செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை வெளியீடு
31 தொகுதி 12000 பக்கங்கள் கொண்ட பேரகரமுதலி


1

10838

2769

3111

538

3554

677

1093

620

189

1004

402

2
க்
1

8212
கா
2579
கி
564
கீ
222
கு
4598
கூ
780
கெ
615
கே
391
கை
1101
கொ
2417
கோ
1754
கௌ
110
ங்
1

2
ஙா
2
ஙி
1
ஙீ
1
ஙு
1
ஙூ
1
ஙெ
1
ஙே
1
ஙை
1
ஙொ
5
ஙோ
1
ஙௌ
1
ச்
1

5235
சா
1186
சி
2424
சீ
439
சு
1261
சூ
420
செ
1529
சே
470
சை
23
சொ
409
சோ
365
சௌ
1
ஞ்
1

15
ஞா
44
ஞி
3
ஞீ ஞு ஞூ ஞெ
34
ஞே
5
ஞை
2
ஞொ
3
ஞோ
2
ஞௌ
1
ட்
1

1
டா
1
டி
1
டீ
1
டு
1
டூ
1
டெ
2
டே
1
டை
1
டொ
1
டோ
1
டௌ
ண்
1

1
ணா
1
ணி
1
ணீ ணு
1
ணூ
1
ணெ
2
ணே
1
ணை
1
ணொ
1
ணோ
1
ணௌ
த்
3113
தா
1530
தி
2203
தீ
393
து
1238
தூ
411
தெ
694
தே
856
தை
39
தொ
878
தோ
459
தௌ
ந்
1

2789
நா
204
நி
1860
நீ
1161
நு
14
நூ
18
நெ
892
நே
318
நை
89
நொ
210
நோ
159
நௌ
2
ப்
1

4560
பா
1824
பி
492
பீ
25
பு
2224
பூ
1133
பெ
1064
பே
483
பை
127
பொ
1218
போ
478
பௌ
2
ம்
4760
மா
1422
மி
535
மீ
268
மு
3016
மூ
949
மெ
396
மே
751
மை
152
மொ
284
மோ
242
மௌ
ய்
1

119
யா
426
யி
1
யீ
1
யு
46
யூ
20
யெ
9
யே
1
யை
1
யொ
1
யோ
98
யௌ
1
ர்
87
ரா
107
ரி
11
ரீ
7
ரு
24
ரூ
20
ரெ
6
ரே
16
ரை
10
ரொ
8
ரோ
23
ரௌ
ல்
117
லா
44
லி
8
லீ
5
லு
8
லூ
3
லெ
13
லே
21
லை லொ
20
லோ
63
லௌ
3
வ்
1

3800
வா
1329
வி
1638
வீ
515
வு
1
வூ
1
வெ
2164
வே
834
வை
229
வொ
1
வோ
3
வௌ
ழ்
1

1
ழா
1
ழி
1
ழீ
1
ழு
6
ழூ
1
ழெ
1
ழே ழை ழொ ழோ
1
ழௌ
ள்
1

2
ளா
1
ளி
1
ளீ
1
ளு
1
ளூ
1
ளெ
2
ளே
1
ளை
1
ளொ
1
ளோ
1
ளௌ
ற்
1

1
றா
1
றி
1
றீ
1
று
1
றூ
1
றெ
2
றே
1
றை
1
றொ
1
றோ
1
றௌ
ன்
1

1
னா
1
னி
1
னீ
1
னு
1
னூ
1
னெ
2
னே
1
னை னொ
1
னோ
1
னௌ
தலைசொல் பொருள்

க1 ka, பெ(n.)

   வல்லின உயிர்மெய்யெழுத்து; the compound of க்+அ, secondary vowel consonantal symbol ka.

 க2 ka, பெ(n.)

ககரம் மெய்முன்னாகவும், உயிர்பின்னாகவும் ஒலிக்கப்படினும், மாத்திரையளவில் மெய்யின் ஒலிப்புக் கரந்து உயிரின் ஒலிப்பளவே ஒலிப்பளவாய், ஒரு மாத்திரைக் குறிலாய் ஒலிப்பது மரபு. நீரில் கரைந்த உப்பைப்போல ஒன்றில்ஒன்று கரையும் என்பதாம். நீர் சுவையையும், உப்பு பருவடிவையும் இழப்பதைப் போலக் ககரமெய் தன் ஒலிப்பளவையும், அகரஉயிர் தன் வரிவடிவத்தையும் இழத்தலாலும், ஒலிப்பளவினாலே மட்டும் ஒரெழுத்துத் தன்னைப் புலப்படுத்திக் கொள்வதாலும், அவ்வாறு ஒலிப்பளவைப் புலப்படுத்திக்கொள்ளும் உயிரெழுத்தை முன்னிலைப் படுத்தி உயிர்மெய்யெழுத்து என இலக்கண வல்லார் குறியீடு இட்டனர் என்க. மெய்யுயிரெழுத்து என வழங்காததும் இதன்பொருட்டே எனலாம்.

 க3 ka, பெ(n.)

   ஒன்றென்னும் எண்ணின் குறியீடு; sign in Tamil numerals indicative of figure one.

ஒன்று என்னும் எண்ணின் சொற்பொருளாகிய ஒன்றித்தல், ஒன்றாகக் கட்டப்பட்டு அல்லது குடத்தில் பெய்யப்பட்டு இருக்கும் நிலையை உணர்த்தும் பட எழுத்தின் பண்டைய எழுத்து வடிவம். ககரப் படவெழுத்தின் வரலாற்று வழிவந்த ககர எழுத்து வடிவங்களும், ஒன்று எனும் எண்ணைக் குறிப்பனவாயின. எண் குறியீடுகள் பார்க்க see en kufo-yoidugal.

 க4 ka, பெ(n.)

   ஏழிசைக் குறியீடுகளுள் மூன்றாவதாகிய ‘கைக்கிளை’யின்(காந்தாரம்); எழுத்து; symbol representing the third note of the gamut.

 க5 ka, பெ(n.)

   இடை(part); ஒரு வியங்கோள் ஈறு (நன்.338);; verb ending of the optative, as in வாழ்க.

     “வான்முகில் வழாது பெய்க” (கந்தபு:பாயிரம். வாழ்த்து,5);.

ம.க

     [காண்→கா→க]

காண் என்னும் வினை போய்க்காண், இருந்துகாண் என்றாற் போன்று ஈற்று அசைநிலையாயிற்று. பின்னர் காண் → கா → க எனக் குறைந்து வழக்கூன்றியது. உண்கா, செல்கா என்பவை உண்க, செல்க என வியங்கோள் ஈறாயின. இன்றும் வட தருமபுரி மாவட்டத்து வேளாளரும், பழந்தமிழரும் இருகா (இருங்கள்);, போகா (போங்கள்);, என்னகா (என்ன); எனப் பேசுதலையும், தஞ்சைக் கிளை வழக்கில் வாங்காணும், போங்காணும் எனக் காண் துணைவினையை ஏவலிற்றுச் சொல்லசையாகப் புணர்த்திப் பேசுதலையும் காணலாம்.

 க6 ka, பெ.(n.)

   1. நான்முகன்; Brahma.

     “கவ்வென்ப தயன்பேர்” (காஞ்சிப்பு.தலவி.26);.

   2. திருமால்; Vishnu.

   3. காமன்,

 Kaman, God of love.

   4. கதிரவன்,

 Sun.

   5. நிலவு

 Moon.

   6. ஆதன்,

 soul.

க.க

ககரம் ஒன்று என்னும் எண்ணைக் குறித்த குறியிடாதலின் படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களுள் முதற்றொழிலைச் செய்யும் நான்முகனை முதலாவது எண்ணாகிய ககரம் குறித்தது எனத் தொன்ம நூலார் உன்னிப்பாகக் கட்டுரைத்தனர். இது நாளடைவில் முதன்மை பெறத்தக்கனவாகக் கருதப்பட்டவற்றிற்கும் ஆளப்பட்டிருக்கலாம்.

ஆயின் முதுபண்டைக் காலத்திலிருந்து தாழி அல்லது மட்பாண்டத்தின்மீது அல்லது அடிமரம், குறுந்தரி போன்றவற்றின்மீது தாம் வழிபடும் தெய்வத்தின் குறி அல்லது உரு எழுதி வழிபடுவது மரபாதலின், ககரத்தின் வெவ்வேறு கால வரிவடிவக் குறியீடுகள் பல்வேறு தெய்வங்களைக் குறித்திருக்கலாம். இத்தகைய வழிபாட்டு முறை ஆரியர்க்கு இன்மையின் இக் குறியீட்டுக் கோலங்கள் தமிழரிடமிருந்தே ஏனையோரால் கடன் கொள்ளப்பட்டதாகல் வேண்டும்.

த.க → Skt. ka.

 க7 ka, பெ(n.)

அழல்

 fire.

நரகங்களிலே கவின்று” (புலியூரந்:7);:

க.க

     [காய்தல் = வேதல், காய் → கா → க = தீ.

த.க→ Skt. ka.]

கஃகான்

 கஃகான் kaḵkāṉ, பெ(n.)

   ககரவெழுத்து; the letter ‘ka’.

கஃசு

கஃசு kaḵcu, பெ(n.)

   காற்பலம் கொண்ட நிறையளவு; a measure of 1/4 palam.

     “தொடிப்புழுதி கஃசா வணக்கின்” (குறள்,1037);. சர்க்கரை இருபதின் பலமும் – கண்டசர்க்கரை முக்கஃகம் (S.I.I.ii.i2 (கல்.அக.);

க. கஃசு

   5 மஞ்சாடி – ஒரு கழஞ்சு

   2 கழஞ்சு – ஒரு கஃசு

   4 கஃசு – ஒரு பலம் (ஒரு தொடி); (கணக்கதி);

கஃறெனல்

கஃறெனல் kaḵṟeṉal, பெ.(n.)

   கறுத்துள்ளமை காட்டும் குறிப்பு; an expression signifying blackness.

     ‘கஃறென்னுங் கல்லதர் அத்தம்’ (தொல், எழுத்து.40, நச்.உரை);.

     [கல் → கஃறு = கருமை, கருமைக்குறிப்பு. கஃறு + எனல் கல் = கருமை இருள் (வடமொ.வ-110);]

ககரம்

 ககரம் kagaram, பெ.(n.)

     ‘க’ என்னும் எழுத்து;

 the letter ‘ka’.

ம. ககாரம்

     [க+கரம் = ககரம், கரம் – எழுத்துச்சாரியை. ‘க’ பார்க்க;see ‘ka”.]

ககாரம்,

ககாரம், kakāram, பெ.(n.)

     ‘க’ என்னும் எழுத்து;

 the letter ‘ka’.

     [க+ காரம் – ககாரம், கரம் –எழுத்துச்சாரியை.]

கரம், காரம், கான் என்னும் மூன்று பழந்தமிழ் எழுத்துச் சாரியைகள். இவற்றுள் கரம், கான் இரண்டும் நெட்டெழுத்திற்கு வாரா. ஆயின் கரம், காரம், கான் இம் மூன்றும் குற்றெழுத்துச் சாரியைகளாய் வரும் (தொல். எழுத்து.137);. கரம் குற்றெழுத்திற்கும் காரம் நெட்டெழுத்திற்கும் சொல்லும் வழக்க அச் சாரியைகளில் அமைந்துள்ள குறில் நெடில் வடிவங்களால் ஏற்பட்டதென்க.

ககுதி

 ககுதி gagudi, பெ.(n.)

   முத்திரை குத்தின எருது; stamped bull.

     [ககுத்து → ககுதி = திமிலின்மீதிடும் முத்திரை.]

ககுத்து,

ககுத்து, gaguttu, பெ.(n.)

   காளையின் திமில்; hump of the bull.

     ‘ஏற்றின் ககுத்தை முறித்தாய்’ (ஈடு.4,3-1);.

மறுவ. திமில், மோபுரம் (மீப்புறம்);.

   க,ககுத;   ம.ககுத்து; skt.kakuda;

 L.cacumen.

     [கழுத்து → ககுத்து த. கழுத்து → Skt, kakuda]

எருத்தின் திமில் கழுத்தின் மீப்புறத்தைக் குறித்தது. இதற்குத் திமில் என்றும் மோபுரம் (மீப்புறம்); என்றும் பெயர் வழங்கக் காணலாம். கழுத்தின் பெயர் மீப்புறத்திற்கு ஆகி வந்தது. ககுத்து என்னும் கொச்சை வடிவம் பொருத்தமான தனறு.

ககுபம்

ககுபம் kakupam, பெ.(n.)

   திசை; direction.

     “மாதிரம், ஆசை, வம்பல், திசைப்பெயர்,ககுபம் காட்டையும்.ஆம்”.(நிகதி5:5-6);.

     [ககு – ககும்]

கக்கக் கொடு-த்தல்

கக்கக் கொடு-த்தல் kakkakkoḍuttal,    4 செகுன்றாவிv.t)

   1. உணவை மிதமிஞ்சி யூட்டுதல் (வின்);; to pamper, feed to surfeit, used in reproach.

   2. உட்கொண்ட பொருளைக் கக்கி வெளிப்படுத்த மாற்றுப்பொருளைப் புகட்டுதல்; to seed to stimulate vomiting.

கக்கக்குழி

 கக்கக்குழி kakkakkuḻi, பெ(n.)

   கையும் தோளும் இணையுமிடத்துக் கீழ்ப்பகுதியில் அமைந்த குழி; armpit.

ம. கக்ழகுழி, க. கங்குழி, கங்குழு, கவுங்குழ், கொங்கழ் கொங்கழு, கொங்குழ், து. கங்குள தெ. கெளங்கிலி பர். கவ்கொர், கவ்கொட் பட. கக்குவ,

கக்கக்கெனல்

கக்கக்கெனல் kakkakkeṉal, பெ.(n.)

   1. கோழிகள், குஞ்சுகளை அழைக்கும் ஒலிக்குறிப்பு. (வின்.);; onom. expression of clucking, as fowls.

   2. சிரித்தற் குறிப்பு; onom. expression meaning laughter, ‘கக்கக்கென்றேதே நகைப்பார்” (பாஞ்சபா.II.53);.

கக்கசம்

கக்கசம் kakkasam, பெ.(n.)

   1. களைப்பு wearness.

   2. கடுமை; hardness.

   3. வயிறுமுட்ட உண்பது, வேகமாக ஒடுவது போன்றவற்றால் ஏற்படும் மூச்சுத்திணறல் (கருநா);; trouble (heavy breathing, etc.); arising from an overloaded stomach or resulting from running fast.

க. கக்கச

     [கடும் கட்டம் – கடுங்கட்டம் – கக்கட்டம் – கக்கத்தம் – கக்கச்சம் – கக்கசம் – மிகு வருத்தம் (கொ.வ);. த.கக்கத்தம்→ Skt. karkasa.]

கக்கடி

 கக்கடி kakkaḍi, பெ.(n.)

   துத்தி நாமதீப; wrinkle leaved evening mallow.

     [கள்+கடி. கள் = நெருக்கம், சுருக்கம்]

கக்கடை

 கக்கடை kakkaḍai, பெ.(n.)

   ஒருவகைக் குத்துவாள்; a kind of dagger. s

ம. கக்கட, க. கக்கடெ, கர்கடெ Skt. karkaša.

     [கை கடி -கைக்கடி – கைக்கடை.கடிதல் = வெட்டுதல். கள் → கடு → கடி = வெட்டு, வெட்டும் கருவி, குத்தும் கருவி. கை = சிறிய கைக்கடி = குத்துவாள்]

கக்கட்டமிடு-தல்

கக்கட்டமிடு-தல் kakkaḍḍamiḍudal,    20 செ.கு.வி.(v.i)

குதிரை கனைப்பதுபோல் இடையிட்டுச் சிரித்தல் onom.

 expression meaning to laugh loudly, as horse-neigh.

கந்தன் கக்கட்டமிட்டுச் சிரித்தான் (யாழ்ப்);.

     [கெக்கலி → கெக்கட்டமிடு → கக்கட்டமிடு]

கக்கட்டம்

கக்கட்டம் kakkaṭṭam, பெ(n.)

   உரத்த குரற் சிரிப்பு; onom. expression signifying laugh.

     [கக்கக் கக்க (ஒலிக்குறிப்படுக்கு);,கக்கட்டம் = உரத்த குரற் சிரிப்பு;

 kakk, kakh, kakkh, khakkh என வடசொன் முதனிலை நால்வடிவில் உளது.]

   மா.வி. அகரமுதலியில் இச் சிறப்புப் பொருள் குறிக்கப்பெறவில்லை;சென்னை அகரமுதலியில்தான் குறிக்கப்பட்டுள்ளது. (வ.மொ.வ-101);.

த.கக்கட்டம் – Skt. kakkhata.

கக்கண்டு

 கக்கண்டு kakkaṇṭu, பெ.(n.)

   கண் இமை நுனியில் வரும்பரு, கண்கட்டி; styonthe eye lid.

     [கண்+கண்டு-கக்கண்டு]

கக்கதண்டம்

 கக்கதண்டம் kakkadaṇṭam, பெ.(n.)

   அக்குளில் இடுக்கி நடக்குங் கழி; crutch.

முறிந்த கால் சரியாகும்வரை கக்க தண்டம் வைத்துக் கொள் (உ.வ);.

     [அக்குள் → கக்குள்→கக்கம்+தண்டம், தண்டம்= கோல், தண்டு – தண்டம்]

த.கக்கம்→Skt.kaksa.

கக்கதாசம்

 கக்கதாசம் kakkatācam, பெ.(n.)

   ஒசூர் வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Hosur Taluk.

     [கக்கன்+(தாசன்); தாசம்]

 கக்கதாசம் kakkatācam, பெ.(n.)

   தருமபுரி உள்ள ஊர்; a village in Dharmapuri district.

     [கக்கன் + தாசன் – கக்கதாசன் → கக்கதாசம் (மகர மெய் ஈற்றுத் திரிபு கக்கதாசன் என்பவனின் பெயரில் அமைந்த ஊராகலாம்.]

கக்கனூர்

 கக்கனூர் kakkaṉūr, பெ.(n.)

   விழுப்புரம் மாவட்டத்துச் சிற்றூர்; a village in villuppuramdistrict.

     [கக்கன்+ஊர்_கக்கனூர். கக்கன் பெயரில் அமைந்த ஊர்]

கக்கன்

கக்கன்1 kakkaṉ, பெ.(n.)

   1.பெரியவன்; a great person.

   2.வலிமை சான்றவன்; able bodied man.

     [கருக்கள் → கக்கள். கரு = பெரிய வலிமைசான்ற]

 கக்கன்2 kakkaṉ, பெ.(n.)

   1. ஆண்பாற் பெயர்; proper name (masc.);.

   2. தலைவன்; lord, master.

     [கா → காக்கன் → கக்கன். கா – பெருமை, பெரியவன், தலைவன்.]

 கக்கன்3 kakkaṉ, பெ.(n.)

   கரிய நிறமுடையவன்; man of black complexion.

     [கக்கு = கரிய நிறம் கக்கு+அன் (ஆபா.ஈறு]

 கக்கன்4 kakkaṉ, பெ.(n.)

   திக்கிப் பேசுபவன்; a stammerer (சேரநா.);.

ம. கக்கன்

     [கக்கு+அன் (ஆபா.ஈறு);

கக்கபிக்கவெனல்

கக்கபிக்கவெனல் kakkabikkaveṉal, பெ.(n.)

   1. மனக்குழப்பத்தால் விழித்தற்குறிப்பு:

 blinking in confusion.

   2. உளறுதற்குறிப்பு; blabbering or talking incoherently.

     [கக்கபிக்க (ஒலிக்குறிப்பு); + எனல்]

கக்கப்பாளம்

 கக்கப்பாளம் kakkappāḷam, பெ(n.)

   துறவிகள் கக்கத்திடுக்குங் கலம் அல்லது மூட்டை (வின்.);; vessel or bag carried under the am by ascetics.

     [கக்கம் + பாளம் பள்ளம் → பாளம் = உட்குழிவான ஏனம் ஒ.நோ. தாம்பாளம் கக்கம் = அக்குள்]

இரப்போர் அக்குளில் இடுக்கி எடுத்துச்செல்லும் உண்கலமாகிய திருவோட்டையே இச் சொல் குறித்தது. இதனை மண்டையோடு எனப் பொருள்கொள்வது பொருந்தாது.

கக்கப்பை

 கக்கப்பை kakkappai, பெ.(n.)

   துறவிகள் அக்குளில் கொண்டு செல்லும் மூட்டை, பை; bag carried under the arm by ascetics and mendiCantS.

     [கக்கம் பை கக்கம் = அக்குள் முதலில் அக்குளில் இடுக்கி எடுத்துச் செல்லும் மூட்டை அல்லது சிறுபையைக் குறித்து, பின்னர்த் தோளில் தொங்கவிட்டுக் கொள்ளும் பையைக் குறித்தது.]

கக்கப்பொட்டணம்

 கக்கப்பொட்டணம் kakkappoṭṭaṇam, பெ.(n.)

   கக்கத்தில் இடுக்கிய துணிமூட்டை (வின்.);; bundle of cloth carried under the arm.

     [கக்கம் + பெட்டணம் கக்கம் = அக்குள் பொக்கணம் → பொட்டணம்)

கக்கம்’

 அஅன்ன ஆவன்னா aaṉṉaāvaṉṉā, பெ. (n.)

   அரிவரி யென்னும் தமிழ் வண்ணமாலை (குறுங்கணக்கும் நெடுங்கணக்கும்);;  Tamil Alphabet.

   எழுத்துகளைக் கல்லா மக்கள், சிறப்பாகச் சிறுவர் சிறுமியர், எளிதாக ஒலித்துக் கற்கும் பொருட்டு, பண்டைத் தொடக்கப்பள்ளி யாசிரியர் உயிரும் உயிர்மெய்யுமாகிய இருவகைக் குறிலுக்கும்’அன்ன’ச் சாரியையும், இருவகை நெடிலுக்கும் அன்னா’ச் சாரியையும் ஏற்படுத்தினர்;     ‘அஆ’ என்னும் ஈரெழுத்தும் தமிழ் வண்ணமாலையின் முதலெழுத்துகளாதலின், அவை முதற்குறிப்பாகி, அம் முதற்குறிப்பே’அஅன்ன ஆவன்னா’ என்று வண்ணமாலைப் பெயராயிற்று. இது ‘alpha’, ‘beta’ என்னும் கிரேக்க இரு முதலெழுத்துகளும் சேர்ந்து”alphabetum’ என்று இலத்தீனிலும், ‘alphabet’ என்று ஆங்கிலத்திலும், வண்ணமாலைப் பெயராக வழங்குவது போன்றது;

   அ, இ, க, கி என்று ஒரு மாத்திரை யொலிக்குங்குறிலெழுத்துகளை விட்டொலிப்பது, சிறுபிள்ளைகட்குச் சற்று வருத்தமுற மூச்சு வாங்குவதால்,’அஅன்ன’ என்பது”ஆனா” என்றும் இஅன்ன என்பது’ஈனா’ என்றும், மாணாக்க நிலையிலும் பின்னும் ஒலிக்கப்பட்டுவந்தன. இவ்வொலிப்புமுறை குறில்களின் உண்மையான ஒலியளவை உடனே தெரிந்துகொள்ளத் தடையாயிருந்தமையின், இந்நூற்றாண்டுத் தொடக்கத்தில் அரசியற் கல்வித்துறையறிஞர், சாரியையின்றி ஒலிநூன் முறைப்படி அ, ஆ, இ, ஈ,… என்று ஒலித்துப் பயிலும் முறையைப் புகுத்திவிட்டனர். அதனால், இன்று ‘அஆ’ என்பது வண்ணமாலைப் பெயராக வழங்கி வருகின்றது. இது புணர்ச்சியில்’அவ்வா’ என்றாகும்;

கக்கரி,

 கக்கரி, kakkari, பெ.(n.)

   முள்வெள்ளரி (சூடா);; kakri-melon.

   ம.கக்கரி, கக்கிரி; Pkt. kakkợia;

 Ori. kākuri;

 H. kakrỉ, Guj. kăkợỉ, Nep. kăkri, Sinh. kăkira Skt. karkafi.

     [கள் = முள். கள் + கு – கட்கு → கக்கு = முள். கக்கு + வெள்ளி – கக்குவெள்ளி → கக்கரி வெள் அளி. வெள்ளரி = வெண்மையான வித்துகளைக் கொண்ட காய்]

கக்கரிகம்

 கக்கரிகம் gaggarigam, பெ.(n.)

கக்கரி பார்க்க; See kakkari.

     [கக்கரி → கக்கரிகம்]

கக்கரிபிக்கரி

 கக்கரிபிக்கரி kakkaribikkari, பெ.(n.)

   தெளிவின்றிப் பேசுதற் குறிப்பு; onom.expression signifying wishy-wishy talk.

க. கக்காபிக்கரி, தெ. கக்கரிபிக்கரி

     [கக்கரி பிக்கரி – கக்கரிபிக்கரி (எதுகை மரபிணைச் சொல்);]

கக்கரியெண்ணெய்

 கக்கரியெண்ணெய் kakkariyeṇīey, பெ(n.)

   முள்வெள்ளரி விதையினின்று எடுக்கப்படும் எண்ணெய்; oil extracted from kakkari-melon Seeds.

ம. கக்கரியெண்ண

     [கக்கரி +எண்ணெய். கக்கரி = முள்வெள்ளரி]

கக்கரை

 கக்கரை kakkarai, பெ.(n.)

   தஞ்சை மாவட்டத்துச் சிற்றூர்; a village in Thanjavur district.

     [கை – சிறுமை, கை+கரை_கைக்கரை → கக்கரை சிறிய கரை.]

கக்கரைமண்

 கக்கரைமண் kakkaraimaṇ, பெ.(n.)

   மண்தளக் கூரைகளின் மேற்றளத்தில் பரப்பும் மண்வகை (மதுரை);; a soil used for terrace floor of mudroofed buildings.

     [களிக்கல் → கக்கல் → கக்கரை (மணல் கலந்த களிமண்);+ மண்]

கக்கர்

 கக்கர் kakkar, பெ(n.)

   ஒரு சிற்றுர்த் தெய்வம்; name of a village deity (மதுரை);.

     [கா = காத்தல். கா → காக்கள் → காக்கர் → கக்கர்.]

கக்கலாத்து

 கக்கலாத்து kakkalāttu, பெ.(n.)

   கரப்பான் பூச்சி; Cockroach.

     [கருக்கல் → கக்கல். கக்கல் = கரியது. அந்து ஆந்து → ஆத்து கக்கல் + ஆத்து]

கக்கலும்விக்கலுமாய்

 கக்கலும்விக்கலுமாய் kakkalumvikkalumāy, கு.வி.எ.(adv)

   கதிர் ஈன்றதும் ஈனாததுமாய்; just half shooting forth, as grain in the ear of corn.

நெல்லெல்லாம் கக்கலும் விக்கலுமாயிருக்கிற (வின்.);

     [கக்கலும்+விக்கலும்+ஆய்.]

கக்கல்

கக்கல்1 kakkal, பெ(n.)

   1. வாயாலெடுக்கை (பிங்);; vomiting.

   2. கக்கிய பொருள்; vomit, anything cast out, as from the mouth.

ம. கக்கல், தெ. கக்கு க. கக்கு கழ்க்கு குவி. கக்வ கோத. கக்கு துட. கக்

     [கக்கு → கக்கல். கக்கு = வாயால் எடுக்கும்போது ஏற்படும் ஒலி குறிப்பால் அமைந்த வினைச்சொல்.]

 கக்கல்2 kakkal, பெ.(n.)

   தெற்றிப்பேசுவோர் இடையில் எழுப்பும் ஒலிக்குறிப்பு; stammering.

ம. கக்கல்

     [கக்கு → கக்கல். கக்கு அல்லது கக்கக்கு ஒலிக்கத் தடையாகவுள்ள எழுத்துகளுக்கு முன் எழுப்பும் ஒலிக்குறிப்பு.)

 கக்கல்3 kakkal, தொ.பெ.(vbl.n.)

   1. கழன்று வெளிவருதல்); coming out of one’s position.

கமலையின் சிறு கப்பி கக்கிக்கொண்டு விழுந்துவிட்டது (உ,வ);.

   2. திருடுதல்; stealing.

ம. கக்குக பட கக்கலு.

     [கள் – களைதல், நீங்குதல் வெளிவருதல், விலகுதல், கள்→கக்கு → கக்கல். அல்’ (தொ.பொறு);

 கக்கல்4 kakkal, பெ.(n.)

   1. இருமல்; cough.

   2.கக்குவான் நோய்; chin – cough or whooping Cough.

கக்கல்கரைசல்

கக்கல்கரைசல் kakkalkaraisal, பெ.(n.)

   1 கலங்கல் நீர்; muddy water, as that which flows at the beginning of a flood in a river.

   3ஆற்றுவெள்ளம் கக்கலுங் கரைசலுமாய் ஓடுகிறது. (உ.வ.);

   2. நீத்த மலம்; liquidy excrement.

     [கக்கல் + கரைசல்.]

கக்கல்கழிச்சல்

 கக்கல்கழிச்சல் kakkalkaḻiccal, பெ.(n.)

   வாயாலெடுத்தலும் வயிற்றுப்போக்கும்; vomitting and diarrhoea.

     [கக்கல் கழிச்சல், கக்கல் = வாயாலெடுத்தல் கழிச்சல் = வயிற்றுப்போக்கு]

கக்கள்ளுர்

கக்கள்ளுர் gaiggaḻigaggaḻigovagaḻiberumbāṉmaimūṅgiṟgaḻigaggaḷḷur, பெ.(n.)

   இலால்குடி வட்டத்திலிருந்த பழைய ஊர்; an old place in Lalguditaluk;

     “திருத்தவத்துறை பெருமாநடிகளுக்கு கூவங்குடாங் சிங்கம் பொதுவந்தும் கக்கள்ளூர் எழினி அந்காரி நாரணியும் ஆக இருவரும்” (தெ.இ.கல்.தெ.19:கல்.270);.

     [ஒருகா. கக்கன் + அள்ளுர் → கக்கனள்ளுர் கக்கள்ளுர்]

கக்கழி

 கக்கழி kakkaḻi, பெ.(n.)

   குச்சி விளையாட்டிற்குப் பயன்படும் கழி; stick used for martial art.

     [கைக்கழி → கக்கழி (கொ.வ.);. கழி = பெரும்பான்மை மூங்கிற்கழி]

கக்கவை-த்தல்

கக்கவை-த்தல் kakkavaittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   1. வாயாலெடுக்கச்செய்தல்; to make vomit.

   2.கடனை நெருக்கி வாங்குதல்; to press hard for the discharge of a debt;

 to dumb a debtor and force him to pay.

அவன் தனக்குச் சேரவேண்டிய பாக்கியைக் கக்க வைத்தான் (உ.வ.);.

   3.கமுக்கச் செய்தியை மிரட்டிப் பெறதல்; to extract secret information.

காவலர் நெருக்கியதில் திருடன் உண்மையைக் கக்கிவிட்டான். (உ.வ.);.

க. கக்கிசு, து. கக்காவுனி.

     [கக்கல் வை. ‘வை’ (து.வி.);

கக்கா

கக்கா kakkā, பெ.(n.)

   1. அழுக்கு dirt.

   2. மலம், faeces.

     [கள் + கு = கக்கு → கக்கா. கள் = நீங்கல், வெளிவரல்.]

கக்காட்சேரி

 கக்காட்சேரி kakkāṭcēri, பெ.(n.)

   கன்னியாக்குமரி மாவட்டத்துச் சிற்றூர்; a village in Kanniya-kkumari district.

     [கல்+காடு+சேரி-கற்காட்டுச்சேரி→கக்காட்டூர்.]

கக்கான்

 கக்கான் kakkāṉ, பெ.(n.)

   கப்பலை நடத்தும் கருவி; rudder.

     [கக்கு-சுக்கான்].

கக்காரக்கோட்டை

 கக்காரக்கோட்டை kakkārakāṭṭai, பெ.(n.)

   தஞ்சை மாவட்டத்துச் சிற்றூர்; a willage in Thanjavur district.

     [கை+கரை – கைக்கரை_→கக்கரை +கோட்டை + கக்கரைக்கோட்டை → கக்கராக்கோட்டை கக்கரை பார்க்க see kakkarai.]

கக்கார்

 கக்கார் kakkār, பெ.(n.)

   தித்திப்பு மாங்காய்; sweet mango (சா.அக);.

     [கரு = பெரியது, நல்லது இனியது. கருக்கல் → கருக்கர் → கருக்கார் – கக்கார்]

கக்கி

 கக்கி kakki, பெ.(n.)

   பெண்பாற்பெயர்; propername (feminine);.

பட. கக்கி (ஆண்பாற் பெயர்);

     [கக்கு + இ = கக்கி. கக்கன் (ஆபா); → கக்கி (பெ.பா.);]

இ – பெண்பால் ஈறாக வரும்போது பெண்பாற் பெயரையும், பண்புப்பெயர் ஈறாக வரும்போது ஆண்பாற் பெயர் உள்ளிட்ட அனைத்தையும் குறிக்கும். இவ் வடிப்படையில் இஃது ஆண்பால் பெண்பாற் பெயர்களாகப் பிற திராவிட மொழிகளிலும், பெண்பாற் பெயராகத் தமிழிலும் வழக்கூன்றியுள்ளது.

கக்கிக்கொடு-த்தல்

கக்கிக்கொடு-த்தல் kakkikkoḍuttal,    4 செ.குன்றாவி. (v.t.)

   பறவை தன் வாயிற் கொண்டதைத் தன் குஞ்சுகளுக்கு ஊட்டுதல்; to feed from its own mouth, as a bird to its young ones.

காகம் தன் குஞ்சுக்குக் கக்கிக் கொடுக்கிறது (உ.வ);.

     [கக்கு → கக்கி+கொடு]

கக்கிசம்

 கக்கிசம் kakkisam, பெ.(n.)

கக்கசம் பார்க்க: see kakkašam.

     [கக்கசம் → கக்கிசம்]

கக்கிட்டி

கக்கிட்டி kakkiṭṭi, பெ.(n.)

   கண்ணுக்கு அருகில் வரும் வீக்கம்; a swelling near the eye. (கொ.வ.வ.சொ.39.);

     [கண்+கட்டி-கண்கட்டி-கக்கட்டி→அகக்கிட்டி.]

கக்கிம்

கக்கிம் kakkim, பெ(n.)

   1 அக்குள், கமுக்கூடு; armpit, axilla.

     “கட்டிச் சுருட்டித்தங் கக்கத்தில் வைப்பர்” (பட்டினத். திருப்பா. பொது,30);.

   2. மறைவிடம்; lurking place.

   3. இடுப்பு; waist.

குழந்தையைக் கக்கத்தில் வைத்துக்கொள் (உ.வ.);.

மறுவ. கமுக்கட்டு, கம்முக்கட்டு, கம்மங்கூடு, கமுக்கூடு.

   ம. கக்ழம்;க. கங்குழு, கங்குள், கவுங்குள், தெ. சங்க கெளங்குலி து. கங்குள பட கக்குவ குவி. கக

     [அக்குள்_கக்குள் → கக்கம் → Skt, kaksa)

கக்கம் என்னும் தமிழ்ச்சொல்லே வடமொழியில் ககூடி ஆயிற்று கஷ் (தேய்);, கச்(ஒலி என்பனவற்றை வடவர் மூலமாகக் காட்டுவது பொருந்தாது மறைவிடம் என்னும் பொருளில் இருக்கு வேதத்திலும், அக்குள் என்னும் பொருளில் அதர்வன

வேதத்திலும் ௯ஷ என்னும் சொல் ஆளப்பெற்றிருப்பதாக மா.வி.அகரமுதலி கூறும் (வ.மொ.வ-102);. மேலையாரிய மொழிகளில் இச் சொன்மூலம் இன்மையால் வடமொழியில் மூலம் காட்டுவது சிறிதும் பொருந்தாது.

கக்கு

கக்கு kakku, பெ.(n.)

ஒரு வேட்டி நெய்து முடிந்தவுடன் எடுக்கும் இடைவெளி: thegap leftaftera dhoti in weaving. (நெ.தொ.க.55);.

     [கங்கு-கக்கு]

 கக்கு1 kakkudal,    5 செ.குன்வி.(v.t.)

   1. வாயாலெடுத்தல்; to vomit, spew from the stomach.

   2. வெளிப்படுத்துதல்; to eject, as a snake its poison.

     “புனல்பகுவாயிற் கக்க” (கம்பரா.யுத்த.இரணி..89);.

   ம. கக்குக;குவி. கக்வி க. கக்கு கழ்க்கு கோத. கக் துட. கக் குட கக்க, து. கக்குனி தெ. கக்கு க்ராயு, க்ரக்கு கோண். கக்கானா பிரா. கழழ்ங்க் பட கக்கு.

     [கள் + கு = கக்கு நீக்கு.]

 கக்கு2 kakkudal,    5 செ.கு.வி.(v.i)

   1. ஆணி முதலியன பதியாமல் எதிரெழுதல் (வின்);; to skip with a rebound, fly back, recoil, as a nail, suusly

மேறிய மரத்தில் அடிக்கும் ஆணி கக்குகிறது (உ.வ.);.

   2. ஆறு முதலியன பெருக்கெடுத்தல்; to overflow, as a river.

ஆற்றில் வெள்ளம் கக்கிப்பாய்கிறது (உ.வ.);.

   3. கதிரீனுதல் (வின்);; to shoot out as ears of corn.

நெற்பயிர் கதிர் கக்கும் பருவம்.

   4. மருந்துச் சாறமிறங்குதல்; to yield the essence, as drugs put in boiling water.

   5. தோலிலிருந்து எண்ணெய் முதலியன கசிதல்; to ooze out, as oil through the pores of the skin.

ம. கக்குக: க. கக்கு து. கக்கு பிரா. கழிழ்ங், பட கக்கு.

     [கள்→கக்கு (கள் – நீக்கல் கருத்து வேர்); ஒ.நோ. வெள்→வெஃகு]

 கக்கு3 kakkudal,    5 செ.கு.வி(v.i)

   1. திரிபு பெறல்; to change from the normal position.

   2. விலகுதல்; withdraw.

   3. திக்குதல்; stammering.

     [கள் + கு = கக்கு.]

 கக்கு4 kakkudal, செ.கு.வி.(v.i)

இருமுதல்; to cough.

   கோத. கக்கு;பட கக்கு (இருமச் செய்யும் நெடி);. (கள் + கு = கஃகு – கக்கு. கஃகு – ஒலிக்குறிப்பு);

 கக்கு5 kakku, பெ.(n.)

   கக்குவான்; whooping cough.

     “கக்கு களைவரு நீரடைப்பு” (திருப்பு.627);.

     [கள் + கு = கஃகு → கக்கு.]

 கக்கு6 kakku, பெ.(n.)

   கற்கண்டு; sugar candy.

     [கற்கண்டு→ கக்கண்டு→ கக்கு (மருஉ.);]

 கக்கு7 kakku, பெ.(n.)

   பிஞ்சு இளையது; young,tender

ம. கக்கு

 கக்கு8 kakku, பெ.(n.)

   1. கக்குவள்ளி, ஒருவகைக் கொடி; a kind of climber.

   2. பறவைகளின் இரண்டாம் வயிறு; gizzard, second stomach of a bird (thick and muscular); (சேரநா.);.

     [ம. கக்கு (கள் + கு -கக்கு = சேர்தல், ஒட்டுதல், இணைதல்.]

கக்குகோட்டுத்லை,

 கக்குகோட்டுத்லை, kakkuāṭṭutlai, பெ.(n.)

   கன்னியாக்குமரி மாவட்டத்துக் கல்குளம் வட்டத்துச் சிற்றூர்; a village in Kal-kulam taluk in Kanniyāk-kumari district.

     [கல் + கோடு தலை – கற்கோட்டுத் தலை → கக்கோட்டுத்தலை கல்கோடு = கல்லால்கட்டிய ஏரிக்கரை, = முகப்பிலுள்ளது கற்கோட்டுத் = கல்லால் அமைந்த ஏரிக்கரையின் முகப்பிலுள்ள ஊர்.)

கக்குலத்தை

 கக்குலத்தை kakkulattai, பெ.(n.)

   அன்பு, மனவிரக்கம்; love, compassion.

   க. ககுலதெ ககுலாதெ;   தெ. கக்குரிதி, கக்கூர்தி;ம. கக்கத.

     [கக்கு=பிச்சு, இளமை, மென்மை (சேரநாட்டு வழக்கு);. மென்மைப்பொருள், அன்பு, இரக்கப்பொருள்களில் புடைபெயர்ந்து கக்கு→ கக்குதல்→ கக்குலிதம் கக்குலத்தை (இ.வ.);

கக்குளி-த்தல்,

கக்குளி-த்தல், kakkuḷittal,    4 செ.கு.வி(V.i)

   அக்குளில் விரலிட்டுக் கூச்சமுண்டாக்குதல்; to tickle.

மறுவ, கிச்கக்கிச்சு மூட்டல்

   க. கக்குளிக;பட. கிலிகிருக.

     [அக்குள் → கக்குள் → கக்குளி, இகரம் ஏவலிறு,]

கக்குள்,

 கக்குள், kakkuḷ, பெ.(n.)

   அக்குள், கமுக்கூடு; armpit, axilla.

க. கங்குளி, தெ. சங்க து. கங்கள பட கக்குவ

     [அக்குள்→கக்குள். அக்குள் பார்க்க;see akkull]

கக்குவான் கயிறு

 கக்குவான் கயிறு kakkuvāṉkayiṟu, பெ.(n.)

குழந்தைகளின் கழுத்தில் மந்திரித்துக் கட்டப்படும் கயிறு; amulet tied around children”s neck.

கக்குவான் கயிறு ஒண்னு கட்டு புள்ளைக்குச் சரியாகப் பூடும். (உவ);.

     [கக்கு → கக்குவான்+கயிறு]

கக்குவான்.

கக்குவான். kakkuvāṉ, பெ.(n.)

   இருமலையும், மூச்சிரைப்பையும் உண்டாக்கும் நோய், கக்கிருமல் (பாலவா.1000);; whooping cough.

மறுவ, கக்குவாய், கக்கிருமல்,

   க. கக்கிக;   துட, கோத, கக்கச;து. கக்காவுனி

     [கக்கு → கக்குவான்.]

கக்குவாய்,

 கக்குவாய், kakkuvāy, பெ.(n.)

கக்குவான் பார்க்க;see kakuvan.

     [கக்குவான் → கக்குவாய்.]

கக்கோடு,

 கக்கோடு, kakāṭu, பெ.(n.)

   கன்னியாக்குமரி மாவட்டத்துக் கல்குளம் வட்டத்துச் சிற்றூர்; a village in Kal-kulam taluk in Kanniyā-k-kumari district.

கங்கடிகம்,

 கங்கடிகம், gaṅgaḍigam, பெ.(n.)

   குருந்தொட்டி எனும் மருந்துச் செடி; common balah.

     [கங்கடி + அகம் – கங்கடிகம். கரு → கக்கு → கங்கு = கரியது, தீய்ந்தது, கசப்பானது. கங்கு → கங்கடி]

கங்கடிக்காய்,

 கங்கடிக்காய், kaṅgaḍikkāy, பெ.(n.)

   சிறு தும்மட்க் காய்; fowl’s cucumber.

     [கங்கு + அடி + காய்]

கங்கண எடுப்பு,

 கங்கண எடுப்பு, kaṅgaṇaeḍuppu, பெ.(n.)

   காப்பு நாண் நீக்கும் நிகழ்வு (சடங்கு);; ceremony of removing the kanganam.

     [கங்கணம் எடுப்பு]

கங்கணங்கட்டு-தல்

கங்கணங்கட்டு-தல் kaṅgaṇaṅgaṭṭudal,    5 செ.கு.வி. (v.i)

   1. திருமணம் முதலிய நிகழ்வு (சடங்கு); களில் கையில் காப்புநாண் கட்டுதல்; to tie u cord round one’s wrist at the commencement of a wedding ceremony etc.

   2. ஒரு செயலை முடிக்க மூண்டு நிற்றல், உறுதி எடுத்தல்; to take a vow to accomplish something, to be pertinacious in the realization of the aim.

ஒரு மாத இறுதிக்குள் கடனைத் திருப்பிக் கொடுத்துவிடுவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டான்.

க. து. கங்கணகட்டு

     [கங்கணம் கட்டு]

கங்கணத்தி

 கங்கணத்தி kaṅgaṇatti, பெ.(n.)

   சிறு பறவை; myna.

ம. கங்ஙணத்தி

     [குறுங்கழுத்தி → கங்கணத்தி.]

கங்கணத்தி

கங்கணம்

கங்கணம்2 kaṅgaṇam, பெ.(n.)

   நீர்வாழ் பறவை வகை(வின்.);; a kind of water fowl (சா.அக.);.

   தெ. கங்கணமு;க. கங்க.

     [கொங்கு → கங்கு → கங்கணம் = வளைந்த மூக்குள்ள பறவை.]

 கங்கணம்3 kaṅgaṇam, பெ.(n.)

   முடி; hair (த.சொ.அக);.

     [கங்கு (கருமை); → கங்கணம்]

கங்கணம் கட்டு-தல்

கங்கணம் கட்டு-தல் kaṅkaṇamkaṭṭutal, செ.குன்றாவி.(v.t)

   1. மஞ்சட்கிழங்கு கட்டிய மஞ்சள் கயிற்றைமணிக்கட்டில் கட்டும்.உறுதி

 souel fig; a ceremony of oathtaking by way of tieing a yellow thread on the wrist.

   2. முன்னோக்கம் கொள்; to preconceive notion.

நீ என்ன, கங்கணம் கட்டிக்கொண்டு சண்டைக்கு வருகிறாயா. (உவ);.

     [கை+அங்கணம்-கங்கணம்]

கங்கணம்,

கங்கணம், kaṅgaṇam, பெ.(n.)

   1. மங்கல நிகழ்வுகளைச் செய்து முடிக்கும் பொருட்டு மணிக்கட்டில் கட்டப்படும் மஞ்சள் துண்டு அல்லது மஞ்சள் கயிறு; a sacredthreador stringtied with apiece of turmeric (usually); around the right arm or wrist (on auspicious occasions as a symbol of initiation to a specific ritual);.

கங்கணம் கட்டிய மாப்பிள்ளை வெளியூர் செல்லக்கூடாது (உ.வ.);

   2. ஒரு செயலைச் செய்யும் பொருட்டு மனத்திற்குள்ளும் உறுதிப்பாடு; determination of mind to do a particular job.

   மாநிலத்தில் முதல் மாணவனாக வரவேண்டு மென்று கங்கணம் கட்டிக்கொண்டு படிக்கிறான்;   3. ஒருவகைக் கைவளை; bangle, bracelet, wristlet.

     “கங்கணம் பாடி” (திருவாச. 9:19);.

   4. இறந்தார்க்குச் செய்யுணும் இறுதி நடப்பில் அவரது கால்வழியினர் கையில் கட்டும் மஞ்சள் கயிறு அல்லது துண்டு; a turmeric tied string or yellow string tied on the hand of the dead person’s son or sons at the time of the funeral rites,தந்தையின் இறுதி நடப்புக்கு பிள்ளைகள் கங்கணம் கட்டிக் கொண்டனர்.

   5. தான் கொண்ட உறுதியை நிறைவேற்றுவதற்காக இடக்கை மணிக்கட்டில் கட்டிக்கொள்ளும் மஞ்சள் துண்டு அல்லது மஞ்சள் கயிறு; a turmeric piece tied string or yellow string tied on the left hand of the person who takes a vow or vengence. இந்த மாத இறுதிக்குள் கடனைத் திருப்பிக் கொடுத்து விடவேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டான்.

   ம. கங்கணம்: க. து. கங்கண;   தெ. கங்கணமு;எரு. கங்கடோ.

த.கங்கணம் → Skt. kaňkaņa, Nep. kaňkan (a large iron bracelet worn by sadhus);.

     [குல் – குங்கு – கங்கு – கங்கணம் (வட்டமாகக் கட்டிய காப்பு (சொ.ஆ.க.55);]

கங்கணமென்ற தென்சொல்லே வடசொற்கும் மூலமாகுமென்றும் இது கணகண என்ற ஒலிக் குறிப்படிப்படையில் உருவானதென்றும் கிற்றல் (kite); பெருமகனார் கூறுவார். ஆயின் கங்கு அடியினின்றே கங்கணம் தோன்றுவதன் பொருத்தத்தைக் காண்க. கங்கணம் ஒருவன் தன் பகைவனிடத்தில் பழிக்குப்பழி வாங்க வேண்டுமென்று அதற்கு அடையாளமாகக் கட்டிக் கொள்ளும் காப்பு அவ் வடிப்படையில் இது சூள் வகைகளுள் ஒன்றாகக் காட்டத்தக்கது. திருமணத்தில் ஆணுக்கு வலக்கை மணிக்கட்டிலும், பெண்ணிற்கு இடக்கை மணிக்கட்டிலும் கங்கணம் கட்டுவது மரபு. நீத்தார் நினைவுக் கடன் செய்யும் பொருட்டு மறைந்தாரது கால்வழியினர் கையில் கங்கணம் கட்டிக்கொள்வர். கோயில் திருவிழாவின் போதும் கங்கணம் கட்டுவது உண்டு. கங்கணமாகப் பெரும்பான்மை சிறு மஞ்சள் துண்டு அல்லது மஞ்சள் கயிறு பயன்படுத்துவது வழக்கு.

கங்கணரேகை,

 கங்கணரேகை, kaṅgaṇarēkai, பெ.(n.)

கங்கணவரை பார்க்க;see kangana-varai.

ம. கங்கணரேக (கங்கணம் போன்று மணிக்கட்டில் அமைந்த வரை);.

     [கங்கணம் + ரேகை (வரிகை → ரேகை);கங்கணரேகை. த. வளிகை (ரேகை); → Skt. Rёкһаў]

கங்கணவரை,

கங்கணவரை, kaṅgaṇavarai, பெ.(n.)

   1 மணிக் கட்டில் வளையல்போல் உள்ள கைவரி வகை; a kind of line below the palm (in the wrist); resembling a bracelet.

   2. திருமண வாய்ப்பைக் காட்டுவதாகக் கருதப்படும் கைவரி; a line in the palm indicating marital opportunity.

கங்கணாரேந்தல்,

 கங்கணாரேந்தல், kaṅgaṇārēndal, பெ.(n.)

   இராமநாதபுரம் மாவட்டத்துச் சிற்றுார்; a village in Ramanathapuram district

     [கங்கன் + ஆர் + ஏந்தல் – கங்கனாரேந்தல் → கங்கணாரேந்தல். கங்கன் என்பதன் ஆண்பாலிற்று ணகரம் னகரமாகத் திரிந்திருப்பது வழு. ஆர் உபன்.ஈறு. ஏந்தல் = ஏரி, கங்கனார் ஏந்தல் = கங்கன் பெயரிலமைந்த ஏரி]

கங்கணி

 கங்கணி kaṅkaṇi, பெ.(n.)

   திருவாடானை வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Tiruvadanai Taluk.

     [கண்+காணி]

கங்கணி,

 கங்கணி, kaṅgaṇi, பெ.(n.)

   இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள ஓர் ஊர்; name of a village in Râmanātapuram district

     [கண் + காணி – கண்காணி = மேற்பார்வையாளன், மேற்பார்வையாளன் பெயரிலமைந்த ஒர் ஊர். கண்காணி → கங்காணி → கங்கணி (மரூஉ);]

கங்கனான அழகிய கந்தரக்கோன்

கங்கனான அழகிய கந்தரக்கோன் kaṅkaṉāṉaaḻkiyakantarakāṉ, பெ.(n.)

   மாறவர்மன் சுந்தர பாண்டியன் காலத்தில் தி.பி.1314ஆம் ஆண்டு திருவோத்துர் கோயிலுக்கு பால் இயவன்; one who are milk and ghee to the temple.

கங்கனூர்,

 கங்கனூர், kaṅgaṉūr, பெ.(n.)

   தருமபுரி மாவட்டத்துச் சிற்றூர்; a village in Dharumapuri district.

     [கங்கன்+குளம்-கங்கன்குளம். கங்கள் பெயரிலமைந்த சிற்றூர்.]

கங்கன்

கங்கன்1 kaṅgaṉ, பெ.(n.)

   சீயகங்கன் (நன். சிறப்புப் மயிலை.);; a chief of the ancient Tamil country.

     [கங்கம் – கங்கன் (கங்க நாட்டினன், கங்கமரபினன்);]

 கங்கன்2 kaṅgaṉ, பெ.(n.)

சீர்பந்த செய்நஞ்சு:

 a mineral poison (சா.அக.);.

     [கங்கு → கங்கன் (திப்போல் கொல்லும் தன்மையது.);]

கங்கன்குளம்,

 கங்கன்குளம், kaṅgaṉkuḷam, பெ.(n.)

   தூத்துக்குடி மாவட்டத்துச் சிற்றூர்; a village in Tuttukkudi district.

     [கங்கன் + குளம் – கங்கன்குளம். கங்கன் பெயரிலமைந்த சிற்றுர்]

கங்கபத்திரம்,

கங்கபத்திரம், kaṅgabattiram, பெ.(n.)

   1. பருந்தினிறகு; kite’s feather.

     “கங்கபத்திர நன்னீழல்” (இரகு, நாட்டுப்.59);.

   2. அம்பு (திவா.);; arrow winged with the feathers of a kite or heron.

க. கங்கபத்ர ம. கங்கபத்ரம்.

     [கொங்கு = பறவையின் வளைந்த அலகு அலகுடைய பறவை கொங்கு →கொங்க → கங்க பத்திரம். வ. பத்ர → த. பத்திரம் = இலை, இறகு இறகுசெருகிய அம்பு. கங்கம் = பருந்து]

கங்கபாடி,

கங்கபாடி, kaṅgapāṭi, பெ.(n.)

   கங்கவரசர் ஆண்ட நாடு; name of the southern part of the Mysore province which was ruled over by the kings of the Ganga dynasty. ‘வேங்கை நாடுங் கங்கபாடியும்” (S.I.I.i.94);.

     [கங்கர்+பாடி]

கங்கமரபினர் குவலாளபுரத்தைத் (கோலார்); தலைநகராகக் கொண்டு கங்க நாட்டை (கங்கபாடி); ஆண்டுவந்தனர். கங்கபாடி 96000 என்று கங்கர்களின் செப்பேடுகளில் குறிக்கப்பெற்றுள்ளது. கங்கபாடி என்பது இன்றைய கருநாடக மாநிலத்தின் தென்பகுதி.

கங்கபாளையம்,

 கங்கபாளையம், kaṅgapāḷaiyam, பெ.(n.)

   கோயம்புத்தூர் மாவட்டத்துச் சிற்றூர்; a village in Coimbatore district.

     [கங்கன் + பாளையம் – கங்கன் பாளையம் – கங்கம்பாளையம் பாளையம் → படை தங்கிய இடம், பாடிவிடு. கங்கன் பெயரில் அமைந்த ஊர்.)

கங்கமநாய்க்கன்குப்பம்,

 கங்கமநாய்க்கன்குப்பம், kaṅgamanāykkaṉkuppam, பெ.(n.)

   கடலூர் மாவட்டத்துச் சிற்றூர்; a village in Cuddalore district.

     [கங்கள் → கங்கமன் + நாயக்கன் + குப்பம் – கங்கமநாயக்கன் குப்பம் தற்போது கங்கணங்குப்பம் என்று வழங்குகிறது.)

கங்கம்

கங்கம்1 kaṅgam, பெ.(n.)

   1. தீப்பொறி (வின்);; spark of fire.

   2.கோளக நஞ்சு (மூ.அ.);; a mineral poison.

ம. கங்கில்

     [கங்கு = தி கங்கு + அம் = கங்கம்.]

 கங்கம்2 kaṅgam, பெ.(n.)

   1. பருந்து; common kite.

     “கங்கவிப்படா நிழலும்” (இரகு.மிட்சி.48);.

   2. கழுகு (பிங்கு.);; eagle.

   க. கங்க;ம. கங்கம்.

     [கொங்கு → கங்கு → கங்கம் (வளைந்த மூக்குடையது]

 கங்கம்3 kaṅgam, பெ.(n.)

   சீப்பு (பிங்);; comb.

க. கங்கத.

     [கங்கு+அம்-கங்கம்=முனை. த.கங்கம் → Skt. karīgata.]

 கங்கம்4 kaṅgam, பெ.(n.)

   கங்க அரசமரபினரால் ஆளப்பட்ட தமிழ்நாட்டை அடுத்துள்ள ஒரு நாடு; name of a territory adjoining the Tamil country and ruled over by the Kangar.

கங்க மகதங்கடாரம் நன்.272.மயிலை.).

     [கங்கை→கங்கம். கங்கபாடி பார்க்க;see kanga. pādi.]

 கங்கம்5 kaṅgam, பெ.(n.)

   பெருமரம் (யாழ்.அக);; tooth leaved tree of heaven.

     [கங்கு = கருப்பு. கங்கு+அம் + கங்கம் = கரிய அடிப்பாகத்தைக் கொண்ட பெருமரம்]

 கங்கம்6 kaṅgam, பெ.(n.)

   இறப்பு; death (சா.அக.);.

     [கங்கு = தி அனல், நெருப்பு. கங்கு + அம் – கங்கம் = திப்பட்டு அழிவது போன்ற மறைவு, சாவு]

கங்கரம்,

 கங்கரம், kaṅgaram, பெ.(n.)

   மோர் (யாழ்.அக);; butter-milk.

     [கங்கு → கங்கல் → கங்கலம் → கங்கரம் = மெலிவு, இளக்கம், இளக்கமான மோர் த. கங்கலம்→ வ. கங்கரம்]

கங்கர்

கங்கர் kaṅgar, பெ.(n.)

   கி.மு.176 முதல் மகத நாடாண்ட மரபினர்; a ruling class in Magada.

     [கங்கம்-சுங்கள்].

மோரியரின் படைத்தலைவனாக இருந்த புசியமித்திரனால் உண்டாக்கப்பட்ட அரசமரபு.

 கங்கர்1 kaṅgar, பெ.(n.)

   கருநாடக மாநிலத்தின் குவலாளபுரம் (கோலார்);, தலைக்காடு ஆகிய ஊர்களைத் தலைநகராகக் கொண்டு நாடாண்ட அரசமரபினர்; name of a dynasty of kings who formerly ruled over a portion of Karnataka territory with Kolar and Thalaikkadu as their capitals.

     “பங்களர் கங்கர் பல்வேற் கட்டியர்’ (சிலப்.25:157);.

     [கங்கை → கங்கர் கங்கைப்பகுதியில் வாழ்ந்த தமிழ் வேளாளர்.]

கங்கமரபினர் பண்டைக்காலத்தில் கி.மு.7ஆம் நூற்றாண்டு வரை கங்கைப்பகுதியில் வாழ்ந்திருந்து பின்னர்த் தென்னாட்டில் பல மாநிலங்களில் குடியேறிக் கங்கமரபினர் என்னும் பெயர் பெற்றனர். தமிழகத்தில் குடியேறியோர் கங்கைக்குல வேளாளர் என்று அழைக்கப்பெற்றனர். – பினான சிற்றரசர் – க் காலத்திலேே த்திற் சிறந்து பெயர் பெற்றவராயிருந்தனர்.

     “நன்ன னேற்றை நறும்பூ ணத்தி துன்னருங் கடுந்திறற் கங்கன் கட்டி” (அகநா.44);

     “பங்களர் கங்கர் பல்வேற் கட்டியர்” (சிலப்.25:157);

எனப் பழைய நூல்கள் கூறுதல் காண்க

இக்கங்க மரபைச் சேர்ந்தவனே, 12ஆம் நூற்றாண்டில் மூன்றாங் குலோத்துங்க சோழன் காலத்தவனும், அமராபரணன் ஸ்ரீமத் குவலாளபுரப் பரமேசுவரன்’, ‘கங்ககுலோற்பவன்’ என்று தன் மெய்க்கீர்த்திகளில் பாராட்டப்பெறுபவனும், பவணந்தி முனிவரைக் கொண்டு நன்னூலை ஆக்குவித்தவனும் ஆகிய சீயகங்கன் என்பவன். (திரவிடத்தாய்,பக்.58,59);.

 கங்கர்2 kaṅgar, பெ.(n.)

   1. பக்குவப்படாத கக்கான்கல்; kankar limestone, ån impure concretionary carbonate of lime.

   2. பருக்கைக்கல்,

 gravel.

மறுவ ஓடைக்கல், கண்ணாம்புக்கல்.

   க. கங்கரெ;   ம.கங்கா;   தெ.கங்கர; Skt, karkara (hard, firm);;

 Pkt. Kakkara;

 Mar., Guj. kaňkara;

 Beng. kankara, H.-kankar.

     [கொங்கு = கூர், கூர்முனை. கொங்கு → கங்கு + அல் – கங்கல் → கங்கர் கங்கர் = கூர் முனை அல்லது விளிம்பு கொண்ட கல்வகை சாம்பல் → சாம்பர் என்றாற் போன்று கங்கல் → கங்கர்” என ஈற்றுப் போலியாயிற்று]

கங்கலப்பம்பாளையம்,

 கங்கலப்பம்பாளையம், kaṅgalappambāḷaiyam, பெ.(n.)

   கோயம்புத்தூர் மாவட்டத்துச் சிற்றூர்; a village in Coimbatore district.

     [கங்கல் + அப்பன் + பாளையம், கங்கலப்பன் பாளையம் → கங்கலப்பம் பாளையம். அப்பன்’ என்பதன் ஈற்று னகரம் மகரமாகத் திரிந்தது. கங்கல் ஊரினனாகிய கங்கலப்பனின் பெயரிலமைந்த ஊராகலாம்]

கங்கலி,

 கங்கலி, kaṅgali, பெ.(n.)

   பருந்து வகை; a kind of kite (சா.அக);.

     [கங்கு → கங்கல் → கங்கலி = சிறிய பருந்துவகை]

கங்கல்

கங்கல்1 kaṅgal, பெ.(n.)

   துண்டுக்கயிறு; a short rope.

   தண்ணிர் மட்டம் இறங்கிவிட்டது;தாம்புக் கயிற்றுடன் ஒரு கங்கலைச் சேர்த்துக்கொள் (உ.வ.);.

     [கங்கு → கங்கல், கங்கு = ஒரம், விளிம்பு சிறியது]

மீன்பிடிவலையின் அடிப்பகுதி கடலடித்தரையில் படியாத நிலையில் கங்கல் சேர்த்து அவ் வலையைத் தரைவரை எட்டச்செய்வது நெல்லை மீனவர் வழக்கு.

மாட்டைக் கட்டி மேய்க்கும் பொழுது கயிற்றின் நீளத்தைத் தான் விரும்பும் எல்லைவரை எட்டச்செய்யக் கங்கல் இணைத்து மேயச்செய்வது வேளாளர் வழக்கு.

கிணற்றிலிருந்து நீரிறைக்கும் பொழுது நீர் இருக்கும் எல்லையைக் கயிறு எட்டாத நிலையில் அதனுடன் கங்கல் இணைத்து நீரிறைப்பது உலக வழக்கு இதுபோல் பல்லாற்றானும் கயிற்றின் நீளத்தை நீட்டிக்கக் கங்கல் துண்டுக் கயிறு) பயன்படுமாற்றைக் காண்க

 கங்கல்2 kaṅgal, பெ.(n.)

   மாலை மயங்கிய இருள் அல்லது வைகறை; dusk or dawn.

     [கங்குல் → கங்கல் = கருக்கல், இருட்டான விடியற்காலை]

கங்கல்கருக்கல்,

 கங்கல்கருக்கல், kaṅgalkarukkal, பெ.(n.)

   எற்பாடும் வைகறையும்; dusk and dawn.

     [கங்கல் + கருக்கல். கங்குல் → கங்கல் = மாலைப்பொழுது, இரவு. கருக்கல் = காலை இருள். கங்கல்கருக்கல் – எதுகைநோக்கி வந்த மரபிணைமொழி]

கங்கள வேடக்கும்பி

 கங்கள வேடக்கும்பி kaṅkaḷavēṭakkumpi, பெ.(n.)

கும்மிப்பாட்டின் ஒர் ஆய்வு:

கங்களன்.

 கங்களன். kaṅgaḷaṉ, பெ.(n.)

   பார்வையிழந்தவன், குருடன் (கருநா.);; blind man.

க. கங்கள

     [கண் + (களை); கள + அன்]

கங்கவரம்,

 கங்கவரம், kaṅgavaram, பெ.(n.)

   விழுப்புரம் வட்டத்துச் சிற்றூர்; a village in Villuppuram district.

     [கங்கன்+புரம் – கங்கபுரம் → கங்கவரம் புரம் என்னும் இடப்பெயரிறு வரம் எனத் திரிந்தது.]

கங்கவள்ளி,

 கங்கவள்ளி, kaṅgavaḷḷi, பெ.(n.)

   சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டத்தில் உள்ள ஊர்; a willage in Attur taluk in Salem district.

     [கங்கள் + பள்ளி – கங்கன்பள்ளி → கங்கன்அள்ளி – கங்கவள்ளி த. பள்ளி → க. அள்ளி பள்ளி = சிற்றுர்]

கங்காணம்,

 கங்காணம், kaṅgāṇam, பெ..(.n) கண்காணம் பார்க்க;see kangănam.

ம. கங்காணம்

     [கண்காணம் → கங்காணம்]

கங்காணி

கங்காணி kaṅkāṇi, பெ.(n.)

கால் காணி:

   1/4 measure.

     [கால்+காணி]

 கங்காணி1 kaṅgāṇi, பெ.(n.)

   1 சிற்றூர் ஆட்சி அலுவரின் பணியாளர்; the menial of the village administrator.

   2. ஊரிலுள்ள விளைநிலங்களின் எல்லையறிந்தவன்; one who knows the topography of a village.

     [கங்கு + காணி, கங்கு = எல்லை, ஒரம், விளிம்பு காணி = மேற்பார்ப்பவன்.]

 கங்காணி2 kaṅgāṇi, பெ.(n.)

கண்காணி பார்க்க; see kankani.

திருமாகேசுவரக் கங்காணி’ (S.I.I.iii.43);.

ம. கங்காணி

     [கண் + காணி – கண்காணி → கங்காணி]

கங்கான்,

 கங்கான், kaṅgāṉ, பெ.(n.)

   எலும்பும் தோலுமாய் மெலிந்தவன்; a skeleton like person.

     [கங்காளம் (எலும்பு); + கங்காளன் → கங்கான்.]

கங்காபுரம்

கங்காபுரம்1 kaṅgāpuram, பெ.(n.)

கங்கைகொண்ட சோழபுரம் பார்க்க; see kangal. konda-cola-puram.

குளிர்பொழில்சூழ் கங்காபுர மாளிகை (தண்டி.95.14 உரை);.

     [கங்கை + கொண்ட + சோழபுரம் – கங்கை கொண்ட சோழபுரம் → கங்காபுரம் (மரு.உ);]

 கங்காபுரம்1 kaṅgāpuram, பெ.(n.)

Three_Space>ஈரோடு மாவட்டம், ஈரோடு வட்டத்துச்சிற்றுர்; a willage in Erode taluk in Erode district.

     [கங்கன் + புரம் – கங்கன்புரம் → கங்காபுரம் கங்கன் பெயரிலமைந்த சிற்றுார்]

கங்காமணியம்மாள்,

 கங்காமணியம்மாள், kaṅgāmaṇiyammāḷ, பெ.(n.)

   மீனவர் வணங்கும் பெண்தெய்வம் (செங்கை மீனவ.);; a Goddess worshipped by the fishermen,

     [கங்கை + மணி + அம்மாள்.]

கங்காரு,

கங்காரு, kaṅgāru, பெ.(n.)

   தாவிச்செல்வதற்கேதுவாய் நீண்ட பின்னங்கால்களையும் குட்டையான முன்னங்கால்களையும் உடைய, உருவில் பெரிய ஆத்திரேலியப் புல்லுண்ணி விலங்கு; a large Australian herbivorous marsupial (family Macropoclidal); with short forelimbs, very long hindlegs and great leaping power, kangaroo.

ம. கங்கரு

     [காண்கு + அருது – காண்கருது → காண்கரு → கங்காரு எனத் திரிந்த திரிபாகலாம். இன்றும் கொங்கு நாட்டுப்புறவழக்கில் நான் பார்க்கவில்லை என்பதை நான் காங்கலெ எனக் குறிப்பிடுவதைக் கேட்கலாம்.]

கங்காரு என்னும் சொல் ஆத்திரேலியப் பழங்குடிகளின் மொழியில் தெரியாது எனப் பொருள்படும். அவர்கள் தமக்குத் தெரியாது எனச் சொல்லிய சொல்லையே இவ் விலங்குக்குப் பெயராகத் தவறுதலாகச் சூட்டியதால் அதுவே பெயராக நிலைபேறடைந்தது என்பர். ஆத்திரேலியப் பழங்குடிகளின் மொழிகள் தமிழொடு தொடர்புடையன என ஆய்வாளர் J.C. Prichard – 1847 and Cold well – 1856 பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுவிலேயே கண்டறிந்துள்ளனர்.

     “All Australian oborigines are supposed to be descended from Dravidians who migrated about 15,000 years ago from India and Ceylon”-Doglas Lockwood.

     “We the Aborigines”, Cassels, Australia, 1963.

     “Only the Dravidian suggestion deserves to be taken at all seriously” as regards the affinity of Australian Languages -R.M.W. Dixon:

     “The Languages of Australia”, Cambridge University Press, 1980.

கங்காளன்

கங்காளன்1 kaṅgāḷaṉ, பெ.(n.)

   சிவன்;Šivā.

     [கங்காளம்1 → கங்காளன்.]

கங்காளன்,

 கங்காளன், kaṅgāḷaṉ, பெ.(n.)

   துருசு; blue vitriol, Copper-Sulphate.

     [கங்கு → கங்காள் → கங்காளன்.]

கங்காளமாலி,

 கங்காளமாலி, kaṅgāḷamāli, பெ.(n.)

   எலும்புமாலை அணிந்த சிவன்;Śiva who wears garland of bones.

   ம.கங்களாமாலி; Skt. Karikálamálin

     [கங்காளம் + மாலி மாலையாகக் கொண்டவன் மாலி ‘இ’ உடைமை ஈறு]

கங்காளமூலி,

 கங்காளமூலி, kaṅgāḷamūli, பெ.(.n)

   சிவகரந்தை (கரந்தையில் ஒருவகை);; Ceylon toolsy.

     [கங்கான் + மூலி, மூலி = மூலிகை.]

கங்காளம்

கங்காளம் kaṅkāḷam, பெ.(n.)

   சிற்பங்களில் உள்ள தோளணி; armlet of statue.

     [கங்கு+ஆளம்]

 கங்காளம்1 kaṅgāḷam, பெ.(n.)

   பித்தளை அல்லது வெண்கலத்தாலான ஏனம்; large metalvessel generally of brass or bronze for holding water etc.

   ம. கங்ஙானம் (சமைக்கப் பயன்படுத்தும் ஏனம்);;க. கங்காள தெ. கங்காளமு.

     [கொங்கு → கங்கு → கங்காளம் = வட்டமான பெரிய ஏனம்]

 கங்காளம்2 kaṅgāḷam, பெ.(n.)

   1. தசைகிழிந்த உடலின் எலும்புக்கூடு (திவா);; skeleton,

   2. பிணம்; dead body.

ம. கங்காளம்

     [கங்காளம் → கங்காளம் கங்காளம் = பெரிய ஏனம் உடம்பை ஒரு மட்பாண்டத்திற்கு ஒப்பிடுதலின் உடலையும் எலும்பையும் குறித்தது. த.கங்காளம்→ Skt. kaskåla (skeleton);]

கங்காளி

கங்காளி1 kaṅgāḷi, பெ.(n.)

   1. மாகாளி (பிங்.);; Kal being the consort of Kangălan.

   2. மலைமகள்; Parvati

     “மலைமாது கங்காளி” (மறைசை.17);.

ம. கங்காளி

     [கங்காளன் → கங்காளி = எலும்பு மாலை அணிந்த (சிவன்); கங்காளன் மனைவி த. கங்காளி →Skt, kankali);

 கங்காளி2 kaṅgāḷi, பெ.(n.)

   1. ஏழை; poor.

   2. இரவலன்; miserable person, begger.

   க. கங்காலி;   தெ.கங்காளி; Skt, kankala (Sekeleton);;

 Beng., Nep. kangāl;

 Ori., Pkt kangāla;

 Persn. kangalah (whore monger, miser);;

 U. kangal;

 Mar., H kańgāli.

     [அங்கம் = எலும்பு அங்கம் → கங்கம் + ஆளி கங்காளி (எலும்புமாலை அணிந்தவன்);. எலும்புமாலை அணிந்த சிவன். இரந்துண்பவன் என்னும் பொருளில் இச்சொல் இரவலனையும் ஏழையையும் குறித்தது]

கங்காள்,

 கங்காள், kaṅgāḷ, பெ.(n.)

மெலிவு, வலுவின்மை,

 weak, feeble.

க. கங்காடு

     [கங்காளம் → கங்காள்]

கங்கில்

கங்கில்1 kaṅgil, பெ.(n.)

   1. காளம் என்னுங் குழலிசைக் கருவியின் உறுப்புகளுளொன்று; apart of the trumpet.

கங்கில் ஒன்றும் குழல் இரண்டும் மோதிரம் ஐஞ்சும் உடைய பொன்னின் காளங்கள்

   2. விளக்குத்திரியின் கரிந்த பகுதி; burnt part of the wick in a lamp.

ம. கங்கில்

     [கங்கு → கங்கில் = குழலில் தீச்சுட்ட பகுதி காளத்தின் துளைப்பகுதி]

 கங்கில்2 kaṅgil, பெ.(n.)

   மீன்பிடிவலை மிதக்க உதவும் மரக்கட்டைகளை வலையோடு சேர்த்துக் கட்டும் கயிறு; cord used for tieing pieces of wooden blocks in fishing nets (G&JET);.

     [கங்கல் → கங்கில் கங்கல் = துண்டுக்கயிறு.]

கங்கிளவு

 கங்கிளவு kaṅgiḷavu, பெ.(n.)

   நாற்றுநட்டபிறகு பாயும் முதல் நீர்; first irrigation water after transplantation of seedlings.

கங்கு

கங்கு kaṅku, பெ.(n.)

கதிரினின்று தவசமணிகள் நீக்கப்பட்ட பகுதி,

 ear of corn without grains.

     [கல்-கங்கு(கருப்பு நிறமுடையது);]

 கங்கு1 kangu, பெ.(n.)

   1. எல்லை (ஈடு,5.4:7);; limit, border.

     “எம்மோராக்கக் கங்குண்டே” புறநா:39625).

   2 வயல்வரம்பு; ridge to retain water in paddy fields.

     “கங்குபயில் வயல்” (சேதுபு திருநாட்66);,

   3. வரப்பின் Lööln (filout);; side of a bank or ridge.

நீரைத் தடுக்கக் கங்கு மண்ணை வெட்டிப்போடு (உவ);.

   4. அணை; dam,

     “கங்குங் கரையுமறப் பெருகுகிற” (திவ்.திருப்பா.8 வியா, 108);.

   5. வரிசை; row, regular order.

     “கங்குகங்கய் முனைதரப் பொங்கி” (இராமநா. ஆரணி.14);,

   6. பனைமட்டையின் அடிப்புறம் (யாழ்ப்.);; base of palmyra stem.

பனைமரத்தில் ஏறினால் கங்கு கையைக் கிழிக்கும் (உ.வ.);.

ம. கங்கு கோத. கக்

     [கள் = துண்டு, சிறிது கள் → கங்கு = சிறிதாக முனையாக இருக்கும் ஒரம், விளிம்பு)

 கங்கு2 kangu, பெ.(n.)

   1. தீப்பொறி, கனல்துண்டு; cinder, glowing coal.

அடுப்புக்கங்கை முழுவதுமாய் அணைத்துவிடு (உவ);.

   2. அம்மைநோய்; a kind of smallpox.

ம. கங்கில், கங்கல், கங்ாவில். (விளக்குத் திரியின் எரிந்த பகுதி);

     [காங்கு → கங்கு (வேக185.);

 கங்கு3 kaṅgu, பெ.(n.)

   துண்டு; shred, piece.

சீலை கங்குகங்காய்க் கிழிந்துபோயிற்று (உவ);.

     [கள் → கங்கு கள் = சிறியது, துண்டு.]

 கங்கு4 kaṅgu, பெ.(n.)

   1. கழுகு; eagle.

     “நரிகள் கங்கு காகம்” (திருப்பு:120);.

   2. பருந்து (சூடா);; kite.

     [கொங்கு → கங்கு கொங்கு = வளைந்த அலகு வளைந்த அலகுடைய பறவை த. கங்கு → Skt, kanka.]

 கங்கு5 kaṅgu, பெ.(n.)

   1. கருப்பு; black.

   2. கருந்தினை(பிங்.);; black talian millet.

   3. கருஞ்சோளம்; black jowar,

மாட்டுக்குத் தீனியாகு மென்று கங்கு விதைத்துள்ளேன் (உ.வ);.

ம. கங்கு க. கங்கள குருடன்).

     [கள் – கருப்பு. கள் → (கண்); → கண்கு → கங்கு = கருந்தினை (வேக124); த. கங்கு Skt, kangu.);

 கங்கு6 kaṅgu, பெ.(n.)

சினம், சீற்றம்: anger, சண்டைக்குப் பின்னும் கங்கு மனத்தில் பதிந்துள்ளது (உ.வ.);.

க. கங்கு, கங்காரு, கங்காலு.

     [காங்கை → காங்கு → கங்கு காங்கை = அனல், வெப்பம், அனல்போன்ற சிற்றம்]

 கங்கு7 kaṅgu, பெ.(n.)

   1. வரகு போன்றவற்றின் உமி; husk, as of millet.

   2.கம்புபோன்ற பயிர்களின் கதிர்; ear ofgrain.

கம்பு கங்கு விட்டுள்ளது (உ.வ);.

க. கங்கு கங்கி, தெ. கங்கி (தவசக் கதிர்);.

     [கொங்கு → கங்கு]

கங்குகட்டு-தல்

 கங்குகட்டு-தல் kaṅkukaṭṭutal, செகுன்றாவி. (v.t.)

   பாய் நெசவு செய்த பின்னர் அதன் ஆரங்களைச் சீவி மடித்துக் கட்டுவது; to stitch the edge of a mat after plaiting.

     [கங்கு+கட்டு]

கங்குகரை,

கங்குகரை, gaṅgugarai, பெ.(n.)

   1 வரம்பு, எல்லை,

 bank, shore, limit.

     “கங்குகரை காணாத கடலே” (தாயுமான.1);.

   2. எண்ணிக்கை; number.

     [கங்கு கரை. கங்கு, கரை என்னும் இரு சொற்களும் ஒரு பொருளைக் குறித்து நின்ற இணைமொழி, கங்கு = நிலத்தின் எல்லை, வரம்பு. கரை = நீர்நிலையின் எல்லை, வரம்பு]

கங்குக்கூடு,

 கங்குக்கூடு, kaṅgukāṭu, பெ.(n.)

   தச்சுக் கருவி வகை; carpenter’s instrument.

மறுவ வருவு (வரைவு);.

     [கங்கு கூடு. கங்கு = கூரிய விளிம்பு. கங்குக்கூடு = கூரிய விளிம்புள்ள அலகு கொண்ட தச்கக்கருவி. பலகையை இழைப்பதற்கும், குறைப்பதற்கும் தேவையான அளவைக் கோடிட்டுக் காட்டப் பயன்படும் கருவி.]

கங்குட்டம்,

கங்குட்டம், kaṅguṭṭam, பெ.(n.)

   1. ஒருவகைக் காவி. இது 64 கடைச் சரக்குகளுள் ஒன்று; a kind of Indian red earth. It forms one of the 64 bazaar drugs described in Tamil medicine.

   2. மிருதாறுசிங்கு எனும் நஞ்சுவகை; a kind of poison from lead (சா.அக.);.

     [கங்கு = கருமை. கங்குள் → கங்குடு → கங்குட்டம்]

கங்குணம்,

 கங்குணம், kaṅguṇam, பெ.(n.)

   நான்முகப் புல்; a kind of grass which has four edges.

     [கங்கு = விளிம்பு பக்கம். கங்கு → கங்குணம்]

கங்குணி,

 கங்குணி, kaṅguṇi, பெ.(n.)

கங்குளி பார்க்க;see kańguli.

     [கங்குளி → கங்குணி]

கங்குநீர்

 கங்குநீர் kaṅkunīr, பெ.(n.)

   மூன்றாம் நாள் நாற்றங்காலுக்குப்பாய்ச்சும் நீர்; irrigating to afield on third day of transplantation.

     [கங்கு+நீர்]

மறுவ. எடுப்பு நீர்

கங்குநோய்,

கங்குநோய், kaṅgunōy, பெ.(n.)

   கொப்புளநோய் வகையில் ஒன்று(சீவரட்.144);; small blisters on the skin, resembling grains of millet.

     [காங்கு → கங்கு நோய்]

கங்குனி,

 கங்குனி, kaṅguṉi, பெ.(n.)

   வாலுளுவை மரம்; intellect tree (சா.அக.);.

     [கங்குளி → கங்குனி]

கங்குனிறம்,

 கங்குனிறம், kaṅguṉiṟam, பெ.(n.)

   கறுப்பு நிறம்; black colour.

     [கங்குல் + நிறம் கங்கு → கங்குல் = கரிய இரவு, கருமை நிறம்]

கங்குபத்திரம்

 கங்குபத்திரம் kaṅkupattiram, பெ.(n.)

   அம்பு; arrow.

     [கங்கு+பத்திரம்]

கங்குபுரட்டியடி-த்தல்

 கங்குபுரட்டியடி-த்தல் kaṅkupuraṭṭiyaṭittal, செ.குன்றாவி (v.t.)

   நெற்கதிரை சாய்த்து அடித்தல்; to thrash paddy on stalk on the ground.

     [கங்கு+புரட்டி+அடி]

கங்குப்பனை,

கங்குப்பனை, kaṅguppaṉai, பெ.(n.)

   1. அடியிற் கருக்குச் சூழ்ந்த பனை (யாழ்ப்);,

 rough palmyra tree that is difficult to climb.

   2. அடுக்குப்பனை; a species of palm tree. (சா.அக.);

     [கங்கு + பனை.]

கங்குப்பலா,

 கங்குப்பலா, kaṅguppalā, பெ.(n.)

காட்டுப் பலா jungle jack (சா.அக.);.

     [காங்கு = வெப்பம், கானல், காங்கு → கங்கு + பலா]

கங்குமட்டை,

 கங்குமட்டை, kaṅgumaṭṭai, பெ.(n.)

   பனையின் அடிக்கருக்கு (வின்.);; base of a palmyra leaf-stalk encircling the tree.

     [கங்கு + மட்டை]

கங்குரு,

 கங்குரு, kaṅguru, பெ.(n.)

   கண்கட்டி; sty in the eye.

ம. கங்குரு

     [கண் + குரு – கண்குரு → கங்குரு]

கங்குர்,

 கங்குர், kaṅgur, பெ.(n.)

   தினை; millet (சா.அக);.

     [கங்கு + கங்குர்]

கங்குற்கிறை,

கங்குற்கிறை, kaṅguṟkiṟai, பெ.(n.)

   1. திங்கள் விரும்பி (சந்திரகாந்தி);:

 moon flower.

   2. திங்கள் (சா.அக.);; the Moon.

     [கங்குல் + இறை தலைவன்)]

கங்குற்சிறை,

 கங்குற்சிறை, kaṅguṟciṟai, பெ.(n.)

   இராக்காவல் (வின்.);; watch or guard kept during night.

     [கங்குல் + சிறை]

கங்குல்

கங்குல்1 kaṅgul, பெ.(n.)

   1.இரவு; night.

     ”நள்ளென் கங்குலும் வருமரோ” நற்.145:10,

   2. இருட்டு; darkness.

   3. தாழி (பரணி); நாண்மீன் (வின்);; the second star.

     [கங்கு’ → கங்குல் = கரிய இரவு இருட்டு]

 கங்குல்2 kaṅgul, பெ.(n.)

   எல்லை (சங்.அக);; ridge, boundary.

     [கங்கு’ → கங்குல்.]

கங்குல்வாணர்,

கங்குல்வாணர், kaṅgulvāṇar, பெ.(n.)

   1. இரவில் விலங்குகளை வேட்டையாடுவோர்; those who go for hunting during night hours.

   2. இரவில் திரியும் அரக்கர்; as those who usually carry on their activities during the night time.

     “கங்குல் வாணர்தங் கடனிறப்பதே” (பாரத.வேத்திர,11);,

     [கங்குல் + வாழ்நர் வாழ்நர் → வாணர்]

கங்குல்விழிப்பு

கங்குல்விழிப்பு kangu-vilippu, பெ.(n.)

   1. கூகை (யாழ்.அக);; rock horned-owl.

   2. கோட்டான்; the small screech-owl (சா.அக.);.

     [கங்குல் + விழிப்பு ( = இரவில் விழித்திருப்பது);]

கங்குல்வெள்ளத்தார்,

கங்குல்வெள்ளத்தார், kaṅgulveḷḷattār, பெ.(n.)

   குறுந்தொகை 387 ஆம் பாடல் ஆசிரியர்; author of verse 387 of Kurundogai.

     [கங்குல் + வெள்ளத்தார். கங்குல்வெள்ளம் என்ற தொடரால் பெற்ற பெயர்]

   பிரிவிடை வருந்திய தலைவி, செயலறுதற்குரிய மாலைக் காலத்தையும் ஒருவாறு நீந்துவோம்;ஆயின் நீந்திக் கரைகாண இயலாததாக இரவு இருக்கிறது,என்று துன்பப்படுவதாக இரவை வெள்ளமாக உருவகப்படுத்திக் கங்குல்வெள்ளம் என்ற தொடரை நயம்படப் பெய்துள்ளார். கங்குல் = இரவு.

கங்குளி,

 கங்குளி, kaṅguḷi, பெ.(n.)

   சிறுவாலுளுவையரிசி; the arm pit (சா.அக.);.

க. கங்குழ், கங்குழ, கங்குழு, கவுங்குழ், கொங்கழ், கொங்கழ து. கங்குள தெ. சங்கெ சங்கிலி பட கக்குவ

     [அக்குள் → கக்குள் → கங்குள் → கங்குழ்]

 கங்குளி, kaṅguḷi, பெ.(n.)

சிறுவாலுளுவையரிசி,

 the seed of the spindle tree (சா.அக.);.

     [கங்கு → கங்குளி கங்கு = கூர்மை]

கங்குவடலி,

 கங்குவடலி, kaṅguvaḍali, பெ.(n.)

   அடிக்கருக்குள்ள மட்டைகள் சூழ்ந்த இளம் பனைமரம்; young palmyra with the dried leaves still adhering to its trunk (சா.அக.);.

     [கங்கு + வடலி]

கங்கை

 கங்கை kaṅkai, பெ.(n.)

   கிளித்தட்டு விளையாட்டில் உட்காருவதற்கான இடத்தை அடையாளப்படுத்த போடப்படும் வட்டம்; to identifyone”s round-place in a game coco.

     [கொங்கு-கங்கு-கங்கை]

கங்கை மொள்ளு-தல்

 கங்கை மொள்ளு-தல் kaṅkaimoḷḷutal, செ.கு.வி. (v.i.)

   ஏரித் தண்ணிரைக் குடத்தில் நிரப்பி அருளாடி (சாமியாடி); வருதல்; the lake water in a pot and dance with a divines grace.

     [கங்கை (நீர்); + மொள்]

கங்கை,

கங்கை, kaṅgai, பெ.(n.)

   1. நீர்; water.

கங்கை தூவி (மேகம்); (யாழ்.அக.);

   2. ஆற்றைக் குறிக்கும் பொதுப்பெயர்; river.

     “உவரிமிசைக் கங்கைகள் வந்தெய்தும்” (கந்தபு:தாரக37);.

   3. பனிமலை இமய மலை)யில் கங்கோத்திரி என்னுமிடத்தில் தோன்றி வங்கக்கடலில் கலக்கும் ஆறு,

 the river which orginates at Gangotriof Himalyan mountain and ends at Bay of Bengal, river Ganges.

     “usinusong, யெல்லாம் சென்றுணக் கங்கைக் கரைபொரு மலிநீர்” (புறநா.1616);.

   ம.கங்க;க.கங்கெ; Skt., Nep. gangā.

     [அம் = நீர் அம்_→ கம் + கை = கங்கை கை – சொல்லாக்க ஈறு.]

நீரைக் குறித்த சிறப்புப் பெயர், ஆற்றுப் பொதுவிற்கும், வெள்ளம் பெருக்கெடுத்தோடும் ஆற்றுக்கும், கங்கைக்கும் ஆகிவந்துள்ளது.

ஒ.நோ. கம் = நீர், கம் + அம் – கம்மம் (நன்செய் உழவுத்தொழில்);. கம் என்னும் நீரைக் குறித்த சொல் ‘அம் ஈறு பெற்று உழவுத்தொழிலைக் குறித்தது போல, இச் சொல் ‘கை’ ஈறு பெற்றுக் கம் கை – கங்கை எனத் திரிந்து நீர்ப்பெருக்கான ஆற்றையும் நீர்நிலையையும் கட்டியது.

கங்கை என்பதற்கு வடமொழியில் ‘கம் (gam); என்னும் வேர்ச்சொல்லைக் காட்டி, விரைந்து செல்வது (swiftgoer); என்று மானியர் வில்லியம்க காரணம் காட்டியிருப்பது பொருந்தாது. எல்லா ஆறுகளும் விரைந்து செல்வனவே.

கங்கை என்பதற்கு நீர் என்னும் பொருளும் வடமொழியில் இல்லை. கங்கை தூவி (மேகம்);, கங்கை சாற்றி (மணித்தக்காளி, கங்கைப்பாலிலை (கள்ளி போன்ற சொற்களில் கங்கை, நீர் என்னும் பொருளில் ஆளப்பட்டிருத்தல் காண்க.);

கங்கைகுலம்,

 கங்கைகுலம், gaṅgaigulam, பெ.(n.)

   கங்கைச் சமவெளியிலிருந்து வருந்து குடியேறியதாகக் கூறப்படும் வேளாளர்குலம்; the Vēlāla tribe, who claim to have migrated from the Gangetic region.

     [கங்கை + குலம் – கங்கைகுலம். கங்கைச் சமவெளியிலிருந்து தென்னாடு நோக்கி வந்தவராகக் கங்கை குல வேளாளர் கருதப்படினும், தமிழ்நாட்டிலிருந்து வடநாடு முழுவதும் பரவி வாழ்ந்து காலப்போக்கில் தென்னகம் திரும்பிய ஒருசாரார் என்பதே இதன் பொருள்.]

கங்கைகொண்டசோழச்சேரி,

கங்கைகொண்டசோழச்சேரி, gaṅgaigoṇṭacōḻccēri, பெ.(n.)

   இலால்குடி வட்டம் ஆலம்பாக்கம் அருகிலிருந்த ஒரூர்; a village near Alambakkam near Lalgudi.

     “ஸ்ரீ கங்கை கொண்ட சோழ சேரி சிறு கொட்டையூர் தத்தந்” (தெ.இ.கல்.தொ.26. கல்.769);.

     [கங்கை + கொண்ட + சோழன் + சேரி]

கங்கைகொண்டசோழன்

கங்கைகொண்டசோழன் kangai-konda-colan, பெ.(n.)

   முதலாம் இராசேந்திரசோழன் (கலிங்.223);; a Cõla king, who conquered the Gangetic region.

     [கங்கை + கொண்ட + சோழன்]

கங்கை வரை படையெடுத்து வென்றவனாதலின் இப் பெயர் பெற்றான். இவனைத் தென்னாட்டு நெப்போலியன் என்றும் வரலாற்று ஆசிரியர் சிறப்பித்துக் கூறுவர்.

கங்கைகொண்டசோழபுரம்,

 கங்கைகொண்டசோழபுரம், gaṅgaigoṇṭacōḻpuram, பெ.(n.)

   முதலாம் இராசேந்திர சோழன் காலத்திருந்து சோழமன்னர்களின் தலைநகராகத் திகழ்ந்ததும் உடையார்பாளையத்திலிருந்து பத்துக்கல் தொலைவிலமைந்துமான ஓர் ஊர்; capital of the Chola kings from the time of Rajendra-I, a town about ten miles from Udaiyār-palaiyam.

     [கங்கை + கொண்ட + சோழன் + புரம்]

கங்கைப்பகுதியை வென்றதால் இராசேந்திர சோழனுக்குக் கங்கைகொண்ட சோழன் என்னும் சிறப்புப் பெயரமைந்தது. அவனால் நிறுவப்பட்ட கோநகரம் கங்கை கொண்ட சோழபுரம்.

கங்கைகொண்டான்,

 கங்கைகொண்டான், gaṅgaigoṇṭāṉ, பெ.(n.)

கங்கைகொண்ட சோழபுரம் பார்க்க;see kangaikonda-Côla-puram.

     [கங்கை கொண்ட சோழபுரம் → கங்கை கொண்டான்.]

கங்கைக்குளியல்,

கங்கைக்குளியல், kaṅgaikkuḷiyal, பெ.(n.)

   1. கங்கையில் குளித்த பலனை அடைவதற்குச் செய்யும் கொடை; gift to obtain the spiritual benefit of a bath in the Ganges.

   2. விளக்கணிவிழா(தீபாவளி); அன்று செய்யும் எண்ணெய்க் குளியல்; oil bath on the Deepavali day.

     [கங்கை + குளியல்.]

கங்கைசாற்றி,

 கங்கைசாற்றி, kaṅgaicāṟṟi, பெ.(n.)

   மணித்தக்காளி (சா.அக.);; black night shade.

     [கங்கை + சாற்றி கங்கை = நீர் நீரார்ந்த பழம்.]

கங்கைதுவி,

 கங்கைதுவி, kaṅgaiduvi, பெ.(n.)

   முகில் (பாழ்.அக.);; cloud.

     [அம் = நீர் அம் → கம். கம் + கை – கங்கை = நீர், நீர்த்திரள், வெள்ளம் கங்கை + தூவி தூவு → தூவி]

கங்கைப்பாலிலை,

 கங்கைப்பாலிலை, kaṅgaippālilai, பெ.(n.)

   சதுரக்கள்ளி; square spurge (சா.அக.);.

     [கங்கை + பாலிலை = வெண்ணிறப் பாலினைக் கொண்டது.]

கங்கைமகன்,

கங்கைமகன், gaṅgaimagaṉ, பெ.(n.)

   1. முருகன்; Murugan.

   2.வீடுமன்; Bişmā.

மறுவ கங்கை மைந்தன்.

     [கங்கை + மகன். கங்கை = கங்கையாறு, கங்கைத்தேவி]

கங்கைமாத்திரர்,

கங்கைமாத்திரர், kaṅgaimāttirar, பெ.(n.)

   உத்தி பிரித்துச் சிறுவர் ஆடும் விளையாட்டில் ஒருசாரார்க்கு வழங்கிய பெயர் (தொல்,சொல்.165, சேனா.);; name given to one of two groups in a boy’s game of ancient times.

     [கங்கை + மாத்திரர். மாத்திரம் → மாத்திரர். மாத்தல் = அளவிடுதல், திறமையுடையவராதல்.]

கங்கைமாத்திரர் = கங்கையை அளவிடுபவர். மக்களால் அளவிடற்கரிய கங்கையினையும் அளவிட்டறியும் ஆற்றலுடையார் என்பதை விளக்க, கங்கை மாத்திரர் என்றார் (சேனாவரையர்);. இப் பெயர்கள் பட்டிபுத்திரர், கங்கைமாத்திரர் பண்டைக்காலத்துச் சிறார் விளையாடுங் காலத்துப் படைத்திட்டுக் கொண்ட பெயராம்

இக்காலத்தும் பலர் குழுமித் தம்மிற் கூடி விளையாடல் குறித்த போழ்தத்து அம் மகாரில் இருவர் தலைவராக நிற்க ஏனையோர் இருவர் இருவராகப் பிரிந்து தனியிடஞ் சென்று தம்மிற் பெயர் புனைந்து தலைவர்களை யண்மிக் காற்றைக்

கலசத்திலடைத்தவன் ஒருவன்’, ‘கடலைக் கையால் நீந்தினவன் ஒருவன் இருவருள் நுமக்கு யாவன் வேண்டுமெனவும் ‘வானத்தை வில்லாக வளைத்தவன் ஒருவன் ஆற்று மணலைக் கயிறாகத் திரித்தவனொருவன் இவருள் யாவன் நுமக்கு வேண்டுமெனவும். வினவுவர். அத் தலைவர்கள் இன்னின்னார் வேண்டுமென, அவர்கள் பகுதியிற் சேர்ந்து ஆடலியற்றுவர் என்க. ஆசிரியர் நச்சினார்க்கினியர், இளந்துணை மகார் தம்மிற் கூடி விளையாடல் குறித்த பொழுதைக்குப் படைத்திட்டுக் கொண்ட பெயர். அவை பட்டிபுத்திரர், கங்கைமாத்திரர்’ என்றதனாலும் இது நன்கு விளங்கும். (பாவாணர். தொல்,சொல்.165, அடிக்குறிப்பு);.

கங்கைமீட்டான்,

 கங்கைமீட்டான், kaṅgaimīṭṭāṉ, பெ.(n.)

   தண்ணீர்விட்டான் கிழங்கு; water-root (சா.அக.);.

     [கங்கை + மீட்டான். கங்கை = தண்ணிர்]

கங்கைமைந்தன்,

 கங்கைமைந்தன், kaṅgaimaindaṉ, பெ.(n.)

கங்கைமகன் பார்க்க;see kangai-magan.

     [கங்கை + மைந்தன் (மகன்);]

கங்கையம்மன்,

 கங்கையம்மன், kaṅgaiyammaṉ, பெ.(n.)

   சிற்றூர்ப் பெண்தெய்வம்; female village deity.

     [கங்கை + அம்மன்.]

ஆற்றினைப் பெண்ணாக உருவகிக்கும் மரபி னடிப்படையில் கங்கையம்மன் என்னும் தெய்வப் பெயர் உண்டாயிற்று.

கங்கையான்,

 கங்கையான், kaṅgaiyāṉ, பெ.(n.)

கங்கையாற்றை

   முடியில் கொண்டவனாகக் கருதப்படும் சிவன்; who is believed to be adorned with the river Ganga on his tuft.

     [கங்கை + ஆன்.]

கங்கையோன்,

 கங்கையோன், kaṅgaiyōṉ, பெ.(n.)

   துருக; blue vitriol (சா.அக.);.

     [கங்கு + கங்கை → கங்கையோன்.}

கங்கைவேணியன்,

 கங்கைவேணியன், kaṅgaivēṇiyaṉ, பெ.(n.)

   சிவன்;Šivā.

     [கங்கை + வேணியன், வேண்=சடை.)

கங்கொளி,

கங்கொளி, kaṅgoḷi, பெ.(n.)

   இருட்டில் ஒளிரும் மரம் (அசோகு);; a tree shining in darkness, luminous tree (&m.95);.

     [கங்குல் + ஒளி – கங்குல்ஒளி → கங்கொளி கங்குல் = இருள். கங்கொளி = இருளில் ஒளிர்வது]

கங்கோலம்,

 கங்கோலம், kaṅālam, பெ.(n.)

   வால்மிளகு; tail pepper (சா.அக.);.

     [கொங்கு + வாளம் → கொங்குவாளம் (வளைந்து நீண்டது → கங்கோலம் (கொ.வ.);]

கங்கோலை,

 கங்கோலை, kaṅālai, பெ.(n.)

   தென்னை மட்டையின் அடியோலை (தஞ்சை);; short leaves on the stalk of a coconut leaf.

கங்கோலை வாருகோல் நன்கு உழைக்கும்.

     [கங்கு + ஒலை, கங்கு = விளிம்பு.]

கச-த்தல்

கச-த்தல் kasattal,    3 செ.கு.வி. (v.i)

   1. கைத்தல்; to taste bitter.

வேப்பங்காய் கசக்கும், வேப்பம் பழம் இனிக்கும் (உ.வ.);.

   2. வெறுப்படைதல்; to be embittered, as the mind, to be disgusted, alienated.

ம. கசய்க்குக

     [கள் → கய் → கய → கச, கய = கசப்பு]

கசகச-த்தல்

கசகச-த்தல் gasagasattal,    4 செ.குவி(v.i)

   1 இறுக் கத்தால் அல்லது புழுக்கத்தால் உடல் வியர்த்தல்,

 to feel uneasy from clamminess due to perspiration on account of heat or sultriness.

உடம்பெல்லாம் கசகசத்துப் போயிற்று (உ.வ.);.

   2. ஒழுங்காற்று ஒலித்தல் (வின்);; to sound rattle, as the crumpling offine paperto rustle.

கூட்டம் தொடங்கும் முன் உறுப்பினர்கள் கசகச வென்று பேசிக்கொண்டனர் (உவ);.

     [கச → கசகச → கசகசத்தல்.]

கசகசப்பு

கசகசப்பு gasagasappu, பெ. (n.)

   1. கசப்பு:

 bitterness.

   2. வெறுப்பு; aversion, hatred.

ம. கசகசப்பு

     [கச + கச – கசகச → கசகசப்பு]

கசகசவெனல்

கசகசவெனல் gasagasaveṉal, பெ. (n.)

   1.ஒலிக்குறிப்பு; onom. expression signifying rustling, gurging.

நேற்று முழுதும் கசகசவெனத் தூறலாக இருந்தது.

   2. வியர்வையால் பிசுபிசுப்பாக உணர்தல்; feel sticky with sweat.

உடம்பு கசகசக்கிறது (உவ);.

   3. செழிப்புக்குறிப்பு; affluence, prosperity.

அவருக்கு இப்போது கசகசவென்று நடக்கிற காலம் (வின்);.

     [கச + கச + எனல்]

கசகசா

கசகசா gasagasā, பெ. (n.)

   1. கசகசாச்செடி,

 poppy plant.

   2. கசகசாச் செடியின் விதை; seed of the white poppy plant (சா,அக,);.

   க.கசகசெ,கசகசி; Ar.,Mar. khaskhas.

     [கச்சு = சிறிது, சிறிய கச்சு → கச, கய் → கச மென்மை, இளமை, வெளிர்நிறம் கச + கச – கசகசா சிறியதும் வெண்மையாயுள்ளதுமான விதை, அவ் விதையைத் தரும் செடி. இவ் விதையினின்று பால்வரும்; எண்ணெயும் எடுக்கலாம். கசகசாவெண்ணெய் மருந்திற்குப் பயன்படும்.]

கசகசாநெய்

 கசகசாநெய் gasagasāney, பெ. (n.)

   கசகசா லினின்று, எடுக்கும் எண்ணய்; the oil extracted from the poppy seeds.

     [கசகசா + நெய்.]

கசகசாநெய் உணவு சமைக்கவும் விளக்கெரிக்கவும் பயன்படும். உறக்கத்தைத் தூண்டும் இயல்புள்ள இந் நெய் ஒவிய வேலைகளுக்கும் பயன்படுகிறது.

கசகபாலி

 கசகபாலி gasagapāli, பெ. (n.)

கிளிமுருக்கு red bean tree (சா.அக);.

     [கள் → கய → கயக → கசக [மென்மை] + பாலி. பால் = பற்றுதல், காத்தல், வளர்த்தல். பாலி = முளைக்கவிட்ட குற்றிளந்தவச நாற்று. மிக்கிளமையின் வெளிர்பச்சை. நிறம் கிளிமுருக்கின் நிறத்திற்கு ஆகி வந்தது]

கசகம்

கசகம்1 gasagam, பெ. (n.)

   வெள்ளரி; cucumber.

     [கள் = மென்மை, இளமை, பிஞ்சு, கள் → கய → கச → கசகம்]

 கசகம்2 gasagam, பெ. (n.)

   கருங்கொள்; black horsegram.

     [கள் = கருமை. கள் → கச → கசகம்]

 கசகம்3 gasagam, பெ. (n.)

   ஒருவகைக் காளான்; a species of mushroom.

     [கள் = திரட்சி கள் → கச → கசகம்]

கசகரணி

கசகரணி gasagaraṇi, பெ. (n.)

   1. வெருகஞ்செடி (தைலவ.தைல.38);;   2.வெருகங்கிழங்கிலிருந்து இறக்கும் எண்ணெய்; an oil extracted from the root of the plant arum macrorizon (சாஅக);.

     [கள் = திரட்சி கள் → கய → கச → கசம் + கரணி கரணி = மருந்து திரட்சியான கிழங்கிலிருந்து இறக்கிய எண்ணெய்.]

கசகு

கசகு1 gasagudal,    9 செ.கு.வி.(v.i.)

   1. பின்வாங்குதல்; to be unwilling, reluctant.

   2. நழுவுதல்; to skid, slip.

   3. ஐயத்தாற்றளர்தல்; to have misgivings;

 to show hesitancy.

     [கலங்கல் → கயங்கல் → கசங்கல் → கசகல் → கசகு (கொ.வ);. கலங்கல் கருத்தினின்றும் தயங்கல் கருத்து முகிழ்த்தது.]

கசகு-தல்

கசகு-தல் gasagudal,    9 செ. கு. வி. (vi)

   பண்டமாற்று முதலியவற்றில் சிறு ஆதாயம் கருதிச் சொல்லாடுதல்; to bargain.

     [கழல் → கயல் → கசல் → கசகு கழல்தல் = உரையாடுதல், பேசுதல்.]

கசக்கம்

 கசக்கம் kasakkam, பெ. (n.)

   கணக்கம் (யாழ்.அக);; delay.

     [கசகு = பின்வாங்கு தயங்கு. கசகு → கசக்கம்.]

கசக்கல்

 கசக்கல் kasakkal, பெ. (n.)

   கசங்கச்செய்கை; rubbing, crushing,bruising.

     [கசக்கு → கசக்கல்.]

கசக்கால்

 கசக்கால் kasakkāl, பெ. (n.)

   ஊற்றுக்காலோரம் கசிவு நீருக்காகத் தோண்டப்படும் வாய்க்கால்; spring channel, channel dug out in beds of deep sand in a river to tap the underflow of water.

     [கயம் + கால் – கயக்கால் → கசக்கால், கயம் → நீர்நிலை]

கசக்கிப்பிழி-தல்

கசக்கிப்பிழி-தல் kasakkippiḻidal,    2 செ.குன்றாவி. (v.t)

   1. துவைத்து நீர் பிழிதல்; to wring out, as wet clothes.

ஆடையைக் கசக்கிப் பிழி (உவ);.

   2. நெருக்கிவருத்துதல்; to trouble a person, to harass, oppress.

அவனைக் கசக்கிப் பிழி (உ.வ.);.

   3. பச்சிலையை இரண்டு உள்ளங்கைகளுக்கு மிடையில் வைத்துக் கசக்கிச் சாறு எடுத்தல்; wringing or squeezing out as is being done to get juice from herbs, placing them between the palms.

முருங்கைக் கீரையைக். கசக்கிப் பிழிந்து சாறுண்டால் மாந்தம் போகும் (சா.அக);.

     [கசக்கு2 → கசக்கி + பிழி துவி)

கசக்கு

கசக்கு1 kasakkudal,    5 செ.குன்றாவி.(v.t)

   1. கசங்கச்செய்தல் (வின்);; to rub;

 to bruise between the fingers or hands;

 to squeeze, as a lemon;

 to crumple, as paper, to mash, as fruits.

எலுமிச்சையைக் கசக்கிக் கொடு (உ.வ.);.

   2. ஆடையைக் கும்முதல்:

 to roll gently and wash, as linen.

     “கந்தை யானாலும் கசக்கிக் கட்டு” (பழ);.

   3. நெருக்குதல்:

 to harass, nag, bring under discipline.

வங்கி மேலாளர் கசக்குதலால் கடன் தண்டல் அதிகரித்துள்ளது (உவ);.

ம. கசக்குக, கயக்குக: குரு. கச்னா, கச்சச்.

     [கள் → கய → கச → கசக்கு. கள் = கூடுதல், நெருங்குதல், நெருக்குதல்.]

 கசக்கு2 kasakku, தொ. பெ. (vbl.n)

   கசங்கச் செய்கை; squeezing, bruising.

அவன் எனக்கு ஒரு கசக்குக்குக் காணமாட்டான் (உவ);.

     [கசங்கு → கசக்கு.]

கசக்குப்புகையிலை

 கசக்குப்புகையிலை gasagguppugaiyilai, பெ. (n.)

புகைப்பதற்காகப் பதமாக்கப்பட்ட ஒருவகைப் புகையிலை (யாழ்ப்);

 tobacco prepared in a certain way for smoking.

     [கசக்கு + புகை + இலை.]

கசக்குமுப்பு

 கசக்குமுப்பு kasakkumuppu, பெ. (n.)

கசப்புச் சுவையும் தீமணமும் கொண்ட ஒருவகையுப்பு.

 a species of salt with a bad smell and bitterness (சா.அக);.

     [கசக்கும் + உப்பு. கச_+ கசக்கும் [செய்யும் என்னும் வாய்பாட்டுப் பெயரெச்சம்] உம் – ஐம்பால் மூவிடங்களில் வரும் இறப்பல்லாக் கால பெயரெச்ச ஈறு.]

கசங்கம்

 கசங்கம் kasaṅgam, பெ. (n.)

   மரவகை பீநாறி); (மலை);; fetid tree.

     [கசங்கு → கசங்கம்.]

கசங்கு

கசங்கு kacaṅku, பெ. (n.)

   கூடை பின்னப் பயன்படும் ஈச்சமரத்தின் நார்; fiber of ccam tree formaking basket.

     [கசம்-கசங்கு]

 கசங்கு1 kasaṅgudal,    5 செ, கு, வி, (v.i.)

   1. குழைதல்; to be squeezed, crumpled, rubbed, as a leaf.

   2. தொடுவதால் மெல்லிய பொருள் தன் நிலை கெடுதல்; to lose freshness, as a flower that has been much handled.

மலர்கள் கசங்கிவிட்டன (உவ);.

   3. வேலையினால் இளைத்தல் (வின்);; to be exhausted, worn out by labour;

 to become wearied, as by walking too much.

பணிச்சுமையால் கசங்கிவிட்டான் (உ.வ.);.

   4. மனம் நோதல்; to be displeased, hurt in mind.

அவனுடைய மனம் கசங்கிப் போயிற்று (உவ);.

ம. கசங்க: குரு. கச்னா.

     [குழை → குழ → கழ → கச → கசங்கு.]

 கசங்கு2 kasaṅgu, பெ. (n.)

   1. பேரீச்சை மரம் (மூ,அக,);; wild date-palm.

   2. ஒலை கழித்த ஈச்சமட்டை (வின்);; stalk, as of the date-leaf.

   3. நார்; fibre.

     [கள் = முள். கள் → கயங்கு → கசங்கு.]

கசங்குக்கூடை

 கசங்குக்கூடை kasaṅgukāṭai, பெ. (n.)

   ஈச்சங்கூடை; wicker basket.

     [கசங்கு + கூடை]

கசங்குத்தட்டு

 கசங்குத்தட்டு kasaṅguttaṭṭu, பெ.(n.)

கசங்குகொண்டு முடையப்பட்ட தட்டு,

 wicker basket made of palm-leaf stalk.

மறுவ தட்டு, தட்டுக்கூடை

     [கசங்கு + தட்டு.]

ஒ.நோ. சோளத்தட்டு → சோளத்தட்டை

கசடன்

 கசடன் kasaḍaṉ, பெ. (n.)

குற்றமுள்ளவன்,

 he who is low-minded, wicked,

பணத்திற்காக எதையும் செய்யும் கசடன்.

ம. கசடன்

     [கசடு + அன் ஆபா.ஈறு – கசடன்.]

கசடர்

 கசடர் kasaḍar, பெ. (n.)

   கீழ்மக்கள் (இநூ.அக);; mean and unscrupulous persons.

     [கசடு + அர் (பயா.ஈறு); – கசடர்]

கசடறு-த்தல்

கசடறு-த்தல் kasaḍaṟuttal,    5 செகுன்றாவி (v.t)

   1. அழுக்குப் போக்கல்; to remove filth.

   2. தூய்மை செய்தல்; to clean, as of metal from rust.

   3. மனத்தின் மாசுபோக்கல்; to get rid of the impurities of the mind (சா,அக,);.

     [கசடு + அறு].

கசடறுக்கும்மண்

 கசடறுக்கும்மண் kasaḍaṟukkummaṇ, பெ. (n.)

   உழமண்; dhoby’s earth which removes dirt from clothes.

     [கசடு + அறுக்கும் மண்.]

கசடு

கசடு1 kasaḍu, பெ.(n.)

   1. குற்றம்; blemish, fault, defect, imperfection.

     “கற்க கசடற” (குறள்,391);

   2. அழுக்கு (பிங்);, uncleanliness, dirtiness.

     “ஐயமறாஅர் கசடிண்டு காட்சி” (புறநா.214:2);.

   3. ஐயம்(பிங்);: doubt.

   4 g. அடிமண்டி:

 dregs, lees.

நெய்யுருக்கினால் கசடிருக்கும் (உவ);.

   5. கழிவு:

 waste, impurities.

ஆலைக்கசடு(உ,வ,);,

   க. கசட, கசடா, கசா, கச்சட: ம. கசடு: தெ. கசட: து. கசவு: கசாவு: துட. கொசவ்: குரு. கச்சர்: மா. கசெ: பட. ss. Skt. Kaccacra; H. kacra;

 Pali, kacadu;

 Mar. kacara;

 Pkt.

 sakada.

     [கசள் → கசண்டு → கசடு [திரு.தமிமர.739] கசடு மண்டி போன்ற குற்றம் (சொல்.கட்42);

 கசடு2 kasaḍu, பெ. (n.)

   1. குறைவு (யாழ்.அக);; deficiency.

   2. ஈளைநோய்:

 consumption.

   3. தழும்பு, வடு:

 scar,

     “கைக்கச டிருந்தவென் கண்ணகன் தடாரி” (பொருந70);.

   4. சளி,

 phlegm.

     [கசள் → கசடு]

 கசடு3 kasaḍu, பெ. (n.)

மயிர்:

 hair.

     [கள் = கருமை கள் → கய → கயல் → கசள் → கசடு]

 கசடு4 kasaḍudal,    5 செ. கு. வி. (vi)

கசகு2-தல் பார்க்க;see {kašagu”-.}

கசட்டம்புல்

 கசட்டம்புல் kasaṭṭambul, பெ. (n.)

கக்குநாறிப்புல்,

 ginger grass (சா,அக);.

     [கசள் → கசடு + அம் → கசட்டம் + புல் கசள் = இளமை, மென்மை]

கசட்டை

கசட்டை kasaṭṭai, பெ. (n.)

   1. துவர்ப்பு (யாழ்ப்);; astringency, as of unripe fruit.

   2. இளமை; youthhood (சா,அக,);

     [கள் → கசள் → கச → கசட்டை கசள் = இளமை, மென்மை]

கசட்டைத்தயிர்

 கசட்டைத்தயிர் kasaṭṭaittayir, பெ. (n.)

   ஆடை ஆடை எடுத்த தயிர்; (யாழ்ப்,);; curd from which the butter has been removed.

     [கள் = திரண்டது. கள் → கய → கச → கசட்டை = தயிர்]

கசட்டைப்பிஞ்சு

கசட்டைப்பிஞ்சு kasaṭṭaippiñsu, பெ. (n.)

   1. கசப்புப்பிஞ்சு அல்லது இளங்காய்:

 bitter and tender fruit.

   2. துவர்ப்புப்பிஞ்சு; tender astringent fruit.

   3. இளம்பிஞ்சு; tender and young fruit.

   4. பழுக்காத காய்; an unripe fruit (சா,அக,);.

     [கசட்டை + பிஞ்சு]

கசண்டு

கசண்டு kasaṇṭu, பெ. (n.)

   1. அடிமண்டி, வண்டல்:

 dregs, lees (சா,அக);.

   2. குற்றம்:

 blemish.

   3. அழுக்கு; uncleanliness, fault, defect, imperfection, dirtiness.

   4. வடு; scar.

க. கசடு, தெ. கசி, து. கசண்டு.

     [கசள் → கசண்டு]

கசனை

கசனை1 kasaṉai, பெ. (n.)

   1. ஈரம்; dampness, moisture, as round a well.

வீடு கசனைகொண்டு விட்டது (உ,வே);,

   2. உப்புப்பற்று; impregnation, as with salt.

   3. பற்று; attachment, love.

     “மாதமர்கள் கசனையை விடுவது” (திருப்பு:143);.

     [கசி → கசினை → கசனை. கசி = ஈரம், பசை, பற்று]

 கசனை2 kasaṉai, பெ. (n.)

   சூட்டுக்குறி (யாழ்ப்);; mark with which cattle are branded.

     [கசம் = இருள், கருமை, கசம் → கச → கசனை.]

 கசனை3 kasaṉai, பெ. (n.)

   செம்மண்; red earth, red ochre (சா,அக);.

     [கசி = மஞ்சள், மஞ்சள் கலந்த செம்மை கசி → கசிரி = செம்புளிச்சை கசி → கசினை → கசனை.]

கசபுசல்

 கசபுசல் kasabusal, பெ. (n.)

   கமுக்கம் ஒன்றைப்பற்றிய ஊர்ப்பேச்சு; gossip about a secret, title-tattle.

ஊரில் அதைப்பற்றிக் கசபுசலாயிருக் கிறது (உவ);.

     [கசமுச [ஒலிக்குறிப்பு] → கசபுச → கசபுசல். ஒலிக்குறிப்பு அடிப்படையாக வந்த கமுக்கப் பொருள், ஊர்ப்பேச்சைக் குறித்தது.]

கசபுடம்

 கசபுடம் kasabuḍam, பெ. (n.)

   நூறு எருமுட்டையை வைத்தெரிக்கும் படம்; a fire prepared with one hundred cakes of dried cowdung for calcining medicines.

     [கள் [கூடுதல்] → கய → கச → கசம் + புடம் → கசபுடம்]

ஆயிரம் எருமுட்டை என்ற வழக்குமுண்டு.

கசப்பகத்தி

 கசப்பகத்தி gasappagatti, பெ. (n.)

   பேயகத்தி; bitter fig or wild fig. (சா,அக);.

     [கசப்பு + அகத்தி]

கசப்பி

கசப்பி1 kasappi, பெ. (n.)

   1. வேம்பு (மலை);; margosa.

   2. வல்லாரை (மலை);; Indian pennywort, herb.

   3. காசித்தும்மைப்பூ (சங்,அக);; white dead nettle flower.

   4. பேய்ப்பீர்க்கு; bitter gourd.

   5. சிறுவாலுளுவை; small variety of spindle tree.

   6. கருங்காலி:

 ebony tree.

   7. பொன்னுமத்தை,

 datura plant bearing yellow flowers (சா,அக);.

     [கசப்பு → கசப்பி]

 கசப்பி2 kasappi, பெ. (n.)

   மயிலின் தலைக் கொண்டை; peacock fan fern, like a miniature palm.

     [கசள் → கசப்பி.]

கசப்பு

கசப்பு kasappu, பெ. (n.)

   1. அறுசுவைகளுளொன்று:

 one of the elementary sensations of taste, bitterness.

   2. வெறுப்பு; disgust, aversion.

உடன் பிறந்தார்களுக் குள் கசப்பு மண்டிக் கிடந்தது (உவ);.

   3. கக்கல்கழிச்சல் (வாந்திபேதி,

 cholera.

அவன் ஒரேயடியாய்க் கசப்படித்துக் கிடக்கிறான் (உ.வ);.

   ம. கசப்பு, கய்பு: க. கய், கயி, கய்யி, கய்பு, கய்பெ;   தெ. கசு;   கை. கயிபெ, கைபெல்;   இரு கேசபெ;   எரு. கய்ச்சு;கோத. கய் குட. கய் கோண். கே.ககே, கைத்தானா பர். கேபி, மா. க்வசெ பட கைமெ.ஆ கோண். அடிலா. கைய்ய,

இமயமலை சார்ந்த மொழிகள்:

 Gyar. kuchchek;

 Takpa. khakbo;

 Thochu. khak;

 Tibet (col); khako;

 Serpa. khakti;

 Sunwar. kaso, Magar. khacho;

 Newar. khaiyu;

 Limbu. kckhikpa;

 Kiranti. khakho;

 Rung. kha-kwa: Chhing. khak’no, Achher. khik’do, Aling. khak;

 Yakha. khika;

 Chouras. khacho;

 Kulung. khike, Thulung khepa, Bahing. kaba, Lohor. khik’ka, Lambich, khik’yukha, Balali.kheukup;

 Sangpang.khiki, Dumi.khepa, Khaling. khapa;

 Dungmali. khaki: Pahri. khakhadha;

 Bhram, kyakhai;

 Vayu. khachin;

 Kusunda. katuk;

 Lepcha (sikkim);, krimbo;

 Bhutani. khako;

 Bodo, gakha: Dhimal. khakha:Kocch. kaduva, Kachari. goka, Mithan Naga.kha, Tableung Naga. kha, Khari Naga. kha;

 Sibsagar Miri. kodak, Deoria chutia. kai, Singpho. kha, Angami Naga. (k = ch); chasi, Burmese (Lit);. kha, Burmese (Lit);. kha;

 Burmese (Col);, kha, Khyeng V. khau-show, Kami. kha, Talain v Mon. ka-taw: Sgau-Karen. kah;

 Pwo – Karen. khah, Toungh – thu. khu, Shan. khon, Siamese. khom, Ahom. khum, Khamti. khom;

 Laos, khom.

     [கைப்பு → கயப்பு → கசப்பு]

கசப்புச் சுவையைக் குறிக்கக் காடு, புனம், பேய் ஆகிய சொற்கள் அடைகளாய் வந்துள்ளன. [எ-டு காட்டுக்கொள். புன முருங்கை, பேய்ப்பீர்க்கு. காட்டில் விளைவன மிகு உரத்தினால் கொழுத்துக் கசப்புச் சுவையுடன் இருக்கும். அதனால் கசப்புக்கு இச் சொற்கள் (காடு, புனம்); அடைகளாய் வந்துள்ளன.

கசப்புக் கொள்

 கசப்புக் கொள் kasappukkoḷ, பெ. (n.)

   போய்க்கொள்; jungle horse-gram.

     [கசப்பு + கொள்.]

கசப்புக்கசகசா

 கசப்புக்கசகசா gasappuggasagasā, பெ. (n.)

கருப்புக் கசகசா:

 black poppy (சா.அக);.

     [கசப்பு + கசகசா.]

கசப்புக்காய்

 கசப்புக்காய் kasappukkāy, பெ. (n.)

பேய்ச்சுரைக் காய்:

 bitter bottle-gourd (சா,அக);.

     [கசப்பு + காய்]

கசப்புக்கிச்சிலி

 கசப்புக்கிச்சிலி kasappukkissili, பெ. (n.)

   தஞ்சாவூர் நாரத்தை; Thanjavur bitter orange (சா.அக);.

ம. கைப்பநாரங்க

     [கசப்பு + கிச்சிலி]

கசப்புக்கெண்டை

 கசப்புக்கெண்டை kasappukkeṇṭai, பெ. (n.)

   கருங்கெண்டை மீன்; bitter carp.

ம. கய்பு

     [கசப்பு கெண்டை]

கசப்புக்கையான்

 கசப்புக்கையான் kasappukkaiyāṉ, பெ. (n.)

   கசப்புக்கரிசலை; a bitter variety of eclipse plant (சா.அக.);.

     [கசப்பு + கையான் இலையுடையது]

கசப்புக்கொடிச்சி

 கசப்புக்கொடிச்சி kasappukkoḍissi, பெ. (n.)

   செந்திராய்; a red variety of Indian chick weed (சா.அக);.

     [கயப்பு → கசப்பு + கொடிச்சி]

கசப்புக்கொழுமிச்சை

 கசப்புக்கொழுமிச்சை kasappukkoḻumissai, பெ. (n.)

   காட்டுக் கொழுமிச்சை; bitter ctron (சா.அக);.

     [கசப்பு + கொழுமிச்சை]

கசப்புச்சுரிஞ்சான்

 கசப்புச்சுரிஞ்சான் kasappussuriñsāṉ, பெ. (n.)

   வயிற்றுப்போக்கை உண்டாக்கும் ஒருவகைக் கசப்பு மூலிகைவேர்; a bitter Unanidrug;

 mercury’s finger.

     [கசப்பு + சுரிஞ்சான். கரிஞ்சான் = ஒருவகைப் பழுப்புநிறக் கிழங்கு. கசப்புச்சுரிஞ்சான் உட்கொள்ளத் தரப்படுவதில்லை.]

கசப்புச்சுரை

 கசப்புச்சுரை kasappussurai, பெ, (n.)

   பேய்ச்சுரை; bitter bottle-gourd.

மறுவ. கசப்புக்காய்

     [கசப்பு + கரை.]

கசப்புத்திரு

 கசப்புத்திரு kasapputtiru, பெ. (n.)

சிவதை வேர்:

 the root of Indian jalap (சா,அக);.

     [கசப்பு + திரு → தூறு → துறு → திறு → திரு.)

கசப்புத்துவரை

 கசப்புத்துவரை kasapputtuvarai, பெ. (n.)

   பேய்த்துவரை; bitter pigeon pea, wild pigeon pea (சா.அக);.

     [கசப்பு + துவரை]

கசப்புநீர்

 கசப்புநீர் kasappunīr, பெ. (n.)

   கறியுப்பு எடுத்தபின் நின்ற கைப்பு நீர்; the residual water after crystallisation of sodium chloride (சா,அக,);.

     [கசப்பு + நீர்]

கசப்புப்பசலை

 கசப்புப்பசலை kasappuppasalai, பெ. (n.)

   கசப்புச்சுவையுடைய ஒருவகைப் பசலைக்கீரை; a bitter species of spinach.

மறுவ. தரைப்பசலை.

     [கசப்பு + பசலை]

மலைப்பாங்கான இடங்களில் வளருகின்ற இப் பசலையால் இதளியம் (பாதரசம்); மணியாகும்: சாதிலிங்கம் பொடியாகும்: நாகம் செந்தூரமாகும் பொன்னுக்கு மாற்றேறும் என்பர்.

கசப்புப்பாலை

 கசப்புப்பாலை kasappuppālai, பெ. (n.)

   பேய்ப்பாலை; a bitter plant(சா,அக);.

     [கசப்பு + பாலை]

கசப்புப்பிவேல்

கசப்புப்பிவேல் kasappuppivēl, பெ. (n.)

   கசப்பான 15Gsusu unsun; a bitter variety of fetid memosa (சா.அக);.

     [கசப்பு + பிவேல்.]

கசப்புப்பீர்க்கு

 கசப்புப்பீர்க்கு kasappuppīrkku, பெ. (n.)

   போய்ப்பீர்க்கு; wild-luffa (சா,அக,);.

     [கசப்பு + பிர்க்கு]

கசப்புப்புகயிலை

 கசப்புப்புகயிலை gasappuppugayilai, பெ. (n.)

   கைப்புப் புகையிலை; bitter tobacco (சா.அக);.

     [கசப்பு + புகையிலை.]

கசப்புப்போளம்

 கசப்புப்போளம் kasappuppōḷam, பெ. (n.)

   கரியபோளம்; black myrrh, hepatic aloe.

     [கசப்பு + போளம்]

மலைக் கற்றாழையின் சாற்றை உறையவைத்துப் பதப்படுத்தி அணியமாக்கிய ஒரு கருப்புக் கூட்டு மருந்து (சா.அக);.

   வகைகள்: அரபிப் போளம்;இந்துப்போளம்: பாரசீகப் போளம்.

கசப்புமாஞ்சகி

 கசப்புமாஞ்சகி gasappumāñsagi, பெ. (n.)

   கசப்புக்கும்மட்டி; bitter apple (சா.அக);.

மறுவ. பேய்க்கும்மட்டி

     [கசப்பு + மாஞ்சகி]

கசப்புமுருங்கை

 கசப்புமுருங்கை kasappumuruṅgai, பெ. (n.)

   கசப்புச்சுவையுடைய முருங்கை; bitter drumstick (சா.அக);.

     [கசப்பு + முருங்கை]

கசப்புவாதுமை

 கசப்புவாதுமை kasappuvātumai, பெ. (n.)

   கசப்பு வாதுமைமரம்; bitter almond tree.

     [கசப்பு + வாதுமை]

கசப்புவெட்பாலை

 கசப்புவெட்பாலை kasappuveṭpālai, பெ. (n.)

   குடசப்பாலை; conessi bark.

     [கசப்பு + வெள் + பாலை. வெட்பாலை = வெண்மையான பூக்கள் உள்ள பாலை. இதன் அரிசி கசப்பு வெட்பாலையரிசி)

கசப்புவெள்ளரி

 கசப்புவெள்ளரி kasappuveḷḷari, பெ. (n.)

   காட்டு வெள்ளரி; bitter cucumber.

     [கசப்பு + வெள்ளி]

கசப்புவேர்

 கசப்புவேர் kasappuvēr, பெ. (n.)

   சிவப்பு உரோகினிச் செடியின் வேர்; bitter root of red {rõkini} (சா,அக,);.

     [கசப்பு + வேர்]

கசப்பூலிகம்

 கசப்பூலிகம் kasappuligam, பெ.(n.)

மிதிபாகல்,

 prostrate creeper, a small variety of bitter gourd (சா.அக);.

   ம,கசில்லகம்; Skt. kacillaka.

     [கசப்பு + ஊலிகம்.]

கசப்பெலுமிச்சை

 கசப்பெலுமிச்சை kasappelumissai, பெ. (n.)

காட்டெலுமிச்சை:

 jungle lime (சா.அக);.

     [கசப்பு + எலுமிச்சை]

கசப்பைந்து

 கசப்பைந்து kasappaindu, பெ. (n.)

   நொச்சி, வேம்பு, கண்டங்கத்தரி, சீந்தில், பேய்ப்புடல் ஆகிய ஐந்து கசப்பு மருந்துப்பூடுகள்; the five bitter drug plants viz., common gendarussa, margosa tree, prickly night shade, moon-creeper, wild snake-gourd (சாஅக);.

     [கசப்பு + ஐந்து]

கசமாதுகம்

 கசமாதுகம் gasamātugam, பெ. (n.)

ஊமத்தை:

 datura, thorn apple (சா.அக.);

மறுவ கசமாது, கசமேடு.

     [கசம் [கசப்பு] + [மத்தம்] மாதுகம். மீத்தம் = கலக்கம், மயக்கம்)

கசமீன்

 கசமீன் kasamīṉ, பெ. (n.)

   ஆழ்கடலில் மேயும் மீன்’ (முகவை,மீனவ,);; a kind of sea fish.

     [கயம் → கசம் + மீன் – கசமீன். கயம் = ஆழ்ந்த நீர்நிலை]

கசமுச

கசமுச kasamusa, பெ. (n.)

   1. தாறுமாறு தன்மையைக் குறிக்கும் ஒர் ஒலிக்குறிப்புச் சொல்; onom. expression signifying disorderliness.

   2. குழப்பம், தீங்கு போன்றவற்றைக் குறிக்கும் ஒலிக்குறிப்புச் சொல்:

 onom. expression signifying bewilderment, perplexity.

   3. வெளிப்படையாக இல்லாதது;   வெற்றுரை; gossip.

தலைவரைப் பற்றி நிறையக் கசமுசாப் பேச்சுகள் வந்துவிட்டன. (உவ);

மறுவ, கசமு.சா.

ம. கசசி: பட. கசபிச, கசபுச.

     [கச + முச – எதுகை மரபிணைச்சொல்]

கசமுசவெனல்

 கசமுசவெனல் kasamusaveṉal, பெ. (n.)

கசமுச பார்க்க;see {kaša-muşa.}

     [கச + முச + எனல்]

கசமுசா

கசமுசா kacamucā, பெ. (n.)

   வெளிப்படையாகச் சொல்லாமல் முணுமுணுத்தல்; to murmur as a secret it (கொ.வ.வ.சொ.40.);

     [கசமுச (ஒலிக்குறிப்பு);]

கசம்

கசம் kacam, பெ. (n.)

அழுக்கு

 filth.

     [கயம் – கசம்]

 கசம்1 kasam, பெ. (n.)

   1. காரிருள்; dense darkness.

   2. குற்றம்; fault.

   3. துன்பம்; distress.

     [கள் [கருமை] → கய → கயம் → கசம் கள் =இருள் வேக125]

     ‘இருட்டுக் கசம்’ என்பது நெல்லை வழக்கு.

 கசம்2 kasam, பெ. (n.)

   ஆழ்கடல்; deep sea.

     [கள் → கயம் → கசம். கயம் = ஆழம்]

 கசம்3 kasam, பெ. (n.)

   தாமரை மூ.அ); lotus.

     [கயம் → கசம் = நீரில் உள்ளது.]

 கசம்4 kasam, பெ. (n.)

   1. இரும்பு:

 iron,

   2. கனிமம்,

 mineral.

     [கசம் → கசம்”]

கசம்பி

 கசம்பி kasambi, பெ. (n.)

   கருவண்டு; blackbeetle (சாஅக);.

     [கசம் → கசம்பி கசம் = கருமை.]

கசரி

 கசரி kasari, பெ. (n.)

   துவையல் (நாமதீப);; a kind of strong relish prepared by adding paste of chilli to coconut, ginger, curry or similar things.

     [கசம் → கசளி [நீர்த்தது, நீரொடு சேர்ந்தது].]

கசரை

கசரை kasarai, பெ. (n.)

   காலே யரைக்காற் பலம் (S.I.I.ii,127);; a measure in weight = 1% சுஃக.

     [கஃசு + அரை → கஃசரை → கசரை.]

கசர்

கசர்1 kasar, பெ. (n.)

   1 இளநீர் முதலியவற்றின் துவர்; astringency of tender coconut water etc.

   2. ஒரு மருந்து வகை; a kind of drug.

   3. துவர்ப்பு:

 astringency in general.

     [கள் → கய → கச → கசர் → கசப்பு. துவர்ப்பு]

 கசர்2 kasar, பெ. (n.)

   1. மிகுதி:

 excess.

   2. குறைவு:

 Shortage,

     [கசிதல் → மிகுதல், மிகுந்து வெளியேறுவதால் நேரும் குறைவு கசி → கசிர் → கசர்.]

 கசர்3 kasar, பெ. (n.)

சிவப்புக்கல்லின் குற்றவகை:

 flaw in a ruby.

     [கள் → கய → கச [கருமை, குற்றம், சேறு கறை] → கசர்]

 கசர்4 kasar, பெ. (n.)

   வணிகன் பகர்ந்த விலைக்கும், கொள்வோன் கொடுத்த தொகைக்கும் இடைப்பட்ட எச்சத்தொகை; the extra amount obtained by bargaining.

     [கசி → கசர் = இடையில் எஞ்சியது, ஈவுத்தொகை]

 கசர்5 kasar, பெ. (n.)

சேறு mud.

மறுவ சகதி

க.கெசறு

     [கள் → கய → கச → கசர். கள்=இளமை. கசர் =

இளகிய சேறு)

கசர்பிடி-த்தல்

கசர்பிடி-த்தல் kasarpiḍittal,    4 செ. கு. வி. (v.i)

கறைபடுதல்:

 to be soiled with juice of a vegetable.

     [கசர் → சேறு, கறை. கசர் + பிடி]

கசர்ப்பாக்கு

 கசர்ப்பாக்கு kasarppākku, பெ. (n.)

   துவர்ப்பு மிகுந்த பாக்கு (யாழ்ப்);; highly astringend areCanut.

     [கள் → கய → கயர் → கசர் + பாக்கு கள் = இளமை.]

கசறு

கசறு1 kasaṟu, பெ. (n.)

   மாணிக்கத் [புட்பராகம்] தன்மைகளுளொன்று (மதிகளஞ்2:47);; a quality in pusparagam gems.

     [கசம் = இருள், குற்றம் கசம் → கச → கசர் → கசறு]

 கசறு2 kasaṟu, பெ. (n.)

   சிக்கல்; tangle, complication.

     [கள் → கச → கசறு. கள் = கூடுதல், நெருங்குதல்.]

கசறு-தல்

 கசறு-தல் kacaṟutal, செ.கு.வி. (v.i.)

நச்சரித்தல், மேலும் மேலும் விலை குறைத்துக் கேட்டல், haggle fora trifling gain to gains.

     [கய-கச-கசறு]

கசலி

 கசலி kasali, பெ. (n.)

   மீன்வகை (நாமதீம்);; a kind of fish.

     [கச்சல் → கச்சலி → கசலி]

கசலை

கசலை1 gassalgassaligasaligasalai, பெ. (n.)

   துன்பம் (யாழ்.அக);; trouble.

     [கசி → கசல் → கசலை.]

 கசலை2 kasalai, பெ. (n.)

   கெண்டைமீன்; a small variety of kendai fish.

     [கச்சல் → கசல் → கசலை. கச்சல் = சிறியது]

கசளி

கசளி kasaḷi, பெ. (n.)

   சிறு கெண்டைமீன்; a small fresh water fish, barbus.

க. கெசளி

     [குல் → குழ → குத → கத → கதலி → கசலி → கசளி (வேக.147);. குல் – தோன்றற் கருத்து வேர். இம் மீனைக் கெண்டைக் கசளி என்றும் அழைப்பர்.]

கசள்

கசள்1 kasaḷ, பெ. (n.)

   1. இளமை; youth-hood.

   2. Quosirsmuo; tenderness.

     [கள் → கய → கச → கசள், கள் = இளமை]

 கசள்2 kasaḷ, பெ. (n.)

   1 முதிராமை, செப்பமுறாமை,

 not matured, not refined.

   2. குறையுடைமை, குற்றம்; blemish, defect.

   3. கருமை; blackness.

   4. மயிர்; hair.

க. கசரு

     [கள் [கருமை, இழிவு → கய → கயள் → கசள்]

கசவம்

 கசவம் kasavam, பெ. (n.)

   கடுகு (மலை);; Indian mustard.

     [கயம் → கயவம் → கசவம். கயம் = கருமை]

கசவர்

 கசவர் kasavar, பெ. (n.)

   தமிழ்நாட்டின் நீலமலை மாவட்டத்திலும் கருநாடக மாநிலத்தின் தென்பகுதியிலும் வாழும் திராவிடப் பழங்குடியினர்; a Dravidian tribe who inhabit the Nilgiri district of Tamilnadu and Southern part of Karnataka state.

     [கச → கசவு → கசவர்]

கசவாளி

 கசவாளி kasavāḷi, பெ. (n.)

கயவாளி;see {kaya-v-āli}.

     [கயவன் → கயவாளி → கசவாளி]

கசவிருள்

கசவிருள் kasaviruḷ, பெ. (n.)

   பேரிருள் (வின்);; pitch darkness.

     [கயம் + இருள் – கயவிருள் → கசவிருள். கயம் = ஆழம் நிறைவு, செறிவு. காரிருளை இருட்டுக்கசம் என்பது நெல்லை வழக்கு [வேக.127].]

கசவு

கசவு kasavu, பெ. (n.)

   1. நார்ச் செடிவகை; a fibrous plant.

   2. வைக்கோல்; hay.

   3. மஞ்சள் நிறம்; yellow.

மறுவ. கசா

     [கசவு → கசா]

தெ. கசவு க. கச:

     [காலுதல் = நீளுதல். கால் → காய் → காசு → கசு → கச → கசவு]

கசா

 கசா kacā, பெ. (n.)

கசவ பார்க்க;see kasavu (சா.அக);.

     [கசவு → கசா]

கசாகு

 கசாகு kacāku, பெ. (n.)

பாம்பு: a snake (சா,அக);.

     [கசகு → கசாகு. கசகுதல் = பின்வாங்குதல், அசைதல், நகர்தல், நழுவிச்செல்லல்]

கசாகூளம்

கசாகூளம் kacāāḷam, பெ. (n.)

   1. தாறுமாறு:

 confusion.

   2 குப்பை; garbage, refuse.

   3. கடைப்பட்டோர்; dregs of society, scum, offscourings.

   4. பலஇனக் கலப்பு:

 hybrid.

     [கழி → கசி → கசம் + கூளம் – கசகூளம் → கசாகடளம், கூளம் = குப்பைக்குவியல்.]

கசாங்கு

 கசாங்கு kacāṅku, பெ. (n.)

   ஒலைகளால் ஆன கயிறு; rope made of palm leaves.

     [கசல் – கசாங்கு]

கசாடு

 கசாடு kacāṭu, பெ. (n.)

   வலையில் பிடிபடும் உண்பதற்கொவ்வா உயிரிகள் (இராமநா. மீனவ);; unedible fish varieties found in net.

     [கசடு → கசாடு]

கசாது

கசாது kacātu, பெ. (n.)

   1. கைச்சாத்து பார்க்க; see {kai-c-cāttu.}

   2. திருமணப்பதிவு; registration of marriage.

கசாது எழுதிக் கலியாணம் பண்ணியாயிற்று (உவ);.

     [கைச்சாத்து → கச்சாத்து → கசாது]

கசாமுசாபண்ணு-தல்

கசாமுசாபண்ணு-தல் kacāmucāpaṇṇudal,    5.செ.குன்றாவி (v.t)

   தாறுமாறாகச் செய்தல்; to make improper.

     [கசாமுசா + பண்ணு.]

கசாரிப்பட்டி

 கசாரிப்பட்டி kacārippaṭṭi, பெ. (n.)

   அசாம் மாநிலத்தில் உள்ள ஊர்ப்பெயர்; a Tamil name of a village in Assam state.

     [கசவர் → கசவரன் + பட்டி → கசவரன்பட்டி → கசவாரிப்பட்டி → கசாரிப்பட்டி]

கசாலை

கசாலை1 kacālai, பெ. (n.)

   1. கோக்காலி; shelf, bracket.

   2. சுவர்மேல் ஆரல் (நெல்லை);; protective covering on a wall.

     [கச்சல் + ஆலை – கச்சாலை [சிறியவிடம், சிறிய கூடம்] → கசாலை. கச்சல் = பிஞ்சு, இளமை, சிறிய.]

 கசாலை2 kacālai, பெ. (n.)

   சமையற்கூடம்; kitchen.

     [கச்சல் + ஆலை – கச்சாலை → கசாலை. கச்சல் =சிறிய ஆலை = இடம். கச்சாலை = சிற்றிடம்சமையற்கூடம்]

கசி

கசி1 kasidal,    4 செ.கு.வி.(vi)

   1. ஈரங்கசிதல்,

 to ooze out as moisture from a wall;

 to spread as humidity around a water body.

சென்ற மழையில் மேற்றிசைச் சுவர் முழுவதும் கசிந்தது (உவ);.

   2. நுண்துளை வழியாக வளி முதலியன வெளியேறுதல்:

 to leak as gases through pores.

நச்சுக்காற்றுக் கசிந்தால் உயிருக்கு ஏதம் ஏற்படும் (உ,வே);.

   3. ஊறுதல்; water coming out from sand bed.

ஆற்றுப்படுகையில் பல கசிவு வாய்க்கால்கள் தோன்றுவதுண்டு (உவ);.

   4. வியர்த்தல்; to perspire as the hands and feet.

கடும் உழைப்பால் வியர்வை கசிந்தது (உவ);.

   5. குருதி, கண்ணிர், சீழ் முதலியன அரும்பி ஒழுகுதல்; to dribble as of blood, tears, pus etc.

கடிவாயிலிருந்து கருதி கசிந்துகொண்டிருக்கிறது (உவ);.

   6. அழுதல் (திவா);; to weep

   7. உப்பு, வெல்லம் முதலியன இளகுதல்; to melt as of salt, jaggery etc.

மழைச்சாரலால் உப்புக் கசிந்துவிட்டது (உவ);.

   8. மனம் நெகிழ்தல்; to relent as the heart in pity.

     “காதலாகிக் கசிந்து கண்ணர் மல்கி” (தேவா.3307:1);.

   9. கவலைப்படுதல் (நாநார்த்த);; to be distressed, troubled.

க. கசி, கசபா. க.சி.

     [கள் → கழி → கயி → கசி]

 கசி2 kasi, பெ. (n.)

   1. மஞ்சள்,

 turmeric.

   2. மஞ்சள் நிறம்,

 yellow.

   3. சிவப்பு; red.

     [கசவு → கசி]

கசிகசிப்பு

கசிகசிப்பு gasigasippu, பெ. (n.)

   1. கசிவு (வின்);; being damp, dank, moist to the touch.

   2. கசகசப்பு:

 perspiration (சா,அக);.

     [கசி + கசி + பு – கசிகசிப்பு. கசிகசி – அடுக்குத் தொடர் பு – சொஆாறு]

கசிதம்

கசிதம்1 kasidam, பெ. (n)

   1. கச்சிதம் பார்க்க; see kaccidam.

   2. பதிக்கை; setting, mounting with precious stones, inlaying.

மறுவ. கச்சிதம், கச்சாரம்.

     [கச்சிதம் → கசிதம்]

 கசிதம்2 kasidam, பெ. (n.)

   எண்ணெய், தைலம், இளகியம் இவற்றைக் கிண்டுவதற்குப் பயன்படுத்தும் சிறிய துடுப்பு (சா,அக);; a small ladle used for stirring medicinal oils and electuaries in their preparation.

     [கழிதம் → கசிதம்]

கசிந்து

 கசிந்து kasindu, பெ. (n.)

பொன்,

 gold (சா.அக);.

     [கசி – கசிந்து, கசம் – கசி = வெளிறிய மஞ்சள் நிறம் மஞ்சள் நிறம் அந்நிறமுடைய பொன்.]

கசிப்பு

 கசிப்பு kasippu, பெ. (n.)

   கள்ளச்சாறாயம் (யாழ்ப்);; illicit liquor.

     [கசி → கசிப்பு]

ஆவியாக்கிக் குளிர வைக்கும் முறையில் காய்ச்சப்படும் சாறாயம். இது சாறாயவகை அனைத்திற்கும் பொதுப்பெயராயினும் இடவழக்காகக் கள்ளச் சாறாயத்தைக் குறித்தது.

கசியம்

 கசியம் kasiyam, பெ. (n.)

   கள்; toddy (சா.அக);.

     [கசிதல் = வடிதல். கசி → கசியம் ஒ.நோ. கழி → கழியம் (தின்பண்டம்]

பனைமரத்தில் கட்டிய முட்டியில் (சிறிய சட்டி); சிறிது சிறிதாகக் கசிந்து ஒழுகும் இயல்புபற்றி இப் பெயர் பெற்றது.

கசிரடி-த்தல்

கசிரடி-த்தல் kasiraḍittal,    4 செகுன்றாவி(v.t)

   கசிவு ஏற்படுதல்; to seep, ooze.

மறுவ. கசாடித்தல்.

     [கசி → கசிர் → கசிரடி-]

கசிரம்

கசிரம் kasiram, பெ. (n.)

   1. கடம்பு; cadamba tree.

   2. வாலுளுவை;, spindle tree (சா,அக);.

     [கசி → கசிரம் கசி = மஞ்சள் நிறம்]

கசிரி

 கசிரி kasiri, பெ.(n.)

   செம்புளிச்சை; red cedar (சா.அக);.

     [கசி → கசிரி கசி = மஞ்சள், மஞ்சள் கலந்த சிவப்பு]

கசிர்

 கசிர் kasir, பெ. (n.)

ஏலச்சீட்டில் சீட்டை ஏலம் விட்டுக் கிடைக்கும் ஆதாயப் பணத்தில் உறுப்பினர்களுக்குக் கிடைக்கும் பங்குத் தொகை, dividend, இம்மாதச் சிட்டில் அதிகமாகக் கசிர் கிடைத்தது (உவ);.

மறுவ. கசர்

     [கழி →கசி → கசிர்]

கசிவகத்துண்மை

 கசிவகத்துண்மை gasivagattuṇmai, பெ. (n.)

   இரக்கம், பரிவு, முதலிய வேளாண்மாந்தரியல்புகளுள் ஒன்று (திவா);; kind-heartedness, one of the characteristics of the {Vēlālās.}

     [கசிவு + அகத்து உண்மை. க.சி → கசிவு = மனத்தில் கரக்கும் பரிவுணர்வு]

கசிவறல்

 கசிவறல் kasivaṟal, தொ, பெ. (vbl.n)

   கசிவு நீங்குதல்; stop oozing; getting rid of moisture (சா.அக);.

     [கசிவு + அறல் அறு → அறல் அல் → தொ.பொறு]

கசிவிறு-த்தல்

கசிவிறு-த்தல் kasiviṟuttal,    4 செ.குன்றாவி(v.t)

   கசிந்த நீரை இறுத்துக் கொள்ளல்; collecting the water oozing out (சா,அக,);.

     [கசிவு + இறு. இறுத்தல் = வடித்தல்.]

கசிவு

கசிவு1 kasivu, பெ. (n.)

   1. ஊறுகை; ooze, discharge.

மடையைக் கசிவில்லாமல் கட்டு (உவ);.

   2. ஈரம்; moisture as of land, dampness.

அடுத்த வயலில் நீர்நிற்பதால் இந்த வயலில் கசிவு ஏற்பட்டுள்ளது (உவ);.

   3. சிறிய ஒழுக்கு:

 leak.

தண்ணிர்த் தொட்டியில் கசிவு உள்ளது (உவ);.

   4. அடைக்கப்பட்ட குடுவை போன்றவற்றினின்று வளி முதலியன வெளியேறுகை ; leak of gas from a container.

நச்சுக் காற்றுக் கசிவால் பலர் இறந்தனர் (உவ);.

   5. மின்கடத்தலில் ஏற்படும் மின்னிழப்பு

 energy loss in conduction.

   6. வியர்வை; perspiration.

     “பசிதினத் திரங்கிய கசிவுடை யாக்கை” (புறநா.160:4);.

     [கசி → கசிவு]

 கசிவு2 kasivu, பெ. (n.)

   1. மனநெகிழ்வு; to relent as the heart in pity.

     “கசிவறு மனத்தி னேனும்” (தணிகைப்பு.அவையடக்.2);.

   2. வருத்தம்:

 distress; pain.

     “கசிவெனும் கடலை நீந்தி” (சீவக.1132);.

   3. இரக்கம்; pity.

     “கண்பொறி போகிய கசிவொடு உரனழிந்து” (புறநா.161:13);.

   4. உவகையால் உண்டாகும் அழுகை (சூடா);; weeping.

     “மூதிற் பெண்டிர் கசிந்தழ” (புறநா.19:15);.

     [கசி → கசிவு]

மனநெகிழ்வானது வருத்தம், இரக்கம், அழுகை ஆகியவற்றிற்குக் கரணியமாய் அமைதல்போல் இன்பத்திற்கும் கரணியமாய் நிற்பதை ஒர்ந்துகொள்க.

கசு

கசு kasu, பெ. (n.)

   காற்பலம்; measure of weight = 1/4 பலம்.

     “அமுது செய்யச் சர்க்கரை முக்ககம்’ (S.I.I.ii, 127);.

     [கஃசு [காற்பலம்] → கக கஃசு பார்க்க see {kakksu}.]

கசுகசு – த்தல்

கசுகசு – த்தல் gasugasuttal,    4 செ,கு,வி.(vi)

   ஈரமாயிருத்தல், கசிவாயிருத்தல் [இநூ.அக]; to form moisture, to be sticky or adhesive.

     [கசு + கக – கசுக்க. கசகச – த்தல் பார்க்க; see {kaša-kaša}-.]

கசுகசுப்பு

 கசுகசுப்பு gasugasuppu, பெ. (n.)

   ஒட்டிரம், உள்ளீரம் (யாழ்,அக.);; being moist, sticky or adhesive.

     [கசு + ககப்பு → ககககப்பு]

கசுகுசு – த்தல்

கசுகுசு – த்தல் gasugusuttal,    4 செ,கு,வி,(v.i).,

   50pé,கமுக்கமாய்ப் பேசுதல்; to tell in secret, to reveal a Secret.

கசுகுசெனல்

 கசுகுசெனல் gasuguseṉal, பெ. (n.)

   காதுக்குள் பேசுங் குறிப்பு ; whispering into the ear.

     “கசுகுசெனவே சொலசுகை யென்னடி’ (மதுரகவி);.

பட. குசுகுக

     [கசு + குசு + எனல்]

கசுபிசு – த்தல்

கசுபிசு – த்தல் kasubisuttal,    4 செ.கு,வி,.(v.i).

   ஒட்டிரமாக்கி இளகவைத்தல் (இ.நூ.அக);; to be sticky.

     [கசு + பி.க.]

கசுபிசுக்கை

 கசுபிசுக்கை kasubisukkai, பெ. .(n.)

   பிசுபிசுக்கை; being sticky, adhesive so as to stick to the hands or feet.

ம. கக

     [கக + பிகக்கை]

கசுமாலம்

 கசுமாலம் kasumālam, பெ. (n.)

கழிமாலம் பார்க்க; See {kalimălam.}

     [கழிமாலம் → ககமாலம் (கொ.வ);.]

கசுமாலர்

கசுமாலர் kasumālar, பெ. (n.)

   தூய்மையற்றவர்; dirty slovenly persons.

     “பேயமு தூணிடு சுகமாலர்” (திருப்பு.64);.

     [கழிமாலம் → ககமாலம் → ககமாலர் அர் – பயா.ஈறு.]

கசுமாலி

கசுமாலி kasumāli, பெ. (n.)

   1. தூய்மையற்றவள்; slut, dirty woman.

   2.சண்டைக்காரி (வின்);; termagant.

     [கழிமாலம் → ககமாலம் → ககமாலி, “இ”.பெ.பா.ஈறு,]

கசுவுநார்

 கசுவுநார் kasuvunār, பெ. (n.)

   கசவுச் செடியின் நார் (வின்);; fibre of the plant {kaśa}.

     [கசவு + நார். கசவநார் → ககவுநார்]

கசை

கசை kasai, பெ. (n.)

   1. நீண்ட கயிறு,

 long rope.

   2. சாட்டையாகப் பயன்படுத்தும் வீச்சுக்கயிறு:

 horse whip, whip.

     “கசையால் வீசியுடல் போழ்ந்தார்”. (சிவரக. கத்தரிப்பூ.37);,

   3. நீண்ட மென்கம்பி; rod as an instrument of correction.

     “உபாத்தியாயன் கையிற் கசைகண்டு” (திவ். திருமாலை.11.வியா);.

   ம. கச;   க. கசெ; Skt. {kašā}.

     [கசவு → கசை = கசவுச் செடியின் நாரால் செய்த கயிறு2 அல்லது சாட்டை]

 கசை kasai, பெ.(n.)

   மயிர்மாட்டி; hair ornamen fastened by a hook from the top of the ear to the back of the head.

     [கழி → கசி → கசை நீளமானது.)

 கசை3 kasai, பெ. (n.)

   சித்திரவேலை; decorative work.

கசைவேலைக்கு நாளும் கூலியும் மிகுதியாகும் (உவ);.

     [கசை → கசை 3. கசை = நார், மென்கம்பி கை வேலைப்பாட்டுடன் செய்யும் பணிக்கு நீண்ட மென்கம்பி அடிப்படை அக் கம்பி பொன்னாயிருப்பது சிறப்பு. இதுபற்றியே கசை பொன்னையும் பொன்கம்பியையும், அக் கம்பியால் செய்யும் கைவேலையையும் குறிப்பதாயிற்று)

 கசை4 kasai, பெ .(n.)

   1. மெய்புதையரணம் (கவசம்);; coat of mail.

   2. பசை (வின்);; cement, paste.

     [கச்சம் → கச்சை → கசை = ஒட்டிக்கொள்வது; மேலுறைக் காப்பாக இருப்பது]

 கசை5 kasai, பெ. (n.)

   கடிவாளம் சம்.அக.Ms); horse’s bit.

     [கழி → கசி → கசை நீளமான கயிற்றுடன் கூடிய கடிவாளம்]

கசைக்குச்சி

கசைக்குச்சி kacaikkucci, பெ. (n.)

கலசங்களைத் தாங்கி நிற்கும் குச்சி. (ம.வ.தொ.75);

 supporting sticks.

     [கசை+குச்சி]

கசைமுறுக்கி

 கசைமுறுக்கி kasaimuṟukki, பெ. (n.)

   தட்டான்குறடு (வின்);; goldsmith’s pincers.

     [கசை + முறுக்கி. கசை = நீண்ட கம்பி. முறுக்கி = முறுக்கப் பயன்படுவது.]

கசையடி

கசையடி kasaiyaḍi, பெ. (n.)

   கசையால் தரப்படும் தண்டனை; whiplash as punishment.

கள்ளனுக்குக் கசையடி கொடுத்தா னரசன் நன்.விருத்298).

     [கசை + அடி கசை = விளார். கயிற்று விளார் [சவுக்கு]. அடு = கொல்லுதல், வருத்துதல் அடு → அடி அடித்தல் = புடைத்தல், வருத்துதல், கொல்லுதல்.]

கசைவளையல்

 கசைவளையல் kasaivaḷaiyal, பெ. (n.)

   பொற்கம்பி வளை (வின்);; bracelets made of braided gold wire.

     [கசை + வளையல்.]

கசைவேலை

 கசைவேலை kasaivēlai, பெ. (n.)

   பொற்கம்பி வேலை (வின்);; braiding with gold wire.

     [கசை + வேலை.]

கசைவைத்தபுடவை,

 கசைவைத்தபுடவை, kasaivaittabuḍavai, பெ. (n.)

   பொன்னிழைக்கரைச்சீலை (வின்);; gold fringed cloth.

     [கசை + வைத்த + புடவை.]

கச்சகம்

கச்சகம்1 gaccagam, பெ.(n.)

   குரங்கு; monkey (சா.அக);.

ம. கச்சகம்

     [கொள் = வளைவு கொள் → கொச்சு → கொச்சகம் → கச்சகம், முதுகு வளைந்த விலங்கு குரங்கு.]

 கச்சகம்2 gaccagam, பெ.(n.)

   கொள்; horse-gram.

மறுவ, கொள்ளு காணம், உருளி

     [கொள் = வளைவு கொள் → கொச்சு → கொச்சகம் → கச்சகம் (வளைந்து காணப்படும் கொள்ளுக்காய்);]

கச்சகர்,

 கச்சகர், gaccagar, பெ.(n.)

கச்சகம் பார்க்க; see kaccagamo.

     [கச்சகம் → கச்சகர்]

கச்சக்கடாய்,

 கச்சக்கடாய், kaccakkaṭāy, பெ.(n.)

   ஆமையோடு; the shell of a tortoise.

த.கச்சம் → Skt. kacchapaka (tortoise);.

     [கச்சம் + கடாய். கடாய் = வாயகன்ற மட்கலம் கச்சம் = ஆமை, கச்சம் பார்க்க; see kaccam]

கச்சக்கட்டைமரம்,

 கச்சக்கட்டைமரம், kaccakkaṭṭaimaram, பெ.(n.)

   சின்னாஞ்சிமரம்; crape myrtle.

     [கச்சல் + கட்டை + மரம்.]

கச்சக்கயிறு,

கச்சக்கயிறு, kaccakkayiṟu, பெ.(n.)

   1 யானையின் கழுத்தில் கட்டும் பட்டைக் கயிறு:

 rope tied round the neck of an elephant.

   2. யானையின் வயிற்றைச் சுற்றிக் கட்டும் கயிறு:

 elephant’s girth (சேரநா.);.

ம. கச்சக்கயறு ‘

     [கச்சு + கயிறு]

கச்சக்குமிட்டி,

கச்சக்குமிட்டி, kaccakkumiṭṭi, பெ.(n.)

   1. தலை விரித்தான் செடி, ஒருவகைக் கொம்மட்டி; a kind of bitter plant.

   2.பேய்க்கொம்மட்டி; wild gourd (சா.அக);.

     [கச்சல் + குமிட்டி கொம்மட்டி → குமிட்டி]

கச்சக்குறிஞ்சான்,

 கச்சக்குறிஞ்சான், kaccakkuṟiñjāṉ, பெ.(n.)

   கசப்புக் குறிஞ்சான்; a plant (சா.அக);.

     [கச்சல் + குறிஞ்சான்.]

கச்சக்கோரை,

 கச்சக்கோரை, kaccakārai, பெ.(n.)

   உப்பங்கோரை; a sedge that grows only by the side of salt marshes (சா.அக.);.

     [கச்சல் + கோரை. கச்சல் = சிறுமை, மென்மை.]

கச்சங்கட்டு-தல்,

கச்சங்கட்டு-தல், kaccaṅgaṭṭudal,    5 செ.கு.வி.(v.i.)

கச்சைக்கட்டு பார்க்க;see kaccai-k-kattu-.

     [கச்சை → கச்சம் + கட்டு.]

கச்சங்கம்,

கச்சங்கம், kaccaṅgam, பெ.(n.)

கச்சம், ஒப்பந்தம்,

 agreement, binding.

     “நாங்க ளெம்மிலிருந்தொட்டிய கச்சங்கம் நானுமவனு மறிதும்” (திவ். நாய்ச்.5:8);.

     [கச்சு = பிடிப்பு, கட்டு