தலைசொல் | பொருள் |
---|---|
ஙொ | ஙொṅo, பெ.(n.) ஙகர ஒற்று முன்னும் ஒகரவுயிர் பின்னுமாகப் பலுக்கப்படும் மெல்லின உயிர்மெய் யெழுத்தாகிய சார்பெழுத்து; the compound of ங் + ஒ, velar nasal vowel consonant being one among the secondary alphabets of the Tamil language. [ங் + ஒ → ஙொ.] |
ஙொக்காள் | ஙொக்காள்ṅokkāḷ, பெ.(n.) உங்கள் அக்காள் என்பதன் மரூஉ வழக்காகிய கொச்சைச் சொல்; corrupted form of the compound word. உங்கள் + அக்காள். lit. your elder sister. ஙொக்காள் வந்தாளா? (நெல்லை.);. [உங்கள் + அக்காள் → ஙொக்காள் (கொ.வ.);.] இத்தகைய கடுங்கொச்சை வழக்குகள் முற்றிலும் விலக்கத்தக்கன. |
ஙொண்னன் | ஙொண்னன்ṅoṇṉaṉ, பெ.(n.) உங்கள் அண்ணன் என்பதன் மரு.உ வழக்காகிய கடுங் கொச்சைச் சொல்; corrupted form of the compound word. உங்கள் + அண்ணன் Iit. your elder brother. ஙொண்ணன் எங்கே? (நெல்லை.);. [உங்கள் + அண்ணன் – ஙொண்ணன் (கொ.வ.);.] இத்தகைய கடுங்கொச்சை வழக்குகள் முற்றிலும் விலக்கத்தக்கன. |
ஙொப்பன் | ஙொப்பன்ṅoppaṉ, பெ.(n.) உங்கள் அப்பன் என்பதன் மரூஉ வழக்காகிய கடுங்கொச்சைச் சொல்; corrupted form of the compound word. உங்கள் + அப்பன். lit. your father. ஙொப்பன் எங்கே? (நெல்லை.);. [உங்கள் + அப்பன் – ஙொப்பன் (கொ.வ.);.] இத்தகைய கடுங்கொச்சை வழக்குகள் முற்றிலும் விலக்கத்தக்கன. |
ஙொம்மாள் | ஙொம்மாள்ṅommāḷ, பெ.(n.) உங்கள் அம்மாள் என்பதன் மரூஉ வழக்காகிய கடுங்கொச்சைச் சொல்; corrupted form of the compound word. உங்கள் + அம்மாள். lit. your mother. ஙொம்மாள் எங்கே? (நெல்லை.இ.வ.);. [உங்கள் + அம்மாள் → ஙொம்மாள் (கொ.வ.);.] இத்தகைய கடுங்கொச்சை வழக்குகள் முற்றிலும் விலக்கத்தக்கன. |