தலைசொல் | பொருள் |
---|---|
கௌகப் | கௌகப் gaugap, பெ.(n.) தோலா எடையுள்ள ஒரு பண்டைக் காலத்து முகமதிய வெள்ளி நாணயம்; an ancient Mahomadan silver coin weighing 50 totals (சா.அக.);. |
கௌசனம் | கௌசனம் kausaṉam, பெ.(n.) கௌபீனம் (இ.வ.); பார்க்க;see {}. [Skt.{}-vali → த.கோவலி.] |
கௌசனை | கௌசனை kausaṉai, பெ.(n.) 1. உறை; cover, envelope. 2. குதிரை முதலியவற்றின் மேற்றவிசு (வின்);; cushion or pad for a rider on a horse or elephant. தெ.கௌசினா. [Skt.{} → த.கௌசனை.] |
கௌசபாகம் | கௌசபாகம் kausapākam, பெ.(n.) ஒரு வகைக் கருக்கு நீர்; a kind of decoction (சா.அக.);. [Skt.{} + த.பாகம்.] |
கௌசலம் | கௌசலம்1 kausalam, பெ.(n.) 1. கௌசல்யம் பார்க்க;see {}. 2. தந்திரம் (இ.வ.);; art, artfulness. [Skt.{} → த.கௌசலம்.] கௌசலம்2 kausalam, பெ.(n.) கள்; toddy (சா.அக.);. |
கௌசலை | கௌசலை kausalai, பெ.(n.) இராமனின் தாய்; Rama’s mother. “மன்னுபுகழ்க் கௌசலை தன் மணிவயிறு வாய்த்தவனே” (திவ்.பெருமாள்.8:1);. [Skt.{} → த.கௌசலை.] |
கௌசல்யம் | கௌசல்யம் kausalyam, பெ.(n.) திறமை; ability. “சிற்பகௌசல்யத்துடனே குண்ட மண்டபவேதிகளைச் சமைத்து” (சி.சி.8:3 சிவாக்.);. [Skt.{} → த.கௌசல்யம்.] |
கௌசாம்பி | கௌசாம்பி kaucāmbi, பெ.(n.) கங்கைக் கரையிலுள்ள ஒரு பழைய நகரம்; an ancient city on the banks of the Ganges in the lower part of the Doab. [Skt.{} → த.கௌசாம்பி.] |
கௌசி | கௌசி kausi, பெ.(n.) வயிற்றி லுண்டாகும் ஓர் நீராமைக்கட்டி; dropsy of the belly or abdomen abdominal dropsy-Ascites (சா.அக.);. |
கௌசிகன் | கௌசிகன் gausigaṉ, பெ.(n.) 1. விசுவா மித்திரன்;{}. “கௌசிகன் சொல்லுவான்” (கம்பரா.மிதிலை.42);. 2. இந்திரன் (பிங்.);; Indira. [Skt.{} → த.கௌசிகன்.] |
கௌசிகம் | கௌசிகம் gausigam, பெ.(n.) 1. கூகை (பிங்.);; owl. 2. பட்டாடை (பிங்.);; silk cloth. 3. பண் வகை (சிலப்.6, 35, உரை);; a primary melody-type. [Skt.kausika → த.கௌசிகம்.] |
கௌசிகேயம் | கௌசிகேயம் kausiāyam, பெ.(n.) வெள்ளைக் கிலுகிலுப்பை; fox frightener Crotolaria angulosa (சா.அக.);. |
கௌசிதகி | கௌசிதகி gausidagi, பெ.(n.) நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று; an upanisad, one of 108. [Skt.{} → த.கௌசிதகி.] |
கௌசியல் | கௌசியல் kausiyal, பெ.(n.) தென்னைமரம்; cocoanut tree (சா.அக.);. [P] |
கௌசிரர்நிலக்குரோசினை | கௌசிரர்நிலக்குரோசினை kausirarnilakkurōsiṉai, பெ.(n.) இது செம்பினின்றுகளிம்பெடுக்கும் மருந்து; an unknown paste used to remove verdigris from copper (சா.அக.);. |
கௌசீகபலம் | கௌசீகபலம் kaucīkabalam, பெ.(n.) தேங்காய்; cocoanut (சா.அக.);. |
கௌசீதகி | கௌசீதகி gaucītagi, பெ.(n.) நூற்றெட்டு (உபநிடதம்); துணைத் தோன்றியங்களுலொன்று; un upanisad, one of 108. [Skt.{} → த.கௌசீதகி.] |
கௌசீதளம் | கௌசீதளம் kaucītaḷam, பெ.(n.) 1. வெள்ளை ஈர்கொல்லி; stinking swallow wort. 2. ஈர்கொல்லி பார்க்க;see {} (சா.அக.);. |
கௌசு | கௌசு kausu, பெ.(n.) முடைநாற்றம்; bad smell. க.தெ. கெளசு. [கவிச்சி → கெளசு.] |
கௌசுகம் | கௌசுகம்1 gausugam, பெ.(n.) குங்கிலியம் பார்க்க;see kungiliyam. [Skt.{} → த.கௌசுகம்.] கௌசுகம்2 gausugam, பெ.(n.) குங்கிலியம்; tripterocarp dammar. [Skt.{} → த.கௌசுகம்.] |
கௌஞ்சம் | கௌஞ்சம்1 kauñjam, பெ.(n.) கிரவுஞ்சம் (சூடா.); பார்க்க;see {}. [Skt.kraunea → த.கௌஞ்சம்.] கௌஞ்சம்2 kauñjam, பெ.(n.) 1. அசாதமிற்கு கிழக்கேயுள்ள பனிமலை (இமயமலை);த் தொடர்; the eastern part of the Himalayan range in Assam. 2. திருநெல்வேலிக்கு அருகிலுள்ள ஒரு தீவு; an unknown island near Tirunelvelly Dt. (சா.அக.);. |
கௌடதம் | கௌடதம் kauḍadam, பெ.(n.) 1. வெள்ளுள்ளி; garlic. 2. வெட்பாலை; Tellicherry bark – Nerium antidysentericum (சா.அக.);. [P] |
கௌடநடை | கௌடநடை kauḍanaḍai, பெ.(n.) கௌடநெறி (வின்.); பார்க்க;see {}. [Skt.gauda → த.கௌடம் + நடை.] |
கௌடநெறி | கௌடநெறி kauḍaneṟi, பெ.(n.) செறிவு முதலியவை தருப்ப நெறிக்குரிய குணங்கள் நிரம்பி வாராமல் சொற்பெருகத் தொடுக்குஞ் செய்யுணெறி (தண்டி.12, உரை);; the kautam style of poetry characterised mainly by verbosity, dist. fr. vaitarappa-neri. [Skt.gauda → த.கௌடம் + நெறி.] |
கௌடம் | கௌடம் kauḍam, பெ.(n.) 1. வெல்லத்தினால் செய்த ஒரு மது; a liquor prepared out of jaggery; Molasses or that which is prepared from sugar. 2. ஒரு பின்னலான மருத்துவக் கொடி; a medicinal twining creeper. 3. வடதேயம்; North Indian (சா.அக.);. [Litt.{} (வெல்லம்); விந்தியத்தின் வடபால் பஞ்ச கௌடம் எனும் வடநாடு பஞ்சதிரவிடம் என்பதன் எதிர்.] |
கௌடலி | கௌடலி kauḍali, பெ.(n.) 1. ஆடையில்லாள்; one having no clothes on. 2. சத்தி; the goddess sakti (சா.அக.);. |
கௌடிலம் | கௌடிலம் kauḍilam, பெ.(n.) வளைவு; curve, bent. [Skt.kautilya → த.கௌடிலம்.] |
கௌணப்பொருள் | கௌணப்பொருள் kauṇapporuḷ, பெ.(n.) இலக்கண வகையாற் கொள்ளும் பொருள் (சி.சி.பாயி.2, ஞானப்.);; secondary meaning or sense of a word, metaphorical sense, opp. to {}. [Skt.gauna+porul → த.கௌணப்பொருள்] |
கௌணம் | கௌணம் kauṇam, பெ.(n.) முகாமையல்லாதது; that which is subordinate or secondary. [Skt.gauna → த.கௌணம்.] |
கௌணாவதாரம் | கௌணாவதாரம் kauṇāvatāram, பெ.(n.) ஒரு நிமித்தம் பற்றித் தன்சத்தியை ஒருவர்பால் ஏறிட்டு நிகழ்த்தும் தெய்வத் தோற்றரவு; secondary or patial incarnation in which God’s spirit enters and works through a human being. த.கூடுபாய்தோற்றரவு. [Skt.gauna+ava-{} → த.கௌணாவதாரம்.] |
கௌணியன் | கௌணியன் kauṇiyaṉ, பெ.(n.) கவுணியக் குலத்தான்; one born in the Kaudinya gotra. [Skt.கௌடிண்யம் → த.கவுணியம், கௌணியம்.] வடமொழியாளர் மரபின் வண்ணம் கௌடிண்ய கோத்திரத்தைச் சார்ந்தவனைக் கௌடிண்யன் என்பர். இது தமிழில் கவுணியன் விண்ணந்தாயின் எனும் புலவர் பெயர் உள்ளது. |
கௌண்டன் | கௌண்டன் kauṇṭaṉ, பெ.(n.) 1. உயிர்க் கொல்லி; life-killer. 2. வேடன்; hunter (சா.அக.);. |
கௌண்டினியன் | கௌண்டினியன் kauṇṭiṉiyaṉ, பெ.(n.) 1. ஒரு முனியன்; the name of a great sage. 2. கொடிவழி; |
கௌதகம் | கௌதகம் gaudagam, பெ.(n.) பொதிகை; capital of a pillar, wooden piece attached to a wall supporting the main beam of a house. [கவ்வு → கவுதம் → கெளதகம்.] |
கௌதமதந்திரம் | கௌதமதந்திரம் kaudamadandiram, பெ.(n.) விசவாமித்திரராற் செய்யப்பட்ட ஓர் ஆயுள் வேத நூல்; an Ayurvedic treatise by sage Viswamitra (சா.அக.);. |
கௌதமநாடி | கௌதமநாடி kaudamanāṭi, பெ.(n.) கௌதமரால் தமிழில் செய்யப்பட்ட ஒரு கை வரிக் கணிய நூல், தமிழ், நாடி நூல்கள் பொதுவாக உள்ளங்கைக் கோடுகளைக் கொண்டே வரும். ஆகவே, கை வரி நூலிற்கும் கணிதத்திற்கும் நெருங்கிய தொடர்பு முண்டென்பது தெற்றென விளங்கும்; a work on Astrology written by sage Goutana C’ Viswamitra, Tamil Nadu work is generally based on Palmistry; and therfore a close relation between palmistry and astrology is clearly established (சா.அக.);. |
கௌதமனார் | கௌதமனார் kaudamaṉār, பெ.(n.) தலைச் சங்கப் புலவருள் ஒருவர்; a poet of the first {} [Skt.gautama → த.கௌதமனார்.] |
கௌதமன் | கௌதமன் kaudamaṉ, பெ.(n.) 1. ஒரு முனிவர்; an ancient rsi, husband of {}. 2. அறநூல் செய்த அக்க பாதர்; the founder of the {} system of Indian philosophy. 3. புத்தன்; the Buddha. 4. கிருபாசாரியார்;{}, a preceptor of the {}. “முன்னிருந்த கௌதமன்” (பாரத.வாரணா.66);. [Skt.Gautama → த.கௌதமன்.] |
கௌதமம் | கௌதமம்1 kaudamam, பெ.(n.) அறநூல் பதினெட்டனுள் கௌதமரால் இயற்றப்பட்ட நூல்;{} by Gautama, one of 18 {}. [Skt.gautama → த.கௌதமம்.] கௌதமம்2 kaudamam, பெ.(n.) நறும் பிசின்; fragrant resin (சா.அக.0/ |
கௌதமி | கௌதமி kaudami, பெ.(n.) 1. ஓர் ஆறு (பிங்.);; a river. 2. கோரோசணை; bezoar-stone (W.);. [கோ → கோதை → கோதமன் → கோதமி (பெருமைமிக்கவள், பெருமைமிக்கது);.] கௌதமி kaudami, பெ.(n.) 1. ஒரு ஆறு (பிங்.);; a river. 2. ஆமணத்தி (கோரோசனை); (வின்.);; bezoar-stone. 3. ஆன்; cow. [Skt.{} → த.கௌதமி.] |
கௌதமை | கௌதமை kaudamai, பெ.(n.) கௌதமி பார்க்க (வின்.);;see kaudami. |
கௌதம் | கௌதம் kaudam, பெ.(n.) கிச்சிலிக் குருவி; the king fisher Haicyon (சா.அக.);. [P] |
கௌதாரம் | கௌதாரம் kautāram, பெ.(n.) 1. உடும்பின் குட்டி; young of guana. 2. உடும்பின் நிறமான பாம்பு; a snake of the colour of guana (சா.அக.);. |
கௌதுகம் | கௌதுகம் gaudugam, பெ.(n.) 1. மகிழ்ச்சி; joy pleasure. 2. சாலவிளையாட்டு; legerdemain, jugglery. “கதுமெனத்தரும் விஞ்சையர் கௌதுகம் போல” (சேதுபு.காசிப.37);. 3. காப்பாக மணிக்கட்டிற் கட்டும் நூல் (சங்.அக.);; thread worn on the wrist as amulet. [Skt.kautuka → த.கௌதுகம்.] |
கௌதூகலம் | கௌதூகலம் kautūkalam, பெ.(n.) மிதி பாகல், நிலத்தில் படரும் சிறபாகல்; ground creeper mimordica humilis (சா.அக.);. |
கௌதேரசர்ப்பம் | கௌதேரசர்ப்பம் kautērasarppam, பெ.(n.) சாரைப் பாம்பு, இது உடும்பு நிறத்தை போன்றதால் இப்பெயல்; rat-snake called from its resemblence in colour to guana. (சா.அக.);. [P] |
கௌத்துபம் | கௌத்துபம் kauttubam, பெ.(n.) திருமால் மார்பிலணியும் மணி; by Visnu on his chest. [Skt. kaustuba → கௌஸ்துபம் → த.கௌத்துபம்.] கௌத்துபம் kauttubam, பெ.(n.) திருமால் மார்பிலணியும் மணி; the gem worn by Visnu on his chest. [Skt.kaustuba → த.கௌத்துபம்.] |
கௌத்துவம் | கௌத்துவம்1 kauttuvam, பெ.(n.) மாணிக்கம்; a kind of carb-(gem);; a ruby (சா.அக.);. கௌத்துவம்2 kauttuvam, பெ.(n.) 1. கௌத்துபம் பார்க்க;see kaustubam. “கௌத்துவமுடைக் கோவிந்தன்” (திவ்.பெரியாழ்.4 5:8);. 2. தாமரைக்கல்; a kind of ruby (சூடா.);. [Skt.kaustubha → த.கௌத்துவம்2.] கௌத்துவம்3 kauttuvam, பெ.(n.) கவுத்துவம்1 பார்க்க;see kavuttuvam. [Skt.kaitava → த.கௌத்துவம்.] |
கௌத்துவவழக்கு | கௌத்துவவழக்கு kauttuvavaḻkku, பெ.(n.) பொய்வழக்கு (இ.வ.);; barratry, vexatious litigation, false suit. [கௌத்தும் + வழக்கு.] [Skt. kaitava → த.கௌத்துவம்.] |
கௌந்தியம் | கௌந்தியம் kaundiyam, பெ.(n.) வெண்மருது; white murdah – Terminalia arjuna (சா.அக.);. |
கௌனகுளிகை | கௌனகுளிகை gauṉaguḷigai, பெ.(n.) குளிகை பார்க்க;see kuligai (சா.அக.);. |
கௌனிகம் | கௌனிகம் gauṉigam, பெ.(n.) 1. வான்; sky. 2. கரும்பளிங்கு; a black granite stone (சா.அக.);. |
கௌபம் | கௌபம் kaubam, பெ.(n.) கிணற்று நீர்; well water (சா.அக.);. |
கௌபலம் | கௌபலம் kaubalam, பெ.(n.) மிளகாய்; chilly-Capsicum fruitescens (சா.அக.);. [P] |
கௌபலா | கௌபலா kaubalā, பெ.(n.) தட்டுப் பலா; a kind of jack tree (சா.அக.);. |
கௌபீனசுத்தன | கௌபீனசுத்தன kaupīṉasuttaṉa, பெ.(n.) பிற பெண்களைச் சேராதவன்; man of sexual purity (இ.வ.);. [Skt.{}+{} → த.கௌபீன சுத்தன.] |
கௌபீனசுத்தம் | கௌபீனசுத்தம் kaupīṉasuttam, பெ.(n.) அயற்பெண்களைக் கூடாதிருக்குந் தூயதன்மை; man’s sexual purity. [கௌபீனம்+சுத்தம்.] [Skt.{} → த.சுத்தம்.] |
கௌபீனதோசம் | கௌபீனதோசம் kaupīṉatōcam, பெ.(n.) பிறபெண்களைச் சேர்தலாகிய குற்றம்; man’s sexual impurity. [Skt.{}+{} → கௌபீனதோசம்.] |
கௌபீனம் | கௌபீனம் kaupīṉam, பெ.(n.) நீர்ச்சீலை; man’s loin-cloth. த.வ. கோவணம். [Skt.{} → த.கௌபீனம்.] [த.வ.கோவணம் → Skt.{}.] |
கௌமாதம் | கௌமாதம் kaumātam, பெ.(n.) நளி (கார்த்திகை); மாதம்; the month of Novembar and December (சா.அக.);. |
கௌமாமுட்டி | கௌமாமுட்டி kaumāmuṭṭi, பெ.(n.) எட்டி (மலை);; strychnine tree. |
கௌமாரகம் | கௌமாரகம் gaumāragam, பெ.(n.) இளகை; juvenile age (சா.அக.);. த.வ. குமரம். |
கௌமாரதந்திரம் | கௌமாரதந்திரம் kaumāradandiram, பெ.(n.) பிள்ளைகளை வளர்ப்பதைப் பற்றியும், பயிற்சியைப் பற்றியும் கூறும் ஒரு வடமொழி மருத்துவ நூல்; the section of a medical work in Sanskrit treating of the rearing and education of children (சா.அக.);. த.வ. குமரகல்வி. |
கௌமாரம் | கௌமாரம்1 kaumāram, பெ.(n.) 1. இளமை; youth; maiden age of sixteen. 2. இளமை பருவம்; childhood; young age. 3. ஒன்ற முதல் 16 வயது வரையுள்ள ஆண்; a male aged 1 to 16 years. 4. 16 வயது முதல் 32 வரையுள்ள பெண்; a female aged 16 to 32 years. த.வ. குமரம். [Skt.{} → த.கௌமாரம்.] கௌமாரம்2 kaumāram, பெ.(n.) 1. இளம் பருவம்; childhood. 2. முருகக் கடவுளே பரம்பொருளென்று வழிபடுஞ் சமயம்; the religion of the {} who hold Skanda as the supreme being and are exclusively decoted to his worship. த.வ. குமரம். [Skt.{} → த.கௌமாரம்.] |
கௌமாரி | கௌமாரி kaumāri, பெ.(n.) 1. தூய பெண்களுள் ஒருத்தி; the female principle of {} or Skanda, one of catta-{}. 2. மாகாளி (பிங்.);;{}. [Skt.{} → த.கௌமாரி.] |
கௌமீதி | கௌமீதி kaumīti, பெ.(n.) நிலவு; moon (சா.அக.);. |
கௌமோதகி | கௌமோதகி gaumōtagi, பெ.(n.) திருமாலின் படைக்கலன் (பிங்.);; the mace of Visnu. [Skt.{} → த.கௌமோதகி.] |
கௌரமிருகம் | கௌரமிருகம் gauramirugam, பெ.(n.) காட்டு மாடு; wild cow-Bos gaurus (சா.அக.);. [P] |
கௌரம் | கௌரம் kauram, பெ.(n.) 1. வெண்மை; whiteness. 2. பொன்னிறம் (சிலப்.12, 67, உரை.);; yellow colour. [Skt.gaura → த.கௌரம்.] |
கௌரவம் | கௌரவம் kauravam, பெ.(n.) 1. மேன்மை; dignity; eminence, honour. 2. பெருமிதம்; pride. “அடர்ச்சிமிகுங் கௌரவம்” சிவப்பிர.பொது.30). [Skt.gaurava → த.கௌரவம்.] |
கௌரவர் | கௌரவர் kauravar, பெ.(n.) கவுரவர்; Kaurava princes. “வரிவெஞ்சிலைக்கைக் கௌரவர்” (பாரத.ஒன்பதாம்.31);. [Skt.kaurava → த.கௌரவர்.] |
கௌராங்கம் | கௌராங்கம் kaurāṅgam, பெ.(n.) வெள்ளை அல்லது மஞ்சள் உடம்பை உடைத்தாயிருக்கை; having a white or yellowish body (சா.அக.);. |
கௌரி | கௌரி2 kauri, பெ.(n.) 1. சோழி; small white or yellow shell, used as a coin in some parts of India (M.M.238);. 2. கவுரி பார்க்க;see kavuri. [கவடி → கவரி → கெளரி] கௌரி1 kauri, பெ.(n.) 1. மலைமகள் (திவா.);; பார்வதி; Parvati. “பேருங் கௌரியென்றழைத்தனர்” (திருவிளை.விருத்த.4);. 2. காளி;{}. “அம்பிகை மாதரிகௌரி” (அரிச்.பு.துதி.);. 3. எட்டு அல்லது பத்தகவைப் பெண்; young girl of for 10 years. 4. பொன்னிறம் (வின்.);; yellow colour. 5. கடுகு (மலை);; mustard. 6. கொடி வகை; bristly trifoliate vine. [த.கௌரி → Skt.கௌரி.] கௌரி2 kauri, பெ.(n.) சோழி: (M.M.238);; cowry, small white or yellow shell, used as a coin in some parts of India, Cypraca moneta. [U.kauri → த.கௌரி2.] |
கௌரிகம் | கௌரிகம் gaurigam, பெ.(n.) வெள்ளைக் கடுகு; white mustard (சா.அக.);. |
கௌரிகாளை | கௌரிகாளை kaurikāḷai, பெ.(n.) எக்காள வகை; a long brass trumpet. [Skt.gaurava+{} → த.கௌரிகாளை.] |
கௌரிகேணி | கௌரிகேணி kauriāṇi, பெ.(n.) 1. கொடிவகை; mussell-shell creeper. S.el.elitoria termaated typiea. 2.வெள்ளைக் காக்கணம் பார்க்க (மலை.);;see vellai-k-käkkanam. [குமரி → குவரி → கெளரி + கேணி.] கௌரிகேணி kauriāṇi, பெ.(n.) வெள்ளைக் காக்கணம் (மலை);; white flowered mussell – shell creeper. [Skt.gaura+{} → த.கௌரிகேணி.] |
கௌரிசங்கம் | கௌரிசங்கம் kaurisaṅgam, பெ.(n.) 1. சிவனும் சிவையும் உருவினதாய் இணைந்து உள்ளதாகக் கருதப்பெறும் இருபிளவுபட்ட அக்கமணி; a double {} believed to represent Siva and Sivai. 2. கவுரிசங்கரம் பார்க்க;see {}. [Skt.{}+{} → த.கௌரிசங்கம்.] |
கௌரிசங்காமணி | கௌரிசங்காமணி kaurisaṅgāmaṇi, பெ.(n.) கவுரிசங்கம் (வின்.); பார்க்க;see kauri-sangam. |
கௌரிசிப்பி | கௌரிசிப்பி kaurisippi, பெ.(n.) வழிவாட்டுக் கலனாகப் பயன்படும் பெருஞ்சங்கு (வின்.);; a big conch which is used as a thing to be worshipped. [U.kauri+{} → த.கௌரி+சிப்பி.] |
கௌரிபாடாணம் | கௌரிபாடாணம் kauripāṭāṇam, பெ.(n.) ஒரு வைப்பு நஞ்சு (வின்.);; a prepared arsenic. [Skt.{}+{} → த.கௌரிபாடாணம்.] |
கௌரிப்பழம் | கௌரிப்பழம் kaurippaḻm, பெ.(n.) ஒரு சிவப்புப் பழம், இது சாப்பிடவும் ஊறுகாய் போடவும் உதவும்; Indian black berry Rubus flavus. It is eaten and made into preserves (சா.அக.);. |
கௌரிமாதி | கௌரிமாதி kaurimāti, பெ.(n.) மணமுறிப்பு மர வகை; a kind of Deoder tree (சா.அக.);. |
கௌரிமைந்தன் | கௌரிமைந்தன் kaurimaindaṉ, பெ.(n.) முருகன் கடவுள், பார்வதி மைந்தன் (பிங்);; Skanda, as son of {}. [Skt.gauri+{} → த.கௌரிமைந்தன்.] |
கௌரியச்சம் | கௌரியச்சம் kauriyaccam, பெ.(n.) ஒரு பூடு; an unknown plant (சா.அக.);. |
கௌரியன் | கௌரியன் kauriyaṉ, பெ.(n.) பாண்டியன் பட்டப்பெயர்;{} title. “தவிரா லீகைக் கௌரியச் மருக” (புறநா.3, 5);. [Skt.kauravya → த.கௌரியன்.] |
கௌரிலம் | கௌரிலம் kaurilam, பெ.(n.) 1. கௌரிகம் பார்க்க;see kaurigam. 2. இரும்புப் பொடி; iron filings (சா.அக.);. |
கௌரிவிரதம் | கௌரிவிரதம் kauriviradam, பெ.(n.) ஐப்பசி மாதத்தில் கெளரியை நோக்கிப் புரியும் நோன்பு; religious observance in honour of Parvati in the month of Aippasi. [கெளரி + விரதம்.] கௌரிவிரதம் kauriviradam, பெ.(n.) துலை (ஐப்பசி); மாதத்தில் மலைமகளை நோக்கிப் புரியும் நோன்பு; religious observance in honour of {} in the month of Aippaci. [Skt.{}+vrata → த.கௌரிவிரதம்.] |
கௌரீயந்திரம் | கௌரீயந்திரம் kaurīyandiram, பெ.(n.) சாரணை கொடுப்பதற்காகப் பயன்படுமோர் இயந்திரம்; an apparatus used in Alchemy for purposes of animating mercurial pills. (சா.அக.);. இவ்வியந்திரம் 8 சதுர செங்கல்லைக் கண்ணாடியைப் போல மெதுவாகத் தேய்த்துப் பிறகு அதன் நடுவில் மூளையைப் போற் குடைந்து அதற்குள் சுண்ணாம்பு தடவிப் பின் வெள்ளி, பொன், அப்பி ரேக்கு இவற்றை அரைத்து மூசையில் வார்த்து, வாய்மூடி சீலை மண் செய்து புடமிடப்படும். |
கௌரீலலிதம் | கௌரீலலிதம் kaurīlalidam, பெ.(n.) அரிதாரம் பார்க்க;see {}. |
கௌரேகிதம் | கௌரேகிதம் kaurēkidam, பெ.(n.) பாம்பு; a serpent (சா.அக.);. |
கௌரேசியம் | கௌரேசியம் kaurēciyam, பெ.(n.) வெள்ளை முகமுடைய கருங்குரங்கு; a black monkey with a white face (சா.அக.);. [Skt.{} → த.கௌரேசியம்.] [P] |
கௌலகம் | கௌலகம் gaulagam, பெ.(n.) வால் மிளகு; long pepper (சா.அக.);. [P] |
கௌலவம் | கௌலவம் kaulavam, பெ.(n.) கரணம் பதினொன்றனுள் ஒன்றாகிய காலப் பகுதி; a division of time, one of eleven karanam.q.v., (Astron.);. [Skt.kaulava → த.கௌலவம்.] கௌலவம்1 kaulavam, பெ.(n.) குதிரையுடலின் ஒரு பக்கத்திலிருக்கும் சுழிவகை (அசுவசா.149);; a curl of hair on one side of a horse’s body. |
கௌலியம் | கௌலியம் kauliyam, பெ.(n.) 1. கோரோசினை பார்க்க;see {}. 2. சாணி; dung. 3. கவ்வியம் பார்க்க;see kavviyam (சா.அக.);. |
கௌலேயகன் | கௌலேயகன் gaulēyagaṉ, பெ.(n.) நாய்; dog (சா.அக.);. |
கௌல் | கௌல்1 kaul, பெ.(n.) கவுள்1 பார்க்க;see kavul. கௌல்2 kaul, பெ.(n.) கவுல்2 பார்க்க;see kavul2. [U.qual → த.கௌல்.] |
கௌல்தார் | கௌல்தார் kaultār, பெ.(n.) கவுல்தார் பார்க்க;see {}. |
கௌளம் | கௌளம் kauḷam, பெ.(n.) பண் வகை; a primary melody-type (பரத.இராக.55);. [Skt.gauda → த.கௌளம்.] |
கௌளா | கௌளா kauḷā, பெ.(n.) a kind of fruit much used by unani doctors for cooling the system. see கௌரிப்பழம் (சா.அக.);. |
கௌளி | கௌளி1 kauḷi, பெ.(n.) கவுளி; house-lizard. கௌளி2 kauḷi, பெ.(n.) ஓர் இசை வகை; a specific melody-type (பரத.இராக.56);. |
கௌளிக்கட்டாய்ச்சொல்(லு)-தல் | கௌளிக்கட்டாய்ச்சொல்(லு)-தல் kauḷikkaṭṭāyccolludal, 8. செ.குன்றா. (v.t.) குறி சொல்லி ஏமாற்றுதல் (இ.வ.);; to deceive a person by professing to foretell, to mislead by sooth saying. |
கௌளிக்கட்டு | கௌளிக்கட்டு kauḷikkaṭṭu, பெ.(n.) கௌளிக்காதல் (இ.வ.); பார்க்க;see {}. |
கௌளிக்காதல் | கௌளிக்காதல் kauḷikkātal, பெ.(n.) நன்மை தீமைகளை அறிவிக்கும் பல்லி ஒலி (வின்.);; chirp of a lizard, as presaging good or evil. |
கௌளிசாத்திரம் | கௌளிசாத்திரம் kauḷicāttiram, பெ.(n.) பல்லிச் சொற்குப் பலன்கூறும் நூல்; treatise interpreting the chirps of lizards. |
கௌளிசொல் | கௌளிசொல் kauḷisol, பெ.(n.) பல்லி எழுப்பும் சத்தம்; chirp of the lizard. கௌளி சொல்லுக்குப் பலன் சொல்லுவார்கள் (க்ரியா);. |
கௌளிநூல் | கௌளிநூல் kauḷinūl, பெ.(n.) பல்லி சொல்லுவதின் பயன் கூறும் நூல்; a treatise containing the inter pretation of the chrips of lizards; a science on the noise of lizards and its presage (சா.அக.);. |
கௌளிபத்திரம் | கௌளிபத்திரம் kauḷibattiram, பெ.(n.) வெள்ளை வெற்றிலை வகை; white betelleaf. [Skt.gaura + pattiram → த.கௌளிபத்திரம்.] |
கௌளிபந்து | கௌளிபந்து kauḷibandu, பெ.(n.) ஒரு பண்; a melody type. [T.gauli + → த.கௌளிபந்து.] |
கௌளிபாத்திரம் | கௌளிபாத்திரம் kauḷipāttiram, பெ.(n.) 1. மஞ்சள் நிறமான காய்கள் காய்க்குந் தெங்கு வகை (இ.வ.);; a variety of coconut tree bearing yellow coconuts. 2. தேங்காயோட்டினால் செய்யப்பட்டுத் துறவிகள் நீர் அல்லது உணவு கொள்ளப் பயன்படுத்தும் ஏனம்; coconut shell used by ascetics ad a begging bowl, water-vessel, etc. [Skt.gaura → த.கௌரி + பாத்திரம்.] |
கௌவியம் | கௌவியம் kauviyam, பெ.(n.) ஆனைந்து, ஆவினின்று பெறப்படும் பால், தயிர், மோர், வெண்ணெய், நெய் ஆகிய பொருள்கள்; the five choice products of a cow. “தீதில் கௌவியங் கூட்டுபு பிசைந்தனர்” (சூத.சிவமா.2, 23);. [Skt.gavya → த.கௌவியம்.] |