செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை வெளியீடு
31 தொகுதி 12000 பக்கங்கள் கொண்ட பேரகரமுதலி


1

10838

2769

3111

538

3554

677

1093

620

189

1004

402

2
க்
1

8212
கா
2579
கி
564
கீ
222
கு
4598
கூ
780
கெ
615
கே
391
கை
1101
கொ
2417
கோ
1754
கௌ
110
ங்
1

2
ஙா
2
ஙி
1
ஙீ
1
ஙு
1
ஙூ
1
ஙெ
1
ஙே
1
ஙை
1
ஙொ
5
ஙோ
1
ஙௌ
1
ச்
1

5235
சா
1186
சி
2424
சீ
439
சு
1261
சூ
420
செ
1529
சே
470
சை
23
சொ
409
சோ
365
சௌ
1
ஞ்
1

15
ஞா
44
ஞி
3
ஞீ ஞு ஞூ ஞெ
34
ஞே
5
ஞை
2
ஞொ
3
ஞோ
2
ஞௌ
1
ட்
1

1
டா
1
டி
1
டீ
1
டு
1
டூ
1
டெ
2
டே
1
டை
1
டொ
1
டோ
1
டௌ
ண்
1

1
ணா
1
ணி
1
ணீ ணு
1
ணூ
1
ணெ
2
ணே
1
ணை
1
ணொ
1
ணோ
1
ணௌ
த்
3113
தா
1530
தி
2203
தீ
393
து
1238
தூ
411
தெ
694
தே
856
தை
39
தொ
878
தோ
459
தௌ
ந்
1

2789
நா
204
நி
1860
நீ
1161
நு
14
நூ
18
நெ
892
நே
318
நை
89
நொ
210
நோ
159
நௌ
2
ப்
1

4560
பா
1824
பி
492
பீ
25
பு
2224
பூ
1133
பெ
1064
பே
483
பை
127
பொ
1218
போ
478
பௌ
2
ம்
4760
மா
1422
மி
535
மீ
268
மு
3016
மூ
949
மெ
396
மே
751
மை
152
மொ
284
மோ
242
மௌ
ய்
1

119
யா
426
யி
1
யீ
1
யு
46
யூ
20
யெ
9
யே
1
யை
1
யொ
1
யோ
98
யௌ
1
ர்
87
ரா
107
ரி
11
ரீ
7
ரு
24
ரூ
20
ரெ
6
ரே
16
ரை
10
ரொ
8
ரோ
23
ரௌ
ல்
117
லா
44
லி
8
லீ
5
லு
8
லூ
3
லெ
13
லே
21
லை லொ
20
லோ
63
லௌ
3
வ்
1

3800
வா
1329
வி
1638
வீ
515
வு
1
வூ
1
வெ
2164
வே
834
வை
229
வொ
1
வோ
3
வௌ
ழ்
1

1
ழா
1
ழி
1
ழீ
1
ழு
6
ழூ
1
ழெ
1
ழே ழை ழொ ழோ
1
ழௌ
ள்
1

2
ளா
1
ளி
1
ளீ
1
ளு
1
ளூ
1
ளெ
2
ளே
1
ளை
1
ளொ
1
ளோ
1
ளௌ
ற்
1

1
றா
1
றி
1
றீ
1
று
1
றூ
1
றெ
2
றே
1
றை
1
றொ
1
றோ
1
றௌ
ன்
1

1
னா
1
னி
1
னீ
1
னு
1
னூ
1
னெ
2
னே
1
னை னொ
1
னோ
1
னௌ
தலைசொல் பொருள்
கொ

 கொ ko, பெ.(n.)

   கொகரம்; தமிழ் நெடுங்கணக்கில் அடியண்ண எடுத்தொலிப்பில்லா வல்லின முதல்மெய்யும் (க்);, பத்தாம் உயிரெழுத்தாகிய அரையங்காப்பு இதழ் குவிவுப் பின்னண்ண இடை உயிர்க்குறிலாகிய ‘ஒ’கரமும் சேர்ந்து பிறந்த உயிர்மெய்யெழுத்து; the syllable formed by adding the back middle lax rounded vowel’o’, to the first consonant of Tamil alphabet, velar voiceless stop ‘k’,

     [க் + ஒ – கொ.]

கொகராஞ்சி

 கொகராஞ்சி gogarāñji, பெ.(n.)

   கணவாய் மீனின் முதுகு ஓடு (பரத. கலைச்.சொ.அக.);; back of the skeleton of kanava fish.

கொகுடி

கொகுடி goguḍi, பெ.(n.)

   முல்லைக்கொடிவகை; a variety of jasmine creeper.

     ”குவிமுகையன கொகுடி” (சூளா. தூது.4);.

 Persi. yāsemin,yāsmin; E.jasmine; M.Fr.jasmin; Cotta.jessemin; It. gesmino; Sp.jazmin; Fr.yasmin.

     [கொக்கு → கொக்குள் → கொக்குளி → கொகுளி → கொகுடி.]

கொகுடிக்கோயில்

 கொகுடிக்கோயில் goguḍigāyil, பெ.(n.)

   கோயில் கூடக (விமான); அமைப்புகளுள் ஒன்று; a kind of shrine in temple.

     [கொகுடி + கோயில். கொகுடிக்கோயில் (கொகுடி என்னும் முல்லைக் கொடியின் சிற்ப வேலைப்பாடு அமைந்த கோயில்);.]

கொகொதத்தல்

 கொகொதத்தல் gogodaddal, தொ.பெ. (vbl.n.)

   சிரங்கு,புண் அழிதல்; putrefaction of itch, wounds, injuries, sores etc. (சா.அக.);.

     [கொத + கொதத்தல்.]

கொக்கச்சியன்கல்

 கொக்கச்சியன்கல் kokkacciyaṉkal, பெ. (n.)

   தொண்டை மண்டலத்தில் பொன்னை நிறுப்பதற்குப் பயன்படுத்திய எடைக் கல்; a weight measure prevalent in the {Toņɖai maņdalam.}

     [சொக்கச்சீயன் → சொக்கச்சியம் + கல்]

கொக்கட்டி

கொக்கட்டி1 kokkaṭṭi, பெ.(n.)

   மஞ்சள் நாங்குப்பூடு; xanthochymus

     [கொக்கு → கொக்கட்டி.]

 கொக்கட்டி2 kokkaṭṭi, பெ.(n.)

   குறுகிவளைந்த பனங்கிழங்கு (யாழ்ப்.);; short and slightly crooked plamyra roots.

மறுவ: குறண்டற் பனங்கிழங்கு.

     [கொள் → கொட்கு → கொக்கு. கொக்கட்டி (குறுகி); வளைந்த பனங்கிழங்கு (வட.வர.6);]

கொக்கட்டிச்சோலை

 கொக்கட்டிச்சோலை kokkaṭṭiccōlai, பெ.(n.)

   ஈழவளநாட்டில் மட்டக்களப்பிலுள்ள ஓர் ஊர்; a village at Mattakalappu in Sri Lanka.

     [கொக்கட்டி + சோலை.]

கொக்கரக்கோ

கொக்கரக்கோ kokkarakā, பெ.(n.)

   1. சேவல் எழுப்பும் உரத்த சத்தம்; cock-adoodle-doo.

   2. முருகக் கடவுள்; Murugan.

     [கொக்கர் + கோ ஒலிக்குறிப்பு]

கொக்கரசன்பேட்டை

 கொக்கரசன்பேட்டை kokkarasaṉpēṭṭai, பெ.(n.)

   கடலூர் மாவட்டத்துச் சிற்றுார்; a willage in Cuddalore Dt.

     [கொக்கரசன் + பேட்டை.]

கொக்கரந்தாங்கல்

 கொக்கரந்தாங்கல் kokkarandāṅgal, பெ.(n.)

   காஞ்சிபுரம் மாவட்டத்துச் சிற்றுார்; a willage in Kānjipuram Dt.

     [கொக்கரன் + தாங்கல் எரி.]

கொக்கரன்கோட்டை

 கொக்கரன்கோட்டை kokkaraṉāṭṭai, பெ.(n.)

   இராமநாதபுர மாவட்டத்துச் சிற்றுர்; a willage in Ramanadapuram Dt.

     [கொக்கரன் + கோட்டை.]

கொக்கரி

கொக்கரி2 kokkari, பெ.(n.)

   இன்னிய (வாச்சிய); வகை; a kind of musical instrument.

     “கொக்கரி கிடுபிடி கொட்ட” (வள்ளி. கதை. Ms.);.

     [கெக்கல் (முழங்குதல்); → கொக்கரி.]

 கொக்கரி3 kokkari, பெ.(n.)

   முழக்கம்; shouting, vaunting

     “குருதி குடிகாளி கொக்கரிசெய்” (திருப்பு. 179.);.

     [கொக் + கரி → கொக்கரி’.]

 கொக்கரி4 kokkari, பெ.(n.)

   முன் வளைந்த கொம்புள்ள மாடு; the cow which has horn like hook,

     [கொள்கு → கொட்கு → கொக்கு + அரி.]

கொக்கரி’-த்தல்

 அஅன்ன ஆவன்னா aaṉṉaāvaṉṉā, பெ. (n.)

   அரிவரி யென்னும் தமிழ் வண்ணமாலை (குறுங்கணக்கும் நெடுங்கணக்கும்);;  Tamil Alphabet.

   எழுத்துகளைக் கல்லா மக்கள், சிறப்பாகச் சிறுவர் சிறுமியர், எளிதாக ஒலித்துக் கற்கும் பொருட்டு, பண்டைத் தொடக்கப்பள்ளி யாசிரியர் உயிரும் உயிர்மெய்யுமாகிய இருவகைக் குறிலுக்கும்’அன்ன’ச் சாரியையும், இருவகை நெடிலுக்கும் அன்னா’ச் சாரியையும் ஏற்படுத்தினர்;     ‘அஆ’ என்னும் ஈரெழுத்தும் தமிழ் வண்ணமாலையின் முதலெழுத்துகளாதலின், அவை முதற்குறிப்பாகி, அம் முதற்குறிப்பே’அஅன்ன ஆவன்னா’ என்று வண்ணமாலைப் பெயராயிற்று. இது ‘alpha’, ‘beta’ என்னும் கிரேக்க இரு முதலெழுத்துகளும் சேர்ந்து”alphabetum’ என்று இலத்தீனிலும், ‘alphabet’ என்று ஆங்கிலத்திலும், வண்ணமாலைப் பெயராக வழங்குவது போன்றது;

   அ, இ, க, கி என்று ஒரு மாத்திரை யொலிக்குங்குறிலெழுத்துகளை விட்டொலிப்பது, சிறுபிள்ளைகட்குச் சற்று வருத்தமுற மூச்சு வாங்குவதால்,’அஅன்ன’ என்பது”ஆனா” என்றும் இஅன்ன என்பது’ஈனா’ என்றும், மாணாக்க நிலையிலும் பின்னும் ஒலிக்கப்பட்டுவந்தன. இவ்வொலிப்புமுறை குறில்களின் உண்மையான ஒலியளவை உடனே தெரிந்துகொள்ளத் தடையாயிருந்தமையின், இந்நூற்றாண்டுத் தொடக்கத்தில் அரசியற் கல்வித்துறையறிஞர், சாரியையின்றி ஒலிநூன் முறைப்படி அ, ஆ, இ, ஈ,… என்று ஒலித்துப் பயிலும் முறையைப் புகுத்திவிட்டனர். அதனால், இன்று ‘அஆ’ என்பது வண்ணமாலைப் பெயராக வழங்கி வருகின்றது. இது புணர்ச்சியில்’அவ்வா’ என்றாகும்;

கொக்கரிகம்

 கொக்கரிகம் goggarigam, பெ.(n.)

   எழுத்தாணிப்பூடு(சா.அக.);; style plant.

மறுவ. எழுத்தாணிக்கூர், எழுத்தாணிப் பச்சிலை, எழுத்தாணிப் பச்சை, கடற்கொழுப்பை.

     [கொக்கள் → கொக்கலிகம் → கொக்கரிகம்.]

கொக்கரிக் கொம்பு

 கொக்கரிக் கொம்பு kokkarikkombu, பெ. (n.)

ஒன்று நேராகவும் மற்றொன்று வளைந்தும் இருக்கும் மாட்டுக் கொம்பு வகை:

 horn variety of cow.

     [கொக்கரை-கொம்பு]

கொக்கரிப்பு

கொக்கரிப்பு kokkarippu, பெ.(n.)

   1. தற்சிறப்பு:

 Vociferation

என் வீழ்ச்சியைப் பார்த்துக் கொக்கரிக்கிறான் (உ.வ.);.

   2. பறவையொலி:

 cackle

     [கொக்கரி → கொக்கரிப்பு.]

கொக்கரை

கொக்கரை kokkarai, பெ.(n.)

   1. வளைவு (இ.வ.);:

 crookedness, deformity.

   2. வைக்கோலெடுக்குங் கருவி (இ.வ.);; rake.

   3. வலம்புரிச் சங்கு (திவா.);; chank with spiral turning to the right.

   4. இசைக் கருவி வகை; a kind of musical instrument.

     “தாளமலி கொக்கரை” (தேவா 1141:7);.

   5. வில் (அக.நி.);; bow.

   6.பாம்பு (அக.நி.);; snake.

   7. வலை (அக.நி.);; Net.

   8. தாழை, பனை, தெங்கு முதலியவற்றின் வற்றியுலர்ந்த இளமடல் (யாழ்ப்.);; Dried integument of the palmyra flower.

மறுவ. கொக்கறை.

ம. கொக்கர.

     [கொள் → கொட்கு. கொட்குதல் சுற்றுதல், திரிதல். கொட்கு → கொக்கி. கொட்கு → கொக்கு வளைந்த கழுத்துள்ள பறவை. கொட்கு → கொக்கரை வளைவு.]

கொக்கரையுடும்பு

 கொக்கரையுடும்பு kokkaraiyuḍumbu, பெ.(n.)

   வற்றிய மடல் போன்ற உருவுடைய உடும்பு; lizard of the varanus species, as resembling a dried integument.

     [கொக்கரை + உடும்பு.]

கொக்கறை

 கொக்கறை kokkaṟai, பெ.(n.)

   பனை, தெங்கு முதலியவற்றின் வற்றியுலர்ந்த இளமடல்; dried integument of the palmyra flower (செ.அக.);.

     [குங்கு – குக்கு – கொக்கு – கொக்கறை]

கொக்கலகு

கொக்கலகு goggalagu, பெ.(n.)

   1. வளைந்த மூக்கு; a curved hook..

   2. கொக்கு மூக்கு; beak of crane

     [கொக்கு + அலகு.]

கொக்கல்

 கொக்கல் kokkal, பெ.(n.)

   வளைவு; Curvature.

     [கொள் → கொட்கு → கொக்கு → கொக்கல்.]

 கொக்கல் kokkal, பெ.(n.)

   இருமல்; cough.

     [கக்கு-கொக்கு-கொக்கல்]

கொக்களப்பி

 கொக்களப்பி kokkaḷappi, பெ.(n.)

   மதுரை மாவட்டத்துச் சிற்றூர்; a village in Madurai Dt.

     [கொக்கு + ஆளப்பி o ஒருகா. சங்கஞ்செடி மிகுந்த நிலப்பகுதியாகலாம்.

கொக்கவாலி

 கொக்கவாலி kokkavāli, பெ.(n.)

   புளியாத்தி; sour mountain ebony

     [கொக்கு + வாலி – கொக்குவாலி → கொக்கவாலி.]

கொக்காகை

 கொக்காகை kokkākai, பெ.(n.)

சங்கஞ்செடி:

 mistletoe berry thorn

     [கொக்கு + (சாகை); ஆகை.]

கொக்காடி

 கொக்காடி kokkāṭi, பெ.(n.)

   இராமநாதபுர மாவட்டத்துச் சிற்றுார்; a village in Ramanadapuram Dt.

     [கொக்கு + பாடி – கொக்குப்பாடி → கொக்காடி.]

கொக்காட்டம்

கொக்காட்டம் kokkāṭṭam, பெ.(n.)

   1. கொக்கரித்து ஆடும் ஆட்டம்:

 merriment with dance.

   2. மிகுதியும் ஆட்டிப் படைக்கும் இயல்பு:

 arrogance.

அவன் கொக்காட்டம் போடுவது ஒன்றும் சரியில்லை (நெல்லை.);.

     [கொக்கரி + ஆட்டம் – கொக்கரியாட்டம் → கொக்காட்டம்.]

கொக்காட்டல்

 கொக்காட்டல் kokkāṭṭal, பெ.(n.)

   சீராட்டுகை (யாழ்.அக.);; fondling.

     [கொக்கரி + ஆட்டல் – கொக்கரியாட்டல் → கொக்காட்டல்.]

 கொக்காட்டல் kokkāṭṭal, பெ.(n.)

   ஆட்டிப் படைத்தல்; to harass, annoy.

     [கொக்கி + ஆட்டல் – கொக்காட்டல்.]

கொக்காட்டி

 கொக்காட்டி kokkāṭṭi, பெ.(n.)

   சிவகங்கை மாவட்டத்துச் சிற்றூர்; a village in Sivagangai Dt.

     [கொக்கு + பட்டி- கொக்குப்பட்டி → கொக்கட்டி → கொக்காட்டி.]

கொக்கான்

கொக்கான்1 kokkāṉ, பெ.(n.)

   ஒரு மரம்; a tree

     [கொக்கு → கொக்கான்.]

 கொக்கான்2 kokkāṉ, பெ.(n.)

   ஏழு கூழாங் கற்களைக் கொண்டு ஆடும் மகளிர் விளையாட்டு வகை (யாழ்ப்.);; a game played by girls with seven pebbles.

     [கொக்கு → கொக்கான்.]

 கொக்கான் kokkāṉ, பெ.(n.)

   நாற்று நடவில் இருவர் நடும் அளவு; work of two persons in transplantation.

     [கொக்கு-கொக்கான்]

கொக்கான்அடி-த்தல்

 கொக்கான்அடி-த்தல் kokkāṉaḍittal, செ.கு.வி(v.i.)

   நடவு நடுபவர்களுக்கு நடவேண்டிபகுதியைக் கால் தப்படியால் நடந்து அளவுகாட்டுதல்; to Show the measurement of area to be transplanted in the paddyfield.

     [கொக்கான்+அடி]

கொக்கான்வெட்டு-தல்

கொக்கான்வெட்டு-தல் kokkāṉveṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

கொக்கான் விளையாடுதல் (வின்.);:

 to play with pebbles, as girls.

     [கொக்கான் + வெட்டு-.]

கொக்காமணி

 கொக்காமணி kokkāmaṇi, பெ.(n.)

   மணிவகை; a kind of bead,

     “வக்காமணி கொக்காமணி வாங்கலையோ ஆயாளோ” (நாட்டுப்.);.

     [கொக்குமணி → கொக்காமணி.]

கொக்காம்பாளை

 கொக்காம்பாளை kokkāmbāḷai, பெ.(n.)

   ஒர் பூடு; an unknown shrub

     [கொக்கு + ஆம் + பாளை.]

கொக்காரப்பட்டி

 கொக்காரப்பட்டி kokkārappaṭṭi, பெ.(n.)

   தருமபுரி மாவட்டத்துச் சிற்றூர்; a village in Dharmapuri Dt.

     [கொக்கல் வளைவு, வளைவான மேடு. கொக்கல் + பட்டி – கொக்கல்பட்டி → கொக்கரப்பட்டி → கொக்காரப்பட்டி.]

கொக்காரம்

 கொக்காரம் kokkāram, பெ.(n.)

   ஓர் இசைக் கருவி; a musical instrument.

     [கொங்கு-கொக்கு-கொக்காரம்]

காணிக்காரர் இசைக்கருவி.

கொக்கி

கொக்கி1 kokki, பெ.(n.)

   1.தேள்கெண்டை; scorpion goby.

   2. உளுவை; river goby

     [கொள்→ கொட்கு. கொட்குதல் சுற்றுதல், திரிதல் கொட்கு → கொக்கு வளைந்த கழுத்துள்ள நீர்ப்பறவை. கொட்கி → கொக்கி வளைந்த மாட்டி (வ.மொ.வ.6);.]

 கொக்கி2 kokki, பெ.(n.)

   1. கொளவி; hook, clasp, as of a necklace or ear ring.

   2. துறட்டி நுனியிற் செருகும் இருப்புக்கருவி (இ.வ.);; hooked knife attached to a long bamboo, for cutting leaves and twigs.

   3. சுமைதூக்கப் பயன்படுத்தும் கூரிய வளைவான கம்பி பொருத்தப்பட்ட கருவி; a hook. like device with a handle to hold.

   4. கேள்விக்குறி; question mark.

புரியாத இடங்களில் கொக்கி போட்டுவை.

   5. தையல் எந்திரத்தில் நூலினை இழுத்துவிடும் கொழுப்போல் வளைந்துள்ள பாகம்; the hook that pulls the thread in a sewing machine.

 A.S. hoe hooc; Du. hock, haak; Ice. Haki; Gr. Haken; Ohgr. Hako; Lowgr, hake; E. hook; Fin. kokka (hook);, Est. kook; Hung. Kajko; Mong. glygle; Jap. Kagi. Indones. Kaitān; ME.kok:Ice. haki; Dan. hage; Swed, hake Gr.haken; A.S. haca.

ம. கொக்கி; க. கொக்கெ, கொக்கி, கொங்கி; தெ. கொக்கி, கொக்கெமு; து. கொக்கெ, கொங்கி; கோத. கொக்ய; துட. க்விக்ய்; பட. கொக்கி; நா. கொங்கி (வளைந்த குந்தாலி);.

     [கொள்கு → கொட்கு → கொட்கி → கொக்கி.]

கொக்கிக்கயிறு

 கொக்கிக்கயிறு kokkikkayiṟu, பெ.(n.)

   தூண்டில்முள் கோக்கப்பட்ட நீளக் கயிறு; a long rope attached with a fish hook.

     [கொள் → கொள்கு → கொக்கி + கயிறு.]

கொக்கிக்கல்

 கொக்கிக்கல் kokkikkal, பெ.(n.)

   தாழ்வாரம் கட்டுவதற்காகப் பயன்படுத்தும் வளைந்த கல்; a curved stone use in the construction of a verandah.

     [கொக்கி + கல்.]

கொக்கிதேவர்

 கொக்கிதேவர் kokkitēvar, பெ.(n.)

   சிவனிய (வீரசைவ); அடியவர்களில் ஒருவர்; a devotee of Lingayat sect of saivaism.

     [கொக்கி+தேவர்]

இவர் நந்தவனம் வைத்திருந்தார். அல்லமர் இவரிடம் வந்து நந்தவனத்தின் ஒருபுறம் தோண்டக் கட்டளையிட்டு அதில் ஒரு மனநோன்பி(யோகி); இருப்ப காட்டினார். அவரிடம் இவர் குருவம் (தீட்சை); பெற்றார் (அபி.சிந்);.

கொக்கித்தாழ்ப்பாள்

 கொக்கித்தாழ்ப்பாள் kokkittāḻppāḷ,    தாழ்ப்பாள் வகைகளிலொன்று; a kind of latch.

     [கொக்கி + தாழ்ப்பாள்.]

கொக்கிப்பல்

 கொக்கிப்பல் kokkippal, பெ.(n.)

   மாடுகளுக்கு வளைந்து முளைத்திருக்கும் பற்கள்; bent growth of teeth in cows.

     [கொக்கி+பல்]

கொக்கிப்புழு

 கொக்கிப்புழு kokkippuḻu, பெ.(n.)

குடலில் காணப்படும் நுண்ணுயிரி வகை:

 hook-worm in Intestine.

ம. கொக்கப்புழு, கொக்கோப்புழு: க. கொக்கெகுளு: தெ. கொக்கெபுறகு,

     [கொக்கி + புழு.]

கொக்கிப்பூட்டு

 கொக்கிப்பூட்டு kokkippūṭṭu, பெ.(n.)

   அணிகலனிலமைந்த பூட்டு (வின்.);; lock of a clasp in an ornament.

     [கொக்கி + பூட்டு.]

கொக்கிமுள்ளு

 கொக்கிமுள்ளு kokkimuḷḷu, பெ.(n.)

   காட்டு முள்ளுக்கத்தரி.(L.);; hedge caper,

     [கொக்கி + முள்ளு.]

கொக்கியெலும்பு

 கொக்கியெலும்பு kokkiyelumbu, பெ.(n.)

   மணிக்கட்டின் எலும்பு; bone of the wrist.

     [கொக்கி + எலும்பு.]

கொக்கிறகு

கொக்கிறகு goggiṟagu, பெ.(n.)

   வெள்ளை மந்தாரை (புட்ப.5);; taper-pointed mountain ebony.

     [கொக்கு + இறகு.]

வடிவிலும் நிறத்திலும் அளவிலும் கொக்கிறகை ஒத்திருப்பதால் அப் பெயர் பெற்றது (தமிழர் மதம்.87);.

கொக்கிறகு மந்தாரை

கொக்கிறகு மந்தாரை goggiṟagumandārai, பெ.(n.)

   கொக்குமந்தாரை (M.M. 521.);; Taper – pointed mountain ebony.

     [கொக்கு + இறகு + மந்தாரை.]

கொக்கிறகுப்பூ

 கொக்கிறகுப்பூ kokkiṟakuppū, பெ.(n.)

   வெள்ளை மந்தாரை; shrub by white mountain ebony; crane’s feather, Bauhinia acuminata (சா.அக.);.

     [கொக்கு+இறகு+பூ]

கொக்கிலிமேடு

 கொக்கிலிமேடு kokkilimēṭu, பெ.(n.)

   காஞ்சிபுரம் மாவட்டத்துச் சிற்றூர்; a village in Kanjipuram Dt.

     [கொக்கில் → கொக்கிலி + மேடு.]

கொக்கிலை

 கொக்கிலை kokkilai, பெ.(n.)

   கொக்கு மூக்கைப் போன்ற இலைப்பூடு; lance leaved wind

     [கொக்கு + இலை.]

கொக்கில்

 கொக்கில் kokkil, பெ.(n.)

   அணிகலனில் அமைந்துள்ள கொக்குவாய்; hook of a clasp.

     [கொக்கு → கொக்கி → கொக்கில்.]

கொக்கிவாய்

கொக்கிவாய் kokkivāy, பெ.(n.)

கொக்குவாய் பார்க்க;see kokku-vay.

     “கொக்கிவாய் முத்தாரமாகச் செய்து”(சிலப். 6.101. அரும்.);.

     [கொக்கி + வாய்.]

கொக்கு

கொக்கு1 kokku, பெ.(n.)

   1 பறவைவகை; common crane.

     “பைங்காற் கொக்கின்” (புறநா. 342);

   2. கரிய மூக்குடைய கொக்குவகை; “சித்திரத்துக் கொக்கே ரத்தினத்தைக் கக்கு” (பழ.);.

 Stork.

   3. நெல்லுண்ணும் கொக்குவகை; paddy-bird.

மறுவ. மடையான்.

ம.கொக்கு; க. கொக்கரெ, கொக்கு; தெ. கொக்கர கொங்க, கொக்கராயி, து. கொர்ங்கு; எரு.

கொக்கு; துட.

கொக்கு

கொச்க்; கோண். கொருகு; கூ. கொக்கொ; கொலா. கொங்க; பர். கொக்கல்; பிரா. காகூர்.

 Pkt.kokkai; skt. Kanka; Sinh. koka. Fin. kokko, kotka (eagle);; Est. kotkas, kokas; komi. kuc.

     [கொள் → கொட்கு → கொட்குதல் சுற்றுதல், திரிதல். கொட்கு → கொக்கு வளைந்த கழுத்துள்ள நீர்ப்பறவை. (வ.மொ.வ.6);.]

வகைகள் :

   1. குருட்டுக் கொக்கு.

   2. தேசிக் கொக்கு.

   3. சவதிக் கொக்கு.

   4. வெண்கழுத்தி.

   5. பறைக்கொக்கு

   6. கருமூக்கன்.

   7. பிணந்தின்னிக் கொக்கு.

   8. பூங்கொக்கு

   9.கரண்டி மூக்கன்.

   10. செங்காலன்.

 கொக்கு2 kokku, பெ.(n.)

   மாமரம்; Mango tree.

     ‘துளு மாமரத்தைக் கொக்கென்பது’ (தொல். சொல். 400, உரை);.

து. கொக்கு.

     [குளகு (அழகிய இளந்தழை); → குக்கு → கொக்கு.]

 கொக்கு3 kokku, பெ.(n.)

   செந்நாய் (பிங்.);; wild dog.

   தெ. குக்க; Skt. Kðka.

     [குக்கல் → கொக்கு.]

 கொக்கு4 kokku, பெ.(n.)

   குதிரை(பிங்.);; Horse.

     [கொங்கு → கொக்கு.]

 கொக்கு5 kokku, பெ.(n.)

   1. குருகு (மூல); விண்மீன்; mula naksatra.

     “கொக்குச்சோதி” (விதான குணாகுண.12);,

   2. வெண்மை; White.

     [குல் → குக்கு → கொக்கு. கொக்கு. வளைந்த அல்லது வட்டமான ஒடுபாதையில் ஒட்டப் பயிற்சி பெற்ற குதிரை.]

 கொக்கு6 kokku, பெ.(n.)

   பறவையின் அலகு; beak or bill of a bird.

ம., க.கொக்கு; து. கொக்கு, கொக்காயி, கோகாயி; குட. கொக்கி.

     [கொட்கு → கொக்கு.]

கொக்குக்கல்

 கொக்குக்கல் kokkukkal, பெ.(n.)

   சிலைமான் கல், மாந்தளிர்க்கல் (வின்.);; agate.

     [குல் → குக்கு → கொக்கு.]

கொக்குக்காலன்

 கொக்குக்காலன் kokkukkālaṉ, பெ.(n.)

   நீண்ட கால்களையுடையவன்; one with an abnormally long leg

     [கொக்கு + காலன். கால் + அன் காலன். ‘அன்’ ஆ. பா. று.]

கொக்குக்காலி

கொக்குக்காலி kokkukkāli, பெ.(n.)

   1. மாமரம்: mangotree.

   2. செந்நாய்; Red wild dog.

   3. குதிரை; Horse

     [கொக்கு + காலி.]

கொக்குக்கால்

கொக்குக்கால் kokkukkāl, பெ.(n.)

   1. ஒரு நீர்ப்பூண்டு; an aquatic plant.

   2. நீண்ட கால்; long leg

     [கொக்கு + கால்]

கொக்குச்சத்தகம்

 கொக்குச்சத்தகம் gogguccattagam, பெ.(n.)

அலக்கரிவாள்:

 hook-shaped blade attached to a pole.

     [கொக்கு (வளைவு); + அரிவாள்.]

கொக்குச்சம்பா

 கொக்குச்சம்பா kokkuccambā, பெ.(n.)

   சம்பா நெல்வகை; a kind of cambá paddy.

     [கொக்கு – சம்பா.]

கொக்குச்சாறு

 கொக்குச்சாறு kokkuccāṟu, பெ.(n.)

   கொக்குக் கறியினின்று அணியம் செய்த சாறு;  soup extracted from the flesh of heron

     [கொக்குச – சாறு.]

கொக்குடம்

 கொக்குடம் kokkuḍam, பெ.(n.)

   நச்சுவித்துகளைக் கொண்ட மரம்; strychnos. nux, vomica, tree

மறுவ. எல்லாம்.

     [கொக்குள் → கொக்குளம் → கொக்குடம்.]

கொக்குநடை

 கொக்குநடை kokkunaḍai, பெ.(n.)

கொக்கு நடப்பதுபோல் அசைந்தசைந்து நடக்கும் நடை:

 walk as of a crane.

     [கொக்கு – நடை.]

கொக்குநீர்

 கொக்குநீர் kokkunīr, பெ.(n.)

   கழுதையின் சிறுநீர்; ass’s urine

     [கொக்கு – நீர்.]

கொக்குநோய்

 கொக்குநோய் kokkunōy, பெ.(n.)

   ஆட்டுக்குக் காணும் எரி நோய்; a disease among sheep, highly infectious

     [கொக்கு + நோய்.]

கொக்குநோவு

கொக்குநோவு kokkunōvu, பெ.(n.)

   1.நெல்நோய் வகை; a blight affecting paddy.

   2. ஆடுகட்குக் காணும் எரிநோவு (M.C.M. D.249.);; a contagious disease among sheep.

   3. கோழிகளுக்கு ஏற்படும் கழிச்சல் நோய்; a contagious disease among hens.

     [கொக்கு + நோவு.]

கொக்குப்பதரி

 கொக்குப்பதரி kokkuppadari, பெ.(n.)

   இலந்தை; jujube tree

     [கொக்கு + (புதரி); பதரி.]

கொக்குமட்டி

கொக்குமட்டி kokkumaṭṭi, பெ.(n.)

   1.சிப்பிவகை (வின்.);; cockle.

   2. சங்கு; conch.

   3. நத்தைக் கூடு; cockle shell.

     [கொக்கு + மட்டி.]

கொக்குமணி

கொக்குமணி kokkumaṇi, பெ.(n.)

   கொக்கா மணி; a kind of bead.

     “வக்காமணி கொக்கு மணிகளையும்” (மதி. கள. II, 139);.

     [கொக்கு + மணி.]

கொக்குமந்தாரை

கொக்குமந்தாரை kokkumandārai, பெ.(n.)

   1.வெள்ளை மந்தாரை; taper pointed mountain ebony.

   2. புடவை வகை (கொ.வ.);; a kind of woman’s cloth.

ம. கொக்குமந்தாரம், கொங்ஙுமந்தாரம்.

     [கொக்கு + மந்தாரை.]

கொக்குமரம்

 கொக்குமரம் kokkumaram, பெ.(n.)

   மாமரம்; mango tree (சா.அக.);.

     [கொக்கு+மரம்]

கொக்குமாநிறம்

 கொக்குமாநிறம் kokkumāniṟam, பெ.(n.)

   சிலைமான் கல்; a kind of stone, Agate (சா.அக.);.

     [கொக்கு+மா+நிறம்]

கொக்குமீன்

கொக்குமீன் kokkumīṉ, பெ.(n.)

   ஊசிக்கழுத்தி மீன் (M.M.203.);; long-nosed fish.

     [கொக்கு + மீன்.]

     [P]

கொக்குமுக்காடு

கொக்குமுக்காடு kokkumukkāṭu, பெ.(n.)

   1. கொக்கைப் போலக் கூனிக் குறுகி முக்காடு போடுகை; veiling oneself adopting a crowling.

   2. மிளகாய், கத்தரிச்செடிகள் நட்ட மறுநாள் இருக்கும் தன்மை; the look of chilly brinjal plants the day after they are transplanted.

     [கொக்கு + முக்காடு.]

கொக்குமுட்டை

 கொக்குமுட்டை kokkumuṭṭai, பெ.(n.)

   புதுக்கோட்டை மாவட்டத்துச் சிற்றூர்; a village in Pudukköttai Dt.

     [கொக்கு + (முட்டம்); முட்டை.]

கொக்குமுத்து

 கொக்குமுத்து kokkumuttu, பெ.(n.)

   கொக்கின் கண்டத்தில் பிறப்பதாகச் சொல்லப்படும் ஒரு வெண்முத்து; a white pearl-like concretion said to be formed in the neck of a stork

     [கொக்கு + முத்து.]

கொக்குமுள்ளு

 கொக்குமுள்ளு kokkumuḷḷu, பெ.(n.)

   தொடரி; prickly burr-thorn

     [கொக்கு + முள்ளு.]

கொக்குமூக்கன்

 கொக்குமூக்கன் kokkumūkkaṉ, பெ.(n.)

   நீண்டு வளைந்த மூக்குடையவன்; one who has a long hook – nose.

     [கொக்கு + மூக்கன்.]

கொக்குமூக்கு

 கொக்குமூக்கு kokkumūkku, பெ.(n.)

   வளைந்த மூக்கு; hook-nose, aquiline nose

     [கொக்கு + மூக்கு.]

கொக்குமேனி

கொக்குமேனி kokkumēṉi, பெ.(n.)

   1.தில்லை மரம்; tiger’s milk tree.

   2. எடை குறைந்த உடல்; slight body

     [கொக்கு + மேனி.]

கொக்கும்பதரி

 கொக்கும்பதரி kokkumpatari, பெ.(n.)

   இலந்தை மரம்; a small thorny tree known as the common jujube, Zizyphus jujuba (சா.அக.);.

கொக்குவம்

கொக்குவம் kokkuvam, பெ.(n.)

கொக்கோகம் பார்க்க;see kokkogam.

     “மையறு கொக்குவம் பரதமலி கணிதஞ் சத்தம்” (வள்ள. சுருதி. பாயி.9);.

 Skt. kokkóha.

     [கொக்குவகன் → கொக்குவம்.]

கொக்குவகன் என்பவாால் இயற்றப்பட்டாதி ரகசியம் என்னும் நூல்.

கொக்குவாய்

 கொக்குவாய் kokkuvāy, பெ.(n.)

   அணிகலனில் உள்ள படுகண்ணியிற் செருகும் பூட்டு; the hook of a clasp in an ornament held by the padukans,

     “கொக்குவாய் ஒன்றும்”

     [கொக்கு + வாய்.]

கொக்கூறப்பூடு

 கொக்கூறப்பூடு kokāṟappūṭu, பெ.(n.)

   நெருஞ்சில்; caltrops tribulus terrestrics (சா.அக.);

     [கொக்கல் → கொக்கறை + (பூண்டு); பூடு.]

கொக்கேறி

 கொக்கேறி kokāṟi, பெ.(n.)

   நெட்டி (L.);; solapith.

     [கொக்கு + ஏறி.]

கொக்கை

 கொக்கை kokkai, பெ.(n.)

கொக்கி பார்க்க;see kokki.

பட கொக்கெ.

     [கொள் → கொட்கு → கொக்கை.]

கொக்கைக்கல்

 கொக்கைக்கல் kokkaikkal, பெ.(n.)

   ஆட்டுக்காற்கல் (வின்.);; coral stone,

     [கொக்கை + கல்.]

கொக்கைச்சத்தகம்

 கொக்கைச்சத்தகம் goggaiccattagam, பெ.(n.)

   ஒருவகைச் சிறுகத்தி (வின்.);; small bill hook.

     [கொக்கை + சத்தகம்.]

கொக்கைச்சால்

 கொக்கைச்சால் kokkaiccāl, பெ.(n.)

   உழவுச்சால் படாத தரை (யாழ்ப்.);; balk in ploughing.

     [கொக்கை + சால். ஒருகா. பொக்கை → கொக்கை.]

கொக்கோகம்

 கொக்கோகம் kokākam, பெ.(n.)

   வரகுணராம பாண்டியனால் வடமொழியினின்றும் மொழி பெயர்க்கப்பட்ட ஒரு காமநூல்; a treatise on erotics translated from Sanskrit by Varagunarama Pāndiyaŋ,

மறுவ. கொக்குவம்,

     [கொக்குவகன் – கொக்குவகம் → கொக்கோகம்.]

கொக்குவகனால் இயற்றப்பட்ட நூல். இது முதலில் தமிழில் எழுதப்பட்டு வடமொழியாக்கம் பெற்றதென்றும் அதன் பின்னர் வடமொழியிலிருந்து தமிழாக்கம் பெற்றதென்றும் கூறுவர். கொக்குவகன் என்னும் பெயரே தமிழாயிருத்தல் காண்க.

கொக்கோடு

கொக்கோடு1 kokāṭu, பெ.(n.)

   கோயில் மேல் தளத்தை மேவப் பயன்படும் ஒருவகைச் சிறிய ஒடு; a kind of small printed tile used for roofing temples.

மறுவ. கூரோடு.

ம. கொக்கோடு.

     [கொக்கு + ஒடு.]

 கொக்கோடு2 kokāṭu, பெ.(n.)

   குமரி மாவட்டத்துச் சிற்றூர்; a village in Kanyakumari Dt.

     [கொக்கு + கோடு – கொக்குக்கோடு → கொக்கோடு.]

கொக்கோவெனல்

 கொக்கோவெனல் kokāveṉal, பெ.(n.)

   ஒர் ஒலிகுறிப்பு; onom, expr of cackling, clucking.

     [கொக்கோ + எனல்.]

கொங்கடி

கொங்கடி koṅgaḍi, பெ.(n.)

   1. மழைக்காலத்தில் குடைபோல் பயன்படுத்தும் ஒலையால் முடைந்த கூர்ங்கூடை ; a rain cover made of ruds and leaves.

   2. தலையில் கவித்துக் கொள்ளும் உள் மடித்த சாக்

   குத்துணி; a tucked in gunny bag used as a raincoat.

     [P]

மறுவ. கொங்கணி, சம்மங்கூடு.

     [கொங்கு வளைவு, கொங்கு → கொங்கடி.]

கொங்கடுக்கு

 கொங்கடுக்கு koṅgaḍukku, பெ.(n.)

   மாட்டு வண்டியில் பாரம் ஏற்றும் முறை; a method of loading the cart.

     [கொங்கு+அடுக்கு]

கொங்கணக்கத்தி

 கொங்கணக்கத்தி koṅgaṇakkatti, பெ.(n.)

   வளைந்த அமைப்புடைய ஒருவகைக் கத்தி; a kind of curved knife.

ம. கொங்கணம் கத்தி; து. கொங்கணகத்தி,

     [கொங்கணம் + கத்தி.]

கொங்கணதுபம்

 கொங்கணதுபம் koṅkaṇatupam, பெ.(n.)

   வெள்ளைக் குங்கிலியம்; white dammer; cocony resin (சா.அக.);.

கொங்கணநாயனார்

 கொங்கணநாயனார் koṅgaṇanāyaṉār, பெ.(n.)

   பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்களுளொருவர் (சிற்.அக.);; a poet of fifteenth century.

     [கொங்கணம் + நாயன் + ஆர்.]

கொங்கணம்

கொங்கணம்1 koṅgaṇam, பெ.(n.)

   1. மேற்குத் தொடர்ச்சி மலைக்கு மேற்கும், அரபிக்கடலுக்குக் கிழக்கும், கூர்ச்சரத்திற்குத் தெற்கும், கோவாவுக்கு வடக்குமாக உள்ளதும், ஐம்பத்தாறு நாடுகளுள் ஒன்றுமான நாடு (நன்.272. மயிலை.);; Konkan, the low country of Western India between the ghats and the Arabian sea extending from Goa to Gujarat, one of 56 Nadu.

   2. தமிழ் நூல்களிற் கூறப்படும் பதினெட்டு மொழிகளுள் ஒன்று (திவா.);; language of Korgan, one of 18 languages referred to in Tamil works.

   ம. கொங்கணம்;க., தெ., து. கொங்கண.

கொங்கணம் → skt. Konkana.

     [கொண்கானம் → கொங்கணம்.]

 கொங்கணம்2 koṅgaṇam, பெ.(n.)

   வளைந்த தன்மை; the state of being curved.

     [கொங்கு + அணம். அணம் – சொல்லாக்க ஈறு.]

கொங்கணர்

கொங்கணர்1 koṅgaṇar, பெ.(n.)

   1. கொங்கண நாட்டார்; inhabitants of Kongan .

   2. பண்டத் தமிழ்ச்சித்தருள் ஒருவர்; an ancient Tamil Siddha.

ம. கொங்கணன்.

     [கொங்கணம் → கொங்கணர்.]

 கொங்கணர்2 koṅgaṇar, பெ.(n.)

   கன்னட நாட்டின் மங்களூர்ப் பகுதியினர்; people around Mangalore state.

     “கோசலர் சிங்களர் தெலுங்கர்” (S.I.I.XXVI, 37-9, P..28);.

     [கொங்கணம் → கொங்கணர்.]

 கொங்கணர்3 koṅgaṇar, பெ.(n.)

   கள்ளர்குடிப் பட்டப்பெயர்களுள் ஒன்று (கள்ளர் சரித்.ப.98);; a caste title of Kallars.

     [கொங்கணம் + அர்.]

கொங்கணவன்

 கொங்கணவன் koṅgaṇavaṉ, பெ.(n.)

   நாகரிகமில்லாதவன்; uncivilised person.

     [கொங்கணன் → கொங்கணவன்.]

கொங்கணவர்

 கொங்கணவர் koṅgaṇavar, பெ.(n.)

கொங்கணர் பார்க்க;see kongamar.

கொக் கென்று நினைத்தாயோ கொங்கணவா? (தனிப்பா.);

     [கொங்கணம் → கொங்கணவர்.]

கொங்கணி

கொங்கணி1 koṅgaṇi, பெ.(n.)

   கொங்கண நாட்டான்; inhabitant of Konganam.

ம., க. கொங்கணி.

     [கொங்கணம் → கொங்கணி.]

 கொங்கணி2 koṅgaṇi, பெ.(n.)

   மழையைத் தடுக்கத் தலையிற் கவிக்கும் நீண்டு உள்வளைந்த சம்பங்கூடை அல்லது அதைப் போன்ற பாதுகாப்பு அமைப்பு; a covering againstrain made of camban reeds, palm leaf or grass, etc.

மறுவ. கொங்காடை, கொங்கடி, கொங்காணி.

     [கொங்கு + அணி – கொங்கணி (வளைத்து மூடிய அணி);.]

கொங்கணிப்பூண்டு

 கொங்கணிப்பூண்டு koṅgaṇippūṇṭu, பெ.(n.)

   பயிரின் களையாகிய பூண்டுச்செடி (இ.வ.);; a kind of weed.

     [கொங்கணி + பூண்டு.]

கொங்கணியான்

 கொங்கணியான் koṅgaṇiyāṉ, பெ.(n.)

   மீன்வகை (யாழ்.அக.);; a kind of fish.

     [கொங்கணி → கொங்கணியான்.]

கொங்கணிவர்மன்

 கொங்கணிவர்மன் koṅkaṇivarmaṉ, பெ.(n.)

கொங்கு நாட்டவரை வெற்றி

   கொண்டு அந்நாட்டிற்குக் கொங்கு நாடெனப் பெயரிட்டவன்; Oen who has christened the name Końgu, after conquering it.

     [கொங்கணி+வருமன்.]

கொங்கணையன்

 கொங்கணையன் koṅgaṇaiyaṉ, பெ.(n.)

   பழிச்சொல்; a term of abuse.

     [கொங்கு → கொங்கணவன் → கொங்கணையன்.]

கொங்கனேந்தல்

 கொங்கனேந்தல் koṅgaṉēndal, பெ.(n.)

   சிற்றூரொன்றின் பெயர்; a name of a village.

     [கொங்கன் + ஏந்தல் (ஏரி);.]

கொங்கன்

கொங்கன் koṅgaṉ, பெ.(n.)

   1. கொங்கநாட்டான்; In habitant of the Koñgu country.

     “ஒளிறுவாட்கொங்கர்” (குறுந். 393);.

   2. சேரன் (திவா.);

 Cera king.

ம. கொங்ஙன்; க. கொங்க; து. கொங்கெ,

கொங்கன்குளம்

 கொங்கன்குளம் koṅgaṉkuḷam, பெ.(n.)

   திருநெல்வேலி மாவட்டம் இராசபாளையத்திற்கு அருகேயுள்ள ஒரு சிற்றுார்; a village near Rajapalayam in Tirunelveli Dt.

     [கொங்கன் + குளம்.]

கொங்கன் என்னும் சிற்றரசன் இவ் வூரில் வெட்டிய குளமொன்று அமைந்திருந்ததாகவும் அதன் அடிப்படையில் இப் பெயர் வழங்கி வருவதாகவும் கருதப் படுகிறது.

கொங்கமுடி

 கொங்கமுடி koṅgamuḍi, பெ.(n.)

   தலையின் ஒரு பக்கத்தில் கொண்டை அமையுமாறு முடியப்பட்ட மகளிர் தலைமுடி; a particular hair-do of woman.

 mode of tying the hair on one side of the head.

ம.கொங்கமுடி.

     [கொங்கு + முடி.]

கொங்கம்

கொங்கம் koṅgam, பெ.(n.)

   1. கொங்கு பார்க்க;see Kongua portion of the Tamil country.

   2. கோளத வைப்பு நஞ்சு; a mineral poison.

     [கொங்கு → கொங்கம்.]

கொங்கம்பட்டி

 கொங்கம்பட்டி koṅgambaṭṭi, பெ.(n.)

மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் உள்ள திருமணி முத்தாற்றை ஒட்டி அமைந்துள்ள ஊர்:

 a village situated near Thirumanimutharu river in Melur Taluk Madurai Dt.

     [கொங்கன் + பட்டி – கொங்கன்பட்டி → கொங்கம்பட்டி]

கொங்கம்பாளையம்

 கொங்கம்பாளையம் koṅgambāḷaiyam, பெ.(n.)

   ஈரோடு மாவட்டத்துச் சிற்றுார்; a village in Erode Dt.

     [கொங்கம் + பாளையம்.]

கொங்கரத்தி

 கொங்கரத்தி koṅgaratti, பெ.(n.)

   சிவகங்கை மாவட்டத்துச் சிற்றூர்; a village in Sivagangai Dt.

     [கொங்கு+ ஆரத்தி.]

கொங்கரம்

 கொங்கரம் koṅgaram, பெ.(n.)

   வளைகை; bending.

தெ. கொங்கா.

     [கொங்கு → கொங்கரம்.]

கொங்கராயனூர்

 கொங்கராயனூர் koṅgarāyaṉūr, பெ.(n.)

   கோவை மாவட்டத்தில் அமைந்த ஊர்; a village situated in Coimbattur Dt.

     [கொங்குராயன் + ஊர்.]

கொங்குதேசச் சிற்றரசர்களுள் ஒருவரான கொங்குராயர் ஆண்டமையால் இப் பெயர் பெற்றதாம்.

கொங்கராயர்

கொங்கராயர் koṅgarāyar, பெ.(n.)

   தென்னார்க் காட்டு மாவட்டம் கள்ளக்குறிச்சி வட்டம், கொங்க ராயபாளையத்திலுள்ள, உடையாரினத்தைச் சார்ந்த பாளையக்காரர்களின் பட்டப்பெயர்; title of Poligars of the Udaiyār caste, probably from Kongarāya Pālaiyam in Kalla-kuricci taluk of Villupuram Dt.

   2. கள்ளர்குடிப் பட்டப்பெயர் களுளொன்று (தஞ்);.

 a caste title of Kallars.

     [கொங்கம் + இராயர்.]

கொங்கரி

 கொங்கரி koṅgari, பெ.(n.)

   எல அரிசி (மலை.);; cardamom.

     [கொங்கு + அரிசி.]

கொங்கரையர்

கொங்கரையர் koṅgaraiyar, பெ.(n.)

   கள்ளர்குடிப் பட்டப்பெயர்களுள் ஒன்று (கள்ளர் சரித்.ப.98);; a caste title of Kallars.

     [கொங்கு + அரையர்.]

கொங்கர்கோமான்

 கொங்கர்கோமான் koṅgarāmāṉ, பெ.(n.)

   கொங்குநாட்டை வென்ற மன்னர்கள் சூடிக் கொண்ட பட்டம்;  chieftain of Korgu country.

     [கொங்கர் + கோமான்.]

கொங்கல் நகரம்

 கொங்கல் நகரம் goṅgalnagaram, பெ.(n.)

   கோவை மாவட்டத்துச் சிற்றூர்; a village in Kovai Dt.

     [கொங்கல் நகரம்.]

கொங்கவேம்பு

 கொங்கவேம்பு koṅgavēmbu, பெ.(n.)

   தருமபுரி மாவட்டத்துச்சிற்றூர்; a village in Dharmapuri Dt.

     [கொங்கன் + வேம்பு.]

கொங்காடை

 கொங்காடை koṅgāṭai, பெ.(n.)

   கொங்குநாட்டில் மழை காலத்தில் மடித்துத் தலையில் கவிழ்த்துக் கொள்ளும் துப்பட்டி அல்லது சாக்குத்துணி; coarse cloth or sack which is used to protect the head from rain in Kongu country.

     [கொங்கு + ஆடை – கொங்காடை.]

கொங்காணி

 கொங்காணி koṅgāṇi, பெ.(n.)

   மழையைத் தாங்க உடலிற் கவிக்கும் சம்பங்கூடை; covering against rain, made of palm leaf, grass or reeds.

மறுவ, கொங்கடி, கொங்காடை.

     [கொங்கு → கொங்காணி.]

 கொங்காணி koṅgāṇi, பெ.(n.)

   சுவரில் சட்டையை மாட்டுவதற்குப் பொருத்தியிருக்கும் கொக்கி; coathanger.

     [கொங்கு-ஆணி]

கொங்காணி விழு-தல்

 கொங்காணி விழு-தல் koṅgāṇiviḻudal, தொ.பெ.(vbl.n.)

   கிழிசல் துணியைத் தைப்ப தால் ஏற்படும் சுருக்கம்; shrink seen in stitching of torn cloths.

     [கொங்கு+அணி+விழு]

கொங்காணியர்

 கொங்காணியர் koṅkāṇiyar, பெ.(n.)

   கொண்காணத்தில் இருந்து வந்து குடியேறியவர்கள்; the migrated people who came from konganam.

     [கொண்கானம் – கொங்காணம்+இயர்]

இவர்களில் பார்ப்பனர்கள் கடை வைத்து பிழைப்பர். கொங்காணி கடைமக்கள் (சூத்திரர்); குடுமிக்காரர் எனப்படுவர் (அபி.சிந்);.

கொங்கான்

கொங்கான்1 koṅgāṉ, பெ.(n.)

   கொங்கணன்; a man of Konganam.

     [கொங்கு + ஆன்.]

 கொங்கான்2 koṅgāṉ, பெ.(n.)

   அறிவிலி; Ignorant person.

     [கொங்கன் → கொங்கான்.]

கொங்கார மாசுக்கீரை

கொங்கார மாசுக்கீரை koṅgāramācukārai, பெ.(n.)

   பிண்ணாக்குக் கீரை (சித்.அக.);; a herb.

     [கொங்கர் + மசியல் + கீரை – கொங்கர்மசியல் கீரை → அ கொங்காரமாசிக்கிரை (கொ.வ.);.]

கொங்காழி

பெ.(n.);

   இரண்டு நாழியும் ஒரு உரியும் (21/2 நாழி); கொண்ட ஒரு தவச அளவு; a measure of grain which contains two and a half standard nasis.

ம. கொங்காழி.

     [கொங்கு + ஆழி.]

கொங்காரகி

 கொங்காரகி koṅkāraki, பெ.(n.)

   பிடங்கு நாறி; fire-brandteak, Premnatomentosa (சா.அக.);.

கொங்காரதி

 கொங்காரதி koṅgāradi, பெ.(n.)

   பிடங்குநாறி என்னும் தேக்குமரம்; fire – brand teak

     [குங்கு → கொங்கு → கொங்காரதி.]

கொங்காரமம்

 கொங்காரமம் koṅkāramam, பெ.(n.)

   குங்கும மரம்; a tree called arnoto, Bixa orellana (சா.அக);.

     [கொங்கு+ஆரமம்.]

கொங்காரமாக

 கொங்காரமாக koṅkāramāka, பெ.(n.)

   பிண்ணாக்குக் கீரை; lew’s malilow, Corchorus capuslous alias C. Clitorus (சா.அக.);.

கொங்காரம்

 கொங்காரம் koṅgāram, பெ.(n.)

   குங்குமமரம்; a species of fragrant tree.

     [குங்கு → கொங்கு → கொங்காரம்.]

கொங்காளன்

கொங்காளன் koṅgāḷaṉ, பெ.(n.)

   குதிரைவகை (அசுவசா.151.);; a breed of horses probably of the Kongu country.

     [கொங்கு → கொங்காளன்.]

கொங்காளம்

 கொங்காளம் koṅgāḷam, பெ.(n.)

   பதினெண் மொழிகளுள் ஒன்று; one among the eighteen languages.

மறுவ. கொங்கணம்.

     [கொங்கு → கொங்காளம்.]

கொங்கி

 கொங்கி koṅgi, பெ.(n.)

   நாரை; crane

     [கொங்கு → கொங்கி.]

கொங்கிணிமுள்ளு

 கொங்கிணிமுள்ளு koṅgiṇimuḷḷu, பெ.(n.)

   காட்டுச்சோளம்; wild sage (சா.அக.);.

     [கொங்கிணி + முள்ளு.]

கொங்கிற்பொன்

கொங்கிற்பொன் koṅgiṟpoṉ, பெ.(n.)

   கொங்கு நாட்டுப் பொற்காக; gold coin of Kongu country.

     “கொங்கிற் பன்னு துலைப்பகம் பொன்” (பெரியபு. இடங்கழி.செப்.3);, (கல்அக.);

     [கொங்கில் + பொன்.]

கொங்கிலவு

கொங்கிலவு koṅgilavu, பெ.(n.)

   1. கோங்கிலவு; dipterocarp dammer.

   2. முள்ளிலவு; red cotton tree.

   3. தணக்கு; odal tree.

   4. கள்ளிச்சாரம்; mordant of kalli tree

     [கொங்கு + இலவு.]

கொங்கிளங்கோசர்

 கொங்கிளங்கோசர் koṅgiḷaṅācar, பெ.(n.)

   கொங்குநாட்டில் குடியேறிய கோசர்; Kosar immigrants into Kongu country.

     [கொங்கு + இளம் + கோசர்.]

கொங்கு

கொங்கு1 koṅgu, பெ.(n.)

   1. கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி மாவட்டங்களும் எருமையூர் (மைசூர்);ச் சீமையின் ஒரு பகுதியுமாக அடங்கிய தமிழ்நாட்டுப்பகுதி; the Tamil country comprising the districts of Coimbatore, Erode, Salem, Namakkal and Dharmapuri and portion of Mysore.

கொங்கிளங் கோசர் (சிலம். உரைபெறு.2);

   2.பூந்தாது; farina, pollen of flowers.

     “கொங்குமுதிர் நறுவழை” (குறிஞ்சிப் 83);.

   3. நறுமணம்; fragrance, odour.

     “கொங்கு விம்முபூங் கோதை மாதரார்”(சீவக.. 2680);.

   4. தேன்; Honey.

     “கொங்குகவர்…..சேவல்”(சிறுபாண்.184);. 5. கள் (பிங்.);;

 toddy.

   6. கருஞ்சுரை (மலை.);; a dark kind of bottle – gourd.

   7. புறத்தோல்; Husk.

ம. கொங்ஙு; க. கொங்கு; து. கொஙக; கோத,கொங்க்; துட. க்விக்.

     [குங்கு → கொங்கு.]

 கொங்கு2 koṅgu, பெ.(n.)

   1. வளைந்த தன்மை; the state of being bent. crooked, etc.

   2. குழப்பம்:

 Confusion.

   3. ஒழுங்கின்மை; Irregular.

க. கொங்கு: தெ. கொங்கி, கொங்கா; து. கொங்கு; பட. கொக்கு (வளைவு);.

     [குல் → குள் → குங்கு → கொங்கு.]

 கொங்கு3 koṅgu, பெ.(n.)

   மலையின் சரிவுப் பகுதி; slopes of mountain.

ம. கொங்ஙு; க. கொங்கு; து. கொங்க; கோத. கொங்க்.

     [குல் → குள் → குங்கு → கொங்கு.]

 கொங்கு koṅgu, பெ.(n.)

புடவையின் தலைப்பு:

 fore part of the saree.

க.கொங்கு.

     [குங்கு-கொங்கு]

கொங்கு புழுதி

 கொங்கு புழுதி koṅgubuḻudi, பெ.(n.)

   நன்றாக உழுத புன்செய் நில மண்; soil in the land made fertile without any lumps by ploughing.

     [கொங்கு+புழுதி]

கொங்குகா

 கொங்குகா koṅgukā, பெ.(n.)

   பிரவொட்டி; an unknown black magic plant used for invoking or adjusting a demon

     [கொங்கு + கா.]

கொங்குகி

 கொங்குகி goṅgugi, பெ.(n.)

   கருஞ்கரை; hedge – сарег

     [கருக்கரை → கங்குரி → கொங்குகி.]

இது பூதங்களை அழைப்பிக்கும் மூலி என்பர்.

கொங்குகிர்

 கொங்குகிர் goṅgugir, பெ.(n.)

   வளைந்த உகிர், பறவையின் கூருகிர்; a bent nail or claw.

க. கொங்குகுர்.

     [கொங்கு + உகிர்.]

கொங்குசீர்

 கொங்குசீர் koṅgucīr, பெ.(n.)

   கொங்கர் பின்பற்றும் சடங்கு); a rite among Kongu people.

     [கொங்கு + சீர்.]

கொங்குடையாம்பாளையம்

 கொங்குடையாம்பாளையம் koṅguḍaiyāmbāḷaiyam, பெ.(n.)

   சிற்றூர் பெயர்; name of a village.

     [கொங்கு + உடையான் + பாளையம்.]

கொங்குத்தரம்

 கொங்குத்தரம் koṅguttaram, பெ.(n.)

   காங்கேயத்து மூவகை எருதுகளைப் பிரிக்கும் பகுப்பாகும்; the Kārgēyam buli.

     [கொங்கு + தரம்.]

கொங்குநாடு

 கொங்குநாடு koṅgunāṭu, பெ.(n.)

   பண்டைய தமிழகத்திலிருந்த நாடுகளிலொன்று; a country in ancient Tamil nadu.

     [கொங்கு + நாடு.]

ம. கொங்ஙுநாடு, கொங்ஙநாடு, கொங்கர் நாடு; க. கொங்கு; து. கொங்க; கோத. கொங்க்.

இன்றைய கோயம்புத்கதூர், ஈரோடு, சேலம் மாவட்டங்களடங்கிய நிலப்பகுதி. இதைப்பற்றிய பாடல்களையும் கொங்கு மண்டல சதகத்தையும் கொண்டு பார்க்கும்போது மேற்கே வெள்ளிமலையும், கிழக்கே சோவராயன் மலை பச்சைமலை, கொல்லி மலை ஆகிய மலைகளையும், வடக்கே தலைமலை பிளிகிரிரங்கன் மலைகளையும், தெற்கே பழனி மலையையும் கொண்ட

நிலவெளியாகும்.

கொங்குமுட்டி

 கொங்குமுட்டி koṅgumuṭṭi, பெ.(n.)

   இராமநாதபுரம் மாவட்டத்துச் சிற்றுார்; a willage in Ramanadhapuram Dt.

     [கொங்கு + முட்டி.]

கொங்குமுளை

கொங்குமுளை koṅgumuḷai, பெ.(n.)

   பழைய நாணய வகை (பணவிடு.132);; an ancient coin.

     [கொங்கு + (மிளை); முளை.]

கொங்குரான்வயல்

 கொங்குரான்வயல் koṅgurāṉvayal, பெ.(n.)

   புதுவை மாவட்டத்துச்சிற்றூர்; a village in Puduval Dt

     [கொங்கரையன் → கொங்குரான் + வயல்.]

கொங்குரை

கொங்குரை koṅgurai, பெ.(n.)

   மாற்றுயர்ந்த பொன்; gold of Kongu, the quality of which is high

     “கொங்குரை யாற்றிலிட்டு” (மதுரைக்க. 74);

     [கொங்கு → கொங்குரை.]

கொங்குவஞ்சி

 கொங்குவஞ்சி koṅguvañji, பெ.(n.)

   கரூவூர்; Karuvoor in Kongu.

     [கொங்கு + வஞ்சி.]

கொங்குவேண்மாக்கதை

 கொங்குவேண்மாக்கதை koṅguvēṇmākkadai, பெ.(n.)

   கொங்குவேள் இயற்றிய பெருங்கதை எனும் இலக்கியம்; a Tamil literary work by Konguvēl.

     [கொங்குவேள் + மாக்கதை.]

கொங்குவேளாளர்

 கொங்குவேளாளர் koṅguvēḷāḷar, பெ.(n.)

   கொங்குநாட்டு வேளாளர்; Velalas of the Kongu country.

     [கொங்கு + வேளாளர்.]

கொங்குவேளிர்

 கொங்குவேளிர் koṅkuvēḷir, பெ.(n.)

சிற்றரசர்களில் ஒருவரான கொங்குநாட்டு வேளாளன்

 one of the petty king in Końgu-véllar.

     [கொங்கு+வேளிர்]

பெருங் கொடையாளியாகிய இவரது ஊர் கொங்கு நாட்டு விசயமங்கலம். அடியார்க்கு நல்லார் இவரது கொங்கு வேண்மாக்கதையைப் பாராட்டி யுள்ளார். பேராசிரியரும் இவரது நூலை எடுத் தாண்டுள்ளாராதலின் இவர் காலத்தால் முற்பட்ட வராவார். இவர் சமண சமயத்தவராக இருக்கலாம் (அபி.சிந்.);.

கொங்குவேள்

கொங்குவேள் koṅguvēḷ, பெ.(n.)

   பெருங்கதை யென்னுந் தமிழ்ப்பாவியம் (காவியம்); இயற்றிய ஆசிரியர்; author of the Tamil classical work as Perungadai.

     “கொங்குவேள் மாக்கதையைக் கூறேம்” (சீவக. முகவுரை,13);.

     [கொங்கு + வேள்.]

கொங்கூர்

கொங்கூர் koṅār, பெ.(n.)

   பல்லடம் வட்டம் கொழுமம் அருகிலுள்ள ஊர்; a place near Kolumam in Palladam taluk in Coimbatore Dt.

     “இட்டநிலம் கொங்கூர்க் குளத்துக் கீழைத்தூம்பில்” (S.I.I. V.273:9);.

     [கொங்கு + ஊர்.]

கொங்கெழு சிவாலயம்

கொங்கெழு சிவாலயம் koṅgeḻusivālayam, பெ.(n.)

கொங்குநாட்டில் உள்ள தேவாரப் பாடல்பெற்ற எழு சிவன் கோயில்கள். “திருமுடி பெற்றுக்கொண்டு கொங்கெழு சிவாலயமும் சேவித்து”(கொங்கு நாட்டு சமுதாய ஆவணங்கள் கொங்கு காணியான பட்டயம். 3);

     [கொங்கு + எழு (எழு); + சிவன் + ஆலயம்.]

கொங்கை

கொங்கை koṅgai, பெ.(n.)

   1. முலை:

 woman’s breast.

     “கொங்கை முன்றிற் குங்கும மெழுதாள் (சிலப்.4:49);.

   2. மரத்தின் முருடு (வின்.);:

 protuber ances or knots of a tree.

   3 கம்புத்தவசத்தின் உமி (இ.வ.);:

 kambu husk.

   4. மரக்கிளை:

 branch of a tree.

வடக்கே போற கொங்கையை வெட்டு (நெல்.வழ.);.

ம. கொங்க: க. கொங்கெ: கூய். கன்குடி.

     [கொம்பு → கொங்கு → கொங்கை); (தமி.வ.219);

கொங்கை அடி-த்தல்

 கொங்கை அடி-த்தல் koṅgaiaḍittal, செகுன்றாவி (v.t.)

   கம்பங்கதிரின் உமியைத் துடைப்பத்தால் தள்ளி எடுத்தல்; to remove the husk with broom stick.

     [கொங்கை+அடித்தல்]

கொங்கைக்கட்டி

 கொங்கைக்கட்டி koṅkaikkaṭṭi, பெ.(n.)

முலைக் கட்டி

 mammary abscess (சா.அக.);.

     [கொங்கை+கட்டி]

 கொங்கைக்கட்டி koṅgaikkaṭṭi, பெ.(n.)

முலைக்கட்டி:

 mammary abscess

     [கொங்கை + கட்டி.]

கொங்கைக்குத்தல்

 கொங்கைக்குத்தல் koṅgaikkuttal, பெ.(n.)

   முலையின் கோளத்திற் காணும் குத்தல் வலி; pain in the mammary gland

     [கொங்கை + குத்தல்.]

கொங்கைக்கோளம்

 கொங்கைக்கோளம் koṅgaikāḷam, பெ.(n.)

   பால் சுரக்கும் கோளம்; lactogenic gland

     [கொங்கை + கோளம்.]

கொங்கைநீர்

 கொங்கைநீர் koṅgainīr, பெ.(n.)

   முலைப்பால்; woman’s breast milk

     [கொங்கை + நீர்.]

கொங்கைபவனி

 கொங்கைபவனி koṅgaibavaṉi, பெ.(n.)

   சுழல் வண்டு; a beetle whirling in water

     [கங்கை → கொங்கை + பவனி.]

கொங்கைப்பால்

 கொங்கைப்பால் koṅgaippāl, பெ.(n.)

   பெண் முலைப்பால்; woman’s breast milk

     [கொங்கை + பால்.]

கொங்கைவலி

கொங்கைவலி koṅgaivali, பெ.(n.)

   முலையுள் வலி; pain in the mamma

     [கொங்கை + வலி.]

கொங்கைவிம்மு-தல்

   5 செ.கு.வி.(v.i.);

   காமவிச்சையால் பெண்கள் முலை இறுகிப் பருத்தல்; to becoming distended andrigid as woman’s brests by a force acting from sexual desire

     [கொங்கை + விம்மு-.]

கொசகம்

 கொசகம் gosagam, பெ.(n.)

கொய்சகம் பார்க்க;see Koysagam.

     [கொய்சகம் → கொசகம்.]

கொசக்காரன்

 கொசக்காரன் kosakkāraṉ, பெ.(n.)

   உரிமை யாவணத்தார் (இ.வ.);; pattadar, land owner.

கொசப்பட்டு

 கொசப்பட்டு kosappaṭṭu, பெ.(n.)

   காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்த ஒரு சிற்றுார்; a village in kanjipuram Dt.

மறுவ. கொசப்பூர் (த.நா.ஊர்..பெ.]

     [குயவர் + பட்டு – குயவர்பட்டு. கொசவர் + பட்டு – கொசவர்பட்டு → கொசப்பட்டு]

மட்பாண்டத் தொழில் செய்யும் குயவர் அதிகம் வாழ்ந்தமையால் இப்பெயர் பெற்றதாம்.

கொசமசக்கு

 கொசமசக்கு kosamasakku, பெ.(n.)

குசமசக்கு பார்க்க;see kusa-masakku.

ஏமாற்றுவது, தெரியாமல் எமாற்றுவது: என்னமோ கொசமசக்கு நடந்து போச்சி (நெல்லை);.

     [குசமசக்கு → கொசமசக்கி.]

கொசர்

 கொசர் kosar, பெ.(n.)

குசர் பார்க்க; see kusar,

     [குசர் → கொசர்.]

 கொசர் kosar, பெ.(n.)

குசர் பார்க்க;see {}.

     [U.khusr → த.கொசர்.]

கொசறு

 கொசறு kosaṟu, பெ.(n.)

குசர் பார்க்க;see {}.

     [U.khusr → த.கொசறு.]

கொசலி

கொசலி kosali, பெ.(n.)

   1. குசலை பார்க்க; see Kusalai.

   2. கட்டட எழுதகவேலையின் மறுபெயர்; cornice work.

மறுவ கொசவேலை.

     [குசலை → கொசலி.]

கொசலை

 கொசலை kosalai, பெ.(n.)

குசலை பார்க்க;see kusalai.

     [குசலை → கொசலை.]

கொசவம்

 கொசவம் kosavam, பெ.(n.)

கொய்சகம் (கொ.வ.); பார்க்க; seе koysagam

     [கொய்சகம் → கொசவம் → கொசலகம்.]

கொசவம்பாளையம்

 கொசவம்பாளையம் kosavambāḷaiyam, பெ.(n.)

   குமரி மாவட்டத்துச் சிற்றுார்; a village in Kanyakumari Dt.

     [குயவன் → கொசவன் + பாளையம்.]

கொசவேலை

 கொசவேலை kosavēlai, பெ.(n.)

   கட்டட எழுதக வேலை; cornice work.

     [குசவை → கொசலை → கொச + வேலை.]

 கொசவேலை kosavēlai, பெ.(n.)

   பயனற்ற வேலை; useless work.

     [கயம்-கசம்[குப்பை]-கொச+வேலை]

கொசான்

 கொசான் kocāṉ, பெ.(n.)

கொய்சகம் பார்க்க; see koysagam.

     [கொய்சகம் → கொசான் (கொ.வ.);]

கொசாம்

 கொசாம் kocām, பெ.(n.)

கொய்சகம் பார்க்க;see koy-sagam.

     [கொய்சகம் → கொசாம்.]

கொசிகம்

 கொசிகம் gosigam, பெ.(n.)

   ஆடை (அக,நி.);; cloth.

     [கோசிகம் → கொசிகம்.]

கொசு

கொசு1 kosu, பெ.(n.)

   1. கச்சம் (வின்);; loose inner end or corner of a cloth brought between the legs and tucked in behind.

     [கொதுகு → கொது → கொசு.]

 கொசு2 kosu, பெ.(n.)

   1, பெருங்கொதுகு; Mosquito gnat.

     ‘கொசுக்கு அஞ்சி குடிபோகிறதா’ (பழ.);.

   2. சிறுகொதுகு (கொ.வ.);; eyefly which gathers in clusters on hanging threads.

மறுவ. கொதுகு. கொசுகு. கொசுகான்.

     [கொத்து → கொத்துகு → கொதுகு → கொசுகு → கொசு.]

கொசுகம்

 கொசுகம் gosugam, பெ.(n.)

கொய்சகம் பார்க்க: see koysagam.

     [கொய்சகம் + கொசுகம்.]

கொசுகாந்தேன்

 கொசுகாந்தேன் kosukāndēṉ, பெ.(n.)

கொசுத்தேன் (யாழ்ப்); பார்க்க;see kosu-t-ten.

     [கொதுகு → கொசுகு + ஆம் + தேன்.]

கொசுகு

கொசுகு gosugu, பெ.(n.)

கொசு2 பார்க்க; See kosu.

     “எறிபுனல் சாம்பர் கரியுமி கொசுகு ஈயென்புதியெய்திடம்” (காசிக. 40:17);.

     [கொதுகு → கொசுகு.]

கொசுகுதலை

 கொசுகுதலை gosugudalai, பெ.(n.)

   நெல்வகை (A);; a kind of paddy.

     [கொசுகு + தலை.]

கொசுக்கடி

 கொசுக்கடி kosukkaḍi, பெ.(n.)

   கொசுவினால் உண்டான கடி; mosquito bite

     [கொக + கடி.]

கொசுக்கட்டை

 கொசுக்கட்டை kosukkaṭṭai, பெ.(n.)

   நுண்ணிச் சிறை என்னும் குருவி (யாழ்.அக.);; a very small bird.

     [கொசு + கட்டை.]

கொசுக்குடி

 கொசுக்குடி kosukkuḍi, பெ.(n.)

   இராமநாதபுரம் மாவட்டத்துச்சிற்றூர்; a village in Ramanada puram Dt.

     [கோசு → கொசு + குடி.]

கொசுத்திராவகம்

 கொசுத்திராவகம் gosuttirāvagam, பெ.(n.)

   கொசுமுட்டையினின்று அணியமாகும் ஒருவகை நீர்மம்; a fluid, probably referring to a serum prepared from the eggs of mosquitoes

மறுவ, கொசுநீர்மம்.

     [கொசு + திராவகம் (ஏரிநீர்);.]

கொசுத்தேனீ

கொசுத்தேனீ kosuttēṉī, பெ.(n.)

   சிறு தேனீவகை (M.M. 870.);; mosquito bee.

     [கொசு + தேனீ.]

கொசுத்தேன்

 கொசுத்தேன் kosuttēṉ, பெ.(n.)

   சிறுகொசுவினங்கள் சேர்த்து வைக்குந் தேன் (வின்.);; honeygathered and accumulated by eyeflies.

     [கொசு + தேன்.]

கொசுமிளகாய்

 கொசுமிளகாய் kosumiḷakāy, பெ.(n.)

   ஊசி மிளகாய்; bird-pepper

     [கொசு + மிளகாய்.]

கொசுமுட்டை

 கொசுமுட்டை kosumuṭṭai, பெ.(n.)

   கொசு இடும் முட்டை; egg of mosquitoes.

     [கொசு + முட்டை.]

கொசுமூட்டம்

 கொசுமூட்டம் kosumūṭṭam, பெ.(n.)

   கொசுக்களைப் போக்குதற்கு மூட்டும் புகை (வின்.);; smoke to drive off mosquitoes.

     [கொசு + மூட்டம்.]

கொசுமெழுகு

 கொசுமெழுகு gosumeḻugu, பெ.(n.)

   கொசுத்தேனிக் கூட்டிலிருக்கும் மெழுகு; wax collected by mosquito bee

     [கொசு + மெழுகு.]

கொசுறுதல்

 கொசுறுதல் kosuṟudal, செகுன்றாவி(v.t.)

   மிச்ச மின்றி இலைதழைகளை அரிவாளால் அரிந்து எடுத்தல்; to cut off the leaves.

     [கொய்+உறு-கொயுறு-கொசுறு]

கொசுவத்தி

 கொசுவத்தி kocuvatti, பெ.(n.)

   பற்ற வைத்தால் புகை எழுப்பிக் கொசுக்களை விரட்டும் வேதியியல் சுருள்; mosquito coil made of chemicals that produces smoke to keep off mosquitoes.

     [கொசு+வத்தி பத்தி→வத்தி]

 கொசுவத்தி kosuvatti, பெ.(n.)

   கொசுக்களை விரட்டும் வேதிப்பொருள்களால் செய்யப்பட்ட சுருள்; mosquito coil; a coil that produces smoke to keep off mosquitoes.

     [கொசு + வத்தி.]

கொசுவம்

 கொசுவம் kosuvam, பெ.(n.)

கொய்சகம் (கொ.வ.); பார்க்க; see koysagam

     [கொய்சகம் → கொசுவம்.]

கொசுவலை

 கொசுவலை kosuvalai, பெ.(n.)

   கொசுவராமல் தடுக்கும் வலை; mosquito-net, mosquito-curtain.

ம. கொதுவேல.

     [கொசு + வலை.]

கொசுவு-தல்

கொசுவு-தல் kosuvudal,    12 செ.குன்றாவி..(v.t.)

   ஆடையைக் கொய்து அடுக்கிச் செருகுதல் (கொ.வ.);; to plait, gather into folds by using finger, as the end of a cloth when wearing.

எப்படிக் கொசுவ வேண்டுமென்று சொல்லித்தாருங்கள் (உ.வ.);.

     [P]

கொசுவுதல்

     [கொய்சு → கொசுவு.]

கொசுவுள்ளான்

கொசுவுள்ளான் kosuvuḷḷāṉ, பெ.(n.)

   சிறிய உள்ளான்வகை; small snipe.

     “கொகவுள்ளான்றன்கறியை”(பதார்த்த. 884);.

     [P]

     [கொசு + உள்ளான்.]

கொச்சகக் கலிப்பா

கொச்சகக் கலிப்பா goccagaggalippā, பெ.(n.)

   தரவு, தரவினை, சிஃறாழிசை, பஃறாழிசை, மயங்கிசை என்னும் ஐம்பிரிவுடைய கலிப்பாவகை (யாப்.வி.81);; a species of Kali verse, of five varieties, viz., taravu, taravinai, cikrālisai pakrālisai, mayangisai.

     [கொச்சகம் + கலிப்பா.]

கொச்சகம்

கொச்சகம்1 goccagam, பெ.(n.)

கொச்சகக்கலிப்பா (காரிகை செய்.12.); பார்க்க;see koccaga-k-kalippa.

   2. ஆடையுள் ஒருவழிக் கொய்தடுக்கிக் கட்டுவது (தொல்,பொருள்.433. உரை);; ornamental pleating of a cloth when worn.

   3. அம்போதரங்கவுறுப்புகளுள் ஒன்று (தொல். பொருள்.464);;  one of the elements of amb õdarargam.

   4. பரிபாடலுறுப்புகளுள் ஒன்று (தொல்.பொருள்.433);; one of the elements of Paripádal.

ம. கொச்சகம்.

     [கொய்க → கொச்சு → கொச்சகம்.]

 கொச்சகம்2 goccagam, பெ.(n.)

கொச்சை1 பார்க்க;see koccai.

சிறப்பில்லாததனை ஒரு சாரார் கொச்சையென்றும் கொச்சக மென்றும் வழங்குவர் (யாப்.வி.79);.

     [கொச்சு → கொச்சகம்.]

கொச்சகவொருபோகு

கொச்சகவொருபோகு goccagavorupōgu, பெ.(n.)

     “கலிப்பாவின் வகைகளுள் ஒன்று” (தொல்.பொருள்.செய்யுள்.143);;

 a kind of kalippa.

     [கொச்சகம் + ஒரு + போகு.]

தரவு முதலான உறுப்புகளுள், தாவின்றித் தாழிசை முதலிய உறுப்புகள் பெற்றும், தாழிசையின்றித் தரவு முதலியன உடைத்தாகியும். எண்ணாகிய உறுப்புகளை இடையிட்டுத் தனிச்சொல் வாரா தொழியினும்; சுரிதகமின்றித் தாவு தானே நிமிர்ந்தொழுகி முடியினும்; ஒத்தாழிசையின் யாக்கப்பட்ட யாப்பினும் அதற்குரித்தாக ஓதப்பட்ட கடவுள் வாழ்த்துப் பொருண்மையின்றிக் காமப் பொருளாக வருவதுமாகிய ஒருவகைக் கலிப்பா.

கொச்சக்கயிறு

 கொச்சக்கயிறு koccakkayiṟu, பெ.(n.)

   தெங்கின் கதம்பை நாராற் செய்யப்படுங் கயிறு; rope made of coconut fibre.

ம. கொச்சம் (சிறிய இழைக்கயிறு);.

     [கொச்சம் + கயிறு.]

கொச்சங்காய்

 கொச்சங்காய் koccaṅgāy, பெ.(n.)

   தென்னையின் இளங்காய்; undeveloped coconut fruit.

ம. கொச்சங்ங.

     [கொச்சு + அம் + காய்.]

கொச்சன்

 கொச்சன் koccaṉ, பெ.(n.)

   சிறுபையன்; young boy,

ம. கொச்சன்.

     [கொச்சு → கொச்சன்.]

கொச்சம்

கொச்சம்1 koccam, பெ.(n.)

கொச்சக்கயிறுபார்க்க;see kocca-k-kayiru.

ம. கொச்சம் (சிறிய இழைக்கயிறு);.

     [கொச்சு → கொச்சம்.]

 கொச்சம்2 koccam, பெ.(n.)

   பீர்க்கு; luffa gourd

     [கொச்சு → கொச்சம்.]

 கொச்சம்3 koccam, பெ.(n.)

   கரையையொட்டி எழும் இருவேறு அலைகட் கிடைப்பட்ட நீர்ப்பகுதி; plain water surface between two waves near shore.

     [கொச்சு → கொச்சம்.]

 கொச்சம்4 koccam, பெ.(n.)

   சிறியது, கடைப்பட்டது; that which is small, inferior.

ம. கொச்சம்.

     [கொச்சு + அம்.]

கொச்சவாடை

 கொச்சவாடை koccavāṭai, பெ.(n.)

   இறைச்சி நாற்றம்; foul smell.

ம. கொச்சம்.

     [குழை → குழைச்சு → கொச்சு → கொச்சல் + வாடை.]

கொச்சாம்பாறை

 கொச்சாம்பாறை koccāmbāṟai, பெ.(n.)

   சிறிய பாறைமீன் வகை; a kind of fish.

     [கொச்சம் + பாறை – கொச்சம்பாறை → கொச்சாம் பாறை.]

கொச்சாறு

 கொச்சாறு koccāṟu, பெ.(n.)

   சிறிய ஆறு; a small river, brook.

ம. கொச்சாறு.

     [கொச்சு + ஆறு.]

கொச்சாளை

 கொச்சாளை koccāḷai, பெ.(n.)

மீன்வகை (வின்.);:

 a kind of fish.

     [கொச்சு → கொச்சாளை.]

கொச்சி

கொச்சி1 kocci, பெ.(n.)

   1. கொச்சிநாடு;   2. கொச்சிநகர்;  Cochin town.

   3. பூண்டின் முதற்பெயர்; plant’s first term as

கொச்சிமிளகாய் etc.

   4. மும்முறை வைத்த சவ்வீர வைப்பு; mercury chloride sublimated three times formerly in Cochin state

     [கொச்சு → கொச்சி.]

 கொச்சி2 kocci, பெ.(n.)

   விளாம்பழத்தின் உள்ளிடு (வின்.);; pulp of the wood apple.

     [குச்சில் → குச்சி → கொச்சி.]

 கொச்சி3 kocci, பெ.(n.)

ஊசிமிளகாய் (மலை.); பார்க்க;see Usimilagay

மறுவ. கொச்சி மிளகாய்..

     [குச்சி → கொச்சி.]

 கொச்சி4 kocci, பெ.(n.)

   நெருப்பு (அக.நி.);; fire.

ம. கொச்சி; க. குச்சு (கொதிக்கவை);.

     [கிச்சு → கொக்க → கொச்சி.]

 கொச்சி kocci, பெ.(n.)

   இளங்கொட்டங்காய்ச்சில் (யாழ்.);; dry shell of a young coconut after the kemel is taken out.

     [காய் + சில் – காய்ச்சில் → கச்சில் → கொச்சி.]

கொச்சிக்கடா

 கொச்சிக்கடா koccikkaṭā, பெ.(n.)

   ஒருவகை ஆடு; a species of goat.

     [கொச்சி + கடா.]

கொச்சிக்காய்

 கொச்சிக்காய் koccikkāy, பெ.(n.)

   ஊசி மிளகாய்; sharp chilli.

     [கொச்சி + காய்.]

கொச்சிக்கால்

 கொச்சிக்கால் koccikkāl, பெ.(n.)

   யானைக் கால்; elephantiasis of the leg cochin leg (சா.அக.);.

     [கொச்சி+கால்.]

கொச்சிக்குழந்தை

 கொச்சிக்குழந்தை koccikkuḻndai, பெ.(n.)

   ஒரு வகை வைப்பு நஞ்சு; a prepared arsenic.

     [கொச்சி + குழந்தை]

கொச்சித்தமரத்தை

 கொச்சித்தமரத்தை koccittamarattai, பெ.(n.)

   புளிச்சக்காய் அல்லது புளிமா; sour bilimby

{கொச்சி + தமரத்தை.]

கொச்சிநாய்

 கொச்சிநாய் koccināy, பெ.(n.)

   கொச்சியிலிருந்து வரும் சிறுநாயினம் (இ.வ.);; a small species of dog from Cochin.

     [கொச்சி + நாய்]

கொச்சிநீலப்பூச்சி

 கொச்சிநீலப்பூச்சி koccinīlappūcci, பெ.(n.)

   கொச்சியில் உண்டாகும் ஒருவித நீலப்பூச்சி; Cochineal insect

     [கொச்சி + நீலம் + பூச்சி.]

கொச்சிபேதம்

 கொச்சிபேதம் koccipētam, பெ.(n.)

   குறட்டைப் பழத்திலுள்ள தசைப்பற்று; the pulp of the fruit of kurattai

     [கொச்சி + பேதம்.]

கொச்சிப்பன்னீர்

 கொச்சிப்பன்னீர் koccippaṉṉīr, பெ.(n.)

   கொச்சியில் வடிக்கும் பன்னீர்; rose-water distilled in olden days in Cochin

     [கொச்சி + பன்னீர்.]

கொச்சிப்புத்தன்

கொச்சிப்புத்தன் koccipputtaṉ, பெ.(n.)

பணத்தில் 5/16 பாகம் கொண்ட பழைய நாணயம்:

 an old coin worth 5/16 panam.

ம. கொச்சிப்புத்தன்.

     [கொச்சி + புத்தன் (புதியது.]

கொச்சிமஞ்சள்

 கொச்சிமஞ்சள் koccimañjaḷ, பெ.(n.)

   மஞ்சள் வகை (வின்.);; wild turmeric.

     [கொச்சி + மஞ்சள்.]

கொச்சிமஞ்சாடி

 கொச்சிமஞ்சாடி koccimañjāṭi,    குன்றிமணி; crab’s eye

     [கொச்சி + மஞ்சாடி.]

கொச்சிமிளகாய்

கொச்சிமிளகாய் koccimiḷakāy, பெ.(n.)

   ஊசிமிளகாய் (M.M.170);; small variety of chilli.

     [கொச்சி + மிளகாய்.]

கொச்சிமிளகு

 கொச்சிமிளகு goccimiḷagu, பெ.(n.)

   கொச்சி நாட்டுக் கெட்டிமிளகு); solid pepper of Cochin

மறுவ. குருமிளகு.

     [கொச்சி + மிளகு.]

கொச்சியேலம்

 கொச்சியேலம் kocciyēlam, பெ.(n.)

   கொச்சி நாட்டு ஏலம்; Cochin cardamom

     [கொச்சி + ஏலம்.]

கொச்சிலச்சி

 கொச்சிலச்சி koccilacci, பெ.(n.)

   ஒரு வகைச் சிற்றிலைப் புல்; ring worm killer, Xyris indica.

     [கொச்சி+இலைச்சி]

இது ஒரு அடி உயரமும் மஞ்சள் நிறப் பூவும் உடையது. மலையாளத்தில் இது ஒரு சிறந்த மூலிகையென்று கருதுவார்கள். இதன் சாற்றைக் காடியில் கலந்து சிரங்கு, மேகப்படை முதலியவை களுக்குத் தடவலாம். இலையையும் வேரையும் எண்ணெயிலிட்டுக் காய்ச்சி குட்டத்திற்குத் தடவலாம் (சா.அக.);.

கொச்சிலித்தி

 கொச்சிலித்தி koccilitti, பெ.(n.)

   ஒருவகைச் சிற்றிலைப் புல்; ring worm killer.

ம. கொச்சிளச்சிப்புல்லு..

     [கொச்சு + இலைச்சி – கொச்சிலைச்சி, கொச்சிலித்தி (கொச்க சிறிய); (கொ.வ.);]

கொச்சிலித்திப்புல்

கொச்சிலித்திப்புல் koccilittippul, பெ.(n.)

   மேகப் படையைப் போக்கும் புல்வகை (M.M..229);; ringworm killer.

     [கொச்சிலித்தி + புல்.]

கொச்சில்

 கொச்சில் koccil, பெ.(n.)

   சிறிய பழம்; small fruit.

ம. கொச்சில்.

     [கொச்சு + கொச்சில்.]

கொச்சிவீரம்

கொச்சிவீரம் koccivīram, பெ.(n.)

மும்முறைப் பதனிட்ட சவ்வீரவைப்பு:

 corrosive sublimate prepard formerly in Cochin, three times

     [கொச்சி + வீரம்.]

கொச்சு1-தல்

   5. செ.குன்றாவி(v.t.);

   1. வெட்டுதல்; to cut.

   2. துண்டாக்குதல்; to cut into pieces.

க. கொச்சு.

     [குச்சு → கொச்சு.]

கொச்சு

கொச்சு2 koccu, பெ.(n.)

குஞ்சம் (கோவிலொ.97);:

 tassel.

     [குச்சு → கொச்சு.]

 கொச்சு3 koccu, பெ.(n.)

   கத்தரிக்காய், மாங்காய் முதலியவற்றில் புளி, மிளகாய், உப்பு முதலியவற்றைச் சேர்த்துப் பக்குவப்படுத்திய குழம்புவகை; a thick mess of boiled brinjals, mangoes, etc., seasoned with tamarind, chillies, salt, etc.

மறுவ. கொத்சு.

க. கொச்சு (gojju);

     [கொக்கதல் சிறிதாதல், கண்டுதல். குச்சு → கொக்சு.]

 கொச்சு4 koccu, பெ.எ. (adj.)

   சிறிய; small, young.

கொச்சுப் பையன் (இ.வ.);

   2. இளைய; Junior.

   3. சுருங்கிய; brief, short,

   4. இழிந்த,தாழ்வான; low, base mean.

ம. கொச்சு; க., தெ. குச்சு; து. குக.

     [குல் → குள் → குச்சு → கொச்சு.]

கொச்சுகொச்செனல்

 கொச்சுகொச்செனல் goccugocceṉal, பெ.(n.)

   சிறு மீன்கள் எழுப்பும் ஒலி; sound produced by Small fish.

     [கொச்சு + கொச்சு + எனல்.]

கொச்சை

கொச்சை1 koccai, பெ.(n.)

   1.கழிவு; meanness, despicableness.

     “கொச்சை மானுடர்” (கம்பரா. யுத்மந்திரப். 101);.

   2. இழிந்தவன்; mean despicable person.

     “கொச்சைத் துன்மதி”(கம்பரா.யுத். மந்திரப். 112);.

   3. கொச்சைச் சொல் பார்க்க;see koccia.c-col.

   4. கொச்சைநாற்றம்2 பார்க்க; see koccai-narram.

   5. இழிமை; vulgarity.

இப் படத்தில் கொச்சையான காட்சிகள் இடம்பெற்றுள்ளன (உ.வ.);.

     [கழி → கழிக்க → கச்சு → கொச்சு → கொச்சை.]

 கொச்சை2 koccai, பெ.(n.)

   சீர்காழி; Sirkali

     “கொச்சை வேந்தன்” (தேவா.1035:11);.

     [காழி → காழிச்செ → கழிச்செ → கொச்சை.]

 கொச்சை3 koccai, பெ.(n.)

   1. ஆடு (திவா.);; Sheep

   2. வெள்ளாடு (திவா.);; goat.

     [கச்சை → கொச்சை.]

கொச்சைக்கயிறு

 கொச்சைக்கயிறு koccaikkayiṟu, பெ.(n.)

கொச்சக்கயிறு (இ.வ.); பார்க்க:see kocca-k-kayiru.

     [கொச்சை + கயிறு.]

கொச்சைச்சொல்

கொச்சைச்சொல் koccaiccol, பெ.(n.)

   1.திருந்தாப்பேச்சு; lisping, rustic or unrefined speech.

   2. இழிச்சொல்; vulgar language.

     [கொச்சை + சொல்.]

கொச்சைநாற்றம்

கொச்சைநாற்றம் koccaināṟṟam, பெ.(n.)

   1. ஆட்டுப்பால் நாற்றம்;  smell of sheep’s milk.

   2. பால், தாய்ப்பால் முதலியவற்றின் முடைநாற்றம்; offensive smell of milk, mother’s milk, etc.

   3. மீன் அழுகுவதால் உண்டாகும் நாற்றம்; Stench or smell from rotten fish.

மறுவ. மொச்சை நாற்றம், கொச்சை வீச்சம், கொச்சைவாடை.

     [கொச்சை + நாற்றம்.]

கொச்சைப்படுத்து-தல்

கொச்சைப்படுத்து-தல் koccaippaṭuttutal, செ.கு.வி.(v.i.)

   இழிவுபடுத்துதல்; vulgaize.

தமிழை என்றும் கொச்சைப்படுத்திப் பேச வேண்டாம்.

     [கொச்சை+படுத்து-தல்.]

 கொச்சைப்படுத்து-தல் koccaippaḍuddudal,    5 செ.கு.வி.(v.t.)

   இழிவுபடுத்துதல்; vulgarize.

     [கொச்சை + படுத்து-.]

கொச்சைப்பழக்கம்

கொச்சைப்பழக்கம் koccaippaḻkkam, பெ.(n.)

   1. கெட்ட பழக்கம்; bad habbit.

   2. கீழ்மையான சேர்க்கை; low association

     [கொச்சை + பழக்கம்.]

கொச்சைப்பால்

 கொச்சைப்பால் koccaippāl, பெ.(n.)

   வெள்ளாட்டுப்பால்; goat’s milk

     [கொச்சை + பால்.]

கொச்சைப்பேச்சு

 கொச்சைப்பேச்சு koccaippēccu, பெ.(n.)

   திருந்தாத பேச்சு; barbarous or vulgar speech

     [கொச்சை + பேச்சு.]

கொச்சைமீன்

 கொச்சைமீன் koccaimīṉ, மீனுக்குண்டாவதோர் வாடை:

 the smell of fish.

     [கொச்சை + மீன்.]

கொச்சைமுனி

கொச்சைமுனி koccaimuṉi, பெ.(n.)

   சீர்காழியில் பிறந்த திருஞானசம்பந்தர்; Tirunana-sambandar, as born in Sirkali.

     “சிட்டர்புகழ் கொச்சைமுனி” (திருவாலவா. 38:1);.

     [கொச்சை + முனி.]

கொச்சைமொழி

 கொச்சைமொழி koccaimoḻi, பெ.(n.)

   இழிந்தசொல்; vulgar language.

இப்படத்தில் கொச்சையான உரையாடல்கள் இடம்பெற்றுள்ளன (உ.வ.);.

     [கொச்சை + மொழி.]

கொச்சையர்

கொச்சையர் koccaiyar, பெ.(n.)

   1. இடையர்;  cowherds, sheepherds.

     “கொச்சையர் மனையி லிடைச்சியர்” (திருப்பு. 255);.

   2. இளையார்; young persons.

     “கொச்சைய ரெண்மர்கள்” (திருமந்.1394);.

     [கொச்சை → கொச்சையர்.]

கொச்சைரோசனை

 கொச்சைரோசனை koccairōcaṉai, பெ.(n.)

   வெள்ளாட்டு வயிற்றிலிருந் தெடுக்கும் மணத்த; goats bezoar.

     [கொச்சை + ரோசனை.]

கொச்சைவயம்

கொச்சைவயம் koccaivayam, பெ.(n.)

   சீர்காழி; Sirkāļi.

     “கொடியோடு கொச்சைவயமே” (தேவா.124:1);.

     [கொச்சை + வயம்.]

கொச்சைவார்த்தை

 கொச்சைவார்த்தை koccaivārttai, பெ.(n.)

   திரிவுற்றுத் தெளிவில்லாத சொற்கள்; vulgar words (சா.அக.);.

     [கொச்சை+Skt. வார்த்தை.]

கொச்சைவீச்சம்

கொச்சைவீச்சம் koccaivīccam, பெ.(n.)

   1. ஆட்டுப் பால் நாற்றம்; smell of sheep’s milk.

   2. பால் முதலியவற்றின் முடை நாற்றம்; stink smell of milk, mother’s milk, etc (செ.அக.);.

     [கொச்சை+வீச்சம்]

கொஞ்சக்குலம்

 கொஞ்சக்குலம் koñjakkulam, பெ.(n.)

   தாழ்ந்த குலம்; inferior caste.

     “கொஞ்சக் குலமல்லவோ” (வள்ளி.கதை.Ms.);.

     [கொஞ்சம் + குலம்.]

கொஞ்சங்கொஞ்சமாய்

 கொஞ்சங்கொஞ்சமாய் koñjaṅgoñjamāy, வி.எ.(adv.)

   சிறிது சிறிதாய் (கொ.வ.);; little by little, by degrees.

தெ. கொஞ்செமு கொஞ்செமுகா.

     [கொஞ்சம் + கொஞ்சம் + ஆய்.]

கொஞ்சத்தனம்

கொஞ்சத்தனம் koñjattaṉam, பெ.(n.)

   எளிமை; sorry plight, pitiable condition, meanness.

     “கொஞ்சத் தனத்தை யறிந்து” (குற்றா.குற.112:1);.

     [கஞ்சம் → கொஞ்சம் + தனம்.]

கொஞ்சநஞ்சம்

 கொஞ்சநஞ்சம் koñjanañjam, பெ.(n.)

   மிகச் சிறிதளவு; a little, very small quantity.

கொஞ்ச நஞ்ச மிருந்ததையும் கொடுத்துவிட்டான் (உ.வ.);.

     [கொஞ்சம் + நஞ்சம்.]

கொஞ்சநேரம்

 கொஞ்சநேரம் koñjanēram, பெ.(n.)

   சிறிது பொழுது; a short time

     [கொஞ்சம் + நேரம்.]

கொஞ்சன்

கொஞ்சன் koñjaṉ, பெ.(n.)

   இழிமகன்; mean person.

     “வஞ்சன் கொஞ்சன்” (திருப்பு.609);.

     [கொஞ்சம் → கொஞ்சன்,]

கொஞ்சப்படு-த்தல்

 கொஞ்சப்படு-த்தல் koñjappaḍuttal, பெ.(n.)

கொஞ்சப்படுத்து-தல் பார்க்க.see konja-P-paduttu.

     [கொஞ்சம் + படு-.]

கொஞ்சப்படுத்து-தல்

கொஞ்சப்படுத்து-தல் koñjappaḍuddudal,    5 செ.குன்றாவி (v.t.)

   1. இழிவுபடுத்துதல்; to slight, disregard, treat with contempt.

   2. குறைபடுத்துதல்; decreasing.

     [கொஞ்சம் + படுத்து-.]

கொஞ்சப்பேர்

கொஞ்சப்பேர் koñjappēr, பெ.(n.)

   1 புகழின்மை (யாழ்ப்.);:

 ill-fame, bad reputation,

   2 சிலர்; a few persons.

     [கொஞ்சம் + பேர்.]

கொஞ்சப்பொழுது

 கொஞ்சப்பொழுது koñjappoḻudu, பெ.(n.)

   குறையாயுள்; short life

     [கொஞ்சம் + பொழுது.]

கொஞ்சம்

கொஞ்சம்1 koñjam, பெ.(n.)

   1. சிறிது:

 little, small quantity.

     “கொஞ்சந்தங்கின்பந்தந்து” (திருப்பு.609);.

   2. சிறிய அளவு; a bit.

உணவில் கொஞ்சம் உப்பு அதிகமாகிவிட்டது.

   3. எளிமை; Simplicity.

தெ. கொஞ்செமு, கொஞ்சயமு.

     [குஞ்சு சிறியது, பறவைக்குஞ்சு. குஞ்சு → குஞ்சி சிறியது, பறவைக்குஞ்சி. குஞ்சிப்பெட்டி சிறுபெட்டி.. குஞ்சியப்பன் சிற்றப்பன். குஞ்சு → குஞ்சன் சிறியவன், குறளன். குஞ்சு → கொஞ்சு → கொஞ்சம் → கிஞ்கம் சிறிது. கிஞ்சும் → கிஞ்சித் (வ.); (வ.மொ.வ-131);.]

 கொஞ்சம்2 koñjam, பெ.(n.)

   அருள்கூர்ந்து; requesting a little co-operation; please.

நான் தேர்வுக்குப் படிக்கவேண்டும்; கொஞ்சம் பேசாமல் இருக்கிறீர்களா? (உ.வ.);.

     [கொஞ்சு → கொஞ்சம்.]

கொஞ்சமாக்கு-தல்

   5 செ.குன்றாவி.(v.t.);

   குறைத்தல்; to decrease

     [கொஞ்சம் + ஆக்கு-.]

கொஞ்சல்

கொஞ்சல் koñjal, பெ.(n.)

   1. மழலைச்சொல் (திவா.);; childish prattle.

   2. இன்பந்தரு மினிய பேச்சு; amorous talk.

     “வஞ்சிமீர் கொஞ்சும் வாயிதழே” (தனிப்பா. இரண். 375.);.

   3. செல்லங் கொஞ்சுகை; fondling, caressing.

     [கொஞ்சு + கொஞ்சல்.]

கொஞ்சவிலக்கம்

 கொஞ்சவிலக்கம் koñjavilakkam, பெ.(n.)

   சிறிதாக வரும் விடாய்ச் சூதகநீர் (M.L.);; scanty menses.

     [கொஞ்சம் + விலக்கம்.]

கொஞ்சி

கொஞ்சி koñji, பெ.(n.)

   1.காட்டுக்கொளுஞ்சி; opal orange.

   2. சீமைக்கொளுஞ்சி; China-box.

   3. பூவை மரம்; gum-lac tree.

மறுவ, கிஞ்ஞா, கொஞ்சி வஞ்சி.

     [கொளுஞ்சி → கொஞ்சி.]

கொஞ்சிநட-த்தல்

கொஞ்சிநட-த்தல் koñcinaṭattal,    3 செ.கு.வி. (v.i.)

   களிப்புடன் நடத்தல்; walking at easy расе (சா.அக.);.

     [கொஞ்சி+நட-த்தல்.]

கொஞ்சிப்பேசல்

 கொஞ்சிப்பேசல் koñcippēcal, பெ.(n.)

   குழந்தையைப் போல் பேசுகை; talking like a child; prattling; talking from lust as woman (சா.அக.);.

     [கொஞ்சி+பேசல்]

கொஞ்சிவஞ்சி

 கொஞ்சிவஞ்சி koñcivañci, பெ.(n.)

கும்பாதிரி பெரிய மரவகை,

 lac tree, Schleichera trijuga (செ.அக.);.

     [கொழுஞ்சி+வஞ்சி]

கொஞ்சு

கொஞ்சு1 koñjudal,    5 செ.குன்றாவி.(v.t.)

   1. மழலை பேசுதல்; to lisp, to prattle, as children.

     “கொஞ்சிய வுன்சொற் கேட்டு” (உத்தரரா. சம்பு.21);.

   2. இன்பமாய் பேசுதல்; to talk softly or amorously. as young women.

   3. செல்லங்கொஞ்சுதல்:

 to fondle. Caress.

   4. முத்தமிடுதல் (யாழ்ப்.);:

 to kiss.

   5. இனிதாய் ஒலித்தல்; to sound sweetly.

     “செம்மணி வெயில்வரு சிலம்பு கொஞ்சவே”(பாரத. அருச்சுனன்றவ. 148);.

ம. கொஞ்சுக; க. கொச்சு; து. கொச்சுனி.

 Fin. keha (to praise to talk);; Est. keheld; Hung. kegy Jap. Kuchia. Q. quichua. keshua

     [குஞ்சு → கொஞ்சு.]

 கொஞ்சு2 koñju, பெ.(n.)

   மீன்வகையுளொன்று; a kind of fish.

ம. கொஞ்சு,

     [குஞ்சு → கொஞ்சு,]

கொஞ்சுகிளி

 கொஞ்சுகிளி goñjugiḷi, பெ.(n.)

   குதலை பேசுங் கிளி; lisping parrot.

     [கொஞ்சு + கிளி.]

கொஞ்சுகுதிரை

 கொஞ்சுகுதிரை goñjugudirai, பெ.(n.)

   மென்னடையுள்ள குதிரை; horse whose pace is easy.

     [கொஞ்சு + குதிரை.]

கொஞ்சுநடை

 கொஞ்சுநடை koñjunaḍai, பெ.(n.)

   மெதுவான நடை (வின்.);; easy pace.

     [கொஞ்சு + நடை.]

கொடகன்

 கொடகன் goḍagaṉ, பெ.(n.)

   ஒரு புளி; Malabar gamboge (சா.அக.);.

     [கோட்டகன் → கொடகன்.]

கொடகம்

 கொடகம் goḍagam, பெ.(n.)

குறிஞ்சா (L.); பார்க்க;see kurinjå.

     [குடகம் → கொடகம்.]

கொடகு

கொடகு goḍagu, பெ.(n.)

குடகுமொழி, கருநாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் 80,000 மக்கள் பேசிவரும் திருந்திய திராவிட மொழி:

 a Dravidian language spoken by 80,000 people in Coorg Dt of Karnataka State.

     [குடகு → கொடகு (கொ.வ.);.]

கொடகுத்துவா

 கொடகுத்துவா goḍaguttuvā, பெ.(n.)

கோடகத்துவா பார்க்க;see köda-kattuvâ.

     [கோடு + கத்துவாய் – கோடகத்துவாய் → கோடகத்துவா → கொடகத்துவா (கொ.வ.);]

கொடகொடப்பு

 கொடகொடப்பு goḍagoḍappu, பெ.(n.)

   ஒலிக் குறிப்புச் சொல்; onom expression.

     [கொட + கொடப்பு.]

கொடசபாலை

கொடசபாலை koṭacapālai, பெ.(n.)

   1. வெட்பாலை; conession tellicherrybark, Nerium anti-dysentericum.

   2. கொடிப்பாலை; cotton milk plant, Dregea volubilis; twining swallor wort, Asclepias volubilis.

   3. ஊசிப்பாலை; needle-leaved swallow-wort, Oxystelma esculentum (சா.அக.);.

     [குட்சம்+பாலை]

கொடசாலம்

 கொடசாலம் koṭacālam, பெ.(n.)

   வெந்தோன்றி; November flower plant, Gloriosa superba (சா.அக.);.

     [குட்சம்+ஆலம்]

கொடட்டி

 கொடட்டி koḍaḍḍi, பெ.(n.)

   இராமநாதபுரம் மாவட்டத்துச் சிற்றூர்; a village in Ramanadapuram Dt.

     [கோடு + (பட்டி); அட்டி → கோடட்டி → கொடட்டி.]

கொடப்பட்டினம்

 கொடப்பட்டினம் koḍappaḍḍiṉam, பெ.(n.)

   காஞ்சிபுரம் மாவட்டத்துச் சிற்றுார்; a village in Kanjipuram Dt.

     [குட → கொட + பட்டினம்.]

கொடமநல்லூர்

 கொடமநல்லூர் koḍamanallūr, பெ.(n.)

   திருவள்ளுர் மாவட்டத்துச் சிற்றுார்; a village in Thiruvallur Dt.

     [குடவன் → குடமன் → கொடமன் + நல்லூர்.]

கொடமாண்டப்பட்டி

 கொடமாண்டப்பட்டி koḍamāṇḍappaḍḍi, பெ.(n.)

   தருமபுரி மாவட்டத்துச் சிற்றூர்; a village in Dharmapuri Dt.

     [குட → கொட + மாண்டன் + பட்டி.]

கொடரி

 கொடரி koṭari, பெ.(n.)

   எழுத்தாணிப்பூடு (சித்.அக.);; style plant (செ.அக.);.

     [குடு – குடரி-கொடரி]

கொடரிச்சட்டி

 கொடரிச்சட்டி koḍariccaḍḍi, பெ.(n.)

   எழுத்தாணி போன்ற பூவுள்ள ஒருவகைப் பூண்டு; style plant, having a style-like flower (சா.அக.);.

மறுவ: கொடரி, எழுத்தானிக்கூர், எழுத்தாணிப் பூண்டு, எழுத்தாணிப் பச்சிலை, எழுத்தாணிப் பச்சை, கடற்கொழுப்பை.

     [கோடரி → கொடரி + சட்டி.]

கொடலி

 கொடலி koḍali, பெ.(n.)

   பிறந்தமேனி; nudity (சா.அக.);.

     [கோடி : ஆடை, கோடி + இலி – கோடிலி → கொடலி.]

கொடவண்டி

 கொடவண்டி koḍavaṇḍi, பெ.(n.)

   வண்டி குடை சாய்கை; to be upset as a cart, to be overturned.

கொடவண்டி தூக்கிப் போட்டு அவனுக்குப் பெரிய காயம் (நெல்லை.);.

     [குடை (குடைசாய்ந்த); → கொட + வண்டி (கொ.வ.);.]

கொடவப்புரசு

 கொடவப்புரசு koḍavappurasu, பெ.(n.)

   குடவப் புரசு; East Indian stain wood (சா.அக.);.

மறுவ. கரும்புரசு.

     [குடவம் + புரசு.]

கொடவர்

கொடவர் koḍavar, பெ.(n.)

   கோயிற் கொத்துகளுள் ஒரு பிரிவினர்; a class of temple – servants

     “கொடவர் கொடுவா ளெடுப்பார்” (கோயிலொ, 44);.

     [குடவர் → கொடவர்.]

கொடவாகம்

 கொடவாகம் koḍavākam, பெ.(n.)

   வெண் தோன்றி; November flower plant (சா.அக.);.

மறுவ. கொசாலகம்.

     [குடவாகம் → கொடவாகம்.]

கொடவான்

 கொடவான் koḍavāṉ, பெ.(n.)

   கொத்துமல்லியைத் தாக்கும் ஒரு வகை நோய்; a disease attacking coriander plant.

     [கொடுவன் → கொடவான்.]

கொடவிளாகம்

 கொடவிளாகம் koḍaviḷākam, பெ.(n.)

   நாகைச் சிற்றூர்; a village in Nagai Dt.

     [குட → கொட + விளாகம்.]

கொடா

 கொடா koṭā, பெ.(n.)

   நச்சுவித்துகளைக் கொண்ட மரம்; nux-vomica tree (சா.அக.);.

மறுவ. எட்டி.

     [கொடு → கொடவு → கொடா.]

கொடாக்கண்டன்

 கொடாக்கண்டன் koṭākkaṇṭaṉ, பெ.(n.)

   சிறிதும் ஈயாத இவறன் (கொ.வ.);; confirmed miser, as stubborn in refusing to give, opp. to Vidakkandan (சா.அக.);.

     [கொடா(த); + கண்டன்.]

கொடாரி

கொடாரி koṭāri, பெ.(n.)

   கோடரி; axe.

     “கிளையைச் சாடுங் கொடாரியின் காம்பு போன்றாய்”(பிரபோத. 2, 28);.

     [கோடரி → கொடாரி.]

கொடாலகம்

 கொடாலகம் koṭālakam, பெ.(n.)

வெண்காந்தள் செடிவகை (மலை.);,

 white species of Malabar glory lily, Gloriosa superba (செ.அக.);.

     [குடு+ஆலகம்]

கொடாவி

 கொடாவி koṭāvi, பெ.(n.)

   நாயுருவி; Indian – burr (சா.அக.);.

     [கொறுவி → கொடுவி → கொடாவி.]

கொடி

கொடி1 koṭi, பெ.(n.)

   கருப்பையிலிருக்கும் குழந்தைக்கு உணவு சென்றடையும் கொப்பூழ்க் கொடி; umbilical cord. மறுவ, நஞ்சுக்கொடி

     [கொடு (வளைவு); – கொடி]

 கொடி koṭi, பெ.(n.)

   1. ஒரு நாட்டின், ஒரு குழுவின் சின்னம் பதித்துக் கம்பத்தில் பறக்க வசதியாக வெட்டிய துணி; சட்டை முதலியவற்றில் குத்திக் கொள்ள வசதியாக வெட்டப்பட்ட சிறு துண்டுத்தாள்; flag; standard.

   2. நிறங்களின் வழியாக ஒன்றைத் தெரிவிப்பதற்கு அளவாக வெட்டிய துணி,

 flag to signify something through its colour.

பச்சைக் கொடி. வெள்ளைக் கொடி

     [கொடு-கொடி]

 கொடி1 koḍi, பெ.(n.)

   1.படர்கொடி; creeper, climber,

     “நுடங்குகொடி மருங்கின்”(பெருங், உஞ்சைக். 41;80);.

   2. சித்திரமூலம் (மூ.அக.); பார்க்க;see cittitamülam.

   3. ஆடை உலர்த்துங் கொடி; clothes-line, clothes post.

   4. கொப்பூழ்க் கொடி; umbilical cord.

   ம., தெ., து., குட. கொடி;   க. குடி;   கோத. கொட்ய்;   கோண். கொட்டி;   மா. க்வொரு;பட. குடி..

     [கொடு → கொடி : வளைந்து படரும் நிலைத்திணை வகை (வ.மொ.வர.7); (வே.க.167);.]

 கொடி2 koḍi, பெ.(n.)

   1. மகளிர் கழுத்தணி வகை; gold string or chain for women’s neck.

     “மென்றோட் கொடியென”(பெருங். உஞ்சைக். 41:71);.

   2. அரை ஞாண் (S.I.I.II, 5);; gold or silver thread worn round a person’s waist.

   3. ஏற்றத்தின் கோல் அல்லது கயிறு (வின்.);; rope or pole of a well – sweep.

   4. கண்வரி முதலியன (வின்.);; fine streaks of red capillary veins, as in the eye.

     [கொடு → கொடி.]

 கொடி3 koḍi, பெ.(n.)

   1. ஒழுங்கு; orderliness.

     “கருங்கொடிப் புருவம்” (சீவக.658);.

   2. நீளம்; length.

     “பழன வெதிரின் கொடிப்பிணை யலளே” (ஐங்குறு. 91);.

   3. சிறு கிளைவாய்க்கால் (இ.வ.);; a small branch channel.

   4 ஏரியிலிருந்து வழியும் நீரைக் கொண்டு செல்லும் வாய்க்கால் (W.G.);; a channel for carrying off the surplus water of a reservoir.

     [கொடு → கொடி.]

 கொடி4 koḍi, பெ.(n.)

   1. துணிக்கொடி, பதாகை; banner, flag, standard, streamer.

     “கொடியுங் கவரியும்”(பெருங். உஞ்சை. 57:57.);.

   2. காற்றாடி (யாழ்ப்.);; kite, paper-kite.

   3. காலக்கொடி என்னும் ஒகம்; Yama’s ensign, an inauspicious yoga.

     “பிரம தண்டங் கொடியென்று பொல்லா யோகங்கள்” (விதான. குணாகுன. 34);.

   4. காக்கை; crow.

     “நல சேட்டைக் குலக்கொடியே” (திருக்கோ. 235);.

   5. கீழ்த்திசை; east.

     “கொடிக்கொண்ட கோடையால்” (கலித்.150:15);.

   6. கொடியடுப்பு; side-oven.

கொடி யெரிகிறதா?

   7. பறவை (அவிட்டம்); என்னும் 23 ஆவது உடு; the 23rd naksatra.

     [கொடு → கொடி.]

 கொடி5 koḍi, பெ.(n.)

   கட்டுகயிறாகப் பயன்படுத்தும் நாற்றுச் சோளப்பயிர் அல்லது நனையப் போட்ட கேப்பைத் தாள்; stalk of certain crops used to bind the bundle.

     [குல் → குள் → குடு → கொடு → கொடி.]

கொடி ஆடு

 கொடி ஆடு koḍiāḍu, பெ.(n.)

   மானைப் போல் உயரமாகவும் வெள்ளை கருப்பு நிறத்திலும் இருக்கும் ஆட்டு வகை; a kind of goat.

     [கொடி+ஆடு]

கொடி இண்டு

 கொடி இண்டு koḍiiṇḍu, பெ.(n.)

   மரங்களின் மீது படர்ந்து ஏறக்கூடிய முட் கொடி வகை; a thorny shrub.

மறுவ இண்டங் கொடி.

     [கொடி+இரண்டு]

கொடி நிம்பியம்

 கொடி நிம்பியம் koḍinimbiyam, பெ.(n.)

   வேர்க்கடலை; ground nut (சா.அக.);.

     [கொடி + நிம்பியம்]

கொடிகட்டிநில்-தல்(கொடிகட்டி நிற்றல்)

கொடிகட்டிநில்-தல்(கொடிகட்டி நிற்றல்) goḍigaḍḍiniltalgoḍigaḍḍiniṟṟal,    14 செ.கு.வி.(vi.)

   1. கொடிகட்டு1,2 பார்க்க: see kodi-kattu-,

   2. உறுதிப்பாட்டுடன் முயற்சியை மேற்கொள்ளுதல்; to set about a thing with the utmost zeal and promptness.

   3. நோயாளி முதலியோர் கயிற்றைப் பிடித்துக்கொண்டு நிற்றல் (யாழ்.);; to stand by, holding a rope attached to a beam, as a woman in labour, a sick person etc.

     [கொடிகட்டி + நில்-.]

கொடிகட்டிப்பற-த்தல்

கொடிகட்டிப்பற-த்தல் koṭikaṭṭippaṟattal,    3 செ.கு.வி.(v.i.)

   மிகுந்த செல்வாக்கோடு இருத்தல்; live in great prosperity; fourish.

இந்தக் குடும்பம் அந்த காலத்தில் கொடிகட்டிப்பறந்தது.

     [கொடி+கட்டி+பற-த்தல்.]

 கொடிகட்டிப்பற-த்தல் goḍigaḍḍippaṟattal,    3 செ.கு.வி. (v.i.)

   மிகுந்த செல்வாக்கோடு வாழ்தல்; to live in great prosperity, flourish.

     [கொடி + கட்டி + பற-.]

கொடிகட்டிவாழ்-தல்

கொடிகட்டிவாழ்-தல் goḍigaḍḍivāḻtal,    3 செ.கு.வி. (v.i.)

   மிகுந்த செல்வ வாழ்க்கையில் இருத்தல் (கொ.வ.);; to live in great prosperity.

     [கொடிகட்டி + வாழ்-.]

கொடிகட்டு-தல்

கொடிகட்டு-தல் goḍigaḍḍudal,    5 செ.கு.வி (v.i.)

   1. கொடியெடுத்தல், பார்க்க;see Kodi-y-edu-,

   2. போருக்குவருதல்; to declare hostility.challenge.

   3. கொடியேற்று-தல், பார்க்க;see kodiy-érru-,

     [கொடி + கட்டு-.]

கொடிகம்

 கொடிகம் goḍigam, பெ.(n.)

   ஒருவகை வெந்தயம்; horse-shoe fenugreek (சா.அக.);.

     [கொடு → கொடுகம் → கொடிகம்.]

கொடிகருவேல்

 கொடிகருவேல் goḍigaruvēl, பெ.(n.)

   கருவேலன் கொடி; babool creeper (சா.அக.);.

     [கொடி + கருவேல்.]

கொடிகிழிதல்

 கொடிகிழிதல் goḍigiḻidal, பெ.(n.)

   கருவுயிர்த்தலில் பெண்களுக்குக் கொடிமூலம் பிளத்தல்; laceration of the perineum (சா.அக.);.

     [கொடி + கிழி-.]

கொடிக்கச்சி

 கொடிக்கச்சி koḍikkacci, பெ.(n.)

   சுழற்சிக் கொட்டைச் செடி அல்லது கெச்சக்காய்ச் செடி; eagle stone creeper or nicker tree (சா.அக.);.

     [கொடி + கச்சி.]

கொடிக்கச்சீருகம்

 கொடிக்கச்சீருகம் goḍiggaccīrugam, பெ.(n.)

   பொடு தலை; creeping vervain (சா.அக.);.

     [கொடி + கச்சீருகம்.]

கொடிக்கடமை

கொடிக்கடமை koṭikkaṭamai, பெ.(n.)

வரி வகை (தெ.கல்.தொ.330);; atax(செ.அக.);.

     [கொடி+கடமை.]

கொடிக்கத்தரி

 கொடிக்கத்தரி koḍikkattari, பெ.(n.)

   நீண்ட கத்திரிக்காய்; a species of long brinjal. cf.

கண்டங்கத்தரி (சா.அக.);.

     [கொடி + கத்தரி.]

கொடிக்கப்பல்

 கொடிக்கப்பல் koḍikkappal, பெ.(n.)

   கொடிகட்டிய சிறுமரக்கலம் (இ.வ);; galley or cruiser flying a pennon.

ம. கொடிக்கப்பல்.

     [கொடி + கப்பல்.]

கொடிக்கம்பம்

கொடிக்கம்பம் koḍikkambam, பெ.(n.)

   கோயில்களின் முன்புறம் கொடியேற்றுவதற்காக நடும் மரம்; flag staff in a temple.

     “திருக் கம்பத்திலே”(கோயிலொ. 73);.

மறுவ..கொடிமரம்.

     [கொடி + கம்பம்.]

கொடிக்கயிறு

கொடிக்கயிறு1 koḍikkayiṟu, பெ.(n.)

   1.வீணாத் தண்டின் நடுவில் ஒடும் கயிறுபோன்ற அமைப்பு; the cord-like structure passing through the spinal channel and extending from the brain.

   2. இடுப்பில் கட்டிக்கொண்டு மீன்பிடி வலையினை இழுக்க உதவும் கயிறு; the rope used for pulling out the fishing net by tying with hip (மீ.பிடி.தொ.);.

     [கொடி + கயிறு.]

 கொடிக்கயிறு2 koḍikkayiṟu, பெ.(n.)

   1. முறுக் கேறின. கயிறு; well-twined rope.

     “கொடிக் கயிற் றொடுங் கொணர்ந்தனர்” (உபதேசகா. சிவநாம. 155.);.

   2. கொடியாகக் கட்டுங்கயிறு; rope used as a clothes-line.

   3. கொடியேற்ற, இறக்கப் பயன்படும் கயிறு; rope used to hoist or lower flags.

ம.கொடிக்கயிறு.

     [கொடி + கயிறு.]

கொடிக்கருக்கு

 கொடிக்கருக்கு koḍikkarukku, பெ.(n.)

   வாயில் நிலைகள், தூண்கள் போன்றவற்றில் செய்யப்படும் சிற்பவேலைப்பாடு; decorative workmanship of architectural things in pillars and door frames(சா.அக.);.

கொடிக்கருக்கு

     [கொடி + கருக்கு.]

கொடிக்கருணை

 கொடிக்கருணை koḍikkaruṇai, பெ.(n.)

   கருணை வகை (இ.வ.);; a tuberous-rooted plant.

     [கொடி + கருணை.]

கொடிக்கரும்பு

கொடிக்கரும்பு koḍikkarumbu, பெ.(n.)

   நேராக வளர்ந்த கரும்பு; straight sugarcane.

     “கொடிக்கரும் புடுத்த வேலி’ (சீவக. 1184);.

     [கொடி + கரும்பு.]

கொடிக்கல்

 கொடிக்கல் koḍikkal, பெ.(n.)

   சர்க்கரைவள்ளி; sweet potato creeper-Dioscorea sative (சா.அக.);.

     [கொடி + கல்.]

கொடிக்கள்ளி

கொடிக்கள்ளி koḍikkaḷḷi, பெ.(n.)

   1. கொடிவகை; moon-creeper.

   2. கள்ளிவகை; beak-flowered creeping milk-hedge.

     “கொடிக்கள்ளிப் பாலுக்குக் கூறு” (பதார்த்த 124);.

     [கொடி + கள்ளி.]

கொடிக்கழற்சி

 கொடிக்கழற்சி koḍikkaḻṟci, பெ.(n.)

   கழற்சிக் கொடி; a creeper of two spicies.

மறுவ. கழற்கொடி..

     [கொடி + கழற்சி.]

கொடிக்கழல்

 கொடிக்கழல் koḍikkaḻl, பெ.(n.)

கழற்சிபார்க்க: See kalarci.

ம. கொடிக்கழல்.

     [கொடி + கழல்.]

கொடிக்கவி

கொடிக்கவி koḍikkavi, பெ.(n.)

   தில்லையிலுள்ள கோயிலிற் கொடியேறும்படி உமாபதி சிவாசாரி யாரால் இயற்றப்பெற்றதும், மெய்கண்டசாத்திரம் பதினான்கனுள் ஒன்றுமான சைவ சமய நூல்; a short treatise on the Saiva-siddhanda philosophy, by Umapati-Śivaccariyar, one of 14 Mey-kanda-cattiram q.v., believed to have been composed for raising the temple flag at Chidambaram.

     [கொடி + கவி.]

கொடிக்காக்கட்டான்

 கொடிக்காக்கட்டான் koḍikkākkaḍḍāṉ, பெ.(n.)

   காக்கட்டான் வகை; sky-blue bindweed.

     [கொடி + காக்கட்டான்.]

கொடிக்காசரை

 கொடிக்காசரை koḍikkācarai, பெ.(n.)

   கொடிக் காசரை; a kind of edible greens (சா.அக.);.

     [கொடி + காசரை.]

கொடிக்காசினி

கொடிக்காசினி koḍikkāciṉi, பெ.(n.)

   1. மல்லிகை; Arabian jasmine

   2. படர்மல்லிகை; large – flowered jasmine (சா.அக.);.

     [கொடி + காசினி.]

கொடிக்காய்

கொடிக்காய் koḍikkāy, பெ.(n.)

   கொடிகளில் காய்க்கும் மருத்துவத்திற்குரிய காய்கள்; the vegetables useful to medicine.

கீழ்க்காணும் கொடிகளில் காய்க்கும் காய்கள்.

     [கொடி + காய்.]

வகைகள்:

   1. கலியாணப் பூசணிக்காய்.

   2. பறங்கிக் காய்.

   3. குமட்டிக்காய்.

   4. சுரைக்காய்.

   5. வெள்ளரிக்காய்.

   6. கொட்டையவரைக்காய்.

   7. மொச்சைக்காய்.

   8. பீர்க்கங்காய்.

   9. புடலங்காய்.

   10. பாகற்காய்.

   11. அதனங்காய்.

   12. துதுளங்காய்.

   13. கொடிவழுதுளங் காய்.

   14. பயற்றங்காய்.

   15. கோவைக்காய்.

   16. மிளகுகாய் [சா.அக.].

 கொடிக்காய் koḍikkāy, மெ(n.)

   நிலக்கடலையில் ஒரு வகை; a kind of ground-nut.

     [கொடி+காய்]

கொடிக்காய்வகை

கொடிக்காய்வகை koṭikkāyvakai, பெ.(n.)

   கொடியில் காய்க்கும் காய் வகைகள்; creeper vegetables.

அவையாவன :

   1. கலியாணப் பூசினிக் காய்,

 ash pumpkin, Cucurbita pepo.

   2. பறங்கிக் காய்; sweet gourd, Cucurbitea maxima.

   3. கும்மட்டிக்காய்; bitter apple; Citrullus colocynthis.

   4. சுரைக்காய்; bottle gourd, Lagenaria vulgaris.

   5. வெள்ளரிக்காய்; cucumber, Cucumis satives.

   6. கொட்டையவரைக்காய்; China bean, Dolichor genus.

   7. மொச்சைக்காய்; country bean; Lablab.

   8. பீர்க்கங்காய்; luffa gourd, Luffa acutangula.

   9.புடலங்காய்; snake, Mochosanthes anguina.

   10. பாகற்காய்; balsam gourd, Momordica charantia.

   11.அதளக்காய்; sourgourd, Cucurbita genus.

   12. தூதுளங்காய்; prickly shoonday, Solanum trilobatum.

   13. கொடி வழுதுணைக்காய்; Indian night, shade, Solanum indicum.

   14. பயற்றங்காய்; kidney bean.

   15. கோவைக்காய்; Indian caper, Cephalendra India.

   16.மிளகுக்காய்

 green pepper fruit, Pipernigrum (சா.அக.);.

     [கொடி+காய்+வகை]

கொடிக்காற்கீரை

 கொடிக்காற்கீரை koḍikkāṟārai, பெ.(n.)

   அகத்திக்கீரை; sesbane leaves used as edible greens (சா.அக.);.

     [கொடிக்கால் + கீரை.]

கொடிக்கால்

கொடிக்கால்1 koḍikkāl, பெ.(n.)

   1. வெற்றிலைக் கொடி படருங் கொம்பு (வின்.);; stake or stick set to support the betel creeper.

   2. வெற்றிலை (மலை.);; betel.

   3. வெற்றிலைத்தோட்டம்; betel garden.

   4. காய்கறித்தோட்டம் (இ.வ.);; vegetable garder

   5. கொடிக்கம்பம்; flagstaff of a temple.

     “கோயிலின் முன்னுற்ற கொடிக்காலை”(தனிப்பா. 1:361:98);.

ம. கொடிக்கால்.

     [கொடி + கால்.]

 கொடிக்கால்2 koḍikkāl, பெ.(n.)

   வெற்றிலை பயிரிடும் நிலம்; land where betal is grown.

     “அக்கவி மூலையில் கொடிக்கால் கிணறும்” (நத்தம். ஆய்வேடு. ப.174-24);.

     [கொடி + கால்.]

கொடிக்கால்கத்தரி

கொடிக்கால்கத்தரி koḍikkālkattari, பெ.(n.)

   1. கருங்கொடிக் கத்தரி; a species of black brinjal.

   2. வெற்றிலைத் தோட்டத்தில் பயிராகும் கத்தரி; brinjal cultivated in betel-vine yard (சா.அக.);.

     [கொடிக்கால் + கத்தரி.]

கொடிக்கால்மரம்

 கொடிக்கால்மரம் koḍikkālmaram, பெ.(n.)

   அகத்திமரம்; sesbane tree (சா.அக.);.

     [கொடிக்கால் + மரம்.]

கொடிக்கால்மூலை மூலை

கொடிக்கால்மூலை மூலை koḍikkālmūlaimūlai, பெ.(n.)

   1. வெற்றிலைத் தோட்டமுள்ள திசை; lit., betelgarden quarter.

   2. ஊரின் வடமேற்கு மூலை; the north-west corner of a village.

கொடிக்கால் மூலையில் மின்னினால் உறுதியாய் மழைவரும் (இ.வ.);.

     [கொடிக்கால் + மூலை.]

கொடிக்கால்வேளாளன்

 கொடிக்கால்வேளாளன் koḍikkālvēḷāḷaṉ, பெ.(n.)

கொடிக்காற் பயிர் செய்யும் வேளாள

 cultivating betel.

     [கொடிக்கால் + வேளாளன்.]

கொடிக்கிழங்கு

கொடிக்கிழங்கு koḍikkiḻṅgu, பெ.(n.)

   கொடியின் அடியில் விளையும் கிழங்கின் வகை; the several varieties of medicinal and esculent bulbous roots under the stem of creepers.

     [கொடி + கிழங்கு.]

கொடிக்கிழங்கு வகைகள்:

   1. சீந்திற் கிழங்கு

   2. கருடன் கிழங்கு

   3. கூகைக்கிழங்கு

   4. புளிநாளைக் கிழங்கு

   5. மாகாளிக்கிழங்கு

   6. தண்ணிர்விட்டான் கிழங்கு

   7. தாமரைக் கிழங்கு

   8. செவ்வல்லிக்கிழங்கு

   9. நெய்தற் கிழங்கு

   10. செங்கழுநீர்க்கிழங்கு

   11. கொட்டிக்கிழங்கு

   12. பூமி சருக்கரைக் கிழங்கு

   13.சருக்கரைவள்ளிக்கிழங்கு

   14.கருணைக் கிழங்கு

   15. நிலப்பனைக் கிழங்கு

   16. மரவள்ளிக்கிழங்கு

     [சா.அக.].

 கொடிக்கிழங்கு koḍikkiḻṅgu, பெ.(n.)

   ஏரிக் கரைகளில் காணப்படும். உண்ணக்கூடிய கிழங்கு; a kind of edible root.

     [கொடி+கிழங்கு]

கொடிக்கிழிவு

கொடிக்கிழிவு koḍikkiḻivu, பெ.(n.)

   பெண்கள் கொடி மூலத்தில் கருவுயிர்த்தலால் உண்டாகும் olors; laceration of the perineum (&m.91%.);.

கொடிக்குறிஞ்சா

 கொடிக்குறிஞ்சா koḍikkuṟiñjā, பெ.(n.)

   சிறு குறிஞ்சா; small Indian ipecacuanha;a climber (சா.அக.);.

     [கொடி + குறிஞ்சா.]

கொடிக்குலி

 கொடிக்குலி koḍikkuli, பெ.(n.)

   நூலாஞ்செடி; common cherry nutmeg (சா.அக.);.

     [கொடி + குலி.]

கொடிக்குளம்

 கொடிக்குளம் koḍikkuḷam, பெ.(n.)

   மதுரைத் தெற்கு மாவட்டத்தில் அமைந்த ஒர் ஊர்; a village situated south of Madurai.

     [கோடி + குளம் – கோடிக்குளம் → கொடிக்குளம்.]

ஆனைமலையின் ஒரு கோடியில் இவ்வூர் அமைந்திருப்பதால் முதலில் கோடிக்குளம் என்று பெயர்பெற்று நாளடைவில் கொடிக்குளம் என மருவி வந்ததாம் (த.நா.ஊ.பெ.);.

கொடிக்கூடை

கொடிக்கூடை koḍikāḍai, பெ.(n.)

   1. நாணற் கூடை (வின்.);; wicker-basket.

   2. சுட்டுக் கொடியாலான கூடை; a basket made of binding creeper.

     [கொடி + கூடை.]

கொடிக்கூந்தல்

கொடிக்கூந்தல் koḍikāndal, பெ.(n.)

   1. கொடிகளில் மயிர்க்கூந்தல் போலிருக்கும் ஒரு திரட்சி; a slender turining growth by which a plant attaches itself to something for support.

   2. அம்மையார்; sister’s thread.

மறுவ, கொடியார் கூந்தல். (கொடி கூந்தல்.);

கொடிக்கெண்டை

 கொடிக்கெண்டை kopf-k-kengai பெ.(n.)

   ஒரு வகைக் கெண்டைமீன்; a kind of fish (மீ.பி.டி.தொ.);.

     [கொடி + கெண்டை.]

கொடிக்கையான்

 கொடிக்கையான் koḍikkaiyāṉ, பெ.(n.)

   கையாந்தகரை வகை (வின்.);; a plant growing in wet places.

     [கொடி + கையான்.]

கொடிக்கொத்தான்

கொடிக்கொத்தான்1 koḍikkottāṉ, பெ.(n.)

   1. முடக்கொத்தான்; palsy curer.

   2. கொத்தான்; green thread creeper (சா.அக.);.

     [கொடி + கொத்தான்.]

 கொடிக்கொத்தான்2 koḍikkottāṉ, பெ.(n.)

கொற்றான் பார்க்க;see koran.

     [கொடி + கொத்தான்.]

கொடிக்கொற்றான்

கொடிக்கொற்றான் koṭikkoṟṟāṉ, பெ.(n.)

   1. முடிக்கொத்தான்; palsy curer, Cardiospermum hadlicacabum.

   2.கொத்தான்; green thread creeper, Cassytha filiformis (சா.அக,.);.

     [கொடி+கொற்றான்.]

கொடிங்கியம்

 கொடிங்கியம் koḍiṅgiyam, பெ.(n.)

   கோவை மாவட்டத்துச் சிற்றூர்; a village in Kovai Dt.

     [கொடிங்கு → கொடிங்கியம்.]

கொடிசிலடக்கம்

 கொடிசிலடக்கம் koḍisilaḍakkam, பெ.(n.)

   வாயிலடக்கம்; holding in the mouth as a pill (சா.அக.);

     [கொடிறு → கொடிசு + இல் + அடக்கல்.]

கொடிசு

 கொடிசு koḍisu, பெ.(n.)

   கொடிறு; the joint of the jaw-bones (சா.அக.);.

     [கொடிறு → கொடிசு (கொ.வ.);.]

கொடிசுற்றிப்பிற-த்தல்

கொடிசுற்றிப்பிற-த்தல் koḍisuṟṟippiṟattal,    3 செ.கு.வி. (v.i.)

   பெற்றோர்க்கும் தாய் மாமனுக்கும் தீங்குவிளைதற்கு அறிகுறியாகத் தொப்பூழ்க்கொடி சுற்றிக்கொண்டு குழந்தை பிறத்தல் (உ.வ.);; to be born, as a child, with umbilical cord, around the neck,deemed ominous to parents and maternal uncle.

     [கொடி + சுற்றி + பிற-.]

கொடிசுற்று-தல்

கொடிசுற்று-தல் koḍisuṟṟudal,    5 செ.கு.வி (v.i.)

   தொப்பூழ்க்கொடி குழந்தையைச் சுற்றிக்கொள்ளுதல்; umblical cord encircling the child.

     [கொடி + சுற்று-.]

கொடிசை

கொடிசை koḍisai, பெ.(n.)

   1. கன்னம்; cheek.

   2. நரம்பு; nerve.

மறுவ துப்பு.

     [கொடிறு → கொடிசு → கொடிசை.]

கொடிச்சண்பகம்

 கொடிச்சண்பகம் goḍiccaṇpagam, பெ.(n.)

கொடிச்சம்பங்கி (வின்.); பார்க்க;see kodi-c-cambarigi.

     [கொடி + சண்பகம்.]

கொடிச்சம்பங்கி

 கொடிச்சம்பங்கி koḍiccambaṅgi, பெ.(n.)

   கொடிவகை; creeper champak.

மறுவ, காமப்பூ.

     [கொடி + சம்பங்கி.]

கொடிச்சல்லிமூலம்

கொடிச்சல்லிமூலம் koḍiccallimūlam, பெ.(n.)

   1. நஞ்சுக்கொடி; umbilical cord.

   2. குடல்; intestines (சா.அக.);.

     [கொடி + சல்லி + மூலம்.]

கொடிச்சாறு

கொடிச்சாறு koḍiccāṟu, பெ.(n.)

   1. சிறுபிள்ளையின் சிறுநீர்; boy’s or girl’s urine.

   2. மாதவிலக்கு; menstrual blood.

   3. பெண் காமநீர்; semen muliebre (சா.அக.);.

     [கொடி + சாறு.]

கொடிச்சி

கொடிச்சி1 koḍicci, பெ.(n.)

   1. தண்ணீரைக் கட்டும் கொடி; water bounding plant.

   2. காவட்டம்புல்; citronella grass.

   3. சித்திரமூலம்; Ceylon leadwort.

   4.புற்றாஞ்சோறு; burrow of white-ants.

   5. இரத்த நஞ்சு; a poisonous substance in blood.

   6. குண்டு மணி; crab’s eye.

   7. மூவிலைக் குருந்து; three leaved spring creeper.

   8. குறிஞ்சி நிலத்துப் பெண்; a woman inhabiting a hilly tract.

     “கொடிச்சி காக்கும் பெருங்குர லேனல்” (ஐங்குறு. 296);.

   9. கன்னம்; cheek.

   10. தாடை; jaw.

   11 வெண்மை; whiteness (சா.அக.);.

     [கொடி → கொடிச்சி.]

 கொடிச்சி2 koḍicci, பெ.(n.)

   1. குறிஞ்சிநிலத்துப் பெண்; woman of the hilly tract.

   2. கொடுவேலி (மலை.); பார்க்க;see kogu-véli, Ceylon leadwort.

   3. காமாட்சிப்புல்2 பார்க்க;see kamaici-p-pul (வே.க.167.);.

ம., தெ. து கொடி.

     [கொடி → கொடித்தி → கொடிச்சி (கொடி : நுனி, மலை முகடு.]

 கொடிச்சி3 koḍicci, பெ.(n.)

   கொடிறு (சங்.அக.);; jaws, mandibles.

     [கொடி + கொடிச்சி]

 கொடிச்சி4 koḍicci, பெ.(n.)

கொடிச்சைபார்க்க;see kodiccai.

     [கொடி + கொடிச்சி]

கொடிச்சிங்கேரி

 கொடிச்சிங்கேரி koḍicciṅāri, பெ.(n.)

   கருடக் கொடி (சித்.அக.);; Indian birthwort.

     [கொடி + சிங்கேரி.]

கொடிச்சிதம்

 கொடிச்சிதம் koḍiccidam, பெ.(n.)

   கொடிவேல்; American sumech (சா.அக.);.

     [கொடிச்சி → கொடிச்சிதம்.]

கொடிச்சித்தல்

 கொடிச்சித்தல் koḍiccittal, பெ.(n.)

   கொடிவேல்; American sumach (சா.அக.);.

     [கொடி + சீத்தல்.]

கொடிச்சித்தாமரை

 கொடிச்சித்தாமரை koḍiccittāmarai, பெ.(n.)

நீலத்தாமரை (சித்.அக.);:

 blue nelumbo.

     [கொடிச்சி + தாமரை.]

கொடிச்சியர்

 கொடிச்சியர் koḍicciyar, பெ.(n.)

குறிஞ்சிநிலப் பெண்கள்:

 women in the land of forecters, mountainers.

     [கொடிச்சி + அர்.]

கொடிச்சிவாலி

 கொடிச்சிவாலி koḍiccivāli, பெ.(n.)

   நுனி வெளுத்த வாலுள்ள பசு (யாழ்ப்.);; cow with tail white at the tip.

     [கொடிச்சி + வாலி.]

கொடிச்சிவால்

 கொடிச்சிவால் koḍiccivāl, பெ.(n.)

   நுனி வெண்மையான பசுவின் வால் (யாழ்ப்.);; cow’s tail white at the tip.

     [கொடிச்சி + வால்.]

கொடிச்சீத்தா

 கொடிச்சீத்தா koḍiccīttā, பெ.(n.)

   சீத்தாக்கொடி; custard apple creeper (சா.அக.);.

     [கொடி + சீத்தா.]

கொடிச்சீலை

கொடிச்சீலை koḍiccīlai, பெ.(n.)

   1. கொடியின் செண்டா; pennon, flag.

   2. சித்திரப்படாம்; variegated painted cloth.

   3. துகிற்கொடி; flag, banner as a badge of honour.

மறுவ. விருதுக்கொடி.

     [கொடி + சீலை.]

கொடிச்சூரை

 கொடிச்சூரை koḍiccūrai, பெ.(n.)

   சூரைவகை (வின்.);; creeper species of jujube.

     [கொடி + சூரை.]

கொடிச்செங்கழற்சி

 கொடிச்செங்கழற்சி koḍicceṅgaḻṟci, பெ.(n.)

   சிவப்புக் கழற்சிக்கொடி; red bondue creeper (சா.அக);.

     [கொடி + செம்மை + கழற்சி.]

கொடிச்சேணி

 கொடிச்சேணி koḍiccēṇi, பெ.(n.)

   பெருந்தக்காளி; cape gooseberry (சா.அக.);.

     [கொடி + சேணி.]

கொடிச்சை

கொடிச்சை koḍiccai, பெ.(n.)

   1. கன்னம்; cheek.

   2. தாடை jaw.

ம. கொடிஞ்ஞ.

     [கொடி → கொடிச்சை]

கொடிஞாழன்மாணிபூதனார்

 கொடிஞாழன்மாணிபூதனார் koṭiñāḻṉmāṇipūtaṉār, பெ.(n.)

   கடைக் கழகத்துப் புலவருள் ஒருவர்; a poet who belongs to the last Tamil academy (அபி.சிந்);.

     [கொடி+ஞாழன்+மாணி+பூதன்+ஆர்]

கொடிஞாழல்

 கொடிஞாழல் koḍiñāḻl, பெ.(n.)

   மயிர்க்கொன்றை; Barbados flower fence (சா.அக.);.

     [கொடி + ஞாழல்.]

கொடிஞ்சி

கொடிஞ்சி koḍiñji, பெ.(n.)

   1. கைக்குதவியாகத் தேர்த்தட்டின் முன்னே நடப்பட்டுத் தாமரைப்பூ வடிவுள்ள அழகு பொதிந்த உறுப்பு; ornamental staff in the form of a lotus, fixed in front of the seat in a chariot and held by the hand as support.

     “மணித்தேர்க் கொடிஞ்சி கையாற் பற்றி”(மணிமே. 4:48.);.

   2. தேர்; car chariot.

     “கொய்யுளை கொடிஞ்சி குஞ்சரம்” (ஞானா. 7:18);.

     [கொடி : நுனி, முகடு. கொடி → கொடிஞ்சி (தேர் மொட்டு);.]

கொடிஞ்சிற்பலகை

 கொடிஞ்சிற்பலகை goḍiñjiṟpalagai, பெ.(n.)

   எருதுகளைக் கொண்டு ஆற்றுக்கால் தோண்டும் பலகை; large wooden shovel or scoop for dredging river-channels.

     [கொடிஞ்சில் + பலகை.]

கொடிஞ்சிலடி-த்தல்

கொடிஞ்சிலடி-த்தல் koḍiñjilaḍittal,    4 செ.கு.வி. (v.i.)

   கொடிஞ்சிற் பலகையால் ஆற்றுக்கால் தோண்டுதல்; to dredge a river – channel with a shovel.

     [கொடிஞ்சில் + அடி-.]

கொடிஞ்சில்

 கொடிஞ்சில் koḍiñjil, பெ.(n.)

கொடிஞ்சிற்பலகை பார்க்க;see kodinjir-palagai,

     [கொடி → கொடிஞ்சில்.]

கொடிதினம்

 கொடிதினம் koḍidiṉam, பெ.(n.)

கொடிநாள் பார்க்க;see kodi-nal.

     [கொடி + தினம்.]

கொடிதிருப்பு-தல்

கொடிதிருப்பு-தல் koṭitirupputal,    5 செ.கு.வி.(v.i.)

   பெண் கொண்ட குடும்பத்தில் பெண் கொடுத்தல்; to give a girl in marriage to a member of a family from which a girl has been taken in marriage (செ.அக.);.

     [கொடி+திருப்பு-தல்.]

கொடிது

 கொடிது koḍidu, பெ.(n.)

   கொடியது; that which is virulent, harsh.

     “வறுமைகொடிது”.

     [கொடியது + கொடிது.]

கொடிதூக்கு-தல்

கொடிதூக்கு-தல் koḍidūkkudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   புணர்ச்சிக்காக உடையை =உயர்த்துதல்; to lift a woman’s cloth for the purpose of sexual inter course.

     [கொடி + தூக்கு.]

கொடித்தக்காளி

 கொடித்தக்காளி koḍittakkāḷi, பெ.(n.)

   தென்னமெரிக்க நாட்டைச் சார்ந்த தக்காளிவகை (மூ.அக.);; tomato, pailing plant introduced from South America.

ம. கொடித்தக்காளி.

     [கொடி + தக்காளி).]

கொடித்தடக்கி

கொடித்தடக்கி koḍittaḍakki, பெ.(n.)

   1. மரவகை (மூ.அக.);; a tree.

   2. நாய்க்காலின் மேல்விரல் (யாழ்.அக.);; small projection near the toes of a dog.

     [கொடி + தடக்கி.]

கொடித்தடம்

 கொடித்தடம் koḍittaḍam, பெ.(n.)

   ஒற்றையடிப் பாதை (இ.வ.);; footpath.

     [கொடி + தடம்.]

கொடித்தடுக்கல்

 கொடித்தடுக்கல் koḍittaḍukkal, பெ.(n.)

   பாம்பு தீண்டல்; to bite as of cobra.

     [கொடி + தடுக்கல்.]

கொடித்தடை

கொடித்தடை koḍittaḍai, பெ.(n.)

   1. கொடியால் உண்டாகுந் தடை; lit., prohibition by a stage.

   2. கொடியேற்றியுள்ள திருவிழாக்காலத்தில் ஊர் விட்டு ஊர்செல்லக் கூடாதென்னுங் காப்புத்தடை; prohibition against travel during a temple. festival.

     [கொடி + தடை.]

கொடித்தட்டு

கொடித்தட்டு1 koḍittaḍḍu, பெ.(n.)

   காற்றாடிச் சண்டை (வின்.);; competition with two kites to see which cuts the other’s string.

     [கொடி + தட்டு.]

 கொடித்தட்டு2 koḍiddaḍḍudal,    5 செ.குன்றாவி, (v.t.)

   நல்லபாம்பு கடித்தல்; to bite, as of cobra.

     [கொடி + தட்டுதல். கொடி அசைந்துபடுதல் கொடிபோன்ற பாம்புகடித்தல்]

மொழித்துறையில் அவர் (தமிழர்); நாகரிகம் அடைந்திருப்பது போன்று பண்பாடும் அடைந்திருந்தனர் ஒன்றிற்கு இரண்டிற்குப் போதலை இடக்கரடக்கல் என்றும் சாதலைப் பெரும்பிறிது என்றும் நல்லபாம்பு கடித்தலைக் கொடித்தட்டல் என்றும் மங்கலவழக்காயும் கூறிவந்தனர் [பண்.தமி. பண். நா.106].

 கொடித்தட்டு koḍittaḍḍu, பெ(n.)

   சாணிமண்,எரு போன்றபவற்றை அள்ளுவதற்கு முரட்டுக் காட்டுக் கொடிகளால் பின்னப்பட்ட குழிவுள்ள குழிவுள்ள தட்டு; flat type of basket made of rough Creeper used to take dung and soil.

     [கொடி+தட்டு]

கொடித்தண்டு

கொடித்தண்டு koḍittaṇḍu, பெ.(n.)

கொடிக்கம்பம் பார்க்க;see kodi-k-kambam,

     ‘கருடப்புள் ளெழுதிய கொடித்தண்டு'(சிலப். 11:136, உரை);.

     [கொடி + தண்டு.]

கொடித்தம்பட்டன்

 கொடித்தம்பட்டன் koḍittambaḍḍaṉ, பெ.(n.)

   வாளவரை வகை; fat – podded sword-bean

     [கொடி + தம்பட்டன்.]

கொடித்தம்பம்

 கொடித்தம்பம் koḍittambam, பெ.(n.)

   கொடி கட்டுந் தறி; a post for tying a flag.

     [கொடி + தம்பம்.]

கொடித்தரம்

கொடித்தரம் koḍittaram, பெ.(n.)

   1. கதிரவன் தோன்றும்போது அல்லது மறையும்போது வானுச்சியில் தோன்றும் எட்டாம் நாள் நிலவு (வின்.);; the waxing or waning moon in the 8th, sometimes also in the 7th or 9th phase, when it is in the meridian at sunrise or sunset.

     [கொடி + தரம்.]

கொடித்தாலி

 கொடித்தாலி koḍittāli, பெ.(n.)

சரட்டுத்தாலி (இ.வ.); பார்க்க;see carattu-t-tāli.

     [கொடி + தாலி]

கொடித்தி

கொடித்தி koḍitti, பெ.(n.)

கொடிச்சி (தைலவ. தைல.17); பார்க்க;see kodicci.

     [கொடிச்சி → கொடித்தி. கொடித்தி.என்னும் சொல்லை கொடித்தீ என செ.அக குறிப்பது தவறு.]

கொடித்திப்பிலி

கொடித்திப்பிலி koḍittippili, பெ.(n.)

   1. திப்பிலிக் கொடி; pepper creeper.

   2. சிறுதிப்பிலி; a small variety of pepper (சா.அக.);.

     [கொடி + திப்பிலி.]

கொடித்திருப்பாடகம்

 கொடித்திருப்பாடகம் goḍittiruppāḍagam, பெ.(n.)

   ஒருவகைத் தாவணி; a kind of shoe.

     [கொடி + திரு + பாடகம்]

கொடித்திரும்பு-தல்

கொடித்திரும்பு-தல் koḍiddirumbudal,    5 செ.கு.வி. (v.i.)

   கோள்கள் வானுச்சியைக் கடத்தல்; to pass the meridian, as the sun or other heavenly body.

     “கொடித்திரும்பின உடனே”(யாழ்ப்.);.

     [கொடி + திரும்பு-.]

கொடித்தீ

 கொடித்தீ koḍittī, பெ.(n.)

   சித்திரமூலம்; Ceylon leadwort (சா.அக.);.

மறுவ. கொடிச்சி.

     [கொடித்து → கொடித்தி → கொடித்தீ (கொ.வ.);.]

கொடித்துத்தி

 கொடித்துத்தி koḍittutti, பெ.(n.)

   சிறுதுத்திவகை (வின்.);; membranous carpelled evening – mallow.

     [கொடி + துத்தி.]

கொடித்தூண்

 கொடித்தூண் koḍittūṇ, பெ.(n.)

   கொடியோடும் வீணாத்தண்டு; the vertebaral column through which the spinal cord passes (சா.அக.);.

     [கொடி + தூண்.]

கொடித்தோட்டம்

 கொடித்தோட்டம் koḍittōḍḍam, பெ.(n.)

   மிளகு அல்லது வெற்றிலைத் தோட்டம்; pepper or betel grove.

ம. கொடித்தோட்டம்.

     [கொடி + தோட்டம்.]

கொடித்தோதிகம்

 கொடித்தோதிகம் goḍittōtigam, பெ.(n.)

   நீராரை; pseudoferuns marselia qudri-folia (சா.அக.);.

     [கொடி + தோதிகம்.]

கொடிநஞ்சுமாவு

 கொடிநஞ்சுமாவு koḍinañjumāvu, பெ.(n.)

   நஞ்சுக்கொடி; umbilical cord (சா.அக.);.

     [கொடி + நஞ்சு.]

கொடிநடு

 கொடிநடு koṭinaṭu, பெ.(n.)

   தண்டுவடத்தின் நடுவே ஓடுவதாகச் சொல்லப்பட்ட ஒரு காணாப் பாதை; a subtle passage supposed to be running in the centre of the spinal cord (சா.அக.);.

     [கொடி+நடு]

 கொடிநடு koḍinaḍu, பெ.(n.)

   கொடிக்கயிற்றின் நடுவே ஓடுவதாகச் சொல்லப்பட்ட ஒர் காணா பாதை; a subtte passage supposed to be running in the centre of the spinal cord (சா.அக.);,

     [கொடி + நடு.]

கொடிநரம்பு

கொடிநரம்பு koḍinarambu, பெ.(n.)

   1. மேலேழும்பிக் காணும் உடம்பின் பச்சை நரம்பு; veins seen prominent by raised above the surface of the body.

   2. உடம்பில் கொடியைப்போற் படர்ந்து காணும் நரம்பின் கூட்டம்; spinal nerves with their ramifications extending to several parts of the body.

   3. உடம்பின் நடுப்பாகத்தில் இதயம், வயிறு, அடிவயிற்றுப்பகுதி ஆகியவற்றில் வலைபோற் காணப்படும் நரம்புக் கூட்டம்; the great net-work of nerves or veins upon the heart, about the stomach and other abdominal viscera (சா.அக.);.

     [கொடி + நரம்பு.]

கொடிநவ்வல்

 கொடிநவ்வல் koṭinavval, பெ.(n.)

   படர் நாவல்; a species of jaumoon creeper, Jambolana(சா.அக.);.

     [கொடி+நவ்வல்.]

கொடிநாக்கி

 கொடிநாக்கி koṭinākki, பெ.(n.)

படர்நெல்லி,

 a rare plant(சா.அக.);.

     [கொடி+நாக்கி]

கொடிநாட்டியழை-த்தல்

கொடிநாட்டியழை-த்தல் koḍināḍḍiyaḻaittal,    4 செ.கு.வி (v.i.)

   உயிர்ப்பிழைக்க கையை நீட்டிச் செய்கை மூலம் உதவி வேண்டுதல்; ask for some help by showing hands to save the life (மீ.பிடி.தொ.);.

     [கொடி + நாட்டி + அழை-.]

கொடிநாய்

 கொடிநாய் koḍināy, பெ.(n.)

   சோணங்கி நாய் (வின்.);; grey-hound.

     [கொடி + நாய்.]

கொடிநாரத்தன்

கொடிநாரத்தன் koḍinārattaṉ, பெ.(n.)

கொடி நாரத்தை (அ.வை.ர.1667); பார்க்க;see kodinārattai.

     [கொடி + நாரத்தன்.]

கொடிநாரத்தை

 கொடிநாரத்தை koḍinārattai, பெ.(n.)

   நாரத்தை வகை (சித்.அக.);; a kind of citron.

     [கொடி + நாரத்தை.]

கொடிநாளம்

கொடிநாளம் koḍināḷam, பெ.(n.)

   1. பச்சை நரம்பு; vein.

   2. காரிரத்தக்குழாய்களடங்கிய வலைபோன்ற கூட்டம்; a great net-work of veins (சா.அக.);.

     [கொடி + நாளம்.]

கொடிநாள்

 கொடிநாள் koḍināḷ, பெ.(n.)

   முன்னாள் படைவீரர் மேம்பாட்டிற்காக நிதி திரட்டும் வகையில் குறிப்பிட்ட நாள்; flag day, observed to raise funds for ex-service men.

     [கொடி + நாள்.]

முன்னாள் படைவீரர்களுக்கெனக் குறிப்பிடப்பட்ட முத்திரை அச்சிடப்பட்ட முத்திரைத்தாள், துணி முதலியன விற்கப்படும் நாள்.

கொடிநாவல்

 கொடிநாவல் koḍināval, பெ.(n.)

   நாவல் வகை (வின்.);; species of jambolanum.

     [கொடி + நாவல்.]

கொடிநிலை

கொடிநிலை koḍinilai, பெ.(n.)

   1. கடவுளர்தம் கொடிகளுள் ஒன்றனோடு அரசன் கொடியை உவமித்துப் புகழும் புறத்துறை (பு.வெ. 9,36);; theme eulogising the king’s flag as resembling that of Brahma, Visnu or Siva.

   2. கீழ்திசையில் நிலையாக எழுஞ்சூரியன்; the sun regularly rising in the east.

     “கொடிநிலை கந்தழி வள்ளி”(தொல். பொருள். 88);.

     [கொடி : உச்சி. நுனிமேல் கதிரவனை உச்சிக்கிழான் என்பதை ஒப்பு நோக்குக. கொடி + நிலை.]

கொடிநெட்டி

 கொடிநெட்டி koḍineḍḍi, பெ.(n.)

நீர்ச்சுண்டி (மலை.);;பார்க்க;see nir-c-cundi,

 water mimosa.

     [கொடி + நெட்டி.]

கொடிநெல்லி

 கொடிநெல்லி koḍinelli, பெ.(n.)

   படர்நெல்லி; gooseberry creeper (சா.அக.);.

     [கொடி + நெல்லி.]

ஒரு காயசித்தி மூலி. சூதத்தை மணியாகப் பண்ணும். கொடிநெல்வாயல்

கொடிநெல்வாயல்

 கொடிநெல்வாயல் koḍinelvāyal, பெ.(n.)

   திருவள்ளூர் மாவட்டத்துச் சிற்றுார்; a village in Tiruvallur Dt.

     [கொடிநெல்லி → கொடிநெல் + வாயல்]

கொடிநேத்திரிகம்

 கொடிநேத்திரிகம் goḍinēttirigam, பெ.(n.)

   பெருங்குன்றிமணி; a big variety of red bead vine (சா.அக.);.

     [கொடி + நேத்திரிகம் (நேத்திரிகம் – வ.மொ. (விழி போல்); இருப்பதால் இப் பெயர் பெற்றிருக்கலாம்.]

கொடிநை

 கொடிநை koḍinai, பெ.(n.)

   சுண்டி; water mimosa (சா.அக.);.

     [கொடி → கொடிநை.]

கொடிபடருதல்

 கொடிபடருதல் koṭipaṭarutal, தொ.பெ. (vbl.n.)

   கொடி சூழ்தல்; spreading of creeper (சா.அக.);.

     [கொடி+படரு-தல்.]

கொடிபடர்-தல்

கொடிபடர்-தல் koḍibaḍartal,    3 செ.கு.வி.(v.i.)

   கொடி சூழ்தல்; spreading of creeper (சா.அக.);.

     [கொடி + படர்-.]

கொடிபிடி-த்தல்

கொடிபிடி-த்தல் koḍibiḍittal,    4 செ.கு.வி.(v.i.)

   1. வேலை நிறுத்தம் மேற்கொள்ளல்; to go on strike..

   2. முரணாகச் செயல்படுதல்; to act perversely.

     [கொடி + பிடி-.]

கொடிபிள-த்தல்

கொடிபிள-த்தல் koḍibiḷattal, பெ.(n.)

   4 செ.கு.வி.(v.i.);

கொடிகிழி-தல் பார்க்க;see kodi-killi-

     [கொடி + பிள-.]

கொடிபோடு-தல்

கொடிபோடு-தல் koḍipōḍudal,    19 செ.குன்றாவி. (v.t.)

   போருக்கு அழைக்கவேனும் வெற்றி குறிக்கவேனும் கொடி நாட்டுதல்; to hoist a flag as a challenge or signal of victory.

   2. உறுதியாயிருத்தல்; to be determined.

   3. தன்னதாக்க வழிபண்ணுதல் (யாழ்.அக.);; to device ways and means of appropriating.

     [கொடி + போடு-.]

கொடிப்பசலை

கொடிப்பசலை koḍippasalai, பெ.(n.)

   1. மஞ்சட்செம்முள்ளி; common yellow nail-dye.

   2. பசலைக்கொடி; spinach Creeper.

   3: சிறுபசலை; small-leaved Indian spinach (சா.அக.);.

     [கொடி + பசலை.]

கொடிப்பசளை

 கொடிப்பசளை koḍippasaḷai, பெ.(n.)

கொடிப் பசலை (இ.வ.); பார்க்க;see kodi-p-pasalai.

     [கொடி + (பசலை); பசளை.]

கொடிப்படை

கொடிப்படை koḍippaḍai, பெ.(n.)

   சேனையின் முன்னணிப்படை; front rank of an army, van.

     “கொடிப்படை போக்கிப் படிப்படை நிறீஇ” (பெருங். மகத 24:39);.

மறுவ. துசிப்படை (தூசு – துணிக்கொடி);

     [கொடி + படை.]

கொடிப்பட்டை

 கொடிப்பட்டை koḍippaḍḍai, பெ.(n.)

   நீரிறைக்கும் ஒலைப்பட்டை (வின்.);; ola-bucket.

     [கொடி + பட்டை.]

கொடிப்பந்தர்

கொடிப்பந்தர் koḍippandar, பெ.(n.)

   கொடிகள் படர்ந்த பந்தல்; a power or shady retreat made of interwining creepers.

     “எழுநிலை மாடமு மிடுகு கொடிப்பந்தரும்”(பெருங். இலாவாண. 15:11);.

     [கொடி + (பந்தல்); பந்தர்.]

கொடிப்பயறு

 கொடிப்பயறு koḍippayaṟu, பெ.(n.)

   பயறுவகை (வின்.);; a kind of pulse that puts forth tendrils.

     [கொடி + பயறு.]

கொடிப்பலாசம்

 கொடிப்பலாசம் koḍippalācam, பெ.(n.)

   கொடி முருக்கம்; species of palaus climber – Butea superba (சா.அக.);.

     [கொடி + பலாசம்.]

கொடிப்பவளம்

 கொடிப்பவளம் koḍippavaḷam, பெ.(n.)

   பவளக்கொடி; brittle epidermis of the stem of coral.

     [கொடி + பவளம்.]

கொடிப்பவழம்

கொடிப்பவழம் koḍippavaḻm, பெ.(n.)

பவழம் பார்க்க;see pavalam.

     “கொளுவொடு படாஅக் கொடிப்பவ ழத்து” (பெருங். இலாவாண. 2:127);.

     [கொடி + பவழம்.]

கொடிப்பவுத்திரம்

 கொடிப்பவுத்திரம் koḍippavuttiram, பெ.(n.)

   குதத்திற்கும் குய்யத்திற்கும் நடுவே கொடிபோல் நீளமாக ஒடும் ஒருவகை மூலநோய்; a kind of fistula or opening near the line of perinellu communicating with the anus or rectum, a fistula through the premium into the anus(சா.அக.);.

     [கொடி + பவுத்திரம்.]

கொடிப்பாகல்

 கொடிப்பாகல் koḍippākal, பெ.(n.)

   கொடியில் விளையும் பாகற்காய்; spiked bitter cucumber – Momondica charantia (சா.அக.);.

     [கொடி + பாகல்.]

கொடிப்பாசி

கொடிப்பாசி koḍippāci, பெ.(n.)

   நீர்ப்பாசிவகை (M.M. 668.);; a kind of moss creeping upon water.

மறுவ, கனைப்பாசி.

     [கொடி + பாசி.]

கொடிப்பாசூரி

 கொடிப்பாசூரி koḍippācūri, பெ.(n.)

   நத்தைச்சூரி; bristly button weed (சா.அக.);

     [கொடி + பாசூரி.]

கொடிப்பாதை

 கொடிப்பாதை koḍippātai, பெ.(n.)

கொடித்தடம் (இ.வ.); பார்க்க;see kodi-t-tadam.

     [கொடி + பாதை.]

கொடிப்பாலை

கொடிப்பாலை koḍippālai, பெ.(n.)

   1. பாலைவகை (L.);; greenwax-flower.

   2. பாலையாழ்த்திறவகை (திவா.);; an ancient secondary melody – type of the pālai class.

ம. கொடிப்பால.

     [கொடி + பாலை.]

கொடிப்பால்

கொடிப்பால் koṭippāl, பெ.(n.)

   1. சிறு பெண்ணின் முலைப்பால்; the breast milk of a girl or young woman.

   2. கொடியின் பால்; the milky juice of creeper.

   3. கொடி ஆட்டின் பால்; goats milk(சா.அக.);.

     [கொடி + பால்.]

கொடிப்பாவை

கொடிப்பாவை koḍippāvai, பெ.(n.)

   1. காட்டுக் கொடி பார்க்க;see kattu-k-kodi.

   2. கொடியைப் போன்ற பெண்; a girl slender and wring like a creeper (சா.அக.);.

     [கொடி + பாவை.]

கொடிப்பிணை

 கொடிப்பிணை koḍippiṇai, பெ.(n.)

   வங்கமணல் (யாழ்.அக.);; lead ore.

     [கொடி + பிணை.]

கொடிப்பிணையல்

 கொடிப்பிணையல் koḍippiṇaiyal, பெ.(n.)

   நீளப் புனையும் மாலைவகை; a kind of garland.

     [கொடி + பிணையல்.]

கொடிப்பிரட்டி

 கொடிப்பிரட்டி koḍippiraḍḍi, பெ.(n.)

   ஒருவகைச் செடி; an unidentified plant (சா.அக.);.

கொடிப்பிரண்டை

 கொடிப்பிரண்டை koḍippiraṇḍai, பெ.(n.)

   பிரண்டைக் கொடி; adamant creeper (சா.அக.);.

     [கொடி + பிரண்டை.]

கொடிப்பிள்ளை

கொடிப்பிள்ளை koḍippiḷḷai, பெ.(n.)

   1. காக்கைக் குஞ்சு; the young of a crow.

   2. பள்ளையாடு; a dwarf goat.

   3. கொடிசுற்றிப் பிறந்த பிள்ளை; child born with navel-cord round its neck (சா.அக.);.

     [கொடி + பிள்ளை.]

கொடிப்புங்கு

 கொடிப்புங்கு koḍippuṅgu, பெ.(n.)

கொடிப்புன்கு பார்க்க;see kodi-p-pսրցս.

     [கொடி + புன்கு – கொடிப்புன்கு → கொடிப்புங்கு.]

கொடிப்புடவை

 கொடிப்புடவை koḍippuḍavai, பெ.(n.)

   அறுதலி (விதவை);க்கு முதலாண்டுப் பயன்பாட்டிற்கெனச் சுற்றத்தார் கொடியிலிடும் புதுச்சேலை; new cloth which relatives of a arudali place on a clothes-line for use during the first year of her widowhood.

     [கொடி + புடவை.]

கொடிப்புன்கு

 கொடிப்புன்கு koḍippuṉku, பெ.(n.)

   கொடிவகை (L.);; hog creeper.

மறுவ. சுரபுன்கு.

     [கொடி + புன்கு.]

கொடிப்புலி

 கொடிப்புலி koḍippuli, பெ.(n.)

   நீண்ட வேங்கைப் புலி; a long and thin tiger;

 a tiger of an extended body resembling a grey-hound (சா.அக.);.

     [கொடி + புலி.]

கொடிப்புல்

கொடிப்புல் koḍippul, பெ.(n.)

அறுகு பார்க்க;see arugu.

     “கொடிப்புல்லென்று கறிப்பான”(சீவக.932);.

மறுவ. கொடியறுகு.

     [கொடி + புல்.]

கொடிப்பூ

கொடிப்பூ koḍippū, பெ.(n.)

   நால்வகைப் பூக்களுட் கொடிகளிற் பூப்பது; flower of creepers, one of nālvagappu.

     “சின்னப்பூ வணிந்துங் கொடிப்பூக் கொய்தும்” (பெருங். இலாவாண.12:130);.

     [கொடி + பூ.]

கொடிப்பூகம்

 கொடிப்பூகம் koḍippūkam, பெ.(n.)

   காமப்பூ; creeper champauk (சா.அக.);.

மறுவ. கொடிச்சம்பங்கி,

     [கொடி + பூகம்.]

கொடிப்பூண்டு

 கொடிப்பூண்டு koṭippūṇṭu, பெ.(n.)

   கொடி; any creeping plant; creeper (சா.அக.);.

     [கொடி+பூண்டு]

கொடிப்பூளை

 கொடிப்பூளை koḍippūḷai, பெ.(n.)

   பூளைக்கொடி; a species of climbing woolplant-Aerua seandens (சா.அக.);.

     [கொடி + பூளை.]

கொடிப்பை

கொடிப்பை koḍippai, பெ.(n.)

   1. பொன்னாங்கண்ணி,

 sessile plant.

   2. ஒரு மீன்; a fish (சா.அக.);.

மறுவ, கொடுப்பை.

கொடிமங்கலத்துவாதுளிநற்சேந்தனார்

 கொடிமங்கலத்துவாதுளிநற்சேந்தனார் koṭimaṅkalattuvātuḷinaṟcēntaṉār, பெ.(n.)

   கடைக் கழகம் மருவிய புலவர்; the poet who belonged to the last Sangam era (அபி.சிந்);.

     [கொடிமங்கலம்+அத்து+வாதுனி+நல்+சேந்தன்+ஆர்]

இவர் ஊர் கொடிமங்கலமாக இருக்க வேண்டும்.

கொடிமங்கலம்

 கொடிமங்கலம் koḍimaṅgalam, பெ.(n.)

   மதுரை மாவட்டத்துச் சிற்றூர்; a village in Madurai Dt.

     [கொடி + மங்கலம்.]

கொடிமணி

கொடிமணி koḍimaṇi, பெ.(n.)

   1. மணிக்குடல்; mesentery retaining the intestines and their appendages.

   2. கொடிமாதுளை பார்க்க (சா.அக.);;see kodi-mădulai.

     [கொடி + மணி.]

கொடிமந்தாரை

 கொடிமந்தாரை koḍimandārai, பெ.(n.)

   மந்தாரைக் கொடி; climbing mountain ebony (சா.அக.);.

     [கொடி + மந்தாரை.]

கொடிமப்பு

 கொடிமப்பு koḍimappu, பெ.(n.)

   கொடிபோன்று நீளமாகக் காட்சி தரும் மேகம்; a cloud in the shape of creeper.

மறுவ. கொடிமேகம்.

     [கொடி + மப்பு.]

கொடிமரம்

கொடிமரம் koḍimaram, பெ.(n.)

   1. கொடியைக் கட்டுவதற்காக நடப்படும் மரம்; a flag-staff.

   2. கோவில் கொடிமரம்; flag-staff in a temple.

கொடிமரம்

   ம. கொடிமரம்;   து..கொடிமர;பட. கொடிமொர.

     [கொடி + மரம்.]

கொடிமல்லிகை

கொடிமல்லிகை goḍimalligai, பெ.(n.)

   1. மல்லிகை (பிங்.);; Arabian jasmine.

   2. சாதிமல்லிகை (L.);

 large flowered jasmine.

     [கொடி + மல்லிகை.]

கொடிமாகிதம்

 கொடிமாகிதம் koṭimākitam, பெ. (n.)

   நெஞ்சில்; caltropes, Tribulus terrestrisa (சா.அக.);.

     [கொடி+மாகிதம்]

கொடிமாசிகள்

 கொடிமாசிகள் goḍimācigaḷ, பெ.(n.)

   நிலையற்றோடும் மேகங்கள் (வின்.);; flitting clouds.

     [கொடி + மாசி.]

கொடிமாடு

கொடிமாடு koḍimāḍu, பெ.(n.)

   1. நீண்டு தளர்ந்த மாடு (வின்.);; bullock, lank and long.

   2. கதரடித்த வைக்கோலில் ஒட்டியுள்ள நெல்மணிகளை அறவே நீக்க மாடுகளைப் பக்கவாட்டில் இணைத்துச் சுற்றிவரச் செய்தலில் (கிடாவடி); வலக்கைப்பக்கம் முதலில் நிற்கும் மாட்டின் பெயர்; the bullock on the right most end of team of bullocks used to go round & round for threshing out the remaining grains from the straw from which most of the paddy has been threshed out by hand.

     [கொடி + மாடு.]

கொடிமாதளத்தி

 கொடிமாதளத்தி koḍimātaḷatti, பெ.(n.)

   வேளை; vēlay(சா.அக.);.

     [கொடி + மாதளத்தி.]

கொடிமாதுளை

கொடிமாதுளை koḍimātuḷai, பெ.(n.)

   1. துரிஞ்சி மாதுளை; creeping anaur.

   2. கொம்மட்டி மாதுளை; pomegranate lime.

     [கொடி + மாதுளை.]

கொடிமாதுளைச்சோறு

 கொடிமாதுளைச்சோறு koḍimātuḷaiccōṟu, பெ.(n.)

   கொடிமாதுளையின் உட்சதைப்பற்று; the pulp of creeper of pomegranate lime (சா.அக.);.

     [கொடி + மாதுளை + சோறு.]

கொடிமாமரம்

 கொடிமாமரம் koḍimāmaram, பெ.(n.)

   தரையோடு படர்ந்திருக்கும் ஒட்டு மாமரம்; graft mango tree (சா.அக.);.

     [கொடி + மரம்.]

கொடிமின்

 கொடிமின் koḍimiṉ, பெ.(n.)

கொடிமின்னல் பார்க்க;see kodi-minnal. [கொடி + மின்.]

கொடிமின்னல்

 கொடிமின்னல் koḍimiṉṉal, பெ.(n.)

   கொடிபோல் வீசி ஒளிரும் மின்னல்; extended streak of lightning.

     [கொடி + மின்னல்.]

கொடிமின்னை

 கொடிமின்னை koḍimiṉṉai, பெ.(n.)

   மூக்குத்திக் கொடி; pointed leaved hogweed – Boerhaavia rependa alias B. Verticillata (சா.அக.);.

     [கொடி + மின்னை.]

கொடிமுகாக்கினி

 கொடிமுகாக்கினி koṭimukākkiṉi, பெ.(n.)

   நெல்லி; gooseberry tree, Phyllanthus emblica (சா.அக.);.

     [கொடி+முகம்+அக்கினி]

கொடிமுடி

 கொடிமுடி koḍimuḍi, பெ.(n.)

   கிளைகள் பிணைத்திருக்கும் செடிவகை (வின்.);; a shrub with intertwined branches.

     [கொடி + முடி.]

கொடிமுடிந்தவழக்கு

 கொடிமுடிந்தவழக்கு koḍimuḍindavaḻkku, பெ.(n.)

   ஓயாத சிக்கல் வழக்கு (இ.வ.);; intricate never-ending dispute.

     [கொடி + முடிந்த + வழக்கு.]

கொடிமுடிபருவதம்

 கொடிமுடிபருவதம் koḍimuḍibaruvadam, பெ.(n.)

   வெள்ளிமலை; mountain containing silver ore (சா.அக.);.

     [கொடி + முடி + பருவதம்.]

கொடிமுடிபர்வதம்

 கொடிமுடிபர்வதம் koṭimuṭiparvatam, பெ.(n.)

   வெள்ளி மலை; mountain containing silver ore (சா.அக.);.

     [கொடிமுடி+Skt. பர்வதம்]

கொடிமுடியன்

 கொடிமுடியன் koḍimuḍiyaṉ, பெ.(n.)

கொம்பேறி மூக்கன் (யாழ்.); பார்க்க;see kombēri-mūkkan.

     [கொடி + முடி + அன். அன் – சொ. ஆ.ஈறு]

கொடிமுடிவாயில்

 கொடிமுடிவாயில் koḍimuḍivāyil, பெ.(n.)

   அறமன்றம்; court of justice.

     [கொடிமுடி + வாயில்.]

கொடிமுண்டி

கொடிமுண்டி koḍimuṇḍi, பெ.(n.)

   1. கொடிமுந்திரி; a kind of grape plant.

   2. கொட்டைக்களா; false wild jujube (சா.அக.);.

     [கொடி + முந்தி – கொடிமுந்தி → கொடிமுண்டி.]

கொடிமுதன்மருந்து

கொடிமுதன்மருந்து koḍimudaṉmarundu, பெ.(n.)

   1.சமூலம்; herbaceous creeper as a whole.

   2. பெண்ணின் முதல் தீட்டு; the blood ir first menstruation.

   3. தலைச்சன் பிள்ளை நச்சுக்கொடி யினின்று தயாரிக்கும் ஓர் சுண்ண மருந்து; a calcium compound prepared from the navel – cord of a first born child (சா.அக.);.

     [கொடி + முதல் + மருந்து.]

கொடிமுந்திரி

கொடிமுந்திரி koḍimundiri, பெ.(n.)

   திராட்சை (பதார்த்த.762);; grape vine. ம. கொடிமுந்திரி.

     [கொடி + முந்திரி.]

கொடிமுந்திரிகை

 கொடிமுந்திரிகை goḍimundirigai, பெ.(n.)

கொடி முந்திரி பார்க்க;see kodi-mundiri.

     [கொடி + முந்திரிகை.]

கொடிமுன்னிகம்

 கொடிமுன்னிகம் goḍimuṉṉigam, பெ.(n.)

   கொடிமுல்லை; eared jasmine.

     [கொடி + முள் + இகம் – கொடிமுள்ளிகம் → கொடி முண்ணிகம் → கொடிமுன்னிகம்.]

கொடிமுன்னை

 கொடிமுன்னை koḍimuṉṉai, பெ.(n.)

   மூக்குத்திக் கொடி (L.);; pointed leaved hogweed.

     [கொடி + முன்னை.]

கொடிமுரிதம்

 கொடிமுரிதம் koḍimuridam, பெ.(n.)

   நேர்வாளம்; croton plant (சா.அக.);.

     [கொடி + முரிதம்.]

கொடிமுருக்கம்

 கொடிமுருக்கம் koḍimurukkam, பெ.(n.)

   கொடிப் பலாசம்; a species of palaus climber (சா.அக.);.

     [கொடி + முருக்கம்.]

கொடிமுறுக்கம்

 கொடிமுறுக்கம் koṭimuṟukkam, பெ.(n.)

   கொடிப் பலாசம்; a species of palaus climber, Butea superba (சா.அக.);.

     [கொடி+முறுக்கம்]

கொடிமுறுக்கு

 கொடிமுறுக்கு koḍimuṟukku, பெ.(n.)

   நன்றாக ஏறின முறுக்கு (இ.வ.);; inextricable twist, as of a twine.

     [கொடி + முறுக்கு.]

கொடிமுல்லை

 கொடிமுல்லை koḍimullai, பெ.(n.)

   ஊசிமுல்லை (சா.அக.);; eared jasmine.

     [கொடி + முல்லை.]

கொடிமூகாக்கினி

 கொடிமூகாக்கினி koḍimūkākkiṉi, பெ.(n.)

   நெல்லி; gooseberry tree Phyllanthus emblica (சா.அக.);.

     [கொடி + முகம் + அக்கினி – கொடிமூகாக்கினி (கொ.வ.);.]

கொடிமூக்கு

கொடிமூக்கு koḍimūkku, பெ.(n.)

நீண்ட மூக்கு:

 long slender nose.

     ‘ஒழுகுபொற் கொடிமூக்கும்” (சீவக.165);.

     [கொடி + மூக்கு.]

 கொடிமூக்கு koḍimūkku, பெ.(n.)

மூக்கின் நுனி:

 tip of the nose.

     “சோதி நயனங் கொடி மூக்கிலேயுறச்சீர்திகடச்சிங்காதனமணக்கச் செய்யுமே” (திருமந்:540);.

     [கொடி+மூக்கு]

கொடிமூட்டு

கொடிமூட்டு1 koḍimūḍḍudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   பெண்கள் கருவுயிர்த்தலில் கிழிந்த கொடி மூலத்தைத் தைத்தல்; suturing the torn or lacerated portion of the perineum during child birth, plastic surgery of the perineum (சா.அக.);.

     [கொடி + மூட்டு-.]

 கொடிமூட்டு2 koḍimūḍḍu, பெ.(n.)

   கொடிமூலத்தின் தையல்; suture of the perineum (சா.அக.);.

     [கொடி + மூட்டு.]

கொடிமூலக்கழலை

 கொடிமூலக்கழலை koḍimūlakkaḻlai, பெ.(n.)

   குதத்திற்கும் குய்யத்திற்கும் நடுவிலுண்டாகும் கழலை; any tumour in the perineum (சா.அக.);.

     [கொடி + மூலம் + கழலை.]

கொடிமூலம்

கொடிமூலம் koḍimūlam, பெ.(n.)

   1.நஞ்சுக்கொடி; umbilical cord.

   2. வழலை; fuller’s earth.

   3. கொடியின் அடிவேர்; root of creeper.

   4. மரத்தின் மேல் படர்ந்த கொடி; creeper on a tree.

   5. குதத்திற்கும் குய்யத்திற்கும் நடுவே கொடியின் இரு பக்கமுள்ள சதைப்பகுதி; the space or area between the anus and the genital organs, perineum.

   6. கொடியின் கிழங்கு; the root of a creeper.

   7. கொடிக்கயிற்றின் பிறப்பு; the beginning of the spinal cord in the sacral region (சா.அக.);.

     [கொடி + மூலம்.]

கொடிமூலி

கொடிமூலி koḍimūli, பெ.(n.)

   1. சிவப்புச் சித்திர மூலம்; rosy flowered leadwort.

   2. மூலிகைக் கொடிகள்; medicinal creepers (சா.அக.);.

     [கொடி + மூலி.]

கொடிய

கொடிய koṭiya, பெ.அ.(adj)

   1. உயிருக்கு ஊறு விளைவிக்கக் கூடிய

 likely to cause danger to life; cruel,

இந்தக் காட்டில்

சிங்கம், புலி போன்ற கொடிய மிருகங்கள் இருக்கின்றன. கொடிய கொலையாளிகள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

   2. பொறுத்துக் கொள்ள முடியாத அளவுக்கு வருந்துகை கடுமையான, மிகுந்த

 causing unbearable strain; terrible; severe.

கொடிய குளிர்காற்று வீசியது. கொடிய வற்கடகம் (பஞ்சம்); தலைவிரித்தாடியது.

     [கொடு- கொடிய]

 கொடிய koḍiya, பெ.எ.(adj.)

   கடுமையான, கொடுமையான; terrible, cruel, severe, intense.

ம. கொடிய.

     [கொடு → கொடிய.]

கொடியகடுந்தீ

கொடியகடுந்தீ goḍiyagaḍundī, பெ.(n.)

   1. கொடிவேலி; leadwort.

   2: புடத்திற்குப் போடும் காடாக்கினி; conflagration of fire or great fire used in calcination (சா.அக.);.

     [கொடிய + கடும் + தீ.]

கொடியகற்பி

 கொடியகற்பி goḍiyagaṟpi, பெ.(n.)

   கற்ப மூலிகையான நீலஞ்சோதி எனும் திருகுகள்ளி வேர்; root of twisted milk spurge (சா.அக.);.

     [கொடிய + கற்பி.]

கொடியசுரம்

கொடியசுரம் koḍiyasuram, பெ.(n.)

   1. வெப்பக் காய்ச்சல்; thermic fever.

   2. கடுமையான காய்ச்சல்; high degree of fever (சா.அக.);.

     [கொடிய + சுரம்.]

கொடியடுப்பு

கொடியடுப்பு koḍiyaḍuppu, பெ.(n.)

   1. அடுப்புப் புகை; a kind of domestic oven.

   2. பக்க அடுப்பு; side-oven.

ம. கொடியடுப்பு.

கொடியடுப்பு

     [கொடி + அடுப்பு.]

கொடியணிவட்டம்

 கொடியணிவட்டம் koḍiyaṇivaḍḍam, பெ.(n.)

   சுவர்த்தூணில் அமைக்கப்படும் அழகு அணி; a kind of decoration made in wall pillars.

     [கொடி + அணி + வட்டம்.]

கொடியதகம்

 கொடியதகம் goḍiyadagam, பெ.(n.)

   கொடிவேலி சித்திரமூலம்; Plumbago genus (சா.அக.);.

     [கொடி + அதகம்.]

கொடியத்தி

 கொடியத்தி koḍiyatti, பெ.(n.)

நீரத்தி (மலை.); பார்க்க;see nir-atti.

     [கொடி + அத்தி.]

கொடியநற்குணி

 கொடியநற்குணி koṭiyanaṟkuṇi, பெ.(n.)

   கருநொச்சி; black notchy, Vitex trifolia (சா.அக.);.

     [கொடிய+நல்+குணி]

கொடியநிறக்குன்னி

 கொடியநிறக்குன்னி koḍiyaniṟakkuṉṉi, பெ.(n.)

   கருநொச்சி; black notci (சா.அக.);.

     [(கொடிய + நிறம் + குன்னி.]

கொடியந்தம்

 கொடியந்தம் koḍiyandam, பெ.(n.)

வீணாத்தண்டு வழியாய் மூளையில் போய் ஒடுங்கும் கொடிக் கயிற்றின் முடிவு.

 the terminal portion of the spinal cord running through the vertebral column and connecting with brain (சா.அக.);.

     [கொடி + அந்தம்.]

கொடியனல்ராகு

 கொடியனல்ராகு koḍiyaṉalrāku, பெ.(n.)

   கோமேதகம்; sardonyx (சா.அக.);.

     [கொடியனல் + ராகு.]

கொடியன்

கொடியன்1 koḍiyaṉ, பெ.(n.)

   தீயன் (சூடா.);; cruel man.

     [கொடுமை → கொடியன்.]

 கொடியன்2 koḍiyaṉ, பெ.(n.)

   செங்கோள் (கேது); (சூடா.);; the descending node.

     [கொடுமை → கொடியன்.]

கொடியபீசம்

 கொடியபீசம் koḍiyapīcam, பெ.(n.)

   சீதாங்க நஞ்சு; a mineral poison (சா.அக.);.

     [கொடிய + பீசம்.]

கொடியமன்னன்

 கொடியமன்னன் koḍiyamaṉṉaṉ, பெ.(n.)

கோடாசொரி வைப்புநஞ்சு (யாழ்.அக.); பார்க்க;see ködāsori-Vaippu-nanju.

     [கொடிய + மன்னன்.]

கொடியரசு

கொடியரசு koḍiyarasu, பெ.(n.)

   1. அரசுவகை; wild pipal.

   2. அவரை (மலை.); பார்க்க;see avarai.

     [கொடி + அரசு.]

கொடியராகு

 கொடியராகு koḍiyarāku, பெ.(n.)

   கோமேதகம் (யாழ்.அக.);; cinnamon stone, a species of garnet.

     [கொடிய + ராகு.]

கொடியறுகு

 கொடியறுகு goḍiyaṟugu, பெ.(n.)

   அறுகுவகை; a species of Bermuda grass.

     [கொடி + அறுகு.]

கொடியழிஞ்சில்

 கொடியழிஞ்சில் koḍiyaḻiñjil, பெ.(n.)

   கூவழிஞ்சில்; alangiam creeper.

மறுவ. கூவழிஞ்சில்.

     [கொடி + அழிஞ்சில்.]

கொடியவருக்கை

 கொடியவருக்கை koḍiyavarukkai, பெ.(n.)

   பெருந்தும்பை; bitter leucus (சா.அக.);.

     [கொடிய + வருக்கை.]

கொடியவரை

 கொடியவரை koḍiyavarai, பெ.(n.)

   அவரை; country bean creeper-Dolichos albus (சா.அக.);.

     [கொடி + அவரை.]

கொடியவர்

கொடியவர் koḍiyavar, பெ.(n.)

   கொடுமையான குணங்களையுடையவர்; one who is harsh (குறள், 550. பரிமே.); (உரை சொ. 2);.

ம. கொடியவன்.

     [கொடு → கொடியவர்.]

கொடியவிடகாரி

 கொடியவிடகாரி koṭiyaviṭakāri, பெ.(n.)

   சீந்தில்; moon creeper, Menispermum cordifolium (சா.அக.);.

     [கொடிய+விடத்தாரி]

கொடியவிடத்தி

 கொடியவிடத்தி koṭiyaviṭatti, பெ.(n.)

   மருதாணி; fragrant naildye, Lawsonia alba alias Lawsonia spinosa (சா.அக.);.

     [கொடிய+விடத்தி]

கொடியவிடம்

கொடியவிடம் koṭiyaviṭam, பெ.(n.)

   1. சீதங்க பாடாணம்; a mineral poison.

   2. பொல்லாத நஞ்சு; virulent poison (சா.அக.);.

     [கொடிய+விடம்]

கொடியவியாதி

 கொடியவியாதி koḍiyaviyāti, பெ.(n.)

கொடிய நோய் பார்க்க: see kodiya-noy.

     [கொடிய + வியாதி.]

கொடியவீரன்

 கொடியவீரன் koḍiyavīraṉ, பெ.(n.)

கோடாசொரி வைப்புநஞ்சு (வின்.); பார்க்க: see kodasori-vaippu-nanju.

     [கொடிய + வீரன்.]

கொடியாச்சி

 கொடியாச்சி koḍiyācci, பெ.(n.)

   பிள்ளைத்தாய்ச்சிக் கொடி; an unknown plant. probably a creeper useful to pregnant woman (சா.அக.);,

     [கொடி + ஆய்ச்சி.]

கொடியாடு

கொடியாடு koḍiyāḍu, பெ.(n.)

   ஆண்டிற்கொருமுறை ஒரு குட்டி ஈனும் நீண்டகாலுள்ள ஆடு; long legged goat which annually begets one kid. Opp. to palladu.

     “கொடியாடு நற்கறியாம்” (பதார்த்த. 845.);.

மறுவ: வெள்ளாடு.

     [கொடி + ஆடு.]

கொடியாட்டுக்கறியை அதிகாலையில் சமைத்துச் சாப்பிட இடுப்புவலி, ஈளை, வெட்டைச் சூடு போகும் எனச் சா.அக. கூறும்,

கொடியாடை

கொடியாடை koḍiyāḍai, பெ.(n.)

கொடிச்சீலை பார்க்க see kodi.c-cilai.

     “கொடியாடை முதலானதுகளைத் தைக்கிறதும்”(கோவிலொ.94);.

ம. கொடியாட.

     [கொடி + ஆடை.]

கொடியாந்தரம்

 கொடியாந்தரம் koḍiyāndaram, பெ.(n.)

   கொடுமை; cruelty.

     [கொடிய + அந்தரம்.]

கொடியான்

கொடியான் koḍiyāṉ, பெ.(n.)

   கொடுமையானவன்; cruel man.

     “கொடியான் வருமென்று குலாவுவதோ” (கம்பரா. உருக்காட்டு.9);.

     [கொடியன்1 → கொடியான்.]

கொடியாம்பல்

கொடியாம்பல் koḍiyāmbal, பெ.(n.)

   1 ஆம்பல் கொடி,

 Indian water lily.

   2. நீராம்பல் என்னும் ஒரு வகைப் பாண்டு நோய்; a kind of ascites (சா.அக.);.

     [கொடி + ஆம்பல்.]

கொடியார் கூந்தல்

 கொடியார் கூந்தல் koḍiyārāndal, பெ.(n.)

   கொடியார் கூந்தலெனும் பூண்டுவகை; a kind of plant called kodiyār-kūndal.

மறுவ. அம்மையார் கூந்தல்.

     [கொடியார்(பெண்டிர்); + கூந்தல்.]

கொடியாலம்

கொடியாலம் koḍiyālam, பெ.(n.)

   தஞ்சை மாவட்டத்தில் காவிரித் தென்கரையில் அமைந்த பண்டைய ஊர்; a village in Thanjavur Dt.

     “தென்கரைராச கம்பீர வளநாட்டுக் கொடியாலம் ஊர் ஒன்று”(தெ.இ.கல்.329, 2);.

     [கொடி + ஆலம்.]

கொடியால்

 கொடியால் koḍiyāl, பெ.(n.)

ஆலமரவகை (வின்.);:

 a kind of banyan.

     [கொடி + ஆல்.]

கொடியாளன்

 கொடியாளன் koḍiyāḷaṉ, பெ.(n.)

   கோடா கெளரி செய்நஞ்சு; a kind of prepared arsenic (சா.அக.);.

     [கொடு → கொடி + ஆளன்.]

கொடியாளம்

 கொடியாளம் koḍiyāḷam, பெ.(n.)

   தருமபுரி மாவட்டத்துச்சிற்றூர்; a village in Dharmapuri Dt.

     [கொடியாலம் → கொடியாளம்.]

கொடியாள்

கொடியாள்1 koḍiyāḷ, பெ.(n.)

   கொடி போன்ற பெண்; slender and beautiful lady as a vine.

     “கொடியாளை,,,,,,, மருமானுக் கருள்செய்ய” (சீவக. 1057);.

ம. கொடியாள்.

     [கொடி + கொடியாள்.]

 கொடியாள்2 koḍiyāḷ, பெ.(n.)

   கொடுமையானவள்; cruel woman.

     “உள்ளமுங் கோடிய கொடியாள்” (கம்பரா. மந்தரை.81);.

கொடியாள்கூந்தல்

ம. கொடியாள்.

     [கொடுமை → கொடியாள்.]

கொடியாள் கூந்தல்

கொடியாள் கூந்தல் koḍiyāḷāndal, பெ.(n.)

கொடியார்கூந்தல் (வின்.); பார்க்க;see kodyarkundal.

     [கொடியாள்1 + கூந்தல்.]

கொடியிச்சன்

 கொடியிச்சன் koṭiyiccaṉ, பெ.(n.)

   சீமை ஈச்சன்; common Indian fern, Cycas circinalis (சா.அக);.

     [கொடி+ஈச்சன்.]

கொடியிடை

 கொடியிடை koḍiyiḍai, பெ.(n.)

   சிற்றிடை; slim waist, or loins (suggestive of slender shapeliness of a female);.

ம. கொடியிட, கொடிநடுவு.

     [கொடி + இடை.]

கொடியிறக்கம்

 கொடியிறக்கம் koḍiyiṟakkam, பெ.(n.)

   முடிவு பண்ணுதல் (யாழ்.அக.);; concluding, finishing.

     [கொடி + இறக்கம்.]

கொடியிறக்கு

கொடியிறக்கு1 koḍiyiṟakkudal,    5 செ. குன்றாவி.(v.t.)

   முடிவு பண்ணுதல்; to conclude

ம. கொடியிறக்குக.

     [கொடி + இறக்கு-.]

 கொடியிறக்கு2 koḍiyiṟakkudal,    5 செ.

குன்றாவி.(v.t.);

   1. ஏற்றின கொடியைத் தாழ்த்துதல்; to strike or lower a flag.

   2. திருவிழா முடிவாகக் கொடியைக் கீழிறக்கிவிடுதல்; to take down the temple flag, as indicating the close of a festival.

   3. காற்றாடியை இறக்குதல் (யாழ்ப்.);; to pull or haul down a kite.

     [கொடி + இறக்கு-.]

கொடியிலஞ்சு

கொடியிலஞ்சு koḍiyilañju, பெ.(n.)

   கொடியில் காய்க்கின்ற கறிகள் ஐந்து; creeper vegetables fruits.

     “அடைக்காயமுது இலையமுது கொம்பில் அஞ்சு கொடியில் அஞ்சுமுதல் கறியமுதும்” (S.І.І.ХХIV. 412);.

     [கொடி + இல் + (ஐந்து); அஞ்சு.]

கொடியிலந்தை

 கொடியிலந்தை koḍiyilandai, பெ.(n.)

   இலந்தை வகை (வின்.);; a spreading shrub.

     [கொடி + இலந்தை.]

கொடியிலாஞ்சு

 கொடியிலாஞ்சு koḍiyilāñju, பெ.(n.)

   கொடியில் காய்கின்ற கறிகள் ஐந்து; creeper vegetable fruits five.

     [கொடி + இலாஞ்சு.]

கொடியிலை

கொடியிலை2 koḍiyilai, பெ.(n.)

   வாழையிலையின் நுனிப்பகுதி; the tip of the plantain leaf (சேரநா.);.

ம. கொடியில.

     [கொடி + இலை.]

கொடியிலைவகை

கொடியிலைவகை koṭiyilaivakai, பெ.(n.)

   பல வகையான செடிகளின் இலை; a variety of creeper leaves.

   1. தூதுறையிலை; leaf of three-lobed night shade, Solanum trilobatum.

   2. பறங்கியிலை; leaf of sweet gourd, Cucurbita maxima.

   3. கறையிலை; leaf of bottle-gourd, Lagenaria vulgaris.

   4. பேய்ச்சுரையிலை; leaf of wild bottleground, Pepo lagenarius.

   5.பாகவிலை; leaf of country bean creeper, Dolichos albus.

   6. அவரையிலை; leaf of country bean creeper, Dolichos albus.

   7. காராமணியிலை; leaf of crow gram, Wigma catang,

   8. கொடிக் குறிஞ்சாயிலை; leaf of small Indian ipecacuanna, Gymnema sylvestre.

   9. கறிப்லையிலை; leaf of edible paulay, Mimusops Kanki.

   10. ஊசிப்பாலையிலை; leaf of needle paulay, Periploca esculentum.

   11. கோவையிலை; leaf of India coccinia, Cephandra indica.

   12. முகமுசுக்கையிலை; leaf of rough bryony, Mukia scabresla.

   13. கோழியவரையிலை; leaf of fowl’s bean, Canavalia cusiformis,

   14. முயற்காதிலை; rabbit’s ear leaf.

   15. கழற்சியிலை; leaf of bonduc nut creeper, Caesalpinia bonducella.

   16. வெண்கழற்சியிலை; leaf of white bonduc creeper, Guilandia bonducella.

   17. வரிக்கும்மட்டியிலை; leaf of striped colocynth gourd, Cucumis colocynthis.

   18. சிறுபூனைக் காயிலை; leaf of whitish passion flower, Passiflora foetida.

   19. வேலிப் பருத்தியிலை; hedge cotton leaf, Daemia extensa.

   20. துராயிலை; leaf of king of herbs, Fumaria parviflora.

   21. செந்துராயிலை; red variety of tura-y-ilai.

   22. நச்சுமூங்கியிலை; poison bamboo leaf, Asiatic poison bulb, Crinum asaticum.

   23. சதாப்பிலை; leaf of Indian rue, Ruta graveolens.

   24. கடற்பாலையிலை; leaf of ocean dryer, Convolvuls nervosus.

   25. நொச்சியிலை; leaf of five leaved chaste tree, Vitex negundo.

   26. தழுதாழையிலை; wind killer, Cleodendron Phlomoides (சா.அக.);.

     [கொடி+இலை+வகை]

கொடியில்லை

கொடியில்லை1 koḍiyillai, பெ.(n.)

   மருந்துக்குப் பயன்படும் இலை வகைகள் (பதார்த்த குண சிந்தாமணியிற் சொல்லியுள்ளவை);; creeperleaves useful in medicine as laid down in Tamil Materia medica viz.

     [கொடி + இலை.]

வகைகள்:

   1. தூதுளையிலை,

   2. பறங்கியிலை,

   3. சுரையிலை,

   4. பேய்ச்சுரையிலை,

   5. பாகலிலை,

   6. அவரையிலை,

   7. காராமணியிலை,

   8. கொடிக் குறிஞ்சாவிலை,

   9. கறிவேப்பிலை,

   10. ஊசிப்பாலை யிலை,

   11. கோவையிலை,

   12. முசுமுகக்கையிலை,

   13 கோழியவரையிலை,

   14 முயற்காதிலை, க.கழற்சி யிலை,

   16. வெண் கழற்சியிலை,

   17. வரிக்கும்மட்டியிலை,

   18. சிறு பூனைக் காலியிலை,_

   19. வேலிப்பருத்தியிலை,

   20 துராயிலை,

   21.செந்துராய் இலை,

   22 நச்சு மூங்கிலிலை,

   23.சதாப்பிலை,

   24.கடற்பாலையிலை,

   25.நொச்சியிலை,

   26.தழுதாழையிலை.

கொடியீசு

 கொடியீசு koḍiyīcu, பெ.(n.)

கொடியீச்சையார்க்க;see kodi-yiccai (சா.அக.);.

     [கொடி + ஈசு.]

கொடியீச்சு

 கொடியீச்சு koḍiyīccu, பெ.(n.)

சவ்வரிசி பார்க்க;see cavvarisi.

     [கொடி + ஈச்சு.]

கொடியீச்சை

 கொடியீச்சை koḍiyīccai, பெ.(n.)

சீமையீச்சை:

 common Indian fern.

     [கொடி + ஈச்சை.]

கொடியுளுந்து

 கொடியுளுந்து koḍiyuḷundu, பெ.(n.)

   கொடி யாகப்படர்ந்து கூடுதலாகப்பயன் கொடுக்கும் உளுந்து வகை; a creeperkind of blackgram yielding more.

     [கொடி+உளுந்து]

கொடியூசிதம்

 கொடியூசிதம் koḍiyūcidam, பெ.(n.)

   பச்சைத் திப்பிலி; green plant of long pepper (சா.அக.);.

     [கொடி + ஊசிதம்.]

கொடியூமத்தை

 கொடியூமத்தை koḍiyūmattai, பெ.(n.)

   ஊமத்தைக் கொடி; datura creeper (சா.அக.);.

     [கொடி + ஊமத்தை.]

கொடியூர்

 கொடியூர் koḍiyūr, பெ.(n.)

   திருவண்ணாமலை அருகே அமைந்துள்ள சிற்றூர்; a small village near Thiruvannãmalai.

     [கொடி + ஊர்.]

ஆால் விளக்கணி (கார்த்திகைத்தீபம்); விழாவிற் குரிய கொடியினை இவ் வூரிலிருந்து எடுத்துச் செல்வதால் இவ் வூர் கொடியூர் எனப் பெயர் பெற்றதாம்.

கொடியூர்கிழார்மகனார்நெய்தற்றத்தனார்

கொடியூர்கிழார்மகனார்நெய்தற்றத்தனார் koṭiyūrkiḻārmakaṉārneytaṟṟattaṉār, பெ. (n.)

   கடைக்கழகப் புலவரில் ஒருவர்; one of the poet who belonged to the last Šaňgam.

     [கொடியூர்+கிழார்+மகனார்+நெய்தல்+தத்தன்+ஆர்]

இவர் இயற்பெயர் தத்தர். நெய்தல் நிலத்தைச் சார்ந்தவர். தந்தையின் பெயர் கொடியூர்க்கிழார்.

இவர் வேளாளர் (அபி.சிந்.);. அகநானூறு 243ம்

பாடலைப் பாடியுள்ளார்.

கொடியெடு-த்தல்

கொடியெடு-த்தல் koḍiyeḍuttal,    4 செ.கு.வி. (v.i.)

   அறைகூவுகை, வெற்றி என்பவற்றின் அறிகுறியாகக் கொடி பிடித்தல்; to raise the standard as a signal of a challenge or victory.

     “நுண்கலை நீத்த நீந்திக் கொடியெடுத்த வர்க்கு நல்கு” (சீவக. 291);.

     [கொடி + எடு-.]

கொடியெலுமிச்சை

கொடியெலுமிச்சை koḍiyelumiccai, பெ.(n.)

   எலுமிச்சை வகை (பதார்த்த. 678);; Italian lemon.

     [கொடி + எலுமிச்சை.]

கொடியேறு

 கொடியேறு koḍiyēṟu, பெ.(n.)

   திருவிழாத் தொடங்குவதைக் குறிக்கக் கொடியேறுதல்; the flag to be hoisted in temples as an indication of festival.

ம. கொடியேறுக.

     [கொடி + ஏறு.]

கொடியேற்றம்

 கொடியேற்றம் koḍiyēṟṟam, பெ.(n.)

   திருவிழாத் தொடக்கத்தில் கொடிமரத்தில் கொடியை யுயர்த்துகை; hoisting a flag in the temple at the commencement of a periodical festival.

ம. கொடியேற்றம்.

     [கொடி + ஏற்றம்.]

கொடியேற்று

கொடியேற்று1 koḍiyēṟṟudal,    5 செ.கு.வி.(v.i.)

   திருவிழாத் தொடக்கத்தில் கொடியை உயர்த்துதல்; to hoist a flag in a temple indicating the beginning of a periodical festival.

     “திருக்கொடி யேற்று நான்று” (S.I.I, II, 125);.

ம. கொடியேற்றுக.

     [கொடி + ஏற்று-.]

 கொடியேற்று2 koḍiyēṟṟu, பெ.(n.)

கொடியேற்றம் பார்க்க;see kodi-y-erram.

     “காமன்கொடி யேற்றென வியப்ப” (குமர. பிர. முத்துக். 77);.

     [கொடி + ஏற்று.]

கொடியொட்டி

 கொடியொட்டி koḍiyoḍḍi, பெ.(n.)

   கருப்பையை அடுத்து ஒட்டிக்கொண்டிருக்கும் நஞ்சுக்கொடியின் சதைப் பாகம்; that part of the placenta which comes next to uterine wall (சா.அக.);.

     [கொடி + ஒட்டி.]

கொடியோடு-தல்

கொடியோடு-தல் koḍiyōḍudal,    5 செ.கு.வி. (v.i.)

   1.கொடியுண்டாகிப் படர்தல் (இ.வ.);; to shoot forth tendrils.

   2. கை அல்லது கண் வரைவு (ரேகை); நீளுதல்; to be marked with long-lines as palm;

 to be marked with fine red capillary streaks, as eyes, etc.,

   3. இறக்குங்காலத்தில் மூச்சு இழைதல்; to be feeble, as breath at the time of death.

     [கொடி + ஒடு-.]

கொடியோன்

கொடியோன்1 koḍiyōṉ, பெ.(n.)

   தீயவன்; cruel man.

     “கொடியோர்த் தெறுதலும்” (புறநா. 29:9);.

ம. கொடியோன்.

     [கொடு (கொடுமை); → கொடியோன்.]

 கொடியோன்2 koḍiyōṉ, பெ.(n.)

   1. கற்றாழை (மலை.); பார்க்க;see karaajai.

   2. கறிப்புடோல்; vegetable gourd or snake gourd.

   3. கற்பூரம்; champor.

   4. வீரம்; corrosive sublimate.

     [கொடி + கொடியோன்.]

கொடிறு

கொடிறு1 koḍiṟu,    பெ.(n.); cheek, jaw.

     “கொடிறுடைக்குங் கூன்கையர்” (குறள் 1077);.

   2. யானை மதச்சுவடு (பிங்.);; marks of elephant’s must

   3. குறடு; pincers.

     “கொடிறும் பேதையுங் கொண்டது விடா” (திருவாச. 4:63);.

     [கொடு → கொடிறு.]

 கொடிறு2 koḍiṟu, பெ.(n.)

   எட்டாவது கோள், மீன், பூசம்; eigth naksatra pusam.

     [கொடு → கொடிறு (குறடு);.]

கொடிற்றுக்கோல்

கொடிற்றுக்கோல் koḍiṟṟukāl, பெ.(n.)

   செங்கல் முதலியவற்றைப் பெயர்த்தெடுப்பதற்குக் கள்வர் பயன்படுத்துங்கருவி (சிலப்.16:142. உரை);; jemmy, crow-bar, one of the implements of a burglar for removing stones from a wall.

     [கொடிறு + கோல்.]

கொடிற்றுச்சன்னி

 கொடிற்றுச்சன்னி koḍiṟṟuccaṉṉi, பெ.(n.)

   பற்கள் பூட்டிக்கொள்ளும்படி செய்யும் நரப்பிசிவு வகை; lockjaw, tetanus.

     [கொடிறு + சன்னி.]

கொடிலி

 கொடிலி koḍili, பெ.(n.)

   விட்டில்பூச்சி; kokra laurel (சா.அக.);.

     [கூடு + இல்லி – கூடில்லி → கொடில்லி → கொடிலி (கொ.வ.);.]

கொடிவகை

 கொடிவகை goḍivagai, பெ.(n.)

   கொடி; creeper.

     [கொள் → கொடு → கொடி. கொள் : பற்று.]

கொடிவங்கம்

 கொடிவங்கம் koḍivaṅgam, பெ.(n.)

   வங்கமணல்; lead ore (சா.அக.);.

     [கொடி + வங்கம்.]

கொடிவசலி

 கொடிவசலி koḍivasali, பெ.(n.)

   நல்ல பாலை; green-wax flower (சா.அக.);.

மறுவ. கொடிப்பாலை,

     [கொடி + வசலி.]

கொடிவசலை

கொடிவசலை koḍivasalai, பெ.(n.)

   1. மஞ்சட் செம்முள்ளி; common yellow nail-dye-Barberia prionitis.

   2. பசலைக்கொடி; spimach creeper.

   3. சிறுபசலை; small leaved Indian spinach (சா.அக.);.

மறுவ. கொடிப்பசலை.

ம. கொடிவசள.

     [கொடி + (பசலை); வசலை.]’

கொடிவஞ்சி

 கொடிவஞ்சி koḍivañji, பெ.(n.)

   வஞ்சிக்கொடி; slender rattan (சா.அக.);.

     [கொடி + வஞ்சி.]

கொடிவடாகிகம்

 கொடிவடாகிகம் goḍivaḍāgigam, பெ.(n.)

   காமப்பூ; creeper champauk (சா.அக.);.

     [கொடி + (வளங்கம் (பிறை); → வடங்கம்); வடாகிகம்.]

கொடிவட்டக்கல்

 கொடிவட்டக்கல் koḍivaḍḍakkal, பெ.(n.)

   நஞ்சுக் கொடியில் உண்டாகும் கல் அல்லது மணலைப் போன்ற திரட்சி; calcareous or sabulus deposits contained in the placenta (சா.அக.);

     [கொடி + வட்டம் + கல்.]

கொடிவட்டப்பிறை

 கொடிவட்டப்பிறை koḍivaḍḍappiṟai, பெ.(n.)

   கருவில் இரட்டைப் பிள்ளை உண்டாகியிருக்கும் போது சில வேளை ஏற்படும் பிறையைப் போன்ற கொடி; a crescentic form of placenta, sometimes occuring in twin pregnancy (சா.அக.);.

     [கொடி + வட்டம் + பிறை.]

கொடிவட்டம்

 கொடிவட்டம் koḍivaḍḍam, பெ.(n.)

   நஞ்சுக்கொடி கருப்பையில் ஒட்டிக்கொண்டிருக்கும் வட்டப்பகுதி; the round, flat organ within the uterus which establishes communication between the mother and child by means of the umbilical cord – Placenta (சா.அக.);.

     [கொடி + வட்டம்.]

கொடிவயலை

 கொடிவயலை koḍivayalai, பெ.(n.)

கொடிப் பசலை பார்க்க: see kodi-p-pasalai.

     [கொடி + (வசலை); வயலை.]

கொடிவலசை

 கொடிவலசை koḍivalasai, பெ.(n.)

   திருவள்ளூர் மாவட்டத்துச் சிற்றூர்; a village in Tiruvallur Dt.

     [கொடி + வலசை.]

கொடிவலி

கொடிவலி1 koḍivalittal, பெ.(n.)

   4 செ.குன்றாவி (v.t.);

   1.காற்றாடிக் கயிற்றை இழுத்தல்; to draw in the string of a kite.

   2. வளார்களைச் செடியினின்றும் எடுத்தல்; to draw out a withe for use.

     [கொடி + வலி,]

 கொடிவலி2 koḍivali, பெ.(n.)

குதத்திற்கும்

   குய்யத்திற்கும் இடையே பெண்களுக்குக் காணும் வலி; a chronic rupture in females between the rectum and the vagina – perineal rupture(சா.அக.);.

     [கொடி + வலி.]

கொடிவலை

 கொடிவலை koḍivalai, பெ.(n.)

   இரண்டு தூண்களை இணைக்கும் சிறிய உத்தரம்; a cross beam which connects two pillars (கட்.தொ.);

     [கொடி + வலை.]

கொடிவழி

கொடிவழி koḍivaḻi, பெ.(n.)

   1.ஒற்றையடிப்பாதை (இ.வ.);; foot-path.

   2. குடி வழி; genealogical tree.

     [கொடி வழி.]

கொடிவழித்தீர்த்தம்

கொடிவழித்தீர்த்தம் koḍivaḻittīrttam, பெ.(n.)

   திருப்பதி மலையிலுள்ள ஒரு நல்வினைச் சுனை; a sacred spring on Tirupati hills.

     ‘கொடிவழித் தீர்த்த முதலிய மிக்க…. வேங்கடம்'(சிலப். 11:41, உரை);.

     [கொடி + வழி + தீர்த்தம்.]

கொடிவழுதலை

 கொடிவழுதலை koḍivaḻudalai, பெ.(n.)

   வழுதுணைவகை (யாழ்.அக.);; a kind of night shade.

     [கொடி வழுதலை.]

கொடிவாகனன்

 கொடிவாகனன் koḍivākaṉaṉ, பெ.(n.)

   காக்கையை ஊர்தியாகக் கொண்ட (சனி); காரிக்கோள்; Planetary god Sani with crow in his standard.

     [கொடி + வாகனன்.]

கொடிவிசி

 கொடிவிசி koḍivisi, பெ.(n.)

   வட்டமான கட்டுநார்; round ligament (சா.அக.);.

     [கொடி + விசி. விசி : கட்டு.]

கொடிவிடு-தல்

கொடிவிடு-தல் koḍiviḍudal, பெ.(n.)

   20 செ.கு.வி.(v.i.);

   1. கொடியோடு1 – பார்க்க;see kodi-y-õdu-,

   2. மிகுதியாதல்; to increase, shoot up.

     “காமங் கொடிவிட.” (பரிபா. 6:103);.

     [கொடு + விடு-.]

கொடிவிதை

 கொடிவிதை koḍividai, பெ.(n.)

மோதிரக்கண்ணி:

 climbing flax (சா.அக.);.

     [கொடி + விதை.]

கொடிவிரியன்

 கொடிவிரியன் koḍiviriyaṉ, பெ.(n.)

   செவ்விரியன்; red viper (சா.அக.);.

     [கொடி + விரியன்.]

கொடிவிருட்சம்

 கொடிவிருட்சம் koṭiviruṭcam, பெ.(n.)

   கொடிக்கள்ளி; creeping milk hedge or moon creeper, Sacrastemmal brevistigma alias Asclepias acids(சா.அக.);.

     [கொடி+Skt. விருட்சம்]

     [P]

கொடிவிரை

 கொடிவிரை koḍivirai, பெ.(n.)

   கொடிச்சணல்; creeping falsah; climbing flax (சா.அக.);.

     [கொடி + விரை.]

கொடிவீசு-தல்

கொடிவீசு-தல் koḍivīcudal,    15 செ.கு.வி.(v.i.)

கொடியோடு1 பார்க்க;see Kodi-y-odu-.

     [கொடி + வீசு-.]

கொடிவீடு

கொடிவீடு koḍivīḍu, பெ.(n.)

   படர்கொடிகளால் அமைந்த வீடு (பெருங். உதயணன்சரித். ப. 199);; arbour, summer-house.

     [கொடி + வீடு.]

கொடிவேம்பு

 கொடிவேம்பு koḍivēmbu, பெ.(n.)

   கொடியாகப் படர்ந்த வேம்பு; margosa creëper (சா.அக.);.

     [கொடி + வேம்பு.]

கொடிவேர்

கொடிவேர் koḍivēr, பெ.(n.)

   1. தலைச்சன் பிள்ளை; the first-born child of a woman.

   2. கொடியின்வேர்; the root of a creeper.

   3. கொடிவேலி பார்க்க;see kodi-veli.

   4. நஞ்சுக் கொடி வட்டம்; placenta (சா.அக.);. [கொடி + வேர்.]

கொடிவேர்வகை

கொடிவேர்வகை koṭivērvakai, பெ.(n.)

   முக்கியமான கொடியின் வேர்; important roots of creeper’s.

     [கொடி+வேர்+வகை]

   1. நாகமல்லி வேர்; snake jasmine root, Rhinacanthus communis.

   2. காட்டு மல்லிகை; wild jasmine root, Jasminum angustifolium.

   3. சிறுகுறிஞ்சா வேர்; small Indian ipecacuanha root, Gymnema sylvestre.

   4. பேய்ச்சுரை; wild bottle gourd root.

   5. முகமுசுக்கை வேர்; bristly bryony root, Mukia scabrella.

   6. வெண்காக்கட்டான்; black or blue mussell -shell creeper root, Clitorea ternatea.

   7.கருங்காக்கட்டான்; black or blue mussell -shell creeper root, Clitorea ternatea.

   8. கொடிவேலி வேர்; hedge-creeper root, Plumbago zeylanica.

   9. பெருமருந்து வேர்; Indian birth wort-root, Aristolochia indica,

   10. பெருங்காஞ்சொறி; climbing nettle root, Tragia involucrate,

   11 சிறுகாஞ்சொறிவேர்; small climbing nettle root, Tragia involucrata.

   12. கருங்காஞ்சொறி; black climbing nettle root, Tragia involucrata.

   13. பச்சைத் திப்பிலி வேர்; green long pepper plant root, Piper longum.

   14. இன்புறா வேர் அல்லது சாய வேர்; chay root or dye root, Piper longum.

   15. நன்னாரி வேர்; Indiam sarsaparilla root, Hemidesmus indicus.

   16. கொஞ்சி வேர்; opal orange tree root, Glycosmis pentaphylla,

   17. குன்றி வேர்; jeweller’s head root, Abrus precatorius.

   18. நுணா; ach root, Morinda citrifolia.

   19. கொழும்பு வேர்; columbo root, Jateorrhiza columba.

   20. கீரி புரண்டான் வேர்; Indian snake – root, Ophiorrhiza mungos (சா.அக.);.

கொடிவேலன்

 கொடிவேலன் koḍivēlaṉ, பெ.(n.)

திவிதிவி பார்க்க;see divi-divi.

     [கொடி + வேலன்.]

கொடிவேலம்

கொடிவேலம் koḍivēlam, பெ.(n.)

   1 முள்ளில்லாத வேல்; American sumach.

   2. ஒருவகைப் பெரிய நீண்ட கத்திரிக்காய்; a variety of large and long shapped brinjal (சா.அக.);.

     [கொடி + வேல் (அம் – சொ.ஆ.ஈறு);.]

கொடிவேலி

கொடிவேலி koḍivēli, பெ.(n.)

   1. கொடுவேலி பார்க்க;see kodu-velli.

   2 கொடு வேலி வகை (L.);; rosy flowered leadwort.

மறுவ. சித்திரமூலம்.

     [கொடுவேலி → கொடிவேலி.]

 கொடிவேலி koḍivēli, பெ.(n.)

   செங்கொடிவேலி; a plant.

     [கொடி+வேலி]

கொடிவேலிப்பொடி

 கொடிவேலிப்பொடி koḍivēlippoḍi, பெ.(n.)

   கொடி வேலியுடன் மற்ற சரக்குகளுஞ் சேர்ந்த ஒரு வகைச் சூரணம்; a medicinal compoundin which the leadwortforms in Chief ingredient.

     [கொடி+வேலி+பொடி]

கொடிவேல்

 கொடிவேல் koḍivēl, பெ.(n.)

   வேலன்கொடி; acacia creeper (சா.அக.);.

     [கொடி + வேல்.]

கொடு

கொடு1 koḍuttal,    4 செ.குன்றாவி.(v.t.)

   1.ஈதல்; to give, grant, supply.

     “கொடுப்பதூஉந்துய்ப்பதூஉமில்லார்க்கு” (குறள்,1005);.

   2.பெற்றெடுத்தல்; to bring forth.

     “பார்வதி யேழுலகுங் கொடுத்தாள்” (பிரமோத். 9:61);.

   3. பங்கிடுதல்; to divide, distribute, as a sum of money.

இந்தத் தொகையைப் பத்துப்பேருக்குக் கொடு (இ.வ.);.

   4. விற்றல்; to sell.

     “தில்லைமுன்றிற் கொடுக்கோ வளை” (திருக்கோ. 63);.

   5. உடன்படுதல்; to allow, permit.

     “மலரன்றி மிதிப்பக் கொடான்” (திருக்கோ. 303);.

   6. சாகக் கொடுத்தல்; to lose by death, as giving to Yama.

     “நீபயந்த கோட்டானைத் தானே கொடு” (தனிப்பா 1,35:68);.

   7.திட்டுதல்; to abuse roundly.

நன்றாய்க் கொடுத்தாளா? வேணும், வேணும் (இ.வ.);.

   8. அடித்தல்; to belabour. thrash.

     [கொள் → கொடு.]

 கொடு2 koḍu, து.வி. (aux.v.)

ஒரு துணை வினை:

 an auxilary verb, as in.

சொல்லிக்கொடு, முடித்துக்கொடு.

     [கொள் → கொடு.]

 கொடு3 koḍu, பெ.(n.)

   1. வளைந்த; crooked.

   2. கொடிய; violent.

   3. கோணல்; crookedness (சா.அக.);.

     [கொள் → கொடு.]

 kodu Tam. Mal. fierce, extreme, rough, lit. crooked

– e.g. kodukku Tam. The claws of the crab. kodi-il Mal. pincers comp. Sans, kut, crooked (GGDFL584);.

 கொடு4 koḍuttal, பெ.(n.)

   1.பறிகொடுத்தல்; losing by death.

   2. மருந்து கொடுத்தல்; administering or giving internally as medicine.

   3. கொடுத்தல்;     [கொள் → கொடு.]

கொடு கோல்

 கொடு கோல் koḍuāl, பெ. (n.)

   பயிர் அறுவடைக்குரிய வளைந்த கருக்கரிவாள்; sickle used for harvesting.

து_கொடுகோல், கடுகோல்.

     [கொடு[வளைவு]+கோல்]

கொடு வலை

 கொடு வலை koḍuvalai, பெ.(n.)

   பிடித்துக் கொண்டு வந்த மீன்களைப் பாதுகாத்து வைக்கும் வலை; a type of net used to keep the catched fishes in the net.

     [கொடு+வலை]

கொடு-த்தல்

கொடு-த்தல் koḍuttal,    4 செ.கு.வி.(v.i.)

   ஈதல்; to give to gift, to grant.

     [கொள் → கொடு.]

கொடுத்தலும் பலவகைப்படும். அவை, வழக்கத்திற் கொடுத்தல், உரிமையிற் கொடுத்தல், அச்சத்தில் கொடுத்தல் பாவனையிற் கொடுத்தல், உவகையிற் கொடுத்தல் வெகுளியிற் கொடுத்தல், அவலத்தில் கொடுத்தல் முதலியன [ஆறு. நன். 298] [வரை.சொ.க.].

கொடுகணி

கொடுகணி goḍugaṇi, பெ.(n.)

   1.சிற்றாமுட்டி; rose coloured sticky mallow.

   2. சிறுகாஞ்சொறி; small climbing nettle.

   3. காட்டெலுமிச்சை; wild lime (சா.அக.);.

     [கொடு + (சுள்); கணி]

கொடுகிலை

 கொடுகிலை goḍugilai, பெ.(n.)

   நகுதலிலை; common cherry nutmeg.

     [கொடுகு + இலை.]

கொடுகு

கொடுகு1 goḍugudal,    5 செ.கு.வி.(v.i.)

   1. குளிரால் நடுங்குதல் (இ.வ.);; to shrink or shiver with cold.

   2. பற்கூசுதல்; to have the teeth set on edge (மு.தா.84.);.

பற்கொடுகுதல் அதிகமா யிருக்கிறது (உ.வ.);.

ம. கோடுக.

     [குள் → குடு → கொடு → கொடுகு.]

 கொடுகு2 goḍugudal,    10 செ.கு.வி.(v.i.)

   கொடுமையாதல்; to be cruel, ruthless.

     “கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர்”(தேவா. 918:1);.

     [கொடு → கொடுகு.]

கொடுகொடு-த்தல்

கொடுகொடு-த்தல் goḍugoḍuttal,    4 செ.கு.வி.(v.i.)

   1. குளிரால் நடுங்குதல்; to shiver or tremble with cold.

   2. சடுதிப்படுதல் (இ.வ,);; to be hasty.

     [குடுகுடு → கொடுகொடு.]

கொடுகொட்டி

கொடுகொட்டி goḍugoḍḍi, பெ.(n.)

   1. பதினோராடல்களுள், முப்புரம் எரித்தஞான்று சிவனாடிய கூத்து;Śiva’s dance on the destruction of Tiripuram, one. of 11 ktitu.

     “இமையவ னாடிய கொடுகொட்டி யாடலும்”(சிலப். 6:43);.

   2. ஒருவகைப் பறை; a kind of drum.

     “குடமுழவங் கொடுகொட்டி குழலு மோங்க”(தேவா 225:2);.

     [கொடுங்கொட்டி → கொடுகொட்டி (நச்);.]

எண்திசையும் தீ எரியக்கண்டு இரங்காது கைகொட்டி நின்று ஆடுதலிற் கொடுமை யுடைத்தாதல் நோக்கி கொடுகொட்டி என்று பெயராயிற்று [அடியார்க். சிலப். 6:43].

கொடுங்கொட்டி கொடுகொட்டி எனத்திரிபுற்றது. எல்லாவற்றையும் அழித்து நின்று ஆடுதலின் கொடுங்கொட்டி என்றார். கொட்டுவது கொட்டி. கொட்டப்படும் இசைக்கருவிகளின் பாடலுக்கு இசைந்தனவும் ஆடலுக்கு இசைந்தனவும் என இருவகைப்படும். இங்குகொட்டி என்பது ஆடலுக்கு இசைந்த கைகொட்டு ஓசையைக் குறித்தது. கொடுகொட்டி ஆடலைக் கொட்டிச் சேதம் எனவும் கூறுவர்.

கொடுக்கன்

கொடுக்கன்1 koḍukkaṉ, பெ.(n.)

   தேள் வகை (யாழ்.);; a kind of scorpion (வே.க.166);.

     [கொடு → கொடுக்கன்.]

 கொடுக்கன்2 koḍukkaṉ, பெ.(n.)

   மகன்; son. வயிர மேகனார் கொடுக்கன் சிற்றன்புலியூர் நாடன் (S.I.I. VII, 32);.

தெ. கொடுக்கு

கொடுக்கறு-த்தல்

கொடுக்கறு-த்தல் koḍukkaṟuttal,    4 செ.குன்றாவி. (v.t.)

 to break down one’s mischievous tendency lit to cut off the sting of a scorpion.

     [கொடுக்கு + அறு-.]

கொடுக்கறுவாள்

 கொடுக்கறுவாள் koḍukkaṟuvāḷ, பெ.(n.)

   ஒரு வகை அறுவாள்; a kind of knife.

     [கொடு – கொடுக்கு (வளைவு); + அறுவாள்.]

கொடுக்கறுவாள்

கொடுக்கல்வாங்கல்

கொடுக்கல்வாங்கல்1 koḍukkalvāṅgal, பெ.(n.)

   பனங் கொடுத்து வாங்குகை (உ.வ.);, வட்டித் தொழில்; money transactions, lending and borrowing.

     [கொடுக்கல் + வாங்கல்.]

 கொடுக்கல்வாங்கல்2 koḍukkalvāṅgal, பெ.(n.)

   பெண் கொடுத்துவாங்குகை, எதிர் பெண் எடுத்தல்; to take bride in exchange.

     [கொடுக்கல் + வாங்கல்.]

கொடுக்காடுபிடிக்கை

 கொடுக்காடுபிடிக்கை koḍukkāḍubiḍikkai, பெ.(n.)

கொழுத்தாடு பிடிக்கை பார்க்க;see kosuttådu-pidikkai.

     [கொடுக்கு + ஆடு + பிடிக்கை.]

கொடுக்கான்

கொடுக்கான் koḍukkāṉ, பெ.(n.)

   1. நட்டுவாய்க் காலி; black lobster mouthed – legged scorpion (சா.அக.);.

   2. தேள்; scorpion,

     [கொடுக்கள் → கொடுக்கான்.]

கொடுக்காய்

 கொடுக்காய் koḍukkāy, பெ.(n.)

கொடுக்காய்ப் புளி பார்க்க;see Kodukkäy-p-puli.

     [கொடு + காய்.]

கொடுக்காய்ப்புளி

 கொடுக்காய்ப்புளி koḍukkāyppuḷi, பெ.(n.)

   மரவகை; Manilla tamarind.

     [கொடுக்காய் + புளி. கொடு : வளைவு, கொடுக்காய் : வளைந்தகாய்.]

கொடுக்காய்ப்புளி,

 கொடுக்காய்ப்புளி, koḍukkāyppuḷi, பெ.(n.)

   வித்தினைச் சரியாக வெண்பருப்புப் படலம் மூடாததும் அவரை போன்ற வித்திடைப்பள்ளம் கொண்டதும் வளைந்துகோணல்மாணலாகக் காணப்படுவதுமாகிய சீமைப் புளியங்காய்; a kind of tamarind tree.

     [கொடுக்கை+காய்ப்புளி]

கொடுக்கி

கொடுக்கி koṭukki, பெ.(n) .

   கதவை யடைக்க இடும் இரும்புப் பட்டை; hooked bar for fastening doors.

   2. அணிகலனின் பூட்டு; clasp of an ornament.

   3. தேட்கொடுக்கியெனும் சிறு செடிவகை (யாழ்.அக.);; turnsole, Heliotropium indicum.

   4. செடி வகை; tiger’s claw, Martynia diandra (செ.அக.);.

     [கொடு – கொடுக்கி]

 கொடுக்கி koḍukki, பெ.(n.)

   1. பொருளை உய ரத்தில் இருந்து இழுக்க உதவும் கருவி; hooked knife attached to the bamboo.

   2. கொடுமைக்காரி:

 shrew.

     [கொடு-கொடுக்க]

கொடுக்கிலை

கொடுக்கிலை koḍukkilai, பெ.(n.)

   1. தேட்கொடுக்கியிலை; leaf of scorpion plant.

   2. தேள்கொடுக்கி:

 scorpion plant.

   3. வயற்கொடுக்கி; field scorpion plant (சா.அக.);.

     [கொடுக்கு + இலை.]

கொடுக்கு

கொடுக்கு1 koḍukku, பெ.(n.)

   1. கவர்; divarication of branches

   2. பின் (கோவணம்);; back-lap.

     [குள் → கொடு → கொடுக்கு.]

 கொடுக்கு2 koḍukkudal,    18 செ.கு.வி.(v.i.)

கொடு1-த்தல் பார்க்க: see kodu-.

     [கொடு → கொடுகு.]

 கொடுக்கு3 koḍukkudal,    5 செ.கு.வி.(v.i.)

   நடுக்குதல் (இ.வ.);; to cause one to shudder.

     [கொடு → கொடுகு → கொடுக்கு.]

 கொடுக்கு4 koḍukku, பெ.(n.)

   1.தேள் முதலியவற்றின் கொட்டும் உறுப்பு; sting of a wasp, hornet, scorpion.

தேளுக்குக் கொடுக்கிலே நஞ்சு, தேவடியாளுக்கு உடம்பிலே நஞ்சு (பழ);.

   2. நண்டு முதலியவற்றின் இடுக்கிக் கால் (உ.வ.);; claws of a crab, lobster.

   3. குறும்பன். தீக்குணப் பையன்; mischievous lad.

   4. ஆடை முதலியவற்றிற் கட்டிவிடுந் தொங்கல்; ornamental hangings or ends of cloth in wear.

     “கச்சை புனைந்ததிலேவிட்டான் பெருங் கொடுக்கு”(திருவாலவா.30:9);.

   5. மூலத்தாறு; cloth passed between the legs and tucked up behind.

     [கொடு → கொடுக்கு.]

 கொடுக்கு5 koḍukku, பெ.(n.)

   மகன் (இ.வ.);; son.

     [த. குழகன்;

தெ. கொடுக்கு.]

கொடுக்குக்கட்டிநில்-தல் (நிற்றல்)

கொடுக்குக்கட்டிநில்-தல் (நிற்றல்) koḍukkukkaḍḍiniltalniṟṟal,    14 செ.கு.வி.(v.i)

   1.விடாப்பிடியா யிருத்தல்; to stand with a firm resolve;

 to be resolute or determined

   2 ஊக்கமாயிருத்தல்; to be earnestly engaged, as in an enterprise.

     [கொடுக்குக்கட்டி + நில்.]

கொடுக்குப்பிடி-த்தல்

கொடுக்குப்பிடி-த்தல் koḍukkuppiḍittal,    18 செ.குன்றாவி (v.t.)

   ஒருவனை விடாது ஊழியன் போன்று, பின்தொடர்ந்து திரிதல்; to act as a person’s satellite or underling.

     [கொடுக்கு + பிடி-.]

கொடுக்குமதி

 கொடுக்குமதி koṭukkumati, பெ.(n.)

கொடுக்க வேண்டியது

 debt, what is due (செ.அக.);.

     [கொடு – கொடுக்கு+மதி]

கொடுக்குமால்

 கொடுக்குமால் koḍukkumāl, பெ.(n.)

   கலத்தின் முன்பகுதியில் காப்புக்காக அமைக்கப்பட்ட முக்கோணம் போன்ற காப்புப் பகுதி; jib, triangular portion of the boat or ship.

     [கொடுக்கு + மால்.]

கொடுக்கூர்

 கொடுக்கூர் koḍukār, பெ.(n.)

   சேரநாட்டில் புகழ் பெற்ற ஊர்களிலொன்று; a famous village in Céra kingdom.

     [கொடுக்கு + ஊர்.]

கொடுக்கூர்ப்போர்

 கொடுக்கூர்ப்போர் koḍukārppōr, பெ.(n.)

   சேரன் செங்குட்டுவன் செய்த போர்களில் குறிப்பிடத்தக்கது; site of a remarkable battle waged by Céran Serguttuvan and Pandiya etc., kings.

     [கொடுக்கூர் + போர்.]

சோன் செங்குட்டுவன் கொங்கர் செங்களத்தே நடந்த போரில் தன்னை எதிர்த்த கொங்கர், சோழர், பாண்டியர் ஆகியோாை வென்றதாக இளங்கோவடி களால் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொடுங்கண்

 கொடுங்கண் koḍuṅgaṇ, பெ.(n.)

   தீமை விளைவிக்கும் பார்வை (இ.வ.);; evil-eye.

     [கொடும் + கண்.]

கொடுங்கரி

 கொடுங்கரி koḍuṅgari, பெ.(n.)

பொய்ச்சாட்சி (யாழ்.அக.);:

 false witness.

     [கொடுமை + கரி.]

கொடுங்களுர்

 கொடுங்களுர் koḍuṅgaḷur, பெ.(n.)

சேர அரசர்களது தலைநகரம்:

 Kodungalur. the capital of the Céra kings who ruled Céranādu.

ம.கொடுங்ஙல்லூர்,கொடுங்ஙல்லூர், கொடுங்ஙொல்லூர், கொடுங்கோளூர்

     [கொடும் + (கோளூர்); களூர்.]

கொடுங்காய்

கொடுங்காய் koḍuṅgāy, பெ.(n.)

வெள்ளரி, lit.,

 crooked fruit cucumber.

     “வாள்வரிக் கொடுங்காய்’ (சிலப் 16:25);.

     [கொடுமை + காய். கொடு : வளைவு.]

கொடுங்காரம்

கொடுங்காரம் koḍuṅgāram, பெ.(n.)

   1.தாலம்பச் செய்நஞ்சு; a kind of arsenic.

   2.கொடிய காரம்; strong alkali (சா.அக.);.

     [கொடுமை + காரம்.]

கொடுங்காரல்

கொடுங்காரல் koḍuṅgāral, பெ.(n.)

   காரல்மீன்; a small kind of fish (மீன்.பிடி.தொ.);.

     [கொடும் + காரல்.]

 கொடுங்காரல் koḍuṅgāral, பெ.(n.)

   1. உள்வளைந்த கால்; inner arched post, pillar.

   2. கோயில் மண்டபத் தூண்களில் போதிகையைத் தாங்கும் சிறிய அமைப்புடைய தூண் (கட்.தொ.);; a small curved plank which connects the pillars and entablature.

     [கொடும் + கால்.]

கொடுங்காறல்

 கொடுங்காறல் koḍuṅgāṟal, பெ.(n.)

சுதுப்பு நாங்காறல் மீன்:

 horse-mackerel (செ.அக.);.

     [கொடும் + காறல்.]

கொடுங்காலம்

 கொடுங்காலம் koḍuṅgālam, பெ.(n.)

   கொடுமையான காலம்; a time of death, scarcity, drought general suffering – oppression, cruelly.

     [கொடுமை + காலம்.]

கொடுங்கால்

கொடுங்கால்2 koḍuṅgāl, பெ.(n.)

ஈன்றவுடன் எழுந்து நிற்கும் கன்றின் வளைந்த முன்கால்,

 bentforeleg of the calf.

     [கொடும் + கால்.]

கொடுங்கீறு

 கொடுங்கீறு koḍuṅāṟu, பெ.(n.)

   கிழிந்த கீற்று; palm frond mat which is torn.

     [கொடும் + கீறு.]

கொடுங்கு-தல்

கொடுங்கு-தல் koḍuṅgudal,    11 செ.கு.வி.(v.i.)

கொடுகு-தல் பார்க்க: see kodugu-.

     [கொடுகு → கொடுங்கு.]

கொடுங்குன்றம்

 கொடுங்குன்றம் koḍuṅguṉṟam, பெ.(n.)

   இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பிரான்மலை (தேவா.);; Piranmalai, a hill and a town in the Ramanathapuram Dt.

     [கொடும் + குன்றம்.]

கொடுங்குளம்

 கொடுங்குளம் koḍuṅguḷam, பெ.(n.)

   குமரி மாவட்டத்துச் சிற்றூர்; a village in Kanyakumari Dt.

     [கொடும் + குளம்.]

கொடுங்குழை

 கொடுங்குழை koḍuṅguḻai, பெ.(n.)

   வளைந்த காதணி; twisted ear-ornament, one of sixteen kinds of ear-ornament.

     [கொடு + குழை,]

கொடுங்கூற்று

 கொடுங்கூற்று koḍuṅāṟṟu, பெ.(n.)

   கொடிய நமன்; god of death, Yama.

     [கொடும் + கூற்று.]

கொடுங்கை

கொடுங்கை koḍuṅgai, பெ.(n.)

   1.மடித்த கை; folded arm.

     “மன்னர் மன்னவன் கொடுங்கைமேற் றுயின்றனள்” (நைடத. கான்புகு 21);.

   2. வீடு முதலியவற்றின் வெளிப்புறம் நீண்டு வளைந்துள்ள உறுப்பு; curved cornice or projection on the sides or front of a building, car, etc.

     “மரகதக் கொடுங்கை சுற்றமைய வைத்தனன்”(தணிகைப்பு.வள். 12);.

   3. கொடுமை (யாழ்ப்.);; severity, harshness, oppression.

கொடுங்கை

     [கொடும் + கை.]

கொடுங்கைத்தாடி

 கொடுங்கைத்தாடி koḍuṅgaittāḍi, பெ.(n.)

   நீண்டு வளைந்த தாடி (வின்.);; a long, rounded beard.

     [கொடுங்கை + தாடி.]

கொடுங்கையூர்

 கொடுங்கையூர் koḍuṅgaiyūr, பெ.(n.)

   சென்னை மாவட்டத்துச் சிற்றூர்; a village in Chennai Dt.

     [கொடுங்கை + ஊர்.]

கொடுங்கொடிச்சிலை

 கொடுங்கொடிச்சிலை koḍuṅgoḍiccilai, பெ.(n.)

   மஞ்சட்கல்; yellow ochre.

     [கொடும் + கொடி + சிலை.]

கொடுங்கோடாசூரி

 கொடுங்கோடாசூரி koḍuṅāḍācūri, பெ.(n.)

   அகத்தியர் செய்த நஞ்சுமுறிநூல்; a treatise on poisons with their antidotes and treatment compiled by Agastiya (சா.அக.);.

     [கொடும் + கோடா + சூரி.]

கொடுங்கோன்மை

 கொடுங்கோன்மை koḍuṅāṉmai, பெ.(n.)

   செங்கோன்மையின் கோடுதல் தன்மை (நேர்மையற்ற ஆட்சி);; unrighteous rule. opp. to cengonmai.

கொடுங்கோபிச்சிலை

கொடுங்கோபிச்சிலை koḍuṅāpiccilai, பெ.(n.)

   1. ஒருவகை மஞ்சள்நிறக் கல் (வின்.);; a kind of yellow stone.

   2. சுண்ணாமபுக்கல்; lime-stone.

     [கொடுங்கோபி + சிலை.]

கொடுங்கோல்

கொடுங்கோல் koḍuṅāl, பெ.(n.)

   முறை (நீதி); தவறிய அரசாட்சி (lit., curved sceptre);; unjust or unrighteous rule, despotic government, tyranny opp. to Cergõl.

     “கொடுங்கோ லுண்டுகொல்” (சிலப்.23:111);.

     [கொடுமை + கோல்.]

   செம்மை நேர்மை;   கொடுமை வளைவு;முறை தவறிய ஆட்சி கொடுங்கோல்.

 Qöm (StäGohironolulg866); koguri-köva-y-urukk;

 Glu.(n); & 556 mismsuns;

 spreading hogweed (சா.அக.);.

     [கொடுங்கோவை + உருக்கி.]

கொடுங்கோளூர்

கொடுங்கோளூர்1 koḍuṅāḷūr, பெ.(n.)

   1. சேர நாட்டிலிருந்த ஒரு பழைய தலைநகரம்; a capital city in Céra kingdom.

   2. கழறிற்றறிவார் என்னும் சேரநாட்டு மன்னரான சிவனடியாரின் தலைநகரம்; capital city of the Saiva Saint and king of the céra country.

     [கடும் + கோ – கடுங்கோ + வேள் + ஊர் – கடுங்கோவேளுர் கொடுங்கோவேளூர் → கொடுங்கோளூர் (கொ.வ.); கடுங்கோ என்பது சேரர்களின் இயற்பெயர். இதில் அகரமுதல் கொகர முதலாகத் திரிந்ததால் கடுங்கோ → கொடுங்கோ எனத் திரிந்தது. இருங்கோவேள் என்பது இருங்கோள் எனத் திரிந்தது போன்று கொடுங்கோவேள் → கொடுங்கோள் + ஊர் எனத் திரிந்தது.]

மேற்குக் கடற்கரையில் அமைந்துள்ள சேரமானின் தலைநகர். இப்பொழுது கொடுங்கலூர் எனப்படுகிறது.

 கொடுங்கோளூர்2 koḍuṅāḷūr, பெ.(n.)

   கேரள மாநிலத்தில் பகவதியம்மனைக் கண்ணகியாக வழிபடும் ஊர்; a place in Kēraļa where Bhagavadi is worshipped as Kannagi. (சதாசிவ பண்டாரத்தாரின் பிற்காலச் சோழர் வரலாறு ப.106);.

     [கொடும் + கோளூர்.]

கொடுங்கோள்

 கொடுங்கோள் koḍuṅāḷ, பெ.(n.)

புறம்பே வசைகூறல், speak reproachfully behind the back, back biting.

     [கொடும் + கோள்.]

கொடுசூரி

 கொடுசூரி koḍucūri, பெ.(n.)

கொடுசூலி பார்க்க;see kodu-šūli.

     [கொடு + சூலி → சூரி.]

கொடுசூலி

 கொடுசூலி koḍucūli, பெ.(n.)

   கடுஞ்சினத்தள்; cruel, wicked woman, as Kāli.

     [கொடு + சூலி + சூரி.]

கொடுசூலித்தனம்

 கொடுசூலித்தனம் koḍucūlittaṉam, பெ.(n.)

   மிக்க கடுஞ்சினத்தன்மை (உ.வ.);; extreme wickedness or cruelty applied to women.

     [கொடுஞ்சூலி + தனம்.]

கொடுஞ்சாவு

 கொடுஞ்சாவு koḍuñjāvu, பெ.(n.)

நேர்ச்சி முதலியவற்றால் ஏற்படும் இறப்பு:

 untimely or unnatural death.

     [கொடு[மை]+சாவு]

கொடுஞ்சி

கொடுஞ்சி koḍuñji, பெ.(n.)

கொடிஞ்சி பார்க்க;see kodinji.

     “பூண்ட பொன்னுகக் கொடுஞ்சி…… கடுஞ்செல லாழித் திண்டேர்” (பெருங், உஞ்சைக். 48:15);.

     [கொடி → கொடிஞ்சி → கொடுஞ்சி.]

கொடுஞ்சுரம்

கொடுஞ்சுரம் koḍuñjuram, பெ.(n.)

   1. நஞ்சுச்சுரம்; malignant fever.

   2. கடுங்காய்ச்சல்; high degree of fever (சா.அக.);.

     [கொடும் + சுரம்.]

கொடுஞ்சூரி

கொடுஞ்சூரி koḍuñjūri, பெ.(n.)

   1. கொடியவன்; wickedman.

   2. கொடுசூரி (வின்.); பார்க்க;see kodu-suri.

     [கொடுமை + சூரி.]

கொடுஞ்சொறி

 கொடுஞ்சொறி koḍuñjoṟi, பெ.(n.)

   விலங்குகளுக்குக் காணுஞ் சொறிநோய்வகை; mango, scab or itch in animals.

     [கொடும் + சொறி.]

கொடுஞ்சொல்

 கொடுஞ்சொல் koḍuñjol, பெ.(n.)

   வன்சொல்; rude language harsh speech.

     [கொடு → கொடும் + சொல்.]

கொடுதலை

 கொடுதலை koḍudalai, பெ.(n.)

   பணம் முதலியன செலுத்தகை (இ.வ.);; giving paying.

     [கொடு + தலை]

கொடுதலைமடிப்பு

 கொடுதலைமடிப்பு koḍudalaimaḍippu, பெ.(n.)

கொடுமுடிச்சு பார்க்க;see kodu-mudiccu.

     [கொடுதலை + மடிப்பு.]

கொடுதலைமுடிச்சு

கொடுதலைமுடிச்சு koḍudalaimuḍiccu, பெ.(n.)

கொடுமுடிச்சு1பார்க்க;see kodu-mudiccu.

     [கொடுதலை + முடிச்சு.]

கொடுதலைவிற்பூட்டு

 கொடுதலைவிற்பூட்டு koḍudalaiviṟpūḍḍu, பெ.(n.)

கொடுதலை முடிச்சு பார்க்க: see kodutalai. Mudiccu.

     [கொடுதலை + விற்பூட்டு.]

கொடுதி

கொடுதி koḍudi, பெ.(n.)

   1. மரவாணி (யாழ்ப்.);; peg for fastening a tenon in a mortise.

   2. மடிப்புத்தொழில்; folding work (இரு.நூ.);.

ம. கொடுதி.

     [கொடு → கொடுதி.]

 கொடுதி koḍudi, பெ.(n.)

   வழிபடும்தெய்வத்திற்குத் தரும் காணிக்கைப் பொருள், காணிக்கைத் தரும் விழா; a ceremony of making offerings to the village deity.

மறுவ,கொடை, பருவம், நன்மை.

     [கொடு-கொடுதி]

கொடுத்துவை

கொடுத்துவை1 koḍuttuvaittal,    4 செ. குன்றாவி.(v.t.)

   1. நம்பிக்கையாய் ஒருவரிடம் பொருளை வைத்தல்; to entrust or charge with.

   2. எதிர்பாராத வாய்ப்புப்பெறுதல்; to get unexpected chance.

குபேரன் பட்டணம் கொள்ளையானாலும் கொடுத்து வைக்காதவனுக்கு ஏதுமில்லை (பழ);.

     [கொடுத்து + வை-.]

 கொடுத்துவை2 koḍuttuvaittal, பெ.(n.)

   4 செ.கு.வி. (v.i.);

   முற்பயனால் உதவுதல்; to be lucky,

உன்னைத் திருமணம் செய்து கொள்ள அவனுக்குக் கொடுத்து வைக்கவில்லை.

     [கொடுத்து + வை-.]

கொடுத்துவைத்தது

 கொடுத்துவைத்தது koḍudduvaiddadu, பெ.(n.)

   நற்பேறு; luck.

     [கொடுத்து + வைத்தது.]

கொடுத்துவைத்தவன்

 கொடுத்துவைத்தவன் koḍuttuvaittavaṉ, பெ.(n.)

   நற்பேறு அடைபவன்; lucky person.

     [கொடுத்து + வைத்தவன்.]

கொடுநஞ்சு

கொடுநஞ்சு koḍunañju, பெ.(n.)

   1.கொல்லுந்தன்மையுள்ள நஞ்சு; fatal poison, venom.

   2. வெள்ளை வைப்புநஞ்சு. (வின்.);; a mineral poison.

     [கொடு → கொடும் + நஞ்சு.]

கொடுநா

 கொடுநா koḍunā, பெ.(n.)

   சித்திரமூலம் என்னும் மூலிகை; leadwort(சா.அக.);.

மறுவ. கொடுவேலி.

     [கொடு + (நாவி); →நா.]

கொடுநாக்கு

 கொடுநாக்கு koḍunākku, பெ.(n.)

   கருநாக்கு; vile tongue (karunakku);.

     [கொடு + நாக்கு.]

கொடுநாக்கெறி-தல்

கொடுநாக்கெறி-தல் koḍunākkeṟidal, பெ.(n.)

   2 செ.கு.வி. (v.i.);

   நாக்கைச் சப்புக் கொட்டல்; to beat the tongue against the palate.

     [கொடு + நாக்கு + எறி-.]

கொடுநாவி

 கொடுநாவி koḍunāvi, பெ.(n.)

   கொடுவேலி, சித்திரமூலம்; plumbago genus.

     [கொடு + நாவி.]

இது மூவகைப்படும்; மருத்துவக் குணம் உடையது [சா.அக.].

கொடுநீபம்

 கொடுநீபம் koḍunīpam, பெ.(n.)

   மஞ்சட் கடம்பு; yellow cadamba (சா.அக.);.

     [கொடு + நீபம்.]

கொடுநீர்

 கொடுநீர் koḍunīr, பெ.(n.)

   கழுதையின் சிறுநீர்; ass’s urine (சா.அக.);.

     [கொடு + நீர்.]

கொடுநுகம்

கொடுநுகம் goḍunugam, பெ.(n.)

   1.நுகத்தடி; yoke.

     “கொடுநுக நுழைந்த கணைக்கா லத்திரி” (அகநா. 350);.

   2. கலப்பை; plough.

   3. மகம் பார்க்க;see magam.

     [கொடு + நுகம்.]

கொடுநோய்

 கொடுநோய் koḍunōy, பெ.(n.)

   மாட்டுநோய் வகை; a disease of cattle.

     [கொடு + நோய்.]

கொடுந்தமிழ்

கொடுந்தமிழ் koḍundamiḻ, பெ.(n.)

   செந்தமிழ் நாட்டைச் சூழ்ந்திருக்கும் நிலங்களில் வழங்கும் தமிழ்மொழி (நன்.273, உரை);; Tamil dialects current in regions surrounding Centamilnādu.

ம. கொடுந்தமிழ்.

     [கொள் (கொண்); கொடு : வளைவு, வளைவான கொடும் + தமிழ் – கொடுந்தமிழ் : செந்தமிழினின்று திரிந்த தமிழ் (வ.மொ.வ.7);.]

இலக்கணம் நிரம்பிய சிறந்த செப்பமான தமிழ் செந்தமிழ், அது திரிந்தது கொடுந்தமிழ், செம்மை நேர்மை, கொடுமை வளைவு, செங்கோல், கொடுங்கோல் என்னுஞ் சொற்களை நோக்குக.

கொடுந்தமிழ்நாடு

கொடுந்தமிழ்நாடு koḍundamiḻnāḍu, பெ.(n.)

   கொடுந்தமிழ் பேசப்படுவனவாகிய தென்பாண்டி, குட்டம், குடம், கற்கா, வேணாடு, பூழி, பன்றி, அருவா, அருவாவடதலை, சீதம், மலாடு, புனனாடு என்னும் பன்னிருநிலங்கள் (நன். 273, உரை);;(தொல்.சொல் 400. சேனா.);; regions where kogun-tamil is spoken, 12 in number, viz., Ten-pāndi, Kuttam, Kugam, Karka, Vēnāgu. Pūļi, Panri, Aruvā, Aruvā-Vagatala, Cidam, Malāgu, Punanāgu. Cenavaraiyar giving Pongar-nādu and Olinadu, instead of Venadu and Punanādu.

     [கொடுந்தமிழ் + நாடு.]

தொல்காப்பியர் காலத்தில் இவையெல்லாம் செந்தமிழ் நிலமே. பிற்காலத்தில் செந்தமிழ் நிலப்பரப்பு மிகச் கருங்கிய பின்னர் இப் பன்னிரண்டும் கொடுந்தமிழ்நாடு எனக் கணக்கிடப்பட்டன – பாவாணர் (தமிழ் வரலாறு 1967 ப.46);.

கொடுந்தறி

கொடுந்தறி koḍundaṟi, பெ.(n.)

   வளைந்த முளைக்கோல்; curved marking stick.

     “செங்கேழ் வட்டஞ் சுருக்கிக் கொடுந்தறிச் சிலம்பி வானூல்” (நெடுநல்.58);. [கொடும் + தறி.]

கொடுந்தலை

 கொடுந்தலை koḍundalai, பெ.(n.)

வளைந்த தலை.

     [கொடு → கொடும் + தலை.]

கொடுந்தலைப்பாறை

 கொடுந்தலைப்பாறை koḍundalaippāṟai, பெ.(n.)

   கொடிய பார்வையுடைய பாறைமீன்; a kind of fish having wild sight (மீன்.பிடி.தொ.);.

     [கொடும் + தலை + பாறை.]

கொடுந்தலைப்பொருவா

கொடுந்தலைப்பொருவா koḍundalaipporuvā, பெ.(n.)

   அறுவிரல் நீளமும், பொன்மை கலந்த வெண்ணிறமும் உள்ள கடல்மீன்வகை; anchovy. a sea-fish, silvery, tinged with gold, attaining 6 inches in length.

     [கொடும் + தலை + பொருவா.]

கொடுந்தாள்

 கொடுந்தாள் koḍundāḷ, பெ.(n.)

   கோடியிருந்த தாள்; bended leg.

கொடுந்தாள் அலவன்.

     [கொடும் + தாள்.]

கொடுந்திண்ணை

 கொடுந்திண்ணை koḍundiṇṇai, பெ.(n.)

   சுற்றுத்திண்ணை; a curved raised floor or veranda either out side or inside of the house (கட்.தொ.);.

     [கொடும் + திண்ணை.]

கொடுந்துன்பம்

கொடுந்துன்பம் koḍunduṉpam, பெ.(n.)

   1. தாங்கவொண்ணாத் துயரம்; unbearable suffering.

   2. புண்ணால் ஏற்பட்ட பெருந்துன்பம்; grievous hurt (சா.அக.);.

     [கொடும் + துன்பம்.]

கொடுந்துயர்

கொடுந்துயர் koḍunduyar, பெ.(n.)

   மிக்க துயரமாகிய இறப்பு; death.

     “குரவர்க் குற்ற கொடுந்துயர் கேட்டு”(மணிமே.3:18);.

     [கொடுமை + துயர்.]

கொடுந்தொழிலாளன்

கொடுந்தொழிலாளன் koḍundoḻilāḷaṉ, பெ.(n.)

   1. கொடுஞ்செய்கையுள்ளவன்; lit, one given to cruel deeds.

   2. எமன்; Yama

     “கொடுந்தொழி லாளன் கொன்றனன் குவிப்ப”(மணிமே. 6.100);.

     [கொடும் + தொழிலாளன்.]

கொடுந்தொழில்

 கொடுந்தொழில் koḍundoḻil, பெ.(n.)

   கொடுமையான செய்கை; cruel deed.

     [கொடுமை + தொழில்.]

கொடுபச்சை

கொடுபச்சை koḍubaccai, பெ.(n.)

   1. பொன்னாங்கண்ணி; sessile plant.

   2. ஒரு வகை மீன்; a fish (சா.அக.);.

     [கொடு + பச்சை.]

கொடுபடு-தல்

கொடுபடு-தல் koḍubaḍudal, பெ.(n.)

   20 செ.கு.வி.(v.i.);

   கடன் முதலியன செலுத்தப்படுதல்; to be discharged or paid, as a debt, to be returned, as borrowed article.

     [கொடு + படு-. படு-து.வி.]

கொடுபாடு

 கொடுபாடு koḍupāḍu, பெ.(n.)

கொடுதலை (இ.வ.); பார்க்க;see kodu-talai.

     [கொடு + பாடு.]

கொடுபோ-தல்

கொடுபோ-தல் koḍupōtal, பெ.(n.)

   8 செ.குன்றாவி.(v.t.);

   கொண்டு செல்லுதல்; to carry.

     “தன்பொருள் கொடுபோந் தென்ன” (கந்தபு. ஆற்று.30);.

     [கொடு + போ-.]

கொடுப்பக்குழி

 கொடுப்பக்குழி koḍuppakkuḻi, பெ.(n.)

   குமரி மாவட்டத்துச் சிற்றூர்; a village in Kanyakumari Dt.

     [கொடுப்பு + குழி – கொடுப்புக்குழி → கொடுப்பக்குழி.]

கொடுப்பனவு

கொடுப்பனவு koṭuppaṉavu, பெ.(п.)

   கொடுக்க வேண்டிய தொகை (இலங்.);; amount to be paid to some one.

அவருக்குக் கொடுப்பனவு எவ்வளவு என்று பார்த்துச் சொல்.

மறுவ, நிலுவை (பாக்கி);

     [கொடு- கொடுப்பன+உ]

 கொடுப்பனவு koḍuppaṉavu, பெ.(n.)

   1.கொடுக்குந்தன்மை;   2. பெண்ணைத் திருமணம் செய்து கொடுத்தல்; giving a girl in marriage.

   3. கொடுக்க வேண்டிய தொகை; amount to be paid.

     [கொடு + பனவு.]

கொடுப்பனை

 கொடுப்பனை koḍuppaṉai, பெ.(n.)

கொடுப் பனவு பார்க்க;see kodu-p-panavu.

     [கொடு + பனை.]

கொடுப்பரளை

 கொடுப்பரளை koḍupparaḷai, பெ.(n.)

   வாய்நோய் வகை; a disease of the mouth.

     [கொடு + பரளை.]

கொடுப்பினை

கொடுப்பினை koṭuppiṉai, பெ.(n.)

கொடுத்து வைத்தது; ஆகூழ், நற்பேறு (அதிர்ஷ்டம்); destiny. எங்களுக்குப் பிள்ளை இல்லை. எங்களுடைய கொடுப்பினை அவ்வளவுதான்.

     [கொடு→கொடுப்பினை.]

 கொடுப்பினை koḍuppiṉai, பெ.(n.)

   1. நற்பேறு, கொடுத்து வைத்தது; luck.

எங்களுடைய கொடுப்பினை அவ்வளவுதான்.

   2. கொள்வினை கொடுப்பினை; giving and taking girl in marriage.

     [கொடுப்பு → கொடுப்பினை.)

கொடுப்பு

கொடுப்பு1 koḍuppu, பெ.(n.)

   1.கதுப்பு: jaw including cheek (சா.அக.);.

   2. கடைவாய்; region in the mouth near molar teeth.

     [கொள் (கொண்); → கொடு : வளைவு. வளைவான கொடு → கொடுப்பு குறடுபோன்ற கதுப்பு (அலகு); (வ.மொ.வ.1);

 கொடுப்பு2 koḍuppu, பெ.(n.)

   1.கொடுக்கை; giving.

   2. விளையாட்டாக அடிக்கை (வின்.);; playful dealing of blows.

ம. கொடுப்பு.

     [கொடு → கொடுப்பு.]

கொடுப்புப்பல்

கொடுப்புப்பல் koḍuppuppal, பெ.(n.)

   1. மெல்லும் பல்; molar teeth.

   2. கடைவாய்ப் பல்; grinders (சா.அக.);.

     [கொடு → கொடுப்பு + பல்.]

கொடுப்புப்பீறி

 கொடுப்புப்பீறி koḍuppuppīṟi, பெ.(n.)

   கன்னத்திற்கும் தாடைக்கும் இடையே யுண்டாகும் ஒரு சிலந்தி; cancer arising between the cheeck and the jaw (சா.அக.);.

     [கொடு → கொடுப்பு + பீறி.]

கொடுப்புலியார்

கொடுப்புலியார் koḍuppuliyār, பெ.(n.)

   கள்ளர்குடிப் பட்டப்பெயர்களுள் ஒன்று (கள்ளர் சரித்.ப.98);; a caste title of Kallars.

     [கொடும் + புலி + ஆர். கொடும்புலி → கொடுப்புலி.]

கொடுப்பை

 கொடுப்பை koḍuppai, பெ.(n.)

   பொன்னாங்காணி (மலை.);; sessile plant, a plant. growing in damp places.

ம. கொடுப்பை,

     [கொடுப்பு → கொடுப்பை.]

கொடுப்பைத்தைலம்

 கொடுப்பைத்தைலம் koḍuppaittailam, பெ.(n.)

   பொன்னாங்கண்ணித் தைலம்; medicated oil prepared with sessile plant as chief ingredient (சா.அக.);.

மறுவ, கொடுபைநெய்.

     [கொடுப்பை + தைலம்.]

இது மூளைக்குக் குளிர்ச்சியைத் தரும்.

கொடுப்பைநெய்

 கொடுப்பைநெய் koḍuppainey, பெ.(n.)

   பொன்னாங்கண்ணி நெய்; a medicated ghee prepared with dry sessile plant mixed with other ingredients (சா.அக.);.

மறுவ. கொடுபைக்கிருதம்

     [கொடுப்பை + நெய்.]

கொடுமகப்பேறு

 கொடுமகப்பேறு goḍumagappēṟu, பெ.(n.)

   இயற்கை நிலைக்கு மாறுபட்ட மகப்பேறு; labour differing from its natural state by its difficulty, duration or danger involved, preternatural labour.

     [கொடு+மகவு+பேறு]

கொடுமச்சேறு

 கொடுமச்சேறு koḍumaccēṟu, பெ.(n.)

   கடலடிச்சேறு; mire in the bottem of the sea (மீன்.பி.டி.தொ.);.

     [கொடும் + அடிச்சேறு – கொடுமடிச்சேறு → கொடுமச்சேறு.]

கொடுமடி

கொடுமடி koḍumaḍi, பெ.(n.)

   பண்டம் இடுதற்காக வளைத்துக் கட்டிய மடி; cloth at the waist folded to hold things, as in a bag.

     “கொடுமடி யுடையர் கோற்கைக் கோவலர்” (அகநா. 54:10);.

     [கொடு + மடி.]

கொடுமணம்

கொடுமணம் koḍumaṇam, பெ.(n.)

அணிகலன்களுக்குப் பேர்பெற்ற பழையதோர் ஊர்:

 an ancient town noted for manufacture of jewellery.

     “கொடுமணம் பட்ட வினைமா ணருங்கலம்”(பதிற்றுப். 74);

     [கொடு + மணம்.]

கொடூவூர், கொடூர் என்பன கொடையளிக்கப்பட்ட ஊர்களின் பெயர்கள். கொடுமணம் என்பது திருமணக் கொடையாக வழங்கப்பட்ட ஊராகலாம்.

கொடுமணல்

 கொடுமணல் koḍumaṇal, பெ.(n.)

   ஈரோடு மாவட்டத்துச் சிற்றூர்; a village in Erode Dt.

     [கொடு + மணல்.]

கொடு = வளைந்த. ஆற்றங்கரையின் வளைந்த மணல் மேட்டருகில் அமைந்த ஊராகலாம்.

கொடுமனூர்

 கொடுமனூர் koḍumaṉūr, பெ.(n.)

   கடலூர் மாவட்டத்துச் சிற்றூர்; a village in Kadalur Dt.

     [கொடுமன் (சரிவு, சாரல்); + ஊர்.]

கொடுமன்

கொடுமன் koḍumaṉ, பெ.(n.)

   1. சரிவு, சாரல்; slope.

   2. கொடுமைக்காரன்; wicked person.

     [கொடு + அன் – கொடுவன் → கொடுமன்.]

கொடுமரம்

கொடுமரம் koḍumaram, பெ.(n.)

   1. வில்; bow.

     “கொடுமரந் தேய்த்தார்.” (கலித். 12);.

   2. சிலை (தனு);யோரை (சூடா.);; Sagittarius, a constellation of the zodiac.

   3. ஏணிப்பழு; rung of a ladder.

     “கொடுமரம் பற்றி நெட்டிதண்பொலிந்தும்” (கல்லா. 22.98);.

     [கொடு + மரம். கொள் → (கொண்); → கொடு : வளைவு.]

கொடுமலையாளம்

கொடுமலையாளம் koḍumalaiyāḷam, பெ.(n.)

   1.அரிதிற் பொருள்படும் மலையாள மொழிவகை ; a Malaiyalam dialect considered difficult to be understood.

   2. கொடுமலையாளம் பேசும் மலையாள நாட்டுப் பகுதி; that part of Malabar where Kodumalaiyalam is spoken.

     “கொடுமலை யாளக் குடியிருப்புடையோன்” (மனோன். பாயி.);.

     [கொடு + மலையாளம் → கொடுமலையாளம் எளிதில் விளங்காத பழமலையாளம் (மலையாள் + அம்);.]

கொடுமுடி

கொடுமுடி koḍumuḍi, பெ.(n.)

   1.மலையுச்சி; summit of a mountain, peak.

   2. உப்பரிகை; terrace or top of a mansion.

     “கோடுயர் மாடத்துக் கொடுமுடி” (பெருங்.மகத.8:15);.

   3. பாண்டிக் கொடுமுடி பார்க்க;see Pāndi-k-kodumudi.

     [கொடு + முடி.]

கொடுமுடிச்சு

கொடுமுடிச்சு koḍumuḍiccu, பெ.(n.)

   1.அவிழ்க்க முடியாத முடிச்சு; hard, inextricable knot.

   2. கேடு சூழும் சூழ்ச்சி; malignant plot, vile conspiracy.

     [கொடு + முடிச்சு.]

கொடுமுடிந்த வழக்கு

 கொடுமுடிந்த வழக்கு koḍumuḍindavaḻkku, பெ.(n.)

கொடிமுடிந்த வழக்கு பார்க்க;kodi mudinda-valakku.

     [கொடி → கொடு + முடிந்த + வழக்கு.]

கொடுமுடிப்பூடு

 கொடுமுடிப்பூடு koḍumuḍippūḍu, பெ.(n.)

   கோபுரங்களில் வளர்ந்துள்ள செடிவகை; plants growing in vimanas of temple (சா.அக.);.

     [கொடுமுடி + பூடு.]

கொடுமுண்டி

 கொடுமுண்டி koḍumuṇḍi, பெ.(n.)

   சொத்தைக்களா (L.);; bushy roundish – leaved sweet thorn.

     [கொடு + முண்டி.]

கொடுமுறுக்கு

கொடுமுறுக்கு koḍumuṟukku, பெ.(n.)

   1. நூலின் மிகச் சுற்றியேறிய முறுக்கு; inextricable twisting of strands or inextricable knots in a string.

   2. சிம்பு(பத்துப்.ப. 607, கீழ்க்குறிப்பு);; small fibrous risings on the smooth surface of a string.

     [கொடு + முறுக்கு.]

கொடுமூலி

 கொடுமூலி koḍumūli, பெ.(n.)

   செங்கொடிவேலி; a runnig plant whose root is a powerful caustic; rose coloured leaved-wort (சா.அக.);.

     [கொடு + மூலி.]

கொடுமூலை

 கொடுமூலை koḍumūlai, பெ.(n.)

   எளிதில் அறிந்து செல்லக்கூடாத மூலையிடம் (இ.வ.);; out-of the way corner.

     [கொடு + மூலை.]

கொடுமை

கொடுமை1 koḍumai, பெ.(n.)

   1.மாந்தத் தன்மையற்ற கொடுஞ்செயல்; cruelty, tyranny. inhumanity.

     “கொடுமைபல செய்தன”(தேவா. 945:1);.

   2.கடுமை (கந்தபு.பார்.6);; severity, harshness.

   3. முருட்டுத்தன்மை; roughness, uncouthness.

   4. தீமை; vileness, wickedness.

     “கூனுஞ் சிறிய கோத்தாயுங்கொடுமை யிழைப்பை” (கம்பரா. மந்திரப். 1);.

   5. வேண்டா வார்த்தை (அக.நி.);; harsh words, slander.

ம.கொடும.

     [கொடு → கொடுமை.]

 கொடுமை2 koḍumai, பெ.(n.)

   1.வளைவு (சிலப். 11:20.);; crookedness, obliquity.

   2 மனக்கோட்டம்; partiality.

     “கொடுமையுஞ் செம்மையும்”(பரிபா 4: 50);

   3. ஒருபாற்கோடுதல் (நீதிதவறுதல்);; injustice.

     “கொடியோர் கொடுமை” (தொல்பொருள். 147);.

   4. கரிசு, பாவம் (இ.வ.);; sin.

   5. வக்கிராந்த வைப்பு நஞ்சு (சங்.அக.);; a mineral poison.

     [கொள் → கொண் → கொடு → கொடுமை.]

அறனழியப் பிறரைச் சூழும் சூழ்ச்சி (தொல். பொருள். 270, இளம்); கேடுசூழ நினையும் தீவினையுள்ளம் (தொல். பொருள். 257, பேரா.); (உரை.சொ.க.);.

கொடுமைசொல்(லு)-தல்

கொடுமைசொல்(லு)-தல் koḍumaisolludal,    8 செ.குன்றாவி.(v.t.)

   தீமை பயக்கும் கொடுஞ் சொற்களைக் கூறுதல் (கொ.வ.);; to speak harsh or cruel words.

     [கொடுமை + சொல்-.]

கொடுமைத்தானம்

 கொடுமைத்தானம் koḍumaittāṉam, பெ.(n.)

   பிறப்போரைக்கு எட்டாமிடம் (சங்.அக.);; the eigth house from the ascendant.

     [கொடுமை + தானம். தானம் : இடம்.]

கொடும்

 கொடும் koṭum, பெ.அ.(adj.)

கொடிய, கடுமையான

 terrible.

கொடும் பாலைவனம்; கொடு நோய்.

     [கொடு+ம்.]

கொடும்பகல்

 கொடும்பகல் goḍumbagal, பெ.(n.)

   நண்பகல் (இ.வ.);; mid-day.

     [கொடும் + பகல்.]

கொடும்பனி

 கொடும்பனி koḍumbaṉi, பெ.(n.)

   கடும்பனி; severe cold, frost.

     [கொடும் + பனி.]

கொடும்பனிக்காலம்

 கொடும்பனிக்காலம் koḍumbaṉikkālam, பெ.(n.)

   பனி மிகுந்துள்ள கும்ப, மீன மாதங்கள் (பிங்.);; the months of Masi and Panguni, season of heavy dews.

     [கொடும் + பனி + காலம்.]

கொடும்பன்

 கொடும்பன் koḍumbaṉ, பெ.(n.)

கொடுமை செய்யும் இயல்பினன் (அழிம்பன்);,

 villain wicked person.

கொடும்பறை

கொடும்பறை koḍumbaṟai, பெ.(n.)

   கண்கள் வளைந்த பறை; a drum with a curved central spot.

     “கொடும்பறைக் கோடியர் கடும்புடன் வாழ்த்தும்” (மதுரைக்.523);.

     [கொடும் + பறை.]

கொடும்பாடன்

கொடும்பாடன் koḍumbāḍaṉ, பெ.(n.)

   கொடியவன்; cruel man,

     “கண்ணறையன் கொடும்பாட னென்றுரைக்க வேண்டா” (தேவா. 670:9);.

     [கொடும்பாடு → கொடும்பாடன்.]

கொடும்பாடு

கொடும்பாடு koḍumbāḍu, பெ.(n.)

   1. கொடுமை, துன்பம்; cruelty, severity, hardship.

     “கோவலர் வாழ்க்கையோர் கொடும்பா டில்லை” (சிலம் 15:1121);.

   2. மாறுபாடு; perversit.

     “கொடும்பா டறியற்க வெம்மறிவு” (பரிபா:2:76);.

     [கொடுமை + பாடு – கொடும்பாடு.]

கொடும்பாதகம்

கொடும்பாதகம் goḍumbātagam, பெ.(n.)

   1. அல்நயன், அறக்கேடு (அநீதி);,

 injustice.

   2. கொடிய ஏய்ப்பு (வஞ்சனை);

 deceit.

     [கொடும் + பாதகம்.]

கொடும்பாளூர்

கொடும்பாளூர் koḍumbāḷūr, பெ.(n.)

   புதுக்கோட்டைச் சீமையில் உள்ள வரலாற்றுப் புகழ்மிக்க ஒருர்; a village in Pudukkottai state noted for its historical interest.

     “கோனாட்டுக் கொடிநகரங் கொடும்பாளூர்”(பெரியபு. இடங்கழி.);.

     [கொடும்பை (குளம், நீர்நிலை); + ஆளுர் கொடும்பையாளூர் கொடும்பாளூர்.]

பெரிய நீர்நிலைகள் அமைந்திருந்தமையால் பிற்காலத்தில் கொடும்பாளூர் என்றும் வழங்கி இருக்கலாம். கி.பி.768-815-இல் பராந்தக நெடுஞ்செழியனால் எழுதப்பட்ட வேள்விக்குடிச் செப்பேட்டில் ‘கொடும்பாளூர்’ என்று குறிப்பிட்டுள்ளதை ஒப்பு நோக்கலாம்.

கொடும்பாளூர் அரையர்

கொடும்பாளூர் அரையர் koḍumbāḷūraraiyar, பெ.(n.)

   கள்ளர்குடிப் பட்டப்பெயர்களுள் ஒன்று (கள்ளர்சரித்.ப.98);; a caste title of Kallars.

     [கொடும்பாளூர் + அரையர்.]

கொடும்பாவி

கொடும்பாவி1 koḍumbāvi, பெ.(n.)

   1.கொடுஞ் செயற்காரன்; heinous sinner.

     “பயமெனுமோர் கொடும்பாவிப் பயலே” (அருட்பா,vi. தான் பெற்ற.17);.

     “கொடும்பாவியானாலும் கொண்ட மாமியார் வேண்டும்” – பழ.

   2. எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் தெருவில் இழுத்துச் சென்று எரிக்கும் உருவம்; effigy (as a protest.);.

கொடுமைக்காரனுக்குக் கொடும்பாவி எரித் தார்கள் (உ.வ.);.

     [கொடும் + பாவி.]

 கொடும்பாவி2 koḍumbāvi, பெ.(n.)

   பஞ்ச முதலியன உண்டான காலங்களில் அவை தீரும்படி, ஊர்த்தெருக்களிற் கட்டியிழுத்துக் கொளுத்தப்படும் வைக்கோரலுருவம் (உ.வ.);; straw effigy representing the most heinous sinner, dragged through the village streets in time of drought and then burnt to expiate public crime and bring rain.

     [கொடுமை + பாவி – கொடும்பாவி.]

கொடும்பாவை

கொடும்பாவை koḍumbāvai, பெ.(n.)

கொடும்பாவி2;see kodum-pāvi.

     [கொள் → கொடு → கொடுமை → கொடும் + பாவை.]

கொடும்பு

கொடும்பு1 koḍumbu, பெ.(n.)

   கொடுமை; cruelty, severity.

     [கொள் → (கொண்); கொடு : வளைவு, வளைவான. கொடு → கொடுமை = வளைவு, தீமை, கடுமை. கொடு → கொடும்பு : கொடுமை);

 கொடும்பு2 koḍumbu, பெ.(n.)

   1. சிம்பு; small fibrous rising on a surface of thread or string.

     ‘வெண்சிறு கடுகளவும் கொடும்பில்லை யாம்படி தீற்றி’ (மலைபடு 24, உரை);.

   2. தவிட்டுப்பொடி (இ.வ.);; bran.

   3. முறுக்கு மிகுதியான கயிறு; highly twisted rope (மீன்.பி.டி.தொ.);.

     [கொடு → கொடும்பு.]

கொடும்புராயர்

 கொடும்புராயர் koḍumburāyar, பெ.(n.)

கொடும்பாளூர் அரையர் பார்க்க;see kodumpalur-araiyar.

     [கொடும்பை → கொடும்பு + அரையர்.]

கொடும்புரி

கொடும்புரி koḍumburi, பெ.(n.)

   1. கொடி முறுக்கு பார்க்க;see kodi-murukku.

   2. கடுஞ்சூழ்ச்சி (வின்.);; deep-laid plot.

     [கொடும் + புரி.]

கொடும்புலி

கொடும்புலி koḍumbuli, பெ.(n.)

   1. அரிமா (சிங்கம்); (உரி.நி.);; lion.

   2. மடங்கல் (சிங்கராசி);; leo, a constellation of the zodiac.

     [கொடும் + புலி.]

கொடும்பேதி

கொடும்பேதி koḍumbēti, பெ.(n.)

   1. மச்சமுனி யென்னும் சித்தன் வசமிருந்த ஒரு கவன குளிகை; animated mercurial pill in possession of a siddha named Maccamuni, for flying in the sky.

   2. கொடிய வயிற்றுப்போக்கு; diarrhoea of virulent type, violent purging.

   3. கக்கல் கழிச்சல்; cholera (சா.அக.);.

     [கொடும் + பேதி.]

கொடும்பை

கொடும்பை1 koḍumbai, பெ.(n.)

   1. நீர்வீழ்ச்சி(அ.க.நி.);,

 waterfall.

   2. குன்றம் (அக.நி.);; bill, hil-lock.

   3. குளம் (அக.நி.);; tank.

   4. தூம்பு (சது.);; gutter. drain.

   5. தாம்பு (அக.நி.);; rope, halter.

   6. பச்சிலைப்பூடுவகை (அக.நி.);; a kind of evergreen shrub with medicinal properties.

     [குடும்பு + கொடும்பு → கொடும்பை.]

 கொடும்பை2 koḍumbai, பெ.(n.)

   1 கொடும்பாளூர் பார்க்க;see kopumbalur,

     “கொடும்பை நெடுங்குளக் கோட்டகம்” (சிலப். 11:71);.

   2. ஒரு பச்சிலை; a medicineal green leaf.

     [கொடும்பு → கொடும்பை.]

கொடும்பைத்தியம்

கொடும்பைத்தியம் koḍumbaittiyam, பெ.(n.)

   1.கொடிய கிறுக்கு; dangerous lunacy; extreme insanity.

   2. ஊறு செய்யும் கிறுக்கு; insanity leading to acts of violence (சா.அக.);.

     [கொடும் + பைத்தியம்.]

கொடும்பைப்பட்டி

 கொடும்பைப்பட்டி koḍumbaippaḍḍi, பெ.(n.)

   கரூர் மாவட்டத்துச் சிற்றூர்; a village in Erode Dt.

     [கொடும்பை + பட்டி.]

கொடும்போக்கு

 கொடும்போக்கு koḍumbōkku, பெ.(n.)

   வீட்டிற்குத் திரும்பிவருங்கருத்தின்றி வெளியேறுகை (இ.வ.);; departure, as from home, with no intention of returning.

     [கொடும் + போக்கு.]

கொடுவரி

கொடுவரி koḍuvari, பெ.(n.)

   வளைந்த வரிகளையுடைய புலி; lit., that which has curved stripes, tiger.

     “கொடுவரி வழங்குங் கோடுயர் நெடுவரை” (புறநா. 135:1);.

மறுவ. வேங்கை, வரிப்புலி, கொடுவாய்.

     [கொடு(வளைந்த);. + வரி]

கொடுவலை

 கொடுவலை koḍuvalai, பெ.(n.)

   ஒருவகை மீன் வலை; a kind of fishing net (பரத.கலை.சொ.அக);.

     [கொடு + வலை.]

கொடுவா

கொடுவா1 koḍuvādalkoḍuvarudal,    15 செ.குன்றாவி.(v.t.)

   கொண்டுவருதல்; to bring.

     “கொடுவருதி ரிரதமெனக் கூற லோடும்”(கந்தபு தாரக. 31);.

     [கொண்டு → கொடு + வா-.]

 கொடுவா2 koḍuvā, பெ.(n.)

   ஒருவகைமீன்; a kind of fish.

     [கொடு → கொடுவாய்]

கொடுவா வலை

 கொடுவா வலை koḍuvāvalai, பெ.(n.)

   கொடு வாய் மீன்கள் பிடிப்பதற்காக அமைக்கப்பட்ட வலை; a special netto catch koduva fish,

     [கொடுவாய்-கொடுவா+வலை]

கொடுவாக்குட்டி

 கொடுவாக்குட்டி koḍuvākkuḍḍi, பெ.(n.)

   சிறு கொடுவா மீன்; a kind of small fish (மீன்.பிடி.தொ.);.

     [கொடுவாய் + குட்டி → கொடுவாக்குட்டி]

கொடுவாஞ்சி

 கொடுவாஞ்சி koḍuvāñji, பெ.(n.)

   கொட்டாஞ்சி; Kottànji, which see (சா.அக.);.

     [கொடு + வாஞ்சி.]

கொடுவாட்கத்தி

 கொடுவாட்கத்தி koṭuvāṭkatti, பெ.(n.)

அறுக்க பயன்படுத்தும் ஒரு வளைந்த கத்தி,

 a curved knife used in surgery (சா.அக.);.

     [கொடுவாள்+கத்தி]

கொடுவாத்திருக்கை

 கொடுவாத்திருக்கை koḍuvāttirukkai, பெ.(n.)

   ஒருவகைத்திருக்கை மீன்; a kind of fish.

     [கொடு + வாய் + திருக்கை.]

கொடுவாத்திருக்கை

கொடுவாயிரும்பு

கொடுவாயிரும்பு koḍuvāyirumbu, பெ.(n.)

   தூண்டில் முதலியவற்றிலுள்ள இரும்புக் கொக்கி; iron hook, as of an angle.

     “கொடுவாயிரும்பின் கோளிரை துற்றி”(அகநா. 36:2);.

     [கொடு(வளைந்த); + வாய் + இரும்பு.]

கொடுவாய்

கொடுவாய்1 koḍuvāy, பெ.(n.)

   1.வாள் முதலியவற்றின் வளைந்த வாய்; curved or bent edge, as of a bill-hook:

     “கொவாய்க் குயத்து” (சிலப். 16:30);.

   2. குறளை (பிங்.);; tale-bearing, backbiting.

   3. பழிச்சொல்; reproach.

     “கன்னிகா காமியெனுங் கொடுவாய்”(சீகாழித். கொச்சை.31);.

   4. ஐந்தடி நீளமும் சாம்பல் நிறமும் உள்ள மீன்வகை (M.M.195.);,

 cockup, grey, attaining 5ft. in length.

   5. புலிவகை (இ.வ.);; a species of tiger.

   6. தூங்கும்போது வழியும் எச்சில்:

 saliva flowing out of mouth during sleep.

     [கொடு(வளைந்த); + வாய்.]

 கொடுவாய்2 koḍuvāy, பெ.(n.)

கோடைவாய் பார்க்க;see ködai-vāy.

     [கொடுமை + வாய்.]

 கொடுவாய்3 koḍuvāy, பெ.(n.)

கொட்டுவாய் பார்க்க;see kottu-vai.

     [கொட்டு → கொடு + வாய்.]

 கொடுவாய்4 koḍuvāy, பெ.(n.)

   ஈரோடு மாவட்டத்துச் சிற்றூர்; a village in Erode Dt.

     [கொடு + வாவல் – கொடுவாவல் → கொடுவாவு → கொடுவாய்.]

கொடுவாய்க்கத்தி

 கொடுவாய்க்கத்தி koḍuvāykkatti, பெ.(n.)

   வளைந்த கத்தி; curved knife.

     [கொடுவாள் + கத்தி – கொடுவாள்கத்தி → கொடுவாய்க்கத்தி.]

கொடுவால்முறுக்கு-தல்

கொடுவால்முறுக்கு-தல் koḍuvālmuṟukkudal,    5 செ.குன்றாவி.(v.t.)

   வண்டியில் பூட்டிய மாட்டின் வாலை விரைவாகச் செல்வதற்காக முறுக்குதல்; to twist the tail of the ox to drive it fast.

     [கொடுவால் + முறுக்கு-.]

கொடுவாளை

கொடுவாளை koḍuvāḷai, பெ.(n.)

   1. ஓர் ஆற்று மீன்; a river fish Indian perch.

   2. பனையேறி மீன்; nayar fish-lates fish (சா.அக.);.

     [கொடு + வாளை.]

கொடுவாள்

கொடுவாள் koḍuvāḷ, பெ.(n.)

   1.அரிவாள்; amputating knife, bill-hook, sickle.

   2. மழு; battle axe.

     “வலக்கை யஞ்சுடர்க் கொடுவாள் பிடித்தோள்” (சிலப். 23:8);.

     [கொடு + வாள்.]

கொடுவாவல்

கொடுவாவல் koḍuvāval, பெ.(n.)

கொடுவாய்4 பார்க்க;see kodu-vāy.

     [கொடு + வாவல்.]

கொடுவிடத்தி

 கொடுவிடத்தி koṭuviṭatti, பெ.(n.)

   மருதாணி; prickly lawsonia, Lawsonia Spinosa (சா.அக.);.

     [கொடு+விடத்தி]

கொடுவிடம்

கொடுவிடம் koṭuviṭam, பெ. (n.)

   1. கொல்லுந் தன்மை கொண்ட நஞ்சு

 fatal poison, Venom.

   2. வெள்ளைப் பாடாணம்; a mineral poison (செ.அக.);.

     [கொடு + Skt. விடம்]

கொடுவினை

கொடுவினை koḍuviṉai, பெ.(n.)

   முற்பிறவியில் செய்த தீவினை; evil deeds of former births.

     “கொடுவினையா ரென்றும் குறுகாவடி”(தேவா. 969:2);.

     [கொடு + வினை.]

கொடுவிலார்பட்டி

 கொடுவிலார்பட்டி koḍuvilārpaḍḍi, பெ.(n.)

   தேனி மாவட்டத்துச் சிற்றூர்; a village in Teni Dt.

     [கொடு + வி(ல்);லார் + பட்டி.]

கொடுவிழுதை

 கொடுவிழுதை koḍuviḻudai, பெ.(n.)

   பெருநெல் வகை (இ.வ.);; a kind of paddy.

     [கொடு + விழுதை.]

கொடுவூர்

 கொடுவூர் koḍuvūr, பெ.(n.)

   இராமநாதபுரம் மாவட்டத்துச் சிற்றூர்; a village donated in olden days in Ramanadhapuram Dt.

     [கொடு + ஊர் – கொடுவூர் (கொடையளித்த ஊர்);.]

கொடுவேரி

கொடுவேரி koḍuvēri, பெ.(n.)

கொடுவேலி பார்க்க;see kodu-veli (வேளாண்.கலை.அக.);.

     [கொடு + வேரி.]

 கொடுவேரி koḍuvēri, பெ.(n.)

கொடுவேலி பார்க்க;see kodu-veli.

     “செங்கொடு வேரி தேமா மணிச்சிகை”(குறிஞ்சிப்.64);.

ம. கொடுவேரி.

     [கொடு + (வேலி); வேரி.]

கொடுவேலி

 கொடுவேலி koḍuvēli, பெ.(n.)

   சித்திரமூலம் என்னும் கொடி (மலை.);; Ceylon leadwort, climber.

மறுவ. அகனாதி, அணிஞ்சகம், அணிஞ்சில், அதிகநாறி, அதிபநிங்கி, அரி, அருணவேலி, அழல், அழற்சூடி, அனல், அனலம், ஆங்காரசத்தி, ஆண்கொடிவேலி, ஆதிமகாமூலி, இலதை வன்னி, உக்கன், உடல்வேதிச்சி, உதகவன், உதங்கன், உமிழ்நீர்பெருக்கி, எழுநா, ஒலிகைச்செடி, கனலி, காணிலம், காரிகை, காரிமை, காரீமை, காவிக்கருப்பி, கானலிந்தரின்கொடி, கூரியவன்னி, கொடிச்சி, கொடிவேர், கொடிவேலி, கொடுவேரி, கோணுங்காகிலம், கோமுச்சிரவல்லி, சத்தி, சதாவேதா, சதாவேதை, சாத்துவாதி, சித்தர்மூலம், சித்திமூலம், சித்திரக்கொடி, சித்திரகம், சிலைமண், சிவம், செருக்கன், சோதி காந்தம், தணலாகினி, தணலாற்றி , தபனகம், தமாகி, தழல், தழற்கொடி தாகம், திகனாதி, திசைநாச்செடி, துவயாக்கினி, நடக்கையறிவாள், நெருப்புமூலி,

பகப்பாதி, பாடினம், மகந்தம், வங்கி, வச்சகாரம், வசகம், வசங்கம், வஞ்சகாரம், வறாளம், வன்னி, வனமா, வாளகச்சிகை வெண்கொடிமூலம்.

     [கொடு + வேலி.]

கொடுவை

கொடுவை koḍuvai, பெ.(n.)

   கெட்டவியல்பு; wicked-ness.

     ‘கொடுவைப் பசுக்களை'(ஈடு 4, 8:4);.

     [கொடு → கொடுகு. கொடுகுதல் : கொடிதாதல், கொடு → கொடுவை : தீயதன்மை.(வ.மொ.வ.);.]

கொடூரம்

 கொடூரம் koṭūram, பெ.(n.)

   கொடுமை; cruelty, severity, harshness.

     [கொடு → கொடுரம் → கொடூரம்.]

கொடூர்

 கொடூர் koṭūr, பெ.(n.)

   திருவள்ளூர் மாவட்டத்துச் சிற்றூர்; a village in Thiruvallur Dt.

கொடு + ஊர் – கொடுவூர் → கொடூர் (கொடையளித்த ஊர்);,]

கொடை

கொடை1 koḍai, பெ.(n.)

   உயிர், உடம்பு, உறுப்பு முதலிய எல்லாப் பொருளும் கொடுக்கை (தொல். பொருள். 257);; the act of gift as of life body and parts of body.

     [கொடு → கொடை.]

 கொடை2 koḍai, பெ.(n.)

   1. ஈகை; giving away, as a gift, donation.

     “இல்லான் கொடையே கொடைப்பயன்” (நாலடி. 65);. இலுப்பை சக்கரைக் கொடையாம் துரைகள் மெச்சின நடையாம் (பழ);.

   2. கைக்கொண்ட நிரையை, இரவலர்க்கு வரையாது கொடுக்கும் புறத்துறை; Puram theme of a king distributing liberally to the poor the enemy’s cattle captured by him.

     “உண்டாட்டுக் கொடையென” (தொல், பொருள்.58);.

   3. சிற்றூர்த் தெய்வத்திற்கு மூன்று நாள் செய்யும் திருவிழா (G.M.D.I. 117);; three day festival of a village deity.

   4. வசவு, திட்டு, அடி,

 round abuse, round blows.

அவள் கொடுத்த கொடை ஏழுசன்மத்திற்குப் போதும்.

   5. அடி; round blows.

     [கொடு → கொடை..]

கொடைக்கடம்

கொடைக்கடம் koḍaikkaḍam, பெ.(n.)

   கொடையாகிய கடமை; charity – giving considered a duty.

     “கொடைக் கடம்பூண் கொள்கை யனாகி” (பெருங்,நரவாண.8:43);.

     [கொடை + (கடன்); → கொடை..]

கொடைக்கல்

 கொடைக்கல் koḍaikkal, பெ.(n.)

   ஒருவன் செய்த அறச்செயல்பொறிக்கப்பட்ட கல்வெட்டு(இ.வ.);; memorial slab inscribed with the charitable deeds of a person.

     [கொடை+கல்]

கொடைக்கானல்

கொடைக்கானல் koḍaikkāṉal, பெ.(n.)

பழனி மலைத் தொடரின் தென்பால் 7000 அடிக்குமேல் உயரமுள்ள மலைப்பகுதி:

 the southern ridge of the Palani Hills, more than 7,000 ft. high.

   2. கோடைக்கானல் மலையின் உச்சியில் குளிர்ச்சிக்காகத் தங்கும் ஒரு மலைநகர்; a sanatorium at the top of Ködakkânal.

     [கோடைக்கானல் → கொடைக்கானல்.]

கோடைக்காற்று வீசும் மேற்குத் திசை கோடை எனப்படும்.கோடைக்கானல் என்பது மேற்கு மலைக்காடு எனப் பொருள்படும். கானல் = சோலை, அடர்ந்த காடு.

கொடைக்கை

 கொடைக்கை koḍaikkai, பெ.(n.)

   வீட்டின்முகடு; ridge of a roof.

     [கொடு → கொடை + கை.]

கொடைசாலி

 கொடைசாலி koḍaicāli, பெ.(n.)

   ஈகையாளன்; a liberal man, banefactor.

     [கொடை + சாலி. ஒருகா. கொடையாளி → கொடைசாலி (கொ.வ.);.]

கொடைத்தம்பம்

 கொடைத்தம்பம் koḍaittambam, பெ.(n.)

   ஈகத்திற்கு அறிகுறியாக நாட்டு தம்பம்; pillar commemorating one’s munificence.

     [கொடை + தம்பம்.]

கொடைநம்பிகள்

 கொடைநம்பிகள் goḍainambigaḷ, பெ.(n.)

   திருவாய்மொழிக்கு “மனத்தாலும் வாயாலும்” என்னுந் தனியனைப் பாடியவர்; a Vasnavite poet who contributed eulogical preface to one of Tiruvâimolli hymns.

     [கொடை + நம்பிகள்.]

கொடைநேர்

கொடைநேர்1 koḍainērtal,    2 செ.குன்றாவி. (v.t.)

   மகளை மணம் செய்துகொடுக்க உடன்படுதல்; to agree to give one’s daughter in marriage (இ.வ.);.

     “ஆர்வுற் றெமர்கொடை நேர்ந்தார்”(கலித். 104:75);.

     [கொடு → கொடை + நேர்தல்.]

 கொடைநேர்2 koḍainērtal,    2 செ.கு.வி.(v.i.)

   சிறுதெய்வத்திற்கு விழா எடுக்கத் தீர்மானித்தல்; to promise or mentally resolve the celebration of a festive worship to a deity.

     [கொடு → கொடை + நேர்தல்.]

கொடைப்பணக்காரன்

 கொடைப்பணக்காரன் koḍaippaṇakkāraṉ, பெ.(n.)

   மிகுந்த செல்வமுள்ளவன்; man of great wealth.

     [கொடை + பணக்காரன்.]

கொடைப்பொருள்

 கொடைப்பொருள் koḍaipporuḷ, பெ.(n.)

   கொடுக்கப்படும் பொருள்; material that is gifted.

     [கொடை + பொருள்.]

கொடைமடம்

கொடைமடம் koḍaimaḍam, பெ.(n.)

   வரை வின்றிக் கொடுக்கை (இ.வ.);; unrestricted munificence.

     “கொடைமடம் படுத லல்லது” (புறநா. 142:5);.

     [கொடை + மடம். கொடைமடம் : கொடுப்பதில் நேரும் அறியாமையின் வெளிப்பாடு.]

யாருக்கு எது எப்போது எக்காரணத்திற்காகத் தருதல் வேண்டும் என்று ஆய்ந்து நோக்காமல், பரிவும் அன்பும் மட்டுமே கருதி உடனே கேட்டதைத் தருதலும், கேளாமலே அதன் பின்விளைவு நோக்காமல் தருதலும் கொடைமடம் எனப்படும்.

கொடைமடம்கடு-தல்

கொடைமடம்கடு-தல் koḍaimaḍamkaḍudal,    20 செ.கு.வி. (v.i.)

கொடைமடம் பார்க்க;see kodai madam.

     [கொடை + மடம் + படு.]

கொடைமுடி

 கொடைமுடி koḍaimuḍi, பெ.(n.)

   சரக்கொன்றை; Indian laburnum.

     [குடை → கொடை + முடி.]

கொடைமை

கொடைமை koḍaimai, பெ.(n.)

   கொடைத்தொழில்; munificence

     “கொடுத்த லெய்திய கொடையமையானும்” (தொல், பொருள்.63);.

     [கொடு → கொடைமை.]

கொடையாளன்

கொடையாளன் koḍaiyāḷaṉ, பெ.(n.)

   ஈகையுள்ளவன்; munificent person (இ.வ.);

     “கோலக்கா மேவுங் கொடையாளா” (அருட்பா. i. விண்ணப். 16);.

     [கொடை + ஆளன்.]

கொடையாளி

 கொடையாளி koḍaiyāḷi, பெ.(n.)

கொடையாளன் பார்க்க;see kodai-y-alan.

     [கொடை + ஆளி. ஒ.நோ. பாட்டாளி.]

கொடையுள்ளம்

 கொடையுள்ளம் koḍaiyuḷḷam, பெ.(n.)

   அறம்புரியும் எண்ணம்; charitable or virtuous disposition.

     [கொடை+உள்ளம்]

கொடையெதிர்-தல்

கொடையெதிர்-தல் koḍaiyedirdal,    2.செ.குன்றாவி. (v.t.)

   1. கொடுத்தலை மேற்கொள்ளுதல் (இ.வ.);; to make a gift offering.

     “குத்தொக வரூஉங் கொடை யெதிர் கிளவி” (தொல்.சொல். 99. இளம்);.

   2. கொடுப்பதனை யேற்றல் (இ.வ.);; to accept or receive.

     “கொடையெதிர் கிளவியெனக் கொள்வோனாகவும்” (இலக்.கொத்.ப.5);.

     [கொடை + எதிர்.]

கொடையெலும்பு

 கொடையெலும்பு koṭaiyelumpu, பெ.(n.)

   குடையெலும்பு அதாவது உள் வளைந்த எலும்பு; bone with an inward curvature; incurved bone (சா.அக.);.

     [கொடை+எலும்பு]

கொடையோன்

 கொடையோன் koḍaiyōṉ, பெ.(n.)

கொடையாளன் (பிங்.); பார்க்க;see kodai-y-alan.

     [கொடையான் → கொடயோன்.]

கொடைவஞ்சி

கொடைவஞ்சி koḍaivañji, பெ.(n.)

   போரில் வென்றுகொண்ட பொருளைப் பாடிய பாணர்க்கு அரசன் பரிசாக அளிப்பதைக் கூறும் புறத்துறை (பு.வெ.3,16);;     [கொடை + வஞ்சி.]

கொடைவினா

கொடைவினா koḍaiviṉā, பெ.(n.)

   1. கொடுக்கும் நோக்கத்தோடு கேட்கும் வினா; a question implying willingness to give as Has he no dress?.

   2. அறுவகை வினாக்களிலொன்று; one of the six kinds of interrogation.

     ‘சாத்தற்கு ஆடையில்லையோ என்பது கொடைவினா’ (நன்.385, உரை);.

     [கொடை + வினா.]

கொடைவீரம்

 கொடைவீரம் koḍaivīram, பெ.(n.)

   மிகு கொடையினா லுண்டாகும் வீரம்; heroism, magnanimity created by the exercise of munifiсепсе.

     [கொடை + வீரம்.]

கொட்கு-தல்

கொட்கு-தல் koṭkudal,    5 செ.கு.வி.(v.i.)

   1.சுழலுதல்; to whirl round.

     “வளிவலங் கொட்கு மாதிரம்’ (மணிமே. 12:91);.

   2. சூழவருதல்; to move in an orbit, revolve.

     “காலுண வாகச் சுடரொடு கொட்கும்” (புறநா.43);.

   3. திரிதல்; to roam, wander.

     “கொடும்புலி கொட்கும் வழி” (சிறுபஞ்.80);.

   4. வெளிப்படுதல்; to be revealed, to come to view.

     “கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை”(குறள்.663);.

     [கொள் → கொட்கு.]

கொட்ட வாழை

 கொட்ட வாழை koṭṭavāḻai, பெ.(n.)

   கல்வாழை வகை; a type of kalvalai plant.

     [கொட்டை+வாழை]

கொட்டகச்சி

கொட்டகச்சி goṭṭagacci, பெ.(n.)

   1. சிரட்டை (யாழ்.அக.);; Coconut shell.

   2. கொட்டாங்காய்ச்சில் பார்க்க;see kottan-kāyccil.

மறுவ.. கொட்டாங்கச்சி, கொட்டாஞ்சி, கொட்டாங் காய்ச்சி.

     [கொட்டான் (வித்து); + காய் + சில் – கொட்டாங்காய்ச்சில் → கொட்டாங்கச்சி → கொட்டகச்சி (கொ.வ.);.]

கொட்டகம்

கொட்டகம்1 goṭṭagam, பெ.(n.)

கொட்டகை (வின்.); பார்க்க; see kottagai.

மறுவ. கொட்டாய்.

     [கொள் → கொட்டு → கொட்டகம்.]

 கொட்டகம்2 goṭṭagam, பெ.(n.)

   சிற்றில்; house, built by children.

ஊரில், பெண்களாய்க் கொட்டகமெடுத்து விளையாடித் திரிகிறவர்களுடைய (திவ்.பெரியாழ். 1.29. வியா. ப.48);.

     [கொட்டில் → கொட்டகம்.]

கொட்டகாரம்

கொட்டகாரம்1 koṭṭakāram, பெ.(n.)

   நெல்முதலிய பண்டம் வைக்கும் அறை; store-room; granary.

     “நெற்கூட்டி னிரைசெறிந்த புரிபலவா நிலைக் கொட்ட காரத்தில்” (பெரியபு:இடங்கழி.7);.

     [கொட்டகம் → கொட்டிகாரம்.]

 கொட்டகாரம்2 koṭṭakāram, பெ.(n.)

   1. அரண்மனை இல்லாத ஊரில் மன்னர் தங்கும் மண்டபம்;  building with a large hall where the king takes rest.

   2. நெற்களஞ்சியம், சரக்கறை; a granaray, a store house.

ம. கொட்டகாரம்.

     [கொட்டகம் → கொட்டகாரம்.]

கொட்டகை

கொட்டகை goṭṭagai, பெ.(n.)

   1. பந்தல்வகை; shed with sloping roofs.

   2. ஆநிரைக் கொட்டில்; cowshed.

   3. திருமணப்பந்தல்; marriage pandal.

     “கொட்டகைத் தூண்போற் காலிலங்க” (குற்றா.குற.84.4);. மறுவ, கொட்டாய்.

ம. கொட்டக, கொட்ட; க. கொட்டகெ, கொடிகெ, கொட்டிகெ; தெ. கொட்டுமு: ப. கொட்டகெ.

     [கொட்டு → கொட்டம் வட்டமான தொழு, நூற்குங் கொட்டை. கொட்டு → கொட்டகை சாய்ப்புப்பந்தல் (வ.மொ.வ.6);.]

கொட்டக்கச்சி

 கொட்டக்கச்சி koṭṭakkacci, பெ.(n.)

கொட்டங்கச்சி பார்க்க: see kottān-kacci.

மறுவ. கொட்டாங்கச்சி, கொட்டாஞ்சி.

     [கொட்டான் – காய் – சில் – கொட்டாங்காய்ச்சில் → கொட்டாங்கச்சி → கொட்டக்கச்சி.]

கொட்டக்கவிச்சிவிளை

 கொட்டக்கவிச்சிவிளை koṭṭakkavicciviḷai, பெ.(n.)

   குமரி மாவட்டத்துச் சிற்றுார்; a village ir Kanyakumari Dt.

     [கொட்டம் – கவிச்சி – விளை.]

கொட்டக்காரன்

கொட்டக்காரன்1 koṭṭakkāraṉ, பெ.(n.)

   1. திப்பிலி

 long pepper.

   2. தீய கண்ணுடையோன்; one who has evil eyes.

     [கொட்டம் + காரன்.]

 கொட்டக்காரன்2 koṭṭakkāraṉ, பெ.(n.)

   1. அடா பிடிக்காரன் (வின்.);; mischievous person.

   2. காரல் மீன் வகை; a kind of fish.

     [கொட்டம் (திமிர்); + காரன்.]

கொட்டக்காவல்

 கொட்டக்காவல் koṭṭakkāval, பெ.(n.)

   சிற்றூரொன்றின் பெயர்; a name of a village.

     [கொட்டம் + காவல்.]

கொட்டக்குடி

 கொட்டக்குடி koḍḍakkuḍi, பெ.(n.)

   தேனி மாவட்டத்துச் சிற்றூர்; a village in Theni Dt.

     [கொட்டன் + குடி.]

கொட்டக்குடிகீழ்ப்பாத்தி

 கொட்டக்குடிகீழ்ப்பாத்தி koḍḍakkuḍiāḻppātti, பெ.(n.)

   சிவகங்கை மாவட்டத்துச் சிற்றூர்; a willage in Sivagangai Dt.

     [கொட்டன் + குடி + கீழ்ப்பாத்தி.]

கொட்டங்கச்சி

 கொட்டங்கச்சி koṭṭaṅgacci, பெ.(n.)

   தேங்காய் ஒடு; empty shell of a coconut.

     [கொட்டாங்கச்சி → கொட்டங்கச்சி.]

கொட்டங்கரை

 கொட்டங்கரை koṭṭaṅgarai, பெ.(n.)

   தருமபுரி மாவட்டத்துச் சிற்றூர்; a village in Dharmapuri Dt.

     [கொட்டன் + கரை.]

கொட்டங்காய்

 கொட்டங்காய் koṭṭaṅgāy, பெ.(n.)

   தேங்காய் (மூ.அக.);; Coconut.

     [கொட்டை (நெற்று); + காய்.]

கொட்டங்காய்ச்சி

 கொட்டங்காய்ச்சி koṭṭaṅgāycci, பெ.(n.)

   தேங்காய் ஓட்டின் ஒரு பகுதி; portion of a coconut shell.

ம. கோட்டாங்கச்சி.

     [கொட்டான் (நெற்று, கொட்டெ); + காய் + சில் – கொட்டான்காய்ச்சில் → கொட்டாங்காய்ச்சி (கொ.வ.);.]

கொட்டங்கைச்சி

 கொட்டங்கைச்சி koṭṭaṅgaicci, பெ.(n.)

கொட்டாங்காய்ச்சி பார்க்க;see kottan-kaycci.

     [கொட்டான் + காய் + சி – கொட்டான்காய்ச்சி → கொட்டாங்காய்ச்சி → கொட்டாங்கச்சி.]

கொட்டச்சேடு

 கொட்டச்சேடு koṭṭaccēṭu, பெ.(n.)

   சேலம் மாவட்டத்துச் சிற்றூர்; a village in Salem Dt.

     [கொட்டன் + தோடு (சிற்றோடை); – கொட்டத்தோடு → கொட்டச்சேடு (கொ.வ.);.]

கொட்டடி

கொட்டடி1 koḍḍaḍittal,    4 செ.கு.வி. (v.i.)

   மத்தளம் போன்றவற்றை அடித்தல்; to beat the drum.

     [கொட்டு + அடி-.]

கொட்டடி2-த்தல்

   4 செ.கு.வி. (v.i.);

   மறைபொருளை ஊரறியப் பரப்புதல்; to spread a secret.

இதைப்போய்க் கொட்டடிக்கலாமா?

     [கொட்டு + அடி-.]

 கொட்டடி3 koḍḍaḍi, பெ.(n.)

   1.சமையல் முதலிய வற்றிற்கு உதவும் அறை; room, as kitchen, store room.

   2. மாட்டுக் கொட்டில்; cattle-shed.

   3. சிறைச் சாலை அறை; prisoner’s cell.

   4. நெல் கொட்டி விற்குமிடம்; paddy selling place, shed.

     [கொட்டில் + அடி – கொட்டிலடி → கொட்டடி.]

 O.E., E. cote; AS. cot, cote, cyte; Du. kot; Ice. kot, Gr. Koth; Wel. cuet.

 கொட்டடி4 koḍḍaḍi, பெ.(n.)

   பூவேலைப்பாடுகள் அச்சிடப்பட்ட சேலைவகை; a variety of printed sarees.

     [கொட்டு + அடி – கொட்டடி + சேலை.]

சதுர அமைப்பில் கோட்டுக் கட்டங்கள் உள்ள புடவை கொட்டடிச்சேலை எனப்பட்டது.

 கொட்டடி koḍḍaḍi, பெ.(n.)

 kummi, play of ladies.(மீனவ.);

     [கொட்டு+அடி]

கொட்டடியாசாமி

 கொட்டடியாசாமி koḍḍaḍiyācāmi, பெ.(n.)

   கரடிக்கூடத்தில் பயின்ற வல்லாளன் (இ.வ.);; gymnast, athlete trained in the Muhammadan methods of bodily exercise, as practiced in a karadikkūdam.

     [கொட்டடி + ஆசாமி.]

கொட்டடியாத்தூர்

 கொட்டடியாத்தூர் koḍḍaḍiyāttūr, பெ.(n.)

   சிவகங்கை மாவட்டத்துச் சிற்றுார்; a willage in Sivagangai Dt.

     [கொட்டடி + (ஆற்றுர்); ஆத்தூர் – கொட்டியாத்தூர்.]

கொட்டடைப்பன்

கொட்டடைப்பன் koḍḍaḍaippaṉ, பெ.(n.)

   மாட்டுநோய் வகை (பெரியமாட்.62);; a disease of cattle.

     [கொட்டு + அடைப்பன்.]

கொட்டணக்காரி

 கொட்டணக்காரி koṭṭaṇakkāri, பெ.(n.)

   கூலிக்கு நெற்குத்துபவள் (இ.வ.);; woman who lives by ricepounding.

ம. கொட்டணக்காரி.

     [கொட்டு (குத்து); → கொட்டணம் + காரி.]

கொட்டணச்சோறு

 கொட்டணச்சோறு koṭṭaṇaccōṟu, பெ.(n.)

   தவிடு நீங்காத அரிசிச் சோறு; rice prepared from unbranned rice.

ம. கொட்டணச் சோறு.

     [கொட்டணம் + சோறு.]

கொட்டணம்

கொட்டணம் koṭṭaṇam, பெ.(n.)

   1. தவிடுநீங்காத அரிசி; unbranned rice.

   2. தவிடு நீங்காத அரிசிச் சோறு; cooked unbranned rice.

   3. தவிடு

   சேதப்படாமல் நெற்குத்துகை; poundingkor husking paddy, husking in such a manner as the bran is not lost.

   4. பஞ்சு கொட்டுகை (இ.வ.);; carding.

   ம. கொட்டணம், க. கொட்டண; தெ. கொட்டணமு; குரு. கொட்னா; மா. க்வொடெ; Pali.kottna.

     [கொட்டு + அணம். கொட்டுதல் இடித்தல், குத்துதல். அணம் சொல்லாக்க ஈறு.]

கொட்டணை

 கொட்டணை koṭṭaṇai, பெ.(n.)

   சதுப்புநிலத்தில் வளரும் ஒருவகைப் பூடு (வின்.);; a herb growing in marshy places.

மறுவ, கொட்டணைக்காய்.

     [கொட்டு + அணம் → அணை.]

கொட்டணைக்காய்

 கொட்டணைக்காய் koṭṭaṇaikkāy, பெ.(n.)

உப்பெடுக்கும் ஒரு கடற்கரைப் பூடு,

 a sea shore plant of the species of cranberry from which salt is extracted (சா.அக.);.

     [கொட்டணை+காய்]

கொட்டதுங்கு

 கொட்டதுங்கு koṭṭaduṅgu, பெ.(n.)

கல் நுங்கு

 hard nut palmyra fruit.

     [கொட்டை+நுங்கு]

கொட்டத்திரட்சி

 கொட்டத்திரட்சி koṭṭattiraṭci, பெ.(n.)

   திராய் மலை; mountain co taining impure zinc or sphelter

     [கொட்டம் + திரட்சி.]

கொட்டன்

கொட்டன் koṭṭaṉ, பெ.(n.)

   1. கொட்டாப்புளி (யாழ்ப்.);; mallet.

   2. பருத்த-வன்-வள்-து; fat manor woman or animal.

   3. நெற்கள முதலியவற்றிற் பயன்படுத்தும் தேங்காய்; coconut, as used at the threshing-floor.

     [கொட்டு → கொட்டன்.]

கொட்டன்கட்டை

 கொட்டன்கட்டை koṭṭaṉkaṭṭai, பெ.(n.)

கொட்டாப்புளி (யாழ்ப்.);.

 mallet.

     [கொட்டன் + கட்டை]

கொட்டன்பொல்லு

 கொட்டன்பொல்லு koṭṭaṉpollu, பெ.(n.)

   குறும்பொல்லு, பருத்தியில் கொட்டை நீக்குவதற்காக அடிக்கப் பயன்படும் கோல்; a stick a cane.

     [கொட்டான் வித்து நீக்காத பருத்தி. பொல்லு சிறுகோல். கொட்டான் + பொல்லு.]

கொட்டமடக்கி

கொட்டமடக்கி koḍḍamaḍakki, பெ.(n.)

குதிரைப் படையை எதிர்கொண்டடக்கியவர்: “வைகை வளநடையின் கொட்ட மடக்கி”(சேது.செப்.1-12);.

     [கொட்டம் + அடக்கி.]

கொட்டமடி-த்தல்

கொட்டமடி-த்தல் koḍḍamaḍittal,    4 செ.கு.வி.(v.i.)

   மணம்போனபடி குறும்புசெய்தல்; to be mischievous or turbulent, as an unruly boy.

     [கொட்டம் + அடி-.]

கொட்டமலழகி

 கொட்டமலழகி koṭṭamalaḻki, பெ.(n.)

ஆவிரை பார்க்க;see āvirai,

     [கோட்டு + அழல் + அழகி.]

கொட்டமுடிச்சு

 கொட்டமுடிச்சு koḍḍamuḍiccu, பெ.(n.)

   வடமுடிச்சு; knot at the end of a rope.

     [கோடு → கொட்டம் + முடிச்சு.]

கொட்டமுத்துப்போடு-தல்

கொட்டமுத்துப்போடு-தல் koṭṭamudduppōṭudal,    20 செ.கு.வி.(v.i)

   1. எதிரியை அழித்தல்; (எதிரி கோட்டையை அழித்து ஆமணக்கு முத்து விதைத்தல்);

 to ruin the fort of the enemy and sow the useless seeds.

நாம் இருக்கிற நிலையறிச்சில்லே பய கொட்டமுத்து போடுவின் (நெல்லை);.

   2. பெரியம்மை நோய்காணுதல்; to be affected with small pox.

     [கொட்டை + முத்து + போடு-.]

கொட்டமேடு

 கொட்டமேடு koṭṭamēṭu, பெ.(n.)

   காஞ்சிபுரம் மாவட்டத்துச்சிற்றூர்; a village in Kanjipuram Dt.

     [கொட்டன் + மேடு.]

கொட்டம்

கொட்டம்1 koṭṭam, பெ.(n.)

   1. இறுமாப்பு; superciliousness, arrogance.

     “வேடர் கொட்டம தடங்க” (தாயு.சிற்சு.4);.

   2. குறும்பு; mischievousness.

கொட்டக்காரன் (உ.வ.);

   3. கடுகடுப்பு (இ.வ.);; petulance.

   4. முழக்கம்; roaring, trumpeting.

     “கொட்டமிடுங்கெசம்” (இராமநா.பாலகா. 18);.

   5. பொல்லாங்கு; evil, vice, evilness.

   6. நீர் முதலியன ஒழுகுகை; flowing, pouring.

     “கொடுங்காற் குண்டிகைக் கொட்டம் ஏய்ப்ப” (பெருங், உஞ்சைக் 43:130);.

     [குல் → குலவு. குலவுதல் வளைதல் குல → குள் → குளம் வளைந்த நெற்றி, வெல்ல வுருண்டை. குல் → குர் → குரங்கு. குரங்குதல் -வளைதல். குல் → குன் → குனி. குனிதல் வளைதல், உடம்பு வளைதல் குல் → குள் → கொள் வளைந்த காயுள்ள பயற்றுவகை, சாய்த்து உள்ளீட்டை வீழ்த்துதல், கொட்டு → கொட்டம் வட்டமான தொழு. நூற்குங் கொட்டை (வே.க.164);.]

 கொட்டம்2 koṭṭam, பெ.(n.)

   1. மாட்டுத்தொழுவம்; cattle-shed;

எருது நினைத்தவிடத்திற் கொட்டங் கட்டுவார்களா?

   2. மூங்கிற் கொட்டு; cattle shed of bamboo.

ம. கொட்ட; குட. கொட்டி.

 Skt.göstha

     [கொள் → கொட்டு → கொட்டம்.]

 கொட்டம்3 koṭṭam, பெ.(n.)

   ஒருவகை நறுமணப் பொருள்; costus root.

     “கொட்டமே கமழும்… மொய்குழல்” (சீவக. 2575);.

ம. கொட்டம்.

     [கோட்டம் → கொட்டம்.]

 கொட்டம்4 koṭṭam, பெ.(n.)

   மாடுகளுக்கு மருந்து, நீர் முதலியன கொடுக்கும் மூங்கிற் குழாய் (இ.வ.);; a hollow piece of bamboo for orally administering medicine, water etc. to cattle.

மறுவ. கத்துக்குழாய்.

ம. கொட்டமு, க. கொட்ட, தொட்ட;தெ. தொட்டமு.

     [கொள் → கொடு → கொட்டம்.]

 கொட்டம்5 koṭṭam, பெ.(n.)

   சிறிய ஓலைப் பெட்டி; small Óla basket.

     “கொழுங்கொடி முகண்டை கொட்டங் கொள்ளவும்” (சிறுபாண்.166);.

ம. கொட்டம்.

     [கொட்டம் → கோட்டம்.]

 கொட்டம்6 koṭṭam, பெ.(n.)

   வீடு; house.

     “ஒரு கொட்டம் ஒழிச்சுக் குடுத்துருங்கோ” (எங்களுர்.47);.

     [கொட்புல் → கொட்டம்.]

 கொட்டம் koṭṭam, பெ.(n.)

   மாட்டுத்தொழுவம்; cow pen.

     [கொட்டகை-கொட்டம்]

 கொட்டம் koṭṭam, பெ.(n.)

   ஒருவகை மணப்பண்டம்; costus root.

     “கொட்டமே கமழும்…. மொய் குழல்” (சீவக.2575);.

     [Skt.kustha → த.கொட்டம்.]

கொட்டம்பலவனார்

 கொட்டம்பலவனார் koṭṭampalavaṉār, பெ.(n.)

   ஒரு புலவர்; a poet, of the Šangam age (சா.அக.);.

     [கொட்டு+அம்பலவன்+ஆர்]

கொட்டரி

 கொட்டரி koṭṭari, பெ.(n.)

   வானாசுரனின் தாய்; mother of Panasuran.

     [குட்டாளி – கொட்டரி]

கண்ணனுடன் வாணாகரன் போர் செய்த பொழுது, வாணாகரன் இறக்கும் பொழுதில் ஆடை களைந்து மத்தியில் இருந்து போரைத் தடுத்தாள் (அபி.சிந்.);.

கொட்டரை

 கொட்டரை koṭṭarai, பெ.(n.)

   பெரம்பலூர் மாவட்டத்துச் சிற்றூர்; a village in Perambalur Dt.

     [கொட்டன் + (தலை); தரை – கொட்டந்தரை → கொட்டரை.]

கொட்டறை

 கொட்டறை koṭṭaṟai, பெ.(n.)

கொட்டடி (வின்.); பார்க்க; see Kottadi.

ம. கொட்டற.

 Mar. kotthāra; U. kötari.

     [கொட்டு + அறை.]

கொட்டலாட்டம்

 கொட்டலாட்டம் koṭṭalāṭṭam, பெ.(n.)

   அடிதடி, சண்டை; fight.

தெ-கொட்டலாட்ட து கட்டலாட்ட

     [கொட்டல்+ஆட்டம்]

கொட்டல்

கொட்டல் koṭṭal, பெ.(n.)

   1. கொட்டுதல்; stinging as of scorpion.

   2. கைதட்டல்; clapping hands.

   3. அடித்தல்; to hammer, beat.

   4. அப்புதல்; to stick,

 clap as with the hand

     [கொட்டு + அல்.]

கொட்டவாக்கம்

 கொட்டவாக்கம் koṭṭavākkam, பெ.(n.)

   காஞ்சிபுரம் மாவட்டத்துச் சிற்றுார்; a village in kanjipuram Dt.

     [கொட்டம் + (பாக்கம்); வாக்கம் – கொட்டவாக்கம்.]

கொட்டவாடி

 கொட்டவாடி koṭṭavāṭi, பெ.(n.)

   சேலம் மாவட்டத்துச் சிற்றுார்; a village in Salem Dt.

     [கொட்டம் + (பாடி); வாடி.]

கொட்டவாயன்

 கொட்டவாயன் koṭṭavāyaṉ, பெ.(n.)

   ஒரு கடல் மீன் வகை; a kind of sea fish.

     [கொட்டம் + வாயன்.]

கொட்டவி

 கொட்டவி koṭṭavi, பெ.(n.)

   உடலில் ஆடையில்லாப் பெண்; a naked woman

     [கட்டவிழி → கொட்டவி.]

கொட்டவிடல்

 கொட்டவிடல் koḍḍaviḍal, பெ.(n.)

   தேன்குளவி போன்றவற்றை விட்டுப் பல தடவையும் கொட்டும்படி செய்தல்; the flogging of a part with repeated stings of a scorpion or wasp

     [கொட்டம் + விடல்.]

கொட்டாகை

 கொட்டாகை koṭṭākai, பெ.(n.)

   கொட்டில் (யாழ்.அக.);; shed.

     [கொட்டதை → கொட்டாகை.]

கொட்டாக்குளம்

 கொட்டாக்குளம் koṭṭākkuḷam, பெ.(n.)

   திருநெல்வேலி மாவட்டத்துச் சிற்றுார்; a village in Tirunelveli Dt.

     [கொட்டன் + குளம் – கொட்டன்குளம் → கொட்டாக்குளம்.]

கொட்டாங்கச்சி

கொட்டாங்கச்சி koṭṭāṅgacci, பெ.(n.)

   1. தேங்காய் ஓட்டின் ஒரு பகுதி; portion of a part of coconut shell.

   2. கொட்டம்1 பார்க்க;see kottam.

ம. கோட்டாங்கச்சி.

     [கொட்டான் + காய் + சில்.]

கொட்டாங்கச்சித்தாட்டுப்பத்திரி

 கொட்டாங்கச்சித்தாட்டுப்பத்திரி koṭṭāṅgaccittāṭṭuppattiri, பெ.(n.)

   சேலைவகை; a kind of saree.

     [கொட்டாங்கச்சி + தாட்டு + பத்திரி.]

கொட்டாங்கச்சித்தைலம்

 கொட்டாங்கச்சித்தைலம் koṭṭāṅkaccittailam, பெ.(n.)

தேங்காய் ஒட்டை எரிப்பதனால் அதில் இருந்து எடுக்கும் கருஞ்சிவப்பு நிறமான எண்ணெய்,

 a black or brown paint obtained by burning the cocoanut shell (சா.அக.);.

     [கொட்டாம்+கச்சி+தைலம்.]

கொட்டாங்கரந்தை

 கொட்டாங்கரந்தை koṭṭāṅgarandai, பெ.(n.)

கொட்டைக்கரந்தை (யாழ்.அக.); பார்க்க;see kotta-k-karandai.

     [கொட்டை → கொட்டா + கரந்தை.]

கொட்டாங்காய்ச்சில்

 கொட்டாங்காய்ச்சில் koṭṭāṅgāyccil, பெ.(n.)

   தேங்காய் ஓடு; coconut shell.

     [கொட்டான் + காய் + சில் (ஒடு);.]

கொட்டாங்குழல்

 கொட்டாங்குழல் koṭṭāṅguḻl, பெ.(n.)

   கொருக்கலப்பையில் விதைபோடும் பகுதியில் முப்பிரிவாகச் செல்லும் குழாய்; sowing three way implement attached to the plough.

     [கோடு → கோட்டம் → கொட்டம் + குழல்.]

கொட்டாங்கோரை

 கொட்டாங்கோரை koṭṭāṅārai, பெ.(n.)

   கோரைவகை; a kind of sedge.

     [கொட்டான் + கோரை.]

     [P]

கொட்டாஞ்சி

கொட்டாஞ்சி koṭṭāñji, பெ.(n.)

   1. ஒருவகைப் பழம்; a kind of fruit.

   2 தேங்காய் ஓடு; Coconut shell

     [கொட்டு → கொட்டாஞ்சி.]

 கொட்டாஞ்சி koṭṭāñji, பெ.(n.)

கொட்டாங்காச்சி (சிரட்டைப் போன்று கால் முட்டியில் இருக்கும் அசையக்கூடிய சில்லு எலும்பு

 joint bone.

     [கொட்டங்கச்சி-கொட்டாஞ்சி]

கொட்டாட்டு

கொட்டாட்டு1 koṭṭāṭṭu, பெ.(n.)

   மத்தளத்தின் தாள இன்னோசைக்கேற்ப ஆடும் ஆட்டம்; dance performed according to beat of mattalam.

     [கொட்டு + ஆட்டு.]

 கொட்டாட்டு2 koṭṭāṭṭu, பெ.(n.)

   ஊர்ப்பறை அல்லது போர்ப்பறையின் முழக்கோசைக்கேற்ப ஆகும் ஆட்டம்; dance performed according to the beat of local drum or war drum.

     [கொட்டு + ஆட்டு.]

கொட்டாட்டுப்பாட்டு

 கொட்டாட்டுப்பாட்டு koṭṭāṭṭuppāṭṭu, பெ.(n.)

   கொட்டுமுழக்கோடு பாடும் பாட்டு; a dance with music and drums.

     [கொட்டு + ஆட்டு + பாட்டு.]

கொட்டாணிமறவன்

 கொட்டாணிமறவன் koṭṭāṇimaṟavaṉ, பெ.(n.)

   மறவருள் ஒர் இனத்தார்; (E.T.);; a subsect of Maravās.

     [கொட்டாணி + மறவன்.]

கொட்டாத்திருக்கை

 கொட்டாத்திருக்கை koṭṭāttirukkai, பெ.(n.)

   வலிய பற்களைக் கொண்ட திருக்கை மீன்வகை; sting ray.

     [கொட்டா + திருக்கை.]

கொட்டாநத்தம்

கொட்டாநத்தம் koṭṭānattam, பெ.(n.)

   திண்டுக்கல் மாவட்டத்துச் சிற்றூர்; a village in Dindukkal Dt.

     [கொட்டான் + நத்தம்.]

கொட்டாப்பி-த்தல்

   4 செ.குன்றாவி. (v.t.);

   மக்கள் அல்லது விலங்குகள் உண்ணுதல் (யாழ்ப்.);; to eat, as men or beasts.

     [கொட்டு + ஆப்பு – கொட்டாப்பு (விழுங்குதல்); → கொட்டாப்பி.]

கொட்டான்

கொட்டான்1 koṭṭāṉ, பெ.(n.)

   கொட்டை நீக்காத பருத்தி; Cotton with seed.

கொட்டான் பத்துப்பொதி ஆயிற்று (நெல்லை.);. கொல்லன் கொடுத்த கதிர் இருக்கு, கொட்டான் விளையக் காடிருக்கு நூறுவயக வரை நூற்றுப் பிழைச்சுக்கம்மா (நாட்டுப்பா.);

த.கொட்டான் → E.cotton.

     [கொட்டை → கொட்டான் (கொட்டையுள்ள பகுதி);.]

ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் கொட்டையோடு உள்ள பருத்தியை ஏற்றுமதிசெய்தனர். இப் பருத்தி கொட்டான் எனப்பட்டது. இதுவே ஆங்கிலத்தில் cotton ஆயிற்று.

 கொட்டான்2 koṭṭāṉ, பெ.(n.)

கொட்டன்1 (யாழ்ப்); பார்க்க; see kottam (f.);.

 Gk. kampsa

     [கொட்டன் → கொட்டான்.]

 கொட்டான்3 koṭṭāṉ, பெ.(n.)

   சிறிய ஒலைப்பெட்டி; small olā basket.

     [குட்டான் + கொட்டான்.]

 கொட்டான்4 koṭṭāṉ, பெ.(n.)

   1. கொட்டை நீக்காத பஞ்சு; cotton crop with seed.

   2. நூற்பதற்கு அணியம் செய்த பஞ்சு; spining cotton.

     [கொட்டை → கொட்டான்.]

த.கொட்டான் → E. Cotton.

கொட்டான்கரந்தை

கொட்டான்கரந்தை koṭṭāṉkarantai, பெ.(n.)

   நாறு கரந்தை; Indian globe thistle, Sphoeranthus indicus (&m. 918.);.

     [கொட்டானி (கொட்டை);+கரந்தை.]

கொட்டான்சிலை

 கொட்டான்சிலை koṭṭāṉcilai, பெ.(n.)

   வாகை மரம்; common sirissa, Albizzia lebbek (சா.அக.);.

     [கொட்டான் (கொட்டை);+சிலை.]

கொட்டாபி-த்தல்

கொட்டாபி-த்தல்  koṭṭāpittal,    4 செ.குன்றாவி.(v.t)

   உண்ணுதல்;  to eat. (

     [கொட்டாவி+கொட்டாபி]

கொட்டாப் பெட்டி

 கொட்டாப் பெட்டி koṭṭāppeṭṭi, பெ.(n.)

   பனை நாரினால் முடையப்பட்ட (பெட்டி); கூடை; a small basket.

     [கொட்டாப்பு+பெட்டி]

     [P]

கொட்டாப்பிடி

 கொட்டாப்பிடி koḍḍāppiḍi, பெ.(n.)

கொட்டாப் புளி பார்க்க;see kotta-P-puli.

     [கொட்டாப்பு + உளி – கொட்டாப்புளி → கொட்டாப்பிடி (கொ.வ.);.]

கொட்டாப்பு

கொட்டாப்பு koṭṭāppu, பெ.(n.)

   1. கொட்டுதல், அடித்தல்; to beat.

   2 இடித்துக்கெட்டிப்படுத்துதல்; solidification of loose soil of the ground floor in construction.

தரைத்தளத்தில் கொட்டாப்பு வேலை நடக்கிறது (உ.வ.);.

     [கொட்டு + ஆப்பு (சொல்லாக்க ஈறு.]

கொட்டாப்புளி

 கொட்டாப்புளி koṭṭāppuḷi, பெ.(n.)

   உளிமேல் அடிக்கும் கருவி; beater, wooden mallet.

     [கொட்டாப்பு+உளி]

 கொட்டாப்புளி koṭṭāppuḷi, பெ.(n.)

   உளியை அடிக்கும் மரச்சுத்தியல்; wooden hammer.

     [கொட்டு+ஆப்பு+உளி]

     [P]

கொட்டாப்புளிக்குருவி

 கொட்டாப்புளிக்குருவி koṭṭāppuḷikkuruvi, பெ.(n.)

   கறையான் புற்றுகளைக் கொத்தி யுடைத்து அதில் உள்ள கறையான்களைக் கொத்தித்தின்னும்பறவைவகை; a kind of bird which pecks the ant-hill and eats the termite in nature.(கட.வ.);.

     [கொட்டாப்புளி+குருவி]

கொட்டாப்பெட்டி

 கொட்டாப்பெட்டி  koṭṭāppeṭṭi, பெ.(n.)

கொட்டைப்பெட்டி பார்க்க: see kotta-P-petti

     [கொட்டைப்பெட்டி+கொட்டாப்பெட்டி]

கொட்டாமட்டை

 கொட்டாமட்டை  koṭṭāmaṭṭai, பெ.(n)

   ஒலையை இளைதாயிருக்கும் பொழுது வெட்டிவிடுவதால், நார் நிரம்பி இறுகியிருக்கும் பனைமட்டையின் அடிப்பகுதி (lungs.);;  stem of a palmyra leaf grown fibrous and tough from the leaf being cutoff when young

     [கொட்டு+ஆம்+மட்டை]

கொட்டாமத்தகி

 கொட்டாமத்தகி  goṭṭāmattagi, பெ.(n)

மருளுமத்தை

 bur-weed (சா.அக.);.

     [கொட்டை+(ஊமத்தை); ஊமத்தகி]

கொட்டாம்பட்டி

 கொட்டாம்பட்டி  koṭṭāmbaṭṭi, பெ.(n)

மதுரை மாவட்டத்திலுள்ள பறம்புமலையைப் பின்னணி யாகக் கொண்டு பாலாற்றுக்கருகே அமைந்த ஓர் assisi,

 a village situated at the foot of the Parambu hill and near Päläru river in Madurai Dt.

     [கொட்டம்+பட்டி – கொட்டம்பட்டி→கொட்டாம்பட்டி)

கொட்டாம்பிளி

 கொட்டாம்பிளி koṭṭāmpiḷi, பெ.(n.)

   உளி மேல் அடிக்கும் ஆய்தம்; beatet, wooden mallet (செ.அக.);

கொட்டாப்புளி பார்க்க; see kuffappufi

     [கொட்டு – கொட்டாப்பு+உளி]

கொட்டாய்

 கொட்டாய்  koṭṭāy, பெ.(n)

கொட்டகை பார்க்க: see koffagai

கொட்டாரப்புலி

 கொட்டாரப்புலி  koṭṭārappuli, பெ.(n)

   சிவகங்கை மாவட்டத்துச் சீற்றூர்;  a village in Sivagangai Dt.

     [கொட்டாரம்+புலி]

கொட்டாரம்

கொட்டாரம்2 koṭṭāram, பெ.(n.)

   குமரி மாவட்டத்துச் சிற்றூர்; a village in Kanyakumari Dt.

     [கொட்டம் → கொட்டாரம்.]

கொட்டாரம்’

 அஅன்ன ஆவன்னா aaṉṉaāvaṉṉā, பெ. (n.)

   அரிவரி யென்னும் தமிழ் வண்ணமாலை (குறுங்கணக்கும் நெடுங்கணக்கும்);;  Tamil Alphabet.

   எழுத்துகளைக் கல்லா மக்கள், சிறப்பாகச் சிறுவர் சிறுமியர், எளிதாக ஒலித்துக் கற்கும் பொருட்டு, பண்டைத் தொடக்கப்பள்ளி யாசிரியர் உயிரும் உயிர்மெய்யுமாகிய இருவகைக் குறிலுக்கும்’அன்ன’ச் சாரியையும், இருவகை நெடிலுக்கும் அன்னா’ச் சாரியையும் ஏற்படுத்தினர்;     ‘அஆ’ என்னும் ஈரெழுத்தும் தமிழ் வண்ணமாலையின் முதலெழுத்துகளாதலின், அவை முதற்குறிப்பாகி, அம் முதற்குறிப்பே’அஅன்ன ஆவன்னா’ என்று வண்ணமாலைப் பெயராயிற்று. இது ‘alpha’, ‘beta’ என்னும் கிரேக்க இரு முதலெழுத்துகளும் சேர்ந்து”alphabetum’ என்று இலத்தீனிலும், ‘alphabet’ என்று ஆங்கிலத்திலும், வண்ணமாலைப் பெயராக வழங்குவது போன்றது;

   அ, இ, க, கி என்று ஒரு மாத்திரை யொலிக்குங்குறிலெழுத்துகளை விட்டொலிப்பது, சிறுபிள்ளைகட்குச் சற்று வருத்தமுற மூச்சு வாங்குவதால்,’அஅன்ன’ என்பது”ஆனா” என்றும் இஅன்ன என்பது’ஈனா’ என்றும், மாணாக்க நிலையிலும் பின்னும் ஒலிக்கப்பட்டுவந்தன. இவ்வொலிப்புமுறை குறில்களின் உண்மையான ஒலியளவை உடனே தெரிந்துகொள்ளத் தடையாயிருந்தமையின், இந்நூற்றாண்டுத் தொடக்கத்தில் அரசியற் கல்வித்துறையறிஞர், சாரியையின்றி ஒலிநூன் முறைப்படி அ, ஆ, இ, ஈ,… என்று ஒலித்துப் பயிலும் முறையைப் புகுத்திவிட்டனர். அதனால், இன்று ‘அஆ’ என்பது வண்ணமாலைப் பெயராக வழங்கி வருகின்றது. இது புணர்ச்சியில்’அவ்வா’ என்றாகும்;

கொட்டாறா

 கொட்டாறா koṭṭāṟā, பெ.(n.)

   ஒருவகை மீன்; a kind of fish.

     [கொட்டு + ஆறா.]

கொட்டாறு

 கொட்டாறு koṭṭāṟu, பெ.(n.)

   உப்பளம் (W.G.);; salt pan.

     [கொட்டு + ஆறு]

கொட்டாவி

கொட்டாவி koṭṭāvi, பெ.(n.)

   மயக்கம், களைப்பு ஆகியவற்றின் காரணமாக வாயைத் திறந்து உள்ளிழுத்து வெளிவரும் காற்று (திவ்.பெரியாழ். 1:4:6);; Yawning.

கொட்டாவி கொள்கின்றான்.

ம. கொட்டாவி, கோட்டாவி,.

     [கொட்டு + ஆவி}

கொட்டாவிகொள்ளு-தல்

கொட்டாவிகொள்ளு-தல் koṭṭāvikoḷḷutal,    16 செ.கு.வி.(v.i.)

கொட்டாவி விடு-தல் பார்க்க; see kottāni-vigu(சா.அக.);.

     [கோட்டு+ஆவி+கொள்.]

கொட்டாவிக்கால்

 கொட்டாவிக்கால் koṭṭāvikkāl, பெ.(n.)

   கொட்டாவியை எழுப்பும் தேவதத்தன் என்னும் பத்துவகைக் காற்றிலொன்று; one of the ten vital airs, which is exhaled in yawning

     [கொட்டாவி + கால் (காற்று);.]

கொட்டாவிச்சுரம்,

 கொட்டாவிச்சுரம், koṭṭāviccuram, பெ.(n.)

   ஒருவகைப் பித்தநோய்; a kind of bilious disease marked by frequent yawning

     [கொட்டாவி + பித்தம்.]

கொட்டாவிபித்தம்,

கொட்டாவிபித்தம், koṭṭāvibittam, பெ.(n.)

   கொட்டாவி முதலியவற்றோடு கூடிய சுரநோய் வகை (சீவரட்.48.);;  a fever attended with yawning and hiccoughing.

     [கொட்டாவி + சுரம்]

கொட்டாவிவிடு-தல்

கொட்டாவிவிடு-தல் koṭṭāviviṭutal,    20 செ.கு.வி.(v.i.)

   1 வாயால் நெட்டுயிர்த்தல்; the act of yawning, Osceoto.

   2, களைத்தல்; being exhausted or wearied.

   3. இறத்தல்; dying (சா.அக.);.

     [கோட்டாவி+விடு-தல்.]

கொட்டாவிவிட்டிறுக்கி

கொட்டாவிவிட்டிறுக்கி koṭṭāviviṭṭiṟukki, பெ.(n.)

நாயுருவி (மலை.); பார்க்க;see nayuruvi a plant growing in hedges and thickets.

     [கொட்டாவி + விட்டு + இறுக்கி.]

கொட்டாவிவிடு-தல்

   20 செ.கு.வி. (v.i.);

   1. மயக்கம், களைப்பு ஆகியவற்றின் காரணமாக வாயைத் திறந்து காற்றை உள்ளிழுக்கும் நெட்டுயிர்ப்பு; yawning.

   2. இறத்தல் (கொ.வ.);; To die, suffer the last gasp, used in jest.

   3. களைத்துப்போதல்); to be fatigued or exhausted, as by work.

     [கொட்டாவி + விடு-.]

கொட்டி

கொட்டி1 koṭṭi, பெ.(n.)

   நீர்க்கொடிவகை; An aquatic plant.

     “கொட்டியு மாம்பலு நெய்தலும்” (வாக்குண். 17);.

   ஒரு வகைக் கிழங்கு; a kind of root.

ம. கொட்டி.

     [கொட்டு → கொட்டி.]

 கொட்டி2 koṭṭi, பெ.(n.)

கொடுகொட்டி பார்க்க (சிலப்.3.14, உரை);;see kodu-kotti.

   2. தாளம் (இசை.);; time measure.

     “கொட்டி யளந்தமையாப் பாடலும்”(திரிகடு.57);.

ம. கொட்டி.

     [கொட்டு. → கொட்டி (பறைகொட்டி ஆடும் ஆட்டம்);.]

 கொட்டி3 koṭṭi, பெ.(n.)

   1. கோபுரவாயில்; tower gate in temple.

   2. வாயில் (அக.நி.);; gate.

ம.கொட்டி,

 Skt kôttara

     [கொட்டில் → கொட்டி.]

 கொட்டி4 koṭṭi, பெ.(n.)

   கூட்டம் (அக.நி.);; assembly, gathering.

     [கோட்டி → கொட்டி.]

 கொட்டி5 koṭṭi, பெ.(n.)

   செம்புகொட்டி; a tinker.

ம. கொட்டவன்.

     [கொட்டு → கொட்டி.]

 கொட்டி6 koṭṭi, பெ.(n.)

   1. முரசு அறைபவன்; a drummer.

   2. சுத்தி; a hammers.

ம. கொட்டி,

     [கொட்டு → கொட்டி.]

 கொட்டி7 koṭṭi, பெ.(n.)

   மலடி; barrien woman.

மறுவ, கொட்டு.

க.தெ. கொட்டி.

     [கொட்டி * கொட்டி என்னும் நீர்க்கொடி. இது காய்த்துக் கணிதராதது போன்று பிள்ளைப்பேறு வாய்க்காத பெண்ணும் கொட்டி எனப்பட்டாள்.]

கொட்டிக்காகம்

 கொட்டிக்காகம் koṭṭikkākam, பெ.(n.)

   கழி முகத்தில் பறந்தலைந்து மீனை உணவாகச் கொள்ளும் ஒருவகைக் காகம்; a kind of crow inhabitant of lagoons, which takes fish as food.

     [கொட்டி + காகம்.]

கொட்டிக்கொடு-த்தல்

கொட்டிக்கொடு-த்தல் koḍḍikkoḍuttal,    4 செ குன்றாவி.(v.t.)

   1.அதிகமாகக் கொடுத்தல்; to give liberally.

   2. அதிகமாகக் கண்டித்தல் (இ.வ.);; to check or rebuke constantly.

     [கொட்டி + கொடு-.]

கொட்டிக்கொள்(ளு)-தல்

கொட்டிக்கொள்(ளு)-தல் koṭṭikkoḷḷudal,    1 செ.குன்றாவி.(v.t.)

   1, நிரம்ப உண்ணுதல்; to gulg down in large quantities.

   2. மேம்பாட்டுக்

   கொள்ளுதல்; to take the responsibility of; to draw down upon oneself, as the consequence of an act.

என் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ளாதே (உ..வ.);.

     [கொட்டி + கொள்ளு)-.]

கொட்டிக்கொள்ளல்

கொட்டிக்கொள்ளல் koṭṭikkoḷḷal, பெ.(n.)

   1. தகாட யடித்தல்; beating into a sheet.

   2. உண்ணுதல்; eating

     [கொட்டி + கொள்ளல்.]

கொட்டிக்கோரை

 கொட்டிக்கோரை koṭṭikārai, பெ.(n.)

   ஒரு வகைக் கோரை; a kind of sedge – grass.

மறுவ, கொட்டாங்கோரை.

     [கொட்டி + கோரை.]

கொட்டிச்சாந்து

 கொட்டிச்சாந்து koṭṭiccāndu, பெ.(n.)

   ஒரு கடைப்பொருள்; a bazaar drug

     [கொட்டி + சாந்து.]

கொட்டிச்சேதம்

கொட்டிச்சேதம் koṭṭiccētam, பெ.(n.)

கொடு கொட்டி பார்க்க; see kodu-kotti.

     “இமையவனாடிய கொட்டிச் சேதம்”(சிலப்.28:75);.

மறுவ, கொடுகொட்டு.

ம. கொட்டிச்சேதம்.

     [கொட்டி + சேதம்.]

கொட்டிச்சேதம் என்பது கொடு கொட்டி ஆடலின் மறுபெயர் சேதம் என்பது விலக்குறுப்புகள் பதினான்கனுள் ஒன்று. ஆரியம் தமிழ் எனச் சேதம் இருவகைப்படும்.

ஆரியம் தமிழெனுச் சீர்நடமிரண்டினும் ஆதிக் கதையை யவற்றிற் கொப்பச் சேதித் திடுவது சேதமென்றாகும்

     [சிலப்.3:13 உரை].

கொட்டிட்டை

கொட்டிட்டை koṭṭiṭṭai, பெ.(n.)

   தஞ்சாவூர் மாவட்டத்தில் கருவிலி என்னும் பாடல்பெற்ற இடத்திரலுள்ள சிவன்கோயில்; the shrine of Śiva in Karuvili in Tanjāvūr Dt.

     “கருவிலிக் கொட்டிட்டையுறைவான் கழல் கூடுமே”(தேவா. 602:1);.

     [கொட்டில் → கொட்டி + இட்டிடை கொட்டியிட்டிடை → கொட்டிட்டை.]

கொட்டித்தலை-த்தல்

கொட்டித்தலை-த்தல் koṭṭittalaittal,    5 செ. குன்றாவி (v.t.)

   சிதறடித்தல்; To scatter, disperse.

     [கொட்டி + தலை-.]

கொட்டிப்பேசு-தல்

கொட்டிப்பேசு-தல் koṭṭippēcudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   குத்திப்பேசுதல் (இ.வ.);; to sting with cutting remarks.

     [கொட்டு + பேசு-.]

கொட்டிமத்தளம்

கொட்டிமத்தளம் koṭṭimattaḷam, பெ.(n.)

   பெரிய மத்தளம்; big drum.

     “கொட்டி மத்தளம் வாசிப்பான்” (S.I.I.II.254);.

     [கொட்டி → மத்தளம்.]

கொட்டிமம்

 கொட்டிமம் koṭṭimam, பெ.(n.)

   செந்நகரப்பட்டை; the fragrant bark of olive linden tree

     [கொட்டி → கொட்டிமம்.]

கொட்டியப்பூச்சி

கொட்டியப்பூச்சி1 koṭṭiyappūcci, பெ.(n.)

   ஒரு வரிவகை; a tax..

     [கொட்டியம் + பூச்சி.]

 கொட்டியப்பூச்சி2 koṭṭiyappūcci, பெ.(n.)

   பயிரையழிக்கும் ஒருவகைப் புழு; a kind of worm, in Crops.

     [கொட்டியம் + பூச்சி.]

கொட்டியம்

கொட்டியம் koṭṭiyam, பெ.(n.)

   1.எருது (சூடா);; bull, ox.

   2. பொதிமாட்டுத் திரள் (வின்.);; herd or pack bullocks.

ம. கொட்டியம்; Skt. góstha.

     [கோடு → கோட்டியம் (கொம்புள்ளது); → கொட்டியம்.]

கொட்டியம்பலம்

 கொட்டியம்பலம் koṭṭiyambalam, பெ.(n.)

   முகடு வேய்ந்த வாசல் நடை (நாஞ்);; a gate with a small roofing at the top.

     [கொட்டி + அம்பலம்.]

கொட்டியான்

கொட்டியான் koṭṭiyāṉ, பெ.(n.)

   1. சுமைகாரன் (இ.வ.);; Carrier.

   2. பயிரில்விழும் நோய்வகை; a blight affecting growing paddy.

   3. கெடுதியை உண்டுபண்ணுவது; that which brings disaster.

அந்த ஊருக்கு அவன் குடியிருக்கப்போனது ஒரு கொட்டியான் விழுந்தது போலாயிற்று (இ.வ.);.

     [கொட்டு → கொட்டியான். கொட்டுதல் * தாக்குதல்.]

கொட்டியாம்பூண்டி

 கொட்டியாம்பூண்டி koṭṭiyāmbūṇṭi, பெ.(n.)

   விழுப்புரம் மாவட்டத்துச் சிற்றுார்; a village in Villupuram Dt.

     [கொட்டியான் + பூண்டி (நீர்நிலை);.]

கொட்டிலம்

 கொட்டிலம் koṭṭilam, பெ.(n.)

   கோட்டம்; Arabian costus

     [கொட்டில் + அம்.]

கொட்டிலாம்சல்லி

 கொட்டிலாம்சல்லி koṭṭilāmcalli, பெ.(n.)

   முன்னோர் பயன்படுத்திய ஒரு செம்பு நாணயம்; a copper coin current in ancient days

     [கொட்டில் + அம் + சல்லி.]

கொட்டில்

கொட்டில் koṭṭil, பெ.(n.)

   1. மாட்டுக்கொட்டம்; cow stall.

     “ஏறு கட்டிய கொட்டி லரங்கமே” (தனிப்பா.188.174);.

   2. வில்வித்தை பயிற்றுவிக்குமிடம்; school for archery.

கல்லூரி நற் கொட்டிலா” (சீவக.995);.

   3. கொட்டகை; shed.

     “கொட்டில் விளங்குதேர் புக்கதன்றே” (சீவக.471);.

   4. சிறுகுடில்;  hut.

     “பன்னூறாயிரம் பாடிக் கொட்டிலும்”(பெருங். உஞ்சை 43:199);.

ம. கொட்டில்; க. கொட்டிகெ: தெ. கொட்டாமு; து. கொட்ய; குட. கொட்டி; பட கொட்டகெ:

 Pkt.gotha.

     [குள் → கொள் → கொட்டி * வளைவு, சுழற்சி, கற்றுகை கொள் → கொட்டு * வட்டமான நெற்கூடு. கொட்டு → கொட்டில் * வட்டமான தொழுவம் (வ.மொ.வ.5); (வே.க.165);.]

கொட்டிவாக்கங்குப்பம்

 கொட்டிவாக்கங்குப்பம் koṭṭivākkaṅguppam, பெ.(n.)

   உப்பங்கழியில் மீன்தொழில் செய்வோர் வாழும் ஊர்; a village of fishermen.

     [கொட்டிவாக்கம் + குப்பம்.]

கொட்டிவாக்கம்

 கொட்டிவாக்கம் koṭṭivākkam, பெ.(n.)

   காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் வட்டத்தில் அமைந்த ஒர் ஊர்; a village situated in Madurantagam Taluk in Kanjipuram Dt.

     [கொட்டி + வாக்கம்.]

இவ் வூரில் கொட்டி என்னும் நீர்நிலைக் கொடிவகை அதிகம் வளர்ந்து வந்தமையால் இப் பெயர் பெற்றிருக்கலாம்.

கொட்டு

கொட்டு1 koṭṭudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. மத்தளங் கொட்டுதல்; to beat, as a drum, a tambourine.

     “மத்தளங் கொட்ட” (திவ். நாய்ச். 6:6);.

   2. கம்மியர் சம்மட்டியால் அடித்தல்; striking with hammer as blacksmiths.

     “கொட்டுவினைக் கொட்டிலும்” (பெருங்.மகத.4:16);.

   3. கையால் தட்டுதல்; to clap, strike with the palms.

     “கொட்டி னான்றோள்”(கம்பரா.சம்புமா.18);.

   4. பஞ்சரைத்தல்; to card out. as cotton

     “கொட்டிய பஞ்சுபோல்” (இராமநா. அயோத்.5);.

   5. நெற்குத்துதல்; to pound as paddy.

     “கொட்டி வீழுமி குத்தல்” (பிரபுலிங். சித்தரா.9);.

   6.அடித்தல்; to strike, beat.

   7. தேள், குளவி முதலியன கொட்டுதல்; to sting, as a scorpion, a wasp.

     “கருங்குளவி கொட்டும்” (அரி.ச் பு நகர்நீங்.41);. ‘திருடனைத் தேள் கொட்டினது போல’ (பழ.);.

   8. சொரிதல்; to pour forth. shower down.

 Shed.

   9. கூடை, சாக்கு முதலியவற்றி னின்றும், பண்டங்களைக் கவிழ்தல்; to cast out or empty the contents of a basket or sack as grain, sand.

   10. பொருள்களைக் கலத்தில் ஒருசேர இடுதல்; to throw or cast into a vessel.

   11. அப்புதல்; to be smear, as sandal or other fragrant paste.

     “பூங்கேழ்த் தேய்வை… இளமுலை கொட்டி” (திருமுருகு 35.);.

   12.விழுதல்; fall off.

   13. குவித்தல்; pile up.

   14. இமைத்தல்; Bat.

கொட்டாது பார்க்கிறான்.

ம. கொட்டுக; க. கொட்டண (உமியைத் தட்டுதல்);; தெ. கொட்டு, து. கொடபுணி; கோத. கொட்க; துட. க்விட்க; கோண். கொட்ட்; பர். கொட்ட; குரு. கொட்னா; மா. க்வொடெ; குட. கொட்ட.

     [கொள் → கொட்டு.] (வே.க164);.

 கொட்டு2 koṭṭudal,    5 செ.கு.வி. (v.i)

   1.அறைந்து கொள்ளுதல்; to beat, as upon the breast.

     “கைகளான் முலைமேற் கொட்டி” (கம்பரா. இராவணன்சோக 44.);

   2. பல்லிசொல்லுதல்; to chirp, as a lizard.

     “கொட்டாய் பல்லிக்குட்டி’ (திவ்.பெரியதி. 10.10.4);

   3. உதிர்தல்; to drop, as leaves; to fall of as hair.

மயிரெலெம்மாம் கொட்டிப் போயிற்று (இ.வ.);.

     [கொள் → கொட்டு.]

 கொட்டு3 koṭṭu, பெ.(n.)

   1. அடி; beat, stroke.

   2. மத்தளம் அல்லது மேளத்தினது அடிப்பு; drum beat.

     “மள்ளர் கொட்டின் மஞ்ஞை யாலும்’ (ஐங்குறு.371);.

   3. வாச்சியம்; drum, tomtom, tabour

     “‘பதினோ ராடலும் பாட்டுங் கொட்டும்”(சிலப்.3:14);.

   4. தாளத்தில் அரை மாத்திரைக் காலம் (சிலப்.3:16, உரை);; a duration of time measure consisting of half a mattirai.

   5. தேள் முதலிய கொட்டகை; stinging

   6. சொரிகை; pouring, throwing, emptying.

   7. கத்துதல்; chirp as a lizard.

பல்லி கொட்டும் ஒசை கேட்கிறது (உ.வ.);.

   8. மேளம் அல்லது தவுல்; musical instrument, drum

ம. கோட்டு (அகழ்வதற்குப் பயன்படும் ஒரு கருவி);: க. குறு (மண் திருப்புதல்);; தெ. கோராட; து. கோர் (அகழ்தல்);.

 Pkt. kottana

     [குட்டு → கொட்டு குட்டுதல் * முட்டியால் தலையைத் தாக்குதல் கொட்டுதல் முட்டியால் ஒன்றைத் தாக்குதல்.]

குச்சியால் பறையை அடித்தல், சுத்தியலால் ஒன்றைத் தட்டுதல், கொட்டுப்பிடி. செம்புகொட்டி முதலிய பெயர்களை நோக்குக, {மு.தா.88]

 கொட்டு4 koṭṭu, பெ.(n.)

   தோண்டுகருவி வகை (பழ.388. உரை);; hoe with short handle weeding-hoe.

   2. மண்வெட்டி; Spade.

     “யான்கல்லுங் கொட்டைப் பறித்தார்”(பெரியபு.தண்டி.16);

   3. உடம்பு; body.

உயிர் அங்கே, கொட்டு இங்கே (வின்.);.

   4. நெற்கூடு (பழ.388, உரை);; granary.

   5. பிரப்பங்கூடை (இ.வ.);; basket made of rattan.

   6. பனந்துண்டு (யாழ்.);; trunk of a palmyra tree.

   7. கிணற்றுக்கட்டு; parapet wall of well.

ம. கோட்டு; து. கொட்டு; பர்., கட. கொடல்.

     [குள் → கொள் → கொட்டு, கொட்டுதல் கொள்கலத்தைச் சாய்த்து உள்ளீட்டை விழ்த்துதல். கொள் → கொட்டி * வளைவ, சுழற்சி, சுற்றுகை. கொள் → கொட்டு * வட்டமான நெற்கூடு.]

 கொட்டு5 koṭṭu, பெ.(n.)

   மலடி (இ.வ.);; Barren woman.

மறுவ, கொட்டுச் சிறுக்கி,

க., பட. கொட்டி; து. கொட்டு.

கொட்டு-தல்

கொட்டு-தல் koṭṭutal,    5 செ.கு.வி.(v.i.)

   1. கொடுக்கினால் கொட்டுதல்; stinging as by a scorpion.

   2.வார்த்தல்; pouring as water or any liquid.

   3. பல்லி பலுக்குதல்; chirpingas ofa lizard.

   4. பல் கொட்டுதல்; falling or dropping as of tooth (சா.அக.);.

     [கொடு- கொட்டு.]

கொட்டுக் கூடை

கொட்டுக் கூடை koṭṭukāṭai, பெ.(n.)

   1.கிண்ணவடிவான கூடை (வின்.);; a cup-shaped basket.

   2. கூடைபோன்ற வடிவுள்ள மாழையிலான ஏனம் (இ.வ.);; a basket-shaped metal vessel.

   3. வெண்கலத்தாலான சிறு உண்கலம்; a vessel made of bell metal.

   4. சென்னாக்கூனியை அளந்தறிதற்குரிய சிறு கூடை; a small basket to measure the fish (மீ.பிடி.தொ.அக.);.

     [கொட்டு + கூடை.]

கொட்டுக்கன்னார்

 கொட்டுக்கன்னார் koṭṭukkaṉṉār, பெ.(n.)

   செம்கடிக்குங் கன்னார் (வின்.);; braziers who work by beating plates into shape and not by casting.

     [கொட்டு + கன்னார்.]

கொட்டுக்கலியாணம்

 கொட்டுக்கலியாணம் koṭṭukkaliyāṇam, பெ.(n.)

   கைம்பெண் அல்லது மணவிலக்குப் பெற்றபெண்ணுக்கு மேளத்தோடு செய்யும் மறுமணம்; Remarriage of a widow or a divorced women celeb rated with tom. Among certain castes (as distinct from கட்டுத்தாலி-the same without tom tom.

     [கொட்டு + கலியாணம்.]

கொட்டுக்காரன்

கொட்டுக்காரன் koṭṭukkāraṉ, பெ.(n.)

   1. மத்தளம் முதலிய தாளக் கருவிகளை இயக்குபவன் (இ.வ..);;  drummer.

   2. மேளம் வாசிக்கும் இனத்தவர்; a caste of drummers.

     [கொட்டு + காரன்.]

கொட்டுக்கிடாரம்

 கொட்டுக்கிடாரம் koṭṭukkiṭāram, பெ.(n.)

பெரிய கொப்பரை (வின்.);:

 large boiler of beaten brass.

     [கொட்டு + கிடாரம்.]

கொட்டுக்கிணறு

 கொட்டுக்கிணறு koṭṭukkiṇaṟu, பெ.(n.)

   பனந்துண்டுகளை வைத்துக் கட்டிய கிணறு (யாழ்ப்.);; a well, walled with hollow palmyra trunks.

     [கொட்டு + கிணறு.]

கொட்டுக்குடலை

 கொட்டுக்குடலை koḍḍukkuḍalai, பெ.(n.)

   உடுக்கைபோல் வடிவமைந்த ஏனம் (இ.வ.);; a kettle – shaped vessel.

     [கொட்டு + குடவை.]

கொட்டுக்கொட்டென்று

கொட்டுக்கொட்டென்று koṭṭukkoṭṭeṉṟu, வி.எ.(adv.)

   சிறிதும் கண்ணயராமல்; தூக்கத்தின் அறிகுறி சிறுதும் இல்லாமல்; wide awake.

இரவு முழுக்கக் கொட்டுக் கொட்டென்று விழித்துக் கதை படித்துக் கொண்டிருந்தான்.

   2. ஒரே இடத்தில் ஒரு வேலையும் செய்யாமல் சலிப்புடன் இருத்தல்; remaining unoccupied suggestive of boredom.

வீட்டில் எவ்வளவு நேரம் நான் கொட்டுக் கொட்டென்று உட்கார்ந்திருப்பது?

     [கொட்டு+கொட்டு+என்று.]

கொட்டுக்கோல்

 கொட்டுக்கோல் koṭṭukāl, பெ.(n.)

   மேளம் முதலிய தாளக் கருவிகளை அடிக்கப் பயன்படுத்தும் கோல்; stick used for drumming, drum-stick.

ம. கொட்டுக்கோல், கொட்டுகம்பு.

     [கொட்டு + கோல்]

கொட்டுச்சிறுக்கி

 கொட்டுச்சிறுக்கி koṭṭucciṟukki, பெ.(n.)

   பிள்ளை பெறா மலடி; a barren woman (சா.அக.);.

கொட்டுச்சீட்டு

 கொட்டுச்சீட்டு koṭṭuccīṭṭu, பெ.(n.)

   குலுக்கி யெடுக்கும் சீட்டு (இ.வ.);; a chit transaction in which the prize at each instalment is determined by the drawing of lots, dist. fr. elaccittu.

     [கொட்டு + சீட்டு]

கொட்டுச்செத்தல்

 கொட்டுச்செத்தல் koṭṭuccettal, பெ.(n.)

   அறக்காய்ந்த தேங்காய் (யாழ்.அக.);; fully dried coconut.

     [கொட்டு + செத்தல். கொட்டை → கொட்டு செத்தல் : நெற்று.]

கொட்டுச்செம்பு

 கொட்டுச்செம்பு koṭṭuccembu, பெ.(n.)

   தகடடித்துச் செய்த தாமிரச் செம்பு (வின்.);; a copper pot made by beating plates into shape.

     [கொட்டு + செம்பு.]

கொட்டுத்தட்டு

 கொட்டுத்தட்டு koṭṭuttaṭṭu, பெ.(n.)

   மத்தளத்தின் வலந்தரையின் நடுப்பகுதி; the central part of right hand side of the music instrument mirudangam.

     [கொட்டு + தட்டு.]

கொட்டுப்படாதவன்

 கொட்டுப்படாதவன் koṭṭuppaṭātavaṉ, பெ.(n.)

   ஏச்சு வாங்காதவன், வடுப்படாதவன் (இ.வ.);; one of unblemished character.

     [கொட்டு + படாதவன்.]

கொட்டுப்பனை

 கொட்டுப்பனை koṭṭuppaṉai, பெ.(n.)

   தறிக்கப்பட்ட பனையினடி; chopped root of a palm.

     [கொட்டு + பனை.]

கொட்டுப்பிடி

கொட்டுப்பிடி koḍḍuppiḍi, பெ.(n.)

   கொட்டாப்புளி; wooden mallet.

     “கொட்டுப்பிடி போலுங் கூனும்” (சீவக.2798);.

குட்டு → கொட்டு.

     [கொட்டு + பிடி.]

கொட்டுப்பித்தளை

 கொட்டுப்பித்தளை koṭṭuppittaḷai, பெ.(n.)

   கொட்டுவேலை செய்ய உதவும் பித்தளை; brass for the (work); use of smith.

     [கொட்டு + பித்தளை.]

கொட்டுப்புரி

 கொட்டுப்புரி koṭṭuppuri, பெ.(n.)

   சிறுதுடைப்ப வகை; a kind of small broom;brush.

     [கொட்டு + புரி.]

கொட்டுப்பூசல்

கொட்டுப்பூசல் koṭṭuppūcal, பெ.(n.)

   சிறு சண்டை; street fight.

     “ஊரழிஞ்சி தொறுக்கொள்ள கொட்டுப்பூசல் போய்” (ஆவ.6-4, ப.16);. (செங்கம் நடுகல். 971/57);.

     [கொட்டு (பறைமுழக்கம்); + பூசல்.]

கொட்டுமண்

 கொட்டுமண் koṭṭumaṇ, பெ.(n.)

   எடுத்துக் கொண்டுவந்து இடும் மண்; loose earth thrown to improve land, repair a road, etc., dist. fr. nilaiman.

மறுவ போடுமண்.

     [கொட்டு + மண்.]

கொட்டுமண்வெட்டி

 கொட்டுமண்வெட்டி koṭṭumaṇveṭṭi, பெ.(n.)

   மண்வெட்டி வகைகளுள் ஒன்று; a kind of hoe, spade.

     [கொட்டு + மண் + வெட்டி.]

கொட்டுமம்பட்டி

 கொட்டுமம்பட்டி koṭṭumambaṭṭi, பெ.(n.)

   தேய்ந்த மண்வெட்டி; blunt spade.

     [கொட்டு + (மண்வெட்டி); மம்பட்டி (கொ.வ.);.]

கொட்டுமரம்

 கொட்டுமரம் koṭṭumaram, பெ.(n.)

   ஆடையை வண்ணக் கலவையி(சாயத்தி);ல் தோய்த்து அடிக்குங் கட்டை; dyer’s block for beating cloth and fixing colours (செ.அக.);.

     [கொட்டு+மரம்.]

கொட்டுமுறி

 கொட்டுமுறி koṭṭumuṟi, பெ.(n.)

   உயர்ந்த பித்தளை வகை (வின்.);; a superior kind of brass.

     [கொட்டு + முறி.]

கொட்டுமுழக்கு

 கொட்டுமுழக்கு koṭṭumuḻkku, பெ.(n.)

   விழாக்கால இன்னிசைமுழக்கம்; sounding of drums and pipes on festive occasions.

     [கொட்டு + முழக்கு.]

கொட்டுமேளம்

கொட்டுமேளம் koṭṭumēḷam, பெ.(n.)

   1. பறை, தாரை, தப்பட்டை முதலான இசைக் கருவிகள்; drums and pipes.

   2. முறையான திருமணம்; legal marriage.

கொட்டுமேளமா கட்டுதாலியா? (உ.வ.);.

     [கொட்டு + மேளம்.]

கொட்டுரசம்

 கொட்டுரசம் koṭṭurasam, பெ.(n.)

   பருப்பிடாத சாறு; a kind of pepper-water prepared without dhall.

மறுவ, கொட்டுச்சாறு.

     [கொட்டு + ரசம்.]

கொட்டுளு

 கொட்டுளு koṭṭuḷu, பெ.(n.)

   ஊமைச்சி மீன்; trunk fish.

ம. கொட்டுள்.

     [கொட்டு + உளு.]

கொட்டுவலை

 கொட்டுவலை koṭṭuvalai, பெ.(n.)

   நீண்ட மீன்வலை; long fishing net.

     [கொட்டு + வலை.]

கொட்டுவான்

கொட்டுவான்1 koṭṭuvāṉ, பெ.(n.)

   1. கொட்டாப்புளி; mallet.

கொட்டுவானால் அடித்துத் தகரத்தைச் சமனாக்கு.

   2. தேள் முதலியவை; scorpion.

கொட்டுவான் கொட்டியதால் வலி தாங்க முடியவில்லை.

   3 புற்செதுக்குங் கருவிவகை; hoe with a long handle.

     [கொட்டு → கொட்டுவான்.]

 கொட்டுவான்2 koṭṭuvāṉ, பெ.(n.)

   கொட்டுக் கன்னான்; brazier who works by beating plates into shape.

நெளிந்த குடத்தைச் கொட்டுவானிடம் கொடுத்துச் சரிசெய் (உ.வ.);.

     [கொட்டு → கொட்டுவான்.]

கொட்டுவாய்

கொட்டுவாய் koṭṭuvāy, பெ.(n.)

   1.தேள் முதலியவை கொட்டின இடம்; the spot stung by a scorpion or other poisonous insects.

கொட்டுவாயில் மருந்தைப்போடு,

   2.நெருக்கடியான நேரம்; nick of time.

கொட்டுவாயில் வந்து கேட்கிறான் (உ.வ.);.

     [கொட்டு + வாய்.]

கொட்டுவாய்க்கடுப்பு:

 கொட்டுவாய்க்கடுப்பு: koṭṭuvāykkaṭuppu, பெ. (n.)

   நச்சு உயிரிகள் கடித்த இடத்தில் ஏற்படும் கடுநோய் அல்லது, எரிவு; intense irritation or burning pain at the spot bitten by poisonous insects or reptiles (சா.அக.);.

     [கொட்டு+வாய்+கடுப்பு]

கொட்டுவிடக்காலி

 கொட்டுவிடக்காலி koḍḍuviḍakkāli,    காலினால் கொட்டும் செங்குளவி; a red species of wasp having its sting in its legs (சா.அக.).

     [கொட்டு + விடம் + காலி.]

கொட்டுவிடம்

 கொட்டுவிடம் koḍḍuviḍam, பெ.(n.)

   தேள் கொட்டலால் ஏற்பட்ட நஞ்சு; poison due to scorpion sting (சா.அக.);.

     [கொட்டு + விடம்.]

கொட்டுவிரியன்பாம்பு

 கொட்டுவிரியன்பாம்பு koṭṭuviriyaṉpāmbu, பெ.(n.)

   ஆழ்கடலில் வாழும் ஒருவகைப்பாம்பு; a kind of snake living in deep sea.

     [கொட்டு + விரியன் + பாம்பு]

கொட்டுவேலை

கொட்டுவேலை1 koṭṭuvēlai, பெ.(n.)

கொட்டுக் கன்னார் வேலை (வின்.);

 beaten work, dist. fr. vārppuvēlai.

ம. கொட்டுபணி.

     [கொட்டு + வேலை.]

 கொட்டுவேலை2 koṭṭuvēlai, பெ.(n.)

   துணியில் அச்சடித்தல்; print on cloth (சிற்பரத்.முன்.ப.9);.

     [கொட்டு + வேலை.]

கொட்டெரிச்சல்

கொட்டெரிச்சல் koṭṭericcal, பெ.(n.)

   1. கொட்டு வதனா லுண்டாகும் எரிவு; burning sensation due to stinging by a scorpion (சா.அக.);.

     [கொட்டு + எரிச்சல்.]

கொட்டேணி

 கொட்டேணி koṭṭēṇi, பெ.(n.)

   பன்மாடிக்கட்டடம், கட்டுவோர் ஆழ்துளைக் கற்காறை அடிமானம் இடுதற்காகப் பயன்படுத்தும் எந்திர ஏணி இடிப்புப் பொறி; pile driver used to lay pile foundation for multistoreyed buildings.

     [கொட்டுதல் : இடித்தல், ஏணி : ஏணி போன்ற இயந்திரம். கொட்டு + ஏணி.]

கொட்டை

கொட்டை1 koṭṭai, பெ.(n.)

   1.விதை (பிங்.);; seed of any kind not enclosed in chaff or husk, nut, stone, kernel.

   2. விதைக்கொட்டை; testicles.

   3. தாமரைக்கொட்டை; pericarp of the lotus flower.

     “தாமரை வள்ளிதழ் பொதிந்த கொட்டை போல” (பெருங், உஞ்சைக். 38:258);.

   4. பலாபூசணிகளின் பிஞ்சு (கொ.வ.);,

 fruit bud of the jack; very small green pumpkin.

   5. உருண்டை வடிவம்; large rounded form, as in writing.

கொட்டையெழுத்து.

   ம. கொட்ட;   க., து. கொட்டெ;   தெ. குலிடி;   பட. கொட்டெ;குரு. கொடா.

     [குள் → கொள் → கோள் → கோளம் : வட்டம், உருண்டை. கொள் → கொட்டு → கொட்டை(வே.க165.); (ஒ.நோ. 173.);]

 கொட்டை2 koṭṭai, பெ.(n.)

   1. தங்கத்தாலான மகளிர் தலையணி வகை; a gold ornament for women’s hair.

   2. கிடுகுதாங்குங் கால் முதலியவற்றின் தலைப்பகுதி; head of a pole used as a prop.

     “மணிபுனை செம்பொற் கொட்டை” (சீவக.113);.

   3.யானையின் தலையணிச் சிறப்பு; an ornament for elephant

   4. சும்மாடு (வின்.);; pad for the head in carrying a load.

   5. சிறு தலையணை; small round pillow, cushion.

     “பஞ்சின் கெட்டணை யருகாக் கொட்டைகள் பரப்பி” (பதினொ. திருவிடைம. மும்.19);.

     [கொள் → கொட்டு → கொட்டை.]

 கொட்டை3 koṭṭai, பெ.(n.)

   1.கொட்டையிலந்தை பார்க்க;see kottai-y-ilandai

   2. ஆமணக்கு பார்க்க;see amarakku.

   3. கொட்டைக்கரந்தை (மலை.); பார்க்க;see kottai-k-karandai.

     [கொள் → கொட்டு → கொட்டை.]

 கொட்டை4 koṭṭai, பெ.(n.)

   1 பாதக்குறட்டின் குமிழ்; knob of wooden sandals.

     “பவழக்கொட்டை பொற் செருப் பேற்றி” (பெருங். மகத.22:202);.

   2. ஆடைத்தும்பினை அழகுபடுத்துதற்காகத் திரள முடிந்த முடிச்சு; knots made of warp threads at the end of a cloth, as ornament, etc.

     “கொட்டைக் கரைய பட்டுடை நல்கி” (பொருந. 155);. 3.ஆடைத் தும்பு (பொருந.155, உரை.);;

 warp threads at the end of the cloth, hanging loosely and not made into knots.

     [கோடு → கொடு → கொட்டை.]

 கொட்டை5 koṭṭai, பெ.(n.)

   1. நூற்குங் கதிரின் கொட்டை; base of a hand-spindle.

கப்பல் ஓடிப் பட்ட கடன் கொட்டை நூற்றா விடியும் (பழ.);.

   2. பஞ்சுச்சுருள்; rolls of cotton prepared for spinning

     “கொட்டைத் தலைப்பால் கொடுத்து” (திவ். பெரியாழ். 3,5:1);

   3. காதுவளர்க்குங் திரி (இ.வ.);; plug or tent of cloth to widen the ear-holes for jewels;

   4. மகளிர் காதணிவகை (பிங்.);; a kind of ear-orrnament for women.

     [கொள் → கொடு → கொட்டை.]

 கொட்டை6 koṭṭai, பெ.(n.)

   ஒருவகை மீன்; a kind of fish.

     [கொள் → கொடு → கொட்டை.]

 கொட்டை7 koṭṭai, பெ.(n.)

   நெல்வகை (தண்.கன.பன்.ப.62);; a kind of paddy.

     [குள் → குடு (வளைவு, வட்டம்); கொடு → கொட்டை – தடிப்பான நெல்வகை.]

கொட்டைகடு-தல்

கொட்டைகடு-தல் goḍḍaigaḍudal,    17 செ.குன்றாவி. (v.t.)

   முந்திரிக்கொட்டைகளைத் தீயிலிட்டு எடுத்தல்; to fry the cashewnut.

     [கொட்டை + கடு-.]

கொட்டைகட்டு-தல்

கொட்டைகட்டு-தல் koṭṭaikaṭṭutal,    5 செ.கு.வி.(v.i.)

   1. இலுப்பைக்காய் வைத்துச் சூதாடுதல்; to gamble with mahua seeds.

   2. நாய்ப்புலி என்னும் ஒரு வகை ஆட்டத்தில் புலியைக் கட்டுகை; to checkmate the tiger in the game of nay-p-puli (செ.அக.);.

     [கொட்டை+கட்டு-தல்.]

கொட்டைக்கச்சி

 கொட்டைக்கச்சி koṭṭaikkacci, பெ.(n.)

கொட்டாங்காய்ச்சில் பார்க்க;see kottan-kay-c. cil.

     [கொட்டான் + காய் + சில் – கொட்டாங்காய்ச்சில் கொட்டைக்கச்சி (கொ.வ.);.]

கொட்டைக்கட்டு-தல்

கொட்டைக்கட்டு-தல் koṭṭaikkaṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. இலுப்பைக்காய் வைத்துச் சூதாடுதல் (வின்.);; to gamble with mahua seeds.

   2. நாய்ப்புலி யென்னும் ஆட்டத்திற் புலியைக் கட்டுதல் (இ.வ.);; to checkmate the tiger in the game of nåyppuli.

     [கொட்டை + கட்டு-.]

கொட்டைக்கரந்தை

 கொட்டைக்கரந்தை koṭṭaikkarandai, பெ.(n.)

   செடிவகை; Indian globe – thistle.

     [கொட்டை + கரந்தை.]

கொட்டைக்களா

 கொட்டைக்களா koṭṭaikkaḷā, பெ.(n.)

   ஒரு வகைத் தணக்கு; whirling nut (சா,அக.);.

     [கொட்டை + களா.]

கொட்டைக்காய்

கொட்டைக்காய் koṭṭaikkāy, பெ.(n.)

   1. விதைகள் பெருத்தும் நிறைந்தும் உள்ள காய்; fruit, the seeds or stones of which are disproportionately large or numerous.

   2. காய்ந்து சுருங்கிய பொருள்; a shrunk and dried object.

     [கொட்டை + காய்.]

கொட்டைக்காய்ச்சி

 கொட்டைக்காய்ச்சி koṭṭaikkāycci, பெ.(n.)

   தசைப்பற்று அதிகமின்றிக் கொட்டை பருத்துள்ள காய்காய்க்கும் மாமரம்; a species of mango yielding fruits of large stones with a small quantity of pulp.

     [கொட்டை + காய்ச்சி.]

கொட்டைக்காலி

 கொட்டைக்காலி koṭṭaikkāli, பெ.(n.)

கொட்டைச் சேம்பு பார்க்க;see kottai-c-cémbu.

ம. கொட்டக்காலி.

     [கொட்டை + காலி.]

கொட்டைக்கூலி

கொட்டைக்கூலி koṭṭaikāli, பெ.(n.)

   வரி வகை; a tax (SII.VIII.139);.

     [கொட்டை + கூலி.]

கொட்டைக்கையில்

 கொட்டைக்கையில் koṭṭaikkaiyil, பெ.(n.)

   கொட்டங்காய்ச்சில் (யாழ்);; portion of coconut shell.

மறுவ. கொட்டாஞ்சி, கொட்டாங்கச்சி (தஞ்.வ.);.

     [கொட்டை + (காய் + சில்); கயில்.]

கொட்டைக்கொடி

 கொட்டைக்கொடி koḍḍaikkoḍi, பெ.(n.)

   ஆண் கருவுயிர்மக் கொடி; spermatic cord (சா.அக.);.

     [கொட்டை + கொடி.]

கொட்டைசெத்தவன்

 கொட்டைசெத்தவன் koṭṭaisettavaṉ, பெ.(n.)

   கையாலாகதவன் (கொ.வ.);; lit. an emasculated person, coward, nerveless man.

     [கொட்டை + செத்தவன்.]

கொட்டைச்செத்தல்

 கொட்டைச்செத்தல் koṭṭaiccettal, பெ.(n.)

கொட்டைத் தேங்காய் (யாழ்ப்.); பார்க்க: see kottatai-t-têngay.

     [கொட்டை + செத்தல்.]

கொட்டைச்சேம்பு

 கொட்டைச்சேம்பு koṭṭaiccēmbu, பெ.(n.)

ஒருவகைச் சேம்பு:

 a kind of caladium.

ம. கொட்டச்சேம்பு.

     [கொட்டை + சேம்பு.]

கொட்டைதாழ்த்து-தல்

கொட்டைதாழ்த்து-தல் koṭṭaidāḻddudal,    5 செ.குன்றாவி (v.t.)

   பழக்கொட்டையை நிலத்தில் விதைத்தல் (வின்.);; to plant fruit-stones.

     [கொட்டை + தாழ்த்து-.]

கொட்டைத்தணக்கு

 கொட்டைத்தணக்கு koṭṭaittaṇakku, பெ.(n.)

   தணக்குவகை (L);; whirling-nut.

     [கொட்டை + தணக்கு.]

கொட்டைத்தண்டு

 கொட்டைத்தண்டு koṭṭaittaṇṭu, பெ.(n.)

ஆமணக்குச்செடி,

 castor plant,

பட்டிக் காட்டுத் தம்பிரானுக்குக் கொட்டைத் தண்டு கருட கமயம.

பறுவ ஆய_க்கு

     [கொட்டை+தண்டு]

கொட்டைத்தேங்காய்

 கொட்டைத்தேங்காய் koṭṭaittēṅgāy, பெ.(n.)

   கொப்பரைத் தேங்காய் (யாழ்ப்.);; dry coconut in which the kernel rattles.

ம.கொட்டத்தேங்ங.

     [கொட்டை + தேங்காய்.]

கொட்டைநண்டு

 கொட்டைநண்டு koṭṭainaṇṭu, பெ.(n.)

   முதுகில் முள்ளுடைய கடல்நண்டு; a kind of sea crab which has thorn on the back.

     [கொட்டை + நண்டு.]

கொட்டைநாகம்

 கொட்டைநாகம் koṭṭainākam, பெ.(n.)

நாவல் மரவகை (L.);, jamoon plum.

     [கொட்டை + நாகம்.]

கொட்டைநாளம்

 கொட்டைநாளம் koṭṭaināḷam, பெ.(n.)

கொட்டைக் கரந்தை பார்க்க;see kottai-k-karandai (சா.அக.);

     [கொட்டை + நாளம்.]

கொட்டைநாவல்

 கொட்டைநாவல் koṭṭaināval, பெ.(n.)

கொட்டை நாகம் (யாழ்ப்); பார்க்க;see kottai-nāgam.

மறுவ நரிநாவல், சிறுநாவல்.

     [கொட்டை + நாவல்.]

கொட்டைநூல்-தல் (கொட்டைநூற்றல்)

கொட்டைநூல்-தல் (கொட்டைநூற்றல்) koṭṭainūltalkoṭṭainūṟṟal,    9 செ.குன்றாவி(v.t.)

   1, பஞ்சுநூற்றல்; to spir cotton;

கப்பலோடிப் பட்ட கடன், கொட்டை நூற்றுத் தீருமோ?

   2. பயனற்ற வேலை செய்தல் (உ.வ.);; to be engaged in an unprofitable work.

   3. வீண்காலம் போக்குதல் (உ.வ.);; to waste or idle away one’s time.

     [கொட்டை + நூல்.]

கொட்டைநெய்

 கொட்டைநெய் koṭṭainey, பெ.(n.)

   சிற்றாமணக் கெண்ணெய்; oil from small castor seeds (சா.அக.);.

     [கொட்டை + நெய்.]

கொட்டைபரப்பு-தல்

கொட்டைபரப்பு-தல் koṭṭaibarabbudal,    5 செ.குன்றாவி (v.t.)

   பகைவரது நாட்டை அழித்துத் தரைமட்டமாக்குதல்; to destroy completely, raze to the ground, as an enemy’s town.

     “திரிபுரஞ் சுட்டுக் கொட்டை பரப்புங் குரிசில்”(திருப்பு.);.

மறுவ கொட்டைமுத்து விதைத்தல்.

     [கொட்டை + பரப்பு-.]

கொட்டைபருத்தல்

 கொட்டைபருத்தல் koṭṭaibaruttal, பெ.(n.)

   விதை பெரிதாதல்; enlargement of the testicles (சா.அக.);.

     [கொட்டை + பருத்தல்.]

கொட்டைபற்றுதல்

 கொட்டைபற்றுதல் koṭṭaibaṟṟudal, பெ.(n.)

கொட்டைபிடித்தல் பார்க்க;see kottai-pittal.

     [கொட்டை + பற்றுதல்.]

கொட்டைபிசைதல்

கொட்டைபிசைதல் koṭṭaibisaidal, பெ.(n.)

   1. விதையைப் பிசைதல்; squeezing the testicles.

   2. ஒருவகைக் கொலை; a mode of causing death(சா.அக.);.

     [கொட்டை + பிசை.]

கொட்டைபிடித்தல்

 கொட்டைபிடித்தல் koḍḍaibiḍittal, பெ.(n.)

   பிஞ்சுகளுக்குக் கொட்டை பிடித்தல்; embryonic formation of nut in an immature fruit (சா.அக.);.

     [கொட்டை + பிடித்தல்.]

கொட்டைபோடு-தல்

கொட்டைபோடு-தல் koṭṭaipōṭudal,    19 செ.குன்றாவி (v.t.)

   1. விதை விதைத்தல்; to sow seeds in garden – beds.

   2. பலாமரம் முதலியன பிஞ்சுவிடுதல் (இ.வ.);; to shoot forth fruit-buds, as the jack-tree.

   3. தொழில் முதலியவற்றில் பழக்கப்படுதல் (கொ.வ.);; to be experienced, as in a profession.

   4. இறத்தல் (இ.வ.);; to die.

     [கொட்டை + போடு-.]

கொட்டைப்பனை

 கொட்டைப்பனை koṭṭaippaṉai, பெ.(n.)

   தாளிப்பனை; talipot palm (சா.அக.);.

     [கொட்டை + பனை.]

கொட்டைப்பயறு

கொட்டைப்பயறு koṭṭaippayaṟu, பெ.(n.)

   மணற்பாங்கான நிலத்தில் புரட்டாசியில் விதைத்து நான்கு மாதங்களில் விளையும் பயறுவகை (M.M. 329.);; a kind of pulse raised in sandy soil, sown in Purattāsī and maturing in four months.

     [கொட்டை + பயறு.]

கொட்டைப்பருந்து

 கொட்டைப்பருந்து koṭṭaipparundu, பெ.(n.)

   பருந்து வகை; black kite.

     [கொட்டை + பருந்து.]

கொட்டைப்பருப்பு

 கொட்டைப்பருப்பு koṭṭaipparuppu, பெ.(n.)

   கொட்டைப்பயறுள்ளிருக்கும் பருப்பு; kernel inside the nut (சா.அக.);.

     [கொட்டை + பருப்பு]

கொட்டைப்பாக்கன் ஏந்தல்

 கொட்டைப்பாக்கன் ஏந்தல் koṭṭaippākkaṉēndal, பெ.(n.)

   புதுக்கோட்டை மாவட்டத்துச் சிற்றுர்; a village in Pudukkottai Dt.

     [கொட்டை + பாக்கன் + ஏந்தல் (ஏரி);.]

கொட்டைப்பாக்கு

கொட்டைப்பாக்கு koṭṭaippākku, பெ.(n.)

   வேகவைக்காமல் உணக்கிய முழுப்பாக்கு; areca-nut dried without boiling, raw areca-nut.

     “கொட்டைப்பாக் கென்றுரைக்கிற் கோழைமலம் போம்”(பதார்த்த 1437);.

ம.கொட்டப்பாக்கு கொட்டடய்க்க.

     [கொட்டை + பாக்கு.]

கொட்டைப்பாக்குத்தலை

 கொட்டைப்பாக்குத்தலை koṭṭaippākkuttalai, பெ.(n.)

   மிகச் சிறிய தலை; an abnormally small head- microceaphalus. cf.

மாங்காய்த்தலை.

     [கொட்டைப்பாக்கு + தலை.]

கொட்டைப்பாக்குத்தலைப்பா

 கொட்டைப்பாக்குத்தலைப்பா koṭṭaippākkuttalaippā, பெ.(n.)

   குஞ்சுத்தலைப்பா (யாழ்.அக.);; a kind of turban.

     [கொட்டை + பாக்கு + தலைப்பா.]

கொட்டைப்பாசம்

 கொட்டைப்பாசம் koṭṭaippācam, பெ.(n.)

   குளிர்தாமரை; floating lotus (சா.அக.);.

     [கொட்டை + பாசம்.]

கொட்டைப்பாசி

கொட்டைப்பாசி koṭṭaippāci, பெ.(n.)

   நீர்ப்பாசி வகை; a kind of moss.

     ‘கொட்டைப் பாசியின் வேரையொத்த சிதரின சீரையை’ (பெரும்பாண். 468. உரை);.

     [கொட்டை + பாசி.]

கொட்டைப்பாமிரம்

 கொட்டைப்பாமிரம் koṭṭaippāmiram, பெ.(n.)

   கொட்டைக் கரந்தை; Indian globe thistle, Sphoeranthus indicus (சா.அக.);.

     [கொட்டை+பாமிரம்]

கொட்டைப்பாய்

 கொட்டைப்பாய் koṭṭaippāy, பெ.(n.)

முரட்டுப் பாய்,

 a rough or dry mat.

ம. கொட்டப்பாய.

     [கொட்டை + பாய்.]

கொட்டைப்பாலை

 கொட்டைப்பாலை koṭṭaippālai, பெ.(n.)

கொட்டைக் கரந்தை பார்க்க;see kottai-k-karandai (சா.அக.);.

     [கொட்டை + பாலை.]

கொட்டைப்புளி

 கொட்டைப்புளி koṭṭaippuḷi, பெ.(n.)

   விதையெடுக்காத புளி; pulp of tamarind fruits with the Seeds.

     [கொட்டை + புளி.]

கொட்டைப்பூவரசு

 கொட்டைப்பூவரசு koṭṭaippūvarasu, பெ.(n.)

   கொட்டை முதிர்ந்த காய்கள் காய்க்கும் பூவரசு; portia tree yielding fruit of matured seeds (சா.அக.);.

     [கொட்டை + பூவரசு.]

கொட்டைப்பெட்டி

கொட்டைப்பெட்டி koṭṭaippeṭṭi, பெ.(n.)

   1. (தாம்பூலப்); பெட்டி (வின்.);; betel-box, basket for betel, areca-nuts.

   2. நெசவுக்குரிய பஞ்சுச்சுருள் வைக்கும் பெட்டி; basket for cotton yarn.

   3. பனைநாராற் செய்த சிறுபெட்டி வகை; a small basket of palmyra leaves or fibres

     [கொட்டை + பெட்டி.]

கொட்டைப்பை

கொட்டைப்பை koṭṭaippai, பெ.(n.)

   1. விதைப் பை:

 testicle sac.

   2. விதையைக் கவர்ந்துகொண்டிருக்கும் பை; a pouch investing the testicle(சா.அக.);.

     [கொட்டை + பை.]

கொட்டைமறைவு

 கொட்டைமறைவு koṭṭaimaṟaivu, பெ.(n.)

   விதை பிடுக்கினுள்ளிறங்காமல் வயிற்றினுள்ளே மறைந்து நிற்றல்; concealment of the testicles within the abdomen (சா.அக.);.

     [கொட்டை + மறைவு.]

கொட்டைமுடிச்சு

 கொட்டைமுடிச்சு koḍḍaimuḍiccu, பெ.(n.)

   முடிச்சு வகை; a kind of knot.

     [கொட்டை+முடிச்சு]

கொட்டைமுதல்

கொட்டைமுதல் koṭṭaimudal, பெ.(n.)

   1.கைமுதல்; initial capital of a business.

   2. விதைத்தல்; to sow Seed.

மறுவ. விதைமுதல்.

     [கொட்டை + முதல்.]

கொட்டைமுதிர்ச்சி

 கொட்டைமுதிர்ச்சி koṭṭaimudircci, பெ.(n.)

   பழத்தினுள்ளிருக்கும் விதை முதிர்ந்து பெரிதாதல்; maturity of the nut in a fruit (சா.அக.);.

     [கொட்டை + முதிர்ச்சி.]

கொட்டைமுத்து

 கொட்டைமுத்து koṭṭaimuttu, பெ.(n.)

   ஆமணக்கு முத்து; the seed of the castor plant.

மறுவ. சிற்றாமணக்கு விதை (மலை.);

     [கொட்டை + முத்து.]

கொட்டைமுத்தூற்று-தல்

கொட்டைமுத்தூற்று-தல் koṭṭaimuddūṟṟudal,    5 செ.கு.வி.(v.i.)

   ஆமணக்கு விதையிலிருந்து எண்ணெயெடுத்தல்; extracting oil from castor seed by boiling process (சா.அக.);.

     [கொட்டைமுத்து + ஊற்று-.]

கொட்டைமுத்தெண்ணெய்

 கொட்டைமுத்தெண்ணெய் koṭṭaimutteṇīey, பெ.(n.)

   விளக்கெண்ணெய்; castor oil (சா.அக.);.

     [கொட்டை + முத்து + எண்ணெய்.]

கொட்டைமுந்திரி

 கொட்டைமுந்திரி koṭṭaimundiri, பெ.(n.)

   மரவகை; cashewnut tree.

     [கொட்டை + முந்திரி.]

கொட்டைமுந்திரிகை

 கொட்டைமுந்திரிகை goṭṭaimundirigai, பெ.(n.)

   முந்திரியின் பருப்பு; cashewnut.

     [கொட்டை + முந்திரிகை.]

கொட்டைமூலம்

 கொட்டைமூலம் koṭṭaimūlam, பெ.(n.)

   கொட்டிக் கிழங்கு; a kind of cyprus root (சா.அக.);.

     [கொட்டை + மூலம்.]

கொட்டையடி-த்தல்

கொட்டையடி-த்தல் koḍḍaiyaḍittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   ஆடு மாடுகளுக்கு விதையடித்தல்; castration as in bulls (சா.அக.);.

     [கொட்டை + அடி-.]

கொட்டையடித்தவன்

 கொட்டையடித்தவன் koḍḍaiyaḍittavaṉ, பெ.(n.)

   விதையெடுக்கப்பட்டவன்; one in whom the testicles have been removed (சா.அக.);.

     [கொட்டை + அடித்தவன்.]

கொட்டையரைஞாண்

கொட்டையரைஞாண் koṭṭaiyaraiñāṇ, பெ.(n.)

   குழந்தையணிவகை (பெரியபு:சிறுத்.60);; a child’s ornament.

     [கொட்டை + அரைஞாண்.]

கொட்டையழுகு-தல்

கொட்டையழுகு-தல் goṭṭaiyaḻugudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. பழத்தினுள் கொட்டை அழுகுதல்; rotten condition of the nut inside a fruit.

   2. பெண்நோயால் ஆண்விதை அழுகல்; putrid state of the testicles

 from venereal disease (சா.அக.);.

     [கொட்டை + அழுகு-.]

கொட்டையவரை

 கொட்டையவரை koṭṭaiyavarai, பெ.(n.)

   கொட்டை முத்தின அவரை; a species of bean with matured seed or in which the seed portion alone is edible (சா.அக.);.

     [கொட்டை+அவரை.]

 கொட்டையவரை koṭṭaiyavarai, பெ.(n.)

   முதிர்ந்த அவரை; matured bean in which the seed portion alone is edible (சா.அக.);.

     [கொட்டை + அவரை.]

கொட்டையாகாசி

 கொட்டையாகாசி koṭṭaiyākāci, பெ.(n.)

   ஒரு வகைப் பூடு; round-leaved moonseed, Cocculus macrocarpus (சா.அக.);.

     [கொட்டை+(ஆகாயம்); ஆகாசி]

கொட்டையாசாசி

 கொட்டையாசாசி koṭṭaiyācāci, பெ.(n.)

   ஒரு வகைக் கொடி; a kind of creeper; glaucous-backed round leaved moonseed, Cocculus macrocarpus (செ.அக.);.

     [கொட்டை+ஆகு+ஆசி]

கொட்டையாண்டார்

 கொட்டையாண்டார் koṭṭaiyāṇṭār, பெ.(n.)

கோட்டையாண்டார் பார்க்க;see kolay-andar.

     [கோட்டை → கொட்டை + ஆண்டார்.]

கொட்டையிடு-தல்

கொட்டையிடு-தல் koḍḍaiyiḍudal,    20 செ.கு.வி.(v.i.)

   1. கொட்டையோடு-, பார்க்க;see kottai.podu-,

   2. பஞ்சுச்சுருள் செய்தல் (வின்.);; to prepare cotton roll.

     [கொட்டை + இடு-.]

கொட்டையிலந்தை

 கொட்டையிலந்தை koṭṭaiyilandai, பெ.(n.)

   இலந்தை மரவகை (L.);; woody, fruited jujube.

     [கொட்டை + இலந்தை.]

கொட்டையிலான்

 கொட்டையிலான் koṭṭaiyilāṉ, பெ.(n.)

   விதையில்லான்; one deprived of testicles (சா.அக.);.

     [கொட்டை + இல்லான்.]

கொட்டையிலாப்பழம்

கொட்டையிலாப்பழம் koṭṭaiyilāppaḻm, பெ.(n.)

   1. விதையில்லாத பழம்; seedless fruit.

   2. விதையில்லாத பிடுக்கு; indicating scrotum deprived of testicles which lie concealed in the abdomen (சா.அக.);.

     [கொட்டை + இல்லா + பழம்.]

கொட்டையிலாமுந்திரி

 கொட்டையிலாமுந்திரி koṭṭaiyilāmundiri, பெ.(n.)

   விதையில்லாக் கொடிமுந்திரி (திராட்சை);; seedless raisin (சா.அக.);.

மறுவ. கிசுமிசுப்பழம்.

     [கொட்டை + இல்லா + முந்திரி.]

கொட்டையிலை

 கொட்டையிலை koṭṭaiyilai, பெ.(n.)

கொட்டைக் கரந்தை (சங்.அக..); பார்க்க;see kottai-k-karandai.

     [கொட்டை + இலை.]

கொட்டையீனன்

 கொட்டையீனன் koṭṭaiyīṉaṉ, பெ.(n.)

   பிடுக்கில் கீழிறங்காது மேலேறி நிற்கும் விதையுள்ளவன்; one in whom the testicles fails to descend into the scrotum (சா.அக.);.

     [கொட்டை + (ஊனன்); ஈனன்.]

கொட்டையீனம்

 கொட்டையீனம் koṭṭaiyīṉam, பெ.(n.)

   விதைபிடுக்கினுள் இறங்காமை; a condition in which the testicles have not descended into the scrotum (சா.அக.); (கொ.வ.);.

     [கொட்டை + ஊனம் – கொட்டையூனம் → கொட்டையீனம்.]

கொட்டையூர்

 கொட்டையூர் koṭṭaiyūr, பெ.(n.)

   தஞ்சைமாவட்டம், கும்பகோணம் அருகே அமைந்துள்ள ஒர் ஊர்; a village situated near Kumbakonam in Thanjavur Dt.

     [கொட்டை + ஊர்.]

ஆமணக்குக் கொட்டை மிகுதியாக விளைந்துள்ளமையால் இப் பெயர் பெற்றதாம். அவ்வூரில் அமைந்துள்ள திருக்கோயிலின் காவல் (தல); மரம் ஆமணக்குச் செடி. சிவக் கொழுந்து தேசிகர் வாழ்ந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது (த.நா.ஊ.பெ.);.

கொட்டையெடு-த்தல்

கொட்டையெடு-த்தல் koḍḍaiyeḍuttal,    4 செ. குன்றாவி. (v.t.)

   1. பேடியாக்கல்; making effeminate by depriving virility – emasculating (சா.அக.);.

   2. முந்திரி மரத்தினின்று கொட்டைகளை எடுத்தல்; to reap the cashewnut.

   3. புளிபோன்ற பழங்களிலிருந்து கொட்டையை நீக்குதல்; to remove the nut as of tamarind.

     [கொட்டை + எடு-.]

கொட்டைவலி

 கொட்டைவலி koṭṭaivali, பெ.(n.)

   விதையில் ஏற்படும் வலி; pain of the testicles (சா.அக.);.

     [கொட்டை + வலி.]

கொட்டைவாங்கு-தல்

கொட்டைவாங்கு-தல் koṭṭaivāṅgudal,    5செ.குன்றாவி (v.t.)

   ஆடுமாடுகளுக்கு விதையடித்தல்; castration (சா.அக.);.

     [கொட்டை + வாங்கு-.]

கொட்டைவாழை

 கொட்டைவாழை koṭṭaivāḻai, பெ.(n.)

   கொட்டை மிகுந்திருத்தலால் உண்ண உதவாத கனியுடைய வாழை வகை (இ.வ.);; a kind of plantain yielding stony fruit, not edible.

     [கொட்டை + வாழை.]

கொட்டைவீக்கம்

 கொட்டைவீக்கம் koṭṭaivīkkam, பெ.(n.)

   விதைக் பருத்துக் காணல்; enlargement of the testicles (சா.அக.);.

     [கொட்டை + வீக்கம்.]

கொட்பாட்டன்

 கொட்பாட்டன் koṭpāṭṭaṉ, பெ.(n.)

கொள்ளுப் பாட்டன் பார்க்க;see kollu-p-pâttan.

     [கொள் + பாட்டன் → கொட்பாட்டன்.]

கொட்பு

கொட்பு1 koṭpu, பெ.(n.)

   1. சுழற்சி; whirling, revolving.

     “கொட்புறு கலினப் பாய்மா”(கம்பரா. மிதிலை. 13);.

   2. சுற்றித்திரிகை (திவா.);

 wandering, rambling, going about.

   3. மனச்சுழற்சி (சீவக. 540, உரை);; perturbation, agitation.

   4 நிலையின்மை; inconstancy, instability.

     “கொட்பின்றி யொல்லும்வா யூன்றும் நிலை”(குறள், 789);.

   5. வளைவு (வின்.);; Curve, bend.

     [கொள் → கொட்பு.]

 கொட்பு2 koṭpu, பெ.(n.)

   கருத்து; intention, idea.

     “கூட வைக்கும் கொட்பின ளாகி”(மணிமே.21,77);.

     [கொள் + கொட்பு.]

கொட்பூ

 கொட்பூ koṭpū, பெ.(n.)

   ஒருவகைக் காதணி (கல்.அக.);; ear jewel.

     [கொள் + கொட்பு.]

இது மேற்காதில் அணியப்படும் பூ வடிவினதான காதணி.

கொட்பேரன்

கொட்பேரன் koṭpēraṉ, பெ.(n.)

கொள்ளுப்பேரன் பார்க்க;see Kolu-p-peran.

     “பிரமதேவனுக்குக் கொட்பேரன்” (இராமநா. ஆரணி.19);.

     [கொள்ளுப்பேரன் → கொட்பேரன்.]

கொணகொண-த்தல்

 கொணகொண-த்தல் goṇagoṇattal, பெ.(n.)

   மூக்கின் வழியாய்ப் பேசல்; the nasal quality of voice (சா.அக.);.

     [கொண + கொண-.]

கொணக்கலவாடி

 கொணக்கலவாடி koṇakkalavāṭi, பெ.(n.)

   விழுப்புரம் மாவட்டத்துச் சிற்றூர்; a village in Villuppuram Dt.

     [குணக்கு (கிழக்கு); + கல் + பாடி-குணக்குக்கல்பாடி → குணக்கல்வாடி → குணக்கலவாடி → கொணக்கலவாடி.]

கொணக்கு-தல்

கொணக்கு-தல் koṇakkudal,    5 செ.கு.வி.(v.i.)

   கெடுத்தல்; to spoil.

இந்தக் கலியாணத்திலே தேவையில்லாம கொணக்கிட்டாளே (நெல்லை);.

கொணங்கு

கொணங்கு1 koṇaṅgu, பெ.(n.)

   1. குறிஞ்சா; an edible and medicinal creeper.

   2. முறையற்று ஓடுகிற (பொறி); எஞ்சின் கொணங்கிப் போச்சு (நெல்லை);.

     [குணங்கு → கொணங்கு.]

 கொணங்கு2 koṇaṅgudal,    5 செ.கு.வி.(v.i.)

   சரியில்லாமல் போதல்; to get disordered,

இயந்திரம் கொணங்கிப் போச்சு (நெல்லை);.

     [குணங்கு → கொணங்கு.]

கொணசில்

 கொணசில் koṇasil, பெ.(n.)

   கோணல்; curve.

மறுவ. கொணக்கு.

     [குணகு → கொணசில்.]

கொணட்டு-தல்

கொணட்டு-தல் koṇaṭṭudal,    5 செ.கு.வி.(v.i.)

   பகட்டுதல்; to make show.

காரியம் முடிவதற்காகச் கொணட்டுகிறான் (நெல்லை);.

     [குணட்டு → கொணட்டு.]

கொணட்டை

 கொணட்டை koṇaṭṭai, பெ.(n.)

   குறும்பு வம்பு; mischief,

     [கொணக்கு-கொணட்டை]

கொணமங்கலம்

 கொணமங்கலம் koṇamaṅgalam, பெ.(n.)

   விழுப்புரம் மாவட்டத்துச் சிற்றூர்; a village in Villuppuram Dt.

     [குண்ணல் → கொண்ணல் → கொணல் + மங்கலம்.]

கொணமணப்பிள்ளை

 கொணமணப்பிள்ளை koṇamaṇappiḷḷai, பெ.(n.)

   திருமணச் சடங்கில் பொம்மையொன்றைப் பிள்ளையாகப் பாவித்துப் பெண், மாப்பிள்ளையிடங் கொடுத்துத் திரும்பப் பெற்றுக்கொள்ளுஞ் சடங்கு; a marriage ceremony in which the bride presents the bridegroom with a doll representing a child, which he returns back to her (loc.);.

     [குழமணம் → கொணமணம் + பிள்ளை.]

கொணர்-தல்

கொணர்-தல் koṇartal,    13 செ.கு.வி. (v.i.)

   கொண்டு வருதல்; bring.

சான்றிதழ்களைக் கொணரும்படி தலைமையாசிரியர் மாணவ னிடம் கூறினார். வெளி மாநிலத் திலிருந்து சென்னை நகருக்கு குடிநீர் கொணரும் திட்டம் நிறைவேறியது.

     [கொள் – கொணர்.]

கொணலவாடி

 கொணலவாடி koṇalavāṭi, பெ.(n.)

   விழுப்புரம் மாவட்டத்துச் சிற்றூர்; a village in Villuppuram Dt.

     [குண்ணல் → கொண்ணல் + பாடி – கொண்ணப்பாடி → கொணலவாடி.]

கொணலூர்

 கொணலூர் koṇalūr, பெ.(n.)

   விழுப்புரம் மாவட்டத்துச் சிற்றூர்; a village in Villuppuram Dt.

     [குண்ணல் → கொண்ணல் + ஊர்-கொண்ணலூர் → கொணலூர்.]

கொணா-தல் (கொணர்-தல்)

கொணா-தல் (கொணர்-தல்) koṇātalkoṇartal,    13 செ.குன்றாவி.(v.t.)

   கொண்டுவருதல்; to bring.

     “அருந்தவனைக் கொணர்துமென” (கம்பரா. திருவவ. 38. நன்.160, மயிலை.);.

     [கொண்டுவா → கொணா(கொ.வ);.]

கொணாரம்

 கொணாரம் koṇāram, பெ.(n.)

   எருமையின் உக்காரம்; bellowing of a buffalo.

மறுவ முக்காரம், சிலைப்பு, உக்காரம்.

     [குணல் → குணர் → குணாரம் → கொணாரம்.]

கொணி

 கொணி koṇi, பெ.(n.)

   மரத்திலுள்ள காய், பழம் போன்றவற்றை வீழ்த்த எறியும் தடி; a stick thrown to fall fruits etc., from trees (சேரநா.);

ம. கொணி.

     [கொள் → கொண் + இ.]

கொணிகை

கொணிகை goṇigai, பெ.(n.)

   ஒருவகை வரி; a kind

 of tax.

     “திருமுக் காட்சி நல்லெருது நற்பசு கொணிகை விரிமூட்டு தறியிறை”(S.I.I.IV,415:2);.

     [கொள் → கொளிகை → கொணிகை.]

கொணிசல்

 கொணிசல் koṇical, பெ.(n.)

கோணல்:

 bend,curve (செ.அக.);.

     [கொணிசல் – பேச்சுவழக்கு.]

கொண்கன்

கொண்கன்1 koṇkaṉ, பெ.(n.)

   1. கணவன்; husband.

   2. தலைவன்; hero, leader.

   3. நெய்தனிலத் தலைவன்” (திவா.);; hero of maritime tract.

     [கொள்கு → கொண்கு + அன்.]

கொண்காகிதம்

 கொண்காகிதம் koṇkākidam, பெ.(n.)

   முயற்புல்; hare’s tail grass (சா.அக.);.

மறுவ. மூகைப்புல்.

கொண்கானம்

கொண்கானம்1 koṇkāṉam, பெ.(n.)

   மலையொன்றின் பெயர்; a name of a mountain.

     “பொன்படு கொண்கான நன்னன்’ (நற்.391); (புறநா.154,உரை);.

     [கொண்மூ (மேகம்); → கொண் + கானம்.]

 கொண்கானம்3 koṇkāṉam, பெ.(n.)

   ஒரு மலை; Mt. Konkara.

     “பொன்படு கொண்கான நன்னன்” (நற்.391);.

     [கொண்மூ (மேகம்); → கொண் + கானம்.]

கொண்கானாங்கிழான்

 கொண்கானாங்கிழான் koṇkāṉāṅkiḻāṉ, பெ.(n.)

   கொண்கான நாட்டு மன்னன்; king of konkånå-nadu.

மோசிகீரனாரால் பாடப்பட்ட கடைக் கழக மன்னன் (அபிசிந்);.

     [கொண்கானம்+கிழான்.]

கொண்ட

கொண்ட1 koṇṭa, வி.எ.(adv.)

   1. எடுக்கப்பட்ட; having taken.

   2. வாங்கப்பட்ட; received.

   3. விலைக்கு வாங்கப்பட்ட; purchased.

ம. கொண்ட.

     [கொள் → கொண் → கொண்ட.]

 கொண்ட2 koṇṭa, இடை.(part.)

   ஓர் உவமச்சொல்; a word denoting comparison.

     “யாழ்கொண்ட விமிழிசை”(கலித்.29:17);.

     [கொள் → கொண்ட.]

கொண்டகம்புகு-தல்

கொண்டகம்புகு-தல் goṇṭagambugudal, பெ.(n.)

   21 செ.கு.வி. (v.i.);

   பெருந்திணைத் துறைகளு ளொன்று; one of the themes in love poetry which explains the lust.

     “கண்டுகளித்துக் கயலுண்கண் நீர்மல்கக் கொண்டகம் புக்காள் கொடியன்னாள்” (பு.வெ.12:3);.

     [கொண் + அகம் + புகு-.]

கொண்டகரை

 கொண்டகரை goṇṭagarai, பெ.(n.)

   திருவள்ளூர் மாவட்டத்துச் சிற்றூர்; a village in Tiruvallur Dt.

     [கொண்டன் + கரை.]

கொண்டகாரிகுப்பம்

 கொண்டகாரிகுப்பம் goṇṭagāriguppam, பெ.(n.)

   காஞ்சிபுரம் மாவட்டத்துச் சிற்றுார்; a village in Kanjipuram Dt.

     [கொண்டன் + காரி + குப்பம்.]

கொண்டகி

 கொண்டகி goṇṭagi, பெ.(n.)

   நச்சுவித்துகளைக் கொண்ட மரம்; strychnos nux-vomica (சா.அக.);.

     [கள் → கண்டு → கண்டகி → கொண்டகி.]

கொண்டகுண்டம்

 கொண்டகுண்டம் goṇṭaguṇṭam, பெ.(n.)

கொண்டகி பார்க்க: see kondagi.

     [கண்டு → கண்ட + குண்டம் – கண்டகுண்டம் → கொண்டகுண்டம்.]

கொண்டகுளம்

 கொண்டகுளம் goṇṭaguḷam, பெ.(n.)

   எட்டிமரம் (மலை.);; with a piosonous and very bitter fruit.

     [கள் → கண்ட + குளம் → கொண்டகுளம்.]

கொண்டகோடி

 கொண்டகோடி koṇṭaāṭi, பெ.(n.)

   கோடி எனும் எண்ணை ஒன்றாகக் கொண்டுமிகப்பேரெண் களை எண்ணும் பழங்கால எண்ணு முறை; ancient Tamil mathematical method of counting multidigital numbers by taking one crore as a beginning number one.

     [கொண்ட+கோடி]

கொண்டக்கரை

 கொண்டக்கரை koṇṭakkarai, பெ.(n.)

சிறுகரை,

 small bund.

     [கொண்டம் + கரை.]

கொண்டக்காரண்

 கொண்டக்காரண் koṇṭakkāraṇ, பெ.(n.)

   மீன் பிடிக்கும் வலைஞரில் ஒரு வகுப்பினன் (யாழ்.அக.);; a sub-caste of fishermen community (செ.அக.);.

     [கொண்டை+காரன்.]

கொண்டக்காரர்

 கொண்டக்காரர் koṇṭakkārar, பெ.(n.)

   பரதவ இனத்தாருள் ஒரு பிரிவினர்; a sub caste of fishermen.

     [கொண்டை + காரர்.]

கொண்டக்கிரி

 கொண்டக்கிரி koṇṭakkiri, பெ.(n.)

   ஒருவகைப் பண் (யாழ்.அக.);; a kind of musical mode.

     [கொண்டைக்கிரி → கொண்டக்கிரி.]

மேகராகக் குறிஞ்சியின் ஒருவகையாகலாம்.

கொண்டக்குலாத்தி

கொண்டக்குலாத்தி koṇṭakkulātti, பெ.(n.)

கொண்டடைக் கிளர்த்தி பார்க்க;see Kondai kilartti.

     “கொண்டைக் குலாத்தியும் மாடப்புறாவும்” (குற்றா.குற. 87:2);.

     [கொண்டை + (கிளர்த்தி); குலாத்தி.]

கொண்டங்கட்டிப்பாய்ச்சு-தல்

கொண்டங்கட்டிப்பாய்ச்சு-தல் koṇṭaṅkaṭṭippāyccutal,    5 செ.கு.வி. (v.i.)

   அணை கட்டி மேட்டு நிலத்தில் நீர் பாய்ச்சுதல்; to irrigate a field on a high level by damming a river or channel and forming a small reservoir (செ.அக.);.

     [குண்டம்-கொண்டம்+கட்டி+பாய்ச்சு-தல்.]

கொண்டங்கி

 கொண்டங்கி koṇṭaṅgi, பெ.(n.)

   காஞ்சிபுரம் மாவட்டத்துச் சிற்றூர்; a village in Kanjipuram Dt.

     [கொண்டன் + அங்கி. அணங்கு → அணங்கி → அங்கி.]

கொண்டங்குறவான்

 கொண்டங்குறவான் koṇṭaṅguṟavāṉ, பெ.(n.)

   வெண்மை கலந்த சிவப்பு வரியையுடைய ஒரு வகைக் கடல்மீன்; a sea-fish with white and red stripes (சா.அக.);.

     [கண்டங்கறையன் → கொண்டங்குறவான்.]

கொண்டசமுத்திரம்

 கொண்டசமுத்திரம் koṇṭasamuttiram, பெ.(n.)

   விழுப்புரம் மாவட்டத்துச் சிற்றுார்; a village in Viluppuram Dt.

த. கடலன் → Skt. samuttiram.

     [கொண்டன் + சமுத்திரம்.]

இவ்வூரின் பழைய பெயர் கொண்டன்கடலனூர்.

கொண்டசிரம்

கொண்டசிரம் koṇṭasiram, பெ.(n.)

   1. கடற்கரையிலுள்ள தாழை; sea-weed.

   2. செந்தாழை; false tragacanth (சா.அக.);.

மறுவ. கொந்தாழை.

     [கண்டல் + சிரம் – கொண்டசிரம்.]

கொண்டச்சாணி

 கொண்டச்சாணி koṇṭaccāṇi, பெ.(n.)

   படுவங்கீரை (யாழ்.அக.);; a kind of herb (செ.அக.);.

     [கொண்டை+சாணி]

கொண்டச்சானி

 கொண்டச்சானி koṇṭaccāṉi, பெ.(n.)

   நஞ்சறுப்பான்; a medicinal creeper.

     [கண்டம் + சாலி – கண்டசாலி → கொண்டச்சானி.]

கொண்டச்சானிக்கிழங்கு

 கொண்டச்சானிக்கிழங்கு koṇṭaccāṉikkiḻṅgu, பெ.(n.)

   நஞ்சறுக்கும் கிழங்குவகை; root of above creeper.

     [கண்டம் → சாலி + கிழங்கு.]

கொண்டஞ்சேரி

 கொண்டஞ்சேரி koṇṭañjēri, பெ.(n.)

   திருவள்ளூர் மாவட்டத்துச் சிற்றூர்; a village in Tiruvallur Dt.

     [கொண்டன் + சேரி.]

கொண்டடை

கொண்டடை1 koṇḍaḍaidal,    2 செ.குன்றாவி. (v.t.)

   பகுதிபகுதியாகக் கூரைவேய்தல்; to cover the sloping roof (with Ölas); in part by part (கட்.தொ.);.

     [கொண்டு (பகுதியாகக் கொண்டு); + அடை-.]

 கொண்டடை2 koṇḍaḍai, பெ.(n.)

கூரைவேயும் போது பகுதி பகுதியாகக் கட்டப்படும் ஒரு பகுதி:

 a portion tied at the time of covering the roof with olas (கட்.தொ.);.

     [கொண்டு (பகுதியாகக் கொண்டு); + அடை.]

கொண்டதும்பை

 கொண்டதும்பை koṇṭadumbai, பெ.(n.)

   மலைத் தும்பை; stooping toombay (சா.அக.);.

மறுவ. கவிழ்தும்பை.

     [கொண்டை + தும்பை.]

கொண்டன்மார்

 கொண்டன்மார் koṇṭaṉmār, பெ.(n.)

   எதிராளிகளுடன் கைகோர்த்துச் செயல்படும் நம் பிக்கைக் கேடர்; a traitors.

     [கொண்டான்+மார்]

இரு இடத்திலும் நம்பிக்கை கொண்டவர் போல் நடிப்பவர்.

கொண்டபாகம்

கொண்டபாகம் koṇṭapākam, பெ.(n.)

   1. நிறை சுமை; full weight.

   2. பொறுக்கக்கூடிய சுமை; weight which one could bear (சா.அக.);.

     [குண்டைபாகம் → கொண்டபாகம்.]

கொண்டபாடு

கொண்டபாடு koṇṭapāṭu, பெ.(n.)

   கோட்பாடு; opinion, belief.

     ‘நெறியன்றி ஒருவர் தம்மை மனத்தின்கட் கொண்டக்கால் அக்கொண்ட பாட்டினின்றும் மீட்டுத் தெருட்டுதல்’ (பழ.37, உரை);.

     [கொண்ட + பாடு.]

கொண்டபாரம்

 கொண்டபாரம் koṇṭapāram, பெ.(n.)

நிறை சுமை: full load (யாழ்.அக.);.

     [கொள் → கொண்ட (நிறைந்த); + பாரம்.]

கொண்டபாளையம்

 கொண்டபாளையம் koṇṭapāḷaiyam, பெ.(n.)

   ஊர்ப்பெயர்; name of a place.

     [கொண்டன் + பாளையம்.]

கொண்டப்பநாயக்கன்பட்டி

 கொண்டப்பநாயக்கன்பட்டி koṇṭappanāyakkaṉpaṭṭi, பெ.(n.)

   சேலம் மாவட்டத்துச் சிற்றூர்; a village in Salem Dt.

     [கொண்டப்பன் + நாயக்கன் + பட்டி.]

கொண்டப்பனை

கொண்டப்பனை1 koṇṭappaṉai, பெ.(n.)

   பனைமடலில் தீ மூட்டும் விழா; a festival of fire using palm leaves.

மறுவ. காந்தம்பனை, கூந்தற்பனை.

     [குண்டம் → கொண்டம் + பனை.]

 கொண்டப்பனை2 koṇṭappaṉai, பெ.(n.)

   1. ஈர்ப்புப் பனை; hill arecanut palm.

   2.மலைப்பனை; hill toddy palm.

   3. குடைப்பனை; umbrella palm (சா.அக.);.

     [கொண்டை + பனை.]

கொண்டமங்கலம்

 கொண்டமங்கலம் koṇṭamaṅgalam, பெ.(n.)

   காஞ்சிபுரம் மாவட்டத்துச் சிற்றுார்; a village in Kanjipuram Dt.

     [கொண்டன் + மங்கலம்.]

கொண்டமாந்தம்

 கொண்டமாந்தம் koṇṭamāndam, பெ.(n.)

   குழந்தைகளுக்குண்டாகும் ஒருவகை மாந்த நோய்; indigestion in children due to derangement of the three humours in the system (சா.அக.);.

     [கண்டல் → கொண்டல் → கொண்ட + மாந்தம்.]

கொண்டம்

கொண்டம்1 koṇṭam, பெ.(n.)

   குறிஞ்சா; an edible and medicinal creeper.

     [குண்டம் → கொண்டம்.]

 கொண்டம்2 koṇṭam, பெ.(n.)

   மேட்டுநிலத்தில் பாய்ச்சுதற்காகத் தேக்கிய நீர்நிலை; small reservoir formed by damming a river or channel for irrigating field on a high level.

     [குண்டம் → கொண்டம்.]

 கொண்டம் koṇṭam, பெ.(n.)

கால்வாயின் குறுக்குத் தடுபபு:

 middle check in the channel.

     [கெழள்-கொண்டம்]

கொண்டம்பட்டி

 கொண்டம்பட்டி koṇṭambaṭṭi, பெ.(n.)

   கோவை மாவட்டத்துச் சிற்றூர்; a village in Kovai Dt.

     [கொண்டன் + பட்டி.]

கொண்டயனேரி

கொண்டயனேரி koṇṭayaṉēri, பெ.(n.)

   சிவகங்கை வட்டத்தில் சோழபுரம் கோயிலுக்கு வழங்கப்பட்ட ஏரி; a lake donated to the temple, at Cholapuram in Sivagangai Dt.

     “துடையனூர் முட்டத்து திருச்சேரலூரும் அமண்புரத்ததூரும் கொண்டைய னேரியும்”(S.I.I. XXVI.526);.

     [கொண்டயன் + ஏரி.]

கொண்டராங்கி கீரனூர்

 கொண்டராங்கி கீரனூர் koṇṭarāṅgiāraṉūr, பெ.(n.)

   திண்டுக்கல் மாவட்டத்துச் சிற்றூர்; a village in Dindukkal Dt.

     [கண்டீரக்கோ → கண்டிரங்கோ → கொண்டரங்கோ. கொண்டராங்கி + கீரனூர்.]

கொண்டற்கல்

 கொண்டற்கல் koṇṭaṟkal, பெ.(n.)

கொண்டற் சிலை பார்க்க;see kondar-cilai (சா.அக.);.

     [கொண்டல் + கல்.]

கொண்டற்சிலை

 கொண்டற்சிலை koṇṭaṟcilai, பெ.(n.)

   மந்தாரச் சீலை; a species of black stone (mineral); thought capable of converting camphor into copper (சா.அக.);.

     [கொண்டல் + சிலை.]

இதனால் கற்பூரம் செம்பாகும் எனக் கருதினர்.

கொண்டற்பகை

 கொண்டற்பகை goṇṭaṟpagai, பெ.(n.)

   காற்று; wind, air as enemy of clouds or rain (சா.அக.);.

     [கொண்டல் + பகை.]

கொண்டலடித்தல்

 கொண்டலடித்தல் koṇḍalaḍittal, பெ.(n.)

மகளிர் விளையாட்டிலொன்று:

 a kind of woman’s play.

     [கொண்டல் + அடித்தல்.]

கொண்டலவ்வம்

 கொண்டலவ்வம் koṇṭalavvam, பெ.(n.)

   இலவங்கப்பட்டை (சா.அக.);; wild cinnamon, cassia lignia or cassia bark.

     [கொண்டை + இலவங்கம் – கொண்டையிலவங்கம் → கொண்டலவ்வம்.]

கொண்டலாங்குப்பம்

 கொண்டலாங்குப்பம் koṇṭalāṅguppam, பெ.(n.)

   விழுப்புரம் மாவட்டத்துச் சிற்றூர்; a village in Villuppuram Dt.

     [கொண்டலான் + குப்பம்.]

கொண்டலாத்தி

கொண்டலாத்தி1 koṇṭalātti, பெ.(n.)

   1. கொண்டையை அசைக்கும் ஒரு குருவி; கொண்டலாத்தி

 mountain bulbul with crest erected at will.

   2. சிவப்புக் கொண்டலாத்தி; red-whiskered bulbul.

   3. கொண்டைக் குருவி; crested bird.

   4. புழுக்கொத்தி; a large kind of crested bird (சா.அக.);.

     [கொண்டை + கிளாறு → கொண்டைலாறு → கொண்டலாத்தி (கொ.வ.);.]

 கொண்டலாத்தி2 koṇṭalātti, பெ.(n.)

   கொண்டைக் கிளாத்தி என்னும் மீன்வகை; a kind of fish.

   ம. கொண்டலாத்த;தெ. கொண்டலாடி.

     [கொண்டை + (கிளர்த்தி); லாத்தி→கொண்டைலாத்தி → கொண்டலாத்தி (கொ.வ.);.]

கொண்டலாத்திக்குருவி

 கொண்டலாத்திக்குருவி koṇṭalāttikkuruvi, பெ. (n.)

   மீன்குத்திப் பறவையினத்தைச் ஒரு பறவை; a bird, which main pray is fish.

     [P]

     [கொண்டை+ஆலாத்தி+குருவி]

இதன் தலையில் அழகிய கொண்டை ஒன்று உண்டு. அந்தக் கொண்டையை அது களிப் படைந்திருக்கையில் விரித்தும், குவித்தும் விளையாடும். இது செம்மை கலந்த மஞ்சள் நிறமுள்ளது. இதன் தோகையிலும், இறக்கையிலும் வெண்மையான வரிகளுமுடையது. மரங்களிலும், நிலத்திலும் பூச்சிப்புழுக்களைத் தோண்டியுண்ணுமாறு இதன் மூக்கு நீண்டுடிருக்கும். இது கோடை காலத்தில் நீண்ட தூரம் பயணம் செய்து மழைக் காலத்தில் திரும்பும் தன்மையது (அபி.சிந்);.

கொண்டலுப்பு

 கொண்டலுப்பு koṇṭaluppu, பெ.(n.)

   கறுப்புப்பு; black salt (சா.அக.);.

     [கொண்டல் + உப்பு.]

கொண்டலை

கொண்டலை koṇṭalai, பெ.(n.)

   1. கொண்டல் மரம்; sea side Indian oak.

   2. சமுத்திரக் கடம்பு பார்க்க;see samuttira-k-kadambu.

     [கொண்டல் → கொண்டலை.]

கொண்டல்

கொண்டல்1 koṇṭal, பெ.(n.)

   1.கொள்ளுகை; taking.

     “உணங்கற் றலையிற் பலிகொண்ட லென்னே”(தேவா. 614:5);

   2. மேகம் (இ.வ.);; cloud.

     “கொண்டல் வண்ணா குடக்கூத்தா” (திவ். திருவாய்,8:5,6);

   3. மழை (ஞான. 43:14, உரை);; rain.

   4. மேழவோரை, மேடராசி (சாதகசிந். காலநிக. 24);; aries a constellation of the zodiac.

   5. கொண்டற்கல் பார்க்க;see kondar-kall(சங்.அக.);.

   6. மகளிர் விளையாட்டுவகை; a girls’ game.

     [கொள் → கொண்டு → கொண்டல்.]

 கொண்டல்2 koṇṭal, பெ.(n.)

   1. கீழ்காற்று (இ.வ.);; east wind.

     “கொண்டன்மாமழை பொழிந்த….. துளி” (புறநா. 34:22);.

   2. காற்று (பிங்; wind.

   3. கிழக்கு; east.

     [குள் → குணக்கு (கிழக்கு); → குண்டல் → கொண்டல்.]

 கொண்டல்3 koṇṭal, பெ.(n.)

   1. மந்தாரச்சிலை; black – stone species (mineral);.

   2. நெருப்பு; fire (சா.அக.);.

     [கொள் → கொண்டு → கொண்டல்.]

நீரை முகந்துகொள்வதால் மேகத்தையும் எதையும் பற்றிக்கொள்வதால் தீயையும் குறித்தது.

கொண்டல் மிதி-த்தல்

கொண்டல் மிதி-த்தல் koṇṭalmididdal,    4 செ. குன்றாவி (v.t.)

   தீ மிதித்தல்; fire walking (யாழ்.அக.);.

     [கொண்ட + மிதி. கொண்டல் : நெருப்பு.. கொண்டல்3 பார்க்க;see kordal3.]

கொண்டல்தொவகரை

கொண்டல்தொவகரை goṇṭaltovagarai, பெ.(n.)

கிழக்கிலிருந்து மேற்காய்ச் செல்லும் கடல்

   நீரோட்டம்; under water current in sea which passes from east to west (மீன்.பிடி.தொ.);.

     [கொண்டல்2 → (தொகுவரை); தொவகரை (கொ.வ.);.]

கொண்டல்நீர்

 கொண்டல்நீர் koṇṭalnīr, பெ.(n.)

   கிழக்கிலிருந்து மேற்காய் வரும் கடல்நீரோட்டம்; under water current in sea that passes from east to west (மீன்.பிடி.தொ.);. [கொண்டல் + நீர்.]

கொண்டல்மேகம்

 கொண்டல்மேகம் koṇṭalmēkam, பெ.(n.)

   கொண்டற் சிலை; a species of black Stone.

     [கொண்டல்+மேகம்]

இதனால் கற்பூரம் செம்பாகும் (சா.அக.);.

கொண்டல்மேனி

 கொண்டல்மேனி koṇṭalmēṉi, பெ.(n.)

   நீலத் தாமரை; blue lotus (சா.அக.);.

     [கொண்டல் + மேனி.]

கொண்டல்வண்ணன்

கொண்டல்வண்ணன் koṇṭalvaṇṇaṉ, பெ.(n.)

   மேகநிறமுடையவன்; Visnu as the cloud-coloured.

     “கொண்டல் வண்ணனை” (திவ். அமலனாதி.10);.

     [கொண்டல் + வண்ணன்.]

கொண்டவன்

கொண்டவன் koṇṭavaṉ, பெ.(n.)

   1. பொருளைப் பெற்றுக் கொண்டவன்; one who receives the material.

   2. கணவன்; husband.

கொண்டவன் தன்பக்கம் இருந்தால் கூரையேறிச் சண்டையிடலாம் (பழ);.

   ம. கொண்டவன்;பட. கொண்டம.

     [கொள் → கொண்டு → கொண்டவன்.]

கொண்டவன் கொடுத்தவன்

 கொண்டவன் கொடுத்தவன் koṇḍavaṉkoḍuttavaṉ, பெ.(n.)

கொண்டான் கொடுத்தான் பார்க்க;see kondān-koduttãn.

     [கொண்டவன் + கொடுத்தவன்.]

கொண்டவலை

 கொண்டவலை koṇṭavalai, பெ.(n.)

கொண்டை வலை பார்க்க;see kondai-valai.

மறுவ. இருவலை.

     [கொண்டை → கொண்டவலை (கொ.வ.);.]

கொண்டவாகை

 கொண்டவாகை koṇṭavākai, பெ.(n.)

கொண்டைவாகை பார்க்க;see kondai-vagi.

     [கொண்டைவாகை → கொண்டவாகை (கொ.வ);.]

கொண்டவாக்கம்

 கொண்டவாக்கம் koṇṭavākkam, பெ.(n.)

   காஞ்சிபுரம் மாவட்டத்துச் சிற்றுார்; a village in Kanjipuram Dt.

     [கொண்டன் + (பாக்கம்); வாக்கம்.]

கொண்டா

கொண்டா koṇṭā, பெ.(n.)

   ஆந்திரப்பிரதேசம் விசாகப்பட்டிணம், திரு (ஶ்ரீ);காகுளம் மாவட்டங்களில் 40000 பழங்குடிமக்கள் பேசும் திராவிட மொழி. கூயி, கூவி மொழிகளுடன் தொடர்புடையது; a Dravidian language spoken by tribals in Višakapattinam, Srikakulam districts of Andhra Pradesh.

     [குன்று → தெ கொண்டா(மலை, மலைவாழ்மக்களின் மொழி.]

இந்தக்”கொண்டா” மொழிபற்றிக் காண்க:

 Sanford B. Steever(Ed.); The Dravidian Languages;

   1998. London, Routledge see Ch.1X (pp.241-269);:

     “Konda” by Bh. Krishnamurthi and Brett A. Bentham.

கொண்டாச்சான்

கொண்டாச்சான் koṇṭāccāṉ, பெ.(n.)

ஒட்டை lasto Lmit55;see offai-maram.

 |குண்டு கொண்டு ஆச்சான்)

கொண்டாடல்

கொண்டாடல் koṇṭāṭal, பெ.(n.)

   1. கொண்டாடுதல்; celebrate.

   2. பேயாடல்; dancing through the influence of devils (சா.அக.);.

     [கொண்டு + ஆடல்.]

கொண்டாடு-தல்

கொண்டாடு-தல் koṇṭāṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. கூடிக்குலவுதல்; to enjoy a person’s society.

   2.பாராட்டுதல் (இ.வ.);; to praise.

     “கொண்டாடுதல் புரியாவரு தக்கன்” (தேவா.908:9);.

   3. விழா முதலியன கொண்டாடுதல்; celebrating a festival.

   4. பலர் அறியும்படி தெரிவித்தல்; claim;

சொத்துக்கு உரிமை கொண்டாட வந்துவிட்டான் (உ.வ.);.

   ம. கொண்டாடுக;க.,தெ.,து.கொண்டாடு: துட. கொண்டார். [கொண்டு + ஆடு.]

கொண்டாட்டக்காரன்

கொண்டாட்டக்காரன் kongata-k-karam, பெ.(n)

   1. மகிழ்ச்சியுள்ளவன்; cheerful man,

   2. தோழன்; companion.

     [கொண்டாட்டம் + காரன்.]

கொண்டாட்டம்

கொண்டாட்டம்1 koṇṭāṭṭam, பெ.(n.)

   1.பொழுது போக்கு; pastime.

   2. சிறப்பு நிகழ்ச்சி; celebration.

விடுதலைநாள் கொண்டாட்டம்.

   3. திருவிழா; festival.

கடை கெட்ட மூளிக்குக் கோபம் கொண்டாட்டம் (பழ);.

   ம. கொண்டாட்டம்;   க., து. கொண்டாட;தெ. கொண்டாடமு.

     [கொள் → கொண் → கொண்டு + ஆட்டம் ஆடு → ஆட்டம். (எதையேனும் கையில் கொண்டு அல்லது வெற்றி கொண்டு ஆடுதல்);.]

 கொண்டாட்டம்2 koṇṭāṭṭam, பெ.(n.)

   1. கொண்டாட்டு; joy.

     ‘காதலன் கொண்டாட்டத்தாலே களித்து'(சீவக. 229,உரை);.

   2. களிப்பு; delight.

     [கொண்டு + ஆட்டம்.]

மகிழ்ச்சிக்குரிய இனிய நினைவை அல்லது நிகழ்ச்சியை மனத்துட் கொண்டு ஆடுதல். ஒன்றனை அல்லது ஒருவரைத் தலைமேற் கொண்டு ஆடுதல்.

கொண்டாட்டு

கொண்டாட்டு koṇṭāṭṭu, பெ.(n.)

   1. கொள்கை; policy.

   2. சீராட்டு; civilities, great attention to a guest.

   3.பாரட்டல்; praise, appreciation, fond ling. Caressing.

     “கொண்டாட்டும் குலம்புனைவும்” (திவ்.திருவாய்.4,9:3);.

     [கொண்டு + ஆட்டு.]

கொண்டானடி-த்தல்

கொண்டானடி-த்தல் koṇḍāṉaḍittal,    4 செ.கு.வி. (v.i.)

   மகிழ்ச்சியால் தடுத்தாடுதல்; to dance in merriment.

     “பேயெழும்பி யெழும்பிக் கொண்டானடிக்க” (இராமநா. உயுத்.78);.

     [கொண்டான் + அடி-.]

கொண்டானடித்தல்

 கொண்டானடித்தல் koṇḍāṉaḍittal, பெ.(n.)

   ஒருவகை விளையாட்டு; a kind of game.

     “கொண்டனடிக்கிறாக்” (நந்தனார் சரித்திரம்);.

     [கொண்டான் + அடித்தல்.]

கொண்டான்

கொண்டான்1 koṇṭāṉ, பெ.(n.)

   1.கொண்டவன் பார்க்க (இ.வ.);;see kondavan.

     “கொண்டானிற்றுன்னிய கேளிர் பிறரில்லை” (நான்மணி.56);.

   2. கொண்டல் பார்க்க;see kondal.

   3. ஒரு விளையாட்டு; a kind of play.

     [கொண்டவன் → கொண்டான்.]

 கொண்டான்2 koṇṭāṉ, பெ.(n.)

   தமிழை இழித்துக்கூறிய குயக்கொண்டான்; kuya-k-köndan, who under estimated Tamil by making false remarks.

     [குயக்கொண்டான் → கொண்டான் (முதற்குறை); கொண்டான்மார் பார்க்க;see kondanmar.]

கொண்டான்கொடுத்தான்

 கொண்டான்கொடுத்தான் koṇḍāṉkoḍuttāṉ, பெ.(n.)

   கொண்டுங் கொடுத்தும் மணத்தொடர்பு செய்தோர்; persons who have entered into matrimonial alliance by the marriage of their sons and daughters in exchange.

மறுவ விழைவர் (சம்பந்தி);, உறவாடி.

     [கொண்டவன் + கொடுத்தவன் → கொண்டான் கொடுத்தான்.]

   பழ: ‘கொண்டானும் கொடுத்தானும் ஒண்ணு;இந்தக் கலியாணத்தைக் கூட்டி வைத்தவன் வாயில் மண்ணு’.

கொண்டான்மார்

கொண்டான்மார் koṇṭāṉmār, பெ.(n.)

   1. காட்டிக் கொடுப்பவர்;   இரண்டகர்; traitors.

   2. நம்பவைத்து ஏய்ப்பவர்கள்; cheats, deceivers.

   3. இரண்டகம் சேய்வோர்; betrayers;

 treacherous people.

மறுவ.ஐந்தாம்படை, இரண்டகர், காட்டிக்கொடுப்பவர்,

கோடரிக்காம்பு, கருங்காலி.

     [குயக்கொண்டான் → கொண்டான் + மார் – கொண்டான்மார் (முதற்குறை);.]

குயக்கொண்டான் என்பவன் தமிழனாய் இருந்தும் தமிழ்மீதும் தமிழினத்தின் மீதும் சிறிதும் பற்றும் பரிவும் இல்லாமலும் தமிழ் வரலாறு தமிழர் வரலாறு ஆகியவற்றின் உண்மை நிலைகளை யுணராமலும் ”’ஆரியம் நன்று தமிழ் தீது” என முற்றிலும் வேண்டுமென்றே உண்மைக்குப் புறம்பாகத் தமிழைத் தாழ்த்தியுரைத்தான். தமிழுக்கும் தமிழினத்துக்கும் இரண்டகம் செய்தான். நன்றி கெட்ட இவன் பெயரை, நன்றி கெட்டுத் தன்னினத்தைத் தானே காட்டிக் கொடுக்கும் அனைவர்க்கும் ஆள்வது வழக்கமாயிற்று. இவன் ஒரு குயக்கொண்டான் என்றும் பேசலாயினர். இதன் பலர்பால் வடிவம் கொண்டான்மார்.

குயக்கொண்டானின் இழிசெயலை,

     “ஆரியம் நன்று தமிழ்தீது என்றுரைத்த காரியத்தாற் காலக்கோட் பட்டானை”

என்னும் வெண்பாவாலும் அறியலாம்.

கொண்டாபுரம்

 கொண்டாபுரம் koṇṭāpuram, பெ.(n.)

   திருவள்ளூர் மாவட்டத்துச் சிற்றூர்; a village in Tiruvallur Dt.

     [கொண்டான் + புரம்.]

கொண்டாரணியம்

 கொண்டாரணியம் koṇṭāraṇiyam, பெ.(n.)

   நுழைய முடியாத பெருங்காடு; thick impenetrable forest.

     “கொண்டாரணியமான இடம்”.

     [கள் → (முள்); → கண்டு → கொண்டு + ஆரணியம். ஆரணியம் : காடு → அரண் → அரணியம் → ஆரணியம்.]

கொண்டாழி

கொண்டாழி koṇṭāḻi, பெ.(n.)

   நிலத்தின் பெயர்; name of a land.

இறையிழிச்சின நிலம் தேவதானம் கொண்டாழி என்னும் பழம்படி நிலம் ஐஞ்சும் (S.I.I. XXII, 389);.

     [ஒருகா. கொண்டன் + வாழி.]

கொண்டி

கொண்டி1 koṇṭi, பெ.(n.)

   1.பிறர் பொருளைக் கொள்ளுகை; getting possession of somebody else’s property

     “நெஞ்சு நடுக்குறூஉக் கொண்டி மகளிர்” (மதுரைக்.583);.

   2. களவு; theft.

     “கொண்டி யிலே பிடியுண்டு” (ஈடு.7,7:2);.

   3. கொள்ளை; plunder

     “கொண்டியும் பெரிதென”(புறநா.78:6.);.

   ம. கொண்டி,கொள்ள;   க.கொள்ளெ;தெ.கொல்ல.

     [கொள் → கொண் → கொண்டி (வே.க.166);.]

 கொண்டி2 koṇṭi, பெ.(n.)

   கப்பம்; tribute.

     “கொண்டி வேண்டுவ னாயின்”(புறநா.51.6);.

மறுவ திறை.

     [கொள் → கொண்டி (வே.க.199);.]

 கொண்டி3 koṇṭi, பெ.(n.)

   1. மிகுதி; abundance.

     “கொண்டி யுண்டித் தொண்டையோர்” (பெரும்பாண்.454);.

   2. அடங்காத-வன்-வள்-து; haughty person or animal.

     “கொண்டி யாயினவா றென்றன் கோதையே” (தேவா.710:73.);.

   3. பரத்தை; prostitute.

     “வீழ்ந்த கொண்டி மல்லன் மார்புமடுத்தனள்”(நற்.174);.

தெ. கொண்டி.

     [கொள் → கொண்டி.]

 கொண்டி4 koṇṭi, பெ.(n.)

   1. கதவுக் குடுமி; corner pin of a door on which it swings.

   2. சங்கிலி மாட்டும் இரும்பு; clamp, cleat of a door lock.

   3. ஏர்க்கொழு மாட்டும் ஆணி; the pin that holds the share to the plough.

   4. கொக்கி; a hook.

   5. கழுத்தணி, வளையல் போன்றவற்றில் இணைக்கும் வளைந்த பகுதி; the clasp or hook of a chain or bracelet.

   க., தெ., து., பட. கெண்டி;பர். கொண்டு.

     [கொள் → கொண்டி.]

 கொண்டி5 koṇṭi, பெ.(n.)

   ஒருவகை மகளிர் விளையாட்டு; a kind of play of girls.

     [கொண்டல் → கொண்டி.]

 கொண்டி6 koṇṭi, பெ.(n.)

   உணவு; food.

     “கட்கொண்டிக் குடிப்பாக்கத்து”(மதுரைக்.137);.

     [கொள் → கொண்டி.]

 கொண்டி7 koṇṭi, பெ.(n.)

   1. மனவருத்தம்; grievance.

உனக்கு அவன்மீது என்ன கொண்டி? இப்படிப் பேசுகிறாயே?

   2. பகைமை; ill-feeling.

கொண்டியினால் ஒன்றுங் கூறவில்லை.

   3. புறங்கூறுகை; tale-bearing, back-biting.

     [கொண்டியம் → கொண்டி.]

 கொண்டி koṇṭi, பெ.(n.)

   சிறைச்சாலை; prison, jail.

அவனை கொண்டியில் அடைத்துவிட் டார்கள்.(இ.வ.);

     [கொள்+கொண்டி]

கொண்டி மகளிர்

 கொண்டி மகளிர் goṇṭimagaḷir, பெ.(n.)

   பகை நாட்டில் சிறைப்பிடித்து வரப்பட்ட மகளிர்; captured women of defeated country.

     [கொள்-கொண்டி-மகளிர்]

கொண்டிக்கடுக்கன்

 கொண்டிக்கடுக்கன் koṇḍikkaḍukkaṉ, பெ.(n.)

   காதணிவகை; a kind of ear-ring.

     [கொண்டி + கடுக்கன்.]

கொண்டிக்கதவு

 கொண்டிக்கதவு koṇṭikkadavu, பெ.(n.)

   குடுமிக்கதவு; door that turns on projecting pins at the corners.

     [கொண்டி + கதவு.]

கொண்டிக்கல்

 கொண்டிக்கல் koṇṭikkal, பெ.(n.)

   தாழ்வாரம் அமைக்கச் சுவரில் பொருத்தப்படும் கல்; a stone fixed to the wall to form a sloped roof (சா.அக.);.

     [கொண்டி + கல்.]

கொண்டிக்காரன்பட்டி

 கொண்டிக்காரன்பட்டி koṇṭikkāraṉpaṭṭi, பெ.(n.)

   தேனி மாவட்டத்துச் சிற்றூர்; a village in Theni Dt.

     [கொண்டிக்காரன் + பட்டி.]

கொண்டிக்காவல்

 கொண்டிக்காவல் koṇṭikkāval, பெ.(n.)

   ஊர்ப்பொதுவிலிருந்து புன்செய் புறம்போக்குகளுக்குப் போடப்படும் காவல்; a guarding system for the dry waste land of the village for which expenses are met by it own fund.

     [கொண்டி + காவல்.]

கொண்டி என்பது பகைவர் நாட்டிலிருந்து கொள்ளையடித்து வந்த பொருள்களைக் குறிக்கும். அவற்றைக் காப்பது பொதுக்கடமையானது போன்று ஊர்ப்பொது நிலதைக்காப்பதும் அதே சொல்லால் அழைக்கப்படுவதாயிற்று.

கொண்டிசொல்(லு)-தல்

கொண்டிசொல்(லு)-தல் koṇṭisolludal,    8 செ. குன்றாவி.(v.t.)

கொண்டிபேசு-தல் பார்க்க;see kondi-p-pesu-.

     [கொண்டி + சொல்(லு);-.]

கொண்டிச்செட்டிப்பட்டி

 கொண்டிச்செட்டிப்பட்டி koṇṭicceṭṭippaṭṭi, பெ.(n.)

   நாமக்கல் மாவட்டத்துச் சிற்றுார்; a village in Namakkal Dt.

     [கொண்டி + செட்டி + பட்டி.]

கொண்டித்தனம்

 கொண்டித்தனம் koṇṭittaṉam, பெ.(n.)

   அடங்காத தன்மை; insubordination.

     [கொண்டி + தனம்.]

கொண்டித்தாழ்ப்பாள்

 கொண்டித்தாழ்ப்பாள் koṇṭittāḻppāḷ, பெ.(n.)

   கதவுப் பலகையின் துளையில் சட்டத்திலுள்ள வளையம் நுழையுமாறு அமைக்கப்பட்டு அதில் கொக்கி போன்ற தாழ்ப்பாள் நுழையுமாறு அமைந்த கொக்கித்தாழ்ப்பாள்; hooked lever fixed on the door to shut by hook pattern.

     [கொண்டி+தாழ்ப்பாள்]

கொண்டித்தொட்டி

 கொண்டித்தொட்டி koṇṭittoṭṭi, பெ.(n.)

கொண்டித்தொழு பார்க்க;see kondit-t-tolu.

     [கொண்டி + தொட்டி.]

கொண்டித்தொழு

 கொண்டித்தொழு koṇṭittoḻu, பெ.(n.)

   பட்டிமாட்டை அடைக்குந் தொழுவம்; cattlepound (செ.அக.);.

     [கொண்டி+தொழு]

கொண்டின்னி

 கொண்டின்னி koṇṭiṉṉi, பெ.(n.)

   தும்பை (சங்.அக.);; black gaub.

     [கொண்டி – தேள்கொடுக்கு, நஞ்சு, கொண்டி + தின்னி (நஞ்சு முறிப்பது);.]

கொண்டிபேசு-தல்

கொண்டிபேசு-தல் koṇṭipēcudal,    5 செ. குன்றாவி. (v.t.)

   1. பகைமையால் கொடுமை பேசுதல்; speak ill of any one out of ill-feeling.

   2. கோட்சொல்லுதல்; to tell tales.

   3. குறை கூறுதல்; to point out one’s defect.

   4. குற்றம் சுமத்திப் பேசுதல்; to accuse.

 |கொண்டி + பேசு-.]

கொண்டிப்பணம்

 கொண்டிப்பணம் koṇṭippaṇam, பெ.(n.)

   ஆடுமாடுகள் பட்டி மேய்தலுக்கு இடும் தண்டம்; fine imposed for graying cattle in prohibited area (வின்.);.

     [கொண்டி + பணம்.]

கொண்டிப்பாறை

 கொண்டிப்பாறை koṇṭippāṟai, பெ.(n.)

   ஒருவகை மீன்; a kind of fish.

     [கொண்டி + பாறை.]

கொண்டிமகளிர்

கொண்டிமகளிர் goṇṭimagaḷir, பெ.(n.)

   1.சிறை பிடிக்கப்பட்ட மகளிர் (இ.வ.);; captive women.

     “கொண்டி மகளி ருண்டுறை மூழ்கி” (பட்டினப். 246);.

   2. பரத்தையர் (இ.வ.);; prostitutes.

     “வண்டிற்றுறக்குங் கொண்டி மகளிரை” (மணிமே. 18:109);.

     [கொண்டி + மகளிர்.]

கொண்டிமாடு

 கொண்டிமாடு koṇṭimāṭu, பெ.(n.)

   பட்டிமாடு; stray cattle.

     [கொண்டி + மாடு.]

கொண்டிமுளை

 கொண்டிமுளை koṇṭimuḷai, பெ.(n.)

கதவு நிலைகளில் தொடர் வளையத்தால்மாட்டுமாறு பொருத்தப்பட்டிருக்கும் வளை அமைப்பு

 iron chain fixed between door and frame to lock,

கொண்டி முளையை இழுத்து மாட்டி பூட்டுபோடு.(இ.வ.);

     [கொண்டி+முளை]

கொண்டிமேய்-தல்

கொண்டிமேய்-தல் koṇṭimēytal,    2 செ.கு.வி.(v.i.)

   பட்டி மேய்தல்; to graze stealthily in prohibited arеаs.

     [கொண்டி + மேய்-.]

கொண்டியம்

கொண்டியம் koṇṭiyam, பெ.(n.)

   1. குறளை; calumny, back – biting (பிங்.);

   2.புறங்கூறல்; asperse, slander.

   3.பொய்ச்சொல்; falsehood, lie.

   க. கொண்டெய;தெ. கொண்டெமு.

     [கொள் → கொண்டி (வளைவு); → கொண்டியம்.]

கொண்டியாரம்

கொண்டியாரம் koṇṭiyāram, பெ.(n.)

   1. நிந்தை மொழி; invective.

   2 பிறர் செயலில் தலையிடுகை; meddling.

   3. செருக்கு; haughtiness.

   4. சிறப்பு; elegance.

   ம.கொண்டியாரம்;   க. கொண்டய;தெ. கொண்டெமு.

     [கொண்டி + ஆரம் (சொல்லாக்க ஈறு);.]

கொண்டியோட்டி

கொண்டியோட்டி koṇṭiyōṭṭi, பெ.(n.)

   கொண்டித் தொழுவுக்குப் பட்டிமாட்டைச் செலுத்துவோன்;     (G.T.D.i.241); impounder of stray cattle.

     [கொண்டி + ஒட்டி.]

கொண்டிரு-த்தல்

கொண்டிரு-த்தல் koṇṭiruttal,    5 செ.கு.வி. (v.i.)

   தோற்றம், நடத்தை முதலியவற்றில் ஒருவரைப் போலிருத்தல் ஒத்திருத்தல்; look like; take after.

குழந்தை யாரைக் கொண்டிருக்கிறது? அப்பாவையா? அம்மாவையா? (இ.வ.);.

     [கொண்டு+இரு-த்தல்.]

 கொண்டிரு-த்தல் koṇṭiruttal,    2 செ.குன்றாவி (v.t.)

   ஒத்திருத்தல்; look like.

குழந்தை யாரைக் கொண்டிருக்கிறது அம்மாவையா? அப்பாவையா? (உ.வ.);.

     [கொண்டு + இரு-.]

கொண்டிலாத்தி

 கொண்டிலாத்தி koṇṭilātti, பெ.(n.)

கொண்டலாத்தி பார்க்க;see kondalätti.

மறுவ. கொண்டைக் கிளர்த்தி, கொண்டிலான்.

     [கொண்டைலாத்தி → கொண்டலாத்தி → கொண்டிலாத்தி (கொ.வ.);.]

கொண்டிலான்

 கொண்டிலான் koṇṭilāṉ, பெ.(n.)

கொண்டலாத்தி பார்க்க;see kondalatti.

   ம. கொண்டிலான்;தெ. கொண்டலாடி.

     [கொண்டை → கொண்டில் + ஆன்.]

கொண்டு

கொண்டு1 koṇṭu, பெ.(n.)

   1. முதல்; from beginning with.

     “அடியிற்கொண்டு முடிகாறும்” (இறை. 3:45);.

   2. குறித்து (இ.வ.);; towards, in the direction of.

     “குடதிசைக் கொண்டு” (சிலப்.10:34);.

     [கொள் → கொண்டு.]

 கொண்டு2 koṇṭu, இடை.(part.)

   1. மூன்றாம் வேற்றுமைச் சொல்லுருபு (பி.வி.6, உரை);; a sign of the instrumental case.

வாள்கொண்டு மரத்தை அறுத்தார்கள்.

   2. அசைநிலை; expletive.

     “எனக்குமுன் றனக்குங் கொண்டு” (திருவிளை. நரிபரி. 83);.

ம, து. கொண்டு.

     [கொள் → கொண்டு.]

கொண்டுகடவோம்

கொண்டுகடவோம் goṇḍugaḍavōm, வி. (v.)

   கைக்கொண்டு செலுத்துவோம்; to pay at own risk.

     “இப் பொன்கொண்டு கடவோம்” (தெ.கல் தொ.12. கல்.71);.

     [கொள் → கொண்டு + கடவு + ஒம் (ஒம் : தன்மைப் பன்மை ஈறு);.]

கொண்டுகட்டுப்பொருள்கோள்

கொண்டுகட்டுப்பொருள்கோள் koṇṭukaṭṭupporuḷāḷ, பெ.(n.)

செய்யுளில் பலவடியிலும் தொடுக்கப்பட்டச் சொற்களைப் பொருளுக்குத் தக்கபடி கூட்டிப் பொருள்

 Glasm sirs so; mode of constructing a stanza in which words are appropriatly transposed to arrive at the proper meaning, one of eight.

கோப்பு மொழிகளை ஏற்புழியிசைப்பது கொண்டு கூட்டே (நன்.418);.

     [கொண்டு+கூட்டு+பொருள்கோள்.]

கொண்டுகட்டுவணிகம்

 கொண்டுகட்டுவணிகம் goṇṭugaṭṭuvaṇigam, பெ.(n.)

   பண்டங்களை மலிந்தபோது வாங்கிக் கட்டி, விலையேறின காலத்தில் விற்கை; trading in articles bought cheap in retail and stored up awaiting a favourable market.

     [கொண்டு + கட்டு + வணிகம்.]

கொண்டுகட்டுவியாபாரம்

 கொண்டுகட்டுவியாபாரம் koṇṭukaṭṭuviyāpāram, பெ.(n.)

   பொருட்களின் விலை குறைவான போது கொஞ்சம் கொஞ்சமாக் வாங்கி விலையேறின காலத்தில் விற்கை; trading a articles bought cheap in retail and stored up awaiting a favourable market (செ.அக.);.

     [கொண்டு+கட்டு Skt. வியாபாரம்]

கொண்டுகண்மாறு-தல்

கொண்டுகண்மாறு-தல் goṇṭugaṇmāṟudal,    5 செ.குன்றாவி (v.t.)

   நட்புக்கொண்டு புறக்கணித்தல் (இ.வ.);; to make friends and then ignore.

     “கொண்டுகண் மாறல் கொடுமையிற் றுவ்வாது” (முது காஞ்.37);.

     [கொண்டு + கண் + மாறு.]

கொண்டுகூட்டல்

 கொண்டுகூட்டல் koṇṭuāṭṭal, பெ.(n.)

   மருந்துப்பொருள்களை நன்கு அறிந்து அதன் பின் பயன்படுத்துதல் அல்லது சேர்த்தல்; using or mixing up ingredients after studying the drug well (சா.அக.);.

     [கொண்டு + கூட்டல்.]

கொண்டுகூட்டு

கொண்டுகூட்டு koṇṭuāṭṭu, பெ.(n.)

   1. எண் வகைப் பொருள்கோளுள் செய்யுளின் அடிகள் பலவற்றிலும் உள்ள சொற்களைப் பொருளுக்கு ஏற்றவிடத்தில் எடுத்துக் கூட்டிப் பொருள் கொள்ளு முறை; mode of construing a stanza in which words are appropriately transposed to arrive at the proper meaning, one of eight poru!-k-ol

     “கோப்புடை மொழிகளை ஏற்புழி யிசைப்பது கொண்டு கூட்டே” (நன். 418);.

   2. உடன்படு; accept.

     [கொண்டு + கூட்டு.]

தெங்கங்காய் போலத் திரண்டுருண்ட பைங்கூந்தல்

வெண்கோழி முட்டை யுடைத்தன்னை மாமேனி

யஞ்சனத் தன்ன பசலை தணிவாமே

வங்கத்துச் சென்றார் வரின்

என்னும் பாடலுள் வங்கத்துச் சென்றார்வரின், அஞ்சனத்தன்ன பைங்கூந்தல் உடையானது மாமேனி மேல் தெங்கங்காய் போலத் திரண்டுருண்ட கோழி வெண் முட்டை யுடைத்தன்ன பசலை தணிவாம் எனக் கூட்டுவது கொண்டுகூட்டாம்.

கொண்டுகூற்று

கொண்டுகூற்று koṇṭuāṟṟu, பெ.(n.)

   அயலார் நேரிற் சொல்வதாகக் கூறும் மொழி (இ.வ.);; direct speech.

     ‘கொண்டுகூற்றாகக் கூறப்படுவனவும்’ (தொல்.பொருள்.115, உரை);.

     [கொண்டு + கூற்று.]

கொண்டுகொடு-த்தல்

கொண்டுகொடு-த்தல் goṇḍugoḍuttal, பெ.(n.)

   4 செ. குன்றாவி.(v.t.);

   பெண்ணைக் கொண்டுங் கொடுத்தும் மணவுறவு கொள்ளுதல்; to give and take in marriage as a girl.

கொண்டுகொடுப்பனை

 கொண்டுகொடுப்பனை goṇḍugoḍuppaṉai, பெ.(n.)

   பெண்ணைக் கொண்டுங் கொடுத்துஞ் செய்யும் திருமண வுறவு; giving and taking a girl in marriage in exchange,.

மறுவ. எதிர்பெண்.

     [கொண்டு + கொடுப்பனை.]

கொண்டுகொடுப்பு

 கொண்டுகொடுப்பு goṇḍugoḍuppu, பெ.(n.)

கொண்டு கொடுப்பனை பார்க்கவும்;see kondu-. Koduppanai.

     [கொண்டு + கொடுப்பு.]

கொண்டுசெலுத்து-தல்

கொண்டுசெலுத்து-தல் koṇṭuseluddudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. தடைபல கடந்து செயலை முடிவுவரை நடத்துதல்; carry to completion though with difficulty, to succeed against odds.

   2. ஆளுவம் செய்தல் (நிருவகித்தல்);; to be able to manage.

     [கொண்டு + செலுத்து-.]

கொண்டுசெல்(லு)-தல்

கொண்டுசெல்(லு)-தல் koṇṭucellutal,    13 செ.கு.வி.(v.i.)

   ஆளுமை செய்தல் (நிர்வகித்தல்);; to be able to manage.

எனக்கு இனிமேற் கொண்டு செல்லாது (செஅக);.

     [கொண்டு+செல்லு)-தல்.]

கொண்டுணி

 கொண்டுணி koṇṭuṇi, பெ.(n.)

   கோட் சொல்வோன்; slanderer.

மறுவ.குண்டுணி.

     [கொள் → கோள் → கொண்டு → கொண்டுணி.]

கொண்டுதலைக்கழிதல்

 கொண்டுதலைக்கழிதல் koṇṭudalaikkaḻidal, பெ.(n.)

   தலைவன் தலைவியை உடன்கொண்டு போதலைக் கூறும் அகத்துறை; theme describing the elopement of the hero with his lady-love (தொல்பொருள்.);.

     [கொண்டு + தலை + கழிதல்.]

கொண்டுநடத்து-தல்

கொண்டுநடத்து-தல் koṇḍunaḍaddudal,    5 செ.கு.வி. (v.i.)

   1.கொண்டுசெலுத்து-தல் பார்க்க;Kondu-seluttu-.

   2. கொடுக்கல் வாங்கல்; to do banking business.

     [கொண்டு + நடத்து-.]

கொண்டுநிலை

கொண்டுநிலை koṇṭunilai, பெ.(n.)

   குரவைக் கூத்தில் தலைவனது வரைவு வேண்டிப்பாடும் பாட்டு (இ.வ.);; Kuravai song praying for the hero’s union in wedlock with the heroine.

     “என்றியாங் கொண்டு நிலைபாடி யாடுங் குரவையை” (சிலப் : 24. இறுதிப்பாட்டுமடை.);

மறுவ. திருமணம், மன்றல், மணம், வரைவு, கலியாணம்.

     [கொண்டு + நிலை.]

கொண்டுநிலைகூறல்

கொண்டுநிலைகூறல் koṇṭunilaiāṟal, பெ.(n.)

   மடல் விலக்கிற்குரிய கிளவிகளு ளொன்று (அகப்.9,26);; words dissuading a hero from serious action.

{கொண்டு + நிலை + கூறல்.]

கொண்டுநிலைக்கூற்று

கொண்டுநிலைக்கூற்று koṇṭunilaikāṟṟu, பெ.(n.)

   இகந்துபடாமல் தலைமகனைத் தாங்கிக் கூறுந் தோழியின் சொல்; words of encouragement by the heroine’s maid, dissuading the hero from desperate action.

     ‘இதனைக் கொண்டுநிலைக் கூற்றென்று சொல்வது’ (இறை.9, உரை);.

     [கொண்டு + நிலை + கூற்று.]

கொண்டுபோ-தல்

கொண்டுபோ-தல் koṇṭupōtal,    8 செ.குன்றாவி. (v.t.)

   1. எடுத்துக்கொண்டு செல்லுதல்; to carry.

     “கொண்டுபோவான் வந்து நின்றார்” (திவ். பெரியாழ். 2, 2:7);.

   2. அழைத்துச் செல்லுதல்; to lead escoort.

குருடனை வெளியிற் கொண்டுபோய் விடு.

   3. கவர்ந்து செல்லுதல்; to carry away (இ.வ.);.

     “செங்கண்மால் தான் கொண்டு போனான்” (திவ். பெரியாழ்.3, 8:4);.

   4. நடத்துதல்; to conduct.

நூலாசிரியர் கதையை விறுவிறுப்பாகக் கொண்டு போயிருக்கிறார்.

   5. நெறிப்படுத்துதல்; to direct.

திரைக்கதையை எப்படிக் கொண்டுபோவதென்று தெரியாமல் இயக்குநர் திணறி இருக்கிறார் (உ.வ.);.

     [கொண்டு + போ-.]

கொண்டுமிஞ்சு-தல்

கொண்டுமிஞ்சு-தல் koṇṭumiñjudal,    5.செ.குன்றாவி. (v.t.)

   மிகு வரவு; excess income.

     ‘கொண்டு மிஞ்சிப் போச்சி கொடுக்கல் வாங்கலாச்சி’ (கோமாளிப்பாட்டு);.

     [கொண்டு + மிஞ்சு-.]

கொண்டுமுதல்

 கொண்டுமுதல் koṇṭumudal, பெ.(n.)

   வணிக மூலதனம்; business capital.

மறுவ. கொள்முதல்.

     [கொள் → கொண்டு + முதல்.]

கொண்டுமொழி-தல்

கொண்டுமொழி-தல் koṇṭumoḻidal,    2 செ. குன்றாவி.(v.t.)

   அயலார் சொல்லை அவர் சொல்வதாகவே எடுத்துக் கூறல்; to report a person’s speech in direct form.

     [கொண்டு + மொழி-.]

கொண்டுலங்கம்

 கொண்டுலங்கம் koṇṭulaṅgam, பெ.(n.)

   பேராமுட்டி; fragrant pavonia (சா.அக.);.

     [கொண்டல் + அங்கம்.]

கொண்டுவந்தவள்

 கொண்டுவந்தவள் koṇṭuvandavaḷ, பெ.(n.)

   அதிகமாகச் சீர் கொண்டுவந்த மருமகள்; the daughter-in-law who brought more money.

கொண்டுவந்தவளாக இருப்பதால் மாமியாரைத் திட்டுவதா? (உ.வ.);.

     [கொண்டு + வந்தவள்.]

கொண்டுவரு-தல்

கொண்டுவரு-தல் koṇṭuvarudal,    15 செ. குன்றாவி. (v.t.)

   1. அழைத்து வருதல்; to bring as of a man.

நோயாளியை முன்னரே என்னிடம் கொண்டு வந்திருக்கலாம்.

   2. எடுத்து வருதல் (உ.வ.);; to bring, as of a thing.

நான் சொன்ன பொத்தகங்களைக் கொண்டுவந்தாயா?.

   3. தீர்மானத்தை முன் வைத்தல்; to bring a motion to an assembly.

எதிர்க்கட்சியினர் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோற்றுப்போயிற்று (உ.வ.);.

   4. சட்ட முன்வரைவை அறிமுகப்படுத்துதல்; to bring a bill before the assembly.

     [கொண்டு + வரு-.]

கொண்டுவலை

 கொண்டுவலை koṇṭuvalai, பெ.(n.)

   மீன்பிடி வலை வகையுளொன்று; a kind of fishing net.

     [கொண்டு + வலை.]

 கொண்டுவலை koṇṭuvalai, பெ.(n.)

இருபுறமும்

   கைப்பிடியுள்ள மீன்பிடி வலை; double hold net.

     [கொண்டு+வலை பிடித்த மீனொடு வலையை இழுத்து வருவதற்கானபிடியுள்ள வலை]

கொண்டுவா-தல்

கொண்டுவா-தல் koṇṭuvātal,    18 செ.கு.வி. (v.i.)

   1. ஒருவரை அழைத்து வருதல்; ஒன்றை எடுத்து வருதல்; வரவழைத்தல்; bring some one or something.

நோயாளியை முன்னரே என்னிடம் கொண்டு வந்திருக்கலாம் என்றார் மருத்துவர். நான சொன்ன புத்தகங்களைக் கொண்டு வந்தாயா?

   2. சிக்கல், தீர்மானம் முதலியவற்றை முன்வைத்தல்; சட்டத்தை ஏற்படுத்துதல்; bringing a problem to one’s attention; move motion; enact law,

சின்னச் சின்னச் சிக்கல்களையெல்லாம் என்னிடம் கொண்டு வராதீர்கள் என்று கூறிவிட்டார் அதிகாரி எதிர்க்கட்சியினர் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோற்றுப் போயிற்று. மதுவிலக்குச் சட்டம் கொண்டு வரக் கோரிப் பெண்கள் மன்றம் ஆர்ப்பாட்டம் நடத்தியது.

     [கொண்டு+வா-தல்.]

கொண்டுவிடு-தல்

கொண்டுவிடு-தல் koṇṭuviṭutal,    20 செ.கு.வி. (v.i.)

   ஒருவரை ஓர் இடத்திற்கு அழைத்துச் செல்லுதல்; ஒருவரை இட்டுச் சென்று ஒன்றில் விடுதல்; take some one to a place; lead some one into something.

கீழே விழுந்து கிடந்தவரை அவரது விட்டில் கொண்டு போய் விட ஏற்பாடு செய்தோம். ஆராயாமல் எடுக்கும் முடிவு உன்னைச் சிக்கலில் மாட்டி விடும்.

     [கொண்டு+விடு-தல்.]

கொண்டுவிற்றல்

 கொண்டுவிற்றல் koṇṭuviṟṟal, பெ.(n.)

   போட்டி வணிகம், எதிர்ச் செட்டு; competition in trade;buying and selling again directly at a small profit.

     [கொண்டு + விற்றல்.]

கொண்டுவிலை

 கொண்டுவிலை koṇṭuvilai, பெ.(n.)

   பண வணிகம் முதலியன; money-lending business, trade etc.

     [கொண்டு + விலை.]

கொண்டுவில்-தல் (கொண்டுவிற்றல்)

கொண்டுவில்-தல் (கொண்டுவிற்றல்) koṇṭuviltalkoṇṭuviṟṟal,    9 செ.குன்றாவி. (v.t.)

   1. அப்போதைக்கப்போது வணிகத்திற்காகப் பண்டங்களை வாங்கி விற்றல்; to carry on a petty trade by buying and selling things every now and then.

     “கொண்டு விற்றல் கூலித்தொழில்” (தணிகைப்பு. அகத். 197);.

   2. பணவணிகம் முதலியவை செய்தல்; to carry-on money lending business.

     [கொண்டு + வில்-.]

கொண்டூர்

 கொண்டூர் koṇṭūr, பெ.(n.)

   கடலூர் மாவட்டத்துச் சிற்றூர்; a village in Kadalur Dt.

     [குண்டு (குளம்); → கொண்டு + ஊர்.]

கொண்டேசன்

 கொண்டேசன் koṇṭēcaṉ, பெ.(n.)

   சுக்கு (மூ.அக.);; dry ginger.

     [குன்று + உச்சல் → குன்றுச்சல் → குண்டச்சல் → கொண்டோசன் → கொண்டேசன் (கொ.வ);..]

கொண்டை

கொண்டை1 koṇṭai, பெ.(n.)

   1. பெண்களின் ஐம்பான்முடியுள் கூந்தலைத் திரளாகச் சேர்த்துக் கட்டும் முடிவகை; tuft dressing of hair in large coil on the head, one of aimpanmudi of ladies.

குடல் கூழுக்கு அழுகிறதாம்; கொண்டை பூவுக்கு அழுகிறதாம் (பழ);.

   2. சொருக்கு; dressing of hair by turning up and folding.

   3 குழந்தைகளுக்கு உச்சிக்கொண்டை கட்டப் பயன்படும் நார்வளையம்; fibre ring used in dressing the hair of child.

   4. பறவைசூட்டு; crest of a bird.

   5. ஆணி, பம்பரம் முதலியனவற்றின் குமிழ்த்தலை; head, as of a nall, round top.

   6. திமில்; hump.

   தெ. கொண்டெ;   ம. கொண்ட;   க. கொண்டே, கொண்டெ;   து., குட., பட. கொண்டே;   கோத. கொண்ட்;   துட. க்விட்;பிரா. கண்ட்.

     [குள் → குண்டு → கொண்டை.]

வகைகள்:

   1. இடுமுடிக் கொண்டை,

   2. முத்துமுடிக் கொண்டை,

   3. வளையம்புக் கொண்டை,

   4. புரிக்கொண்டை,

   5. கூட்டுக்கொண்டை.

 கொண்டை2 koṇṭai, பெ.(n.)

   இலந்தை; the jujube, a thorny tree yielding a small fruit like the mulberry.

     [குண்டை → கொண்டை.]

 கொண்டை3 koṇṭai, பெ.(n.)

   திமில்; hump (தஞ்சை.);.

     [குள் → குண்டு → கொண்டை.]

கொண்டை குலைந்துபோ-தல்

கொண்டை குலைந்துபோ-தல் goṇṭaigulaindupōtal,    8 செ.கு.வி.(v.i.)

   அவமானப்படுதல்; to suffer loss of honour.

     [கொண்டை + குலைந்து + போ-.]

கொண்டைஆறு

 கொண்டைஆறு koṇṭaiāṟu, பெ.(n.)

   திண்டுக்கல் மாவட்டம் பழனிமலைப் பகுதியில் உள்ள ஆறு; a river in Palani hill area.

     [குண்டை → கொண்டை + ஆறு.]

கொண்டைஊசி

 கொண்டைஊசி koṇṭaiūci, பெ.(n.)

   பெண்கள் போட்டிருக்கும் கொண்டை அல்லது பின்னல் அவிழாதபடி செருகும் இரு பகுதியாக வளைக்கப்பட்ட மெல்லிய கம்பி; u-shaped hairpin to keep the hair-do intact.

     [கொண்டை+ஊசி]

கொண்டைகட்டி

 கொண்டைகட்டி koṇṭaikaṭṭi, பெ.(n.)

   திருமணத்தின் போது தலைமயிரைக் கொண்டையாக முடிக்கும் வேளாள வகையினர்; a sub-sect of vélālās who dress their hair in large coil on the head during marriage (செ.அக.);.

     [கொண்டை+கட்டி]

இவர்கள் குடுமிக்குப் பதிலாக சிகையைக் கொண்டைபோல் கட்டியிருந்தால் இப்பெயர் பெற்றனர். குறும்பரசனிடம் இருந்த பழக்கத்தால் கொண்டை பெற்றிருந்தனர் என்பர். முடிதிருத்தாமல் தங்கள் சிகையைத் தொடாது கொண்டை கட்டிக் கொண்டிருந்தவராதலின் இப்பெயர் பெற்றனர் என்பர் (அபி.சிந்);.

கொண்டைகட்டிமறவன்

 கொண்டைகட்டிமறவன் goṇṭaigaṭṭimaṟavaṉ, பெ.(n.)

   மறவர் வகை; a sub-sect of Maravar caste.

     [கொண்டை + கட்டி + மறவன்.]

கொண்டைகட்டிவேளாளர்

 கொண்டைகட்டிவேளாளர் goṇṭaigaṭṭivēḷāḷar, பெ.(n.)

   திருமணத்திற் கொண்டையாகத் தலை மயிரை முடிக்கும் வேளாளவகையினர்; a sub-sect of Velalas who put up the hair in a peculiar fashion during marriage.

மறுவ, கொண்டைகட்டி.

     [கொண்டை + கட்டி + வேளாளர்.]

கொண்டைகிருட்டி

 கொண்டைகிருட்டி koṇṭaikiruṭṭi, பெ.(n.)

   கொண்டலாத்தி (யாழ்.அக.);; hoopoe, a crested bird (சா.அக.);.

     [கொண்டை+கிருட்டி]

கொண்டைக் கோடரி

 கொண்டைக் கோடரி koṇṭaikāṭari, பெ.(n.)

   அடிப்பகுதி கனத்திருக்கும் விறகு பிளக்குங்கோடரி; a heavy axe.

     [கொண்டை+கோடரி]

     [P]

கொண்டைக்கடலை

 கொண்டைக்கடலை koṇṭaikkaṭalai, பெ.(n.)

   வறுத்தோ, அவித்தோ பயன்படுத்தும் உருண்டை வடிவத்தில் இருக்கும் பழுப்பு நிறப் பருப்பு; cluster-seed, bengal gram; chick реа.

     [கொண்டை+கடலை]

 கொண்டைக்கடலை koṇḍaikkaḍalai, பெ.(n.)

   கடலை; Bengal gram (சா.அக.);.

     [கொண்டை + கடலை.]

கொண்டைக்கட்டி

 கொண்டைக்கட்டி koṇṭaikkaṭṭi, பெ.(n.)

   வேளாளருள் ஒருவகை; a group of agriculturists.

மறுவ. கொண்டைக்கட்டி வேளாளர்.

     [கொண்டை + கட்டி.]

கொண்டைக்கரிச்சான்

 கொண்டைக்கரிச்சான் koṇṭaikkariccāṉ, பெ.(n.)

   உச்சிச் சூட்டுள்ள கரிக்குருவி வகை; hair crested king-crow.

     [கொண்டை + கரிச்சான்.]

கொண்டைக்காரன்

கொண்டைக்காரன் koṇṭaikkāraṉ, பெ.(n.)

   1.தலைமயிரைத் திரளாக முடித்துக் கட்டியவன்; one who wears his hair in a knot.

   2. மென்மையுடையவன்; respectable person.

   3. செருக்குடையவன்; haughty man.

     [கொண்டை + காரன்.]

கொண்டைக்காரி

 கொண்டைக்காரி koṇṭaikkāri, பெ.(n.)

   மயிர்க்கொண்டையிட்ட பெண்; a woman having a tuft of hair tied into a coiled knot (சா.அக.);.

     [கொண்டை + காரி.]

 கொண்டைக்காரி koṇṭaikkāri, பெ.(n.)

   பணக்காரி; a wealthy woman.

அவள் பெயர் கொண்டைக்காரி (மீனவ.);.

மறுவ. தொப்பைக்காரி

     [கொண்டை+காரி]

கொண்டைக்கிரி

 கொண்டைக்கிரி koṇṭaikkiri, பெ.(n.)

   முல்லைநிலப் பண்வகை (பிங்.);; a secondary melody-type of the mullai class.

     [கெண்டை + கிரி. ஒருகா. கொண்டைஆகிரி.]

கொண்டைக்கிருட்டி

 கொண்டைக்கிருட்டி koṇṭaikkiruṭṭi, பெ.(n.)

   கொண்டையை அசைக்கும் ஒரு குருவி; mountair bulbul with crust erected at will (சா.அக.);.

     [கொண்டை + (கிளர்த்தி); கிருட்டி.]

கொண்டைக்கிலாத்தி

 கொண்டைக்கிலாத்தி koṇṭaikkilātti, பெ.(n.)

கொண்டைக்கிளர்த்தி பார்க்க;see kondai-k-kilartti.

     [கொண்டை + (கிளர்த்தி); கிலாத்தி.]

கொண்டைக்கிளர்த்தி

 கொண்டைக்கிளர்த்தி koṇṭaikkiḷartti, பெ.(n.)

   கொண்டையை அசைக்கும் குருவி; mountain bulbul which shakes crust at will.

     [கொண்டை + கிளர்த்தி.]

கொண்டைக்கிளாறு

 கொண்டைக்கிளாறு koṇṭaikkiḷāṟu, பெ.(n.)

கொண்டைகிளர்த்திபார்க்க (சா.அக.);;see kondai-kilartti.

     [கொண்டை + (கிளர்த்தி); கிளாறு.]

கொண்டைக்கிளிஞ்சான்

 கொண்டைக்கிளிஞ்சான் koṇṭaikkiḷiñjāṉ, பெ.(n.)

   ஒருவகைக் கடல்மீன்; a kind of sea-fish.

     [கொண்டை + கிளிஞ்சான்.]

கொண்டைக்குச்சு

கொண்டைக்குச்சு koṇṭaikkuccu, பெ.(n.)

   1. சடைக்குச்சு; a hair-ornament with pendants.

   2. கொண்டையில் செருகும் ஊசிவகை; ornamented hair-pin.

     [கொண்டை + குச்சு.]

கொண்டைக்கோல்

கொண்டைக்கோல் koṇṭaikāl, பெ.(n.)

   1.தலையிற் கொண்டையுள்ள கழி; a staff with a knob at its head.

   2. ஆழத்திற்கு அறிகுறியாக நீரிடையில் நடுங்கோல்; a post planted to indicate the depth of water.

     ‘ஆழங்காலிலே இழிந்து அமிழ்ந்துவார் அவ்விடத்தே கொண்டைக்கோல் நாட்டு மாபோலே’ (ஈடு, 10.7:1);.

   3. மகிழ்ச்சி காரணமாக உயர்த்தி யசைக்கும் ஆடை கட்டிய கோல்; a staff with cloth uplifted and flourished as a sign of joy.

     “கொண்டைக் கோலொடு குணலை யிட்டார்” (கோயிற்பு. இரணிய. 130);.

   4. எல்லை குறிக்கும் கோல்; boundary post.

அளக்கும் பிரதேசத்துக்கு கொண்டைக்கோல் நாட்டுகிறார் (திவ். திருநெடுந். 5 விலா.);.

     [கொண்டை + கோல்.]

கொண்டைச்சாணி

கொண்டைச்சாணி koṇṭaiccāṇi, பெ.(n.)

   1. நஞ்சறுப்பான்; a creeper used as an antidote for poison.

   2. நாய்ப்பாலை; Indian ipecacuanha.

   3. கழுதைப்பாலை; common Indian ipecacuanka (சா.அக.);.

மறுவ. கழுதைப்பாலை, கொண்டைச்சீனிக் கிழங்கு, கொண்டைச்சாணிக் கிழங்கு.

     [கொண்டை (சீனி); + சாணி.]

கொண்டைச்சாணிக்கிழங்கு

 கொண்டைச்சாணிக்கிழங்கு koṇṭaiccāṇikkiḻṅku, பெ.(n.)

   நஞ்சறுப்பான் கிழங்கு; a creeper used an antidote for poison, Asclepias prolifera (சா.அக.);.

     [கொண்டை+சாணி+கிழங்கு.]

கொண்டைச்சி

கொண்டைச்சி koṇṭaicci, பெ.(n.)

   1. கொண்டையை அசைக்கும் ஒர் குருவி; mountain bulbul with crust erected at will-Ixos monticolons alias pycnonotus haemorhous.

   2. சிவப்புக் கொண்டலாத்தி; red-whiskered bulbul, Otocompsa jocosa.

   3. கொண்டைக் குருவி; crested bird-Lxos caper.

   4. பெருங் கொண்டலாத்தி அல்லது புழுக்கொத்தி; a large kind of crested bird; houp-upupa epops (சா.அக.);.

     [கொண்டை+ஆச்சி]

கொண்டைச்சீனிக்கிழங்கு

கொண்டைச்சீனிக்கிழங்கு koṇṭaiccīṉikkiḻṅku, பெ.(n.)

   1. நஞ்சறுப்பான்; a creeper used as an antidote for poison. Asclepias prolifera.

   2. நாய்பாலை; Indian ipecacuanha, Asclepias asthmatica.

   3. கழுதைப் பாலை; common Indian ipeca cuanha, Tylophora asthmatica (சா.அக.);.

     [கொண்டை+சீனி+கிழங்கு.]

கொண்டைச்சுத்தியல்

 கொண்டைச்சுத்தியல் koṇṭaiccuttiyal, பெ.(n.)

   தட்டார் கருவிகளுள் ஒன்று; goldsmith’s or brazier’s hammer (செ.அக.);.

     [கொண்டை+சுத்தியல்.]

 கொண்டைச்சுத்தியல் koṇṭaiccuttiyal, பெ.(n.)

   தட்டார் கருவிகளுள் ஒன்று; goldsmith’s or braziers hammer.

     [கொண்டை + சுத்தியல்.]

கொண்டைதிருகி

 கொண்டைதிருகி koṇṭaitiruki, பெ.(n.)

கதவுக்குடுமி செருகும் துளை,

 hole in the sill into which the corner-pin of a door is fitted (செ.அக.);.

     [கொண்டை+சதிருகி.]

கொண்டைத்தலை

 கொண்டைத்தலை koṇṭaittalai, பெ.(n.)

   மயிர்முடித் தலை; head with a hair knot.

     [கொண்டை + தலை.]

கொண்டைத்திருகி

 கொண்டைத்திருகி goṇṭaittirugi, பெ.(n.)

   கதவுக்குடுமி செருகுந்துளை; hole in the sill into which the corner pin of a door is fitted கட்.தொ.).

     [கொண்டை + திருகி.]

கொண்டைத்திருகு

 கொண்டைத்திருகு goṇṭaittirugu, பெ.(n.)

   மகளிர் தலையிலணியும் செவ்வந்திப்பூ வடிவிலானதாகிய திருகாணிவகை; ornament for hair in the shape of a chrysanthemum flower with a spiral wire underneath, worn by women.

     [கொண்டை + திருகு.]

கொண்டைத்தும்பை

 கொண்டைத்தும்பை koṇṭaittumbai, பெ.(n.)

   கசிழ்தும்பை; stooping tommbay,

மறுவ. மலைத்தும்பை.

     [கொண்டை + தும்பை.]

கொண்டைத்துலா

 கொண்டைத்துலா koṇṭaittulā, பெ.(n.)

   கயிறு நழுவிவிடாதபடி கொண்டை கட்டிய துலாவகை; picottah with a crest-like projection at the end to prevent the rope from slipping.

     [கொண்டை + துலா.]

கொண்டைபோடு-தல்

கொண்டைபோடு-தல் koṇṭaipōṭudal,    19 செ.கு.வி.(v.i.)

   கல்வியறிவின்மை, நாகரிகமின்மையைக் குறித்தல்; indicative of an illiterate and uncultured person.

இதையெல்லாம் கொண்டை போட்ட ஆளைப்பார்த்துச் சொல் (உ.வ.);.

     [கொண்டை + போடு-.]

கொண்டைப்புல்

 கொண்டைப்புல் koṇṭaippul, பெ.(n.)

   மயிற் கொண்டைப்புல்; trail grass (சா.அக.);.

ம. கொண்டப்புல்.

     [கொண்டை + புல்.]

கொண்டைப்பூ

 கொண்டைப்பூ koṇṭaippū, பெ.(n.)

கொண்டைத் திருகு பார்க்க;see Kondai-t-tirugu.

ம. கொண்டைப்பூ.

     [கொண்டை + பூ.]

கொண்டைமார்சா

 கொண்டைமார்சா koṇṭaimārcā, பெ.(n.)

   கரைப்பரப்பினின்று ஆழக் கடல்நோக்கிச் செல்லும் கடலலை; wave moving from coast towards the deep sea.

     [கொண்டை (கிழக்கு); + மார்சா.]

கிழக்கு நோக்கிய அலை என்பதேயாம். மார்தல் = நீளுதல், ஓங்குதல்.

கொண்டைமாறு

கொண்டைமாறு koṇṭaimāṟu, பெ.(n.)

   1. கொண்டை போன்ற அடிப்பக்கமுடைய வளார்; twigs of a shrub with knob-like root.

   2. மரத்தின் உச்சியிலிருந்தெடுக்கும் சிறுசுள்ளி; twigs gathered from the top-most part of the trees.

   3. கொண்டையுள்ள விளக்குமாறு; a kind of broom with a knob-like handle.

     [கொண்டை + மாறு.]

கொண்டைமுசு

 கொண்டைமுசு koṇṭaimusu, பெ.(n.)

   பெரிய கருங்குரங்கு வகை; a large black-faced monkey.

மறுவ. கொண்டை முகடு, கொண்டைமுசுறு. முசாண்டலம். முககோத்தி.

     [கொண்டை + முசு.]

கொண்டைமுசுறு

 கொண்டைமுசுறு koṇṭaimusuṟu, பெ.(n.)

கொண்டைமுசு பார்க்க;see kondai-musu.

மறுவ. கொண்டை முகிறு. கொண்டை முகடு.

     [கொண்டை + (முசு); முசுறு.]

கொண்டைமுடி-தல்

கொண்டைமுடி-தல் koṇḍaimuḍidal,    2 செ.குன்றாவி.(v.t.)

   1. ஏமாற்றுதல்; to deceive.

   2. அணியுறக் கூந்தலை அள்ளி முடித்தல்; to tie the hair knot.

     [கொண்டை + முடி-.]

கொண்டைமேற்காற்றடிக்க

கொண்டைமேற்காற்றடிக்க koṇḍaimēṟkāṟṟaḍikka, வி.எ. (adv.)

 the breeze playing about the tuft.

     ‘கொண்டைமேல் காற்றடிக்கத் திரியப் பெறாதே’ (திருவிருத். 23: வியா. ப. 150);.

     [கொண்டை + மேல் + காற்று + அடிக்க.]

கொண்டையங்கோட்டை மறவன்

 கொண்டையங்கோட்டை மறவன் koṇṭaiyaṅāṭṭaimaṟavaṉ, பெ.(n.)

கொண்டைகட்டி மறவன் பார்க்க;see kondai-katti-maravan.

     [கொண்டை + அம் + கோட்டை + மறவன்.]

கொண்டையடுப்பு

 கொண்டையடுப்பு koṇḍaiyaḍuppu, பெ.(n.)

   சூட்டடுப்பு; a kind of domestic oven.

     [கொண்டை + அடுப்பு.]

கொண்டையன்

 கொண்டையன் koṇṭaiyaṉ, பெ.(n.)

   உச்சிக் கொண்டையுள்ள பருந்துவகை; a species of crested kite.

     [கொண்டை → கொண்டையன்.]

கொண்டையம்

கொண்டையம் koṇṭaiyam, பெ.(n.)

   1. உச்சி; top.

   2. மலைமுகடு; hill top.

கொண்டையத்தில் ஏறாதே (உ.வ.);.

   3. வீட்டின் முகடு, கூரையின் உச்சி; top of the thatched house.

     [கொள் → கொண்டு → கொண்டையம் (முடிச்சு);.]

கொண்டையழகி

 கொண்டையழகி koṇṭaiyaḻki, பெ.(n.)

   கூந்தழலகி; a woman with flowing hairs long enough to be dressed into a large coil, which adds to her beauty (சா.அக.);.

     [கொண்டை + அழகி.]

கொண்டையாணி

கொண்டையாணி koṇṭaiyāṇi, பெ.(n.)

   1. மேற்கொண்டையுள்ள ஆணி; nail with round head stud.

   2. கடையாணி; axle pin of a wheel.

     [கொண்டை + ஆணி.]

கொண்டையிற்கையோடு-தல்

கொண்டையிற்கையோடு-தல் koṇṭaiyiṟkaiyōṭutal,    20 செ.கு.வி.(v.i.)

   பெண்ணின் மயிர் பிடித்து இழுத்து அவமதித்தல்; outraging a woman by handling the lock or tuft of hair on her head; pulling a woman by her hair (சா.அக.);.

     [கொண்டையில்+கை+போடு-தல்.]

கொண்டையூசி

கொண்டையூசி koṇṭaiyūci, பெ.(n.)

   1. குண்டூசி; pin.

   2. கொண்டை அவிழாதபடி செருகும் கம்பி; hair-pin to keep the hair intact.

     [கொண்டை + ஊசி.]

கொண்டையூசிவளைவு

 கொண்டையூசிவளைவு koṇṭaiyūcivaḷaivu, பெ.(n.)

   கொண்டை ஊசி வளைவு; hair-pin bend.

கொண்டைஊசி வளைவு

     [கொண்டை + ஊசி + வளைவு.]

கொண்டைலாத்தி

 கொண்டைலாத்தி koṇṭailātti, பெ.(n.)

கொண்டைக்கிளர்த்தி பார்க்க;see kondai-k-kilartti.

     [கொண்டை + (கிளர்த்தி);லாத்தி.]

கொண்டைவலை

 கொண்டைவலை koṇṭaivalai, பெ.(n.)

   அலைவாயிலிருந்து வீசிமீனைப்பிடிக்கும் ஒருவகை வலை; a kind of shore-net used in catching sea-fish.

     [கொண்டை + வலை.]

கொண்டைவலைப்பு

 கொண்டைவலைப்பு koṇṭaivalaippu, பெ.(n.)

   நேர்தொலைவாய் மீன் வலைக்கை; fishing from due distance.

     [கொண்டை + வலைப்பு.]

கொண்டைவாகை

 கொண்டைவாகை koṇṭaivākai, பெ.(n.)

   வாகைமர வகை; doon siriss tree.

     [கொண்டை + வாகை.]

கொண்டோசனக்கிழங்கு

 கொண்டோசனக்கிழங்கு koṇṭōcaṉakkiḻṅku, பெ.(n.)

   திப்பிலி மூலம்; root of long pepper.

     [கொண்டோசனம்+கிழங்கு.]

இது மணமாகவும் சிவப்பாகவும் இருக்கும் (சாஅக.);.

 கொண்டோசனக்கிழங்கு koṇṭōcaṉakkiḻṅgu, பெ.(n.)

   திப்பிலி மூலம்; root of long-pepper (சா.அக.);.

     [குன்று + உச்சல் → குன்றுச்சல் → குண்டச்சல் → கொண்டோசன் + கிழங்கு..]

இது நறுமணமாகவும், சிவப்பாகவும் இருக்கும்.

கொண்டோசனை

கொண்டோசனை koṇṭōcaṉai, பெ.(n.)

   ஒருவகை மூலிகை; a kind of medicinal plant.

     “தட்டிலாக் கொண்டோசனைக் கிழங்கு” (தெய்வச். விறலிவிடு. 407);.

     [கண்டு → கொண்டு → கொண்டோசனை.]

கொண்டோடி

 கொண்டோடி koṇṭōṭi, பெ.(n.)

   ஏற்றத்தில் துலாவையும் அதன் கொடியையும் பிணிக்குங் கயிறு (யாழ்.அக.);; rope fastening the pole to the beam of the picotta.

     [கொண்டு + ஓடி.]

கொண்டோன்

கொண்டோன் koṇṭōṉ, பெ.(n.)

   கணவன் (இ.வ.);; husband.

     “கொண்டோ னல்லது தெய்வமும் பேணாப் பெண்டிர்” (மணிமே. 18:101);.

ம. கொண்டோன்.

     [கொண்டான் → கொண்டோன்.]

கொண்ணை

கொண்ணை koṇṇai, பெ.(n)

கொன்றை:

 common cassia Indiam laburnam, Cassia fistula alias C.rhombifolia.

     [கொன்றை – கொண்னை – கொண்ணை (கொ.வ.);.]

வகைகள்:

   1. இராகத்துக் கொன்றை

 red Indian laburnam, Cassia margiuafa,

   2. ஈசன்தார்க் கொன்றை; gold flower tree.

   3. எருமைக் கொன்றை; sumatra senna, Cassia siamea.

   4. கருங்கொன்றை; sumatra senna, Cassia siamea.

   5. காக்கொன்றை; black senna.

   6. காட்டுக்கொன்றை; wild kondray; venezula soap bark tree, Pithecolobium bigeminum.

   7. குண்டு பூக் கொன்றை; globe-flowered cassia, Cassia glaயca.

   8. குளோப்பூக் கொன்றை

 globe-flowered cassia, Cassia glauca.

   9. சரக்கொன்றை:

 common cassia.

   10. சிவப்புக் கொன்றை; red Indian laburnam, Cassia margiuata.

   11. சிறுகொன்றை செடிக்கொன்றை; cassia plant, Cassia arborescens.

   12. சிறு மயிற் கொன்றை:

 false peacock flower, Caesalpinia pulcherrima.

   13. சீமைக் கொன்றை; red Indian laburnam, Cassia margiuata.

   14. சூரத்துக் கொன்றை:

 surat cassia, Cassia surattensis.

   15. செம்மயிற் கொன்றை; red pea-cock flower, Poinciana regia.

   16. செழு மலர்க் கொன்றை:

 large flower cassia, Cassia florida.

   17. சொறிக் கொன்றை:

 rough cassia.

   18. நரிக் கொன்றை; red Indian laburnam, Cassia margiuata-

   19. நொச்சிக் கொன்றை:

 mottled ebony, Diospyros Kanjilali

   20. பிரம்புக் கொன்றை:

 cassia plant, Cassia arborescesns.

   21. புலி நகக் கொன்றை; cassia with re-curved prickles, Caesalpinia ligulata

   22. புளினைக் காய் கொன்றை; prickly brasiletto climber, Wagtea spicata.

   23. (1); பெருங்கொன்றை; the same as cara-k-konrai.

 unarmed brasiletto, Peltophorum ferயgineum.

   24. பெருமயிர்க் கொன்றை

 royal peacock flowers, poincian regia.

   25. பொன்மாற் கொன்றை; yellow pea-cock flower, Caesalpinia pulcherrima.

   26. மஞ்சட் கொன்றை; yellow kondray, Cassia sulpeurea alias Senna sumutrana.

   27. மந்தாரக் கொன்றை:

 dull-flower cassia, Cassia.

   28. மாம்பழக் கொன்றை; mango cassia.

   29. மயிற் கொன்றை; peacock laburnum Caesalpinia pulcherrima alias Poinciana regia

   30. மல்லங் கொன்றை; shingle tree, Acrocarpus fraxinifolius.

   31. மலைக் கொன்றை; deccany senna, Cassia montana.

   32. முட் கொன்றை:

 prickly cassia, Caesalpinia scandens.

   33. வரிக்கொன்றை; stripped-kondray, Cassia emarginata.

   34. வெண்மயிற் கொன்றை; creamy pea-cock flower, Poinciana elata (சா.அக.);,

கொண்னாட்டிவிளை

 கொண்னாட்டிவிளை koṇṉāṭṭiviḷai, பெ.(n.)

   குமரி மாவட்டத்துச் சிற்றூர்; a village in Kanniyakumari Dt.

     [கொண்ணன் + (பட்டி); அட்டி + விளை (நிலம்);.]

கொண்முடிபு

 கொண்முடிபு koṇmuḍibu, பெ.(n.)

   முடிந்த முடிவு (சித்தாந்தம்);; well established conclusion, settled opinion or doctrine received or admitted truth.

     [கொண் + முடிபு]

கொண்மூ

கொண்மூ koṇmū, பெ.(n.)

   1. முகில்; cloud.

     “நீருடைக் கொண்மு” (பெருங்.உஞ்சைக்.43);.

   2. வானம் (பிங்.);; sky.

     [கொள் → கொண்ம் → கொண்மூ (நீரை முகந்து கொண்டிருப்பது);.]

கொண்மூமுத்து

 கொண்மூமுத்து koṇmūmuttu, பெ.(n.)

   முகிலிற்பிறந்த கதிர் முத்து; a pearl formed in the cloud.

     [கொண்மூ + முத்து.]

வானிலிருந்து வீழ்ந்த எரிகல் அல்லது கொள்ளிக்கல்லை மேகமுத்தாகக் கருதியிருக்கலாம்.

கொதக்கு

 கொதக்கு kodakku, பெ.(n.)

   பயனற்ற; useless.

     [குந்து → கொந்து → கொதக்கு.]

கொதப்பல்

கொதப்பல் kodappal, தொ.பெ. (vbl.n.)

   1. மெல்லாது வாயை அசைத்தல்; eating with the lips close

   2. மெல்லுதல்; masticating.

   3. உதப்புதல்; shiffing the mouth with food (சா.அக.);.

     [குதப்பு → கொதப்பு + அல்.]

கொதவளை

 கொதவளை kodavaḷai, பெ.(n.)

குரல்வளை,

 throat. –

     [குரல்வளை→கொதவளை(கொ.வ.);]

கொதி

கொதி1 kodiddal,    4 செ.கு.வி. (v.i.)

   1. நீர் முதலியன காய்ந்து பொங்குதல்; to boil, bubble up from heat. effervesce.

     “குண்டிகை யிருந்த நீருங்….. கொதித்த தன்றே” (கம்பரா. வருணனை. 61);.

   2. சூடுடையதாதல்; to be heated, as the body, ground, etc.

உடம்பு கொதிக்கிறது (உ.வ.);.

   3. சினத்தல் (பிங்.);; to be infuriated, enraged, to burn with indignation.

   4. வருத்தமுறுதல்; to be offended;

 to be distressed: to be moved with pity.

அவன் செய்த தீங்கால் என் நெஞ்சு கொதிக்கிறது.

   5. ஆசை மிகக் கொள்ளுதல்; to burn with desire, hanker after.

அவன் உன்னைப் பார்க்கக் கொதிக்கிறான் (இ.வ.);.

   6. வயிறு நழுக்குதல்; to have slight diarrhoea.

   ம. கொதிக்குக;   க., பட. குதி;து. குதி, கொதி.

     [குள் → குதி → கொதி.]

 கொதி2 kodi, பெ.(n.)

   1. நீர் முதலியவற்றின் கொதிப்பு; bubbling up, as of boiling water or oil.

     “கொதியடக்கச் சிவிறி” (தைலவ. வைத்.14);.

   2. வெப்பம்; heat, as of fire, weather etc.

   3. உடம்பிற் காணும் காங்கை; sensation of heat, in the body.

   4. காய்ச்சல்; fever.

மாந்தக்கொதி; ஊதைக்கொதி (வின்.);.

   5. கொதிக்கழிச்சல் (வின்.); பார்க்க;see kodi-k-kaliccal.

   6. சினம்; anger, rage.

   7. மிகுசினம்; fierceness, as of anger.

     “கொதியினால்வரு காளிதன் கோபம்” (தேவா. 485: 4);.

   8. வருத்தம்; grief, sorrow.

   9. செருக்கு; pride, arrogance.

கொதியிறக்க (இ.வ.);.

   10. ஆசை; desire, greed.

   11. தெய்வத்திற்குப் படைக்கும் சோறு (S.I.I.VII.22);; food offering to the deity.

க., பட. குதி.

     [குல் → குதி → கொதி.]

 கொதி3 kodi, பெ.(n.)

   இஞ்சி; ginger.

     “சற்கரையமுது எண்ணுாற் றிருபதின்பலமும் மிளகமுது னாழி உழக்கும் பயற்றமுது னாலு மரக்காலும் கொதி இரண்டுமரக்காலும் (திருப்.கல்.தொ.உ.எண்.134:12);.

     [கொள் → கொத்தி → கொதி.]

 கொதி4 kodi, பெ.(n.)

   திருப்படையல் (பிரசாதம்);; food offering to the deity (S.I.I.VII.22);.

     [கொதி = கொதித்தல், வேகவைத்த உணவு.]

கொதி-த்தல்

கொதி-த்தல் kotittal,    4 செ.கு.வி. (v.i.)

   1. காய்ச்சல் காய்தல்; to be suffering from fever; being attacked wih fever,

   2. வெப்பங் கொள்ளல்; getting heated in the system.

   3. தண்ணீர் முதலியன

   காய்ந்து பொங்குதல்; over-flowing of water etc. by its being boiled.

   4. வயிறு வழுக்குதல் அல்லது வழுவுதல்; fluxing or flowing from the bowls as in dysentery or diarrhoea.

   5. மிகச் சினத்தல்; growing extremely angry.

   6.மகவை இழத்தலினால் தாய்க்கு வயிற்றில் ஏற்படும் குழப்பம்; a peculiar stirring sensation felt or experienced by the mother in the stomach on the loss of her child.

   7.நீர் ஆவியாகக் கிளம்பல்; turning of a liquid into a gaseous state (சா.அக.);.

     [குய் – கொய் – கொதி]

கொதிகஞ்சி

 கொதிகஞ்சி godigañji, பெ.(n.)

   உலைநீரில் கொதிக்கும் அரிசியினின்று வடிக்கும் கஞ்சி; rice-water taken hot in cooking.

     [கொதி + கஞ்சி.]

கொதிகருப்பஞ்சாறு

 கொதிகருப்பஞ்சாறு godigaruppañjāṟu, பெ.(n.)

   கொதிக்க வைத்த கரும்பின் சாறு; boiled sugarcane juice (சா.அக.);.

     [கொதி + கரும்பு + அம் + சாறு.]

கொதிகருப்பநீர்

கொதிகருப்பநீர் godigaruppanīr, பெ.(n.)

   1. சுட வைத்த இனிப்புகள் (யாழ்ப்.);;  heated sweet toddy.

   2. பனிக்குடத்து நீர்; amniotic fluid.

     [கொதி + கருப்பநீர்.]

கொதிகலன்

 கொதிகலன் godigalaṉ, பெ.(n.)

   நீராவி உண்டாக்கப் பயன்படுத்தும் கலன்; boiler.

     [கொதி + கலன்.]

கொதிகிளம்பக்காய்ச்சல்

 கொதிகிளம்பக்காய்ச்சல் godigiḷambaggāyccal, பெ.(n.)

   குமிழியெழும்பும்படி காய்ச்சுதல்; heating to the boiling point (சா.அக.);.

     [கொதி + கிளம்ப + காய்ச்சல்.]

கொதிகுடலன்

 கொதிகுடலன் godiguḍalaṉ, பெ.(n.)

   பசி தணியாதவயிறுள்ளவன் (யாழ்ப்.);; a man of insatiable appetite.

     [கொதி + குடல் + அன்.]

கொதிகுடல்

கொதிகுடல் godiguḍal, பெ.(n.)

   1. பசியினால் கொதிக்கும் குடல்; bowels easily excited by hunger.

   2. பசியைத் தாங்க முடியாத வயிறு; stomach incapable of bearing hunger (சா.அக.);.

     [கொதி + குடல்.]

கொதிகொதி-த்தல்

கொதிகொதி-த்தல் godigodiddal,    4 செ.கு.வி. (v.i.)

   உலைப்பெய்த அரிசி முதலியவற்றினின்றும் கொதியெழும்புதல்; to bubble up, as boiling rice.

     [கொதி + கொதி-.]

கொதிகொள்ளல்

கொதிகொள்ளல் godigoḷḷal, பெ.(n.)

   1. கொதியுண்டாதல்; reaching the boiling point.

   2. உடலின் வெக்கை; developing excessive heat in the system.

   3. அரத்தக் கழிச்சலால் உடம்பு சுடுதல்; being attacked with or suffering from dysentery.

   4. காய்ச்சலினால் உடம்பு காந்துதல்; generating heat from the body as in fever (சா.அக.);.

     [கொதி + கொள்ளல்.]

கொதிக்கண்

 கொதிக்கண் kodikkaṇ, பெ.(n.)

கொடுங்கண் பார்க்க;see kodun-gan.

     [கொதி + கண்.]

கொதிக்கழிச்சல்

 கொதிக்கழிச்சல் kodikkaḻiccal, பெ.(n.)

   வெப்பத்தால் உண்டாகும் வயிற்றுப்போக்கு; diarrhoea attended with flux.

     [கொதி + கழிச்சல்.]

கொதிக்கவை-த்தல்

கொதிக்கவை-த்தல் kodikkavaiddal,    4 செ. குன்றா.வி.(v.t.)

   1. குழம்பு முதலியவற்றை அடுப்பில் வைத்துக் கொதிக்கும்வரை சூடேற்றல்; boiling broth or sauce to a stage till its contents are completely cooked or baked; the operation of boiling while cooking.

   2. உடம்பில் பற்றுப் போடுவதற்காகக் கரைத்த மருந்துகளைக் கரண்டியி லிட்டுக் கொதிக்கும் வரை சூடுக்காட்டல்; heating a solution of medicine in a big spoon to a boiling point for external application.

   3. கருக்கு (கியாழம்); வற்றும்படி கொதிக்கும்வரை சூடேற்றல்; boiling down decoction till it is sufficiently reduced in quantity (சா.அக.);.

க., பட. குதசு.

     [கொதிக்க + வை-.]

கொதிக்கென்று போ-தல்

கொதிக்கென்று போ-தல் kodikkeṉṟupōdal,    8 செ.கு.வி. (v.i,)

   சூட்டால் மலத்தோடு இரத்தம் கழிதல்; the fluxing or discharging of mucus matter in stools as in dysentry or diarrhoea (சா.அக.);.

     [கொதுக்கு + என்று + போ-.]

கொதிதண்ணீர்

கொதிதண்ணீர் kodidaṇṇīr, பெ.(n.)

   1. வெந்நீர் (யாழ்.அக.);; boiling water.

   2. சோறு கொதிக்கும் போது வடிந்த நீர்; water seethed with rice (சா.அக.);.

     [கொதி + தண்ணீர்.]

கொதிதைலம்

கொதிதைலம் kodidailam, பெ.(n.)

   1. எண்ணெயில் மருந்துப் பொருள்களைக் கூட்டிக் காய்ச்சிக் கொதிக்க வைத்து இறக்கிய எண்ணெய்; medicated oil prepared by mixing up drugs in oil and then boiling it sufficiently.

   2. முத்துக்கொட்டை முதலிய விதைகளை இடித்துத் தண்ணீரிற் கலந்து கொதிக்கவைப்பதனால் இறங்கும் எண்ணெய்ச் சத்து; oil extracted from castor seeds by boiling process (சா.அக.);.

     [கொதி + தைலம்.]

கொதித்தைலம்

கொதித்தைலம் kotittailam, பெ.(n.)

   முத்துக்கொட்டை முதலியவற்றை இடித்து நீரிற் கொதிக்க வைத்து இறக்கும் எண்ணெய் (பைஷஜ.3);; medicinal oil prepared by boiling pounded castorbeans, etc., in water (செ.அக.);.

     [கொதி+Skt, தைலம்.]

கொதிநிலை

 கொதிநிலை kodinilai, பெ.(n.)

   கொதிக்கும் வெப்ப அளவு; boiling point.

     [கொதி + நிலை.]

கொதிநிலையம்

 கொதிநிலையம் kodinilaiyam, பெ.(n.)

கொதிநிலை பார்க்க;see kodi-nilai.

     [கொதி + நிலை. அம் – செல்லாக்க ஈறு.]

கொதிநீர்

 கொதிநீர் kodinīr, பெ.(n.)

   கொதிக்கின்ற நீர்; boiling water (சா.அக.);.

     [கொதி + நீர்.]

கொதிபிடி-த்தல்

கொதிபிடி-த்தல் kodibiḍiddal,    4 செ.கு.வி.(v.i.)

   உண்ணும்போது நேர்ந்த தீக்கண் பார்வையால் உண்டி குன்றிப் போகை (இ.வ.);; being affected in the appetite by the greedy eyes of a person looking on when one is taking meals.

     [கொதி + பிடி-.]

கொதிபோடு-தல்

கொதிபோடு-தல் kodipōṭudal,    20 செ.கு.வி. (v.i.)

கொதி4.5 பார்க்க;see kodi1.5.

     [கொதி + போடு-.]

கொதிப்படக்கி

 கொதிப்படக்கி kodippaḍakki, பெ.(n.)

உடம்பினுள்ள வெப்பத்தைப் போக்கும் மருந்துகள்:

 medicinal agents tending to soothe or allay the irritation and assuage pain (சா.அக.);.

மறுவ. கொதிப்பாற்றி.

     [கொதிப்பு + அடக்கி.]

கொதிப்பாற்றி

 கொதிப்பாற்றி kodippāṟṟi, பெ.(n.)

   வெப்பந்தணிக்கும் மருந்து (இ.வ.);; sedative, palliative.

     [கொதிப்பு + ஆற்றி.]

கொதிப்பி

கொதிப்பி1 kodippiddal,    18 செ.குன்றாவி (v.t.)

   சுடச் செய்தல்; to be boiled.

     [கொதி + பி. பி – பிறவினை ஈறு.]

 கொதிப்பி2 kodippiddal,    4 செ.கு.வி. (v.i.)

   சிற்றுணா உண்ணுதல்; to take small refreshment.

     [கொதி → கொதிப்பி.]

கொதிப்பு

கொதிப்பு kodippu, பெ.(n.)

   1. பொங்குகை; boiling, bubbling up, offervesce.

   2. வெப்பம்; heat.

   3. காய்ச்சல்; fever.

   4. சினம்; rage, anger.

     “மறவன் கொதிப்புரைத்தன்று” (பு.வெ.8:27, கொளு);.

   5 வயிற்றெரிச்சல்; grief, sorrow.

   6. பரபரப்பு; flutter, flurried state of mind.

     “கொழுநரைத் தழுவுறுங் கொதிப்பால்” (கம்பரா. இலங்கையெரி. 27);.

     [கொதி → கொதிப்பு.]

கொதிப்புக்கணம்

 கொதிப்புக்கணம் kodippukkaṇam, பெ.(n.)

   கருப்பச் சூட்டினால் குழந்தைகளுக்கேற்படும் கணநோய்; mesenteric fever in children due to congenital causes (சா.அக.);.

     [கொதிப்பு + கணம்.]

கொதிப்புக்கொள்ளல்

கொதிப்புக்கொள்ளல் kodippukkoḷḷal, பெ.(n.)

   1. உடம்பு சுடுகை; getting heated in constitution.

   2. கொதிக்கை; bubbling by heat.

   3. சினத்தால் வெப்புக்கொள்ளல்; getting hot or violent through anger (சா.அக.);.

கொதிப்பு + கொள் + அல்.]

கொதிப்பெடு-த்தல்

கொதிப்பெடு-த்தல் kotippeṭuttal,    4 செ.கு.வி.(v.i.)

   1. உடம்பு சூடாதல்; getting heated in constitution.

   2. சினத்தால் வெப்புக் கொள்ளல்; getting hot or violent through anger (சா.அக.);.

     [கொதிப்பு+எடு-த்தல்.]

கொதிப்பேறல்

கொதிப்பேறல் kodippēṟal, பெ.(n.)

   1. உடம்பில் வெப்பம் கொள்ளல்; getting heated in the system.

   2. உடம்பிற் சூடு அதிகப்படல்; the system becoming increased in heat (சா.அக.);.

     [கொதிப்பு + ஏறல்.]

கொதிமந்தம்

 கொதிமந்தம் kodimandam, பெ.(n.)

   வெப்பால் வரும் மந்த நோய் (யாழ்.அக.);; indigestion caused by excess of heat in the system.

     [கொதி + மந்தம்.]

கொதியன்

 கொதியன் kodiyaṉ, பெ.(n.)

   உணவில் ஆசைமிக்கவன் (இ.வ.);; one who hankers after food.

     [கொதி → கொதியன்.]

கொதியல்

கொதியல் kodiyal, பெ.(n.)

   1. கொதிப்பு (வின்.); பார்க்க;see kodippu.

   2. நெகிழ்ந்த அணிகலனுறுப்பை இறுகச் செய்யும் வேலை; the work of tightening the loose parts of an ornament.

     [கொதி → கொதியல்.]

கொதியல்போடு-தல்

கொதியல்போடு-தல் kodiyalpōṭudal,    18 செ. குன்றாவி.(v.t.)

   நெகிழ்ந்த அணிகலனுறுப்பை இறுகச் செய்தல் (இ.வ.);; to tighten the loose parts of an ornament.

     [கொதியல் + போடு-.]

கொதியிறங்கு-தல்

கொதியிறங்கு-தல் kodiyiṟaṅgudal,    5 செ.கு.வி.(v.i.)

   செருக்குக் குறைதல்; to deminish as pride, vanity, haughtiness, anger etc.

     [கொதி + இறங்கு-.]

கொதியெடு-த்தல்

கொதியெடு-த்தல் kodiyeḍuddal,    4 செ.கு.வி.(v.i.)

கொதியிறங்கு-தல் பார்க்க;see kodi-y-iangu-.

     [கொதி + எடு-.]

கொதியெண்ணி

 கொதியெண்ணி kodiyeṇṇi, பெ.(n.)

   உணவுண்ணக் காத்திருப்போன் (யாழ்.அக.);; one who waits for meals.

     [கொதி + எண்ணி.]

கொதியெண்ணெய்

 கொதியெண்ணெய் kodiyeṇīey, பெ.(n.)

   கொதிக்க வைத்தெடுத்த மருந்தெண்ணெய் வகை; a medicinal oil, as boiled (வின்.);.

     [கொதி + எண்ணெய்.]

கொதியெழும்பு-தல்

கொதியெழும்பு-தல் kodiyeḻumbudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. கொதித்தல்; to boil.

   2. உட்சுரங் காய்தல்; to have a slight internal fever (சா.அக.);.

     [கொதி + எழும்பு-.]

கொதிவரக்காய்ச்சு-தல்,

கொதிவரக்காய்ச்சு-தல், kodivarakkāyccudal,    5 செ.குன்றாவி (v.t.)

   கொதியெழும்பக் காய்ச்சுதல்; heating to the boiling point (சா.அக.);.

     [கொதிவர + காய்ச்சு-.]

கொதிவா-தல்

கொதிவா-தல் kodivādal, பெ.(n.)

   18 செ.கு.வி.(v.i.);

கொதியெழும்பு-தல் பார்க்க;see kodi-elmbu-.

கொதிவெந்நீர்

 கொதிவெந்நீர் kodivennīr, பெ.(n.)

கொதிக்கும் நீர்:

 boiling water (சா.அக.);.

     [கொதி + வெந்நீர்.]

கொதுகு

கொதுகு godugu, பெ.(n.)

   கொசு; mosquito, gnat, fly.

     “கொதுகறாக் கண்ணி னோன்பிகள்” (தேவா. 381: 9);.

ம. கொதுகு.

 Fin. Koi: Est. koi: Mari. Koje;

 Mansi. Kij;

 Turk. Kuja;

 Kirghig. Kujo;

 Kazakh. Koja;

 Jap. Ka.

     [கொத்து → கொது → கொதுகு.]

கொத்துவதனால் கொதுகு எனப் பெயர் பெற்றது. கொதுகு → கொசு எனத் திரிந்தது. ‘கு’ சொல்லாக்க ஈறு. முயலை → முயல்கு என்றும் யானையைத் தெலுங்கில் ஏனிகு என்றும் வழங்குவதுபோன்றுகொத்து → கொது → கொதுகு என வழங்கினர்.

கொதுகுலசவையார்

 கொதுகுலசவையார் godugulasavaiyār, பெ.(n.)

   தூதர் எனப்படும் இனத்தார்; the caste of Tudar.

     “கொதுகுல சவையாரிற் சூரியன்” (T.A.S);.

     [கொத்து + குலம் + (அவை); சவை + ஆர்.]

கொதுகுலம்

 கொதுகுலம் godugulam, பெ.(n.)

   மழலை கொஞ்சுகை (யாழ்.அக.);; lisping.

     [குதுகலி → கொதுகுலம்.]

கொதுகுலவன்

கொதுகுலவன் godugulavaṉ, பெ.(n.)

   முந்தையமரக்காலின் பெயர்; name of grain measure in the Tirunedungalam area in Lalkudi Tk.

     “இந்நெல்லுமுப்பதின் கலமும் கொதுகுலான் என்னும் மரக்காலால் நிசதம்முற்றத்து அட்டி” (S.I.I. XXVI.738:5);.

     [குதுகலம் → குதுகலவன் → கொதுகுலவன்.]

கொதுகுலி-த்தல்

கொதுகுலி-த்தல் goduguliddal,    4 செ.கு.வி.(v.i.)

   குழைந்துருகுதல் (யாழ்.அக.);; to melt.

     [குதுகலித்தல் → கொதுகுலி.]

கொதுகொது-த்தல்

கொதுகொது-த்தல் godugoduddal,    4 செ.கு.வி.(v.i.)

   ஒலிக்குறிப்பு; onom. expr. to throb with pain.

     [கொது + கொது-.]

கொதுகொதுப்பு

கொதுகொதுப்பு godugoduppu, பெ.(n.)

   1. கொஞ்சமாய் உடம்பு காய்தல்; slight febrile affection.

   2. சினத்தாலுண்டாகும் சூடு; heat felt in an agitated or excited state (சா.அக.);.

   3. குளிரால் நடுங்குகை ; shivering with cold.

     [குது → கொது + கொதுப்பு.]

கொதுகொதெனல்

கொதுகொதெனல் godugodeṉal, பெ.(n.)

   1. நோவெடுத்தற் குறிப்பு (வின்.);; onom. Expr. of throbbing, as with pain.

   2. சிறு காய்ச்சற் குறிப்பு; slight rise of temperature in the body.

   3. புண் அல்லது கட்டி வீங்கிப் பழுத்திருத்தற் குறிப்பு; highly inflamed condition, as of a sore.

     [கொது + கொது + எனல்.]

கொதுக் கொதுக்கென்றுபோ-தல்

கொதுக் கொதுக்கென்றுபோ-தல் kotukkotukkeṉṟupōtal,    8 செ.கு.வி.(vi)

   செரியாமையினால் அடிக்கடி சிறு அளவாக மலங் கழிதல்; going to stool often in small quantities or having looseness of bowels, due to indigestion (சா.அக.);.

     [கொது+கொது+என்று+போ-தல்.]

கொதுக்கொதுக்கென்றுபோ-தல்

கொதுக்கொதுக்கென்றுபோ-தல் kodukkodukkeṉṟupōdal,    8 செ.கு.வி.(v.t.)

செரியாமையால்

   அடிக்கடி சிற்றளவு மலங்கழிதல்; having looseness of bowels, due to indigestion (சா.அக.);.

மறுவ. கொதுக்கொதுக்கெனக் கொட்டல்.

     [கொதுக்கு + கொதுக்கு + என்று + போ-.]

கொதும்பு

 கொதும்பு kodumbu, பெ.(n.)

கதம்பை நார் (இ.வ.);:

 coconut fibre (சா.அக.);.

     [கோது → கதும் → கொதும்பு.]

கொதுவா

 கொதுவா koduvā, பெ.(n.)

   ஒருவகை மீன்; a kind of fish.

     [கதுவு → கதுவா → கொதுவா.]

கொதுவை

கொதுவை1 koduvai, பெ.(n.)

   மரத்தை உளியால் தோண்டுகை; cut made in wood with a chisel.

     [கொத்து → கொத்துகை → கொதுவை.]

 கொதுவை2 koduvai, பெ.(n.)

   அடைமானம்; pledge, pawn, mortgage.

     [குத்தவை → கொதுவை.]

கொதை

 கொதை kodai, பெ.(n.)

   மரத்தில் உளியால் தோண்டுகை; chiselling wood with chisel.

     [கொத்து → கொதை.]

கொத்தகரை

 கொத்தகரை gottagarai, பெ.(n.)

   பேரரத்தை; greater galangal (சா.அக.);.

ம. கொத்தச்சக்கை

     [கோ + தகரை-கோத்தகரை → கொத்தகரை.]

கொத்தகுறிக்கி

 கொத்தகுறிக்கி gottaguṟiggi, பெ.(n.)

   தருமபுரி மாவட்டத்துச் சிற்றூர்; a village in Dharmapuri Dt.

     [த.கொல் (புதிய); → தெ. கொத்த + த. குறிச்சி); → க. குறிக்கி.]

கொத்தங்குடி

 கொத்தங்குடி kottaṅguḍi, பெ.(n.)

   கடலூர் மாவட்டத்துச் சிற்றூர்; a village in Kadalur Dt.

     [கொற்றன் → கொத்தன் + குடி.]

கொத்தச்சக்கை

 கொத்தச்சக்கை kottaccakkai, பெ.(n.)

   பலாப்பிஞ்சு; tender jack-fruit.

     [கொத்தை + சக்கை. கொத்தை : முற்றாதது.]

கொத்தடிமை

கொத்தடிமை kottaḍimai, பெ.(n.)

   குடும்பத்தோடு அடிமையாதல்; servitude of a family.

     “கொத்தடிமையான குடிநான் பராபரமே” (தாயு. பராபரக். 148);.

     [கொத்து + அடிமை.]

கொத்தடியேந்தல்

 கொத்தடியேந்தல் kottaḍiyēndal, பெ.(n.)

   இராமநாதபுரம் மாவட்டத்துச் சிற்றுார்; a village in Ramanadhapuram Dt..

     [கொத்து + அடி + ஏந்தல்(எரி);.]

கொத்தட்டை

 கொத்தட்டை kottaṭṭai, பெ.(n.)

   கடலூர் மாவட்டத்துச் சிற்றூர்; a village in Kadalur Dt.

     [கொற்றன் → கொத்தன் + தட்டை(மேட்டுநிலம்);.]

கொத்தணி

 கொத்தணி kottaṇi, பெ.(n.)

   குண்றிமணி; a seed of a medicinal climber yielding a beautiful bean.(சா.அக.);.

     [கொத்து + அணி.]

கொத்தனாம்பட்டி

 கொத்தனாம்பட்டி kottaṉāmbaṭṭi, பெ.(n.)

   தருமபுரி மாவட்டத்துச் சிற்றூர்; a village in Kadalur dt.

     [கொற்றன் → கொத்தன் + பட்டி.]

கொத்தனார்

 கொத்தனார் kottaṉār, பெ.(n.)

   தலைமைக் கொத்தன்; head mason.

     [கொத்தன் → கொத்தனார்.]

கொத்தனிக்கோட்டை

 கொத்தனிக்கோட்டை kottaṉikāṭṭai, பெ.(n.)

   இராமநாதபுரம் மாவட்டத்துச் சிற்றூர்; a village in Ramanadhapuram Dt.

     [கொற்றன் → கொத்தன் + தனி + கோட்டை.]

கொத்தனூர்

 கொத்தனூர் kottaṉūr, பெ.(n.)

   கடலூர் மாவட்டத்துச் சிற்றூர்; a village in Kadalur Dt.

     [கொற்றன் → கொத்தன் + ஊர்.]

கொத்தனை

கொத்தனை kottaṉai, பெ.(n.)

   கூட்டமாகச் செல்லும் சிறுமீன் வகை; a kind of small fish living in shoals.

     “கொத்தனை யுகளுநன்னீர்” (பாரத. சூதுபோர்.14);.

     [கொத்து → கொத்தல் → கொத்தலை → கொத்தனை.]

கொத்தன்

கொத்தன்1 kottaṉ, பெ.(n.)

   கட்டட வேலை செய்வோன்; mason, brick-layer (வே.க.179);.

     [கொத்து → கொத்தன்.]

 கொத்தன்2 kottaṉ, பெ.(n.)

   கோயிற் திறவுகோல் (சாவிக்); கொத்தினை வைத்திருக்க உரிமையுள்ள குடியினன்; an authorised man to keep the temple key bunch.

     [கொத்து + அன்.]

 கொத்தன்3 kottaṉ, பெ.(n.)

சவண்டிக்கொத்தன் பார்க்க;see cavandi-k-kottan.

     [கொத்து + அன்.]

 கொத்தன்4 kottaṉ, பெ.(n.)

கொத்தச்சக்கை பார்க்க;see kotta-c-cakkai.

     [ம. கொத்தச்சக்கெ (பலாப்பிஞ்சு); → கொத்தன்.]

 கொத்தன்2 kottaṉ, பெ.(n.)

   நத்தை (Pond.);; snail.

     [குழை → குழைத்து → கொத்து → கொத்தான.]

கொத்தன்குளம்சேரி

 கொத்தன்குளம்சேரி kottaṉkuḷamcēri, பெ.(n.)

   குமரி மாவட்டத்துச் சிற்றூர்; a village in Kanyakumari Dt.

     [கொத்தன் + குளம் + சேரி.]

கொத்தப்பருத்தி

 கொத்தப்பருத்தி kottapparutti, பெ.(n.)

   கழிவுப்பருத்தி; cotton waste.

     [கழித்தல் → கத்தல் → கொத்தல் + பருத்தி.]

கொத்தப்பியர்

 கொத்தப்பியர் kottappiyar, பெ.(n.)

   இந்தியாவை ஆட்சிபுரிந்த பழம்பெரும் அரசக் குடும்பத்தினர்; the dynasty who ruled India (அபி.சிந்.);.

கொத்தப்பிரார்

கொத்தப்பிரார் kottappirār, பெ.(n.)

   கள்ளர்குடிப் பட்டப்பெயர்களுள் ஒன்று (கள்ளர் சரித்.ப.98);; a caste title of Kallars,

     [கொற்றப்பிரியர் → கொத்தப்பிரியர்.]

கொத்தப்புள்ளி

 கொத்தப்புள்ளி kottappuḷḷi, பெ.(n.)

   திண்டுக்கல்மாவட்டத்துச் சிற்றூர்; a village in Dindukkal Dt.

     [கொற்றன் → கொத்தன் + (பள்ளி); புள்ளி (கொ.வ);.]

கொத்தம கண்டகம்

 கொத்தம கண்டகம் gottamagaṇṭagam, பெ.(n.)

   பற்பாடகம்; fever plant (சா.அக.);.

     [கொத்து → கொத்தமம் + கண்டகம்.]

கொத்தமங்கலம்

 கொத்தமங்கலம் kottamaṅgalam, பெ.(n.)

   விழுப்புரம் மாவட்டத்துச் சிற்றூர்; a village in Villuppuram Dt.

     [கொற்றன் → கொத்தன் + மங்கலம்.]

கொத்தமல்லி

 கொத்தமல்லி kottamalli, பெ.(n.)

கொத்துமல்லி பார்க்க;see kottumalli.

ம., தொ., பட. கொத்தமல்லி.

     [கொத்து + மல்லி – கொத்துமல்லி → கொத்தமல்லி.]

கொத்தமல்லி விதை

 கொத்தமல்லி விதை koddamallividai, பெ.(n.)

   உருளரசி; common coriander seed (சா.அக.);.

     [கொத்தமல்லி + விதை.]

கொத்தமல்லிக் கீரை

 கொத்தமல்லிக் கீரை kottamallikārai, பெ.(n.)

   கறிக்குதவும் பச்சைக் கொத்துமல்லியிலை; green coriander leaves used in curry (சா.அக.);.

மறுவ. கொத்தமல்லித்தழை.

     [கொத்து + மல்லி – கொத்தமல்லி + கீரை.]

கொத்தமல்லிசூரி

 கொத்தமல்லிசூரி kottamallicūri, பெ.(n.)

   கொப்புளிப்பான் நோய்; chicken-pox or measles.

மறுவ. நீர்க்கொளுவன், கொத்தமல்லியம்மை.

     [கொத்தமல்லி + (வைசூரி);சூரி]

கொத்தமல்லிச் சூரணம்

 கொத்தமல்லிச் சூரணம் kottamalliccūraṇam, பெ.(n.)

   கொத்தமல்லி விதையைப் பொடி செய்து மற்றக் கடைப்பொருள்களுடன் சேர்த்துச் செய்த மருந்துப் பொடி; powder of coriander seeds mixed with other medicinal ingredients (சா.அக.);.

     [கொத்தமல்லி + சூரணம்.]

கொத்தமல்லிச்செடி

 கொத்தமல்லிச்செடி kottamallicceṭi, பெ.(n.)

மணத்திற்காக குழம்பில் சேர்த்துக் கொள்ளப்படும் கொத்த மல்லி செடி,

 coriander, Coriandrum sativum (சா.அக.);.

     [கொத்தமல்லி+செடி]

கொத்தமல்லித் தைலம்

 கொத்தமல்லித் தைலம் kottamallittailam, பெ.(n.)

கொத்தமல்லியெண்ணெய் பார்க்க;see kottamalli-y-enney.

     [கொத்தமல்லி + தைலம்.]

கொத்தமல்லித்துள்

 கொத்தமல்லித்துள் kottamallittuḷ, பெ.(n.)

   கறிக்குப் போடுவதற்காக இடித்த கொத்தமல்லித்தூள்; powder of dried Coriander seeds used in curries and confectionaries (சா.அக.);.

     [கொத்த+மல்லி+தூள்.]

கொத்தமல்லிமணி

 கொத்தமல்லிமணி kottamallimaṇi, பெ.(n.)

   மகளிர் கழுத்தணி வகை; a kind of necklace worn by women.

     [கொத்தமல்லி + மணி.]

கொத்தமல்லியம்மை

 கொத்தமல்லியம்மை kottamalliyammai, பெ.(n.)

கொப்புளிப்பான் பார்க்க: see koppulippan.

ம. கொத்தமல்லியம்ம.

     [கொத்தமல்லி + அம்மை.]

கொத்தமல்லியெண்ணெய்

 கொத்தமல்லியெண்ணெய் kottamalliyeṇīey, பெ.(n.)

   கொத்தமல்லி விதையை வாலையிலிட்டு வடிக்கும் எண்ணெய்; a volatile oil extracted from coriander seeds (சா.அக.);.

     [கொத்தமல்லி + எண்ணெய்.]

கொத்தமல்லிவசூரி

 கொத்தமல்லிவசூரி kottamallivacūri, பெ.(n.)

   கொப்புளிப்பான் என்னும் அம்மை வகை; chicken – pox or measles (செ.அக.);.

     [கொத்தமல்லி+Skt. வகுரி]

கொத்தமுரி

 கொத்தமுரி kottamuri, பெ.(n.)

கொத்தமல்லி பார்க்க;see kottamalli.

உருளரிசி கொத்தமுரி யென்றாற் போல’ (இறை. , உரை);.

     [கொத்து + மல்லி – கொத்துமல்லி → கொத்தமுரி.]

கொத்தம்

கொத்தம்1 kottam, பெ.(n.)

   எல்லை (பிங்.);; boundary, limit.

     [கொல் → கொத்து + அம்.]

 கொத்தம்2 kottam, பெ.(n.)

   கொத்தன் வேலை, கட்டடத் தொழில்; masonry (பண்.த.நா.பண்.98);.

     [கொத்து → கொத்தம்.]

 கொத்தம்3 kottam, பெ.(n.)

   புதுமை; newness.

தெ.கொத்த(புதிய);.

     [குல் → குது → கொத்து + அம்.]

எதுவுந் தோன்றியவுடன் புதுமையாயிருக்குமாதலால், தோண்றற் கருத்தில் புதுமைக் கருத்துத்தோன்றிற்று (குது); – கொத்தம் (மு.தா. 42);.

 கொத்தம்4 kottam, பெ.(n.)

   கொத்துமல்லி; coriandar leaf.

     “கடுகிங்கு கொத்தம் மதுரம் வசம்பு”(சரசோதி.);

     [கொத்து → கொத்தம்.]

 கொத்தம்5 kottam, பெ.(n.)

   புதிய நிலம்; new land.

     “வடபாற்கெல்லை மெழுக்குப் புறத்துக்கு வடவெல்லைக் கொத்தத்துக்குத் தெற்கும்”(S.I.I.XIII.125:25);.

     [கொத்து → கொத்தம்.]

கொத்தம்பரி

 கொத்தம்பரி kottambari, பெ.(n.)

கொத்துமல்லி: a bunch of coriandar leaf (கல்.அக.);.

க.கொத்தம்பரி, கொத்துமிரி. கொத்தமரி.

     [கொத்துமல்லி → க. கொத்துமரி → கொத்தம்பரி (கொ.வ);.]

கொத்தம்பாக்கம்

 கொத்தம்பாக்கம் kottambākkam, பெ.(n.)

   விழுப்புரம் மாவட்டத்துச் சிற்றூர்; a village in Villuppuram Dt.

     [கொற்றன் → கொத்தன் + பாக்கம்.]

கொத்தயம்

 கொத்தயம் kottayam, பெ.(n.)

   திண்டுக்கல் மாவட்டத்துச் சிற்றூர்; a village in Dindugul Dt.

     [கொத்து + ஆயம் – கொத்தாயம் → கொத்தயம்.]

கொத்தரல்

 கொத்தரல் kottaral, பெ.(n.)

கொத்தறல் பார்க்க see kottaral.

     [கொத்து + (அறல்); அரல்.]

கொத்தரி

 கொத்தரி kottari, பெ.(n.)

   சிவகங்கை மாவட்டத்துச் சிற்றூர்; a village in Sivagangai Dt.

     [கொடித்தலம் → கொத்தலம் → கொத்தரி.]

கொத்தரி-த்தல்

கொத்தரி-த்தல் kottarittal,    4 செ.குன்றா.வி. (v.t.)

   கொத்திடுதல்; to chisel, pick.

இதைக் கொத்தரித்து விடு (உ.வ.);.

     [கொத்து → கொத்தரி.]

கொத்தரிவாள்

 கொத்தரிவாள் kottarivāḷ, பெ.(n.)

   அரிவாள் வகை; a kind of sickle.

     [கொத்து + அரிவாள்.]

கொத்தர்குப்பம்

 கொத்தர்குப்பம் kottarkuppam, பெ.(n.)

   கட்டடத்தொழில் மேற்கொள்வோர் வாழும் ஊர்; a village where masons are living.

     [கொத்தர் + குப்பம்.]

கட்டடத்தொழில் வல்லவர்கள் இப்பகுதியில் பெரும்பான்மையினர் வாழ்ந்தமையால் இப்பெயர் பெற்றிருக்கலாம்.

கொத்தறுவாள்

 கொத்தறுவாள் kottaṟuvāḷ, பெ.(n.)

   ஆட்டுக் கறியை அறுப்பதற்கும் கொத்துவதற்கும் பயன்படும் அறுவாள்; knife used to choping meat.

     [கொத்து + அறுவாள்.]

கொத்தல பெத்தாம்பட்டி

 கொத்தல பெத்தாம்பட்டி kottalabettāmbaṭṭi, பெ.(n.)

   தருமபுரி மாவட்டத்துச் சிற்றூர்; a village in Dharmapuri Dt.

     [கொடித்தலம் → கொத்தலம் + பெத்தன் (பெரியவன்); பட்டி.]

கொத்தலரி

 கொத்தலரி gottalari, பெ.(n.)

   அடுக்கலரிப்பூ; cluster oleander.

     [கொத்து + அலரி.]

கொத்தல்

கொத்தல் kottal, தொ.பெ.(vbl.n.)

   1. பாம்பு கடித்தல்; biting as a snake.

   2 கறிகொத்துதல்; chopping as of meat.

   3. பறவை மூக்கினால் மோதல்; striking with the beak as birds.

     “நெடுங்கணார் தோட்கிளி கொத்தலின்” (சீகாளத். பு. நக்கீர. 30);.

   4. இரை கொத்தியெடுத்தல்; picking up grains as birds (சா.அக.);.

   5. நோண்டுதல்; delving, digging the ground with a spade.

   6. களைகொத்தல்; to remove weeds by using hoe.

ம. கொத்தல்.

     [குல் → குத்து → கொத்து → கொத்தல்.]

கொத்தள-த்தல்

கொத்தள-த்தல் kottaḷattal,    2 செ.கு.வி. (v.i.)

   கூலியாகத் தவசங் கொடுத்தல்; to pay wages in kind, as to an artisan.

     “கூலிவேலை செய்தால் கொத்தளக்குமாறு போல”(சி.சி. 2: 21. மறைஞா.);.

     [கொத்து = நெற்கட்டு, கதிர்த்தாள் கட்டு (ஒரு தாள் கட்டில் உதித்த தவசம்); கொத்து + அள-.]

கொத்தளம்

 கொத்தளம் kottaḷam, பெ.(n.)

   கோட்டை மதிலுறுப்புகளுள் ஒன்று (பிங்.);; part of a rampart, bastion, defensive erection on the top of a rampart.

   ம. கொத்தளம்;   க. கொத்தள;   தெ. கொத்தடமு, க்ரொத்தட, க்ரொத்தளமு, கொத்தள;து. கொத்தள, கொத்தல். Pãli.kottaka.

     [கொத்து + அளம் (சொல்லாக்க ஈறு);.]

கொத்தளி

 கொத்தளி kottaḷi, பெ.(n.)

கொத்தளிப்பாய் (வின்.); பார்க்க;see kottali-p-pay.

     [கொத்து → கொத்துளி → கொத்தளி.]

கொத்தளிப்பாய்

 கொத்தளிப்பாய் kottaḷippāy, பெ.(n.)

   புற்பாய் (பிங்.);; mat made of rushes.

     [கொத்தளி + பாய்.]

கொத்தளை

 கொத்தளை kottaḷai, பெ.(n.)

   கூட்டமாய்த் திரியும் மீன்வகை; a kind of fish which moves as a group.

     [கொத்து → கொத்தல் → கொத்தலை → கொத்தளை (கொ.வ.);.]

கொத்தழி-தல்

கொத்தழி-தல் koddaḻidal,    2 செ.கு.வி. (v.i.)

   முற்றுமழிதல் (வின்.);; to lie waste or desolate, to be in ruins.

     [கொத்து(முழுவதும்); + அழி-.]

கொத்தவன்

 கொத்தவன் kottavaṉ, பெ.(n.)

   முடக்கற்றான்; palsy curer (சா.அக.);.

     [முடக்கற்றான் → கொற்றான் → கொத்தான் → கொத்தவன்.]

கொத்தவரங்காய்

 கொத்தவரங்காய் kottavaraṅkāy, பெ.(n.)

   சற்று நீளமாகவும், தட்டையாகவும், வெளிர்ப்பச்சை நிறமாகவும் இருக்கும் காய்கறி; cluster beans.

கொத்தவரங்காய் வற்றல். கொத்தவரங்காய் போல் இருக்கிறான்

     [கொத்து+அவரங்காய்.அவரைக்காய் → அவரங்காய்]

 கொத்தவரங்காய் kottavaraṅgāy, பெ.(n.)

   கொத்தாய்க் காய்க்கும் அவரைவகைகளி லொன்று; a kind of cluster bean.

     [கொத்து + அவரை + காய்.]

கொத்தவரங்காய்ப்பின்னல்

 கொத்தவரங்காய்ப்பின்னல் kottavaraṅgāyppiṉṉal, பெ.(n.)

   கொத்தவரங்காய் போலக் குழந்தைகட்குப் பின்னும் பின்னல் வகை; plaiting the hair of a child in the form of a cluster bean.

     [கொத்தவரங்காய் + பின்னல்.]

கொத்தவரை

 கொத்தவரை kottavarai, பெ.(n.)

   கொத்துக் கொத்தாகக் காய்க்கும் அவரை வகை; cluster bean.

ம. கொத்தவர.

     [கொத்து + அவரை.]

கொத்தவாசல்

 கொத்தவாசல் kottavācal, பெ.(n.)

   கடலூர் மாவட்டத்துச் சிற்றூர்; a village in Kadalur Dt.

     [கொற்றன் → கொத்தன் + (வாயல்); வாசல்.]

கொத்தவாஞ்சேரி

 கொத்தவாஞ்சேரி kottavāñjēri, பெ.(n.)

   கடலூர் மாவட்டத்துச் சிற்றூர்; a village in Kadalur Dt.

     [கொற்றவன் + சேரி – கொற்றவன்சேரி → கொத்தவாஞ்சேரி.]

கொத்தவாற்சாவடி

கொத்தவாற்சாவடி kottavāṟcāvaḍi, பெ.(n.)

   1. காவல்நிலையம்; police station.

   2. நகர நடுவில் உணவுப்பொருள்கள் முதலியன விற்கப்படும் வணிக மையம்; Central place in some towns serving as a market for provisions etc.

     [கோட்டை + வாசல் – கொத்தவாசல் + (தாவடி); சாவடி.]

கொத்தவாற்சேவகன்

 கொத்தவாற்சேவகன் kottavāṟcēvakaṉ, பெ. (n.)

   கொத்தவாலெனுங் காவற் தலைவனின் கீழ் வேலை பார்க்கும் காவலாள்; police constable under a kottavāl (செ.அக.);.

     [கோட்டை+அள்+சேவகன்,]

கொத்தவால்

 கொத்தவால் kottavāl, பெ.(n)

   நகரங்கள், சிற்றுார்கள் முதலியவற்றின் காவல் தலைவன்; chief police officer for a city or town, superintendent of markets (செ.அக.);.

     [கோட்டை+வாள்.]

 கொத்தவால் kottavāl, பெ.(n.)

   நகர முதலியற்றின் காவற்றலைவன்; chief police officer for a city or town, superintendent of markets.

     [U.{} → த.கொத்தவால்.]

முகம்மதிய ஆட்சியில் நகரம், பேரூர் ஆகியவற்றிற்குப் பொறுப்பாளியாக இருந்த காவல் தலைவன் ‘கொத்தவால்’ என்று அழைக்கப்பெற்றான்.

கொத்தாங்கொளுஞ்சி

கொத்தாங்கொளுஞ்சி kottāṅgoḷuñji, பெ.(n.)

   கொழிஞ்சிவகை (பெரியமாட். 113.);; a plant.

     [கொற்றான் → கொத்தான் + கொளுஞ்சி.]

கொத்தான்

கொத்தான்1 kottāṉ, பெ.(n.)

கொற்றான் பார்க்க;see korrãn.

     [கொற்றான் → கொத்தான்.]

கொத்தான் வகை :

   1.எருமைக்கொத்தான்,

   2. கொடிக் கொத்தான்,

   3. கங்கொத்தான்,

   4. கறிக்கொத்தான்,

   5. முடக்கொத்தான்,

   6. வேரிலாக்கொத்தான்,

   7. முட் கொத்தான்

     [சா.அக.].

 கொத்தான் kottāṉ, பெ.(n.)

   நண்டு போல் மணலைத் துளைக்கும் வண்டு; a type of beetle like crab.

     [கொத்து+ஆன்.]

கொத்தான் இஞ்சி

 கொத்தான் இஞ்சி kottāṉiñji, பெ.(n.)

   பச்சை இஞ்சி; green ginger (சா.அக.);.

     [கொத்தான் + இஞ்சி.]

கொத்தான் சூரிகை

 கொத்தான் சூரிகை gottāṉcūrigai, பெ.(n.)

   பச்சைமிளகு; green pepper (சா. அக.);.

     [கொத்தான் + சூரிகை).]

கொத்தான் வாகை

கொத்தான் வாகை kottāṉvākai, பெ.(n.)

   வாகைவகை (பு.வெ.8:2. கொளு, உரை);; a species of sirissa.

மறுவ. வெண்கண்ணி.

     [கொத்தான் + வாகை.]

கொத்தான்கொடி

 கொத்தான்கொடி kottāṉkoṭi, பெ.(n.)

   ஆகாசவல்லிக் கொடி; air plant or air creeper, leafless creeper or thread creeper, Cassytha filiformis (சா.அக.);.

     [கொத்தான்+கொடி]

கொத்தாபட்டி

 கொத்தாபட்டி kottāpaṭṭi, பெ.(n.)

   தேனி மாவட்டத்துச் சிற்றூர்; a village in Theni Dt.

     [கொத்தன் + பட்டி – கொத்தன்பட்டி → கொத்தாபட்டி.]

கொத்தார்குழவி

 கொத்தார்குழவி kottārkuḻvi, பெ.(n.)

   சீவக மூலி; wild sarsaparilla (சா.அக.);.

     [கொத்து + ஆர் + குழவி.]

கொத்தாள்

கொத்தாள் kottāḷ, பெ.(n.)

   1. வேளாண் தொழிற்கூலியாள்r; hired labourer in agricultural operations.

   2. அடிமை; slave.

     [கொத்து + ஆள்.]

கொத்தி

கொத்தி1 kotti, பெ.(n.)

   மீன்கொத்திப் பறவை; kingfisher (சா.அக.);.

     [கொத்து → கொத்தி]

 கொத்தி2 kotti, பெ.(n.)

   1. குருட்டு விலங்கு; blind animal.

   2.பூனை; cat.

மறுவ. பூசை.

 E. cat: O. E. cattle: M.E. cattes: L.L. cattus, catta: ONF. Chat: O.N. kottr: O.H.G. kazza.

     [கொத்து → கொத்தை. கொத்தை = குருடு.]

கொத்திக்கொண்டுபோ-தல்

கொத்திக்கொண்டுபோ-தல் kottikkoṇṭupōtal,    8 செ.குன்றாவி.(v.t.)

   தவறவிடாமல் கைப்பற்றுதல்; swoop away,

உன் அழகிற்கு யாராவது உன்னைக் கொத்திக்கொண்டு போய்விடுவார்கள் (உ.வ.);.

     [கொத்தி + கொண்டு + போ-.]

கொத்திடல்

 கொத்திடல் kottiḍal, பெ.(n.)

   இராமநாதபுரம் மாவட்டத்துச் சிற்றூர்; a village in Ramanadhapuram Dt.

     [கோ (அரசன்); + திடல் – கோத்திடல் → கொத்திடல்.]

கொத்திதழி

கொத்திதழி koddidaḻi, பெ.(n.)

சரக்கொன்றை பார்க்க (தைலவ.தைல.135,26.);;see cara-k-konrai.

     [கொத்து + இதழி.]

கொத்தித்தின்(னு)-தல்

கொத்தித்தின்(னு)-தல் koddiddiṉṉudal,    14 செ. குன்றாவி (v.t.)

   1. கொத்தி யுண்ணுதல்; lit., to peck and eat.

   2. மிகுதியாகத் துன்பப்படுத்துதல் (கொ.வ.);; to harass, torment.

     [கொத்தி + தின்(னு-.]

கொத்திப்பறத்து-தல்

கொத்திப்பறத்து-தல் koddippaṟaddudal,    5 செ. குன்றாவி (v.t.)

   துன்பப்படுத்தி வெருட்டுதல்; to torment and drive off.

     [கொத்து → கொத்தி + பறத்து-.]

கொத்திப்பிடுங்கு-தல்

கொத்திப்பிடுங்கு-தல் koddippiḍuṅgudal,    5 செ.குன்றாவி. (v.t.)

கொத்தித்தின்(னு);-தல், பார்க்க;see kotti-t-tin(nu);-.

     [கொத்தி + பிடுங்கு-.]

கொத்திப்போடல்

 கொத்திப்போடல் kottippōṭal, தொ.பெ. (vbl.n.)

   பறவைகள் அலகுகளால் கொத்துதல்; picking up with the beak (சா.அக.);.

     [கொத்தி+போடல்.]

கொத்திமங்கலம்

 கொத்திமங்கலம் kottimaṅgalam, பெ.(n.)

   காஞ்சிபுரம் மாவட்டத்துச் சிற்றூர்; a village in Kanjipuram Dt.

     [கொத்தி + மங்கலம்.]

கொத்தியரி-த்தல்

கொத்தியரி-த்தல் kottiyarittal,    4 செ.குன்றாவி (v.t.)

   நாசமாக்குதல்; to destroy.

     [கொத்தி + அரி-.]

கொத்தியார்கோட்டை

 கொத்தியார்கோட்டை kottiyārāṭṭai, பெ.(n.)

   இராமநாதபுரம் மாவட்டத்துச் சிற்றூர்; a village in Ramanadhapuram Dt.

     [கொற்றியார் → கொத்தியார் + கோட்டை.]

கொத்தியெடு-த்தல்

கொத்தியெடு-த்தல் kottiyeḍuttal,    4 செ.குன்றாவி (v.t.)

   மூக்கால் கொத்தியெடுத்தல்; picking up grains as by fowls, pigeons etc. (சா.அக.);.

     [கொத்தி + எடு-.]

கொத்திலை

கொத்திலை kottilai, பெ.(n.)

   1. நிலவேம்பு; ground neem.

மறுவ. காக்கைப்பிலை, காகோளி.

     [கைத்து → கொத்து + இலை.]

கொத்து

கொத்து1 koddudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. நிலத்தைக் கிண்டுதல்; to grub up, hoe.

   2. அலகால் குத்தியெடுத்தல்; to peck, as a bird.

     “கழுகு கொத்திடக் களத்திடைக் கவிழ்ந்தனர்” (காசிக. தக்கன்வேள்வியை.48);.

   3. குத்திக் கடித்தல்; to bite, as a snake.

   4. வெட்டுதல்; to chop, hack, mince.

கொல்லிமலைப் பக்கங்களில் பலாக்காய் கொத்துகிறார்கள்.

   5. எழுத்து முதலியன செதுக்குதல்; to carve, engrave.

   6. பிளத்தல்; split;

விறகு கொத்த ஆள் கிடைக்கவில்லை (கிரி.); (வே.க.178);.

   7. அம்மி, உரல் முதலியவற்றில் கொத்துதல், உளியால் கொத்துதல்; to chisel, to chop.

   ம. கொத்துக;   க.கொத்து;   தெ. குச்சு;   குட. கொத்த;   துட. க்விந்த்க்;கோத. கொத்ய்.

 Bāli n-getep, nu-get. ME. Cutten, kutten;

 Swed. kuta, kota;

 Ice. kuta.

     [குத்து → கொத்து.]

 கொத்து2 kottu, பெ.(n.)

   1. கொத்துவகை; grubbing;

 mincing;

 pecking, as birds, grabbing, as fish;

 biting, as a serpent;

 gashing, engraving.

   2. கொத்துவேலை; masonry, work of a mason.

   3. கொத்தனது ஒரு நாள் வேலை; a day’s work of a mason.

   4. கொத்துவேலை செய்பவன்; a mason, dist. fr. cittu.

   5. களை பறிக்கப் பயன்படும் சிறுகளைக்கொட்டு (இ.வ.);; a small hoe used for rooting out weeds.

     [குத்து → கொத்து.]

 கொத்து3 kottu, பெ.(n.)

   1. பூ முதலியவற்றின் குலை; bunch, cluster, collection of things of the same kind,

     “கொத்துறு போது மிலைந்து” (திருவாச. 6:30);.

   2 திரள்; assembly, multitude.

     “அனைத்துக் கொத்துப் பரிஜனங்களும்”(குருபரம்.);

   3. குடும்பம்; family.

அவன் கொத்துக் கொடியை அறிவேன் (வின்.);.

   4. சவண்டிக் கொத்தன் பார்க்க;see cavandi-k-kottan.

   5. ஆடையின மடி (இ.வ.);; a piece of cloth.

   6. தவசமாகக் கொடுக்குங் கூலி (இ.வ.);; wages paid in kind, as grain, etc.

   7. சோறு; cooked rice.

     “அரும்புக்கும் கொத்துக்கும் வந்தார்” (தனிப்பா. 1, 87:174);.

   8. கைப்பிடி அளவு; handful, as of cooked rice.

ஒரு கொத்துச் சோறு கொடு (உ.வ.);.

   9. நாழி (யாழ்.);; a standard measure = about a quart.

   10. ஒன்றாகச் சேர்ந்திருக்கும் நிலை;கொத்து

 bunch, cluster.

கொத்துக் கொத்தாக மலர்கள் பூத்திருந்தன (உ.வ.);.

வித்தாரக் கள்ளி விறகொடிக்கப் போனாளாம் கத்தாழை முள்ளு கொத்தோட தைத்ததாம் (பழ);.

ம., க. கொத்து., தெ. கொதரு (அதிகமாதல்);.

     [குத்து திரட்சி;குத்து → கொத்து.]

 guccha, gunja, gutra, a bunch, a bundle, a bunch of flowers, a cluster of blossoms. Lf.D. kottu, gutti, gudi, goñcal, gonci, gõne, gole, the so-called Tbhs. kuccu, koccu, and the terms S. kude. K. K.E.D.XIII.

 கொத்து4 kottu, பெ.(n.)

   ஒன்றேகால் கல்லெடைக்கு (கிலோவுக்கு);ச் சமமான அளவுகொண்ட முகத்தல் அளவை; a measure roughly equal to one and a quarter kilogram.

     [குத்து → கொத்து.]

 கொத்து kottu, பெ.(n.)

நெசவு நெய்த புதியதுணி,

 new cloths of handloom.

கொத்து வெளுக்கத் தந்திருக்கிறார்கள்.(இ.வ.);

     [கொல்-(புதுமை);-கொத்து-புதியது]

கொத்து-தல்

கொத்து-தல் kottutal,    5 செ.கு.வி.(v.i.)

   1. பாம்பு கடித்தல்; biting as by a snake.

   2. கறி கொந்துதல்; chopping as of meat.

   3. பறவை மூக்கினால் மோதல்; striking with the beak as by birds.

   4. இரை கொத்தி எடுத்தல்; picking up grains as by birds (சா.அக.);.

     [கொல்-கொத்து.]

கொத்துக்கடம்பை

 கொத்துக்கடம்பை kottukkaḍambai, பெ.(n.)

   குத்தாக வளரும் ஒரு சிறிய செடி; a small shrub growing dense, known as buttermilk leaf plant (சா.அக.);.

     [குத்து → கொத்து + கடம்பை.]

கொத்துக்கட்டி

 கொத்துக்கட்டி kottukkaṭṭi, பெ.(n.)

   மண்கட்டி (யாழ்.);; clods hoed up.

     [கொத்து + கட்டி.]

கொத்துக்கட்டை

 கொத்துக்கட்டை kottukkaṭṭai, பெ.(n.)

மேலே வைத்து நறுக்கப் பயன்படுத்தும் மரக்கட்டை,

 a wooden piece used to chap anything onit.

     [கொத்து+கட்டை]

கொத்துக்கணக்கு

கொத்துக்கணக்கு1 kottukkaṇakku, பெ.(n.)

   கொடிவழிக் கணக்கு வேலை (இ.வ.);; hereditary office of accountant.

     [கொத்து + கணக்கு.]

 கொத்துக்கணக்கு2 kottukkaṇakku, பெ.(n.)

   கொத்தன் சம்பளக் கணக்கு (இ.வ.);; account of mason’s wages.

     [கொத்து + கணக்கு.]

கொத்துக்கத்தரி

 கொத்துக்கத்தரி kottukkattari, பெ.(n.)

சுண்டை பார்க்க;see sundai.

     [கொத்து + கத்தரி.]

கொத்துக்கம்பு

கொத்துக்கம்பு kottukkambu, பெ.(n.)

   கம்புவகை (G.Sm.D.I.I.219.);; a variety of millet.

     [கொத்து + கம்பு.]

கொத்துக்கரண்டி

 கொத்துக்கரண்டி kottukkaraṇṭi, பெ.(n.)

   கொத்துவேலைக்குரிய அரசிலைக் கரண்டி; mason’s trowel.

     [கொத்து + கரண்டி.]

கொத்துக்கறி

 கொத்துக்கறி kottukkaṟi, பெ.(n.)

   சிறுசிறு துண்டுகளாக நறுக்கிய இறைச்சி; chopped meat.

     [கொத்து + கறி.]

கொத்துக்களா

கொத்துக்களா kottukkaḷā, பெ.(n.)

   1. ஒரு வகைக் களா; fascicled leaved berberry.

   2. மலைக்களா; Indian cranberry (சா.அக.);.

     [கொத்து + களா.]

கொத்துக்காடு

கொத்துக்காடு kottukkāṭu, பெ.(n.)

   உழவினாலன்றிக் கொத்திப் பயிரிடுவதற்குரிய நிலம் (G.Sm.D.I., II,43.);; land cultivable by hoeing and not by ploughing, opp. to ulavukkādu.

     [கொத்து + காடு.]

கொத்துக்காரச்சம்மட்டி

 கொத்துக்காரச்சம்மட்டி kottukkāraccammaṭṭi, பெ.(n.)

   ஒரு மருந்துச்செடி; a medicinal plant.

     [கொத்துக்காரன் + சம்மட்டி.]

கொத்துக்காரனுளி

 கொத்துக்காரனுளி kottukkāraṉuḷi, பெ.(n.)

   உளிவகை; gouge (புதுவை);.

     [கொத்துக்காரன் + உளி.]

கொத்துக்காரன்

கொத்துக்காரன்1 kottukkāraṉ, பெ.(n.)

   1. வேலையாள்களின் தலைவன் (இ.வ.);; head of a company of labourers, as of those engaged in reaping.

   2. சவண்டிக்கொத்தன் பார்க்க;see cavandi-k-kottan.

     [கொத்து + காரன்.]

 கொத்துக்காரன்2 kottukkāraṉ, பெ.(n.)

   1. கொத்துவேலை செய்பவன்; mason, brick layer.

   2. கல்வேலை செய்பவன்; stone mason.

   3. ஊர்த்தலைவன்; village head.

   4. பண்ணை மேலாளர்,

 manager of a farm.

     [கொத்து + காரன்.]

கொத்துக்காரி

 கொத்துக்காரி kottukkāri, பெ.(n.)

   கோயிலிற்கொடிவழி உரிமையுடைய நாட்டிய மங்கை (இ.வ.);; dancing girl holding hereditary rights in a temple.

     [கொத்து (கொத்தடிமை); + காரி.]

கொத்துக்காரை

கொத்துக்காரை kottukkārai, பெ.(n.)

   1. பெருங்காரை; divine jasmine.

   2. பூங்காரை; poisonous fruit (சா.அக.);.

     [கொத்து + காரை.]

கொத்துக்கிளை

 கொத்துக்கிளை kottukkiḷai, பெ.(n.)

   நகு தாளிலை; cherry nutmeg (சா.அக.);.

     [கொத்து + கிளை.]

கொத்துக்கீரை

 கொத்துக்கீரை kottukārai, பெ.(n.)

   கறிவகை (நாஞ்.);; a kind of dish.

     [கொத்து + கீரை.]

கொத்துக்குறடு

 கொத்துக்குறடு kottukkuṟaḍu, பெ.(n.)

   நண்டு; Crab.

     [கொத்து + குறடு.]

கொத்துக்கூலி

கொத்துக்கூலி kottukāli, பெ.(n.)

   1. வேளாண் தொழில்களின் பொருட்டுக் கொடுக்குங் கூலி; wage for the various forms of agricultural work.

   2. கொத்தர்க்குக் கொடுக்குங் கூலி; wage for masonry work (செ.அக.);.

மறுவ, கொத்தனார்கூலி

     [கொத்து+கூலி]

 கொத்துக்கூலி kottukāli, பெ.(n.)

   1. உழவுத் தொழிலின்பொருட்டுக் கொடுக்குங்கூலி; wages for various forms of agricultural work.

   2. கொத்தர்க்குக் கொடுக்குங் கூலி,

 wage for masonry work.

     [கொத்து + கூலி.]

கொத்துக்கோரை

 கொத்துக்கோரை kottukārai, பெ.(n.)

   கோரை வகைகளுள் ஒன்று; wet-land sedge, Cyperus compressus (செ.அக.);.

     [கொத்து+கோரை.]

 கொத்துக்கோரை kottukārai, பெ.(n.)

   கோரை வகை; wet-land sedge.

     [கொத்து (தொகுதி); + கோரை.]

கொத்துக்கோவை

கொத்துக்கோவை kottukāvai, பெ.(n.)

   1. காக்கைப் பிலை; esculent leaved false kamela.

   2. காகோளி; downy-leaved false hamela (சா.அக.);

     [கொத்து + கோவை.]

கொத்துங்குறடு

கொத்துங்குறடு kottuṅguṟaḍu, பெ.(n.)

   1. நண்டு (யாழ்.அக.);;  crab.

   2. கொத்துதற்குக் குறடு போன்ற உறுப்புடையது; lit. that which has pincer-like mandibles to strike.

     [கொத்தும் + குறடு.]

கொத்துங்குறையுமாய்

 கொத்துங்குறையுமாய் kottuṅguṟaiyumāy, கு.வி.எ. (adv.)

   அரைகுறையாய் (வின்.);; in an incomplete or unfinished state.

     [கொத்தும் + குறையும் + ஆய்.]

கொத்துங்கூற்றானுள்ளோன்

 கொத்துங்கூற்றானுள்ளோன் kottuṅāṟṟāṉuḷḷōṉ, பெ.(n.)

   நண்டு; crab (சா.அக.);.

மறுவ. கொத்துங்குறடு.

     [கொத்தும் + கூற்றான் + உள்ளோன்.]

கொத்துச்சட்டி

கொத்துச்சட்டி kottuccaṭṭi, பெ.(n.)

   1. உணவு பரிமாறப் பயன்படும் என வகை (கொ.வ.);; a cluster of cups, used in serving food.

   2. கட்டட வேலைக்குப் பயன்படும் இருப்புச்சட்டி; small recep-tacle of iron sheet, used by masons for keeping mortar.

மறுவ. குத்துச்சட்டி.

     [கொத்து + சட்டி.]

கொத்துச்சரப்பணி

 கொத்துச்சரப்பணி kottuccarappaṇi, பெ.(n.)

   மகளிர் கழுத்தணிவகை; a kind of gold chain for the neck, worn by women.

     [கொத்து + சரப்பணி.]

கொத்துச்சரப்பளி

 கொத்துச்சரப்பளி kottuccarappaḷi, பெ.(n.)

கொத்துச்சரப்பணி பார்க்க;see kottu-c-сагарралі.

     [கொத்து (சரப்பணி); + சரப்பளி.]

கொத்துச்சரம்

 கொத்துச்சரம் kottuccaram, பெ.(n.)

   பொன்மணியாராகிய மாலை (வின்.);; strings of golden beads.

     [கொத்து + சரம்.]

கொத்துச்சவடி

 கொத்துச்சவடி kottuccavaḍi, பெ.(n.)

கொத்துச்சரப்பணி பார்க்க;see kottu-c-саrарралі.

     [கொத்து + சவடி.]

கொத்துணி

கொத்துணி kottuṇi, பெ.(n.)

   1. பலர்க்குப் பொதுவான அடிமை; slave owned in common by several persons.

   2. பலர்க்குப் பொதுவான தோட்டம்; garden owned by several persons.

     [கொத்து + (கூட்டம், பொது); உண் – கொத்துண் → கொத்துணி.]

கொத்துத்தம்பட்டன்

 கொத்துத்தம்பட்டன் kottuttambaṭṭaṉ, பெ.(n.)

   கொடித்தம்பட்டன்; sword-bean (சா.அக.);.

     [கொத்து + தம்பட்டன்]

கொத்துத்தாழ்வடம்

 கொத்துத்தாழ்வடம் kottuttāḻvaḍam, பெ.(n.)

   பவளங்கள் இடையிட்டு முகப்பில் தங்கக் கட்டமைந்த உருத்திராக்க மாலை (இ.வ.);; string of rudraksa beads inter-spersed with coral.

     [கொத்து + தாழ்வடம்.]

கொத்துத்தூர்வை

 கொத்துத்தூர்வை kottuttūrvai, பெ.(n.)

   கொத்துதலாலாகுந் தரையின் இளக்கம் (யாழ்ப்.);; looseness of earth caused by hoeing.

     [கொத்து + தூர்வை.]

கொத்துப்பசலை

 கொத்துப்பசலை kottuppasalai, பெ.(n.)

   ஒரு வகைக் கீரை; a kind of green plant.

     [கொத்து + பசலை. பசளை → பசலை.]

கொத்துப்பசளை

கொத்துப்பசளை kottuppasaḷai, பெ.(n.)

கொடிப்பசளை (M.M. 461.); பார்க்க;see kodi-p-pašalai.

     [கொத்து + பசளை.]

கொத்துப்பணி

 கொத்துப்பணி kottuppaṇi, பெ.(n.)

கொத்து வேலை பார்க்க;see kottu-velai.

ம. கொத்துபணி.

     [கொத்து + பணி]

கொத்துப்பத்துவேலை

 கொத்துப்பத்துவேலை kottuppattuvēlai, பெ.(n.)

   கோபுரம், விமானம் போன்றவற்றில் சுதையுருவங்கள் செய்யும் வேலை; stucco structure on temple towers (கட்.தொ.);.

     [கொத்து + (பற்று); பத்து + வேலை.]

கொத்துப்பற்று-தல்

கொத்துப்பற்று-தல் kodduppaṟṟudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. பலனடைதல்; to reap the fruit of one’s labours.

   2. கூலித்தவசம் பெறுதல்; lit., to receive wages in kind.

     [கொத்து + பற்று-.]

கொத்துப்பலகை

 கொத்துப்பலகை gottuppalagai, பெ.(n.)

   பாத்தியில் படிந்திருக்கும் உப்பை வாருவதற்கு ஏந்தாகக் கொத்தும் பலகை; a plank used to grub up the salt to facilitate the collection of salt from salt pan (பரத. கடற். சொ.);.

     [கொத்து + பலகை.]

கொத்துப்பாசி

 கொத்துப்பாசி kottuppāci, பெ.(n.)

   பாசிவகையுளொன்று; a kind of moss.

     [கொத்து + பாசி.]

கொத்துப்புங்கன்

கொத்துப்புங்கன் kottuppuṅgaṉ, பெ.(n.)

   1. காய்கள் கொத்தாக விடும் புன்கு; Indian beech yielding fruits in clusters.

   2. சரப்புன்கு; hogcreeper.

     [கொத்து + புங்கன்.]

கொத்துப்புடல்

 கொத்துப்புடல் kottuppuḍal, பெ.(n.)

   புடலைவகை (வின்.);; a kind of snake-gourd.

     [கொத்து + புடல்.]

கொத்துமணி

 கொத்துமணி kottumaṇi, பெ.(n.)

   பல மணிகள்சேர்ந்த மணிக்கொத்து; cluster of bells.

     [கொத்து + மணி.]

கொத்துமலி

 கொத்துமலி kottumali, பெ.(n.)

   ஒரு வகைச் செடி (திவா);; coriander, Coriandrum sativum (செ.அக.);.

     [கொத்து+மலி]

கொத்துமல்லி

கொத்துமல்லி kottumalli, பெ.(n.)

   1. ஒருவகைச் செடி; annual plant with aromatic fruit, coriander.

   2.சம்பாரப் பண்டங்களுள் ஒன்றாகிய கொத்துமல்லி விதை ; coriander seed, used as a condiment.

   ம.,தெ.,பட. கொத்துமல்லி;   க. கொத்துமலி, கொத்துமிலி, கொத்தும்பரி; Skt. kusrumburu.

     [கொத்து + மல்லி.]

கொத்துமானம்

 கொத்துமானம் kottumāṉam, பெ.(n.)

   அணிகலன்களில் நுண்ணுளியால் செய்யப்படும் அழகு வேலைப்பாடு; fine chisel – workmanship in gold or silver.

     [கொத்து + மானம்.]

கொத்துமானவேலை

 கொத்துமானவேலை kottumāṉavēlai, பெ.(n.)

கொத்துமானம் பார்க்க;see kottu-mânam.

     [கொத்து + மானம் + வேலை.]

கொத்துமாலை

கொத்துமாலை kottumālai, பெ.(n.)

   பல பூச்சரங்கள் சேர்த்து ஒன்றாகக் கட்டிய பூமாலை; garland of many wreaths.

     ‘கொத்துமாலை நிறைந்த பெரிய தோளினையும்'(திருக்கோ. 391, உரை);.

     [கொத்து + மாலை.]

கொத்துமேகம்

 கொத்துமேகம் kottumēkam, பெ.(n.)

   கொத்துக்கொத்தாயிருக்கும் முகில்; an assemblage of clouds.

     [கொத்து + மேகம்.]

கொத்துலதம்

 கொத்துலதம் kodduladam, பெ.(n.)

   மாமரம்; mango tree.

     [கொத்து + அதுலம் → கொத்ததலம் → கொத்துலதம் (கொ.வ.);.]

கொத்துளி

 கொத்துளி kottuḷi, பெ.(n.)

உளிவகை (Pond.);

 a kind of chisel.

     [கொத்து + உளி.]

கொத்துவசளை

 கொத்துவசளை kottuvasaḷai, பெ.(n.)

   கொடிப்பசளை; heart leaved Malabar night shade (சா.அக.);.

     [கொத்துப்பசளை → கொத்துவசளை.]

கொத்துவலை

 கொத்துவலை kottuvalai, பெ.(n.)

   அறுபட்டு இருகூறான மீன்பிடி வலை; a portion of the fishing net which is cut into two pieces (மீன்.பி.டி.தொ.);.

     [கொத்து + வலை.]

கொத்துவானம்

 கொத்துவானம் kottuvāṉam, பெ.(n.)

   முகில்கள் கொத்துக் கொத்தாகவுள்ள வானம் (வின்.);; mackerel sky.

     [கொத்து + வானம்.]

கொத்துவான்

 கொத்துவான் kottuvāṉ, பெ.(n.)

   மண்வெட்டி; Spade.

     [கொத்து → கொத்துவான்.]

 கொத்துவான் kottuvāṉ, பெ.(n.)

   களைவெட்டி: களைக்கொத்து(கொங்.வ);; hoe.

     [கொத்து+வ்-ஆன்+கொத்துவான்]

கொத்துவாய்

 கொத்துவாய் kottuvāy, பெ.(n.)

   வெட்டுவாய்; a long deep cut made in the flesh; an incision of considerable length particularly of flesh (சா.அக.);.

     [கொத்து + வாய்.]

கொத்துவால்

 கொத்துவால் kottuvāl, பெ.(n.)

   தேளின் கொடுக்கைப் போன்ற கொட்டும் வால்; stinging tail as of a scorpion (சா.அக.);.

     [கொட்டுவால் → கொத்துவால் (கொ.வ.);]

 கொத்துவால் kottuvāl, பெ.(n.)

கொத்தவால் பார்க்க;see {}.

     [U.{} → த.கொத்துவால்.]

கொத்துவேலை

கொத்துவேலை kottuvēlai, பெ.(n.)

   1. உளியாற் கொத்திச் செய்யும் சித்திரவேலை; carved work, engraving statuary.

   2 கட்டட வேலை; masonry, brick laying.

   3. உரல் ஆட்டுக்கல் போன்றவற்றை உளியாற் கொத்திச் செப்பனிடுதல்; shaping mortar, wetgrinder, etc.

ம. கொத்துபணி, கொத்துவேல.

     [கொத்து + வேலை.]

கொத்தை

கொத்தை1 kottai, பெ.(n.)

   1. சொத்தை; rottenness.

   2. ஈனம்; blot, blemish, defect.

     ‘அவர் வமிசத்துக்குக் கொத்தையாங் காண்’ (ஈடு. 5:4:7);.

   3. நூல் முதலியவற்றின் சிம்பு; fibrous rising on cloth scab, scale.

     ‘கொத்தையும் நெருடுமான சீலை’ (வின்.);

   4. அரைகுறை; Incompleteness

     ‘வெந்தது கொத்தையாக வாயிலிடுமாபோல'(ஈடு. 1,3:1);.

   5. குருடன்:

 blind man.

     “கொத்தைக்கு மூங்கர் வழி காட்டுவித்து” (தேவா. 1040:2);.

   6. கரிசன்:

 sinner.

     “கொத்தைபோ னிரயக்குழி கூடுவார்” (சிவதரு.கோபுர.271);.

   7. சமய அறிவில்லாமை; spiritual Ignorance

     “கொத்தை மாந்தர்” (சங்கற்ப, பாடாணவாதி சங்கற்ப. வரி.38);.

     [குல் → குந்து → குத்து → கொத்தை.]

 கொத்தை2 kottai, பெ.(n.)

   குருடு; blindness.

கண்ணாற் கொத்தை காலால் முடவன் (உருபு மயக்கம், உரைக்குறிப்பு);.

     [கொள் → கொத்து → கொத்தை.]

கொத்தைநூல்

 கொத்தைநூல் kottainūl, பெ.(n.)

   சிம்புவிழுந்த பருத்தி நூல் (வின்.);; ill-cleaned cotton yarn.

     [கொத்தை + நூல்.]

கொந்தகன்

கொந்தகன் gondagaṉ, பெ.(n.)

   படைத்தலைவன்;  commander of an army.

     “கொந்தகன் வாக்கிது (திருவாலவா. 30:45);.

     [கொந்தகை → கொந்தகன்.]

கொந்தகன்பெருங்கரை

 கொந்தகன்பெருங்கரை gondagaṉperuṅgarai, பெ.(n.)

 a village in Sivagangai Dt.

     [கொந்தன் → கொந்தகன் + பெரும் + கரை.]

கொந்தகை

கொந்தகை gondagai, பெ.(n.)

   சிவகங்கை மாவட்டத்தில் அமைந்த ஒர் ஊர்; a village in Sivagangai Dt.

     [குந்தவை → கொந்தவை + கொந்தகை]

கி.பி. 985 – 1014 காலச் சோழ மன்னான இராசராசனின் மகள் குந்தவையின் நினைவால் இவ் வூருக்கு அப் பெயர் வழங்கி இருக்கலாம். [த.நா.ஊ.பெ.]

கொந்தக்குலம்

கொந்தக்குலம் kondakkulam, பெ.(n.)

   மதுரைக்கு அருகிலுள்ள கொந்தகையூரினரும் பாண்டியர் படைத்தலைவருமான பழைய வேளாள மரபினர்i; the family of Velalas in Kondagai near Madurai, formerly commanders under the Pandiyas,

     “உயர் கொந்தக் குலத்துட்டோன்றி (திருவாலவா.39:1);.

     [கொந்தகை → கொந்தகன் + குலம்.]

கொந்தமணி

 கொந்தமணி kondamaṇi, பெ.(n.)

   மகளிர் கழுத்தணி வகை (இ.வ.);; a kind of necklace worn by women.

     [கொத்து → கொந்து + மணி – கொந்தமணி.]

கொந்தமூர்

 கொந்தமூர் kondamūr, பெ.(n.)

   விழுப்புரம் மாவட்டத்துச் சிற்றூர்; a village in Villuppuram Dt.

     [கொந்தன் + ஆமூர் – கொந்தாமூர் → கொந்தமூர்.]

   குந்தம் = ஒரு படைக்கலன். கையில் குந்தப் படைக்கலன் ஏந்தியவன் குந்தகன்_கொந்தகன்;கொந்தகண் → கொந்தன் + ஆமூர் — கொந்தன் ஆமூர் → கொந்தமூர் [கொ.வ.].

கொந்தம்

கொந்தம் kondam, பெ.(n.)

   மயிர்க்குழற்சி; fine wavy, dense curls of hair.

     “கொந்தக் குழலை” (திவ். பெரியாழ். 2, 5:8);.

     [கொந்தளம் → கொந்தம். கொந்தளம் : பெண்கள் தலைமயிர்ச் சுருள்.]

கொந்தராத்து

 கொந்தராத்து kontarāttu, பெ.(n.)

   ஒப்பந்தம் (இலங்.);; contract.

ஊரையே கொந்தராத்து எடுத்தது போல் பேசுகிறார். (கொ.வ.);

     [E. contract –த.கொந்தராத்து]

கொந்தரிவாள்

 கொந்தரிவாள் kondarivāḷ, பெ.(n.)

   முட்செடிகளை வெட்டியழித்து நீக்கப் பயன்படும் அரிவாள் வகை (இ.வ.);; sickle, long-handled bill-hook, as for clearing prickly-pear.

     [கொந்து + அரிவாள்.]

மறுவ. கொந்தறுவாள்.

கொந்தறிவாள்

 கொந்தறிவாள் kondaṟivāḷ, பெ.(n)

   சதையிற் குத்தி அறுக்கும் கத்தி; a surgical knife or instrument with a handle used for puncturing before cutting through the skin(சா.அக.);;

     [கொந்து+அரிவாள்.]

கொந்தறுவாள்

 கொந்தறுவாள் kondaṟuvāḷ, பெ.(n.)

   முட் செடிகளை வெட்டியழிக்க உதவும் அறுவாள்; sickle, long handled bill-hook as for clearing prickly-pear.

     [கொந்து + அறுவாள்.]

கொந்தல்

கொந்தல் kondal, பெ.(n.)

   1. கொத்துவகை; picking, nibbling.

   2. பறவை முதலியவற்றாற் கொத்துப்பட்ட கனி; fruits injured by birds, reptiles, etc.

   3. தணியாச் சினம் (பிங்.);; wrath, fury.

   4. கடுங்குளிர்; biting cold.

கொந்தலிற் கொடுகிக் கிடக்கிறான் (உ.வ.);.

   5. போலியொழுக்கம் (ஆசாரம்);:

 feigned orthodoxy.

     [கொத்து → கொந்து → கொந்தல்.]

கொந்தல்மாங்காய்

 கொந்தல்மாங்காய் kondalmāṅgāy, பெ.(n.)

   சேதப்பட்ட மாங்காய் (யாழ்ப்.);; mango fruit injured or stunted in growth.

     [கொந்தல் + மாங்காய்.]

கொந்தளங்காய்

 கொந்தளங்காய் kondaḷaṅgāy, பெ.(n.)

   சமுத்திராப் பழம்; sea-side Indian oak (சா.அக.);.

     [கொந்தளம் + காய்]

கொந்தளம்

கொந்தளம் kondaḷam, பெ.(n.)

   1.கொந்தளங்காய்,

 sea-side Indian oak.

   2. கல்யானை என்னும் காண்டாமிருகம்; rhinoceros,

   3. சுருட்டை மயிர்; curly hair.

   4. விலங்கின் குட்டி; young of an animal.

   5. பெண்ணின் கூந்தல்; woman’s hair.

   6. மயிர்க் குழற்சி; lock of hair (சா.அக.);.

   ம.கொந்தளம்; Skt. Kundala.

     [கொத்து→ கொந்து→ கொந்தளம்]

 கொந்தளம்2 kondaḷam, பெ.(n.)

   1. குழப்பம்,

 confusion, turmoil.

     “கொந்தள மாக்கி” (திவ்நாய்ச் 12:9);.

   2. கூத்துவகை ; a kind of dance.

     [கொந்தளி→ கொந்தளம்]

 கொந்தளம்3 kondaḷam, பெ.(n.)

   காதணி வகை; an ear-ornament.

     ‘காதுக்குக் கொந்தளம் அணிந்து’ (தமிழறி. 64);

     [கொத்து→ கொந்து→ கொந்தளம்]

 கொந்தளம்4 kondaḷam, பெ.(n.)

   எல்லா எந்து (வசதி);களுமுள்ள இடம் (இ.வ.);; a site with conveniences of every kind.

     [ஒருகா. கொத்தளம் → கொந்தளம்]

 கொந்தளம்5 kondaḷam, பெ.(n.)

   ஈரோடு மாவட்டத்துச் சிற்றூர்; a village in Erode Dt.

     [கொந்து → கொந்தளம்.]

 கொந்தளம்6 kondaḷam, பெ.(n.)

   சாளுக்கியர் ஆண்ட நாடு (S.I.I. Il, 230.);; an ancient kingdom ruled by Calukyas.

     [குந்தளம் → கொந்தளம்.]

கொந்தளவரசர்

 கொந்தளவரசர் kondaḷavarasar, பெ.(n.)

   மேலைச் சாளுக்கிய அரசர்; western Calukkia king.

     “கொந்தள வரசர் தந்தள மிரிய” (முதற் குலோத்துங்கன் மெய்க்கீர்த்தி); (கல். அக.);

     [குந்தளம் → கொந்தளம் + அரசர்.]

கொந்தளி-த்தல்

கொந்தளி-த்தல் kondaḷittal,    4 செ.கு.வி. (v.i.)

   பொங்கியெழுதல்; to be rough or boisterous;

 to swell, as the sea;

 to be stormy, tumultuous.

     ‘திரைகள் மேல்நோக்கிக் கொந்தளித்து’ (திவ்.திருவிருத். 52:292, வியா.);.

     [கொதி → கொந்தளி.]

கொந்தளிப்பு

கொந்தளிப்பு kondaḷippu, பெ.(n.)

   1. குழப்பம், கெற்சிதம்; emotional, upheaval.

   2. மும்முரம்; excitement.

     [கொதி → கொந்தளி → கொந்தளிப்பு.]

கொந்தளை

கொந்தளை1 kondaḷai, பெ.(n.)

   1. பேய்க் கொம்மட்டி; bitter apple.

   2. கொந்தளங்காய் பார்க்க;see kondalangay (சா.அக.);.

     [கொந்தளம் → கொந்தளை.]

 கொந்தளை2 kondaḷai, பெ.(n.)

   கடற்பக்கத்து மரவகை (L.);; seaside Indian oak.

     [கொந்தாழை → கொந்தளை.]

கொந்தழற்புண்

 கொந்தழற்புண் kondaḻṟpuṇ, பெ.(n.)

   பற்றி எரியும் தீச்சுட்ட புண்; extensive burns caused by a raging fire (சா.அக.);.

     [கொந்து + அழல் + புண்]

கொந்தழல்

கொந்தழல் kondaḻl, பெ{n.)

   1. முறுகிய தீ; raging fire.

கொந்தழற்புண்ணொடு”(பெருங் வத்தவ 13: 71);.

   2. பெருந்தீ; great fire (சா.அக.);.

ம. கொந்தழல்.

     [கொந்து+அமுல்]

கொந்தவக்காய்

 கொந்தவக்காய் kondavakkāy, பெ.(n.)

கொந்தளங்காய் பார்க்க;see kondalaigal.

     [கொந்து+ஆவக்காய்-கொந்தாவக்காய்= கொந்தவக்காய்]

கொந்தவர்

கொந்தவர் kondavar, பெ.(n.)

   கட்டுக்கோப்பான படையினர்; diciplined warriors.

     ‘இராசராசதேவர் படைவில்லாள் கொந்தவரில்”(கல்வெட்டு அறிக்கை – எண். 92/895 கல்அக);

     [கொத்து→ கொந்து→ கொந்தவர்]

கொந்தாங்கொள்ளை

 கொந்தாங்கொள்ளை kondāṅgoḷḷai, பெ.(n.)

   நிறைய; abundance.

கொந்தாங் கொள்ளையாய்த் தின்பானுக்குக் கொட்டியழு (இ.வ.);.

     [கொந்து + ஆம் + கொள்ளை.]

கொந்தாலி

 கொந்தாலி kondāli, பெ.(n.)

குந்தாலி (யாழ்ப்.); பார்க்க;see kundali.

     [குந்தாலி → கொந்தாலி.]

 கொந்தாலி kondāli, பெ.(n.)

   குந்தாலி (யாழ்ப்.);; pick axe.

     [Skt.{} → த.கொந்தாலி.]

கொந்தாளம்

 கொந்தாளம் kondāḷam, பெ.(n.)

   நஞ்சை நீக்குமோர் மூலிகை; medicinal plant used as an antidote for poison (சா.அக.);.

     [கொந்து + தாளம்.]

 கொந்தாளம் kondāḷam, பெ.(n.)

   கடினமான மண்ணை வெட்டவுதவும் வேளாண் கருவி; a implement used to cut the hardened earth.

     [கொந்து+கொத்தாளம்]

கொந்தாளி-த்தல்

கொந்தாளி-த்தல் kondāḷittal,    4 செ.கு.வி. (v.i.)

கொந்தளி-த்தல், (யாழ்.அக.); பார்க்க;see kondali-.

     [கொந்தளி → கொந்தாளி.]

கொந்தாழம்

கொந்தாழம் kondāḻm, பெ.(n.)

   1. கடற்கரையிலுள்ள தாழை; sea-weed.

   2. செந்தாழை; false tragacanth.

   3. ஒரு மருந்து; a medicine.

   4. கொந்தாளம் பார்க்க;see kondalam (சா.அக.);.

     [கொந்து + ஆழம்.]

கொந்தாழை

 கொந்தாழை kondāḻai, பெ.(n.)

கடற்றாழை (வின்.);:

 sea-weed.

     [கொத்து → கொந்து + தாழை.]

கொந்தி

கொந்தி1 kondi, பெ.(n.)

   வீட்டின் மூலைப் பகுதி (கட்.தொ.);; a corner of the house.

     [கொந்து → கொந்தி.]

 கொந்தி2 kondi, பெ.(n.)

   வரிக்கூத்து வகை (சிலப்.3: 13, உரை);; mask, masquerade dance.

     [குந்தி → கொந்தி.]

கொந்திக்காய்

கொந்திக்காய்2 kondikkāy, பெ.(n.)

   மகளிர் கைமுட்டுக்குமேல் அணியும் அணிவகை (இ.வ.);; a string of gold or coral beads worn by women above the elbow.

     [கொந்தி + காய்.]

 கொந்திக்காய்2 kondikkāy, பெ.(n.)

   மிடறு (இ.வ.);; throat.

     [கொந்தி + காய்.]

கொந்தினஇறைச்சி

 கொந்தினஇறைச்சி kontiṉaiṟaicci, பெ.(n.)

   நன்கு பொடிப்பொடி துண்டாக வெட்டின இறைச்சி; meat chopped into minute pieces, Mince-meat; Hash (சா.அக);.

மறுவ, கொத்துக்கறி

     [கொந்தின+இறைச்சி]

கொந்து

கொந்து1 kondudal,    5 செ.குன்றாவி, (v.t.)

   1. கொத்துதல்; to peck, pick, mince.

   2. பழம் முதலியவற்றை அலகாற் குதறுதல்; to injure fruits by pecking, gnawing.

   3. அச்சுறுத்தல்; to threaten, intimidate, terrify.

     “கொந்தி யிரும்பிற் பிணிப்பர்கயத்தை”, uskoláis;

   1skrofous கயத்தை”(நான்மணி. 12);.

   4. குத்துதல்; to gore pierce.

     “கொந்தியயி லலகம்பால்” (பெரியபு. கண்ணப்.145);.

     [கொத்து → கொந்து.]

 கொந்து2 kondudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. ஒற்றைக்காலாற் குதித்தல்; to hop, as in a game.

   2. மிகு தூய்மையும் ஒழுக்கமும் காட்டிக் கொள்ளுதல்; to pretend to be very orthodox.

     [கிந்து → கொந்து-.]

 கொந்து3 kondudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. எரிதல்; to burn, to be in flames.

     “கொந்தழல்”(சீவக. 1499);.

   2. சினம் மூளுதல் (பிங்.);; to be enraged, furious, to be inflamed with anger.

     “இந்தனக் குழுவைக் கொந்தழ லடூஉம்” (ஞானா. 63:11);.

     [குல் → குந்து → கொந்து.]

 கொந்து4 kondudal,    5 செ.குன்றாவி.(v.t.)

   1. மகளிர் ஆட்டத்தில் மேலெறிந்த காய் விழுவதற்குள் தரையிலுள்ள காய்களை எடுத்தல்; to pick up shells, etc., from the floor before a thrown-up shell comes down, as in game played by girls. அவள் புளியவிதையைக் கொந்தி விளையாடுகிறாள் (கொ.வ.);.

   2. கொடியி லிருக்கும் ஆடையைக் கோல்கொண்டு எடுத்தல்; to remove a cloth from the clothe’s line with stick.

     [கொள் + து → கொந்து.]

 கொந்து5 kondu, பெ.(n.)

   1. பூங்கொத்து; cluster of flowers.

     “கொந்தா ரிளவேனில்” (சிலப். 8, வெண்பா.1);.

   2. திரள்; gathering multitude.

     “கொந்தினாற் பொலியும் வீதி” (இரகு. இரகுவு. 53);.

   3. கொத்துமாலை; garland of many wreaths.

     “கொந்தார் தடந்தோள்” (திருக்கோ. 391);.

   4. பூந்தாது; pollen.

     “கொந்துசொரிவன கொன்றையே” (தக்கயாகப்.62);.

     [கொத்து → கொந்து.]

 கொந்து6 kondu, பெ.(n.)

   இடைப்பட்ட நிலம், பகுதி; side, region.

இந்த மழை கன்னியாகுமரிக் கொந்திற் பெய்யவில்லை.

     [கொத்து → கொந்து.]

கொந்துகம்

கொந்துகம் gondugam, பெ.(n.)

   1. குதிரைவாலிச்சம்பா; horse tail paddy.

   2. குதிரைவாலிச் சாமை; horse tail millet.

   3. குதிரைவாலிப் புல்; horse tail grass.

   4. குதிரைவாலி போன்ற பூடுவகை; equisetacae family of plants (சா.அக.);.

     [கூந்தல் → கொந்து → கொந்துகம்.]

கொந்துகோல்

கொந்துகோல் konduāl, பெ.(n.)

   அங்குசம்; elephant’s goad.

     “கொந்துகோலும்வேதினமும்”(செ.செல்:56-2);

     [கொந்து+கோல்]

கொனை

கொனை koṉai, பெ.(n.)

   நுனி; tip end as of a needle.

     “பிரம்பின் கொனைபடலால்” (அஷ்டப்.திருவரங். மா.89);.

     [முனை → குனை → கொனை. நுனியைக் கொனை என்பது வடார்க்காட்டு வழக்கு.]

 Russ. Konesh;

 E. cone, a sold pointed figure;

 Fr. cone;

 L. conus;

 Gr. konos, a peak, a cone eh.E.D. E. hone;

 A.S;

 han;

 Ice.hein;

 Skt. cana.

கொன்னை, கொன்னையன் முதலிய சொற்கள் கொனை என்பதினின்றும் திரிந்தவையே (க.வி.43, ஒ.மொ.370);.

கோ

கொன்

கொன் koṉ, பெ.(n.)

   1. பயனின்மை (தொல்,சொல். 256);; uselessness.

   2. அச்சம்; fear.

     “கொன் முனையிரவூர் போல” (குறுந்.91);.

     [கொல் → கொன்.]

 கொன்2 koṉ, பெ.(n.)

   1. கூர்மை; sharpness.

   2. நுனி; tip.

   3. காலம் (தொல்.சொல். 256);; season.

   4. விடியற்காலம்; dawn.

     “கொன்னிளம் பரிதி’ (சீவக. 173);.

   5. பெருமை; greatness.

     “கொன்னூர்துஞ்சினு மியாந்துஞ் சலமே” (குறுந். 138);.

   6. வலி (சூடா.);; strength.

     [குல் → கொல் (குத்துதல்); → கொன்.]

கொன்னக்குடி

 கொன்னக்குடி koṉṉakkuḍi, பெ.(n.)

   இராமநாதபுரம் மாவட்டத்துச் சிற்றூர்; a village in Ramanadhapuram Dt.

     [கொன்னை + குடி.]

கொன்னக்குளம்

 கொன்னக்குளம் koṉṉakkuḷam, பெ.(n.)

   சிவகங்கை மாவட்டத்துச் சிற்றூர்; a village in Sivagangai Dt.

     [கொன்னை + குளம்.]

கொன்னக்கோல்

 கொன்னக்கோல் koṉṉakāl, பெ.(n.)

   கச்சேரியின்போது பக்க இன்னியமாக வாயால் சொல்லப்படும் தாளம்; vocalized rhythmic beat as an accompaniment in a concert.

     [கொன்னை + கோல்]

கொன்னக்கோழி

 கொன்னக்கோழி koṉṉakāḻi, பெ.(n.)

   நோய் கண்ட பயிரின் கோழை; a foam like formation on crop.

     [குன்னல்-கொன்னல்+[கோழை] கோழி]

கொன்னத்தான்பட்டி

 கொன்னத்தான்பட்டி koṉṉattāṉpaṭṭi, பெ.(n.)

   சிவகங்கை மாவட்டத்துச் சிற்றூர்; a village in Sivagangai Dt.

     [கொன்னம் → கொன்னத்தான் + பட்டி.]

கொன்னாளன்

கொன்னாளன் koṉṉāḷaṉ, பெ.(n.)

   1.பயனற்றவன்; useless person.

     “நம்மருளாக் கொன்னாளன்” (கலித். 42:18);.

   2. பாழ்வினையன் (பாவி);; sinner.

     “வடதிசையுங் கொன்னாளர் சாலப் பலர்” (நாலடி.. 243);.

     [கொன் + ஆளன்.]

கொன்னாளர்

 கொன்னாளர் koṉṉāḷar, பெ.(n.)

   கரிசாளர் (பாவிகள்);; sinner, contemptible person, wretch.

     [கொன்னாள் + அர்]

கொன்னி-த்தல்

கொன்னி-த்தல் koṉṉittal,    4 செ.கு.வி. (v.i.)

   1. நாத்திரும்பாதிருத்தல்; have an impediment in one’s speech.

   2. திக்குதல்; to stammer.

     [கொன்னு → கொன்னி.]

கொன்னிப்பு

கொன்னிப்பு koṉṉippu, பெ.(n.)

   1. திக்கிப் பேசுகை; stammering.

   2. நோய் வகை (பரராச.i, 236);; a disease.

     [கொன் → கொன்னிப்பு.]

கொன்னிப்பேசு-தல்

கொன்னிப்பேசு-தல் koṉṉippēcudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. தெத்திப் பேசுதல்; to stammer,

   2. குழந்தையைப் போற் பேசுதல்; prattle like a child (சா.அக.);.

     [கொன்னி + பேசு-.]

கொன்னு

கொன்னு1 koṉṉudal,    5 செ.கு.வி.(v.i.)

   1. திக்கிப் பேசுதல்; to stammer;

 stutter.

   2. குழறுதல், to babble.

     “ஒன்னார்கள் வாய்கொன்ன” (தனிப்பா, 1.386:38);.

கொன்னு-தல்

கொன்னு-தல் koṉṉudal,    5 செ.கு.வி.(v.i.)

   பெருமையுறுதல் (தணிகைப்பு.நாட்140);; to become famous.

கொன்னெச்சன்

 கொன்னெச்சன் koṉṉeccaṉ, பெ.(n.)

   மாட்டிற்பற்றும் ஈவகை; a kind of gadfly biting cattle.

     [கொன் + எச்சன்.]

கொன்னே

 கொன்னே koṉṉē, கு.வி.எ.(adv.)

   வீணே; for no purpose.

     [கொன் → கொன்னே.]

கொன்னை

கொன்னை1 koṉṉai, பெ.(n.)

   1. திக்கிப்பேசுகை; stammering.

   2. குழறுவகை; babbling.

   ம. கொஞ்ஞ;   க.,பட, கொதசு;கெ.கொதுகு

     [கொன்னு → கொன்னை.]

 கொன்னை2 koṉṉai, பெ.(n.)

   தொன்னை (இ.வ.);; cup made of leaves.

     [குல் → கொல் → கொன் → கொன்னை.]

 கொன்னை3 koṉṉai, பெ.(n.)

கொன்றை பார்க்க;see konrai.

     [கொன்றை → கொன்னை.]

 கொன்னை4 koṉṉai, பெ.(n.)

   சிறிய வெற்றிலையடுக்கு; a bunch of betel leaves.

     [குல் → கொல் → கொன் → கொன்னை.]

 கொன்னை5 koṉṉai, பெ.(n.)

   இகழ்ச்சி; contempt.

     “அத்துரு தாசி யாகிக் கொன்னை யுற்றிடுதி” (வேதாரணி. சேடன்.7);.

     [கொன் → கொன்னை.]

கொன்னைச்சொல்

 கொன்னைச்சொல் koṉṉaiccol, பெ.(n.)

   இடை நிலையாய்ப் பயன்படும் சொல் (வழ.சொ.அக.);; expletive.

     [கொன்னை + சொல்.]

கொன்னைத்தெங்கு

கொன்னைத்தெங்கு koṉṉaitteṅgu, பெ.(n.)

   1. முடத்தெங்கு, வளைந்த தென்னை; crooked cocopalm.

   2. காய்க்காத தெங்கு (நாஞ்);; barren cocoanut palm.

     [கொன் → கொன்னை + தெங்கு.]

கொன்னைப்புளி

 கொன்னைப்புளி koṉṉaippuḷi, பெ.(n.)

கொன்றைப்புளி பார்க்க;see konrai-p-puli (சா.அக.);.

     [கொன்றைப்புளி → கொன்னைப்புளி]

கொன்னையன்

 கொன்னையன் koṉṉaiyaṉ, பெ.(n.)

   திக்கிப் பேசுபவன்; a man of indistinct or inperfect. anticulation.

ம. கொஞ்ஞன்.

     [கொன்னை → கொன்னையன்.]

கொன்னைவாயன்

 கொன்னைவாயன் koṉṉaivāyaṉ, பெ.(n.)

   தெத்துவாயன்; stammerer; one who makes faltering speech (சா.அக.);.

     [கொன்னை + வாய் + அன்]

கொன்னைவாய்

 கொன்னைவாய் koṉṉaivāy, பெ.(n.)

   தெத்துவாய்; defective utterance (சா.அக.);.

     [கொன்னை + வாய்]

கொன்றன்

 கொன்றன் koṉṟaṉ, பெ.(n.)

   வாழை; plantain tree (சா.அக.);.

     [கொல் → கொன்றன.]

கொன்றல்

 கொன்றல் koṉṟal, பெ.(n.)

   கொல்லுதல்; murder.

     [கொல் → கொன்றல்.]

கொன்றான்சாறு

 கொன்றான்சாறு koṉṟāṉcāṟu, பெ.(n.)

   வாழைச்சாறு; the juice of plantain bark (சா.அக.);.

     [கொன்றன் → கொன்றான் + சாறு.]

கொன்று-தல்

கொன்று-தல் koṉṟudal,    5 செ.கு.வி.(v.i.)

   1. கொன்னிப் பேசல் அல்லது திக்கிப் பேசல்; stammering.

   2. குழறிப் பேசல்; babbling.

   3. குழந்தைபோற் பேசல்; prattling like child (சா.அக.);.

     [கொன் → கொன்று.]

கொன்றுண்ணி

 கொன்றுண்ணி koṉṟuṇṇi, பெ.(n.)

   பிற உயிரினைக் கொன்று பிறகு உண்ணும் உயிரி; predator.

     [கொன்று + உண்ணி.]

கொன்றை

கொன்றை koṉṟai, பெ.(n.)

   1. சரக்கொன்றை; Indian laburnum.

     “பொலனணி கொன்றையும்” (ஐங்குறு. 435);.

   2. செங்கொன்றை; red Indian laburnum.

   3. மஞ்சட்கொன்றை; Siamese tree.

   4. கடுக்கை மரம்; gallnut tree.

மறுவ. கொன்னை மரம்.

     [கொல் → கொன்று → கொன்றை (கொத்து);.]

வகைகள்:

   1. சரக்கொண்றை

   2. மயிற்கொண்றை

   3. சிவப்புக் கொன்றை

   4. கருங்கொன்றை

   5. குளோப் பூக்கொன்றை

   6. காட்டுக்கொன்றை

   7. மஞ்சட்கொன்றை

   8. வரிக்கொன்றை

   9. பிரம்புக் கொன்றை

   10. மலைக் கொன்றை

   11. சீமைக் கொன்றை

   12. இராகத்துக் கொன்றை

   13 நரிக் கொன்றை

   14. சிறு கொன்றை

   15. செடிக் கொன்றை

   16. பெருமயிற் கொன்றை

   17. செழு மலர்க் கொன்றை

   18. சொறிக்கொன்றை

   19. எருமைக் கொன்றை

   20. புலிநகக் கொன்றை

   21. மந்தாரக் கொன்றை

   22. பெருங்கொன்றை

   23 செம்மயிற் கொன்றை

   24. பொன்மயிற்கொன்றை

   25. முட்கொன்றை

   26. வெண் மயிற் கொன்றை

   27. குண்டு பூக்கொன்றை

   28. சிறு மயிற் கொன்றை

   29. காக் கொன்றை

   30. மல்லங்கொன்றை

   31. நொச்சிக் கொன்றை

   32. புளினைக்காய் கொன்றை

   33. ஈசன் தார்க் கொண்றை

   34. மாம்பழக் கொன்றை

   35. சூரத்துக் கொன்றை (சா.அக.);.

கொன்றைக்களி

 கொன்றைக்களி koṉṟaikkaḷi, பெ.(n.)

கொன்றைப் புளிபார்க்க;see koorai-p-puli.

     [கொன்றை + களி.]

கொன்றைக்காய்

கொன்றைக்காய் koṉṟaikkāy, பெ.(n.)

   1. கொன்னைக் காய்; purging cassia pod.

   2. கொற்றைப்புளிபார்க்க;see Korrai-p-p-puli.

     [கொன்றை + காய்.]

இதனை இடித்து வடிகட்டிச் சிறிதளவு சாப்பிட மலத்தை இளக்கும். அதிகளவு சாப்பிடக் கழிச்சலாகும்.

கொன்றைக்குழல்

 கொன்றைக்குழல் koṉṟaikkuḻl, பெ.(n.)

கொன்றைப்பழக்குழல் பார்க்க;see Konrai-p-pala-k-kulai,

     [கொன்றை + குழல்]

கொன்றைக்கொழுந்து

 கொன்றைக்கொழுந்து koṉṟaikkoḻuntu, பெ.(n.)

   கடையில் விற்கும் கொன்னைத் தளிர்; cassia buds sold in the bazaar (சா.அக.);.

     [கொன்றை+கொழுந்து.]

கொன்றைசூடி

கொன்றைசூடி1 koṉṟaicūṭi, பெ.(n.)

   கொன்றை மாலை சூடியவன், சிவன் (திவா.);; siva, as crowned with konrai flowers.

     [கொன்றை + சூடி.]

 கொன்றைசூடி2 koṉṟaicūṭi, பெ.(n.)

   சிவகரந்தை; sweet basil (சா.அக.);.

     [கொன்றை + சூடி]

கொன்றைப்பட்டை

 கொன்றைப்பட்டை koṉṟaippaṭṭai, பெ.(n.)

   கொன்றை மரத்தின் அடிமரத்துப் பட்டை; bark of the stem of cassia tree-cassia bark.

     [கொன்றை + பட்டை]

இதை இடித்து எண்ணெயிற் குழைத்து அம்மைப் புண், வண்டுகடி, சதை வெடிப்பு முதலியவற்றுக்குப் பூசலாம்(சா.அக.);.

கொன்றைப்பழக்குழல்

கொன்றைப்பழக்குழல் koṉṟaippaḻkkuḻl, பெ.(n.)

   கொன்றைப் பழத்தைத் துளைத்துச் செய்யப்பட்ட ஊதுகுழல்; musical pipe made of the konrai-pod.

     ‘கொன்றைப் பழக்குழற் கோவலர்'(சிலப்.17.பாட்டு,உரை);.

     [கொன்றை + பழம் + குழல்]

கொன்றைப்புளி

 கொன்றைப்புளி koṉṟaippuḷi, பெ.(n.)

   கொன்றைக் காய்க்குள் விதையைச் சுற்றிலுமுள்ள பசை; mucilaginous pulp surrounding the seeds of cassia.

     [கொன்றை + புளி]

இது மலம் இளக்கும்; வறுமைக் காலத்தில் உணவாகும். நீரிழிவை நீக்கும். பெண்களுக்குக் குல்கந்துடன் சேர்த்துக் கொடுக்க மலம் இளக்கும். குழந்தைகட்கு வயிற்றுப்பிசத்தால் காணும் வலிக்குத் தொப்புளைச் சுற்றித் தடவுதலும் உண்டு (சா.அக.);.

கொன்றைப்பூ

 கொன்றைப்பூ koṉṟaippū, பெ.(n.)

   கொன்றை மரத்தின் பூ; cassia flowers.

     [கொன்றை + பூ]

இதனைக் கியாழம் இட்டுக் கழிச்சல், சீதக்கழிச்சல் ஆகியவற்றைக் குணமாக்கலாம் (சா.அக.);. சிவனுக்குகந்தமலர்.

கொன்றையிலை

 கொன்றையிலை koṉṟaiyilai, பெ.(n.)

   கொன்றை மரத்தின் இலை; cassia flowers.

     [கொன்றை+இலை.]

இதை கீரையாகச் சமைத்து சாப்பிடுவது உண்டு. இலையை அரைத்து வண்டு கடிக்குப் – பூசலாம் (சா.அக.);.

கொன்றைவாருதி

கொன்றைவாருதி koṉṟaivārudi, பெ.(n.)

   1.ஒரு பூண்டு (மலை);; marsh-samphire.

   2 பவளப்பூண்டு; species of glasswort (சா.அக.);.

     [கொன்றை + வாருதி]

கொன்றைவேந்தன்

 கொன்றைவேந்தன் koṉṟaivēndaṉ, பெ.(n.)

   ஒளவையார் இயற்றிய ‘கொன்றை வேய்ந்த’ என்று தொடங்கும் ஒரு நீதிநூல்; a short moral code in Tamil by Avvaiyar commencing with Konraiveynda.

     [கொன்றை + வேய்ந்தன் – கொன்றைவேய்ந்தன் → கொன்றைவேந்தன்.]

கொன்றைவேய்ந்தன்

 கொன்றைவேய்ந்தன் koṉṟaivēyntaṉ, பெ.(n.)

ஒளவையார் இயற்றிய ‘கொன்றை வேய்ந்த என்று தொடங்கும் ஒரு நீதி நூல்,

 a short moral code in Tamil by Avvaiyar, commencing with Konraivéynda

     [கொன்றை+வேந்தன்.]

கொன்றைவேர்ப்பட்டை

 கொன்றைவேர்ப்பட்டை koṉṟaivērppaṭṭai, பெ.(n.)

கொன்றை வேரில் மேல்

 Ullool root bark of cassia (சா.அக.);.

     [கொன்றை+வேர்+பட்டை]

கொப்பகரை

 கொப்பகரை goppagarai, பெ.(n.)

   தருமபுரி மாவட்டத்துச் சிற்றூர்; a village in Dharmapuri Dt.

     [குப்பன் → கொப்பன் + கரை.]

கொப்பணன்

கொப்பணன் koppaṇaṉ, பெ.(n.)

   கம்பணஉடையார் காலத்துக் காஞ்சிபுரத்துக் கோயிலலுவலர்; temple officer of Kanjipuram during the period of Kambana Udaiyar.

     “இவை கொப்பணன் எழுத்து” (S.I.I.I:87);.

     [கொப்பு + அண்ணன்.]

கொப்பணி

 கொப்பணி koppaṇi, பெ.(n.)

   மகளிர் மேல் காதில் அணியும் சிறிய அணிகலன்; a small ornament worn on the upper ear by women.

     [கொப்பு+அணி]

கொப்பம்

கொப்பம்1 koppam, பெ.(n.)

   யானை பிடிப்பதற்காக வெட்டும் பெருங்குழி; keddah for elephants.

     “கைம்மலைசெல் கொப்பத்து வீழ” (குமர. பிர. மீனாட். பிள்ளை. 11);.

     [குல் → குப்பு → (கப்பல்); → கப்பம் (குழி); → கொப்பம்.]

 கொப்பம்2 koppam, பெ.(n.)

   1. ஒரு நாடு; a country.

     “பப்பரம் கொப்பம் வங்கம்” (பாரத. படை. 19);.

   2. பெல்லாரி மாவட்டத்தையடுத்து நிசாம் ஆளுகைக்குட்பட்ட ஓர் ஊர்; a town in the Nizam dominious bordering Bellary district.

     “கொப்பத்தொருகளிற்றாற் கொண்டோனும்” (விக்கிரம.உலா, 40);.

     [குப்பம் → கொப்பம்.]

 கொப்பம்3 koppam, பெ.(n.)

   சேலம் மாவட்டத்துச் சிற்றூர்; a village in Salem Dt.

கொப்பயம்பட்டி

 கொப்பயம்பட்டி koppayambaṭṭi, பெ.(n.)

   தேனி மாவட்டத்துச் சிற்றூர்; a village in Theni Dt.

கொப்பரகேசரிவன்மர்

 கொப்பரகேசரிவன்மர் kopparaācarivaṉmar, பெ.(n.)

   ஒரு சோழ மன்னன்; a Cõlãking.

மறுவ. பராந்தகன், வீரநாராயணன்.

     [கோ+பரகேசர்+வருமன்.]

இவர் மதுரை, ஈழம் முதலிய நாடுகளை வென்றார். ஆதித்தச் சோழரின் மகன். இவரின் மனைவி கேரள நாட்டு மன்னனின் மகள் கோக்கிழார் என்பவள். இவருக்கு இராசாதித்தன் கண்டராதித்தன்_அரிஞ்சயன் என மூன்று பிள்ளைகள் இருந்தனர் (அபி.சிந்);.

     [P]

கொப்பரம்

கொப்பரம் kopparam, பெ.(n.)

   1. முழங்கை; elbow.

   2. மற்போர் வகை; a mode of grappling the arms in wrestling.

   ம. கொப்பரம்;   தெ. கொப்பரமு; Skt. kurpara.

     [குப்பரம் → கொப்பரம்.]

கொப்பரம் பாய்ச்சு

கொப்பரம் பாய்ச்சு2 kopparambāyccudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   அதட்டுதல்; to upbraid, bluster.

     [குப்பரம் → கொப்பரம் + பாய்ச்சு-.]

கொப்பரம்பாய்ச்சு

கொப்பரம்பாய்ச்சு1 kopparambāyccudal,    5 செ.கு.வி. (v.i.)

   மல்லுக்குக் கைகோத்தல் (யாழ்.அக.);; to grapple an antagonist, as in wrestling.

     [குப்பரம் → கொப்பரம் + பாய்ச்சு-.]

கொப்பரி

கொப்பரி koppari, பெ.(n.)

கொப்பரை2 (பிங்.); பார்க்க;see kopparai.

     [கொப்பரை → கொப்பரி.]

கொப்பரை

கொப்பரை1 kopparai, பெ.(n.)

   கைப்பிடியோடு கூடிய பெரிய ஏனம்; brass or copper boiler with rings for handles, cauldron.