தலைசொல் | பொருள் |
---|---|
ஙா | ஙா1ṅā, பெ.(n.) ஙகர ஒற்று முன்னும் ஆகாரவுயிர் பின்னுமாகப் பலுக்கப்படும் மெல்லின உயிர்மெய்யெழுத்தாகிய சார்பெழுத்து; the compound of ங் + ஆ, velar nasal vowel consonant being one among the secondary alphabets of the Tamil language. [ங் + ஆ → ஙா.] ஙா2ṅā, பெ.(n.) 1. குழந்தையின் அழுகையொலி; weeping sound of a child. 2. குழந்தை மொழியில் பாலைக் குறிப்பால் உணர்த்தும் இங்கா என்னும் சொற்குறுக்க ஒலிப்புக் குறியீடு; symbolic sound of a child denoting the requirement of milk from mother. [இங்ஙா → இங்ஙா → ஙா] |
ஙாத்தாள் | ஙாத்தாள்ṅāttāḷ, பெ.(n.) எங்கள் ஆத்தரள் என்பதன் மரூஉ வழக்காகிய கடுங் கொச்சைச் சொல்; corrupted form of the compound word. எங்கள் + ஆத்தாள். lit. our mother. [எங்கள் + ஆத்தாள் – ஙாத்தாள் (கொ.வ);.] இத்தகைய கடுங்கொச்சை வழக்கு முற்றிலும் விலக்கத் தக்கது. |