செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை வெளியீடு
31 தொகுதி 12000 பக்கங்கள் கொண்ட பேரகரமுதலி


1

10838

2769

3111

538

3554

677

1093

620

189

1004

402

2
க்
1

8212
கா
2579
கி
564
கீ
222
கு
4598
கூ
780
கெ
615
கே
391
கை
1101
கொ
2417
கோ
1754
கௌ
110
ங்
1

2
ஙா
2
ஙி
1
ஙீ
1
ஙு
1
ஙூ
1
ஙெ
1
ஙே
1
ஙை
1
ஙொ
5
ஙோ
1
ஙௌ
1
ச்
1

5235
சா
1186
சி
2424
சீ
439
சு
1261
சூ
420
செ
1529
சே
470
சை
23
சொ
409
சோ
365
சௌ
1
ஞ்
1

15
ஞா
44
ஞி
3
ஞீ ஞு ஞூ ஞெ
34
ஞே
5
ஞை
2
ஞொ
3
ஞோ
2
ஞௌ
1
ட்
1

1
டா
1
டி
1
டீ
1
டு
1
டூ
1
டெ
2
டே
1
டை
1
டொ
1
டோ
1
டௌ
ண்
1

1
ணா
1
ணி
1
ணீ ணு
1
ணூ
1
ணெ
2
ணே
1
ணை
1
ணொ
1
ணோ
1
ணௌ
த்
3113
தா
1530
தி
2203
தீ
393
து
1238
தூ
411
தெ
694
தே
856
தை
39
தொ
878
தோ
459
தௌ
ந்
1

2789
நா
204
நி
1860
நீ
1161
நு
14
நூ
18
நெ
892
நே
318
நை
89
நொ
210
நோ
159
நௌ
2
ப்
1

4560
பா
1824
பி
492
பீ
25
பு
2224
பூ
1133
பெ
1064
பே
483
பை
127
பொ
1218
போ
478
பௌ
2
ம்
4760
மா
1422
மி
535
மீ
268
மு
3016
மூ
949
மெ
396
மே
751
மை
152
மொ
284
மோ
242
மௌ
ய்
1

119
யா
426
யி
1
யீ
1
யு
46
யூ
20
யெ
9
யே
1
யை
1
யொ
1
யோ
98
யௌ
1
ர்
87
ரா
107
ரி
11
ரீ
7
ரு
24
ரூ
20
ரெ
6
ரே
16
ரை
10
ரொ
8
ரோ
23
ரௌ
ல்
117
லா
44
லி
8
லீ
5
லு
8
லூ
3
லெ
13
லே
21
லை லொ
20
லோ
63
லௌ
3
வ்
1

3800
வா
1329
வி
1638
வீ
515
வு
1
வூ
1
வெ
2164
வே
834
வை
229
வொ
1
வோ
3
வௌ
ழ்
1

1
ழா
1
ழி
1
ழீ
1
ழு
6
ழூ
1
ழெ
1
ழே ழை ழொ ழோ
1
ழௌ
ள்
1

2
ளா
1
ளி
1
ளீ
1
ளு
1
ளூ
1
ளெ
2
ளே
1
ளை
1
ளொ
1
ளோ
1
ளௌ
ற்
1

1
றா
1
றி
1
றீ
1
று
1
றூ
1
றெ
2
றே
1
றை
1
றொ
1
றோ
1
றௌ
ன்
1

1
னா
1
னி
1
னீ
1
னு
1
னூ
1
னெ
2
னே
1
னை னொ
1
னோ
1
னௌ
தலைசொல் பொருள்
சா

சா1 cā,      ‘ச’ கர மெய்யும் ‘ஆ’ கார உயிரும் இணைந்த உயிர்மெய்யெழுத்து;

 the syllable formed by adding the long vowel {} to the consonant ‘c’ / ‘S’.

     [ச் + ஆ]

 சா2 cātal,    19 செ.கு.வி. (v.i.)

   ஒன்றிற்காக வருத்திக்கொள்ளுதல்;   ஒருவருக்காகத் துன்பப்படுதல்; to torture oneself something;

 suffer for someone. பணம், பணம் என்று ஏன் சாகிறாய்!

     [சாய் → சா-,]

 சா3 cātal,    19 செ.கு.வி. (v.i.)

   1. இறத்தல்; to die, to decease, to depart from life, to cease to live, to expire.

     “சாதலி னின்னாத தில்லை” (குறள், 23௦);.

   2. பயிர் முதலியன கெட்டுப்போதல்; to be spoiled or blighted, as crops.

     ‘பயிர் தண்ணீரில்லாமற் சாகிறது’ (உ.வ.);.

   3. சோர்தல்; to be exhausted.

கைகால் செத்துப் போயின.

   4. ஒன்றிற்காகப் பெருவிருப்பம் கொண்டிருத்தல்; to do, have great desire.

பணத்திற்காகச் சாகின்ற அவன் ஒழுங்காக உண்ணவும் மாட்டான்.

   5. உடலுறுப்பு செயலிழத்தல்; to lose, or decay as of limbs.

இரண்டு நாள் காய்ச்சலில் நாக்குச் செத்துவிட்டது. மறுவ. உயிர் நீத்தல், மடிதல்

   ம. சாகுக. சாவுக;   க. சாய், சாயு;   தெ. சச்சு, சா, சாவ்;   து. சைபுனி;   பட. சாயி;   குட. சாள், சாவ்;   பர். சய்;   கட. சய், சய்;   கோண்., மால. சைஆன;   பிரா. ககி, சைஆன, சாய், சவெ;   குவி. கைய்; Ice. deyja;

 Dan. do;

 Scot. dee;

 E. die, starve;

 O.E. stcorfan.

     [சாய் = சாய்தல், சாய்ந்து விழுதல். சாய் → சா]

 சா4 cā, பெ. (n.)

   முதன்மைவினையின் தன்மை மிகுதிப்படுவதை உணர்த்தும் துணைவினை; an auxiliary to indicate that the action of the main verb is greatly intensified.

அப்பா திட்டுவாரோ என்று அஞ்சிச் சாகிறாள்.

 சா5 cā, பெ. (n.)

சாவு பார்க்க;See {}.

     [சாய் → சா]

 சா5 cā, பெ. (n.)

   வட்டக்கோட்டின் ஒரு பகுதியின் இருமுனைகளையும் சேர்க்கும் கோடு; chord of an arc;

 sine of an arc.

     [சாய் → சா]

 சா cā, பெ.(n.)

   வளைகோட்டின் ஒரு பகுதியின் இரு முனைகளையும சேர்க்குங் கோடு;த.வ.நாண்

     [Skt.{} → த.சா]

 சா2 cā, பெ.(n.)

   தேயிலைச்செடி (இ.வ.);; tea-plant.

     [U.{} → த.சா]

சாகக்கீரை

 சாகக்கீரை cākakārai, பெ. (n.)

   சிறுகீரை; garden spinach – Amaranthus campestris.

சாகசக்கியம்

சாகசக்கியம் sākasakkiyam, பெ.(n.)

   1. திறமை, ஆற்றல் (சாமர்த்தியம்);; cleverness, as in speech; trickery.

   2. போலித்தனம் (பாசாங்கு);; false pretence “சாகசக்கியம் பண்ணுகிறான்”

த.வ.ஏமாற்றுவேலை

     [Skt.{} → த.சாகசக்கியம்]

சாகசன்

 சாகசன் sākasaṉ, பெ. (n.)

   துணிவுள்ளவன் (இ.வ.);; a clever, brave man.

     [சாகசம் → சாகசன்]

 சாகசன் sākasaṉ, பெ.(n.)

   துணிகர முள்ளவன்; a clever, brave man.

     [Skt.{} → த.சாகசன்]

சாகசபட்சி

சாகசபட்சி sākasabaṭsi, பெ.(n.)

   1. சாகசத்தொழில் செய்யலாகாது என்று பிறவற்றுக்கு அறிவுரை செய்து அரிமா (சிங்கம்); வாயைத் திறக்கும் போது தான் உட்புகுந்து அதன் தொண்டைத் தசையைத் தின்னும் இயல்பினதாகக் கூறப்படும் குலிங்கமென்னும் பறவை,

 a fabulous bird which preaches against cruelty but itself enters the lion’s mouth when it gapes, and eats its flesh.

   2. முதலையின் பல்லழுக்கைக் கவரும் துணிவுள்ளதொரு பறவை(வின்.);; a kind of bird bold enough to pick the crocodile’s teeth.

     [Skt.{} → த.சாகசபட்சி]

     [P]

சாகசம்

சாகசம்1 sākasam, பெ. (n.)

   சிறுகீரை; gardem greens – amaranthus campestris.

 சாகசம்2 sākasam, பெ. (n.)

   ஊர்க்குருவி; sparrow.

     [சகடம் – வளையவளைய சுற்றும் பறவை. சகடம் → சகசம் – சாகசம்]

 சாகசம்1 sākasam, பெ.(n.)

   1. துணிவு; daring, daring act.

     “சாகசங்கள் பல செய்தும்” (பிரபோத.30, 53);.

   2. போலிநடிப்பு, பாசாங்கு; false, pretence.

     “இத்தனை சாகசமும் வேணுமோ” (இராமநா.அயாத்.7);

     [Skt.{} → த.சாகசம்]

 சாகசம்2 sākasam, பெ.(n.)

   மெய்ம்மை; truth.

     “சாகசமொன்றும் விரும்புவோள்” (ஞானவா.தா.சூ.80);

     [Skt.sahaja → த.சாகசம்]

 சாகசம்3 sākasam, பெ.(n.)

   யானை (அக.நி);; elephant.

சாகசரியம்

 சாகசரியம் sākasariyam, பெ.(n.)

   கோழமை; companionship.

த.வ.நட்பு

     [Skt.{} → த.சாகசரியம்]

சாகசி

 சாகசி sākasi, பெ. (n.)

   மருதோன்றி; nail-dye – Lawsonia alba (சா.அக.);.

சாகசிகன்

சாகசிகன் sāgasigaṉ, பெ.(n.)

   1. துணிவுள்ளவன்; daring man.

   2. பாசாங்கு செய்வோன், போலியாக நடிப்போன்; pretender

     [Skt.{} → த.சாகசிகன்]

சாகசிரேட்டம்

 சாகசிரேட்டம் sākasirēṭṭam, பெ. (n.)

   பாலை மரம்; milk-tree – Dichopsis ellipticus (சா.அக.);.

சாகச்சூம்பி

 சாகச்சூம்பி cākaccūmbi, பெ. (n.)

   மிக மெலிந்தவன் (யாழ்.அக.);; emaciated person.

     [சா + சூம்பு – சாக்சூம்பு → சாகச்சூம்பி. சும்பு → சூம்பு → சூம்பி. ‘இ’ வி.மு.த.ஈறு]

சாகச்சோம்பி

 சாகச்சோம்பி cākaccōmbi, பெ. (n.)

சாகச்சூம்பி பார்க்க (யாழ்.அக.);;See {}.

     [சாகச்சூம்பி → சாகச்சோம்பி]

சாகஞ்சம்

 சாகஞ்சம் cākañjam, பெ. (n.)

   சிறுதேக்கு; fire- creeper-Cleodendron serratum alias C. Javanicum (சா.அக.);.

சாகடி-த்தல்

சாகடி-த்தல் cākaḍittal,    4 செ.கு.வி. (v.i.)

   கொல்லுதல், உயிரைப் போக்குதல்); to kill, render lifeless.

     ‘பணத்துக்காக அவனைச் சாகடித்தான்’ (உ.வ.);.

ம. சாடிப்பு (தூக்குத்தண்டனை);

     [சா + சாக + அடி = சாகடி-,]

சாகதன்

 சாகதன் cākadaṉ, பெ.(n.)

சாகசன் பார்க்க;see {}.

     [Skt.{} → சாகசன் → த.சாகதன்]

சாகதுண்டம்

 சாகதுண்டம் cākaduṇṭam, பெ. (n.)

   அகில் (அக.நி.);; eagle-wood.

 சாகதுண்டம் cākaduṇṭam, பெ.(n.)

   அகில் (அக.நி.);; eaglewood.

சாகத்தீவு

சாகத்தீவு cākattīvu, பெ. (n.)

   தேக்கந்தீவு; an annular continent, named after a tree called {} or teak.

     “சாகத்தீவினுளுறைபவர்” (கம்பரா. படைக்கா-9);.

     [சாகம் + தீவு]

சாகநாற்றனம்

 சாகநாற்றனம் cākanāṟṟaṉam, பெ. (n.)

   ஒரு வகைப் பொன்; a kind of gold (சாஅக.);.

சாகபசுநியாயம்

சாகபசுநியாயம் sākabasuniyāyam, பெ.(n.)

முன்னர் ஆ(பசு);வெனப் பொதுப் பெயராற் கூறிப் பின்னர் புல்லுண்ணி ஆ(சாகபசு); வெனச் சிறப்புப் பெயரடையோடு பொது நீக்கிக் கூறுதலான் முன்னர்க் கூறிய ஆ (பசு);வும் புல்லுண்ணியே (சாகமே); எனப் பொருள் கொள்ள நிற்பதோர் நெறி. (சி.போ.பா.1,2,பக்.73);

 Illustration of sacrificial animal and goat by which a general term like sacrificial animal in a text is construed in limited sense like goat because of subsequent specification.

     [Skt.{} → த.சாகபசுநியாயம்]

சாகபட்சிணி

 சாகபட்சிணி cākabaṭciṇi, பெ.(n.)

   இலையுணவு கொள்ளும் விலங்கு; Herbivorous animal

த.வ.இலைக்கறியுண்ணி

     [Skt.{}+patcini → த.சாகபட்சிணி]

சாகபிலவங்கம்

 சாகபிலவங்கம் cākabilavaṅgam, பெ. (n.)

   கத்தரிச்செடி; brinjal plant – Solanum melongena.

சாகபில்லகம்

 சாகபில்லகம் cāgabillagam, பெ. (n.)

சாகபிலவங்கம் பார்க்க;See {}.

     [சாகபிலவங்கம் → சாகபில்லகம்]

சாகமூலி

சாகமூலி cākamūli, பெ. (n.)

   1. கொல்லன் கோவை; snake caper – Bryonia epigaea.

   2. ஊமத்தை; dhatura – Ohatura stramonium.

     [சா → சாக (வைக்கும்); + மூலி]

சாகம்

சாகம்1 cākam, பெ. (n.)

   1. அசோகு; asoka tree – Saraca indica.

   2. அரசமரம்; peepul tree. Ficus religiosa.

   3. மராமரம்; saul tree – Aporo sa lindleyane (சாஅக.);.

 சாகம்2 cākam, பெ. (n.)

   வெள்ளாடு (பிங்.);; he goat.

மறுவ. வெள்ளை, வற்காலி, கொச்சை

 சாகம்3 cākam, பெ. (n.)

   தேனீ (சூடா.);; bee.

     [சரகம் → சாகம்]

 சாகம்4 cākam, பெ. (n.)

   1. இலைக்கறி (பிங்.);; potherbs, greens.

   2. இலை; leaf.

     “அருந் தவத்தின் சாகந்தழைத்து” (கம்பரா. நகரப். 75);.

   3. சிறுகீரை (பிங்.);; a species of amaranth.

   4. தேக்கு (பிங்.);; teak.

   5. தாழை (மலை);; fragrant screwpine.

   6. சாகத்தீவு பார்க்க;See {}.

   7. இலைச்சாறு (யாழ்ப்.);; juice of leaves.

ம. சாகம்

     [சாகை → சாகம்]

 சாகம்5 cākam, பெ. (n.)

   வில்; bow.

     “சாகம் பொன்வரையாக” (தேவா. 1௦33, 6);.

     [ஆவம் → சாவம் → சாபம் = வில். சாபம் → சாவம் → சாகம்]

 சாகம்1 cākam, பெ.(n.)

   வெள்ளாடு(பிங்.);; he goat.

     [Skt.{} → த.சாகம்]

     [P]

 சாகம்3 cākam, பெ.(n.)

   தேனீ (சூடா);; bee.

     [சரகம் → சாகம்]

சாகயம்

 சாகயம் cākayam, பெ. (n.)

   தேக்கு; teak-wood Tectona grandis (சா.அக.);.

     [சாகம் → சாகயம்]

சாகரகுலம்

 சாகரகுலம் cāgaragulam, பெ. (n.)

   உப்புரவர் குலம்; a caste of Uppuravar.

     [சாகரம் + குலம்]

சாகரக்கொடி

 சாகரக்கொடி cākarakkoḍi, பெ. (n.)

   சுழற்சி; bonduct nut (lit.);; ocean round pebble – Caesalpinia bonduc.

     [சாகரம் + கொடி]

சாகரக்கோடி

 சாகரக்கோடி cākarakāṭi, பெ. (n.)

   கடற் சங்கு; sea-chank.

     [சாகரம் + கோடி. கோடு → கோடி]

சாகரணம்

சாகரணம் cākaraṇam, பெ.(n.)

சாகரம்1 பார்க்க;see {}.

     “சாகரணா வஸ்கையில் இருக்கிறான்”

     [Skt.{} → த.சாகரணம்]

சாகரத்தினம்

 சாகரத்தினம் cākarattiṉam, பெ. (n.)

   ஒரு வகை முல்லை; a species of jasmine (சா.அக);.

சாகரப்பன்றி

 சாகரப்பன்றி cākarappaṉṟi, பெ. (n.)

   பிலாச்சை மீன்; frog-fish – Ostrachian genus.

சாகரப்பிரபை

 சாகரப்பிரபை cākarabbirabai, பெ.(n.)

   எப்பொழுதும் விழித்தே இருக்க வேண்டிய ஒரு நிரயம் (நரகம்); (யாழ்.அக.);; hell of perpetual sleeplessness.

சாகரம்

சாகரம்1 cākaram, பெ. (n.)

   யானையின் காது வழி ஒழுகும் மதநீர்; sporting, wantoning (கழ.அக.);.

 சாகரம்2 cākaram, பெ. (n.)

   1. வாரி; ocean.

   2. பதினாயிரங் கோடி (வின்.);; ten quadrillions.

     [சக்கரம் = வளைவு, வட்டம். சக்கரம் → சகரம் → சாகரம் = நிலவுலகத்தை வளையச் சூழ்ந்திருப்பது]

சகர என்னும் பெயருடைய ஞாயிற்றுக் குலத்து அரசன் நஞ்சுடன் பிறந்தவன் (ச-கர); என்றும் அவருக்குக் கெவலினி என்னும் மனைவியிடம் அசமஞ்ச என்னும் மகனும் சுமதி என்னும் மனைவியிடம் அறுபதினாயிரம் மக்களும் பிறந்தனர் என்றும், கபிலர் என்னும் முனிவர் சாவத்தினால் அவ்வறுபதினாயிர மக்களும் சாம்பலாயினர் என்றும், அவர்களைத் தூய்மைபடுத்த பகீரதன் தன் பத்தியினால் கங்கையை மேலுலகத்திலிருந்து இறங்கச் செய்தான் என்றும், அந்நீர் சென்று சேரும் கடலுக்குத் தன்முன்னோர் பெயரை (சகர); இட்டார் என்றும் தொன்மக் (புராண); கதை அடிப்படையில் சாகரம் என்னும் சொற்கு மூலம் கூறுவது எத்துணையும் பொருந்தா.

மற்றொரு தொன்மக்கதை சகரனின் மக்கள் நிலத்தைத் தோண்டிக் கடலை உருவாக்கினர் எனக் கூறுகிறது. நிலவுலகத்தின் முக்காற் பங்கிற்கும் மேலாகப் பரந்திருப்பது ஒரு சிலரால் தோண்டி உருவாக்கப்பட்டது என்பதும் பொருந்தாது.

இச் சொற்கு இனச்சொற்கள் மேலையாரிய மொழிகளில் இல்லாமை இது இந் நாட்டு இயன்மொழிச்சொல் என்பதை உறுதிப் படுத்துதல் காண்க.

அகன்று விரிந்த கடல் பின்னர் பேரெண்ணிக்கையைக் குறித்தது.

 சாகரம்1 cākaram, பெ.(n.)

   விழிப்புநிலை; விழித்திருக்கை (பிங்);; sleeplessness, watchfulness.

     [Skt.{} → த.சாகரம்]

 சாகரம்2 cākaram, பெ.(n.)

   1. சகரர்கள் தோண்டியதாகக் கருதப்படும் கடன்; ocean, sea, as dug by cakarar.

     “சகரர் தொட்டலாற் சாகரம் (கம்பரா.அகலி.43);

   2. பதினாயிரங்கோடி (வின்);; ten quadrillions.

     [Skt.{}த.சாகரம்]

சாகரி

 சாகரி cākari, பெ. (n.)

   ஒரு வகைப்பண் (யாழ்.அக.);; a melody type.

சாகலா

 சாகலா cākalā, பெ. (n.)

   ஆடுதின்னாப் பாலை; worm-killer-Aristolochia bracteata.

சாகலாசனார்

சாகலாசனார் cākalācaṉār, பெ. (n.)

   அகநானூறு 16,270 ஆவது பாடல்களின் ஆசிரியர்;{} poet, author of {} 16, 270.

சாகளம்

 சாகளம் cākaḷam, பெ. (n.)

   வெள்ளாடு (உரி.நி.);; goat.

சாகவாசம்

 சாகவாசம் cākavācam, பெ.(n.)

   தோழமை, நட்பு; association, fiendship.

     [Skt.{} → த.சாகவாசம்]

சாகவில்வம்

 சாகவில்வம் cākavilvam, பெ. (n.)

   சேம்பு (மலை);; cocco, a coarse herb.

சாகாகுவஞ்சம்

 சாகாகுவஞ்சம் cākākuvañjam, பெ. (n.)

   தேக்கு; teak-wood – Tectona grandis (சா.அக.);.

சாகாக்கலை

சாகாக்கலை cākākkalai, பெ. (n.)

   சாதலின்றி நெடிது வாழ்ந்திருக்கும் கலை; boon of immortality

     “சாகாக் கலைநிலை தழைத்ததில் வெறியெனும் ஆகாயத்தொளிர் அருட்பெருஞ்சோதி”(அருட்பா.461551);

     [சுவாக்கலை – சாகாக்கலை]

சாகாங்கம்

 சாகாங்கம் cākāṅgam, பெ. (n.)

   மிளகு (மலை.);; pepper.

 சாகாங்கம் cākāṅgam, பெ.(n.)

   மிளகு (மலை);; Pepper.

     [Skt.{} → த.சாகாங்கம்]

சாகாசந்திரநியாயம்

 சாகாசந்திரநியாயம் cākācandiraniyāyam, பெ.(n.)

   நிலவு கிளைக்கு மேலிருப்பதாகக் காட்டி உணர்த்துவதுபோலப் பார்வைக்குத் தொடர்புள்ளது போலிருக்கும் பொருளை அடையாளமாகக் காட்டி வேறொரு முகாமையானப் (முக்கியமான); பொருளைத் தெரிவிக்கும் நெறி; Illustration of the bough and the moon by which an object in question, like moon, has its position assigned in reference to another object, like bough, with which it is apparently connected.

     [Skt.{}+santira-niyaya → த.சாகாசந்திரநியாயம்]

சாகாசிவை

 சாகாசிவை cākācivai, பெ. (n.)

   விழுது (யாழ்.அக.);; aerial root.

 சாகாசிவை cākācivai, பெ. (n.)

   கடலாமணக்கு; sea-side castor plant – Jatropha curcas (சா.அக);.

சாகாச்சாவு

 சாகாச்சாவு cākāccāvu, பெ. (n.)

சாவாச்சாவு பார்க்க;See {}.

ம. சாகாச்சாவு

     [சாவாச்சரவு → சாகாச்சாவு]

சாகாடச்சிற்றன்

சாகாடச்சிற்றன் cākāṭacciṟṟaṉ, பெ. (n.)

   ஆநிரை மீட்கும் கரந்தைப்போரில் இறந்த வீரன்; a hero, who lost his life in a battle of restore buffalo herd.

     “கொங்கத்து எழுமாத்தூர் இருந்து வாழுஞ் சாகாடச் சிற்றன் மீகொன்றை” (தெ.க.தொ. 1971/57);.

   பல்லவன் கம்பவருமனின் ஆறாம் ஆண்டு;கி.பி. 9ஆம் நூற்றாண்டு, ஈரோடு வட்டத்தில் உள்ளது எழுமாத்தூர். கொங்குவேளாளரில் காடை குலத்தவரில், சாகாடை, பனங்காடை என்ற இரு வகையினர் உண்டு. கொங்கு நாட்டிலிருந்து மீகொன்றை நாட்டிற்கு விருந்திற்கு வந்த வேளையில், எருமை மந்தையை விரட்டிச் சென்றாரைத் தொடர்ந்து சென்று சண்டையிட்டு, எருமைகளை மீட்டு மாண்டான்.

சாகாடு

சாகாடு cākāṭu, பெ. (n.)

   1. பெரும்பாலும் வேளாளர் பணிகளுக்கும் பெருஞ்சுமைகளை ஏற்றிச் செல்வதற்கும் எருது இழுத்துச் செல்லும் வலுவான இரண்டு சக்கரங்களை யுடைய வண்டி; strong two-wheeled, ox drawn vehicle used in farming and for heavy goods.

     “பீலிபெய் சாகாடு மச்சிறும்” (குறள், 476);.

   2. வண்டியுருளை; cart wheel.

     “அச்சுடைச் சாகாட்டாரம்” (புறநா. 256);.

   3. உருள் நாண்மீன் (திவா.);; the fourth {}.

     [சகடம் → சகடு → சகடி = வண்டி. சகடு → சாகாடு (வே.க. 241);]

சாகாதமூலி

சாகாதமூலி cākātamūli, பெ. (n.)

   1. வேம்பு; margosa tree.

   2. சீந்திற்கொடி; moon creeper – Tinospora cordifolia.

     [சாவாத → சாகாத + மூலி]

சாகாதுண்டம்

சாகாதுண்டம்1 cākātuṇṭam, பெ. (n.)

சாகதுண்டம் பார்க்க;See {}.

     [சாகதுண்டம் → சாகாதுண்டம்]

 சாகாதுண்டம்2 cākātuṇṭam, பெ. (n.)

   சீந்தில் (வின்.);; gulancha.

சாகாதுயில்

 சாகாதுயில் cākātuyil, பெ. (n.)

   அகில்; eagle wood.

சாகாமருந்து

சாகாமருந்து cākāmarundu, பெ. (n.)

   1. தேவ அமிழ்தம் (இறவாமல் காப்பது);; ambrosia, as preventing death.

   2. ஒரு வகை மூலிகை (யாழ்.அக.);; a medicinal shrub.

     [சா + ஆ + மருந்து → சாவா மருந்து → சாகா மருந்து]

சாகாமிருகம்

 சாகாமிருகம் cāgāmirugam, பெ. (n.)

 monkey, as living in branches.

     [சாகைமிருகம் → சாகாமிருகம்]

 Skt. {} → த. மிருகம்

சாகாமூலி

 சாகாமூலி cākāmūli, பெ. (n.)

   சீந்தில் (மலை.);; gulancha.

ம. சாகாமூலி

     [சா + ஆ + மூலி – சாவாமூலி → சாகாமூலி]

சாகாமூவாப்பேருரு

சாகாமூவாப்பேருரு cākāmūvāppēruru, பெ. (n.)

   திருநுந்தாவிளக்கெரிப்பதற்கு வேண்டும் நெய்யின்பொருட்டு, என்றும் இளமையுடன் ஒரு தொகையுள்ளனவாகக் கோயிற்குவிடப் படும் ஆடுமாடுகள்; cattle of a fixed number endowed to provide a continuous supply of ghee for temple lamps.

     “சாகாமூவாப் பேருருவாக அட்டின பசு இருபத்தஞ்சு” (T.A.S.1,14);.

     [சா + ஆ + மூ + ஆ + பேருரு → சாவா மூவரப் பேருரு → சாகாமூவாப் பேருரு. ‘ஆ’ எதிர்மறை இடைநிலை]

சாகாரம்

 சாகாரம் cākāram, பெ. (n.)

     ‘சா’ என்னும் தமிழ் வண்ணமாலை எழுத்து;

 the letter {}.

மறுவ. சகர ஆகாரம்

     [சா + காரம். உயிர்மெய்யெழுத்துகளுள், நெடிலுக்குத் தனிச்சாரியை இல்லை. இருப்பினும், ‘காரம்’ அவ்வப்போது ஆளப்பெறுகிறது. சகர ஆகாரம் என்பதே, இலக்கணப்படி சரி]

சகரஆகாரம் பார்க்க

சாகாவுப்புச்செய்நீர்

 சாகாவுப்புச்செய்நீர் cākāvuppucceynīr, பெ. (n.)

   நஞ்சக்கொடியினுப்போடு, ஏனைய மருந்துச் சரக்குகளைச் சேர்த்துப் பின்பு வடிக்கப்பெறும் மூலிகை நீர்; the salt extracted from the navel-string after mixing it with other ingredients.

     [சாகாவுப்பு + செய்நீர்]

சாகி

சாகி cāki, பெ. (n.)

   1. மரம் (சூடா.);; tree.

   2. சிற்றீஞ்சு; shiny-leaved dwarf date.

   3. திராய் (மலை.);; Indian chickweed.

     [அகைதல் = தளிர்தல். அகை → சகை → சாகை → சாகி]

 சாகி cāki, பெ.(n.)

   1. மரம் (சூடா);; tree.

   2. சிற்றீஞ்சு; shiny-leaved dwarf date

   3. திராப்(மலை);; Indian chickweed.

     [Skt.{} → த.சாகி]

சாகித்திய சக்தி

 சாகித்திய சக்தி sākittiyasakti, பெ.(n.)

   பாத்திறன்; பாடுந்திறமை; poetic skill.

     [சாதித்திய(ம்);+சக்தி]

     [Skt.{} → த.சாகித்திய(ம்);]

     [த.சக்தி → Skt.skti]

சாகித்தியம்

சாகித்தியம் cākittiyam, பெ.(n.)

   1. பா; செய்யுள்; literary composition.

   2. இசைப்பாட்டு; musical composition.

சாகினி

சாகினி1 cākiṉi, பெ. (n.)

   வெள்ளாடு; goat (கழஅக.);.

     [சாகம் → சாகினி]

 சாகினி2 cākiṉi, பெ. (n.)

   1. சிறுகீரை (திவா.);; a species of amaranth.

   2. பூங்கீரை; cocks comb greens.

   3. சேம்பு (பிங்.);; cocco.

 சாகினி3 cākiṉi, பெ. (n.)

   தீத்தேவதை (சங்.அக.);; an evil spirit.

     [சாவு → சாவினி → சாகினி]

சாகினியம்

 சாகினியம் cākiṉiyam, பெ. (n.)

   சேம்பு; a vegetable plant with esculent leaves known as Indian kales – Caladium nymphaefolium alias colocasia antiquorum (சா.அக.);.

     [சாகனி → சாகினியம்]

சாகியம்

 சாகியம் cākiyam, பெ.(n.)

   நட்பு (இலக்.அக.);; friendship.

     [Skt.sakhya → த.சாகியம்]

சாகிலியன்

 சாகிலியன் cākiliyaṉ, பெ. (n.)

   சிறுகீரை; garden spinach – Amaranthus campestris.

     [சாகி → சாகிலியன்]

சாகு-தல்

சாகு-தல் cākudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. செல்லுதல்; to go, to move forward, to proceed.

   2. தொடர்தல், முன்னேறுதல்; to proceed or advance (கருநா);.

க., தெ. சாகு

     [சல் → சலகு → சாகு-,]

சாகுடி

 சாகுடி cākuḍi, பெ. (n.)

   வழித்தோன்றல் முடிந்த குடும்பம் (நாஞ்.);; extinct family.

ம. சாகுடி

     [சா + குடி]

சாகுபடி

 சாகுபடி cākubaḍi, பெ. (n.)

   விளைச்சல், பயிர் வளர்ப்பு; cultivation.

கடும்புயலால் நெல் சாகுபடி குறைந்துவிட்டது.

   தெ. சாகுபடி ({});;க. து., சாகுவளி

சாகுபடிக்கணக்கு

 சாகுபடிக்கணக்கு cākubaḍikkaṇakku, பெ. (n.)

   பயிர் செய்யப்பட்ட நிலங்களின் கணக்கு (R.T.);; cultivation account.

     [சாகுபடி + கணக்கு]

சாகுபடிக்காலம்

 சாகுபடிக்காலம் cākubaḍikkālam, பெ. (n.)

   வேளாண் பணி தொடங்கும் காலம்; the time to commence farming.

க. சாகுவளி கால

     [சாகுபடி + காலம்]

சாகுபடிசெய்-தல்

சாகுபடிசெய்-தல் sākubaḍiseytal,    1 செ.குன்றாவி. (v.t.)

   பயிர் செய்தல்; to cultivate, to till.

க. சாகுவளி மாடு

     [சாகுபடி + செய்-,]

சாகுபடித்திட்டம்

சாகுபடித்திட்டம் cākubaḍittiḍḍam, பெ. (n.)

   1. காலநிலை கைகொடுக்கும்போது பயிர் செய்யவேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்ட நிலங்களின் பட்டியல் (R.T.);; account, taken by revenue servants at the commencement of the cultivating season, of the holdings intended for cultivation.

   2. பயிரிடுதற்கு ஏற்படும் தோராயச் செலவு; approximate cultivation expenses.

     [சாகுபடி + திட்டம்]

சாகுபடிப்பத்திரம்

 சாகுபடிப்பத்திரம் cākubaḍibbattiram, பெ. (n.)

   பயிர் செய்யப்படும் நிலங்களின் குத்தகை ஆவணம் (R.T.);; lease deed of cultivate land.

     [சாகுபடி + திட்டம்]

 Skt. பத்திரம் → த. பத்திரம்

சாகுபடிமுச்சலிக்கை

சாகுபடிமுச்சலிக்கை cākubaḍimuccalikkai, பெ. (n).

ஒவ்வொருவரது கையொப்பத்துடனும் அவ்வவர்க்குச் சொந்தமான நிலத்தின் பரப்பளவைக் குறித்துவைக்கும் ஆண்டுக்

   கணக்கு (R.T.);; an annual rent-roll in which the extent of land held by each individual ryot is recorded and his signature taken.

   2. சாகுபடி செய்வதாக ஒப்புக்கொண்டு நிலத்தின் சொந்தக்காரருக்கு எழுதிக் கொடுக்கும் ஆவணம்; agreement containing the terms of cultivation executed by a tenant in favour of his land-lord.

     [சாகுபடி + முச்சலிக்கை]

சாகுருவி

 சாகுருவி cākuruvi, பெ. (n.)

சாக்குருவி பார்க்க;See {}.

     [சா + குருவி]

சாகுலி

 சாகுலி cākuli, பெ. (n.)

   ஆவாரை; tanner’s cassia – Cassia curiculata.

சாகுலிகர்

 சாகுலிகர் cāguligar, பெ. (n.)

   கரையார் (யாழ்.அக);; fisherman.

சாகுளி

சாகுளி cākuḷi, பெ. (n.)

   பண் வகை (பரத. ராக. 103);; a specific melody type.

சாகுவளி

சாகுவளி cākuvaḷi, பெ. (n.)

   சாகுபடி; cultivation, agriculture.

     “தரிசு பூமிசாகு வளி செய்திருக்க” (தாசீல்தார் நா. பக். 89);.

க. சாகுவளி

     [சாகுபடி → சாகுவளி]

சாகேதம்

 சாகேதம் cāātam, பெ.(n.)

   அயோத்தி (திவா.);;     [Skt.{} → த.சாகேதம்]

சாகை

சாகை1 cākai, பெ. (n.)

   வாழுமிடம், வீடு; house, hut, residence, halting-place.

     “அந்த சாக (சாகை); தான் அவன் இருக்குமிடம்”.

   தெ. சாக;க. சாக (இடம், அறை);

     [சால் → சாய்ப்கை = படுக்குமிடம், இளைப்பாறுமிடம். சாய்கை → சாகை]

சாய்கை பார்க்க

 சாகை2 cākai, பெ. (n.)

   1. மரக்கிளை; branch of a tree.

     “சாகைச் சம்பு தன்கீழ்” (மணிமே. பதி.5);.

   2. கிளைக்குடும்பம்; branch of a family. (நாஞ்.);.

   3. கை; hand.

     “தளிரோங்கு சாகைகளும் (கோயிற் பாயி. 6);.

   4. மறையின் உட்பிரிவு; vedic section.

     “சாகையாயிர முடையார்” (தேவா. 199, 1);.

   5. மறை (பிங்.);;{}.

   6. எகர் மறைப்பகுதி; a portion of yajur {}.

     [உகு → உகை → அகை. அகைதல் = தளிர்தல், கிளைத்தல். அகை → சகை → சாகை]

 சாகை3 cākai, பெ. (n.)

   இலை (பிங்.);; leaf.

     [அகை → சகை → சாகை]

 சாகை4 cākai, பெ. (n.)

   வட்டில் (பிங்.);; cup.

     [சூள் → சாள் → சாளை = வட்டமான குடிசை. சாள் → சாணை = வட்டமான சாணைக்கல். சாளை → சாளையம் = வளையம். சாளை → சாகை]

 சாகை5 cākai, பெ. (n.)

   இறப்பு; death.

     ‘சாகைக்கு மீண்டு பிறக்கைக்கு மன்றி” (கந்தரலங். 54);.

     [சா → சாகை. ‘கை’ தொ.பெ.ஈறு]

சாகோபசாகையாய்

 சாகோபசாகையாய் cāāpacākaiyāy, து.வி.(Adv.)

 Lit; with branches and branchlets, luxuriantly abundantly.

     [சாகோப(ம்); + சாகையாய்]

     [Skt.{} → த.சாகோப(ம்);]

சாக்கடை

சாக்கடை1 cākkaḍai, பெ. (n.)

சாய்கடை பார்க்க;See {}.

     “சாக்கடைக்குள் நரிக்குட்டி” (இராமநா. உயுத். 43);.

   ம. சாக்கட; U. {}

     [சாய்கடை → சாக்கடை (வே.க. 232); = வட்டமாகவுள்ள அங்கணம் (சலதாரை);. ஒ.நோ. சூல் → சால் → சலாகம் = அங்கணம். சாலுதல் = சாய்தல். கடை = இடம்]

 சாக்கடை2 cākkaḍai, பெ. (n.)

   சேறு (யாழ். அக.);; mire.

மறுவ. சள்ளல்

     [சாய்கடை → சாக்கடை]

சாக்கட்டை

 சாக்கட்டை cākkaṭṭai, பெ. (n.)

   கும்பாதிரி மரம் (L.);; lac tree.

     [சாய் + கட்டை]

சாக்கணவாய்

சாக்கணவாய் cākkaṇavāy, பெ. (n.)

   ஆழ்கடலில் காணப்படும் முள்ளில்லாத மீன் (மீனவ.);; a kind of sea fish.

     [ஆழ்க்கணவாய் → ஆக்கணவாய் → சாக்கணவாய்]

     [p]

சாக்கா-த்தல்

__,

   4 செ.கு.வி. (v.i.);

   இறப்போர்க்கு அருகிருந்து உதவுதல் (யாழ்ப்.);; to wait on a dying person, affording necessary help.

     [சா + கா-,]

சாக்கணாக்கறி

 சாக்கணாக்கறி cākkaṇākkaṟi, பெ.(n.)

   மதுவுண்போர் தின்னும் புலால்; meat prepared and sold at taverns to be taken by drunkards along with the drink.

த.வ.களியாஊன்

     [சாக்கணா+கறி]

     [U.{} → த.சாக்கணா]

சாக்கண்ணன்

 சாக்கண்ணன் cākkaṇṇaṉ, பெ. (n.)

   ஒற்றைக் கண்ணன்; one eyed person (சேரநா.);.

ம. சாக்கண்ணன்

     [சாய் + கண்ணன்]

சாக்காடு

சாக்காடு cākkāṭu, பெ. (n.)

   1. சாவு; death.

     “உறங்குவது போலுஞ் சாக்காடு” (குறள். 339);.

   2. கெடுதி; ruin, injury.

     ‘மரம் சாக்காடா யிருக்கிறது’ (இ.வ.);.

     [சா → சாக்காடு. (வே.க. 234);. கடு → காடு = மிகுதி. ஓ.நோ. வெள்ளக்காடு]

சாக்காட்டு-தல்

சாக்காட்டு-தல் cākkāṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

சாக்கா- (யாழ்ப்.); பார்க்க;See {}.

     [சா + காட்டு-,]

சாக்காட்டுப்பறை

சாக்காட்டுப்பறை cākkāṭṭuppaṟai, பெ. (n.)

   சாப்பறை (புறநா. 194, உரை);; funeral drum.

     [சாக்காடு + பறை]

சாக்காட்டுமரம்

 சாக்காட்டுமரம் cākkāṭṭumaram, பெ. (n.)

   இடி, மின்னல் இவற்றால் தாக்குண்டு காய்ந்த மரம் (இ.வ.);; a kind of tree.

     [சாக்காடு + மரம். சாக்காடு = இறப்பு, அழிவு]

சாக்காலம்

 சாக்காலம் cākkālam, பெ. (n.)

   இறக்கும் நேரம்; time of death.

ம. சாக்காலம்

     [சா(கும்); + காலம். கோல் → கால் = கம்பு, தூண். தூண்போல் உடம்பைத்தாங்கும் உறுப்பு. கால்போல் நீண்டுசெல்லும் நீர்ப்போக்கு. நீண்டியங்கும் காற்று. நீண்டு தொடரும் காலம். கால் → காலம்]

சாக்காளி

சாக்காளி cākkāḷi, பெ. (n.)

   தன்னுருவை மறைத்துக் கிடக்கும் புழுவகை; a kind of worm which conceals its form by a membranous cover made by itself.

     “சாக்காளி என்னும் புழுப்போல- வேறேபூண்டு கிடக்கையாலே” (திருவுந்தி. 24, உரை);.

     [சாக்கு + ஆள் – சாக்காள் → சாக்காளி]

சாக்கி

சாக்கி cākki, பெ. (n.)

   சக்கிமுக்கிக்கல்; flint.

     “சதி கொண்ட சாக்கி யெரியின் வடிவாம்” (திருமந்.

   1653).

ம. சாக்கி

     [சக்கி → சாக்கி]

 சாக்கி cākki, பெ.(n.)

   நேர் பார்வைச் சான்று; eye witness

     “தேவர் சாக்கியாக” (இராமநா.உயுத்.71);

த.வ.சான்று, காட்சிச் சான்று

     [Skt.{}.த.சாக்கி]

 சாக்கி2 cākki, பெ.(n.)

   நெருப்புண்டாக்க பயன்படுத்தி வந்த ஒரு வகைக் கல்; flint-stone used for kindling fire.

த.வ.அழற்கல், வெங்களிச்சான்கல், வெண்கல், சக்கிமுக்கிகல், தீக்கடைகல்.

     [Skt.சச்கி → சாக்கி]

சாக்கிடு-தல்

சாக்கிடு-தல் cākkiḍudal,    17 செ.குன்றாவி. (v.t.)

   தலைக்கீடாகக் கொள்ளுதல், பொய்க்காரணம் கூறுதல்; to make a false excuse, allege as a protext.

கோயிலைச் சாக்கிட்டு வயிறு வளர்க்கிறான்.

     [சாக்கு + இடு-,]

சாக்கிபாக்கி

 சாக்கிபாக்கி cākkipākki, பெ. (n.)

   கொசுறு (உ.வ.);; extra quantity obtained into the bargain.

     [சாக்கி + பாக்கி. எதுகைநோக்கி வந்த மரபிணைமொழி]

சாக்கியநாயனார்

சாக்கியநாயனார் cākkiyanāyaṉār, பெ.(n.)

   புத்தமதத்திலிருந்து சிவனிய மதத்தைத் தழுவியவரும் நாயன்மார் அறுபத்துமூவருள் ஒருவருமாகிய சிவனடியார் (பெரியபு.);; a canonized {} saint converted to {} from Buddhism, one of 63.

     [சாக்கிய(ம்);+நாயனார்]

     [Skt.{} → த.சாக்கிய(ம்);]

சாக்கியன்

சாக்கியன்1 cākkiyaṉ, பெ.(n.)

   1. புத்தர் (பிங்.);; Gautama Buddhar.

   2. சாக்கிய நாயனார் பார்க்க;see {}.

 சாக்கியன்2 cākkiyaṉ, பெ.(n.)

சாக்கையன் பார்க்க;see {}.

சாக்கியப்பள்ளி

சாக்கியப்பள்ளி cākkiyappaḷḷi, பெ. (n.)

   புத்தர் கோயில்; temple of Buddha.

     “குழலூர்ச்சாக்கியப்பள்ளி எல்லைக் கரையே கிழக்கு” (TAS. 1958-59.P84);

     [சாக்கியன்+பள்ளி]

சாக்கியமுனி

 சாக்கியமுனி cākkiyamuṉi, பெ.(n.)

   புத்தர்; Gautama Buddha.

     [சாக்கியம்+முனி]

     [Skt.{}+த.சாக்கியம்]

சாக்கியம்

சாக்கியம் cākkiyam, பெ.(n.)

   புத்தமதம்; Buddhism, as founded by {}.

     “சாக்கியங் கற்றோஞ் சமண்கற்றோம்” (பெருந்தொ,1812);.

த.வ.அறிவன்மதம்

     [Skt.{} → த.சாக்கியம்]

சாக்கியர்

சாக்கியர் cākkiyar, பெ.(n.)

   1. புத்தர்; Buddhists.

சாக்கியரும் (தி.வ்.திருவாய், 4, 10, 5.);

   2. அருகர் சைனர்; Jainas.

     “பாக்கியமில் சாக்கியர்கள்” (திருவாலவா.38, 50);.

     [Skt.{} → த.சாக்கியர்]

சாக்கிரக்கருவி

சாக்கிரக்கருவி cākkirakkaruvi, பெ.(n.)

   பொறிகள் புலன்கள் தன்மாத்திரைகள் உயிர்வளி ஆதன் என்னும் விழிப்புணர்வுக்கு (சாக்கிராவத்தைக்கு); உரிய கருவிகள் (சி.சி.4,34.);;த.வ.விழிப்பேந்துகள்

     [சாக்கிரம்+கருவி]

     [Skt.{} → த.சாக்கிரம்]

சாக்கிரதை

 சாக்கிரதை cākkiradai, பெ.(n.)

   விழிப்பு; wake fulness vigilance.

த.வ.கூர்ங்கவனம்

     [Skt.jagrat-ta → த.சாக்கிரதை]

சாக்கிரத்தானம்

சாக்கிரத்தானம் cākkirattāṉam, பெ.(n.)

   சாக்கிரத்தில் ஆதனில் இடமாகக் கருதும் புருவ நடுவம் (மத்தியம்);; centre between the eyebrows where the soul dwells in the waking state.

     “ஆன்மா வானவன் சாக்கிரத் தானமாகிய புருவமத்தியத்தைப் பொருந்தும் போது (சி.சி.4, 33, மறைஞா.);

த.வ.புருவநடு

     [Skt.Jagrat-{} → த.சாக்கிரத்தானம்.]

சாக்கிரத்திற்சாக்கிரம்

சாக்கிரத்திற்சாக்கிரம் cākkirattiṟcākkiram, பெ.(n.)

   ஆதன் (ஆன்மா); கொண்முடிபு நிலை (தத்துவதாத்துவிகங்);களோடு கூடித் (விடயங்களை); துய்க்கும் நிலை (அனுபவிக்கும் அவசரம்); (ஞான.கட்.30);;     [சாக்கிரத்தில் + சாக்கிரம்]

சாக்கிரத்திற்சுழுத்தி

சாக்கிரத்திற்சுழுத்தி cākkirattiṟcuḻutti, பெ.(n.)

   ஆதன் உயிர்வளியுடனும் மெய்ப்பாட்டுடனுங் கூடி அறிவுணர்ச்சியடங்கி நிற்கும் நிலை (ஆன்மா சித்தத்துடனும் பிராணவாயுவுடனுங் கூடி அறிவுணர்ச்சி முதலியன அடங்கி நிற்கும் அவசரம்); (தத்துவ தாத்துவிகங்); (ஞானா.கட்.30);;     [சாக்கிரம் → சாக்கிரத்தில் + சுழுத்தி]

சாக்கிரத்திற்சொப்பனம்

சாக்கிரத்திற்சொப்பனம் cākkirattiṟcoppaṉam, பெ.(n.)

   ஆதன் மனத்துடனும் உயிர்வளியுடனுங் கூடிய அறிவுணர்ச்சி முதலியன தெளிவின்றி நிகழும் நிலை (ஆன்மா சித்தத்துடனும் பிராணாதி வாயுவுடனுங் கூடிய அறிவுணர்ச்சி முதலியன தெளிவின்றி நிகழும் அவசரம்); (ஞானா.கட்.30);;     [சாக்கிரம் → சாக்கிரத்தில் + சொப்பனம்]

சாக்கிரத்திற்றுரியம்

சாக்கிரத்திற்றுரியம் cākkirattiṟṟuriyam, பெ.(n.)

   ஆதன் மனமழிந்து உயிர்வளி சிறிதே இயங்கி நிற்கும் நிலை (ஆன்மா சித்தமழிந்து பிராணவாயு சிறிதே இயங்கி நிற்கும் அவசரம்); (ஞானா.கட்.30);;

சாக்கிரத்திற்றுரீயாதீதம்

 சாக்கிரத்திற்றுரீயாதீதம் cākkirattiṟṟurīyātītam, பெ.(n.)

சாக்கிரத்திலதீதம் பார்க்க;see {}.

     [சாக்கிரம் → சாக்கிரத்தில் + துரியாதீதம்]

சாக்கிரத்திலதீதம்

சாக்கிரத்திலதீதம் cākkirattilatītam, பெ.(n.)

   ஆன்மா தொடர்பானவற்றைத் துய்க்கின்ற (விடயங்களை யனுபவிக்கிற); வேளையில் உயிர் வளியும் (பிராணவாயுவும்); இயங்காமல் ஒன்றையும் அறியாமல் மூர்ச்சித்து முயங்கி நிற்கும் நிலை (ஞானா. கட்.29);;     [சாக்கிரம் → சாக்கிரத்தில் + அதீதம்]

சாக்கிரபாலன்

சாக்கிரபாலன் cākkirapālaṉ, பெ.(n.)

   விழிப்பு நிலையில் இயங்கும் ஆதன் (ஆன்மா); (சி.சி.4, 33, மறைஞா); (சாக்கிரதசையில் வளங்குபவன்);; soul, as active in the waking state.

     [Skt.{} → த.சாக்கிரபாலன்]

சாக்கிரம்

சாக்கிரம் cākkiram, பெ.(n.)

   ஆன்மா புருவ நடு நின்று கோட்பாட்டு (தத்துவங்);களுடன் கூடி (விடய); நுகர்ச்சியில் மெத்தென நிற்கும் நிலை (சி.போ.பா.4, 3, பக்.275, புது.);;த.வ.விழிப்புநிலை

     [Skt.{} → த.சாக்கிரம்]

சாக்கிராதீதம்

 சாக்கிராதீதம் cākkirātītam, பெ.(n.)

சாக்கிரத்திற்றுரியாதீதம் பார்க்க;see {}.

     [Skt.{} → த.சாக்கிராதீதம்]

சாக்கிலி

 சாக்கிலி cākkili, பெ.(n.)

   அடிமைவேலை; menial service.

த.வ.ஏவற்பணி, சிறுபணி, தொழும்பு

     [U.{} → த.சாக்கிலி]

சாக்கு

சாக்கு1 cākkudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   வளர்த்தல், வளர்த்து உருவாக்குதல்; to bring up, to foster, to rear, to nurse, to keep, to protect, to preserve (கருநா.);.

க., தெ., பட. சாகு

     [சால் → சால்கு → சாக்கு-,]

 சாக்கு2 cākku, பெ. (n.)

   இறப்பு; death (சேரநா.);.

ம. சாக்கு

     [சா → சாக்கு]

சாக்கு3 பார்க்க

 சாக்கு3 cākku, பெ. (n.)

   போலிக் காரணம்; pretence excuse, pretext.

     ‘வேலையைச் செய்யாமல் சாக்குச் சொல்லுகிறான்” (உ.வ.);.

   தெ., க. சாக;பட. சாகி

     [சா = சாவு. சா → சாக்கு. ம. சாக்கு (இறப்பு); ம. சாக்கும் போக்கும் (இறப்பும் புகலிடமும்);. இவ்விணைமொழி மலையாளத்தில் சாக்கும் போக்கும் இல்லாத அல்லது கெட்ட என்று ஆளப்படுவது இதன் பொருளைத் தெளிவுபடுத்துதல் காண்க. இறப்பு அல்லது பிற புகலிடம் இல்லாத இக்கட்டான நிலையை உணர்த்தும் இவ் விணைமொழி இறப்பு அல்லது ஏதாவது புகலிடத்தைப் பற்றிப் பொய்யாகக் கூறும் வீண் காரணத்தையும் குறித்தது. பின் இவ்விணை மொழியின் முதற் சொல்லே இப் பொருளைக் குறித்தது.]

 சாக்கு4 cākku, பெ. (n.)

   பொன் (வின்.);; gold.

     [சரக்கு = வணிகப் பண்டம். சரக்கு → சாக்கு]

 சாக்கு5 cākku, பெ. (n.)

   1. கோணிப்பை; gunny bag.

   2. சட்டைப்பை (வின்.);; pocket in a gапment.

 OE. sace;

 L., GK. sakkos;

 Heb. saq. Port. sac;

 Du. zak. E. sack, sake.

     [சணப்பு → சாப்பு → சாக்கு]

சாக்குக்கட்டி

 சாக்குக்கட்டி cākkukkaṭṭi, பெ.(n.)

   கரும்பலகையில் எழுதப்பயன்படும் சீமைச் சுண்ணாம்புத் துண்டு; chalk piece; piece of chalk.

     [சாக்கு+கட்டி]

     [E.chalk → த.சாக்கு]

சாக்குக்கணவாய்

 சாக்குக்கணவாய் cākkukkaṇavāy, பெ. (n.)

   நத்தைவகை (வின்.);; species of squid, octopus vulgaris.

     [சாக்கு + கணவாய்]

சாக்குச்சுருளி

சாக்குச்சுருளி cākkuccuruḷi, பெ. (n.)

   சாக்கில் சுருட்டி வைத்திருப்பது (இ.வ.);; that which is rolled up in a sack.

     [சாக்கு5 + சுருளி]

சாக்குடி

 சாக்குடி cākkuḍi, பெ. (n.)

   கால்வழியில்லாமல் அழியும் குடும்பம்; extinction of a family, extinct family.

ம. சாக்குடி

     [சா + குடி. குடி = இல், குடியிருப்பு. குடிகள் = நாட்டிற் குடியிருக்கும் மக்கள்]

சாக்குப்போக்கு

சாக்குப்போக்கு cākkuppōkku, பெ. (n.)

சாக்கு3 பார்க்க;See {}.

ம. சாக்கும் போக்கும் (இறப்போ புகலிடமோ இல்லாத);

     [சாக்கு + போக்கு. மரபிணைமொழி]

சாக்குமாண்டி

 சாக்குமாண்டி cākkumāṇṭi, பெ. (n.)

   மண்ணையன் (யாழ்ப்.);; dullard, fool.

     [சாக்கு + மாண்டி]

எளிய பொருட்களை உவமைப்படுத்தித் திட்டும் அடிப்படையில் எளியதும், முரட்டமைப்பைக் கொண்டதுமான சாக்கு, திட்டுவதற்கு ஆளப்பட்டுள்ளது. ஒ.நோ. சாணிப்பிணம்.

மொண்ணை → மண்ணை = அறிவுக் கூர்மை இல்லாதவன். மண்ணை → மாண்டி. சாக்குமாண்டி மரபினை மொழி.

சாக்குரற்பறவை

 சாக்குரற்பறவை cākkuraṟpaṟavai, பெ. (n.)

சாக்குருவி பார்க்க;See {}.

     [சாக்குரல் + பறவை]

சாக்குரல்

 சாக்குரல் cākkural, பெ. (n.)

   பிறர் இறப்பைக் குறிப்பிக்கும் ஆந்தையோசை; screech of owl, believed to portend death.

     [சா + குரல்]

சாக்குருவி

 சாக்குருவி cākkuruvi, பெ. (n.)

   தீச்செயல் நிகழுதற்கு அறிகுறியான ஓசையுடையதென்று கருதப்படும் ஆந்தை வகை; screech – owl, a species of Athene, whose cry is believed to portend death.

ம. சாகுருவி

     [சா + குருவி]

     [p]

சாக்குறி

 சாக்குறி cākkuṟi, பெ. (n.)

   இறக்கும் அறிகுறி; omen or sign of death.

     [சா + குறி]

சாக்குழந்தை

 சாக்குழந்தை cākkuḻndai, பெ. (n.)

சாப்பிள்ளை பார்க்க;See {}.

ம. சாகுருளி

     [சா + குழந்தை]

சாக்கை

சாக்கை1 cākkai, பெ. (n.)

   1. கணியன் (நிமித்திகன்); (சூடா.);; astrologer.

   2. அரசரது கருமத்தலைவன் (பிங்.);; king’s ministerial officer.

   3. போற்றாளி, தலைமைப்பூசகர் (சங்.அக.);; head priest

     [சால் → சால்கை → சாக்கை]

 சாக்கை2 cākkai, பெ. (n.)

   சாக்கைக் கூத்தாடுபவன்; a dancer.

     “மறைக்காட்டுக் கணவதியான திருவெள்ளறை சாக்கைக்குப் பங்கு ஒன்றரையும்’ (தெ.க.தொ.2:66);.

     [சால் = நிறைவு. சால் → சால்கை → சாக்கை = பெருமைகளைச் சொல்லி (புகழ்ந்து); மகிழச் செய்தல் புகழ்மொழிச் சொல்லி ஆடும் கூத்து]

சாக்கை → Skt. {}

சாக்கைக்கூத்து

சாக்கைக்கூத்து cākkaikāttu, பெ. (n.)

   ஆடவர் ஆடும்கூத்து வகையுளொன்று; a dance performed by {}.

     “_திருவிழாவிற்கு வந்து சாக்கைக்கூத்து ஆடக்கடவ அடலையூர் சாக்கைக்கு மூன்றங்கம் ஆட நிவந்தம்” (தெ.க. தொ. 19:171);

ம. சாக்கயான், சாய்பார் கூத்து

     [சாக்கையன் + கூத்து]

சாக்கைக்கூத்து ஆடுபவர், சாக்கையர் எனப் பட்டனர். இவர்கள் ஆரியக்கூத்தும் ஆடும் திறமை பெற்றிருந்தனர். இக்கூத்து, தமிழகத்துச் சிவன்கோயில்களில் ஆடப்பெற்றது. சாக்கைக்கூத்து மூன்று பகுதியாகவும், ஏழு பிரிவாகவும் ஆடப்பெறும் (கல்அக.);

சாக்கையர் பெயர், வெற்றிக்காலத்தும் அமைதிக்காலத்தும் அரசர்க்குக் கூத்தாடி மகிழ்ச்சியை யுண்டுபண்ணும் வேத்தியற் கூத்தரைக் குறிக்கும்.

சாக்கையன்

சாக்கையன் cākkaiyaṉ, பெ. (n.)

   1. சாக்கைக் கூத்து நிகழ்த்தும் ஒர் இனத்தான்; member of a caste, whose profession in ancient times was to sing and dance in temples and palaces.

     “கூத்தச்சாக்கை யனாடலின்” (சிலப். 28: 77);.

   2. கணியன் (சூடா.);; astrologer.

     [சாக்கை → சாக்கையன்]

சாக்கைவயல்

 சாக்கைவயல் cākkaivayal, பெ.(n.)

   திருப்பத்துர் வட்டத்திலுள்ள சிற்றுர்; a village in Tiruppattur.Taluk.

     [சாக்கையன்+வயல்]

சாக்கொட்டு

 சாக்கொட்டு cākkoṭṭu, பெ. (n.)

சாவுக்கொட்டு பார்க்க;See {}.

     [சா + கொட்டு]

சாக்கோட்டி

 சாக்கோட்டி cākāṭṭi, பெ. (n.)

   கருவுற்ற மகளிர்க்கு வரும் மசக்கை (இ.வ.);; sickness of a pregnant woman.

சாக்தன்

 சாக்தன் cāktaṉ, பெ.(n.)

   கொற்றவை அல்லது காளி (சிவை); வழிபாட்டாளன்; follower of {} religion.

     [Skt.{} → த.சாக்தன்]

சாக்தம்

 சாக்தம் cāktam, பெ.(n.)

   மலைமகளே மீமிசைத் தெய்வமென வழிபடுஞ் சமயம். சிவையம்; (சக்தியே பரதேவதையாக வழிபடுங் சமயம்);; the religion which enjoins the exclusive worship of {} as the supreme Being.

     [Skt.{} → த.சாக்தம்]

சாக்தேயம்

 சாக்தேயம் cāktēyam, பெ.(n.)

சாக்தம் பார்க்க;see {}.

     [Skt.{} → த.சாக்தேயம்]

சாங்கசம்

 சாங்கசம் sāṅgasam, பெ. (n.)

   சீந்தில்; gulancha (சா.அக.);.

     [சாங்கம் → சாங்கசம்]

சாங்கடை

 சாங்கடை cāṅgaḍai, பெ. (n.)

   சாங்காலம், இறக்குந்தறுவாய் (வின்.);; moment of death.

     [சா + கடை. ‘கடை’ இடம், பொழுது]

சாங்கமாய்

சாங்கமாய் cāṅgamāy, து.வி.(adv.)

   1. முழுதும்,

 wholly, completely.

     “சாங்கமாயனுட்டிக்கும் சாமர்த்திய மில்லா தாராய் (சி.சி.8,4,ஞானப்);

   2. காப்பாய் (பத்திரமாய்); (வின்.);

 with safety.

     ‘அந்த வழியிலே சாங்கமாய் நடக்கலாம்”.

     [Skt.{} → த.சாங்க + த.ஆய்]

சாங்கமிலார்

சாங்கமிலார் cāṅgamilār, பெ.(n.)

   சாதிவிலக்குப்பட்டவர்; outcastes.

     “சூளைக்காரச் சாங்கமிலார்” (திருப்பு.589);

     [சாங்கம்+இலார்]

     [Skt.{} → த.சாங்கம்]

சாங்கம்

சாங்கம்1 cāṅgam, பெ. (n.)

   1. ஒழுங்கு; order.

   2. சங்கொலி; the sound of a blown chank.

     [சங்கு → சங்கம் = பெருஞ்சங்கு. ‘அம்’ பெருமைப் பொருள் பின்னொட்டு. சங்கம் → சாங்கம்]

 சாங்கம்2 cāṅgam, பெ. (n.)

   சங்கச் செய்நஞ்சு பாடாணம் (மூ.அ.);; a mineral poison.

     [சங்கம் → சாங்கம்]

 சாங்கம்3 cāṅgam, பெ. (n.)

   சீந்தில் (மலை.);; gulancha.

 சாங்கம் cāṅgam, பெ.(n.)

   இறைவடிவச் சிற்பங் களின் உறுப்புகளிற் ஒன்று; a feature in sculpture.

     [சாரங்கம்-சாங்கம்]

 சாங்கம் cāṅgam, பெ.(n.)

   1. உறுப்புக்களைனைத்தும்; all the limbs.

     “கரசரணாதி சாங்கம்” (சி.சி.1,47, மறை.ஞா);

   2. சாயல்; likeness, similarity of features.

     “பார்த்தால் அவன் சாங்கமாயிருக்கிறது”.

     [Skt.{} → த.சாங்கம்]

சாங்கரம்

சாங்கரம் cāṅgaram, பெ.(n.)

   கலப்பின வகுப்பு (சாதி);; mixed caste.

     “சாங்கரத்திணங்கு பலவேறு சாதியினும்” (திருவானைக்.நகரப்.64);

     [Skt.{}.த.சாங்கரம்]

சாங்கரர்

 சாங்கரர் cāṅgarar, பெ.(n.)

   கலப்பினத்தார்; persons of mixed caste.

     “வெய்யகாருகர்க்குஞ் சாங்கரரார்க்குமடாது வேந்தே”

     [Skt.{} → த.சாங்கரர்]

சாங்கரிசம்

 சாங்கரிசம் sāṅgarisam, பெ.(n.)

சாங்கரியம் பார்க்க;see {}.

சாங்கரியம்

சாங்கரியம் cāṅgariyam, பெ.(n.)

   கலப்பு; mixture.

     “சாங்கரியம் வாராமல்” (சிவசம.40);

     [Skt.{} → த.சாங்கரியம்]

சாங்கரீயம்

சாங்கரீயம் cāṅgarīyam, பெ.(n.)

   கலப்பானது; that which is mixed as caste.

     “சாங்கரீய மரபிற் சனித்தவன்” (சேது4.தனுக்.24);

     [Skt.{} → த.சாங்கரீயம்]

சாங்கலிகன்

 சாங்கலிகன் cāṅgaligaṉ, பெ. (n.)

   நஞ்சுமுறி மருத்துவன் (சங்.அக.);; a doctor who has specialised in curing poison.

சாங்காலம்

 சாங்காலம் cāṅgālam, பெ. (n.)

   இறக்குந் தருவாய், சாகுங்காலம்; the time of death.

     [சா (சாகும்); + காலம்]

சாங்கிமம்

 சாங்கிமம் cāṅgimam, பெ. (n.)

   மருத யாழ்த்திற வகை (பிங்.);; an ancient secondary melody type of marudam class – musical.

சாங்கியன்

சாங்கியன் cāṅgiyaṉ, பெ.(n.)

   சாங்கியவாதி; follower of the {} philosophy.

     “பௌத்தன் மாறாய் நின்ற சாங்கியனைக் குறித்து” (மணிமே.29, 169.);

     [Skt.{}.த.சாங்கியன்]

சாங்கியம்

சாங்கியம் cāṅgiyam, பெ.(n.)

   திருக்கோயிலூர் வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Tirukkoyilur Taluk.

     [சாங்கு-சாங்கியம்]

 சாங்கியம்2 cāṅgiyam, பெ.(n.)

   தோற்பாவை நிழற்கூத்துக் கலைஞர்கள் சடங்குகளைக் குறிக்கப் பயன்படுத்துகின்ற சொல்; a term used to mean ritual.

     [சழங்கு-சாங்கு-சாங்கியம்]

 சாங்கியம்1 cāṅgiyam, பெ.(n.)

   1. கபிலரால் வெளிப்படுத்தப்பட்டதும் கொண்முடிபுகள் (தத்துவங்கள்); இருபத்தைந்து எனக் கணக்கிடுவதுமான ஒரு சமயம்; the {} system of Philosophy expounded by Kapila, enumerating twenty-five tattvas.

     “இது சாங்கிய மதமென்றெடுத் துரைப்போன்” (மணி.27, 202.);

   2. எண்ணிக்கை; that which can be counted.

     “அருவாய்ப் பல சாங்கியமாய்” (சி.போ.பா.அவை);

     [Skt.{}.த.சாங்கியம்]

 சாங்கியம்2 cāṅgiyam, பெ.(n.)

   சடங்குகள்; ceremonies, rites.

சாங்கிருதம்

 சாங்கிருதம் cāṅgirudam, பெ. (n.)

   சலங்கை (யாழ்.அக.);; tinkler in an anklet.

சாங்கு

 சாங்கு cāṅgu, பெ. (n.)

   ஒரு வகை அம்பு (யாழ்.அக.);; a kind of dart, arrow.

     [சங்கு = முளை. சங்கு → சாங்கு]

சாங்குகெளரி

 சாங்குகெளரி cāṅgugeḷari, பெ. (n.)

   புளி நரளை (மலை.);; bristly trifoliate vine.

சாங்குசித்தன்

 சாங்குசித்தன் sāṅgusittaṉ, பெ.(n.)

   குருவிடம் நல்லுரை (உபதேசம்); பெற விரும்புவோன்; one who wishes to be initiated by a guru.

     [Skt.sam-siddha → த.சாங்குசித்தன்]

சாங்குலம்

 சாங்குலம் cāṅgulam, பெ. (n.)

   நஞ்சு; poison (கழ.அக.);.

சாங்கேதிகம்

சாங்கேதிகம் cāṅātigam, பெ.(n.)

   அடையாளம், கட்டுப்பாடு முதலியவற்றால் நிகழ்வது; that which is conventional; signs based on agreement.

     “அந்த அகாரங்களினுடையசாங்கேதிகத்துக்கு அபிவ்யஞ்சகம்” (சி.சி.2,62 சிவாக்);

     [Skt.{} → த.சாங்கேதிகம்]

சாங்கோபாங்கமாகப் பண்ணு-தல்

 சாங்கோபாங்கமாகப் பண்ணு-தல் cāṅāpāṅgamākappaṇṇudal, செ.கு.வி. (v.t.)

   சுறுசுறுப்பாகச் செய்வது போல நடித்தல் (யாழ்ப்);; to make pretence of being diligent or active.

சாங்கோபாங்கமாய்

 சாங்கோபாங்கமாய் cāṅāpāṅgamāy,    து.வி.(adv.) முழுவதும்; completely, in detail.

சாங்கோபாங்கம்

சாங்கோபாங்கம் cāṅāpāṅgam, பெ.(n.)

   1. முழுமை; completeness.

   2. சிறந்த கிருத்துவர்களின் வாழ்க்கை (கிருத்);; true christian perfection.

     [Skt.{} → த.சாங்கோபாங்கம்]

சாசக்கினி

 சாசக்கினி cācakkiṉi, பெ. (n.)

   சிறுதேக்கு; small teak – Cleodandron Javaulicum (சா.அக.);.

சாசங்கமூலி

 சாசங்கமூலி cācaṅgamūli, பெ. (n.)

   செங்குன்றி; crab’s eye;

 red seed of the plant – abrus precatorius (சா.அக.);.

சாசனக்காணி

 சாசனக்காணி cācaṉakkāṇi, பெ.(n.)

   அரசனால் விடப்பட்ட உரிமை நிலம் (யாழ்ப்.);; hereditary property held under a royal grant.

     [சாசனம்+காணி]

     [Skt.{} → த.சாசனம்]

காண் → காணி

சாசனம்

சாசனம்1 cācaṉam, பெ. (n.)

   வெண்கடுகு (மலை.);; white mustard, as keeping of evil spirits.

 சாசனம்2 cācaṉam, பெ. (n.)

   1. இறையில்லாதவூர் (யாழ். அக.);; tax-free village.

   2. வலையர்சேரி; fishermen’s quarters.

 சாசனம் cācaṉam, பெ.(n.)

   1. கட்டளை; order, edict, command.

   2. அரசாணை முதலிவற்றைக் குறிக்கும் கல்வெட்டு செப்புப்பட்டயம் முதலியவை; royal grant of land or of privileges, charter, patent usually inscribed on stone or copper.

   3. (பத்திரம்); ஆவணம்; document.

   4. இறையிலி நிலம் (வின்.);; tax-free land.

   5. அதிகாரச்சின்னம் (வின்.);; insignia of authority.

   6. தண்டனை (வின்.);; punishment, retribution.

   7. வேட்டுவச்சேரி (வின்.);; village of a hinter-tribe attached to a royal household.

     [Skt.{} → சாசனம்]

சாசனம்பண்ணு-தல்

சாசனம்பண்ணு-தல் cācaṉambaṇṇudal,    12 செ.குன்றாவி.(v.t.)

   நிலம் முதலியவற்றை விற்பனை செய்தல்; to sell or convey by deed.

     [சாசனம் + பண்ணு]

     [Skt.{} → த.சாசனம்]

சாசனவிருத்தி

 சாசனவிருத்தி cācaṉavirutti, பெ.(n.)

 maintenance enjoyed under a written deed or grant. (R.T.);

     [Skt.sasana+{} → த.சாசனவிருத்தி]

சாசபுடம்

சாசபுடம் cācabuḍam, பெ. (n.)

   ஐவகைத் தாளத் தொன்று (பரத. தாள. 2);; a variety of time- measure, one of {}.

சாசம்

 சாசம் cācam, பெ. (n.)

   அசோகு; asoka tree – polyathia longifolia (சா.அக.);.

சாசயாபகம்

 சாசயாபகம் cācayāpagam, பெ. (n.)

   சிறுநீலி; small-leaved indigo plant – Indigofera tinctoria (சா.அக.);.

சாசற்புடம்

சாசற்புடம் cācaṟpuḍam, பெ. (n.)

சாசபுடம் (பரத. தாள. 12); பார்க்க;See {}.

சாசாரம்

சாசாரம் cācāram, பெ.(n.)

   தேவருலகத்துளொன்று; a celestial world.

     “நிலையிலா வுடம்பு நீங்கி…. சாசாரம் புக்கான்” (மேருமந்.480);

     [Skt.{} → த.சாசாரம்]

சாசி

சாசி1 cāci, பெ. (n.)

 gகீரைவகை (மலை.); Indian chickweed.

 சாசி2 cāci, பெ. (n.)

   முலைப்பால்; mother’s milk (செ.அக.);.

   ம. சாச்சி;   தெ. த்சாகி;க. சாசி

சாசினம்

 சாசினம் cāciṉam, பெ. (n.)

   வெண்கடுகு; white mustard – brassica alba (சா.அக.);.

சாசிபம்

 சாசிபம் cācibam, பெ.(n.)

   தவளை (சது.);; frog.

     [Skt.{}த.சாசியம்]

     [P]

சாசியா

 சாசியா cāciyā, பெ. (n.)

   அரசு; peepul tree – ficus religiosa (சா.அக.);.

சாசு

 சாசு cācu, பெ. (n.)

   பேய்ப்பீர்க்கு; wild luffa – cucumis acutangulus (சா.அக.);.

சாசுகம்

 சாசுகம் cācugam, பெ. (n.)

   சிவப்புச் சோளம்; red maize (சா.அக.);.

சாசுக்கிலகம்

 சாசுக்கிலகம் cācuggilagam, பெ. (n.)

   புளி; tamarind – Tamarindus Indicus (சா.அக.);.

சாசுறு

 சாசுறு cācuṟu, பெ. (n.)

   முந்திரி; cashew-nut plant – Cassuvium pomiferum (சா.அக.);.

சாசுலம்

 சாசுலம் cāculam, பெ. (n.)

   கருந்தக்காளி; black tomato (சா.அக.);.

சாசுவதக்கவுல்

 சாசுவதக்கவுல் cācuvadakkavul, பெ.(n.)

   குத்தகைதாரனும் அவன் வழித்தோன்றல்களும் உடன்படிக்கைத் திட்டப்படி வரி செலுத்தி (நிரந்தரமாக அனுபவித்து); தொடர்ந்து துய்த்து வரும் வழியுரிமை (கவுல்); நிலம்; perpetual lease of land to be enjoyed by the lessee and his heirs, subject to payment of the rent agreed upon, which generally is only nominal (R.F.);

     [Skt.{}-kauvl → த.சாசுவதக்கவுல்]

சாசுவதக்குத்தகை

 சாசுவதக்குத்தகை cācuvadagguddagai, பெ.(n.)

சாசுவதக்கவல் பார்க்க;see {}.

சாசுவதப்பகுதி

 சாசுவதப்பகுதி cācuvadappagudi, பெ.(n.)

   வழியுரிமை (கவுல்); நிலக்குத்தையில் வாங்கப்படும் நிலைக் குத்தகைப்பணம்; fixed rent, as in a permanent lease.

     [சாசுவதம் + பகுதி]

     [Skt.{}த.சாசுவதம்]

சாசுவதப்பனை

 சாசுவதப்பனை cācuvadappaṉai, பெ.(n.)

   பட்டாநிலமுழுதிலும் பிறர்க்குரித்தன்றிப் பட்டாதார்க்கே உரிமையான பனை;     [சாசுவதம் + பனை]

     [Skt.{} → த.சாசுவதம்]

சாசுவதம்

சாசுவதம் cācuvadam, பெ.(n.)

   1. நிலை பேறுடைமை; ஈறில்காலம் (நிக்கியம்);; perpetuity, eternity.

     “சாசுவதபுட்கல….வ் யோம நிலையை (தாயு.திருவருள்வி.3);

   2. அசையாநிலை; immobility, steeddd fastness.

   3. வீடுபேறு (மோட்சம்); (சங்.அக);; eternal bliss, salvation.

   4. சாசுவதக்கவுல் பார்க்க;see {}.

     [Skt.{} → த.சாசுவதம்]

சாசைவம்

 சாசைவம் cācaivam, பெ. (n.)

   வெள்ளைக் கழற்கொடி; a white species of {}. bonduct nut – Caesalpinia bonducella (சா.அக.);.

சாச்சடங்கு

 சாச்சடங்கு cāccaḍaṅgu, பெ. (n.)

   இறப்பில் நிகழ்த்தும் செய்கைகள்; funeral ceremonies, obsequies.

மறுவ. ஈமச்சடங்கு

     [சா + சடங்கு]

சாச்சா

 சாச்சா cāccā, பெ. (n.)

   குறட்டைப்பருப்பு (வின்.);; pulp of the bitter snake-gourd.

சாச்செலவு

 சாச்செலவு cāccelavu, பெ. (n.)

   இறப்புச் சடங்கினை நடத்துவதற்கு ஆகும் செலவு (வின்.);; funeral expenses.

     [சா + செலவு]

சாஞ்சயம்

 சாஞ்சயம் cāñjayam, பெ. (n.)

   மிளகு (மலை.);; pepper.

சாஞ்சலியம்

 சாஞ்சலியம் cāñjaliyam, பெ.(n.)

   நிலையின்மை; instability, fickleness.

     “அவன் மனத்துச் சாஞ்சலியம் உடையவன்” (சங்.அக);

     [Skt.{} → த.சாங்சலியம்]

சாஞ்சி

சாஞ்சி1 cāñji, பெ. (n.)

   நடுவண் இந்தியாவில் போபால் அருகிலுள்ள இடம்; a place in middle India near Bhopal.

இங்குப் புத்தமதத்தின் கலைச்சின்னங்கள் அமைந்துள்ளன. இங்கிருந்து அசோகன் மகன் மகேந்திரன் புத்தமதத்தைப் பரப்ப இலங்கைக்குச் சென்றான்.

 சாஞ்சி2 cāñji, பெ. (n.)

   சாஞ்சியம் பார்க்க; Ssee {}.

சாஞ்சிதம்

 சாஞ்சிதம் cāñjidam, பெ. (n.)

   பச்சைக்கல்லில் (மரகதம்); ஏற்படும் குற்றங்களுள் ஒன்று; a kind of fault in an emerald.

சாஞ்சித்தன்

 சாஞ்சித்தன் cāñjittaṉ, பெ.(n.)

சாமுசித்தன் (பதிபசுபாச); பார்க்க;see {}.

     [Skt.samsiddha → த.சஞ்சித்தன்]

சாஞ்சியம்

 சாஞ்சியம் cāñjiyam, பெ. (n.)

   வெண்பாதிரி; white fragrant trumpet flower – Bignonia chelonoides (சா.அக.);.

சாடராக்கினி

சாடராக்கினி cāṭarākkiṉi, பெ.(n.)

   உணவைச் செரிக்கச் செய்யும் வயிற்றுத்தீ; digesting agency, considered a fire or heat abiding in the stomach.

     “தேபமிலகுவாகுஞ் சாடராக்கினி சொலிக்கும்.” (பிரபோத.44, 16);

     [Skt.{}-agni → த.சாடராக்கினி]

சாடவம்

சாடவம் cāṭavam, பெ.(n.)

   ஒரு வகையான பண்; a musical note.

     [சாடு-சாடவம்]

 சாடவம் cāṭavam, பெ.(n.)

   ஆறுசுரமுள்ள பண் (இராகம்); (சிலப்.13, 106, உரை);;த.வ.நிறைப்பண்

     [Skt.{} → த.சாடவம்]

சாடாவாக

 சாடாவாக cāṭāvāka,  completely, entirely.

சாடி

சாடி1 cāṭittal,    4 செ.கு.வி. (v.i.)

   கோள் சொல்லுதல் (வின்.);; to slander.

   க. சாடிசு;   தெ. சாடிஞ்சு;து. சாடி

     [சாடு → சரடி. (வே.க.231);]

 சாடி2 cāṭittal,    2 செ.குன்றாவி. (v.t.)

   1. கண்டித்தல் (இ.வ.);; to chide, rebuke.

   2. நொறுக்குதல் (வின்.);; to crush.

     [சாடு → சாடி-,]

 சாடி2 cāṭittal,    4 செ.கு.வி. (v.i.)

   இரு பக்கமும் அசைதல் (யாழ்ப்.);; to totter, rock from side to side.

     [சாடு → சாடி-,]

 சாடி3 cāṭi, பெ. (n.)

   1. கோள்மொழி (பிங்.);, பிறரைக் குறித்துக் குற்றம் சொல்லும் பேச்சு; malicious report, slander.

   2. பொடி (யாழ்.அக);; powder.

   தெ. துசாடி;   க. சகட, சகடி, சகடெ, சாட, சாடி, சாகடி, சாட, சாடி; Mar. {}.

     [சாள் → சாடு. சாடுதல் = சாய்தல். சாடு → சாடி = ஒருவனைத் தாக்கிச் சொல்லும் கோட்சொல்]

 சாடி4 cāṭi, பெ. (n.)

   சீலை (பிங்.);; cloth, clothing.

   ம. சாடி;   க. சாடி; Skt. {};

 H. {}

     [சவளி → சாளி → சாடி]

 சாடி5 cāṭi, பெ. (n.)

   ஆண்மக்கள் தலைமயிர் (யாழ்.அக.);; man’s hair.

     [சாடு → சாடி]

 சாடி6 cāṭi, பெ. (n.)

   திப்பிலி (மலை.);; long pepper.

 சாடி7 cāṭi, பெ. (n.)

   1. தெருக் குப்பையைக் கூட்ட உதவும் மாறுவகை (mod.);; road-sweep.

   2. மணிகளைப் பதிக்கும் உம்மிசம்; socket for setting gems.

     “ரத்தினங்களை யெல்லாம் சாடியிலே பதித்துக் காட்டுமா போல” (திவ். அமலனாதி7. வியா. பக். 86);.

     [சாள் → சாடு. சாடுதல் = சாய்தல். சாடு → சாட்டம் = சாய்வு. சாடு → சாடி = குப்பைகனை ஒருபுறம் ஒதுக்க உதவும் மாறு]

 சாடி8 cāṭi, பெ. (n.)

   1. பாண்டவகை; jar.

     “சாடிமட்டயின்று” (சீவக. 1614);.

   2. கும்ப ஒரை (திவா.);; aquarius of the zodiac.

     [சாள் → சாளி → சாடி]

சாளி1 பார்க்க

 சாடி9 cāṭi, பெ. (n.)

   1. ஓர் அளவை (தொல். எழுத்து. 170, உரை);; a measure of capacity.

   2. உழுசால்; a furrow.

     “மூரி தவிர முடுக்கு முதுசாடி” (பரிபா. 2௦, 54);.

     [சால் → சாலி → சாளி → சாடி]

சாடிகம்

 சாடிகம் cāṭigam, பெ. (n.)

   திப்பிலி; long-pepper-Piper longume.

சாடிகோர்

 சாடிகோர் cāṭiār, பெ. (n.)

   புறங்கூறுவோன் (C.G.);; talebearer, backbiter (செ.அக.);.

 Mhr. {} – Persn. {}

     [சாடு → சாடி + காரன் – சாடிக்காரன் → சாடிகோர்]

சாடிக்காரகண்டன்

சாடிக்காரகண்டன் cāṭiggāragaṇṭaṉ, பெ. (n.)

   பகைவரை ஒழிப்பவன்; one who destroys his foes. (சே.ம.செ.ப. 101);.

     [சாடிக்காரன்+கண்டன்]

சாடிக்காரன்

சாடிக்காரன்1 cāṭikkāraṉ, பெ. (n.)

   மீனின் ஒரு வகை (மீனவ.);; a kind of fish.

 சாடிக்காரன்2 cāṭikkāraṉ, பெ. (n.)

   பழி தூற்றுபவன்; slanderer.

க. சாடிகார, சாடிகாற

     [சாடி + காரன்]

சாடிதவம்

 சாடிதவம் cāṭidavam, பெ. (n.)

   கற்கோவை; air -living bryony – Bryonia epigaea (சா.அக.);.

சாடிப்பானை

 சாடிப்பானை cāṭippāṉai, பெ. (n.)

   கோலா மீன் பிடிக்கச் செல்வோர் கொண்டு செல்லும் உணவு; a kind of fisherman’s food.

     [சாடி + பானை – சாடிப்பானை = -சாடிப் பானையில் சமைக்கும் உணவு வகை]

இது பலநாள் கெடாமலிருக்குமாறுப் பக்குவமாகச் சமைக்கப்பட்டிருக்கும் (மீனவ.);.

சாடிப்பேச்சு

 சாடிப்பேச்சு cāṭippēccu, பெ. (n.)

   பழி தூற்றுரை; slanderous talk.

க. சாடிமாது, சாடிவாது

     [சாடி + பேச்சு]

சாடியாயனீ

சாடியாயனீ cāṭiyāyaṉī, பெ.(n.)

   நூற்றெட்டு மறைகளுள் ஒன்று(சங்.அக.);; an upanisad one of 108.

     [Skt.{} → த.சாட்டியாயனீ]

சாடு

சாடு1 cāṭudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. அடித்தல்; to beat.

     ‘சாடிக்கொன்றனன் சிலவரை’ (கம்பரா. கிங்கிர. 36);.

   2. மோதுதல்; to fall upon.

     ‘கமுகின் குலைசாடி’ (திருக்கோ. 10௦);.

   3. துகைத்தல்; to trample.

     “விடரியங் கண்ணிப் பொதுவனைச் சாடி” (கலித். 1௦1);.

   4. குத்திக் கிழித்தல்; to tear open, gore.

     ‘அதனிறஞ் சாடி முரண்டீர்ந்த’ (கலித். 52);.

   5. வடுச்செய்தல்; to scratch. ‘கூருகிர் சாடிய மார்பும்’ (கலித். 91);.

   6. ஒடித்தல்; to lop off, break, as branches.

     “குங்குமத் தடஞ்சினை சாடி” (நைடத. நாட் 4);.

   5. கொல்லுதல்; to kill, destroy.

     “சாடியது சிற்சிலவர் தம்மை” (கந்தபு. தகரேறு. 14);.

   8. கடிதல் (வின்.);; to abuse, reprove.

   ம. சாடு (குதித்தல்);;   க. சாடிசு (எறிதல்);;   து. சாண்டுனி (ஈட்டியை அசைத்தல்);;குரு. சாட்காரை (குதித்தல்);.

     [சாள் → சாடு (வே.க.231);]

 சாடு2 cāṭudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. அசைதல்; to shake.

   2. ஒரு கட்சிக்குச் சார்பாயிருத்தல்; to favour a party, as in a civil suit.

   3. சாய்ந்து நிற்றல்; to lean, overhang, as a tree.

   4. சாடி4 பார்க்க;See {}.

     ‘பட்டம் வாலுக்குச் சாடுகிறது’.

   ம. சாடுக;   க. சாடிசு;து. சாண்டுனி

     [சாள் → சாடு2]

 சாடு3 cāṭudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   கை கால் எறிதல்; to stretch out, as the arms or legs from lassitude.

 சாடு4 cāṭudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. குறைகூறிக் கடுமையாகத் தாக்குதல்; to critisize vehemently, attack verbally.

தமிழுக்கு எதிராகப் பேசுவோரைப் பாவாணர் சாடினார்.

   2. தாவுதல், எகிறுதல்; to leap, jump over.

     ‘திருடன் மேல் சாடி விழுந்தார்’.

     [சள் → சாள் → சாடு → சாடை = தன்மை, சாயல். சள் → சாள் → சாடு. சாடுதல் = சாய்தல்]

 சாடு5 cāṭudal,    5 செ.குன்றாவி. (v.t.)

 to collect dirt in the eyes.

     ‘கண்வலியால் பீளை சாடிக் கண்ணைத் திறக்க முடியவில்லை’.

     [சாள் → சாடு]

 சாடு6 cāṭu, பெ. (n.)

   மணிமுற்றாத சோளம்; unripe grain of great millet.

   ம. சாட;   தெ. சவிலெ, சாவி;கூய். சடு

 சாடு7 cāṭu, பெ. (n.)

   கைக்கு இடும் உறை; glove, gaunlet.

     ‘விரற்சாடு’ (சீவக. 22௦2, உரை);.

   க. சாடு;தெ. த்சாடு

     [சாள் → சாடு]

 சாடு8 cāṭu, பெ. (n.)

சாட்டுக்கூடை (யாழ்ப்.); பார்க்க;See {}.

     [சாட்டுக்கூடை → சாடு]

 சாடு9 cāṭu, பெ. (n.)

   வண்டி; cart.

     “குறுஞ்சாட் டுருளையொடு” (பெரும்பாண். 188);.

   ம. சாடு;   க. சகம்;   தெ. செகடா; Skt.{}

     [சகடம் → சகடு → சகடி = வண்டி. சகடு → சாகாடு = வண்டி. சகடு → சாடு (வே.க.115);]

சாடுகம்

சாடுகம் cāṭugam, பெ. (n.)

சாடு3 (அகநி); பார்க்க;See {}.

     [சாடு → சாடுகம்]

சாடுசக்கட்டை

 சாடுசக்கட்டை sāṭusakkaṭṭai, பெ. (n.)

   திறமையற்றவ-ன்-ள் (நாஞ்.);; a worthless person.

     [சாடு + சக்கட்டை]

சாடுமாறி

சாடுமாறி cāṭumāṟi, பெ. (n.)

   1. வீட்டைப் பெருக்கித் தூய்மை செய்பவள்; woman sweeper.

   2. கீழ்த்தரமானவ-ன்-ள் (இ.வ.);; a mean, despicable person.

க. சாடுமாலி

     [சாடு + மாறி]

சாடுமாலி

 சாடுமாலி cāṭumāli, பெ. (n.)

சாடுமாறி பார்க்க;See {}.

     [சாள் → சாடு → சாடுமாலி]

சாடை

சாடை1 cāṭai, பெ. (n.)

   1. சாயல்; appearance, feature.

தமையனுந் தம்பியும் ஒரு சாடை.

   2. ஒப்பு; similarity,

முகம் நிலவு சாடையா யிருக்கிறது.

   3. போக்கு (வின்.);; inclination, tendency, temperament.

   4. சைகை; hint, significant, gesture.

     “சாடை பேசிய வகையாலே” (திருப்பு. 572);.

   5. மிகச்சிறு அளவு, சிறுக்கம்; trifle, slightness.

     ‘சாடையால் உப்புக்கூட்டு’ (கொ.வ.);.

   தெ. சாட;   ம. சாட;   க. சாடு, சாடெ;   கோத. சாட்;பட. சாடெ

     [சாள் → சாடு. சாடுதல் = சாய்தல். சாடு → சாட்டம் = சாய்வு. சாடு → சாடை(வே.க);]

 சாடை2 cāṭai, பெ. (n.)

சாடி2 -1 (வின்.); பார்க்க;See {}.

சாடைக்காரன்

 சாடைக்காரன் cāṭaikkāraṉ, பெ. (n.)

   கோட்சொல்வான் (வின்.);; tale bearer.

     [சாடை + காரன். காரம் → காரன் = உரியவன், உடையவன்]

சாடைபண்ணு-தல்

சாடைபண்ணு-தல் cāṭaibaṇṇudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. சைகை காட்டுதல்; to make gestures.

   2. இரக்கம் (தயை); காட்டுதல் (வின்.);; to be lenient.

     [சாடை + பண்ணு-,]

சாடைமாடையாத்திட்டு-தல்

சாடைமாடையாத்திட்டு-தல் cāṭaimāṭaiyāddiṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   நேரல் முறையில் பழித்தல்; to slander indirectly.

     [சாடைமாடையாய் + திட்டு-,]

சாடைமாடையாய்

சாடைமாடையாய் cāṭaimāṭaiyāy, கு.வி.எ. (adv.)

   1. குறிப்பாக; by hint.

     ‘சாடைமாடையாய்ப் பேசுகிறார்’ (கொ.வ.);.

   2. சிறுக (இ.வ.);; in a small degree, slightly.

   3. பார்த்தும் பாராமல்; without taking serious notice, somewhat indifferently.

அவன் செய்த குற்றத்தைச் சாடைமாடையாய் விட்டுவிட்டார்.

     [சாடை + மாடை + ஆய். சாடு – சாடை = நேரன்மை, சாயல், ஒப்பு. முள் → மாள் → மாடு → மாடை = சாய்]

சாடைமூட்டு-தல்

சாடைமூட்டு-தல் cāṭaimūṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   சண்டையெழுப்புதல் (யாழ்ப்.);; to sow discord, incite quarrel by tale-bearing.

     [சாடை + மூட்டு-,]

சாட்குலி

 சாட்குலி cāṭkuli, பெ. (n.)

   தசை தின்போன் (பிங்.);; flesh-eater.

சாட்கோல்

சாட்கோல் cāṭāl, பெ. (n.)

   சாணளவுள்ள கோல் (தொல். எழுத்து. 147, உரை);; span measure.

     [சாண் + கோல்]

சாட்சாத்கரி-த்தல்

சாட்சாத்கரி-த்தல் cāṭcātkarittal,    4. செ.குன்றாவி (v.t.)

   நேரே காணுதல்; to visualise, realize.

     “தியானித்துச் சமாதித்துச் சாட்சாத்கரிப்பன் (சி.சி.66,ஞானப்);.

     [Skt.{} → த.சாட்சாத்கரி-,]

சாட்சாத்காரம்

சாட்சாத்காரம் cāṭcātkāram, பெ.(n.)

   நேரில் உணர்கை; direct or actual perception, realization.

     “சாட்சாத்காரக் கிரமத்தில் அறிந்து” (சி.சி.6,6.ஞானப்);.

     [Skt.{} → த.சாட்சாத்காரம்]

சாட்சாத்து

சாட்சாத்து cāṭcāttu, பெ.(n.)

   1. வெளிப்படை; manifestly, evidently

   2. கண்கூடு; actually, really, directly.

     [Skt.{} → த.சாட்சாத்து]

சாட்சி

சாட்சி cāṭci, பெ.(n.)

   1. நேரிற் பார்த்தறிந்தவன்-ள்; eye-witness.

   2. வழக்கில் சான்று கூறுவோ-ன்-ள்; witness in court.

     “சாட்சியழைத்ததும்” (திருவு சாத்தான நான்மணிமாலை, 53; திருவாலவா.பக்.27);.

   3. உடனுண்ணும் விருந்து; guest, as dining at the same table.

     “சாட்சியறப் பசியாறியை” (திருப்பு.266);.

   4. சைதன்யம் (வின்.);;த.வ.சான்றாளர்

     [Skt.{} → த.சாட்சி]

சாட்சிகாட்டு-தல்

சாட்சிகாட்டு-தல் cāṭcikāṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   தன் கூற்றுக்கு சான்றாக எடுத்துச் சொல்லுதல் (வின்.);; to cite authority for a statement.

     [சாட்சி + காட்டு-]

     [Skt.{} → த.சாட்சி]

சாட்சிகோரு-தல்

சாட்சிகோரு-தல் cāṭciārudal,    5 செ.கு.வி.(v.i.)

   வழக்கில் சான்றாளரைக் குறிப்பிடுதல்; to name or cite witnesses.

     [சாட்சி+கோரு-]

     [Skt.{} → த.சாட்சி]

சாட்சிக்கட்டளை

 சாட்சிக்கட்டளை cāṭcikkaṭṭaḷai, பெ.(n.)

சான்றுரைக்க அழைப்பு (சாட்சி, சம்மன்);

 summons for witnesses.

     [சாட்சி+கட்டளை]

     [Skt.{} → த.சாட்சி]

சாட்சிக்காரன்

 சாட்சிக்காரன் cāṭcikkāraṉ, பெ.(n.)

சாட்சி பார்க்க;see {}.

     [சாட்சி + காரன்]

சாட்சிசாப்தா

 சாட்சிசாப்தா cāṭcicāptā, பெ.(n.)

சாட்சிப்பட்டி பார்க்க;see {}.

     [சாட்சி சாப்தா → சாட்சிப்பட்டி]

சாட்சிபூதமாயிரு-த்தல்

சாட்சிபூதமாயிரு-த்தல் cāṭcipūtamāyiruttal,    5 செ.கு.வி.(v.i.)

   நோக்கின்றி (உதாசீனனாய்); நோக்கியிருத்தல்; to be an indifferent or passive witness to an event.

     [சாட்சி + பூதமாய் + இரு]

சாட்சிபூதம்

 சாட்சிபூதம் cāṭcipūtam, பெ.(n.)

   சான்றா (சாட்சியா);யிருப்பது (சங்.அக.);; that which is a witness.

     [Skt.{} → த.சாட்சிபூதம்]

சாட்சிபோசனம்

 சாட்சிபோசனம் cāṭcipōcaṉam, பெ.(n.)

   விருந்தினரோடு உண்ணும் உணவு; dining in company with guests.

த.வ.விருந்துணா

     [Skt.{} → த.சாட்சிபோசனம்]

சாட்சிபோடு-தல்

சாட்சிபோடு-தல்1 cāṭcipōṭudal,    17 செ.குன்றாவி (v.t.)

   சாட்சி கோருதல்; to cite, as witness.

     [சாட்சி + போடு-,]

     [Skt.{} → த.சாட்சி]

 சாட்சிபோடு-தல்2 cāṭcipōṭudal,    20 செ.கு.வி.(v.i.)

     (பத்திர); ஆவணம் முதலியவற்றின் சான்றொப்பமிடுதல்;

 to sign one’s name as attesting witness in bond etc.,

     [Skt.{} → த.சாட்சி]

சாட்சிப்படி

 சாட்சிப்படி cāḍcippaḍi, பெ.(n.)

   வழிச் செலவிற்காகச் சான்றுரைப்போர்களுக்குக் கட்டும் பணம்;     [சாட்சி + படி]

     [Skt.{} → த.சாட்சி]

சாட்சிப்பட்டி

 சாட்சிப்பட்டி cāṭcippaṭṭi, பெ.(n.)

   சான்றாளர்களின் பெயர் குறிக்கப்பட்ட பட்டியல்; list of witnesses.

     [சாட்சி + பட்டி]

     [Skt.{} → த.சாட்சி]

சாட்சிப்பெட்டி

 சாட்சிப்பெட்டி cāṭcippeṭṭi, பெ.(n.)

   சான்றாளர்கள் நின்று வாக்குமூலம் கொடுக்கும் இடம்; witness-box.

த.வ.சான்றாளர் கூண்டு

     [சாட்சி + பெட்டி]

     [Skt.{} → த.சாட்சி]

     [P]

சாட்சியம்

 சாட்சியம் cāṭciyam, பெ.(n.)

   வழக்கிற் கூறுஞ்சான்று (சங்.அக.);; testimony, deposition.

     [Skt.{} → த.சாட்சியம்]

சாட்சியொப்பனை

சாட்சியொப்பனை cāṭciyoppaṉai, பெ.(n.)

   1. சாட்சியம் பார்க்க;see {}.

   2. வாய் மூலமாகவும் எழுத்து மூலமாக கவுமாயுள்ள சான்று; oral and documentary evidence.

   3. சான்று ஒப்பம்; attestation by a witness.

     [Skt.{} → த.சாட்சி]

சாட்சிவாங்கு-தல்

சாட்சிவாங்கு-தல் cāṭcivāṅgudal,    9 செ.கு.வி. (v.i.)

   1. சான்றாளரை உசாவல் (வின்.);; to examme witness, to take down evidence.

   2. சான்றாளரின் கையொப்பம் வாங்குதல்; to get the attestation.

     [Skt.{} → த.சாட்சி]

சாட்சிவிசாரணை

 சாட்சிவிசாரணை cāṭcivicāraṇai, பெ.(n.)

   சான்றாளரை அறமன்றத்தில் வானவுதல்; examination of witness.

த.வ. சான்றுஉசாவல்

     [Skt.{}-{} → த.சாட்சிவிசாரணை]

சாட்சிவிடு-தல்

சாட்சிவிடு-தல் cāḍciviḍudal,    20 செ.கு.வி.(v.i.)

   வழக்கில் சான்றாளரை உசாவல் செய்தல்; to let in evidence.

     [Skt.{} → த.சாட்சி]

சாட்சிவிளங்கு-தல்

சாட்சிவிளங்கு-தல் cāṭciviḷaṅgudal,    7 செ.கு.வி.(v.i.)

   சான்றாளரை (ஆய்வு); உசாவல் செய்தல்; to examine witness.

     [Skt.{} → த.சாட்சி]

சாட்சிவை-த்தல்

சாட்சிவை-த்தல் cāṭcivaittal,    4 செ.கு.வி.(v.i.)

சாட்சி போடுதல் பார்க்க;see {}.

     [சாட்சி+வை-,]

சாட்சுதீட்சை

சாட்சுதீட்சை cāṭcutīṭcai, பெ.(n.)

   அருணோக்க நோன்புறுதி (நயனதீட்சை);;     “சாட்சுச தீட்சையினாலே ஆணவ மலத்தையும் நீக்கி (சி.சி.12,7, சிவாக்.);

த.வ.நோக்கு அருளிப்பு

     [Skt.{} → த.சாட்சுதீட்சை]

சாட்டங்கமாக

 சாட்டங்கமாக cāṭṭaṅgamāka, வி.அ.(adv.)

உடலின் எட்டு இடங்களை தரையில் படும்படியாக

 prostrating

     ‘பெரியவர்கள் முன் சாட்டாங்கமாக விழுந்து வணங்கினான்’.

த.வ.நெடுஞ்சான் கிடையாக

சாட்டம்

சாட்டம்1 cāṭṭam, பெ. (n.)

   1. அடிக்கை (இ.வ.);; beating.

   2. செருக்கு (நாஞ்.);; arrogant or autocratic behaviour.

     [சாடு → சாட்டம்]

 சாட்டம்2 cāṭṭam, பெ. (n.)

   சாய்வு; slope.

     ‘அங்கணம் வாட்டஞ் சாட்டமாய் இருக்க வேண்டும்’ (உ.வ.);.

     [சள் → சடு → சாடு. சாடுதல் = சாய்தல். சாடு → சாட்டம் = சாய்வு. ஒ.நோ. வாள் → வாடு → வாட்டம் = சாய்வு. வாட்டம் சாட்டம் என்பது வழக்கு. அங்கணம் வாட்டசாட்டமாய் இருக்க வேண்டும் என்பர் (மு.தா.226);]

சாட்டரணை

 சாட்டரணை cāṭṭaraṇai, பெ. (n.)

   மூக்கொற்றி (மலை.);; printed-leaved hogweed.

சாட்டி

சாட்டி1 cāṭṭi, பெ. (n.)

சாட்டை பார்க்க (இ.வ.);;See {}.

     [சவட்டு → சவட்டி → சாட்டி]

 சாட்டி2 cāṭṭi, பெ. (n.)

   1. அறுவடையானபின் உழாது கிடக்கும் நிலம்; land lying fallow after a crop.

   2. பயிரிடுதற்கு உரமிடப்பட்டிருக்கும் நிலம்; land manured for raising crop.

ம. சாட்டிப் பூட்டு

சாட்டிக்கழி-த்தல்

சாட்டிக்கழி-த்தல் cāṭṭikkaḻittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   1. போக்குச் சொல்லிக் கழித்தல்; to shift

 off responsibility.

   2. சிறிது கொடுத்தல் (வின்.);; to give sparingly, distribute scantily.

     [சாட்டி + கழி-,]

சாட்டியக்குடி

 சாட்டியக்குடி cāḍḍiyakkuḍi, பெ.(n.)

   அறந்தாங்கி வட்டத்திலுள்ள சிற்றுர்; a village in Arantangi Taluk.

     [சாட்டியம்+குடி]

சாட்டியம்

சாட்டியம்1 cāṭṭiyam, பெ. (n.)

   1. ஏய்ப்பு (திவா);; deceit, guile.

   2. பொய்; falsewood.

     ‘சாட்டியஞ் சொன்ன சத்தியகோடனும்’ (நரிவிருத். 24);.

     [சாட்டு + இயம்]

 சாட்டியம்2 cāṭṭiyam, பெ. (n.)

   1. சடத்தன்மை; inanimateness.

   2. மந்தம்; dullness, inactivity.

   3. சுரக்குறி (கொ.வ.);; symptoms of fever.

   4. உடல்வலி (சது.);; pain, suffering.

   5. விடாப்பிடி (நாஞ்.);; obstinacy.

சாட்டு

சாட்டு1 cāṭṭudal,    5 செ. குன்றாவி. (v.t.)

   1. பொறுப்பை அல்லது கடமையைப் பிறனிடம் சார்த்துதல்; to transfer as a debt: to assign.

   2. ஒருவர் மீது குற்றஞ் சுமத்துதல் (வின்.);; to accuse, charge with.

   3. தலைக்கிடாகக்கொள்ளுதல்; to allege as a pretext.

கோயிலைச் சாட்டி வயிறு வளர்க்கிறான் (வின்.);.

தெ. சாடு

     [சார்த்து → சாட்டு. ஒ.நோ. துவர்த்து → துவட்டு (வே.க.235);]

 சாட்டு2 cāṭṭudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   அடித்தல் (வின்.);; to beat or strike.

     [சவட்டுதல் = காலால் மிதித்தல், அடித்தல். சவட்டு1 → சாட்டு3]

 சாட்டு3 cāṭṭu, பெ. (n.)

   1. பிறனிடம் சார்த்துகை (வின்.);; assigning, transferring.

   2. குற்றப் படுத்துகை; accusing, charging.

     [சாட்டு1 → சாட்டு2]

 சாட்டு4 cāṭṭu, பெ. (n.)

   புற்றரை (யாழ்.அக);; meadow, pasture land.

சாட்டுகம்

சாட்டுகம் cāṭṭugam, பெ. (n.)

சாட்டுவம்2 பார்க்க;See {} (சாஅக.);.

     [சாட்டுவம் → சாட்டுகம்]

சாட்டுக்கூடை

 சாட்டுக்கூடை cāṭṭukāṭai, பெ. (n.)

   பெரிய கூடை (யாழ்ப்.);; large basket.

     [தாட்டு → சாட்டு + கூடை. தாட்டு = பெரிது]

சாட்டுளி

 சாட்டுளி cāṭṭuḷi, பெ. (n.)

   சுறாமீன்களை வேட்டையாடப் பயன்படும் கயிற்றுடன் கூடிய எறியீட்டி (மீனவ.);; a kind of javelin.

     [சாட்டு → சாட்டுளி]

சாட்டுவம்

சாட்டுவம்1 cāṭṭuvam, பெ. (n.)

   அறுகு; harialli grass.

 சாட்டுவம்2 cāṭṭuvam, பெ. (n.)

   வச்சநாபி (வின்.);; Nepal aconite.

சாட்டுவரி

சாட்டுவரி cāṭṭuvari, பெ. (n.)

   வரிவகை (S.I.I.V. 139);; a tax.

     [சாட்டு + வரி]

சாட்டுவலம்

சாட்டுவலம்1 cāṭṭuvalam, பெ. (n.)

   1. பைம்புற்றாரை (பிங்.);; meadow.

   2. அறுகு (மலை.);; harialli grass.

     [சாட்டுவம் → சாட்டுவலம்]

 சாட்டுவலம்2 cāṭṭuvalam, பெ. (n.)

   நாவல் (மலை.);; common black plum.

சாட்டுவாய்

 சாட்டுவாய் cāṭṭuvāy, பெ. (n.)

   தூற்றின பொலியிற் பதருடன் கலந்துள்ள தவசக் குவியல் (இ.வ.);; grain found mixed with chaff even after winnowing.

     [சகட்டு → சாட்டு → சாட்டுவாய்]

சாட்டை

சாட்டை1 cāṭṭai, பெ. (n.)

   1. கயிற்றை அல்லது தோல்வாரைக் கட்டியதும் அடிக்கப் பயன்படுத்துவதுமான ஒருவகைக் கருவி, ‘கசை’; whip, made of cord or leather.

   2. கோயில் திருமேனிகள் (மூர்த்திகள்);, கண்டி நாட்டதிகாரிகள், இன்னோர் திருமுன் மக்கள் அமைதி உண்டாக்க வேண்டி அடித்து ஒலிக்கச் செய்யும் கிறிச்சுச் சாட்டை (யாழ்ப்.);; a large whip cracked before idols and chief officers of the Kandyan country to disperse or silence crowd.

   3. பம்பரம் மாட்டுங் கயிறு; string to spin a top.

     “சாட்டையிற் பம்பர சாலம் போலெலா மாட்டுவான்” (தாயு. ஆசை. 3);.

   4. மரத்தாற் செய்யப்பட்ட ஒருவகைக் குயக்கருவி (வின்.);; a small pallet.

   ம. சாட்ட;   க. சாடி, சாவடி, சாவுடி;   தெ. சாடி;கோத. சாட்

     [சவட்டு → சவட்டை → சாட்டை]

சாட்டைக்கயிறு

 சாட்டைக்கயிறு cāṭṭaikkayiṟu, பெ. (n.)

   சாட்டைக்கான கயிறு; whip or whip-cord.

ம. சாட்டக்கயிறு

     [சாட்டை + கயிறு]

சாட்டைக்கூடை

 சாட்டைக்கூடை cāṭṭaikāṭai, பெ. (n.)

சாட்டுக்கூடை (இ.வ.); பார்க்க;See {}.

     [சாட்டு + கூடை → சாட்டைக்கூடை]

சாட்டைக்கோல்

சாட்டைக்கோல்1 cāṭṭaikāl, பெ. (n.)

   வார்க்கோல்; whip made from twisted leather- strap.

க. சாடிகோலு

     [சாட்டை + கோல்]

சாட்டையடிசடங்கு

 சாட்டையடிசடங்கு sāḍḍaiyaḍisaḍaṅgu, பெ.. (n.)

   தீ மிதித்து வந்தோர் மண்டியிட்டுத் தலைக்கு மேல் கைகூப்பி நிற்க ஒருவர் சாட்டையால் கையில் ஓர் அடியடித்தல்; aritual in temple festival.

     [சாட்டை+அடி]

சாட்டைவார்

 சாட்டைவார் cāṭṭaivār, பெ. (n.)

   சவுக்கு (கொ.வ.);; whip cord, whip.

ம. சாட்டவாரி

     [சாட்டை + வார்]

சாட்ணி

 சாட்ணி cāṭṇi, பெ.(n.)

   அறிப்பு; burning, destruction, as of records.

     “பழைய பத்திரங்கள் சாட்ணிக்கு அனுப்பப்பட்டன.” (C.G.);

த.வ.நசிவு, அழிப்பு.

     [U.{} → த.சாட்ணி]

சாணகச்சாறு

சாணகச்சாறு cāṇagaccāṟu, பெ. (n.)

   பால், தயிர், நெய், ஆநீர், சாணம் என்னும் ஆனைந்து பொருள்களின் சேர்க்கை; the mixer of the five products of cow viz., milk, curd, ghee, urine and dung.

     “சாணகச் சாற்றோபாதி சுத்தி மாத்திரத்தையே உபசீவித்து” (ஈடு.4. 1:1௦);.

ம. சாணகச்சாறு

     [சாணகம் + சாறு]

சாணகம்

சாணகம் cāṇagam, பெ. (n.)

சாணம்1 பார்க்க;See {}.

     ‘சாணகத்தைக் கொண்டு மெழுகுமளவிலே” (புறநா. 249, உரை);.

ம. சாணகம். Pkt. {}

     [சாணம் → சாணகம்]

சாணகி

 சாணகி cāṇagi, பெ. (n.)

   கொத்தான்; air creeper. leafless creeper – Cassytha filiformis (சா.அக.);.

சாணக்கல்

 சாணக்கல் cāṇakkal, பெ. (n.)

சாணைக்கல் பார்க்க;See {}.

     [சாணைக்கல் → சாணக்கல் (கொ.வ.);]

சாணக்கி

 சாணக்கி cāṇakki, பெ.(n.)

சானிகை (இ.வ.); பார்க்க;see {}.

     [U.{} → த.சாணக்கி]

சாணக்கியன்

சாணக்கியன் cāṇakkiyaṉ, பெ.(n.)

   1. வடமொழியில் அர்த்தசாத்திரம் இயற்றிய வரும் சந்திரகுப்தரின் அமைச்சராகவும் விளங்கியவர்; author of the Artha-{} in sanskrit and minister of Candra gupta

   2.2.சந்திரக்காரன்; cunning, artful person.

     [Skt.{} → த.சாணக்கியன்]

சாணக்கியம்

 சாணக்கியம் cāṇakkiyam, பெ.(n.)

   கரவடம் (தந்திரம்);; art, stratagem.

     “அவன் சாணக்கியமெல்லாம் பலிக்கவில்லை (நாஞ்.);.

த.வ.வலக்காரம், நுண்சூழ்ச்சித்திறம்

     [Skt.{} → த.சாணக்கியம்]

சாணக்கு

 சாணக்கு cāṇakku, பெ. (n.)

   மட்பாண்டத்தின் மேல் மூடி; lid of the pot.

     [சாள்-சாளக்கு-சாளக்கு]

சாணங்கி

 சாணங்கி cāṇaṅgi, பெ. (n.)

   துளசி (மலை.);; sacred basil.

சாணத்தனம்

சாணத்தனம்1 cāṇattaṉam, பெ. (n.)

   வசம்பு; sweet flag – Acorus calamus (சா.அக.);.

     [சணம் → சாணம் + தனம்]

 சாணத்தனம்2 cāṇattaṉam, பெ. (n.)

   பகடி (இராட்);; ribaldry.

தெ. சாணதநழு

     [சாணம் + தனம்]

சாணந்தெளி-த்தல்

சாணந்தெளி-த்தல் cāṇandeḷittal,    4 செ.கு.வி. (v.i.)

   வீடு முதலியவற்றைத் தூய்மை செய்யச் சாணிநீர் தெளித்தல் (கொ.வ.);; to sprinkle cow- dung mixed in water, for cleansing

ம. சாணம் தளிக்க

     [சாணம் + தெளி-த்தல்]

சாணமுத்திரை

சாணமுத்திரை cāṇamuttirai, பெ. (n.)

   முத்திரை வகை (சைவாநுட். வி. 17);; a hand-pose.

     [சாள் → சாளை → சாணை = வட்டமானது, வளைந்தது. சாணை → சாணம் + முத்திரை]

சாணமூலி

 சாணமூலி cāṇamūli, பெ. (n.)

   கற்பூரவல்லி; thick-leaved – lavander – Anischilus carnosus.

     [சாணம் + மூலி]

சாணம்

சாணம்1 cāṇam, பெ. (n.)

   சாணி; cow-dung.

   ம. சாணம், சாணகம்;   க. சகணி;   பட. செகணி; Pkt. {};

 Skt. {}

     [சண்ணுதல் = நீக்குதல். சண் → சாண் → சாணம் = மாட்டுப் பவ்வீ. வடவர் பல்வேறு மலத்தை/ம் சாணியையும் குறிக்கும் சக்ருத் என்னும் சொல்லினின்று சக்ன் என்றொரு மூலத்தை வலிந்து திரிப்பர் (வ.வ. 145);]

சாணம் வீட்டைத் துப்புரவு செய்யவும் அடுப்பெரிக்கவும் பயிருக்குரயிடவும் உதவுவது

 சாணம்2 cāṇam, பெ. (n.)

   1. சாணைக்கல் (சது.); பார்க்க;See {}.

   2. சந்தனக்கல் (பிங்.);; stone for grinding sandalwood.

ம. சாணம்

     [சூள் → சாள் → சாளை = வட்டமான குடிசை. சாளை → சாளையம் = வளைவு. சாளை → சாணை = வட்டமான சாணைக்கல். சாணை → சாணம்]

 சாணம்3 cāṇam, பெ. (n.)

   தழும்பு; scar.

     “சாணந் தின்ற சமந்தாங்கு தடக்கை” (மதுரைக். 593);.

     [சதைத்தல் = அடித்தல். சதை → சதைவு = அடி, நெகிழ்ச்சி. சதை → சதைவுகாயம் = உதிரம் ஏற்படும் காயம். சதை → (சணை); → சாணை → சாணம்]

 சாணம்4 cāṇam, பெ. (n.)

   நாராலாகிய பொருள் (நன்.266, மயிலை);; article made of fibres.

     [சள்ளுதல் = சிக்குதல். சள் → சடை = நார். சடை → சடம் → சடம்பு = நாருள்ளச் செடி. சள் → சணம் = சணல், சணல்நார். சணம் → சாணம் =நாரினால் செய்யப்பட்ட பொருள்]

 சாணம்5 cāṇam, பெ. (n.)

   சாதிலிங்கம்; vermilion.

 சாணம்6 cāṇam, பெ. (n.)

   சணற்கயிறு; flaxen cord.

     “இறுக்கின சாணமும் கட்டின கச்சும்” (திவ். திருநெடுந். 21, வியா. பக். 17௦);.

சாணளந்தான்பூச்சி

 சாணளந்தான்பூச்சி cāṇaḷandāṉpūcci, பெ. (n.)

   புழுவகை (வின்.);; a kind of worm.

     [சாண் + அளத்தான் + பூச்சி]

சாணளப்பான்புழு

சாணளப்பான்புழு cāṇaḷappāṉpuḻu, பெ. (n.)

சாணளந்தான்பூச்சி பார்க்க;See {}.

     “சாணளப்பான் புழுப்போவ அந்த ஆன்மா…. வேறொருடலைக் கன்மத்துக்கீடாகப் பற்றினாலும் பற்றும்” (சிசி.2.37, மறைஞா.);.

     [சாண் + அளப்பான் + புழு]

சாணாகக்கடகம்

 சாணாகக்கடகம் cāṇāgaggaḍagam, பெ. (n.)

   சாணிக்கூடை (வின்.);; basket for cow-dung.

     [சாணாகம் + கடகம். குணகு → குடங்கு → குடகம் → கடகம் = வட்டம், வட்டமான கூடை]

சாணாகமுதலை

 சாணாகமுதலை cāṇākamudalai, பெ. (n.)

   தீங்கு செய்யாத ஒருவகைத் தாழ்தரமான முதலை (வின்.);; an inferior, harmless kind of alligator.

     [சாணாகம் + முதலை]

சாணாகமூக்கன்

 சாணாகமூக்கன் cāṇākamūkkaṉ, பெ. (n.)

   வண்டு வகை (யாழ்.அக);; a kind of bee.

     [சாணாக + மூக்கன். சேண் → சாண் → சாணகம்]

சாணாகம்

சாணாகம் cāṇākam, பெ. (n.)

சாணம்1 பார்க்க;See {}.

     “சாணாகத்தைக் கொண்டு மெழுகுமளவிலே” (புறநா. 249, உரை);.

     [சாணம் → சாணாகம்]

சாணாக்கி

 சாணாக்கி cāṇākki, பெ. (n.)

சாணாக்கிக்கீரை பார்க்க;See {}.

சாணாக்கிக்கீரை

சாணாக்கிக்கீரை cāṇākkikārai, பெ. (n.)

   1. மயிர் மாணிக்கம்; sickle leaf.

   2. முயற்செவி

 hare’s ear.

   3. சனகிப்பூண்டு (வின்.);; milk-hedge.

     [சாணாக்கி + கீரை]

சாணாக்கிப்பூச்சி

 சாணாக்கிப்பூச்சி cāṇākkippūcci, பெ. (n.)

புழு (இ.வ.); a kind of worm.

     [சாணாக்கி + பூச்சி]

சாணாக்கியம்

சாணாக்கியம் cāṇākkiyam, பெ. (n.)

   1. சின்ன முள்ளங்கி அல்லது சுவற்று முள்ளங்கி; wall radish – Blumea aurita.

   2. மக்கி; gamboge tree (சா.அக.);.

சாணாக்கு

 சாணாக்கு cāṇākku, பெ.(n.)

சாக்கணாக்கறி (வின்.); பார்க்க;see {}.

     [U.{} → த.சாணாக்கு]

சாணாங்கி

சாணாங்கி cāṇāṅgi, பெ. (n.)

சாணம்1 பார்க்க;See {}.

     [சாணம் → சாணாங்கி]

சாணாயிரம்முழமாயிரம்கோயில்

சாணாயிரம்முழமாயிரம்கோயில் cāṇāyirammuḻmāyiramāyil, பெ. (n.)

தகடூரிலுள்ள சிவன் கோயில்;{} temple in {}.

     “நகலிரு சோழமண்டலத்து கங்க நாட்டுத் தகடூர் சாட்டுத் தகடூரில் சாணாயிர முழமாயிரம் உட்பட்ட கோயில்.” (தெ.கல்.தொ.7. கல். 533, 534);.

     [சாணாயிரம் + முழமாயிரம் + கோயில்]

சாணாரக்கத்தி

 சாணாரக்கத்தி cāṇārakkatti, பெ. (n.)

   கள்ளுக்காகப் பாளைசீவும் கத்தி; toddy- drawer’s knife.

     [சாணான் + கத்தி → சாணாரக்கத்தி]

சாணாரமூக்கன்

 சாணாரமூக்கன் cāṇāramūkkaṉ, பெ. (n.)

   கொம்பேறிமூக்கன் என்னும் பாம்பு (சீவரட்);; tree-snake.

     [சாணார + மூக்கன்]

சாணாரமூர்க்கன்

 சாணாரமூர்க்கன் cāṇāramūrkkaṉ, பெ. (n.)

சாணாரமூக்கன் பார்க்க;See {}.

     [சாணார + மூர்க்கன். மூக்கன் → மூர்க்கன்]

சாணார்

 சாணார் cāṇār, பெ. (n.)

   பனை ஏறுவோர், சாணார்குடி; member of the {} caste, whose occupation is toddy drawing.

     “பனையேரி சாணான் குடி” (சேதுபதி மன்னர் செப்பேடுகள்.);.

சாணி

சாணி cāṇi, பெ. (n.)

சாணம்1 பார்க்க;See {}.

     “சாணியின் குவியலில்” (மணிமே. 3௦: 253, உரை.);.

   ம. சாணி, சகணம்;   உ. சகணி;   பட. செகணி;   பர். சர்பி;   கட. சர்பி, சட்பி;ப் கோண். சராபி,

   சடாபி;   கொண். ராபி;குவி. ராபி

     [சண் → சாண் → சாணம் → சாணி]

 சாணி cāṇi, பெ.(n.)

   குதிரை பழக்குவோன் (வின்.);; horse-breaker.

     [E.johnnie → த.சாணி]

சாணிக்கெண்டை

 சாணிக்கெண்டை cāṇikkeṇṭai, பெ. (n.)

   ஒருவகைக் கெண்டை மீன் (மீனவ.);; a kind of kendai fish, bitter carp.

மறுவ. கருங்கெண்டை

ம. சாணிக்கெண்ட

     [சாணி + கெண்டை]

     [p]

சாணிச்சுருணை

 சாணிச்சுருணை cāṇiccuruṇai, பெ. (n.)

   சாணமிட்டு மெழுகுதற்குரிய துணிக்கற்றை; rags used for cleansing the floor with cow-dung.

     [சாணி + கருணை. கருள் → கருணை = சுருட்டி வைத்தல், சுந்தல்]

சாணிதட்டு-தல்

சாணிதட்டு-தல் cāṇidaṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   சாணியை வறட்டிக்காக தட்டுதல்; to beat cow-dung into cakes for fuel.

     [சாணி + தட்டு-,]

சாணிநீர்

 சாணிநீர் cāṇinīr, பெ. (n.)

சாணிப்பால் பார்க்க;See {}.

   ம. சாணகநீர்;பட. செகணி நீரு

     [சாணி + நீர்]

சாணிபோடு

சாணிபோடு2 cāṇipōṭudal,    20 செ.கு.வி. (v.i.)

   வெற்றிலையையெண்ணுகையில் கள்ளத்தனமாகச் சிலவற்றை அடிக் கையால் நழுவவிடுதல் (இ.வ.);; to drop stealthily some betel-leaves into the basket while counting them.

     [சாணி + போடு-,]

சாணிபோடு-தல்

சாணிபோடு-தல் cāṇipōṭudal,    20 செ.கு.வி. (v.i.)

   ஆ மலங்கழித்தல்; to evacuate dung, as cow or buffalo.

     [சாணி + போடு-,]

சாணிப்பச்சை

 சாணிப்பச்சை cāṇippaccai, பெ. (n.)

   கரும்பச்சை நிறம்; dark green colour.

ம. சாணகப்பச்ச

     [சாணி + பச்சை]

சாணிப்பாறை

 சாணிப்பாறை cāṇippāṟai, பெ. (n.)

   கடல் மீன் வகை (F.L.);; marine fish, greyish, Gazza – Asgentaria.

     [சாணி + பாறை]

சாணிப்பால்

 சாணிப்பால் cāṇippāl, பெ. (n.)

   களத்தில் நெற்குவியலின்மேல் குறியிடுதற்குரிய சாணி நீர்; cow-dung mixed in water and used for marking paddy heaped on the threshing-floor.

     [சாணி + பால்]

சாணிப்பிணம்

சாணிப்பிணம் cāṇippiṇam, பெ. (n.)

   1. சதைமிக்கு வலியற்றவ-ன்-ள்; flabby, weak person.

   2. பயனற்றவ-ன்-ள் (வின்.);; useless fellow.

     [சாணி + பிணம்]

சாணிப்பிண்டம்

 சாணிப்பிண்டம் cāṇippiṇṭam, பெ. (n.)

சாணிப்பினம் (இ.வ.); பார்க்க;See {}.

     [சாணி + பிண்டம்]

சாணிப்புல்

 சாணிப்புல் cāṇippul, பெ. (n.)

   ஒரு வகைப் புல்; a kind of grass.

     [சாணி + புல்]

சாணிப்பூரான்

 சாணிப்பூரான் cāṇippūrāṉ, பெ. (n.)

   இளங்கருப்பு நிறத்துடன் எருக்குவியலிலும் சாணத்தின் கீழ் இருக்கும் பூரான்; certiped gray in colour mostly seen under the low – during.

     [சாணி+பூரான்]

சாணிமுதலை

 சாணிமுதலை cāṇimudalai, பெ. (n.)

சாணாக முதலை (இ.வ.); பார்க்க;See {}.

     [சாணி + முதலை]

சாணிமுத்திரை

 சாணிமுத்திரை cāṇimuttirai, பெ. (n.)

   நெற் குவியலில் சாணிப்பாலால் இடும் குறி; mark on a heap of paddy made with cow-dung mixture.

     [சாணி + முத்திரை. முக + திரம் = மோதிரம், முத்திரையிட்ட விரலணி. முகத்திரம் → (முத்திரம்); → முத்திரை]

சாணியுடம்பு

 சாணியுடம்பு cāṇiyuḍambu, பெ. (n.)

   சதைமிக்கு வலியற்றிருக்கும் உடம்பு; flabby, weak body.

     [சாணி + உடம்பு]

சாணிவண்டு

 சாணிவண்டு cāṇivaṇṭu, பெ. (n.)

   சாணியிலிருந்து தோன்றும் வண்டு; the beetle generated in cow- dung (சா. அக.);.

     [சாணி + வண்டு]

சாணிவறட்டி

 சாணிவறட்டி cāṇivaṟaṭṭi, பெ. (n.)

   வறட்டி; dried cow-dung cake.

   ம. சாணகவரடி, சாணகவறடி, சாணக வறட்டி, சாணகவரளி;   க. சகணபிண்ட பறடி;பட. செகணிபறட்டி

     [சாணி + வறட்டி. வறள் + தி = வறட்டி]

சாணை

சாணை1 cāṇai, பெ. (n.)

   1. சாணைக்கல் பார்க்க;See {}.

     “வாடீட்டிய கிடந்த சாணை” (நைடத. அன்னத்தைத். 14);.

   2. சருக்கரை முதலியவற்றால் வட்டமாய்ச் சுட்ட பணியார வகை (வின்.);; round flat cake made of jaggery, etc.

   ம. சாண;   க. சாணெ;   தெ. சான; Skt. {}

     [சவள் → சாள். சாளுதல் = வளைதல். சாள் → சாய். சாய்தல் = வளைதல். சாள் → சாளை → சாணை (வே.க. 231); சாணை =

   1. வட்டமான கதிர்ச்சூட்டு (நெல்லை);.

   2. வட்டமாய் தட்டிய புளி மொத்தை. வடவர், சோ (தீட்டு); என்னுஞ் சொல்லை மூலமாகக் காட்டுவர் அது சாணைக்கல் ஒன்றற்குத்தான் சிறிது பொருந்தும் (வ.வ. 145);.]

 சாணை2 cāṇai, பெ. (n.)

சாணைச்சீலை (வின்.); பார்க்க: see {}.

     [சுள் → சூழ். சூழ்தல் = நாற்புறமும் வளைதல். சுள் → சாள் → சாணை = ஒன்றைச் சூழ்வது, போர்த்துவது]

சாணைகட்டு-தல்

சாணைகட்டு-தல் cāṇaigaṭṭudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   சோளம் கேழ்வரகு முதலிய கதிர்களை அறுத்துக் குவித்துச் சுற்றிலும் தட்டை, தாள் இவைகளைக் கொண்டு மழைநீர் உட்புகாத படி மூடுதல்; to cover the sheaf from rain.

     [சாணை + கட்டு-,]

சாணைக்கல்

 சாணைக்கல் cāṇaikkal, பெ. (n.)

   ஆய்தந் தீட்டுங்கல் (C.E.M.);; grindstone, whetstone, hone.

   ம. சாணக்கல்லு;க., து. சாணெக்கல்லு

     [சாணை + கல்]

சாணைக்காரன்

 சாணைக்காரன் cāṇaikkāraṉ, பெ. (n.)

   சாணை பிடிப்பவன்; one who whets and sharpens knives, etc.

   ம. சாணக்காரன்;க. சாணெகார, சாணிக

     [சாணை + காரன்]

சாணைக்கூறை

 சாணைக்கூறை cāṇaikāṟai, பெ. (n.)

   குழந்தைகளுக்கு மணம்பேசிச் செய்யும் விழாவில் பெண்ணுக்குக் கொடுக்கும் புதிய சிற்றாடை (யாழ்ப்.);; new cloth given by bridegroom’s parents to the infant bride at the time of betrothal in child-marriage.

     [சாணை + கூறை]

சாணைசேர்-த்தல்

சாணைசேர்-த்தல் cāṇaicērttal,    4 செ.கு.வி. (v.i.)

   புளியடை தட்டுதல் (வின்.);; to preserve tamarind pulp in round cakes.

     [சாணை + சேர்-,]

சாணைச்சீலை

சாணைச்சீலை cāṇaiccīlai, பெ. (n.)

   கைக் குழந்தைகளை மூடிப்பொதியுஞ் சீலை (யாழ்.அக.);; swaddling clothes.

     [சாணை + சீலை]

சாணை2 பார்க்க

சாணைதீர்-தல்

சாணைதீர்-தல் cāṇaitīrtal,    4 செ.கு.வி. (v.i.)

   1. சாணை பிடிக்கப்படுதல்; to be sharpened, as a weapon.

   2. மணிபட்டை தீர்தல் (வின்.);; to be cut and polished, as gems.

தெ. சானபட்டு

     [சாணை + தீர்-,]

சாணைபிடி-த்தல்

சாணைபிடி-த்தல் cāṇaibiḍittal,    4 செ.கு.வி. & செ.குன்றாவி. (v.i. & v.t.)

   ஆய்தத்தைக் கூர்மைப்படுத்துதல் (திவ்.திருப்பா. 1, அரும். 32);; to grind, whet, sharpen, as a weapon.

க. சாணெபிடி

     [சாணை + பிடி-,]

சாணைப்பதம்

 சாணைப்பதம் cāṇaippadam, பெ. (n.)

   மருக்களங்காய்; common emetic nut – Randia dumetorum (சா.அக.);.

     [சாணை + பதம்]

சாணைப்பரல்

 சாணைப்பரல் cāṇaipparal, பெ. (n.)

   சாணை உருவாக்கப் பயன்படுத்தும் ஒரு வகை மணல்; a kind of sand used for making the whetting roller (சேரநா.);.

ம. சாணப்பரல்

     [சாணை + பரல். (புர்); → பர → பரல் = பருக்கைக்கல்]

சாணைப்பிள்ளை

 சாணைப்பிள்ளை cāṇaippiḷḷai, பெ. (n.)

   துணியில் கிடக்கும் கைக்குழந்தை (யாழ்ப்.);; infant in swaddling – clothes.

     [சாணை + பிள்ளை]

சாணைமேய்-தல்

சாணைமேய்-தல் cāṇaimēytal,    3 செ.கு.வி. (v.i.)

சாணைகட்டு-தல் பார்க்க;See {}.

     [சாணை + மேய்-, வேய் → மேய்]

சாணைவை

சாணைவை1 cāṇaivaittal,    4 செ.கு.வி. & செ.குன்றாவி. (v.i. & v.t.)

சாணைபிடி-த்தல் பார்க்க;See {}.

     [சாணை + வை-,]

 சாணைவை2 cāṇaivaittal,    4 செ.கு.வி. (v.i.)

   கதிர்க்கட்டுகளைக் களத்தில் ஒரே இடத்தில் கூட்டிவைத்தல்; to gather sheaf.

     [சாணை + வை-,]

சாண்

சாண்1 cāṇ, பெ. (n.)

   விரல்களை அகல விரித்த நிலையில் சுண்டுவிரல் நுனியிலிருந்து கட்டை விரல் நுனிவரை உள்ள தொலைவு; a span, the distance between the end of the thumb to the end of the little finger or forefinger – nine inches.

     “எண் சாணளவா லெடுத்த வுடம்புக்குள்” (திருமந். 2127);.

   ம. சாண்;   க. கேண், கேண, கேணு;   தெ. சேன;   து. கேணு, கேண;   குட. சாணி;   பட. சாணு;   கோத. காண்;   துட. கீண்;கொலா. சேன

     [அள் → அண் = பொருத்துதல். அண் → சண் → சாண் = இரு இடங்களுக்கு இடைப்பட்ட அதாவது விரித்த கையின் இருவிரல்நுனி (கட்டைவிரல், சிறுவிரல்); களுக்கிடைப்பட்ட இடைவெளி.]

சாண் ஒன்பது விரலம் (அங்குலம்); அளவுடையது. 8 நெல் = 1 பெருவிரல், 12 பெருவிரல் = 1 சாண், 2 சாண் = 1 முழம் என்றும் ஒரு நீட்டளவு உண்டு.

     [p]

 சாண்2 cāṇ, பெ. (n.)

   சிறியது; that which is small.

     ‘சாண்பிள்ளையானாலும் ஆண் பிள்ளை’ (பழ.);

     [சாண்1 → சாண்]

சாண்கெண்டை

சாண்கெண்டை cāṇkeṇṭai, பெ. (n.)

   ஒரு சாண் அளவுள்ள கெண்டை மீன்; a carp-fish about a span in length – barbus chola (சா.அக.);.

     [சாண்1 + கெண்டை]

சாண்சீலை

சாண்சீலை cāṇcīlai, பெ. (n.)

   சிறுசீலை (வின்.);; loin cloth.

     [சாண்2 + சீலை. சீரை → சீலை = துணி]

சாண்டில்லியம்

சாண்டில்லியம் cāṇṭilliyam, பெ.(n.)

   நூற்றெட்டு மறை நூல்களொன்று (சங்.அக.);; an upanisad, one of 108.

     [Skt.{} → த.சாண்டில்லியம்]

சாண்டு

சாண்டு cāṇṭu, பெ. (n.)

நோனிக் குருதி,

 menstrual fluid.

     [சான்+சாண்டு]

 சாண்டு1 cāṇṭudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   குற்றுதல்; to pound (சேரநா.);.

   ம. சாண்டுக;   க. சாடிசு;   தெ. சாடின்சு;து. சாண்டுனி

     [சாடு + சாண்டு-,]

 சாண்டு2 cāṇṭu, பெ. (n.)

   1. பூப்புநீர்; menstrual discharge.

   2. விந்து; semen.

   ம. சாண்டு;க., தெ. சாடு

     [சாறு → சாண்டு]

சாண்மாதுரன்

 சாண்மாதுரன் cāṇmāturaṉ, பெ.(n.)

   முருகக்கடவுள் (இலக்.அக.);; Lord Murugan.

     [Skt.{} → த.சாண்மாதுரன்]

சாண்மூலி

சாண்மூலி cāṇmūli, பெ. (n.)

   1. சாண் உயரம் வளரும் மூலிகை; any herbaceous plant growing to the height of a span.

   2. கற்பூரவள்ளி; camphor creeper – Anisochilus carnosus (சாஅக.);.

     [சாண்1 + மூலி]

சாதகக்கட்சி

 சாதகக்கட்சி cātagaggaṭci, பெ. (n.)

   காந்தம் (மூ.அ.);; loadstone.

சாதகக்கிள்ளையோன்

 சாதகக்கிள்ளையோன் cātagaggiḷḷaiyōṉ, பெ. (n.)

   காய்ச்சற்செய்நஞ்சு (யாழ்.அக.);; a mineral poison.

சாதகக்கோடு

 சாதகக்கோடு cātagagāṭu, பெ. (n.)

   சங்க செய்நஞ்சு (யாழ்.அக.);; a mineral poison.

சாதகசித்தி

சாதகசித்தி sātagasitti, பெ. (n.)

   1. வல்லாரை; Indian penny wort – Hydrocotyle asiatica.

   2. வாலுளுவை அரிசி; Seeds of spindle tree – Oleum nigrum alias Celastrus Paniculata (சாஅக.);.

சாதகச்சக்கிலி

 சாதகச்சக்கிலி cātagaccaggili, பெ. (n.)

   சத்திசாரம் (யாழ்.அக.);; an acrid salt.

சாதகச்சீர்த்தி

 சாதகச்சீர்த்தி cātagaccīrtti, பெ. (n.)

   அரத்தச் செய்நஞ்சு (யாழ். அக.);; a prepared arsenic.

சாதகப்புள்

 சாதகப்புள் cātagappuḷ, பெ. (n.)

   வானத்தினின்று விழும் மழைத்துளியைப் பருகி வாழ்வதாகக் கருதப்படும் பறவை;   வானம்பாடி; shepherd koel, believed to subsist on rain drops.

சாதகம்

 சாதகம் cātagam, பெ. (n.)

எருக்கு (மலை); பார்க்க;See erukku.

சாதகாகத்தி

 சாதகாகத்தி cātakākatti, பெ. (n.)

   கோழித் தலைக் கந்தகம் (வின்.);; a prepared arsenic.

சாதகும்பம்

சாதகும்பம் cātagumbam, பெ. (n.)

   பொன்; gold.

     “விற்சாதகும்பன்” (காளத். உலா, 87);.

சாதகை

 சாதகை cātagai, பெ. (n.)

   மலைமகள்;{}.

சாதம்

 சாதம் cātam, பெ. (n.)

வேகவைத்த அரிசி,

 Cooked rice.

     [சோறு→ சோது→ சாது→ சாதம்]

ப்ரஸாத என்னும் முன்னொட்டுப் பெற்ற சொல் லன்றி லாத என்னும் தனிச்சொல் வடமொழி வழக்கி லில்லை. ஸாத மேலை யாரியமொழி யொன்றிலு மில்லாத வட நாட்டுச் சொல். தமிழில் மட்டும் சாதம் என சோறு குறித்து வழங்கி வருகின்றது.

சாதலப்பேரி

 சாதலப்பேரி cātalappēri, பெ. (n.)

   ஒருவகைக் கீரை; cake mellow – Abutilon indicum (சா.அக.);.

சாதலம்

 சாதலம் cātalam, பெ. (n.)

   ஒருவகைக் கீரை (மலை.);; Indian chickweed.

சாதலி

 சாதலி cātali, பெ. (n.)

   நெய்ச்சிட்டி; jauna – Grewia orbiculata (சா.அக.);.

சாதல்

சாதல் cātal, பெ. (n.)

   இறப்பு; death.

     “சாதலும் பிறத்த றானுந் தம்வினைப் பயத்தினாகும்” (சீவக. 269);.

     [சா + தல். ‘தல்’ தொ.பெ. ஈறு]

சாதவாகனன்

சாதவாகனன்1 cātavākaṉaṉ, பெ. (n.)

   சாதவாகன இனத்தைச் சார்ந்த ஒரு மன்னன் (நன். 48, மயிலை.);; a king of the {} dynasty

 சாதவாகனன்2 cātavākaṉaṉ, பெ. (n.)

   ஐயனார் (திவா.);;{}, as having a vehicle.

     [சாத்து + வாகனன் → சாத்துவாகனன் → சாதவாகனம். வணிகக் கூட்டத்தை (சாக்கை); ஊர்தியாகக் கொண்டவன் என்னும் பொருளில் சாதவாகனன் ஐயனாரைக் குறித்தது]

சாதவு

 சாதவு cātavu, பெ. (n.)

   கருங்கொள்; black horse-gram (சா.அக.);.

சாதவேதம்

சாதவேதம் cātavētam, பெ. (n.)

   1. கொடுவேலி; lead wort – Acacia tomentosa.

   2. நெருப்பு; fire (சா.அக.);.

சாதாப்பட்டு

 சாதாப்பட்டு cātāppaṭṭu, பெ.(n.)

   நான்கு (அ); ஐந்து குறுக்கிழைகள் கொண்ட பட்டு; a type of silk.

     [சாதா+பட்டு]

சாதாமுந்தானை

 சாதாமுந்தானை cātāmundāṉai, பெ.(n.)

   வடிவம் இல்லாத முந்தானை; ordinary fore Safeе.

     [சாதா+முந்தானை]

சாதாரி

சாதாரி cātāri, பெ. (n.)

   செவ்வழியாழ்த் திற வகை; a secondary melody-type of the {} class corresponding to {}.

     “சாதாரி யென்னுங் கானம் பாடினான்” (திருவாலவா. 54, 32);.

சாதாளநிம்பம்

 சாதாளநிம்பம் cātāḷanimbam, பெ. (n.)

சாதாளம் பார்க்க;See {}.

     [சாதாளம் + நிம்பம்]

சாதாளம்

 சாதாளம் cātāḷam, பெ. (n.)

   எருக்கு; madar plant – Caltropis gigantea (சா.அக.);.

     [சாதகம் → சாதாளம்]

சாதாளி

 சாதாளி cātāḷi, பெ. (n.)

சாதாரி பார்க்க;See {}.

சாதாளிகம்

 சாதாளிகம் cātāḷigam, பெ. (n.)

   விடத்தலை மரம்; vidattalai tree – Dichrostachyo cinerea (சா.அக.);.

சாதாழை

சாதாழை cātāḻai, பெ. (n.)

   1. கடற்பூண்டு வகை (யாழ்ப்.);; dead sea-weed.

   2. வலுவற்றவன்; weak, inert person.

சாதாழைநிம்பம்

 சாதாழைநிம்பம் cātāḻainimbam, பெ. (n.)

சாதாளம் பார்க்க;See {}.

சாதாவேரி

 சாதாவேரி cātāvēri, பெ. (n.)

   தண்ணீர் விட்டான்; a common climber with many thick fleshy roots.

சாதாவேலி

 சாதாவேலி cātāvēli, பெ. (n.)

சாதாவேரி பார்க்க;See {}.

சாதி

சாதி cāti, பெ. (n.)

   1. தேக்கு (பிங்.);; teak.

   2. திப்பிலி (வின்.);; long – pepper.

   3. பிரம்பு (பிங்.);; common rattan of S. India.

   4. பிரப்பம்பாய் (பிங்.);; rattan matting.

   5. ஆடாதோடை (மலை.);; malabar-nut tree.

   6. கள் (பிங்.);; toddy.

   7. புழுகுச் சட்டம்; perfume sac of a civet cat.

     “அமிர்தை முக்கடு சாதி” (தைலவ. தைல. 34);.

     [சடாய்த்தல் = செழித்தல். சடாய் → சதாய் → சாதி]

சாதிகம்

 சாதிகம் cātigam, பெ. (n.)

   ஆடாதோடை; Malabar winter cherry – Adhatoda vesica (சாஅக.);.

சாதிகி

 சாதிகி cātigi, பெ. (n.)

   முருங்கை; moringa – drumstick tree (சா.அக.);.

சாதிகேசம்

 சாதிகேசம் cātiācam, பெ. (n.)

   குங்குமப்பூ; English saffron flower – Crocus sativus (சா. அக.);.

சாதிகோசம்

 சாதிகோசம் cātiācam, பெ. (n.)

   வேலம் பிசின்; gum of acacia tree – Gummi acasiae (சா.அக.);.

சாதிக்காய்

சாதிக்காய்1 cātikkāy, பெ. (n.)

   பந்தைப்போல் உருண்டையாயும், பழுப்பு நிறமாயும், மணம் கொண்டுள்ளதாயுமுள்ள ஒருவகை நெற்றுக் காய்; common nutmeg – Myristica fragrans. It is like a ball. The outer portion which forms the kernel of the fruit is yellowish, fragrant.

இது வளிநோயைப் போக்கும் சுறுசுறுப்பை உண்டாக்கும். வயிற்றுவலி, கழிச்சல் முதலிய நோய்களுக்கு மருந்தாகப் பயன்படும். இலங்கை, மலையாளம், நீலகிரி முதலிய இடங்களில் பயிராகிறது.

இதன் காய்மேல் படர்ந்திருப்பதே சாதி பத்திரி. இதில் பலவகைகள் உண்டு.

   1. பெரிய காட்டுச் சாதிக்காய்:

 forest nutmeg – Myristica Malabarica

   2. மலையாளச்சாதிக்காய்:

 Travancore nutmeg – Myristica magnia

   3. நீலகிரி சாதிக்காய் –

 a variety grown in the Nilgiris

   4. நாட்டுச் சாதிக்காய்:

   5. காட்டுச் சாதிக்காய்; wild nutmeg – Myristica laurigolia.(சாஅக.);.

 சாதிக்காய்2 cātikkāy, பெ. (n.)

   சீமைக்கள்ளி மரம்; firabies.

 சாதிக்காய்3 cātikkāy, பெ. (n.)

   ஐந்து நறுமணத்துள் ஒன்று; nutmeg, fragrant and medicinal.

து. சாய்காய்

சாதிக்காய்ப்பெட்டி

 சாதிக்காய்ப்பெட்டி cātikkāyppeṭṭi, பெ. (n.)

   சீமைக்கள்ளிப் பெட்டி; dealwood box, especially used as packing case.

     [சாதிக்காய் + பெட்டி]

சாதிங்குலிகம்

சாதிங்குலிகம் cātiṅguligam, பெ. (n.)

   சாதிலிங்கம்; vermilion.

     “சாதிங்குலிக மொடு சமர மொழுகிய” (பெருங். இலாவாண. 5, 22);.

     [சாதி + குங்குலிகம்]

சாதிசம்

சாதிசம் sātisam, பெ. (n.)

   1. சாதிக்காய்1 (தைலவ.தைல. 98);.

   2. நறும்பிசின் (யாழ்.அக.);; socotrine aloe.

     [சாதி → சாதிசம்]

சாதித்துப்பூசு-தல்

சாதித்துப்பூசு-தல் cādidduppūcudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   தேய்த்துப் பூசுதல் (வின்.);; to rub, as oil, ointment.

     [சாதித்து + பூசு-,]

சாதினி

சாதினி cātiṉi, பெ. (n.)

   1. முசுக்கட்டை (மலை.);; Indian Mulberry.

   2. பீர்க்கு; sponge-gourd.

சாதிப்பன்னம்

சாதிப்பன்னம் cātippaṉṉam, பெ. (n.)

   சாதிபத்திரி (தைலவ.தைல. 109.);; mace.

சாதியடி

சாதியடி cātiyaḍi, பெ. (n.)

   1/2 அங்குலம் கொண்ட ஒரு நீட்டலளவு

 a kind of measurment.

     [சாதி+அடி]

சாதீவம்

 சாதீவம் cātīvam, பெ. (n.)

   குழி நாவல்; common myrtle – Myrtus communis (சா.அக.);.

சாது

சாது2 cātu, பெ. (n.)

   தயிர் (யாழ்.அக.);; curd.

     [அள் → அளி. அளிதல் = குழைதல். அளி → அளை = தயிர். அளை → சளை → (சதை); → சாது]

சாது → Skt. {}

சாதுகம்

 சாதுகம் cātugam, பெ. (n.)

   பெருங்காயம் (மூஅ);; Asafoetida.

சாதுசாக்கிரன்

 சாதுசாக்கிரன் cātucākkiraṉ, பெ. (n.)

   வான்வழிச் செல்லும் கலையறிந்த முனிவர்; sage, he knew travelling on sky (அபி.சிந்.);.

     [சாது + சாக்கிரன்]

சாதுசீதளம்

 சாதுசீதளம் cātucītaḷam, பெ. (n.)

   மகிழம்பூ; ape-face flower – Mimusops elengi (சா.அக.);.

சாதுவன்

சாதுவன் cātuvaṉ, பெ. (n.)

   1. நல்லவன்:

 goodman சாதுவராய் போது மின்க ளென்றான் (திவ். இயக் 6812. ஐம்புலன் அடக்கிய துறவி

 a monk

தத்துவன் சாதுவன் (சிலம்:10.182);

     [சால் – சாது+வ் +அன்]

 சாதுவன் cātuvaṉ, பெ. (n.)

   காவிரிப்பூம் பட்டினத்தில் வாழ்ந்த வணிகன்; a merchant lived in Kaviri-p-{}.

     [சாத்து → சாத்துவன் → சாதுவன்]

சாதேவி

 சாதேவி cātēvi, பெ. (n.)

   திப்பிலி; long pepper (சா.அக.);.

சாத்தக்கணத்தார்

சாத்தக்கணத்தார் cāttakkaṇattār, பெ. (n.)

   அய்யனார் கோயிலை ஆளுமை (நிருவாகம்); செய்பவர்கள்; admininstrators of {} temple.

     “இத்தன்மம் சாத்த கணத்தார் ரச்சிப்பாராகவும்” (தெ.க.தொ. 111);.

     [சாத்தன் + கணத்தார். கள்ளுதல் = கூடுதல், பொருந்துதல், ஒத்தல். கள் → கள → கண. கணத்தல் = கூடுதல், ஒத்தல். கள் → களம் = கூட்டம், அவை. களம் → கணம் =கூட்டம். கணம் + அத்து + ஆர் = கணத்தார்]

சாத்தங்குடி

சாத்தங்குடி cāttaṅguḍi, பெ. (n.)

   பல்லவர் நாட்டுச் சிற்றூர்; a village in pallava territory (புல், செ. 74);.

     “காசியப கோத்திரத்து சாத்தங்குடி கிழான் பங்கொன்று’

     [சாத்தன்+குடி]

சாத்தண்டம்

சாத்தண்டம் cāttaṇṭam, பெ. (n.)

   கொலை செய்ததற்கு விதிக்கும் தண்டனை; punishment for killing.

சாத்தண்டம் செய்கில் இருபத்து நாலு காணம் கொடுப்பது (T.A.S. iii. 195);.

     [சா + தண்டம்]

சாத்தண்டை

சாத்தண்டை cāttaṇṭai, பெ. (n.)

   நிலத்தில் அண்டை வெட்டுதலில் ஒருவகை (செங். 2);; a kind of cultivation.

அண்டை வெட்டும்போது வயல்வரப்பில் இருக்கும் ஒட்டைகளை அடைப்பதற்காகச் சேற்றினை அள்ளி வரப்பின்மீது சாத்தி வெட்டும் அண்டை.

     [சாத்து + அண்டை]

சாத்தந்தை

சாத்தந்தை cāttandai, பெ. (n.)

   சாத்தனுக்குத் தந்தை (தொல். எழுத்து. 347);; father of {}.

     [சாத்தன் + தந்தை]

சாத்தந்தையார்

 சாத்தந்தையார் cāttandaiyār,    கடைக்கழகப் புலவர்;{} poet.

     [சாத்தன் + தந்தையார்]

திணைமொழி யைம்பதின் ஆசிரியர் கண்ணஞ்சேந்தனாருடைய தந்தை. இவர் பாடியதாகப் புறநானூற்றில் நான்கு பாடல்கள் காணப்படுகின்றன. மற்போர் இயல்பு இவர் பாடலில் காணப்படுகிறது. சோழன் போர்வைக் கோப்பெருநற் கிள்ளியைப் பாடியுள்ளார்.

சாத்தனார்

 சாத்தனார் cāttaṉār, பெ. (n.)

   கழகக்காலப் புலவர்; sangam poet.

     [சாத்தன் → சாத்தனார்]

சாத்தனி

சாத்தனி1 cāttaṉi, பெ.(n.)

   பரமக்குடி வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Paramakkudi Taluk.

     [சாத்து+அணி]

 சாத்தனி2 cāttaṉi, பெ.(n.)

   சிவகங்கை வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Ssivaganga Taluk.

     [சாத்து+அணி]

சாத்தனூர்

சாத்தனூர் cāttaṉūr, பெ. (n.)

   திருநள்ளாற் றுக்கு வடகிழக்கே 8 கல் தொலைவில் உள்ள ஊர்; a village 8 km from Thirunallär.

     [சாத்தன்+ஊர்]

சாத்தன்

சாத்தன்1 cāttaṉ, பெ. (n.)

   1. சாத்தன் எனும் தெய்வம் (திவா.);; a village deity.

   2. அருகன் (சூடா.);

 Arhat.

   3. புத்தன்; Buddha.

   4. சீத்தலைச் சாத்தனார் பார்க்க;See {}.

     “அவனுழை யிருந்த தண்டமிழ்ச் சாத்தன்” (சிலப். பதி. 10);.

   5. யாரேனும் ஒருவனைக் குறிப்பதற்காகச் சொல்லும் சொல்; imaginary person of male sex.

     “அக்கடவுளாற் பயன்பெற நின்றானோர் சாத்தனை” (தொல். பொருள். 422, உரை);.

   ம. சாத்தன்;க. சாத (பேய்);

     [சாத்து → சாத்தன் = வணிகச் சாத்தினர் வணங்குந்தெய்வம். பண்டைக் காலத்தில் பெரும்பாலும் வணிகரே சாத்தன் என்னும் பெயர் தாங்கியிருத்தனர்.]

வடவர் ஐயனாரைக் குறிக்கும்போது சாஸ்தா என்றும் சாஸ்த்கு என்றும் திரிப்பர்.இதனின்று அவர் ஏமாற்றை அறிந்து கொள்க (தமி.வ.66);.

 சாத்தன்2 cāttaṉ, பெ. (n.)

   வாணிகக்கூட்டத் தலைவன் (நன். 130, மயிலை);; head of a trading caravan (செ.அக.);.

     [சாத்து → சாத்தன்]

வணிகச் சாத்தின் தலைவன் சாத்தன் எனப்படுவான். இப்பெயர் ஸார்த்த என்று வடமொழியில் திரியும். வடமொழியில் சாத்தைக் குறிக்கும் சொற்கும் சாத்தின் தலைவனைக் குறிக்கும் சொற்கும் வேறு பாடின்மையும், சாத்தன் என்னும் தெய்வத்தைக் குறிக்கும் சொல் வேறு பட்டிருப்பதும் கண்டு உண்மை தெளிக.

சாத்தன் என்னும் சொல் பிற்காலத்திற் சாத்துவன் என்றும் சாத்துவான் என்றுந் திரிந்தது.கண்ணகியின் தந்தை மாசாத்துவான் (பெருஞ்சாத்தன்); என்று இயற்பெயர் பெற்றிருந்தமை காண்க (தமி.வ. 66);.

சாத்தன்காசு

 சாத்தன்காசு cāttaṉkācu, பெ. (n.)

   ஒரு பழைய காசு வகை; name of an old coin (சேரநா.);.

ம. சாத்தன் காசு

     [சாத்தன் + காசு]

சாத்தமகரணி

 சாத்தமகரணி cāttamagaraṇi, பெ. (n.)

   உத்தாமணி; hedge cotton – Damea extensa (சாஅக.);.

சாத்தமிழ்து

 சாத்தமிழ்து cāttamiḻtu, பெ. (n.)

   புளிச் சாறு சோறு; a kind of water soup added to the rice.

     [சாறு → சாற்று → சாத்து + அமிழ்து. அமிழ்து = உணவு]

சாத்தமுது

 சாத்தமுது cāddamudu, பெ. (n.)

சாத்தமிழ்து பார்க்க;See {}.

     [சாத்தமிழ்து → சாத்தமுது]

சாத்தமை

 சாத்தமை cāttamai, பெ.(n.)

   மதுராந்தகம் வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Madurantakam Taluk.

     [சாத்து+ஆண்மை]

சாத்தம்

சாத்தம் cāttam, பெ. (n.)

வண்டிக்கூலி,

 charge levied for carrying goods from place to place by cart.

     [சாத்து-சாத்தம்]

சாத்து வாணிகர் தம் வண்டிச் சாத்துகளில் வாங்கிய கட்டணம் சாத்து-சாத்தம் எனப்பட்டது. இது வண்டிச் சத்தம் எனத் திரிந்தது.

 சாத்தம் cāttam, பெ.(n.)

   மலைமகளை (சக்தியை); முதற் கடவுளாக வழிபடும்சமயம்; the religion which enjoins the exclusive worship of Sakthi as the Supreme Being.

     “சிலர்கள் சாத்தமுஞ் சிலர்கள் சாம்பவமுரசமாய்” (திருக்காளத்.பு.30, 26);.

     [Skt.{} → த.சாத்தம்]

சாத்தம்மி

சாத்தம்மி cāttammi, பெ. (n.)

   1. கலவைச் சந்தனங் குழைத்தற்குரிய அம்மி; grindstone for compounding perfumed sandal.

     ‘கருங்கொள்ளியின் நிறத்தையொத்த நறிய சாத்தம்மியிலே கத்தூரி முதலிய பகங்கூட்டரைக்க’

   2. மெருகு சுண்ணாம்பு அரைக்கும் பெரிய அம்மி வகை; big grind stone for pounding limepolish, etc.

     [சாந்து + அம்மி – சாந்தம்மி → சாத்தம்மி]

சாத்தர்

சாத்தர் cāttar, பெ. (n.)

சாத்தவர்2 பார்க்க;See {}.

     “அதர்கெடுத் தலறிய சாத்தரொ டாங்கு” (அகநா. 39);.

     [சாத்து → சாத்தர்]

சாத்தலகு

 சாத்தலகு cāttalagu, பெ. (n.)

   கூரைக் கைமரங்களை இணைக்கும் பட்டியல் சட்டம் (கட்டட);; a kind of wooden bar used house making.

     [சார் → சார்த்து → சாத்து + அலகு]

சாத்தல்

சாத்தல் cāttal, பெ. (n.)

   மறைநூல்; the {}.

     “சாத்த லோதும்…. பிரமசாரிப் புதல்வரை” (திருவாலவா. 27, 52);.

     [சாற்று → சாத்து → சாத்தல்]

சாத்தவர்

சாத்தவர்1 cāttavar, பெ. (n.)

   குதிரை வீரர்; cavalry, troopers.

 சாத்தவர்2 cāttavar, பெ. (n.)

   வெளிநாடுகளிற் சென்று வணிகஞ் செய்யும் வணிகக் கூட்டத்தார்; trading caravan.

     “பழுதில் சாத்தவர்கள் சூழ” (திருவாலவா. 271);.

     [சாத்து → சாத்தவர்]

சாத்தாதவன்

 சாத்தாதவன் cāttātavaṉ, பெ. (n.)

சாத்தானி பார்க்க (பூணூல் அணியாதவன்);;See {}, lit.

 one who does not wear the sacred thread.

     [சாத்து + ஆ + த + அவன்]

பூணூல் அணியாமலும், உச்சிக்குடுமி வைக்காமலும் இருக்கும் ஒரு பிரிவினர். மாலியத்தை (வைணவத்தை);ச் சார்ந்த இவர்கள் பல்வேறு பிரிவுகளிலிருந்து, ஒன்று சேர்ந்தவர்கள்.

சாத்தானி

 சாத்தானி cāttāṉi, பெ. (n.)

   கோயிலில் பூமாலை கட்டிக் கொடுக்கும் பார்ப்பனன் அல்லாத மாலியன்; non-brahmin caste of {} who render service in temples.

க., தெ., சாதாநி

     [சாத்து + ஆ + ஆன் → சாத்தான் → சாத்தானி]

சாத்தாவாரி

 சாத்தாவாரி cāttāvāri, பெ. (n.)

   தண்ணீர் விட்டான் கிழங்கு; a common climber with many thick fleshy roots.

சாத்திகன்

சாத்திகன் cāttigaṉ, பெ.(n.)

சாத்துவிகன் பார்க்க;see {}.

     “சாத்திகனாய்ப் பரதத்துவந் தானுன்னி” (திருமந்.1696);.

     [Skt.{} → த.சாத்திகன்]

சாத்திகம்

சாத்திகம் cāttigam, பெ.(n.)

சாத்துவிகம் பார்க்க;see {}.

     “தாமதத்துடனிராசதஞ் சாத்திக மென்னும்” (ஞானவா.திதி.7);.

     [Skt.{} → த.சாத்தியம்]

சாத்திக்கொள்(ளு) – தல்

சாத்திக்கொள்(ளு) – தல் cāddikkoḷḷudal,    13 செ.குன்றாவி. (v.t.)

   பகட்டாக (ஆடம்பரமாக); மாலை முதலியன அணிதல் (யாழ்ப்);; to dress oneself with gaudy, costly attire, decorate oneself.

     [சாத்து → சாத்தி + கொள்(ளு);-,]

சாத்தியசாந்தகம்

 சாத்தியசாந்தகம் cāttiyacāndagam, பெ. (n.)

   நான்முகப் புல்; reed grass – Saccharum spontaneum (சா.அக);.

சாத்தியதன்மவிகலம்

சாத்தியதன்மவிகலம் cāddiyadaṉmavigalam, பெ.(n.)

   சாதன்மியதிட்டாந்த வாபாசம் ஐந்தனுள் ஒன்றாய் சத்தம் நித்தம் அமூர்த்தத்தால் புத்திபோல் என்று காட்டப்பட்ட திருட்டாந்தத்திற் புத்தி அமூர்த்தமாய் நின்றும் அநித்தியமாதல் போலச் சாத்தியதன்மங்குறைவு பட்டிருப்பது (மணிமே.29:349);; a fallacious example defective in {} or the major term, one of five-{}-{}-v-{}, q.v.

     [Skt.{}-dharma-vi-kala → த.சாத்தியதன்மவிகலம்]

சாத்தியநாமம்

 சாத்தியநாமம் cāttiyanāmam, பெ. (n.)

   ஒருவன் மீது மந்திரம் செயல்படுவதற்காக அம்மந்திரத்திற் சேர்க்கும் அவன் பெயர் (யாழ்ப்.);; name of a person introduced in a mantra for achieving the desired end.

     [சாத்திய + நாமம்]

 Skt. {} → த. நாமம்

சாத்தியம்

சாத்தியம் cāttiyam, பெ.(n.)

   1. இயல்வது (சாதிக்கத்தக்கது);; that which is practicable, possible, attainable.

     “விழைவெ லாஞ்சாத்திய மாக்கம்” (சேதுபு.சாத்தியா.);.

   2. சாத்தியரோகம் பார்க்க;see {}.

     “பிணியளவு சாத்தியம் அசாத்தியம் யாப்பிய மென்னுஞ் சாதிவேறுபாடும்” (குறள், 949, உரை);.

   3. அனுமானவுறுப்புள் துணியப் படவேண்டும் பொருள் (log);; that which remains to be proved or concluded, the major term, dist fr. {}.

     “சாதன சாத்திய மிவையந்து வயம்” (மணிமே.27, 29);.

   4. யோக மிருபத்தேழனுள் ஒன்று (விதான.பஞ்சாங்க.24, உரை);;   5. எண் வகையுரிமைகளுள் (அட்டபோகங்);களுள் விளைபொருளுரிமை (C.G.);; right to fruits of the earth, one of {}, q.v.

     [Skt.{} → த.சாத்தியம்]

சாத்தியரோகம்

 சாத்தியரோகம் cāttiyarōkam, பெ.(n.)

   தீர்க்கக்கூடிய நோய்; curable disease, oneof three {}, q.v.

     [Skt.{}+rogam → த.சாத்தியரோகம்]

சாத்தியர்

சாத்தியர் cāttiyar, பெ.(n.)

   தேவருள் ஒரு சாரார்; a class of celestial beings.

     “விசுவதேவர் வசுக்கள் சாத்தியராதி விண்ணவர்” (சேதுபு.கலிதீர்த்.7);.

     [Skt.{} → த.சாத்தியம்]

சாத்தியாவியாவிருத்தி

சாத்தியாவியாவிருத்தி cāttiyāviyāvirutti, பெ.(n.)

   வைதன்மிய திட்டாந்தவாபாசவகை ஐந்தனுள் ஒன்றாய் சத்தம் நித்தன் அமூர்த்தத்தால் பரமாணுப்போல் என்று காட்டப்பட்ட வைதன்மிய திருட்டாந்தத்தில் பராமவை நித்தமும் மர்த்தமுமாதலால் சாதனதன்மம் மீண்டு சாத்தியதன்மம் மீளாதொழிவது (மணிமே.29:403);;     [Skt.{}+a-{} → த.சாத்தியாவியாவிருத்தி]

சாத்தியேகவசனம்

 சாத்தியேகவசனம் sāttiyēkavasaṉam, பெ.(n.)

   சாதியையுணர்த்துதற்கு வரும் ஒருமை;     [Skt.{}-vacana → த.சாத்தியேகவசனம்]

சாத்திரதீட்சை

சாத்திரதீட்சை cāttiratīṭcai, பெ.(n.)

   தீக்கை (தீட்சை);யேழனள் சிவாகமதத்துவங்களை ஆசிரியன் மாணவனுக்கு ஓதுவிப்பது (உபதேசிப்பது); (சாத்திரதீக்ஷையானது சைவாகமாதி சிவசாத்திரப் பொருளைப் போதித்தலாம்); (சி.சி.8,3, உரை);;

சாத்திரபஞ்சகம்

 சாத்திரபஞ்சகம் cāttirabañjagam, பெ.(n.)

   இலௌகிக சாத்திரம், வைதிகசாத்திரம், அத்தியாத்துமசாத்திரம், அதிமார்க்கிகசாத்திரம், மந்திரசாத்திரம் என்று ஐவகைப்பட்ட சாத்திரம்; the five sciences, ilaukika-{}, vaitika {}, {}-{}, {}-k-kika-{} and mantira-{}.

சாத்திரபேதி

 சாத்திரபேதி cāttirapēti, பெ.(n.)

   மாழை கலந்த மணல் வகை (வை.மூ.);; a kind of ore.

சாத்திரமாணி

சாத்திரமாணி cāttiramāṇi, பெ.(n.)

   மாணவன் (S.I.I.V.500);; student.

     [சாத்திரம்+மாணி]

     [Skt.{} → த.சாத்திரம்]

சாத்திரமுயற்சி

 சாத்திரமுயற்சி cāttiramuyaṟci, பெ.(n.)

   சாத்திரமுறைப்படி சடங்கு செய்கை (வின்.);; performing religious ceremonies according to the {}.

     [சாத்திரம்+முயற்சி]

     [Skt.{} → த.சாத்திரம்]

சாத்திரம்

சாத்திரம்1 cāttiram, பெ.(n.)

   1. நூல்; science.

   2. சோதிடநூல்; astrology or astromony.

   3. தயிர்; curd.

   4. மருத்துவம் (வைத்தியம்);; medical science.

 சாத்திரம்2 cāttiram, பெ.(n.)

   1. நூல்; treastise, especially religion or scientific.

   2. வேதாந்தம், தருக்கம் முதலிய நூல்,

 department of knowledge as {}, tarka, {} etc.

   3. அறிவியல் நூல்; science.

     “சாத்திரம் பலபேசுஞ் சழக்கர்காள்” (தேவா.1070,3);.

த.வ.அறிவுநூல்

     [Skt.{} → த.சாஸ்திரம் → சாத்திரம்]

சாத்திரர்

சாத்திரர் cāttirar, பெ.(n.)

   மாணவர்; students.

     “மூவர்சாத்திரர் அமிர்துசெய்வது” (T.A.S.III.173);.

     [Skt.{} → த.சாத்திரர்]

சாத்திரவாராய்ச்சி

 சாத்திரவாராய்ச்சி cāttiravārāycci, பெ.(n.)

   நூலாராய்ச்சி; scientific research.

     [சாத்திரம்+ஆராய்ச்சி]

     [Skt.{} → த.சாத்திரம்]

சாத்திரவேரி

 சாத்திரவேரி cāttiravēri, பெ.(n.)

   தண்ணீர் விட்டான் (மலை.);; a common climber.

     [Skt.{} → த.சாத்திரவேரி]

சாத்திராலவணம்

 சாத்திராலவணம் cāttirālavaṇam, பெ.(n.)

   பொட்டிலுப்பு; saltpetre.

சாத்திரி

சாத்திரி cāttiri, பெ.(n.)

   1. வேதமறிந்தவன்; one versed in the {}.

   2. கற்றவன்; learned man.

   3. பார்ப்பனர்களுக்கு வழங்கும் பட்டப் பெயர்களுள் ஒன்று; a title, especially of {}-Brahmin.

     [Skt.{} → த.சாத்திரி]

சாத்திரிய

சாத்திரிய cāttiriya, பெ.அ.(adj.)

   1. பழங்காலத்தில் தோற்றுவிக்கப்பட்ட அமைப்பு, தரம் முதலியவற்றை அடிப்படையாகக் கொண்ட உயர்வான, கலப்பற்ற; classical.

     “சாஸ்திரிய சங்கீரம், சாஸ்திரிய கலைகள்”.

   2. (அ.வ.); (குறிப்பிட்ட ஒன்றின்); வரையறுக்கப்பட்ட, ஒழுங்கான; traditional.

     “இங்கே சாஸ்திரிய முறைப்படி தையல் கற்றுத்தரப்படும்”.

     [Skt.{} → த.சாத்திரிய]

சாத்து

சாத்து1 cāddudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   ஒருவர் பெயர் நிலைத்துநிற்கும் நோக்கோடு அவர் நினைவாக ஒன்றினைச் செய்தல்; to do a good thing in memory of an other person.

     “குன்றனூரனைச் சாத்தி இவர் மகன் ஸ்ரீராசிங்கப் பேரையனான அரைசயன் இகழாநிலை கண்ணனூர்க் குளத்துக்குக் கட்டின குமிழி” (ஆவணம் 1991: 15-1);

     [சார் → சார்த்து → சாத்து-,]

 சாத்து2 cāddudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. அணிதல்; to put on, adorn used in reference to idols, great persons, etc.

     ‘முளைவெண்டிங்க ளென்னச் சாத்தி’ (சிலப். 12:26);.

   2. பூணுதல்; to wear, as the caste-mark.

     ‘தன்றிரு நாமத்தைத் தானுஞ் சாத்தியே’ (கம்பரா. கடிமண. 49);.

   3. பூசுதல் (பிங்.);; to daub, smear, anoint.

     “சாத்தியருளச் சந்தன முக்கசும்’ (S.l.l.iii, 187);.

   4. நூலைப் படித்து முடித்தல்; to finish reading a sacred book.

   5. அடித்தல்; beat, thrash.

     ‘அவனை இரண்டு சாத்துச் சாத்தினான்’ (கொ.வ.);.

   6. பெயர்த்து நடுதல் (வின்.);; to transplant.

தென்னம்பிள்ளை சாத்துதல்.

     [சுள் → சூர் → சார் → சார்த்து → சாத்து. சாத்துதல் = மூடுதல் (மு.தா.33);]

 சாத்து3 cāddudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   ஒன்றின் மேல் சாய்ந்த நிலையில் இருக்கச் செய்தல்; rest something at a slant.

     ‘குடையை மூலையில் சாத்தி வை’.

     [சார்த்து → சாத்து-,]

 சாத்து4 cāddudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   அடைத்தல்; to close, as a door, to shut.

     “போர்க் கதவஞ் சாத்தி” (திவ். இயற். 1, 4);.

     [சார்த்து → சாத்து-,]

   {}-u. to close a door, to shut: Saxon scyit- an, to shut in; Dutch schutt-en, to stop;

 English to shut (C.G. D.F.L. 593);.

 சாத்து5 cāttu, பெ. (n.)

   1. சாத்துகை; wearing, as a garland.

     ‘சாத்து கோதையும்’ (பெருங். மகத. 5, 78);.

   2.சாத்துமுறை-3 பார்க்க;See {}-

   3. அடி; beat, thrash.

   4. பெயர்த்து நடப்பட்ட நாற்று; young plant transplanted.

நாற்று முப்பது சாத்து முப்பது Rd.M.

     [சார்த்து → சாத்து]

 சாத்து6 cāttu, பெ. (n.)

   1. வணிகக் கூட்டம்: trading caravan.

     ‘சாத்தொடு போந்து தனித்துய ருழந்தேன்’ (சிலப். 11:19௦););.

   2. கூட்டம்; company.

     “சுரிவளைச் சாத்து நிறைமதி தவழும்” (கல்லா. 63, 32);.

     [சேர் → சார் → சார்த்து → சாத்து. சாத்தல் = சேர்தல், கலத்தல், கூடுதல்]

த. சாத்து → Skt. {}

நிலவாணிகர் வணிகப்பண்டங்களைக் குதிரைகள் மேலும், கோவேறு கழுதைகள் மேலும் ஏற்றிக்கொண்டு, கூட்டங்கூட்டமாய் காட்டுவழியே தமிழகத்தையடுத்த வடுக நாட்டிற்கும், நெடுந்தொலைவான வட நாட்டிற்கும், காவற்படையுடன் சென்று ஏராளமாய்ப் பொருளீட்டி வந்தனர். அவ் வணிகக் கூட்டங்கட்குச் ‘சாத்து’ என்று பெயர். சாத்து கூட்டம். சார்த்து → சாத்து. சார்தல் = சேர்தல்.

வணிகச்சாத்துகளின் காவல்தெய்வமாகிய ஐயனார்க்குச் சாத்தன் என்று பெயர். அதனால் வணிகர்க்குச் சாத்தன், சாத்துவன் என்னும் பெயர்கள் இயற்பெயராய் வழங்கின. ஐயனார் கோயிலில், வணிகச்சாத்தைக் குறித்தற்கு, மண் குதிரை யுருவங்கள் செய்து வைத்திருத்தலைக் காண்க. சாத்தன் என்னும் தெய்வப்பெயர் வடமொழியில் சாஸ்தா எனத் திரியும் (ப.ப.93);.

 சாத்து7 cāttu, பெ. (n.)

சாத்துப்பட்டை பார்க்க;See {}.

     [சார் → சார்த்து → சாத்து]

 சாத்து8 cāttu, பெ. (n.)

   சாத்தம்மி; big grinding stone.

     “ஓர் சாமஞ் சாத்தி லரைக்க தனித்து” (தஞ்சர. iii. 69);.

     [சாத்தம்மி → சாத்து]

சாத்துக்கடி

 சாத்துக்கடி cāttukkaḍi, பெ. (n.)

சாத்துக்குடி (இ.வ.); பார்க்க;See {} (செ.அக.);.

     [சாத்துக்குடி → சாத்துக்கடி]

சாத்துக்கம்பு

 சாத்துக்கம்பு cāttukkambu, பெ. (n.)

   தாழ்வாரத்தைத் தாங்கச் சாய்வாக அமைக்கப் பட்ட கழி; support pole.

     [சாத்து + கம்பு. கும் → கொம் → கொம்மை = திரட்சி. கொம் → கொம்பு → கம்பு]

சாத்துக்கழி

 சாத்துக்கழி cāttukkaḻi, பெ. (n.)

   கூரையைத் தாங்க முகட்டு வளையையும் சுவரின் மேற் பகுதியிலமைந்த சட்டத்தையும் இணைக்கும் மரச்சட்டம் (கட்டட);; a kind of wooden bar used in sloping roof.

     [சாத்து + கழி]

சாத்துக்கவி

 சாத்துக்கவி cāttukkavi, பெ. (n.)

   சிறப்புப் பாயிரக்கவி; laudatory stanza in praise of an author and his work.

     [சார்த்து + கவி]

சாத்துக்காப்பு

 சாத்துக்காப்பு cāttukkāppu, பெ. (n.)

சாத்துப்படி (வின்.); பார்க்க;See {}.

     [சாத்து + காப்பு]

சாத்துக்கால்

சாத்துக்கால்1 cāttukkāl, பெ. (n.)

   1. இறைவன் திருமேனியை அழகு செய்யப் பயன்படுத்தும் திருப்பாதம் (இ.வ.);; metal leg used in decorating an idol.

     [சாத்து + கால்]

 சாத்துக்கால்2 cāttukkāl, பெ. (n.)

   மாட்டுக் குற்றவகை (பெரியமாட் 18);; a blemish in cattle.

     [சாத்து + கால்]

சாத்துக்குடி

சாத்துக்குடி cāttukkuḍi, பெ. (n.)

   1. சாத்துக்குடி என்னும் ஊரில விளைந்த கிச்சிலிப் பழவகை (M.M.);; batavian orange produced in {}, a village in North Arcot district.

   2. தித்திப் பெலுமிச்சை; sweet lime – m.tr. Citrus medica- limetta.

     [சாத்து + குடி]

சாத்துக்கூறை

சாத்துக்கூறை cāttukāṟai, பெ. (n.)

   திருப் பரிவட்டம் (S.I.I.iv,280.);; vestment of a deity.

     [சாத்து + கூறை]

சாத்துக்கை

 சாத்துக்கை cāttukkai, பெ. (n.)

   திருவிழாத் திருவுருவை அழகுபடுத்தப் பயன்படுத்துந் திருக்கை (இ.வ.);; metal arm used in decorating an idol.

     [சாத்து + கை]

சாத்துச்சட்டி

 சாத்துச்சட்டி cāttuccaṭṭi, பெ. (n.)

   குழம்பு வைக்கப் பயன்படுத்தும் மட்பாண்டம்; earthern vessel used for keeping sauce.

     [சாறு → சாற்று → சாத்து + சட்டி]

சாத்துடிப்பு

 சாத்துடிப்பு cāttuḍippu, பெ. (n.)

   இறக்கும் தருவாயில் ஏற்படும் துடிப்பு (மரணவேதனை);; death-throb (செ.அக.);.

     [சா + துடிப்பு]

சாத்துநாறு

 சாத்துநாறு cāttunāṟu, பெ. (n.)

சாத்துநாற்று (இராட்.); பார்க்க;See {}.

     [சாத்து + நூறு]

சாத்துநாற்று

 சாத்துநாற்று cāttunāṟṟu, பெ. (n.)

   பட்டுப்போன வற்றிற்கு மாற்றாக நடும் நாற்று (இராட்);; young plants planted in place of those which are dead.

     [சார் → சார்த்து → சாத்து + நாற்று. நாறு → நாற்று]

சாத்துப்படி

சாத்துப்படி cāttuppaḍi, பெ. (n.)

   1. கோயிலில் திருமேனிகட்குச் செய்யும் ஒப்பனை; adornment, bedecking of idols.

     ‘சாத்துப்படிக்குச் சந்தனம் பலகாலும்” (T.A.S. iv. 95);.

   2. பூசுதற்குரிய சந்தனம் ({}.);; sandal paste. ம. சாத்துப்படி

     [சாத்து + படி]

சாத்துப்பட்டை

 சாத்துப்பட்டை cāttuppaṭṭai, பெ. (n.)

   கைமரம் (இ.வ.);; common rafter.

ம. சாத்து (படகின் இருபுறமும் சேர்த்துக் கட்டும் பலகை);

     [சார் → சார்த்து → சாத்து = சாத்துகை. சாத்து + பட்டை]

சாத்துப்பனை

சாத்துப்பனை cāttuppaṉai, பெ. (n.)

   1. சாற்றுப் பனை; palmyra, yielding fruit or toddy.

   2. பெண் பனை; female palmyra tree (சா.அக.);.

     [சாத்து + பனை]

சாத்துப்பயிர்

 சாத்துப்பயிர் cāttuppayir, பெ. (n.)

   பிடுங்கி நடப்பெற்று வளர்ந்த பயிர் (தஞ்சை);; grown- up plant transplanted a second time.

     [சாத்து + பயிர்]

சாத்துப்பிள்ளை

 சாத்துப்பிள்ளை cāttuppiḷḷai, பெ. (n.)

   ஒரு நெசவுக் கருவி; a kind of weaving parts.

     [சாத்து + பிள்ளை]

சாத்துப்பிள்ளைக்கால்

 சாத்துப்பிள்ளைக்கால் cāttuppiḷḷaikkāl, பெ. (n.)

   சாத்துப்பிள்ளைத் தாங்கி நிற்கும் மரக்கால்கள்; supporting poles or legs of {}.

     [சாத்துப்பிள்ளை + கால்]

சாத்துமாலை

 சாத்துமாலை cāttumālai, பெ. (n.)

   அணிதற்குரிய பூமாலை; galand intended to be put on idols, etc. opp. to {}.

     [சாத்து + மாலை]

சாத்துமுறை

சாத்துமுறை cāttumuṟai, பெ. (n.)

   1. கோயில் முதலிய இடங்களில் போற்றிப் பாடல்களை ஒதியபின் இறுதியில் சில பாடல்களைச் சிறப்புத் தோன்ற தனியே ஒதுகை; recital of some special stanzas at the close of pirabandam recitation in times of worship at temples, etc.

   2. ஆழ்வார் முதலானோர் விழா முடிவு; close of the festival in honour of vaisnava saints.

   3. ஓதுகை முடிவு; completion of the study of sacred works.

     [சாற்று → சாத்து + முறை]

சாத்துயர்

 சாத்துயர் cāttuyar, பெ. (n.)

   கடுந்துயர் (மரணவேதனை);; death agony.

     [சா + துயர்]

சாத்துறி

சாத்துறி cāttuṟi, பெ. (n.)

   உறிவகை; suspended network of rope.

     “சாத்துறி பவளக் கன்னல்” (சீவக. 19௦6);.

     [சார்த்து + உறி]

சாத்துவதி

சாத்துவதி1 cādduvadi, பெ. (n.)

   அறம் பொருளாகவும் தெய்வமானிடர் தலைவராகவும் வரும் நாடக வகை (விருத்தி);; a variety of dramatic, composition which has a semi-divine being for hero and treats of virtue, one of four {}, ‘அவன் சாத்துவதி…. பாரதி யென வினவ’ (சிலப். 3, 13, உரை.);.

சாத்துவன்

சாத்துவன் cāttuvaṉ, பெ. (n.)

சாத்தன்2 பார்க்க;See {}.

     [சார் → சார்த்து → சாத்து → சாத்துவன்]

சாத்துவரப்பு

 சாத்துவரப்பு cāttuvarappu, பெ. (n.)

   திரட்டுவரப்பு (செங்கை);; patch ridge of a field.

     [சாத்து + வரப்பு]

சாத்துவரி

 சாத்துவரி cāttuvari, பெ. (n.)

   கள்ளிறக்கும் மரங்களுக்கிடும் வரி (இ.வ.);; tax on toddy – yielding trees.

     [சாறு + வரி – சாற்றுவரி → சாத்துவரி]

சாத்துவாதி

 சாத்துவாதி cāttuvāti, பெ. (n.)

   சித்திர மூலம்; Ceylon leadwort – Plumbago zeylanica (சா.அக.);.

சாத்துவான்

சாத்துவான் cāttuvāṉ, பெ. (n.)

சாத்தன்2 பார்க்க;See {}.

     [சாத்து → சாத்துவன் → சாத்துவான்]

சாத்தூலம்

 சாத்தூலம் cāttūlam, பெ. (n.)

   புலிதொடக்கிச் சாறு; the juice of tiger stopper – Caesalpinia sepiaria (சா.அக.);.

சாத்தெறி –தல்

சாத்தெறி –தல் cāddeṟidal,    3 செ.கு.வி. (v.i.)

   வாணிகக் கூட்டத்தைக் கொள்ளையிடுதல்; to plunder a trading caravan (செ.அக.);.

     [சாத்து + எறி-,]

சாந்தகப்பை

 சாந்தகப்பை cāndagappai, பெ. (n.)

   கொத்தன் கரண்டி (யாழ்ப்.);; mason’s trowel.

     [சாந்து + அகப்பை. அகழ் → அகழ்ப்பு → அகழ்ப்பை → அகப்பை]

சாந்தகம்

 சாந்தகம் cāndagam, பெ. (n.)

   நான்முகப் புல்; four-faced grass;

 buffalo reed – Saccharum spontaneum (சா.அக.);.

சாந்தகலம்

 சாந்தகலம் cāndagalam, பெ. (n.)

   தணக்கு முட்டைக் கோங்கு என்னும் மரம்; whirling nut – Gyrocarpus jacuini.

சாந்தகவன்னி

 சாந்தகவன்னி cāndagavaṉṉi, பெ. (n.)

   தீமுறிப் பூடு; a kind of plant which is said to suspen the action of fire (சா.அக.);.

சாந்தகவிராயர்

 சாந்தகவிராயர் cāndagavirāyar, பெ. (n.)

   இரங்கேச வெண்பா இயற்றிய புலவர்; author of {}.

     [சந்தம் → சாந்தம் + கவிராயர்]

சாந்தசந்திரோதயம்

 சாந்தசந்திரோதயம் sāndasandirōtayam, பெ. (n.)

   ஒருவகைக் குளிகை (வின்.);; a medicinal pill.

சாந்தன்

சாந்தன் cāndaṉ, பெ. (n.)

   1. அமைதியுடையோன்; quiet, peaceful person, patient man.

     “புராரியும் புகழ்தற்கொத்த சாந்தனால்” (கம்பரா.திருவவ.34);.

   2. அருகன் (திவா.);; Arhat.

   3. புத்தன் (திவா.);; Buddha.

     [சாந்தம் → சாந்தன்]

சாந்தபனம்

 சாந்தபனம் cāndabaṉam, பெ. (n.)

   ஒருவகை நோன்பு; penance, religious vow.

இது மூன்றுநாள் பகலுணவு மட்டும் உண்டு, பின் மூன்றுநாள் இரவு உணவு மட்டும் உண்டு, மூன்றுநாள் கேட்காமல் கிடைத்த பொருளை உண்டு, மூன்று நாள் உணவின்றிப் பட்டினி இருக்கும் நோன்பு. (அபி.சிந்.);.

சாந்தம்

சாந்தம்1 cāndam, பெ. (n.)

   1. அமைதி; peace, composure, resignation, quietism.

     “சாந்தந் தருபவர் வெங்கை புரேசர்” (வெங்கைக்கோ. 329);.

   2. பொறுமை (சூடா.);; endurance, patience.

   3. ஒன்பான் சுவைகளுள் ஒன்று (திவா.);; sentiment of resignation, quietistic sentiment, one of nava-rasam.

     [சந்து → சந்தம் → சாந்தம். சந்து செய்தல் = சமன்செய்தல், சமன்செய்து அமைதி உண்டாக்கல்.]

சாந்த ({}); என்னும் சொற்கு உழைத்தல், அதனால் ஏற்படும் களைப்பு, அதிலும் குறிப்பாகப் பூசை தொடர்பான சடங்கினை மேற்கொள்வதால் ஏற்படும் களைப்பு, களைப்பின் காரணமாகப் பணி செய்யாது வெறுமனே இருத்தல், ஒய்வெடுத்தல், அமைதியாதல் என்பன போன்ற பொருள்களைக் கொண்ட சம் ({}); என்பதை வேராகக் காட்டுகிறது மா.வி. அகரமுதலி. இதில் உழைத்தலும் அதனால் ஏற்படும் களைப்பும் அடிப்பொருள்களாகக் கொண்ட வேர் அமைதிப் பொருள் தராமை கண்டு கொள்க. உழைத்துக் களைப்படையும் நிலை சோர்வினைக் குறிக்குமேயல்லாமல் அமைதிப் பொருள் தராது. அதேபோல் சோர்வின் காரணமாகப் பணிசெய்யாது வெறுமனே இருத்தல் ஒய்வெடுத்தலாகுமே யல்லாமல் எவ்வகையிலும் அமைதியின் பாற்படாது.

அமைதி மனவுணர்வுகளை அமையச்செய்யும் (அமை + தி);, அடக்கச் செய்யும் தன்மையது. வடமொழிக்கு இனமொழிகளான மேலையாரிய மொழிகளில் இச் சொற்கான இனச்சொல் இல்லை.

கொண்முடிபு (சித்தாந்த); நூலாரும் மெய்ப் பொருள் (தத்துவ); நூலாரும், இருவகைப் பற்றுமறுத்து முற்றத்துறந்த முழுமுனிவரான ஒகியரும் இருவினையுஞ் செய்யாது இறைவன் மேல் எண்ணத்தை நிலையாக நிறுத்தி இருக்கும் நிலையில் அமைதி பிறக்கும் என்றும் அது இணையற்ற இன்பநிலை என்றும் குறிப்பிட்டுள்ளனரே யல்லாமல் பணி செய்யாது சும்மாயிருக்கும் நிலையில் அமைதி பிறக்கும் எனக் குறியாமை காண்க.

 சாந்தம்2 cāndam, பெ. (n.)

   1. சந்தனம்; sandal.

     “சாந்த நறும்புகை” (ஐங்குறு. 253);.

   2. குளிர்ச்சி (சூடா);; coolness.

   3. சாணம் (வின்.);; cow-dung.

     [சாந்து → சாந்தம் (வ.வ. 148);]

சாந்தம்மி

சாந்தம்மி cāndammi, பெ. (n.)

   1. சந்தனக்கல்; sandal-mortar.

     “நறுஞ்சாந்தம்மியும்” (பெருங். உஞ்சைக். 38. 171);.

   2. சுண்ணாம்புச் சாந்து அரைக்கும் அம்மி; stone for grinding lime.

ம. சாந்தம்மி

     [சாந்து + அம்மி. அம்முதல் = அமுக்குதல், அமுக்கியரைத்தல். அம் + இ – அம்மி = அமுக்கியரைக்கவுதவுங்கல்]

சாந்தரை-த்தல்

சாந்தரை-த்தல் cāndaraittal,    4 செ.கு.வி. (v.i.)

   சாந்தினை அரைத்துக் கூழாக்குதல்; to grind sandal to make paste.

     [சாந்து + அரை-,]

சாந்தலிங்கக்கவிராயர்

 சாந்தலிங்கக்கவிராயர் cāndaliṅgakkavirāyar, பெ. (n.)

   தண்டலையார் சதகம் பாடியவர்; author of {}.

இவர் சோழநாட்டில் தண்டலைச்சேரியில் பிறந்தவர். தண்டலையார் சதகம், பழமொழி விளக்கம் எனவும் பெயர் பெறும் (அபி.சிந்.);.

சாந்தலிங்கசுவாமிகள்

சாந்தலிங்கசுவாமிகள் sāndaliṅgasuvāmigaḷ, பெ. (n.)

   கொலைமறுத்தல் முதலிய நூல்கள் இயற்றியவரும் 17ஆம் நூற்றாண்டினருமாகிய ஒரு வீரச் சிவனிய முனிவர்; a {} ascetic of the 17th century author of kolai- {} and some other works.

சாந்தவாரி

 சாந்தவாரி cāndavāri, பெ. (n.)

   தண்ணீர் விட்டான் (மலை.);; a common climber with many thick fleshy roots.

சாந்தாற்றி

சாந்தாற்றி cāndāṟṟi, பெ. (n.)

   1. சிற்றால வட்டம்; fan. ‘மணிக்கட் பீலி மின்னு சாந்தாற்றி’ (சீவக. 839);.

   2. பீலி விசிறி (அக.நி);; bunch of peacock’s feathers used as fan.

     [சாந்து + ஆற்றி]

சாந்தி1

__,

பெ. (n.);

   1. அமைதி; composure, tranquillity, peace.

     “சாந்தி மேவியுயர் தருமம் மல்கி”

   2. தணிவு; alleviation, pacification.

   3. கோள் கோளாறுகளை அமைதிப்படுத்தச் செய்யும் விழா; propiatory rites for averiting the evil influences of planets.

   4. கழுவாய்; remedy, antidote.

   5. திருவிழா; festival.

     “கபாலீச் சரமமர்ந்தான் பெருஞ்சாந்தி காணாதே” (தேவா. 1119. 1௦);.

   6. பூசை; worship, ‘ஆய்ந்த மரபிற் சாந்திவேட்டு’ (பதிற்றுப். 9௦, பதி.);.

   7. தீர்த்தங்கரர் இருபத்து நால்வருள் ஒருவர் (திருக்கலம். காப்பு. உரை);; a Jaina Arhat, one of 24 {}.

     [சாந்தம் → சாந்தி]

சாந்தம்1 பார்க்க

சாந்திக்கூத்தன்

சாந்திக்கூத்தன் cāndikāttaṉ, பெ. (n.)

   சாந்திக்கூத்து ஆடுபவன்; person performing the {}.

     ‘சாந்திக்கூத்தன் திருவாலன் திருமுது குன்றனான விஜயராஜேந்திர ஆசார்யனுக்கும்’ (S.I.I.ii. 306);.

     [சாந்தி + கூத்தன்]

சாந்திக்கூத்து

சாந்திக்கூத்து cāndikāttu, பெ. (n.)

   ஒன்பது வகைகளையுடையதும் கோயில்களில் திருவிழாக் காலங்களில், உலக மக்களின் அமைதி வேண்டி ஆடப்படுவதுமான கூத்து வகையுள் ஒன்று; a kind of dance calculated to give peace of mind to the people and other actors.

     “சித்திரைத் திருநாளுக்குக் கூத்தாடுகைக்குச் சாந்திக் கூத்தாடுகிற ஏழுநாட்டு நங்கைக்கு கூத்தாடுகைக்கு விட்டநிலம்-இந்நிலம் கொண்டு இத்திருநாளுக்கு ஆடக்கடவ கூத்து ஒன்பது ஆடுவாளாகவும்” (விக்கிரம சோழன், கி.பி. 1134, புதுக். கல். 128); (கல்கலை.அக.);.

     [சாந்தி + கூத்து]

சாந்திமத்தீவு

சாந்திமத்தீவு cāndimattīvu, பெ. (n.)

   மேல்கடற்கண் உள்ள ஒரு தீவு; an island in the Arabian sea.

     [சாந்திமம் + தீவு. தீர்வு → தீவு]

முதல் இராசேந்திரன் காலத்தில் இத்தீவு சோழர்களால் வெற்றி பெறப்பட்டது. யாரும் கிட்டுதற்கரிய அரண்களையுடையது சாந்திமத்தீவு என கூறப்படுகிறது (பிற். சோழ. வர. சதாசிவப்பண், பக். 155);.

சாந்திரகம்

சாந்திரகம் cāndiragam, பெ. (n.)

   1. இஞ்சி; green ginger.

   2. சுக்கு; dried ginger (சா.அக);.

சாந்திறாசு

 சாந்திறாசு cāndiṟācu, பெ. (n.)

   ஒரு வகை மரம் (L.);; Tasmanian pine.

சாந்து

சாந்து cāndu, பெ. (n.)

   1. சந்தன மரம்; sandal tree.

     “சாந்துசாய் தடங்கள்” (கம்பரா. வரைக்காட்சி. 44);.

   2. கலவைச் சந்தனம்; sandal paste.

     “புலர்சாந்தின்… வியன்மார்ப” (புறநா, 3);.

   3. அரிசி அல்லது கேழ்வரகைக் கருக்கிக் கூட்டப்பட்டதாய் நெற்றிக்கிடும் கருஞ்சாந்து; black pigment made of burnt rice or ragi, used as tilaka.

   4. திருநீறு; sacred ashes.

     “ஈசன சாந்தும்” (புறநா. 246);.

   5. விழுது; paste.

     “வெள்ளெட் சாந்து” (புறநா. 246);.

   6. சுண்ணாம்பு; mortar, plaster.

   7. மலம் (வின்.);; faeces.

   ம. சாந்து;   க.சாது, சாந்து;   தெ. சாது;   து. சாந்து;குட. சாந்தி

     [சார் → சார்த்து → சாத்து. சாத்துதல் = பூசுதல், திருமண் காப்பிடுதல், சந்தனம் பூசுதல். சாத்து → சாந்து = சுண்ணாம்புச் சேறு, அரைத்த சந்தனம் (வ.வ. 147, 148);]

 Skt. {}

சாந்துகா

 சாந்துகா cāndukā, பெ. (n.)

   வெளிச்சிப் பிசின்; the gem of wood apple tree (சா.அக.);.

     [சாந்து → சாந்துகா]

சாந்துகுத்து-தல்

சாந்துகுத்து-தல் cānduguddudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   சுண்ணாம்பை உலக்கையாற் குத்திச் சாந்தாக்குதல்; to pound mortar for use.

     [சாந்து + குத்து-,]

சாந்துகுழை-த்தல்

சாந்துகுழை-த்தல் cānduguḻaittal,    4 செ.கு.வி. (v.i.)

   1. பொட்டிடுதற்குச் சாந்து குழைத்தல்; to soften black pigment with water for use as tilaka.

   2. சுண்ணாம்பு முதலியன குழைத்தல்; to pound and temper mortar, etc.

ம. சாந்துகுழய்க்குக

     [சாந்து + குழை-,]

சாந்துகூட்டு-தல்

சாந்துகூட்டு-தல் cānduāṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   நெற்றிக்கிடுஞ் சாந்து உண்டாக்குதல்; to prepare {} or black pigment

     [சாந்து + கூட்டு-,]

சாந்துக்காரை

 சாந்துக்காரை cāndukkārai, பெ. (n.)

   சுவர் முதலியன பூசுதற்குரிய சுண்ணாம்பு (இ.வ.);; lime for plastering walls, etc.

     [சாந்து + காரை]

சாந்துக்காறை

 சாந்துக்காறை cāndukkāṟai, பெ. (n.)

   மகளிர் கழுத்தணிவகை (இ.வ.);; collar-like ornament worn by women.

     [சாந்து + காறை]

சாந்துக்கோய்

சாந்துக்கோய் cāndukāy, பெ. (n.)

   சாந்துப்பரணி; perfume box or casket.

     “ஓடிச் சாந்துக்கோய் புகிய செல்வ” (சீவக. 764);.

     [சாந்து + கோய்]

சாந்துசாத்தி

 சாந்துசாத்தி cānducātti, பெ. (n.)

   கோயிலில் மூலவர்க்கு நெய்க் காப்பிடுகை (R.);; anointing of an idol.

     [சாந்து + சாத்தி. சார் → சார்த்து → சாத்தி]

சாந்துசேவை

 சாந்துசேவை cānducēvai, பெ. (n.)

சாந்துசாத்தி (R.); பார்க்க;See {}.

     [சாந்து + சேவை]

 Skt. {} → த. சேவை

சாந்துதேய்-த்தல்

சாந்துதேய்-த்தல் cāndutēyttal,    5 செ.கு.வி. (v.i.)

சாந்தரை-த்தல் பார்க்க;See {}.

ம. சாந்துதேய்க்குக

     [சாந்து + தேய்-,]

சாந்துபூசு-தல்

சாந்துபூசு-தல் cāndupūcudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. சந்தனம் முதலியவை பூசுதல் (வின்.);; to smear the body with sandal or other unguents.

   2. சுண்ணாம்பு பூசுதல்; to plaster a wall.

ம. சாந்துபூசுக

     [சாந்து + பூசு-,]

சாந்துப்படி

 சாந்துப்படி cānduppaḍi, பெ. (n.)

   சந்தனக் குழம்பு தருவதற்கான படி; allowance for supplying sandal paste (சேரநா.);.

ம. சாந்துப்படி

     [சாந்து + படி]

சாந்துப்புறம்

சாந்துப்புறம் cānduppuṟam, பெ. (n.)

   சந்தனம் கொடுத்துவருவதற்காக விடப்பட்ட இறையிலி நிலம் (சீவக. 2577);; land granted rent-free for supplying sandal paste to the king.

     [சாந்து + புறம்]

சாந்துப்பொடி

 சாந்துப்பொடி cānduppoḍi, பெ. (n.)

   மணப் பொடி (வின்.);; perfumed powder.

     [சாந்து + பொடி]

சாந்துப்பொட்டு

 சாந்துப்பொட்டு cānduppoṭṭu, பெ. (n.)

   கருஞ்சாந்தால் நெற்றியிலிடும் பொட்டு; tilaka made with black pigment. க. சாது;

தெ. சாது

     [சாந்து + பொட்டு]

சாந்துருவம்

 சாந்துருவம் cānduruvam, பெ. (n.)

   சுண்ணச் சிலை; plaster statue (கழ.அக.);.

     [சாந்து + உருவம்]

சாந்துலக்கை

 சாந்துலக்கை cāndulakkai, பெ. (n.)

   சுண்ணாம்புச் சாந்து குத்தும் உலக்கை; pestle for pounding mortar.

     [சாந்து + உலக்கை. உல் → உலம் = திரட்சி. உலம் → உலக்கை = திரண்ட தடி]

சாந்துவாரி

 சாந்துவாரி cānduvāri, பெ. (n.)

   குப்பைக்காரன் (வின்.);; scavenger.

{சாந்து + வாரி]

சாந்தை

சாந்தை cāndai, பெ. (n.)

   மலைமகள் (கூர்மபு. திருக்கலியாண. 23);;{}.

சானகி

சானகி1 cāṉagi, பெ. (n.)

   1. பொன்னாங்காணி (மலை);; plant growing in damp places.

   2. கொற்றான்செடி; a plant.

 சானகி2 cāṉagi, பெ. (n.)

   மூங்கில் (யாழ்அக);; bamboo.

     [சானகம் → சானகி]

சானகை

 சானகை cāṉagai, பெ. (n.)

சானிகை (இவ.); பார்க்க;See {}.

சானக்கிமேனி

 சானக்கிமேனி cāṉakkimēṉi, பெ. (n.)

   குப்பை மேனிச் செடி; rubbish plant – Acalypha indica (சாஅக.);.

சானக்கு

 சானக்கு cāṉakku, பெ.(n.)

   அரைத்தட்டுப் போன்ற மண் சட்டி; a plate like pot.

     [சாளக்கு-சாணக்கு]

சானமாவு

 சானமாவு cāṉamāvu, பெ. (n.)

   ஒசூர் வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Hosur Taluk.

     [சானன்+ [மா]மாவு]

சானம்

சானம்1 cāṉam, பெ. (n.)

   பெருங்காயம் (மூஅ);; asafoetida.

 சானம்2 cāṉam, பெ. (n.)

   சாதிலிங்கம்; vermilion.

 சானம்3 cāṉam, பெ. (n.)

   1. அம்மி (யாழ்அக);; millstone.

   2. உரைகல்; touchstone.

சானிகை

 சானிகை cāṉigai, பெ. (n.)

   மண்ணாற் செய்த தட்டு; earthen dish (madr);.

தெ. சானிக

சானித்தட்டு

 சானித்தட்டு cāṉittaṭṭu, பெ. (n.)

   மாட்டுச் சாணத்தை அள்ளப்பயன்படும்தட்டு; a basket used to take cow dug.

     [சாணி+தட்டு]

சானினி

சானினி cāṉiṉi, பெ. (n.)

   1. சிறுகீரை (மலை.);; amaranth.

   2. சேம்பு; cocco, coarse herb.

     [சாகினி → சானினி]

சானீளம்

 சானீளம் cāṉīḷam, பெ. (n.)

   ஒரு படைச்சால் நீளம்; a furllong.

     [சால் + நீளம்]

சானுர்

சானுர் cāṉur, பெ. (n.)

   பல்லவர் நாட்டுச் சிற்றூர்; a village in pallava territory. (புல். செ. 74.);.

     “காளத கோத்திரத்து ஆவத்தம்பச் குத்திரத்து சானூர்வத்தவன் கூள சர்மன்”

     [சாண்+ஊர்]

சான்மலம்

 சான்மலம் cāṉmalam, பெ. (n.)

சான்மலி (மூ.அ.); பார்க்க;See {}.

     [சான்மலி → சான்மலம்]

சான்மலி

சான்மலி cāṉmali, பெ. (n.)

   1. இலவு (பிங்.);; red flowerd silk – cotton tree.

   2. சான்மலித்துவீபம் பார்க்க;See {}.

     “கன்னல் வளைந்துடைய தீபஞ் சான்மலியாம்” (கந்தபு. அண்டகோ. 53);

   3. ஒரு நிரயம் (நரகம்); (சி.போ.பா. 2, 3, பக். 204);; a hell.

     [சால் + மலி]

சான்மலிசாரம்

 சான்மலிசாரம் cāṉmalicāram, பெ. (n.)

   இலவம் பிசின் (யாழ்.அக.);; resin of the silk-cotton tree.

     [சான்மலி + சாரம்]

சான்மலித்தீவு

சான்மலித்தீவு cāṉmalittīvu,    பெ. (n) இலவந்தீவு; an annular continent named after silk-cotton tree.

     “சான்மலித் தீவின் வேந்தன்” (நைடத. சுயம்வர. 135);.

     [சான்மலி + தீவு. தீர்வு → தீவு]

சான்மலித்துவீபம்

 சான்மலித்துவீபம் cāṉmalittuvīpam, பெ. (n.)

சால்மலித்தீவம்;{}.

     [சான்மலி + துவீபம். தீர்தல் = நீங்குதல். தீர் → தீர்வு → தீவு]

 Skt. {} → துவீபம்

சான்மூலிகை

 சான்மூலிகை cāṉmūligai,    பெ. (n) சிறுதேக்கு; small teak – cleadendron serratum (சா.அக.).

     [சான் + மூலிகை]

சான்ற

 சான்ற cāṉṟa, பெ.எ. (adj.)

   இயல்பு, தன்மை, பண்பு முதலியவற்றைக் குறிக்கும் பெயர்களோடு இணைக்கப்படும்போது, ‘உள்ள’, ‘நிறைந்திருக்கிற’ என்னும் பொருளில் பயன்படுத்தும் சொல்; when added to nouns of quality, nature, etc. it is used in the sense of

     “having’, being full of.

     ‘புகழ் சான்ற தலைவர்’ (உ.வ.);.

     [சால் → சான்ற]

சான்றளி-த்தல்

சான்றளி-த்தல் cāṉṟaḷittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   விளத்தம் உண்மையானது என்று அல்லது அவற்றின் படி உண்மையானது என்று கையொப்பமும் முத்திரையும் இட்டு உறுதியளித்தல்; to certify (a fact); attest (a copy);.

     ‘விண்ணப்பத்துடன் சான்றளிக்கப்பட்ட மதிப்பெண் பட்டியலையும் இணைத்து அனுப்புக’ (உ.வ.);.

     [சான்று + அளித்தல்]

சான்றவன்

சான்றவன் cāṉṟavaṉ, பெ. (n.)

   சான்று கூறுவோன்; a witness.

     “பொய்த்த சான்றவன் குலமென” (கம்பரா. வருணனை. 25);.

     [சான்று → சான்றவன்.]

சான்றவர்

சான்றவர் cāṉṟavar, பெ. (n.)

   1. சான்றோர்1 பார்க்க;See {},.

     “சான்றவர் சான்றாண்மை குன்றின்” (குறள், 990);.

   2. சான்றோர்2 பார்க்;See {}-2,

     “ஞாலமேழ் புகழுஞ் சான்றவ ருடனே” (திருவாலாவ. 17, 6);.

     [சால் → சான் → சான்றவர்]

சான்றாண்மை

சான்றாண்மை1 cāṉṟāṇmai, பெ. (n.)

   1. பெருந்தன்மை;   நற்குணங்கள் பல்லாற் றானும் அமைதல் (குறள். அதி, 99, மணக் குடவர்);; nobility, greatness,

     “சான்றாண்மை தீயினஞ்சேரக் கெடும்” (நாலடி. 179);.

   2. பொறுமை,

   பலகுணங்களானும் நிறைந்து அவற்றை ஆளுந்தன்மை (குறள், அதி. 99, பரிமே);; self- control, patience.

     “கதனன்று சான்றாண்மை தீது” (சிறுபஞ். 17);.

ம. சான்னாய்

     [சுல் → சோல் → சால். சாலுதல் = நிறைதல். சால = மிக. சால் → சான்றோர். சால் – சான்றாண்மை = எல்லா நற்குணங்களும் நிறைந்து அவற்றை ஆளுந்தன்மை (மு.தா.158);]

 சான்றாண்மை2 cāṉṟāṇmai, பெ. (n.)

   கள்ளிறக்கும் தொழில்; toddy-drawing.

     “சான்றாண்மை பயின்றார்” (குமரபிர. மதுரைக்.24);.

     [சாறு = கள். சாறு + ஆண்மை – சாற்றாண்மை → சான்றாண்மை]

சான்றார்

சான்றார்1 cāṉṟār, பெ. (n.)

சான்றோர் பார்க்க;See {}.

     “சான்றாருட் சான்றானெனப்படுதல்” (திரிகடு.82);. ம. சான்றான்

     [சால் → சான் → சான்றோர்]

 சான்றார்2 cāṉṟār, பெ. (n.)

சாணார்;{}.

     “சான்றான்மாட்டு மேனிப்பொன்னும்” (T.A.S. lI. 67);.

     [சான்றோர் = போர் மறவர் “தேர்தர வந்த சான்றோரெல்லாம்” (புறம்.63); சான்றோர் → சான்றார். “ஈழக்குலச் சான்றார் ஏனாதி நாயனார்” (பெரியபு.15:2);]

இப்பிரிவினருடைய தொழில் கள்ளிறக்குதல், கருப்பட்டி காய்ச்சுதல், வாணிகஞ்செய்தல், குடிக்காவல், படைக்கலம் பயிற்றல் ஆகியன. இதில் கருக்கு மட்டையன், மேனாட்டான், கொடிக்கால் நாட்டாத்தி, பிழுக்கை என்னும் பிரிவுகளுண்டு.

நாடார், சேர்வைகாரன் என்பன, இவர்களின் குலப்பட்டப் பெயர்கள். முக்குந்தன் என்பது வழக்கு வீழ்ந்தது (தமி.வ.111);.

சான்றாளி

 சான்றாளி cāṉṟāḷi, பெ. (n.)

சான்று கூறுபவன்

 a witness.

சான்றாளன் பார்க்க; see cānrāļan.

     [சான்று+ (ஆள்); + ஆளி]

சான்றிதழ்

 சான்றிதழ் cāṉṟidaḻ, பெ. (n.)

   பிறப்பு, கல்வி முதலிய குறித்துக் குறிப்பிட்ட விளக்கமளித்து அதற்குரிய அதிகாரி அல்லது அமைப்பு வழங்கும் எழுத்து வடிவான சான்று; testimonial;certificate.

ஓட்டுநர் பயிற்சிச் சான்றிதழ் வாங்க வேண்டும்.

     [சான்று + இதழ்]

சான்று

சான்று cāṉṟu, பெ. (n.)

   கரி; witness, evidence.

     “வன்னிமரமு மடைப்பளியுஞ் சான்றாக” (சிலப். 21: 5);.

     [சால் → சான்று]

சான்றுரை

 சான்றுரை cāṉṟurai, பெ. (n.)

   சான்றுக்காகச் சொல்லும் உரை; evidence, demonstration.

     [சான்று + உரை]

சான்றுறுதி

 சான்றுறுதி cāṉṟuṟudi, பெ. (n.)

   எழுத்துமூலம் அளிக்கும் உறுதி; testimony.

     [சான்று + உறுதி]

சான்றொப்பம்

 சான்றொப்பம் cāṉṟoppam, பெ. (n.)

சான்றிதழ், ஆவணம் முதலியவற்றில் கொடுக் கப்பட்டுள்ள விளத்தம் உண்மையானது அல்லது அவற்றின் நேர்ப்படி உண்மையானது என்று இடப்படும் கையெழுத்து

 attesta.copy, certify.

விண்ணப்பத்தில் சான்றொப்பம் வாங்கிவா.

     [சான்று+ஒப்பம்]

சான்றோன்

சான்றோன்1 cāṉṟōṉ, பெ. (n.)

   அறிவொழுக்கங் களாற் சிறந்தவன்; a wise, learned and

 respectable man.

     “சான்றோ னாக்குதல் தந்தைக்குக் கடனே” (புறநா. 312);.

     [சால் → சான் → சான்றோன்]

தாமாக உயர்ந்த ஒழுக்கம் பூணும் ஒரு சிலரே சான்றோர். ஏனையோரெல்லாம், அரசனின் தண்டனைக்கஞ்சியே ஒழுக்கத்தைக் கடைப் பிடிப்பவராவர்.

 சான்றோன்2 cāṉṟōṉ, பெ. (n.)

   மாழ்கு விண்மீன் (மிருகசீரிடம்); (பிங்.);; the fifth {}.

 சான்றோன்3 cāṉṟōṉ, பெ. (n.)

   கதிரவன் (பிங்.);; sun.

     [சான்று → சான்றோன்]

சான்றோன்மூலி

 சான்றோன்மூலி cāṉṟōṉmūli, பெ. (n.)

   கொடி எலுமிச்சை; lemon creeper – Citrus medica limonum (சா.அக.);.

     [சான்றோன் + மூலி]

சான்றோராட்சி

 சான்றோராட்சி cāṉṟōrāṭci, பெ. (n.)

   கற்றோர் வழக்கு; the learned usages.

     [சான்றோர் + ஆட்சி]

சான்றோர்

சான்றோர் cāṉṟōr, பெ. (n.)

   1. அறிவொழுக்கங் களால் நிறைந்த பெரியோர்; the great, the learned, the noble.

     “சான்றோர் செய்த நன்றுண்டாயின்” (புறநா. 34:2௦);.

   2. கழகக் காலத்துப் புலவர்; poets of the {} period.

     “சான்றோர் செய்யுளில் இன்சாரியை உருபுபற்றாது நிற்றல் நோக்கி” (தொல்.சொல். 1, உரை);.

   3. வீரர்; warriors.

     “தேர்தர வந்த சான்றோ ரெல்லாம்” (புறநா. 63, 5);.

மறுவ. மிக்கோர், நல்லோர், தகுதியோர், மேலோர், ஆய்ந்தோர், ஆன்றவர், உலகம், மேதாவியர்

     [சாலுதல் = நிறைதல். சால் → சான் → சான்றோர் = அறிவு நிறைந்தோர் (மு.தா.158);]

சான்றோர்தன்மை

 சான்றோர்தன்மை cāṉṟōrtaṉmai, பெ. (n.)

   சான்றோர்க்குரிய எட்டுத் தன்மைகள்; the eight qualities of learned men.

     [சான்றோர் +தன்மை]

சாபஞ்சியம்

 சாபஞ்சியம் cāpañjiyam, பெ. (n.)

   சீரகம்; cummin seed (சா.அக.);.

சாபத்திரி

 சாபத்திரி cāpattiri, பெ. (n.)

   சாதிபத்திரி (கொ.வ.);; mace.

சாபமிடு-தல்

சாபமிடு-தல் cāpamiḍudal,    17 செ.குன்றாவி. (v.t.)

   திட்டுதல்; to curse, revile.

க. சாபகொடு

     [சாபம் + இடு-,]

சாபம்

சாபம்1 cāpam, பெ. (n.)

   தவத்தோர் கடிந்து கூறும் மொழி; curse, imprecation.

     “தடுப்பருஞ் சாபம்” (கம்பரா. அகலிகை. 7);.

ம. சாபம்

     [சா → சாவி (பி.வி.);. சாவித்தல் = அங்கதம் பாடி அல்லது சினந்துரைத்துச் சாகப் பண்ணுதல், சாவு குறித்த சொற்களைச் சொல்லித் திட்டுதல்.

வாழ்த்து (வாழவை); என்னும் பிற வினைக்கு எதிராகச்சாவியென்னுஞ் சொல்லே பொருத்தமாயிருத்தல் காண்க. இனி, ஒருவன் கடுமையாகத் திட்டும்போது,

     “சாவிக்கிறன்” என்று கூறும் உலக வழக்கையும் நோக்குக (வ.வ. 147);.

     [சாவி → சாவம் → சாபம்]

 சாபம்2 cāpam, பெ. (n.)

   1. மூங்கிலால் செய்த வில்; bow made of bamboo.

   2. வில்; bow.

     “சாபஞ்சாத்திய கணை துஞ்சு வியனகர்” (பெரும்பாண். 121);.

   3. வானவில்; rainbow.

   4. சிலை ஒரை (தனுசு); (திவா.);; sagittarius of the zodiac.

மறுவ. கொடு, மரம், சிலை.

   ம. சாபம்;க. சாப

     [ஆவம் = மூங்கில். ஆவம் → சாவம் = வில். சாவம் → சாபம்]

த. சாபம் → Skt. {}

 சாபம்3 cāpam, பெ. (n.)

   விலங்கின் குருளை; the younger of an animal.

     “சாபவெங் கோளரியென” (பாரத. சம்பவ. 40);.

 சாபம்4 cāpam, பெ. (n.)

   விலக்கப்பட்டது; that which is prohibited or banned.

     “உலகத்தார் சாபமென்று ஆசெளசங் கொள்கின்றது மாம்சத்தையன்றே” (நீலகேசி, 341, உரை.);.

சாபம்கொடு-த்தல்

சாபம்கொடு-த்தல் cāpamkoḍuttal,    4 செ.குன்றாவி. (v.t.)

சாபமிடு-தல் பார்க்க;See {}.

க. சாபகொடு

     [சாபம் + கொடு-,]

சாபர்த்தி

 சாபர்த்தி cāpartti, பெ.(n.)

   கிருட்டிணகிரி வட்டத்திலுள்ள வட்டத்திலுள்ள சிற்றுர்; a villagein KrishnagiriTaluk.

சாபறை

சாபறை cāpaṟai, பெ. (n.)

சாப்பறை2 (யாழ்.அக); பார்க்க;See {}.

     [சா + பறை]

சாபவான்புழு

சாபவான்புழு cāpavāṉpuḻu, பெ. (n.)

   வில்லூன்றிப்புழு (ஞானா.20);; an insect.

சாபாவனி

சாபாவனி cāpāvaṉi, பெ. (n.)

   அரசிறையைத் தவிர்ப்பதற்காக ஒளித்துச் செய்யும் பயிர்த் தொழில் (M.Sm. D. I. 278);; concealment of cultivation for the purpose of evading payment of government revenue.

சாபி-த்தல்

சாபி-த்தல் cāpittal,    4 செ.குன்றாவி. (v.t.)

சாவி1-த்தல் பார்க்க;See {}.

     “கேள்வித் தலைவரைச் சாபியா” (உபதேசிகா. அயமுகி. 75);.

     [சவி → சபி → சாபி]

சாபிணம்

சாபிணம் cāpiṇam, பெ. (n.)

   வலியற்றுச் சாகுநிலையிலுள்ளவன் (வின்.);; weak old person, as one about die-used in contempt.

     [சா1 + பிணம்]

சாபிள்ளை

 சாபிள்ளை cāpiḷḷai, பெ. (n.)

சாப்பிள்ளை (வின்.); பார்க்க;See {}.

     [சா + பிள்ளை]

சாபுதாளம்

 சாபுதாளம் cāputāḷam, பெ. (n.)

சாப்புதாளம் பார்க்க;See {}.

     [சாப்புதாளம் → சாபுதாளம்]

சாப்டுர்

 சாப்டுர் cāpṭur, பெ.(n.)

   திருமங்கலம் வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Tirumangalam Taluk.

     [ஒருகா. சாப்பாட்டு+ஊர்]

சாப்படுக்கை

 சாப்படுக்கை cāppaḍukkai, பெ. (n.)

   இறுதிப் படுக்கை, சாவுக்குரிய இறுதிநோய்; death bed.

     [சா + படுக்கை. பள் → படு → படுக்கை]

சாப்பறை

சாப்பறை1 cāppaṟai, பெ. (n.)

   நெய்தல் நிலப் பறை; maritime district drum (கழ.அக.);.

     [சா + பறை]

 சாப்பறை2 cāppaṟai, பெ. (n.)

   சாவில் அடிக்கப்படும் பறை (திவா.);; funeral drum.

     [சா + பறை]

சாப்பாக்கொடு-த்தல்

சாப்பாக்கொடு-த்தல் cāppākkoḍuttal,    4 செ.கு.வி. (v.i.)

   சுருதியோடு இசைய வேண்டி முழவைத் தட்டிப் பார்த்தல்; to test the tone of a {} by striking it.

     [சாப்பா + கொடு-,]

சாப்பாடு

சாப்பாடு1 cāppāṭu, பெ. (n.)

   1. கவளங் கவளமாகக் கறிவகைகளுடன் (அல்லது அவையின்றிக்); குழம்பும் சாறும் மோரும் (அல்லது அவற்றுள் ஒன்று); கலந்து உண்பதற்கான சோறு; boiled rice with or without side dishes, sauce, buttermilk, etc.

   2. உணவு; food, meal especially of human beings.

     “நல்வண்ணமென்னி லொரு சாப்பாடு” (திறவேங். சத. 29);.

   ம. சாப்பாடு;தெ. சாபாடு

     [சப்பு → சப்பிடு → சாப்பிடு → சாப்பாடு]

 சாப்பாடு2 cāppāṭu, பெ. (n.)

   நல்ல அடி; drubbing.

     ‘நீ சேட்டை பண்ணினால் சாப்பாடு கிடைக்கும்’ (உ.வ.);.

   ம. சாப்பாடு;தெ. சாபாடு

     [சப்பு → சப்பிடு → சாப்பிடு → சாப்பாடு]

சாப்பாட்டுக்கடை

சாப்பாட்டுக்கடை cāppāḍḍukkaḍai, பெ. (n.)

   1. பணங்கொடுத்துச் சாப்பிடுங் கடை; hotel, restaurant.

   2. உணவிடுகை; serving of food. சாப்பாட்டுக்கடை முடிந்துவிட்டதா?

     [சாப்பாடு + கடை]

சாப்பாட்டுராமன்

சாப்பாட்டுராமன் cāppāṭṭurāmaṉ, பெ. (n.)

   1. பெருந்தீனிக்காரன்; glutton.

   2. பயனற்றவன்; good-for-nothing fellow.

     [சாப்பாடு + ராமன்]

இராம காதைத் தலைவன் இராமன் மாந்தப் பண்புகளின் உயர்விடமாகக் காட்டப் பட்டுள்ளதையொற்றிப் பிறசெயல்களிலும் மேலானவன் (உண்பதில் முன்னிற்பவன்); எனக் காட்டும் முகத்தான் ஆளப்பட்ட சொல். ஒநோ: தண்டச்சோத்துத் தடிராமன், திண்ணைத் தூங்கி இராமன்.

சாப்பாட்டுவிடுதி

 சாப்பாட்டுவிடுதி cāppāḍḍuviḍudi, பெ. (n.)

   பணங்கொடுத்து உண்ணும் உண்டிச்சாலை (இ.வ.);; hotel.

     [சாப்பாடு + விடுதி]

சாப்பாணம்

 சாப்பாணம் cāppāṇam, பெ. (n.)

   யாழ்ப்பாணம்; a northern province of Ceylon, Jaffna (சேரநா.);.

ம. சாப்பாணம்

     [யாழ்ப்பாணம் → சாப்பாணம்]

சாப்பிடு

சாப்பிடு1 cāppiḍudal,    18 செ.குன்றாவி. (v.t.)

   1. குழம்பும் சாறும் மோரும் (அல்லது அவற்றுள் ஒன்று); கலந்த சோற்றைக் கவளங் கவளமாகக் கறிவகைகளுடன் (அல்லது அவையின்றி); உட்கொள்ளுதல்; to take into mouth chew and swallow boiled rice with or without side dishes, sauce, butter milk, etc. இருவரும் ஒன்றாகத்தான் சாப்பிடச் செல்வோம்.

   2. திட உணவுகளை உண்ணுதல்; to eat solid foods, eatables.

பழம் சாப்பிடப் பெரும் பாலோர்க்கு ஆசை.

   3. பருகையை (நீர்மத்தை); க் குடித்தல்; to drink. தேநீர் சாப்பிடச் சென்றனர்.

   4. புகைத்தல் (புகை பிடித்தல்);; to smoke.

வெண் சுருட்டு (சிகரட்); சாப்பிடும் பழக்கம் கேடானது.

   ம. சாப்பிடுக;தெ. சாபடு

     [சப்பு → சப்பிடு → சாப்பிடு-,]

 சாப்பிடு2 cāppiḍudal,    18 செ.குன்றாவி. (v.t.)

   கவர்தல்; to consume, misappropriate

ஊர்ப்பணத்தைச் சாப்பிடக் கூடாது.

ம. சாப்பிடுக

     [சப்பிடு → சாப்பிடு]

சாப்பிரா

 சாப்பிரா cāppirā, பெ. (n.)

   சிறுமரவகை (I.P.);; arnotto.

தெ. சாபரா

சாப்பிராவிதை

 சாப்பிராவிதை cāppirāvidai, பெ. (n.)

   குரங்குமூஞ்சி விதை; arnotto, monkey turmeric- Bixa orellana (சா.அக);.

     [சாப்பிரா + விதை]

சாப்பிள்ளை

 சாப்பிள்ளை cāppiḷḷai, பெ. (n.)

   கருவிலே இறந்துவிழும் பிள்ளை; stil-born child.

     ‘சாப்பிள்ளைபெற்றுத் தாலாட்டலாமா?’ (இ.வ.);.

ம. சாப்பிள்ள, சாகிடாவு

     [சா + பிள்ளை]

சாப்பீடு

 சாப்பீடு cāppīṭu, பெ. (n.)

     ‘சப்பு’ எனும் உயர்திணை ஒலிக்குறிப்பினின்று தோன்றிய ஒலிக்குறிப்புச் சொல்;

 onom. expr. word signifying Smacking sound.

     [சப்பு → சப்பிடு → சாப்பிடு → சாப்பீடு]

சாப்பு

சாப்பு1 cāppudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   அடித்தல்; to strike.

     “கேவரகைத் தண்டெடுத்துக் கேப்பை யென்று சாப்பினேன்” (நெல்விடு. 416);.

     [சாய் → சாய்ப்பு → சாப்பு-,]

 சாப்பு2 cāppu, பெ. (n.)

   படி (C.G.);; copy, transcript.

     [சாய் → சாயை = நிழல். சாய் → சாயல் = ஒப்பு. சாய் → சாய்பு → சாய்ப்பு → சாப்பு]

 சாப்பு3 cāppu, பெ. (n.)

   ஒருவகைத் தாளம்; a kind of cymbal (கழ.அக..);.

சாப்புத்தாளம்

 சாப்புத்தாளம் cāpputtāḷam, பெ. (n.)

   தாளவகை; variety of time-measure (Mus.);.

     [சாப்பு + தாளம்]

சாப்புள்

 சாப்புள் cāppuḷ, பெ. (n.)

சாக்குருவி பார்க்க;See {}.

     [சா + புள்]

சாப்பை

சாப்பை1 cāppai, பெ. (n.)

   புற்பாய் (திவா.);; mat made of grass or rushes.

   ம. சாப்ப;   க. சாப, சாபெ, சாபெ;   தெ. சாப;   து. சாபெ, சாபெ;   துட. சோப்ய;பட. சாபெ.

     [சாய் + பாய் = சாய்ப்பாய் → சாப்பை (கொ.வ.);. சாய் = பாய்முடையப் பயன்படும் நீர்க்கால் புல்வகை]

 சாப்பை2 cāppai, பெ. (n.)

   ஆற்றலில்லாதவன் (வின்.);; weak-minded person.

     [சப்பை → சாப்பை]

சாப்பைக்கொண்டான்

 சாப்பைக்கொண்டான் cāppaikkoṇṭāṉ, பெ. (n.)

   சாப்பைக் சொண்டான் பார்க்க;{} (சா.அக.);.

     [சாப்பைச்சொண்டான் → சாப்பைக் கொண்டான்]

சாப்பைச்சொண்டான்

 சாப்பைச்சொண்டான் cāppaiccoṇṭāṉ, பெ. (n.)

   நாரைவகை (யாழ்ப்);; spoonbill, species of platalea.

சாப்பொறி

 சாப்பொறி cāppoṟi, பெ. (n.)

   காப்பாகத் தோன்றினாலும் உயிருக்குப் பேரிடர் தரக்கூடிய இடம்; death-trap.

     [சா + பொறி]

சாமகானம்

 சாமகானம் cāmakāṉam, பெ.(n.)

   பாடல் வகைகளிற் ஒன்று; a type of musical tune.

     [சாமம்+கானம்]

தமிழ்ப்பண்களில், பாடப்பெறும் வேதப்பாடல்.

சாமக்காரன்

 சாமக்காரன் cāmakkāraṉ, பெ. (n.)

இரவுக் காவலாளன் (யாழ்ப்.);, night-watch.

     [சாமம் + காரன்;

சாமம் =இரவு, நடுஇரவு]

சாமக்காவல்

 சாமக்காவல் cāmakkāval, பெ. (n.)

   இரவுக் காவல் (யாழ்.அக.);; night-watch.

     [சாமம் + காவல்]

சாமக்கிழங்கு

 சாமக்கிழங்கு cāmakkiḻṅgu, பெ. (n.)

   ஒரு வகைக் கிழங்கு; the root of a plant – Colocasia antiquorum (சா.அக.);.

     [சாமம் + கிழங்கு. கிழக்கு → கிழங்கு = நிலத்தின்கீழ் விளைவது]

சாமக்கீரை

சாமக்கீரை cāmakārai, பெ. (n.)

   கீரை வகை (விவசா. 4);; a kind of greens.

சாமக்கோடங்கி

 சாமக்கோடங்கி cāmakāṭaṅgi, பெ.(n.)

   நடு இரவில் வந்து குறி சொல்பவர்; midnight fore-teller.

     [யாமம்-சாமம்+கோடங்கி]

     [P]

சாமக்கோழி

சாமக்கோழி cāmakāḻi, பெ. (n.)

   நள்ளிரவில் கூவுங்கோழி; cock crowing at midnight.

     “உறங்குமது தான் சாமக்கோழி (திவ். திருப்பா. 18, வ்யா, பக். 17௦);.

து. சாமகோரி

     [சாமம் + கோழி]

     [p]

சாமசம்

 சாமசம் sāmasam, பெ. (n.)

   யானை; elephant.

     [யாமயம் → சாமயம் → சாமசம் = கரு நிறமுடையது. ஓ.நோ: யாமம் → சாமம்]

சாமணம்

 சாமணம் cāmaṇam, பெ. (n.)

   தட்டார் கருவி வகை (C.E.M.);; nippers, pincers.

ம. சாமணம்

     [சாவணம் → சாமணம்]

சாமண்டகம்

 சாமண்டகம் cāmaṇṭagam, பெ. (n.)

   சரக்கொன்றை; cassia (சாஅக.);.

சாமத்திரம்

 சாமத்திரம் cāmattiram, பெ. (n.)

   கருங்காலி; black wood (சா.அக.);.

     [சாமம் + திரம். சாமம் – கருநிறமுடையது]

சாமந்தநாராயணத்தொண்டைமான்

 சாமந்தநாராயணத்தொண்டைமான் cāmandanārāyaṇattoṇṭaimāṉ, பெ. (n.)

   தஞ்சையில் சாமந்த நாராயண விண்ணகர் கட்டியவன்; the builder of {} at Tanjore (அபி.சிந்.);.

     [சாமந்தன் + நாராயணன் + தொண்டைமான்]

சாமந்தன்

சாமந்தன்1 cāmandaṉ, பெ. (n.)

   1. அமைச்சன் (சது.);; king’s minister.

   2. படைத்தலைவன்;     “சேனை யோட்டு சாமந்தராகி” (திருவாலவா. 59, 16);.

   3. சிற்றரசன்; feudatory prince, petty ruler.

     “சண்டவார் சிலை சாமந்தர் வாங்கினார்” (பாரத. முதற்போ.24);.

ம. சாமந்தன், சாமந்தன்

     [அம்முதல் = பொருந்துதல், கூடுதல், நெருங்குதல் அம் → அமை. அமைதல் = பொருந்துதல், சேர்தல், நெருங்குதல். அம் → அமை → அமைத்தோன் → அமைச்சன் = அரசனுடன் நெருங்கி இருந்து அரசுச் செயல்களை நிறை வேற்றுபவன், செயலாற்றும் பணியாளர். அமைந்தோன் → அமைந்தன் → சமைந்தன் → சமந்தன் → சாமந்தன்]

 சாமந்தன்2 cāmandaṉ, பெ. (n.)

   குலப்பூடண பாண்டியனின் படைத்தலைவன்; amy chief of {}.

     [சாமந்தன்1 → சாமந்தன்]

அரசன் படை திரட்டக் கொடுத்த பணத்தை அறவழியில் செலவிட்டவன். இவன் பொருட்டு மதுரைக் கடவுள் மெய்க் காட்டிட்ட திருவிளையாடலைச் செய்தார் என்று திருவிளையாடல் தொன்மம் கூறுகிறது (சிற.பெஅக.);.

சாமந்தன்காசு

சாமந்தன்காசு cāmandaṉkācu, பெ. (n.)

   பழைய மாழையால் ஆன பண (நாணய); வகை (சரவண. பணவிடு.56);; an ancient coin.

     [சாமந்தன் + காசு. காழ் → காசு]

சாமந்தம்

சாமந்தம்1 cāmandam, பெ. (n.)

   ஒரு பண் (சது.);; a kind of tune.

 சாமந்தம்2 cāmandam, பெ. (n.)

   பக்கம் (யாழ்.அக.);; neighbourhood.

     [அம்முதல் = நெருங்குதல், அடைதல், பொருந்துதல். அம் → அமை. அமைதல் = நெருங்குதல் (மலைபடு. 181);. அமை = நெருக்கம், அண்மை. அமை → Skt. {}. அமை → அமைந்தம் → சமைந்தம் → சாமந்தம்]

சாமந்தவாடா

 சாமந்தவாடா cāmandavāṭā, பெ.(n.)

   திருத்தணி வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Tiruttani Taluk.

     [சாமந்தன்+பாடி]

சாமந்தி

சாமந்தி cāmandi, பெ. (n.)

   1. ஒருவகைப் பூச்செடி; Indian chamomile or chinese flower – Chrysanthemum indicum.

தெ. சேமந்தி, க. சேவந்தி

     [சாமம் + அந்தி – சாமம். அந்தி → சாம அந்தி – மாலையந்தி. சாம அந்தி → சாமந்’தி = அந்தி வண்ணம், அந்தி வண்ணம் போன்ற நிறமுடைய பூ வகை]

செவ்வந்தி – Skt. {}

சாமந்தியை, நாட்டுச் சாமந்தி, சீமைச் சாமந்தி என இருவகைப்படுத்தியும் அதன் பூவின்

நிறத்தை வைத்து மஞ்சள், வெள்ளை, நீலம் என வகைப்படுத்தியும் குறிப்பதுண்டு.

பூவின் வகைகள்

   1. நாட்டுச் சாமந்தி – தோட்டச் சாமந்தி; garden chamomile – Chrysan themum indicum.

   2. மஞ்சள் சாமந்தி; yellow chamomile – Chrysanthemum caronarium.

   3. வெள்ளைச் சாமந்தி; white chamomile – Chrysanthemum crinatum

   4. சிவப்புச் சாமந்தி; red chamomile – Chrysanthemum roxburghi.

   5. நீலச் சாமந்தி; blue chamomile – Chrysanthemum genus.

   6. சீமைச் சாமந்தி; Europe chamomile – Anthemis nobilis.

   7. துலுக்கச் சாமந்தி; Turkish chamomile – Tagetus erec.

   8. ஆட சாமந்தி; Helicteres isora.

   9. காட்டுச் சாமந்தி; wild chamomile – Matricuria chamomile (சாஅக.);.

சாமந்திப்பூ

 சாமந்திப்பூ cāmandippū, பெ. (n.)

   செவ்வந்திப் பூ வடிவினதான திருகுவில்லை என்ற மகளிர் அணி; gold jewel resembling chrysanthemum, worn by women in the hair.

     [சாமந்தி + பூ]

சாமன்

சாமன்1 cāmaṉ, பெ. (n.)

   1. அறிவன் (புதன்); (பிங்.);; the planet mercury.

   2. சிவன்;{}.

     [சாம்பன் → சாமன்]

 சாமன்2 cāmaṉ, பெ. (n.)

   காமன்தம்பி; younger brother of {}.

     “சாமனார் தம்முன் செலவு” (கலித். 94);.

சாமபுட்பம்

 சாமபுட்பம் cāmabuṭbam, பெ. (n.)

   பாக்கு மரம்; arecanut – areca catcchu (சா.அக.);.

சாமம்

சாமம்1 cāmam, பெ. (n.)

   தூண், கதவு, உத்திரம் முதலியன செய்யப் பயன்படும் மரம்; a kind of tree.

 சாமம்2 cāmam, பெ. (n.)

   1. 7 1/2 நாழிகை கொண்ட காலவளவை (பிங்.);; a watch of 7 1/2 {} = 3 hours.

   2. நடுச்சாமம் (வின்);; midnight.

   3. இரவு (

     [பிங்.);

 night.

     [யாமம் → சாமம்]

சாமம்3

__,

பெ. (n.);

   1. பசுமை (பிங்.);; green or dark green colour.

   2. கருமை; dark or black colour.

     “சாயற் சாமத் திருமேனி” (திவ். திருவாய், 851);.

   3. அறுகு (மலை.);; cynodon grass.

     [யா = கருமை. யா → யாமம் = இருள், இரவு, கருமை. யாமம் → சாமம் = கருப்பு, பச்சைகளை அழிக்கும் அறுகம் (அறு → அறுகு); புல்]

 சாமம்4 cāmam, பெ. (n.)

   வறட்சி, பஞ்சம்; drought, famine.

     [சுப்பு → சும்பு =→ சம்பு → சாம்பு. சாம்புதல் = எரிதல், வாடுதல். சாம்பு → சாம்பல் = எரிந்த சாணம். அம் → சம் → சாம் → சாமம் = வறட்சி]

சாமரசம்

 சாமரசம் sāmarasam, பெ. (n.)

   பசுமுன்னை; fire-brand teak (சா.அக);.

சாமரம்

சாமரம்1 cāmaram, பெ. (n.)

   கழு, இறப்புத் தண்டனை (மரணத்தண்டனை); வழங்கப் பயன்படுத்தும் கூர்முனையுள்ள கம்பம்; impaling stake.

     “குறித்த சாமரம் பெற்றது குற்றமோ” (திருவாலவா. 38, 51);.

     [சா + மரம்]

 சாமரம்2 cāmaram, பெ. (n.)

   1. கவரிமானின் மயிரால் அமைந்த அரசச் சின்னம் (சூடா);; chowry, bush tail of the yak, used as a fly- flapper for idols or as a royal insignia.

   2. கவரிமானின் மயிரால் அமைந்த விசிறி; fan.

   ம. சாமரம்;   க சமர, சாமர;து. சாமர, சாமரோ

     [கவரி → சவரி → சமரி → சாமரி → சாமரம்]

த. செவ்வந்தி → Skt. {}

     [p]

 சாமரம்3 cāmaram, பெ. (n.)

சிவதைக்கொடி (மலை.); jalap.

சாமரம்வீசு-தல்

சாமரம்வீசு-தல் cāmaramvīcudal,    5 செ.கு.வி. (v.i.)

   காற்று வருமாறு சாமரம் (விசிறி); கொண்டு அசைத்தல்; to fly-flap with bushy tail of the yak, chowry.

க. சாமரவனிடு

     [சாமரம் + வீசு-,]

சாமரி

 சாமரி cāmari, பெ. (n.)

   குதிரை (யாழ்அக.);; horse.

ம. சாமரி

சாமரிகம்

 சாமரிகம் cāmarigam, பெ. (n.)

   குதிரைக் குளம்படி; horse-hoof plant (சாஅக);.

     [சாமரி → சாமரிகம்]

சாமரை

சாமரை cāmarai, பெ. (n.)

சாமரம்2 பார்க்க;See {}.

     “சாமரை யுக்க மாதியாம்” (கம்பரா. நிந்தனை. 12);.

சாமளம்

சாமளம் cāmaḷam, பெ. (n.)

   1. கருமை (உரி.நி.);; blackness.

   2. பசுமை (திவா.);; dark-green colour.

     [சாமம் → சாமளம்]

சாமளை

சாமளை cāmaḷai, பெ. (n.)

   மலைமகள் (சாமள நிறமுடையவள்);;{}, as being of dark-green complexion.

     “சாம்பவி சங்கரி சாமளை” (அபிராமி. 5௦);.

     [சாமம் → சாமளை]

சாமான்வண்டி

 சாமான்வண்டி cāmāṉvaṇṭi, பெ.(n.)

   முன்ன வனின் இடுப்பினைக் கைகோர்த்துப்பிடித்துக் கொண்டு விளையாடல் (தொடர்வண்டி போல்);; a children’s play.

     [சாமான்+வண்டி]

சாமிகொண்டாடிகள்

 சாமிகொண்டாடிகள் cāmigoṇṭāṭigaḷ, பெ. (n.)

   கொடைவிழாவில் சாமியாடுவோரைக் குறிக்கும் சொல்; possessed priests of a temple.

     [சாமி+கொண்டு+ஆடிகள்]

சாமிநாதக்கவிராயர்

 சாமிநாதக்கவிராயர் cāminātakkavirāyar, பெ. (n.)

   பொதிகை நிகண்டின் ஆசிரியர்; a poet, author of Podigai {}.

     [சாமிநாதன் + கவி + அரையர் → ராயர்]

இவர் பாண்டி நாட்டில் கல்லிடைக் குறிச்சியில் வாழ்ந்தவர். இவரின் தந்தையார் நாமதீப நிகண்டு இயற்றிய சிவசுப்பிரமணியக் கவிராயர் (தமி. புல. அக.);.

சாமிலம்

 சாமிலம் cāmilam, பெ. (n.)

   புளிவஞ்சி; a sour plant, perhaps a species of rattan (சா.அக.);.

சாமுகூர்த்தம்

 சாமுகூர்த்தம் cāmuārttam, பெ. (n.)

சாமுழுத்தம் பார்க்க;See {}.

     [சா + முகூர்த்தம்]

சாமுண்டி

சாமுண்டி1 cāmuṇṭi, பெ. (n.)

   ஏழு கன்னியரில் ஒருத்தியாகிய கொற்றவை;{}, one of {}.

   ம. சாமுண்ட, சாமுண்டி, சாமுண்ணி;   க. சாமுண்டி;து. சாமுண்டி, சவுண்டி

     [சாவு + உண்டி – சாவுண்டி → சாமுண்டி. வெற்றித் தெய்வமாகக் கருதப்படும் கொற்றவை சாவு உண்டாக்கும் திறம் பற்றிச் சாமுண்டி எனப்பட்டாள்]

   {}, a form of {} or {}, in D. also {}. The word is composed of D. {}, death; a corpse, and {}. etc. may be {} (she who rolls about); (K.K.E.D. XXIX);.

 சாமுண்டி2 cāmuṇṭi, பெ. (n.)

   1. நாணல் (மலை.);; kaus.

   2. அவுரி; Indigo plant.

 சாமுண்டி3 cāmuṇṭi, பெ. (n.)

   பொன்னாவிரை (மலை.);; negro coffee.

சாமுண்டிதேவநாயகர்

 சாமுண்டிதேவநாயகர் cāmuṇṭitēvanāyagar, பெ. (n.)

   செங்கற்பட்டு மாவட்டத்திலுள்ள மாகறல் ஊரினராகிய புறப்பொருள் வெண்பாமாலையின் உரையாசிரியர்; the commentator of {}, native of {}, in {} district (செ.அக.);.

     [சாமுண்டி + தேவநாயகர்]

சாமுதம்

சாமுதம்1 cāmudam, பெ. (n.)

   கடுக்காய் (வின்.);; chebulic myrobalan.

 சாமுதம்2 cāmudam, பெ. (n.)

   கோரைப்புல் (மலை.);; sedge.

சாமுழுத்தம்

 சாமுழுத்தம் cāmuḻuttam, பெ. (n.)

   கெட்ட காலம் (வின்.);; fatal hour, inauspicious time.

     [சா + முழுத்தம்]

சாமூஞ்சி

 சாமூஞ்சி cāmūñji, பெ. (n.)

   பிணமூஞ்சி; dismal, ghastly countenance.

     [சா + மூஞ்சி. முசு → மூசு. மூசுதல் = மூச்சுயிர்த்தல், மோப்பம் பிடித்தல். மூசு → மூச்சு. மூசு → மூஞ்சு → மூஞ்சி = மூக்கு, மூக்குள்ள முகப்பகுதி]

சாமூர்த்தம்

சாமூர்த்தம் cāmūrttam, பெ. (n.)

சாமுழுத்தம் பார்க்க;See {}.

     “சாமூர்த்தமென்றே மந்திரிநூன் மறை வல்லவ ரோதினர்” (விதான. குணாகுண. 91);.

     [சாமுகூர்த்தல் → சாமூர்த்தம்]

சாமூலி

 சாமூலி cāmūli, பெ. (n.)

   ஊமத்தை; dhatura (சா.அக.);.

     [சா + மூலி]

சாமேளம்

 சாமேளம் cāmēḷam, பெ. (n.)

   சாப்பறை; funeral drum.

     [சா + மேளம்]

சாமை

சாமை1 cāmai, பெ. (n.)

   1. மடங்கல் (ஆவணி); மாதத்தில் விதைத்து 6 கிழமை முதல் 4 மாதங்களுள் விளையும் ஒரு வகைப் புன்செய்ப்பயிர்; poor-man’s millet, sown in Avani and maturing in six weeks to four months ‘சக்கிலியப் பெண்ணும் சாமைக்கதிரும் சமைந்தால் தெரியும்’ (பழ.);

   2. தவச வகை; little millet, panicum miliare.

     “சாமை தினை வண்ண வோதனம்” (விதான. யாத்திரை. 8);.

   3. வரகு; common millet.

   ம. சாம;   க. சாமெ, சாவெ, சந்தெ;   தெ. ச்யாமாலு;   பட. சாமெ;   பர். சாம; H. {};

 Skt. {}

     [சமை → சாமை, வடவர் கரியது என்று பொருட்காரணம் கூறுவது தவறு. சாமை கரியதாகாது.]

சாமை படைப்புக் காலந் தொட்டுத் தென்னாட்டில் விளைந்துவரும் தொண் (ஒன்பான்); கூலங்களுள் ஒன்றாகும். இன்றும் அது நாட்டுப்புற உழவர்க்கு உரிய ஒழுங்கான உணவு வகைகளுள் ஒன்றாக இருந்து வருகின்றது (மொ.க.66);.

 சாமை2 cāmai, பெ. (n.)

   1. பெருநெருஞ்சி (சங்.அக.);; a stout stemmed herb.

   2. கற்சேம்பு (சங்.அக.);; a plant.

சாமைக்குருணை

 சாமைக்குருணை cāmaikkuruṇai, பெ. (n.)

   ஒரு வகைப் புல்; a kind of grass.

     [சாமை + குருணை]

சாமைப்புல்

 சாமைப்புல் cāmaippul, பெ. (n.)

   ஒரு வகைப் புல்; a kind of grass.

     [சாமை + புல். சாமைப் பயிர் போன்ற புல்]

சாம்பகி

 சாம்பகி cāmbagi, பெ. (n.)

   நெருஞ்சில்; calotrope -Tirbulus terrestris (சா.அக);.

சாம்பசதாசிவன்

 சாம்பசதாசிவன் sāmbasatāsivaṉ, பெ. (n.)

   சிவனார் வேம்பு;{} neem – Indigofera asphalathoides (சா.அக.);.

சாம்பசிவன்

 சாம்பசிவன் sāmbasivaṉ, பெ. (n.)

   அம்பிகையுடன் கூடிய சிவன்;{} in company with {}.

     [சாம்பன் + சிவன். சாம்பல் → சாம்பன் = சுடலையாண்டி]

சாம்பசிவம்

 சாம்பசிவம் sāmbasivam, பெ. (n.)

   அறுகம்புல்; sacred grass (சா.அக.);.

சாம்பச்சி

 சாம்பச்சி cāmbacci, பெ. (n.)

   சாம்பன் குடியைச் சார்ந்த பெண் (சங்.அக.);; a woman belonging to samban clan.

     [சாம்பன் → சாம்பத்தி → சாம்பச்சி. அச்சி = பெண்பாலீறு]

சாம்பனாரை

 சாம்பனாரை cāmbaṉārai, பெ. (n.)

   நாரை வகை (யாழ்.அக.);; a kind of grey crane.

     [சாம்பல் + நாரை]

சாம்பன்

சாம்பன் cāmbaṉ, பெ. (n.)

   சிவன்;{}.

     “சாம்ப கடம்பவ னேசனே” (குமர. பிர. மதுரைக்கலம். 68);.

     [சம்பு → சாம்பு. சாம்புதல் = எரிதல். சாம்பு → சாம்பல் = எரிந்த சாணம். சாம்பல் → சாம்பன் = சுடலையாண்டி]

சாம்பம்

 சாம்பம் cāmbam, பெ. (n.)

   ஆனைநெருஞ்சி (மலை.);; a small plant.

சாம்பராக்கு

 சாம்பராக்கு cāmbarākku, பெ. (n.)

   பாட்டினிறுதி தோறும் ‘சாம்பராக்கு’ என்று முடியுமாறு பாடப்படும் ஒரு வகைப் பாட்டு (வின்.);; a poem in praise of a deity, each stanza of which ends with the refrain {}.

     [சாம்பல் → சாம்பர் + ஆக்கு]

சாம்பர்

சாம்பர் cāmbar, பெ. (n.)

சாம்பல்1 பார்க்க;See {}.

     “சாம்பரகலத் தணிந்தாய் போற்றி” (தேவா. 967. 4);.

     [சாம்பல் → சாம்பர். ல – ர போலி]

சாம்பற்கத்தலை

சாம்பற்கத்தலை cāmbaṟkattalai, பெ. (n.)

   மூன்றடி நீளமும், சாம்பல்நிறமும் கொண்டதும், சாப்பிட உதவாததுமான கத்தலை என்னும் கடல்மீன்; a grey-coloured sea-fish – Sciaena albida alias corvina albida. It is about 3ft long not esteemed for table (சா.அக.);.

     [சாம்பல் + கத்தலை]

சாம்பற்கரை-த்தல்

சாம்பற்கரை-த்தல் cāmbaṟkaraittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   இறந்தவரின் உடலை எரித்தபின் சாம்பலையும் எரியாத எலும்பையும் எடுத்து நீரில் விடுதல்; to immerse ashes of a cremated person in river etc., a post-funeral rite.

     [சாம்பல் + கரை-,]

சாம்பற்கரைத்தல்

 சாம்பற்கரைத்தல் cāmbaṟkaraittal, பெ. (n.)

   பிணத்தை எரித்த பின்பு, சாம்பலைக் கரைத்து எலும்பைப் பொறுக்கும் ஈமச்சடங்கு (இ.வ.);; performing the ceremony of pouring water on the ashes and collecting the bones after cremation.

     [சாம்பல் + கரைத்தல். இதனை அங்கங் கரைத்தல் என்று கூறுவது, தென்பாண்டி வழக்கம்]

சாம்பற்கற்றாழை

 சாம்பற்கற்றாழை cāmbaṟkaṟṟāḻai, பெ. (n.)

   வீக்கத்தைக் குணப்படுத்தும் சாம்பல் நிறமான கற்றாழை; an ash-coloured aloe found grown near the railway fencing;Rail-Aloe americana.

     [சாம்பல் + கற்றாழை]

சாம்பற்காட்டுக்கோழி

 சாம்பற்காட்டுக்கோழி cāmbaṟkāṭṭukāḻi, பெ. (n.)

சாம்பற்கோழி பார்க்க;See {}.

     [சாம்பல் + காட்டுக்கோழி]

சாம்பற்கீரை

 சாம்பற்கீரை cāmbaṟārai, பெ. (n.)

   சிறுபசலைக் கீரை; creeping purslane.

     [சாம்பல் + கீரை]

சாம்பற்குண்டி

 சாம்பற்குண்டி cāmbaṟkuṇṭi, பெ. (n.)

   அருவருக்கத்தக்கவன் (வின்.);; slovenly, dirty, person.

     [சாம்பல் + குண்டி; குள் → குண் → குண்டி = புட்டம். உடல் முழுவதும் சாம்பல் பூசியவன் அல்லது நெடுங்காலம் நீராடாமல் புழுதி படிந்த அம்மணத் தோற்றத்து முனிவன்]

சாம்பற்குளி-த்தல்

சாம்பற்குளி-த்தல் cāmbaṟkuḷittal,    4 செ.கு.வி. (v.i.)

   சாம்பலிற் புரளுதல்; to bathe in ashes to be covered with ashes, as a brooding hen.

     [சாம்பல் + குளி-,]

சாம்பற்கோழி

 சாம்பற்கோழி cāmbaṟāḻi, பெ. (n.)

   சாம்பல் நிறத்தில் இருக்கும் கோழி; ash coloured fowl.

ம. சாம்பக்கோழி

     [சாம்பல் + கோழி. குள் → கொழு → கோழி = நிலத்தையும் குப்பையையும் கிளைக்கும் பறவை]

சாம்பற்சுறா

 சாம்பற்சுறா cāmbaṟcuṟā, பெ. (n.)

   சாம்பல் வண்ணமான சுறாமீன்; grey shark – Carcharias macloti (சா.அக.);.

     [சாம்பல் + சுறா]

சாம்பற்பாரை

 சாம்பற்பாரை cāmbaṟpārai, பெ. (n.)

   சாம்பல் வண்ணமான ஒருவகைக் கடல்மீன்; a sea-fish, grey pauray – Caranx nigrescens (சா.அக);.

     [சாம்பல் + பாரை]

சாம்பற்புறா

சாம்பற்புறா cāmbaṟpuṟā, பெ. (n.)

   சாம்பல் நிறத்தில் இருக்கும் புறா; ash coloured dove.

ம. சாம்பப்ராவு

     [சாம்பல் + புறா]

சாம்பற்பூ- த்தல்

__,

   4 செ.கு.வி. (v.i.);

   1. நெருப்பில் நீறுபூத்தல்; to be covered with ashes, as live embers.

   2. காய், இலை முதலியவற்றில் சாம்பல்நிறம் படிதல்; to have ash-like appearance, as fruits, leaves, etc.

   3. சாம்பல் போல் உடல் வெளுத்தல்; to grow ashy, as one’s body.

     [சாம்பல் + பூ-,]

சாம்பற்பூசணி

 சாம்பற்பூசணி cāmbaṟpūcaṇi, பெ. (n.)

   பூசணி வகை (மலை.);; ash-gourd.

     [சாம்பல் + பூசணி]

சாம்பலச்சி

 சாம்பலச்சி cāmbalacci, பெ. (n.)

   வெடியுப்பு (யாழ்ப்.);; saltpetre, potassium nitrate.

     [சாம்பல் → சாம்பலச்சி]

சாம்பலடிப்பெருநாள்

சாம்பலடிப்பெருநாள் cāmbalaḍipperunāḷ, பெ. (n.)

   கிறித்துவத் திருநாள்களுள் ஒன்று; Ash Wednesday. Shrove Tuesday (R.C.);.

ம. சாம்பல் பெருநாள்

     [சாம்பல்1 + அடி + பெருநாள்]

சாம்பலாண்டி

__,

பெ. (n.);

   1. உடல் முழுதும் நீறுபூசிய துறவி; religious mendicant whose whole body is smeared with ashes.

   2. கோமாளி (வின்.);; clown.

     [சாம்பல்1 + ஆண்டி]

சாம்பலுப்பு

சாம்பலுப்பு cāmbaluppu, பெ. (n.)

   மரவுப்பு (இங்.வை.166);; potash, salt of tartar, Potassa.

     [சாம்பல் + உப்பு]

சாம்பலெரு

சாம்பலெரு cāmbaleru, பெ. (n.)

   வறட்டி, விறகு, உமி முதலியவை முற்றிலும் எரிந்தபின், கிடைக்கும் எரு (செங்கை);; a kind of manure.

     [சாம்பல்1 + எரு]

சாம்பலொட்டி

சாம்பலொட்டி cāmbaloṭṭi, பெ. (n.)

   எருக்கு (சாம்பனிறம் படிந்திருப்பது); (சங்.அக.);; madar, as being of ash-like dull-grey colour.

     [சாம்பல்1 + ஒட்டி. சாம்பலை அப்பியது போன்ற நிறமுடையது]

சாம்பல்

சாம்பல்1 cāmbal, பெ. (n.)

   1. ஏதாவது பொருளை எரித்த பின் மிஞ்சும் பொடித்துகள்; powdery residue left after combustion of any substance, ashes.

     “சுடுகாடான சாம்பல ரங்கத்திலே நிருத்தமாடி” (பு.வெ. 9, 43, உரை);.

   2. வாடற்பூ; withered flower.

     “ஆம்பற் பூவின் சாம்பலன்ன” (குறுந். 46);.

   3. முதுமை (பிங்.);; old age.

   4. புகையிலை, பருத்திப்பயிர்களைக் கெடுக்கும் பூச்சி (இ.வ.);; insect causing damage to tobacco, cotton, etc.

ம. சாம்பல்

     [சுள் → சுட்பு → சுப்பு. சுப்பெனல் = விரைந்து நீர்வற்றுதல். சுப்பு → சுப்பல் = சுள்ளி. சுப்பு → சும்பு → சம்பு → சாம்பு. சாம்புதல் = எரிதல், வாடுதல். சாம்பு → சாம்பல் (வே.க.89);. எரிபட்ட நீறு, சாம்பல் நிறமாகத் தெரியும் வாடிய பூ, பயிர்களை அழிக்கும் சாம்பம்நிறப் பூச்சி]

 சாம்பல்2 cāmbal, பெ. (n.)

   நாவல் மரம் (மலை.);; jamun plum.

     [சம்பு → சாம்பு → சாம்பல்]

சம்பு4 பார்க்க

சாம்பல்கரை-த்தல்

சாம்பல்கரை-த்தல் cāmbalkaraittal,    4 செ.குன்றாவி. (v.t.)

சாம்பற்கரை-த்தல் பார்க்க;See {}.

     [சாம்பல் + கரை-,]

சாம்பல்கலன்

 சாம்பல்கலன் cāmbalkalaṉ, பெ.(n.)

   சுருட்டு போன்றவற்றின் சாம்பலைத் தட்டும் சிறுவட்டில்; ashtray.

     [சாம்பல்+கலன்]

சாம்பல்கிளுவை

 சாம்பல்கிளுவை cāmbalkiḷuvai, பெ. (n.)

   சாம்பல்நிறமான கிளுவை; grey balsum – Balsmodendron Beryyi (சா.அக);.

     [சாம்பல் + கிளுவை]

சாம்பல்சத்து

 சாம்பல்சத்து cāmbalcattu, பெ. (n.)

   பயிரின் திரட்சிக்கும், நோய் எதிர்ப்புத் தன்மைக்கும் உதவியாக இருந்து நல்ல சாகுபடியைத் தரும் சத்து; potash.

     [சாம்பல் + சத்து]

சாம்பல்நத்தம்

 சாம்பல்நத்தம் cāmbalnattam, பெ. (n.)

   மதுரை மாவட்டத்தில் உள்ள ஊர்; a village in Madurai district.

     [சாம்பல் + நத்தம்]

சம்பந்தர் சமணர்களைச் சொல்லாடலில் (வாதில்); வென்று அவர்கள் பாடிய ஏடுகளைத் தீயில் எரித்துச் சாம்பலாக்கிய காரணமாக பெற்ற பெயர் சாம்பல் நத்தம் (த.ஊ.பெ.);.

சாம்பல்நாரை

 சாம்பல்நாரை cāmbalnārai, பெ. (n.)

   சாம்பல் நிற நாரை வகை; eastern grey heron – Ardea cincrea rectirostris. மறுவ. நாராயன், நரையான், நாராயணப்பட்சி

     [சாம்பல் + நாரை]

நரை என்ற சொல், சாம்பல் கலந்த வெள்ளை நிறத்தைக் குறிக்கும். நரை நிறமுடைய பறவையை நரையான் (அ); நாரை என்று அழைத்தனர் (சங்க இலக்கியத்தில் புள்ளின விளக்கம்);.

சாம்பல்நோய்

 சாம்பல்நோய் cāmbalnōy, பெ. (n.)

   எள் பயிரைத் தாக்கும் நோய்; a disease attack gingelly.

     [சாம்பல் + நோய். நுள் → நொள் → நோள் → நோய்]

சாம்பல்புறா

 சாம்பல்புறா cāmbalpuṟā, பெ. (n.)

   ஒரு வகைப் புறா; a kind of dove – Streptopelia decaocto.

     [சாம்பல் + புறா]

வெள்ளைப் புறா, தூதுணம் புறா என்ற வேறு பெயர்களும் உண்டு. வேலமரத்தில் காணப்படும் தவசங்களோடு சிறுசிறு கற்களையும் விழுங்கும் தன்மையால் தூதுணம் புறா என்றும் அழைப்பர் (சங்.புள்.விள.);.

சாம்பல்பூ-த்தல்

சாம்பல்பூ-த்தல் cāmbalpūttal,    4 செ.குன்றாவி. (v.t.)

   1. கதிரில் உள்ள கங்கின்மேல் சாம்பல் படிதல், மரம், காய் முதலியவற்றில் சாம்பல்நிறப் பொருள் படிதல்; to be covered with ashes or ash like thing.

   2. உடல் வெளுத்தல்: to turn ashen to body. அவன் உடம்பு மெலிந்து சாம்பல்

பூத்துவிட்டது.

   3. அதிக வேலையினால் உடலில் (வெயர்வையால்); சாம்பல்படிதல்; to turn ashen (of body);.

     ‘உடல் சாம்பல் பூத்து விட்டது, குளிக்கவேண்டும்’ (உ.வ.);.

     [சாம்பல் + பூ-,]

சாம்பல்பூசனம்

 சாம்பல்பூசனம் cāmbalpūcaṉam, பெ. (n.)

   பருத்திச்செடியைத் தாக்கும் ஒரு நோய், பூசனக்கொல்லிகள்; a kind of disease attack cotton.

     [சாம்பல் + பூசனம். பூஞ்சாளம் → பூசாளம் → பூசனம்]

சாம்பல்மரலி

 சாம்பல்மரலி cāmbalmarali, பெ. (n.)

   சிறுநாவல்; ruddy black plum – Eugenia rubicunda (சா.அக);.

     [சாம்பல் + மரலி]

சாம்பல்மொந்தன்

சாம்பல்மொந்தன் cāmbalmondaṉ, பெ. (n.)

   வாழைவகை; a variety of plantain bearing ash – coloured fruits.

ம. சாம்பமொந்தன்

     [சாம்பல்1 + மொந்தன். பொந்து → பொந்தன் → மொந்தன். பொதுபொது (இரட்டைக் கிளவி);. பொதுக்கு, பொந்து என்னும் சொற்களை நோக்குக. இவை பெருமைப்பொருளைக் குறிப்பன.]

சாம்பல்வருணி

 சாம்பல்வருணி cāmbalvaruṇi, பெ. (n.)

   செருப்படை; a low spreading plant found in rice fields after harvest – Coldenia procumbens (சாஅக.);.

     [சாம்பல் + வருணி]

சாம்பல்வாழை

சாம்பல்வாழை cāmbalvāḻai, பெ. (n.)

சாம்பல் மொந்தன் (G.Sm.D.I.i.215); பார்க்க;See {}.

     [சாம்பல்1 + வாழை. சாம்பல் நிற வாழை]

சாம்பவனோடை அம்பலவாண முனிவர்

சாம்பவனோடை அம்பலவாண முனிவர் cāmbavaṉōṭaiambalavāṇamuṉivar, பெ. (n.)

   17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து திருவுசாத்தானப் புராணம் பாடிய தில்லை வளாகத்தைச் சேர்ந்த புலவர்; a poet, author of {}, lived in 17th century at {}.

     “சாம்பவனோடை என்பது இவரின் ஊர்” (பிற்புல.);.

     [சாம்பனோடை +அம்பலவாண முனிவர்]

சாம்பவன்

 சாம்பவன் cāmbavaṉ, பெ. (n.)

   சிவனை வழிபடுவோன்; worshipper of {} devotee.

     [சாம்பன் → சாம்பவன்]

சாம்பவம்

சாம்பவம்1 cāmbavam, பெ. (n.)

   1. சிவன் தொடர்பானது; that which pertains to {}.

   2. சிவமதவேறுபாடு; a {} sect.

     “சிலர் சாத்தமும் சிலர் சாம்பவமுமாய்ச் சேர்வர்” (திருக்காளத். பு. 3௦: 26);.

     [சம்பு → சாம்பு → சாம்பல் → சாம்பன் → சாம்பவன் → சாம்பவம்]

 சாம்பவம்2 cāmbavam, பெ. (n.)

   சம்புநாவல் (யாழ்.அக.);; rose-apple.

     [சம்பு → சாம்பு → சாம்பல் → சாம்பவம்]

சாம்பவி

சாம்பவி cāmbavi, பெ. (n.)

   1. நாவல்வகை; clove leaved black plum.

   2. பெருநாவல் (மலை.);; east Indian rose-apple.

     [சாம்பவம் → சாம்பவி]

சாம்பவிவிந்து

 சாம்பவிவிந்து cāmbavivindu, பெ. (n.)

   கெளரி செய்நஞ்சு (யாழ்.அக);; a prepared arsenic.

சாம்பாகினி

 சாம்பாகினி cāmbākiṉi, பெ. (n.)

   பசலைக் கீரை; garden spinach, Malabar night shade – Basella Cordifolia (சா.அக.);.

சாம்பாட்டு

 சாம்பாட்டு cāmbāṭṭu, பெ. (n.)

   புடல் (மலை.);; snake gourd.

     [சாம்பல் + ஆட்டு → சாம்பலாட்டு → சாம்பாட்டு]

சாம்பாத்தி

 சாம்பாத்தி cāmbātti, பெ. (n.)

சாம்பச்சி (யாழ்ப்.); பார்க்க;See {}.

சாம்பான்

சாம்பான்1 cāmbāṉ, பெ. (n.)

   எருக்கிலை; madar leaf – Caltropis gigantea (சா.அக.);.

     [சாம்பல் → சாம்பன் → சாம்பான் = சாம்பல்நிற இலைகளைக் கொண்டது]

 சாம்பான்2 cāmbāṉ, பெ. (n.)

   பறையர் பட்டப்பெயர்; caste of Pariahs.

     “பெற்றான் சாம்பானுக்குப் பேதமறத் தீக்கை செய்து” (தனிப்பா.);.

ம. சாம்பான்

     [சும் → சும்பு → (சம்பு); → சாம்பு → சா ம்பல் → சாம்பர். சாம்பு → சாம்பான் = பிணத்தைச் சுடுபவன் (மு.தா.149);]

சாம்பி

 சாம்பி cāmbi, பெ. (n.)

கயிறு முதலியவற்றை மாட்டி, ஒன்றை உயரத் தூக்குதற்குரிய உருளை (இ.வ.);’ pulley.

     [சாம்பு → சாம்பி]

சாம்பியம்

 சாம்பியம் cāmbiyam, பெ. (n.)

   சிறுநாகப்பூ; iron-wood of Ceylon – Musua ferrea (சா.அக);.

சாம்பிரி

 சாம்பிரி cāmbiri, பெ. (n.)

   சேங்கொட்டை; dhoby’s nut – Semicarpus anacardium (சா.அக.);.

சாம்பு

சாம்பு1 cāmbudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. வாடுதல்; to wither, droop.

     “நெய்தற் பூச்சாம்பும் புலத்தாங்கண்” (பட்டின. 12);.

   2. கெடுதல்; to perish, pine away.

   3. குவிதல் (திவா.);; to close up, as flowers.

   4. ஒடுங்குதல் (பிங்.);; to decline.

   5. உணர்வழிதல்; to lose consciousness.

     “சாதல் காப்பவரு மென்றவத்திற் சாம்பினார்” (கம்பரா. உருக்காட். 21);.

   6. ஒளி மழுங்குதல்; to grow dim, as the eyes.

     “மன்னரெல்லாந் தளர்ந்து கண் சாம்பினாரே” (சீவக. 811);. எரிதல்;

 to burn.

ம. சாம்புக

     [சுள் → சுட்பு → சுப்பு. சுப்பெனல் = விரைந்து நீர்வற்றுதல். சுப்பு → சுப்பல் = சுள்ளி. சுப்பு → சுப்பி = சுள்ளி. சுப்பு → சும்பு → சம்பு → சாம்பு (வே.க.212);]

 சாம்பு2 cāmbudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. இழுத்தல் (வின்.);; to pull in by jerks, to haul” to draw in, to pump.

   2. அறைதல் (யாழ்ப்.);; to give a blow.

     [சப்பு → சம்பு → சாம்பு]

 சாம்பு3 cāmbu, பெ. (n) பறை (சூடா.): drum.

     [சாம்பு2(-தல்); → சாம்பு = அடித்து இசையெழுப்பும் இசைக்கருவி]

 சாம்பு4 cāmbu, பெ. (n.)

   படுக்கை; bed.

     “கற்றை வேய்ந்த கழித்தலைச் சாம்பின்” (பெரும்பாண். 15௦);.

     [சாள் → சாடு. சாடுதல் = சாய்தல். சாள் → சாய். சாய்தல் = வளைதல், கவிழ்தல், படுத்தல். சாய் – →(சாயம்); Skt. {} = படுக்கை. சாய் → சாய்கை = படுக்குமிடம். சாள் → சாய்ப்பு → சாம்பு]

 சாம்பு5 cāmbu, பெ. (n.)

   1. 18 முழங்கொண்ட புடைவை; woman’s cloth of 18 cubits.

   2. பல துண்டுகள் கொண்ட முழுச்சீலை (வின்.);; a full piece containing several clothes.

 சாம்பு6 cāmbu, பெ. (n.)

   பொன் (சூடா.);; gold.

     [சுள் → சுட்பு → சுப்பு. சுப்பெனல் = விரைந்து நீர் வற்றுதல். சுப்பு → சுப்பல்= சுள்ளி. சுப்பு → சும்பு → சம்பு → சாம்பு = எரிதல், ஒளிவிடுதல், ஒளிவிடும் பொன்]

 சாம்பு7 cāmbu, பெ. (n.)

   நாவல் (தைலவ. தைல.);; jamum plum.

     [சம்பு → சாம்பு]

சாம்புசண்பகம்

 சாம்புசண்பகம் sāmbusaṇpagam, பெ. (n.)

   நாவற்பூ (வின்.);; flower of the jamum plum.

     [சாம்பு + சண்பகம்]

சாம்புநதம்

சாம்புநதம் cāmbunadam, பெ. (n.)

   1. மேரு மலைக்கு வடக்கில், நாவற்சாறு பெருகி ஒடும் ஆறு; a river believed to flow north of the Mt. {} carrying the juice of the jamun tree.

     “இத்தருவின் றீங்கனிநீ ராறாய் மேருத் தடவரையைப் புடை சூழ்ந்து வடபாற் சென்று சாம்புநதப் பெயர்பெறும்” (கந்தபு. அண்டகோ. 33);.

   2. நால்வகைப் பொன்களுள் ஒன்று; a kind of fine gold, one of four kinds of {}.

     “பொன்னுக்குச் சாம்புநதம்” (வள்ளுவமா. 36);.

     [சாம்பு + நதம்]

சாம்புவன்

 சாம்புவன் cāmbuvaṉ, பெ. (n.)

   சுடலை காப்பவன்; watchman of burning ground.

     [சும்பு → சம்பு → சாம்பு. சாம்புதல் = எரிதல். சாம்பு → சாம்பல் = எரிவதால் மிஞ்சும் பொடித்துகள், சுடலைப்பொடி. ஒ.நோ: சாம்பற்கரைத்தல். சாம்பலவன் → சாம்புவன்]

சாம்பூநதம்

 சாம்பூநதம் cāmbūnadam, பெ. (n.)

சாம்புநதம் பார்க்க;See {}-nadam.

     [சாம்புநதம் → சாம்பூநதம்]

சாயகம்

சாயகம் cāyagam, பெ. (n.)

   அம்பு; arrow.

     “இரட்டிச் சாயகங்கள்” (கம்பரா. மகரக்கண்ணன். 18);.

     [சாய் → சாயகம் – சாயச்செய்வது;விழ்த்துவது]

சாயக்காரன்

சாயக்காரன் cāyakkāraṉ, பெ. (n.)

   1. சாயமிடுபவன்; dyer.

   2. சாயம் காய்ச்சுபவன்; one who prepares dye.

     [சாயம் + காரன்]

சாயக்கிழங்கு

 சாயக்கிழங்கு cāyakkiḻṅgu, பெ. (n.)

   கிழங்கு மஞ்சள்; green turmeric, turmeric root (சா.அக);.

     [சாயம் + கிழங்கு]

சாயக்குண்டா

 சாயக்குண்டா cāyakkuṇṭā, பெ. (n.)

   சாயம் போடப் பயன்படும் செப்பு ஏனம் (செங்கை);; copper vessel for dyeing.

     [சாயம் + குண்டா. குள் → குண் -→ குண்டு → குண்டா = உருண்டு திரண்ட கலம்]

சாயக்கொண்டை

சாயக்கொண்டை cāyakkoṇṭai, பெ. (n.)

   1. மகளிரது கொண்டை வகைகளுளொன்று; women’s tresses done in a particular way.

   2. கோயில்களில் திருவிழாக் காலங்களில் உலா வரும் திருமேனிக்குச் சிவப்பு அல்லது நீலநிறப் பட்டாடையால் தலையில் முடி போல் அமைக்கப்படுங் கொண்டை; a turban of red or blue silk resembling crown, put on the head of {}.

   3. முடியணி வகை; a kind of coronet.

     [சாய்வுக்கொண்டை → சாயக்கொண்டை]

சாயக்கோரை

 சாயக்கோரை cāyakārai, பெ. (n.)

   சாயம் நனைத்துப் பாய் முதலியன பின்னப் பயன்படும் கோரைவகை (வின்.);; a sedge used for making mat etc.

     [சாயம் + கோரை]

சாயக்கோல்

 சாயக்கோல் cāyakāl, பெ. (n.)

   சாயம் போடுதலில் பயன்படும் மரக்கோல் (செங்கை);; wooden pole for dyeing.

     [சாயம் + கோல். குல் → கோல் = திரட்சி, திரண்டகம்பு]

சாயங்காய்ச்சு-தல்

சாயங்காய்ச்சு-தல் cāyaṅgāyccudal,    5 செ.கு.வி. (v.i.)

   சாயம் போடுதல் (வின்.);; to dye, colour.

     [சாயம் + காய்ச்சு. காய் → காய்ச்சு. காய்தல் = சுடுதல். காய்ச்சுதல் = சுடவைத்தல்]

சாயங்காலம்

 சாயங்காலம் cāyaṅgālam, பெ (n.)

சாயுங் காலம் பார்க்க;See {}.

தெ. சாயமு

     [சாயுங்காலம் → சாயங்காலம்]

சாயங்கொட்டை

 சாயங்கொட்டை cāyaṅgoṭṭai, பெ (n.)

   சேங்கொட்டை; dhoby’s nut (சா.அக);.

     [சாயம் + கொட்டை]

சாயச்சந்தி

சாயச்சந்தி cāyaccandi, பெ (n.)

   1. மாலை மங்கல் (வின்.);; evening twilight.

   2. மாலை வழிபாடு (இ.வ.);; evening devotions.

     [சாய் → சாயும் + சந்தி → சாயும் சந்தி → சாயச்சந்தி = மாலைப்பொழுது, அப்பொழுதில் செய்யும் வழிபாடு]

சாயச்சம்பங்கி

 சாயச்சம்பங்கி cāyaccambaṅgi, பெ. (n.)

   கொடிச் சம்பங்கி; champank creeper – Pergularia monor (சா.அக.);.

     [சாயம் + சம்பங்கி]

சாயச்சாந்தி

 சாயச்சாந்தி cāyaccāndi, பெ. (n.)

   சாவுச்சடங்கு (அந்தியேட்டி); (யாழ்.அக.);; crematory rite.

     [சாவுசாந்தி → சாயசாந்தி]

சாயச்சால்

 சாயச்சால் cāyaccāl, பெ. (n.)

   சாயந் தோய்க்கும் பானை (வின்.);; vat for dyeing.

     [சாயம் + சால்]

சாயச்சீலை

 சாயச்சீலை cāyaccīlai, பெ (n.)

   சாயமேற்றப் பட்ட வண்ணத்துணி; coloured cloth.

ம. சாயச்சீல (ஒணத்தில் உடுத்தும் புதிய வண்ணத்துணி);

     [சாயம் + சீலை]

சாயச்செடி

 சாயச்செடி cāyacceḍi, பெ (n.)

   இம்பூறல்; Indian madder (சா.அக.);.

     [சாயம் + செடி]

சாயடி

 சாயடி cāyaḍi, பெ. (n.)

   சாயம் போடுமிடம்; place for dyeing.

     [சாயம் + அடி. அடி = இடம்]

சாயத்துணி

 சாயத்துணி cāyattuṇi, பெ. (n.)

   நிறமேற்றப் பட்ட துணி; dyed cloth.

ம. சாயத்துணி

     [சாயம் + துணி]

சாயந்தரம்

 சாயந்தரம் cāyandaram, பெ. (n.)

   மாலைப் பொழுது; evening.

     [சாய் → சாய்ந்தரம் → சாயந்தரம்]

 சாயந்தரம் cāyandaram, பெ. (n.)

சாயுங்காலம் பார்க்க;See {}.

 Skt. antara → த. அந்தரம்

சாயந்தீர்-தல்

சாயந்தீர்-தல் cāyandīrtal,    4 செ.குன்றாவி., செ.கு.வி. (v.t & v.i.)

சாயந்தோய்த்தல் (வின்.); பார்க்க;See {}.

     [சாயம் + தீர்-,]

சாயந்தோய்-த்தல்

சாயந்தோய்-த்தல் cāyandōyttal,    4 செ.கு.வி. (v.i.)

   சாயம் போடுதல் (கொ.வ.);; to dye, colour.

     [சாயம் + தோய்-,]

சாயனதம்

 சாயனதம் cāyaṉadam, பெ. (n.)

சாயானகம் பார்க்க (யாழ்.அக.);;See {}.

சாயனம்

 சாயனம் cāyaṉam, பெ. (n.)

   கோள்நிலை (வின்.);; celestial longitude computed form the vernal equinox.

சாயப்பட்டை

 சாயப்பட்டை cāyappaṭṭai, பெ. (n.)

   வேம்பாடம் பட்டை; the bark of buck thorn climber (சா.அக.);.

     [சாயம் + பட்டை]

சாயப்பணி

சாயப்பணி cāyappaṇi, பெ. (n.)

   1. செஞ் சாயமிடுந் தொழில் (வின்.);; work of dyeing with red, dist. fr. {}.

   2. சாயமூட்டும் பணி the art of painting, dyeing.

ம. சாயப்பணி

     [சாயம் + பணி]

சாயப்பாக்கு

 சாயப்பாக்கு cāyappākku, பெ. (n.)

   சாயமேற்றிய பாக்கு (உ.வ.);; areca-nut sliced and dyed by boiling.

     [சாயம் + பாக்கு]

சாயப்பானை

 சாயப்பானை cāyappāṉai, பெ. (n.)

கோரையின் சாயம் ஏற்றும் பானை,

 a pot for paint.

     [சாயம்+பானை]

சாயப்பிடி-த்தல்

சாயப்பிடி-த்தல் cāyappiḍittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   காற்றுவாக்கிற் கப்பலைச் செலுத்துதல் (யாழ்ப்.);; to steer a vessel windward (செ.அக.);.

     [சாய் + பிடி-,]

சாயப்பூலிகம்

 சாயப்பூலிகம் cāyappūligam, பெ. (n.)

   சிவப்புப் பசலை; red spinach (சா.அக.);.

     [சாயம் + பூலிகம்]

சாயப்பெட்டி

 சாயப்பெட்டி cāyappeṭṭi, பெ. (n.)

   சாயமிட்ட ஒலை முதலியவற்றால் அறைகள் உள்ளனவாகச் செய்யப்பட்ட பெட்டி (இ.வ.);; small lacquer boxes with compartments; dyed ola-covered baskets with compartments.

     [சாயம் + பெட்டி]

சாயப்பொன்

 சாயப்பொன் cāyappoṉ, பெ. (n.)

   நிறமூட்டப் பட்ட பொன்; coloured gold.

ம. சாயப்பொன்னு

     [சாயம் + பொன்]

சாயப்போல்

 சாயப்போல் cāyappōl, பெ. (n.)

   சாயமிட்ட கழி (யாழ்ப்);; painted cane or staff.

     [சாயம் + போல்]

சாயமடி-த்தல்

சாயமடி-த்தல் cāyamaḍittal,    4 செ.கு.வி. (v.i.)

சாயந்தோய்-த்தல் பார்க்க;See {}.

     [சாயம் + அடி-,]

சாயமரம்

சாயமரம் cāyamaram, பெ. (n.)

   1. ஒரு வகை மரம் (M.M.464);; Malay sandal.

   2. மரவகை (இங்.வை.);; American logwood.

     [சாயம் + மரம்]

சாயமேற்று-தல்

சாயமேற்று-தல் cāyamēṟṟudal,    5 செ.கு.வி. (v.i.)

சாயந்தோய்-த்தல் பார்க்க;See {}. (செ.அக.);.

     [சாயம் + ஏற்று-,]

சாயம்

சாயம்1 cāyam, பெ. (n.)

சாயங்காலம் (பிங்.); பார்க்க;See {}.

     [சாய்3 → சாயம்]

 சாயம்2 cāyam, பெ. (n.)

   1. நிறம்; colour, tinge, tint.

   2. நூல் முதலியவற்றிற்கு ஊட்டும் வண்ணம்; dye.

   3. உண்மைத்தன்மை; true colour;

 real nature.

     “சாயந்துலங்கி விட்டது”.

   4. பொய்த்தன்மை; false nature.

சாயம் வெளுத்து விட்டது.

   5. சாயவேர் (வின்.); பார்க்க;See {}.

   ம. சாயம்;   க., தெ., பட. சாய;   குட. சாய்;   கோத. சய்வ்;துட. சாய

     [சாய் → சாயை = நிழல், படிவடிவம், ஒப்பு, புகழ். சாய்4 → சாயம்]

த. சாயம் → Skt. {}

சாயம்பற்றவை-த்தல்

சாயம்பற்றவை-த்தல் cāyambaṟṟavaittal,    4 செ.கு.வி. (v.i.)

   பொய்ச்செய்தியைப் பரப்புதல் (நாஞ்.);; to spread false information.

     [சாயம் + பற்ற + வை-,]

சாயம்பிடி

சாயம்பிடி1 cāyambiḍittal,    4 செ.கு.வி. (v.i.)

   சாயம்பற்றுதல்; to take on colour.

     [சாயம் + பிடி-,]

 சாயம்பிடி2 cāyambiḍittal,    4 செ.குன்றாவி. (v.t.)

சாயந்தோய்-த்தல் பார்க்க;See {}.

     [சாயம்2 + பிடி-,]

 சாயம்பிடி3 cāyambiḍi, பெ. (n.)

   பொன்னாங் காய்; Indian soap-nut (சா.அக);.

     [சாயம் + பிடி]

சாயம்போ-தல்

சாயம்போ-தல் cāyambōtal,    8 செ.கு.வி. (v.i.)

   ஏற்றிய நிறம் நீங்குதல்; to become change of real colour.

     [சாயம் + போ-,]

சாயம்போடு-தல்

சாயம்போடு-தல் cāyambōṭudal,    19 செ.கு.வி. (v.i.)

சாயந்தோய்-த்தல் பார்க்க;See {}.

     [சாயம் + போடு-,]

சாயம்வெளு-த்தல்

சாயம்வெளு-த்தல் cāyamveḷuttal,    4 செ.கு.வி. (v.i.)

   பொய் மறைந்து உண்மை வெளிப்படுதல்; to come to light;

 get-exposed.

அவன் சாயம் வெளுத்துப் போச்சு, இனி யாரையும் ஏமாற்ற முடியாது.

     [சாயம் + வெளு-,]

சாயரச்சை

சாயரச்சை cāyaraccai, பெ. (n.)

   1. சாயங் காலம்; evening.

   2. கோவிலில் நடக்கும் மாலைப் பூசை; evening service in temples.

     [சாயம் + ரச்சை. சாயம் = மாலை, த. ரச்சை → Skt. {}.

செய்கிறபொழுது, போகிறபொழுது என்பனபோல் வரும் தொடர்நிகழ்வைக் குறிக்கும், சொல்லாட்சிகள் செய்கிறச்சை, போரச்சை எனக் கொச்சை திரிபுற்று வழக்கெய்தியன. அச்சொல்லாட்சிகளில் பின்னொட்டாக வரும் ரச்சை என்பதனைத் தனிச்சொல்லாகக் கொண்டு ரக்க்ஷா என்னும் வட சொற்றிரிபு எனத் தலைக்கீழாகக் கொண்டனர்]

சாயரி

 சாயரி cāyari, பெ. (n.)

   பாலைப் பண்வகை (பிங்.);; a primary melody type of the palai class.

சாயர்

சாயர் cāyar, பெ. (n.)

   1. நிலவரி நீங்கிய வழக்கமான பிற தீர்வை (C.G);; customs, duties, current or customary sources of revenue other than land tax.

   2. தீர்வை தண்டுபவர்; custom- house officer (செ.அக.);.

     [ஆயம் = வரி. ஆயர் = வரி வாங்குபவர். ஆயர் → சாயர்]

சாயர்செளகி

 சாயர்செளகி cāyarceḷagi, பெ. (n.)

   தீர்வை வாங்குமிடம் (C.G.);; custom-house or station.

     [சாயர் + சௌகி. சவுக்கம் → சவுக்கி → சௌகி]

சாயலன்

 சாயலன் cāyalaṉ, பெ. (n.)

   காவிரிப்பூம் பட்டினத்துள்ள ஒரு வணிகன்; a trader in {}.

எட்டிப் பட்டம் பெற்ற வணிகன் (சாஅக.);.

     [சாயல் → சாயலன்]

சாயலம்

சாயலம் cāyalam, பெ. (n.)

   ஒரணி கலன்; a kind of ornament.

     “வயிரசாயலம், பாதசாயலம்” (S.l.l.ii16);.

     [சாய்4 → சாயல் = அழகு. சாயல் → சாயலம்]

சாயலாள்

 சாயலாள் cāyalāḷ, பெ. (n.)

   நல்ல தலைமுடி உள்ளவன், அழகி; a woman having beautiful hair, a beautiful woman (சேரநா.);.

ம. சாயலாள்

     [சாயல் + ஆள்]

சாயல்

சாயல்1 cāyal, பெ. (n.)

   1. சாய்வு; inclining, slanting.

   2. இளைப்பு; weariness, exhaustion.

     “உழையோர் தன்னினும் பெருஞ்சாயலரே” (புறநா. 262);.

   3. நுணுக்கம் (திவா.);; contraction, shrinking.

   4. துயிலிடம் (பிங்.);; bed, sleeping place.

ம. சாயல்

     [சாய்தல் = படுத்தல். தலைசாய்தல் = படுத்தல், சிறிது நேரம் உறங்குதல். சாய் → சாய்கை = படுக்குமிடம் சாய் → (சாயனம்); → வ. சயனம் = படுக்கை. சாய்2 → சாயல்]

 சாயல்2 cāyal, பெ. (n.)

   1. அழகு; beauty, gracefulness.

     “கண்ணாருஞ் சாயல்” (பரிபா. 11:54);.

   2. நிறம் (பிங்.);; colour.

   3. மேனி, உடல்; body form.

     “தளர்ந்த சாயற் றகைமென் கூந்தல்” (சிலப். 8: 1௦௦);.

   4. ஒப்பு; likeness, resembleance in feature.

     “பாலனை நின் சாயல் கண்டு… மெல்லியலா ளெடுத்தாள்” (தனிப்பா. 2: 142:361);.

   5. நிழல்; reflectd image, shadow.

   6. சார்பு; protection.

     “அன்பர்கள் சாயலுளடையலுற் றிருந்தேன்” (தேவா. 154, 7);.

   7. மஞ்சள் (மலை.);; turmeric.

   8. மேம்பாடு (சூடா.);; excellence, superiority.

   9. அருள்; grace, as of God.

     “சாயனினது வானிறை” (பரிபா. 2:56);.

   10. மேம்பாடாகிய சொல்; lofty words.

     “சாயலே மெய்யே யுணர்ந்ததார் மிகவுரைப்பர்” (ஏலாதி, 28);.

   ம. சாயல்; Skt. {}

     [சாய்4 + சாயல்]

 சாயல்3 cāyal, பெ. (n.)

   மென்மை; tenderness.

     “அது நாயும் பன்றியும் போலாது மயிலும் குயிலும் போல்வதோர் தன்மை” (தொல்.பொருள். 243, இராம. உரை);.

     [சாய்4 + சாயல்]

சாயல்காட்டு-தல்

சாயல்காட்டு-தல் cāyalkāṭṭudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. நடித்தல்; to imitate, represent, personate.

   2. முன்குறியாகக் காட்டுதல் (உ.வ.);; to foreshadow.

     [சாயல் + காட்டு-,]

சாயல்சரிவு

சாயல்சரிவு cāyalcarivu, பெ. (n.)

   1. ஒப்பு; likeness.

   2. இசைவு; symmetry.

   3. இணக்கங் காட்டுங் குணம்; spirit of compromise

     [சாயல் + சரிவு – சாயல்சரிவு – மரபிணை மொழி]

சாயல்பிடி

சாயல்பிடி1 cāyalpiḍittal,    4 செ.கு.வி. (v.i.)

   சரியான படி (அராகம்); பண்பிடித்தல்; to get the right tune.

     [சாயல் + பிடி]

 சாயல்பிடி2 cāyalpiḍittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   ஒத்திசைத்தல் (அனுகரித்ததல்);; to imitate correctly, as in dress.

     [சாயல் + பிடி-,]

சாயல்மாயலாய்

 சாயல்மாயலாய் cāyalmāyalāy,    கு.வி.எ. (adv.) சாடைமாடையாய் (இ.வ.); without taking serious notice.

     [சாயல் + மாயல் + ஆய்]

சாயல்வரி

சாயல்வரி cāyalvari, பெ. (n.)

   வரிப் பாட்டு வகை (சிலப். 7:43, உரை);; a love-song.

     [சாயல் + வரி]

சாயல்வாகை

 சாயல்வாகை cāyalvākai, பெ. (n.)

   உசிலமர வகை (L);; black sirissa.

சாயவடுப்பு

 சாயவடுப்பு cāyavaḍuppu, பெ. (n.)

   சாயம் காயச்சுதற்குரிய அடுப்பு; oven for preparing dye.

     [சாயம் + அடுப்பு. அடுதல் = சுடுதல், சமைத்தல். அடு → அடுப்பு]

சாயவிடு-தல்

சாயவிடு-தல் cāyaviḍudal,    18 செ.குன்றாவி. (v.t.)

   சாய்த்தல்; to cause to incline.

     ‘மூட்டையைச் சாயவிட்டான்’ (உ.வ.);.

     [சாய் → சாய + விடு-,]

சாயவிராதகம்

 சாயவிராதகம் cāyavirātagam, பெ. (n.)

   கடுக்காய்; gallnut (சாஅக);.

சாயவிரை

 சாயவிரை cāyavirai, பெ. (n.)

   குரங்குமூஞ்சி விதை; monkey turmeric (சா.அக.);.

சாயவிலை

 சாயவிலை cāyavilai, பெ. (n.)

   சீமைக் கற்பூரம் (L);; Bengal sage.

சாயவெளிச்சை

சாயவெளிச்சை cāyaveḷiccai, பெ. (n.)

   ஆறு விரலம் (அங்குலம்); நீளமுள்ள ஆற்றுமீன் வகை (F.L.);; a river-fish, silvery, attaining 6 in. in length.

சாயவேட்டி

 சாயவேட்டி cāyavēṭṭi, பெ. (n.)

   சாயமேற்றிய ஆடை; dyed clothworn by men.

     [சாயம் + வேட்டி]

 சாயவேட்டி cāyavēṭṭi, பெ. (n.)

   சாய மேற்றிய ஆடை; colour added cloth.

     [சாயம்+வேட்டி]

சாயவேர்

சாயவேர் cāyavēr, பெ. (n.)

   சாயமிடுதற்குதவும் பூடுவகை (M.M. 160);; chayroot, Indian madder.

   ம. சாயவேர்;க. சாயி, சாயிபேரு

     [சாயம் + வேர்]

சாயவேர்குத்திகள்

 சாயவேர்குத்திகள் cāyavērguttigaḷ, பெ. (n.)

   சாயவேரைத் தோண்டியெடுப்போர் (யாழ்ப்.);; chayroot diggers.

     [

சாயவேர் + குத்திகள்]

சாயவேர்ச்சக்களத்தி

 சாயவேர்ச்சக்களத்தி cāyavērccakkaḷatti, பெ. (n.)

   போலிச்சாயவேர் (சங்.அக.);; counterifeit chayroot.

     [சாயவேர் + சக்களத்தி]

சாயவேளாகொல்லி

சாயவேளாகொல்லி cāyavēḷākolli, பெ. (n.)

   பண்வகை (சிலப். 14:166, உரை);; primary melody- type.

சாயவோலை

 சாயவோலை cāyavōlai, பெ. (n.)

   காதுக்கு இடவும் பெட்டி முடையவும் உதவுஞ் சாயமிட்ட ஓலை (வின்.);; dyed olas or rushes for ear-ornament and for matting.

     [சாயம் + ஓலை]

சாயாகிரகம்

 சாயாகிரகம் cāyāgiragam, பெ. (n.)

சாயைக்கிரகம் பார்க்க;See {}.

     [சாயை → சாயா + கிரகம்]

 Skt. graha → த. கிரகம்

சாயாகெளளம்

சாயாகெளளம் cāyākeḷaḷam, பெ. (n.)

   பண் (அராகம்); வகை (பரத. இராக. 55);; a specific melody – type.

சாயாசூரன்

 சாயாசூரன் cāyācūraṉ, பெ. (n.)

   ஒர் அசூரன்; a monster.

     [சாய் → சாயா + சூரன். சுள் → கர் → சுரம் → சுரன் → சூரன்]

சாயானகம்

 சாயானகம் cāyāṉagam, பெ. (n.)

   ஒந்தி (திவா.);; chameleon.

சாயாபடம்

 சாயாபடம் cāyāpaḍam, பெ. (n.)

சாயைப்படம் பார்க்க;See {}.

     [சாய் → சாயா + படம்]

சாயி

சாயி1 cāyi, பெ. (n.)

   மை (C.G.);; ink.

க. சாய்

     [சாய் = நிறம். சாய் → சாயி]

 சாயி2 cāyi, பெ. (n.)

   படுத்துக்கிடப்பவன்; reclining person used only in compounds.

     [சாள் → சாடு. சாடுதல் = சாய்தல். சாள் → சாய். சாய்தல் = படுத்தல். சாய் + இ – சாயி]

சாயிதான்

 சாயிதான் cāyitāṉ, பெ. (n.)

   மைக்கூடு (C.G.);; ink stand, ink-bottle.

     [சாயம் → சாயி + தான். தானம் → தான்]

 U. {} → த. தான்

சாயினம்

சாயினம் cāyiṉam, பெ. (n.)

   மென்மையுள்ள மகளிர்கூட்டம்; bevy of beautiful ladies.

     “துவ்வா நறவின் சாயினத்தானே” (பதிற்றுப். 6௦);.

     [சாய்4 → சாயல் → சாயினம்]

சாயு

சாயு cāyu, பெ. (n.)

   ஒருவகைப்புல்; a kind of grass.

     [சாய்5 → சாயு]

சாயுங்காலம்

சாயுங்காலம் cāyuṅgālam, பெ. (n.)

   கதிரவன் சாயும் வேளை (எற்பாடு); மாலைப் பொழுது; evening.

     [சாயும் + காலம்]

கதிரவன் சாயுங்காலத்தைப் பொழுது சாய்கிற வேளை என்பது இன்றும் பெருவழக்கான உலக வழக்கு. ஆங்கிலரும் decline என்று கூறுதல் காண்க.

வடவர் ஸோ என்பதை மூலமாகக் காட்டுவர். ஸோ = அழி, கொல், முடி. சாயம் = நாள், முடிவு. இங்ஙனம் வடசொல்லாகக் காட்டுவதற்கே சாயுங்காலம் என்னும் வடிவைச் சென்னைப்

பல்கலைக்கழக அகரமுதலியிற் காட்டாது விட்டிருக்கின்றனர் (வ.வ.146);.

த. சாயுங்காலம் → Skt. {}

சாயை

சாயை1 cāyai, பெ. (n.)

   1. நிழல்; shadow.

     “தன்னது சாயை தனக்குத வாது” (திருமந். 170);.

   2. படிவடிவம் (வின்.);; reflected image, reflection.

   3. ஒப்பு; resemblance, likeness.

இக் குழந்தைக்குத் தகப்பன் சாயை உள்ளது.

   4. சாயைக்கிரகம் பார்க்க (வின்.););;See {}.

   5. புகழ்; fame.

     “நின் சாயை யழிவு கண்டாய்” (திவ். பெரியாழ். 5,3,3);.

   6. நிழல்போல் தொடரும் கரிசு (பாவம்);; sin, as following a person like his shadow.

     “பிரமக் கொலைச் சாயை” (திருவானைக். தீர்த்தலி.9);.

   வ. சாயா;கிரே. ஸ்கிய

     [சாய் + ஐ – சாயை = நிழல்]

நிழல் சாய்கிறது என்பது வழக்கு ஒ.நோ: மாய் + ஐ = மாயை. சாயை சாயா என்று ஆகார வீறாக்கின வளவானே வடசொல்லாகக் கூறுவது நகைப்பிற்கிடமானதே (ஒப். மொ.64);.

 சாயை2 cāyai, பெ. (n.)

சாயமரம் பார்க்க (L.);;See {}.

     [சாயம் → சாயை]

 சாயை3 cāyai, பெ. (n.)

   மனைவி (யாழ்.அக.);; wife.

     [சாயல் → சாயை. சாயல் = நிழல்;

சாயை = நிழல்போல் உடனிருப்பவள்]

 சாயை4 cāyai, பெ. (n.)

   சுவடு; trace.

     “தன்னய விருப்பின் சாயைகூடத் தன்னிடம் இல்லாமலும்” (நித்தியானுசந். பக்.366);.

     [சாயல் → சாயை]

சாயைகாட்டு-தல்

சாயைகாட்டு-தல் cāyaikāṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   கோயிலில் இறைவனுக்கு முன் மதிப்புரவாகக் (உபசாரமாகக்); கண்ணாடி காட்டுதல் (இ.வ.);; to hold a mirror before an idol, in worship.

     [சாயை = நிழல். சாயை + காட்டு-,]

சாயைக்கிரகம்

 சாயைக்கிரகம் cāyaiggiragam, பெ. (n.)

   காணாக்கோள்களாகக் கருதப்படும் இராகு, கேது என்னும் கோள்கள்; nodes, considered as invisible planets.

 Skt. graha → த. கிரகம்

     [சாய் → சாயை + கிரகம்]

கருங்கோள் (இராகு);, செங்கோள் (கேது); எனக் கருதப்படும் இரு கோள்களும் தனியான கோள்கள் அல்ல. பெருங்கோள்களின் சாயை (நிழல்);.

சாயைப்படம்

 சாயைப்படம் cāyaippaḍam, பெ. (n.)

   புகைப்படம்; photograph.

     [சாயை = படம்]

சாய்

சாய்1 cāytal,    2 செ.கு.வி. (v.i.)

   1. கவிழ்தல்; to incline, hand down.

     “நாணடச் சாய்ந்த நலங்கிள ரெருத்தின்” (பொருந. 31);.

   2. வானில் கோள் முதலியவை சாய்தல்; to decline, as a heavenly body.

   3. வளைதல்; to bend, turn down, as the ear.

     “சாய் செவிக்குருளை” (சிறுபாண். 130);.

   4. படுத்தல்; to recline, lie down.

     ‘திருக்கையிலே சாயுமித்தனை’ (ஈடு, 27:5);.

   5. திரண்டுசெல்லுதல்; to march, in crowds.

     ‘திருவிழாவுக்கு மக்கள் திரள் சாய்கிறார்கள்’ (உ.வ.);.

   6. முறிதல்; to give

 way, break.

     “சாய்ந்த வல்லுருமு போய்” (கம்பரா. நாகபாச. 99);.

   7. தோற்றோடுதல்; to be routed;

 to flee.

     “வந்தவர் சாய்ந்த வாறும்” (பாரத. நீரைமீட்சி. 137);.

   8. நடுநிலை திறம்புதல்; to be partial, biassed.

   9. ஒதுங்குதல் (வின்.);; to decline from a direct course;

 to deviate.

   10. சார்தல்; to lean.

தூணின் மேல் சாய்ந்தான்.

   11. நடந்தேறுதல்; to happen, succeed.

அந்தக் காரியஞ் சாய்ந்தது.

   ம. சாயுக;   து. சாவுனி;   வ. சய்;சீ. கூடிய்.

     [சூள் → சாள் → சாய்]

 சாய்2 cāytal,    2 செ.கு.வி. (v.i.)

   1. தளர்தல்; to be fatigued, to grow weary.

     “கள்ளொற்றிக் கண் சாய்பவர்” (குறள், 927);.

   2. வருந்துதல்; to be troubled.

     “சாய்குவ ளல்லளோ” (கலித். 79: 1௦);.

   3. மெலிதல்; to grow thin, emaciated.

     “சாயினள் வருந்தியாளிடும்பை” (கலித். 121);.

   4. வற்றுதல்; to get dried up, as a channel.

     “கான்யாற்றுக் கடும்புனல் சாஅய்” (அகநா. 25);.

   5. அழிதல்; to be ruined, to perish.

     “மறஞ்சாய” (பு.வெ.2,1, கொளு.);.

     [சாள் → சாய்]

 சாய்3 cāyttal,    4 செ.குன்றாவி. (v.t.)

   1. சாயச் செய்தல்; to cause to incline, bend or stoop.

     “உண்டுறையுடைந்த பூப்புனல் சாய்ப்ப” (கலித். 78);.

   2. ஒருபக்கமாக ஒட்டுதல் (வின்.);; to turn in a new direction, to drive.

   3. கரைக்குச் செலுத்துதல் (வின்.);; to steer shoreward, as a vessel.

   4. மனஞ்சாயப் பண்ணுதல் (வின்.);; to prejudice.

   5. கெடுத்தல்; to destroy, mar or spoil.

     “மல்லரை மறஞ்சாய்த்த” (கலித். 134);.

   6. தோல்வியுறச் செய்தல்; to discomfit, defeat.

     “சூதும் பங்கய முகையுஞ் சாய்த்துப் பணைத் தெழுந்து” (பெரியபு. தடுத்தாட். 21);.

   7. முறித்தல்; to break off.

     “குருந்தஞ் சாய்த்ததூஉம்” (திரிகடு.காப்பு,1);.

   8. மெய்ப்படுத்துதல்; to establish.

     “தன்பாற் றவறுண்டெனக் கெளசிகன் சாய்க்கின்” (அரிச். பு. இந்திர. 42);.

   9. முற்றுவித்தல்; to finish, bring to a successful issue.

   10. மிகுதியாகக் கொடுத்தல்; to give in abundance.

     ‘தாய் பெண்ணுக்கு எல்லாவற்றையுஞ் சாய்த்தாள்’ (உ.வ.);.

   ம. சாய்க்குக;து. சாசுனி

     [சாள் → சாய். சாய்தல் (த.வி.);, சாய்த்தல் (பி.வி.);]

 சாய்4 cāy, பெ. (n.)

   1. ஒளி; brilliance, light.

     “சாய்கொண்ட விம்மையும்” (திவ். திருவாய். 3. 9: 9);;

   2. சாயல், அழகு; beauty.

     “சங்கஞ் சரிந்தன சாயிழந்தேன்” (திவ். திருவாய். 8 2: 1);.

   3. சாயம், நிறம்; colour

     “சாயாற்கரியானை” (திவ்.இயற். பெரியதிவந். 14);.

   4. புகழ்; fame, reputation.

     ‘இந்திரன் தன் சாயாப் பெருஞ்சாய் கெட” (கம்பரா. நாகபா. 21);.

   5. சாயை, நிழல்; shadow.

   ம. சாய்;   குட. சய் (அழகு);;கோத. சய்வ் (நிறம்);

     [சால் → சாய் (வே.க. 232.);]

 சாய்5 cāy, பெ. (n.)

   1. தண்டான்கோரை; sedge.

     “சாய்க்கொழுதிப்பாவை தந்தணைத் தற்கோ” (கலித். 767);.

   2. செறும்பு; splinter.

     “இரும்பனை வெளிற்றின் புன்சாயன்ன” (திருமுரு. 312);.

     [சாள் → சாய்]

சாய்கடை

 சாய்கடை cāykaḍai, பெ. (n.)

   நீர்த்தாரை; drain, gutter for carrying off sewage.

மறுவ. சுருங்கு, சலதாரை, சாலகம், அங்கணம்

     [சாள் → சாய். சாய்தல் = வளைதல். சாய் + கடை]

அங்கணம் என்னும் பெயரும் இக்கரணியம் பற்றியதே. ஒ.நோ. வணங்கு → வாங்கு → வங்கு → அங்கு. அங்குதல் = வளைதல், சாய்தல். அங்கு + அணம் – அங்கணம் – வாட்டஞ் சாட்டமாயிருக்கும் சாலகம்.

சாய்கண்குருடு

 சாய்கண்குருடு cāykaṇkuruḍu, பெ. (n.)

வாய், கண், மூக்கு, நாக்கு இவை ஒரு பக்கத்தில்

   இழுத்துக் கொண்டு, அத்துடன் கண்கள் சிவந்து குருடாகி, எரிச்சல், நீர் வடிதல் ஆகிய பண்புகளைக் காட்டுமோர் நோய்; blindness of the eyes characterised by controtion of the face on one side, thereby affecting the mouth, eyes, nose, tongue, etc., attended with inflammation, burning and watery discharge from the eyes (aft-gyas);.

     [சாப் + கண் + குருடு]

சாய்கரகம்

சாய்கரகம் cāygaragam, பெ. (n.)

   தண்ணீர்ப் பந்தரில் நீர் வார்க்கும் ஏன (பாத்திர); வகை (ஈடு,6. 10: 7);; a kind of spouted vessel used in pouring water.

     [சாய் + கரகம்]

சாய்காலம்

சாய்காலம் cāykālam, பெ. (n.)

   சொல் செயற்படும்படியான நிலை (இ.வ.);; time of prosperity and influence.

     [சாய்1 + காலம்]

சாய்கால்

சாய்கால் cāykāl, பெ. (n.)

   செயற்றிறம் வாய்ந்த மதிப்பு (இ.வ.);; influence.

     [சாள் → சாய் → சாய்கால் (வே.க.233);]

சாய்கால்விக்கிரயம்

 சாய்கால்விக்கிரயம் cāykālvikkirayam, பெ. (n.)

   உள்ளூர் வணிகம்; inland trade.

     [சாய்கால் + விக்கிரயம்]

சாய்கை

சாய்கை cāykai, பெ. (n.)

   தங்குமிடம் (யாழ்ப்.);; house, rest-house.

     [சாய்1 → சாய்கை. சாய்கை = படுக்குமிடம், இளைப்பாறுமிடம். ‘கை’ சொ. ஆ. ஈறு.]

   ஒநோ: இ. சகா;சாய் → (சாயனம்); → வ. சயனம் = படுக்கை. உ. சாகர்

சாய்க்காடு

சாய்க்காடு cāykkāṭu, பெ. (n.)

   பூம்புகாரைச் சார்ந்த ஊர்; a village near {}.

     [சாய் + காடு]

இவ்வூர், தேவாரத்தில் பூம்புகார்ச் சாய்க்காடு என்றும் காவிரிப் பூம்பட்டினத்துச் சாய்க்காடு என்றும் குறிக்கப்படுகிறது.

     “விண்புகார் எனவேண்டா வெண்மாட நெடுவீதித் தன் புகார்ச்சாய்க்காட்டுள் தலைவன் தாள் சார்ந்தாரே” எனவும்

     “மொட்டலர்ந்த தடந்தாழை முருகுயிர்க்கும் காவிரிப்பூம் பட்டினத்துச் சாய்க்காட்டெம் பரமேட்டி பாதமே” (திருச்சாய்க்காட்டுப் பதிகம் 1: 4);.

சாய்ங்காலம்

 சாய்ங்காலம் cāyṅgālam, பெ. (n.)

சாயுங் காலம் பார்க்க;See {}.

     ‘சாய்ங்காலம் இன்றைக்கு ஊருக்குப் போறேன்’ (உ.வ.);.

     [சாயுங்காலம் → சாயங்காலம் → சாய்ங்காலம்]

சாய்தட்டுத்தாள்

 சாய்தட்டுத்தாள் cāytaṭṭuttāḷ, பெ. (n.)

   ஒரு வகையான ஆடல் இயக்கம்; a dance movement.

     [சாய்தட்டு+தாள்]

சாய்திண்ணை

 சாய்திண்ணை cāytiṇṇai, பெ. (n.)

   சாய்ந்து கொள்ள வசதியான ஒருபுறம் திட்டு வைத்துக் கட்டப்படும் திண்ணை; back seat pial.

     [காய்+திண்ணை]

சாய்த்துக்கொடு-த்தல்

சாய்த்துக்கொடு-த்தல் cāyttukkoḍuttal,    5 செ.குன்றாவி. (v.t.)

   ஒருசேரக் கொடுத்தல்; to give in abundance.

     “பரிசிலரைக் காணில்….. யானையை அணியணியாகச் சாய்த்துக் கொடுக்கும்” (புறநா. 135, உரை.);.

     [சாய் → சாய்த்து + கொடு-,]

சாய்த்துப்பார்-த்தல்

சாய்த்துப்பார்-த்தல் cāyttuppārttal,    4 செ.குன்றாவி. (v.t.)

   கண்ணைக் கோணலாக வைத்துக் கொண்டு (வக்கிரித்துப்); பார்த்தல்; to look askant.

     [சாய் → சாய்த்து + பார்-,]

சாய்த்துவிடு-தல்

சாய்த்துவிடு-தல் cāydduviḍudal,    18 செ.குன்றாவி. (v.t.)

   1. சாய்த்துக்கொடு பார்க்க;See {}.

   2. கொல்லுதல் (இ.வ.);; to kill.

     [சாய் → சாய்த்து + விடு-,]

சாய்ந்தரக்களை

 சாய்ந்தரக்களை cāyndarakkaḷai, பெ. (n.)

   மாலை நான்கு மணியில் இருந்து இருட்டும் வரை செய்யும் களையெடுத்தல் தொழில் (தெ.ஆ.);; evening weeding.

சாய்ந்தரக் களைக்கு ஆள் கூப்பிடு

     [சாய்ந்தரம் + களை. சாய் → சாய்ந்தரம்]

சாய்ந்தரப்பூட்டு

சாய்ந்தரப்பூட்டு cāyndarappūṭṭu, பெ. (n.)

   மாலையில் (4 மணிக்குமேல்); செய்யும் உழவு (தொழில்.);; evening ploughing.

     [சாய்த்தரம் + பூட்டு. பூண் → பூட்டு = உழவு]

சாய்ந்தாடு-தல்

சாய்ந்தாடு-தல் cāyndāṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   நிலத்தில் நின்றுகொண்டு அல்லது இருக்கையில் இருந்து கொண்டு பக்கவாட்டில் அல்லது முன்னும்பின்னும் அசைதல்; to swing or swerve sideways without shifting position.

     “சாந்தாடம்மா சாய்ந்தாடு” (குழந்தைப் பாட்டு);.

ம. சாஞ்ஞாடுக, சாஞ்சாடுக

     [சாய்ந்து + ஆடு-,]

சாய்ந்தாட்டம்

 சாய்ந்தாட்டம் cāyndāṭṭam, பெ. (n.)

   சாய்ந்தாடுதல்; swinging or swerveing sideways without shifting position.

ம. சாஞ்சாட்டம்

     [சாய்ந்தாடு → சாந்தாட்டம்]

சாய்பலகை

 சாய்பலகை cāypalagai, பெ. (n.)

   சாய்மானப் பலகை (இ.வ.);; sloping wooden back for reclining.

     [சாய் + பலகை]

சாய்ப்பாங்கரை

 சாய்ப்பாங்கரை cāyppāṅgarai, பெ. (n.)

   அடுப்பங்கரை, அடுப்படி; kitchen;

 the front of the hearth.

     [சாய்ப்பாங்கடை → சாய்ப்பாங்கரை]

சாய்ப்பாய்விடு-தல்

சாய்ப்பாய்விடு-தல் cāyppāyviḍudal,    18 செ.குன்றாவி. (v.t.)

   பாராதுபோல இருந்து விடுதல்; to connive at.

     [சாய்ப்பாய் + விடு-,]

சாய்ப்பாவை

சாய்ப்பாவை cāyppāvai, பெ. (n.)

   ;   கோரைப் பாவை (கலித்.133, 33, உரை);; doll made of sedge.

     [சாய்5 + பாவை. சாய் = கோரை]

சாய்ப்பிடம்

சாய்ப்பிடம் cāyppiḍam, பெ. (n.)

   1. படை பின் வாங்குமிடம்; place of retreat, as of an army.

     “சாய்ப்பிடமாகப் போர்ப்படை பரப்பி” (பெருங். மகத. 17:63);.

   2. சிறு கொட்டகை (இவ.);; a shed with sloping roof.

     [சாய்3 + சாய்ப்பிடம்]

சாய்ப்பிறக்கு-தல்

சாய்ப்பிறக்கு-தல் cāyppiṟakkudal,    5 செ.கு.வி. (v.i.)

   சாய்வாக மேற்கூரை அமைத்தல் (வின்.);; to construct a sloping roof.

     [சாய்ப்பு + இறக்கு-,]

சாய்ப்பு

சாய்ப்பு cāyppu, பெ. (n.)

   1. தாழ்வு (பிங்.);; slope, slant.

   2. மலைச்சரிவு (வின்.);; slide or declivity of a mountain.

   3. சாய்வான கூரை (வின்.);; sloping or slanting roof.

   4. சாய்வு-2 பார்க்க (வின்.);;See {}.

   5. முகங்கொடாமை (வின்.);; aversion, indifference.

   6. மட்ட வெற்றிலை (யாழ்ப்.);; inferior betel leaves.

ம. சாயிப்பு

     [சாய் + சாய்ப்பு. ‘பு’ சொ.ஆ.ஈறு]

சாய்ப்புத்தாளம்

 சாய்ப்புத்தாளம் cāypputtāḷam, பெ. (n.)

   பரதத்தில் பயன்படுத்தப்படும் தாள வகைகளிற் ஒன்று; a time measure.

     [சாய்ப்பு+தாளம்]

சாய்மணை

சாய்மணை cāymaṇai, பெ. (n.)

   1. சாய்மானம்1, 1 பார்க்க;See {},

   2. திண்டு; a kind of pillow.

     [சாய் + மணை]

சாய்மரம்

 சாய்மரம் cāymaram, பெ. (n.)

   சிவதை (மலை);; jalap.

சாய்மானக்கதிரை

 சாய்மானக்கதிரை cāymāṉakkadirai, பெ. (n.)

   சாய்வுநாற்காலி (இலங்கை);; easy chair.

     [சாய்மானம் + கதிரை]

சாய்மானப்பலகை

சாய்மானப்பலகை cāymāṉappalagai, பெ. (n.)

   1. சாய்ந்துகொள்ளுதற்குரிய பலகை; a plank used for reclining.

   2. துணிவெளுக்கும் பலகை (இ.வ.);; washboards.

     [சாய்மானம் + பலகை]

சாய்மானம்

சாய்மானம்1 cāymāṉam, பெ. (n.)

   1. சார்மணை (உ.வ.);; back, as of a chair;a masonry construction to recline.

   2. சாய்கை (உ.வ.);; leaning, reclining.

   3. சாய்வு1, 2 (வின்.); பார்க்க;See {}, 2.

ம. சாய்மானம்

     [சாய் + மானம்]

 சாய்மானம்2 cāymāṉam, பெ. (n.)

   ஒப்பொழுக்கம் (ஒப்பாசாரம்); (யாழ்.அக);; conformity, decorum.

     [சாய் + மானம்]

சாய்மேதிதம்

 சாய்மேதிதம் cāymēdidam, பெ. (n.)

   குங்குமப்பூ; English saffron flower – Crocus sativus (சா.அக.);.

சாய்வு

சாய்வு1 cāyvu, பெ. (n.)

   1. சரிவு (யாழ்அக);; slope, declivity, side of a hill.

   2. ஒருபாற்கோடல் (சங்.அக);; bias, partiality.

   3. குறைவு; defect, deficiency.

     “சாய்வறத் திருத்திய சாலை” (கம்பரா. திருவவ. 84);.

   4. நிலைமைத்தாழ்வு; straitened circumstances.

   5. வளைவு (யாழ்ப்.);; going obliquely;

 turning aside;

 obliquity, divergency.

   6. நோக்கம்; inclination, bent of mind.

   7. அழிவு; death;

 destruction.

     “உயிர்ப்பொறைச் சாய்வு நீக்குதல் சாரதி தன்மைத்தால்” (கம்பரா. இராவணன்வதை, 182);.

   8. கட்டடம் முதலியவற்றின் வாட்டம் (இ.வ.);; gradient.

ம.சாய்வு

     [சாள் → சாய் → சாய்வு. ‘வு’ சொ.ஆ.ஈறு]

 சாய்வு2 cāyvu, பெ. (n.)

   நீர் இல்லாமல் உலர்ந்து போன பயிர் (செங்கை.);; dry crop (without water);.

     [சாய் → சாய்வு]

சாய்வுசரிவு

சாய்வுசரிவு sāyvusarivu, பெ. (n.)

   1. இரக்கம் (தாட்சணியம்);; kindness, leniency.

   2. சாய்வு1-2 பார்க்க;See {}-2

     [சாய்வு + சரிவு]

சாய்வுநாற்காலி

 சாய்வுநாற்காலி cāyvunāṟkāli, பெ. (n.)

   கெட்டியான துணியைத் தொட்டில் போல் தொங்கவிட்ட, சாய்ந்து கொள்வதற்கான நாற்காலி; deck-chair, easy chair.

தாத்தாவுக்கு ஒரு சாய்வு நாற்காலி வாங்க வேண்டும்

     [சாய்வு + நாற்காலி]

     [p]

சாய்வுப்பாதை

 சாய்வுப்பாதை cāyvuppātai, பெ. (n.)

   மாடிக்கு அல்லது மேடைக்குச் செல்லப் படியில்லாமல் சாய்வாக அமைக்கப்பட்ட தளப்பாதை (கட்டட);; terrace way without step, ramp

     [சாய்வு + பாதை]

சாய்வுமேசை

 சாய்வுமேசை cāyvumēcai, பெ. (n.)

   எழுதுவதற்கு ஏந்தாகக் கீழ்நோக்கிச் சாய்ந்த பரப்பையுடைய மிசை; a desk with a sloping top.

     [சாய்வு + மேசை]

சாரகத்தி

 சாரகத்தி cāragatti, பெ. (n.)

   நீர்முள்ளி; water thistle – Hygrophila spinosa (சா.அக.);.

சாரகந்தகம்

 சாரகந்தகம் cāragandagam, பெ. (n.)

   சந்தனம் (மலை.);; sandalwood.

சாரகந்தம்

 சாரகந்தம் cāragandam, பெ. (n.)

சாரகந்தகம் பார்க்க (மூ.அ.);;See {}

     [சாரகந்தகம் → சாரகந்தம்]

சாரகம்

சாரகம்1 cāragam, பெ. (n.)

   தேன் (சங்.அக.);; honey.

   ம. சாரகம்; Skt. {}

 சாரகம்2 cāragam, பெ. (n.)

   இந்துப்பு (மூ.அ.);; rock salt.

சாரக்கட்டை

சாரக்கட்டை cārakkaṭṭai, பெ. (n.)

   1. வளைவைத் தாங்குதற் கென்று கட்டிப் பின்பு எடுத்துவிடக் கூடிய சுவர்; temporary wall erected for supporting an arch under construction.

   2. அணை வளைவைத் தாங்க இடைக்கால ஏற்பாடாகக் கட்டப்படும் நடுக்கட்டைச் சுவர் (C.E.M.);; centering pier

     [சாரம் + கட்டை]

சாரக்கயிறு

 சாரக்கயிறு cārakkayiṟu, பெ. (n.)

சாரங் கட்டும் கயிறு,

 rope.

     [சாரம்+கயிறு]

சாரக்கினி

 சாரக்கினி cārakkiṉi, பெ. (n.)

   சிறுகீரை; field spinach – Amaranthus eampestris (சா.அக);.

சாரக்கிழங்கு

 சாரக்கிழங்கு cārakkiḻṅgu, பெ. (n.)

   சிறுகிழங்கு; Chinese yam;small yam – Dioscorea aculeata (சாஅக.);.

     [சாரம் + கிழங்கு. கிழக்கு → கிழங்கு = நிலத்தின்கீழ் விளைவது]

சாரக்குறி

 சாரக்குறி cārakkuṟi, பெ. (n.)

 a mark on the forehead etc. made by ashes (சேரநா.);.

ம. சாரக்குறி

     [சாரம் + குறி]

சாரங்கட்டு-தல்

சாரங்கட்டு-தல் cāraṅgaṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   கட்டடத்தின் மேற்பகுதிக்கு ஏறுவதற்கு வாய்ப்பாகக் கம்புகளைக் கொண்டு படி போன்ற நிலையினை உருவாக்குதல்; to scaffold.

க. சாரகட்டு

     [சாரம் + கட்டு-,]

சாரங்கநாட்டை

சாரங்கநாட்டை cāraṅganāṭṭai, பெ. (n.)

   பண் வகை (பரத. ராக. 102);; a specific melody-type.

சாரங்கன்

சாரங்கன்1 cāraṅgaṉ, பெ. (n.)

   திருமால் (வின்.);;{} (Visnu);, as a bowman.

     [சரம்’ = அம்பு. சரம் → சாரம் + அங்கன்]

 Skt. anga → த. அங்கன்

 சாரங்கன்2 cāraṅgaṉ, பெ. (n.)

   குதிரை வகை (அகவசா. 151);; a species of horse (செ.அக.);.

சாரங்கபாடாணம்

 சாரங்கபாடாணம் cāraṅgapāṭāṇam, பெ. (n.)

   செய்நஞ்சு (பாடாண); வகையுளொன்று (சங்.அக.);; a kind of arsenic.

சாரங்கம்

சாரங்கம்1 cāraṅgam, பெ. (n.)

   1. குறிஞ்சா; Indian ipecacuanha.

   2. சிறுகுறிஞ்சா; small Indian pecacuanha (செ.அக.);.

 சாரங்கம்2 cāraṅgam, பெ. (n.)

சாரங்கவீணை பார்க்க (பரத. ஒழிபி. 15);;See {}.

சாரங்கவீணை

 சாரங்கவீணை cāraṅgavīṇai, பெ. (n.)

   வீணை வகை (சங்.அக);; a kind of lute.

     [சாரங்கம் + வீணை. விண் = வில்நரம்பு தெரித்தற்குறிப்பு. விண்விண் = யாழ்நரம்பு தெரித்தற்குறிப்பு. விண் → வீணை]

சாரங்கி

 சாரங்கி cāraṅgi, பெ. (n.)

   நரம்பிசைக் கருவி வகை (வின்.);; Indian violin, a stringed instrument played with a bow.

சாரங்கெட்டவன்

சாரங்கெட்டவன் cāraṅgeṭṭavaṉ, பெ. (n.)

   1. பெண் நோக்கம் இல்லாதவன்; impotant geroon.

   2. பயன் இல்லாதவன்; useless person.

     [சாரம்+கெட்டவன்]

சாரசணம்

 சாரசணம் sārasaṇam, பெ. (n.)

   மாதரின் இடையணி வகை (யாழ்.அக.);; a waist band for women (செ.அக.);.

சாரசம்

சாரசம் sārasam, பெ. (n.)

   சீமை நன்னாரி (M.M.171);; sarsaparilla china root, similax officinalis.

சாரசவேர்

 சாரசவேர் sārasavēr, பெ. (n.)

   சீமை நன்னாரி வேர்; root of jamaica sarsaparilla – sarsac radix (சா.அக.);.

     [சாரசம் + வேர்]

சாரசிங்கி

சாரசிங்கி sārasiṅgi, பெ. (n.)

   1. கல்லுப்பு; crystallized sea-salt.

   2. சவ்வீரம்; corrosive sublimate (சா.அக.);.

சாரசேர்

 சாரசேர் cāracēr, பெ. (n.)

   முதியார் கூந்தல்; virginian silk – Periplocal sclapidae (சா.அக.);.

சாரஞ்சுடு-தல்

சாரஞ்சுடு-தல் cārañjuḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   காரநீர் மருந்துக்கானச் சாம்பலுக்காகக் கள்ளி முதலியவற்றை எரித்தல் (வின்.);; to burn the milk-hedge, prickly pear, etc., to get their ashes for making lye.

     [சாரம் + சுடு-,]

சாரடை

சாரடை cāraḍai, பெ. (n.)

   வரிவகையுளொன்று (தெ.க.தொ. 4.106);; a tax.

சாரணத்தி

 சாரணத்தி cāraṇatti, பெ. (n.)

சாரணை (மலை.); பார்க்க;See {}.

     [சாரணை → சாரணத்தி]

சாரணம்

 சாரணம் cāraṇam, பெ. (n.)

   அம்மையார் கூந்தல் (மலை.);; Seeta’s thread.

சாரணரியக்கம்

 சாரணரியக்கம் cāraṇariyakkam, பெ. (n.)

   நாட்டுநலப்பணித் தொண்டர் படை இயக்கம் (Mod.);; scout movement.

     [சாரணர் + இயக்கம்]

சாரணர்

சாரணர்1 cāraṇar, பெ. (n.)

   1. ஒற்றர்; spies, secret agents, emissaries.

     “தவாத் தொழிற் றூதுவர் சாரணர்” (திவா.);.

   2. தூதுவர்; messengers, ambassadors.

     “சாரணர்…… அளித்த வோலை” (விநாயகபு. 3: 35);.

   3. சமணரிலும் புத்தரிலும் சித்தி பெற்றோர்; Jain or Buddhist sages who have obtained supernatural powers.

     “சாரண ரறிந்தோர் காரணங்கூற” (மணிமே. 29. 29);.

   4. பதினெண்கணத்துள் ஒரு சாரார் (சூடா.);; a class of celestial hosts, one of {}.

   5. நாட்டு நலப்பணியாளர்கள்; scouts.

     [சரணம் = கால். சரணம் → சாரணர்]

 சாரணர்2 cāraṇar, பெ. (n.)

   தேவருள்பாடும் வகுப்பார்; recite caste (அபி.கோ);.

சாரணி

 சாரணி cāraṇi, பெ. (n.)

   துளைக்கரண்டி, கண்கரண்டி; perforated laddle.

     [கரை-சரை-சாரணி]

     [P]

சாரணை

சாரணை cāraṇai, பெ. (n.)

   மழைக்காலத்தில் முளைக்கும் செடி; one – styled trianthema – Trianthema monogyna (சா.அக.);.

வகைகள்

   1. சத்திச் சாரணை; hogweed – Boerhaavia rependa.

   2. வெள்ளைச் சாரணை; white Shauranay- Trianthema decandra.

   3. சிகப்புச் சாரணை; red Shauranay – Orygia decumbens alias O. trianthemoides.

   4. மிளகுச் சாரணை; pungent trianthema.

   5. செஞ் சாரணை;   6. மூக்கரைச் சாரணை; a white creeper – Trianthema monogyna.

   7. வட்டச் சாரணை; purslane – leaved trianthema-Trianthema pentardra.

   8. அதி சாரணை;   9. சிறு சாரணை;

சாரத்தண்ணீர்

 சாரத்தண்ணீர் cārattaṇṇīr, பெ. (n.)

   காரத் தண்ணீர் (வின்.);; lye

     [காரம் → சாரம் + தண்ணீர்]

சாரத்துளை

 சாரத்துளை cārattuḷai, பெ. (n.)

   சாரக்கழி வைக்கும் சுவர்த்துளை; scaffold-hole or pút log hole in a building under construction.

     [சாரம் + துளை. துள் → துளை]

சாரன்

சாரன் cāraṉ, பெ. (n.)

   1. ஒற்றன்; spy, emissary.

     “ஓடினார் சாரர்வல்லை” (கம்பரா.பிரமாத்திர. 162);.

   2. குதிரைவகை (அகவசா.152.);; a breed of horse.

     [சார் → சாரன்]

சாரப்பந்தினி

 சாரப்பந்தினி cārappandiṉi, பெ. (n.)

   பேரா முட்டி; fragrant pavinia – Pavonia odorate (சா.அக.);.

சாரப்பருப்பு

சாரப்பருப்பு cārapparuppu, பெ. (n.)

   காட்டுமாவிரை (பதார்த்த. 786);; pulp of Cuddapah almond.

     [சாரம் + பருப்பு]

சாரப்பாரிகம்

 சாரப்பாரிகம் cārappārigam, பெ. (n.)

   விளாம்பழம்; the riped fruit of wood – apple tree (சா.அக.);.

சாரமண்

சாரமண் cāramaṇ, பெ. (n.)

   1. உழமண்; fuller’s earth.

   2. தூய்மையான மண்; pure alkaline earth (சா.அக.);.

     [காரம் → சாரம் + மண்]

சாரமத்தியம்

 சாரமத்தியம் cāramattiyam, பெ. (n.)

   நாயுருவி; Indian burr – Achy – ranthes aspera (சா.அக.);.

சாரமாக்கு-தல்

சாரமாக்கு-தல் cāramākkudal,    5 செ. குன்றாவி. (v.t.)

   பொருட்படுத்துதல்; to give importance, mind.

அவன் செய்ததைச் சாரமாக்காதே (நாஞ்);.

     [சாரம் + ஆக்கு-,]

சாரமாணி

சாரமாணி cāramāṇi, பெ. (n.)

   பகடிக்காரன் (சிலப். 5: 53, உரை);; professional buffoon.

     [சாரம் + மாணி]

சாரமிறக்கு

சாரமிறக்கு1 cāramiṟakkudal,    5 செ.கு.வி. (v.i.)

   கட்டடச் சாரத்தைப் பிரித்தல் (வின்.);; to take down a scaffoldings.

     [சார் → சாரம் + இறக்கு-,]

 சாரமிறக்கு2 cāramiṟakkudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. சாறுபிழிதல் (வின்.);; to express juice, distil.

   2. சாற்றை உட்செலுத்துதல்; to swallow the juice of anything chewed or dissolved in the mouth.

     [சாறு → சாறம் → சாரம் + இறக்கு-,]

சாரமேசன்

 சாரமேசன் cāramēcaṉ, பெ. (n.)

   கருஞ்சீந்தில்; a black variety of moon-creeper – menispermum cardifolium (சா.அக.);.

சாரமேயன்

 சாரமேயன் cāramēyaṉ, பெ. (n.)

   நாய் (பிங்.);; dog.

சாரம்

சாரம்1 cāram, பெ. (n.)

   1. மேலேறக்கட்டும் மரம்; scaffolding, sheers, sticks tied to the smaller branches of a flower – tree, as a scaffold for pricking flowers.

     “உதர ரோமச் சங்கிலி சாரமாக்கி” (குற்றால. தல. தருமசா. 7௦);.

   2. மேடு (வின்.);; elevation, eminence, high ground.

   ம. சாரம்;   க. சார;   தெ. சாரவ, சாருவ;கோத. சாம்

     [சார் → சாரம் = கவரைச் சாரக்கட்டும் மரம்]

 சாரம்2 cāram, பெ. (n.)

   1. பயிர்களின் உயிர்ச் சாறு; sap, as of plants.

     “வழியு மாசாரமுஞ் சிறந்தீர்” (அழகர்கல. 67);.

   2. இனிமை (பிங்.);; relish sweetness.

   3. மருந்து (பிங்.);; medicine, elixir.

   4. சிறந்தது; that which is of superior quality.

     “மாமணிச்சாரம் வைத்த வலயமொன்று” (பார. சூது போர். 175);.

   5. வடித்தெடுத்த பகுதி; essence,Gist.

     “பதார்த்த மெல்லாஞ் சாரமாச் சேகரித்து” (சிவரக. சிவதன்மா. 34);.

   6. பயன்; advantage use.

   7. ஆற்றல்; strength, vigour.

   8. மரவயிரம் (பிங்.);; hard inner part or heart of a tree.

   9. மரவகை; Cuddapah almond, Buchanania latifolia.

   10. இருப்பை (மலை.);; South Indian mahua.

   11. கொட்டை முந்திரி (மலை.);; cashew tree.

   11. சித்திரப் பாலடை (மலை);; tailed tick-trefoil.

     [சாறு → சாறம் → சாரம்]

 சாரம்3 cāram, பெ. (n.)

   1. எரிவுப்பு (நவச்சாரம்);; ammonium chloride.

   2. வண்ணான் காரம்; washerman’s lye.

   3. காரச் சாம்பல்; ashes for lye.

     [காரம் → சாரம்]

 சாரம்4 cāram, பெ. (n.)

   அணிவகை (பாப்பா.72);; a figure of speech.

 சாரம்5 cāram, பெ. (n.)

   சாம்பல்; a kind of ash.

   ம. சாரம்; Pkt. charra;

 Skt. {}.

     [சார் → சாரம்]

 சாரம்6 cāram, பெ. (n.)

   அருகு, அண்மை; nearness, vicinity (சேரநா.);.

   ம. சாரம்;   க., பட. சாரெ;   து. சார்தி (சந்திப்பு);;   கோத. சாரி;   துட. சோரி;குட. சாசெ (உறவினர்);

     [சார் → சாரம்]

சாரம்போடு-தல்

சாரம்போடு-தல் cārambōṭudal,    20 செ.கு.வி. (v.i.)

சாரங்கட்டு-தல் பார்க்க;See {}.

     [சரம் + போடு-,]

சாரர்

சாரர் cārar, பெ. (n.)

   1. ஒற்றர்; spy.

   2. நண்பர்; friend.

     [சார் – சாரர்]

சாரற்கட்டு

சாரற்கட்டு cāraṟkaṭṭu, பெ. (n.)

   கோடைக் காலத்தில் மலையுச்சியில் முகில் கூடியிருக்கை; gathering of clouds over the hills during the monsoon.

     “விண்மலர்ந்த சாரற்கட்டு” (கொண்டல் விடு. 651);.

     [சாரல் + கட்டு]

சாரலன்

 சாரலன் cāralaṉ, பெ. (n.)

சாரல்நாடன் பார்க்க;See {}.

     [சார் → சாரல் = மலைச்சரிவு, சாய்ந்து பெய்யும் மழை. சாரல் → சாரலன்]

சாரலம்

 சாரலம் cāralam, பெ. (n.)

   எள் (மூ.அ.);; sesamum.

சாரலி

 சாரலி cārali, பெ. (n.)

   நெல்வகை (வின்.);; a kind of paddy.

     [சாலி → சாரலி]

சாரல்

சாரல்1 cāral, பெ. (n.)

   சாய்வாகவும் துளித் துளியாகவும் விழும் மழை அல்லது காற்றால் அடித்துவரப்படும் மழை; light drizzle, driving rain. குற்றாலத்தில் சாரல் எப்போது தொடங்கும்.

   ம. சாரல் (மழை);;பட. செரெ

     [சார் → சாரல் = சாய்ந்து பெய்யும் தூறல்]

   {}, rain driven by th wind; in the usage of the southern Tamilians, the rain brought by the south-west monsoon. Comp. Samoiede sarre, Perimian ser, Votiak sor, rain. (C.G.D.F.L. 619);.

 சாரல்2 cāral, பெ. (n.)

   1. கிட்டுகை; drawing near.

     “தாஞ்சாரற்கரிய தனுவளைத்தான்” (பாரத. திரௌபதி. 57);.

   2. பக்கம்; side.

     “மாளிகையின் சாரல்” (கம்பரா.ஊர்தே.1௦௦);.

   3. பக்கமலை; side or slope of a mountain.

     “வழையமை நறுஞ்சாரல்” (கலித். 53);.

   4. மலை (பிங்.);; mountain.

   5. தூவானம்; rain driven in.

   6. மலையில் மேகங் கட்டிப் பெய்யுந் தூற்றல்; drizzling rain from clouds gathering on hill-tops.

   7. மருதயாழ்த் திறமாகிய காந்தாரப்பண் (பிங்.);;{}, a secondary melody-type of the marutham class.

ம. சாரல்

     [சார் → சாரல் = மலைச்சரிவு]

மலையடிவாரம் சாரல் எனப்படும். ‘சாரல்நாட செவ்வியை யாகுமதி’ (குறுந். 18-2);

     “சாரல் நாட நடுநாள்” (குறுந். 9);.

     “சாரல் நாட வாரலோ எனவே” (குறுந். 141:8); என்பன மலைப்பக்க நாட்டைச் சாரல் நாடு எனக் கூறுதல் காண்க. மேற்புறமாயினும் கீழ்ப்புறமாயினும் சேரநாடு முழுவதும் பெரும்பாலும் மேற்குத் தொடர்ச்சி கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் அடிவாரச் சரிவே. இதனாலேயே இந்நாட்டரசன் சேரன் (சாரல் – சேரல் – சேரலன் – சேரன்); எனப்பட்டான்.

 சாரல்3 cāral, பெ. (n.)

   நிறம் சற்றுக் குறைகை; become dull colour.

     [சார் → சாரல்]

சாரல்கட்டு-தல்

சாரல்கட்டு-தல் cāralkaṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   மழைபெய்தற்கு ஏற்றபடி நிறைந்திருத்தல்; to be dense with water-vapour as clouds on hill- side (Tinn.);.

     [சாரல் + கட்டு-,]

சாரல்காற்று

 சாரல்காற்று cāralkāṟṟu, பெ. (n.)

   மேற்குக் காற்று; west wind.

ம. சாரவாயு

     [சாரல் + காற்று]

சாரல்நாடன்

சாரல்நாடன் cāralnāṭaṉ, பெ. (n.)

   மலைச் சரிவிலுள்ள நாட்டரசன்; king of slope of hill.

     “சாரல் நாட வாரலோ வெனவே” (குறுந். 141);.

     [சாரல் + நாடன்]

சாரவறுதி

 சாரவறுதி cāravaṟudi, பெ. (n.)

   நொய்மை (இலேசு);; lightness, slightness, as of a blow, a fall.

     ‘அடி சாரவறுதியாய்ப்பட்டது’ (யாழ்ப்.);.

     [சாரம் + அறுதி]

சாரவாக்கியம்

 சாரவாக்கியம் cāravākkiyam, பெ. (n.)

   கோள்நிலையைக் கணிக்கும் விளக்க நூற்பா (வின்.);; mnemonic or formula for calculating the position of planets, the letters of the alphabet being substituted for numbers.

     [சாரம் + வாக்கியம்]

சாரவிறுதி

 சாரவிறுதி cāraviṟudi, பெ. (n.)

சாரவறுதி (யாழ்ப்.); பார்க்க;See {}.

     [சாரம் + இறுதி]

சாராக

 சாராக cārāka,    கு.வி.எ. (adv.) அணைவாக (நாஞ்.); benami.

     [சார் → சாராக]

சாராம்சம்

 சாராம்சம் cārāmcam, பெ. (n.)

   வடித்தெடுத்த பகுதி (கொ.வ.);; essence, as of a fruit, purport, gist, as of speech.

     [சாறு → சாரு → சாரம் + அம்சம்]

 Skt. amsa → த. அம்சம்

சாராயக்கடை

 சாராயக்கடை cārāyakkaḍai, பெ. (n.)

   சாராயம் விற்கும் கடை; an arrack shop.

   ம. சாராயக்கட;பட. சாராயக்கடெ

     [சாராயம் + கடை]

சாராயக்காரன்

சாராயக்காரன் cārāyakkāraṉ, பெ. (n.)

   1. சாராயம் காய்ச்சுபவன்; one who distills arrack.

   2. சாராயம் விற்போன்; one who sells arrack.

   ம. சாராயக்காரன்;பட. சாராயகாரா

     [சாராயம் + காரன்]

சாராயக்கிடங்கு

 சாராயக்கிடங்கு cārāyakkiḍaṅgu, பெ. (n.)

   சாராயக்கடை; arrack shop tavern.

     [சாராயம் + கிடங்கு. கிழக்கு → கிழங்கு = நிலத்தின் கீழ் விளைவது. கிழங்கு → கிடங்கு]

சாராயங்கட்டு-தல்

சாராயங்கட்டு-தல் cārāyaṅgaṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

சாராயங் காய்ச்சு – தல் (வின்.); பார்க்க;See {}.

     [சாராயம் + கட்டு-,]

சாராயங்காய்ச்சு-தல்

 சாராயங்காய்ச்சு-தல் cārāyaṅgāyccudal, பெ. (n.)

   சாராயம் வடித்தல்; to distil arrack.

     [சாராயம் + காய்ச்சு. காய் → காய்ச்சு]

சாராயச்சட்டி

 சாராயச்சட்டி cārāyaccaṭṭi, பெ. (n.)

   சாராயம் காய்ச்சுவதற்குப் பயன்படுத்தும் பானை; an earthern vessel used for distilling arrack.

ம. சாராயச்சட்டி

     [சாராயம் + சட்டி]

சாராயப்பாவாலை

 சாராயப்பாவாலை cārāyappāvālai, பெ. (n.)

   சாராயம் வடியும் பானை (இ.வ.); (வின்.);; vessel for receiving distilled spirits.

     [சாராயம் + பாவாலை]

சாராயம்

சாராயம் cārāyam, பெ. (n.)

   மரப் பட்டையையோ, கரும்பின் கழிவையோ, சில வகைக் கிழங்கையோ நொதிக்க வைத்துக் காய்ச்சி வடித்தெடுக்கும் மயக்கமூட்டும் நீர்மம்; local alcoholic brew;

 spirits;

 arrack.

   ம. சாராயம்;   க. சாராய;   தெ. சாராய், சாராயி;   து. சாராயி;   பட. சாராய; Ar.sharab;

 Skt. saraka.

     [சாறு → சாரு → சாராயம்]

சாராய வகைகள்

   1. இலுப்பைச் சாராயம்

   2. வேலம்பட்டைச் சாராயம்

   3. வத்தாவிச் சாராயம்

   4. தென்னஞ் சாராயம்

   5. கொழும்புச் சாராயம்

   6. ஈச்சஞ் சாராயம்

   7. வெல்லச் சாராயம்

   8. பனஞ் சாராயம்

   9. பட்டைச் சாராயம்

   10. அரிசிச் சாராயம்

   11. கூந்தல்பனைச் சாராயம்

சாரார்

 சாரார் cārār, பெ. (n.)

   குழுவினர்;   பிரிவினர்; group or party;section.

இரு சாராருமே ஒத்துப் போக வேண்டும்.

     [சார் + ஆர். ‘ஆர்’ பலர்பாலீறு]

சாரி

சாரி1 cāri, பெ. (n.)

   1. வட்டமாயோடுகை; circular, movement, wheeling, as of soldiers, horses or chariots in fighting.

     “திரிந்தார் நெடுஞ்சாரி” (கம்பரா. வாலிவ. 37);.

   2. நடை (வின்.);; movement, course.

   3. ஊர்தி மீது செல்லுகை; ride, drive.

   4. உலாவுகை (வின்.);; stroll, walk.

   5. கூட்டம்; company, swarm, as of ants.

எறும்பு சாரிசாரியாய்ப் போகிறது.

     [சார் → சாரி]

 சாரி2 cāri, பெ. (n.)

   இசைக்கருவி வகை; a musical instrument.

     “கரடிகை பீலிசாரி” (கந்தபு.திறக்கல்.6);.

     [சார் → சாரி]

 சாரி3 cāri, பெ. (n.)

   சூதாடுகாய் (பிங்.);; dice.

     [சார் → சாரி]

 சாரி4 cāri, பெ. (n.)

   1. பக்கம்; side, wing.

     ‘அவன் வீடு வடசாரியில் இருக்கிறது’.

   2. வரிசை; row or series.

சாரிசாரியாக மக்கள் சென்றனர்.

   3. நடந்து செல்பவனைக் குறிக்கவரும் கூட்டுச் சொல்லின் இறுதிப் பகுதி; at the end of compounds one who is moving, walking or wandering about. பாதசாரி.

ம. சாரி

     [சார் → சாரி]

சாரம்5 பார்க்க

 சாரி5 cāri, பெ. (n.)

   தடவை; time, turn.

அவனுக்குப் பலசாரி சொன்னார் (தஞ்சை.); (செஅக.);.

தெ., க., து. சாரி

     [சார் → சாரி]

 சாரி7 cāri, பெ. (n.)

   மகளிர் சீலை வகை; long piece of cotton or silk cloth worn by women.

     [சீரை → சாரி]

 சாரி8 cāri, பெ. (n.)

   அஞ்சனச் செய்நஞ்சு (பாடாணம்); (யாழ்.அக.);; a mineral poison.

 சாரி9 cārittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   கீழ் வீழ்த்தல்; to prostrate, fell down.

     “நெடுமரத்தாற் சாரித்தலைத் துருட்டும்” (கம்பரா. அதிகாயன். 161);.

     [சார் → சாரி-,]

சாரிகை

சாரிகை1 cārigai, பெ. (n.)

   1. சாரி1 பார்க்க;See {}.

     “நெடுஞ்சாரிகை திரிந்தான்” (கம்பரா. நிகும்பலை. 104);.

   2. வையாளி; horse-riding.

     “சாரிகைப் புள்ளர்” (திருவிருத். 19);.

   3. கதி; onward movement.

     “சாரிகை மறுத்து” (பரிபா. 6, 36);.

   4. சுழல்காற்று (பிங்.);; whirwind.

     [சார் → சாரி → சாரிகை]

 சாரிகை2 cārigai, பெ. (n.)

   நாகணவாய்ப்புள்; myna.

     “கருந்தலைச் சாரிகை” (கல்லா.7.);.

 சாரிகை3 cārigai, பெ. (n.)

சாரி4 (வின்.); பார்க்க;See {} (செஅக.);.

     [சார் → சாரி → சாரிகை]

 சாரிகை4 cārigai, பெ. (n.)

   கவசம் (சது.);; armour coat of mail.

     [சுல் → (சோல்); → சால் → சால்பை = போர்வை. சால் → சார் → சாரிகை = மெய்புகு கருவி, மெய்யை மூடும் கருவி]

சாரிகைவரி

சாரிகைவரி cārigaivari, பெ. (n.)

   தலைச் சுமையாக வழிச்சாரிகள் சுமந்து வந்து விற்பனை செய்யும் பொருள்களுக்கான வரி; duty, toll.

     “முன்னாள் வழிச்சாரிகையில் வைத்துக் குடுத்த மகண்மையும்” (தெ.க. தொ.17, க. 142);

மறுவ. மகண்மை

     [சாரிகை + வரி]

சாரிகொள்(ளு)-தல்

சாரிகொள்(ளு)-தல் cārigoḷḷudal,    13 செ.கு.வி. (v.i.)

   நடனத்தில் இடம் வலமாக ஆடுதல்; to move about or dance in a circle, as in nautch.

     “பதசாரி சாரி கொள்ள” (விறலிவிடு. 419);.

     [சாரி + கொள்]

சாரிசாரியாக

 சாரிசாரியாக cāricāriyāka, வி.எ. (adv.)

   வரிசை வரிசையாக; in a row or series.

மக்கள் திருவிழாவிற்குச் சாரிசாரியாகச் சென்றனர்.

     [சாரி + சாரியாக]

சாரிதங்கன்

 சாரிதங்கன் cāridaṅgaṉ, பெ. (n.)

   சிறுகீரை; pig’s greens – Amaranthus campestris (சா.அக.);.

சாரிபம்

 சாரிபம் cāribam, பெ. (n.)

சாரிபை (மலை.); பார்க்க;See {}.

சாரிபாதிதம்

 சாரிபாதிதம் cāripādidam, பெ. (n.)

   வெருகன் கிழங்கு; a kind of bulbous root – Arum Macrorhizon (சா.அக.);.

சாரிபூமி

 சாரிபூமி cāripūmi, பெ. (n.)

   முற்றவெளி; esplanade.

     [சார் → சாரி + பூமி]

 Skt. {} → த. பூமி

சாரிபை

சாரிபை cāribai, பெ. (n.)

   நன்னாரி (தைலவ.தைல. 34);; Indian sarsaparilla.

சாரியக்கோட்டை

சாரியக்கோட்டை cāriyakāṭṭai, பெ. (n.)

   தஞ்சாவூர் மாவட்டம் மன்னார்குடி வட்டாரத்தில் உள்ள ஊர்; a village in Tanjavur district, {} taluk.

     “சமையதன்மை இனிது நடாத்தி நிகழாநின்ற சாரியக் கோட்டையில் புவனெகவிரன்மடிகையில் நான்கு திசை பதினெண் விஷயத்தோம்” (தெ.க. தொ.6, க. 47-1௦);.

     [சாரியம் + கோட்டை]

சாரியன்

சாரியன் cāriyaṉ, பெ. (n.)

   ஒழுக்கமுடையவன்; person of unimpeachable conduct.

     “மாசாரியனா மறுதலைச் சொன் மாற்றுவதே ஆசாரியன தமைவு” (ஏலாதி. 75);.

சாரியம்

சாரியம்1 cāriyam, பெ. (n.)

   எட்டி (மலை.);; strychnine tree.

 சாரியம்2 cāriyam, பெ. (n.)

சாரிபை (மலை.); பார்க்க;See {}.

சாரியல்

 சாரியல் cāriyal, பெ. (n.)

   இந்துப்பு (யாழ்அக.);; rock-salt.

     [சாரி + இயல்]

சாரியா

 சாரியா cāriyā, பெ. (n.)

   அகத்திக்கீரை; leaves of sesbane – Sesbania grandiflora.

சாரியெலும்பு

சாரியெலும்பு cāriyelumbu, பெ. (n.)

   கரட்டெலும்பு (இங்.வை.15);; ankle bone. Astragalus.

     [சாரி + எலும்பு. எல் = ஒளி, வெள்ளை. எல் → எலும்பு]

சாரியை

சாரியை1 cāriyai, பெ. (n.)

   1. குதிரையின் சுற்று வரவு; pace of horse in a circle.

     “பதினெட்டுச் சாரியையும்” (பு.வெ.12, வென்றிப். 13);.

   2. வீரனுடைய நடை வகை; course, onward movement, as of a warrior.

     “சாரியை யந்தரத் தியக்கமும்” (பெருங். உஞ்சைக். 37, 3௦);.

   3. ஆடல் வகை; a mode of dancing.

     “பெருநடை சாரியை பிரமரி இவை முதலாயினவும்” (சிலப். 3, 16, உரை.);.

     [சார் → சாரியை]

 சாரியை2 cāriyai, பெ. (n.)

   சொல்லுக்கும் உருபுக்கும் இடையில் தோன்றும் அசை; empty morph.

ம. சாரிய

     [சார் → சாரியை]

தாமாகச் சேராத சொல்லுறுப்புகளையும் சொற்களையும் சார்ந்து இயைக்கும் அசைகளும் சொற்களும் சாரியை எனப்படும். இயைத்தல் → இசைத்தல். தாமாக ஒலிக்காத எழுத்துகளை ஒலித்தற்கும், ஒலிக்கும் எழுத்துகளை எளிதாய் ஒலித்தற்கும், அவற்றைச் சார்ந்து வரும் ஒலிகளும் சாரியை எனப்படும். ஆகவே எழுத்துச்சாரியை, சொற் சாரியை எனச் சாரியை இரு வகையாம்.

எழுத்துச்சாரியை

உயிரெழுத்துகளுள் குறிலுக்குக் கரமும் நெடிலுக்குக் காரமும் சாரியையாம். நெடில்களுள் ஐ, ஒள என்னும் இரண்டிற்கும் கான் என்பது சிறப்புச் சாரியை.

ஆய்தத்திற்குச் சாரியை ஏனம் என்பதாம். அது சேரும்போது ஆய்தத்திற்கு முன் அகரமும் பின் ககர மெய்யும் சேர்ந்து அஃகேனம் என்றாகும்.

மெய்யெழுத்திற்கு ‘அ’ சாரியை. அது மெய்க்குப் பின் வரும் க என்பது சாரியை யேற்ற மெய்யெழுத்திற்கும் க என்னும் குறிலுக்கும் பொதுவாயிருப்பதால் மெய் யெழுத்தை விதந்து குறிக்கும்போது ககரமெய் என்பது மரபு.

   உயிர்மெய்யெழுத்துகளுள், குறிலுக்குக் கரம் சாரியை;நெடிலுக்குத் தனிச் சாரியை இல்லை. அதனால் மெய்யையும் நெடிலையும் பிரித்துக் ககர ஆகாரம் (கா);, ககர ஈகாரம் (கீ); என்ற முறையிற் சொல்லப்பெறும்.

சொற்சாரியை

அ, அத்து, அம் அற்று, அன், ஆம், இற்று. இன், உ, ஐ முதலியன சொற்சாரியை.

எ-டு: தட்டாரப்பாட்டம், எனக்கு, பட்டினத் தான், குளத்துப் பாய்ச்சல், புளியம்பழம், அவற்றை, அதனை. கல்லாங்கொள்ளி, பதிற்றுப்பத்து, பதினொன்று, வேரினை, அவனுக்கு, பண்டைக்காலம்.

இவற்றுள் அற்றுச் சாரியைப் புணர்ச்சியும் இற்றுச் சாரியைப் புணர்ச்சியும் இன்று உலக வழக்கற்றன. அவைகள் என்பது மிகைபடக் கூறும் வழுஉச் சொல்லும், அதுகள் என்பது இழிவழக்கும் ஆகும். ஆதலால், அவற்றை இவற்றை எவற்றை என்றே குமரி நாட்டுப் பொதுமக்கள் வழங்கியிருத்தல் வேண்டும்.

சாரியைகளும் சுட்டடியினவே. (த.வ.252, 253);

பகுபதவுறுப்புகளுள் ஒன்றான சாரியை முழுச் சொல்லோடு இடைச் சொற்கள் சேரும்போதும் பிற இடங்களிலும் அச் சொற்கள் நன்கு இசையும் வண்ணம் சார்ந்து இயைந்து நிற்கும். சாரியைக்கென்று தனிப்பட்ட பொருள் எதுவும் இல்லை. அதனாற்றான் இதனைப் பொருளற்ற உருபன் (empty morph); என்றழைப்பர்.

மொழியியல் நோக்கில் அகப்புணர்ச்சியில் வரும் சாரியைகளுக்குப் பொருள் இல்லை என்பதனைப் பல சொற்கள் சாரியை இல்லாமல் வருவது, (வேந்தன், வேந்தனை, கை, கையால், கால் (காற்று); காலொடு); சில சொற்கள் சாரியை பெற்றும் பெறாமலும் வருவது, (நாட்டை நாட்டினை, வடக்கண் வடக்கின்கண்); ஆகியவற்றைக் காரணமாகக் காட்டுவர். சாரியை பொருளுள்ளனவாக இருந்தால் சாரியை பெற்று வரும் சொற்களை நோக்கச் சாரியை பெறாது வரும் சொற்கள் பொருள் குறைவு உடையனவாக இருக்கவேண்டும். அவ்வாறின்மையால் சாரியைக்குப் பொருள் இல்லை என்பதே ஏரண அடிப்படையான முடிவாகும்.

சாரிரத்தை

 சாரிரத்தை cārirattai, பெ. (n.)

   எட்டி (யாழ்அக.);; strychine.

சாரிவசந்தம்

 சாரிவசந்தம் sārivasandam, பெ. (n.)

   கழற் கொடி; grey bonduc – Casalpinia bonducella.

சாரு

சாரு cāru, பெ. (n.)

   1. அழகு (பிங்.);; beauty.

   2. கிளி; parrot.

     [சார் → சாரு]

சாருகன்

 சாருகன் cārugaṉ, பெ. (n.)

   கொலையாளன் (பிங்.);; murderer.

சாருகம்

சாருகம் cārugam, பெ. (n.)

   1. கொலை; murder.

   2. ஊறு; disaster.

   3. அணங்கு; an inferior deity.

   4. வேட்டம்; hunting.

சாருகேசி

சாருகேசி cāruāci, பெ. (n.)

   முதன்மைப் பண் வகையுளொன்று (சங்.சந்.47);; a primary {}.

சாருசகம்

 சாருசகம் sārusagam, பெ. (n.)

   கறியுப்பு; common salt (சா.அக.);.

சாருசம்

 சாருசம் sārusam, பெ. (n.)

   கல்லுப்பு (யாழ்அக.);; rock salt.

சாருசி

 சாருசி sārusi, பெ. (n.)

   சிற்றாமணக்கு; small castor seed – Ricinus communis (சா.அக.);.

சாருணி

 சாருணி cāruṇi, பெ. (n.)

   மஞ்சிட்டி; butter seed tree – Bira Orellana (சா.அக.);.

சாருதாரி

 சாருதாரி cārutāri, பெ. (n.)

   வெள்ளைக் கரிசிலாங்கண்ணி; white flowered eclipse plant – Eclipta alba (சா.அக.);.

சாருபலம்

 சாருபலம் cārubalam, பெ. (n.)

   கொடி முந்திரிகை; grape vine – Vitis vinifera (சாஅக.);.

சாருமாட்சிகம்

 சாருமாட்சிகம் cārumāṭcigam, பெ. (n.)

   முந்திரிகை; cashew nut – Anacardium Occidentale (சா.அக);.

சாருல்

 சாருல் cārul, பெ. (n.)

   உத்திரம், தூண், பாலம் முதலியன கட்டப் பயன்படும் காட்டு மர வகை; a kind of forest tree.

சாரை

சாரை1 cārai, பெ. (n.)

   நீளமான கோடு (வின்.);; long, straight, direct course or line, stripe.

     [சார் → சாரை]

 சாரை2 cārai, பெ. (n.)

   ஒரு வகைப் பாம்பு, சாரைப்பாம்பு; a kind of a rat-snake.

     [சர் → சர → சர சர → சாரை. ‘சர்’ எனும் ஒலிக் குறிப்பினின்று தோன்றிய சொல்]

நல்ல பாம்போடு இணையும் ஆண் பாம்பு புகர் நிறம் அல்லது மஞ்சள் நிறம் கொண்டது. இப்பாம்பு சீறும் தன்மையது. எனினும் நச்சுத் தன்மை இல்லாதது. நீண்ட உடலும் வேக ஒட்டமும் கொண்டது. எதிரியை வாலால் அடிக்கும் தன்மையது.

இதன் வகைகள்:

   1. கருஞ்சாரை; black rat snake.

   2. மலஞ்சாரை; hill rat snake.

   3. பெருஞ்சாரை அல்லது சாரைக்கடா; large rat snake.

   4. நெடுஞ்சாரை; long rat snake.

   5. வெண்சாரை; white rat snake.

   6. மஞ்சட்சாரை; yellow rat snake.

   7. செஞ்சாரை; red rat snake.

     [p]

 சாரை3 cārai, பெ. (n.)

   வெள்ளை நிற வெள்ளாடு (செங்கை);; a kind of goat.

சாரைக்கடா

சாரைக்கடா cāraikkaṭā, பெ. (n.)

சாரை2 (யாழ்ப்.); பார்க்க;See {}.

     [சாரை + கடா]

சாரைக்கிட்டகுட்டி

சாரைக்கிட்டகுட்டி cāraiggiṭṭaguṭṭi, பெ. (n.)

   1. முயற்குட்டி; feeble leveret, unable to escape from pursuit, usually with a white spot on the forehead.

   2. நோஞ்சான்; feeble, harmless chap.

     [சாரை + கிட்டகுட்டி]

சாரைசாரையாக

 சாரைசாரையாக cāraicāraiyāka, வி.எ. (adv.)

சாரிசாரியாக பார்க்க;See {}.

     [சாரை + சாரையாக]

சாரையுப்பு

 சாரையுப்பு cāraiyuppu, பெ. (n.)

   கல்லுப்பு; crystallised sea salt (சா.அக.);.

சாரையோட்டம்

சாரையோட்டம் cāraiyōṭṭam, பெ. (n.)

   சாரைப்பாம்பின் விரைவு (வின்.);; darting, rapid and direct motion of the rat-snake, applied to persons, bulls, etc.

     [சாரை2 + ஓட்டம்]

சாரைவாலன்

சாரைவாலன் cāraivālaṉ, பெ. (n.)

   1. நீண்ட வாலுள்ள எருது (யாழ்ப்.);; bullock with a long tapering tail.

   2. புகையிலை வகை; a kind of tobacco.

     [சாரை + வாலன். வால் → வாலன். ‘ன்’ உடைமை குறித்த ஈறு]

சாரைவால்

 சாரைவால் cāraivāl, பெ. (n.)

   மாட்டு வால் வகையுள் ஒன்று; a kind of cow’s tail.

     [சாரை + வால்]

சாரோசி

 சாரோசி cārōci, பெ. (n.)

   எரியுப்பு (நவச்சாரம்); (யாழ்.அக.);; sal-ammoniac, a solder.

சாரோலை

 சாரோலை cārōlai, பெ. (n.)

   பாய், தடுக்கு, பெட்டிகள் செய்யப் பயன்படும் பனையின் முதிர்ந்த குருத்தோலை; palmyra leaf

     ‘சாரோலை விழுந்ததென்று குருத்தோலை சிரிக்கலாமா’ (பழ.);(செஅக.);.

     [சார் + ஓலை – சாரோலை]

சார்வோலை பார்க்க

சார்

சார்1 cārtal,    2 செ.குன்றாவி. (v.t.)

   1. சென்றடைதல்; to reach, approach.

     “சாரா வேதங்கள்” (திவ். திருவாய். 10. 5:8);.

   2. புகலடைதல்; to depend upon, take shelter in.

   3. அடுத்தல்; to be near to.

கடல்சார்ந்து மின்னீர் பிறக்கும்” (நாலடி, 245);.

   4. கலத்தல்; to unite.

     “நல்லெழில் மார்பனைச் சார்ந்து” (கலித். 142);.

   5. உறவு கொள்ளுதல்(கொ.வ.);; to be related to.

   6. ஒத்தல்; to resemble, equal.

   7. சாய்தல் (வின்.);; to lean upon, recline against

   8. பொருந்தி யிருத்தல்; to be associated or connected with.

     “நலமாட்சி நல்லாரைச் சார்ந்து” (நாலடி. 175);.

   ம. சாருக;   க. சார்;   தெ. சாரு;   து. சார்தி;   கோத. சார்ய்;   துட. சோர்ய்;பட. சேரு

     [சுள் → சள் → சழி. சழிதல் = கலமும் பெட்டியும் பக்கமாக அமுங்கிச் சரிதல். சள் → சரு → சருவு. சருவுதல் = சாய்தல். சரு → சரி → சரிவு. சரிதல் = சாய்தல். சடி = அடி வாரம். சரு → சார். சார்தல் = சாய்தல் (மு.தா.66, 67);]

 சார்2 cār, பெ. (n.)

   1. கூடுகை (சூடா.);; joining, uniting.

   2. இடம் (பிங்.);; place, situation.

   3. இடப்பொருளுணர்த்தும் ஏழனுருபு; a locative ending.

     “காட்டுச்சார்க் கொய்த சிறுமுல்லை” (கலித். 117:11);

   4. பக்கம்; side.

     “பழுமரத்தின் புறத்தொரு சார்” (திருவிளை. பழியெஞ்சு. 12);.

   5. அணைக்கரை (வின்.);; bund across a river or channel with an opening for placing a fishing net.

   6. தாழ்வாரம்; inner verandah under sloping roof surrounding the inner courtyard of a house.

   7. வகை; kind, class, species.

ஒருசாராசிரியர்.

   8. அழகு (பிங்.);; beauty, comeliness.

   9. ஒரு மரம்; a tree.

     “ஆரும் வெதிருஞ் சாரும் பீரும்” (தொல். எழுத்து. 363);.

     [சாள் → சார்]

 சார்3 cār, பெ. (n.)

   ஒற்றன்; spy.

     “சிறுவனுய்த்த சாரென நினைந்து” (கந்தபு. அவைபுகு. 151);.

 சார்4 cār, பெ. (n.)

   1. சுவர்; wall.

     “தச்சனஞ்சிச் சாரகழ்கள்வனென்கின்ற தன்மையினாய்” (நீலகேசி, 51௦);.

   2. மலரணை (நாஞ்.);; benami.

     [சாள் → சார்]

சார்கொடு-த்தல்

சார்கொடு-த்தல் cārkoḍuttal,    4 செ.குன்றாவி. (v.t.)

   அணுகவிடுதல்; to give room as to a disease.

     “நோயுஞ் சார்கொடான்” (திவ். திருவாய்.1.1௦:6);.

     [சார்2 + கொடு-,]

சார்க்கரம்

சார்க்கரம் cārkkaram, பெ. (n.)

   1. கற்கண்டு; sugar candy.

   2. பாலின் ஆடை; skim of milk.

     [சருக்கரை → சர்க்கரை → சக்கரை = வட்டமாக வார்க்கப்பட்ட வெல்லக்கட்டி. சருக்கரம் → சார்க்கரம் (வே.க.114);]

சார்க்கருவூலம்

 சார்க்கருவூலம் cārkkaruvūlam, பெ. (n.)

   மாவட்டக் கிளைக் கருவூலம்; district sub- treasury.

     [சார் + கருவூலம்]

சார்க்களம்

 சார்க்களம் cārkkaḷam, பெ. (n.)

   ஆதொண்டை; Ceylon caper – Capparis horrida (சா.அக.);.

சார்க்காரி

 சார்க்காரி cārkkāri, பெ. (n.)

   தழுதாழை; wind- killer-Cleodendron phlomoides (சா.அக.);.

சார்க்கேசபுஞ்சம்

 சார்க்கேசபுஞ்சம் cārkācabuñjam, பெ. (n.)

   இலவம்பிசின் (யாழ்.அக.);; gum of the red cotton tree.

சார்ச்சார்

சார்ச்சார் cārccār, கு.வி.எ. (adv.)

   இடந்தொறு மிடந்தொறும்; everywhere.

     “மலையினிழி யருவி- சார்ச்சார்க் கரைமரஞ் சேர்ந்து” (பரிபா. 16, 32);.

     [சார் + சார்]

சார்ச்சி

சார்ச்சி1 cārcci, பெ. (n.)

   1. சாய்வு; leaning.

   2. சேருகை; uniting.

   3. தொடர்பு; connection.

     “கருமச் சார்ச்சியல்லாத” (தொல். சொல். 84, உரை.);.

   4. வருகை; approach.

     “சகுனி கெளசிகன் சார்ச்சியை” (பெருங். மகத. 26: 47);.

   5. சார்விடம் (பிங்.);; support, place of support.

     [சார் → சார்ச்சி]

 சார்ச்சி2 cārcci, பெ. (n.)

   ஒன்றை மற்றொன்றாகச் சார்த்திச் கூறுதல் (உபசரித்தல்);; to quote one’s own as others (in metonymy);.

     [சார் → சார்ச்சி]

சார்த்தவகன்

 சார்த்தவகன் cārttavagaṉ, பெ. (n.)

   வாணிகன் (யாழ்.அக.);; merchant, trader.

     [சார் → (சாத்து); → சார்த்து → சார்த்தவகன்]

சார்த்திக்கொடு-த்தல்

சார்த்திக்கொடு-த்தல் cārttikkoḍuttal,    4. செ.கு.வி. (v.i.)

   ஆடு, மாடு, கன்று போன்றவற்றை ஒன்றாக மதிப்பீடு செய்து கொடுத்தல்; to pay tax in kind, calculating goat, cow calf etc., in total.

     “பசுவின் கன்றும் எருதும் பசுச் சார்த்திக் குடுத்தன பசுவாகவும் ஆட்டுக் குட்டியும் கிடாயும் ஆடு சாத்திக் குடுத்தன ஆடாகவும்” (தெ. க. தொ. 2, கல். 63);.

     [சார்த்தி + கொடு-,]

சார்த்தியளத்தல்

சார்த்தியளத்தல் cārttiyaḷattal, பெ. (n.)

   ஒன்றனோடு மற்றொன்றை ஒப்பிட்டு அளக்கை (தொல். எழுத்து. 7, உரை);; measurement by comparison.

     [சார்த்தி + அள-,]

சார்த்து

சார்த்து1 cārddudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. சாரச் செய்தல்; to cause to lean, to support.

   2. இணைத்தல்; to join, unite, connect (செ.அக.);.

   ம. சார்த்து;   க. சார்;   தெ. சாது;   து. சார்ணி;பட. சேத்து

     [சார் → சார்த்து (வே.க. 234);]

 சார்த்து2 cārttu, பெ. (n.)

   1. ஆவணம்; document.

     ‘கைச்சார்த்து’ (நாஞ்.);.

   2. குறிப்பு; note, memorandum.

     “முகூர்த்தச் சார்த்து’ (இ.வ.);.

     [சார் → சார்த்து]

 சார்த்து3 cārttu, பெ. (n.)

   1. வணிகக் கூட்டம்; a caravan.

   2. வணிகப் பொருட்கள்; merchandise, commodity (சேரநா.);.

ம. சார்த்து

     [சார் → (சாத்து); → சார்த்து]

சார்த்துகவி

சார்த்துகவி cārttugavi, பெ. (n.)

   ஒருவன் கவியிசையில் வேறொரு செய்யுட் புணர்ப்போன் (வெண்பாப். செய். 48, உரை);; one who composes a verse after a model set by another.

     [சார் → சார்த்து + கவி]

சார்த்துக்கை

 சார்த்துக்கை cārttukkai, பெ. (n.)

கைமரம் (யாழ்ப்.);:

 common rafter.

     [சார் → சார்த்து + கை]

சார்த்துப்பெட்டி

 சார்த்துப்பெட்டி cārttuppeṭṭi, பெ. (n.)

   அரிப்பெட்டியின்கீழ்ச் சலித்த பொருளைக் கொள்ளவைக்கும் பெட்டி (யாழ். அக.);; box under a sieve to receive anything sifted, as corn flour.

     [சார் → சார்த்து + பெட்டி]

சார்த்துவகை

சார்த்துவகை cārttuvagai, பெ. (n.)

   தலைமை வகையானன்றி உவமை முதலிய சார்பு வகையாற் கூறும் முறை; mode of stating a thing casually or incidentally, dist. fr. Talaimai- vagai.

     “அகத்திணைக்கண் சார்த்துவகையான் வந்தனவன்றித் தலைமை வகையாக வந்தில என்பது” (தொல். பொருள். 54. உரை);.

     [சார் → சார்த்து + வகை]

சார்த்துவரி

சார்த்துவரி cārttuvari, பெ. (n.)

   பாட்டுடைத் தலைவன் பதியொடும் பேரொடுஞ் சார்த்திப் பாடும் வரிப்பாட்டு வகை (சிலப். 7:7 அரும்.);; a kind of love songs having the name or the place of the hero, as its theme.

     [சார் → சார்த்து + வரி. வரி = வரிப்பாட்டு]

சார்த்தூலம்

 சார்த்தூலம் cārttūlam, பெ. (n.)

   புலி (திவா.);; tiger.

மறுவ, வல்லியம், வயமா, வெல்லுமா, உழுவை, பாய்மா, தரக்கு, வேங்கை, குயவரி, புல், புண்டரீகம், கொடுவரி

சார்நிலை

 சார்நிலை cārnilai, பெ. (n.)

   மாவட்ட அளவில் உள்ள அலுவலர்க்கோ அலுவலகத்துக்கோ அடுத்த நிலை; subordinate to district level officer or offices sub as in sub-registrar, sub- treasury, etc.

     [சார் + நிலை]

சார்ந்தோர்

சார்ந்தோர் cārndōr, பெ. (n.)

   1. சுற்றத்தார் (சூடா.);; relatives.

   2. நண்பர்; friends, associates.

     [சார் → சார்ந்தோர்]

சார்படமானம்

 சார்படமானம் cārpaḍamāṉam, பெ. (n.)

   பின்னொற்றி (இ.வ.);; subsequent mortgage.

     [சார்பு + அடமானம்]

சார்பதிவாளர்

 சார்பதிவாளர் cārpadivāḷar, பெ. (n.)

   பதிவுத் துறை உதவிப்பதிவாளர்; sub-registrar in registrar’s office.

     [சார் + பதிவாளர்]

சார்பறு-த்தல்

சார்பறு-த்தல் cārpaṟuttal,    5 செ.கு.வி. (v.i.)

   1. துறத்தல் (சூடா.);; to renounce the world.

   2. பிறப்பறுத்தல்; to be freed from births.

     “இறைவற் பேணிச் சார்பறுத் துய்தி யென்று” (சீவக. 1221);.

     [சார் → சார்பு + அறு-,]

சார்பாக

சார்பாக cārpāka, வி.எ. (adv.)

   1. ஒருவருக்கோ ஒன்றனுக்கோ நிகராளியாக; on behalf of;

 for someone.

   2. உதவுவித்து; on behalf of;

 in one’s favour.

     [சார்பு + ஆக]

சார்பின்சார்பு

சார்பின்சார்பு cārpiṉcārpu, பெ. (n.)

   குறுகின சார்பெழுத்து; shortened secondary letter.

     “சார்பின் சார்பாகிய ஆய்தக் குறுக்கமும்” (நன். 87, விருத்.);.

     [சார் → சார்பின் + சார்பு]

சார்பியல்கோட்பாடு

 சார்பியல்கோட்பாடு cārpiyalāṭpāṭu, பெ. (n.)

   இயக்கத்திலிருக்கும் பொருளின் அளவு, நிறை, காலம் ஆகியவை வேகத்தைச் சார்ந்து மாறுபடும் என்பதை விளக்கும் கோட்பாடு; theory of relativity.

     [சார்பியல் + கோட்பாடு]

சார்பிற்றோற்றம்

சார்பிற்றோற்றம் cārpiṟṟōṟṟam, பெ. (n.)

   1. இயற்கைத் தோற்றமுறை (சி.சி.);; natural cause of existence, as off spring from the parent, saplings from the root.

   2. சார்பெழுத்து பார்க்க. see {}.

     “சார்பிற்றோற்றம் பிறக்குமாறு கூறுகின்றது” (தொல். எழுத்து. 1௦1, உரை);.

   3. சார்பு-8 பார்க்க. see {}-8.

     “தவமுந் தருமமுஞ் சார்பிற் றோற்றமும்” (மணிமே. 21: 163);.

     [சார்பு + இல் + தோற்றம்]

சார்பிலார்

சார்பிலார்1 cārpilār, பெ. (n.)

   முனிவர்; ascetics.

     [சார் → சார்பு + இலார்]

 சார்பிலார்2 cārpilār, பெ. (n.)

   பகைவர்; enemies.

     [சார் → சார்பு + இலார். இல்லார் → இலார்]

சார்பிலோர்

 சார்பிலோர் cārpilōr, பெ. (n.)

சார்பிலார் (சூடா); பார்க்க;See {}.

     [சார்பிலார் → சார்பிலோர்]

சார்பில்

 சார்பில் cārpil,    வி.எ. (adv.) ஆள்வினை பொருணிலை ஆகியவற்றால் செய்யும் உதவியில்; under the auspicious of a university, etc., with the help of.

அறக்கட்டளையின் சார்பல் நடைபெறும் சொற்பொழிவுத் தொடர் இது (கிரியா.);.

     [சார்பு + இல்]

சார்பு

சார்பு cārpu, பெ. (n.)

   1. இடம்; place.

     “படைஞர் சார்புதொறேகி” (கந்துபு. முதனாட். 3௦);.

   2. பக்கம்; side. வாதிசார்பில் நியாயாதிபதி தீர்மானித்தார்.

   3. சார்ப்பு, 1 பார்க்க;See {}, 1.

   4. துணை; help, support.

     “மதலையாஞ் சார்பிலார்க்கு” (குறள், 449);.

   5. புகலிடம்; refuge, shelter.

     “ஓர் சார்பிலாமையால்—- காப்பு நீங்கினார்” (திருவிளை. வளையல். 28);.

   6. பற்று; attachment.

     “சார்புகெட வொழுகின்” (குறள், 359);.

   7. பிறப்பு; birth.

     “சார்பறுத் துய்தி யென்று கூறினன்” (சீவக. 1221);.

   8. புத்த மதத்தினர் கூறும் பேதைமை, செய்கை, உணர்வு, அருவுரு, வாயில், ஊறு, நுகர்வு, வேட்கை, பற்று, பிறப்பு, தோற்றம் வினைப்பயன் என்ற பன்னிரண்டு நெறிகள் (மணிமே. 21: 163-4);; causes of misery, 12 in number.

   9. ஒருதலைப்பக்கம்; bias, partiality.

அவனுக்குச் சார்பாகப் பேசுகிறான்.

   10. கூட்டுறவு; friendship.

அவனோடு இவன் சார்புள்ளவன்.

   11. கிட்டுகை (வின்.);; approximation.

   12. அருகு, அண்மை (வின்.);; adjacency, nearness.

     [சார் → சார்பு]

சார்புக்கை

 சார்புக்கை cārpukkai, பெ. (n.)

   நடனமாடு கையில் உடலுறுப்புகள் நிகழ்த்தும் வினை; dance movement.

     [சார்+புகை]

சார்புச்செயலர்

 சார்புச்செயலர் cārpucceyalar, பெ. (n.)

   தலைமைச் செயலக உதவிச் செயலர் (இக்.வ.);; under secretary in secretariat.

     [சார் → சார்பு + செயலர்]

சார்புநூல்

சார்புநூல் cārpunūl, பெ. (n.)

   நூல்வகை மூன்றனுள் முதனூல் வழிநூல்களோடு பொருண்முடிபு ஒருபுடையொத்து ஒழிந்தன ஒவ்வாமையுடைய புடைநூல் (நன். 8, உரை);; a work, which has for its source a {} and a {}, but differs from them in many particulars, one of three kinds of {}.

     [சார்பு + நூல்]

   1. முதனூல் வழிநூல் ஆகிய நூலுள்ளும் ஒரு வழி முடிந்த பொருளை ஒரு பயன் நோக்கி ஒரு கோவைபட வைப்பது (இறை. 1);.

   2. முதனூல், வழிநூல் ஆகிய நூலுள்ளும் ஒருவழி முடிந்த பொருளை ஒராசிரியன் யாதானும் ஒரு பயன்நோக்கி ஒரு கோவைபட வைப்பது. (யாப். பாயிரம்);.

   3. சார்பு நூல் என்று ஒன்றுண்டா லெனின் அஃது இருவர் ஆசிரியர் கூறியதற்கு உடம்பட்டு வருதலின் அதுவும் வழிநூலென அடங்கும் (தொல்.பொருள். 639 இளம். உரை);.

சார்பெழுத்து

சார்பெழுத்து cārpeḻuttu, பெ. (n.)

   தமக்கென்று தனியான வரிவடிவங்கள் இல்லாமல் முதலெழுத்துகளைச் சார்ந்து ஒலிக்கும் எழுத்துகள்; secondary letters.

     [சார்பு + எழுத்து]

   1. தம்மொடு தாம் சார்ந்தும் இடஞ் சார்ந்தும் இடமும் பற்றுக்கோடும் சார்ந்தும் வேறுபாட்டால் வருதலின் சார்பெழுத் தென்றாயின (நன். 6௦ மயிலை);.

   2. சார்ந்து வருவதானும் தத்தம் முதலெழுத்தின் திரிபு விகாரத்தால் பிறத்தலானும் சார்பெழுத்தாயின.

உயிர்மெய் யொழிந்தன, அகரம் முதலியன போல் தனித்தானும், ககரம் முதலியனபோல் அகரமொடு சிவணியானும் இலங்கும் இயல்பின்றி ஒரு மொழியைச் சார்ந்து வருதலே தமக்கு இலக்கணமாக உடைமையின் சார்பெழுத்தாயின (நன். 6௦. சிவ.); (உ.சொ.க.);.

தொல்காப்பியம் குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் ஆகிய மூன்றினைச் சார்பெழுத்துகளாகக் குறிப்பிடுகிறது.

நன்னூல் இவற்றொடு உயிர்மெய், உயிரளபெடை, ஒற்றளபெடை, ஐகாரக்குறுக்கம், ஒளகாரக் குறுக்கம், மகரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கம் ஆகியவற்றையும் சேர்த்துச் சார்பெழுத்துகள் பத்து என்று குறிப்பிடுகிறது.

உயிரும் மெய்யும் ஆகிய முதலெழுத்துகளுட் சிலவற்றின் சார்பினால் தோன்றுவன சார்பெழுத்துகள். சார்தல் ஒன்றையொன்று அடுத்தல். உயிரினத்தைச் சேர்ந்தவை

இரண்டும் மெய்யினத்தைச் சேர்ந்தது ஒன்றும் ஆக, சார்பெழுத்துகள் மொத்தம் மூன்றாம். அவை குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் என்பனவாகும்.

தொல்காப்பியர் கூறியவாறு இம் மூன்றே சார்பெழுத்துகள். நன்னூலார் உயிர் மெய்யையும் வேறு சில எழுத்துக் குறுக்கங்களையும் அளபெடையையும் சேர்த்துத் தவறாகப் பத்தென விரித்து விட்டார். உயிர்மெய், உயிரும் மெய்யும் சேர்ந்த கூட்டெழுத்தே யன்றி வேறெழுத்தாகாது. எழுத்துக் குறுக்கங்களையெல்லாம் சார்பெழுத்தென்று கொள்ளின் ஆய்தக் குறுக்கத்தைச் சார்பிற் சார்பென்று கொள்ளவேண்டும். அளபெடை என்பது எழுத்தொலி நீட்டமேயன்றித் தனியெழுத்தாகாது. இவ்வுண்மைகளை யெல்லாம் நோக்காது. சார்பெழுத்துத் தொகையைப் பெருக்கியதற்கு மாணவரை மயக்குதலன்றி வேறொரு பயனுமின்றாம் (த.வ. 137);.

சார்போடு-தல்

சார்போடு-தல் cārpōṭudal,    20 செ.கு.வி. (v.i.)

   மீன் பிடிக்கச் சிறுகரை போடுதல் (வின்.);; to put up a small bund for fishing.

     [சார் + போடு-தல். சார் = கரை]

சார்போதன்

 சார்போதன் cārpōtaṉ, பெ. (n.)

   படிகம்போல் சார்ந்ததன் வண்ணமாகிய ஆதன் (ஆன்மா);; soul, as assuming, like crystal, the characteristics of objects in contact (செ.அக.);.

     [சார்பு + ஆதன் – சார்பாதன் → சார்போதன்]

சார்ப்பிறக்கு-தல்

சார்ப்பிறக்கு-தல் cārppiṟakkudal,    5 செ.கு.வி. (v.i.)

   சாய்ப்பிறக்குதல் (இ.வ.);; to construct a sloping roof.

     [சார் → சார்ப்பு + இறக்கு-,]

சார்ப்பு

சார்ப்பு cārppu, பெ. (n.)

   1. சாய்ப்புக்கூரை; sloping roof.

   2. அடிப்படை; support.

     “சார்ப்புக் கொண்ட தஞ்சிறகரால்” (கந்தபு. தருநாட்டுப். 45);.

   3. மலைச்சரிவு; slope of hill.

     [சார் → சார்ப்பு]

சார்மணை

 சார்மணை cārmaṇai, பெ. (n.)

   சுவரோடு ஒட்டித் திண்ணையில் கட்டிய சாய்மானத் திண்டு (வின்.);; cushion-like masonry work against the wall on a pial, intended to lean on.

     [சார் + மணை]

சார்மானம்

 சார்மானம் cārmāṉam, பெ. (n.)

   சாய்மானம் (வின்.);; anything to lean on.

ம. சார்ம்மானம்.

     [சார் + மானம்]

சார்மேடை

 சார்மேடை cārmēṭai, பெ. (n.)

   வீட்டுக்கு முன் உள்ள திண்ணையில் சாய்ந்து உட்கார்ந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்ட சாய்வு வடிவத்திண்டு; seat provided-like masonry work against the wall on a pial, intended to learn on.

     [சார்+மேடை]

சார்வணை

சார்வணை cārvaṇai, பெ. (n.)

   சாய்ந்திருத்தற் குரிய அணை; seat provided with back.

     “சந்தனப் பீடிகைச் சார்வணை யேறி” (பெருங். உஞ்சைக். 37: 15);.

     [சார் + அணை]

சார்வரி

 சார்வரி cārvari, பெ. (n.)

   நரிப்பயறு; fox gram – Rothia trifoliate (சா.அக);.

சார்வலை

 சார்வலை cārvalai, பெ. (n.)

   மீன் வலை வகை (இ.வ.);; a fishing net.

     [சார் + வலை]

சார்வா-தல்

சார்வா-தல் cārvātal,    6 செ.கு.வி. (v.i.)

   அறமன்றக் கட்டளை முதலியன உரியவனிடத்துக் கொடுக்கப்படுதல்; to be served as summons.

சம்மன் அவனுக்குச் சார்வாகவில்லை.

     [சார் → சார்வா-,]

சார்வாய்

 சார்வாய் cārvāy, பெ. (n.)

   அறுத்தவித்த பனங்காய் (யாழ்.அக.);; palmyra fruit sliced and cooked

 சார்வாய் cārvāy, பெ.(n.)

   ஆத்தூர் வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Attur Taluk.

     [சாரல்+வாய்]

சார்வாய்க்கதிர்வேற்கவிராயர்

 சார்வாய்க்கதிர்வேற்கவிராயர் cārvāykkadirvēṟkavirāyar, பெ. (n.)

   முருகர் பதிற்றுப் பத்தாந்தியின் ஆசிரியர்; a poet, author of Murugar-{}.

     [சார்வாய் + கதிர்வேற் கவிராயர்]

இவர் சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் சார்வாய் என்னும் ஊரைச் சார்ந்தவர். குமரேசசதகம் பாடிய குருபாத தாசர் இவரின் தந்தை. இவர் உயிர் வருக்கத் திருப்புகழ், உயிர் வருக்கக் கீர்த்தனை, பஞ்சரத்தினத் திருப்புகழ் முதலிய நூல்களை இயற்றியவர் (பிற்.புல.);.

சார்வாரம்

 சார்வாரம் cārvāram, பெ. (n.)

   மகளிர் கச்சின் றலைப்பு (பிங்.);; tying ends of a bodice.

     [சார் + வாரம். வார் → வாரி = நீண்ட வார் → வாரம்].

சார்வு

சார்வு cārvu, பெ. (n.)

   1. இடம் (பிங்.);; place, residence.

   2. ஒட்டுத்திண்ணை; verandha.

     “சார்வுந் திண்ணையுங் குயிற்றி” (சீவக. 108);.

   3. புகலிடம்; refuge.

     “உறுவர் செல்சார்வாகி” (புறநா. 2௦5);.

   4. அடிப்படை; basis.

   5. துணை; help, support.

     “கெட்டார்க்குச் சார்வாய்’ (குறள், 15);.

   6. வழிவகை; means.

     “உயருஞ் சார்விலா வுயிர்” (கம்பரா. நாட்டு. 55);.

   7. பற்று (சூடா.);; attachment.

   8. அயலிடம் (வின்);; vicinity, neighbourhood.

   9. ஒருதலைப் பக்கம்; partiality.

   10. சார்வோலை (யாழ்ப்.); பார்க்க;See {}.

     [சார் → சார்வு]

சார்வோலை

 சார்வோலை cārvōlai, பெ. (n.)

   முதிர்ந்த குருத்தோலை (யாழ்ப்.);; matured palm leaf adjoining kuruttu.

     [சார்வு + ஓலை]

சாறடை

 சாறடை cāṟaḍai, பெ. (n.)

சாறணை (பிங்.); பார்க்க;See {}.

     [சாறணை → சாறடை]

சாறணத்தி

 சாறணத்தி cāṟaṇatti, பெ. (n.)

சாறணை (வின்); பார்க்க;See {}.

     [சாறணை → சாறணத்தி]

சாறணை

 சாறணை cāṟaṇai,    பெ. (n) பூடு வகை (பிங்.); purslane leaved trianthema.

சாறதி

 சாறதி cāṟadi, பெ. (n.)

   சிறு செருப்படை; a low spreading leaf – coldenia procumbens (சா.அக.);.

சாறயர்-தல்

சாறயர்-தல் cāṟayartal,    3 செ.கு.வி. (v.i.)

   விழாக் கொண்டாடுதல்; to celebrate a festival.

     “சாறயர்ந் திறைவற் பேணி” (சீவக. 1221);.

     [சாறு3 + அயர்-,]

சாறல்

 சாறல் cāṟal, பெ. (n.)

சாரல் பார்க்க;See {}.

     [சாரல் → சாறல்]

சாறிப்போ-தல்

சாறிப்போ-தல் cāṟippōtal,    8 செ.கு.வி. (v.i.)

   வீண் போதல்; to prove futile, to fail, as business.

காரியஞ் சாறிப் போயிற்று (வின்.);

     [சாறு → சாறி + போ-,]

சாறு

சாறு1 cāṟudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. நழுவுதல்; to slip off.

     “கலையுஞ் சாறின” (கம்பரா. உண்டாட்டு. 63);.

   2. வழுக்குதல்; to slip down, as from a tree.

     “சாறிவிழுந்தான்” (வின்.);.

   3. சரிதல் (வின்);; to slant, incline as a post;

 to deviate.

   4. வடிதல்; to flow, issue.

     “இரு விழிகள் பீளை சாறிட” (திருப்பு. 79௦);.

   ம. சாருக;   க. சாறு;   தெ. சாறு;பட. சாரு

     [சார் → சாறு]

 சாறு2 cāṟudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. களத்தில் தவசம் (தானியம்); பெருக்குதல் (யாழ்ப்.);

 to sweep the threshing floor and gather scattered grain.

   2. நிலத்தைக்கொத்துதல்; to hoe superficially, harrow.

     [சார் → சாறு-,]

 சாறு3 cāṟu, பெ. (n.)

   1. இலை பழம் முதலியவற்றின் சாறு; juice, sap.

     “கரும்பூர்ந்த சாறு” (நாலடி. 34);.

   2. கள் (பிங்.);; toddy.

   3. மணப் பொருள்கள் ஊறின நீர்; water in which aromatic substances are infused.

     “சாறுஞ் சேறு நெய்யு மலரும்” (பரிபா. 6, 41);.

   4. மிளகுச் சாறு; pepper water.

     “காரசாரஞ் சேர் சாற்றிலே கலந்து சோறு” (அருட்பா, 4. அவாவறு, 2);.

   5. இழவு வீட்டில் இறந்தவருடைய உறவினர் இடும் உணவு (இ.வ.);; food given by relatives in the house of the chief mourner, generally on the tenth day.

   ம. சாறு;   க. சாறு, சாறு;   து. சாரு, சாரு;தெ. சேரு

     [தெள் → தெறு → தெற்று = தெளிவு. தெற்றென = தெளிவாக. தெறு → தேறு. தேறுதல் = தெளிதல், துணிதல். தேறு → தேறல் = தெளிவு, தெளிந்த கள், தேன், தெளிந்த சாறு (சாரம்.);. தேறு → சேறு = கள், தேன், பாகு, இனிமை. ஒ.நோ: தாறு → சாறு = காய்கனிக் குலை (பிங்);. சேறு → சாறு = கள், நறுமணப் பண்டங்கன் ஊறின நீர், மிளகுநீர், இலை, கனி முதலியவற்றின் நீர். (வ.வ. 147);]

த. சாறு → Skt. {}

 சாறு3 cāṟu, பெ. (n.)

   1. விழா; festival.

     “வேறு வேறு கடவுளர் சாறுசிறந் தொருபால்” (சிலப். 5, 178);.

   2. பூசை; worship.

     “அடியார் சாறுகொள வெழுந்து” (பரிபா.8: 96);.

   3. திருமணம்; maniage.

     “நூன்மறை விதியிற் சாறு செய்தே” (திருவாலவா. 31, 5);.

 சாறு4 cāṟu, பெ. (n.)

   மீன்பிடிக்க இடும் சிற்றணை (இ.வ.);; small dam of mud across a channel with a row of bamboo splits planted on it, put up in fishing.

தெ. சாருவ

     [சார் → சாறு]

 சாறு5 cāṟu, பெ. (n.)

   மரத்தின் குலை (பிங்);; bunch or cluster of fruits.

ம. சாறு

     [தாறு → சாறு]

சாறுசிவப்பி

 சாறுசிவப்பி sāṟusivappi,    பெ. (n) தேள் கொடுக்கிச்செடி; scorpion’s sting plant – Heliotropium indicum (சா.அக.).

சாறுதாரி

 சாறுதாரி cāṟutāri, பெ. (n.)

   கரிசலாங்கண்ணி (மலை.);; species of eclipta.

     [சாறு + தாரி]

 Skt. {} → த. தாரி

சாறுபிழி –தல்

சாறுபிழி –தல் cāṟubiḻidal,    2 செ.கு.வி. (v.i.)

   1. சாறெடுத்தல்; to express juice.

   2. வேலை மிகுதி முதலியவற்றால் வருத்துதல்; to squeeze oppress as by over working a person.

   3. நன்றாய் அடித்தல் (வின்.);; to give one a good drubbing.

     [சாறு + பிழி-,]

சாறுவேளை

சாறுவேளை1 cāṟuvēḷai, பெ. (n.)

   1. தைவேளை; fire leaved cleome – Cleome pentaphylla.

   2. வெள்ளைச்சாறணை; white trianthema – Trianthema decandra (சா.அக.);.

     [சாறு + வேளை]

 சாறுவேளை2 cāṟuvēḷai, பெ. (n.)

சாறணை பார்க்க;See {}.

     [சாறு + வேளை]

சாற்காந்தள்

 சாற்காந்தள் cāṟkāndaḷ, பெ. (n.)

   மலையத்தி; malabar mountain ebony.

சாற்றங்காலி

 சாற்றங்காலி cāṟṟaṅgāli, பெ. (n.)

   கருங்காலி; glabrous foliaged cutech – Acacia catechu.

     [சாறு → சாரம், வலிமை. சாறு + அம் + காலி]

சாற்றமுது

 சாற்றமுது cāṟṟamudu, பெ. (n.)

   மிளகுச்சாறு; pepper-water ({});.

     [சாறு + அமுது]

சாற்று

சாற்று1 cāṟṟudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. விளம்பரப்படுத்துதல்; to publish, announce.

     “அடிசேர்ந்து சாற்றுமின்” (பரிபா. 8, 79);.

   2. விரித்துச்சொல்லுதல்; to explain in detail.

கலந்தார்க் குயலுண்மை சாற்றுவேன் மன் (குறள், 1212);

   3. சொல்லுதல் (திவா.);; to speak, mention.

   4. புகழ்தல்; to praise.

     “சாற்றரிய வாயிரக்கால் மண்டபம்” (ஏகாம். உலா காப்பு);.

   5. அடித்தல்; to beat, as a drum.

     “பேரி —— திரிந்து சாற்றினான்” (கம்பரா. மந்தரை. 25);.

   6. நிறைத்தல்; to fill with water, as tank.

     “குளங்கொளச் சாற்றி” (மதுரைக். 246);.

   7. அமைத்தல்; to form.

     “விற்படைசாற்றி” (சீவக. 1951);.

   ம. சாற்றுக;   க. சாறு;   தெ. சாடு;   து. சாரியுனி;   கோத. சார்;பட. சாறு

     [சார் → சார்த்து → சாத்து. சாத்துதல் = பூசுதல், திருமண் காப்பிடுதல். சாத்து → சாற்று → சாற்றுதல் = பலரறியச் சொல்லுதல்]

 சாற்று2 cāṟṟu, பெ. (n.)

.

   1. விளம்பரப்படுத்துகை; proclaiming, declaring.

   2. ஓசை; sound.

     “சுரிவளைச் சாற்றும்” (கல்லா. 46, 11);.

ம. சாற்று

சாற்றுப்படி

சாற்றுப்படி cāṟṟuppaḍi, பெ. (n) சாத்துப்படி1 பார்க்க;See {}.

     “அடைக்காயமுது சாற்றுப்படி” (T.A.S.l.268);.

     [சாத்துப்படி → சாற்றுப்படி]

சாற்றுப்பட்டை

 சாற்றுப்பட்டை cāṟṟuppaṭṭai, பெ. (n) சாத்துப்பட்டை (C.E.M.) பார்க்க;See {}.

     [சாத்துப்பட்டை → சாற்றுப்பட்டை]

சாற்றுப்பனை

 சாற்றுப்பனை cāṟṟuppaṉai, பெ. (n.)

   பனை; char-palm.

     [சாறு + பனை]

பனை பார்க்க

சாற்றுப்பாட்டு

 சாற்றுப்பாட்டு cāṟṟuppāṭṭu, பெ. (n.)

   விழாச் செய்தியைப் பறைசாற்றிச் சொல்வதற்கான பாட்டு; a song sung while declaring day of festival by drumming

     [சாற்று+பாட்டு]

காணிக்காரரிடை இப்பாடல் வழக்கில் உள்ளது.

 சாற்றுப்பாட்டு cāṟṟuppāṭṭu,    பெ. (n) திருநாலாயிரப் பனுவல் ஒதி முடிக்கும்போது பாடும் (விசேடந் தோன்ற அனுவந்திக்கும் அதன்) இறுதிப் பாடல்கள் (பாசுரங்கள்); stanzas sung to mark the close of Tivya-p-prapantam recitation in a temple.

ம. சாற்றுப்பாட்டு

     [சாற்று + பாட்டு]

சாற்றுரை

 சாற்றுரை cāṟṟurai, பெ. (n.)

அறிவித்தல்,

 declaration.

     [சாற்று+உரை]

சாற்றுவரி

 சாற்றுவரி cāṟṟuvari,    பெ. (n) கள்ளிறக்கும் மரவரி; tax on toddy-yielding trees.

     [சாறு → சாற்று + வரி]

சாற்றுவாயூற்று-தல்

சாற்றுவாயூற்று-தல் cāṟṟuvāyūṟṟudal,    5 செ.கு.வி. (v.i.)

   சாளைவடிதல் (வின்.);; to dirbble in the mouth, as a babe.

     [சாறு → சாற்று + வாய் + ஊற்று-,]

சாற்றுவாய்

 சாற்றுவாய் cāṟṟuvāy, பெ. (n.)

   சாளைவாய் (யாழ்.அக.);; dribbling mouth.

     [சாறு + வாய்]

சாற்றுவாரி

 சாற்றுவாரி cāṟṟuvāri, பெ. (n.)

சாளைவாய் (வின்.); பார்க்க;See {}.

     [சாறு + வாரி → சாற்றுவாரி]

சாற்றோலை

 சாற்றோலை cāṟṟōlai, பெ. (n.)

   ஆட்டுக் கிடையில் இடையர்கள் ஒதுங்கியிருக்கும் மறைவோலை (நாஞ்);;{} shelter for shepherds keeping watch over their flock.

     [சாற்று + ஓலை]

சால

சால cāla,    கு.வி.எ. (adv.) மிகவும்; very well, very much.

     “சால வமுதுண்டு” (திருவாச. 16, 8);.

   ம. சால;   க. சலெ;தெ. சாலு

     [சால் → சால]

சாலகம்

சாலகம்1 cālagam, பெ. (n.)

   1. வலை (அக.நி.);; net, rope-net.

   2. சிலந்தி வலை; cobweb.

   3. வேள்வி செய்யுங்கால் வேள்வி செய்பவரின் மனைவியணியும் நுதலணி (புறநா.166, உரை.);; ornament worn on the forehead by sacrificer’s wife.

   4. பறவைக் கூடு; bird’s nest.

   5. அரும்பு (பிங்);; flower bud.

   6. மந்திரவித்தை (வின்);; trick, magic.

   க. சாளேசு;து. சாலீசு

     [சூல் → சால் → சாலகம்]

 சாலகம்2 cālagam, பெ. (n.)

   கழிவு நீர் செல்லும் மூடிய வழி, அங்கணம்; drain

ம. சாலகம்.

     [சூல் → சால் → சாலகம். சாலுதல் = சாய்தல்]

 சாலகம்3 cālagam, பெ. (n.)

   சிறுகுறிஞ்சா (மலை);; species of gymnema.

 சாலகம்4 cālagam, பெ. (n.)

   கோயிற் கருவறை முகமண்டபத்திலும் பெருமண்டபத்திலும் ஒளியும், வளியும் உட்செல்லத் துளைகள் பல அமையுமாறு சிற்ப வேலைப்பாட்டுடன் அழகூட்டமாகச் செய்யப்பெறும் சிற்பப் பலகணி; a kind of ornament window.

     “மங்கைமார் சாலக வாசல்பற்றி” (திவ். பெரியாழ். 3,4:1);

     “இத்திருச்சலாகம் கஞ்சமலைப் பெரிய பிள்ளை தன்மம்” (தெ. க. தொ.4, க 146);

     “சாலேகம் சார நட” (முத்தொள்.);.

     [சாளரம் → சாலகம்]

சாலகராகம்

 சாலகராகம் cālagarāgam, பெ. (n.)

   தூய (சுத்த); பண்ணை (அராகத்தை);யொட்டி அதற்கடுத்த படியிலுள்ள பண் (அராகம்);; a class of melody type differing but slightly form cutta-{}.

     [சாலகம் + அராகம்]

சாலகாரகன்

சாலகாரகன் cālagāragaṉ, பெ. (n.)

   1. சிலந்தி; spider.

   2. வலை பின்னுவோன்; net weaver.

     [சாலிகன் → சாலகாரன்]

சாலக்கயிறு

 சாலக்கயிறு cālakkayiṟu, பெ. (n.)

ஏற்றச் சாலுக்குப்போடும் கயிறு,

 rope.

     [சால்+கயிறு]

சாலக்காரன்

சாலக்காரன் cālakkāraṉ, பெ. (n.)

   ஏய்ப்பவன் (வஞ்சகன்);; deceiver, hypocrite.

க. சாலகார (கடன்காரன்);

     [சாலம்1 + காரன்]

சாலக்கிராமம்

 சாலக்கிராமம் cālakkirāmam, பெ. (n.)

சாளக்கிராமம் பார்க்க;See {}.

     [சாளக்கிராமம் → சாலக்கிராமம்]

சாலச்சகோணம்

 சாலச்சகோணம் cālaccaāṇam, பெ.(n.)

   விளவங்கோடு வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Vilavancode Taluk.

     [சாலத்தன்+கோணம்]

சாலடி-த்தல்

சாலடி-த்தல் cālaḍittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   சால்பட உழுதல்; to make furrows in ploughing.

     [சால் + அடி-,]

சாலபஞ்சிகை

சாலபஞ்சிகை1 cālabañjigai, பெ. (n.)

   மரப் பாவை (இலக்.அக.);; wooden image.

 சாலபஞ்சிகை2 cālabañjigai, பெ. (n.)

   விலை மகள் (வேசி); (யாழ்.அக.);; prostitude.

சாலப்பகம்

 சாலப்பகம் cālappagam, பெ. (n.)

   நாவல்; jambo tree (சாஅக.);.

சாலப்பு

 சாலப்பு cālappu, பெ. (n.)

   சிவதை; Indian jalap

 u. {}

     [சாலம் → சாலப்பு]

சாலப்பூச்செடி

 சாலப்பூச்செடி cālappūcceḍi, பெ. (n.)

   மலமிளக்கிக் கிழங்கு; purgative root, true jalap (சாஅக.);.

சாலமலி

சாலமலி cālamali, பெ. (n.)

   1. இலவு; silk-cotton tree-Bombaz malabartcum.

   2. இலவம்பிசின்; the gum of silk -cotton tree.

சாலமலினிருச்சி

 சாலமலினிருச்சி cālamaliṉirucci, பெ. (n.)

   இலவம் பிசின்; gum of silk cotton tree.

சாலமலிபத்திரம்

 சாலமலிபத்திரம் cālamalibattiram, பெ. (n.)

   ஏழிலைப் புன்னை; seven leaved poon.

     [சாலமலி + பத்திரம்]

சாலமாலம்

சாலமாலம்1 cālamālam, பெ. (n.)

   ஏய்ப்பு (வஞ்சகம்); (யாழ்ப்.);; trickery deceplion.

     [சாலம் + மாலம். ‘சாலமாலம்’ மரபிணை மொழி]

 சாலமாலம்2 cālamālam, பெ. (n.)

   கண்டு சாய்ப்பு (யாழ்.அக.);; furtiveness.

கண்டுங் காணாதது போலிருக்கை.

     [சாலம் + மாலம். எதுகை நோக்கி வந்த இணைமொழி]

சாலம்

சாலம்1 cālam, பெ. (n.)

   1. சாலவித்தை பார்க்க;See {}

   2. நடிப்பு; artfulness. pretence.

     “சாலமென்ன சொல்லுவேன்” (பணவிடு. 316);.

   3. கூட்டம்; multitude, company, flock, herd, shoal.

     “திரிந்தன சாலமீன் சாலம்” (கம்பரா. வருணனை, 25);.

   4. சவை (பிங்);; assembly, court.

   5. வலை; net.

     “அளப்பில் சாலம் வீசிநின் றீர்த்திடும்” (கந்தபு. திருநகரப்.18);.

   6. பலகணி (பிங்.);; latticed window.

   7. அரும்பு (வின்.);; flower-bud.

   8. குறளை (பிங்);; slander.

   9. கல்வி (திவா.);; learning.

   10. மருத்துவநூல் (வின்.);; medical science.

தெ. சால

     [சலுக்கு பிலுக்கு = நகைகளைக் காட்டி மிடுக்காக நடக்கும் ஒலிக்குறிப்பு. சலுக்கு → சாலக்கு → சாலம்]

 சாலம்2 cālam, பெ. (n.)

சாலப்பு பார்க்க: see {}.

 சாலம்3 cālam, பெ. (n.)

   1. மதில் (பிங்);; surrounding wall, fortress.

   2. ஆச்சா (பிங்);; sal.

   3. மராமரம்; Ceylon ebony.

   4. மரம் (வின்);; tree.

     [சூல் → சால் → சாலம்]

 சாலம்4 cālam, பெ. (n.)

   அகலம் (அக.நி.);; width.

     [சால் → சாலம். அகலம் → ஆலம் → சாலம் என்றுமாம்]

சாலம்பப்பாடாணம்

 சாலம்பப்பாடாணம் cālambappāṭāṇam, பெ. (n.)

   ஒருவகைச் செய்நஞ்சு (பாடாணம்); (யாழ்.அக.);; a kind of arsenic.

சாலரா

சாலரா cālarā, பெ. (n.)

சாலர்3 பார்க்க;See {}.

     [சாலர் → சாலரா]

சாலரி

 சாலரி cālari, பெ. (n.)

   ஒர் இசைக் கருவி; a musical instrument.

     [சாலர் → சாலரி]

சாலர்

சாலர்1 cālar, பெ. (n.)

   நெய்தனிலமாக்கள் (வலையுடையோர்); (சூடா.);; inhabitants of coastal region, fishermen as using nets.

மறுவ. பரதவர், நுளையர், பஃறியர், திமிலர், கடலர், கழியர்

     [சலம் → சவர் → சாலர்]

 சாலர்3 cālar, பெ. (n.)

   கைத்தாளம்; cymbals.

     [சல் → சல்லர் → சாலர். சல் அல்லது சல்லரை என்னும் ஓசையுண்டாக்குவது. இத்தாளக் கருவியில் பெரியது சல்லரி சிறியது சாலர்]

த. சாலர் → Skt. {}

சாலவம்

 சாலவம் cālavam, பெ. (n.)

   சலதாரை (இ.வ.);; drain, gutter.

     [சுல் → சூல் → சால் → சாலகம் → சாலவம்]

சாலவித்தை

 சாலவித்தை cālavittai, பெ. (n.)

   கண்கட்டி கலை (வித்தை);; magic, juggelry.

     [சாலம் + வித்தை]

 Skt. {} → த. வித்தை

சாலா

சாலா cālā, பெ. (n.)

   1. சிறிய கடல்மீன் (நெல்லை);; small sea fish.

   2. ஆற்றில் மேயுங் கெண்டை மீன்; river fish.

     [p]

சாலாங்கபாடாணம்

 சாலாங்கபாடாணம் cālāṅgapāṭāṇam, பெ. (n.)

   பிறவிச் செய்நஞ்சு வகை; a mineral poison.

சாலாதார்

சாலாதார் cālātār, பெ. (n.)

   பெருமை யில்லாதோர்;   சான்றாண்மை இல்லாதோர்; ignorable persons. opp to {}.

     “சாலாதார் தீயவினைகளைச் செய்து” (குறள், 657, உரை.);.

     [சால் + ஆ + தார். ‘ஆ’ எ.ம.இ.]

சாலானி

 சாலானி cālāṉi, பெ. (n.)

   நீர் நிறைத்து வைக்கும் பானையைத் தாங்கி நிற்கும் மரத்தாலான தாங்கி; wooden ring stand.

     [சால்+ஆணி]

சாலாபோகம்

சாலாபோகம் cālāpōkam, பெ. (n.)

   அறச் சாலைகட்காக விடப்படும் இறையிலி நிலம் (T.A.S. I. 16, 5);; endowment of land for the maintenance of rest houses and choultries.

     [சாலை → சாலா + போகம்]

சாலாமாலாவாக

 சாலாமாலாவாக cālāmālāvāka,    கு.வி.எ. (adv.) குழப்பமாக (இ.வ.); confusedly.

     [சாலா + மாலா. எதுகை நோக்கி வந்த மரபிணைமொழி]

சாலாமியம்

 சாலாமியம் cālāmiyam, பெ. (n.)

   கருடக்கொடி; Indian birth-wort-Aristolochia Indica (சா.அக);.

சாலாரம்

சாலாரம் cālāram, பெ. (n.)

   1. ஏணி; ladder.

   2. படிக்கட்டு; steps.

   3. பறவைக்கூடு; nest, cage (கழஅக.);.

     [சால் + ஆரம். சால் போன்று அதிக்கடுக்காக அமையும் படி, ஏணி.]

சாலாவலை

 சாலாவலை cālāvalai, பெ. (n.)

சாலாமீன் பிடிக்கப் பயன்படும் வலை (மீனவ.);, a fishing net.

     [சாலா + வலை]

சாலி

சாலி1 cāli, பெ. (n.)

   1. செந்நெல்; a superior, species of paddy.

     “சாலி வெண்சோறு குவைஇய

குன்றில்” (ஞானா. 36, 15);.

   2. நெற்பயிர்ப்பொது; growing paddy crop.

     “தாரைகொள்ளத் தழைப்பன சாலியே” (கம்பரா. நாட். 25);.

   3. புழுகுச் சட்டம் (தைலவ.);; perfume – sac of the civet cat.

   மறுவ. வரி, கொல், விரீஇ, யவம்;க. சாலி, சாலெ ம. சாலி

     [சேய் → சே. சேத்தல் = சிவத்தல். சேது → கேது = சிவப்பு. சுல் → (சோல்); சால் → சாலி (மு.தா.153);]

 சாலி2 cāli, பெ. (n.)

   உடையவன் – உடையவள் என்னும் பொருளுடன் தொடர்மொழியிறுதியில் வரும்சொல்; word meaning possessor, used at the end of compounds, as in திறமைசாலி, குணசாலி.

     [சால் = நிறைவு, உடைமை. சால் → சாலி]

 சாலி3 cāli, பெ. (n.)

   அருந்ததி; wife of {}.

     “சாலியொருமீன் றகையாளை” (சிலப். 1: 51);.

 சாலி4 cāli, பெ. (n.)

சாலிகை2 (அக.நி.); பார்க்க;See {}.

     [சால் → சாலி]

 சாலி5 cāli, பெ. (n.)

   1. மராமரம் (க);; Ceylon ebony.

     “மிக்க சாலிக ளேழையும்” (சேதுபு. சேதுவந். 9);.

   2. சீமைவேல்; Jerusalam thorn.

   3. குடைவேல்; umbrella – thorn babul.

   4. கூந்தல் வேல்; elephant thorn.

   5. முள்வேல்; buffalo – thorncutch.

 சாலி cāli, பெ. (n.)

   இசையில் நிறைவை உடையது எனப் பொருள் தருவது; a term used in music referring to satisfaction.

     [சால்-சாலி]

சாலிகன்

சாலிகன் cāligaṉ, பெ. (n.)

   1. சாலியன், 1 பார்க்க;See {}, 1.

   2. சாலியன் நெய்த ஆடை (நன் 289, மயிலை);; cloth manufactured by weavers.

க. சாலிக

     [சாலியன் → சாலிகன்]

சாலிகம்

 சாலிகம் cāligam, பெ. (n.)

   சம்பா நெல்; champa paddy-Oryza sative (சா.அக.);

     [சாலி → சாலிகம்]

சாலிகர்

சாலிகர் cāligar, பெ. (n.)

   நெய்வோன்; weaver.

     “சாலிகற்க்கு குடியிருப்புக் காணியாக விட்டமனம் பெரியான் திருவீதி” (தெ.க.தொ. 24, க. 145-4);

     [சாலி → சாலியர் → சாலிகர்]

சாலிகை

சாலிகை1 cāligai, பெ. (n.)

   ஒருவகை மரம்; french honey-suckle-Desmodium genus (சா.அக.);.

     [சாலி → சாலிகை]

 சாலிகை2 cāligai, பெ. (n.)

   கவசம்; armour, coat of mail.

     “சாலிகை யுடம்பினர் தறுகணாளரே” (சீவக. 2227);.

மறுவ. அரணம், சடாரி, ஆசு, கண்டம், பருமம், மெய்யுறை, கச்சை, பரம்.

     [சுல் → (சோல்); → சால் = நிறைதல். சால் → சாலிகை = குறிப்பிட்ட உறுப்பை முழுவதுமாக (நிறைவாக);மூடுவது]

 சாலிகை3 cāligai, பெ. (n.)

   வரி, இறை; toll, customs, duty.

சாலிகைத்தறி

சாலிகைத்தறி cāligaittaṟi, பெ. (n.)

   பழைய வரிவகை (S.I.l. i. 91);; ancient tax.

     [சாலிகை + தறி]

சாலிக்கண்ணி

 சாலிக்கண்ணி cālikkaṇṇi, பெ. (n.)

   அவுரி; indigo – Indigo fera tinctoria (சா.அக);.

சாலிக்கிராமம்

 சாலிக்கிராமம் cālikkirāmam, பெ. (n.)

சாளக்கிரமம்;See {}.

சாலிநெல்

சாலிநெல் cālinel, பெ. (n.)

   செந்நெல்; paddy (கழஅக.);.

க. சாலி (நெல்);

     [சாலி + நெல். சால் → சாலி = செந்நெல்] சாலி1 பார்க்க

சாலினி

சாலினி cāliṉi, பெ. (n.)

   1.தேவராட்டி; foretelling women with divine power.

முழங்குவாய் சாலினி (சிலம்.12-7);

     [சால்-சாலி – சாலினி]

 சாலினி1 cāliṉi, பெ. (n.)

   1. தெய்வமேறியாடும் பெண்; women employed in pronouncing oracles under the influence of a spirit.

     “பழங்கடனுற்ற முழங்குவாய்ச் சாலினி” (சிலப். 12:7);.

   2. அருந்ததி; wife of {}.

     “கடவு ளொருமீன் சாலினி யொழிய” (பரிபா. 5: 44);.

மறுவ. தேவராட்டி

சாலினி தெய்வமேறியாடும் பெண். காளி பெண் தெய்வமாதலின் அணங்காடுபவள் பெரும்பாலும் சாலினியே யென்பது ‘வேட்டுவவரி’யால் அறியக் கிடக்கின்றது.

 சாலினி2 cāliṉi, பெ. (n.)

   1. பேய்ப்பீர்க்கு (தைலவ.தைல.52);; bitter luffa.

   2. பீர்க்கு (மலை.);; sponge gourd. க. சாலினீ

 சாலினி3 cāliṉi, பெ. (n.)

   கள் வாணிச்சி (அக.நி.);; woman who deals in toddy.

     [சாலி → சாலினி]

சாலிப்பகுதி

 சாலிப்பகுதி cālippagudi, பெ. (n.)

   கடைகளுக்கு வாங்கும் வரிவகை (R.T.);; a tax on shops.

சாலிப்பரணி

சாலிப்பரணி cālipparaṇi, பெ. (n.)

   1. பெரு மல்லிகை; large jasmine.

   2. படிக்கட்டு; steps.

   3. பறவைக் கூடு; nest, cage (சா.அக.);.

     [சால் → சாலி + பரணை. பரணை → பரணி. சால் போன்று அடுக்கடுக்காக (பரணையாக); அமையும் படிக்கட்டு]

சாலிமரம்

 சாலிமரம் cālimaram, பெ. (n.)

   குடைவேல் மரம்; arrowthorn (சாஅக.);.

     [சாலி + மரம்]

சாலியக்கோட்டம்

சாலியக்கோட்டம் cāliyakāṭṭam, பெ. (n.)

   தஞ்சை மாவட்டத்தை உள்ளடக்கிய பழைய நாடு; an ancient province, country.

     “சோழ மண்டபத்தில் சாலியக் கோட்டத்தில் வாழை குலைச்சேரி கிராமம் ஒன்றும்” (திருப்.க.தொ.2. க. 1௦6 – 4);

     [சாவியம் + கோட்டம். கோண் → கோடு. கோடுதல் = வளைதல். கோடு → கோட்டம் = வளைவு]

சாலியன்

சாலியன் cāliyaṉ, பெ. (n.)

   1. நெசவுத் தொழில் செய்யும் இனத்தான்; a caste of weavers

     “பட்டுச்சாலிய ரிருக்கு மிடங்களும்” (சிலப். 5:17, உரை);.

   2. காராம்பூப்பட்டையை உரிக்கும் யாழ்ப்பாணத்து வகுப்பான் (சாதியான்); (யாழ்ப்.);; member of a caste of cinnmon peelers.

   ம. சாலியன்;   க. சாலிக;   தெ. சாலெவாடு;து. சாலியன், சாடெ, சாட்ய

     [சாலி → சாலியன்]

சாலியன்கூறை1

__,

பெ. (n.);

   திருமணத்தில் மணமகளுடுத்துங் கூறைப் புடைவை (இ.வ);; bride’s wedding cloth.

     [சாலியன் + கூறை]

சாலியமங்கலம்

 சாலியமங்கலம் cāliyamaṅgalam, பெ. (n.)

   தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஓர் ஊர்; a village in Thanjavur.

     [சாலி-சாலியம்+மங்கலம்]

சாலியம்பாக்கு

 சாலியம்பாக்கு cāliyambākku, பெ. (n.)

   சாயப்பாக்கு (இ.வ.);; areca nut sliced and boiled in water which gives it a reddish hue.

ம. சாயில்யம்

     [சுல் → செல் → சேல் = செந்நிறக் கெண்டை. சுல் → சேல் → சால் → சாலி = சிவப்பு. சாலி + அம் + பாக்கு]

சாலியர்காணம்

 சாலியர்காணம் cāliyarkāṇam, பெ. (n.)

   துணி நெய்யும் நூலிற்குச் சாயமிடும் சாலியக்குடியினர் அத்தொழிலுக்குரிய வரியைக் காசாகச் செலுத்தும் முறை; a tax rended by {} of their weaving occupation (கல். கலை. அக.);.

மறுவ. சாலியத்தறி

     [சாலியர் + காணம்]

சாலிகைத்தறி பார்க்க

சாலிறைப்போன்

 சாலிறைப்போன் cāliṟaippōṉ, பெ. (n.)

   ஏற்றத்தின் கீழே சாலைக் கவிழ்ப்போன்; a worker in piccotah irrigation.

     [சால்+இறைப்போன்]

சாலிவாகனசகாப்தம்

சாலிவாகனசகாப்தம் sālivākaṉasakāptam, பெ. (n.)

   கி.பி.78ஆம் ஆண்டு மேழம் (சைத்திர); மாதத்தில் தொடங்கிச் சாலிவாகனன் பெயரால் வழங்கும் ஆண்டு; era of Salivahana commencing with chaitra. 78 A.D.

     [சாலிவாகனன் + சகாப்தம்]

சாலிவாகனன்

 சாலிவாகனன் cālivākaṉaṉ, பெ. (n.)

   விக்கிரமாதித்தனுக்குப் பகைவனும் ஆண்டு தொடக்கத்திற்குரியவனுமாகச் சொல்லப்படும் ஒரு பேரரசன்; a celebrated king believed to have been the enemy of {} and the institutor of the era now called {} (செ.அக);.

     [சாலி + வாகனன். சுல் → (சோல்); → சால் = நிறைதல், ஒரு கால எல்லை நிறைவு, ஆண்டு. ஆண்டுமானக் கணக்குக்குரிய அரசன்]

சாலிவாரம்

 சாலிவாரம் cālivāram, பெ. (n.)

   ஒசூர் வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Hosur Taluk.

     [சாலி [நெல்]+வாரம்]

சாலு

சாலு2 cālu, பெ. (n.)

சால்வை பார்க்க;See {}.

க. சாலு

     [சுல் → (சோல்); → சால் → சாலு (முதா.2௦9);]

சாலுகம்

 சாலுகம் cālugam, பெ. (n.)

   சாதிக்காய் (சங்அக);; nutmeg.

சாலுங்கரகம்

 சாலுங்கரகம் cāluṅgaragam, பெ. (n.)

   பட்டினவர் திருமணத்துள் நாட்டாண்மைக் காரர் வீட்டிலிருந்து மணவீட்டுக்கு மேள தாளத்துடன் எடுத்துச்செல்லும் நீர்க் கரகம் (இ.வ.);; water-pot, taken ceremoniously from the {} house to the house where a marriage is being performed, among {}.

     [சால் + உம் + கரகம்]

சாலுவை

சாலுவை cāluvai, பெ. (n.)

சால்வை பார்க்க;See {}.

     “தண்டிகையும் போர்த்திட்ட சாலுவையும்” (பணவிடு. 245);.

   க. சாலுவெ;பட. சாலவெ

     [சால்வை → சாலுவை]

சாலூரம்

சாலூரம்1 cālūram, பெ. (n.)

   மேன்மை (சூடா.);; greatness, eminence.

     [சால் + ஊர் – சாலூர் → சாலூரம்]

 சாலூரம்2 cālūram, பெ. (n.)

   தவளை; frog.

     [சால் + ஊரம். ஊர் → ஊரம்]

சாலூர்

 சாலூர் cālūr, பெ.(n.)

   செங்கற்பட்டு வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Chingleput Taluk.

     [சாலி+ஊர்]

சாலெடுத்தல்

சாலெடுத்தல் cāleḍuttal,    4 செ.கு.வி. (v.i.)

   கீறுதல் போன்ற நீண்ட பள்ளம் உருவாக்குதல்; to furrow, to form a line.

   க. சாலிடு;பட சாலிடி

     [சால் + எடு-,]

சாலேகம்

சாலேகம்1 cālēkam, பெ. (n.)

   1. சாளரம்; latticed window.

     “சாலேகநாற்றிக் குத்துறுத்து” (நெடுநல். 125);.

   2. பூவரும்பு (பிங்.);; flower-bud.

க. சாளக

     [காலேகம் → சாலேகம். கால் = காற்று]

 சாலேகம்2 cālēkam, பெ. (n.)

   1. சந்தனம் (மலை.);; sandalwood.

   2. செந்தூரம் (வின்.);; vermilion.

     [சேய் → சே. சேத்தல் = சிவத்தல். சுல்(சோல்); → சால் → சாலி = செந்நெல். சேல் → சேலேகம் = சித்தூரம். சேலேகம் → சாலேகம் (மு.தா.140);]

சாலேகால்

 சாலேகால் cālēkāl, பெ. (n.)

   நடப்பு ஆண்டு (C.G.);; current year.

     [சால் + ஏ + கால்]

சாலேயம்

சாலேயம்1 cālēyam, பெ. (n.)

   சிறுதேக்கு; bushy fire brand teak (சா.அக);.

     [சால் = மரவகை. சால் → சாலேயம்]

 சாலேயம்2 cālēyam, பெ. (n.)

   செந்நெல் விளையும் நிலம் (பிங்.);; field where {} rice is cultivated

     [சாலி → சாலேயம். சாலி= நெல். நெல் விளையும் நிலம்]

 சாலேயம்3 cālēyam, பெ. (n.)

   கம்பளித்துணி (யாழ்.அக.);; woollen cloth

சாலை

சாலை1 cālai, பெ. (n.)

   நீர்க்குழாய்கள் செய்யப் பயன்படும் மரம்; a tree used to made water tubes.

     [சால் → சாலை]

 சாலை2 cālai, பெ. (n.)

   1. உணவு அளிக்கும் அறச்சாலை; alms-house, feeding-house.

     “தண்ட மிட்டன்றிச் சாலை உண்ணப் பெறார்” (T.A. S. l. 9);.

   2. வேள்விச் சாலை; sacrificial hall.

     “திருத்திய சாலை புக்கனன்” (கம்பரா. திருவவ. 84);.

   3. பள்ளிக்கூடம்; school.

     “கறையறு கல்வி கற்குங் காமர்சாலையும்” (குசேலோ. குசே. வைகுந். 23);.

   4. குதிரை யானை முதலியவற்றின் கூடம் (பிங்.);; stable, elephant-stable.

   5. ஆவின் (பசுக்);கொட்டில்; cow-shed.

     “ஆத்துறு சாலைதோறும்” (கம்பரா. ஊர்தேடு. 101);.

   6. பெரிய பொது மண்டபம் (இ.வ.);; large public hall.

   7. அரண்மனை (பிங்);; royal palace.

   8. வீடு; house, mansion.

     “விதுரன் சாலைக் கரும்புது விருந்தா மருந்தே” (அழகர்கல. 5);.

   9. இருபக்கமும் மரஞ்செறிந்த பாதை; avenue, public road shaded by trees.

   10. அகன்ற பாதை; road.

     ‘அண்ணா சாலை சென்னையில் மிக நீளமானது’ (உ.வ.);.

   ம. சால; E. saloon, hall

     [சால் → சாலை = பெருங்கூடம், பட்டறை, தொழிலகம், அலுவலகம், அகன்றபாதை (மு.தா. 173);]

மாணவர் கல்வி பயிலும் பள்ளியைக் கல்விச் சாலை, பாடசாலை என்றும் தொழிலாளர் பலர் கூடித்தொழில் செய்யுமிடத்தைத் தொழிற்சாலை என்றும், கம்மியர் வீட்டில் பணிசெய்யும் அறையை, பட்டசாலை என்றும் வழங்குதல் காண்க.

 சாலை2 cālai, பெ. (n.)

   கையாந்தகரை (L);; a plant.

     [கரிசாலை → சாலை]

சாலைக்கரை

 சாலைக்கரை cālaikkarai, பெ. (n.)

   சாலைப் பக்கம் (கொ.வ.);; road-side.

     [சாலை + கரை]

சாலைநடவு

 சாலைநடவு cālainaḍavu, பெ. (n.)

   பயிர் நடவு வகை (செங்.);; transplantation of seedlings.

     [சாலை + நடவு. நடவு ‘வு’ தொ.பெ. ஈறு]

சாலைப்பணி

 சாலைப்பணி cālaippaṇi, பெ. (n.)

   சாலை அமைக்கும் பணி; work of laying road.

     [சாலை + பணி]

சாலைப்புறம்

சாலைப்புறம் cālaippuṟam, பெ. (n.)

   அந்தணர்கள் உண்பதற்குக் களப்பாளர் அரசன் ஏற்படுத்திய மடம், மடப்புறம்; brahmin’s abbey.

     “திரிபுவனசண்டேஸ்வர தேவற்கு இத்தேவர் ஸ்ரீ பண்டாரத்தை வஸ்துக் கொண்டு இச்சாலைப்புறமாக நாங்கள் இறையிலியாக விற்றுக்குடுக்க நிலைமாவுது” (ந.க. 2. க 321 – 6);.

     [சாலை + புறம்]

சாலைமடையன்

சாலைமடையன் cālaimaḍaiyaṉ, பெ. (n.)

   கோயில் உணவு சமைப்பவன்; temple cook.

     “சனி ஒன்றுக்கு எண்ணை உரி ஆழாக்குக்கு நெல்லு ஐங்குறுணியும் சாலைமடையன் ஒருவனுக்கு நெல்லு அறுநாழியும்” (தெ.க. தொ. 4. க. 223/1986);.

     [சாலை + மடையன். மடைத்தொழில் = உணவு சமைக்கும் தொழில்]

சாலையட்டுவான்

சாலையட்டுவான் cālaiyaṭṭuvāṉ, பெ. (n.)

   உணவுச் சாலையில் உணவிடுபவன்; server.

     “சாலையட்டுவானுக்கு நெல்லுப்பது பதக்கும்” (தெ. க.தொ.13. க. 157 – 3);.

     [சாலை + அட்டுவான்]

சாலையூஞ்சல்

 சாலையூஞ்சல் cālaiyūñjal, பெ. (n.)

   ஒருவகை ஊஞ்சல் மரம்; a kind of sirissa tree (சா.அக.);.

சாலைவாசல்

சாலைவாசல் cālaivācal, பெ. (n.)

   அறச்சாலை அல்லது உணவுச்சாலை; alms-house, mess.

     “திருக்கொடி திருநாள்-2க்கு ஏழந் திருநாளில் சாலை வாசலில் அமுது செய்தருளும் சீடைப்படி” (திருப். க. தொ – 3 க. 127-4);.

     [சாலை + வாசல்]

சாலோட்டு-தல்

 சாலோட்டு-தல் cālōṭṭudal, செ.கு.வி. (v.i)

   நிலத்தை உழுதல்; to plough land.

நேற்று வரை இரண்டு சால் ஒட்டி ஆயிற்று. (உ.வ.);

     [சால்+ஒட்டு]

சால்

சால்1 cālludal,    13 செ.கு.வி. (v.i.)

   1. நிறைதல்; to be abundant, full, extensive.

     “ஈடுசால் பேர்” (சீவக. 59);.

   2. மாட்சிபெறுதல்; to excel in moral worth;

 to great, noble.

   3. பொருந்துதல்; to be suitable, fiting.

     “இந்திரனே சாலுங் கரி” (குறள், 25);.

   4. முற்றுதல்; to be finished, exhausted.

     “தாமத்தாரின ரெண்ணினுஞ் சால்வரோ” (கம்பரா. பிணிவீட்டு. 97);.

   5. போதியதாதல்; to be all that is required, to be sufficient.

   ம. சாலு;   க., து. சாலு;   தெ. சாலு;   கோத. சலு;துட. செளலு.

     [சுல் → சோல் → சால். சாலுதல் = நிறைதல், நற்குணம் நிறைந்திருத்தல், முற்றுதல், நிறைதலால் போதியதாதல்]

 சால்2 cāl, பெ. (n.)

   உத்தரம், தளம், தூண், பாலம் முதலிய வேலைகளுக்குப் பயன்படும் மரம்; a kind of strong trees.

 சால்3 cāl, பெ. (n.)

   1. நிறைவு; fullness, abundance.

   2. தண்ணீர் நிரப்பும் பானை (பிங்.);; large water -pot;

   3. நீர் இறைக்கும் கலம்; baling bucket.

   4. உழவுசால்; furrow in ploughing.

     “உழுத செஞ்சால்” (சீவக. 817);.

   5. விதைக்கும் பொழுது விதைப்பவன் வயலில் ஒரு முறை சென்று திரும்புகை (வின்.);; track of a sower in passing and repassing while sowing grain.

   6. கும்பஒரை (கும்பராசி); (குமாரசு. தினாதி, 3, உரை);; the eleventh sign of the zodiac, Aquarius.

   7. நீண்டவரி; continuous line, row (செ.அக.);.

   ம. சால;   க. சால், சாலு (போதும்);;   தெ. சால, சாலு (முடியும், போதும்);;கொலா. சால்

குவி. கால் (போதும்);

 E. jar

     [சுல் → (சோல்); → சால்]

{}, a bucket, a furrow, Comp, oni-ia ({}-ia);, any flat board or tray with a raised rim (C.G.D.F.L.593);.

 சால்4 cāl, பெ. (n.)

   ஆண்டு (இ.வ.);; year (செஅக.);.

     [சுல் → (சோல்); → சால் = நிறைதல், ஒரு குறிப்பிட்ட கால எல்லை நிறைவடைதல்]

     [p]

 சால்5 cālludal,    5 செ.கு.வி. (v.i.)

   சாய்தல்; to decline.

     [சுல் → சால்-,]

சால்கட்டு-தல்

சால்கட்டு-தல் cālkaṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. தலைச்சாலுழுதல் (வின்.);; to plough the first furrow in a field.

   2. வாய்க்கால் போல் நீண்ட கோடு உருவாக்குதல்; to form a line.

   3. சாலில் விதைத்துச் செல்லுதல்; to pass and repass, sowing grain in a field.

   ம. சாலாகுக (உழுதல், சிறுகால்வாய் வெட்டுதல்);;க. சாலுகட்டு

     [சால் + கட்டு-,]

சால்கரகம்

சால்கரகம் cālgaragam, பெ. (n.)

   ஒருவகைக் குடம்; a kind of water pot.

     “அமு பானை சட்டி திருமஞ்சனக் குடம் சால் கரகம் எரி கரும்பு இவையும்” (தெ.க, தொ.7, க. 47௦/4);

     [சால் + கரகம்]

சால்கெண்டை

 சால்கெண்டை cālkeṇṭai, பெ. (n.)

கெண்டை மீன் வகையுள் ஒன்று

 dorsalis,

     [சால்+கெண்டை]

     [P]

சால்கோல்

 சால்கோல் cālāl, பெ. (n.)

   ஏற்றக்கோல் (செங்கை);; bamboo pole of picottah.

     [சால் + கோல்]

சால்சாப்பு

 சால்சாப்பு cālcāppu, பெ. (n.)

   சமாளித்தல், சரி செய்தல்; to adjust by tactics.

     [சால்+சாப்பு]

சால்நடவு

 சால்நடவு cālnaḍavu, பெ. (n.)

   விதையை கையிலெடுத்து எருக்குப் பின் விதைத்தல்; planting method.

     [சால்+நடவு]

சால்பானை

 சால்பானை cālpāṉai, பெ. (n.)

   பெரிய தண்ணீர் பானை; water pot.

     [சால்+பாறை]

சால்பிடி-த்தல்

சால்பிடி-த்தல் cālpiḍittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   ஏர்ச்சால் பிடித்தல்; to form a line, to be in rows.

   க. சால் கொள், சால்தெகெ;பட. சால் கிடி

     [சால் + பிடி]

சால்பு

சால்பு1 cālpu, பெ. (n.)

   1. மேன்மை (திவா.);; excellence.

   2. நற்குணம்; good quality or character.

     “சாலும் பிறநூலின் சால்பு” (ஏலாதி, 5);.

   3. சான்றாண்மை; nobility.

     “என்ன பயத்ததோ சால்பு” (குறள், 987);.

   4. தன்மை; nature,

     “தடுப்பன போலுஞ் சால்பின” (கம்பரா. கடிமண. 67);.

   5. கல்வி (திவா.);; learning, erudition.

மறுவ. தகவு, பெற்றி, தகுதி, பான்மை, தகைமை

     [சால் → சால்பு]

 சால்பு2 cālpu, பெ. (n.)

   மனவமைவு; frame of mind.

     “இரவொல்லாச் சால்பு” (குறள், 1௦64);.

     [சால் → சால்பு. ‘பு’ சொல்லாக்க ஈறு]

சால்புமுல்லை

சால்புமுல்லை cālpumullai, பெ. (n.)

   சான்றோரின் அமைதி கூறும் புறத்துறை (பு.வெ. 8:31);; theme describing the serenity of noble – minded persons.

     [சால்பு + முல்லை]

சால்புளி

சால்புளி cālpuḷi, பெ. (n.)

   முறைப்படி; in the prescribed manner.

     “சமிதைக் கிரிகை சால்புளிக் கழிப்பி” (பெருங். இலாவாண. 3, 81);.

     [சால்பு → சால்புளி]

சால்வடம்

 சால்வடம் cālvaḍam, பெ. (n.)

   துலான் வடம்; a kind of picottah part.

     [சால் + வடம்]

சால்வயிறு

 சால்வயிறு cālvayiṟu, பெ. (n.)

   பெருவயிறு (கொ.வ.);; pot belly.

     [சால் + வயிறு]

சால்வளை-த்தல்

சால்வளை-த்தல் cālvaḷaittal,    4 செ.கு.வி. (v.i.)

சால்விடு-, பார்க்க;See {}.

     [சால் + வளை-,]

சால்வளையம்

 சால்வளையம் cālvaḷaiyam, பெ. (n.)

   சாலின் நான்கு இரும்புப் பட்டைகள் சேர்ந்த, மேற் பகுதியில் உள்ள வளையம் (செங்கை);; a ring of baling bucket.

     [சால் + வளையம். வள் → வளை → வளையம்]

சால்விடு-தல்

சால்விடு-தல் cālviḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   ஏர்ச்சாலுழுதல் (யாழ்ப்.);; to plough a furrow.

     [சால் + விடு-,]

சால்விதைப்பு

 சால்விதைப்பு cālvidaippu, பெ. (n.)

   மழை பெய்து மேல்மண் காய்ந்தபின் ஏர்ச்சாலில் விதைகளைப் போடுதல்; furrow sowing.

     [சால் + விதைப்பு. விதை → விதைப்பு]

சால்வு

சால்வு cālvu, பெ. (n.)

   பொந்திகை (திருப்தி);; satisfaction.

     [சால் → சால்வு]

சால்பு1 பார்க்க

சால்வை

சால்வை cālvai, பெ. (n.)

   மயிர்க்கம்பளம்; shawl.

சொற்பொழிவாளர் சால்வை பரிசில் பெற்றார்.

   க. சாலுவெ, சாலு;பட. சால்வெ

     [சுல் → (சோல்); → சால் → சால்வை = போர்வை (மு.தா. 191);. போர்த்திக் கொள்வதற்குப் பயன்படுவது]

சால்வையெடு-த்தல்

சால்வையெடு-த்தல் cālvaiyeḍuttal,    4 செ.கு.வி. (v.i.)

   மதிப்புரவாக (மரியாதையாக); மேல்துண்டை யெடுத்தல் (யாழ்ப்.);; to lower or take the upper cloth as a mark of respect.

     [சால்வை + எடு-,]

சாளகபைரவி

சாளகபைரவி cāḷagabairavi, பெ. (n.)

   பண் வகை (பரத.ராக.102);; a specific melody-type.

     [சாளகம் + பைரவி]

சாளகம்

சாளகம் cāḷagam, பெ. (n.)

   இசைப்பாவுக்குரிய சாதியோசை மூன்றனுள் ஒன்று (சிலப். 6, 35, உரை);; one of the three types of harmonic tone.

சாளக்கிராமம்

சாளக்கிராமம் cāḷakkirāmam, பெ. (n.)

   திருமாலுருவமாகக் கொண்டு பூசித்தற்குரிய கண்டகிச் சிலை; black fossil ammonite worshipped as a form of {} chiefly found in the river Gandak.

     “பாற் கடற் பிறந்தாலு நத்தை தான் சாளக்கிராம மாமோ (சேதுபு. சக்கர. 19);.

சாளமீன்

 சாளமீன் cāḷamīṉ, பெ. (n.)

   ஒருவகை மீன் (மீனவ.);; a kind of fish.

     [சாளை + மீன் = சாளை மீன் → சாளமீன்]

சாளம்

சாளம்1 cāḷam, பெ. (n.)

   குங்கிலியம் (மூ.அ.);; dammar resin.

 சாளம்2 cāḷam, பெ. (n.)

   மணல் (சங்அக.);; sand.

     [அளம் = உவர்மண், நெய்தல் நிலம், அளம் – (சளம்); → சாளம்]

 சாளம்3 cāḷam, பெ. (n.)

சாளரம் பார்க்க;See {}.

     “மலயத் தனிக்கால் வரசாளந் தைவந் துலவ” (சொக்கநா. உலா. 42);.

     [சாளரம் → சாளம்]

சாளரம்

சாளரம்1 cāḷaram, பெ. (n.)

   பலகணி; latticcd window;

 window.

     “சாளரந் தோறுந் தோன்றுஞ் சந்திரவுதயங் கண்டார்” (கம்பரா. மிதிலைக். 14);.

   ம. சாளரம்;க. சாலந்தரா

     [சாரல் → சாரலம் → சாரளம் → சாளரம்]

 சாளரம்2 cāḷaram, பெ. (n.)

சாலகராகம் பார்க்க;See {}.

     “சுத்த சாளர சங்கீதம்” (திருவால வா. 54. 13);.

சாளரவாயில்

 சாளரவாயில் cāḷaravāyil, பெ. (n.)

   பலகணி (வின்.);; window.

க. சாலகா

     [சாளரம் + வாயில்]

சாளர்

 சாளர் cāḷar, பெ. (n.)

   செவ்வழி யாழ்த்திற வகை (பிங்);; a secondary melody-type of the {} class.

சாளவலை

 சாளவலை cāḷavalai, பெ. (n.)

   சாலமீன் பிடிக்கப் பயன்படும் வலை;{} fish net.

     [சாளை → சாள + வலை]

சாளா

சாளா cāḷā, பெ. (n.)

சாளை1 (சங்அக); பார்க்க;See {}.

     [சாளை → சாளா]

சாளி

சாளி1 cāḷi, பெ. (n.)

சாளிகை2 (தனிப்பா. 1, 72, 142. உரை); பார்க்க;See {}.

     [சாள் → சாளி]

 சாளி2 cāḷi, பெ. (n.)

   குடைவேல் மரம்; umbrella thorn babul.

 சாளி cāḷi, பெ. (n.)

   திருப்பத்துர் வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Tiruppathur Taluk.

     [சாளை-சாளி]

சாளிகம்

சாளிகம் cāḷigam, பெ. (n.)

சாளிகை1 (வின்.); பார்க்க;See {}.

     [சாளிகை → சாளிகம்]

சாளிகை

சாளிகை1 cāḷigai, பெ. (n.)

   வண்டு (வின்);; beetle.

ம. சாழி

     [அள் = கூர்மை, முள், கொடுக்கு. அள் → அளி = கொட்டும் உறுப்புள்ள ஈ அல்லது வண்டு. அளி → சளி → சாளி → சாளிகை]

 சாளிகை2 cāḷigai, பெ. (n.)

   பணப்பை; money bag.

     “மாளிகையும் பணச்சாளிகையும்” (கந்தரலங். 78);.

   ம. சாளிக;   க. சாளிகெ;   தெ. சாலியா, சாலெ. சாலேய; Skt. {}

     [சால் → சாலிகை → சாளிகை)]

 சாளிகை3 cāḷigai, பெ. (n.)

   சாடி; jar.

     [சாடி → சாடிகை → சாளிகை]

சாளிகைப்பணக்காரன்

 சாளிகைப்பணக்காரன் cāḷigaippaṇaggāraṉ, பெ. (n.)

   பெருஞ்செல்வன் (வின்.);; person with long purse, wealthy man.

     [சாளிகை + பணக்காரன்]

சாளிகைமாடு

 சாளிகைமாடு cāḷigaimāṭu, பெ. (n.)

   சல்லிக் கட்டுக்குரிய எருது (இ.வ.);; bull let out in bull- baiting.

     [சாளிகை + மாடு]

சாளியல்

சாளியல் cāḷiyal, பெ (n.)

சாளிகை2 (இ.வ.); பார்க்க;See {}.

     [சாளி(கை); → சாளியல்]

சாளியா

 சாளியா cāḷiyā, பெ. (n.)

   ஒருவகை மருந்துவிதை (வின்.);; a kind of medicinal seed.

சாளு-தல்

சாளு-தல் cāḷudal,    5 செ.கு.வி. (v.i.)

   வளைதல்; to bend (பே.மொ.வ. 145);.

     [சூள் → சாள் + சாளை = வட்டமான குடிசை. சாளை → சாளையம் = வளைவு. சவள் → சாள் → சாளு-,]

சாளுக்கிநாராயணன்கால்

சாளுக்கிநாராயணன்கால் cāḷukkinārāyaṇaṉkāl, பெ. (n.)

   முகத்தல் அளவை (அளவு);; measure of capacity.

     “சிரிபண்டாரத்திலே சாளுக்கி நாராயன் காலால் அமுதுபடி இரண்டு மரக்காலும்” (திருப்-க-தொ. 2, க 3-4);

     [சாளுக்கி நாராயணன் + கால்]

சாளுக்கியர்

சாளுக்கியர் cāḷukkiyar, பெ. (n.)

   இந்தியாவின் தென்பகுதியை ஆறு முதல் பதின்மூன்றாவது நூற்றாண்டு வரை ஆண்டு வந்த ஒர் அரச மரபினர்; a dynasty of kings who ruled in the Dekhan from 6th to 13th C.A.D.

சாளுவன்

சாளுவன் cāḷuvaṉ, பெ. (n.)

   விசயநகர அரசரது பட்டப்பெயர்களுள் (விருதுகளுள்); ஒன்று; a dynastic surname of the kings of Vijayanagar.

     “சாளுவ தேவமகாராயர்” (தெ.க.தொ.85);.

சாளை

சாளை1 cāḷai, பெ. (n.)

   எட்டு விரலளவு நீளமுள்ள கடல்மீன் வகை (வின்.);; oil sardine, bluish, attaining 8in. in length species of clupea.

ம. சாலி

 சாளை2 cāḷai, பெ. (n.)

   இரண்டடிச்சுவரும் அதன் மீது கூரைச்சாய்ப்பும் கொண்ட வீடு, வட்டமான குடிசை; hut, hovel.

     “சாளை போட்டான்” (சங்.அக.);.

     [சவள் → சாள். சாளுதல் = வளைதல். சாள் → சாய். சாய்தல் = வளைதல், சாள் → சாளை = வட்டமான குடிசை (வ.வ.145);]

ம. சாள → Skt. {}

 சாளை3 cāḷai, பெ. (n.)

   வழிந்து விழும் வாய்நீர் (கொ.வ.);; dribble, saliva flowing from the mouth.

ம. சாளுக

     [சுள் → சொள் = வடியும் வாய்நீர். கள் → சள் → சழ → சழங்கு. சழங்குதல் = சோர்தல். சள் → சாள் → சாளை (மு.தா. 312);]

சாளைக்காரன்

 சாளைக்காரன் cāḷaikkāraṉ, பெ. (n.)

   குடிசையில் வாழ்பவன்; one who lives in a hut.

ம. சாளக்காரன்

     [சாளை + காரன்]

சாளைக்கெண்டை

 சாளைக்கெண்டை cāḷaikkeṇṭai, பெ. (n.)

   பழுப்பு நிறமுள்ள ஆற்றுமீன் வகை (வின்.);; a kind of river-mullet, greenish-brown, barbas carnaticus.

     [சாளை + கெண்டை]

சாளைத்தடி

 சாளைத்தடி cāḷaittaḍi, பெ. (n.)

   கட்டுமரம்; a fishing catamaran, used on the west coast.

ம. சாளத்தடி

     [சாளை + தடி. சாளை = வளைவு. துள் → தள் → தண்டு → தண்டம். தண்டு → தண்டி → தடி = திரண்ட கம்பு. சாளைத்தடி = வளைந்து திரண்ட கம்பு]

சாளையக்கை

சாளையக்கை cāḷaiyakkai,    பெ. (n) பெருவிரல், சுட்டுவிரல், நடுவிரல் இம் மூன்றையும் நீட்டி, மோதிரவிரல் சுண்டு விரல்களின் நுனி உள்ளங்கையிற்படும்படி வளைத்து, விரல்களின் இடைவெளி தோன்றும்படி செய்து, மணிக்கட்டை வளைத்துக்காட்டும் நளிநயக்கை (முத்திரைக் கை) (பரத.பாவ. 24); gesture with one hand in which the thumb, fore-finger and the middle finger are held erect and the reminaing fingers are so bent that their trips touch the palm, the wrist being turned down.

     [சூள் → சாள் → சாளை = வட்டமான குடிசை. சாளை —→ சாணை = வட்டமான கதிர்ச்சூடு. சாள் → சாளை + அம் + கை = விரல்கள் வளைந்து நிற்கும் தன்மை]

சாளையப்பட்டு

சாளையப்பட்டு cāḷaiyappaṭṭu, பெ. (n.)

   படைவீரர்கள் தங்குங் குடிசைகளுள்ள இடம்; soldiers lines,

     “சாளையப்பட்டு சளப்பட்டு” (மான்விடு. 112);.

     [சுள் → சுழி. சுழிதல் = வளைதல். சுள் → சுட்டி = வட்டமான நெற்றியணி. சூள் → சூடு. சூடுதல் = வளைதல். சூள் → சாள் → சாளை = வட்டமான குடிசை. சாளை + அம் + பட்டு]

சாளையம்

சாளையம் cāḷaiyam,    பெ. (n) வளைவு; bent.

     [சூள் → சாள் → சாளை = வட்டமான குடிசை. சாளை → சாளையம் = வளைவு (வே.க. 231);]

சாளையிறக்கு-தல்

சாளையிறக்கு-தல் cāḷaiyiṟakkudal,    5 செ.கு.வி. (v.i.)

   குடிசை கட்டுதல் (யாழ்ப்.);; to put up a hut.

     [சாளை + இறக்கு-,]

சாளைவாய்

 சாளைவாய் cāḷaivāy, பெ. (n.)

   நீர்வடியும் வாய் (கொ.வ.);; dribbling mouth.

ம. சாளுவா

     [சாளை + வாய்]

சாழல்

சாழல் cāḻl, பெ. (n.)

   1. மகளிர் விளையாட்டு வகை; an ancient game played by girls.

     “மற்று மங்கையர் சாழலாம் விளையாடலாக” (தருவாத. பு.புத்தரை. 86);.

   2. முன்னிரண்டடிகள் வினாவும் பின்னிரண்டடிகள் விடையுமாக அவ்விடை யிறுதியில் ‘சாழலோ’ என்ற சொல்லுடையவாக வரும் பாடல்களையுடைய சிற்றிலக்கியம் (திவ்.பெரியதி. 11, 5);; a poem whose stanzas are each in the form of a question and answer with the refrain {} at the end.

   3. வரிக்கூத்து வகை (சிலப். 3, 13, உரை);; a masquerade dance.

   4. கரடி (அக.நி.);; bear.

சாழல்படி-த்தல்

சாழல்படி-த்தல் cāḻlpaḍittal,    4 செ.கு.வி. (v.i.)

   ஒருவன் சாகுந்தறுவாயில் திருவாசகத்தின் பகுதியாகிய திருச்சாழலை ஓதுதல் (நாஞ்);; to recite or read Tiru-c-{} from {} during the last moments of a person.

     [சாழல் + படி-,]

சாழல்பாடு-தல்

சாழல்பாடு-தல் cāḻlpāṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   சாழல் ஆடுதல் (வின்.);; to play the {} game.

     [சாழல் + பாடு-,]

சாழை

சாழை1 cāḻai, பெ. (n.)

   கைகொட்டி ஆடும் விளையாட்டு (யாழ்.அக.);; a girls game accompained with clapping of hands.

     [சாழல் → சாழை]

 சாழை2 cāḻai, பெ. (n.)

சாளை2 (வின்.); பார்க்க;See {}.

     [சாளை → சாழை]

சாழைகொட்டு-தல்

சாழைகொட்டு-தல் cāḻaigoṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   கைகொட்டுதல் (வின்.);; to clap hands.

     [சாழை + கொட்டு-,]

சாழையகத்தி

 சாழையகத்தி cāḻaiyagatti, பெ. (n.)

   ஒருவகை அகத்திமரம்; a species of sesbane tree (யாழ்.அக.);.

சாவகக்குறிஞ்சி

 சாவகக்குறிஞ்சி cāvagagguṟiñji, பெ. (n.)

   குறிஞ்சியாழ்த் திறத்துள் ஒன்று (பிங்.);; a secondary melody-type of {} class.

மறுவ. சாவகன் குறிஞ்சி.

     [சாவகம் + குறிஞ்சி]

சாவகநோன்பி

சாவகநோன்பி cāvaganōṉpi, பெ. (n.)

   இல்லறத்திலிருந்து நோன்பு இருப்போன்; householder who takes to ascetic practice

     “சாவகநோன்பிக ளடிக ளாதலின்” (சிலப். 16:18);.

     [சாவகம் + நோன்பி]

சாவகன்

 சாவகன் cāvagaṉ, பெ. (n.)

   காரி (சனி); (திவா.);; Saturn.

     [சாவு + அகம் – சாவகம் → சாவகன்]

சாவகம்

சாவகம்1 cāvagam, பெ. (n.)

   1. யவத்தீவு; the Archipelago, Sumatra – Java or Java.

     “சாவக நன்னாட்டுத் தண்பெயன் மறுத்தலின்” (மணிமே. 14, 74);.

   2. யவத்தீவில் வழங்குதும் பதினெண் மொழிகளுள் ஒன்றானதுமான மொழி; language of the country of {}, one of 18 languages referred to in Tamil work.

 சாவகம்2 cāvagam, பெ. (n.)

   . நாயுருவி; Indian burr-Achyanthus aspera.

   2. கருப்புக் கடுகு; black mustard (சா.அக.);.

சாவகாரியம்

 சாவகாரியம் cāvakāriyam, பெ. (n.)

   உலகியல் அறிவு; discernment, discrimination.

சாவக்காய்

 சாவக்காய் cāvakkāy, பெ. (n.)

   மாமரம்; mango tree – Mungifera India (சா.அக.);.

சாவக்கை

 சாவக்கை cāvakkai, பெ. (n.)

   கூரை வேயப் பயன்படும் குருத்துள்ள மூங்கில் தப்பை; bark of bamboo.

     [சவம் = மூங்கில். சவம் → சாவம் → சாவக்கை]

சாவச்சம்

 சாவச்சம் cāvaccam, பெ. (n.)

   இறப்பு நேரக்கூடும் என்னும் நேரத்தில் மனத்தில் தோன்றும் அச்சம்; death fear.

     ‘பாட்டிக்குச் சாவச்சம் வந்துவிட்டது’ (உ.வ.);.

     [சாவு + அச்சம். அஞ்சு → அச்சம்]

சாவடி

சாவடி1 cāvaḍi, பெ. (n.)

   இறப்பை விளைக்கத் தக்க அடி; deadly blow.

     [சாவு + அடி]

 சாவடி2 cāvaḍi, பெ. (n.)

   1. வழிப்போக்கர் தங்குமிடம்; inn, choultry.

     “மலர்ச்சோலையுஞ் சாவடிகளும்” (இராமநா.சுந்தர.3);.

   2. ஊர்ப் பொதுக்கட்டடம்; a public building in a village.

   3. காவல் அலுவலகம் (கச்சேரி); (வின்.);; police station, office of village magistrate. customs station.

   4. வீட்டுச்சவுக்கை; open dais in front of a house for general use.

     “சாவடியும் வீடுந் தலைவாசலும்” (பணவிடு. 163);.

   ம., க., குரு. சாவடி;   தெ. சாவடி, சாவிடி; Mar. {}

     [உசாவடி → சாவடி]

சாவடிச்சீட்டு

சாவடிச்சீட்டு cāvaḍiccīḍḍu, பெ. (n.)

   1. சாவடியில் சோறுண்ணுதற்குப் பெறும் நுழைவுச்சீட்டு; a chit or ticket permitting one

 to obtain food at a choultry.

   2. அரசனளிக்குங் கொடை; royal or government grant.

     [சாவடி + சீட்டு]

சாவடிமரம்

 சாவடிமரம் cāvaḍimaram, பெ. (n.)

   வெடங்குறுணி அல்லது அலம்பல்மரம்; walking stick bignonia – Stereospermum xylocarpum (சாஅக.);.

     [சாவடி + மரம்]

சாவட்டம்

 சாவட்டம் cāvaṭṭam, பெ. (n.)

   ஒற்றை உருபாவைக் குறிக்கும் குழுஉக்குறி (இ.வ.);; slang term for a rupee.

ம. சாவட்டம்

     [சாவு + வட்டம் → சாவுவட்டம் → சாவட்டம். வட்டம் = காசு]

இறந்தவர் நெற்றியில் ஒட்டும் பணம் பெரும்பாலும் ஓர் உருபாவாக இருந்ததன் அடிப்படையில் தோன்றிய குழுஉக்குறி.

சாவட்டை

சாவட்டை1 cāvaṭṭai, பெ. (n.)

   1. ஈர் (வின்.);; nits found in the hair.

   2. பயிர்ச்சாவி (இ.வ.);; withered grain, chaff.

   3. மெலிந்தவ-ன்-ள் (இ.வ.);; emaciated person.

   4. உலர்ந்தவெற்றிலை (யாழ்ப்.);; dried betel leaves.

   5. தட்டாரப்பூச்சி; butterfly.

ம. சாவட்ட

     [சா → சாம்பு. சாம்புதல் = வாடுதல், குவிதல், ஒடுங்குதல். சா + அட்டை]

 சாவட்டை2 cāvaṭṭai, பெ. (n.)

   சிறுவட்டத் தலையணை (நாஞ்);; a small round pillow.

     [சாய் → சா + வட்டை. வட்டு → வட்டை. ‘ஐ’ ப.பெ. ஈறு]

சாவட்டைப்பயிர்

 சாவட்டைப்பயிர் cāvaṭṭaippayir, பெ. (n.)

   சாவியான பயிர் (வின்.);; blighted or withered plants.

     [சாவட்டை + பயிர்]

சாவணம்

சாவணம்1 cāvaṇam, பெ. (n.)

   1. கம்மியர் கருவி வகை; goldsmith’s pincers.

   2. மூக்குமயிர் களையும் கருவி (யாழ்ப்.);; barber’s pincers for extracting hair of the nose.

   ம. சாவணம்;தெ. ச்ராவணமு

     [p]

 சாவணம்2 cāvaṇam, பெ. (n.)

   1. நாணல் (மலை);; kaus.

   2. நாளம்; hollow stalk as of a lotus.

     [சரவணம் → சாவணம்]

சாவதயிலம்

 சாவதயிலம் cāvadayilam, பெ. (n.)

   மாமரம் (மலை.);; mango tree.

சாவம்

சாவம்1 cāvam, பெ. (n.)

   வில்; bow.

     “சாவந் தாங்கிய சாந்துபுலர் திணிதோள்” (சிறுபாண். 98);.

     [ஆவம் = மூங்கில். ஆவம் → சாவம்]

த. சாவம் → Skt. {}

 சாவம்2 cāvam, பெ. (n.)

   தீமொழி (சாபம்);; curse.

     “சாவ முண்டென தாருயிர் தந்ததால்” (கம்பரா. சூளா. 21);.

 Pkt. {}

     [சாவி → சாவம் (வ.வ.147);;

சாவித்தல் = கடுமைமாகத் திட்டுதல்]

 சாவம்3 cāvam, பெ. (n.)

   1. சாத்தீட்டு; pollution due to death of a relative.

     “அதனால் வருஞ் சாவம் சூதகத்தோடு அழியும்” (சங்.அக.);.

   2. பிணம்; corpse, carcass.

ம. சாவம்

     [சா → சாவு → சாவம். ‘அம்’ ப.பெ.ஈறு]

சவம்1 பார்க்க.

 சாவம்4 cāvam, பெ. (n.)

   அறுகு; panic grass (சா.அக.);.

சாவறுதி

சாவறுதி cāvaṟudi, பெ. (n.)

   1. இறக்குந் தறுவாய்; the moment of death

   2. வலுவின்மை; feebleness, debility.

     [சாவு + அறுதி]

சாவல்

 சாவல் cāval, பெ. (n.)

   ஆண்கோழி; cock, male of domestic fowls.

ம. சாவல்

     [சேவல் → சாவல்]

சாவளம்

 சாவளம் cāvaḷam, பெ. (n.)

அறையிலிருந்து தண்ணிர் வெளியேறுமாறு கவரின் கீழ்ப் பகுதியில் அமைக்கப்படும் துளை,

 the hole to outlet the water from the room.

     [துவளம்-தவளம்-சாவளம்]

சாவாக்கியம்

 சாவாக்கியம் cāvākkiyam, பெ. (n.)

   கணித வாய்பாட்டு வகை (சங்அக);; table of equations.

சாவாக்கிழங்கு

 சாவாக்கிழங்கு cāvākkiḻṅgu, பெ. (n.)

   கருடன் கிழங்கு (மலை);; Indian birth wort.

     [சா + ஆ + கிழங்கு]

சாவாச்சாவு

 சாவாச்சாவு cāvāccāvu, பெ. (n.)

   இறந்தவன் போல் இருக்கும் நிலை; பயனற்று வாழும் நிலை; a state similar to death, to be useless or inactive like a dead body.

ம. சாகாச் சாவு

     [சாவு + ஆ + சாவு]

சாவாஞ்செத்தவன்

 சாவாஞ்செத்தவன் cāvāñjettavaṉ, பெ. (n.)

   வலுவற்றவன் (வின்);; very weak person, not much better than a live corpse.

     [சாவு + ஆ + செத்தவன்]

சாவாடுசெத்தவன்

 சாவாடுசெத்தவன் sāvāṭusettavaṉ, பெ. (n.)

சாவாஞ்செத்தவன் பார்க்க;See {}.

தெ. சாவடமு

     [சாவு → சாவாடு + செத்தவன்]

சாவாடைசெத்த

 சாவாடைசெத்த sāvāṭaisetta, கு.பெ.எ. (adj.)

   பயனற்ற (இ.வ.);; worthless, withered, good for nothing.

     [சாவு → சாவாடை. சா → சத்த → செத்த. சாவாடை + செத்த]

சாவாண்டை

 சாவாண்டை cāvāṇṭai, பெ. (n.)

   பொன்னின் நிறைபற்றி வழங்கும் ஒரு குழுஉக் குறி; a trade term for a weight of gold

சாவாமருந்து

சாவாமருந்து cāvāmarundu, பெ. (n.)

   1. இறவாமல் காப்பது, அமிழ்தம்; ambrosia, as preventing death.

     “சாவாமருந் தெனினும் வேண்டற்பாற் றன்று” (குறள், 82);.

   2. ஒருவகை மூலிகை (யாழ்.அக.);; a medicinal shrub.

     [சா + ஆ + மருந்து. ‘ஆ’ (எ.ம.இ.);]

சாவாமூலி

சாவாமூலி cāvāmūli, பெ. (n.)

   1. மயிற்றோகை (சங்.அக.);; peacock fan.

   2. வேம்பு; margosa.

     [சா + ஆ + மூலி. மூல் → மூலி]

சாவாமூவா

 சாவாமூவா cāvāmūvā, பெ. (n.)

   இறப்போ முதுமையோ இல்லாமல் கோயில் விளக்கு தொடர்ந்து எரிவதற்குரிய நெய்யினைத் தரும் கால்நடைகளின் நலத்தினைக் குறிக்கும் பழைய வழக்கு; an old usage to quality milch cattle (neither dying mor growing old, healthy); endowed to provide a continuous supply of ghee for temple lamps.

ம. சாவாமூவா

     [சா + ஆ + மூ + ஆ. ‘ஆ’ எ.ம.இ.]

சாவாமூவாச்செவ்வரிஆடு

சாவாமூவாச்செவ்வரிஆடு cāvāmūvāccevvariāṭu, பெ. (n.)

   முதலீடாக வைத்த எண்ணிக்கையளவு குறையாமல் இருக்கும் பெரிய செம்மறி ஆடுகள்; big rams.

     “நெய் தொண்ணூற்று நாழிக்கு விட்ட சாவா மூவா செவ்வரி ஆடு” (தெ. க.தொ. 5, க. 646);.

     [சாவா + மூவா + செவ்வரி + ஆடு. செவ்வரி = செம்மறி]

சாவாமூவாப்பசு

சாவாமூவாப்பசு sāvāmūvāppasu, பெ. (n.)

   வைத்த எண்ணிக்கையில் குறையாது ஈடு செய்து காக்கும் ஆநிரை; cow endowed.

     ‘திருவிறையான் கோயில் மஹா தேவர்க்கு விட்ட சாவாமூவாப் பசு பதிநாறு’ (முதற்குலோத்துங்கன், கி.பி.1௦92, தெ.க.தொ.7, க. 849);

     [சாவா + மூவா + பசு]

 Skt. pasu → த. பசு

சாவாமூவாப்பாலாடு

சாவாமூவாப்பாலாடு cāvāmūvāppālāṭu, பெ. (n.)

   என்றும் எண்ணிக்கை குறையாது பால் கறக்கும் ஆடு; a constant counting goat.

     “சாவாமூவா பாலாடு தொண்ணூற்று ஆறு இவ்வாடு கொண்டு.” (தெ.க.தொ. 24, க. 45 – 58);.

     [சாவா + மூவா + பால் + ஆடு]

சாவாமூவாப்பேராடு

சாவாமூவாப்பேராடு cāvāmūvāppērāṭu, பெ. (n.)

   நந்தாவிளக்கு எரிப்பதற்கு வேண்டும் நெய்யின் பொருட்டு என்றும் இளமையுடன் ஒரு தொகையுள்ளனவாகக் கோயிற்கு விடப்படும் ஆடுகள்; a fixed number of milch sheep endowed permanently to provide a continuous supply of ghee for temple lamps.

     “நந்தா விளக்கொன்றினுக்கு வைத்த சாவா மூவாப் பேராடு தொண்ணூறு” (S.l.l. 111, 1௦7);.

     [சாவா + மூவா + பேராடு]

சாவாமூவாவாழ்மாடு

சாவாமூவாவாழ்மாடு cāvāmūvāvāḻmāṭu, பெ. (n.)

   கோயில்களில் திருவிளக்கு இடுவதற்குக் கொடையாகக் கொடுக்கப்பட்ட ஆநிரைகளை எண்ணிக்கையில் குறையாமல் வைத்திருக்க வேண்டும் என்னும் ஒப்பந்தக் குறிப்பு; cow endowed agreement.

     [சாவா + மூவா + வாழ் + மாடு]

கோயில்களில் விளக்கு வைப்பதற்கு மானிய மாகப்பெறும் மாடுகள் முதுமையுற்றாலும் இறந்து விட்டாலும் ஒப்பந்தக்காரர் அதற்கு ஈடாக அவருக்கு உரிமையான கன்றினங்களில் பருவமடைந்த கன்றுகளைத் தந்து எண்ணிக்கைக் குறையாமல் வைப்பர் (தெ.க.தொ.ம.க. 51);.

சாவாளன்

 சாவாளன் cāvāḷaṉ, பெ. (n.)

   இறப்பைக் கொண்டவன், மனிதன்; one who is mortal, man (சேரநா.);.

ம. சாவாளன்

     [சா + ஆளன்]

சாவாளை

சாவாளை cāvāḷai, பெ. (n.)

   மூன்றடி நீளமுள்ள கடல்மீன் வகை (சங்.அக.);; sabre-fish-attaining at least 3 ft. in length.

   ம. சாவாள;தெ. சாவட

     [p]

சாவாவரம்

 சாவாவரம் cāvāvaram, பெ. (n.)

   இறவாதபடி பெறும் இறையருள்; divine gift of immortality.

     [சாவா + வரம்]

சாவாவுடம்பு

சாவாவுடம்பு cāvāvuḍambu, பெ. (n.)

   புகழ் அழியாத உடல்; fame as vehicle of deathless life.

     “இம்மூவர் சாவாவுடம் பெய்தினார்” (திரிகடு. 16);.

     [சாவா + உடம்பு]

சாவி

சாவி1 cāvi, பெ. (n.)

   மணிபிடியாமற் பதராய்ப் போன பயிர்; withered crop, blighted empty grain.

     “சாவியே போன புன்செயே யனையேன்” (அருட்பா. 4, அபயத்திறன். 13);.

   ம. சாவி;தெ. சாவி

     [சாவு → சாவி. ‘வி’ ப.பெ.ஈறு]

 சாவி2 cāvittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   திட்டுதல்; to curse, reville.

     “வீணாகச் சாவிக்கிறான்’ (இ.வ.);.

     [சா → சாவி. சாவித்தல் = அங்கதம் பாடி அல்லது சினந்து, வைது சாகப் பண்ணுதல். சாவுகுறித்த சொற்களைச் சொல்லித்திட்டுதல் (வ.வ.);]

 சாவி3 cāvittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   அங்கதம் பாடி அல்லது சினந்துரைத்துச் சாகச் செய்தல் (தொல். எழுத்து. 76 இளம்);; to cause to die.

     [சா. → சாவி. சாவி-, (வ.வ.);]

சாவிகை

 சாவிகை cāvigai, பெ. (n.)

   இனிப்பு சேர்த்து உண்ணும் இடியாப்ப வகை; avapour cooked rice pudding.

சாவிநெல்

சாவிநெல் cāvinel, பெ. (n.)

கருக்காய் நெல், perish paddy.

     “கல்,பதர், செத்தல், சாவிநெல் நீக்கி” (CHEN.xix.P. 206-208.);

     [சாவு-சாவி+நெல்]

சாவிப்பு

 சாவிப்பு cāvippu, பெ. (n.)

   வசையாணை; curse.

     [சாவித்தல் = திட்டுதல். சாவி → சாவிப்பு. ‘பு’ பெ.ஆ.ஈறு.]

சாவிப்போ-தல்

சாவிப்போ-தல் cāvippōtal,    8 செ.கு.வி. (v.i.)

   பயிர் பட்டுப்போதல்; to perish, to be blighted, as crop.

     “கொல்லைதான் சாவிபோய் விட்டாலு மங்குவரு குருவிக்கு மேய்ச்சலுண்டு” (குமரே. சத. 79);.

     [சாவு → சாவி + போ-,]

சாவியபயிர்

 சாவியபயிர் cāviyabayir, பெ. (n.)

சவலைப் பயிர் பார்க்க;See {}.

     [சாவிய + பயிர்]

சாவியோதம்

 சாவியோதம் cāviyōtam, பெ. (n.)

   ஒருவகை முல்லை; a species of jasmine (சா.அக.);.

சாவிளைவு

 சாவிளைவு cāviḷaivu, பெ. (n.)

   சாக்குறியாக விளையும் பெருவிளைவு; super-abundant crop, believed to be a prognostic of death of the land owner or his near relatives.

     ‘அவனுக்குச் சாவிளைவாயிருக்கிறது. நலமாய் இருக்க வேண்டும்’ (உ.வ.);.

     [சாவு + விளைவு]

சாவிவைக்கோல்

 சாவிவைக்கோல் cāvivaikāl, பெ. (n.)

   சாவியாய்ப் போன பயிரின் வைக்கோல்; straw of blighted crop.

     [சாவி + வைக்கோல்]

சாவீடு

 சாவீடு cāvīṭu, பெ. (n.)

   இழவு நேர்ந்த வீடு; house in mourning.

பட. சாவுமனெ

     [சாவு + வீடு]

சாவீரன்

 சாவீரன் cāvīraṉ, பெ. (n.)

   தற்கொலைப் படை மறவன்; a soldier belonging to a suicide squad (சேரநா.);.

ம. சாவீரன், சாவரக்கன்

     [சா(வு); + வீரன்]

சாவு

சாவு cāvu, பெ. (n.)

   1. இறப்பு (பிங்.);; death.

   2. பினம்; corpse.

   3. பிறந்த ஒன்றுக்கு (இலக்கினத்துக்கு); எட்டா மிடமாகிய இறப்பைக் குறிக்கும் இடம் (விதான. மரபி. 4);; the eighth house, as the house of death.

   4. பேய்; ghost.

     “சாவாயகன்று தாவினன்” (ஞானா.33, 10);.

   ம. சாவு;   க., து., பட. குட. சாவு;   தெ. சாவு. கோத. சாவ்;   துட. சொவ்;   கோண். காவ;   குவி. கானெ;பர். சாந்த்

     [சாய் = சாய்தல், சாய்ந்து விழுதல். சாய் → சா → சாவு = நேராக நிற்கும் தன்மையற்ற (உயிரற்ற); உடல். இறந்தவர் பேயாக மாறுவர் என்னும் நம்பிக்கையின் அடிப்படையில் சாவு, பேயைக் குறித்தது. ‘வு’ தொ.பெ.ஈறு.]

சாவுகம்

 சாவுகம் cāvugam, பெ. (n.)

   வன்னிக்காய்; Indian tanarix-tamarix gallica (சா.அக.);.

சாவுக்கழிச்சல்

 சாவுக்கழிச்சல் cāvukkaḻiccal, பெ. (n.)

இறப்புக்கு முன்னால்நோய்வாய்ப்பட்டவர்க்கு ஏற்படும் மலக்கழிச்சல்

 loose motion to the patient before the time of death. ‘;

இறப்புக்கு முன் உடல் தளர்தலில் குடல் முழுவதும் உள்ள மலம் வெளியேறி விடும்”

     [சாவு+கழிச்சல்]

சாவுக்காணிக்கை

 சாவுக்காணிக்கை cāvukkāṇikkai, பெ. (n.)

   இறப்பின் பேரில் போடப்பட்ட வரிவகை (நாஞ்.);; a kind of death-duty, opp. to {}.

     [சாவு + காணிக்கை]

சாவுக்காயம்

 சாவுக்காயம் cāvukkāyam, பெ. (n.)

   இறப்பு தரத்தக்க புண் (இறப்புக் காயம்); (வின்.);; mortal wound.

     [சாவு + காயம்]

சாவுக்குருவி

 சாவுக்குருவி cāvukkuruvi, பெ. (n.)

   தீச்செயல்கள் நிகழுதற்கு அறிகுறியான ஓசை உடையதென்று கருதப்படும் ஆந்தை வகை; screech-owl aspecies of Atheno whose cry is believed to portend death.

     [P]

     [சாவு+குருவி]

சாவுக்குருவி,

 சாவுக்குருவி, cāvukkuruvi, பெ.(n.)

   ஒருவகை குருவி இனம்; Indian nightjar.

     [சா-சாவு+குருவி]

சாவுக்கொட்டு

 சாவுக்கொட்டு cāvukkoṭṭu, பெ. (n.)

   சாவு குறிக்கும் பறைமுழக்கு (உ.வ.);; a mode of beating the drum to indicate the death of a person.

     [சாவு + கொட்டு]

சாவுசெத்தவன்

 சாவுசெத்தவன் sāvusettavaṉ, பெ. (n.)

சாவாஞ் செத்தவன் பார்க்க;See {}.

     [சாவு + செத்தவன்]

சாவுச்சான்றிதழ்

 சாவுச்சான்றிதழ் cāvuccāṉṟidaḻ, பெ. (n.)

   ஒருவரது இறப்பைத் தெரிவிக்கும் சான்றிதழ்; death certificate.

ம. இறப்புச் சான்றிதழ்.

     [சாவு + சான்றிதழ்]

சாவுத்தீட்டு

 சாவுத்தீட்டு cāvuttīṭṭu, பெ. (n.)

   உறவினரின் இறப்பால் நேரும் தீட்டு (கொ.வ.);; pollution on the death of a relative.

மறுவ. சாதீட்டு, சாத்தீட்டு

     [சாவு + தீட்டு]

சாவுநோவு

 சாவுநோவு cāvunōvu, பெ. (n.)

   இறப்பும் நோவும், துன்பப்பட்டறிவு; death and experiencing agony.

க. சாவு நோவு

     [சாவு + நோவு]

சாவுப்பாட்டு

 சாவுப்பாட்டு cāvuppāṭṭu, பெ.(n.)

   ஒப்பாரி பாடலின் மற்றொரு பெயர்; a name of lamentation song.

     [சாவு+பாட்டு]

சாவுமணி

சாவுமணி cāvumaṇi, பெ. (n.)

   1. ஒருவர் இறப்பைத் தெரிவிக்கும் வகையில், கிறித்தவர் கோயிலில் அடிக்கப்படும் மணி; death bell in a church.

   2. ஒன்றின் முடிவு; end.

     “அவன் ஆட்சிக்குச் ‘சாவுமணி’ அடித்தாயிற்று.

ம. சாவுமணி

     [சாவு + மணி]

சாவெடி

 சாவெடி cāveḍi, பெ. (n.)

   பிணநாற்றம் (இ.வ.);; fetid smell of a corpse.

     [சா + வெடி. வெறி → வெடி]

சாவெடில்

சாவெடில் cāveḍil, பெ. (n.)

   1. சாவெடி (சங்அக); பார்க்க;See {}.

   2. கெட்ட நாற்றம் (யாழ்ப்.);; stinking smell, as of putrid matter.

     [சா + வெடில். வெடி → வெடில்]

சாவெடு-த்தல்

சாவெடு-த்தல் cāveḍuttal,    4 செ.குன்றாவி. (v.t.)

   இறந்த உடலை நன்காட்டிற்குக் கொண்டு செல்லுதல்; to take the dead body to funeral ground.

   ம. சாவெடுக்குக;பட. சாவெத்து

     [சாவு + எடு-,]

சாவெழுத்து

 சாவெழுத்து cāveḻuttu, பெ. (n.)

   நச்செழுத்து (வின்.);; fatal letter.

மறுவ. நச்செழுத்து

     [சாவு + எழுத்து. மங்கலமொழி அல்லாதவிடத்து மொழி முதலில் வரக்கூடாத எழுத்துகள். ய், ர், ள், யா, ரா, லா, ளா, யோ, ரோ, லோ, ளோ, ஃ, மகரக்குறுக்கம், அளபெடை]

சாவேரி

சாவேரி cāvēri, பெ. (n.)

   ஒரு பண் (அராகம்);, (பரத. இராக 56);; a specific melody-type.

சாவேறு

சாவேறு cāvēṟu, பெ. (n.)

   பகையரசனைச் சூழ்ந்து காக்கும் படைமீது ஒருமுகமாய்ப் பாய்ந்து ஊடறுத்துச் செல்லமுயன்று அந்நிலையில் உயிர் துறத்தலையே சூளாகக் (விரதமாகக்); கொண்ட வீரர் தொகுதி; a select band of armed warriors who, under a solemn vow, rush in a body, endeavor to cut their way through the guards of the enemy-king and lose their lives in the fray ‘சாவேறெல்லாந் தனி விசும்பேற’ (தெ.க.தொ. 3. க. 145);.

ம. சாவேறு

     [சாவு + ஏறு]

சாவோலை

 சாவோலை cāvōlai, பெ. (n.)

   இறப்பைத் தெரிவிக்கும் ஒலைச்சீட்டு;{} letter informing the death of a person.

     “சாவோலை கொண்டொருவ னெதிரே செல்ல” (தனிப்பா.);.

ம. சாவோல

     [சாவு + ஓலை]