| தலைசொல் | பொருள் |
|---|---|
| கை | கை kai, பெ.(n.) ‘க்’ என்னும் அடியண்ண மெய்யொலியும் ‘ஐ’ என்னும் கூட்டுயிரொலியும் இணைந்த மெய்யெழுத்து; the syllable formed by adding the diphthong’ai’ to consonant, velarvoiceless stop’k’. [க் +ஐ – கை.] கை1 kaidal, 1செ.குன்றாவி (v.t.) செய்தல்: to do; to work, to act. கைநேர்த்தி(செய்நேர்த்தி);. மறுவ, கெய்,செய். [குல் → குய் → கய் → கெய் → கை.] கை2 kaittal, 4 செ.கு.வி. (v.i) 1. கசத்தல்; to be bitter, astringent, unpleasant. “தேனும் புளித்தறக் கைத்ததுவே” (கந்தரலங்.6);. 2.உப்புக்கரித்தல; to be saitish to the taste. உப்புமிகுதியானதால்தெளிசாறு கைக்கிறது(உ.வ.);. ம.கைக்குக; தெ.காரு; கோத.கய்ள்;பட.கய். [கள் → கய் → கய → கச → கசப்பு. கய் → கை.] கை3 kaittal, 4செ.கு.வி(v.i) நைந்து வருந்துதல்; to be deeply afflicted. “கைத்தன ளுள்ளம்” (கம்பரா. மாயாசன. 30);. [குழை → குழ → கழ.கச → கசங்கு. கச → கய → கை] கை4 kaittal, 4 செ.குன்றாவி.(v.t.) 1. சினத்தல் “மருவலரைக் கைக்கும்”(தஞ்சைவா.423);:to dislike; to be angry with; to hate. 2.அலைத்தல்; to vex, trouble, harass, torment. [குல்:எரிதல். குல் → குய் → கய் → கை.] கை5 kaittal, 11செ.குன்றாவி.(v.t.) செலுத்துதல்; to produce, as a sound; to propel, shoot, as an arrow. “சிலம்பிரங்கு மின்குரல் கைத்தெடுத்தலின்” (சீவக.2683);. [குல் – தோன்றுதல்,முற்செலவுக் கருத்துவேர். குல் – குய் → கய் → கை.] கை6 kaittal, 11 செ.குன்றாவி.(v.t.) ஒப்பனை செய்தல் (அலங்கரித்தல்);; to adorn, decorate. “மடமொழி யோருங் கைஇ மெல்லிதி னொதுங்கி” (மதுரைக்.419);. [குல் – கூடுதல் கருத்துவேர். குல் – கெல் → கெய் (செய்தல்); → கை.] கை7 kai, 1.தோள்பட்டையிலிருந்து தொங்கும் நீண்டமாந்தவுறுப்பு, கரம்; the human forelimb from shoulder to hand, arm. “அகமென் கிளவிக்குக் கைமுன் வரினே” (தொல்.எழுத்து 315);. 2. மணிக்கட்டிற்குக் கீழுள்ள மாந்தவுறுப்பு; hand. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை (பழ.);. கைப்புண்ணுக்குக்கண்ணாடியா? (பழ.);. 3.யானைத் தும்பிக்கை; elephant’s trunk. “தூங்குகையானோங்குநடைய” (புறநா.22);. 4. கதிரவனின் ஒளிக்கற்றை; ray, as of sun. “செங்கை நீட்டித் தினகரன் தோன்றலும்”(திருவிளை. விடை. 20);. 5. நாட்டிய நளிக்கை (சிலப்.3:18, உரை);; hand-pose in dancing. 6.சட்டையின் கை; sleeve of a garment. முழுக்கைச் சட்டை(உ.வ.);. ம.கை,கய்யி; க.கய்,கயி,கய்யி,கெய்; தெ.செயி; து., பட., இரு., கோண். கை; கோத. கெய்; து. கொள்; எருக். கயி, கி; குட.கை, கீய், கய்; கூ. கசு; குவி.கேயு, கேசு; நா.கீ; குரு. கியு; மால.கெகெ; பர்.கெய்;கட.,கொலா.கி. [குல் – கூடுதல் கருத்துவேர். குல் → குய் → கய் (செய்தல்); → கெய்: செய். செய் → கெய் →கை.] கை யென்னும் பெயர், செய் என்னும் வடிவில் குமரி நாட்டில் வழங்கியிருத்தல் வேண்டும் செல்வி 435(1974); தமிழ் ‘செய்’ எனும் வடிவம் கன்னடம், குடகு, துளு, கோத்தம், துடவம், படகு, கொலாமி, கடபா, கோண்டி, கொண்டா, கூய், குவி, பிராகுவி ஆகிய மொழிகளில் கை, கெய், gey, giy, கீ எனும் வடிவங்களில் ஆட்சிபெற்றுள்ளது. மாந்தக்கை போன்றிருக்கும் தும்பிக்கையும் கை எனப்பட்டது. ஒளிக்கற்றையைக் கதிரவனின் கையாக உருவகப்படுத்தியுரைப்பதால் அதுவும் கை எனலாயிற்று. kai-hand:all Dravidian dialects. Telugu has in addition célu and chey-I or chèy-i. The harder form is probably the more ancient; hence the words we have to compare with corresponding words in other languages are key, to do, and kei, hand. Lt cannot be doubted that these words were originally identical, like kar, to do, and kar-a hand in Sanskrit. Key would naturally become kei, of which we see an appropriate instance in gei-du, having done, in colloquial Canarese, which is the shape of the order and more classical gey-du has taken. Though it seems certain that these words were originally identical it does not seem quite so clear which of the two meanings to door the hand, was the original one. It would be very natural to call the hand the doer; on the other hand; ‘to do’is a abstract word, which cannot well have come into use until a large number of doings and doers had been provided with special names. Some word for hand would be required at a much earlier stage, and it is conceivable that to do meant first of all to use the hand(C.G.D.F.L.582);. கை8 kai, பெ.(n.) 1. ஐந்து என்னும் எண்ணிக்கையைக் குறிக்குஞ் சொல்); a word signifying number five. மாம்பழம் ஒரு கை போடு (உ.வ.);. 2. செங்கல் முதலியவற்றை எண்ணும்.ஓரளவு(கொ.வ.); group,set, as in counting bricks, dry dung cakes. உடைந்த கல்லிற்குஈடாகஒருகைபோடு(உ.வ.);3.கையளவு; handful. கையளவுமனத்தில்கடலளவுஆசைவைத்தான்(பழ.); ஒரு கை உப்புக்கொடு(உ.வ.);. [கை7 → கை8] கை9 kai, பெ.(n.) 1. பக்கம்; side, right or left. “இருகையுமிரைத்து மொய்த்தார்” (கம்பரா.கைகேசி.83);. 2.கட்சி, பிரிவு; faction.party. நேற்றுவரை நம்முடன் இருந்தவர் இன்று எதிர் கையில் சேர்ந்துவிட்டார்(உ.வ.);.3.சிறகு; wings of a bird. “கோழி கைத்தலத்தைக் கொட்டி” (அரிச்சந்.விவா.195);.3.இடம் (சூடா.);; place. 4.கிளை, துணை; branch;tributary. [கை7 → கை9.] மாந்த உறுப்பான ‘கை’ உடலின் ஒரு பக்கத்தைக் குறிக்கும் வகையின் அடிப்படையில், ‘கை’ பக்கப் பொருளில் விரிந்தது; பக்கங்களில் இருப்பதால் சிறகும் கை எனப்பட்டது. கை10 kai, பெ.(n.) 1. கைப்பிடி; handle, as of an axe. “நெடுங்கை நவியம் பாய்தலின்” (புறநா.36:7);. 2. கைமரம்; rafter. “கால்தொடுத் திருகை யேற்றி” (தேவா. 838:4);. 3.விசிறிக்காம்பு; handle, as of a fan. “மணிக்கையாலவட்டம்” (பெருங்.உஞ்சைக்34:217);. 4. தொடர்வண்டியின் கைகாட்டி (கொ.வ.);; semaphore. 5.நாற்காலியில் கை வைக்கும் சட்டம்; a rail or support for the armon a chair. கையொடிந்த நாற்காலி (உ.வ.);. 6. முழம்; elmeasure. Fin. kasi, kandj; Est. kasi; Hung. Kez; Mong. katyl (to lead by hand);; Jap. Kata; Q. kucus (elbow. elmeasure);. [கை7 → கை10.] கை11 kai, பெ.(n.) முள்; thorn. [கள் முள்); → கய் → கை.ஒ.நோ. கைதை (முள்ளுள்ள தாழை.] கை12 kai, பெ.(n.) கைப்பொருள்; money on hand. “அவரன்பும்கையற்றகண்ணே யறும்”(நாலடி371);. [குய் → கெய் → கய் → கை.] கை இடவாகுபெயராய்ப் பணத்தை (கைப்பொருளை);க் குறித்தது. கை13 kai, பெ.(n.) 1.செய்யத்தக்கது; that which is fit to be done. “கையறியாமையுடைத்தே” (குறள்,925);. 2. ஒப்பனை (பிங்.);; decoration, dressing. க. கை, கெய். [க.கய் → கெய் → கை.] கை14 kai, பெ.(n.) 1. சிறுமை; littleness, smallness, hardiness. “கைஞ்ஞானங்கொண்டொழுகுங்காரறி வாளர்” (நாலடி(311);. 2. தங்கை(பிங்.);; younger sister. [குய் → நெய் → கை.] கை சிறியதாக இருத்தலின் சிறுமைப் பொருள் தந்தது. கை15 kai, பெ.(n.) 1. ஆற்றல்; strength, ability. யாரிடம் உன் கை காட்டுகிறாய்? (உ.வ.); ‘கை உண்டாவது கற்றவர்களுக்கு ஆமே’ (பழ.);. 2. ஆள்; hands, workmen, assistants. சீட்டாட்டத்திற்கு ஒரு கை குறைகிறது (உ.வ.);. [கை1 → கை14.] கைதல் – செய்தல் செயலுக்குரிய ஆற்றலையும் குறித்தது. கை16 kai, பெ.(n.) 1. ஒழுங்கு; row, line. கையமை விளக்கம் (முல்லைப்.49);; 2. முறை, தடவை; turn. 3. உலகவொகழுக்கம்; custom, usage, way of the world. 4. பழக்கம்: habit. அது அவருக்குக் கைவந்த கலை (உ.வ.);. க. கை, கய், கெய். [கை14 – கை15.] செயல்திறனின் நோக்கமும் விளைவும் ஒழுங்கின் பாற்பட்டவையாதலின்ஒழுங்கைக்குறித்தது. கை17 kai, பெ.(n.) குற்றம்; fault, blemish (அக.நி.);. “கைசெய்தூண் மாலையவர்”(குறள்,);. து. கைனெ (இழிமகள்);. [கை2 – கை 16. கை : கசப்பு, குற்றம்.] கை18 kai, பெ.(n.) செல்வாக்குள்ளவன்; man of high influence. அவன் பெரிய கை. அவனிடம் பகை வேண்டா (உ.வ.);. [கை14 → கை17.] கை19 kai, இடை. (part.) 1. குறுமைப் பொருள் முன்னொட்டு; diminutive prefix. 2.சிறுமைப்பொருள் பின்னொட்டு; diminutive suffix. குடிகை, கன்னிகை (வேர்.கட்.161);. 3.உடைமைப்பொருளீறு; possessive suffix. 4.தொழிற்பெயரீறு; suffixat the end of verbal nouns. செய்கை, வருகை. 5. வினையுடன் சேர்ந்துவரும் முன்னொட்டு; auxiliary prefix to verbs as in கையிகந்து. [கை14 → கை19.] கை20 kai, இடை. (part.) எழனுருபுள் ஒன்று; a locative ending. “செவிலி கையென் புதல்வனை நோக்கி” (அகநா.26:18);. [கை7 → கை19. (இடப்பொருள்குறித்தது.);] கை kai, பெ.(n.) காற்பலம்; one-fourth of a palam. “சர்க்கரையமுது போது கைசாக” (S.I.I.II.70:14);. [கஃசு → கைசு (கொ.வ.);.] |
| கை ஒப்பிதம் | கை ஒப்பிதம் kaioppidam, பெ.(n.) ஒப்புகைக்கான கையொப்பம்; signature(கொ.நா.ஆவ.35ப.132);. [கை + ஒப்பிதம்.] |
| கைஅம்பு | கைஅம்பு kaiambu, பெ.(n.) கைக்கணை; smaller arrow. [கை13 + அம்பு.] |
| கைஒலை கட்டோலை | கைஒலை கட்டோலை gaiolaigaṭṭōlai, பெ.(n.) படி ஓலை; copyof document on hand (கொ.நா.ஆவ.58 ப.247);. [கை + ஒலை + கட்டு + ஒலை.] |
| கைககழுவு | கைககழுவு1 gaigagaḻuvudal, 5 செ.கு.வி (v.i.) கையலம்புதல்; to wash the hands. க. கெய்தொளெ;பட.கைதோகு. கை + கழுவு-.] |
| கைகட-த்தல் | கைகட-த்தல் gaigaḍattal, 3 செ.கு.வி. (v.i.) 1. வயப்படாமல் மீறுதல்; to pass beyond one’s control. ‘நின்னைக்கைகடந்துநின்னுண்கண்களே, எனக்குச் சொல்லலுறுவதொரு காரியம்'(குறள் 1271,உரை);. 2. கைக்கு எட்டாமற்போதல்; to escape; to pass out of one’s hands; to pass beyond one’s reach. “தோண் முயங்கிடாது…. கைகடக்க விட்டிருந்து” (கம்பரா.கார்மு.54);. [கை + கட-.] |
| கைகடந்தபோகம் | கைகடந்தபோகம் gaigaḍandapōgam, பெ.(n.) மிகுதியான காமம்; too much of indulgence in sexual intercourse (சா.அக.);. [கை + கடந்த + போகம்.] |
| கைகடி-த்தல் | கைகடி-த்தல் gaigaḍittal, 4 செ.குன்றாவி.(v.t.) கைமுதலுக்கு இழப்பு நேர்தல்; to loss (of capitalin hand);. ம.கைகடிக்குக. [கை + கடி.] |
| கைகடை-தல் | கைகடை-தல் gaigaḍaidal, 12 செ.குன்றாவி.(v.t.) கையால் கடைதல்; to churn or stir about with the hands. க.கெய்கடெ. [கை + கடை-.] |
| கைகட்டி | கைகட்டி kaikaṭṭi, வி.அ.(adv) மிகவும் பணிந்து போகை; most humbly; cap in hand. மன்னர் சிலர் ஆங்கிலேயர்களுக்குக் கைகட்டி வேலை செய்தனர் [கை+கட்டி] |
| கைகட்டிக்கிட-த்தல் | கைகட்டிக்கிட-த்தல் kaikaṭṭikkiṭattal, 3 செ.கு.வி. (v.i.) நோயாளியின் இரண்டு கைகளையும் கட்டி படுக்கையிற் சேர்த்தல்; letting the patient lie on a cot witt the hands tied together or sometimes to a Cot (சா.அக.);. [கை+ கட்டி+கிட] |
| கைகட்டிக்கொள்ளு-தல் | கைகட்டிக்கொள்ளு-தல் kaikaṭṭikkoḷḷutal, 16 செ.கு.வி.(v.i.) 1. கைகளைக் குறுக்கே கட்டிக் கொள்ளல்; joining the arms across, a sign of respect (சா.அக.);. [கைகட்டி+ கொள்ளு-தல்] |
| கைகட்டிநில்(-தல்) (கைகட்டிநிற்றல்) | கைகட்டிநில்(-தல்) (கைகட்டிநிற்றல்) gaigaṭṭiniltalgaigaṭṭiniṟṟal, 14 செ.கு.வி.(v.i.) கைகளைக் கட்டிக்கொண்டு வணங்கி நிற்றல்; to stand submissively with folded arms. [கை + கட்டி + நில்-.] |
| கைகட்டு | கைகட்டு gaigaṭṭu, பெ.(n.) கூலியாள்களின் சேர்க்கைக் கூட்டம் (இ.வ.);; batch, as of workmen. [கை + கட்டு-.] |
| கைகட்டு-தல் | கைகட்டு-தல் kaikaṭṭutal, 5 செ.கு.வி.(v.i.) 1. இரண்டு கைகளைக் குறுக்காக மடித்தல்; putting or folding the hands across. 2. முறிந்த கைக்குக் கட்டுப் போடல்: bandaging the fractured hand or arm. 3. நோயாளியின் இரண்டு கைகளையும் சேர்த்துக் கட்டல்; tying the hands together (சா.அக.);. [கை+கட்டு-தல்.] |
| கைகண்ட | கைகண்ட1 gaigaṇṭa, கு.பெ.எ.(adj.) தேர்ந்த; skilled. அவர்இந்தத் தொழிலில் கைகண்டவர்(சா.அக.); [கை + கண்ட.] கைகண்ட2 gaigaṇṭa, கு.பெ.எ.(adj.) நின்ற மதியுடைய, நற்றிறமிக்க; immediatelyuseful, efficacious. “தீவினைக் கருக்கெடும்மிது கைகண்ட யோகமே.(தேவா. 927:5);. [கை + கண்ட.] |
| கைகண்டகலை | கைகண்டகலை kaikaṇṭakalai, alchemy (சா.அக.). மறுவ. பொன்னாக்கல் [கைகண்ட+கலை.] |
| கைகண்டசாரம் | கைகண்டசாரம் gaigaṇṭacāram, பெ.(n.) 1.நவச் சாரம்; chloride of ammonium. 2. கைகண்ட பலன்; the result in hand immediate benefit. [கை + கண்ட + சாரம்.] |
| கைகண்டது | கைகண்டது gaigaṇṭadu, பெ.(n.) 1.படிப்பினையால் சிறந்ததெனக் கொள்ளப்பட்டது; that which is found usually efficacious after experience. “சான்றோர் புகழும்வெருகெண்ணெய்தவறா திதுகை கண்டோம் நாம்” (பராச சேகரம்.); (சா.அக.);. 2. கைகூடு-தல் பார்க்க;see kai-küdu-. 3. தோன்றினது; that which appeared. [கை + கண்டது.] |
| கைகண்டபணி | கைகண்டபணி gaigaṇṭabaṇi, பெ.(n.) பழக்கப்பட்ட பணி, தேர்ச்சி பெற்ற பணி; work which is known to a person or to which a person is accustomed. க.கெய்கண்ட கெலச. [கைகண்ட + பணி.] |
| கைகண்டபயன் | கைகண்டபயன் gaigaṇṭabayaṉ, பெ.(n.) நடைமுறையில் உறுதிப்படுத்தப்பட்ட பயன்; established benefit. [கைகண்ட + பயன்.] |
| கைகண்டபரிகாரி | கைகண்டபரிகாரி gaigaṇṭabarigāri, பெ.(n.) பட்டறிவு மிக்க மருத்துவன்; an experienced physician (சா.அக.);. [கை + கண்ட + பரிகாரி.] |
| கைகண்டபலன் | கைகண்டபலன் gaigaṇṭabalaṉ, பெ.(n.) கை கண்ட பயன் பார்க்க;see kai-kanda-payan. [கை + கண்ட + பலன்.] |
| கைகண்டமருந்து | கைகண்டமருந்து gaigaṇṭamarundu, பெ.(n.) 1. நோய் தீர்க்கும் மருந்து; the medicine which cures a disease. 2. கை தேர்ந்த மருந்து; a medicine the virtues of which are tried. 3. நோய்க்குரிய மருந்து; the medicine which exerts a special action in the prevention and cure of a disease(சா.அக.);. [கை + கண்ட + மருந்து.] |
| கைகண்டமுறை | கைகண்டமுறை gaigaṇṭamuṟai, பெ.(n.) நுகர்ச்சியால் தெளிந்த முறை; an efficient method determined by experience(சா.அக.);. [கை + கண்ட + முறை.] |
| கைகண்டயோகம் | கைகண்டயோகம் gaigaṇṭayōgam, பெ.(n.) வழக்கத்தால் நலம்.உள்ளதெனத்தெரிந்தமருந்து; any Medicine found by trial to possess peculiar efficacy in the cure of a particular disease. “கைகண்டயோகந் தடவர் தீரும்”(திவ்.நாய்ச்.12:5);. [கை + கண்ட + யோகம்.] |
| கைகண்டவள் | கைகண்டவள் gaigaṇṭavaḷ, பெ.(n.) பரத்தை; prostitute (சா.அக.);. [கை + கண்டவள்.] |
| கைகண்டவித்தை | கைகண்டவித்தை kaikaṇṭavittai, பெ.(n.) கைகண்டகலை பார்க்க; see kai-kandaKalai(சா.அக.);. [கைகண்ட+Skt. வித்தை] |
| கைகண்டவேலை | கைகண்டவேலை1 gaigaṇṭavēlai, பெ.(n.) கைகண்டபணிபார்க்க;see kai-kanda-pani. க.கெய்கண்ட கெலச. [கை + கண்ட + வேலை..] கைகண்டவேலை2 ஒருவருக்கு நன்கு தெரிந்த அல்லது பழக்கப்பட்ட வேலை; work which is known to a person or to which a person is accustomed. க.கெய்கண்டகெலச [கை + கண்ட + வேலை.] |
| கைகம் | கைகம் gaigam, பெ.(n.) வக்கிராந்தி செய் (வைப்பு); நஞ்சு (யாழ்.அக.);; a mineral poison. [கச → கயி → கை → கைகம்.] |
| கைகயன். | கைகயன். gaigayaṉ, பெ.(n.) 1.கேகயநாட்டுமன்னன்; king of Kegaya. “கைகயன் மகள் விழுந்தரற்ற” (கம்பரா.கிளைகண்டு.40);. 2. கேகய நாட்டைச் சார்ந்தவன்; inhabitant of Kegaya. “கைகயர் வேந்தன்” (கம்பரா.எழுச்.64);. [கேகயன் → கைகயன்.] |
| கைகர-த்தல் | கைகர-த்தல் gaigarattal, 3 செ.குன்றாவி (v.t.) ஒளித்தல்; to hide, conceal. “சான்றவர் கைகரப்ப” (பழ.242);. [கை + கர-.] |
| கைகருங்கு-தல் | கைகருங்கு-தல் gaigaruṅgudal, 5 செ.கு.வி.(v.i.) செலவு குறைதல்; to be cut down expenses. [கை + சுருங்கு-.] |
| கைகல-த்தல் | கைகல-த்தல் gaigalattal, பெ.(n.) 3செ.கு.வி.(v.i.); 1.கூடுதல்; to unite. join. “ஆசையிற் கைகலந்து”(திருப்பு:296);. 2.நெருங்கிப்பொருதல்; to engage in a hand-to-hand fight. “மதன் படையுங்கைகலக்குந்தானே” (தனிப்பா. 1,326,24);. [கை + கல-.] |
| கைகலப்பு | கைகலப்பு kaikalappu, பெ.(n.) கையால் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளும்சண்டை ; hand-to-hand fight; scuffle. கூட்டத்தில் கைகலப்பு ஏற்பட்டது. [கை+கலப்பு] |
| கைகளத்துளர் | கைகளத்துளர் gaigaḷattuḷar, பெ.(n.) பெரம்பலூர் மாவட்டச் சிற்றூர்; a village in Perambalur Dt. [கை(சிறு); + களத்தூர்.] |
| கைகழற்று-தல் | கைகழற்று-தல் kaikaḻṟṟutal, 5 செ.கு.வி. (v.i.) கையை மாற்றி மாற்றிச் சுற்றுதல்; whirling the hand alternatively in quick succession as in exercises for exciting circulation of blood (சா.அக.);. [கை+சுழற்று-தல்.] |
| கைகழி-தல் | கைகழி-தல் gaigaḻidal, 3 செ.கு.வி.(v.i.) எல்லை கடத்தல்; to go beyond, exceed the bounds, overstep the limits to go beyond the hand, etc. “அப்ராப்தமானதிலே கைகழியப் போய்”(ஈடு4,6:8); க.கெய்கழி. [கை + கழி-.] |
| கைகழுவிவிடு-தல் | கைகழுவிவிடு-தல் gaigaḻuviviḍudal, 20 செ.கு.வி. (v.i.) முடியாதென்று மறுத்தல்; to refuse, to rescue. சாகுந்தறுவாயிலிருந்த ஒரு நோயாளியை மருத்துவர் கைகழுவிவிட்டார்(இ.வ.); [கை + கழுவி + விடு-.] |
| கைகழுவு | கைகழுவு2 gaigaḻuvudal, பெ.(n.) 5 செ.குன்றாவி (v.t.); 1.விட்டு விடுதல்; to relinguish, abandon. 2. பொறுப்பை நீக்கிக்கொள்ளுதல்; to avoid one’s responsibility. [கை + கழுவு-.] |
| கைகவி-த்தல் | கைகவி-த்தல் gaigavittal, 4 செ.குன்றாவி, (v.t.) 1.கைக்குறியால் அடக்குதல்; to check as by gesture. ‘மற்று அவனைக் கைகவித்து’ (பாரத வெண்.34.உரை);. 2.புகலிடம்கொடுத்தல்: toprotect. “அஞ்சே லென்றுகைகவியாய்”(திவ். பெரியாழ்.5,3:7);. [கை + கவி-.] |
| கைகாக | கைகாக kaikāka, பெ.(n.) கைக்காசு பார்க்க;see kai-k-kasu. [கை + காசு} |
| கைகாட்டி | கைகாட்டி kaikāṭṭi, பெ.(n.) 1.கைகாட்டிமரம்பார்க்க;see kai-kātti-maram. 2. மாமியாரிடத்தில் மருமகள் கைகாட்டியல்லது வாயாற்பேசுதல் கூடா தென்னும் வழக்கத்தையுடைய ஒருசார் கணக்க வகுப்பினர் (இ.வ.);; A caste of accountants, so called from their custom of prohibiting a daughter-in-law, to communicate with her mother-in-law except by signs. ம.கைகாட்டி. [கை + காட்டி.] |
| கைகாட்டிமரம் | கைகாட்டிமரம் kaikāṭṭimaram, பெ.(n.) ஊர்களுக்குச் செல்லும் வழி சொல்லி அடையாளங் கைகாட்டிமரம் குறிக்கும் மரம்; sign board, semaphore. [கை + காட்டி + மரம்.] |
| கைகாட்டிவிடு-தல் | கைகாட்டிவிடு-தல் kaikāḍḍiviḍudal, 20 செ.கு.வி. (v.i.) 1. தொழிலைப் பழக்கிக் கொடுத்தல்; to train a person. 2.தான் பொறுப்பேற்காமல் வேறொருவரைக் காட்டிவிடுதல்; to guide one to seek help from some one else. [கை + காட்டி + விடு-.] |
| கைகாட்டு | கைகாட்டு1 kaikāṭṭudal, 5. செ.கு.வி (v.i.) 1. சைகை காட்டுதல்; to make signs with the hand. “பேதையார் கைகாட்டும்பொன்னும்” (நாலடி.328);. 2. நாட்டியத்தில் தொழிற்கை பிடித்தல்; to gesticulate with hands as dancing girls. 3. கொடியசைத்து அடையாளங்காட்டுதல் (உ.வ.);; to wave the flag, as in railway stations. 4. நோய் அறிய, நாடி பார்க்கக் கையைக் காட்டுதல்; to show hand in order that the physician feels the pulse and diagnoses disease. ம.கை காட்டுக;க.கெய்தோரு. [கை + காட்டு-.] கைகாட்டு2 kaikāṭṭudal, 5.செ.கு.வி.(v.i.) திறமை காட்டுதல்; to exhibit (the power of); one’s strength. யாரிடத்தில் கைகாட்டுகிறாய் (உ.வ.);. க.கெய்தோறு. [கை + காட்டு-.] கைகாட்டு3 kaikāṭṭudal, 5.செ.கு.வி.(v.i.) 1.சிறிது கொடுத்தல்; to give a little. “ஐயமும் பிச்சையு மாந்தனையுங் கைகாட்டி” (திவ்.திருப்பா.2);. 2. வாழ்க்கைக்குத் தேவையானவற்றைக் கொடுத்தல்; to enable one to earn his livelihood. 3. இறைவநனுக்குப் படைத்தல்; to offer to God. 4.கையூட்டுக்கொடுத்தல் (இ.வ);; to bribe. [கை + காட்டு-.] கைகாட்டு4 kaikāṭṭudal, 5 செ.கு.வி.(v.i) கை காட்டிவிடு-தல் பார்க்க ;see kāi-kātti-vidu-. [கை + காட்டு-.] கைகாட்டு5 kaikāṭṭu, பெ.(n.) கைச்சைகை; gesture with hands. “கடவுணீ யுணர்த்துவதுங் கைகாட்டு” (தாயு.கல்லாலின்.1);. [கை + காட்டு.] |
| கைகாட்டு-தல் | கைகாட்டு-தல் kaikāṭṭutal, 5. செ.கு.வி.(v.i.) 1. நோயைக் கண்டறிய வேண்டி நாடி பார்ப்பதற்காகக் கையைக் காட்டல்: stretching out the arm for the pulse to be felt. 2. சாடை காட்டுதல்; making gestures as in love. 3. கைவரையைப் பார்த்து கணியம் சொல்லும்படி கையைக் காட்டல்; showing the hand for revealing one’s events in life in accordance with palmistry, 4. போகும் திசையை குறித்தல்; to pointout the direction (சா.அக.);. [கை + கட்டு-தல்.] |
| கைகாண்(ணு) | கைகாண்(ணு)1 kaikāṇṇudal, 16.செ.குன்றாவி, (v.t.) பட்டறிவின் வாயிலாக அறிதல்; to find out by experience. “மருந்துகை கண்டேன்” (பெரியபு. கண்ணப்.181);. [கை + காண்(ணு);-.);] கைகாண்(ணு)2 kaikāṇṇudal, 12செ.கு.வி.(v.i.) 1. மெய்ப்பித்தல் (யாழ்ப்.அக.);; to prove, 2. நிறை வேறுதல்; to complete. [கை + காண்(ணு);-.] |
| கைகாய்த்து-தல் | கைகாய்த்து-தல் kaikāyddudal, பி.வி.2(caus.) எரியச் செய்தல்; to burn, “காடுகை காய்த்திய நீடுநா ளிருக்கை”(பதிற்றுப்.82:9);. [கை + காய்த்து-.] |
| கைகாய்ப்பு | கைகாய்ப்பு kaikāyppu, பெ.(n.) கடும் உழைப்பில் உள்ளங்கையில் ஏற்படும் தோல் தடிப்பு; hardening of skin in palm due to hard work. [கை + காய்ப்பு.] |
| கைகாரன் | கைகாரன் kaikāraṉ, பெ.(n.) கைக்காரன் பார்க்க: See kai-k-kāran. [கை + காரன்.] |
| கைகாற்கழுவல் | கைகாற்கழுவல் kaikāṟkaḻuval, பெ.(n.) கைகால்களைத் தண்ணீரால் கழுவுதல்; washing hands and feet (சா.அக.);. [கை + கால் + கழுவல்.] |
| கைகாற்காந்து-தல் | கைகாற்காந்து-தல் kaikāṟkāndudal, 5 செ.கு.வி. (v.i.) கைகால்களில் காணும் சூடு; glowing of heal experienced due to high temperature (சா.அக.);. [கை + கால் + காந்து-.] |
| கைகாற்குடைச்சல் | கைகாற்குடைச்சல் kaikāṟkuḍaiccal, பெ.(n.) 1 கைகால் குடைதல்; aching of the limbs. 2. கைகால்களுக்கேற்படும் ஊதைக் குடைச்சல்; rheumatic pain of the limbs (சா.அக.);. [கை + கால் + குடைச்சல்.] |
| கைகாற்குத்தல் | கைகாற்குத்தல் kaikāṟkuttal, தொ.பெ.(vbl.n.) கைகால்களில் உண்டாகும் குத்தல் வலி; excruciating or piercing pain experienced in wounds, ulcers or other injuries inflicated in the limbs (சா.அக.);. [கை கால் + குத்தல்.] |
| கைகாற்குறண்டு-தல் | கைகாற்குறண்டு-தல் kaikāṟkuṟaṇṭudal, 5 செ.கு.வி.(v.i.) கைகால் வெலவெலத்தல்; being convulsed in the hands and feet (சா.அக.);. [கை கால் + குறண்டு-.] |
| கைகாற்சந்துளைவு | கைகாற்சந்துளைவு kaikāṟcanduḷaivu, பெ.(n.) 1. கைகாற் குடைதல்; aching of the limbs. 2. கை கால்களுக்கு கால்களுக்கு ஏற்படும் ஊதை(வாத);க் குடைச்சல்; rheumatic pain of the limbs(சா.அக.);. [கை + கால் + சந்து + உளைவு.] |
| கைகாற்சில்லிடு-தல் | கைகாற்சில்லிடு-தல் kaikāṟcilliḍudal, 18 செ.கு.வி. (v.i.) கைகால் குளிர்ச்சியடைதல்; getting chillness of extremities which is a premonitory symptom of death (சா.அக.);. [கை + கால் + சில்லிடு-.] |
| கைகாற்சுத்திசெய்-தல் | கைகாற்சுத்திசெய்-தல் kaikāṟsuttiseytal, 1 செ.குன்றாவி.(v.t.) மருந்துநீர் அல்லது கருக்கினால் கைகாலைக் கழுவுதல்; cleaning of hands and feet with a lotion or other disinfectants, Sterlization of hands and feet. 2. மரபு கோட்பாட்டின்படி (ஐதிகம்); தூள்மைசெய்தல்; ceremonial cleaning of hands and feet (சா.அக.);. [கை + கால் + சுத்தி + செய்-.] |
| கைகாற்சுரப்பு | கைகாற்சுரப்பு kaikāṟcurappu, பெ.(n.) கைகால் வீக்கம்; swelling of the limbs (சா.அக.);. [கை + கால் + சுரப்பு.] |
| கைகாற்சுரவை | கைகாற்சுரவை kaikāṟcuravai, பெ.(n.) கைகால் வீக்கம்; swelling of the limbs (சா.அக.);. [கை + கால் + சுரவை.] |
| கைகாற்செத்துப்போ-தல் | கைகாற்செத்துப்போ-தல் kaikāṟcettuppōtal, 8 செ.கு.வி (v.t.) 1. கைகால் ஒய்ச்சல்; exhausion of the limbs. 2. கைகால் உணர்ச்சியற்றுப் போதல்; loss of motion and sensation of the limbs (சா.அக.);. [கை + கால் + செத்து + போ-.] |
| கைகாற்பிடி-த்தல் | கைகாற்பிடி-த்தல் kaikāṟpiḍittal, பெ.(n.) 4 செ.குன்றாவி. (v.t.); வெந்நீரால் கைக்கால்களை வருடிப் பிடித்துப் பலவாறு திருப்பி நெட்டி முறித்தல்; pressing and rubbing over the limbs at the same time bending and racking the joints especially when giving a hot bath(சா.அக.);. [கை + கால் + பிடி-.] |
| கைகாற்பிடிப்பு | கைகாற்பிடிப்பு kaikāṟpiḍippu, பெ.(n.) 1.கைகால் அசையமுடியாமல்செய்யும்ஊதை(வாத);நோய்; a kind of arthritis marked by inability to stretch or bend the joints due to stiffening of the limbs (சா.அக.);. [கை + கால் + பிடிப்பு.] |
| கைகாற்றிமிர் | கைகாற்றிமிர் kaikāṟṟimir, பெ.(n.) கைகால்களில் ஏற்படும் திமிர்; numbness of the limbs (சா.அக.);. [கை + கால் + திமிர்.] |
| கைகாலசதி | கைகாலசதி kaikālasadi, பெ.(n.) வலுக்குறைவினால் உண்டாகும் கைகாலுளைச்சல்; exhaustion of the limbs through weakness(சா.அக.);. [கை + கால் + அசதி.] |
| கைகாலசை-த்தல் | கைகாலசை-த்தல் kaikālacaittal, 4 செ.கு.வி.(vi.) கை கால் ஆட்டல், moving the limbs (சா.அக.);. [கைகால்+அசை-த்தல்.] |
| கைகாலடி-த்தல் | கைகாலடி-த்தல் kaikālaḍittal, 4 செ.கு.வி. (v.i.) பக்கவூதையால் கை கால் உணர்ச்சியறல்; to be attacked with paralysis of the limbs (சா.அக.);. [கை + கால் + அடி-.] |
| கைகாலதிர்ச்சி | கைகாலதிர்ச்சி kaikāladircci, பெ.(n.) கைகால் நடுக்கம்; trembling of hand and leg(சா.அக.);. [கை + கால் + அதிர்ச்சி.] |
| கைகாலயர்-தல் | கைகாலயர்-தல் kaikālayartal, 2 செ.கு.வி (v.i.) கைகால் கனத்து, திமிர்த்து ஒய்தல்; heavy becoming and benumbed as hands and feet (சா.அக.);. [கை + கால் + அயர்-.] |
| கைகாலழற்சி | கைகாலழற்சி kaikālaḻṟci, பெ.(n.) கைகாலெரிவு; burning of the extremities (சா.அக.);. [கை + கால் + அழற்சி.] |
| கைகாலாட்டு-தல் | கைகாலாட்டு-தல் kaikālāṭṭudal, 5 செ.குன்றாவி. (v.t.) 1.கைகாலசைத்தல்; to move hands and legs.. 2. சோம்பி இருக்காமல் ஏதாவது பணி செய்தல்; to do some work instead being lazy(சா.அக.);. [கை + கால் + ஆட்டு-.] |
| கைகாலிற்றுவிழல் | கைகாலிற்றுவிழல் kaikāliṟṟuviḻl, தொ.பெ. (vbl.n.) குட்ட நோயால் கைகால் இற்றுவிழல்; dropping off of the digits in leprosy(சா.அக.);. [கை + கால் + இற்று + விழல்.] |
| கைகாலுதறு-தல் | கைகாலுதறு-தல் kaikāludaṟudal, 5 செ.கு.வி. (v.t.) கைகால் நடுங்குதல்; to shiver as the hands and feet (சா.அக.);. [கை + கால் + உதறு-.] |
| கைகாலுதை-த்தல் | கைகாலுதை-த்தல் kaikāludaiddal, 4 செ.குன்றாவி. (v.t.) 1. கால், கை வலிப்புக் கண்டு கையையும் காலையும் உதைத்துக் கொள்ளுதல்; to move the hands and feet alternatively or in quick succession due to convulsions as epilepsy. 2. குழந்தைகள் கிடக்கும்போது கையையும் காலையும் உதைத்துக் கொள்ளல்; to move hands and feet spontaneously as by children when lying(சா.அக.);. [கை + கால் + உதை-.] |
| கைகாலுதைத்துக்கொள்ளு-தல் | கைகாலுதைத்துக்கொள்ளு-தல் kaikālutaittukkoḷḷutal, 16 செ.கு.வி.(v.i.) வலிப்பு நோயால் கையையும், காலையும் உதைத்துக் கொள்ளுதல்; moving the hands and feet alternatively or in quick succession due to tonic or clonic convulsions as in epilepsy (சா.அக.);. [கைகால்+உதைத்து+கொள்ளு-தல்.] |
| கைகாலுறுப்பு | கைகாலுறுப்பு kaikāluṟuppu, பெ.(n.) சேர்க்கை உறுப்பு; a jointed and divisible part of the limbs,appendages of the limbs (சா.அக.);. [கை + கால் + உறுப்பு.] |
| கைகாலுளைச்சல் | கைகாலுளைச்சல் kaikāluḷaiccal, பெ.(n.) கைகால் குடைச்சல்; boring pain of the limbs experienced in rheumatism or other nervous affections(சா.அக.);. [கை + கால் + உளைச்சல்.] |
| கைகாலூது-தல் | கைகாலூது-தல் kaikālūdudal, 5 செ.கு.வி. (v.i.) கைகால் வீக்கம் கொள்ளல் அல்லது.பருத்தல்; to swell or enlarge abnormal by referring to extremities (சா.அக.);. [கை + கால் +ஊது-. உல் → ஊல் → ஊது] |
| கைகாலூனம் | கைகாலூனம் kaikālūṉam, பெ.(n.) கைகால் நொண்டி; defective formation of limbs (சா.அக.);. [கை + கால் + ஊனம்.] |
| கைகாலெரிச்சல் | கைகாலெரிச்சல் kaikālericcal, பெ.(n.) 1.கை காலெரிவு; burning of the extremities 2. பித்தவெரிச்சல்; burning sensation of the palm and the sole from biliousness (சா.அக.);. [கை + கால் +எரிச்சல்.] |
| கைகாலோய்-தல் | கைகாலோய்-தல் kaikālōytal, 2 செ.கு.வி.(v.i.) கைகால் கனத்து மரத்துப் போதல்; hands and feet becoming heavy and benumbed (சா.அக.);. [கை + கால் + ஒய்-.] |
| கைகாலோய்ச்சல் | கைகாலோய்ச்சல் kaikālōyccal, பெ.(n.) வலுவின்மையால் காணும் கைகால் அசதி; exhaution of the limbs through weakness(சா.அக.);. [கை + கால் + ஒய்ச்சல்.] |
| கைகால் வலி | கைகால் வலி kaikālvali, பெ.(n.) கைகால் குத்தல் அல்லது குடைச்சல்; intense pricking or boring pain in the extremities (சா.அக.);. [கை + கால் + வலி.] |
| கைகால் வழங்காமை | கைகால் வழங்காமை kaikālvaḻṅgāmai, பெ.(n.) 1.கையால் பயன்படாதிருத்தல்; the state of being in capable of using hands and feet. 2 கைகால் செயல் இழத்தல்: deadening, or loss of motion and sensation of the limbs through paralytic attack (சா.அக.);. [கை + கால் + வழங்காமை.] |
| கைகால்கரணைவிழல் | கைகால்கரணைவிழல் kaikālkaraṇaiviḻl, பெ.(n.) கைகால்பருத்ததனால் அல்லது வீங்குவதால் மடிப்பு விழுதல்; formation of folds in the cutaneous portion of the limbs from corpulency or swelling(சா.அக.);. [கைகால் + கரணை + விழல்.] |
| கைகால்நடுக்கம் | கைகால்நடுக்கம் kaikālnaḍukkam, பெ.(n.) 1.கை கால் இவற்றில் காணப்படும் நடுக்கம். shivering of the Iimbs. 2. குழந்தை அல்லது வலுவில்லார்க்கு ஏற்படும் நடுக்கம்; inability to keep the fingers and toes free from continued motion as in convalescents or children (சா.அக.);. [கைகால் + நடுக்கம்.] |
| கைகால்பிடி-த்தல் | கைகால்பிடி-த்தல் kaikālpiḍittal, 4 செ.கு.வி.(v.i.) வெந்நீரிட்டுக் கைகால்களைத் தடவிப் பிடித்து பலவாறு திருப்பி நெட்டி முறித்தல்; to press and rub over the limbs at the same time bending and racking the joints especially when giving a hot bath (சா.அக.);. [கைகால் + பிடி-.] |
| கைகால்முடக்கு | கைகால்முடக்கு kaikālmuḍakku, பெ.(n.) 1. கை கால் மரத்து நீட்டவும் மடக்கவும் முடியாமற்போகும் ஒருவகை ஊதை (வாத); நோய்; a kind of rheumatic affection of the limbs arising from undue pressure exerted in the nervous system due to forcible throwing of stones, bending of bows etc. (சா.அக.);. [கை + கால் + முடக்கு.) |
| கைகால்முரடுகட்டு-தல் | கைகால்முரடுகட்டு-தல் gaigālmuraḍugaḍḍudal, 5.செ.குன்றாவி(v.t.) முழங்கை முழங்கால் ஆகியவை திருப்ப முடியாது கரடு கட்டுதல்; the hardening or stiffening of a joint such as the elbow or knee in which there is no rotatary movement (சா.அக.);. [கைகால் + முரடு + கட்டு-.] |
| கைகால்முறுக்கு-தல் | கைகால்முறுக்கு-தல் kaikālmuṟukkudal, 8 செ.குன்றாவி.(v.t.) 1. கைகால்களைப் பலவாறு திருப்புதல்; twisting the limbs in various ways for the purpose of stimulating the circulation of blood. 2 கைகால் பிடித்தல் பார்க்க;see kai-kai-pid. [கை + கால் + முறுக்கு-.] |
| கைகால்லுதறிநட-த்தல் | கைகால்லுதறிநட-த்தல் kaikāllutaṟinaṭattal, 3 செ.கு.வி.(v.i.) கை கால் தடங்கல் இல்லாமல் அசைத்து நடத்தல்; walking by moving the hands and legs freely (சா.அக.);. [கைகால்+உதறிநட-த்தல்.] |
| கைகால்வற்று-தல் | கைகால்வற்று-தல் kaikālvaṟṟudal, 5.செ.கு.வி.(v.i.) கை கால் சூம்புதல்: atrophy of the limbs (சா.அக.);. [கை + கால் + வற்று-.] |
| கைகால்வாங்கு-தல் | கைகால்வாங்கு-தல் kaikālvāṅgudal, 5 செ. குன்றாவி. (v.t.) கைகால் நீக்குதல்: amputation of the limbs (சா.அக);. [கை + கால் + வாங்கு-.] |
| கைகால்வாதம் | கைகால்வாதம் kaikālvātam, பெ.(n.) கை, காலுக்கு ஏற்படும் ஊதை வலி; rheumatism of the limbs (சா.அக.);. [கைகால்+Skt. வாதம்] |
| கைகால்விழு-தல் | கைகால்விழு-தல் kaikālviḻudal, 2 செ.கு.வி. (v.i.) கைகால் உணர்ச்சி அசைவு ஆகியவை இல்லாமற் போதல்; to lose motion and sensation of the limbs through paralytic attack(சா.அக.);. [கைகால் + விழு-.] |
| கைகால்வீங்கு-தல் | கைகால்வீங்கு-தல் kaikālvīṅgudal, 5 செ.கு.வி. (v.i.) 1.கைகால் பொதுவாக வீங்கிக்கொள்ளுதல்; to swell, of the limbs ordinarily from a disease. 2. சாவுக்குறி அடையாளமாகப் புறங்கை புறங்கால் வீங்குதல்; to swell, of in-steps, back of the palm indicating fata ltermination. [கை + கால் + வீங்கு-.] |
| கைகால்வெடிப்பு | கைகால்வெடிப்பு kaikālveḍippu, பெ.(n.) கைகால்களில் ஏற்படும் வெடிப்பு; crack or fissure of the extremities through bilious disorders or frost bite (சா.அக.);. [கைகால் + வெடிப்பு.] |
| கைகாவல் | கைகாவல் kaikāval, பெ.(n.) 1. இன்றியமையாத நேரத்திற்பயன்படுத்தப்படும்பொருள்கள்(இ.வ.);; that which is useful in emergency as medicines, provisions and weapons. 2. கையுதவி; a ready or necessary help(சா.அக.);. 3. காத்தல் ; protection, guard. ம.கைகாவல். [கை + காவல்] கைகாவல்2 kaikāval, வேண்டியதற்குமேல் ஒன்று இருப்பிலிருப்பு; something excess in gossession more than the actual requirement. [கை + காவல்.] |
| கைகீழ் | கைகீழ் kaiāḻ, பெ.(n.) கையமைச்சல்; dependency, subordination as of servant. [கை + கீழ்.] |
| கைகும்பு | கைகும்பு1 kaikumputal, 5செ.குவி(vi) குழந்தைகள் வாயில் விரலை வைத்து சூம்புதல்; sip, suck, mumble, masticate. [கை+சூம்பு-தல்.] |
| கைகுறண்டு-தல் | கைகுறண்டு-தல் gaiguṟaṇṭudal, பெ.(n.) 5.செ.கு.வி.(v.i.); 1. வலிப்புநோயினால் கை மடங்குதல் (வின்.);; to be affected by spasms in the hands; to be cramped in the hands. 2. இவறத் (கஞ்சத்); தனமாயிருத்தல்; to be stingy, parsimonious, close-fisted. [கை + குறண்டு-] |
| கைகுறுகிநில்-தல்(நிற்றல்) | கைகுறுகிநில்-தல்(நிற்றல்) gaiguṟuginiltalniṟṟal, கைகட்டிநில்-தல்(நிற்றல்)பார்க்க;see-kaikati-nil-. [கை + குறுகி + நில்-.] |
| கைகுலுக்கு-தல் | கைகுலுக்கு-தல் gaiguluggudal, 5 செ.குன்றாவி. (v.t.) மகிழ்ச்சிக் குறியாக ஒருவர் கையை ஒருவர் பிடித்து அசைத்தல்; to shake hands. [கை + குலுக்கு-.] |
| கைகுளிர | கைகுளிர gaiguḷira, கு.வி.எ (adv.) தாராளமாய்; liberally, freely. கைகுளிரக் கொடுத்தான். [கை + குளிர.] |
| கைகுவி | கைகுவி1 gaiguvittal, 4 செ.குன்றாவி. (v.t.) கை கூப்புதல்; to greet with one’s palms joined together in front of the chest. மறுவ. கைகூப்பு;கைமுகிழ். [கை + குவி-] கைகுவி2 gaiguvittal, 4செ.கு.வி.(v.i.) கொம்மை கொட்டுதல் (யாழ்.அக.);; to clap hands and dance. [கை + குவி-.] |
| கைகூசு-தல் | கைகூசு-தல் kaiācudal, 5. செ.கு,வி. (v.i.) 1. அச்சத்தால் அல்லது வெட்கத்தால் பின்னடைதல் (வின்.);; to shrink, draw back, shrink out of fear or reserve. 2.இவறன்மை(கஞ்சத்தனம்);கொள்ளுதல்; to be stingy, parsimonious. [கை + கூசு-.] |
| கைகூடு | கைகூடு2 kaiāṭudal, 5.செ.கு.வி.(v.i.) கிட்டுதல்; to approach, draw near. “கடுங்களிறு கண்கனலக் கைகூடி”(பு.வெ.7:12);. [கை + கூடு-.] |
| கைகூடு-தல் | கைகூடு-தல் kaiāṭudal, 5.செ.கு.வி.(v.i.) 1.எடுத்த பணியில் வெற்றியடைதல்; to succeed, prosper. காரியங் கைகூடிற்று. க.கெய்கூடு. [கை + கூடு-.] |
| கைகூட்டு-தல் | கைகூட்டு-தல் kaiāṭṭudal, 5 செ.குன்றாவி.(v.t.) கைகூப்புபார்க்க;see kal-kuppu. “வணங்கித் தன் கைகூட்டினளாகி”(பெருங்.வத்தவ.13:34:35);. [கை + கூட்டு-.] |
| கைகூப்பி | கைகூப்பி kaiāppi, பெ.(n.) சிப்பி; bi-value shell (சா.அக.);. மறுவ.கும்பிடுகிளிஞ்சல். [கை + கூப்பி.] கைகூப்பியதுபோன்றவடிவம்பெற்றமையால்இப் பெயர்பெற்றிருக்கலாம். |
| கைகூப்பு | கைகூப்பு1 kaiāppudal, 5 செ.குன்றாவி (v.t.) 1. கையைக் குவித்துக் கும்பிடுதல் (சூடா.);: to worship,adore, as by raising joined hands (செ.அக.);. 2. கொப்பி கொட்டல்; to clap hands in kummi dance. ம.கைகூப்புக. [கை + கூப்பு-.] கைகூப்பு2 kaiāppudal, 5 செ.கு.வி.(v.i.) கைகுவி-தல் (யாழ்.அக.); பார்க்க;see kai.kuvi- (செ.அக.);. [கை + கூப்பு-.] கைகூப்பு3 kaiāppu, பெ.(n.) 1. கைகுவித்து வணங்குகை; worshipping with joined hands. “எண் கைகூப்புச் செய்கையே”(திவ்.திருவாய் 4,3:2); 2. அடிமுதல் கூப்பிய கைவரையுள்ள அளவு(வின்.);; distance from the feet to the tip of the fingers of the hands joined and raised above the head. [கை + கூப்பு.] |
| கைகேசி | கைகேசி1 kaiāci, பெ.(n.) கரிசலாங்கண்ணி; eclipse plant(சா.அக.);. [கை + (கசி);); கேசி.] கைகேசி2 kaiāci, பெ.(n.) கேகயவரசன் மகளும் தசரதன் மனைவியருள் ஒருத்தியும் பரதன் தாயுமானவன்; daughter of the king of Kégaya,one of the wife of Dasarada and mother of Bharata. “உனைப்பயந்த கைகேசி தன்சொற் கேட்டு”(திவ்.பெருமாள்.9:1);. [கேகயன் → கைகேசி.] கைகேசி3 kaiāci, பெ.(n.) கையாந்தகரை; a herb. மறுவ.கைவீசி. [கைவீசி-கைகேசி.] |
| கைகேயி | கைகேயி kaiāyi, பெ.(n.) கைகேசி2 பார்க்க;see kaikesi. “கைகேயி நினைந்த கருத்திதுவோ”. (கம்பரா.பிராட்டிகளங்.15);. |
| கைகொடு | கைகொடு1 gaigoḍuttal, 4 செ.கு.வி.(v.i.) 1.உதவிசெய்தல்; to lend a hand in aidor succour, render assistance. “உற்றுழியுங் கைகொடுக்கும்” (நீதிநெறி.2);. 2.கைலாகுகொடு-த்தல்பார்க்க;see kailagu-kodu-. “விடையார்க்குங் கைகொடுக்குந் தொழில்பூண்டான்” (குற்றா.தல. யானைபூ சித்த, 18:40);. ம.கைகொடுக்குக;க.கெய்கொடு. [கை + கொடு-.] கைகொடு2 gaigoḍuttal, 4 செ.குன்றாவி.(v.t.) 1.கைகுலுக்கு-தல் (யாழ்.அக.); பார்க்க;see kai. kulukku-. 2. கையடித்து உறுதி கூறுதல்; to strike hands as in concluding a bargain. ம. கைகொடுக்குக. [கை + கொடு-.] கைகொடு3 gaigoḍuttal, 4.செ.குன்றாவி.(v.t.) ஏமாற்றுதல்; to deceive. மறுவ. கடுக்காய்கொடு. க. கெய்கொடு. [கை + கொடு-.] |
| கைகொட்டிச்சிரி-த்தல் | கைகொட்டிச்சிரி-த்தல் kaikoṭṭiccirittal, 4 செ.கு.வி. (v.i.) இகழ்ச்சியை வெளிப்படுத்துதல்; laugh at; mock at; deride. ஊரே கைகொட்டிச் சிரிக்கும் அளவுக்கு நடந்து கொண்டாய் [கை+கொட்டி+சிரி-த்தல்.] கைகொட்டிச்சிரி-த்தல் gaigoṭṭiccirittal, 4 செ.கு.வி. (v.i) ஏளனமாய்ச் சிரித்தல்; to laugh derisively. ம.கைகொட்டிச் சிரிக்குக. [கை + கொட்டி + சிரி-.] |
| கைகொட்டு | கைகொட்டு1 gaigoṭṭudal, 5.செ.குன்றாவி (v.t.) கைகளைத் தட்டுதல்; to clap the hands, as in ridicule or applause. “கைகட்டிவாய்பொத்தி நிற்பாரைக் கண்டே கைகொட்டிச் சிரிக்கின்றீர்” (அருட்பா.VI.உறுதி.9);. ம.கைகொட்டுக;க.கெய்கட்டு. [கை + கொட்டு-.] கைகொட்டு2 gaigoṭṭudal, 5.செ.கு.வி.(v.i.) 1. உள்ளங்கைகள் இரண்டை ஒன்றோடொன்று சேருமாறு அடித்து ஒலி உண்டாக்குதல்; to clap;applause by clapping the hands. 2. எள்ளி நகையாடுதல்; to ridicule, laugh at derisively. ம. கைகொட்டுக. [கை + கொட்டு-.] |
| கைகோ-த்தல் | கைகோ-த்தல் kaiāttal, 4 செ.கு.வி. (v.i.) 1. தோளோடு தோள் பின்னுதல்; to take another’s arm, to be arm to arm. 2. கைபிணைதல் (சிலப்.5:70, உரை);; to clasp one another’s hands, join hands. 3. நட்புச் செய்தல்; to make friends with “வஞ்சகக்காரர்கள் கைகோவாமல் நற்குணத்தார் கைகோத்து நான்றிரிவது” (தாயு. எந்நாட் அன்பர்நெறி, 2);. 4. சண்டைபிடித்தல் (உ.வ.);; to start fighting, to come to blows. [கை + கோ-.] [கைகோள் + சேனை + அதிபதி.] |
| கைகோட்சேனாதிபதி | கைகோட்சேனாதிபதி kaiāṭcēṉādibadi, பெ.(n.) அரசரின் மெய்காவற்படைத் தலைவர்; chief of the bodyguard unit of the king. “திருநெல்வேலிகைகோட் சேனாதிபதி களோம்”(தெ.இ.க.தொ.5க.417);, |
| கைகோத்தாடு-தல் | கைகோத்தாடு-தல் kaiāddāṭudal, 5.செ.கு.வி.(v.i.) குரவையாடுதல்; to dance the rural dance of females. [கைகோத்து + ஆடு-.] |
| கைகோத்துக்கொண்டு | கைகோத்துக்கொண்டு kaiāttukkoṇṭu, வி.எ.(adv.) வேறுபாடு இல்லாமல் இணைந்து; hand in hand; hand in glove, கடத்தல்காரர்கள் கள்ளச் சந்தைக் காரர்களுடன் கைகோத்துக் கொண்டு ஆதாயம் தேடுகிறார்கள். [கை+ கோத்து+கொண்டு.] |
| கைகோர்-த்தல் | கைகோர்-த்தல் kaiārttal, 4செ.கு.வி.(v.i.) கைகோத்தல்பார்க்க;see kai-ko-. [கைகோ → கைகோர்-த்தல்.] |
| கைகோலு | கைகோலு2 kaiāludal, 5.செ.குன்றாவி, (v.t.) 1. சூளுரைத்தல், உறுதியேற்றல்; to resolve, determine, To swear. “கைகோலிஞாலமளந்து” (திவ்.இயற்.2.47);. 2.கைகூப்புபார்க்க;see kai-koppu. [கை + கோலு-.] |
| கைகோலு-தல் | கைகோலு-தல் kaiāludal, 5 செ.கு.வி.(v.i.) 1.முயலுதல்; to make effort, to attempt. 2. தொடங்குதல் (இ.வ.);; to make a beginning. [கை + கோல் – கைகோல் → கைகோலு.] |
| கைகோள் | கைகோள் kaiāḷ, பெ.(n.) 1. தலைவியரின் களவு கற்பொழுக்கங்கள்(தொல்பொருள்.498,உரை);; con-duct of lovers, comprising of clandestine intercourse as well as subsequent wedding life(Akap.);. 2. சோரப் புணர்ச்சி; illicit intercourse with a female (சா.அக.);. [கை + கோள்.] |
| கைகோவை | கைகோவை kaiāvai, பெ.(n.) பொற்கொல்லர் தொழிலினொன்று (யாழ்.அக.);; a process in gold Smith craft. [கை + கோவை.] |
| கைக் கட்டை | கைக் கட்டை kaikkaṭṭai, பெ.(n.) பணப்புழக்கம் முற்றிலும் இல்லாத நிலை; stage of no money for transaction. [கை+கட்டை] |
| கைக் கதிர் | கைக் கதிர் kaikkadir, பெ.(n.) கம்பு, கேழ்வரகு சோளம் போன்றவற்றை அறுவடை செய்தவர்களுக்குக் கொடுக்கும் கூலிக் கதிர் payment by ear of cereal to the harvester. [கை+கதிர்] |
| கைக் கொண்டை | கைக் கொண்டை kaikkoṇṭai, பெ.(n.) கை நிறைய கொடுத்தல்; handful of something. [கை+கொண்டை] |
| கைக்கடகம் | கைக்கடகம் gaiggaḍagam, பெ.(n.) கையில் அணியும் கடகம்; a hand bracelet. க. கைகடக;து.க.கிடக. [கை – கட்டு + பவளம்.] |
| கைக்கடனாற்றல் | கைக்கடனாற்றல் kaikkaḍaṉāṟṟal, பெ.(n.) உதவிபுரிதலாகிய வேளாண் மாந்தரியல்பு (சூடா.);; rendering assistance, helping, obliging, mentioned as a characteristic of the Velalas. [கை + கடன் + ஆற்றல்.] |
| கைக்கடனாற்று-தல் | கைக்கடனாற்று-தல் kaikkaḍaṉāṟṟudal, 5 செ.கு.வி.(v.i.) உறுதியின்றி நம்பிக்கை கொடுத்தல்; to assure without any trust. [கை + கடன் + ஆற்று-.] |
| கைக்கடன் | கைக்கடன் kaikkaḍaṉ, பெ.(n.) 1. ஒப்பந்தமுறியோ வட்டியோ இல்லாமல் குறுகிய காலத்தில் திருப்பித்தரும் வகையில் கடனாகப் பெறும் பொருள்கள் அல்லது பணம்: a temporary loan of articles or money without bond or interest. 2.கடப்பாடு; obligation, duty. “உம்முடைய கைக்கடன்றனுயிர்காக்கக் கடவீர்” (கம்பரா.கும்பகர்.355);. மறுவ.கைமாற்றுக்கடன். க. கைகட, கெய்கட;து. கைகட. [கை + கடன்.] |
| கைக்கடன்தீர்-த்தல் | கைக்கடன்தீர்-த்தல் kaikkaḍaṉtīrttal, 4 செ. குன்றாவி.(v.t.) பெற்ற கடனை அடைத்தல்: to clear it or return a loans. க. கெய்கடதீரிக. [கைக்கடன்+தீர்.] |
| கைக்கடிகாரம் | கைக்கடிகாரம் kaikkaṭikāram, பெ.(n.) மணிக்கட்டில் கட்டிக் கொள்ளும் பொழுது பொழுது (நேரம்); காட்டும் கருவி; wrist watch. [கை+ கடிகாரம்] |
| கைக்கடியாரம் | கைக்கடியாரம் kaikkaḍiyāram, பெ.(n.) கையிலெடுத்தாளும் சிறுகடியாரம்: wrist watch. [கை + கடியாரம்.] |
| கைக்கடுதாசி | கைக்கடுதாசி kaikkaḍutāci, பெ.(n.) கைச்சீட்டு பார்க்க;see kai-c-cittu. [கை + கடுதாசி.] |
| கைக்கட்டி | கைக்கட்டி kaikkaṭṭi, பெ.(n.) 1. கையுறை (சூடா);; gloves. 2.அக்குட்புண் (இ.வ.);; boil or tumour in the arm-pit. 3. ஓர் அணிகலன்; an ornament. 4. கைச்சட்டை: hand of shirt. [கை + கட்டி.] |
| கைக்கட்டிக்கொண்டு | கைக்கட்டிக்கொண்டு kaikkaṭṭikkoṇṭu, வி.அ.(adv.) தடுக்கவோ, எதிர்க்கவோ செய்யாமல் கம்மா இருத்தல்; பேசாமல்; doing nothing at the time when one could intervene. கலவரம் நடந்த போது காவலர்கள் கைகட்டிக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தார்களா? அவன் என்னை அடித்த போது நீகைகட்டிக் கொண்டுதானே இருந்தாய்? [கை+ கட்டி+ கொண்டு.] |
| கைக்கட்டு | கைக்கட்டு kaikkaṭṭu, பெ. (n.) 1. கைகளைக் கட்டிக் கொள்கை, folding the hands. 2. கைகளில் அடிபட்டாலோ, முறிவு ஏற்பட்டாலோ மருத்துவரால் கட்டப்படும் கட்டு; bandage. [Ma. Kaikettu → த.கைக்கட்டு]] [கை கட்டு, ம, கைகெட்டு→ த. கைக்கட்டு] கைக்கட்டு kaikkaṭṭu, பெ.(n.) மகளிர் கையில் அணியும் அணி வகை; ornament for the arm or waist of a women (செ.அக.);. [Tu. Kaikattu → த.கைக்கட்டு] [கை+கட்டு] கைக்கட்டு kaikkaṭṭu, பெ.(n.) புண், எலும்பு முறிவு, காயம் முதலியவற்றைக் கருதிக் கைக்கிடும் கட்டு: bandage for the arm in cases of wounds, fractures or other injuries (சா.அக.);. 2. கையில் அணியும் அணிகலன்: an ornament for the arms. ம.கய்க்கெட்டு: க. கெய்கட்டு:து. கைகட்டு. [கை + கட்டு.] கைக்கட்டு4 kaikkaṭṭudal, 4 செ.கு.வி.(v.i.) இடக்கையை வலப்பக்கமாகவும், வலக்கையை இடப்பக்கமாகவும் மடக்கிக்கொண்டு வணக்கங் காட்டுதல்; to fold the hands in reverence, obedience, etc. “தாம் என்முன்னே கைக்கட்டிக் கொண்டு நின்றார்” (திவ்.திருநெடுந். 21. 188,வியா.);. [கை + கட்டு-.] |
| கைக்கட்டுபவளம் | கைக்கட்டுபவளம் kaikkaṭṭubavaḷam, பெ.(n.) பவளத்தாலான ஒருவகைக் கையணி (பர.);; coral bracelet. [கை + கட்டு – பவளம்.] |
| கைக்கணக்கு | கைக்கணக்கு1 kaikkaṇakku, பெ.(n.) 1.கணக்குக் குறிக்கப்பெறும் சிற்றேடு; memorandum of accounts. கையைக்கொண்டுஎண்ணப்படும்கணக்கு. 2.சான்றுச்சீட்டு (யாழ்.அக.);; receipt. 3.ஒருறுதி; an аssurance. ம. கைக்கணக்கு. [கண் – அக்கு – கணக்கு. கை + கணக்கு.] |
| கைக்கணக்குமுதல் | கைக்கணக்குமுதல் kaikkaṇakkumudal, பெ.(n.) பழைய வரிவகை. (S.I.I.VI.33);; a kind of ancient tax. [கை + கணக்கு + முதல்.] |
| கைக்கணிசம் | கைக்கணிசம் kaikkaṇisam, பெ.(n.) கையால் மதிக்கும் மதிப்பு: estimation of weight or quantity by the hand. [கை + கணிசம்.] |
| கைக்கதவு | கைக்கதவு kaikkadavu, பெ.(n.) சிறு நுழைகதவு; trapdoor. “கைக்கதவும்தாழ்திறக்கக்காண்கிலேன்” (நெல்விடு431);. [கை + கதவு. கடவு → கதவு] |
| கைக்கத்தி | கைக்கத்தி1 kaikkatti, பெ.(n.) சிறு கத்தி; pocket knife, small knife. க. கெய்கத்தி;து.கயிகத்தி. [கை + கத்தி. கை : சிறுமை.] கைக்கத்தி2 kaikkatti, பெ.(n.) விரலால் எடுத்துக் கொண்டு அறுக்குங் கத்தி; a surgeon’s knife (சா.அக.);. ம.கைக்கத்தி. [கை + கத்தி.] |
| கைக்கத்திரிகை | கைக்கத்திரிகை gaiggattirigai, பெ.(n.) மயிர் வெட்டுங் கருவி; shears, clipping instrument. ‘கைக்கத்திரிகையிட்டு நறுக்கின தலையாட்டத்தை யுடைய பரிகள்’ (பு.வெ.3:10,உரை);. [கை + கத்திரிகை.] |
| கைக்கனை | கைக்கனை kaikkaṉai, பெ.(n.) கைஅம்புபார்க்க;see kai-ambu. [கை – கணை.] |
| கைக்கரடு | கைக்கரடு kaikkaraḍu, பெ.(n.) முன்கையும் முழங்கையும் இணையும் பொருத்து(வின்.);; wrist. மறுவ.மணிக்கட்டு. [கை + கரடு. கரண் : திரட்சி,முருடு கரண் → கரடு] |
| கைக்கரணம் | கைக்கரணம் kaikkaraṇam, பெ.(n.) 1.கைச்சாடை (நெல்லை);; sign, as of dumb show. 2. கொத்துக் கரண்டிவகை (இ.வ.);; a small trowel. மறுவ. கைச்சாடை. [கை + கரணம்.] |
| கைக்கரணை | கைக்கரணை1 kaikkaraṇai, பெ.(n.) கொத்தனார் கைக்கரண்டி; a mason’s tool. கைக்கரணை [கை + கரணை.] கைக்கரணை2 kaikkaraṇai, பெ.(n.) கையில் உண்டாகும் ஒருவகைச்சிலந்தி(இ.வ.);; whitlow. [கை + கரணை.கரள் → கரணை: மேல்தோல்சமனற்றும் உரிய நிறமாற்றம் காணப்படுதல்.] |
| கைக்கரண்டி | கைக்கரண்டி kaikkaraṇṭi, பெ.(n.) சிறு கரண்டி; small-spoon, tea-spoon. து. கயிசமுட்டு. [கை + கரண்டி.கரள் → கரண் → கரண்டு → கரண்டி] |
| கைக்கரத்தை | கைக்கரத்தை kaikkarattai, பெ.(n.) ஆள் இழுப்பு வண்டி (யாழ்ப்.);; rickshaw. Fr. Carte. [கை+கரத்தை.கரு → கரத்தை : ஒற்றைமாட்டுவண்டி கைக்கரத்தை : கையால் இழுக்கும்வண்டி.] |
| கைக்கறுப்பு | கைக்கறுப்பு kaikkaṟuppu, பெ.(n.) உள்ளங்கை கறுக்கும்ஒருவகைத்தோல்நோய்(பால்வினைநோய்);; a venereal affection by which the palm is rendered black. [கை + கறுப்பு.] |
| கைக்கல் | கைக்கல் kaikkal, பெ.(n.) தட்டாங்கல்விளையாட்டில் தரையில் கற்களை வைத்தபின் கையில் எஞ்சியிருக்கும் ஒற்றைக் கல்; the single stone which is in hand after keeping the remaining stones on ground in one of girls lay with stones. மறுவ.ஆட்சிக்கல். [கை + கல்.] விளையாட்டின் தொடக்கத்தில் விளையாட்டுக் கற்கள் மேலெறிந்துபிடிக்கப்படுவதால் அக் கல்லைக் கைக்கல் என்பர். |
| கைக்கழுத்து | கைக்கழுத்து kaikkaḻuttu, பெ.(n.) முன்கை மணிக்கட்டு; wrist, “திருக் கைக்கழுத்தின் வளையில்” (S.I.I.IV.81);. மறுவ, மணிக்கட்டு, கைக்காடு. [கை + கழுத்து.] |
| கைக்கவசம் | கைக்கவசம் kaikkavasam, பெ.(n.) கையுறை: gloves. மறுவ, கையுறை. [கை + கவசம்.] |
| கைக்கவளம் | கைக்கவளம் kaikkavaḷam, பெ.(n.) ஒருமுறை கையால் எடுத்து வாயிடும் அளவு உணவு; so much food as is taken with the fingers and put into the mouth. க.கெய்துத்து. [கை + கவளம்.] கைக்கவளம் kaikkavaḷam, பெ.(n.) ஒருமுறை வாயில்போடக் கையால் எடுக்கும் அளவு உணவு; so much food as is taken with the fingers and put into the mouth. க. கெய்துத்து. [கை + கவளம்.] |
| கைக்காசு | கைக்காசு kaikkācu, பெ.(n.) 1.கையிலுள்ள காசு, cash on hand. 2.முதலீடு (மூலதனம்); கைக்காசிற்கு இழப்பில்லாமல் வணிகம் நடத்து. |கை + காசு.] |
| கைக்காணம் | கைக்காணம் kaikkāṇam, பெ.(n.) கையூட்டு (இ.வ..);; bribe. மறுவ. கையூட்டு. ம.கைக்கரணம். [கை + காணம். காணம் : பழங்காலக் காசு.] |
| கைக்காணி | கைக்காணி kaikkāṇi, பெ.(n.) காணிக்கை,கொடை; present, gift. ‘இடப விலச்சனையைக் கைக் காணியாக இட்டு’ (கலித், 82:12.உரை);. ம.கய்க்காணம். [கை + காணி.] |
| கைக்காணிக்கை | கைக்காணிக்கை kaikkāṇikkai, பெ.(n.) 1.கையால் அளிக்கும் காணிக்கை; present given with hand. 2. பெரியோர், மேலானோர், ஆகியோரைக் காணும் காணிக்கை; present given to elders and respected ones on the occassion of a visit or an offering to God while visiting a temple. க. கெய்காணிகெ. |
| கைக்காப்பு | கைக்காப்பு kaikkāppu, பெ.(n.) கையிலணியுங் காப்பு; wristlet, bracelet. க. கெய்கட்டு. [கை + காப்பு.] |
| கைக்காய் | கைக்காய் kaikkāy, பெ.(n.) சதுரங்கம் போன்ற ஆட்டங்களில் ஆடுவதற்காகக் கையில் வைத்திருக்கும் காய்; a die cat chess etc. that is in one’s hand. க.கெய்குதுரெ. [கை + காய்.] |
| கைக்காய்ச்சல் | கைக்காய்ச்சல் kaikkāyccal, பெ.(n.) கையில் உண்டாகும் ஒருவகைஎரிச்சல்; a burning sensation in hand. [கை + காய்ச்சல்.] |
| கைக்காரன் | கைக்காரன்1 kaikkāraṉ, 1. உதவுபவன்; one who helps others. 2. பணக்காரன்; rich man. க.கெய்ருடக [கை + காரன்.] கைக்காரன்2 kaikkāraṉ, பெ.(n.) 1. வல்லாளன்: man of ability or skill. 2. செல்வன் (இ.வ.); wealthy person. ம. கய்க்காரன், கைக்காரன்;க.கெய்ருடக. [கை + காரன்.] கைக்காரன்3 kaikkāraṉ, பெ.(n.) 1.சூழ்ச்சியாளன்; a man of invention, sagacious person. 2. ஏமாற்றுபவன்; deceiver. க.கெய்கார. [கை + காரன்.] கை என்பது செயல்திறம் என்னும்பொருளது.அதன் எதிர்மறையாவது இது. |
| கைக்காரியம் | கைக்காரியம் kaikkāriyam, பெ.(n.) கைவேலை (உ.வ.);; work on hand, immediate engagement. [கை + காரியம்.] |
| கைக்காறை | கைக்காறை kaikkāṟai, பெ.(n.) ஒருவகைக் கையணி; bracelet, arm-ring. ‘திருக்கைக்காறை யொன்று'(S.I.I.II.144);. [கை + காறை.] |
| கைக்காளவாய் | கைக்காளவாய் kaikkāḷavāy, பெ.(n.) சுண்ணாம்பு கடுவதற்குக் கிணறுபோலக் கட்டப்பட்ட காளவாய் (கட்டட.நாமா.9);; a kind of lime kiln. [கை + காளவாய்.] |
| கைக்கிட்டி | கைக்கிட்டி kaikkiṭṭi, பெ.(n.) கைகளிலிட்டு இறக்குங் கோல் (வின்.);; instrument of torture for the hand. [கை + கிட்டி.] |
| கைக்கிரியை | கைக்கிரியை kaikkiriyai, பெ.(n.) கையினாற் செய்யும் வேலை; the work done with hand, manual labour. [கை + கிரியை.] |
| கைக்கிளவன். | கைக்கிளவன். kaikkiḷavaṉ, பெ.(n.) கைக்கோளன் (இ.வ..); பார்க்க;see kai-k-kolan. [கை + கிளவன்(கொ.வ.);.] கை:சிறுமைப்பொருள் முன்னொட்டு,கிளை ஒழுக்கம்.கை + கிளை. |
| கைக்கிளவர் | கைக்கிளவர் kaikkiḷavar, பெ.(n.) கைக்கோளர் பார்க்க;see kai-k-olar. மறுவ, கைக்குளர் கைக்கொளவர். [கை – கிளவர் (கொ.வ.);.] |
| கைக்கிளை | கைக்கிளை kaikkiḷai, பெ.(n.) 1. ஒருதலைக் காமம்; unreciprocated sexual love, as one sided. “கைக்கிளை முதலாப் பெருந்திணை யிறுவாய்” (தொல்,பொருள் அகத்.1);. 2. ஐந்து விருத்தச் செய்யுளில் ஒருதலைக் காமத்தைப்பற்றிக் கூறும் சிற்றிலக்கியம்(இலக்.வி827);; poem in five viruttam versestreating of unrecipocated love. 3.ஏழிசையுள் மூன்றாவதாகிய காந்தாரப்பண் (திவா.);; the third note of the gamut one of seven isai. 4. மருட்பா பார்க்க;see marutpa, a kind of verse. “கைக்கிளை பரிபாட் டங்கதச்செய்யுளோடு”(தொல்.பொருள்.430);. கை – சிறுமைப் பொருள் முன்னொட்டு. கிளை , ஒழுக்கம். [கை + கிளை + திணை.] கைக்கிளையாவது, ஆடவன் பெண்டு ஆகிய இருவருள்ளும் ஒருவருக்கே காதல் இருப்பது. இது ஒருதலைக் காமம். கை என்பது பக்கம். கிளை என்பது நேயம். ஆகவே கைக்கிளை என்பது ஒருதலைக் காதல் (தமிழர் திருமணம் 28);. |
| கைக்கிளைத்தினை | கைக்கிளைத்தினை kaikkiḷaittiṉai, பெ.(n.) கைக்கிளையைப்பற்றிக் கூறும் திணை (தொல், பொருள்.1, உரை);; theme treating of kai-k-kilai [கை + கிளை + திணை.] |
| கைக்கிளைமருட்பா | கைக்கிளைமருட்பா kaikkiḷaimaruṭpā, பெ.(n.) மருட்பாவகை (பாப்பா.132);, a kind of verse. [கை + கிளை + மருட்பா.] |
| கைக்கீறல் | கைக்கீறல் kaikāṟal, பெ.(n.) கைக்கீறுபார்க்க;see kai-k-kiru. [கை + கீறல்.] |
| கைக்கீறு | கைக்கீறு kaikāṟu, பெ.(n.) தற்குறிக் கீற்று; signature mark made by an illiterate person. ம.கைக்கீறு. [கை + கீறு,] |
| கைக்குக்கீழ் | கைக்குக்கீழ் kaikkukāḻ, வி.எ.(adv.) பிறரது ஆளுகைக்கு உட்பட்டு; under (another); control or authority, the state of being at (another); disposition. க. கெய்கெளகெ.. [கை + கு +கீழ்,] |
| கைக்குடை | கைக்குடை kaikkuḍai, பெ.(n.) சிறுகுடை; parasol, small umbrella. “அலர்கதிர் ஞாயிற்றைக் கைக்குடையுங்காக்கும்.”(அறநெறி.43);. [கை-குடை.(கை-சிறுமைப்பொருள்முன்னொட்டு);.] |
| கைக்குட்டை | கைக்குட்டை1 kaikkuṭṭai, பெ.(n.) சிறுதுண்டு; hand kerchief. க. கெய்பாவட கெய்வட்ட. [கை + குட்டை(கை-சிறுமைப்பொருள்முன்னொட்டு);.] கைக்குட்டை2 kaikkuṭṭai, பெ.(n.) இரண்டு மணிக்கட்டுகளையும் பிணைக்கும் கயிறு அல்லது தொடரி(சங்கிலி);; handcuff. மறுவ..கைவிலங்கு, கைக்களை. [கை + குட்டை.] |
| கைக்குதல் | கைக்குதல் kaikkudal, தொ.பெ.(vbl.n.) கசத்தல்; being bitter (சா.அக.);. [கை → கைக்கு.] |
| கைக்குதவு-தல் | கைக்குதவு-தல் kaikkudavudal, 5 செ.கு.வி. (v.i.) ஏற்றபொழுதிற் பொருள் வகையாலோ வினை வகையாலோ உதவிசெய்தல்; to be opportunely useful, to be of timely help. [கைக்கு + உதவு-.] |
| கைக்குத்தலரிசி | கைக்குத்தலரிசி kaikkuttalarisi, பெ.(n.) நெல்லை உரலிலிட்டு உலக்கையால்குத்தி ஆக்கப்படும்அரிசி; rice got by pounding paddy with pestle in mortar. [கை + குத்தல் + அரிசி.] கைக்குத்தலரிசி kaikkuttalarisi, பெ.(n.) கையால் குத்தியமுனை முறியாத அரிசி; rice obtained by hand pounding. [கை + குத்தல் + அரிசி.] நெல்லை.ஆலையில் இட்டு அரைத்து அரிசியாக்காமல் உரலிலிட்டு உலக்கையால் குத்தி எடுக்கும் அரிசி. |
| கைக்குத்து | கைக்குத்து kaikkuttu, பெ.(n.) கைமுட்டியால் தாக்குகை; blow with the fist cuff in boxing. “கைக்குத்தது படலும்”(கம்பரா.முதற்போ.176);. ம.கைக்குத்து. [கை + குத்து.] |
| கைக்குநீர்கொள்(ளு)-தல் | கைக்குநீர்கொள்(ளு)-தல் kaikkunīrkoḷḷudal, 16.செ.கு.வி.(v.i.) சிறுநீர்விடுதல்(யாழ்.அக.);: lit.to take Water for washing hands, while going to pass urine (used euphemistically);. ம.கைக்கினி கொள்ளுக. [கைக்கு + நீர் + கொள்(ளு);-.] |
| கைக்குந்தாலி | கைக்குந்தாலி kaikkundāli, பெ.(n.) சிறுகுந்தாலி; a small hoe. க. கெய்குத்தலி:பட கைகுத்தலி. [கை + குந்தாலி.] |
| கைக்குன்று | கைக்குன்று kaikkuṉṟu, பெ.(n.) யானை; elephant (சா.அக);. கைக்குன்று [கை + குன்று.] |
| கைக்குமெய்க்குமில்லாமை | கைக்குமெய்க்குமில்லாமை kaikkumeykkumillāmai, பெ.(n.) உண்ணவும் உடுக்கவுமில்லாத நிலை; the struggle of existence for food and cloth. [கைக்கும் + மெய்க்கும் + இல்லாமை.] |
| கைக்குறி | கைக்குறி kaikkuṟi, பெ.(n.) 1. வாழ்வின் போக்கினைக் குறிப்பதாகக் கருதும் கைவரி (இரேகை);; lines on the palms as indicating one’s career or course of life. 2. கையளவு; handful ‘கைக்குறியாப்பை வாங்குவது’ (ஈடு, 1,4:6);. [கை + குறி.] |
| கைக்குறிநூல் | கைக்குறிநூல் kaikkuṟinūl, பெ.(n.) கைவரை பார்க்கும் நூல்; palmistry; chiromancy (சா.அக);. [கை +குறி+ நூல்.] |
| கைக்குறிப்பு | கைக்குறிப்பு kaikkuṟippu, பெ.(n.) நினைவுக் குறிப்பு; written record, memorandum (செ.அக.); ம.கைக்குறிப்பு; க. கெய்காகத;து.கயிகன்னெ. [கை + குறிப்பு.] |
| கைக்குறிப்பேடு | கைக்குறிப்பேடு kaikkuṟippēṭu, பெ.(n.) 1. அற்றைக்குறிப்பேடு; rough day book. 2. வருவாய்த்துறையினரின் நாட்குறிப்பு; ittah book of the Revenue official. [கை + குறிப்பு + ஏடு.] |
| கைக்குற்றம் | கைக்குற்றம் kaikkuṟṟam, பெ.(n.) 1. கைத்தவறு; Slip of the hand. 2. சிறுபிழை; lapse, slight, accidental mistake. ம.கைக்குற்றம்;க.கெய்தப்பு. [கை + குற்றம்.] |
| கைக்குளசு | கைக்குளசு kaikkuḷasu, பெ.(n.) கைக்குழைச்சு பார்க்க;see kai-k-kulaiccu. [குழைச்சு → குளசு. கை + குளசு.] |
| கைக்குளர் | கைக்குளர் kaikkuḷar, பெ.(n.) கைக்கோளர்; a class of weavers. மறுவ. கைக்குளர்: கைக்கொளவர். [கை + கோளர் + குளர்.] |
| கைக்குள் | கைக்குள்1 kaikkuḷ, பெ.(n.) 1. உடனே (யாழ்.அக.); ; immediately 2. சடுதி; quick (செ.அக.);. [கை + கு + உள்.] கைக்குள் kaikkuḷ, பெ.(n.) கட்டுப்பாடு; control.obedience. என் கைக்குள்ளேயே வளர்ந்தவன். [கை + உள்.] |
| கைக்குள்போடு-தல் | கைக்குள்போடு-தல் kaikkuḷpōṭutal, 20 செ.கு.வி.(v.i.) தன் விருப்பப்படி நடந்து கொள்வதற்காக, கண்காணிக்கும் அதிகாரம் உடைய நபரையோ அமைப்பையோ தன் வயப்படுத்துதல்; have someone in one’s pocket, மேலதிகாரியைக் கைக்குள் போட்டுக் கொண்டு தன் விருப்பப்படி ஆடுகிறான். தன் பணத்தால் ஊரையே கைக்குள் போட்டுக் கொண்டான் [கைக்குள்+போடு-தல்.] கைக்குள்போடு-தல் kaikkuḷpōṭudal, பெ.(n.) 19 செ. குன்றாவி. (v.t.); தன்வயப்படுத்துதல்; to gain one to his side(சா.அக.);. [கைக்குள் + போடு-.] |
| கைக்குள்ளா-தல் | கைக்குள்ளா-தல் kaikkuḷḷātal, பெ.(n.) 1. வெற்றி பெறல்; gaining success. 2.வயப்படுத்துதல்; winning (சா.அக.);. [கைக்குள் + ஆதல். ஆதல்-து.வி.] |
| கைக்குள்வளர்-தல் | கைக்குள்வளர்-தல் kaikkuḷvaḷartal, 2செ.கு.வி.(v.i.) ஒருவர் பொறுப்பில் வளர்தல்; to grow in one’s custody. என் கைக்குள் வளர்ந்தவன் என்னையே எதிர்க்கின்றான். [கைக்குள் + வளர்-.] |
| கைக்குழந்தை | கைக்குழந்தை kaikkuḻndai, பெ.(n.) 1. இடுப்புப் பிள்ளை; small baby. 2.சிறுகுழந்தை; infant. ம. கைக்குஞ்து: க. கெய்கூசு: பட கைகூசு, [கை + குழந்தை (கை – சிறுமைப் பொருள் முன்னொட்டு);.] |
| கைக்குழவி | கைக்குழவி1 kaikkuḻvi, பெ.(n.) கைக்குழந்தை பார்க்க;see kai-k-kulandai. “மூர்த்திகைக் குழவியே போல் முதற்புரியாடல்” (கந்தபு:திருவவ.114);. [கை + குழவி.] கைக்குழவி2 kaikkuḻvi, பெ.(n.) சிறிய அம்மிக் குழவி; small macerating stone. [கை + குழவி.] |
| கைக்குழி | கைக்குழி kaikkuḻi, பெ.(n.) அக்குள், கமுக்கட்டு; the arm-pit. ம.கய்க்குழி(கைக்கூடு);;க.கங்குள்:தெ.சங்கலு:து. கிதுகில்: பட கக்குவ. [கை + குழி.] |
| கைக்குழித்தாமரை | கைக்குழித்தாமரை kaikkuḻittāmarai, பெ.(n.) அக்குளில் தோன்றும்புண்வகை (யாழ்.அக.);: atumour in the arm-pit (செ.அக.);. [கை – குழி + தாமரை.] |
| கைக்குழைச்சு | கைக்குழைச்சு kaikkuḻaiccu, பெ.(n.) மணிக்கட்டு (இ.வ.);: wrist(செ.அக.);. [கை + குழைச்சு.] |
| கைக்குவா-தல் (கைக்கு வருதல்) | கைக்குவா-தல் (கைக்கு வருதல்) kaikkuvādalkaikkuvarudal, 18 செ.கு.வி.(v.i.) 1.கையிற்கிட்டுதல்: to come to hand. 2. மகன் தந்தைக்கு உதவியாய் வருவதுபோல், பயன் உள்ளதாக இருத்தல், உதவி செய்தல்; to become useful or afford assistance, as a grown up son to his father. க. கெய்கெபரு. [கைக்கு + வா-.] |
| கைக்கூச்சம் | கைக்கூச்சம் kaikāccam, பெ.(n.) ஈயாமை, இவறற்றனம்(கஞ்சத்தனம்); (இ.வ.);; miserliness. [கை + கூச்சம்.] |
| கைக்கூட்டன் | கைக்கூட்டன் kaikāṭṭaṉ, பெ.(n.) காவற்காரன்; watchman, warder, prison guard. ‘ராஜபுத்ரனைச் சிறையிலே இட்டுவைத்தால் கைக்கூட்டனுக்குப் பாலுஞ் சோறும் இடுவாரைப் போல'(ஈடு,7,10:8); [கை + கூட்டன்.] |
| கைக்கூட்டம் | கைக்கூட்டம் kaikāṭṭam, பெ.(n.) அணிவகுப்புக் கூட்டம்; battle array. “கைக்கூட்ட மிட்டாற்போலே என்னவுமாம்” (திங் பெரியாழ்.5:2:1,வியா);(செ.அக.); [கை + கூட்டம்.] |
| கைக்கூலி | கைக்கூலி1 kaikāli, பெ.(n.) 1.அற்றைக்கூலி; daily wages. 2. கையிலே கொடுக்கும் விலைப்பொருள்; cash payment. ‘கைக்கூலி கொடுத்துக் கொள்ள வேண்டும்”(ஈடு4,6:1);. கையூட்டு; bribe, glove money. ம.கைக்கூலி: க. கைகூலி, கெய்கூலி. [கை + கூலி.] கைக்கூலி2 kaikāli, பெ.(n.) 1. மணமகளுக்குப் பெண்வீட்டார் கொடுக்கும் தொகை (வின்.);: money paid by the parents of the bride to the bridegroom. 2. கையூட்டு; bribe. ‘கைக்கூலி தான்வாங்கு காலறுவான்” (தனிப்பா.1,108:47);. ம.கய்க்கூலி;க. கெய்கூலி. [கை + கூலி.] |
| கைக்கூலிக்காரன் | கைக்கூலிக்காரன் kaikālikkāraṉ, பெ.(n.) நாட் கூலிக்குப் பணி செய்பவன்; a day labourer. க. கெய்கூலிகார. [கை + கூலி + காரன்.] |
| கைக்கெளிமை | கைக்கெளிமை kaikkeḷimai, பெ.(n.) உள்ளீடற்று எடையில்லாத மென்மை (இலேசு);; lightness. [கை + கு + எளிமை.] |
| கைக்கேடு | கைக்கேடு kaikāṭu, பெ.(n.) 1. கீழறுப்பு; treachery. 2. எதிர்பாராது நேர்ந்த கேடு; unintentional error, accidental loss. [கை + கேடு.] |
| கைக்கேடுபோ-தல் | கைக்கேடுபோ-தல் kaikāṭupōtal, 8 செ.கு.வி. (v.i.) பிறர் சூழ்ச்சிக்குட்பட்டுக் கேடு அடைதல்; to run risk or loss unawares by another’s deception. [கை + கேடு + போ-.] |
| கைக்கை | கைக்கை kaikkai, பெ.(n.) 1. கசப்பு: bitter. 2.வெறுப்பு; aversion. [கை + கை.] |
| கைக்கொடு-த்தல் | கைக்கொடு-த்தல் kaikkoḍuttal, 4 செ.குவி (v.i.) கைகொடு பார்க்க;see Kai-kodu. “நற்சவையிற். கைக்கொடுத்தல் சாலவு முன்னினிதே” (இனி .நாற்.2);. [கை + கொடு-.] |
| கைக்கொட்டை | கைக்கொட்டை1 kaikkoṭṭai, பெ.(n.) கைத்திண்டு (வின்.);; pillow cushion for the arm (செ.அக.);. மறுவ. கைத்திரண்டு. [கை + கொட்டை.] |
| கைக்கொளவன் | கைக்கொளவன் kaikkoḷavaṉ, பெ.(n.) போரில் அரசனைப் பாதுகாக்கும் மெய்காப்பு மறவன்; a soldier who takes the responsibility of guarding the royal king. மறுவ.கைக்கோளன். [கை+(கொளுவன்); கொளவன்.] |
| கைக்கொளவர் | கைக்கொளவர் kaikkoḷavar, பெ.(n.) 1.அரசனைச் சூழ்ந்துபாதுகாக்கும்பொறுப்பேற்றபடைமறவர்; special body guards of the king in the army. 2. நெசவாளர்; Weaver. [கை +(கொளுவர்); கொளவர்.] அரசனைப் பாதுகாக்கும் பொறுப்பைக் கையில் கொண்டவர். |
| கைக்கொள் | கைக்கொள்3 kaikkoḷ, பெ.(n.) தலைவன் தலைவி யரின் களவுகற்பொழுக்கங்கள்(தொல்.பொருள்.498, உரை);; life of hero and heroin through clandestine union or arranged marriage. [கை + கொள்] |
| கைக்கொள்(ளு) | கைக்கொள்(ளு)1 kaikkoḷḷudal, 13 செ. குன்றாவி.(v.t.) 1.கையில் எடுத்துக் கொள்ளுதல்; to take in hand, take up, occupy, have in charge. “கணவிர மாலை கைக்கொண் டென்ன”(மணிமே. 5:48);. 2. பேணிக் கொள்ளுதல்; to observe; to practise; to maintain. அறத்தைக் கைக்கொண்டு நடக்கிறார்கள். 3. ஏற்றுக் கொள்ளுதல், ஒப்புக் கொள்ளுதல், மேற்கொள்ளுதல்; to accept, adopt, admit. ‘சொன்னவார்த்தை ஆப்தமென்ற கைக் கொள்ள வேண்டும்படி ‘ (ஈடு.4:7.பிர.);. 4. கவர்தல்: to seize.grasp. “கணநிரைகைக்கொண்டு” (பு.வெ.1:9);. 5.வளைத்துக் கொள்ளுதல்; to surround. “கண்ணுதலோ னிருமருங்கு மொன்றாகக் கைக் கொண்டார்” (கோயிற்பு.பதஞ்.18);. ம.கய்க்கொள்ளுக. கைக்கொள்ளுக;க.கெய்கொள்: தெ. கைகொனு. [கை + கொள்.] கைக்கொள்(ளு)2 kaikkoḷḷudal, பெ.(n.) 13 செ. குன்றாவி.(v.t.); 1.ஏற்றுச் செயற்படுத்துதல்: toundertake. “மதுராந்தக ப்ரஹ்மாதிராஜர் கைக்கொண்டு இரட்சித்தமையில்” (S.I.I.VII.308);. 2. உரிமையாக்குதல்; to make one’s own. ‘தெருவைக் கைக்கொண்டு நின்றார்’ (சீவக.457,உரை);. [கை + கொள்(ளு);-.); |
| கைக்கோடரி | கைக்கோடரி kaikāṭari, பெ.(n.) சிறு கோடரி: hatchet, Small axe, hand axe. ம.கைக்கோடாலி; க.கெய்கொடலி.கைகோட்லி; தெ. செயிகொட்டலி;பட. கைகொடலி. [கை + கோடரி.] |
| கைக்கோடாலி | கைக்கோடாலி kaikāṭāli, பெ.(n.) சிறு கோடாலி; hatchet(செ.அக.);. [கை +கோடாலி] [P] |
| கைக்கோட்சேனாதிபதி | கைக்கோட்சேனாதிபதி kaikāṭcēṉādibadi, பெ.(n.) மண்வெட்டி; a spade, a hoe. ம. கய்க்கோட்டு. [கை + கோட்டு + சேனாதிபதி.] |
| கைக்கோட்டு | கைக்கோட்டு kaikāṭṭu, பெ.(n.) மண்வெட்டி; a spade, a hoe. கைக்கோட்டு ம.கய்க்கோட்டு. [கை + (கொட்டு); கோட்டு.] |
| கைக்கோட்டை | கைக்கோட்டை kaikāṭṭai, பெ.(n.) யானை; elephant. [கை + (கோடு); கோட்டை.] |
| கைக்கோரணி | கைக்கோரணி kaikāraṇi, பெ.(n.) 1. கைச்சாடை (வின்.);; signs with the hands, as of a dumb person or a dying man(சா.அக.);. [கை + கோரணி.குறள் → குரண் → குரணி → கோரணி (கொ.வ.);.] |
| கைக்கோரணி காட்டு-தல் | கைக்கோரணி காட்டு-தல் kaikāraṇikāṭṭudal, 5.செ.கு.வி.(v.i.) இறக்குந்தறுவாயிலிருத்தல்(இ.வ.);; to be at the point of death. [கை + கோரணி + காட்டு-.] |
| கைக்கோலிளையர் | கைக்கோலிளையர் kaikāliḷaiyar, பெ.(n.) கையில் கோல் பிடித்துக் காவற்றொழில் புரிவோர்; watchmen, guards, as holding a staff. “காவற் றொழிலொடு கைக்கோ லிளையரும்” (பெருங். உஞ்சைக்.57:70);. [கை + கோல் + இளையர்.] |
| கைக்கோல் | கைக்கோல்1 kaikāl, பெ.(n.) 1.ஊன்றுகோல்; staff, walking stick. “தன்கைக்கோலம்மனைக்கோலாகிய ஞான்று” (நாலடி.14); . 2.பற்றுக் கொடிறு; goldsmith’s pincers. “கைக்கோற் கொல்லன்”(சிலப்.16:108);. ம.கைக்கோல்;க.கெய்கோலு. [கை + கோல்.] கைக்கோல்2 kaikāl, பெ.(n.) செங்கோல்; sceptre. “எழுமேதி னிக்குங் கைக்கோல் செலுத்துங் குலோத்துங்கன்”(குலோத்.கோ.391);. [கை + கோல்.] |
| கைக்கோளன் | கைக்கோளன் kaikāḷaṉ, பெ.(n.) 1. போர்க் காலத்தில் அரசனைச் சூழ நின்று பாதுகாக்கும் பொறுப்பேற்றுச் சூளுரைக்கும் சிறப்புப்படைமறவன்; special army men who function as reliable bodyguards of the king. 2. இன்று பெரும்பாலும் நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் ஒரு தமிழ்க்குடியினன்; a caste, now mostly weavers, found in all districts. ம.கய்க்கோளன்;தெ.கைகோல. [கைக்கொளவன் → கைக்கோளன்.] |
| கைக்கோளன்காடி | கைக்கோளன்காடி kaikāḷaṉkāṭi, பெ.(n.) 1. நெசவுக்காரர் ஆக்கும் அரிசிக்காடி, fermented liquid prepared from boiled rice and used by weavers for yarns. 2. ஆறு மாதத்திய காடி; fermented liquid six months old (சா.அக.);. [கைக்கோளன் + காடி.] |
| கைக்கோளப்படை | கைக்கோளப்படை kaikāḷappaḍai, பெ.(n.) சோழர் சிறப்புப்படை; special army of Cölās. [கைக்கோள் + படை.] “ஶ்ரீ ராஜராஜ தேவர், கைக்கோளப்படை பிரந்தகந் தெரிஞ்ச கைக்கோளரும் சூத்திரசோழந் தெரிஞ்ச கைக்கோளரும் பாண்டிய குலாசநித் தெரிஞ்சகைக்கோளரும்” (தெ.கல்.தொ.4.கல்.391); நான்கு வகைகளைக் கொண்ட இப் படைப் பிரிவு முதல் இராசராசன் ஆட்சியில் சிறந்த படைப்பிரிவாக இருந்ததாம். (கல்.அக.);. |
| கைக்கோளர் | கைக்கோளர்1 kaikāḷar, பெ.(n.) கைக்கோளன் பார்க்க;see kai-kõlan. கைக்கோளர்2 kaikāḷar, பெ.(n.) நெசவுத்தொழில் செய்வோர்; weavers community. “கங்கநல்லூர் கைக்கோளருங்”(ஆவ.2கட்.11ப.24);. [கை + கோளர்.] கைக்கோளர்3 kaikāḷar, பெ.(n.) நெசவாளர்; weavers. [கை + கோள் + ஆர்.] கைக்கோளர்4 kaikāḷar, பெ.(n.) அரசரின் படைப்பிரிவில் வரி தண்டுவதற்காகத் தேர்ந்தெடுத்த படை மக்கள்; selected people in the administration for collection of tax using mild power. “இரட்டித்துவந்த பொன் 30 தண்டப் போந்த சமரகேசரித் தெரிந்த கைக்கோளர் தண்டிப்பொன் கொண்ருவருக வென்று இராஜராஜ மாராயர் கடையீடு வரக்காட்ட” SII.XXII. Pt.1, 27-5p.21). [கை + கோள் + அர்.] |
| கைக்கோள் | கைக்கோள் kaikāḷ, பெ.(n.) கைப்பற்றிக் கொள்ளுதல்; seizure. [கை + கோள்.] |
| கைக்கோள்முதலி | கைக்கோள்முதலி kaikāḷmudali, பெ.(n.) கைக்கோளக் குடியினரின் தலைவர்; chief of the Kaikkola caste. “கைக்கோளர்க்கும் கைக்கோள் முதலிகளுக்கும் உள்ள மனையும்” (தெ.இ.கல்.தொ:I:121); [கைக்கோள் + முதலி.] |
| கைங்கரியம் | கைங்கரியம் kaiṅgariyam, பெ.(n.) பணிவிடை; service, employment of a servant. Skt. kankarya. |
| கைசகர் | கைசகர் gaisagar, பெ.(n.) வன்னியர் (அக.நி.);; persons of the Vannniya caste. [கைச்+ சகர்.சாகு, வேளாண்மை,உழவுத்தொழில்.சாகு → சாகர் → சகர்.] |
| கைசரம் | கைசரம் kaicaram, பெ.(n.) மகிழம் பூ ape face flower, Mimusops elengi (சா.அக.);. |
| கைசருவு-தல் | கைசருவு-தல் kaisaruvudal, பெ.(n.) 5 செ.குன்றாவி (v.t.); 1.எதிர்த்தல்(யாழ்ப்.);: to attack.assault. 2.திருடுதல்; to pifer, steal. 3. தகாதமுறையில் பெண்களிடம் நடந்துகொள்ளுதல் (இ.வ.);; to commit indecent assault, as on a woman. கைசருவிய வேண்டும் இன்னமும் வேண்டும்(உ.வ.);. {கை + சருவு.] |
| கைசலி-த்தல் | கைசலி-த்தல் kaisalittal, 4 செ.கு.வி.(v.i.) 1.கையோய்த்ல்; to be tired, exhausted, wearied, as the arms in swimming carrying a burden, etc. “வேதாவும் கைசலித்து விட்டானே” (பட்டினத். திருப்பா.பொது.ப.172);. 2. வறுமையுறுதல்; to be reduced to poverty, to be in straitened circumstances. [கை + சலி-.] |
| கைசளை-த்தல் | கைசளை-த்தல் kaisaḷaittal, 4 செ.கு.வி.(v.i.) கைசலி-த்தல்.பார்க்க;see kai-Sali-. [கை + சளை-.] |
| கைசா | கைசா kaicā, பெ.(n.) இரு கழஞ்சு கொண்ட நிறை (கணக்கதி.7:8);.; a weight =2 kalanju. ம.கைசு(1/4பலம்); Mar. kaich [கஃசு → கைசா(கொ.வ.);.] |
| கைசாடைகாட்டு-தல் | கைசாடைகாட்டு-தல் kaicāṭaikāṭṭutal, 5 செ.கு.வி.(v.i.) சைகை காட்டல்; moving the hand expressive of thought or feeling, as patients do with the cure in attendance (சா.அக.);. [(கை+காடை+காட்டு-தல்.] |
| கைசிகத்துவாதசி | கைசிகத்துவாதசி gaisigattuvātasi, பெ.(n.) நளி (கார்த்திகை); மாதத்தில் வெண்பக்கத்து வருவதும் நம்பாடு வானுக்குரியதுமான பளிரெண்டாம் நாள் (துவாதசி);; the twelth day of the bright fortnight in the month of {}, sacred to {}. |
| கைசிகநிடாதம் | கைசிகநிடாதம் gaisiganiṭātam, பெ.(n.) எழுவகைப் பண் (சோடக சுரங்);களுள் ஒன்று; middle variety of the seventh note of the gamut, one of {}-{}. |
| கைசிகன் | கைசிகன் gaisigaṉ, பெ.(n.) நம்பாடுவான்(திவ்.திருமாலை.33, வியா.ப.202);; the devotee Nampāduvāņ who sang in the kaišiga melody. [கைசிகம் → கைசிகன்.] |
| கைசிகம் | கைசிகம் gaisigam, பெ.(n.) 1. பண்வகையுளொன்று(பரத.இராக.56);: a musical mọde. 2. இசை; music. [கைசெய் → கைசிகம்] |
| கைசிகவேகாதசி | கைசிகவேகாதசி gaisigavēgātasi, பெ.(n.) கைசிகமென்ற பண்ணைப் பாடிக்கொண்டு நம்பாடுவானென்பான் திருமாலை வழிபட்டு முத்திபெற்ற நாளாகிய நளி (கார்த்திகை); மாதத்துச் வெண்பக்கத்து (சுக்கில பட்சத்து); பதினோறாம் நாள் (ஏகாதசி);; the eleventh day of the bright fortnight in the month of {}, sacred to {} who sang the musical mode {} and obtained salvation. |
| கைசிகிச்சை | கைசிகிச்சை kaicikiccai, பெ.(n.) கைபாகமாகச் செய்யும் மருத்துவம்; நாட்டு மருத்துவம்; by experience; palliative treatment (சா.அக.);. [கை+Skt. சிகிச்சை] |
| கைசிகிவிருத்தி | கைசிகிவிருத்தி gaisigivirutti, பெ.(n.) காமம் பொருளாகக் காமுகராகிய மக்கள் தலைவராக வரும் நாடக நடை (சிலப். 3:13, உரை);; a variety of dramatic composition in which a libertine is the hero, one of four kinds of {}-virutti. (q.v.);. |
| கைசியம் | கைசியம் kaisiyam, பெ.(n.) மயிர் (யாழ்.அக.);; hair. [கேசம் → கைசியம்.] |
| கைசூம்பு | கைசூம்பு2 kaicūmputal, பெ.(n.) கை சிறுத்தல்; diminution in the size of the hand. [கை+கும்புதல்] |
| கைசெய் | கைசெய்1 kaiseytal, 1.செ.கு.வி.(v.i.) 1.தொழில் செய்தல்; to do manual labour, work with one’s. hands. “நும்மெய் வருத்திக் கைசெய் துய்ம்மினோ” (திவ்.திருவாய்.3,9:6);. 2. அழகு படுத்துதல்; to ador n, decorate, trick out. “மானிட மகளிர்க்கு………கை செய்து பிறப்பிக்கும் அழகு” (திருமுருகு.17.உரை);. 3. உதவி செய்தல் (ஈடு.4,8:7);: to assist. பட.கைமாடு. [கை + செய்-.] கைசெய்2 kaiseytal, 1 செ.குன்றாவி(v.t.) 1. நடத்துதல்; to conduct. “பாரதங் கைசெய்த” (திவ்.பெரியாழ்.2,1:1);. 2.பழக்குதல்; to domesticate. Fin. Kesy (to tame, domesticate); [கை + செய்-.] கைசெய்3 kaiseytal, 2 செ.கு.வி.(v.i.) அறுவை மருத்துவம் செய்தல் (நாஞ்.);; to make a surgical operation. [கை + செய்-.] |
| கைசேர்-தல் | கைசேர்-தல் kaicērtal, 2 செ.குன்றாவி(v.t.) ஒன்று சேர்தல்; to join (the hand);; க. கெய்சேரு. [கை + சேர்-.] |
| கைசைகை | கைசைகை kaicaikai, பெ.(n.) கைசாடை, gestures of the hand (சா.அக.);. [கை+சைகை] |
| கைசோர்-தல் | கைசோர்-தல் kaicōrtal, 2 செ.கு.வி.(v.i.) 1. கைதளர்ந்து விழுதல்; to be loosened from the hand, to fell. 2. கைசலி பார்க்க;see kai-Sali-. க. கெய்சோல். [கை + சோர்-.] |
| கைசோர்ந்துபோ-தல் | கைசோர்ந்துபோ-தல் kaicōrndupōtal, 8 செ.கு.வி. (v.i.) 1.கைவிட்டுப்போதல்; to slip out of one’s hands, to be lost. 2. வறுமைநிலை அடைதல்; to become poor. [கை + சோர்ந்து + போ-.] |
| கைச் சொளகு | கைச் சொளகு gaiccoḷagu, சிறிய முறம்; small winnowing basket. [கை+களகு] |
| கைச்சங்கம் | கைச்சங்கம் kaiccaṅgam, பெ.(n.) நாகரவண்டு, நத்தை(யாழ்.அக);; snail. [கைச் + சங்கம்.] |
| கைச்சங்கிலி | கைச்சங்கிலி kaiccaṅgili, பெ.(n.) கைவிலங்கு; handcuff, chain, a shackle. ம.கைச்சங்ங்ல;க.கைகோள. [கை + சங்கிலி.] |
| கைச்சட்டம் | கைச்சட்டம் kaiccaṭṭam, பெ.(n.) கூரையின் குறுக்குச் சட்டம் (வின்.);; cross piece for rafters. மறுவ.கைவிட்டம். [கை + சட்டம்.] |
| கைச்சட்டை | கைச்சட்டை kaiccaṭṭai, பெ.(n.) 1. அரைச்சட்டை; short-sleeved shirt, bodice. 2. கையுறை; gloves. [கை + சட்டை.] |
| கைச்சந்திராய் | கைச்சந்திராய் kaiccantirāy, பெ.(n.) கசப்புத் தன்மையுடைய செடி வகை; a species of bitter edible plant; Indian chickweed, Moilugo Parviflora (சா.அக.);. |
| கைச்சனம் | கைச்சனம் kaiccaṉam, பெ.(n.) புளிநரளை (சித்.அக.);; bristly trifoliate vine. [கய் → கை + சனம். சனம் : இனம்(வின்);.] |
| கைச்சனாரத்தை | கைச்சனாரத்தை kaiccaṉārattai, பெ.(n.) புளிநாரத்தை (மலை.);; bitter orange. [கைச்சல் + நாரத்தை.] |
| கைச்சம் | கைச்சம் kaiccam, பெ.(n.) ஆணை; order. “இப்பரிசு கைச்சம் செய்தோம்சபையோம்”(SII.XIV.78-4p.50);. [கை → கைச்சம்.] |
| கைச்சம்பிரதாயம் | கைச்சம்பிரதாயம் kaiccambiratāyam, பெ.(n.) கைச்சித்திரம் (யாழ்.அக.);; dexterity of hand, skill in manual labour. [கை (வ.); சம்பிரதாயம்.] |
| கைச்சரக்கு | கைச்சரக்கு kaiccarakku, பெ.(n.) கற்பித்துக் கூறுவது, இட்டுக்கட்டிச் சொல்வது; fabricated reports, exaggerations. நடந்ததைக் கூறாமல் கைச்சரக்கைச் சேர்த்துக் கதைவிடலாமா? (உ.வ.);. [கை + சரக்கு.] |
| கைச்சரசம் | கைச்சரசம் kaissarasam, பெ.(n.) 1. ஆண் பெண்ணைத் தொட்டு விளையாடும் விளையாட்டு; wanton sport, dallying. 2. கைச்சேட்டை; ungraceful gestures with the hand. 3. நகையாட்டு; joking by action. மாப்பிள்ளை என்னிடம் கைச்சரசம் வேண்டா (உ.வ.);. மறுவ, கைச்சேட்டை.கைக்குறும்பு. [கை + சரசம்.] |
| கைச்சரடு | கைச்சரடு1 kaiccaraḍu, பெ.(n.) கைச்சாடு (பதிற்றுப்.19, உரை);பார்க்க;see kai.c-cadu. [கை + சரடு.] |
| கைச்சரி | கைச்சரி kaiccari, பெ.(n.) கைவளை; a kind of armring, bracelet. [கைச்செறி → கைச்சரி.] காப்புக்கு மேற்பகுதியில் கையில் அணியப்படும் சரிகை என்னும் அணிகலன். இது மேலே பருத்தும் கீழே சிறுத்தும் சிறு குழாய் வடிவில் இருக்கும்; பொன்னினா லானது. |
| கைச்சற்றிராய் | கைச்சற்றிராய் kaiccaṟṟirāy, பெ.(n.) திராய் வகைகளுளொன்று (வின்.);; a kind of chickweed, as bitter, mollugo. [கைச்சல் + திராய்.] |
| கைச்சற்றோடை | கைச்சற்றோடை kaiccaṟṟōṭai, பெ.(n.) கைச்சனாரத்தை (வின்.); பார்க்க;see kaiccanārattai. மறுவ. புளி நாரத்தை. [கைச்சல் + தோடை. தோடை : எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற காய்கள் காய்க்கும் செடிவகை. புளிப்பின் மிகுதியால் கசப்புத்தன்மை கொண்டதால் இப் பெயர் பெற்றதாம்.] |
| கைச்சல் | கைச்சல் kaiccal, பெ.(n.) 1.வெறுப்பு(யாழ்.அக.);; dislike. 2.கைப்பு,கசப்பு; bitterness. [கள் → கை → கைச்சல்.] |
| கைச்சவளம் | கைச்சவளம் kaiccavaḷam, பெ.(n.) குத்தீட்டி, கையீட்டி(புவெ.10.சிறப்பிற்.10,உரை);; a kind of hand lance, spear. [கை + சவளம். சவளம் : குத்தாயுதம்] |
| கைச்சாடு | கைச்சாடு kaiccāṭu, பெ.(n.) கையுறை; gloves. தொழின்மாட்சிமைப்பட்டகைச்சாட்டைஇறுகக்கட்டி (கலித்.7,உரை);.மின்வலர் கைச்சாடின்றிப்பணி செய்ய இயலாது (உ.வ.);. 2. குத்துச் சண்டையில் கையில் அணியும் திண்ணுறை; gloves for wrestling. மறுவ. கையுறை. க. கெய்சீல;பட.கய்சீர. [கை + சாடு. தோடு → தாடு → சாடு.] |
| கைச்சாடை | கைச்சாடை kaiccāṭai, பெ.(n.) கையால் காட்டும் மனக்குறிப்பு; significant movement of hand to evoke a response or convey intention. [கை + சாடை.] |
| கைச்சாது | கைச்சாது kaiccātu, பெ.(n.) 1. பணம் செலுத்தி யதற்கானபற்றுச்சீட்டு; receipt. “குண்டிகையில் இட்டு கைச்சாதுக் கொள்ள”(SII.VI.57-4p.32);. [கை + (சாத்து); சாது(கொ.வ.);.] |
| கைச்சாத்து | கைச்சாத்து kaiccāttu, பெ.(n.) 1. கையெழுத்து; signature. “தந்தைதன் தந்தைதான் வேறெழுது கைச்சாத்து”(பெரியபு.தடுத்தாட்.61);. 2.பொருட்பட்டி, invoice, list of goods with the vendor’s signature. 3. பற்றுச்சீட்டு; receipt for land tax paid, acknowledgement of payment. ம. கைச்சார்த்து. [கை + சாத்து. சாற்று → சாத்து : சொல்லுகை.] |
| கைச்சாய்ப்பு | கைச்சாய்ப்பு kaiccāyppu, பெ.(n.) சாய்மானம் (யாழ்.அக.);; back, as of a chair, anything to lean on. [கை + சாய்ப்பு.] |
| கைச்சார்பு | கைச்சார்பு kaiccārpu, பெ.(n.) கைச்சாய்ப்புபார்க்க;see kai-c-сауррu. [கை + சார்பு.] |
| கைச்சால் | கைச்சால் kaiccāl, பெ.(n.) நீரிறைக்குங் கைவாளி (வின்.);; hand bucket. [கை + சால்.சால் : நீரிறைக்குங் கலம்.] |
| கைச்சாளை | கைச்சாளை kaiccāḷai, பெ.(n.) வளாகச் சுவரில் வைக்கப்பட்டிருக்கும்பதிவின் மீதுள்ள கூரை; the roof (கட்.தொ.);. [கை + சாளை.] |
| கைச்சி | கைச்சி1 kaicci, பெ.(n.) கழுகு (மலை.);; areca-nutpalm. கைச்சி2 kaicci, பெ.(n.) 1. சிரட்டை; coconutshell,half of a dried Palmyra nut. 2. ஊமற்கச்சி; snail. [கை : சிறியது. கை → கைச்சி.] |
| கைச்சிகம் | கைச்சிகம் kaiccikam, பெ.(n.) பாக்கு மரம்; areca-nutpalm (சா.அக.);. |
| கைச்சிட்டா | கைச்சிட்டா kaicciṭṭā, பெ.(n.) அன்றாடக்குறிப்பேடு (இ.வ.);; rough day-book. கைக்குறிப்பேடு பார்க்க;see kai-k-kurippédu. [கை + சிட்டா. U.cittah → த. சிட்டா.] |
| கைச்சித்தி | கைச்சித்தி kaiccitti, பெ.(n.) கைப்பேறுபார்க்க;see kai-p-peru. [கை + சித்தி. சித்தி:நலம், வெற்றி.] |
| கைச்சித்திரம் | கைச்சித்திரம் kaiccittiram, பெ.(n.) 1. தொழிற்றிறமை; dexterity of hand, skill in manual labour, in fine arts. இவருடைய கைச்சித்திரம் எண்ணி மகிழத்தக்கது(உ.வ.);. 2.கைநளினம்; sleight of hand. [கை + சித்திரம்.] |
| கைச்சின்னம் | கைச்சின்னம் kaicciṉṉam, பெ.(n.) தேவாரம்பெற்ற சிவப்பதிகளில் ஒன்று; one of Sivatemples on which there are hymns in Têvãram. [கை + சின்னம். சின்னம் : அடையாளம்.] இந்நாளில் இவ்வூர் கச்சனம் என வழங்கப் பெறுகிறது; நாகை மாவட்டத்தில் எட்டுக்குடிக்கருகில் உள்ளது. |
| கைச்சிபம் | கைச்சிபம் kaiccipam, பெ.(n.) சிறு கட்டுக்கொடி а сreeper capable of binding water (சா.அக.);. [கைச்சி+அம்-] |
| கைச்சிமிட்டி | கைச்சிமிட்டி kaiccimiṭṭi, பெ.(n.) ஏமாற்றுக் கலை; sleight of hand trick (சா.அக.);. [கை+சிமிட்டி] |
| கைச்சிமிட்டு | கைச்சிமிட்டு kaiccimiṭṭu, பெ.(n.) 1. கமுக்கமாக (இரகசியமாக);க் கைகாட்டுங்குறிப்பு: secretgesture orsign with the hand. 2.கைத்திறன்; sleight of hand. [கை + சிமிட்டு. சிமிட்டு : கள்ளவேலை. சிமிழ்த்து → சிமிட்டு.] |
| கைச்சிறை | கைச்சிறை kaicciṟai, பெ.(n.) 1. கையகத்தது; that which is in one’s hand or possession, as property. “கைச்சிறையான வநேகமும் விழுங்கப்பட்டு” (திருப்பு:579);. 2.பணயமாக வைக்கப்பட்ட ஆள்; hostage. ம.கைச்சிற;க.கெய்சிறெ. [கை + சிறை.] |
| கைச்சீட்டு | கைச்சீட்டு kaiccīṭṭu, பெ.(n.) 1. கையாலெழுதிய குறிப்புச்சீட்டு; written acknowledgement,anyshort memorandum in writting. 2. கடன்முறி; a bond. ம. கய்ச்சீட்டு, கைச்சீட்டு;க.கெய்காகத.கெய்சீட்டு, [கை + சீட்டு.] |
| கைச்சீப்பு | கைச்சீப்பு kaiccīppu, பெ.(n.) தோட்பட்டையெலும்பு (வின்.);; scapula, shoulder blade. ம. கைசீட்டு. [கை + சீப்பு. சிப்பு:விலா எலும்பு(வின்);.] |
| கைச்சுடர் | கைச்சுடர் kaiccuḍar, பெ.(n.) சிறுவிளக்கு; a small lamp. க. கெய்சொடர். [கை + சுடர்.] |
| கைச்சுத்தம் | கைச்சுத்தம் kaiccuttam, பெ.(n.) கைத்தூய்மை பார்க்க;see kai-t-tūymai. [கை + சுத்தம்.] |
| கைச்சுத்தி | கைச்சுத்தி kaiccutti, பெ.(n.) கைச்சுத்தியல்பார்க்க;see kai-c-cuttiyal. [கை சுத்தி.] |
| கைச்சுத்தியல் | கைச்சுத்தியல் kaiccuttiyal, பெ.(n.) சுத்தியல்வகை;தட்டார் பயன்படுத்துஞ் சுத்தியல் வகை (C.E.M.);: small hammer for working in gold. கைச்சுத்தியல் [கை + சுத்தி + அல். (அல் : தொழிற்பெயர் ஈறு. ஒ.நோ. பட்டியல், செதுத்தல் → செத்துதல் – அடித்தல்,தாக்குதல். செத்து → (சொத்து);சுத்து.] |
| கைச்சுரிகை | கைச்சுரிகை gaiccurigai, பெ.(n.) உடைவாள்(சீவக. 558, உரை);, dagger. [கை + கரிகை.] |
| கைச்சுருக்க | கைச்சுருக்க kaiccurukka, வி.எ.(adv.)விரைவாய்; quick, hastily. கைச்சுருக்கக் கடைக்குப்போய்வா. [கை + சுருக்க.] |
| கைச்சுருக்கு | கைச்சுருக்கு1 kaiccurukkudal, 3செ.கு.வி.(v.i.) கைகுறுக்கு பார்க்க;see kay-kurukku. [கை + சுருக்கு-.] கைச்சுருக்கு2 kaiccurukku, பெ.(n.) 1.கைத்திறன்; expertness, dexterity of hand in any craft or excercise. 2. கையிறுக்கம்; stinginess, close fistedness. ம.கைச்சுறுக்கு. [கை + சுருக்கு.] |
| கைச்சுருள் | கைச்சுருள் kaiccuruḷ, பெ.(n.) 1.திருமணத்தில் நாகவல்லிக்கு முன்னும் மற்றும் சில நற்செயல் நிகழ்வுகளிலும் மணமக்களுக்குக் கொடுக்கும் வெற்றிலைச்சுருள்; roll of betel leaves offered to bride and bridegroom when going to bathe on the day of marriage and on similar auspicious occasions. 2. மணமக்களுக்குத் தம்பலத்தோடு (தாம்பூலத்தோடு);கொடுக்கும்பணம்; a wedding gift of money presented with roll of betel leaves. மறுவ. இலைப்பணம், இலைவயம்,கும்பிடுபணம். [கை + சுருள்.] கையில்கொடுக்கும்வெற்றிலைச்சுருளுக்குவழங்கிய இப்பெயர்.அச்சுருளோடுகொடுக்கும்பணத்திற்கும்வழங்கியது. இலைக்குள் (வெற்றிலை); வைத்துத் தந்தது இலைவயம் – இலவசம் ஆயிற்று. |
| கைச்சுறுக்கு | கைச்சுறுக்கு kaiccuṟukku, பெ.(n.) கைச்சுருக்கு2 பார்க்க;see kai-c-curukku. [கை + சுறுக்கு.] |
| கைச்சுழி | கைச்சுழி kaiccuḻi, பெ.(n.) விதைக்கும்போது விதைகள் ஒன்றுகூடி விழுகை (யாழ்ப்.);; falling in handfuls, as seeds in sowing. [கை + சுழி.] |
| கைச்சுழிப்படு-தல் | கைச்சுழிப்படு-தல் kaiccuḻippaḍudal, 20செ.கு.வி. (v.i.) சரியாக விதையாமையால் பயிர் ஓரிடத்துக் குவிந்துவளர்தல்(யாழ்ப்.);; to grow in clumps,as grain sown by untrained hands. [கைச்சுழி + படு-.] |
| கைச்சுழியா-தல் | கைச்சுழியா-தல் kaiccuḻiyātal, 6 செ.கு.வி.(v.i.) கைச்சுழிப்படு-தல், (யாழ்ப்.);பார்க்க;see kai-C-Culi-p-padu-. [கை + சுழி + ஆ-.] |
| கைச்சுவடி | கைச்சுவடி kaiccuvaḍi, பெ.(n.) கையேடு பார்க்க;see kai-y-édu. மறுவ.கையேடு. [கை + சுவடி.] |
| கைச்சூடு | கைச்சூடு1 kaiccūṭu, பெ.(n.) 1.கையைத்தேய்த்தல், தீக்காய்தல் முதலியவற்றால் உண்டாகுஞ்சூடு(வின்.);: heat produced in the hand by friction orby holding it to the fire. 2. கை பொறுக்கக்கூடிய சூடு; bearable heat. கைச்சூடு பதமாக எண்ணெய் காய்ச்சித் தலைக்குத் தேய்(உவ.);. ம.கைச்சூடு. [கை + சூடு.] கைச்சூடு கைச்சூடு2 kaiccūṭu, பெ.(n.) கதிரறுப்பவர் களுக்குக் கொடுக்கும் அரிக்கட்டு (யாழ்ப்.);; sheaf given to reapers. [கை + சூடு. சூடு : விளைந்த கதிர்.] |
| கைச்செட்டு | கைச்செட்டு kaicceṭṭu, பெ.(n.) 1. சிக்கனம் (யாழ். அக.);; thrift, economy, புதிதாக வந்த மருமகளின் கைச்செட்டு மாமியாருக்கு மிகவும் பிடித்துவிட்டது (உ.வ.);. 2.சில்லறை வணிகம் (யாழ். அக.);; retail trading. [கை + செட்டு.] |
| கைச்செட்டை | கைச்செட்டை kaicceṭṭai, பெ.(n.) கைச்சீப்பு பார்க்க;see kai-c-cippu. [கை + செட்டை.] |
| கைச்செய்கை | கைச்செய்கை kaicceykai, பெ.(n.) வயல் முதலியவற்றில் செய்யுங் கைவேலை(வின்.);; manual labour in field or garden. [கை + செய்கை.] |
| கைச்செறி | கைச்செறி kaicceṟi, பெ.(n.) 1. தோலினாற் செய்த கையுறை; gloves made of leather. “காற்செறி நாணெறிகைச்செறிகட்டி” (பெரியபு:கண்ணப்ப.60);. 2. கையில் அணியும் அணிகலன்; ornament worn on hand. [கை + செறி.] |
| கைச்செலவு | கைச்செலவு kaiccelavu, பெ.(n.) 1. சொந்தச் செலவு; personal expense. கைச்செலவுக்குக்கூடக் காசில்லை (உ.வ.);. 2. சில்லறைச்செலவு ; sundry expenses. கைச்செலவுக்குஇவ்வளவுபணமா?(உ.வ.);. ம. கைச்செலவு; க.கைகாசு;பட.கைசெலவு. [கை + செலவு.] |
| கைச்சேட்டை | கைச்சேட்டை kaiccēṭṭai, பெ.(n.) கையாற்செய்யுங் குறும்புச் செயல்; mischievous acts of the hand. [கை + சேட்டை.] |
| கைச்சைகை | கைச்சைகை gaiccaigai, பெ.(n.) 1.கையால்காட்டுங் குறிப்பு; sign made by the hand. 2. கையொப்பம் (இ.வ.);; signature. மறுவ, கைச்சாடை. க. கெய்மாட, கெய்சன்னெ;பட.கைசன்னிய, [கை + சைகை.] |
| கைச்சொடுக்கு | கைச்சொடுக்கு1 kaiccoḍukku, பெ.(n.) கைப்பெருவிரலையும் நடுவிரலையும் ஒன்றோடொன்று உராய்ந்து உண்டாக்கும் ஓசை; a snap with the fingers. க. கெய்கொடுகு. [கை + சொடுக்கு.] கைச்சொடுக்கு2 kaiccoḍukkudal, 5 செ. குன்றாவி.(v.t.) விரல்களை நெட்டியெடுத்தல்; to snap with the fingers. க. கெய்கொடுங்கு [கை + சொடுக்கு.] |
| கைச்சோரம் | கைச்சோரம் kaiccōram, பெ.(n.) கச்சோரம் (தைலவ.தைல.77);பார்க்க;see kaccoram. [கை + சோரம்.] |
| கைச்சோர்வு | கைச்சோர்வு kaiccōrvu, பெ.(n.) 1. இழுப்புநோய் போன்றவற்றால் கை உணர்வற்றுப் போதல்; loss of sensation in hand or the arm though paralysis. 2. வன்முறைத் தாக்குதலால் கைதளர்ந்து போதல்; disablement effected by violence(சா.அக.);. [கை + சோர்வு.] |
| கைச்சோலம் | கைச்சோலம்1 kaiccōlam, பெ.(n.) கிச்சிலிக் கிழங்கு; an aromatic root (சா.அக.);. [கை : சிறிய. கை+ சோலம். கல்லம் → சோலம்.] கைச்சோலம்2 kaiccōlam, பெ.(n.) ஒருவகை ஏனம்; a kind of metal vessel. “வெண்கலக் கைச்சோலமொன்று”(S.I.I.II.4089);. [கை : சிறிய கை + சோலம்.] கைச்சோலம்3 kaiccōlam, பெ.(n.) இறைவன் வழிபாட்டிற்குரிய ஏனங்களுள் ஒன்று; a vessel for worship. “மேற்படி நிறை கைச்சோலம் ஒன்று” (SII.V.521-7, p.212);. [கச்சோலம் → கைச்சோலம்.] |
| கைஞ்ஞானம் | கைஞ்ஞானம் kaiññāṉam, பெ.(n.) சிற்றறிவு(அற்ப); அறிவு; shallow, superficial knowledge. “கைஞ்ஞானங் கொண்டொழுகுங் காரறி வாளர்” (நாலடி.311);. [கை + ஞானம். கை : சிறிய.] |
| கைடவன் | கைடவன் kaiṭavaṉ, பெ.(n.) திருமாலால் கொல்லப்பட்ட ஓர் அரக்கன்; an asura slain by Visnu. “மதுகைடவரும் வயிறுருகி மாண்டார்”(திவ்.இயற்.3 66); (செ.அக);. கைடவன் kaiḍavaṉ, பெ.(n.) திருமாலால் கொல்லப்பட்ட ஓர் அரக்கன் (அசுரன்);; an {} slain by {}. “மதுகைடவரும் வயிறுருகி மாண்டார்” (திவ்.இயற்.3:66);. [Skt.kitaidi → த.கைதி.] |
| கைடவை | கைடவை kaiḍavai, பெ.(n.) காளி (துர்க்கை); (யாழ்.அக.);;{}. |
| கைடிகம் | கைடிகம் kaiṭikam, பெ.(n.) 1. மலை எலுமிச்சை; hill lime, Atlantic monophylla. 2. கசப்பு நாரத்தை; mountain lime, Citrus medicalimonum (சா.அக.);. |
| கைடிகா | கைடிகா kaiṭikā, பெ.(n.) புட்டரிசி; a kind of kangoon rice (சா.அக.);. |
| கைதகம் | கைதகம் gaidagam, பெ.(n.) தாழம்பு; fragrant screwpine (சா.அக.);. [கை → கைது → கைதகம்.] |
| கைதட்டல் | கைதட்டல் kaitaṭṭal, பெ.(n.) வியப்பு வெறுப்பு நகைப்பு முதலியவற்றின் குறியாகக் கைதட்டுகை; to clap or strike hands together in token of defiance, triumph, derision, admiration, etc.. [கை+தட்டல்.] |
| கைதட்டிப்பண்டாரம் | கைதட்டிப்பண்டாரம் kaidaṭṭippaṇṭāram, பெ.(n.) வாய் திறவாது, கைதட்டி இரந்துண்ணும் சைவப் பண்டாரம் (இ.வ.);; a Saiva mendicant who wanders about mutely, clapping hands for alms. [கை + தட்டி + பண்டாரம்.] |
| கைதட்டிப்போடு-தல் | கைதட்டிப்போடு-தல் kaidaṭṭippōṭudal, பெ.(n.) 19 செ.குன்றாவி.(v.t.); நீக்கிவிடுதல்(வின்.);: to forsake, give up. [கை + தட்டி + போடு-.] |
| கைதட்டிவை-த்தல் | கைதட்டிவை-த்தல் kaidaṭṭivaiddal, 4 செ.குன்றாவி. (v.t.) பூப்படையாப் பெண்ணைப் பூப்பெய்தியவளாகக் கொண்டு உரிய நிகழ்வுகள் செய்தல்; to perform the rites connected with puberty to any immature girl. [கைதட்டி + வை-.] |
| கைதட்டு | கைதட்டு1 kaidaṭṭudal, 5 செ.குன்றாவி(v.t.) 1. வியப்பு,வெறுப்பு:நகைப்பு முதலியவற்றின் குறியாகக் குறியாகக் கைகொட்டுதல்; to clap or strike hands together in token of defiance, triumph, derision, admirationetc. “கைதட்டி வெண்ணகை செய்வர் கண்டாய்” (அருட்பா.II, புறமொழிக்.10);. 2. புலையரும் வீட்டுவிலக்கான பெண்களும் ஒதுங்கிச் செல்வதற்காகக் கையைத் தட்டுதல்; to warm off, as an outcaste pulayas,a woman in menstruation etc. 3. கையடி பார்க்க;see kai-y-adi. 4. கைதப்புதல்(வின்.);பார்க்க;see kai-tappu-. க.கெய்தட்டு;பட.கைதட்டு. [கை + தட்டு-.] கைதட்டு2 kaidaṭṭudal, 5 செ.கு.வி.(v.i.) பூப்பு எய்துதல் (இ.வ.);; to attain puberty, to be in menses, as signified by clapping of hands. [கை + தட்டு-.] கைதட்டு3 kaidaṭṭudal, பெ.(n.) கைகொட்டுதல்; clapping the hands. க. கெய்சப்பளி;பட கைசப்படெ. [கை + தட்டு-.] |
| கைதப்பு-தல் | கைதப்பு-தல் kaidappudal, 5 செ.கு.வி.(v.i.) 1. கையினின்று தவறிப் போதல்; to slip from the hand, as a thing,to escape or get out of control, as a person or animal. “கானவர் வலையிற் பட்டுக் கைதப்பி யோடும்”(கைவல்.தத்து.13);. 2. இலக்குத் தவறுதல்; to miss the mark. க. கெய்தப்பு;பட.கைதப்பு. [கை + தப்பு-.] |
| கைதரியம் | கைதரியம் kaitariyam, பெ.(n.) 1. வேம்பு; margosa tree, Melia bukayan. 2. ஒரு பூடு; a plant, Myrica sapida (சா.அக.);. |
| கைதரு-தல் | கைதரு-தல் kaidarudal, 2 செ.கு.வி.(v.i.) 1. இடங் கொடுத்தல்; to give a hold. 2. உதவுதல்; to help. 3. கைகூடுதல்; to materialize. [கை + தரு-.] |
| கைதலைவை-த்தல் | கைதலைவை-த்தல் kaidalaivaiddal, 4செ.கு.வி.(v.i.) பெருந்துயரடைதல்(கையைத் தலைமீதுவைத்தல்);; lit., to place the hand on the head; to mourn, lament, grieve, “கறைகெழு குடிகள் கைதலை வைப்ப” (சிலம்:4:9);. [கை + தலை+ வை-.] |
| கைதல் | கைதல் kaidal, பெ.(n.) தாழை; fragrant screw-pine. “கைதல் சூழ்கழிக் கானல் (தேவா.532:2);. ம.கைத; க.கேதகெ,கேதிகை; தெ.,கே.தகி;து.கேதை, கேதயி, கேதாயி. Skt. ketaka. [கை → கைதல்.] |
| கைதளர்-தல் | கைதளர்-தல் kaidaḷardal, 2 செ.கு.வி.(v.i.) 1.கையின் வலிமை அல்லது ஆற்றல் இழத்தல்: to lose the use or power of one’s hand. 2. தோற்றுப் போதல்; to be defeated. 3.வறுமை; to be in reduced circumstances. க.கெய்கெடு. [கை + தளர்-.] |
| கைதழுவுதல் | கைதழுவுதல் kaidaḻuvudal, 5 செ.கு.வி. (v.i.) கைகோர்த்தல்; to clasp hand in hand. “தொடந்து கைதழீஇ நடந்து” (பெருங்.உஞ்சைக்41:110);. [கை + தழுவு-.] |
| கைதவன் | கைதவன்1 kaidavaṉ, பெ.(n.) 1. பாண்டியன்; Pănợya king. “கைதவனுஞ் சொன்னான்” (பெரியபு. திருஞான.749);. 2. பாண்டியனின் பட்டப் பெயர்களிலொன்று; one of the title of Pandiakings. மறுவ. பாண்டியன், செழியன், கூடற்கோமான், தென்னவன், வேம்பின்றாரோன், வழுதி, குமரிச்சேர்ப்பன், வைகைத்துறைவன்,மாறன்,பொதியவெற்பன்.மீனவன். [கைதவம் → கைதவன்(மிகுபுகழ் உடையவன்.] கைதவன்2 kaidavaṉ, பெ.(n.) ஏய்ப்பவன், வஞ்சகன்; deceitful, cunning person. “கைதவனாமிக் கானவ னேயோ” (திருவிளை.பழியஞ்.28);. கைதவம் → கைதவன்.] கைதவன்3 kaidavaṉ, பெ.(n.) திருமாலாற் கொல்லப்பட்ட ஓர் அசுரன்; an Asura slain by visnu. “மதுகைடவரும் வயிறுருக மாண்டார்” (திவ்.இயற். 3:66);. [கை – கைதவன்.] |
| கைதவம் | கைதவம்1 kaidavam, பெ.(n.) 1.ஏய்ப்பு,வஞ்சம்; cunning, craftiness. “மைதவழ் கண்ணி கைதவந் திருப்பா”(பெருங்.மகத. 15:18);. 2. பொய்; falsehood. “கைதவம் புகலேன்”(கந்தபு. வரவுகேள்.4); 3. துன்பம்; affliction, suffering. “கைதவமே செய்யு மதுவின்களி”(பிரமோத் சிவராத்திரி.17);. ம.கைதவம். [கை → கைத்து → கைத்துவம் → கைதவம்.] கைதவம் kaidavam, பெ..(n.) ஓரிடத்தில் வளரும் பொருள் மற்றொரு இடத்துக்குப் பொருந்திய பெயரைப்புனைந்து வருவது; unusual name. [கை+[தவல்]தவம்] |
| கைதவறு-தல் | கைதவறு-தல் kaidavaṟudal, பெ.(n.) 5 செ.கு.வி.(v.i.); 1 கைதப்பு-, பார்க்க;see kai-tappu. 2. கைப் பிழையாதல்; to err or commit a mistake by a slip of the hand. 3.தொலைந்து போதல்; to be lost. என் புத்தகம் கைதவறிவிட்டது(உ.வ.);. 4.இறத்தல்: to die. குழந்தை கைதவறிவிட்டது. [கை + தவறு-.] |
| கைதவை | கைதவை kaidavai, பெ.(n.) கொற்றவை (துர்க்கை); (யாழ்.அக.);; Durga. [கொற்றவை → கொதவை → கைதவை.] |
| கைதா-தல்(கைதருதல்) | கைதா-தல்(கைதருதல்) kaidādalkaidarudal, 18செ.கு.வி.(v.i.) 1.வறுமை, இடுக்கண் முதலியவற்றில் உதவிபுரிதல்; to render help, save, rescue, as from poverty,danger, etc. “காவலனார் பெருங்கருணை கைதந்தபடி யென்று” (பெரியபு:திருஞான.1118);. 2. உறுதி கொடுத்தல்: to give assurance. “எய்தவல்லையேற்கு கைதருக”(பாரத. குருகுல. 44);. 3.மணம்புரிதல்; to marry. “கோதையா லுறவுகொண்டு கைதரல்குறித்த கோமகன்” (பாரத.குருகுல.131);. 4. மிகுதல்; to increase. “உவகை கைதர” (கம்பரா.மீட்சி.268);. [கை + தா-.] |
| கைதாகு-தல் | கைதாகு-தல் kaitākutal, 6 செ.கு.வி.(vi.) குற்றம் புரிந்ததாகக் கருதப்படுவர் காவலரால் பிடிக்கப்படுதல்; get arrested, get imprisoned. சுதந்திரப் போராட்டக் காலத்தில் எங்கள் ஊரில் பலர் கைதானார்கள் [கைது+ஆகு-தல்] |
| கைதாங்கி | கைதாங்கி kaitāṅgi, பெ.(n.) கைப்பிடி (யாழ்.அக.);; handle. [கை + தாங்கி.] |
| கைதாங்கியடி-த்தல் | கைதாங்கியடி-த்தல் kaitāṅgiyaḍittal, 4 செ.கு.வி. (v.i.) 1. மெதுவாயடித்தல் (இ.வ.);; to beat or strike gently. 2. ஓங்கி வலுவாயடித்தல்; to strike forcibly. [கை + தாங்கி + அடி-.] |
| கைதாங்கியுழு-தல் | கைதாங்கியுழு-தல் kaidāṅgiyuḻudal, பெ.(n.) 5செ.கு.வி.(v.i.); மேலாக உழுதல் (வின்.);; to plough lightly. [கை + தாங்கி + உழு-.] |
| கைதாங்கு-தல் | கைதாங்கு-தல் kaidāṅgudal, 5.செ.குன்றாவி(v.t.) 1. கைதாங்கல் கொடுத்தல்; to support one by the arm. 2. அழிவெய்தாமற் காத்தல்; to save from ruin. [கை + தாங்கு-.] |
| கைதாரம் | கைதாரம் kaitāram, பெ.(n.) செந்நெல்; red J paddy (சா.அக);. |
| கைதி | கைதி kaidi, பெ.(n.) சிறைப்பட்ட குற்றவாளி; prisoner, captive, accused person. [U.{} → த.கைதி.] |
| கைதீண்டு-தல் | கைதீண்டு-தல் kaidīṇṭudal, 5.செ.குன்றாவி(v.t.) 1. அடித்தல்; to beat. 2: முறைகேடாகப் பெண்டிரை pool8); to commit indecent assault on a .חaחחסW |கை திண்டு-) |
| கைது | கைது kaidu, பெ.(n.) சிறைக்காவல், தளை; imprisonment. [U.qaid → த.கைது.] |
| கைதுக்கு | கைதுக்கு1 kaidukkudal, 5.செ.குன்றாவி(v.t.) 1. கையை உயர்த்துதல்; to raise the hand. 2. இசைவு தெரிவித்தல்; to record agreement or approval. ம.கைபொக்கு [கை + தூக்கு-.] |
| கைதுசெய்-தல் | கைதுசெய்-தல் kaiduseydal, 1. செ.குன்றாவி. (v.t.) சிறைப்படுத்துதல்; to arrest, imprison. [கைது + செய்-,] [U.qaid → த.கைது.] |
| கைதுடை-த்தல் | கைதுடை-த்தல் ka-tuda, 4 செ.குன்றாவி.(v.t) súlLGILTŲl#sü; togiveupforgood; toforsake,abandon. எமைக் கைதுடைத் தேகவும்” (கம்பரா. நகர்நீ.159);. |கை துடை) |
| கைதூக்கல் | கைதூக்கல் kaitūkkal, பெ.(n.) 1. உதவுகை; help. 2. ஒப்புகை; acceptance. [கை + தூக்கல்.] |
| கைதூக்கிவிடு-தல் | கைதூக்கிவிடு-தல் kaidūkkiviḍudal, 5 செ.கு.வி. (v.t.) 1. கைதூக்கு-தல் பார்க்க;see kai-tūkku-, 2. கூட்டத்தின் நடுவில் கையைப் பிடித்து வெளியே இழுத்துவிடுதல் (கொ.வ.);; to drag out one by the hand from an assembly or crowd. [கை + தூக்கிவிடு-.] |
| கைதூக்கு | கைதூக்கு2 kaidūkkudal, 5 செ.குன்றாவி(v.t.) 1. வறுமையில் வருந்துவோர், நீரில் அழுந்துவோர் முதலியோரைக் காத்தல்; to lend a helping hand, to save from ruin; to rescue from sinking. 2. ஏற்றுக்கொள்ளுதற் குறியாகக் கையை உயர்த்துதல்; to hold up the hand to record agreement or approval. 3. விடுதலையாக்கல்; to get released, freed. 4. காப்பாற்றுதல்; to save. ம.கையொக்குக. [கை + தூக்கு-.] |
| கைதூவாமை | கைதூவாமை1 kaitūvāmai, பெ.(n.) 1. கையொழியாமை (திவா.); ; incessant, unceasing work. 2.ஒழியாவொழுக்கம்; moral conduct of departing from a right course. மறுவ.கையொழியாமை. [கை + தூவு + ஆ + மை. ‘ஆ’ எ.ம.இ.நி.] கைதூவாமை2 kaitūvāmai, பெ.(n.) படைக் கலன்களுள் ஒன்று,கைவிடாப்படை(அக.நி.);; a kind of weapon. [கை + தூவாமை.] |
| கைதூவு | கைதூவு1 kaidūvudal, 5 செ.கு.வி.(v.i.) கையொழிதல்; to have rest or leisure, as from one’s activities. “புலவற் களியொடு….. கை தூவலை” (கலித்.50);. [கை + தூவு-.] கைதூவு2 kaitūvu, பெ.(n.) செயலற்றிருக்கை; restorleisure from work. “நனிவிருந் தயருங் கைதூவின்மையின்”(நற்.280);. [கை + தூவு-.] |
| கைதேர்-தல் | கைதேர்-தல் kaitērtal, 2 செ.குன்றாவி(v.t.) திறமையடைதல்; to become an adept. [கை + தேர்-.] |
| கைதேர்ந்த | கைதேர்ந்த kaitērnta, பெ.அ. (adj.) கலையில், தொழிலில் திறமையான; adeptin craft, a profession etc. சமையற்கலையில் கைதேர்ந்த ஐந்து பேரால் இந்த விண்மீன் உணவகம் நடத்தப்படுகிறது. படகு ஒட்டுவதில் கை தேர்ந்தவன். [கை+தேர்ந்த] |
| கைதேர்ந்தவன் | கைதேர்ந்தவன் kaitērndavaṉ, பெ.(n.) திறமையாளன்; adept, expert. [கை + தேர்ந்தவன்.] |
| கைதை | கைதை1 kaidai, பெ.(n.) தாழை; fragrant screw-pine. “கைதையம்படப்பை” (அகநா.100:18);. ம.கைதா. [கள் : முள். கள் → கய் → கை (கைது); கைதை : முள்ளுள்ள தாழை(வட.வர.131); கைதை→Skt.kaitaka.] கைதை2 kaidai, பெ.(n.) எட்டி; nux vomicca. [கை → கைத்து → கைதை.] கைதை3 kaidai, பெ.(n.) வயல் (பிங்.);; paddy field. Skt. këdåra. [செய் → கை → கைதை(கொ.வ.);.] |
| கைதைச்சுரிகையன் | கைதைச்சுரிகையன் gaidaiccurigaiyaṉ, பெ.(n.) தாழையை வாளாக உடைய காமன் (பிங்.);; lit., one having screw-pine for his weapon: Kama, the god of love. மறுவ.காமன். [கைதை + சூரி → கரி + கையன் – கைதைகரி கையன் (கொ.வ);.] தாழையை வாளாக உடையவனாதலால் இப் பெயர் பெற்றிருக்கலாம். |
| கைதொடன் | கைதொடன் kaidoḍaṉ, பெ.(n.) 1.உதவிசெய்வோன்; one who helps or serves. “தூசித்தலையிலவர்களே கைதொடராய்” (ஈடு.4,4:1);. 2. அறிவாற்றலுடன் செயலைச் செய்வோன்; one who does an act intelli-gently. “ஜநநிபக்கல் அபராதத்திற் கை தொடனாயிருக்க” (ஈடு.6,10:10);. [கை + தொடு + அன்.] |
| கைதொடல் | கைதொடல்1 kaidoḍal, பெ.(n.) 1.உண்கை(பிங்.);; taking food, eating. 2. உணவு; food as taken by the hand. “கைதொடல்கண்படைவெய்துறுபெரும்பயம்” (ஞானா.35);. 3.சிறிதுண்ணல்; eating a small quantity. [கை + தொடல்.] கைதொடல்2 kaidoḍal, பெ.(n.) திருமணம்(யாழ்.அக.);; marriage. [கை + தொடல்.] |
| கைதொடு | கைதொடு1 kaidoḍudal, 20 செ.குன்றாவி.(v.t.) 1. கையினால் மெய்தீண்டுதல்; to touch with the hand. “சக்கரவர்த்தித் திருமகன் இத்தைக் கை தொட்டுச் சிட்சித்து” (ஈடு.4,2:8);. 2. சூளுரைத்தல்; to lift one’s hand, in oath to swear. 3. உண்ணுதல் (பிங்.);; to eat. 4. தொடங்குதல்; to commence, begin, enter upon. அவன் கை தொட்ட நிகழ்வு(காரியம்);நல்லதே(உ.வ.);. 5. மணஞ் செய்தல்(வின்.);:to marry. [கை + தொடு-.] கைதொடு2 kaidoḍuddal, 17 செ.குன்றாவி.(v.t.) 1.திருமணஞ் செய்துவைத்தல்(வின்.);: to marry,join hands in marriage. [கை + தொடு-.] |
| கைதொடுமானம் | கைதொடுமானம் kaidoḍumāṉam, பெ.(n.) உதவி; help, support. “தன் வெறுமையைக் கை தொடுமானமாகக் கொண்டு” (ஈடு.6,10:8);. [கை + தொடு – மானம்.] |
| கைதொழு-தல் | கைதொழு-தல் kaidoḻudal, பெ.(n.) 1 செ.குன்றாவி.(v.t.); 1. வணங்குதல்; to adore, worship as with hands joined. “காதலி தன்னொடு கைதொழு தெடுத்து” (மணிமே.13:20);. 2. கும்பிடுவதற்காகக் கையைத் தலைமேல் உயர்த்துதல்; to lift up the hands above the head,as in adoration or worship. “கைதொழூஉப்பரவி”(திருமுருகு.252);. {கை + தொழு-.] |
| கைதோணி | கைதோணி kaitōṇi, பெ.(n.) ஒருவகைப் பூடு; a kind of an unknown herb (சா.அக.);. [கை + தோணி.] நீர்வளமுள்ள இடங்களில் வளரும் பூண்டானதால் இப் பெயர் பெற்றிருக்கலாம். |
| கைதோய்வு | கைதோய்வு kaitōyvu, பெ.(n.) கையால் எட்டிப்பிடிக்கக் கூடிய நிலை; being within hand’s reach. “கைதோய் வன்ன கார்மழைத் தொழுதி” (மலைபடு.362);. [கை + தோய்வு.] |
| கைத்தகம் | கைத்தகம் gaittagam, பெ.(n.) தாழை; fragrant screw-pine. 2. எட்டி; nux-vomica (சா.அக.);. [கை(கசப்பு); → கைத்தகம்.] |
| கைத்தகோடரம் | கைத்தகோடரம் kaittaāṭaram, பெ.(n.) எட்டி (மலை.);nux-vomica. [கைத்த(கசப்பான); + கோடரம்.] |
| கைத்தடி | கைத்தடி1 kaittaḍi, பெ.(n.) 1. ஊன்றுகோல்; walking-stick. “ஒரு கைத்தடி கொண்டடிக்கவோ வலியிலேன்” (அருட்பா.5.தெய்வமணி.31);. 2.சிறுதடி; short stick. க. கயிகம்ப, கெய்கோலு:து.கயிகம்ப;பட. கைதடி. [கை + தடி.] கைத்தடி kaittaḍi, பெ.(n.) 1. சொத்துரிமைப் பங்கீட்டு ஆவணம்; partition deed. 2.தற்குறிக்கீற்று: mark of signature made by an illiterate person. ம.கைத்தடி. [கை + தடி. கைத்தடி : ஊன்றுகோல்போல் பாதுகாப்பான ஆவணம் அல்லது கையெழுத்து.] கைத்தடி3 kaittaḍi, பெ.(n.) கையாள்; man employed to execute one’s unlawful wishes. அவருக்கு கைத்தடியாக இருப்பதில் இவனுக்கு வெட்கமில்லையே! [கை + தடி.] கையுடன் இருக்கும் தடியைப்போல் ஒருவன் பின் சென்றொழுகும் தன்மை கொண்டோன் கைத்தடி எனப்பட்டான். |
| கைத்தடிப்படி | கைத்தடிப்படி kaittaḍippaḍi, பெ.(n.) 1. கையிழப்பு பார்க்க;see kai-y-ilappu. 2. ஊன்றுகோல்; crutch. து. கைத்தண்டா. |
| கைத்தட்டு | கைத்தட்டு kaittaṭṭu, பெ.(n.) குவளை அல்லது ஏனம்; a small cup or basin. க. கெய்பட்லு. [கை + தட்டு.] |
| கைத்தண்டம் | கைத்தண்டம் kaittaṇṭam, பெ.(n.) 1. கையிழப்பு பார்க்க;see kai-y-ilappu. 2. ஊன்றுகோல்; crutch. து. கைத்தண்டா. [கை + தண்டம்.] |
| கைத்தண்டலம் | கைத்தண்டலம் kaittaṇṭalam, பெ.(n.) காஞ்சிபுரம் மாவட்டச் சிற்றூர்: a village in Kanjipuram Dt. [கை(சிறு); + தண்டலம்.] |
| கைத்தண்டு | கைத்தண்டு kaittaṇṭu, பெ.(n.) 1.கைத்தடி; hand stick. 2. ஒக(யோக);த் தண்டு; resting rod used by ascetics in yoga. [கை + தண்டு.] |
| கைத்தபழம் | கைத்தபழம் kaittabaḻm, பெ.(n.) சோற்றுக் கற்றாழைப் பால்; the juice of aloe-pulp (சா.அக.);. [கை → கைத்த + பழம்.] |
| கைத்தப்பு | கைத்தப்பு kaittappu, பெ.(n.) கைக்குற்றம்பார்க்க: See kai-k-kurram. ம. கைத்தப்பு;க. கெய்தப்பு. [கை + தப்பு.] |
| கைத்தரவு | கைத்தரவு kaittaravu, பெ.(n.) வரவு வைத்த கைச்சாத்து. “கார்தோறும் குடுத்து இவர் கையால் தரவு கொள்வோமாகவும்”(தெ.இ.க.தொ.5க.415);. [கை + தரவு.] |
| கைத்தராசு | கைத்தராசு kaittarācu, பெ.(n.) சிறு நிறைகோல் (தராசு);; small balance used for weighing precious metals and stones. [கை + தராசு.] |
| கைத்தறி | கைத்தறி kaittaṟi, பெ.(n.) கையால் இயக்கப்படும் தறி, handloom, கைத்தறி ஆடைகள் கைத்தறி நெசவாளர்கள். [P] [கை+தறி] |
| கைத்தலம் | கைத்தலம்1 kaittalam, பெ.(n.) உள்ளங்கைப்பகுதி; palm of the hand, metacarpus. “கைத்தலமொத்தா” (பெருங்.வத்தவ.14:71);. கைத்தலமும் முக அளவும் க.கெய்தள [கை + தலம்.] கைத்தலம்2 kaittalam, பெ.(n.) கைத்தலைப்பூண்டு பார்க்க;see kaittalai-p-pundu. [கைத்தலை → கைத்தலம்.] |
| கைத்தலம்பால் | கைத்தலம்பால் kaittalambāl, பெ.(n.) கன்றில்லாமல் கறக்கும் ஆவின் பால்; cow’s milk drawn without the aid of a calf(சா.அக.);. ம.கைத்தலம். [கை + தலம் + பால்.] |
| கைத்தலைப்பூண்டு | கைத்தலைப்பூண்டு kaittalaippūṇṭu, பெ.(n.) சிற்றெழுத்தாணிப் பூடு (சித்.அக.);; a variety of style plant. [கைத்தலை + பூண்டு.] |
| கைத்தல் | கைத்தல்1 kaittal, தொ.பெ.(vbl.n.) 1.கசத்தல்; tasting bitter. 2. களிம்பேறல்; forming verdigris (சா.அக.);. 3. அலைத்தல்; torment. 4. சினத்தல்; to get angry. 5. வெறுத்தல்; to hate. [கை + கைத்தல்.] கைத்தல்2 kaittal, பெ.(n.) அணி செய்தல் (அலங்கத்தல்);; to decorate. [கை → கைத்தல். கை : அழகு.] கைத்தல்3 kaittal, பெ.(n.) கறிவகை; a kind of vegetable curry. “கரியல் பொடித்துவல் கைத்தல்” (சரவண.பணவிடு.,274);. [கை → கைத்தல்.] |
| கைத்தளம் | கைத்தளம் kaittaḷam, பெ.(n.) கேடய வகை (சீவக.1561, உரை.);; a kind of shield. [கை + தளம்.] |
| கைத்தளை | கைத்தளை kaittaḷai, பெ.(n.) இருகைகளையும் பிணைத்துக் கட்டும்படியாக அமைந்த, சிறு தொடரி (சங்கிலி);யால் இணைக்கப்பட்ட, மாழையாலான இருவட்டங்களைக் கொண்ட கருவி; handcuff. “கைத்தளை நீக்கி யென்முன் காட்டு” (பட்டினத்.பொது.42);. மறுவ. கைவிலங்கு. ம.கைத்தள. [கை + தளை.] |
| கைத்தவம் | கைத்தவம்2 kaittavam, பெ.(n.) மிகுபுகழ்; great eulogy, praise, panegyric. [கை + தவம். கைமேல் பயன் கண்டதவமுயற்சி, புகழ்.] |
| கைத்தவறு | கைத்தவறு kaittavaṟu, பெ.(n.) கைக்குற்றம் பார்க்க;see kai-k-kurram. க. கெய்தப்பு [கை + தவறு.] |
| கைத்தா | கைத்தா kaittā, பெ.(n.) காட்டாமணக்கு (மலை.); பார்க்க;see kättāmanakku. [கை + தாள் – கைத்தாள் → கைத்தா.] |
| கைத்தாக்கு | கைத்தாக்கு kaittākku, பெ.(n.) 1. கையினால் கொடுத்த குத்து; a blow dealt with the hand. 2. கையினால் குத்துகை; pounding with the hand as rice (சா.அக.);. [கை + தாக்கு.] |
| கைத்தாங்கலாக | கைத்தாங்கலாக kaittāṅkalāka, வி.அ. (adv.) நடக்க முடியாத நிலையில் இருப்பவரைக் கீழே விழாத வகையில் உதவி செய்யும் பொருட்டு (ஆதரவாக);த் தாங்கிப் பிடித்தல்; throwing the hand around a person in a supporting manner, மயங்கி விழுந்தவரைக் கைத்தாங்கலாக அழைத்துப் போய் வண்டியில் ஏற்றினார்கள் [கை+தாங்கலாக.] |
| கைத்தாங்கல் | கைத்தாங்கல் kaittāṅgal, பெ.(n.) கையால் தாங்கி நிற்கை; supporting a person or thing by the arms. மருத்துவமனையிலிருந்து ஒரு நோயாளியைக் கைத்தாங்கலாக அழைத்து வந்தனர் (இ.வ.);. ம.கைத்தாங்ஙு. [கை + தாங்கல்.] |
| கைத்தாமணக்கு | கைத்தாமணக்கு kaittāmaṇakku, பெ.(n.) காட்டாமணி (சித்.அக.);; Malabar nut. [கைத்த + ஆமணக்கு.] |
| கைத்தாம்புலம் | கைத்தாம்புலம் kaittāmbulam, பெ.(n.) பெண் ஊறுதிக்காக இருவீட்டாரும் வெற்றிலை பாக்கு மாற்றிக் கொள்ளுதல்; agreement for marriage approved by exchange of betel. [கை+தாம்புலம்] |
| கைத்தாயர் | கைத்தாயர் kaittāyar, பெ.(n.) கைத்தாய் பார்க்க: see kaithaay. “ஓர் உயிரைத் தருகின்ற போதிருகைத்தாயர் தம்பால் வருகின்ற நண்பு” (திருமந்.459);. |
| கைத்தாய் | கைத்தாய் kaittāy, பெ.(n.) 1. தூக்கி வளர்த்த தாய்; nurse. 2.செவிலித்தாய்; wet-nurse. 3.வளர்ப்புத்தாய்; foster-mother(சா.அக.);. [கை + தாய்.] |
| கைத்தாராளம் | கைத்தாராளம் kaittārāḷam, பெ.(n.) பெருந்தன்மை, வள்ளன்மை; open-handedness, liberality. க. கெய்தொட்டது. [கை + தாராளம்.] |
| கைத்தாளம் | கைத்தாளம் kaittāḷam, பெ.(n.) 1. தாளக்கருவி; cymbals. “கொக்கரை கைத்தாள மொந்தை” (தேவா.965:7);. 2. கையாற் போடுந் தாளம்; beating time with the hand. “செத்தவ ரெழுவ ரென்று கைத்தாளம் போடு” (அருட்பா.vi,நாமாவ.161);. கைத்தாளம் ம.கைத்தாளம்; க.,து. கைதாள;தெ.கைதாளமு. [கை + தாளம்.] |
| கைத்தாள் | கைத்தாள் kaittāḷ, பெ.(n.) 1. திறவுகோல்; key. “கைத்தாள் கொண்டாருந் திறந்தறிவா ரில்லை” (திருமந்.2604);. 2. கையாலிடுந் தாழ்ப்பாள்; bolt 3. கைத்தாழ் பார்க்க;see kai-t-tal. க.கெய்தாழு. [கை + தாழ் → கைத்தாள்.] |
| கைத்தாழ் | கைத்தாழ் kaittāḻ, பெ.(n.) திறவுகோல்; key. [கை + தாழ்.] இதனைக்கைத்தாள் என்பதுகொள்கைவழக்கு. |
| கைத்திட்டம் | கைத்திட்டம் kaittiṭṭam, பெ.(n.) 1.கைமதிப்பு; rough estimation of the weight or measure of a thing by the hand. கைத்திட்டமாக உப்புப்போடு (உ.வ.);. 2. அறுதியிட்டகையிருப்புத் தொகை; balance struck in accounts, balance in hand. [கை + திட்டம்.] |
| கைத்திட்டு | கைத்திட்டு kaittiṭṭu, பெ.(n.) ஆவணம் (T.A.S.);; document, deed, record of gift. மணற்குடி யூரோம் கைத்தீட்டு. ம.கைத்தீட்டு. [கை + (தீற்று);தீட்டு.] |
| கைத்திண்டு | கைத்திண்டு kaittiṇṭu, பெ.(n.) கைக்கு வைத்துக் கொள்ளும் சாய்வுத் திண்டு; a pillow to lean on. [கை + திண்டு.] |
| கைத்திரி | கைத்திரி kaittiri, பெ.(n.) இடக்கை என்னுந் தோற்கருவி; a small drum. “குழையுடற் றளைவிரி கைத்திரிகறங்க” (கல்லா.8:12);. [கை + திரி.] |
| கைத்திருத்தம் | கைத்திருத்தம் kaittiruttam, பெ.(n.) கையால் செய்வதில் நேர்த்தியான ஒழுங்கு deftness in doing something with the hand, தையல் வேலையானாலும் சமையல் வேலையானாலும் பாட்டியின் கைத்திருத்தம் யாருக்கும் வராது [கை+திருத்தம்] |
| கைத்திறன் | கைத்திறன் kaittiṟaṉ, பெ.(n.) கைக்குணம்; the virtue or efficacy of the hand. 2. பயிற்சி; practice. 3. பட்டறிவு; experience. து. கய்யெட்டெ. [கை + திறன்.] |
| கைத்தீட்டு | கைத்தீட்டு2 kaittīṭṭu, பெ.(n.) நேரில் கையெழுத்திட்டு எழுதிக் கொடுத்த உறுதிச் சீட்டு.”பஞ்சவந் பிரமராயர்க்கு நாங்கள் கைத்தீட்டு இட்டுக் குடுத்த (ஆவ.10-17-2 பக்.42-4);(கி.பி.1072);. [கை + தீட்டு.] |
| கைத்தீன் | கைத்தீன் kaittīṉ, பெ.(n.) கையில் வைத்து ஊட்டும் உணவு (வின்.);; food given to calves, lambs, kids, etc., by hand, food for infants. ம.கைத்தீற்றி. [கை + தீன்.] |
| கைத்தீபம் | கைத்தீபம் kaittīpam, பெ.(n.) 1.கைத்தீவட்டி(பிங்.); பார்க்க;see kai-t-tivatti. 2.கைவிளக்கு; small,hand lamp. கைவிளக்கை வைத்துக்கொண்டு கிணற்றில் விழுவார்களா?(பழ.);. க.கெய்தீவிகெ. [கை + தீபம்.] |
| கைத்தீற்றி | கைத்தீற்றி kaittīṟṟi, பெ.(n.) கையால் ஊட்டும் தீனி; foodgiven to calves, lambs, kids,etc.by hand, food for infants. மறுவ.கைத்தீனி. ம.கைத்தீற்றி. [கை + தீற்றி.] |
| கைத்தீவட்டி | கைத்தீவட்டி kaittīvaṭṭi, பெ.(n.) சிறு தீவட்டி; small torch. [கை + தீவட்டி.] |
| கைத்தீவர்த்தி | கைத்தீவர்த்தி kaittīvartti, பெ.(n.) கைத்தீவட்டி (வின்.); பார்க்க;see kai-t-tivatti. [கை + தீவர்த்தி.] |
| கைத்து | கைத்து1 kaittu, பெ.(n.) செல்வம்; lit., that which is in hand, gold, riches,wealth. “கைத்துண்டாம்போழ்தே கரவா தறஞ்செய்மின்”(நாலடி.19);. [கையகத்தது → கைத்து.] கைத்து2 kaittu, பெ.(n.) வெறுப்பு(சூடா.);; abhorrence. [கை(தவறு);கசப்பு → கைத்து.] |
| கைத்துக்கு | கைத்துக்கு2 kaittukku, பெ.(n.) கையினால் எடுக்கக் கூடிய ஒரு தூக்களவு; so much weight as can be lifted by hand. [கை + தூக்கு. தூக்கு : 16 சேர் கொண்ட எடையளவு.] |
| கைத்துடுக்கு | கைத்துடுக்கு kaittuḍukku, பெ.(n.) கையால் அடித்தல் போன்றுசெய்யுந் தீய பழக்கம்; bad habit of the hand, as fighting, pilfering etc. கைத்துடுக்கால் சீரழிபவர்கள் மிகுதி(உ.வ.);. க.கெய்துடுகு. [கை + துடுக்கு.] |
| கைத்துடுப்பு | கைத்துடுப்பு kaittuḍuppu, பெ.(n.) 1.கூழ்முதலியன துழாவுங் கருவி; small ladle used in stirring liquid food. “கைத்துடுப்பால்…….. துழாவித் துழாவிக் கொள்ளீரே”(கலிங்.537);. 2. படகு வலிக்குஞ் சிறிய தண்டு; small oar. [கை + துடுப்பு.] |
| கைத்துணிகரம் | கைத்துணிகரம் gaittuṇigaram, பெ.(n.) கைத்துணிச்சல்பார்க்க;see kai-t-tuniccal. [கை + துணிகரம்.] |
| கைத்துணிச்சல் | கைத்துணிச்சல் kaittuṇiccal, பெ.(n.) துணிந்த செய்கை (இ.வ.);; act of daring. [கை + துணிச்சல்.] |
| கைத்துணை | கைத்துணை1 kaittuṇai, பெ.(n.) உதவியாள்; a helpmate. க.கெய்குடக. [கை + துணை.] கைத்துணை2 kaittuṇai, பெ.(n.) உதவி,துணைமை; help, assistance. கைத்துப்பாக்கி க. கெய்தநரவு. [கை + துணை.] |
| கைத்துண்டு | கைத்துண்டு kaittuṇṭu, பெ.(n.) 1. கைக்குட்டை, hand kerchief. 2. கைமரம்; pair of rafters framed together with a joint at one end. ம.கைத்துகில். [கை + துண்டு.] |
| கைத்துப்பாக்கி | கைத்துப்பாக்கி kaittuppākki, பெ.(n.) கைத்துமுக்கிபார்க்க;see kai-t-tumukki. மறுவ. கைத்துமிக்கி, ம.கைத்தோக்கு. [கை + துப்பாக்கி.] |
| கைத்துப்போ-தல் | கைத்துப்போ-தல் kaittuppōtal, 8 செ.கு.வி.(v.i.) களிம்பேறல்; forming verdigris (சா.அக.);. [கைத்து + போ-.] |
| கைத்துமுக்கி | கைத்துமுக்கி kaittumukki, பெ.(n.) 1.கைத்துவக்கு, கைத்துப்பாக்கி; hand pistal. [கை + துமுக்கி.] |
| கைத்துரண் | கைத்துரண்1 kaitturaṇ, பெ.(n.) சிறுதூண்; small pillar. [கை + தூண்.] |
| கைத்துருவுமனை | கைத்துருவுமனை kaitturuvumaṉai, பெ.(n.) சிறு துருவுமணை; nut scraper. [கை + துருவு + மணை.] |
| கைத்துவக்கு | கைத்துவக்கு1 kaittuvakku, பெ.(n.) கைத்துமுக்கி (துப்பாக்கி);பார்க்க;see kai-t-tumukki. [கை + துவக்கு.] கைத்துவக்கு2 kaittuvakku, பெ.(n.) சிறு தொடரி (சங்கிலி);; a small chain. [கை + துவக்கு.] |
| கைத்தூண் | கைத்தூண்2 kaittūṇ, பெ.(n.) பிறர் கையால் உண்கை; accepting food from another’s hands. “கடவதன்றுநின் கைத்தூண் வாழ்க்கை” (சிலப்,15:57);. [கைத்து + ஊண்.] |
| கைத்தூய்மை | கைத்தூய்மை kaittūymai, பெ.(n.) 1. களவு செய்யாமை; not to cover other’s property. 2. கையூட்டுப் பொறாமை; non-taking of bribes. 3. திருத்தமான கைத்தொழில்; fine workmanship. [கை + தூய்மை.] |
| கைத்தேக்கு | கைத்தேக்கு kaittēkku, பெ.(n.) சிறு தேக்கு five creeper, Cleodendron serratum alias C.Javanicum (சா.அக.);. [கை+தேக்கு.] கைத்தேக்கு kaittēkku, பெ.(n.) சிறுதேக்கு; firecreeper(சா.அக.);. [கை + தேக்கு.] |
| கைத்தேங்காய் | கைத்தேங்காய் kaittēṅgāy, பெ.(n.) புத்தாண்டு நாளன்று தேங்காயை உருட்டியாடும் விளையாட்டு வகை(வின்.);; a new year’s game in which coconuts are rolled forcibly one against another and broken. [கை + தேங்காய்.] |
| கைத்தொண்டு | கைத்தொண்டு kaittoṇṭu, பெ.(n.) 1. கையினாற் செய்யும் கோயிற் பணிவிடை; manual service in temple. “காசுவாசியுடன் பெற்றார் கைத்தொண்டாகு மடிமையினால்” (பெரியபு:திருநாவுக்.260);. 2. குற்றேவல்; menial service. மறுவ கைப்பணி. [கை + தொண்டு.] |
| கைத்தொழில் | கைத்தொழில் kaittoḻil, பெ.(n.) 1.கையாற்செய்யும் வேலை; manual art, industries, handicrafts. “கைத்தொழி லமைத்தபின்” (பெருங்.இலா வாண. 10:91);. 2. பெண்களது கைத்திறனை வெளிக் காட்டும் ஐவகைத் தொழில்; the five skilled accomplishments of women. இலை எழுதுதல், கிள்ளல், பூத்தொடுத்தல், யாழ்.மீட்டுதல் போன்றவை பெண்கள் கைத்திறன் காட்டும் ஐவகைத் தொழில்கள் எனப் பண்டைக்காலத்தில் கருதப்பட்டது ம.கைத்தொழில். [கை + தொழில்.] |
| கைத்தொழும்பு | கைத்தொழும்பு kaittoḻumbu, பெ.(n.) கைத் தொண்டு (யாழ்.அக.);; manual service. [கை + தொழும்பு.] |
| கைத்தோணி | கைத்தோணி kaittōṇi, பெ.(n.) கையினால் இயக்கும் ஒரு வகை மரக்கலம்; a kind of wooden boat which is propelled by hands. [கை + தோணி.] |
| கைநடுக்கம் | கைநடுக்கம் kainaḍukkam, பெ.(n.) மூப்பு, அச்சம் முதலியவற்றால் கைநடுங்குகை; tremulousness of the hand through age, nervousness, etc. (செ.அக.);. [கை + நடுக்கம்.] |
| கைநட்டம் | கைநட்டம் kainaṭṭam, பெ.(n.) கையிழப்பு பார்க்க: See kai-y-ilappu. ம.கைநழ்டம். Skt. nasta → த.நட்டம். |
| கைநனை-த்தல் | கைநனை-த்தல் kainaṉaittal, 4 செ.கு.வி.(v.i.) 1. பிறர் வீட்டில் உணவு கொள்ளுதல்; to partake of food in another’s house. 2. சாவு வீட்டில் உண்ணுதல்; to partake of food in a deseased person’s house. துக்க வீட்டில் கைநனைக்காமல் போகலாமா?(நெல்லை.);. [கை + நனை-.] உணவு கொள்வதற்கு முன்னும் உண்டபின்னும் நீரால் கையைக் கழுவும் பண்பாட்டுப் பழக்கத்தின் அடிப்படையில் கைநனைத்தல் உண்ணுதலைக் குறித்தது. |
| கைநன்றி | கைநன்றி kainaṉṟi, பெ.(n.) செய்ந்நன்றி(யாழ்.அக.);; gratitude. [கை + நன்றி.] |
| கைநம்பிக்கை | கைநம்பிக்கை kainambikkai, பெ.(n.) 1.கையடித்து உறுதிமொழி கூறுகை; giving or striking the hand in token of a promise or assurance. 2. கைக்கடன்; temporary oral loan. கை நம்பிக்கை யாகக் கொடு (செ.அக.);. து. கைநம்பி.கெ. [கை + நம்பிக்கை.] |
| கைநறுக்கு | கைநறுக்கு kainaṟukku, பெ.(n.) கைச்சீட்டு பார்க்க;see kai-c-cittu. [கை + நறுக்கு.] |
| கைநலப்பால் | கைநலப்பால் kainalappāl, பெ.(n.) கன்றின் உதவியின்றிக்கையா ற்கறக்கும்பால்(யாழ்.அக.);; milk drawn by the hand without the help of the calf. [கை + நலம் + பால்.] |
| கைநலம் | கைநலம்1 kainalam, பெ.(n.) வாய்ப்பான உள்ளங்கைக் கோடு (அஸ்தரேகை); அமைந்தவர் மருத்துவத் தொழிலில் கைதொட்டவுடன் குணமாகும் தன்மை; [கை + நலம்.] கைநலம்2 kainalam, பெ.(n.) 1.கைராசி; auspiciousness of one’s hand supposed to produce the desired end. 2. கைநலப்பால்(யாழ்.அக.); பார்க்க;see kai-nala-p-pâl. [கை + நலம்.] |
| கைநாடி | கைநாடி kaināṭi, பெ.(n.) 1. மணிக்கட்டில் துடிக்கும் குருதிநாடி; the pulse feltat the wrist. 2. கையில் ஓடும் நாடி; arteries of the arm (சா.அக.);. [கை + நாடி.நாளி → நாடி.] |
| கைநாட்டு | கைநாட்டு1 kaināṭṭudal, 5 செ.குன்றாவி.(v.t.) 1. கையெழுத்திடுதல்; to affix or put one’s signature. As in a bond. 2.தற்குறிக் கீறல்; an illiterate person making his mark in token of his signature. [கை + நாட்டு. நட்டு → நாட்டு, நாட்டுதல் : நிறுவுதல், நிலைநிறுத்தம் படைக்கல், எழுதுதல்.] கைநாட்டு kaināṭṭu, பெ.(n.) 1.கையெழுத்து; signature. “கோவலனார் கைநாட்டைக் கொற்றவனுந்தான்பார்த்து” (கோவ.க.25);. 2.எழுத்தறிவு அற்றவன்; an illiterate person. க. கெய்றுது. மறுவ, கைக்கீறு. [கை + நாட்டு.] |
| கைநாட்டுப் பேர்வழி | கைநாட்டுப் பேர்வழி kaināṭṭuppērvaḻi, பெ.(n.) படிப்பறிவற்றவன்: ignorant. இவன் ஒரு கைநாட்டு. பேர்வழி. எதைப் பேசியும் பயனில்லை(உ.வ);. மறுவ. தற்குறி. [கைநாட்டு + பேர்வழி.] |
| கைநிமிர்-தல் | கைநிமிர்-தல் kainimirtal, 2 செ.கு.வி.(v.i.) அகவையாகி(வயதாகி);வளர்தல்: to grow up to adolescence. கைநிமிர்ந்த பிள்ளை இருக்கும் போது உனக்கென்னகவலை(நெல்லை);. [கை + நிமிர்-.] |
| கைநிமிர்ந்தாதனம் | கைநிமிர்ந்தாதனம் kainimirndātaṉam, பெ.(n.) இருக்கை (ஆசன); வகையுளொன்று (தத்துவப்.108, உரை);; a yogic posture. [கை + நிமிர்த்து + ஆதனம்.] |
| கைநிரை | கைநிரை kainirai, பெ.(n.) ஒலைகளால் செய்த தடுப்புத்திரை, நிரைச்சல்; screen of plaited palm, leaves. “கைநிரை கட்டிக்கொண்டிருக்கிறநாளிலே” (ஈடு. 4,6:6);. [கை + நிரை. கை + ஒழுங்கு.] |
| கைநிறக்கல் | கைநிறக்கல் kainiṟakkal, பெ.(n.) செம்பாறைக்கல்; gravel stone (சா.அக.);. [கை + நிறம் + கல்.] |
| கைநிறம் | கைநிறம் kainiṟam, பெ.(n.) வெண்கலம்; bell-metal (சா.அக.);. [கை + நிறம்.] |
| கைநிறை | கைநிறை kainiṟai, பெ.(n.) கையால் தூக்கி மதிக்கும் நிறை; estimation of the weight of a thing by lifting it in hand. மறுவ.கைமதிப்பு [கை + நிறை.] |
| கைநிறைய | கைநிறைய1 kainiṟaiya, வி.அ.(adv.) கை கொண்டளவு: handful(சா.அக.);. [கை+நிறைய] கைநிறைய2 kainiṟaiya, வி.அ. (adv.) தேவைக்கும் அதிகமான; of income, remuneration substantially; more than enough. கைநிறையச் சம்பளம் வாங்கும் மாப்பிள்ளை நிறையச்சம்பாதிக்கும்போது உனக்கு என்ன குறை? [கை+நிறைய] |
| கைநிலை | கைநிலை kainilai, பெ.(n.) வீரர்கள் தங்குதற்குப் பாசறையில் தனித்தனியே அமைக்கப்பட்ட குடிசை (பு.வெ.4:7,2-உரை);; soldiers lines, military guarters in a camp. [கை + நிலை. கை : திறமை, திறமைமிக்க மறவர்.] |
| கைநீட்டம் | கைநீட்டம் kainīṭṭam, பெ.(n.) 1.கொடை(இ.வ.);; presents, gift, donation. 2.அன்றன்று கடை திறந்தவுடன் முதன்முதலாக விற்கும் பண்டத்திற்கு வாங்கும் முதற்பணம்; first cash payment received for the first article sold after opening the shop for the day. ம. கைநீட்டம். [கை + நீட்டம்.] |
| கைநீட்டல் | கைநீட்டல் kainīṭṭal, பெ.(n.) அடித்தல்; striking. கைநீட்டு2-தல் பார்க்க;see kai-nittu-. [கை + நீட்டல்.] |
| கைநீட்டு | கைநீட்டு1 kainīṭṭudal, 5 செ.குன்றாவி.(v.t.) 1. கையை நீட்டுதல்; to stretch out the hand. 2.இரத்தல்; to beg, pray for gift or charity. 3.திருடுதல்; to steal, pilfer. 4. கையூட்டு வாங்குதல்; to accept bribe. ம. கைநீட்டுக;க.கெய்நீடு. [கை + நீட்டு-.] கைநீட்டு2 kainīṭṭudal, 5 செ.குன்றாவி(v.t.) 1. அடிக்கக் கையோங்குதல்; to lift one’s hand against another. 2.இழவு வினாவுதல் (விசாரித்தல்);; to condole. ம.கைநீட்டுக. [கை + நீட்டு-.] |
| கைநீளம் | கைநீளம் kainīḷam, பெ.(n.) 1. தாராளம் (இ.வ.);; liberality. 2. திருடுங்குணம்; thievish tendency. 3. அடிக்குங் குணம்; show of power, disposition to strike. ம. கைநீளம். [கை + நீளம்).] |
| கைநீளல் | கைநீளல் kainīḷal, பெ.(n.) கையால் அடித்தல்; beat with hand. 2.கையூட்டு பெறுதல்; receiving bribe. [கை+நீளல்] |
| கைநீளு-தல் | கைநீளு-தல் kainīḷudal, 16 செ.கு.வி.(v.i.) 1. கொடுத்தல்:to give. “கைநீண்டதயரதன்” (கம்பரா.);. 2. அடித்தல்; to beat. இனிக் கண்டபடி கைநீளுதல் கூடாது. 3. திருடுதல்; to steal. எல்லா விடங்களிலும் கை நீண்டதால் அவனது பெயர் கெட்டுப் போனது (உ.வ.); [கை + நீளு. நீள் → நீளு.] கையை நீட்டிச் செய்யும் வினைகளானதால் இப் பெயர்பெற்றதாம். |
| கைநீள்-தல் | கைநீள்-தல் kainīḷtal, செ.கு.வி. (v.i.) கட்டுப்பாட்டை மீறி தேவை இல்லாமல் கையால் அடித்தல்; behave intemperately where restraint is needed. பேச்சு நடந்து கொண்டிருந்த போதே அவன் கைநீண்டு விட்டது. [கை+ நீள்-தல்.] |
| கைநுணுக்கம் | கைநுணுக்கம் kainuṇukkam, பெ.(n.) 1. அழகான வேலைப்பாடு; fine workmanship. 2. இவறற்றனம் (கஞ்சத்தனம்);; close-fistedness. [கை + நுணுக்கம்.] கையினால் நுணுகிச்செய்யும் வேலை. |
| கைநெகிழ்-தல் | கைநெகிழ்-தல் gainegiḻtal, 2.செ.குன்றாவி. (v.t.) 1. கைதவற விடுதல்; to let slip: “மெள்ள மெள்ளக்கைநெகிழவிட்டாய்”(தாயு.பராபர.334);. [கை + நெகிழ்-.] |
| கைநெசவு | கைநெசவு kainesavu, பெ.(n.) 1.சிறுநெசவுத்தறி; a small loom. 2. கையால் நெய்யும் தறி; a loom that is marked by hand. க. கெய்மக்க. [கை + நெசவு.] |
| கைநெரி-த்தல் | கைநெரி-த்தல் kainerittal, 4 செ.குன்றாவி.(v.t.) துக்கம் அச்சம்முதலியவற்றால்கையைநெரித்தல்; to wring one’s hands in grief, fear, etc. “மந்தி எழுந்தெழுந்து கைநெரிக்கும் ஈங்கோயே” (ஈங்கோய்.);. [கை + நெரி-.] |
| கைநெல்லி | கைநெல்லி kainelli, பெ.(n.) உள்ளே இருக்கும் நிறத்தையே புறத்திலும் காட்டும் நெல்லிக்கனி; nelli fruit which is transparent as a crystal for clarity. “தோற்றர வடுக்குங் கைநெல்லி போலெனல்” (மணிமே.29:83);. மறுவ..அங்கையுள் நெல்லி,உள்ளங்கை நெல்லிக்கனி, உள்ளகங்காண்நெல்லி. [அங்கை → கை → நெல்லி.] அகம் + காண் + நெல்லி – அகங்காண் நெல்லி – அங்கைநெல்லி – கைநெல்லி எனத் திரிந்தது. உள்ளே இருக்கும் நிறமே புறத்தும் காணப்படுதலால் அகங்காண் நெல்லி எனப் பெயர் பெற்றது. உள்ளங்கை நெல்லி என்பது பொருட் பொருத்தமற்றது. |
| கைநொடி-த்தல் | கைநொடி-த்தல் kainoṭittal, 4 செ.கு.வி.(v.i.) செல்வ நிலைமை கெடுகை; to be reduced in circumstances, reduced to poverty. “செட்டியார் கைநொடித்துப் போனார்” (செஅக.);. [கை+நொடி-த்தல்.] கைநொடி-த்தல் kainoḍittal, 4செ.குன்றாவி.(v.t.) 1. பெருவிரல் நடுவிரல் இரண்டும் கொண்டு (கைவிரலால்); ஒலியுண்டாக்குதல்; to snap the fingers. 2.செல்வநிலைமை கெடுதல்; to be reduced in circumstances, to become poor, destitute. செட்டியார் கைநொடித்துப்போனார் (இ.வ.);. ம. கைநொடிக்குக.கைஞொடிக்குக. [கை + நொடி-.] |
| கைநொடுநொடு-த்தல் | கைநொடுநொடு-த்தல் kainoḍunoḍuttal, 4 செ.கு.வி. (v.i.) கண்டவெல்லாவற்றையுங் கையால் தொடுதல் (யாழ்.அக.);; to be restless of hand and touch everything near about. [கை + நொடுநொடு-.] |
| கைநோட்டம் | கைநோட்டம் kainōṭṭam, பெ.(n.) 1. கையினாற் குறிப்புணர்த்தல் (சாடை); (இ.வ.);; sign or gesture made by hand. 2.கைவேலைத்திறம்; manual skill. 3. கையால் அளவிடும் மதிப்பு; estimation by hand. ம.கைநோட்டம்;து..கைநோட. [கை + நோட்டம்.] |
| கைந்தபழம் | கைந்தபழம் kaintapaḻm, பெ.(n.) சோற்றுக் கற்றாழையின் பால்; the juice ofaloe-pulp (சா.அக.);. [கைந்தை+பழம்] |
| கைந்தலை | கைந்தலை kaindalai, பெ.(n.) 1. கைம்பெண், கணவனை இழந்தவள்; widow. “கைந்தலைவிரைந்து நோக்குந் தக்கபேரன்பையும்” (திருவாலவா.41:28);. [கைம்(மை); + தலை.] |
| கைந்துப்போ-தல் | கைந்துப்போ-தல் kaintuppōtal, 8 செ.கு.வி. (v.i.) களிப்பேறல்; forming verdigris (சா.அக.);. [கைந்து+போ-தல்.] |
| கைந்நட்டம் | கைந்நட்டம் kainnaṭṭam, பெ.(n.) கையிழப்பு பார்க்க;see kai-y-ilappu. [கை + நட்டம்.] |
| கைந்நன்றி | கைந்நன்றி kainnaṉṟi, பெ.(n.) செய்நன்றி; gratitude, benefits done. [கை + நன்றி.] |
| கைந்நறுக்கு | கைந்நறுக்கு kainnaṟukku, பெ.(n.) கையுறுதி; firmness, stability. [கை + நறுக்கு.] |
| கைந்நலம் | கைந்நலம் kainnalam, பெ.(n.) கன்றிறந்தபின் பால் கொடுக்கும் மாடு; cow that milks after having lost its calf. {கை + நலம்.] |
| கைந்நவிலாளர் | கைந்நவிலாளர் kainnavilāḷar, பெ.(n.) கை வினைஞர், கையால் தொழில் செய்யப் பழகியவர்; handicrafts men. ‘கைந்நவி லாளர் காடெறிந்து” (பெருங், உஞ்சைக். 46:66);. [கை + நவிலாளர்.] |
| கைந்நவில் | கைந்நவில் kainnavil, பெ.(n.) கைத்தொழில்; handi crafts. [கை + நவில்.] |
| கைந்நாகம் | கைந்நாகம் kainnākam, பெ.(n.) யானை; elephant, as having a trunk. “கைந்நாகம்……….கடல்வந்த தோர்காட்சி” (கம்பரா.கடறாவு.40);. [கை + நாகம்.] |
| கைந்நாடிபார்-த்தல் | கைந்நாடிபார்-த்தல் kainnāṭipārttal, 4 செ.குன்றாவி.(v.t.) நாடியோட்டம் பார்த்தல்; to observe the blood circulation in hand by feeling the pulse. [கைந்நாடி + பார்-.] |
| கைந்நிதானம் | கைந்நிதானம் kainnitāṉam, பெ.(n.) கையில்நிறை முதலியவற்றை மதிப்பிடுகை (உ.வ.);; estimation of weight, etc. by the hand. ம. கைநிதானம். [கை + நிதானம்.] |
| கைந்நிறுத்து-தல் | கைந்நிறுத்து-தல் kainniṟuddudal, 5 செ.குன்றாவி. (v.t) 1. நிலைநிறுத்துதல்; to establish. “காப்புக்கைந் நிறுத்த வல்வேற் கோசர்” (அகநா.113);. 2. அடக்குதல்; to subdue, conquer. “காமங்கைந்நிறுக் கல்லாது”(அகநா.198);. [கை + நிறுத்து-.] |
| கைந்நிறை | கைந்நிறை kainniṟai, பெ.(n.) சீராக அடுக்குதல்: to be nicely arranged. க. கெய்நிறெ. [கை + நிறை.] |
| கைந்நிலை | கைந்நிலை1 kainnilai, பெ.(n.) பதினெண்கீழ்க் கணக்கு நூல்களுளொன்றும், அகப்பொருள் பற்றியதும், புல்லங்காடர் என்ற புலவரியற்றியது மான நூல்; an ancient love poem by, Pullarikādar, one of Padloen kilkkanakku. “நாலடி நான்மணி……… கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு” (தனிப்பா.);. கைந்நிலை [கை + நிலை.] கைந்நிலை2 kainnilai, பெ.(n.) பாசறை (தக்கயாகப்ப.274);; military camp. ம.கைநில. [கை + நிலை.] |
| கைந்நீட்டு | கைந்நீட்டு1 kainnīṭṭu, பெ.(n.) கைப்பிடி; handle, haft. தமது கிடுகைக் காம்புடனே கைந்நீட்டுச் செறிக்கவும் (புறநா.98,உரை);. ம. கைநாட. [கை + நீட்டு.] கைந்நீட்டு2 kainnīṭṭudal, 5.செ.குன்றாவி.(v.t.) 1. கையைநீட்டுதல்; to stretch out the hand. 2.இரத்தல்; to beg, pray for gift or charity. 3. திருடுதல்; to steal, pilfer. 4. கையூட்டு வாங்குதல்; to accept bribe. ம.கைநீட்டுக;க.கெய்நீடு. [கை + நீட்டு-.] கைந்நீட்டு3 kainnīṭṭu, பெ.(n.) கைப்பிடி; handle, haft. தமது கிடுகைக் காம்புடனே கைந்நீட்டுச் செறிக்கவும்(புறநா.98,உரை);. ம. கைநாட. [கை + நீட்டு.] |
| கைந்நீரு | கைந்நீரு kainnīru, பெ.(n.) மரகதம்; emerald (சா.அக.);. [கை+நீரு.] |
| கைந்நீவு-தல் | கைந்நீவு-தல் kainnīvudal, 5 செ.குன்றாவி.(v.t.) அவமதித்துக் கடத்தல்; to defy, disregard. “மதமாக் கொடுந்தோட்டி கைந்நீவி” (பரிபா.10:49);. [கை + நீவு.] |
| கைந்நூல் | கைந்நூல்1 kainnūl, பெ.(n.) கையிற் கட்டும் காப்பு நாண்; ceremonial thread worn on the wrist. “கைந்நூல் யாவாம்” (குறுந்.218);. [கை + நூல்.] பண்டைத் தமிழரின் கைந்நூல் கட்டும் வழக்கம் வடபுலத்தில் ரக்ஷாபந்தன் என மருவி வழங்கலாயிற்று. கைந்நூல்2 kainnūl, பெ.(n.) கையால் நூற்ற நூல் (கதர் நூல்);; hand spun thread. காந்தியடிகள் எப்பொழுதும் கைந்நூலாடையே அணிவார்(உ.வ.);. [கை + நூல்.] |
| கைந்நெகிழ்-தல் | கைந்நெகிழ்-தல் gainnegiḻtal, 2 செ.கு.வி.(v.i.) கையிலிருந்து நழுவி விழுதல்; to slip down from the hand. [கை + நெகிழ்-.] |
| கைந்நொடி | கைந்நொடி1 kainnoḍi, பெ.(n.) 1. ஒலியுண்டாக்க இருவிரல்களை அழுத்தி எடுத்தல்; a snap with the fingers. 2. கையை நொடிக்கும் நேரம்; a unit of time marked by a snap of the finger. மாந்தருடைய கண்ணிமையுங் கைந்நொடியும் (நன்.99,மயிலை.);. க. கெய்சிடுகு, [கை + நொடி.] கைந்நொடி2 kainnoḍittal, 4.செ.குன்றாவி.(v.t.) விரலை நொடித்தல்; to snap the finger. ம.கைநொடிக்குக.கைஞொடிக்குக;க.கெய்நொடு. [கை + நொடி-.] |
| கைனி | கைனி1 kaiṉi, பெ. (n.) கைம்பெண் (திவா.);; widow [கை (தனிமை);. கைனி(தனித்திருப்பவள், கணவனை இழந்தவள்);.] |
| கைபடி-தல் | கைபடி-தல் kaibaḍidal, 4செ.கு.வி.(v.i.) தொழிலிற் கைதிருத்தல்; to acquire ease and skill in manual art and craft. “கைபடியத் திருமகளைப் படைத்திவளைப் படைத்தனன்”(தனிப்பா.1,147:48); [கை + படி-.] |
| கைபதறு-தல் | கைபதறு-தல் kaibadaṟudal, 8 செ.கு.வி.(v.i.) பதற்றப்படுதல்; to be in a hurry. “காரியவசத்தினர்கள் கைபதறல் செய்யார்” (பிரபோத.5:24);. [கை + பதறு-.] |
| கைபதில் | கைபதில் kaibadil, பெ.(n.) கைமாற்று பார்க்க;see kai-marru. து..கைபத்லு. [கை + பதில்.] |
| கைபதைக்க | கைபதைக்க kaibadaikka, வி.எ.(adv.) வேளாண் பணிகளை விரைவாகச் செய்தல்; do the agricultural work speedily. [கை+பதைக்க] |
| கைபத்து | கைபத்து kaibattu, பெ.(n.) 1. நேரில் செல்லாமை; absence. 2. உரிமை கொண்டாடுவோ ரின்மையால் கருவூலத்தில் தனியாக வைக்கப்பட்டிருக்கும் தொகை (உ.வ.);; money in a treasury lying unclaimed. [U.gaibat → த.கைபத்து.] |
| கைபரி-தல் | கைபரி-தல் kaibaridal, 4 செ.கு.வி.(v.i.) ஒழுங்கு குலைதல்; to fall into disorder. “கார்மழை முன்பிற் கைபரிந்து” (பதிற்றுப்.83:1);. [கை + பரி-.] |
| கைபரிமாறு | கைபரிமாறு1 kaibarimāṟudal, 5 செ.குன்றாவி. (v.t.) 1. தூய்மை கெடும்படி தொடுதல்; to pollute or make unclean by touch. 2. கற்பை யழித்தல்; to violate the chastity of a woman. 3. கவர்தல், எடுத்துக்கொள்ளுதல்; to missappropriate, to embezzle. [கை + பரிமாறு-.] கைபரிமாறு2 kaibarimāṟudal, 5 செ.கு.வி.(v.i.) அடிபிடிசண்டையிடுதல்; to fight, exchange blows. [கை + பரிமாறு-.] |
| கைபறி-தல் | கைபறி-தல் kaibaṟidal, 4 செ.குன்றாவி. (v.t.) கை தவறுதல் (வின்.); (செ.அக.);; to slip, as a hold, to slip or fall out of the hands. [கை + பறி-.] |
| கைபலிதம் | கைபலிதம் kaibalidam, பெ.(n.) கைவரியால் (அஸ்த ரேகையால்); மருத்துவத் தொழிலில் கை தொட்டவுடன் குணமாகும் தன்மை; the curing power of diseases due to peculiar link(சா.அக.);. [கை + பலிதம்.] |
| கைபாகம் | கைபாகம் kaipākam, பெ.(n.) 1.கைம்முறை; the skill of hand in compounding medicines as opposed to ceypagam. 2. வீட்டு மருந்து; household medicine. 3.மருத்துவமுறைசாராமருத்துவம்(பண்டுவம்);; non medicinal treatment. 4.சமையல் பாகம்; skill in cooking (சா.அக.);. [கை + பாகம்.] |
| கைபாரமாய்ப் பொடித்தல் | கைபாரமாய்ப் பொடித்தல் kaipāramāyppoḍittal, தொ.பெ.(vbl.n.) கையின் வலிவு கொண்டளவில் அழுத்திப்பொடி செய்தல்; pulverising by exerting as much pressure as possible with the hand(சா.அக.);. [கை + பாரமாய் + பொடித்தல்.] |
| கைபார் | கைபார்1 kaipārttal, 4 செ.கு.வி.(v.i.) 1.கைந்நாடி பார்த்தல் ; to feel the pulse of. 2. கைவரை (இரேகை); பார்த்தல்; to read the line of the palm. 3. உதவி நாடுதல்; to seek the help of. ஏழைகள் செல்வரின் கைபார்த்து வாழவேண்டி யிருக்கிறது(உ.வ.);. [கை + பார்-.] கைபார்2 kaipārttal, 4 செ.குன்றாவி.(v.t.) 1. பழுதுபார்த்தல்(யாழ்ப்.);: to make repairs. 2.வணிகச்சரக்குகளைச் சரிபார்த்தல்; to examine goods, as a trader: 3.பொருள்களைத் தரம் பிரித்தல்; to divide according to quality or standard. [கை + பார். கை : ஒழுங்கு.] |
| கைபிசகாக | கைபிசகாக kaipicakāka, வி.அ. (adv.) தவறுதலாக; absentmindedly,inadvertenly, எழுதுகோலைக் கைபிசகாக எங்கோவைத்துவிட்டேன்(க்ரியா);. மறுவ. கவனக்குறைவாக [கை+பிசகாக] |
| கைபிசை-தல் | கைபிசை-தல் kaibisaidal, பெ.(n.) 4 செ.கு.வி.(v.i.); செய்வ தறியாது திகைத்தல்; lit., to wring the hands, to be in a fix, to be in deep affliction. [கை + பிசை-.] |
| கைபிடி | கைபிடி1 kaibiḍittal, 4 செ.குன்றாவி.(v.t.) கைக்கொள்ளுதல்; to take on hand,entertain, cherish. “கைபிடித்து விடுதற் குரியதோ” (அரிச்சந். நகர்நீ.123);. க.கெய்விடி, கெய்பிடி. [கை + பிடி.] கைபிடி2 kaibiḍittal, பெ.(n.) 4செ.குன்றாவி(v.t.); மணம் செய்தல்; to marry. கைபிடித்த நாள் முதலாய் அவளைக் கண்கலங்காமல் காத்து வருகிறேன் (உ.வ.);. [கை + பிடி-.] கைபிடி3 kaibiḍi, பெ.(n.) 1.கைப்பிடிபார்க்க;see kai-p-pidi. 2.கையிற்பெற்றுக்கொண்டபொருள்; money or thing received on hand. ‘இவ்வாடு திருவுண்ணாழிகையுடையார் கைபிடி’ (S.I.I.III.107);. [கை + பிடி-.] |
| கைபிடித்திழு-த்தல் | கைபிடித்திழு-த்தல் kaipiṭittiḻuttal, 4 செ.கு.வி. (v.i.) வலியப் புணர்தல்; seducing or ravishing a woman (சா.அக.);. [கை+பிடித்து+இழு-த்தல்.] |
| கைபிடித்துத்தூக்குதல் | கைபிடித்துத்தூக்குதல் kaipiṭittuttūkkutal, 5 செ.கு.வி. (v.i.) ஒருவர் கையைப் பிடித்து எழும்பச் செய்தல்; lifting one by the hand (சா.அக.);. [கை+பிடித்து+தூக்கு-தல்.] |
| கைபிடித்துப் பார்-த்தல் | கைபிடித்துப் பார்-த்தல் kaibiḍittubbārttal, 4 செ.குன்றாவி.(v.t.) 1.நாடித்துடிப்பை அறிதல்; to feeling the pulse of a patient. 2. உள்ளகை வரியை ஆய்தல்; to read the lines of the palm. 3.வல்லமையை ஆய்தல்; to try one’s ability or strength (சா.அக.);. [கை + பிடித்து + பார்-.] |
| கைபிடிபத்திரம் | கைபிடிபத்திரம் kaipiṭipattiram, பெ.(n.) 1. நெருங்கிய நட்பு; intimate friendship, close friendship, mutual confidence. 2. கமுக்கமான (அந்தரங்கமா);ன ஆள்: confidential servant; secret agent (செ.அக.);. [கை+பிடி+Skt. பத்திரம்] கைபிடிபத்திரம்1 kaibiḍibattiram, பெ.(n.) கைபிடியாவணம் பார்க்க;see kai-pidi-y-avanam. [கைபிடி + பத்திரம்.] |
| கைபிடியாவணம் | கைபிடியாவணம் kaibiḍiyāvaṇam, பெ.(n.) வைப்பு நிதி, வைப்புப்பொருள்; wealth well secured or guarded. [கைபிடி + ஆவணம்.] |
| கைபின்வளைவு | கைபின்வளைவு kaibiṉvaḷaivu, பெ.(n.) பிறக்கும் பொழுதே கையின் பக்கமாக வளைந்திருக்கும் ஒரு வகை முடம்; backward deviation of the hand from the time of birth (சா.அக.);. [கை + பின் + வளைவு.] |
| கைபியத்து | கைபியத்து kaibiyattu, பெ.(n.) கைபீது பார்க்க;see {}. [U.{} → த.கைபியத்து.] |
| கைபியத்துநாமா | கைபியத்துநாமா kaibiyattunāmā, பெ.(n.) உறுதியோலை (பிரமாண பத்திரம்);; affidavit. [U.{}+{} → த.கைபியத்துநாமா.] |
| கைபிழைபாடு | கைபிழைபாடு kaibiḻaibāṭu, பெ.(n.) கைப்பிழை (வின்.); பார்க்க;see kai-p-pilai. [கைபிழை + பாடு.] |
| கைபீது | கைபீது kaipītu, பெ.(n.) விளக்கக் (விவர);க் குறிப்பு; statement, report, detailed account, particulars. [U.{} → த.கைபீது.] |
| கைபுகு-தல் | கைபுகு-தல் gaibugudal, 21 செ.கு.வி. (v.i.) 1. வயப் படுதல்; to come with in one’s reach or grasp. “திருமந்திரங் கைபுகுந்தவாறே ஈசுவரன் கைபுகும்” (ஶ்ரீவசன.97);. 2. ஒருவன் பேரிலிருந்த ஆவணம் பிறனொருவன் பேருக்கு மாறுதல்; to be assigned, to be made over, as a document. இது கைபுகுந்த ஆவணம் (பத்திரம்); (இ.வ.);. க.கெய்வொகு.கெய்புகு. [கை + புகு-.] |
| கைபுடை-த்தல் | கைபுடை-த்தல் kaibuḍaittal, 4 செ.குன்றாவி.(v.t.) கைத்தட்டுதல்; to strike one’s hand on. “காணுநர் கைபுடைத்திரங்க” (பதிற்றும்.19);. [கை + புடை-.] |
| கைபுனை | கைபுனை1 kaibuṉaidal, 2 செ.குன்றாவி(v.t.) 1. அழகுபடுத்துதல்; to adorn, decorate. “கைபுனைந்த பூமலி சேக்கை” (பு.வெ.12, பெண்பாற்.4);. 2. பூத்தொடுத்தல்(வின்.);; to string as flowers. க.கெய்கெய்;தெ.கைசேய். [கை + புனை-.] கைபுனை2 kaibuṉai, 1.பூத்தொடுக்கை(சது.); stringing as flowers. “கைப்புனைந் தியற்றாக் கவின்பெரு வனப்பு” (திருமுருகு.);. [கை + புனை.] |
| கைபூசு-தல் | கைபூசு-தல் kaipūcudal, 5.செ.குன்றாவி(v.t.) 1. உண்ட கையைக் கழுவுதல்; to wash the hand after meals. “மறையோ ரினிதருந்திக் கைபூசி” (கூர்மபு. தென்புலத்.9);. [கை + பூசு-.] |
| கைபோ | கைபோ1 kaipōtal, 8 செ.கு.வி.(v.i.) முற்றும் வல்லவனாதல்; to attain thorough mastery. “ஒவியத்துறை கைபோய வொருவனை” (நைடத. அன்.கண்.6);. [கை + போ-.] கைபோ2 kaipōtal, 8 செ.குன்றாவி(v.t.) கடந்து செல்லுதல்; to overstep, pass beyond, exceed the limits. “நிறையெனுஞ் சிறையைக் கைபோய்” (சீவக.710);. [கை + போ-.] |
| கைபோடு-தல் | கைபோடு-தல் kaipōṭudal, பெ.(n.) 20 செ.கு.வி. (v.i.); 1.கை வைத்தல்; to put or apply the hand. 2. கைகொடுத்து உறுதிதருதல்(இ.வ.);; to confirm a promise by offering the hand. 3.தொழிலேற்கத் தொடங்குதல்; to undertake a business. ‘வேலையில் இன்னுங்கைபோடவில்லை'(வின்);. 4.பிறரறியாமல்கைகளைத் துணியால் மறைத்துக் கொண்டு கைக்குறிப்பால் விலை பேசுதல் (உ.வ.);; to consult secretly about the price of a thing by making signs with hands under cover. 4.காமவெறியோடு தொடுதல்(இ.வ.);; to commit indecent as salt on a woman. க.கெய்காகு. [கை + போடு-.] |
| கைபோட்டிழு-த்தல் | கைபோட்டிழு-த்தல் kaipōṭṭiḻuttal, 4 செ.கு.வி.(v.i.) கையை உள்ளே விட்டு இழுத்து வெளிப்படுத்துதல்; puling out by inserting one’s hand as a child from the womb (சா.அக.);. [கை+போட்டு+இழு-த்தல்.] கைபோட்டிழு-த்தல் kaipōṭṭiḻuttal, 4 செ.குன்றாவி. (v.t.) கையைஉள்ளேவிட்டுஇழுத்துவெளிப்படுத்தல்; pulling out by inserting one’s hand as a child from the womb(சா.அக.);. [கை + போட்டு + இழு-.] |
| கைப் பரப்பு | கைப் பரப்பு kaipparappu, பெ.(n.) வேளாண் தொழிலில் ஒரு ஆள் வேலை செய்யும் நிலப்பரப்பு; distance within the reach of two hands of a reaper. [கை+பரப்பு] |
| கைப் பாடை | கைப் பாடை kaippāṭai, பெ.(n.) அழகுபடுத்தாத பாடை: non decorated bier. [கை+பாடை] |
| கைப்பகர்ப்பு | கைப்பகர்ப்பு gaippagarppu, பெ.(n.) இசைவின்றிப் பெற்றுக்கொண்டபடி (இ.வ.);; unauthorised copy, as of a document filed in court. [கை + பகர்ப்பு.] |
| கைப்பகற்றல் | கைப்பகற்றல் gaippagaṟṟal, பெ.(n.) மனக்கசப்பைப் போக்கல்; removing the bitterness from a substance (சா.அக.);. அண்ணன் தம்பியிடம் கைப்பகற்றல் நண்பர்கள் கடமையாகும். [கை → கைப்பு + அகற்றல்.] |
| கைப்பக்கம் | கைப்பக்கம் kaippakkam, பெ.(n.) கு.வி.எ. (adv.); அருகில் (இ.வ.);: very close, near at hand. அவன் என் கைப்பக்கம் இருந்தான் (உவ);. [கை + பக்கம்.] |
| கைப்பக்குவம் | கைப்பக்குவம் kaippakkuvam, பெ.(n.) உணவு, மருந்து முதலியவற்றைப்பதமாக்கும் திறமை; hand skill of a person, to estimate the compounding of ingredients in correct form in cooking and in medicine with good aroma. – [கை+பக்குவம்] |
| கைப்பங்கொட்டை | கைப்பங்கொட்டை kaippaṅgoṭṭai, பெ.(n.) ஒருவகை மரம்; a variety of tree. [கை → கைப்பு + அம் + கொட்டை.] எட்டிக் கொட்டையைப் போன்று மும்மடங்கு நச்சுத்தன்மையுடையதும், வெண்ணிறப்பூக்களைக் கொண்டதும், மருத்துவத்திற்குப் பயன்படுவதுமான இம் மரம் பிலிப்பைன்சு நாட்டில் அதிகம் காணப்படுகிறது. |
| கைப்பட | கைப்பட kaippaḍa, கு.வி.எ.(adv.) சொந்தக் கையெழுத்தாக; in one’s own hand writting. அதைத் தட்டச்சுக்குக் கொடுக்காமல், ஏன் கைப்பட எழுதிக் கொடுத்தாய்? (உ.வ.);. ம.கய்பட கைப்பட. [கை + பட. படு → பட.] |
| கைப்படு | கைப்படு1 kaippaḍudal, 20 செ.கு.வி.(v.i.) கைவயமாதல்; to fall into one’s hands. “ஒள்வாடனொன்னார்கைப்பட்டக்கால்” (நாலடி.129);. [கை + படு-.] கைப்படு2 kaippaḍudal, 17 செ.குன்றாவி.(v.t.); 1. தொடுதல்; to meet, 2. பார்த்தல்; find, “புனைசெய் கோல் வளையைக் கைப்படுதி” (சீவக.1600);. [கை + படு-.] கைப்படு3 kaippaḍuttal, 18செகுன்றாவி.(v.t.) 1. கைப்பற்றுதல்; to seize, take hold of, acquire. “கடல்சூழ் வையங் கைப்படுத்தான்” (சீவக. 1058.);. 2. தெளிதல்; to find out, discover. “நின்……… மாயப் பரத்தைமை……..கைப்படுத்தேன்” (கலித்.98);. [கை + படு-.] |
| கைப்படை | கைப்படை kaippaḍai, பெ.(n.) 1. படைக்கலம், ஆயுதம்; weapons. “வென்றிக் கைப்படை நவின்ற வெம்போர்”(சூளா.சீய.128);. 2. மணியாகப் பலகை (இ.வ.);; mason’s smoothing plane. [கை + படை.] |
| கைப்பட்டை | கைப்பட்டை kaippaṭṭai, பெ.(n.) 1. தோட்பட்டை, shoulder blade. 2. கைமரம் தாங்கும் சட்டம் (இ.வ.);; sleeper, joist to support a superstructure. 3. நீர் முகக்கும் சிறுபட்டை (வின்.);; small ðlabucket. [கை + பட்டை.] |
| கைப்பணம் | கைப்பணம்1 kaippaṇam, பெ.(n.) 1. கையிலுள்ள தொகை; cash in hand. 2.சொந்தப் பணம்; one’s own money. கைப்பணம் போட்டு அந்தப் பொத்தகத்தை அச்சிட்டார். 3. வணிகத்தில் கடனின்றிக் கைமேற் கொடுக்கும் பணம் (யாழ்.அக.);; cash-payment for purchase. மறுவ.ரொக்கம். ம. கைப்பணம்;க. கெய்கண்டு. [கை + பணம்.] கைப்பணம்2 kaippaṇam, பெ.(n.) முதலீடு (மூலதனம்);; capital. [கை + பணம்.] |
| கைப்பணி | கைப்பணி kaippaṇi, பெ.(n.) 1.கல்தச்சர் (சிற்பர்); கருவிகளுள் ஒன்று; a kind of instrument used by menial stone cutters. 2. கைத்தொண்டு; manual service in the temple of deity. 3. மணியாகப் பலகை; polishing board used by the mason. 4. முடவன் தவழ்வதற்குக் கொள்ளும் கைப்பிடி; hand hold for lame persons who have to crawl. ம.கைப்பணி [கை + பணி.] |
| கைப்பண்டம் | கைப்பண்டம் kaippaṇṭam, பெ.(n.) கையிலுள்ள பொருள்; things in hand. கைப்பண்டம் கருணைக் கிழங்கு(உ.வ.);. [கை + பண்டம்.] |
| கைப்பதட்டம் | கைப்பதட்டம் kaippadaṭṭam, பெ.(n.) கைப்பதற்றம் பார்க்க;see kai-p-padarram. [கை + பதற்றம்-கைப்பதற்றம்-கைப்பதட்டம்(கொ.வ.);.] |
| கைப்பதம் | கைப்பதம் kaippadam, பெ.(n.) 1.அடுதலில்,மருந்து தருதலில் தனித்திறம்; special skill in cooking or compounding medicine. அடுவதில்அவர் கைப்பதம் யார்க்கும் வராது(உ.வ.);. தெ.கயிபதமு. [கை + பதம்.] |
| கைப்பதர் | கைப்பதர் kaippadar, பெ.(n.) களவு, கொலை, கொள்ளை முதலியபழிச்செயல்கள்; mean acts such as stealing, murder and robbery. ‘வாய்ப்பதர் கைப்பதர் சிசுப்பதர் வாழாது’ (இ.வ.);. [கை(சிறுமை, இழிவு); + பதர்.] |
| கைப்பதற்றம் | கைப்பதற்றம் kaippadaṟṟam, பெ.(n.) 1. பதற்றத்தில் கைபதறுகை; tremulousness of the hand as in haste. 2.திருடுங்தகுணம் (வின்.);; thievishness (செ.அக.);. [கை + பதற்றம்-கைப்பதற்றம்.] |
| கைப்பதிவு | கைப்பதிவு kaippadivu, பெ.(n.) கையொப்பம் பார்க்க;see kai-y-opраm. ம.கைப்பதிவு. [கை + பதிவு.] |
| கைப்பத்து | கைப்பத்து kaippattu, பெ.(n.) விளக்கக் (விவர);குறிப்பு; statement, report, detailed account, particulars. [கை + பற்று – கைப்பற்று → கைப்பத்து.] |
| கைப்பந்தம் | கைப்பந்தம் kaippandam, பெ.(n.) கைத்தீவட்டி: flambeau, hand torch. [கை + பந்தம்.] |
| கைப்பந்து | கைப்பந்து kaippantu, பெ.(n.) நடுவில் வலை கட்டிப்பந்தை ஓர் அணியினர் கையால் அடிக்க அதை எதிர் அணியினர் திரும்பிச் செல்லுமாறு அடித்து விளையாடும் தொய்வையால் (ரப்பர்); செய்த விளையாட்டுக் கருவி; valley-ball [கை+பந்து] [P] கைப்பந்து kaippantu, பெ.(n.) ஐந்து ஐந்து வகைக் கசப்புச் சுவை; five kinds of bitter. [கைப்பு+ஐந்து] அவையாவன : 1. கருநொச்சி; blacknotchy, Gendarussa vulgaris. 2. வேம்பு; neemtree, Melia azadirachta. 3. கண்டங்கத்திரி; prickly brinjal, Solanum xanthocarpum. 4. சீந்தில்; moon creeperr, Tinosora coodifoolia. 5. பேய்ப் புடல்; wild snake gourd, Trichosanthes cucumerina (சா.அக.);. கைப்பந்து kaippandu, பெ.(n.) எறிந்து பிடிக்கும் பந்து விளையாட்டு; hand ball. [கை + பந்து.] |
| கைப்பயிர் | கைப்பயிர் kaippayir, பெ.(n.) இளம்பயிர்; young cгор. [கை + பயிர். கை : இளமை குறித்த முன்னொட்டு.] |
| கைப்பயில் | கைப்பயில் gaibayirgaiiḷamaiguṟittamuṉṉoṭṭugaibbayil, பெ.(n.) 1. கையால் குறிப்புணர்த்துகை (வின்.);; beckoning with the hand, hand language, as of dumb persons. 2.கைவரைவு நூல்; palmistry. [கை + பயில்.] |
| கைப்பரசன் | கைப்பரசன் kaipparacaṉ, பெ.(n.) மிக்கக் கசப்புள்ள நீல வேம்பு; ground neem orking ofbitter, Justicia Paniculata (சா.அக);. [கைப்பு+அரசன்.] |
| கைப்பரிசு | கைப்பரிசு1 kaipparisu, பெ.(n.) 1.சிறுதெப்பம்; small raft. “கைப்பரிசு காரர்போ லறிவான வங்கமுங் கைவிட்டு” (தாயு.தேசோ.2);. [கை + பரிசு.] கைப்பரிசு2 kaipparisu, பெ.(n.) கையூட்டு (இ.வ.); bribe. [கை + பரிசு.] நல்லெண்ணத்தில் சிறப்புச் செய்யக் கையில் கொடுக்கும் பொருளைக் குறித்து, பின்னர் தவறான எண்ணத்தில் கொடுப்பதையும் குறிக்க வழங்கியது. |
| கைப்பரிட்சை | கைப்பரிட்சை kaippariṭcai, பெ.(n.) கைப்பழக்கம்1 பார்க்க;see kai-p-palakkam(சா.அக.);. [கை + பரிட்சை.] |
| கைப்பரீட்சை | கைப்பரீட்சை kaipparīṭcai, பெ.(n.) நாடி பார்க்கை; feeling or examining the pulse (சா.அக.);. [கை+Skt. பரீட்சை] |
| கைப்பறை | கைப்பறை kaippaṟai, பெ.(n.) சிறு பறை a hand drum. க. கெய்பறெ. [கை + பறை.] |
| கைப்பறையன் | கைப்பறையன் kaippaṟaiyaṉ, பெ.(n.) சிறுபறையை அடிப்பவன்; a drummer who beats a small drum with his hand or stick. க. கெய்பறெக. [கை + பறையன்.] |
| கைப்பற்றம் | கைப்பற்றம் kaippaṟṟam, பெ.(n.) 1. கைப்பிடி; handle. 2. கைத்தாங்கல்; supporting a person or thing by the hands. மறுவ.கைத்தாங்கல். [கை + பற்றம்.] |
| கைப்பற்று | கைப்பற்று1 kaippaṟṟudal, 5.செ.குன்றாவி(v.t.) 1. திருமணம் செய்தல்; to marry. 2. கைவயத்திலொடுக்குதல்; to restrain with hands. 3. வாங்குதல்; to purchase. 4. உரிமைப்படுத்திக் கொள்; to annex. [கை + பற்று-.] கைப்பற்று2 kaippaṟṟudal, 5.செ.குன்றாவி(v.t.) கையிற் கொள்ளுதல்; to apply the hand, or lay hold of, with vehimence or eagerness. “கைப்பற்றிய விற்கொடு” (கந்தபு.காம.35);. 2. கவர்ந்து கொள்ளுதல்; to seize eagerly or by force. ம.கைப்பற்றுக; க. கெய்துடுகு;து..கைபட்டு. Fin. kaapala (to capture);. Est. kaabata. Hung. kap, Mong. xabuc, Q. hapi [கை + பற்று-.] கைப்பற்று3 kaippaṟṟudal, 15 செ.கு.வி.(v.i.) 1. கைகதூக்குதல்; to uphold, to save from ruin. [கை + பற்று-.] கைப்பற்று4 kaippaṟṟu, பெ.(n.) ஆம்புடை (சாதனம்);; means. தான்தோன்றியான கைப்பற்றடியாக வந்தொன்றல்ல(ஈடு.94:9); [கை + பற்று.] கைப்பற்று5 kaippaṟṟu, பெ.(n.) 1. கைத்தாங்கல; supporting a person by the arms. 2. கையிற் பெற்றுக்கொண்ட தொகை; money received on hand. 3. உரிமை நல்கை: land held rent free. “இளமண்டியம் என்கிற கிராமத்தை அவர்களுக்குக் கைப்பற்றாக விடுவித்து” (குரு.பரம்.234);. ம.கைப்பற்று. [கை + பற்று.] |
| கைப்பற்றுநிலம் | கைப்பற்றுநிலம் kaippaṟṟunilam, பெ.(n.) நீண்ட காலம் ஆளுகையிலிருக்கும்.நிலம்; land acquired by darkhast or by prescription. [கைப்பற்று + நிலம்.] |
| கைப்பற்றுப்பாத்தியம் | கைப்பற்றுப்பாத்தியம் kaippaṟṟuppāttiyam, பெ.(n.) கைப்பற்றுரிமை; right to land acquired by prescription. Skt. pattıyam → த. பாத்தியம். [கைப்பற்று + பாத்தியம்.] |
| கைப்பள்ளம் | கைப்பள்ளம் kaippaḷḷam, பெ.(n.) உள்ளங்கைக் குழி; hollow of the hand. க. கெய்கொப்பெ [கை + பள்ளம்.] |
| கைப்பழக்கம் | கைப்பழக்கம்1 kaippaḻkkam, பெ.(n.) நாடி பார்த்தல்; feeling the pulse. [கை + பழக்கம்.] கைப்பழக்கம்2 kaippaḻkkam, பெ.(n.) பட்டறிவால் பெறும் திறம்; manual skill acquired by practice. “சித்திரமும் கைப்பழக்கம்” (தனிப்பா.1:91:5);. ம. கைப்பழக்கம். [கை + பழக்கம்.] |
| கைப்பாகம் | கைப்பாகம் kaippākam, பெ.(n.) கைப்பதம்பார்க்க;see kai-p-padam, பதமறிந்து மருந்து, சமையல் முதலியன பக்குவம் செய்யும் திறம்; skill in cooking, skill in compounding medicine. ம.கைபாகம் [கை + பாகம்.] |
| கைப்பாடு | கைப்பாடு1 kaippāṭu, பெ.(n.) கையிழப்பு; loss in trade or otherwise. [கை + பாடு.] கைப்பாடு2 kaippāṭu, பெ.(n.) 1. உடைமை, உடைமைப்பொருள்; possession. 2.கைவயம் உள்ள பொருள்; possession, subjection. 3.கைப்பதிவு; impression of the hand. 4. கையிழப்பு (சேர.நா.);; loss from one’s own hand. ம.கைப்பாடு. [கை + பாடு. படு → பாடு.] கைப்பாடு3 kaippāṭu, பெ.(n.) உடலுழைப்பு; manual labour, toil by hand. [கை + பாடு. பாடு : வேலை. பிடிக்கை.] |
| கைப்பாடுபடு-தல் | கைப்பாடுபடு-தல் kaibbāḍubaḍudal, பெ.(n.) 20 செ.கு.வி. (v.i.); அரும்பாடுபட்டு உழைத்தல்; to work with the hand, toil, labour hard. அவன் கைப்பாடுபட்டு முன்னுக்கு வந்தான் (உ.வ.);. [கைப்பாடு + படு-.] |
| கைப்பாணி | கைப்பாணி kaippāṇi, பெ.(n.) 1. கைப்பணிபார்க்க;see kai-p-pani; 2. மணியாசுப் பலகை; mason’s smoothing plane. ‘கைப்பாணியிட்டு மெழுக்கு வாசியிலே பிரமிக்கும்படி’ (ஈடு.5:1:5);. 3. முடவன் தவழ்வதற்குக் கொள்ளும் கைப்பிடி; hand hold for lame persons who have to crawl. ‘முடவனாய்க் கைப்பாணி கொண்டு தவழ்வா னொருவன்’ (பழ.16.உரை);. ம.கைப்பாணி [கை + (பணி);பாணி.] |
| கைப்பாணிப்பு | கைப்பாணிப்பு kaippāṇippu, பெ.(n.) பொருளைக் கையில் எடுத்து நிறுத்திடும் மதிப்பு; estimating the weight of anything by hand. [கை + பாணிப்பு.] |
| கைப்பாதி | கைப்பாதி kaippāti, பெ.(n.) இரண்டாய்ப் பிளப்பதிற் சிறுபாதி; a small portion in division. [கை + பாதி.] |
| கைப்பாத்திரம் | கைப்பாத்திரம் kaippāttiram, பெ.(n.) கையேனம் பார்க்க;see kai-y-énam. [கை + பாத்திரம்.பாத்திரம் : கொள்கலன்.] |
| கைப்பான் | கைப்பான் kaippāṉ, பெ.(n.) 1. பாகல்; spiked bitter cucumber. 2. கசப்பு மருந்து; bitter medicine. 3. கசக்கக் கூடிய பொருள்; any substance that is bitter [கய் → கை → கைப்பான்.] |
| கைப்பான்கொட்டை | கைப்பான்கொட்டை kaippāṉkoṭṭai, பெ.(n.) கைப்பங்கொட்டை பார்க்க;see kaippan-kotta (சா.அக.);. [கய் → கை → கைப்பான் + கொட்டை.] |
| கைப்பாலை | கைப்பாலை kaippālai, பெ.(n.) வெட்பாலை; Tellicherry bark (சா.அக.);. [கை + பாலை.] |
| கைப்பால் | கைப்பால் kaippāl, பெ.(n.) வாங்குவோர் எதிரில் கறவாமல் முன்னரே கறந்து கொண்டு வந்து விற்கும் பால்; milk not milked in the presence of the buyer, but brought by the milk man in his can. [கை + பால்.] |
| கைப்பாவை | கைப்பாவை kaippāvai, பெ.(n.) பாவைக் கூடத்தில் இருப்பது போல் பிறர் இயக்க இயங்கும் நிலை; puppet figuratively. தீவிரவாதிகள் பிறநாடுகளின் கைப்பாவையாக ஆகிவிடக் கூடாது. எத்தனைக் காலம் இந்த நாடு கொடுங்கோலரின் (சர்வாதிகாரி); கைப்பாவையாக இருக்கும் [கை+பாவை.] |
| கைப்பிசகு | கைப்பிசகு gaippisagu, பெ.(n.) கைக்குற்றம் பார்க்க;see kai-k-kurram. [கை + பிசகு.பிழை → பிசகு.] |
| கைப்பிச்சை | கைப்பிச்சை kaippiccai, பெ.(n.) களத்தில் கொடுக்கும்பிச்சை (R.T.);; handful of grain given in charity at the threshing floor. [கை + பிச்சை.] |
| கைப்பிடி | கைப்பிடி1 kaippiḍittal, 4 செ.கு.வி.(v.i.) 1 உறுதியாகப் பிடித்தல்; to seize with hand, grasp firmy. “இம்முறைகைப்பிடித்தல்” (தணிகைப்பு.அகத் 415);. 2. மணம் புரிதல்; to marry. “கண்ணாலங் கோடித்துக் கன்னிதன்னைக் கைப்பிடிப்பான் (திவ்.நாய்ச்.11:9);. [கை + பிடி-.] கைப்பிடி2 kaippiḍi, பெ.(n.) 1. கையாற் பிடிக்கை; grasp, grip of the hand. 2 ஆயுதம் முதலியவற்றின் பிடி; handle, as of a tool, ear, as of a pitcher. 3. படிக்கட்டு முதலியவற்றின் பக்கங்களில் கையாற் பிடித்துச்செல்ல அமைக்கும் சுவர், சட்டம் முதலியன; hand rail, rail of a ship, parapet of a house. 4 திருமணம்; marriage. “கைப்பிடிநாயகன்” (பட்டினத் திருவே.மாலை.3);. 5.உலக்கை; pestle. 6.பிடியளவு: a handful. ம.கைப்பிடி கய்பிடி: க.கெய்பிடி.கைபிடி: தெ.செயிபிடி து.கைபுடி. [கை + பிடி.] கைப்பிடி3 kaippiḍi, பெ.(n.) பிடியளவு; handful. மறுவ.குத்து. [கை + பிடி.] |
| கைப்பிடிகாப்பு | கைப்பிடிகாப்பு kaippiḍikāppu, பெ.(n.) 1. நெருங்கிய நட்பு; close friendship, mental confidence. 2.அணுக்கமான (அந்தரங்கமான);ஆள்; confidential servant. [கை + பிடி + காப்பு.] |
| கைப்பிடிக்கணையாழி | கைப்பிடிக்கணையாழி kaippiḍikkaṇaiyāḻi, பெ.(n.) திருமணத்தின்போது மாப்பிள்ளைக்கும் பெண்வீட்டார் கொடுக்கும் கணையாழி : ring presented to the bridegroom by the bride’s parents a marriage. [கைப்பிடி + கணையாழி.] |
| கைப்பிடிச் செங்கல் | கைப்பிடிச் செங்கல் kaippiḍicceṅgal, பெ.(n.) வரிசையாக நின்றுகொண்டு கைக்குக் கை மாறும் பொருள்; act of passing on a thing by hand in a row. கிடக்கின்ற விறகு கட்டைகளைக் கைப்பிடிச் செங்கலாய் உள்ளே அடுங்குங்கள் (நெல்லை.);. [கைப்பிடி + செங்கல்.] கட்டடக்கூலித்தொழிலாளர் கைக்குக்கை செங்கல் மாற்றுவது போன்று பொருள்களை வரிசையாக மாற்றுதல். |
| கைப்பிடிச்சக்கை | கைப்பிடிச்சக்கை kaippiḍiccakkai, பெ.(n.) தேய்ப்புவேலைக்குப் பயன்படும்மரப்பலகை; a wooden plank used for masonry polishing work. கைப்பிடிச்சக்கை [கை + பிடி + சக்கை.] இது நான்கு முதல் ஆறு அங்குல அளவுள்ளதாய் இருக்கும். |
| கைப்பிடிச்சட்டம் | கைப்பிடிச்சட்டம் kaippiḍiccaḍḍam, பெ.(n.) படிக்கட்டில் கைப்பிடி இணைக்கப்பட்ட சட்டம்; hand rail on the sides of a stair-case, banisters. [கை + பிடி + சட்டம்.] |
| கைப்பிடிச்சுருள் | கைப்பிடிச்சுருள் kaippiḍiccuruḷ, பெ.(n.) மணநிகழ்வில், மணமகளுடைய தந்தையால் மணமக்களின் விரல்களைச் சேர்த்துக் கட்டின பட்டையை அவிழ்த்ததற்காக, மணமகளின் பிறவனுக்குத் (சகோதரனுக்கு); தரும் பணப் பரிசு (G.Tn.D.136);; present to the bride’s brother when he unties the silk tied by the bride’s father uniting the fingers of the bride and bridegroom. [கை + பிடி + சுருள். பணவளத்திற்கேற்பக் கைப்பிடிச்சுருள் மாறுபடும்.] |
| கைப்பிடிச்சுவர் | கைப்பிடிச்சுவர் kaippiḍiccuvar, பெ.(n.) 1. மொட்டை மாடி, படிக்கட்டு, பாலம் முதலியவற்றின் பக்கங்களில் கையாற்பிடித்துக்கொண்டுசெல்லுமாறு அமைக்கப்பட்ட உயரக் குறைவான சுவர் (C.E.M.);: கைப்பிடிச் செங்கல் walI similar to railings on both the side of staircase, bridge, etc., parapet wall. 2. சிறு சுவர்; small wall. க. கெய்பிடிகோடெ. [கைப்பிடி + சுவர்.] |
| கைப்பிடித்துப்பார்-த்தல் | கைப்பிடித்துப்பார்-த்தல் kaippiṭittuppārttal, 4 செ.கு.வி.(v.i.) 1. நாடி நடையை அறிதல்; feeling the pulse of a patient. 2. உள்ளங் கையின் கைவரையைச் சோதித்தல்; reading the lines of the palm; telling fortunes by examining the palm of the hand. 3. திறமையைச் சோதித்தல்; trying one’s ability (சா.அக.);. [கை+பிடித்து+பார்-] |
| கைப்பிடிபத்திரம் | கைப்பிடிபத்திரம்2 kaibbiḍibattiram, பெ.(n.) கைபிடிகாப்புபார்க்க;see kai-pidi-kappu. [கைபிடி + பத்திரம்.] |
| கைப்பிடிமடி | கைப்பிடிமடி kaippiḍimaḍi, பெ.(n.) 1. மீன்தங்கும் சிறிய வலைப்பை; small netted bag for fishing. 2. வலைப்பையின் முன்பகுதி (மீனவ.);; front side of the netted bag. [கைப்பிடி + மடி.] |
| கைப்பிடிமோதிரம் | கைப்பிடிமோதிரம் kaippiḍimōtiram, பெ.(n.) கைப்பிடிக் கணையாழி பார்க்க; see kai-p-pidi-k- Капаi-у-ali. [கைப்பிடி + மோதிரம்.] |
| கைப்பிடியாய்ப்பிடி-த்தல் | கைப்பிடியாய்ப்பிடி-த்தல் kaippiḍiyāyppiḍittal, 4 செ.குன்றா.வி.(v.t.) கையுங் களவுமாய்ப்பிடித்தல்; to catch a thief red handed, to detect a fraud even in the act of perpetration. [கைப்பிடி + பிடி-.] |
| கைப்பிடிவாள் | கைப்பிடிவாள் kaippiḍivāḷ, பெ.(n.) 1. கைவாள்; small sword (சூடா.);. 2. கை அரம்பம்; hand saw. மறுவ, கைவாள். [கைப்பிடி + வாள்.] |
| கைப்பிடிவேலி | கைப்பிடிவேலி kaippiḍivēli, பெ.(n.) கோயில் கட்டட அடித்தள வரிசை அமைப்பினுள் ஒரு பகுதி; a part of a foundation structure of a temple. [கைப்பிடி + வேலி.] |
| கைப்பிணக்கிடு-தல் | கைப்பிணக்கிடு-தல் kaippiṇakkiḍudal, 20 செ.கு.வி. (v.i.) கைகோர்த்தல்; to hold the hands of another in one’s own hands. “அவர்களோடே கைப்பிணக்கிடுகை முதலான இவன் செய்யும் விஷமங்கள் வாசாம கோசர மாகையாலே” (திவ்.பெரியாழ்.2:7.4, வியா.ப.395);. [கை + பிணக்கு + இடு-.] |
| கைப்பிணி | கைப்பிணி kaippiṇi, பெ.(n.) கையால்தழுவுகை; embracing. [கை + பிணை – கைப்பிணை → கைப்பிணி.] |
| கைப்பிணை | கைப்பிணை kaippiṇai, பெ.(n.) 1. காக்கும்படி கையில் ஒப்படைக்கப்பட்ட பொருள் அல்லது மாந்தர்; person or thing entrusted to one’s care, trust. 2.வேண்டுங் காலங்களில் குற்றவாளி தவறாமல் வருவதற்கு முறை(நீதி);மன்றம்அமர்த்தும் பிணையம்; bail or security demanded by the court to ensure the appearance of the accused when summoned. [கை + பிணை.] |
| கைப்பிரதி | கைப்பிரதி kaippirati, பெ.(n.) 1. ஒலைச் சாவடியில் உள்ளதைப் பார்த்து தாளில் எழுதி வைத்த படி (நகல்);; handwritten copy of a palm leaf manuscript. 2 கையெழுத்துப் படி(பிரதி);; hand written manuscript [கை+பிரதி] |
| கைப்பிள்ளை | கைப்பிள்ளை kaippiḷḷai, பெ.(n.) கைக்குழந்தை; baby in arms. வேலைக்காரிக்குக் கைப்பிள்ளை சாக்கு (பழ.);. வயிற்றுப் பிள்ளையை நம்பி, கைப்பிள்ளையைவிட்டதுபோல் (பழ.);. [கை + பிள்ளை.] |
| கைப்பிள்ளைக்காரி | கைப்பிள்ளைக்காரி kaippiḷḷaikkāri, பெ.(n.) கைக்குழந்தை வைத்திருப்பவள்; woman having new born baby. [கை + பிள்ளை + காரி.] |
| கைப்பிழி | கைப்பிழி kaippiḻi, பெ.(n.) கையால் பிழியப்பட்டது; that which is squeezed. Fin. kapsata (to squeeze);; Mong. Xabci; Q. gapi. [கை + பிழி.] |
| கைப்பிழை | கைப்பிழை1 kaippiḻai, பெ.(n.) கைக்குற்றம்பார்க்க see kai-k-kurram. ம.கய்பிழ. [கை + பிழை.] கைப்பிழை2 kaippiḻai, பெ.(n.) கவனக்குறைவால் நிகழ்ந்த குற்றச் செயல்; mistake due to carelessness. “பள்ளிசெல்வன் இவ்வூரிருக்கும் பள்ள வேணாட்டரையனைக் கைப்பிழையாலெய்து செத்தமையில்”(S.I.I.Vol.VII,68-12);. க. கெய்தப்பு [கை + பிழை.] |
| கைப்பிழைபாடு | கைப்பிழைபாடு kaippiḻaipāṭu, பெ.(n.) 1. கைத்தவறான குற்றம், கவனக் குறைவால் நிகழ்ந்த குற்றச் செய்கை; accidental mistake, slip of the pen. “நாட்டார் வேட்டைக்குப் போன இடத்திலே பள்ளி உழுக்கை நாடாழ்வான் பச்சைப் பள்ளியைக் கைப்பிழை பாடேயெய்ய” (தெ.கல்.தொ.XVI கல்,200);. “சம்புரத்திற்கும் பள்ளிசெல்வன் இவ் ஆரிருக்கும் பள்ளி வேணாட்டரையனை கைப்பிழையாலெய்து செத்தமையில் கைப்பிழை புகுந்தது இதுக்கு துரணாண்டார் கோயிலிலே அரை விளக்கு வைக்கச் சொல்ல” (தெ.கல்.தொ.7 கல்.68); [கல்,அகர.] |
| கைப்பிழைபுகு-தல் | கைப்பிழைபுகு-தல் gaibbiḻaibugudal, 2 செ.கு.வி. (v.i.) 1.கைத்தவறுநேர்தல்; to occur by slip of hand. “சம்புபுரத்திருக்கும் பள்ளிசெல்வன் இவ்வூரிருக்கும் பள்ளி வேணாட்டராயனைக் கைப் பிழையால் எய்து செத்தமையில்நாட்டவரும்சம்புவரையரும் கூடி இவன் வேணாட்டரையனுக்காகச் சாக வேண்டாம். கைப்பிழைபுகுந்தது'(S.I.I.Vol.VII,68.);. [கைப்பிழை + புகு-.] |
| கைப்பீது | கைப்பீது kaippītu, பெ.(n.) கைபீது பார்க்க;see {}. [U.kaifiyat → த.கைப்பீது.] |
| கைப்பு | கைப்பு1 kaippu, பெ.(n.) 1. அறுசுவையினொன்றான கசப்பு; oñe among the six flavours. 2.கசப்புப்பண்டம்; bitterness. 3. வெறுப்பு; dislike, aversion. ம.கைப்பு. Russ.gorik. [கை → கைப்பு.] கைப்பு2 kaippu, பெ.(n.) ஆடுதின்னாப்பாளை; wormkiller. [கை → கைப்பு.] கைப்பு kaippu, பெ.(n.) ஈயமில்லா ஏனத்தில் வைக்கப்பட்ட உணவின் சுவை taste of food kept in a lead uncoated vessel. [கரிப்பு→சிகைப்பு] |
| கைப்புக்கந்தம் | கைப்புக்கந்தம் kaippukkandam, பெ.(n.) கசப்புச் சரக்கு; aromatic drugs with a bitter taste(சா.அக.);. [கைப்பு + கந்தம்.] |
| கைப்புக்கெண்டை | கைப்புக்கெண்டை kaippukkeṇṭai, பெ.(n.) கருங்கெண்டைமீன்; bitter carp (சா.அக.);. கைப்புக்கெண்டை [கைப்பு + கெண்டை.] |
| கைப்புச்சரக்கு | கைப்புச்சரக்கு kaippuccarakku, பெ.(n.) கசப்பு மருந்துச் சரக்கு; any medicinal agent having a bitter taste (சா.அக.);. [கைப்பு + சரக்கு.] |
| கைப்புச்சீந்தில் | கைப்புச்சீந்தில் kaippuccīndil, பெ.(n.) சீந்தில்; a kind of medicinal creeper. [கைப்பு + சீந்தில்.] |
| கைப்புடை | கைப்புடை1 kaippuḍai, பெ.(n.) கைப்புட்டில்பார்க்க;see kai-p-puttil. [கை + புடை.] கைப்புடை2 kaippuḍai, பெ.(n.) அம்பின் இருபுறமும் இழைமுள் உள்ள கீழ்ப்பகுதி; the lower, feathered part of an arrow(கருநா.);. க.கெய்பொடெ. [கை + புடை.] கைப்புடை3 kaippuḍai, பெ.(n.) கைக்கட்டி; boil or obscess in hand. [கை + புடை.] கைப்புடை4 kaippuḍai, பெ.(n.) 1. வாயிற்காவலர் தங்குமிடம்; guard’s room. ‘தங்கள் கைப்புடைகளிலே இருத்தி’ (ஈடு.10,9:9);. 2. அருகு; nearness. “வெண்மதிக் கைப்புடை வியாழம் போல”(பெருங். இலாவாண. 19:92);. து. கைபுடெ. [கை + புடை.] |
| கைப்புட்டில் | கைப்புட்டில் kaippuṭṭil, பெ.(n.) கைவிரலுறை; armoured glove, glove (யாழ்.அக.);. [கை + புட்டில்.] புட்டில் : கூடை. கூடை போன்ற அமைப்பையுடையதால் இப் பெயர் பெற்றது. |
| கைப்புண் | கைப்புண் kaippuṇ, பெ.(n.) 1. ள்ளங்கைப்புண்; any sore or ulcer in the palm (சா.அக.);. கைப்புண்ணுக் கண்ணாடியா?(பழ.);. 2.தெளிவாகத் தெரிவது; anything clear to eyes. ம.கய்யில் புண்ணு;பட.கையுண்ணு. [கை + புண்.] |
| கைப்புண்ணியம் | கைப்புண்ணியம் kaippuṇṇiyam, பெ.(n.) 1.பெருந் தன்மை, தயாளம்; benevolence, liberality. 2. கையமைவு (கைராசி);; luckiness of one’s hand. ம.கைப்புண்ணியம். மறுவ. கைப்பேறு, கைவாக்கு, கைப்பாங்கு (கைராசி); கைப்பேறு. [கை + புண்ணியம்.] |
| கைப்புத்துவர்ப்பு | கைப்புத்துவர்ப்பு kaipputtuvarppu, பெ.(n.) கசப்போடு கூடிய துவர்ப்பு; bitter drugs with markedly astringent taste(சா.அக.);. [கைப்பு + துவர்ப்பு.] |
| கைப்புநீர் | கைப்புநீர் kaippunīr, பெ.(n.) 1. உப்புத்தண்ணீர்; brackish water(சா.அக.);. 2. கசப்பு நீர்; water bitter in taste. 3. உப்புநீரின் வண்டல்; brine remaining after salt has been derived from it in salt works, [கைப்பு + நீர்.] |
| கைப்புப் பீர்க்கு | கைப்புப் பீர்க்கு kaippuppīrkku, பெ.(n.) கசப்புப் பீர்க்கு; bitter gourd(சா.அக.);. [கைப்பு + பீர்க்கு.] |
| கைப்புப்பட்டை | கைப்புப்பட்டை kaippuppaṭṭai, பெ.(n.) ஒருவகை மரத்தின் கசப்புப் பட்டை; bitter bark of a tree(சா.அக.);. [கைப்பு + பட்டை.] |
| கைப்புப்பண்டம் | கைப்புப்பண்டம் kaippuppaṇṭam, பெ.(n.) கசப்புத் தின்பண்டம்; any bitter substance(சா.அக.);. [கைப்பு + பண்டம்.] |
| கைப்புப்புல் | கைப்புப்புல் kaippuppul, பெ.(n.) கசத்தம்புல்; bitter grass (சா.அக.);. [கைப்பு + புல்.] |
| கைப்புமருந்து | கைப்புமருந்து kaippumarundu, பெ.(n.) கசப்பு மருந்து; bitter medicine (சா,அக.);. [கைப்பு + மருந்து.] |
| கைப்புமானோன் | கைப்புமானோன் kaippumāṉōṉ, பெ.(n.) ஒருவகைச் செய்நஞ்சு; a kind of arsenic. [கைப்பு + உம் + ஆனோன்.] |
| கைப்புமாறல் | கைப்புமாறல் kaippumāṟal, பெ.(n.) 1. கசப்பு மாறுதல்; change of bitterness (சா.அக.);. 2. மருந்துணாக்கொள்ளும்போதுகசப்புப்பண்டங்களை விலக்கல்; abstaining from taking bitter substances when on diet. [கைப்பு + மாறல்.] |
| கைப்புயம் | கைப்புயம் kaippuyam, பெ.(n.) கைப்பட்டைபார்க்க: see kai-p-pattai. [கை + புயம்.] |
| கைப்புரட்டு | கைப்புரட்டு kaippuraṭṭu, பெ.(n.) கைத்திறமையால் செய்து காட்டும் ஏமாற்று வேலை; illusionary acts performed by the sleight of the hand. 2.கைமாற்று; short loan by way of accommodation. [கை + புரட்டு.] கைப்புரட்டு kaippuraṭṭu, பெ.(n.) கையெழுத்துப் போடத் தெரியாதவர்; illiterate person. மறுவ, கை நாட்டு [கை+புரட்டு] |
| கைப்புலி | கைப்புலி kaippuli, பெ.(n.) யானை; elephant.lit., tiger with a hand elephant. [கை + புலி] |
| கைப்புவலியுறுத்தி | கைப்புவலியுறுத்தி kaippuvaliyuṟutti, பெ.(n.) வலிமையை உண்டாக்கும் கசப்பு மருந்து; bitter tonic, (சா.அக.);. [கைப்பு + வலி + உறுத்தி.] |
| கைப்புவாதுமை | கைப்புவாதுமை kaippuvātumai, பெ.(n.) கசப்பு வாதுமைக் கொட்டை; bitter almond (சா.அக.);. [கைப்பு + வாதுமை.] |
| கைப்புவெட்பாலை | கைப்புவெட்பாலை kaippuveṭpālai, பெ.(n.) கசப்பு வெட்பாலை; bitter oleander (சா.அக.);. [கைப்பு + வெட்பாலை – கைப்புவெட்பாலை.] |
| கைப்புவேம்பு | கைப்புவேம்பு kaippuvēmbu, பெ.(n.) நிலவேம்பு; king of bitters, Justicia Paniculata (சா.அக.);. [கைப்பு + வேம்பு.] |
| கைப்பூட்டு | கைப்பூட்டு1 kaippūṭṭu, பெ.(n.) சிறிய பூட்டு; small lock. ம.கைப்பூட்டு [(கை + பூட்டு.] கைப்பூட்டு2 kaippūṭṭu, பெ.(n.) 1.மல்லரின்கைப்பிடி; hand-grip in wrestling. 2. தோட் பொருத்து; shoulder joint. ம.கைப்பூட்டு. [கை + பூட்டு.] |
| கைப்பெட்டகம் | கைப்பெட்டகம் gaippeṭṭagam, பெ.(n.) கைப் பெட்டி பார்க்க;see kai-p-pētti. ம.கைப்பெட்டகம்;க.கைபெட்டிக. [கை + பெட்டகம்.] |
| கைப்பெட்டி | கைப்பெட்டி kaippeṭṭi, பெ.(n.) சிறுபெட்டி; small box. ம. கைபெட்டி, கய்பெட்டி; க.கைபெட்டிகெ, கெய்பெட்டிகெ; தெ.சேபெட்டெ;பட. கைப்பெட்டி. [கை + பெட்டி.] |
| கைப்பேறிப்புளி | கைப்பேறிப்புளி kaippēṟippuḷi, பெ.(n.) காட்டெலுமிச்சை; Indian wild lime(சா.அக.);. [கைப்பு + ஏறி + புளி.] |
| கைப்பேறு | கைப்பேறு kaippēṟu, பெ.(n.) மருத்துவக் குணம் உண்டாவதாகக்கருதப்படும் தன்மை; success or skill in medical treatment. மறுவ, கைராசி. [கை + பேறு.] |
| கைப்பை | கைப்பை kaippai, பெ.(n.) 1. சொந்தச் செலவிற்காகப் பணம் வைக்கும் பை; a purse or bundle of money for one’s use. 2. சிறுபை; a small bag. க. கெய்கண்டு, கெய்சீல;படகைசீர, கய்சீர. [கை + பை.] |
| கைப்பொங்கல் | கைப்பொங்கல் kaippoṅgal, வி.எ. (adv.) தனக்கான உணவைத் தானே சமைத்துக் கொள்ளல்: cook food for one self. [கை+பொங்கல்] |
| கைப்பொட்டு | கைப்பொட்டு kaippoṭṭu, பெ.(n.) ஒருவகை அணி; a kind of an ornament. “திருக்கைப் பொட்டு ஒன்று” (S.I.I.II.80,7);. [கை + பொட்டு.] |
| கைப்பொம்மை | கைப்பொம்மை kaippommai, பெ.(n.) கைப்பாவை பார்க்க; see ka-p-pavai |
| கைப்பொருள் | கைப்பொருள் kaipporuḷ, பெ.(n.) கையிலுள்ள பொருள்; cash in hand, property in possession. “கைப்பொருள் போகூழாற் றோன்றும் மடி’ (குறள்.371);. மறுவ. கைம்முதல். ம.கைப்பொருள்;க.கெய்கண்டு. [கை + பொருள்.] |
| கைப்பொறுப்பாய் | கைப்பொறுப்பாய் kaippoṟuppāy, கு.வி.எ.(adv.) 1. பொறுப்பாய்,அக்கறையாய்; with full responsibility, earnestly. 2. ஊக்கம் தளராமல்; diligently. [கை + பொறுப்பாய்.] |
| கைப்பொறுப்பு | கைப்பொறுப்பு kaippoṟuppu, பெ.(n.) 1. வணிகம் முதலியவற்றில் செலவு இழப்பு முதலியவை தன் பொறுப்பு ஆகுகை; monetary or financial responsibility. 2. இழப்பு; loss. 3. தன் பொறுப்பு; self responsibility. [கை + பொறுப்பு.] |
| கைப்பொலி | கைப்பொலி kaippoli, பெ.(n.) கையாலள்ளும்பொலி; a handful of winnowed corn in the heap. [கை + பொலி.] |
| கைப்பொல்லம் | கைப்பொல்லம் kaippollam, பெ.(n.) சிறுதுண்டு (யாழ்.அக.);; small piece. [கை + பொல்லம்.] |
| கைப்பொழுது | கைப்பொழுது kaippoḻudu, பெ.(n.) கதிரவன் தோன்றும் போதும் மறையும் போதும் நிலவுலகுக்குமேல் கைம்முழ வுயரத்திலிருப்பதாகத் தோன்றும் சிறு நோம் (வின்.);; the time during which the rising or setting sun is just above the horizon. கைப்பொழுதாயும் காட்டுக்குப் போகலையா? கைப்பொழுது இருக்கவே வேலையை ஏறக்கட்டி விட்டாயா? (உ.வ.);. [கை + பொழுது.] |
| கைமகவு | கைமகவு gaimagavu, பெ.(n.) கைப்பிள்ளை பார்க்க;see kai-p-pillai. [கை + மகவு.] |
| கைமடிப்பு | கைமடிப்பு kaimaḍippu, பெ.(n.) கீழறுப்பு. ஏமாற்று (வஞ்சகச் செயல்); (வின்.);; cheating, duplicity. [கை + மடிப்பு.] |
| கைமட்டம் | கைமட்டம் kaimaṭṭam, பெ.(n.) 1.கைமதிப்பு பார்க்க;see kil-madippu. 2. கைப்பழக்கம் (வின்.);: precision of hand acquired by practice. 3. கொத்தன் மட்டம் பார்ப்பதற்கு உதவுங் கருவி (இ.வ.);; a mason’s implement for level-testing. 4. தரைமட்டத்திலிருந்து தாழவிட்ட கை நுனி வரையிலுள்ள உயரம்; height up to the tips of the hanging arms. கைமட்டத்துக்குச் சுவரை உயர்த்து (உ.வ.);. [கை + மட்டம்.] |
| கைமட்டு | கைமட்டு kaimaṭṭu, பெ.(n.) கைமதிப்பு (வின்.); பார்க்க;see kai-madippu. [கை + மட்டு.] |
| கைமணி | கைமணி kaimaṇi, பெ.(n.) பூசை போன்றவற்றில் பயன்படுத்தும் சிறிய மணி; a kind of small bell. “கைமணி ஒரணை நிறை ஐம்பத்தெண்பலம்” (S.I.I.V.521:10);. ம. கைமணி, [கை + மணி.] |
| கைமண்டை | கைமண்டை kaimaṇṭai, பெ.(n.) 1.நீர் முதலியன ஏற்பதற்கு ஏனம்போல் குவித்துக் கொள்ளுங் கை; hands held like a bowl. குழந்தைக்குப் பாலைக் கைமண்டை வைத்துப் புகட்டு (உ.வ.); [கை + மண்டை. மொந்தை → மந்தை → மண்டை.] |
| கைமதிப்பு | கைமதிப்பு kaimadippu, பெ.(n.) 1. கையால் தூக்கி மதிக்கும் மதிப்பு: estimating weight by hand. 2. தோராய மதிப்பு (இ.வ.);; rough estimation. ம. கைமதிப்பு. [கை + மதிப்பு.] |
| கைமதியம் | கைமதியம் kaimadiyam, பெ.(n.) கைமதிப்பு (யாழ்.அக.); பார்க்க;see kai-madippu. [கை + மதி + அம்.அம் சொ.ஆ.ஈறு. ஒ.நோ: தேக்கம்.] |
| கைமதில் | கைமதில் kaimadil, பெ.(n.) உயரம் குறைந்த மதில்; a low wall. ம. கைமதில். [கை + மதில்] |
| கைமயக்கு | கைமயக்கு kaimayakku, பெ.(n.) வசிய மருந்து(இ.வ.);; a preparation of drugs for keeping a person under fascination. [கை + மயக்கு.] |
| கைமரம் | கைமரம் kaimaram, பெ.(n.) 1. வீட்டுக்கூரையின் மரச்சட்டம் அல்லது நெற்றிச்சரம்; rafter of roof. 2. உழுத வயலைச் சமமாக்கப் பயன்படுத்தும் பலகை; a short leveling plank used in paddy fields. ம. கைமரம். [கை + மரம்.] |
| கைமருத்துவம் | கைமருத்துவம் kaimaruttuvam, பெ.(n.) 1.பட்டறிவு மருத்துவம்; practice of medicine through experience. 2. வீட்டு மருத்துவம்; home treatment. 3. கைப்பாகம்: palliative treatment. 4. எல்லோருக்கும் தெரிந்த மருத்துவம்; medical treatment known to everybody, well known medical treatment. க. கெய்கரண. [கை + மருத்துவம்.] |
| கைமருந்து | கைமருந்து kaimarundu, பெ.(n.) 1.அணியம் செய்து கையிலிருக்கும் மருந்து; prepared medicine on hand, 2. கைமுறையாற் செய்த மருந்து; medicine prepared by experience. 3. கைக்கிடு மருந்து; medicine applied to hand or arm (சா.அக.);. [கை + மருந்து.] |
| கைமறதி | கைமறதி kaimaṟadi, பெ.(n.) கைத்தவறு பார்க்க (வின்.);;see kai-t-tavaru. [கை + மறதி.] |
| கைமறி-தல் | கைமறி-தல் kaimaṟidal, 4 செ.கு.வி.(v.i.) கைமாறு1தல் பார்க்க;see kai-maru- [கை + மறி-.] |
| கைமறு-த்தல் | கைமறு-த்தல் kaimaṟuttal, 4 செ.குன்றாவி, (v.t.) கொடுக்க மறுத்தல்; to refuse to give, deny. [கை + மறு-.] |
| கைமறை | கைமறை kaimaṟai, பெ.(n.) விதைத்தபின் விதை உள்ளடங்க உழும் மேலுழவு (யாழ்ப்.);; ploughing after sowing, to cover the seed. [கை + மறை.] |
| கைமறைப்பு | கைமறைப்பு kaimaṟaippu, பெ.(n.) மருந்து அணியமாக்குதலில் ஏற்படும் அற்றம்; secrecy in the preparation of medicine (சா.அக.);. [கை + மறைப்பு.] |
| கைமலம் | கைமலம் kaimalam, பெ.(n.) 1. கன்றிறந்த பின் பால் கொடுக்கும் மாடு (இவ.);; cow that milks after having lost its calf (செ.அக.);. 2. கைம்மூலம் பார்க்க;see kai-m-mulam. [கை + மூலம் – கைமூலம் → கைமலம் (கொ.வ);.] |
| கைமலிவு | கைமலிவு kaimalivu, பெ.(n.) விலைநயம்; cheapness, கைமலிவு பார்த்து வாங்கு (இ.வ.);. [கை + மலிவு.] |
| கைமா | கைமா kaimā, பெ.(n.) கொத்தின இறைச்சி; minced meat. [U.{} → த.கைமா.] |
| கைமாட்டாதார் | கைமாட்டாதார் kaimāṭṭātār, பெ.(n.) வேலை செய்ய இயலாதவர்; incapable or incompetent persons;maimed, disabled or weak persons. “கைமாட்டாதார்……. நரகமென்ற பதல்வர்” (பிரபோத.13:10);. [கை + மாட்டாதார்.] |
| கைமாட்டிக்கொள்(ளு)-தல் | கைமாட்டிக்கொள்(ளு)-தல் kaimāṭṭikkoḷḷudal, 12 செ.கு.வி.(v.i.) அகப்பட்டுக் கொள்ளுதல்; to get entangled, to be caught. [கை + மாட்டிக்கொள்(ளு);-.] |
| கைமாட்டு-தல் | கைமாட்டு-தல் kaimāṭṭudal, 5 செ.கு.வி.(v.i.) கைமாட்டிக்கொள்(ளு);-தல் பார்க்க;see kai. matti-k-ko(lu);-. [கை + மாட்டு.] |
| கைமாயம் | கைமாயம் kaimāyam, பெ.(n.) 1.கையினாற் செய்யும் மாயவித்தை; magic, sleight of hand. 2. திறன்மிகு திருட்டு (வின்.);; dexterous stealing. ம. கைமாயம். [கை + மாயம்] |
| கைமாயவித்தை | கைமாயவித்தை kaimāyavittai, பெ.(n.) செய்ய முடியாத செயலைச் செய்வதாகச் சொல்லிச் செய்யுந் தொழில் (Pond.);; jugglery. [கை + மாய + வித்தை.] |
| கைமார் | கைமார் kaimār, பெ.(n.) முழம் என்னும் நீட்டல் அளவு; elmeasure. Fin. kyynārā (elmeasure);. Est. kuunar. Mordvin. kener, Hung. konyok: Jap. kuneru, Q. kanay. [கை + மார்.] மார் என்பது கைகளையும் அகன்ற பக்கவாக்கில் நீட்டிய அளவு. ஒரு முழம் என்பது முழங்கை முதல் நடுவிரல் நுனி வரையிலான அளவைக் குறிப்பதாகலின் முழங்கை யளவினதாகிய மார் என்னும் பொருளில் கைமார் என இடவழக்குச் சொல்லாயிற்று. |
| கைமாறாட்டம் | கைமாறாட்டம் kaimāṟāṭṭam, பெ.(n.) 1.கைத் தவறு; slip of the hand. 2 கைவன்மையாற் செய்யும் ஏமாற்றம்; juggling with hand, deception practised by sleight of hand. [கை + மாறாட்டம்.] |
| கைமாறாப்பு | கைமாறாப்பு kaimāṟāppu, பெ.(n.) கைகளை மாற்றி மார்போடு சேர்த்துத் தோள்மேல் வைக்கை; folding of arms cross-wise against the breast, the right hand touching the left shoulder and the left hand the right (shoulder); one. [கை + மாறாப்பு.] |
| கைமாறு | கைமாறு1 kaimāṟudal, 11. செ.கு.வி. (v.i.) ஒருவருரிமை இன்னொருவருக்கு மாறுதல்; to transfer one’s right to another. [கை + மாறு-.] கைமாறு2 kaimāṟudal, 5 செ.கு.வி.(v.i.) 1.ஒருவர் கையினின்றும் மற்றொருவர் கைக்குச் செல்லுதல்; to change hands, as a thing when sold. இந்த வீடு எத்தனை கைமாறியிருக்கிறது என்கிறீர்கள். 2. வேலையாள்கள் முறைமாறுதல்; to be relieved in work, as by relays. 3. ஒழுக்கத்தைக் கைவிடுதல்; to change one’s conduct. “கடிதகன்று கைமாறி”(கலித். 65);. 4. கட்சி மாறுதல்; to change sides, leave one party and join other. ம. கைமறியுக, கைமாறுக. [கை + மாறு-.] கைமாறு2 kaimāṟu, பெ.(n.) 1. கைம்மாறு பார்க்க;see kai-m-măru. 2. கைம்மாறு பார்க்க;see kai-m-marru. [கை + மாறு.] |
| கைமாற்றம் | கைமாற்றம் kaimāṟṟam, பெ.(n.) கைமாற்று பார்க்க;see kai-marru-. ம. கைமாற்றம். [கை + மாற்றம்.] |
| கைமாற்றம்பிள்ளை | கைமாற்றம்பிள்ளை kaimāṟṟambiḷḷai, பெ.(n.) கைமாற்றுக்கடன் கணக்குப் பார்க்கும் பணியாளன் (இ.வ.);; accountant in charge of call-loans. [கை + மாற்றம் + பிள்ளை.] |
| கைமாற்று | கைமாற்று1 kaimāṟṟudal, 5 செ.குன்றாவி (v.t.) 1.ஆளை வேலையினின்று முறைமாற்றுதல் (வின்.);: to relieve, as persons in work, by relays. 2. Usins unitsis); Glérigou; to barter, exchange. 3. solippi (Q.5u.);; to sell, dispose of |கை மாற்று-) கைமாற்று kal-marய, பெ.(n) 1. சிறிய கடன்; Glorsog, snåååLoir; short loan without bond for a given time, கைமாற்றாகக் கொஞ்சம் பணம் கொடு. 2. ஒருவர் வயம் இருந்தது மற்றொருவர் வயம் ஆதல்; changing of hands ownership. 3. கையை மாற்றி மாற்றி நீரிற் போட்டு நீந்தும் நீச்சல் (இ.வ.);; swimming with alternate overarm stroke. 4. பண்டமாற்று (இ.வ.);; barter, exchange. 5. விற்பனை (இ.வ.);; sale. க. கெய்பதலு. [கை + மாற்று.] |
| கைமிகு | கைமிகு1 gaimigudal, 2 செ.கு.வி.(v.i.) 1 அளவு கடத்தல்; to go beyond, 2.மிகுதியாதல்; to become exessive. 3. தடுக்க முடியாததாதல்; to become uncontrollable. க. கெய்மிகு. [கை + மிகு-.] |
| கைமிஞ்சு | கைமிஞ்சு1 kaimiñjudal, 5 செ.கு.வி.(v.i.) 1.வரம்பு மீறுதல்; to overstep or transgress the limits, to go beyond bounds, “போனா ளெனைவிட்டுக்கைமிஞ்சியே” (தனிப்பா.2. 138:351);. 2. பிறரோடு சண்டை செய்ய முற்படுதல்; to be disposed to fight; to be aggressive. க. கெய்மிஞ்சு. [கை + மிஞ்சு-.] கைமிஞ்சு2 kaimiñjudal, 5 செ.கு.வி.(v.i.) 1.நோய் கட்டுப்படாமை; turning of disease beyond cure. 2. அடித்தல்; striking. 3. அளவுக்குமேல் சேர்த்தல்; adding beyond the normal quantity as salt, tamarind or chilli to a sauce (சா.அக.);. [கை + மிஞ்சு-.] |
| கைமிடுக்கு | கைமிடுக்கு kaimiḍukku, பெ.(n.) 1. கைத்தேர்ச்சி; dexterity, skill, speedy execution. 2. படைத்திறன்; might of arms, strength (சேரநா.);. 3. திறமை; ability. என் கைமிடுக்காலே யறிந்து சொல்லுகிறேன் (உ.வ.);. ம. கைமிடுக்கு. [கை + மிடுக்கு.] |
| கைமீறு-தல் | கைமீறு-தல் kaimīṟutal, 5. செ.கு.வி(v.i.) கரணியம், சிக்கல் முதலியவை கட்டுப் பாட்டுக்கு உட்படாத அல்லது சமாளிக்க முடியாத நிலையை அடைதல்; problems that exceed beyond a limit to solve, வீட்டுச் சிக்கல் கைமீறிப் போய் விடுமோ என்று பயப்படுகிறேன் [கை+மீறு-தல்.] |
| கைமுகம் | கைமுகம் gaimugam, பெ.(n.) உடலைவிட்டு உயிர்போகும் கதிகளுள் ஒன்று (சீவக.948, உரை);; |
| கைமுகிழ்-தல் | கைமுகிழ்-தல் gaimugiḻtal, 4 செ.கு.வி.(v.i.) இரு கைகளைக் கூட்டி வணங்குதல்; to join hands out of respect, to salute, to pray to god. க. கைமுகி; து. கயிமுகிழனி;பட. கைமொகெ. [கை + முட்டி.] |
| கைமுடக்கம் | கைமுடக்கம் kaimuḍakkam, பெ.(n.) செய்கைக்குக் கை பயன்படாமை; inablity to use the hand, as from paralysis. 2. பண முட்டுப்பாடு; straitened circumstances, severe straits. [கை + முடக்கம்.] |
| கைமுடக்கு | கைமுடக்கு kaimuḍakku, பெ.(n.) கைநொண்டி; lame of hand. கைமுடக்கு நோய் வந்தமையால் நலிந்து போனான் (உ.வ.); [கை + முடக்கு – கைமுடக்கு.] |
| கைமுடக்குவாதம் | கைமுடக்குவாதம் kaimuḍakkuvātam, பெ.(n.) கைகளை அசைக்கவும், நீட்டவும் முடியாமற் செய்யும் ஒரு வகை நோய்; a kind of rheumatism affecting the joints of the arm or hand due to the aggravated condition of vayu which prevails in the arm (சா.அக.);. [கை + முடக்கு + நோய்.] |
| கைமுடம் | கைமுடம் kaimuḍam, பெ.(n.) 1. கைநொண்டி; lame of hand. 2. திருகிய கை; a deformity of the hand in which it is twisted out of shape or position (சா.அக.); [கை + முடம். முட → முடம்.] |
| கைமுடிப்பு | கைமுடிப்பு kaimuḍippu, பெ.(n.) 1. கைப்பொருள்; cash or property in possession, savings. 2. கட்டுச்சோறு; food for a journey. [கை + முடிப்பு.] |
| கைமுடை | கைமுடை1 kaimuḍai, பெ.(n.) கைமுடக்கம்2 பார்க்க;see kai-mudakkam. [கைமுடக்கம் → கைமுடை.] கைமுடை2 kaimuḍai, பெ.(n.) செலவுக்குப் பணத்தட்டுப்பாடு; straitened circumstances, severe straits. [கை + முடை.] |
| கைமுடைஞ்சல் | கைமுடைஞ்சல்1 kaimuḍaiñjal, பெ.(n.) 1.கை இளைத்தல் அல்லது சூம்பல்; atrophsy of hand. 2. கைமுடக்கம்2 பார்க்க;see kai-mudakkam. கைமுடைஞ்சலுக்குப் பணம் தேவைப்படுகிறது (உ.வ.);. [முட → முடை → முடைஞ்சல். கை + முடைஞ்சல்.] கைமுடைஞ்சல்2 kaimuḍaiñjal, பெ.(n.) கைமுடை பார்க்க;see kai-mudai. [கை + முடைஞ்சல்.] |
| கைமுட்டி | கைமுட்டி1 kaimuṭṭi, பெ.(n.) 1. விரல் மடக்கியுள்ள கை; clenched fist. 2. முட்டிபோர்; boxing with the fist. து. கய்தமுட்டெ. [கை + முட்டி.] |
| கைமுட்டு | கைமுட்டு2 kaimuṭṭu, பெ.(n.) 1.விரற்கணு; knuckle. 2. முழங்கைச் சந்து; elbow joint. ம. கைமுட்டு [கை + முட்டு.] கைமுட்டு3 kaimuṭṭu, பெ.(n.) கைமுடக்கம்பார்க்க see kai-mudakkam. [கை + முட்டு.] |
| கைமுதல் | கைமுதல் kaimudal, பெ.(n.) கைம்முதல் பார்க்க;see kai-m-mudal. ம. கைமுதல் [கை + முதல்.] |
| கைமுதிகளுாயம் | கைமுதிகளுாயம் gaimudigayam, பெ.(n.) அதுவே அப்படியானால் மற்றதனைப்பற்றிக் கூறுவதேன் என்னும் வாதநெறி; illustration of arguing a posteriori, “குழறுபடை கைமுதிக நியாயத்தான் இனிது விளங்கும்” (சித். மரபுகண். 21);. [கை + (முதுக்கு); முதிக + ஞாயம். முதுக்கு : அறிவு] |
| கைமுதிர்-தல் | கைமுதிர்-தல் kaimudirdal, 2 செ.கு.வி.(v.t.) இளமைப் பருவம் நிரம்புதல் (இ.வ.);; to be grown up. [கை + முதிர்-.] |
| கைமுந்து | கைமுந்து1 kaimundudal, 5 செ.கு.வி.(v.i.) கைமிஞ்சு-தல் பார்க்க;see kai.minju-. [கை + முந்து-.] |
| கைமுந்து-தல் | கைமுந்து-தல் kaimundudal, 5 செ.குன்றாவி.(v.t.) திருடுதல்; to steal, pilfer. அவன் கைமுந்துந் தன்மையன். [கை + முந்து-.] |
| கைமுனை | கைமுனை1 kaimuṉai, பெ.(n.) கையின் நுனிப்பகுதி; the point of the hand. க. கெய்துகி. [கை + முனை.] கைமுனை2 kaimuṉai, பெ.(n.) கைவிரலின் முன் பகுதி; the point of the hand. க. கெய்துகி. [கை + முனை.] |
| கைமுறி | கைமுறி kaimuṟi, பெ.(n.) 1. ஒலைத்துண்டு; a piece of palm leaf. 2. ஓலைச்சீட்டு; note on a piece of palm leaf. ம. கைமுறி (குறிப்பு);. [கை + முறி.] |
| கைமுறி-தல் | கைமுறி-தல் kaimuṟital, 3 செ.கு.வி.(v.i.) கை தற்செயலாய் ஒடிதல்; fracture of arm or hand occuring accident ally (சா.அக.);. [கை+முறி-தல்.] கைமுறி-தல் kaimuṟidal, 2 செ.குன்றாவி, (v.t.) கை தற்செயலாய் ஒடிதல்; to fracture of arm or hand occurring accidentally (சா.அக.);. [கை + முறி-.] |
| கைமுறி-த்தல் | கைமுறி-த்தல் kaimuṟittal, 4 செ.கு.வி.(v.i.) 1.கையை ஒடித்தல்; breaking or causing fracture of the arm. 2. நெட்டி முறித்தல்; wringing the hands. 3. வருத்தத்தால் கையைப் பிசைந்து கொள்ளல்; manifesting grief by convulsive clasping of the hands (சா.அக.);. [கை+முறி-த்தல்.] |
| கைமுறுக்கு | கைமுறுக்கு kaimuṟukku, பெ.(n.) கையால் பிழிந்து திரித்துச் சுட்டெடுக்கும் கார முறுக்கு; a kind of snack made of rice flour using fingers to give the shape of screw like twisting. [கை + முறுக்கு.] |
| கைமுறை | கைமுறை kaimuṟai, பெ.(n.) 1. மருந்து செய்யும் வழக்க முறை; the practice of making medicine without a regular medical education but chiefly relying on experience of observation; empirical method (சா.அக.);. பாட்டி மருத்துவம் என்பது நம் முன்னோர் கைமுறையாகச் செய்து வந்த பயனுள்ள மருத்துவ முறையாகும். 2. விளையாட்டு முதலியவற்றில் மாறிமாறி வரும் முறை; one’s turn as in play. [கை + முறை.] கைமுறை1 kaimuṟai, பெ.(n.) 1. விளையாட்டு முதலியவற்றில் மாறி மாறி வரும் முறை; one’s turn, as in play. [கை + முறை.] கைமுறை2 kaimuṟai, பெ.(n.) மருந்து செய்யும் பட்டறிவு முறை; empirical method of preparing medicine. [கை + முறை.] |
| கைமுறை மருந்து | கைமுறை மருந்து kaimuṟaimarundu, பெ.(n.) 1.பழக்கத்தால் செய்த மருந்து; medicine prepared from experience. 2. சாதனைப் பழக்கத்தாற் செய்த மருந்து; medicine based on habitual preparation (சா.அக.);. [கைமுறை + மருந்து.] |
| கைமுறை வேதியியல் | கைமுறை வேதியியல் kaimuṟaivētiyiyal, பெ.(n.) செய்முறை (சோதனை); வகையைக் கூறும் வேதியியல் நூல்; a book on practical chemistry (சா.அக.);. [கைமுறை + வேதியியல்.] |
| கைமுளி | கைமுளி kaimuḷi, பெ.(n.) மணிக்கட்டிலுள்ள எலும்பு; [கை + முளி.] |
| கைமுழம் | கைமுழம் kaimuḻm, பெ.(n.) முழங்கை நீளமுள்ள அளவு; length of fore-arm. மூன்று கைம்முழம் மல்லிகைப்பூ வாங்கி வந்தேன் (உ.வ.);. க. கெய்மாரு. [கை + முழம்.] |
| கைமுழுத்தம் | கைமுழுத்தம் kaimuḻuttam, பெ. (n.) கடையில் முதல் விற்பனை (பேணி); (இலங்.);: first sale of the day for cash payment as soon as the shop opens. 45sol-āommis இன்றைக்கு நீங்கள் தான் கைமுழுத்தம் என்றார் [கை+முளுத்தம்] |
| கைமூட்டு | கைமூட்டு kaimūṭṭu, பெ.(n.) தோட்பொருத்து; shoulder-joint. ம. கைமூட்டு. [கை + மூட்டு.] |
| கைமூலம் | கைமூலம்1 kaimūlam, பெ.(n.) கமுக்கட்டு (பிங்.);: armpit. [கை + மூலம்.] கைமூலம்2 kaimūlam, பெ.(n.) கைராசிபார்க்க;see kai-rāši. [கை + மூலம்.] கைமூலம் kaimūlam, பெ.(n.) கன்றிழந்த கறவைமாடு; milch cow, that has lost its calf. கை + மூலம்,] |
| கைமெய்காட்டு-தல் | கைமெய்காட்டு-தல் kaimeykāṭṭudal, பெ.(n.) 5 செ.கு.வி. (v.i.); மெய்ப்பாடு தோன்ற உறுப்பசைவு காட்டல் (அபிநயங்காட்டுதல்);; to make gesticulations. [கை + மெய் + காட்டு-.] |
| கைமெய்யாய் | கைமெய்யாய் kaimeyyāy, வி.எ.(adv.) கையும் களவுமாய் (இ.வ.);; in the very act of crime, redhanded. [கை + மெய் + ஆய்.] |
| கைமேசு | கைமேசு kaimēcu, பெ.(n.) கைவிரலுறை; gloves. [கை + மேசு.] |
| கைமேய்ச்சல் | கைமேய்ச்சல் kaimēyccal, பெ.(n.) ஆடு மாடுகளைக் கையில் பிடித்துக் கொண்டுமேய விடுதல்; grazing the cattles by holding the ropes in the hand. [கை+மேய்ச்சல்] |
| கைமேற்பணம் | கைமேற்பணம் kaimēṟpaṇam, பெ.(n.) பொருளின் விற்பனை முதலியவற்றுக்காக உடன் கையிற் கொடுக்கும் பணம்; ready money, cash payment. [கைமேல் + பணம்.] |
| கைமேலே | கைமேலே kaimēlē, வி.எ.(adv.) உடன்கையில்; in quick return, immediately. கைமேலே பயன் கிடைத்தது (உ.வ.);. |
| கைமோசம் | கைமோசம் kaimōcam, பெ.(n.) கைக்கேடு பார்க்க: See kai-k-kédu. ம. கைமோசம் [கை + மோசம்.] |
| கைமோசம்போ-தல் | கைமோசம்போ-தல் kaimōcambōtal, பெ.(n.) 8 செ.கு.வி.(v.i.); கைக்கேடுபோ-தல் பார்க்க;see kai-k-kédu-po-. [கைமோசம் + போ-.] |
| கைம்பெண் | கைம்பெண் kaimbeṇ, பெ.(n.) கைம்பெண்டாட்டி பார்க்க;see kaim-pendatti. [கை + பெண்.] |
| கைம்பெண்கூறு | கைம்பெண்கூறு kaimbeṇāṟu, பெ.(n.) ஆண் வழித்தோன்றலில்லாத கணவனையிழந்தாளுக்குக் குடும்பச் சொத்திலிருந்து கொடுக்கும்வாழ்க்கைப்படி (சீவனாம்சம்);(இ.வ.);; allowance, out of family funds, made to a son’s widow for maintenance. [கைம்பெண் + கூறு.] |
| கைம்பெண்சாதி | கைம்பெண்சாதி kaimbeṇcāti, பெ.(n.) கைம்பெண்; widow. [கைம்பெண் + சாதி.] |
| கைம்பெண்டாட்டி | கைம்பெண்டாட்டி kaimbeṇṭāṭṭi, பெ.(n.) கணவனை இழந்தவள் (விதவை);; widow. மறுவ. கைம்மை, கைனி, கலங்கழி, மடக்கை. [கைம்(மை); + பெண்டாட்டி.] |
| கைம்பெண்ணுடை | கைம்பெண்ணுடை kaimbeṇṇuḍai, பெ.(n.) கணவனை இழந்த பெண் உடுத்தத் தக்க உடை; a dress of a widow. [கைம்பெண் + உடை.] |
| கைம்பெண்மணம் | கைம்பெண்மணம் kaimbeṇmaṇam, பெ.(n.) கணவனையிழந்தவளைமணத்தல்; marring a widow. [கைம்பெண் + மணம்.] மணமகள் நிலை பற்றி, தமிழ் மணங்கள் 1. கன்னி மணம், 2. கட்டுப்பட்ட மணம், 3. கைம்பெண்மணம் என முத்திறப்படும். இவற்றுள் பின்னவை யிரண்டும் இழந்தோர் மணமாகவும் இடைத்தரத்தோர் மணமாகவும் இருந்து வந்திருக்கின்றன(தமிழர்திருமணம்,28);. |
| கைம்மகவு | கைம்மகவு gaimmagavu, பெ.(n.) பச்சிளங் குழந்தை ; babe in arms. “கைம்மகவொடுங் காதலவரொடும்” (பரிபா.15:47);. மறுவ.கைப்பிள்ளை,கைக்குப்பிள்ளை,கைக்குழந்தை, இளம்பிள்ளை. க. கைம்மொகு;தெ. செய்பிட்ட. [கை + மகவு.] |
| கைம்மடங்கு-தல் | கைம்மடங்கு-தல் kaimmaḍaṅgudal, 5 செ.கு,வி (v.i.) வாளாவிருத்தல்; laziness, not doing anywork “உழவினார் கைம்மடங்கின் இல்லை” (குறள்.1036);. |
| கைம்மடல் | கைம்மடல் kaimmaḍal, பெ.(n.) தோட்பட்டை (யாழ்.அக.);; scapula, shoulder blade. 2.கைச்சீப்பு; comb. [கை + மடல்.] |
| கைம்மட்டம் | கைம்மட்டம் kaimmaṭṭam, பெ.(n.) 1. கைமதிப்பீடு, கைமட்டு; level fixed by hand. 2. கொத்தன் கைமட்டம் பார்க்க உதவும் கருவி(ரசமட்டம்);; hand level used to see level by the mason. மறுவ. கைமட்டு, கைமதியம். [கை + மட்டம்.] |
| கைம்மணி | கைம்மணி kaimmaṇi, பெ.(n.) 1.பூசையில் வழங்கும் சிறுமணி; hand bell used in worship. “கைம்மணிச் சீரன்றிச் சீரறியா” (தமிழ்வா.102);. 2.கைத்தாளம்; cong used in temple. 3.கோல்கொண்டடிக்கும் வட்ட மணிவகை(சேமக்கலம்);; cymbals. மறுவ. படலிகை, பரந்தவட்டம். க.கெய்கண்டெ [கை + மணி.] |
| கைம்மதம் | கைம்மதம் kaimmadam, பெ.(n.) யானையின் துதிக்கையினின்றுவெளியேறும்மதநீர்(திவா.);; exudation from the trunk of an elephant in rut. [கை + மதம்.] |
| கைம்மதியம் | கைம்மதியம் kaimmadiyam, பெ.(n.) கைமட்டு: level fixed by hand. [கை + மதியம்(மதிப்பீடு);.] |
| கைம்மயக்கம் | கைம்மயக்கம் kaimmayakkam, பெ.(n.) இன்ப மயக்கம்; fascination,infatutation. “திரிகண்ண ரானவர்செய்தகைம்மயக்கமோ”குற்றா.குற70:26). [கை + மயக்கம்.] |
| கைம்மயக்கு | கைம்மயக்கு kaimmayakku, பெ.(n.) 1. கைம் மயக்கம்பார்க்க;see kai-m-mayakkam. 2.ஒருவசிய மருந்து; [கை + மயக்கு.] |
| கைம்மரம் | கைம்மரம் kaimmaram, பெ.(n.) வீட்டின் பாய்ச்சு மரம்; one of the sloping beams of the house, rafter. கைம்மரம் [கை + மரம்.] |
| கைம்மருந்து | கைம்மருந்து kaimmarundu, பெ.(n.) 1.கையிலுள்ள மயக்கு (வசிய); மருந்து; medicine for infatuation kept always on hand for use. “அவன் கைம்மருந்தான் மெய்ம்மறந்து திரிகின்றாயோ” (தனிப்பா.1.323:18);. 2. தான் பயன்படுத்திப் பயன் அடைந்த (அனுபவப்பட்ட); மருந்து (வின்.);: simple medicine prepared from one’s own experience. 3. கணவனைத் தன்வயமாக்கப் பெண்டிர் பயன்படுத்தும் மருந்து: specifics administered by wives to keep their husbands from straying. 4. மருத்துவரின்றித் தாமே செய்து கொடுக்கு மருந்து: self prepared medicine without doctor. து. கயிமர்த். [கை + மருந்து.] |
| கைம்மறதி | கைம்மறதி kaimmaṟadi, பெ.(n.) நினைவுதவறுகை; forgetfulness, as of a place where a thing was kept. தமிழர் வரலாறு என்ற பாவாணரின் நூலை கைமறதியாக எங்கோ வைத்துவிட்டேன் (உ.வ.);. 2. அயர்ச்சி; forgetfulness. [கை + மறதி.] |
| கைம்மறி-த்தல் | கைம்மறி-த்தல் kaimmaṟittal, 4 செ.குன்றாவி.(v.t.) 1. கையால் தடுத்தல்; to check or resist with the forearm. 2. கைகவித்து விலக்குதல்; to wave the open hand as a sign of disapproval. “கைம்மறித்த காந்தளந்தோதகாதெனவே” (சீவக.1227);. [கை + மறி-.] |
| கைம்மறை | கைம்மறை1 kaimmaṟai, பெ.(n.) கையால்மறைத்தல்; hiding through hands. [கை + மறை.] |
| கைம்மலை | கைம்மலை kaimmalai, பெ.(n.) மலை போன்றது, கையை உடைய யானை (அக.நி.);; lit, mountain with a hand, elephant. [கை + மலை.] |
| கைம்மா | கைம்மா kaimmā, பெ.(n.) துதிக்கையை உடைய விலங்கு, யானை; elephant, an animal with a trunk. “பொலம்படைக் கைம்மாவை” (பரிபா.11:52);. மறுவ.கைக்குன்று.கைம்மலை.உம்பல்.உ.வா.ஒங்கல், கரி, கள்வன், கறையடி, குஞ்சரம். தும்பி, நால்வாய், புகர்முகம், புழைக்கை (பூட்கை);. பெருமா, பொங்கடி, யானை (எனை);, வழுவை, வாரணம், வேழம், கைப்புலி. கை + மா – கைம்மா.] |
| கைம்மாட்டாங்கானா-தல் | கைம்மாட்டாங்கானா-தல் kaimmāṭṭāṅgāṉātal, 6 செ.கு.வி.(v.i.) கையெழுத்து இடுவதற்கு ஆகமாட்டாதவனாக இருத்தல்; one who becomes unfit to put his own signature. “இது பற்றமுடையான் கைய்ம்மாட்டாங் கானமைக்கு. இவைபற்றமுடையான இவை தாண்டான் எழுத்து” (தெ.கல்.தொ.5 கல்.985); (கல்.அக.); [கை + மாட்டாங்கான் (மாட்டாமை); + ஆதல்.] |
| கைம்மாட்டாங்கு | கைம்மாட்டாங்கு kaimmāṭṭāṅgu, பெ.(n.) தற்குறி; mark. “ஆளுடையானும் கைம்மாட்டாங் கானமைக்கும்” (S.I.I.VII.406);. [கை + மாட்டாங்கு (மாட்டாமை, இயலாமை, கையால் எழுதத் தெரியாமை);.] |
| கைம்மாயம் | கைம்மாயம் kaimmāyam, பெ.(n.) கைமயக்கு பார்க்க;see kai-mayakku. [கை + மாயம்.] |
| கைம்மாய்ச்சி | கைம்மாய்ச்சி kaimmāycci, பெ.(n.) கைவிலங்கு (யாழ்.அக.);, handcuff. மறுவ.கைமாச்சி, கைமாச்சு, [கை + மாய்ச்சி(மாய்ச்சி : பூட்டுவிலங்கு.] |
| கைம்மாறு | கைம்மாறு1 kaimmāṟudal, 5.செ.குன்றாவி.(v.t.) 1.மேற்கொள்ளுதல்; to assume, partake, usurp. “களிற்றியல் கைம்மாறுவார்” (பரிபா.9:50);. து. கயிமாருனி. [கை + மாறு-.] கைம்மாறு2 kaimmāṟu, பெ.(n.) 1. பகரம் (பதிலி);; substitute, exchange. “கைம்மாறா நோயும் பசலையுந்தந்து”(குறள் 1183);. 2. செய்த உதவிக்குச் செய்யும் நன்றி ; recompense, return. “கைம்மாறு வேண்டா கடப்பாடு” (குறள்.211);. [கை + மாறு. கையினது மறுசெய்கை, அதேபோன்ற மாற்றுச் செய்கை.] |
| கைம்மாறுவெற்றிலை | கைம்மாறுவெற்றிலை kaimmāṟuveṟṟilai, பெ.(n.) ஒரு வகை வெற்றிலை; a kind of betel leaf (சா.அக.);. மறுவ. கம்மாறு வெற்றிலை, [கய் → கைம் + மாறு + வெற்றிலை.] |
| கைம்மாற்று | கைம்மாற்று kaimmāṟṟu, பெ.(n.) சிறிய கடன் தொகை; hand loan (of money);. கைமாற்றாக வாங்கிய பணத்தை மறுநாளே திரும்பக் கொடுத்து விட்டேன்(நெல்.வழ.);. க.கெய்பதலு. [கை + மாற்று.] |
| கைம்மிகல் | கைம்மிகல் gaimmigal, பெ.(n.) கைமிகுதல்பார்க்க;see kai-migu-. [கை + மிகல்.] |
| கைம்மிகு-தல் | கைம்மிகு-தல் gaimmigudal, 21செ.கு.வி.(v.i.) 1. அன்பு, துன்பம்,நோய் போன்றவை அளவுகடத்தல்; to exceed the limit, to be beyond sufferance, as love. sorrow, disease. “காப்புக் கைம்மிகுதல்” thlóðgei ” (தொல்,பொருள்.214);. 2. இனக் கட்டுப்பாட்டிற்கு மாறுபட்டு ஒழுகுதல்; to violate the caste rules. “கைம்மிகனலிதல்” (தொல். பொருள்.260);. [கை + மிகு-.] |
| கைம்மிடிப்பு | கைம்மிடிப்பு kaimmiḍippu, பெ.(n.) கையிலொன்று மில்லாமை; nothing iñ hand. [கை + மிடிப்பு.] |
| கைம்மிறு-தல் | கைம்மிறு-தல் kaimmiṟudal, 5 செ.கு.வி.(v.i.) அளவுக்கு மிஞ்சுதல்; to exceed, transgress. கடன் பட்டவரின் வாழ்க்கை கைம்மீறிப் போய்விட்டது(உ.வ.);. து. கைமீரு. [கை + மீறு.] |
| கைம்மீன் | கைம்மீன் kaimmīṉ, பெ.(n.) பதின்மூன்றாவது விண்மீன் (அத்தம்);; the 13th naksatra. [கை + மீன்.] |
| கைம்முகிழ்-த்தல் | கைம்முகிழ்-த்தல் gaimmugiḻttal, 4 செ.கு.வி.(v.i.) கடவுள் வழிபாடு வணக்கம் முதலியவற்றில் கையைக் கூப்புதல் (உ.வ.);; to join or unite the palms of the hand, as in salute, prayer, etc. து. படகைமுகி. [கை + முகிழ்-.] |
| கைம்முடக்கம் | கைம்முடக்கம் kaimmuḍakkam, பெ.(n.) மூட்டு வினைக்கேடு; lameness. [கை + முடக்கம்.] |
| கைம்முடிப்பு | கைம்முடிப்பு kaimmuḍippu, பெ.(n.) முடிப்புப் பணம்; wrapped money, bundled cash. [கை + முடிப்பு.] |
| கைம்முட்டு | கைம்முட்டு kaimmuṭṭu, பெ.(n.) கைம்மிடிப்பு பார்க்க;see kai-m-midippu. [கை + முட்டு.] |
| கைம்முதல் | கைம்முதல் kaimmudal, பெ.(n.) 1.வணிகம் முதலியவற்றிற்கு வைத்த கைப்பொருள்; business capital investment. 2. கையில் இருக்கும் பணம்; cash in hand, savings, ready money. “கைம்முதற்கு நட்டமில்லை” (பணவிடு.241);. 3.விலைமதிப்புமிக்க பொருள்; cash valuables. “கைம்முதல் கொடுத்தனர்” (உபதேச கா. சிவத்துரோ.72);. 4. முறை (சாதனம்);; means. ‘ஒரு கைம்முத லின்றிக்கே யிருக்க'(ஈடு4,7:9);. ம. கைமுதல். [கை + முதல் – கைமுதல் → கைம்முதல்.] |
| கைம்முறி-தல் | கைம்முறி-தல் kaimmuṟidal, 2 செ.கு.வி. (v.i.) ஏற்ற துணை இல்லாது போதல்; devoid of companion. [கை + முறி-.] கைம்முறை |
| கைம்முறை | கைம்முறை kaimmuṟai, பெ.(n.) ஆடல் (நர்த்தனம்);; dance. “நின்று பண்ணுங் கைம்முறை தப்பா” — (சரவண.பணவிடு.417);. [கை + முறை.] |
| கைம்முற்று-தல் | கைம்முற்று-தல் kaimmuṟṟudal, 6 செ.கு.வி.(v.i.) முடிவு பெறுதல்; to be finished, exhausted. “கைம்முற் றலநின் புகழே” (புறநா.53:8);. [கை + முற்று-.] |
| கைம்மூலம் | கைம்மூலம் kaimmūlam, பெ.(n.) 1.அக்குள்; arm pit. 2. கன்று செத்த பின்பு கறக்கும் பால்; milk drawn after the death of calf. 3. கையினடி; back arm. 4. முகாந்திரம்; cause, reason. [கை + மூலம்.] |
| கைம்மெய்காட்டு-தல் | கைம்மெய்காட்டு-தல் kaimmeykāṭṭudal, 5 செ.குன்றாவி.(v.t.) அபிநயங்காட்டல்; to indicate passion. [கை + மெய் + காட்டு-.] |
| கைம்மேற்பணம் | கைம்மேற்பணம் kaimmēṟpaṇam, பெ.(n.) உடனே கையிற் கொடுக்கும் பணம்; cash on hand. [கை + மேல் + பணம்.] |
| கைம்மேல் | கைம்மேல் kaimmēl, வி.எ.(adv.) கைமேலே பார்க்க;see kai-mélé. [கை + மேல்.] |
| கைம்மை | கைம்மை1 kaimmai, பெ.(n.) 1.காதலனைப் பிரிந்திருக்குந் தனிமை; love-lorn condition. “கைம்மையா லொண்கலையும்….. தோற்றவர்கள்” (பதினொ. ஆளு. திருவுலா 128);. 2. கணவனை யிழந்த நிலைமை; widowhood. “கருந்தடங் கண்ணி கைம்மை கூறின்று” (பு.வெ.10, சிறப்பிற். 4. கொளு);. 3. கணவனை இழந்தவள் (விதவை);; widow. “ஓர் கைம்மையைக் கலத்த னோக்கி” (நைடத. கலிதோன்று.9);. [கை → கைம்மை.] கைம்மை2 kaimmai, பெ.(n.) 1. சிறுமை; ture, degradation, ignominy, “கைம்மை கொள்ளேல் காஞ்சன” (மணிமே.20.122);. 2. அறி வின்மை; ignorance. “கைம்மையி னானின் கழல் பர வாது” (பதினொ. ஆளு. திருவந்.18);. 3. பொய்; lie. “கைம்மை சொல்லி” (திவ். திருவாய். 5:1:1);. [கை + மை.] |
| கைம்மை பெற்றோன். | கைம்மை பெற்றோன். kaimmaibeṟṟōṉ, பெ.(n.) கைம்பெண்ணிடம் பிறந்தவன் (சூடா.);; one born of a widow. [கைம்மை + பெற்றோன்] |
| கைம்மை வினை | கைம்மை வினை kaimmaiviṉai, பெ.(n.) கையால் வேலை செய்யும் திறம்; manual skill. “கைம்மை வினையினில் வேறுவேறு கறியமுதாக்கி”(பெரியபு. இளையான்குடி. 22);. [கை → கைம்மை + வினை.] |
| கைம்மோசம் | கைம்மோசம் kaimmōcam, பெ.(n.) செய்கைப் பிழை; error, omission. கை + மோசம்.] |
| கையகப்படு | கையகப்படு1 gaiyagappaḍudal, 20 செ.கு.வி. (v.i.) வயப்படுதல்; to come under one’s control. “மாநிலங் கையகப்படுவது பொய்யா காதே”(புறநா.58);. [கையகம் + படு-.] கையகப்படு2 gaiyagappaḍuttal, 20 செ.குன்றாவி, (v.t.) 1. ஒப்புக் கொடுத்தல்;சிக்கப் பண்ணுதல்; to entangle 3. பிடித்தல்; to hold, control. 4. கைக்குட்சேருதல்; to hold within hands. [கையகம் + படு-.] |
| கையகப்படுத்து-தல் | கையகப்படுத்து-தல் gaiyagappaḍuddudal, 5 செ.கு.வி. (v.i.) 1. தன்வயப்படுத்துதல்; to get possession of, to inveigle, entice. 2. காட்டிக் கொடுத்தல்; to betray(செ.அக.);. 4. சிக்க வைத்தல்; to entangle (கழ.தமி.அக.);. [கையகம் + படுத்து-.] |
| கையகலக்கரை | கையகலக்கரை gaiyagalaggarai, பெ.(n.) சேலை வேட்டி போன்றவற்றின் நீளவாக்கு ஒர விளிம்பில் உள்ள கை அகலத்தில் உள்ள வண்ணக் கரை; border of a cloth or saree to the breadth equal to that of a palm. [கை + அகலம் + கரை.] |
| கையகலம் | கையகலம் gaiyagalam, பெ.(n.) மிகச் சிறிய; very small, hand breadth. ம. கையகலம். [கை + அகலம்.] |
| கையகல்(லு)-தல் | கையகல்(லு)-தல் gaiyagalludal, 7 செ.கு.வி. (v.i.) விட்டு நீங்குதல்; to separate from, depart from. [கை + அகல்(லு);-.] |
| கையங்கண்ணனார் | கையங்கண்ணனார் kaiyaṅkaṇṇaṉār, பெ.(n.) கடைக் கழகம் மருவிய புலவர்; the poet who belonged to the last Šangam (அபி.சிந்);. [கை+அம்+கண்ணன்+ஆர்] |
| கையசதி | கையசதி kaiyasadi, பெ.(n.) கைகடுப்பு; fatigue in the hand. [கை + அசதி.] |
| கையசதிவாதம் | கையசதிவாதம் kaiyasadivādam, பெ.(n.) கைகடுத்து, பிடரி நரம்பை யிழுத்து வலியை உண்டாக்கும் ஒருவகை ஊதைநோய்; an affection of cold marked by severe pain of the arm and spasmotic contraction of the nape (சா.அக.);. [கை + அசதி + வாதம்.] |
| கையடக்கஅகரமுதலி | கையடக்கஅகரமுதலி gaiyaḍaggaagaramudali, பெ.(n.) கையடக்கமாக ஆளும் வகையில் அச்சிடப்பட்ட அகரமுதலி; a packet dictionary. [கை + அடக்கம் + அகரமுதலி.] |
| கையடக்கப்பதிப்பு | கையடக்கப்பதிப்பு kaiyaḍakkappadippu, பெ.(n.) சிறிய அளவிலான நூற்பதிப்பு; a small size publication of a book. [கை + அடக்கம் + பதிப்பு.] |
| கையடக்கம் | கையடக்கம்2 kaiyaḍakkam, பெ.(n.) 1.கைக்குள் அடங்குகை; being handy 2. கைக்குள் அடங்கக் கூடிய பொருள்; anything handy or portable. 3. சேமித்து வைக்கப்பட்ட பொருள்; money laid by, savings. 4. ஒளித்து வைக்கப்பட்ட பொருள்; that which is concealed. ம. கையடக்கம். [கை + அடக்கம்] கையடக்கம்1 kaiyaḍakkam, பெ.(n.) கைக்கு நொய்தானது; handy one. ம. கையடக்கம். [கை + அடக்கம்.] |
| கையடம் | கையடம் kaiyaḍam, பெ.(n.) கையடர் எழுதிய ஒரு நூல்; book written by kaiyadar. [கையடர்→கையடம்.] |
| கையடர் | கையடர் kaiyaḍar, பெ.(n.) கையடம் என்ற நூலின் ஆசிரியர்; an author of the book Kayadam. [கையடன் → கையடர்.] கையடி1-த்தல் 4. செ.குன்றாவி, (v.t.); 1. விலைக்கு விற்றல்; to sell என் வண்டியை எப்படியாவது கையடிக்கப் பார்க்கிறேன் (உ.வ.); [கை + அடி-.] |
| கையடி | கையடி2 kaiyaḍittal, 4 செ.கு.வி. (v.i) 1. கை தட்டிப் பறித்தல், ஏமாற்றுதல்; to deceive, to cheat. 2. கைபோடு-தல் பார்க்க;see kai-podu-, 3. கைவேலை செய்தல்; to work with the hand, to do manual labour. [கை + அடி-] கையடி3 kaiyaḍittal, 4 செ.கு.வி.(vi.) ஒப்புறுதி அளித்தலைக் காட்டும் வகையில் மற்றவரின் உள்ளங்கையில் அடித்தல்; to manifest approbation by striking the palm of another’s hand, to agree, to assent உறுதி (சத்தியம்); சொல்வார். தலையில் கைவைத்தல், துணிமேல் கைவைத்தல். புத்தகத்தின்மேல் கைவைத்தல், தாங்கள் மதிக்கும் பொருள்மேல் கைவைத்தல் எனப் பலவகையால் சொல்வதுண்டு. “அவ்வாறே கையடித்தலும் வந்ததாம்” என்ற பரிபாடல் வரியையும் இங்கு ஒப்புநோக்கலாம். க. கெய்வொய், கெய்பொய். [கை + அடி-.] கையடி4 kaiyaḍi, பெ.(n.) களத்தில் கையாலடித்த நெல்மணி (தவசம்);; grain threshed by hand on the threshing floor (G.Sm.D.I.i.210);. [கை + அடி.] நெற்கதிரினைக் கையால் அடித்துப் பெற்ற நெல்லைக் கையடி நெல், அடி.நெல் என்றும் கையால் அடித்தபிறகு குவித்த நெல்லைப் போரடி நெல் என்றும் வழங்குவது வழக்காம். கையடிப்படு1-தல் 4 செ.கு.வி. (v.i.); 1. ஒரு பொருள் பல கைகளில் கடந்து செல்லுதல்; to pass through many hands, as a current coin. 2. கைக்குட்படுதல்; to obtain in hand. [கை + அடிபடு-.] கையடிப்படு2-தல் kai-y-adippadu-, 5 செ.குன்றாவி(v.t); ஆட்சிக்குட்படுத்துதல்; to have control over, rule. [கையடி + படு-.] |
| கையடியுண்(ணு)-தல் | கையடியுண்(ணு)-தல் kaiyaḍiyuṇṇudal, 12 செ.கு.வி.(v.i) ஈடுபடுதல்; to be absorbed, en-grossed. ‘இங்கு இவன் நீர்மையிலே கையடியுண்டிருக் கையாலே’ (ஈடு,9.9:பிர.);. கையடு-த்தல் 4 செ.குன்றாவி.(v.t.); 1.கையடைத்தல் பார்க்க;see kai-y-adai- “அடைக்கல நினக்கென வவன்வயிற் கையடுத்து” (பெருங்.மகத23:49);. 2. அடைக்கலம் புகுதல் (உ.வ.);: to take refuge in. [கை + அடு-.] |
| கையடுப்பு | கையடுப்பு kaiyaḍuppu, பெ.(n.) கையால் எடுத்துச் செல்லத்தகும் சிற்றடுப்பு; small portable oven. [கை + அடுப்பு] கையடை1-த்தல் 4 செ.குன்றாவி(v.t); ஒப்படைத்தல்; to give charge to. [கை + அடை-] |
| கையடை | கையடை2 kaiyaḍai, பெ.(n.) 1.அடைக்கலம்: Re-fuge. 2. காக்குமாறு ஒப்படைத்த பொருள்; a thing which was handed over for safe keeping. 3. கடனைத் தீர்; to pay off or discharge a debt [கை + அடை] கையடை3 kaiyaḍai, பெ.(n.) 1.பிறர் கையில் ஒப்புவிக்கை; entrusting, depositing. 2.காக்குமாறு ஒப்பித்த பொருள்; trust, deposit. “கையடை யாகுமென்னு……..காட்டுங் காலை” (கம்பரா. வாலிவ. 151);. 3. கையூட்டு (இ.வ.);; bribe. [கை + அடை] |
| கையடைப்பு | கையடைப்பு kaiyaḍaippu, பெ.(n.) கைவசமான பொருள்; that which is kept under one’s charge or control, நெஞ்சும் இவள்தனக்குக் கையடைப் பாகையாலே (ஈடு, 2,4:3); (செ.அக..);. [கை + அடைப்பு.] |
| கையணி | கையணி kaiyaṇi, பெ.(n.) கைக்கு அணியும் அணிகலன்கள்; ornaments for the hand. க. கெய்தொடி.கெ. [கை + அணி] |
| கையனார் | கையனார் kaiyaṉār, பெ.(n.) யாப்பிலக்கண ஆசிரியர்களில் ஒருவர்; a Tamil scholar who wrote a treatise on prosody. [கையன்+ஆர்] இவர் யாப்பிலக்கண நூலாசிரியர். அமுதசாகரர் செய்த காண்டிகையுரையில் இவர் செய்த யாப்பியற் சூத்திரம் ஆங்காங்கு எடுத்துக் – காட்டப்பட்டுள்ளது (அபி.சிந்.);. |
| கையமைதி | கையமைதி kaiyamaidi, பெ.(n.) கைவிரல்களை நீட்டுதல், மடக்குதல், கூட்டுதல், விலக்குதல், குவித்தல் ஆகிய ஐந்து நிலைகளின் அடிப்படையில் தன் எண்ணத்தைப் புறத்தே வெளியிடுவதற்குக் காட்டும் நாட்டிய மெய்ப்பாட்டுக் குறிப்பு நிலைகள்; five types of hand and finger positions in dance posture of the ancient traditional art of dancing of the Tamils. [கை + அமைதி] கையமைதிகளுள் 24 வகை தொழிற்கைகளும் 4 வகை எழிற்கைகளும் அடங்கும். 1.அருட்கை, 2. ஈகைக்கை, 3. கடகக்கை, 4. விளிக்கை, 5. மெய்பொருள் விளக்கக்கை, 6. சுட்டுக் கை 7. அச்சுறுத்தும் கை, 8. கத்திரிக்கை, 9. விரிதாமரைக்கை, 10. வியப்புக்கை, 11. தளிர்க்கை, 12. துயிற்கை, 13. அரைநிலாக்கை, 14. இருபாற்கை, 15. முத்தலைவேற்கை, 16. முட்டிக்கை, 17. சிகரக்கை, 18. நிலம் தொழுகை, 19. கிடக்கை, 20. கடியவலம், 21. தழுவற்கை, 22. விற்கை, 23. உடுக்கைக் கை, 24. ஒறுத்தல் கை. |
| கையமைவு | கையமைவு kaiyamaivu, பெ.(n.) சிலர் கைக்குள்ளதாகக் கருதப்படும் சிறப்புத்தன்மை (கைராசி);; merit or luckiness of hand. [கை + அமைவு.] கையயர்-தல் 2 செ.கு.வி.(v.i.); 1.சோர்வடைதல்; to get tired. 2: நிலைமை தாழ்தல்; to be reduced in circumstances. [கை + அயர்-.] |
| கையம் | கையம் kaiyam, பெ.(n.) 1.நீர் (அ.க.நி.);; water. 2. கடல்; sea. [கயம் -→ கையம்.] கையம்பாய் கு.வி.எ.(adv); 1. கையிலுள்ள அம்புபோலக் கிடைத்தற்கு எளிதாய்; like an arrow in the hand, ready at hand, easily available. 2. உறுதியாய்; unmistakably, most certainly. [கை + அம்பு + ஆய்.] |
| கையம்பு | கையம்பு1 kaiyambu, பெ.(n) சிறு அம்பு; Small arrow. ம. கையம்பு. [கை + அம்பு] கையம்பு3 kaiyambu, பெ.(n.) 1.உறுதி; firmness, strength. 2. நம்பிக்கை; trust. [கை + அம்பு] கையமர்-த்தல் 3 செ.கு.வி.(v.i.); அமர்ந்திருக்கக் குறிப்புக்காட்டல்; to give a sign, to remain peaceful hint to sit, by hands. [கை + அமர்-] கையமர்த்து-தல் 3 செ.குன்றாவி. (v.t.); 1. கையாற் குறிப்புக் காட்டி ஒலியடங்கச் செய்தல்; to silence, as an audience, by a show of hand. 2. கையால் குறிப்புக்காட்டி அவையோரை அமரச் செய்தல்; to motion a person or an assembly to be seated. 3.அடக்கி ஆளுதல்; to keep under proper control, as children. சிறுபிள்ளைகளைக் கையமர்த்திக்கொண்டு போவது எளிதான செயலன்று (இ.வ.);. 4. ஒப்பாரியில் அழுகையை நிறுத்தச் செய்தல்; to stop weeping in lamentation. நீண்ட நேரமாக அழுபவளைக் கையமர்த்து (உ.வ.);. [கை அமர்த்து-] கையமை-த்தல் 3 செ.கு.வி.(v.i.); கையமர்த்தல் பார்க்க;see ka-y-amar-. [கை + அமை-.] |
| கையரம் | கையரம் kaiyaram, பெ.(n.) அராவுவதற்குரிய சிறு எஃகு கருவி; hand file. [கை + அரம்.] |
| கையரம்பம் | கையரம்பம் kaiyarambam, பெ.(n.) சிறு ஈர்வாள்; hand saw. [கை + அரம்பம்] |
| கையராயர் | கையராயர் kaiyarāyar, பெ.(n.) கள்ளர்குடிப் பட்டப்பெயர்களுள் ஒன்று (கள்ளர் சரித்.ப.98);; a caste title of Kallars. [கையன் + அரையர்.] கையரி1-த்தல் 4 செ.கு.வி. (v.t.); 1.கையில் தினவெடுத்தல்; to itch at hand. 2. அல்வழியில் பொருள் தேட முயலுதல்; to take effort to get things in improper way, [கை + அரி-,] |
| கையரி | கையரி2 kaiyari, பெ.(n.) தேடல் (அக.நி);;seeking, searching. [கை + அரி – கையரி.] கையரிக்கொள்(ளு);-தல் 10 செ.குன்றாவி.(v.t); 1. தேடுதல் (திவா.);; to seek. search for. 2. வாரி அரித்துக் கொள்ளுதல்; to gather, sweep up. “காடு கையரிக் கொண்டு” (சீவக 30);. [கையரி + கொள்(ளு);-] |
| கையரியம் | கையரியம் kaiyariyam, பெ.(n.) இரும்பு (மூ.அக.);; iron. [கை + அரியம்.] |
| கையர் | கையர் kaiyar, பெ.(n.) 1.கீழ்மக்கள் (திவா.);; mean, despicable persons. 2. கள்ளர்; thieves. “கைவந்தவா செய்யுங் கையர்” (திருநூற். 94);. 3. ஏமாற்றுபலர் (வஞ்சகர்);; deceivers, cheats ignorant persons. “ஒராக்கையர்கள் தம்மைத்தாமே காதலித்து” (சிவதரு. பலவிசிட். 41);. [கை + அர்.] |
| கையறம் | கையறம்1 kaiyaṟam, பெ.(n.) இரங்கற்பா; Elegy. “கம்பன் பேரிற் பாடிய கையறம் (தமிழ்நா. 92);. மறுவ, வசைக்கவி. [கை + அறம்] கையறம்2 kaiyaṟam, பெ.(n.) பெருந்துன்பம்; great distress. “வாளமர்கட் கையறமாம்” (பாரதவெண். 176);. [கை + அறம்.] |
| கையறல் | கையறல் kaiyaṟal, பெ.(n.) கையறவு பார்க்க;see kai-y-aravu. [கை + அறல்.] கையறல் kaiyaṟal, பெ.(n.) 1.ஒழுக்கமின்மை; indecency. 2.செயலின்மை; powerlessness. 3. இரத்தல்; begging. மறுவ. கையறவு. [கை + அறல்.] |
| கையறல்விலக்கு | கையறல்விலக்கு kaiyaṟalvilakku, பெ.(n.) ஓரணிகாரம்; a kind of decoration. அது கையறு தலைக் காட்டி விலக்குவது (உ..வ,);. [கையறல் + விலக்கு.] |
| கையறவு | கையறவு kaiyaṟavu, பெ.(n.) 1. செயலற்ற நிலை; state of utter prostration, helplessness. “வாராள் காயசண் டிகையெனக் கையற வெய்தி” (மணிமே 20:26);. 2. இறப்பு; death. “கையற வுரைத்துக் கை சோர்ந் தன்று” (பு.வெ.10. சிறப்பிற். 14, கொளு);. 3. துன்பம், பெருந்துயர்; affliction, sorrow, disaster. “யான்பட்ட கையறவு காணாயோ” (கம்பரா. சூர்ப். 107);. 4. ஊடல்; love quarrel. “கையறவு வட்டித்து” (பரிபா.10:33);. 5 ஏழ்மை; Impecuniosity, poverty. “பிறர்கை யறவு தான்நா ணுதலும்” (புறநா.157:2); 6. ஒழுக்கமின்மை (வின்);; immorality. [கை + அறவு] கையறி-தல் 2 செ.கு.வி.(v.i); 1.பழக்க மாதல்; to become trained or adept. 2. செய்யுமுறைமை அறிதல்; to know how to do things; to be discreet and knowing. “கையறியாப் பேதை” (குறள், 836);. மறுவ. கையறல். [கை + அறி-.] |
| கையறிந்தவன் | கையறிந்தவன் kaiyaṟindavaṉ, பெ.(n.) 1,நாடி பார்க்க அறிந்தவன்; one who is skilled in examining pulse. 2. தேர்ந்த மருத்துவன்; an experienced physician (ச.அக.);. [கை + அறிந்தவன்.] |
| கையறியாமை | கையறியாமை kaiyaṟiyāmai, பெ.(n.) செய்வ தறியாமை; helplessness. “கையறியாமை உடைத்தே” (குறள்.925);. [கை + அறியாமை] கையறு-தல் 20 செ.கு.வி.(v.i.); 1. செயலற்றுப் போதல்; to be laid prostrate, be overcome, as with pity. “காணா வுயிர்க்குங் கையற்றேங்கி” (மணிமே.3:89);. 2. மானமழிதல்; to be broken hearted. “கையற் றின்ன லெய்தலும்” (ஞானா 31:22);. 3. அளவு கடத்தல்; to exceed limits. “காப்பின் கடுமை கையற வரினும்” (தொல். பொருள். 114);. 4.மீட்சி யரிதாதல்; to be irremediable, overwhelming. “கையறு துன்பங் காட்டினுங் காட்டும்'” 5. இறத்தல்; to die. “காதி மலைந்தே கையற்றார்” (பாரத பதினாறாம்..2);. 6.ஒழுக்கம் நீங்குதல்; to become immoral. [கை + அறு-.] |
| கையறுகிளவி | கையறுகிளவி gaiyaṟugiḷavi, பெ.(n.) தாய் துஞ்சாமை நாய் துஞ்சாமை முதலாய காப்பு மிகுதி சொல்லி வரவு விலக்குதலைக் கூறும் அகத்துறை (அகப்.);,(களவியல்.99.);; theme describing obstacles to the hero visiting the heroine. [கையறு + கிளவி.] கையறுத்துக்கொள்(ளு);-தல் 16 செ.கு.வி.(v.i); பொருள் இழப்பு ஏற்படுதல் (இ.வ.);; to suffer loss of money or materials. [கையறுத்து + கொள்(ளு-] |
| கையறுதி | கையறுதி kaiyaṟudi, பெ.(n.) 1.அறுதியாக விற்கை (வின்);; Outright sale. 2. முற்றும் கைவிட்டு நீக்குகை (வின்);; quitting finally; relinguishing entirely, as one’s claim or right. 3. கையுறுதி2 பார்க்க;see kai-y-urudi(செ.அக.);. [கை + அறுதி] |
| கையறுதியாய்விடல் | கையறுதியாய்விடல் kaiyaṟudiyāyviḍal, பெ.(n.) தீராதன கைவிடுதல்; giving up as incurable: giving up all hopes (சா.அக.);. [கை + அறுதியாய் + விடல்.] |
| கையறுநிலை | கையறுநிலை kaiyaṟunilai, பெ.(n.) 1.தலைவனேனும் தலைவியேனும் இறந்தமைக்கு அவர் ஆயத்தார் முதலானோர் செயலற்று மிக வருந்தியதைக் கூறும் புறத்துறை; theme describing the utter helplessness of dependents at the death of a chief or his wife. “கழிந்தோர் தேஎத்தழிபட ருறிஇ, ஒழிந்தோர் புலம்பிய கையறு நிலையும்” (தொல், பொருள். 79);. 2. கையறுநிலை பற்றிய சிற்றிலக்கியம் (வின்.);; a poem on kaiarunilai. [கையறு + நிலை] வாட்போரில் இறந்த மன்னனைக் கண்டு யாழ்ப்பாணரும் சுற்றத்தாரும் அவன் பட்ட பாட்டைக் கூறி இரங்கிப் பாடப்பெற்ற இலக்கியம். |
| கையறை | கையறை1 kaiyaṟai, பெ.(n.) கையாறு2பார்க்க;see kai-y-aru. “கலன் மாய்த்தவர் கையறை போல்” (தணிகைப்பு. களவு 104);, மறுவ. கையறவு, கையறல். [கை + அறை] கையறை2 kaiyaṟai, பெ.(n.) கையாறு3 (சூடா.); பார்க்க;see kai-y-aru (செ.அக.);. கையறை3 kaiyaṟai, பெ.(n.) சிறிய பொருள் வைப்பறை (இ.வ.);; small store-room, as in a temple (செ.அக.);. [கை + அறை. கை = சிறிய.) |
| கையலகு | கையலகு gaiyalagu, பெ.(n.) கைமரம்; Rafter “உத்தரமுதலியன பயில அவற்றின் மேலே பளிக்குக் கையலகாலே கைபரப்பி” (சீவக. 593 உரை);. ம. கைலகு. [கை + அலகு.] |
| கையலப்பு | கையலப்பு kaiyalappu, பெ.(n.) 1.கையசைத்து நடத்தலிற் காணப்பெறும் நளினம்; a kind ofzestin a walk. “காதோரங் கொண்டைக்காரி கையலப்பில் கெட்டிக்காரி” (நா.பா.);. 2. ஒருவித அழகு; a kind of beauty. [கை + அலப்பு.] கையலம்பு-தல் 5 செ.குன்றாவி. (v.t.); 1. கையைக் கழுவுதல்; to wash the hand. 2. விலக்கி விடுதல்; to avert. [கை + அலம்பு-.] கையலு-த்தல் 4 செ.கு.வி.(v.i.); கையயர்2-தல் பார்க்க;see kai-y-ayar-. [கை + அலு-.] கையலை-த்தல் 4 செ.குன்றாவி, (v.t); துன்புறுத்தல்; to trouble, harass, torment. “கையலைத் தோடுமோர் களிமகற் காண்மின்” (பெருங், உஞ்சைக், 40.98);. கொ.வ. கையலப்பு, [கை + அலை-.] கையழி-தல் 2 செ.கு.வி.(v.i.); செயலறுதல்; to be disabled, to be broken-hearted. “கையழிந்து புலவர் வாடிய பசிய ராகி” (புறநா.240); [கை + அழி-.] |
| கையல்லது | கையல்லது kaiyalladu, பெ.(n.) தகாதது, கடிபட்ட; that which is unbecoming. “காதன்மை கையல்ல தன்கட் செயல்” (குறள், 832); [கை + அல்லது.] |
| கையளவு | கையளவு kaiyaḷavu, பெ.(n.) மிகச் சிறு அளவு; a small measure. கையளவு இடமிருந்தால் அவன் கற்பனை வானளவு சென்றுவிடும் (உ.வ.);. [கை + அளவு] கையளி-த்தல் 4 செ.குன்றாவி.(v.t.); கையடை-த்தல் பார்க்க; see kai-y-adai-(செ.அக.);. [கை + அளி-] கையளிப்பு பெ.(n.); பிறரிடம் ஒப்பிக்கை [கை + அளிப்பு.] கையற கு.வி.எ. (adv); முற்றும்; Utterly. “இவன் கையற நசிக்கின்ற காலத்து “(நீலகேசி 187 உரை);. [கை + அற.] கையறக்கொள்(ளு);-தல் 10 செ.குன்றாவி.(v.t.); முழுத்தொகையினையும் பெற்றுக்கொள்ளுதல்; to receive full amount. “விலைப்பொருள் இந்நாளிலே கையிலே கையறச் கொண்டு” (தெ.க.கல்.தொ. 1 433);. [கை + அற + கொள்.] |
| கையளிவாள் | கையளிவாள் kaiyaḷivāḷ, பெ.(n.) சிற்றரிவாள்; small sickle. P கையளிவாள் மறுவ. கருக்கறுவாள். [கை + அரிவாள்.] |
| கையாக்கம் | கையாக்கம் kaiyākkam, பெ.(n.) கைபடுவதனால் உண்டாவதாகக் கருதும் நன்மை; luckiness associated with one’s hand. அவன் கையாக்கமுள்ளவன் (இ.வ.);. மறுவ, கைராசி [கை + ஆக்கம்.] |
| கையாடல் | கையாடல் kaiyāṭal, பெ.(n.) 1. பயன்படுத்துகை; administration, usage. 2. திருட்டு; theft. 3.நம்பிக்கைக்கு மாறாகப் பிறர் பொருளைக் கவர்ந்து கொள்ளுதல்; misappropriation. அரசு பணத்தைக் கையாடல் செய்த அலுவலருக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனை (உ.வ.);. [கை + ஆடல்.] கையாடு1-தல் 5 செ.குன்றாவி.(v.t.); 1. பயன் படுத்துதல்; administering as medicine. 2. நம்பிக்கைக்கு மாறாகப் பிறர் பொருளைக் கவர்ந்து கொள்ளுதல்);; misappropriation of funds (சா.அக.);. [கை + ஆடு-.] கையாடு2-தல் 5 செ.கு.வி.(v.i.); முதுமையின் அறிகுறியாகக் கை நடுங்குதல்; shivering of hands due to old age. [கை + ஆடு] கையாடு3-தல் 5 செ.கு.வி.(v.i.); கையாள்(ளு);-தல் பார்க்க;see kai-y-a!(!u);-, ம. கையாடு. [கை + ஆடு.-] |
| கையாட்சி | கையாட்சி kaiyāṭci, பெ.(n.) 1.கைப்பழக்கம்; constant use and practice. 2.தொழில்; profession, occupation. “ஆலயத்தின் களவு கையாட்சியான்” (குற்றா, தல மந்தமா. 90);. 3. ஒருவன் வசமானது; that which is on hand or in one’s possession and enjoyment. 4. பட்டறிவினால் நன்மையெனத் தெளிந்தது (வின்.);; that which has been proved good by experience (செ.அக,);. [கை + ஆட்சி,] |
| கையாட்சி மருந்து | கையாட்சி மருந்து kaiyāṭcimarundu, பெ.(n.) கைதேர்ந்த மருந்து; approved medicine efficacious drug (சா,அக,);. [கை + ஆட்சி + மருந்து.] |
| கையாண்ட மருந்து | கையாண்ட மருந்து kaiyāṇṭamarundu, பெ.(n.) நோய்க்குக் கொடுத்து ஆய்ந்த மருந்து; tried medicine [கை + ஆண்ட + மருந்து.] கையாணி பெ.(n.); கைமரத்திற் சட்டத்தையிறக்கும் ஆணி);; rafter-nail (C.E.M.); [கை + ஆணி] |
| கையாந்தகரை | கையாந்தகரை gaiyāndagarai, பெ.(n.) கரிசலாங்கண்ணி (பிங்.);; a plant growing in wet places, Eclipta alba [கய்யாந்தகரை → கையாந்தகரை.] [P] |
| கையானீர் | கையானீர் kaiyāṉīr, பெ.(n.) கரிசலாங்கண்ணிச் சாறு; the juice of the bee plant [கையான் + நீர்.] கையிக-த்தல் 3 செ.கு.வி.(v.i.); 1. அளவுக்கு மேற்படுதல்; to exceed the limits. “கையிகந்த தண்டமும்”(குறள், 567);. 2 மீறுதல்; to get beyond one’s control. “கரப்பினும் கையிகந்து” (குறள். 1271);.3. அகன்று நிற்றல்; to standaway. 4. ஒழுங்குதப்புதல்; to derail from rightful conduct or behaviour 5. கடத்தல்; to smuggle. [கை + இக-.] |
| கையான் | கையான் kaiyāṉ, பெ.(n.) 1.கையாந்தகரைபார்க்க;see kayāntagarai. 2. கொடிகையான்; creeper eclipse. 3. பொற்றலைக் கையான்; Mari-gold ம. கய்யன்யம். [கை → கையான்.] |
| கையாப்பலகை | கையாப்பலகை gaiyāppalagai, பெ.(n.) வள்ளத் தின் குறுக்குவாட்டில் இடப்படும் பலகைகளில் ஒன்று); one of the cross planks used in wooden boat. [கையாம் + பலகை.] |
| கையாப்புடை | கையாப்புடை kaiyāppuḍai, பெ.(n.) மரவகை (L.);: white Australian teak tree. Malay. kãyũputi [கையா + புடை.] கையாப்புடை kaiyāppuḍai, பெ.(n.) மரவகை; white Australian tea tree, m.tr.,Melaleuca leucadendron minhor (செ.பே.);. [Malay.{} த.கையாப்புடை.] |
| கையாயிரத்தன் | கையாயிரத்தன் kaiyāyirattaṉ, பெ.(n.) வாணாசுரன்; an enemy of the Aryans who has thousand arms. [கை + ஆயிரம் + அத்து + அன்.] கையார கு.வி.எ.(adv.); கைக்குப் பொந்திகையாக (திருப்தியாக);; to the satisfaction of one’s hand, liberally, in large quantities. ம. கையார; க. கையாரெ, து.,பட.கய்யார. [கை + ஆர.] கையால்முகந்துடை-த்தல்; 4 செ.குன்றாவி. (v.t.); பறவைக் குற்றத்தால் குழந்தைகள் நோயுற்றபோது அடிக்கடி கையினால் முகத்தைத் தேய்த்துக் கொள்ளுதல்; rubbing of the face with the hands, as children do in morbid diathesis [கை + ஆல் + முகம் + துடை-.] கையாலா-தல் 6 செ.கு.வி.(v.i); செய்யும் ஆற்றல் பெறுதல்; to be able to work or accomplish க. கெய்லாகு. [கை + ஆல் + ஆகு-.] |
| கையாறு | கையாறு3 kaiyāṟu, பெ.(n.) 1.செயலறுகை; state of utter prostration, helplessness. 2. துன்பம்; distress, affliction, suffering. “கலக்கத்தைக் கையாற்றாக் கொள்ளதா மேல்” (குறள். 627);. [கை + ஆறு.] கையாறு4 kaiyāṟu, பெ.(n.) ஒழுக்கநெறி; conduct, behaviour. “இடுதுணி கையாறா” (பரிபா. 8:78);. [கை + ஆறு.] கையாறு5 kaiyāṟu, பெ.(n.) 1. வரலாறு; History. 2. சிற்றாறு; small river. “அண்ணா நாட்டு எல்லையில் திருந்தி கையாற்றை அடைத்து ஏரியும் வெட்டி தூம்பும் இட்டு” (தெ.கல்.தொ8.கல்.83);. [கை + ஆறு.] |
| கையாற்பிசை-தல் | கையாற்பிசை-தல் kaiyāṟpicaital, 3 செ.கு.வி.(v.i.) 1. கையினால் சதை அழுந்த அமுக்கி விடல்; shampooing; massaging. 2. மாவு முதலியவற்றைக் கையால் பிசைதல்; to mingle; mix with the hand. [கையால்+பிசை-தல்.] |
| கையாற்றல் | கையாற்றல் kaiyāṟṟal, பெ.(n.) கைவலிமை பார்க்க;see kai-valimai. [கை + ஆற்றல்.] |
| கையாற்றி | கையாற்றி kaiyāṟṟi, பெ.(n.) 1.தொழிலுக்கு உதவகை; relieving or aiding in manual labour. 2. இளைப்பாறல்; relief or rest from work. நீ வருவாயானால் எனக்குக் கையாற்றியாயிருக்கும். 3. ஆறுதல்; consolation. 4. உதவி; help. [கை + ஆற்றி.] கையாற்று-தல் 9 செ.கு.வி.(v.i.); 1. அடைதல்; to attain, reach. 2. மாற்றுதல்; to change. 3. இளைப்பாற்றுதல்; to relieve, console. [கை + ஆற்று-.] கையாறு1-தல் 8 செ.குன்றாவி, (v.t.); உதவி செய்து இளைப்பாறச் செய்தல்; to give or offer relief as by a subsitute. [கை + ஆறு-.] கையாறு2-தல் 5 செ.கு.வி.(v.i.); இளைப்பாறுதல்; to rest a while from work. “பண்ணுமயன் கையாறவும்” (பட்டினத் திருப்பா. பொது திருவை,);. [கை + ஆறு-.] |
| கையாலாகத்தனம் | கையாலாகத்தனம் kaiyālākattaṉam, பெ.(n.) எதிர்த்துச் செயற்பட முடியாத வலிமை குறைவான நிலை; இயலாமை; impotence. தன்னைத் திட்டினவனைக் திட்டாமல் இருந்த தன் கையாலாகாத் தனத்தை நினைத்துக் குமைந்தான் [கையால்+ஆகாத்தனம்] |
| கையாலாகாத | கையாலாகாத kaiyālākāta, பெ.அ.(adj.) தேவையான வகையில் செயல்பட இயலாத, impotent; helpless. எதிர்க்காமல் அடங்கிப் போவதால் என்னைக் கையாலாகாத ஆள் என்று நினைத்து விட்டான். [கையால்+ஆகாத] |
| கையாலாகாதவன் | கையாலாகாதவன் kaiyālākātavaṉ, பெ.(n.) எவ்வேலையும் செய்யத் திறமையற்றவன்; an incapable or incompetent person. கையாலாகாதவனுக்குக் கருக்கரிவாள் பத்து வேண்டுமா. (பழ.);. [கையால் + ஆகாதவன்.] கையாலேபாணி-த்தல் 4 செ.குன்றாவி.(v.t.); கையால் தூக்கிப்பார்த்து நிறையறிதல் (இ.வ.);; to estimate the weight of a thing by hand. [கையாலே + பாணி-.] |
| கையாளி | கையாளி kaiyāḷi, பெ.(n.) 1.திறலோன்; a good hand, skillful person. 2.கொடியன்,கயவன்; Wicked man. 3. பாசாங்கு செய்பவன்; hypocrite, dissembler, pretender (யாழ்,அக.);. க. கய்யாலி; தெ. கயாலி. [கை + ஆள் + இ.] ‘இ’.சொல்லாக்க ஈறு. ஒ.நோ. மலையாளி, தொழிலாளி. கையாளி-த்தல் kai-y-ali-, செ.குன்றாவி.(v.t.); ஒப்படைத்தல்); to hand over, as charge or possession. “கிராமத்தார்வசம் கையாளிக் கையில்”(TA.S.V:150);. கையாளு-தல் Kai-y-alu-, செ.கு.வி. (v.i.); எடுத்துப் பயன்கொள்ளல்; to adopt, use, handle. [கை + ஆள்(ளு);-.] கையாற்சா-தல் kaya-sa, 19 செ.கு.வி.(v.i.); ஒருவரால் கொல்லப்படுதல்; being killed by one [கையால் + சா-.] |
| கையாள் | கையாள்1 kaiyāḷ, பெ.(n.) குறிப்பறிந்து செய்பவன்; one who does by taking the cue ம. கையாள்; து. கையாளு; பட.கைஆ. [கை + ஆள்.] கையாள்2 kaiyāḷ, பெ.(n.) 1 குற்றேவல் செய்வோன்; trustworthy servant, waiter, menial servant. “உனக்குக் கையாளாய் உன் இசைவு பார்த்து” 2. உதவி செய்வோன் (உ.வ.); helping hand, ம. கய்யாள்; க., து. கையாளு; பட. கைஆ. [கை + ஆள்.] கையாள்(ளு3);-தல் Kai-y-a!(!u);, 10 செ.குன்றாவி. (v.t.); 1 கையிலெடுத்து ஆளுதல்; to handle, use. 2. வழக்கத்துக்குக் கொண்டு வருதல்; to bring into vogue or practice, to make constant use of. 3. வல்லந்தமாகக் கவர்தல்; to usurp, misappropriate, 4, கற்பழித்தல்; to violate a woman’s chastity, ம. கய்யாளுக, கையாளுக. [கை + ஆள்(ளு);-.] |
| கையிசுவாதம் | கையிசுவாதம் kaiyisuvātam, பெ.(n.) தோளில் மிக்க குடைச்சலை உண்டாக்கும் ஊதைநோய்; a kind of rheumatism characterised by pain all over body, numbness of certain parts and pain in the shoulders [கை + இக + வாதம்.] கையிசை-தல் 2 செ.கு.வி.(v.i); மனம் இணங்குதல்; to agree, assent. “காஞ்சன மாலை கையிசைந்து” (பெருங், உஞ்சைப் 44:150);. [கை + இசை-.] கையிடு-தல் 20 செ.கு.வி.(v.i.); 1. கையைத் தொய்த்தல்; to dip one’s hands. ‘நெய்யிலே கையிட வல்லாரார்’ (ஈடு,6,1:5);. 2. காரியத்திற் புகல்; to undertake, engage in. 3. ஒரு தொழிலில் வேண்டாது தலையிடுதல்; to meddle, interfere officiously. 4. நேர்ப்படுதல்; to put in order. [கை + இடு-.] |
| கையிடை | கையிடை kaiyiḍai, பெ.(n.) கையூட்டு (உ.வ.);; bribe, hush-money. [கை + இடை-.] |
| கையிணக்கமாதல் | கையிணக்கமாதல் kaiyiṇakkamātal, பெ.(n.) கையிணக்கமாதல்; submitting to one’s persuasion [கை + இணக்கம் + ஆதல்.] |
| கையிணக்கம் | கையிணக்கம் kaiyiṇakkam, பெ.(n.) 1. பொருத்தம், fitness, suitability, complete agreement. 2. கையடக்கம்2 பார்க்க;see kai-yadakkam, 3. கைகலந்து சண்டையிடுகை; Boxing 4. வைப்பாட்டி வைக்கை; keeping a mistress or concubine. 5. போர் செய்கை; struggling, agitating. ம. கையிணக்கம், [கை + இணக்கம்.] |
| கையிருப்பு | கையிருப்பு1 kaiyiruppu, பெ.(n.) செங்குவளைப்பூ: red Indian water lily [கை + இருப்பு.] கையிருப்பு2 kaiyiruppu, பெ.(n.) 1.இருப்புத் திட்டம்; money on hand, cash balance of an account. 2. கைப்பணம்; cash on hand. 3. உணவுப் பொருள் முதலியவற்றின் இருப்பு; Stock-accouunt. [கை + இருப்பு.] |
| கையிறக்கம் | கையிறக்கம் kaiyiṟakkam, பெ.(n.) 1 சீட்டு விளையாட்டில் முதலில் சீட்டை இறக்குகை; first serve in a game of cards. 2: செல்வநிலை குன்றுகை; reverse of fortune. 3. கைவிட்டிறங்குதல்; to get down from hand. [கை + இறக்கம்.] கையிறக்குதல் 5 செ.கு.வி.(v.i.); தொடர்வண்டி (இரயில்); வர அடையாளமாகக் கைகாட்டியைக் கீழிறக்குதல்; lowering of arm of train signal. [கை + இறக்கு-.] |
| கையிறுக்கம் | கையிறுக்கம் kaiyiṟukkam, பெ.(n.) 1 சிக்கனம்; thrift. 2. உதவாத இயல்பு, இவறன்மை, கஞ்சத்தனம்; Miserliness. மறுவ. இவறன்மை, கஞ்சத்தனம், ஈயாமாரித்தனம். [கை + இறுக்கம்.] |
| கையிறை | கையிறை kaiyiṟai, பெ.(n.) 1. கைரேகை பார்க்க:see kai-régai. 2. கைவிரலின் இடக்கு; crotch of the fingers. [கை + இறை.] |
| கையிற்கனி | கையிற்கனி kaiyiṟkaṉi, பெ.(n.) நெல்லிக்காய்; gooseberry (சா.அக.);. [கையில் + கனி.] |
| கையிற்சாதல் | கையிற்சாதல் kaiyiṟcātal, பெ.(n.) ஒருவர் கையில் தாங்கப்பட்ட நிலையில் இறத்தல்; dying while resting on one’s hand (சா.அக.);. [கையில் + சாதல்.] |
| கையிலாகாதவன் | கையிலாகாதவன் kaiyilākātavaṉ, பெ.(n.) கையிலாகாதவன் பார்க்க;see kaiya/-ägådavan. “கையிலாகாதவன் போலக் கண்டோர் பழிக்க” (இராமநா. ஆரணி. 24);. [கையால் + ஆகாதவன்.] |
| கையிலாதம் | கையிலாதம் kaiyilātam, பெ.(n.) எண் வகை மலைகளுள் ஒன்றும், சிவன் வாழும் இடமுமான மலை (அஷ்டப். திருவரங்கத்தந்: 23);; mount kailas, the abode of Śwa, one of asta-kula-parvatam (செ.அக.);. |
| கையிலி | கையிலி kaiyili, பெ.(n.) கை இல்லாதவன்; lame of hand [கை + இலி. இ – பண்புகுறித்த ஈறு.] கையிழ-த்தல் 2. செ.கு.வி.(v.i.); காணாமற் போதல், பயன் குறைந்து உள்ளதும் குறைவது; to be lost, to lose capital and the profit there of. [கை + இழ-.] |
| கையில் | கையில் kaiyil, பெ.(n.) தேங்காயில் பாதி; one – half of the coconut (சா.அக.);. ம. கையில். [கயில் → கையில்.] |
| கையில் பிடிக்க முடியாமை | கையில் பிடிக்க முடியாமை kaiyilpiḍikkamuḍiyāmai, பெ.(n.) அளவிடவியலாத மகிழ்ச்சி; immense joy. தேர்விலே வெற்றி பெற்றதும் கையிலே பிடிக்க முடியலே (நெல்லை.); [கை + இல் + பிடிக்க + முடியாமை.] |
| கையில்பிடித்துக்கொடு-த்தல் | கையில்பிடித்துக்கொடு-த்தல் kaiyilpiṭittukkoṭuttal, 4 செ.கு.வி. (v.i.) பெண்ணை ஒருவருக்குத் திருமணம் செய்து கொடுத்தல்; give a girl in marriage to some one; marry of a girl. தங்கையை யாராவது ஒருவன் கையில் பிடித்துக் கொடுத்த பின்புதான்நான் எனது திருமணத்தைப் பற்றி சிந்திக்க முடியும் மறுவ, மணம் முடித்துக் கொடுத்தல். [கையில்+பிடித்து+கொடு-த்தல்.] |
| கையிழப்பு | கையிழப்பு kaiyiḻppu, பெ.(n.) 1. கையில் உள்ளதை இழக்கை; loss of anything on hand. 2. கைமுதலுக்கு ஏற்படும் இழப்பு; loss of capital in trade. [கை + இழப்பு.] கையிளகு—தல் 5 செ.கு.வி.(v.i.); 1. கைப்பிடப்பு நிகழ்தல்; to become slack in handgrip. 2. தாராளமாதல்; to be liberal, bountiful. 3. கொடுக்கச் சம்மதித்தல்; to agree to give. [கை + இளகு-.] கையிளை-த்தல் 4 செ.கு.வி.(v.i.); 1. கைசலி-த்தல் பார்க்க;see kai-sali-. 2. செல்வநிலை குன்றுதல்; to be reduced in circumstances. [கை + இளை-.] |
| கையீடு | கையீடு kaiyīṭu, பெ.(n.) பணம் செலுத்துகை; receipt for remittance. “பதினெட்டாவது தியதி கையீடு ஒன்றினால் காசு” (S.I.I, IV. 134);. ம. கையீடு. [கை + ஈடு இடு → ஈடு.] |
| கையுங்கணக்கும் | கையுங்கணக்கும் kaiyuṅgaṇakkum, பெ.(n.) வரையறை: limit.bound. அங்கே வந்த பட்டத்துக்குக் கையும் கணக்குமில்லை (கொ.);. [கையும் + கணக்கும்.] |
| கையுங்களவுமாய் | கையுங்களவுமாய் kaiyuṅgaḷavumāy, பெ(n.) கைமெய்யாய் பார்க்க;see kai-mei-yai. [கையும் + களவும் + ஆய்.] கையுடன் வி.எ.(adv.); 1.கையோடு பார்க்க;see kai-y-odu. 2.உடனே; at once, immediately. [கை + உடன்.] |
| கையுடை | கையுடை kaiyuḍai, பெ.(n.) கையாப்பு. கைக்கவசம்; boxing gloves. மறுவ. கையாப்பு. கையுறை. ம. கய்யுற, [கை + உடை.] கையுண்(ணு);-தல் 13 செ.கு.வி.(vi); பிறர் கைபார்த்து உண்டு வாழ்தல்; to live a dependent life. “சான்றவர் கையுண்டுங் கூறுவர் மெய்” (பழ. 83);. [கை + உண்(ணு);-.] |
| கையுதயம் | கையுதயம் kaiyudayam, பெ.(n.) பிள்ளைப்பேற்றின்போது குழந்தையின் கை வெளிப்படல் (சா,அக.);; emergence of hand at child birth. [கை + உதயம்.] |
| கையுதவி | கையுதவி kaiyudavi, பெ.(n.) 1.சமையத்தில் உதவும் உதவி; timely help. 2. துணையான உதவிப் பொருள்; ready or necessary help as a friend, a weapon. 3. சிற்றுதவி; trifling aid or assistance. 4.கையூட்டு, bribe. 5. ஆளுதவி; provision of helping hands. க. கெய்நொவு; பட. கைநொ. [கை + உதவி.] |
| கையுதிர்க்கோடல் | கையுதிர்க்கோடல் kaiyudirkāṭal, பெ.(n.) விட்டு விலகும்படி கையசைத்துக் குறிப்பிடுகை; waving one’s hand as a signal to quit or go away. “காண மிலியென கையுதிர்க் கோடலும்” (மணிமே 16:10);. [கை + உதிர் + கோடல்.] |
| கையுபகாரம் | கையுபகாரம் kaiyubakāram, பெ.(n.) 1.கையுதவி பார்க்க;;see kai-y-udavi. 2. ஒத்தாசை; Help. [கை + உபகாரம்.] கையுமெய்யுமாய் வி.எ.(adv.); கைமெய்யாய் பார்க்க; see kai-mei-y-ay. [கையும் + மெய்யும் + ஆய்.] கையுயர்-தல் 4 செ.கு.வி.(v.i.); கையோங்கு1,2-தல் பார்க்க; see kai-y-ongu-. [கை + உயர்-.] கையுயர்த்து-தல் 5 செ.குன்றாவி. (v.t.); 1, கையோங்கு-தல் பார்க்க;see kai-y-ongu. 2. கையெடு-த்தல் பார்க்க;see kai-y-edu-. [கை + உயர்த்து-.] |
| கையும்களவுமாக | கையும்களவுமாக kaiyumkaḷavumāka, வி.அ.(adv.) குற்றம் அல்லது தவறு செய்யும் அதே நேரத்தில்; red-handed. தேங்காய் திருடியவன் கையும் களவுமாக மாட்டிக் கொண்டான். [கையும்+களவுமாக] |
| கையும்மெய்யுமாக | கையும்மெய்யுமாக kaiyummeyyumāka, வி.அ.(adv.) கையும்களவுமாக பார்க்க; see kayum-kalavumaga [கையும்+மெய்யுமாக] |
| கையுருவிச்சுவர் | கையுருவிச்சுவர் kaiyuruviccuvar, பெ.(n.) கைப்பிடிச்சுவர் (புதுக்.கல்.213);; Parapet wall. [கை + உருவி + சுவர்.] |
| கையுரொக்கம் | கையுரொக்கம் kaiyurokkam, பெ.(n.) கைவயத்திலிருக்கும் பணம்; ready cash. மறுவ. கைப்பணம், கைக்காக [கை + உரொக்கம்.] |
| கையுறு | கையுறு1 kaiyuṟudal, 20 செ.குவி.(v.i) கைவயமாகக் கிடைத்தல்; to come to hand to be received, to attain, “வானகம் கையுறினும்” (நாலடி. 300); கையுறு2-தல் 20 செ.குன்றாவி.(v.t.); தீண்டுதல்; to approach, have intercourse with. “பூப்பு மகளிர் கையுறாப் பொருட்டே” [கை + உறு-.] கையுறு3-தல் 20 செ.குன்றாவி.(v.i.); 1. கைக்கொள்ளுதல்; to hold, 2. பகுத்தல்; to divide. “நீங்கலாக நின்ற பல மரங்களோடும் ஆடுபடுத்தும் பிடிலிகை வாரிஅரைக்கால் பொன்னுக்குக் கீழ்ப்பட்ட பொன்னும் இக் கோயில் சிவப் பிராமணர்கள் கையுற்று தாங்கள் அநுபவித்து” (தெ.கல்.தொ. 7 கல். 801);. [கை + உறு-.] |
| கையுறுதி | கையுறுதி kaiyuṟudi, பெ.(n.) 1.கடனுக்கு வைக்கப்படும் ஈடு; security deposited for loan. 2. கையடித்து விலையுறுதி செய்கை; completing a bargain by striking hands. 3. அட்டவணை; table. 4. வாய்மொழி உறுதி; oral assurance. [கை + உறுதி.] |
| கையுறை | கையுறை1 kaiyuṟai, பெ.(n.) 1.காணிக்கைப் பொருள்; offerings, presents from an inferior to a superior, visiting presents. “மையுறை சிறப்புற் கையுறை யேந்தி” (சிலப். 8:22);. 2. மொய்ப்பணம்; marriage presents. 3. தலைவிக்கு அன்பு பாராட்டித் தலைவன் கொடுக்கும் தழை முதலிய நன்கொடை (தஞ்சைவா. 97 தலைப்பு);; customary love-token consisting of a bunch of tender leaves. 4. கையுடை பார்க்க:see kai-y-udai. 5 கையூட்டு: bribe. ம. கையுற: க. கெய்சீல, [கை + உறை.] கையுறை2 kaiyuṟai, பெ.(n.) விரல்களைத் தனித்தனியாக நுழைத்து மணிக்கட்டு வரையில் மாட்டிக்கொள்ளும் காப்பு உறை; a glove. மறுவ, கைச்சாடு. க. கெய்சீல. [கை + உறை.] கையுறையெழுது-தல் செ. கு.வி.(v.i); திருமணம் முதலிய விழாக்களில் மொய்க்கணக்கெழுதுதல்; to make a list of presents made on marriage or other occasions. “கையுறை யெழுதினர்” (சீவக. 829);. [கை + உறை + எழுது-.] |
| கையுளி | கையுளி kaiyuḷi, பெ.(n.) சற்றொப்ப இரண்டு விரலம் (அங்குலம்); அகலம் கொண்ட உளி; a chisel of about two inches in width. [P] கையுளி ம. கையுளி(பட்டையுளி);; து. கயிஉளி. [கை + உளி.] |
| கையுள் | கையுள் kaiyuḷ, பெ.(n.) 1. கையின் உட்பக்கம்: inner side of arm or hand. 2.உள்ளங்கை; the palm (சா.அக.);. [கை+உள்.] |
| கையுழற்றி | கையுழற்றி kaiyuḻṟṟi, பெ.(n.) கைநடுக்கம்; spasms in the arms. [கை + உழற்றி.] |
| கையுழைப்பு | கையுழைப்பு kaiyuḻaippu, பெ.(n.) 1.வேலை; toil. 2. உடலுழைப்பு (மீன்.பிடி.தொ.);: manual labour. [கை + உழைப்பு.] |
| கையூக்கம் | கையூக்கம் kaiyūkkam, பெ.(n.) கையூற்றம் பார்க்க;see kai-y-urram [கை + ஊக்கம்.] |
| கையூக்கு | கையூக்கு kaiyūkku, பெ.(n.) கையூற்றம் பார்க்க;see kai-y-urram. [கை + ஊக்கு.] |
| கையூட்டு | கையூட்டு kaiyūṭṭu, பெ.(n.) நேர்மைக்குப் புறம்பாகச் செயற்பட வேண்டியோ, நேர்மையாகச் சட்டபூர்வமாக மேற்கொள்ள வேண்டிய செயற்பாட்டை மேற்கொள்ளாமலிருப்பதற்கோ கொடுக்கப்படும் பணம் அல்லது பொருள் (லஞ்சம்);; bribe, illegal gratification, hush-money. “எப்பேர்ப்பட்ட கையூட்டுங் கொண்டான்” (சோழவமி. 53);. [கை + ஊட்டு.] |
| கையூறல் | கையூறல் kaiyūṟal, பெ.(n.) வெள்ளையினால் கையிற் காணும் ஊறல் நோய்; venereal litching of the palm (செ.அக.);. [கை + ஊறல்.] கையூனம் பெ.(n.); கைபழுது; privation of hand or arm [கை + ஊனம்.] கையெடு1-த்தல் 4 செ.குன்றாவி (v.t.); 1. கையைத் தூக்குதல்; to raise hands. 2. கும்பிடுதல்; to salute, as a mark of respect. “அவன் எவரையும் கையெடுப்பதில்லை”(செ.அக.);. காந்தியண்ணலைச் சுடுமுன் நாதுராம் விநாயக கோட்சே அவரைக் கையெடுத்துக் கும்பிட்டான். [கை +எடு-] கையெடு2-த்தல் 4 செ.குன்றாவி.(v.t.); 1. கையை நீக்குதல்; to withdraw the hand. தேள் கொட்டுமுன் கையெடுத்துக் கொண்டான் (உ,வ.);. 2. கைவாங்கு-தல் பார்க்க;see kai-vangu-. க. கெய்தெகெ. [கை + எடு-.] கையெடு3-த்தல் 4 செ.குன்றாவி.(v.t.); 1. இரத்தல்; to beg, entreat, supplicate. 2. தேர்ந்தெடுப்பு முதலியவற்றில் கையுயர்த்தித் தம் கருத்தை உணர்தல் [கை + எடு-.] |
| கையூற்றம் | கையூற்றம் kaiyūṟṟam, பெ.(n.) கையின் வலிமை, வல்லமை; strength of the arm, skill. ம. கையூற்றம். [கை + ஊற்றம்.] |
| கையூழ் | கையூழ் kaiyūḻ, பெ.(n.) வண்ணத்திற் செய்த பாடலெல்லாம் இன்பமாகயாழிற் பாடுதல் (உறை.சொ.5);; to play music melodiously. [கை + ஊழ்.] |
| கையெடு-த்தல் | கையெடு-த்தல் kaiyeḍuttal, செ.கு.வி.(v.i.) கை கூப்பி வணங்குதல்; to show obeyance by folding palms together. அவரைக் கண்டதும் கையெடுக்கத் தோன்றும். மறுவ வணங்குதல் [கை+எடு] |
| கையெடுப்பு | கையெடுப்பு kaiyeḍuppu, பெ.(n.) கையை யுயர்த்தி நிற்கும் ஒருவனது உயரத்தினளவு; the height of a man with his arms raised up right, as used in indicating the depth of water in a well, tank, etc. அந்தக் குளத்தில் கையெடுப்பு நீர் இருக்கிறது (உ.வ.);. [கை + எடுப்பு.] |
| கையெண்ணெய் | கையெண்ணெய் kaiyeṇīey, பெ.(n.) கையால் பிழிந்து பெறப்பட்ட எண்ணெய்; oil extracted by hand (not by mill);. மறுவ. விளக்கெண்ணெய். க. கெய்யெண்ணெ. [கை + எண்ணெய்.] கையெரிவு பெ.(n.); பித்தத்தினால் உண்டாகும் உள்ளங்கை எரிச்சல்; burning of the palm due to bilious causes (சா.அக.);. [கை + எரிவு.] |
| கையெறி காலெறி | கையெறி காலெறி kaiyeṟikāleṟi, பெ.(n.) வலிப்பினால் கைகால்களை உதைத்துக் கொள்ளுதல்; alternate contraction of arms and legs through convulsion, clonic spasm or convulsion of the limbs [கை + எறி + கால் + எறி.] |
| கையெறி-தல் | கையெறி-தல் kaiyeṟidal, 2 செ.கு.வி.(v.t.) 1. கை கொட்டுதல்; to Clap hands. “கையெறிந்து நக்கார்” (சீவக. 582);. 2. உறுதி கூறிக் கையடித்தல்; to take a vow or to swear by striking hands. “சென்றங்குப் பாரதங் கையெறிந் தானுக்கு” (திவ். பெரியாழ். 2:6:4);. 3. சினத்தாற் கைவீசுதல் (இ.வ.);; to flourish the hands in anger [கை + எறி-.] |
| கையெறிகுண்டு | கையெறிகுண்டு kaiyeṟikuṇṭu, பெ.(n.) கையால் வீசி வெடிக்கச் செய்யும் குண்டு; handgrenade [கை+எறி+குண்டு.] கையெறிகுண்டு gaiyeṟiguṇṭu, பெ.(n.) கையால் வீசி வெடிக்கச் செய்யும் குண்டு; hand grenade. [கை + எறி + குண்டு.] |
| கையெழுத்தாகு-தல் | கையெழுத்தாகு-தல் kaiyeḻuttākutal, 7 செ.கு.வி.(v.i.) ஒப்பந்தம் முதலியவை ஒப்பளிக்கப்பட்டதற்கு அடையாளமாக அவற்றில் கையெழுத்திடப்படுதல்; of deeds, agreement get signed or executed. ஒப்பந்தம் கையெழுத்தாகி நாற்பத்தெட்டு மணி நேரத்தில் போர் நிறுத்தப்பட்டது. [கை+எழுத்து+ஆகு-தல்.] |
| கையெழுத்து | கையெழுத்து kaiyeḻuttu, பெ.(n.) 1. கையா லெழுதும் எழுத்து; hand writing. “நீரி லெழுதுங் கையெழுத் தென்றும்”(அருட்பா. தெய்வமணி 17);. கையெழுத்து நல்லாயிருந்தா போதுமா, தலையெழுத்தும் நல்லா இருக்கனுமே (உ.வ.);. 2. கையொப்பம்; signature, initial. 3. உடன்படிக்கை; written agreement. “சதுர்சவேதி மங்கலத்து சபையோம் கையெழுத்து” (S.I.I.II.103);. 4. கைவரி பார்க்க;see kai-vari 5. தன் பேரெழுத்து; name of an individual signed on letter on document. சிலர் கையெழுத்து முத்துப்போல் அழகாக இருக்கும் (உ.வ.);. ம. கய்யக்ழரம், கையெழுத்து; க. கெய்பாக. [கை + எழுத்து.] |
| கையெழுத்து இயக்கம் | கையெழுத்து இயக்கம் kaiyeḻuttuiyakkam, பெ.(n.) கோரிக்கை அல்லது வேண்டுகோள் போன்றவற்றுக்காக ஆதரவாளர் பலரிடமிருந்தும் கையெழுத்து வாங்கும் இயக்கம்; a campaign canvassing for subscription to a petition, etc. [கை+எழுத்து+இயக்கம்.] |
| கையெழுத்து மறைகிற நேரம் | கையெழுத்து மறைகிற நேரம் gaiyeḻuttumaṟaigiṟanēram, பெ.(n.) மாலைப்பொழுது; evening time. [கை+எழுத்து+மறைகிற+நேரம்] |
| கையெழுத்து மறையும் நேரம் | கையெழுத்து மறையும் நேரம் kaiyeḻuttumaṟaiyumnēram, பெ.(n.) அந்தி மயங்கும் நேரம்; twilight. கையெழுத்து மறையும் நேரமாயிற்று. இன்னும் கன்றுகாலிகள் பட்டியில் வந்து அடையவில்லை (உ.வ.);. [கை + எழுத்து + மறையும் நேரம்.] |
| கையெழுத்துப்படி | கையெழுத்துப்படி kaiyeḻuttuppaḍi, பெ.(n.) கையாலெழுதிய நூற்படி மூலம்; manuscript. சில நூற்றாண்டுகளுக்கு முன் எழுதிய தமிழ் நூல்களின் மூலக் கையெழுத்துப்படிக் கூடக் கிட்டவில்லை. [கை + எழுத்து + படி.] |
| கையெழுத்துப்பிரதி | கையெழுத்துப்பிரதி kaiyeḻudduppiradi, பெ.(n.) கையெழுத்துப்படி பார்க்க;see kaiy-eluttu-P-padi. [கை + எழுத்து + பிரதி.] கையெழுத்துப்போடு-தல் 20 செ.கு.வி. (v.i.); கையொப்பமிடுதல்; to signone’s name, affix one’s signature or initial (செ.அக.);. [கை + எழுத்து + போடு-.] |
| கையெழுத்துவை-த்தல் | கையெழுத்துவை-த்தல் kaiyeḻuttuvaittal, 4.செ.கு.வி. (v.t.) கையெழுத்துப் போடு-தல்பார்க்க; See kai-y-eluttu-P-pôdu- [கை + எழுத்து + வை-.] |
| கையேடு | கையேடு kaiyēṭu, பெ.(n.) 1. சிறிய ஏட்டுப்புத்தகம் (தொல்,பொருள். 1. இளம்);; small book, handbook, 2, நாள்வழிக் கணக்கு; day-book, journal. 3. நாள்வழிக் கணக்கில் ஏற்றுதற்கு அவ்வப்போது எழுதி வைக்கும் குறிப்புப் புத்தகம் (இ.வ.);; rough day-book, waste-book. 4. பெருஞ் செலவிற்கு விவரங் காட்டுந் தனிக் கணக்குப் புத்தகம்; memorandum of account containing details of major items of expense. கையேட்டிலுள்ள குறிப்புகள் பேரேட்டிற்குச் செல்ல வேண்டும் (உ.வ.);. மறுவ. கைச்சுவடி.. ம. கையேடு. [கை + எடு.] கையேடு kaiyēṭu, பெ.(n.) ஒன்றைச் செய்யும் அல்லது இயக்கும் முறை குறித்து விளக்கும் நூல், செய் முறைக் குறிப்பு நூல்; manual. தேர்தல் கையேட்டில் உள்ளபடி தேர்தல் பணியாற்றவேண்டும். [கை+ஏடு] |
| கையேந்தி | கையேந்தி kaiyēndi, பெ.(n.) இரப்போன் (வின்..);; beggar (செ.அக.);. [கை + ஏந்தி.] கையேந்து-தல் 9 செ.குன்றாவி (v.t.); 1. கையை யேந்துதல்; to hold out hands. 2. இரத்தல்; to beg. [கை + ஏந்து-.] கையேல்-தல் (கையேற்றல்); 14 செ.கு.வி. (v.i.); 1. கையேந்து- பார்க்க;see kai-y-endu-. “மென்காந்தள் கையேற்கு மிழலை யாமே” (தேவா. 575:4); 2..செயல் பொறுப்பை ஏற்று நடத்தல்; to undertake, shoulder responsibility (செ.அக.);. [கை + ஏல்-.] |
| கையேனம் | கையேனம் kaiyēṉam, பெ.(n.) சிறு ஏனம், சிறு கொள்கலன்; small vessel. [கை + ஏனம்.] |
| கையேறல் | கையேறல் kaiyēṟal, பெ.(n.) நடுத்தரமான முத்து (யாழ்.அக.);; pearl of medium size or quality [கை + ஏறல்.] கையேறு-தல் 5 செ.கு.வி.(v.i.); 1 கையிற்கிடைத்தல்; to reach one’s hand; to come to hand, as a payment or bribe. இன்னும் பணங் கையேறவில்லை. 2. கைமாறு1 பார்க்க;see kai-maru [கை + ஏறு-.] |
| கையேற்பு | கையேற்பு1 kaiyēṟpu, பெ.(n.) 1. பெறுகை; taking, receiving. 2. இரக்கை; begging. 3, களப்பிச்சை வாங்குகை (வின்.);; receiving alms at the threshing floor. 4 ஒரு தொழிலை ஏற்றுக்கொள்ளுகை (இ.வ.);; undertaking a job (செ.அக.);. [கை + ஏற்பு.] கையேற்பு2 kaiyēṟpu, பெ.(n.) 1. வரிவகை (I.M.P. Cg. 524);; a tax 2. கைப்பிச்சை; begging for alms. [கை + ஏற்பு.] |
| கையேற்றம் | கையேற்றம் kaiyēṟṟam, பெ.(n.) செல்வப் பெருக்கான நிலை; state of prosperity இப்போது அவன் கையேற்றமாய் உள்ளான் (உ.வ.);. [கை + ஏற்றம்.] |
| கையை | கையை kaiyai, பெ.(n.) தங்கை (பிங்,); younger sister. [கை + ஐ.] கையைக்கடி-த்தல் 4 செ.கு.வி. (v.i.); 1. எதிர்பார்த்தற்குமேல் செலவாதல்; lit.to bite the hand, to exceed the allotted amount. 2. இழப்பு ஏற்படுதல்; to entail loss திருமணச் செலவு கையைக் கடித்துவிட்டது. [கையை + கடி-.] கையைக் குறுக்கு-தல் 5 செ.கு.வி. (v.i); 1. செலவைக் குறைத்தல்; to retrench or cut down expenses. 2. இவறன்மை (கஞ்சத்தனம்); செய்தல்; to be close-fisted; to give sparingly [கையை + குறுக்கு-.] |
| கையைப்பிசை-தல் | கையைப்பிசை-தல் kaiyaippicaital, 2 செ.கு.வி.(v.i.) 1. இக்கட்டான சூழலில் செய்வதறியாது கலங்குதல் அல்லது திகைத்தல்; be in a fix; be in a quandary. மகளின் திருமணத்திற்குப் பணம் கிடைக் காமல் கையைப் பிசைந்து கொண்டிருந்தார். 2. தயக்கம், குழப்பம் முதலியவற்றைக் காட்டும் குறிப்பாகக் கையை நெரித்தல்; wring one’s hands as an indication of helplessness, confusion, etc. கையைப் பிசைந்து கொண்டிருந்தால் எப்படிக் காரியம் நடக்குமா? [கையை+பிசை-தல்.] |
| கையைப்பிடி-த்தல் | கையைப்பிடி-த்தல் kaiyaippiḍittal, 4 செ.குன்றாவி. (v.t.) 1. கையைப்பற்றுதல்; to hold the hand. 2 திருமணஞ் செய்தல்; to marry. 3. கையைப் பிடித்திழு-த்தல் பார்க்க;see kaiyai-P-pidittilu-. [கையை +பிடி-.] |
| கையைப்பிடித்திழு-த்தல் | கையைப்பிடித்திழு-த்தல் kaiyaippiḍittiḻuttal, 4 செ.குன்றாவி.(v.t.) தீயநோக்கத்தோடு ஒருத்தியைக் கைப்பற்றி யழைத்தல்; to solicit illegitimately the favours of a woman through drawing her by her hands (செ.அக.);, [கையை + பிடித்து + இழு-.] |
| கையைவிட்டு | கையைவிட்டு kaiyaiviṭṭu, வி.அ. (adv.) தேவை (அவசியம்); இல்லையென்றாலும் விரைவை (அவசரத்தை); முன்னிட்டு, though not necessary from one’s own pocket. [கையை+விட்டு] |
| கையொடுகாவலாய் | கையொடுகாவலாய் kaiyoḍukāvalāy, கு.வி.எ. (adv.) தக்க நேரத்திற்குப் பயன்படுவதாய் (கொ.வ.);; as a help in emergencies (செ.அக.);. [கையொடு + காவலாய்.] |
| கையொட்டி | கையொட்டி kaiyoṭṭi, பெ.(n.) சிறுகுழந்தை (இ.வ.);; a babe in arms, nursling மறுவ. கைக்குழந்தை. [கை + ஒட்டி.] |
| கையொட்டுக்கால் | கையொட்டுக்கால் kaiyoṭṭukkāl, பெ.(n.) கருப்பூரவகை (சிலப்.14:109, உரை);; a kind of camphor [கை + ஒட்டு + கால்.] கையொடிந்ததா-தல் 4 செ.கு.வி.(v.i.); பிரிவு; separation. அவன் இல்லாதது கையொடிந்தது போல இருக்கிறது (நெல்.வழ.);. [கை + ஒடிந்தது + ஆ-.] |
| கையொத்து-தல் | கையொத்து-தல் kaiyoddudal, 4 செ.கு.வி.(v.i.) வழிபாடு செய்தல்; to join the hands together in worship. “கையொத்து செல்லுங்கோள்” (ஈடு. 6, 1:5); (செ.அக.);. [கை + ஒற்று → ஒத்து.] |
| கையொப்பம் | கையொப்பம் kaiyoppam, பெ.(n.) 1, கையால் தன் பெயரெழுதிய ஒப்புகை; signature. 2. கீறற் கையெழுத்து, mark made in place of signature by illiterate persons. 3,கையெழுத்துச் செய்யப்பட்ட தொகை (சந்தா);; subscribed amount (செ.அக.);. ம. கைப்பதிவு; க. கெய்குறுது. [கை + ஒப்பம்.] கையொப்பமிடு-தல் 20 செ. கு.வி.(v.i.); கையெடுத்திடு-தல் பார்க்க; see kai-y-eduttidu-. [கையொப்பம் + இடு-.] |
| கையொறுப்பு | கையொறுப்பு kaiyoṟuppu, பெ.(n.) 1 சிக்கனச் செலவு (யாழ். அக.);; thrift. 2. இச்சையடக்குகை; Selfdenial 2. கையுறுதியில் வைக்கப் பட்ட காணியீடு); security deposited to obtain a loan. [கை + ஒறுப்பு.] |
| கையொற்றி | கையொற்றி kaiyoṟṟi, பெ.(n.) 1. அமர்த்தாணை ஆவண எழுத்தரால் எழுதப்பெறாமல் வைக்கப்படும் ஒற்றி (வின்.);; mortgage of lands without reference to a notary public. 2. பதிவு செய்யப்படாத ஒற்றி; a mortgage transaction not evidenced by registration ம. கையொற்றி. [கை + ஒற்றி.] |
| கையொலி | கையொலி1 kaiyoli, பெ.(n.) கைகளால் எழுப்பும் ஒலி; sound made while clapping. கோயில்களில் சண்டிகேசுவரருக்கு நூலைப் போட்டு, கையொலி செய்தல் வேண்டும் (உ.வ.);. [கை + ஒலி.] கையொலி2 kaiyoli, பெ.(n.) பெரும்பாலும் ஐந்து முழமுள்ளதும் திருமேனிகட்குச் சாத்துவதுமான சிறிய ஆடை; small cloth, usually five cubits long, with which idols are clothed. “கையொலித் தலையிலே கட்டுகிறதும்”(கோயிலொ.); (செ. அக.);. [கை + ஒலி. ஒலியல் ஆடை.] |
| கையொலியல் | கையொலியல் kaiyoliyal, பெ.(n.) கையொலி (தொல். பொருள்.1, இளம்.); பார்க்க; see kai-y-oli (செ.அக.);. [கை + ஒலியல்.] கையொழி-தல் 2 செ.கு.வி. (v.i.); 1. கைதூவு-தல் பார்க்க;see kai-tuvu-. “எண்ணிய கருமஞ் செய்தற்கு யான் கையொழியேன்”(குறள், 1021 உரை);. 2. கைவேலை நீங்குதல் (கொ. வ.);; to be free from work or engagement ம. கையொழியுக; து. கயிவொடுங்கெலுனி. [கை + ஒழி-.] |
| கையொழியாமை | கையொழியாமை kaiyoḻiyāmai, பெ.(n.) 1. முயற்சி நீங்காமை (தீவா);; state of ceaseless activity; 2. ஓய்வின்மை; want of leisure; 3. நீங்கா நிறை ஒழுக்கம்; perfect conduct. மறுவ. ஒழியா வொழுக்கம். [கை + ஒழியாமை.] |
| கையொழுக்கம் | கையொழுக்கம் kaiyoḻukkam, பெ.(n.) வேறுபாடின்றி ஒரே வகையாக யொழுகுந் தன்மை (வின்.);; unvarying course of conduct, perseverance 2. ஒழுக்கம்; conduct. [கை + ஒழுக்கம்.] |
| கையோங்கு | கையோங்கு1 kaiyōṅgudal, 5 செ. குன்றாவி, (v.t.) அடித்தல்; to strike, பிள்ளைகளைக் கையோங்கலாகாது (உ.வ.);. [கை + ஒங்கு-.] கையோங்கு2 kaiyōṅgudal, 8 செ.கு.வி. (v.i.) 1. மேன்மைப்படுதல்; to grow in prosperity, to be prosperous. அவனுக்கு இப்போது கையோங்குங் காலம் (உ.வ.);. 2. செழித்தோங்குதல் (வின்.);; to be luxuriant in growth, as tree. 3. வெற்றியடைதல்; to gain victory. ம. கையோங்குக, [கை + ஒங்கு-.] ஆட்டம், போர், பொருள் முதலியவற்றின் வெற்றிக்கும் உயர்ச்சிக்கும் இடமாகச் சொல்லப்படுவதால் இச் சொல் வழக்குச் சொல்லாயிற்று. |
| கையோடழை-த்தல் | கையோடழை-த்தல் kaiyōṭaḻaittal, 4 செ.கு.வி. (v.i.) 1. உடனே வருமாறு அழைத்தல்; ask to come at once. திருமண உறுதி செய்யும் பொருட்டுத் தங்களை அம்மா கையோடழைத்துவரச் சொன்னார். (உ.வ);. [கை + ஒடு + அழை-]. |
| கையோடாமை | கையோடாமை kaiyōṭāmai, பெ.(n.) திடீர் உணர்வில் செயற்பட முடியாத நிலை; stage of in activeness, அதிர்ச்சியில் அவனுக்குக் கையும் ஒடவில்லை காலும் ஒடவில்லை (உ.வ.);. [கை + ஒடாமை.]. |
| கையோடு | கையோடு1 kaiyōṭudal, 5 செ.கு.வி.(v.i.). 1. வேகமாக எழுதுதல்; to write a fast hand, write quickly. “கையோட வல்லவர்… எழுதினும் (அருட்பா.1 திருவருள்.10);. 2. ஒரு தொழிலில் மனஞ் செல்லுதல்; to be inclined to a task. [கை + ஒடு-.] கையோடு2 kaiyōṭu, கு.வி.எ. (adv) 1. உடன் with, together with. கையோடு கூட்டிவா. 2 அணியமாக; at hand, ready. மருந்து கையோடு இருக்க வேண்டும். 3. உடனடியாக, காலந் தாழ்த்தாது; immediately, without delay. சொன்னதுங் கையோடே போனேன் (செ.அக.);. ம. கையோடெ. [கை + ஒடு.] |
| கையோடுகையாய் | கையோடுகையாய் gaiyōṭugaiyāy, வி.எ.(adv.) 1. செயலுடன் செயலாக; along with th work on hand. கையோடு கையாய் இச் செயலையும் முடித்துவிடு. 2 கையோடு3 பார்க்க;see kai-y-odu. [கையோடு + கை +ஆய்.] |
| கையோடே | கையோடே kaiyōṭē, கு.வி.எ.(adv.) கையோடு பார்க்க;see Kai-y-odu [கை + ஒடே.] |
| கையோட்டம் | கையோட்டம் kaiyōṭṭam, பெ.(n.) 1 எழுதுதல் முதலிய வேலைகளிற் கை விரைவு; dexterity of hand; speed or ease, as in writing. 2. செல்வநிலை; affluent circumstances [கை + ஒட்டம்.] |
| கையோலை | கையோலை kaiyōlai, பெ.(n.) கைமுறிபார்க்க;see kai-muri 2. கையுறுதி; security deposited for loan. ம. கையோல. [கை + ஒலை.] |
| கையோலைசெய்-தல் | கையோலைசெய்-தல் kaiyōlaiseytal, 1 செ குன்றாவி.(v.t..). தீர்மானித்தல், உறுதி செய்தல்; tdetermine, settle, confirm. “கவிழ்ந்திருந்து கையோலை செய்து கொடுக்கிறார்” (ஈடு,2,9:4); (செ.அக.); [கை + ஒலை + செய்-.] |
| கைரதம் | கைரதம் kairatam, பெ.(n.) 1. ஒரு பாம்பு a serpent. 2. ஒரு வகைச் சந்தன மரம் a kind of sandalwood. 3. ஒரு வகைப் பூடு; a plant, Agathotes Chirayata (சா.அக.);. [கைரம்- கைரதம்] |
| கைரம் | கைரம் kairam, பெ.(n.) காத்திகைக் கிழங்கு November flower, Methonica superba (சா.அக.);. [கய் – கை – கைரம்] மறுவ. கலப்பைக் கிழங்கு |
| கைரலம் | கைரலம் kairalam, பெ.(n.) கைரவி பார்க்க: see kairavi (சா.அக.);. |
| கைரலி | கைரலி kairali, பெ.(n.) வாயு விளங்கம்; wind-berry climber, Embelia ribes (சா.அக.);. |
| கைரவம் | கைரவம் kairavam, பெ.(n.) அல்லி மலர் (திவா.);; Indian water-lily, Nymphaea lotus (செ.அக.);. கைரவம் kairavam, பெ.(n.) ஆம்பல் (திவா.);; Indian water-lilly. [Skt.kairava → த.கைரவம்.] |
| கைரவாலி | கைரவாலி kairavāli, பெ.(n.) புளிச்சைக் கீரை; sour greens, Hibiscus Cannabinus (சா.அக.);. [கைரம்+வாலி] |
| கைரவாவிகம் | கைரவாவிகம் kairavāvikam, பெ.(n.) புளிச்சைக்கீரை (சித்.அக.);; fax(செ.அக.);. |
| கைரவி | கைரவி kairavi, பெ.(n.) 1. வெந்தயம்; fenugreek, Trigonella fenugraceum. 2. சந்திரகாந்திப் பூ moon-flower (சா.அக.);. |
| கைராசி | கைராசி kairāci, பெ.(n.) கையாக்கம் பார்க்க; see kai-y-ākkam. [கை + ராசி.] |
| கைராட்டினம் | கைராட்டினம் kairāṭṭiṉam, பெ.(n.) கைராட்டை பார்க்க; see ka-ralta(க்ரியா.);. |
| கைராட்டு | கைராட்டு kairāṭṭu, பெ.(n.) கையால் நூல் நூற்கும் எந்திரம், spinning wheel (செ. அக.);. [P] கைராட்டு மறுவ. கைராட்டை, கைராட்டினம் ம, கைராட்டு; க. கைராடெ; தெ. சேதிராட்னமு. [கை + இறாட்டு → இராட்டு.] |
| கைராட்டை | கைராட்டை kairāṭṭai, பெ.(n.) கையால் சுற்றி இயக்கி நூல் நூற்கும் கருவி; a handoperated spinning wheel [கை+ராட்டை] [P] |
| கைராதம் | கைராதம் kairātam, பெ.(n.) நில வேம்பு; ground neem, Justica paniculata (சா.அக.);. |
| கைராத்தாசாமி | கைராத்தாசாமி kairāttācāmi, பெ.(n.) 1. பிச்சைக்காரன்; begger. 2. ஒன்றுக்கும் உதவாதவன்; a good for nothing person (செ.அக.);. மறுவ, கையாலாகாதவன் கைராத்தாசாமி kairāttācāmi, பெ.(n.) 1. இரவலன்; begger, 2. ஒன்றுக்கும் உதவாதவன்; a good-for-nothing person. [U.{}+{} → த.கைராத்தஆசாமி.] |
| கைராத்தினாம் | கைராத்தினாம் kairāttiṉām, பெ.(n.) அறக்கொடை; charitable endowment (செ.அக.);. [கை+ராத்தினாம்.] கைராத்தினாம் kairāttiṉām, பெ.(n.) அறக்கொடை (இ.வ.);; charitable endowment. [U.{}+{} → த.கைராத்து+இனாம்.] |
| கைராத்து | கைராத்து1 kairāttu, பெ.(n.) ஒரு வசைமொழி; a term of abuse. [Ar.{} → த.கைராத்து.] கைராத்து2 kairāttu, பெ.(n.) 1. அறம்; charity, alms. 2. பயனற்றது; that which is useless. [U. khairat → த.கைராத்து.] |
| கைரிகம் | கைரிகம்1 kairikam, பெ.(n.) பொன்னுமத்தை (சித்.அக.);; purple stramony (செ.அக.);. கைரிகம்2 kairikam, பெ.(n.) 1. காவி வண்ணம் ஊட்டப்பட்ட கல் (பிங்.);; redochre. 2. பொன் (சது.);; gold(செ.அக.);. கைரிகம் gairigam, பெ.(n.) 1. காவிக்கல் (பிங்.);; red ochre. 2. பொன் (சது.);; gold. [Skt.gairika → த.கைரிகம்.] |
| கைரியம் | கைரியம் kairiyam, பெ.(n.) 1. நரி; jackal. 2. பொன்; gold. 3. கல்மதம்; bitumen (சா.அக.);. |
| கைரேகை | கைரேகை kairēkai, பெ.(n.) கைவரை பார்க்க;see kai-varai. கை + ரேகை. ஏகை (சிலப்.);. ஏகை – கீற்று, ஏகை – ரேகை என வடமொழியில் திரிந்தது (ஏகைக்கணியம்);. கைவரிபார்க்க; see kai-vari. மறுவ. கையேகை. கைவரை. கைவரி. [கை + ரேகை.] |
| கைரேகை நூல் | கைரேகை நூல் kairēkainūl, பெ.(n.) கைவரி கணியம்; palmistry மறுவ கைவரிக்கணியம். [கை + ரேகை + நூல்.] |
| கைரொக்கம் | கைரொக்கம் kairokkam, பெ.(n.) கைம்முதல் பார்க்க;see kai-m-mudai. [கை + ரொக்கம்.] |
| கைரோகம் | கைரோகம் kairōkam, பெ.(n.) கையில் ஏற்படும் நோய்கள்; diseases of the hands (சா.அக.);. [கை+Skt. ரோகம்] |
| கைர் | கைர் kair, வி.எ.(adv.) நல்ல; good (Muham.). [Ar.khair → த.கைர்.] |
| கைலஞ்சம் | கைலஞ்சம் kailañjam, பெ.(n.) கையூட்டு பார்க்க;see kai-y-ottu. [கை + லஞ்சம்.] |
| கைலாகு | கைலாகு kailāku, பெ.(n.) கைத்தாங்கல் பார்க்க;see kaittangal. மறுவ. கைலாகுகொடுத்தல். [கை + லாகு.] கைலாகுகொடு-த்தல் 1 செ.கு. வி.(v.t.); அரசர் துறவியர் போன்ற மேன்மையர் நடக்கும்பொழுது மதிப்புரவாக அவர் கைகளைத் தாங்குதல்; to support by the arms, as a king or other great personage while walking, as a mark of respect. 2. உடல் வலிவற்றவரைக் கையொடுத்துத் தாங்குதல்; to hold by the arms, as a weak man [கை + லாகு + கொடுத்தல்.] |
| கைலாகை | கைலாகை kailākai, பெ.(n.) கைலாகு (யாழ். அக.); பார்க்க;see kai-lagu. [கை + லாகை.] |
| கைலாச மந்திரன் | கைலாச மந்திரன் kailācamandiraṉ, பெ.(n.) சிவன்; Lord Śiva. [கைலாசம் + (மந்திரம்); மந்திரன்.] |
| கைலாசசட்டைநாதர் | கைலாசசட்டைநாதர் kailācacaṭṭainātar, பெ.(n.) தமிழில் மருத்துவநூல் சிலவற்றை இயற்றிய சட்டைமுனி என்னும் சித்தர்;Šiddar author of some medical treatises in Tamil (சா.அக.);. [கைலாசம்+சட்டை+நாதர்] |
| கைலாசநாதன் | கைலாசநாதன் kailācanātaṉ, பெ.(n.) சிவன்; “Siva, as the Lord of Mount Kailas. [கைலாசம் + நாதன்.] |
| கைலாசநாயனார் | கைலாசநாயனார் kailācanāyaṉār, பெ.(n.) சட்டைமுனி என்னும் சித்தரின் மறுபெயர்: a Siddha named Sattamuni |
| கைலாசம் | கைலாசம் kailācam, பெ.(n.) கைலாயம்பார்க்க;see kailāyam. [கைலாயம் → கைலாசம்.] |
| கைலாத்து | கைலாத்து1 kailāttu, பெ.(n.) சாரமற்றது; juiceless, a thing of no avail. [கையால் + அற்றது → கையாலற்றது → கைலாத்து (கொ.வ.);.] |
| கைலாய சுந்தரர் | கைலாய சுந்தரர் kailāyasundarar, பெ.(n.) கைலாசநாதன் பார்க்க;see kaillasa-nadan. [கைலாயம் + சுந்தரர்.] |
| கைலாய மேருகலை | கைலாய மேருகலை gailāyamērugalai, பெ.(n.) வலது மூக்குத்துளை வழியாகச் செல்லும் மூச்சுக்காற்று; the vital air passing through the right nostril மறுவ. சூரியகலை. [கைலாயம் + மேரு + கலை.] |
| கைலாயதேகம் | கைலாயதேகம் kailāyatēkam, பெ.(n.) 1. கற்பகதேகம்; rejuvenated system of body. 2. இறவா உடல்; immortal body. [கைலாயம் + தேகம்.] |
| கைலாயம் | கைலாயம் kailāyam, பெ. (n.) எண்வகைக் குன்றுகளில் ஒன்றும் சிவன் வாழ்விடமாகக் கருதப்படுவதுமான ஒருமலை: Kailas. supposed to be the abode of Šiva, one of Asta-kula parvadam (செ.அக.);. [கயில்3 (உச்சி, முகடு); + ஆயம்-கயிலாயம்(உயர்ந்த உச்சிகளைக் கொண்டமலை);.] |
| கைலி | கைலி kaili, பெ.(n.) கையொலி2 பார்க்க;see kai-y-oli. “அழகிய மணவாளப் பெருமாள் சாத்தியருளின கைலியில்” (கோயிலொ. 30); (செ. அக.); [கையொலி → கைலி.] |
| கைலேசு | கைலேசு kailēcu, பெ. (n.) கைக்குட்டை (நாஞ்.);; Hand kerchief [கை + லேசு. (கை * குறுமை, ஒலியல் → ஒலிசு → லேசு * உடை);.] |
| கைலேஞ்சி | கைலேஞ்சி kailēñci, பெ.(n.) கைக்குட்டை (இலங்.); handkerchief |
| கைலை | கைலை kailai, பெ.(n.) கைலாயம் (திவா.); பார்க்க;see kalayam [கைலாயம் → கைலை. மரு.உ] |
| கைலைக்கலம்பகம் | கைலைக்கலம்பகம் gailaiggalambagam, பெ. (n.) குமரகுருபரரால் பதினேழாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட சிற்றிலக்கிய நூல்; a treatise composed by kummaragurubarar during 17th Century. [கைலை + கலம்பகம்.] |
| கைலைமூர்த்தி | கைலைமூர்த்தி kailaimūrtti, பெ.(n.) அண்ட கண்ணம்; calcined compound [கைலை + மூர்த்தி.] |
| கைலைவெளி | கைலைவெளி kailaiveḷi, பெ.(n.) மூளை; brain [கைலை + வெளி.] |
| கைலொசம்காட்டுதல் | கைலொசம்காட்டுதல் kailosamkāṭṭudal, பெ. (vbl.n.) தற்பெருமை பேசித் திரிதல்; blow one’s own trumpet, self boasting. [கைலாயம்+காட்டுதல்] |
| கைல் | கைல் kail, பெ.(n.) பிடரி; back of the neck; nape. [உல் → குல் → கில் → கைல்.] கைல் kail, பெ.(n.) பிடரி; back of the neck; nape (சா.அக.);. [P] |
| கைவசப்படுத்து-தல் | கைவசப்படுத்து-தல் kaivacappaṭuttutal, 5 செ.கு.வி. (v.i.) தன் பிடிக்குக் கீழ் கொண்டு வருதல்; தன் வயப்படுத்துதல்; take control of seize. வீட்டை அடுத்த புறம்போக்கு நிலத்தைக் கைவசப்படுத்திக் கொண்டார். [கை+வசம்+படுத்து-தல் வயம்→வசம்] |
| கைவசம் | கைவசம் kaivasam, பெ.(n.) கைவயம்பார்க்க;see kai-Vayam. க. கெய்வச. [கை + (வயம்); வசம்.] |
| கைவட்டகை | கைவட்டகை gaivaṭṭagai, பெ.(n.) சிறிய உண்கவன்; a kind of metal vessel. “கைவட்டகையொன்று’ (S.l.l.II. 418, 81); (செ.அக.);. ம. கைவட்டகை, [கை + வட்டகை.] |
| கைவட்டணை | கைவட்டணை kaivaṭṭaṇai, பெ. (n.) நாட்டியத்தில் கையாற்செய்யும் முத்திரை (சீவக.1257, உரை);; hand pose in dancing. [கை + வட்டணை.] |
| கைவட்டி | கைவட்டி kaivaṭṭi, பெ.(n.) சிறிய ஒலைப்பெட்டி; small ola basket [கைவட்டி * கடக்ப்பெட்டி. வடு → வட்டு → வட்டி : வட்டமானது, உருண்டையானது,] |
| கைவட்டில் | கைவட்டில் kaivaṭṭil, பெ. (n.) கைவட்டிபார்க்க;see kai-vatti. [கை + (வட்டு → வட்டி); வட்டில்.] |
| கைவணக்கம் | கைவணக்கம் kaivaṇakkam, பெ.(n.) தொடர்ந்து ஒரு பொருளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் கைபக்குவம்; skill fullness of hand movement. மறுவ கைப்பழக்கம் [கை+வணக்கம்] |
| கைவண்டி | கைவண்டி kaivaṇṭi, பெ. (n.) 1. கையால் இழுக்கும் வண்டி; hand-cart, barrow, trundle. 2. தள்ளுவண்டி; perambulator. ம. கைவண்டி; க. கைபண்டி, தெ. செய்பண்டி. [கை + வண்டி.] |
| கைவண்டில் | கைவண்டில் kaivaṇṭil, பெ.(n.) கைவண்டி பார்க்க;see kai-vandi. [கை + வண்டில். வண்டி → வண்டில்.] |
| கைவண்ணம் | கைவண்ணம் kaivaṇṇam, பெ.(n.) கைத்திறன் – ஆற்றல்; power of the hand, talent. “கைவண்ணம் அங்குக் கண்டேன்”(கம்பரா.பால.481);. [கை + வண்ணம்.] |
| கைவந்தகலை | கைவந்தகலை gaivandagalai, பெ. (n.) செய்து செய்து பழகிய முதிர்ந்த நிலை; handy technique. பாவேந்தர் பாரதிதாசனார்க்குத் தமிழ்ப்பா, கைவந்த கலையாகத் திகழ்ந்தது (உ.வ.);. [கை + வந்த + கலை.] |
| கைவந்தவன் | கைவந்தவன் kaivandavaṉ, பெ.(n.) பழகித் தேர்ந்தவன்; a practised hand. வித்தை கை வந்தவன் (செ.அக.);. [கை + வந்தவன்.] |
| கைவந்தி | கைவந்தி kaivandi, பெ.(n.) தோளின் கீழாகக் கையில் அணியப்படும் ஓரணி; bracelet worn on the arm just below the shoulder. “விளக்க முற்றிய கைவந்தி யினையும் “(மதுரைக் 415, உரை);. [கை + வந்தி.] |
| கைவன்மை | கைவன்மை kaivaṉmai, பெ.(n.) கைவல்லவம் பார்க்க;see kai-vallavam [கை + வன்மை.] கைவா1-தல் (கைவருதல்); 18 செ.கு.வி. (v.i); 1.தேர்ச்சி பெறுதல்; to become proficient, expert. “வேத தாற்பரியங் கைவந்திருக்கு மவர்கள்” (ஈடு. 10,1:2);. 2. ஒருங்கே நிகழ்தல்; to happen together. “காட்டிய பத்துங் கைவரு மெனினே” (நம்பியகப். 36);. 3. கைகூடுல்; to be successful, attained. “இந்தப்பாவனை கைவாரா தாகில்”(சி.சி 8:34, மறைஞா.); (செ. அக.);. [கை + வா-.] |
| கைவயம் | கைவயம்1 kaivayam, பெ.(n.) கையிலிருக்கும் பொருள்; matter on hand. புலவர் குழந்தையின் திருக்குறள் உரை என் கைவயமில்லையே (உ.வ.);. [கை + வயம்.] கைவயம்2 kaivayam, பெ.(n.) 1. கையிருப்பு; actual possession. 2. கையிருப்பு; charge. 3.அடைக்கலம், கையடை; custody. அவள் இப்போது உன் கைவயமாய் ஆகிவிட்டாள் (உ வ.);. ம. கைவசம்; க., து., கைவச. [கை + வயம்.] |
| கைவரப்பு | கைவரப்பு kaivarappu, பெ.(n.) குறுங்காலிகமாக இட்ட சிறு மண்ணணை (இ.வ.);; temporary earthen bank கைவரப்பு எவ்வளவு நேரம் நிற்கும். [கை + வரப்பு.] |
| கைவரல் | கைவரல் kaivaral, பெ.(n.) 1. அறுவை மருத்துவம் செய்வதில் தேர்ச்சியடைந்திருத்தல்; being an expert in performing a manual work as operation 2. கைப்பழக்கம்; manual skill acquired by practice. [கை + வரல்.] |
| கைவரி | கைவரி kaivari, பெ.(n.) கைவரைபார்க்க;see kai. Varai. [கைவரை → கைவரி.] |
| கைவரிகை | கைவரிகை gaivarigai, பெ.(n.) கைவரை பார்க்க;see kai-Varai. [கைவரை → கைவரிகை.] |
| கைவரிக்கணியம் | கைவரிக்கணியம் kaivarikkaṇiyam, பெ.(n.) கைவரி (கைரேகை);களை உற்று நோக்கி வருங்காலம் உரைக்கும் குறிநூல்; palmistry. மறுவ. கைரேகை நூல், கைரேகை சாத்திரம். [கை + வரி + கணியம்.] |
| கைவரிசை | கைவரிசை kaivarisai, பெ.(n.) 1. திறமை (கொ.வ.);; strength, prowess. இறுதியில் அவன் தன் கைவரிசையைக் காட்டிவிட்டான். 2. கொடை (இ.வ.);; Liberality, 3. சீட்டாட்டத்தில் முதலில் சீட்டை இறக்கும் உரிமை; right to serve first in a game of cards [கை + வரிசை.] கைவருடல் 7 செ.கு.வி.(v.t.); கையால் தடவுதல்; to massage. [கை + வருடல்] |
| கைவரை | கைவரை1 kaivarai, பெ.(n.) அகங்கையில் உள்ள கோடுகள்; lines on the palm. மறுவ, கைவரி, கைரேகை. [கை + வரை] கைவரை2 kaivarai, பெ.(n.) 1. கையெழுத்து; handwriting. 2.கையொப்பம்; signature. க. கெய்பரக. [கை + வரை] கைவரை3 kaivarai, பெ.(n.) கையால் எழுதியது; hand-writing. க. கெய்பெரக; பட கைபரெ. [கை + வரை] |
| கைவரைச்சம்பா | கைவரைச்சம்பா kaivaraiccambā, பெ.(n.) சம்பா நெல்வகையுளொன்று (பதார்த்த. 803);; a kind of camba paddy [கை + வரை + சம்பா.] |
| கைவர்த்தம் | கைவர்த்தம் kaivarttam, பெ.(n.) கோரைக்கிழங்கு; corai root [கை + வருத்தம் (வட்டம், வளைவு); – கைவருத்தம் → கைவர்த்தம்.] |
| கைவர்த்தர் | கைவர்த்தர் kaivarttar, பெ.(n.) பல்லக்குத் தூக்கிகள் (ஈடு.);; palanquin bearers [கைவரு → கைவருத்தர் → கைவர்த்தர் (திறனாளர்);.] |
| கைவறட்டி | கைவறட்டி kaivaṟaṭṭi, பெ.(n.) கையால் தட்டின வறட்டி; cow dung cake formed by hand. [கை + வறட்டி.] கைவறள்(ளு);-தல் 16 செ.கு.வி. (v.i.); கைவற்று-தல் பார்க்க; see kai-varru- [கை + வறள்ளு)-.] |
| கைவறுண்டி | கைவறுண்டி1 kaivaṟuṇṭi, பெ.(n.) சீமை மிளகாய்; காந்தாரி மிளகாய் பார்க்க;see kandari-milagay [சேய்மை → சீமை + மிளகாய். கை + வறுண்டி.] கைவறுண்டி2 kaivaṟuṇṭi, பெ.(n.) 1. சீனமிளகாய் (சித்.அக.);; a species of chillies plant 2.சீனிவெடி; chinese cracker. 3. சீனி அவரைக்காய் (கொத்தவரங்காய் – சென்னை வழக்கு);; a beans like vegetable. [சின்ன → சீன (சிறிய); மிளகாய். கை + வறுண்டி.] |
| கைவலச்செல்வன் | கைவலச்செல்வன் kaivalaccelvaṉ, பெ.(n.) அருகன் (துறக்கமா செல்வத்தை யுடையவன்);; Arhat. as one possessing the wealth of final emancipation. “கருமக்கடம் கடந்த கைவலச் செல்வன்'(சீவக. 274);. [கைவலம் + செல்வன்.] |
| கைவலம் | கைவலம் kaivalam, பெ(n.) துறக்கம்; final emancipation. “இவை விடுத்தறானேயடையுங் கைவலம்” Luck associated with one’s hand. [கை + (ஒல் → வல் → வல்லயம்); வலம்.] |
| கைவலி-தல் | கைவலி-தல் kaivalidal, 2 செ. குன்றாவி. (v.t.) கைகடந்து போதல்; to get out of control, to dis obey. “சிறுமா னிவணம்மைக் கைவலிந்து” (திவ்.திருவாய். 6:5:7);. [கை + வலி-.] |
| கைவலிப்பு | கைவலிப்பு kaivalippu, பெ.(n.) கைக்குக் காணும் குரக்குவலி; Cramp in the hand 2. கைக்கடுப்பு; irritation in the hand [கை + வலம்.] |
| கைவலிமை | கைவலிமை kaivalimai, பெ.(n.) கையின் ஆற்றல்; the power of the hand. க. கெய்பல. [கை + வலிமை] |
| கைவலை | கைவலை kaivalai, பெ.(n.) சிறுவலை; small casting-net. [கை + வலை.] |
| கைவல்யம் | கைவல்யம் kaivalyam, பெ.(n.) கைவல்லியம் பார்க்க;see kavalliyam [கைவல்லியம் → கைவல்யம்.] |
| கைவல்லபம் | கைவல்லபம் kaivallabam, பெ. (n.) 1. தோள் வலிமை; power or strength of arm. 2. தொழில் செய்கைத்திறம்; dexterity of hand, skill in handicraft |
| கைவல்லயம் | கைவல்லயம் kaivallayam, பெ. (n.) கைத்திறமை, ஆற்றல்; talent. [கை + (ஒல் → வல்); வல்லயம்.] |
| கைவல்லர் | கைவல்லர் kaivallar, பெ.(n.) திறமையானவர்; adept. [கை + வல்லர்.] |
| கைவல்லவம் | கைவல்லவம் kaivallavam, பெ. (n.) கைவல்லயம் பார்க்க;see kai-vallayam. [கை + (ஒல் → வல் → வல்லயம்); வல்லவம்.] திறமையையும் ஆற்றலையும் குறித்த வல்லவம் எனும் தமிழ்ச்சொல் வடமொழியில் வல்லபம் எனத் திரிந்தது. |
| கைவல்லிய நவநீதம் | கைவல்லிய நவநீதம் kaivalliyanavanītam, பெ.(n.) தாண்டவராய அடிகள் தமிழ்ச் செய்யுளில் இயற்றிய ஒர் இரண்டன்மை நெறிநூல்; an Advaita treatise in Tamil by Tandavaraya swami [கை + (வல்லயம்); வல்லியம் + நவநீதம்.] |
| கைவல்லியமா-தல் | கைவல்லியமா-தல் kaivalliyamātal, 2 செ.கு.வி. (v.i.) வாய்த்தல்; being successful [கை + வல்லியம் + ஆ-.] |
| கைவல்லியம் | கைவல்லியம்1 kaivalliyam, பெ.(n.) 1. ஒன்றான தன்மை; absolute oneness, perfect isolation. “நிர்விடிய கைவல்லமாநிஷ்க”‘(தாயு கருணா.1); 2. துறக்கம் (திவா.);; final emancipation. 3. பயன் ( அனுகூலம்); (இ.வ.);; success, gain. 4. நூற்றெட்டு மறைமங் (உபநிடதம்); களிலொன்று; an Upanishad, one of 108 5. கைகூடுகை; achieving object. 6.தனிமை; solitude. [கை + (ஒல் → வல்); வல்லயம் (வல்லியம்);. கை தனிமை, உயர்வு.] கைவல்லியம்2 kaivalliyam, பெ.(n.) வீடுபேறு; eternal emancipation. 2. வெற்றி; success. 3. உடலிலிருந்து உயிரைப் பிரித்தல்; separation of the soul from matter. 4. எல்லாப் பற்றுகளினின்றும் விலகி, மறுபிறப்பு அறுத்தும் நிற்றல்; perfect isolation [கை + (வல்லயம்); வல்லியம். கைதுல்லுதல் கைச்சேர்தல், பெறுதல். ஒல் → வல். கைவல்லியம் பெறத்தக்க வீடுபேறு.] |
| கைவல்லோர் | கைவல்லோர் kaivallōr, பெ.(n.) கைப்பழக்கமுள்ளோர்; Adeptat handiwork. [கை + வல்லோர்.] |
| கைவளச்சம்பா | கைவளச்சம்பா kaivaḷaccambā, பெ.(n.) நிறமும் இனிமையுமுள்ள சம்பா நெல்வகை (வின்.);; a species of camba paddy with bright colour and pleasant taste. [கை + வளம் + சம்பா.] |
| கைவளப்பம் | கைவளப்பம் kaivaḷappam, பெ.(n.) கொடை. bounty. ‘கைவளப்பத்தையுடைய தலைவன் (பெரும்பாண். 420, உரை);. [கை + வளப்பம்.] |
| கைவளம் | கைவளம் kaivaḷam, பெ.(n.) 1, கைராசி பார்க்க:see kai-rási. 2. கை,ப்பொருள்; property on hand. 3. செழிப்பு; fertility, luxuriance, richness of soil. “கைவளமான தேசம்”(இ.வ.);. 4. கைத்தொழிலின் திறம்; skill in workmanship. “கண்டோர் மருளக் கைவளங் காட்டி” (பெருங். இலாவாண.4:194); (செ.அக.);. [கை + வளம்.] |
| கைவளர் | கைவளர்1 kaivaḷartal, 2 செ.கு.வி. (v.i.) 1. போற்றப்பட்டு வளர்தல்; to be carefully tended. “கைவளர் மயில் னாளை” (கம்பரா.கோலங்.18);. 2. பழக்கமுறுதல்; to be accustomed, habituated, experienced. “விஷயாந்தரங்களிலே கைவளருகிற கரணங்களை”‘(அஷ்பாதச. ப. 22);. ம. கைவளருக. [கை + வளர்-.] கைவளர்2-தல் 2 செ.கு.வி.(v.i); பரவுதல்; to spread. “சேனையொடுகைவளர்ந்து சென்றது” (பு.வெ.6:5);. “கன்னசூழ் நாட்டிற் கயலானை கைவளர” [கை + வளர்-.] |
| கைவளாக்கை | கைவளாக்கை kaivaḷākkai, பெ.(n.) ஏழு முள்ளுக்கொடி (சா.அக.);; thorny creeper. [கைவளம் + செழிப்பு. அக்கு 2 முள். கைவளம் + (அக்கு); அக்கை – கைவளக்கை.] |
| கைவளை | கைவளை1 kaivaḷai, பெ.(n.) 1. கைத்தொடி (பிங்.);; bangle worn on hand or bangle bracelet. கைவளை திருத்துபு கடைக்கண் நோக்கினாள்” (கம்ப.இராம.);. 2. தோள்வளை; an arm-ring. 3.மேற்கூரையைத் தாங்குமாறு சுவர் முதலியவற்றிலமைக்குஞ் சட்டம்; wall-plate, horizontal beam upon a wall or upon projecting corbels, supporting the ends of other beams or roof-trusses 4.கூகம்; the state of being hidden. 5. சிறுவளை; small bangle. 6. மருதோன்றி; a flowering shrub. 7. வளையல்; bangle. [P] கை வளை (தொடி); ம. கைவள: க. கெய்பளெ: பட கைபே. [கை + வளை.] கைவளை2 kaivaḷai, பெ.(n.) மருதோன்றி; a herb used to colour the hands and feet of girls. [மரு நிறம். மரு + தோன்றி. கை + சிறிய. வேளை [வேளைச்செடிவகை. கை + வளை – கைவேளை – கைவளை (கொ.வ.);.] கைவளை3 kaivaḷai, பெ.(n.) 1. சிறியபொந்து; a small hole. 2. கமுக்கம்,மறைவு; the state of being hidden. 3. சிறுவளை; small bangle. 4. வளையல்; bangle. [கை + வளை.] |
| கைவளையல் | கைவளையல் kaivaḷaiyal, பெ.(n.) கைக்கிடும் வட்டவடிவ அணிகலன்; bangle. கைவற்று-தல் 6 செ.கு. வி. (v.i.); 1. பொருளின்றி நிலைமை தாழ்தல்; to become reduced in circumstances. 2. கையிற் பொருளறுதல்; to be empty handed [கை + வற்று-.] |
| கைவழக்கம் | கைவழக்கம் kaivaḻkkam, பெ.(n.) 1. கையின் கொடைக்குணம்; liberality, munificence. திருக்கை வழக்கம். 2. கைவிளக்கம்2பார்க்க; see kai vilakkam. 3. கோயிலில் பூசகர் முதலியோருக்கு உரிய உரிமை; perquisites of the priest or servant of a temple. 4. ஈமக்கடனாற்றிய பின்பு குடிமக்கள் ஐவர்க்குக் கொடுக்கும் பணம் முதலியன (யாழ்.);; money and other gifts to five of the kudimakkal on the day after the funeral ceremony. ம. கைவழக்கம்: பட. கைபழக்க. [கை + வழக்கம்.] |
| கைவழங்காமலிருத்தல் | கைவழங்காமலிருத்தல் kaivaḻṅgāmaliruttal, பெ.(n.) கைமுடமாயிலருத்தல்; being lame of hand (சா.அக.);. [கை + வழங்காமல் + இருத்தல்.] |
| கைவழங்காமை | கைவழங்காமை kaivaḻṅgāmai, பெ.(n.) கை பயன்பாடற்றுப் போதல்; being unable to use the hand மறுவ விளங்காமை. [கை + வழங்காமை.] |
| கைவழங்கு | கைவழங்கு1 kaivaḻṅgudal, 8 செ. குன்றாவி. (v.t) கொடுத்தல்; to give (செ. அக.);. [கை + வழங்கு-.] கைவழங்கு2 kaivaḻṅgudal, 10 செ.கு. வி. (v.i.) கையடி-1, பார்க்க;see Kai-y-adi-. “வெஞ்சமர் விளைக்கவே கைவழங்குகென” (பாரத. கிருட்.120);. [கை + வழங்கு-.] கைவழம் வழங்குங் கைப்பக்கம்; being able to use the hand or arm. [கை + வழம்.] |
| கைவழி | கைவழி1 kaivaḻi, பெ.(n.) 1. யாழ்; lute, as an instrument held in the hand. “கைவழி மருங்கின் செவ்வழி பண்ணி”(புறநா. 149:3); (செ. அக.);. [கை + வழி (கையிலிருப்பது.] கைவழி2 kaivaḻi, பெ. (n.) 1. ஒருவன் கைவசமாக அனுப்பிய பொருள்; that which is sent by a person. 2. ஆள்; individual, person. 3. கைராசி (இ.வ.);; பார்க்க;see kai-rasi [கை + வழி.] கைவழி3 kaivaḻi, பெ.(n.) 1. ஒற்றையடிப்பாதை (இ.வ.);; foot-path. 2. சிறு கிளையாறு; small branch of a river ம. கைவழி. [கை + வழி.] கைவழி4 kaivaḻi, பெ.(n.) தெய்வத் திருமேனிக்குச் சாற்றும் சிற்றாடை; Small cloth, usu. 5 cubits. long, with which idols are clothed. [கை + வழி.] |
| கைவழித்தமண் | கைவழித்தமண் kaivaḻittamaṇ, பெ.(n.) நுண்ணிய களிமண்; fine clay, sticking to the hands of potter [கை + வழித்த + மண்.] |
| கைவா | கைவா2 kaivātal, 18 செ.கு.வி. (v.i.) ஒன்றைச் செய்யக் கையெழுதல்; to be disposed to do a thing. . அடிக்கக் கைவர வில்லை (உ.வ.); [கை + வா-.] கைவா3 kaivātal, 18 செ.கு.வி. (v.t.) செய்நேர்த்தியாதல்; to be accomplished. பாவாணருக்குச் சொல்லாய்வு கைவந்த கலையாயிற்றே (உ.வ.);. [கை + (வரு); வா-.] |
| கைவாகு | கைவாகு kaivāku, பெ.(n.) 1, கைராசி (இ.வ.); பார்க்க; see kai-rasi. 2. கையால் ஆளுதற்கு உரிய நிலை; being ready to hand சமைத்தற்குரிய பொருளைக் கைவாகாக வைத்துக் கொண்டால் சமையலே எளிதாக இருக்கும் (உ.வ.);. [கை + வாகு.] கைவாங்கியுண்(ணு);-தல் 5 செ.குன்றாவி, (v.t.); நிறைய உண்ணுதல் (இ.வ.);; to eat in large qunatities [கை + வாங்கி + உண்ணு-.] கைவாங்கு1-தல் 7 செ.கு.வி.(v.i.); நீங்குதல்; to withdraw. “இரட்சணத்தினின்றும் கைவாங்கினாயோ” (திவ். திருநெடுந் 16:128, வியா);. [கை + வாங்கு-.] |
| கைவாக்கு | கைவாக்கு kaivākku, பெ.(n.) 1. கைவாகுபார்க்க: see kai-agu, 2. கைவழக்கம் பார்க்க:see kai-valakkam. ம. கைவாக்கு. [கை + வாக்கு.] |
| கைவாங்கு | கைவாங்கு2 kaivāṅgudal, 5 செ. குன்றாவி. (v.t.). கையை வெட்டுதல், to cut off the hand, to amputate ம. கைவாங்ஙுக. [கை + வாங்கு-.] |
| கைவாசி | கைவாசி kaivāci, பெ.(n.) கைராசிபார்க்க;see kairåsi ம. கைவாசி. [கை + வயம் → வாசி) வாசி.] |
| கைவாட்சம்பா | கைவாட்சம்பா kaivāṭcambā, பெ.(n.) நெல்வகை (யாழ்.அக.);: a kind of paddy [கை + வாள் + சம்பா.] |
| கைவாய்க்கால் | கைவாய்க்கால் kaivāykkāl, பெ.(n.) சிறுகால்வாய் small channel branching out from the main one [கை + வாய்க்கால்.] |
| கைவாய்ச்சி | கைவாய்ச்சி kaivāycci, பெ.(n.) சிறு வாய்ச்சிக் கருவி (வின்.);; a small adze க. கெய்வாசி. [கை + வாய்ச்சி.] |
| கைவாய்ப்பு | கைவாய்ப்பு kaivāyppu, பெ.(n.) கைமாற்று1 பார்க்க;see kai-marru. மூன்று உருபா கைவாய்ப்பாய் வாங்கியிருக்கிறேன் (இ.வ.); (செ.அக.);. ம. கைவாய்ப. [கை + வாய்ப்பு.] |
| கைவாரங்கொள்(ளு)-தல் | கைவாரங்கொள்(ளு)-தல் kaivāraṅgoḷḷudal, 2 செ.கு.வி. (v.i.) 1 அதிகாரத் தோரணை கொள்ளுதல்; to assume authority. 2. கூத்தை நிறுத்தும் பொருட்டுக் கையை உயரவெடுத்து வீசுதல் (ஒழிவி. பொது. 1, உரை); (செ.அக.);; to wave the hand to stop the folk dance drama. க. கெய்வாரிசு (புகழ்தல்);. [கை + வாரம் + கொள்(ளு);-.] |
| கைவாரம் | கைவாரம்1 kaivāram, பெ.(n.) 1. கைதூக்கிக் கூறும் வாழ்த்து; benediction, encomium, praise pronounced with raised hands. “புறப்பட்டருளினவுடனே ஜயசப்தங்களாலே கைவாரம் பண்ணுகிறதும்” (கோயிலொ. 89);. 2. பனங்கிழங்கு உண்டாக்குதல் முதலியவற்றுக்குக் கொடுக்குங் கூலி (யாழ்ப்.);; wage in kind for pressing pulp of palmyra fruits or preparing palmyra roots. 3 சரிவாரம்; equal division of a crop. 4. வயிர முதலியவற்றின் முனை; edge, as of a diamond க. கெய்வார; தெ. கைவாரமு. [கை + வாரம்.] கைவாரம்2 kaivāram, பெ.(n.) 1. வேளாண்மையில் உழைப்புக்குரிய பங்கு (யாழ். அக.);; cultivator’s share of the produce for his tilling and manuring the soil களத்தடி நிலத்தை கைவாரமாகக் கொடுத்துள்ளேன் (உ.வ.);. [கை + வாரம்.] |
| கைவாரிகள் | கைவாரிகள் gaivārigaḷ, பெ.(n.) நின்றேத்துவார் panegyrists of a king whose duty is to praise standing with raised hands. தெ. கைவாரி. [கைவாரம் → கைவாரி + கள்.] |
| கைவாறு | கைவாறு kaivāṟu, பெ.(n.) 1. தக்கசமையம் (யாழ்ப்.);; suitable opportunity. 2, கைலாகு பார்க்க;see kailagu 3. கைதூக்கு; giving a hand. [கை + வாறு.] |
| கைவாளப்பை | கைவாளப்பை kaivāḷappai, பெ.(n.) கைவாளை பார்க்க;see kai-valai, “பாக்கிட்ட் கைவாளப் பையும்” (விறலிவிடு. 661); (செ.அக.);. ம. கைவாளச்சஞ்சி, [கை + வாளப்பை.] |
| கைவாளம் | கைவாளம் kaivāḷam, பெ.(n.) கைவாளை பார்க்க;see kai-valai. “தொங்கிய கைவாளமென்று தூக்கி” (விறலிவிடு. 809);. [கை + (வாளை); வாளம்.] |
| கைவாளரம் | கைவாளரம் kaivāḷaram, பெ.(n.) சிறிய அரவகை [கை + வாள் + அரம்.] |
| கைவாளை | கைவாளை1 kaivāḷai, பெ.(n.) அடைப்பை, வெற்றிலைப்பை; pouch with a wrapper, betel pouch. தம்முடைய கைவாளையிலேயிருந்த தீர்த்தவிக்கிரகத்தை”(குருபரம். 571. பன்னீ.);. ம. கைவாளசஞ்சி. [கை + வாளை.] கைவாளை2 kaivāḷai, பெ.(n.) புடைவை வகை (யாழ்.அக.);; a kind of saree. [கை + வாளை.] கைவாளைப்பை பெ.(n.); கைவாளை1 பார்க்க;see kai-valai ம. கைவாளச்சஞ்சி. [கை + வாளை + பை.] |
| கைவாளைவட்டுவம் | கைவாளைவட்டுவம் kaivāḷaivaṭṭuvam, பெ.(n.) கைவாளை1 பார்க்க;see kai-valai [கை + வாளை + வட்டுவம் (பை அல்லது சிறுபெட்டி);.] |
| கைவாள் | கைவாள் kaivāḷ, பெ.(n.) 1. கையரம்பம் (இ.வ.);; hand saw. 2. சிறுவாள் (தொல். பொருள்.1, இளம்.); short sword 3. சிறுகத்தி; A grass-knife, sickle. [P] கைவாள் ம. கைவாள்; க. கெய்பாளு; பட. கையாளு. [கை + வாள்.] |
| கைவிசேடம் | கைவிசேடம் kaivicēṭam, பெ.(n.) 1. கை படுவதனால் உண்டாவதாகக் கருதும் நன்மை; luckiness associated with one’s hand, “மருத்துவர்க்கோ சயங் கைவிசேடந் தன்னிலே”(அறப்.சத.33);. 2. பரிசு present (செ.அக.);. [கை+Skt. விசேடம்] |
| கைவிசை | கைவிசை kaivisai, பெ.(n.) 1. கைமுறை பார்க்க;see kai-murai. 2. கைவிடல்; droping, forsake. 3. நீங்கல்; removal. [கை + விசை.] |
| கைவிச்சு | கைவிச்சு1 kaiviccu, பெ.(n.) 1. கைவீசுகை; swing or free motion of the arms, as in walking. “கைவிச்சொன்றே பெறு மைம்பது பொன்” (தனிப்பா.2, 132:334);. 2. கையிருப்புத் தொகை (வின்.);; cash on hand. 3 கைத்திறன்; strength, ability. “அரக்கன் கைவிச்சு” இராமநா.பாலகா.5). 4. மிகுகொடை; grand donation. 5. ஐந்து; five. பழம் இரண்டு கைவீச்சு வாங்கி வா (உ.வ.);. ம. கைவீச்சு. [கை + வீச்சு.] |
| கைவிஞ்சு-தல் | கைவிஞ்சு-தல் kaiviñjudal, 5 செ.கு.வி. (v.i.). அளவு கடத்தல். to exceed the limit. “கைவிஞ்சி மோகமுற” (திருவாய். நூற். 62);. (செ. அக.);. [கை + விஞ்சு-.] |
| கைவிடல் | கைவிடல் kaiviḍal, பெ.(n.) நோய் நீங்காதென மருந்து கொடுக்காது விட்டகலல்; abandoning a patient without prescribing medicines [கை + விடல்.] |
| கைவிடாப்படை | கைவிடாப்படை kaiviḍāppaḍai, பெ.(n.) வாள் போன்ற கைப்படை (பிங்.);; hand-weapon, weapon held in hand, dist. for kai-vidu-padai (செ.அக.);. [கை + விடா + படை.] கைவிடு1-தல் 18 செ. குன்றாவி (v.t.); 1. பிடிதளர்தல்; to let loose (one’s own or another’s); hand. 2. விட்டொழிதல்; to forsake, abandon, desert, as dependents; to shun, eschew, as passions. “பெரியோர் கண்டு கைவிட்ட மயல்” (நாலடி. 43); 3. தள்ளிப் போடுதல்; to postpone. ம. கைவிடுக; க. கைபிடு, கெய்பிடு; தெ செய்விடுகட; ப. கையுடு. [கை + விடு-.] |
| கைவிடு | கைவிடு2 kaiviḍudal, 18 செ.குன்றாவி, (v.t.) கொப்புவிடுதல்; branch out. [கை + விடுதல்.] |
| கைவிடு-தல் | கைவிடு-தல் kaiviṭutal, 20 செ.கு.வி. (v.i.) தன்னிடம் ஒன்றை எதிர்பார்ப்பவரை ஏமாற்றம் அடையச் செய்தல்; விட்டு நீங்குதல்; let some one down; desert; forsake. உங்களைத்தான் நம்பியிருக் கிறேன். என்னைக் கைவிட்டு விடாதீர்கள். இந்த முறையும் மழை நம்மைக் கைவிட்டு விடுமோ? [கை+விடு-தல்.] |
| கைவிடுங்குறி | கைவிடுங்குறி kaiviḍuṅguṟi, பெ.(n.) குணமடைதல் அரிது எனும் அறிகுறி; symptom cincurability. 2. சாவுக்குறி; symptoms of collapse 3. பெண்குறியில் கை விட்டறியும் கருப்பக்குறி; diagnosis of pregnancy by a finger inserted int. the vagina [கை + விடும் + குறி.] |
| கைவிடுபடை | கைவிடுபடை kaiviḍubaḍai, பெ. (n.) அம்புப்பபை (பிங்.);; missile weapon. as an arrow. Dist. Fr. kavida-P-padai 2. கைப்படை, அம்பு. Аггow. [கை + விடு + படை.] கைவிடு படை அம்பு போன்றன. கைவிடாப் படைவாள் போன்றன. கைவிடுபடை kaiviḍubaḍai, பெ.(n.) கருவுயிர்ப்பின் போது பெண்குறிக்குள் விரலையிட்டுக் குழந்தை இருக்கும் நிலையை மாறச் செய்தல்; conversion performed by the hand introduced into the uterus. 2. கருப்பைக்குள் கையை விட்டுக் குழந்தையைத் திருப்பி வெளிப்படச் செய்தல் the manual turning of the child in delivery [கை + விடும் + மாற்றம்.] |
| கைவிட்டம் | கைவிட்டம் kaiviṭṭam, பெ.(n.) வீட்டின் குறுக்கு விட்டம் (கொ.வ.);; cross-piece, cross-beam, brace connecting two rafters [கை + விட்டம்.] |
| கைவிட்டுப்போ-தல் | கைவிட்டுப்போ-தல் kaiviṭṭuppōtal, 8 செ.கு.வி.(v.i.) தன் வயமாக வேண்டியது நீங்குதல், தப்பிப் போதல், நழுவுதல்; slip out of one’s hands. அந்த வேலை கைவிட்டு போய்விட்டது. இந்த வாய்ப்பும் கைவிட்டுப் போகாமல் இருக்க வேண்டும். [கை+விட்டு+போ-தல்.] |
| கைவிதிர்-த்தல் | கைவிதிர்-த்தல் kaividirddal, 4 செ.கு.வி. (v.i.) 1, மறுப்பு; to shake one’s hands in denia “இனித்தவிர் விச்சையெனக் கைவிதிர்த் தலுமே” (கலிங் 160);. 2. அச்சத்தைக் காட்டுதற்காகக் கையை அசைத்தல்; to shake one’s hands to show fear “அடியார் சூழ்ந்து கைவிதிக் கொண்டு (திருவாலவா.37:39);. 3. வியப்பினை வெளிப்படுத்துதற்க் கையை அசைத்தல்; to shake one’s hand in surprise. “வியந்துகை விதிர்ப்ப” (சீவக. 2366); 4. புகழ்ச்சியைக் கவருமுகத்தான் கையை அசைத்தல்; to shake one’s hand in praise “அங்கை விதிர்த்தாங் கரசவை புகழ” (பெருக உஞ்சைக் 32.58);. [கை + விதிர்-] |
| கைவிதை | கைவிதை1 kaividai, பெ.(n.) வெந்தயம் (மலை.); பார்க்க;see vendayam, [கை + விதை.] கைவிதை2 kaividai, பெ.(n.) நாற்றைப் பெயர்த்து நடுகையின்றி விதைத்தபடியே பயிர்செய்கை (இ.வ.);; cultivation without the process of transplantation. [கை + விதை.] |
| கைவிதைப்பு | கைவிதைப்பு kaividaippu, பெ.(n.) 1. புழுதி விதைப்பு (இ.வ.);; sowing in dry earth 2. கொருக்கலப்பையில் விதை போடாமல் நேரடியாக விதைகளைக் கையிலெடுத்து நிலத்தில் வீசி விதைத்தல்; to sow seeds with hand. [கை + விதைப்பு.] |
| கைவித்தாரம் | கைவித்தாரம் kaivittāram, பெ.(n.) ஒப்பனை; decoration (செ.அக.);. [கை+Skt. வித்தாரம்] |
| கைவினை | கைவினை kaiviṉai, பெ. (n.) கைவேலை பார்க்க;see kai-velai. “வித்தக ரியற்றிய…. கைவினைச் சித்திரம் (மணிமே. 19.5);. [கை + வினை.] |
| கைவினைக்குடி | கைவினைக்குடி kaiviṉaikkuḍi, பெ.(n.) கைத்தொழில் வேலை செய்யும் இனத்தோர்; artisan class. “உழவுகுடி கைவினைக் குடி காசாயக் குடியிற் கொள்ளும்” (S.I.I.V. 95);. [கை + வினை + குடி.] |
| கைவினைஞன் | கைவினைஞன் kaiviṉaiñaṉ, பெ. (n.) 1. தொழிலாளி; artisan, mechanic, workman 2. கம்மாளர்; carpenter, blacksmith. 3. செய்கை வல்லோர்; dynamic person, experts. [கை + வினைஞன்.] |
| கைவினைத்திறன் | கைவினைத்திறன் kaiviṉaittiṟaṉ, பெ.(n.) கைவேலை பார்க்க;see Kai-velai. [கை +_வினை + திறன்.] |
| கைவியர்வை | கைவியர்வை kaiviyarvai, பெ.(n.) கையில் அடிக்கடி உண்டாகும் வியர்வை frequent perspiration of the hands (சா.அக.);. [கை+வியர்வை.] |
| கைவியளம் | கைவியளம் kaiviyaḷam, பெ.(n.) கைவிசேடம் பார்க்க; see kai-Visédam (செ.அக.);. |
| கைவிரசு | கைவிரசு1 kaivirasu, பெ.(n.) கைவிரைவு பார்க்க: See kai-viraivu [கை + (விரவு); → விரசு-.] கைவிரசு kaivirasu, பெ.(n.) சீட்டாட்டத்தில் கை வரிசைப்படி சீட்டை இறக்குகை; to deal card as per turn. [கை + விரக.] |
| கைவிரட்டி | கைவிரட்டி kaiviraṭṭi, பெ.(n.) கையால் தட்டின வறட்டி; by hand cow dung cake கைவறட்டி பார்க்க;see kaivaratti. [கை + (வறட்டி); விரட்டி.] |
| கைவிரற்சந்து | கைவிரற்சந்து kaiviraṟcandu, பெ.(n) கைவிரலின் இடுக்கு; crotch of the fingers (சா.அக.);. [கை + விரல் + சந்து.] |
| கைவிரல் | கைவிரல் kaiviral, பெ.(n.) கையின் நுனிப்பகுதியில் அமைந்துள்ள ஐந்து உறுப்புகளுள் ஒன்று; one of the five terminal parts of the hand, finger. க. கெய்வரள், கெய்பெரல்; பட. கைபெரலு. |கை + விரல்.] |
| கைவிரி-த்தல் | கைவிரி-த்தல் kaivirittal, 4 செ.குன்றாவி.(v.t.) 1. இரத்தற் பொருட்டுக் கையை நீட்டுதல்; to stretch out the hands in begging. “கைவிரித் தெவரளித் தாலும் நன்றென வேற்ற வளநிதி” (பிரமோத் 6:54);. 2. தன்னால் இயலாமை குறிப்பித்தல்; to indicate one’s inability, disappointment [கை + விரி-.] |
| கைவிரிதவம் | கைவிரிதவம் kaiviridavam, பெ.(n.) செந்நாகதாளி (சித்.அக.);; a red cobra creeper. [கை + விரிதவம்.] |
| கைவிரைச்சம்பா | கைவிரைச்சம்பா kaiviraiccambā, பெ.(n.) கைவளச்சம்பா; a species of camba-paddy [கை + விரை + சம்பா.] |
| கைவிரைவு | கைவிரைவு kaiviraivu, பெ.(n.) கையினால் விரைந்து தொழில் செய்யுந்தன்மை; quickness of hand, as in suffling cards. [கை + விரைவு.] . |
| கைவிறிசு | கைவிறிசு kaiviṟisu, பெ.(n.) ஒருவகை வாணவெடி (யாழ்ப்.);; hand-rocket, a kind of fire-work. [கை + விறிசு.] |
| கைவிலக்கமாதல் | கைவிலக்கமாதல் kaivilakkamātal, பெ.(n.) தீட்டாதல்; being on monthly course [கை + விலக்கம் + ஆதல்.] |
| கைவிலக்கம் | கைவிலக்கம் kaivilakkam, பெ.(n.) மகளிர் தீட்டு; the menstrual discharge of females [கை + விலக்கம். எதையும் தொடலாகாது என்னும் வழக்கம்.] |
| கைவிலக்கு | கைவிலக்கு kaivilakku, பெ.(n.) 1. களப்பிச்சை கொடுத்து இரவலர்களை அனுப்புகை; sending away beggars from the threshing floor after giving them alms. 2. கதிரவனின் ஒளிக்கற்றை கண்ணிற் படாதபடி கையால் மறைக்கை; shading the eyes from the sun with the hand (செ. அக.);. [கை + விலக்கு.] |
| கைவிலங்கு | கைவிலங்கு kaivilaṅgu, பெ.(n.) இரண்டு மணிக்கட்டுகளையும் பிணைக்கும் கயிறு அல்லது தொடரி (சங்கலி);; manacles, handcuffs மறுவ, கைத்தளை. கைக்குட்டை. ம. கைவிலங்ஙு. [கை + விலங்கு.] |
| கைவிலை | கைவிலை1 kaivilai, பெ.(n.) மொத்த விலை, பண விலை: cash –price 2. கைப்பணத்திற்கு விற்றல்: to sell for ready-money. ம. கைவில: து. கையிலெ: பட கைபெலெ. [கை + விலை.] கைவிலை2 kaivilai, பெ.(n.) அப்போதைய விலை; current price. “பிடாகை தோறும் கைவிலைப் படிக்கு நாடோறும் தாவெழுதவும்” (S.I.I.VIII.139);, [கை + விலை-] |
| கைவிளக்கம் | கைவிளக்கம் kaiviḷakkam, பெ.(n.) 1. தொழிலின் திறமை; dexterity, workmanship. 2, கைப்பாங்கு பார்க்க;see kai-P-pangu. அவன் கைவிளக்கமில்லாதவன் (செ. அக.);. மறுவ. கைப்பாங்கு, கைராசி. [கை + விளக்கம்.] |
| கைவிளக்கு | கைவிளக்கு kaiviḷakku, பெ.(n.) சிறுவிளக்கு; hand lamp, small portable lamp. “கைவிளக் கேந்தி” (சீவக. 1542);. 2. ஒளிர்விளக்கு; bright lamp. ம. கைவிளக்கு; க. கெய்திவி.கெ.. [கை + விளக்கு.] |
| கைவிளங்கம் | கைவிளங்கம் kaiviḷaṅkam, பெ.(n.) வாய் விளங்கம்; wild berry, Embelia ribes (சா.அக.);. [கை+விளங்கம்] |
| கைவிளங்காமை | கைவிளங்காமை kaiviḷaṅgāmai, பெ.(n.) கைசெயற்படாகை; inability to use the hand. மறுவ. கைமுடக்கு, கைமுடக்கம். [கை + விளங்காமை.] |
| கைவிளி | கைவிளி1 kaiviḷi, பெ.(n.) கையால் உதட்டை மடித்து ஊதியெழுப்பும் சீழ்க்கையொலி; whistle produced by applying the hand to the lips. “மறவ ரழைத்த கைவிளி”(சேதுபு சங்கரபா, 7.); மறுவ. சீழ்க்கை. [கை + விளி.] கைவிளி2 kaiviḷi, பெ.(n.) கைதட்டியேனும் குறியீடுகள் (சமிஞ்ஞை); செய்தேனும் அழைக்கை (பெரியபு. கண்ணப்ப. 72);; calling one’s attention by clapping hands or making signs [கை + விளி.] |
| கைவிழல் | கைவிழல் kaiviḻl, பெ.(n.) பக்கக் (பாரிச); காற்றால் கை உணர்ச்சியற்றுப் போதல்; paralysis of an arm [கை + விழல்.] |
| கைவிழுது | கைவிழுது kaiviḻudu, பெ.(n.) கடலில் ஆழங்குறைவாயுள்ள இடங்களில் ஆழத்தை அறிய உதவுங்கயிறு (M. Navi. 71);; handlead-line, used for sounding small depths in the sea. [கை + விழுது.] |
| கைவீசி | கைவீசி kaivīci, பெ.(n.) கையாந்தகரை (சு. வைர.181); பார்க்க; see kaiyāntagarai. [கை + வீசி.] |
| கைவீசிநட-த்தல் | கைவீசிநட-த்தல் kaivīcinaṭattal, 3 செ.கு.வி.(v.i.) கைகளை தாராளமாய் ஆட்டி நடத்தல்; swimming the arms freely while walking (சா.அக.);. [கை+விசி+நட-த்தல்.] |
| கைவீசியிலை | கைவீசியிலை kaivīciyilai, பெ.(n.) கரிசலாங் கண்ணி; Eclipse [கை + வீசி + இலை.] |
| கைவீசு-தல் | கைவீசு-தல் kaivīcudal, 7 செ.குன்றாவி.(v.t.) 1. கையை முன்னும் பின்னும் அசைத்தல்; to sway or wave the arms to and fro. 2. சண்டைக்கு அணியமாகும்போது கை வீசுதல்; to wave the hand when beginning to fight. 3. சைகை காட்டும் பொருட்டு கைவீசுதல்; to wave the hand for giving a sign. க. கெய்வீசு, கெய்பீசு; பட. கைபீசு. [கை + வீசு-.] |
| கைவீச்சன் | கைவீச்சன் kaivīccaṉ, பெ.(n.) பணிகார வகை (யாழ். அக.);; a Sweet cake [கை + வீச்சன்.] |
| கைவீச்சு | கைவீச்சு2 kaivīccu, பெ.(n.) அடி (யாழ். அக.);; blow, stroke with the hand [கை + வீச்சு.] |
| கைவீடு | கைவீடு kaivīṭu, பெ.(n.) விட்டு நீங்குகை (குறள். 799, உரை);; desertion, forsaking [கை + வீடு. விடு → வீடு.] |
| கைவீணை | கைவீணை kaivīṇai, பெ.(n.) நரப்புக் கருவி வகையுளொன்று; a kind of lute. “கைவீனை முழங்க”(கொண்டல்விடு. 511); [P] கைவீணை [கை + வீணை.] கைவீழ்-தல் 2.செ.கு.வி.(v.i.); கையின் பயன் அல்லது ஆற்றல் அறுதல்; to lose the use or power of one’s hands. க. கெய்கெடு; பட. கைசோலு. [கை + வீழ்-.] |
| கைவீது | கைவீது kaivītu, பெ.(n.) கைபீது பார்க்க;see {}. [U.{} → த.கைவீது.] |
| கைவெள்ளை | கைவெள்ளை kaiveḷḷai, பெ.(n.) கையின் தோலை வெளுக்கச் செய்யும் ஒருவகை வெள்ளை (மேக); நோய்; leucoderma of the hand ம. கைவெள்ள (உள்ளங்கை);. [கை + வெள்ளை.] |
| கைவேகம் | கைவேகம் kaivēkam, 1. கைவிரைவு பார்க்க;see kai-viraivu 2. கைவரிசை; hand speed, dexterity, talent. ம. கைவேகம்; க. கெய்தவக, கெய்வேக. [கை + வேகம்.] |
| கைவேட்டு | கைவேட்டு kaivēṭṭu, பெ.(n.) இடிகொம்பு (இ.வ.);; small mortars set on a pole and used in pyrotechny. [கை + வேட்டு.] |
| கைவேலி | கைவேலி kaivēli, பெ.(n.) காஞ்சிமாவட்டத்துச் சிற்றூர்; a village in kanjipuram Dt. [கைதை (தாழை); → கை + வேலி (நிலம்);.] |
| கைவேலை | கைவேலை kaivēlai, பெ.(n.) 1. கைத்தொழில்; manual labour, handicraft. 2. கைத்தொழிற்றிறம்; workmanship. 3. கையாற்செய்தது; work done with one’s own hand, work performed by the hand ம. கைவேல; க.,பட. கைகெலச; து. கைவாடு. Norw. Handling. [கை + வேலை] |
| கைவேலைப்பாடு | கைவேலைப்பாடு kaivēlaippāṭu, பெ.(n.) கைத்தொழிற்றிறம்; handicraft, workmanship. [கை + வேலைப்பாடு.] |
| கைவேல் | கைவேல் kaivēl, பெ.(n.) கப்பணம்; dart, javelin. “கைவேல் களிற்றொடு போக்கி” (குறள், 774);. [கை + வேல்.] ஐகாரக் குறுக்கம் மொழி முதற்கண் ஒன்றரை மாத்திரையாயும், ஏனைய இடங்களில் ஒரு மாத்திரையாயும் குறுகுமென்றுணர்க. அவ்வாறு கொள்ளாக்கால் கய்வேல் களிற்றொடு என வரும் இலக்கியம் இலக்கணம் இன்றாய் முடியும் – இலப்பிரபம். |
| கைவை | கைவை1 kaivaittal, பெ.(n.) 1. கற்பழித்தல்; Seducing 2. ஏற்படுதல்; to happening. 3.தொடுதல்; to feel by touch. [கை + வை-.] கைவை2-த்தல் 4 செ.கு.வி.(v.i.); 1. கையால் தொட்டுச் செய்தல்; to touch, handle, deal with. 2. உட்புகுதல்; to enter, as on a disquisition. “பகவத் விஷயத்திற் கைவைத்தார்” (ஈடு, 6:2 பிர.);. 3. திருடுதல் (கொ.வ.);; to steal, embezzle. 4. கைவைத்து, குரு தூய்மையாக்குதல்; to consecrate by laying hands on (Chr.);. ம. கைவய்க்குக: க. கெய்யிக்கு; பட. கையிக்கு. [கை +வை-.] கைவை3 kaivaittal, 18 செ. குன்றாவி. (v.i.). 1. அடித்தல்; to beat, belabour. 2. கற்பழித்தல் (இழி. வ.);; to seduce, as a woman. [கை + வை-.] |
| கைவைத்தியம் | கைவைத்தியம் kaivaittiyam, பெ.(n.) சிறு நோய்த் துன்பங்கள் நீங்க மருத்துவர் உதவி இல்லாமல் வீட்டிலேயே செய்து கொள்ளும் மரபுவழி வந்த மருத்துவ முறை: home remedy. மறுவ, கைமருத்துவம் [கை+skt. வைத்தியம். வைத்தியம் : மருத்துவம்] கைவைத்தியம் kaivaittiyam, பெ.(n.) கைமருத்தவம் பார்க்க;see kai-maruttuvam. [கை + வைத்தியம்.] |