ, பெ. (n.)

   உள்ளான் குருவி; small snipe.

     [சிறு + உள்ளான்]

சிற்றுழா

 சிற்றுழா ciṟṟuḻā, பெ. (n.)

   அரத்த மூலம், சீழ் மூலம், வெட்டை முதலியவற்றைப் போக்கும் குட்டி விளா எனும் மூலிகை; it is a small plant of the feronia genus;

 it cures piles, gleet etc., (சா.அக.);.

சிற்றுழியன்

சிற்றுழியன் ciṟṟuḻiyaṉ, பெ. (n.)

   1. வீட்டு வேலையாள்; lacquey,

   2. கலப்பற்றுக்காரன்; one whose occupation is the caulking of ships, boats etc., (செ.அக.);.

     [சிறு(மை); + ஊழியன்]

சிற்றூண்

 சிற்றூண் ciṟṟūṇ, பெ. (n.)

சிற்றுண்டி பார்க்க;see sirrundi,

     “நெய்ச்சூட் டமைந்த சிற்றுாண்”

     [சிறு(மை); + ஊண்]

சிற்றெட்டகம்

சிற்றெட்டகம் ciṟṟeṭṭagam, பெ. (n.)

   அகப்பொருளைக் கூறும் ஒரு நூல் (களவியற். 16);; an ancient poem on Agam.

     [சிறு + எட்டகம்]

சிற்றெண்

சிற்றெண் ciṟṟeṇ, பெ. (n.)

   1. கீழெண்; fraction.

   2. இருசீர் ஒரடியாய் வரும் அம்போதரங்க வகை (காரிகை, செய், 10, உரை);; a variety of ambodarangam consisting of shortlines of two fect each.

   3. பரிபாடலுறுப்புகளுள் ஒன்று (பரிபா. 1:60);; a constituent section of Paripadal.

     [சிறு(மை); + எண்]

சிற்றெறும்பு

சிற்றெறும்பு ciṟṟeṟumbu, பெ. (n.)

   சிவப் பெறும்பு வகை; Small redant.

     “பாற்கடலைச் சிற்றெறும்பு பருகநினைப் பதுபோலும்” (சேக்கிழார்.பு.பாயி.9);. ‘சிற்றெறும்பைச் சிற்றெறும்பும் கட்டெறும்பைக் கட்டெறும்பும் தேடும்’ (பழ.);.

     [சிறு(மை); + எறும்பு]

வகையை விதந்து கூற சிறுமை முன்னொட்டானது.

சிற்றெலி

 சிற்றெலி ciṟṟeli, பெ. (n.)

   கண்டெலி (இ.வ.);; mouse, species of small rat.

     [சிறு(மை); + எலி);

வகை வேறுபாடறிதற்கும், தோற்றம் கருதியும் இப்பெயரமைந்தது.

சிற்றெலும்பு

 சிற்றெலும்பு ciṟṟelumbu, பெ. (n.)

மெல்லிய தான சிறிய எலும்பு Small bone (சா.அக.);.

     [சிறு(மை); + எலும்பு]

சிற்றெல்லை

 சிற்றெல்லை ciṟṟellai, பெ. (n.)

   அவ்வச் செய்யுட்குரிய அடிகளின் சிறுமை வரையறை; minimum number of lines, as in a stanza, opp. to per-ellai.

     [சிறு(மை); + எல்லை]

சிற்றெள்

 சிற்றெள் ciṟṟeḷ, பெ. (n.)

   எள் வகை (வின்.);; gingelly oil plant, small kind of sesamum.

     [சிறு(மை); + எள்]

தோற்றத்தினாலும், வகைமையை விதந் தோதுதற்கும் சிறுமை முன்னொட்டானது.

சிற்றெழுத்தர்

 சிற்றெழுத்தர் ciṟṟeḻuttar, பெ. (n.)

   கையேட்டுக் கணக்கர்; personal attendant.

     [சிறு+ எழுத்தர்]

சிற்றெழுத்தாணிப்பூடு

 சிற்றெழுத்தாணிப்பூடு ciṟṟeḻuttāṇippūṭu, பெ. (n.)

   சிறிய வடிவுள்ள எழுத்தாணிப் பூண்டு செடி; small variety of style plant (சா.அக.);.

     [சிறு + எழுத்தாணிப்பூடு]

சிற்றேரண்டம்

 சிற்றேரண்டம் ciṟṟēraṇṭam, பெ. (n.)

   சிற்றாமணக்கு (மலை.);; castor plant.

     [சிறு(மை); + ஏரண்டம்]

சிற்றேரி

 சிற்றேரி ciṟṟēri, பெ. (n.)

   சிறிய நீர்நிலை; a small tank.

சிற்றேரிகம்

 சிற்றேரிகம் ciṟṟērigam, பெ. (n.)

   பாசி வகையுளொன்றான இலைப்பாசி (மூ.அ.);; species of duckweed.

     [சிறு + ஏரிகம்]

சிற்றேலம்

 சிற்றேலம் ciṟṟēlam, பெ. (n.)

   தலைவலி, காய்ச்சல், உமிழ்நீரூறல், வயிற்றுக்கொதிப்பு முதலானவற்றைப் போக்கும், சிறிய ஏலக்காய்; small cardamum, which cures headache, fever, excess salvation etc., (சா.அக.);.

ம. சிற்றேலம்

     [சிறு(மை); + ஏலம்]

சிற்றேவலர்

 சிற்றேவலர் ciṟṟēvalar, பெ. (n.)

   அலுவல் உதவியாளர்; attender.

     [சிறு+ ஏவலர்]

சிற்றொடுவை

 சிற்றொடுவை ciṟṟoḍuvai, பெ. (n.)

   ஒடுவை மரம்; a kind of rafle tree (சா.அக.);.

     [சிறு + ஒடுவை]

சிற்றொத்தி

 சிற்றொத்தி ciṟṟotti, பெ. (n.)

சிற்றொற்றி பார்க்க;see Sirrorri.

     [சிறு(மை); + ஒத்தி]

ஒற்றி → ஒத்தி ஒநோ: பற்று → பத்து. கற்றுக்குட்டி → கத்துக்குட்டி

சிற்றொற்றி

 சிற்றொற்றி ciṟṟoṟṟi, பெ. (n.)

   மறுவொற்றி; submortgage.

ம. சிற்றொற்றி

     [சிறு(மை); + ஒற்றி]

ஒற்றிக்கு வைத்தல் என்பது ஒரு பொருளை அடைமானமாய் வைத்து வேறொரு பொருளையோ பணத்தையோ மறுதலையாகப் பெறல். இங்குச் சிறுமை, மறுமைப் பொருளில் முன்னொட்டானது.

சிற்றொழுக்கம்

சிற்றொழுக்கம் ciṟṟoḻukkam, பெ. (n.)

   இழிநடத்தை (நாமதீப.650);; base conduct.

     [சிறு + ஒழுக்கம்]

சிற்றோலை

 சிற்றோலை ciṟṟōlai, பெ. (n.)

   தென்னை மட்டையின் நுனிப்பாகத்துள்ள சிறிய ஓலை; the short blades at the end of the leaf of a coconut tree.

     [சிறு(மை); + ஓலை]

சில

சில cila, பெ. (n.)

   சின்மையானவை; some. a few.

     “சிலசொல்ல றேற்றாதவர்” (குறள். 649);.

   ம. சில;   க. கெலவி, கெல;   தெ. சிலுபி, சிலுவ;   து. கெல, கெலவு, கிக்க்;கோத கில்கட்

     [சல் → சில் = சிறியது, துண்டு சிற்றளவு. சில் → சில்வான் = குட்டி ஒணான் சில் → சின் → சின்னான் = சிறியவன். சில் → சின்மை. சில் → சில. அளவுச் சிறுமை குறித்த சொல் தொகைச் சிறுமையும் குறித்தது (மு.தா.129);]

சிலகம்

சிலகம்1 cilagam, பெ. (n.)

   1. சட்டுவம் (பிங்.);; a kind of ladle.

   2. நாவழுத்திப் பிடிக்கும் மாழையிற் செய்த குறடு (பிங்.);; metal spatula.

     [சல் → சூல் → சூலம் சூல் = சூலம் சுல் → சில் சிலகம் = குத்துவது போன்று இறுக்கிப் பிடிக்குங் கருவி]

 சிலகம்2 cilagam, பெ. (n.)

   சாதிக்காய்; nutmeg (சாஅக.);.

சிலகயம்

 சிலகயம் cilagayam, பெ. (n.)

   அரத்தத்தை முறிக்குந்தன்மை வாய்ந்த சிவப்புச் சதுரக்கள்ளி; a red variety of square; it destroys the richness of blood (சா.அக.);.

சிலக்கு

 சிலக்கு cilakku, பெ. (n.)

   இன்னும் கொஞ்சம் (இ.வ.);; something more.

 U. silak.

சிலக்குணம்

 சிலக்குணம் cilakkuṇam, பெ. (n.)

   திமிங்கிலம் (யாழ்.அக.);; whale.

சிலங்கம்

சிலங்கம்1 cilaṅgam, பெ. (n.)

   விளாம்பட்டை (வின்.);; bark of the wood-apple tree.

 சிலங்கம்2 cilaṅgam, பெ. (n.)

   வெள்ளி மரப்பட்டை; lodhra bark (சா.அக);.

சிலங்கை

சிலங்கை cilaṅgai, பெ. (n.)

   சலங்கை; tinny bells used as ornaments.

     [சலங்கை → சிவங்கை (மு.தா.3);]

சிலசியம்

 சிலசியம் silasiyam, பெ. (n.)

   கருநெல்லி மரம்; black-barried feather foil (சா.அக.);.

மறுவ. உச்சிலிந்தி

சிலட்டூர்

 சிலட்டூர் cilaṭṭūr, பெ.(n.)

   அறந்தாங்கி வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in ArantangiTaluk.

     [சில்+ஊற்றுார்]

சிலதன்

சிலதன்1 ciladaṉ, பெ. (n.)

   1. மருதநிலவாணன் (பிங்.);; inhabitant of the agricultural tract.

   2. ஏவலாளன்; servant, labourer.

     “சிலதர் காக்குஞ் சேணுயர் வரைப்பின்” (பெரும்பாண். 324);

   3. துரதன்; messenger.

     “சேறி யாலெனச் சிலத ரோதினார்” (கந்தபு. தெய்வயா. 53);.

 சிலதன்2 ciladaṉ, பெ. (n.)

   தோழன் (பிங்.); கூட்டாளி; male companion, associate.

சிலதி

சிலதி ciladi, பெ. (n.)

   நம்பகத்தன்மை மிக்க தோழி, பெண் பணயாளா; a confident female servant or companion

     “அங்கொரு சிலதியை” (பெருங். வத்தவ.14:172);.

சிலதை

சிலதை ciladai, பெ. (n.)

   நீண்டு மெலிந்து கரு நிறத்தளாய காமமிக்க பெண்; a tall and lean woman, black in complexion and highly lustful.

     “பேசலஞ் சிலதை யென்றே” (கொக்கோ.4:6);.

சிலத்திற்கடுகு

 சிலத்திற்கடுகு cilattiṟgaḍugu, பெ. (n.)

   திமிங்கிலம் (யாழ்.அக);; whale.

மறுவ. சிலக்குணம்.

சிலந்தி

சிலந்தி1 cilandi, பெ. (n.)

   1. பரு; pimple.

   2. சிறு கட்டி; small boil.

   3. கட்டி, நச்சுக்கட்டி; abscess, ulcer, venereal boil.

   4. நடன முத்திரைக்குரிய ஆண் கையுள் ஒன்று (சிலப். பக்.92,);; a hand-pose expressive of the emotions of men.

   ம. சிலன்னி; Skt. granthi.

     [சில → அசிவத்தி (வேக.); உடம்பின்தவைக்குக் கீழ் எங்கேனும் புறப்படும் கொப்புளம் சிவத்திப் பூச்சியின் உடன் போல் திரண்டிருத்தல் தன்மை பற்றிச் சிவந்தியெனப் பெயர்பெற்றது]

 சிலந்தி2 cilandi, பெ. (n.)

   1. மரவகை; panicled golden-blossomed pear tree.

   2. கருஞ்சிலந்தி; small-leaved golden-blossomed pear tree.

   3. சிலந்தியரிசி,

 ediblesedge.

   4 கோரை வகை; sedge.

 சிலந்தி3 cilandi, பெ. (n.)

தன் வாயிலுள்ள சுரப்பைக் கொண்டு பூச்சிகளைச் சிக்க வைக்கும் வகையில் வலை பின்னக்கூடியதும் எட்டுக் கால்களை உடையதுமான சிறுபூச்சி: spider.

     “சிலந்தி யுண்பதோர் குரங்கின்மேல்” (கம்பரா. பஞ்சசேனா.1.);

   ம. சிலந்தி, சிலன்னி;   க. செலதி, செலந்தி;தெ. செலதி

     [சில் → சிவந்தி = வட்டமான துரல்வவை யமைக்கும் பூச்சி]

 சிலந்தி4 cilandi, பெ. (n.)

   தொண்மணிகளுள் ஒன்றான கோமேதக வகை (தெ.இ.க.தொ. 8.53);; sardonyx.

சிலந்திகம்

 சிலந்திகம் cilandigam, பெ. (n.)

   வாலுளுவை மரம்; spindle tree (சா.அக.);.

சிலந்திக்கடி

 சிலந்திக்கடி cilandikkaḍi, பெ. (n.)

   நச்சுத் தன்மையுள்ள சிலந்திப் பூச்சியாலேற்பட்ட கடி; spider-bite; it is very poisonous and troublesome in nature (சா.அக.);.

     [சிலந்தி + கடி]

சிலந்திக்கரப்பான்

சிலந்திக்கரப்பான் cilandikkarappāṉ, பெ. (n.)

   தோலிலேற்படுங் கரப்பான் புண் வகை (தஞச்ர.iii,92);; ulcerating eruption of the skin.

     [சிலந்தி + கரப்பான்]

சிலந்திக்கழலை

 சிலந்திக்கழலை cilandikkaḻlai, பெ. (n.)

   உடம்பிலுண்டாகும் மிகு வெப்பத்தினால் முதலிற் பருத்து வீங்கி, வரவரப் பெரிதாகிச் சீழ்ப் பிடித்துக் கட்டியாக மாறுங் கழலை; a sebaceous tumor arising from excess of heat in the body.

     [சிலந்தி + கழவை]

சிலந்திக்கூடு

 சிலந்திக்கூடு cilandikāṭu, பெ. (n.)

   பஞ்சினைப்போல் வெண்மையாகவும், மென்மையாகவும் அமைந்ததும், அரத்தப் போக்கினை நிறுத்துந்தன்மை மிக்கதுமான சிலந்தியின் கூடு; the spider-web of a house spider. It is white and soft like cotton and is a useful application for checking the flow of blood (சா.அக.);.

மறுவ. கோலான்

     [சிலந்தி + கூடு]

சிலந்திக்கொடி

 சிலந்திக்கொடி cilandikkoḍi, பெ. (n.)

   ஈசுருமூலி; Indian birthwort.

     [சிலந்தி + கொடி]

சிலந்திநாயகம்

சிலந்திநாயகம் cilandināyagam, பெ. (n.)

   சொறி, புண்களை நீக்கும் மருந்துவகை (பதார்த்த.290);; a plant as curing cutaneous eruptions.

     [சிலந்தி + தாயகம்]

சிலந்திப்பூச்சி

 சிலந்திப்பூச்சி cilandippūcci, பெ. (n.)

   வாயின் கீழ் வளைந்த, நச்சுத்தன்மை மிக்க கொடுக்கினையுடையதும், கூடுகட்டுந் தன்மையுடையதுமான எட்டுக்காற் பூச்சி; an eight-legged insect known as spider. It has four parts of legs attached fore-parts of the body. mandibles furnished with a curved claw perforated at the extremity like poison fang.

     [சிலந்தி + ஆச்சி]

சிலந்திமரம்

சிலந்திமரம் cilandimaram, பெ. (n.)

   1. அத்தி மரவகையுளொன்று; a kind of fig tree.

   2. செருந்திமரம்; firefly (சா.அக);.

     [சிலந்தி + மரம்]

சிலந்தியரிசி

சிலந்தியரிசி silandiyarisi, பெ. (n.)

   1. பூந்கோரை (வின்.);; edible sedge.

   2. கோரை வகை (மூ.அ.);; a kind of weed.

     [சிலந்தி + அரிசி]

சிலனி

 சிலனி cilaṉi, பெ. (n.)

   ஊமத்தை வகையுளொன்று; a kind of datura burdock (சா.அக.);.

சிலப்பதிகாரம்

 சிலப்பதிகாரம் cilappadikāram, பெ. (n.)

   ஐம் பெருங்காப்பியத்துள் பழைமை வாய்ந்ததும் இளங்கோவடிகளால் இயற்றப் பெற்றதும் கோவலன் கண்ணகியின் வரலாற்றைக் கூறுவதுமாகிய ஒர் இலக்கியம்; an ancient historic poem by Ilangovadigal dealing with the story of Kovalan and Kan nagi, one of Aimberungappiyam.

     [சிலம்பு + அதிகாரம்]

சிலமன்

 சிலமன் cilamaṉ, பெ. (n.)

   சாடை; indication by noise, stir, etc. ‘அவர் வந்த சிலமனில்லை’ (யாழ்ப்.);.

     [சிலம்பு → சிவமன்]

சிலமம்

சிலமம் cilamam, பெ. (n.)

சிலம்பம்-2 பார்க்க;see silambam-2.

     ‘சிலமத்திலே காரியம் பார்க்க’ (யாழ்ப்.);.

     [சிலம்பம் → சிலம்ம்]

சிலமான்கல்

 சிலமான்கல் cilamāṉkal, பெ. (n.)

   விலையுயர்ந்த கல்வகையுளொன்று (M.M.);; agate, a variegated form of silica.

 U. sulaiman.

சிலமி

சிலமி1 cilami, பெ. (n.)

   1. சிலம்பக்காரன் (சங்.அக.);; person clever in the use of quarterstaff.

   2. அடாவடிக்காரன் (யாழ்ப்);,

 bully, blusterer.

     [சிலமம் → சிலமி]

 சிலமி2 cilamittal,    4 செ.குன்றாவி (v.t)

   1. சிலம்பம் பண்ணுதல் (யாழ்.அக);; to fence with the quarter-staff.

   2. அச்சுறுத்துதல்; threaten.

     [சிலம்பம் = கழி கொண்டு சண்டையிடுதல். சிவம்பம் → சிவமம் → சிலமி-.) சண்டையிடுதற் பொருள் அச்சுறுத்தலுக்கும் புடை பெயர்ந்தது.

சிலமூலகாரம்

 சிலமூலகாரம் cilamūlakāram, பெ. (n.)

சிலைமூலகாரம் பார்க்க;see Silai-millagaram (சா.அக.);.

     [சிலைமூலகாரம் → சிவமூலகாரம்]

சிலம்

சிலம் cilam, பெ. (n.)

   1. பொதுவகையுப்பு; salt in common.

   2. இந்துப்பு; rock-salt (சா.அக.);.

சிலம்பக்காரன்

 சிலம்பக்காரன் cilambakkāraṉ, பெ. (n.)

   சிலம்பக்கலை வல்லவன்; person cleverin the use of quarterstaff.

ம. சிலம்பி

     [சிலம்பம் + காரன்]

சிலம்பக்கூடம்

 சிலம்பக்கூடம் cilambakāṭam, பெ. (n.)

   சிலம்பம் பயிலுமிடம் (வின்.);; palaestra, fencing school.

     [சிலம்பம் + கூடம்]

சிலம்பங்கட்டு-தல்

சிலம்பங்கட்டு-தல் cilambaṅgaṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   சிலம்பக் கலையில் கழி முதலியவற்றை வீசுதல் (வின்.);; to brandish quarter-staff in the art of fencing.

     [சிலம்பம் + கட்டு-,]

சிலம்பங்காட்டு-தல்

சிலம்பங்காட்டு-தல் silambamkaṭṭusilambaṅgāṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. சிலம்பக்கலை (வித்தை); காட்டுதல்; to brandish staff in fencing.

   2. அச்சுறுத்துதல் (இ.வ.);; to menace, threaten.

   3. செயற்கரிய செயலைச் செய்வது போல் நடித்தல் (இ.வ.);; to pretend to be active in the accomplishment of a difficult task.

     [சிலம்பம் + காட்டு-,]

சிலம்பன்

சிலம்பன்1 cilambaṉ, பெ. (n.)

   1. குறிஞ்சித் தலைவன்; chief of a hilly tract.

     “அயந்திகழ் சிலம்ப” (ஜங்குறு. 264);.

   2. முருகன் (பு. வெ. 12, இருபாற்.10, கொளு.);; Muruga, as lord of the hilly tract.

   3. காவேரியின் புதுவெள்ளம்; the freshet in the river Kaveri, as in the month the Chittirai.

     ‘சித்திரைச் சிலம்பன்’ (இ.வ.);

மறுவ. மலையன், வெற்பன், பொருப்பன்.

   ம. சிலம்பன்; Eng. sherha, sherrif

     [சிலம்பு = மலை. சிலம்பு → சிவம்பன். ‘அன்’ ஆண்பாலீறு]

 சிலம்பன்2 cilambaṉ, பெ. (n.)

பழைய காசு

 an ancient coin.

     [சிலம்பு → சிவம்பன்]

 சிலம்பன்3 cilambaṉ, பெ. (n.)

   குருவி வகை; babbler.

     [சிலம்பு → சிவம்பன் = ஒலித்துக் கொண்டேயிருக்கும் பறவை]

தமிழ்நாட்டின் மலைப்பகுதிகளும், புல்வெளிகளிலும், புதர்க்காடுகளிலும் காணப் படும் குருவி வகை, இது உடலமைப்பாலும், வண்ணத்தாலும் பலவகைகளாகக் காணப் படுகின்றன.

சிலம்பன் வகைகள்

   1. வளைந்த அலகுச் சிலம்பன்

   2. வெண் தொண்டைச் சிலம்பன்

   3. கருந்தலைச் சிலம்பன்

   4. மஞ்சள்கண் சிலம்பன்

   5. தவிட்டுச் சிலம்பன்

   6. பெரிய சாம்பற் சிலம்பன்

   7. கருஞ்சிவப்புச் சிலம்பன்

   8. காட்டுச் சிலம்பன்

   9. வெண்தலைச் சிலம்பன்

   10. கலகலப்பான் சிலம்பன்

   11. புள்ளிச் சிலம்பன்

சிலம்பப்பயிற்சி

 சிலம்பப்பயிற்சி cilambappayiṟci, பெ. (n.)

சிலம்பாட்டம் பார்க்க;see silainbaittam (சா.அக.);

     [சிலம்பம் + பயிற்சி]

சிலம்பமாடு-தல்

சிலம்பமாடு-தல் cilambamāṭudal,    5 செகுவி. (v.i.)

   சிலம்பம் விளையாடுதல்; to fence, brandish, parry with quarterstaff.

     [சிலம்பம் + ஆடு-,]

சிலம்பம்

சிலம்பம் cilambam, பெ. (n.)

   1. கழியை இருகையாலும் பிடித்து முன்னும் பின்னும் பக்கவாட்டிலும் சுழற்றித் தாக்கவும் தாக்குதலைத் தடுக்கவும் மேற்கொள்ளும் பயிற்சி (பதார்த்த.1294);; a kind of martial art where fencing is done with a staff.

   2. சூழ்ச்சி; trick, stratagem.

     “சிலம்பத்திற் றிரிந்துற் றிட்டு” (திருப்பு.1076.);

ம. சிலம்பம்

     [சிலம்பு → சிலம்பம் (த.வ.79);]

சிலம்பம்பண்ணு-தல்

சிலம்பம்பண்ணு-தல் cilambambaṇṇudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. சிலம்பமாடு- பார்க்க;see silambam-idu-

   2. சிலம்பங்காட்டு- (இ.வ.); பார்க்க;see Silambari-kättu

     [சிவம்பம் + பண்ணு-,]

சிலம்பல்

சிலம்பல் cilambal, பெ. (n.)

   1. யாழினோசை (பிங்.);; sound of a lute.

   2. ஒயாது, வீண் பேச்சுப் பேசுபவ-ன்-ள் (இ.வ.);; a vulger chatter box, chatterer.

ம. சிலம்பல்

     [சிவம்பு → சிவம்பன்]

சிலம்பவித்தை

 சிலம்பவித்தை cilambavittai, பெ. (n.)

சிலம்பாட்டம் பார்க்க;see Silambá stam (சா.அக.);.

   த. விச்சை;வ. வித்தை

சிலம்பாட்டம்

 சிலம்பாட்டம் cilambāṭṭam, பெ. (n.)

   கம்பை முறைப்படிச் சுழற்றி எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காகவும் தளர்ந்த உடல் இறுகுவதற்காகவும், பசியேற்படுவதற்காகவும் பயிலுங்கலை; an orderly method of rotating the long role either to defend or to offend, it is a tiring exercise by which the body is hardened, appetite is increased (சா.அக.);.

     [சிலம்பம் + ஆட்டம்]

சிலம்பாறு

சிலம்பாறு cilambāṟu, பெ. (n.)

   மதுரை மாவட்டத்தில் அழகர்மலையில் உருவாகுஞ் சிற்றாறு; the sacred stream of the Alagar hills, in Madurai district.

     “நிலம்பக வீழ்ந்த சிலம்பாற்றகன்றலை” (சிலப். 11:108);.

     [சிலம்பு + ஆறு]

சிலம்பி

சிலம்பி cilambi, பெ. (n.)

   சிலந்தி; spider.

     “சிலம்பி வானூல் வலந்த மருங்கில்” (பெரும்பாண். 236);.

     [சிலந்தி → சிலம்பி (வே.க.);]

சிலம்பிநூல்

 சிலம்பிநூல் cilambinūl, பெ. (n.)

   சிலந்திப்பூச்சி நூல்; spider web (சா.அக.);.

     [சிலம்பி + நூல்]

சிலம்பியாதனம்

சிலம்பியாதனம் cilambiyātaṉam, பெ. (n.)

   ஒக வகையுளொன்று (தத்துவப்.109);; yogic posture.

     [சிலம்பு + ஆதனம். ஆசனம் → ஆதனம்]

சிலம்பு

சிலம்பு1 cilambudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. ஒலித்தல்; to sound, make a tinkling noise.

     “சீரார் ஞெகிழஞ் சிலம்ப” (கலித். 90);.

   2. எதிரொலித்தல்; to echo, resound.

     “வளநகர் சிலம்பப் பாடி” (அகநா. 22);.

ம. சிலம்புக

     [சில் – ஒலிக்குறிப்பு. சில் → சிவம்பு]

 சிலம்பு2 cilambu, பெ. (n.)

   1. ஒலி (சூடா.);; sound.

   2. இரைச்சல்; noise.

   3. ஒலியலை எதிர்வு; resonance.

   4. வண்டின் மென் முரலொலி; buzz.

   ம. சிலம்பு;   க. கெலெ;   கோண். கிலி;குயி. க்லா, க்லாத்

     [சில் → சிவம்பு]

 சிலம்பு3 cilambu, பெ. (n.)

   பூசாரிகள் கைச் சிலம்பு; blong hollow ring of brass filled with pebbles and shaken before an idol in worship.

     [சில் → சிலம்பு]

 சிலம்பு4 cilambu, பெ. (n.)

   உள்ளிடு அற்ற பொன்னாலோ வெள்ளியாலோ ஆனதுமான் வளைகூட்டில் பரலிடப்பட்டு ஒலியெழுப்புவதுமான மகளிர் காலணி; a kind of tinkling hollow anklet made of gold, silver, copper, etc. and filled with granules for tinkling worn by women in former times.

     “ஒன்றின வோவலளஞ்சிலம் படியே” (ஜங்குறு.389.);

ம. சிலம்பு

     [சில் → சிவம்பு]

 சிலம்பு5 cilambu, பெ. (n.)

   1. மலை; mountain.

     “நளியிருஞ் சிலம்பிற் சீறூர்” (புறநா. 143:10.);.

   2. பக்கமலை; mountain slope.

     “மால்வரைச் சிலம்பின்” (பெரும்பாண். 330);.

   3. மலை, முழைஞ்சு; mountain cave, cavern.

     “சிலம்பிற் சிலம்பிசை யோவாது” (பரிபா.15:44);.

மறுவ. வெற்பு, பொருப்பு

     [சில் → சிலை, சிலை – கல், மலை, கரடு. சிலை → சிலைம்பு → சிவம்பு]

 சிலம்பு2 cilambu, பெ. (n.)

   மரச்சிறாம்பு; small splinter or splint rising on the smooth surface of wood.

சிலம்பு,

 சிலம்பு, cilambu, பெ.(n.)

   பரத நாட்டியத்தைக் குறிக்கும் பெயர்; name of Bharata natya.

சிலம்புகழிநோன்பு

சிலம்புகழிநோன்பு cilambugaḻinōṉpu, பெ. (n.)

   மணவினைக்குமுன் பெண்ணிற்கு நடத்தும் சிலம்புகழற்றலாகிய சடங்கு வகை (ஐங்குறு.399,உரை.);; ancient ceremony preliminary to marriage, probably consisting in removing the anklets of a bride.

     [சிலம்பு + கழி + நோன்பு]

சிலம்புகூறல்

 சிலம்புகூறல் cilambuāṟal, பெ. (n.)

   கோவலன் சிலம்புவிற்ற கதை (யாழ்.அக.);; story of Kovalan selling the anklet.

     [சிலம்பு, கூறல்]

சிலம்புப்பாட்டு

 சிலம்புப்பாட்டு cilambuppāṭṭu, பெ. (n.)

   சிலப்பதிகாரக் கதையடிப்படையில் காளியைப் புகழ்ந்து பாடும் பாட்டு; a song in praise of Kali based on the story of Silappadigaram (சேரநா.);.

ம. சிலம்பு பாட்டு

     [சிலம்பு + பாட்டு]

சிலம்புரி

 சிலம்புரி cilamburi, பெ. (n.)

   அயல்நாட்டுத் துணி வகை (இ.வ.);; a kind of foreign longcloth.

     [சிலம்பி + புரி. புரி = நூல்]

சிலந்திநூல் போல் மெல்லிய இழையால் நெய்யப்பட்ட துகில்.

சிலம்பொலி

 சிலம்பொலி cilamboli, பெ. (n.)

   சிலம்பின் ஓசை; tinkling sound of an anklet.

ம. சிலம்பொலி

     [சிவம்பு + ஒலி]

சிலர்

சிலர் cilar, பெ. (n.)

   1. சிலபேர்; some, a few persons. opp. to palar.

     “நோற்பார் சிலர் பலர் நோலாதவர்” (குறள். 270);.

   ம. சிலர்;க. கெலபர்

     [சில் → சில + அர்]

சிலவங்கம்

 சிலவங்கம் cilavaṅgam, பெ. (n.)

   மீனெலும்பு (யாழ்.அக.);; fish bone.

 Skt. gila + vanga

சிலவர்

சிலவர்1 cilavar, பெ. (n.)

சிலர் பார்க்க;see silar.

     “அழுதனர் சிலவர்” (கம்பரா. திருவடி. 4);

க. கெலபர்

     [சில + அர்]

 சிலவர்2 cilavar, பெ. (n.)

   1. பாலைநில மக்கள் (திவா.);; people of the desert tract.

   2. பாலை நிலத் தலைவா (திவா.);; chiefs of the desert tract.

   3. வேடர் (அக.நி.);; hunters.

     [சிலர் → சிலவர்]

சிலவிரிஞ்சம்

 சிலவிரிஞ்சம் cilaviriñjam, பெ. (n.)

   தாமரை மலர்; lotus flower (சா.அக.);.

சிலவெதுப்பு

சிலவெதுப்பு cilaveduppu, பெ. (n.)

   மாட்டு நோய்வகை (மாட்டுவா.156);; a disease of cattle.

சிலாகு

சிலாகு cilāku, பெ. (n.)

   1. இரும்பூசி; needle.

   2. அறுவை மருத்துவர் பயன்படுத்தும் கருவி; surgeon’s probe (சா.அக.);.

சிலாகை

சிலாகை1 cilākai, பெ. (n.)

சலாகை (வின்.); பார்க்க;see Salagas.

 சிலாகை2 cilākai, பெ. (n.)

   1. செம்பாறைக்கல், தேக்கல்,

 gravel stone.

   2. தொட்டிச்செய்ந்நஞ்சு (சங்.அக.);; a mineral poison.

   3. நீலக்கல் (யாழ்.அக.);; a blue stone.

சிலாங்கன்

 சிலாங்கன் cilāṅgaṉ, பெ. (n.)

   விளாம்பட்டை; the bark of wood apple tree (சா.அக.);

சிலாசத்து

சிலாசத்து cilācattu, பெ. (n.)

   1. எழுவகை துணைத் தாதுக்களில் மாழை வகை (பதார்த்த. 1130);; an inferior mineral, one of seven upa-datu.

   2. கோடைக் காலத்து மிகு வெப்பத்தின் விளைவாக மலைப் பகுதிகளிலிருந்து உருகி வழியும் இரும்பு கலந்த கல்மதம்; abituminous substance containing from exuded by rocks during Summer (சா.அக.);

   3. கணிக்கல் வகை; foliated crystallized gypsum.

     [சிலை → கல், கற் குன்று, மலை. சிலை → சிலா, சிலா + அத்து]

சிலாசம்

சிலாசம் cilācam, பெ. (n.)

   1. இரும்பு செம்பு முதலிய மாழை; metal such as iron, copper etc.,

   2. மலைபடு பொருள்; that which is procured from a mountain (சா.அக.);.

சிலாசாசனம்

 சிலாசாசனம் cilācācaṉam, பெ. (n.)

   கொடை (தானம்); முதலியவற்றைக் குறித்து வரையப்படும் கல்வெட்டு; stone inscription.

சிலாசாதனம்

 சிலாசாதனம் cilācātaṉam, பெ. (n.)

சிலாசாசனம் பார்க்க;see sila-Sssanam.

சிலாசாரம்

 சிலாசாரம் cilācāram, பெ. (n.)

   கல்லைப் போன்ற வன்மையுடைய இரும்பு (மூஅ);; iron, a hard as rock.

மறுவ. சிலாத்துமசம்

சிலாசிலாவாக

 சிலாசிலாவாக cilācilāvāka, வி.எ. (adv.)

   சிறிது சிறிதாக; little by little.

தான் வாங்கிய கடனைச் சிலாசிலாவாகக் கொடுக்கிறான்’ (சென்னை);.

மறுவ, கொஞ்சங் கொஞ்சமாக

     [சில் → சில → சிலா. சிலா + ஆக]

சிலாஞ்சனம்

 சிலாஞ்சனம் cilāñjaṉam, பெ. (n.)

   நீலமணி வகை (வின்.);; a blue stone, lapis- lazuli.

சிலாடா

 சிலாடா cilāṭā, பெ. (n.)

   நெல்லிக்காய்; Indian gooseberry (சா.அக.);.

சிலாதன்

சிலாதன் cilātaṉ, பெ. (n.)

   நந்திதேவரின் தந்தை; the father of Nandi-devar.

     “தேக்கு மன்பிற் சிலாதனற் செம்மலை” (கந்தபு. அயனைச் சிறை நீக்கு. 8);.

சிலாதரன்

சிலாதரன் cilātaraṉ, பெ. (n.)

சிலாதன் பார்க்க;see silidan.

     “சிலாதரன் புதல்வன் சொல்வான்” (சிவரக. வில்வவன.30);.

சிலாதலம்

சிலாதலம் cilātalam, பெ. (n.)

   1, பாறை; rock.

     “சிலாதலத்தின் மேலிருந்த மந்தி” (திவ். இயற். 3, 58);.

   2. கற்பாவிய இருக்கைமேடை; a raised stone paved seat.

     “இலகொளிச் சிலாதல மேலிருந் தருளி (சிலப். 15:54);.

சிலாதைலம்

 சிலாதைலம் cilātailam, பெ. (n.)

   பாறையில் வடியும் மண் நெய்மம்; bitumen, as exuding from rocks.

     [சிலை + தைலம். சிலை → சிலா]

சிலாத்தஞ்சனம்

 சிலாத்தஞ்சனம் cilāttañjaṉam, பெ. (n.)

   கட்களிம்பு; eye-ointment (சா.அக);.

சிலாத்தணி

 சிலாத்தணி cilāttaṇi, பெ.(n.)

   அறந்தாங்கி வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Arantangi Taluk.

     [சிலாத்து+அணி]

சிலாத்திக்குமரி

 சிலாத்திக்குமரி cilāttikkumari, பெ. (n.)

   கௌரி வைப்பு நஞ்சு; a prepared arsenic (சா.அக.);.

சிலாத்துமசம்

 சிலாத்துமசம் silāttumasam, பெ. (n.)

 iron, as born of stone.

சிலாசாரம் பார்க்க

சிலாநஞ்சு

 சிலாநஞ்சு cilānañju, பெ. (n.)

   கன்மதம் (யாழ்.அக.);; rock-alum.

     [சிலை → சிலா. சிலா + நஞ்சு]

சிலாநாகக்கல்

 சிலாநாகக்கல் cilānākakkal, பெ. (n.)

   சூடாலைக் கல் (வின்.);; a kind of stone.

     [சிலை → சிலா. சிலா + நாகக்கல்]

சிலாநாகம்

 சிலாநாகம் cilānākam, பெ. (n.)

சிலாநாகக்கல் (வின்.); பார்க்க;see sili-naga-k-kal.

     [சிலை → சிலா. சிலா + நாகம்]

சிலாந்தி

 சிலாந்தி cilāndi, பெ. (n.)

   சீந்தில் (மலை.);; gulancha.

 Skt. jivanti

சிலாந்திகம்

 சிலாந்திகம் cilāndigam, பெ. (n.)

   கருஞ்சிலந்தி மரம்; a kind of pear tree (சா.அக.);.

சிலாபம்

 சிலாபம் cilāpam, பெ. (n.)

   முத்துக் குளிக்கை (வின்.);; pearl fishery.

ம. சிலாபம்

     [சலாபம் → சிலாபம்]

சிலாபேசி

 சிலாபேசி cilāpēci, பெ. (n.)

   சிவப்பு நெருஞ்சி; red cow-thorn.

சிலாபேதி

சிலாபேதி cilāpēti, பெ. (n.)

   1. செப்பு; trailing indigo.

   2. கலப்பு வெள்ளி; inferior silver (சா.அக.);.

சிலாப்பி

 சிலாப்பி cilāppi, பெ. (n.)

   கழப்புவோன் (யாழ்ப்.);; idler, one who whiles away his time in idleness.

     [சிலாப்பு → சிலாப்பி]

சிலாப்பு-தல்

சிலாப்பு-தல் cilāppudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. கழப்புதல் (யாழ்ப்.);; to idle away one’s time.

   2. நடித்தல்; to profess, pretend.

     [சிலம்பு → சிலப்பு → சிலாப்பு-,]

சிலாப்புட்டி

 சிலாப்புட்டி cilāppuṭṭi, பெ. (n.)

   நீரிறைக்கப் பயன்படும் தோற்பை அல்லது இறைகூடை (இராட்);; leather bag or bucket forbaling water.

     [சலம் + புட்டி → சலப்புட்டி → சிலாப்புட்டி]

சிலாமணி

சிலாமணி1 cilāmaṇi, பெ. (n.)

   செல்லக்கூடியது; that which is in currency.

 U. calaoni.

     [செலாவணி → சிவாவணி → சிவrமணி]

 சிலாமணி2 cilāmaṇi, பெ. (n.)

   கனிக்கல் வகை (வின்.);; a variety of gypsum.

     [சிலை → சிலா. சிலா + மணி]

சிலாமதம்

சிலாமதம் cilāmadam, பெ. (n.)

   1. பிறவி வைப்பு நஞ்சு வகையுளொன்று; a kind of mineral poison.

   2. கன்மதம் (சங்.அக.);; rock alum.

     [சிலை → சிலா. சிலா + மதம்]

சிலாமுகம்

 சிலாமுகம் cilāmugam, பெ. (n.)

   வண்டு (பிங்.);; bee.

     [சில் → சிலா + முகம். துனையுடைய கையை முகத்திற் கொண்ட வண்டு சுல் – துளைத்தல் கருத்து வேர்]

சிலாமேனி

 சிலாமேனி cilāmēṉi, பெ. (n.)

   திருமால் உருவமாகக் கொண்டு பூசித்தற்குரிய கண்டகிச் சிலை; black fossil ammonite worshipped as a form of Tirumal chiefly found in the silver Gandak.

சிலாம்பு

சிலாம்பு cilāmbu, பெ. (n.)

   1. சிறாம்பு (இ.வ.);; Splinter.

   2. கூடை முடைவதற்குரிய மூங்கிற் சிம்பு; splint.

   மறுவ. சிலும்பு;சிராய்

     [சிலும்பு → சிலம்பு → சிலாம்பு]

சிலாம்பேதம்

சிலாம்பேதம் cilāmbētam, பெ. (n.)

   1. சிறு பூனைக்காலி; common cowich, cowhage.

   2. கல்லுருவி; gravel plant (சா.அக.);.

சிலாரு

 சிலாரு cilāru, பெ. (n.)

   குழப்பம் (யாழ்.அக);; confusion.

சிலார்

சிலார்1 cilār, பெ. (n.)

   1. சச்சரவு, பூசல், சண்டை; quarrel.

   2. குழப்பம் (வின்.);; confusion.

   3. தொல்லை; trouble.

 சிலார்2 cilār, பெ. (n.)

   நன்கொடை; reward, recompense.

 U. sila.

சிலாலம்

 சிலாலம் cilālam, பெ. (n.)

   சிறுநீரகத்தில் உண்டாகும் கல்லை நீக்கச் செய்யும் அறுவை மருத்துவம்; the operation of cutting into the bladder in order to extract a calculus of stone (சா.அக);.

சிலாவடிவம்

 சிலாவடிவம் cilāvaḍivam, பெ.(n.)

   முருகனின் சிற்ப வடிவங்களுள் ஒன்று; a feature in sculpture.

     [சிலை+வடிவம்]

சிலாவி

சிலாவி1 cilāvi, பெ. (n.)

   உத்தரத்துக்கு மேல் கூரையைத் தாங்குவதற்கான வளைவு (C.E.M);; collar-piece.

 சிலாவி2 cilāvi, பெ. (n.)

சிலாவிந்து பார்க்க;see Sila-vindu.

 சிலாவி3 cilāvi, பெ. (n.)

   சிற்பி; artisan.

 Skt. silpin

 சிலாவி4 cilāvi, பெ. (n.)

   கட்டடவுறுப்பு வகை (இ.வ.);; a part of a building.

சிலாவிந்து

 சிலாவிந்து cilāvindu, பெ. (n.)

   கல்நார் (யாழ்.அக.);; asbestos.

 Skt. Silabindu

சிலாவு

சிலாவு1 cilāvudal,    5 செ.குவி (v.i.)

   சுழலுதல் (வின்.);; to whirl, revolve.

     [சுலவு → சுலாவு → சிலாவு-,]

 சிலாவு2 cilāvudal,    5 செகுவி (v.i.)

வட்டமாய் வார்த்தல் (இ.வ.);

 to pour circularly.

     [சுலவு → சுலாவு → சிலாவு-,)]

சிலிசிமம்

 சிலிசிமம் silisimam, பெ. (n.)

   சிறிய மீன்; a small fish (சா.அக.);.

சிலிட்டம்

சிலிட்டம் ciliṭṭam, பெ. (n.)

   1. செறிவு (தண்டி. 15; உரை.);; compactness.

   2. மணிச்சுருக்கம்; terseness.

   3. இரட்டுற மொழிதலுளொன்று; that which admits of two or more meanings.

சிலிட்ட வுருவகம்.

 Skt. slista

     [சில் = நெருக்கம். சில் → சிலிட்டம்]

சிலிந்தியரிசி

 சிலிந்தியரிசி silindiyarisi, பெ. (n.)

சிலந்தியரிசி (சங்.அக.); பார்க்க; see silandi-yarisi.

     [சிவந்தியரிசி → சிவிந்தியரிசி)

சிலிபதம்

 சிலிபதம் cilibadam, பெ. (n.)

   ஆனைக்கால் நோய்; elephantiasis (சா.அக.);.

சிலிம்பி

 சிலிம்பி cilimbi, பெ. (n.)

   கருஞ்சிலந்தி மர வகையுளொன்று; a kind of pear tree (சா.அக.);.

     [சிலம்பி → சிலிம்பி]

சிலியாக்கை

 சிலியாக்கை ciliyākkai, பெ. (n.)

சிலியானை பார்க்க;see Sili-y-anai (சா.அக.);.

சிலியானை

 சிலியானை ciliyāṉai, பெ. (n.)

   முடக்கொற்றான் (மலை.);; balloon vine.

சிலிரிடல்

 சிலிரிடல் ciliriḍal, பெ. (n.)

   அச்சத்தினால் உடம்பு குளிர்கை; becoming chill through fear (சா.அக.);.

     [சில் → சிலிர் + இடல்]

சிலிர்

சிலிர்1 cilirttal,    4 செ.குவி (v.i.)

   1. தளிர்த்தல் (திவா.);; to sprout, shoot.

   2. உடல் புல்லரித்தல்; to get the goose-skin, from intense emotion.

 E: shiver

     [உல்லரி = தளிர். உல்லரி → (உலிர்); → இலிர். இலிர்த்தல் = தளர்த்தல். இலிர் → சிலிர்]

 சிலிர்2 cilirttal,    4 செகுன்றாவி (v.t.)

   மயிர் கூச்செறிதல்; to bristle, as the hair on the body.

     “மெய்ம்மயிர் சிலிர்த்த தன்றே” (கம்பரா. மிதிலை.98);

     [இலிர் → சிலிர்]

 சிலிர்3 cilirttal,    4 செ.குவி (v.i.)

   சில்லிடுதல் (வின்.);; to be chilled, to run cold,as blood.

 E. chill

     [சில் → சிலிர்-,)

 சிலிர்4 cilir, பெ. (n.)

   மரவகையுளொன்று (தொல்.எழுத்து.363, உரை.);; a kind of tree.

சிலிர்சிலிர்-த்தல்

சிலிர்சிலிர்-த்தல் cilircilirttal,    4 செகுவி (v.i.)

   மெய்சிலிர்த்தல்; to get the goose-skin, from intense emotion.

     “திருமேனி திகழநோக்கிச் சிலிர்சிலித்து” (திருவாச. 27, 8);.

     [சிலிர் → சிலிர்சிலிர்-,)

சிலிர்ப்பு

 சிலிர்ப்பு cilirppu, பெ. (n.)

   குளிராலோ அச்சத்தாலோ மயிர் குத்திட்டு நிற்றல்; bristiling of the hair occasioned by cold or fear (சா.அக.);.

     [சில் → சிலிர் → சிலிர்ப்பு]

சிலீபதம்

 சிலீபதம் cilīpadam, பெ. (n.)

   யானைக்கால் நோய் (யர்ழ்.அக.);;  elephantiasis.

சிலீமுகக்கை

சிலீமுகக்கை cilīmugaggai, பெ. (n.)

   பெருவிரலின் உகிர் நுனியினைச் சுட்டு விரலின் முன்வரை ஊன்றி, ஏனைய விரல்களின் உகிர் நுனிகளை உள்ளங்கையிலுான்றும் முத்திரை வகை (பரத.பாவ.27);; hand-pose in which the tip of the thumb touches the first line of the forefinger and the tips of the otherfingers touch the palm.

சிலீமுகம்

சிலீமுகம் cilīmugam, பெ. (n.)

   1. அம்பு; arrow.

     “சிலையிது சிலீமுகங்க ளிவை” (பாரத. திரெள.31.);

   2. வண்டு (பிங்.);; bee.

   3. முலைக்கண் (பிங்.);; nipple of woman’s breast.

   4. போர் (யாழ்.அக.);; battle, fight.

சிலீரிடு-தல்

சிலீரிடு-தல் cilīriḍudal,    20 செகுவி. (v.i.)

   குளிர்ந்து போதல்; to become chill.

     [சில்வெனல் = குளிர்தல். சில் → சிலிர் → சிலீர் + இடு-,]

சிலீரெனல்

சிலீரெனல் cilīreṉal, பெ. (n.)

   1. குளிரா லுண்டாம் உணர்ச்சிக் குறிப்பு; onom.expr of being benumbed with cold, being chill.

   2. மகிழ்ச்சிக் குறிப்பு; onom. expr. of getting the goose-skin.

     “மெய்யுஞ் சிலீரென்ன” (பணவிடு. 324);

     [சில் → சிலிர் → சிலீர் + எனல்]

சிலீர்சிலீரெனல்

சிலீர்சிலீரெனல் cilīrcilīreṉal, பெ. (n.)

சிலீரெனல் பார்க்க;see silir-enal.

     “ரோம குச்சு நிறைந்து சிலீர் சிலீரென” (திருப்பு. 296);.

     [சிலீர் + சிலீர் + எனல்]

சிலு

சிலு1 ciluttal,    4 செ.கு.வி (v.i.)

   1. பதமாதல்; to be properly boiled, as rice.

     “செவ்வித் தினையரிசியால் ஆக்கின சிலுத்த சோற்றை” (பெரும்பாண். 168, உரை);.

   2. சோறு பதனழிதல் (தஞ்சை.);; to be spoiled, as cooked rice.

   3. சோறளிதல் (யாழ்ப்.);; to overboil, as rice.

   4. கணிதல் (யாழ்ப்.);; to ripen as fruits.

   5. சினத்தல் (இ.வ.);; to get angry.

   6. விள்ளுதல் (இ.வ.);; to open split.

   7. குலுங்கக் காய்த்தல் (வின்.);; to bear fruit in abundance, as a tree.

     [சில் → சிலு-,]

 சிலு2 ciluttal,    4 செ.குன்றாவி (v.t.)

   சிறிது சிறிதாய்ச் சொரிதல் (வின்.);; to pour in small quantities, as grain;

 to pour in drops, as fluid.

     [சில் → சிலு-,]

சிலுகன்

 சிலுகன் cilugaṉ, பெ. (n.)

சிலுக்கன் (யாழ்.அக.); பார்க்க;see Silukkan.

     [சிலுகு → சிலுக்கன் → சிலுகன்]

சிலுகி

 சிலுகி cilugi, பெ. (n.)

   கலகக்காரி (வின்.);; quarrelsome woman.

     [சிலுகன் → சிலுகி]

சிலுகிடு-தல்

சிலுகிடு-தல் cilugiḍudal,    20 செகுவி (v.i.)

   1. நிலை குலைதல்; to become disorderly, confused.

     “ஸம்ஸாரம் . . . சிலுகிடாதபடி . . . வேலியிட்டு வர” (குருபரம். ஆறா.);.

   2. சண்டையிடுதல்; to quarrel.

     “சிலுகிடுகையே….. ஸுவபாவமான.. ஸ்திரீகள்” (ஈடு, 67:4, ஜீ);.

   3. கூச்சலிடுதல் (ஈடு. 1,8,5);; to raise a hue and cry.

     [சிலுகு + இடு-,]

சிலுகு

சிலுகு1 cilugu,    5 செகுவி (v.i.)

   1. துன்பம் (பிங்.);; trouble, affliction.

   2. குழப்பம்; perplexity.

     “அறச்சிலு குடைத்து நின்றிற முரைக்கின்” (உத்தரரா. தோத்திர. 22);

   3. சண்டை (ஈடு, 6:7:4, ஜீ);; quarrel.

   4. கூச்சல்; hue and cry.

     “கள்ளனென்று சிலுகிட்ட வாறே” (ஈடு, 1:8:5);.

   5. குறும்பு (இ.வ.);; mischief.

   6. தடை; obstacle.

     “கன்மலோகச் சிலுகும்” (கந்தரந்.47);.

   7. தோல்வி (வின்.);; failure.

ம., க., தெ. சிலுகு

 சிலுகு2 cilugu, பெ. (n.)

சிலுகுபாக்கி பார்க்க;see Silugu-pakki.

தெ. சிலுகு

சிலுகுசிலுகெனல்

சிலுகுசிலுகெனல் silugusilugeṉal, பெ. (n.)

   1. விரைவுக்குறிப்பு (யாழ்ப்.);; onom. expr of rapidity.

   2. இடைவிடாது பேசுதற்குறிப்பு; garrulousness.

     “சிலுகுசிலுகென்னும் ஸ்திரீகள்” (ஈடு, 6:7:4);.

     [சிலுகு + சிலுகு + எனல்]

சிலுகுபாக்கி

 சிலுகுபாக்கி cilugupāggi, பெ. (n.)

   கையிருப்பு (C.G.);; balance on hand.

     [சிலுகு + பாக்கி]

சிலுகை

 சிலுகை cilugai, பெ. (n.)

   கஞ்சாக்குடுக்கை; bowl for smooking ganja.

சிலுக்கன்

 சிலுக்கன் cilukkaṉ, பெ. (n.)

   தொந்தரை செய்பவன் (இ.வ.);; troublesome or quarrelsome man.

ம. சிலுகன்

     [சிலுகு → சிலுக்கு → சிலுக்கன்]

சிலுக்கி

 சிலுக்கி cilukki, பெ. (n.)

   வல்லாரை; Indian penny wort (சா.அக.);.

சிலுக்கு

சிலுக்கு1 cilukkudal, செ.கு.வி (v.i.)

சிக்கு1-தல் பார்க்க;see sikku-.

க. சிலுகு, சிலிகு, சிக்கு

     [இல் → இல்லி = பொள்ளல், துணை. இல் → சில் → சில்கு → சிலுக்கு = துளையுள் புகுதல், மாட்டுதல், சிக்குப்படுதல்]

 சிலுக்கு2 cilukkudal,    5 செ.கு.வி. (v.i.)

   பகட்டுதல்; to make a display.

     “செய்யுள் பலகற்றுச் சிலுக்கி யிறுமாந்து” (பஞ்ச. திருமுக. 884);.

     [சில் → சிலு → சிலுகு → சிலுக்கு-,]

 சிலுக்கு3 cilukku, பெ. (n.)

   1. இரும்பு வளையம் இரும்பு மோதிரம் (வின்.);; iron staple, iron-ring.

   2. வாள் முதலியவற்றின் பல் (வின்.);; tooth of a saw, barb of an arrow.

   3. சிலும்பு (வின்.);; splint or fibre rising on a smooth surface of wood.

   4. வெட்டிய சிறுதுண்டு (வின்.);; chipping, cutting.

   5. சிலுக்கு வெட்டு (இ.வ.); பார்க்க;see Silukku-vettu.

     [சுல் → சில் = துண்டு. வட்டம், வட்டப் பொருள். சில் → சிலுக்கு = வெட்டின துண்டு]

 சிலுக்கு4 cilukku, பெ. (n.)

   1. தொந்தரவு (வின்.);; trouble.

   2. சண்டை; quarrel.

க. சிலுகு

     [சிலுகு → சிலுக்கு]

சிலுக்குவெட்டு

 சிலுக்குவெட்டு cilukkuveṭṭu, பெ. (n.)

சிறு காயம் (வின்.);:

 slight notch, gash or wound (சா.அக.);.

     [சிலுக்கு + வெட்டு]

சிலுசிலு-த்தல்

சிலுசிலு-த்தல் silusiluttal,    4 செ.கு.வி. (v.i.)

   1. ஒலித்தல் (யாழ்ப்.);; to sound, as in frying.

   2. படபடவென்று பேசுதல்; to rattle away, talk without restraint.

     “சிற்றுணர்வோ ரென்றுஞ் சிலுசிலுப்பர் (நீதிவெண். 35);.

   3. சினத்தல் (இ.வ.);; to get angry.

   4. சுறிரென்று ஒலித்தல் (வின்.);; to make a hissing noise, as water in contact with a burningwick.

   5. தூறுதல் (வின்.);; to raingently, drizzle.

   6. சுரக்குளிர் வருதல்; to feel chill.

   7. குளிர்ந்திருத்தல்; to be cool.

   8. மயிர்க் கூச்செறிதல்; bristling (சா.அக);.

சிலுசிலுப்பான்

 சிலுசிலுப்பான் silusiluppāṉ, பெ. (n.)

   அம்மை நோய் வகை (யாழ்.அக.);; a kind of small pox.

     [சிலுசிலு → சிலுசிலுப்பான்]

சிலுசிலுப்பு

சிலுசிலுப்பு silusiluppu, பெ. (n.)

   1. குளிர்ச்சி; cold, chill.

   2. சிறுசினம் (இ.வ.);; querulousness.

   3. குறும்பு (இ.வ.);; mischief.

     [சிலுசிலு → சிலுசிலுப்பு]

சிலுசிலெனல்

சிலுசிலெனல் silusileṉal, பெ. (n.)

   1. ஒலிக் குறிப்பு வகை (யாழ்ப்.);; onom. Expr. of chattering, crackling.

   2. குளரால் நடுங்குதற் குறிப்பு; shivering, shaking with cold.

     [சிலுசிலு + எனல்]

சிலுநீர்

 சிலுநீர் cilunīr, பெ. (n.)

   இலையில் தங்கி விழும் மழைத்துளி (யாழ்.அக.);; rain drop dripping from leaves.

     [சில் → சிலு + நீர்]

சிலுப்பட்டை

சிலுப்பட்டை ciluppaṭṭai, பெ. (n.)

   1. அலப்புகிறவன் (இ.வ.);; chatterbox, applied especially to children.

   2. குறும்பு செய்யுஞ் சிறுவன்; mischievous brat.

தெ. சிலி.பி.

     [சிலு + பட்டை]

சிலுப்பல்

 சிலுப்பல் ciluppal, பெ. (n.)

   சிலும்பல் (வின்.);; roughness, as of a surface.

     [சிலும்பு → சிலும்பல்;

சிலும்பல் → சிலுப்பன்]

சிலுப்பா

சிலுப்பா ciluppā, பெ. (n.)

   1. தொங்கும் பக்கக் குடுமி; side locks on the temples, especially of boys and young men.

   2. கத்தரித்துக்கொண்ட தலைமையிர் (யாழ்ப்.);; cropped hair.

 U. Zulf.

சிலுப்பி

 சிலுப்பி ciluppi, பெ. (n.)

   முதுகுளத்தூர் வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Mudukulattur Taluk.

     [சிலம்பு-சிலுப்பி]

சிலுப்பிக்குடல்

 சிலுப்பிக்குடல் ciluppikkuḍal, பெ. (n.)

   மணிக்குடலின் ஒரு பகுதி; a part of the small intestines.

     [சிலுப்பு → சிலுப்பி + குடல்]

சிலுப்பு

சிலுப்பு1 ciluppudal,    5 செகுன்றாவி (v.t.)

   1. மயிர் நெறிக்கச் செய்தல் (வின்.);; to bristle, erect the hair, raise the quills, as a porcupine, to dishevel.

   2. சுழற்றுதல்; to whirl round.

     “ஒரு செண்டு சிலுப்பி” (திவ்.பெரியதி. 10:8:2);

   3. அசைத்தல்; to shake, as one’s headin disdain or displeasure.

ஏன் தலையைச் சிலுப்புகிறாய்?

   4. தயிர்கடைதல் (உவ);; to churn.

   5. கலக்குதல் (வின்.);; to stir, agitate.

     [சில் → சிலு → சிலுப்பு]

 சிலுப்பு2 ciluppu, பெ. (n.)

   1. சினங் காட்டுகை; show of anger.

     ‘இவன் உம்முடைய சிலுப்புக் கெல்லாம் அஞ்சுபவனல்லன்’.

   2. அடங்கா நடை (இ.வ.);; unruly behaviour.

     [சில் → சிலு → சிலுப்பு]

சிலுப்புத்தண்ணிர்

 சிலுப்புத்தண்ணிர் cilupputtaṇṇir, பெ.(n.)

   வயலில் தண்ணிர் பாய்ச்சுதல்; sprinkle irrigation.

மறுவ. எடுப்புத்தண்ணி

     [சிலுப்பு+தண்ணீர்]

சிலுப்பை

 சிலுப்பை ciluppai, பெ. (n.)

கைத்தறிக் கருவி,

 a device containing few kunjams in handloom weaving.

     [சிலு-சிலும்பை]

சிலும்பலி

 சிலும்பலி cilumbali, பெ. (n.)

   அழகற்ற, அருவருக்கத்தக்க உருவினள் (இ.வ.);; ugly woman.

     [சிலுப்பல் → சிலும்பல் → சிலும்பலி]

சிலும்பல்

சிலும்பல் cilumbal, பெ. (n.)

   1. சிலிர்த்திருக்கை; roughness, shagginess, as the body, of bear dog.

   2. சீலை முதலியவற்றின் கரடு; uneveness, as of cloth, uneveness in thatching, matting or hedging

   3. துணி முதலியவற்றின் பீறல்; tear, as in garment.

     [சிலு → சிலுப்பு → சிலுப்பன் → சிலும்பல்]

சிலும்பி

 சிலும்பி cilumbi, பெ. (n.)

   கஞ்சாக் குடிக்கும் குழாய்; pipe for smoking bhang.

 U. cilm.

சிலும்பு

சிலும்பு cilumbu, பெ. (n.)

துரு, மாழை (உலோக);க்கறை

 rust.

     [சிலு-சிலும்பு]

 சிலும்பு1 cilumbudal,    5 செகுவி (v.i.)

   1. மயிர் முதலியன சிலிர்த்தல்; to standon end, asman’s hair, porcupine’s quill, etc.,

     “உன்னரு மயிர் சிலும்ப” (திருவாலவா. 27:39);.

   2. கட்டை முதலியவற்றில் தும்பு முதலியன வெளிப்பட்டு நிற்றல்; to have an uneven surface by the rise of splinters, fibres etc.

     ‘கட்டை சிலும்பியிருக்கிறது’ (உ.வ.);.

   3. பெருகி வருதல்; to flow out, gush out.

     “மார்பங் குருதி சிலும்பிட” (உபதேசகா. அயமுகி.71);.

   4. ஒலித்தல் (சூடா.);; to sound.

   5. கலங்குதல் (வின்.);; to be agitated, excited;

 to be shaken.

   6. அசைதல்; to move restively.

     ‘மாடு சிலும்புகிறது’ (உ.வ.);.

     [சில் → சிலு → சிலுப்பு → சிலும்பு-,]

 சிலும்பு3 cilumbu, பெ. (n.)

   களிம்பு (வின்.);; verdigris.

   க. கிலுபு;   தெ. சிலுமு;பட. கிலும்பு

 சிலும்பு4 cilumbu, பெ. (n.)

   சுருட்டு வகை; hookha.

     “பீடி சிலும்பு குடாக்கும் பிடிப்பார்கள்” (மதி.க ii,116);.

 சிலும்பு5 cilumbu, பெ. (n.)

   மீன் முதுகிலுள்ள துடுப்பு போன்ற முள்ளெலும்பு; the spinal portion of the dorsal in the fish (சா.அக.);.

சிலுவட்டை

 சிலுவட்டை ciluvaṭṭai, பெ. (n.)

   சிறுமையானவன்-வள்-து; anything small, a little creature, an insignificant person or thing.

     ‘சிலு வட்டைகளோடு சேராதே’ (இ.வ.);.

     [சில் → சிலு + அட்டை]

சிலுவணி

 சிலுவணி ciluvaṇi, பெ. (n.)

   காதணி வகையுளொன்று (மீனவ.);; a kind of ear-ornament.

     [சில் → சிலு + அணி]

சிலுவலி

 சிலுவலி ciluvali, பெ. (n.)

   இழிமகள் (யாழ்ப்);; slut.

     [சிலுவல் → சிலுவவி]

சிலுவல்

சிலுவல் ciluval, பெ. (n.)

   1. கந்தை (யாழ்ப்.);; rags, tatters.

   2. எளிமை (யாழ்ப்.);; poorness, thinness.

   3. அழகின்மை (யாழ்ப்.);; ugliness.

   4. ஒழுங்கின்மை (யாழ்.அக);; disorderliness.

   5. மதிப்புரவின்மை (யாழ்.அக);; want of decorum,

   6. தகுதியின்மை; impropriety.

   7. ஒழுங்கற்றவள் (யாழ்ப்);; slut.

     [சில் → சிலு → சிலுவல்]

சிலுவாணம்

சிலுவாணம் ciluvāṇam, பெ. (n.)

சில்வானம்1-2 (C.G.); பார்க்க;see silvanam1,-2.

     [சில்வானம் → சிலுவாணம்]

சிலுவாய்

 சிலுவாய் ciluvāy, பெ. (n.)

   வாயின் ஒரம்; edge of mouth.

     [கீள்-சீள்-சிலுவாய்]

சிலுவைக்கடப்பு

 சிலுவைக்கடப்பு ciluvaikkaḍappu, பெ. (n.)

   கடப்ப நெல் வகை; a kind of paddy.

     [சிலுவை + கடப்பு]

சிலேயம்

சிலேயம்1 cilēyam, பெ. (n.)

   கல்போலக் கடினமாயிருப்பது (சங்.அக.);; anythinghardlike a Stone.

     [சிலை → சிலையம் → சிலேயம்]

 சிலேயம்2 cilēyam, பெ. (n.)

   மலையில் விளையும் மூலிகை, கனிமம் முதலானவை; herbs, mineral etc, obtained from a mountain (சா.அக.);.

சிலேற்பனநாடி

 சிலேற்பனநாடி cilēṟpaṉanāṭi, பெ. (n.)

   மணிக்கட்டிலுள்ள மூவகை நாடியுளொன்று; one of the three beats, felt at the wrist (சா.அக.);.

சிலேற்பம்

 சிலேற்பம் cilēṟpam, பெ. (n.)

   நறுவிலி மரம்; scbesten tree (சா.அக.);.

சிலேற்பின்பால்

 சிலேற்பின்பால் cilēṟpiṉpāl, பெ. (n.)

   தேங்காய்ப்பால்; milky juice of coconut milk (சா.அக.);.

சிலை

சிலை1 cilaittal, செ.கு.வி. (v.i.)

   1. ஒலித்தல்; to sound, resound.

     “காவலர் கொடுங்கோடு சிலைப்ப” (பெருங். உஞ்சைக். 58.25);.

   2. முழுங்குதல்; to roar, bellow.

     “ஆமா நல்லேறு சிலைப்ப” (திருமுரு. 315);.

   3. யாழொலித்தல் (திவா.);; to twang, as musical instrument.

   4. கொட்டுதல்; to beat, as a drum.

     “வலி துரந்து சிலைக்கும்……துடி” (புறநா.170);.

   5. சினங் கொள்ளுதல்; to be angry.

     “செற்றங் கொண்டாடிச் சிலைத்தெழுந்தார்” (பு.வெ.3:7);

     [சில் → சிலை-,]

 சிலை2 cilaittal,    4 செகுவி (v.i.)

   பின்னிடல்; to retreat.

     “செருச்சிலையா மன்னர்” (பு.வெ.1:16);.

 சிலை3 cilai, பெ. (n.)

   1. முழக்கம்; sound, roar, below, twang.

     “கடுஞ்சிலை கழறி” (பதிற்றுப்.81:4);.

   2. பாடும்போது கலகலவென்றிலங்கும் ஒலி; rattling sound (of singing);.

   3. வில்; bow.

     “கொடுஞ்சிலைக் கைக்கூற்றினை” (பு.வெ.1:10);.

   4. சிலையோரை (தனுராசி); (விதான. யாத். 13.);; sagittarins of the zodiac.

   5. சிலை (மார்கழி); மாதம்; the month Margali.

     “சிலையில் வெங்கதிரைத் திங்க ளொன்றிய” (பாரத. முகூர்த்தங்கேள். 4.);.

   6. பத்தொன்பதாவது விண்மீனான குருகு (சூடா);; the 19th Milla naksatra.

   7. வானவில்; rainbow

     “சிலைத் தராகலம்” (புறநா.61:14);.

   8. ஒளி; lustre, light.

     “சிலையிலங்கு மணிமாடத்து” (திவ். பெரியதி.39:4);.

   9. வால்;  tail.

     “பைஞ்சிலைச் சேலை” (கல்லா.26:24);.

     [சில் → சிலை]

 சிலை4 cilai, பெ. (n.)

   1. கல் (பிங்.);; rock, stone.

   2. மலை; hill, mountain.

     “வணங்காச் சிலையளித்த தோளான்” (பு.வெ.2:12);.

   3. அம்மி; horizontal stone for macerating spices.

     “தரைத் தடஞ் சிலையதாக” (கந்தபு. தாரகன் வதை.48);

   4. கலுவம்; apothecary’s stone-mortar.

     “இரதமாங் கொருசிலையிலிட்டு” (கந்தபு.மார்க்கண.132);.

   5. சிலை வாகை; stone sirissa.

     “வணங்குசிலைச் சாபம்” (பெருங். மகத. 20. 8);.

   6. மனோசிலை என்னும் செய் நஞ்சு; a mineral poison.

   7. சூதமென்னும் செய்நஞ்சு; a mineral poison.

   8. கருநிறம்; black colour.

   9. உஞ்சை மர வகையுளொன்று; a kind of sirissa tree.

     [சில் → சிவம், எதிரொலிக்கும் மலை, ஒலிக்கும் சிலம்பக் கழி. சில் → சிலை = மலை, கல்]

சிலை என்பதற்கு வடமொழியில் கல் என்னும் பொருட்படும் வேர் அல்லது முதனிலை இல்லை. மானியர் வில்லியம்சு தம் அகர முதலியில், ஒருகா. ‘சி’ மூலமாயிருக்கலாம் என்பர். ‘சி’ என்பதற்கு நல்கு, பொந்திகை (திருப்தி);ப்படுத்து, கூராக்கு என்னும் பொருள்கள்தாம் உண்டு. அவை பொருந்தா தமிழிலும் திட்டமாகவோ தேற்றமாகவோ மூலங்காட்டுதற்கில்லை. சிலை என்னுஞ் சொற்குச் சில் என்பதுதான் மூலமாயிருத்தல் வேண்டும்.

இனி, சிலை என்பது சிலம்பு என்பது போல் மலை என்றும் தமிழில் பொருள் கொண்டிருப்பதால், மலை என்னும் பொருளினின்றே கல் (மலைப் பிஞ்சு); என்னும் முதலாகுபெயர்ப் பொருளும் தென்மொழியிலும் வடமொழியிலும் தோன்றிற்று என்று கொள்ளவும் இடமுண்டு. (நாகைத் தமிழ்ச் சங்க மறைமலையடிகன் நினைவு மலர் 1969);.

 சிலை5 cilai, பெ. (n.)

   நினைவுகூர்தற்கு ஒருவரைப் போல் செய்துவைத்த உருவம்; statue, idol.

     [சுலவுதல் = வளைதல், துண்டு. சுல் → சில் → சிலை = வெட்டின அல்லது செதுக்கின உருவம்]

சிலை என்னும் சொல் வடமொழியில் கல் அல்லது பாறை என்றே பொருள்படும் silex என்னும் இலத்தீன் சொல்லும் அதனின்று திரிந்த silica என்னும் ஆங்கிலச் சொல்லும் வன்கல்லை (second stone); யன்றி உருவச் சிலையைக் குறியா. நாம்தான் அதைக் கருவி யாகுபெயராய் உருவம் என்னும் பொருளில் வழங்குகின்றோம்.

சிலா சாசனம் = கல்லில் எழுதப்பட்ட கட்டளை, கற்பட்டயம், விக்கிரகம், மூர்த்தம் என்பனவே உருவத்தைக் குறிக்கும் வட சொற்கள். மூர்த்தம் உடையவன் மூர்த்தி. ப்ரதிமா என்பது தென் சொற்றிரிபு.

நாம் கற்சிலை என்பதுபோல் வடவர் சிலாசிலா என்ன முடியாது. இருப்புச் சிலை, வெள்ளிச்சிலை, செப்புச்சிலை, பொற்சிலை, வெண்கலச் சிலை என்று உருவப் பொருளில் தான் வழங்குகின்றோம். கற்பொருளில் என்றும் வழங்குவதில்லை. தெய்வ உருவம் தெய்வச் சிலை எனப்படும். (நாகை தமிழ்ச் சங்க மறைமலையடிகள் நினைவு மலர், 1969);.

சிலை என்னும் உருவப்பொருட் சொற்குத் தமிழ் மூலம் சற்று வலிந்து கொள்வதாகவே இருப்பினும் பின்வரும் ஏதுக்களால் அதைத் தென்சொல் என்று கொள்ளவும் இடமுண்டு.

   1. வடமொழியில் சிலை என்னும் சொற்கு மூலமில்லை. ஆரியர் இந்தியாவிற்கு வரும் முன்பே தமிழகத்தில் உருவக் கலை இருந்தது.

   2. உருவம், படிமை என்னும் தென்சொற்களும் வடசொல்லாகக் காட்டப்படுகின்றன. அவை போன்றே சிலை என்பதும்

   3. வேத ஆரியர்க்கு வேள்வி வழிபாடேயன்றி உருவ

வணக்கமில்லை.

   4. தென்னாடு வந்த பின்னரே தமிழரிடமிருந்து மேற்கொண்டனர்.

   5. சிலா என்னும் வடசொல்லில் இருமொழிப் பொதுவெழுத்தேயன்றி வடமொழிச் சிறப்பெழுத்தில்லை.

   6. தமிழ் ஐகாரவீறு வடமொழியில் ஆகார ஈறாய்த் திரிவது இயல்பே. எடு: மாலை → மாலா;வடை→ வடா.

   7. சிலா என்னுஞ் சொல் இருக்கு வேதத்திற்குப் பிற்பட்ட வடநூல்களிலேயே ஆளப்பட்டுள்ளது.

   8. சிலம்பு, சிலை என்னும் இரு (மலைப் பொருட் சொற்களும், தமிழில் சில் என்னும் ஒரே மூலத்தையும், ஒலித்தல் என்னும் ஒரே வேர்ப்பொருட்கரணியத்தையும் கொண்டுள்ளன.

   9. தமிழ் மேலை ஆரியத் திற்கும் அடிப்படைச் சொற்களை உதவிய பெருவளமொழி.

 சிலை6 cilai, பெ. (n.)

   சினம்; anger.

     “பொய்ச்சிலைக் குரலேற் றெருத்தமிறுத்த” (திவ். பெருமாள் 2:5, வியா. பக். 33);.

     [சில் → சிலை]

 சிலை7 cilai, பெ. (n.)

   1. புண்புரை; sore or wound or ulcer.

   2. புண்ணின் உட்டுளை; sinus of an ulcer or abscess (சா.அக.);.

சிலைக்கல்

சிலைக்கல் cilaikkal, பெ. (n.)

   1. செங்கற்கிட்டம்; over burnt brick.

   2. உருகிய கல்; molten rock of the volcanic region.

   3. காகச் சிலை; black load stone.

   4. ஈரக்கல் (யாழ்.அக.);; corundum.

     [சிலை + கல்]

சிலைக்கல்லிச்சி

 சிலைக்கல்லிச்சி cilaikkallicci, பெ. (n.)

   கற்பாங்குள்ள இடத்தில் முளைக்கும் இச்சி மரம்; yellow barked fig found grown instoney soil (சா.அக.);.

     [சிலை + கல் + இச்சி]

சிலைக்காரம்

சிலைக்காரம்1 cilaikkāram, பெ. (n.)

   செந்நாயுருவி; a red variety of nåyuruvi (சா.அக.);.

     [சிலை + காரம்]

 சிலைக்காரம்2 cilaikkāram, பெ. (n.)

   வெடிகாரம் (மூ.அ.);; a kind of salt – Caustic potash.

     [சிலை + காரம்]

சிலைக்காரி

 சிலைக்காரி cilaikkāri, பெ. (n.)

   அஞ்சன செய்நஞ்சு வகையுளொன்று (யாழ்.அக.);; a mineral poison.

     [சிலை + காரி]

சிலைக்கால்

சிலைக்கால் cilaikkāl, பெ. (n.)

   சித்தர் பயன்படுத்திய நூற்று இருபது இயற்கை மருந்துச் சரக்கு வகைகளுளொன்று; an unknown stone, which is classified as one of the 120 kinds of natural substances in Tamil sitta medicine (சா.அக.);.

மறுவ. முடவாட்டுக்கால்

     [சிலை + கால்]

சிலைக்கால்தூய்மை

 சிலைக்கால்தூய்மை cilaikkāltūymai, பெ. (n.)

   வைப்பு நஞ்சு வகையுளொன்று; a kind of native arsenic (சா.அக.);.

     [சிலைக்கால் + தூய்மை]

சிலைக்குள்தீட்டு

 சிலைக்குள்தீட்டு cilaikkuḷtīṭṭu, பெ. (n.)

சிலையொழுக்கு பார்க்க;see Silas-y-olukku (சா.அக.);.

     [சிலைக்குள் + தீட்டு]

சிலைக்கெந்தி

 சிலைக்கெந்தி cilaikkendi, பெ. (n.)

   கந்தகம் சேர்ந்த கல் (யாழ்.அக);; sulphur ore.

     [சிலை + கெந்தி]

சிலைச்சத்து

 சிலைச்சத்து cilaiccattu, பெ. (n.)

   கல்மதம்; bitumen, fossil exudation.

மறுவ. சிலைநஞ்சு, சிலைத்தாது

     [சிலை + சத்து]

சிலைச்சாசனம்

 சிலைச்சாசனம் cilaiccācaṉam, பெ. (n.)

   கொடை முதலியவற்றைக் குறித்துப் பொறிக்கப்படும் கற்பட்டயம்; stone inscription.

     [சிலை + சாசனம். சிலை = கல் சாசனம் = ஆவணம்]

த. சிலைச்சாசனம் → Skt. சிலாசாசனம்

சிலைச்சூதம்

 சிலைச்சூதம் cilaiccūtam, பெ. (n.)

   எளிதில் உடையுந்தன்மையுள்ள நீலக்கல்; sulphate of antimony (சா.அக.);.

     [சிலை + சூதம்]

சிலைச்செம்மண்

 சிலைச்செம்மண் cilaiccemmaṇ, பெ. (n.)

   செம்மையும் மஞ்சளுங் கலந்த கற்காவி; redochre.

     [சிலை + செம்மண்]

சிலைத்தண்ணீர்

 சிலைத்தண்ணீர் cilaittaṇṇīr, பெ. (n.)

சிலைநீர் பார்க்க;see Silai-nir.

     [சிலை + தண்ணீர்]

சிலைத்தாசி

 சிலைத்தாசி cilaittāci, பெ. (n.)

   திருமால் உருவமாகக்கொண்டு பூசித்தற்குரிய கண்டகிச் சிலை; black fossil ammonite worshipped of a form a Tirumal chiefly found in the river Gandak.

மறுவ. சாளக்கிராமம்

சிலைத்தைலம்

சிலைத்தைலம்1 cilaittailam, பெ. (n.)

   1. மருந்தெண்ணெய் வகையுளொன்று; a kind of essential medicinal oil.

   2. பாறையெண்ணெய்; rock oil.

   3. நிலத்தடி எண்ணெண்ணெய்; earth oil or crude oil.

   4. மண் நெய்மம்; bitumen.

   5. புண் புரைகளுக்கிடும் மருந்தெண்ணெய்; a medicated oil or ointment used chiefly for putrified sores (சா.அக.);.

     [சிலை + தைலம்]

 Skt. taila → த. தைலம்

சிலைநாகம்

 சிலைநாகம் cilainākam, பெ. (n.)

   சூடாலைக் கல் (வின்.);; a mineral.

சிலைநார்

 சிலைநார் cilainār, பெ. (n.)

   கல்நார் (சங்.அக);; asbestos.

     [சிலை + நார்]

சிலைநிறக்கல்

 சிலைநிறக்கல் cilainiṟakkal, பெ. (n.)

   கருநிறக்கல் (மாமிசசிலை); வகை (யாழ்.அக);; a kind of black stone.

     [சிலை + திறம் + கல்]

சிலைநீர்

 சிலைநீர் cilainīr, பெ. (n.)

   காயம் பட்ட புண்ணினின்று வடியும் நீர்; a thin and coloured discharge issuing out from wounds, etc. (சா.அக.);.

     [சிலை + நீர்]

சிலைநீர்சொரி-தல்

 சிலைநீர்சொரி-தல் cilainīrcoridal, தொ.பெ.(n.)

   புண்புரையினின்று நீர் வடிதல்; a thin watery acrid humour or discharge from sinus of sores, wounds, ulcers etc.,

     [சிலை + நீர் சொரி-,]

சிலைபாரி-த்தல்

சிலைபாரி-த்தல் cilaipārittal,    4 செகுவி (v.i.)

   வில் வளைத்தல் (சீவக.2286,உரை.);; to bend the bow.

     [சிலை + பாரி-,]

சிலைப்பலா

 சிலைப்பலா cilaippalā, பெ. (n.)

   கற்பலா; stone jack (சா.அக.);.

     [சிலை + பலா]

சிலைப்பாசி

 சிலைப்பாசி cilaippāci, பெ. (n.)

   பாறைகளின் மேல் படருந்தன்மையுள்ள புல்லுருவி வகையைச் சார்ந்த் பூடு; rock-moss or lichen or order of cryptogenic plant (சா.அக.);.

     [சிலை + பாசி]

சிலைப்புல்

 சிலைப்புல் cilaippul, பெ. (n.)

மலைப்புல்:

 mountain grass (சா.அக.);.

     [சிலை + புல்]

சிலைமா

 சிலைமா cilaimā, பெ. (n.)

   மாக்கல் (யாழ்.அக);; soap-stone.

     [சிலை + மா]

சிலைமான்கல்

 சிலைமான்கல் cilaimāṉkal, பெ. (n.)

   அரத்தின மணிவகையுளொன்று; agate orsolomonstone.

     [சிலைமான் + கல்]

சிலைமூலக்காரம்

 சிலைமூலக்காரம் cilaimūlakkāram, பெ. (n.)

   படிகாரம் (சீனக்காரம்);; alum stone.

     [சிலை + மூலக்காரம்]

சிலைமெழுகு

 சிலைமெழுகு cilaimeḻugu, பெ. (n.)

   தலைச்சூட்டு வள்ளி; Indian birth-wort.

     [சிலை + மெழுகு]

சிலையடி-த்தல்

சிலையடி-த்தல் cilaiyaḍittal,    4 செகுன்றாவி, (v.t.)

   கல்லில் உருவம் அமைத்தல் (உவ);; to carve in a stone.

     [சிலை + அடி-,]

சிலையரசன்

 சிலையரசன் silaiyarasaṉ, பெ. (n.)

   மணிகளுள் அரசனாகிய வைரம் (யாழ்.அக);; diamond, as the king of stones.

     [சிலை + அரசன்]

சிலையாதனம்

சிலையாதனம் cilaiyātaṉam, பெ. (n.)

   சிவனிய வோக நிலையு ளொன்று (தத்துவப். 109, உரை.);; a yogic posture.

     [சிலை + ஆதனம்]

சிலையாவி

 சிலையாவி cilaiyāvi, பெ. (n.)

சிலைநார் (வின்.); பார்க்க;see Silai-nar.

     [சிலை + ஆவி]

சிலையிராசன்

 சிலையிராசன் cilaiyirācaṉ, பெ. (n.)

சிலையரசன் பார்க்க;see Silas-y-arasan.

மறுவ. சிலையரசன்

     [சிலை + இராசன்]

சிலையுஞ்சை

 சிலையுஞ்சை cilaiyuñjai, பெ. (n.)

   நறுமண மிக்க மரவகை; fragrant sirissa.

     [சிலை + உஞ்சை]

சிலையுடம்பு

 சிலையுடம்பு cilaiyuḍambu, பெ. (n.)

   புண் கட்டிகள் அடிக்கடி புறப்படுதற்குரிய உடல் அமைப்பு; bodily constitution which has a tendency to skin eruptions.

     [சிலை + உடம்பு]

சிலையுருக்குக்கல்

சிலையுருக்குக்கல் cilaiyurukkukkal, பெ. (n.)

   1. உருக்காங்கல் (யாழ்.அக);;  overburnt brick.

   2. செங்கல்; brick.

     [சிலை + உருக்கு + கல்]

சிலையூஞ்சில்

 சிலையூஞ்சில் cilaiyūñjil, பெ. (n.)

   காட்டுத் துரிஞ்சல்; fragrant acacia.

     [சிலை + ஊஞ்சில்]

சிலையெண்ணெய்

 சிலையெண்ணெய் cilaiyeṇīey, பெ. (n.)

   புண்ணிற்கிடும் மருந்தெண்ணெய்; medicatedoil used externally for wounds (சா.அக.);.

     [சிலை + எண்ணெய்]

சிலையெழும்பு-தல்

சிலையெழும்பு-தல் cilaiyeḻumbudal,    10 செ.கு.வி. (v.i.)

   எதிரொலியுண்டாதல்; to echo.

     “பறையர்கொட்டு முழக்காலும் … பாட்டாலும் எங்கும் சிலையெழும்பிற்று” (எங்களூர், 104);,

     [சிலை3 + எழும்பு-,]

சிலையொழுக்கு

 சிலையொழுக்கு cilaiyoḻukku, பெ. (n.)

   கல் மதம்; bitumen exuding from rocks during summer.

சிலையோடு

சிலையோடு2 cilaiyōṭudal, செ.கு.வி. (v.i.)

   எதிரொலித்தல் (வின்.);; to echo, as rocks.

     [சில்லி3 + ஓடு-,]

சிலையோடு-தல்

சிலையோடு-தல் cilaiyōṭudal, செ.கு.வி. (v.i)

   மலைகளில் எதிரொலிக்கும் ஓசை; to echo sound in mountain.

     [சிலை+ஒடு]

 சிலையோடு-தல் cilaiyōṭudal,    5 செ.குவி (v.i.)

   புரையோடுதல் (வின்.);; to burrow into the flesh, as a fistula.

     [சில்லி2 + ஓடு-,]

சிலையோடுபுண்

சிலையோடுபுண் cilaiyōṭubuṇ, பெ. (n.)

   1. புரையோடும் புண்; a deep-seated sore.

   2. உள் மூல நோய்; internal fistula (சா.அக.);.

     [சிலை + ஓடு + புண்]

சிலையோட்டம்

 சிலையோட்டம் cilaiyōṭṭam, பெ. (n.)

   புரையோடுகை; formation of sinuses in a wound or abscess.

     [சிலை + ஒட்டம்]

சிலைவங்கம்

சிலைவங்கம் cilaivaṅgam, பெ. (n.)

   1. செய் நஞ்சு வகையுளொன்று (யாழ்.அக.);; a mineral poison.

   2. ஈயக் கல்; lead sulphide.

     [சிலை + வங்கம்]

சிலைவாகை

 சிலைவாகை cilaivākai, பெ. (n.)

   பீலி வாகை; stipulate srissa.

     [சிலை + வாகை]

சிலைவாழை

 சிலைவாழை cilaivāḻai, பெ. (n.)

கல் வாழை,

 stone plantain.

     [சிலை + வாழை]

சிலைவிந்து

 சிலைவிந்து cilaivindu, பெ. (n.)

சிலைநார் (வின்.); பார்க்க;see Silai-nar.

மறுவ. கல்நார்

     [சிலை + விந்து]

சிலைவைரம்

 சிலைவைரம் cilaivairam, பெ. (n.)

   வயிரக்கல் (வின்.);; diamond.

     [சிலை + வைரம்]

சில்

சில்1 cil, பெ.எ. (adj.)

   1. சில; some, few.

   2. சிறியதான, small, slight.

     “விராவு சில்லுணா மிசைந்தனர்” (கந்தபு. வள். 209);.

   3. நுண்மையான (திருக்கோ. 196, உரை);; fine.

     [சுல் → சில் = சிற்றளவு]

 சில்2 cil, பெ. (n.)

   1. சிறுதுண்டு; small piece, as of broken glass.

கண்ணாடிச்சில், தேங்காய்ச்சில்.

   2. ஒட்டுச்சீலை; small patch of cloth.

   3. வட்டமானது; anything flat and round, as eye-glass, wheel.

   4. உருளை; wheel, as of a car.

   5. தலையணி வகை (இ.வ.);; a kind of hairornament.

   6. கடற்சில் (யாழ்ப்);; flat roundstone or seed of a sea-plant.

     [சுல் → சில் = சிறியது, துண்டு]

 சில்3 cil, பெ. (n.)

   1. ஆரவாரம் (வின்.);, ஒலி; sound.

   2. இரைச்சல் (வின்.);; noise.

 சில்4 cil, பெ. (n.)

   1. மூடி (இ.வ.);; cover.

   2. மூக்குக் கண்ணாடி (யாழ்.அக.);; spectacles.

 சில்5 cil, பெ. (n.)

   குளிர்ச்சி; chillness.

சில்காற்று

சில்காற்று cilkāṟṟu, பெ. (n.)

   தென்றல்; gentle South wind.

     “சில்காற் றிசைக்கும் பல்புழை நல்லில்” (மதுரைக். 358);.

     [சில் + காற்று]

சில்சொல்

சில்சொல் cilcol, பெ. (n.)

   மென்மொழி; soft or gentle speech.

     “சில்சொற் பெருந் தோண் மகளிரும்” (திரிகடு.47);.

     [சில → சில். சில் + சொல்]

சில்பதவுணவு

சில்பதவுணவு cilpadavuṇavu, பெ. (n.)

   பக்குவப்படுத்துவதற்குச் சிறிதளவாகக் கூட்டப்பெறும் உணவுப்பொருளாகிய உப்பு; salt, as an article used in small quantities for scasoning.

     “சில்பத வுணவின் கொள்ளை சாற்றி” (பெரும்பாண். 64);.

     [சில் + பதம் + உணவு]

சில்பி

 சில்பி cilpi, பெ. (n.)

   கடல்மீன் வகை; a kind of sea-fish.

சில்மூக்கு

சில்மூக்கு cilmūkku, பெ. (n.)

   1. மூக்கிலிருந்து அரத்தமொழுகும்நோய்; epistaxis.

   2. அரத்தம் வடியும் மூக்கு; bleeding nose.

     [சில்லி → சில் + மூக்கு]

சில்லகி

 சில்லகி cillagi, பெ. (n.)

சில்லம் (சூடா.); பார்க்க;see Sillam.

     [சில்வம் → சில்லகி]

சில்லங்கெடு-தல்

சில்லங்கெடு-தல் cillaṅgeḍudal,    20 செகுவி (v.i.)

   1. சிதறுண்ணுதல் (யாழ்.அக.);; to be scattered,

   2. உடைதல்; to be broken.

     [சில்வம் + கெடு_,]

சில்லட்டைக்கடி

 சில்லட்டைக்கடி cillaḍḍaikkaḍi, பெ. (n.)

   நச்சுத் தன்மைமிக்க சிறிய அட்டைப்பூச்சியின் கடிவாய்; a poisonous leech-bite (சா.அக.);.

     [சில்லட்டை + கடி]

சில்லந்தட்டிப்போ_தல்

சில்லந்தட்டிப்போ_தல் cillandaṭṭippōtal, செகுவி (v.i.)

   வறுமையுட்படுதல் (யாழ்.அக.);; to become impoverished.

     [சில்லம்2 + தட்டிப்போ_,]

சில்லந்தராயம்

சில்லந்தராயம் cillandarāyam, பெ. (n.)

சில்வரி (தெ.க.தொ.5,501); பார்க்க;see Silvari.

     [சில் + அந்தராயம்]

சில்லபொல்லம்

 சில்லபொல்லம் cillabollam, பெ. (n.)

   சிறுதுண்டு;   சிறுபகுதி, நுண்மையான சில்; fragments, small pieces.

     [சில்வம் + பொல்லம்]

சில்லம்

சில்லம்1 cillam, பெ. (n.)

   1. தேற்றாமரம் (சூடா);; clearing nut tree.

   2. எட்டி (மலை);; nux vomica tree.

   3. தில்லைமரம்; tiger’s milk spurge.

க. சில்ல

 சில்லம்2 cillam, பெ. (n.)

   1. சிறுதுண்டு; shivers, fragments, small pieces.

   2. பொருள் முட்டுப் பாடு (வின்.);; extreme or pressing necessity, urgent straits.

க., தெ., சில்ல.

     [சிதிலம் → சில்லம்]

 சில்லம்3 cillam, பெ. (n.)

   தொட்டாற் சுருங்கி; sensitivity plant, touch-me-not (சா.அக.);.

சில்லம்பாய்

 சில்லம்பாய் cillambāy, பெ. (n.)

   கிழிந்தபாய் (யாழ்ப்.அக.);; worn-out mat.

     [சில்லம் + பாய்]

சில்லரங்கம்

 சில்லரங்கம் cillaraṅgam, பெ. (n.)

   முந்திரிப் பழம்; cashew fruit (சா.அக.);.

சில்லரி

 சில்லரி cillari, பெ. (n.)

   சிலம்பின் பருக்கைக் கற்கள் (யாழ்.அக.);; pebble inserted in tinkling anklets.

     [சில் + அரி]

சில்லர்

சில்லர்1 cillar, பெ. (n.)

   கிறீச்சென்று ஒலிக்கின்ற பூச்சி வகை (இ.வ.);; a kind of screeching insect.

     [சில் = ஒலிக்குறிப்பு; சில் → சில்வர்]

 சில்லர்2 cillar, பெ. (n.)

   வேடர் (சது.);; hunters.

மறுவ. வேட்டுவர்.

சில்லறை

சில்லறை1 cillaṟai, பெ. (n.)

   1. சிறுசிறு பகுதிகளாகக் கிடப்பவை; things scattered here and there in small quantities or amounts, sundries.

   2. மீதி எஞ்சியுள்ளவற்றின் தொகுதி; remainder.

     ‘நான் கொடுக்க வேண்டியதை எடுத்துக் கொண்டு சில்லறையைக் கொடு’.

   3. தேவைக்கு மேற்பட்ட கையிருப்பு; surplus.

     ‘சில்லறை ஆசை கல்லறை வரை விடாது’ (உ.வ.);

   4. சில்வானம்; fractional quantities over and above a round sum, odd.

     ‘பத்தே சில்லறை உரூபாய்’ (உ,வ.);.

   5. கீழ்வாய் எண்; an amount less than one, fraction.

   6. சிறுபாகம்; a small fraction.

   7. சிறு தொகையாக மாற்றும் பணம்; change, as of a rupee.

நூறு உரூபாய்க்குச் சில்லறை கொடு.

   8. காசு (நாணயம்);; change as of coin.

என்னிடம் பணமில்லை சில்லறைதான் இருக்கிறது.

   ம. சில்லற;   க. சில்லற, சில்றெ, சில்லறெ;   தெ. சில்லற;   து., பட. சில்லறெ;   கோத. சில்ர்;துட. சிலொர்

     [சில் + அறு – சில்லறு → சில்வறை]

 சில்லறை2 cillaṟai, பெ. (n.)

   1. மிகவும் சிறுமையானது; trifling, insignificant matter.

   2. மகளிர் காதணிவகை;   காதுச் சில்லறை (இ.வ.);; woman’s small ear-ornament.

   3. தொந்தரவான சிறு செயல்; petty, annoying business.

   4. திருடர் தொந்தரவு; trouble from thieves.

     “கள்ளர் சில்லறை” (வின்.);

   5. கொடு நோயால் ஏற்படும் இறப்பு (வின்.);; death from malignant diseases.

     [சில் + அறு – சில்வறு → சில்வறை]

சில்லறைகூடுதல்

சில்லறைகூடுதல் cillaṟaiāṭudal, பெ. (n.)

   1. பலவகைச் சிறு வருமானங்கள்; Sundry items.

   2. தஞ்சாவூர் மாவட்டத்தில் முகம்மதிய அரசு சுமத்திய தீர்வை மிகுதி; an extra tax imposed by the Muhammadan Government in Tanjavur district.

     [சில்லறை + கூடுதல்]

சில்லறைக் காசு

சில்லறைக் காசு cillaṟaikkācu, பெ. (n.)

   1. மாமழையில் வார்க்கப்பட்ட காசு; metal coins.

   2. சில்லறையாயுள்ள தொகை; small money change.

   3. சிறு கையூட்டு (இ.வ.);; petty bribe.

     [சில்வறை + காசு]

   க. சில்லற நாண்ய;து. சில்லரெகாசு

சில்லறைக் குடி

 சில்லறைக் குடி cillaṟaikkuḍi, பெ. (n.)

   சிறிதாகப் பயிரிட்டு வாழுங்குடிகள் (R.T.);; ryots who hold small holdings.

     [சில்லறை + குடி]

சில்லறைக்கடை

சில்லறைக்கடை cillaṟaikkaḍai, பெ. (n.)

   1. சிறிதளவாக வாணிகஞ் செய்யுங் கடை; shop dealing in miscellaneous things on a small scale, retail shop.

   2. பணமாற்றுக் கடை (இ.வ.);; exchange stall.

ம. சில்லறக்கட

     [சில்லறை + கடை]

சில்லறைக்கணக்கு

சில்லறைக்கணக்கு cillaṟaikkaṇakku, பெ. (n.)

   1. விளக்கம் அறியப்படாத சிறு தொகைகள் (வின்.);; small unaccounted sums.

   2. கணக்குப்பொத்தகத்தில் அங்குமிங்குமாகப் பதிவு செய்யப்பட்ட, சில்லறைக்குறிப்புகள்; sundry items promiscuously arranged in account.

ம. சில்லறக்குற்றி

     [சில்வறை + கணக்கு]

சில்லறைச்சாமான்

 சில்லறைச்சாமான் cillaṟaiccāmāṉ, பெ. (n.)

   உதிரிப்பொருள், மளிகைப் பொருள்; sundry articles of commerce, as grain etc., excluding cloth.

க. சில்லறெ சாமானு, து. சில்லரெ சாமான்

     [சில்லறை + சாமான்]

சில்லறைச்செலவினம்

 சில்லறைச்செலவினம் cillaṟaiccelaviṉam, பெ. (n.)

சில்லறைச்செலவு பார்க்க;see sillarai-c-cclavu.

     [சில்லறை + செலவினம். செலவு → செலவினம்]

சில்லறைச்செலவு

 சில்லறைச்செலவு cillaṟaiccelavu, பெ. (n.)

   சிறிய தொகைக்கான செலவு; the non descriot petty expenses.

   ம. சில்லறச் செலவு;   க. சில்லறகர்சு;து. சில்லரெகர்சு

     [சில்லறை + செலவு]

சில்லறைதீர்-த்தல்

சில்லறைதீர்-த்தல் cillaṟaitīrttal,    4 செ.குவி (v.i.)

   நிலுவை, கடன் முதலியவற்றை முடித்தல் (இ.வ.);; to settle outstandings or debts.

     [சில்லறை + தீர்_,]

சில்லறைத்தட்டுப்பாடு

 சில்லறைத்தட்டுப்பாடு cillaṟaittaṭṭuppāṭu, பெ. (n.)

   சில்லறைக் குறைபாடு; lack of coins.

     [சில்லறை + தட்டுப்பாடு]

சில்லறைப்பணம்

 சில்லறைப்பணம் cillaṟaippaṇam, பெ. (n.)

   குறிப்பிட்ட முழு எண்ணுக்குக் குறைவான பணம்; small money, change.

   க. சில்லறரொக்க;பட. சில்லரெகண.

     [சில்லறை + பணம். படம் → பணம்]

சில்லறைப்பணி

 சில்லறைப்பணி cillaṟaippaṇi, பெ. (n.)

   சிறுசிறு பணிகள்; small works.

   க. சில்லறெகெலச;   து. சில்லரெ கெலச;பட. சில்லரெ கெலச

     [சில்லறை + பணி]

சில்லறைப்புத்தி

சில்லறைப்புத்தி cillaṟaipputti, பெ. (n.)

   1. சிறுமைத்தனம்; silliness, mean-mindedness.

   2. மழுங்கியவறிவு (வின்.);; shallow wit.

   3. கூடாவொழுக்கம் (வின்.);; adultcry.

து. சில்லரெபுத்தி

     [சில்லறை + புத்தி]

சிற்றறிவு பார்க்க

சில்லறையங்காடி

 சில்லறையங்காடி cillaṟaiyaṅgāṭi, பெ. (n.)

   அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற பொருள்களை விற்கும் மளிகைக்கடை; a shop of sundry articles, as rice, pulse, oil, etc., with the exclusion of cloth, petty shop.

   க. சில்லறெயங்காடி;து. சில்லரெ அங்கடி

     [சில்லறை + அங்காடி]

சில்லறையாட்கள்

சில்லறையாட்கள் cillaṟaiyāṭkaḷ, பெ. (n.)

   1. சிறப்பற்றவர்; unimportant persons.

   2. தொந்தரவு செய்யும் புல்லியர்; troublesome people.

   3. எடுபிடி ஆட்கள்; ordinary coolies.

   ம. சில்லறக்காரன்;   தெ. சில்லறவாண்டுலு;து. சில்ரெசன

     [சில்லறை + ஆட்கள்]

சில்லறைவணிகம்

 சில்லறைவணிகம் cillaṟaivaṇigam, பெ. (n.)

   மொத்த விற்பனையாளரிடமிருந்து பெற்று நுகர்வோருக்கு விற்கும் வணிகம்; retail trade.

ம. சில்லறகச்சவடம்

     [சில்வறை + வணிகம்]

சில்லறைவணிகர்

 சில்லறைவணிகர் cillaṟaivaṇigar, பெ. (n.)

   மொத்த விற்பனையாளரிடமிருந்து பெற்று நுகர்வோருக்கு விற்கும் வணிகர்; a retail merchant.

ம. சில்லறகச் சவடக்காரன்

     [சில்லறை + வணிகர்]

சில்லறைவிற்பனை

 சில்லறைவிற்பனை cillaṟaiviṟpaṉai, பெ. (n.)

   பொருட்களைச் சில்லறையாக விற்கும் வணிகம்; retail trade.

ம. சில்லறவில்பன

     [சில்லறை + விற்பனை]

சில்லறைவேலை

 சில்லறைவேலை cillaṟaivēlai, பெ. (n.)

சில்லறைப்பணி பார்க்க;see Sillarai-p-pani.

   க. சில்லலெறகெலச;   து. சில்லரெ கெலச;பட சில்லரெ கெலச

     [சில்லறை + வேலை]

சில்லாக்கோல்

சில்லாக்கோல் cillākāl,    5 பெ. (n)

எலி பாம்பு போன்றவற்றைக் கொல்ல கூரான கொம்பு பொருத்தப்பட்ட மூங்கில் கழி:

 spiked stick. [சில்லா+கோல்]

சில்லாக்கோல்பாய்ச்சு-தல்

 சில்லாக்கோல்பாய்ச்சு-தல் cillākālpāyccudal, செ.கு.வி. (v.i.)

   முழங்கால்களுக்குள் இரு கைகளையும் விட்டு அவற்றை நிலத்திற் பதிய வைத்து அம்முழங்கால்கைகளிடையே கோலைவிட்டு இறுக்கி அசையாதிருக்கும் படி குற்றவாளியை ஒறுத்தல் (இவ);; to punish a person by making him sit with his hands across the knees and with a stick thrust between, making it impossible for him to move.

தெ. ஜில்ல.

     [சில்லாக்கோல் + பாய்ச்சு_,]

சில்லாங்குச்சி

சில்லாங்குச்சி cillāṅgucci, பெ. (n.)

   கிட்டிப்புள் (இ.வ.);; game of tipcat.

     [சில்1 + ஆம் + குச்சி]

சில்லாடை

 சில்லாடை cillāṭai, பெ. (n.)

சில்லாட்டை (இ.வ.); பார்க்க;see Sillattai.

     [சில்லாட்டை → சில்லாடை)

சில்லாட்டு

சில்லாட்டு cillāṭṭu, பெ. (n.)

சில்லறை1 (யாழ்ப்.); பார்க்க;see Sillarai1.

     [சில்1 + ஆட்டு = சில்லாட்டு]

சில்லாட்டை

 சில்லாட்டை cillāṭṭai, பெ. (n.)

   பன்னாடை (இ.வ.);; fibrous covering around the top of palms.

     [இல் → சில் + ஆடை – சில்லாடை – சில்லாட்டை]

சில்லான்

சில்லான் cillāṉ, பெ. (n.)

   தெருக்கூத்தில் பயன்படுத்தப்படும் இசைக்கருவி வகை; a music instrument.

     [சில்லை-சில்லான்]

 சில்லான் cillāṉ, பெ. (n.)

   1. ஒருவகைச் சிறிய ஒந்தி (யாழ்ப்.);; small blood sucker.

   2. குருவி வகை; a small bird.

   3. சிறுவர் விளையாட்டு, சில்லான் குடுகுடு (யாழ்ப்.);; a boy’s game.

   4. கறையான் (இ.வ.);; white ant.

     [சுல் → சில் = சிறியது, துண்டு சில் → சில்லான் (மு.தா. 129);]

 சில்லான் cillāṉ, பெ. (n.)

   தெருக்கூத்தில் பயன் படுத்தப்படும் ஓர் இசைக் கருவி; a little musical instrument asthala used in Street play.

     [சில்-சில்லான்]

சில்லான்குடுகுடு

 சில்லான்குடுகுடு cillāṉguḍuguḍu, பெ. (n.)

   சடுகுடு விளையாட்டு (யாழ்ப்.);; a boy’s game.

     [சில்லான் + குடுகுடு]

சில்லான்தட்டு-தல்

 சில்லான்தட்டு-தல் cillāṉdaṭṭudal, செ.கு.வி. (v.t.)

   ஒருவரின் கருத்துக்கு ஒத்துப் போய்ப் பேசுதல்; co-operate to one another.

சில்லாவலி

 சில்லாவலி cillāvali, பெ. (n.)

   வீண்கலகம் (இ.வ.);; petty infructuous disturbance.

தெ. சில்ல

     [சில் = சில்வறை, சிறியது. வலி = வருத்தம், துன்பம், சில் + வலி = சில்வலி → சில்லாவலி]

சில்லி

சில்லி1 cilli, பெ. (n.)

   சிள்வண்டு; cricket.

     “சில்லி சில்லென் றொல்லறாத” (திவ். பெரியதி.1,7:9.);.

 Skt. jhila.

     [சில் → சில்லி. ‘சில்’ ஒலிக்குறிப்பு]

 சில்லி2 cilli, பெ. (n.)

   ஒட்டை, விரிசல், துளை; leak, crack, hole.

ம., க., தெ. சில்லி

     [இல்லி → சில்லி]

 சில்லி3 cilli, பெ. (n.)

   1. வட்டம் (பிங்.);; circle.

   2. தேருருளை; car wheel.

     “வெள்ளிச் சில்லிபுக் குற்றது” (கம்பரா. கடிமண. 71);

   3. சிறுகீரை; field spinach.

     “சில்லி தங்குமென் யாத்தி” (திருவிளை. அருச். 29.);.

   4. துண்டு; small broken piece of stone etc.,

     “திரிந்தன சிகரச் சில்லி” (கம்பரா. சேதுபந். 22.);

க. சல்லி

     [சில்1 → சில்லி)

 சில்லி4 cilli, பெ. (n.)

   1. புண்துளை; sinus of a wound.

   2. மெல்லியதோல்; membrane (சா.அக.);.

 சில்லி cilli, பெ.(n.)

   ஒடு அல்லது கல்லை வட்டம், சதுரம் வடிவங்களில் அமைத்து விளையாடுதல்; a children’s play.

     [சில்-சில்லி]

சில்லாக்கு, தெல்லாக்கு எத்துமாங் கொட்டை, பாண்டி, ஒண்ணான் இரண்டான், வட்டு என்றும் அழைக்கப்படுகிறது.

சில்லிகாதபம்

 சில்லிகாதபம் cillikātabam, பெ. (n.)

   தொண்டையில் மெல்லியதாய் ச் சதை வளர்ந்ததால், ஏற்படும் அழற்சி; an inflammatery disease of the throat with the formation of a false membrane-diphtheris (சா.அக.);.

சில்லிகுத்தியவோடு

 சில்லிகுத்தியவோடு cilliguttiyavōṭu, பெ. (n.)

   துளைகளிட்ட ஒட்டுப் பாளம்; a piece of file perforated holes (சா.அக.);.

     [சல்வி = சிறு துனை. சல்லி → சில்லி. சில்லி + குத்திய ஒடு]

சில்லிகை

சில்லிகை1 cilligai, பெ. (n.)

   சுவர்க்கோழி (சூடா);; cricket

   2. நல்லாடை வகை (சிலப்.14, 108, உரை.);; a kind of superfine cloth.

     [சில்லி + கை]

 சில்லிகை2 cilligai, பெ. (n.)

   கதிரொளி; sun’s rays (சா.அக);.

     [சில்லி + கை]

சில்லிக்கரண்டி

சில்லிக்கரண்டி cillikkaraṇṭi, பெ. (n.)

   1. மரம் அல்லது இரும்பினாலாகியதும், துளைகள் அமைந்ததும் மருந்து வடிகட்டப் பயன் படுவதுமான சிறியி அகப்பை; a wooden or iron spoon with small holes for filtering.

   2. சில்லியகப்பை; a colander used in cookery (சா.அக.);.

     [சல்லி = சிறு சிறுதுளை. சல்விக் கரண்டி → சில்விக்கரண்டி]

சில்லிக்காது

சில்லிக்காது cillikkātu, பெ. (n.)

   சிறு தொளைக் காது (இ.வ.);; boredear dist. fr. Tolai-k-kadu.

     [சில்லி2 + காது.]

சில்லிக்கோல்

சில்லிக்கோல் cillikāl, பெ. (n.)

   ஒருவகைச் சிறுகம்பு; a kind of small stick.

     “சில்லிக்கோ லெடுத்துக் கண்ணிசேர்த்து” (குற்றா. குற. 79.);.

தெ. சில்லகோல

     [சில்லி + கோல்]

சில்லிசாகம்

 சில்லிசாகம் cillicākam, பெ. (n.)

   சிறுகீரை; pigs greens (சா.அக.);.

சில்லிடல்

சில்லிடல் cilliḍal,    20 செ.கு.வி. (v.i.)

சில்லிடுதல் பார்கக;see Sillidu-.

சில்லிடு_தல்

சில்லிடு_தல் cilliḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   1. குளிர்ந்து போதல்; to become chill.

   2. ஒலித்தல் (சங்.அக.);; to buzz, as bees.

   3. அச்சங் கொண்டு நடுங்குதல் (வின்.);; to thrill with a sudden sensation of fear.

   4. சினம் நீர்க்கோப்பு முதலியவற்றால் முகஞ்சிவத்தல் (யாழ்ப்.);; to blush, to be flushed with rage, to be red in the face from cold, from weeping.

ம. சில்லிடுக

     [சில் + இடு_,]

சில்லிட்டுச்சீலைசெய்-தல்

 சில்லிட்டுச்சீலைசெய்-தல் silliṭṭussīlaiseytal, செ.கு.வி. (v.i.)

சில்லுப்போடு_தல் பார்க்க;see Sillu-p-podu-.

சில்லிட்டுப்போ-தல்

 சில்லிட்டுப்போ-தல் cilliṭṭuppōtal, செ.கு.வி. (v.i.)

   இறப்பின் அறிகுறியாக உடம்பு முழுதுங்குளிர்ந்து போதல்; losing the ordinary warmth of the body which becomes chill, as a sign of death (சா.அக.);.

     [சில் → சில்லிட்டு. சில்லிட்டு + போ_,]

சில்லிதம்

 சில்லிதம் cillidam, பெ. (n.)

   தேற்றா மரம்; water clearing tree (சா.அக.);.

சில்லிப்பலம்

 சில்லிப்பலம் cillippalam, பெ. (n.)

   இலைமேற் காய்; bridal couch plant (சா.அக.);.

     [சில்லி + பலம்]

சில்லிமூக்கு

சில்லிமூக்கு cillimūkku, பெ. (n.)

   1. குருதி வடியும் மூக்கு; bleeding nose.

   2. மூக்குநுனி (இ.வ.);; tip of the nose.

     [சில்லி + மூக்கு]

சில்லிமூக்குடை_தல்

சில்லிமூக்குடை_தல் cillimūkkuḍaidal,    2 செ.கு.வி. (v.i.)

   மூக்கினின்று குருதி வடிதல்; to bleedin the nose.

     [சில்லி2 + மூக்கு + உடை_,]

சில்லியகப்பை

சில்லியகப்பை cilliyagappai, பெ. (n.)

   சல்லடைக் கண் போன்ற சில்லிகளையுடைய அகப்பை (தைலவ.பாயி.37,உரை.);;  flat perforated ladle.

     [சில்லி + அகப்பை]

சில்லியடை

சில்லியடை cilliyaḍai, பெ. (n.)

   சல்லடை வகை (தைலவ.பாயி.22);; a kind of covered sieve.

     [சில்லி2 + அடை. அடு → அடை]

சில்லியடை_த்தல்

 சில்லியடை_த்தல் cilliyaḍaittal, செ.கு.வி. (v.i.)

சில்லிடு-தல் பார்க்க;see illidu-, (சா.அக);.

சில்லியம்புள்ளி

 சில்லியம்புள்ளி cilliyambuḷḷi, பெ.(n.)

   பெரியகுளம் வட்டத்திலுள்ள சிற்றுர்; a village in Periyakulam Taluk.

     [சில்லியன்+பள்ளி]

சில்லியரத்தம்

சில்லியரத்தம் cilliyarattam, பெ. (n.)

   1. பொசியும் குருதி (யாழ்.அக.);; oozing blood.

   2. உரைந்த அரத்தம்; coagulated blood (சாஅக.);.

     [சில்லி2 + அரத்தம்]

சில்லியாடு

 சில்லியாடு cilliyāṭu, பெ. (n.)

   அளவிற்சிறிய காதுள்ள செம்மறியாடு; a kind of brown sheep

     [சில்லை+ஆடு]

சில்லியூ_த்தல்

சில்லியூ_த்தல் cilliyūttal,    4 செ.கு.வி. (v.i.)

   கண் கூசும்படியிருத்தல் (யாழ்ப்.);; to be dazzled, as eyes.

     [சில்லி3 + பூ_,]

சில்லியெடு_த்தல்

சில்லியெடு_த்தல் cilliyeḍuttal,    4 செ.கு.வி. (v.i.)

   முடமாக்கல்; to break the leg by taking off the knee-cap, said by person in fury (சா.அக.);.

     [சில்லி + எடு ,]

சில்லிறை

சில்லிறை cilliṟai, பெ. (n.)

சில்லறை வரி

 petty taxes.

     [சில்லி3 + இறை]

சில்லிவாயன்

சில்லிவாயன் cillivāyaṉ, பெ. (n.)

   வாயில் வந்ததைப் பிதற்றுபவன்; a babbler, as leaky-Mouthed.

     “சில்லிவாயர் சொல்லுவார்” (பெரியபு. திருஞான.776);.

மறுவ. சல்லிவாயன்

     [சில்லி2 + வாயன்]

சில்லு

சில்லு1 cillu, பெ. (n.)

   1. துண்டு, உடைந்த கற்சில்; broken piece, as of stone.

     “கல்லுச் சில்லுப் பொருநாசிக் கேழல்” (திருப்போ. சந். அலங்.18);.

   2. வட்டமாயுள்ள விளையாட்டுக் கருவி; a round piece used by children in play.

   3. கண்ணாடிச் சில்லு; glass pane.

   4. சக்கரம் (இ.வ.);; wheel.

   5. முழங்காற் சில்லு; knee cap, as being round.

   6. நொண்டி விளையாட்டு; a game of hopscotch played with potsherd.

   உடைந்த புதியவோடு; broken piece of a new pot (சா.அக.);.

ம., து. சில்ல

     [சில்1 → சில்லு]

 சில்லு2 cillu, பெ. (n.)

   பெருங்கொடி வகை (L.);; a kind of scimitar-pod.

மறுவ. இரிக்கி

சில்லுக்கருப்பட்டி

சில்லுக்கருப்பட்டி cillukkaruppaṭṭi, பெ. (n.)

   துய்மைப்படுத்திய பனைவெல்லச் சிறுகட்டி; a superior kind of spiced jaggery.

     [சில்லு1 + கருப்பட்டி. சுல் → சில் = சிறியது. துண்டு, சிற்றளவு. சில்லுக் கருப்பட்டி = சிறு கருப்புக்கட்டி. கருப்பு கட்டி → கருப்புக்கட்டி → கருப்பட்டி (மு.தா. 140);]

சில்லுக்குந்து_தல்

சில்லுக்குந்து_தல் cillukkundudal, செ.கு.வி. (v.i.)

   . பாண்டிவிளையாடுதல் (வின்.);; to play hopscotch.

     [சில்லு1 + குத்து_,]

சில்லுசெய்_தல்

சில்லுசெய்_தல் silluseytal,    1. செ.கு.வி. (v.i.)

சில்லுப்போடு_தல் பார்க்க;see sillu-p-podu (சா. அக.);.

     [சில்லு1 + செய்_,]

சில்லுணா

சில்லுணா cilluṇā, பெ. (n.)

   சிற்றுண்டி (இலக்.அக.);; light refreshments.

     [சில்1 + உண்டி;உணவு = உணா]

சில்லுண்டி

சில்லுண்டி cilluṇṭi, பெ. (n.)

   1. சிறுமையானது; trifling thing.

   2. புல்லன் (இ.வ.);; mean person.

   3. சிறுகுழந்தைகள் (வின்.);; little children.

     [சில் + உண்டி]

சில்லுப்பு

 சில்லுப்பு cilluppu, பெ. (n.)

கல்லுப்பு:

 crystallised salt (சா.அக.);.

     [சில் = சிறுதுண்டு, சில் + உப்பு]

சில்லுப்போடு_தல்

சில்லுப்போடு_தல் cilluppōṭudal,    20 செ.கு.வி. (v.i.)

   1. மருந்திட்ட பாண்டத்தை ஒடு வைத்து மூடிய பின் சீலை மண் செய்தல்; to lute a vessel containing medicine by covering the lid with a piece of tile (சா.அக.);.

     [சில்லு + போடு_,]

சில்லுமாங்கொட்டை

 சில்லுமாங்கொட்டை cillumāṅgoṭṭai, பெ. (n.)

   மாங்கொட்டை வகை (இ.வ.);; a kind of mango seed which resembles the stone of a mango.

     [சில்லு + மாங்கொட்டை]

சில்லுமூடிசீலைசெய்_தல்

 சில்லுமூடிசீலைசெய்_தல் sillumūṭisīlaiseytal, செ.கு.வி. (v.i.)

சில்லுப்போடு_தல் பார்க்க;see sillu-p-pogu- (சா.அக.);.

     [சில்லு + மூடி + சீலை + செய் _,)

சில்லுமூடு_தல்

 சில்லுமூடு_தல்  cillumūṭudal, செ.கு.வி. (v.i.)

சில்லுப்போடுதல் பார்க்க;see sillu-p-polu (சாஅக.);.

     [சில் → சில்லு;சில்லு + மூடு_,]

சில்லூறு

 சில்லூறு cillūṟu, பெ. (n.)

   சிள்வண்டு; cricket.

     [சில் + ஊறு. உறு → ஊறு]

சில்லெடு_த்தல்

சில்லெடு_த்தல் cilleḍuttal,    4 செ.கு.வி. (v.i.)

   சட்டப்படி ஒருவரைப் பிடித்து, முறைமன்றம், காவல் நிலையம் முதலியவற்றில் ஒப்படைக்க ஆணை பெறுதல் (இ.வ.);; to take out a warrant.

     [சில் + எடு-,]

சில்லெனல்

சில்லெனல் cilleṉal, பெ. (n.)

   1. குளிர்ந்திருக்கைக் குறிப்பு; onom. expr. of being very chill.

     “சில்லென் றென்னு டம்பும் …………. குளிர் வித்த தாண் மலர்கள்” (அருட்பா.4, அருட்பிர. 74);.

   2. புலன்களுக்கு இன்பமூட்டுங் குறிப்பு; being pleasant to the senses.

     “மழலைச் சில்லென் கிளவி” (கூர்மபு. திருக்கல்யாண. 47);

   3. முக மலர்ச்சிக் குறிப்பு; being cheerful in countenance

   4. ஒலியின்மைக் குறிப்பு; absence of bustle.

     ‘இரவில் ஊர் சில்லென்றிருக்கிறது’ (உவ);

   5. ஒலிக் குறிப்பு வகை; shrill sound.

     “சில்லி சில்லென் றொல்லறாத” (திவ். பெரியதி.17:9);.

     [சில்2 + எனல்]

சில்லெலும்பு

 சில்லெலும்பு cillelumbu, பெ. (n.)

   முழங்காற் சில்லெலும்பு; knec-cap bone (சா.அக);.

     [சில் = சிறுதுண்டு. சில் + எலும்பு]

சில்லை

சில்லை1 cillai, பெ. (n.)

   1. சிள் வண்டு (பிங்.);; cicada.

   2. கிலுகிலுப்பை; rattle wort.

த.சில்லி → Skt .jhilli

     [சில்லிடுதல் = ஒவித்தல், சில் → சில்லி → சில்லை]

 சில்லை2 cillai, பெ. (n.)

   1. இழிவு; humbleness.

   2. கஞ்சத்தனம், கயமை; meanness.

     “சில்லைச் சிறுகுடி லகத்திருந் தோனென” (சிவப்.16:147);.

   3. பழிச்சொல்; slander.

     “சில்லை வாய்ப் பெண்டுகள்” (திவ். திருவாய். 67:4);.

   4. முரட்டுத் தனம்; unruly mischievous disposition, as of a bull.

     “சில்லைச் செவிமறைக் கொண்டவன்” (கலித். 107);.

   5. சிற்றின்பம் மிகுதியாகவுடைய கொடு மனத்தள்; wicked and libidinous woman.

     “சில்லைக்க ணன்பினை யேமாந் தெமதென் றிருந்தார்” (நாலடி, 377);.

     [சில் → சில்லை]

 சில்லை3 cillai, பெ. (n.)

   1. தமிழ்நாட்டில் கிழக்குக்கடற்கரைப் பகுதிகளில் காணப்படும் பறவை வகை; munia.

   2. நீர்ப்பறவை வகை (மணிமே.8,29);; a kind of water-bird.

   3. சிவல் வகை (பிங்.);; a species of partidge.

   1. சிவப்புச் சில்லை

   2. வெண்தொண்டைச் சில்லை

   3. வெண்முதுகுச் சில்லை

   4. கருந்தொண்டைச் சில்லை

   5. புள்ளிச் சில்லை

   6. கருந்தலைச் சில்லை

 சில்லை4 cillai, பெ. (n.)

   பிரண்டை; squarestalked wild grape.

சில்லொலி

 சில்லொலி cilloli, பெ. (n.)

   கீச்சுக்குரல் (புதுவை.);; shrill;squeak.

சில் = ஒலிக்குறிப்புச் சொல்

     [சில் + ஒலி]

சில்வண்டு

சில்வண்டு cilvaṇṭu, பெ. (n.)

     ‘கிறிச்’ என்று ஒலியெழுப்பும் வண்டு;

 cicada.

     [சில்1 + வண்டு]

சில்வநோய்

 சில்வநோய் cilvanōy, பெ. (n.)

   உகிர் (நக);க் கண்ணைச் சுற்றியேற்படும் உகிர்ச் சுற்றுநோய்; it is a swelling of the nail-bed. It is known by several names-felon, panaris etc. (சா.அக.);.

மறுவ. நகச்சுற்று, உகிர்ச்சுற்று, விரற்கற்று

சில்வரி

சில்வரி cilvari, பெ. (n.)

   சிறிய வரிகள் (தெ.க.தொ.i,87);; small taxes or cesses.

     [சில் = சில;

சில் + வரி]

சில்வானஞ்சேர்-த்தல்

சில்வானஞ்சேர்-த்தல் cilvāṉañjērttal, செகுவி. (v.i.)

வீட்டுப் பொருள்களைப் பிறர் கானா வண்ணம் விற்றுச் சிறுவாடு சேர்த்தல் (இ.வ.);:

 to scrape up small illegitimate earnings by secretly selling house hold things.

     [சில்வானம்1 + சேர்-,]

சில்வானம்

சில்வானம் cilvāṉam, பெ. (n.)

   1. சில்லறை3பார்க்க;see sillarai3.

   2. வீட்டுச் செலவுக்குக்

   கொடுத்த தொகையில் சிறு தனிச் சொத்தாக மிகுத்து வைக்கும் பணம் (இ.வ.);; Savings effected from the sum allotted for household expenscs.

   ம. சில்வானம்;   சில்லுவானம், சில்லானம்;   க. சிலவான்;து. சில்வான, சிலுவான.

     [சில் + மானம் – சில்மானம் → சில்வானம்;மா + அனம் – மானம் = அளவீடு, அளவு, அளவை, மதிப்பு]

 சில்வானம்2 cilvāṉam, பெ. (n.)

   சிறிது; that which is small or little, thing of minor importance.

     “சில்வான பிரயோஜனங்களைப் பற்ற” (ரஹஸ்ய.49);

     [சில் + மானம் – சில்மானம் → சில்வானம்]

 சில்வானம்3 cilvāṉam, பெ. (n.)

   சிறுதுாறல் (இ.வ.);; drizzle.

     [சில்1 + வானம்]

சில்வானம் வில்-தல் (சில்வானம் விற்றல்)

சில்வானம் வில்-தல் (சில்வானம் விற்றல்) cilvāṉamviltalcilvāṉamviṟṟal,    4 செ.கு.வி. (v.i.)

   சிறுவாடு சேர்த்தற்காக வீட்டுப் பொருள்களைக் கமுக்கமாக விற்றல் (இ.வ.);; to sell household things secretly and effect small illegitimate savings.

     [சில்வானம்1 + வில்-,]

சில்வான்

 சில்வான் cilvāṉ, பெ. (n.)

சில்வானம் பார்க்க;see Silvånam.

க. சிலவடு

     [சில்வானம் → சில்வான்]

சில்வாய்

 சில்வாய் cilvāy, பெ. (n.)

   கடைவாய் (நெல்லை);; corners of mouth.

     [சில் + வாய்]

சில்வாய்ப்பிடி

 சில்வாய்ப்பிடி cilvāyppiḍi, பெ. (n.)

   இரு கன்னங்களையும், கை விரல்களால் உள்ளழுத்தி, வாய் திறந்த வண்ணமாயிருக்கும்படி செய்யுந் தண்டனை (வின்.);; the punishment of keeping one’s mouth open by pressing in the cheeks with fingers.

     [சில்வாய் + பிடி]

சில்வாரி

 சில்வாரி cilvāri, பெ. (n.)

   செவ்வலரி; red oleander (சா.அக.);.

சில்விடம்

சில்விடம் cilviḍam, பெ. (n.)

   சிறு பூச்சிகளின் கடிநஞ்சு; poison due to bite of small insects.

     “சில்விடம தொப்பான்” (பிரபோத.26:47);

     [சில் + விடம்]

 Skt. visa → த. விடம்

சிளுசிளு

சிளுசிளு1 silu-silய-,    4 செ.குவி (v.i.)

   இரைச்சலிடுதல் (யாழ்.அக.);; to be chattering.

     [சிளு + சிளு-இ]

 சிளுசிளு2 Silu-Silu-,    4 செ.குவி (v.i.)

   பதனழிதல்; to decay, rot or become decomposed, as vegetables.

     [சிளு + சிளு-,]

சிளுசிளெனல்

 சிளுசிளெனல் siḷusiḷeṉal, பெ. (n.)

   ஒலிக் குறிப்பு வகை (சங்.அக.);; onom. expr, of bubbling, as boiling water.

     [சிளு + சிளு + எனல்]

சிளுபுளு-த்தல்

சிளுபுளு-த்தல் Silu-pulu,    4 செ.குவி (v.i.)

   1. சிளுசிளு-த்தல் பார்க்க (யாழ்.அக.);;see Silu-Silu-.

   2. நொதுநொதுத்தல்; to be mashy, as overboiled rice.

     [சிளு + புளு-,]

சிளுபுளெனல்

 சிளுபுளெனல் ciḷubuḷeṉal, பெ. (n.)

சிளு சிளெனல் (வின்.); பார்க்க;see silu-silenal.

     [சிளு + புளு + எனல்]

சிளை-த்தல்

சிளை-த்தல் silai,    4 செகுவி (v.i.)

   சோர்தல்; to be weary, become tired.

     ‘அவனைப் போலே பிரிவுக்குச் சிளையாதபடி’ (ஈடு, 9.5:3);.

     [இளை → சிளை-,]

சிள்ளீடு

 சிள்ளீடு ciḷḷīṭu, பெ. (n.)

சிள்வண்டு (யாழ்.அக.); பார்க்க;see Sil-Vandu.

     [சின் → சிள். சிள் + வீடு]

சிள்ளுப்புள்ளெனல்

 சிள்ளுப்புள்ளெனல் ciḷḷuppuḷḷeṉal, பெ. (n.)

சிளுசிளெனல் (உ.வ.); பார்க்க;see Silusilenal.

     [சிள்ளு + புள்ளு + எனல்]

சிள்ளெனல்

சிள்ளெனல் ciḷḷeṉal, பெ. (n.)

   1. விரைவுக் குறிப்பு; onom. expr. of a rapidity, swiftness.

     ‘சிள்ளெனப் பருந்து வீழ்ந்தெடுத்த பைந்தலை யரவம்’ (ஜங்குறு. 501);.

   2. ஆரவாரக் குறிப்பு (திவா.);; boisterous.

     [சிள் + எனல்]

சிள்வண்டு

 சிள்வண்டு ciḷvaṇṭu, பெ. (n.)

   சுவர்க்கோழி;     [சின் → சிள். சிள் + வண்டு]

சிள்வீடு

சிள்வீடு ciḷvīṭu, பெ. (n.)

சிள்வண்டு பார்க்க;see sil-vandu.

     “சிள்வீடு கறங்குஞ் சேய் நாட்டத்தம்” (நற். 252);.

     [சின் → சிள். சிள் + வீடு. விடு → வீடு]

சிள் ஒலிக்குறிப்பு சிள்ளென ஒலி விடுதலால் இவ்வாறழைக்கப்பட்டது.

சிழகு-தல்

சிழகு-தல் silagu-,    7 செ.குவி (v.i.)

   விம்முதல்; to choke with sobbing.

     “சிழகிச் சிழகி யழுதால்” (ஈடு, 3.2:7);.

     [சீம்கு → சிமுகு. சீழ்குதல் = விம்முதல்]

சிவ-த்தல்

சிவ-த்தல் civattal,    3 செ.குவி (v.i.)

   1. செந்நிறமாதல்; to redden, blush, to be red.

     “காமர் நெடுங்கண் கைம்மீச் சிவப்ப” (பெருங். இலாவாண. 14, 63);,

 to become angry.

     “தேற்றாய் சிவந்தனை காண்பாய்நீ தீ தின்மை” (கலித்.91);.

     [சிவ் → சிவ → சிவ-. (வே.க.);]

சிவகணமுதல்

 சிவகணமுதல் civagaṇamudal, பெ. (n.)

   சிவகணத் தலைவரான நந்திதேவர் (பிங்.);; Nandi as the leader of Sivan’s hosts.

     [சிவகணம் + முதல். கள் → கண். கண்ணுதல் = பொருந்துதல் கண் → கண. கணத்தல் = கூடுதல், கண → கணம் =

கூட்டம், படைப்பகுதி]

சிவகணம்

சிவகணம் civagaṇam, பெ. (n.)

   சிவபெரு மானுடைய திருவருட் கூட்டம்; Sivan’s celestial hosts.

     “சிவகணத்துளோர்த. . . சீறி” (உபதேசகா. உருத்திரா. 109);.

     [சிவன் + கணம்]

சிவகதி

சிவகதி civagadi, பெ. (n.)

   வீடுபேறு (முத்தி);; salvation, final deliverance of the soul.

     “சிவகதி நாயகன்” (சிலப். 10:180);.

     [சிவம் + கதி]

சிவகதிக்கிறை

 சிவகதிக்கிறை civagadiggiṟai, பெ. (n.)

   சிவகதிக்குத் தலைவனான அருகன் (சூடா);; Arugan, as lord of Siva-gadi.

     [சிவகதிக்கு + இறை]

சிவகம்

சிவகம் civagam, பெ. (n.)

   1. சாதிக்காய் (மலை);; true-nutmeg.

   2. நாய்ச்சீரகம்; purple fleabane.

சிவகரணம்

 சிவகரணம் civagaraṇam, பெ. (n.)

   ஆதனின் செயலற்ற நிலையில் தன்முனைப்பறுக்கும் (ஆணவம்); இறையின் செயல்; action of god manifested in a person who has attained the stage of complete self effacement.

     [சிவம் + கரணம்]

சிவகரந்தை

சிவகரந்தை civagarandai, பெ. (n.)

   கரந்தை வகை (பதார்த்த.314);; fever basil.

     [சிவம் + கரந்தை]

சிவகாமி

சிவகாமி civakāmi, பெ. (n.)

   சிதம்பரத்தில் வழிபடப் பெறும் அம்மன்; Parvadi as worshipped at Chidambaram.

     “சிவகாமி நல்கிய சேயே” (திருப்பு. 553);

     [சிவம் + காமி]

சிவகிரி

 சிவகிரி civagiri, பெ.(n.)

   ஈரோடு வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Erode Taluk.

     [சிவன்+கிரி]

சிவகீதை

சிவகீதை civaātai, பெ. (n.)

   அகத்தியர் செய்ததாகக் கூறப்படும் தமிழ் நூல் (சி.சி. 8:16, சிவஞா.);; a devotional work in Tamil attributed to Agattiyar.

     [சிவன் + கீதை]

 Skt. gita → த. கீதை

சிவகூர்ச்சம்

 சிவகூர்ச்சம் civaārccam, பெ. (n.)

   ஆவினின்று பெறப்படும் ஐவகைப் பொருள்கள்; mixture of the five products of the cow.

மறுவ. ஆனைந்து (பஞ்சகவ்யம்);

ஐம்பொருள்களாவன: பால், தயிர், நெய், மூத்திரம், சாணம்.

சிவகோணம்

சிவகோணம் civaāṇam, பெ. (n.)

   சிவபெருமானைக் குறிப்பதாகத் தாமிரம் முதலியவற்றில் வரையும் கோணம் (சௌந்தர்ய. 11);; a mystic diagram believed to represent Sivan.

     [சிவன் + கோணம், கோள் → கோண் →

கோணம் = வளைவு, மூலை]

சிவக்கம்

 சிவக்கம் civakkam, பெ.(n.)

   சிதம்பரம் வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Chidambaram Taluk.

     [செவக்கல்-சிவக்கம்]

சிவக்குறி

சிவக்குறி civakkuṟi, பெ. (n.)

   சிவனியர் வழிபடும் இலிங்க வடிவமான சிவனுருவம்; cylindrical stone rounded off at the top worshipped by saivites as an emblem of siva.

     “தகுசிவக்குறி யர்ச்சிப்பர்” (சூத. முத்தி. 1:18: சங். அக);.

ம. சிவக்குக

     [சிவ் → சிவ → சிவம் + குறி (வே.க.);]

சிவங்கரன்

 சிவங்கரன் civaṅgaraṉ, பெ. (n.)

   ஆதனுக்குப் (ஆன்மா); பேரின்பப் பெருவாழ்வை வழங்கும் சிவன் (சங்.அக.);; Sivan as the dispenser of bliss.

சிவங்கரி

சிவங்கரி civaṅgari, பெ. (n.)

   மங்கலத்தைச் செய்பவளான மலைமகள் (திருவானைக். கோச்செங்.81);; Pârvadi, as the dispenser of bliss.

சிவசத்தி

சிவசத்தி sivasatti, பெ. (n.)

   1. ஐவகைச் சிவ ஆற்றல்கள் (சி.சி.1:61 சிவஞா);; the five energies of Sivan.

   2. துரிசு (யாழ்.அக.);; verdigris.

     [சிவன் + சத்தி]

ஐவகைச் சிவ ஆற்றல்கள்

   1. விழைவாற்றல் (இச்சா சத்தி);

   2. செயலாற்றல் (கிரியா சத்தி);

   3. அறிவாற்றல் (ஞான சக்தி);

   4. மறைப்பாற்றல் (திரோதான சத்தி);

   5. அருளாற்றல் (பராசத்தி);

சிவசன்

 சிவசன் sivasaṉ, பெ. (n.)

   சிவனிடம் பிறந்தவனாகிய சுக்கிரன்; Sukran, as born of sivan.

     [சிவன் + (சேயன் → சேன் →); சன்]

சிவசமவாதசைவம்

சிவசமவாதசைவம் sivasamavātasaivam, பெ. (n.)

   அகச்சமயம் ஆறனுள் மலங்கள் நீங்கிய வழி, அறிவு மாத்திரையாய் நிற்கும் ஆதனை, இறைவன், தன் வடிவாக்கித் தன் ஐந்தொழில்களை இயற்றும்படிச் செய்வன் என்று கூறும் சிவனிய வகை (சி.போ. பா. பக். 22, சுவாமிநா.);; a Saiva sect which holds that the soul when it is freed from malam becomes Pure Intelligence, and that in such a condition Sivan transmutes it into a Being like Himself enabling it to perform His five-fold functions, one of six aga-c-camayam.

     [சிவம் + சமவாதம் + சைவம்]

சிவசாதனம்

சிவசாதனம் civacātaṉam, பெ. (n.)

   அக்கமணி திருநீறு முதலிய சிவனியத்திற்குரிய சின்னங்கள்; emblems of saiva religion, as rudraksa beads and sacred ashes.

     “சிவசாதனந் தனி லன்பு மிக்கவன்” (திருவிளை.நாக.3);.

     [சிவன் + சாதனம்]

சிவசித்தர்

 சிவசித்தர் sivasittar, பெ. (n.)

   சிவனிய (சைவ); சமயத்திற் கூறியவாறு கட்டுகளினின்று நீங்கிப் பரமுத்தியை அடைந்தவர்; those who have obtained the highest form of salvation.

     [சிவம் + சித்தர்]

சிவசின்னம்

சிவசின்னம் sivasiṉṉam, பெ. (n.)

சிவசாதனம்1 பார்க்க;see sivasadanam”.

     “சிட்டமாஞ் சிவ சின்னங்கள் சேர்ந்துளீர்” (சிவரக. சிவரகவரலா.9.);.

     [சிவம் + சின்னம்]

சிவசிவ

சிவசிவ sivasiva, இடை (int.)

   1. வழிபடற் குறிப்பு; a sign of worship.

     “சிவசிவ என்றிடத் தீவினைமாளும்” (திருமந்.);.

   2. ஒர் இரக்கக் குறிப்பு; an exclamation of pity.

     “சிவசிவ மற்றென் செய்வாய்” (அருட்பா. i, நெஞ்சறி, 401);.

     [சிவ + சிவ]

சிவச்சி

 சிவச்சி civacci, பெ. (n.)

   சாதிக்காய் (மூ.அ.);; nutmeg.

சிவஞானகோசம்

சிவஞானகோசம் civañāṉaācam, பெ. (n.)

சிவாகமம் பார்க்க;see sivigamam.

     “பொருவில் – பரம சிவஞானகோசம்” (சிவதரு. சிவஞானதா. 50);.

     [சிவம் + ஞானம் + கோசம்]

சிவஞானசித்தியார்

சிவஞானசித்தியார் sivañāṉasittiyār, பெ. (n.)

   அருணந்தி சிவாசாரியரால், சிவஞான போதத்தை முதனுரலாகக் கொண்டு, விரிவாகச் செய்யப் பெற்றதும், மெய்கண்ட நூல்களுள் பதினான்கனுளொன்றுமாகிய சிவனியக் கொண்முடிபு நுல்; a text-book of the Saiva Sittända philosophy by Aruänandi-Sivâcâriyar, based on Siva-fiana-bódam, one of 14 meyganda-sattiram.

     [சிவஞானம் + சித்தியார்]

சிவஞானபோதம்

சிவஞானபோதம் civañāṉapōtam, பெ. (n.)

   மெய்கண்ட தேவரால் இயற்றப்பட்டதும், மெய்கண்ட நூல்கள் பதினான்கனுள் ஒன்றும் அவற்றுள் பன்னிரண்டு நூல்களுள் முதன்மையாயுள்ளதுமாகிய சிவனியக்கொண் முடிபு நூல்; a textbook of the Saiva Siddhanda philosophy composed by Mey-kanda-dévar, the basis of twelve of the fourteen textbooks one of 14 mey-kanda-nul.

     [சிவஞானம் + போதம்]

சிவஞானமுனிவர்

சிவஞானமுனிவர் civañāṉamuṉivar, பெ. (n.)

   சிவஞான போதத்திற்குத் திராவிட மாபாடியம் என்னும் பேருரை செய்தவரும், சிவஞான சித்தியார், தொல்காப்பியப் பாயிரம் முதல் நூற்பா முதலியவற்றிற்கு உரை வகுத்தவரும், காஞ்சிப்புராணம் முதற்காண்டத்தின் ஆசிரியரும், சிவசமவாத மறுப்பு முதலிய கண்டன நூல்கள் எழுதியவரும், 18ஆம் நூற்றாண்டில் திருவாவடுதுறை மடத்தில் வாழ்ந்தவருமாகிய சிவனியத் துறவி; a celebrated ascetic of the Tiruvavadurai mutt, 18th century A.D. author of many minor poems, the first part of Kafijippuranam, some polemic treatises and commentaries on the payiram and the lstnarpa of Tolgappiyam, Siva-fiana-bódam and Siva-fiana-Sittiyar.

     [சிவஞானம் + முனிவர்]

சிவஞானம்

சிவஞானம் civañāṉam, பெ. (n.)

   பதியுணர்வு; knowledge of god.

     “சிவஞானந் தனக்கு மேலாம்” (சி.சி. 2:2);.

     [சிவம் + ஞானம்]

சிவஞானி

 சிவஞானி civañāṉi, பெ. (n.)

   சிவனறிவு பெற்றோன்; Saiva saint as one who has obtained knowledge of God.

     [சிவம் + ஞானி]

சிவணு

சிவணு1 civaṇudal,    11 செ.கு.வி (v.i.)

   1. நட்புக் கொள்ளுதல்; to make friends.

     “தன்னோடு சிவணிய வேனோர்” (தொல். பொருள். 27);

   2. பொருந்துதல்; to go with.

     “பல்லோ ரறியுஞ் சொல்லோடு சிவணி” (தொல். சொல். 2);

   3. அளவளாவுதல் (பிங்.);; to hold intimate intercourse, to show intimacy.

ம. சிவணன் (சேர்தல், இணைதல், இயைபு);

     [சுவள் → சுவண் → சிவண் → சிவணுதல் (இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும் பக். 26);]

 சிவணு2 civaṇudal,    10 செ.குன்றாவி. (v.t.)

   1. அணுகுதல் (திவா.);; to approach.

   2. ஒத்தல்; to resemble.

     “நெடுவரையெவையு மொரு வழித்திரண்டன சிவண” (கம்பரா. நிந்தனை.1.);

   3. பெறுதல்; to receive.

     “தனங்கிடைக்குமேற் சிவனுறாதவர் யாரே” (தணிகைப்பு. திருநா. 16);,

     [சுவள் → சுவண் → சிவண் → சிவணுதல் (வ.வ. 211);]

சிவதகி

 சிவதகி civadagi, பெ. (n.)

   வெள்ளரி; cucumber (சா.அக.);.

சிவதகை

 சிவதகை civadagai, பெ. (n.)

   எழுத்தாணிப் பச்சிலை; style plant (சா.அக.);.

சிவதங்கை

 சிவதங்கை civadaṅgai, பெ. (n.)

சிவதகை பார்க்க;see Sivadagas (சா.அக.);.

சிவதடி

சிவதடி1 civadaḍi, பெ. (n.)

   வெள்ளரி (மலை);; cucumber.

 சிவதடி2 civadaḍi, பெ. (n.)

   வெள்ள; silver (சா.அக.);.

சிவதத்துவம்

சிவதத்துவம் civadadduvam, பெ. (n.)

   அறிவாற்றலின் இருப்பிடமும் தூய மாயை மெய்ம்மங்களுள் ஒன்றுமாகிய மெய்ப்பொருள் (சி.போ.பா.2:2.பக்.139);; sphere or region of knowledge presided over by Sivan’s fiánasatti.

     [சிவம் + தத்துவம்]

 சிவதத்துவம்2 civadadduvam, பெ. (n.)

   1. ஒளி (விந்து);; semen.

   2. தோன்றியத்தில் கூறப் பட்டுள்ள ஐவகைச் சிவமெய்ப்பொருள்கள்; in Ågama philosophy the five degrees of developmentor attainment in the spiritual power derived from Sivan as Suttavittai, isuram, sadakkiyam, satti, sivam (சா.அக.);.

     [சிவம் + தத்துவம்]

சிவதன்மம்

 சிவதன்மம் civadaṉmam, பெ. (n.)

சிவதருமம் (திவா.); பார்க்க;see Siva-darumam.

     [சிவம் + தன்மம்]

சிவதம்

 சிவதம் sivadam, பெ. (n.)

   இருக்கு வேதம் (வின்);; the Rig-Veda.

 Skt. Siva-da

சிவதரம்

சிவதரம் civadaram, பெ. (n.)

   அதிக மங்கலமானது; that which is highly auspicious.

     “தலைவா நின்னிற் சிவதரமாம் பொருள் வேறின்மையால்” (திருக்காளத்.4.5:51);.

சிவதரிசனம்

 சிவதரிசனம் sivadarisaṉam, பெ. (n.)

சிவப்பார்வை பார்க்க;see Siva-p-parvai.

     [சிவம் + தரிசனம்]

 Skt. darsana → த. தரிசனம்

சிவதரு

 சிவதரு civadaru, பெ. (n.)

சிவதாரம் பார்க்க;see Siva-daram

சிவதருமம்

சிவதருமம் civadarumam, பெ. (n.)

   பதினெண் வகைத் துணைத் தொன்மப் பிரிவுகளுள் ஒன்று; a secondary purana one of 18 ubapurànam.

     [சிவம் + தருமம்]

சிவதருமிணி

சிவதருமிணி civadarumiṇi, பெ. (n.)

   அறிவொழுக்கத்திலுயர்ந்து திகழும் முத்தி பெற்றவர்கட்கு மறைப்பு நிலையில் தலை மழித்துச் செய்யும் குருவின் அருள் வழங்கல் முறை (சைவச ஆசாரி 62, உரை);; a way or religious initiation accompanied with the removal of hair-tuft, which is believed to represent the obscuring principle, a kind of sapisa-ditcai.

     [சிவம் + தருமிணி]

சிவதலம்

 சிவதலம் civadalam, பெ. (n.)

   சிவன் கோயில் கொண்ட இடம்; place or shrine sacred to Sivan.

சிவதா

சிவதா civatā, பெ. (n.)

   அடைக்கலக்கூற்று (பெரியபு.எறி.16);; an expression crying forhelp.

சிவதாகம்

 சிவதாகம் civatākam, பெ. (n.)

   முருங்கை மரம்; drumstick tree.

சிவதாகிதம்

 சிவதாகிதம் civadākidam, பெ. (n.)

   மாசிக்காய்; nut gall oak (சா.அக.);.

சிவதாசு

 சிவதாசு civatācu, பெ. (n.)

   திருநாமப்பாலை; poon tree (சா.அக.);.

மறுவ. சீரானயிருசுவம்

சிவதாது

சிவதாது civatātu, பெ. (n.)

   1. இதளியம்; mercury.

   2. ஒருவகைக் கல்; a stone (சா.அக.);.

     [சிவம் + தாது]

சிவதாரம்

 சிவதாரம் civatāram, பெ. (n.)

   தேவதாரு (மலை.);; red-cedar.

மறுவ. செம்மரம், சிவதாரி

சிவதாரிகம்

 சிவதாரிகம் civatārigam, பெ. (n.)

   பாலை; milk tree (சா.அக.);.

சிவதீட்சை

 சிவதீட்சை civatīṭcai, பெ. (n.)

   சிவ பூசையையும் சமயவொழுகலாறுகளையும், மேற் கொள்ளுதற்குமுன், சிவனியனுக்குக் குருவினாற் செய்யத்தகுஞ் சமய நிகழ்வு (அருட்பாலிப்பு);; initiation of a disciple into the mysteries of the Saiva religion.

     [சிவன் + தீட்சை]

சிவதுசி

 சிவதுசி sivadusi, பெ. (n.)

   பாற்குறண்டி; milk coranday (சா.அக.);.

     [சிவம் + தூசி]

சிவதும்பை

 சிவதும்பை civadumbai, பெ. (n.)

   சிறு தும்பை; small leucas (சா.அக.);.

     [சிவன் + தும்பை]

சிவதுரியம்

 சிவதுரியம் civaduriyam, பெ. (n.)

   தோன்றியத்துள் கூறப்படும் மேலான பேருறக்க (துரிய); நிலை; in agama philosophy the highest degreein which the yogi attains entire quiescence (சா.அக.);.

     [சிவன் + துரியம்]

சிவதுளசி

சிவதுளசி1 sivaduḷasi, பெ. (n.)

   1. திருநீற்றுப் பச்சை; sweet basil.

   2. வெண் துளசி; white basil (சா.அக.);

     [சிவன் + துளசி]

சிவதை

 சிவதை civadai, பெ. (n.)

வயிற்றுப்பூச்சி, மலச்சிக்கல், கால் வீக்கம், தோல்நோய் முதலானவற்றைப் போக்கும் மருந்துக் கொடி:

 Indian jalap turpath root; it is a good remeady against worms, swellings of the limbs and diseases of the skin (சா.அக.);.

மறுவ. பகன்றை

சிவதைச்சர்க்கரை

 சிவதைச்சர்க்கரை civadaiccarkkarai, பெ. (n.)

   சீந்திற் கொடியினின்று எடுக்கப்படும் மருந்துப்பு; a medicinal salt prepared from gulancha stalk (சா.அக.);.

     [சிவதை + சர்க்கரை]

சிவதைப்பொடி

 சிவதைப்பொடி civadaippoḍi, பெ. (n.)

   சிவதையை ஆவின் பாலில் அவித்தெடுத்து உலர்த்திய பொடி; purification of jailap by boiling it in milk and then drying (சா.அக.);.

     [சிவதை + பொடி]

சிவதையிளகியம்

 சிவதையிளகியம் civadaiyiḷagiyam, பெ. (n.)

   பெருநோய், மலச்சிக்கல் போன்றவற்றைப் போக்குவதற்காகக் கடைச்சரக்குகளுடன் சிவதை மூலிகையைச் சேர்த்துச் செய்யப்படும் இளகியம்; an electuary prepared with jalap as a chief ingredient along with other bazar drugs. It is removes costipation by helping a free motion of bowels and cures dyspepsia (சா.அக.);.

     [சிவதை + இளகியம்]

சிவதைவேர்

 சிவதைவேர் civadaivēr, பெ. (n.)

   மலம் போக்கிவேர்; turpith root (சா.அக.);.

     [சிவதை + வேர்]

சிவதைவேர்ச்சூரணம்

 சிவதைவேர்ச்சூரணம் civadaivērccūraṇam, பெ. (n.)

பகன்றை மருந்துப் பொடி,

 Indian jalap powder (சா.அக.);.

     [சிவதை + வேர் + சூரணம்]

சிவதோதிகம்

 சிவதோதிகம் civatōtigam, பெ. (n.)

   திருநீற்றுப் பச்சை; holy ashes leaf (சா.அக.);.

சிவத்ததாசி

சிவத்ததாசி civattatāci, பெ. (n.)

   1. சிவந்தசேசை பார்க்க;see sivanda- vesai.

   2. செம்பருத்தி; tree cotton.

சிவத்தமண்

சிவத்தமண் civattamaṇ, பெ. (n.)

   1. செம்மண்,

 red soil.

   2. காவி மண்; red ochre (சா.அக.);.

     [சிவந்த → சிவத்த + மண்]

சிவத்தமுள்ளங்கி

சிவத்தமுள்ளங்கி1 civattamuḷḷaṅgi, பெ. (n.)

   காசினி விரை; chicory.

     [சிவப்பு முள்ளங்கி → சிவத்த முள்ளங்கி]

 சிவத்தமுள்ளங்கி2 civattamuḷḷaṅgi, பெ. (n.)

சிவப்புமுள்ளங்கி பார்க்க;see sivappu-mullangi (சா.அக.);.

     [சிவப்பு முள்ளங்கி → சிவத்த முள்ளங்கி]

சிவத்தம்

 சிவத்தம் civattam, பெ. (n.)

   செம்முருங்கை (மலை.);; red Indian laburnum.

     [சிவந்தம் → சிவத்தம்]

சிவத்தாசிகம்

 சிவத்தாசிகம் civattācigam, பெ. (n.)

   செம்பரத்தை; chinese rose mallow (சா.அக.);.

சிவத்தாட்சி

 சிவத்தாட்சி civattāṭci, பெ. (n.)

சிவத்தாசிகம் பார்க்க;see SivattiSigam (சா.அக.);.

சிவத்தானம்

 சிவத்தானம் civattāṉam, பெ. (n.)

   வெற்றிலை; betel leaf (சா.அக.);.

சிவத்தி

 சிவத்தி civatti, பெ. (n.)

சாதிலிங்கம்;(சா.அக.);.

சிவத்திருமி

 சிவத்திருமி civattirumi, பெ. (n.)

   தான்றி மரம்; devil’s abode (சா.அக.);.

சிவத்திருவம்

 சிவத்திருவம் civattiruvam, பெ. (n.)

சிவத்துரமம் பார்க்க;see siva-t-turumam (சா.அக.);.

சிவத்திறை

சிவத்திறை civattiṟai, பெ. (n.)

   சிவகதிக்குத் தலைவனான அருகன் (சூடா.);; Arugan, as lord of Siva-gadi.

     “சிவத்திறை யுறையுஞ் சித்தாயதனம்” (மேருமந்.620);.

     [சிவம் (சிவத்து); + இறை]

சிவத்துருமம்

 சிவத்துருமம் civatturumam, பெ. (n.)

   வில்வம்; bael tree.

     [சிவம் + துருமம்]

சிவத்துவிசர்

 சிவத்துவிசர் sivattuvisar, பெ. (n.)

   சிவன் கோயில்களிற் பூசைக்கு அதிகாரிகளாகிய சிவப்பார்ப்ப்னர்; Brahmans who conduct service in Sivan temples.

சிவத்தை

சிவத்தை civattai, பெ. (n.)

   1. சிவப்பு; redness in colour.

   2. பொன்னிறப்பெண்; fair complexed girl.

   3. செந்நிறக் காளை; red colour bull.

     [சிவ் → சிவ → சிவத்தை (வே.க.222);]

சிவத்தோன்றியம்

சிவத்தோன்றியம் civattōṉṟiyam, பெ. (n.)

   சிவனிடமிருந்து தோன்றியவை எனப்படும் காமிகம், ஒகசம், சிந்தியம், காரணம், அசிதம், தீபதம், சூக்குமம், சகச்சிரம், அஞ்சுமான், சுப்பிரபேதம், விசயம், நிசுவாசம், சுவாயம்புவம், ஆக்கினேயம், வீரம், இரெளரவம், மகுடம், விமலம், சந்திரஞானம், முகவிம்பம், புரோற்கீதம், இலளிதம், சித்தம், சந்தானம், சர்வோத்தம், பாரமேசுவரம், கிரணம், வாதுளம் ஆகிய இருபத்தெட்டு தோன்றியங்கள் (ஆகமங்கள்); சைவச பொது, 78);; ancient Agamas or Saiva scriptures in Sanskrit believed to have originated from Siva Himself 28 in number, viz, Kamigam, Ogasam, Sindiyam, Karaṇam, Acidam, Tiptam, Cukkumam, Sagacciram, Anjuman, Cuppirabe dam, Visayam, Nisubasam, Suvayambuvam, Akkincyam, Viram, Irauravam, Magudam, Vimalam, Candirafianam, Mugavimbam, Purorkidam, Ilalidam, Cittam, Sanda nam, Sarvottam, Paramcsuvaram, Kiranam, Vaduļam.

     [சிவம் + தோன்றியம்]

சிவநாபம்

சிவநாபம் civanāpam, பெ. (n.)

   ஒருவகைச் சிவலிங்கம்; a variety of lińga.

     “நாசமில் செழுஞ் சிவநாபந் தன்னையும்” (சேதுபு. சேதுபல. 126);.

சிவநிசி

சிவநிசி sivanisi, பெ. (n.)

சிவராத்திரி பார்க்க;see sivarittiri.

     “நன்று சிவநிசியி னன்மை” (பிரமோத். 4,60);.

சிவநெறிப்பிரகாசம்

சிவநெறிப்பிரகாசம் civaneṟippirakācam, பெ. (n.)

   ஒரு சிவனியக் கொண்முடிபு நூல் (பெரியபு.உபோற்.பக்.2);; a treatise on the Saiva Sittanda philosophy.

சிவந்த பாலி

 சிவந்த பாலி civandapāli, பெ. (n.)

சிவந்த சதுர்முகி பார்க்க;see Sivanda-Saturmugi.

     [சிவந்த + பாலி]

கள்ளிச் செடி பாலுள்ளதாகையால் பாலி எனப்பட்டது.

சிவந்தகஞ்சா

 சிவந்தகஞ்சா civandagañjā, பெ. (n.)

   சிவப்பு நிறக் கஞ்சா வகை; a red variety of kafija (சா.அக.);.

     [சிவந்த + கஞ்சா]

சிவந்தகதிர்நிறத்தி

 சிவந்தகதிர்நிறத்தி civandagadirniṟaddi, பெ. (n.)

   இக்காலத்தில் அறியப்படாத சேந்தாடுபாவை என்னும் கற்பமூலிகை வகையுளொன்று; a rejuvenating drug unidentified at present (சா.அக.);.

     [சிவந்த + கதிர் + நிறத்தி]

சிவந்தகன்னிப்பால்

 சிவந்தகன்னிப்பால் civandagaṉṉippāl, பெ. (n.)

   மருந்திற்குப் பயன்படும் சிவப்புப் பெண்ணின் முலைப்பால்; the breast milk of a woman of red complexion and it is considered an important medium in the use of medicine.

     [சிவந்த + கன்னி + பால்]

சிவந்தகரிசாலை

 சிவந்தகரிசாலை civandagaricālai, பெ. (n.)

   பொற்றலைக் கையாந்தகரை; Ceylon verbesina (சா.அக.);.

     [சிவந்த + கரிசாலை]

சிவந்தகுளிகை

 சிவந்தகுளிகை civandaguḷigai, பெ. (n.)

   சிந்தூரக் குளிகை; pills prepared out of redoxides of metals (சா.அக.);.

     [சிவந்த + குளிகை]

சிவந்தகையான்

 சிவந்தகையான் civandagaiyāṉ, பெ. (n.)

சிவந்தகரிசாலை பார்க்க;see Sivanda-karisalaj.

     [சிவந்த + கையான்]

சிவந்தகோழிக்காரம்

 சிவந்தகோழிக்காரம் civandaāḻikkāram, பெ. (n.)

   செந்நிறக் கோழியின் மலம்; the drug of a red fowl.

     [சிவந்த + கோழி + காரம்]

சிவந்தசதுர்முகி

 சிவந்தசதுர்முகி sivandasadurmugi, பெ. (n.)

   சிவப்புச் சதுரக்கள்ளி; a red variety of square Spurge (சா.அக.);.

     [சிவந்த + சதுர்முகி]

நான்கு பட்டை உள்ளதைச் சதுர முகம் என்பது உலக வழக்கம். சதுர முகத்தை உடைய கள்ளி சதுர்முகி ஆயிற்று.

சிவந்தசந்தம்

 சிவந்தசந்தம் sivandasandam, பெ. (n.)

   செஞ்சந்தனம்; red sandal (சா.அக);.

     [சிவந்த + சந்தம். சந்தனம் → சந்தம்]

 E : sandal.

சிவந்தசோறு

 சிவந்தசோறு civandacōṟu, பெ. (n.)

   தீய்ந்து போன சோறு (யாழ்ப்,);; rice burnt reddish in cooking.

     [சிவந்த + சோறு]

சிவந்தநாயுருவி

 சிவந்தநாயுருவி civandanāyuruvi, பெ. (n.)

   செந்நாயுருவி; a red variety of Indian burr (சா.அக.);

     [சிவந்த + நாயுருவி]

சிவந்தநிறவல்லி

 சிவந்தநிறவல்லி civandaniṟavalli, பெ. (n.)

சிவந்தவல்லி பார்க்க;see Sivanda-walli.

     [சிவந்தவல்லி → சிவந்ததிறவல்லி]

சிவந்தநீர்

சிவந்தநீர் civandanīr, பெ. (n.)

   முத்தின் சிவந்த நீரோட்டம்; red water of a pearl.

     “சிவந்த நீரும்பாணிச்சாயு முடைய முத்து” (தெ.இ.க. தொ.2, 171);.

     [சிவந்த + நீர்]

சிவந்தபசு

 சிவந்தபசு sivandabasu, பெ. (n.)

   சேதா; red COW.

   ம. சேதா;துட. கெபாப்.

     [சிவந்த + பசு]

சிவந்தபத்திரி

 சிவந்தபத்திரி civandabattiri, பெ. (n.)

   சாதிப்பத்திரி; nut meg (சா.அக);.

     [சிவந்த + பத்திரி]

சிவந்தபோத்தக்காய்விதை

 சிவந்தபோத்தக்காய்விதை civandapōddakkāyvidai, பெ. (n.)

   சிவப்புக் கசகசாச் செடியின் விதை; red seed.

     [சிவந்த + போத்தக்காப் + விதை]

சிவந்தமண்

 சிவந்தமண் civandamaṇ, பெ. (n.)

   செப்பு மணல்; copper ore (சா.அக.);.

     [சிவந்த + மண்]

செந்நிறமாயுள்ள மண்ணைச் செம்மண் என வழங்குவது உலக வழக்கு செந்நிறமாயுள்ள செம்பு கலந்த மணலையோ மண்ணையோ சிவந்தமண் என்பது மருத்துவ வழக்கு.

சிவந்தமலர்

 சிவந்தமலர் civandamalar, பெ. (n.)

   செம்பு; copper.

     [சிவந்த + மலர்]

செம்பு செந்நிறத்தது. மருத்துவக்குழுஉக் குறியாக இம்மாழையை மலரெனச் சொல்லியிருப்பர் போலும்.

சிவந்தமலர்ப்பகுதி

 சிவந்தமலர்ப்பகுதி civandamalarppagudi, பெ. (n.)

   செம்பருத்தி, கம்பளிப்பருத்தி; Bengal cotton, spence cotton.

     [சிவந்த + மலர் + பருத்தி]

சிவந்தமல்லி

 சிவந்தமல்லி civandamalli, பெ. (n.)

   பொன்னிறமல்லி அல்லது செப்பு மல்லிகை; golden jasmine (சா.அக.);.

     [சிவந்த + மல்லி]

இஃது இருபத்தெட்டு பெரு மூலிகைகளுள் ஒன்றாகும்

சிவந்தலாவனரிசி

சிவந்தலாவனரிசி sivandalāvaṉarisi, பெ. (n.)

   1. பெருநோயைப் போக்குந் தன்மைமிக்க சிவப்பு வால் நெல்லரிசி; a species of red paddy considered to be a good diet for leprosy.

   2. செவ்வாலுளுவை; a red variety of spindle tree (சா.அக.);.

     [சிவந்த + வாலன் + அரிசி]

சிவந்தவரிதாரம்

சிவந்தவரிதாரம்1 civandavaritāram, பெ. (n.)

   பிறவி வைப்பு நஞ்சு (மூ.அ.);; red arsenic.

     [சிவந்த + அரிதாரம்]

 சிவந்தவரிதாரம்2 civandavaritāram, பெ. (n.)

சிவப்பரிதாரம் பார்க்க: See sivapparidiram (சா.அ க.);.

     [சிவப்பரிதாரம் → சிவந்தவரிதாரம்]

சிவந்தவல்லி

 சிவந்தவல்லி civandavalli, பெ. (n.)

   செவ்வரளி; red oleander.

     [சிவந்தவரணி → சிவந்தவள்ளி → சிவந்தவல்லி]

சிவந்தவேசை

 சிவந்தவேசை civandavēcai, பெ. (n.)

   செம்பரத்தை; Chinese rose mallow (சா.அக.);.

     [சிவந்த + வேசை]

பொது மகளிரை வேசையெனவும், பரத்தை யெனவும் வழங்குவதுண்டு. மருத்துவக் குழுஉக் குறியாகப் ‘பரத்தை’ என்பதற்குப் பகரமாய வேசை கையாளப்படுகிறது.

சிவந்தவைப்புநஞ்சு

 சிவந்தவைப்புநஞ்சு civandavaippunañju, பெ. (n.)

   செந்நிற வைப்பு நஞ்சு (யாழ்.அக);; red arsenic.

     [சிவந்த + வைப்பு நஞ்சு]

சிவந்தாடு

 சிவந்தாடு civandāṭu, பெ. (n.)

   செம்மறியாடு; a brown wooly sheep (சா.அக.);.

     [சிவந்த + ஆடு]

சிவந்தி

சிவந்தி civandi, பெ. (n.)

   1. கொடிப்பாலை (மலை);; green wax flower.

   2. தான்றிமரம்; devil’s abods (சா.அக.);.

 சிவந்தி2 civandi, பெ. (n.)

   செவ்வந்தி; garden chrysanthemum.

     [செவந்தி → சிவந்தி]

சிவந்திகம்

 சிவந்திகம் civandigam, பெ. (n.)

   நரிநாவல் அல்லது சிறுநாவல்; ruddy black plum (சாஅக.);.

சிவந்திக்கடுக்காய்

 சிவந்திக்கடுக்காய் civandikkaḍukkāy, பெ. (n.)

   ஊதை, மூலம் போன்ற நோய்க்கு மருந்தாவதும், பொன் வண்ணமுடையதும், காட்டில் விளைவதுமான செங்கடுக்காய்; a wild red golden-coloured gallnut and it is a cire against rheumatism and hemorrhoids (சாஅக.);.

     [சிவந்தி + கடுக்காய்]

சிவந்திக்கருப்பூரம்

 சிவந்திக்கருப்பூரம் civandikkaruppūram, பெ. (n.)

   இதளியக் (இரச); கருப்பூரம்; bichloride of mercury (சா.அக.);.

     [சிவந்தி + கருப்பூரம்]

சிவந்திடுமாழைமண்

சிவந்திடுமாழைமண் civandiḍumāḻaimaṇ, பெ. (n.)

   1. செப்புமணல்; copper ore.

   2. பூங்காவ; red ochre (சா.அங்.);.

     [சிவந்திடு + மாழை+ மண்]

சிவனடியார்

சிவனடியார் civaṉaḍiyār, பெ. (n.)

   1. சிவனை வழிபடுவோர்; devotees of Siva.

   2. நாயன்மார்கள் (வின்.);; the Nayanmars.

     [சிவன் + அடியார்]

சிவனந்தி

 சிவனந்தி civaṉandi, பெ. (n.)

   அடுக்கு நந்தியாவட்டம்; double wax flower (சா.அக.);.

சிவனமிர்தம்

 சிவனமிர்தம் civaṉamirtam, பெ. (n.)

   கடுக்காய்; gall nut (சா.அக.);.

சிவனம்

சிவனம் civaṉam, பெ. (n.)

   1. குன்றிமணி; jewellers bead.

   2. பொருத்து; suture (சா.அக.);.

 சிவனம் civaṉam, பெ.(n.)

   வந்தவாசி வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Wandiwash Taluk.

     [சிவன்ண-சிவனம்]

சிவனாகம்

 சிவனாகம் civaṉākam, பெ. (n.)

   உப்புமணி; salt beads (சா.அக.);.

சிவனாகினி

 சிவனாகினி civaṉākiṉi, பெ. (n.)

   வெற்றிலைக் கொடி; betel creeper (சா.அக.);.

சிவனாடல்

 சிவனாடல் civaṉāṭal, பெ. (n.)

   பாண்டரங்கம், கொடுகொட்டி, காபாலம் என்று கூறப்படும் சிவபெருமானது ஆடல்; dance of Sivan, three in number, viz. paņdarangam, kodu-kotti, kabalam.

     [சிவன் + ஆடல்]

சிவனாதியுப்பு

 சிவனாதியுப்பு civaṉātiyuppu, பெ. (n.)

   பூரணாதி உப்பு; a quintesence salt (சா.அக.);.

சிவனாம்பு

 சிவனாம்பு civaṉāmbu, பெ. (n.)

   மருந்துப் பூடுவகை; a kind of medicinal shrub.

     [சிவன் → சிவனாம்]

சிவனார்கிழங்கு

 சிவனார்கிழங்கு civaṉārkiḻṅgu, பெ. (n.)

   கார்த்திகைக் கிழங்கு (மலை);; Malabar glorylily.

     [சிவனார் + கிழங்கு]

சிவனார்கொடி

சிவனார்கொடி civaṉārkoḍi, பெ. (n.)

   செங்காந்தள் (திவ்.பெரியாழ். 3.3:1, ஜீ);; Malabar glory-lily.

சிவனார்சேவிகம்

 சிவனார்சேவிகம் civaṉārcēvigam, பெ. (n.)

சிவன்மூலி பார்க்க;see sivan-mili (சா.அக.);.

     [சிவனார் + சேவிகம்]

சிவனார்தலை

 சிவனார்தலை civaṉārtalai, பெ. (n.)

   இலிங்கம்; phallus.

     [சிவனார் + தலை]

சிவனார்பாகல்

சிவனார்பாகல் civaṉārpākal, பெ. (n.)

   1. ஐவிரலி; a creeper bearing a red fruit.

   2. கோவை (மலை.);; a common creeper of the hedges.

     [சிவனார் + பாகல்]

சிவனார்பாவை

 சிவனார்பாவை civaṉārpāvai, பெ. (n.)

   கொவ்வைக் கொடி; Indian Creeper (சா.அக);.

     [சிவனார் + பாவை]

சிவனார்விந்து

 சிவனார்விந்து civaṉārvindu, பெ. (n.)

   இதளியம்; mercury (சா.அக);.

     [சிவனார் + விந்து]

சிவனார்வேம்பு

சிவனார்வேம்பு civaṉārvēmbu, பெ. (n.)

   செடிவகை (பதார்த்த. 267);; wiry indigo.

மறுவ. இறைவன் வேம்பு

     [சிவனார் + வேம்பு]

சிவனி

சிவனி1 civaṉi, பெ. (n.)

   கழுதை (யாழ்.அக.);; ass.

 சிவனி2 civaṉi, பெ. (n.)

   1. மருளூமத்தை; Indian xanthium.

   2. பாலை; edible paulay.

சிவனிப்பால்

 சிவனிப்பால் civaṉippāl, பெ. (n.)

   கழுதைப்பால்; ass’s milk.

     [சிவனி + பால்]

சிவனிரவு

சிவனிரவு civaṉiravu, பெ. (n.)

   கும்ப மாசி); மாதத்தில் வெள்ளுவாவின் 14ஆம் நாளன்று உள்ள இரவு பெரும்|மா சிவனிரவு (மகாசிவராத்திரி);; for teenth night of kumba (māci); month from full moon.

     [சிவன்+ இரவு]

 சிவனிரவு civaṉiravu, பெ. (n.)

   கும்ப (மாசி); மாதத்துக் காருவா பதினான்காம் நாளில் (கிருஷ்ண சதுர்த்தசி); சிவனடியார்கள் நாள் முழுதும் உண்ணாநோன்பிருந்து இரவெல்லாம் கண்விழித்துச் சிவனைப் பூசித்துக் கொண்டாடும் நோன்பு; a popular religious observance in honour of Sivan on the 14th titi of the dark fortnight of the month of Masi, when Saiva devotees perform pujas several times at night without having any sleep.

     [சிவன் + இரவு]

சிவனுப்பு

 சிவனுப்பு civaṉuppu, பெ. (n.)

   செயற்கையுப்பு; an artificial salt (சா.அக.);.

     [சிவன் + உப்பு]

சிவனுள்மலை

 சிவனுள்மலை civaṉuḷmalai, பெ. (n.)

   அயமலை; mountain containing iron ore (சா.அக);.

சிவனெண்குணம்

சிவனெண்குணம் civaṉeṇkuṇam, பெ. (n.)

   சிவபெருமானுடைய எண் வகைக் குணங்களான தன் வயத்தனாதல், துய வுடம்பினனாதல், இயற்கையுணர்வினனாதல், முற்றுமுணர்தல் இயல்பாக, பாசங் களினிங்குதல், பேரருளுடைமை, முடிவிலா ஆற்றலுடைமை, வரம்பிலின்பமுடைமை முதலியன (குறள், 9, உரை);; the eight attributes of Sivan, viz, tan-vayattanadal, tuya-v-udambinanadal, iyarkai-y-unarvinanadal, murrumunardal, iyalpagave pasangali ningudal, peraruludaimai, mudivilaarraludaimai, varambilinpamudaimai.

     [சிவன் + எண் + குணம்]

சிவனேயென்றிரு-த்தல்

சிவனேயென்றிரு-த்தல் sivaney-cnriru-    3 செ.கு.வி. (v.i.)

   முயற்சியின்றி அடங்கியிருத்தல் (உ.வ);; to keep quiet or peaceful.

     [சிவன் + ஏ+ என்றிரு-,]

சிவனைம்முகம்

 சிவனைம்முகம் civaṉaimmugam, பெ. (n.)

   கிழக்கு, மேற்கு, வடக்கு, வடகிழக்கு, தெற்கு நோக்கி யருள்பாலிக்கும் சிவபெருமானுடைய ஐந்து முகங்கள் (ஈசானம், தற்புருடம், அகோரம், வாமம், சத்தியோசாதம்);; the five faces of Sivan in His Sada Sivan from, viz, Isanam, tarpurudam, akoram, vamam, sattiyosatam.

     [சிவன் + ஐம்முகம்]

சிவனோங்கிவள்ளி

 சிவனோங்கிவள்ளி civaṉōṅgivaḷḷi, பெ. (n.)

   காந்தம்; magnet (சா.அக.);.

சிவன்

சிவன்1 civaṉ, பெ. (n.)

   சிவனியர்க்கு வழங்கிய சிறப்புப் பெயர்; title of Saiva devotees.

     “கயிலாயன் ஆரூரான் தர்மம் சிவனக்கு நிசதம் நெல்லு முக்குறுணி” (தெ.க.தொ.2,254);.

   ம. சிவன்;க. சிவ, சிவு, தெ. சிவுடு

     [சிவ → சிவம் → சிவன். (த.ம.);]

த. சிவன் → Skt. Siva

சிவன் என்னும் பெயர் சிவந்தவன் என்று பொருள்பட்டுச் சேயோன் என்னும் முருகனை முன்னும் முத்தொழிலிறைவனைப் பின்னும் குறிக்கும் தூய தமிழ்ச்சொல். வேதத்தில் அக்கினிக்கும் இந்திரனுக்கும் உருத்திரனுக்கும் பொது அடைமொழியாக வரும் சிவ என்னும் சொல், மங்கல அல்லது நல்ல என்று பொருள்படும் பெயரெச்சம், இவ்விரண்டிற்கும் தொடர்பில்லை (வவ.இன்.34);

 சிவன்2 civaṉ, பெ. (n.)

   பூனைக் கண்மணி (வயிடூரியம்); (மூ.அ.);; cat’s eye, a variety of quartz.

     [(சிவப்பு); → சிவ → சிவன்]

 சிவன்3 civaṉ, பெ. (n.)

   1. இதளியம்; mercury.

   2. சிவகரந்தை; sweet basil (சா.அக.);

 சிவன்4 civaṉ, பெ. (n.)

   1. தந்தை; father.

   2. குரு; master.

சிவன்சொத்து

சிவன்சொத்து1 civaṉcottu, பெ. (n.)

   சிவன் கோயில், திருமேனி, அணிகலன்கள், முதலியன; property of sivan viz. temple, statue, ornament, etc.

     ‘சிவன் சொத்து குலநாசம்’ (பழ.);.

 சிவன்சொத்து2 civaṉcottu, பெ. (n.)

   செயற்கைப் பொன்; synthetic gold (சா.அக);.

     [சிவன் + சொத்து]

சிவன்மாலை

 சிவன்மாலை civaṉmālai, பெ. (n.)

சிவதுளசி பார்க்க;see Siva-tulasi (சா.அக.);.

     [சிவன் + மாலை)

சிவன்முடிக்கன்னி

 சிவன்முடிக்கன்னி civaṉmuḍikkaṉṉi, பெ. (n.)

சிவகரந்தை பார்க்க;see Siva-karandai (சா.அக.);.

     [சிவன் + முடிக்கன்னி]

சிவன்முடிச்செல்வி

 சிவன்முடிச்செல்வி civaṉmuḍiccelvi, பெ. (n.)

   நாறுகரந்தை; Indian globe thistle (சா.அக.);.

     [சிவன் + முடிச்செல்வி]

சிவன்மூலி

 சிவன்மூலி civaṉmūli, பெ. (n.)

   அழற்சி மிகு குளிர்ச்சி, பெருநோய், பிளவை, பல்வலி, வாய்ப்புண் போன்றவற்றைப் போக்கும் படர் கொடி மூலிகை; Sivan’s neem, wiry indigo. It is a spreading shrub, decoction is prescribed for sever cold, leprous, and cancerous affections the chewed root when given has the virtue of easing tooth ache and etc (சா.அக.);.

     [சிவன் + மூலி]

மறுவ. சிவனார்வேம்பு, சிவவிரியம், சிவனார் சேவிகம்.

சிவன்விந்து

சிவன்விந்து civaṉvindu, பெ. (n.)

   1. வழலை; a mystic name for quintessence salt used in Alchemy.

   2. மூளை; brain.

   3. தலைப்பிண்ட மூளை; the brain of the first foetus of a woman’s womb.

   4. வன்னிமரம்; suma trees (சா.அக.);.

     [சிவன் + விந்து]

சிவன்வீரியம்

 சிவன்வீரியம் civaṉvīriyam, பெ. (n.)

   இதளியம்; mercury.

     [சிவன் + வீரியம்]

சிவன்வேசை

 சிவன்வேசை civaṉvēcai, பெ. (n.)

   செம்பருத்தி; red-cotton (சா.அக.);.

     [சிவன் + வேசை]

செம்பரத்தை பார்க்க

சிவன்வேம்பு

 சிவன்வேம்பு civaṉvēmbu, பெ. (n.)

சிவனார் வேம்பு (வின்.); பார்க்க;see sivanar-vembu.

     [சிவன் + வேம்பு]

சிவபண்டாரி

சிவபண்டாரி civabaṇṭāri, பெ. (n.)

   1. சிவாலயக் கருவூலக்காரன்; treasurer of Saiva temple.

     “சிவபண்டாரிகள் வசமும்” (தெ.க.தொ. 1,140);.

   2. சிவாலயத்தின் சரக்கறைக்காரன் (இ.வ.);; store keeper of a Śivan temple.

     [சிவன் + பண்டாரி]

பண்டம் = சரக்கு பணம், கருவூலம், பொன். பண்டத்தையுடையவனும், காப்பவனும் பண்டாரி எனப்பட்டனர். ஒநோ. அதிகாரமுடையவன், அதிகாரி பண்டாரி என்னும் சொல் மக்கட் பெயராக

இந்தியாவிலும் இந்தியாவிற்கு வெளியிலும் சென்றுள்ளது.

எ. கா. ரமேஷ் பண்டாரி வ. இந்தியா பண்டார நாயகா: இலங்கை

கடற்கரைத்துறைமுகங்கள் அருகில் சரக்குகள் உள்ள பண்டாரக் குடில்கள் ஏராளமாக இருந்தமையால், துறைமுகங்களே பண்டார் எனப்பட்டன.

எ. கா. அப்பாஸ் பண்டார்.

இது பந்தர் எனச் சுருங்கி வட இந்தியாவில் உள்ளது.

எ. கா. போர் பந்தர், மஜித் பந்தர்.

சிவபதம்

சிவபதம் civabadam, பெ. (n.)

   சிவ பத்தர்கள் தத்தம் பக்குவத்திற்கு (பரிபாகத்திற்கு); ஏற்ப அடையும் தானாளுலகிருத்தல், தன் பாலிருத்தல், தானாம்பதம் பெறல், தானாகுதல் என்ற நால்வகைச் சிவபதவி (பிங்.);; Siva’s plane, comprising four states of bliss, viz, tan-al-ulagiruttal, tanpal-iruttal, tan-ampadam-peral, tan-agudal.

     “செம்மையேயாய சிவபத மளித்த செல்வமே” (திருவாச. 37:3);.

     [சிவன் + பதம்]

சிவபாத்தியன்

சிவபாத்தியன் civapāttiyaṉ, பெ. (n.)

   .சிவனடியான்; Sivan’s devotee as attached to the feet of Sivan.

     “திருவாதவூர்ச் சிவபாத்தியன்” (பதினொ. கோயிற்றிருப்பண். 58);.

     [சிவன் + பாத்தியன்]

சிவபிரான்

சிவபிரான் civabirāṉ, பெ. (n.)

   சிவபெருமான்; Sivan,

     “முனிவர் நாகருஞ் சென்று காணரிய சிவபிரானை” (சேதுபு. தைமிசா. 20);.

     [சிவன் + பிரான். பெருமகன் → பெருமான் → பிரான்.]

சிவபீசம்

 சிவபீசம் civapīcam, பெ. (n.)

   இதளியம் (சங்.அக.);; quick silver.

சிவபுண்ணியத்தெளிவு

சிவபுண்ணியத்தெளிவு civabuṇṇiyatteḷivu, பெ. (n.)

   உமாபதிசிவாசாரியர் இயற்றியதாகக் கருதப்படும் சிவனிய அறநூல்; a treatise on Saiva dharma considered to be authorised by Umapadi-Sivacariyar, 13th C.

சிவபுண்ணியம்

சிவபுண்ணியம் civabuṇṇiyam, பெ. (n.)

   சிவனே முழுமுதற்கடவுளெனக் கொண்டு அக்கடவுளுவப்பச் செய்யும் நற்கருமங்கள் (சி.போ.பா.8:1, பக்.356);; meritorious acts done in reference to Sivan, as the Supreme Being.

     [சிவன் + புண்ணியம்]

சிவபுரம்

சிவபுரம் civaburam, பெ. (n.)

   வேலூர் மாவட்டத்தில் உள்ள ஓர் ஊர்; a village in Vellore.

     [சிவம்+புரம்].

 சிவபுரம் civaburam, பெ. (n.)

   சிவவுலகம்; Sivan’s abode.

     “பார்மேற் சிவபுரம்போற் கொண்டாடும்” (திருவாச. 19:3);.

     [சிவன் + புரம்]

சிவபுராணம்

சிவபுராணம் civaburāṇam, பெ. (n.)

   1. பதினெண் தொன்மங்களுள் (புராணத்துள்); சிவனைப் பற்றிக்கூறும் பத்துத் தொன்மங்கள் (கந்தபு. பாயி. 54);; ten of the eighteen chief purinis.

   2. மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்துள் ஒரு பகுதி:

 a poem in Tiruvasagam by Manikkavasagar.

     [சிவன் + புராணம்]

 Skt. purana → த. புராணம்

சிவபுராணி

 சிவபுராணி civaburāṇi, பெ.(n.)

   கும்பகோணம் வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Kombakkonam Taluk. –

     [சிவன்+புராணி]

சிவபூசை

சிவபூசை civapūcai, பெ. (n.)

   நெறிமுறைப்படி செய்யும் சிவவழிபாடு; worship of Sivan usually ceremonial.

     “சிவபூசையின் பேற்றினால்” (சிவாக. தேவிநாட்டிய.24);.

     [சிவன் + பூசை. பூசு → பூசை]

 Skt. Puja

சிவபெருமான்

சிவபெருமான் civaberumāṉ, பெ. (n.)

சிவபிரான் பார்க்க;see Sivapiran.

     “செல்வமே சிவபெருமானே” (திருவாச. 37:1);.

     [சிவன் + பெருமான். பெருமகன் → பெருமான்]

சிவபோகம்

சிவபோகம் civapōkam, பெ. (n.)

   ஆதனின், பத்துவகைச் செயல்களுள் ஒன்றானதும், ஆதன் தன்னையிழந்து இறையுளொன்றி நிற்பதுமான பெருமகிழ்வுப் பெருவாழ்வு (உண்மை நெறி. 6.);; spiritual experience of the soul in which it merges its individuality in Sivan, the Supreme Being, one of tasa-kariyam.

     [சிவன் + போகம்]

சிவபோளம்

 சிவபோளம் civapōḷam, பெ. (n.)

   வெள்ளைப் போளம்; myrrh.

     [சிவன் + போளம்]

சிவப்பகத்தி

 சிவப்பகத்தி civappagatti, பெ. (n.)

   செவ்வகத்தி; West Indian sesban (சா.அக.);.

சிவப்பகாதிதம்

 சிவப்பகாதிதம் civappakādidam, பெ. (n.)

   குன்றிமணி; crab’s eye (சா.அக);.

சிவப்பகில்

 சிவப்பகில் civappagil, பெ. (n.)

   செந்நிறம் உள்ள அகிற்கட்டை; agallocha (சா.அக);.

     [சிவப்பு + அகில்]

சிவப்படுக்கலரி

 சிவப்படுக்கலரி civappaḍukkalari, பெ. (n.)

செம்மைநிறமுள்ள குங்குமவலரி:

 double red oleander.

     [சிவப்பு + அடுக்கு + அலரி]

சிவப்பணு

 சிவப்பணு civappaṇu, பெ. (n.)

   குருதியிலுள்ள சிவப்பணுத் திரள்; red cells in blood (சா.அக.);.

     [சிவப்பு + அணு]

சிவப்பந்திமல்லிகை

 சிவப்பந்திமல்லிகை civappandimalligai, பெ. (n.)

   செவ்வந்தி மந்தாரை; evening twilight flower (சா.அக.);.

     [சிவப்பு + அந்தி + மல்லிகை]

சிவப்பன்

சிவப்பன் civappaṉ, பெ. (n.)

   செந்நிறமுள்ளவன்; a man of ruddy or fair complexion.

     “பேர் கறுப்பணிறஞ் சிவப்பன்” (தனிப்பா. i.216:1);.

கோத்த: கெம்பன்

     [சிவ் → சிவ → சிவப்பு → சிவப்பன் (வே.க. 222]

சிவப்பப்பிரகாரம்

 சிவப்பப்பிரகாரம் civappappirakāram, பெ. (n.)

   சிவப்புநிறமுள்ள காக்காய்ப்பொன்; a red variety of mica (சா.அக.);.

     [சிவப்பு + அப்பிரகாரம்]

சிவப்பம்மான்பச்சரிசி

 சிவப்பம்மான்பச்சரிசி sivappammāṉpassarisi, பெ. (n.)

   வெள்ளிமாழையைத் துகளாக்கவும், ஆண் விந்துவினை பெருக்கி, முடக்கு நோயைப் போக்கவும் பயன்படும் செம்மை நிறமுள்ள ஒருவகை யரிசி; a red variety of rice which is used for calcining silver, secretion of semen against rhumatism and urinary disease.

மறுவ. சிறுசித்திரப் பாலடை

     [சிவப்பு + அம்மான் + பச்சரிசி]

சிவப்பம்மை

 சிவப்பம்மை civappammai, பெ. (n.)

   உடம்பில் சிவந்த கொப்புளங்களையுருவாக்கி அவற்றின் விளைவாக மிகுதியான காய்ச்சலை யேற்படுத்தும் அம்மைநோய் வகை; a kind of variola attended with red eruptions or rash and fever (சா.அக.);.

     [சிவப்பு + அம்மை]

சிவப்பரக்கு

சிவப்பரக்கு civapparakku, பெ. (n.)

   1. செவ்வரக்கு; wax red or red sealing wax.

   2. செம்பரக்கு; lac dye or cake lac (சா.அக.);.

ம. க. கெம்பரகு

     [சிவப்பு + அரக்கு]

சிவப்பரசிகா

 சிவப்பரசிகா sivapparasikā, பெ. (n.)

   செவ்வாம்பல்; red Indian water lily (சா.அக.);.

சிவப்பரிசி

சிவப்பரிசி sivapparisi, பெ. (n.)

   1. மட்டையரிசி; red rice of an inferior kind of paddy.

   2. பத்தியத்திற்கு (மருந்துணவுக்குப்); பயன்படும் கருங்குருவையரிசி; black paddy, the red rice of which is used in diet (சா.அக.);.

     [சிவப்பு + அரிசி]

சிவப்பரிதகிக்காய்

 சிவப்பரிதகிக்காய் civapparidagiggāy, பெ. (n.)

சிவந்திக்கடுக்காய் பார்க்க;see sivandi-k-kagukkay (சா.அக.);.

     [சிவப்பு + அரிதகிக்காய்]

சிவப்பரைக்கீரை

 சிவப்பரைக்கீரை civapparaikārai, பெ. (n.)

   செந்நிறமுள்ள அரைக்கீரை; redgarden greens (சா.அக.);.

     [சிவப்பு + அரைக்கீரை]

சிவப்பலரி

 சிவப்பலரி civappalari, பெ. (n.)

   செவ்வரளி; red oleander (சா.அக.);.

     [சிவப்பு + அலரி]

சிவப்பலி

 சிவப்பலி civappali, பெ. (n.)

   செம்மரம்;  red wood (சா.அக.);.

சிவப்பல்லி

 சிவப்பல்லி civappalli, பெ. (n.)

   செவ்வாம்பல்; red Indian water lily.

     [சிவப்பு + அல்லி]

சிவப்பல்லிக்கிழங்கு

 சிவப்பல்லிக்கிழங்கு civappallikkiḻṅgu, பெ. (n.)

   செம்பின் களிம்பைப் போக்கிச் செந்துார வண்ணமாக்குந் தன்மையுள்ள செங்கழுநீர்க் கிழங்கு; root of red Indian water lilly. It is useful for purifying and calcining copper.

     [சிவப்பு + அல்லி + கிழங்கு]

சிவப்பவரை

 சிவப்பவரை civappavarai, பெ. (n.)

   குங்கும நிறமுடைய சிவந்த அவரைக்கொடி, இதன் இலைச்சாறு பொன்னைச் சிந்துாரமாக்குந் தன்மையது; red bean creeper the juice of the leaves is used for calcining gold (சா.அக.);.

     [சிவப்பு + அவரை]

சிவப்பாக்கல்

 சிவப்பாக்கல் civappākkal, தொ. பெ. (vbl.n.)

   செந்தூரமாகச் செய்தல்; calcining into a red powder (சா.அக.);.

சிவப்பாதளை

சிவப்பாதளை civappātaḷai, பெ. (n.)

   1. சீமையாதளை; foreign physic nut.

   2. செவ்வாமணக்கு; red castor plant (சா.அக.);.

சிவப்பானந்தவல்லி

 சிவப்பானந்தவல்லி civappāṉandavalli, பெ. (n.)

   கோழித்தலைக் கந்தகம்;  red sulphur (சா.அக.);.

     [சிவப்பு + ஆனந்தவல்லி]

சிவப்பானபசளை

 சிவப்பானபசளை sivabbāṉabasaḷai, பெ. (n.)

   செம்பசளைக்கீரை; red Indian spinach (சா.அக.);.

     [சிவப்பு + பசளை]

சிவப்பானவெள்ளைச்சி

 சிவப்பானவெள்ளைச்சி civappāṉaveḷḷaicci, பெ. (n.)

   புற்றாம்பழம் (யாழ்.அக);; a kind of ore.

சிவப்பாமணக்கு

 சிவப்பாமணக்கு civappāmaṇakku, பெ. (n.)

   ஆமணக்குவகை; a variety of castor-plant.

     [சிவப்பு + ஆமணக்கு]

சிவப்பாம்பல்

 சிவப்பாம்பல் civappāmbal, பெ. (n.)

   செந்நிறமலர்தரும் ஆம்பல்; water-lily having red flower.

ம. சுவன்னஆம்பல்

     [சிவப்பு + ஆம்பல்]

சிவப்பார்வை

 சிவப்பார்வை civappārvai, பெ. (n.)

   இறைவனது பத்து வகையருளிச் செயல்களுள், ஆதனது (ஆன்மா); சிறுமையையும், தன் முயற்சியாலன்றித் தனக்கருள் புரிந்த இறைவனது பெருமையையும் தெளிய வுணர்ந்து கொள்ளுதலாகிய ஆதனின் அருளுணர்வு நிலை (சிவப்.கட்);; spiritual experience of the soul in which it understands its own limitations and perceives the Divine wisdom which, of its own accord, bestows grace one of dasa-kariyam.

     [சிவம் + பார்வை]

சிவப்பாற்றுச்சவுக்கு

 சிவப்பாற்றுச்சவுக்கு civappāṟṟuccavukku, பெ. (n.)

   சிவப்பான காயினையுங் கசப்புத் தன்மை வாய்ந்த பட்டையையுமுடைய சிவந்த ஆற்றுச் சவுக்கு மரம்; red Indian tamarisk galls are employed as an astringent and tonic and bark is bitter (சா.அக.);.

     [சிவப்பு + ஆற்று + சவுக்கு]

சிவப்பி

சிவப்பி1 civappi, பெ. (n.)

   1. சிவப்பு நிறமுள்ளவள்; woman of ruddy or fair complexion.

   2. செந்தெங்கு (யாழ்.அக.);; reddish coconut.

கோத்த: கெம்பய்

     [சிவ → சிவப்பி (வே.க. 222);]

 சிவப்பி2 civappi, பெ. (n.)

   1. செவ்வாமணக்கு; red castor plant.

   2. செந்திராய்; red Indian chickweed.

   3. தொட்டி வைப்புநஞ்சு; a prepared arsenic.

   4. அரத்த வைப்புநஞ்சு; red arsenic.

   5. செவ்வகத்தி; west Indian sesban (சா.அக.);.

     [சிவப்பு → சிவப்பி. ‘இ’ உடைமைப் பொருளீறு]

சிவப்பிப்பால்

 சிவப்பிப்பால் civappippāl, பெ. (n.)

   சிவந்த பெண் முலைப்பால்; breast milk of a fair Woman (சா.அக.);.

     [சிவப்பி + பால்]

சிவப்பிரகாசம்

சிவப்பிரகாசம்1 civappirakācam, பெ. (n.)

   மெய்கண்ட பதினான்கனுள் உமாபதி சிவாச்சாரியாரால் இயற்றப்பெற்ற சிவனியக் கொண்முடிபு நூல் (சிவப்பிர. பாயி. 11);; a text book of the Saiva Sittända philosophy by Umapadi-Sivaccariyar, one of 14 mey-kandasattiram.

சிவப்பிரகாசர்

சிவப்பிரகாசர் civappirakācar, பெ. (n.)

பதினேழாம் நூற்றாண்டிலிருந்தவரும், பிரபுலிங்கலீலை, நன்னெறி முதலிய நூல்களின் ஆசிரியரும், வீரச் சிவனிய மதத்தைச் சார்ந்தவருமாகிய ஒரு துறவி,

 a Vira-Saiva ascetic, author of Prabulinga-Iilai, Nanneri and some other works, 17th century.

சிவப்பிராமணர்

சிவப்பிராமணர் civappirāmaṇar, பெ. (n.)

   சிவன்கோயிற் பூசை, முதலான ஒழுகலாறுகளை மேற்கொண்ட அதிகாரிகள்; Brahmans, who conduct service in Siva temples.

     “வீரசோழன் திருமடை விளாகத்தில் குடியிருந்த தவசியர்க்கும் சிவப்பிராமணர்க்கும்” (தெ.க.தொ.3,47);.

     [சிவன் + பிராமணர்]

சிவப்பிரியம்

 சிவப்பிரியம் civappiriyam, பெ. (n.)

   அக்கமணி (சங்.அக.);; rudraksa bead.

     [சிவன் + பிரியம். புரியம் → பிரியம்]

குமரி நாட்டுக் காலந்தொட்டுச் சிவநெறித் தமிழரால் அணியப்பட்டு வரும் அக்கமணி (முள்மணி); சிவனுக்கு விருப்பமானது என்னும் அடிப்படையில் சிவப்பிரியம் என வழங்கப்பெற்றது.

சிவப்பிரியா

 சிவப்பிரியா civappiriyā, பெ. (n.)

   கருப்பு வண்ண ஊமத்தை; black datura (சா.அக);.

சிவப்பிரியை

 சிவப்பிரியை civappiriyai, பெ. (n.)

   சிவபிரானது அன்புடைய உமையம்மை; Umai, as the beloved of Sivan.

     [சிவன் + பிரியை]

சிவப்பிவேர்

 சிவப்பிவேர் civappivēr, பெ. (n.)

   நச்சுப்புல்; a species of poisonous grass (சா.அக.);

     [சிவப்பி + வேர்]

சிவப்பீயம்

 சிவப்பீயம் civappīyam, பெ. (n.)

   செம்மண் நிறமுள்ள ஈயத்தூள்; a heavy bright red powder of lead (சா.அக.);

ம. சுவப்பீயம்

     [சிவப்பு + ஈயம்]

சிவப்பு

சிவப்பு1 civappu, பெ. (n.)

   1. செந்நிறம் (பிங்);; ruddiness, red colour.

   2. சிவப்புக்கல்; ruby.

   3. கறுப்பு (அக.நி.);; blackness

   ம. சிவப்பு, செமப்பு;   க. கெம்பு;   தெ. செம்;   து. கெம், கெஞ்ச, கெஞ்சி, கெம்பு;   பட. கெப்பு;   குரு. கேசொ;மா. கெசோ.

     [செம் → செவ் → சிவ் → சிவ → சிவப்பு → (வே.க.222);]

 சிவப்பு2 civappu, பெ. (n.)

 anger,

     “கறுப்புஞ் சிவப்பும் வெகுளிப் பொருள” (தொல். சொல். 372);.

     [செம் → செவ் → சிவ் → சிவ → சிவப்பு. (வே.க. 222);]

 சிவப்பு3 civappu, பெ. (n.)

   1. சாதிலிங்கம்; vermilion.

   2. மகளிர் (சூதகம்); தீட்டு; menstrual blood.

   3. செந்தூரம்; red-oxide.

   4. சிவப்புக் கல்நார்; red variety of asbestos.

   5. அரக்கு; sealing wax.

     [செம் → செவ் → சிவ் → சிவ → சிவப்பு]

 சிவப்பு4 civappu, பெ. (n.)

   சீட்டு முதலிய விளையாட்டுகளில் வென்ற குழுவினருக்கு இடுங்குறியீடு; score of a winning party in a game of cards, etc.,

     [சிவ → சிவப்பு]

சிவப்பு நண்டு

 சிவப்பு நண்டு civappunaṇṭu, பெ. (n.)

   கடற்கரையோரமாகக் காணப்படும் சிவப்பு நிறமுள்ள நண்டு; red-crab found in sea-shore.

     [சிவப்பு + நண்டு]

சிவப்புக் காஞ்சொறி

 சிவப்புக் காஞ்சொறி civappukkāñjoṟi, பெ. (n.)

   செந்தொட்டிப் படர்கொடி; climbing nettle (சா.அக.);.

     [சிவப்பு + காஞ்சொறி]

சிவப்புக் குன்றி

 சிவப்புக் குன்றி civappukkuṉṟi, பெ. (n.)

   சிவப்புநிறமுள்ள குன்றிமணி; crab’s eye (சா.அக.);.

மறுவ. குன்றிமுத்து, குண்டுமணி

     [சிவப்பு + குன்றி]

சிவப்புக்கசகசா

 சிவப்புக்கசகசா sivappuggasagasā, பெ. (n.)

செந்நிறக் கசகசா,

 red poppy seed (சா.அக);.

     [சிவப்பு + கசகசா]

சிவப்புக்கடுக்காய்

 சிவப்புக்கடுக்காய் civappukkaḍukkāy, பெ. (n.)

   செங்கடுக்காய்; red gallnut (சா.அக);.

மறுவ. சிவந்திக்கடுக்காய், சிவப்புச்சிந்தாதி

     [சிவப்பு + கடுக்காய்]

சிவப்புக்கத்தரிக்காய்

சிவப்புக்கத்தரிக்காய் civappukkattarikkāy, பெ. (n.)

   1. சிவந்த கத்தரிக்காய்; red brinjal plant.

   2. செங்கத்தரி,

 caper shrub (சா.அக);

     [சிவப்பு + கத்தரிக்காய்]

சிவப்புக்கத்திரகம்

 சிவப்புக்கத்திரகம் civappuggattiragam, பெ. (n.)

   மதிமயக்கிப் பூடு; a plantsupposed to cause bewilderment if trodden upon or interfered with (சா.அக);.

மறுவ. திகைப்பூடு

சிவப்புக்கத்திரி

 சிவப்புக்கத்திரி civappukkattiri, பெ. (n.)

சிவப்புக்கத்தரிக்காய் பார்க்க;see Sivappu-k-kattarikkay.

     [சிவப்புக் கத்தரிக்காய் → சிவப்புக் கத்திரி]

சிவப்புக்கந்தகம்

 சிவப்புக்கந்தகம் civappuggandagam, பெ. (n.)

   செயற்கைப் பொன் மற்றும் வெள்ளி செய்யப் பயன்படும் கந்தகம்; red sulphur used to preparing artificial gold and silver (சா.அக.);.

     [சிவப்பு + கந்தகம்]

சிவப்புக்கந்தி

 சிவப்புக்கந்தி civappukkandi, பெ. (n.)

   கோழித்தலைக் கந்தகம் (வின்.);; a mineral poison.

     [சிவப்பு + கந்தி]

சிவப்புக்கந்திகா

 சிவப்புக்கந்திகா civappukkandikā, பெ. (n.)

   பூனைவணங்கி; rubbish plant (சா.அக.);.

மறுவ. குப்பைமேனி

     [சிவப்பு + கந்திகா]

சிவப்புக்கரிசாலை

 சிவப்புக்கரிசாலை civappukkaricālai, பெ. (n.)

   பொற்றளைக் கையாந்தகரை; Ceylon verbesina.

மறுவ. சிவந்த கரிசலாங்கண்ணி, சிவப்புக் கரிசலாங்கண்ணி, சிவப்புக் கையான்.

     [சிவப்பு + கரிசாலை]

சிவப்புக்கரு

 சிவப்புக்கரு civappukkaru, பெ. (n.)

   முட்டையிலுள்ள மஞ்சட்கரு (வின்.);; yolk of an egg.

     [சிவப்பு + கரு]

சிவப்புக்கற்பூரம்

 சிவப்புக்கற்பூரம் civappukkaṟpūram, பெ. (n.)

   இதளியக் கற்பூரம்; a red arsenic camphor (சா.அக.);.

     [சிவப்பு + கற்பூரம்]

சிவப்புக்கற்றாழை

 சிவப்புக்கற்றாழை civappukkaṟṟāḻai, பெ. (n.)

   செங்கற்றாழை; red aloe (சா.அக.);.

     [சிவப்பு + கற்றாழை]

சிவப்புக்கலவாய்

 சிவப்புக்கலவாய் civappukkalavāy, பெ. (n.)

சிவப்புக்களவாய் பார்க்க;see Sivappu-k-kalavay.

     [சிவப்புக்களவாப் → சிவப்புக்கலவாய்]

சிவப்புக்கல்

சிவப்புக்கல் civappukkal, பெ. (n.)

   1. ஈரற்கல் (வின்.);; a red stone.

   2. கெம்புக்கல் (உ.வ.);; ruby.

க. கெம்புகல்லு

     [சிவப்பு + கல்]

சிவப்புக்களவாய்

சிவப்புக்களவாய் civappukkaḷavāy, பெ. (n.)

   மிக்க செந்நிறமுள்ளதும், மூன்றடி நீளம் வளர்வதுமாகிய கடல்மீன் வகை; Sea fish, lake, attaining 3 ft. in length.

     [சிவப்பு + களவாய்]

களவாய் பார்க்க.

சிவப்புக்கழற்சி

 சிவப்புக்கழற்சி civappukkaḻṟci, பெ. (n.)

   செந்நிறமுள்ள கழற்சிக்காய்; a redivariety of bonduc nut (சா.அக.);.

     [சிவப்பு + கழற்சி]

சிவப்புக்கழி-தல்

சிவப்புக்கழி-தல் civappukkaḻidal,    2 செ.கு.வி (v.i)

   1. மாதவிடாயாதல்; to menstruate.

   2. மட்டுமீறிய மாதவிடாயாதல்; to menorrhagia (சா.அக.);.

     [சிவப்பு + கழி-,]

சிவப்புக்காசரைக்கீரை

 சிவப்புக்காசரைக்கீரை civappukkācaraikārai, பெ. (n.)

   புளிச்சைக்கீரை; red Indian brown hemp.

மறுவ, சீமைக் காசரைக் கீரை

     [சிவப்பு + காசரை + கீரை]

சிவப்புக்காசற்கீரை

 சிவப்புக்காசற்கீரை civappukkācaṟārai, பெ. (n.)

சிவப்புக்காசரைக்கீரை பார்க்க;see Sivappu-k-kasarai-k-kirai.

சிவப்புக்காசித்தும்பை

 சிவப்புக்காசித்தும்பை civappukkācittumbai, பெ. (n.)

   செந்நிறமான காசித்தும்பை; a red tumbay flower (சா.அக.);.

     [சிவப்பு + காசித்தும்பை]

சிவப்புக்காசினிக்கீரை

 சிவப்புக்காசினிக்கீரை civappukkāciṉikārai, பெ. (n.)

   செந்நிறமான காசினிக்கீரை வகை; endive plant (சா.அக.);.

     [சிவப்பு + காசினிக்கீரை]

சிவப்புக்காட்டுக்கோழி

சிவப்புக்காட்டுக்கோழி civappukkāṭṭukāḻi, பெ. (n.)

   1. செந்நிறமுள்ள காட்டுச் சம்பங் கோழி; red jungle fowl.

   2. சிறகுக்கோழி; red spurfowl.

     [சிவப்பு + காட்டுக்கோது]

சிவப்புக்காதி

 சிவப்புக்காதி civappukkāti, பெ. (n.)

   செம்பசளை; red Malabar night shade.

     [சிவப்பு + காதி]

சிவப்புக்காந்தள்

 சிவப்புக்காந்தள் civappukkāndaḷ, பெ. (n.)

   செங்காந்தள்; flame flower (சா.அக.);.

     [சிவப்பு + காந்தள்]

சிவப்புக்காய்ச்சுரை

 சிவப்புக்காய்ச்சுரை civappukkāyccurai, பெ. (n.)

   சீமைக்காய்ச்சுரை; red sorrel (சா.அக.);.

மறுவ, செம்புளிச்சை

     [சிவப்பு + காய்ச்சுரை]

சிவப்புக்காய்வேளை

 சிவப்புக்காய்வேளை civappukkāyvēḷai, பெ. (n.)

   செங்கீரை வகை; red cleome (சா.அக.);.

     [சிவப்பு + காய்வேளை]

சிவப்புக்கார்கண்டல்

 சிவப்புக்கார்கண்டல் civappukkārkaṇṭal, பெ. (n.)

   சேற்றுநிலத்தில் விளையும் மரவகை; tree mangrove (சா.அக.);.

     [சிவப்பு + கார்கண்டல்]

சிவப்புக்காவி

 சிவப்புக்காவி civappukkāvi, பெ. (n.)

   பூங்காவிக்கல்; red ochre containing much oxide of iron, used by dyers as red paint (சா.அக.);.

     [சிவப்பு + காவி]

சிவப்புக்கி

 சிவப்புக்கி civappukki, பெ. (n.)

சிவகரந்தை பார்க்க;see Sivagarandai (சா.அக.);.

சிவப்புக்கிலுகிலுப்பை

 சிவப்புக்கிலுகிலுப்பை civappuggilugiluppai, பெ. (n.)

   செங்கிலுகிலுப்பை; red crotolaria (சா.அக.);.

     [சிவப்பு + கிலுகிலுப்பை]

சிவப்புக்கீழாநெல்லி

 சிவப்புக்கீழாநெல்லி civappukāḻānelli, பெ. (n.)

சிவப்புக்கீழ்க்காய்நெல்லி பார்க்க;see Sivappu-k-kil-k-kay-nelli (சா.அக.);.

     [சிவப்பு + கீழாநெல்லி (உ.வ.); இதனைக் கீழ்க்காய் நெல்லி என வழங்குவதே திருந்திய வடிவம்]

சிவப்புக்கீழ்க்காய்நெல்லி

 சிவப்புக்கீழ்க்காய்நெல்லி civappukāḻkkāynelli, பெ. (n.)

   அடித்தண்டு செந்நிறமாயிருக்கும் ஒருவகைக் கீழ்க்காய் நெல்லி; red necroory (சா.அக.);.

     [சிவப்பு + கீழ்க்காப் + நெல்லி]

சிவப்புக்குங்கிலியம்

 சிவப்புக்குங்கிலியம் civappukkuṅgiliyam, பெ. (n.)

   குங்கிலிய மரவகையுளொன்று (மூ.அ.);; red dammer.

     [சிவப்பு + குங்கிலியம்]

சிவப்புக்குத்தாளை

 சிவப்புக்குத்தாளை civappukkuttāḷai, பெ. (n.)

 Gibsvæuson;

 a kind of paddy (சா.அக.);.

     [சிவப்பு + குத்தாளை]

குத்தாளை = நெல்வகை, வானவாரியாக விளையக்கூடியது

சிவப்புக்கும்மிட்டி

 சிவப்புக்கும்மிட்டி civappukkummiṭṭi, பெ. (n.)

சிவப்புக்கொம்மட்டி பார்க்க;see Sivappu-k-kommatti (சா.அக.);.

     [சிவப்புக்கொம்மட்டி → சிவப்புக் கும்மட்டி → சிவப்புக்கும்மிட்டி]

சிவப்புக்கூத்தன்

 சிவப்புக்கூத்தன் civappukāttaṉ, பெ. (n.)

   சிவப்புநிறமுள்ள காதணிவகையு ளொன்று; a red variety of ear-ring (சா.அக.);.

     [சிவப்பு + கூத்தன்]

சிவப்புக்கெண்டை

சிவப்புக்கெண்டை civappukkeṇṭai, பெ. (n.)

   1. சேற்கெண்டை; red carp.

   2. பூமீன்கெண்டை; red masheer or salmon of India (சா.அக.);.

     [சிவப்பு + கெண்டை]

சிவப்புக்கெந்தி

 சிவப்புக்கெந்தி civappukkendi, பெ. (n.)

சிவப்புக்கந்தகம் பார்க்க;see Sivappu-k-kandagam (சா.அக.);.

     [சிவப்பு + கெந்தி. கந்தகம் → கெந்தி]

சிவப்புக்கையான்

 சிவப்புக்கையான் civappukkaiyāṉ, பெ. (n.)

சிவப்புக்கரிசாலை பார்க்க;see Sivappu-k-karisalai (சா.அக.);.

மறுவ. பொற்றலைக் கையாந்தகரை, சிவந்த கரிசாலை

     [சிவப்பு + கையான்]

சிவப்புக்கொடிப்பசலை

 சிவப்புக்கொடிப்பசலை sivappukkoḍippasalai, பெ. (n.)

   இரவில் பூக்கும் கொடி வகை (மூ.அ.);; red malabar nightshade (சா.அக.);.

     [சிவப்பு + கொடிப்பசலை]

சிவப்புக்கொடிவேலி

 சிவப்புக்கொடிவேலி civappukkoḍivēli, பெ. (n.)

   செங்கொடி வேலி; rosy coloured leadwort (சா.அக.);.

     [சிவப்பு + கொடிவேலி]

சிவப்புக்கொட்டைக்கரந்தை

 சிவப்புக்கொட்டைக்கரந்தை civappukkoṭṭaikkarandai, பெ. (n.)

   சிறு நீரடைப்பைப் போக்குங் கரந்தைச் செடி; Indian globe thistle (சா.அக.);.

     [சிவப்பு + கொட்டை + கரந்தை]

சிவப்புக்கொன்றை

சிவப்புக்கொன்றை1 civappukkoṉṟai, பெ. (n.)

   வரிக்கொன்றை; red Indian laburnum (சா.அக.);.

     [சிவப்பு + கொன்றை]

 சிவப்புக்கொன்றை civappukkoṉṟai, பெ. (n.)

   அழகிற்காகத் தோட்டங்களிற் பயிராக்கப் படும் செங்கொன்றை; red Indian laburnum planted in garden for ornamental purposes (சா.அக.);.

     [சிவப்பு + கொன்றை]

சிவப்புக்கொம்மட்டி

 சிவப்புக்கொம்மட்டி civappukkommaṭṭi, பெ. (n.)

   செங்கொம்மட்டி; red bitter water melon (சா.அக.);.

     [சிவப்பு + கொம்மட்டி]

சிவப்புக்கொய்யா

 சிவப்புக்கொய்யா civappukkoyyā, பெ. (n.)

   செங்கொய்யா; red guava (சா.அக);.

     [சிவப்பு + கொய்யா]

சிவப்புக்கோடைச்சவுக்கு

 சிவப்புக்கோடைச்சவுக்கு civappukāṭaiccavukku, பெ. (n.)

   இறகுபோன்ற கிளைகளை உடைய ஆற்றுச்சவுக்கு; tamarisk (சா.அக);.

     [சிவப்பு + கோடை + சவுக்கு]

சிவப்புச்சங்கு

 சிவப்புச்சங்கு civappuccaṅgu, பெ. (n.)

   வெண் சிவப்புநிறமுள்ள சங்குவகை; pink coloured conch (சா.அக.);.

     [சிவப்பு + சங்கு]

சிவப்புச்சதுரக்கள்ளி

 சிவப்புச்சதுரக்கள்ளி civappuccadurakkaḷḷi, பெ. (n.)

   செங்கள்ளி; a red variety of square Spurge (சா.அக.);.

     [சிவப்பு + சதுரக்கள்ளி]

சிவப்புச்சத்திகாரணை

 சிவப்புச்சத்திகாரணை civappuccattikāraṇai, பெ. (n.)

   செந்நிறமும் சிறியதும் சதைப்பற்றும் வாய்ந்த இலையினையுடையதும், உணவிற்குக் கீரையாகப் பயன்படுவதுமான சத்திசாரணை மூலிகை; red shauranay. It is a procumbent herb with fleshy red leaves and it is used in food like vegetable greens (சா.அக.);.

     [சிவப்பு + சத்திசாரணை]

சிவப்புச்சந்தனம்

 சிவப்புச்சந்தனம் civappuccandaṉam, பெ. (n.)

   செஞ்சந்தன மரவகை; a kind of red sandals (சா.அக.);

     [சிப்பு + சந்தனம்]

சிவப்புச்சந்தானிகம்

 சிவப்புச்சந்தானிகம் civappuccandāṉigam, பெ. (n.)

   செம்மாதுளை; red pomegranate.

     [சிவப்பு + சந்தானிகம்]

சிவப்புச்சவ்வீரம்

 சிவப்புச்சவ்வீரம் civappuccavvīram, பெ. (n.)

   இதளியஞ் சேர்த்துருவாக்கப்பட்ட வீரவைப்பு நஞ்சு வகையுளொன்று; a prepared sublimate of mercury (சா.அக.);.

     [சிவப்பு + சவ்வீரம்]

சிவப்புச்சாமந்தி

 சிவப்புச்சாமந்தி civappuccāmandi, பெ. (n.)

   கொத்தாக மலரும் சாமந்தி வகை; red chrysanthemum (சா.அக.);.

     [சிவப்பு + சாமந்தி. சாமம் + அந்தி → சாமந்தி = அத்தி வண்ணம் போன்ற திறமுடைய பூவகை]

சிவப்புச்சாமை

 சிவப்புச்சாமை civappuccāmai, பெ. (n.)

   செஞ்சாமை; red species of little millet (சா.அக.);.

மறுவ மத்தங்காய்ப்புல்

     [சிவப்பு + சாமை. சமை → சாமை]

சிவப்புச்சாரணை

 சிவப்புச்சாரணை civappuccāraṇai, பெ. (n.)

சிவப்புச்சத்திசாரணை பார்க்க;see Sivappu-c-cattisaranai (சா.அக.);.

     [சிவப்புச்சத்திசாரணை → சிவப்பு சாரணை]

சிவப்புச்சாரம்

 சிவப்புச்சாரம் civappuccāram, பெ. (n.)

   மருந்துச்சரக்குகளைக் கொல்லுந் தன்மை மிக்க சாரம்; an unknown alkaline potash supposed to kill some of the drugs (சா.அக.);.

     [சிவப்பு + சாரம். காரம் → சாரம்]

சிவப்புச்சாறு

 சிவப்புச்சாறு civappuccāṟu, பெ. (n.)

   தேட் கொடுக்குப்பூடு; scorpion sting plant (சா.அக.);.

     [சிவப்பு + சாறு]

சிவப்புச்சிக்கு

 சிவப்புச்சிக்கு civappuccikku, பெ. (n.)

   புளியிண்டு; rosy-flushed assitello climber (சா.அக.);.

     [சிவப்பு + சிக்கு]

சிவப்புச்சிங்கிரா

 சிவப்புச்சிங்கிரா civappucciṅgirā, பெ. (n.)

   செவ்வரளி; red oleander.

     [சிவப்பு + சிங்கிரா]

சிவப்புச்சிங்கொனா

 சிவப்புச்சிங்கொனா civappucciṅgoṉā, பெ. (n.)

சிவப்புச்சுரப்பட்டை பார்க்க;see Sivappu-c-curappattai (சா.அக.);.

     [சிவப்பு + சிங்கொனா]

சிவப்புச்சித்திரமூலம்

 சிவப்புச்சித்திரமூலம் civappuccittiramūlam, பெ. (n.)

   செங்கொடிவேலி; rosy-flowered leadwort (சா.அக.);.

     [சிவப்பு + சித்திரமூலம்]

சிவப்புச்சிந்தாதி

 சிவப்புச்சிந்தாதி civappuccindāti, பெ. (n.)

சிவந்திக்கடுக்காய் பார்க்க;see sivandi-kkagukkay (சா.அக.);.

     [சிவப்பு + சிந்தாதி]

சிவப்புச்சிறுசவுக்கு

 சிவப்புச்சிறுசவுக்கு sivappussiṟusavukku, பெ. (n.)

   கோடைச்சவுக்கு; common tamarisk (சா.அக.);.

     [சிவப்பு + சிறுசவுக்கு]

சிவப்புச்சிறுமணியன்

 சிவப்புச்சிறுமணியன் civappucciṟumaṇiyaṉ, பெ. (n.)

   சம்பாநெல் வகை (தஞ்சை);; a variety of camba paddy (சா.அக.);.

     [சிவப்பு + சிறுமணியன், சிறுமணி → சிறுமணியன்]

சிவப்புச்சிறுமுறியன்

 சிவப்புச்சிறுமுறியன் civappucciṟumuṟiyaṉ, பெ. (n.)

   நெல்வகை; a kind of paddy (சா.அக.);.

     [சிவப்பு + சிறுமுறியன்]

சிவப்புச்சிற்றகத்தி

 சிவப்புச்சிற்றகத்தி civappucciṟṟagatti, பெ. (n.)

   சிவப்பு வகை அகத்தி; red scsbana (சா.அக.);.

     [சிவப்பு + சிற்றகத்தி]

சிவப்புச்சிற்றாமரை

 சிவப்புச்சிற்றாமரை civappucciṟṟāmarai, பெ. (n.)

   முளரிமலர் (உரோசா);; rose-flower (சா.அக.);.

     [சிவப்பு + சிற்றாமரை]

சிவப்புச்சிவதை

 சிவப்புச்சிவதை civappuccivadai, பெ. (n.)

   குடலிளக்க மருந்தாகப் பயன்படும் செஞ்சிவதைவேர்; a red variety of turbith root.

     [சிவப்பு + சிவதை]

சிவப்புச்சீதாசெங்கழுநீர்

 சிவப்புச்சீதாசெங்கழுநீர் civappuccītāceṅgaḻunīr, பெ. (n.)

   சிவப்பு நெய்ச்சிட்டிக் கீரை; a red variety of ash coloured fleabane (சா.அக.);.

     [சிவப்பு + சீதா + செங்கழுநீர்]

சிவப்புச்சீபிகம்

 சிவப்புச்சீபிகம் civappuccīpigam, பெ. (n.)

சிவப்புக்கழற்சி பார்கக;see Sivappu-k-kalarci (சா.அக.);.

சிவப்புச்சீமைப்பிச்சி

சிவப்புச்சீமைப்பிச்சி civappuccīmaippicci, பெ. (n.)

   1. சீன்பபவளப்பச்சி; China coral jasmine.

   2. பாரசீகப்பழம்; Persian fruit (சா.அக.);.

     [சிவப்பு + சீமைப்பிச்சி]

சிவப்புச்சுரப்பட்டை

 சிவப்புச்சுரப்பட்டை civappuccurappaṭṭai, பெ. (n.)

   சிவப்புச் சின்கொனாப்பட்டை; California cinchona bark (சா.அக.);

     [சிவப்பு + சுரப்பட்டை]

சிவப்புச்சோற்றுக்கற்றாழை

 சிவப்புச்சோற்றுக்கற்றாழை civappuccōṟṟukkaṟṟāḻai, பெ. (n.)

   செங்கற்றாழை; curacoa aloes (சா.அக.);.

     [சிவப்பு + சோற்றுக்கற்றாழை]

சிவப்புச்சோளம்

 சிவப்புச்சோளம் civappuccōḷam, பெ. (n.)

   செஞ்சோளம்; red maize.

     [சிவப்பு + சோளம்]

சிவப்புத்தண்டுக்கீரை

 சிவப்புத்தண்டுக்கீரை civapputtaṇṭukārai, பெ. (n.)

   தண்டுக்கீரை; a pot-herb (சா.அக);.

மறுவ. தண்டங்கீரை

     [சிவப்பு + தண்டுக்கீரை]

சிவப்புத்தம்பட்டை

 சிவப்புத்தம்பட்டை civapputtambaṭṭai, பெ. (n.)

   வாளவரை வகை; ovate-leaved redflowered sword-bean (சா.அக.);.

     [சிவப்பு + தம்பட்டை]

சிவப்புத்தலைக்கிளி

 சிவப்புத்தலைக்கிளி civapputtalaikkiḷi, பெ. (n.)

   செந்நிறக்கொண்டையுள்ள கிளி; rose-headed parrot (சா.அக.);.

     [சிவப்புத்தலை + கிளி]

சிவப்புத்தில்லை

 சிவப்புத்தில்லை civapputtillai, பெ. (n.)

   மலைமூலிகை இருபத்துமூன்றுள் ஒன்றாகிய சிவப்புத் தில்லை மரம்; a red variety of tigermilk tree which is one of the twenty three mountain herbs (சா.அக.);.

சிவப்புத்துத்தி

 சிவப்புத்துத்தி civapputtutti, பெ. (n.)

   செந்துத்தி; devil’s cotton (சா.அக.);.

மறுவ துத்தி, வட்டத்துத்தி, வட்டக்கண்ணி

     [சிவப்பு + துத்தி]

சிவப்புத்துவரை

 சிவப்புத்துவரை civapputtuvarai, பெ. (n.)

   துவரை வகை; red gram (சா.அக);.

     [சிவப்பு + துவரை]

சிவப்புப் பனையேறி

 சிவப்புப் பனையேறி civappuppaṉaiyēṟi, பெ. (n.)

   கிச்சிலிநிறமும் மஞ்சள் புள்ளிகளும் உடைய ஒரு வகை மீன்; a variety of orange colour and yellow spots (சா.அக.);.

     [சிவப்பு + பனையேறி]

சிவப்புப்பசலை

 சிவப்புப்பசலை sivappuppasalai, பெ. (n.)

   கீரை வகை (சங்.அக.);; a variety of Indian spinach.

மறுவ. பசளைக்கீரை, செம்பசளைக் கீரை

க. கெபுபசளெ

     [சிவப்பு + பசலை]

சிவப்புப்பூலா

சிவப்புப்பூலா civappuppūlā, பெ. (n.)

   1. பூலா; feather foil, a large shrub.

   2. பவளப்பூலா; coral berry tree.

     [சிவப்பு + ஆவா]

சிவப்புமந்தாரை

 சிவப்புமந்தாரை civappumandārai, பெ. (n.)

   மந்தாரை வகையுளொன்று (மூ.அ);; a variety of purple variegated mountain ebony.

க. கெம்புமந்தார

     [சிவப்பு + மந்தாரை]

சிவப்புமரம்

சிவப்புமரம் civappumaram, பெ. (n.)

   1. செம்மரம்; Coromandel redwood.

   2. விளாரி; bastard cedar.

     [சிவப்பு + மரம்]

சிவப்புமருதோன்றி

 சிவப்புமருதோன்றி civappumarutōṉṟi, பெ. (n.)

   செம்மருது; a red variety of nail dye (சா.அக.);.

     [சிவப்பு + மருதோன்றி]

சிவப்புமிளகு

 சிவப்புமிளகு civappumiḷagu, பெ. (n.)

   சம்பாநெல் வகையுளொன்று; a kind of camba paddy (சா.அக.);.

மறுவ. மிளகுச் சம்பா

     [சிவப்பு + மிளகு, மிளகு = மிளகுச் சம்பா]

நீண்டு மெலிந்த மணியுடைய நெல்லைச் சீரகச்சம்பா என்றும், உருண்டை வடிவ மணியுடைய நெல்லை மிளகுச்சம்பா என்றும், தடித்த மணியுடைய நெல்லைக் கட்டைச்சம்பா என்றும் வழங்குவர். சம்பா பொதுவாய்க் கூலத்தையும், சிறப்பாய் நெல்லையும் குறிக்கும்.

சிவப்புமுள்ளங்கி

 சிவப்புமுள்ளங்கி civappumuḷḷaṅgi, பெ. (n.)

   செந்நிறமுள்ள முள்ளங்கிக்கிழங்கு வகை (இ.வ.);; red country radish.

     [சிவப்பு + முள்ளங்கி]

சிவப்புமூக்குள்ளான்

 சிவப்புமூக்குள்ளான் civappumūkkuḷḷāṉ, பெ. (n.)

   உள்ளான் வகை; painted snipe.

     [சிவப்பு மூக்கு + உள்ளான்]

சிவப்புமொச்சை

 சிவப்புமொச்சை civappumoccai, பெ. (n.)

   மொச்சை வகை; red bean

     [சிவப்பு + மொச்சை]

சிவப்புவாடாமல்லிகை

 சிவப்புவாடாமல்லிகை civappuvāṭāmalligai, பெ. (n.)

   செம்மல்லிகை வகையுளொன்று; a red variety of globe everlasting jasmine.

     [சிவப்பு + வாடாமல்லிகை]

சிவப்புவெட்சி

 சிவப்புவெட்சி civappuveṭci, பெ. (n.)

   வெட்சி வகை; pinkixora.

     [சிவப்பு + வெட்சி]

சிவப்புவேர்

 சிவப்புவேர் civappuvēr, பெ. (n.)

   நச்சுப் புல் வகையுளொன்று; a red variety of poisonous grass (சா.அக.);.

     [சிவப்பு + வேர்]

சிவப்பூ

 சிவப்பூ civappū, பெ. (n.)

   மரவகை; bastard cedar (சா.அக.);.

சிவப்பூர்-தல்

சிவப்பூர்-தல் sivappir-,    2 செகுவி (v.i.)

   சிவந்த நிறமடைதல்; to redden.

     “செவ்விரல் சிவப்பூர” (கலித்.70);.

     [சிவப்பு + ஊர். உறு-தல் → ஊர்-,]

சிவப்பெலிச்செவி

 சிவப்பெலிச்செவி civappeliccevi, பெ. (n.)

   சிவப்பு நிறமுள்ள எலிச்செவிக்கீரை வகை; a red variety of rat’s ear green plant (சா.அக.);.

     [சிவப்பு + எலி + செவி]

சிவப்பேறு

சிவப்பேறு civappēṟu, பெ. (n.)

   சிவமாந்தன்மையை அடைகை; realization of Godhead.

     “ஆன்மசுத்திப்பின் சிவப்பேறாமாறு உணர்த்துகின்றது” (சி.போ.பா.அவை.பக்-4);.

     [சிவம் + பேறு]

சிவப்பேறு-தல்

சிவப்பேறு-தல் siva-p-pdru-,    5 செகுன்றாவி, (v.t.)

   செந்நிறமடைதல்; to redden.

     [சிவப்பு + ஏறு-,]

சிவப்பொட்டடை

 சிவப்பொட்டடை civappoḍḍaḍai, பெ. (n.)

   செந்நிறமுள்ள ஒட்டடை நெல்வகை; a red variety of ottadai paddy.

     [சிவப்பு + ஒட்டடை]

சிவப்போணான்

 சிவப்போணான் civappōṇāṉ, பெ. (n.)

   சீத்தியோணான் (வின்.);; a species of small blood-sucker.

     [சிவப்பு + ஒணான்]

சிவப்போளகம்

 சிவப்போளகம் civappōḷagam, பெ. (n.)

   அரத்தபோளம்; red dammer (சா.அக);.

     [சிவப்பு + போளகம்]

சிவமகாபுராணம்

 சிவமகாபுராணம் civamakāpurāṇam, பெ. (n.)

   பதினெண் தொன்மத்தொன்று; a chief Tonma one of padinen-tonmam.

     [சிவன் + மகாபுராணம்]

சிவமதம்

 சிவமதம் civamadam, பெ. (n.)

சிவனை முழு முதல் கடவுளாகக் கொண்ட சமயம்,

 saivism.

     [சிவன்+மதம்]

சிவமயம்

சிவமயம் civamayam, பெ. (n.)

   1. சிவமாந்தன்மை;Śiva in essence.

     “அவர் சிவமயமேயாகலின்” (சி.போ.பா.அவை.பக்.4);.

   2. கடிதம், நூல் முதலியவற்றின் தொடக்கத்தில் சிவ சமயிகளால் வழங்கப்பெறும் மங்கலமொழி; an invocation meaning”All to the glory of Siva”, used by Saivites at the head of a letter or document or over the title of a book.

     [சிவன் + மயம்]

சிவமரம்

சிவமரம் civamaram, பெ. (n.)

   1. வெள்ளைக் கடம்பு; bridal-couch plant.

   2. சவுக்கு; whip tree.

     [சிவன் + மரம்]

சிவமல்லி

 சிவமல்லி civamalli, பெ. (n.)

   கொக்கு மந்தாரை (மலை.);; taper-pointed mountain ebony.

     [சிவன் + மல்லி, மல்லி = மல்லிகை]

சிவமல்லிகா

 சிவமல்லிகா civamallikā, பெ. (n.)

   வெள்ளை; white onion (சா.அக.);.

சிவமாக்கு-தல்

சிவமாக்கு-தல் civamākkudal, செகுன்றாவி. (v.t.)

   மெய்யுணர்வுபெறச் செய்தல்; to make immortable.

     “சித்தமல மறுவித்துச் சிவ மாக்கி யெனையாண்ட அத்தனெனக் கருளியவாறார்பெறுவார்'(திருவாச);.

     [சிவம்+ ஆக்கு]

 சிவமாக்கு-தல் sivam-akku-,    5 செ.கு.வி. (v.i.)

   பற்பமாக்குதல், துகள்துகளாக்குதல்; calcining into an oxide, it is so called from its being turned into ashes (சா.அக.);.

     [சிவம் + ஆக்கு-,]

சிவமாதிகம்

சிவமாதிகம்1 civamātigam, பெ. (n.)

சிவகரந்தை பார்க்க;see Siva-karandai (சா.அக);.

 சிவமாதிகம்2 civamātigam, பெ. (n.)

   மாமரம்; mango tree (சா.அக.);.

சிவமாதுகம்

 சிவமாதுகம் civamātugam, பெ. (n.)

   வேம்பு; margosa tree (சா.அக.);.

சிவமாலை

 சிவமாலை civamālai, பெ. (n.)

   தலைமாலை; Indian shot (சா.அக.);.

சிவமுப்பு

சிவமுப்பு civamuppu, பெ. (n.)

   1. மண்டை யோட்டிலிருந்து செய்யப்படும் உப்புவகை; a salt prepared by a secret process from the skull.

   2. விந்து; semen (சா.அக.);.

சிவமுறை

 சிவமுறை civamuṟai, பெ. (n.)

   ஐவேலி; species of bryonia (சா.அக.);.

சிவமூலக்காரம்

 சிவமூலக்காரம் civamūlakkāram, பெ. (n.)

   ஊதைநோய், பல்லரணை, உட்சூடு போன்றவற்றைப் போக்கும் சீனக்காரம்; alum imported from China as distinguished from indegenous one (சா.அக.);.

     [சிவமூலம் + காரம்]

சிவமூலி

 சிவமூலி civamūli, பெ. (n.)

   கஞ்சா; gunjah plant (சா.அக);.

     [சிவம் + மூலி]

சிவம்

சிவம்1 civam, பெ. (n.)

   1. வீடுபேறு (முத்தி); (பிங்.);; final deliverance.

   2. சித்துருவாகித் தற்பேரொளியாய் நிற்கும் சிவவடிவம்; highest state of God in which He exists as pure intelligence.

     “சித்தமல மறுவித்துச் சிவமாக்கி” (திருவாச. 51.1);.

   3. சிவதத்துவம் பார்க்க;see sivatattuvam.

   4. ஓகம் இருபத்தேழனுள் ஒன்று; a division of time, one of 27 ogam.

   5. குறுணி; a measure of capacity = 8 padi.

     “ஒல்லைக்கொடுத்த மதுச்சிவ மென் றுரைத்தான் (உபதேசகா. சிவநாம. 8);

     [செம் → செவ் → சிவ் → சிவ → சிவம் (த.ம.39);]

     “சிவம் என்ற சொல்லிற்கு நன்மை என்று செஅக பொருள் கூறியிருப்பது, வடநூல் வழக்கைத் தழுவியதாகும். சிவன், தென்னவர் தெய்வமாதலால், அப்பொருள் பொருந்தாது. நல்ல அல்லது மங்கல என்னும் பொருளில் உருத்திரனுக்கும் இந்திரனுக்கும் அக்கினிக்கும் பொதுவாக வழங்கிய, ‘சிவ’ என்னும் அடை மொழியாகிய வடசொல் வேறு;

நெருப்பின் கூறாகக் கொள்ளப்பட்டு அழல்வண்ணன் எனப்பட்ட இறைவன் பெயராகிய சிவன் என்னும் தென்சொல் வேறு.” (வே. க. 225); ‘தென்னாடுடைய சிவனே போற்றி!’ என்பது மேற்கூறிய கருத்தை அரண்செய்யும். தட்சிணாமூர்த்தி என்ற சொல்லாட்சியும் இதனையே வலியுறுத்தும்.

 சிவம்2 civam, பெ. (n.)

   1. கொடிவேலி; Ceylon redwort.

   2. வழலையுப்பு; mystric salt.

   3. கறியுப்பு; common salt.

   4. வெண்காரம்; borax.

   5. வேம்பு; margosa tree.

   6. திருகு கள்ளி; twisted spurge.

   7. மழையோடு சேர்ந்துவிழும் ஆலங்கட்டி; frozen drops of rain.

   8. கடுக்காய்; gall-nut.

   9. இதளியம்; mercury.

   10. நெல்லிக்காய்; Indian gooseberry.

   11. தண்ணீர்; water.

   12. செயற்கை உப்பு வகையுளொன்று; a kind of synthetic salt (சா.அக.);.

 சிவம்3 civam, பெ. (n.)

சிவக்கொண்முடிபு

 Saiva Sittanda philosophy.

     “சிவமென்னு மந்தந்தரம் (சி. போ.124:4, வெண்பா.);

     [சிவனியம் → சிவம்]

சிவயோகத்தங்கம்

 சிவயோகத்தங்கம் civayōkattaṅgam, பெ. (n.)

சிவவோகத்தங்கம் பார்க்க;see siva-v-oga-t-tangam (சா.அக.);.

சிவயோகம்

 சிவயோகம் civayōkam, பெ. (n.)

சிவவோகம் பார்க்க;see Siva-V-ogam (சா.அக.);.

சிவயோகி

 சிவயோகி civayōki, பெ. (n.)

சிவவோகி பார்க்க;see Siva-v-ogi.

சிவரகசியம்

சிவரகசியம் sivaragasiyam, பெ. (n.)

   18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒப்பிலாமணி தேசிகரால் இயற்றப்பட்டதும் சிவபூசை முதலியவற்றின் பெருமைகளை வனப்பு இலக்கிய முறையில் கூறுவதுமான செய்யுணூல்; a treatise in Tamil verse dealing with the importance of Sivan worship and illustrating it by means of stories, by Oppila mani desigar, 17l8 A.D.

     [சிவன் + ரகசியம்]

 Skt. rahasya.

சிவரசம்

சிவரசம் sivarasam, பெ. (n.)

   1. மூன்று நாள் ஊறிய கஞ்சி; rice gruel for three days.

   2. மூலநோயகல செம்பு முதலிய மாழைகளைப் பற்பமாக்கி, மாதுளம் பழச்சாறு, இதளியம் போன்றவற்றைச் சமநிலையிற் சேர்த்துக் கொடுக்கும் ஆயுள்வேதமருந்து;  a kind of Ayurvedic medicine prepared by mixing the calcined powders of mercury, copper and mica taken in equal weights and then grinding them with the pomegranate juice. It is prescribed for piles (சா.அக.);.

வ. ரசம்

     [சிவன் + ரசம்]

சிவரம்

 சிவரம் civaram, பெ.(n.)

   அரக்கோணம் வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Arakkönam Taluk.

     [சீ+வரம்].

சிவராசத்தங்கம்

 சிவராசத்தங்கம் civarācattaṅgam, பெ. (n.)

   உப்பைச் சேர்த்துச் செயற்கைப் பொன்னாக்க முறையிற் செய்த தங்கம்; a synthetic gold prepared out of consolidated common salt by alchemical process (சா.அக.);.

சிவராசவெள்ளி

 சிவராசவெள்ளி civarācaveḷḷi, பெ. (n.)

   இதளிய (பாதரச); வெள்ளி; a synthetic silver prepared from consolidated mercury.

     [சிவராசம் + வெள்ளி. சிவரசம் → சிவராசம்]

சிவராசவோகி

 சிவராசவோகி civarācavōki, பெ. (n.)

   மாபெருஞ்சித்தரும், அகத்தியர் மாணவருமான புலத்தியர்; the name of a Sitta known as Pulathiar, the disciple of the great Sittar Agattiya (சா.அக.);.

சிவராத்திரி

சிவராத்திரி civarāttiri, பெ. (n.)

சிவனிரவு பார்க்க;see Sivamiravu.

     “சிவராத்திரிப் போது துயிலோமென்ற விரதியரும்” (தாயு.பரிபூ.3.);.

     [சிவன் + இராத்திரி. இரவு → இரா]

சிவராயன்

சிவராயன் civarāyaṉ, பெ. (n.)

   1. பழைய காசு (நாணய); வகை (பணவிடு.117);; an ancient coin.

   2. துணிவகை (இ.வ.);; a kind of cloth.

சிவராளம்

 சிவராளம் civarāḷam, பெ. (n.)

   இலவங்கப்பூ; clove flower (சா.அக.);.

சிவரி

 சிவரி civari, பெ. (n.)

   கழுதை; ass (சா.அக);.

சிவரோகம்

 சிவரோகம் civarōkam, பெ. (n.)

   கற்கடகச் சிங்கி; crab’s horn (சா.அக.);.

சிவறாங்கம்

 சிவறாங்கம் civaṟāṅgam, பெ. (n.)

   உருத்திரனைக் குறிக்கும் திருவைந்தெழுத்துள் ஒன்றான சிகாரம்; the middle of the Sivan mystic letters representing the power Rudran (சா.அக.);.

சிவறாமவிந்து

 சிவறாமவிந்து civaṟāmavindu, பெ. (n.)

   முலைப்பால்; woman’s breast milk (சா.அக.);

சிவலிங்கக்காய்

 சிவலிங்கக்காய் civaliṅgakkāy, பெ. (n.)

   ஐவேலி மரத்தின் காய்; the fruit of Iveli tree (சா.அக.);.

     [சிவலிங்கம் + காய்]

சிவலிங்கப்பூசை

 சிவலிங்கப்பூசை civaliṅgappūcai, பெ. (n.)

   சிவ சமயத்தவரால் பூசிக்கப்படும் சிவலிங்க வழிபாடு; cylindrical stone rounded off at the top, worshipped by Saivites as an emblem of Sivan (சா.அக.);.

     [சிவலிங்கம் + பூசை]

சிவலிங்கமரம்

 சிவலிங்கமரம் civaliṅgamaram, பெ. (n.)

   மாவகம்; nitta tree (சா.அக);.

     [சிவலிங்கம் + மரம்]

சிவலிங்கம்

 சிவலிங்கம் civaliṅgam, பெ. (n.)

   சிவனியர் வழிபடும் இலிங்க வடிவமான சிவனுருவம்; cylindrical stone rounded off at the top, worshipped by Saivites as an emblem of Sivan.

     [சிவன் + இலிங்கம், இவங்கம் → இலிங்கம்]

சிவலை

சிவலை civalai, பெ. (n.)

   1. செந்நிறமான எருது போன்ற வலிங்கு (உ.வ.);; reddish animal, as a bull.

   2. சிவப்பான ஆள் (யாழ்ப்.);; person of light complexion.

   3. சிவப்புநிறமுள்ளது; that which is red.

     “நெற்றிச் சிவலை” (கலித். 104:65);.

சிவலோகச்சிவன்

 சிவலோகச்சிவன் civalōkaccivaṉ, பெ. (n.)

   காந்தம் (இராட்);; load stone.

சிவலோகத்தி

 சிவலோகத்தி civalōkatti, பெ. (n.)

   திப்பிலி; long pepper (சா.அக.);.

சிவலோகம்

சிவலோகம்1 civalōkam, பெ. (n.)

   சிவன் வாழும் இடமென்று கருதப்படும் கைலாயம்; Kailayam, as Sivan’s abode.

     “அப்பாண்டி நாட்டைச் சிவலோக மாக்குவித்த வப்பார் சடையப்பன்” (திருவாச. 8:11);.

     [சிவன் + உலகம் – சிவனுலகம் → சிவலோகம்]

 சிவலோகம்2 civalōkam, பெ. (n.)

   இதளியம்; mercury (சா.அக.);.

சிவல்

சிவல் cival, பெ. (n.)

   1. கவுதாரி என்னும் பறவை (திவா.);; Indian partridge.

   2. காடை வகை (வின்.);; quail.

   3. கிலுகிலுப்பைச் செடி (மலை.);; laburnum-leaved rattlewort.

   4. செவ்வனிலம்; redsoil.

மறுவ. செவல், செவல்மண், செவலை.

     [சிவ் → சிவ → சிவல் (வே.க. 223);]

சிவல்கறி

 சிவல்கறி civalkaṟi, பெ. (n.)

   பித்தம், கோழை போன்றவற்றைப் போக்கும் கவுதாரி இறைச்சி; partridge flesh is greatly useful in cases of bilious and phlegmatic (சா.அக.);.

     [சிவன் + கறி]

சிவளிகை

 சிவளிகை civaḷigai, பெ. (n.)

   பெருஞ்சூட்டு (அக.நி.);; a kind of head-ornament.

     [சிகழலிகை → சிவளிகை]

சிவளிகைக்கச்சு

சிவளிகைக்கச்சு civaḷigaiggaccu, பெ. (n.)

   உடைமேற் கட்டுங்கச்சு; sash tied round the waist over the dress.

     “செவ்வரத்த வுடையாடை யதன்மேலோர் சிவளிகைக்கச்சென்கின்றாளால்” (திவ். பெரியதி 817);.

     [சிவளிகை + கச்சு]

சிவவடிவம்

சிவவடிவம் civavaḍivam, பெ. (n.)

   ஆதனின் பத்து வகைச் செயற்பாடுகளுள் ஒன்றாய், ‘அருள்மயமான ஐந்தொழிலால், தன்னைக் கட்டுண்ட மலங்களை நீக்கி, இறைவன் முத்தியளிப்போன் என்றுணர்ந்து கொள்ளும் ஆதனின் துய்ப்பு நிலை (உண்மை நெறி. 3);; spiritual experience of the soul in which it clearly understands that Sivan, by His five gracious functions cleanses it of malam and bestows salvation, one of tasa-kariyam.

     [சிவன் + வடிவம்]

சிவவல்லபம்

சிவவல்லபம் civavallabam, பெ. (n.)

   1. எருக்கு; madar.

   2. நாவல் வகை; a species of jambolona.

   3. செவ்வந்தி; chrysanthemum.

   3. மாமரம்; mango tree (சா.அக.);.

     [சிவன் + வல்லபம்]

வல்லபம் பார்க்க.

சிவவல்லி

 சிவவல்லி civavalli, பெ. (n.)

   கோவைக் கொடி வகை (சங்.அக.);; a kind of climber.

     [சிவம் + வல்வி, வல்லி = கொடி. வள்ளி → வல்லி]

சிவவாக்கியம்

சிவவாக்கியம்1 civavākkiyam, பெ. (n.)

   சிவவாக்கியர் இயற்றிய செய்யுள் நூல்; a collection of mystic verses ascribed to Sivavakkiyar.

     [சிவவாக்கியா → சிவவாக்கியம்]

ஒ.நோ. தொல்காப்பியர் → தொல்காப்பியம்

 சிவவாக்கியம்2 civavākkiyam, பெ. (n.)

   திருவைந்தெழுத்து; the five mystic letters (சா.அக.);.

     [சிவம் + வாக்கியம். வாக்கு → வாக்கியம்]

சிவவாக்கியர்

 சிவவாக்கியர் civavākkiyar, பெ. (n.)

   சிவத்துறவி; a Saiva devotee.

இவர் மெய்ப்பொருட் கருத்தடங்கிய சிவ வாக்கியம் என்ற நூலை இயற்றியவர்.

சிவவீசம்

 சிவவீசம் civavīcam, பெ. (n.)

சிவலோகம் பார்க்க;see Siva-logam.

சிவவுலகச்சேவகன்

 சிவவுலகச்சேவகன் civavulagaccēvagaṉ, பெ. (n.)

   காந்தம்; load-stone.

     [சிவவுவகம் + சேவகன்]

சிவவேகை

 சிவவேகை civavēkai, பெ. (n.)

   செம்பருத்தி; red cotton (சா.அக.);.

சிவவேடம்

சிவவேடம் civavēṭam, பெ. (n.)

   அக்கமணி முதலான சிவச்சின்னம் பூண்ட கோலம்; distinctive external marks of a Saiva consisting of akkamaņi beads and sacred ashes.

     “சிவவேடந் தரித்தவர்” (காசிக. பாயி. 12.);.

     [சிவன் + வேடம்]

சிவவோகத்தங்கம்

 சிவவோகத்தங்கம் civavōkattaṅgam, பெ. (n.)

   சிவவோகி தம்முடைய குண்டலத்திற்குப் பயன்படுத்தும் உயர்ந்த வகைத் தங்கம்;  a superior refined synthetic gold used as an ear ornament by a vögi addicted to worship of Siva (சா.அக.);.

     [சிவவோகம் + தங்கம்]

சிவவோகம்

சிவவோகம் civavōkam, பெ. (n.)

   ஆதனது (ஆன்மாவின்); பத்து வகைச் செயற்பாட்டி னொன்று. இந்நிலையில் ஆதன் தன்னை யிழக்காது இறைவனின் எல்லாமாந் தன்மையை உணர்ந்து அவனோடு இயைந்து நிற்கும் துய்ப்பு நிலை (உண்மை நெறி. 5);; spiritual experience of the soul in which it realises the omnitude of Siva and sets itself in tune with Him with out losing its individuality, one of tasa-kariyam.

     [சிவன் + ஓகம்]

சிவவோகி

சிவவோகி1 civavōki, பெ. (n.)

   சிவவோகத்தால் முத்தி நிலையடைந்தோர்; yogins who by meditation on Sivan have attained salvation.

     [சிவன் +ஓகி]

 சிவவோகி2 civavōki, பெ. (n.)

   வசம்பு (பாலவா. 317);; sweet flag.

சிவாகமம்

 சிவாகமம் civākamam, பெ. (n.)

சிவத்தோன்றியம் பார்க்க;see siva-t-tonriyam.

     [சிவன் + ஆகமம்]

 Skt. agama → த. ஆகமம்

சிவாகம்

 சிவாகம் civākam, பெ. (n.)

   கடுக்காய்; galnut (சா.அக.);.

சிவாகிதம்

 சிவாகிதம் civākidam, பெ. (n.)

   பாதிரி; trumpet flower tree (சா.அக.);.

சிவாக்கிரயோகி

 சிவாக்கிரயோகி civākkirayōki, பெ. (n.)

   சிவஞானசித்தியார் உரைகாரருளொருவர்; a commentator on Siva-nana-sittiyar.

சிவாங்கம்

சிவாங்கம் civāṅgam, பெ. (n.)

   1. வில்வம்; bael.

   2. இலவங்கப் பத்திரி; cinnamon (சா.அக);.

சிவாசாரியர்

 சிவாசாரியர் civācāriyar, பெ. (n.)

   சிவன் கோயில் குருக்கள்மார்தம் பட்டப்பெயர்; title of saiva Accaryas especially Adi-saiva priests.

     [சிவன் + ஆசாரியர்;சிவனாசாரியார் → சிவாசாரியர்]

சிவாச்சகம்

 சிவாச்சகம் civāccagam, பெ. (n.)

   கீழ்க்காய் நெல்லி; niruri (சா.அக);.

சிவாச்சிரமத்தெளிவு

 சிவாச்சிரமத்தெளிவு civācciramatteḷivu, பெ. (n.)

   பண்டாரசாத்திரத் தொன்றும், அம்பலவாண தேசிகரியற்றியதுமான சிவனியக்கொண்முடிபு நூல்; a Saiva Sittanda treatise by Ambalavana tesigar, one of pandaracattiram.

     [சிவாசிரமம் + தெளிவு]

சிவாட்சம்

 சிவாட்சம் civāṭcam, பெ. (n.)

   அக்கமணி (மலை.);; rudrakka bead.

     [சிவன் அட்சம் (அக்கமணி);. அள் = கூர்மை. அள் → அங்கு → அக்கு. அக்கு = கூர்மை, முனை, முண்முனை, முண்முனை யாடிள்ளமணி. அக்கு → அக்கம் → அக்சம் → அக்சம் → அட்சம்]

சிவாதகி

 சிவாதகி civātagi, பெ. (n.)

   வன்னிமரம்; suma tree (சா.அக.);.

சிவாதமுள்ளி

 சிவாதமுள்ளி civātamuḷḷi, பெ. (n.)

   செம்முள்ளி; thorny nail dye (சா.அக.);.

     [சிவத்தமுள்ளி → சிவாதமுள்ளி (கொ.வ.);]

சிவாதாயம்

 சிவாதாயம் civātāyam, பெ. (n.)

பல சில்லறை

   வகைகளிலும் வரும் வருமானம் (R.T.);; miscellaneous revenue.

     [சிவன் + ஆதாயம். சிவனாதாயம் → சிவாதாயம்]

சிவாதிகம்

 சிவாதிகம் civātigam, பெ. (n.)

   பேயத்தி; devil fig (சா.அக);.

சிவாத்துவிதசைவம்

சிவாத்துவிதசைவம் sivādduvidasaivam, பெ. (n.)

   அகச்சமயம் ஆறனுள், துணை காரணனாகிய இறைவனே உலகிற்கு முதற் காரணனும் ஆவன் என்று கூறும் சிவனியப் பிரிவு (சி.போ.பா.7:1, பக்.337);; saiva doctrine which holds that Siva, the efficient cause, is also the material cause of the universe one of six aka-c-camayam.

     [சிவன் + அத்துவைதம் + சைவம்; சிவனத்துவைத சைவம் → சிவாத்துவைத சைவம்]

சிவாத்துவிதம்

சிவாத்துவிதம் civādduvidam, பெ. (n.)

சிவாத்துவிதசைவம் பார்க்க (சி. போ. பா. 2:1. பக். 106);;see Sivattuvida-saivam.

     [சிவன் + அத்துவைதம்]

அத்துவைதம் → அத்துவிதம்

சிவாத்துவைதம்

சிவாத்துவைதம் civādduvaidam, பெ. (n.)

சிவாத்துவிதசைவம் பார்க்க (சி. போ. பா. 2:1. பக். 106);;see sivattuvida-saivam.

     [சிவன் + அத்துவைதம்]

சிவாநந்திமூலம்

 சிவாநந்திமூலம் civānandimūlam, பெ. (n.)

   வெடியுப்புச் சுண்ணம்; calcium compound prepared from nitre (சா.அக.);.

சிவானந்தி

 சிவானந்தி civāṉandi, பெ. (n.)

   சிறுதுத்தி; small leaved rose mallow (சா.அக.);.

சிவாமதானு

 சிவாமதானு civāmatāṉu, பெ. (n.)

   வெந்தயம்; dill seed (சா.அக.);.

சிவாம்பரத்தம்

 சிவாம்பரத்தம் civāmbarattam, பெ. (n.)

   செம்பரத்தம்; Chinese rose mallow (சா.அக.);.

     [சிவப்பு + செம்பரத்தம். சிவப்புச் செம்பரத்தம் → சிவாம்பரத்தம்]

சிவாயநம

 சிவாயநம civāyanama, பெ. (n.)

   சிவனியர்களால் போற்றப்படும் திருவைந்தெழுத்து மந்திரம்; the tiruvaindeluttu mantra of the Saivaites, held to be most sacred.

     “நானேயோ தவஞ்செய்தேன் சிவா தமவெனப் பெற்றேன்” (திருவாசகம்);.

சிவாரகம்

 சிவாரகம் civāragam, பெ. (n.)

   ஆட்டாங்கொடி; a kind of medicinal plant (சா.அக.);.

சிவாராதி

 சிவாராதி civārāti, பெ. (n.)

   நாய்; dog (சா.அக.);.

சிவாருகம்

 சிவாருகம் civārugam, பெ. (n.)

   ஆல் (மலை.);; banyan tree.

     [சிவ + ஆருகம்]

சிவார்ப்பணம்

சிவார்ப்பணம் civārppaṇam, பெ. (n.)

   செயல் முடிவில், அதன் பயனைச் சிவனுக்குரிய தாக்குவதைக் குறிக்குந் தொடர்; expression used by Saivites generally at the close of rituals, ablutions, etc., dedicating them to Sivan.

     “சிவார்ப்பணம் எனக்கருதாத வழிக் குற்றமென்று ஆகமங்கள் கூறியது.உம்” (சி.போ.பா. 11:1, பக்.224);.

     [சிவம் + அர்ப்பணம்]

சிவாலயம்

சிவாலயம் civālayam, பெ. (n.)

   சிவன் கோயில்; Sivan temple.

     [சிவன் + ஆலயம்]

 Skt. alaya.

 சிவாலயம்2 civālayam, பெ. (n.)

   செந்துளசி; red basil (சா.அக.);.

     [சிவன் + ஆலயம்]

சிவாலு

 சிவாலு civālu, பெ. (n.)

   நரி; fox (சா.அக);.

சிவி-தல்

சிவி-தல் sivi,    4 செ.குவி (v.i.)

   1. பிஞ்சாய் உதிர்தல் (நெல்லை.);; to wither as fruits.

   2. சுருங்குதல், சிறுத்தல் (திருக். தமிழ் மரபுரை 742);.

சிவிகரம்

 சிவிகரம் civigaram, பெ. (n.)

   சாதிக்காய் (மலை.);; nutmeg.

சிவிகாதிதம்

 சிவிகாதிதம் civikādidam, பெ. (n.)

   வேங்கை மரம்; kino tree (சா.அக.);.

சிவிகை

சிவிகை civigai, பெ. (n.)

   1. பல்லக்கு; palanquin, covered litter.

     “சிவிகை பொறுத்தானோ டூர்ந்தானிடை” (குறள், 37);.

   2. எருது பூட்டிய ஊர்தி (திவா.);; bullock-cart.

     [சில் → சிவ் → சி.வி → சிவிகை]

சிவிகைப்புறம்

சிவிகைப்புறம் civigaippuṟam, பெ. (n.)

   கோயில் பல்லக்குச் செலவுக்கு விடப்பட்ட நிலம்; free land for the expense of temple palanquin. (தெ.கோ.சா. 3:2);.

     [சிவிகை+புறம்]

சிவிகையார்

 சிவிகையார் civigaiyār, பெ. (n.)

   பல்லக்குத் தூக்கும் பிரிவினர்; a caste of palanquinbearers.

     [சிவிகை + ஆர்]

சிவிகையார்வழக்கு

 சிவிகையார்வழக்கு civigaiyārvaḻggu, பெ. (n.)

   பெருஞ்சண்டை (இராட்);; violent quarrel.

     [சிவிகையார் + வழக்கு]

சிவிங்கி

சிவிங்கி1 civiṅgi, பெ. (n.)

   1. ஒருவகை விலங்கு; Indian lynx.

   2. சிறுத்தை (வின்);; hunting leopard.

     [சிவி → சிவிங்கி]

   தெ. க. சிவிங்கி;ம. சிவின்னி

 சிவிங்கி2 civiṅgi, பெ. (n.)

   சிவிங்கி மீன்; a felix species of fish (சா.அக.);.

 சிவிங்கி3 civiṅgi, பெ. (n.)

   பறவை வகை; a kind of bird (சா.அக.);.

சிவிங்கிநாய்

 சிவிங்கிநாய் civiṅgināy, பெ. (n.)

   வேகமாய் ஒடக்கூடிய சோணங்கி நாய் (வின்);; a swiftfooted hunting dog.

     [சிவிங்கி + நாய்]

சிவிங்கிப்பூனை

 சிவிங்கிப்பூனை civiṅgippūṉai, பெ. (n.)

   பூனை வகை; leopard cat.

     [சிவிங்கி + பூனை]

சிவிடு

சிவிடு civiḍu, பெ. (n.)

   1. 360 நெல் பிடிக்கும் அளவு; a measure of 360 paddy grains.

   2. சிறிது; that which is small.

     [செவிடு (யாழ்.அக.); → சிவிடு]

சிவிட்கு

சிவிட்கு civiṭku, பெ. (n.)

   சினம்; anger,

     “புவியினுடைய சிவிட்கும்” (திவ். திருப்பா. 23, வியா. 205);.

தெ. சிவிக்கு

சிவிட்கெனல்

சிவிட்கெனல் civiṭkeṉal, பெ. (n.)

   1. பொறுமையின்மைக் குறிப்பு; onom. expr. of being impatient.

     “பின்னையும் உணரக் காணாமை யாலே சிவிட்கென்று உன் மகள் தான் ஊமையோ வென்கிறார்கள்” (திவ். திருப்பா.9, வியா.114);. being quick, hasty.

     “பூனைபோ லொடுங்கிச் சிவிட்கென் றெழுந்து” (குருபரம். 197);.

தெ. சிவ்ன்க்குனா

     [சிவிட்கு + எனல்]

சிவித்திரம்

 சிவித்திரம் civittiram, பெ. (n.)

   வெண்குட்டம்; white leprosy (சா.அக.);.

சிவிபோகணம்

 சிவிபோகணம் civipōkaṇam, பெ. (n.)

   வெள்ளை நாகணம்; white croton plant (சா.அக.);.

சிவிப்பறவை

 சிவிப்பறவை civippaṟavai, பெ. (n.)

   சிறவிப் புலி; a small variety of panther (சா.அக.);.

சிவியார்

சிவியார் civiyār, பெ. (n.)

   1. சிவிகையார் பார்க்க;see sivigaiyar.

     “பரியெங்கே சிவியா ரெங்கே” (தண்டவை.சத.34);.

   2. மீன்பிடி தொழிலால் வாழுமினம்; a caste whose profession is fishing.

     [சிவிகையார் → சிவியார்]

சிவிரம்

 சிவிரம் civiram, பெ. (n.)

   படையெடுத்த அரசன் தங்கும் பாசறை; camp of an invading king.

 Skt. Sibira.

சிவிறி

சிவிறி civiṟi, பெ. (n.)

   1. விசிறி (பிங்.);; fan.

     “தேயுமிடைப் பாங்கியர்கள் சிவிறி யால் வீசி” (குசேலோ. குசே. வைகுந்.58);.

   2. நீர்வீகங்கருவி; syringe.

     “நெய்ம்மாண் சிவிறியர் நீர்மணக் கோட்டினர்” (பரிபா. 6:34);.

   தெ. சிவிறி;குய் ஜிப்பெரி, ஜின்ஜெரி

     [விசிற → சிவிறி]

 சிவிறி2 civiṟi, பெ. (n.)

   பெருந்துருத்தி; belows (சா.அக.);.

சிவிறு-தல்

சிவிறு-தல் siviru,    5 செகுவி (v.i.)

   1. பரத்தல்; to spread as water.

     “ஊடுறு கமலக் கண்ணீர் திசைதொறுஞ் சிவிறியோட” (கம்பரா. மீட்சி. 348);.

   2. விசிறு-தல் பார்க்க;see visiru-.

     [விசிறு → சிவிறு-,]

சிவிலாதி

 சிவிலாதி civilāti, பெ.(n.)

   பரமக்குடி வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Paramagudi Taluk.

     [செவலை+ஆதி]

சிவீரெனல்

சிவீரெனல்1 civīreṉal, பெ. (n.)

   தொட்டாற் சில்லென்றிருத்தற் குறிப்பு (இ.வ.);; expr. of being cold to the touch.

     [சிலீர் → சிவீர்]

 சிவீரெனல்2 civīreṉal, பெ. (n.)

   சிவந்திருக்கை; become red;

 blush.

     [செவேர் → சிவீர் + எனல் (வே.க.);]

சிவீலெனல்

சிவீலெனல் civīleṉal, பெ. (n.)

   பொறாமைக் குறிப்பு; onom. expr of being jealous, envious.

     “நம்முடைய ஸ்வரூபருபகுண விபூதிகளைச் சொன்ன விடத்தில் சிவீ லென்றிருந்திலை” (ஈடு,3.5:6);.

     [சிவ் → சிவீல்;

சிவீல் + எனல்]

சிவுகம்

 சிவுகம் civugam, பெ. (n.)

   மோவாய் (சூடா.);; chin.

சிவுடம்

 சிவுடம் civuḍam, பெ. (n.)

சிவுகம் பார்க்க;see sivigam

சிவேதை

சிவேதை civētai, பெ. (n.)

   1. செடிவகை (பிங்.);; square-stalkcd bindweed.

   2. நாணல்; kaus.

 Skt. Sveta

 சிவேதை civētai, பெ. (n.)

   1. சீந்தில் (மூ.அ.);; gulancha.

   2. கொடிவகை; Indian jalap.

 Skt. Siva-da

 சிவேதை3 civētai, பெ. (n.)

   தெற்கு (பிங்.);; South.

 Skt. Sivetava

சிவேரெனல்

 சிவேரெனல் civēreṉal, பெ. (n.)

   சிவந்திருத்தற் குறிப்பு; exprn. signifying redness.

     [சிவீர் → சிவேர் + எனல் (வே.க.);]

சிவை

சிவை1 civai, பெ. (n.)

   1. மலைமகள் (பிங்.);; Parvadi.

     “பொருவரிய சிவையாகி யனந்தையாய்” (கூர்மபு. திருக்கலி.3.);.

   2. காளி (சூடா.);; Durga.

     [சிவன் (ஆ.பா.); → சிவை (பெ.பா.); சிவன் தேவியாக உருவகிக்கப்பட்ட திருவருள் (வே.க.);]

 சிவை2 civai, பெ. (n.)

   1. நரி,

 jackal.

     “வெந்திறற் சிவையை யெல்லாம் வெம்பரி யாக்கி” (திருவாலவா. 29:16);.

   2. நெல்லி (தைலவ. தைல. 28.);; emblic myrobalan.

   3. வேர்; root

கல்லறச் சிவைக ளுன்றி” (இரகு. இரகுகதி. 7);.

     [சிவன் → சிவ → சிவை]

 சிவை3 civai, பெ. (n.)

   உலைமூக்கு (திவா.);; nozzle or bellows.

     “சிவையின்வா யென்னச் செந்தீயுயிர்ப்புறச் சிவந்த மூக்கன்” (கம்பரா. கும்பகரு.14);.

 Skt. jihva

சிவைக்கியம்

 சிவைக்கியம் civaikkiyam, பெ. (n.)

சிவனும்,

   ஆதனும் (ஆன்மா); இணைந்து ஒன்றியிருத்தல்; the union of the soul with God Sivan (சா.அக.);.

     [சிவன் + ஐக்கியம்]

சிவோகம்பாவனை

சிவோகம்பாவனை civōkambāvaṉai, பெ. (n.)

   சிவன் நான் என்று கருதுகை; meditation suggesting a mystic union with Sivan.

     “”சிவோகம்பாவனையைத் தலைப்பட்டோனாதல் அறிக” (சி. போ. சிற். 2,1,4, பக்.39);.

 Skt. Sivoham + bhavana

த. பாவித்தல் – Skt. bhavana

     [சிவோகம் + பாவனை]

சிவ்வல்

 சிவ்வல் civval, பெ. (n.)

   கடற்பாசி (மூ.அ.);; seaweed.

சிவ்வாடா

 சிவ்வாடா civvāṭā, பெ.(n.)

   திருத்தணி வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Tiruttani Taluk.

     [செவ்வன்+பாடி]

சிவ்வெனல்

சிவ்வெனல்1 civveṉal, பெ. (n.)

   சிவத்தற் குறிப்பு; expr. of being red.

     ‘கண் சிவ்வென்றிருந்தது (நெல்லை.);.

     [சிவ் + எனல்]

 சிவ்வெனல்2 civveṉal, பெ. (n.)

   1. விரைவுக் குறிப்பு; onom. expr. of being quick.

   2. இறுகற்குறிப்பு (இ.வ.);; being tough, firm or viscid.