செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை வெளியீடு
31 தொகுதி 12000 பக்கங்கள் கொண்ட பேரகரமுதலி


1

10838

2769

3111

538

3554

677

1093

620

189

1004

402

2
க்
1

8212
கா
2579
கி
564
கீ
222
கு
4598
கூ
780
கெ
615
கே
391
கை
1101
கொ
2417
கோ
1754
கௌ
110
ங்
1

2
ஙா
2
ஙி
1
ஙீ
1
ஙு
1
ஙூ
1
ஙெ
1
ஙே
1
ஙை
1
ஙொ
5
ஙோ
1
ஙௌ
1
ச்
1

5235
சா
1186
சி
2424
சீ
439
சு
1261
சூ
420
செ
1529
சே
470
சை
23
சொ
409
சோ
365
சௌ
1
ஞ்
1

15
ஞா
44
ஞி
3
ஞீ ஞு ஞூ ஞெ
34
ஞே
5
ஞை
2
ஞொ
3
ஞோ
2
ஞௌ
1
ட்
1

1
டா
1
டி
1
டீ
1
டு
1
டூ
1
டெ
2
டே
1
டை
1
டொ
1
டோ
1
டௌ
ண்
1

1
ணா
1
ணி
1
ணீ ணு
1
ணூ
1
ணெ
2
ணே
1
ணை
1
ணொ
1
ணோ
1
ணௌ
த்
3113
தா
1530
தி
2203
தீ
393
து
1238
தூ
411
தெ
694
தே
856
தை
39
தொ
878
தோ
459
தௌ
ந்
1

2789
நா
204
நி
1860
நீ
1161
நு
14
நூ
18
நெ
892
நே
318
நை
89
நொ
210
நோ
159
நௌ
2
ப்
1

4560
பா
1824
பி
492
பீ
25
பு
2224
பூ
1133
பெ
1064
பே
483
பை
127
பொ
1218
போ
478
பௌ
2
ம்
4760
மா
1422
மி
535
மீ
268
மு
3016
மூ
949
மெ
396
மே
751
மை
152
மொ
284
மோ
242
மௌ
ய்
1

119
யா
426
யி
1
யீ
1
யு
46
யூ
20
யெ
9
யே
1
யை
1
யொ
1
யோ
98
யௌ
1
ர்
87
ரா
107
ரி
11
ரீ
7
ரு
24
ரூ
20
ரெ
6
ரே
16
ரை
10
ரொ
8
ரோ
23
ரௌ
ல்
117
லா
44
லி
8
லீ
5
லு
8
லூ
3
லெ
13
லே
21
லை லொ
20
லோ
63
லௌ
3
வ்
1

3800
வா
1329
வி
1638
வீ
515
வு
1
வூ
1
வெ
2164
வே
834
வை
229
வொ
1
வோ
3
வௌ
ழ்
1

1
ழா
1
ழி
1
ழீ
1
ழு
6
ழூ
1
ழெ
1
ழே ழை ழொ ழோ
1
ழௌ
ள்
1

2
ளா
1
ளி
1
ளீ
1
ளு
1
ளூ
1
ளெ
2
ளே
1
ளை
1
ளொ
1
ளோ
1
ளௌ
ற்
1

1
றா
1
றி
1
றீ
1
று
1
றூ
1
றெ
2
றே
1
றை
1
றொ
1
றோ
1
றௌ
ன்
1

1
னா
1
னி
1
னீ
1
னு
1
னூ
1
னெ
2
னே
1
னை னொ
1
னோ
1
னௌ
தலைசொல் பொருள்

ங1ṅa, பெ.(n.)

   ஙகர ஒற்று முன்னும் அகரவுயிர் பின்னுமாகப் பலுக்கப்படும் மெல்லின உயிர்மெய் யெழுத்தாகிய சார்பெழுத்து; the compound of ங் + அ. velar nasal vowel consonant being one among the secondary alphabets of the Tamil language.

     “ஙப்போல் வளை” (ஆத்திகசூடி);.

     [ங் + அ → ங]

ஙகா உயிர்மெய்யெழுத்து வரிசையில் அனைத்து உயிர்மெய்யெழுத்துகளும் தமிழ்ச் சொல்லாட்சிகளில் இடம்பெறவில்லை. இவற்றுள் ங ஒன்றே வழக்கி லிருப்பினும் தமிழ் நெடுங்கணக்கில் உயிர்மெய்யெழுத்துகள் பதினெட்டும் மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கப்படுகின்றன. கற்பிக்குங்கால் எழுத்துக் கோவை இடையீடு படலாகாது என்பதற்காக நெடுங்கணக்கில் பயன்பாடு நோக்காது பயிற்சி யொழுங்கு நோக்கிச் சேர்த்துக்கொள்ளப்பட்டன என மரபிலக்கண வல்லுநர் அமைதி

கூறுவர். அதனாற்றான் ஒளவை யாரும் பயன் கருதாது சுற்றந் தழுவ வேண்டும் என்னும் கருத்தை வலியுறுத்த

     “ங்ப்போல் வளை” என ஙகர வரிசைத் தழுவலை உவமைகாட்டி

விளக்கினார்.

கல்லாதார் நாவில் திரிபடையும் சொற்களும், ஞாலத் தாய்மொழி காலத்திலிருந்து கிளைத்த உலகமொழிகளில் ஒலித்திரியாகும் ஊடாட்டங்களிலும், தமிழில் பயன்கழிந்த ஙகர உயிர்மெய்யெழுத்தொலிகள் வழக்கூன்றலாம் எனும்

கருத்தும் பண்டையோர் முடிபாகலாம்.

ஙகரம்

ஙகரம்ṅagaram, பெ.(n.)

   குறுணியளவு; a measure of capacity = 8 nali = 1 kuruni.

     [ங + கரம் – ஙகரம் = ங எனும் உயிர்மெய்யெழுத்து.]

வகர உயிர்மெய்யெழுத்தின் வரிவடிவக் குறியீடு பழந்தமிழ்க் கணக்கு நூல்களில் குறுணியளவைக் குறிப்பதற்காக ஆளப்பட்டது. 8 நாழி = 1 குறுணி.

   ஙனம் nanam, இடை.(part.); சுட்டெழுத்து வினா வெழுத்துகளையொட்டித் தன்மை இடம் முதலிய பொருள்களைத் தரும் இடைச்சொல்; suffix in the sense of place, manner, room, mode, ways used after the demonstrative particles அ.இ.உ.எ.யா as அங்ஙனம், etc.

     [ங் + அனம் → ஙனம் ‘அனம்’ → ‘கனம்’ என்பதன் திரிபு ஈறு. அ+ஙனம் – அங்ஙனம் = அத்தன்மை. ஒ.நோ. நன்கனம்);. அ+கண் – அங்கண் → அங்கணே (கொ.வ.); ? அங்ஙனம் (அவ்விடம்);. இவ்வாறு தன்மை இடப்பொருள்களில் இச் சொல் ஆட்சி பெற்றது.]

இனி ஙகரம் மொழி முதலாவது குறித்து,

     “சுட்டியா வெகா வினாவழி யவ்வை ஒட்டி ஙவ்வு முதலா கும்மே.” என நன்னூல் (106); கூறுவது கூர்ந்து நோக்கத்தக்கது. மூன்று கட்டும்யா வினாவும் எகர வினாவுமாகிய இடைச்சொற்களின் பின், அகரத்தைச் சேர்ந்து ஙகர மெய்யும் சொல்லுக்கு முதலாகும்.

மூன்று கட்டும் யாவினாவும் எகர வினாவுமாகிய இடைச்சொற்களின் பின், அகரத்தை யொட்டி ஙவ்வும் மொழிக்கு முதலாம்.

எ-டு. அங்ஙனம், இங்ஙனம், உங்ஙனம், யாங்ஙனம், எங்ஙணம் எனவரும். இவற்றை அங்கு எங்கு என்றாற்போல

ஒருமொழிகள் என்றால் என்னையெனின் அஞ்ஞான்று. எஞ்ஞான்று என்பனபோலப் பிளவுபட்டு இடையே மெல்லொற்று மிக்கு வருதலின் தொடர்மொழிகளே யாமென்க

ஙனமென்பது இடத்தினையும் தன்மை யினையும் உணர்த்தும் பலபொருள் ஒருசொல்லாய் வரினும், தனித்துவரும் தன்மையதன்றி முடவன் கோலூன்றி வந்தாற்போலச் சுட்டு வினாவாகிய இடைச்சொற்களை முன்னிட்டு வருதலான் வழி யென்றும், ஏனைய மெய்கள் போல முதலாகாமையின் அவ்வோ டென்னாது ஒட்டி என்றும் ஒருவாற்றான் முதலாதலின் இழிவுசிறப்பாக ஙவ்வுமென்று கூறினார். இங்ஙனம் கூறலான் ஙகரம் மொழிக்கு முதலாகாதென்பார்க்கு உடன்படலும் மறுத்தலுமாய்ப் பிறர்தம் மதமேற் கொண்டு களைவே யென்னும் மதம்படக் கூறினாரென்றுணர்க” எனச் சிவஞான முனிவர் நன்னூலில் உரை வகுத்துள்ளார்.

     [அ + கனம் – அக்கனம் → அங்கனம் → அங்ஙனம் எனவும் அ + கண் → அக்கண் → அங்கண் → அங்ஙனம் எனவும் ககர முதற்சொற்கள் வருமொழியில் ஙகர முதற்சொற்களாகத் திரிந்திருத்தலின் ஙகரத்தைத் திரிபு முதலெழுத்து எனக் கொள்ளலாம்.]

ஙா

ஙா1ṅā, பெ.(n.)

   ஙகர ஒற்று முன்னும் ஆகாரவுயிர் பின்னுமாகப் பலுக்கப்படும் மெல்லின உயிர்மெய்யெழுத்தாகிய சார்பெழுத்து; the compound of ங் + ஆ, velar nasal vowel consonant being one among the secondary alphabets of the Tamil language.

     [ங் + ஆ → ஙா.]

 ஙா2ṅā, பெ.(n.)

   1. குழந்தையின் அழுகையொலி; weeping sound of a child.

   2. குழந்தை மொழியில் பாலைக் குறிப்பால் உணர்த்தும் இங்கா என்னும் சொற்குறுக்க ஒலிப்புக் குறியீடு; symbolic sound of a child denoting the requirement of milk from mother.

     [இங்ஙா → இங்ஙா → ஙா]

ஙாத்தாள்

 ஙாத்தாள்ṅāttāḷ, பெ.(n.)

   எங்கள் ஆத்தரள் என்பதன் மரூஉ வழக்காகிய கடுங் கொச்சைச் சொல்; corrupted form of the compound word.

எங்கள் + ஆத்தாள். lit. our mother.

     [எங்கள் + ஆத்தாள் – ஙாத்தாள் (கொ.வ);.]

இத்தகைய கடுங்கொச்சை வழக்கு முற்றிலும் விலக்கத் தக்கது.

ஙி

 ஙிṅi, பெ.(n.)

   ஙகர ஒற்று முன்னும் இகரவுயிர் பின்னுமாகப் பலுக்கப்படும் மெல்லின உயிர்மெய்யெழுத்தாகிய சார்பெழுத்து; the compound of ங் + இ, velar nasal vowel consonant being one among the secondary alphabets of the Tamil language.

     [ங் + இ → ஙி.]

ஙீ

 ஙீṅī, பெ.(n.)

   ஙகர ஒற்று முன்னும் ஈகாரவுயிர் பின்னுமாகப் பலுக்கப்படும் மெல்லின உயிர்மெய் யெழுத்தாகிய சார்பெழுத்து; the compound of ங் + ஈ, velar nasal vowel consonant being one among the secondary alphabets of the Tamil language.

     [ங் + ஈ → ஙீ.]

ஙு

 ஙுṅu, பெ.(n.)

   ஙகர ஒற்று முன்னும் உகரவுயிர் பின்னுமாகப் பலுக்கப்படும் மெல்லின உயிர்மெய்யெழுத்தாகிய சார்பெழுத்து; the compound of ங் + உ, velar nasal vowel consonant being one among the secondary alphabets of the Tamil language.

 |ங் + உ → ஙு.]

ஙூ

 ஙூṅū, பெ.(n.)

   ஙகர ஒற்று முன்னும் ஊகாரவுயிர் பின்னுமாகப் பலுக்கப்படும் மெல்லின உயிர்மெய்யெழுத்தாகிய சார்பெழுத்து; the compound of ங் + ஊ, velar nasal vowel consonant being one among the secondary alphabets of the Tamil language.

     [ங் + ஊ → ஙூ.]

ஙெ

 ஙெṅe, பெ.(n.)

   ஙகர ஒற்று முன்னும் எகரவுயிர் பின்னுமாகப் பலுக்கப்படும் மெல்லின உயிர்மெய் Quggäästölu &miQuggäg; the compound offi + ST, velar nasal vowel consonant being one among the secondary alphabets of the Tamil language.

     [ங் + எ – ஙெ.]

ஙே

 ஙேṅē, பெ.(n.)

ஙகர ஒற்று முன்னும் ஏகாரவுயிர் பின்னுமாகப் பலுக்கப்படும் மெல்லின உயிர்மெய் யெழுத்தாகிய சார்பெழுத்து:

 the compound of ங் + எ, velar nasal vowel consonant being one among the secondary alphabets of the Tamil language.

     [ங் + ஏ – ஙே.]

ஙை

 ஙைṅai, பெ.(n.)

   ஙகர ஒற்று முன்னும் ஐகாரவுயிர் பின்னுமாகப் பலுக்கப்படும் மெல்லின உயிர்மெய் யெழுத்தாகிய சார்பெழுத்து; the compound of ங் + ஐ, velar nasal vowel consonant being one among the secondary alphabets of the Tamil language.

     [ங் + ஐ → ஙை.]

ஙொ

 ஙொṅo, பெ.(n.)

   ஙகர ஒற்று முன்னும் ஒகரவுயிர் பின்னுமாகப் பலுக்கப்படும் மெல்லின உயிர்மெய் யெழுத்தாகிய சார்பெழுத்து; the compound of ங் + ஒ, velar nasal vowel consonant being one among the secondary alphabets of the Tamil language.

     [ங் + ஒ → ஙொ.]

ஙொக்காள்

 ஙொக்காள்ṅokkāḷ, பெ.(n.)

   உங்கள் அக்காள் என்பதன் மரூஉ வழக்காகிய கொச்சைச் சொல்; corrupted form of the compound word.

உங்கள் + அக்காள். lit. your elder sister. ஙொக்காள் வந்தாளா? (நெல்லை.);.

     [உங்கள் + அக்காள் → ஙொக்காள் (கொ.வ.);.]

இத்தகைய கடுங்கொச்சை வழக்குகள் முற்றிலும் விலக்கத்தக்கன.

ஙொண்னன்

 ஙொண்னன்ṅoṇṉaṉ, பெ.(n.)

   உங்கள் அண்ணன் என்பதன் மரு.உ வழக்காகிய கடுங் கொச்சைச் சொல்; corrupted form of the compound word.

உங்கள் + அண்ணன் Iit. your elder brother. ஙொண்ணன் எங்கே? (நெல்லை.);.

     [உங்கள் + அண்ணன் – ஙொண்ணன் (கொ.வ.);.]

இத்தகைய கடுங்கொச்சை வழக்குகள் முற்றிலும் விலக்கத்தக்கன.

ஙொப்பன்

 ஙொப்பன்ṅoppaṉ, பெ.(n.)

   உங்கள் அப்பன் என்பதன் மரூஉ வழக்காகிய கடுங்கொச்சைச் சொல்; corrupted form of the compound word.

உங்கள் + அப்பன். lit. your father. ஙொப்பன் எங்கே? (நெல்லை.);.

     [உங்கள் + அப்பன் – ஙொப்பன் (கொ.வ.);.]

இத்தகைய கடுங்கொச்சை வழக்குகள் முற்றிலும் விலக்கத்தக்கன.

ஙொம்மாள்

 ஙொம்மாள்ṅommāḷ, பெ.(n.)

   உங்கள் அம்மாள் என்பதன் மரூஉ வழக்காகிய கடுங்கொச்சைச் சொல்; corrupted form of the compound word.

உங்கள் + அம்மாள். lit. your mother. ஙொம்மாள் எங்கே? (நெல்லை.இ.வ.);.

     [உங்கள் + அம்மாள் → ஙொம்மாள் (கொ.வ.);.]

இத்தகைய கடுங்கொச்சை வழக்குகள் முற்றிலும் விலக்கத்தக்கன.

ஙோ

 ஙோṅō, பெ.(n.)

   ஙகர ஒற்று முன்னும் ஒகாரவுயிர் பின்னுமாகப் பலுக்கப்படும் மெல்லின உயிர்மெய் யெழுத்தாகிய சார்பெழுத்து; the compound of ங் + ஒ, velar nasal vowel consonant being one among the secondary alphabets of the Tamil language.

     [ங் + ஒ → ஙோ.]

ஙௌ

 ஙௌṅau, பெ.(n.)

   ஙகர ஒற்று முன்னும் ஒளகாரவுயிர் பின்னுமாகப் பலுக்கப்படும் மெல்லின உயிர்மெய் யெழுத்தாகிய சார்பெழுத்து; the compound of ங் + ஔ, velar nasal vowel consonant being one among the secondary alphabets of the Tamil language.

     [ங் + ஒள – ஙௌ.]

ங்

ங்ṅ, பெ.(n.)

   ஙகரத்தின் இனமெல்லெழுத்தாகிய பின்னண்ண மூக்கொலி மெய்யெழுத்து. தமிழ் நெடுங்கணக்கில் முப்பது முதலெழுத்துகளுள் ஒன்று; the velar nasal consonant related to the velar plosive by place of articulation, being one among the 30 primary alphabets of the Tamil language.

     [ங் = ககரத்தின் இனமெல்லெழுத்து மெய்.]

 ங்2ṅ, பெ.(n.)

   குறுணியைக் குறிக்கும் குறியீடு; symbol for a marakkal or eight measures.

     [ங்+அ-ங]

பண்டைய ஙகர வரிவடிவம் குறுணியைக் குறிக்கும் குறியீடாயிற்று.

கலம் என்னும் முகத்தல் அளவுக்குக் கீழளவு எண்களைத் தூணி, பதக்கு, குறுணி என்னும் வரிசையில் குறுணி மூன்றாம் அளவாக நிற்றலின் மூன்றைக் குறிக்கும். ஙகர வடிவு முகத்தல் அளவுக் குறியீடாகியிருக்கலாம்.