செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை வெளியீடு
31 தொகுதி 12000 பக்கங்கள் கொண்ட பேரகரமுதலி


1

10838

2769

3111

538

3554

677

1093

620

189

1004

402

2
க்
1

8212
கா
2579
கி
564
கீ
222
கு
4598
கூ
780
கெ
615
கே
391
கை
1101
கொ
2417
கோ
1754
கௌ
110
ங்
1

2
ஙா
2
ஙி
1
ஙீ
1
ஙு
1
ஙூ
1
ஙெ
1
ஙே
1
ஙை
1
ஙொ
5
ஙோ
1
ஙௌ
1
ச்
1

5235
சா
1186
சி
2424
சீ
439
சு
1261
சூ
420
செ
1529
சே
470
சை
23
சொ
409
சோ
365
சௌ
1
ஞ்
1

15
ஞா
44
ஞி
3
ஞீ ஞு ஞூ ஞெ
34
ஞே
5
ஞை
2
ஞொ
3
ஞோ
2
ஞௌ
1
ட்
1

1
டா
1
டி
1
டீ
1
டு
1
டூ
1
டெ
2
டே
1
டை
1
டொ
1
டோ
1
டௌ
ண்
1

1
ணா
1
ணி
1
ணீ ணு
1
ணூ
1
ணெ
2
ணே
1
ணை
1
ணொ
1
ணோ
1
ணௌ
த்
3113
தா
1530
தி
2203
தீ
393
து
1238
தூ
411
தெ
694
தே
856
தை
39
தொ
878
தோ
459
தௌ
ந்
1

2789
நா
204
நி
1860
நீ
1161
நு
14
நூ
18
நெ
892
நே
318
நை
89
நொ
210
நோ
159
நௌ
2
ப்
1

4560
பா
1824
பி
492
பீ
25
பு
2224
பூ
1133
பெ
1064
பே
483
பை
127
பொ
1218
போ
478
பௌ
2
ம்
4760
மா
1422
மி
535
மீ
268
மு
3016
மூ
949
மெ
396
மே
751
மை
152
மொ
284
மோ
242
மௌ
ய்
1

119
யா
426
யி
1
யீ
1
யு
46
யூ
20
யெ
9
யே
1
யை
1
யொ
1
யோ
98
யௌ
1
ர்
87
ரா
107
ரி
11
ரீ
7
ரு
24
ரூ
20
ரெ
6
ரே
16
ரை
10
ரொ
8
ரோ
23
ரௌ
ல்
117
லா
44
லி
8
லீ
5
லு
8
லூ
3
லெ
13
லே
21
லை லொ
20
லோ
63
லௌ
3
வ்
1

3800
வா
1329
வி
1638
வீ
515
வு
1
வூ
1
வெ
2164
வே
834
வை
229
வொ
1
வோ
3
வௌ
ழ்
1

1
ழா
1
ழி
1
ழீ
1
ழு
6
ழூ
1
ழெ
1
ழே ழை ழொ ழோ
1
ழௌ
ள்
1

2
ளா
1
ளி
1
ளீ
1
ளு
1
ளூ
1
ளெ
2
ளே
1
ளை
1
ளொ
1
ளோ
1
ளௌ
ற்
1

1
றா
1
றி
1
றீ
1
று
1
றூ
1
றெ
2
றே
1
றை
1
றொ
1
றோ
1
றௌ
ன்
1

1
னா
1
னி
1
னீ
1
னு
1
னூ
1
னெ
2
னே
1
னை னொ
1
னோ
1
னௌ
தலைசொல் பொருள்
கோ

கோ1ā,    1. ககர மெய்யும் ஒகார நெடிலும் சேர்ந்த உயிர்மெய்யெழுத்து; the compound of க் + ஓ.

   2. ஒலிக்குறிப்பு; word imitative of sounds.

     [க் + ஒ.]

 கோ2āttal,    4 செ.குன்றாவி, (v.t.)

   1. மணி முதலியவற்றினூடு நூலைப் புகுத்தி இணைத்தல்; to string, as beads, flowers. ola leaves;

 to file;

 to insert;

 to thread, as a needle.

     “கோத்தணிந்தவெற்பு மணி” (பெரியபு. மானக்கஞ்.22);.

இறைச்சி தின்றாலும் எலும்பைக் கோத்துக் கழுத்தில் அணிகிறதா (பழ);.

   2. ஒழுங்கு படுத்துதல்; to compose, compile, arrange, reduce to order;

 to systematise.

     ‘பார்த்தவிட மெங்கனுங்கோத்தநிலை குலையாது” (தாயு. கருணாகர.4);.

   3. முறையாகக் கூறுதல்; to narrate in order;

     “பூமியாண் முறையுங் கோத்தார்” (பாரத. சம்பவ.113);.

   4. தொகுத்துரைத்தல்; to enumerate, recount.

     “கோமின் றுழாய்முடி யாதியஞ் சோதி குணங்களே”.(திவ்.திருவாய்.4, 1:7);.

   5. நுணுக்கமாகக் கதை முதலியன புனைதல்; to invent, as a story, in a clever and fitting manner.

   6. உடுத்துதல்; to put on, to wear.

     “கோத்தகல் லாடையும்” (தேவா. 509:2);.

   7. கை பிணைத்தல்; to clasp, join, interlock, as the hands.

     “குரவை யாய்ச்சியரோடு கோத்ததும்” (திவ். திருவாய். 6, 4:1);.

   8. ஒன்றுசேர்த்தல்; to unite, merge.

     “அன்பரைக் கோத்தற விழுங்கிக் கொண்டு” (தாயு. பொருள்வ. 3);.

   9. கவிந்து கொள்ளுதல்; to envelop, cover.

     “வல்லிருள் கோத்தது கருங்கடல் கொள்ளை கொண்டென” (கம்பரா. இலங்கை கேள்வி.3);.

   10. எதிர்த்தல்; to oppose, resist.

     “கனலி கோப்பக் காரிருளுடைந்ததேபோல்”(சீவக. 1290);.

     [கோலு → கோர் → கோர்த்தல் → கோத்தல். கொள் = ஒன்றாகக் கொள்வது, சேர்ப்பது.]

 கோ3ā, பெ.(n.)

   1. ஆன் (பசு); (பிங்.);; cow.

   2. எருது; bull. ‘ஒரு கோவை யேறி’ (இலக்.வி.907,உரை);.

 Per gaw, orgrar gauk;

 Avest. gāush;

 Tock-A. ko, ki;

 Tock-B. ken Mod. key, kye;

 OE. cu;

 O.S. kö;

 OFris. KQ;

 M.Du. Coe;

 Du. Koe;

 OHG. chuo.kuo;

 MHG. Kuo;

 Gr. Kuh;

 Dan., Swed. Ko;

 ON. Kyr;

 Norw.kyr,ko;

   ö; Lett. guous. O. Slav. gov;

 Czech. hovado;

 Slavak. hovado(ox);;

 O. Gr. gauk;

 Avest. gaush (ox, bull, cow);;

 A. s. cyna, cū(pe);ey;

 Rus.govt.

     [கோள் → கோ = கவரப்படும் ‘ஆ’]

பண்டைக் காலத்திற் கொள்ளைக்காரராலும் அரசராலும் பெரும்பாலும் கவரப்பட்டது ‘ஆ’வே. ஊர்கொலை, ஆகோள் பூசல்மாற்றே (தொல். 1004); கோ → கோவன் → கோன்.

கோன் = இடையன் பட்டப்பெயர்.

கோன் → கோனான் = மாட்டிடையன்.

இடையன் → இடையர் = பட்டப்பெயர்.

ஒ.நோ: ஆ → ஆயன் = மாட்டிடையன், இடையன்.

 OS., KO., OE. kū;

 E. cow;

 Skt. go.

இச் சொற்கு ஆரிய மொழிகளில் மூலமில்லை. ‘கோ’ என்னுஞ்சொல் ‘ஆ’ என்னும் பொருளில் ஆரிய மொழிகளிற் பெரு வழக்காக வழங்குகின்றது. ‘கோ’ என்னுஞ்சொல். ‘ஆ’ என்னும் பொருளில் தமிழில் வழங்காமையாலும், ஆரியத்தில் வழங்குவதினாலும் அதை ஆரியச்சொல் என்று கொள்ளற்க. பசுவைக் குறிக்க ‘ஆ’, பெற்றம் என ஏனைய இரு சொற்கள் வழங்குவதினாலேயே ‘கோ’ என்னுஞ்சொல் அப் பொருளில் வழக்கற்ற தென்க (வண். மொழி. வழு. 43);.

 கோ4ā, பெ.(n.)

   1. பேரரசர், மன்னர்மன்னன்; emperor.

     “கோக்கண்ட மன்னர் குரைகடற் புக்கிலர்” (தமிழ்நா. 126);.

கோவுக்கு அழகு செங்கோல் முறைமை (பழ);.

   2. அரசன் (பிங்.);; king.

   3. பெருமையிற் சிறந்தோன் (பிங்.);; great man, eminent person.

   4. தகப்பன்; father.

     “நின்கோ வரினுமிங்கே வருக”(கலித். 116);.

   5. தலைமை; leader-ship, domination.

     “ஐவர் வந்து கோச்செய்து குமைக்க” (தேவா. 997:6);.

   6. மலை; mountain.

     “கோக்க டோறு மின்வாள் வீசி” (சிவப்பிர. வெங்கைக்கலம். 84);.

   7. குயவன்; potter.

     “மூதூர்க் கலஞ்செய் கோவே”(புறநா.256:7);.

   8. தாய்; mother.

   9. மேன்மை; excellence, superiority.

   10. கலைவாணி; goddess of education.

   11. வெளிச்சம்; light, brightness.

 Chin. Gong guo;

 Gr. kuh;

 Kore. kö. Fin. kopea (proud, grand bold);, kova (hard);;

 Est. kobe (strong, hard);;

 Kare. Kova;

 Jap. Kowai;

 Q. japaf.

   க.கோவ;ம.கோ.

     [கோவன் → கோன் = இடையன், இடையன் ஆடுகளைக் காப்பதுபோல் மக்களைக் காக்கும் அரசன். கோன் → கோ (பண். த.நா. பண். 112);.]

 கோ5ā, பெ.(n.)

   1. பேரின்ப வீடு; heaven.

     ‘உயர்கோவைத் தருகோவை’ (இலக்.வி.907, உரை);

   2. விசும்பு (பிங்.);; aerial region, sky.

   3. நிலம் (பூமி); (பிங்.);; earth

   4. திசை (பிங்.);; cardinal points, direction.

   5. கதிர் (பிங்.);; ray, beam.

   6. இந்திரனின் இடிப்படைக்கலன் (வச்சிராயுதம்); (பிங்.);; thunder bolt, as the weapon of Indra.

     [கா → கோ (பெரியது);.]

 கோ6ā, பெ.(n.)

   1. அம்பு (பிங்.);; arrow.

   2. கண்; eye.

     “கோலானைக் கோவமுலாற் காய்ந்தார்” (தேவா 520:7);.

   3. சொல் (பிங்.);; speech, word.

   4. நீர்; water. வருகோவைச் சூடி (இலக். வி. 907, உரை);.

   5. சாறு (இரசம்);; sap.juice (தைலவ.);.

   6. சூரியன்; sun.

     [கோல் → கோ = நீட்டு.]

 கோ7ā, பெ.(n.)

   இலந்தை (மலை.);; jujube tree.

 Skt. kðla

     [கோல்காய் → கோல் → கோ.]

 கோ8ā, பெ.(n.)

   இரங்கற்குறிப்பு (சூடா.);; expr. meaning alas!

     ‘கோ’ வென்று கதறினான் (இ.வ.);.

     [ஒ → கோ.]

கோஇல்

 கோஇல்āil, பெ.(n.)

   திருக்கோயில்; temple (கல். அக.);.

     [கோ + இல்-கோஇல்.]

இடையில் யகர வகர உடம்படுமெய் புணர்க்காமல் ஆள்வது பண்டையோர் மாபு. கோ = பெரிய எனப் பொருள்படும் குறிப்புப் பெயரெச்சம். கோ.இல் = பெரியவீடு, அாசனின் அரண்மனை. இது குறிப்புப் பெயரெச்சத் தொடாதலின் விட்டிசைத்தது. எனவே உடம்படுமெய் புணர்க்கப்படவில்லை. நாளடைவில் விட்டிசை கெடாமல் யகர உடம்படுமெய் சேர்த்து ஆயிடை, மாயிருஞாலம் என வழங்கியதும் உண்டு. இருசொல்லும் ஒட்டி ஒருசொல் நீர்மைத்தாகும்போது ஆவூர், மாவிலை என ‘வகா’ உடம்படுமெய் பெறும். கோயில்,கோவில் பார்க்க.

கோகஞ்சம்பா

 கோகஞ்சம்பாākañjambā, பெ.(n.)

   கல்லிடையே விளையும் சம்பாநெல்; cambã paddy grown in crevices of rocks or other stony places (சா.அக.);.

     [கோலு → கோக்கு → கோக்கன் → கோகன் + சம்பா.]

கல்லிடை நூல்கோத்தாற் போன்று வேர் வீழ்த்து முளைப்பது.

கோகடம்

 கோகடம்ākaḍam, பெ.(n.)

   முயல்வகை (யாழ்.அக.);; a kind of hare.

     [கோ (நீட்சி); + கடம்.]

நீண்ட காது காரணமாகப் பெற்ற பெயராகலாம்.

 கோகடம்ākaḍam, பெ.(n.)

   முயல் வகை (யாழ்.அக.);; a kind of hare.

     [Skt.{} → த.கோகடம்.]

கோகணமுள்

 கோகணமுள்ākaṇamuḷ, பெ.(n.)

கோகண்டம் பார்க்க;see kõgandam.

     [கோகண்டம் → கோகணம் + முள்.]

கோகண்டகம்

 கோகண்டகம்āgaṇṭagam, பெ.(n.)

கோகண்டம் பார்க்க;see kö-gandam (சா.அக.);.

     [கோ + கண்டகம்.]

கோகண்டம்

கோகண்டம்ākaṇṭam, பெ.(n.)

   1. நெருஞ்சி; a small prostrate herb.

   2. நீர்முள்ளி; cattle thorn (சா.அக.);.

கோ =அம்பு. கூர்மையானது. கண்டம் = துண்டு.

     [கோ + கண்டம்.]

 கோகண்டம்ākaṇṭam, பெ.(n.)

   நெருஞ்சி (மலை);; a small prostrate herb.

     [Skt.{} → த.கோகண்டம்.]

கோகது

 கோகதுākadu, பெ.(n.)

   காட்டுப் புறா; wood pigeon (சா.அக.);.

     [கோ = புறா;திசையை அறிந்து செல்வது. கோ + (கதுவாலி);கது.]

கோகதேவன்

 கோகதேவன்ākatēvaṉ, பெ.(n.)

   புறா; pigeon (சா.அக.);.

     [கோகது → கோகதேவன்.]

கோகநகம்

கோகநகம்ākanakam, பெ.(n.)

   1. செந்தாமரை,

 red lotus.

   2. செவ்வாம்பல்; red Indian water-lily,

   3.செந்தும்பை; a red variety of leucas (சா.அக.);.

கோகநெய்

 கோகநெய்ākaney, பெ.(n.)

   கோகம் வெண்ணெய்; mate mangosteen kokum butter tree (சா.அக.);.

     [கோகம் (உயரமான மரம்); + நெய்.]

ஈளை காசம், கண்டமாலை, கை கால் வெடிப்புக்கும் போடலாம். இது கோகம் பட்டர் என்றும் வழங்கப்படும். இது ஒருவகை மங்குகதான் பழமரம். இதன் விதையில் எண்ணெய் எடுப்பதால் இப் பெயர் வந்தது (சா.அக.);

கோகந்தம்

 கோகந்தம்ākandam, பெ.(n.)

   கந்தகச் செய்ந்நஞ்சு (வின்.);; a sulphuric mineral poison.

     [கோ + கந்தம்.]

கோகந்தான்

 கோகந்தான்ākandāṉ, பெ.(n.)

   இராமநாதபுரம் மாவட்டத்துச் சிற்றூர்; a village in Ramanadhapuram Dt.

     [கோகன் + அந்தை – கோகந்தை → கோகந்தான்.]

கோகனகச்சிலை

 கோகனகச்சிலைāgaṉagaccilai, பெ.(n.)

   பழமராக் கல்; a precious stone, jacinth, hyacinth.

     [கோ + கனகம் + சிலை.]

கோகனகம்

கோகனகம்āgaṉagam, பெ.(n.)

   1. கோகனதம் பார்க்க;see koganadam.

     “கோகனகத்தவள் கேள்வன்” (திவ். திருவாய். 9, 8:2);.

   2. செந்தாமரை; red lotus.

   3. செவ்வாம்பல்; red Indian water-lily.

   4. செந்தும்பை; a red variety of leucas (சா.அக.);.

     [கோ + கனகம்).]

பொன்னிறத் தாமரை கோகனகம் எனப்பட்டது.

கோகனகை

 கோகனகைāgaṉagai, பெ.(n.)

கோகனதை (திவா.); பார்க்க;see kõganadai.

     [கோ + (கனகம்); கனதை – கோகனதை → கோகனகை.]

கோகனதத்தோன்

கோகனதத்தோன்ākaṉadaddōṉ, பெ.(n.)

கோகனதன் பார்க்க;see kdganadan.

     “கோகன தத்தோன் றுண்ட மாகிய விடத்தில்” (கந்தபு. ததீசியத்.17);.

கோகனதன்

கோகனதன்ākaṉadaṉ, பெ.(n.)

   தாமரையிற்பிறந்த நான்முகன்; Brahma as lotus – born.

     “கோகனதன் சொற்கொண்டு” (கோயிற்பு. நடரா. 68);.

     [கோ + கனதன்.]

கோகனதம்

கோகனதம்ākaṉadam, பெ.(n.)

   செந்தாமரை; red lotus.

     “கோகனத முகங்காட்ட” (தேவா.575:3);.

     [கோ + கனதம்.]

கோகனதை

கோகனதைākaṉadai, பெ.(n.)

   தாமரையில் இருப்பவள் (இலக்குமி);; Laksmi, as seated on the lotus.

     “கோகனதை பிரியாத குழகன் போல” (சேதுபு. சேதுபந். 37);.

     [கோ + (கனகம்); கனதை.]

கோகனம்

கோகனம்ākaṉam, பெ.(n.)

   1. கரிசலாங் கண்ணி; a plant found in wet places.

   2. நிலக் கடம்பு; a plant.

   3. நிலவேம்பு; ground neem.

     [கோ + (கனகம்); கனம்.]

கோகன்னம்

கோகன்னம்1ākaṉṉam, பெ.(n.)

   1. மலைநாட்டில் சிவன் கோயில் கொண்ட ஒர் இடம்; Sivashrine in Malabar.

     “ஆவினது செவிபோல அவ்விலிங்க நிமிர்வுறலால் மேவினது கோகன்ன மெனும் பெயர்” (பிரமோத். 2:55);.

   2. கோகழி பார்க்க;see ko-kali.

     [கோ + கன்னம் (காது);.]

 கோகன்னம்2ākaṉṉam, பெ.(n.)

   1. ஆவின் காதைப்போற் காதுகளுடைய ஒருவகை மான்; a species of deer with ears resembling those of the cow.

   2. மூக்குச் சட்டி; a vessel with a nozzle for pouring liquids from.

   3. ஒரு பெண்பாம்பு; a female serpent (சா.அக.);.

   4. ஆவினை (பசுவை);ப் போலக் காதை மாத்திரம் அசைத்துக் காண்பிக்கும் ஒரு வித்தை; an art of moving or shaking the ears alone as cows do.

     [கோ + கன்னம் (காது);.]

 கோகன்னம்3ākaṉṉam, பெ.(n.)

   ஒக விருக்கையுளொன்று; a yogic posture.

     “கோகன்னங் கேசரமேற் பாதம் (தத்துவப்.108);.

     [கோ + கன்னம் (காது);.]

ஆவின் காதுபோன்ற தோற்றத்தில் அமரும் ஒகவகை.

கோகபந்தகம்

 கோகபந்தகம்ākapantakam, பெ.(n.)

சூரிய காந்தி:

 sun-flower (சா.அக.);.

கோகமாக

 கோகமாகākamāka, பெ.(n.)

   ஏமாற்று; juggling, deception, hoax (செ.அக);.

     [U.ghoimal→த. கோகமாக]

கோகமுகம்

 கோகமுகம்āgamugam, பெ.(n.)

   ஒநாய் முகம்; face resembling that of wolf; wolf face (சா.அக.);.

     [கோகம் + முகம்.]

கோகம்

கோகம்1ākam, பெ.(n.)

   1 சக்கரவாகப் புள்; ruddy shield-rake.

     “கோகங்களெல்லைப் போதிற் றணந்திட” (இரகு. திக்குவி. 247);.

   2 செந்நாய்; a species of wolf.

   3. தவளை; frog

   4 பல்லி; houselizard.

     [குள் → குக்கம் (வாடியது); → கோகம்.]

 கோகம்2ākam, பெ.(n.)

   1. உலர்ந்த பூ (வின்.);; dried or withered flower.

   2 மலைப் புளிச்சை; hill hemp bendy-Hibiscus fureatus.

   3. கோகமரம்; kokum butter tree

   4. துணி; cloth (சா.அக.);.

   5. பேரீந்து; wild date – palm

   6. சிற்றீந்து (நாநார்த்த.);; a variety of date – palm.

     [கோ → கோகம்.]

கோகம்பளன்.

 கோகம்பளன்.ākampaḷaṉ, பெ.(n.)

   நரி வயிற்றில் பிறந்த ஒரு முனிவன்; asaintwho born in jackal’s stomach (அபி.சிந்.);.

கோகயம்

 கோகயம்ākayam, பெ.(n.)

   தாமரை (மலை.);; lotus flower (சா.அக.);.

     [கோ + கயம்.]

 கோகயம்ākayam, பெ.(n.)

   தாமரை (மலை);; lotus flower.

     [Skt.{} → த.கோகயம்.]

கோகரணம்

கோகரணம்ākaraṇam, பெ.(n.)

   1.கோ கன்னம்2,4 பார்க்க;see kogannam.

     “கசகரணங்கள் சேர்ந்த கோகரண மார்க்கம்” (திருவேங்.சத.66);.

   2. கோகாணம்2-2 பார்க்க;see kokarnam.

     “கோலக் கோபுரக் கோகரனஞ் சூழா”(தேவா.1182:9);.

     [கோ + கரணம்.]

கோகரந்தபுத்தூர்

 கோகரந்தபுத்தூர்ākarandabuttūr, பெ.(n.)

கோவிந்தபுத்தூர் பார்க்க (தஞ்சை .ஊர்.);;see kövinda-puttur.

     [கோகரந்த + புத்தூர்.]

கோகருணம்

கோகருணம்1ākaruṇam, பெ.(n.)

கோகன்னம் பார்க்க;see kokannam

     [கோ + (காணம்);கருணம்.]

 கோகருணம்2ākaruṇam, பெ.(n.)

   1. மோதிர விரற்சாண்; span from tip of ring finger to tip of thumb.

   2. மான்வகை; a kind of antelope.

     [கோ + (காணம்); கருணம்.]

கோகருணி

கோகருணிākaruṇi, பெ.(n.)

   பெருங் குரும்பை; the unripe fruit of Palmyra.

   2. எருக்கு; bow-string hemp (சா.அக.);.

     [கோ + கருணி.]

கோகருணை

கோகருணைākaruṇai, பெ.(n.)

   1. பெருங் குரும்பை; the unripe fruit of palmyra.

   2. எருக்கு; bow-string hemp, Calotropis gigantea (சா.அக.);.

கோகர்ணம்

கோகர்ணம்1ākarṇam, பெ.(n.)

   1. கோகழிபார்க்க;see ko-kali.

   2. கோகன்னம்1 பார்க்க;see kokannam.

மறுவ. கோகழி.

     [கோ + (கழி); கர்ணம்.]

 கோகர்ணம்2ākarṇam, பெ.(n.)

கோகன்னம்2 பார்க்க;see kökannam.

     [கோ + கன்னம் (காது); – கோகன்னம் → Skt.gökarnam]

கன்னம் என்னும் காதைக் குறிக்கும் சொல்வடமொழியில் கர்ணம் எனத் திரிந்தது.

 கோகர்ணம்ākarṇam, பெ.(n.)

   1. மலை நாட்டில் உள்ள ஒரு சிவன்கோயில்;{} shrine in Malabar.

   2. மூக்குச் சட்டி; a vessel with a nozzle for pouring liquids from.

     [Skt.{} → த.கோகர்ணம்.]

கோகர்ணவாதனம்

கோகர்ணவாதனம்ākarṇavātaṉam, பெ.(n.)

கோகன்னம்2,4 பார்க்க;see kokannam.

     [கோ + கர்ணம் + ஆதனம்( கோ = ஆவு, கர்ணம் = காது);.]

கோகலி

 கோகலிākali, பெ.(n.)

   கடம்பு; sea side Indian oak.

     [கோக்காலி → கோகலி.]

கோகலிவாழை

 கோகலிவாழைākalivāḻai, பெ.(n.)

   காட்டுமல்லிகை; wild jasmine.

     [கோக்காலி → கோகலி + வாழை.]

கோகழி

கோகழிākaḻi, பெ.(n.)

   திருவாவடுதுறை என்னும் சிவத்தலம்; Tiruvavadudurai a Śiva shrine.

     “கோகழி யாண்ட குருமனிதன் றாள்வாழ்க” (திருவா. 1:3);.

     [கோ + கழி.]

சமணமும் பெளத்தமும் பெருகியிருந்த காலத்தில் கோவா பகுதியைச்சார்ந்த கடற்கழியிலிருந்த சிவன் கோவில் கோகழி எனப்பட்டது. கோகழி என்பதற்குப் பெரிய கழிமுகம் எனப்பொருள் நிலவியது. தொன்மங்கள் (புராணங்கள்); பெருகியபோது ஆவினது செவி (கோகர்ணம்); என்னும் பொருள் பொருத்தப்பட்டது. இக்கோவிலின் பெயரே திருவாவடுதுறைக் கோவிலுக்கும் பெயராயிற்று.

கோகழியிலிருந்த சிவத்தாணு (இலிங்கம்); சதுரத்தின் மேல் அறுகோணம் அதன்மேல் எண்கோணம் அதன்மேல் குமிழ் உருளை வடிவினது என்பர்.

கோகானம்

 கோகானம்ākāṉam, பெ.(n.)

   வேய்ங்குழலோசை; sound produced from flute.

     [கோ + கானம்.]

கோகாலியம்

 கோகாலியம்ākāliyam, பெ.(n.)

   ஒருவகைப் பூடு; a herbal plant (சா.அக.);.

     [கோ + காலியம்.]

கோகி

கோகிāki, பெ.(n.)

   1. தும்பைப் பூ; leucas flower.

   2. விலாமிச்சு; a fragrant grass.

   3. நீர்முள்ளி; water thistle (சா.அக.);.

     [கோகு → கோகி.]

கோகிதம்

 கோகிதம்ākidam, பெ.(n.)

   குதிங்கால் (யாழ். அக.);; heel.

     [கோகு → கோகிதம்.]

கோகினி

 கோகினிākiṉi, பெ.(n.)

   வெட்பாலை; bitter oleander, wrightia anti-dysenterica (சா.அக.);.

கோகினிசம்பை

 கோகினிசம்பைākiṉisambai, பெ.(n.)

   சிவகங்கை மாவட்டத்துச் சிற்றூர்; a village in Sivagangai Dt.

     [கோகிலி + சண்பை – கோகிலிசண்பை → சகோகினி சம்பை.]

கோகிலநயனம்

கோகிலநயனம்ākilanayaṉam, பெ.(n.)

   1. குயில் கண்; eyes like those of the cuckoo.

   2. முள்ளுக் கத்தரி; European caper.

   3. நீர் முள்ளி; long-flowered nail dye (சா.அக.);.

     [கூவு → கூகு → கோகு → கோகிலம் + நயனம்.]

கோகிலபட்சம்

கோகிலபட்சம்ākilapaṭcam, பெ.(n.)

   1. கொம்மட்டி மாதுளை; melon lime, citrus medica-medica.

   2. கொடி மாதுளை அல்லது துரிஞ்சி; lemon citron, Citrus medica.

   3. நீர்முள்ளி; water thistle, Hygrophila spinosa (சா.அக.);.

     [கோகில+பட்சம்]

கோகிலப்பிரிய

கோகிலப்பிரியākilappiriya, பெ.(n.)

   முதனிலைப் பண்களுளொன்று (சங்.சந்.47);; a primary raga.

     [கூவு → கூகு → கோகு → கோகிலம் + பிரிய.]

கோகிலம்

கோகிலம்1ākilam, பெ.(n.)

   1. குயில்; koel.

     “இருளாநின்ற கோகிலமே” (திருக்கோ. 322);.

   2. பல்லி (திவா.);; wall-lizard.

   3. கிளி; parrot.

     [கூவு → கூகு → கோகு → கோகிலம்.]

 கோகிலம்2ākilam, பெ.(n.)

   குரங்கு (பிங்.);; monkey.

     [குறுகுகு (வளைதல்); → கோகு → கோகிலம்.]

 கோகிலம்3ākilam, பெ.(n.)

   1. துளை; tube;

 anything tubular.

   2. சிறுகுறிஞ்சான் (மலை.);; small Indian ipecacuanha.

   3. இலந்தை; jujube fruit tree.

   4. கரி; carbon.

   5. உலக்கை; long round edged heavy wooden pestle.

   6. கலப்பை; plough.

     [குள் → குள்கு → கோகு → கோகிலம்.]

கோகிலவாசம்

 கோகிலவாசம்ākilavācam, பெ.(n.)

   குயிலுக்கு இருப்பிடமான மாமரம்; the abode of koels, mango tree.

     [கோகிலம் + வாசம்.]

கோகிலவீசம்

 கோகிலவீசம்ākilavīcam, பெ.(n.)

   மஞ்சிட்டி (சித்.அக.);; manjeet.

     [கோகிலம் + வீசம்.]

கோகிலவெலி

 கோகிலவெலிākilaveli, பெ.(n.)

   குயிலைப்போல் மேலே புள்ளிகளையுடைய எலி; a kind of rat spotted like koel (சா.அக.);

     [கூவு → கூகு → கோகு → கோகிலம் + எலி.]

கோகிலா

 கோகிலாākilā, பெ.(n.)

   சிறுகுறிஞ்சான்; small Indian ipecacuanha.

     [கோகிலம் → கோகிலா.கோகிலம் பார்க்க;see kogilam (சா.அக.);.]

கோகிலாட்சம்

கோகிலாட்சம்ākilāṭcam, பெ.(n.)

   1 நீர்முள்ளி பூடு வகை; white long-flowered nail dye, Hygrophila spinosa.

   2. மரவகை (சிலப்ப.16, 25, உரை);;; citron, a tree, Citrus medicamedica (செ.அக.);.

 கோகிலாட்சம்ākilāṭcam, பெ.(n.)

   1. நீர்முள்ளி; white long flowered naildye.

   2. கொம்மட்டி; citron.

     [Cf.{} → த.கோகிலாட்சம்.]

கோகிலானந்தம்

 கோகிலானந்தம்ākilāṉandam, பெ.(n.)

   மாமரம் (மூ.அக.);; mango tree.

     [கோகிலம் + ஆனந்தம்.]

கோகிலாபுரம்

 கோகிலாபுரம்ākilāpuram, பெ.(n.)

   தேனி மாவட்டத்துச் சிற்றூர்; a village in Theni Dt.

     [கோகிலம் + புரம்.]

கோகிலாமட்சம்

 கோகிலாமட்சம்ākilāmaṭcam, பெ.(n.)

   வெள்ளை நீர் முள்ளி; white flowered water thistle, Hygrophila spinosa (சா.அக.);.

கோகிலி

கோகிலிākili, பெ.(n.)

   1 மணலிக்கீரை; sand greens.

   2. மணிப் புங்கு; rusty soap-nut (சா.அக.);.

     [கோகுல் → கோகிலி.]

கோகிலோற்சவம்

 கோகிலோற்சவம்ākilōṟcavam, பெ.(n.)

   மாமரம் (மலை.); (குயிலுக்கு மகிழிச்சியை விளைப்பது);; mango tree (lit., that which causes festivity to the koels (செ.அக);.

 கோகிலோற்சவம்ākilōṟcavam, பெ.(n.)

   மாமரம் (மலை);; lit., that which causes festivity to the koels. Mango tree.

த.வ. கோகிலவாசம்.

     [Skt.{}+{} → கோகிலோற்சம்.]

கோகு

கோகுāku, பெ.(n.)

   1. தோள்; shoulder.

     “கொற்ற வன்றன் கோகின்மேல் வெற்றிவாளின் வீசினான்” (சூளா. அரசி, 240);.

   2. ஏய்ப்பு (கபடம்);; guile.

     “கொத்தைக்கு மூங்கர் வழிகாட்டு வித்தென்னைக் கோகு செய்தாய்”(தேவா. 1040);.

   3. அடைவுகேடு (ஈடு.3:5:4);; irregularity, disorder.

   4. கழுதை; ass,

     “வீழ்ந்து கோகிறப்புழி” (உபதேசகா. உருத்திரா. 193);.

     [குல் → குகு → கோகு(வளைவு);.]

கோகுகட்டு-தல்

கோகுகட்டு-தல்āgugaṭṭudal,    5 செ.கு.வி.(v.i.)

கோகுகட்டுண் டுழலாதர்” (திவ். திருவாய். 3, 5:4);.

     [கோகு + கட்டு-.]

கோகுகம்

 கோகுகம்āgugam, பெ.(n.)

   மணிப்புங்கு; rusty soap-nut (சா.அக.);.

மறுவ. கோகிலி.

     [கோகு → கோகுகம்.]

கோகுடி

கோகுடிākuḍi, பெ.(n.)

   ஒருவகைப்பூ (கோகுடிப்பூ);; a kind of flower.

     “ஞாழன் மௌவ னறுந்தன் கோகுடி” (குறிஞ்சிப்.18);.

     [கொகுடி → கோகுடி.]

கோகுதட்டு-தல்

கோகுதட்டு-தல்ākudaṭṭudal,    5 செ.கு.வி.(v.i.)

   ஆரவாரஞ் செய்தல்; to parade one’s strength by patting oneself on the shoulder.

     “கோகுதட்டிடு தனஞ்சயன்.” (பாரத. நிரைமீட்சி. 68);.

     [கோக்கு → கோகு + தட்டு-.]

கோகுத்தம்

 கோகுத்தம்ākuttam, பெ.(n.)

   மல்லிகை (மலை.);; Arabian jasmine.

     [கோகுந்தம் → கோகுத்தம்.]

கோகுந்தம்

 கோகுந்தம்ākundam, பெ.(n.)

   மலைமல்லிகை; hill jasmine or wild jasmine (சா.அக.);.

     [கொகுந்தம் → கோகுந்தம்.]

கோகுல வாய்சகம்

 கோகுல வாய்சகம்āgulavāycagam, பெ.(n.)

   விளாம்பிசின்; the gum of wood-apple tree (சா.அக.);.

     [கோகு → கோகுலம் – வாய்சகம்.]

கோகுலம்

கோகுலம்1ākulam, பெ.(n.)

   கண்ணன் வளர்ந்த ஆயர்பாடி; the village where Krisna was brought up.

     “கோகுலத் தாயன் வேட்ட” (திருச்செந். பு. 18:26);.

     [கோ + குலம்.]

 கோகுலம்2ākulam, பெ.(n.)

   குயில்; koel.

     “கோகுலமாய்க் கூவுநரும்” (பரிபா. 9:65);.

மறுவ. கோகிலம்.

     [கோகிலம் → கோகுலம்.]

 கோகுலம்3ākulam, பெ.(n.)

   துளை; tube.

மறுவ. கோகிலம்.

     [கோகிலம் → கோகுலம்.]

 கோகுலம்4ākulam, பெ.(n.)

கோகிலம்3 பார்க்க;see kõgilam.

     [கோகிலம் → கோகலம்.]

 கோகுலம்5ākulam, பெ.(n.)

கோயில் (நாநார்த்த.);:

 temple.

     [கோ (பெரியது); + குலம்.]

 கோகுலம்6ākulam, பெ.(n.)

   1. கொட்டில்; cattle shed.

   2. ஆவினங்கள்; herd of cows.

     [கோ (ஆனிரை); + குலம்.]

கோகுலம்பால்

 கோகுலம்பால்ākulampāl, பெ.(n.).

   ஆவின் பால்; cow’s milk (சா.அக.);.

     [கோகுலம்+பால்.]

கோகுலாட்டமி

 கோகுலாட்டமிākulāṭṭami, பெ.(n.)

   கண்ணன் தோன்றிய ஆவணி மாதத்து எட்டாம் (கிருஷ்ணாஷ்டமி); நாள்; birthday of Šrikršņā (செ.அக.);.

 கோகுலாட்டமிākulāṭṭami, பெ.(n.)

   கண்ணன் பிறந்ததாகக் கூறப்படும் மடங்கல் (ஆவணி); மாதத்து எட்டாம் நாள்; birthday of {}.

     [Skt.{}+{} → த.கோகுலாட்டமி.]

கோகுள்

கோகுள்ākuḷ, பெ.(n.)

   மரவகை; a kind of tree.

     ‘கோகுளிலையைக் கொண்டு’ (ஈடு. 7. 2:1);.

     [கோகு → கோகுள்.]

கோகொட்டை

 கோகொட்டைākoṭṭai, பெ.(n.)

   மஞ்சள்நாங்கு; a species of gamboge.

     [கோ + கொட்டை.]

கோகோ

 கோகோāā, பெ.(n.)

கோகோ விதை மரம்,

 chocolate tree, Theobroma cacao.

     [கோ+கோ]

இவ்விதை அண்ட வடிவாயும், கறுப்பாயும், தோல் உள்ளதாயும் இருக்கும். இது தேயிலை அல்லது குளம்பி (காப்பி);க் கொட்டையைப் போல் குணத்தை உடையது (சா.அக.);.

கோகோகிழங்கு

 கோகோகிழங்குāākiḻṅgu, பெ.(n.)

   சேம்பு, சேப்பங்கிழங்கு; Indian kales, cocoa root (சா.அக.);.

     [கோகோ + கிழங்கு.]

கோகோசனம்

 கோகோசனம்āācaṉam, பெ.(n.)

   ஆன்மணத்தி (கோரோசனை); (மூ.அக.);; bezoar.

மறுவ கோரோசனை.

     [கோ + (கோசம்); கோசனம்.]

கோகோடு

 கோகோடுāāṭu, பெ.(n.)

   நீலகிரி மாவட்டத்துச் சிற்றூர்; a village in Nilagiri Dt.

     [கோ(உயரம்); + கோடு.]

கோகோட்டம்

 கோகோட்டம்āāṭṭam, பெ.(n.)

   ஆன்கொட்டில்; place or yard of cow.

     [கோ + கோட்டம்.]

கோகோவெனல்

கோகோவெனல்āāveṉal, பெ.(n.)

   1. பேரொலி செய்தற்குறிப்பு:

 onom. Expr. of crying or bawling loudly.

     “கோகோவென்று வந்திருகை தலை புடைத்து” (பாரத.பதினேழாம். 254);.

   2. இரக்கக் குறிப்பு; onom. expression of sympathy.

     [கோகோ + எனல்.]

கோக்கணம்

 கோக்கணம்ākkaṇam, பெ.(n.)

   ஆனைத் திப்பிலி; elephant pepper (சா.அக.);.

     [கோ + கணம். கோ = பெரிய.]

கோக்கதவு

 கோக்கதவுākkadavu, பெ.(n.)

   பெரிய கதவு; big-door.

களத்திற்குக் கோக்கதவு கூட்டி விட்டிருக்கிறது (நாஞ்.);.

     [கோ + கதவு.]

கோக்கம்

 கோக்கம்ākkam, பெ.(n.)

நெல்லி,

 Indian gooseberry, Phyllanthus emblica (சா.அக.);.

கோக்கருநந்தடக்கன்

 கோக்கருநந்தடக்கன்ākkarunandaḍakkaṉ, பெ.(n.)

   சேரநாட்டுத் தென்பகுதியை ஆண்ட அரசருள் ஒருவன்; a king who ruled the south Travancore (சிற.பெ.அக.);.

     [கோ + கரு + நந்தடக்கன்.]

கோக்கலம்

 கோக்கலம்ākkalam, பெ.(n.)

   வெண்கல ஏனம் (நாஞ்.);; vessels or utensils made of bell-metal.

     [கோ + கலம்.]

கோக்கள்

கோக்கள்ākkaḷ, பெ.(n.)

   1. அரசர்; king.

   2. சிறந்தோர்; eminent personality.

   3. பெரியோர்; elders.

     [கோ+கள்(பன்மையீறு-கோக்கள்.]

கோக்காமரம்

 கோக்காமரம்ākkāmaram, பெ.(n.)

கோக்கால் மரம் பார்க்க;see kõkkāl-maram.

     [கோவன் → கோன் → கோ.]

கோக்காரை

 கோக்காரைākkārai, பெ.(n.)

   சங்கஞ்செடி; mistletoe berry thron (சா.அக.);.

     [கோ + காரை.]

கோக்காலி

கோக்காலிākkāli, பெ.(n.)

   1. சட்டிபானை முதலியவை வைப்பதற்குச் சுவரையொட்டி அமைக்கப்படுஞ் சட்டம் (பதிற்றுப். 43, உரை);; bracket in a wall for holding pots.

   2. நெட்டையானவன்; a tall person.

கோக்காலி மாதிரி வளர்ந்ததுதான் மிச்சம் ஒரு கூறு கிடையாது (நெல்லை);.

   3. உயரமான மொட்டான்; stool for greater heights.

   4. வைக்கோலை எடுக்க உதவும் வளைந்த கொம்பு; a pole fixed with a hook to handle hay etc.

கோக்காலி

     [கோ + கால் + இ.]

கோக்கால்மரம்

கோக்கால்மரம்ākkālmaram, பெ.(n.)

   1. கடலில் செலுத்தும் கட்டுமர வகைகளில் ஒன்று; a kind of raft or catamaran.

   2. தூக்குமரம்; scaffold for execution of criminals.

     [கோ + கால் – கோக்கால் + மரம்(கால் கோத்த மரம்);]

கோக்காளை முறைமை

கோக்காளை முறைமைākkāḷaimuṟaimai, பெ.(n.)

     ‘கோ’ என்பது ஆநிரையையுங் காளையையுங் குறிக்குமெனினும், அச் சொல்லுக்குப்பின் பலீவர்த்தம் என்ற சொல் வருவதானால், அது ஆநிரையையே குறிப்பதாகக் கொள்ளும் முறைமை (திவ்.பெரியாழ். 2, 1:2. வியா.ப.210);;

 the illustration of the meaning of ‘kö’ or cattle being confined to cows’ because immediately thereafter palivartham or bull is mentioned.

     [கோ + காளை + முறைமை.]

கறவை = கறக்கும் ஆடு (மாடு, பெற்றம்);. கறவை → காவை → காவு → கோவு → கோ. கறவை என்னும் சொல் சோவியத்து மொழிகளில் ‘கறவ’ என்றும் ஆத்திரேலியப் பழங்குடி மொழிகளில ‘கறக்’ என்றும் வழங்குவதால் உலகமொழிகள் பிரிவதற்கு முன்பே கால்நடை வளர்ப்புக் காலத்தில் தமிழில் தோன்றிய சொல்லாகலாம். ஆங்கிலத்தில் கறவை – cow என வழங்குதலை ஒப்பிடுக.

கோக்கிரந்தி

 கோக்கிரந்திākkirandi, பெ.(n.)

கோக்கிரந்தை பார்க்க;see kö-k-kirandai.

     [கோ + கிரந்தி.]

கோக்கிரந்தை

 கோக்கிரந்தைākkirandai, பெ.(n.)

   எருவறட்டி; cowdung cake (சா.அக.);.

     [கோ + கிரந்தை. கரள் → கரந்தை → (கட்டி); வ. கிரந்தை.]

கோக்கிலம்

கோக்கிலம்ākkilam, பெ.(n.)

   1. உயரமாய் வளர்ந்த மரம்; any tree rising to a great height; any tall majestic tree.

   2. ஒரு முள்மரம்; camel tree; camel thistle.

     [கோ → கோக்கு → கோக்கில் → கோக்கிலம்.]

கோக்கிழானடிகள்

கோக்கிழானடிகள்āggiḻāṉaḍigaḷ, பெ.(n.)

   முதல் பராந்தகச் சோழனின் பட்டத்தரசி;(பிற். சோழ. வர.சதாசிவன்.ப.57);; Queen of Paranthaga Cholan.

     [கோ + கிழான் + அடிகள்.]

கோக்கு

 கோக்குākku, பெ.(n.)

   நூலோட்டுகை (இ.வ.);; basting, tacking.

     [கோ(கோத்தல்); – கோக்கு. த.கோக்கு →U kok.]

கோக்கு மாக்கு

 கோக்கு மாக்குākkumākku, பெ.(n.)

   தவறான செயல்; something wrong.

அதில் ஏதோ கோக்கு மாக்கு நடந்திருக்கிறது.(நெல்.வ.); மறுவதப்பு தவறு. தப்பு தண்டா.

     [குடக்கு மடக்கு – கோக்கு மாக்கு (குடக்கு-கோணல் மடக்கு-கோணல்);]

கோக்குஞ்சம்

 கோக்குஞ்சம்ākkuñjam, பெ.(n.)

   அம்பறாத்தூணி; quiver.

     [கோ + குஞ்சம்.]

கோக்குமாக்கு

 கோக்குமாக்குākkumākku, பெ.(n.)

   புரட்டுச் செயல்; juggling.

கோக்குமாக்குச் செய்யாதே (உ.வ.);.

     [கோக்கு மாக்கு – எதுகை நோக்கி வந்த மரபிணைச் சொல்.]

கோக்குற்றம்

கோக்குற்றம்ākkuṟṟam, பெ.(n.)

   ஆட்சியாளரிடம் எதிர்நோக்கும் இடையூறு; any hindrance anticipated from the administratiors.

     “இன்னெல்லுக்கு கோக்குற்றமும், குடிக்குற்றமும் ஏரிக்குற்றமுஞ் சொல்லாதே ஆட்டாண்டு தோறும்”(SII.XXII.282-43p.224);.

     [கோ + குற்றம்.]

ஏரியில் நீரின்றியோ அல்லது வேறு காரணம் பற்றியோ, விளைச்சல் குறைவாக இருந்தாலும், உடன்வாழும் குடிமக்களால் ஏதேனும் இடைஞ்சல் ஏற்பட்டாலும், ஆளுவோரால் ஏதேனும் கோளாறுகள் நேர்ந்தாலும், கோயிலுக்குக் கொடுக்க வேண்டிய நெல்லை ஆண்டுதோறும் தடையின்றி வழங்க வேண்டு மென்பது உட்கருத்து.

கோக்குளமுற்றனார்

 கோக்குளமுற்றனார்ākkuḷamuṟṟaṉār, பெ.(n.)

   கழக்கடைப் புலவருள் ஒருவர்; a poet of Sangam age.

     [கோ + குளம் + முற்றம் + அன் + ஆர்.]

உழவர்களின் துணைகொண்டு பரந்த நன்செய் நிலத்தை உழுவித்துண்டு வந்த வேளாண்மரபினர், அவ் வுரிமையால் பெற்ற பட்டம்தான் ‘கோ’ என்று நற்றிணைப் பதிப்பாசிரியர் கூறுகிறார்.

கோக்கோ

 கோக்கோākā, பெ.(n.)

   பாலில் கலந்துண்ணக் கூடிய நீர்ம பண்டம்; cocoa.

     [E.cocoa → த.கோக்கோ.]

கோக்கோடி

 கோக்கோடிākāṭi, பெ.(n.)

   நீர்நிலை; water tank (சா.அக.);.

     [கோ = நீர். கோ + கோடி.]

கோக்கோதைமார்பன்

 கோக்கோதைமார்பன்ākātaimārpaṉ, பெ.(n.)

   சோழ அரசன்; Colla king.

     [கோ (அரசன்); + கோதை + மார்பன்.]

இயற்பெயருக்கு முன் ‘கோ’ என்னும் சொல் அடையாகச் சேர்ந்துள்ளது.

கோங்கண தூபம்

 கோங்கண தூபம்āṅgaṇatūpam, பெ.(n.)

   வெள்ளைக் குங்கிலியம்; concan resin; white dammer (சா.அக.);.

     [கோங்கணம் + (தூவம்); தூபம்,]

கோங்கணம்

கோங்கணம்āṅgaṇam, பெ.(n.)

   1. ஒரு பறவை; an unknown bird.

   2. ஒருவகை மீன்; a kind of fish.

   3. ஒரு நாடு; a nation (சா.அக.);.

     [கொங்கணம் → கோங்கணம்.]

கோங்கந்தட்டம்

கோங்கந்தட்டம்āṅgandaṭṭam, பெ.(n.)

   1. கோங்கம்பூ; flower of kongu tree.

     “கோங்கந் தட்டம் வாங்கினர் வைத்தும்” (பெருங். இலாவாண. 14:24);.

   2. கோங்கம் வடிவமாகச் செய்யப்பட்ட தாம்பாளம்; a plate made like köngu flower.

     [கோங்கு + அம் + தட்டம்.]

கோங்கன்

 கோங்கன்āṅkaṉ, பெ.(n.)

   ஒரு மன்னன்; a king.

இவன் கோயம்புத்துர் கரூரை ஆண்டவன். இச்சேரனும், கோங்கனும் சேரன் குமரர்கள். தங்கள் நாட்டை இரு வகையாகப் பிரித்துக் கொண்டனர் (அபி.சிந்);.

கோங்கம்

கோங்கம்1āṅgam, பெ.(n.)

கோங்கிலவு பார்க்க;see Kongilavu.

     “முறியினர்க் கோங்கம்” (ஐங்குறு. 366);.

     [கோங்கு → கோங்கம்.]

 கோங்கம்2āṅgam, பெ.(n.)

   நெல்லி; emblic myrobalan.

     [கோரங்கம் → கோங்கம்.]

கோங்கலர்

கோங்கலர்āṅgalar, பெ.(n.)

   முற்காலத்து வழங்கிய ஒருவகைத் துகில் (சிலப். 14:108, உரை);; a garment of ancient time.

     [கோங்கு + அலர்.]

கோங்கல்

கோங்கல்āṅgal, பெ.(n.)

   1. நெல்லி; Indian gooseberry.

   2. கோங்கிலவு; false tragacanth.

   3. கோளகச் செய்நஞ்சு; a mineral poison (சா.அக.);.

     [கோங்கு → கோங்கல்.]

கோங்காடு

 கோங்காடுāṅgāṭu, பெ.(n.)

   காஞ்சிபுரம் மாவட்டத்துச் சிற்றூர்; a village in Kanjipuram Dt.

     [கோன் + காடு.]

கோங்கிமார்

கோங்கிமார்āṅgimār, பெ.(n.)

   கோனார்கள் (யாதவர்கள்);; sheperd community.

     ”எனக்கு கோங்கிமாற்கள் ரெண்டு தெருவீதி கட்டடம் விட்டுக் குடுக்கவும்” (திருமலை.செப்.10/1645, பக்.35);.

     [கோனன் → கோங்கி + மார்.]

கோங்கிலவன் பிசின்

 கோங்கிலவன் பிசின் kumāṅgilavaṉbisiṉ, பெ.(n.)

   கோங்கிலவு மரத்தின் பிசின்; gum of golden silk cotton tree.

     [கோங்கு + இலவு + பிசின்.]

இது வெள்ளை, சிவப்பு, கறுப்பு நிறமாக இருக்கும். சிவப்பினம் இருமலுக்கு நல்லது (சா.அக.);.

கோங்கிலவன் பூ

 கோங்கிலவன் பூāṅgilavaṉpū, பெ.(n.)

   கோங்கிலவ மரத்தின் பூ;   இது ஒரு வாணாள் மூலி; flower of false tragacanth tree. It is useful in rejuvenation (சா.அக.);.

     [கோங்கு + இலவன் + பூ.]

கோங்கிலவன்பட்டை

 கோங்கிலவன்பட்டைāṅgilavaṉpaṭṭai, பெ.(n.)

   கோங்கிலவ மரத்தின் பட்டை; the bark of golden silk cotton tree or false tragacanth tree (சா.அக.);.

     [கோங்கு (உயரம்); + இலவம் + பட்டை.]

இது பல் நோயைப் போக்கும். கல்நாரைப் பொடியாக்கும்.

கோங்கிலவு

 கோங்கிலவுāṅgilavu, பெ.(n.)

   இலவு மரவகை (L.);; a kind of tree as of false tragacanth.

     [கோங்கு (உயரம்); → கோங்கிலவு.]

கோங்கிலி

 கோங்கிலிāṅgili, பெ.(n.)

   வச்சிர வேங்கை; heart-wood kino tree (சா.அக.);.

     [கொங்கில் → கோங்கிலி.]

கோங்கில்லம்

 கோங்கில்லம்āṅgillam, பெ.(n.)

   கோங்கிலவு, பஞ்சுமரம்; golden silk cotton tree (சா.அக.);.

     [கோங்கு + இலவம் – கோங்கிலவம் → கோங்கிலவம் → கோங்கிலவம் → இலவம் → இல்லம்.]

கோங்கிளங்கோசர்

 கோங்கிளங்கோசர்āṅgiḷaṅācar, பெ.(n.)

   கொங்குநாட்டில் குடியேறியோர்; immigrates in Kongu-nadu.

     [கொங்கு → கோங்கு + இளங்கோசர்.]

கோங்கிவயல்

 கோங்கிவயல்āṅgivayal, பெ.(n.)

   இராமநாதபுரம் மாவட்டத்துச் சிற்றூர்; a village in Ramanathapuram Dt.

     [கொழிஞ்சில் → கோஞ்சி → கோங்கி + வயல்.]

கோங்கு

கோங்கு1āṅgu, பெ.(n.)

   குவிந்த மொட்டுகளாய்ப் பூக்கும் மரவகை; a tree with conical flower buds.

     “வேங்கை வெற்பின் விரிந்த கோங்கின் முகைவனப் பேந்திய முற்றா விளமுலை” (புறநா. 334:9–10);.

     [கொங்கை → கொங்கு → கோங்கு.]

கொங்கைபோற் குவிந்த மொட்டு, அதன் மலர், அது பூக்கும் மரம் (தமி. வர. 219);.

வகைகள் :

   1. வெள்ளைக் கோங்கு

   2. உறப்புக் கோங்கு

   3. நீர்க்கோங்கு

   4. கறைக்கோங்கு

   5. நெடுவாற் கோங்கு

   6. கருங்கோங்கு;   7. இலைக் கோங்கு.

 கோங்கு2āṅgu, பெ.(n.)

   1. காங்கு; dipterocarp dammer.

   2. முள்ளிலவு; red cotton tree.

   3. தனக்கு; odal tree.

   4. கள்ளிக் காரம்; mordant of kallitree (சா.அக.);.

     [கொங்கு(வளைவு); → கோங்கு.]

கோங்கு இலவு

 கோங்கு இலவுāṅguilavu, பெ.(n.)

   நேராகவும் உயரமாகவும் வளரும் ஒருவகைச் செடி; a type of plant growing straight and tall.

     [கோங்கு-+இலவு]

கோங்குடிப்பட்டு

 கோங்குடிப்பட்டுāṅguḍippaḍḍu, பெ.(n.)

   புதுக்கோட்டை மாவட்டத்துச் சிற்றூர்; a village in Pudukkottai Dt.

     [கோன் + குடி + பட்டு.]

கோங்குப்பிசின்

 கோங்குப்பிசின்āṅguppisiṉ, பெ.(n.)

   பலவகைக் கோங்கு மரங்களின் பிசின்; gum of golden cotton tree. It is a mixture of gums of several kinds of golden cotton trees (சா.அக.);.

     [கோங்கு + பிசின்.]

கோங்குப்பொன்

 கோங்குப்பொன்āṅguppoṉ, பெ.(n.)

   பித்தளை; brass (சா.அக.);.

     [கோங்கு + பொன்.]

கோங்குமரம்

 கோங்குமரம்āṅgumaram, பெ.(n.)

   உறுதியான மரவகைகளுளொன்று; a kind of strong tree.

     [கோங்கு (உயரம்); + மரம்.]

பிற நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் மரவகை.

கோங்குவேளாளர்

 கோங்குவேளாளர்āṅkuvēḷāḷar, பெ.(n.)

   வேளாளர்கள்; a kind of peasent’s, whose origin is Kofigu.

இவர்கள் கோங்கு நாட்டிலிருந்து வந்து தென்னாட்டில் பரவியவர்கள். வேளாளர் என்று சொல்லப்பட்டாலும் வேளாண் தன்மை சிறிதும் இல்லாதவர்கள். இவர்களது பழக்க வழக்கங்கள் பெரிதும் மாறுபட்டவை. கணவனுக்கு வயது வருமளவும், மணப்பெண் மாமனுடன் இருப்பது போன்ற சமூகத்திற்கு எதிரான நடைமுறைகள் – இவர்களிடம் உண்டு (அபி.சிந்);.

கோசகசாலை

 கோசகசாலைācagacālai, பெ.(n.)

   ஒருவகைப் பூடு; a kind of herbal plant.

     [கோசகம் + சாலை.]

கோசகம்

கோசகம்ācagam, பெ.(n.)

   1. முட்டை; egg.

   2. விதை; testicle.

   3. குறி; symbol.

   4. ஒருவகைக் கரும்பு; a kind of Sugar-cane (சா.அக.);.

     [கோசம் → கோசகா.]

கோசகாரகம்

 கோசகாரகம்ācagāragam, பெ.(n.)

   செங்கரும்பு; red sugar-cane (சா.அக.);.

     [கோசம் + காரகம்.]

கோசகாரம்

கோசகாரம்ācakāram, பெ.(n.)

   1 பட்டுப்பூச்சி; silk worm.

     “கோசகாரப் புழுப்போல்” (ஞானவா. மனத். 22);.

   2. தென்னைமரம்; coconut tree.

   3.கரும்பு; sugar-cane.

     [கோசம் + காரம்.]

கோசக்கம்

 கோசக்கம்ācakkam, பெ.(n.)

   குழப்பம் (யாழ். அக.);; confusion.

     [கோக → கோசகம் → கோசக்கம் → கோன் → கோ.]

கோசக்காய்

கோசக்காய்ācakkāy, பெ.(n.)

   1. சாதிக்காய்; nutmeg (சா.அக.);.

   2. வெள்ளரிக்காய்; cucumber.

இந்தத் தடவை கோசக்காய் விளைச்சல் அதிகம் (கொங்கு.);.

     [கோசம் + காய்.]

கோசக்கிலம்

 கோசக்கிலம்ācakkilam, பெ.(n.)

   வெண் சுண்டை; white coloured solanum (சா.அக.);.

     [கோசம் + கிலம்.]

கோசங்கம்

 கோசங்கம்ācaṅgam, பெ.(n.)

   வைகறைப்பொழுது (யாழ்.அக.);; early morning. dawn.

     [கோசு + அங்கம்.]

கோசஞ்சாரபூமி

 கோசஞ்சாரபூமிācañcārapūmi, பெ.(n.)

   ஆவினங்களின் மேய்ச்சலுக்கென விடப்பட்ட நிலம்; land allotted for pasturage of cows, land left for granzing (செ.அக.);.

     [கோ+Skt. சஞ்சாரபூமி]

 கோசஞ்சாரபூமிācañjārapūmi, பெ.(n.)

   மாடுகள் மேய்வதற்கென்று விடப்பட்ட நிலம்; land allotted for pasturage of cows.

     [Skt.{} → த.கோசஞ்சாரபூமி.]

கோசணை

 கோசணைācaṇai, பெ.(n.) பேரொலி (பிங்.):

 roar, loud noise, tumult(செ.அக.);.

 கோசணைācaṇai, பெ.(n.)

கோசை பார்க்க;see {}.

     [Skt.{} → த.கோசணை.]

 கோசணைācaṇai, பெ. (n.)

   பேரொலி (பிங்.);; loud noise, tumult, roar.

     [Skt. {} → த. கோசணை.]

கோசத்தம்பரோகம்

 கோசத்தம்பரோகம்ācattambarōkam, பெ.(n.)

   ஆண்குறித்தண்டிற் காணுமோர் நோய்; a disease of the male genital organ (penis); (சா.அக.);.

கோசநாசி

கோசநாசிācanāci, பெ.(n.)

   1. ஆண்குறி எழுச்சியில்லாதவன்; one who is destitute of the power of erection of the male organ.

   2. அலி; eunuch (சா.அக.);.

     [கோசம் + நாசி.]

கோசநெறி

கோசநெறிācaneṟi, பெ.(n.)

   1. பிடுக்கின் வீக்கம்; enlargement of the scrotum.

   2. பீச நரம்பின் வீக்கம்; swelling of the spermatic cord.

   3. பிடுக்கிலுள்ள நரம்புத் திரட்சி; varicosis of the scrotum.

   4. ஆண் அல்லது பெண்குறியின் கோளம்; male or female sexual gland (சா.அக.);.

     [கோசம் + நெறி.]

கோசந்தனம்

கோசந்தனம்ācandaṉam, பெ.(n.)

   1. மஞ்சட்சந்தனவகை; a kind of yellow sandal-wood.

   2. ஒரு நச்சு அட்டை; a venomous leech (சா.அக.);.

     [கோசம் → கோ + சந்தனம்.]

கோசனகம்

கோசனகம்ācaṉagam, பெ.(n.)

   1. கையாந்த கரை; a plant growing in marshy places.

   2. நிலக் கடம்பு வகை; a kind of medicinal plant.

     [கோசம் + கனகம்.]

கோசனை

கோசனை1ācaṉai, பெ.(n.)

   ஆன்மணத்தி (கோரோசனை);; bezoar taken from the intestine of the cow.

     [கோரோசனை → கோசனை.]

 கோசனை2ācaṉai, பெ.(n.)

பேரொலி (யாழ்.அக.);

 uproar, clamour (சா.அக.);.

     [கோரோசனை → கோசனை.]

கோசன்

 கோசன்ācaṉ, பெ.(n.)

   சீர்பந்த பாடாணம் எனும் பிறவி நஞ்சு வகை; a mineral poison (செ.அக.);.

 கோசன்ācaṉ, பெ.(n.)

ஞாயிறு குலத்து தூய்மையடைந்தான் (அபி.சிந்);.

 upsitorsit; king of sun dynasty.

இவன் விரல்களில் புழுச் சொரிந்து கொண்டு இருந்தது. ஒருநாள் அயோத்திக்கு அருகில் உள்ள

ஞாயிறு நீர்த்துறையில் நீராடி புழு நீங்கித் தூய்மையடைந்தான். (அபி.சிந்.);

 கோசன்ācaṉ, பெ.(n.)

   வைப்பு நஞ்சு; a mineral poison.

     [Skt.{} → த.கோசன்.]

கோசபலம்

கோசபலம்ācabalam, பெ.(n.)

   1. பெரும் பீர்க்கு; acute-angled cucumber.

   2. பிடுக்கு; scrotum.

   3. சாதிக்காய்; nutmeg.

   4. நறுமணம்; perfume.

   5. தம்பட்டை அவரை; fowls bean (சா.அக.);.

     [கோச + பலம்.]

கோசபீசம்

கோசபீசம்ācapīcam, பெ.(n.)

   1. பொன்னாக்கல் ஆய்வில் உருக்கு முகத்தில் கொடுக்கும் ஒரு மருந்துக் கலப்பு;   2. பொன்னுக்கு மாற்று ஏறுவதற்காகப் பயன்படுத்துமோர் உப்புச் சரக்கு; an alkaloid used in alchemy for increasing the fineness of gold.

   3. மூப்பு; a quintessence prepared from three mystic salts;

   4. பிடுக்கிலுள்ள விதைகள்; testicles contained in the scrotum (சா.அக.);.

     [கோசம் + பீசம்.]

கோசப்பட்டு

 கோசப்பட்டுācappaṭṭu, பெ.(n.)

   காஞ்சிபுரம் மாவட்டத்துச் சிற்றூர்; a village in Kanjipuram Dt.

     [கோசன் + பட்டு.]

கோசமணி

 கோசமணிācamaṇi, பெ.(n.)

   பெண்குறியின் மணி; the projecting part of a female genital, clitoris (சா.அக.);.

     [கோசம் + மணி.]

கோசமதம்

கோசமதம்1ācamadam, பெ.(n.)

   1. யானையின் குறியினின்று வரும் மதநீர்; must from the genital organ of an elephant when it ruts.

   2. காமத்தினால் ஆண் அல்லது பெண் குறியினின்று ஒழுகும் விந்து அல்லது நாதம்; seminal or ovarian discharge in man or woman from lust (சா.அக.);.

     [கோசம் + மதம்.]

கோசமம்

 கோசமம்ācamam, பெ.(n.)

   சமைய லுக்குகந்த காய் காய்க்கும் பீர்க்கு எனும் கொடி வகை; sponge gourd, strainer-Vine, Luffa acutangula(செ.அக.);.

கோசமலர்

 கோசமலர்ācamalar, பெ.(n.)

   ஆண்குறியின் முன்பாகம்; the vascular body forming the extremity of the penis-glans penis (சா.அக.);.

     [கோசம் + மலர்.]

கோசமாகிகம்

 கோசமாகிகம்ācamākikam, பெ.(n.)

   காடு (வன); மிரட்டி; forest frightener, a kind of unknown creeper (சா.அக.);.

     [கோச+மாகிகம்]

கோசமாதிகம்

 கோசமாதிகம்ācamātigam, பெ.(n.)

   கொன்றை வகை; a kind of {} (சா.அக.);.

     [Skt.{}-matigam → த.கோசமாதிகம்.]

கோசமாற்று-தல்

கோசமாற்று-தல்ācamāṟṟudal,    5 செ.கு.வி. (v.i.)

   உரிமையாவணம் முதலியவற்றில் பேர் மாற்றுதல்; to transfer patta, etc., in another’s name.

     [கோசம் + மாற்று.]

கோசம்

கோசம்1ācam, பெ.(n.)

   1. முட்டை (பிங்.);; egg.

   2. உறை (அக.நி.);; sheath, scabbard case, receptacle.

   3. ஐங்கோசம்; sheaths or cases believed to constitute the body.

     “பிணங்கிய கோச பாசப் பின்னலை” (கைவல்.தத்து.10);.

   4.மதிலுறுப்பு (பிங்.);; a part of fortress wall.

   5. ஆண்குறி; penis.

     “ஐயர்தங் கோச நோக்கினர்”(கந்தபு.ததீசியுத். 54);.

   6. கருப்பை; womb.

     “சஞ்சலமான கோசத் தசையினை” (பாரத. சம்பவ. 72);.

   7. கருவூலம் (திவா.);; treasure.

   8. கருவூலச் சாலை; treasury.

     “ஐம்பெருங் குழுவு மத்தி கோசமும்”(பெருங். வத்தவ. 9:5);.

   9. அகரமுதலி முதலிய புத்தகம்; treatise, book, vocabulary, dictionary.

     “காப்பியக் கோசமும் கட்டிலும் பள்ளியும்”(பெருங். உஞ்சைக் 38:167);.

   10. பட்டா (இ.வ.);; register.

   11. தொகுதி (பெருங். உஞ்சைக். 38:167, உரை);; heap, bundle.

   12. நடன முத்திரைக்குரிய அலிக்கை வகை; a variety of alikkai (சிலப். ப. 92);.

   13. சாதிக்காய் (மலை.);; nutmeg tree.

   14. மகிழ மரம்; ape-face flower tree.

     [குள் (வட்டம்); → கொள் → கோள் → கோளம் → கோயம் → கோசம்.]

 கோசம்2ācam, பெ.(n.)

   அடங்கற்கணக்கு (PT.L.);; register of village lands.

     [கோள் → கோளம் → கோசம்.]

 கோசம்3ācam, பெ.(n.)

   காளையின் அடிவயிற்றில் நீர்த்தாரையோடு தொங்கும் தோல்; skin of the gland suspending under the abdomen of a bull.

     [கோள் → கோளம் → கோசம்.]

 கோசம்4ācam, பெ.(n.)

   தெரு (வீதி);; street.

     [கோள் → கோளம் → கோசம்.]

 கோசம்ācam, பெ.(n.)

   1. பேரொலி; noise roar,thunder,

   2. இடைச்சேரி; herdsmen’s quarters.

     “கங்கையிற் கோசமென்றும்” (தைவல்.தத்.79);

     [Skt.{} → த.கோசம்.]

கோசம்பி

கோசம்பிācambi, பெ.(n.)

   கங்கைக் கரையிலுள்ள ஒரு பழைய நகரம்; an ancient city on the banks of the Ganges in the lower part of the Doab.

     “கொடிக் கோசம்பி கோமகன்” (மணிமே.15:161);.

     [கோசம் → கோசம்பி.]

கோசயம்

 கோசயம்ācayam, பெ.(n.)

   குதிரையின் நெஞ்சத்தசை; the two lumps of flesh near the heart of a horse (சா.அக.);.

கோசரங்கம்

 கோசரங்கம்ācaraṅkam, பெ.(n.)

நாணல்,

 reed(சா.அக.);.

 கோசரங்கம்ācaraṅgam, பெ.(n.)

   நாணல்; reed.

கோசரதசித்தா

 கோசரதசித்தாācaratacittā, பெ.(n.)

   தேவதாளி; a kind of suffa, Luffa eschinata (சா.அக.);.

கோசரன்

 கோசரன்ācaraṉ, பெ.(n.)

   துறவி; ascetic, mendicant.

     [கோசரம் → கோசரன்.]

கோசரபலம்

 கோசரபலம்ācarabalam, பெ.(n.)

   பிறப்பு ஒரையிலிருந்து தற்காலத்தில் கோள்கள் இருக்கும் நிலையில் பலன்; influence of planets at a given moment with reference to their relative position from the birth-rasi.

     [கோசரம் + பலம்.]

கோசரம்

கோசரம்1ācaram, பெ.(n.)

   1. ஐம்பொறி மனம் இவற்றுக்குத் தொடர்பானது; object of sense, as sound, colour, etc.

     “சிந்தைக்குங் கோசர மல்லன்” (திவ். திருவாய்.1, 9:6);.

   2. பொறியுணர்வு; sensation, perception, range of the organs of sense.

     “நயன கோசர மறைதலும்” (கம்பரா. மிதிலைக். 40);.

   3. ஊர் (பிங்.);; town, village.

   4. குறித்த காலத்தில் கோள்கள் இருக்கும் நிலை; position of planets at a given moment.

   5. கோசரபலம் பார்க்க;see kösara-palam.

   6. கண் வரிசை; range of the eyes(சா.அக.);.

     [கோ + சரம்.]

 கோசரம்2ācaram, பெ.(n.)

   கொடிவழி (சைவ. பொது. 331, உரை);; lineage, family.

     [கோ + சரம்.]

 கோசரம்3ācaram, பெ.(n.)

   1. பூந்தாது (பிங்.);; farina, pollen of a flower.

   2. மகிழம்பூ (மலை.);; pointedleaved ape-flower.

     [கேசரம் → கோசரம்.]

கோசரி-த்தல்

கோசரி-த்தல்ācarittal,    4 செ.கு.வி. (v.i.)

   அறிவுக்குப் புலனாதல்; to be cognizable by the senses or intellect.

     “அனுபவஞான மாத்திரையின் விளங்கிச் கோசரிப்பதாயும்”(சி.போ.பா. 6:2.ப. 121, சுவாமி);.

     [கோசரம்1 → கோசரித்தல்.]

கோசர்

கோசர்1ācar, பெ.(n.)

   பழைய வீரக்குடியினருள் ஒரு சாரார்; an ancient caste of warriors.

     “மெய்ம்மலி பெரும்பூட் செம்மற் கோசர்”(அகநா.15);,

     “இளந்தேன் கொப்புளிக்கும் நெய்தல் மலர்கள் செறிந்த வளமிக்க வயல்களையுடைய கோசர்களின் நன்னாடு” (அகநா. 113);.

கண்ணகிக்கு விழாச் செய்த கொங்கு நாட்டவர்.

 கோசர்ācar, பெ.(n.)

   1.கடைக்கழகக் காலத்தில் வாழ்ந்த குறுநில மன்னர் மரபினர்; Chieftains of sangam period.

வாய்மொழிக் கோசர் போல வன்கண் சூழ்ச்சியும் வேண்டுமாற் சிறிதே.

   2. மலைவாழ்மக்கள் மரபினர்; a group of hill tribes.

     [கோ-கோயர்-கோசர்]

கோசர் வாழ்ந்த நிலம் கோசலம் எனவும் கூறுவர்.

கோசர்ப்பம்

 கோசர்ப்பம்ācarppam, பெ.(n.)

பீர்க்கு

 sponge gourd; Iuffa, Cucumber acutangularis (சா.அக.);.

     [கோ+சர்ப்பம்]

கோசலத்தரசன்

 கோசலத்தரசன்ācalattaracaṉ, பெ.(n.)

   ஒரு மன்னன்; a king.

     [கோசலம்+அத்து+அரசன்.]

இவனது இயற்பெயர் தெரியவில்லை. பாஞ்சால மன்னன் இவன் மீது படையெடுத்து வந்து இவனை வென்றான். இவனின் மகள் வாசவதத்தையையும், பிற ஆயத்தாரையும் தன் மனைவிகளுக்குப் பணிப்பெண்ணாக்கினான். உதயணன் என்பவன் பாஞ்சாலத்தின் மேல் படையெடுத்து வென்று வாசவதத்தையை மணந்து, மற்றவர்களைத் தன் மனைவிகளுக்குப் பங்கிட்டுக் கொடுத்தான் (அபி.சிந்);.

கோசலமாமூலி

 கோசலமாமூலிācalamāmūli, பெ.(n.)

   காட்டாமணக்கு; Moghul castor, purging nut, physic nut.

     [கோசலர் + மா + மூலி.]

இதனைக் கரப்பான், சிரங்கு, வெட்டுக்காயம் போன்றவற்றுக்கிடலாம் (சா.அக.);.

கோசலம்

கோசலம்1ācalam, பெ.(n.)

   மாட்டின் சிறுநீர்; cow’s urine.

     “கோசல மோர்நா ளோர்நாள் கோமயம்” (காசிக. வியாதன்சாப. 18);.

     [கோ + சலம்.]

 கோசலம்2ācalam, பெ.(n.)

   1. ஐம்பத்தாறு நாடுகளுள் ஒன்று; modern Oudh, one of 56 tesam.

     “கோசலத் திறைவ னெய்த”(சீவக.2184);.

   2. தமிழ்நூல்களில் குறிக்கப்பெறும் பதினெண்மொழியுள் ஒன்று (திவா.);; one of eighteen languages referred to in the ancient Tamil works.

     [கோ + சாலை – கோசாலை (மாட்டுப்பட்டியுள்ள ஊர்); → கோசலம்.]

கோசலரேகை

 கோசலரேகைācalarēkai, பெ.(n.)

   கையின் வரி (கைரேகை); வகை (திருவாரூர்.குற.Ms);; a line in palm of hand.

     [கோசலம் + ரேகை (வரி-வரிசை → ரேகை);.]

கோசலவளநாடு

 கோசலவளநாடுācalavaḷanāṭu, பெ.(n.)

   ஒரு நாடு; a city.

இந்நாடு செல்வத்திலும், புகழிலும் சிறந்தது. இந்நாட்டிலுள்ளவர்கள் நடுவுநிலைமையிலும், பாத்திரமறிந்து கொடுத்தலினும் சிறந்தவர். இந்நாட்டு சித்திர வேலைக்காரர்கள் மிகவும் புகழ் பெற்றவர்கள் (அபி.சிந்);.

கோசலை

கோசலை1ācalai, பெ.(n.)

கோசலம்2 பார்க்க;see kosaram.

     “வைகுறு கோசலை மன்னர் மன்னனே” (கம்பரா. திருவவ. 90);.

     [கோசலம்2 → கோசலை.]

 கோசலை2ācalai, பெ.(n.)

இராமனின் தாய்:

 Kausayã, mother of Rama.

     “திருவுறப் பயந்தனடிறங்கொள் கோசலை”(கம்பரா. திருவவ. 104);

     [கோசலம் → கோசலை.]

கோசவதம்

 கோசவதம்ācavatam, பெ.(n.)

   ஒரு பூடு; a plant, Cucumis utilissimus (சா.அக);.

     [கோச+வதம்]

கோசவதி

 கோசவதிācavadi, பெ.(n.)

பீர்க்கு (தைலவ.);:

 sponge-gourd.

     [கோசம் → கோசவதி.]

கோசவம்

 கோசவம்ācavam, பெ.(n.)

கோமேதம்

 a precious stone, Onyx (சா.அக.);.

கோசவாகாரக்கட்டி

கோசவாகாரக்கட்டிācavākārakkaṭṭi, பெ.(n.)

   பையைப்போல் உள்ள கழலை வகை (இங்.வை.307);; cystic tumour.

     [கோசம் + ஆகாரம் + கட்டி.]

 கோசவாகாரக்கட்டிācavākārakkaṭṭi, பெ.(n.)

   பையைப்போல உள்ள கழலை வகை (இங்.வை.307);; cystic tumour.

     [கோசவாகாரம் + கட்டி.]

     [Skt.{}+{} → த.கோசவாகாரம்.]

குள் → கள் → கட்டு → கட்டி.

கோசா

கோசா1ācā, பெ.(n.)

   திருநங்கை அலி (வின்.);; hermaphrodite, eunuch.

     [U.{} → த.கோசா.]

 கோசா2ācā, பெ.(n.)

   இசுலாமியப் பெண்கள் நெருங்கிய உறவினர்களைத் தவிரப் பிற ஆண்கள் தங்களைப் பார்க்காதவாறு உடலை மறைத்துக் கொள்ளுகை; covering the body so as not to be seen by men other then one’s close relation as Practised by Muslim women, who wear screen o her face.

     [U.{} → த.கோசா.]

கோசாகாரப்புழு

கோசாகாரப்புழுācākārappuḻu, பெ.(n.)

   பட்டுப்புழு; silkworm.

     “பற்றறாக் கோசாகாரப் புழுப்போல்” (சொரூபசாரம்.98);.

     [கோசாகாரம் + புழு.]

கோசாங்

 கோசாங்ācāṅ, பெ.(n.)

   கோரைக் கிழங்கு; tuberous root (சா.அக.);.

கோசாங்கம்

 கோசாங்கம்ācāṅgam, பெ.(n.)

   நாணல்; kaus.

     [கோசம் → கோசாங்கம்.]

 கோசாங்கம்ācāṅgam, பெ.(n.)

   நாணல் (மலை);; kaus.

     [Skt.{} → த.கோசாங்கம்.]

கோசாங்கோரை

 கோசாங்கோரைācāṅārai, பெ.(n.)

   கிழங்கு; tuberous root (சா.அக);.

     [கோசம் + கோரை → கோசங்கோரை → கோசாங்கோரை.]

கோசாதகி

 கோசாதகிācātagi, பெ.(n.)

   பேய்ப்பீர்க்கு; bitter luffa-luffa acutangula. (சா.அக.);.

     [Skt.{} → த.கோசாதகி.]

கோசாதி

 கோசாதிācāti, பெ.(n.)

   சுக்கு; dry ginger (சா.அக.);.

கோசான்

 கோசான்ācāṉ, பெ.(n.)

   ஆண்குறி (உ.வ.);; mem-brum virile.

     [கோசம் → கோசான்.]

கோசாமரம்

கோசாமரம்ācāmaram, பெ.(n.)

   1. பயனற்ற மரம்; useless tree.

   2. காய்க்காத மரம்; Wild tree.

   3. காய்க்காத மரம்; tree not yielding fruits (சா.அக);.

     [கோசா(த); + மரம் – கோசமரம் → கோசாமரம்.]

கோசாமி

 கோசாமிācāmi, பெ.(n.)

கோசாயி பார்க்க;see kosāyi.

     [கோ + சாமி.]

 கோசாமிācāmi, பெ.(n.)

கோசாயி பார்க்க;see {}.

     [Skt.{} → த.கோசாமி.]

கோசாயி

 கோசாயிācāyi, பெ.(n.)

   வடநாட்டுத் துறவியருள் ஒருவகையார்; a class of ascetics from North India.

மரா. கோசாவி → த. கோசாயி.

கோசாரம்

கோசாரம்1ācāram, பெ.(n.)

   குறித்த காலத்தில் கோள்கள் இருக்கும் நிலை; position of planets at a given moments.

     [கோள் + சாரம்.]

 கோசாரம்2ācāram, பெ.(n.)

   1. அடங்கல்; deminish.

   2. அறியத்தக்கது; worth to know.

   3. மகிழமரம்; pointed leaved ape-flower tree.

   4. செய்தி; matter.

     [கோ + சாரம்.]

கோசாரி

 கோசாரிācāri, பெ.(n.)

கோசாவதி பார்க்க;see {} (சா.அக.);.

கோசாலம்

கோசாலம்1ācālam, பெ.(n.)

கோசாலை1 பார்க்க;see kosalai.

     [கோசாலை → கோசாலம்.]

 கோசாலம்2ācālam, பெ.(n.)

   அகங்கை; palm of the hand (சா.அக.);.

     [கோசம் → கோசலம் → கோசாலம்.]

கோசாலை

கோசாலைācālai, பெ.(n.)

   இறைவன் வழிபாட்டிற்குரிய பால் பெறுதற்குரிய கோயில்களில் வளர்க்கப் பெறும் ஆக்களுக் கமைந்த கொட்டி. இதனைச் சுரபிச் சாலை, ஆ(பசு); மடம் என்று கூறுவர்; cow stall maintained for the supply of milk to a temple.

     [கோ+சாலை.]

     ”திருக்காமக் கோட்டமுடைய பெரிய நாச்சியார் கோவிலுக்கும் பால் அமுது செய்தருளும் பாற் போனகப் பாலுக்கும் குலோத்துங்க சோழன் திருக்கோசாலை யிடையற்கு விட்ட பசு நானூற்றொருபதினால்”(தெ.கல்.தொ.8 கல்54);

 கோசாலை1ācālai, பெ.(n.)

   ஆன்கொட்டில்; cow-shed.

     “ஒரு கல்தச்சன் முன்பு கோசாலை கட்டுகிற போது” (கோயிலொ.100);.

     [கோ + சாலை.]

இறைவன் திருவமுது செய்தற்குப் பால்பெறுதற்குரியதாகக் கோயில்களில் வளர்க்கப் பெறும் ஆக்களமைந்தகொட்டில் (கல்.அக.);.

     “திருகாமக் கோட்ட முடைய பெரிய நாச்சியார் கோயிலுக்கும் பால் அமுது செய்தருளவும் பாற்போனகப் பாலுக்கும் குலோத்துங்க சோழன் திருக்கோ சாலையிடையற்கு விட்ட பசு நானாற் றொருபதினால்” (தெ.கல். தொ.8.கல.54);.

 கோசாலைācālai, பெ.(n.)

கொய்சகம் பார்க்க;see köysagām.

     [கொய் + சீலை – கொய்சீலை → கோசாலை.]

கோசாவித்திரி

கோசாவித்திரிācāvittiri, பெ.(n.)

   ஆக்களைத் துதிக்கும் மந்திரம்; mantra propitiating cow.

     ‘கோசாவித்திரி முதலிய தோத்திரங்களைச் செய்து’ (சைவச. பொது.168, உரை);.

     [கோ + சாவித்திரி.]

கோசாவெடு-த்தல்

கோசாவெடு-த்தல்ācāveḍuttal,    4 செ.கு.வி. (v.i.)

   வெளிநாட்டில் பணியாற்றுதற்கு அதிகார ஆவணம் (பத்திரம்);பெறுதல்; to obtain power of attorney for acting as agent outside British India.

கோசம் → கோசா + எடு-.]

 கோசாவெடு-த்தல்ācāveḍuttal,    4. செ.கு.வி. (v.i.)

   வெளிநாட்டில் பணியாற்றுதற்கு அதிகார ஆவணம் (பத்திரம்); பெறுதல்; to obtain power of attorney for acting as agent outside British India.

கோசி

 கோசிāci, பெ.(n.)

   விலாமிச்சை வேர்; the root of a fragrant grass (சா.அக.);.

கோசி-த்தல்

கோசி-த்தல்ācittal,    4. செ.கு.வி. (v.i.)

   பேரொலி ஒலித்தல்; to sound roar,

     “டமாரங்கள் கோசிப்ப” (பணவிடு.71);

     [Skt.{} → த.கோசி-த்தல்.]

கோசிகன்

கோசிகன்1ācigaṉ, பெ.(n.)

   விசுவாமித்திரன்; Visuvâmitra, as the descendant of Kausika.

     “கோசிகற் கொருமொழி சனகன் கூறுவான்” (கம்பரா. கார்முக.64);.

     [கெளசிகன் → கோசிகன்.]

 கோசிகன்2ācigaṉ, பெ.(n.)

   கோவலன் காலத்தில் வாsurpsholsâr; a contemporary of Kovalan in Silappatikaram.

     [கெளசிகன் → கோசிகன்.]

கோசிகம்

கோசிகம்1ācigam, பெ.(n.)

   1. பட்டாடை; silk cloth.

     “கோசிகம் போல” (பெருங்.உஞ்சைக். 43:154);.

     “கோசிகச் செம்பொ னாடை கொம்பனா ரசைத்தல் போலும்” (நைடத.இளவே.4);.

   2. ஒரு பண்; a primary melody type, corresponding to Pairavi.

   3. சாமவேதம் (சூடா.);;Šāmavēdā.

   4. கூகை; owl.

     “கூகைப்பெயர் கோசிக மென்பது” (உபதேசகா. சிவநாம.47);.

     [கோசம் → கோசிகம்.]

 கோசிகம்2ācigam, பெ.(n.)

   1. விலாமிச்சை வேர்; the root of a fragrant grass.

   2. வெட்டிவேர்; cuscus root (சா.அக);.

     [கோசு → கோசிகம்.]

கோசிகுவா

 கோசிகுவாācikuvā, பெ.(n.)

   கறி முன்னை; curry nelli, Premna esculenta (சா.அக.);.

     [கோசி + குவா.]

 கோசிகுவாāciguvā, பெ.(n.)

   கறிமுன்னை; curry nellipramna esculenta (சா.அக.);.

கோசிகுவிகம்

 கோசிகுவிகம்āciguvigam, பெ.(n.)

   உண்ணாக்க; the uvula (சா.அக.);.

கோசிகை

கோசிகைācigai, பெ.(n.)

   1. பட்டாடை; silk cloth.

     “கோசிகையாம் … அரங்கேசர்க் கரவரசே” (அஷ்டப்.திருவரங்.மா.87);.

   2. குடிக்கும் ஏனம்; drinking vessels.

   3. மல்லிகைக்கொடி; a variety of jasmine creeper.

   4. ஆனைச் செவியடி; cow’s tongue.

   5. குறட்டைப்பாசி; coix millet.

     [கோசி → கோசிகை.]

கோசினி

 கோசினிāciṉi, பெ.(n.)

மாமரம்; mango tree (சா.அக.);.

கோசிலம்

 கோசிலம்ācilam, பெ.(n.)

   மொச்சைவகை; a kind of bean (சா.அக.);.

     [கொள் (வளைவு); → கோசு → கோசிலம்.]

கோசிலேபிடித்துவா-தல் (கோசிலேபிடித்து வரு-தல்)

கோசிலேபிடித்துவா-தல் (கோசிலேபிடித்து வரு-தல்)ācilēpiḍidduvādalācilēpiḍidduvarudal,    18 செ.குன்றாவி (v.t.)

செ.கு.வி.(v.i.);

   காற்றின் ஒட்டத்தில் செல்லும்படி கப்பற் சுக்கானைத் திருப்புதல் (வின்.);; to turn the rudder of a ship to facilitate sailing towards of the flow of the wind direction.

     [கோசு (வளைவு); + இல் + ஏ + பிடித்து + வா-.]

கோசிலேவா-தல் (கோசிலேவருதல்)

கோசிலேவா-தல் (கோசிலேவருதல்)ācilēvātalācilēvarutal,    18 செ.கு.வி.(v.i.)

   காற்றின் போக்கிலே செல்லும்படி கப்பற்சுக்கானைத் திருப்புதல்; to manage the rudder so as to sail close to the wind (செ.அக.);.

கோசு

கோசு1ācu, பெ.(n.)

   1. கூப்பிடு தொலைவு; a measure of distance, linear measure of Tamil Nadu 1 mile 110 feet, calling distance.

     “சன்னிதிக்கு அப்புறத்தில் இரண்டு கோசு அளவிலிருக்கும் பாபவிநாசனிக்கு” (குருபரம். பன்னீ.217);.

   2. இரண்டு காதம்; the distance of twenty miles.

     [காதம் → காசம் → காசு → கோசு.]

 கோசு2ācu, பெ.(n.)

கோசம்4 பார்க்க;see kõsam.

     [கோசம் → கோசு.]

 கோசு3ācu, பெ.(n.)

   1. தோணிப்பாயின் முன்புறக் கயிறு (வின்.);; lower front rope of the sail of a boat

   2. தடவை முறை (யாழ்ப்.);; turn, time.

   3. தோல்வி; defeat, loss, overthrow.

அவன் இதிலே கோசுபோய் விட்டான்.

   4. காரியம்; affair, concern.

அவன் கோசுக்குப் போகாதே.

   5. பாயின் கீழ்ப்புறம்; bottom of the sail.

   6.கலத்தின் ஒரு பக்கம்; a side of a vessel.

     [கோள் (வளைவு); → கோசு.]

 கோசு4ācu, பெ.(n.)

   பரணிச்செப்பு (சரபேந்திர. குறவஞ்சி.321);; a kind of small perfume-box.

   2. தொங்கல் (இ.வ.);; hangings.

     [கொய் → கோய் (மடிப்பு); → கோசு.]

 கோசு5ācu, பெ.(n.)

   கப்பலின் காற்றுப்பக்கம் (பாண்டி.);; windward side of a ship.

     [கால் (காற்று); → கோல் → கோய் → கோசு.]

 கோசுācu,    முட்டைக்கோசு; cabbage.

     [E.cosh → த.கோசு.]

     [P]

கோசுக்கால்

கோசுக்கால்ācukkāl, பெ.(n.)

   1. கீரையின் நீண்ட மெல்லிய கால் (யாழ்ப்.);; long slender stalks of pot herbs.

   2. பருமனின்றி நெடுக வளர்ந்த கால்; a leg which has grown in length without proportionate breadth.

     [கோல் → கோசு + கால்.]

கோசுக்கீரை

 கோசுக்கீரைācukārai, பெ.(n.)

   செடிவகை (முட்டைக்கோசு);; cabbage, Brassica oleracea capitata (செ.அக.);.

     [P]

 கோசுக்கீரைācukārai, பெ.(n.)

கோசு பார்க்க;see {}.

கோசுபறுவான்

கோசுபறுவான்ācubaṟuvāṉ, பெ.(n.)

   கப்பலிற் பாயை இழுத்துக் கட்ட உதவும் அறை (M.Navi 82);; gaff.

     [E.gaff-spar → த.கோசுபறுவான்.]

கோசுபோ-தல்

கோசுபோ-தல்ācupōtal,    8 செ.கு.வி.(v.i.)

   தாழ்ச்சியாதல்; to fall low in status, to be degraded.

   2. தோல்வியுறுதல்; to be defeated.

தெ. கோள் போவுட

     [கோள் (வளைவு); → கோய் → கோசு + போ.]

கோசுப்பாய்

கோசுப்பாய்ācuppāy, பெ.(n.)

   கப்பலின் பின்புறப் பாய்; spankar, after-sail in a barque.

     [கோசு2 + பாய்.]

கோசுப்பாய்மரம்

 கோசுப்பாய்மரம்ācuppāymaram, பெ.(n.)

   பெரிய பாய்மரம்; the mast of a vessel.

     [கோசு + பாய்மரம்.]

கோசுப்புறம்

 கோசுப்புறம்ācuppuṟam, பெ.(n.)

   மரக்கலத்தின் வலப்பக்கம் (மீன்.தொ.);; right side of a wooden vessel.

     [கோசு + புறம்.]

கோசுப்பெட்டி

 கோசுப்பெட்டிācuppeṭṭi, பெ.(n.)

   வில் வண்டி; a roofed cart.

     [கோத்தல் → கோச்சுதல் (கூரையமைத்தல்); கோச்சு → கோசு + பெட்டி.]

கோசுமந்தில்

 கோசுமந்தில்ācumandil, பெ.(n.)

   படகின் பின் பக்கத்துப் பாய் தாங்கும் கட்டை; gaff lift, the spar upon which the upper edge of a fore and aft sail is extended.

     [கோசு + (மந்து); மந்தில்.]

கோசுமலி

 கோசுமலிācumali, பெ.(n.)

   ஒருவகைப் பச்சடி; a relish made of pulse and other ingredients (செ.அக.);.

 கோசுமலிācumali, பெ.(n.)

கோசும்பரி பார்க்க;see {}.

     [Mhr.{} → த.கோசுமலி.]

கோசுமாசு

 கோசுமாசுācumācu, பெ.(n.)

   ஏமாற்று; juggling, deception, hoax.

     [U.{} → த.கோசுமாசு.]

கோசும்பரி

 கோசும்பரிācumbari, பெ.(n.)

   காய்கறிகளைப் பச்சையாகவே மசாலையிட்டு ஆக்கிய ஒருவகைப் பச்சடி; a side food which is made of raw vege tables seasoned with condiments so as to give it a relish and taken with main food to increase taste (சா.அக);.

மறுவ. கோகமலி.

   க.,து. கோசும்பரி;மரா. கோசிம்பரி.

     [கொய்து + உண்பலி – கொய்துண்பலி → கோசும்பரி.]

கோசுவாரி

 கோசுவாரிācuvāri, பெ.(n.)

   பாய்மரத்தின் கீழ்புறத்தில் பாயைக் கட்டப் பயன்படும் குறுக்கு வாட்டக் கழி; the spar on which the bottom of the sail rope is fixed upon.

     [கோசுவரி → கோசுவாரி.]

கோசுவிழு-தல்

கோசுவிழு-தல்ācuviḻudal,    2 செ.கு.வி.(v.i.)

   துணிவெட்டும்போது கோணிப்போதல்; zigzag cutting of the cloth by mistake.

     [கோள் → கோசு + விழு.]

கோசை

 கோசைācai, பெ.(n.)

   பேரொலி (வின்);; loud noise.

     [Skt.{} → த.கோசை.]

கோச்சடை

கோச்சடைāccaḍai, பெ.(n.)

   1. இராமநாதபுரம் மாவட்டத்துச் சிற்றூர்; a village in Ramanathapuram Dt.

   2. மதுரை மாவட்டத்துச் சிற்றூர்; a village in Madurai Dt.

     [கோ + (சடையன்); சடை.]

கோச்சடையன் இரண தீரன்

கோச்சடையன் இரண தீரன்āccaḍaiyaṉiraṇatīraṉ, பெ.(n.)

   முற்காலப் பாண்டிய மன்னன்; a Pandya king.

இவன் கி.பி. 674-725 வரை ஆட்சி செய்தவன்.

     [கோ + சடையன் + இரணதீரன்.]

கோச்சிங்கப்பல்லவன்

 கோச்சிங்கப்பல்லவன்ācciṅkappallavaṉ, பெ.(n.)

   சுந்தரர் காலத்தில் ஆட்சி புரிந்த பல்லவ மன்னன்; a Pallava king who is the contemporary of Sundarar a J canonized Siva devotee (அபி.சிந்.);.

கோச்சு

கோச்சுāccu, பெ.(n.)

   1. தொடர்வண்டிப் பெட்டி; train carriage.

   2. பழங்கால அரசுக் குதிரை வண்டி; coach, a four-wheeled carriage draw by horses.

     [E.coach → த.கோச்சு.]

கோச்சூலி

 கோச்சூலிāccūli, பெ.(n.)

   சினையுற்ற மாடு; cow-in-calf, conceived cow (சா.அக.);.

     [கோ + சூலி.]

கோச்செங்கட்சோழ நாயனார்

கோச்செங்கட்சோழ நாயனார்ācceṅgaṭcōḻnāyaṉār, பெ.(n.)

   நாயன்மார் அறுபத்து மூவருள் ஒருவராகிய சோழவரசர் (பெரியபு. 4);; the Cola king canonized Saiva saint, one of 63.

     [கோ + செங்கண் + சோழன் + நாயனார்.]

கோச்செங்கட்சோழநாயனார்

கோச்செங்கட்சோழநாயனார்ācceṅkaṭcōḻnāyaṉār, பெ.(n.)

   அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவரான சோழகுல அரசன்; the Chola king and canonized Šaiva saint, one of 63 (செ.அக.);.

     [கோ+செங்கண்+சோழ+நாயனார்.]

கோச்செங்கணான்

கோச்செங்கணான்ācceṅkaṇāṉ, பெ.(n.)

கோச்செங்கட்சோழநாயனார் பார்க்க; see köccergafeö/a-nayanar.

     “செம்பியன் கோச்செங்கணான் சேர்ந்த கோயில்” (திவ்.பெரியதி.6, 6, 1); (செ.அக);.

     [கோ+செங்கண்+ஆன்.]

 கோச்செங்கணான்ācceṅgaṇāṉ, பெ.(n.)

கோச்செங்கட் சோழ நாயனார் பார்க்க;see kõccengat-cõla-nāyanār.

     “செம்பியன் கோச்செங்கணான் சேர்ந்த கோயில்” (திவ். பெரியதி. 6. 6:1);.

     [கோ + (செங்கண்ணன்); செங்கணான்.]

கோச்செங்குட்டுவன்

 கோச்செங்குட்டுவன்ācceṅkuṭṭuvaṉ, பெ.(n.)

   ஒரு சேர மன்னன்; a ceraking.

இவனைப் பரணர் பாடி உம்பற்

கோச்செய்-தல்

கோச்செய்-தல்ācceytal,    1.செ.கு.வி. (v.i.)

   ஆட்சி செய்தல்; to rule.

     “ஐவர் வந்து கோச்செய்து சமைக்க” (தேவா.997:6);.

     “அரசன் தன் ஆணைவழிச் செய்யும் செயல் போலச் செய்து”.

     “இத் தர்மத்துள்ளார் யாவரேனும் கோச் செய்வது செய்து செலுத்த வெட்டிக் குடுத்தோம்” (தொ. 8. கல். 29);.

     [கோ + செய்-.]

கோஞ்சகக்குடி

 கோஞ்சகக்குடிāñjagagguḍi, பெ.(n.)

   சிவகங்கை மாவட்டத்துச் சிற்றூர்; a village n Sivagangai Dt.

கோஞ்சண வயல்

 கோஞ்சண வயல்āñjaṇavayal, பெ.(n.)

   இராமநாதபுரம் மாவட்டத்துச் சிற்றூர்; a village in Ramanadhapuram dt.

     [கொழிஞ்சில் → கொஞ்சனி → கோஞ்சணி + வயல்.]

கோடகசாலை

கோடகசாலைāṭagacālai, பெ.(n.)

   ஒருவகைப்பூடு; a very small plant (பதார்த்த.252);.

ம. கோடாசாரி.

     [கோடம் → கோடகம் + சாலை.]

கோடகபாசியம்

 கோடகபாசியம்āṭagapāciyam, பெ.(n.)

   வேம்பு; neem tree (சா.அக.);.

     [கோடம் → கோடகம் + பாசியம்.]

கோடகம்

கோடகம்1āṭagam, பெ.(n.)

   1. முடியுறுப்பு ஐந்தனுள் ஒன்று (திவா.);; ornamental curves of a crown, one of five mudi-y-uruppu.

   2. கோபுரமாகச்(சிகரமாகச்); செய்த முடிவகை; a kind of tapering crown.

     “கோடக மணிந்த கோல முடியினாய்” (சீவக.2989);.

   3. பல தெருக் கூடுமிடம் (பிங்.);; junction where several streets meet crossing.

   4.குண்டிகை (வின்.);; ewer.

ம. கோடகம்.

 Skt. kðtaka (curve. bend);

     [கோடு + அகம்.]

 கோடகம்2āṭagam, பெ.(n.)

   1. குதிரை; horse.

     “பச்சைக் கோடகக் காற்றை” (கல்லா. 17:48);.

   2. இரலை (அகவதி); பார்க்க (சங்.அக.);; the first star.

 Skt. ghôta Russ. koni. Mal. kuda

     [கோடு + அகம்.]

 கோடகம்3āṭagam, பெ.(n.)

   புதுமை (பிங்.);; newness, novelty.

ம. கோடகம்.

     [குடு → கொடு → கோடு (உயரம், மேன்மை); → கோடகம்.]

 கோடகம்4āṭagam, பெ.(n.)

   1. சுக்கு; dry ginger.

   2. செங்கருங்காலி; black catechu.

   3. கோழிக்கீரை; cock’s greens.

   4. இலந்தை போன்ற கொடி; a creeping plant resembling jujube (சா.அக.);.

   5. பீர்க்கு (நாநார்த்த);; spurge gourd.

 Skt. ghðtaka

     [குள் (பள்ளம். குழி, ஒடுக்கு); → குடு → கோடு → கோடகம்.]

கோடகாசுரன்

 கோடகாசுரன்āṭakācuraṉ, பெ.(n.)

   ஒரு அரக்கன்; a giant.

தேவரை வருத்திக் கொண்டிருந்த இவனை சிவன் குலத்தால் கொன்றார் (அபிசிந்);.

கோடகி

 கோடகிāṭagi, பெ.(n.)

   நீர்மேல் நெருப்புச்செடி; water – fire plant.

     [கோடங்கம் → கோடகி.]

இது இசிவு போன்ற நோய்களைப் போக்கும் (சா.அக.);.

கோடக்ககம்

 கோடக்ககம்āṭaggagam, பெ.(n.)

   குமரி மாவட்டத்துச் சிற்றூர்; a village in Kanyakumari Dt.

     [கோடன் + அக்ககம் (அக்கசாலை);.]

கோடக்கன்

 கோடக்கன்āṭakkaṉ, பெ.(n.)

   கொட்டைப்பாக்கு; areca-nut (சா.அக.);.

     [கோடு + (அடைக்காய்); அடக்கன் → கோட்டக்கன் → கோடக்கன் (கொ.வ.);.]

கோடக்குடி

 கோடக்குடிāḍakkuḍi, பெ.(n.)

   இராமநாதபுரம் மாவட்டத்துச் சிற்றூர்; a village in Rāmānādapuram Dt.

     [கோடன் + குடி.]

கோடக்குத்துவா

கோடக்குத்துவாāṭakkuttuvā, பெ.(n.)

   1. கடல் மீன்வகை; a heming, greenish, Pellona indica.

   2. குத்துவா மீன்வகை; a herring, golden, glossed with purple. Pellona brachysoma.

     [கோடு + அ + குத்துவாய். ‘அ’ ஆறன்உருபு.]

கோடங்கம்

 கோடங்கம்āṭaṅgam, பெ.(n.)

   உடுக்கை மரம் அல்லது கருங்காலி; black wood-acacia catechu (சா.அக.);.

மறுவ. கோடங்கி.

     [கோடு + அங்கம்.]

கோடங்கி

கோடங்கிāṭaṅgi, பெ.(n.)

   1. உடுக்கை (தஞ்சை.);; a small hand drum.

   2. உடுக்கடித்துக் குறி சொல்வோன் (இ.வ.);; soothsayer who uses the udukku drum.

   3. ஒரு மரம்; a tree.

கோடாங்கி

   ம.க. கோடங்கி;   தெ. கோணங்கி;து. கோடங்கி, கோடங்யெ.

     [கொடு → கோடு → கோடங்கி.]

கோடங்க மரத்தால் செய்த உடுக்கை அதனையடிப்பவனையும் குறித்தது.

கோடங்கி பார்-த்தல்

கோடங்கி பார்-த்தல்āṭaṅgipārttal,    4 செ.கு.வி (v.i.)

   கோடங்கியிடம் குறி கேட்டல் (வின்.);; to consult a soothsayer.

     [கோடங்கி + பார்.]

கோடங்கிழங்கு

 கோடங்கிழங்குāṭaṅgiḻṅgu, பெ.(n.)

   சிற்றரத்தை; lesser galangal.

     [கோடு = வளைதல், கோடு + அம் – கோடம் + கிழங்கு.

கோடங்குடி

 கோடங்குடிāḍaṅguḍi, பெ.(n.)

   நாகப்பட்டினம் மாவட்டத்துச் சிற்றூர்; a village in Nagappattinan Dt.

     [கோடல் + குடி – கோடல்குடி → கோடங்குடி.]

கோடணை

கோடணை1āṭaṇai, பெ.(n.)

   1. சங்கின் ஒலி (திவா.);; sound.

   2. முழக்கம்; loud noise

     “கோடனை போக்கி

     “(பெருங்.உஞ்சைக். 49:85);.

   3. யாழ் மீட்டல்; playing on the lute.

     “குழலவன் கோடணை யறைவாம்” (சீவக.603);.

   4. இசைக் கருவி; musical instrument.

     “பாடிமிழ் பனித்துறைக் கோடனை யரவமும்” (பெருங்.உஞ்சைக்.41:3);.

   5. ஒப்பனை (அலங்காரம்); (மணிமே.5;   94,அரும்.); decoration.

     [த.கோடனை → skt. góshana.]

     [கோடு + அணை. கோடு = சங்கு.]

சங்கின் முழக்கம் கோடணை. இது skt.goshana என வடமொழியில் திரிந்தது.

 கோடணை2āṭaṇai, பெ.(n.)

   கொடுமை (பிங்.);; cruelty.

     [கொடு → கோடு → கோடணை.]

கோடணைபோக்கு-தல்

கோடணைபோக்கு-தல்āṭaṇaipōkkudal,    5 செ.கு.வி.(v.i.)

   பெரு முழக்கம் உண்டாகச் செய்தல்; to cause loud noise.

     “கோடணை போக்கியதிர் குரன்முரசு”(பெருங்.உஞ்சைக்.49:85);.

     [கோடணை + போக்கு. கோடணை1 பார்க்க;see ködanai1.]

கோடதகம்

 கோடதகம்āṭadagam, பெ.(n.)

   சுக்கு (சீவரட்.);; dried ginger.

மறுவ. கோடதரம்.

     [குள் (குழி, ஒடுக்கு); → குடு → குடுது → கோடது → கோடதகம்]

கோடதாரம்

 கோடதாரம்āṭatāram, பெ.(n.)

   சுக்குநாறிப் புல்; ginger grass-paniculm repens (சா.அக.);.

     [கோடம் + தாரம்.]

 கோடதாரம்āṭatāram, பெ.(n.)

   தேமல்; a skin disease.

     [கோடு(கண்ணாம்பு, வெண்மை);-கோட + நோய்.]

கோடன்

கோடன்1āṭaṉ, பெ.(n.)

   குயக்கோடன் என்னும் குயவன் ஒருவனின் பெயர்; name of a potter.

     [கோடு → கோடன்.]

தொல்காப்பியப் பொருளதிகாாத்தில் பேராசிரியர், மந்திரம் என்னும் சொல்லுக்குப் பொருள் கூறுங்கால் தமிழை இகழ்ந்த கோடன் என்னும் குயவன் நக்கீரரால் சவிக்கப்பட்டு இறந்தமையைச் சுட்டிக் காட்டுகிறார். முரணில் பொதியின் முதற் புத்தேள் வாழி

பாண கபிலரும் வாழி – யாணியல்

ஆனந்த வேட்கையான் வேட்கோ குயக்கோடன்

ஆனந்தஞ் சேர்க சுவா.

 கோடன்2āṭaṉ, பெ.(n.)

   கால்நொண்டி; a lame man (சா.அக.);.

     [கொடு → கோடு → கோடன்.]

 கோடன்āṭaṉ, பெ.(n.)

ஒருவகைக் களைச் செடி,

 a kind of weed.

     [கோடு-கோடான்]

கோடன்சம்பா

 கோடன்சம்பாāṭaṉcambā, பெ.(n.)

வேனிற் காலத்தில் விதைக்கப் பெற்று ஐந்து மாதங்களிற் பயிராகும் சம்பாநெல் வகை (இ.வ.);: Samba paddy sown in hot season and maturing in five months.

     [கோடை → கோடன் + சம்பா.]

கோடன்நாடு

 கோடன்நாடுāṭaṉnāṭu, பெ.(n.)

   நீலகிரி மாவட்டத்துச் சிற்றூர்; a village in Nilagiri Dt.

     [கோடன் + நாடு.]

கோடபதி

கோடபதிāṭabadi, பெ.(n.)

   1. கோடவதி பார்க்க;see kõda-vati.

   2. உதயணனுடைய யாழ்; the lute belonging to Udayanan.

     “கூட்டமை வனப்பிற்கோட பதிக்குரல்”(பெருங்.வத்தவ.3:123);.

     [கோடு + பதி.]

கோடமாதீதம்

 கோடமாதீதம்āṭamātītam, பெ.(n.)

   மதகரிவேம்பு; javanese cedar of sandal neem-Cedrela toona (சா.அக.);.

     [கோடு → கோடம் + ஆதிதம்.]

கோடம்

கோடம்1āṭam, பெ.(n.)

   செங்கருங்காலி (மலை.);; red catechu.

ம. கோடம்.

     [கோடு → கோடம்.]

 கோடம்2āṭam, பெ.(n.)

   1. பேரொலி; loud noise.

     “இங்கய லெழுந்த கோடம் யாது” (பாரத. பதின்மூன்.155);.

   2. வெண்கலம் (சங்.அக.);; bellmetal.

     [கோடு(சங்கு); → கோடம்.]

 கோடம்3āṭam, பெ.(n.)

   எல்லை (சது.);; border.

     [கோடி → கோடம்.]

 கோடம்4āṭam, பெ.(n.)

   முடியுறுப்பு ஐந்தனுள் ஒன்று; ornamental curves of a crown, one of five mudi-y-uruppu.

     “கோடங்களிலும்……… கோத்த முத்து” (S.I.I.II.87);.

     [கோடகம்1 → கோடம்4.]

 கோடம்5āṭam, பெ.(n.)

   1. சங்கு செய்நஞ்சு; a kind of white arsenic.

   2. மாமரம்; mango tree.

   3. வேம்பு; neem tree.

   4. தவளை; frog.

   5. கோசம்; penis.

   6. நெல்லி; Indian gooseberry.

   7. உடம் பெங்கும்தினவை உண்டாக்கும் ஒருவகைத் தேமல்; a disease of the skin attended with itching and exfoliation of the outer-skin (epidermis); (சா.அக.);.

     [கோடு = சங்கு, மரக்கிளை. கோடு + அம். = கோடம்.]

 கோடம்6āṭam, பெ.(n.)

   ஒரு கால் முடம் (நாநார்த்த.);; person lame of one leg.

     [கொடு → கோடு → கோடம்.]

 கோடம்āṭam, பெ.(n.)

   1. பேரொலி; loud noise roar.

     “இங்கய லெழுந்த கோடம் யாது” (பாரத.பதின்மூன்.155);.

   2. வெண்கலம் (சங்.அக.);; bell metal.

     [Skt.{} → த.கோடம்.]

கோடயு

கோடயுāṭayu, பெ.(n.)

   1. நரி; fox;

 jackal.

   2. சிறு கலன்; small vessel.

     [குறு → கோ + மாயு]

கோடரகம்

 கோடரகம்āṭaragam, பெ.(n.)

   சதுரக்கள்ளி; square spurge uphorbia an tiquorum (சா.அக);.

     [கோடு = பக்கம். கோடு → கோடர் + அகம்.]

கோடரம்

கோடரம்1āṭaram, பெ.(n.)

   1. எட்டி; a poisonous and very bitter tree.

   2. உணர்ச்சி; sensation.

   3. அழிஞ்சில்; sage leaved alangium.

   4. சிவதை; Indian rhubarb.

   5. வெண்சிவதை; white variety of rhubarbe.

   6. மயிர்ச் சாந்து; an unguent used to perfume the hair (சா.அக.);.

     [கோடு → கோடரம்.]

 கோடரம்2āṭaram, பெ.(n.)

   1. மரப்பொந்து; hollow of a tree.

     “அத்தருவின் கோடரத்து” (பாரத. நாடு. 10);.

   2. மரக்கிளை (பிங்.);; branch of a tree.

   3. மரம் (அக.நி.);; tree.

   4. சோலை (பிங்.);; grove.

   5. தேரின் மொட்டு (பிங்.);; pinnacle of a car.

க. கோடக.

     [கோடு → கோடரம்]

 கோடரம்3āṭaram, பெ.(n.)

   1. குதிரை; horse.

   2. குரங்கு; monkey.

     “கொய்தளிர் கோதும் வாழ்க்கைக் கோடரத் துருவு கொண்டு” (கம்பரா.அட்சகுமா.4.);.

     [கோடு → கோடரம்.]

கோடரவம்

கோடரவம்āṭaravam, பெ.(n.)

   துன்பம் (இ,வ.);; distress.

     “பணிந்தெழுவார் தம்மனத்திற் கோடரவந்தீர்க்குமவன்”(தேவா.821:2);.

     [கோடு + அரவம்.]

கோடரவாலி

 கோடரவாலிāṭaravāli, பெ.(n.)

   வேப்பமரம்; margosa tree (சா.அக.);.

     [கோடரம் + ஆலி.]

கோடரி

கோடரி1āṭari, பெ.(n.)

   மரத்தை பிளக்கும் கருவிவகைகளிளொன்று (பிங்.);; a kind of axe, wood cutter.

கோடரி

மறுவ. கோடாலி.

   ம. கோடாலி;   க. கொடலி, கொட்லி;   கொட்டலி;   தெ. கொடரி, கொலா, கொல்லி;   மால. கொதலி;   பட. கொடலி;   கூய். கொட்டேலி; Skt. kuthåra

     [கோடு → கோடரி, கோடு = மரக்கிளை, அரிதல்= அறுத்தல், வெட்டுதல், கோடரி = மரக்கிளையை வெட்டும் அல்லது பிளக்குங்கருவி.]

கோடரி வகை:

   1. சிறுகாம்புக் கோடரி

   2. பெருங்காம்புக் கோடரி

   3. அங்குசக் கோடரி

   4. உள்மடிப் பெருங்கோடரி

   5. தலைக்கனக் கோடரி

   6. உள்மடிக் கூர்க் கூர்க் கோடரி

   7. இருதலைக் கோடரி.

 கோடரிāṭari, பெ.(n.)

   கொற்றவை, காளி; Goddess kāli.

     [கோட்டை + மாரி – கோட்டைமாரி → கோடரி(மரூஉ);.]

கோடரிக்கரந்தை

 கோடரிக்கரந்தைāṭarikkarandai, பெ.(n.)

கோடாலிக்கரந்தை பார்க்க;see kodali-k-karandai.

     [கோடரி + கரந்தை.]

கோடரிக்காம்பு

கோடரிக்காம்புāṭarikkāmbu, பெ.(n.)

   1. கோடரியின் மரப்பிடி; the wooden handle of an axe.

   2. தன் குலத்தை அழிப்பவன்; one who destroys one’s own family.

இந்தப் பையன் அவன் குலத்தையே அழிக்கவந்த கோடரிக்காம்பு (உ.வ.);.

மறுவ. கோடாலிக்காம்பு.

   ம. கோடாலிக்காம்பு;பட. கொடலிகாவு.

     [கோடரி + காம்பு]

கோடரிக்கொண்டை

 கோடரிக்கொண்டைāṭarikkoṇṭai, பெ.(n.)

   காம்பு கழன்ற கோடரியை நினைவூட்டும் உருவம் கொண்ட கொண்டை; a knot of hair dressing resembling a axe without handle.

கோடலிக் கொண்டைக்காரி (நெல்லை.);.

மறுவ: கோடாலி,

     [கோடரி + கொண்டை.]

கோடரோகம்

 கோடரோகம்āṭarōkam, பெ.(n.)

கோடநோய் பார்க்க;see kõdanõy.

     [கோடு + ரோகம்.]

கோடர்

கோடர்āṭar, பெ.(n.)

   இருளர்; Irular community who are the inhabitants of hill.

     [கோடு (மலை);+அர்]

தோடர்களும் இவர்கள் வகுப்பைச் சார்ந்தவர்களே. தற்பொழுது நீலகிரி மலையில் வாழும் இவர்கள் முதலில் மைசூருக்கடுத்த கொல்லி மலையில் வாழ்ந்தனர். ஆவினை (பசுவை);க் கொலை செய்பவர்களாதலால் இப்பெயர் வந்ததென்பர். கோடகிரி, தொடநாடு முதலிய இடங்களிலுள்ள குடிசைகளில் வாழ்கின்றனர். தமிழும், கன்னடமும் கலந்து பேசும் இவர்கள் அழுகிய இறைச்சியாயினும் உண்பர் (அபி.சிந்);.

 கோடர்āṭar, பெ.(n.)

   மலை உச்சி (சிகரம்);; peak.

     “கோடரி னீண்மதிற் கோட்டாறு'” (இறை.23, உதா.199);.

     [கோடு + அர்.]

கோடற்கிழங்கு

 கோடற்கிழங்குāṭaṟkiḻṅku, பெ.(n.)

   வெண் காந்தற் கிழங்கு; a bulbous root grown in the summer season (சா.அக.);.

     [கோடல்+கிழங்கு.]

கோடற்பூசினி

 கோடற்பூசினிāṭaṟpūciṉi, பெ.(n.)

கோடைப் பூசனி பார்க்க;see Kodai-p-pusani (சா.அக.);.

     [கோடை + பூசனி – கோடற்பூசனி (கொ.வ.);.]

கோடலம்

 கோடலம்āṭalam, பெ.(n.)

   பிறைபோல் வளைந்த மாலைவகை; a kind of garland in the shape of the crescent moon.

     [கோடு → கோடலம்]

கோடலி

கோடலிāṭali, பெ.(n.)

   1. இலந்தை; jujube.

   2. காட்டுக்கொடி; wild creeper.

   3. கோடாலி மரம்; axe tree.

   4. தெருணை; Mysore plum (சா.அக);.

     [குடலி → கூடலி → கோடலி.]

கோடல்

கோடல்1āṭal, பெ.(n.)

   1. கொள்ளுகை; taking.

     “நானம் பகர்ந்திடக் கோடல் செய்வார்” (நைடத. நகரப். 31);.

   2. பாடங்கேட்கை; taking lessons from a teacher.

     “கோடன் மரபே கூறுங் காலை”(நன்.40);.

   3. மனத்துக் கொள்ளுகை; considering.

     “கொல்லு மாற்றல ருளரெனக் கோடலுங் கொண்டாய்” (கம்பரா.உயுத்.மந்திரப்.104);.

   4. மருமகள்; daughter-in-law.

தெ. கோடாலு.

     [கொள் → கோடல்.]

 கோடல்2āṭal, பெ.(n.)

   1. வளைவு (உரி.நி.);; curving.

   2. முறிக்கை (தி.வா.);; breaking.

ம. கோடல்.

     [கோடு → கோடல்.]

 கோடல்3āṭal, பெ.(n.)

   1. வெண்காந்தள்; white species of Malabar glory-lily.

     “கோடன் முகையோடு” (பு.வெ.8:16);.

   2. வெண்கிடை (பிங்.);; sola pith.

     [கோடு (வெண்மை); → கோடல்]

 கோடல்4āṭal, பெ.(n.)

   கொம்பு இல்லாத கொடி; a creeper without a branch.

     [கோடு + அல்]

 கோடல்āṭal, பெ.(n.)

   மருமகள்; daughter in law.

தெ.கோடாளு.

     [கொளல் – கோடல் (பிறர் வீட்டிலிருந்து கொள்ளப்பட்ட பெண்);]

கோடல்வாவி

 கோடல்வாவிāṭalvāvi, பெ.(n.)

   திண்டுக்கல் மாவட்டத்துச் சிற்றூர்; a village in Thindukkal Dt.

     [கோடல் + வாவி.]

கோடவதி

 கோடவதிāṭavadi, பெ.(n.)

   வீணை (திவா.);; lute.

     [கோடு → கோடவி → கோடவதி.]

விரவுப்பெயர் போன்று வீணையைப் பெண்பாலாக்கிக் கூறிய கூற்று.

கோடவி

 கோடவி kāṟiyaāṟṟuāṭavi, பெ.(n.)

   காளி (துர்க்கை); (யாழ்.அக.);; Durga.

     [கொற்றவை → கோட்டவி → கோடவி.]

கோடா

கோடாāṭā, பெ.(n.)

   1. சாராய வண்டல் (யாழ்ப்.);; sediments of liquor.

   2. பட்டைச் சாராயம்; arrack derived from bark.

   3. அரக்குமண்டி; refuse of lac(சா.அக.);.

     [கூடு → கோடு → கோடம் → கோடா (கொ.வ.);.]

 கோடாāṭā, பெ.(n.)

கோட்டா பார்க்க;see {}.

கோடா முடிச்சு

 கோடா முடிச்சுāḍāmuḍiccu, பெ. (n.)

   இறுக்கமான கயிற்று முடிச்சு; very strong knotwigth а горе.

     [கோடா [அசையாத, நெகிழாத]+முடிச்சு]

கோடாகிழங்கு

 கோடாகிழங்குāṭākiḻṅku, பெ.(n.)

   கோரைக் கிழங்கு; fragrant tuber of Cyperus rotundus (செ.அக.);.

கோடாகோடி

கோடாகோடிāṭāāṭi, பெ.(n.)

   1. கோடானு கோடி பார்க்க;see kõdānu-kõdi.

     “கொம்மைபெறுங் கோடா கோடி”(அருட்பா.i. நெஞ்சறி.85);.

   2. அளவின்மை; infinite.

   3. தாமரை; lotus.

ம. கோடாகோடி.

     [கோடி + கோடி – கோடிகோடி → கோடாகோடி.]

கோடாக்கிழங்கு

 கோடாக்கிழங்குāṭākkiḻṅgu, பெ.(n.)

   கோணக்கிழங்கு; a fragrant tuber.

     [கோடானி + கிழங்கு → கோடாகிழங்கு.]

கோடாக்குளிகை

 கோடாக்குளிகைāṭāgguḷigai, பெ.(n.)

   சாராய வண்டலைக் கொண்டு செய்யும் மருந்து உருண்டை; a medicinal pill made of dregs of spirituos liquors as arrack as a chief ingredient.

     [கோடா + குளிகை.]

கோடாங்கல்

 கோடாங்கல்āṭāṅgal, பெ.(n.)

   மலை உச்சிகளில் கூர்மையாகவுள்ள கற்கள்; stones of nail like projections on the summit of rocks;

 stones like a pyramid in shape (சா.அக.);.

     [கோடு + (அம்); ஆம் + கல்.]

கோடாங்கி

கோடாங்கி1āṭāṅgi, பெ.(n.)

   1. கோடங்கிபார்க்க;see kõfangi.

   2. வரிக்கூத்து வகை; a masquerade dance.

   ம., க. கோடாங்கி;   தெ. கோணங்கி;து. கோடங்கி.கோடங்கியெ.

     [கொடு → கோடு → கோடங்கி → கோடாங்கி.]

 கோடாங்கி2āṭāṅgi, பெ.(n.)

   மகளிர் வரிப் புடைவை வகை (வின்.);; women’s striped sari.

   ம. கோடாங்கி;பட. கோடிங்கெ (முரட்டுப் போர்வை);.

     [கோடு + அங்கி – கோடங்கி → கோடாங்கி.]

கோடாங்கிநாயக்கன்பட்டி

 கோடாங்கிநாயக்கன்பட்டிāṭāṅgināyakkaṉpaṭṭi, பெ.(n.)

   திண்டுக்கல் மாவட்டத்துச் சிற்றூர்;  a village in Thingukkal Dt..

     [கோடாங்கி + நாயக்கன் + பட்டி.]

கோடாங்கிபட்டி

 கோடாங்கிபட்டிāṭāṅgibaṭṭi, பெ.(n.)

   திண்டுக்கல் மாவட்டத்துச் சிற்றூர்; a village in Thingukkal Dt.

     [கோடாங்கி + பட்டி.]

கோடாங்கிபாளையம்

 கோடாங்கிபாளையம்āṭāṅgipāḷaiyam, பெ.(n.)

   கோவை மாவட்டத்துச் சிற்றூர்; a village in Kovai Dt.

     [கோடாங்கி + பாளையம்.]

கோடாசரி

 கோடாசரிāṭācari, பெ.(n.)

   கோடகசாலை என்னும் பூண்டு வகை; coromandel gendarussa.

மறுவ. கோடகசாலை, கோடாசுழி, கோடாசூரி,

ம. கோடாசாரி.

     [கோடகசாலை → கோடாசரி.]

கோடாசலக்குளிகை

கோடாசலக்குளிகைāṭācalakkuḷikai, பெ.(n.)

   வயிற்றுப்போக்கைக் கட்டும் மருந்து (பதார்த்த.1215);; a medicinal pill for arresting diarrhoea (செ.அக.);.

கோடாசலம்

கோடாசலம்āṭācalam, பெ.(n.)

   வயிற்றுப் போக்கைக் கட்டும் மருந்துவகை (பதார்த்த.1215);; a medicinal pill for arresting diarrhoea.

மறுவ. கோடாசலக் குளிகை, கோடாசுழி.

ம. கோடாசாரி.

கோடாசாலை

கோடாசாலைāṭācālai, பெ.(n.)

   1. கற்பூர வல்லி; country borage, Coleus aromaticus alias C.amboynicus.

   2. ஒரு பூடு; a very small plant, Juatica procumbens.

   3.ஒருமூலி; a drug, Rungia repens. 4. ஆவாரை; tanner’s senna, Cassia auriculata.

   5. சதைக்கரண்டி; a plant that corrodes the skin (சா.அக.);.

கோடாசுழி

 கோடாசுழிāṭācuḻi, பெ.(n.)

   வயிற்றுப்போக்கு மருந்து; a dose of physic (சா.அக.);.

     [குடல் → குடலம் → கோடலம் → கோடா + சுழி.]

கோடாசுழிமாத்திரை

 கோடாசுழிமாத்திரைāṭācuḻimāttirai, பெ.(n.)

கோடாசலக்குளிகை பார்க்க: see kodasala-k-kuligai.

     [கோடாசுழி + மாத்திரை.]

கோடாசூரி

 கோடாசூரிāṭācūri, பெ.(n.)

   கோடகசாலை; Coromandal gendarusa.

     [கோடகசாலை → கோடாசூரி.]

கோடாசொரிச் செய்நஞ்சு

 கோடாசொரிச் செய்நஞ்சுāṭācoricceynañju, பெ.(n.)

   வைப்பு நஞ்சுவகை (வின்.);; a prepared arsenic.

மறுவ. கோடாசொரி.

     [கோடகசாலை → கோடகசொரி + செய்நஞ்சு.]

கோடாஞ்சி

 கோடாஞ்சிāṭāñji, பெ.(n.)

   நெடுநாரைப்பூடு; fragrant cherry nut meg (சா.அக.);.

ம. கோடாஞ்சி,

     [கோடு → கோடாஞ்சி.]

சென்னைப் பல்கலைக்கழக அகரமுதலி இச்சொல்லுக்குப் பெரிய மரவகை எனப்பொருள் குறித்துள்ளது.

கோடாநீர்

 கோடாநீர்āṭānīr, பெ.(n.)

   தடிப்பில்லாத நீர்; fluid not thick (சா.அக.);.

     [கோடு → கோடா + நீர்.]

கோடாந்தூர்

 கோடாந்தூர்āṭāndūr, பெ.(n.)

   கரூர் மாவட்டத்துச் சிற்றூர்; a village in Karur Dt.

     [கோடன் + (அழுந்தூர்); ஆந்தூர்.]

கோடாந்தை

 கோடாந்தைāṭāndai, பெ.(n.)

   இராமநாதபுரம் மாவட்டத்துச் சிற்றூர்; a village in Râmanadapuram Dt.

     [கோடன் + ஆந்தை.]

கோடானி

 கோடானிāṭāṉi, பெ.(n.)

   நறுமணமிக்க வேர்; fragrant coray root (சா.அக.);.

     [கோடு → கோடானி.]

கோடானுகோடி

கோடானுகோடிāṭāṉuāṭi, பெ.(n.)

   பலகோடி; immense number, as a hundred billions.

     “கோடானு கோடி கொடுப்பினும்”(தமிழ்நா. 40);.

   ம.கோடானுகோடி;கோடார்கோடி.

     [கோடி + ஆன + கோடி → கோடானகோடி → கோடானுகோடி.]

கோடான்

கோடான்1āṭāṉ, பெ.(n.)

   சிவகங்கை மாவட்டத்துச் சிற்றூர்; a village in Sivagangai Dt

     [கோடன் → கோடான்.]

 கோடான்2āṭāṉ, பெ.(n.)

   1. புன்செய்ப் பொழியிலுள்ள ஒருவகைக் கிழங்குச் செடி; a kind of tuber plant.

   2. கொத்துமல்லியில் தோன்றும் ஒருவகை நோய்; a kind of disease in coriander plant.

     [கோடன் → கோடான்.]

கோடான்குறிச்சி

 கோடான்குறிச்சிāṭāṉkuṟicci, பெ.(n.)

   சிவகங்கை மாவட்டத்துச் சிற்றூர்; a village in sivagangai Dt.

     [கோடன் → கோடான் + குறிச்சி.]

கோடாமணி

 கோடாமணிāṭāmaṇi, பெ.(n.)

   மணிகள் போன்று தேரின் விளிம்புகளில் செதுக்கப்படும் உருவம்; a figure engraved on the edges of the chariot as a bead of coral.

     [கோடா + மணி.]

கோடாமை

கோடாமைāṭāmai, பெ.(n.)

   1. மனக்கோட்டம் கொள்ளாமை; absence of envy or dislike.

   2. கோணாமை; poise.

   3. திரியாமை; of stable mind.

   4. சலியாமை; untirableness.

   5. ஒருதலைக் கணில்லாமை; fair and neutral outlook.

     “கோடாமை சான்றோர்க் கணி”(குறள்.118);.

     [கோடு + ஆ + மை. ‘ஆ’ எ.ம.இ.நிலை.]

கோடாய்

கோடாய்āṭāy, பெ.(n.)

   செவிலித்தாய்; foster mother.

     “கோடாய் மடந்தையை நாட”(திருக்கோ, 235, கொளு);.

     [கொள் → கோள் + தாய்.]

கோடாரி

 கோடாரிāṭāri, பெ.(n.)

கோடரி பார்க்க;see kõdari (சங்.அக.);.

     [கோடரி → கோடாரி.]

கோடாரிக்காம்பு

 கோடாரிக்காம்புāṭārikkāmbu, பெ.(n.)

கோடரிக்காம்பு பார்க்க;see kõdari-k-kāmbu.

ம. கோடாலிக்காம்பு, கோடாலிக்கை.

     [கோடு + அரி – கோடரி + காம்பு – கோடரிக்காம்பு → கோடாரிக்காம்பு.]

கோடாரேந்தல்

 கோடாரேந்தல்āṭārēndal, பெ.(n.)

   இராமநாதபுரம் மாவட்டத்துச் சிற்றூர்; a village in Rämanädapuram Dt.

     [கோடலம் → கோடாலம் + ஏந்தல் → கோடாலஏந்தல் → கோடாரேந்தல். ஏந்தல் = ஏரி.]

கோடாலம்

கோடாலம்āṭālam, பெ.(n.)

   பிறைபோல் வளைந்த மாலைவகை; crescent shaped necklace, as of pearls.

     “குளிர்முத்தின் கோடாலமும்” (திவ். பெரியாழ். 3.3:1);.

     [கோடு → கோடாலம்.]

கோடாலி

கோடாலி1āṭāli, பெ.(n.)

கோடரி பார்க்க;see kõdari.

மறுவ. கோடரி.

   ம. கோடாலி;   க. கொடலி, கொட்லி;   தெ. கொட்டலி;   கொலா. கொல்லி;   மால. கொதலி;   கூய். கொட்டேலி;பட. கொடலி.

     [கோடு + அரி – கோடரி → கோடாலி.]

 கோடாலி2āṭāli, பெ.(n.)

   சுரக்கோடாலி; a pill (சா.அக.);.

     [கோடரி → கோடாலி.]

கோடாலிக்கரந்தை

 கோடாலிக்கரந்தைāṭālikkarandai, பெ.(n.)

கொட்டைக்கரந்தை பார்க்க;see kottai-k-karandai.

     [கோடாலி + கரந்தை.]

கோடாலிக்காம்பு

 கோடாலிக்காம்புāṭālikkāmbu, பெ.(n.)

கோடரிக்காம்பு பார்க்க;see kõdari-k-kāmbu.

குலத்தைக் கெடுக்கவந்த கோடாலிக் காம்பே.

   ம. கோடாலிக்காம்பு;பட. கொடலிகாவு.

     [கோடரிக்காம்பு → கோடாலிக்காம்பு.]

கோடாலிக்குடோரி

கோடாலிக்குடோரிāṭālikkuṭōri, பெ.(n.)

   1. இசிவு (சன்னி); முதலிய நோய்களைக் குணப்படுத்துவதற்குக் கீறியிடும் ஒரு மருந்துச் சரக்கு; a medicinal preparation applied to wounds in scarification as a cure for apoplexy.

   2. இதள் மாற்றிய (இராச வாத); முறைப்படி மாழைகளை உருக்க வேண்டிப் பயன்படும் ஒரு மருந்து; in al-chemya chemical substance used for melting a metal (சா.அக.);.

     [கோடாலி + குடோரி = கீள் → கீனுறு (கீறு); → குடுறு → குடோரி.]

கோடாலிக்கொண்டை

 கோடாலிக்கொண்டைāṭālikkoṇṭai, பெ.(n.)

கோடாலிமுடிச்சு பார்க்க;see kbdali-mudiccu.

கோடாலிக்கொண்டை

     [கோடாலி + கொண்டை.]

கோடாலிமரம்

 கோடாலிமரம்āṭālimaram, பெ.(n.)

   சரளமரம், அரக்க மரம்; potato plum of Mysore (சா.அக.);.

     [கோடரி → கோடாலி + மரம்.]

கோடாலிமுடிச்சு

 கோடாலிமுடிச்சுāḍālimuḍiccu, பெ.(n.)

   கூந்தலை அள்ளிச் சுருட்டிப் போட்டுக்கொள்ளும் முடிச்சு (தஞ்சை.);; a casual way of knotting the hair.

மறுவ. கோடாலிக் கொண்டை.

     [கோடரி → கோடாலி + முடிச்சு.]

கோடாலைக்கல்

கோடாலைக்கல்āṭālaikkal, பெ.(n.)

   சூடாலைக்கல் என வழங்கும் ஒருவகை மருந்துச் சரக்கு; kind of loadstone probably manganese, one of the 126 kinds of natural substances (சா.அக.);.

     [கோடாலை + கல்.]

கோடாலைச்சக்கரம்

 கோடாலைச்சக்கரம்āṭālaiccakkaram, பெ.(n.)

கோடாலைக்கல் பார்க்க;see kodalai-k-kal(சா.அக.);.

     [கோடாலை + சக்கரம்.]

கோடாவடி-த்தல்

கோடாவடி-த்தல்āḍāvaḍittal,    4.செ.குன்றாவி (v.t.)

   பட்டைச் சாராய வண்டலை நீரிலிட்டுக் கரைத்தல் (வின்.);; to dissolve the dregs of an inferior kind of arrack in water (W.);.

     [கோடா + அடி.]

கோடி

கோடிāṭi, பெ.(n.)

இறந்தவரின் உடல் மேல் இடும் அல்லது கைம்பெண்ணிற்குத் தரும்

 goof; cloth spread over the dead body or given to the widow (க்ரியா.);.

பெண்ணிற்கு பிறந்த வீட்டுக் கோடி போட வேண்டும்.

     [கோடு- கோடி]

 கோடி1āṭi, பெ.(n.)

   1. ஆடை; cloth (பிங்.);.

   2. புதிய ஆடை; newly purchased cloth.

     “மந்திரக் கோடியுடுத்து” (திவ். நாய்ச். 6:3);.

   3. புதுமை (சூடா.);; newness.

ம. கோடி. து. கோடி (சாயம் வெளுக்காத துணி);.

     [கோடு → கோடி. விளிம்பில் கரை (கோடு); கட்டிய புத்தாடை.]

 கோடி2āṭi, பெ.(n.)

   இளமை; youthful.

அவளைக் கோடியில் பார்த்தேன் மிக அழகாக இருந்தாள் (கொங்.வ);.

     [குழ → குட → குடு → கொடு → கோடு → கோடி.]

 கோடி3āṭi, பெ.(n.)

   1.வளைவு; bend.

     “முளைத் திங்கட் கோடியென” (திருவாரூ. 134);.

   2. முடிமாலை; garland worn on head.

     [கோடு(வளைவு); → கோடி]

 கோடி4āṭi, பெ.(n.)

   1. நூறு நூறாயிரம்; crore.

     “நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன”(திருவாச.3:4);.

   2. எண்ணின் மிகுதி; large number.

   3. தொகுதி; multitude, as of living beings.

     “சிவகோடி” (கைவல். தத், 33);.

   4. 64 அக்குரோணி கொண்ட பெரும்படை (பிங்.);; a vast army consisting of 64 akkuróni.

   5. இருபது; a score, as in counting precious stones, silks, etc.

கோடிப்பட்டின் (சீவக. 2331, உரை);.

   6. வரிசை; row.

     ‘ஆயுத கோடியிலும், ஆபரண கோடியிலும்'(ஈடு.);.

ம. க., தெ., பட., கோண். கோடி, து. கோடி (கற்களையும் மரங்களையும் அளக்கும் ஓர் அளவு);.

 கோடி5āṭi, பெ.(n.)

   1. நுனி: tip, end.

     “கூவலொன்றகழ்ந்தான் வில்லின் கோடியால்” (சேதுபு. இராமனரு. 95);.

   2. கடலுட் செல்லுந்தரை முனை; capecalin.

கோடிக்கரை,

   3. மூலை; nook.

   4. வீட்டின் புறக்கோடி (வின்.);; backyard of a house.

   5. விளிம்பு; edge, as of verandah; bead, as in carpentry

   6. படை (சேனை);யின் பிற்கூழை; rear of an army.

உரமுதற் கோடி யீறாயின” (குறள், 767, உரை);.

   7. எல்லை; limit.

     “அறிவின் கோடியார்” (கம்பரா. ஆறுசெல்.13);.

   8. கலிங்கு; weir of a tank, outlet for the surplus water.

     “ஏரிகோடியோடுகிறது” (C.G.);.

   9. குறிப்பு; slight hint.

கோடிகண்டால் விடுவாரோ (வின்.);.

   10. சாத்திரச் சொற்போரில் மேன்மேற் கூறும் கருத்து; argument raised in a debate.

   11. வயிரக் குணங்களுள் ஒன்று (சிலப்.74,180, உரை.);; a quality in diamond.

ம. க., தெ., து,. பட., கோண்.கோடி.

     [கோள் → கோடு(வளைவு, விளிம்பு, நுனி, முகடு, உயர்வு, பெருக்கம். மிகுதி); → கோடி.]

 கோடி6āṭittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   1. அணிசெய்தல் (அலங்கரித்தல்);; to adorn, decorate.

     “கோடித் தன்ன கோடுசால் வையம்” (பெருங். இலாவாண. 8:185);.

   2. அமைத்தல்; to make.

     “கடிமண்டபமுன் கோடிப்ப” (காஞ்சிப்பு. திருமண.4);.

   3. மனக் கோட்டை கட்டுதல்; to imagine, picture in mind.

     “கண்ணாலங் கோடித்தது” (திவ். நாய்ச். 10:9);.

   4. வேண்டுதல் (யாழ். அக.);; to beseech. supplicate.

   5. ஒலித்தல்; to sound.

     [கொள் → கோள் → கோடு → கோடி.]

 கோடிāṭi, பெ.(n.)

   1 நூறு நூறாயிரம் (இலட்சம்); கொண்ட பேரெண்:

 one crore.

   2. பத்து நெய்தல் (பத்து இலட்சம்); கொண்ட பேரெண்; one crore consisting 10 million.

பாலி.கோடி Skt. kðti E. Crore Hin, carode.

     [குவளை-குவடி-கோடி]

தமிழிலிருந்து கி.மு.800 அளவில் திரிந்த திரிபு. பாலி மொழி வாயிலாக ஏனைய மொழிகளில் ஊடாட்டம் பெற்றது.

கோடிகச்சு

கோடிகச்சுāṭigaccu, பெ.(n.)

   முகமதியரின் (இசுலாத்தின்); ஐந்து கடமைகளில் ஒன்றான மக்காவிற்குப் புனிதப் பயணம் (யாத்திரை); மேற்கொள்ளுதல்; Haj Pilgarimage.

     “கோடிகச்சு செய்த பலனுமடைவா ராகவும்”(சேதுபதி மன்னர் செப்பேடுகள் எ.55-65, பக்.476);

     [கோடி + கச்சு (ஹஜ் → கச்சு.);.]

கோடிகம்

கோடிகம்1āṭigam, பெ.(n.)

   1. பூந்தட்டு; salver or tray for flowers.

     “பூ நிறைசெய்த… கோடிகம்” (சீவக. 2707);.

   2. குண்டிகை (பிங்.);; ewer pot with a spout.

   3. அணிகலச்செப்பு (பிங்.);; jewel casket.

     [கோடி → கோடிகம்.]

 கோடிகம்2āṭigam, பெ.(n.)

   1. இந்திரகோபப் பூச்சி; lady’s fly.

   2. நுனி; tip.

   3. மூலை; corner.

   4 ஆடை; cloth.

     “செங்கோடிகம்” (பெருங். உஞ்சைச். 57:43);.

   5. சிலை; statue.

   6. இளமை; youth.

     [கோடு → கோடி → கோடிகம்.]

கோடிகரி-த்தல்

கோடிகரி-த்தல்āṭigarittal,    4 செ.கு.வி. (v.i.)

   தொகுத்துச் சொல்லுதல்; to sum up in order, systematize and summarise.

     [கோடி + கரி.]

கோடிகர்

கோடிகர்āṭigar, பெ.(n.)

   ஆடைநெய்வோர்; weaver.

     “கோடிகர் வரைப்பினும்”(பெருங். இலாவாண. 8:67);.

     [கோடிகம் → கோடிகர்.]

கோடிகாசியன்

 கோடிகாசியன்āṭikāciyaṉ, பெ.(n.)

   ஒரு அரச குமரன்; a prince.

பாண்டவர்கள் காட்டில் வாழ்ந்த போது தனித்திருந்த பாஞ்சாலியைக் கண்டு ஆசை கொண்டவன் (அபிசிந்);.

கோடிகாட்டு-தல்

கோடிகாட்டு-தல்āṭikāṭṭudal,    5 செ.கு.வி.(v.i.)

   செய்தியைப் புரிந்துகொள்ளும்படியாகக் குறிப்புக் காட்டுதல்; to hint at.

கோடிகாட்டினால் போதும் புரிந்துகொள்வேன் (உ.வ.);.

     [கோடு → கோடி + காட்டு.]

கோடிகாண்பி-த்தல்

கோடிகாண்பி-த்தல்āṭikāṇpittal,    4 செ.கு.வி. (v.i.)

   1. குறிப்புக்காட்டுதல்; to hint at slightly.

   2. சுருங்கச் சொல்லி விளங்கவைத்தல்; to make one under. stand by hinting.

     [கோடி + காண்பி.]

கோடிகாவன்

கோடிகாவன்āṭikāvaṉ, பெ.(n.)

   கோடிக்கரை கோவிலுக்கு நிலக்கொடை கொடுத்தவன்; donar of land to kõdikkarai temple.

     “திருக்கோடிக்காவாகிய கண்ணமங்கலத்து ஆத்திரையன் கிழவன் கோடிகாவன் மெழுக்குப்புறம் வைத்த நிலத்துக் கீழ்பாற் கெல்லை” (S.I.I.XIII, 125-3pg.64);.

     [கோடி + காவன்.]

கோடிகோடாக்கினி

 கோடிகோடாக்கினிāṭiāṭākkiṉi, பெ.(n.)

   பேரழிவு தரும் காட்டுத்தீ; great conflagration (சா.அக.);.

     [கோடி + கோடாக்கினி.]

கோடிக்கரை

கோடிக்கரை1āṭikkarai, பெ.(n.)

   நாகை மாவட்டம் திருமறைக்காட்டருகில் அமைந்த ஒர் ஊர்; a village situated near Tirumaraikkadu in Nagappattinam Dt.

     [கோடி + கரை.]

இதன் இலக்கியப்பெயர் தொன்முதுகுடி என்பதாகும். கோடியில் அமைந்ததாலும், கடல், ஏரி, ஆறு, குளம் இவற்றின் கரைகளில் அமைந்த ஊர்கள் போலக் கரை என்னும் பின்னொட்டு அடைவதாலும் இப்பெயர் வழங்கப்படுகிறது.

 கோடிக்கரை2āṭikkarai, பெ.(n.)

   தனுக்கோடி முதலிய தூய நீர்த்துறை; sacred sea-bathing ghats at Ködikkari, Dhanusködi, etc.

     [கோடி + கரை.]

கோடிக்கரைச்செறிவு

 கோடிக்கரைச்செறிவுāṭikkaraicceṟivu, பெ.(n.)

   குமரிமுனை புகையிலை; tobacco of Cape Comerin (சா.அக.);.

     [கோடிக்கரை + செறிவு.]

கோடிக்கரையான்தோணி

 கோடிக்கரையான்தோணிāṭikkaraiyāṉtōṇi, பெ.(n.)

   கோடிக்கரையிலுள்ள தோணி, அதாவது கள்ளத்தோணி; vessel at ködi-k- karai. Piratical vessel.

     [கோடிக்கரை + ஆன் + தோணி.]

கோடிக்கல்

 கோடிக்கல்āṭikkal, பெ.(n.)

   கட்டடத்தின் மூலைக்கல் (வின்.);; corner stone.

ம. கோடிக்கல்.

     [கோடி + கல்.]

கோடிக்காட்டு-தல்

கோடிக்காட்டு-தல்āṭikkāṭṭutal,    5 செ.கு.வி. (v.i.)

   வலியுறுத்திச் சுட்டிக் காட்டுதல்; underline, underscore.

இந்த உடன்படிக்கையை எங்கள் கட்சி ஏற்கவில்லை என்பதைக் கோடிட்டுக் காட்டினோம்.

     [கோடு + இட்டு + காட்டு-தல்.]

கோடிக்காய்kopk-kay.

 கோடிக்காய்kopk-kay.āṭikkāy, பெ.(n.)

   மரத்தில் முதன் முதலில் காய்த்த; the first fruit of the tree.

கோடிக்காய் காய்த்திருக்கிறது.(இ.வ.);.

ம.கோடிக்காய்.

     [கோடி [புதிய]+ காய்]

கோடிக்காரன்

கோடிக்காரன்1āṭikkāraṉ, பெ.(n.)

   கோயிற்றிருமேனிகள் ஊர்தியில் உலாவரும் போது தூக்க வருபவன்; one who carries temple idols on mounts.

மறுவ. திருவடித்தாங்கி.

     [கோடி + காரன். கோடுதல் = கொள்ளுதல், சுமத்தல்.]

 கோடிக்காரன்2āṭikkāraṉ, பெ.(n.)

   கொடுக்கல் வாங்கல் செய்யும் மார்வாரி வணிகன்; Marvari, money lender.

     [கோடி + காரன்.]

கோடிக்கிளை

 கோடிக்கிளைāṭikkiḷai, பெ.(n.)

   நகுதாளியிலை; common cherry nutmeg (சா.அக.);.

     [கோடி + கிளை.]

கோடிக்குத்தல்

கோடிக்குத்தல்āṭikkuttal, பெ.(n.)

   1. தெருப்பாய்ச்சல்; situation of a house at the street-end. facing streetward, considered inauspicious.

   2. தெருக்கோடி; corner of a street.

   3. சிற்றூரின் கடைசிப்பகுதியில் அமைந்த வீடு; a house situated at the end of the small village.

     [கோடி + குத்தல்.]

கோடிசித்தி

 கோடிசித்திāṭisitti, பெ.(n.)

   சேர்ந்தாடு பாவை என்னும் மருந்து; an unknown drug (சா.அக.);.

     [கோடு + சித்தி.]

கோடிசீமான்

 கோடிசீமான்āṭicīmāṉ, பெ.(n.)

   பெருஞ் செல்வன்; multi-millionaire.

     [கோடி + சீமான்.]

கோடிச்சிலை

கோடிச்சிலைāṭiccilai, பெ.(n.)

   1. 120 தமிழ் மருத்துவ இயற்கைப் பொருள்களில் ஒன்றான மஞ்சட்கல்; the yellow stone.

   2. புதிய சீலை; a new sari (சா.அக.);.

     [கோடி + சிலை (எதிரொலிப்பது, கல்);-கோடிச்சிலை → கோடிச்சீலை.]

கோடிச்செல்வன்

 கோடிச்செல்வன்āṭiccelvaṉ, பெ.(n.)

   மிகப்பெருஞ் செல்வன், பணக்காரன்; fabulously wealthy man, multi-millionaire.

     [கோடி + செல்வன்.]

கோடிச்செல்வி

 கோடிச்செல்விāṭiccelvi, பெ.(n.)

   மிகப்பெரும் பணக்காரி; fabulously wealthy woman.

     [கோடி + செல்வி.]

கோடிஞ்சி

 கோடிஞ்சிāṭiñji, பெ.(n.)

   கோழி; fowl, cock or hen (சா.அக.);.

     [கோழி → கோழிஞ்சி → கோடிஞ்சி (கொ.வ.);.]

கோடிஞ்சிகா

 கோடிஞ்சிகாāṭiñcikā, பெ.(n.)

   கோழிப் பூண்டு; cock’s comb, Celosia cristata (சா.அக.);.

கோடிடு-தல்

கோடிடு-தல்āḍiḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   அடக்கோடிடுதல்; to underline

     [கோடு + இடு.]

கோடிட்ட

 கோடிட்டāṭiṭṭa, பெ.எ.(adj.)

   கோடுபோட்டுவிடப்பட்ட; indicated by a line.

     [கோடு + இட்ட.]

கோடிட்டுக்காட்டு-தல்

கோடிட்டுக்காட்டு-தல்āṭiṭṭukkāṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   வலியுறுத்திச் சுட்டிக்காட்டுதல்; to underline, under Score.

     [கோடிட்டு + காட்டு.]

கோடிதம்

 கோடிதம்āṭidam, பெ.(n.)

   ஒரு முகில்; a cloud, blue sky; azure.

     [கூடு → கோடு → கோடிதம்.]

கோடிதீர்த்தம்

 கோடிதீர்த்தம்āṭitīrttam, பெ.(n.)

   கடலிற் குளித்தற்கரிய நற்பேறுடைய இடங்களான (புண்ணியத் தலங்கள்); தனுக்கோடி போன்ற கோடிக்கரை; sacred sea bathing ghat at Dapuskódi etc.,

     [கோடி + (நீர்த்தம்); தீர்த்தம்.]

கோடிதூங்கி

 கோடிதூங்கிāṭitūṅgi, பெ.(n.)

   வேலையில்லாது சோம்பித்திரிபவன்-ள்; loiterer, one who hangs about other’s houses.

     [கோடிதூங்கு → கோடி தூங்கி.]

கோடிதூங்கு-தல்

கோடிதூங்கு-தல்āṭidūṅgudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. மூலையில் உறங்குதல்; to sleep in a corner.

   2. சோம்பித்திரிதல்; to loiter about.

     [கோடி + தூங்கு.]

கோடித்தரை

கோடித்தரைāṭittarai, பெ.(n.)

   1. விளை நிலமாகப் புதிதாய் வெட்டித் திருத்தப்பட்ட நிலம் (யாழ்.அக.);; land newly converted and made fit for cultivation.

   2. புதுச்செய்கை; new act.

   3. பூண்டதரை; newly converted land, floor.

     [கோடி (புதியது); + தரை.]

கோடிநீர்

 கோடிநீர்āṭinīr, பெ.(n.)

   தண்ணீர்க்குடம்; water pot (சா.அக.);.

     [கோடி + நீர்.]

கோடிபோடு-தல்

கோடிபோடு-தல்āṭipōṭudal,    20 செ.கு.வி. (v.i.)

   கணவன் இறந்தவுடன் கைம்பெண்ணுக்கு உறவினர் புதுப்புடவை போடுதல்; to offer a new cloth to a widow in mourning by relations.

     [கோடி + போடு-.]

கோடிப்பருவம்

 கோடிப்பருவம்āṭipparuvam, பெ.(n.)

   இளமைப் பருவம் (யாழ்.அக.);; youth.

அவனை நான் கோடியில் பார்த்த போது அழகாய் இருந்தான் (கொங்கு);.

மறுவ வாலைப்பருவம், கோடிவயது.

தெ. கோடெபருவமு.

     [கோடி + பருவம்.]

கோடிப்பல்லி

 கோடிப்பல்லிāṭippalli, பெ.(n.)

   தருமபுரி மாவட்டத்துச் சிற்றூர்; a village in Dharumapuri Dt.

     [கோடி + (பள்ளி); பல்லி.]

கோடிப்பள்ளம்

 கோடிப்பள்ளம்āṭippaḷḷam, பெ.(n.)

   திருவள்ளூர் மாவட்டத்துச் சிற்றூர்; a village in Thiruvallur Dt.

     [கோடி + பள்ளம்.]

கோடிப்பாக்கம்

 கோடிப்பாக்கம்āṭippākkam, பெ.(n.)

   விழுப்புரம் மாவட்டத்துச் சிற்றூர்; a village in Villuppuram dt..

     [கோடி + பாக்கம்.]

கோடிப்பாம்பு

கோடிப்பாம்புāṭippāmbu, பெ.(n.)

   பழக்கப்படாத பாம்பு; wild or untamed young cobra.

     “வெட்ட வெளியிலே கோடிப்பாம் பாடுமோ” (குற்றா.குற. 124:31);.

     [கோடி (புதிய); + பாம்பு.]

கோடிப்பாலை

கோடிப்பாலைāṭippālai, பெ.(n.)

கொடிப் பாலை (சிலப். 3:71, கீழ்க்குறிப்பு); பார்க்க;see kodi-p-palai.

     [கோடி + பாலை]

கோடிப்பாளைக்கருக்கு

 கோடிப்பாளைக்கருக்குāṭippāḷaikkarukku, பெ.(n.)

   மகளிரின் நெற்றிச்சுட்டி என்னும் சூளா மணிவகைகளின் முன்னமைப்பு; a frontal decoration of an ornament worn by women hanging above the forehead.

கோடிப்பாளை கருக்கு

     [கோடி (இறுதி); + பாளை + கருக்கு – கோடிப்பாளைக் கருக்கு.]

பாக்குப்பாளை போன்று பூவேலைப்பாடுகள் செதுக்கப்பட்ட அணிகல வேலைப்பாடுகளை பாளைக்கருக்கு என்பர்.

கோடிப்புங்கு

கோடிப்புங்குāṭippuṅgu, பெ.(n.)

இராமநாதபுரம் விளத்தூர் பகுதியில் இருந்த ஒரு ஊரின் பெயர்; ‘விளத்தூர் மண் கோட்டை சோளிக்குடி சிருதவயல் கோடிப்புங்கு'(சே.செ.52-37, பக்.262);.

     [கோடி + புங்கு.]

கோடிப்பூட்டு இணைப்பு

 கோடிப்பூட்டு இணைப்புāṭippūṭṭuiṇaippu, பெ.(n.)

   மரவேலைப்பாட்டின்போது பயன்படுத்தப்படும் ஒரு வகை இணைப்பு; a kind of joint used in wooden works.

     [கோடி + பூட்டு + இணைப்பு.]

கோடிமங்கலத்துவாதுளிநற்சேந்தனார்

கோடிமங்கலத்துவாதுளிநற்சேந்தனார்āṭimaṅkalattuvātuḷinaṟcēntaṉār, பெ.(n.)

   கடைக்கழகப் புலவர்களில் ஒருவர்; the poet who belonged to the last Šañgamera.

     [கோடிமங்கலம்+துவாதுளி+நல்+சேந்தன்.]

இவர் ஒரு பார்ப்பனர். கோடிமங்கலம் எனும் ஊரைச் சேர்ந்த இவரது பெயர் நற்சேந்தனார் (அபி.சிந்.);. அகநானூறு 179, 232 ஆகிய பாடல்களைப் பாடியுள்ளார்.

கோடிமட்டம்

 கோடிமட்டம்āṭimaṭṭam, பெ.(n.)

   சுவர்களின் கோடியைச் சரிபார்க்க உதவும் கருவி; an instrumental used for the correction of the corner of a wall in masonry work.

மறுவ. மூலைமட்டம்.

     [கோடு + மட்டம்.]

கோடிமுடி-தல்

கோடிமுடி-தல்āḍimuḍidal,    2 செ.கு.வி. (v.i.)

   1. தன்னை விருந்திற்கழைக்கும்படி மணமகன் முதலியோருடைய புதிய ஆடையில் பணம் முடிதல் (யாழ்ப்.);; to tie a piece of money in the new cloth as of a bridegroom to oblige him to give an invitation to a feast.

   2. ஒருவகை விளையாட்டு; a kind of play.

     [கோடி + முடி-.]

கோடிமுரிதல்

கோடிமுரிதல்āṭimuridal, பெ.(n.)

   வயிரக்குற்றம் பன்னிரண்டனுள் ஒன்று (சிலப். 14:180, உரை.);; a flaw in diamonds, one of 12 vayirakkurram.

     [கோடி + முரி.]

கோடிமூட்டு

 கோடிமூட்டுāṭimūṭṭu, பெ.(n.)

   மரப்பலகை, சட்டம் ஆகியவை மூலைகளில் பொருந்துமாறு இணைக்கப்படும் இணைப்பு; a joint which connects the corners of the wooden planks and frames.

     [கோடி + மூட்டு.]

கோடிம்பகம்

 கோடிம்பகம்āṭimbagam, பெ.(n.)

கோடும்பிகம் பார்க்க;see kodumbigam (சா.அக.);.

     [கோடும்பிகம் → கோடிம்பகம்.]

கோடிம்பம்

 கோடிம்பம்āṭimbam, பெ.(n.)

   கரும்பூசணி; sweet water melon (சா.அக.);

     [கோடு + நிம்பம்.]

கோடியக்கரை

 கோடியக்கரைāṭiyakkarai, பெ.(n.)

கோடியக்கரை பார்க்க;see kõdi-k-karai.

     [கோடி + அ + கரை.]

கோடியக்காடு

 கோடியக்காடுāṭiyakkāṭu, பெ.(n.)

   நாகை மாவட்டம் திருமறைக் காட்டிற்குத் தெற்கே உள்ள காடு; a forest situated in Tirutturai-p-pundi taluk in Nägai Dt.

     [கோடி + அ + காடு.]

கோடியன்

 கோடியன்āṭiyaṉ, பெ.(n.)

   பல்லக்கு மற்றும் ஊர்தி சுமப்போன்; bearer of palanquin or vāganam of an idol.

     [கோடு = பல்லக்குத்தண்டு, மரம். கோடு → கோடியன்.]

கோடியம்

 கோடியம்āṭiyam, பெ.(n.)

   விழுப்புரம் மாவட்டத்துச் சிற்றூர்; a village in Viluppuram Dt.

     [கோடி → கோடியம்.]

கோடியர்

கோடியர்1āṭiyar, பெ.(n.)

   1. கூத்தர்; professional dancers.

     “கொடும்பறைக் கோடியர்” (மதுரைக். 523);.

   2. நாடகர்; actors or actress.

     [கோடு → கோடியர் (வளைந்தாடும் கூத்தர்);.]

 கோடியர்2āṭiyar, பெ.(n.)

   சிவிகையின் முன்பின் முனைகளைத் தாங்கிச்செல்வோர் (யாழ்.அக.);; those who carry a palanquin at its two ends.

     “விழவிற் கோடியர் நீர்மை போல” (புறநா.29);.

     [கோடு → கோடி → கோடியர்.]

கோடியலூர்தி

கோடியலூர்திāṭiyalūrti, பெ.(n.)

யானை மருப்பினால் செய்யப்பட்ட ஊர்தி:

 vehicle or conveyance made of elephant’s tusks.

     “கோடிய லூர்தியுங் கொண்டு விசியுறுத்து” (பெருங். உஞ்சைக். 37:219);.

     [கோடு + இயல் + ஊர்தி.]

கோடியிணைப்பு

 கோடியிணைப்புāṭiyiṇaippu, பெ.(n.)

மரச் சட்டங்களின் கோடியில் இணைக்கும் இணைப்பு:

 a joint between the corners of wooden planks.

     [கோடி + இணைப்பு.]

கோடியில்லாமை

கோடியில்லாமைāṭiyillāmai, பெ.(n.)

   வயிரக்குற்றம் 12-ல் ஒன்று (சிலப். 14:180, உரை);; a flaw in diamonds, one of 12 vairakkurram.

     [கோடி + இல்லாமை.]

கோடியுடம்பு

கோடியுடம்புāḍiyuḍambu, பெ.(n.)

   1. மெல்லிய உடம்பு (யாழ்ப்.);; tender body.

   2 இளைத்தவுடம்பு; young body.

     [கொடி → கோடி + உடம்பு.]

கோடியூர்

 கோடியூர்āṭiyūr, பெ.(n.)

   குமரி மாவட்டத்துச் சிற்றூர்; a village in Kanyakumari Dt

     [கோடி + ஊர்.]

கோடியெடு

கோடியெடு1āḍiyeḍuttal,    4 செ.குன்றாவி. (v.t.)

   திரும்பச் சொல்லுதல் (ஈடு.10.3:1);; to repeat.

     [கோடி + எடு.]

 கோடியெடு2āḍiyeḍuttal, பெ.(n.)

   4 செ.குன்றாவி. (v.t.);

   இறந்தவர் வீட்டுக்குப் புத்தாடை வாங்கிச் செல்லுதல்; to buy and carry a new cloth to deceased house.

     [கோடி (புத்தாடை); + எடு.]

கோடியோடு-தல்

கோடியோடு-தல்āṭiyōṭudal,    5.செ.கு.வி.(v.i.)

   ஏரி நீர் நிரம்பிவழிதல் (C.G.);; to overflow, as surplus water in a tank.

     [கோடி + ஒடு.]

கோடிரம

கோடிரம1āṭirama, பெ.(n.)

   1. ஒரு விலங்கு; an ichneumon.

   2. ஓர் பூச்சியினம்; insect coccinella of various kinds.

   3. கீரி; mongoose (சா.அக.);.

ம. கோடிரம்.

     [கோடு → கோடிரம்.]

கோடிரம்

கோடிரம்2āṭiram, பெ.(n.)

கோடிரவம்பார்க்க;see kõdiravam.

     [கோடு → கோடிரம்.]

கோடிரவம்

 கோடிரவம்āṭiravam, பெ.(n.)

   சதுரக்கள்ளி (மலை.);; square spurge.

     [கோடு → கோடிரம் → கோடிரவம்.]

கோடிலம்

கோடிலம்āṭilam, பெ.(n.)

   1. கோட்டம்; put chock.

   2. ஒருவகை நறுமணச் செடி; a kind of fragrant plant.

     [கோடு → கோடிலம்.]

கோடிவகை

 கோடிவகைāṭivagai, பெ.(n.)

   ஆடைவகைகள்; type of clothings.

     [கோடி + வகை.]

வகைகள்: கோசிகம், பீதகம், பச்சிலை, அரத்தம், நுண்டுகில், கண்ணம், வடகம், பஞ்சு, இட்டு, பாகம், கோங்கலர், கோபம், குருதி, கரியல், பேடகம், பூங்காக்காழம், துரியம், நூல்யாப்பு, திருக்கு, தேவாங்கு, குச்சலி, தேவகிரி, இறஞ்சி, வெண்பொத்தி., செம்பொத்தி, பணி பொத்தி (கழ.த..அக.);.

கோடிவஞ்சி

 கோடிவஞ்சிāṭivañji, பெ.(n.)

   சிறுகுறிஞ்சான்; small Indian ipecacuanha (சா.அக.);.

     [கோடி + வஞ்சி.]

கோடிவயது

கோடிவயதுāṭivayadu, பெ.(n.)

   1. இளமை; youth

   2. கோடிப்பருவம் பார்க்க;see kodi p-paruvam (சா.அக.);.

     [கோடி + வயது.]

கோடிவளி

 கோடிவளிāṭivaḷi, பெ.(n.)

   திருவள்ளூர் மாவட்டத்துச் சிற்றூர்; a village in Thiruvallur dt.

     [கோடி + வளி.]

கோடிவெள்ளை

 கோடிவெள்ளைāṭiveḷḷai, பெ.(n.)

   புதிய ஆடையின் முதல் வெள்ளை; first wash of new Cloths.

     [கோடி + வெள்ளை.]

கோடீகரி-த்தல்

கோடீகரி-த்தல்āṭīkarittal,    4 செ.குன்றாவி.(v.t.)

   தொகுத்துச்சொல்லுதல்; to sum up in order, systematise and summarise.

     [கொள் → கோள் → கோடு (மனத்துட் கொள்ளுதல்); + கரித்தல்.]

கோடீசுவரன்

 கோடீசுவரன்āṭīcuvaraṉ, பெ.(n.)

   சொத்தின் மதிப்பு கோடிக் கணக்கில் உள்ளன. மிகப் பெரும் பணக்காரன்; one who is fabulously rich billionaire.

     [கோடி+ஈசுவரன்.]

 கோடீசுவரன்āṭīcuvaraṉ, பெ.(n.)

கோடிச் செல்வன் பார்க்க;see ködi-c-celvan.

     [கோடி + ஈசுவரன்.]

கோடீசுவரி

 கோடீசுவரிāṭīcuvari, பெ.(n.)

   கோடீசுவரன் என்பதன் பெண்பால்; feminine of Kodišuvaran.

     [கோடி+ஈசுவரி]

 கோடீசுவரிāṭīcuvari, பெ.(n.)

கோடிச்செல்வி பார்க்க;see kбd|-с-сеlvi.

     [கோடி + ஈகவரி.]

கோடீரம்

கோடீரம்1āṭīram, பெ.(n.)

   1. முடி (வின்.);; crest, diadem.

   2. முனிவர்களின் சடை; long matted hair. as of ascetics.

     “வெண்ணிலவு விரிந்த கோடிரம்” (குமர.பிர. மதுரைக். 101);.

   3. மண்ணாங்கட்டியுடைக்குந் தடி முதலியன; a pole clods is used to break the clod of earth.

     [கோடு(வளைவு); → கோடுரம் → கோடீரம்.]

 கோடீரம்2āṭīram, பெ.(n.)

   வானவில்; rain-bow.

     [கோடு = வளைவு. கோடு → கோடிரம் → கோடீரம்.]

கோடு

கோடு1āṭu, பெ.(n.)

   ஒரு பரப்பில் ஒற்றை அளவில் நீளவாக்கில் இருக்கும் பதிவு; line; stripe.

   தரையில் குச்சியால் கோடு கிழித்து விளையாட ஆரம்பித்தார்கள். கோடுபோட்ட சட்டை, அணிலின் முதுகில் மூன்று கோடுகள் இருக்கும். 2. தோலில் ஏற்படும் சுருக்கம்; wrinkle.

நெற்றியில் கோடு உள்ளது.

     [கொடு – கோடு]

 கோடு1āṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. வளைதல்; to bend, to be crooked.

     “செங்கோல் கோடியோ

     ” (மணிமே.28:188);.

   2. நெறிதவறுதல்; to go astray, deviate.

     “கோடாருங் கோடிக் கடுவினையராகியார்ச் சார்ந்து” (நாலடி, 124);.

   3. நடுநிலைமை தவறுதல்; to be partial, biassed.

     “கோடாமை சான்றோர்க் கணி” (குறள்,118);.

   4. வெறுப்புறுதல் (வின்.);; to be displeased, aversion.

   5. கோணுதல்; to bend, curve.

     “கற்பிளார்கோடும் வாயினரீவார்க்கரும் பழுதுரைப்பவர்” (தணிகைப்பு. அகத்.346);.

   6. சூழ்தல்; to cover, all round.

   7. வட்டமாதல்; to get round.

   8. எரிதல்; to burn.

   9. குறாவுதல்; to mean, to be sad.

   10. கொள்ளுதல்; to secure.

     “தலை யிழைத்துக் கோடுமுன்” (தணிகைப்பு.விராட்.39);.

     [கோண் → கோடு.]

 கோடு2āṭu, பெ.(n.)

   1. வளைவு; crookedness, flexure.

   2. நடுநிலை நீங்குகை; partiality.

     “கோடிறீக் கூற்றம்”(நாலடி.5.);.

   3. யானை, பன்றிகளின் கொம்பு; tusk.

     “மத்த யானையின் கோடும்”(தேவா.39:1);.

   4. விலங்கின் கொம்பு; horn.

     “கோட்டிடை யாடினை கூத்து” (திவ். இயற். திருவிருத். 21);.

   5. ஊதுகொம்பு; blowing-horn.

     “கடுங்கட் காவலர் கொடுங்கோடு சிலைப்ப” (பெருங். உஞ்சைக். 58:25);.

   6. நீர்வீசுங் கொம்பு; a horn-like contrivance used for discharging water in jets.

     “நீர்மணக் கோடட்டினர்” (பரிபா.6:34);.

   7. மரக்கொம்பு (பிங்.);; branch of a tree.

   8. யாழ் தண்டு; body of a lute.

     “மகர யாழின் வான்கோடு தழீஇ” (மணிமே.4:56);.

   9. கெ, கே முதலியவற்றின் தலைப்பிலுள்ள கொம்புக் குறியீடு; symbol ‘தெ’, ‘தே’, கெ,கே,etc.

     ‘விலங்கு பெற்றும் கோடு பெற்றும் புள்ளி பெற்றும்’ (தொல். எழுத்து. 17, உரை);.

   10. பிறைமதி; crescent moon.

     “பசும்பணிக்கோடு மிலைந்தான்” (திருக்கோ. 149);.

   11. சங்கு; conch, chank.

     “கோடு முழங் கிமிழிசை யெடுப்பும்” (பதிற்றுப். 50:25);.

   12. குலை; bunch, cluster.

   13. மயிர்முடி; coil of hair.

குரற் கூந்தற்கோடு”(கலித். 72:20);.

   14. மலையுச்சி; summit of a hill, peak.

     “பொற்கோட் டிமயமும்” (புறநா.2:24);.

   15. மலை; mountain.

     “குமரிக் கோடும்” (சிலப்.11:20);.

   16. மேட்டு நிலம்; high ground, elevation.

     “நறுங்காழ் கொன்று கோட்டின் வித்திய” (மதுரைக் .286);.

   17. வரி; line.

   18. ஆட்டம் முதலியவற்றுக்காக வகுத்த எல்லை (தானம்);; diagram, figure, as a square, circle, etc., drawn for playing games.

     “கோடின்றி வட்டாடல் கொள்வ தொக்கும்”(தாயு. நினை.2);.

   19. நீர்க்கரை; bank of a river, bund of a tank or well.

     “குளவளாக் கோடின்றி நீர்நிறைந் தற்று” (குறள்:523);.

   20. குளம்; tank.

     “கோடெலா நிறையக் குவளைம் மலரும்” (தேவா.425:4);.

   21. காலவட்டம்; cycle of time.

     “கலியுகக் கோட்டுநாள்” (T.A.S.H.O.P.S. 5);.

   22. வரம்பு (பிங்.);; ridge, as in a field;

 border, limit.

   23. ஆடைக்கரை; stripe, border, as of a cloth.

     “கொடுந்தானைக் கோட்டழகும்” (நாலடி.131);.

   24. முனை; cusp, horn, as of the crescent moon

     “கோடு கூடு மதியம்” (பதிற்றுப்.31.12);.

   25. பக்கம்; side.

     “கோடுய ரடுப்பு” (புறநா. 164);.

   26. அாணிருக்கை (வின்);; stronghold, fortified place.

   27. கட்டடச் சுவர்; wall of a building.

   28. நத்தை; snail.

   29. கோட்டான்; large owl.

   30. சங்கம்பட்டை; bark of smooth volkameria – cleodendran inerme.

   31. கிளிஞ்சல்; shell (சா.அக.);

   32. சுண்ணாம்பு; lime.

   தெ., க., து. கோடு;   பர். கோட்;கோண். கோர்.

     [கோண் → கோடு ஒ.நோ. பாண் → பாடு.]

 கோடு3āṭu, பெ.(n.)

   கொடுமை; hardship, oppression.

     “கோடற வைத்த கோடாக் கொள்கையும்” (பதிற்றுப். 37:11);.

     [கொள் → கொடு → கோடு.]

கோடுகடைதொழில்

 கோடுகடைதொழில்āḍugaḍaidoḻil, பெ.(n.)

   யானைக்கோடு முதலியவற்றைக் கடையும்தொழில்; the art of carving tusks.

     [கோடு + கடை + தொழில்.]

கோடுகீறு-தல்

கோடுகீறு-தல்āṭuāṟudal, பெ.(n.)

   5 செ.கு.வி. (v.i.);

கோடிகாண்பி பார்க்க;see kodi-kanbi.

     [கோடு + கீறு.]

கோடுங்கிரி

 கோடுங்கிரிāṭuṅgiri, பெ.(n.)

   மல்லிகை; jasmine (சா.அக.);.

     [கோடு = புதிய, கலி = மணம். கோடும் + கலி → கோடுங்கலி → கோடுங்கிரி(கொ.வ);.]

கோடுபாடு

 கோடுபாடுāṭupāṭu, பெ.(n.)

   மூலைமுடுக்கு; in all Corners.

     [கோடு + பாடு.]

கோடுபோடு-தல்

கோடுபோடு-தல்āṭupōṭudal,    19 செ.குன்றாவி. (v.t.)

   உப்பளப் பாத்தியில் படிந்த உப்புப்படிவத்தில் பலகையால் கோடுபோடுதல்; to draw lines on the surface of crystalized salt.

     [கோடு + போடு.]

கோடுமட்டி

 கோடுமட்டிāṭumaṭṭi, பெ.(n.)

   மட்டி வகைகளுலொன்று; a kind of shell.

     [கோடு + மட்டி.]

கோடுமுத்தம்

 கோடுமுத்தம்āṭumuttam, பெ.(n.)

   சங்கிற் பிறந்த வெண்ணிநிற முத்து; white pearl from sea shell oyster.

     [கோடு = பங்கு. கோடு + முத்தம்.]

கோடும்பிகம்

 கோடும்பிகம்āṭumbigam, பெ.(n.)

   தும்மட்டி; country cucumber (சா.அக.);.

     [கொள் → கொடு → கொடும்பி → கொடும்பிகம் → கோடும்பிகம்.]

கோடுருவகம்

 கோடுருவகம்āṭuruvagam, பெ.(n.)

   அத்தி; a kind of fig tree (சா.அக.);.

     [கோடு + உருவகம்.]

கோடுரை

 கோடுரைāṭurai, பெ.(n.)

   சங்கஞ்செடி; a thorny kind of shrub (சா.அக.);.

     [கோடு + கோடுரை.]

கோடுவாய்

 கோடுவாய்āṭuvāy, பெ.(n.)

கோட்டுவாய் பார்க்க;see köttu-vái (சா.அக.);.

     [கோட்டுவாய் → கோடுவாய்.]

கோடை

கோடை1āṭai, பெ.(n.)

   1. மேல்காற்று; west wind.

     “கோடை தூற்றக் கூடிய வூழிலை” (ஞானா. 28:12);.

   2. வேனிற்காலம் (பிங்.);; summer season.

   3. வெயில்; sun shine.

     “வெந்துயர்க் கோடை மாத்தலை கரப்ப” (திருவாசக.3:71);.

   4. கோடைப்பயிர் (இ.வ.);; summer crop.

   5. கோடைக்கானல்; a mountain.

     “வெள்வீ வேலிக் கோடைப் பொருந’ (புறநா.205:6);.

   க. கோடெ;   ம. கோட;   பட. (தென்மேற்கு பருவமழை);;   கோத.. கெட்;துட. க்வாட் (பருவமழை, ஆண்டு);.

     [கொடு → கோடு → கோடை.(குடக்கு);→கோடை.]

 கோடை2āṭai, பெ.(n.)

   1. கோடற்கிழங்கு; a bulbous root grown in the summer season.

   2. கரந்தை; sweet basil.

     [கோடு → கோடை.]

 கோடை3āṭai, பெ.(n.)

   குதிரை (பிங்.);; horse.

     [கோடகம் → கோடை.]

 கோடை4āṭai, பெ.(n.)

   1. வெண்காந்தள்; white species of Malabar glory-lily.

   2. செங்காந்தள்; Malabar glorylily.

     [கோடு = வெண்மை. கோடு → கோடை.]

 கோடை5āṭai, பெ.(n.)

   இளமை; youth.

தெ. கோடெ (இளைஞன். இளம);

 Fin. Kyty. (wife’s brother-in-law);: Est. kudi: Mansi. Kil;

 Mong. kydeqy: O.Turk. kude: Jap. Kata: Q. katac.

     [கோடு → கோடை.]

 கோடைāṭai, பெ.(n.)

   விலங்குகளுக்கு கொம்பு முளைக்கும் பருவம்; horn growing stage among animals.

   2. இளமைப் பருவம்; teen age.

அவனை நான் கோடையில் பார்த்த நினைவு இருக்கிறது.(கொங்.வ.);.

     [கோடு(கொம்பு);-கோடை]

கோடைக்கட்டி

 கோடைக்கட்டிāṭaikkaṭṭi, பெ.(n.)

   வேனிற் காலத்தில் உடம்பில் காணும் அரத்தக் கொப்புளம்; boils occuring in summer due to excessive heal of the body (சா.அக.);.

மறுவ. கோடைக் கொப்புளம்.

     [கோடை + கட்டி.]

கோடைக்கண்ணி

கோடைக்கண்ணிāṭaikkaṇṇi, பெ.(n.)

   1. ஒரு வகை நெல்; a kind of paddy.

   2. வேனிற்காலத்துப் பூ; summer flower (சா.அக.);.

     [கோடை + கண்ணி.]

கோடைக்காந்தள்

 கோடைக்காந்தள்āṭaikkāndaḷ, பெ.(n.)

   வெண்காந்தள்; Malabar glory (சா.அக.);.

     [கோடை + காந்தள்.]

கோடைக்காந்திரம்

 கோடைக்காந்திரம்āṭaikkāndiram, பெ.(n.)

   பொழுதுவணங்கி (சூரியகாந்தி);; sunflower (சா.அக.);.

     [கோடை + காந்திரம்.]

கோடைக்கானல்

கோடைக்கானல்āṭaikkāṉal, பெ.(n.)

   1. பழனி மலைத் தொடரின் தென்பால் 7,000 அடிக்குமேல் உயரமுள்ள மலைப் பகுதி; the southern ridge of the Palani hills. more than 7000 ft. high.

   2. கோடைக்கானல் மலையின் உச்சியில் குளிர்ச்சிக்காகத் தங்கும் ஒரு மலைநகர்; a sanatorium at the top of Kodaikkanal hill.

     [கோடை (மேற்கு); + கானல்.]

கோடைக்காற்று

கோடைக்காற்றுāṭaikkāṟṟu, பெ.(n.)

   1. மேற்குக் காற்று; west wind.

   2. நெருப்புக்காற்று; the hot west wind.

   3. வேனிற் பருவத்தின் காற்று; breeze of summer season (சா.அக.);.

   ம. கோடக்காற்று;பட.கோடெதாயி.

     [கோடை + காற்று.]

கோடைக்காலம்

 கோடைக்காலம்āṭaikkālam, பெ.(n.)

   வேனிற்காலம்; hot weather, summer season (சா.அக.);.

     [கோடை + காலம்.]

கோடைக்கிழங்கு

 கோடைக்கிழங்குāṭaikkiḻṅgu, பெ.(n.)

   சிற்றரத்தை (மலை.);; lesser galangal.

ம. கோடக்கிழங்ஙு,

மறுவ. குட்டியிடுக்கி.

     [கோடை + கிழங்கு.]

கோடைக்கீரிசம்

 கோடைக்கீரிசம்āṭaikārisam, பெ.(n.)

   மணிப்பிரண்டை;, a species of adamantine creeper (சா.அக.);.

     [கோடை + (கிரிச்சம்); கீரிசம்.]

கோடைக்குறுவை

கோடைக்குறுவைāṭaikkuṟuvai, பெ.(n.)

   நெல்வகை; a kind of paddy.

     “கோடைக் குறுவை குளவாளை செங்குறுவை (நெல்விடு.179);.

மறுவ. சித்திரைக்குறுவை.

     [கோடை + குறுவை.]

கோடைக்குவாடான்

 கோடைக்குவாடான்āṭaikkuvāṭāṉ, பெ.(n.)

   ஆவிரை என்னுமோர் மூலிகை (மலை.);; Cassia.

     [கோடை + வாடான்.]

கோடைக்கேப்பை

 கோடைக்கேப்பைāṭaikāppai, பெ.(n.)

   கேழ்வரகு வகை; a kind of ragi.

     [கோடை + கேப்பை.]

கோடைக்கொட்டை

 கோடைக்கொட்டைāṭaikkoṭṭai, பெ.(n.)

   நிலக்கடலை; ground-nut, as usually a summer cгор.

     [கோடை + கொட்டை.]

கோடைக்கொப்புளம்

 கோடைக்கொப்புளம்āṭaikkoppuḷam, பெ.(n.)

கோடைக்கட்டி பார்க்க;see kodai-k-katti. (சா.அக.);.

     [கோடை + கொப்புளம்.]

கோடைச்சம்பா

 கோடைச்சம்பாāṭaiccambā, பெ.(n.)

   வேனிற்காலத்துப் பயிராகும் சம்பாநெல்; Samba paddy grown in summer season (சா.அக.);.

     [கோடை + சம்பா.]

கோடைச்சவுக்கு

 கோடைச்சவுக்குāṭaiccavukku, பெ.(n.)

   ஆற்றுச்சவுக்கு (L.);; tamarisk.

     [கோடை + சவுக்கு.]

கோடைச்செய்கை

 கோடைச்செய்கைāṭaicceykai, பெ.(n.)

   மறுபயிருக்குக் கோடைக் காலத்தில் நிலத்தைப் பண்படுத்துவகை (வின்.);; preparation of land in hot season for the next crop.

     [கோடை + செய்கை.]

கோடைச்சோளம்

 கோடைச்சோளம்āṭaiccōḷam, பெ.(n.)

   தஞ்சையில் கோடை காலத்திற் பயிரிடப்படும் சோளம்; cholam cultivated in Thanjavur area in Summer.

     [கோடை + சோளம்.]

கோடைத்தணி

 கோடைத்தணிāṭaittaṇi, பெ.(n.)

   ஆனைத்தொண்டி; ordure tree (சா.அக.);.

மறுவ:கோடைத்தொண்டி.

     [கோடை + (தலை);தணி.]

கோடைத்தண்ணீர்

கோடைத்தண்ணீர்āṭaittaṇṇīr, பெ.(n.)

   1. கள்; toddy, as a beverage in hot weather.

   2. பனிக் கட்டி உருகிய தண்ணீர்; ice-water (சா.அக.);.

     [கோடை + தண்ணீர்.]

கோடைத்தாணி

 கோடைத்தாணிāṭaittāṇi, பெ.(n.)

   ஒருவகைப் பூடு; a kind of herb as of net-veined Indian nettle (சா.அக.);.

     [கோடை + தாளி)தாணி.]

கோடைத்திருநாள்

கோடைத்திருநாள்āṭaittirunāḷ, பெ.(n.)

   கோடைகாலத்தில் நடைபெறுகின்ற திருவிழா; a celebration in summer.

     “இறையமுது நூறும் கொடைத்திருநாள் பிற்பத்தில் முதல் திருநாளில்” (திருப்பதி.கல்.தொ.3.கல்7-2);.

     [கோடை + திருநாள்.]

கோடைத்தொண்டி

 கோடைத்தொண்டிāṭaittoṇṭi, பெ.(n.)

   ஆனைத்தொண்டி; ordure tree – sterculia lata (சா.அக.);.

மறுவ. கோடைத்தணி

     [கோடை + தொண்டி.]

கோடைப்பட்டம்

 கோடைப்பட்டம்āṭaippaṭṭam, பெ.(n.)

   மேழ (சித்திரை); மாதப் பயிரிடும் பருவம்; seeding season during summer month, April.

     [கோடை+பட்டம்]

கோடைப்பயிர்

கோடைப்பயிர்āṭaippayir, பெ.(n.)

   1.கோடைக்காலத்துப் பயிர்; crop raised in hot season.

   2. கோடைச்சாகுபடியின் விளை பொருள்; produce of cultivation in the hot season.

ம.கோடைநெல் (ஒருவகை நெல்);.

     [கோடை + பயிர்.]

கோடைப்பாலி

 கோடைப்பாலிāṭaippāli, பெ.(n.)

   மடச்சாம்பிராணி; Malabar mahogany (சா.அக.);.

     [கோடை + (பால்); பாலி.]

கோடைப்புரோசனம்

 கோடைப்புரோசனம்āṭaippurōcaṉam, பெ.(n.)

கோடைப்பயிர் பார்க்க;see kodai-p-payir.

     [கோடை + புரோசனம்.]

கோடைப்பூகிகம்

 கோடைப்பூகிகம்āṭaippūgigam, பெ.(n.)

   மஞ்சள்அந்திமல்லிகை; yellow evening jasmine (சா.அக.);.

     [கோடை + (போகம்); பூகிகம்.]

கோடைப்பூசணி

 கோடைப்பூசணிāṭaippūcaṇi, பெ.(n.)

   கோடைக்காலத்தில் காய்க்கும் பூசணிவகை; a species of pumpkin bearing fruit in hot season.

     [கோடை + பூசணி.]

கோடைப்போகம்

 கோடைப்போகம்āṭaippōkam, பெ.(n.)

கோடைப்பயிர் பார்க்க: see kodai-p-payir.

     [கோடை + போகம்.]

கோடைமழை

 கோடைமழைāṭaimaḻai, பெ.(n.)

   கோடைகாலத்து மழை; summer rain.

   ம. கோடமழ;பட.கோடெமே.

     [கோடை + மழை.]

கோடையடிக்காரன்

 கோடையடிக்காரன்āḍaiyaḍikkāraṉ, பெ.(n.)

   ஒருவரிடத்தினின்று பிடுங்கி மற்றொருவர்க்கு ஏராளமாய்க் கொடுப்பவன்; one who is liberal at another’s expense (loc.);.

     [கோடை + அடி + காரன்.]

கோடையடிபடு-தல்

கோடையடிபடு-தல்āḍaiyaḍibaḍudal,    20 செ.கு.வி (v.i.)

   வெய்யிலிலடிபடுதல்; to roam in hot sun.

     [கோடை + அடிபடு.]

கோடையாடியபெரும்பூதனார்

 கோடையாடியபெரும்பூதனார்āṭaiyāṭiyaberumbūtaṉār, பெ.(n.)

   சங்ககாலப் புலவர்களு ளொருவர்; a Sangam poet.

     [கோடை (கொடைக்கானல் மலை); + பாடிய + பெரும்பூதனார்.]

இவர் பாடிய பாடல் கிடைத்திலது. அக்காலத்தில் மலை, ஊர்பற்றிப் பாடும்போது அதனை முன்பு பாடிய புலவரைக் குறிப்பிடுதல் உண்டு. அதனடியாக இவர் கோடையைப்பற்றிப் பாடியிருக்கக் கூடும். பெரும்பூதனார் என்னும் அவரின் இயற்பெயருடன் கூடி இப் பெயர் அமைந்தது எனக் கருதப்படுகிறது.

கோடையான்தோட்டம்

 கோடையான்தோட்டம்āṭaiyāṉtōṭṭam, பெ.(n.)

   தஞ்சை மாவட்டத்துச் சிற்றூர்; a village in Thanjai Dt.

     [கோடையான் + தோட்டம்.]

கோடையிடி

 கோடையிடிāḍaiyiḍi, பெ.(n.)

   கோடைப்பருவத்துமழையிடி; thunder during rains in hot season.

     [கோடை + இடி.]

கோடையெலுமிச்சை

 கோடையெலுமிச்சைāṭaiyelumiccai, பெ.(n.)

   புதுச்சேரி எலுமிச்சை; Pondicherry lime (சா.அக.);.

     [கோடை + எலுமிச்சை.]

கோடைவாகளி

 கோடைவாகளிāṭaivākaḷi, பெ.(n.)

   சிறு செருகப்படை; a low spreading plant. as a diffuse prostrate herb.

மறுவ:கோடைவாசனி.

     [கோடை + வாகளி.]

இது அறுத்த வயலிலும், குளக்கரையிலும் படரும், சொறிசிரங்கு, படை முதலிய நோய்களைப் போக்கும் (சா.அக.);.

கோடைவாசத்தலம்

 கோடைவாசத்தலம்āṭaivācattalam, பெ.(n.)

   கோடை காலத்திலும் குளிர்ச்சியைத் தரும்படியான சூழலைக் கொண்டதாக அமைந்திருக்கும் இடம்; summer resort mostly a hill station.

     [கோடை+வாசத்தலம்.]

கோடைவாய்

 கோடைவாய்āṭaivāy, பெ.(n.)

   வாயினின்றுவடியும் நீர்; dribble.

மறுவ. கொடுவாய், கோட்டவாய்.

     [கோட்டுவாய் → கோடைவாய்.]

கோட்கரும்பு

 கோட்கரும்புāṭkarumbu, பெ.(n.)

   தேன் குடிக்கும் வண்டு; a kind of beetlè.

     [கோள் + கரும்பு.]

கோட்காரன்

 கோட்காரன்āṭkāraṉ, பெ.(n.)

   கோட்சொல்லி (வின்.);; slanderer.

     [கோள் + காரன்.]

கோட்கூச்சவ்வை

 கோட்கூச்சவ்வைāṭāccavvai, பெ.(n.)

   ஒரு சிவபக்தை; a devotee of Siva.

இவளின் தந்தை சிவதேவசரணர். கோவில் திருப்பணி பொருட்டு வெளியூர் செல்ல நேரிட்டதால் இறைவனுக்குப் பால் உணவு அளிக்கும் பணி இவருக்கு வந்தது. இவரது பத்தியை மெச்சி இறைவன் உணவை உண்டு அருளினார். ஊர் திரும்பிய தந்தை மகள் வெறும் கலத்துடன் வருவது கண்டு சந்தேகிக்க, ஒளவை இறைவனை உண்ண வேண்டினாள். தாமதமாவது கண்டு தந்தை ஒளவையே குற்றம் செய்தாலென அடிக்க வர சிவன் ஒளவையை மார்பில்

அணைத்தார். இதனால் சிவனுக்குக் கொப்பிலிங்கமெனப் பெயர் உண்டாயிற்று (அபி.சிந்:);.

கோட்கூறு

கோட்கூறுāṭāṟu,    ஒரையை (இராசியை) முப்பது வகையாகப் பிரிக்கை; division of a sign of the zodiac into 30 sections, being the number of its degrees.

   2. கோள் குற்றம்; good or evil influence of the planets.

     [கோள் + கூறு.]

கோட்சுறா

 கோட்சுறாāṭcuṟā, பெ.(n.)

   கொல்லும் தலைமையுள்ள சுறாமீன்; a kind of shark which capable of taking life of human.

     [கோள் + சுறா.]

கோட்சொல்(லு)-தல்

கோட்சொல்(லு)-தல்āṭcolludal, பெ.(n.)

   13 செ.கு.வி.(v.i.);

   1. குறளை கூறுதல்; to tales-bear.

     [கோள் + சொல்.]

கோட்சொல்லி

 கோட்சொல்லிāṭcolli,    குறளை கூறுவோன் (உ.வ.); talo-bearer, slanderer.

     [கோள் + சொல்லி.]

கோட்ட விளை

 கோட்ட விளைāṭṭaviḷai, பெ.(n.)

   குமரிமாவட்டத்துச் சிற்றூர்; a village in Kanyakumari Dt.

     [கோடு → கோட்டு + விளை – கோட்டவிளை.]

கோட்டகம்

கோட்டகம்1āṭṭagam, பெ.(n.)

   1. குளக்கரை; shore, bank.

     “நெடுங்குளக் கோட்டகம்” (சிலப். 11:71);.

   2. பள்ளம் (சிலப். 11:71, உரை);; pit, ditch.

   3. ஆழமான நீர்நிலை; deep tank.

     “கோட்டக நிலைப்படா நிறைந்தன” (சீவக.41);.

   4. குளம்; pool.

     “கோட்டகத்தி னகம்புகும்” (கந்தபு.ஆற்.35);.

   5. கோயில்; temple.

     [கோட்டம் → கோட்டகம்.]

 கோட்டகம்2āṭṭagam, பெ.(n.)

   செங்கத்தாரி; false pea-cock’s foot tree (சா.அக);.

     [கோடு → கோட்டு + அகம்.]

 கோட்டகம்3āṭṭagam, பெ.(n.)

   பல தெருக்கள் கூடுமிடம்; junction of the streets.

     [கூடு → கூட்டு → கோட்டு + அகம்.]

 கோட்டகம்4āṭṭagam, பெ.(n.)

   விழுப்புரம் மாவட்டத்துச் சிற்றூர்; a village in Villuppuram Dt

     [கோடு → கோட்டு + அகம்.]

 கோட்டகம்āṭṭagam, பெ.(n.)

   செங்கத்தாரி; false-pea-cock food tree Niebuhria linearis (சா.அக.);.

கோட்டகயப்பாக்கம்

 கோட்டகயப்பாக்கம்āṭṭagayappāggam, பெ.(n.)

   காஞ்சிபுரம் மாவட்டத்துச் சிற்றூர்; a village in Kanjipuram Dt.

     [கோடு → கோட்டு + கயம் + பாக்கம்.]

கோட்டகாரம்

கோட்டகாரம்āṭṭakāram, பெ.(n.)

   நெற்களஞ்சியம்; granary.

     “ஊருணி குளமுங் கரையும் ஐயன் கோயிலுந் திருமுற்றமும் கோட்டகாரமும் வெள்ளான் சுடுகாடும். புதைச் சுடுகாடும் பறைச்சேரியும்” (தெ.இ.கல்.தொ.II, கல்.-1, பகுதி-1, வரி 4);

     [கோட்டை + காரம்.]

கோட்டகுப்பம்

 கோட்டகுப்பம்āṭṭaguppam, பெ.(n.)

   திருவள்ளூர் மாவட்டத்துச் சிற்றூர்; a village in Thiruvallur Dt.

     [கோடு → கோட்டு + குப்பம் → கோட்டகுப்பம்.]

கோட்டக்ககம்

 கோட்டக்ககம்āṭṭaggagam, பெ.(n.)

   குமரி மாவட்டத்துச் சிற்றூர்; a village in Kanyakumari Dt.

     [கோடு → கோட்டு + அக்ககம்.]

கோட்டக்கரை

 கோட்டக்கரைāṭṭakkarai, பெ.(n.)

   குமரி மாவட்டத்துச் சிற்றூர்; a village in Kanyakumari Dt.

     [கோடு → கோட்ட + கரை,]

கோட்டக்கினி

 கோட்டக்கினிāṭṭakkiṉi, பெ.(n.)

   வயிற்றெரிச்சல்; burning senstation in the stomach (சா.அக.);.

     [கோடு + அக்கினி.]

கோட்டங்காவலர்

கோட்டங்காவலர்āṭṭaṅgāvalar, பெ.(n.)

   சிறைக்கூடங்காப்போர்; warders of a jail.

     “கோட்டங் காவலர்….இசைத்துமென் றேகி” (மணிமே.19:48);.

     [கோட்டம் + காவலர்.]

கோட்டசததோடம்

 கோட்டசததோடம்āṭṭasadadōṭam, பெ.(n.)

   குழந்தைகளுக்கு வயிற்றுக்குள் காற்றை உலாவச் செய்து கக்கலையுண்டாக்கும் ஒரு வகை தோ(ஷ);ட நோய்; a morbific diathesis in children marked by flatulence of the stomach and vomiting (சா.அக.);

கோட்டசதம்

 கோட்டசதம்āṭṭasadam, பெ.(n.)

   வயிறு; belly (சா.அக.);

கோட்டச்சோதி

 கோட்டச்சோதிāṭṭaccōti, பெ.(n.)

   ஒளி மரம் (சோதி விருட்சம்);; a tree luminous in – the dark, found in thick forest (சா.அக.);.

கோட்டடி

கோட்டடி1āḍḍaḍittal,    4 செ.கு.வி (v.i)

   தேர்வில் தோல்வியடைதல் (இ.வ.);; to fail in an examination.

பத்தாம் வகுப்பில் இரண்டுமுறை கோட்டடித்து விட்டான்.

     [கோள் → கோட்டு + அடி-.]

 கோட்டடி2āḍḍaḍittal,    4 செ.கு.வி. (v.i.)

   சீட்டாட்டத்தில் எல்லாப் பிடிகளையுந் தனியே பிடிக்க முயலுதல்; to play alone hand to win all the tricks in a card-game.

     [கூட்டு → கோட்டு + அடி-.]

கோட்டநாகம்

 கோட்டநாகம்āṭṭanākam, பெ.(n.)

   மலச்சிக்கல்; constiveness, constipation. (சா.அக.);

கோட்டந்தை

 கோட்டந்தைāṭṭandai, பெ.(n.)

   இராமநாதபுரம் மாவட்டத்துச் சிற்றூர்; a village in Ramanadhapuram Dt.

     [கோடு → கோட்டு + அந்தை – கோட்டந்தை.]

கோட்டபஞ்சரம்

 கோட்டபஞ்சரம்āṭṭabañjaram, பெ.(n.)

   கோயிற் கருவறைப் புறச்சுவரில் அழகிய சிறிய கோட்டம் போன்று அமைந்த அமைப்பு; small niche on the outer wall of innermost sauctuary of the temple.

     [கோட்டம் + பஞ்சரம்.]

கோட்டபேதம்

 கோட்டபேதம்āṭṭapētam, பெ.(n.)

   குடலுக்குண்டான சிதைவு; waste sustained by bowels (சா.அக.);.

     [கோட்டம் + பேதம்.]

 கோட்டபேதம்āṭṭapētam, பெ.(n.)

   குடலுக்குண்டான சிதைவு; morbid affections of the bowels. (சா.அக.);

கோட்டமடுகு

 கோட்டமடுகுāḍḍamaḍugu, பெ.(n.)

   தருமபுரி மாவட்டத்துச் சிற்றூர்; a village in Dharmapuri Dt.

     [கோட்டை + (மடு); மடுகு (மடுவு → மடுகு);.]

கோட்டமருதூர்

 கோட்டமருதூர்āṭṭamarutūr, பெ.(n.)

   விழுப்புரம்மாவட்டத்துச் சிற்றூர்; a village in Villuppuram Dt.

     [கோடு → கோட்டு + மருதூர்.]

கோட்டம்

கோட்டம்āṭṭam, பெ.(n.)

   1. ஒரு வகை நறுமணச் செடி; Costus shrub, Saussurea lappa,

   2. ஒரு வகைச் செடி:

 arabian costum, Costus speciosus.

   3. நறுமணப் பொருளின் ஒரு வகை; putchock(செ.அக.);.

 கோட்டம்1āṭṭam, பெ.(n.)

   1. வளைவு; bend, curve, warp, as in timber.

     “மரத்தின் கனக்கோட்டந் தீர்க்குநூல்” (நன்.25);.

   2. வணக்கம்; bowing in worship, adoration.

     “முன்னோன் கழற்கே கோட்டந் தருநங் குருமுடி வெற்பன்.” (திருக்கோ. 156);.

   3. நடுநிலை திறம்புகை; partiality, as swerving from uprightness.

     “கோவினுக் கருங்கலங் கோட்ட மில்லது”(தேவா. 1182:2);.

   4. மனக்கோணல்; crookedness, as of mind.

     “உட்கோட்ட மின்மை பெறின்” (குறள், 119);.

   5.பகைமை; hatred.

     “கோட்டமுற் றமர்செய” (விநாயகபு.37:3);.

   6.பொறாமை (பிங்.);; envy, jealousy.

   7. நாடு (பிங்.);; district, province.

   8. மதில் சூழ்ந்த நகரம் (பிங்.);; town, City.

   9.வேலி சூழ்ந்த தோட்டம் (பிங்.);; garden.

   10. கரை; shore, as of a tank.

     “உயர்கோட்டத்து… வான் பொய்கை” (பட்டினப்.36);.

   11. வளைந்த தண்டுள்ள யாழ் (பிங்.);: lute.

   12. மாக்கோலம் (பிங்.);; lines, figures and diagrams drawn with rice-flour on the ground on festive occasions.

   13. உண்பன (பிங்.);; eatables, edibles.

   14. ஒருவகை மருந்து; a kind of medicine.

   15. சாலை; street.

     “அருஞ்சிறைக் கோட்டத் தகவயிற் புகுந்து”(மணிமே.19:133);.

   ம. கோட்டம்;   க. கோட;தெ. கோடி (வளைந்தது);.

     [குள் → கொள் → கோள் → கோடு → கோட்டம்.]

 கோட்டம்2āṭṭam, பெ.(n.)

   1. மதில் சூழ்ந்த பள்ளிப்படை அல்லது கல்லறை; cemetery.

     “சுடுமனோங்கிய நெடுநிலைக் கோட்டமும்” (மணிமே.6:59);.

   2. மதில் சூழ்ந்த கோயில் (இ.வ.);; temple.

     “கோழிச் சேவற் கொடியோன் கோட்டமும்” (சிலப்.14:10);.

   3. அரண் வேலி சூழ்ந்த பாசறை (பிங்.);:

 camp.

   4. மதில் சூழ்ந்த சிறைச்சாலை (இ.வ.);; prison.

     “கோன்றமர் நிகள மூழ்கிக் கோட்டத்துக் குரங்க” (சீவக.262);.

     “ஒறுக்குந் தண்டத் துறுசிறைக் கோட்டம்” (மணிமே.19:43);,

   5. இடம் (பிங்.);; place.

   6. கூட்டம்; assembly, meeting (வே.க.170); (சுவி.73);.

   7. வட்டமான ஆன்கொட்டில் (இ.வ.);; cow shed.

     “ஆனிரைக டுன்னு கோட்டம்” (வாயுசங். பஞ்சாக்.58);.

   8. ஆக்கூட்டம் (பிங்.);; herd of cows.

   9. குரங்கு; monkey.

க. கோணெ (அறை);.

     [கோ (உயர்வு → கோடு → கோட்டம்.]

 கோட்டம்3āṭṭam, பெ.(n.)

   1. வெண்கோட்டம்; Arabian costum.

   2.. ஒருவகை நறுமணச் செடி; costus shrub.

     “கோட்டமுங் குங்குமமும் பரந்து” (சீவக. 1905);.

   3. ஒருவகை நறுமணப் பண்டம்; fragrant costus shrub root.

     “கடலிடைக் கோட்டந் தேய்த்துக் கழிவது”(கம்பரா.கும்பக.145);.

   4. குராமரம் (பிங்.);; bottle-flower.

   5. வயல்; field.

     [கோடு = கொம்பு, சந்தனமரக் கிளை, கோடு → கோட்டம்.]

 கோட்டம்4āṭṭam, பெ.(n.)

   1. கடற்கொந்தளிப்பு; sea turbulance.

   2. உம்பருலகம்; holy world.

   3. வீணை; a stringed musical instrument.

   4. வாட்டரவு; weariness, fatigue.

     [குள் → குடு (ஒவித்தற் குறிப்பு); → குட்டம் → கோட்டம்.]

 கோட்டம்1āṭṭam, பெ.(n.)

   1. ஒரு வகை மணமுள்ள செடி; costus shrub savassurea lappa.

   2. நறுமணப் பண்ட வகை; putchock

     [Skt.{} → த.கோட்டம்.]

 கோட்டம்2āṭṭam, பெ.(n.)

   ஆரவாரம்; loud noise.

     [Skt.{} → த. கோட்டம்.]

 கோட்டம்3āṭṭam, பெ.(n.)

   குடல்; intestines, bowels (சா.அக.);

கோட்டம்பட்டி

 கோட்டம்பட்டிāṭṭambaṭṭi, பெ.(n.)

   கோவைமாவட்டத்துச் சிற்றூர்; a village in Kovai Dt.

     [கோட்டம் + பட்டி.]

கோட்டம்பலத்துத் துஞ்சியசேரமான்

 கோட்டம்பலத்துத் துஞ்சியசேரமான்āṭṭampalattuttuñciyacēramāṉ, பெ.(n.)

   கடைக் கழகப் புலவர்; the poetwho belonged to the last Sangam age (அபி.சிந்);.

கோட்டம்பலவனார்

கோட்டம்பலவனார்āṭṭambalavaṉār, பெ.(n.)

   சங்கப்புலவர்களில் ஒருவர்; one of the Sangam poets.

     [கோட்டம்பலம் → கோட்டம்பலவன் + ஆர்.]

நற்றிணை என்னும் நூலில் 95ஆம் பாடலை இவர் இயற்றியுள்ளார். கோட்டம்பலம் என்னும் ஊரினராதலின் கோட்டம்பலவன் எனப்பட்டார்.

     “ஆர்” உயர்வுப்பன்மையிறு.

கோட்டயம்

கோட்டயம்āṭṭayam, பெ.(n.)

   1. சேரநாட்டின் பழைய சிற்றரசுகளுள் ஒன்று; one of the ancient principalities of Kerala.

   2. கேரள மாநிலத்தின் நகரங்களுளொன்று; name of a town, head-quarters of the present kottayam Dt.

ம. கோட்டயம்.

     [கோட்டை + அகம் – கோட்டகம் → கோட்டயம்.]

கோட்டரம்

கோட்டரம்āṭṭaram, பெ.(n.)

   1. குரங்கு; monkey.

   2 பொய்மை; falsehood.

   3. நீர்நிலை; pool, tank.

     [கோடு வளைவு) → கோட்டு + அரம்.]

கோட்டரவு

கோட்டரவுāṭṭaravu, பெ.(n.)

   1. மனத்துயர் (யாழ்ப்.);; distress.

   2 குரங்குமனம்; mischievous mind (சா.அக);.

     [கோடுதல் = வளைதல், மனம் சாய்தல், வருந்துதல் கோடு + அரவு (சொல்லாக்கு ஈறு);.]

கோட்டரோகம்

 கோட்டரோகம்āṭṭarōkam, பெ.(n.)

   அடிவயிற்றில் ஏற்படும் நோய்; disease of the abdomen (சா.அக.);

     [Skt.{}-{} → த.கோட்டரோகம்.]

கோட்டா

 கோட்டாāṭṭā, பெ.(n.)

   பகடி, கிண்டல் (கேலி);; ridicule, mockery.

     [U.{} → த.கோட்டா.]

கோட்டாக்கினி

 கோட்டாக்கினிāṭṭākkiṉi, பெ.(n.)

   வயிற்றுத் தீ; the thermal heat supposed to be in the secral region (சா.அக);.

     [கோடக்கினி → கோட்டாக்கினி.]

கோட்டாங்கம்

 கோட்டாங்கம்āṭṭāṅgam, பெ.(n.)

   அரத்தம் முதலியவை தங்கி நிற்பதற்காக உட்பக்கம் குழியமைந்துள்ளவுறுப்பு; an internal orgam with acavity for retaining the blook. (சா.அக.);

கோட்டான்

கோட்டான்āṭṭāṉ, பெ.(n.)

   1. கூகை (இ.வ.);; rock horned owl.

     “கூகையைக் கோட்டா னென்றலும்” (தொல்,பொருள்.623);.

   2. கொக்கு வகை (யாழ்ப்.);; a species of bittern.

ம. கோட்டான்.

     [கோடு = கொம்பு, வளைவு, கோடு + ஆன் – கோட்டான். கொம்புடைமையின் கோட்டானையும் வளைந்த கழுத்துடைமையின் கொக்கையும் குறித்தது.]

கோட்டான்கறி

 கோட்டான்கறிāṭṭāṉkaṟi, பெ.(n.)

   கோட்டானின் இறைச்சி; meat of hooting owl.

     “கொற்றவரை மயக்கும் கோட்டானின் கறி” என்பது பழமொழி (சா.அக);.

     [கோட்டான் + கறி]

இது நோய்களை விரட்டும். பசியையும் காட்டானை போல் மதமும் உண்டாக்கும். மருந்து குணமுடையது.

கோட்டான்காய்

 கோட்டான்காய்āṭṭāṉkāy, பெ.(n.)

   கூகைத்தேங்காய்; blughted coconut.

     [கோட்டான் + காய்]

இது நோய்களை விரட்டும். பசியையும் காட்டானை போல் மதமும் உண்டாக்கும்.

கோட்டான்கோட்டான்

 கோட்டான்கோட்டான்āṭṭāṉāṭṭāṉ, பெ.(n.)

   பிள்ளைகளின் விளையாட்டு வகை (இ.வ.);; a game of children.

     [கோட்டான் + கோட்டான்.]

கோட்டான்திருக்கை

கோட்டான்திருக்கைāṭṭāṉtirukkai, பெ.(n.)

   18 அடி நீளமுள்ளதும் பச்சையும் நீலமுங் கலந்த நிறமுடையதுமான கடல்மீன் வகை; sea- devil, deep-purplish, attaining, 18 ft. and upwards across the disc which is twice as broad as long.

     [கோட்டான் + திருக்கை.]

கோட்டாரன்

கோட்டாரன்āṭṭāraṉ, பெ.(n.)

   1.தீய ஒழுக்கங்கொண்டவன்; one who leads a low or infamous life.

   2. காமவிருப்பமுடையவன்; a debouched man.

ம. கோட்டாரன்.

     [கோடு → கோட்டு + காரன் – கோட்டுகாரன் → கோட்டாரன் (கொ.வ);]

கோட்டாரப்பட்டி

 கோட்டாரப்பட்டிāṭṭārappaṭṭi, பெ.(n.)

   தருமபுரி மாவட்டத்துச் சிற்றூர்; a village in Dharmapuri Dt.

     [கொட்டாரம் → கோட்டாரம் + பட்டி.]

கோட்டாரம்

கோட்டாரம்1āṭṭāram, பெ.(n.)

   1. கிணறு; well.

   2.குளம்; pond.

   3. குளத்திற்கு செல்லும் படி; the stairs leading to a pond.

   3. நாற்சதுரத் தரவு; square well.

   4. தாமரைத்தடம்; lotus tank.

   5. மரம்; tree.

ம. கோட்டாரம்.

     [கோட்டகம் → கோட்டாரம்.]

 கோட்டாரம்2āṭṭāram, பெ.(n.)

   1. அரண் சூழ்ந்த நகரம்; a fortified town.

   2. அரண்மனை; palace.

   3. தலைநகரம்; capital.

   4. காவலமைந்த இடம்; a strong hold.

ம. கோட்டாரம்.

     [கோட்டகம் → கோட்டம்.]

கோட்டாரி

கோட்டாரிāṭṭāri, பெ.(n.)

   1. கல்லாரை (மலை.);; iron weed.

   2. மலையடிவாரங்களில் அகப்படும் ஆரையைப் போன்ற ஒர் அரிய கொடி; an unknown creeper of the species of marselia said to be found very rarely at the foot of the hills (சா.அக);.

     [கோடு + ஆரை.]

கோட்டாறு

கோட்டாறுāṭṭāṟu, பெ.(n.)

   குமரிமுனைக்கு வடக்கில் நாஞ்சில் நாட்டிலுள்ள ஊர்; a village in Nanjilnadu north of Kumarimunai.

     “குறுகலர் குலைய கோட்டாறு உட்பட” – முதற் குலோத்துங்கன் மெய்க்கீர்த்தி (கல்.அக.);.

     [கோடு + ஆறு.]

   சங்க கால வேள் ஆயின் ஆய்குடி இதுவே என்பர் மு.இராகவையங்கார் (வேளிர் வரலாறு;இரண்டாம் பதிப்பு 1916 பக். 33);.

கோட்டாற்றுநிலைப்படை

கோட்டாற்றுநிலைப்படைāḍḍāṟṟunilaippaḍai, பெ.(n.)

   குலோத்துங்கன் தான் வென்ற கோட்டாற்றில் தன் படையைச் சேர்ந்த தலைவரின் கீழ் அமைத்த நிலைப்படை (பிற்.சோழ.வர. சதாசிவ. பண்.பக்.288-289);; a kind of army camp of the Chola king Kulothungan stationed at Köttàru.

     [கோட்டாறு + நிலைப்படை.]

கோட்டாலம்

 கோட்டாலம்āṭṭālam, பெ.(n.)

   விழுப்புரம் மாவட்டத்துச் சிற்றூர்; a village in Villuppuram Dt.

     [கோடு → கோட்டு + ஆலம்.]

கோட்டாலை

கோட்டாலைāṭṭālai, பெ.(n.)

   1. துன்பம் (திவா.);; distress.

   2. நகையாட்டுக் கூத்து; grotesque gestures. as of one possessed by the devil antic.

     “கூத்தாடு வாயிதென்ன கோட்டாலை” (பணவிடு. 158);

   3. மூடநடத்தை; foolish behaviour

   4. களியாட்டம்; dalliance.

   4. உலைவு; to get loosened.

   5. நோய்; disease.

     [கொடு(வளைவு); → கோடு + ஆலை – கோட்டாலை.]

கோட்டாலைக்காரன்

கோட்டாலைக்காரன்āṭṭālaikkāraṉ, பெ.(n.)

   1. தொல்லை செய்வோன்; troublesome person.

   2. பகடியாடி; buffoon, joker.

     [கொடு → கோடு + ஆலை + காரன்.]

கோட்டி

கோட்டி1āṭṭi, பெ.(n.)

   1. துன்பம் (வின்.);; trouble, vexation, annoyance.

   2. மூலைக்கோளாறு (வின்.);; madness, insanity.

     “காமக் கோட்டியால் மனங்கூசினேன்”(இராமநா. உயுத். 41);

   3. பகடி; joke, mimicry.

   4. நகையாட்டுக் கூத்து; grotesque gestures, as of one possessed by the devil;

 actic.

   5. அழகு; beauty.

   6. உலைவு; to get loosensed.

ம.கோட்டி.

     [கோள் → கோட்டி.]

 கோட்டி2āṭṭi, பெ.(n.)

   1. அவை (சபை); (இ.வ.);; assembly of learned or respectable persons.

     “தோமறு கோட்டியும்” (மணிமே.1:43);.

   2. கூட்டம் (பிங்.);; multitude, collection, class.

   3. பேச்சு, அவைப்பேச்சு, சொற்பொழிவு (இ.வ.);; speech, or utteranice as in an asembly.

     “வீரக் கோட்டி பேசுபவார்” (கம்பரா.மாயாசனகப்.13);.

   4. ஒருவரோடு கூடியிருக்கை; company as of a person.

     “தன்றுணைவி கோட்டியினி னீங்கி” (சீவக. 1035);.

     [கோடகம் → கோட்டி. கொளுத்தி → கோட்டி.]

 கோட்டி3āṭṭi, பெ.(n.)

   1. கோபுரவாசல்; gateway under a temple tower.

     “ஆயிழை கோட்டத்தோங்கிருங் கோட்டி யிருந்தோய்”(சிலப்.30:62);.

   2. மனைவாயில் (பிங்.);; door of a house.

     [கோட்டம் → கோட்டி = கோட்டத்தில் உள்ளது.]

 கோட்டி4āṭṭi, பெ.(n.)

   கிட்டிப்புள் (இராட்.);; larger stick in the game of tip-cat (R.);.

ம. கோட்டி.

     [கிட்டி → கொட்டி → கோட்டி.]

 கோட்டி5āṭṭittal,    4 செ.கு.வி. (v.i.)

   ஆரவாரித்தல்; to sound, clamour,roar.

     [கூடு → கூட்டு → கூட்டி → கோட்டி.]

 கோட்டி1āṭṭi, பெ.(n.)

   1. கூட்டம்; assembly, congregation.

     “விர்தாகோட்டி யென்னிலே செல்வாதத்தனை” (தாயு.ஆனந்தமான.1);

   2. கறுவறை முதலியவற்றில் திருவாய்மொழி முதலியன சொல்வார் இருக்கும் வரிசை; row, order, as of reciters of sacred works in the presence of the idol.

     [Skt.{} → த.கோட்டி.]

 கோட்டி2āṭṭi, பெ.(n.)

   சிலந்திப் பூச்சி; spider (சா.அக.);.

     [P]

கோட்டிகொள்

கோட்டிகொள்1āṭṭigoḷḷudal,    16 செ.கு.வி. (v.i.)

   அவையில் உரையாற்றுதல்; to speak as in an assembly.

     “நூலின்றிக் கோட்டி கொளல்” (குறள், 401);.

     [கோட்டி + கொள்(ளு);-.]

 கோட்டிகொள்2āṭṭigoḷḷudal, பெ.(n.)

   10 செ.குன்றாவி, (v.t.);

   1. துன்புறுத்தல்; to annoy, vex.

   2. இகழ்தல்; to jeer at, banter, mock.

     [கோட்டி + கொள்(ளு);-.]

கோட்டிக்காரன்

 கோட்டிக்காரன்āṭṭikkāraṉ, பெ.(n.)

   பித்தன் (நெல்லை.);; mad man.

     [கோட்டி + காரன்]

கோட்டிதம்

 கோட்டிதம்āṭṭidam, பெ.(n.)

   தோலினின்றும், அதைச் சேர்ந்த மயிர், நகங்கள், குளம்பு, கொம்பு நகம் உருவாவதற்கு அடிப்படையான வெடியகப் பொருள் முதலியவற்றினின்றும் எடுக்கப்படும் பசை; impure viscous substance obtained by boiling animal substances such as skins, hairs, nails, hoofs; keratin (சா.அக);.

     [கூட்டு → கூட்டி → கூட்டிதம் → கோட்டிதம்.]

கோட்டினம்

கோட்டினம்āṭṭiṉam, பெ.(n.)

   கொம்புடைய எருமைக் கூட்டம் (இ.வ.);; herd of buffaloes, as having horns.

     “கோட்டினத் தாயர் மகனன்றே” (கலித்.103:33);.

     [கோடு + இனம்]

கோட்டிப்பு

 கோட்டிப்புāṭṭippu, பெ.(n.)

   பேரொலி (வின்);; loud noise.

கோட்டியம்

கோட்டியம்āṭṭiyam, பெ.(n.)

   1. வியப்பு; miracle.

   2. திகைப்பு; astonishment,wonder.

     [கோட்டி → கோட்டியம்.]

 கோட்டியம்āṭṭiyam, பெ.(n.)

   நுரையீரல் நடு; the centre of the lungs (சா.அக.);.

கோட்டியாழ்

 கோட்டியாழ்āṭṭiyāḻ, பெ.(n.)

   நால்வகை யாழினொன்று; one among the four kinds of lutes.

மறுவ. செங்கோட்டியாழ்.

     [கோடு → கோட்டி + யாழ்.]

கோட்டியூர்நல்லந்தையார்

கோட்டியூர்நல்லந்தையார்āṭṭiyūrnallantaiyār, பெ.(n.)

   கடைக் கழகக்காலப் புலவர்; a poet, belonged to last Sangam еrа.

     [கோட்டியூர்+நல்+அந்தை+ஆர்]

இவர் நற்றிணை 211-ஆம் பாடலில் நெய்தற் திணையைச் சிறப்பித்துப் பாடியுள்ளார் (அபி.சிந்:);.

கோட்டிறால்

 கோட்டிறால்āṭṭiṟāl, பெ.(n.)

   பாறைகளின் இடுக்குகளில் வாழுமோர்வகை இறால்மீன்; a kind of fish living in the gaps of rocks.

     [கோடு + இறால்]

கோட்டிலக்கம்

கோட்டிலக்கம்āṭṭilakkam, பெ.(n.)

   1. வகுத்தமிச்சம்; remainder, in division.

   2. ஒருவகைச் சதுரக்கணக்கு (வின்.);; magic square.

     [கூடு → கூட்டு → கோட்டு + இலக்கம்.]

கோட்டில்வாழ்விலங்கு

 கோட்டில்வாழ்விலங்குāṭṭilvāḻvilaṅgu, பெ.(n.)

   கிளைகளில் உறையும் அணில், குரங்கு போன்றவை; animals living on branches of trees such as the squirrel, monkey etc.(சா.அக);.

     [(கோடு + இல்); கோட்டில் + வாழ் + விலங்கு]

கோட்டு

கோட்டு1āṭṭudal,    5 செ.குன்றாவி.(v.t.)

   1. வளைத்தல்; to bend, cause to stoop.

     “நகைமுகங்கோட்டி நின்றாள்” (சீவக. 1568);.

   2. வளைத்து முறித்தல் (திவா.);; to break.

   3. சித்திரம் முதலியன எழுதுதல்; to draw picture.

     “தன்னாம மேருவினுங் கோட்டி னானே” (பாரத. சிறப்புப். 19);.

   4. கட்டுதல்; to build.

     “ஒரு மண்டபங் கோட்டினேன்” (பாரத. வாரணா.123);.

ம. கோட்டுக.

     [கோடு → கோட்டு.]

 கோட்டு2āṭṭu, பெ.(n.)

   1. வளைவு; bend.

   2. எழுதுகை; writing.

   3. கட்டு; bind.

   4. எருமை; buffalo.

     [கோடு → கோட்டு.]

 கோட்டு3āṭṭu, பெ.(n.)

   நெல்லரியின் தொகுதி; bundle of sheaves of paddy.

     [கூடு → கூட்டு → கோட்டு.]

 கோட்டு1āṭṭu, பெ.(n.)

   சீட்டாட்டத்தில் எல்லாப்பிடிகளையும் பிடித்து வெற்றி பெறுகை; to win all the cards in a card-game.

     [E.court-card → த.கோட்டு.]

 கோட்டு2āṭṭu, பெ.(n.)

   வயிறு; belly; stomach. (சா.அக.);

     [Skt.{} → த.கோட்டு.]

கோட்டுஅடி-த்தல்

 கோட்டுஅடி-த்தல்āḍḍuaḍittal, பெ.(n.)

கதிரில் உள்ள நெல்லை அடித்துப்பிரித்தல்:

 threshing of paddy.

     [கோட்டு+அடி]

கோட்டுக்காறல்

 கோட்டுக்காறல்āṭṭukkāṟal, பெ.(n.)

   வெள்ளியைப் போல் பளபளக்கும் ஒரு வகைக் கடல்மீன்; a kind of sea-fish which shines as silver.

     [கோடு + காறல்]

கோட்டுச்சம்பா

 கோட்டுச்சம்பாāṭṭuccambā, பெ.(n.)

   விளைந்த நெல்லரியை கயிற்றால் கோடுபிடித்து அடித்த துப்புரவான முதல்தர நெல்; fine paddy obtained by threshing the reaped paddy stalk.

கோட்டுச் சம்பா ஆக்கிவைத்தால் போட்டுச் சாப்பிட வருவார்கள் (பழ);.

     [கோடு + சம்பா.]

கோட்டுநீறு

கோட்டுநீறுāṭṭunīṟu, பெ.(n.)

   1 கிளிஞ்சல் சுண்ணாம்பு; shell lime.

   2. சங்குச் சுண்ணாம்பு; a chank lime (சா.அக);.

     [கோடு (சுண்ணாம்பு); + (நூறு); நீறு. நூறுதல் = அறைத்தல்]

கோட்டுநூறு

கோட்டுநூறுāṭṭunūṟu, பெ.(n.)

கோட்டுநீறு பார்க்க;see kottu-niru.

     ‘கோட்டு நூறும் மஞ்சளுங் கூடியவழிப் பிறந்த செவ்வண்ணம் போல’ (தொல், எழுத்து. 6,உரை);.

மறுவ. கோட்டு நீறு.

     [கோட்டுநீறு → கோட்டுநூறு.]

கோட்டுநோய்

 கோட்டுநோய்āṭṭunōy, பெ.(n.)

   வயிற்றுநோய்; stomach disease (சா.அக);.

     [கோடு + நோய்]

 கோட்டுநோய்āṭṭunōy, பெ.(n.)

   வயிற்று நோய்; stomach-ache colic (சா.அக.);

     [கோட்டு + நோய்.]

     [Skt.{} → த.கோட்டு.]

கோட்டுபுட்பம்

 கோட்டுபுட்பம்āṭṭupuṭpam, பெ.(n.)

   கல் தாமரை; dry lotus generally found grow in the crevices of rocks and mountains (சா.அக.);.

     [கோட்டு+Skt, புட்பம்]

கோட்டுப்பலகை

 கோட்டுப்பலகைāṭṭuppalagai, பெ.(n.)

   உப்பளத்தில் உப்புவாரும் பலகை (மீனவ.);; a plank used for taking salt in salt-pan.

     [கோடு + பலகை]

கோட்டுப்பிடி-த்தல்

கோட்டுப்பிடி-த்தல்āḍḍuppiḍittal,    4 செ.கு.வி. (v.i.)

   நெல்லின் அரிகளை யடித்தல் (உ.வ.);; to thresh the sheaves of paddy.

     [கோட்டு + பிடி.]

கோட்டுப்புலி

 கோட்டுப்புலிāṭṭuppuli, பெ.(n.)

   இராமநாதபுரம் மாவட்டத்துச் சிற்றூர்; a village in Ramanadhapuram Dt.

     [கோடு → கோட்டு + புலி.]

கோட்டுப்பூ

கோட்டுப்பூ1āṭṭuppū, பெ.(n.)

   1. மரக்கொம்புகளில் தோன்றும் பூ; flowers on the branches of a tree.

     “கோட்டுப் பூப்போல மலர்ந்துபிற் கூம்பாது” (நாலடி.215);.

     [கோடு + பூ]

பூக்கள் கோட்டுப்பூ, கொடிப்பூ, நீாப்பூ, நிலப்பூ என நால்வகைப்படும்.

 கோட்டுப்பூ2āṭṭuppū,    கல் தாமரை; stone lotus.

   2. ஒருவகைத் தாழை; a kind of screwpine (சா.அக);.

     [கோடு + பூ.]

கோட்டுமண்கொள்(ளு)-தல்

கோட்டுமண்கொள்(ளு)-தல்āṭṭumaṇkoḷḷudal, பெ.(n.)

   16 செ.கு.வி.(v.i.);

   மண்ணைக் கொம்பாற் குத்திப் பெயர்த்தல்; to break up earth with horns or tusks.

     “கோட்டுமண் கொண்டிடந்து” (திவ்.பெரியாழ். 3.3.9);.

மறுவ. கோட்டுமண்னெடுத்தல்.

     [கோடு → கோட்டு + மண் + கொள்.]

கோட்டுமலை

கோட்டுமலைāṭṭumalai, பெ.(n.)

   1. கொம்புள்ள மலையாகிய யானை; elephant.

   2. வெண்கல் மலை; hill consisting white or marble stones.

     [கோடு (கொம்பு); → கோட்டு + மலை.]

கோட்டுமா

கோட்டுமாāṭṭumā, பெ.(n.)

   1. யானை; ele phant.

     “கோட்டுமா வழங்குங் காட்டக நெறியே” (ஐங்குறு.282);.

   2. காட்டுப்பன்றி (சிலப்.15:99,அரும்.);; boar.

   3.எருமைக் கடா; he-buffalo.

     “கோட்டுமா வூரவும்” (சிலப்.15:98);.

   4. கொம்புள்ள விலங்கு; animal with tusks or horns.

     [கோடு(கொம்பு); + மா.]

கோட்டுமால்

 கோட்டுமால்āṭṭumāl, பெ.(n.)

   வலைகளை வைத்துக் கட்டும் பெரிய வலைப்பை (மீனவ.);; a big netted bag used for keeping the fishing net.

     [கூட்டு → கோட்டு + மால்.]

கோட்டுமீன்

கோட்டுமீன்āṭṭumīṉ, பெ.(n.)

   சுறா; shark.

     “கோட்டுமீ னெறிந்த வுவகையர்” (நற்.49);.

     [கோடு → கோட்டு + மீன்.]

கோட்டுமுத்து

 கோட்டுமுத்துāṭṭumuttu, பெ.(n.)

   யானை மருப்பு முதலியவற்றில் உண்டாகுவதாகக் கருதப்படும் முத்து; pearls claimed to be derived from the tusk of an elephant (சா.அக);.

     [கோடு → கோட்டு + முத்து.]

கோட்டுமுளை

 கோட்டுமுளைāṭṭumuḷai, பெ.(n.)

   கடலூர் மாவட்டத்துச் சிற்றூர்; a village in Kadalur Dt.

மறுவ. கோட்டிமுளை

     [கோடு → கோட்டு + முளை.]

கோட்டுறல்

கோட்டுறல்āṭṭuṟal, பெ.(n.)

   1. வளைகை; bending.

   2. எழுதுகை; writing.

     [கோடு → உறல் – கோட்டுறல்.]

கோட்டுறுகன்னி

 கோட்டுறுகன்னிāṭṭuṟugaṉṉi, பெ.(n.)

   கோவை; Indian caper (சா.அக.);.

     [கோட்டு + உறு + கன்னி.]

கோட்டுவாச்சியம்

 கோட்டுவாச்சியம்āṭṭuvācciyam, பெ.(n.)

   கம்பியுள்ள இசைக்கருவி; a kind of stringed musical instrument.

கோட்டுவாத்தியம்

     [கோடு + வாச்சியம்.]

கோட்டுவாத்தியம்

 கோட்டுவாத்தியம்āṭṭuvāttiyam, பெ.(n.)

   தந்தியுள்ள இசைக் கருவி; a kind of stringed musical instrument (செ.அக.);.

     [P]

கோட்டுவான்

கோட்டுவான்āṭṭuvāṉ, பெ.(n.)

   1. கோட்டான்; rock horned owl.

   2. ஒருவகை நீர்ப்பறவை (யாழ்.அக.);; an aquatic bird.

     [கோடு → கோட்டு + ஆன். (வகர உடம்படுமெய் இடையில் மிக்கது.);]

கோட்டுவாய்

கோட்டுவாய்āṭṭuvāy, பெ.(n.)

   1. கோடை வாய்; Dribble.

     “முகத்தொழுகு கோட்டு வாயு நெடுமூச்சுங் கண்டு” (இராமநா.சுந்தர.4);.

   2. கொட்டாவி (இ.வ.);; yawning.

   3. வாயிலிருந்து வழிந்த உமிழ்நீர் காய்ந்து உண்டாக்கிய கோடு; saliva trickling from ones mouth, dribble.

     ‘கோட்டுவாயைக்கூடத் துடைக்காமல் வெளியே கிளம்பிவிட்டாயா?'(உ.வ.);.

ம. கோட்டுவா(ய்);.

     [கோட்டு + வாய்.]

 கோட்டுவாய்āṭṭuvāy, பெ.(n.)

   உறங்கும் போது எச்சில் வழிந்து காய்ந்த வெண்கோட்டுக் கறை; saliva stain due to dripping from mouth during sleeping time.

     [கோடு+வாய் [இரண்டன் உருபும் பயனும் உடன் தொக்க தொகையாதலின்ஒற்று இரட்டித்தது]

கோட்டுவாய்சலம்

 கோட்டுவாய்சலம்āṭṭuvāycalam, பெ.(n.)

   வாய்ஒழுக்க நீர்; dribbled saliva (சா.அக);.

     [கோடு + வாய் + சலம்.]

கோட்டுவாய்த்திருக்கை

 கோட்டுவாய்த்திருக்கைāṭṭuvāyttirukkai, பெ.(n.)

   திருக்கை மீன் வகைகளிலொன்று; a kind of fish.

     [கோட்டுவாய் + திருக்கை.]

கோட்டுவாய்வடிதல்

 கோட்டுவாய்வடிதல்āḍḍuvāyvaḍidal, பெ.(n.)

தொ.பெ.(vbl.n.);

   வாயினின்று நீர் ஒழுகல்; the flowing of saliva as that founded at the corners of the mouth during sleep in a patient suffering from phlegmatic fever (சா.அக);.

     [கோட்டுவாய் + வடி-.]

கோட்டூர்

கோட்டூர்āṭṭūr, பெ.(n.)

   1. நாகை மாவட்டம் திருத்துறைப்பூண்டியின் அருகில் அமைந்த ஒர் ஊர்; a village near Tirutturaippundi.

   2. சென்னைக்கருகிலுள்ள ஊர்; a village near Chennai.

     [கோடு → கோட்டு + ஊர் – கோட்டூர் = ஏரியூர்.]

கோடு = ஏரிக்கரை, கரையுயர்த்தப்பட்ட ஏரி. கோடு என்பது ஏரியைக் குறித்த சொல்லாதலின் ஏரியையடுத்திருக்கும் ஊர், கோடு + ஊர் – கோட்டூர் எனப்பெயர் பெற்றது.

கோட்டூர்தி

கோட்டூர்திāṭṭūrti, பெ.(n.)

   யானை மருப்பினாற் செய்த பல்லக்கு; palanquin made of elephant’s tusks.

     “தேவிய ரேறிய பெருங்கோட் டூர்தி” (பெருங்.உஞ்சைக்.38.180);.

     [கோட்டு + ஊர்தி]

கோட்டூர்நாடு

கோட்டூர்நாடுāṭṭūrnāṭu, பெ.(n.)

   சென்னை மாநகரில் கோட்டூரைச் சுற்றியுள்ள பண்டைய பகுதி; old habitations around the köttür village of Chennai.

     “ஜயங்கொண்ட சோழ மண்டலத்து புலியூர்க் கோட்டமான குலோத்துங்க சோழவளநாட்டு கோட்டூர் நாட்டுத் திருவான்மியூரில்” (செ.மா,கல். 1967-125, 6); (கி.பி.13 ஆம் நூற்றாண்டு);.

     [கோடு + ஊர் – கோட்டூர் + நாடு, கோடு = ஏரிக்கரை, ஏரி, கோட்டூர் : ஏரியூர்.]

கோட்டெங்கு

கோட்டெங்குāṭṭeṅgu, பெ.(n.)

   குலைகளை யுடைய தெங்கு; coconut tree bearing bunches of coconuts.

     “கோட்டெங்கிற் குலைவாழை” (பட்டினப்.16);.

     [கோள் + தெங்கு.]

கோட்டேரி

 கோட்டேரிāṭṭēri, பெ.(n.)

   கடலூர் மாவட்டத்துச் சிற்றூர்; a village in Kadalur Dt.

     [கோடு → கோட்டு + ஏரி.]

கோட்டை

கோட்டை1āṭṭai, பெ.(n.)

   வட்டமான மதிலரண் (சூடா.);; castle, fort, stronghold.

     “தங்கிவர்பெலக்கிற்கோட்டை கொத்தளமுஞ் சதுரிலுப் பரிகையாசாரம்” (சாதகசிந்.692);. கோட்டையில் பெண் பிறந்தாலும் போட்ட புள்ளி தட்டாது (பழ);.

   ம. கோட்ட;   க. கோடெ (மண்கவர், கவர்);, கோட்ட, கோட் (நகரம்,கோட்டை);;   தெ. குடி,கோட,கோமு, கோட்டார (அரணுள்ள நகரம்);;   து., குட,, பட.கோடெ;கொலா. கொடா (சுவர்);.

 Indon. Kota;

 Ar. Hājiz;

 Spain. Castalla;

 Argentina. castel-ar;

 Itali. castel di leva;

 Mexico. castano-s. Chile. castilla. Eng. castle acre;

 Ireland. castle har: Scottland.castle hay:Wales. castle caer-einion Pkt. kudda Mal. Kðta.

     [கோ (உயரம்); → கோடு → கோட்டை.]

கோ = உயரம். கோடு = உயரமானது, மதிற்கவர், பக்கச்சுவர், மலைமுகடு. கோட்டை = உயர்ந்த மதிற்கவர்களைக் கொண்ட பாதுகாப்பு அரண், பகைவர்களாலும், விலங்குகளாலும், படையெடுப்பு களாலும் எவ்விதத் தீங்கும் நேராமல் இருப்பதற்காகப் பழங்கால அரசர்கள் அரண்மனையைச் சுற்றிலும் மிக வலுவான கோட்டையை அமைத்துக் கொண்டார்கள். நகரத்தைச் சுற்றிலும்கூட கோட்டை

அமைத்துக் கொள்வது உண்டு. கோட்டை வேளாளர் என்னும் அரச வேளாளர் தம் குடியிருப்புகளைச் சுற்றிலும் கோட்டை

கட்டிக் கொள்வார்கள். இதனால் தமிழர்களின் நாகரிகத்தைக் கோட்டைநாகரிகம் என்பர். மண்கோட்டைகள், செங்கற்கோட்டைகள், கற்கோட்டைகள் ஆகியவை செயற்கையாக அமைக்கப்படும் கோட்டைகளாகும். மலை மீது அமைக்கப்படும் கோட்டை மலைக்கோட்டை எனப்படும். கோட்டையைச் சுற்றி அகழியும், அகழியைச் சுற்றி மிளை என்னும் காவற்காடுகளும் அமைக்கப்படுவது தமிழர்களின் கோட்டை நாகரிகத்தின் சிறப்பியல்புகளாகும். தமிழர்களின் கோட்டை கட்டும் நாகரிகம் வட இந்தியாவிலும் பல உலக நாகரிகங்களிலும் பரவியிருப்பதை, கோட்டை என்னும் சொல்லே பல வடிவில் திரிந்து பற்பல மொழிகளிலும் ஊடாடியிருப்பதைக் கொண்டு மெய்ப்பிக்கின்றனர். தமிழர்களின் கோட்டை நாகரிகமே பிற நாட்டாரின் படையெடுப்புகளிலிருந்து தமிழகத்தைக் காத்திருக்கிறது என்று வாலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். கோயில் கட்டும் நாகரிகம் வளர்ந்த பிறகு கோட்டை கட்டும் நாகரிகம் மறையத் தொடங்கியது என்று கூறுகின்றனர்.

 கோட்டை2āṭṭai, பெ.(n.)

   1, 21 மரக்கால் கொண்ட ஒரு முகத்தலளவை (G.Tn.D.I.238);; measure of capacity = 21 marakkal.

   2. ஒரு சில அளவு (I.M.P.Tn.278);; a land measure.

   3. வட்டமான நெற்கூடு; a straw-covering with paddy stored in

     “உலவாக்கோட்டை”(திருவாலவா.50:13);.

   4. வைக்கோற் போர்; stack of straw or hay.

     “வாரிக் களத்தடிக்கும் வந்துபின்பு கோட்டை புகும்” (தனிப்பா.I.4:3);.

   5. நெல்; paddy.

     “அன்பனுக்குலவாத கோட்டை யளித்தவாறு கிளத்துவாம்” (திருவிளை.உலவாக்கோ.1);,

   6. புளி, இலை முதலியவற்றின் கட்டு; bundle, as of tamarind, plantain leaves etc.

இலைக்கோட்டை.

   7. ஏராளம்; plenty.

ம., தெ.,க., து.,வ. கோட்ட.

     [கோட்டம் → கோட்டை.]

 கோட்டை3āṭṭai, பெ.(n.)

   1. இஞ்சி; ginger plant

     “சாலவிருட் சோதக மூலந்தந்த சடநாரங் கோட்டை”(தைலவ. தைல.85);.

   2. காடு (பிங்.);; jungle.

   3. பரிவேடம்; halo.

     “சந்திரனோர் கோட்டை கட்டிக் கொண்டிருந்த கோலமென்ன” (கொண்டல் விடு.72);.

   4. பூட்டின் ஒருறுப்பு (இ.வ.);; ward of a lock.

   5. வீட்டின் உள்ளிடம் (பிங்.);; interior of a house.

   6. கவை; the fork.

     [கோடு = வளைவு. கோடு → கோட்டை]

கோட்டைஏர்

 கோட்டைஏர்āṭṭaiēr, பெ.(n.)

   உழுவதற்கு முன்பும் பின்பும் கலப்பையைத் தலைமாற்றிக் கொண்டு செல்கை; to carry the plough on the shoulder upside down before and after ploughing to field.

     [கோட்.டை + ஏர்.]

கோட்டைகட்டு

கோட்டைகட்டு1āṭṭaigaṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. மதிலரண் எடுத்தல்; to construct a fort.

   2. பெரும் பொருள் திரட்டுதல்; to accumulate a huge fortune.

   3. பரிவேடம் கொள்ளுதல்; to form a halo, as the moon.

ம. கோட்ட கெட்டுக

     [கோட்டை + கட்டு-.]

 கோட்டைகட்டு2āṭṭaigaṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   நெல் மணிகளைக் கோட்டையாகக் கட்டி வைத்தல் (இ.வ.);; to store paddy-seeds in bundles.

     [கோட்டை + கட்டு-.]

 கோட்டைகட்டு3āṭṭaigaṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   கோலி விளையாடுதல்; to play with glass marbles.

     [கோட்டை + கட்டு.]

குறிப்பிட்ட தொலைவிலிருந்து ஒரு கோடிட்டு, அக் கோட்டினின்று பக்கக் கோடுகளும் இட்டு இதற்கிடையில் கோலிக் குண்டுகளை இடுதல். எவரது குண்டு அந்தக் கோட்டின் அருகில் நிற்கிறதோ அவர் வெற்றி பெற்றதாகக் கருதி விளையாடும் விளையாட்டு.

 கோட்டைகட்டு4āṭṭaigaṭṭu, பெ.(n.)

   படைஅணி வகுப்பினொன்று; a kind of parade.

     [கோட்டை + கட்டு.]

 கோட்டைகட்டு5āṭṭaigaṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. மனத்தில் அளவு கடந்த ஆசைகளை வளர்த்துக் கொள்ளுதல், மனக்கோட்டை கட்டுதல்; to build castles in the air, to have vain imagines.

எப்படி யெல்லாமோ வாழவேண்டு மென்று கோட்டை கட்டியிருந்தேன்.

   2. பொய்க் கதை கட்டுதல்; to invent a fictitious story.

ம. கோட்டகெட்டுக.

     [கோட்டை + கட்டு-.]

கோட்டைக்கடன்

கோட்டைக்கடன்āḍḍaikkaḍaṉ, பெ.(n.)

   அறுப்புக் காலத்தில் நெற்கொடுத்துத் தீர்ப்பதாகச் சொல்லி வாங்ழகுஞ் சிறுகடன் (இ.வ.);; short loan of money returnable in kind after harvest.

     [கோட்டை2 + கடன்.]

கோட்டைக்கல்

 கோட்டைக்கல்āṭṭaikkal, பெ.(n.)

   புதைகுழியின் மேல் வைக்கும் கல்; a memory stone erected on the burial pit.

     [கோட்டை-கல்]

கசவர் பழங்குடிகளின் சொல்லாட்சி,

கோட்டைக்காடு

கோட்டைக்காடுāṭṭaikkāṭu, பெ.(n.)

   காஞ்சிபுரம் மாவட்டத்துச் சிற்றூர்; a village in Kanjipuram Dt.

     [கோட்டை1 + காடு.]

கோட்டைக்கிழங்கு

 கோட்டைக்கிழங்குāṭṭaikkiḻṅgu, பெ.(n.)

   வாழைக் கிழங்கு; plantain root (சா.அக.);.

மறுவ. தாயைக் கொல்லி.

     [கோட்டை + கிழங்கு.]

கோட்டைக்குழி

 கோட்டைக்குழிāṭṭaikkuḻi, பெ.(n.)

   கோட்டையைச்சுற்றி அமைக்கப்படும் பள்ளம்; a moat, trench.

மறுவ. அகழி.

ம.கோட்டக்குழி.

     [கோட்டை + குழி.]

கோட்டைச்சுவர்

 கோட்டைச்சுவர்āṭṭaiccuvar, பெ.(n.)

   அரண்மனைச் சுவர்; fortress, castle.

     [கோட்டை + சுவர்.]

கோட்டைத்தணக்குஎ

 கோட்டைத்தணக்குஎāṭṭaittaṇakkue, பெ.(n.)

   மரவகைகளு ளொன்று; a kind of tree.

     [கோட்டை + தணக்கு.]

கோட்டைபிடி-த்தல்

கோட்டைபிடி-த்தல்āḍḍaibiḍittal,    4 செ.கு.வி. (v.i.)

   அரிய செயலைச் செய்து முடித்தல்; to accomplish a great or arduous task, usually in contempt.

     [கோட்டை + பிடி.]

கோட்டைப்படி

 கோட்டைப்படிāḍḍaippaḍi, பெ.(n.)

   கோட்டைவாயில்; gate of a fort.

ம. கோட்டப்படி.

     [கோட்டை + படி.]

கோட்டைப்பணம்

 கோட்டைப்பணம்āṭṭaippaṇam, பெ.(n.)

   கோட்டையைப் பழுது பார்க்க விதிக்கும் வரி; a tax for the repair building of forts.

ம. கோட்டப்பணம்.

     [கோட்டை + பணம்.]

கோட்டைப்பப்பளி

 கோட்டைப்பப்பளிāṭṭaippappaḷi, பெ.(n.)

   புடைவை வகை (இ.வ.);; a kind of saree.

     [கோட்டை + (பூப்புள்ளி); பப்பளி.]

கோட்டைப்பவுன்

 கோட்டைப்பவுன்āṭṭaippavuṉ, பெ.(n.)

   பொன் நாணய வகை; gold sovereign with the royal arms impressed on the reverse, dist. fr. kudiraipavun.

     [கோட்டை + பவுன்,]

கோட்டைப்பூண்டி

 கோட்டைப்பூண்டிāṭṭaippūṇṭi, பெ.(n.)

   விழுப்புரம் மாவட்டத்துச் சிற்றூர்; a village in Villuppuram Dt.

     [கோட்டை + பூண்டி.]

கோட்டைப்பொறி

 கோட்டைப்பொறிāṭṭaippoṟi, பெ.(n.)

   கோட்டையில் அமைக்கப்படும் பொறி; a machine erected in the fortress.

     [கோட்டை + பொறி.]

கோட்டைப்போர்

 கோட்டைப்போர்āṭṭaippōr, பெ.(n.)

   வைக்கோற்போர் (யாழ்.அக.);; hay-stack.

     [கோட்டை + போர்.]

கோட்டைமதில்

 கோட்டைமதில்āṭṭaimadil, பெ.(n.)

   வலிய (அரண்);மனையைச் சுற்றியமையும் சுவர்; compound wall of a palace.

ம. கோட்டமதில்.

     [கோட்டை + மதில்]

கோட்டைமேடு

கோட்டைமேடுāṭṭaimēṭu, பெ.(n.)

   1. அகழிக்குப் புறம்பேயுள்ள மண்மேடு (கட்டட. நாமா.7);; glacis.

   2. கொள்ளிடம் ஆறு கடலுடன் கலக்குமிடத்தில் ஏற்பட்ட தீவினில் கட்டப்பட்ட கோட்டையைச் சுற்றியுள்ள மேடு; the mound around the fort constructed in an Island formed by the lagoon of Kollidam.

     [கோட்டை + மேடு.]

கொள்ளிடம் ஆறு கடலில் கலக்குமிடத்தில் உருவான தீவில் பதினேழாம் நூற்றாண்டில் ஒரு கோட்டை கட்டப்பட்டது. இதனைத் தீவுக்கோட்டை என்று அழைத்தனர். அதைச் சுற்றி அகழியும் அமைக்கப்பட்டு முதலைகள் வளர்க்கப்பட்டன. இக் கோட்டையை ஆங்கிலேயர்கள் 1742 ல் கைப்பற்றினர். கடலரிப்பால் கோட்டை அழிந்துபட்டது. தற்போது அக் கோட்டை இருந்த மேடுமட்டுமே தெரிவதால் கோட்டைமேடு என வழங்கப்படுகிறது.

கோட்டையடி

 கோட்டையடிāḍḍaiyaḍi, பெ.(n.)

   குமரி மாவட்டத்துச் சிற்றூர்; a village in Kanniyakumari Dt.

     [கோட்டை + அடி.]

கோட்டையடுப்பு

 கோட்டையடுப்புāḍḍaiyaḍuppu, பெ.(n.)

   காடியடுப்புஅ (உ.வ.);; oven-trench.

     [கோட்டு → கோட்டை + அடுப்பு.]

கோட்டையம்மன்

 கோட்டையம்மன்āṭṭaiyammaṉ, பெ.(n.)

   கன்னியாகுமரிக் கோயிலில் அமைந்த தெய்வம்; one of the deities installed at the temple in Kanniyākumari.

ம. கோட்டயம்மன்.

     [கோட்டை + அம்மன்.]

கோட்டையாண்டார்

கோட்டையாண்டார்āṭṭaiyāṇṭār, பெ.(n.)

   கள்ளர்குடிப் பட்டப்பெயர்களுள் ஒன்று (கள்ளர் சரித்.பக்.98);; a caste title of Kallars.

     [கோட்டை + ஆண்டார்.]

கோட்டைவடம்

 கோட்டைவடம்āḍḍaivaḍam, பெ.(n.)

   கவலை (கமலை);யைப் பயன்படுத்தாத நேரங்களில் கோதாயம் போட்ட நிலையில் வடத்தைச் சுற்றி வைத்தல்; keeping the rope of ‘watch-lift’ in circular posture when it is in not use

     [கோட்டை + வடம்.]

கோட்டைவாயில்

 கோட்டைவாயில்āṭṭaivāyil, பெ.(n.)

   கோட்டைக்குச் செல்லும் வாயில்; entrance of a fort.

மறுவ. கோட்டைபடி.

ம. கோட்டவாதில்.

     [கோட்டை + வாயில்.]

கோட்டைவிடு-தல்

கோட்டைவிடு-தல்āṭṭaiviṭutal,    20 செ.கு.வி. (v.i.)

   ஏமாந்து தவறவிடுதல்; miss or lose something in a silly way.

பணத்தை இப்படிக் கோட்டைவிட்டு விட்டு வந்துநிற்கிறாயே? [கோட்டை+விடு-தல்.]

 கோட்டைவிடு-தல்āḍḍaiviḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   தவற விடுதல்; to let slip away.

பணத்தை இப்படிக் கோட்டை விட்டு விட்டாயே (உ.வ.);.

     [கோட்டை + விடு.]

கோட்டைவிதைப்பாடு

கோட்டைவிதைப்பாடுāṭṭaividaippāṭu, பெ.(n.)

   ஒரு கோட்டை விதை விதைக்கக் கூடிய நிலவளவு (G. Tn. D. I, 238);; land measure about 1.62 acres = the extent of land which requires one kottai of seed for sowing.

மறுவ.கோட்டைவிரைப்பாடு.

     [கோட்டை + விதைப்பாடு.]

கோட்டைவிரைப்பாடு

 கோட்டைவிரைப்பாடுāṭṭaiviraippāṭu, பெ.(n.)

கோட்டைவிதைப்பாடு பார்க்க;see kottai vidai-p-pâdu.

     [கோட்டை + விரைப்பாடு.]

கோட்டைவெளி

 கோட்டைவெளிāṭṭaiveḷi, பெ.(n.)

   கோட்டைக்கு வெளியிலுள்ள இடம் (G. E. M.);; esplanade.

     [கோட்டை + வெளி.]

கோட்டைவேளாளர்

 கோட்டைவேளாளர்āṭṭaivēḷāḷar, பெ.(n.)

   தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டத்தில் கோட்டைக்குள் வாழ்ந்துவரும் வேளாள வகையினர்; a sect of Velalas living in a fort at Srivaikundam in Tuttukudi Dt.

     [கோட்டை + வேளாளர்.]

கோட்படு

கோட்படு1āḍpaḍuttal,    18 செ.குன்றாவி. (v.t.)

   கோளாறடையச் செய்தல்; to cause derangement or disorder in the system (சா.அக.);.

     [குள் (வளைவு); → கோள் + படு.]

 கோட்படு2āḍpaḍudal,    20 செ.கு.வி.(v.i.)

   1. பிடிக்கப்படுதல்; to be captured.

     “புலிதானே புறத்ததாகக் குட்டி கோட்படா தென்ன” (கம்பரா.சூர்ப்ப. 102);..

   2. அறியப்படுதல்; to be realised.

     “ஞானத்தாலுங் கோட்படாப் பதமே” (கம்பரா.அனுமப்.36);.

   3. வலிமை கொள்ளுதல்; become powerful.

     “பனிமதக் குவடு கோட்பட்டெழுந்துறப் பாய்ந்த வாற்றால்” (இரகு. திக்குவி.225);.

     [கோள் + படு – கோட்படு.]

கோட்படுபதம்

கோட்படுபதம்āḍbaḍubadam, பெ.(n.)

   1. மாட்டுக் குளம்பு (யாழ்.அக.);; hoof.

   2. குளம்பின் சுவடு,

 hoof mark.

     [கோட்படுதல் = வளைதல், கோட்படு + (பாதம்); பதம்.]

கோட்பதம்

 கோட்பதம்āṭpadam, பெ.(n.)

கோட்படுபதம் பார்க்க;see köt-padu-padam.

     [கோட்டுபதம் → கோட்டுபதம்.]

கோட்பறை

கோட்பறைāṭpaṟai, பெ.(n.)

   செய்திகளை நகரத்தார்க்குத் தெரிவிக்கும் பறை; proclamation-drum.

     “கொள்ளென் குரலொடு கோட்பறை கொளீஇ” (பெருங்.வத்தவ.5:62);.

     [கோள் + பறை.]

கோட்பலவு

 கோட்பலவுāṭpalavu, பெ.(n.)

   குலைகளை யுடைய பலாமரம்; jack tree having bunches of jack fruit.

     [கோள் + பலவு.]

கோட்பாடு

கோட்பாடு1āṭpāṭu, பெ.(n.)

   1. கொள்கை; doctrines.

   2. நடத்தை (சிலப்பதி.16. அரும்.); ; conduct.

   3. கடைப்பிடிப்பு; adherence. Adhesion.

   4. நிலைமை; state, condition.

   5. கொண்டிருக்கும் தன்மை; state of having.

     [கொள் → கோள் + பாடு → கோட்பாடு.]

ஒ.நோ. ஒருமைப்பாடு. பண்பாடு.

 கோட்பாடு2āṭpāṭu, பெ.(n.)

   கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு நிறுவப்படும் கூற்று; tenet, conclusion, thesis.

     [கொள் → கோள் + பாடு.]

கோட்பாரா

 கோட்பாராāṭpārā, பெ.(n.)

   கணக்குச் சுருக்கம்; abstract of account.

     [U.{} → த.கோட்பாரா.]

கோட்பு

கோட்புāṭpu, பெ.(n.)

   1. கொள்ளுகை (யாழ்.அக.);; taking.

   2. வலிமை; strength.

     “விதியின் கோட்பான்வீடினன்” (கம்பரா.உருக்காட்.81);.

     [கொள் → கோள் + பு. (‘பு’ சொல்லாக்க ஈறு);.]

கோட்புகு-தல்

கோட்புகு-தல்āṭpugudal,    21 செ.கு.வி.(v.i.)

   மரம் முதலியன பயன் கொள்ளும் பருவத்ததாதல்; to mature, as trees.

     ‘கோட்புகாத கன்னிக்கமுகு (சீவக. 169. உரை);.

     [கொள் → கோள் + புகு-.]

கோட்புலி

 கோட்புலிāṭpuli, பெ.(n.)

   கொண்டதை விடாத புலி; the tiger which will not let go what it has caught.

     [கொள் → கோள் + புலி.]

கோட்புலி நாயனார்

கோட்புலி நாயனார்āṭpulināyaṉār, பெ.(n.)

நாயன்மார் அறுபத்து மூவருள் ஒருவர் (பெரியபு.);:

 a canonized Saiva Saint, one of 63.

     [கோள் + புலி + நாயன் + ஆர். கொண்டதை விடாதபுலி → கோட்புலி.]

கோட்புலியார்

 கோட்புலியார்āṭpuliyār, பெ.(n.)

   ஒரு சிவனடியார்; a devotee of Švā.

     [கோள்+புலி+ஆர்]

சிங்கடிவனப்பகை என்னும் தன் இரண்டு பெண்களைச் சுந்தரருக்கு அடிமையாகக் கொடுத்தவர். இவர் கோட்புலி நாயனரினும் வேறுபட்டவர். ஏனெனில் இவரது வரலாற்றில் கந்தரரைக் குறித்துச் சொல்லப்படவில்லை (அபி.சிந்);.

கோண வட்டம்

கோண வட்டம்2āṇavaṭṭam, பெ.(n.)

   அரசவிருதுகளுள் ஒன்று; an emblem of royalty.

     “கோணவட்டக் கோல முகத்த” (பெருங். மகத. 20:22);.

கோணல் + வட்டம்.]

கோண வீச்சம்

 கோண வீச்சம்āṇavīccam, பெ.(n.)

   ஒரு புள்ளியிலிருந்து எழும் இருவேறு கோடுகளுக்கிடைய உள்ள தூரம்; amplitude of two lines starting from a particular point.

     [கோணம் + வீச்சம்.]

கோணக்கணிதவியல்

 கோணக்கணிதவியல்āṇakkaṇidaviyal, பெ.(n.)

   கோணங்களைக் கொண்டு பயிலும் கணக்கு; trigonometry.

     [கோணம் + கணிதம் + இயல்.]

கோணக்கண்

 கோணக்கண்āṇakkaṇ, பெ.(n.)

   மாறுகண்; squint.

     [கோண் + அ + கண்.]

கண்களின் இருவிழிகளும் வெவ்வேறு திசை களைப் பார்ப்பது போன்ற நிலை.

கோணக்களிகிண்டு-தல்

கோணக்களிகிண்டு-தல்āṇaggaḷigiṇṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   குழப்பமுண்டாதல் (நெல்லை);; to create confusion.

இப்படிக் கோணக்களி கிண்டுவது நல்லதன்று (உ.வ.);.

     [கோணல் + களி + கிண்டு.]

கோணக்கழுத்து

கோணக்கழுத்துāṇakkaḻuttu, பெ.(n.)

   1. பிறவியில் அல்லது வலிப்பினால் வளைந்த கழுத்து; distorted neck either congenital or acquired from fits.

   2. சாய்ந்த கழுத்து; wry neck (சா.அக.);.

     [கோணல்+கழுத்து.]

 கோணக்கழுத்துāṇakkaḻuttu, பெ.(n.)

   1. பிறவியில் அல்லது வலிப்பினால் வளைந்த கழுத்து; distorted neck either congenital or acquired from fits.

   2. சாய்ந்த கழுத்து; wry neck (சா.அக.);.

     [கோணல் + கழுத்து.]

கோணக்காப்பு

 கோணக்காப்புāṇakkāppu, பெ.(n.)

   கை கால்களிலணியும் கோணல்வளை; angulated anklet or bangles.

     [கோணல் + காப்பு.]

கோணக்காய்

 கோணக்காய்āṇakkāy, பெ.(n.)

கோணற் காய் பார்க்க;see konar-kay (சா.அக.);.

     [கோணல் + காய் – கோணற்காய் → கோணக்காய்.]

கோணக்கால்

 கோணக்கால்āṇakkāl, பெ.(n.)

கோணற் கால் பார்க்க;see konar-kal (சா.அக.);.

     [கோணல் + கால் – கோணற்கால் → கோணக்கால்.]

கோணக்கிணாக்கி

 கோணக்கிணாக்கிāṇakkiṇākki, பெ.(n.)

   சிற்றரத்தை வகை (மலை.);; nodding galangal.

மறுவ:கோணாக்கிணக்கி.

     [கோணல் + (கிணக்கி); கிணாக்கி.]

கோணக்கீச்சான்

 கோணக்கீச்சான்āṇakāccāṉ, பெ.(n.)

   உடல்வளைந்த கீச்சான் மீன்; a kind of fish having twisted body.

     [கோணல் + கீச்சான்.]

கோணக்குழல்

 கோணக்குழல்āṇakkuḻl, பெ.(n.)

   ஒருவகை வளைந்த ஊதுகுழல்; a kind of trumpet.

ம. கோணக்குழல்.

     [கோண(ம்); + குழல்.]

கோணக்கூத்து

 கோணக்கூத்துāṇakāttu, பெ.(n.)

   இழுப்பினால் குதிக்கச் செய்யும் ஒரு நோய் (சா.அக.);; a disease marked by a peculiar jumping or springing motion in the patient due to clonic spasm of the muscles,saltatory spasm.

     [கோணல் + கூத்து,]

கோணக்கொன்றை

 கோணக்கொன்றைāṇakkoṉṟai, பெ.(n.)

   கோணக்காய்க் கொன்றை; purging cassia (சா.அக.);.

     [கோணல் + கொன்றை – கோணற்கொன்றை → கோணக்கொன்றை.]

கோணக்கொம்பு

கோணக்கொம்புāṇakkombu, பெ.(n.)

   1. வாங்கால் என்னும் ஊது கருவி; bugle – horn, wind instrument (loc.);.

   2. மாட்டுக் கொம்பில் ஒரு வகை; a kind of cow horn.

     [கோணல் + கொம்பு.]

கோணக்கோணவிழு-தல்

கோணக்கோணவிழு-தல்āṇakāṇaviḻudal,    2 செ.கு.வி (v.i.)

   வலிப்பு நோயினால் கைகால் இழுத்தல்; distortion of the limbs as in fits (சா.அக.);.

     [கோண + கோண + விழு-.]

கோணக்கோதயம்

 கோணக்கோதயம்āṇakātayam, பெ.(n.)

   தகரை; ringworm plant (சா.அக.);.

     [கோணல் + கோதயம்.]

கோணங்கி

கோணங்கிāṇaṅgi, பெ.(n.)

   1. கோமாளி; clown or fool in a play, buffoon.

   2. கோடங்கி பார்க்க;see kodangi.

   3. நகைச்சுவை நாடகம்; a kind of humourous drama.

   4. உடற்கோணி ஆட்டம்; a twisted dance.

     [கோண் → கோணங்கி.]

கோணங்கிக் கூத்து

கோணங்கிக் கூத்துāṇaṅgikāttu, பெ.(n.)

   1. கோமாளிக்கூத்து; dancing of a clown.

   2. ஒழுங்கற்ற நடையுடைகள்; droll and improper conduct or dress.

     [கோணங்கி + கூத்து.]

கோணங்கித்தாசரி

 கோணங்கித்தாசரிāṇaṅgittācari, பெ.(n.)

   தாசரி இனத்திலுள்ள கோணங்கி; a konangi belonging to Dasari caste.

     [கோணங்கி + தாசரி.]

கோணங்கிப்பட்டி

 கோணங்கிப்பட்டிāṇaṅgippaṭṭi, பெ.(n.)

   நாமக்கல் மாவட்டத்துச் சிற்றூர்; a village in Namakkal Dt.

     [கோணங்கி + பட்டி.]

கோணங்கிப்பல்லு

 கோணங்கிப்பல்லுāṇaṅgippallu, பெ.(n.)

   அழகற்று நீண்டுள்ள பல் (வின்.);; projecting unsightly teeth (W.);.

     [கோணங்கி + பல்லு. பல் → பல்லு.]

கோணங்கிப்பாட்டு

 கோணங்கிப்பாட்டுāṇaṅgippāṭṭu, பெ.(n.)

   செய்யுள் வகை; a kind of poem.

     [கோணங்கி + பாட்டு.]

கோணங்கியம்மை

 கோணங்கியம்மைāṇaṅgiyammai, பெ.(n.)

   உடல் உறுப்புகளைக் குறைத்து வேறுபடுத்தும் அம்மை வகை (வின்.);; a kind of small pox which contracts and distorts the limbs.

     [கோணங்கி + அம்மை.]

கோணதிசை

 கோணதிசைāṇaticai, பெ.(n.)

   மூலைத் திசை; intermediate directions between the cardinal points (செ.அக.);.

கோணத்தடி

 கோணத்தடிāṇattaḍi, பெ.(n.)

   அதிகாரக் குறியாகக் கொண்டு செல்லும் தடிவகை (இ.வ.);; a staff with a curved head, an emblem of authority.

     [கோண் → கோணல் + தடி.]

கோணத்தண்டு

கோணத்தண்டுāṇattaṇṭu, பெ.(n.)

   1. ஒருபுறம் வளைந்த ஆண்குறி; penis inclined to one side.

   2. வாசியை மாற்றுவதற்குப் பயன்படும் ஒக தண்டு; a stick or a wooden rod with a curve at the top used by yogis, for directing vital air from the right nostril to the left and vice versa (சா.அக.);.

     [கோணல் + தண்டு.]

கோணத்திசை

 கோணத்திசைāṇatticai, பெ.(n.)

இரண்டு திசைகளுக்கு இடைப்பட்ட திசை

 the point of the compass between the perpendicular directions.

     [கோணம்+திசை]

 கோணத்திசைāṇattisai, பெ.(n.)

   இருதிசைகளுக்கிடைப்பட்ட திசை; intermediate directions between two perpendicular directions.

மறுவ. மூலத்திசை.

     [கோணல் + திசை-கோணத்திசை.]

கோணத்தேளி

 கோணத்தேளிāṇattēḷi, பெ.(n.)

   உருவமைப்பில் கோணலாய்த் தோன்றும் மீன்; a kind of fish which seems to be having twisted body.

     [கோணல் + தேளி.]

கோணன்

கோணன்āṇaṉ, பெ.(n.)

   1. கூனன் (பிங்.);; humpback.

   2. அற (நீதி);க்கேடன்; unjust, unrighteous person.

     “கொடுமராதியைப் பண்ணிடுங் கோணன்” (சிவதரு, பாவ. 66);.

     [கோணு → கோணன்.]

 கோணன்āṇaṉ, பெ.(n.)

   காரி (சனி);; saturn.

ம. கோணன்.

     [கோண் → கோணன்.]’

கோணப்பார்வை

 கோணப்பார்வைāṇappārvai, பெ.(n.)

   மாறு கண் (இ.வ.);; squint eye.

     [கோணல் + பார்வை.]

கோணப்பாறை

 கோணப்பாறைāṇappāṟai, பெ.(n.)

   பூம்புகாருக்கு வடகிழக்கில் கடலடியில் அமைந்திருக்கும் ஒரு பாறை; an under sea-rock situated at north east of Poompukar.

     [கோணம் + பாறை.]

கோணப்புளி

 கோணப்புளிāṇappuḷi, பெ.(n.)

   கொடுக்காய்ப் புளி (L.);; Manilla tamarind.

     [கோணல் + புளி.]

கோணமங்கலம்

 கோணமங்கலம்āṇamaṅgalam, பெ.(n.)

   கடலூர் மாவட்டத்துச் சிற்றூர்; a village in Cuddalore Dt.

     [கோணம் (எருமை); + மங்கலம்.]

கோணமலை

 கோணமலைāṇamalai, பெ.(n.)

   திரிகோணமலை; Triköna-malai a place name in Sri Lanka.

மறுவ:கோணாமலை.

     [கோணம் + மலை.]

கோணமானி

 கோணமானிāṇamāṉi, பெ.(n.)

   கோணங்களை அளக்கப் பயன்படுத்தும் கருவி; an instrument for measuring angles, especially to check your position at sea orto look at stars, quadrant.

     [கோண[ம்]+மானி]

கோணமுகம்

 கோணமுகம்āṇamugam, பெ.(n.)

   ஒருபக்கம் கோணிய முகம்; face distorted to one side, as in paralysis, or in birth (சா.அக.);.

     [கோணல் + முகம்.]

கோணமூக்கு

 கோணமூக்குāṇamūkku, பெ.(n.)

   பிறவியிலேயே அல்லது காயம், அடி முதலியவற்றால் ஊனமான மூக்கு; mis-shapen or ill-shaped nose by congenital or traumatic cause (சா.அக.);.

   மறுவ;கோணைமுகம்.

     [கோணல் + மூக்கு.]

கோணம்

கோணம்āṇam, பெ.(n.)

இரு கோடுகள் அல்லது இரு பரப்புகள் ஒன்றையொன்று சந்திக்கும் இடத்தில் உள்ள இடைவெளியின் கோண அளவு:

 angle.

இந்தக் கட்டடத்தில் எத்தனைக் கோணங்கள் உள்ளன.

 கோணம்1āṇam, பெ.(n.)

   1. வளைவு (பிங்.);; curve curvature.

   2. வளைந்தவாள் (பிங்.);; curved sword scimitar.

   3. யானைத்தோட்டி; elephant hook.

     “கோணந் தின்ற வடுவாழ் முகத்த” (மதுரைக். 592);

   4. குறுந்தெரு; narrow short lane.

     “கோணமு மறுகு மெல்லாம்” (சீவக. 615);.

   5. மாப்பிலாச்சை மீன் (M.M.803.);;seer-fish, bluish attaining 4 ft. in length.

   வ.கோண; Skt.kona Gk. Gonia (angle);;

 E. gon.

     [கோண் → கோணம்.]

 கோணம்2āṇam, பெ.(n.)

   1. மூலை; angle, corner.

     “கோணமொத் திலங்கோர் முழத்தினின்” (திருவாலவா.15:2);.

   2. கோணத்திசை பார்க்க;see kona-t-tisai.

     “வடக்கொடு கோணந்தலை செய்யார்” (ஆசாரக். 31);.

   3. ஒதுக்குப்புறமான இடம் (இ.வ.);; remote, obscure place.

   4. வயற்காடு; a small estate.

 ME. Ang-Fr. Cornere;

 ML. corneria;

 L. cornu;

 E. corner.

     [கோண் → கோணம்.]

 கோணம்3āṇam, பெ.(n.)

   மூக்கு (பிங்.);; nose, Snout, nostril.

 Skt. ghonka.

     [கோண் → கோணம்.]

 கோணம்4āṇam, பெ.(n.)

   குதிரை (பிங்.);; horse.

 Skt. ghonå.

     [கோ → கோணம் (ஆண் குதிரை);.]

கோணம்5

   1. நிலை; perspective.

   2. கண்ணோட்டம்; point of views.

ஒவ்வொரு தமிழறிஞரும் அவரவர் கோணத்தில் இலக்கியத்தை அணுகுகிறார்கள் (உ.வ.);.

     [கோண் → கோணம்.]

 கோணம்1āṇam, பெ.(n.)

   மூக்கு (பிங்.);; nose, snou, nostril.

     [Skt.{} → த.கோணம்.]

கோணயன்

 கோணயன்āṇayaṉ, பெ.(n.)

   அறிவிலி, பயனற்றவன்; a senseless fellow, a worthless man.

ம. கோணயன்

     [கோன் → கோணயன்.]

கோணற்கழுத்து

 கோணற்கழுத்துāṇaṟkaḻuttu, பெ.(n.)

கோணக்கழுத்து பார்க்க;see Kona-k-kaluttu (சா.அக.);.

     [கோணல் + கழுத்து.]

கோணற்காய்

 கோணற்காய்āṇaṟkāy, பெ.(n.)

கோணை வேல் பார்க்க;see kónai-věl (சா.அக.);.

     [கோணல் + காய்.]

கோணற்காரன்

 கோணற்காரன்āṇaṟkāraṉ, பெ.(n.)

   ஒரு மரம்; mountain snow-ball tree (சா.அக.);.

     [கோணல் + காரன்.]

கோணற்கால்

 கோணற்கால்āṇaṟkāl, பெ.(n.)

   உள் வளைந்த கால்; bandy leg (சா.அக.);.

   மறுவ;கோணக்கால.

     [கோணல் + கால்.]

கோணற்பாய்

 கோணற்பாய்āṇaṟpāy, பெ.(n.)

   சிறுமரப்பாய்; wooden mat.

     [கோணல் + பாய்.]

கோணலயம்

 கோணலயம்āṇalayam, பெ.(n.)

   அரிவாள்; a sickle, reaping hook.

     [கோணல் + அயம் (இரும்பு);.]

கோணலிலை

 கோணலிலைāṇalilai, பெ.(n.)

   காட்டுநெல்லி; triple-nerved mercury (சா.அக.);.

     [கோணல் + இலை.]

கோணல்

கோணல்1āṇal, பெ.(n.)

   1.வளைவு (பிங்.);; wryness, obliquity, deflection.

   2. கூன் (திவா.);; hump, deformity.

   3. மாறுபாடு (சூடா.);; crookedness, as of mind.

   4. மனவுளைச்சல் (உ.வ.);; uneasiness of mind.

ம. கோணல்.

     [கோண் → கோணல்.]

 கோணல்2āṇal, பெ.(n.)

   முறையற்ற போக்கு; perversity, deviation.

உன்னறிவு ஏன் கோணலாகப் போகிறது? (உ.வ.);.

     [கோண் → கோணல்.]

கோணல்குணங்கல்

கோணல்குணங்கல்āṇalkuṇaṅkal, பெ.(n.)

   1. வளைவு (பிங்);; wryness, obliquity, deflection.

   2. கூன் (திவா.);; hump, deformity.

   3. மாறுபாடு (சூடா);; crookedness, as of mind.

   4. மனவுளைச்சல்; uneasiness of mind (செ.அக.);.

கோணல்குணம்

கோணல்குணம்āṇalkuṇam, பெ.(n.)

   1. மனத்துன்பம்; uneasiness of mind.

   2. கோணல் பார்க்க;see kõnal (சா.அக.);.

     [கோணல் + குணம்.]

கோணல்சம்பா

கோணல்சம்பாāṇalcambā, பெ.(n.)

   நெல்வகை (விவசா.1);; a kind of paddy.

     [கோணல் + சம்பா.]

கோணல்மாணல்

கோணல்மாணல்āṇalmāṇal, பெ.(n.)

   1. தாறுமாறு; crookedness, of a complex nature, difficult to set right.

   2. மாறுபாடு; confused state or condition (சா.அக.);.

     [கோணல் + மாணல்.]

கோணல்மூஞ்சி

 கோணல்மூஞ்சிāṇalmūñji, பெ.(n.)

   வெறுப்பு, சிரிப்பு முதலியவற்றைக் காட்டும் முகம் (இ.வ.);; grimace, wry face expressing annoyance, etc. or meant to raise a laugh.

     [கோணல் + மூஞ்சி.]

கோணல்வளைவு

கோணல்வளைவுāṇalvaḷaivu, பெ.(n.)

   வளைவு வகை (கட்டட.நாமா.16);; skew.

     [கோணல் + வளைவு.]

கோணளவு

 கோணளவுāṇaḷavu, பெ.(n.)

கோணங்களின் மதிப்பீடு:

 angular measurement.

     [கோணம் + அளவு.]

கோணவட்டம்

கோணவட்டம்1āṇavaṭṭam, பெ.(n.)

   கோணலாயுள்ள வட்டம்; irregular circle.

     [கோணல் + வட்டம்.]

கோணவழக்கு

 கோணவழக்குāṇavaḻkku, பெ.(n.)

   நேர்மையற்ற சொற்போர்; perverse argument.

     [கோணல் + வழக்கு.]

கோணவாசல்

 கோணவாசல்āṇavācal, பெ.(n.)

   அரண்மனை முதலியவற்றில் வளைந்து செல்லும் வாயில் (இ.வ.);; gateways leading to a hall, circuitously arranged, as in a palace.

     [கோணம் + வாசல்.]

கோணவாயன்

 கோணவாயன்āṇavāyaṉ, பெ.(n.)

   பன்றி; pig.

மறுவ. பன்றி, மிறுதாறு.

     [கோணல் + வாயன்.]

கோணவாய்

 கோணவாய்āṇavāy, பெ.(n.)

   கோணலாயுள்ள வாய்; wry mouth.

     [கோணம் + வாய்.]

கோணவாளை

 கோணவாளைāṇavāḷai, பெ.(n.)

   வாளைமீன் வகைகளிலொன்று; a kind of fish.

     [கோணல் + வாளை.]

கோணவிட்டம்

 கோணவிட்டம்āṇaviṭṭam, பெ.(n.)

   மூலைகளை இணைக்கும் விட்டம்; a cross beam which connects the corners.

     [கோணம் + விட்டம்.]

கோணவிருட்சம்

 கோணவிருட்சம்āṇaviruṭcam, பெ.(n.)

   கரும்பு; sugarcane (சா.அக.);.

     [கோல் → கோன் → கோண் → கோணம் + விருட்சம்.]

கோணவுடம்பு

 கோணவுடம்புāṇavuḍambu, பெ.(n.)

   கருவிலேயே ஒரு பக்கமாகத் திரும்பிக் கோண வடிவாய்க் காணப்படும் உடம்பு; the body of a baby in the womb which is so distorted to one side that it exhibits a ghastly appearance (சா.அ.க.);.

     [கோணல் + உடம்பு.]

கோணவெழுச்சி

 கோணவெழுச்சிāṇaveḻucci, பெ.(n.)

   உள் வளைந்த ஆண்குறியேழுச்சி; painful erection with incurvation of the penis towards the scrotum occurring in gonorrhoea (சா.அக.);.

     [கோணல் + எழுச்சி.]

கோணவேலன்

 கோணவேலன்āṇavēlaṉ, பெ.(n.)

கோணவேல் பார்க்க;see kona-vel.

     [கோணம் + அளவு.]

கோணவேல்

 கோணவேல்āṇavēl, பெ.(n.)

   மரு என்ற முள்ளில்லாத வேல மரவகை; divi-divi tree.

மறுவ: கோணவேலன்.

     [கோணல் + வேல்.]

கோணா

 கோணாāṇā, பெ.(n.)

   ஒர் நீலகிரிப்பூடு; Nilgiri herb elm (சா.அக.);.

     [கோண் → கோணா.]

கோணாகோணம்

கோணாகோணம்āṇāāṇam, பெ.(n.)

   கோணத்துட் கோணம் (தொல். எழுத்து. 311. உரை);; angular figure within an angular figure.

     [கோணம் + கோணம். கோணகோணம் → கோணாகோணம்.]

கோணாக்கினாக்கி

 கோணாக்கினாக்கிāṇākkiṉākki, பெ.(n.)

   சிற்றரத்தை; nodding galangal (சா.அக.);.

     [கோணக்கினாக்கி → கோணாக்கிணாக்கி.]

கோணாதித்தியன்

 கோணாதித்தியன்āṇātittiyaṉ, பெ.(n.)

   கதிரவன்; sun (அபி.சிந்);.

கோணாமானாவெனல்

 கோணாமானாவெனல்āṇāmāṉāveṉal, பெ.(n.)

தாறுமாறாதற் குறிப்பு:

 expr. signifying confusion or disorderliness.

     [கோணு → கோணா → மாணா + எனல்.]

கோணாமுகம்

 கோணாமுகம்āṇāmugam, பெ.(n.)

   சூழ்ந்த அகழியிருக்கை (வின்.);; a fortified capital surrounded by a ditch.

     [கோள் → கோண் → கோணா + முகம்.]

கோணாய்

கோணாய்āṇāy, பெ.(n.)

   1. ஓநாய்; Indian wolf.

   2. ஆண் நரி; male jackal.

     [கொள் → கோள் → கோண் + நாய் → கோணாய்.]

கோணாவட்டம்

கோணாவட்டம்āṇāvaṭṭam, பெ.(n.)

   1.கோணத்துள் வட்டம் (தொல். எழுத்து. 311, உரை);; circle within an angular figure.

   2. அரச விருதுகளுள் ஒன்று; an emblem of royalty.

     “கூந்தற் பிச்சமுங் கோணா வட்டமும்” (பெருங். உஞ்சைக். 46:62);.

     [கோணம் + வட்டம் → கோணவட்டம் → கோணாவட்டம்.]

கோணாவலை

 கோணாவலைāṇāvalai, பெ.(n.)

   இறால்மீன் பிடிக்கப் பயன்படும் வலை (மீனவ.);; net used for prawn fishing.

     [கோணம் + வலை – கோணவலை → கோணாவலை.]

கோணி

கோணி1āṇi, பெ.(n.)

   அத்தி; country fig.

     [கோளி → கோணி.]

 கோணி2āṇi, பெ.(n.)

   1. சாக்குப்பை; sacks made of jute fibre, gunny bag, sack cloth.

கோணி கொண்டது. எருது சுமந்தது (பழ);.

   2. எட்டு மரக்கால் கொண்ட ஒர் அளவு; a measure of capacity 2 tūni = 8 marakkāl.

     “கோணித் தீம் பசும்பால் வாரெரித்திட்டு” (தைலவ. தைல. 135);.

   3. கந்தை; tatters.

   4. பதினாயிரங் கோடா கோடி; ten thousand crores of a crore.

   5. இருதூணி என்னுமோ ரளவை; a measure knownas

     “iru thooni”

மறுவ. கோணிகை, கோணிப்பை, கோணியல்.

   ம. கோணி;   க., தெ., து., பட. கோணி; skt. goni.

     [கோள் → கோளி → கோணி.]

 கோணி3āṇi, பெ.(n.)

   பன்றி (பிங்.);; boar, hog, as having a snout.

     [கோண் → கோணி.]

கோணிகை

கோணிகை1āṇigai, பெ.(n.)

கோணி2 பார்க்க;see kõni2.

     [கோண் → கோணிகை.]

 கோணிகை2āṇigai, பெ.(n.)

   சிற்றூரில் ஏற்பட்டிருந்த பழைய வரிவகை (I.M.P.T.P. 234);; an ancient village cess.

     [கோண் → கோணிகை.]

கோணிக்கயிறு

 கோணிக்கயிறுāṇikkayiṟu, பெ.(n.)

   சாக்குத் தைக்கும் சணல்நூல் (இ.வ.);; gunny twine.

ம. கோனிக்கயர்.

     [கோணி + கயிறு.]

கோணிக்கவாயன்

 கோணிக்கவாயன்āṇikkavāyaṉ, பெ.(n.)

   நெல்வகை; a kind of paddy.

     [கோணி + கவையன் – கோணிக்கவையன் → கோணக்கவாயன்.]

கோணிக்குணங்கல்

 கோணிக்குணங்கல்āṇikkuṇaṅgal, பெ.(n.)

   மனம் தளர்தல்; getting uneasiness of mind through annoyance (சா.அக.);.

     [கோண் → கோணி + குணங்கல்.]

கோணிக்குறுகல்

 கோணிக்குறுகல்āṇigguṟugal, பெ.(n.)

   மூப்பினால் வளைந்து சிறுத்தல்; becoming short and crooked through old age (சா.அக.);.

     [கோணி + குறுகல்.]

கோணிக்கொடு-த்தல்

கோணிக்கொடு-த்தல்āṇikkoḍuttal,    4 செ.கு.வி. (v.i.)

   மனமில்லாமற் கொடுத்தல்; to give grudgingly or with reluctance.

     [கோனு + கொடு → கோணிக்கொடு.]

கோணிக்கொள்ளல்

கோணிக்கொள்ளல்āṇikkoḷḷal, பெ.(n.)

   1. வளைந்து கொள்ளல்; being bent.

   2. சினங் கொள்ளல்; getting angry.

   3. பிணக்குக் கொள்ளல்; quarrelling as of lovers (சா.அக.);.

     [கோணி + கொள்ளல்.]

கோணித்தட்டம்மை

 கோணித்தட்டம்மைāṇittaṭṭammai, பெ.(n.)

   ஒருவகைத் தட்டம்மை; a kind of small-pox with elevated or raised flat patches in the body (சா.அக.);.

மறுவ: கோணித்தட்டு.

     [கோணி + தட்டம்மை.]

கோணித்தட்டு

 கோணித்தட்டுāṇittaṭṭu, பெ.(n.)

கோணித்தட்டம்மை பார்க்க;see koni-t-tattammai.

     [கோண் → கோணி + பட்டு.]

கோணிப்பட்டு

கோணிப்பட்டுāṇippaṭṭu, பெ.(n.)

   பட்டுவகை (S.I.I.VIII.23);; a kind of silk.

     [கோண் → கோணி + பட்டு.]

கோணிப்பட்டை

 கோணிப்பட்டைāṇippaṭṭai, பெ.(n.)

   சாக்குத் துணி; coarse gunny-cloth.

     [கோணி + பட்டை.]

கோணிப்பை

 கோணிப்பைāṇippai, பெ.(n.)

   சாக்கு; coarse sack, gunny-bag.

     [கோணி + பை.]

கோணிப்போ-தல்

கோணிப்போ-தல்āṇippōtal,    5 செ.கு.வி. (v.i.)

   வளைதல்; to grow wry (சா.அக.);.

     [கோண் → கோணி + போ.]

கோணியம்

 கோணியம்āṇiyam, பெ.(n.)

கோப்பிரண்டை பார்க்க;see kõppirandai (சா.அக.);.

     [கோப்பிரண்டை → கோணியம்.]

கோணியலூசி

 கோணியலூசிāṇiyalūci, பெ.(n.)

கோணியூசி பார்க்க;see köni-y-usi.

     [கோணி → கோணியல்.]

கோணியல்

 கோணியல்āṇiyal, பெ.(n.)

கோணிப்பை பார்க்க;see köni-p-pai.

     [கோணி → கோணியல்.]

கோணியூசி

 கோணியூசிāṇiyūci, பெ.(n.)

   சாக்குத் தைக்கும் ஊசி; packing-needle for sewing gunny bags, bodkin.

மறுவ கோணியலூசி.

ம. கோணிசூசி.

     [கோணி + ஊசி.]

கோணீசுவரர்

 கோணீசுவரர்āṇīcuvarar, பெ.(n.)

   திருக்கோண மாமலையிலே கோயில் கொண்டிருக்கும் இறைவன்; God at Tirikonamalai in Sri Lanka.

     [கோணி + ஈசுவரன்.]

கோணு-தல்

கோணு-தல்āṇudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. வளைதல் (பிங்.);; to be bent, curved.

   2. கோணலாயிருத்தல்; to be awry, crooked, oblique.

   3. நெறி பிறழ்தல்; to deviate, swerve from the proper course.

   4. முகங்கோணுதல். மாறுபடுதல் (சூடா.);; to be perverse, to be changed as circumstances.

   5. வெறுப்புக் கொள்ளுதல்; to have dislike or aversion.

     “கோணாதே குலவி நுழைந்தனையே”

     (அருட்பா. 6. திருவடிப்புகழ்ச் 1:4);.

   6. சாய்தல்; to in cline.

ம. கோணுக.

 Fin. kaantya, kaantaa (to turn);, kaannos (turn);;

 Kari. Keanda;

 Est. kaanata;

 Komi. Kezni;

 Mong. yandai.

     [கோள் → கோண் → கோணு-தல்.]

கோணுசி

கோணுசிāṇusi, பெ.(n.)

கோணியூசிபார்க்க;see köni-usi.

     [கோண் + ஊசி.]

கோணை1

   1. வளைவு; curvature.

   2. கோணல்; crookedness.

   3. கொடுமை (அக.நி.);; severity, cruelty.

   4. தொல்லை; difficulty, trouble.

     “கோணை பெரிதுடைத்தெம் பெம்மானைக் கூறுதலே” (திவ்.திருவாய். 2.5:10);.

   5. வலிமை; strength.

     “கோணை யிருங்குண்டை அட்டப். திருவேங்.மா. 58).

     [கோண் → கோணை.]

கோணை

கோணை2āṇai, பெ.(n.)

அழிவின்மை (திவா.);.

 imperishability.

     [கோள் = வட்டம், நிறைவு, அழிவின்மை. கோள் → கோண் → கோணை.]

கோணை மாதம்

 கோணை மாதம்āṇaimātam, பெ.(n.)

   சிலை மாதம் (மார்கழி); (வின்.);; Mārkali. as an unpropitious month.

மறுவ. பீடை மாதம்.

     [கோணை + மாதம்.]

கோணைக்கத்தி

 கோணைக்கத்திāṇaikkatti, பெ.(n.)

   அறுவை செய்வதற்குப் பயன்படும் வளைந்த கத்தி; a curved knife used in surgery (சா.அக.);.

     [கோணை + கத்தி.]

கோணைக்களிறு

 கோணைக்களிறுāṇaikkaḷiṟu, பெ.(n.)

   வலுவுள்ள இளம்யானை; male of the elephant.

     [கோணை + களிறு.]

கோணைக்கழுத்தன்

 கோணைக்கழுத்தன்āṇaikkaḻuttaṉ, பெ.(n.)

   வளைவுள்ள கழுத்துள்ளோன்; a man of crooked neck (சா.அக.);.

     [கோண் → கோணை + கழுத்து + அன்.]

கோணைக்குரங்கன்

 கோணைக்குரங்கன்āṇaikkuraṅgaṉ, பெ.(n.)

சூழ்ச்சிக்குணமும் குறும்புத்தனமும் உள்ளவன்:

 a man of crooked and mischivous disposition (சா.அக.);.

     [கோணை + குரங்கு + அன்.]

கோணைத்தலைப்பாடி

 கோணைத்தலைப்பாடிāṇaittalaippāṭi, பெ.(n.)

   தஞ்சை மாவட்டத்துச் சிற்றூர்; a village in Thanjai Dt.

     [கோணை + தலை + பாடி.]

கோணைப்பல்

கோணைப்பல்āṇaippal, பெ.(n.)

   1. ஒழுங்கில்லாமல் வளர்ந்த பல்; an irregular tooth.

   2. கோரைப்பல்; canine tooth.

ம. கொம்பல்லு: ப. கோணெகல்லு.

     [கோணை + பல்.]

கோணைப்பெருமான்

 கோணைப்பெருமான்āṇaipperumāṉ, பெ.(n.)

   ஒற்றைத் திருவடிச் சிவம்; Siva in his Egapādādam form.

     [கோணை + பெருமான்.]

கோணைப்பேச்சு

 கோணைப்பேச்சுāṇaippēccu, பெ.(n.)

   அயன் மொழி (இ.வ.);; foreign language.

     [கோண் → கோணை + பேச்சு.]

கோணைமுகம்

 கோணைமுகம்āṇaimugam, பெ.(n.)

கோணமுகம் பார்க்க;see kõna-mugam (சா.அக.);.

     [கோண் → கோணை + முகம்.]

கோணையன்

 கோணையன்āṇaiyaṉ, பெ.(n.)

   தீக்குணமுள்ளவன் (இ,வ.);; man of crooked disposition.

     [கோணை → கோணையன்.]

கோணையாராய்ச்சி

 கோணையாராய்ச்சிāṇaiyārāycci, பெ.(n.)

   தவறான ஆய்வு; perverted research.

     [கோணை + ஆராய்ச்சி.]

கோணைவாயன் (கோணைவாய்ச்சி)

 கோணைவாயன் (கோணைவாய்ச்சி)āṇaivāyaṉāṇaivāycci, பெ.(n.)

பிறவியில் அல்லது வலிப்பினால் ஒருபக்கம் வளைந்த வாய் உள்ளவன்-ன்:

 man with a writhed or distorted mouth due to congenital causes or nervous affections (சா.அக.);.

     [கோனை + வாய் + அன்.]

கோணைவேல்

 கோணைவேல்āṇaivēl, பெ.(n.)

   முள்ளில்லாத வேல்; American sumach (சா.அக.);.

மறுவ. கோணற்காய்

     [கோணை + வேல்.]

கோண்

கோண்1āṇ, பெ.(n.)

   1. வளைவு; crookedness.

     “கோணார் பிறை” (திருவாசக. 16:5);.

   2. கோணம்; an angle.

     “முக்கோ ணிவர்தரு வட்டம்” (குற்றா.தல. பராசத்.3);.

   3. மாறுபாடு; crossness of disposition.

     “கோணைக் களிற்றுக் கொடித்தேர்” (சீவக. 28);.

   4. கொடுங்கோன்மை (திவா.);:

 tyranny,

   ம. கோண்;   க. கோண, கோன;   தெ. கோணமு;   து. கோண;பட.கோணெ (வளைவு);.

 Skt. kona.

     [கோள் → கோண்.]

 கோண்2āṇ, பெ.(n.)

   நுண்ணிய பகுதி; a minute division.

     “அணுவினைச் சத கூறிட்ட கோணினுமுளன்” (கம்பரா,இரணிய. 124);

     [குள் → கொள் → கோள் → கோண்.]

 கோண்3āṇ, பெ.(n.)

   ஏனத்தின் (பாத்திரத்தின்); மூக்கு (யாழ்ப.அக.);; spout or projecting mouth of a vessel, lip.

     [குள் → கொள் → கோள் → கோண்.]

கோண்டகம்

 கோண்டகம்āṇṭagam, பெ.(n.)

   நெருஞ்சில்; caltrope (சா.அக.);.

     [குள் → குண்டு → குண்டகம் → கோண்டகம்.]

கோண்டகாமியம்

 கோண்டகாமியம்āṇṭakāmiyam, பெ.(n.)

   மதி மயக்கிப் பூடு; a plant supposed to cause perplexity of mind when trampled upon (சா.அக.);.

கோண்டகு

 கோண்டகுāṇṭagu, பெ.(n.)

   குறிஞ்சான்; an edible and medicinal creeper (சா.அக.);.

     [குண்டகம் → கோண்டகு.]

கோண்டகை

 கோண்டகைāṇṭagai, பெ.(n.)

   கொடியரசு; a kind of tree as of ficus (சா.அக.);.

     [கொள் → கொண்டகை → கோண்டகை.]

கோண்டன்

கோண்டன்āṇṭaṉ, பெ.(n.)

   1.கீழ்மகன்; loafer.

   2. பெருங் கொப்பூழன்; one who has a large navel.

ம. கோண்டன்.

     [குண்டன் → கோண்டன்.]

கோண்டன்கிழங்கு

 கோண்டன்கிழங்குāṇṭaṉkiḻṅgu, பெ.(n.)

கோரைக்கிழங்கு பார்க்க;see Korai-k-kilangu.

     [கோண்டன் + கிழங்கு.]

கோண்டம்

கோண்டம்1āṇṭam, பெ.(n.)

கோண்டகம் பார்க்க;see kõndagam.

     [கோண்டகம் → கோண்டம்.]

 கோண்டம்āṇṭam, பெ.(n.)

   குறிஞ்சாவகை (மலை.);; a species of scammony swallow-wort.

     [கோண்டகம் → கோண்டம்.]

 கோண்டம்3āṇṭam, பெ.(n.)

   1. கோதண்டம்2 (யாழ்.அக.); பார்க்க;see kōdangam

   2. தூக்கு; pendents, anything suspended.

     [குண்டம் → கோண்டம்.]

கோண்டலன் குப்பம்

 கோண்டலன் குப்பம்āṇṭalaṉkuppam, பெ.(n.)

   விழுப்புரம் மாவட்டத்துச் சிற்றூர்; a village in Villuppuram Dt.

     [கொண்டலன் → கோண்டலன் + குப்பம்.]

கோண்டி

 கோண்டிāṇṭi, பெ.(n.)

ஆந்திர மாநிலம் (கம்மம், அடிலபாத்);, சட்டிச்கார் (பச்தர்);, மகாராட்டிரம் (வார்தா, நாக்பூர்);, ஒரிசா மாநிலங்களில் பழங்குடி மக்களால் பேசப்பட்டு வரும் திராவிட மொழி:a.Dravidian language spoken by Tribals in Andhra Pradesh, Chattisgarh, Maharashtra and Orissa.

கோண்டி பேசுவோர் இருபது இலக்கம் பேர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் இவற்றை அடுத்து அதிக மக்கள் பேசும் திராவிட மொழி கோண்டி மொழியே ஆகும்.

கோண்டூர்

 கோண்டூர்āṇṭūr, பெ.(n.)

   விழுப்புரம் மாவட்டத்துச் சிற்றூர்; a village in Villuppuram Dt.

     [கோண்டன்(கோரைக்கிழங்கு);→கோண்டு + ஊா.]

கோண்டை

கோண்டை1āṇṭai, பெ.(n.)

   1 இலந்தை; jujube.

   2. பாக்குமரம்; areca-nut tree.

     [குண்டை → கோண்டை.]

கோண்பாய்ச்சல்

 கோண்பாய்ச்சல்āṇpāyccal, பெ.(n.)

   குறுக்கிடு வழி (இ.வ.);; cross-wise or slanting direction.

     [குள் → கோள் → கோண் + பாய்ச்சல்.]

கோண்பு

 கோண்புāṇpu, பெ.(n.)

   கோணுதல்; to be bent, curved.

     [கோண் → கோண்பு. ஒ.நோ. காண் → காண்பு.]

கோண்மா

கோண்மாāṇmā, பெ.(n.)

   இரைக்காகப் பிற உயிரினங்களைக் கொல்லும் புலி, அரிமா முதலியன; beast of prey, as lion, tiger etc.

     “கும்பத்தின்கரியைக் கோண்மாக் கொன்றென”(கம்பரா. இரணிய. 125);.

     [கோள் + மா – கோள்மா → கோண்மா.]

கோண்மா நெடுங்கோட்டனார்

கோண்மா நெடுங்கோட்டனார்āṇmāneḍuṅāḍḍaṉār, பெ.(n.)

   கடைக்கழகப் புலவர்களி லொருவர்; one among Sangam poets.

     [கோண்மா + நெடுங்கோட்டனார்.]

இவர் கடைக்கழக நூல்களில் ஒன்றான நற்றிணையின் 40ஆவது பாடலைப் பாடியுள்ளார். அப் பாடலில் வருகின்ற கோண்மா நெடுங்கோடு என்னும் சொற்றொடரிலிருந்து இப் பெயர் வழங்கப்பட் டிருக்கலாம்.

கோண்மீன்

கோண்மீன்āṇmīṉ, பெ.(n.)

   கோள் (கிரகம்);; planet.

     “வாணிற விசும்பிற் கோண்மீன்” (சிறுபாண். 242);.

     [கோள் → கோண் + மீன்.]

கோண்விழு-தல்

கோண்விழு-தல்āṇviḻudal,    2 செ.கு.வி.(v.i.)

   கோணலாதல் (வின்.);; to become crooked, uneven.

     [கோண் + விழு.]

கோதஒடைப்பட்டி

 கோதஒடைப்பட்டிātaoḍaippaḍḍi, பெ.(n.)

   தேனி மாவட்டத்துச் சிற்றூர்; a village in Theni Dt.

     [கோதன் + ஒடை + பட்டி.]

கோதகம்

கோதகம்ātagam, பெ.(n.)

   1. சுக்குநாறிப் புல்; ginger grass.

   2. அழிஞ்சில்; sage leaved alangium (சா.அக.);.

     [கோது → கோதகம்.]

கோதகி

 கோதகிātaki, பெ.(n.)

ஒரு ஆறு

 a river (அபி.சிந்);.

கோதங்கிப்பட்டி

 கோதங்கிப்பட்டிātaṅgippaṭṭi, பெ.(n.)

   தேனி மாவட்டத்துச் சிற்றூர்; a village in Theni Dt.

     [கோடங்கி → கோதங்கி + பட்டி.]

கோதடி

 கோதடிātaḍi, பெ.(n.)

   கப்பற் கயிற்றை உரைசாமற் காக்குங் கருவி (Naut.);; chafing-gear, any material used to protect sails or rigging at points where they are exposed to friction.

     [கோ + தடி.]

கோதண்டபாணி

கோதண்டபாணிātaṇṭapāṇi, பெ.(n.)

   இராமன் (வில்லை கையிற் கொண்டவன்);; Rama, as having bow Kodandam in his hand.

     “கோதண்டபாணிகுலமருகன்” (திருப்போ. சந்நிதி. மாலை, 66);.

     [கோதண்டம் + தண்டம் + பாணி.]

 கோதண்டபாணிātaṇṭapāṇi, பெ.(n.)

   இராமன் (வில்லை கையிற் கொண்டவன்);;{}, a having bow in his hand.

     “கோதண்டபாணி குலமருகன்” (திருப்போ.சந்நிதி.மாலை.66);.

     [Skt.{}+{} → த.கோதண்டபாணி.]

கோதண்டப்புலியர்

கோதண்டப்புலியர்ātaṇṭappuliyar, பெ.(n.)

   கள்ளர்குடிப் பட்டப்பெயர்களுள் ஒன்று (கள்ளர் சரித்.பக்.98);; a caste title of Kallars.

     [கோதண்டம் + புலி + அர்.]

கோதண்டம்

கோதண்டம்1ātaṇṭam, பெ.(n.)

   1. வில்; bow.

     “கனகவரைக் கோதண்டன்” (திருப்போ. சந். தாலாட்டு காப்பு.);.

   2. இராமன் வில்; the bow of Rama.

   3. புருவ நடுவம்; space between eyebrows.

     “அணைவரிய கோதண்ட மடைந்தருளி”(சி.சி. 9:8);.

     [கோ + தண்டம்.]

 கோதண்டம்2ātaṇṭam, பெ.(n.)

   1. பள்ளிச் சிறாரைத் தண்டிக்குந் தொங்கு கயிறு (உ.வ.);; rope or swing suspended in old-time schools for infliction of punishment.

   2. பழங்காலத்தில் பிடிபட்ட குற்றவாளியின் கைகால்களைக் கட்டி தண்டிக்க மரத்தினால் செய்யப்பட்ட ஒர் அமைப்பு; stocks in ancient time used to punish criminals (prisoners);.

   ம.கோதாண்டம்;   க. கோதண்ட;தெ. கோதண்டமு.

     [கோ + தண்டம்.]

கோதண்டவெளி

கோதண்டவெளிātaṇṭaveḷi, பெ.(n.)

   நெற்றிக் கண் (தக்கயாகப்.34,உரை.);;Šiva’s third eye, in the forehead.

மறுவ. கோதண்டவெள்ளம்.

     [கோதண்டம் + வெளி.]

கோதண்டவேர்

 கோதண்டவேர்ātaṇṭavēr, பெ.(n.)

   கணுக்கால்; ankle (சா. அக.);.

     [கோதண்டம் + வேர்.]

கோதண்டை

 கோதண்டைātaṇṭai, பெ.(n.)

   சிற்றூர்ப் பெயர்; name of a village.

     [கோ + தண்டலை – கோத்தண்டலை → கோதண்டை.]

கோதத்தம்

கோதத்தம்ātattam, பெ.(n.)

   1. அரிதாரம்;  yellow orpiment.

   2. ஒரு வெண்தாதுவுப்பு; a white mineral substance, apparently an earthy salt (சா.அக.);.

     [கோ + தத்தம்]

கோதந்தம்

கோதந்தம்ātandam, பெ.(n.)

   1. மாட்டுக்கொம்பு; horn of cattle.

   2. ஆவின் பால்; cow’s tooth (சா.அக.);.

     [கோ + தந்தம்]

கோதந்தி

கோதந்திātandi, பெ.(n.)

   1. தாடை; jaw.

   2. கதுப்பு; chin.

   3. கன்னம்; cheek (சா. அக.);.

     [கொழுது + அந்தி – கொழுதந்தி → கோதந்தி]

கோதனம்

கோதனம்1ātaṉam, பெ.(n.)

   1. ஆவின்கன்று (பிங்.);; calf.

   2 ஆன் (பசுச்); செல்வம்; cows considered as wealth.

     “மாதனம் கோதனங்கள்” (திருவாலவா. 40:4);.

மறுவ: கோதன்னம்.

     [கோ + தனம்.]

கோதன்னம்

 கோதன்னம்ātaṉṉam, பெ.(n.)

   ஆவின் கன்று (பிங்.);; calf(செ.அக.);.

கோதப்பட்டி

 கோதப்பட்டிātappaṭṭi, பெ.(n.)

   தேனி மாவட்டத்துச் சிற்றூர்; a village in Theni Dt.

     [கோதன் + பட்டி.]

கோதமனார்

 கோதமனார்ātamaṉār, பெ.(n.)

   கடைச்சங்கப் புலவருள் ஒருவர் (பாவலர். சரித்.);; a poet in the last Tamil Academy of Sangam age.

     [கோதமன் + ஆர்.]

கோதமன்

கோதமன்ātamaṉ, பெ.(n.)

கெளதமன் பார்க்க;see Koudaman

     “கோதமன் காதலன் கூறன் மேயினான்” (கம்பரா. கார்முக. 11);.

     [கவுதமன் → கோதமன்.]

கோதமாயவா

 கோதமாயவாātamāyavā, பெ.(n.)

   கோதுமை; wheat (சா.அக.);.

     [கோதுமை + யவம்.]

கோதம்

கோதம்1ātam, பெ.(n.)

   1. பொல்லாங்கு; fault.

     “கோதஞ்செய் குடர்கள்” (சீவக. 1583);.

   2. சீதாங்க செய்நெஞ்சு (W.);; a mineral poison.

     [கோது → கோதகம்]

 கோதம்2ātam, பெ.(n.)

   1. சினம்; anger.

     “கோதம்புரி மனத்தார்” (பிரமோத்.13:12);.

   2. குற்றம்; fault;blemish.

   3. வெறுப்பு; hatred aversion.

     [கதம் → கொதம் → கோதம்]

 கோதம்3ātam, பெ.(n.)

கோத்திரம் பார்க்க;see

 Kottiram.

     “நீசகோதமும் நின்றுதித்திட” (மேருமந். 332);.

     [கோத்திரம் → கோதம்]

கோதரணி

 கோதரணிātaraṇi, பெ.(n.)

   ஒருவகைப் பூ; a kind of flower (சா.அக.);.

     [கோது + (அரளி);அரணி.]

கோதரபுட்பி

 கோதரபுட்பிātarabuṭbi, பெ.(n.)

   ஒரு பூடு; a plant (சா. அக.);.

     [கோதரம் + புட்பி.]

கோதரம்

 கோதரம்ātaram, பெ.(n.)

   சுக்கு; dry ginger (சா.அக.);.

     [கோது → கோதரம்.]

கோதரவம்

கோதரவம்ātaravam, பெ.(n.)

   1. உடும்பு; guana.

   2. ஒரு கொடிய நச்சுப்பாம்பு; a very poisonous snake (சா.அக.);.

     [கோது + அரவம்.]

கோதலூத்து

 கோதலூத்துātalūttu, பெ.(n.)

   தேனி மாவட்டத்துச் சிற்றூர்; a village in Theni Dt.

     [கொழிதல் → கோதல் + ஊத்து.]

கோதல்

கோதல்ātal, பெ.(n.)

   1. அழிந்த பண்டம்; decayed or decomposed matter or substance.

   2. முத்தமிடல்; kissing.

   3. எயிற்று நீர்; sucking the lips (சா. அக.);.

     [கொழுது → கோது → கோதல்.]

கோதளங்காய்

 கோதளங்காய்ātaḷaṅgāy, பெ.(n.)

   சமுத்திராப் பழம்; common Indian oak (சா.அக.);.

     [கோதளம் + காய்.]

கோதவாடி

 கோதவாடிātavāṭi, பெ.(n.)

   கோவை மாவட்டத்துச் சிற்றூர்; a village in Kovai dt.

     [கோதன் + (பாடி); வாடி.]

கோதா

கோதா1ātā, பெ.(n.)

உடும்பு: guana.

     [கோது → கோதா.]

 கோதா2ātā, பெ.(n.)

   1. கொம்மட்டி; small water-melon.

   2. நாரத்தை; citron (சா.அக.);.

   ம. கோத; Skt. gðdhå.

     [கோது → கோதா.]

 கோதாātā, பெ.(n.)

   மற்கட்டும் களம்; wrestling ground.

     [U.{} → த.கோதா.]

கோதாகொடு-த்தல்

கோதாகொடு-த்தல்ātākoḍuttal,    4 செ.குன்றாயி. (v.t.)

   ஏமாற்றி விட்டுப் போதல்; to give the slip, play the hoax.

     [U.{}+{} → த.கோதாகொடு-த்தல்.]

கோதாக்கினி

 கோதாக்கினிātākkiṉi, பெ.(n.)

   செழுமலர்க் கொன்றை; a flowering tree of the cassia genus.

     [கோது + (அழகினி); அக்கினி.]

கோதாட்டம்

 கோதாட்டம்ātāṭṭam, பெ.(n.)

கோதாட்டு பார்க்க (வின்.);;see kõdāttu.

     [கொழுது → கோது + ஆட்டம்.]

கோதாட்டு

கோதாட்டு1ādāṭṭudal,    5 செ.குன்றாவி (v.t.)

   1. தீவினை முதலிய குற்றங்களைப் போக்குதல்; to cleanse or purify from sin or dirt.

     “நந்தம்மைக் கோதாட்டி” (திருவாச. 7:17);.

   2. சீராட்டுதல்; to caress, tend with care.

     “குருவி பறவாமற் கோதாட்டி” (பட்டினத்.திருப்பா.17:8);.

     [கொழுது → கோது + ஆட்டு.]

 கோதாட்டு2ātāṭṭu, பெ.(n.)

   1. அழுக்கைப் போக்கித் தூய்மை செய்தல் (சா. அக.);; purifying by removing the dirt.

   2. வருந்தகை; vexing, illtreatment.

   3. வஞ்சிக்கை (W.);; deceit, guile fraud.

   4. குறும்பு விளையாட்டு; mischiveous sport.

     “கோதாட்டொழி” (ஆத்திசூ.);.

மறுவ: கோதாட்டம்.

     [கோது + ஆட்டு.]

கோதாணி

கோதாணி1ātāṇi, பெ.(n.)

   பெருங்குரும்பை; bowstring hemp, stemless plant (சங்.அக.);.

     [கோது + (தாளி); தாணி.]

 கோதாணி2ātāṇi, பெ.(n.)

   கால்நடைகளுக்குத் தீவனம் வைக்கும் நெடுங்கூடை; a long open basket for cattle feed.

     [கோது + (தாழி); தாணி.]

கோதானம்

 கோதானம்ātāṉam, பெ.(n.)

   பத்துவகைக் கொடைகளில் ஒன்றாகிய ஆ(பசு);க்கொடை; gift of a cow, one of ten gifts.

அப்பன் சோற்றுக்கு அழுகிறான். பிள்ளை கும்பகோணத்தில் கோதானம் செய்கிறான் (பழ);.

     [கோ + தானம்.]

கோதாரணம்

கோதாரணம்ātāraṇam, பெ.(n.)

   1. கலப்பை (யாழ்.அக.);.

 plough.

   2. மண்வெட்டி; spade. hoe.

ம. கோதாரணம்.

கோதாரி

கோதாரிātāri, பெ.(n.)

   1. கக்கல்கழிச்சல் நோய்; spasmodic cholera.

   2. கொள்ளைநோய்; epidemic, pestilential disease, as small-pox, scarlet fever.

மறுவ: கோதாரிக் கழிச்சல்.

     [கோது → கோதாரி.]

கோதாரிக் காய்ச்சல்

 கோதாரிக் காய்ச்சல்ātārikkāyccal, பெ.(n.)

பெருவாரிச் சுரம்,

 influenza (சா. அக.);.

     [கோதாரி + காய்ச்சல்.]

கோதாரிக் குரல்

 கோதாரிக் குரல்ātārikkural, பெ.(n.)

   கக்கல் கழிச்சல் (வாந்தி பேதிக்); குரல்; cholera-voice (சா. அக.);.

     [கோதாரி + குரல்.]

கோதாளை

 கோதாளைātāḷai, பெ.(n.)

   கப்பற்குழாயின் வாய் (Naut);; limber hole, mouth of conduit on either side of the kelson to afford a passage for water to the pump-well.

     [கோ + துளை – கோதுளை → கோதாளை.]

கோதாவரி

 கோதாவரிātāvari, பெ.(n.)

கோதாவிரி பார்க்க;see kõdāviri.

   மறுவ;கோதாவிரி.

     [கோதாவிரி → கோதாவரி.]

கோதாவிரி

கோதாவிரிātāviri, பெ.(n.)

   ஆந்திர மாநிலத்தில் பாயும் ஒரு பேராறு (சூடா.);; the river Godavari in Andhra Pradesh.

     “சான்றோர் கவியெனக் கிடந்த கோதாவிரி” (கம்பரா. சூர்ப்ப.1);.

     [கோதை + விரி – கோதாவிரி (கோதை = பெண். விரி : விரிந்து செல்வது.);.]

கோதி

கோதி1āti, பெ.(n.)

   கோதுமை; wheat.

     [கோது → கோதி.]

 கோதி2āti, பெ.(n.)

   நெற்றி; forehead.

     [குது → கொது → கோது → கோதி.]

கோதிகை

கோதிகைātigai, பெ.(n.)

   1. உடும்பு (தைலவ. பாயி. 57);; a big lizard.

   2. முதலை (யாழ்.அக.);; crocodile.

     [கோள் → கோள்து → கோது → கோதிகை.]

கோதிமம்

 கோதிமம்ātimam, பெ.(n.)

   கோதுமை; wheat (சா.அக.);.

   மறுவ;கோதி, கோதமாயவா.

கோதிமுடி-த்தல்

கோதிமுடி-த்தல்ātimuḍittal,    4 செ.கு.வி. (v.i.)

   மயிர்சீவிக்கட்டுதல்; to form a hair-knot.

     [கோதி + முடி-]

கோதில்லாச் சாறு

 கோதில்லாச் சாறுātillāccāṟu, பெ.(n.)

   இலை, காம்பு, செத்தைகள் இல்லாத சாறு; juice free from leaves, strings and other rubbish (சா.அக.);.

     [கோது_+ இல்லா + சாறு.]

கோதில்லாப்புளி

 கோதில்லாப்புளிātillāppuḷi, பெ.(n.)

   காம்புகள் களைந்த புளி; tamarind got rid of strings and other strings (சா.அக.);.

     [கோது + இல்லா + புளி.]

கோது

கோது1ādudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. அலகால் இறகைக் குடைந்து நேராக்குதல்; to peck and adjust with the beak, as feathers.

     “மயில்கோது கயிலாயம்” (தேவா. 1157: 6);.

   2. மயிர்ச்சிக்கெடுத்தல்; to disentangle, as the hair, with the fingers.

     “கோதிச் சிக்கின்றி முடிக்கின்ற…. குழலி” (பெருந்தொ. 1323);.

   3. சிறிது சிறிதாக உண்ணுதல்; to pick, as food in eating;

 to take in small quantities, as birds, sickly or dainty children, bashful persons. குழந்தை சோற்றைக் கோதுகிறது. 4 வெளிச் சிதறுதல்;

 to scatter, spill.

     “கோதிக் குழம்பலைக்குங் கும்பத்தை” (நாலடி,47);.

   5. ஓலையை வாருதல்; to tear in strips, as tender leaves.

   6. தோண்டுதல் (யாழ்ப்.);; to hollow, excavate, scoop out.

ம. கோது

     [கொழுது → கோது.]

 கோது2ātu, பெ.(n.)

   1. சக்கை; refuse, waste, empty kernels of grain, lees, residuum, leavings; fibre, as of a tamarind fruit, sugarcane.

     “மற்றதன் கோதுபோற் போகு முடம்பு” (நாலடி, 34);.

   2. பழ முதலியவற்றின் தோல்; covering, capsule, pod.

     “சங்கெட்கோது” (தைலவ, தைல. 18);.

   3. பூ முதலியவற்றின் நரம்பு; fibrous structure in flowers, etc.

     “கோது குலாவிய கொன்றை” (திருமந், 16);.

   4. குற்றம்; fault, blemish, defect, error.

     “கோதியியல் காமம்” (சீவக. 223);.

   5. பயனின்மை; uselessness.

     “கோது செய்குணக் கோதினுட் கோதனான்” (சீவக, 240);.

   6.நெறிதவறுகை; deviation, deflection.

ம. கோது.

 Fin. kuori (shell, bark, husk, cortex);. Est. koor: Mansi. gör: Jap. kõra. kara. Q. fara.

     [கொழுது → கோது.]

 கோது3ātu, பெ.(n.)

கோதுகம் பார்க்க;see kodugam.

     “வானவர்தங் கோதா” (திவ். பெரியதி. 6.2:9);.

 Mal. Gandum.

     [குதுகலம் → குதுகம் → கோதுகம் → கோது.]

 கோதுātu, பெ.(n.)

   1. கரும்புச் சக்கை; pressed wasste of sugarcane.

   2. இடியாப்பம்(சந்திக்கனி);; boiled rice noodle.

   3. மென்சக்கை கொண்ட கோதுமைத் தினை,

 wheat.

     [கோல்-கோலு-கோது]

 கோதுātu, பெ.(n.)

கோதுகம் பார்க்க;see {}.

     “வானவர் தங்கோதா” (திவ்.பெரியதி.6.2:9);.

     [Skt.kautuka → த.கோது.]

கோது நரம்பு

 கோது நரம்புātunarambu, பெ.(n.)

   செடி, இலை முதலியவற்றின் நரம்பு; filaments of plants and flowers (சா. அக.);.

     [கோது + நரம்பு.]

கோதுகம்

கோதுகம்1ātugam, பெ.(n.)

   உள்ளக் களிப்பு; joy. delight.

     “கோதுக மியாவர் கொண்டாடுவார்” (சூளா. முத். 36);.

     [குதுகலம் → குதுகம் → கோதுகம்.]

 கோதுகம்2ātugam, பெ.(n.)

   கச்சோலம் (சித்.அக.);;  long zedoary.

     [கொழுது → கொழுதுகம் → கோதுகம்.].

 கோதுகம்ātugam, பெ.(n.)

   உள்ளிக்களிப்பு; joy, delight.

     “கோதுக மியாவர் கொண்டாடுவார்” (சூளா.முத்.36);.

     [Skt.kautuka → த.கோதுகம்.]

கோதுகலம்

கோதுகலம்ātugalam, பெ.(n.)

   குதுகலம் விருப்பம்; desiser, longing.

     “கோதுகலமுடைக்குட்டனேயோ” (திவ்.பெரியாழ்.2:9:6);

மறுவ. குதுகம், குதூகலம்.

     [குது → குதுகம் → குதுகலம் → கோதுகலம்.]

 கோதுகலம்ātugalam, பெ.(n.)

கோதுகம் பார்க்க;see {}.

     “கோதுகலமுடைக் குட்டனேயோ” (திவ்.பெரியாழ்.2.9:6);.

     [Skt.{} → த.கோதுகலம்.]

கோதுகுலம்

கோதுகுலம்ātugulam, பெ.(n.)

கோதுகலம் பார்க்க;see kõdu-kalam.

     “கோதுகுலமுடைமபாவாய்” ‘(திவ்.திருப்பா.8);

     [கோது + குலம்.]

கோதுபழம்

 கோதுபழம்ātubaḻm, பெ.(n.)

   புளியம்பழம்; tamarind fruit (சா.அக.);.

     [கோது + பழம்.]

கோதுமம்

 கோதுமம்ātumam, பெ.(n.)

   கோதுமை (யாழ்.அக.);; wheat.

     [கோதும்பை → கோதுமம்.]

கோதுமை

கோதுமைātumai, பெ.(n.)

   ஒருவகைத் தவசம் (பதார்த்த.827);; wheat, triticum vulgare.

ஏழாயிரம் பொன் பெற்ற குதிரை இறப்பைப் பிடுங்கையில் குருட்டுக் குதிரை கோதுமை ரொட்டிக்கு வீங்கினதாம் (பழ);.

ம. கோதூமம்.

     [கோத்தும்பை → கோதுமை.]

 கோதுமைātumai, பெ.(n.)

   ஒருவகைத் தவசம் (பதார்த்த. 827);; wheat, triticum vulgare.

     [Skt.{} → த.கோதுமை.]

கோதுமைஅடை

 கோதுமைஅடைātumaiaḍai, பெ.(n.)

   கோதுமை அடை; bread made of wheat (சா.அக.);.

     [கோதுமை + அடை.]

கோதுமைக்கஞ்சி

கோதுமைக்கஞ்சிātumaikkañji, பெ.(n.)

   1. கோதுமை நொய்யைக் கொண்டு அணியமாக்கப்படும் கஞ்சி; conjee prepared from wheat flour which is taken to check profuse menstruation.

   2. வாற்கோதுமைக் கஞ்சி; barley water (சா.அக.);.

     [கோதுமை + கஞ்சி.]

கோதுமைக்களி

 கோதுமைக்களிātumaikkaḷi, பெ.(n.)

   கோதுமை மாவைத் தண்ணீரிலிட்டுக் கொதிக்க வைத்துக் கிண்டிய களி; pudding prepared from wheat flour by boiling it in water and stirring (சா.அக.);.

     [கோதுமை + களி.]

கோதுமைக்காடி

 கோதுமைக்காடிātumaikkāṭi, பெ.(n.)

   கோதுமைக் கஞ்சியைப் புளிக்க வைத்து அணியமாக்கும் காடி; alcoholic fermentation of wheat conjee (சா.அக.);.

     [கோதுமை + காடி.]

கோதுமைக்கூழ்

 கோதுமைக்கூழ்ātumaikāḻ, பெ.(n.)

   கோதுமை மாவு அல்லது நொய்யைக் கொண்டு அணியமாக்கப்படும் பாயசம்; wheat porridge prepared like wheat pudding, but in a liquid form (சா.அக.);.

     [கோதுமை + கூழ்.]

கோதுமைச்சத்து

கோதுமைச்சத்துātumaiccattu, பெ.(n.)

   1. கோதுமை துகள் (ரவா); அல்லது மாவைத் தண்ணீரி லிட்டுப் பிழிந்தெடுத்த சாறு; liquid essence of wheat pressed and filtered out from a solution of wheat gruel or flour.

   2. கோதுமையில் அடங்கியுள்ள பொருள்கள்; the glutinous starchy substance etc., contained in wheat (சா.அக.);.

     [கோதுமை + சத்து.]

கோதுமைத்தவிடு

 கோதுமைத்தவிடுātumaittaviḍu, பெ.(n.)

   கோதுமையினின்று கழிந்த மேற்றோல்; the husk or outer coat of wheat;

 wheat bran.

     [கோதுமை + தவிடு.]

இது சிறிதளவு மலத்தை இளக்கும். நீரிழிவுக்கும் கொடுக்கலாம். கட்டுக்கட்டவும், வறுத்து ஒத்தடம் கொடுக்கவும் பயன்படும். மார்பு வலி, வயிற்று வலி முதலியன குணமாகும் (சா. அக.);.

கோதுமைநாகம்

 கோதுமைநாகம்ātumainākam, பெ.(n.)

   கோதுமைத் தவசம் போன்ற புள்ளியுடைய பாம்புவகை; a species of cobra with wheat-like patches.

     [கோதுமை + நாகம்.]

கோதுமைப்பாணி

 கோதுமைப்பாணிātumaippāṇi, பெ.(n.)

   கோதுமை மாவைத் தண்ணீரிலிட்டுக் கொதிக்க வைத்துக் கிண்டிய சாரம்; mucilage of starch. It is obtained by boiling wheat flour and water and constantly stirring for a few minutes (சா.அக.);.

     [கோதுமை + பாணி.]

கோதுமைப்பால்

 கோதுமைப்பால்ātumaippāl, பெ.(n.)

கோதுமைச்சத்து பார்க்க;see ködumai-c-cattu.

     [கோதுமை + பால்.]

கோதுமைமணி

கோதுமைமணிātumaimaṇi, பெ.(n.)

   1. கோது மைத் தவசம்; wheat grain.

   2. கோதுமைத் தவசம் போன்ற பொன்மணிகளால் அமைந்த கழுத்தணி; a kind of necklace formed of wheat-like beads of gold.

     [கோதுமை + மணி]

கோதுமைமால்ட்

 கோதுமைமால்ட்ātumaimālṭ, பெ.(n.)

   கோதுமையைத் தண்ணிரில் ஊறப் போட்டு முளைக்கும்படிவைத்து பிறகு எடுத்துலர்த்திய தவசம்; wheat-steeped in water tillitgerminates and then dried (சா.அக.);.

மறுவ முளைக்கோதுமை

     [கோதுமை+மால்ட் E மால்ட் →த. குழ்]

கோதுமைமாவு

 கோதுமைமாவுātumaimāvu, பெ.(n.)

   கோதுமையை அரைத்த மாவு; flour obtained by grinding wheat in mills (சா.அக.);.

     [கோதுமை+மாவு]

கோதுமையரவை

 கோதுமையரவைātumaiyaravai, பெ.(n.)

   கோதுமையரிசியை உடைத்துப் பிரித்தெடுத்த நுண்ணியநொய்; fine crushed particles prepared from the heart of wheat (சா.அக.);.

     [கோதுமை + அரவை. அரவை → ரவை → ரவா எனத் திரிபுற்றது.]

கோதுமையரிசி

 கோதுமையரிசிātumaiyarisi, பெ.(n.)

   கோதுமையை உடைத்துப் பிரித்தெடுத்த பருத்த நொய்; large particles of crushed wheat cooked and used like rice for eating (சா.அக.);.

     [கோதுமை + அரிசி.]

கோதுமைரவா

 கோதுமைரவாātumairavā, பெ.(n.)

கோதுமையரவை பார்க்க;see kõdumai-aravai.

     [கோதுமை + (அரவை); ரவா.]

கோதும்பி

 கோதும்பிātumbi, பெ.(n.)

   கோத்தும்பீ என்ற தொடரைப் பாட்டின் ஈறுதோறுங் கொண்ட திருவாசகப் பதிகம்; a poem in Tiruvâsagam with the refrain kottumbi at the end of each verse.

     [கோத்தும்பி → கோதும்பி.]

கோதும்பை

 கோதும்பைātumbai, பெ.(n.)

   கோதுமை (உ.வ.);;  wheat.

     [கோது → கோதும்பை.]

கோதுவி-த்தல்

கோதுவி-த்தல்ātuvittal,    1. பி.வி.(v.cau.)

நீக்குவித்தல்:

 to remove. root out. Exterminate.

     “வினையாயின கோதுவித்தாய் நீறெழு” (தேவா. 1139:2);.

     [கோது → கோதுவி.]

கோதுவை

கோதுவைātuvai, பெ.(n.)

   அடமானம்; pledge.

     “மடத்துச் சொத்துக்கள் யாதேனும் கோதுவை வைக்க விக்கிரயஞ் செய்ய தானங் கொடுக்க எவ்வித சுதந்திரமும் கொள்ளக் கூடாது”[செ.மா.கல்.1967/171,18).

     [கொதுவை → கோதுவை.]

கோதூமம்

கோதூமம்ātūmam, பெ.(n.)

   கோதுமை; wheat.

     “நலம்தகு பொருள் கோதுமம்” (திருவானைக். நானவி. 25);.

     [கோதுமை → கோதுமம்.]

 கோதூமம்ātūmam, பெ.(n.)

கோதுமை பார்க்க;see {}.

     “நலத்தகு பொருள் கோதூமம்” (திருவானைக் நானவி.25);.

     [Skt.{} → த.கோதூமை.]

கோதூர்

 கோதூர்ātūr, பெ.(n.)

   நாமக்கல் மாவட்டத்துச் சிற்றூர்; a village in Namakkal Dt.

     [கோது + ஊர்.]

கோதூளி

 கோதூளிātūḷi, பெ.(n.)

   வீட்டுக்குத் திரும்பி வரும் மாடுகளின் நடையால் துளியெழுங் காலமாகிய மாலை நேரம் (பிங்.);; evening, as the time when dust is raised by home returning cattle, considered auspecious.

   மறுவ: கோதுளி சமயம்;கோதூளிலக்கினம்.

     [கோ + துளி.]

 கோதூளிātūḷi, பெ.(n.)

   சாயுங்காலம் (பிங்.); வீட்டுக்குத் திரும்பி வரும் ஆசுக்களின் நடையால் தூளியெழுங் காலம்; evening, as the time when dust is raised by home returning cattle, considered auspicious.

     [Skt.{} → த.கோதூளி.]

கோதூளிசமயம்

 கோதூளிசமயம்ātūḷisamayam, பெ.(n.)

கோதூளி பார்க்க;see koduli.

     [கோதூளி + சமயம்.]

 கோதூளிசமயம்ātūḷisamayam, பெ.(n.)

கோதூளி பார்க்க;see {}.

     [Skt.{}+samayam → த.கோதூளிசமயம்.]

கோதேனுகம்

 கோதேனுகம்ātēṉugam, பெ.(n.)

   சதையொட்டியிலை; the leaf of an unknown plant supposed to unite the two cut portions of flesh, as in incision (சா. அக.);.

     [கோ + தேனுகம்.]

கோதேரன்

 கோதேரன்ātēraṉ, பெ.(n.)

   காவற்காரன் (யாழ்.அக.);; protector.

     [கோ + தேரன் (தேர்க்காரன்);.]

கோதை

கோதை1ātai, பெ.(n.)

   1. பெண்களின் தலைமயிர் (பிங்.);; women’s hair.

   2. ஆண்டாள்; a Vaisnava female saint.

   3. பூமாலை; garland of flowers worn by women.

     “கூந்தல் வேய்ந்த கோதையும்”(பெருங். உஞ்சைக். 48.77);.

   4. முத்தாரம்; garland of pearls.

     “கோதை சூடிப் பூண்சுமந்து” (பதிற்றுப். 88:31);.

   5. ஒழுங்கு (பிங்.);; order, Regularity, row, series.

   6. பெண்; woman, beautiful as a garland.

     “நறுமலர்க் கோதைக்கு நல்லற முரைத்து” (மணிமே.பதி. 81);. 7.பேய்;

 goblin.

     “துரகமுகக் கோதைக்கிடை” (திருப்பு. 137);.

     [கோது → கோதை.]

 கோதை2ātai, பெ.(n.)

   சேரர் பட்டப் பெயர்களுளொன்று; a title of the Cera kings.

     “மாவள் ளீகைக் கோதையும்”(புறநா.172: 10);.

ம. கோத.

     [கோது → கோதை.]

 கோதை3ātai, பெ.(n.)

   காற்று (பிங்.);; wind.

     [கூதை → கோதை.]

 கோதை4ātai, பெ.(n.)

   1. உடும்பு (பிங்.);; guana.

   2. வில்லாளர் கையிற் பூணும் தோலுறை; glove of iguana leather, worn by archers on the left fore-arm to protect it from being injured by the bowstring.

     “மூரிச் சிலையு முரட்கோதை யுங்கட்டி” (பாரதவெண். 776);.

   3. மரக்காற்பறை; a cylindrical drum.

     “மரக்கா லன்ன வொருவாய்க் கோதை” (கல்லா. 8);.

   ம.கோத; Skt. gðdhå

     [கோது → கோதை.]

 கோதை5ātai, பெ.(n.)

   கெளதமி என்னும் பழங்கால ஆற்றின் பெயர் (பிங்.);; name of an ancient river kaudami.

     [கோது → கோதை.]

 கோதை1ātai, பெ.(n.)

   1. உடும்பு (பிங்.);; iguana.

   2. வில்லாளர் கையிற் பூணும் தோலுறை; glove of iguana leather, worm by archers on the left fore-arm to protect it from being injured by the bowstring.

     “மூரிச் சிலையு முரட்கோதை யுங்கட்டி” (பாரதவெண்.776);.

   3. மரக்காற்பறை; a cylindrical drum.

     “மரக்கா லன்ன வொருவாய்க் கோதை” (கல்லா.8);.

     [Skt.{} → த.கோதை.]

 கோதை2ātai, பெ.(n.)

   கௌதமி என்னும் ஆறு (பிங்.);; an ancient river.

கோதைக்குடி

கோதைக்குடிātaikkuḍi, பெ.(n.)

   இலால்குடி வட்டம், ஆலம்பாக்கத்திற்கு அருகிலிருந்த சிற்றூர்; a small village near Alambakkam in Lalgudi taluk.

     “கொங்குலாங் கோதைய்க்குடி உய்ய வந்தாள் தன் தம்பிரானுக்கு” (SII.XXVI.778-3 pg.564);.

     [கோதை (சேரன்); + குடி.]

கோதைமங்கலம்

 கோதைமங்கலம்ātaimaṅgalam, பெ.(n.)

   திண்டுக்கல் மாவட்டம் பழனியின் அருகில் அமைந்த ஓர் ஊர்; a village situated near Palani in Thindukkal Dt.

     [கோதை + மங்கலம்.]

கடை ஏழு வள்ளல்களுள் ஒருவனான பேகன் தனது பாத்தை கோதை என்பவளுக்கு இலவயமாகக் கொடுத்தமையால் இப் பெயர் பெற்றதாம்.

கோதைமலை

 கோதைமலைātaimalai, பெ.(n.)

   சேரன் மலை; a hill of the céra king.

     [கோதை+மலை]

கோதைமாதவி

 கோதைமாதவிātaimātavi, பெ.(n.)

   மாலைபோலப் பூக்கும் ஒருவகைக் குருக்கத்தி; a species of kurukkatti (சா.அக.);.

     [கோதை + மாதவி.]

கோதையன்

கோதையன்ātaiyaṉ, பெ.(n.)

   பயனில்லாப் பொருளைக் கூறுவோன்; man of empty words.

     “எந்நாக் கோதையர்க் கூற லுண்டே” (சீவக. 3098);.

     [கோது → கோதையன்.]

கோதையர்

 கோதையர்ātaiyar, பெ.(n.)

   மாதர்; women.

     [கோது → கோதையர்.]

கோதையாள்வியான புரவுவரிநங்கை

கோதையாள்வியான புரவுவரிநங்கைātaiyāḷviyāṉaburavuvarinaṅgai, பெ.(n.)

   திண்டிவனம் வட்டாரத்திலுள்ள பெருமுக்கல் ஊரில் உள்ள கோயில்; temple of the Perumukkal in Tindvanam taluk.

     “இக்கோயில் தேவரடிமகள் கோதையாள்வியான புரவுவரி நங்கை வினாயகப் பிள்ளையார்க்கு” (த.நா.தொ.ஆய்வு. தொடர்.எண். 114/1992 கல்.46,4);.

     [கோதை + ஆள்வி + ஆன + புரவுவரி + நங்கை.]

கோதையிருப்பு

 கோதையிருப்புātaiyiruppu, பெ.(n.)

   திண்டுக்கல் மாவட்டத்துச் சிற்றூர்; a village in Thindukkal Dt.

     [கோதை + இருப்பு.]

கோதையூர்

 கோதையூர்ātaiyūr, பெ.(n.)

   குமரி மாவட்டத்துச் சிற்றூர்; a village in Kanyakumari Dt.

     [கோதை + ஊர்.]

கோத்தகிரி

 கோத்தகிரிāttagiri, பெ.(n.)

   நீலகிரி மாவட்டத்தில் அமைந்த ஓர் ஊர்; a village situated in Nilgiris District.

     [கோத்தர் + கிரி → கோத்தகிரி. கேரி → கிரி]

கோத்தர்கள் வாழும் இடமாதலால் இப் பெயர் பெற்றது.

கோத்தக்கொடி

 கோத்தக்கொடிāttakkoḍi, பெ.(n.)

   இலந்தை;  jujube (சா.அக.);.

     [கோத்தல் + கொடி.]

கோத்தணி

 கோத்தணிāttaṇi, பெ.(n.)

கொடிமுந்திரி பார்க்க;see kodi-mundiri.

     [கொத்து + அணி – கொத்தணி → கோத்தணி.]

கோத்தணிகை

 கோத்தணிகைāttaṇigai, பெ.(n.)

கோத்தணி பார்க்க;see kõttaņi.

     [கோத்தணி → கோத்தணிகை.]

கோத்தந்தம்

கோத்தந்தம்1āttandam, பெ.(n.)

   1. மாட்டுக் கொம்பு; horn of cattle.

   2.. மாட்டுப்பல்; tooth of cow.

மறுவ. கோதந்தம்.

     [கோ + தந்தம்.]

கோத்தனம்

 கோத்தனம்āttaṉam, பெ.(n.)

   நாற்பது சரமுள்ள முத்துமாலை; pear garland is having forty strings.

     [கோ + தனம்.]

கோத்தனி

 கோத்தனிāttaṉi, பெ.(n.)

கொடிமுந்திரி பார்க்க: see kodi-mundiri.

     [கோத்தணி → கோத்தனி.]

கோத்தபுட்பகம்

 கோத்தபுட்பகம்āttabuṭbagam, பெ.(n.)

   செம்மரம்; redwood;

 red cedar (சா.அக.);.

     [கோத்தல் + புட்பகம்.]

கோத்தமாலை

 கோத்தமாலைāttamālai, பெ.(n.)

   தொடையல்; garland.

     [கோத்த + மாலை.]

கோத்தம்

 கோத்தம்āttam, பெ.(n.)

   நீலமலையில் பேசப்படும் திருந்தாத் திராவிட மொழிகளுள் ஒன்று; one of the uncultivated the Dravidian languages, which is spoken at Nilgiri hills.

     [கோ → கோத்தம்.]

கோத்தரி

கோத்தரி2āttari, பெ.(n.)

   மலை; mountain.

     “கொங்கின் புசககோத்திரி” (திருப்பு: 1187);.

     [குவடு → கோடு → கோ → கோத்து → கோத்திரி.]

கோத்தர்

கோத்தர்āttar, பெ.(n.)

   நீல மலைவாழ் பழங்குடியினத்தவர்; Kotas a tribe on the Nilgiris District.

கோத்தகிரி முதலிய ஏழு ஊர்களில் மொத்தம் சில நூறு கோத்தர் வாழ்கின்றனர். 1981-ல் 492 பேர் இருந்தனர். கோத்தர் தம் ஊர்களைக் ‘கோகால்’ என அழைக்கின்றனர்.

கோத்தர்மொழி

 கோத்தர்மொழிāttarmoḻi, பெ.(n.)

கோத்தம் பார்க்க;see kõttam.

     [கோத்தர் + மொழி]

கோத்தற்கோவை

 கோத்தற்கோவைāttaṟāvai, பெ.(n.)

   காக்கைப் பாலை; esculent-leaved false kamela (சா.அக.);.

     [கோத்தல் + கோவை]

கோத்திகவாசனம்

 கோத்திகவாசனம்āttigavācaṉam, பெ.(n.)

   முழந்தாளைக் சுண்டிக் குளசிரண்டில் பதியவைத்து உட்கார்ந்திருத்தல்; a posture in which the legs are folded crosswise and the inward joints of the feet made to rest in the flexure on either side (சா.அக.);.

     [குத்தகம் → கோத்திகம் + ஆசனம்.]

கோத்திரகம்

கோத்திரகம்āttirakam, பெ.(n.)

   1. தொட்டி பாடாணம்; a prepared arsenic.

   2. கொடி முந்திரிகை,

 commongrape.

   3.நெட்டிப்புல்,

 sola pith grass, Aeschynomens aspera.

   4. சிறு வரகு; kora milleti paspalum scrobiculatum.

   5. மறு பிறப்புக்குக் காரணமான கருமம்; karma determining re-birth.

   6. மலை; hill, mountain (சா.அக.);.

     [கோணம்+திரகம்]

கோத்திரசன்

 கோத்திரசன்āttirasaṉ, பெ.(n.)

   ஒரு குலவழியில் பிறந்தவன்; one born in the same {} or family.

     [Skt.{} → த.கோத்திரசன்.]

கோத்திரப்பெயர்

கோத்திரப்பெயர்āttirappeyar, பெ.(n.)

   குடிப்பெயர் (பன்னிருபா. 146);; patronymic.

     [கோத்திரம் + பெயர்.]

 கோத்திரப்பெயர்āttirappeyar, பெ.(n.)

   குடிப்பெயர் (பன்னிருபா.146);; patronymic.

     [Skt.{} → த.கோத்திரம் + பெயர்.]

கோத்திரமின்மை

 கோத்திரமின்மைāttiramiṉmai, பெ.(n.)

   அருகன் எண்குணங்களுள் மறுபிறப்புக்குரிய வினையில்லாமை (பிங்.);; condition of being free from karma that causes re-birth, one of arugan-en-kunam.

     [கோத்திரம் + இன்மை.]

 கோத்திரமின்மைāttiramiṉmai, பெ.(n.)

   அருகன் எண்குணங்களுள் மறுபிறப்புக்குரிய முன் வினையில்லாமை (பிங்.);; condition of being free from Karma that causes rebirth, one of arukan-en-kunam.

     [Skt.{} → த.கோத்திரம் + இன்மை.]

கோத்திரம்

கோத்திரம்1āttiram, பெ.(n.)

   1. தொட்டி செய் நஞ்சு; a prepared arsenic.

   2. கொடிமுந்திரிகை; common grape.

   3. நெட்டிப்புல்; sola pith grass.

   4. மறுபிறப்பிற்குக் காரணமான தீவினை; karma determining re-birth.

   5. நிலம்; earth.

   6. காடு; forest.

   7. குடை; umbrella (சா.அக.);.

     [கோ + திரம்.]

 கோத்திரம்2āttiram, பெ.(n.)

   1. மரபுவழி; lineage

   2. தலைமுறை; generation.

   3. கால்வழி; lineage, family.

     “எவ்வூரெக் கோத்திரத்தீர்” (பெருங். மகத. 6:185);.

     [கொத்து → கோத்து → கோத்திரம்.]

 கோத்திரம்3āttiram, பெ.(n.)

   1. மாட்டுக்கொட்டில்; protection or shelter for cows, cow-pen, cowshed stable for cattle.

   2.. மாட்டுமந்தைக்குரிய முனிவரிடம் பயின்ற மாணவரைச் சுட்டும் சொல்; a word denoting the owner-cum teacher of a cow-pen, who considered to be the lineage head of a student’s heritage.

     “கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர்”

   3. பிராமணரின் 49 குடியிருப்புகளில் ஒன்று; one of the 49 Gotras of Brahmins.

     [கோ + திரம் → கோத்திரம். ஒ.நோ. மா + திரம் → மாத்திரம். கோ = மாடு, ஆவு, ஆன்,கோத்திரம் = மாட்டுமந்தை, மாட்டுத்தொழுவம்.]

த. கோத்திரம் → skt. Götra.

   மாட்டுக் கொட்டிலைக் குறித்த இச்சொல் வடமொழியில் Gotra எனவும் Gotrai எனவும் வழங்குகிறது. எந்த மாட்டுக் கொட்டிலுக்கு உரிமையுடைய முனிவரிடம் ஒரு மாணவன் பயின்றானோ அவன் அந்த முனிவரின் பெயரைத் தன் குடிப்பெயராகக் கொள்வது ஆரியரின் மரபாகும். இதனை, an affix used for forming a Patr. Li; a tribe, subdivision in Brahman Caste 49 Götras are reckoned and supposed to be sprung from and named after celebrated teachers as Sandilya, kasyapa, Gauthama, Bharadvāja etc., என்று மாணியர் வில்லியம்சு வடமொழி அகரமுதலியில் குறிப்பிடுகிறார்.

 கோத்திரம்4āttiram, பெ.(n.)

சிறுவரகு (மலை.);:

 kora millet.

     [கோத்து = மலை. கோத்து → கோத்திரம்.]

 கோத்திரம்āttiram, பெ.(n.)

கோத்திரை (சூடா.);;see {}.

கோத்திரலாகிகம்

 கோத்திரலாகிகம்āttiralākikam, பெ.(n.)

   முசுட்டை; clove-scented creeper, Rivea hypocrateriformis(சா.அக.);.

கோத்திரவன்

 கோத்திரவன்āttiravaṉ, பெ.(n.)

   வரகு (பிங்.);; common millet.

     [Skt.{} → த.கோத்திரவம்.]

கோத்திரவம்

 கோத்திரவம்āttiravam, பெ.(n.)

   ஒருவகைத் தவசம் (தானியம்);; common millet, Paspalum scrobiculatum (செ.அக.);.

     [கோ+திரவம்]

கோத்திரவிருட்சம்

 கோத்திரவிருட்சம்āttiraviruṭcam, பெ.(n.)

   முண்டக மரம்; an unknown tree (சா.அக.);.

கோத்திரி

கோத்திரி1āttiri, பெ.(n.)

   1. கொடிமுந்திரிகை; grape vine.

   2. முசுமுசுக்கை; bristly bryony.

     [கோத்து → கோத்திரி.]

 கோத்திரி3āttiri, பெ.(n.)

   தெய்வங்களுக்குப் படைப்பிட்டு அதன் பேரில் நாட்டும் திரி அல்லது சிறு பந்தம் (நாஞ்சில்);; burning wick or small torch placed on an offering of cooked rice to a deity.

ம. கோத்திரி.

     [கோ + திரி.]

 கோத்திரி1āttiri, பெ.(n.)

   நற்குலத்தோள்; man of noble birth.

     “பரத்துவசனுக் குறவுரிய கோத்திரி” (பாரத.பதினான்காம்.200);.

கோத்திரிகை

கோத்திரிகைāttirigai, பெ.(n.)

   1. கொடி முந்திரிகை; grape vine.

   2 முசுமுசுக்கை; rough bryony (சா.அக.);.

     [கோத்து → கோத்திரிகை.]

கோத்திரேயம்

 கோத்திரேயம்āttirēyam, பெ.(n.)

   வெண்பருத்தி; white cotton (சா.அக.);.

கோத்திரை

கோத்திரைāttirai, பெ.(n.)

   1. நிலம் (பிங்.);

 earth.

   2. மலை; mountain.

     [கோ → கோத்து (மலை); → கோத்திரை.]

 கோத்திரைāttirai, பெ.(n.)

   நிலம்; earth.

     [Skt.{} → த.கோத்திரை.]

கோத்திழை-த்தல்

கோத்திழை-த்தல்āttiḻaittal,    4 செ.குன்றாவி.(v.t.)

   பாய், கூடை முதலியவற்றைப் பழுதுபார்த்தல்; to patch up a hole or rent, as in a mat, a basket.

     [கோ → கோர் → கோத்து + இழை-.]

கோத்து

 கோத்துāttu, பெ.(n.)

   படைத்துறை தங்குமிடம்; cantonment (செ.அக.);.

கோத்துக்கொடு-த்தல்

கோத்துக்கொடு-த்தல்āttukkoḍuttal,    4 செ.குன்றாவி (v.t.)

   1 பிறருக்கு ஊசியில் நூலைக் கோத்துக் கொடுத்தல்; to thread a needle and pass it to another.

   2. இருவருக்குள் பகையுண்டாகும்படி ஒருவர் கூற்றை மற்றவர்க்கு மாறுபடுத்திக் கூறுதல் (வின்.);; to tell tales and create enmity between two persons.

     [கோர் → கோத்து + கொடு-.]

கோத்தும்பி

கோத்தும்பிāttumbi, பெ.(n.)

   1 அரசவண்டு; king of beetle.

   2. ‘கோத்தும்பீ’ என்ற தொடரைப் பாட்டின் ஈறுதோறுங் கொண்ட திருவாசகப் பதிகம்; a poem in Tiruvasagam with the refrain köttumbs at the end of each verse.

     [கோ + தும்பி.]

கோத்துவாங்கு

கோத்துவாங்கு1ādduvāṅgudal,    5 செ.கு.வி. (v.i.)

   ஆடைக்கரையை வேறு நூலில் தனியாக நெய்தல்; to weave the borders of a cloth with threads of a different colour.

 கோத்துவாங்கு2āttuvāṅgu,    5 செ. குன்றாவி. (v.t.)

   கோணி முதலியன தைத்தல்; to do coarse sewing as of gunny bags, mats.

     [கோத்து + வாங்கு-.]

கோத்துவிடு-தல்

கோத்துவிடு-தல்ādduviḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   1.துன்பத்துக்கு உள்ளாகுதல்; to bring into difficulties.

   2. பகைமூட்டுதல் (வின்.);; to show discord, create enmity.

     [கோத்து + விடு-.]

கோத்தை

கோத்தைāttai, பெ.(n.)

   1. பழுது; defect. Blemish, flaw.

     “கோத்தை யுண்டாமோ” (பரிபா. 175:5);.

   2. குருடன்; a blind person.

   3. பீளை; rheum. secretion from the eyes.

   4. அழிம்பன்; destroyer.

   5. ஆண்நரி; male jackal.

 Gk. Kakos.

     [கோது → கோத்து → கோத்தை.]

கோத்தொட்டுண்ணப்பாலது

 கோத்தொட்டுண்ணப்பாலதுāddoṭṭuṇṇappāladu, பெ.(n.)

   அரசன் உரிமையுடன் பெற்று நுகர்தற்குரியதான இறைவரி கடமை முதலிய வரி வகைகள்; land revenue etc lawfully accruing to a king,

     “ஊராட்சியும் வட்டி நாழியும் உள்ளிட்டுக் கோத்தொட்டுண்ணப் பால தெவ்வகைப் பட்டதும் கோக்கொள்ளாதேய் பள்ளிச் சந்தத்துக்கேய் பெறுவதாகவும்” (பெரிய லெய்டன் செப்பேடுகள்.);.

     [கோ (அரசன்); + தொட்டு + உண்ணற்பாலது.]

கோநகர்

கோநகர்ānagar, பெ.(n.)

   1. தலைநகர்; capita city.

     “கோநக ரெதிர்கொள” (சிலப்.27:255);

   2.. கோயில்; temple.

     “மாயோன் கோநக ரெட்டும் (கந்தபு. திருநகரப். 88);.

     [கோ + நகர்]

அாசனின் தலைநகர் அரசிருக்கை, கோநகர் படைவீடு என்னும் பெயர்களுள் ஒன்றால் அழைக்கப்பெற்றது இவற்றுள் அரசிருக்கை என்பது அரசன் நிலையாக வாழு நகரையே குறிக்கும். கோநகர் என்பது அரச குடும்பத்தின இருந்து ஆளும் நகரையும், படைவீடு என்பது படை நிறுத்தப்பெற்று அாசன், நாடுகாவல் சுற்றும்போக்கிக தங்கக்கூடிய நகரையும் குறிப்பது முண்டு (பழந்தமிழாட்சி. பக் 12 → 13

கோநசம்

 கோநசம்ānasam, பெ.(n.)

   ஒருவகைப் பாம்பு (யாழ்.அக.);; a kind of snake.

     [கோ + (நாசம்);நசம்.]

கோநாகசர்ப்பம்

 கோநாகசர்ப்பம்ānākasarppam, பெ.(n.)

   மிக்க வெய்யிலினாலும், அலைச்சலினாலும் அடிபட்டு பசுக்களின் மூக்கிலிருந்துண்டாகிப் பிறகு வெளிப்பட்டுத் திரிவதாகக் கருதப்பட்ட ஒருவகை நாகம்; a kind of cobra imagined to be originating from the nostrils of the cow knocking about in the scorching sun and exhausted by fatigue (சா.அக.);.

மறுவ. கோநசம்.

கோநாக்கிலை

 கோநாக்கிலைānākkilai, பெ.(n.)

   ஆன்நாக்கிலை; a plant, the leaves of which resemble the tongue of the cow (சா.அக.);.

     [கோ + நாக்கு + இலை]

கோநாதன்

கோநாதன்ānātaṉ, பெ.(n.)

   1. எருது; a bug (எருது);.

   2. இடையன்; a shepherd.

     [கோ + நாதன்.]

கோநாய்

கோநாய்ānāy, பெ.(n.)

   1. ஆண்நரி; male jackal.

   2. ஒநாய்; wolf.

     “கோநாயினம் வெரூஉம் வெற்ப” (பழ.292);. ஆட்டுக்கிடையிலே கோநாய் புகுந்ததுபோல் (பழ);.

கோநாய்

     [கோ + நாய்.]

கோநிலையம்

 கோநிலையம்ānilaiyam, பெ.(n.)

   அரசமனை; palace.

     [கோ + நிலையம்.]

கோநீர்

 கோநீர்ānīr, பெ.(n.)

   ஆன் (பசு); மூத்திரம்; cow’s urine (சா.அக.);.

மறுவ. கோமியம்.

     [கோ + நீர்.]

கோநெய்

 கோநெய்āney, பெ.(n.)

   ஆன் (பசு); நெய்; cow’s ghee (சா.அக.);.

     [கோ + நெய்.]

கோநொந்தோலி

 கோநொந்தோலிānondōli, பெ.(n.)

   நொந்தோலி மீன்வகையில் பெரிய மீன் (மீனவ.);; a kind of big fish by name nondoli.

     [கோ + (நெய்த்தோலி); நொந்தோலி.]

கோநோக்கம்

 கோநோக்கம்ānōkkam, பெ.(n.)

   கண்டங் கத்தரி; a thorny plant which bears small yellow fruits (சா.அக.);.

     [கோ + (நூக்கம்); நோக்கம்.]

கோந்தச்சார்

 கோந்தச்சார்āndaccār, பெ.(n.)

   அற்பன்; an insignificant contemptible person.

     [கோந்தி + சார் – கோந்திச்சார் → கோந்தச்சார். கோந்தி = குரங்கு.]

கோந்தனை

 கோந்தனைāndaṉai, பெ.(n.)

   பேய்க் கொம்மட்டி; colocynth, climber.

     [கோது → கோந்து → கோந்தனை.]

கோந்தளங்காய்

கோந்தளங்காய்āndaḷaṅgāy, பெ.(n.)

   1. குறு தேங்காய்; unripe coconut.

   2. சமுத்திராப்பழம்; seaside Indian oak.

     [கோந்தளம் + காய்.]

கோந்தளாகிகம்

 கோந்தளாகிகம்āndaḷāgigam, பெ.(n.)

   முயற்புல்; hare grass (சா.அக.);.

     [கோந்தளம் + ஆகிகம்.]

கோந்தி

 கோந்திāndi, பெ.(n.)

   குரங்கு; monkey.

   க., து., நா. கோதி;   தெ. கோதி, க்ரோதி;கட. கோதி, கோந்தி.

     [தெ.கோடி → கோந்தி]

கோந்திக்குணம்

 கோந்திக்குணம்āndikkuṇam, பெ.(n.)

   குரங்குக் குறும்பு; apishness, foolery (சா.அக.);.

     [கோந்தி + குணம்.]

கோந்து

 கோந்துāndu, பெ.(n.)

   பிசின்; gun.

தெ.கோந்து

     [U.gond → த.கோந்து.]

கோந்துத்தான்

 கோந்துத்தான்ānduttāṉ, பெ.(n.)

பிசின் ஏனம் (C.G.);

 gum-pot, gum-bottle.

     [U.{} → த.கோந்துத்தான்.]

கோந்துரு

கோந்துரு1ānduru, பெ.(n.)

   1. பூட்டனுக்குப் பாட்டன் (யாழ்ப்.);; ancestor in the fifth line, great grandfather’s grandfather (J.);.

   2. கேலி எள்ளல்; ridicule (W.);.

     [கொந்துள் → கோந்துள் → கோந்துரு.]

 கோந்துரு2ānduru, பெ.(n.)

   வஞ்சகம் (யாழ்.அக.);; duplicity.

     [கோது → கோந்து → கோந்துரு.]

கோந்துலா

 கோந்துலாāndulā, பெ.(n.)

   மராட்டியப் பிச்சைக்காரர் பயன்படுத்தும் பறைவகை (இ.வ.);; a kind of musical drum used by Mahratta beggars.

     [மரா. கோண்தல → கோந்துலா.]

 கோந்துலாāndulā, பெ.(n.)

   மராட்டியப் பிச்சைக்காரர் பயன்படுத்தும் பறைவகை (இ.வ.);; a kind of musical drum used by Mahratta beggars.

     [Mhr.{} → த.கோந்துலா.]

கோனகப்பாடி

 கோனகப்பாடிāṉagappāṭi, பெ.(n.)

   நாமக்கல் மாவட்டத்துச் சிற்றூர்; a village in Namakkal Dt.

     [கோனகன் + பாடி.]

கோனடிதொடு-தல்

கோனடிதொடு-தல்āṉaḍidoḍudal,    12 செ.கு.வி. (v.i.)

   அரசனடிமேல் ஆணையிடுதல்; to swear upon king’s feet.

     “உசாவுவங் கோனடி தொட்டேன்” (கலித். 94:36);.

     [கோன் + அடி + தொடு-.]

கோனாகவன்

 கோனாகவன்āṉākavaṉ, பெ.(n.)

யமன்,

 God of death (சா.அக.);.

கோனாகுளம்

 கோனாகுளம்āṉākuḷam, பெ.(n.)

   இராமநாதபுரம் மாவட்டத்துச் சிற்றூர்; a village in Ramanadhapuram Dt.

     [கோனான் + குளம்.]

கோனாடு

கோனாடு1āṉāṭu, பெ.(n.)

   சோணாட்டு உட்பிரிவுகளுளொன்று (புறநா. 54);; a division of Cõlā country.

     [கோன் + நாடு.]

 கோனாடு2āṉāṭu, பெ.(n.)

   புதுக்கோட்டைப் பகுதியில் முற்காலத்தில் இருந்த நிலப்பரப்பு (பிற்.சோழ.வரலாறு-சதாசிவ பண்டாரம் ப.6);; a region around Pudukkottai in ancient times.

     [கோன் + நாடு.]

சோழநாட்டிற்கும் பாண்டிய நாட்டிற்கும் இடைப்பட்ட பகுதியில் இருந்த நாடு. கொடும்பாளூர் இதன் தலைநகர். இருக்குவேளிர் எனும் மரபினர் இப் பகுதியை ஆட்சி செய்தனர்.

கோனாட்டுஎறிச்சலூர்மாடலன்மதுரைக்

 கோனாட்டுஎறிச்சலூர்மாடலன்மதுரைக்āṉāṭṭueṟiccalūrmāṭalaṉmaturaik, பெ.(n.)

   கடைக் கழகப் புலவர்; a poet of sangam age.

சேரமன் குட்டுவன்கோதை முதலியோரைப் பாடியுள்ளார் (அபி.சிந்);.

கோனான்

கோனான்āṉāṉ, பெ.(n.)

   இடையர் பட்டப்பெயர்; title of the Idaiyar caste.

     “எந்தக் கோனான்றன் கையிற்கொடுத்தானோ”(விறலிவிடு. 703);.

தெ. கோனாரி.

     [கோ ஆனிரை, மாடு, கோ → கோன் → கோனான்.]

கோனாப்பட்டு

 கோனாப்பட்டுāṉāppaṭṭu, பெ.(n.)

   புதுக்கோட்டை மாவட்டத்துச் சிற்றூர்; a village in Pudukkottai Dt.

     [கோனான் + பட்டு.]

கோனார் கரசு.

 கோனார் கரசு.āṉārkaracu, பெ.(n.)

   இடையரில் ஒரு வகையர்; sect of people in herdimen community.

மறுவ. கோவலர்.

     [கோ-கோன் + ஆர்.]

கோனி

 கோனிāṉi, பெ.(n.)

   பூவாது காய்க்கும் மரம்; a tree bearing fruit without showing flowers (சா.அக.);.

     [கோலி- கோனி]

கோனிச்சி

 கோனிச்சிāṉicci, பெ.(n.)

   இடைச்சி (யாழ்.அக.);; a woman of Idaiyar caste

     [கோனான் (ஆ.பா.); → கோனிச்சி (பெ.பா.);.]

கோனிப்பூடு

 கோனிப்பூடுāṉippūṭu, பெ.(n.)

   சணல் (சித்.அக.);; Indian hemp. jute

     [கோனி + பூடு.]

கோனியக்கனி

 கோனியக்கனிāṉiyakkaṉi, பெ.(n.)

   கோனிப் பூண்டியன்; hemlock fruit (சா.அக.);.

     [கோனி+அம்+கனி]

கோனிற்கொடி

 கோனிற்கொடிāṉiṟkoṭi, பெ.(n.)

   கொடிப்புள்ளு; hog – creeper, Derris scandens (சா.அக.);.

     [கோனில்+கொடி]

கோனூர்

 கோனூர்āṉūr, பெ.(n.)

   தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஓர் ஊர்; a village in Thanjavur Dt.

     [கோன் + ஊர்.]

கோனேரி

கோனேரிāṉēri, பெ.(n.)

   திருப்பதியிலுள்ளதொரு பொய்கை; a sacred tank on Tirupati hills.

     “கோனேரி வாழுங் குருகாய்ப் பிறப்பேனே” (திவ். பெருமாள். 4:1);.

     [கொலுவுதல் = படிக்கட்டுக் கோலுதல். கொலு பொம்மைக்கொலு. கொலு → கோலு → கோனு + ஏரி (கோனேரி = படிக்கட்டுகள் அமைக்கப்பட்ட நீர்நிலை);.]

கோனேரிதாசர்

 கோனேரிதாசர்āṉēritācar, பெ.(n.)

   பத்தொன்பதாம் நூற்றாண்டுப் புலவர்களு ளொருவர்; a poet of nineteenth century.

     [கோனேரி + தாசர்.]

கோனேரியப்ப முதலியார்

 கோனேரியப்ப முதலியார்āṉēriyappamudaliyār, பெ.(n.)

   தமிழில் உபதேசகாண்டம் பாடிய ஆசிரியர்; the author of Upadeśa kåndamin Tamil.

     [கோனேரி + அப்பன் + முதலியார்.]

கோனேரியப்பர்

 komeri-y-appar,

பெ.(n);

   பன்னிரண்டாம் நூற்றாண்டுப்புலவர்களிலொருவர்; a poet of twelfth century.

     [கோனேரி + அப்பர்.]

கோனை

 கோனைāṉai, பெ.(n.)

   ஒலி (அக.நி.); ; sound.

     [கொல் → கொன் → கோன் → கோனை.]

கோனைவேல்

 கோனைவேல்āṉaivēl, பெ.(n.)

   ஒரு வகை வேல்; Crooked acacia (சா.அக.);.

     [கோனை + வேல்.]

கோனோலை

கோனோலைāṉōlai, பெ.(n.)

   அரசாணை எழுதப்பட்ட திருமுகம் (S.I.I.II. 351);; written order of a king.

     [கோ = அரசன். கோ → கோன் + ஒலை.]

கெள

கோன்

கோன்1āṉ, பெ.(n.)

   1. அரசன்; king,

   2. தலைவன்; master, lord,

     “உண்மையுமா யின்மையுமாய்க் கோனாகி” (திருவாச. 5:15);.

ம. கோன்.

     [கோவன் → கோன்.]

 கோன்2āṉ, பெ.(n.)

கோனான் பார்க்க (loc.);;see konan.

     [கோ → கோவன் → கோன்); (வ.மொ.வ.43.);

 கோன்3āṉ, பெ.(n.)

   1. ஞாயிறு; Sun.

   2. திங்கள்; Moon.

   3. வியாழன்; Jupiter (சோதிட.அக.);.

     [கோள் → கோ → கோன்.]

கோன்மை

கோன்மை1āṉmai, பெ.(n.)

   1. ஆளுகை; rule savereignty.

     ‘பாய்திரை யுலகக் கோன்மை’ (உபதேசகா. சிவத்துரோ.2760);.

   2. அரசமுறைமை; justice (இரு.நூ.);

   3. தனது சட்டங்களைத் தானே அமைத்துக்கொள்ளும் உரிமை; the right constitute their own law of the land, sovereignty.

     [கோல் → கோன் + மை.]

கோன்மை என்பது ஒரு நாட்டிற்குரிய தனியுறுப்பாகப் பண்டைக் காலத்தில் உணரப்பட்டமையால் திருவள்ளுவர் ஏனை மூன்றுறுப்புகளையும் ஆறாக வகுத்து

     “படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு” என்று கூறினார் (பழந்தமிழாட்சி.ப. 8);.

ம. கோன்ம.

 கோன்மை2āṉmai, பெ.(n.)

   தலைமை; superiority.

     [கோன் → கோன்மை.]

கோபக்கண்ணி

கோபக்கண்ணிāpakkaṇṇi, பெ.(n.)

   1. முண்டினி மரம்; an unknown tree.

   2. கோபக்கண்ணுடையவள்; woman with an angry look (சா.அக.);.

     [கோபம் + கண்ணி.]

கோபக்காரன்

 கோபக்காரன்āpakkāraṉ, பெ.(n.)

   சினம்மிகுந்தவன்; irritable, hot-tempered man.

     [கோபம் + காரன்.]

கோபக்காரி

கோபக்காரி1āpakkāri, பெ.(n.)

மிகுசினமுள்ள பெண்:

 angry woman.

     [கோபம் + காரி.]

 கோபக்காரி2āpakkāri, பெ.(n.)

   தலைச்சுருளி; Indian birth wort (சா.அக.);.

     [கோபம் + காரி.]

கோபக்கிதம்

 கோபக்கிதம்āpakkidam, பெ.(n.)

   கழற்சி (சங்.அக.);; bonduc-nut.

     [Skt.{}-bhaksita → த.கோபக்கிதம்.]

கோபக்குண்டம்

 கோபக்குண்டம்āpakkuṇṭam, பெ.(n.)

   எட்டி மரம்; strychnine tree.

   மறுவ;கோபதிண்டம்.

     [கோபம் + குண்டம்.]

கோபக்குரு

 கோபக்குருāpakkuru, பெ.(n.)

   வெள்ளைக் கழற்கொடி (சா. அக);; white bead vine.

     [கோபம் + குரு.]

கோபங்கம்

 கோபங்கம்āpaṅgam, பெ.(n.)

   வைப்புநஞ்சு (சரகண்டபாடாணம்); (யாழ்.அக.);; a mineral poison.

கோபங்காய்ந்தோர்

 கோபங்காய்ந்தோர்āpaṅgāyndōr, பெ.(n.)

 sages, saints, as persons who have subdued their temper.

     [கோபம் + காய்ந்தோர்.]

கோபங்கொண்டார்

கோபங்கொண்டார்āpaṅkoṇṭār, பெ.(n.)

   1. உயரமாய் வளர்ந்த மரம்; any tree rising to a great height; any tall majestic tree,

   2.ஒரு முள் மரம்; camel tree; camel thistle, Echinops echinatus.

கோபங்கொள்(ளு)-தல்

கோபங்கொள்(ளு)-தல்āpaṅgoḷḷudal,    16 செ.கு.வி. (v.i.)

   புண் முதலியவை உக்கிரமாதல் (யாழ்ப்.);;  to be inflamed, irritated. as a sore or wound, to become aggravated, as a disease, to rage, as the sea.

     [கோபம் + கொள்ளு.]

கோபச்சுரம்

கோபச்சுரம்āpaccuram, பெ.(n.)

   சினம் வரும்படி பித்தம் மிகுந்திருக்கும் காய்ச்சல் (சீவரட்.32);; bilious fever.

     [கோபம் + காம்.]

கோபஞ்செலுத்து-தல்

கோபஞ்செலுத்து-தல்āpañjeluddudal,    5 செ.கு.வி.(v.i.)

   சினத்தை வெளிக்காட்டுதல் (வின்.);; to give vent to anger.

     [கோபம் + செலுத்து.]

கோபதாப்ம்

 கோபதாப்ம்āpatāpm, பெ.(n.)

   கடுஞ்சினம்; fury, rage.

     [கோபம் + தாபம்.]

கோபதி

கோபதிāpadi, பெ.(n.)

   1. எருது (உரி.நி);:

 bull, as lord of cows.

   2. தேவர்த் தலைவன் (இந்திரன்);; Indra, as king of Svarga.

   3. கதிரவன்:

 sun.

     [கோ + பதி.]

 கோபதிāpadi, பெ.(n.)

   1. எருது (உரி.நி.);; bull, as lord of cows.

     [Skt.{}-poti → த.கோபதி.]

கோபதிண்டம்

 கோபதிண்டம்āpadiṇṭam, பெ.(n.)

கோபக் குண்டம் பார்க்க;see Koba-k-kundam.

     [கோபக்குண்டம் → கோபதிண்டம்.]

கோபத்திரம்

 கோபத்திரம்āpattiram, பெ.(n)

   தாமரை நூல் (மூ.அ.);; fibre obtained from lotus stalk (செ.அக.);.

கோபத்திரை

 கோபத்திரைāpattirai, பெ.(n.)

   வாகை; sirissa, Albizzialebbek (சா.அக;.);.

கோபத்தீ

கோபத்தீāpattī, பெ.(n.)

   1. கோபத்தின் சூடு; heat arising from anger;wrath (சா.அக.);.

   2. உயிர்த் தீக்களுள் ஒன்றான சினம் (சூடா.);; the fire of anger, one of uyir-t-ti.

     [கோபம் + தீ.]

கோபனை

 கோபனைāpaṉai, பெ.(n.)

   கவண் (யாழ்ப்);; sling to drive away birds etc.

     [கோப்பு → கோப்பனை → கோபனை.]

கோபன்

கோபன்āpaṉ, பெ.(n.)

   1. இடையன்; shepherd, cowherd.

   2. அதிகாரி; officer.

   3. காப்போன்; guard.

   4. சிவன்; Siva,

கூன் மதியர் கோபர் (தேவா.542:4);.

     [கோ + கோவன் → கோபன் (கொ.வ.);.]

கோபம்

கோபம்1āpam, பெ.(n.)

   1. சினம்; anger.

   2. வெறுப்பு: dislike.

     [குப்பள் = சிவப்பு. குப்பள் → குப்பளி → குப்பு → கோப்பு → கோபம் (கொ.வ.);.]

 Skt., Pali., kõpa;

 Pkt. Kõva;

 Sinh. kov kõ.

   கோபநிலைகள்: கோபம் சிறிது பொழுது நிற்பது: சினம் நீடித்து நிற்கும் கோபம்;   சீற்றம் சீறியெழுங் கோபம்: வெகுளி அல்லது காய்வு அல்லது உருத்திரம் நெருப்புத்தன்மையுள்ள கடுங்கோபம்: கொதிப்பு கண் போன்ற உறவினர்க்குச் செய்யப்பட் கொடுமைபற்றிப் பொங்கியெழுங் கோபம்;   எரிச்சல் மனத்தை உறுத்துங் கோபம்;   கடுப்பு பொறாமையோடு கூடிய கோபம்;   சுறம் அல்லது வன்மம் பழிவாங்குங் கோபம்;   கறுவு தணியாக் கோபம்;   கறுப்பு கருப்பன்முகம் கறுத்துத் தோன்றும் கோபம்;   சிவப்பு அல்லது செயிர் சிவப்பன் முகம் சிவந்து தோன்றுங் கோபம்: விளம் நச்சுத் தன்மையான கோபம்: வெறி அறிவிழந்த கோபம்: முனிவு அல்லது முனைவு வெறுப்போடு கூடிய கோபம்;   கதம் என்றும் இயல்பான கோபம்;   கனிவு முகஞ்சுளிக்கும் கோபம்: செற்றம் அல்லது செறல் பகைவனை அழிக்கும் கோபம்;   ஊடல் மனைவி கணவனொடு கோபித்துக் கொண்டு உரையாடாத மென்கோபம்: புலவி ஊடலின் வளர்ந்த நிலை: துணி ஊடலின் முதிர்ந்த நிலை;சடைவு உறவினர் குறைகூறும் அமைதியான கோபம் (சொல். கட். 49);.

 கோபம்2āpam, பெ.(n.)

   தம்பலப் பூச்சி; cochineal.

     “கொல்லை நெடுவழிக் கோபம் ஊரவும்” (சிறுபாண்.168);.

     [குப்பள் → குப்பம் → கோபம்.]

 கோபம்3āpam, பெ.(n.)

   ஒருவகைத் துகில்; a kind of cloth (சிலப்.14:108 உரை);.

     [கோபம் = சிவப்பு, செந்நிறத்துகில்.]

 கோபம்4āpam, பெ.(n.)

   துத்த செய்நஞ்சு; a kind of prepared arsenic.

     [கோபம்1 → கோபம்4.]

 கோபம்āpam, பெ.(n.)

   பொன்; gold (பிங்.);.

     [Skt.karbura → த.கோபம்.]

கோபல்

 கோபல்āpal, பெ.(n.)

   இது அம்பரைப் போன்ற ஒரு போலிகடைச்சரக்கு; false amber or copal, it is fraudently sold in bazaars as a substitute for amber (சா. அக.);.

     [குப்பள் = சிவப்பு. குப்பள் → கோப்பல் → கோபல்.]

கோபவல்லி

கோபவல்லிāpavalli, பெ.(n.)

   1. பெருங்குரும்பை; moorva stemless plant.

   2. நன்னாரி; Indian sarsaparilla (சா.அக.);.

     [கோபம் (சிவப்பு); + வல்லி.]

 கோபவல்லிāpavalli, பெ.(n.)

   1. பெருங் குப்பை; moorva stemless plant.

   2. நன்னாரி; indian sarsaparilla (சா.அக.);.

     [Skt.{}-valli → த.கோபவல்லி.]

கோபாக்கினி

 கோபாக்கினிāpākkiṉi, பெ.(n.)

கோபத்தீ பார்க்க;see köba-t-ti.

     [கோபம் + அழனி → அக்கினி.]

கோபாபத்திரம்

 கோபாபத்திரம்āpāpattiram, பெ.(n.)

   ஆம்பற் கிழங்கு, கொட்டிக் கிழங்கு; esculent bulbous root of Indian water-lily (சா.அக.);.

     [கோபம் (சிவப்பு); + பத்திரம்.]

கோபாலகன்

கோபாலகன்āpālagaṉ, பெ.(n.)

   1. இடையன்; shepherd, cow-herd.

   2. கண்ணன்; Lord Krisnan.

     “குருந்தொசித்த கோபாலகன்” (திவ்.இயற்.3:32);.

     [கோ + பாலகன்.]

கோபாலகிருட்டிணதாசன்

 கோபாலகிருட்டிணதாசன்āpālakiruṭṭiṇatācaṉ, பெ.(n.)

   ஒரு புலவன்; a poet.

இடையரான இவர் எம்பிரான் சதகம் பாடியுள்ளார் (அபி.சிந்);.

கோபாலகிருட்டிணபாரதியார்

 கோபாலகிருட்டிணபாரதியார்āpālagiruṭṭiṇapāradiyār, பெ.(n.)

   பத்தொன்பதாம் நூற்றாண்டுப் புலவர்களுளொருவர்;     “நந்தனார் சரித்திர” ஆசிரியர்;

 a poet of nineteenth century author of Nandanär-carttiram.

     [கோபாலன் + கிருட்டிணன் + பாரதியார்.]

கோபாலசக்கரம்

கோபாலசக்கரம்āpālasakkaram, பெ.(n.)

   பழைய நாணய வகை (பணவிடு.145);; an ancient Coin.

கோபாலதானம்

கோபாலதானம்āpālatāṉam, பெ.(n.)

   நூற்றியெட்டு துணை நூல்க(உபநிடதங்க);ளுள் ஒன்று; an upanišād one of 108 (செ.அக.);.

கோபாலதாபனம்

கோபாலதாபனம்āpālatāpaṉam, பெ.(n.)

   நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று; an Upanisad, one of 108.

     [Skt.{}-{} → த.கோபாலதாபனம்.]

கோபாலதாபினி

 கோபாலதாபினிāpālatāpiṉi, பெ.(n.)

   கோபாலதாபனம் பார்க்க; see köbásadābassam (செ.அக.);.

 கோபாலதாபினிāpālatāpiṉi, பெ.(n.)

கோபாலதாபனம் பார்க்க;see {}-{}.

கோபாலன்

கோபாலன்āpālaṉ, பெ.(n.)

   1. இடையன்; shepherd.

   2. கண்ணன்; Lord Krisna.

     “கோபாலா போரேறே” – (பாரத.கிருட்.34);.

 Skt., Pali. gõpåla;

 Pkt. Gövāla;

 Pan. Gavăl;

 Nep. gwalö;

 Uri goala, H. goal, gual;

 Guj, goval. Mar. govala, gova, govla;

 Beng. goyal (cowshed);.

     [கோ + பாலன்.]

கோபாலம்

 கோபாலம்āpālam, பெ.(n.)

   கன்னி (புரட்டாசி); மாதத்தில் காரி (சனி);க்கிழமை தோறும் இரந்து நோற்கும் நோன்பு; a religious vow to beg on Saturdays in the month of Purattasi.

     [கோபாலன் → கோபாலம்.]

கோபாலர்

கோபாலர்1āpālar, பெ.(n.)

   1. அரசர்; king,

   2. இடையர்; shepherd, cowherd.

     [கோ + பாலர்.]

 கோபாலர்2āpālar, பெ.(n.)

   கள்ளர்குடிப் பட்டப்பெயர்களுள் ஒன்று (கள்ளர் சரித்.பக்.98);; a caste title of Kallars.

     [கோவலர் → கோபாலர்.]

கோபாலவார்னிசு

கோபாலவார்னிசுāpālavārṉisu, பெ.(n.)

   1. பிசைமிகுந்த குங்கிலியத்தையும் சூடத்தையும் ஆறுக்கு ஒன்றாகக் கூட்டிச் சூரணமாக்கிச் சாராயத்தை விட்டுக் குழைத்துச் சித்தஞ் செய்யும் மின்னுநெய் செய்யும் வகை (உ.வ.);; spirit-varnish prepared by mixing hot alcohol with 6 parts of piney dammar and one part of camphor.

த.வ. மினுப்பி.

     [E.copal+E.varnish → த.கோபாலவார்னிசு.]

கோபாலி

கோபாலிāpāli, பெ.(n.)

   வேணுகோபாலன் உருவம் பொறிக்கப்பெற்றுச் சேலம் பகுதியில் வழங்கிய ஒரு வகை நாணயம் (G.Sm.D.l.i, 290);; a fanam current in the Salem district, having the figure of Krishna with the flute.

     [கோபாலன் → கோபாலி.]

கோபால்

 கோபால்āpāl, பெ.(n.).

ஆவின் பால்

 cows milk(சா.அக.);.

     [கோ (மாடு);+பால்.]

கோபாவல்லி

 கோபாவல்லிāpāvalli, பெ.(n.)

   மருள் என்னும் சணல் வகை; lowstring hemp (சா.அக.);.

     [கோபம் = சிவப்பு, கோபம் + வல்லி – கோபவல்லி → கோபாவல்லி.]

கோபாவேசம்

 கோபாவேசம்āpāvēcam, பெ.(n.)

   சினங்கொண்ட நிலைமை; the state of being red with anger; angry mood (சா.அக.);.

     [கோபம் + ஆவேசம்.]

கோபி

கோபி1āpittal,    4 செ.கு.வி. (v.i.)

   1. சினம் கொள்ளுதல்; to be angry, indignant, offended;

 to take umbrage.

   2. புண் முதலியன சினத்தல் (யாழ்ப்.);; to be morbidly irritated;

 to be virulent, as an ulcer.

ம. கோபிக்குக.

     [கோப்புதல் = மேலெழுப்புதல், கோப்பு → கோப்பி → கோபி = சினம் பொங்குதல்.]

 கோபி2āpittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   கடிதல்; tobe angry with, to reprove, check, reprimand.

     [கோபி1 → கோபி2.]

 கோபி3āpi, பெ.(n.)

   சினமுள்ளவன்; hot tempered man.

ம. கோபி.

     [குப்பு → கோப்பு → கோப்பி → கோபி.]

 கோபி4āpi, பெ.(n.)

   சுண்ணாம்புடன் கலந்து கட்டடங்களுக்கு வண்ணமாகப் பூசப்படும் சந்தன நிறத்திலுள்ள ஒருவகைப் பொடி; yellowish red pigment mixed with lime used for painting buildings.

     [குப்பள் = சிவந்த மண், சிவப்பு. குப்பள் → குப்பி → கோபி.]

 கோபி5āpi, பெ.(n.)

   1. நன்னாரி; sarsaparilla.

   2. சந்தனம்; sandal.

   3. கருநொச்சி; willow-leaked justicia.

     [குப்பள் = சிவந்த மண், சிவப்பு, குப்பள் → குப்பி → கோபி.]

கோபிகம்

 கோபிகம்āpigam, பெ.(n.)

   அசோகு; asõgā tree (சா.அக.);.

     [கோபி (சிவப்பு); கோபிகம்.]

கோபிகாகிதம்

 கோபிகாகிதம்āpikākitam, பெ.(n.)

   புன்னை; common poon of alexandiran laured, Calophyllum inophyllum (சா.அக.);.

கோபிகாவசந்தம்

கோபிகாவசந்தம்āpikāvasandam, பெ.(n.)

   பண்வகை (இராகவகை); (பரத.இராக.102);; a specific melody – type.

     [கோபிகை + வசந்தம்.]

கோபிகாவி

கோபிகாவிāpikāvi, பெ.(n.)

   1. ஒருவகைச் சிவந்த மஞ்சட்காவி; a kind of reddish yellow ochre.

   2. பூரான் காவி; common yellow ochre.

     [கோபி + காவி.]

கோபிகை

 கோபிகைāpigai, பெ.(n.)

   இடையர் குலப்பெண்; herds woman, shep herdess.

கோபிசந்தனம்

கோபிசந்தனம்āpisandaṉam, பெ.(n.)

   1. கோபிக்கல்; yellow ochre.

   2. திருமண்; yellow earth worn by Vaisnavites on their forehead (சா.அக.);.

     “தாமரைத் திருமணியு மெய்க் கோபி சந்தனமும்” (பிரபோத.10:13);.

     [கோபி + சந்தனம்.]

 கோபிசந்தனம்āpisandaṉam, பெ.(n.)

   ஒருசார் திருமால் அடியவர்கள் ஊர்த்துவ புண்டரமாக நெற்றியிலணிவதும் வெண்மை கலந்த மஞ்சள் நிறமுள்ளதுமாகிய ஒருவகைத் திருமண்; yellowish earth used by certain decotees of Visnu for upright sectarian marks.

     “தாமரைத் திருமணியு மெய்க்கோபி சந்தனமும்” (பிரபோத.10:13);.

த.வ. திருமால் திருமண்.

     [Mhr.{} → த.கோபிசந்தனம்.]

கோபிசாற்று-தல்

கோபிசாற்று-தல்āpicāṟṟudal,    5 செ.குன்றாவி (v.t.)

ஏமாற்றுதல் (உ.வ.);:

 to deceive.

     [கோபம் = சிவப்பு. கோபம் → கோபி = செஞ்சந்தனம்.]

கோபிதாகம்

 கோபிதாகம்āpitākam, பெ.(n.)

   தில்லை மரம்; tiger’s milk spurge, Excoecaria agallocha (சா.அக.);.

கோபிதாரம்

 கோபிதாரம்āpitāram, பெ.(n.)

   குரா (பிங்.);; bottle flower.

     [கோபி + தாரம்.]

கோபித்தம்

 கோபித்தம்āpittam, பெ.(n.)

   எருது அல்லது ஆவின் பித்தப் பையினின்று எடுத்து அணியமாக்கப்படும் மான்மணத்தி; ox bile;bile of cowsbezoar (சா.அக.);.

     [கோ + பித்தம்.]

கோபித்தவக்கினி

கோபித்தவக்கினிāpittavakkiṉi, பெ.(n.)

   1. அகட்டுத் தீ; gastric fire.

   2. பித்தம்; bile (சா.அக.);.

     [கோபித்தம் + அக்கினி.]

கோபிநாதன்

 கோபிநாதன்āpinātaṉ, பெ.(n.)

கண்ணன் (இடைச்சியர் நாயகன்);

 Kanna, asthe Lord of herdwomen (செ.அக.);.

     [கோபி+நாதன்.]

கோபிநாமம்

 கோபிநாமம்āpināmam, பெ.(n.)

   திருமால் பக்தர்களில் ஒரு வகையினர், வெண்மை கலந்த மஞ்சள் நிறமுள்ள திருமண்ணால் அணியும் நெற்றிக் குறி; yellowish earth used by certain devotees of Tirumal for upright sectarian marks (செ.அக.);.

கோபினை

 கோபினைāpiṉai, பெ.(n.)

   சினம் (யாழ்.அக.);; anger.

     [கோபம் → கோபினை.]

கோபிபாலைவனம்

கோபிபாலைவனம்āpipālaivaṉam, பெ.(n)

   மத்திய ஆசியாவில் உள்ள பெரிய பாலைவனம்; big desert in central.

இதன் நடுவில் சாமு என்னும் மணல்வெளி உண்டு. இதை மணற்கடல் என்பர். இதன் நீளம் 1200 மைல், அகலம் 50 மைல் (அபி.சிந்);.

கோபிபோடு-தல்

கோபிபோடு-தல்āpipōṭudal,    19 செ.குன்றாவி.(v.t.)

கோபிசாற்று-தல் பார்க்க;see købi-sārru-.

     [கோபி + போடு.]

கோபிப்பேய்ச்சூலை

 கோபிப்பேய்ச்சூலைāpippēyccūlai, பெ.(n.)

   பித்தம் மிகுந்து சினக்கும்போது பேய் பிடித்த வர்களைப் போல் நடுக்கங் கண்டு சூலைநோய் கொண்டவர்களைப் போல் கை, கால் வலுவற்று ஒன்றையெடுக்கவும், நடக்கவும் முடியாமற் செய்யுமோர் நிலைமை; an agitated condition or strong emotion by which one is rendered unable to handle any substance or to walk any distance, owing to the shivering of the body arising from anger. It is due to the affection of the nervous system as a result of the aggravated condition of bile in the system (சா.அக.);.

     [கோபி + பேய் + சூலை.]

கோபியடி-த்தல்

கோபியடி-த்தல்āpiyaḍittal,    4 செ.கு.வி.(v.i.)

   சுவர்க்கு மஞ்சட்காவி பூசுதல்; to brush walls with yellow-wash.

     [கோபி + அடி.]

கோபீகன்

கோபீகன்āpīkaṉ, பெ.(n.)

   கடுங்கோபமுள்ளவன்; extremely hot-tempered man.

     “பொறையிலாத கோபீகன்” (திருப்பு. 530);.

     [கோபம் → கோபிகன் → கோபீகன்.]

கோபுத்தம்

 கோபுத்தம்āputtam, பெ.(n.)

   சமுத்திராப் பழம்; white Indian oak, Barringtonia гасетоза (சா.அக.);.

கோபுரக்கல்

 கோபுரக்கல்āpurakkal, பெ.(n.)

   செங்கல்; brick; red brick (சா.அக.);.

     [கோபுரம் + கல்.]

கோபுரக்கள்ளி

 கோபுரக்கள்ளிāpurakkaḷḷi, பெ.(n.)

   பெருங்கள்ளி; a kind of tall spurge (சா.அக.);.

     [கோபுரம் + கள்ளி.]

கோபுரச்சங்கு

 கோபுரச்சங்குāpuraccaṅgu, பெ.(n.)

   கோபுரவடிவுடைய சங்கு (மீனவ.);; a shell having the shape of temple tower.

     [கோபுரம் + சங்கு.]

கோபுரச்சித்தன்

 கோபுரச்சித்தன்āpuraccittaṉ, பெ.(n.)

   பொன்னாக்கும் ஆற்றல் முறைகளை இயற்றிய சித்தர்களுள் ஒருவர்; one of the Sidda’s who instituted the principles of alchemy (சா.அக.);.

     [கோபுரம் + சித்தன்.]

கோபுரத்தலை

 கோபுரத்தலைāpurattalai, பெ.(n.)

   கோபுரத்தைப்போல் அடி பருத்தும், மேற்பக்கம் கூச்சாகவும், உச்சியுயர்ந்தும் காணும் தலை; tower head-Acrocephalia, it is a deformity of the head in which its vertical diametre is increased and the top is more or less pointed like a tower (சா.அக.);.

     [கோபுரம் + தலை.]

கோபுரத்துமெய்காப்பான்

கோபுரத்துமெய்காப்பான்āpurattumeykāppāṉ, பெ.(n.)

   கோயில் காவலன்; temple guard.

     “கோபுரத்து மெய்காப்பான் நொருவன் இவன்னெ சாலை உண் வெண்கல நூறும் எண்ணி புகுவிக்கவு பொதவைப்பிக்கவும் கடவான்” (SII.XIX.357:67, pg. 185);.

     [கோபுரத்து + மெய்காப்பான்.]

கோபுரத்தும்பை

 கோபுரத்தும்பைāpurattumbai, பெ.(n.)

   அடுக்குத் தும்பை (மலை.);; species of balsam.

     [கோபுரம் + தும்பை]

கோபுரந்தாங்கி

கோபுரந்தாங்கிāpurandāṅgi, பெ.(n.)

   1. கோபுரந்தாங்கிப்பதுமை பார்க்க;see kopurandangi-p-padumai.

   2. செயற்பொறுப் பாளராய் நடிப்பவன்; one who has an immoderate sense of self-importance and thinks that on him alone everything depends.

   3. பூடுவகை (M.M.95);; Coromandel chiretta.

     [கோபுரம் + தாங்கி]

கோபுரந்தாங்கிப்பதுமை

 கோபுரந்தாங்கிப்பதுமைāpurandāṅgippadumai, பெ.(n.)

   கோபுரத்தைத் தாங்குவது போல, கோபுர உச்சியிலுள்ள பதுமை; figure at the top of a tower seeming to support it.

     [கோபுரம் + தாங்கி + பதுமை]

கோபுரப்புடம்

 கோபுரப்புடம்āpurappuḍam, பெ.(n.)

   காட்டெருவைக் கோபுரம் போலக் குவித்து நிரப்பி இடும் புடம்; calcination of metals with dried cow-dung heaped like a cone.

     [கோபுரம் + புடம்.]

கோபுரப்பூண்டு

 கோபுரப்பூண்டுāpurappūṇṭu, பெ.(n.)

   அடுக்குப்பூடு; a kind of plant (சா.அக.);.

     [கோபுரம்+பூண்டு]

கோபுரம்

கோபுரம்1āpuram, பெ.(n.)

   நகரம் அல்லது கோயிலின் பெருவாயில் (திவா.);; tower-gate of a city or temple.

கோ = அரசு, தலைமை. புரம் = உயர்வு, உயர்ந்த கட்டடம்.

புரை = உயர்ச்சி, ‘புரைஉயர் பாகும்’ (தொல். உரி, 4); வேந்தன் இருந்த உயர்ந்த எழுநிலைக் கட்டடம் முதலிற் கோபுரம் எனப்பட்டது. பின்பு கோயிலில் அமைந்த எழுநிலை மாடமும் வானளாவி நின்று அப் பெயர் பெற்றது. அதன் அமைப்புத் தேரை ஒத்ததாகும்.

கோபுரம் உள்ள நகர்களின் பெயர்களே, முதலில், ‘புரம்’ என்னும் ஈறு பெற்றன.

எ.டு. : காஞ்சிபுரம், கங்கைகொண்ட சோழபுரம். வேந்தன் தன் தலைநகரை நாற்புறமும் நோக்கவும், தொலைவிற் பகைவர் வரவைக் காணவும், பகைவர் முற்றுகையிட்டு உழிஞைப்போரை நடத்துங்கால் நொச்சிப்போரைக் கண்காணிக்கவும், அவன் அரண்மனையின்மேல் எழுநிலை கொண்ட ஓர் உயர்ந்த தேர்போன்ற கட்டடம் கட்டப்பட்டிருந்தது. அது ‘புரம்’ எனப்பட்டது. ‘புரம்’ = உயர்ந்த கட்டடமான மேன்மாடம்.

புரம் என்பது பின்பு, புரத்தைக் கொண்ட அரண்மனையையும், அதன் சூழலையும் குறித்து, அதன்பின் நகர் என்னும் சொற்போல் தலைநகர் முழுவதையும் குறித்து, நாளடைவில் நகரப் பொதுப் பெயராயிற்று. அரண்மனையிலுள்ள புரம் அரசன் இருக்கையாதலால், கோபுரம் எனப்பட்டது. கோ = அரசன், கோ இருந்த இல் கோயில் எனப்பட்டதை நோக்குக.

பகைவர் வரவு காண்டற்குக் கோபுரம் சிறந்த அமைப்பென்று கண்டபின், நகரைச் சூழ்ந்த கோட்டை மதிலிலும், வாயிலிற் பெரிதாகவும் மற்ற இடங்களிற் சிறியனவாகவும் கோபுரங்கள் கட்டப்பட்டன. சிறியன கொத்தளம் எனப்பட்டன. (பண். தமி. நா.பக். 135-6);

கோ என்பது உயரமான, பெரிய எனப் பொருள் தரும், புரம் = வளைந்த சுற்றுமதில்.கோபுரம் = சுற்றுச்சுவரில் உயரமாகக் கட்டப்பெற்ற நுழைவாயில் கட்டடப் பகுதி, கொடியேந்திய யானையும் தேரும் உள்நுழையும் வண்ணம் நுழைவாயில் அமைந்த உயர்ந்த மதிற்கவர்ப்பகுதி. புரம், புரி என்பன சுற்று மதில்கள் உயர்த்திக் கட்டப்பட்ட நகரம், அரண்மனை, கோட்டை ஆகியவற்றைக் குறிக்கும். தமிழர் வரலாற்றில் அரண்மனையிலும் நகரத்தைச் சுற்றிலும் கோட்டை மதில்களில் அமைக்கப்பட்ட கோபுரங்கள்,கோவில்களில் இடம்பெற்றபோது நுழைவாயில் கோபுரங்களாக உயர்த்திக் கட்டப்பெற்றன. கோபுரம் என்னும் தமிழ்ச் சொல் சமற்கிருதம் உள்ளிட்ட அனைத்து வடமொழி களிலும் இதே முறையில் வழங்கி வருகிறது. வடமொழியாளர் கோபுரம் என்பதற்கு மாட்டுப்பட்டிகளில் மாடுகள் நுழைவதற்கு அமைக்கப்பட்ட வாயில் என்று கூறுவது உண்மைக் காரணம் ஆகாது. புரம் என்னும் சொல் நேரடியாக வாயில் எனப் பொருள் தராது மாட்டைக் குறிக்கும் ‘கோவு’ → ‘கோ’ என்னும் சொல்லும் தூய தமிழ்ச்சொல்லே. இச்சொல்லையும் இதே முறையில் வடமொழி

கடன் கொண்டுள்ளது. ஆதலின் வட மொழியாளர் கோபுரம் என்னும் தமிழ்ச் சொல்லை வடசொல்லாகத் திரித்து கூறுவது பொருந்தாது.

 கோபுரம்2āpuram, பெ.(n.)

   பெருங்கோரை (நாநார்த்த.);; a kind of sedge.

     [கோ + புரம் = கோபுரம்.]

கோபுரவாசல்

 கோபுரவாசல்āpuravācal, பெ.(n.)

   கோபுரத்தின் கீழ்நிலை; gateway under a tower.

மறுவ;கோபுரவாயில்.

     [கோபுரம் + வாசல்.]

கோபுரவாயில்

 கோபுரவாயில்āpuravāyil, பெ.(n.)

கோபுரவாசல் பார்க்க;see kõpuravasal.

மறுவ. கோபுரவாயில்.

     [கோபுரம் + வாசல்.]

கோபுளகம்

 கோபுளகம்āpuḷagam, பெ.(n.)

   வைப்பு நஞ்சு (தாலபாடாணம்); (சங்.அக.);; a mineral poison.

     [Skt.{} → த.கோபுளகம்.]

கோப்பதவாரம்

கோப்பதவாரம்āppadavāram, பெ.(n.)

   அரசர்க்குரிய இறை (T.A.S.II.82.);; tax due to the king.

     [கோ + பதம் + வாரம்.]

கோப்பன்

கோப்பன்āppaṉ, பெ.(n.)

   1. கெட்டிக்காரன்; capable person not easily bamboozled.

   2. தேர்ந்த போக்கிரி; clever scoundrel.

     [கோ → கோப்பன்.]

கோப்பரம்

 கோப்பரம்āpparam, பெ.(n.)

உதவாக்கரை, ஒன்றுக்கும் பயன்படாதவன்: useless fellow அவன் ஒரு கோப்பரம். ஒன்றுக்கும் பயனில்லை (நெல்லை.);.

மறுவ. ஆதம் (ஆதாயம்); அற்றவன், துப்பற்றவன் விட்டேற்றி, உதவாக்கரை, கழிசடை.

     [கோ = மாடு, எருது, கோ + உரம் – கோவரம் → கோப்புரம் → கோப்பரம் (மாட்டுச்சாணம், எரு, குப்பை);.]

கோப்பழி-த்தல்

கோப்பழி-த்தல்āppaḻittal,    4 செ.குன்றாவி.(v.t.)

   சீரழித்தல்; to ruin, pull down, dismantle.

     “குருமாமணி யூசலைக் கோப்பழித்து” (திருக்கோ. 161);.

     [கோப்பு + அழி.]

கோப்பாட்டன்

 கோப்பாட்டன்āppāṭṭaṉ, பெ.(n.)

   கொட்பாட்டன் (வின்.);; grandfather’s father.

     [கொட்பாட்டன் → கோட்பாட்டன்.]

கோப்பாண்டியன்

 கோப்பாண்டியன்āppāṇṭiyaṉ, பெ.(n.)

   பாண்டியன் (திவா.);; Pandya, as king of kings.

     [கோ + பாண்டியன்.]

கோப்பாளச்சுவர்

 கோப்பாளச்சுவர்āppāḷaccuvar, பெ.(n.)

   இருபக்க ஒட்டுச்சார்பின் மேல் முக்கோண வடிவிலமைந்த சுவர் (கட். தொ.);; triangular wall on a partition wall.

கோப்பாளச்சுவர்

     [கோப்பாளம் + சுவர்.]

கோப்பாளம்

 கோப்பாளம்āppāḷam, பெ.(n.)

   மாலியர் (வைணவர்); திருமாலின் பன்னிரு பெயர்களை ஒதி உடலிற் பன்னிரு இடங்களில் செங்குத்து முக்கீற்றாக இடும் திருமண் குறி; the Vaisnava sectarian tridental mark, worn on the person in twelve places, reciting the twelve names of Vishnu.

அவன் நெற்றியில் கோப்பாளம் போட்டிருக்கிறான் (நெல்லை);.

மறுவ. திருமண், நாமம்.

     [கோவலன் → கோபாலன் → கோப்பாளம்.]

கோபாலன் பெயரைச் சொல்லி இட்டுக் கொள்ளும் அடையாளக் குறியீடு கோப்பாளம் எனப்பெயர் பெற்றது.

கோப்பாளி

கோப்பாளி koāppāḷi, பெ.(n.)

   1. வரிக்கூத்துவகை (சிலப். 3:13, உரை);; a masquerade dance.

   2. கோப்பன் பார்க்க (loc.); see koppan.

     [கோப்பு + ஆளி.]

கோப்பி

கோப்பிāppi, பெ.(n.)

   1. திருமாலை வழிபடக் கூடிய ஒருசாரார் நெற்றியிலணிவதும், வெண்மை கலந்த மஞ்சள் நிறமுள்ளதுமாகிய ஒருவகைத் திருமண்; yellowish earth used by certain devotees of visnu for upright sectarian marks.

   2. திருமால் பக்தர்களள் ஒரு வகையினர் கோபி சந்தனத்தால் அணியும் நெற்றிக்குறி; single solid mark with Köpi-šandanam worn by certain devotees of Tirumāl (செ.அக.);.

 கோப்பி1āppi, பெ.(n.)

காப்பி (யாழ்ப்.); பார்க்க;see {}.

     [E.coffee → த.கோப்பி.]

 கோப்பிāppi, பெ.(n.)

   காப்பித்தூளைக் கொதிக்கும் நீரில் போட்டுத் தெளியவைத்துப் பால் கலந்து தேவையான அளவு இனிப்பு சேர்த்துச் செய்யும் பருகம்; coffee (usually with milk and sugar);.

த.வ. காணீர் (காழ் + நீர்);, குளம்பி

     [E.coffee → த.காப்பி → இலங்.வ.கோப்பி.]

கோப்பிகா

 கோப்பிகாāppikā, பெ.(n.)

   புன்னை; common poon or Alexandrian laurel (சா.அக.);.

     [குப்பி → கோப்பி → கோப்பிகை → கோப்பிகா.]

கோப்பிடு-தல்

கோப்பிடு-தல்āppiḍudal,    18 செ.குன்றாவி.(v.t.)

   ஏற்பாடு செய்தல்; to make arrangements;

 to scheme.

     “கூட்டுக்குளேயடைக்கக் கோப்பிட்டாள்” (விறலிவிடு. 603);.

ம.கோப்பிடுக.

     [கோப்பு + இடு-.]

கோப்பியகன்

 கோப்பியகன்āppiyagaṉ, பெ.(n.)

   அடிமை; slave.

     [கோப்பியன் → கோப்பியகன்.]

கோப்பியம்

கோப்பியம்āppiyam, பெ.(n.)

   1. ஒளித்து வைத்தல்; keeping hidden or concealed (சா.அக.);.

   2. கண்ணியம்; sence of decency.

   3. காத்தல்; to save, protect.

   4. அடக்கம்; humility, quietness.

   5. கோலம் (கழ.த.அக.);; decorative designs drawn on floor.

   6. மறைபொருள்; secrecy, concealment, privacy.

எல்லாம் கோப்பியமாக நடக்கிறது (உ..வ.);.

   ம. கோப்பியம் (மந்தணம்);; Skt. gopya.

     [குப்பு → கூப்பு → கோப்பு → கோப்பியம்.]

கோப்பியாதி

 கோப்பியாதிāppiyāti, பெ.(n.)

   ஈடு; substitute, compensatory.

     [கோப்பியம் + ஆதி.]

கோப்பிரசாரபூமி

கோப்பிரசாரபூமிāppiracārapūmi, பெ.(n.)

   அரசு ஆணைவழி கோயிலுக்கு விளம்பரப்படுத்திய நிலம்; land to temples notified by king.

     “ஆக இந் நாற்பால் எல்லைக்கும் உட்பட்ட இருபத்தஞ்சு பாடகமும் கோப்பிரசார பூமியாரு எல்லோருக்கும் சாதாரணம் ஆதலால்”(தெ.கல். தொ.Vகல். 993:4);.

     [கோ + பிரசாரம் + பூமி.]

கோப்பிரண்டை

 கோப்பிரண்டைāppiraṇṭai, பெ.(n.)

   களிப் பிரண்டை; a species of adamantine creeper. It is round and smooth and is prescribed for flatulence.

     [கோ + பிரண்டை.]

உருண்டையாயும், வழவழப்பாயுமிருக்கும். இது ஊதை நோய்க்குப் பயன்படும்.

கோப்பிராமணர்,

கோப்பிராமணர்,āppirāmaṇar, பெ.(n.)

   இறைவனுக்குக் கொடை அளிக்க ஆனிரைகளைப் பேணி வந்த அந்தணர்; bhramin who took care of the cows endowed to a temple.

     “அகிதம் பண்ணினாள் அவாள் கெங்கைக் கரையில் கோகஸ்த்தியும் கோப்பிராமணரையும் கொன்னை தோஷத்தில் அடைவார்கள்”(தஞ்.மரா.செப்.50, 26-43);.

     [கோ + பிராமணர்.]

கோப்பு

கோப்பு1āppu, பெ.(n.)

   1. கோக்கை; stringing, inserting, threading, adorning.

   2. ஒழுங்கு;аrrangement, order, method.

     “விரதத்தின் கோப்பனைத்தும்” (விநாயகபு.62:15);.

   3. அமைப் பழகு; beauty, as of form or construction;finish.

     “ஊசலைக் கோப்பழித்து” (திருக்கோ. 161);.

   4. ஒப்பனை; decoration, ornament, embellishment.

     “கோப்பணி வான்றோய் குடி”(திருக்கோ. 196);.

   5. கவிவு; that which covers, as a cloud, a roof;

 that which over-whelms, as grief.

     “நீப்பருந் துயர் கோப்புக் கொள்ளலும்”(விநாயகபு.7:3);.

   6. இடம்பம் (வின்.);; gaudiness, showiness, parade.

   7. பகிடி (வின்.);; jest, sport, farce.

   8. சூழ்ச்சி (உபாயம்);; means, device, scheme.

     “வேந்தர் பொன்னைக் கொள்ளை கொள்ளக் கள்ளியிந்தக் கோப் பெடுத்தாள்” (விறலிவிடு. 421);.

   9. தோள் முதலியவற்றிற் கோக்கப்படும் சுமை; bundle, pack, as taken on shoulders.

     “தோட்கோப்புக் கொள்ளார்” (நாலடி.328);.

   10. பணியாளர்களுக்கு அரசில் ஏற்படும் படித்தரம் (யாழ்ப்.);; daily provisions allowed by kings to their officers.

   ம. கோப்பு;   தெ., க. கோபு;   குட. கோபி (விழா);;பர். கோப் (பேணுதல்);.

     [கோ → கோப்பு.]

 கோப்பு2āppu, பெ.(n.)

   காய்கறிகள்; vegetables (சா. அக.);.

     [காய் → காய்ப்பு → காப்பு → கோப்பு.]

 கோப்பு3āppu, பெ.(n.)

   இணைத்தொகுப்பு, பதிவு மூலங்களின் தொகுப்பு; file.

     [கோ → கோப்பு. ‘பு’ சொ.ஆ.ஈறு.]

 கோப்பு4āppu, பெ.(n.)

   மனையின் மேற்கூரையும் துலாக்கட்டும் சேரும் பகுதி;     (கட்.தொ.);;

 joint of roof with sub-structure.

     [கோ → கோப்பு.]

 கோப்பு5āppu, பெ.(n.)

   1. வணக்கம்; salution.

   2. உயரம், வலிமை; hight, strength.

தெ. கோப்பு.

     [கூப்பு → கோப்பு.]

 கோப்பு6āppu, பெ.(n.)

   அணியமான நிலை; a proper and fitting nature.

கம்பு அருவாளோடு கோப்பா வந்து இறங்கிட்டான் (நெல்லை.);.

     [கூப்பு → கோப்பு.]

கோப்புக்கயிறு

 கோப்புக்கயிறுāppukkayiṟu, பெ.(n.)

   இருவேறு வலைகளை இணைக்க உதவுங் கயிறு (மீனவ.);; a rope used for joining the two different nets.

     [கோப்பு +. கயிறு.]

கோப்புக்கூட்டு-தல்

கோப்புக்கூட்டு-தல்āppukāṭṭudal,    5 செ. குன்றாவி.(v.t.)

   அணியமாதல் (இ.வ.);; to make or get ready.

     [கோப்பு + கூட்டு.]

கோப்புக்கொடு-த்தல்

கோப்புக்கொடு-த்தல்āppukkoḍuttal,    4 செ.கு.வி. (v.i.)

   சமையலுக்கு வேண்டிய காய்கறிப் பொருள்களைக் கொடுத்தல்; to give or supply vegetables, curry stuffs etc. necessary for preparing food (சா.அக.);.

     [கோப்பு + கொடு.]

கோப்புத்தட்டு-தல்

 கோப்புத்தட்டு-தல்āppuddaṭṭudal, தொ.பெ. (vbl.n.)

   கடலடிப் பாறை முகட்டிற் சிக்கிய வலையைக் குளியாள் நீக்குதல் (மீனவ.);; to remove the intangle of the net on the top of the sea rock.

     [கோப்பு + தட்டு-.]

கோப்புப்பட்டறை

 கோப்புப்பட்டறைāppuppaṭṭaṟai, பெ.(n.)

   பல உதிரிப் பொருள்களை இணைக்குமிடம்; fabrication shop.

     [கோப்பு + பட்டறை.]

கோப்புப்போடு-தல்

கோப்புப்போடு-தல்āppuppōṭudal,    19 செ. குன்றாவி.(v.t.)

   மனைக்குமேற் கோப்பு அமைத்தல் (கட்.தொ.);; to form the top joints of a house.

     [கோப்பு + போடு-.]

கோப்புமட்டம்

 கோப்புமட்டம்āppumaṭṭam, பெ.(n.)

   கட்டடச் சுவரின் மேல்வரி (கட்.தொ.);; top layer of the wall.

     [கோப்பு + மட்டம்.]

கோப்புமுறை

கோப்புமுறைāppumuṟai, பெ.(n.)

   பொருத்தும் முறை; art or manner of fitting or arranging things.

     “மூக்குங் கோடுங் கோப்புமுறை கொளீஇ” (பெருங். உஞ்சைக். 58:53);.

     [கோப்பு + முறை.]

கோப்பெண்டு

கோப்பெண்டுāppeṇṭu, பெ.(n.)

   அரசன் மனைவி; Queen,

     “பெருங்கோப் பெண்டு மொருங்குடன் மாய்ந்தனள்” (சிலப். 25:86);.

     [கோ + பெண்டு.]

கோப்பெருங்கணக்கர்

கோப்பெருங்கணக்கர்āpperuṅgaṇakkar, பெ.(n.)

   அரசு தலைமைக் கணக்கர்; chief accountants of a state.

     “கோப்பெருங் கணக்கரைக் குழுவிடை விளங்க” (பெருங். நரவாண.7:122);.

     [கோ + பெருங்கணக்கர்.]

கோப்பெருங்கிழவோள்

கோப்பெருங்கிழவோள்āpperuṅgiḻvōḷ, பெ.(n.)

கோப்பெருந்தேவி பார்க்க;see ko-p-perun-devi.

     “குன்றாக் கற்பினெங் கோப்பெருங் கிழவோள்” (பெருங்.இலாவாண. 11:47);.

     [கோ + பெரும் + கிழவோள்.]

கோப்பெருஞ்சிங்கன்

 கோப்பெருஞ்சிங்கன்āpperuñjiṅgaṉ, பெ.(n.)

   சேந்தமங்கலத்தைத் தலைநகராகக் கொண்டு நடுநாட்டை ஆண்ட காடவர் குல மன்னர்களில் சிறந்தவர்; a popular king of the Kadava dynasty who ruled from Séndamangalam on the banks of Kadilam in Nadunadu (Viluppuram Dt.);.

     [கோ + பெருஞ்சிங்கன்.]

கோப்பெருஞ்சிங்கவேளார்

கோப்பெருஞ்சிங்கவேளார்āpperuñjiṅgavēḷār, பெ.(n.)

   நடுநாட்டு மன்னர் கோப்பெருஞ் சிங்கனின் அதிகாரி; an officer of the King of Nadu Nadu, kopperuń-singan.

     “கூடலூர்க் கூடலூருடையான் திருவரங்கன் பெரிய நாயனான கோப்பெருஞ்சிங்கவேளார் வைத்த திருநொந்தா விளக்கொன்றுக்கு” (SII.XII.227-6 pg.141);.

     [கோ + பெருஞ்சிங்கன் + வேளார்.]

கோப்பெருஞ்சேரல் இரும்பொறை

 கோப்பெருஞ்சேரல் இரும்பொறைāpperuñjēralirumboṟai, பெ.(n.)

   ஒரு சேர மன்னன்; a Cēra king.

     [கோ + பெருஞ்சேரல் + இரும்பொறை.]

கோப்பெருஞ்சோழன்

 கோப்பெருஞ்சோழன்āpperuñjōḻṉ, பெ.(n.)

   சோழ மன்னர்களில் ஒருவன்; a Cola king.

     [கோ + பெருஞ்சோழன்.]

உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டவன்; மிக்க புலமையுடையோன்; கிள்ளி வளவனுக்குப் பின் அரசு கட்டி லேறியவன். இவனுக்கு நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி என்னும் மக்களிருந்தனர். இவர்கள் தந்தைமீது காழ்ப்புணர்ச்சி கொண்டு தாக்க முற்பட்டபோது மனம் வருந்தி வடக்கிருந்து உயிர் நீத்தான். இவனைக் காணாமலேயே இவன்மீது நட்புக் கொண்ட பிசிராந்தையார் இவனருகில் அமர்ந்து வடக்கிருந்து உயிர் நீத்தார்.

கோப்பெருந்தேவி

கோப்பெருந்தேவிāpperundēvi, பெ.(n.)

   பட்டத்தரசி; chief queen, queen consort.

     “ஓர்த்துடனிருந்த கோப்பெருந் தேவி” (சிலப்.27:251);.

     [கோ + பெருந்தேவி.]

கோப்பெருமுதியர்

கோப்பெருமுதியர்āpperumudiyar, பெ.(n.)

   அரசாங்கத்தில் பட்டறிவு மிகுந்த விருத்தர்; aged and experienced counsellors in a state.

     “வாணிகர்க் கறையுங் கோப்பெரு முதியர்”(பெருங். இலாவாண. 2:164);.

     [கோ + பெருமுதியர்.]

கோப்பெருவேந்தன்

கோப்பெருவேந்தன்āpperuvēndaṉ, பெ.(n.)

   அரசர்க்கரசன்; king of kings, emperor.

     “கோப்பெரு வேந்தன் யாப்புறுத் தமைத்தபின்” (பெருங். மகத. 22:78);.

     [கோ + பெருவேந்தன்.]

கோப்பை

கோப்பைāppai, பெ.(n.)

   1. வெள்ளைக் களி மண்ணினாற் செய்த சீனக் கலம் (சா.அக);; a porcelain Cup manufactured in China.

   2. வேலைப்பாடு கொண்ட பரிசுப் பொருள்; cup trophy.

நமது நாடு காற்பந்து போட்டியில் உலகக் கோப்பையை வென்றது (உ.வ.);

   3. உண்கலம்; cup drinkingvessel.

   ம. கோப்ப;   க., து. குப்பி;   தெ. குப்பெ;பட.கோப்பெ.

 H. kuppi;

 Pali., Pkt. Kūppa;

 L. cuppa;

 F. Coupe;

 E. cup;

 Port. Copa.

     [கும்பம் = மட்பாண்டம். கும்பம் → கும்பி → குப்பி → கோப்பை.]

கோப்பைவெடிப்பு

 கோப்பைவெடிப்புāppaiveḍippu, பெ.(n.)

   மரத்தில் ஆண்டு வளைவுகள் சரியாகப் பொருந்தாமல் வெடிக்கும் வெடிப்பு (கட்.தொ.);; crack in joints of wooden planks.

     [கோப்பை + வெடிப்பு.]

கோமகன்

கோமகன்āmagaṉ, பெ.(n.)

   1. இளவரசன்; prince, son of a king.

கோமகற் பெற்று (பெருங். நரவாண. 7:36);.

   2. அரசன்; king.

     “கோமகன் கொற்றங் குறைவின் றோங்கி” (சிலப். 36:6);.

   3. மதிப்பிற் குரியவர்; eminent person.

     [கோ + மகன்.]

கோமகள்

கோமகள்āmagaḷ, பெ.(n.)

   1. அரசி; queen.

     “எங்கோமகளை யாட்டிய வந்நாள்” (சிலப். 25:161);.

   2. தலைவி (பிங்.);; lady in authority, mistress.

ம. கோமள்

     [கோ + மகள்.]

கோமக்கள்ளி

 கோமக்கள்ளிāmakkaḷḷi, பெ.(n.)

சதுரக் கள்ளி:

 square-spurge.

     [கூர்மம் + கள்ளி – கூர்மக்கள்ளி → கூமக்கள்ளி → கோமக்கள்ளி.]

கோமங்கலம்

 கோமங்கலம்āmaṅgalam, பெ.(n.)

   கோவை மாவட்டத்துச் சிற்றூர்; a village in Kovai Dt.

     [கோ + மங்கலம்.]

கோமசூரிகை

 கோமசூரிகைāmacūrigai, பெ.(n.)

   கால்நடைகளுக் குண்டாகும் அம்மை; cow-pox. small pox of cattle – vaccinia (சா.அக.);.

     [கோமம் + சூரிகை.]

கோமடந்தை

கோமடந்தைāmaḍandai, பெ.(n.)

   அரசலக்குமி, அரசி; queen, goddess of Sovereignty.

     “கோமடந்தை களிகூர”(பாரத அருச்சுனன்றீர். 40);.

ம. கோமடந்த.

     [கோ + மடந்தை.]

கோமடம்

கோமடம்āmaḍam, பெ.(n.)

   பெரிய மடம்; big mutt.

     “கஞ்சிபோசன் இராமபிரான் பட்டரூய கோமடத்து சூரியதேவபட்டருய அத்திக்குறி நம்பிப்பிரான் பட்டரூய” (தெ.இ.கல்.தொ.6 கல்.3716);.

     [கோ + மடம்.]

கோமட்டி

 கோமட்டிāmaṭṭi, பெ.(n.)

   தெலுங்கு வணிக வகையினர்; Telugu-speaking merchant-caste.

   ம.கோமட்டி;   க. கோமடி, கோமடிக;   தெ. கோமடி;கூ. கோமடி, கோமடிகெ

     [கோமுட்டி → கோமட்டி.]

கோமணம்

 கோமணம்āmaṇam, பெ.(n.)

கோவணம்பார்க்க;see kõvaṇam.

மறுவ. தாய்ச்சிலை.

ம. கோமணம், து. கோமன. (கோமணம் கோவணம்);

கோமணாண்டி

 கோமணாண்டிāmaṇāṇṭi, பெ.(n.)

கோவணாண்டி பார்க்க;see kõvanāndi.

     [கோவணான்டி → கோமணாண்டி.]

கோமணிக் குன்றம்

 கோமணிக் குன்றம்āmaṇikkuṉṟam, பெ.(n.)

   பித்தளைக்கான கனிமங்கள் கிடைக்கும் மலை; mountain containing brass ore (சா.அக.);.

     [கோமணி + குன்றம்.]

கோமண்டவெள்ளம்

கோமண்டவெள்ளம்āmaṇṭaveḷḷam, பெ.(n.)

கோதண்டவெளி (தக்கயாகம்.334, உரை); பார்க்க;see ködanda-veli.

     [கோதண்டம் + வெள்ளம்.]

கோமதம்

 கோமதம்āmadam, பெ.(n.)

கோரோசனை பார்க்க;see kðrðsanai (சா.அக.);.

     [கோ = மாடு. கோ + மதம்.]

கோமதி

கோமதிāmadi, பெ.(n.)

   1. பீகார் மாநிலத்து ஆறு; a river of Bihar.

     “ஆன கோமதி வந்தெய்து மரவம்” (கம்பரா. வேள்வி.5);

   2. ஒரு தெய்வம்; a Goddess.

     [கோமளத்தி → கோமதி}

கோமதை

 கோமதைāmadai, பெ.(n.)

கோமதி பார்க்க;see kõrmadi.

     [கோமதி + கோமதை]

கோமம்

கோமம்āmam, பெ.(n.)

   1. ஈரல்; liver,

   2. சங்கு செய்நஞ்சு; a variety of white arsenic (சா.அக.);.

கோப்பு → கோமம் (கூரானது);}

கோமம்பட்டி

 கோமம்பட்டிāmambaṭṭi, பெ.(n.)

   தருமபுரி மாவட்டத்துச் சிற்றூர்; a village in Dharmapuri dt.

     [கோமம் + பட்டி.]

கோமம்பட்டு

 கோமம்பட்டுāmambaṭṭu, பெ.(n.)

   தருமபுரி மாவட்டத்துச் சிற்றூர்; a village in Dharmapuri Dt.

     [கோமம் + பட்டு.]

கோமயம்

கோமயம்āmayam, பெ.(n.)

   1.மாட்டுச்சாணம்; cow-dung.

     “கோமயப் பூச்சிச் செய்தே” (இரகு.கடிம.79);.

   2. ஆன் (பகவின்); சிறுநீர்; cows urine.

     “இருநான்கு பஞ்சதசியேழ் இரண்டு தன்னில் வரமாகுங் கொள்கோமயம்” (சைவச. பெ.கு. 198);.

   3.காடிநீர்; fermented liquid, vinegar.

   4. ஆ (பசு);த்தன்மை; the nature or peculiarity of a cow (சா.அக.);.

     [கோ + மயம்]

கோமரத்தாடி

கோமரத்தாடிāmarattāṭi, பெ.(n.)

   உடலில் தெய்வங்களேறுவதால் வெறியாடுபவன் (G.Tn. D.I. 109);; a person who is inspired by deities and dances.

     [கோ + மரம் + அத்து + ஆடி.]

கோமரம்

கோமரம்1āmaram, பெ.(n.)

   தெய்வமேறி ஆடுகை (தெய்வ ஆவேசம்); (G.Tn.D I.109);; inspiration, possession by spirits.

     [ம. கோமரம் → த. கோமரம்.]

 கோமரம்2āmaram, பெ.(n.)

   சதுரக்கள்ளி (மலை.);; square spurge.

     [கூர் → கோ + மரம்]

கோமராசி

 கோமராசிāmarāci, பெ.(n.)

   குரங்கன்சுறா அல்லது புலிச்சுறா வென்னும் ஒருவகைக் கடல்மீன்; tiger-shark-Stegostoma tigrinum (சா.அக.);.

     [கோமம் + ராசி (உயிரினம்);]

கோமரி

 கோமரிāmari, பெ.(n.)

   ஓமம்; a species of cumin (சா.அக.);.

     [கூர்மலி → கூமலி → கோமரி]

கோமரிமோதம்

 கோமரிமோதம்āmarimōtam, பெ.(n.)

   ஓமம்; Omum plant, Carum copticum or Sison ammi (சா.அக.);.

கோமர்

 கோமர்āmar, பெ.(n.)

   நாவல் மரம்; jamoon tree (சா. அக.);.

     [கோமம் + மரம் – கோமமரம் → கோமார் (கொ.வ.);]

கோமலகம்

 கோமலகம்āmalagam, பெ.(n.)

   தாமரை நார் நூல்; lotus thread.

மறுவ. கோபத்திரம்.

     [கோமலம் → கோமலகம்]

கோமலதை

 கோமலதைāmaladai, பெ.(n.)

   மென்மை; that which is soft.

     [கோமலம் → கோமலதை]

கோமலமூலகம்

 கோமலமூலகம்āmalamūlagam, பெ.(n.)

   முருங்கை; drumstick tree.

     [கோமலம் + மூலகம்]

கோமலம்

கோமலம்āmalam, பெ.(n.)

   1. அழகு; beauty.

   2. நீர்; water.

   3. பேய்த்தேர்; a ghost (temple car); chariot,

   4.மிருது; softness.

   5. இளவேனில்; spring Season.

     [கும் → கும்மல் → கும்மலம் → கோமலம்]

கோமளம்

கோமளம்āmaḷam, பெ.(n.)

   1. மென்மை; softness, tenderness.

     “கோமளக் கொழுந்து” (திருவாச.5:68);. 2);

   இளமை; youthfullness, juvenility.

     “கோமளவான் கன்றைப்புல்கி” (திவ். திருவாய் 4:4:5);.

   3. அழகு (சூடா.);; loveliness, beauty.

     “கோமளம் பத்மராகம்” (அரிச்.நாட்டு. 10);.

   4.கறவை பெற்றம் (சூடா.);:

 milch cow.

   5.மாணிக்கவகை; a kind of ruby.

     “மாணிக்கம்…….. கோமளமும்” (S.I.I.ii,431.51);.

   6. மகிழ்ச்சி; joy.

     [கும்மல் → கும்மலம் → கோமளம்]

கோமளாங்கம்

 கோமளாங்கம்āmaḷāṅgam, பெ.(n.)

   மென்மையான வுடம்பு; tender body (சா.அக.);.

     [கோமளம் + அங்கம் → கோமளாங்கம்]

கோமாட்சிகம்

 கோமாட்சிகம்āmāṭcikam, பெ.(n.)

   மாட்டு ஈ; gad fly; cattle fiy, Musca domestica (சா.அக.);.

     [கோ+மாட்சிகம்]

கோமாட்டி

கோமாட்டிāmāṭṭi, பெ.(n.)

   தலைவி; heroine, mistress.

     “கவிரிதழ்க் குறக்கோ மாட்டி கணவனை (குற்றா, தல, நூற்பயன் 49);.

     [கோவன் → கோபன் → கோமம் + ஆட்டி → கோமாட்டி.]

கோமாணங்கையர்

கோமாணங்கையர்āmāṇaṅgaiyar, பெ.(n.)

அரசன் பெருந்தேவி:

 queen-in-chief in a kings harem.

     “பைந்தொடிக் கோமாணங்கையர்”(பெருங். உஞ்சைக். 40.63);.

     [கோமாள் + நங்கையர்.]

கோமாதாக்கள்

 கோமாதாக்கள்āmātākkaḷ, பெ.(n.)

   நந்தை, பத்திரை. சுரபி, சுசீலை, சுமனை என்ற ஐவகை ஆன் (பசு);கள்; the fine ‘mother cows’, viz., nantal, pattirai, surabi, susilai. Sumanai.

     [கோ + மாதாக்கள்.]

கோமான்

கோமான்1āmāṉ, பெ.(n.)

   1. அரசன்; king.

     “வத்தவர் கோமான் வயவர் திரிதர”(பெருங். உஞ்சைக். 44:93);.

   2. பெருமையிற் சிறந்தோன்; person of eminence, lord.

     “கோமாற்கே நாமென்று மீளா வாளாய்”(தேவா. 1236:1);

   3. குரு (பிங்.);; spiritual preceptor.

   4. மூத்தோன் (திவா.);; elder.

     [கோ + (மகன்); மான்]

 கோமான்2āmāṉ, பெ.(n.)

   பன்றி; hog.

     [கூர்மம் → கோமம் → கோமான்]

 கோமான்3āmāṉ, பெ.(n.)

   சதுரக்கள்ளி; square spurge.

     [கூர்மம் → கோமம் → கோமான்.]

கோமாபுரம்

 கோமாபுரம்āmāpuram, பெ.(n.)

   தஞ்சை மாவட்டத்துச் சிற்றூர்;  a village in Thanjai dt.

     [கோமம் + புரம்.]

கோமாப்பு

 கோமாப்புāmāppu, பெ.(n.)

   நரிநாவல்; small jaumoon (சா.அக.);.

     [கோ + (மால்); மாப்பு]

கோமாமிசப்பட்சணி

 கோமாமிசப்பட்சணிāmāmicappaṭcaṇi, பெ.(n.)

   மாட்டின் இறைச்சியைத் Élsårgumor; one who eats beef (சா.அக.);.

     [கோ+மாமிச+பட்சணி]

கோமாரி

 கோமாரிāmāri, பெ.(n.)

   மாடுகளின் கால்களிலும் வாயிலும் வரும் ஒருவகை நோய்; a kind of disease in the mouth and leg of cow.

மறுவ கோதாரி.

     [கோ (மாடு); + மாரி (நோய்);.]

கோமாளம்

கோமாளம்āmāḷam, பெ.(n.)

   1. கும்மாளம் குதித்து ஆடுகை; jumping, romping, as of fat bullocks.

   2. கொண்டாட்டம்; celebration.

   3. பகடி விளையாட்டு; a kind of fun play.

ம. கோமாளம்.

     [கும்மாளம் → கோமாளம்]

கோமாளி

கோமாளி1āmāḷittal,    4 செ.கு.வி.(v.i.)

   கோமாளித்தனஞ் செய்தல் (பாண்டி);; to play the buffoon;

 to indulge in drollery.

     [கோமாளம் → கோமாளி.]

 கோமாளி2āmāḷi, பெ.(n.)

   1. நகைச்சுவையூட்டுபவன்; buffoon, a clown.

     “நிலையிலாத கோமாளி (திருப்பு. 530);.

   2. பேதை; a simpleton.

   ம. கோமாளி;கோத. கோமாள்ய.

     [கும்மாளம் → கும்மாளி → கோமாளி.]

கோமாளிக்குணம்

 கோமாளிக்குணம்āmāḷikkuṇam, பெ.(n.)

   பித்து; madness (சா. அக.);.

     [கோமாளி + குணம்.]

கோமாளிக்கூத்து

 கோமாளிக்கூத்துāmāḷikāttu, பெ.(n.)

   நகைப்பு விளைக்குஞ் செயல்; buffoonery.

     [கோமாளி + கூத்து.]

கோமாளித்தனம்

 கோமாளித்தனம்āmāḷittaṉam, பெ.(n.)

   பேதைத்தனம்; baffoonness.

     [கோமாளி + தனம்.]

கோமாளூர்

 கோமாளூர்āmāḷūr, பெ.(n.)

   விழுப்புரம் மாவட்டத்துச் சிற்றூர்; a village in Villuppuram dt.

     [கோமாள் + ஊர்.]

கோமாள்

கோமாள்āmāḷ, பெ.(n.)

   தலைவி; mistress.

     “கோமாட் கோடிய குறிப்பின னாகி” (பெருங். மகத. 8:59);.

     [கோமகள் → கோமாள்]

கோமி

கோமிāmi, பெ.(n.)

கோமதி பார்க்க;see kõmadi.

     “கோமியு முறையுங் குடமுக்கிலே” (தேவா. 432:8);.

     [கோமதி → கோமி.]

கோமியம்

 கோமியம்āmiyam, பெ.(n.)

   ஒன்பது (நவ); வகை மணிகளுள் ஒன்று (சங்.அக.);; sardonyx from the Himalayas and the Hindus, one of nava-mani(செ.அக.);.

கோமியவண்ணம்

 கோமியவண்ணம்āmiyavaṇṇam, பெ.(n.)

   ஆவின் சிறுநீரை நிறத்தை ஒத்த கல் அதாவது கோமேதகம்; one of the gems resembling the colour of cow’s urine, Cinnamon stone (சா.அக.);.

     [கோமியம்+வண்ணம்]

கோமிருகம்

 கோமிருகம்āmirugam, பெ.(n.)

   கத்தூரிமான்; musk deer (சா.அக.);.

     [கோ + மிருகம்.]

கோமிலாய்

 கோமிலாய்āmilāy, பெ.(n.)

   காட்டுவிலங்கின் தன்மையன் (யாழ்.அக.);; rude, brutish person.

     [கோமுரான் → கோமிலா(ன்);ய்.]

கோமுகம்

கோமுகம்1āmugam, பெ.(n.)

   1. கோமுகா விருக்கை பார்க்க;see Komuga-v-irukkai.

   2. கோமுகி பார்க்க;see komugi. ஒரு விரல்

உசரத்து கோமுகம் ஒன்று (S.I.I. ii. 176. 60);.

     [கோ + முகம்]

 கோமுகம்2āmugam, பெ.(n.)

   ஒருவகை இசைக் கருவி; a kind of musical instrument.

     [கோ + முகம்]

கோமுகாசனம்

 கோமுகாசனம்āmukācaṉam, பெ.(n.)

   கணுக்கால்களை இடுப்புச் சந்தில் சேர்க்கும் இருக்கை (ஆசன); வகை (ஆவின் முகம் போன்ற இருக்கை);; a yogic posture which consists in crossing the ankles and placing them on the hip joints (செ.அக.);.

கோமுகாவிருக்கை

 கோமுகாவிருக்கைāmukāvirukkai, பெ.(n.)

   கணுக்கால்களை இடுப்புச் சந்திற் சேர்க்கும் மாட்டின் முகம் போன்ற ஒக இருக்கை வகை; a yogic posture which consists in crossing the ankles and placing them in the hip joints.

மறுவ. கோமுகாசனம்

     [கோமுகம் + இருக்கை]

கோமுகி

 கோமுகிāmugi, பெ.(n.)

   ஆன் (பசு); முதலியவற்றின் முகமாகச் செய்யப்பட்ட நீர்விழும்வாய்; gargoyle as in the form of cows’ head, projecting from a building, pedestal of a lingam etc.

மறுவ. கோமுகம், கோமுகை.

     [கோ + முகி]

கோமுகை

கோமுகைāmugai, பெ.(n.)

கோமுகிபார்க்க see ko-mugi.

     “ஒருமுழங் கோமுகையோடும்” (சைவச. பொது. 505);.

     [கோ + (முகி); முகை.]

கோமுச்சிரவல்லி

 கோமுச்சிரவல்லிāmucciravalli, பெ.(n.)

   சித்திரமூலம் என்னும் கொடி (மலை.);; Ceylon leadwort, climber.

மறுவ. கொடுவேலி.

     [கோமுகம் + சிரவல்லி.]

கோமுட்டி

கோமுட்டி1āmuṭṭi, பெ.(n.)

   தெலுங்கு பேசும் வணிகர்; Telugu speaking merchant.

     [கோ + முட்டி. மாட்டு மந்தைகளையுடைய செல்வன்.]

 கோமுட்டி2āmuṭṭi, பெ.(n.)

   பாயுடன் கூடிய மரம்; a wood along with a mat.

     [கோ + முட்டி.]

கோமுட்டிக்குட்டு

 கோமுட்டிக்குட்டுāmuṭṭikkuṭṭu, பெ.(n.)

   கோமுட்டிகளின் கமுக்கமான வணிகத் தரவுகள்; trade-secrets, as of a kömutti.

     [கோமுட்டி + குட்டு.]

கோமுட்டிச்சாட்சி

 கோமுட்டிச்சாட்சிāmuṭṭiccāṭci, பெ.(n.)

   வழக்காடி, எதிர்வழக்காடி இருவருக்கும் ஏற்ப உரைக்கும் சான்று (கோமுட்டி சொல்லுஞ் சான்று);; evidence equally favourable to the plaintiff and defendant, evidence of ambiguous value.

     [கோமுட்டி + சாட்சி.]

கோமுனி

கோமுனிāmuṉi, பெ.(n.)

   அரச குரு; royal sage.

     “சரங்களே கொடு கோமுனி யிருக்கையோர் கூட மாக்கினான்”(கம்பரா. வேள்வி. 49);.

     [கோ + முனி.]

கோமுராச்சுறா

 கோமுராச்சுறாāmurāccuṟā, பெ.(n.)

   சுறாமீன் வகைகளுலொன்று; a kind of shark fish.

கோமுராச்சுறாமீன்

     [கோமுரா + சுறா.]

கோமுறியான்

 கோமுறியான்āmuṟiyāṉ, பெ.(n.)

   பிலால் வகையைச் சார்ந்ததொரு கடல்மீன் (மீனவ.);; a kind of sea fish as of piläl.

     [கோ + முறியான்.]

கோமுறை

கோமுறை1āmuṟai, பெ.(n.)

   அரசனது நெறி தவறாத ஆட்சி; just rule of a king.

     “கோமுறையன்றிப் படுபொருள் வெளவிய” (சிலப். 23:101);.

     [கோ + முறை.]

 கோமுறை2āmuṟai, பெ.(n.)

   அரசிறை; revenue.

     “நாம் கொள்ளும் கோமுறைகளுமே” (S.I.I.V.312);.

     [கோ + முறை.]

கோமுறைபாடு

கோமுறைபாடுāmuṟaipāṭu, பெ.(n.)

   அரசு இட்டுள்ள இறை, வரி முதலிய கட்டுப்பாடுகள்; regularisation of rate, tax levied by the Government.

     “இந் நான்கெல்லைக்கு உட்பட்ட நஞ்செய் புஞ்செய் பட்டடை கொடித்தோட்டம் மரவடை மாவடை மற்றும் நாங்கொள்ளும் கோமுறை பாடுகளும் மற்றும் எப்பேற்பட்ட சுவந்திரங்களும்” (SII.V. 763→6 p. 329);.

     [கோ + முறைபாடு.]

கோமுற்றவர்

கோமுற்றவர்āmuṟṟavar, பெ.(n.)

   அரசர்; king,

     “கோமுற்றவர் கொள்ளுதல்” (அஷ்டாதச, ப. 71);.

     [கோ + முற்று – கோமுற்று → கோமுற்றவர்.]

கோமூத்திரம்

கோமூத்திரம்āmūttiram, பெ.(n.)

   ஆவின் சிறுநீர்; cow’s urine (சா.அக.);.

     [கோ + மூத்திரம்.]

முள் – (மொள்); = மோள். மோளுதல் → சிறுநீர்விடுதல். மோள் + நிரம் – (மோட்டிரம்); – மோத்திரம் → மூத்திரம். மோள் என்னும் வினையும் மோத்திரம் என்னும் பெயர் வடிவும் இன்றும் பாண்டி நாட்டில் வழங்குகிறது (வட.வர.244);.

கோமூத்திரிகை

கோமூத்திரிகை1āmūttirigai, பெ.(n.)

   1. ஒரு வகைப் புல்; a kind of yellowish brown grass.

   2. ஒரு கொடி; a creeper (சா. அக.);.

     [கோ + (மூத்திரம்); மூத்திரிகை.]

 கோமூத்திரிகை2āmūttirigai, பெ.(n.)

   ஒரு செய்யுளின் முன்னிரண்டடி மேல்வரியாகவும் பின்னிரண்டடி கீழ்வரியாகவும் எழுதி அவ் விரண்டு வரியின் எழுத்துகளையும் மாட்டின் சிறுநீர்த் தாரைபோல் மாறிமாறிப்படிக்க அச் செய்யுளாகும்படி அமைத்துப் பாடும் சித்திரகவி (தண்டி. 95);; verse of two lines composed in such a way that the first letter of the first, the 2nd of the 2nd, the 3rd of the first, the 4th of the 2nd, etc., when read together form the 1st line and the 1st of the 2nd, the 2nd of the 1st, the 3rd of the 2nd, the 4th of the 1st etc., form the second line.

கோமூத்திரிகை

 Skt. muttirika.

     [கோ + (மூத்திரம்); மூத்திரிகை.]

கோமேதகத்தீவு

கோமேதகத்தீவுāmētagattīvu, பெ.(n.)

   தொன்மங்களில் கூறப்பட்ட எழுவகைத் தீவுகளுள் ஒன்று: (சி.போ,பா,ப.209);; an annular continent mentioned in Puranas.

     [கோமேதகம் + தீவு.]

கோமேதகம்

கோமேதகம்āmētagam, பெ.(n.)

   ஒன்பான் மணிகளுளொன்று (சிலப். 14:190, உரை);; sardonyx from the Himalayas and the Indus, one of nine gems.

     [கோ + மேதகம். கோ + (மேதம்); மேதகம். கோ = மாடு. மேதம் = கொழுப்பு.]

மாட்டுக் கொழுப்பின் நிறம் கொண்ட மணி கோமேதகம் எனப்பட்டது. இதில் வெண்மை, வெளிர்மஞ்சள், சிவப்பு, கருநீல வகைகளும் உண்டு.

கோமேதம்

கோமேதம்1āmētam, பெ.(n.)

கோமேதகம் பார்க்க;see kõmēdagam.

     [கோ + (மேதகம்); மேதம்.]

 கோமேதம்2āmētam, பெ.(n.)

ஆவின் கொழுப்பைத் தீயிலிடும் வேள்வி: cow.sacrifice.

     “கோமே மிராச சூயம்” (உத்தரா.திக்குவி. 117);.

     [கோ + மேதம். கோ = ஆ, மாடு, மேதம் = கொழுப்பு.]

கோம்பறை

கோம்பறை1āmbaṟai, பெ.(n.)

   பயனற்றது (யாழ்.அக.);; that which is good for nothing.

     [கோம்பை → கோம்பறை.]

 கோம்பறை2āmbaṟai, பெ.(n.)

ஒருவகைக் கடல் மீன்:

 a kind of sea fish.

     [கோம்பு → கோம்பறை (முக்கோண வடிவினது);.]

கோம்பல்

கோம்பல்1āmbal, பெ.(n.)

   1. குறையாத சினம் (பிங்.);; vehement anger.

   2. மிகுசினம் (திவா.);; rage

   3. முன்கோபம் (திவா.);; hot temper.

     [கோம்பு → கோம்பல்.]

கோம்பவிளை

 கோம்பவிளைāmbaviḷai, பெ.(n.)

   குமரி மாவட்டத்துச் சிற்றூர்; a village in Kanyakumari Dt.

     [கோம்பு + விளை.]

கோம்பி

கோம்பிāmbi, பெ.(n.)

   1. பச்சோந்தி (பிங்.);;  chameleon.

   2. ஒந்திப் பொது:

 bloodsucker.

     “கோம்பிக் கொதுங்கி மேயா மஞ்ஞை” (திருக்கோ 21);.

     [கோம்பு → கோம்பி.]

கோம்பு

கோம்பு1āmbudal,    5 செ.கு.வி (v.i.)

   சினத்தல் (பிங்.);; to be angry, furious.

     [கூம்பு → கோம்பு.]

 கோம்பு2āmbu, பெ.(n.)

சினக்குறிப்பு:

 anger. signs of anger.

     “கோம்பு படைத்த மொழிசொல்பரத்தையர்” (திருப்பு. 263);.

     [கூம்பு → கோம்பு.]

 கோம்பு3āmbu, பெ.(n.)

   நீர்த்தேக்கப்பகுதிகளில் ஆற்றோடு வந்துசேரும் சிற்றாறு அல்லது நீர்க்கால் பள்ளச்சாய்கால்களில் நிலப்பரப்பின் உட்புகுந்து நீர் தேங்கும் கூம்பு தோற்றத்து பள்ளப் பகுதி; area of water stagnation in the low belts adjacent to the main storage of the dam.

இந்த ஆண்டு கோம்பில் நீர் ஏறியதால் முழுவடையில் பயிரிடவில்லை (கொங்.வ.);.

     [கோத்தல் → கோ (நீர்கோத்தல்); → கோம்பு.]

கோம்புபாளையம்

 கோம்புபாளையம்āmbupāḷaiyam, பெ.(n.)

   கரூர் மாவட்டத்துச் சிற்றூர்; a village in Karur Dt.

     [கோம்பு + பாளையம்.]

கோம்பூர்

 கோம்பூர்āmbūr, பெ.(n.)

   தருமபுரி மாவட்டத்துச் சிற்றூர்; a village in Dharmapuri Dt.

     [கோம்பு + ஊர்.]

கோம்பை

கோம்பை1āmbai, பெ.(n.)

   1. தேங்காய் முதலியவற்றின் மேலோடு (தஞ்சை.);; shell of a coconut or arecanut with the husk, young palmyra fruit after the edible kernel is removed.

   2. அறிவிலி (தஞ்சை.);; empty headed person.

   3. காட்டிலுள்ள மரக்கட்டை வேலி; stockade in a forest.

ம. கோம்ப.

     [குரும்பை → கோம்பை.]

 கோம்பை2āmbai, பெ.(n.)

   தேனி மாவட்டத்தில் ஓர் ஊர்; a town in Theni district noted for dogs.

     [கோம்பு → கோம்பை.]

 கோம்பை3āmbai, பெ.(n.)

   கூரை, ஒட்டு வீடுகளின் பக்கச் கவர்களின் முக்கோண வடிவ மேற்பகுதி (கட்.தொ.);; top triangular portion of side walls of tiled or thatched houses.

     [கோம்பு → கோம்பை.]

கோம்பை

கோம்பை நாய்

 கோம்பை நாய்āmbaināy, பெ.(n.)

   கோம்பை ஊரிலுள்ளதும் காவல் புரிவதிற் சிறந்ததுமான ஒருவகைச் செந்நாய்; species of large red dogs used as watch dogs, bred in Kombai in Theni district.

     [கோம்பை + நாய்.]

கோம்பைக் கலயம்

 கோம்பைக் கலயம்āmbaikkalayam, பெ.(n.)

   அடியற்ற மட்பாண்டம்; a bottomless mud-vessel.

     [கோம்பை + கலயம்.]

கோம்பைப்பட்டி

 கோம்பைப்பட்டிāmbaippaṭṭi, பெ.(n.)

   திண்டுக்கல் மாவட்டத்துச் சிற்றூர்; a village in Dhindukkal dt.

     [கோம்பை + பட்டி.]

கோம்மரை

கோம்மரைāmmarai, பெ.(n.)

   தஞ்சாவூர் மாவட்டம் தண்டந்தோட்டம் அருகிருந்த ஊர்; a place near Thandanthottam in Thanjavur dt.

     “மாத்தர கோத்திரத்து இரண்ய கேசி சூத்திரத்து கோம்மரை சுவாமிதத்தா பட்டன்”(பல்.செ.முப்.பக் 222 வ..208, தண்.தோ.செ.);.

     [கோம்பரை → கோம்மரை.]

கோயக்கண்

 கோயக்கண்āyakkaṇ, பெ.(n.)

   மாறுகண்; squint eye.

     [கோய் + கண் – கோய்க்கண் → கோயக்கண்.]

கோயன்

கோயன்āyaṉ, பெ.(n.)

   1. மாடுமேய்ப்பவன், ஆயன்; a cowherd.

   2. மாட்டு மந்தைக்கு உரிமை யாளன்; owner of a herd.

     [கோள் = பகைவரிடம் கொள்ளையடித்த மாடுகள், கோள் → கோ + அன் → கோயன்.]

கோயமுத்தூர்

 கோயமுத்தூர்āyamuttūr, பெ.(n.)

கோவன் புத்தூர் பார்க்க;see kövan-puttur.

     [கோவன் – கோயன் + புத்தூர்.]

கோயம்புத்தூர்

 கோயம்புத்தூர்āyambuttūr, பெ.(n.)

கோவன் புத்தூர் பார்க்க;see kovan-puttur.

     [கோவன் (ஆயன்); + புத்தூர் = கோவன்புத்தூர் → கோயம்புத்தூர்.]

கோவன் என்னும் ஆயர் இனத் தலைவன் வாழ்ந்த ஊர் என்பதனால் கோவன்புத்தூர் ஆகிப் பின்னர்க் கோயம்புத்தூர் ஆயிற்று.

கோயம்பேடு

 கோயம்பேடுāyambēṭu, பெ.(n.)

   சென்னை மாவட்டத்துச் சிற்றூர்; a village in Chennai Dt.

     [கோள் = பகைவரிடம் கொள்ளையடித்த மாடுகள். கோள் → கோ + அன் – கோயன் (மாடு மேய்ப்பவன். மாட்டு மந்தைக்காரன்.); + பேடு (மேட்டு நிலம்); → கோயம்பேடு.]

கோயர்

கோயர்āyar, பெ.(n.)

   1. கோயன் பார்க்க;see koyan.

   2. கோசர் என்னும் வகுப்பினர்; people known as Kosar.

   3. கோதாவிரிக்கரையில் வாழும் திராவிட வகுப்பினர்; a Dravidian tribal group of people in the Godaviri region of Andra Pradesh.

     [கோ → கோயன் → கோயர் (மாடு மேய்ப்பவர்);.]

 கோயர்āyar, பெ.(n.)

   மலை நிலைத் தலைவர்; head ofhill tribe.

   2.அரசக் கிளை மரபினர்; a branch of a royal family.

மறுவகோசர், கோமன்,கோமர்.

ம.கோயர்_கோய்கள் (அரசர்);.

     [கோ+அர்-கோசர்-கோயர்]

கோயா

 கோயாāyā, பெ.(n.)

   ஆந்திர மாநிலத்தில் வாரங்கல், கம்மம், கோதாவரிப் பகுதிகளிலும், சட்டித்(ஸ்);கர் (பஸ்தர்);, ஒரியா (கோரபட்); மாநிலங்களிலும் பழங்குடிமக்கள் இரண்டிலக்கம் பேருக்குமேல் பேசி வரும் திரவிடமொழி; a Dravidian language spoken by more than two lakhs Tribals in Andhra Pradesh (Warangal, Kammam, Godavari); etc.

     [கோ = மலை. கோ → கோயன் → கோயா (மலைவாழ்நன்);.]

கோயினான்மணிமாலை

 கோயினான்மணிமாலைāyiṉāṉmaṇimālai, பெ.(n.)

   சிதம்பரத்திலுள்ள சிவபெருமான்மீது பட்டினத்தடிகள் பாடியதொரு சிற்றிலக்கியம்; a poem by Pattinattadigal in praise of Śiva at Chidambaram.

     [கோயில் + நான்மணி + மாலை.]

கோயின்மேரை

 கோயின்மேரைāyiṉmērai, பெ.(n.)

   கோயிலுக்குக் கொடுக்கும் விளைச்சல் பகுதி; portion of agricultural produce set apart for temple.

     [கோயில் + மேரை.]

கோயின்மை

கோயின்மைāyiṉmai, பெ.(n.)

   1. பெருமை; royal dignity, pride, as of a king.

     “அடிமை யென்னுமக் கோயின்மை யாலே” (திவ். பெரியாழ்.5.1:4);.

   2. செருக்கு; arrogance, conceit.

     “கொங்கை நஞ்சுண்ட கோயின்மைகொலோ” (திவ். பெரியதி. 11.1:4);.

மறுவ: கோவின்மை.

     [கோயில் → கோயின்மை.]

கோயிற்கட்டணம்

கோயிற்கட்டணம்āyiṟkaṭṭaṇam, பெ.(n.)

உவளகம் (அந்தப்புரம்);:

 palace-zenana.

     ‘பெரிய பிராட்டியார் எழுந்தருளியிருக்கிற கோயிற்கட்டணமாய்” (ஈடு.10.10:9);.

     [கோயில் + கட்டணம்.]

கோயிற்கட்டி

 கோயிற்கட்டிāyiṟkaṭṭi, பெ.(n.)

உண்டைக்கட்டி:

 balls of cooked rice distributed in temples.

     [கோயில் + கட்டி.]

கோயிற்கணக்கு

கோயிற்கணக்கு1āyiṟkaṇakku, பெ.(n.)

   கோயிற்கணக்கன்; temple accountant.

     “இக் கோயிற் கணக்குகாணியுடைய நெற்குப்பை உடையான்” (S.I.I.V,645);.

     [கோயில் + கணக்கு.]

 கோயிற்கணக்கு2āyiṟkaṇakku, பெ.(n.)

   ஊர் தோறும் கிறித்தவரின் பிறப்பிறப்பு மற்றும் மண நிகழ்வுபற்றிப் பதியும் கோயிலிலுள்ள கணக்குப் புத்தகம் (யாழ்.அக.);; the Parish registry.

     [கோயில் + கணக்கு.]

கோயிற்கணக்குக் காணி

கோயிற்கணக்குக் காணிāyiṟkaṇakkukkāṇi, பெ.(n.)

கோயில் கணக்கர் இறையிலிநிலம்:

 Govt. Tax free land of the temple accountant.

     “திருவூறலுடையார் கோயில் கணக்குக் காணி உடைய பெருந்துறுடையான்” (S.I.I.V.1380-2 p. 500);.

கோயில் + கணக்கு + காணி,]

கோயிற்கலஞ்செய்-தல்

கோயிற்கலஞ்செய்-தல்āyiṟkalañjeytal, பெ.(n.)

   1. செ.கு.வி. (v.i);

   கோயிலிடித்தல்; to demolish a temple.

     “மாந்தரைக் குழியுளுந்துதல் கோயிற் கலஞ் செய்தல்” (நீலகேசி, 540);.

     [கோயில் + கு + அலம் + செய்.]

கோயிற்காலம்

 கோயிற்காலம்āyiṟkālam, பெ.(n.)

   கோயில்களில் அவ்வக் காலத்துச் செய்யப்படும் பூசை; temple worship performed at different hours of the day.

     [கோயில் + காலம்.]

கோயிற்காளை

கோயிற்காளைāyiṟkāḷai, பெ.(n.)

   1. கோயிலுக்கு விடப்பட்ட காளை; bull of the temple.

   2. அடங்காத்தடியன்; fat and unruly fellow.

     [கோயில் + காளை.]

கோயிற்கிராமம்

 கோயிற்கிராமம்āyiṟkirāmam, பெ.(n.)

   கோயிலுக்குச் சொந்தமான சிற்றூர்; a village belonging to a temple.

     [கோயில் + (கம்மம்); கிராமம்.]

கோயிற்குடிமை

கோயிற்குடிமைāyiṟkuḍimai, பெ.(n.)

   கோயிலுக்குரிய பணியாளர் கோயில் நிலபுலன்களில் வீடு கட்டிக்கொண்டு வாழும் உரிமை; right to erect house in temple land by the temple servant.

     “கொயில் குடிமை திருஅரங்கு விரபொகம், மடஅரிசி உள்ளிட்டன தவிர்வதாகவும்” (தெ.க.தொ.8, கல்.44);,

     [கோயில் + குடிமை.]

கோயிற்குடியான்

 கோயிற்குடியான்āyiṟkuḍiyāṉ, பெ.(n.)

   சங்கூதும் பணிசெய்வோன்; conch-blower, a servile caste.

     [கோயில் + குடியான்.]

கோயிற்குட்டி

 கோயிற்குட்டிāyiṟkuṭṭi, பெ.(n.)

கோயிற் பிள்ளை பார்க்க;see koyir- pillai.

     [கோயில் + குட்டி.]

கோயிற்குத்து

 கோயிற்குத்துāyiṟkuttu, பெ.(n.)

   கோயில் வாசலுக்கு நேராக மனையின் வாசலமைதல்; the entrance of a home kept directly opposite to the entrance of a temple.

     [கோயில் + குத்து.]

கோயிற்குறுணி

 கோயிற்குறுணிāyiṟkuṟuṇi, பெ.(n.)

   களத்தில் முதன் முதலாகக் கோயிலுக்குக் கொடுக்கும் குறுணியளவுள்ள தவசம்; first kuruni of a harvest given as an offering to the temple.

ம. கோயிற்குறுணி,

     [கோயில் + குறுணி.]

கோயிற்கூட்டி

 கோயிற்கூட்டிāyiṟāṭṭi, பெ.(n.)

   கிறித்தவக் கோயிலைப் பெருக்கித் தூய்மை செய்பவள்; church sweeper

     [கோயில் + கூட்டி.]

கோயிற்கூழைத்தனம்

கோயிற்கூழைத்தனம்āyiṟāḻaittaṉam, பெ.(n.)

   அரசன் அவையிலுள்ளார் காட்டும் போலி வணக்கம்; hypocritical behaviour, characteristic of courters.

     ‘நீங்கள் கோயிற் கூழைத்தனம் அடிக்கிறபடி இதுவோ! (திவ். இயற்.திருவிருத். 90, வியா. 468);.

     [கோயில் + கூழை + தனம்.]

கோயிற்கேள்வி

கோயிற்கேள்விāyiṟāḷvi, பெ.(n.)

கோயில் மேலாளர் (I.M.P.N.A. 191);:

 temple manager.

     [கோயில் + கேள்வி. கேள்விகேட்டவர் = மேலாளர்.]

கோயிற்கொத்து

கோயிற்கொத்துāyiṟkottu, பெ.(n.)

   கோயில் அல்லது அரண்மனைப் பணியாள்கள் (M.E.R. 1923-4, p. 103);; temple or palace servants

     “கோயிற்கொத் தடிமைத் தாசி இருக்குமனை” (சரவண. பணவிடு. 192);.

     [கோயில் + கொத்து.]

கோயிற்கொள்(ளு)-தல்

கோயிற்கொள்(ளு)-தல்āyiṟkoḷḷudal,    13 செ. குன்றாவி, (v.t.)

   வாழுமிடமாகக் கொள்ளுதல்; to take up abode in, inhabit.

     “திருக்கடித் தானத்தைக் கோயில் கொண்டான்”(திவ். திருவாய். 8:6:5);.

     [கோயில் + கொள்(ளு);-.]

கோயிற்சாந்து

கோயிற்சாந்துāyiṟcāndu, பெ.(n.)

   அரசர் பூசுதற்குரிய கலவைச் சந்தனம்; sandal-paste of superior quality, as suited to a king.

     ‘கோயிற்சாந்தை உன்னால் ஒளிக்கப்போமோ’ (திவ்.திருப்பா.10, வியா.120);.

     [கோயில் + சாந்து.]

கோயிற்சுற்று

 கோயிற்சுற்றுāyiṟcuṟṟu, பெ.(n.)

   கோயிலைஅடுத்துள்ள இடம்; vicinity or neighbourhood of a temple.

     [கோயில் + சுற்று.]

கோயிற்சேரி

 கோயிற்சேரிāyiṟcēri, பெ.(n.)

   கோயிலுக்குச் சொந்தமான குடியிருப்புப் பகுதி; part of a village belonging to a temple.

     [கோயில் + சேரி.]

கோயிற்படி

 கோயிற்படிāyiṟpaḍi, பெ.(n.)

   கோயிலிற் கிடைக்கும் அன்றாடக் கட்டளை (வின்.);; daily allowance for the expenditure of a temple.

     [கோயில் + படி.]

கோயிற்பணிப்பெண்

 கோயிற்பணிப்பெண்āyiṟpaṇippeṇ, பெ.(n.)

   கோயிலிற் பணியாற்றும் பெண்; maid servant of the temple.

     [கோயில் + பணிப்பெண்.]

கோயிற்பண்ணியர் விருத்தம்

 கோயிற்பண்ணியர் விருத்தம்āyiṟpaṇṇiyarviruttam, பெ.(n.)

நம்பியாண்டார் நம்பியால் இயற்றப்பெற்றுப் பதினொராந் திருமுறையுள் சேர்க்கப்பெற்றுள்ளதொரு சிற்றிலக்கியம்:

 a poem in Patinoräntirumurai composed by Nambi yãnợãr nambi.

     [கோயில் + பண்ணியர் + விருத்தம்.]

கோயிற்பதாகை

 கோயிற்பதாகைāyiṟpatākai, பெ.(n.)

   சென்னை மாவட்டத்துச் சிற்றூர்; a village in Chennai Dt.

     [கோயில் + (படாகை); பதாகை.]

கோயிற்பறவை

கோயிற்பறவைāyiṟpaṟavai, பெ.(n.)

   1. புறா; pigeon.

   2. மயில்; peacock (சா. அக.);.

     [கோயில் + பறவை.]

கோயிற்பற்று

கோயிற்பற்றுāyiṟpaṟṟu, பெ.(n.)

   1. கோயிலுக்குரிய நிலம் முதலியவை; lands, etc. belonging to a temple.

   2 கிறித்தவக்கோயிலின் ஆளுகைக்குட்பட்ட ஊர்ப்பகுதி; Parish district belonging to a church.

ம. கோயிர்ப்பற்று.

     [கோயில் + பற்று.]

கோயிற்பாறை

கோயிற்பாறைāyiṟpāṟai, பெ.(n.)

   பூம்புகாருக்குக் கிழக்கே 15 பாகக் கடலடியில் காணுமொரு கடற்பாறை; a sea rock at about 15 fathom depth in the sea east of Pumpugar.

     [கோயில் + பாறை.]

கோயிற்பாளையம்

 கோயிற்பாளையம்āyiṟpāḷaiyam, பெ.(n.)

   ஈரோடு மாவட்டத்துச் சிற்றூர்; a village in Erode Dt.

     [கோயில் + பாளையம்.]

கோயிற்பிரதிட்டை

கோயிற்பிரதிட்டைāyiṟpiratiṭṭai, பெ.(n.)

   1. கோயில்களில் நிலைகோள் (பிரதிஷ்டை); மற்றும் தூய்மை (சுத்தி); செய்வதற்கும் உரிய நடப்பு குடமுழுக்கு; consecration of a temple causing the deity to take up its abode in the idol.

   2. கிறித்துவக் கோயிலின் நிறுவனம் (தாபனம்);; establishment of a church (செ.அக.);.

     [கோயில்+Skt, பிரதிட்டை]

கோயிற்பிராகரம்

கோயிற்பிராகரம்1āyiṟpirākaram, பெ.(n.)

கோயிற்றிருரச்சுற்று பார்க்க;see köylr-riruccurru.

     [கோயில் + பிராகாரம்.]

கோயிற்பிராகாரம்

கோயிற்பிராகாரம்2āyiṟpirākāram, பெ.(n.)

   கிருத்தவக் கோயில்களில் பிணம் புதைக்குமிடம்; church yard.

     [கோயில் + பிராகாரம்.]

கோயிற்பிள்ளை

 கோயிற்பிள்ளைāyiṟpiḷḷai, பெ.(n.)

   கிறித்தவக் கோயிலின் அலுவலர்; church warden;

 sexton.

மறுவ. கோயிற்குட்டி.

     [கோயில் + பிள்ளை.]

கோயிற்புரம்

 கோயிற்புரம்āyiṟpuram, பெ.(n.)

   குமரி மாவட்டத்துச் சிற்றூர்; a village in Kanyakumari Dt.

     [கோயில் + புரம்.]

கோயிற்புராணம்

 கோயிற்புராணம்āyiṟpurāṇam, பெ.(n.)

   உமாபதி சிவாச்சாரியார்(சிதம்பரம்); தில்லையின் பெருமை குறித்து இயற்றிய தொன்மநூல்; a puramam by UmapathiSvāccāriyār dealing with Chidambaram.

     [கோயில் + புராணம்.]

கோயிற்புறம்

 கோயிற்புறம்āyiṟpuṟam, பெ.(n.)

   கோவிலுக்குக் கொடையாக விடப்பட்ட நிலம்; land endowed to a temple.

     [கோயில் + புறம்.]

கோயிற்புறா

 கோயிற்புறாāyiṟpuṟā, பெ.(n.)

   மாடப் புறா; blue rock-pigeon.

     [கோயில் + புறா.]

கோயிற்பூனை

 கோயிற்பூனைāyiṟpūṉai, பெ.(n.)

   மதவேடதாரி (வின்.);; dissembler in religion;hypocrite.

     [கோயில் + பூனை.]

கோயிற்பெண்டுகள்

கோயிற்பெண்டுகள்āyiṟpeṇṭugaḷ, பெ.(n.)

   கோயில்களில் பணிபுரியும் பெண்கள்;   தேவரடியார்; women working in temple.

     “தன்மீஸ்வரமுடைய நாயனார் கோயில் தானத்தோம் கோயில் பெண்டுகள் மக்களும், புத்திர புத்திரரும்”(S.I.I.VI. 254);.

     [கோயில் + பெண்டுகள்.]

கோயிற்பெருச்சாளி

 கோயிற்பெருச்சாளிāyiṟperuccāḷi, பெ.(n.)

   கோயிற் சொத்தைப் பறிக்க முயல்வோன்; one who misappropriates temple funds.

     “உங்களப்பன் கோயிற் பெருச்சாளி” (தனிப்பா.);.

     [கோயில் + பெருச்சாளி, பெருச்சாளி = உழைப்பின்றி உண்டு கொழுப்பது. அதுபோல் கோயிற் சொத்தை உண்டு கொழுப்போன்.]

கோயிற்றமப்பேறு

கோயிற்றமப்பேறுāyiṟṟamappēṟu, பெ.(n.)

   ஒருவகை வரி; a kind of tax in nanjai land.

     “அந்தராயம் குடிமை கொயிற்றமப் பேறு நகர வினியோகம் உள்ளிட்டு வருவனவும் இந்நிலத்துக்கு தண்டாதொழியக் கடவதாகவும்”(S.I.I.XVII.287-3);.

     [கோயில் + தாமம் + பேறு.]

கோயிற்றமர்

கோயிற்றமர்āyiṟṟamar, பெ.(n.)

   வழிபாடு, வரவுசெலவுக் கணக்கு, கண்காணிப்பு, தணிக்கை ஆய்வு ஆகிய அனைத்துப் பணிகளையும் நிகழ்த்தும் பூசகர்; the priest who is looking after the administration of the temple.

     “அடுத்த ஆண்டைச் செலவு கோயிற்றமர் தவிராமையாலும்” (தெ.க.தொ.8, கல்97);.

     [கோயில் + தமர்.]

கோயிற்றிருச்சுற்று

 கோயிற்றிருச்சுற்றுāyiṟṟiruccuṟṟu, பெ.(n.)

கோயிற்சுற்று பார்க்க;see Koyir-surru.

     [கோயில் + திரு+ சுற்று.]

கோயிற்றூக்கு

கோயிற்றூக்குāyiṟṟūkku, பெ.(n.)

   தாளவகையுள் ஒன்று (சிலப்.14:150, உரை);; a variety of time-measure.

     [கோயில் + தூக்கு.]

கோயிலகம்

 கோயிலகம்āyilagam, பெ.(n.)

   கோயில் உள்ளகம்;  the inner part of the temple.

     [கோயில் + ஆகம்.]

கோயிலக்கரமண்டபம்

கோயிலக்கரமண்டபம்āyilakkaramaṇṭabam, பெ.(n.)

   கோயில் முன்மண்டபம்; the first mandapam in a temple.

     “இக்கோயிலக்கற மண்டபத்து தளம் வடவெற்றாற்றி நித்தவினோத புரத்து அழியா நிலையில் வியாபாரிகளில் கோட்டாறுடையான முகிலன் குனிச்சாண்டார் தன்மம்” (புது.கல்.1029);.

     [கோயில் + அக்கரம் + மண்டபம்,]

கோயிலங்காடியார்

 கோயிலங்காடியார்āyilaṅgāṭiyār, பெ.(n.)

   தமிழ் நாட்டு வணிகக்குடிகளுள் ஒன்று; one of the business communities of Tamilnadu.

     “நாட்டார் மாடையில் வகுக்கும் காணிக்கை திருத்தாயார் காணிக்கை திருமகனார் காணிக்கை பத்திவரி செட்டிகள் வாணிகள் சேனையங்காடியார் கொயிலங்காடியார்”.

     [கோயில் + அங்காடியார்.]

கோயிலாஞ்சேரி

 கோயிலாஞ்சேரிāyilāñjēri, பெ.(n.)

   சென்னை மாவட்டத்துச் சிற்றூர்; a village in Chennai Dt.

     [கோயிலான் + சேரி.]

கோயிலாம்பாக்கம்

 கோயிலாம்பாக்கம்āyilāmbākkam, பெ.(n.)

   சென்னை மாவட்டத்துச் சிற்றூர்; a village in Chennai Dt

     [கோயிலான் + பாக்கம்.]

கோயிலார்

 கோயிலார்āyilār, பெ.(n.)

   கோயிற் பணியாளர்; servents of a temple (யாழ்.அக);.

     [கோயில் + ஆர்.]

கோயிலாள்

கோயிலாள்āyilāḷ, பெ.(n.)

   பட்டத்தரசி; crowned queen.

     “தானுங் கோயிலாளும் புறம்போந்து நின்று (பதிற்றுப். 8, பதி. இறுதி);.

     [கோ + இலாள். இல்லாள் → இலாள்.]

கோயிலாழ்வார்

கோயிலாழ்வார்āyilāḻvār, பெ.(n.)

   1. வழிபாட்டுப் பெட்டி; box-shrine for private worship.

   2. கருவறை; inner sanctuary or sanctum, sanctorum of a temple.

     “கோயிலாழ்வார்க் குள்ளே பெரிய பெருமாள் கண் வளர்ந்தருளுகிறபடி” (திவ். திருமாலை. 21 வியா.76);.

மறுவ. உண்ணாழிகை.

     [கோயில் + ஆழ்வார்.]

கோயிலொழுகு

 கோயிலொழுகுāyiloḻugu, பெ.(n.)

   திருவரங்கத்துக் கோயிலின் வரலாறு கூறும் நூல்; a book dealing with the history, properties etc., of the Srirangam temple.

     [கோயில் + ஒழுகு.]

கோயில்

கோயில்1āyil, பெ.(n.)

   அரண்மனை; palace, residence of a king or noble man.

     “கோயின் மன்னனைக் குறுகினள்” (சிலப்.20:47);.

     [கோ + இல்_- கோயில்.]

கோயில் எனும் சொல் தொடக்க காலத்தில் அரசனின் அரண்மனையை மட்டும் குறித்தது (கோ – அரசன், இல் – வீடு); இச் சொல் (கோ); பெரியது என்றும் பொருள்பட்டதால் பெரிய வீடு என்றும் தொடக்கத்தில் ஆளப்பட்டது. பெரிய வீடு என்று பொருள்பட்ட போது அரசன் வாழும் வீட்டைவிட, கடவுள் இருக்கும் கட்டடம் மிகப் பெரிதாக இருக்க வேண்டும் எனும் கருத்தில் கோயில்கள் அரண்மனைகளைவிட, பெரியனவாகக் கட்டப்பட்டன. இக் கருத்தில் ‘கோ’ (பெரிய); பெயரெச்சமாக நிற்பதால் கோயில் என்பதைச் சேர்த்து எழுதாமல் கோ இல் எனப் பிரித்து எழுதுவதும் வழக்கமாக இருந்தது. பிரித்து எழுதப்பட்ட கோஇல் என்னும் சொல்லே கல்வெட்டிலும் கடவுள் ஆலயத்தைக் குறிக்கப் பயன்பட்டிருக்கிறது. இடையில் யகரவகா உடம்படுமெய்கள் சேர்க்காமல் பெயர்ச்சொற்களையும் பெயர் ஈறுகளையும் பிரித்து எழுதுவதைத் தொல்காப்பியரும் குறிப்பிட்டிருக்கிறார். நாய் என்பது நாஇ என உயிரெழுத்து இகரம் சேர்த்துத் தொல்காப்பியத்தில் குறிப்பிடப்படுகிறது ஐந்திராவிட மொழிகளான மராத்தி, குச்சா மொழிகளிலும் உடம்படுமெய்களான யகர வகரங்கள் சேர்க்கப்படுவதில்லை.

கோ என்னும் சொல்லுக்குத் தலைவன், அரசன் கடவுள், பெரியது என்னும் அடிப்படைப் பொருள்கள் உள்ளன.

     “வாயில் வந்து கோயில் காட்ட” எனும் சிலப்பதிகாரத் தொடரில் கோயில் என்னும் சொல் அரண்மனையையே குறித்தது தொல்காப்பியருக்கும் முந்தைய பழங்காலத்தில் கோயில்கள் மாங்களின் கீழ் அமைந்த சிறு உருவங்களாக இருந்தன. கடவுள் கோவிலுக்கென்று கட்டடங்கள் எழுப்பப்பட்டதற்கான சான்றுகள் சிந்துவெளி நாகரிகத்தில் கூடக் கிடைக்கவில்லை

ஆதலால் கோட்டைகளோடு அமைந்த அாசன் வீடு ஒன்றே பெரிய கட்டடமாக இருந்ததால் கோயில் அரண்மனையை மட்டும் குறித்தது. மலையாள மொழியிலும் கோயில் அரண்மனையைக் குறிக்கும். கடவுள் இருக்கும் கோயிலை அம்பலம் என்பர் (பகவதி அம்பலம்);. நாளடைவில் அரண்மனையைக் குறித்த கோயில் எனும் சொல் கடவுள் ஆலயத்தையும் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. கடவுள் இருக்கும் ஆலயத்தைக் கோவில் என்னும் சொல்லால் வேர் பிரித்துக் காட்டுவதே இலக்கணப்படி செப்பமானதாகும். புணர்ச்சி இலக்கணப்படி,

     “இ, ஈ, ஐ வழி யவ்வும் ஏனை

உயிர்வழி வவ்வும் ஏமுனில் விருமையும்

உயன்வரின் உடம்படு மெய்யென் றாகும்”

நன்.162

இதன்படி கோ + இல் = கோவில் என்றுதான் வாவேண்டும். கோயில் என்று எழுதுவது இலக்கணப்படி தவறாகிறது. அப்படியானால்

இறையன் – இறைவன்

துறையன்_துறைவன்

என்னும் சொற்கள் இருவகையாகவும் புணர்கின்றன. ஆனால் மலையன் என்பதை மலைவன் என்று சொல்ல முடியவில்லை. தலையன் தலைவன் என்ற இாண்டும் ஒரே பொருளில் வரும் என்று சொல்ல முடியாது. முனியன் முனிவன் என்பதையும் ஒரே பொருளில் கொள்ள முடியாது. கணியன் கணிவன் என்பனவும் வெவ்வேறு பொருளுடையன. ஆதலின் வகர உடம்படுமெய் வரவேண்டிய இடத்தில் யகா உடம்படுமெய் வந்தால் ஒரு நுண்ணிய பொருள் வேறுபாடு உள்ளது என்பதை மறுக்க இயலாது. ஆதலின் கோயில் என்பதில் பெரிய என்னும் பொருளில் ‘கோ’ பெயரெச்சமாக நின்று இடையில் விட்டிசைத்ததால் இலக்கணப்படி வகர உடம்படுமெய் வாராமல் யகா உடம்படுமெய் வந்ததாகக் கொள்ள வேண்டும். இதன்படி கோவில் என்பதை ஒரு சொல் நீர்மைத்தாகக் கொண்டு. சேர்த்திசைக்க வேண்டும். கோயில்’ என்பதை இருசொல் நீர்மைத்தான பெயரெச்சத் தொடராகக் கொண்டு ‘கோ.இல்’ என இருசொல் போல் விட்டிசைக்க வேண்டும் என்று கொள்வதே பொருத்தமாகும்.

விட்டிசைக்காத சொற்புணர்வுகளில் பொருள் வேறுபாட்டை முதன்நிலைச் சொல்லே விளக்குகிறது. தலையன் தலைவன் எனும் விட்டிசை இல்லாத சொற்களில் நிலைமொழிச் சொல்லான தலை என்பதே பொருள் வேறுபாடு காட்டும். தலையன் என்பதில் தலையை உடையன் எனும் பொருளில் தலை + அன் எனப் பிரித்தல் வேண்டும். தலைவன் என்னும் சொல்லில் தலைமை உடைபவள் என்னும் பொருளில் தலைவு + அன் எனப் பிரித்தல் வேண்டும் (தலைவு = தலைமை); சான்றாகப் பணிவு துணிவு போன்றவை பண்புப் பெயராதல் காண்க.

முனியன் முனிவன் எனும் சொற்களில் முனியன் என்பது இயற்பெயர். முனிவன் என்பதில் முனிவு என்பது நிலைமொழி ஆகிறது. (முனிவு + அன்].

இறையன், இறைவன் என்னும் சொற்களில் இறை + அன் – இறையன் எனவும். இறைவு (தலைமை); + அன் – இறைவன் எனவும் புணர்ந்தன. துறையன் துறைவன் என்னும் சொற்களில் துறை + அன் துறையன், துறைவு [துறை மேலாண்மை); + அன் = துறைவன் எனப் புணர்ந்தன. இறைவு,

துறைவு எனும் சொற்கள் வழக்கிழந்தன. சான்றாகப் பண்ணைய மேலாண்மை யைக் குறித்த பண்ணாட்டு என்னும் சொல் செய்யுளில் வழக்கிழந்தாலும் கொங்குநாட்டில் இன்றும் பேச்சு வழக்கில் இருப்பதைச் சுட்டிக் காட்டலாம்.

இதன் வண்ணம் கோவு (தலைமை); + இல் = கோவில். உலகப் படைப்பிற்கே தலைவனான இறைவனின் கோவிலைச் கட்டியது. ஆதலால் கோயில் என்பது அரண்மனையை குறிக்கவும், கோவில் என்பது இறைவனின் ஆலயத்தைக் குறிக்கவும் வழங்கிய சொற்கள் என்று கூறுவதே இலக்கணப்படி அமைவுபெறத் தக்கனவாம். இருவகையாகவும் வரலாம் எனவும் ஒன்றினை வழுவமைதியாகக் கொள்ளலாம் எனவும் கூறப்படுவன மொழிமரபின் வரையறுத்த இலக்கண மருங்கில் உகந்த வழக்காக ஏற்றுக்கொள்ளத் தக்கனவல்ல.

 கோயில்2āyil, பெ.(n.)

   1. ஆலயம்; temple, sanctuary, church, chapel.

     “அரும்பொகுட்யண்ணல் கோயில்”(பரிபா. பக்.174, செய்யுள்.2);.

   2. சிதம்பரம் (தேவா.);; sacred town of Chidambaram (Cirrambalam);.

   3. திருவரங்கம்; Srirangam.

     “கோயிற் பிள்ளா யிங்கே போதராயே” (திவ். பெரியாழ். 2.9:4);.

   4. வீரசைவர் தரிக்கும் இலிங்கசம்புடம்; silver casket enclosing the lingam worn by Lingayats.

   5. கோயிற்பற்று; parish church, parish.

மறுவ. கோவில், கோ இல், கோநகர் அம்பலம்.

   ம. கோயில்;   தெ. கோயில, கோவெல;   கோண். கோஅ (அரசன்);;பர். கோச் (அரசன்);.

     [கோ + இல் → கோயில்.]

கோயில் பெயரெச்சத்தொடர்.

 கோயில்3āyil, பெ.(n.)

   நாற் சீர்த்தூக்கு நேர அளவு (மணிமே.2:19, உரை);;  a kind of time measure.

     [கோயில் மணி → கோயில்.]

கோயில்கணக்கு

கோயில்கணக்குāyilkaṇakku, பெ.(n.)

கோயிற்கணக்கு பார்க்க;see koyir-kanakku.

     “இப்படிக்கு கோயில் கணக்கு தப்பிலா வேளான் எழுத்து” (SII. XXVI. 15-16 p.11);.

     [கோயில் + கணக்கு.]

கோயில்காளை

 கோயில்காளைāyilkāḷai, பெ.(n.)

கோயிற் காளை பார்க்க;see Koyir-kalai.

     [கோயில் + காளை.]

கோயில்குடியான்

 கோயில்குடியான்āyilkuḍiyāṉ, பெ.(n.)

   துரிஞ்சில்; dark sirissa (சா.அக.);.

     [கோயில் + குடியான்.]

கோயில்கொள்(ளு)-தல்

கோயில்கொள்(ளு)-தல்āyilkoḷḷutal,    16 செ.கு.வி.(v.i.)

   வாழும் இடமாகக் கொள்ளுதல்; totake up abode in, inhabit.

     “திருக்கடித் தானத்தைக் , கோயில் கொண்டான்” (திவ். திருவாய்க, 6, 5);. (செஅக.);

     [கோயில்+கொள்.]

கோயில்தானத்தார்

கோயில்தானத்தார்āyiltāṉattār, பெ.(n.)

   திருக்கோயில் வழிபாடுகள். திருவிழாக்கள். திருப் பணிகள் ஆகியவற்றைப் பொறுப்புடன் நிகழ்த்துவதற்கு ஊர்ச்சபையாரால் அமைக்கப்பெறும் பெருமக்கள்; a set of people asked to administer temple affairs.

     “உடையார் திருக்கோபுரமடைய நாயனார் கோயில் தானத்தார்க்கு அருளிச் செயல்படி”(S.I.I. XVII.130);.

     [கோயில் + தானம் + அத்து + ஆர்.]

கோயில்பட்சி

கோயில்பட்சிāyilpaṭci, பெ.(n.)

   1. புறா, pigeon.

   2. மயில்; pea-cock (சா.அக.);.

     [P]

     [கோயில்+Skt. பட்சி]

கோயில்பெருச்சாளி

 கோயில்பெருச்சாளிāyilperuccāḷi, பெ. (n.)

   பிறர் சொத்தை உடனிருந்து சிறிது சிறிதாகக் கவர்பவர்; an insider who is a swindler,

அவன் பொதுத்தொண்டு என்ற போர்வையில் திரியும் கோயில் பெருச்சாளி

     [கோயில்+பெருச்சாளி]

கோயில்மகிமை

 கோயில்மகிமைāyilmagimai, பெ.(n.)

   கோயில் காணிக்கை; donations to the temple.

     [கோயில் + மகிமை]

கோயில்மாடு

கோயில்மாடுāyilmāṭu, பெ.(n.)

   1. கோயிற்கு விடப்பட்ட மாடு, கோயிலில் விளக்கெரிக்கத் தேவைப்படும் நெய்யை வழங்குதற்காகக் கொடையாக வழங்கப்பட்ட மாடு; cow or bull belonging to a temple.

   2. பெருமாள்மாடு; trained bull taken by wandering mendicants.

   3. கோயிற்காளை பார்க்க;see koyir-kalai.

     [கோயில் + மாடு.]

கோயில்யானை

 கோயில்யானைāyilyāṉai, பெ.(n.)

   கோயிலில் உள்ள யானை; temple elephant.

     [கோயில் + யானை.]

நிலம் விற்ற பிறகு எல்லை உறுதி செய்து ஊர் ஆட்சி மன்றத்தினர் நிலம் விற்றவர் வாங்கியவர் ஆகியவர் யானை முன் செல்லக் கற்களையும் கள்ளியையும் பயன்படுத்தி நிலத்தின் நான்கெல்லையும் உறுதி செய்வது.

கோயில்வாசி

கோயில்வாசிāyilvāci, பெ.(n.)

   அரசர்க்குரிய இறை; taxes due to the king (S.I.I.iii. 80);.

     [கோயில் + வாசி.]

கோயில்வாரியம்

கோயில்வாரியம்āyilvāriyam, பெ.(n.)

   கோயில் மேலாண்மை அவை; managing committee of a temple.

     “கோயில் வாரியம்” (S.I.I.iii, 80);.

     [கோயில் + வாரியம்]

கோயில்வெண்ணி

 கோயில்வெண்ணிāyilveṇṇi, பெ.(n.)

   கரிகாற் சோழன் தன் பகைவர்களுடன் பொருது வெற்றிபெற்ற இடம்; the place where kari-kal solan has fought with his opponent and won.

மறுவ. வெண்ணிக்கூற்றம், திருவெண்ணியூர், கோயில் உண்ணி.

     [கோயில் + வெண்ணி (வெண்நாவல் மரம்);.]

தஞ்சை மாவட் த்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புடைய ஊர். கரிகாலன் சோமான் பெருஞ்சேரலாதனை வென்றவூர், வெண்ணாவல் மாத்தை வெண்ணி என்பர்.. வெண்ணாவல் மரம் இருந்ததால் பெற்ற பெயர்.

கோய்

கோய்āy, பெ.(n.)

   1. கள் முகக்கும் ஏனம்; vessel for taking out toddy.

     “ஓரிற் கோயிற் றேருமால்” (புறநா. 300);.

   2. மணத்தி (பரணி);ச் செப்பு; small perfume box.

     “சாந்துக்கோய் புகிய செல்வ” (சீவக. 764);.

   3. தாழி (பரணி); நாள் (சங்.அக.);; the second naksatra.

     [கோளி → கோள் → கோய்.]

கோரகம்

கோரகம்1āragam, பெ.(n.)

கோரம்(வின்.); பார்க்க;see köram (W.);.

தெ. கோர.

     [கோரம் → கோரகம்.]

 கோரகம்2āragam, பெ.(n.)

   அரும்பு (பிங்.);; bud.

     [குல் → குரவம் → குரகம் → கோரகம்.]

 கோரகம்3āragam, பெ.(n.)

   தக்கோலம் (நாநார்த்த);; Cubeb.

     [குரகம் → கோரகம்.]

கோரகுப்பம்

 கோரகுப்பம்āraguppam, பெ.(n.)

   திருவள்ளூர் மாவட்டத்துச் சிற்றூர்; a village in Thiruvallur Dt.

     [கோரை + குப்பம் → கோரைக்குப்பம் → கோரகுப்பம் (கொ.வ.);.]

கோரகை

கோரகை1āragai, பெ.(n.)

   1. அகப்பை; ladle.

     “கோரகைக்குட் பதிகடுகற்கம்” (தைலவ. பாயி. 14);.

   2. புத்தத் துறவியரின் உணவு வாங்கும் ஏனம் (மணிமே.5:59, அரும்.);; begging bowl of the Buddhist ascetics.

     [கோர் → கோரகை (மொள்ளுவது);.]

 கோரகை2āragai, பெ.(n.)

   1. குயில்; Indian cuckoo.

   2. இளம் பூவரும்பு; bud of flower.

     “புல்லி நீப்பன பூவிரி கோரகை”(சேதுபு. திருநாட்டு. 120);.

     [கொள் → கோள் → கோளகை → கோரகை.]

கோரக்கநாதர்

 கோரக்கநாதர்ārakkanātar, பெ.(n.)

   ஒன்பது சித்தருள் ஒருவர் (சது.);; one among the nine Šiddhas.

     [குரவர் → குரக்கர் → கோரக்கர் + நாதர்.]

கோரக்கர்

 கோரக்கர்ārakkar, பெ.(n.)

கோரக்கநாதம் பார்க்க;see körrakka-nādar.

     [குரவர் → குரக்கர் → கோரக்கர்.]

கோரக்கர் மூலி

கோரக்கர் மூலிārakkarmūli, பெ.(n.)

   கஞ்சாங்குல்லை (மூ.அ.);; the drug ganja, as used by Korakkar.

     “புகையென்று கோரக்கர் மூல தன்னை”(அகத்.வல்.);.

     [கோரக்கர் + மூலி.]

கோரக்கர் இம் மூலிகையை மருந்தாகச் செய்து வந்தவராம். இது குறித்தே இப் பூண்டுக்குக் கோரக்கர் மூலி எனப் பெயர் வந்திருக்கலாம் (பாவலர் சரித்.ப. 117);.

கோரக்கர் வைப்பு

 கோரக்கர் வைப்புārakkarvaippu, பெ.(n.)

   கோரக்கர் எழுதிய நூல்களுள் ஒன்று;  a book writ ten by Körakkar.

     [கோரக்கர் + வைப்பு.]

கோரக்கர்புளி

 கோரக்கர்புளிārakkarpuḷi, பெ.(n.)

   ஆனைப் புளிபப்பரப்புளி; Korakha’s tamarind, baobab (சா.அக.);

     [கோரக்கர் + புளி.]

கோரக்கர் இம் மரத்தினடியே இருந்து உணர்த்தியதனால் இப் பெயர் பெற்றது.

கோரக்கர்மரம்

 கோரக்கர்மரம்ārakkarmaram, பெ.(n.)

   ஆனைப் புளிய மரம், பப்பரப்புளியமரம், பூரி மரம், பப்பாரப் புளி, பெருக்க மரம்; elephant tamarind tree (சா.அக.);.

கோரங்கம்

 கோரங்கம்āraṅgam, பெ.(n.)

   நெல்லி (மலை);; Indian gooseberry.

மறுவ. கோரங்காமிகம்.

     [குளங்கம் → கோளங்கம் → கோரகம்.]

கோரங்காமிகம்

 கோரங்காமிகம்āraṅkāmikam, பெ.(n.)

   நெல்லி; Indian gooseberry, Phyllanthus emblica (சா.அக.);.

கோரங்கி

கோரங்கிāraṅgi, பெ.(n.)

   1. சிற்றேலம் (மலை.);;  small cardamom.

   2. பூலா; feather-foil.

   3. கோரங்கி நெல்; paddy grown in Korangi (Godaveri Dist.); (சா. அக.);.

     [குளாங்கி → கோரங்கி.]

கோரங்கிப்பயறு

 கோரங்கிப்பயறுāraṅgippayaṟu, பெ.(n.)

   கோதாவரி மாவட்டம் கோரங்கி நாட்டில் விளையும் பயறு; pulse or cereals cultivated in Korangi (Godaveri Dist.); (சா.அக.);.

     [கோரங்கி + பயறு.]

கோரங்கிமூலம்

 கோரங்கிமூலம்āraṅgimūlam, பெ.(n.)

   பூலாங்கிழங்கு; bulbous root of pula.

     [கோரங்கி + மூலம்]

கோரங்கியேலம்

 கோரங்கியேலம்āraṅgiyēlam, பெ.(n.)

   சிற்றேலம்; little cardamom (சா.அக.);.

     [கோரங்கி + ஏலம்.]

கோரங்கிழங்கு

 கோரங்கிழங்குāraṅgiḻṅgu, பெ.(n.)

கோரைக்கிழங்கு பார்க்க; see Korai-k-kilangu.

     [கோரை → கோரம் + கிழங்கு.]

கோரங்கு

 கோரங்குāraṅgu, பெ.(n.)

   நீர்க்கோழி; water-towl (சா. அக.);.

     [கோரங்கி → கோரங்கு.]

கோரசண்டி

 கோரசண்டிārasaṇṭi, பெ.(n.)

   தலைச்சுருளிப் பூண்டு; Indian birth-wort (சா.அக.);.

மறுவ. பெருமருந்துப்பூடு.

     [கோரை + சண்டி – கோரைச்சண்டி → கோரசண்டி (கொ.வ.);.]

கோரசம்

கோரசம்ārasam, பெ.(n.)

   1. சிவல் என்னும் பறவைவகை (பிங்.);; a kind of partridge.

   2. கவுதாரி; grey partridge.

     [குரசம் → கோரசம்.]

கோரடம்

 கோரடம்āraḍam, பெ.(n.)

   கருங்காலி; a kind of ebony (சா.அக.);.

     [கால் → காரடம் → கோரடம்.]

கோரணப்பட்டு

 கோரணப்பட்டுāraṇappaṭṭu, பெ.(n.)

   கடலூர் மாவட்டத்துச் சிற்றூர்; a village in Cuddalore Dt.

     [காரணை → கோரணம் + பட்டு.]

கோரணம்பட்டி

 கோரணம்பட்டிāraṇambaṭṭi, பெ.(n.)

   நாமக்கல் மாவட்டத்துச் சிற்றூர்; a village in Namakkal Dt.

     [கோரணம் + பட்டி.]

கோரணி

கோரணி1āraṇi, பெ.(n.)

   1. கேலிக்கூத்து; mockery by gesture;mimicry.

     “தோகையர் பாலர்கள் கோரணி கொண்டு”(பட்டினத். உடற்கூற்று வண்ணம். 3);.

   2. முகஞ்களித்தல் (இராட்.);; grimace, distortion of the countenance, as in pain or mimi cry.

   3. திமிர்வாதம் (வின்.);; epilepsy.

   4. முணுமுணுப்பு (யாழ்ப்.);; captious complaint.

     [குறளி → குரணி → கோரணி.]

 கோரணி2āraṇi, பெ.(n.)

   1. குழப்பம், கோளாறு; confusion;

     “கோரணிப் படுத்துமக் கொடியரோவலர்” (இரட்சணிய.ப.81);.

   2. கவனத்தை வேறுவழியில் திருப்புதல் (பாண்டி);; diversion of attention.

     [குரளு → குரணி → கோரணி.]

கோரண்டம்

கோரண்டம்āraṇṭam, பெ.(n.)

   1. பெருங்குறிஞ்சி (பிங்.);; a species of conehead.

   2. மரு தோன்றி (வின்.);; henna.

   3. செம்முள்ளி (தைலவ. தைல. 10);; thorny nail-dye.

மறுவ. கோரண்ணம்.

     [குரண்டம் → கோரண்டம்.]

கோரண்ணம்

 கோரண்ணம்āraṇṇam, பெ.(n.)

கோரண்டம் பார்க்க;see kõrandam (சா.அக.);.

     [கோரண்டம் → கோரண்ணம்.]

கோரதந்தம்

 கோரதந்தம்āradandam, பெ.(n.)

   வளைந்தகொடுந்தந்தம்; curvad tusks, as of wild boars.

     [Skt.{}+tandam → த.கோரதந்தம்.]

கோரதம்

 கோரதம்āradam, பெ.(n.)

   பெரும்பாலும் எருதுகளால் இழுக்கப்படும் தேர்; a car, generally drawn by oxen.

     [கோ + ரதம்.]

 கோரதம்āradam, பெ.(n.)

   பெரும்பாலும் எருதுகளால் இழுக்கப்படும் தேர்; a car, generally drawn by oxen.

த.வ.காளைத்தேர்.

     [Skt.{}-ratha → த.கோரதம்.]

கோரதரம்

கோரதரம்āradaram, பெ.(n.)

   நிரயம் (சிவதரு.சுவர்க்க நரக.107);; a hell.

     [Skt.{}-tara → த.கோரதரம்.]

கோரத்தூடம்

 கோரத்தூடம்ārattūṭam, பெ.(n.)

வரகு,

 Indian millet, Panicum milianceum (சா.அக.);.

கோரநந்தம்

கோரநந்தம்āranandam, பெ.(n.)

   1. கோரைப்புல்; curved tusks, as of wild boars.

   2. பாம்பின் நச்சுப்பல்; poisonous fang of a snake.

     [கூர் → கூர → கோரம் + தந்தம்]

கோரநீடு

 கோரநீடுāranīṭu, பெ.(n.)

   பூனை; cat (சா. அக.);.

     [கோரை + (நீட்டு); நீடு – கோரைநீடு (கோரைப்புல் போன்ற மீசையுடையது);.]

கோரனைப்பூடு

 கோரனைப்பூடுāraṉaippūṭu, பெ.(n.)

   வெட்டிவேர்; khus khus root (சா.அக.);.

     [கோரை → கோரணை + பூடு.]

கோரன்

கோரன்1āraṉ, பெ.(n.)

   1. சிவன்; Lord Šiva.

   2. சுளுந்துக் கட்டை; torch tree.

     [குல் → குரு → கோரன்.]

 கோரன்2āraṉ, பெ.(n.)

கொங்குவள நாட்டிலே வல்லம் என்னும் ஊரில் வாழ்ந்தவன். கொலை, களவு முதலிய தீத்தொழில்களைச் செய்து கொண்டிருந்தமையால் இப்பெயர் பெற்றிருக்கலாம். பேசுதலைக் கடைப்பிடித்துத் தனது தீத்தொழில் களையும் போக்கிக் கொண்டவன்.

     [குல் → குரு → கோரன்.]

கோரபுட்பம்

கோரபுட்பம்ārabuṭbam, பெ.(n.)

   1, ஊமத்தம் பூ; datura flower.

   2. வெண்கலம்; bell-metal, bronze (சா. அக.);.

     [கோரம் + புட்பம்]

கோரப்பல்

கோரப்பல்ārappal, பெ.(n.)

   1) கொடுமையான, தோற்றமுடையப் பல்; ugly-looking tooth.

   2. பாம்பின் நச்சுப் பல்; poisonous fang of a snake.

   3. நான்கு முன்பற்களுக்கு அடுத்தபடி இரு பக்கத்திலுள்ள பற்கள்; the two sharp-pointed teeth in both jaws one on each side between the incisors, and grinders-canine teeth.

   3. முறிந்த பல்; projecting stump of a tooth-snag tooth.

   4.தெத்துப் பல்; deformed tooth (சா.அக.);.

மறுவ. கோரதந்தம்.

ம. கோம்பல்லு.

     [கோரை → கோரம் + பல்.]

கோரப்பிடி

 கோரப்பிடிārappiḍi, பெ.(n.)

   வறுமை போன்றவற்றின் தப்பமுடியாத தீவிரநிலை; vice-like grip as of poverty.

வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கின்றனர் (உ.வ.);.

     [கோரம் + பிடி]

கோரமங்கலம்

 கோரமங்கலம்āramaṅgalam, பெ.(n.)

   திருவள்ளூர் மாவட்டத்துச் சிற்றூர்; a village in Thiruvallur Dt.

     [கோரை + மங்கலம்.]

கோரமரணம்

 கோரமரணம்āramaraṇam, பெ.(n.)

   வலிமிகுவிக்கும் சாவு; painful death;

 agonising death (சா. அக.);.

     [கோரம் + (மடி); மரணம்.]

கோரமூஞ்சி

கோரமூஞ்சிāramūñji, பெ.(n.)

   1. கொடுமையான முகம்; horrible face in a monster birth.

   2. கழிந்த முகம்; distortion of the countenance – grimace (சா.அக.);.

     [கோரம் + (முகம்); மூஞ்சி]

கோரம்

கோரம்1āram, பெ.(n.)

   1. கோளகச் செய்நஞ்சு; a native arsenic.

   2. ஊமத்தை; thorn apple.

   3. மகிழம்

விதை;seed of makila.

   4. வெப்பம்; heat.

   5. கொடுமை: cruelty, severity.

   6. கொடூரமானது; that which creates fear.

     “நின்முகக் கமலுங் கோரமாம்” (திருச்செந்.4:13:17);.

   7. ஒரு மறைமொழி; a mantra.

   8. கொடுந்தோற்றம்; that which is hideus.

     [குள் → குரம் (வளைவு); → கோரம்]

 கோரம்2āram,    1. வளைவு; curvature.

   2. புகையிலை; tobacco.

   3. வட்டில்; eating dish, a hollow metallic plate.

     “அமுதுடைக் கோர நீக்கி (கம்பரா.அயோத்தி.மந்திரப்.25);.

   4. நரக வகை; a hell.

     “கோர மதுதான் முதனாகம்” (சிவதரு. சுவர்க்க.107, நரக.);.

   5. விரைவு (திவா.);; swiftness, fleetness, speed.

   6. சோழன்குதிரை; horse of Cölä king.

     “கோரத்துக் கொப்போ கனவட்ட மம்மானை” (தனிப்பா.);.

தெ. கோர (வட்டில்); தெ. குர்ரமு (குதிரை);.

     [குல் → குரம் → கோரம்]

 கோரம்3āram, பெ.(n.)

   அரும்பு; bud.

     [குள் → குரு → கோர் → கோரம்]

கோரம்பர்

 கோரம்பர்ārambar, பெ.(n.)

   கழைக்கூத்தர் (வின்.);; pole-dancers.

     [கோல் + அம்பர்.]

கோரம்பலம்

கோரம்பலம்ārambalam, பெ.(n.)

   1. கேளிக்கை; diversion, drollfry, amusement, bufoonery

   2. தந்திரம்:

 excuse, subterfuge, pretence, shift, trick.

   3. வாய்ச்சண்டை; altercation, bickering.

   4. உதவி; help, assist.

   5. கோளாறு; disorder.

     [கோரம் + அம்பலம்]

கோரம்பாய்

 கோரம்பாய்ārambāy, பெ.(n.)

கோரைப்பாய் பார்க்க;see Кбrai-р-рау.

     [கோரைப்பாய் → கோரம்பாய் (கொ.வ.);]

கோரம்பு

கோரம்புārambu, பெ.(n.)

   தீம்பு; wickedness.

     “அதுவுமுன் கோரம்புக் கேற்கு மன்றே” (திவ். பெருமாள். 6:4);.

     [கோரம் → கோரம்பு.]

கோரரூபம்

கோரரூபம்ārarūpam, பெ.(n.)

   1. அழகற்ற வடிவம்; ahideous figure.

     [Skt.ghora-{} → த.கோரரூபம்.]

கோரல்

 கோரல்āral, பெ.(n.)

   ஆட்டிற்கும், மானிற்கும் ஒப்பான விலங்கு; an animal, similar to goat and deer.

     [குறள் – குரல் – கோரல்]

இது ஆட்டைப் போல் குறுகிய கொம்பை உடையது. இரண்டடி உயரமுள்ள இவை இமய – மலையில் வாழ்கின்றன. (அபி.சிந்);.

கோரவாதம்

 கோரவாதம்āravātam, பெ.(n.)

   உடம்பின் நரம்புகளில் காற்றுப் பிடிப்புப் பரவிக் கீல்களைத் தளரச் செய்யுமோர் ஊதை நோய்; a kind of rheumatism (சா.அக.);.

     [கோரம் + வாதம்]

கோரவாரம்

 கோரவாரம்āravāram, பெ.(n.)

   சந்தனமரம் (யாழ்.அக.);; sandal-wood tree (சா.அக.);.

     [கோர் (செங்குத்து உயரம்); → கோர + வாரம்]

 கோரவாரம்āravāram, பெ.(n.)

   சந்தனமரம் (யாழ்.அக.);; sandalwood tree.

     [Skt.{}+{} → த.கோரவாரம்.]

கோரவிருத்தி

கோரவிருத்திāravirutti, பெ.(n.)

   1. அரக்கக் குணம்; one of the three inherent qualities of man.

   2. அதிகச் சூடு; increase of heat in the system.

   3. நஞ்சின் மிகுதி; excess of poison (சா.அக.);.

     [கோரம் + விருத்தி.]

கோரவெய்யில்

 கோரவெய்யில்āraveyyil, பெ.(n.)

   கொடிய வெய்யில்; severe or scorching sun (சா.அக.);.

     [கோரம் + வெய்யில்.]

கோரா

கோராārā, பெ.(n.)

   1. அழுக்கெடுக்காதது; unbleached as cotton cloth.

   2. சாயம் ஏற்றாதது; undyed as silk.

   3. கோரப்பட்டு பார்க்க;see kora-p-pattu.

   4. கரச்சி மீன்:

 a kind of sea-fish Pristipoma caripa.

   5. பழக்கப்படாத புதிய குதிரை, காளை போன்ற விலங்கு; untamed horse, bull etc.

     [கோரம் → கோரா.]

கோராகும்பார்

 கோராகும்பார்ārākumpār, பெ.(n.)

   திருமால் அடியவர்; devotee of Lord Vishnu.

தோடாகியென்னும் ஊரில் மனைவி, குழந்தையுடன் வாழ்ந்து வந்தார். இடைவிடாது பெருமாளை எண்ணிக் கொண்டிருக்கும் இவர் ஒர் நாள் அறியாது தன் குழந்தையை மண்ணில் மிதித்துக் கொன்றார். இதனால் நடந்த சண்டையில் மனைவி தன்னைத் தீண்ட வேண்டா மென்றாள். மக்கட்பேறுக்காகத் தன் தங்கையை மணம் செய்து வைக்க அவளையும் இவர் தீண்டவில்லை. ஒரு நாள் இவர் அறியாது இரு மனைவியரும் அருகில் துயில, தூக்கத்தில் மனைவியர் மேல்பட்ட கரங்களை வெட்டி எறிந்தார். பின் பண்டரிக்குச் சென்று இறந்த குழந்தை யையும், கைகளையும் திரும்பப் பெற்று, பெருமாளின் ஆணையால் மனைவியருடன் களிப்புற்றிருந்தார் (அபி.சிந்);.

கோராகோரம்

கோராகோரம்ārāāram, பெ.(n.)

   ஒருவகை நிரயம் (சிவதரு.சுவர்க்கநரக.107);; a hell.

     [Skt.{}+{} → த.கோராகோரம்.]

கோராசுரன்

கோராசுரன்1ārācuraṉ, பெ.(n.)

ஒரு அரக்கன்; a giant. கொக்கு வடிவம் கொண்டு பிள்ளையாரை விழுங்க வந்து, அவரால் இறந்தவன் (அபி.சிந்);.

 கோராசுரன்2ārācuraṉ, பெ. (n.)

   1.சிவபெருமானால் கொல்லப்பட்ட அகரன்; an asuran killed by Lord Śiva who was torturing Devas.

   2. தேவர்களுக்குத் துன்பம் செய்து சிவனால் கொல்லப்பட்டவன்; (அபி.சிந்);.

கோராடம்

 கோராடம்ārāṭam, பெ.(n.)

   பூஞ்சாந்துப் பட்டை, ஒரு கடைச்சரக்கு; a bazaar drug (சா. அக.);.

     [கோரடம் → கோராடம்.]

கோராதனம்

கோராதனம்ārātaṉam, பெ.(n.)

   ஒகவகை; a yogic posture (தத்தவப்..109, உரை);.

     [கோர் → கோராப்பு.]

கோரான்

 கோரான்ārāṉ, பெ.(n.)

   சுளுந்து மரவகை; torch tree, Ixora Parviflora (செ.அக.);.

 கோரான்ārāṉ, பெ.(n.)

   சுளுந்துக் கட்டைமரம்; torch tree (சா.அக.);.

மறுவ. கோரான்கட்டை, கோரான் குக்க, கோரான் சூள்.

     [கோர் → உயரம். கோர் → கோராப்பு.]

வழிப்போக்கர்கள் இாவில் தீவட்டியாகப் பயன்படுத்துவர்); (சா. அக.);.

கோரான் சிவப்பு

 கோரான் சிவப்புārāṉcivappu, பெ.(n.)

   கம்மலான சிவப்புநிறம்; dull red colour (சா.அக.);.

     [கோன் → கோரான் + சிவப்பு.]

கோரான் வெள்ளை

 கோரான் வெள்ளைārāṉveḷḷai, பெ.(n.)

   கம்மலான வெள்ளை மண் வகை; a kind of dull white clay (சா.அக.);.

     [கோரான் + வெள்ளை]

கோரான்காவி

 கோரான்காவிārāṉkāvi, பெ.(n.)

ஒருவகைக் காவி:

 a kind of red ochre not bright or clear (சா.அக.);.

     [கோரான் + காவி.]

கோரான்குச்சு

 கோரான்குச்சுārāṉkuccu, பெ.(n.)

கோரான் பார்க்க;see kõrān.

     [கோரான் + குச்சு]

கோரான்சுளுத்து

 கோரான்சுளுத்துārāṉcuḷuttu, பெ.(n.)

கோரான் பார்க்க;see koran (சா.அக.);.

     [கோரான் + களந்து]

கோரான்சூள்

 கோரான்சூள்ārāṉcūḷ, பெ.(n.)

கோரான் பார்க்க;see koram (சா. அக.);.

     [கோரான் + சூள்]

கோராப்பட்டு

கோராப்பட்டுārāppaṭṭu, பெ.(n.)

   1. யுனானி மருத்துவத்தில் ஆண்மைப் பெருக்கத்திற்குப் பயன்படுத்தும் ஒரு கடைப்பொருள்; a bazaar drug prescribed by Unani practitioners for increasing the secretion of semen.

   2. சாயம் ஏற்றாத வெண்பட்டு; undyed white silk (சா.அக.);.

     [கோரம் + பட்டு.]

கோராப்பு

 கோராப்புārāppu, பெ.(n.)

   கோரைப்புல் வடிவிலுள்ள ஒருவகைக் கடல்வாழ் பயிரி; a kind of sea plant as of bul rush.

     [கோர் → கோராப்பு.]

கோராமசன்னி

 கோராமசன்னிārāmasaṉṉi, பெ.(n.)

   குழந்தைகளுக்கு உடம்பு நெருப்பைப்போற் காய்ந்து சதை குலுங்கவும். கைகால் துடிக்கவும் செய்யும் ஒரு குளிர் ஊதைநோய்; a kind of typhoid fever in children marked by fits or convulsions followed by violent agitation of muscles and limbs due to high temperature (சா.அக.);.

     [கோரம் → கோராமம் + சன்னி.]

கோராலி

 கோராலிārāli, பெ.(n.)

குதிரைவாலி எனும் புன்செய் தவசம்

 a millet,

     “ஐம்பது மூட்டை கோராலி விளைந்தது (கொங்.வ.);.

     [குதிரைவாலி-கோராலி]

கோராள்

 கோராள்ārāḷ, பெ.(n.)

   தேவ இனத்தவன்; belonging to celestial abode (அபி.சிந்.);.

கோராவாரி

 கோராவாரிārāvāri, பெ.(n.)

   புயற்காற்று; storm, so called from its carrying dust and dirt along with it (சா.அக.);.

     [கோரம் → கோரா + வாரி.]

 கோராவாரிārāvāri, பெ.(n.)

   பெரும்புயல் (j.);; violent storm.

     [Skt.{}+{} → த.கோராவாரி.]

கோரி

கோரி1ārittal,    4 செ.கு.வி.(v.i.)

   1. கடுமையாதல்; to become violent, to hement;

 to rage.

     ‘கோரித் தொன்பது வாயிலும்…… கொளுத்த’ (திருவிளை.குண்மோ.16);.

     [குரு → கோர் → கோரி.]

 கோரி2āri, பெ.(n.)

   மலைமகள்; Parvati.

     ‘கோரியென் னுள்ளங் குலாவிநின் றாளே’ (திரும;ந.1110);.

     [கெளரி → கோரி]

கோரிகை

கோரிகை2ārigai, பெ.(n.)

   மரக்குதிரையின்மேல் வைக்கும் ஒலை நெற்கூடை (யாழ்ப்.);; large ola bag for grain, set on a wooden horse.

     [கோர் → கோரிகை]

கோரிக்கை

கோரிக்கைārikkai, பெ.(n.)

   1.. வேண்டுகோள்; request.

   2. விருப்பம்; desire.

   3. மன்றாட்டம்; pray.

     [கோலு → கோரு → கோரி]

   கோரிக்கை1 அகப்பை; wooden spoon: ladle.

     “முக்கோரிகை நெய்யூற்று” (தைவல.தைல.135, வரி 137);.

     [கோரகை → கோரிகை.]

கோரிதம்

கோரிதம்āridam, பெ.(n.)

   1. துகள்; dust.

   2. விள்ளல்; a pіece.

     [கோர் → கோரிதம்]

கோரியை

கோரியைāriyai, பெ.(n.)

கோரிகை1 பார்க்க;see kõrigai (சா.அக.);.

     [கோரிகை → கோரியை]

கோரு

கோரு1ārudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. வேண்டிக்கொள்ளுதல்; to request, solicit.

   2. விரும்புதல்; to wish, desire.

   3. நினைத்தல்; to think.

   தெ., து. கோரு;க., ம. கோறு.

     [கோது → கோரு.]

 கோரு2ārudal,    5 செ. குன்றாவி. (v.t.)

கோலு4 பார்க்க;see kolu.

கிணற்றிலிருந்து தண்ணீர் கோருகிறான் (உ.வ.);.

     [கோது → கோரு.]

கோரு-தல்

 கோரு-தல்ārudal, செ.குன்றாவி (v.t.)

   காதால் கேள்; to heal.

நீ கோர்தியா (நீ கேட்கிறாயா);

     [கேள்- கேர்-கோர்-கோரு.(தொ.வ.);]

கோருடன்

 கோருடன்āruḍaṉ, பெ.(n.)

கோரை பார்க்க;see korai (சா. அக.);.

     [கோறு → கோரு]

கோரை

கோரை1ārai, பெ.(n.)

   1. கோரை2 பார்க்க;see kórai.

   2. மயிர்; hair.

   3. முடி, மயிர்i; lock hair (சா. அக.);.

     [கோல் → கோர் → கோரை.]

 கோரை2ārai, பெ.(n.)

   1. வழலை; the three mystic salts.

   2. முட்டையுட் சவ்வு; the membrane covering albumen and yolk.

     [கோலு + கோரை]

 கோரை3ārai, பெ.(n.)

   1. புல்வகை (K.R.);; sedges and bulrushes.

   2. ஒருவகைக் கிழங்கு; a kind of root.

   3. ஒருவகைக் கடற்புல்; a kind of sea grass.

ம. கோர.

     [கோர் (நீட்சி); → கோரை]

 கோரை4ārai, பெ.(n.)

   காளை; bull.

     [கோ → கோரை.]

 கோரை5ārai, பெ.(n.)

   1. வளைவு; bend.

   2. அழகில்லாதது; not beautiful, ugly.

     [குல் → குலை → கூரை → கோரை]

கோரைகிண்டி

 கோரைகிண்டிāraigiṇṭi, பெ.(n.)

கோரையுள்ளான் பார்க்க;see kórai-y-ullan.

மறுவ. கோரைகுத்தி.

     [கோரை + கிண்டி.]

கோரைகுச்சு

 கோரைகுச்சுāraiguccu, பெ.(n.)

   கொறுக்கை; European bamboo reed (loc.);.

     [கோரை + குச்சு.]

கோரைகுத்தி

 கோரைகுத்திāraigutti, பெ.(n.)

கோரையுள்ளான் பார்க்க;see köral-y-ullan.

     [கோரை + குத்தி.]

கோரைக்காடன்

கோரைக்காடன்āraikkāṭaṉ, பெ.(n.)

   நாங்குநேரி வட்டம் ஏர்வாடிப்பகுதியில் உள்ள பெரும் பழஞ்சியின் படைத்தலைவன்; army chief.

     “பெரும் பழஞ்சி இருக்கின்ற படைத்தலைவன் கொறைக் காடனுக்கு” (தெ.இ.க.தொ.14, கல்.44-20);.

     [கோரை + காடன்]

கோரைக்கிழங்கு

கோரைக்கிழங்குāraikkiḻṅgu, பெ.(n.)

   1. முத்தக்காசு வகை; fragrant tuber of cyperus rotundus.

   2. முத்தக்காசு; straight sedge (பதார்த்த.443);.

     [கோரை + கிழங்கு]

இது நறுமணம் உள்ளது. இதயம், வயிறு இவற்றிற்கு வலிவைக் கொடுக்கும். வறட்சியை உண்டாக்கும்; வியர்வையைத் தோற்றுவிக்கும். நீரைப் போக்கும்; கூந்தல் வளர்ச்சிக்குப் பயன்படும் (சா. அக.);.

கோரைச்சம்பா

கோரைச்சம்பாāraiccambā, பெ.(n.)

   சம்பா நெல்வகை (பதார்த்த. 811);; rush-paddy.

     [கோரை + சம்பா]

கோரைச்சுண்ணம்

 கோரைச்சுண்ணம்āraiccuṇṇam, பெ.(n.)

   வழலைச் சுண்ணம்; the universal salt (சா.அக.);.

     [கோரை + சுண்ணம்]

கோரைத்தண்டு

 கோரைத்தண்டுāraittaṇṭu, பெ.(n.)

   கோரைப் புல்லின் அடித்தண்டு; the tuber of cyperus or sedge grass (சா.அக.);.

     [கோரை + தண்டு]

கோரைநிலம்

 கோரைநிலம்ārainilam, பெ.(n.)

   கற்கரடு, கருமலை, ஆரணி, உவற்பொட்டல், களிமண்உப்பு, மண் போன்றவை கொண்டதாக இருக்கும் நிலம்; a kind of land.

     [கோரை + நிலம்]

கோரை மட்டும் வளரும் நிலம்.

கோரைப்படாத

 கோரைப்படாதāraippaṭāta, பெ.எ. (adj.)

   மயிர் முளையாத; of hair not grown as on head; without hair generally said of the head of the fetus (சா.அக.);.

     [கோரை+படாத]

கோரைப்பதி

 கோரைப்பதிāraippadi, பெ.(n.)

   பெரும்பீர்க்கு; a large species of Iuffa (சா.அக.);.

     [கோரை + பதி.]

கோரைப்பல்

 கோரைப்பல்āraippal, பெ.(n.)

   கடித்துத் துண்டாக்குவதற்கு ஏதுவாக மேல் தாடையிலும், கீழ் தாடையிலும் உள்ள கூரிய முனையை உடைய பல்; canine tooth

     [கோரை+பல்.]

கோரைப்பாசி

 கோரைப்பாசிāraippāci, பெ.(n.)

   பாசி வகை; a species of moss, Sida humilis (செ.அக.);.

கோரைப்பாய்

 கோரைப்பாய்āraippāy, பெ.(n.)

   கோரைப் புல்லாற் பின்னப்பட்டப் பாய் (உ.வ.);; grass mat, bulrush mat.

ம. கோரப்பாய்.

     [கோரை + பாய்.]

கோரைப்புற்கிழங்கு

 கோரைப்புற்கிழங்குāraippuṟkiḻṅgu, பெ.(n.)

கோரைக்கிழங்கு பார்க்க;see Korai-k-kilangu.

     [கோரை + புல் + கிழங்கு.]

கோரைப்புல்

கோரைப்புல்āraippul, பெ.(n.)

கோரை2 பார்க்க;see kõrai.

ம.கோரப்புல்லு, கோரம்புல்லு.

     [கோரை + புல்.]

கோரைப்பேரிகம்

 கோரைப்பேரிகம்āraippērigam, பெ.(n.)

   மிசிரிப்பருப்பு, சாலா மிசிரி; salep-Salep orchid (சா.அக.);.

     [கோரை + பேரிகம்.]

கோரைமயிர்

 கோரைமயிர்āraimayir, பெ.(n.)

   முறைப்புள்ள நீண்ட மயிர்; long and stiff hair.

கோரைமயிர் குடியைக் கெடுக்கும் (பழ.);.

     [கோரை + மயிர்.]

கோரைமுடி

 கோரைமுடிāraimuḍi, பெ.(n.)

கோரைமயிர் பார்க்க;see körai-mayir.

     [கோரை + முடி.]

கோரைமூஞ்சி

 கோரைமூஞ்சிāraimūñji, பெ.(n.)

கோரமூஞ்சி பார்க்க;see kora-munji

     [கோரை + மூஞ்சி.]

கோரையஞ்சீலா

 கோரையஞ்சீலாāraiyañjīlā, பெ.(n.)

   சீலாமீன் வகைகளுளொன்று; a kind of silä fish (சா.அக.);.

     [கோரை +அம் + சீலா.]

கோரையரிசி

 கோரையரிசிāraiyarisi, பெ.(n.)

   நீண்ட அரிசி; needle shaped rice (சா.அக.);.

மறுவ. சிலந்தியரிசி, பூங்கோரை.

     [கோரை + அரிசி.]

கோரையிறால்

 கோரையிறால்āraiyiṟāl, பெ.(n.)

   நீண்ட மீசைகளையுடைய ஒருவகைக் கடலிறால்; sea-prawn with long-whiskers (சா.அக.);.

     [கோரை + இறால்.]

கோரையுளுவை

 கோரையுளுவைāraiyuḷuvai, பெ.(n.)

   பழுப்பு நிறமுடைய உளுவைமீன் (மீனவ.);; uluvai fish, brown in Colour.

கோரையுளுவை

     [கோரை + உளுவை.]

கோரையுள்ளான்

 கோரையுள்ளான்āraiyuḷḷāṉ, பெ.(n.)

   ஒருவகை நீண்ட உள்ளான் பறவை; species of long snipe.

கோரையுள்ளான் மறுவ கோரைகிண்டி,கோரைகுத்தி,கோரைவெட்டி.

     [கோரை + உள்ளான்.]

கோரையூதை

கோரையூதைāraiyūtai, பெ.(n.)

   இடுப்புக் கடுத்து நொந்து, துறட்டியைப்போல் நடுப்படத் தறித்து வலித்து நடக்கவும், நிமிரவும் முடியாது சந்து மட்டும் வலிக்கும் ஒருவகை ஊதைநோய் (யூகி.முனி. 1200);; a rheumatic affection of the muscles about the loins. It is characterised by severe pain of the small of the back and piercing pain in the pelvis due to the inflammatory condition of the fibrous tissues. It is aggravated by movements of limbs often preventing the patient form walking or maintaining an erect position (சா.அக.);.

     [கோரை + ஊதை.]

கோரைவாதம்

 கோரைவாதம்āraivātam, பெ.(n.)

கோரையூதை பார்க்க;see korai-y-Udai.

     [கோரை + வாதம்.]

கோரைவீரம்

 கோரைவீரம்āraivīram, பெ.(n.)

   போகர் நூலிற் சொல்லிய வண்ணம் காகத்தினிறகை கொக்கினிறகைப்போல் வெண்மையாக்கும் திறமுடைய ஒரு வகை வீரவைப்பு; a prepared compound of corrosive sublimate capable of converting the black wing of a crow into a white one resembling that of a stork (சா.அக.);.

     [கோரை + வீரம்.]

கோரைவெட்டி

 கோரைவெட்டிāraiveṭṭi, பெ.(n.)

கோரையுள்ளான் பார்க்க;see kõrai-y-ullān.

     [கோரை + வெட்டி.]

கோரோசனம்

கோரோசனம்ārōcaṉam, பெ.(n.)

   ஆவின் வயிற்றிலிருந்து எடுக்கப்படும் மஞ்சள் நிறமுள்ள நறுமணப் பொருள் (பதார்த்த. 1085);; bezoartaken from the stomach of cows (செ.அக.);.

மறுவ, ஆன்மணத்தி

கோரோசனை

கோரோசனைārōcaṉai, பெ.(n.)

   ஆவின் வயிற்றினின்று எடுக்கப்படும் மஞ்சணிறமுள்ள மணப்பொருள் (பதார்த்த. 1083);; bezoar taken from the stomach of cows.

மறுவ கோரோசம், கோரோசனம், மான்மணத்தி.

     [கோ (மாடு); + அரிசனம் (மஞ்சள்); – கோயரிசனம் → கோரோசனம் → கோரோசனை. மாட்டின் மஞ்சள் நிறமுள்ள மணப்பொருள் மஞ்சள் நிறத்தின் ஒப்புமை நோக்கி கோயரிசனம் எனப்பட்டது. இது பிறமொழியாளரால் வடதமிழில் கோரோசனம் எனத்திரித்து வடமொழியிலும் கடன் கொள்ளப்பட்டது]

கோரோசனைக்குளிகை

 கோரோசனைக்குளிகைārōcaṉaigguḷigai, பெ.(n.)

   குழந்தைகளுக்கேற்படும் கோழை. இருமல், சுரம், தலைவலி முதலியவற்றுக்குக் கொடுக்கும் ஒரு மாத்திரை; a pill prepared with bezoar as chief ingredient and prescribed for morbid affections in apoplexy and children’s diseases such as phlegm in the chest, cough, fever, headache etc. (சா.அக.);.

மறுவ. கோரோசனை மாத்திரை.

     [கோரோசனை + குளிகை.]

கோரோசனைப் பாவிகம்

 கோரோசனைப் பாவிகம்ārōcaṉaippāvigam, பெ.(n.)

   வைப்புக் கோரோசனை; artificially prepared реzoar: false bezоar (சா.அக.);.

     [கோரோசனை + பாவிகம்.]

கோரோசனைப் புளிப்பு

 கோரோசனைப் புளிப்புārōcaṉaippuḷippu, பெ.(n.)

   கோரோசனைத் தூள்; gallic acid occurring in the bezoar stones in the form of a powder (சா.அக.);.

     [கோரோசனை + புளிப்பு.]

கோரோசனைமாத்திரை

 கோரோசனைமாத்திரைārōcaṉaimāttirai, பெ.(n.)

கோரோசனைக் குளிகை பார்க்க;see körösanai-k-kuligai (சா.அக.);.

     [கோரோசனை + மாத்திரை.]

கோரோசம்

 கோரோசம்ārōcam, பெ.(n.)

கோரோசனை பார்க்க;see kõrõsanai (சா.அக.);.

மறுவ. கோவுரசனம், கோரோசனம்.

     [கோரோசனை → கோரோசம்.]

கோர்

கோர்1ārttal,    4 செ.குன்றாவி (v.t.)

கோ-த்தல் பார்க்க;see kõ-.

     [கோ → கோர்.]

 கோர்2ārttal,    4 செ.குன்றாவி.(v.t.)

   நூலை அல்லது நாணைத் துளைவழி துருவச் செய்தல்; to send the edge of a thread through the hole of the needle.

கோர் – செங்குத்து see கோரவாரம்.

     [குள் → குர் → குரு → கோர் → கோர்-த்தல்]

கோர்கச்சா

 கோர்கச்சாārkaccā, பெ.(n.)

   மீன்திரட்டி வைத்தற்குரிய வலைப்பை; a netted bag to collect and keep the fish during the time of fishing.

     [கோர் + கச்சா(வு);.]

கோர்கோர்

 கோர்கோர்ārār, பெ.(n.)

   சிறுவர் சண்டை, சேவற் சண்டையின்போது தூண்டிவிடும் உணர்ச்சிச் சொல்லடுக்கு; a phrase used in Children’s war.

     [கோர் + கோர்.]

கோர்க்கலம்

 கோர்க்கலம்ārkkalam, பெ.(n.)

   மட்கலம் (யாழ்ப்.);; earthen vessel.

     [கோர் + கலம்.]

கோர்க்காலி

 கோர்க்காலிārkkāli, பெ.(n.)

கோக்காலி பார்க்க;see kökkäli.

     [கோக்காலி → கோர்க்காலி.]

கோர்சா

கோர்சாārcā, பெ.(n.)

   20 உருப்படி அடங்கிய துணி மூட்டை (C.G);; bale of cloth containing 20 pieces.

     [U.{} → த.கோர்சா.]

கோர்ட்டார்

 கோர்ட்டார்ārṭṭār, பெ.(n.)

   அறமன்ற நடுவர்; magistrate, judge.

     [E.court → த.கோர்ட்டார்.’ஆர்’ தமிழ் உயர்வு ஒருமை ஈறு.]

கோர்ட்டு

 கோர்ட்டுārṭṭu, பெ.(n.)

   அறமன்றம்; court.

     [E.court → த.கோர்ட்டு.]

கோர்ட்டுமௌகூப்பு

 கோர்ட்டுமௌகூப்புārṭṭumauāppu, பெ.(n.)

   அறமன்றம் சாத்துகை (C.G.);; closing of the court.

     [E.court+U.{} → த.கோர்ட்டுமௌகூப்பு.]

கோர்த்த

 கோர்த்தārtta, பெ.அ.(adj.)

   மூளையைச் சேர்ந்த; pertaining to the large part of the brain, cerebral (சா.அக.);.

கோர்த்தம்

 கோர்த்தம்ārttam, பெ.(n.)

   மூளையின் பெரும் பங்கு; the superior and chief portion of the brain occupying the whole upper cavity of the skull-cerebrum (சா.அக.);.

இது மண்டை ஒட்டு (கபால); அறையில் நெற்றி தொடங்கிப் பிடரி வரையிலுமுள்ள அகலமான பகுதி.

     [கோ → கோர்த்தம்.]

கோர்த்தரம்

 கோர்த்தரம்ārttaram, பெ.(n.)

   சிறு மூளை; portion of the brain which is posterior to and underlies the great cerebral mass or cerebrum – cerebellum (சா.அக.);.

     [கோ → கோர்த்தம் → கோர்த்தரம்.]

இது பிடரியெலும்பினது கீழ்ப்பள்ளத்துள் ளடங்கிய மூளையின் பகுதி.

கோர்வை

கோர்வை korvai, பெ.(n.)

கோவை பார்க்க;see kõvai.

ம. கோர்வ.

     [கோ → கோர் → கோர்வை.]

 கோர்வை2ārvai, பெ.(n.)

   சொற்கட்டு அமைப்பின் முடிவில் வரும் தொடர்; a phrase coming at the end of a sequence of words.

     [கோ → கோர் → கோர்வை.]

 கோர்வை3ārvai, பெ.(n.)

   உடற்பகுதியையும் முந்தானையையும் சேர்த்து நெய்யப்படும் சேலை; saree woven with contrasting colour border and palla.

     [கோ → கோர் → கோர்வை.]

 கோர்வை4ārvai, பெ.(n.)

   அன்னவெட்டி என்னும் சேற்றுக் கரண்டி; spoon to take rice.

     [கோ → கோர் → கோர்வை.]

   கோர்வைப்புகையிலை புகையிலை அடுக்கு; tobacco leaves strung together on a line.

     [கோர்வை + புகையிலை.]

கோர்வைமரம்

 கோர்வைமரம்ārvaimaram, பெ.(n.)

   கைமரங்களின் இணைப்பு; wooden joints.

     [கோர்வை + மரம்.]

கோறடம்

கோறடம்āṟaṭam, பெ.(n.)

எட்டிமரம்,

 drug bane; Indian oison tree, Strychnos пихуотiса.

     [கோறு – கோறடம்]

இது சம உயரம் உள்ளது. இலைகள் மென்மையாயும், பளபளப்பாயும் இருக்கும். 3 முதல் 5 நரம்புகள் மத்தியில் ஓடும். பூக்கள் சிறியவை, வெளிர் பச்சை. திருவனந்தபுரம், கொாநாடு முதலிய இடங்களில் வளரும் காடுகளில் அதிகம் காணப்படும். அடிமரம் குட்டையாகவும், சிறிது வளைந்தும் இருக்கும். கிளைகளில் பட்டை சாம்பல் நிறமாயும், கட்டை கசப்பாயும் இருக்கும் (சா.அக.);.

     [P]

கோறணி

 கோறணிāṟaṇi, பெ.(n.)

கோரணி பார்க்க (யாழ்.அக.);;see kõrani.

     [கோரணி → கோறணி.]

கோறம்பு

கோறம்புāṟambu, பெ.(n.)

   ஒருவகை நெற்றியணி; an ancient ornament for the forehead.

     “நெற்றி மேற்றிருத்திய கோறம்புந் திருக்குழலும்” (திவ்.பெரியாழ். 3:4:6);.

க. கோரம்ப.

     [கோலம் +பூ → கோலம்பூ → கோறம்பு.]

கோறர்

கோறர்āṟar, பெ.(n.)

   கள்ளர்குடிப் பட்டப் பெயர்களுள் ஒன்று (கள்ளர் சரித்,பக்.98);; a caste title of Kallars.

     [கோல + அர் – கோலர் → கோறர்.]

கோறல்

கோறல்āṟal, பெ.(n.)

   கொல்லுகை;  killing, slaying.

     “கோறல் பிறவினை யெல்லாந் தரும்” (குறள் 321);.

     [கொல் → கோறு → கோறல்.]

கோறித்தல்

 கோறித்தல்āṟittal, பெ.(n.)

நில வேம்பு

 ground neem tree, Andrographis paniculata (சா.அக.);.

கோறின்னல்

கோறின்னல்āṟiṉṉal, பெ.(n.)

   பல்விளக்குகை; cleaning the teeth.

     “விதித்த கோறின்று’ (காஞ்சிப்பு. ஒழுக்.8);.

     [கோல் + தின்னல். கோல் = குச்சி – பற்குச்சி. பற்குச்சியை மென்று பல்துலகுதல்.]

கோறுண்ணி

 கோறுண்ணிāṟuṇṇi, பெ.(n.)

   பிற உயிரினைக் கொன்று பிறகு உண்ணும் உயிரி; predator.

     [கோறு + உண்ணி.]

கோறை

கோறைāṟai, பெ.(n.)

   1. பழுது;  loc.;defect, ble mish.

   2. சிராய்ந்த காயம்; scratch, as on the body.

   3. துளை (W.);; hole, cavity, hollow, as in a tooth, in fistula.

   4. மணிபதிக்குங் குவளை (W.);; socket.

     [குறை → கோறை.]

கோறைபடு-தல்

கோறைபடு-தல்āṟaibaḍudal, பெ.(n.)

   20 செ.கு.வி.(v.i..

   1. பழுதாதல்; to be injured, as clothes, fruits.

   2. சிராய்ந்த காயமுண்டாதல்; to have a scratch, as on the body.

     [குறை → கோறை + படு-.]

கோறைப்படு-த்தல்

கோறைப்படு-த்தல்āṟaippaṭuttal,    4 செ.கு.வி. (vi.)

   1. வழுவுண்ணல்; sustaining an abrasion or scratch.

   2. குழி உண்டாதல்; becoming hollow; forming a cavity (சா.அக.);.

     [கோரை + படு-த்தல்.]

கோறையா-தல்

கோறையா-தல்āṟaiyātal,    8 செ.கு.வி.(v.i.)

   1. பழுதுபடுதல்; to be injured or spoiled.

   2. குழியாதல் (யாழ்ப்.);; to become hollow.

     [கோறை + ஆ.]

கோறைவை-த்தல்

கோறைவை-த்தல்āṟaivaittal,    4 செ.கு.வி.(v.i.)

கோறையா-தல் பார்க்க;see korai-y-a-.

     [கோறை + வை.]

கோற்கணக்குக் குழிக்கணக்கு

 கோற்கணக்குக் குழிக்கணக்குāṟkaṇakkukkuḻikkaṇakku, பெ.(n.)

   கோலால் அளந்து கொள்ளப்பட்ட நிலத்தின் குழிக்கணக்கு (இ.வ.);; land surveying, computing the extent of a land in kuli. with a measuring rod.

     [கோற்கணக்கு + குழிக்கணக்கு.]

கோற்காரன்

கோற்காரன்āṟkāraṉ, பெ.(n.)

   1. ஊர் ஊழியக்காரன்(G. Sm. D.I.i.127);; a village servant.

   2. ஒடந்தள்ளுவோன் (இ.வ.);;  terryman.

     [கோல் + காரன்.]

கோற்குத்து

கோற்குத்துāṟkuttu, பெ.(n.)

   கோல்முனையாற் குத்தப்படும் அளவுள்ள நிலம்; bit of land coverable by the end of a staff when planted on the ground.

     ‘ஒரு கோற்குத்துங் கொடேன்'(ஈடு.7:5 பிர.);

     [கோல் + குத்து.]

கோற்குறிப்பு

 கோற்குறிப்புāṟkuṟippu, பெ.(n.)

   நிலவளவுக் கணக்கு (W.G.);; abstract of land survey.

     [கோல் + குறிப்பு.]

கோற்கூத்து

கோற்கூத்துāṟāttu, பெ.(n.)

   வரிக்கூத்துவகை; a kind of masquerade dance.

     ‘கோத்த பறைக் குடும்பு கோற்கூத்து'(சிலப். 3:13. உரை);.

     [கோல் + கூத்து.]

கோற்கூலி

கோற்கூலிāṟāli, பெ.(n.)

   வரிவகை (தெ.இ.க.தொ.IV.30);; a tax

   செய்பவன்; guard or watchman armed with a stick, stationed at the porch of a king’s palace.

     “கோற்றொழி லவற்குக் கூறின னிற்ப” (பெருங். உஞ்சைக். 47:10);.

     [கோல் + தொழில் + அவன்.]

கோற்பூச்சி

 கோற்பூச்சிāṟpūcci, பெ.(n.)

   உடம்பினுள்ளே வாழும் அங்கக்கோற் பூச்சி; a round worm found inside the body (சா.அக.);.

     [கோல்+பூச்சி]

கோற்றொழிலாளர்

கோற்றொழிலாளர்āṟṟoḻilāḷar, பெ.(n.)

   கோலைக் கையேந்தி அரசர்க்குமுன் வழி விலக்குவோர்; king’s attendants armed with sticks, their duty being to disperse the crowd and clear the way for the king to pass.

     “கோற்றொழி லாளர்மாற்றுமொழி இயம்ப” (பெருங். உஞ்சைக். 58:76);.

     [கோல் + தொழில் + ஆளர்.]

கோலகசினி

 கோலகசினிālakaciṉi, பெ.(n.)

   ஆனைத் திப்பிலி; elephant pepper, Scindapsis officinalis.

கோலகசேபிகம்

 கோலகசேபிகம்ālakacēpikam, பெ.(n.)

   மாசிப் பச்சை; green black oak (சா.அக.);.

கோலகந்தம்

 கோலகந்தம்ālagandam, பெ.(n.)

   புழுக்களைக் கொல்லப் பயன்படும் ஒரு கிழங்கு; a bulbous root used for killing worms (சா.அக.);.

     [கோலம் + கந்தம்.]

கோலகப்பை

 கோலகப்பைālagappai, பெ.(n.)

   நீண்ட காம்பையுடைய அகப்பை (இ.வ.);; ladle with a long handle, as used in the preparation of large quantities of rice and curry.

     [கோல் + அகப்பை.]

கோலகம்

 கோலகம்ālagam, பெ.(n.)

   திப்பிலி (மலை.);; long pepper.

     [கோலம் → கோலகம்.]

கோலக்கல்

 கோலக்கல்ālakkal, பெ.(n.)

   கோலப்பொடியாக இடித்தற்குரிய (வெங்கக்); கல்; a kind of white stone powdered and used for drawing decorative figures on the floor.

     [கோலம் + கல்.]

கோலக்காரன்

 கோலக்காரன்ālakkāraṉ, பெ.(n.)

   கேலிக்காரன் (இ.வ.);; humorist, jester.

     [கோலம் (புனைவு); + காரன்.]

கோலக்கிருதம்

கோலக்கிருதம்1ālakkirutam, பெ.(n.)

   நில வேம்பு; ground neem, Justicia Paniculata (சா.அக.);.

கோலங்கட்டு-தல்

கோலங்கட்டு-தல்ālaṅgaṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   நாடகம் முதலியவற்றிற்கு வேடம் பூணுதல் (யாழ்ப்.);; to put on dress as an actor, dress up for the → atricals;

 to put on a mask or costume.

     [கோலம் + கட்டு.]

கோலங்காட்டு-தல்

கோலங்காட்டு-தல்ālaṅgāṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. மணமக்களை மணப்பந்தலுக்கு அழைத்துக் கொண்டு வருதல்(இ,வ.);; to conduct the bridegroom and the bride to the marriage dais.

   2. சாயல் கொள்ளுதல்; to represent, personify.

   3. மாதிரி காட்டுதல்; to show an example.

     [கோலம் + காட்டு.]

கோலங்காண்(ணு)-தல்

கோலங்காண்(ணு)-தல்ālaṅgāṇṇudal,    15.செ.குன்றாவி.(v.t.)

   1. ஒப்பனை செய்தல்; to adorn, beautify, decorate.

கோலாங்காண் படலம் (கம்பரா.);.

   2. துன்பத்திற்கு உள்ளாக்குதல்; to reduce one to a wretched condition.

அவன் என்னை இக்கோலங் கண்டான் (இ.வ.);.

     [கோலம் + காண்(ணு);.]

கோலங்கெடு-தல

கோலங்கெடு-தலālaṅgeḍudala, பெ.(n.)

   20 செ.கு.வி. (v.i.);

   1. அழகு கெடுதல்; to spoil the beauty.

   2. சீரழிதல்; to disorder, to get deranged.

     [கோலம் + கெடு.]

கோலங்கொள்(ளு)-தல்

கோலங்கொள்(ளு)-தல்ālaṅgoḷḷudal,    16 செ.கு.வி. (v.i.)

   1.நிகழ்வுக்கேற்ப வேடம் பூணுதல்; to put on appropriate dress.

     “கொற்றவை கோலங்கொண்டு” (பரிபா.11.100);.

   2. பொய்த் தோற்றம் காட்டுதல்; to put it on.

   3. மந்தாரமாயிருத்தல் (யாழ்ப்.);; to assume a cloudy appearапсе.

     [கோலம் + கொள்(ளு);.]

கோலசிம்பி

 கோலசிம்பிālasimbi, பெ.(n.)

   பூனைப் பிடுக்கன் கொடி; cat bean.

     [கோலம் + சிம்பி.]

கோலச்சங்கம்

 கோலச்சங்கம்ālaccaṅgam, பெ.(n.)

கோலச்சங்கு பார்க்க;see kola-c-cangu (சா.அக.);.

     [கோலம் + (சங்கு); சங்கம்.]

கோலச்சங்கு

 கோலச்சங்குālaccaṅgu, பெ.(n.)

   முட்சங்கு; mistletoe berry thorn.

     [கோலம் + சங்கு.]

கோலச்சாரி

கோலச்சாரிālaccāri, பெ.(n.)

   வேட்டுவப்பெண் கொற்றவையுருக்கொண்டு ஆடுங் கூத்து (சிலப். பதி. 73, உரை);; masquerade dance by a woman of the Védar caste disguised as Durgai.

     [கோலம் + (சாலி = சான்றவள், பொருந்தியவள்); சாரி.]

கோலச்சுண்ணம்

 கோலச்சுண்ணம்ālaccuṇṇam, பெ.(n.)

   வழலைச் சுண்ணம்;     [கோலம் + சுண்ணம்.]

கோலஞ்செய்வாள்

 கோலஞ்செய்வாள்ālañjeyvāḷ, பெ.(n.)

   தலைவிக்கு ஒப்பனை செய்பவள் (சூடா.);; lady’s dressing-maid.

     [கோலம் + செய்வாள்.]

கோலடி

கோலடிālaḍi, பெ.(n.)

   கையாலடித்த தவசத்தைக் குவித்துக் கோலாலடிக்கை (G.Sm. D.I.i.210);; threshing of paddy and other grain with sticks, after beating them with hand.

     [கோல் + அடி.]

கோலதளம்

 கோலதளம்āladaḷam, பெ.(n.)

கோலந்தனா பார்க்க (சா.அக.);;see kölandanä.

     [கோலம் + தளம்.]

கோலநகுடவேர்

 கோலநகுடவேர்ālanaguḍavēr, பெ.(n.)

   அமுக்கிரா (இராசவைத்.);; Indian winter cherry root.

     [கோலம் + நகுடம் + வேர்.]

கோலந்தனா

 கோலந்தனாālandaṉā, பெ.(n.)

   ஞாழல்; a mixture of various shrubs used in perfumes and punguents such as cassia, jasmine etc. (சா.அக.);

     [கோலம் = ஒப்பனை. தளம் = பொடி. கோலம் +தனம் -கோலந்தனம் → கோலந்தானா (கொ.வ.);.]

கோலன்

கோலன்ālaṉ, பெ.(n.)

   1. கையில் கோல் கொண்டவன்; one who is with a staff.

   2. நீண்ட வடிவுடையது; a lengthy one.

   3. ஒப்பனையும் புனைவும் கொண்டவன்; one who is with make up.

     [கோல் + அன்.]

கோலன்வல்லி

 கோலன்வல்லிālaṉvalli, பெ.(n.)

   ஆனைத் திப்பிலி; pericarps of pothos officinalis (சா.அக.);.

     [கோலன் + வல்லி.]

கோலன்வைப்பு

 கோலன்வைப்புālaṉvaippu, பெ.(n.)

   சிவனார் வேம்பு; Siva’s neem (சா.அக.);.

     [கோலன் + வைப்பு.]

கோலப்பாம்பு

 கோலப்பாம்புālappāmbu, பெ.(n.)

   ஒருவகைக் கடற்பாம்பு; a kind of sea snake (மீனவ.);.

     [கோலம் + பாம்பு.]

கோலப்புச்சம்

 கோலப்புச்சம்ālappuccam, பெ.(n.)

   ஒருவகை நாரை; a kind of crane (சா.அக.);.

     [கோலம் + புச்சம்.]

கோலப்பெட்டி

 கோலப்பெட்டிālappeṭṭi, பெ.(n.)

   மான், கிளி, போன்ற உருவங்கள் பின்னப்பட்ட பனை யோலைப்பெட்டி; inscribed deer, parrot like figures on box made of palmyra tree’s leaves.

     [கோலம்+[அழகு.ஒவியம்]+பெட்டி]

கோலப்பொடி

 கோலப்பொடிālappoḍi, பெ.(n.)

   கோலமிடுதற்குதவும் அரிசிமா அல்லது ஒருவகை வெள்ளைக் கற்பொடி; rice-flour or white stone-powder used for drawing decorative figures in houses.

     [கோலம் + பொடி.]

கோலமா

 கோலமாālamā, பெ.(n.)

கோலப்பொடி பார்க்க;see kola-p-podi.

மறுவ. கோலமாவு, கோலப்பொடி.

     [கோலம் + மா.]

கோலமாறு-தல்

கோலமாறு-தல்ālamāṟudal,    5 செ.கு.வி.(v.i.)

   1. முன்கொண்ட தோற்றம் மாறுதல்; to change in appearance or dress.

     “நகுடனுங் கோலமாறினான்” (தனிப்பா.);

   2. வேடம் புனைதல் (வின்.);; to be disguised;

 to put on dress, as an actor.

     [கோலம் + மாறு.]

கோலமாலம்

 கோலமாலம்ālamālam, பெ.(n.)

   மலையாமணக்கு (மலை.);; Coral plant.

     [கோலம் + ஆலம்.]

கோலமாவு

 கோலமாவுālamāvu, பெ.(n.)

கோலப்பொடி பார்க்க;see köla-p-podi.

     [கோலம் + மாவு.]

கோலமிடு-தல்

கோலமிடு-தல்ālamiḍudal,    20 செ.குன்றாவி (v.t.)

கோலம்போடு-தல் பார்க்க;see kòlam-podu-.

     “கோலமிடுதல் குடைபிடித்தல்” (சினேந்.458);.

     [கோலம் + இடு-.]

கோலமுத்தம்

 கோலமுத்தம்ālamuttam, பெ.(n.)

   ஒருவகைப் பூடு; an unknown plant (சா.அக.);.

     [கோலம் + முத்தம்.]

கோலமூலம்

 கோலமூலம்ālamūlam, பெ.(n.)

   திப்பிலி வேர்; root of long pepper, Piper longum (சா.அக.);.

கோலம்

கோலம்1ālam, பெ.(n.)

   1. அழகு; beauty, gracefulness.

     “கோலத் தனிக்கொம்பர்” (திருக்கோ.45);.

   2. நிறம்; colour.

     “கார்க்கோல மேனி யானை” (கம்பரா. கும்பக. 154);.

   3. உருவம்; form, shape, external or general appearance.

மானுடக் கோலம்.

   4. தன்மை; nature.

   5. வேடம்; costume, appropriate dress;

 attire, as worn by actors;

 trappings;

 equipment;

 habiliment.

     “உஙளவரிக் கோலத்து”(சிலப்.5:216);.

   6. அணிகலன்; ornament, as jewelry.

     “குறங்கிணை திரண்டன கோலம் பொறாஅ” சிலப். 30:18).

   7. ஒப்பனை; adornment, decoration, embellishment.

     “புறஞ்சுவர் கோலஞ் செய்து” (திவ்.திருமாலை.6);.

கண்டதே காட்சி கொண்டதே கோலம் (பழ);.

   8. மா, கற்பொடி முதலியவற்றிலிடும் கோலம்; ornamental figures drawn on floor, wall or sacrificial pots with rice – flour, white stonepowder. etc.

   9. சூலி (கர்ப்பிணி); களுக்குச் செய்யும் வளைகாப்புச் சடங்கு; ceremony of providing pregnant woman with bangles in fifth or seventh month after conception.

   10. விளையாட்டு; play, sport.

     “அல்லமன்றன் கோலமென் சொல்வேன்” (பிரபுலிங். பிரபுதே. 73);.

   11. பெருந்துன்பநிலை; wretched condition.

   தெ. கோலமு;   க. கோல;ம.கோலம்.

     [குல் → கொல் (புதியது. அழகியது); → கோல் + அம்.]

 கோலம்ālam, பெ.(n.)

   1 முயற்சி; exertion, effort;

     “கோலங்கொ ளுயிர்களும்” (திவ்.திருவாய். 5.6:10);.

   2. சிறு நீரோட்டம் (பிங்.);; streamlet.

     [குல் → கொலு → கோலு → கோலம்.]

 கோலம்3ālam, பெ.(n.)

   1. பன்றி; hog, wild hog.

     “கேழ றிகழ்வரக் கோலமொடு பெயரிய” (பரிபா.2:16);.

   2. முள்ளம்பன்றி (திவா.);; pcrcupine.

   3. இலந்தை (பிங்.);; jujube tree.

   4. தெப்பம் (வின்.);; raft.

     [கால் (கருப்பு); = கோல் → கோலம்.]

 கோலம்4ālam, பெ.(n.)

குரங்கு (பிங்.);:

 monkey.

     [கோல் (வளைவு); → கோலம்.]

 கோலம்5ālam, பெ.(n.)

   1. பாக்கு (பிங்.);; areca-nut.

   2. பீர்க்கு (பிங்.);; sponge-gourd.

     [கோல் (நீட்சி); → கோலம்.]

 கோலம்6ālam, பெ.(n.)

   தக்கோலம் (மூ.அ.);; cubeb.

     [கோல் → கோலம்.]

கோலம்போடு-தல்

கோலம்போடு-தல்ālambōṭudal,    20 செ.கு.வி. (v.i.)

   1. சுவர், தரை முதலியவற்றில் அழகான வரியிடுதல்; to draw ornamental figures on wall or floor with rice flour or white stone powder.

   2. ஒப்பனை செய்வித்தல்; to decorate.

   3. கோட்டமிடுதல்; to bend.

   4. புனைந்து கொள்ளுதல், வேடமணிதல்; to wear costume.

     [கோலம் + போடு.]

கோலம்வா-தல் (கோலம்வருதல்)

கோலம்வா-தல் (கோலம்வருதல்)ālamvādalālamvarudal,    18 செ.கு.வி.(v.i.)

   ஊர்வலம் வருதல் (வின்.);; to go in procession.

     [கோலம் + வா.]

கோலரக்கு

 கோலரக்குālarakku, பெ.(n.)

   கொம்பரக்கு; shellac.

     [கோல் + அரக்கு.]

கோலரம்

 கோலரம்ālaram, பெ.(n.)

   முளை (சது.);; shoot from a Seed or root.

     [கோலம் → கோலரம்.]

கோலரி

 கோலரிālari, பெ.(n.)

   அமுக்கிரா; amukkirä (சா.அக.);.

     [கோல் + அரி.]

கோலறை

கோலறைālaṟai, பெ.(n.)

   1. கூலியாள் வேலை செய்தற்காக அளவுகோலால் அறுதி செய்து கொடுக்கப்பட்ட நிலம்; working area portioned out for each individual labourer, as determined by a measuring-rod.

     “வாணிச்சிக் கிடுங் கோலறைக் கோரா ளின்றி” (திருவாலவா.30:8);.

   2. குழித்தரை; a pit land.

     [கோல் + அறை.]

கோலறையிடு-தல்

கோலறையிடு-தல்ālaṟaiyiḍudal, பெ.(n.)

   20 செ.கு.வி. (v.i.);

   வேலை செய்யுமிடங்களைக் கூலியாள்களுக்கு வகுத்துக் கொடுத்தல்; to measure off an area for work for different labourers.

     “மனைகடொறுங் கோலறையிட்டு வேண்டி யடைப்பாயென” (திருவாலவா.30:6);.

     [கோல் + அறை + இடு-.]

கோலலவணம்

 கோலலவணம்ālalavaṇam, பெ.(n.)

   துரிசு (வின்.);; a kind of blue vitriol.

     [கோலம் + லவணம் (உப்பு);.]

கோலல்

 கோலல்ālal, பெ.(n.)

   கோலுலதல்; to surround.

     [கொலு → கோலு → கோலல்.]

கோலவல்லி

 கோலவல்லிālavalli, பெ.(n.)

   கொடிவகை (யாழ்.அக.);; a creeper.

     [கோலம் + வல்லி.]

இதன் காய் மிளகைப்போல் இருக்கும்.

கோலவல்லீசம்

 கோலவல்லீசம்ālavallīcam, பெ.(n.)

   செவ்வியம்; common pepper (சா.அக.);.

     [கோலம் + (வல்லியம்); வல்லீசம்.]

கோலவுணவு

 கோலவுணவுālavuṇavu, பெ.(n.)

   பன்றியின் உணவாகிய கோரைக் கிழங்கு (இராசவைத்.);; sedge tuber, as hog’s food.

     [கோலம் + உணவு. கோலம் = பன்றி.]

கோலவேர்

 கோலவேர்ālavēr, பெ.(n.)

   நிலப்பனை (மலை.);; ground palm.

     [கோலம் + வேர்.]

கோலா

கோலா1ālā, பெ.(n.)

   திப்பிலி; long pepper

     [கோலன் + கோலா.]

 கோலா2ālā, பெ.(n.)

   1. கடல்மீன். இதன் உடம்பு நீண்டும் ஒல்லியாயும், தலைக் கூச்சாகவும், எலும்பு பச்சை நிறமாயும் இருக்கும்; a kind of fish; gasfish or garpeck. It has a slender body pointed head and green bone.

   2. பறக்கும் மீன்வகை (யாழ்.அக.);; flying fish.

ம. கோலான்.

 Fin. kala, Est. kala;

 Mari, kol;

 Hung. hal;

 Mong. Xalima;

 Jap. Karei;

 Q. Calma

     [கோலன் → கோலா.]

வகைகள் :

   1. வட்டமூக்குக் கோலா,

   2. பறவைக் கோலா,

   3, பசுங்கோலா,

   4. சப்பைக் கோலா,

   5. வரிக் கோலா,

கோலாமீன்

   6. திருவெண்கோலா,

   7.பாம்புக்கோலா,

   8. கருவாலன்கோலா,

   9. ஏ.மின்கோலா,

   10. மயிற்கோலா,

   11 பற்கோலா,

   12. தாய்க் கோலா,

   13. பீச்சிக்கோலா (சா.அக.);.

 கோலாālā, பெ.(n.)

   ஒருவகைப் பருகம்; a kind of aerated water.

     [E.kola → த.கோதலா3.]

கோலாகலனேந்தல்

 கோலாகலனேந்தல்ālākalaṉēndal, பெ.(n.)

   கோரைக்கிழங்கு (இராசவைத்.);; sedge tuber. as hog’s food.

     [கோலாகலன் – பேரொலி எழுப்பும் பன்றி. நந்து →நந்தல் (விரும்பும் உணவு);. கோலாகலன் + நந்தல்.]

கோலாகலம்

கோலாகலம்ālākalam, பெ. (n.)

   1. சேதி நாட்டு மலை; hill in cēdi-nādu.

   2. மத்திய இந்தியாவில் பண்டில்கண்டிலிருந்து மால்வாவைப் பிரிக்கும் மலை; a hill separating in Malva from Pandelkandi (அபி.சிந்);.

 கோலாகலம்ālākalam, பெ.(n.)

   1. ஆரவாரம், ஆடம்பரம்; pomposity.

     “கூராரும் வேல்விழியார் கோலா கலங்க ளெல்லாம்” (பிரமோத.27:14);.

   2. குசால்; gaiety. style.

   3. பேரொலி; big sound.

   4. விலங்கின மெழுப்புமொலி; sound produced by animals

   5. கூக்குரல்; loud and confused noise.

     [கோலம் + ஆகுலம்.]

கோலாகலம்பண்(ணு)-தல்

கோலாகலம்பண்(ணு)-தல்ālākalambaṇṇudal, பெ.(n.)

   11.செ.கு.வி. (v.i.);

   ஒழுங்கீனமாக நடத்தல் (வின்.);; to be disorderly. to lead a dissipated or dissolute life (சா.அக.);.

     [கோலாகலம் + பண்ணு.]

கோலாகாலி

 கோலாகாலிālākāli, பெ.(n.)

   ஆடம்பரமாய் நடப்பவன்-ள்; extravagant person fond of display or pomp.

     [கோலாகலம் → கோலாகாலி.]

கோலாக்கட்டா

கோலாக்கட்டாālākkaṭṭā, பெ.(n.)

   18 அங்குல நீளம் வளர்வதும் நீலமிடையிட்ட பச்சை நிறமுள்ளதுமான கடல்மீன்வகை; a sea-fish, greenish, shot with blue, attaining 18 in. in length.

     [கோலன் + (கட்டு); கட்டா.]

கோலாங்கூலம்

 கோலாங்கூலம்ālāṅālam, பெ.(n.)

முசு: langur. a large and black kind of wild bearded ape.

     [கால் → கோல் + நாங்குலம் (நாஞ்சில்);. கலப்பை போல் முதுகு வளைந்த கருங்குரங்கு.]

கோலாசுரன்

 கோலாசுரன்ālācuraṉ, பெ.(n.)

   மலை மகளால் கொல்லப்பட்ட ஒரு அரக்கன்; a giant who killed by Malai-magal the goddess of mountain (அபி.சிந்.);.

கோலாச்சி

 கோலாச்சிālācci, பெ.(n.)

   மீன் வகை; a kind of fish.

     [கோல் + ஆச்சி.]

கோலாச்சுறா

 கோலாச்சுறாālāccuṟā, பெ.(n.)

   மீன்வகை (F.L.);; a kind of shark, grey or brown.

     [கோலன் + சுறா.]

கோலாஞ்சி

கோலாஞ்சி1ālāñji, பெ.(n.)

   மிகு ஒப்பனை, ஆகுலம், பகட்டு (யாழ்ப்.);; excessive decoration, finery in dress, style above one’s rank a condition.

கொலு → கோலு → கோலஞ்சி → கோலாஞ்சி.]

 கோலாஞ்சி2ālāñji, பெ.(n.)

   1. அடுக்கு; one on top of another.

   2. அணியம்; ready.

   3. அதிகோலம்; over graceful, over handsome.

     [கொலுவுதல் : பொருத்துதல், அடுக்குதல், அழகுபடுத்துதல். கொலு → கோலு → கோலஞ்சி.]

கோலாடி

கோலாடிālāṭi, பெ.(n.)

   அரசாணை செல்லும் இடம்; sphere of royal authority or influence.

     “என் கோலாடி குறுகப்பெறா” (திவ்.பெரியாழ்.5:4:4);.

     [கோல் + ஆடி.]

கோலாடு

 கோலாடுālāṭu, பெ.(n.)

   ஆட்டுவகை (இ.வ.);; a kind of sheep.

     [கோல் + ஆடு.]

கோலாட்டப்பாட்டு

 கோலாட்டப்பாட்டுālāṭṭappāṭṭu, பெ.(n.)

   கோலடித்து விளையாடும்போது பாடும், ஒருவகைப் பாட்டு; a kind of song in a children’s play with short coloured sticks.

ம. கோலடிப்பாட்டு.

     [கோலாட்டம் + பாட்டு.]

கோலாட்டம்

கோலாட்டம்ālāṭṭam, பெ.(n.)

   1. வண்ணமிட்ட கோல்களைக் கொண்டு தாளத்திற்கும் பாட்டிற்கு மிசையச் சிறார் தட்டிக் கொண்டு விளையாடும் ஒரு வகை விளையாட்டு; a children’s game in which they sing and dance in a ring, marking time with beats of short coloured sticks.

     “செவ்வாய்ச்சியர் கோலாட்டம்” (காஞ்சிப்பு. வாணீச.54);.

   2. துலை, நளி, சிலை (ஐப்பசி, கார்த்திகை, மார்கழி); மாதங்களிளொன்றில் கோலாட்டத்துடன் இளம்பெண்கள் கொண்டாடும் ஒரு விழா; a festival celebrated by girls with kölättam in the months of tulai. nali, cilai Aippasi, Kărtigai or Mărgali.

   ம.கோலடி;   க.கோலாட;   தெ.கோலாடமு;து.கோலாட.

     [கோல் + ஆட்டம்.]

கோலாந்தி

 கோலாந்திālāndi, பெ.(n.)

   பற்பாடகச் செடி; fever plant (சா.அக.);.

     [கோல் → கோலாந்தி.]

கோலாபம்

 கோலாபம்ālāpam, பெ.(n.)

   சிவதை; Indian jalep (சா.அக.);.

     [கலாவம் → கலாபம் → கோலாபம்.]

கோலாமரம்

 கோலாமரம்ālāmaram, பெ.(n.)

   கோலாமீன் பிடிக்கச் செல்லும் மரக்கலம்; a wooden vessel used for fishing of kola fish (மீனவ.);.

     [கோலா + மரம்.]

கோலாமாலாவெனல்

 கோலாமாலாவெனல்ālāmālāveṉal, பெ.(n.)

   குழப்பக் குறிப்பு; expr. denoting confusion or disorderliness.

திருமணத்தைக் கோலாமாலா வென்று நடத்திவிட்டான் (இ.வ.);.

     [கோலாமாலா = ஒலிக்குறிப்பு. கோலா + மாலா + எனல்.]

கோலாமி

கோலாமிālāmi, பெ.(n.)

   ஆந்திர (அடிலாபாத்);, மராட்டிய (வார்தா); மாநிலங்களில் பழங்குடிமக்கள் பேசி வரும் திராவிட மொழி; a Dravidian language spoken by Tribals in Andhra Pradesh (Adilabad); and Maharashtra (Wardha);.

மறுவ, கொலாமி.

     [ஒருகா. குல → குளு → (குழு); குலுமி → கோலாமி.]

   இம்மொழியைப் பலரும் கொலாமி என்றே வழங்குபவர். இம்மொழிபற்றிக் காண்க: S B. Steever(Ed.); The Dravidian Languages (London 1998);; Ch. XI pp. 301-7 ‘Kolami’ by P.S. Subramanyam.

கோலாமீன்

கோலாமீன்ālāmīṉ, பெ.(n.)

   1.கோலா பார்க்க;see kölä.

   2. பறவை மீன்; a flying fish (சா.அக.);.

     [கோலா + மீன்.]

கோலாரிக்கம்

 கோலாரிக்கம்ālārikkam, பெ.(n.)

   இருவரிடும் சண்டை (இராட்.);; duel.

தெ. கொலாரகமு.

     [கோல் + (ஆர்த்தல்); ஆரிக்கம்.]

கோலாலம்

கோலாலம்ālālam, பெ.(n.)

கோலாகலம் பார்க்க;see kolakalam.

     “கோலால மாகிக் குரைகடல்வாயன்றெழுந்த வாலாலம்” (திருவாச. 12:8);.

     [கோலாகலம் → கோலாலம்.]

கோலாலிண்டு

 கோலாலிண்டுālāliṇṭu, பெ.(n.)

   ஒரு முள்ளி; Indian black berry (சா.அக.);.

     [கோலால் + இண்டு.]

கோலாள்

கோலாள்ālāḷ, பெ.(n.)

   தேர்ப்பாகன்; charioteer.

     “அங்கவன்றன் கோலாளைக் கொன்று” (பாரத. வெண். 799);.

     [கோல் = துறட்டி (அங்குசம்);. கோல் + ஆள்.]

கோலாவதீதம்

 கோலாவதீதம்ālāvatītam, பெ.(n.)

   கீழ்க்காய் நெல்லி; Indian Phyllanthus; niruri, Phyllanthus niruri (சா.அக.);.

கோலாவத்தம்

 கோலாவத்தம்ālāvattam, பெ.(n.)

   கீழ்க்காய்நெல்லி; a small plant with slender green main branches (சா.அக.);.

     [கோல் + ஆவத்தம்.]

கோலாவலை

 கோலாவலைālāvalai, பெ.(n.)

   கோலாமீன் பிடிக்கும் வலைவகை; a kind of net generally used for fishing of kola fish.

     [கோலா + வலை.]

கோலாவிதை

 கோலாவிதைālāvidai, பெ.(n.)

   இலந்தை விதை; jujube seed (சா.அக.);.

     [கோலா + விதை.]

கோலி

கோலி1āli, பெ.(n.)

   கூந்தல், மயிர் (சது.);; hair.

     [கோலு (நீட்சி); → கோலி.]

 கோலி2āli, பெ.(n.)

   இலந்தை (பிங்.);; jujube tree (சா.அக.);.

     [கோல் → கோலி.]

 கோலி3āli, பெ.(n.)

   திப்பிலி (மலை.);; long pepper.

 Mhr. Göli. தெ., ம. கோலி (goli);;

து. கோளி (gõli);.

     [கோலன் (குச்சி போன்றது); → கோலா → கோலி.]

 கோலி4āli, பெ.(n.)

   1.சிற்றழிஞ்சில்; privet.

   2. புன்குவகை; a species of privet.

     [கோலன் → கோலி.]

 கோலிāli, பெ.(n.)

   சிறு குண்டுவடிவான விளையாட்டுக் கருவி; marble, a plaything.

     [Mhr.{} → த.கோலி.]

கோலிகக்கருவி

 கோலிகக்கருவிāligaggaruvi, பெ.(n.)

   நெசவுக் கருவி; loom.

     [கோலிகன் + கருவி.]

கோலிகன்

கோலிகன்āligaṉ, பெ.(n.)

   1. நெசவுத்தொழில் செய்பவன் (நேமிநா.எழுத்து.16,.உரை);; weaver.

   2. கோலிகரால் நெய்யப்பட்ட ஆடை (தொல்.சொல். 114, உரை);; a kind of coarse cloth, as woven by kõligar.

ம. கோலியன்.

     [கோலி + அன். கோலுதல் = சேர்த்தல், இணைத்தல். கோலியர் = நூலிழைகளை இணைத்து துணி நெய்வோர். கோல் → கோலு → கோலியன் → கோலிவன் → கோலிகன். ககரம் சகரமாகத் திரிந்தபோது கோலியர் → சோலியர் → சாலியர் எனத் திரிந்தது.]

கோலிகப்பறையன்

 கோலிகப்பறையன்ālikappaṟaiyaṉ, பெ.(n.)

   முரட்டுத் துணி நெய்யும் தொழிலாளர் குலத்தினன்; a division of the Pariah caste who weave coarse cloths (செ.அக.);.

கோலிகம்

 கோலிகம்āligam, பெ.(n.)

   இலந்தை; jujube.

     [கோலி → கோலிகம்.]

கோலிக்கற்றை

கோலிக்கற்றைālikkaṟṟai, பெ.(n.)

   சாமரம் (சங்.அக.);; chowry, tail of the yak.

     [கோலி1 + கற்றை.]

கோலிக்கொள்(ளு)-தல்

கோலிக்கொள்(ளு)-தல்ālikkoḷḷudal,    16 செ.குன்றாவி,.(v.t.)

   சேர்த்துக் கொள்ளுதல் (வின்.);; to gather up, amass, accumulate, as property.

     [கோலி + கொள்(ளு); -. கோலுதல் = சேர்த்தல், திரட்டல்.]

கோலிசம்

 கோலிசம்ālisam, பெ.(n.)

   மிளகு; black рерper-piper nigrum (சா.அக.);.

     [கோலி → கோலிசம்.]

கோலிஞ்சி

 கோலிஞ்சிāliñji, பெ.(n.)

   மலையிஞ்சி (நாஞ்சில்);; a kind of ginger.

ம. கோலிஞ்சி.

     [கோல் + இஞ்சி.]

கோலினிறம்

 கோலினிறம்āliṉiṟam, பெ.(n.)

   அழிஞ்சில்; a medicinal tree whose root, fruit, leaves, flowers are an antidote against poison (சா.அக.);.

     [கோல் + நிறம்.]

கோலிம்

 கோலிம்ālim, பெ.(n.)

   கட்டுக் கொடி; a kind of creeper (சா.அக.);.

கோலியடி-த்தல்

கோலியடி-த்தல்āliyaḍittal,    4 செ.கு.வி. (v.i.)

   கோலியுண்டையால் விளையாடுதல்; to play marbles.

     [கோலி + அடி.]

கோலியன்

 கோலியன்āliyaṉ, பெ.(n.)

கோலிகன் பார்க்க;see kõligan.

ம. கோலியன்.

     [கோலிகன் → கோலியன்.]

கோலியப்பறை

 கோலியப்பறைāliyappaṟai, பெ.(n.)

கோலிகப்பறையன் பார்க்க; see kalgapparalyan (செ.அக.);.

 கோலியப்பறைāliyappaṟai, பெ.(n.)

   கோலிகப் பறையன் (W.);; a division of the pariah caste who weave coarse cloth, as woven by koligar.

     [கோலியன் + பறை.]

கோலியர்

 கோலியர்āliyar, பெ.(n.)

   நெய்வோர்; weaver.

ம. கோலிகர்.

     [கோலு → கோலியர்.]

கோலியள்(ளு)-தல்

கோலியள்(ளு)-தல்āliyaḷḷudal,    5 செ. குன்றாவி. (v.t.)

   வாரியெடுத்தல் (யாழ்ப்.);; to bale, take up with a bucket, as water. or gather with a sweep of the arm, as earth, grain.

     [கோலுதல் = அகலவாட்டில் இருகை சேர்த்தல். கோலி + அள்(ளு);.]

கோலிளகுதல்

கோலிளகுதல்āliḷagudal, பெ.(n.)

   அரசன் சாவு, செங்கோல் தளர்ந்து முடிவுறல்; death of a king, fall of the sceptre.

     ‘கோலிளகுதல் மங்கல மரபு’ (சீவக. 2146, உரை);.

     [கோ + இளகுதல்.]

கோலிவா(ரு)தல்

கோலிவா(ரு)தல்ālivārudal,    15 செ.குன்றாவி, (v.t.)

   சுற்றி வருதல்; to go round, envelope, as an army.

     [கோலு + வா.]

கோலிவாசி

 கோலிவாசிālivāci, பெ.(n.)

   கரடி; bear (சா.அக.);.

     [கோலி(நீண்டமயிர்); + வாசி.]

கோலு

கோலு1āludal, பெ.(n.)

   5 செ.குன்றாவி (v.t.);

   1. பாத்தி முதலியன வகுத்தல்; to make, form, as beds in a garden.

   2. வளைத்ல்; to enclose, envelop, encompass;

 to stretch round.

     “நெடுங்காழ்க் கண்டங்கோலி” (முல்லைப்.44);.

   3. திரட்டிவைத்தல்; to gather.

     “கோலாப் பிரசமன் னாட்கு” (திருக்கோ. 110);.

   4. நீர் முதலியவற்றை முகந்து அள்ளுதல்; to bale, draw up, as with an Olabucket;

 to gather with a sweep of arm.

     ‘கோலித் தண்ணீர் குடிக்கப்பட்ட….. குடை’ (கலித்.23.உரை);.

   5. விரித்தல்; to spread out.

     “கணமயிறொக்கெண்ணுழையாத் தழைகோலிநின் றாலும்” (திருக்கோ. 347);.

   6. தொடங்குதல்; to commence.

     ‘பரஸ்வரூபத்தை நிரூபிக்கக் கோலி’ (ஈடு.அவ.ஜீ.);.

   7. உண்டாக்குதல்; to construct, compass, effect.

   8. கலந்தாய்தல் (ஆலோசித்தல்);; to consider deliberate.

     “முற்கோலிப் பாண்டு புத்திரர்க் கோறும்” (பாரத. நச்சுப்.3);

   9. ஒன்றுதல் (தியானித்தல்);; to ponder meditate.

     “மாலைக் கோலித் திரியும்”(அஷ்டப். திருவேங்.மா.3);.

ம. கோருக.

     [குல் → கொல் → கோல் → கோலு.]

 கோலு2āludal,    9 செ.கு.வி. (v.i.)

   இணைதல்; to join together.

 Fin. koinia, koinata (to copulate);;

 Est. koinaba, koinida.

     [குல் → கொல் → கோல் → கோலு.]

கோலுபட்டை

 கோலுபட்டைālubaṭṭai, பெ.(n.)

   இறைகூடை வகை (யாழ்ப்.);; a kind of ola bucket.

     [கோலு + பட்டை.]

கோலுமை

 கோலுமைālumai, பெ.(n.)

   தொடக்கம் (வின்.);; preparation, commencement.

     [கோலு → கோலுமை.]

கோலெரி

கோலெரிāleri, பெ.(n.)

   விளக்குத் தண்டின்மேல் உள்ளச் சுடரொளி; lamp on a post.

     “கோலெரி கொளைநறை” (பரிபா.17:6);.

     [கோல் + எரி.]

கோலெழுத்து

கோலெழுத்துāleḻuttu, பெ.(n.)

   1. எழுதும் பரப்பில் கீறல் அல்லது பள்ளம் விழாமல் எழுதுகோலில் மை தோய்த்து, துணி, மரப்பட்டை, மட்பானை ஆகியவற்றின் மீது எழுதும் எழுத்து; style used to write using ink or colour powder or liquid.

   2. ஒப்பனைக் கோலம்; a decorative drawing.

   3. மலையாள நாட்டில் வழங்கும் ஒருவகை எழுத்து (I.M.P. Trav. 93-B.);; a variety of script used in Malabar.

ம.கோலழுத்து.

     [கோல் + எழுத்து.]

கண்ணெழுத்து என்பது எழுதும் பரப்பில் கீறல் விழ எழுதுவது, ஒலைச் சுவடி எழுத்து போன்றது.

கோலை

கோலைālai, பெ.(n.)

   மிளகு (தைலவ. தைல. 135, வரி. 91);; black-pepper.

     [கோல் → கோலை.]

கோலொற்று-தல்

கோலொற்று-தல்āloṟṟudal,    5 செ.கு.வி. (v.i.)

   அம்பு தொடுத்தல்; to shoot an arrow.

     “கோலொற்றக்குனிந்த வாறே”(சீவக.797);.

     [கோல் + ஒற்று.]

கோலோகம்

கோலோகம்ālōkam, பெ.(n.)

   ஆ(பசு);க்களுக்குரிய விண்ணுலகம்; paradise of cows as cow-world.

     “கோலோகம் விட்டிழிந்து” (காசிக. விச்சுவநா.8);.

     [கோல் + உலகம்.]

கோலோர்

கோலோர்ālōr, பெ.(n.)

   மதயானையை அடக்கி நடத்தும் குத்துக்கோற்காரர்; spearmen controlling an elephant in rut.

     “கோலார்க் கொன்று மேலோர் வீசி” (மதுரைக். 381);.

     [கோல் → கோலோர்.]

கோல்

கோல்1āl, பெ.(n.)

   1.கழி, கம்பு; rod, stick.

     “அலைக்கொரு கோறா” (கலித்.82:24);.

கோல் ஆட குரங்கு ஆடும் (பழ);.

   2. மரக் கொம்பு (சூடா.);; branch.

   3. ஊன்றுகோல்; staff.

     “கோலூன்றி

     “(நாலடி.13);. கோல் இழந்த குருடனைப் போல (பழ);.

   4. சித்திரந் தீட்டுங் கோல் (பிங்.);; brush, pencil, as for painting

     “இன்னமுது கோறோய்த்து” (நைடத.நளன்றூ. 89);.

   5. அரசாட்சி; government.

     “மன்னவன் கோற்கீழ்ப் படின்” (குறள்,558);.

   6. முத்திரைக் கோல் (வின்);; staff or stamp for marking.

   7. தீக்கடைகோல்; stick used for churning the flint stone to produce fire.

     “கைக்கோ லுமிழ்ந்த வெற்படு சிறுதீ” (பெருங். நரவாண.8:134);.

   8. பிரம்பு; cane.

   9. குதிரையை முடுக்கி ஒட்டும் சவுக்கு, குதிரைச் சம்மட்டி (சூடா.);; horse-whip.

   10. கொழு (பிங்.);; plough share.

   11. அம்பு; arrow.

     “ஐங்கோலை வென்றுகைக் கொண்டமுக் கோலன்” (திருவேங். கலம். காப்பு.3);.

   12. ஈட்டி (சூடா.);; spear.

   13. குடைமுதலியவற்றின் காம்பு; handle, as of an umbrella.

     “அருள்குடையாக வறங்கோ லாக”(பரிபா.3:74);.

   14.யாழின் நரம்பு; lute string.

     “கோல்பொரச் சிவந்த…. விரல்” (சீவக. 459);.

   15. துலாக்கோல் (பிங்.);; balance on the principle of a steel-yard, beam of scales.

   16. துலைஒரை (திவா.);; libra of the zodiac.

   17. துலை (ஐப்பசி);த் திங்கள் (தைலவ.பாயி,55.);; the month tulai (Aippasi);

   18. செங்கோல்; sceptre.

     “வேலன்று வென்றி தருவது மன்னவன் கோலதூஉங் கோடா தெனின்” (குறள், 546);.

   19. அளவுகோல்; measuring rod.

     “கோலிடை யுலக மளத்தலின்” (கம்பரா. நகரப்.11);.

   20. அணியின் ஓவிய வேலை; exquisite work-manship.

வார்கோல் செறியரிச் சிலம்பிற் குறுந்தொடி மகளிர்” (புறநா.36:2);.

   21. திரட்சி; roundness.

     “கோனிற வளையினார்க்கு” (சீவக. 209.);.

   22. வட்டம். உருண்டை; rotundity.

   23. நெசவுக் கருவி; a kind of weaving instrument.

   ம., து. கோலு;   க., பட. கோல். கோலு;   தெ. கோல;   கோத். கோல்;   துட. க்வில்;   பர். கோல் (அம்பு);;   குட. கோலி;   கோண். கோலா;   கூ, கோடு (உலக்கை);;   குவி. கோலு (உலக்கை);;   கொலா. கோலா, கோல;கூய். கேரி (அம்பு);.

 Fin. kolka (a blunt arrow);, kaari;

 Est. kolk, kaar (bow);;

     [குல் → குலவு. குலவுதல் = வளைதல். குலவு → குலாவு. குலுத்தல் = வளைந்த காயுள்ள கொள். குலுக்கை = உருண்டுநீண்ட குதிர். குல் → (கொல்); = கோல் உருட்சி, திரட்சி, உருண்டு திரண்ட நீண்ட கோல்.]

 கோல்2āl, பெ.(n.)

   1. மை எழுது: கோல், அஞ்சனக்கோல்; pencil to paint the eye with collyrium (அக.நி.);.

   2. 11 அடி நீளமுள்ள நீட்டல் அளவுகோல்; a unit of linear measure of 11 feet.

   3. 24 அடியுள்ள நீட்டலளவை; a unit of linear measure of 24 feet (திவ்.பெரியாழ்.3.2:6);.

     [கால் (நீட்சி); → கோல்.]

 கோல்3āl, பெ.(n.)

   1. இலந்தை (சூடா.);; jujube tree.

   2. தெப்பம் (வின்.);; raft, float.

     [குல் → கொல் → கோல்.]

கோல்கடமான்

 கோல்கடமான்ālkaḍamāṉ, பெ.(n.)

   ஒருவகை கடல்மீன்; a kind of sea fish.

     [கோல் + கடமான்.]

கோல்காரன்

கோல்காரன்ālkāraṉ, பெ.(n.)

   1. காவற்காரன்; a watchman.

   2. ஊர்க்காவலன்; a village servant.

     [கோல் + காரன்.]

கோல்குடிதாங்கியார்

கோல்குடிதாங்கியார்ālkuḍitāṅgiyār, பெ.(n.)

   ஊரவைத் தலைவர்; village headman.

     “இவ்வூர் பெருங்குளத்திலிருந்து அறுவமடையும், கோல்குடி தாங்கியார் நிலம் உட்பட மனைக்குழி நூற்றுநால் காணி” (ஆவ.98, ப.54);.

     [கோல் + குடி + தாங்கியார்.]

கோல்கொடு-த்தல்

கோல்கொடு-த்தல்ālkoḍuttal,    4 செ.கு.வி.(v.i.)

   கோலாற் கண்ணிலானை நடத்திவருதல் (வின்.);; to lead the blind with a staff.

     [கோல் + கொடு.]

கோல்கொள்(ளு)-தல்

கோல்கொள்(ளு)-தல்ālkoḷḷudal,    13, செ.குன்றாவி. (v.t.)

   விலங்கு பூட்டிய தேர் முதலியன செலுத்துதல்; to drive, as a car drawn by horses, with a whip in hand.

     “கொள்வார் கோல்கொள்ளக் கொடித்திண்டே ரேறுவோர்” (பரிபா.11:51);.

     [கோல் + கொள்(ளு);.]

கோல்நிறைகூலி

கோல்நிறைகூலிālniṟaiāli, பெ.(n.)

   வரிவகை (S.I.I. iii. 266);; a tax on articles measured by weight.

     [கோல் + நிறை + கூலி.]

கோல்பிடி-த்தல்

கோல்பிடி-த்தல்ālpiḍittal,    4 செ.கு.வி.(v.i.)

கோல் கொடு-த்தல் பார்க்க;see kol-kodu-.

     [கோல் + பிடி.]

கோல்போடு-தல்

கோல்போடு-தல்ālpōṭudal,    20 செ.கு.வி. (v.i.)

   தண்டு வலித்தல் (தூண்டிலிடுதல்); (மீனவ.);; fishing with rod.

     [கோல் + போடு.]

கோல்மட்டம்

 கோல்மட்டம்ālmaṭṭam, பெ.(n.)

   கோலுயரம், கோலளவு; staff-height, as a standard.

     [கோல் + மட்டம்.]

கோல்மரம்

 கோல்மரம்ālmaram, பெ.(n.)

   வண்டியின் ஏர்க்கால் மரம்; pole of a cart.

     [கோல் + மரம்.]

கோல்மால்

 கோல்மால்ālmāl, பெ.(n.)

குல்மால்பண்ணுதல் பார்க்க;see {}-{}-.

     [U.{} → த.கோல்மால்.]

கோல்மூலி

 கோல்மூலிālmūli, பெ.(n.)

   இலந்தை; jujube (சா.அக.);.

     [கோல் + மூலி.]

கோல்வலி-த்தல்

கோல்வலி-த்தல்ālvalittal,    4 செ.கு.வி. (v.i.)

   துடுப்புக்கோலால் பரிசல் தள்ளுதல்; to propel boat with Oars.

     [கோல் + வலி-.]

கோல்வளை

கோல்வளை1ālvaḷai, பெ.(n.)

   1.அழகிய வளை; beautiful ring.

   2. பெண்; female.

     [கோல் (அழகு + வளை.]

 கோல்வளை2ālvaḷai, பெ.(n.)

   வளைவகை; a variety of bangles.

கோல்வளை, கழல் வளை, வரிவளை என்னுமாபோல (திவ்.பெரியாழ்.3.4:8, வியா. பக்.618);.

     [கோள் + வளை.]

கோல்வள்ளம்

கோல்வள்ளம்ālvaḷḷam, பெ.(n.)

   விளிம்பு பிரம்பு கட்டின வட்டில்; a cup with ornamental brim

     “மணிக்கோல் வள்ளத்தவ னேந்த” (சீவக. 2700);.

     [கொள் → கோல் + வள்ளம்.]

கோல்விழுக்காடு

கோல்விழுக்காடுālviḻukkāṭu, பெ.(n.)

   தற்செயல்; chance, accident.

     ‘கோல்விழுக் காட்டாலே பரிகாரமாயிருக்கை யன்றிக்கே’ (ஈடு. 4.10:5.);.

     [கோல் + விழுக்காடு.]

கோளகசீரிடம்

 கோளகசீரிடம்āḷakacīriṭam, பெ.(n.)

   மாசி பத்திரி; Indian worm-wood, Artemesia vulgaris (சா.அக.);.

கோளகச்செய்நஞ்சு

 கோளகச்செய்நஞ்சுāḷagacceynañju, பெ.(n.)

   நாட்படு நஞ்சு (மூ.அக.);; a mineral poison.

     [கோளகம் + செய் + நஞ்சு.]

கோளகன்

கோளகன்1āḷagaṉ, பெ.(n.)

   கோளுரைப்போன்; one who tells tale against others.

     [கோள் → கோளகன்.]

 கோளகன்2āḷagaṉ, பெ.(n.)

   கைம்பெண் (விதவை); பெற்ற மகன்; widow’s son (செ.அக.);

     [கோள் → கோளகன்.]

கோளகம்

கோளகம்1āḷagam, பெ.(n.)

   1. மிளகு; common pepper.

   2. திப்பிலி; long-pepper.

     [கோளம் → கோளகை = வட்டவடிவம். கோளம் → கோளகம் = (உருண்டை); மிளகு (வட.வர.5);.]

 கோளகம்2āḷagam, பெ.(n.)

   1. கோளகச் செய்நஞ்சு பார்க்க;see kolaga-c-cey-nanju.

   2. தாளங்கம் (சங்.அக.);; yellow sulphide of arsenic.

   3. மண்டல விரியன் (பிங்.);; viper.

     [கோள் → கோளகம்.]

கோளகாயம்

 கோளகாயம்āḷakāyam, பெ.(n.)

   எழுத்தாணியைப் போல் பூக்களை உடைய ஒரு வகைச் செடி; style plant, Launea pinnatifida alias Lactuca sarmentosa alias Microhynchus sarmentosus alias Prenanthes sarmentosa (சா.அக.);.

கோளகை

கோளகைāḷagai, பெ.(n.)

   1. வட்டவடிவம்; sphere, globe.

     “அண்டகோளகைப் புறத்ததாய்”(கம்பரா. அகலிகைப்.60);.

   2. யானைக் கிம்புரி; ornamental ring, as of an elephant’s tusk.

   3. மணடலிப்பாம்பு (சூடா.);; a large viper.

   4. உறை (வின்.);; envelope, receptacle, socket.

     [கோளம் → கோளகை = வட்டவடிவம், மண்டலிப் பாம்பு (வட.வர.5.);.]

கோளக்கட்டி

கோளக்கட்டிāḷakkaṭṭi, பெ.(n.)

   புண்வகை (இங்.வை.307);; glandular tumour.

     [கோளம் + கட்டி.]

கோளசாத்திரம்

 கோளசாத்திரம்āḷacāttiram, பெ.(n.)

   உடம்பில் உள்ள கோளங்களைப் பற்றிய நூல்; a treatise on the glandular swelling on any part of the body (சா.அக.);.

     [கோளம்+சாத்திரம்]

கோளத்தசை

 கோளத்தசைāḷattasai, பெ.(n.)

   ஒருவகைத் திசு; a kind of libogue muscles.

     [கோளம் + தசை.]

கோளத்திற்குரிய

 கோளத்திற்குரியāḷattiṟkuriya, பெ.எ. (adj.)

   கோளத் தொடர்புடைய; relatingto a gland, Adenic (சா.அக.);.

     [கோளத்திற்கு+உரிய]

கோளத்தைப்போன்ற

 கோளத்தைப்போன்றāḷattaippōṉṟa, பெ.அ.(adj.)

   கோள வடிவமுள்ள; of the shape of a gland; gland like, Adeniform (சா.அக.);.

கோளன்

கோளன்āḷaṉ, பெ.(n.)

   1. கோளகன் பார்க்க;see kolagan.

     “கோளரிருக்கு மூர்” (தனிப்பா. 1:64:127);.

   2. கோளுரைப்போன்; one who tells tales.

பெருமஞ்சிகன் கோளன் (தணிகைப்பு. அகத.345);.

     [கோள் → கோளன்.]

கோளப்பாதி

 கோளப்பாதிāḷappāti, பெ.(n.)

   நிலவுருண்டையின் பாதிப்பகுதி; earth’s hemisphere.

     [கோளம் + பகுதி.]

இதனை வடமொழியாளர் கோளார்த்தம் என வழங்குவர்.

கோளம்

கோளம்āḷam, பெ.(n.)

   1. உருண்டை; ball, orb, globe sphere.

   2. விலங்குகளின் உடலில் நீருறுந் தசைப்பற்று; gland.

கோளக்கட்டி (உ.வ.);.

     [கொள் → கோள் → கோளம் = வட்டம், உருண்டை (வட.வர.முன்.5);.]

கோளம்பம்

 கோளம்பம்āḷambam, பெ.(n.)

   கோள் மறைப்பு (கிரகணம்);; eclipse (சோதிட.அக.);.

     [அம்பல் = குவிதல், மூடுதல், மறைத்தல், கோள் + (அம்பல்); அம்பம்].

கோளயோகம்

கோளயோகம்āḷayōkam, பெ.(n.)

   ஒர் ஒரையில் ஏழு கோள்கள் நிற்க வரும் நல்வினை; conjunction of seven planets in one house.

     “ஒருராசி தன்னிலேதா னோரேழு கோளு நிற்கிலிருமையாங் கோள யோகம்” (சாதகசிந்.2045);.

     [கோள் → கோளம் + யோகம்.]

கோளரங்கம்

கோளரங்கம்āḷaraṅkam, பெ.(n.)

   கோள்கள், விண்மீன்கள் முதலியன எவ்வாறு வானில் அமைந்துள்ளன என்பதை விளக்கும் வகையில் உருவாக்கப்பட்ட காட்சியகம்; planetarium.

     [கோள் + அரங்கம்]

 கோளரங்கம்1āḷaraṅgam, பெ.(n.)

   வான் கோள்கள் எவ்வாறு அமைந்துள்ளன என்பதை விளக்கும் வகையில் ஒளிப்படம் காட்டும் ஏந்து உள்ள ஒர் அரங்கம்; கோளப்பாதி வடிவக்கூரையில் இப்படம் காட்டப்படும்; planetarium.

     [கோள் + அரங்கம்.]

 கோளரங்கம்2āḷaraṅgam, பெ.(n.)

   ஓரை மண்டலங்களின் விண்மீன்கள், கோள்கள் ஆகியவற்றின் வடிவங்களைப் பொருத்திக்காட்டும் கோளவடிவான விண்தோற்றக் காட்சிக்கூடம்; planetarium, domed building in which images of stars, planets, constellations etc. are projected.

     [கோள் + அரங்கம்.]

கோளரி

 கோளரிāḷari, பெ.(n.)

அரிமா (ஆண்சிங்கம்); (பிங்.);: lion.

     [கோள் + அரி. கோள் = வளைவு, திரும்பு, முன்னும் பின்னும் திரும்பிப்பார்க்கும் இயல்புடையது.]

கோளரிக்கொடியோன்

 கோளரிக்கொடியோன்āḷarikkoḍiyōṉ, பெ.(n.)

   வீமன் (பிங்.);; Bhima, as having a lion-banner.

     [கோள் + அரி + கொடியோன்.]

கோளரிஞ்சான்

கோளரிஞ்சான்āḷariñjāṉ, பெ.(n.)

   ஒன்பதரை அங்குல நீளமும் சாம்பல் நிறத்ததுமான ஆற்றுமீன் வகை; carp, leaden-grey, attaining.91/2 in. in length.

     [கோள் + அரிஞ்சான்.]

கோளவகுப்பு

கோளவகுப்புāḷavaguppu, பெ.(n.)

   எட்டுப் பக்கத்தும் முகங்களை யுடையதாக அமைக்கும் படை வகுப்பு; octagonal disposition of an army (சுக்கி);நீதி, 339);.

மறுவ. கோளவியூகம்.

     [கோளம் + வகுப்பு.]

கோளவங்கம்

 கோளவங்கம்āḷavaṅgam, பெ.(n.)

   ஈயமணல் (சா.அக.);; lead ore.

     [கோளம் + வங்கம்.]

கோளவிக்கம்

 கோளவிக்கம்āḷavikkam, பெ.(n.)

   கோளத்திற்குக் காணும் வீக்கம்; glandular swelling or enlargement of the gland (சா.அக.);.

     [கோளம் + வீக்கம்]

கோளவியூகம்

 கோளவியூகம்āḷaviyūkam, பெ.(n.)

கோளவகுப்பு பார்க்க;see kola-vaguppu.

     [கோளம் + skt. வியூக.]

கோளா

கோளாāḷā, பெ.(n.)

   1. நறுமணப் பண்டங் கலந்ததும் இறைச்சி முதலியவற்றை உள்ளீடாகக் கொண்டதுமான ஒருவகை உண்டை யுணவு (இ.வ.);; balls of minced mutton or vegetables mixed with powdered spices and fried in ghee.

   2. மயக்கத்தையுண்டுபண்ணும் கஞ்சாவுருண்டை; balls of gania drug inducing stupor.

     [கோள் → கோளா = பொரித்த உருண்டைக் கறி, மருந்துருண்டை (வட.வர.5);.]

கோளாங்கட்டி

 கோளாங்கட்டிāḷāṅkaṭṭi, பெ.(n.)

   ஒரு வகை மண் கட்டி; a mineral compound of silicate found in a lump (சா.அக.);.

     [கோளாம்+கட்டி]

கோளாங்கல்

கோளாங்கல்āḷāṅgal, பெ.(n.)

   1. கூழாங்கல் (j.);; pebbles.

   2. பருக்கைக்கல்; small pebbles, gravel.

     [குள் → கூழை + அம் + கல் – கூழாங்கல் → கோளங்கல் (கொ.வ);.]

கோளாந்தி

 கோளாந்திāḷāndi, பெ.(n.)

   சிவகங்கை மாவட்டத்துச்சிற்றூர்; a village in Sivagangai Dt.

     [கோளன் + அந்தை – கோளாந்தை → கோளாந்தி.]

கோளாம்பி

 கோளாம்பிāḷāmbi, பெ.(n.)

   படிக்கம் (இ.வ.);; spitton.

     [கோள் + ஆம்பி.]

கோளார்த்தம்

 கோளார்த்தம்āḷārttam, பெ.(n.)

   கோளத்தின் பாதி; earth’s hemisphere.

     [கோள் + அர்த்தம். வ. கோளப்பாதி பார்க்க;see kola-p-padi.]

கோளாறு

கோளாறு1āḷāṟu, பெ.(n.)

   1. தாறுமாறு; disorder.

   2. குற்றம்; fault.

   3. சண்டை (J.);; quarrel, tumult, scuffle.

     [குளறு → குளாறு → கோளாறு.]

 கோளாறு2āḷāṟu, பெ.(n.)

   1. வழிவகை, வழிமுறை; means, expedient.

அந்தச் செயல் முடியும்படி நான் ஒரு கோளாறு சொல்லுகிறேன் (உ.வ.);.

   2. இலக்கு; aim.

கோளாறு பார்த்து எறிந்தேன் (உ.வ.);.

மறுவ. கொள்ளாறு, வழிவகை.

     [கொள் → கோள் + ஆறு – கோளாறு(கைக்கொள்ளத்தக்க வழிவகை);.]

கோளாளன்

கோளாளன்āḷāḷaṉ, பெ.(n.)

   நூற்பொருள் முதலியவற்றை மறவாது உட்கொள்பவன்; a man of retentive memmory or of firm grasp.

     “கோளாளனென்பான் மறவாதான்”(திரிகடு. 12);.

     [கோள் + ஆளன்.]

கோளி

கோளி1āḷi, பெ.(n.)

   1. கொள்வோன் (சூடா.);; receiver.

   2. நான்காம் வேற்றுமை; dative case.

     “ஒண்கோளியொடு” (வீரசோ. வேற்.1);.

   3. ஆல்; banyan.

   4. அத்தி (பிங்.);; country fig.

   5. பூவாது காய்க்கும் மரம்; tree bearing fruit without outwardly blossoming.

     ”கொழுமென் சினையகோளி யுள்ளும்”(பெரும்பாண்.407);.

   6. கொழுஞ்சி (பிங்.);; sylhet orange.

     [கொள் → கோள் → கோளி.] (வே.க.199);

 கோளி2āḷi, பெ.(n.)

கோளகன் பார்க்க (திவா.);;see kõlagan.

     [கோளன் → கோளி.]

 கோளி3āḷi, பெ.(n.)

கோளிகை பார்க்க;see koligai.

     “குண்டேழுங் கோளியோ ராறும்”(திருக்காளத். பு. 13:30);.

     [கோளிகை → கோளி.]

 கோளி4āḷi, பெ.(n.)

   பூவாது காய்க்கும் மரம்; any tree that bears fruit without blossoming.

கோளி ஆலமரம் (உ.வ.);.

     [கோழி → கோளி.]

கோளிகம்

கோளிகம்āḷikam, பெ.(n.)

   1. திப்பிலி; long pepper.

   2. அத்திமரம்,

 fig tree (சா.அக.);.

கோளிகை

கோளிகைāḷigai, பெ.(n.)

   குதிரை கழுதைகளின் பெட்டை (யாழ்.அக.);; female of a horse or ass.

     [கோழி → கோளி3 → கோளிகை.]

பெட்டையைக் கோழி எனக் குறிப்பது மரபு.

கோளிக்குடி

 கோளிக்குடிāḷikkuḍi, பெ.(n.)

   மதுரை மாவட்டத்துச் சிற்றூர்; a village in Madurai Dt.

     [கோளி (ஆலமரம்); + குடி.]

கோளிப்பாசம்

 கோளிப்பாசம்āḷippācam, பெ.(n.)

   பெருங் குறிஞ்சா; scammony swallow Wort, Secатопеетеlica (சா.அக.);.

     [கோளி+பாசம்]

கோளியம்

 கோளியம்āḷiyam, பெ.(n.)

துத்தி (பிங்.);

 country mallow.

     [கோள் → கோளி → கோளியம்.]

கோளியால்

கோளியால்āḷiyāl, பெ.(n.)

,

   0ஒரு வகை ஆல்; large-leaved yellow fig, Ficus callosa (சா.அக.);.

     [கோளி+ஆல்.]

கோளியூர்கிழார்மகனார்செழியனார்

கோளியூர்கிழார்மகனார்செழியனார்āḷiyūrkiḻārmakaṉārceḻiyaṉār, ‘பெ.(n.)

   புலவர்; a poet who belongs to Sangam era.

இவர் வேளாண் குடியினர். நற்றிணை 383ஆம் பாடலைப் பாடியுள்ளார் (அபி.சிந்);.

கோளிழை-த்தல்

கோளிழை-த்தல்āḷiḻaittal,    16 செ.குன்றாவி (v.t.)

   கொல்லுதல்; to kill.

     “குஞ்சரங் கோளிழைக்கும் பாம்பை” (திருக்கோ.21);.

     [கோள் + இழை-.]

கோளுரை

கோளுரைāḷurai, பெ.(n.)

   குறளைமொழி; slanderous report.

     “கோளுரைகள் பேசொணாது” (அறப். சத.8);.

     [கோள் + உரை.]

கோளுறுவினைப்பயன்

 கோளுறுவினைப்பயன்āḷuṟuviṉaippayaṉ, பெ.(n.)

   கோளைப் பொறுத்த ஊழ்வினைப் பயன்(த.சா.);; the fate of man as depending on the position of planets (சா.அக.);.

     [கோள்+உறு+வினை+பயன்]

கோளேசம்

 கோளேசம்āḷēcam, பெ.(n.)

   குங்குமப்பூ (மலை.);; saffron.

     [குளசம் → கோளேசம்.]

கோளை

கோளை1āḷai, பெ.(n.)

   எலி (யாழ்.அக.);; rat.

     [கோள் → கோளை.]

 கோளை2āḷai, பெ.(n.)

   குவளை; bowl.

     [குவளை → கோளை. (கொ.வ.);]

 கோளை3āḷai, பெ.(n.)

   தோழி; female companion.

   2. கோதாவரிl; the river Godavari.

     [இகுளை (தோழி); → கோளை.]

 கோளை4āḷai, பெ.(n.)

   மீன்வகை; a kind of fish.

     “கோளை யாளல்” (குருகூர்ப்..7);.

     [கோள் → கோளை.]

கோளைக்குத்து

 கோளைக்குத்துāḷaikkuttu, பெ.(n.)

   சளிக் கட்டாலுண்டாகும் நெஞ்சுக்குத்து (J.);; acute throbbing pain in the chest from phlegm.

     [கோழை + குத்து – கோழைக்குத்து → கோளைக்குத்து (கொ.வ.);.]

கோள்

கோள்1āḷ, பெ.(n.)

   1. கொள்ளுகை; taking, receiving, accepting, seizing, holding, envelop-

     “கோளிரு ளிருக்கை” (பரிபா.4:57);

   2 துணிபு:

 opinion, tenet, creed, decision, determination, Conclusion.

     “மாசற்றார் கோள்”(குறள், 646);.3 மதிப்பு;

 estimation, appraising, valuation.

     “தம்மைத்தாங் கொள்வது கோளன்று” (நாலடி, 165);,

   4. வலிமை (பிங்.);; strength, power, ability.

   5. தன்மை; quality, nature, character.

     “யாக்கைக்கோ ளெண்ணார்” (நாலடி.18);.

   6. பட்டறிவு, நுகர்ச்சி; enjoyment, experience.

     “என்னாருயிர் கோளுண்டே” (திவ். திருவாய். 9.6:7);.

   7. குறளை; calumny, aspersion, back-biting, tale-bearing.

     “கோட்செவிக் குறளை காற்றுட னெருப்பு” (கொ.வே.);.

   8. பொய் (சூடா);; falsehood.

   9. இடையூறு (திவா.);; impediment, obstacle, evil, vice.

   10. தீமை (திவா.);;   11. கொலை; killng, murder.

     “கோணினைக் குறித்து வந்தான்” (சீவக. 264);.

   12. பாம்பு (சீவக. 320, உரை);; serpent.

   13. நஞ்சு; poison.

   14. கருங்கோள் (இராகு);; ascending node.

     “கோள்வாய் மதியம் நெடியான் விடுத்தாங்கு” (சீவக..454);.

   15.வானமண்டலத்து ஒர் உறுப்பு; planet.

     “எல்லாக் கோளு நல்வழி நோக்க” (பெருங். இலாவாண.11:70);.

   16. முகில் (மேகம்);; cloud.

     ‘கோளொடு குளிர்மதி வந்து வீழ்ந்தென” (சீவக.320);.

   17. ஒளி; brilliance, light.

     “முன்னைக் கோளரியே” (திவ். திருவாய் 2:6:6);.

   18. பரிவேடம்; halo.

     “மதியங் கோள்வாய் விசும்பிடை”(சீவக. 1098);

   19. குலை; cluster.

     “செழுங்கோள் வாழை” (புறநா.168.13);.

   20. காவட்டம்புல் (மலை.);; citronella grass

   21. கொழு (திவா.);; plough share.

     [கொள் → கோள்.]

குல் → குள் → கூள் → கூளி = வளைந்த வாழைப்பழம். கூல் → கூண்டு = தட்டி வளைவு, வண்டிக்கூண்டு போன்ற பறவைக் கூடு, விலங்குக் கூண்டு. கூண்டு → கூடு = நெற்கூடு, கூண்டு உறை, உள்ளீடின்மை, குள் → கொள் = வளைந்த காயுள்ள பற்றுவகை கொள் → கோள் = சுற்றிவரும் விண்மீன் (கிரகம்); வடவர முன். 5);.

 கோள்2āḷ, பெ.(n.)

   ஒரு பாட்டினகத்துப் பொருள் கொண்டு நிற்கும் நிலை; depth of the theme in a song.

     [கொள் → கோள்.]

 கோள்3āḷ, பெ.(n.)

   முன்னிலைப் பன்மை விகுதி; verbal ending of the second pers. Pl.

     “புறப்பற்றுத் தள்ளுங்கோள்” (அஷ்டப்.நூற்றெட். 58);.

     [கள் → காள் → கோள்.]

கோள்காரன்

 கோள்காரன்āḷkāraṉ, பெ.(n.)

கோள்மூட்டி பார்க்க;see kol-mutti.

சூதுகாரன் கையும் கோள்காரன் வாயும் சும்மாயிராது (பழ);.

     [கோள் + காரன்.]

கோள்குண்டனி

 கோள்குண்டனிāḷkuṇṭaṉi, பெ.(n.)

   புறங்கூறுகை; tale-bearing, calumny.

     [கோள் + குண்டனி.]

கோள்குத்தி

 கோள்குத்திāḷkutti, பெ.(n.)

   புறங்கூறி கலகம் கலகம் விளைவிப்பவன்; one who creates mischief by slanderous reports, a tale bearer.

மறுவ,கோள்டுமூட்டி, கோள்காரன்.

     [கோள்+குத்தி]

கோள்குத்து-தல்

கோள்குத்து-தல்āḷkuddudal, செ.கு.வி (v.i.)

   1. புறந் தூற்றுதல்; to tell tales.

   2. கோட்டை களில் இருவருக்குள் கலகம் விளைவித்தல்:

 to create mischief by slanderous reports.

     [கோள்+குத்து-]

கோள்சொல்(லு)-தல்

கோள்சொல்(லு)-தல்āḷcolludal, பெ.(n.)

   13 செ.கு.வி. (v.i);

கோள்முடி-த்தல் பார்க்க;see kol-mudi-.

     [கோள் + சொல்(லு);.]

கோள்நிலை

 கோள்நிலைāḷnilai, பெ.(n.)

   கதிரவன் குடும்பத்துக் கோள்களின் சுற்றோட்ட நிலை; solar family.

     “கோல்நிலை திரியின் கோள்நிலை திரியும், கோள்நிலை திரியின் மாரி வாறங் கூரும்”(புறநா);.

     [கோள் + நிலை.]

கோள்பற்று

 கோள்பற்றுāḷpaṟṟu, பெ.(n.)

   நிலவு, கதிரவன் ஆகியவற்றுக்கு நேர்க்கோட்டு நிழலடியாகிய மறைப்பு (கிரகணம்);; Eclipse of sun and moon.

     [கோள்+பற்று]

இராகுகேது எனும் நிழல் கோள்கள் நிலவையும் கதிரவனையும் கவ்வுவதாகக் கருதப்பட்ட நிழல் மறைப்பு கிரகணம் எனப்பட்டது.

கோள்பிராது

 கோள்பிராதுāḷpirātu, பெ.(n.)

   குறளை கூறுகை; tale bearing (செ.அக.);.

மறுவ. கோட்சொல்லுகை

கோள்முடி-த்தல்

கோள்முடி-த்தல்āḷmuḍittal,    4 செ.கு.வி. (v.i.)

   1. புறந்தூற்றுதல்; to tell tales.

   2. கோட்சொல்லி இருவருக்குள் கலகம் விளைத்தல்; to create mischief by slanderous reports.

     [கொள் → கோள் + முடி-.]

கோள்மூட்டி

 கோள்மூட்டிāḷmūṭṭi, பெ.(n.)

   புறங்கூறி கலகம் விளைப்பவன்; one who creates mischief by slanderous reports, a tale bearer.

மறுவ. கோள்காரன்.

     [கோள் + மூட்டி.]

கோள்மூட்டு-தல்

கோள்மூட்டு-தல்āḷmūṭṭutal, செ.கு.வி. (v.i.)

   ஒருவரைப் பற்றித் தவறாக மற்றவரிடம் கூறுதல்; இருவரிடைய மனத்தாங்கல் ஏற்படும்படிச் செய்தல்; tell tale against some one.

நீ என்னைப் பற்றி அவனிடம் கோள் மூட்டினாய்?.

     [கோள்+மூட்டு-தல்.]

 கோள்மூட்டு-தல்āḷmūṭṭudal,    5 செ.கு.வி.(v.i.)

கோள்முடி-த்தல் பார்க்க;see kol-mudi-.

     [கோள் + மூட்டு-.]

கோள்வாய்

கோள்வாய்āḷvāy, பெ.(n.)

   புதுப்புண்; fresh wound.

     ‘கலந்துபிரிந்த கோள்வாய் பொறுக்க வரி தாயிருக்கும்'(ஈடு.6.2:ப்ர.);.

     [கோள் + வாய்.]

கோழகம்

 கோழகம்āḻkam, பெ.(n.)

கோழம் பார்க்க;see kõlam.

     [கோழ் → கோழம் → கோழகம்.]

கோழகூரொட்டு

 கோழகூரொட்டுāḻāroṭṭu, பெ.(n.)

   மரப்பலகைகள் கழன்றுவராமல் இணைக்கும் இணைப்பு; a kind of joint in wooden planks.

     [கோழ + கூர் + ஒட்டு.]

கோழக்கெளுத்தி

 கோழக்கெளுத்திāḻkkeḷutti, பெ.(n.)

   கூழக்கெளுத்தி எனும் ஆற்று மீன்; a kind of river fish.

     [கூழை → கோழ → கெளுத்தி.]

கோழம்

கோழம்āḻm, பெ.(n.)

   1. சங்கு செய்நஞ்சு; a mineral poison (யாழ்.அக.);.

   2. ஒரு கனிமம்; an ore.

     [கோழ் → கோழம்.]

கோழம்கொடுமலை

 கோழம்கொடுமலைāḻmkoḍumalai, பெ.(n.)

   வெண்கலமலை; a mountain containing bell-metal ore (சா.அக.);.

     [கோழம் + கொடுமலை.]

கோழம்பம்

கோழம்பம்āḻmbam, பெ.(n.)

குழப்பம்: confusion, tumult.

     “கொடீ ராகிற் கோழம்பமே” (திவ். பெரியாழ்.3.4:5);.

     [குழப்பம் → கோழப்பம் → கோழும்பம் (கொ.வ.);.]

கோழயர்

கோழயர்āḻyar, பெ.(n.)

   கள்ளர்குடிப் பட்டப் பெயர்களுள் ஒன்று (கள்ளர் சரித்.பக்.98);; a caste title of Kallars.

கோழரை

கோழரைāḻrai, பெ.(n.)

   வழுப்பான மரத்தினடி; slippery tree trunk.

     “கோழரை குயின்ற பூகம்” (திருவிளை. திருமணப். 65);.

     [கொழுமை + அரை – கொழரை → கோழரை.]

கோழி

கோழி1āḻi, பெ.(n.)

   வீட்டிலோ அல்லது பண்ணையிலோ முட்டைக்காகவும் இறைச்சிக்காகவும் வளர்க்கப்படும் அதிக உயரம் பறக்காத பறவை; gallinaceous fowl.

     “குப்பை கிளைப் போவாக் கோழிபோல்” (நாலடி. 341);.

மறுவ. குக்குடம்.

   ம. கோழி;   க. கோழி, கோளி;   தெ. கோடி;   து. கோரி: பட. கோயி;   கோத. கொய்;   துட.க்விட்ய்;   குட.கோளி;   கோண்., கொலா., நா., பர். கோர்., கூய். கொசு;   குவி. கொக்கோதி;குரு. கோலி.

     [உள் – உளு = துளைக்கும் புழு, உளுத்தல் = புழு, மரத்தைத் துளைத்தல், உளு → உழு → உழுதல் = நிலத்தைக் கீறுதல். குள் → குழி → குழை → குடை. குடைதல் = துளைத்தல். குழி → கொழு → கொழுது → கோது. கோதுதல் = குடைதல். கொழு = நிலத்தைத் துளைக்கும் ஏரூசி. கொழு → கோழி = நிலத்தைக் கிளைக்கும் பறவை(தமிழ் வரலாறு. 82);. கொழுதுதல் = குப்பை கிளறுதல். கொழு → கோழு → கோழி.]

கோழிவகை:

   1. அறுபதாங்கோழி,

   2. கருங் கோழி,

   3. கானாங்கோழி,

   4. சேவற்கோழி,

   5. வான் கோழி.

   6. பெட்டைக்கோழி,

   7. காட்டுக்கோழி,

   8. நீர்க் கோழி,

   9. நெருப்புக்கோழி,

   10. சம்பங்கோழி,

   11 தாமரைக்கோழி,

   12. கின்னிக் கோழி,

   13. குளத்துக் கோழி,

   14. வரகுக் கோழி,

   15. நாமக்கோழி.

 கோழி2āḻi, பெ.(n.)

   1. கோழி யானையை வென்றதாகக் கூறப்படுமிடமும் சோழன் தலைநகரமுமான உறையூர்; Uraiyur, a town near Tiruccirappalli. once the capital of the Colăs. where a cock is said to have conquered an elephant. ‘கோழியுயர்நிலை மாடத்து'(புறநா.67:8);

மறுவ, உறையூர், உறந்தை. கோழியூர்.

     [கோழியூர் → கோழி.]

 கோழி3āḻi, பெ.(n.)

   விட்டில் பூச்சி; moth.

     “விளக்கத்திற் கோழி போன்றேன்”(தேவா. 523:5);.

மறுவ. விட்டில்.

     [கோழி2 → கோழி3.]

கோழிப்போரில் இறப்புக்கு அஞ்சாமல் போரிட்டு மடியும் சேவலைப் போல் தீயில் அஞ்சாமல் விழுந்து சாகும் இயல்பு நோக்கி விட்டிற்பூச்சி கோழி எனப்பட்டது.

 கோழி4āḻi, பெ.(n.)

   1. கோழியவரை பார்க்க;see koli-y-avarai.

   2. வெருகங்கிழங்கு (மலை.);; a tuberous-rooted herb.

   3. பன்றிமோந்தன் கிழங்கு (மலை.);; water-nut,

   4. இடலை (இ.வ.);; Indian wild Olive.

     [கோழி1 → கோழி3.]

 கோழி5āḻi, பெ.(n.)

   1. விலங்குகளில் சிலவற்றின் பெண்ணினத்தைச் சுட்டும் உவம ஆகுபெயர்; a word denoting the feminine gender among certain animals and non-human objects.

கோழிக்கழுதை (பெட்டைக் குதிரை. பெட்டைக் கழுதை);.

     [கீள் – கிழி – கேழி- கோழி.]

முட்டையிடும் தன்மையால் பெண்மையுணர்த்திய இச்சொல் கோழி (பெண் குதிரை); இந்தியில் Goda எனத்திரிந்தது. மாஞ்செடிவகைகளில் கொழிஞ்சி, ஆலமரம், அத்தி, பெருங்குறிஞ்சா, திப்பிலி ஆகியவற்றுக்கு ஆகுபெயராயிற்று. ஆண் விலங்குகள் சேவல் எனப்படும்

     “குதிரையுள் ஆணினைச் சேவல் என்றலும்” (தொல். பொருள்.);.

கோழிகவிழ்க்கும் நேரம்

 கோழிகவிழ்க்கும் நேரம்āḻigaviḻggumnēram, பெ.(n.)

   மாலைப் பொழுது (அந்தி.);; the time when poultry are shut up (சா.அக.);.

     [கோழி + கவிழ்க்கும் + நேரம்.]

கோழிகிண்டு-தல்

கோழிகிண்டு-தல்āḻigiṇṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   உருத்தெரியாதபடி எழுதுதல் (உ.வ.);; to scrawl, scribble.

மறுவ. கோழிக்கால் கிறுக்கல்.

     [கோழி + கிண்டு.]

கோழிகூவல்

 கோழிகூவல்āḻiāval, பெ.(n.)

கோழிகூவு நேரம் பார்க்க;see koli-kūvu-nēram.

     [கோழி + கூவல்.]

கோழிகூவுநேரம்

 கோழிகூவுநேரம்āḻiāvunēram, பெ.(n.)

   விடியற்காலம் (உ.வ.);; day break, as the time of cockcrowing.

     [கோழி + கூவு + நேரம்.]

கோழிக்கண்

 கோழிக்கண்āḻikkaṇ, பெ.(n.)

   குன்றிமணி; jeweller’s bead.

     [கோழி + கண்.]

கோழியின் கண்போன்ற வடிவத்தை ஒத்திருந்தமையால் குன்றிமணி இப் பெயர் பெற்றதாம்.

கோழிக்கரணம்

 கோழிக்கரணம்āḻikkaraṇam, பெ.(n.)

   பத்திரை (யாழ்.அக.);; a division of time.

     [கோழி + கரணம்.]

கோழிக்கறி

 கோழிக்கறிāḻikkaṟi, பெ.(n.)

   கோழி இறைச்சி; fowl curry (சா.அக.);.

     [கோழி + கறி]

கோழிக்கல்

 கோழிக்கல்āḻikkal, பெ.(n.)

   கற்களையும் இரும்பையும் மெருகிட உதவும் ஒருவகைக் கல்; a kind of stone used to polish stone and steel.

     [கோழி + கல்.]

கோழிக்காசிரைக்கீரை

கோழிக்காசிரைக்கீரைāḻikkāciraikārai, பெ.(n.)

   1. உமரிக்கீரை; sea blite.

   2 கோழிப் பசலை பார்க்க;see Koli-p-pasalai (சா.அக.);.

     [கோழி + காசிரை + கீரை.]

கோழிக்காடை

 கோழிக்காடைāḻikkāṭai, பெ.(n.)

   ஒருவகைக்காடை; the southern grey partridge.

கோழிக்காடை

ம. கோழிக்காட.

     [கோழி + காடை.]

கோழிக்காமம்

 கோழிக்காமம்āḻikkāmam, பெ.(n.)

கோழிப் புணர்ச்சிபார்க்க: see koli-p-punarcci.

     [கோழி + காமம்.]

கோழிக்காரம்

கோழிக்காரம்1āḻikkāram, பெ.(n.)

   1. கோழி மலங்கூட்டிச் செய்த மருந்துவகை; medicine in which fowl-dung is used.

   2. மருந்தாக உட்கொள்ளும் கோழியாணம் (யாழ்.அக.);; medicinal broth of boiled fowl.

   3. கஞ்சாப்பயிருக்கு உரமாகும் கோழியெரு (வின்.);; fowl-dung generally used in manuring soil for the ganja plant.

     [கோழி + காரம்.]

 கோழிக்காரம்2āḻikkāram, பெ.(n.)

   கோழிகளின் காய்ந்த கழிவு (மலம்);; dried fowl-dung.

     [கோழி + காரம்.]

கோழிக்காற்புல்

 கோழிக்காற்புல்āḻikkāṟpul, பெ.(n.)

   புல்வகை (வின்.);; Deccan grass.

     [கோழி + கால் + புல்.]

கோழிக்காற்பூடு

 கோழிக்காற்பூடுāḻikkāṟpūṭu, பெ.(n.)

   கோழித்தலைக் கந்தகம் பார்க்க; a plant, the leaves of which resemble the fowl’s leg (சா.அக.);.

     [கோழி + கால் + பூடு.]

கோழிக்கால்

கோழிக்கால்1āḻikkāl, பெ.(n.)

   கொடியரசு;  wild pipal.

     [கோழி + கால்.]

 கோழிக்கால்2āḻikkāl, பெ.(n.)

   கோழியின்கால், கோழிக்கால் போன்ற அடையாளக் குறிவகை; crossmark shaped like x, as resembling a fowl’s foot.

ம. கோழிக்கால்.

     [கோழி + கால்.]

கோழிக்கிரணிகம்

 கோழிக்கிரணிகம்āḻiggiraṇigam, பெ.(n.)

கோழித்தலைக் கந்தகம் பார்க்க;see koli-t-talai-k-kandagam.

     [கோழி + கிரணிகம்,]

கோழிக்கிழங்கு

 கோழிக்கிழங்குāḻikkiḻṅgu, பெ.(n.)

   வெருகன் கிழங்கு; bulbous root of வெருகு (சா.அக.);.

     [கோழி + கிழங்கு.]

கோழிக்கீரணி

 கோழிக்கீரணிāḻikāraṇi, பெ.(n.)

   மாந்தப்புல்; citronella grass.

மறுவ.காவட்டம் புல்,

     [கோழி + கீரணி.]

கோழிக்கீரை

கோழிக்கீரைāḻikārai, பெ.(n.)

   பருப்புக்கீரை (பதார்த்த. 604);; common purslane.

   ம.கோழிச்சீர;   க. கோளிகோழி;தெ. கோளிகூர.

     [கோழி + கீரை.]

கோழிக்குஞ்சாணம்

 கோழிக்குஞ்சாணம்āḻikkuñjāṇam, பெ.(n.)

   கோழிக்குஞ்சுச் சாறு; chicken-broth (சா.அக.);.

     [கோழி + குஞ்சு + ஆணம்.]

கோழிக்குஞ்சு

 கோழிக்குஞ்சுāḻikkuñju, பெ.(n.)

   இளங்கோழி; chicken (சா.அக.);.

ம.கோழிக்குஞ்ஞூ.

     [கோழி + குஞ்சு]

கோழிக்குடாப்ஹப

 கோழிக்குடாப்ஹபāḻikkuṭābhaba, பெ.(n.)

கோழிக்சகூடு பார்க்க;see köli-k-kudu.

     [கோழி + குடாப்பு.]

கோழிக்குடி

 கோழிக்குடிāḻikkuṭi, பெ.(n.)

   நெட்டி விலங்கு; Indian mast tree, Polyathia longifolla (சா.அக.);.

     [கோழி+குடி]

 கோழிக்குடிāḻikkuḍi, பெ.(n.)

   அசோகுமரம்; Indian mast tree.

     [கோழி + குடி.]

கோழிக்குடை

 கோழிக்குடைāḻikkuḍai, பெ.(n.)

   குடைமேற் குடை; a plant (சா.அக.);.

     [கோழி + குடை.]

கோழிக்குத்தி

 கோழிக்குத்திāḻikkutti, பெ.(n.)

   தஞ்சை மாவட்டத்துச் சிற்றூர்; a village in Thanjavore Dt.

     [கோழி + குத்தி.]

கோழிக்குரல்

 கோழிக்குரல்āḻikkural, பெ.(n.)

கோழிகூவுநேரம் பார்க்க;see köli-kūvu-nēram.

     [கோழி + குரல்.]

கோழிக்குறுமா

 கோழிக்குறுமாāḻikkuṟumā, பெ.(n.)

   கோழிக் கறியுடன் பச்சை மிளகாய் மசாலையிட்டு அணியமாக்கப்படும் குழம்பு; a kind of stew prepared with the aid of green chilly and other Curry stuffs (சா.அக.);.

மறுவ. கோழிச்சாறு.

     [கோழி + குறுமா.]

கோழிக்குறுமான்

 கோழிக்குறுமான்āḻikkuṟumāṉ, பெ.(n.)

கோழிக்கீரை பார்க்க;see koli-k-kirai (சா.அக.);.

மறுவ. கோழிக்குறும்பான்.

     [கோழி + குறுமான்.]

கோழிக்குறும்பான்

 கோழிக்குறும்பான்āḻikkuṟumbāṉ, பெ.(n.)

கோழிக்கீரை பார்க்க;see koli-k-kirai.

     [கோழி + குறும்பான்.]

கோழிக்கூடு

 கோழிக்கூடுāḻikāṭu, பெ.(n.)

   கோழியை அடைத்து வைக்குமிடம் (உ.வ.);; hen-coop, fowl-house.

   ம.கோழிக்கூடு;பட.கோயிகூடு.

     [கோழி + கூடு.]

கோழிக்கூடுபழம்

 கோழிக்கூடுபழம்āḻikāṭubaḻm, பெ.(n.)

   கோழிக்கோட்டில் விளையும் வாழைப்பழம்; a kind of plantain fruit grown in Köli-k-ködu (சா.அக.);.

     [கோழிக்கோடு → கோழிக்கூடு + பழம்.]

கோழிக்கூட்டுப்பழம்

 கோழிக்கூட்டுப்பழம்āḻikāṭṭuppaḻm, பெ.(n.)

   வாழைப் பழ வகை; a kind of bean so called from its resemblance to fowl’s foot (செ.அக.);.

     [கோழிக்கால்+அவரை]

 கோழிக்கூட்டுப்பழம்āḻikāṭṭuppaḻm, பெ. (n.)

   வாழைப் பழ வகை; a species of plantain, as from calicut (செ.அக.);.

     [கோழி+கூட்டு+பழம்]

கோழிக்கூண்டு

 கோழிக்கூண்டுāḻikāṇṭu, பெ.(n.)

கோழிக்கூடு பார்க்க;see kõli-k-kūdu.

     [கோழி + கூண்டு.]

கோழிக்கொடி

 கோழிக்கொடிāḻikkoḍi, பெ.(n.)

கோழியவரை பார்க்க;see Koli-y-avarai.

     [கோழி + கொடி.]

கோழிக்கொடியோன்

கோழிக்கொடியோன்āḻikkoḍiyōṉ, பெ.(n.)

   1. கோழியைக் கொடியிற் கொண்ட முருகக்கடவுள்; one having a cock on his banner.

   2. ஐயனார் (திவா.);; Aiyanār.

ம.கோழிக்கொடியோன்.

     [கோழி + கொடியோன்.]

கோழிக்கொண்டை

கோழிக்கொண்டைāḻikkoṇṭai, பெ.(n.)

   1. சேவற் சூட்டுப்பண்ணைச் செடி (மலை.);; cockscomb, ornamental shrub.

   2. கோழியின் தலையில் வளரும் தசைப்பகுதி; a muscle part grown on the top of the head of a cock.

     [கோழி + கொண்டை.]

கோழிக்கொண்டைப்பூ

 கோழிக்கொண்டைப்பூāḻikkoṇṭaippū, பெ.(n.)

   கோழியின் கொண்டையின் வடிவினதாக வுள்ள மலர்; a flower resembling the crest of a cock.

     [கோழி + கொண்டை + பூ.]

கோழிச்சம்

 கோழிச்சம்āḻiccam, பெ.(n.)

கோழிக்காரம் பார்க்க;see kõli-k-kāram (சா.அக.);.

     [கோழி + எச்சம் = கோழியெச்சம் → கோழிச்சம்.]

கோழிச்சாரம்

 கோழிச்சாரம்āḻiccāram, பெ.(n.)

   பெரு நன்னாரி; big sarsaparilla (சா.அக.);.

     [கோழி + சாரம்.]

கோழிச்சாறு

கோழிச்சாறுāḻiccāṟu, பெ.(n.)

   1. கோழி ஆணம்:

 fowl soup.

   2. கோழிக்குஞ்சு ஆணம்; chicken-broth (சா.அக.);.

     [கோழி + சாறு.]

கோழிச்சாவல்

 கோழிச்சாவல்āḻiccāval, பெ.(n.)

கோழிச் சேவல் பார்க்க;see koli-c-ceval (சா.அக.);.

     [கோழி + சாவல். சேவல் → சாவல் (கொ.வ.);]

கோழிச்சிலும்பான்

 கோழிச்சிலும்பான்āḻiccilumbāṉ, பெ.(n.)

   சிறுசிலும்பான் செடி; an unknown plant (சா,அக.);.

     [கோழி + சிறும்பான்.]

கோழிச்சூடன்

 கோழிச்சூடன்āḻiccūṭaṉ, பெ.(n.)

கோழிக்கொண்டை பார்க்க;see kõli-k-kondai.

     [கோழி + சூடன்.]

கோழிச்சூடு

 கோழிச்சூடுāḻiccūṭu, பெ.(n.)

   கரு நெல்லி; black-berried featherfoil, Phyllanthus reticulatus (சா.அக.);.

     [கோழி+குடு]

கோழிச்சேபகம்

 கோழிச்சேபகம்āḻiccēpagam, பெ.(n.)

கோழிக்கீரணிபார்க்க;see koli-k-kirani (சா.அக.);.

     [கோழி + சேபகம்.]

கோழிச்சேவல்

கோழிச்சேவல்āḻiccēval, பெ.(n.)

   ஆண்கோழி; cock.

     “கோழிச் சேவற் கொடியோன் கோட்டமும்” (சிலப். 14:10);.

     [கோழி + சேவல். சேவல் → சாவல் (கொ.வ.);]

கோழித்தலைக்கந்தகம்

 கோழித்தலைக்கந்தகம்āḻittalaiggandagam, பெ.(n.)

   சிவந்த கந்தகம்; red sulphur.

     [கோழி + தலை + கந்தகம்.]

இது சேவல் கொண்டையைப்போல் சிவப்பாக இருக்கும். கந்தகம் சேர்ந்த ஒருமாழை (உலோகம்);. இதை வாதமுறையில் பொன் வெள்ளி செய்யப் பயன்படுத்துகின்றனர்(சா.அக.);.

கோழித்தலைக்கெந்தி

கோழித்தலைக்கெந்திāḻittalaikkendi, பெ.(n.)

   தமிழ் முறைப்படி 32 வைப்புச் செய்நஞ்சுகளிலொன்று; according to Tamil medicine it is a prepared arsenic which is classified as one of the 32 kinds of synthetic poisons (சா.அக.);.

     [கோழி + தலை + கெந்தி.]

கோழித்தலைச்சூடன்

 கோழித்தலைச்சூடன்āḻittalaiccūṭaṉ, பெ.(n.)

கோழித்தலைக் கந்தகம் பார்க்க;see koli-t-talai-k-kandagam (சா.அக.);.

     [கோழி + தலை + சூடன்.]

கோழித்தாடை

 கோழித்தாடைāḻittāṭai, பெ.(n.)

   கோழித் தொண்டையின்கீழ்த் தொங்கும் சதை; the fleshy excrescence hanging under the throat of the domestic fowl, wattle (சா.அக.);.

     [கோழி + தாடை.]

கோழித்துக்கம்

 கோழித்துக்கம்āḻittukkam, பெ.(n.)

   குறைந்த நேரமே தூங்கும் தூக்கம்; sleepfor a very short time; nap, snooze catnap (க்ரியா.);.

     [கோழி+தூக்கம்.]

கோழித்தூக்கம்

 கோழித்தூக்கம்āḻittūkkam, பெ.(n.)

   கோழியைப்போல் அடிக்கடி உறக்கம் கொண் டெழும் தூக்கம்; light sleep enabling one to wake up frequently like a cock even on slight disturbance (சா.அக.);.

     [கோழி + தூக்கம்.]

கோழிநூல்

கோழிநூல்āḻinūl, பெ.(n.)

   கோழிகளின் போர்த் தன்மையைக் கூறும் நூல் (பு.வெ. 12. வென்றிப். 6. உரை);; a book describing the methods of cock-fight

     [கோழி + நூல்.]

கோழிநெஞ்சு

கோழிநெஞ்சுāḻineñju, பெ.(n.)

   1. கோழிக்குடையது போன்ற நெஞ்சு; pigeon breast.

   2. அச்சத்தால் நடுங்கும் மனம்; timid or agitated heart, chicken heart.

     [கோழி + நெஞ்சு.]

கோழிபற்பம்

 கோழிபற்பம்āḻibaṟbam, பெ.(n.)

   கோழிப்புடமிட்டெடுத்த பற்பம்; white powder obtained by calcining egg (சா.அக.);.

     [கோழி + பற்பம்.]

கோழிப்பசரைக்கீரை

 கோழிப்பசரைக்கீரைāḻippasaraikārai, பெ.(n.)

கோழிப்பசளை பார்க்க;see koji-p-pasalai.

     [கோழிப்பசளைக்கீரை → கோழிப்பசரை (கொ.வ.); + கீரை.]

கோழிப்பசளை

 கோழிப்பசளைāḻippasaḷai, பெ.(n.)

   உமரிக் கீரை (L.);; sea-blite.

     [கோழி + பசளை.]

கோழிப்பறவை

 கோழிப்பறவைāḻippaṟavai, பெ.(n.)

   கோழி பறக்கும் தொலைவு (யாழ்ப்.);; short distance, distance, of a fowl’s flight.

     [கோழி + பறவை.]

கோழிப்பாம்பு

கோழிப்பாம்புāḻippāmbu, பெ.(n.)

   குக்குடப்பாம்பு (மேருமந்.479, உரை);; winged serpent.

     [கோழி + பாம்பு.]

கோழிப்பித்து

 கோழிப்பித்துāḻippittu, பெ.(n.)

   கோழியின் பித்தப் பை; the gall bladder of a fowl (சா.அக.);.

     [கோழி+பித்து.]

கோழிப்பிந்து

 கோழிப்பிந்துāḻippindu, பெ.(n.)

   கோழியின் பித்தப்பை; the gall bladder of fowl (சா.அக.);.

     [கோழி + (பித்து); பிந்து.]

கோழிப்பிராணன்

 கோழிப்பிராணன்āḻippirāṇaṉ, பெ.(n.)

   வலிமையற்றவ-ன்-ள்-து (கோழி போன்று உயிர் வன்மையற்ற உயிரி);; weakling, as a cock (செ.அக.);.

கோழிப்பீ

 கோழிப்பீāḻippī, பெ.(n.)

   கோழியெச்சம்;  fowl’s dung, droppings of a fowl (சா.அக.);.

     [கோழி + பீ,]

கோழிப்புடம்

 கோழிப்புடம்āḻippuḍam, பெ.(n.)

   குக்குடபுடம் (மூ.அ.);; a mode of calcination in preparing medicine.

     [கோழி + புடம்.]

கோழிப்புணர்ச்சி

 கோழிப்புணர்ச்சிāḻippuṇarcci, பெ.(n.)

   சேர்க்கையில் நீடித்து நிற்காமல் எளிதில் விந்து வெளிப்படும் புணர்ச்சி; sexual intercourse not sustainable, but attended with quick discharge of semen (சா.அக.);.

     [கோழி + புணர்ச்சி.]

கோழிப்புரை

 கோழிப்புரைāḻippurai, பெ.(п.)

   கோழிகளை அடைத்து வைக்கும் கூண்டு; enclosure for domestic fowls, esp. chicken; pen

மறுவ. கோழிமடம்

     [கோழி+புரை.]

 கோழிப்புரைāḻippurai, பெ.(n.)

   கோழிகளை அடைத்துவைக்கும் கூண்டு; enclosure for domestic fowls as of chicken pen.

     [கோழி + புரை.]

கோழிப்புல்

 கோழிப்புல்āḻippul, பெ.(n.)

கோழிக்காற்புல் பார்க்க;see köli-k-kār-pul.

     [கோழி + புல்.]

கோழிப்பூ

 கோழிப்பூāḻippū, பெ.(n.)

   கோழியின் தலைச்சசூட்டு; cock’s-comb.

     [கோழி + பூ.]

கோழிப்பூண்டு

 கோழிப்பூண்டுāḻippūṇṭu, பெ.(n.)

கோழியவரை பார்க்க;see Koli-y-avarai (சா.அக.);.

     [கோழி + பூண்டு.]

கோழிப்போகம்

 கோழிப்போகம்āḻippōkam, பெ.(n.)

கோழிப்புணர்ச்சி பார்க்க;see köli-p-punarcci (சா.அக.);.

     [கோழி + போகம்.]

கோழிப்போர்

கோழிப்போர்1āḻippōr, பெ.(n.)

   சேவற் சண்டை; cock fight.

கோழிப்போர்

மறுவ சேவற்போர், சேவற்சண்டை, கோழிச்சண்டை.

     [கோழி + போர்.]

 கோழிப்போர்2āḻippōr, பெ.(n.)

   உறையூரில் நடந்த சண்டை; battle at Uraiyur.

     “ராஜராஜதேவர் கோழிப்போரில் ஊத்தை அட்டாமல் என்று கடவ திருவிளக்குக்குத் தந்த ஆட்டில் அடுத்த ஆடு நாற்பத்து நாலும் இவநெய் வைத்த காசில் குடுத்த காசு” (தெ.இ.கல்.தொ.II. கல்.24, பகுதி-1 வரி.5);.

     [கோழி (உறையூர்); + போர். கோழியூர்போர் → கோழிப்போர்.]

கோழிமன்

 கோழிமன்āḻimaṉ, பெ.(n.)

   உறையூர் அரசன்; king of Uraiyur.

     “கோழிமன் தொடுகழல் வீர சோழன்” (விசயராசேந்திரன் மெய்க்கீர்த்தி);. [கோழி + மன்.]

கோழிமருதை

 கோழிமருதைāḻimarudai, பெ.(n.)

   கருமருது; black marutham or Negroe’s olive (சா.அக.);.

     [கோழி + மருதை.]

கோழிமீன்

கோழிமீன்āḻimīṉ, பெ.(n.)

   பதினெட்டங்குல நீளமும் கருநிறமுமுள்ள கடல்மீன்வகை; sturgeon,

கோழிமீன்

 Blackfish → brown. attaining 18 in. in length.

     [கோழி + மீன்.]

கோழிமீன்கல்

 கோழிமீன்கல்āḻimīṉkal, பெ.(n.)

   கோழிமீன்மேயும் கடலடிக்கல்; a rock in the sea where the small fishes are sheltered.

     [கோழி + மீன் + கல்.]

கோழிமுட்டை

கோழிமுட்டைāḻimuṭṭai, பெ.(n.)

   1. கோழியின் முட்டை; hen’s egg.

   2. பாழ் (பூச்சியம்);:

 cipher.

     [கோழி + முட்டை.]

கோழிமுட்டைக்கரண்டி

 கோழிமுட்டைக்கரண்டிāḻimuṭṭaikkaraṇṭi, பெ.(n.)

   கோழி முட்டை பதியும் அளவு குழியாகச் செய்த கரண்டி; a spoon made hollow so as to hold an egg in it, Egg-spoon (சா.அக.);.

     [கோழி+முட்டை+கரண்டி]

கோழிமுட்டைக்கரு

 கோழிமுட்டைக்கருāḻimuṭṭaikkaru, பெ.(n.)

   கோழி முட்டையின் வெள்ளை அல்லது மஞ்சள் கரு; the white or the yellow part of the fowl’s egg (சா.அக.);.

     [கோழி+முட்டை+கரு.]

கோழிமுட்டைத்தலைம்

 கோழிமுட்டைத்தலைம்āḻimuṭṭaittalaim, பெ.(n.)

மாந்தம், வலிப்பு முதலியவற்றுக்கு மருந்தாகக் கோழிமுட்டையிலிருந்து இறக்கும் நெய் (வின்.);:

 medicinal oil extracted from hen’s eggs, used for fits spasms etc.

     [கோழி + முட்டை + தைலம்.]

கோழிமுட்டையகப்பை

 கோழிமுட்டையகப்பைāḻimuṭṭaiyakappai, பெ.(n.)

   கோழி முட்டை பதியும் படிக்குப் பள்ளமாகச் செய்த ஒர் அகப்பை; a ladele so shaped as to hild an egg in it (சா.அக.);.

     [கோழி+முட்டை+அகப்பை]

கோழிமுதுக்கெண்டை

 கோழிமுதுக்கெண்டைāḻimudukkeṇṭai, பெ.(n.)

ஒருவகைக் கெண்டைமீன்:

 a kind of fish.

     [கோழிமுது + கெண்டை.]

கோழிமுளையான்

 கோழிமுளையான்āḻimuḷaiyāṉ, பெ.(n.)

ஒரு வகைப்பூடு (யாழ்.அக.);:

 large-flowered purslane.

     [கோழி + முளையான்.]

கோழிமுள்

 கோழிமுள்āḻimuḷ, பெ.(n.)

   கோழிக்காலிலுள்ள கூரிய நகம்; hooked claws of a cock.

     [கோழி + முள்.]

கோழிமுள்ளி

 கோழிமுள்ளிāḻimuḷḷi, பெ.(n.)

   கழுதைமுள்ளி; holly-leaved bear’s breech.

     [கோழி + முள்ளி.]

கோழியடி-த்தல்

கோழியடி-த்தல்āḻiyaḍittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   கோழியைக் கொல்லுதல்; to kill a fowl.

     [கோழி + அடி-.]

புலால் உண்பவர் ஆடு, கோழி முதலிய உயிர் (பிராணி);களைக் கொல்வதை ஆடுகொல்லுதல், கோழி கொல்லுதல் என்னாது ஆடடித்தல், கோழியடித்தல் எனக் கூறும் வழக்கு மக்கள் குறிஞ்சி நிலையில் விலங்குகளையும் பறவைகளையும் கல்லாலும் வணரி ( வளைதடி ); யாலும் அடித்துக் கொன்றதை நினைவூட்டும் சொல்.கட்.க.18,

கோழியண்டம்

 கோழியண்டம்āḻiyaṇṭam, பெ.(n.)

   கோழி முட்டை; fowls egg (சா.அக.);.

     [கோழி+அண்டம்]

கோழியவரை

கோழியவரைāḻiyavarai, பெ.(n.)

   1. அவரை வகை (பதார்த்த.572);; sword bean.

   2. பெருங்கோழியவரைக் கொடி (A.);; West Indian seasidebean.

     [கோழி + அவரை.]

கோழியாகக்கூவு

கோழியாகக்கூவு1āḻiyākakāvudal, பெ.(n.)

   5 செ.கு.வி. (v.i.);

   ஒயாமல் அழைத்தல்; continuous call

     ‘கோழியாகக் கடவுகிறேன் என்னவென்று கேட்டாயா’ (உ.வ.);.

     [கோழி + ஆக + கூவு.]

 கோழியாகக்கூவு2āḻiyākakāvudal, பெ.(n.)

   5 செ.கு.வி.(v.i.);

   மன்றாடுதல்; to crow like a cock, to entreat, importune.

     [கோழி + ஆக + கூவு.]

கோழியாணம்

 கோழியாணம்āḻiyāṇam, பெ.(n.)

   கோழிச்சாறு (வின்.);; chicken broth.

     [கோழி + ஆணம்.]

கோழியிரத்தமரப்பொடி

 கோழியிரத்தமரப்பொடிāḻiyirattamarappoṭi, பெ.(n.)

செம்மரத் தூள்,

 red saw. dust of red wood (சா.அக.);.

     [கோழி+அரத்தம்+மரம்+பொடி]

கோழியுறக்கம்

 கோழியுறக்கம்āḻiyuṟakkam, பெ.(n.)

   கோழியைப் போல் அடிக்கடி உறக்கம் கொண்டெழும் தூக்கம்; light sleep enabling one to wake up frequently like a cock even on slight disturbances (சா.அக.);. –

     [கோழி+உறக்கம்]

கோழியுள்ளான்

 கோழியுள்ளான்āḻiyuḷḷāṉ, பெ.(n.)

   ஒருவகை உள்ளான் (வின்.);; Jack snipe.

கோழியுள்ளான்

     [கோ + உள்ளான்.]

கோழியூர்

 கோழியூர்āḻiyūr, பெ.(n.)

   உறையூரின் மறுபெயர்; another name of the Colas capital Uraiyūr.

மறுவ. உறையூர்.

     [கோழி + ஊர்.]

சோழன் தன் தலைநகர் நிறுவும் பொருட்டு யானையுடன் புறப்பட்டான். வழியில் கோழியொன்று யானையைத் தாக்கியது. யானை புறங்காட்டி நின்றது. கோழியின் நினைவாக அரசன் தன் தலைநகரை அவ்விடத்து நிறுவி அவ்வூருக்குக் கோழியூர் எனப் பெயரிட்டழைத்தான் என்று கூறுகின்றனர். இது பொருத்தமன்று.

மதங்கொண்ட யானையின் தலைமீது கோழி பலமுறை மிதித்தால் மதம் அடங்கும். இவ்வாறு யானைக்கு அஞ்சிய கோழிகள் யானையின் தலை மீது பறந்து மிதித்து மதம் அடக்கிய செய்தி, கோழியூர் எனப்பெயர் பெறக் காரணமாயிற்று. வட்டக்காட்சி (Circus); நடத்துவோர் யானை மதங்கொள்ளும்போது அடக்குவதற்கு,கோழிகளை உடன்கொண்டுசெல்வது வழக்கம்.

கோழியூர்கிழார் மகனார் செழியனார்

கோழியூர்கிழார் மகனார் செழியனார்āḻiyūrgiḻārmagaṉārceḻiyaṉār, பெ.(n.)

   ஒரு சங்கப் புலவர்; a Sangam poet.

     [கோழியூர் + கிழார் + மகனார் + செழியனார்.]

நற்றிணையில் 380ஆம் பாடலைப் பாடியவர் ஊரால் பெயர் பெற்றவர்.

கோழியெச்சம்

 கோழியெச்சம்āḻiyeccam, பெ.(n.)

   கோழிப்பீ; fowl’s dudng (சா.அக.);.

     [கோழி+எச்சம்]

கோழியென்றமூலி

கோழியென்றமூலிāḻiyeṉṟamūli, பெ.(n.)

   1. வாளவரை; sword bean, Canavalia ensiformis.

   2. பெருங்கோழி யவரை; West Indian sea-side bean, Canavalia obtusifolia (சா.அக.);.

கோழிரசம்

 கோழிரசம்āḻiracam, பெ.(n.)

   கோழி வெஞ்சாறு; fowl’s soup; cock or hen Soup (சா.அக.);.

கோழிவிழுங்கல்

கோழிவிழுங்கல்āḻiviḻuṅgal, பெ.(n.)

   நாணய வகை (பணவிடு.138);; a coin.

     [கோழி + விழுங்கல்.]

கோழிவெண்காரம்

 கோழிவெண்காரம்āḻiveṇkāram, பெ.(n.)

   கோழியின் வெண்ணிறமான பீ; fowl’s dung of a white colour (சா.அக.);.

     [கோழி+வெண்+காரம்]

கோழிவென்றி

கோழிவென்றிāḻiveṉṟi, பெ.(n.)

   சேவலின் போர் வெற்றியைக் கூறும் புறத்துறை (பு.வெ.12, வென்றிப்.6);; theme describing the victory of a cock in cock-fight.

     [கோழி + வென்றி.]

கோழிவேந்தன்

கோழிவேந்தன்āḻivēndaṉ, பெ.(n.)

   1. சோழ மன்னர்களின் பட்டப்பெயர்:

 title of Cola kings.

   2. சோழன்; Cola as the king of Uraiyur.

     [கோழியூர் → கோழி + வேந்தன்.]

உறையூரைத் தலைநகராகக் கொண்டு அரசு புரிந்த மன்னனுக்குக் கோழி வேந்தன் எனப் பெயர் வழங்கலாயிற்று.

கோழை

கோழைāḻai, பெ.(n.)

   1. சளி; phlegm, mucus.

     “கோழை மிடறாக” (தேவா.263:1);.

   2. உமிழ்நீர்; saliva.

கோழைவடிதல் (உ.வ.);.

   3. மனத் திட்பமின்மை; bashfulness. timidity,

     “கோழை மனத்தை” (திருப்பு.366);.

   4. இரக்கம் (உ.வ.);; tender-heartedness.

   5. மனத்திடமில்லாதவன்; bashful, timid person.

     “கோழைகளா யிருப்பாரை” (ஈடு.9.3:6);.

   6. சிறுபிள்ளை; child.

     “பருவமுறாக் கோழை யறியுமோ” – (விநாயகபு. 72:132);.

   ம.கோழ;க. கோளே: தெ. கோட்ஆடு (திகைப்படைதல்);.

     [குழ → கொழு → கோழி.]

கோழைகாசம்

 கோழைகாசம்āḻaikācam, பெ.(n.)

ஈளை,

 humid asthma (சா.அக);.

     [கோழை+Skt. காசம்]

கோழைகோழையாய்விழு-தல்

 கோழைகோழையாய்விழு-தல்āḻaiāḻaiyāyviḻutal, செ.கு.வி. (v.i.)

   மார்பினின்று கபம் வெளிவரல்; issuing of thick phlegm in lumps(சா.அக.);.

     [கோழை+கோழையாய்+விழு-தல்.]

கோழைக்கட்டு

 கோழைக்கட்டுāḻaikkaṭṭu, பெ.(n.)

   மூச்சுக் குழலிற் கட்டும் சளித் திரட்டு; accumulation of phlegm in the bronchial tubes.

     [கோழை + கட்டு.]

கோழைக்கட்டுவிழு-தல்

கோழைக்கட்டுவிழு-தல்āḻaikkaṭṭuviḻutal,    2 செ.கு.வி.(v.i.)

   நெஞ்சில் கட்டிய கபம் வெளிப்படுதல்; discharge of phlegm ocłlected in the chest (சா.அக.);.

     [கோழை+கட்டு+விழு-தல்.]

கோழைக்குத்து

 கோழைக்குத்துāḻaikkuttu, பெ.(n.)

   கோழையால் ஏற்படும் குத்தல் நோய்; acute pain due to accumulation of phlegm in the chest (சா.அக.);.

     [கோழை+குத்து.]

கோழைதீர்-தல்

கோழைதீர்-தல்āḻaitīrtal,    4 செ.கு.வி.(v.i.)

   மனத்திடம் பெறுதல்; to overcome bashfulness or timidity.

     [கோழை + தீர்.]

கோழைத்தனம்

 கோழைத்தனம்āḻaittaṉam, பெ.(n.)

   மனத்திடன்மை; bashfulness, timidity, cowardice.

     [கோழை + தனம்.]

கோழைநீர்

 கோழைநீர்āḻainīr, பெ.(n.)

   கப நீர்; sputum (சா.அக.);.

     [கோழை+நீர்]

கோழைநெஞ்சு

கோழைநெஞ்சுāḻaineñcu, பெ.(n.)

   1. கோழை கட்டிய நெஞ்சு,

 phlegm in the chest; chest accumulated with phlegm.

   2. வலிமையற்ற மனம்; timid mind chicked hearted.

   3.இளகிய மனம்; sympathetic mind (சா.அக.);.

     [கோழை+நெஞ்சு]

கோழைநோய்

கோழைநோய்āḻainōy, பெ.(n.)

   1. கோழையால் ஏற்படும் நோய்கள்; phlegmatic diseases.

   2. ஈளை; asthma (சா.அக.);.

     [கோழை+நோய்.]

கோழைபடு-தல்

கோழைபடு-தல்āḻaibaḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   கீழ்மையடைதல்; to dwindle, decrease.

     “மேழிச் செல்வங் கோழைபடாது” (கொ.வே.);

ம. கோழெப்பெடுக.

     [கோழை + படு-.]

கோழைபோக்கி

 கோழைபோக்கிāḻaipōkki, பெ.(n.)

   நறுந்தாளி (சங்.அக.);; a fragrant convolvulus.

     [கோழை + போக்கி.]

கோழைமொழிமூர்க்கன்

 கோழைமொழிமூர்க்கன்āḻaimoḻimūrkkaṉ, பெ.(n.)

தவளை; frog (சா.அக.);.

     [கோழை+மொழி+மூர்க்கன்.]

கோழையகற்றுதல்

 கோழையகற்றுதல்āḻaiyakaṟṟutal, தொ.பெ.(vbl.n.)

   கோழையைப் போக்கல்; dephlegmating; removing phlegm (சா.அக.);.

     [கோழை+அகற்று-தல்.]

கோழையடைப்பு

 கோழையடைப்புāḻaiyaṭaippu, பெ.(n.)

   நெஞ்சுக் கோழை திரண்டு மூச்சு விடக் கூடாதபடித் தொண்டையை அடைத்தல்; obstruction of respiration due to collections of mucus and phlegm in the passage of throat (சா.அக.);.

     [கோழை+அடைப்பு]

கோழையன்

 கோழையன்āḻaiyaṉ, பெ.(n.)

   மனத்திடமற்றவன்; bashful or timid person, coward.

     [கோழை + அன்.]

கோழையறுக்குஞ்சூரன்

 கோழையறுக்குஞ்சூரன்āḻaiyaṟukkuñjūraṉ, பெ.(n.)

   திப்பிலி (சங்.அக.);; long-pepper.

     [கோழை + அறுக்கும் + சூரன்.]

கோழையறுப்பான்

 கோழையறுப்பான்āḻaiyaṟuppāṉ, பெ.(n.)

   கோழையைப் போக்கும் பூடு; vegetable expectorant, as loosening phlegm.

     [கோழை + அறுப்பான்.]

கோழையிருமல்

 கோழையிருமல்āḻaiyirumal, பெ.(n.)

கோழையால் வரும் இருமல் (யாழ்ப்.);:

 cough occasioned by the accumulation of phlegm.

     [கோழை + இருமல்.]

கோழையிளக்கி

 கோழையிளக்கிāḻaiyiḷakki, பெ.(n.)

   நெஞ்சில் தங்கி நிற்கும் கோழையை இளக்கும் மருந்து; any drug or medicine rendering the phlegm loose and watery (சா.அக.);.

     [கோழை+இளக்கி]

கோழைவிந்து

 கோழைவிந்துāḻaivindu, பெ.(n.)

   துளசி (மலை.);; holy basil.

     [கோழை (மென்மை); + விந்து (பிந்து); = சிறுவடிவினது.]

கோழ்

கோழ்āḻ, பெ.(n.)

   1. வழுவழுப்பான; slippery. oily.

     “வெண்பொனாற் கோழரை குயின்ற பூகம்” (திருவிளை.திருமணப்.65);.

   2. செழிப்பான; thriving luxurious, rich.

     “கோழிலை வாழை” (அகநா.2);.

   3. கொழுப்பான; fat.

     “கோழிளந தகர்” (திருவிளை. நகரப்.79);.

     [குல் → குள் → குழ் → சோழ்.]

கோவக்காரி

 கோவக்காரிāvakkāri, பெ.(n.)

   தலைச்சுருளிச் செடி; Indian birth wort (சா.அக.);.

     [கோபக்காரி → கோவக்காரி.]

கோவக்கீச்சான்

 கோவக்கீச்சான்āvakāccāṉ, பெ.(n.)

   ஒருவகை கடல்மீன் (மீனவ.);; a kind of sea fish.

     [கோவம் + கீச்சான்.]

கோவங்கம்

 கோவங்கம்āvaṅgam, பெ.(n.)

   சரகண்ட செய்நஞ்சு; a kind of native arsenic (சா.அக.);.

     [கோ + வங்கம்.]

கோவங்கிழங்கு

 கோவங்கிழங்குāvaṅgiḻṅgu, பெ.(n.)

கோவைக் கிழங்கு பார்க்க;see kövai-k-kilangu (சா.அக.);.

     [கொவ்வை → கோவை + கிழங்கு.]

கோவசூரி

 கோவசூரிāvacūri, பெ.(n.)

கோவைசூரி பார்க்க;see kovai-Suri.

     [கோவைசூரி → கோவசூரி.]

கோவசை

 கோவசைāvasai, பெ.(n.)

   மலட்டுமாடு; cow not calved (சா.அக.);.

     [கோ + வசை.]

கோவஞ்சி

கோவஞ்சி1āvañji, பெ.(n.)

   ஒருவகைச் சங்கு; a kind of conch.

     [கோ + (வளஞ்சி); வஞ்சி.]

   கோவஞ்சி2 மீன் வகை; a kind of fish.

கோவஞ்சிக்கடியன் பொதியன் (பறாளை. பள்ளு.16);.

     [கோ + (வளஞ்சி); வஞ்சி.]

கோவணக்குண்டியன்

 கோவணக்குண்டியன்āvaṇakkuṇṭiyaṉ, பெ.(n.)

   கோவணாண்டி; a religious mendicant of the Śiva sect who has no clothing but the fore-lape (சா.அக.);.

     [கோவணம் + குண்டியன்.]

கோவணன்

கோவணன்1āvaṇaṉ, பெ.(n.)

   சிவன் (சது.);; siva one with a loin-cloth fore-lape.

     [கோவணம் + அன்.]

 கோவணன்2āvaṇaṉ, பெ.(n.)

   வசிட்டன் (சது.);; Vasista, as having Kāmatenu with him.

     [கோவணம் + அன்.]

கோவணம்

கோவணம்āvaṇam, பெ.(n.)

   குண்டித்துணி; man’s loin-cloth, fore-lape.

     “துன்னம்பெய் கோவணம்” (திருவாச.12:2);.

கோவணத்தில் ஒரு காசு இருந்தால் கோழி கூப்பிட பாட்டு வரும் (பழ);.

மறுவ. தாச்சிலை.

   ம. கோவணம்;க., து. கோவண: தெ. கோவணமு

     [கோ (கோத்தல்); + அணம்.]

கோவணவன்

கோவணவன்āvaṇavaṉ, பெ.(n.)

கோவணன் பார்க்க see kovanan.

     “இஞ்ஞநின்ற கோவனவன்” (திருவிசை. கருவூர். 46);.

     [கோ + (பணவன்); வணவன்.]

கோவணவர்

கோவணவர்āvaṇavar, பெ.(n.)

கோயில் கண்காணிப்பாளர் (விசாரணையாளர்); (கோயிலொ,65);

 superintendent of a temple.

     [கோ + (பணவர்); வணவர்.]

கோவணாண்டி

 கோவணாண்டிāvaṇāṇṭi, பெ.(n.)

 a begger with only a loin cloth for his clothing, destitute person.

     [கோவணம் + ஆண்டி.]

கோவணி

 கோவணிāvaṇi, பெ.(n.)

   ஆத்தி (மூ.அ.);; common mountain ebony.

     [குவணி → கோவணி.]

கோவண்டக்குறிச்சி

 கோவண்டக்குறிச்சிāvaṇṭakkuṟicci, பெ.(n.)

   திருச்சிராப்பள்ளி மாவட்டத்துச் சிற்றூர்; a village in Tiruchirappalli Dt.

     [கோ + அண்டன் + குறிச்சி.]

கோவதை

கோவதைāvadai, பெ.(n.)

   ஆ(பசு);க்கொலை; slaughter of cows, considered a sin.

     “கொந்தலர்த்தார் மைந்தனைமுன் கோவதை செய்தார்க்கு” (பெரியபு.மனுநீதி. 34);.

     [கோ + வதை.]

கோவத்தக்குடி

 கோவத்தக்குடிāvattakkuḍi, பெ.(n.)

   திருச்சிராப்பள்ளி மாவட்டத்துச் சிற்றூர்; a village in Tiruchirappalli Dt.

     [கோ + அத்தன் + குடி.]

கோவத்தன்

கோவத்தன்āvattaṉ, பெ.(n.)

   கடைக் கழகப் புலவர்களில் ஒருவர்; one of the Šargam poet (அபி.சிந்.);.

இவர் குறுந்தொகையில் 46, 194 ஆகிய எண்ணுள்ள பாடல்களைப் பாடியவர்.

கோவத்தி

 கோவத்திāvatti, பெ.(n.)

கோவதை பார்க்க;see kö-vadai.

     [கோவதை → கோவத்தி.]

கோவந்தபுத்தூர்

 கோவந்தபுத்தூர்āvandabuttūr, பெ.(n.)

   தஞ்சை மாவட்ட ஊர்ப் பெயர்களிலொன்று; a village in Thanjavur Dt.

     [கோ + வந்தன் + புத்தூர்.]

கோவனார்

 கோவனார்āvaṉār, பெ.(n.)

   கடைக்கழகப் புலவர்;Šangam poet (அபி.சிந்.);.

     [கோவன்+ஆர்.]

கோவன்

கோவன்āvaṉ, பெ.(n.)

   1. இடையன்; herdsman.

     “கோவ னிரைமீட்டனன்” (சீவக. 455);.

   2. அரசன்; king.

     “கோவனும் மக்களும்” (சீவக. 1843);.

   3. வசிட்டன் (அக.நி.);; Vasitan.

   4. சிவன் (அக.நி.);; Siva.

     [கோ → கோவு (மாடு); + அன்.]

கோவன்.

கோவன்.āvaṉ, பெ/(n.)

   1. மலை வாழ்நன், one who dwells on one hilltop.

   2. அரச குடும்பத்தைச் சார்ந்தவன்; one who belongs to royal family.

   3. ஓர் இயற்பெயர்; a proper name. 4.மாட்டுக்காரன்;

 owner of cows.

மறுவ,கோமான்.

     [கோ+அன்- கோவன்.]

கோவன்காய்

கோவன்காய்āvaṉkāy, பெ.(n.)

   மலைத் தக்காளி; mountain currant tomato (சா.அக.);.

     [கோவன் + காய்.]

   கோவன்புத்தூர் கோயமுத்தூரின் முந்தைய பெயர்; early form of Coimbatore.

     “பேரூர் நாட்டு கோவந்தபுத்தூரான வீரகேரள நல்லூர்ப்பால் பெருமாட்டிகள்” (SII:V241-6 பக்.88);.

     [கோவன் + புத்துர் → கோவன்புத்தூர்.]

கோவன்வெண்ணெய்க்கூத்தன்

கோவன்வெண்ணெய்க்கூத்தன்āvaṉveṇīeykāttaṉ, பெ.(n.)

   திருமால்புரம் நகரக் கணக்கனின் பெயர்; name of the acccoontant of Thirumalpuram in Velur Dt.

     ‘இப்படிக்கு நகரக்கணக்குக் கோவன் வெண்ணெய்க் கூத்தன் இவை என் எழுத்து’ (தெ.இ.க.தொ-22, கல்.271-18);.

கோவம்

கோவம்1āvam, பெ.(n.)

   கோபம்; angar.

     “கோவந். தோன்றிடிற் றாயையு முயிருனுங் கொடியோர்” (கம்பரா.படைக்கா.23);.

     [கோப்பு → கோப்பி → கோபி → கோவி → கோவம்]

 கோவம்2āvam, பெ.(n.)

   1. தம்பலப்பூச்சி; cochinea.

     “கோவத் தன்ன கொங்குசேர் புறைத்தலின்” (சிறுபாண்.71);.

   2. பொன்; gold.

     [கோபம் → கோவம்.]

கோவரகழுதை

 கோவரகழுதைāvaragaḻudai, பெ.(n.)

கோவேறுகழுதை பார்க்க;see kövéru-kaludai.

     [கோவேறு → கோவா + கழுதை.]

கோவரக்கி

 கோவரக்கிāvarakki, பெ.(n.)

   வெண்வாகை; doon sirrissa tree, Albezzia procera (சா.அக.);.

     [கோ+அரக்கி]

கோவரங்கப்பதுமராகம்

 கோவரங்கப்பதுமராகம்āvaraṅkappatumarākam, பெ.(n.)

   பதுமபண் வகை (யாழ்.அக.);; a kind of Padumaragam (செ.அக.);.

கோவரம்

கோவரம்āvaram, பெ.(n.)

   1. சந்தனம்; sandalwood, Santanum album.

   2. சின்ன முத்து; small pustules or measles (சா.அக.);.

கோவரிதகி

கோவரிதகிāvaritaki, பெ.(n.)

   1. வில்வம்:

 bael tree, Aegle marmelos.

   2. பீர்க்கு; gourd plant, Luffa foetida (சா.அக.);.

கோவர்

 கோவர்āvar, பெ.(n.)

   இடையர்; shepherds.

     [கோ → கோவு + அர்.]

கோவர்த்தனம்

கோவர்த்தனம்āvarttaṉam, பெ.(n.)

   இந்திரன் சினந்து விடுத்த பெருமழையைத் தடுத்து ஆநிரைகளையும் இடையர்களையும் காப்பதற்காகக் கண்ணனாற் குடையாகத் தாங்கப்பட்டதும் வடமதுரைப் பக்கத்துள்ளதுமான ஒரு மலை (திவ். பெரியாழ்.3:5:1);; celebrated hill in Brindaban near Muttra lifted up and held by Krisnă to shelter cows and cowherds from a rain storm sent by Indira.

     [கோ + வர்த்தனம்.]

ஆநிரை மீட்பு நிகழ்வுற்ற இடமாதலின் இவ் வூர் இப் பெயர் ஏற்றதெனலாம்.

கோவர்த்தனர்

 கோவர்த்தனர்āvarttaṉar, பெ.(n.)

   கோவைசியர் (பிங்.);; herds men (சா.அக.);.

     [கோ (மாடு); + வர்த்தனர்.]

கோவலகணவாய்

 கோவலகணவாய்āvalagaṇavāy, பெ.(n.)

   கணவாய்ச்சிப்பி மீன்வகை (வின்.);; a species of cuttle fish.

     [கோ + வல் + கணவாய்]

கோவலன்

கோவலன்1āvalaṉ, பெ.(n.)

   1. மாட்டு மந்தைகளுடைய பெருஞ்செல்வன்; a rich man of cattle wealth.

   2. சிலப்பதிகாரக் காப்பியத் தலைவன்; hero of the epic Sillappadikāram.

     “கொண்டேத்தும் கிழமையில் கோவலன் என் பான்மன்னோ” (சிலப்);.

     [கோ → கோவு → கோவல் (மாட்டு மந்தை); + அன் → கோவலன்.]

மாட்டு மந்தைகளுக்குத் தலைவன் கோவலன் எனப்பட்டான். நாளடைவில் இச் சொல் பெருஞ்செல்வன் என்னும் பொருள்பட்டதால் இப் பொருளில் சிலப்பதிகாரக் கோவலனுக்கும் காரணப்பெயராயிற்று.

 கோவலன்2āvalaṉ, பெ.(n.)

   திருமால் பெயர்களுள் ஒன்று; one of the name of Tirumal.

     [கோவலன் → Skt.gõpāla.]

 கோவலன்āvalaṉ, பெ.(n.)

மாட்டுமந்தைகளை

   யுடைய செல்வன்; a wealthy person who has a number cowpen.

     [கோ-கோவு-கோவல் அன் கோவல் (மாட்டு மந்தை);.]

கோவலன் எனும் தமிழ்ச் சொல்லும் கோவாள் [கோ+பால-மாடுவளர்ப்பவன், மேய்க்கும் பணி யாளர்] என்னும் வடதமிழ்ச் சொல்லும் வேறானவை.

கோவலராய்ப்பேரையன்

கோவலராய்ப்பேரையன்āvalarāyppēraiyaṉ, பெ.(n.)

   விழுப்புரம் மாவட்டம் சம்பையில் தண்டனை பெற்ற வணிகன்; a merchant, who was punished by the guild at Jambai in Thirukkovalur taluk in Villuppuram Dt.

     “முடியனூரிருக்கும் பள்ளிச்சேரி அடியநம்பியான கோவலராயப் பேரையன்”- (தெ.இ.க.தொ.22, கல்.67-5);.

     [கோவலர் + ஆயன் + பேர் + அரையன்.]

கோவலர்

கோவலர்āvalar, பெ.(n.)

   1. முல்லைநில மக்கள்; men of the sylvan tract, herdsmen.

     “குருந்தங்கண்ணிக் கோவலர்” (ஐங்குறு 439);.

   2. இடையர்; shepherds.

     [கோ → கோவு(மாடு); → கோவல் (மாட்டுமந்தை); + அர் → கோவலர்.]

கோவலி

 கோவலிāvali, பெ.(n.)

   பற்கிட்டுகை; tetanus.

     [கோல் → கோ + வலி.]

கோவலூர்

கோவலூர்āvalūr, பெ.(n.)

   விழுப்புரம் மாவட்டத்திலுள்ளதும் பழைமையுடையதுமாகிய திருக்கோவலூர்; Tirukkovalūr in Vilupuram Dt. of historic interest.

     “முரண்மிகு கோவலூர் நூறி” (புறநா. 99);.

     [கோவல் = மாட்டுமந்தை. கோவல் + ஊர் → கோவலூர்.]

 கோவலூர்āvalūr, பெ.(n.)

   மலையமான் திருமுடிக்காரியின் தலைநகர்; the capital city of Tamil king malayaman Tirumudīkārī.

கோவலூர் நூறி.(புறம்);.

     [கோவல் +[மாட்டுமந்தை]+ஊர்.]

கோவலை

கோவலைāvalai, பெ.(n.)

   1. நீரோட்டமுள்ள கழிமுகங்களில் பயன்படும் மீன்வலை; a kind of fishing net used for fishing in backwaters.

   2. நீளமும் அகலமும் உள்ள பெரிய வலை (மீனவ.);; big net, long and broad.

     [கோ + வலை.]

 கோவலைāvalai, பெ. (n )

   நீளத்திலும் அகலத்திலும் பெரிய வலை; a net big in size,

     [கோ-[பெரிய]+வலை]

கோவல்

கோவல்2āval, பெ.(n.)

கோவலூர் பார்க்க;see kovalur.

     “கோவ லிடைகழியே பற்றி” (திவ்.இயற். 1.86);.

     [கோ → கோவு → கோவல்1 → கோவல்2 (மாட்டு மந்தையிருந்த ஊர்);]

 கோவல்āval, பெ.(n.)

   மாட்டுமந்தை; a cow pen.

     [கோ-கோவுமாடு]+அல்-கோவல்.கோவல்-மாட்டுமந்தை]

கோவளம்

கோவளம்1āvaḷam, பெ.(n.)

   1. கடற்குள் நீண்ட தரைமுனை; cape, headland.

   2. தரைமுனையிலுள்ள ஊர்; town near a headland.

   ம. கோவளம்; M. kblam.

 கோவளம்2āvaḷam, பெ.(n.)

   கோயில் முன்மண்டபத்தில் குமுதப்படைக்கு மேலுள்ள பகுதி; portion above the kumudappadai in the front mandapam.

     “திரு அக்கிறமண்டபம் முன்பு திருக்கற் செய்துநின்ற குமுத படைக்குமேல் திருக்கற்சாத்த வாங்கி கோவளத்து கல்லடிப்பிக்கவும்” (SII.XVII. 561 – 23 p. 236); (கி.பி.1237);.

     [கோ → கோவளம்.]

கோவளை

 கோவளைāvaḷai, பெ.(n.)

   நரிவாழை (L.);; tube-flower.

     [கோ + வளை.]

கோவா

 கோவாāvā, பெ.(n.)

   ஒட்டு மாம்பழ வகை; a grafted mango (செ.அக.);.

கோவாக்கிழங்கு

 கோவாக்கிழங்குāvākkiḻṅku, பெ.(n.)

கோவா நாட்டு உருளைக் கிழங்கு,

 Goa potato or Goa yam (சா.அக.);.

     [கோவா+கிழங்கு.]

கோவாங்கம்

கோவாங்கம்āvāṅgam, பெ.(n.)

   1. செம்மணி; a ruby.

   2. மாணிக்கத்தின் நான்காவது பிரிவு; the fourth shape of red beads.

     [கோவு + அங்கம்.]

கோவாங்காட்டு மூலை

 கோவாங்காட்டு மூலைāvāṅgāṭṭumūlai, பெ.(n.)

   வடமேற்கு மூலை; north-western direction.

     [கோவன்காடு → கோவாங்காட்டு + மூலை.]

இம்மூலையில் மின்னினால், உடனே மழை வந்து விடும். அதாவது, பூட்டிய ஏரை அவிழ்த்து வடத்தைச் சுருட்டும் முன்பு மழை வந்துவிடும் என்பது நம்பிக்கை. அதனால் இம்மூலையை வடஞ்சுருட்டி மூலை என்றும் அழைப்பர்.

கோவாங்கு

கோவாங்குāvāṅgu, பெ.(n.)

   படிதமென்னும் மாணிக்க வகை (சிலப்.14:186, உரை);; a kind of ruby.

     [கோவாங்கம் → கோவாங்கு.]

கோவாங்குமணி

 கோவாங்குமணிāvāṅgumaṇi, பெ.(n.)

   ஒருவகை மாணிக்கம் (இரத்தினம்);; a kind of ruby.

     [கோவாங்கு + மணி.]

கோவைப்பழம், செங்கல், குராமலர், மஞ்சளென்னு மிவைபோன்ற நிறத்தினையுடையது.

கோவாதேவதாரு

 கோவாதேவதாருāvātēvatāru, பெ.(n.)

கோவா நாட்டில் விளையும் தேவதாரு மரம்,

 Goa cedar tree; Goa cypress, Cypresaus glauca (சா.அக.);.

     [கோவா+தேவதாரு.]

கோவாரி

கோவாரிāvāri, பெ.(n.)

   மாடுகளுக்கு வரும் அம்மை நோய்வகை;(M.Cm. D.1887, 247);; rinderpest.

     [கோ + வாரி.]

கோவாலவண்டி

கோவாலவண்டிāvālavaṇṭi, பெ.(n.)

கொல்லாப்பாண்டி பார்க்க;(சிலப்.ப.199.);;see kolla-p-pandi.

     [கொல்லாப்பண்டி → கோவாலவண்டி.]

கோவாவவரை

 கோவாவவரைāvāvavarai, பெ.(n.)

கோவாபீன்சு அல்லது முறுக்கவரை

 square or goa bean, Psophocarpus teragonolobus(சா.அக.);.

மறுவ முருங்கை பீன்ஸ்

     [கோவா+அவரை.]

கோவி

கோவி1āvi, பெ.(n.)

   சினமுள்ளவன்-ள்; angry person.

     “கோவி யவாவன்” (சைவச.ஆசாரக்.17);.

     [கோபம் → கோபி → கோவி.]

 கோவி2āvi, பெ.(n.)

   இடைச்சி; shepherdess.

     “கோவி நாயகன்” (திவ். பெரியதி. 2.1:4);.

     [கோவன் → கோவி.]

கோவிக்கல்

கோவிக்கல்āvikkal, பெ.(n.)

   அரண்மனை (T.A.S.V., 205);; palace.

     [கோ → கோவு → கோவி + கல்.]

கோவிக்கீரை

 கோவிக்கீரைāvikārai, பெ.(n.)

   முட்டைக்கோசு (பாண்டி.);; cabbage.

     [கோவி + கீரை.]

கோவிசந்தனம்

கோவிசந்தனம்āvisandaṉam, பெ.(n.)

கோபி சந்தானம் பார்க்க;see kõbi-sandānam.

     “கோவிசந் தனத்தினைக் கோடு நெற்றியில்” (சேதுபு. சேதுபல. 128);.

     [கோபி → கோவி(சந்தனம்); + சந்தானம்.]

கோவிசயநிருபதுங்கவர்மன்

 கோவிசயநிருபதுங்கவர்மன்āvicayanirupatuṅkavarmaṉ, பெ.(n.)

   காஞ்சிபுரத்தை ஆட்சி புரிந்த பல்லவர்களில் ஒருவன்; one of the Pallava king who ruled Kañji-puram (அபி.சிந்.);.

கோவிசு

 கோவிசுāvicu, பெ.(n.)

முட்டைக்கோசு,

 cab. bage, Brassica aleracea capitata (செ.அக.);.

கோவிசுகீரை

 கோவிசுகீரைāvicuārai, பெ.(n.)

   கோசுமுட்டை; cabbage-domestic colewort, Brassica oleracea (சா.அக.);.

     [கோவிசு + கீரை.]

கோவிடாணம்

கோவிடாணம்āviṭāṇam, பெ.(n.)

   நளிநயமுத்திரை வகை (செந். x, 424);; a handpose in dance.

     [கோ + விடானம்.]

கோவிட்டு

கோவிட்டுāviṭṭu, பெ.(n.)

   மாட்டுச் சாணம் (தைலவ.பாயி.41.);; cowdung.

     [கோ + விட்டு. புட்டை → விட்டை → விட்டு. கோவிட்டை பார்க்க;see kở-vittai.]

கோவிட்டை

 கோவிட்டைāviṭṭai, பெ.(n.)

   மாட்டுச்சாணி; cow-dung (சா.அக.);.

     [கோ + விட்டை.]

கோவிதன்

கோவிதன்āvidaṉ, பெ.(n.)

   நன்குணர்ந்தோன்; expert (பகவற். 3:17);.

     [கோவி → கோவித்தியர்.]

கோவிதாரம்

கோவிதாரம்āvitāram, பெ.(n.)

   1. குரா; a kind of shrub bottle – flower.

   2. காட்டாத்தி (மலை.);; a species of tree whose fruit is holy, mountain ebony; fig tree (சா.அக.);.

     [கோவி (சிவப்பு); + தாரம்.]

கோவிதேசுவரம்

கோவிதேசுவரம்āvitēcuvaram, பெ.(n.)

   சிவனிடங்க ளாயிரத்தெட்டனு ளொன்று; one of 1008 Siva temples.

     [கோவு → கோவிதன் + ஈசுவரம்.]

கோவித்தியர்

கோவித்தியர்āvittiyar, பெ.(n.)

   முல்லைநில மகளிர் (தொல்.பொருள்.20, உரை);; women of the sylvan tract, shepherdesses.

     [கோவி → கோவித்தியர்.]

கோவிந்தக்கொள்ளி

 கோவிந்தக்கொள்ளிāvindakkoḷḷi, பெ.(n.)

   கோவிந்தா சத்தமிட்டு ஏதிலி (அநாதைப்); பிணத்துக்கிடுங் கொள்ளி; burning an unclaimed corpse with cries of Govinda.

     [கோவிந்தம் + கொள்ளி.]

கோவிந்தசதகம்

 கோவிந்தசதகம்āvindasadagam, பெ.(n.)

   நாராயண பாரதியார் இயற்றியதும் ஒவ்வொரு செய்யுளும் ஒவ்வொரு பழமொழியைக் கொண்டு கோவிந்தனே யென்று முடியப்பெறுவதுமாகிய சதக நூல்வகை; a sadagam poem by Nārāyana Bárati, each stanza explaining a proverb and ending with an address to Govinda.

     [கோவிந்தன் + சதகம்.]

கோவிந்தன்

 கோவிந்தன்āvindaṉ, பெ.(n.)

திருமால் (பிங்.);: Visnu.

     [கோ → கோவு (மாடு); → கோவந்தன் → கோவிந்தன்.]

கோவிந்தம்

 கோவிந்தம்āvindam, பெ.(n.)

   செம்முள்ளி; thorny nail dye (சா.அக.);.

     [கோவி(சிவப்பு); → கோவிந்தம்.]

கோவிந்தம்போடு-தல்

கோவிந்தம்போடு-தல்āvindambōṭudal,    20 செ.கு.வி.(v.i.)

     ‘கோவிந்தா’ என்று சொல்லிக் கையால் வணங்குதல் (கொ.வ.);;

 to bow or salute uttering the name of Govinda.

     [கோவிந்தம் + போடு-.]

கோவிந்தர்

 கோவிந்தர்āvindar, பெ.(n.)

   இடையர், முல்லைநில மக்கள் (திவா.);; men of the sylvan tract, herdsmen.

     [கோ → கோவு → கோவந்தர் → கோவிந்தர்.]

கோவிந்தை

 கோவிந்தைāvintai, பெ. (n.) சீவக

   சிந்தாமணி பதுமுகன் மனைவி; wife of Padumuga in Švaga-Šindamani (அபி.சிந்);.

கோவின்மை

கோவின்மைāviṉmai, பெ.(n.)

கோயின்மை பார்க்க;see keyiomai.

     ‘கொள்ளும்புட் காக்கின்ற கோவின்மையோ'(யாழ்ப். வி. 22, உரை);.

     [கோ + இன்மை.]

கோவியம்

 கோவியம்āviyam, பெ.(n.)

கோவிட்டை பார்க்க;see kö-vittai (சா.அக.);.

     [கோ + (மயம் → மியம்); → வியம்.]

கோவிரதம்

 கோவிரதம்āviratam, பெ.(n.)

   விடத்தேர்; mint, Mentha crispa (சா.அக.);.

கோவிராசராசகேசரி

கோவிராசராசகேசரிāvirācarācaācari, பெ.(n.)

   முதலாம் இராசராச சோழனுடைய பட்டப்பெயர்; a title of Rajaraja I.

ஶ்ரீ கோவிராஜராஜகேசரி பந்மரான ஶ்ரீராஜராஜ தேவர்க்குயாண்டு” (S.I.I.III.-15 p.23);.

     [கோ + இராசன் + இராசன் + கேசரி.]

கோவிருடபம்

 கோவிருடபம்āviruṭapam, பெ.(n.)

எருது bull (சா.அக.);.

கோவிற்குடியான்

கோவிற்குடியான்āviṟkuḍiyāṉ, பெ.(n.)

   பதினெண்குடியுள் சங்கூதும் பணிசெய்வோன் (வின்.);; conch blower, a servile caste, one of 18 kudimakkal.

     [கோவில் + குடியான்.]

கோவிற்புறா

கோவிற்புறாāviṟpuṟā, பெ.(n.)

   மாடப்புறா (M.M.99);; blue rock-pigeon.

     [கோவில் + புறா.]

கோவிற்றுறையார்

 கோவிற்றுறையார்āviṟṟuṟaiyār, பெ.(n.)

   கோயில் வேலைக்காரர்; staff or servants in a temple.

     [கோவில் + துறையார்.]

கோவிலங்கு

கோவிலங்குāvilaṅgu, பெ.(n.)

   அரிமா (சிங்கம்);; lion, as king of beasts.

     “கோவிலங்கு பொரவஞ்சுமோ”(பாரத. கிருட்டிண. 122);.

     [கோ + விலங்கு. கோ = பெரிய, தலைமை, வலிய.]

கோவிலார்

 கோவிலார்āvilār, பெ.(n.)

   கோவில் வேலை செய்வோர்; one who serve’s temple.

     [கோவில்+ஆர்]

இவர்கள் பூணுல் அணிந்து தாங்கள் அமைத்த கோவிலில் தாங்களே பூசகராக இருப்பார்கள். கோவில் அடியார் எனவும் கூறப்படுவர். பெண்கள் கோவில் அம்மாமார் எனப்படுவர் (அபி.சிந்);.

கோவிலாழ்வார்

 கோவிலாழ்வார்āvilāḻvār, பெ.(n.)

கோயிலாழ்வார் பார்க்க;see Koyil-alvar.

     [கோவில் + ஆழ்வார்.]

கோவில்

கோவில்āvil, பெ.(n.)

   கடவுளின் உருவச் சிலையைக் கொண்டு எழுப்பப்படும் வழிபாட்டுக்கான கட்டடம்; temple.

   ம. கோவில்;தெ. கோவிய,

     [கோ தலைமை, கோ → கோவு = தலைமையான இறைவன் கோவு + இல் = கோவில். கோயில் பார்க்க.]

இறைவனுக்காக எழுப்பப்படும் ஆலயத்தைக் கோவில் என்பதே மரபிலக்கணத்திற்கு ஏற்றதாகும்.

     “இ, ஈ, ஐவழி யவ்வும்

ஏனை உயிர்வழி வவ்வும் ஏமுனிவ்விருமையும்

உயிர்வரின் உடம்படுமெய்யென்றாகும்.”

என்ற நன்னூல் இலக்கண நெறிக்கேற்பக் கோ + இல் = கோவில் எனப் புணர்வதே பொருத்தமாகும். தமிழர்களின் கோவில் கட்டடக்கலையைத் திராவிடக் கட்டடக்கலை என இக்காலத்தில் குறிப்பிடுகின்றனர். மிகப் பழங்காலத்தில் மரங்களின் கீழ்த் தெய்வ வழிபாடு நடந்தது. அதன் பிறகு சிறுகூரை அளவில் கோயில்கள் எழுந்தன. மண்ணாலும் செங்கல்லாலும் மரத்தாலும் கோவில்கள் அமைக்கப்பட்டன. கோச்செங்கட் சோழன் எண்டோள் ஈசற்கு எழுபது மாடங்கள் கட்டினான் எனக் கூறப்படுகின்றது. அதன்பிறகு பல்லவர் காலத்தில் குகைக் கோவில்களும் கற்கோவில்களும் உருவெடுத்தன. சோழர் காலத்திலும், பாண்டியர் காலத்திலும், விசயநகர மன்னர் காலத்திலும் கற்களால் ஆன பெருங்கோவில்கள் தமிழக வரலாற்றில் தலைமையிடத்தைப் பெற்றிருந்தன. திராவிடக் கட்டடக்கலை என்பது ஆறு வகைக் கோவில் அமைப்புகளைக் கொண்டது.

   1. குடிசையின் கூரை அமைப்பு;வட்டக் குடிசை அமைப்பு 2. சதுரக் கோவில் அமைப்பு

   3. நீள்சதுரக் கோவில் அமைப்பு

   4. நீண்ட அரை உருளை வடிவில் அமைந்த தூங்கானை மாடக் கோயில் அமைப்பு 5.நீழற்குடையமைப்பு

   6. கரக்கோவில் எனப்படும் தேர் அமைப்பு. இந்த ஆறு வகை அமைப்புகளின் அடிப்படையை மாமல்லபுரத்தில் உள்ள பாண்டவர் தேர்களில் காணக்கூடும். நீழற்குடையமைப்பு என்பது ஊர்வலங்களில் இடம்பெறும் தெய்வம் அல்லது பெருமக்கள், மணமக்கள் ஆகியோர் மீது வெயிலும் மழையும் படாதவண்ணம் நடுவில் தூக்கிப் பிடித்தும் இருபுறமும் தாழப்பிடித்தும் செல்லும் செயற்கைக் குடைத் துணியமைப்பைக் குறித்தது. நீழற் குடையமைப்பு, வட்டக்குடையமைப்பு எனவும் நீள்குடையமைப்பு எனவும் மேலும் இருவகைப்படும். வட்டக் குடையமைப்பில் விரித்த குடையமைப்பு, மடித்த குடையமைப்பு, கவிழ்த்த குடஅமைப்பு என்பவை உட்பிரிவுகளாகும். ஆலயங்களைச் கற்றி அமைந்துள்ள கற்றாலை மதில்களில் உயரமான நுழைவாயில் கோபுரங்கள் அமைப்பதும் கருவறைக்கு மேல் குடையாப்பு (விமானம்); அமைப்பதும் நூற்றுக்கால், ஆயிரங்கால் மண்ட பம் அமைப்பதும் கோவில்களில் திருக்குளங்களும், கொடிமரங்களும் அமைத்துக் கோவில் மரங்கள் (தலவிருட்சம்); வளர்ப்பதும் தென்னாட்டுக்கே உரிய வேலைப்பாடுகளும் திராவிடக் கட்டடக் கலையின் சிறப்பியல்புகளாகும். மரக்கோவில்களிலும், அரசர்களின் பெருந்தேர்களிலும் அமைந்த சிற்ப வேலைப்பாடுகள் அனைத்தும் கற்களால் கோவில் கட்டிய சுற்றச்சர்களால் முழுமையாகப் பின்பற்றப்பட்டிருப்பதைத் தமிழகக் கோவில்களில்

காணமுடிகிறது. மரவேலைப்பாடுகள் கல்வேலைப்பாடுகளாக வளர்ந்த வளர்ச்சியே திராவிடக் கட்டடக் கலையின்

தனித்தன்மையைக் காட்டுகிறது,

இந்தியக் கோவிற் கட்டடக்கலை வல்லுநர்கள் வட இந்தியக் கோவில் கட்டுமானங்களை நாகர அமைப்பு என்றும் நடுவண் இந்திய அமைப்புகளை வேசாக் கட்டு மானங்கள் என்றும் தென்னிந்தியக் கட்டுமானங்களைத் திராவிடக் கட்டுமானங்கள் என்றும் வகைப்படுத்தி யுள்ளனர். நாகரக் கட்டுமானம் ஆரியச் சார்புடையது. வேசாக் கட்டுமானம் வட நாட்டுத் தென்னாட்டுக் கட்டுமானங்களின் காலப்பாக அமைந்தது ஆரியர்கள் இலைக்குடில்களில் வாழ்ந்தவர்கள். செங்கற் கட்டடம் கூட்டத் தெரியாதவர்கள். ஆதலால்

வடநாட்டுக் கோவில் கட்டுமானத்தை ஆரியச் சார்புடையது என்று சொல்வது பொருந்தாது. நகரம் என்னும் சொல்லில் இருந்து பிறந்த ‘நாகா’ என்னும் சொல் வடநாட்டு வணிகர்கள் வளமாக வாழ்ந்த நகரத்து வீடுகளையே குறிக்கும். ஆதலால் ‘நாகா’க் கட்டுமானம் என்பது வடநாட்டு வணிகரின் வீட்டு அமைப்பு என்று கூறுவதே பொருந்தும்.

திராவிடக் கட்டடக்கலையில் சதுரக் கோவிலின் மேல்முகப்பில் அரைக்கோள வடிவில் அமைக்கப்படும் குடையாப்பு (விமானம்); வகைமையின் சதுரக்கோயில் அமைப்புமே வடநாட்டு ‘நாகர’க் கோவில் அமைப்பாக வளர்ந்திருக்கிறது. தேர்களிலும், தேர்ப் பாடைகளிலும் ஒன்றன்மேல் ஒன்றாக மூங்கிலால் அல்லது மரச்சட்டங்களால் அமைக்கப்படும் மேற்கட்டுகளும் உச்சிக் குடையும் வடநாட்டு ‘நாகரா’க் கட்டுமானத்தில் குடைமேல் குடை அமைந்த கோவில்களாகவும் மூடிய குடைபோன்று நெடுக்குப் பள்ளங்களோடு பூரி சகன்னாதர் கோவில்போல் தொங்கும் குடைவடிவில் அமைந்த அமைப்புகளும் தென்னாட்டுக் கோவில் வகைமையின் திரிபுற்ற வளர்ச்சியே எனலாம். தமிழர்களின் மிகத் தொன்மையான மரபுகளின் வண்ணம் நடுகல் வழிபாடே கோவில் வழிபாடாக வளர்ந்துள்ளது என்பதை வரலாறு காட்டுகிறது. நடுகல் வழிபாடே. வடபுலத்தில் அசோகர் காலத்தில் தூபி என்னும் துமிலிகளாக வளர்ந்தது. நடுகல் செதுக்கும் வழக்கம் அசோகனின் தரும சக்காத் தூணாகவும் அாசர்களின் வெற்றித்தூணாகவும் மாறின. குகையில் வாழ்ந்த முனிவர்களுக்காக அமைக்கப்பட்ட கற்குடைவுகள் கற்கோவில்கள் அமைக்க வழிகோலின. தமிழக அரசர்களின் தேர்களையும் அரண்மனை மற்றும் கோட்.டை கோபுரங்களையும் முற்றிலும் பின்பற்றி வளர்ந்தது திராவிடக் கட்டடக்கலை ஆகும். பெளத்த சமண சமயத்தினர் கலை நுணுக்கங்களில் கருத்துச் செலுத்தாதவராதலால் கட்டட மேற்கட்டு பாங்குகளை மட்டும் பின்பற்றி வடநாட்டு ‘நாகர’ கட்டடக் கலையை வளர்த்துக் கொண்டனர். ஆதலின் இந்தியக் கோவில் கட்டுமானத்தில் தமிழர்களின் கோவிற் கட்டுமானப் பாங்கே ஊடாடியுள்ளது என்பது உறுதிப்படுகிறது. வடமொழியில் ‘மயமதம்’ என்னும் கட்டடக் கலைநூல் மொழியாக்கம் செய்வதற்கு முன்பே தமிழில் ஏராளமான கட்டடக்கலை நூல்கள் இருந்தன என்பதை நூலறிபுலவர், நுணங்கு நூல் அறிந்தோர் என்னும் சொல்லாட்சிகள் நிறுவிக் காட்டுகின்றன. கோட்டை, கோபுரம், கோயில் பார்க்க. சங்ககாலத்தில் செங்கற் கோவில்கள் எழுந்தன. பல்லவர் காலத்தில் கற்கோவில் எழுந்தன. சோழர்காலத்தில் உயர்ந்த கருவறைக் கோவில்கள் எழுந்தன.

பாண்டியர் காலத்தில் நாற்புறக் கோபுரங்கள் அமைந்த கோவில்கள் எழுந்தன. விசயநகர அரசர் காலத்தில் ஆயிரங்கால், நூற்றுக்கால் மண்டபங்களும் நெடிய தூண்களில் அழகிய சிற்பங்களும், பிள்ளைக் கோவில்களும் எழுந்தன.

கோவில்கோட்டை

கோவில்கோட்டைāvilāṭṭai, பெ.(n.)

   கி.பி.1729-ல் இன்றைய புதுக்கோட்டை வட்டத்தின் பண்டைய ஆட்சி மாகாணப் பிரிவு; administrative name of Pudukkottai region.

     “நம்முடையதான குடிக்கானமு கோவில் கோட்டை மாகாணத்தைச் சேர்ந்த சிறுபனையூர்” (தஞ்.மரா.செ.5,61);.

     [கோவில் + கோட்டை.]

கோவில்திருமடந்தை

 கோவில்திருமடந்தைāviltirumaḍandai, பெ.(n.)

   வைப்பரிதாரம்; an orpiment artificially made, synthetic orpiment (சா.அக.);.

     [கோவில் + திருமடந்தை.]

கோவில்திருமாளம்

 கோவில்திருமாளம்āviltirumāḷam, பெ.(n.)

   திருவாரூர் மாவட்டத்துச் சிற்றூர்; a village in Tiruvarur Dt.

     [கோவில் + (திருவாளம்);திருமாளம்.]

கோவில்பட்டி

 கோவில்பட்டிāvilpaṭṭi, பெ.(n.)

   தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு ஊர்; a town in Thoothukudi Dt.

     [கோவில் + பட்டி.]

செண்பகவல்லி கோவில் அமைந்துள்ளமையால் இப் பெயர் பெற்றதாம்.

கோவில்வாசம் மறியல்

கோவில்வாசம் மறியல்āvilvācammaṟiyal, பெ.(n.)

   நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் கோவி லலுவலரை முன்னிட்டுக் கொண்டு நடத்தும் ஊர்க்கூட்டவகை (E.T.V,263);; a form of panchayat among the Nattukkottai Chetties, in which the temple-manager takes the lead, dist. fr. magattuväsal-mariyal.

     [கோவில் + வாசல் + மறியல்.]

கோவில்வீடு

கோவில்வீடுāvilvīṭu, பெ.(n.)

   1. வீட்டிலமைந்த குலதெய்வங்களின் கோவில் (G.Tp. D.I.91);; a private chapel or shrine.

   2. கோவிலுக்குக் கொடையாக விடப்பட்ட வீடு (இ.வ.);; house given as endowment to a temple.

     [கோவில் + வீடு.]

கோவில்வெண்ணி

 கோவில்வெண்ணிāvilveṇṇi, பெ.(n.)

   கரிகாலனைப் பாடிய வெண்ணிக் குயத்தியாரின் ஊர்; place of Vennikkuyattyár who praised Karikālān of Sangam poet.

     [கோவில் + வெண்ணி.]

கோவு

கோவு1āvu, பெ.(n.)

   1. ஆன், ஆவு, மாடு; cow.

   2. ஆவினம்; bovine species.

     [கோள் → கோ → கோவு.]

 கோவு2āvu, பெ.(n.)

   1. தலைமை; leadership.

   2. தலைவன்; leader, head.

   3. அரசன்; king.

   4. இறைவன்; God.

     [கோன் → கோ → கோவு.]

கோவுகந்தம்

 கோவுகந்தம்āvugandam, பெ.(n.)

   நச்சுப்பொருள் (யாழ்.அக.);; an arsenic.

     [கோவு + கந்தம்.]

கோவுரம்

கோவுரம்1āvuram, பெ.(n.)

   1. மாட்டுச்சாணம்; cowdung.

   2. எரு, உரம்; manure.

   3. குப்பை; rubbish.

மறுவ. கோப்பரம்.

ம. கோவுரம்,

     [கோ + உரம்.]

 கோவுரம்2āvuram, பெ.(n.)

   கோபுரம்; tower.

மறுவ கோவுரம்.

     [கோபுரம் → கோவுரம்.]

கோவூர்

 கோவூர்āvūr, பெ.(n.)

   காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் வட்டம் குன்றத்தூருக்கருகிலுள்ள ஓர் ஊர்; a village near Kundrattur in Känjipuram Dt.

கோவூரான் திருட குண்ணத்தூரான் தண்டம் கட்டினான் (பழ);.

     [கோ + ஊர்.]

கற்றுப்புற ஊர்கட்குத் தலைமையானதாக விளங்கியமையால் இப் பெயர் பெற்றிருக்கலாம்.

கோவூர்கிழார்

கோவூர்கிழார்āvūrkiḻār, பெ.(n.)

   கடைக்கழகப்புலவருள் ஒருவர் (புறநா.);; a celebrated poet of the

 last Sargam.

     [கோவூர் + கிழார்.]

இவர் புறநானூற்றில் 46, 68 ஆம் பாடல்களைப் பாடியுள்ளார். சிற்றூரின் நிலங்கள் அனைத்தும் ஒரு மாந்தனுக்கு உரிமைப்படின் அவ்வூர்ப்பெயருடன் கிழார் என்னும் அடை சேர்த்து வழங்குவது அக்கால மரபாகும். அவ் வடிப்படையில் கிழார் என்ற அடை சேர்ந்தது.

கோவெண்ணெய்

 கோவெண்ணெய்āveṇīey, பெ.(n.)

   மாட்டு வெண்ணெய்; butter from cow’s milk;

 cow’s butter (சா.அக.);.

     [கோ + வெண்ணெய்.]

கோவெனல்

கோவெனல்āveṉal, பெ.(n.)

   1. இரங்கற் குறிப்பு; onom. expr. of bewailing.

   2. பேரொலி செய்தற் குறிப்பு (உரி.நி.);; onom.expr. of making loud noise.

     [கோ + எனல்.]

கோவென்று

 கோவென்றுāveṉṟu, வி.எ. (adv.)

   வாய்விட்டுப் பலத்த சத்தத்துடன் அழுதல் முதலியன; bevailing.

கணவன் இறந்த செய்தியைக் கேட்டதும் கோவென்று அழுதாள்.

     [கோ+என்று.]

கோவேங்கைப் பெருங்கதவனார்

கோவேங்கைப் பெருங்கதவனார்āvēṅgaipperuṅgadavaṉār, பெ.(n.)

   கடைக்கழகப் புலவர்களில் ஒருவர்; a Sangam poet.

தொடராற் பெயர் பெற்ற புலவர். குறுந்தொகையின் 134ஆம் பாடலைப் பாடியவர்.

     [கோ + வேங்கை + பெருங்கதவனார்.]

கோவேறு கழுதை

 கோவேறு கழுதைāvēṟugaḻudai, பெ.(n.)

கமேரிய நாட்டு கலப்பினக் கழுதை

 a cross breeddonkey of Sumeria.

     [கோ[அரசன்]+ஏறு+கழுதை.]

கழுதைக்கும் குதிரைக்கும் பிறந்த கலப்பினக் கழுதை, குதிரை வலிமையும் கழுதையின் பொறுமையும் கொண்டது. கருவுறாது. குட்டி போடாது. ஆண் கழுதைக்கும் பெண் குதிரைக்கும் பிறந்தது. mபle என்றும் ஆண் குதிரைக்கும் பெண் கழு தைக்கும் பிறந்தது. Hinny எனவும் அழைக்கப்படும்.

     [P]

கோவேறுகழுதை

கோவேறுகழுதைāvēṟugaḻudai, பெ.(n.)

   கழுதைவகை (சிலப். 6:119, உரை);; mule, as the mount of a king.

   ம. கொவற்கழுத;க. கோநேரிகத்கெ,

     [கோ = அரசன், கோ + ஏறு + கழுதை, அரசர் ஏறும் ஊர்தி.]

கோவேள்

கோவேள்āvēḷ, பெ.(n.)

     “இருங்கோ வேட்களுஞ் செம்பு செய்ஞ்ஞரும்” (மணிமே.28:34);.

க. கோவ.

     [குய் = சுடுதல். குய் → கோ + வேள்.]

கோவை

கோவை1āvai, பெ.(n.)

கோவன்புத்தூர் பார்க்க;see kövan-puttur.

 கோவை2āvai, பெ.(n.)

அன்னவெட்டியென்னும் ஏனம்:

 a kind of metalic vessel for taking and serving rice.

     [கோறு → கோர் → கோர்வை (முகப்பது); → கோவை.]

 கோவை3āvai, பெ.(n.)

   1. கோக்கை; stringing. filling. arranging.

     “கோவையார்வடக் கொழுங்கவடு”(கம்பரா.வரைக்.1);

   2. வரிசை; series, succession, row.

   3. கோத்த வடம் (பிங்.);; string of ornamental beads for neck or waist.

   4. ஏற்பாடு; arrangement, scheme.

     “கோத்த கோவைநன் றாயினும்”(பாரத. சூது. 64);.

   5. அகப்பொருட் கோவை; a kind of love poem.

     “நற்றமிழ்க் கோவை யுரைசெய்த” (பிரமோத். கடவுள்.8);.

   6. பழையதொரு பொன் நாணயம். (I.M.P.N.A 594);; an ancient gold coin.

   7. கொடி வகை; a common creeper of the hedges.

     “கோவையங்கனிதே ரென்ன” (திருச்செந்.பு.8:56);.

   8. படர்கொடிவகை (பதார்த்த.421);; a climbing shrub.

   ம. கோவ;   தெ. க்ரோவ;து.கோபெ.

     [கோ → கோவை.]

கோவைக்கலித்துறை

கோவைக்கலித்துறைāvaikkalittuṟai, பெ.(n.)

கட்டளைக் கலித்துறை பார்க்க (வீரசோ. யாப். 18. உரை);: see kattalai-k-kali-t-turai.

     [கோவை + கலித்துறை.]

கோவைக்காய்

 கோவைக்காய்āvaikkāy, பெ.(n.)

கோவை பார்கக;see kõvai (சா.அக.);.

     [கோவை + காய்.]

கோவைக்காய்வற்றல்

 கோவைக்காய்வற்றல்āvaikkāyvaṟṟal, பெ.(n.)

   பச்சைக் கோவைக்காயை அறுத்துக் காயவைத்து எண்ணெயிலிட்டு வறுத்த பண்டம்; dried pieces of green caper which are sliced and fried in gingelly oil (சா.அக.);.

     [கோவை + காய் + வற்றல்.]

கோவைக்கிழங்கு

கோவைக்கிழங்குāvaikkiḻṅgu, பெ.(n.)

   1 கோவை1 பார்க்க;see kovai.

   2. கொல்லன் கோவைக்கிழங்கு; root of Brahminy kite caper.

   3. கோவை வள்ளிக்கிழங்கு; Goa potato;

 Goa yam (சா.அக.);.

     [கோவை + கிழங்கு.]

கோவைக்கீச்சான்

 கோவைக்கீச்சான்āvaikāccāṉ, பெ.(n.)

   கீச்சான் ; a kind of sea-fish.

     [கோவை + கீச்சான்.]

கோவைக்கீரை

 கோவைக்கீரைāvaikārai, பெ.(n.)

   கோவையிலை; leaves of Indian caper.

     [கோவை + கீரை.]

கோவைசியர்

 கோவைசியர்āvaisiyar, பெ.(n.)

   ஆநிரை புரந்து வாபம் வணிக வகையர்; a class of merchants whose professions were cattle raising and agriculture.

மறுவ. கோவணிகர்.

     [கோ + வைசியர் (வணிகர்);.]

வைசியன் என்னும் சொல் பலவிடங்களுக்குச் சென்று பொருள்களை விற்கும் வணிகனைக் குறித்தது. vis என்னும் வடமொழிச்சொல் புகுதலையும் குடியிருத்தலையும் குறிக்கும். உழவுத் தொழிலோடு கால்நடை மேய்த்து விற்கும் தொழில் கொண்டோர் கோவைசியர் என்றும் உழவுத் தொழிலும் வணிகமும் செய்தோர் பூவைசியர் என்றும் வணிகம்மட்டும் செய்தோர் தனவைசியர் என்றும் அறியப்பட்டனர். கோவணிகன் எனின் முற்றுந் தமிழாம்.

கோவைசூரி

 கோவைசூரிāvaicūri, பெ.(n.)

   மாட்டு வைசூரி; COW pox.

     [கோ + வைசூரி.]

கோவைச்சருக்கரை

 கோவைச்சருக்கரைāvaiccarukkarai, பெ.(n.)

   கோவாநாட்டுச் சருக்கரை; Goa sugar (சா.அக.);.

     [கோவை + சருக்கரை.]

கோவைத்தண்டு

 கோவைத்தண்டுāvaittaṇṭu, பெ.(n.)

   கோவைச்செடியின் தண்டு; leaf-stalk of indian caper (சா.அக.);.

     [கோவை + தண்டு.]

கோவைத்தியன்

 கோவைத்தியன்āvaittiyaṉ, பெ.(n.)

   கால்நடைமருத்துவர்; a veterinary doctor who has specialised in the treatment of cows (சா.அக.);.

மறுவ.. கோமருத்துவன்.

     [கோ + வைத்தியன்.]

கோமருத்துவன் எனின் முற்றுந்தமிழாம்.

கோவைத்துறை

 கோவைத்துறைāvaittuṟai, பெ.(n.)

   கோவை நூலில் அமைந்த அகப்பொருட்டுறை; theme of the stanzas in a Kovai poem.

களவியால் நடகும் ஒழுக்கத்தைக் கூறுவது.

     [கோவை + துறை.]

கோவைப்பழம்

 கோவைப்பழம்āvaippaḻm, பெ.(n.)

   கனிந்த சிவப்புக் கொவ்வைப்பழம்; red ripe caper fruit. It is eaten raw.

     [கோவை + பழம்.]

கோவையவரை

 கோவையவரைāvaiyavarai, பெ.(n.)

   முறுக்குப் பீன்சு; goa bean (சா.அக.);.

மறுவ. முருங்கை பீன்சு

     [கோவை+அவரை]

கோவையாணி

 கோவையாணிāvaiyāṇi, பெ.(n.)

   கைமரங்களை இணைக்கும் முளை (பிணை யலாணி); (வின்.);; pegs for jointing rafters together.

     [கோவை + ஆணி.]

கோவைவள்ளி

 கோவைவள்ளிāvaivaḷḷi, பெ.(n.)

   சிறுவள்ளிக் கிழங்கு; Goa yam;

 Goa potato (சா.அக.);.

     [கோவை + வள்ளி.]