தலைசொல் | பொருள் |
---|---|
ங் | ங்ṅ, பெ.(n.) ஙகரத்தின் இனமெல்லெழுத்தாகிய பின்னண்ண மூக்கொலி மெய்யெழுத்து. தமிழ் நெடுங்கணக்கில் முப்பது முதலெழுத்துகளுள் ஒன்று; the velar nasal consonant related to the velar plosive by place of articulation, being one among the 30 primary alphabets of the Tamil language. [ங் = ககரத்தின் இனமெல்லெழுத்து மெய்.] ங்2ṅ, பெ.(n.) குறுணியைக் குறிக்கும் குறியீடு; symbol for a marakkal or eight measures. [ங்+அ-ங] பண்டைய ஙகர வரிவடிவம் குறுணியைக் குறிக்கும் குறியீடாயிற்று. கலம் என்னும் முகத்தல் அளவுக்குக் கீழளவு எண்களைத் தூணி, பதக்கு, குறுணி என்னும் வரிசையில் குறுணி மூன்றாம் அளவாக நிற்றலின் மூன்றைக் குறிக்கும். ஙகர வடிவு முகத்தல் அளவுக் குறியீடாகியிருக்கலாம். |