செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை வெளியீடு
31 தொகுதி 12000 பக்கங்கள் கொண்ட பேரகரமுதலி


1

10838

2769

3111

538

3554

677

1093

620

189

1004

402

2
க்
1

8212
கா
2579
கி
564
கீ
222
கு
4598
கூ
780
கெ
615
கே
391
கை
1101
கொ
2417
கோ
1754
கௌ
110
ங்
1

2
ஙா
2
ஙி
1
ஙீ
1
ஙு
1
ஙூ
1
ஙெ
1
ஙே
1
ஙை
1
ஙொ
5
ஙோ
1
ஙௌ
1
ச்
1

5235
சா
1186
சி
2424
சீ
439
சு
1261
சூ
420
செ
1529
சே
470
சை
23
சொ
409
சோ
365
சௌ
1
ஞ்
1

15
ஞா
44
ஞி
3
ஞீ ஞு ஞூ ஞெ
34
ஞே
5
ஞை
2
ஞொ
3
ஞோ
2
ஞௌ
1
ட்
1

1
டா
1
டி
1
டீ
1
டு
1
டூ
1
டெ
2
டே
1
டை
1
டொ
1
டோ
1
டௌ
ண்
1

1
ணா
1
ணி
1
ணீ ணு
1
ணூ
1
ணெ
2
ணே
1
ணை
1
ணொ
1
ணோ
1
ணௌ
த்
3113
தா
1530
தி
2203
தீ
393
து
1238
தூ
411
தெ
694
தே
856
தை
39
தொ
878
தோ
459
தௌ
ந்
1

2789
நா
204
நி
1860
நீ
1161
நு
14
நூ
18
நெ
892
நே
318
நை
89
நொ
210
நோ
159
நௌ
2
ப்
1

4560
பா
1824
பி
492
பீ
25
பு
2224
பூ
1133
பெ
1064
பே
483
பை
127
பொ
1218
போ
478
பௌ
2
ம்
4760
மா
1422
மி
535
மீ
268
மு
3016
மூ
949
மெ
396
மே
751
மை
152
மொ
284
மோ
242
மௌ
ய்
1

119
யா
426
யி
1
யீ
1
யு
46
யூ
20
யெ
9
யே
1
யை
1
யொ
1
யோ
98
யௌ
1
ர்
87
ரா
107
ரி
11
ரீ
7
ரு
24
ரூ
20
ரெ
6
ரே
16
ரை
10
ரொ
8
ரோ
23
ரௌ
ல்
117
லா
44
லி
8
லீ
5
லு
8
லூ
3
லெ
13
லே
21
லை லொ
20
லோ
63
லௌ
3
வ்
1

3800
வா
1329
வி
1638
வீ
515
வு
1
வூ
1
வெ
2164
வே
834
வை
229
வொ
1
வோ
3
வௌ
ழ்
1

1
ழா
1
ழி
1
ழீ
1
ழு
6
ழூ
1
ழெ
1
ழே ழை ழொ ழோ
1
ழௌ
ள்
1

2
ளா
1
ளி
1
ளீ
1
ளு
1
ளூ
1
ளெ
2
ளே
1
ளை
1
ளொ
1
ளோ
1
ளௌ
ற்
1

1
றா
1
றி
1
றீ
1
று
1
றூ
1
றெ
2
றே
1
றை
1
றொ
1
றோ
1
றௌ
ன்
1

1
னா
1
னி
1
னீ
1
னு
1
னூ
1
னெ
2
னே
1
னை னொ
1
னோ
1
னௌ
தலைசொல் பொருள்
கே

 கேā, பெ.(n.)

   ககர வல்லொற்றின் மேல் (க் );’ஏகார’ உயிரேறிப்பிறந்தஓர்உயிர்மெய்யெழுத்து; thesyllabic letter representing velar consonant ‘க்’ with the vowel ‘ஏ’.

     [க் + ஏ – கே.]

கே.சாரங்கம்

 கே.சாரங்கம்ācāraṅkam, பெ.(n.)

   செவ்வந்தி; Indian Chamcmile, Authemis nobilis(சா.அக.);.

கேகம்

 கேகம்ākam, பெ.(n.)

   வீடு (யாழ்.அக.);; house.

     [கருவகம்(உள்வீடு); → கிருகம் → கேகம்.]

அரசனின் மந்திரச்சுற்றம் கூடும் நெடுமாடத்தைக்

கருமாளிகை என்றும், இறைவன் எழுந்தருளிய கோயிலகத்தைற் கருவறை என்றும், உள்மண்டபத்தைக்

கருவரங்கம் என்றும் கூறுதலை ஒப்பிட்டு நோக்குக. கருவகம் என்னும் தமிழ்ச்சொல்லே வடமொழியில் கிருகம் என்றும் வட

இந்திய மொழிகளில் கர் (gar); என்றும் திரிந்தது.

கேகயன்

 கேகயன்ākayaṉ, பெ.(n.)

   கேகயம் என்னும்நாட்டை ஆண்ட மன்னன்; a king who ruled the nation kēgayam.

     [கேகயம் → கேகாரன்.]

கேகயப்புள்

கேகயப்புள்ākayappuḷ, பெ.(n.)

இசையுணரும்

   அசுணப்பறவை; a bird believed to possess an extremely delicate sense of music.

     [கேகயம் + புள்(பறவை.);]

இப் பறவையைக் கொல்ல நினைப்பவர், முதலில் யாழை மீட்டிப் பின்பு செவியில் ஏற்கவொண்ணாத பறையை முழக்கிக் கொல்வர் என்பது நற்றிணை 304ஆம் பாடலின் உரைக்குறிப்பு.

கேகயம்

கேகயம்1ākayam, பெ.(n.)

   மயில்(திவா.);; peacock.

     “கேகய நவில்வன”(கம்பரா.நாட்டு.49);.

     [கெக்கலி → கேக்கை → கேகயம் (கெக்கலிக்கும் பறவை);.

 கேகயம்2ākayam, பெ.(n.)

   1.பண்டைய ஐம்பத்தாறு நாடுகளுள் ஒன்றானதும், சிந்து நாட்டிற் கருகிலுள்ளதுமான நாடு; the country bordering on Sindh, one of 56 countries.

     “மணிமுடிக் கேகயத்தரசன்” (பெருங்மகத.16:9);.

   2. பண்வகை (சூடா.);; a musical mode.

   3. கவுரிச் செய்நஞ்சு (யாழ்.அக.);; a prepared arsenic.

   4. கேகயப்புள் பார்க்க;see kégaya-p-pul.

     [கேகயம்1 → கேகயம்2.]

 கேகயம்3ākayam, பெ.(n.)

மகிழம்விதை;seeds of ape-flower tree (சா.அக.);.

     [கேதகம் → கேகயம்.]

 கேகயம்4ākayam, பெ.(n.)

   1. வளைவு; bend.

   2.வில் (அக.நி.);; bow.

 Pkt. Kěya;

 Ma. ketana.

     [கவை → கேவு → கேகம் → கேகயம்.]

கேகரன்

 கேகரன்ākaraṉ, பெ.(n.)

   ஓரக்கண்ணன்; squinteyed man (சா.அக.);.

     [கேக்கை → கேகரம் → கேகரன்.]

கேகரம்

 கேகரம்ākaram, பெ.(n.)

   கடைக்கண்பார்வை; side glance(சா.அக.);.

 Pan. kairă, Ass. ker.rā, kērā;

 H., Mar. kaira.

     [கேக்கை → கேகரம்.]

கேகலன்

 கேகலன்ākalaṉ, பெ.(n.)

   கூத்தாடி; rope dancer.

 Skt. ke-kala.

து.கேகபாடுனி.

     [களி → கேளி → கேளிகளி → கேகலன்(கொ.வ.);.]

கேகாபலம்

 கேகாபலம்ākāpalam, பெ.(n.)

   மயில்; peacock.

     [P]

கேகி

 கேகிāki, பெ.(n.)

   மயில்; peacock(சா.அக.);.

தெ.கேகி.

மறுவ. கேகயம்.

     [கெக்களி → கேகளி → கேகி.]

கேகுந்தகம்

 கேகுந்தகம்āgundagam, பெ.(n.)

   கொழுக்கட்டை; a kind of rice cake or puff(சா.அக.);.

மறுவ, கேகுந்தம்.

     [கேவு → கேவுந்தம் → கேகுந்தம் → கேகுந்தகம்.]

கேகுந்தம்

 கேகுந்தம்ākundam, பெ.(n.)

   கொழுக்கட்டை; puff (சா.அக.);.

     [கேவு → கேவுந்தம் → கேகுந்தம் வடஇந்திய மொழிகளில் gehu கோதுமை எனப்பொருள்படும்.]

கேகை

 கேகைākai, பெ.(n.)

   மயிற்குரலின் அகவலோசை; screech of a pea-cock (சா.அக.);.

மறுவ. கேகம்.

 Skt.keka. Pkt. kekå. H.kehå.

     [கேக்கை (ஒலிக்குறிப்பு); → கேகை.]

கேக்களி-த்தல்

கேக்களி-த்தல்ākkaḷittal,    4செ.கு.வி.(v.i.)

கெக்களி பார்க்க;see kekkali.

     [கெக்களி → கேக்களி.]

கேக்குப்பூடு

 கேக்குப்பூடுākkuppūṭu, பெ.(n.)

   சேய்மை (சீமைச்); சீரகம்; caraway plant(சா.அக.);.

மறுவ. காவிப்பூடு.

     [கேக்கு + பூடு.]

கேக்குவிதை

 கேக்குவிதைākkuvidai, பெ.(n.)

   சேய்மைச் சோம்பு; caraway seed(சா.அக.);.

     [கேக்கு + விதை.]

கேக்குவிரை

கேக்குவிரைākkuvirai, பெ.(n.)

சீமைச் சோம்பு செடிவகை; caraway (செ.அக.);.

 கேக்குவிரைākkuvirai, பெ.(n.)

   சீமைச் சோம்பு; caraway (M.M.128);.

     [கேக்கு + விரை.]

     [E.cake → த.கேக்கு.]

கேக்கை

 கேக்கைākkai, பெ.(n.)

   தாழை; screw-pine-tree.

மறுவ. கேக்கைசி.

     [கேதகை → கேக்கை.]

கேக்கைசி

 கேக்கைசிākkaici, பெ.(n.)

தாழை,

 screwpine tree, Pandanus odoratissimus (சா.அக.);.

கேசகம்

கேசகம்ācagam, பெ.(n.)

   1. ஒருவகைக் கிழங்கு; a kind of root.

   2.அத்தி; fig tree (சா.அக.);.

     [கதி → கெதி → கேதி → கேதிகம் → கேசிகம் → கேசகம்.]

 கேசகம்ācagam, பெ.(n.)

   அத்தி; fig tree.

கேசகாரம்

கேசகாரம்ācakāram, பெ.(n.)

   ஒருவகைக் கரும்பு; a kind of sugarcane (சா.அக.);.

   2. குதிரையைத் தேய்க்குமொறு இரும்புக் கருவி; wire brush to molish the horses.

     [செய் → கெய் → கேயம் → கேசம் + கேசகாரம்.]

கேசக்கினம்

கேசக்கினம்ācakkiṉam, பெ.(n.)

   1. தலை வழுக்கை; morbid baldness.

   2. மயிர் உதிர்தல்; falling off of the hair (சா.அக.);.

     [கேசம் + (கீனம்);கினம்.]

கேசதத்து

 கேசதத்துācadaddu, பெ.(n.)

   தகரை என்னும் மூலிகை; ring-worm plant (சா.அக.);.

     [கதி → கெதி → கேதம் → கேசம் + (தந்து);தத்து.]

கேசதமனி

 கேசதமனிācadamaṉi, பெ.(n.)

   வன்னிமரம்; vanni tree also called Arjuna’s penance tree(சா.அக.);.

     [கதி → கெதி → கேதம் → கேசம் + தமனி.]

கேசதம்

 கேசதம்ācadam, பெ.(n.)

   கையாந்தகரை; eclipse plant(சா.அக.);.

மறுவ. கரிசலாங்கண்ணி, கரிசாலை,கேசதாரகம்

 Skt. kesa-da.

     [கதி → கெதி → கேதம் → கேசம் → கேசதம்.]

கேசதாரகம்

 கேசதாரகம்ācatāragam, பெ.(n.)

   கரிசலாங் கண்ணி; eclipse plant.

     [கதி → கெதி → கேதம் → கேசம் + (தாரம்);தாரகம்.]

கேசநாகுலி

கேசநாகுலிācanākuli, பெ.(n.)

   1. இருசுவர் சற்பாட்சி எனும் மூலிகை; a plant said to be used in complaints arising from germs.

   2. ஒரு வகை நாணற் புல்; a kind of plant (சா.அக.);.

     [கேசம்+நாகுலி]

கேசநாளம்

 கேசநாளம்ācanāḷam, பெ.(n.)

   நுண்ணிய அரத்தக் குழாய்; a blood tube resembling a hair.

     [கேசம் + நாளம்.]

கேசபாரம்

கேசபாரம்ācapāram, பெ.(n.)

கேசரஞ்சனம்1 பார்க்க (தைலவ.தைல.134);;see {}.

     [Skt.{}+{} → த.கேசரஞ்சகம்.]

கேசமதனி

 கேசமதனிācamadaṉi, பெ.(n.)

   வன்னிமரம்; suma tree(சா.அக.);.

     [கேசம் + (மரம் → மரன் → மரனி);மதனி.]

கேசமாமுட்டி

 கேசமாமுட்டிācamāmuṭṭi, பெ.(n.)

   எட்டி; nux vomica(சா.அக.);.

     [கதி → கெதி → கேதம் → கேசம் + (ஆம் + எட்டி.] மாமுட்டி.]

கேசமுட்டி

 கேசமுட்டிācamuṭṭi, பெ.(n.)

   வேப்பமரம் ; margosa tree(சா.அக.);.

     [கதி → கெதி → கேதம் → கேசம் + (உற்றி → உத்தி); உட்டி.]

கேசமோரிகம்

 கேசமோரிகம்ācamōrigam, பெ.(n.)

   பிள்ளை மருது; flowering murdah(சா.அக.);.

     [கதி(தோன்றுதல் → கெதி → கேதம் → கேசம் + ஒரிகம்.]

கேசம்

கேசம்1ācam, பெ.(n.)

   1. மக்கள் தலைமயிர்; human hair.

     “குறையிவட் குண்டேற் கேசங் குறைத்தற்கு” (பெருங்.வத்தவ.14:29);.

   2.விலங்கின் மயிர்(பிங்.);; hair of animals.

 Skt. kesa, Pali., Pkt.késa. Pr.iš-kk(mustache);;

 Dm. kyëc;

 Gaw.khes

     [கதித்தல் : தோன்றுதல், முளைத்தல். கதி → கெதி → கேதம் → கேசம். ஒ.நோ. கேசருகம் : புல். கேசிரி : புளியாரைக் கீரை.]

 கேசம்2ācam, பெ.(n.)

   யானைத் திப்பிலி; elephant pepper.

     [கேசம்1 → கேசம்2.]

 கேசம்ācam, பெ.(n.)

   1. மக்கள் தலைமயிர்; human hair.

     “குறையிவட் குண்டேற் கேசங் குறைத்தற்கு” (பெருங்.வத்தவ.14:29);.

   2. விலங்கின் மயிர் (பிங்.);; hair of animals.

 klis என்னும் வேரிலிருந்து உருவான {} என்னும் சொல் வடமொழியில் மாந்தத் தலையில் முளைக்கும் மயிர், குதிரை, அரிமா ஆகியவற்றின் பிடரிமயிர் ஆகிய பொருள்களுடன் வழக்கிலுள்ளது (மா.வி.);. இச்சொல் தமிழில் தலைமுடி என்னும் பொருளுடன் தலை என்னும் பொருளிலும் “கேசாதிபாதம்” என்பன போன்றவற்றில் வருகின்றது.

     [Skt.{} → த.கேசம்.]

கேசரஞ்சனதைலம்

 கேசரஞ்சனதைலம்ācarañjaṉadailam, பெ.(n.)

   பொற்றலைக்கையாந்தகரை எண்ணெய்; a scented hair-oil prepared from a plant – Ceylon cerbesina marigold.

கேசரஞ்சனம்

கேசரஞ்சனம்1ācarañjaṉam, பெ.(n.)

   1. பொற்றலைக்கையாந் தகரை (சங்.அக.);; Ceylon verbesina.

   2. தலை மயிர் வளர்க்கும் எண்ணெய் (தைல); வகை; a kind of hair-oil.

த.வ. கையாந்தகரை

     [Skt. {}+{} → த.கேசரஞ்சனம்.]

வடமொழியில் தலைமயிர்க்கு வண்ணம் ஊட்டும் எண்ணெய் எனப் பொருள் உள்ளது. தலை மயிர்க்குத் தடவும் எண்ணெய் தலைமயிர் வளர்க்கும் தன்மைத்து எனக் கருதியதால் அவ்வாறு பொருள் வரையப்பட்டுள்ளது.

 கேசரஞ்சனம்2ācarañjaṉam, பெ.(n.)

   1. கரிசலாங்கண்ணி; a plant usually found in wet places.

   2. பெருங்குறிஞ்சி; conehead.

கேசரத்துப்பு

 கேசரத்துப்புācarattuppu, பெ.(n.)

கல்லுப்பு: sea salt(சா.அக.);.

     [கதி(தோன்றுதல்); → கெதி → கேதம் → கேசம் → கேசரம் + அத்து + உப்பு.]

கேசரமாகயம்

 கேசரமாகயம்ācaramākayam, பெ.(n.)

   மகிழ மரம்; ape-flower tree, Mimusops elengi (சா.அக.);.

கேசரமாதயம்

 கேசரமாதயம்ācaramātayam, பெ.(n.)

   மகிழமரம்; ape-flower tree.

கேசரமாதியம்

 கேசரமாதியம்ācaramātiyam, பெ.(n.)

   புல்லுருவி; a parasitic plant.

     [கதி → கதி → கேதம் → கேதரம் → கேசரம் + ஆதியம்.]

கேசரமாருதம்

 கேசரமாருதம்ācaramārudam, பெ.(n.)

விசும்பினடுவே பரவியுள்ள காற்று: air of the mid-sky (சா.அக.);.

     [கே + சாம் + மாருதம்.]

கேசரமுடையன்

 கேசரமுடையன்ācaramuḍaiyaṉ, பெ.(n.)

சீந்தில்: moon-creeper(சா.அக.);,

     [கேசரம் + உடையான்.]

கேசரம்

கேசரம்1ācaram, பெ.(n.)

   1. பூந்தாது (திவா.);; filaments of a flower, stamens.

   2. மகிழமரம் (பிங்.);; pointed-leavedape-flower.

   3.குங்குமப்பூ; saffron.

மறுவ, பூங்கூந்தல்.

 Skt., Pali., Pkt. kěsara, Mar , Guj., H., Nep.kesar. . Sinh. kêsara

     [சகித்தல் : தோன்றுதல், முளைத்தல். கதி → கெதி → கேதம் → கேதரம் → கேசரம்.]

 கேசரம்2ācaram, பெ.(n.)

   1. பெருங்காயம் (யாழ்.அக.);; asafoetida.

   2. வெங்காயம்; onion.

   3. சிறுநாகப்பூ; ironwood of Ceylon.

   4. புன்னை; alexandrian.

   5. பெருங்குறிஞ்சி; conehead.

     [கதி (தோன்றுதல்); → கெதி → கேதம்→ கேதரம் → கேசரம்.]

 கேசரம்3ācaram, பெ.(n.)

   தலைமுடி; hair.

 Skt.kēsarin;

 Pali. kěsarin-maned (of a lion);;

 Pkt késan, Sind kehan. Pan kéhar. kehr(ion tiger);: Guj. Kesn, Mar. kẽsar;

 Sinh.kêsarả. H kehari.

     [கதி (தோன்றுதல். முளைத்தல்); → கெதி → கேதம் → கேதரம் → கேசரம்.]

 கேசரம்ācaram, பெ.(n.)

   1. பூந்தாது; pollon of flowers.

   2. மகிழமரம் (பிங்.);; pointed-leaved ape-flower.

   3. குங்குமப்பூ; saffron.

     [Skt.{} → த.கேசரம்.]

கேசரம்பாய்-தல்

கேசரம்பாய்-தல்ācarambāytal,    2 செ.கு.வி. (v.i.)

   இதளியக் குளிகையின் உதவியால், சித்தர்கள் விண்ணில் விரைவாகச் செல்லுதல்; flying in the midairregion by Siddhars with the aid of animated mercurial pills (சா.அக.);.

     [கேசரம் + பாய்-.]

கேசரர்

கேசரர்ācarar, பெ.(n.)

   வானவர்; those who move in the aerial regions. Vidhy ādhar as a class of demigods.

     “கேசர னெனப்போம் விசும்பிடை ” (பாரத.குருகுல.104);.

     [ககனம் (விசும்பு); + சரர் – ககனசரர் – கேனசரர் →

கேசரர்(கொ.வ.);.]

கேசராசம்

கேசராசம்ācarācam, பெ.(n.)

   1. கடார நாரத்தை; bigarada orange or seville orange, Citrus aurantium.

   2. பொற்றலை; Ceylon verbesina.

   3. கையாந்தகரை; eclipse plant, Eclypta Prostrata

     [கேசம்+ராசம்]

 கேசராசம்ācarācam, பெ.(n.)

   1. கடாரநாரத்தை; seville orange.

   2. பொற்றலை; Ceylon verbesina.

கேசராதனம்

கேசராதனம்ācarātaṉam, பெ.(n.)

   இருக்கை (ஆசன); வகை (தத்துவப்.108, உரை);; a yogic posture.

கேசராதிக்கசாயம்

 கேசராதிக்கசாயம்ācarātikkacāyam, பெ.(n.)

   நாககேசரத்தை முதலாகக் கொண்டு திப்பிலி முதலிய கடைச் சரக்குகளைச் சேர்த்துப் பாண்டு நோய்க்காக இறக்குங் கருக்கு (இதனால் மண் தின்னும் ஆசை நீங்கும்);; a kind of docoction prepared with Ceylon iron wood as a chief ingredient along with other bazaar durgs such as long pepper etc. and prescribed for dropsical anemia, (it is a curative in morbid desire for eating mud etc);.

கேசராமிலம்

 கேசராமிலம்ācarāmilam, பெ.(n.)

புளி

   மாதுளை; sour pomegranate, Punica granatum (சா.அக.);.

     [கேசரம்+அமிலம்]

 கேசராமிலம்ācarāmilam, பெ.(n.)

   புளி மாதுளை; sour pomegranate.

கேசரி

கேசரிācari, பெ.(n.)

   1. வானிற் பறக்குங் கலை; the art of flying in the sky.

   2. கணியத்திற் கூறப்படும் ஒருவகைப் பேறு (யோகம் 3);; a kind of good luck.

     “நீர்ததருமாழ்ந் தெழிலோர் விசைகேசரி நிகழ் பொன்னாள்” (சேதுபு.சடாதீ.7);.

     [ககனம் + சரம் – ககனசரம் – கேனசரம் – கேசரம் – கேசரி.]

கேசரிகம்

கேசரிகம்1ācarigam, பெ.(n.)

   1. நாயுருவி; Indian burr.

   2 அரிமா; lion.

   3.குதிரை; horse.

   4.நாதம்; fuller’s earth.

   5. பெருங்காயம்; asafoetida(சா.அக.);.

     [கேசரம் → கேசரிகம்.]

 கேசரிகம்2ācarigam, பெ.(n.)

   புதர்க்காடுகளில் வளரும் நாயுருவி; Indian burr growing in hedges and thickets.

     [கேசரி + கேசரிகம்.]

கேசரிக்கரு

 கேசரிக்கருācarikkaru, பெ.(n.)

   பிண்டம்; foetus (சா.அக.);.

     [கேசரி + கரு.]

கேசரின்

கேசரின்ācariṉ, பெ.(n.)

   1.நீலோற்பலவிதை;seeds of blue lndian-lily.

   2. சிறுநாகப்பூ; Ceyloniron-wood.

   3. கடாரநாரத்தை; citron tree.

   4. செம்முருங்கைப்பூ; mooring with red flower.

     [கேசரி – கேசரின்.]

கேசரிபாத்து

 கேசரிபாத்துācaripāttu, பெ.(n.)

   குங்குமப்பூ சருக்கரை முதலியவை கலந்த கலவைச் சோறு வகை; rice boiled with saffron, sugar and other ingredients.

த.வ செம்பொடிச்சோறு.

     [Mhr.{} → த.சேகரிபாத்து.]

கேசரிப்பவுடர்

 கேசரிப்பவுடர்ācarippavuḍar, பெ.(n.)

கேசரிப்பொடி பார்க்க;see {}.

     [Skt.{} → த.கேசரி.]

     [E.powder → த.பவுடர்.]

கேசரிப்பொடி

கேசரிப்பொடிācarippoḍi, பெ.(n.)

   மஞ்சள் நிறமுள்ள ஒரு வகைப் பொடி; a powder in the colour of saffron.

த.வ. செம்பொடி.

     [Skt.{} → த.சேகரி+பொடி.]

புள் → பூள் → (பூழ்); → பூழி = தூள், புழுதி.

புள் → பூழ்தி → புழுதி → புள் → (பொள்); → பொடி (மு.தா.127);.

கேசரிமங்கலம்

 கேசரிமங்கலம்ācarimaṅgalam, பெ.(n.)

   கோவை மாவட்டத்துச் சிற்றூர்; a village in Kovai Dt.

     [கேசரி + மங்கலம்.]

கேசரிமார்க்கம்

 கேசரிமார்க்கம்ācarimārkkam, பெ.(n.)

   வானத்தினடு; the region of mid-air.

கேசரிமுத்திரை

 கேசரிமுத்திரைācarimuttirai, பெ.(n.)

   உள் நாக்கைத் தொடும்படி நாக்கு நுனியைக் கொண்டு செய்யும் ஒகவகை; a y ôgic posture in which the tip of the tongue is turned inward to touch the uvula.

     [கேசரி + முத்திரை.]

கேசரியாசனம்

 கேசரியாசனம்ācariyācaṉam, பெ.(n.)

   கணைக்கால்கள் பிட்டத்தைத் தொடவும், விரித்த கைவிரல்கள் துடையிற் படிவும், வாய் மலர்ந்தும், பார்வை மூக்கு நுனியை நோக்கியும் இருக்கும் ஓக இருக்கை (யோகாசன); வகை; a {} posture in which the legs are disposed in such a way that the left ankle touches the right side and the right ankle touches the left side of perineum, the hands are on the thigh with wtretesed fingers the mouth is kept open and the gaze is fixed on the tip of the nose, one of nine {}.

த.வ. அரிஓகநிலை.

     [Skt.{}+{} → த.கேசரியாசனம்.]

கேசரியோகம்

கேசரியோகம்ācariyōkam, பெ.(n.)

   பிறப்புக் (சென்ம); காலத்தில் திங்களுள்ள இடத்துக்கு நடுஇடத்தில் (கேந்திரலக்கினத்தில்); வியாழன் இருக்கும் ஓகம் (சங்.அக.);; situation of Jupiter in the 1st, 4th, 7th or 10th house from the position of the moon at the time of the birth of a child, considered auspicious.

     [Skt.{}-{} → த.கேசரியோகம்.]

கேசரிரூபம்

 கேசரிரூபம்ācarirūpam, பெ.(n.)

   சூடன் (கற்பூரம்);; camphor.

கேசரிவித்தை

 கேசரிவித்தைācarivittai, பெ.(n.)

   வானில் பறத்தல்; the art of flying in the sky (சா.அக.);.

     [கே + சரி + வித்தை.]

கேசரிவேந்தன்

 கேசரிவேந்தன்ācarivēndaṉ, பெ.(n.)

   இதளியம்; mercury.

     [கேசரி + வேந்தன்.]

கேசரீகம்

 கேசரீகம்ācarīkam, பெ.(n.)

   நாயுருவி; a plant growing in hedges and thickets.

     [P]

கேசருகம்

 கேசருகம்ācarugam, பெ.(n.)

   புல்; grass(சா.அக.);.

     [கேசரம் → கேசருகம்.]

கேசருகாசம்

 கேசருகாசம்ācarukācam, பெ..(n.)

   சிறுநீலி; a small species of indigo plant, Indigofera tinctoria (சா.அக.);.

 கேசருகாசம்ācarukācam, பெ.(n.)

   சிறுநீலி; a small species of indigo plant.

கேசரை

 கேசரைācarai, பெ.(n.)

   பருத்திச் செடி; cotton plant (சா.அக.);.

     [கேசரம் → கேசரை.]

கேசரோமம்

 கேசரோமம்ācarōmam, பெ.(n.)

   பூனைக்காலி; velvet bean, Mucana pruriens (சா.அக.);.

     [கேசம்+ரோமம்.]

 கேசரோமம்ācarōmam, பெ.(n.)

   பூனைக்காலி; velvet been.

கேசவந்து

 கேசவந்துācavandu, பெ.(n.)

   வன்னிமரம்; vanni tree(சா.அக.);.

மறுவ. கேசதமணி.

     [கேசதந்து → கேசவந்து.]

கேசவன்

கேசவன்ācavaṉ, பெ.(n.)

   1. திருமால்; Visnu.

     ‘கேசவன்றமர்’ (திவ்.திருவாய்.2,7,1);.

   2. சோழன் (பிங்.);;{} king.

     [Skt.{} → த.கேசவன்.]

கேசவம்

கேசவம்ācavam, பெ.(n.)

   1. நறுமணம்; sweetscent.

   2. பொன்வண்டு; beetle (female);.

   3. ஒரு பூடு;நீலோற்பல விதை;seed of blue Indian-lily.

   4. நிறைமயிர்; fullness of hair.

   5.பேய்: devil.

மறுவ. கேசதமணி.

     [கேசம் → கேசவம்.]

கேசவரம்

கேசவரம்ācavaram, பெ.(n.)

   1.குங்குமம்; red paint

   2 குங்குமப்பூ; European saffron,

   3. நாயுருவி;. Indian burr.

   4. கொம்மட்டிமாதுளை; a kind of citron (சா.அக.);.

     [கேசரம் + வரம்.]

கேசவரிட்டம்

 கேசவரிட்டம்ācavariṭṭam, பெ.(n.)

   பூவா மரம்; a tree bearing no flowers (சா.அக.);.

 கேசவரிட்டம்ācavariṭṭam, பெ.(n.)

   பூவா மரம்; a tree bearing no flowers.

கேசவர்

 கேசவர்ācavar, பெ.(n.)

   வெள்ளைக் காக்கணங் கொடி; white mussel creeper(சா.அக.);.

     [கசவம் → கசவர் → கேசவர்.]

கேசவர்த்தனம்

 கேசவர்த்தனம்ācavarttaṉam, பெ.(n.)

   ஆனைக் குருந்தோட்டி; common balah.

கேசவற்குத்தோழன்

 கேசவற்குத்தோழன்ācavaṟkuttōḻṉ, பெ.(n.)

   கண்ணனுக்குத் தோழானான, அருச்சுனன் (சூடா.);; the friend of {}, Arjuna.

     [கேசவற்கு + தோழன்.]

     [கேசவன் + கு → கேசவற்கு.]

     [Skt.{} → த.கேசவன்.]

துள் → தொள் → தொழு → தோழம் → தோழன்

கேசவை

 கேசவைācavai, பெ.(n.)

   உண்ணத் தகுந்த வேரினைக் கொண்ட ஒருவகைச் செடி; a plant with an esculent root, Colocasia antiquorum.

க.கேக.கேசவெ.

 kēcuka, kēmuka, kacu, kacvi, a plant with an esculant root. Arun colocasia etc. D. késu etc. K. K.E.D.XXII.

கேசாகம்

 கேசாகம்ācākam, பெ.(n.)

மகிழம்பூ, ape.

 flower; West Indian medlar, Mimusps elengi (சா.அக.);.

 கேசாகம்ācākam, பெ.(n.)

   மகிழம் பூ; ape flower, West Indian medlar.

கேசாங்காதனம்

 கேசாங்காதனம்ācāṅgātaṉam, பெ.(n.)

   இருக்கை (ஆசன); வகை; a yogic posture.

கேசாதிபாதமாலை

கேசாதிபாதமாலைācātipātamālai, பெ.(n.)

   கலிவெண்பாவால் ஒருவரை, முடிமுதலாக, அடிவரை வண்ணித்துப் பாடும் ஒருவகைச் சிற்றிலக்கியம் (இலக்.வி.871);; a poem in kali-venbā describing a person from head to foot.

மறுவ. கேசாதிபாதம்.

     [கதி → கெதிகயம்(அடுப்பு); – கேயம் → கேசம் + ஆதி + பாதம் + மாலை. முடியடிமாலைபார்க்க;see mudi-y-adi-malai.]

கேசாதிபாதம்

கேசாதிபாதம்ācātipātam, பெ.(n.)

   1. உச்சி தொட்டு உள்ளங்கால் வரை; from head to foot as opposed to from foot to head.

   2. முழு உடம்பு; the entire body.

     [கேசம் + ஆதி + பாதம்.]

பதி → பாதம்.

கேசாதியக்கு

 கேசாதியக்குācātiyakku, பெ.(n.)

   தின் பீர்க்கு; edible luffa.

கேசாந்தம்

 கேசாந்தம்ācāndam, பெ.(n.)

   மயிர் களைந்து செய்யுமோர் சடங்கு; a ritual ceremony by shaving off the head.

     [கேசம் + அந்தம்.]

கேசாம்பு

 கேசாம்புācāmpu, பெ.(n.)

   வெட்டி வேர்; khus khus root, Andropogon aromatcus (சா.அக.);.

 கேசாம்புācāmbu, பெ.(n.)

   வெட்டி வேர்; khus khus root.

கேசாரங்கம்

 கேசாரங்கம்ācāraṅgam, பெ.(n.)

   செவ்வந்தி; Indian chamomile.

கேசாரசம்

 கேசாரசம்āsārasam, பெ.(n.)

   ஒருவகை நாரத்தை; bitter orange(சா.அக.);.

     [கேசாரம் + ரசம்.]

கேசாரம்

 கேசாரம்ācāram, பெ.(n.)

   சிவப்புச் (குங்குமச்); செவ்வந்தி; red champmile

கேசாரி

கேசாரிācāri, பெ.(n.)

   குதிரையின் பிடரிமயிர்; horse’s mane. ‘பலவாகிய கேசாரியையுடைய குதிரைகள்'(நெடுநல்.93,உரை);.

     [கேசம் + ஆரி.]

கேசாரிசம்

 கேசாரிசம்ācāricam, பெ.(n.)

   ஒரு வகை நாரத்தை; bitter orange, Citrus aurantium (சா.அக.);.

 கேசாரிசம்āsārisam, பெ.(n.)

   ஒரு வகை நாரத்தை; a kind of bitter orange.

கேசாவர்த்தம்

கேசாவர்த்தம்ācāvarttam, பெ.(n.)

   குதிரைக் காலிலுள்ள தீய கழிவகை (அசுவசா.149);; a whorl or ring of hair on the leg of a horse, considered inauspicious.

     [Skt.{}+{}-{} → த.கேசாவர்த்தம்.]

கேசி

கேசிāci, பெ.(n.)

   1. நீண்ட கூந்தலையுடையப் பெண்; a woman with fine, long and flowing hairs.

   2. அரிமா (சிங்கம்);; lion.

     [P]

கேசிகன்

 கேசிகன்ācigaṉ, பெ.(n.)

   உடம் முழுதும் மயிருடையவன்; a hairy man.

கேசிகர்

 கேசிகர்ācigar, பெ.(n.)

   சுமார்த்தப் பார்ப்பனர்களுள் ஒரு வகையார்;     [Skt.{} → த.கேசிகர்.]

கேசினி

 கேசினிāciṉi, பெ.(n.)

   சங்கங்குப்பி; smooth volkameria(சா.அக.);.

     [கேசி → கேசினி.]

கேசியா

 கேசியாāciyā, பெ.(n.)

   தாழை; fragrantscrew-pine (சா.அக.);.

     [கேதம் → கேசம் → கேசியா]

கேசிரி

 கேசிரிāciri, பெ.(n.)

புளியாரைக்கீரை:Indiansorrel (சா.அக.);.

     [கேசம் → கேசரி.]

கேசீ

 கேசீācī, பெ.(n.)

   அவுரிச்செடி; Indigoplant(சா.அக.);.

     [கேசம் → கேசீ.]

கேசு

 கேசுācu, பெ.(n.)

   வழக்கு (வியாச்சியம்);; suit, complaint.

     [E.case → த.கேசு.]

கேசுகம்

 கேசுகம்ācugam, பெ.(n.)

   ஒருவகைக் கிழங்கு; an edible root (சா.அக.);.

     [கேஞ்சலிகை → கேஞ்சுகம் → கேசகம்.]

கேஞ்சலிகை

கேஞ்சலிகைāñjaligai, பெ.(n.)

   1. ஒருவகைக் கிழங்கு; a kind of root(சா.அக.);.

   2.செடிவகை; a plant.

     [காஞ்சலி → காஞ்சலிகை → கேஞ்சலிகை)]

கேடககோளம்

 கேடககோளம்āṭagaāḷam, பெ.(n.)

   நிணநீர் ஊற்று; thyroid gland(சா.அக.);.

மறுவ கேடயகோளம்.

     [கேடகம் + கோளம்.]

கேடகசாரி

 கேடகசாரிāṭagacāri, பெ.(n.)

   கழுதை; ass (சா.அக.);.

     [கேடகம் + சாரி.]

கேடகசீரம்

 கேடகசீரம்āṭagacīram, பெ.(n.)

   சிறுசீரகம்; a small variety of cumin seed (சா.அக.);.

     [கேடகம் + சீரம்.]

கேடகமுருந்து

 கேடகமுருந்துāṭagamurundu, பெ.(n.)

   தொண்டைக் குரல்வளையின் முருந்து; thyroid cartilage (சா.அக.);.

     [கேடகம் + முருந்து.]

கேடகம்

கேடகம்1āṭagam, பெ.(n.)

   1. வட்டமான பரிசை; shield, buckler.

     “கேடகம் வெயில்வீச” (கம்பரா. கடிமண. 33);.

   2. மலைகள் அடுத்துள்ள ஊர் (திவா.);; village in the midst of hills.

   3.பாசறை(பிங்.);; encampment.

   4. கேடயம்2(பிங்.); பார்க்க;see kédayam.

   5. பலகை; plank.

     [கோடு → கோடகம் → கேடகம்.]

 கேடகம்2āṭagam, பெ.(n.)

   1. புறாமுட்டி; parakeet bur.

   2.தாழை; screw-pine(சா.அக.);.

     [கேதம் → கேடம் → கேடகம்.]

கேடன்

கேடன்āṭaṉ, பெ.(n.)

   1.கேடுடையவன்; ruined, miserable man.

     “வினைக்கேடனேன்” (திருவாச.30:3);. 2. அழிப்பவன், he who ruins.

     “வினைக்கேடா”

   ம. கேடன் (தீயவன்);;து.கேடிங்கெ.

     [கேடு → கேடன்.].

பெரும்பாலும் கூட்டுச்சொல்லில் பயன்படுத்தப்படும்.

கேடம்

கேடம்1āṭam, பெ.(n.)

   1.மலைகள் அடுத்துள்ள ஊர் (சூடா.);; village in the midst of hills (கூடா);.

   2. மலை செறிந்த வூர்; hilly village in the midst.

 Skt.kheta. |

     [கோடு : மலை, கோடகம் → கேடகம் → கேடம்.]

 கேடம்2āṭam, பெ.(n.)

   1.கிளி; parrot.

   2. ஆறு; river (அக.நி.);.

     [கிள் → கேடம்.]

கேடயக்கோளம்

 கேடயக்கோளம்āṭayakāḷam, பெ.(n.)

   மூச்சுக்குழலின் இருபக்கங்களிலுமுள்ள, உடல் வளர்ச்சியை உண்டுபண்ணும் தைராய்டுஎனும்சுரப்பி; thyroid.

     [கேடயம் + கோளம்.]

கேடயப்பட்டி

 கேடயப்பட்டிāṭayappaṭṭi, பெ.(n.)

   புதுக்கோட்டை மாவட்டத்துச் சிற்றூர்; a village in Pudukkõttai Dt.

     [கேடயம் + பட்டி.]

கேடயம்

கேடயம்āṭayam, பெ.(n.)

பெற்ற வெற்றி, புரிந்த அருவினை (சாதனை); முதலிய செய்தி

   பொறித்த தட்டு வடிவ ஒப்பனைப் பரிசு; a memento in the form of a shield awarded to a winner or one who has done something meritorious.

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குக் கேடயம் வழங்கப்பட்டது. –

     [கிருகு – கிடயம் – கேடயம்]

 கேடயம்āṭayam, பெ.(n.)

போரிடும்போது பிறர் அம்புபடாதவாறு தடுக்கும் வட்டமான தட்டு: shield, buckler used in person to person combat.

     [P]

கேடயம்

     [கோடு(வளைவு); → கோடகம் → கேடயம்.]

 கேடயம்2āṭayam, பெ.(n.)

   1. பெற்ற வெற்றி, புரிந்த சாதனை முதலிய செய்தி பொறித்த, தட்டு வடிவ அழகிய பரிசு; a memanto in the form of shield, awarded to a winner or one who has done something meritorious.

   2. திருவாசியோடு கூடியதாய்க் கோயில் தெய்வத் திருவுருவை எழுந்தருளப் பண்ணுதற்கு உதவும் தோளுக்கினியான் என்னும் சட்டகம்:light rectangular frame with a solid aureole, used for carrying idols.

 Skt. khetaka.

     [கிடுகு : இணைத்துக் கோத்து. கிடுகு → கேடகம் → கேடயம்.]

கேடரி

கேடரிāṭari, பெ.(n.)

   1. கந்தகம்; sulphur.

   2.பொன்னிமலை; gold coloured pyrites.

   3.நெல்லிக்காய்க் கந்தகம்; crystalline pieces of sulphurlikealum.

   4.செவ்வரளி; red-oleanderசா.அக.).

     [கெடு → கேடு → கேடரி.]

கேடா

 கேடாāṭā, பெ.அடை.(adj.)

   பிரிந்துள்ள (இ.வ.);; seperate, partitioned, divided.

     [U.{} → த.கேடா.]

கேடாய்-த்தல்

கேடாய்-த்தல்āṭāyttal,    4 செ.கு.வி.(v.i.)

   பங்கு பிரித்தல்; to separate, effect a partition, divide (செ.அக.);.

     [கின்-கிள் – கிடாய் – கேடாய்]

 கேடாய்-த்தல்āṭāyttal,    1 செ.குன்றாயி (v.t.)

   பங்கு பிரித்தல் (இ.வ.);; to seperate, effect a partition, divide.

     [கேடா + ஆய்-,]

     [U.{} → த.கேடா.]

கேடி

கேடிāṭi, பெ.(n.)

   1. பழைய திருடன்; known depredator, old offender.

   2. அழிப்பவள்; she who ruins, usually in compounds as.

குடிகேடி, சீர்கேடி.

ஆங்கிலத்தில்knowndelinquentஎன்பதன்சுருக்கம் KD: தமிழ்க் கேடி ஆங்கிலக் KD-யின் ஒலிபெயர்ப்பு அன்று.

     [கேடு → கேடி.]

கேடிக்கை

 கேடிக்கைāṭikkai, பெ.(n.)

   கேளிக்கை; entertainment.

     [கேளிக்கை → கேடிக்கை.]

கேடிலி

கேடிலிāṭili, பெ.(n.)

   அழிவில்லாதவன்-ள்; the imperishable one.

     “கேடிலியை நாடுமவர் கேடிலாரே” (தேவா. 682:1);.

     [கேடு + இலி.]

கேடிலியப்பபிள்ளை

 கேடிலியப்பபிள்ளைāṭiliyappapiḷḷai, பெ.(n.)

   தாயுமானவரின் தந்தை; father of tāyumānavar (அபி.சிந்.);.

     [கேடு+ இலி+ அப்பன்+பிள்ளை.]

கேடிலுவகை

 கேடிலுவகைāṭiluvagai, பெ.(n.)

   துறக்கம்; liberation, salvation, heaven.

     [கேடில் + உவகை.]

கேடில்லாவுவகை

 கேடில்லாவுவகைāṭillāvuvagai, பெ.(n.)

   பேருவகை; imperishable joy (சா.அக.);.

     [கேடு + இல்லா + உவகை.]

கேடு

கேடு1āṭu,    1. அழிவு; ruin, destruction, annihilation.

     “கேடில் விழுச்செல்வம் “குறள், 400).

   2. இழப்பு; loss, waste, damage.

     “ஊர்தி குடையதய மூன்றிற் கடுங்கோட்கள் – சேரவவுற்றிற்குச் சென்றேழி – னேராகக் காணுமேற் கேடு” (சினேந். நட்ட.15);.

   3.வறுமை; adversity, indigence, destitution. “கேட்டினுமுண்டோ ருறுதி”(குறள்.796);.

   4.குற்றம்; defect.

   5. தொல்லை; trouble, problem.

   6. இறப்பு; death. “பிணிபிறவி கேடென்று”(தேவா.935);.

   7. தீமை; evil. injury. “கிள்ளைபோன் மொழியார்க் கெல்லாங்கேடுகுழ்கின்றே னன்றே” (கம்பரா.மாரீச. 77);.

   8. கெடுதல் திரிபு (விகாரம்);; elision, omission, “வந்தனகரந்திரிந்துழிநண்ணுங் கேடே “(நன்.210);.

   9. அழகின்மை; ugliness, deformity.

   ம., க., து., பட.கேடு;   தெ.சேடு;   குட.கெடி;   கோத. கெட்;துட.கொட்.

     [கெடு → கேடு.]

 கேடு2āṭu, பெ.(n.)

   களங்கம்; blemish, damage to fame, honour.

நிறுவனத்தின் நற்பெயருக்குக் கேடு விளைவிக்கலாமா? கெடுவான் கேடு நினைப்பான்’ (பழ.);.

     [கெடு → கேடு.]

கேடுகாலம்

 கேடுகாலம்āṭukālam, பெ.(n.)

   அழிவுறுங்காலம்; bad times.

   ம.கெடுகாலம்;   க., பட., கோடுகால;து. கேட்கால, கேட்காலொ.

     [கேடு + காலம்.]

கேடுகெட்டவன்

 கேடுகெட்டவன்āṭugeṭṭavaṉ, பெ.(n.)

   நிலைமை யழிந்தவன்; ruined, despicable person.

அந்தக் கேடு கெட்டவனை நம்பி, இந்தச் செயலில் இறங்கமுடியுமா? (உ.வ.);.

     [கேடு + கெட்டவன்.]

கேடுகெட்டவள்

 கேடுகெட்டவள்āṭugeṭṭavaḷ, பெ.(n.)

   கீழ்த்தரமானவள்; wretched women.

இந்தக் கேடு கெட்டவளுக்கு, நீங்கள் உதவலாமா? (உ.வ.);.

     [கேடு + கெட்டவள்.]

கேடுநினை-த்தல்

கேடுநினை-த்தல்āṭuniṉaittal,    4 செ.குன்றாவி. (v.t.)

பிறருக்குத் தீமை ஏற்பட எண்ணுதல்:to think ill of others, to have the intention of harming others.

து. கேடு பகெபுனி. [கேடு + நினை.]

கேடுபாடாக

 கேடுபாடாகāṭupāṭāka, வி.எ.(adv.)

   உயிர் பிழைக்கும் உறுதிப்பாடு இன்மை; a patent’s serious condition.

மறுவ. கடு நலிவு.

     [கேடு+பாடு+ஆக]

கேடுபாடு

கேடுபாடுāṭupāṭu, பெ.(n.)

   1. அழிவு; destruction, ruin.

   2. வறுமைநிலை; adverse circumstances.

     [கேடு + பாடு.]

கேடையம்

 கேடையம்āṭaiyam, பெ.(n.)

கேடயம் பார்க்க;see kēdayam.

     [கேடயம் → கேடையம்.]

கேட்காவொலி

கேட்காவொலிāṭkāvoli, பெ.(n.)

கேளாவொலி பார்க்க;see kēlā-v-oli.

     [கேட்கா(த); + ஒலி.]

கேட்கு-தல் kelku-, 5 செ.குன்றாவி.(v.t.);

   1. ஆராய்தல்; to scrutinise.

   2.கேட்டல்; to listen.

   3. தரச் சொல்லுதல்; order to give.

   4.வினாவல்; to question;

 enquire.

     [கேள் + கு → கேட்கு.]

கேட்குநர்

கேட்குநர்āṭkunar, பெ.(n.)

   கேட்பவர்; hearer, audience

     “சொல்லுந போலவும் கேட்குந போலவும்” (தொல்.பொருள்.513);.

     [கேள் + கு + நர்.]

கேட்கும்விடை

 கேட்கும்விடைāḍkumviḍai, பெ.(n.)

   வினாவும் விடை; a reply in question form.

என்னா லாகுமோ?

     [கேள் + உம் + விடை : கேட்கும் விடை.]

கேட்கை

 கேட்கைāṭkai, பெ.(n.)

   கேள்வி; hearing.

     [கேள் + கை – கேட்கை.]

கேட்டல்

கேட்டல்āṭṭal,    3 தொ.பெ.(vbl.n.)

   1. இரத்தல்; to beg: entreat.

   2.செவிகொடுத்தல்: to hear. இவன் எதையும் செவி கொடுத்துக் கேட்கமாட்டான்.

   3. வினாவல்; to question.

   4.வேண்டுதல்; to request.

   5.செய்தல்; todo.

     [கேள் → கேட்டல்.]

கேட்டவாய்க்கேட்டல்

 கேட்டவாய்க்கேட்டல்āṭṭavāykāṭṭal, தொ.பெ.(vbl.n.)

   பலர் சொல்லுவதைக் கேட்டல்; to hear through many.

     [கேள் → கேட்ட + வாய் + கேட்டல்.]

கேட்டவிவு

கேட்டவிவுāṭṭavivu, பெ.(n.)

   செயல்கள் (கருமங்கள்); சில கெட்டும் சில கெடாமலும் நிற்கும் நிலை; condition in which fruits of certain karmas are destroyed and of some others are made innocuous. “கேட்டிற் கேட்ட விவுதன்கண்”(மேருமந்.790);.

     [கேடு → கேட்டு + அவிவு.]

கேட்டி

கேட்டி1āṭṭi, பெ.(n.)

   ஓர்எவல்வினை; imperative verb.

     “மாது கேட்டியிம் மடவரல் விதர்ப்பர்கோன் புதல்வி” (நைடத.வீம.6.);.

     [கேள் → கேட்டி.]

 கேட்டி2āṭṭi, பெ.(n.)

   தாற்றுக்கோல்; staff or rod for driving oxen, ox-goad.

     [P]

கேட்டி

மறுவ,கேட்டித்தடி,மிலாறு, தாற்றுக்குச்சி.

     [கிட்டி → கேட்டி..]

கேட்டிகும்

கேட்டிகும்āṭṭigum, வி.எ.(adv.)

   கேட்டேம்; thatwhich is heard themselves.

     “மலர்பறி யாவெனக் கேட்டிகும்”(பதிற்றுப்.52);.

     [கேள் (கேட்டு); + இகும் – கேட்டிகும்]

கேட்டிக்கம்பு

 கேட்டிக்கம்புāṭṭikkambu, பெ.(n.)

கேட்டிபார்க்க: see këtti.

     [கேட்டி + கம்பு.]

கேட்டிசின்

கேட்டிசின்āṭṭisiṉ, இடை (part)

   1.கேட்டேன்; asked “பிறர்பிறர் கூறவழிக் கேட்டிசினே” (புறநா.150);.

   2. கேட்பாயாக; ask for.

     “அடுபோ ரண்ணல் கேட்டிசின் வாழி” (மதுரைக்.208); (த.மொ.அக.);.

     [கேள் → கேட்டல் → கேட்டிசின்.]

கேட்டித்தடி

 கேட்டித்தடிāṭṭittaṭi, பெ.(n.)

   தாற்றுக் கோல்; staff or rod for driving oxen, oxgoad (செ.அக.);.

     [கிட்டி+தடி.]

கேட்டீரே

கேட்டீரேāṭṭīrē, வியப்.இடை (int.)

   அசைநிலைச் சொல்(தொல்.சொல்.425,உரை);; expression meaning hark, inviting attention.

     [கேள் → கேட்டீர் → கேட்டீரே.]

கேட்டுக்கொள்(ளு)-தல்

கேட்டுக்கொள்(ளு)-தல்āṭṭukkoḷḷudal,    10 செ.குன்றாவி.(v.t.)

   1. செவிக்குப் புலனாக்குதல்; to hear, listento.

   2.வேண்டிக்கொள்ளுதல்; to beg, be seech, request earnestly.

அமைதி காக்கக் கூட்டத்தினரைக் கேட்டுக்கொண்டார்.

     [கேள் → கேட்டு + கொள்-.]

கேட்டுப்போ-தல்

கேட்டுப்போ-தல்āṭṭuppōtal,    8 செ.கு.வி. (v.i.)

   செயல்கள் (காரியங்கள்); கெடுதல்; to fail, as a business.

   2. முறிதல்; to break. வண்டியச்சுக் கேட்டுப் போயிற்று.

   3.சாதல்; to be dead.

     [கெடு → கேடு + போ-.]

கேட்டுமுட்டு

 கேட்டுமுட்டுāṭṭumuṭṭu, பெ.(n.)

   புறச்சமயத் தோரைப்பற்றிக் கேள்விப்பட்டதனால் அமணர்மேற் கொள்ளுந்தீட்டு; defilement assumed by Samanas on hearing aboutheretics.

     “கொட்டுமுட்டியானுமென்றியம்பி”

     [கேட்டு + முட்டு.]

கேட்டை

கேட்டை1āṭṭai, பெ.(n.)

   1.பதினெட்டாவதுவிண்மீன்; the 18th star, part of scorpio.

   2. மூதேவி; goddess of misfortune.

   3. ஒரு நாள்; a day.

     “அவிட்டம் விளக்குப் பதங்கேட்டை” (விதான. குணாகுண.ப.);.

ம. கேட்ட.

 Skt.jyesta.

     [ஏ → ஏண் → ஏட்டை → கேட்டை.]

 கேட்டை2āṭṭai, வியப்.இடை. (int.)

   ஒர் அசைநிலை (தொல்.சொல்.426);; expression meaning hark, inviting attention.

     [கேள் → கேட்டை.]

கேட்டொறும்

கேட்டொறும்āṭṭoṟum, கு.வி.எ. (adv.)

   கேட்கும் பொழுதெல்லாம்; whenever one hears.

     “தண்கடற்படுதிரை கேட்டொறும்” (ஐங்குறு. 107);.

     [கேள் + தொறும்.]

கேட்பவர்

கேட்பவர்āṭpavar,    1. வினாவுவோன். விடைகோருபவன், வேண்டுபவன்; he who asks, he who enquires.

   2. பொறுப்புள்ளவன்; a responsible person, a master.

   க.கேளுவவனு;   து.கேணுநாயெ;பட.கேப்பம.

     [கேள் + ப் + அவர்.]

கேட்பாரற்று

 கேட்பாரற்றுāṭpāraṟṟu, வி.அ.(adv.)

   கவனிப்பதற்கோ கண்காணிப்பதற்கோ உரிமை கொண்டாடுவதற்கோ யாரும் இல்லாத நிலை; without anyone to care for or claim or oversee.

கேட்பாரற்று ஊர் சுற்றித்திரிகிறாயே.

     [(கேட்பார்+அற்று.]

கேட்பாரில்லாமல்

 கேட்பாரில்லாமல்āṭpārillāmal, வி.அ. (adv.)

   கேட்பாரற்று பார்க்க; see ketparu தெருவில் கேட்பார் இல்லாமல் ஒரு பை கிடந்தது. –

     [கேட்பார்+இல்லாமல்.]

கேட்பார் பேச்சு

 கேட்பார் பேச்சுāṭpārpēccu, பெ.(n.)

   தீய எண்ணத்துடன் சொல்பவரின் பேச்சைக் கேட்கும் தன்மை; listening to enemy’s speech.

     [கேள்-கேட்பார்+பேச்சு]

கேட்பி-த்தல்

கேட்பி-த்தல்āṭpittal,    4செ.குன்றாவி.(v.t.)

   திருப்பதிக முதலியன விண்ணப்பஞ் செய்தல்; to recite, as before a person.

     “நாவு லூரர்தம் முன்பு நன்மை விளங்கக் கேட்பித்தார்”(பெரியபு கழறிற்.69);.

     [கேள் + கேட்பி.]

கேட்பு

கேட்புāṭpu, பெ.(n.)

   1. காதால் கேட்டல்; hearing.

   2. வினா எழுப்புதல்; to ask a question.

   3.ஏலம் கேட்டல்; biding in an auction.

ம.கேள்ப்பு.

     [கேள் → கேட்பு.]

கேட்புக்காசோலை

 கேட்புக்காசோலைāṭpukkācōlai, பெ.(n.)

   பிறர் உடனடியாகப் பணம் மாற்றிக்கொள்ளத் தகுந்த வகையில் ஒருவர் வங்கியில் பணத்தைச் செலுத்திப் பெற்ற படிவம்; demand draft issued in banks encashable on presentation.

   மறுவ வரைவோலை;கேட்போலை.

     [கேட்பு காசோலை.]

கேட்புத்தொகை

 கேட்புத்தொகைāṭputtogai, பெ.(n.)

   ஏலமிடுபவ ரால் குறிக்கப்படும் குறைந்த ஏலத்தொகை; lowest acceptable selling price fixed by the auctioner.

     [கேட்பு + தொகை.]

கேட்போர்

கேட்போர்āṭpōr, பெ.(n.)

   1. அவைக்களத்துத் தலைமை ஏற்று அரங்கேறும் நூலைக் கேட்பவர்; the presiding member of a learned assembly listening to a new literary work that came up for approval. “யார்கேட்டாரெனின்… உருத்திரசருமன் என்பது” (இறை. 1. 4);. 2. நூல் கேட்டற்குத் தகுதியுடைய மாணக்கர் (நன். 47);;

 students properly qualified to study a certain book. 3. இன்னார் கூற இன்னார் அதனைக் கேட்டா ரென்னும் அகப்பாட்டுறுப்பு(இறை. 56, உரை);;

 listeners, as distinct from speakers. 4. கேட்பதற்குரியவர்;

 those who ask or are entitled to ask. guardian.

ம. கேள்ப்போர்.

     [கேள் → கேட்போர்.]

கேணம்

 கேணம்āṇam, பெ.(n.)

   செழிப்பு(யாழ்.அக.);; flourishing. state of fertility.

     [கள் → கணம் → கேணம்.]

கேணி

கேணி1āṇi, பெ.(n.)

   1.சிறுகுளம்; smaltank(தொல். சொல்.400,உரை);.

   2. கிணறு (திவா.);:well.

   3.அகழி (திவா.);; ditch, trench.

   க., ம.கேணி;து.கணி.

 Skt. khan.

     [குள் → குணி → கேணி.]

 கேணி2āṇi, பெ.(n.)

   தொட்டில்; cradle.

     [குள் → குணி → கேணி.]

கேணிகா

 கேணிகாāṇikā, பெ.(n.)

   முல்லை; a kind of jasmine (சா.அக.);.

     [குணிகம் → கேணிகா.]

கேணிப்பட்டு

 கேணிப்பட்டுāṇippaṭṭu, பெ.(n.)

   விழுப்புரம் மாவட்டத்துச் சிற்றூர்; a village in Villuppuram Dt.

     [கேணி + பட்டு.]

கேண்டு

 கேண்டுāṇṭu, பெ.(n.)

கேண்டுகம் பார்க்க;see kēngugam.

     [கெண்டு → கெண்டு → கேண்டு.]

கேண்டுகம்

 கேண்டுகம்āṇṭugam, பெ.(n.)

   பந்து; anything rolled as ball. [செண்டு → கெண்டு → கேண்டு கேண்டுகம்.]

கேண்மை

கேண்மை1āṇmai, பெ.(n.)

   1. நட்பு; friendship, intimacy.

     “வெறுமின் வினைதீயார் கேண்மை (நாலடி. 172);.

   2. கண்ணோட்டம் (தி.வா.);; kindness, favour, benevolence.

   3. உறவு; relationship.

     “பழங்கேண்மை கண்டறியா தேன்போல்”(கலித். 39:39);.

   4. வழக்கு; practice, usage.

     “கிளைஞரினெய்தாக் கேண்மையு முடைத்தே” (நம்பியகப். 56);

     [குள் → கெள் → கேள் → கேண்மை.]

 கேண்மை2āṇmai, பெ.(n.)

   1. கேள்வி; hearing.

   2. கேள்வியறிவு; knowledge by hearing.

து. கேண்மெ.

     [கேள் → கேண்மை.]

கேதகம்

 கேதகம்ātagam, பெ.(n.)

   தாழை; fragrant screw-pine(சா.அக.);.

மறுவ.கேதகை.

 Pali. këtaki;

 Pkt.kēaya;

 Pan.keurā;

 Ori, keură;

 H. keura.kewra, Guj.kevra.Mar.kevda.

     [கேதம் – கேதகம்.]

கேதகி

கேதகிātagi, பெ.(n.)

   1.ஆற்றுமருந்து; healing balm.

   2. தாழை; fragrant screw-pine (சா.அக.);.

   3. தலையணிகலன்; ornament worn on the head.

மறுவ. கேதகை,கேதகம், கேத்தை.

     [கேதகம் → கேதகி.]

கேதகிப்பூ

கேதகிப்பூātagippū, பெ.(n.)

   1.தாழம்பூ; flower of fragrant screw-pine. [கேதகி + பூ.]

கேதகை

கேதகைātagai, பெ.(n.)

   1. கதிர்நுனிப் பூந்துகள் (மகரந்தம்);; pollen of the flower.

   2. கதிர் நுனிப் பூந்துகள் இழை (மகரந்தகேசரம்);; stem of a flower where pollen is stored.

     [கதி → கெதி → கேதகை.]

கேதனம்

கேதனம்ātaṉam, பெ.(n.)

   கொடி; flag, banner.

     ‘பொருங் கேதனப் படை மன்னரை’ (அட்டப்.திருவரங்.மா.73);.

     [Skt.{} → .கேதனம்.]

கேதன்

 கேதன்ātaṉ, பெ.(n.)

   காமன் (அக.நி.);; Kama, the god of love.

     [கெமு → கெமுந்தன் → கேதன்.]

கேதம்

கேதம்ātam, பெ.(n.)

   1. இளைப்பு; exhausion.

     “கேதம் பையத் தணித்தான்” (பாரத.சம்.48);.

   2. துன்பம்; affiction

     “கேதங் கெடுத்தென்னை யாண்டருளும்” (திருவாச.43);.

   3. குற்றம்; blemish (சா.அக.);.

     [கதம் → கேதம்.]

கேதம்கேட்கு-தல்

கேதம்கேட்கு-தல்ādamāṭkudal,    5.செ.குன்றாவி.(v.t.)

   இழவுத்துயரத்தைக்கேட்டாற்றுவித்தல்; to condole a death.

     [கேவுதல் : விக்கி அழுதல். கேதம் + கேள்.]

கேதம்விசாரி-த்தல்

 கேதம்விசாரி-த்தல்ātamvicārittal, செ.கு.வி.(v.i.)

   நடந்த துயரத்தைக் குறித்து வினவுகை; to condole with mourners (செ.அக.);.

மறுவ துக்கம் விசாரித்தல்

     [ரதம்→ கேதம் + Skt. விசாரி-த்தல்.]

கேதரம்

கேதரம்ātaram, பெ.(n.)

   1.மயில்; pea-cock.

   2.மலை; mountain.

   3.பனி(இமய);மலையின் ஒருபாகம்; a part of the Himalayas.

   4.தண்ணீர் விட்டான் கிழங்கு; water root(சா.அக.);.

     [கதி → கெதி → கேதம் → கேதரம்.]

கேதல்

கேதல்1ātal, பெ.(n.)

அழைக்கை (பிங்.); calling.inviting.

     [கேது + கேதல்.]

 கேதல்2ātal, பெ.(n.)

   ஒரு வகை மீன்; a kind of fish.

     [கேது → கேதல்: கேது : சிவப்பு.]

கேதவைக்கொடி

 கேதவைக்கொடிātavaikkoḍi, பெ.(n.)

கும்மட்டி: a kind of melon, water melon plant.

     [கேதவை + கொடி.]

கேதாண்டபட்டி

 கேதாண்டபட்டிātāṇṭabaṭṭi, பெ.(n.)

   வேலூர் மாவட்டத்துச் சிற்றூர்; a village in Velur Dt.

கேத்தன் + அண்டன் – கேத்தண்டன் → கேதாண்டன் + பட்டி.]

கேதாரகௌரிநோம்பு

 கேதாரகௌரிநோம்புātāragaurinōmbu, பெ.(n.)

   துலை (ஐப்பசி); மாத தேய்பிறை நான்காம் நாள் (கிருஷ்ண சதுர்த்தசியில்); கேதார திருப்பதியிலுள்ள கௌரியின் பொருட்டுப் பெண்பாலார் கடைப்பிடிக்கும் நோம்பு; religious vow observed by women on the day before the new moon in the month of Aippasi, in honour o {} who dwells in {}.

     [Skt.{}+gauri → த.கேதாரகௌரி+நோம்பு.]

கேதாரகௌளம்

கேதாரகௌளம்ātāragauḷam, பெ.(n.)

   ஒரு வகைப் பண் (பரத.இராக.55);; a musical mode.

கேதாரசிருங்கி

 கேதாரசிருங்கிātārasiruṅgi, பெ.(n.)

   ஒரு வகைத் தாதுச் சரக்கு; a kind of mineral substance.

கேதாரநாட்டை

 கேதாரநாட்டைātāranāṭṭai, பெ.(n.)

   பண்வகை (யாழ்.அக.);; a tune.

     [செய் : விளைநிலம். பண்படுத்தப்பட்ட நிலம். செய் → கெய் + தரம் – கெய்தரம் – கேதாரம் (பண்படுத்தப்பட்ட நிலை, செவ்விய பண் வகை. கேதாரம் + நாட்டை.]

கேதாரம்

 கேதாரம்ātāram, பெ.(n.)

   உழுதநிலம், விளைநிலம்; field.

 Skt.këdåra. këdåra, afield. This is related to D. key. It might even be distined as keyda (or kéda, worked, tilled, fr. D. key, Tbh, ara (or ala);, and mean “tilled ground” K.K.E.D.XXVI.

 Pali. kēdāra (irrigated field);;

 Pkt.kēāra;

 La. kiårå (largeplotinafield);, Pan. keārākiărâ(bedinafieldorgarden);. kuma. kero, kyări(bed of creeping plants etc., ground neara house);.

கேதாரயோகம்

 கேதாரயோகம்ātārayōkam, பெ.(n.)

   ஏழு கோள்கள் இடையீடின்றி நான்கு ஓரைகளில் நிற்கவரும் நல்லூழ் (சங்.அக.);; presence of seven planets in four consecutive houses, indicating good fortune.

     [Skt.{}+{} → த.கேதாரயோகம்.]

கேதாரவிரதம்

 கேதாரவிரதம்ādāraviradam, பெ.(n.)

கேதாரிநோம்பு பார்க்க;see {}-{} → த.கேதாரவிரதம்.]

கேதாரி

கேதாரிātāri, பெ.(n.)

   1. குதிரைப்பிடர் (கலித்.96, உரை);; upper side of a horse’s body.

கேதாரிநோன்பு

கேதாரிநோன்புātārinōṉpu, பெ.(n.)

   கேதாரகௌரி நோம்பு; a religious observance by women (T.C.M.II, 548);.

கேதாளி

 கேதாளிātāḷi, பெ.(n.)

   குறிஞ்சி யாழ்த்திறத்துள் ஒன்று (பிங்.);; a melody-type of the kurinji class.

     [கெக்கலி → கேகலி → கேசம் + தாளி – கேகதாளி → கேதாளி.]

கேதிசம்

 கேதிசம்ātisam, பெ.(n.)

   ஒரு வகை மருந்து; a drug capable of converting black lead into copper.

கேது

கேது1ādudal,    5 செ.குன்றாவி, (v.t.)

   கதறி யழைத்தல் (பிங்.);; to cry aloud from pain or grief.

     “கெடுவதிம் மனிதர் வாழ்க்கை காண்டொறுங் கேது கின்றேன்”(தேவா. 702:1);.

     [கேவு → கேது.]

 கேது2ātu, பெ.(n.)

   ஒன்பதுகோள்களுள் ஒன்று; the descending node caudraconis, one of the nine kiragam.

     [செவ் → செய் → சேய் → சே → சேது : சிவப்பு. சேதா : சிவலைப்பசு. சேதாம்பல் : செவ்வாம்பல். சேது → கேது:செம்பாம்பு வடிவினதாகச்சொல்லப்படும்ஒன்பதாங்கோள். கேது → Skt.kety. வட.வர.130.131.]

 கேதுātu, பெ.(n.)

   விளைநிலம் (இ.வ.);; field tract of land especially fit for cultivation.

     [U.{} → த.கேது.]

கேதுக்கல்

 கேதுக்கல்ātukkal, பெ.(n.)

   வயலின் எல்லைக் கல் (இ.வ.);; demarcation stone.

     [கேது + கல்.]

     [U.{} → த.கேது.]

கேதுச்சிலாங்கனம்

 கேதுச்சிலாங்கனம்ātuccilāṅgaṉam, பெ.(n.)

   ஒன்பான் மணிகளுள் ஒன்று (புட்பராகம்);; topaz (சா.அக.);.

மறுவ. கேது.சிலாங்கனம்,கேதுஞானம்.

     [கது → கிது → கேது + சிலாங்கன்.]

கேதுபுட்பம்

 கேதுபுட்பம்ātupuṭpam, பெ.(n.)

   சாவை உண்டாக்கும் ஒரு நச்சுக் கிழங்கு; a poisonous root causing death (சா.அக.);.

 கேதுபுட்பம்ātubuṭbam, பெ.(n.)

   இறப்பை (மரணத்தை); விளைவிக்கக் கூடிய ஒரு வகை. நச்சுக் கிழங்கு; a poisonous root causing death.

கேதுப்பிரியம்

 கேதுப்பிரியம்ātuppiriyam, பெ.(n.)

   விடரகன் (வைடூரியம்);; cat’s eye.

கேதுமாலம்

கேதுமாலம்ātumālam, பெ.(n.)

   ஒன்பான் (நவ); கண்டங்களுள் ஒன்று; western portion of {}-dvipa, between the Gandhamadana range and the sea, one of nava kandam.

     “குட கடற்குக் கீழ்க் கேதுமாலமெனக் குறித்திடுக்” (சிவதரு. கோபுர.53);.

     [Skt.{} → த.கேதுமாலம்.]

கேதுமால்

கேதுமால்ātumāl, பெ.(n.)

கேதுமாலம் பார்க்க;see {}.

     “கேதுமாலோ டிம்பர் புகழ் பத்திரம்” (கந்தபு.அண்டகோ.37);.

     [Skt.{} → த.கேதுமால்.]

கேதுமால்வருடம்

கேதுமால்வருடம்ātumālvaruḍam, பெ.(n.)

கேதுமாலம் பார்க்க;see {}.

     “கந்தமாதனமேற் புணரி நாப்பண் கேதுமால் வருடம்” (கந்தபு.அண்டகோ.36);.

     [Skt.{}+{} → த.கேதுமால் வருடம்.]

கேதுரத்தினம்

 கேதுரத்தினம்āturattiṉam, பெ.(n.)

கேதுப்பிரியம் பார்க்க;see {}.

கேதுரு

கேதுருāturu, பெ.(n.)

   1. ஒரு நறுமண மரம் a fragrant tree known as cedar of Lebanon.

   2. கேக்கு விதை (சீமைச்சோம்பு);; caraway seed (சா.அக.);.

     [கதி → கெதி → கேது → கேதுரு.]

கேதுவசம்

கேதுவசம்ātuvacam, பெ.(n.)

   இழுப்பு நோய்களைக் கட்டுப்படுத்தி, உடற்சூட்டைத் தணிக்கும் ஒரு வகைக் கொடி; a creeper found everywhere which is useful for urinary diseases and rheumatism, It is used as a Laxative and audorific.

     [கேது+ வசம்]

இதில் மூன்று வகை உண்டு. அவை:

   1. சிறுகட்டுக் கொடி

   2. பெருங்கட்டுக் கொடி

   3. கருங்கட்டுக்கொடி

     (Cocculus Villosus);.

 கேதுவசம்ātuvasam, பெ.(n.)

   கட்டுக்கொடி; coagulating creeper.

கேத்தனூர்

 கேத்தனூர்āttaṉūr, பெ.(n.)

   கோவைமாவட்டத்துச் சிற்றூர்; a village in Kövai Dt.

     [கேத்தன் + ஊர்.]

கேத்தி

 கேத்திātti, பெ.(n.)

   நீலகிரி மாவட்டத்துச் சிற்றுார்; a village in Nilagiri Dt.

     [கேத்தன் + ஊர்-கேத்தனூர் → கேத்தி(கொ.வ.);.]

கேத்திரகணிதம்

 கேத்திரகணிதம்āddiragaṇidam, பெ.(n.)

   வரிகை (இரேகா); கணிதம்; geometry.

     [கேத்திர(ம்); + கணிதம்.]

     [Skt.{} → த.கேத்திர(ம்);.]

கணி → கணிதம்.

கேத்திரக்கியன்

கேத்திரக்கியன்āttirakkiyaṉ, பெ.(n.)

   ஆதன் (ஆன்மா);, உடம்பிலுள்ள அறிவுப் பொருள்; the concious principle in the body.

     ‘கேத்திரக்கியனைத் தொடர்ந்து’ (வாயுசங்.பங்சப்பி.2);.

     [Skt.{}-{} → த.கேத்திரக்கியன்.]

கேத்திரபாலன்

கேத்திரபாலன்āttirapālaṉ, பெ.(n.)

   1. தெய்வம் இருக்கும் இடத்தைக் காக்குஞ்சிறு தெய்வங்கள்; guardian deity of sacred places.

   2. வைரவன் (பிங்.);; Bhairava.

     [Skt.{} → த.கேத்திரம் + பாலன்.]

கேத்திரம்

கேத்திரம்āttiram, பெ.(n.)

   1. நற்பேறு பெற்ற இடம்; sacred place, shrine, any place of pilgrimage.

     “ஞானமிக்களிக்குங் கேத்திரத்தின்” (திருவானைக். மூர்த்.4);.

   2. விளைநிலம்; land, field (செ.அக.);.

     [கேந்திரம்-கேத்திரம்]

 கேத்திரம்āttiram, பெ.(n.)

   1. திருப்பதி, திருவிடம் (புண்ணிய ஸ்தலம்);; sacred place, shrine, any place of pilgrimage.

     ‘ஞானமிக்களிக்குங் கேத்திரத்தின்’ (திருவானைக். மூர்த்.4);.

   2. விளைநிலம்; cultivated land.

     [Skl.{} → த.கேத்திரம்.]

கேத்திரி

கேத்திரிāttiri, பெ.(n.)

   திருமால்; Visnu.

     ‘திப்பியநான்முகன் கேத்திரி புராந்தகன்” (வேதா.சூ.71);.

     [Skt.{} → த.கேத்திரி.]

கேத்திரிகன்

கேத்திரிகன்āttirigaṉ, பெ.(n.)

   ஆதன் (ஆன்மா); (ஞானா.கட்30);; soul.

கேத்து

 கேத்துāttu, பெ.(n.)

   வயல்; field (செ.அக.);.

     [செய் (வயல்); செய்தது – கேத்து]

 கேத்துāttu, பெ.(n.)

   வயல் (இ.வ.);; field.

     [Skt.{} → U.khet → த.கேத்து.]

கேத்துவாரி

கேத்துவாரிāttuvāri, பெ.(n.)

   புன்செய் விளைவில் குடியானவனும், அரசும் அவரவர்க்குரிய பகுதியைப் பிரித்துக் கொள்ளும் முன் கோயில்களுக்குக் கொடுக்கும் பாகம்; portion taken as temple-revenue from the gross produce of drylands, before a division of the yield is effected between the ryot and Government (செ.அக.);.

     [கேத்து+வாரி]

 கேத்துவாரிāttuvāri, பெ.(n.)

   புன்செய் விளைவில் குடியானவனும் அரசும் பாகஞ்செய்து கொள்ளுமுன் கோயில்களுக்குக் கொடுக்கும் பங்கு (G.Tn.D.i.313);; portion taken as temple-revenue from the gross produce of dry lands, before a division of the yield is effected between the ryot and government.

     [U.{} → த.கேத்துவாரி.]

கேத்தை

 கேத்தைāttai, பெ.(n.)

   தாழை; fragrant screw-pine (சா.அக.);. [கேதாம் → கேத்தை.]

கேநாயம்

கேநாயம்ānāyam, பெ.(n.)

   கோயில் பணிகளுள் ஒன்று; a service of the temple.

     ‘ஶ்ரீமாகேவரக் கண்காணி செய்வோர்களுக்கும் கேநாயம் செய்வானுக்கும்” (தென்.க.தொ.2.345-1);

     [கேயநயம்→கேநாயம்]

கேநாரவென்பு

 கேநாரவென்புānāraveṉpu, பெ.(n.)

   கன்னப் பொறியெலும்பு; temporal bone.

     [கேநார + என்பு.]

     [Skt.{} → த.கேநார.]

எல் → என் → என்பு.

கேந்தகம்

 கேந்தகம்āntakam, பெ.(n.)

   ஒரு வகைப் பூடு (மலை);; coromandel gendarussa (செ.அக.);.

 கேந்தகம்āndagam, பெ.(n.)

   ஒருவகைப்பூடு (மலை);; a very small plant.

கேந்தி

கேந்திāndi, பெ.(n.)

   1.அடங்காக் காமம்; inordinate sexual desire.

   2. சினம்; anger, wrath.

     [காந்து + கேந்து → கேந்தி.]

கேந்திகம்

 கேந்திகம்āndigam, பெ.(n.)

புன்கமரம்: pungutree (சா.அக.);.

மறுவ, புங்குதம்.

     [கேந்து → கேந்திகம்]

கேந்திகா

 கேந்திகாāndikā, பெ.(n.)

புளிச் சிறுகீரை: sour greens (சா.அக.);.

     [கேந்தி → கேந்திகா.]

கேந்திக்கியக்கினி

 கேந்திக்கியக்கினிāndikkiyakkiṉi, பெ.(n.)

   அண்டச் சுண்ணம்; a secret medicine prepared by Siddhars from the human skull.

கேந்திதம்

 கேந்திதம்āndidam, பெ.(n.)

   புன்கு (சித்.அக.);; Indian beech.

     [கேந்து → கேந்திதம்.]

கேந்திரம்

கேந்திரம்āndiram, பெ.(n.)

   1.உதயம்; origin.

   2. பிறப்போரையிலிருந்துஒன்று, நான்கு,எழு அல்லது பத்தாமிடம்; the places 1,4,7,10 in the rasikattam in astrology.

   3.வட்டத்தின் நடு மையம்; centre of a circle.

   4.முதன்மை; important.

     [கதி → கெதி → கெந்து → கேந்திரம்.]

கேந்திரவள்ளி

 கேந்திரவள்ளிāndiravaḷḷi, பெ.(n.)

   கண்ணழகு கொடி; a kind of creeper(சா.அக.);.

     [கெந்து → கெந்திதம் → கேந்திரம் + வள்ளி.]

கேந்திரி

கேந்திரி1āndirittal,    4 செ.கு.வி. (v.i.)

   நிற்றல், வட்ட நடுவில் நிற்றல்; to stand at the centre of the circle.

     [கேந்திரம் → கேந்திரி.]

 கேந்திரி2āndirittal,    4 செ.கு.வி.(v.i.)

   கோள் (கிரகம்);.கேந்திரம்பெற்று நிற்றல்; to be in one of the houses in kéndiram, asa kiragam.

     “பொன்னவன் கேந்திரித்த புனிதலக் கினத்தில்” (திருவிளை. உக்கிர.25);.

     [கேந்திரம் → கேந்திரி.]

கேந்துகம்

கேந்துகம்āndugam, பெ.(n.)

   1. வெள்ளத்தி மரம்: white fig tree,

   2.தவளை; frog (சா.அக.);.

     [கேந்து → கேந்துகம்.]

கேந்துகயம்

 கேந்துகயம்āndugayam, பெ.(n.)

   மான் மணத்தியலரி; a kind of olender herb (சா.அக.);.

     [கேந்து + கயம்.]

கேந்துமுறியம்

 கேந்துமுறியம்āndumuṟiyam, பெ.(n.)

   நாய் வேளை ; a sticky plant that generally grows in sandy places.

     [கேந்து + முறியம்.]

கேந்துவாலிகம்

 கேந்துவாலிகம்āntuvālikam, பெ.(n.)

   புகையிலை; tobacco (சா.அக.);.

     [P]

 கேந்துவாலிகம்ānduvāligam, பெ.(n.)

   புகையிலை (சித்.அக.);; tobaco.

     [P]

கேனங்கொண்டவன்

 கேனங்கொண்டவன்āṉaṅkoṇṭavaṉ, பெ. (n.)

   கிறுக்கன்; a lunatic (சா.அக.);. மறுவ கோட்டி.

     [கேனம்+ கொண்டவன்.]

 கேனங்கொண்டவன்āṉaṅgoṇṭavaṉ, பெ.(n.)

   மனநிலைக் கேடன்; a lunatic.

     [கேனம் + கொண்டவன்.]

கேனன்

 கேனன்āṉaṉ, பெ.(n.)

   மனநோயினன்(உவ.);; crazy fellow.

     [கேனம் → கேனன்.]

கேனம்

 கேனம்āṉam, பெ.(n.)

   மனநோய்(பைத்தியம்);; craziness, insanity.

     [கவல் → கவலம் → கவனம் → கேனம்.]

கேனவாயன்

 கேனவாயன்āṉavāyaṉ, பெ.(n.)

   பேதை(உ.வ.);; lit. the open-mouthed;

 simpleton, fool.

மறுவ.இளித்தவாயன்.

     [கேனம் + வாயன்.]

கேனாரவென்பு

 கேனாரவென்புāṉāraveṉpu, பெ.(n.)

   மண்டை யோட்டின் (கபாலத்தின்); இருபக்கத்தின் கீழ்ப் பகுதிகள்; temporal bones (சா.அக.);.

     [கீழ் கீழார → கீனார + என்பு → கேனாரவென்பு (கொ.வ);.]

கேனிப்பட்டு

 கேனிப்பட்டுāṉippaṭṭu, பெ.(n.)

   விழுப்புரம் மாவட்டத்துச் சிற்றூர்; a village in Villuppuram Dt.

     [கேனன் → கேனி + பட்டு.]

கை

கேப்புமாறி

கேப்புமாறிāppumāṟi, பெ.(n.)

   1. போக்கிரி, கயவன் (அயோக்கியன்);; knave. rogue.

   2. தென்னார்க்காடு செங்கற்பட்டு மாவட்டங்களில் திருட்டுத் தொழிலாற் பிழைக்கும் ஒரு தெலுங்க இனத்தால் (E.T.);; name of a criminal caste, speaking Telugu in South Arcot and Chingleput districts.

     [E.cap → த.கேப்பு + மாறி → கேப்புமாறி.]

கேமசரி

 கேமசரிāmacari, பெ.(n.)

   சீவகன் மனைவியருள் ஒருத்தி; one of his wifes of Šivakān (அபி.சிந்.);.

கேமாசிகம்

 கேமாசிகம்āmācikam, பெ.(n.)

   பிரப்பங் கிழங்கு; water-rattan root, Calamus rotang (சா.அக.);.

 கேமாசிகம்āmācigam, பெ.(n.)

   பிரப்பங் கிழங்கு; water-rattan root.

கேரண்டம்

கேரண்டம்āraṇṭam, பெ.(n.)

   1.காக்கை; crow

   2 நீர்ப்பறவை; water-bird.

     [கரண்டம் → கொண்டம் → கோண்டம்.]

கேரலி

 கேரலிārali, பெ.(n.)

   ஒரு நெல்வகை; a kind of paddy (சா.அக.);. [கரல் → கொலி → கோலி.]

கேரளன்

கேரளன்āraḷaṉ, பெ.(n.)

சேரன்:the Cēra.

     [சேரலன் → கேரளன். சாரல் → சோல் → சோலன் → சோன். மலையாணைக் குறிக்கும் குறும்பு என்னும் சொற்போல், சோல் என்பதும் இடவாக பெயராய் அாசனை உணர்த்தும் (ப.த.நா.ப.முன்.20);. சேரல் → சேரலன் → கோளன்.]

மேற்புறமாயினும் கீழ்ப்புறமாயினும், சேரநாடு முழுவதும் பெரும்பாலும் மேற்குத் தொடர்ச்சி கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் அடிவாரச் சரிவே. மலை யடிவாரம், சாரல் எனப்படும். “சாரல் நாட செவ்வியை யாகுமதி”

     [குறுந். 18:2]. “சாரல்நாடநடுநாள்”[குறுந்.9]. “சாரல்நாடநீவா லாறே” [குறுந்.14 4:8] என்பன மலைப்பக்கநாட்டைச் சாரல்நாடு எனக் கூறுதல் காண்க.

கேரளபுரம்

 கேரளபுரம்āraḷaburam, பெ.(n.)

   குமரிமாவட்டத்துச் சிற்றூர்; a village in Kanyakumari Dt.

     [சேரலம் → கேரளம் + புரம்.]

கேரளம்

கேரளம்1āraḷam, பெ.(n.)

   1. தமிழ்நாட்டை ஒட்டி மேற்கே அமைந்துள்ள இந்திய மாநிலம்: an Indian state west of Tamil Nadu.

   2.இந்தியாவின் பண்டைய 56 நாடுகளில் ஒன்று; one of 56 lands of ancient India (திருவேங்.சத.97);.

   3.மலையாள மொழி: Malayälam language.

     [சேரல் → கோல் → கேரளம்.]

 கேரளம்2āraḷam, பெ.(n.)

   வாய்விளங்கம்; common windberry.

     [கெரள் → கெரளம் → கேரளம்.]

கேரளர்

கேரளர்āraḷar, பெ.(n.)

கேரளமாநிலத்து மக்கள்: people of Kerala state.

     “பூஞ்சாப வெற்றிக்கொடிக் கேரளர் பொன்னி நாடர்” (பாரத வெளிப்பர். 21);.

     [சாரல் → சேரல் → சேரலன் → கேரளன் → கேரளர்.]

கேரளா (சோர்);. சோழர், பாண்டியர் என்ற மூவரும் ஒன்றிற் றோன்றிய உடன்பிறப்புகளென்றும், நாகரிகம் தான்றி வளர்ந்த பெருமையுடைய தென்னிந்தியாவின் திருநெல்வேலியிலமைந்த தண்பொருநை ஆற்றங் கரையிலுள்ள கொற்கையைத் தலைநகராகக கொண்டு ஆண்ட அரசமரபினரென்றும், பிற்காலத்தில் இவர்கள் பிளவுண்டு பாண்டியன் அங்கேயே தங்க மற்ற இருவரில் ‘கோளர்’ மேற்கேயும் ‘சோழர்’ வடக்கேயும் அாசமைத்துக்கொண்டனர் என்றும் தமிழ்நாட்டில் வழங்கும் உள்நாட்டு மரபுரை (பழங்கதை); கூறுகிறது. (ப.210); (ஆதாயம் சங்ககாலச் சிறப்புப் பெயர்கள்);.

கேரளாந்தகன்வாயில்

கேரளாந்தகன்வாயில்āraḷāndagaṉvāyil, பெ.(n.)

தஞ்சைப் பெரிய கோயில் முதல் கோபுரத் தோரண வாயிலின் பெயர் (பிற்.சோழ.வர. சதாசிவ. ப.125);name of main entrance of Thanjavur Siva temple

     [கேரளன் + அந்தகன் + வாயில் – கேரளாந்தகன் வாயில்.]

கேரளி

 கேரளிāraḷi, பெ.(n.)

   கேரளத்தில் விளையும் நெல்; a kind of paddy.

     [கேரளம் → கேரளி.]

கேரளை

 கேரளைāraḷai, பெ.(n.)

   இசைப்பாட்டு; a melody Song(சா.அக.);.

     [கெரளை → கேரளை.]

கேரா

 கேராārā, பெ.(n.)

   தலையின் முன்பக்கமாக வளைந்து வரும் மயிர்; hair over the front part of the head and adjoining the kudumi.

     [U.{} → த.கேரா.]

கேரிசுபண்ணு-தல்

கேரிசுபண்ணு-தல்ārisubaṇṇudal,    5 செ.குன்றா வி.(v.t.)

கடை முதலியவற்றைக் கணக்கு முடித்து மூடுதல்(நாட்டுக்கோட்டைச்செட்டி);:to close or wind up.

     [கரிசு → கேரிசு + பண்ணு. கரிசு : கருத்தாகச்செய்யும்

பணி.]

கேரியர்

 கேரியர்āriyar, பெ.(n.)

   உணவு எடுத்துச் செல்லும் அடுக்கு ஏனம்; box in tier system for packing lunch (tiffin);.

     [E.carrier → த.கேரியர்.]

     [P]

கேரைக்குட்டி

 கேரைக்குட்டிāraikkuṭṭi, பெ.(n.)

சிறு கடல்மீன் வகை: a kind of small sea fish.

     [கேரை + குட்டி.]

கேறு-தல்

கேறு-தல்āṟudal,    5.செ.குன்றாவி(v.t.)

   புடைத்தல்; to Winnow.

   ம.சேறுக;   க.கேறு;   தெ.செருகு;   கொலா.,நா.கேடு;   பர்.கேட்;   கட.கேய்;படகேரு.

     [ஏல் → கேல் → கேறு.]

கேற்று

 கேற்றுāṟṟu, பெ.(n.)

   சிறு நங்கூரம்; light anchor used in warping (செ.அக.);.

     [சிறு – சீற்று – கேற்று.]

 கேற்றுāṟṟu, பெ.(n.)

   சிறுநங்கூரம்; light anchor used in warping.

     [E.kedge → த.கேற்று.]

கேலகன்

கேலகன்ālagaṉ, பெ.(n.)

   1. கழைக்கூத்தாடி: pole dancer.

   2. வாள்மேல் நடனமாடுவோன்; sword dancer.

     [கோலகன் → கேலகன்.]

கேலம்

கேலம்ālam, பெ.(n.)

   1. மகளிர் விளையாட்டு: a women’ play.

   2.பகடி (பரிகாரம்);:joke(த.சொ.அக.);.

     [களி → கேளி → கேளம் → கேலம்.]

கேலளம்

கேலளம்ālaḷam, பெ.(n.)

   1. தெங்கு ; coconut tree.

   2 கேளி. செந்தெங்கு; a kind of coconut.

மறுவ.கேளிகம்.

     [கேழ்(சிவப்பு); – கேழிகம் → கேளிகம் → கேலளம்.]

கேலாசம்

 கேலாசம்ālācam, பெ.(n.)

   பளிங்கு (யாழ்.அக.);; crystal.

கேலி

கேலிāli, பெ.(n.)

   1. விளையாட்டுப் பேச்சு; fun,jest, joke.

   2. பகடி, ஏளனம் (பரிகாசம்);; ridicule derision, mockery.

   3. விகடம்; buffoonery, mimicry.

     [களி → கேளி → கேலி(கொ.வ.);.]

 கேலிāli, பெ.(n.)

   1. விளையாட்டுப் பேச்சு; fun, jest, joke, pleasantry.

   2. கிண்டல் (பரிகாசம்);; ridicule, mockery.

   3. விகடம்; mimicry.

த.வ. ஏகடியம்.

     [Skt.{} → த.கேலி.]

கேலிகம்

கேலிகம்āligam, பெ.(n.)

   1. தெங்கு; coconuttree.

   2. சீந்தில்: moon-creeper (சா.அக.);.

   3. அசோகம் (மலை.);; Indian mast tree.

     [கேலி – கேலிகம்.]

கேலிக்காரன்

கேலிக்காரன்ālikkāraṉ, பெ.(n.)

   1. ஒருவர் அல்லதுஒன்றைப்போலநடித்துக்காட்டுபவன்; jester, buffoon, mimic.

   2.ஏளனம்செய்பவன்; onewhoridicules, scoffer.

     [கேலி → கேலிக்காரன்.]

கேலிக்கூத்து

கேலிக்கூத்துālikāttu, பெ.(n.)

   1. பொருளற்ற தாகச் செய்து சிரிக்கும் அளவிற்குத் தாழ்த்திவிடும் செயல்; farce, mockery, travesty.

அவன் செயல் கேலிக்கூத்தாக முடிந்தது.

   2. அளவுக்கதிகமான கோமாளித்தனம்; clownish nature, farce.

நாடகம் நகைச்சுவையாக இருக்க வேண்டுமே தவிரக் கேலிக்கூத்தாக இருக்கக்கூடாது.

     [கேலி + கூத்து.]

கேலிசீலம்

 கேலிசீலம்ālicīlam, பெ.(n.)

   கம்பம்புல்; millet plant (சா.அக.);.

     [கேலி + சீலம்.]

கேலிசெய்-தல்

கேலிசெய்-தல்āliseytal,    1 செ.குன்றாவி, (v.t.)

பொருளற்றதாகச் செய்து சிரிப்புக்கு உள்ளாக்குதல். to make a travesty, mockery.

உன் நடத்தை சட்டத்தையே கேலிசெய்வதாக இருக்கிறது.

     [கேலி + செய்-.]

கேலிச்சித்திரம்

கேலிச்சித்திரம்āliccittiram, பெ.(n.)

   1. ஒரு செய்தியைப் பகடியாக வெளிப்படுத்தும் ஒவியம்; caricature.

   2.கருத்துப்படம்; cartoon.

     [கேலி + சித்திரம்.பகடி ஒவியம்பார்க்க:see pagadi õviyam.]

கேலிச்சிரிப்பு

 கேலிச்சிரிப்புāliccirippu, பெ.(n.)

   பொருளற்ற ஏளனச் சிரிப்பு; laugh with travesty.

     [கேலி + சிரிப்பு.]

கேலிப்பேச்சு

 கேலிப்பேச்சுālippēccu, பெ.(n.)

வேடிக்கையாக. ஏளனமாகப் பேசுதல். talk of fun. Joke

     [கேலி + பேச்சு.]

கேலிமாலி

 கேலிமாலிālimāli, பெ.(n.)

பகடி,ஏளனம்(யாழ்.அக.);: ridicule.

     [கேலிமாலி. எதுகை நோக்கிய மரபிணைச் சொல்.]

 கேலிமாலிālimāli, பெ.(n.)

   கிண்டல் (பரிகாசம்); (யாழ்.அக.);; ridicule.

கேலிவிருட்சம்

 கேலிவிருட்சம்āliviruṭcam, பெ.(n.)

கடம்பு

 kadambu tree, Eugenia racemosa (சா.அக.);.

 கேலிவிருட்சம்āliviruṭcam, பெ.(n.)

   கடம்ப மரம்; kadambu tree.

கேலை

 கேலைālai, பெ.(n.)

   தீக்கொழுந்து; flame.

     [கில்(கிச்சு); → கெல் → கேலை.]

கேளந்தலூர்

 கேளந்தலூர்āḷandalūr, பெ.(n.)

   திருவள்ளுவர் மாவட்டத்துச் சிற்றூர்; a village in Thiruvalluvar Dt.

     [கேளன் + நந்தல் + ஊர் – கேளநந்தலூர் → கேளந்தலூர்.]

கேளன்

 கேளன்āḷaṉ, பெ.(n.)

   தோழன்; friend, companion.

   ம.கேளன்;க.கேள.

     [கேள் + அன்.]

கேளம்பாக்கம்

 கேளம்பாக்கம்āḷambākkam, பெ.(n.)

   காஞ்சிபுரம் மாவட்டத்துச்சிற்றூர்; a village in Kanjipuram Dt.

     [கேளன் + பாக்கம் – கேளம்பாக்கம்.]

கேளலர்

 கேளலர்āḷalar, பெ.(n.)

   பகைவர்; enemies.

     [கேள் + அல் + அர்.]

கேளல்கேளிர்

கேளல்கேளிர்āḷalāḷir, பெ.(n.)

   நொதுமலர், பகையும் நட்பு மில்லாத அயலார்; those who are neither friends nor enemies. neutrals.

     “கேளல்கேளிர் கெழீ இயின ரொழுகவும்”(அகநா.93);.

     [கேள் + அல் + கேளிர்.]

கேளவர்பந்தம்

 கேளவர்பந்தம்āḷavarpandam, பெ.(n.)

   கடலாத்தி; falcate trumpet(சா.அக.);.

மறுவ கேள்விபந்தம்.

     [கேளவர் + பந்தம்.]

கேளவிபந்தம்

 கேளவிபந்தம்āḷavipantam, பெ.(n.)

   கடலாத்தி; falcate trumpet flower, Dolichandrone faicata (சா.அக.);.

     [கேளவி+பந்தம்]

கேளா

 கேளாāḷā, கு.வி.எ.(adv.)

   ஒருபயனுமின்றி (சூடா.);; to no purpose, vainly.

     [கேள் + ஆ.]

கேளாஒலி

 கேளாஒலிāḷāoli, பெ.(n)

காதினால் உணர முடியாததும் புதுக் கருவிகளால் பதிவு செய்யக் கூடியதுமான ஒலி,

 ultrasound. [கேள்→கேளா+ஒலி]

கேளாக்கேள்வி

 கேளாக்கேள்விāḷākāḷvi, பெ.(n.)

கேளாத கேள்வி பார்க்க;see kélada-kélvi.

     [கேளாதகேள்வி → கேளாக் கேள்வி.]

கேளாதகேள்வி

 கேளாதகேள்விāḷātaāḷvi, பெ.(n.)

   கேட்கக் கூடாததைக் கேட்கும் வினா; question not to be asked, indecent, unbecoming lauguage.

மறுவ..கேளாக்கேள்வி.

     [கேளாத + கேள்வி.]

கேளாதவன்

 கேளாதவன்āḷātavaṉ, பெ.(n.)

   காதுகேளாதவன்; deaf man.

     [கேளாத + அவன்.]

கேளான்

 கேளான்āḷāṉ, பெ.(n.)

   செவிடன்; deaf man.

மறுவ.செவிடன்,

     [கேள் +ஆ + ஆன்.]

கேளாமை

 கேளாமைāḷāmai, பெ.(n.)

   கீழப்படியாமை; disobedience.

     [கேள் + ஆ + மை.]

கேளார்

கேளார்āḷār, பெ.(n.)

   1. பகைவர்; enemies. foes

     “கேளாரும் வேட்ப மொழிவதாஞ் சொல்”(குறள்.64);.

   2.காதுகேளாதவர்; deaf persons.

     “காணார்கேளார்’ (மணிமே.13:111);.

மறுவ.செவிடர்.

ம.கேளார்

     [கேள் + ஆ + ஆர்.]

கேளாவொலி

 கேளாவொலிāḷāvoli, பெ.(n.)

   மாந்தக் காதினால் உணரப்படமுடியாததும்,புதியஇயற்பியற்கருவிகளால் பதிவுசெய்யக்கூடியதுமான ஒலி; ultra sound.

     [கேள் + ஆ + ஓலி.]

கேளி

கேளி1āḷi, பெ.(n.)

   மகளிர் விளையாட்டு; women’s sport. “மலர்கொய்கேளி” (இரகு.இந்தும.9);.

   ம.கேளி (விளையாட்டு);; Skt. keli.

     [களி → கேளி.]

 கேளி2āḷi, பெ.(n.)

   செம்மஞ்சள்நிறத்தென்னைவகை (பதார்த்த.65);; Brahman coconut.

ம.கேளி.

 Skt. narikela.

     [கேழ்:செந்நிறம். கேழ் → கேள் → கேளி(செவ்விளநீர்);.]

 கேளி3āḷi, பெ.(n.)

   1. அறிவிப்பு, கேட்பித்தல்; announcement.

   2. பறையறைந்து தெரிவித்தல்; announcement by beating drum.

   3.புகழ்; fame.

ம., து.கேளி.

     [கேள் → கேளி.]

கேளிகா

கேளிகாāḷikā, பெ.(n.)

   1.தென்னை; coconut tree.

   2.செவ்விளநீர்; half-ripe coconut of reddish colour (சா.அக.);.

     [கேளி2 → கேளிகா.]

கேளிகி

 கேளிகிāḷigi, பெ.(n.)

   புளிப்பிரண்டை; souradamantine creeper(சா.அக.);.

     [கேழ் → கேளி → கேளிகி.]

கேளிக்கை

கேளிக்கைāḷikkai, பெ.(n.)

   1. மகளிர் விளையாட்டு; women’s sport.

   2.மகளிர் நடனம் (உரி.நி.);; dancing of women.

   3.பொழுதுபோக்கு; entertainment.

இரவுக் கேளிக்கைகள் இல்லாத நகருண்டா? (உ.வ.);.

ம.கேளிக்க.

 Skt. kelikå.

     [கேளி → கேளிக்கை.]

கேளிக்கைத்தண்டல்

 கேளிக்கைத்தண்டல்āḷikkaittaṇṭal, பெ.(n.)

கேளிக்கைவரிபார்க்க;see kelkkal-vari.

     [கேளிக்கை + தண்டல்.]

கேளிக்கைவரி

 கேளிக்கைவரிāḷikkaivari, பெ.(n.)

   அரசால், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்கு உரிய அனுமதிக்கட்டணத்தோடுசேர்த்துவாங்கப்படும்வரி; entertainment tax imposed by the Government.

     [கேளிக்கை + வரி.]

கேளிதம்

 கேளிதம்āḷidam, பெ.(n.)

   பெருங்கல்(பிங்.);; boulder, rock.

 Skt. galita.

     [கோளி → கேளி → கேளிதம்.]

கேளியிளநீர்

 கேளியிளநீர்āḷiyiḷanīr, பெ.(n.)

   செவ்விள நீர்; halfripe coconut of reddish colour.

     [கேளி + இளநீர்.]

கேளிருள்ரத்தினம்

 கேளிருள்ரத்தினம்āḷiruḷrattiṉam, பெ.(n.)

   மாணிக்கம்; a kind of superior ruby (சா.அக.);.

     [கேள்+ இருள்+ Skt.ரத்தினம்.]

 கேளிருள்ரத்தினம்āḷiruḷrattiṉam, பெ.(n.)

   மாணிக்கம்; a kind of superior ruby.

கேளிர்

கேளிர்āḷir, பெ.(n.)

   1.நண்பர்; friends.

     “கேளிர் போலக் கேள்கொளல் வேண்டி” (பொருந.74);.

   2.சுற்றத்தார்; relation.

     “யாதும்ஊரேயாவரும்கேளிர்” (புறநா.162);.

   3.கணவர்; husband.

     [கேள் → கேளிர்.]

கேளிவிலாசம்

 கேளிவிலாசம்āḷivilācam, பெ.(n.)

வேடிக்கையான காலப்போக்கு

 pastime, amusement (செ.அக.);.

     [கேலி→கேளி+ Skt. விலாசம்]

 கேளிவிலாசம்āḷivilācam, பெ.(n.)

   காலப்போக்கு (இ.வ.);; pastime.

கேளுர்

 கேளுர்āḷur, பெ.(n.)

   திருவண்ணாமலை மாவட்டத்துச்சிற்றூர்; a village in Thiruvannamalai dt.

     [கேளன் + ஊர் – கேளனூர் → கேளுர்.]

கேளையாடு

 கேளையாடுāḷaiyāṭu, பெ.(n.)

   ஒருவகை வெள்ளாடு; akind of goat.

     [P]

கேளையாடு

     [கேளி(விளையாட்டு); → கேளை+ ஆடு.]

விருதுநகர் உய்வகத்தில் (சரணாலயம்); பாதுகாக்கப்

படும் ஒருவகை காட்டாடு.

கேளையூர்

 கேளையூர்āḷaiyūr, பெ.(n.)

   சேலம் மாவட்டத்துச் சிற்றூர்; a village in Salem Dt.

     [கேளன் → கேளை + ஊர்.]

கேளொலி

 கேளொலிāḷoli, பெ.(n.)

   செவிப்புலனாகும் ஒலி (அறி.க.);; sonic.

     [கேள் + ஒலி.]

கேள்

கேள்1āḷtalāṭṭal,    11 செ.குன்றாவி (v.t.)

   1. செவிக்குப் புலனாக்குதல்; to hear, hearken, listen to.

     “சொல்லுந போலவுங் கேட்குந போலவும்” (தொல்,பொருள்.513);

   2. பாடங்கேட்டல்; to learn, be instructed in.

     “ஒருகுறிகேட்போன்”(நன்.பொது.42);.

   3.வினாதல்i; to ask, inquire, question, catechise.

   4. ஆராய்தல்; to investigate. ‘களவுபோனமைஎங்ங்னே என்றுகேட்டு’ (insc.); (சோழவ.66);.

   5.வேண்டுதல்; to request, solicit, crave. படிக்கப் புத்தகம் தருமாறு கேட்டான் (உ,வ,);.

   6.கேள்விப்படுதல்:to be informed of. “தருதி நீயெனக் கேட்டேன்” (பாரத.கன்ன.238);.

   7.உரிமை கொண்டாடிக் கொடுக்கச் சொல்லுதல்; to require, demand,claim.

   8. தண்டித்தல்; to avenge, punish.;

தீயரைத் தெய்வங் கேட்கும் (உ.வ.);

   9. நோய் முதலியன நீக்குதல்; to effect a remedy, cure, as medicine.

     “செயச்செயலுறுகேளாது….அரவு கான்ற வேகம் மிக்கிட்ட தன்றே” (சீவக.127);.

   10. விலை கேட்டல்; to bid, offer, inquire the price of;

   11. ஏற்றுக்கொள்ளுதல்:to accept, agreeto.

     “கேட்டார்ப் பிணிக்கு தகையவாய்”குறள்,643).

   12. பொறுத்தல்; to tolerate, brook.

     “கேளா ராயர் குலத்தவ ரிப்பழி” (திவ்.பெரியாழ்.3,1:8);.

   ம. கோள்க்குக;   க., குட., கோத., துட. கோள்;   து. கேணுனி;   பட.கே;கொலா.கெல்.

 Kël. to hear, comp;

 Latin.aus-cul-to, to hear, tolisten;

 also the gruk klu-ð,tohear:Welsh clyw, hearing:Irish. clusas, to ear;

 Lithuanian klau, to hear, Latin clu-o, to be called (C.G.D.F.L.593);.

     [கிள் → கேள்.]

 கேள்2āḷtal,    12 செ.கு.வி.(v.i.)

   1.தணிதல்:tocome under the control of; to be cured.

வாதநோய் அந்த மருந்துக்குக் கேட்கும்(உ.வ.);.

   2.கீழ்ப்படிதல்:to obey, be submissive, docile.

பொல்லாத மனங் கேளாது (உ.வ.);

   3. ஒலி உலி எட்டுதல்; to be heard, as a call;

 to reach. as a sound.

குண்டுபோட்டால் இங்கே கேட்கும் (உ.வ.);.

   4. செவிப்புலணுணர்வைப் பெறுதல்: to have perception by the ear.

   அவனுக்குக் காது கேட்கும். 5. அனுமதி பெறுதல்; to get permission.

     “கேளாதே வந்து கிளைகளா யிற்றோன்றி” (நாலடி.30);.

 Irish. Cluas. Fin. Kerjata;

 Est. kerjata;

 Komi. Korui;

 Hung. ker: Mung.gori

     [கிள் → கேள்.]

 கேள்3āḷ, பெ.(n.)

   1.உறவு; kindred, relations.

     “தன் கேளலறச் சென்றான்” (நாலடி.29);.

   2. நட்பு; friendship.

   3. நண்பன்; friend, companion (தி.வா.);.

     “கேளன்றிக் கொன்றாரே கேளாகி” (தொல். பொருள். 72,உரை);.

   4. கணவன்; husband.

     “அவளுந்தன் கேட்குச்சொன்னாள்” (சீவக.1052);.

ம.கேள்.

     [குள் → கெள் → கேள்.]

கேள்வன்

கேள்வன்āḷvaṉ, பெ.(n.)

   1. கணவன்; husband.

     “தன் கேள்வனை யெங்கனா வென்னா வினைந் தேங்கி” (சிலப்.18:33);.

   2.தலைவன்; master, lord.

   3. நண்பன், தோழன் (தி.வா.);; companion, comrade, friend.

   ம.கேளன்;க.கேள.

     [கேள் → கேள்வன்.]

கேள்வாகம்

 கேள்வாகம்āḷvākam, பெ.(n.)

   கருங்குன்றி; a black bead of the plant of rhynchosia genus.

கேள்வி

கேள்வி1āḷvi, பெ.(n.)

   1.கேட்கை; hearing.

   2.வினா; question. ஆசிரியர் மாணவனைக் கேள்விகேட்டார் (உ.வ.);.

   3. நூற்பொருள் முதலிய கேட்கை; taking lessons,as in literature;

 listening to words of wisdom.

     “கேள்வியாற் றோட்கப்படாத செவி” (குறள்,418);.

   4. கல்வி (திவா.);; learning.

     “ஆய்ந்தமைந்த கேள்வி யறிவுடையா ரெஞ்ஞான்றும்” (நாலடி..7);.

   5. ஒலி; sound. “எழுதாக் கேள்வியுங் கேள்வி” (ஞானா. பாயி.5:5);.

   6. மறை (வேதம்);; Veda.

     “கெடுவில் கேள்வியு ணடுவா குதலும்”(பரிபா. 2:25);.

   7 நூல்; treatise. “கேள்விக டுறைபோய்”(சீவக.2386);.

   8. சொல்; word. “ஏனோர்கேள்வியுங்கேள்வி” (ஞானா. பாயி.5,6);.

   9. அறிக்கை (உ.வ.);; report.

   10. அலர் (வதந்தி);; rumour, hearsay.

   11. காது (திவா.);; ear, organ of hearing.

     “நட்போடு கேள்வியூடு நாடுவார்” (சேதுபு.இராமநா.76);.

   12.உசாவுதல்; hearing in trial of a case, judicial inquiry.

   13. ஏலம் முதலியன கேட்கை; bid, offer.

   14.இசைக்குறிப்பு; pitch of a tune, keynote.

     “கிளை யாய்ந்து பண்ணிய கேள்வியாழ்ப் பாணனும்” (பு.வெ.7.18);.15. யாழ் (அக.நி.);;

 lute.

   ம.கேள்வி;   க.கேளிகெ, கேள்விகெ;   து.கேளி;   கோத. கேள்வ்ய் (சொல்,பேச்சு);;துட.கேள்வ்.

     [கேள் → கேள்வி.]

கேள்வி என்பது காதால் கேட்கப்படும் கேள்வி அறிவைக்குறிக்கும் சொல்.இதேபொருளில் திருவள்ளுவரும் கேள்வி எனும் அதிகாரம் அமைத்துள்ளார். ஆயின் வாயால் உசாவுதலாகிய வினாப்பொருளிலும் ‘கேள்வி கேட்டான்’ என வழங்கி வருகிறது. செவிப் புலனுக்குரிய வினைச்சொல், வாய்ப்புலனுக்குரிய வினைச்சொல் ஆக வேறுபட்டு மக்களிடையே வழங்குவதைப் பொருட்பாட்டுப் புடைப் பெயர்ச்சி என்பார்கள்.

கிள் – கிட்டு என்னும் சொற்கள் நெருங்குதல் சேர்தல் எனப் பொருள் பெறும்.

கிள் – கெள்(கெளு);-கேள்:காதுக்கு எட்டுதல்,காதிற் சேர்தல்.

கேள் – கேள்வி = காதால் கேட்கப்படும் செய்தி.

சில அடிவினைகள் தன்வினைப் பொருளிலும், பிறவினைப்பொருளிலும் வழங்கும். கேள் என்னும் சொல் காதிற் சேர்தல் என்றும் காதில் சேர்த்தல் என்றும் பொருள்படத் தக்க அடிவினைச்சொல். நீ அவனைக்கேள் என்ற விடத்து ‘அவன் காதில் சேர்த்து’ எனும் பிறவினைப் பொருளில் மற்றொருவரின் காதில் சேர்த்தற்குக் காரணமாகிய பேசுதல் (வினவுதல்);எனும் வினையையும் குறித்தது. இதனால்காதில் சேர்தல், செவிக் கொள்ளுதல் என்னும் பொருளில் செவிப்புலனின்வினையைக்குறித்தகேள்என்னும் சொல்பிறர் செவியில் ஒரு செய்தியைச் சேர்த்தற்குக் காரணமான வாய்ப்புலனின் செய்கையாகிய பேசுதலையும் குறிப்பதாயிற்று. ஆதலின் கேள் என்னும் அடிவினை செவி கொள்வதாகிய செவிப்புலனின் செயலையே குறித்த முதல்வினை என்பதும் நாளடைவில் வாய்ப்புலனின் செய்கையையும் குறித்த வழிவினையாயிற்று என்பதும் புலப்படும்.

வினவுதல் என்ற சொல்லும் தெலுங்கில் காதால் கேட்பதையும், தமிழில் வாயால் வினவுதலையும் குறித்து வழங்கி வருவது கேள் என்னும் சொல்லின் வழக்கர்ற்றலின் வினை போன்றதாகும்.

கேள்வி.நரம்பு

 கேள்வி.நரம்புāḷvinarampu, பெ.(n.)

   காது கேட்பதற்குக் காரணமான நரம்பு; nerve responsible for hearing (சா.அக.);.

     [கேள்வி+நரம்பு]

கேள்விகேட்பாடு

கேள்விகேட்பாடுāḷviāṭpāṭu, பெ.(n.)

   1. ஒழுங்குமுறை; regularity

   2. முறையான நாட்டாண்மை (நீதி நிருவாகம்);; moral control, administration of justice.

ஊரில் கேள்விகேட்பாடு இல்லை. மறுவ.கேள்விமுறை.

     [கேள்வி + கேட்பாடு.]

கேள்விகொடு-த்தல்

கேள்விகொடு-த்தல்āḷvigoḍuttal,    4.செ.கு.வி.(v.i.)

   செவிகொடுத்தல்; to have inclination to hear.

     [கேள்வி + கொடு-]

கேள்விகொடுவை

 கேள்விகொடுவைāḷvigoḍuvai, பெ.(n.)

   குடுவை என்னும் ஒருவகைச் சீட்டாட்டம்;     (G.Sm:D.I.iii.); a game at cards.

     [கேள்வி + கொடுவை.]

கேள்விகொள்(ளு)-தல்

கேள்விகொள்(ளு)-தல்āḷvigoḷḷudal,    13 செ.குன்றாவி.(v.t.)

   ஐயங்கொண்டுகேட்டல்; to question by way of clearing doubts.

     ‘சர்வேசுவரனைக் கேள்வி கொள்ள வேண்டாதபடி ” (ஈடு 1.5:3);.

     [கேள்வி + கொள்(ளு);-.]

கேள்விக்கச்சேரி

 கேள்விக்கச்சேரிāḷvikkaccēri, பெ.(n.)

   வரி தண்டுஞ் சாலை (நாஞ்.);; revenue office.

     [கேள்வி + கச்சேரி.]

கேள்விக்கடுதாசி

கேள்விக்கடுதாசிāḷvikkaḍutāci, பெ.(n.)

   1.முறைமன்றத்தில் கொடுக்கும் எழுத்துமூலமான விண்ணப்பம்; written application to a court of justice.

   2.ஒப்பந்தப்புள்ளி; tender proposal in writing.

     [கேள்வி + கடுதாசி.]

கேள்விக்காரர்

கேள்விக்காரர்āḷvikkārar, பெ.(n.)

   1.ஏலங் கேட்போர்; bidders at an auction.

   2.விலை கேட்போர்; person who tenders proposals at a purchase.

   3. பணிக்கு விண்ணப்பஞ் செய்வோர்; applicants fo ra post.

   4.வழக்கில் வாதி(யாழ்.அக.);; plaintiff.

     [கேள்வி + காரர்.]

கேள்விக்குறி

கேள்விக்குறிāḷvikkuṟi, பெ.(n.)

   1. கேள்வித் தொடர் (வாக்கியம்); என்பதை உணர்த்த இடப்படும் கொக்கி வடிவக் குறி, கேள்வியை உள்ளடக்கிய முகக் குறி(பாவனை);; in punctuation question mark gesture expressive of the desire to know the cause or possible reasons for something.

   கூடி நின்ற கூட்டத்தைப் பார்த்து விட்டு ஒரு கேள்விக்குறியோடு என்னை நோக்கினார். 2. மனத்தில் தொக்கி நிற்கும் கேள்வி அல்லது ஐயம் (சந்தேகம்);; question in one’s mind; question mark over something.

இந்தத் திட்டம் குறித்த காலத்திற்குள் முடிவடையுமா என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது

     [கேள்வி+குறி]

 கேள்விக்குறிāḷvikkuṟi, பெ.(n.)

   1. கேள்விச் சொற்றொடர் என்பதைக் காட்ட இடப்படும் கொக்கி வடிவக் குறி; question mark.

   2.கேள்வியை உள்ளடக்கிய முகக்குறி); gesture expressive of the desire to know.

   நானிருந்தசூழலைப்பார்த்துவிட்டுக் கேள்விக்குறியோடு என்னை நோக்கினார் (உ.வ.);. 3.தொக்கி நிற்கும் ஐயம்; question in one’s mind.

குறித்த காலத்தில் திட்டம் முடிவடையுமா? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது (உ.வ.);.

     [கேள்வி + குறி.]

கேள்விக்குறைவு

 கேள்விக்குறைவுāḷvikkuṟaivu, பெ.(n.)

   காது கேளாமை; dullness of hearing.

     [கேள்வி + குறைவு. குள் → கெள்.]

கேள்விக்குழாய்

 கேள்விக்குழாய்āḷvikkuḻāy, பெ.(n.)

   செவிப்புலன் இழந்தோர் பயன்படுத்தும் குழாய்; a.

 small coiled tube worn at the ear to assist the hearing.

     [கேள்வி + குழாய்.]

கேள்விச்சாட்சியம்

 கேள்விச்சாட்சியம்āḷviccāṭciyam, பெ.(n.)

கேள்விப்பட்டதாகக்கூறும்சான்று(சாட்சியம்);:hearsay evidence.

     [கேள்வி + சாட்சியம்.]

கேள்விச்செல்வம்

 கேள்விச்செல்வம்āḷviccelvam, பெ.(n.)

செவிவழி எய்திய அறிவுப்பெருக்கம்: knowledge acquired by audio education or scholarly lectures.

     [கேள்வி – செல்வம்.]

கேள்விச்செவியன்

 கேள்விச்செவியன்āḷvicceviyaṉ, பெ.(n.)

   கேள்வியுற்றதை யெல்லாம் நம்புவோன்; one who readily believes hearsay reports, credulous person.

கேள்விச் செவியன் ஊரைக்கெடுத்தான்(உ.வ.);.

     [கேள்வி + செவியன்.]

கேள்விஞானம்

 கேள்விஞானம்āḷviñāṉam, பெ.(n.)

   ஒரு துறையில் முறையாகப் பயிற்சி பெறாமல், கேட்பதால் பெறும் அறிவு; knowledge gained through observation and hearing (க்ரியா.);.

     [கேள்வி+Skt. ஞானம் ஞானம் த. அறிவு]

 கேள்விஞானம்āḷviñāṉam, பெ.(n.)

   செவி வழியாய்பெறும் அறிவு; knowledge gained through observation by hearing.

     [கேள்வி + ஞானம்]

கேள்வித்தானம்

கேள்வித்தானம்āḷvittāṉam, பெ.(n.)

பிறப்பியத்தில் ஒருவன் பிறந்த நல்லோரைக்கு இரண்டு அல்லது மூன்றாமிடம் (சங்.அக.);:the2nd or 3rd house from the ascendant.

     [கேள்வி + தானம்.]

கேள்வித்தாரை

 கேள்வித்தாரைāḷvittārai, பெ.(n.)

   காதின் குழாய் வழி; auditory canal(சா.அக.);.

     [கேள்வி(காது); + தாரை.]

கேள்வித்தாள்

 கேள்வித்தாள்āḷvittāḷ, பெ.(n.)

   தேர்வுகளுக்கான வினாத்தாள்; question paper.

     [கேள்வி + தாள்.]

கேள்வித்துளை

கேள்வித்துளைāḷvittuḷai, பெ.(n.)

   காதினுள் ஆனக சவ்வு வரைக்கும்11/4 அங்குலம் நீண்டு சற்றுச் சரிவாக உள்நோக்கி நடுவில் வளைந்தும் ஒடுங்கியுமுள்ள ஒரு குழாய்ப்பாதை; a designation of the internal ear consisting of a series of cavities such as vestibule etc. at the semi-circular canals upto the cavity of the tympanum(சா.அக.);.

     [கேள்வி + துளை.]

கேள்விநரம்பு

 கேள்விநரம்புāḷvinarambu, பெ.(n.)

   கேட்பதற்குக் கரணியமான நரம்பு; auditory nerve.

     [கேள்வி + நரம்பு.]

கேள்விநேரம்

 கேள்விநேரம்āḷvinēram, பெ.(n.)

   சட்டப் பேரவையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்காக ஒதுக்கப்படும் நேரம்; question hour of an Assembly etc.

     [கேள்வி + நேரம்.]

கேள்விப்படு-தல்

கேள்விப்படு-தல்āḷvippaḍudal,    18 செ.குன்றாவி, (v.t.)

   பிறர் வாய்மூலமாகச் செய்தி தெரிந்து கொள்ளுதல்; to learn through others, to learn by hearsay,

     [கேள்வி + படு-.]

கேள்விப்பத்திரம்

கேள்விப்பத்திரம்āḷvippattiram, பெ.(n.)

   1. எழுத்துமூலமான விண்ணப்பம் (யாழ்ப்.);; request, application, petition in writing.

   2.மன்றாட்டு மடல்; letter of supplication.

     [கேள்வி + பத்திரம்.]

கேள்விப்பந்தர்

கேள்விப்பந்தர்āḷvippandar, பெ.(n.)

   பலர் கூடி நூல்கள் கேட்பதற்காக அமைக்கப்பட்டபந்தல்; pandal for discussion of Šastras.

     “கீத சாலையுங் கேள்விப் பந்தரும்”(பெருங்.இலாவாண.7:131);.

     [கேள்வி + பந்தல் → பந்தர்.]

கேள்விமகமை

கேள்விமகமைāḷvimagamai, பெ.(n.)

   வரிவகை (M.E.R.585 of 1926);; a tax.

     [கேள்வி + மகமை.]

கேள்விமுதலி

 கேள்விமுதலிāḷvimudali, பெ.(n.)

   அரசன் கூறுவதைக் கேட்கும் அலுவலர், திருவாய்க்கேள்வி; officer who hears the commands of a king and transfers them to others.

     [கேள்வி+முதலி.]

கேள்விமுறை

கேள்விமுறைāḷvimuṟai, பெ.(n.)

   1. கேள்வி கேட்பாடு பார்க்க;see kelvi-ketpadu

   2. தவறு களைச் சுட்டிக்காட்டிக் கண்டிக்க வழி; means of administration to check and control.

பணம்பிடுங்கும் பள்ளிகட்குக் கேள்விமுறை கிடையாதா?

     [கேள்வி + முறை.]

கேள்விமூலம்

கேள்விமூலம்āḷvimūlam, பெ.(n.)

   1. கேட்பதற்கு மூலமானது; tympanum the source of hearing.

   2. செவி; ear.

     [கேள்வி + மூலம்.]

கேள்விமேற்கொடி

 கேள்விமேற்கொடிāḷvimēṟkoṭi, பெ.(n.)

கருங்குன்றி மணி

 crab’s-eye plant-Abrus precatorius melanospermus (சா.அக.);.

கேள்வியந்திரம்

 கேள்வியந்திரம்āḷviyandiram, பெ.(n.)

   கேளார்க்குக் கேட்கும்படி செய்யும் காதுக்கருவி; an instrument or device enabling the deaf to hear more distinctly (சா.அக.);.

     [கேள்வி + எந்திரம்.]

கேள்வியருத்தாபத்தி

கேள்வியருத்தாபத்திāḷviyaruttāpatti, பெ.(n.)

   ஒருவன் வீட்டில் இல்லைஎன்பதைக் கேட்டவன்,வேறு இடத்தில் அவன் இருக்கிறான் என்று உணர்ந்துகொள்வது போல் வரும்நிலை; implication from a statement heard dist.fr.kān-arruttapatti. “அகத்தினி லையுறு தேவதத்தனெனிலிருப்பனவன் வேறோரிடத்திலெனத் தெரிந்தறிதல்… கேள்வியருத்தாபத்தி”(வேதா.சூ.22);.

     [கேள்வி + அருத்தாபத்தி.]

கேள்வியறல்

 கேள்வியறல்āḷviyaṟal, பெ.(n.)

   காது கேளாது போதல்; becoming deaf.

     [கேள்வி + அறல்.]

கேள்வியறிவு

கேள்வியறிவுāḷviyaṟivu, பெ.(n.)

   1.கேட்கு முணர்ச்சி; the sense of hearing

   2. கேள்வியினாலுண்டான அறிவு; knowledge derived from hearing(சா.அக.);.

     [கேள்வி + அறிவு.]

கேள்வியா-தல்

கேள்வியா-தல்āḷviyātal,    6 செ.கு.வி (v.i.)

   கேள்வியால் தெரியவருதல்; to be heard reported, to reach the ears, as news.

     [கேள்வி + ஆ-.]

கேள்வியாட்டம்

 கேள்வியாட்டம்āḷviyāṭṭam, பெ.(n.)

   சீட்டாட்ட வகை (உ.வ.);; an adaptation of bezique, a game at cards.

     [கேள்வி + ஆட்டம்.]

கேள்வியுள்ளோன்

கேள்வியுள்ளோன்āḷviyuḷḷōṉ, பெ.(n.)

   1. கல்வி கேள்வியுள்ளவன்; a man of great culture;

 learned man.

   2.அறம்பொருள் இன்பம்வீடு ஆகிய இவற்றின் கேள்விகளில் தெரிவு பெற்றவன்; an expert on all questions concerning virtue, wealth, domestic pleasure and heavenly bliss.

     [கேள்வி + உள்ளோன்.]

கேள்வியேற்றல்

 கேள்வியேற்றல்āḷviyēṟṟal, பெ.(n.)

   காது கேளாமைக்குச் சிகிச்சையளித்தல்; improving the sense of hearing(சா.அக.);.

     [கேள்வி + ஏற்றல்.]

கேள்விவரி

கேள்விவரிāḷvivari, பெ.(n.)

   அரசன் கட்டளைகளைப் பதியும் பதிவேடு (T.A.S.I.165);; re gister of royal commands.

ம.கேள்விவரி.

     [கேள்வி + வரி.]

கேள்வு

கேள்வு1āḷvu, பெ.(n.)

   மூச்சத் திணறுகை; to breathe heavily; to gasp for breath, as a dying person.

     [கேள்-கேள்வு.]

 கேள்வுāḷvu, பெ.(n.)

   1. கடுகு வகை (பிங்.);; white mustard.

   2. தோணி முதலியவற்றில் ஏற்றுதற்குரிய கூலி; charge fortransporting goods by sea; freight (செ.அக.);.

தெ., ம.து. கேவு.

 கேள்வுāḷvu, பெ.(n.)

கேவு பார்க்க;see {}.

     [U.{} → த.கேள்வு.]

கேள்வை

 கேள்வைāḷvai, பெ.(n.)

   பெருவிலையில் பொருண் மதிப்பறிந்து கேட்டல்; asking rate by knowing the prime cost of the materials.

     [கேள்வி → கேள்வை.]

கேழற்பன்றி

கேழற்பன்றிāḻṟpaṉṟi, பெ.(n.)

   ஆண்பன்றி; boar.

     [கேழல் + பன்றி.]

கேழற்பன்றி என்பதனைக் களிற்றுப் பன்றி என்றுஞ்

சொல்லுப'[தொல்.பொருள்.589,உரை],

     [P]

கேழற்பன்றி

கேழல்

கேழல்āḻl, பெ.(n.)

   1. நிறம்; bright colour, hue.

     “செங்கேழற்றாமரை” (பதினொ. திருக்கைலா உலா, அரிவை,1);.

   2. மண்ணைத் தோண்டும் ஆண்பன்றி; hog, boar, swine.

     “செந்நாய்…கேழல் பார்க்கும் வெஞ்சுரக் கவலை” (ஐங்குறு.323);.3.குளநெல்;

 wild rice.

     ” நீர்விளை கேழலும் “(சீவக.1422);. 4. யானை;

 elephant.

     [கேழ் → கேழல்.]

கேழ்

கேழ்āḻ, பெ.(n.)

   1. ஒளி (பிங்.);; light. “நயங்கேழ் பெருவள நல்குநல் லூர்”(தஞ்சைவா.392);.

   2. நிறம்; bright colour, hue.

     “ஒண்கேழ் நூற்றித ழலலிரின்” (புறநா.27);.

   3. ஓப்பு; comparison, equality.

     “கேழே வரையுமில்லோன்” (திருக்கோ.269);.

 Chin. Cār;

 E. colour: Am.eng. col-or:ME. colur, colour. OF. colur.colour.

     [கெழு → கேழ்]

கேழ்த்த

கேழ்த்தāḻtta, பெ.எ.(adj.)

   1. நிறங்கொண்ட,

 bright hued.

     “கேழ்த்த வடித்தாமரை.” (திவ்.இயற்.3, 96);.

   2. மிகுந்த; abundant.

     “கேழ்த்த சீரான்” (திவ்.திருவாய்.3, 1, 7); (செஅக.);

     [கேழ்-கேழ்த்த.]

கேழ்பவர்

கேழ்பவர்āḻpavar, பெ.(n.)

   நன்மையுடையார்; blessed persons.

     “ஒருவர் நம்போல் வருங் கேழ்பவ ருளரே” (திருவிருத்.45);.

     [கேழ் → கேழ்பவர்.]

கேழ்பு

கேழ்புāḻpu, பெ.(n.)

   நன்மை(திருவிருத்.45, அரும்.);; blessing.

     [கேழ் → கேழ்பு.]

கேழ்வரகு

கேழ்வரகுāḻvaragu, பெ.(n.)

   கேப்பை (பதார்த்த.1394);; ragi, a millet-Eleusine coracana.

     [P]

கேழ்வரகு

     [கேழ் : சிவப்பு. கேழ் + வரகு,]

கேழ்வரகு ஒடாப்பு

 கேழ்வரகு ஒடாப்புāḻvaraguoṭāppu, பெ. (n.)

   நன்கு அரைக்கப்படாத கேழ்வரகு மாவு; half grinded ragi cereal flour.

     [கேழ்வரகு+உடைப்பு]

கேழ்வரகு சுண்ணாம்பு

 கேழ்வரகு சுண்ணாம்புāḻvaragusuṇṇāmbu, பெ. (n.)

   கேழ்வரகுமணி நீங்கியபின் கதிரின் சிறு துண்டுகள்; empty ear of ragi согтn.

     [கேழ்வரகு + சுண்ணாம்பு]

கேழ்வரகுகளி

 கேழ்வரகுகளிāḻvaragugaḷi, பெ.(n.)

   கேழ்வரகு மாவினால் செய்யப்படும் களி; porridge or dough made up of ragi powder.

     [கேழ்வரகு + களி.]

கேழ்வரகுபுல்

 கேழ்வரகுபுல்āḻvaragubul, பெ. (n.)

   கேழ்வரகு போன்று விளையும்புல்வகை; a kind of grass.

     [கேழ்வரகு+புல்]

கேழ்வி

 கேழ்விāḻvi, பெ.(n.)

வசைவு, திட்டு,

 abusing words, rebuke, scold.

     [கேள்வி-கேழ்வி (கொ.வ.);]

கேழ்விமுதலிகள்

கேழ்விமுதலிகள்āḻvimudaligaḷ, பெ.(n.)

   அரசரின் வாய்மொழி ஆணைகளை நேரில் கேட்டு ஒலையில் எழுதும் அதிகாரி; officer who hears the order direct from the king.

     “இப்படிக்கு வாணவரையன் எழுத்து கேழ்விமுதலிகளில் சிங்களராயர் எழுத்து” (SII.XII. 235-11, p. 148);.

     [கேள்விமுதலி → கேழ்விமுதலி (கொ.வ.);.]

கேழ்வு

 கேழ்வுāḻvu, பெ.(n.)

தோணிக் கூலி, freight (செ.அக.);.

     [கேழ்-கேழ்வு.]

 கேழ்வுāḻvu, பெ.(n.)

   தோணிக்கூலி (இ.வ.);; freight.

     [U.{} → த.கேழ்வு.]

கேவகதிரவியம்

 கேவகதிரவியம்āvagadiraviyam, பெ.(n.)

   மிளகு; black-pepper.

கேவகா

கேவகாāvakā, பெ.(n.)

   1.பிள்ளைத்தாய்ச்சிக்கொடி; anunknown creeper.

   2.நஞ்சுக்கொடி; umblicalcord.

     [கவ்வு → கேவு → கேவகா(கொ.வ.);.]

கேவசட்டையரம்

 கேவசட்டையரம்āvasaṭṭaiyaram, பெ.(n.)

   ஒருவகை அரம் (C.E.M.);; a curved file, half-round file.

     [கேவசட்டை + அரம்.]

கேவணம்

கேவணம்1āvaṇam, பெ.(n.)

   மணிபதிக்கும்குழி; bed or socket for a gem.

     ‘திருவடிக்காறை பொன்னின் பட்டைமேற் குண்டும் கேவனமும் வைத்து விளக்கிற்று’ (தெ.கல்.தொ.2.2.கல். 51);.

     ‘மத்தக மணியொடு வயிரங் கட்டிய பத்திக் கேவனப் பகம்பொற்குடைச்குற்சித்திரச்சிலம்பு’ (சிலப் 16:117 – 8, உரை);.

     [கவ்வு → கவ்வணம் → கேவணம்.]

கேவனம்

கேவனம்2āvaṉam, பெ.(n.)

   பொன்னணிகளில் முத்துகள் இரத்தினக் கற்களைப் பதிப்பதற் கேற்ற வகையில் தனித்தனியே செய்து பற்றவைக்கப்பெறும் பொற்குழிப்புகள்; a bed or socket for gems in ornaments. “திருவடிக்கைக்காறை பொன்னின் பட்டைமேற் குண்டும் கேவணமும் வைத்து விளக்கிற்று “(SII.II.51-175, p.207);.

     [கவ்வு → கவ்வணம் → கேவணம்,]

கேவரம்

 கேவரம்āvaram, பெ.(n.)

   வெள்ளைக் காக்கணம்; white mussel (சா.அக.);.

     [கவ்வு → கவ்வரம் → கேவரம்.]

கேவர்த்தன்

 கேவர்த்தன்āvarttaṉ, பெ.(n.)

   கரையான்; white ant.

கேவலகழுத்தி

 கேவலகழுத்திāvalakaḻutti, பெ.(n.)

   முத்தி (கேவல); நிலைக்குச் செல்லும் பொழுதும் அதன் கணின்று மீளும் பொழுதும் ஆதன் நிற்கும் நிலைகளுள் ஒன்றாகிய பொறிகள் செயலற்று உறங்கும் (சுழுத்தி); நிலை; the Šulutticondition of the embodied soul on its way to, and from kévalakkidai (செ.அக.);.

     [கேவலை+ கழுத்தி]

கேவலகும்பகம்

கேவலகும்பகம்āvalagumbagam, பெ.(n.)

   ஒருங்கே மூச்சுத் தேக்கல்); compelete suppression of breath.

   2. கும்பகத்தில் (ஆன்ம); நிலை; condition of the embodied soul in the suppression of breath.

     [கேவலம் + கும்பகம்.]

கேவலக்கிடை

கேவலக்கிடைāvalakkiḍai, பெ.(n.)

   1. ஆணவத்தால் மறைப்புண்டு செயல்திறம் குறைந்து செயலற்றுக்கிடக்கும்.ஆதனின்(ஆன்மா);நிலை; disembody iedinactive condition of the soul enevloped in anava, the inherent darkness. 2. படுத்தபடுக்கையாய் இருத்தல்;

 being confined to bed by age.

     [கேவலம் + கிடை.]

கேவலக்கிழவன்

கேவலக்கிழவன்āvalakkiḻvaṉ, பெ.(n.)

   அருகக்கடவுள்; Arhat, as enjoying the supreme bliss.

     “தோமறு கேவலக் கிழவன் மூதெயில் போல்” (சீவக.856);.

     [கேவலம் + கிழவன். கேவலம் : மேன்மை, உயர்வு, முற்றறிவு.]

கேவலசரீரம்

 கேவலசரீரம்āvalasarīram, பெ.(n.)

இளைத்த உடம்பு emaciated body (சா.அக.);.

     [கேவலம் + சரீரம்.]

கேவலசாக்கிரம்

 கேவலசாக்கிரம்āvalacākkiram, பெ.(n.)

   விழிப்பு நிலையில் (சாக்கிரத்தில்); ஆதன் (ஆன்ம); நிலை; the condition of the embodied soul.

கேவலசைதந்யம்

கேவலசைதந்யம்āvalacaitanyam, பெ.(n.)

   ஆதன் அறிவு வடிவமாக உள்ள நிலை; condition of soul when it becomes one with the supreme knowledge.

     “கேவல சைதந்யமாகிய ஆத்மாவினிடம்” (சித்.சி.கா.197, 2 உரை); (செ.அக);.

     [கேவலம்+ Skt, சைதந்யம்]

கேவலசைதனியம்

கேவலசைதனியம்āvalasaidaṉiyam, பெ.(n.)

   ஆதன் அறிவமாக (ஞான சொரூபம்); உள்ள நிலை; condition of soul when it becomes one with the supreme knowledge.

     ‘கேவல சைதந்யமாகிய ஆத்மாவினிடம்’ (சித். சிகா. 191:2 உரை);.

     [கேவலம் + சைதன்யம் → சதணியம் (சைதன்யம் : சமணக்கோயில்);.]

கேவலசொப்பனம்

 கேவலசொப்பனம்āvalasoppaṉam, பெ.(n.)

   ஆதன், தன்முனைப்புக் காரிருளால் மறைப்புண் டிருக்கும்பொழுதும் நிலையாகி அதன்கணின்று மீளும்பொழுதும் ஆதன் நிற்கும் நிலைகளுள் மீளும்பொழுதும் ஆதன் நிற்கும் நிலைகளுள் ஒன்றாகிய கனவு; the soppanam condition of the embodied soul on its way to, and from, kêvalakkidai.

     [குவ்வல் → கேவல் → கேவலம் + சொப்பனம்.]

கேவலஞானம்

கேவலஞானம்āvalañāṉam, பெ.(n.)

   முக்கால அறிவு; perfect knowledge, knowledge of the past, present and future.

     ‘கேவல ஞானத்துக்கு முன்காணுங் காட்சியை ‘(சீவக.3081.உரை);.

 Skt. kevalanana.

     [குள்வள் → கேவல் → கேவலம் + ஞானம்.]

கேவலன்

கேவலன்āvalaṉ, பெ.(n.)

   1. வீடுபேறு அடைய முயல்பவன்; one who attempts to obtain finalemancipation.

     “கேவலன்….யாவதாத்மபாவிஅசரீரியாய்க் கொண்டு திரிவானொருவன்” (அஷ்டாதச.அர்த்தபஞ் .26);.

   2.எளியவன்; ordinaryman, average person.

     “ஆசிரியன் கேவல னல்லன்” (திருவாலவா.15:11);.

ம.கேவலன்.

     [கேவலம் → கேவலன்.]

கேவலப்படு

கேவலப்படு1āvalappaḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   1. இளைத்தல்; emaciating

   2. மெலிதல்; becoming thin(சா.அக.);.

     [கிழ்வு → கீவு → கேவு → கேவலம் + படு-.]

கேவலப்படுத்து

கேவலப்படுத்து2āvalappaḍuddudal,    5 செ.குன்றாவி.(v.t.)

   மதிப்புக் குறையுமாறு செய்தல்; to disgrace, dishonour.

     [கிழ்வு → கீவு → கேவு → கேவலம் + படுத்து-.]

கேவலப்பொருள்

கேவலப்பொருள்āvalapporuḷ, பெ.(n.)

   முழுமுதற் கடவுள்; the supreme Being, as the one without a second.

     ‘கேவலப் பொருளையே பாவித்தல் வேண்டுதலான்’ (குறள்,358, உரை);.

     [குவவு → குவவில் → கேவல் → கேவலம் + பொருள்.]

கேவலமானவன்

 கேவலமானவன்āvalamāṉavaṉ, பெ.(n.)

   இழிந்தவன்; loafer(சா.அக.);.

     [கேவலம் + ஆனவன்.]

கேவலமாயிளை-த்தல்

கேவலமாயிளை-த்தல்āvalamāyiḷaittal,    4 செ.கு. வி (v.t.)

   மிகவும் இளைத்தல்; becoming very feeble (சா.அக.);.

     [கேவலமாய் + இளை-.]

கேவலமாய்க்கிடத்தல்

 கேவலமாய்க்கிடத்தல்āvalamāykkiḍattal, தொ.பெ.(vbl.n.)

   பேரிடர்நோயால்கிடத்தல்; lying dangerous ill(சா.அக.);.

     [கேவலமாய் + கிடத்தல்-.]

கேவலம்

கேவலம்1āvalam, பெ.(n.)

   1.தனிமை(சூடா);; singleness, solitariness, isolation.

   2. இணையற்றது; uniqueness.

   3. வீடுபேறு (பிங்.);; finalemancipation, supreme bliss.

   4. கேவல ஞானம் பார்க்க;see kēvala-nānam.

   5. சிறியது; that which is insignificant, common.

     “கேவமல்ல விப்போர்” (பாரத. பதின்மூ. 100);.

   6.தாழ்நிலை; low status, meanness;

அவன் மிகக் கேவலமானவன் (உ.வ.);.

   7. மானக் (56mpo; disgrace, dishonour. 95usmré, Gésusun பண்ணினான் (உ.வ.);.

   8. இழிவு; humilation.

ம.கேவலம்.

 Pali., Pkt. Kěvala: Kt.kyūra, Dm, kyewal;

 Paš. kéwala: Phal. khile, OGuj.kévalaum, Guj.kéval

     [குவவு → குவவல் → கேவல் → கேவலம்.]

 கேவலம்2āvalam, பெ.(n.)

   உயர்வு, மேன்மை; greatness, excellence.

     [குவி → குவை → கூவை → கேவல் → கேவலம்.]

கேவலம் என்னும் சொல் உயர்வு மேன்மை வீடுபேறு போன்ற உயர்பொருள்களிலும் இழிவு தாழ்வு அவமதிப்பு என்னும் இழிபொருள்களிலும் இருவேறுபட்ட முரண் பொருள்களில் வழங்கி வருகின்றது. தவ ஆற்றல் பெற்ற முனிவர்களைக் கேவலிகள் என்பார்கள். வீடுபேற்றிற்கு உரிய காட்சியறிவு கேவலஞானம் எனப்படும்.

குவி, குவை என்னும் சொற்கள் ஒன்றாகத் திரளுதல் பெருகுதல் மேம்படுதல் என்று பொருள்படும். குவை-கூவை எனத் திரியும். (கூவைக்கிழங்கு – பெரிய கிழங்கு); (கூவுதல் பெரிதாக ஒலியெழுப்புதல்.); குவை, கூவை, கூவல், கூவன்,

கூவலம் – கேவலம் = பெருமை, உயர்வு,மேன்மை.

 கேவலம்3āvalam, பெ.(n.)

   தாழ்வு, இழிவு; low status, dishonour, humiliation.

     [கீழ் → கீழ்வு → கேவு → கேவலம்.]

இனி, தாழ்வு என்னும் பொருளில் வழங்கும் கேவலம் என்னும் சொல் கீழ், கீழ்வு, கீவு, கீவல், கீவலம், கேவலம் எனத் திரிந்ததாகும்.

வெருவு-வெருவல்,பார்வு-பார்வல் என்றாற்போன்று கீழ்வு – கீழ்வல், கீவல் என்பனவும் ‘அல்’ ஈற்று தொழிற்பெயர் ஆகும். ஒரே சொல் இருவேறுபட்ட முரண் தருவதாயின் அவை வெவ்வேறுவினையடிகளில் பிறந்தவை ஆதல்வேண்டும்என்பது சொற்பிறப்புநெறிமுறைகளில் ஒன்று.

 கேவலம்āvalam, பெ.(n.)

   1. தனிமை; singleness.

   2. இணையற்றது; uniqueness.

   3. வீடுபேறு (மோட்சம்);; supreme bliss.

   4. இழிவானது; that which is insignificant.

   5. தாழ்நிலை; low status.

   6. அவமானம்; disgrace.

     [Skt.{} → த.கேவலம்.]

கேவலவுணர்வு

 கேவலவுணர்வுāvalavuṇarvu, பெ.(n.)

   உயர் அறிவு (பரஞானம்);;     [கேவலம் + உணர்வு.]

கேவலாவத்தை

 கேவலாவத்தைāvalāvattai, பெ.(n.)

   ஆதனு (ஆன்மா); சூரிய மூன்று வகை துன்பங்களுள் (அவத்தை); ஒன்று; one of the three degrees of conscriousness of the soul.

கேவலி

கேவலிāvali, பெ.(n.)

   முற்றறிவினன்; person possessing perfect knowledge,

     “முதற்பொருள் கேட்டார்க் குரைக்குமெங் கேவலியே” (திருநூற்.10);.

     [கேவலம் → கேவலி.]

 கேவலி2āvali, பெ.(n.)

   வள்ளிக்கொடி(மூ.அக.);; five leaved yam.

     [கை + வல்லி – கைவல்லி → கேவலி.]

கேவலிகா

 கேவலிகாāvalikā, பெ.(n.)

பிளவுச் சீரகம்:a kind of cumin seed(சா.அக.);.

     [கவலிகம் → கவலிகா → கேவலிகா (கொ.வ.);.]

கேவலோத்பத்தி

கேவலோத்பத்திāvalōtpatti, பெ.(n.)

   ஐவகை மணத்திலொன்று (பஞ்ச கல்யாணத் தொன்று); (திருநூற். 4, உரை);; one of {}-{}.

கேவல்

கேவல்1āval, பெ.(n.)

   1.ஒருவகை இழுப்புவலி: a kind of spasmodic pain.

   2. விக்கல் போன்ற அழுகையொலி; sobbing.

அறையிலிருந்து கேவலும் விசும்பலும் கேட்டன (கிரி.);.

     [கவல் → கேவல்.]

 கேவல்2āval, பெ.(n.)

   வள்ளிக்கொடி (மலை.);; five leaved yam.

     [கவல் → கேவல்.]

கேவிகேவியழு-தல்

கேவிகேவியழு-தல்āviāviyaḻudal,    2 செ.கு.வி.(v.t.)

   கடும் துயரத்தால் மூச்சையடக்கி வெளிப்படுமாறுபோல விம்மியழுதல்; to weap.to be grieved or vexed.

     [கேவி + கேவி + அழு-.]

கேவு

கேவு1āvudal,    5.செ.கு.வி.(v.i.)

   1.மூச்சுத்திணறல்; to breath heavily, to breath with difficulty as in whooping cough.

   2.செறுமி அழுதல்; to cry of a child seeking breath.

   3. மூச்சுத்திக்காடல்; to gasp for breath சா.அக.).

ம.கேவுக.

     [கவ்வு → கெவவு → கேவு.]

 கேவு2āvu, பெ.(n.)

   வெண்கடுகு; white mustard (சா.அக.);.

     [கவு → கேவு.]

 கேவு3āvu, பெ.(n.)

   1. செந்நெல்; red paddy.

   2. சிவப்பரிசி; red rice. க.ரீகவு.

     [கவ்வு → கெவவு → கேவு.]

 கேவுāvu, பெ.(n.)

   தோணி முதலியவற்றில் ஏற்றுதற்குரிய கூலி; charge for transporting goods by sea; freight.

ம.,தெ.,துளு.,கேவு.

     [U.{} → த.கேவு.]

கேவு-தல்

கேவு-தல்āvutal, செ.கு.வி.(v.i.)

   1. மூச்சுத் திணறல்; breathing with difficulty as in whooping cough.

   2. செருமி அழுவுதல்; crying, as a child seeking breath.

   3. மூச்சு திக்குமுக்காடல்; gasping for breath or go groaning as a dying person (சா.அக.);.

     [ஏவு+கேவு.]

கேவுநீர்

 கேவுநீர்āvunīr, பெ.(n.)

   கீழ்நீர்; underground water.

து. கெவுநீர்.

     [கசிவு → கேவு + நீர்.]

கேவுரா

கேவுராāvurā, பெ.(n.)

   1. கடுகு; mustard.

   2. கேழ்வரகு; ragi (சா.அக.);.

     [கவு → கேவு → கேவுரம் → கேவுரா.]

கேவேடன்

கேவேடன்āvēṭaṉ, பெ.(n.)

   மீன்வலைஞன்; fisher man

     “கேவேட னாகிக் கெளிறது படுத்தும்” (திருவாச.2:17);.

     [கே + வேடன்.]

கோவல்

கோவல்1 val, பெ.(n.)

   1. மாட்டு மந்தை; herd, flock.

   2. ஊரின் பொது மேய்ச்சலிடம்; common pasture of a village.

மறுவ. மந்தைவெளி. ஆவடி,

     [கோள் = போரில் கொள்ளை கொண்ட மாடுகள். கோள் → கோ(மாடு); → கோவு + அல் → கோவல்.]