தலைசொல் | பொருள் |
---|---|
கெ | கெ ke, பெ.(n.) பின்னண்ண ககர மெய்; ‘க்’ மற்றும் முன்னுயிர் ‘எ’ இரண்டும் இணைந்த அசை எழுத்து; the syllabicletterrepresenting velarconsonant ‘க்’ with front vowel ‘எ’. [க்+எ=கெ.] |
கெகராசி | கெகராசி gegarāci, பெ.(n.) செடிவகை,பூலா(மலை.);; Black berried feather foil. [குவை → கிவை → கிகை+ராசி-கிகைராசி→கெகராசி (கொ.வ.);.] |
கெக்கட்டம் | கெக்கட்டம் kekkaṭṭam, பெ.(n.) கெக்களம் பார்க்க;see kekkalam. கெக்கட்டமிட்டுச்சிரிக்கிறான்(உ.வ.);. தெ. கெக்கிலி, கெக்கலு;துட.கெக், [கெக்கலி → கெக்களி → கெக்கடி → கெக்கட்டம்.] த.கெட்டம் → Skt.gagghatta. |
கெக்கரி | கெக்கரி1 kekkarittal, 4 செ.கு.வி.(v.i.) மிக மிக இனித்தல்; To taste very sweet. [கெக்கலி → கெக்கரி.] கெக்கரி2 kekkarittal, 4 செ.கு.வி.(v.i.) கொக்கரித்தல்; To cackle, cluck, as a hen. [கொக்கரி → கெக்கரி. (ஒலிக்குறிப்புச்சொல்);.] கெக்கரி3 kekkarittal, 4 செ.கு.வி.(v.i.) சினத்தல்; To get angry. [கொக்கரி → கெக்கரி.] |
கெக்கரிக்காய் | கெக்கரிக்காய் kekkarikkāy, பெ.(n.) முள் வெள்ளரி: kakri-melon. க. கெக்கரிகெ (முலாம்பழவகை);:து. சக்கர்பெ. [கெக்கரி+காய்கள்+கரி-கக்கரி.கக்கரி → கெக்கரி.] [P] கெக்கரிக்காய் [கக்கரிக்காய்] |
கெக்கரீசம் | கெக்கரீசம் kekkarīcam, பெ.(n.) செங்கழுநீர் (சித்.அக.);; red Indian water-lily (செ.அக.);. கெக்கரீசம் kekkarīcam, பெ.(n.) செங்கழுநீர்; red indian water lilly; American sweet-scented water lilly. |
கெக்கலி | கெக்கலி1 kekkalittal, 4 செ.கு.வி.(v.i.) குஞ்சுகளைப் பருந்தின் பார்வையினின்றும் காப்பதற்காகத் தாய்க்கோழி ஒலி எழுப்புதல்; Clucking of a hen to protect the chicken from the enemy. க.கெக்கலிக; தெ.கெக்கலின்சு; E.cackles. [கெக்-ஒலிக்குறிப்புஇடைச்சொல்.கெக் → கெக்கலி.] கெக்கலி2 kekkalittal, 4 செ.கு.வி.(v.i.) 1. குலுங்கச் சிரித்தல்; To laugh violently, so that one’s sides shake. 2. ஏளனமாகச் சிரித்தல்; to laugh in a derisive manner. மறுவ. கேக்கலி. ம.கெக்கலிக்குசு:க கெக்களிசு;தெ.கெக்கலின்சு. [கெக்கல் → கெக்கலி.] கெக்கலி3 kekkali, பெ. (n.) இனிமை; sweetness. ம.கிக்கிளி;தெ.கெக்கலி. [கக்கம் → கக்கலி → கிக்கலி → கெக்கலி : கக்கத்தில் விரல் வைத்துச் சிரிக்கச்செய்தல், சிரித்தல் சிரிப்பினால் பெறும் இன்பவுணர்வையும் குறித்தது.] |
கெக்கலி கொட்டு-தல் | கெக்கலி கொட்டு-தல் geggaligoṭṭudal, 5.செ.கு.வி. (v.i.) குலுங்கக்குலுங்கச் சிரித்தல்; to laugh violently so that one’s sides shake. “கண்டவ ரெவருங் கெக்கலி கொட்டவே” (இராமநா.சுந்தா.4);. [கெக்கலி + கொட்டு-.] கெக்கலிப்படு-தல் 20 செ.கு.வி. (v.i.); கெக்கலிபார்க்க;see kekkali-. “அக்களிப்போடு கெக்கலிப்பட “(சர்வச, கீர்த்.186);. [கெக்கலி + படு-.] |
கெக்கலிமூட்டு-தல் | கெக்கலிமூட்டு-தல் kekkalimūṭṭudal, 5 செ.கு.வி. (v.i.) சிரிப்பூட்டுதல், சிரிக்கவைத்தல்; to make one laugh. [கிக்கலி → கெக்கலி – மூட்டு-.] |
கெக்கல் | கெக்கல் kekkal, பெ. (n.) வாய்விட்டுச் சிரிக்கும் ஒலிகுறிப்பு; sound denoting loud laughter. [கெக்-ஒலிக்குறிப்பு. கெக் → கெக்கல்.] |
கெக்களம் | கெக்களம் kekkaḷam, பெ.(n.) வாய்விட்டுச்சிரிக்கை; Loud or open laughter. [கெக்கலி → கெக்களி → கெக்களம் (ஒலிக்குறிப்புச் சொல்);.] |
கெக்களி-த்தல் | கெக்களி-த்தல் kekkaḷittal, 4 செ.கு.வி.(v.i.) 1. நெளிதல், to bend, writhe; to be twisted, distorted. 2. துருத்துதல்; to be pushed out, to protrude. 3. தோற்றுப் போதல்; to be defeated or vanquished. [ஒருகா, கெக்கலி → கெக்களி.] |
கெக்கு-தல் | கெக்கு-தல் kekkudal, 5.செ.கு.வி.(v.i.) கால்நடைகளை மேய்க்கும்போது ஒலிஎழுப்புதல்; To shout intraining cattle. க.கெக்கு. [கக்கு → கெக்கு (கக்குதல் போன்று அடித் தொண்டையால் ஒலியெழுப்புதல்);.] |
கெக்கை | கெக்கை kekkai, பெ.(n.) கன்னம்; cheek. க.கெக்கெ;தெ.செக்கு,செங்கெ. [செவிப்பட்டை → செப்பட்டை → செக்கெ → கெக்கெ → கெக்கை(கொ.வ.);] |
கெங்கபாடி | கெங்கபாடி keṅgapāṭi, பெ.(n.) விழுப்புரம் மாவட்டத்துச் சிற்றூர்; a village in Viluppuram Dt. [கங்கன் + பாடி – கங்கபாடி → கெங்கபாடி (கொ.வ.);.] |
கெங்கரை | கெங்கரை keṅgarai, பெ.(n.) நீலகிரி மாவட்டத்துச் சிற்றூர்; A village in Nilagiri Dt, {கங்கன் + கரை – கங்கங்கரை → கெங்கரை(கொ.வ);.] |
கெங்கலு கண்டிகை | கெங்கலு கண்டிகை geṅgalugaṇṭigai, பெ.(n.) திருவள்ளூர் மாவட்டத்துச் சிற்றுார்; a village in Tiruvallür Dt. [கங்கல் → கெங்கலு(கொ.வ); +கண்டிகை] |
கெங்காதீரம் | கெங்காதீரம் keṅgātīram, பெ.(n.) கங்கைக்கரை; bank of Ganges. “கெங்கா தீர்த்துத் தேசம்” (பெருங்.உஞ்சை.36:220);. [கங்கை → கெங்கை + தீரம் – கெங்காதீரம்.] |
கெங்குபட்டர் | கெங்குபட்டர் keṅkupaṭṭar, பெ.(n.) தருமன் காட்டில் கரந்துறைந்த போது வைத்துக் கொண்ட பெயர்; name which Taruman christened himself, when he dwelt in the forest (அபி.சிந்.);. |
கெங்கை | கெங்கை keṅgai, பெ.(n.) கங்கையாறு; riverGanges. [கங்கை → கெங்கை (கொ.வ.);.] |
கெங்கையாடிக் குப்பம் | கெங்கையாடிக் குப்பம் keṅgaiyāṭikkuppam, பெ.(n.) திருவள்ளுர் மாவட்டத்துச் சிற்றுார்; a village in Tiruvallur Dt. [கங்கை → கெங்கை + ஆடி – கெங்கையாடி + குப்பம்.] |
கெசகங்காடம் | கெசகங்காடம் gesagaṅgāṭam, பெ.(n.) யானை; elephant. [கெச + கங்காடம் – கெசங்காடம்.] |
கெசகன்னம் | கெசகன்னம் kecakaṉṉam, பெ.(n.) 1. காதாட்டும் கல்வி (வித்தை);; elephant’s ear, term used to denote the art of moving or waving one’s in imitation of the elephant. 2. பெரு முயற்சியால் ஆக வேண்டிய செயல்; a task involving stupendous effort, Herculeam task. கெசகன்னம் gesagaṉṉam, பெ.(n.) கசகர்ணம் பார்க்க;see kaca-karnam. (யாழ்.அக.);. [Skt.gaja+karna → த.கெசகன்னம்.] |
கெசகன்னிவாழை | கெசகன்னிவாழை kecakaṉṉivāḻai, பெ.(n.) மொந்தன் வாழை (சித்.அக.);; abyssinian banana (செ.அக.);. |
கெசகரணம் | கெசகரணம் gesagaraṇam, பெ.(n.) கசகர்ணம் பார்க்க;see kasakarnam. [Skt.gaja+karna → த.கெசகரணம்.] |
கெசகோழகன் | கெசகோழகன் kecaāḻkaṉ, பெ.(n.) ஒரு sum surff son sir; monkey soldier (அபி.சிந்.);. |
கெசக்கன்னி | கெசக்கன்னி kesakkaṉṉi, பெ.(n.) 1. வெருகு (மலை.);; a tuberous-rooted herb. 2. மொந்தன் வாழை; stout banana (சா.அக.);. [கச்சல் → கெசல் + கன்னி.] |
கெசடம் | கெசடம் kesaḍam, பெ.(n.) நாகப்பூ; Ceylon ironwood. |
கெசட்டு | கெசட்டு kesaṭṭu, பெ.(n.) அரசு செய்தித் திரட்டுத் தாள் (இராஜாங்க விளம்பரப் பத்திரிகை);; gazette. த.வ. அரசிதழ். [E.gazette → த.கெசட்டு.] |
கெசந்தாதி | கெசந்தாதி kesandāti, பெ.(n.) அரசமரம்; Pipaltree மறுவ, கெசாசனை. [குக்சு → கெச்சு → கெச்சந்தல் → கெசந்தாதி (கூரிய இலையுடையது);.] |
கெசனிக்கீரை | கெசனிக்கீரை kesaṉikārai, பெ.(n.) கூரிய இலையுடைய கீரை; A kind of greens. [குச்சு → கெச்சு → கெச்சனி → கெசனி + கீரை.] |
கெசபடசு | கெசபடசு kesabaḍasu, பெ.(n.) கெசப்பி பார்க்க;see kesapi. |
கெசபுடம் | கெசபுடம் kesabuḍam, பெ.(n.) நூற்றொரு புடம்; calcination repeated 101 items. [கெசம் + புடம்.] |
கெசபுட்பி | கெசபுட்பி kesabuṭbi, பெ.(n.) பெருவேம்பு; mountain neem, melia azedaracham alias composita. |
கெசபூகம் | கெசபூகம் kecapūkam, பெ.(n.) துவரை (சித்.அக.);; dholl (செ.அக.);. கெசபூகம் kesapūkam, பெ.(n.) துவரை (சித்.அக.);; dholl. |
கெசப்பி | கெசப்பி kesappi, பெ.(n.) பூடுவகை (மச்சபு.சருவ.8);; liquorice-plant. |
கெசப்பிடி | கெசப்பிடி kesappiḍi, பெ.(n.) யானைக் கொம்பு; the tusk of an elephant. |
கெசப்பிரியம் | கெசப்பிரியம் kesappiriyam, பெ.(n.) இலவம் பிசின்; the gum of silk cotton tree. |
கெசமாமுட்டி | கெசமாமுட்டி kecamāmuṭṭi, பெ.(n.) மரவகை (மலை);; strychnine tree-Strychnos nux-vomica (செ.அக.);. |
கெசமூசம் | கெசமூசம் kesamūsam, பெ.(n.) இலைப்பாசி; species of duckweed. |
கெசம் | கெசம் kecam, பெ.(n.) யானை; elephant. “கெசதுரக முதலான சதுரங்கம்” (தாயு.சித்தர்.6); (செ.அக.); [Skt. gaja → த.கெசம்] கெசம்1 kesam, பெ.(n.) யானை; elephant. “கெசதுரக முதலான சதுரங்கம்” (தாயு.சித்தர்.6);. [Skt.gaja → த.கெசம்.] கெசம்2 kesam, பெ.(n.) இரண்டு முழம் கொண்ட அளவு; yard-measure. [U.gaz → த.கெசம்.] |
கெசராசினி | கெசராசினி kecarāciṉi, பெ.(n.) பூலா (சித்.அக.);; black-berried feather foil (செ.அக.);. கெசராசினி kesarāsiṉi, பெ.(n.) பூலா (சித்.அக.);; black-berried feather foil. |
கெசாசனை | கெசாசனை kecācaṉai, பெ.(n.) அரசு (யாழ்.அக.);; pipal tree (செ.அக.);. கெசாசனை kecācaṉai, பெ.(n.) அரசமரம் (யாழ்.அக.);; pipal tree. |
கெசாசைநா | கெசாசைநா kecācainā, பெ.(n.) கரிசலாங்கண்ணி, shifls sumsijäsuors of (பிங்.);; a plant growing in wet places – Eclipta alba (செ.அக.);. கெசாசைநா kecācainā, பெ.(n.) கையாந்தகரை (மலை);; a plant found in moist places. |
கெச்ச | கெச்ச kecca, 5 செ.கு.வி. (v.i.) ஏவல் வடிவம் போ; go. “கெச்ச நெறி” (சிவதரு. கோபுர.129);. |
கெச்சக்காய் | கெச்சக்காய் keccakkāy, பெ.(n.) 1. கழற்சிக்காய்; molucca-bean- 2. கழற்கொடி; molucca-bean-recsalpinabonducelca க. கெச்சகாய்;தெ.கட்ச்சகாய. [கழற்சிக்காய் → கெச்சக்காய் (கொ.வ.);.] [P] கெச்சக்காய் |
கெச்சக்கீயம் | கெச்சக்கீயம் keccakāyam, பெ.(n.) துதுவேளை; three-lobed night – shade. [கச்சல் → கெச்சல் + கீயம் கச்சல் : மென்மை, இளமை.] |
கெச்சங் கெட்டு | கெச்சங் கெட்டு keccaṅgeṭṭu, வி.எ.(adv.) மானமில்லாமல், சூடு சொரணை கெட்டுப் போய்; bereft of dignity and honour. [கெச்சம்+கெட்டு] |
கெச்சங்கெட்டவன் | கெச்சங்கெட்டவன் keccaṅgeṭṭavaṉ, பெ.(n.) நாணமில்லாதவன்; shameless man, person void of self-respect. [கெச்சம் + கெட்டவன் (கெச்சம் : நாணம்);.] |
கெச்சச்சிலந்தி | கெச்சச்சிலந்தி keccaccilandi, பெ.(n.) கெச்சைச் சிலந்தி பார்க்க;see keccai-c-cilandi. ம.கெச்சச்சிலந்தி. [கெச்சம் + சிலந்தி.] |
கெச்சட்டிகை | கெச்சட்டிகை geccaṭṭigai, பெ.(n.) கழுத்தணி வகை; a kind of ornamentworn on the neck. [தெ. கெச்சம் + அட்டிகை.] |
கெச்சனா | கெச்சனா keccaṉā, பெ.(n.) கையாந்தகரை; eclipse plant. [கெச்சம் → கெச்சனா.] கெச்சனா keccaṉā, பெ.(n.) கையாந்தகரை; a plant growing in wet places. |
கெச்சனித்தல் | கெச்சனித்தல் keccaṉittal, தொ.பெ.(vbl.n.) 1. கூடுதல்; Joining. 2.சேருதல்; uniting. [குள் → குச்சு → குச்சனி → கெச்சனி → கெச்சனித்தல் (கொ.வ.);.] |
கெச்சம் | கெச்சம்1 keccam, பெ.(n.) நாணம்; shame, sensitiveness, dread of evil. பட. சிக்கு: Skt.lalia. [சிணுங்கு → சிக்கு → சிக்கம் → கெச்சம்.] கெச்சம்2 keccam, பெ.(n.) 1. முல்லை (அக.நி.);; wild jasmine. 2. அரசு (சங்.அக.);; pipal. [குச்சு → குச்சம்(ஊசிமுனை போன்றது); → கெச்சம்.] கெச்சம்3 keccam, பெ.(n.) கெச்சை பார்க்க;see keccai. “பெண்க ளணிமணிக் கெச்சமடா” (குற்றா. குற, 123:12);. ம.கெச்ச; க.,தெ.கச்செ;பட.கக்கரெ. [கழஞ்சு → கழஞ்சம் → கச்சம் → கெச்சம்.] கெச்சம் keccam, பெ.(n.) 1. சலங்கை; tiny bells attached to or used as ornaments. 2. வெட்கம்; shyness. [குகல்-கெச்சு-கெச்சம்] |
கெச்சல்நாயக்கன்பட்டி | கெச்சல்நாயக்கன்பட்டி keccalnāyakkaṉpaṭṭi, பெ.(n.) சேலம் மாவட்டத்துச் சிற்றுார்; a village in Salem Dt. [கெச்சம் → கெச்சில் → கெச்சல் + நாயக்கள் + பட்டி.] |
கெச்சி | கெச்சி kecci, பெ.(n.) பேய்த்தும்மட்டி வகை (சங்.அக.);: Bitterwater – melon. Skt. Gaváksi. [கிச்சு → கெச்சு → கெச்சி.] |
கெச்சிகா | கெச்சிகா keccikā, பெ.(n.) மயிற்றலைப் பூடு; Peacock crest plant. [குச்சி → குச்சிகை → கெச்சிகா(கொ.வ.);.] |
கெச்சிதம் | கெச்சிதம் keccidam, பெ.(n.) 1. பெருமிதம் (இ.வ.);: Majesticair. 2. குணமடைந்து வருகை: improvement in health. உடம்பு கெச்சிதமாய் வருகிறது (இ.வ.); 3. முழக்கம்; Roaring noise. [கச்சிதம் → கெச்சிதம்.] |
கெச்சிநடை | கெச்சிநடை keccinaḍai, பெ.(n.) கெச்சைநடை பார்க்க:see keccar – nadai. [கச்சிதம் → கெச்சித(ம்); → கெச்சி – நடை.] |
கெச்சிலாபுரம் | கெச்சிலாபுரம் keccilāpuram, பெ.(n.) தூத்துக்குடி மாவட்டத்துச் சிற்றுார்; a village in Tūttukkudi Dt. [கெச்சம் → கெச்சில் + புரம்.] |
கெச்சீரம் | கெச்சீரம் keccīram, பெ.(n.) முல்லை; jasmine. [கெச்சம் → கெச்சசீரம். கெச்சம்-முல்லை.] |
கெச்சு | கெச்சு keccu, பெ.(n.) கோடுகளால் வரைந்து காட்டப் பெற்ற மனை முதலியவற்றின் உருவம்; sketch as of a building. அமீன் கெச்சு (இ.வ.);. த.வ. வடிவுரு. [E.sketch → த.கெச்சு.] |
கெச்சுக்கெச்செனல் | கெச்சுக்கெச்செனல் keccukkecceṉal, பெ.(n.) 1கீச்சிடுதற் குறிப்பு; Onom. expr. signifying chirping, as of a lizard. 2. துன்புறுத்துதற் குறிப்பு; expr. signifying teasing, harassing. [கெச்சு + கெச்சு + எனல்.] |
கெச்சுருட்டி | கெச்சுருட்டி keccuruṭṭi, பெ.(n.) திப்பிலி; long pepper. [கச்சல் → கெச்சல் → கெச்சு + உருட்டி.] |
கெச்சை | கெச்சை keccai, பெ.(n.) சலங்கை; tinkling bellsworn around the ankle. ‘அடியிடத்தே சமைத்துக்கட்டின…. கெச்சையும்’ (கலித். 96. உரை);. ம. கெச்ச; க. கச்சக, கெச்செ: து. கெச்ச. கெச்செ. கச்செ: தெ. கச்சியா, கச்செ; பட..கக்கரெ; துட.. கிச்;குட.. கெச்செ: கோத.கெச். [கழஞ்சு → கழஞ்சம் → கச்சம் → கெச்சம் → கெச்சை.] |
கெச்சைகட்டு-தல் | கெச்சைகட்டு-தல் geccaigaṭṭudal, 5. செ.குன்றா. வி.(v.t.) 1. நாடகம் ஆடுவதற்காகக் காலில் கச்சை கட்டுதல்; to adornanklet for dance. 2. அணியமாதல்; To get ready. ம. கெச்சகெட்டுக. [கெச்சை + கட்டு-.] |
கெச்சைக்குதிரை | கெச்சைக்குதிரை keccaikkudirai, பெ.(n.) ஒலிக்கும் கெச்சை அணிந்த குதிரை: horse with anklet of tinkling bells. [கெச்சை + குதிரை.] |
கெச்சைக்கொலுசு | கெச்சைக்கொலுசு kessaikkolusu, பெ.(n.) ஒலிக்கும் முத்துகளையுடைய கொலுசு: anklet of tinkling silver bells. [கெச்சை + கொலுசு.] |
கெச்சைச்சிலந்தி | கெச்சைச்சிலந்தி keccaiccilandi, பெ.(n.) கெச்சைமணி கட்டியதுபோல் காலில் உண்டாகும் சிரங்கு: a kind of eruption on the foot (சேரநா.);. ம. கெச்சச்சிலந்தி. [கெச்சை + சிலந்தி,] |
கெச்சைநடை | கெச்சைநடை keccainaḍai, பெ.(n.) பெருமித நடை (வின்.);: Ponmpous or affected gait. [கெச்சை + நடை.] |
கெச்சைமிதி | கெச்சைமிதி keccaimidi, பெ.(n.) 1. கூத்தின் விரைந்த நடை: a quick or hurried step in dancing. 2. குதிரை விரைந்துசெல்லும் நடைவகை: Rapid pace of a horse. கெச்சைமிதியிலே போ. 3. பெருமித நடை: pompous or affected gait. [கெச்சை + மிதி.] |
கெஞ்சம்பட்டி | கெஞ்சம்பட்டி keñjambaṭṭi, பெ.(n.) மதுரை மாவட்டத்துச்சிற்றூர்: a village in Madurai Dt. [கெச்சம் (முல்லைக்கொடி, அரசமரம்); → கெஞ்சம் + பட்டி.] |
கெஞ்சல் | கெஞ்சல் keñjal, தொ.பெ. இரக்கமான வேண்டுகோள்; imploring, pleading, entreaty. உன் கெஞ்சலுக்கு அவன் மசியமாட்டான் (உவ.);. ம. கெஞ்சல். [கெஞ்சு + அல். ‘அல்’ தொ.பொறு.] |
கெஞ்சி | கெஞ்சி keñji, பெ.(n.) சீந்தில்: moon-creeper. [கொளுஞ்சி → கொஞ்சி → கெஞ்சி.] |
கெஞ்சிக்கேள்-தல் (கெஞ்சிக்கேட்டல்) | கெஞ்சிக்கேள்-தல் (கெஞ்சிக்கேட்டல்) keñjikāḷtalkeñjikāṭṭal, 11 செ.குன்றாவி, (v.t.) பணிவான குரலுடன் வேண்டுதல்; to beg, entreat, beseech. [கெஞ்சு + இ + கேள்.] கெஞ்சு-தல் 5 செ.குன்றாவி.(v.t.); 1. இரந்து குறையுதல்; to beg humbly, to entreat, crave, be seech with supplicating gestures. “கெஞ்சு மாதங்கமுகம் பார்த்திரங்கும்”(தனிப்பா.1.339,50);. 2. இரக்கமாக வேண்டுதல்; to implore, to plead. உங்களைக்கெஞ்சிக்கேட்டுக்கொள்கின்றேன். இந்த முறை மட்டும்.மன்னித்துவிடுங்கள் (உ.வ.);. ம. கெஞ்சுக.., கிஞ்சுக; கோத. கென்ச்; கோண். கேன்சானா;பட, கெஞ்சு: மா. க்வெகெ(கேள்);. Skt, khan [இறைஞ்சு → எஞ்சு → கெஞ்சு (கொ.வ.);.] |
கெஞ்சுதல் | கெஞ்சுதல் keñjudal, பெ.(n.) தொ.பெ. (vbl.n.); கெஞ்சல் பார்க்க;see kerjal. [கெஞ்சு + தல். ‘தல்’ தொ.பெ.ஈறு.] |
கெடகம் | கெடகம் geḍagam, பெ.(n.) புறாமுட்டி; Parakeet burr. [கிடகம் → கெடகம்.] |
கெடகாரனூர் | கெடகாரனூர் keḍakāraṉūr, பெ.(n.) தருமபுரி மாவட்டத்துச் சிற்றூர்; A village in Dharmapuri Dt. [கிடை(ஆட்டுப்பட்டி); + காரன் – கிடைகாரன் → கெடகாரன் + ஊர்.] |
கெடசாரம் | கெடசாரம் keḍacāram, பெ.(n.) இடர், இடையூறு, இன்னல்,சிக்கல்; Danger,misfortune,entanglement. ம.கெடசாரம். [கெட + சாரம்.] |
கெடச்செய்-தல் | கெடச்செய்-தல் keḍacceytal, 1செகுன்றாவி. (v.t.) 1. அழித்தல்; to destroy, ruin. 2. தீயதாக்குதல், கெடுத்துவிடுதல்); to make bad, to spoil. 3. அழகு நலங்கெடுத்தல்: todeflower. 4. நோய்முதலியவற்றை நீக்குதல்; to remove, as a disease. 5. விளக்குப் போன்றவற்றை அணைத்தல்; toextinguishasalamp. க. கெடிக;பட. கெடக. [கெட + செய். செய்-து.வி.) |
கெடமால்கட்டை | கெடமால்கட்டை keḍamālkaḍḍai, பெ.(n.) மீன் வலையின்மேற்புறம்கட்டப்பட்டமிதப்பு; A foattied with the fishing net. மறுவ.தலைவலைக்கட்டை, தொங்கு வலைக்கட்டை, மோம்புக்கட்டை, கடைவால்கட்டை. [கடைவால் → கெடமால் (கொ.வ.); + கட்டை.] |
கெடலணங்கு | கெடலணங்கு keḍalaṇaṅgu, பெ.(n.) தவ்வை, மூதேவி (பிங்.);; the goddess of misfortune. [கெடு → கெடல் + அணங்கு] |
கெடலூழ் | கெடலூழ் keḍalūḻ, பெ.(n.) தீவினை; evil fate. “கெடலூ ழாதலின் கேட்ட பொழுதே … ஆருணி தெளிந்து” (பெருங். மகத. 25:168);. [கெடு → கெடல் + ஊழ்.] |
கெடவரல் | கெடவரல் keḍavaral, பெ.(n.) 1. மகளிர்விளையாட்டு; a woman’s game. “கெடவர லாய மொடு” (தொல்,சொல்.319);. 2. மகளிர் கூட்டம் (சூடா);; Gathering of women. 3.ஒளிந்தாட்டம்; Hide and seek play. Punj.keda [கெடு : மறைதல், ஒளிதல், கெடு + வரல் – கெடுவரல் ஒளிந்துவெளிவருதல், ஒளிந்தாட்டம்.] |
கெடவை-த்தல் | கெடவை-த்தல் keḍavaittal, 4 செ.குன்றாவி.(v.t.) 1. அழித்தல்; To destroy, ruin. 2. தீயதாக்குதல்; To make bad. 3. செயலிழக்கச் செய்தல்; To do cease as a function. 4 நலிவடையச் செய்தல்; to make weak. க.கெடிசு;பட கெடுசு. [கெட + வை-.] |
கெடாக்காரன் | கெடாக்காரன் keṭākkāraṉ, பெ.(n.) எமன்: got of death. [கடாக்காரன்→கெடாக்காரள்.மே.வ.] |
கெடாரம் | கெடாரம் keṭāram, பெ.(n.) கடிகாரம் (யாழ்.அக.);; clock. [கடிகாரம் → கெடாரம்.] |
கெடாவடி | கெடாவடி keḍāvaḍi, பெ.(n.) பிணையடித்தலில் மாடுகள் சுற்றிவரும் வைக்கோல் பரப்பு; he stock on the threshing floor. மறுவயினையடிப்புப் பகுதி. [கடா+அடி→ கெடா+அடி-கெடாவடி [பே.வே]] |
கெடாவிளக்கு | கெடாவிளக்கு keṭāviḷakku, பெ.(n.) தொடர்ந்து எரியும் அல்லது.ஒருகுறிப்பிட்டகாலத்துக்குஎரியுமாறு வடிவமைக்கப்பட்ட விளக்கு; Alampkeptburning perpetually or for a fixed period of time. மறுவ. அணையா விளக்கு, அவியா விளக்கு, நந்தா விளக்கு. ம. கெடாவிளக்கு. [கெடு + ஆ + விளக்கு. ‘ஆ’-எதிர்மறை இடைநிலை.] |
கெடி | கெடி keṭi, பெ.(n.) பயணத்தின் போது எருது, குதிரைகளை மாற்றும் இடம்; a location in a journey, where the horses or bulls of carriages are changed (செ.அக.);. கெடி1 keḍittal, 4 செ.கு.வி. (v.i.) வெருவுதல், அச்சங்கொள்ளுதல் (யாழ்.அக.);: to be afraid. [கடி → கெடி.] கெடி2 keḍi, பெ.(n.) ஊர்; village. [கடி எல்லை. கடி. (எல்லை வகுத்த ஊர்);.] கெடி3 keḍi, பெ.(n.) நிறைவேறிவரும்செயல்; business accomplished. “கெடியாயினவுங்கெடுமே” (சினேந். 451);. [கடி → கெடி.] கெடி4 keḍi, பெ.(n.) 1. மலைக்கோட்டை, துருக்கம்; hil fort. 2. அதிகாரஞ்செல்லுமிடம்; Jurisdiction province, region under authority, 3. வல்லமை; authority.power. “‘கெடிமன்னர் வணங்குந் தாளான்”(சூடா. 9:10.); 4. புகழ்; fame, glory, “மூன்று லோகங் கெடி பெற்ற ராவணா” (இராமநா.யுத்.32.); 5. அச்சம்; Terror tright, alarm. தெ. கடி. [கடி → கெடி.] |
கெடிமண்டு-தல் | கெடிமண்டு-தல் keḍimaṇḍudal, 5 செ.கு.வி.(v.i.) அச்சம் மிகுதல்; To be frightened out of one’s swits; to be terrified, overwhelmed with fear. [கெடி + மண்டு-.] |
கெடிமாடு | கெடிமாடு keḍimāḍu, பெ.(n.) நீண்ட பயணத்தின் இடையிடையே வண்டியில் மாற்றிப் பூட்டும் எருது; bullocks stationed as relays in a journey. [கெடி + மாடு) |
கெடியன் | கெடியன் keḍiyaṉ, பெ.(n.) அச்சம் உண்டாக்குபவன்; cruel, hard-hearted person. [கடியன் → கெடியன்.] |
கெடியாமவிதை | கெடியாமவிதை keḍiyāmavidai, பெ.(n.) தேற்றான்கொட்டை; Water clearing nut. [கடி = வட்டமானகலம்.கடி → கடியாம + விதை-கடியாம விதை → கெடியாமவிதை.] மண்பாண்டங்களைச் சுடுமுன்னர்ச் சிறிதளவே விளக்கெண்ணெய் சேர்த்த செம்மண் பூசி, அதன்மீது தேற்றாங் கொட்டையால்தேய்க்கத்தேய்க்கமண்எணத்தில் மெருகு ஏறும். இது மண் ஏனத்தைத் தீற்றுவதற்குப்பயண்பட்டது. |
கெடியாரம் | கெடியாரம் keḍiyāram, பெ.(n.) 1.வெண்கலம்; bel. metal. 2. வெண்கலத்தட்டு; bell-metal vessel. [கடி = வட்டம், கடி கடியாரம்→ கெடியாரம்.] |
கெடிரோகம் | கெடிரோகம் keḍirōkam, பெ.(n.) அச்சத்தால் ஏற்படும் நோய்; a sudden prostration or perturbation of body and mind through fear. [கடி → கெடி + ரோகம்.] |
கெடிறு | கெடிறு keḍiṟu, பெ.(n.) முள்ளுள்ள மீன்வகை; a kind of fish. “பாண்ம களின்கெடிறு சொரிந்தவகன்பெரு வட்டி”(ஐங்குறு. 47);. [கெளிறு → கெடிறு.] [P] கெடிறு கெடு1-தல் 20செ.கு.வி.(v.i.); 1.அழிதல்: toperish, to be destroyed, annihilated. “தான்கெடினுந்தக்கார்கே டெண்ணற்க” (நாலடி. 80);. 2. பழுதாதல்; to decay, rot; to become tarnished, damaged, spoiled, to be marred, blighted, worn out. 3. வறுமையுறுதல்; to fall on evil days, to be in straitened circumstances. ‘கெட்டார்க்கு உற்றார் கிளையிலுமில்லை’ (பழ.);. 4.ஒழுக்கங்கெடுதல்: todegenerate, deteriorate, change for the worse morally. கெட்டுப்போனவள். 5. உருவழிதல்: to be emaciated, reduced; deformed, disfigured. அந்தச் சித்திரங் கெட்டுவிட்டது. 6. தோற்றோடுதல்; to run away defeated. 7 கெடுதல்; to be elided, dropped. “இறுதி யிகர மெய்யொடுங் கெடுமே” (தொல், எழுத்து.240);. ‘பகையாளி குடியை உறவாடி கெடு’ (பழ.);. 8. வழிதவறிப்போதல்; to lose one’s way. “கெடுமரக்கலம் கரை சேர்ந்தாற் போல”‘(ஈடு1:2:3);. 9. எரியும் விளக்கு, தீப் போன்றன அணைதல்; to be extinguished as lamp fire etc., 10. காய்கறி முதலியன அழுகுதல்; to purify, rot. 11. செயலிழத்தல்; cease to function, weaken. 12. தீயதாதல்; to be come bad. 13. கொடியதாதல்: To become visions. 14. நோய்கவலை முதலியன அடியோடு நீங்குதல்); to be removed, as disease, sorrow. ம. கெடுக; க., பட. கெடு; தெ. செடு; குட. கெட்; து. கெடகுனி; கோத. கெட்; துட. கொட்; கொலா. கிட்; நா. இட்; பர். சிட்;கோண். கரீநாநா. Gk. Kakoein. [கள் (வெட்டுதல், நீக்குதல்); → கடு → கெடு(அழிதல்);.] |
கெடிலம் | கெடிலம்1 keḍilam, பெ.(n.) 1. கடலூரையடுத்துச் செல்லும் ஓராறு; a river near Cuddalore. நிரம்பு கெடிலப் புனலு முடையார்” (தேவா. 949:1); 2. ஆழமான ஓடை; deep stream. [கடி → கடிலம் → கெடிலம் (விரைந்து ஒடும் சிற்றாறு);.] கெடிலம்2 keḍilam, பெ.(n.) 1. குகை den. 2. ஒடுங்கிய பாதை (வின்.);: Narrow passage. [கடி → கடிலம்.] |
கெடிவெட்டூர்நாயக்கர் | கெடிவெட்டூர்நாயக்கர் keḍiveḍḍūrnāyakkar, பெ.(n.) நாயக்க அரசர்களுளொருவர்: a Palayagar Chieftain, [கெடி + வெட்டூர் + நாயக்கர்.] வீரபாண்டிய கட்ட பொம்மனுடைய தாய்மாமன். வெள்ளையர் இவரை அழைத்துக் கட்ட பொம்மு விடம் தூது செல்லப் பயன்படுத்தினர். |
கெடு | கெடு2 keḍuttal, 4 செ.குன்றாவி.(v.t.) 1. அழித்தல்; to destroy, annihilate; to squander, as wealth; to extinguish. “திங்கள் விளங்கொளி கெடுத்து வெய்யவன்… தோன்றினான்” (நைடத, இந்திர.1);. ‘கெடுப்பதும் வாயால், படிப்பதும் வாயால்’ (பழ.);. 2. பழுதாக்குதல்; to damage, spoil, tarnish, blast, injure. “கெடுத்தொழிந்தானை….புதல்வனை” (கம்பரா.மந்தரை. 76);. 3.ஒழுக்கங்கெடுத்தல்; to corrupt,demoralize,seduce,violate. 4. குற்றமாக்குதல்; to render nugatory, as religious rites, austerities. விரதங்களையெல்லாம் தீச்செயலால் கெடுத்துக் கொண்டான். 5. செயல் தடை செய்தல்; to frustrate. என் வேலையைக் கெடுக்காதே. ‘கெடுப்பாரைத் தெய்வம் கெடுக்கும்’ (பழ.);. 6. நீக்குதல்; to remove. “அரந்தை கெடுத்து வரந்தரு மிவளென” (சிலப் உரைபெறு.);. 7.ஆற்றல்குறையச்செய்தல்; toweaken, make inactive. 8. நஞ்சு முதலியவற்றை முறியச் செய்தல்; to neutralize, to counteract as poison in the system. இந்தவேர்நஞ்சைக்கெடுக்கும். 9. தோற்கச் செய்தல்; to defeat, overcome. 10. காணப்பெறாது போதல்; to lose, drop, as an object bynegligence. “‘எற்கெடுத்திரங்கி” (மணிமே.5:36);. ம.கெடுக்குக. Gk. Kakoein. [கள்(வெட்டுதல், நீக்குதல்); → கடு → கெடு(அழித்தல்);.] கெடு3 keḍu, பெ.(n.) தவணை; term, fixed time, instalment. ம. க., து., கடு. [கடு → கடுவு → கெடுவு → கெடு.] கெடு4 keḍu, பெ.(n.) பெ.எ.(adj.); 1.தீய; Bad. 2. அழிந்த; ruined, wasted. ம. கெடு. [கடு → கெடு.] கெடு5 keḍu, பெ.(n.) 1.கேடு; perl,risk. “கெடுவின்று மறங்கெழு சோழர்” (புறநா. 39:7);. 2. ஏழைமை; poverty. “கெடுவாக வையாது” (குறள்.117);. [கடு → கெடு.] |
கெடுகட்டுவரிசை | கெடுகட்டுவரிசை geḍugaḍḍuvarisai, பெ.(n.) பரிசம் வைத்தல், திருமண உறுதி செய்தல் fixing the marriage by offering gifts. [கெடு+கட்டு+வரிசை] கசவர் பழங்குடிகளின் சொல்லாட்சி. |
கெடுகாலம் | கெடுகாலம் keḍukālam, பெ.(n.) அழிவுகாலம்; bad times, time of ruin, drought. ம. கெடுகாலம். [கெடு+காலம்.] |
கெடுகிடு-தல் | கெடுகிடு-தல் geḍugiḍudal, 4 செ.கு.வி.(v.i.) கெட்டொழிதல்; to be utterly ruined, to perish. “வெந்துயர் கெடுகிட” (தேவா. 1077:11);. [கெடுகு + இடு – கெடுகிடு.] |
கெடுகு | கெடுகு geḍugu, பெ.(n.) கெடுதி, தீமை; evil. க.கெடுகு. [கெடு + கு – கெடுகு, ‘கு’ பெயரீறு,] |
கெடுகுறி | கெடுகுறி geḍuguṟi, பெ.(n.) தீயநிமித்தம்(உ.வ.);; bad sign, evil omen, portents. [கெடு + குறி.] |
கெடுசொல் | கெடுசொல் keḍusol, பெ.(n.) தீயபேச்சு; evilword. க. கெடுசொல். [கெடு + சொல்.] |
கெடுதப்பல் | கெடுதப்பல் keḍudappal, பெ.(n.) மாதவிலக்கு முதலியவை காலவொழுங்கு தவறுதல்; outlasting the limited time as mensus in woman. [கடுவு → கெடுவு → கெடு + தப்பல்.] |
கெடுதலம் | கெடுதலம் keḍudalam, பெ.(n.) கெடுவிடம்பார்க்க;see kedu-v-idam. [கெடு + தலம்.] |
கெடுதலை | கெடுதலை keḍudalai, பெ.(n.) அழிவு; ruin, destruction. கெடுதலை பண்ணாதே. [கெடு → கெடுதலை.] |
கெடுதல் | கெடுதல் keḍudal, தொ.பெ. (vbl.n.) 1. அழிவு; run, destruction. 2. பழுது; damage, injury. 3. பேரழிவு; calamity, danger. ‘கெடுதலை யுடைய மாக்கள்’ (பெரும்பாண். 432,உரை);. 4. தீங்கு; Degeneracy, vileness, evil. 5. இலக்கணத்தில் எழுத்து அல்லது அசைகெடுதல்; elision, omission “தோன்ற றிரிதல் கெடுதல் “(நன். 154);. [கெடு → கெடுதல்.] |
கெடுதல்திரிபு | கெடுதல்திரிபு keḍudaldiribu, பெ.(n.) எழுத்துக் கெடும் திரிபு (விகாரம்);; Elision of letter. [கெடுதல் + திரிபு.] |
கெடுதி | கெடுதி keḍudi, பெ.(n.) அழிவு; ruin, destruction. “கிரியையி லரைமலங் கெடுதி யுற்றிடும்”(வள்ள. பதிபசுபாச.பாச.ஆணவ.வி.2);. 2. இழப்பு ; loss,waste, damage. “காணாத போழ்திற் கெடுதிகளுங் காணாது’ (சினேந்.157);. 3.இழந்தபொருள்; property or thing lost. கெடுதிவினாதல் (தஞ்சைவா. 72, தலைப்பு);. 4. பேரிழப்பு: danger, peril. “வேடராற் கெடுதிவந்துறுவனகாணா” (உபதேசகா.சிவவிரத. 256);. 5. துன்பம்; affliction, suffering. 6. தீமை; evil, mischief. “என்னிடையேகெடுதியிருந்த தெனினும்” (அருட்பா III இரங்கன்மா. 28);. ம.கெடுதி; க.கெடுக,கெடுகு, கெடகு; தெ.செடுகு; கோத,கெட்; துட.. கொடில்;குட..கெடி.. [கெடு + தி + கெடுதி.] |
கெடுதோசி | கெடுதோசி keṭutōci, பெ.(n.) தீ வினையோன் (படுபாவி);; heinous sinner, a term of reproach. ‘மாண்டா ருயிரளிக்கு மாமருந்தை வேரோடு கிண்டெறி வாரிந்தக் கெடுதோசிக ளென்பார்’ (இரஷ.சரி.322); (செ.அக);. |
கெடுத்தகேடு | கெடுத்தகேடு keḍuttaāḍu, பெ.(n.) ஒருமுறை இழப்பு ஏற்பட்டும் மீண்டும் முயலுமாறு ஒருவரை அறிவுறுத்துகை; to inducea persor to continue without minding the lost. கெடுத்த+கேடு] |
கெடுத்தம் | கெடுத்தம் keḍuttam, பெ.(n.) கெடு3பார்க்க;see kedu. [கெடு → கெடுத்தம்.] |
கெடுத்துவிடு-தல் | கெடுத்துவிடு-தல் keḍudduviḍudal, 8 செ.குன்றாவி. (v.t.). அழித்துவிடுதல்; to ruin, destroy. [கெடு → கெடுத்து + விடு-. விடு-து.வி.] |
கெடுத்தை | கெடுத்தை keḍuttai, பெ.(n.) நச்சுத்தன்மையுள்ள முள்ளுடன் கூடிய கடல்மீன் வகை; a kind of sea fish. [கெடு → கெடுத்தை.] |
கெடுத்தையுளுவை | கெடுத்தையுளுவை keḍuttaiyuḷuvai, பெ.(n.) கடல் மீன் வகை; a kind of sea fish. [கெடுத்தை + உளுவை] [P] கெடுத்தையுளுவை |
கெடுநினைவு | கெடுநினைவு keḍuniṉaivu, பெ.(n.) தீய எண்ணம்; evil intention, malice. [கெடு + நினைவு.] |
கெடுபடு-தல் | கெடுபடு-தல் keḍubaḍudal, 20 செ.கு.வி.(v.i.) பேரழிவுக்கு உள்ளாதல்; to be caught in danger, to be overtaken by calamity. ‘கெடுபட்டுப் போவார்… விரைந்து போதலைக் கருதுவர்’ (பெரும்பாண். 432, உரை);. (கெடு + படு-.] |
கெடுபாதை | கெடுபாதை keḍupātai, பெ.(n.) கேடுடைய வழி; dangerous path. 2. கள்வரால் தீங்குநேரும் வழிக்காவலுக்கு அரசு பெறும் வரி; cess levied for protection from thieves (S.I.I.VIII, 214);. [கெடு + பாதை.] |
கெடுபிடி | கெடுபிடி keḍubiḍi, பெ.(n.) தடபுடல்(உ.வ.);; bustle, tumult hubbub. 2. விதிமுறைகள், கட்டளைகள் ஆகியவற்றை நிறைவேற்றுவதில் காட்டப்படும் கடுமை; severity in enforcement of order, regulations. கெடுபிடியான நடவடிக்கையால் கடத்தல் குறைந்துள்ளது (உ.வ.);. 3. தானாகச் செயல்பட முடியாத கட்டுப்பாடு; restriction, constraint, check. அப்பாவின் கெடுபிடியால் திரைப்படத்திற்குப் போக முடியவில்லை (உ.வ.);. 4. நெருக்குதல்; compulsion. வரிதண்டலில் (வசூலில்); இப்படிக் கெடுபிடி செய்தால் மக்கள் என்ன செய்வது? (உ.வ.);. மறுவ, கடுபிடி. தெ.,க.கலிபிலி; Mar.gadabadi, U.garbar. [கெடு +பிடி.] |
கெடுபுத்தி | கெடுபுத்தி keḍubutti, பெ.(n.) கெடுநினைவுபார்க்க;see kedu-ninaivu. [கெடு + புத்தி.] |
கெடுப்பவள் | கெடுப்பவள் keḍuppavaḷ, பெ.(n.) அழிப்பவள்; a woman who destroys. க. கெடகி.கெடிகெ,கெடுகி. [கெடு → கெடுப்பவள்.] |
கெடுப்பார் | கெடுப்பார் keḍuppār, பெ.(n.) அழிப்பவர், தீயவர்: those who do evil. கெடுப்பாரைத் தெய்வம் கெடுக்கும் (பழ.);. [கெடு + ப் + பார்.] |
கெடுப்பினை | கெடுப்பினை keḍuppiṉai, பெ.(n.) ஈயக் கனிமம், வங்கமணல்; lead Ore. [கெடு → கெடுப்பு → கெடுப்பினை.] |
கெடுமதி | கெடுமதி keḍumadi, பெ. (n.) 1. கெடுநினைவு பார்க்க;see kegu-ninavu. 2. தீயஅறிவுரை; evilcounsel. “அரும்பொருள் கவர்வ தாகக் கெடுமதி யுரைப்பார்” (திருவாத. பு.திருப்பெருந். 90);. [கெடு + மதி.] |
கெடும்பன் | கெடும்பன் keḍumbaṉ, பெ.(n.) 1. தீயவன்; wicked man. 2. பொறாமைக்காரன் (சேரநா.);; jealous man. ம. கெடும்பன்: க.கெடுக. து.கேடகெ, கடிங்கெ. [கெடும்பு + அன்.] |
கெடும்பு | கெடும்பு1 keḍumbu, பெ.(n.) 1.கேடு (சங்..அக.);; ruin, evil. 2. பொறாமை; jealousy. 3. தீய எண்ணம்; evilintention. 4.கெட்டமணம்,அழுகியதால்ஏற்படும்மணம்; rottenness, foul smell. ம. கெடும்பு; க. கெடுகு;தெ. செகுடி, செருகு து. கெடுகு, கெடகு. [கெடு → கெடும்பு.] கெடும்பு2 keḍumbu, பெ. (n.) சற்று முரடான புன்செய்நிலத்து அரிசி; a rough type of dry land rice. Jap. (katumbu → kempu);kome. [கடு-கடும்பு – கெடும்பு.] கெடும்பு keḍumbu, பெ.(n.) சாலி நெல்லின் அரிசி; a variety of rice. [கெழு-கெடு-கெடும்பு] |
கெடுவளம் | கெடுவளம் keḍuvaḷam, பெ.(n.) வளம்குன்றிய நிலம் (சேரா.);; Unfertile soil. ம. கெடுவளம். [(கெடு + வளம்.] |
கெடுவான் | கெடுவான் keḍuvāṉ, பெ.(n.) ஓர் இகழ்ச்சிமொழி; a term of reproach. கெடுவான் சொல்வதெல்லாம் பொய்.. கெடுவான் கேடு நினைப்பான். [கெடு → கெடுவான்.] |
கெடுவாய் | கெடுவாய் keḍuvāy, பெ.(n.) இகழ்ச்சியாகச் சொல்லும் சொல்; a term of reproach. ‘கெடுவாய் வகுத்த விஷயத்திலன்றோ நாங்கள் நெஞ் சிழந்தது (ஈடு 2.1:7);. [கெடு + கெடுவாய்.] |
கெடுவி | கெடுவி keḍuvi, பெ.(n.) ஓர் இகழ்ச்சிமொழி; A term of reproach. ‘கெடுவிகாள்! நானன்றோ இவ் விஷயத்துக்கு யோக்யனாய் உங்களுக்கு உபதேசிக்கும்படியானேன்’ (திவ்.பெரியதி.1.1:8 வியா.ப.44);. [கெடு(கெடுவான்); → கெடுவி.] |
கெடுவிடம் | கெடுவிடம் keḍuviḍam, பெ.(n.) 1. அதிகாரத்திற்கு உட்பட்ட இடம்; jurisdiction, region under authority. 2. கள்ளர் முதலியகொடியோர் கூடும் இடம்; notorius place, as a haunt or rendezvous of robbers. [கெடு + இடம்.] |
கெடுவு | கெடுவு keḍuvu, பெ.(n.) தவணை; fixedtime, instalment. ம.க., து.கடு;தெ.கடுவு. [கடு → கடுவு → கெடுவு.] |
கெடுவை-த்தல் | கெடுவை-த்தல் keḍuvaittal, 4 செ.குன்றாவி.(v.t.) நாள் குறித்தல்; To fix a date. [கெடு + வை-.] |
கெடை | கெடை keḍai, பெ.(n.) மூங்கில் (இ.வ.);; bamboo. க. கெடெ;தெ.கட. [கழை → கெழை → கெடை (கொ.வ.);.] |
கெடைகட்டியாடுத-ல் | கெடைகட்டியாடுத-ல் geḍaigaḍḍiyāḍudal, 5 செ.கு.வி.(v.i) கழைக்கூத்தாடுதல்(இ.வ.);; toperform acrobatic feats on a bamboo pole. [கெடை + கட்டியாடு-.] |
கெடைக்கட்டு | கெடைக்கட்டு keḍaikkaḍḍu, பெ.(n.) எலும்பு முறிவுக்கு,மூங்கிற்பத்தையைவைத்துக்கட்டும்கட்டு; application of a bamboo splint in a case of fracture of bones. [கழை → கெடை + கட்டு.] |
கெட்ட | கெட்ட keṭṭa, பெ.எ. (adj.) 1. அழிந்த; bad, ruined. ‘கெட்டகுடியேகெடும்’ (பழ.);. 2. தீமைவிளைவிக்கிற; harmful. கெட்டபழக்கத்திற்கு அடிமையாகிவிடாதே. 3. தவறான; mistaken. உனக்கு என்ன கெட்ட நேரமோ? 4. ஒழுக்கமிடல்லாத; evil; bad conduct. உனது கெட்ட நண்பனே இந்த நிலைக்குக் காரணம். 5. மோசமான; obnoxious. இந்தக் கெட்ட நாற்றம் எங்கிருந்து வருகிறது. 6. பதனழிந்த; spoiled. 7. அணைந்த(விளக்கு);; havingbecomeextinguished 8. காணாமல் போன. இல்லாமலான; lost, absent. ம. க..,குட.,து.,பட.கெட்ட:தெ.செட்ட. செடு, Gk. Kakos. Laos. hai-Ahom.khyā; Toungh-tem. Kay:Talaim vmon.hakha; Kumi.haulo; Kungcheng bung. Cuttko; Gyami.hoñtimyà; Basq.gaizto, cesto. [கெடு → கெட்ட.] |
கெட்ட கண் | கெட்ட கண் geṭṭagaṇ, பெ.(n.) 1. கொள்ளிக் கண்; evil eye. 2. குருட்டுக் கண்; Blind eye. [கெட்ட + கண்.] |
கெட்ட காரியம் | கெட்ட காரியம் keṭṭakāriyam, பெ.(n.) கெட்ட செயல் பார்க்க;see ketta-Seyal. ம.கெட்டகார்யம். [கெட்ட + காரியம்.] |
கெட்ட காலம் | கெட்ட காலம் keṭṭakālam, பெ.(n.) தீய நேரம்: Inauspicious time, bad time. ம.கெடுகாலம். [கெட்ட + காலம்.] |
கெட்ட குடும்பம் | கெட்ட குடும்பம் geḍḍaguḍumbam, பெ.(n.) கெட்ட குடி பார்க்க;see ketta-kudi. [கெட்ட + குடும்பம்.] |
கெட்ட நிலை | கெட்ட நிலை keṭṭanilai, பெ.(n.) பிசகான நிலை; malposition as of intestines, uterus [கெட்ட + நிலை.] |
கெட்ட மூக்கு | கெட்ட மூக்கு keṭṭamūkku, பெ.(n.) மூளி மூக்கு; deformed nose. [கெட்ட + மூக்கு.] |
கெட்டகுடி | கெட்டகுடி geḍḍaguḍi, பெ.(n.) நன்கு வாழ்ந்து, பின் தாழ்ந்த போன குடும்பம்; The famil yonce rich but now poor. ‘பட்டகாலிலேபடும்கெட்டகுடியேகெடும்’ (பழ.);. [கெட்ட + குடி.] |
கெட்டகுணம் | கெட்டகுணம் geṭṭaguṇam, பெ.(n.) தீயபண்பு; bad character, evil nature. க. கெட்ட கொண;து. கெட்டகுண. [கெட்ட + குணம்.] |
கெட்டகேடு | கெட்டகேடு keṭṭaāṭu, பெ.(n.) 1.தாழ்நிலையைக் குறிக்கும் ஓர் இழிச்சொல்; A term of contempt implying utter degradation or destitution. நீ கெட்ட கேட்டுக்கு உனக்கு எண்ணெயும் வேண்டுமா? 2. அதிகக் கே; High blemish. [கெட்ட + கேடு.] |
கெட்டகேட்டுக்கு | கெட்டகேட்டுக்கு keṭṭaāṭṭukku, வி.அ. (adv.) இகழ்ச்சியாக இருக்கும் மோசமான நிலை; a term used derisively to contrast what one desires with what one deserves. இந்த ஊர் கெட்டகேட்டுக்கு விளையாட்டு அரங்கம் வேறா?. |
கெட்டகோபம் | கெட்டகோபம் keṭṭaāpam, பெ.(n.) கெட்ட சினம் பார்க்க;see keta-sinam. அவருக்குக்கெட்டகோபம் வரும். [கெட்ட + கோபம்.] |
கெட்டசமயம் | கெட்டசமயம் keṭṭasamayam, பெ.(n.) கெட்டநேரம் பார்க்க;see ketta-nēram. [கெட்ட + சமயம்.] |
கெட்டசினம் | கெட்டசினம் keṭṭasiṉam, பெ.(n.) கட்டுப்படுத்த முடியாத சினம்;seething rage. [கெட்ட + சினம்.] |
கெட்டசெயல் | கெட்டசெயல் keṭṭaseyal, பெ.(n.) 1. அழிவைத்தரும் அல்லது இழைப்பைத் தரும் செயல்; activity leading to loss. guin. 2. தீய செயல்; bad deed, ம. கெடுகாரியம். [கெட்ட + செயல்.] |
கெட்டணை | கெட்டணை keṭṭaṇai, பெ.(n.) இறுகும்படி கெட்டியாதல்; ramming, beating down. [கட்டி → கெட்டி → கெட்டணை.] |
கெட்டதனம் | கெட்டதனம் keṭṭadaṉam, பெ.(n.) கெட்ட நடத்தை பார்க்க;see ketta-nadattai. க. கெட்டதன. கெடுகுதன;தெ. செட்டதனமு து. கெட்டதன. [கெடு → கெட்ட + தனம்.] |
கெட்டநகம் | கெட்டநகம் geṭṭanagam, பெ.(n.) சொத்தை உகிர் (நகம்);: bad nail. [கெட்ட + நகம்.] |
கெட்டநடத்தை | கெட்டநடத்தை1 keḍḍanaḍattai, பெ.(n.) இருமணப் பெண்டிர்: prostitution or loose morality especially in women. [கெட்ட + நடத்தை.] கெட்டநடத்தை2 keḍḍanaḍattai, பெ.(n.) தீயொழுக்கம்; bad, immoral conduct. க., து. கெட்ட நடதெ. [கெடு → கெட்ட + நடத்தை.] |
கெட்டநடவடிக்கை | கெட்டநடவடிக்கை keḍḍanaḍavaḍikkai, பெ.(n.) தீய செயல்; wrong actions. ம.கெடு நடவடிக்கை. [கெட்ட + நடவடிக்கை.] |
கெட்டநடை | கெட்டநடை keḍḍanaḍai, பெ.(n.) கெட்ட நடத்தை2 பார்க்க;see ketta-nagdattai [கெட்ட + நடை.] |
கெட்டநாக்கு | கெட்டநாக்கு keṭṭanākku, பெ.(n.) தீய நாக்கு; evil tongue. மறுவ, கருநாக்கு. [கெட்ட + நாக்கு.] |
கெட்டநாற்றம் | கெட்டநாற்றம் keṭṭanāṟṟam, பெ.(n.) தீய நாற்றம்; முடை நாற்றம்; bad, offensive, stench obnoxious smell. [கெட்ட + நாற்றம்.] நாறு → நாற்றம்..பழந்தமிழில்நாற்றம் நறுமணத்தையே குறித்தது. இக்காலத்தில் இழிபொருளைக் குறிப்பதாயிற்று. |
கெட்டநேரம் | கெட்டநேரம் keṭṭanēram, பெ.(n.) தீய நேரம்; bad time. inauspicious time. [கெட்ட + நேரம்.] |
கெட்டநோய் | கெட்டநோய் keṭṭanōy, பெ.(n.) 1. சிக்கலான நோய்; disease attended with complications. 2. கொடிய நோய்; amalignant disease. 3. பேரிடர் (அபாயமான); நோய்; dangerous disease. 4. பிறப்புறுப்புகளில் உண்டாகும்நோய் (மேக நோய்);; Venereal disease. 5. உயிர் பறிக்கும் கொள்ளை நோய்கள்: diseases such as cholera, small-pox, tuberculosis, consumption, plague, etc. மறுவ, கெட்டவியாதி. [கெட்ட + நோய்.] |
கெட்டனமல்லி | கெட்டனமல்லி keṭṭaṉamalli, பெ.(n.) திருவள்ளூர் மாவட்டத்துச் சிற்றூர்; A village in Tiruvallūr Dt. [குட்டு → கெட்டு (மேடு); → கெட்டன + (பள்ளி);மல்லி (கொ.வ.);.] |
கெட்டபல் | கெட்டபல் keṭṭabal, பெ.(n.) 1. சொத்தைப் பல்; disintegratedtooth. 2. நச்சுப்பல்; Teeth as a cause for uttering bad predictions which turn out to become true. கெட்ட + பல்.] |
கெட்டபழக்கம் | கெட்டபழக்கம் keṭṭabaḻkkam, பெ.(n.) தீயபழக்கம்; Bad habit. து.கெட்டப்பேச.,கெட்டப்பேசொ. [கெட்ட + பழக்கம்.] |
கெட்டபுத்தி | கெட்டபுத்தி keṭṭabutti, பெ.(n.) கெட்டவறிவுபார்க்க:see ketta-v-arivu. [கெட்ட + புத்தி.] கெட்டபெயர் பெ.(n.); கண்டிக்கத்தக்க நடத்தையில்கிடைக்கும்.அவப்பெயர்; badnamearlsing from reprehensible behaviour. உன்னால் நம் குடும்பத்துக்கே கெட்டபெயர். [கெட்ட + பெயர்.] |
கெட்டபேச்சு | கெட்டபேச்சு keṭṭapēccu, பெ.(n.) தீய பேச்சு; foul talk, insulting speech. க. கெட்ட நுடி: து.கெட்டபாதெர;பட, கெட்டமாது. [கெடு → கெட்ட + பேச்சு.] |
கெட்டபேர் | கெட்டபேர் keṭṭapēr, பெ.(n.) கெட்ட பெயர் பார்க்க:see ketta-peyar. [கெட்ட + பெயர் → பேர்.] |
கெட்டமனம் | கெட்டமனம் keṭṭamaṉam,1313பெ.(n.) தீய மனம்; bad mind. |
கெட்டம் | கெட்டம் keṭṭam, பெ.(n.) தாடி; Beard. க.,,து.,பட.கட்ட;.தெ.கட்டமு. Skt. ganda [கட்டை : முகவாய்க்கட்டை → கட்டை → கட்டம் → கெட்டம்(கொ.வ.);.] |
கெட்டரத்தம் | கெட்டரத்தம் keṭṭarattam, பெ.(n.) தூய்மையற்ற குருதி; dark coloured blood, oozing out from a wound. க.கெட்டரக்த; து.கேட்நெத்தரு;பட.கெட்டநெத்தரு. [கெட்ட + அரத்தம்.] |
கெட்டலை-தல் | கெட்டலை-தல் keṭṭalaidal, 2 செ.கு.வி. (v.i.) நிலைகெட்டுத் திரிதல்; To goastray, lead the life of a vagabond. [கெடு → கெட்டு + அலை-.] |
கெட்டழி-தல் | கெட்டழி-தல் keṭṭaḻidal, 2. செ.கு.வி. (v.i.) 1. ஆண் பெண்கள் பாத்தமையால் ஒழுக்கம் கெடுதல்; to become loose in morals. 2. வீண் செலவினால் நிலைமை கெடுதல்; To be ruined by extravagant expenditure. [கெடு → கெட்டு + அழி-.] |
கெட்டவன் | கெட்டவன் keṭṭavaṉ, பெ.(n.) 1. தீயொழுக்க முள்ளவன்; A mischiefmaker,a,bad,wicked, mean man. 2. முன்பு நன்னிலையிலிருந்து பின்னர்த் தாழ்ந்தவன்; one degraded from higher position. க.கெடுக;தெ.கட்டுவாடு:பட.கெட்டம. Pkt. Kontha. [கெடு → கெட்ட + அவன்.] |
கெட்டவயிறு | கெட்டவயிறு keṭṭavayiṟu, பெ.(n.) செரியாமை அல்லது வேறு காரணங்களால் கோளாறடைந்த வயிறு; disorder of stomach due to indigestion or other causes. [கெட்ட + வயிறு.] |
கெட்டவறிவு | கெட்டவறிவு keṭṭavaṟivu, பெ.(n.) தீய வறிவு; crooked mindedness, wickedness. ம.கெடுமதி. [கெட்ட + அறிவு.] |
கெட்டவள் | கெட்டவள் keṭṭavaḷ, பெ.(n.) 1.தீயொழுக்கமுள்ளவள்; a bad, immoral woman. 2. கேடு அடைந்தவள்; a woman who is ruined. க.கெடுதி: து. கெட்டபசாரி;பட.கெட்டவ. [கெடு → கெட்ட + அவள்.] |
கெட்டவழி | கெட்டவழி keṭṭavaḻi, பெ.(n.) தீய வழி: Evil way. க.கெடுவட்டெ,கெட்டதாரி. [கெட்ட + வழி.] |
கெட்டவாடி | கெட்டவாடி keṭṭavāṭi, பெ.(n.) ஈரோடுமாவட்டத்துச் சிற்றூர்; A village in Erode Dt. [கட்டி → கெட்டி + பாடி – கெட்டிபாடி → கெட்டவாடி (கொ.வ.);.] |
கெட்டவாரி | கெட்டவாரி keṭṭavāri, பெ.(n.) நெல்வகை (மதி.கள.I.6);; a kind of paddy. [கெடு → கெட்ட → வாரி.] |
கெட்டவார்த்தை | கெட்டவார்த்தை keṭṭavārttai, பெ.(n.) திட்டுவதற்கு மட்டும் பயன்படுத்துகிற இழிசொல்; dirty obscene language. கெட்ட வார்த்தை சொல்லியா திட்ட வேண்டும். [கெட்ட + வார்த்தை.] மறுவ. கெட்டசொல். இழிசொல். |
கெட்டவியல்பு | கெட்டவியல்பு keṭṭaviyalpu, பெ.(n.) தீயபண்பு; Immoral character. [கெட்ட + இயல்பு.] |
கெட்டவியாதி | கெட்டவியாதி keṭṭaviyāti, பெ.(n.) கெட்ட நோய் பார்க்க;see ketta-noy [கெடு → கெட்ட + வியாதி. Skt.] |
கெட்டவிரல் | கெட்டவிரல் keṭṭaviral, பெ.(n.) குருதியோட்டம் குறைந்து வெண்ணிறமடைந்த விரல்; dead finger. [கெட்ட + விரல்.] |
கெட்டவுடம்பு | கெட்டவுடம்பு keḍḍavuḍambu, பெ.(n.) பெண் நோயினால் சீரழிந்தவுடம்பு; System degenerated by venereal or syphilitic disease. [கெட்ட + உடம்பு.] |
கெட்டவுருவம் | கெட்டவுருவம் keṭṭavuruvam, பெ.(n.) குற்றமுடைய உருவம்; a deformed figure, monstrous figurе. க.கெட்டொடல். [கெட்ட + உருவம்.] |
கெட்டவெண்ணம் | கெட்டவெண்ணம் keṭṭaveṇṇam, பெ.(n.) தீய எண்ணம்; evil, bad thought. [கெட்ட + எண்ணம்.] |
கெட்டவேலை | கெட்டவேலை keṭṭavēlai, பெ.(n.) தீயபணி; an evil deed. க. து. கெட்டகெலச. [கெட்ட + வேலை.] |
கெட்டவேளை | கெட்டவேளை keṭṭavēḷai, பெ.(n.) 1. தீய காலம்; inauspicious time. 2. பொல்லாங்கான காலம்; adverse time or times. 3. காலமல்லாக் காலம்; in opportune time. [கெட்ட + வேளை.] |
கெட்டாகுளம் | கெட்டாகுளம் keṭṭākuḷam, பெ.(n.) நெய்வேலி வட்டத்துச் சிற்றூர்; A village in Neyveli Tk. [கட்டி → கெட்டி + குளம் – கெட்டி குளம் → கெட்டாகுளம்.] |
கெட்டாகெட்டி | கெட்டாகெட்டி keṭṭākeṭṭi, பெ.(n.) கெட்டாரகெட்டி பார்க்க;see kettara-ketti. [கெட்டாரகெட்டி → கெட்டாகெட்டி.] |
கெட்டான் | கெட்டான் keṭṭāṉ, வி.மு.(adv.) சிறந்த எடுத்துக்காட்டையும் மிஞ்சும் வகையில் ஒன்று இருப்பதாகக் கூறும்போது சிறந்த எடுத்துக்காட்டே தன்மையில் குன்றிவிட்டது என்பதைத் தெரிவிக்கப் பயன்படுத்துவது; when the thing compared excels the best example it is used to indicate that the original is devalued; go one better than the best; outdo. உன் திருடன் ஒப்பனை (வேஷம்); நன்றாக உள்ளது. உண்மைத்திருடன் கெட்டான்!. [கெடு + ஆன்.] |
கெட்டாரகெட்டி | கெட்டாரகெட்டி geṭṭārageṭṭi, பெ.(n.) 1. மிகுதிறன்; great ability, consummate skill. 2. வலிமை பொருந்தியவன்; person of great ability.or skill. க. கெட்டாரகெட்டி. [கட்டாரம் → கெட்டாரம் + கெட்டி.] |
கெட்டி | கெட்டி1 keṭṭittal, 4 செ.குன்றாவி.(v.t.) 1. நிலம் முதலியவற்றைக் இறுக்கப்படுத்துதல்; to harden, strengthen, make firm. 2. துமுக்கி (துப்பாக்கி);யில் மருந்திட்டுக் கெட்டிப்படுத்துதல்; Charge or load a fireагm. [கட்டி → கெட்டி.] கெட்டி2 keṭṭi, பெ.(n.) 1. உறுதி; firmness, strength, hardness, durability. 2. இறுக்கம்; denseness, as of a liquid. 3. திறமை; cleverness, ability, skill. 4. வலியவன்; man of ability or skill, clever person. 5. உரத்த குரல்; loudness, as of tone. கெட்டியாய்ப் படிக்கிறான். 6.அழுத்தம்; profundity, soundness. கெட்டிப்படிப்பு. 7. திண்மை: thickness. அழைப்பிதழைக் கெட்டித்தாளில் அச்சடிக்க வேண்டும். 8. நீடித்த தன்மையுடையது; long lasting. அவருக்கு ஆயுள் கெட்டி. க., தெ., பட. கட்டி. Mar. gatti. [கட்டி → கெட்டி.] கெட்டி3 keṭṭi, இடை.(int.) மிக நன்று; welldone,bravo. “கெட்டியையா நல்லதென்பார்” (பணவிடு.19); [கட்டி → கெட்டி.] |
கெட்டிக் காப்பு | கெட்டிக் காப்பு keṭṭikkāppu, பெ.(n.) பெண்கள் கால்களில் அணியும் அணிகலன் வகை; anklet. [கட்டி+கெட்டி+காப்பு] [P] |
கெட்டிக்கட்டடம் | கெட்டிக்கட்டடம் keḍḍikkaḍḍaḍam, பெ.(n.) கருங்கல், அல்லது செங்கற்களால் கட்டப்பட்ட கட்டடம்; building made of brick or stone. [கெட்டி + கட்டடம்.] |
கெட்டிக்காப்பு | கெட்டிக்காப்பு keṭṭikkāppu, பெ.(n.) வெள்ளி அல்லது தங்கத்தாலான உட்டுளை இல்லாது.இறுகிய காப்பு; Bracelet or anklet of solid gold or silver. [கெட்டி + காப்பு.] [P] கெட்டிக்காப்பு கா = காப்பு. தீயன அணுகாது காக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அணியப்படும் அணிகலன் காப்பு எனப்பட்டது. வீட்டு முற்றத்தில் காப்புக்கட்டுவது போன்றனவும் இந் நம்பிக்கையின் அடிப்படையே. |
கெட்டிக்காரன் | கெட்டிக்காரன் keṭṭikkāraṉ, பெ.(n.) 1. திறமையானவன்; clever, active man. வேலையில் மிகவும் கெட்டிக்காரன் (உ.வ.);. 2. துணிச்சல்மிக்கவன்; a braveman. ‘கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளில் தெரியும்’ (பழ.);. தெ. கட்டிவாடு, கட்டுவகாடு. [கட்டி → கெட்டி + காரன்.] |
கெட்டிக்காரி | கெட்டிக்காரி keṭṭikkāri, பெ.(n.) திறமையுள்ளவள்; capablewoman. [கட்டி → கெட்டி + காரி.] |
கெட்டிக்குடல் | கெட்டிக்குடல் keḍḍikkuḍal, பெ.(n.) கழிச்சல் எளிதல் ஆகாக் கல் குடல்; hard bowels not easily movedby purgatives [கெட்டி + குடல்.] |
கெட்டிக்குரல் | கெட்டிக்குரல் keṭṭikkural, பெ.(n.) உரத்தஒலி; loud cry பெ.(n.); [கெட்டி + குரல்.] கெட்டிக்கொலுசு தங்கத்தால் அல்லது வெள்ளியால் ஆன உட்டுளை இல்லாத [P] கெட்டிக்கொலுசு கொலுசு; chain, bracelet or anket of solid gold or silver. [கெட்டி + கொலுசு.] |
கெட்டிசாவி | கெட்டிசாவி keṭṭicāvi, பெ.(n.) கெட்டித்திறவுகோல் பார்க்க;see ketti-t-tiravu-köl. மறுவ, கெட்டித்திறப்பு. [கெட்டி + சாவி.] |
கெட்டிசேயூர் | கெட்டிசேயூர் keṭṭicēyūr, பெ.(n.) ஈரோடு மாவட்டத்துச் சிற்றூர்; a village in Erode Dt. [கட்டி → கெட்டி + சேய் + ஊர்.] |
கெட்டிச்சாயம் | கெட்டிச்சாயம் keṭṭiccāyam, பெ.(n.) அழுத்தமான எளிதில் மாறாத சாயம்(உ.வ.);; fastcolour. [கெட்டி + சாயம்.] |
கெட்டிதளவாய் | கெட்டிதளவாய் keṭṭidaḷavāy, பெ.(n.) கட்டபொம்மு வழிமுறையில் இருபத்து நான்காவது அரசன்; twenty fourth chieftain of Kattabommu’s lineage. [கெட்டி + தளவாய்.] |
கெட்டித்தனம் | கெட்டித்தனம் keṭṭittaṉam, பெ.(n.) 1. திறமை; cleverness, dexterity, capability. 2. செட்டு; economy, thrift. [கெட்டி + தனம்.] |
கெட்டித்தன்மை | கெட்டித்தன்மை keṭṭittaṉmai, பெ.(n.) இறுகலான தன்மை; toughness. [கெட்டி + தன்மை.] |
கெட்டித்தயிர் | கெட்டித்தயிர் keṭṭittayir, பெ.(n.) உறைந்த தயிர்; curdled milk. மறுவ. கட்டித்தயிர். [கெட்டி + தயிர்.] |
கெட்டித்திறவுகோல் | கெட்டித்திறவுகோல் keṭṭittiṟavuāl, பெ.(n.) உட்டுளையில்லாத திறவுகோல்; solid key. மறுவ. கெட்டிச்சாவி. [கெட்டி + திறவு + கோல்.] |
கெட்டித்தீர்வை | கெட்டித்தீர்வை keṭṭittīrvai, பெ.(n.) சோளம் முதலிய தவசங்கள் விளையும் நிலங்களுக்குரிய வரி (R.I.);: assessment payable on lands cultivating certain superior kinds of dry grain, e.g., cholam, ragi, etc. [கெட்டி + தீர்வை,] |
கெட்டித்தேன் | கெட்டித்தேன் keṭṭittēṉ, பெ.(n.) இறுகிய தேன்; Thick honey. [கெட்டி + தேன்.] |
கெட்டிபண்ணு-தல் | கெட்டிபண்ணு-தல் keṭṭibaṇṇudal, பெ.(n.) 5.செ.குன்றாவி. (v.t.); 1. நிலம் முதலியவற்றை உறுதியாக்குதல்; to make firm. harden. 2.மருந்துமுதலியவற்றைஇறுகச் செய்தல்; To solidity, as liquid medicines. [கெட்டி + பண்ணு-.] |
கெட்டிபத்திரம் | கெட்டிபத்திரம் keṭṭibattiram, பெ.(n.) விழிப்பான கேட்பாடு(சாக்கிரதையானவிசாரணை);; delicateenquiry. [கெட்டி + பத்திரம்.] |
கெட்டிபொம்மு | கெட்டிபொம்மு keṭṭibommu, பெ.(n.) கட்டபொம்முவினுடைய நான்காவது வழிமுறையினன்; the fourth chieftain of Kattabommu’s family. [கெட்டி + பொம்மு.] |
கெட்டிப்படு-தல் | கெட்டிப்படு-தல் keḍḍippaḍudal, 20 செ.கு.வி.(v.i.) இறுகுதல்; to become solid. [கெட்டி + படு-.] கெட்டிப்படுத்து-தல் 5 செ. குன்றாவி (v.t.); 1. திடப்பொருளாக்குதல்; bring to a solidstate. 2. கெட்டிபண்ணு-தல்பார்க்க;see ketti-p-pannu-. தெ. கட்டிசேயு. [கெட்டி + படுத்து-.] |
கெட்டிப்பணம் | கெட்டிப்பணம் keṭṭippaṇam, பெ.(n.) நாணயவகை; a kind of fanam, a coin. [கெட்டி + பணம்.] |
கெட்டிப்பல் | கெட்டிப்பல் keṭṭippal, பெ.(n.) இறுகிய பல்; Hard or firm tooth. [கெட்டி + பல்.] |
கெட்டிப்பாகு | கெட்டிப்பாகு keṭṭippāku, பெ.(n.) 1.தடித்தவெல்லம்; a thick treacle made out of jaggery. 2.சருக்கரைப் பாகு; Liquid form of sugar. [கெட்டி + பாகு.] |
கெட்டிப்பிள்ளை | கெட்டிப்பிள்ளை keṭṭippiḷḷai, பெ.(n.) திறமையான இளைஞன்; talented youngster. செட்டிப்பிள்ளை கெட்டிப்பிள்ளை (பழ.);. [கெட்டி + பிள்ளை.] |
கெட்டிமிளகு | கெட்டிமிளகு geṭṭimiḷagu, பெ.(n.) அழுத்தமுள்ள மிளகு; solid pepper. [கெட்டி + மிளகு.] |
கெட்டிமுலை | கெட்டிமுலை keṭṭimulai, பெ.(n.) 1. இறுகிய முலை; hard breast. 2. தளராத முலை; firm breast. [கெட்டி + முலை.] |
கெட்டிமூங்கில் | கெட்டிமூங்கில் keṭṭimūṅgil, பெ.(n.) கல் மூங்கில்; a variety of bamboo. [கெட்டி + மூங்கில்.] |
கெட்டிமேதிகம் | கெட்டிமேதிகம் geṭṭimētigam, பெ.(n.) புரசு; Palaus tree. [கெட்டி + மேதிகம்.] |
கெட்டிமேளம் | கெட்டிமேளம் keṭṭimēḷam, பெ.(n.) தாலி கட்டுகை முதலிய சிறப்புகள் நிகழும்போது முழக்கும் இசை முழக்கம்; simultaneous and rapid play of musical instruments at special moments, as when the tâsı is tied at a marriage. [கொட்டு → கொட்டி → கெட்டி + மேளம்.] |
கெட்டிமோர் | கெட்டிமோர் keṭṭimōr, பெ.(n.) தண்ணிர் கலக்காத மோர்; unadulterated butter-milk. [கெட்டி + மோர்.] |
கெட்டியா-தல் | கெட்டியா-தல் keṭṭiyātal, 6 செ.கு.வி.(v.i) இறுகுதல்; to become firm. முடிச்சைக் கெட்டியாகப் போடு (உ.வ.);. [கெட்டி + ஆ-.] |
கெட்டியாக | கெட்டியாக keṭṭiyāka, வி.அ.(adv) நழுவி வந்து விடாதபடி; இறுக்கி: உறுதியாக; tightly firmly, முடிச்சைக் கெட்டியாகப் போடு, குழந்தை பயந்துபோய் என் கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டது. |
கெட்டியாக்கு-தல் | கெட்டியாக்கு-தல் keṭṭiyākkudal, 5 செ.குன்றா. வி.(v.t.) இறுகச் செய்தல்; To bring firm tight. [கெட்டி ஆக்கு-.] |
கெட்டியுடம்பு | கெட்டியுடம்பு keḍḍiyuḍambu, பெ.(n.) 1. வலுவான உடம்பு; robustbody. 2. உழைப்பினால்இறுகியஉடம்பு; body hardened through labour. 3. இயல்பாகவே வலிவுள்ள உடம்பு; body naturally strong. 4. கற்ப உடம்பு: body invigorated by process of rejuvenation. [கெட்டி + உடம்பு.] |
கெட்டிவஞ்சி | கெட்டிவஞ்சி keṭṭivañji, பெ.(n.) 1. வைரவஞ்சி; iron wood tree. 2. சாவுக்கு; casuarina. [கெட்டி + வஞ்சி.] |
கெட்டிவராகன் | கெட்டிவராகன் keṭṭivarākaṉ, பெ.(n.) கட்டி வராகன்; a coin. [கெட்டி + வராகன்.] |
கெட்டிவாத்தியம் | கெட்டிவாத்தியம் keṭṭivāttiyam, பெ.(n.) கெட்டி மேளம் பார்க்க;see ketti-mělam. [கெட்டி + வாத்தியம்.] Skt. Vadya→ த. வாத்தியம். |
கெட்டு | கெட்டு keṭṭu, பெ.(n.) பக்கக்கிளை (யாழ்ப்.);; branch ofatree or bough. தெ. செட்டு;பட சில்லு. [கிளை → சிளை → சிள்ளு → தெ.செட்டு → த.கெட்டு.] கெட்டுப்போ-தல் 8 செ.கு.வி.(v.i.); 1. அழிதல்; to perish; to be ruined. 2.நைந்துபோதல்; to wear out 3.பதனழிதல்; to be spoiled. 4.அழுகிப்போதல்; To berotten, to decay. 5.ஒழுக்கங்கெடுதல்; to become bad, immoral. 6.வறுமையுறுதல்; to fall on evil days; to be reduced to straitened circumstances. அந்தக் குடும்பம் கெட்டுப் போயிற்று(உ.வ.);. 7. காணாமற்போதல்; to be lost, as goods (உ.வ.);. க.கெட்டுகோகு. [கெடு → கெட்டு + போ-.] |
கெட்டுப்போனவள் | கெட்டுப்போனவள் keṭṭuppōṉavaḷ, பெ.(n.) 1.கற்பழிந்ததனால் இனத்தினின்றுவிலக்கப்பட்டவள்; fallen, unchaste woman. பாலியல் தொழில் செய்பவள்; a woman practicing of prostitution, [கெட்டு + போன + அவள்.] கெட்டுவிடு-தல் 20 செ.கு.வி.(v.i.); கெட்டுப்போ-1,2பார்க்க;see kettu-p-po. [கெட்டு + விடு-.] கெட்டுவை-த்தல் 4 செ.கு.வி.(v.i.); கிளைவிடுதல் (யாழ்ப்.);; to send out branches, to ramify, branch out [கெட்டு + வை-. கெட்டு, கிளை.] |
கெட்டுவிடு-தல் | கெட்டுவிடு-தல் keṭṭuviṭutal, 20 செ.கு.வி. (v.i.) கிளை விடுதல்; to sent out branches; to ramify, branch out (செ.அக.);. [கெட்டு+விடு-தல்.] |
கெட்டெண்ணம் | கெட்டெண்ணம் keṭṭeṇṇam, பெ.(n.) கெடுநினைவு பார்க்க;see kedu-ninaivu. [கெட்ட + எண்ணம்.] |
கெட்டேன் | கெட்டேன் keṭṭēṉ, இடை.(int) இரக்கக்குறிப்பு: expr. meaning woe is me! “அருளியது வாயிற் கெட்டேன் பிழைப்பரோ வரக்கராயோர்” (கம்பரா.விபீடண.127);. [கெடு → கெட்டேன்.] யாவரும் நலம்பெற்று வாழ வேண்டும் என்னும் என் கருத்துத் தோற்றது. நான் தோற்றேன் எனும் பொருளில் கெட்டேன் என்பது வியப்புக் குறித்த இடைச்சொல்லாயிற்று. கெட்டோடு-தல் 5 செ.கு.வி.(vi.); தோற்றோடுதல்; to turn away (toguest);. க.கெட்டோடு. [கெட்டு + ஒடு-.] |
கெணக்கு-தல் | கெணக்கு-தல் keṇakkudal, 5 செ.குன்றாவி.(v.t.) நோண்டுதல்.எரிச்சல்படுத்துதல்: to iritate. Prove by words or deeds. க.கெனகு; தெ. செனகு, செணுகு;து. கெனகுனி, கெண்குணி, கெனகுனி. [கிண் → கிண்டு → கெண்டு → கெணக்கு.] |
கெணசங்கியாபாகம் | கெணசங்கியாபாகம் keṇasaṅgiyāpākam, பெ.(n.) கணசங்கியாபாகம் பார்க்க;see {}. |
கெணிகாயம் | கெணிகாயம் keṇikāyam, பெ.(n.) கலியான முருங்கை; thorny coral tree. [கிளி → .கிணி → கெணி + காயம்.] |
கெணிதம் | கெணிதம் keṇidam, பெ.(n.) 1. எரியணம் (சூடம்);; camphor. 2. வெற்றிலை; betel leaf. [கிளிதம் → கெணிதம்.] |
கெணை | கெணை keṇai, பெ.(n.) 1 கரும்பு; sugarcane – Saccharum officinarum. 2. கணநோய்; a kind of a trophy in children due to rickets ortabes mesenterica. 3. திப்பிலிக்கட்டை; the root of long-pepper, piper longum. 4. திரண்ட வடிவு; cylinderical shape, 5. கால்நடைகளுக்கு ஏற்படும் நோய், a disease attacking cattle (சா.அக.);. [கணு+கெனை.] |
கெண்டகச்சிலை | கெண்டகச்சிலை geṇṭagaccilai, பெ.(n.) கண்டகச்சிலை பார்க்க;see kandaka-c-cilai. |
கெண்டகாரணி | கெண்டகாரணி keṇṭakāraṇi, பெ.(n.) 1 சீவகமூலி; moon-creeperMenispermum Cordifolium. 2. சிவதை; turpeth root – Lpomasea turpethum (சா.அக.);. கெண்டகாரணி keṇṭakāraṇi, பெ.(n.) 1.சீவகமூலி: Moon creeper. 2. சிவதை; turpeth root. [கண்டை → கெண்டை + காரணி → கெண்டகாரணி.] |
கெண்டன் | கெண்டன் keṇṭaṉ, பெ.(n.) 1.மிண்டன்; robust, stout man. 2. முரடன்; One who is rough and tough. ம. கெண்டன்;க. கண்ட (வலியவன்);, தெ. கண்டு (வலிமை);. [குண்டன் → கெண்டன்.] |
கெண்டபேரண்டபட்சி | கெண்டபேரண்டபட்சி keṇṭapēraṇṭapaṭci, பெ.(n.) இருதலைப் பறவை; a monstrous and mythical two headed bird represented as holding an elephant or a serpent in its beak and in its claws (சா.அக.);. [கண்டம்→கெண்டம்+பேரண்டம்+ Skt. பட்சி] |
கெண்டம் | கெண்டம் keṇṭam, பெ.(n.) இக்கட்டான நிலை (ஆபத்து);, கெடுவாய்ப்பு; critical period. Skt. Ganda. க.கண்ட;தெ.கண்டமு. [கண்டம் → கெண்டம்.] |
கெண்டாநகரம் | கெண்டாநகரம் geṇṭānagaram, பெ.(n.) வேலூர் மாவட்டத்துச் சிற்றூர்; A village in Vēlur Dt. [கண்டன் (மிண்டன்); → கெண்டன் + நகரம் – கெண்டநகரம் → கெண்டாநகரம்(கொ.வ.);.] |
கெண்டி | கெண்டி1 keṇṭittal, செ.குன்றாவி(v.t.) 1.கடிந்து கூறுதல்; to reprove, chide. 2. முடிவு கட்டிப் பேசுதல் (வின்.);; to speak with decision, precision. 3. துண்டித்தல் (திவா.);; to chop, mince, slash, cut into pieces. 4. பகிர்தல் (வின்.);; to divide, parcel. 5. பருத்தல்; to grow fat. ஆள் நன்றாய்க் கெண்டித்திருக்கிறான் (உ.வ.);. [கண்டி → கெண்டி.] கெண்டி2 keṇṭi, பெ.(n.) கெண்டிகை பார்க்க;see kendigai. நாளதினாலே கொடுத்த பொன்னின் கெண்டி ஒன்று (S.I.I.II.3);. பட. கிண்டி. [கெண்டிகை → கெண்டி.] கெண்டி3 keṇṭi, பெ.(n.) வெட்டப்பட்ட துண்டு (யாழ்.அக.);; Portion which is cut. [கண்டி → கெண்டி.] கெண்டி4 keṇṭi, பெ.(n.) மூக்குள்ள செம்பு; a pot with a spout. “நாளதினாலெய் குடுத்த பொன்னின் கெண்டி ஒன்று மேற்படி கல்லால் நிறெ இருநூற்றெண்பது” (தெ.இ.கல்.தொ.llகல்.1 (1 இராசராசன்.2 காலம்கி.பி.985-1014);. [கிண்ணி → கிண்டி → கெண்டி.] |
கெண்டிகானூர் | கெண்டிகானூர் keṇṭikāṉūr, பெ.(n.) தருமபுரி மாவட்டத்துச் சிற்றூர்; a village in Dharmapuri Dt. [கண்டன் → கெண்டன் → கெண்டகன் → கெண்டிகான் + ஊர்.] |
கெண்டிகை | கெண்டிகை geṇṭigai, பெ.(n.) கமண்டலம்(திவா.);; pot with a spout, pitcher. பட.கிண்டி; Skt..kundika. [குண்டிகை → கண்டிகை → கெண்டிகை.] |
கெண்டிக்கல் | கெண்டிக்கல் keṇṭikkal, பெ.(n.) சில்லுச்செங்கல் உடைந்த செங்கல்; broken brick. [கண்டி-கெண்டி+கல்] |
கெண்டிச்செம்பு | கெண்டிச்செம்பு keṇṭiccembu, பெ.(n.) மூக்குள்ள செம்புவகை; A pot with a spout. [கெண்டி செம்பு.] [P] கெண்டிச் செம்பு |
கெண்டிரச்சேரி | கெண்டிரச்சேரி keṇṭiraccēri, பெ.(n.) காஞ்சிபுரம் மாவட்டத்துச் சிற்றூர்; a village in Kanjipuram Dt. [கண்டீரன் → கெண்டிரன் + சேரி – கெண்டிரச்சேரி (கொ.வ.);.] |
கெண்டிவாய் | கெண்டிவாய்1 keṇṭivāy, பெ.(n.) ஏனத்தில் நீண்டுள்ள வாய்; the projecting mouth of a vessel. 2. கெண்டி மூக்கு; spout of a pot. [கெண்டி + வாய்.] கெண்டிவாய்2 keṇṭivāy, பெ.(n.) கோடரிவெட்டு; incision or gash in which the axe works in cutting a tree. [கெண்டி + வாய்.] |
கெண்டு | கெண்டு1 keṇṭudal, 5 செ.குன்றாவி(v.t.) 1. தோண்டுதல்; to dig. “கவலை கெண்டிய கல்வாய்” (குறுந் 233);. 2. அறுத்துத் தின்னுதல்: to cut and eat. “‘மன்றத்துமதவிடைகெண்டி” (பெரும்பாண்.143);. 3. கிண்டுதல்; to work in, as a bee gathering honey in flowers. “வண்டு கெண்டி மருவும் பொழில்” – (தேவா.626:10);. 4. வருந்துதல்; to feel sad. [கிண்டு → கெண்டு.] கெண்டு2 keṇṭudal, 5.செ.கு.வி.(v.i.) வருந்துதல்; to be distressed. “கெண்டிக் கெழுதகைமை யில்லேன் கிடந்தூட” (யாப்.வி. பக்.351);. [கெண்டை → கெண்டு.] கெண்டு3 keṇṭu, பெ.(n.) கெண்டைச் சதை; calf muscle. [கெள் → கெண்டு.] கெண்டு4 keṇṭu, பெ.(n.) கெண்டை1 பார்க்க (யாழ்.அக.);;see kendai. [கெண்டை → கெண்டு.] |
கெண்டூரம் | கெண்டூரம் keṇṭūram, பெ.(n.) 1. ஒரு வயிற்றுப் போக்கு மருந்து; a purgative. 2. பாம்புகொல்லி (சித்.அக.);; rue. [கண்டூரம் → கெண்டூரம்.] |
கெண்டை | கெண்டை1 keṇṭai, பெ.(n.) 1. நன்னீரில் வாழும் சேல். மீன்; a fresh-waterfish, “கெண்டைபோனயனத்தி” [P] கெண்டை மீண் ‘கெண்டையைப் போட்டு விறாலை இழுக்கிறது’ (பழ.);. 2.கெண்டைமீன் போன்ற கணைக்கால் (சதை);; that portion of the leg from the ankle to the knee. ம.கெண்ட; க.கெண்டெமீன்;தெ.கண்டெ.கெண்டெ. [கண்டு (திரட்சி); → கண்டை → கெண்டை.] வகைகள் : 1. பருத்திக்கெண்டை, 2. மோரான் கெண்டை, 3.பாற்கெண்டை,, 4.பேராண் கெண்டை. கெண்டை2 keṇṭai, பெ.(n.) 1. தோள்பட்டையின் முன்பக்கத்துச் சதை; biceps. 2. கெண்டைமீன் போன்ற கணைக்கால்; ankle, as carp-shaped. “கெண்டைத்தலனியக்கர்”(தணிகைப்பு.அகத்.488);. ம. கெண்ட; க. கண்டு (சந்து);; குட. கிண்ணி; து. கண்டு; Skt. ganda, gandu. [கண்டு → கண்டை → கெண்டை.] கெண்டை3 keṇṭai, பெ.(n.) கண்டை; gold or silver lace. ம. கெண்ட (கழுத்தணியாகப் பயன்படும் தாயத்து);. [கண்டை → கெண்டை.] கெண்டை4 keṇṭai, பெ.(n.) வயிற்றுக்கட்டி: enlargement of spleen. ம. கெண்ட;குட. கெண்டெ (மண்ணீரல்);. கெண்டை5 keṇṭai, பெ.(n.) ஏளனம்; ridicule, mockery, banter. துட.கீடி. Skt. khandana [கிண்டு → கிண்டை (கிண்டல்); → கெண்டை.] |
கெண்டைக்கட்டி | கெண்டைக்கட்டி keṇṭaikkaṭṭi, பெ.(n.) வயிற்றுக் கட்டி (சீவரட்.120);: enlargement of spleen. [கெண்டை + கட்டி.] |
கெண்டைக்காரல் | கெண்டைக்காரல் keṇṭaikkāral, பெ.(n.) மீன் வகை: a kind of fish. “உருக்கமுடைய கெண்டைக் காரல்” (பறாளை. பள்ளு.16);. [கெண்டை காரல்.] |
கெண்டைக்காரி | கெண்டைக்காரி keṇṭaikkāri, பெ.(n.) உரோம வேங்கை; East Indian Kino alias Indian dragon’s blood – Pterocarpus marsupium (சா.அக.);. |
கெண்டைக்கால் | கெண்டைக்கால் keṇṭaikkāl, பெ.(n.) கணைக்கால்: Leg from ankle to foot(calf of the leg);. [கெண்டை + கால்.] கெண்டைக்கால் keṇṭaikkāl, பெ.(n. முழங்காலுக்கும் பாதத்துக்கும் இடையிலிலுள்ள பகுதி; the portion between knee and foot. [கெண்டை+கால்] |
கெண்டைக்கால் ஊதை | கெண்டைக்கால் ஊதை keṇṭaikkālūtai, பெ.(n.) கெண்டைக்கால் வீங்கிக் கடுத்து வலியை உண்டாக்கும் ஓர் ஊதைநோய்; rheumatic pain or nervous complaint affecting the muscle of the calf (சா.அக.);. [கெண்டை + கால் + ஊதை.] |
கெண்டைக்கால்வாதம் | கெண்டைக்கால்வாதம் keṇṭaikkālvātam, பெ.(n.) கெண்டைக்கால் ஊதைபார்க்க;see kendai-k-kāl-udai. [கெண்டைக்கால் + (Skt.); வாதம்.);] |
கெண்டைக்குஞ்சு | கெண்டைக்குஞ்சு keṇṭaikkuñju, பெ.(n.) சிறிய மீன்; small carp. [கெண்டை1 + குஞ்சு.] |
கெண்டைக்கெளுத்தி | கெண்டைக்கெளுத்தி keṇṭaikkeḷutti, பெ.(n.) ஒரு வகை மீன்; a kind of fish. [கெண்டை + கெளுத்தி.] |
கெண்டைக்கை | கெண்டைக்கை keṇṭaikkai, பெ.(n.) தோளின்முன் பக்கத்துச் சதை; muscle of the arm just in front of the shoulder – biceps. [கெண்டை + கை.] |
கெண்டைச்சதை | கெண்டைச்சதை keṇṭaiccadai, பெ.(n.) கணைக் காலின் பின்புறத்துள்ள சதை; thick fleshy part of the leg behind and below the knee. [கெண்டை + சதை.] |
கெண்டைச்சதைக்கட்டி | கெண்டைச்சதைக்கட்டி keṇṭaiccadaikkaṭṭi, பெ.(n.) கெண்டைச் சதையிற் காணும் கட்டி; abscess of the calf. [கெண்டை + சதை + கட்டி.] |
கெண்டைநோய் | கெண்டைநோய் keṇṭainōy, பெ.(n.) வயிற்றுக் கட்டியால் வரும்நோய்வகை (இராட்.);; hypochondria, as caused by enlarged spleen. [கெண்டை + நோய்.] |
கெண்டைபுரட்டு-தல் | கெண்டைபுரட்டு-தல் keṇṭaiburaṭṭudal, 5 செ.கு.வி. (v.i.) பசி, நாவறட்சி முதலியவற்றால் கைகால்கள் வலித்திழுத்தல்; to have convulsions due to extreme hunger, thirst, etc. “திண்ணையுங் கெண்டை புரட்டுங் கல்யாணத்திற் சென்றவர்க்கே” (தமிழ்நா.190);. [கெண்டை + புரட்டு-.] |
கெண்டைப்பீலி | கெண்டைப்பீலி keṇṭaippīli, பெ.(n.) முகப்பில் கெண்டை வடிவமைந்ததாய்க் கால்விரலில் இடும் அணிவகை; women’s toe ring with face designed like carp. [கெண்டை + பீலி.] |
கெண்டைப்பொடி | கெண்டைப்பொடி keṇḍaippoḍi, பெ.(n.) கெண்டைக் குஞ்சு பார்க்க;see kendai-k-kunju. [கெண்டை + பொடி.] |
கெண்டையேறல் | கெண்டையேறல் keṇṭaiyēṟal, பெ.(n.) கைகால் குரக்கு வலித்தல்; spasm or cramps of the limbs. [கெண்டை + ஏறல்.] |
கெண்டைவலை | கெண்டைவலை keṇṭaivalai, பெ.(n.) சிறு மீன் களைப்பிடிக்கப்பயன்படும்வலை; a small fishing net used in catching small fishes. [கெண்டை + வலை.] |
கெண்டைவாங்கு-தல் | கெண்டைவாங்கு-தல் keṇṭaivāṅgudal, 5 செ.குன்றாவி, (v.t.) கைகால் குரக்கு வலித்தல்; spasm [கெண்டை + வாங்கு-.] |
கெண்டைவாதம் | கெண்டைவாதம் keṇṭaivātam, பெ.(n.) வலிப்பு நோய் வகை; rheumatic pain or spasm in the limbs. [கெண்டை + skt.வாதம்.] |
கெண்டைவியாதி | கெண்டைவியாதி keṇṭaiviyāti, பெ.(n.) கெண்டைநோய்பார்க்க;see kendai-noy. [கெண்டை + வியாதி.] |
கெண்டைவிழி | கெண்டைவிழி keṇṭaiviḻi, பெ.(n.) அழகான கண்; beautiful eyes. [கெண்டை + விழி.] |
கெண்டைவிழுந்தநோய் | கெண்டைவிழுந்தநோய் keṇṭaiviḻundanōy, பெ.(n.) அச்சத்தால் ஏற்படும் கட்டியைப் போன்ற ஒரு நோய்; an affection in the hypochondriac regionattended with exaggerated ideas as regards one’s health-hypochondriasis. [கெண்டை + விழுந்த + நோய்.] |
கெண்டைவூதை | கெண்டைவூதை keṇṭaivūtai, பெ.(n.) வலிப்பு நோய் வகை; rheumatic pain or spasm in the limbs. [கெண்டை + ஊதை.] |
கெண்ணை | கெண்ணை keṇṇai, பெ.(n.) எண்ணிக்கை; computation, reckoning. “அத்துவா சோதனை பண்ணு மிடத்துக் கெண்ணையில் அடங்காதாகையால்” (சித்.மரபுகண்.11); [கணி → கெணி → கெண்ணை (கொ.வ.);.] |
கெதங்கெதமெனல் | கெதங்கெதமெனல் kedaṅgedameṉal, பெ.(n.) அச்சக்குறிப்பு; onom.expr.signifying palpitation of heart through fright. [கெதம்+கெதம்+எனல்.] |
கெதம் | கெதம் kedam, பெ.(n.) 1. அடைகை; reaching. 2.ஓட்டம்; movement, flow. 3.சென்றது; that which is past. [கதம் → கெதம்.] |
கெதானுகெதிகநியாயம் | கெதானுகெதிகநியாயம் gedāṉugediganiyāyam, பெ.(n.) கதானுகதிகநியாயம் பார்க்க;see {}. [Skt. gata-anu-gatika-{} → த.கெதானுகெதிகநியாயம்.] |
கெதாயு | கெதாயு ketāyu, பெ.(n.) வாழ்நாள் (ஆயுள்); முடிந்தவன்; one whose life is extint. “சமர் புரிந்தவன் றானுங் கெதாய வாயினை” (பாரத.பதினான்காம்.37);. |
கெதி | கெதி kedi, பெ.(n.) 1. நடை; motion, movement. 2.வழி; way, path. 3.விரைவு; Swiftness, rapidity. 4.புகலிடம்; refuge.. 5. துறக்கம்; heaven. 6. குதிரை நடை; pace of a horse. 7.உயிரெடுக்கும் பிறப்பு; stages of existence, through which the soul may pass, of which there are four. 8.நிலை; state, condition. அவன் கெதி என்னவாயிற்று? 9.ஆற்றல்; ability, means. கொடுக்கக் கெதியில்லை. 10.இயல்பு; nature, quality, character. 11. ஆகூழ் (அதிட்டம்);; luck, fortune. 12. படலம்; section, chapter. க.,தெ.கதி. [கதி → கெதி.] |
கெதிகெட்டநோய் | கெதிகெட்டநோய் gedigeṭṭanōy, பெ.(n.) தீரா நோய்; chronic or incurable disease. [கதி → கெதி + கெட்ட + நோய்.] |
கெதிகெட்டோடல் | கெதிகெட்டோடல் gedigeṭṭōṭal, பெ.(n.) நோய்கள் ஆதரவு அற்று உடம்பைவிட்டகலல்; getting away completely as diseases from the body. [கதி → கெதி+கெட்டு+ஒடல்.] |
கெதிநாடி | கெதிநாடி kedināṭi, பெ.(n.) தீவிரநாடி; accelerated pulse. [கெதி + நாடி.] |
கெதை | கெதை kedai, பெ.(n.) உப்புத்தடி; a stickmade of consolidated salt which is melted and cast in a mould. [கதை → கெதை.] |
கெதைப்பஞ்சவண்ணம் | கெதைப்பஞ்சவண்ணம் kedaippañjavaṇṇam, பெ.(n.) 1. ஐந்துவகை நிறம் கலந்த மாத்திரைக் கோல்; a magicwand made of consolidated salt exhibiting five colours by reflection. 2. ஊதை நோய்க்குப் பயன்படும் ஒரு வகைக் கட்டுப்பு; consolidated saltreflecting of five colours used for transmutation of metals in to gold. [கதை → கெதை → பஞ்ச + வண்ணம்.] |
கெத்தபரிவிருத்தி | கெத்தபரிவிருத்தி kettabarivirutti, பெ.(n.) கணிய சோதிட); வாய்பாட்டு வகை(வின்.);; the number of synodic revolutionsof a planet deducted as the first step in the use of the parivirutti tables த.வ. பரிப்பு வாய்பாடு. |
கெத்தமார் | கெத்தமார் kettamār, பெ.(n.) புளிப்புத் தன்மை கொண்ட மிகப் பெரிய காய்களையுடைய மரவகை; a mango tree that bears very big fruits sour in taste (செ.அக.);. [கெத்து+மார்] |
கெத்தாமார் | கெத்தாமார் kettāmār, பெ.(n.) கத்தாமார் பார்க்க (இ.வ.);;see {}. [U.{}+{} → த.கெத்தமார்.] |
கெத்திடு-தல் | கெத்திடு-தல் keddiḍudal, 19 செ.குன்றாவி..(v.t.) சில்லுபொல்லாய்வெட்டுதல்; to chop. [கெத்து + இடு-. செத்து → கெத்து.] |
கெத்தியகன் | கெத்தியகன் gettiyagaṉ, பெ.(n.) மூக்கறா; a medicinal root. [கெத்தி+அகன்.] |
கெத்து | கெத்து1 keddudal, 5 செ.குன்றாவி.(v.t.) 1. கீறிப் பிளத்தல்; to split asunder by driving in and turning the hatchet. 2. நறுக்குதல்; to chop, mince, cut off. 3. செதுக்குதல்; to chisel. 4. மீன் முதலியவை அறுத்தல்; to make an incision as in fish. க.,து,,பட.,கெத்து;தெ.செக்கு. [செத்து → கெத்து.] கெத்து2 keddudal, 5 செ.கு.வி.(v.i.) முட்டையிட்ட கோழி அடைகாக்கக்கத்துதல்(யாழ்ப்.);; to cackle, as a hen which has laid egg and seeks to sit on it for hatching. [கத்து + கெத்து.] [செ.ப.க அகரமுதலி குறிக்கும் “கோழி முதலியன கொக்கரித்தல்”என்னும் பொருள் வழுவாகும்(செ.ப.க.சீ.19.] கெத்து3 keddudal, 5 செ.குன்றாவி.(v.t.) 1. கிட்டிப்புள்ளை எற்றிவிடுதல்; to strike the stick in the game of tip-cat. 2. ஏமாற்றுதல்; to deceive, cheat. 3.பாதத்தின் முன்பகுதியை மட்டும் தரையில் ஊன்றி எம்புதல்; hop, skip. [எத்து → கெத்து.] கெத்து4 kettu, பெ.(n.) 1. சூழ்ச்சி (தந்திரம்);; wiles, tricks. “பொருளைக் கெத்திப் பற்றி” (திருப்பு. 1074);. 2. தந்திரமான பேச்சு; evasion, equivocation. தெ.கத்து; Mar.gataka. [எத்து → கெத்து.] |
கெத்துக்கெத்தெனல் | கெத்துக்கெத்தெனல் kettukketteṉal, பெ.(n.) 1. கோழி முதலியன எழுப்பும் ஒலிக்குறிப்பு; onom.expr. signifying chirping, cackling sound as of a hen. 2. அச்சக்குறிப்பு; onom.expr. signifying pit-a-pat, palpitation of heart through fright. க.கெத்து(நடுங்குதல்);. [கெத்து + கெத்து + எனல்.] |
கெத்துவேலைச்செம்பு | கெத்துவேலைச்செம்பு kettuvēlaiccembu, பெ.(n.) வேலைப்பாடுள்ள செம்பு (வின்.);; a copper pot of fine workmanship. [கொத்துவேலை + செம்பு.] |
கெத்தை | கெத்தை kettai, பெ.(n.) மயிர் (சங்.அக.);; hair. [கற்றை → கத்தை → கெத்தை.] |
கெந்தகக்கட்டு | கெந்தகக்கட்டு gendagaggaṭṭu, பெ.(n.) கெந்தகம் நெருப்புக்குப் புகைந்து ஓடாதபடி ஊதை முறையால் கந்தகத்தை நெருப்பிற்காட்டிச் செய்த கட்டிமருந்து; a lamp of sulphur consolidated by alchemical method. “தானென்ற கந்தகமோ கட்டிற் றானால் தட்டுமுதல் தாவரமும் பொன்னே யாகும்’ (கொங்.வாத.காவியம்.); [கெந்தகம் + கட்டு] இது எல்லா மாழைகளையும் பொன்னாக்கும். |
கெந்தகக்களங்கு | கெந்தகக்களங்கு gendagaggaḷaṅgu, பெ.(n.) போகர் எனும் சித்தர் கந்தகம், தங்கம் இவை இரண்டையும் சேர்த்துச்செய்த மருந்து; an alchemical compound of sulphur and gold prepared by Bogar, a Siddha. [கெந்தகம் + களங்கு.] |
கெந்தகக்கோலி | கெந்தகக்கோலி kentakakāli, பெ.(n.) தூம்பிரவாலி; an unknown plant(சா.அக.);. |
கெந்தகத்தைத்தைலமாக்கி | கெந்தகத்தைத்தைலமாக்கி kentakattaittailamākki, பெ.(n.) 1. காட்டுக்ருணை; a species of forest elephant-yam referred to in the siddhars science. 2. இரும்பிலி; box leaved satin ebony- Maba buxifolia. 3.ஒட்டொட்டி; a kind of grass with prickly seeds which stick to the clothes – Desmochacta attopurpurea. 4. சங்கங்குப்பி; smooth volkameri – Cleodendron inerme. 5. பேய்க் கடலை; bitter bengal gram (சா.அக.);. [கந்தகத்தை – கெந்தகத்தை+Skt. தைலம் + ஆக்கி] |
கெந்தகநரணி | கெந்தகநரணி kentakanaraṇi, பெ.(n.) பேரரத்தை; greater galangal – Alpinia galangal (சா.அக.);. |
கெந்தகநீர் | கெந்தகநீர் gendaganīr, பெ.(n.) கெந்தகம் கரைந்த நீர்; a mineral water containing sulphur in solution, sulphur water. 2. பனிக்குடத்து நீர்; amniotic fluid. [கந்தகம் → கெந்தகம் + நீர்.] |
கெந்தகபற்பம் | கெந்தகபற்பம் gendagabaṟbam, பெ.(n.) நலம் நல்கும் கந்தகப் பொடி; calcined oxide of sulphur, which gives good health. [கந்தகம் → கெந்தகம் + பற்பம்.] |
கெந்தகபூமி | கெந்தகபூமி gendagapūmi, பெ.(n.) காங்கையான நிலம்; Soil containing sulphur; hot climate, the heat being ascribed to sulphur in the soil. [கந்தகம் → கெந்தகம் → பூமி.] |
கெந்தகமாஞ்சில் | கெந்தகமாஞ்சில் kentakamāñcil, பெ.(n.) கெந்தகமாஞ்சிலி பார்க்க; seekendaga. Masjili (சா.அக.);. |
கெந்தகமீஞ்சிதம் | கெந்தகமீஞ்சிதம் kentakamīñcitam, பெ.(n.) நாகதாளிக் கள்ளி; many sined prickly pear – Opuntia spinosissima (சா.அக.);. கெந்தகமீஞ்சிதம் gendagamīñjidam, பெ.(n.) நாகத்தாளி கள்ளி; manyspined prickly pear. |
கெந்தகம் | கெந்தகம்1 gendagam, பெ.(n.) 1. கந்தகம்; sulphur. 2. அப்பிரகம்; mica. [காந்து → காந்தகம் → கந்தகம் → கெந்தகம்.] கெந்தகம்2 gendagam, பெ.(n.) நாய்வேளை (மலை); ; a sticky plant that generally grows in.sandy places. [காந்து → காந்தகம் → கெந்தகம்.] கெந்தகம்3 gendagam, பெ.(n.) கெண்டுரம் பார்க்க;see kendūram (சி.அக.);. [கெண்டூரம் → கெந்தகம்.] |
கெந்தகற்பம் | கெந்தகற்பம் gendagaṟpam, பெ.(n.) வில்வம்; bael tree. [கந்தகம் → கெந்தகம் + கற்பம்.] |
கெந்தகவண்டல் | கெந்தகவண்டல் gendagavaṇṭal, பெ.(n.) நீரூற்று மணற்கந்தகம்; sulphur combined with silica found in certain springs. [கந்தகம் → கெந்தகம் + வண்டல்.] |
கெந்தகவுப்பு | கெந்தகவுப்பு gendagavuppu, பெ.(n.) கறுப்புப்பு; sodium chloride with little sulphate of iron. [கந்தகம் → கெந்தகம் + உப்பு.] |
கெந்தகவெடி | கெந்தகவெடி gendagaveḍi, பெ.(n.) பட்டாசு(இ.வ.);; fire crackers. [கெந்தகம் → கந்தகம் + வெடி.] |
கெந்தகவெள்ளை | கெந்தகவெள்ளை gendagaveḷḷai, பெ.(n.) வெண் சுண்ணக் கந்தகம்; milk sulphu robtained from the solution of calcium sulphide. [கந்தகம் → கெந்தகம் + வெள்ளை.] |
கெந்தகாயம் | கெந்தகாயம் kendakāyam, பெ.(n.) நீர்ப்பூலா; black honey shrub. [கந்தகம் → கெந்தகம் + காயம்.] |
கெந்தகி | கெந்தகி gendagi, பெ.(n.) அதிமதுரம்; liquorice plant. [கெந்தம் → கெந்தகி.] |
கெந்தக்கற்பம் | கெந்தக்கற்பம் kentakkaṟpam, பெ.(n.) வில்வம்; bael tree – Crataeva religiosa (சா.அக.);. [கந்தக+கற்பம்] |
கெந்தசடகம் | கெந்தசடகம் gendasaḍagam, பெ.(n.) ஆமணக்கு; castor plant [கெந்தம் + சடகம்.] |
கெந்தசாமகன் | கெந்தசாமகன் gendacāmagaṉ, பெ.(n.) பேரரத்தை; greater galangal. மறுவ. கெந்தநரணி, கெந்த நாகுலியம். [கெந்தம் + சாமகன்.] |
கெந்தசாரஞ்சம் | கெந்தசாரஞ்சம் kentacārañcam, பெ.(n.) சந்தனம் sandal(சா.அக);. கெந்தசாரஞ்சம் kendacārañjam, பெ.(n.) சந்தனம்; sandal. |
கெந்தசாலி | கெந்தசாலி kendacāli, பெ.(n.) கெந்தசாலி நெல்; a kind of paddy. “பெரியசெந்நெற்பிரம்புரிகெந்தசாலி” (தேவா.700:7);. [கெந்தம் + சாலி.] |
கெந்ததாரணை | கெந்ததாரணை kendatāraṇai, பெ.(n.) ஒன்பது வகைத்தாரணையுள் ஒன்று(திவா.Ms.);; one of navatäranai [கெந்தம் + தாரணை.] |
கெந்ததாளி | கெந்ததாளி kendatāḷi, பெ.(n.) 1.கந்தக மணமுள்ள தாளி; sulphur smelling bind weed of ipomaea ge- nus.2.வாய்ப்புண; eruptionofsmelluesiclesonthe lipsmouth, tongue and throat. [கெந்தம் + தாளி.] |
கெந்தநரணி | கெந்தநரணி kendanaraṇi, பெ.(n.) பேரரத்தை; greater galangal. மறுவ. கெந்தசாமகன், கெந்தநாகுலியம். [கெந்தம் + நரணி.] |
கெந்தநாகுலியம் | கெந்தநாகுலியம் kendanākuliyam, பெ.(n.) பேரரத்தை; greater galangal. [கெந்தம் + நாகுலியம்] |
கெந்தனம் | கெந்தனம் kentaṉam, பெ.(n.) ஒரு வகைப் பூடு (மலை);; coromandal gendarussa – Justicia procumbens (செ.அக.);. [கந்து-கந்தனம் – கெந்தனம்] கெந்தனம் kendaṉam, பெ.(n.) கோடக சாலை; a very small plant known as coromandal gendarussa. |
கெந்தனோபிதம் | கெந்தனோபிதம் kendaṉōpidam, பெ.(n.) பரம்பை; Indian mesquit or arjun as penance tree. |
கெந்தன் | கெந்தன் kendaṉ, பெ.(n.) 1. கோடகசாலை; a very small plant known as Coromandel gendarussa. மறுவ. கெந்தணம். [கந்தம் → கெந்தம் → கெந்தன்.] |
கெந்தபத்திரம் | கெந்தபத்திரம் kendabattiram, பெ.(n.) 1.முன்னை; firebrand teak. 2. வில்வம்; bael tree. [கெந்தம் + பத்திரம்.] |
கெந்தபந்தம் | கெந்தபந்தம் kendabandam, பெ.(n.) கவுரிநஞ்சு; a prepared arsenic. [கெந்தம் + பந்தம்.] |
கெந்தபீசகம் | கெந்தபீசகம் gendapīcagam, பெ.(n.) காட்டுமா (சங்.அக.);; Cuddapah almond. [கெந்தம் + பீசகம்.] |
கெந்தபுட்பபத்திரி | கெந்தபுட்பபத்திரி kentapuṭpapattiri, பெ.(n.) துளசி; holy basil – Ocimum sanctum (சா.அக.);. கெந்தபுட்பபத்திரி kendabuṭbabattiri, பெ.(n.) துளசி; holy basil. |
கெந்தபுட்பி | கெந்தபுட்பி kendabuṭbi, பெ.(n.) மெருகன் கிழங்குச் செடி; a plant with a long tuberous root. [கெந்தம் + புட்பி.] |
கெந்தபூதி | கெந்தபூதி kendapūti, பெ.(n.) நாய்வேளை; dog mustard plant. [கெந்தம் + பூதி.] |
கெந்தபூதியம் | கெந்தபூதியம் kendapūtiyam, பெ.(n.) கெந்தபூதி பார்க்க;see kenda-pudi. [கெந்தம் + பூதியம்.] |
கெந்தபொடி | கெந்தபொடி kentapoṭi, பெ.(n.) குளியலுக்குப் பயன்படுத்தும் ஒருவகை நறுமணப் பொடி; aromatic powder used in bath. “மடவா யுன்றனுக்குக் கெந்த பொடியேன்”(தனிப்பா.188.173); (செ.அக.); [கந்தம்→கெந்தம்+பொடி] |
கெந்தப்பொடி | கெந்தப்பொடி kendappoḍi, பெ.(n.) 1. குளிக்கப் பயன்படுத்தும் நறுமணப் பொடி; aromatic powder used in bath. 2. சொக்குப் பொடி; love powder. “பெட்டியிலே கெந்தப்பொடி வைத்தனுப்பினாள்” (தெய்வச்.விறலிவிடு.203);. [கந்தம் → கெந்தம் + பொடி.] |
கெந்தமாஞ்சில் | கெந்தமாஞ்சில் kendamāñjil, பெ.(n.) இலாமிச்சை வேர்; Indian spikenard. மறுவ. வெட்டிவேர். [கெந்தம் + மாஞ்சில்.] |
கெந்தமூலம் | கெந்தமூலம் kendamūlam, பெ.(n.) பிடங்கு நாறி; fire-brand teak.. [கெந்தம் + மூலம்.] |
கெந்தமூலி | கெந்தமூலி kendamūli, பெ.(n.) சிறு இண்டஞ்செடி; a small species of the plant of the Mimosa genus. [கெந்தம் + மூலி.] |
கெந்தம் | கெந்தம் kendam, பெ.(n.) 1.மணம்; scent, odour, fragrance. 2. முகமணப்பொருள்; perfumery. 3. சந்தனம்; sandal-wood. 4. வசம்பு: sweet flag. [கந்தம் → கெந்தம்.] |
கெந்தரகம் | கெந்தரகம் gendaragam, பெ.(n.) செங்கழுநீர்ப்பூ; red lndian water lily. [கெந்தரம் → செந்தரகம்.] |
கெந்தரசம் | கெந்தரசம் kentaracam, பெ.(n.) நறும் பிசின்; fragrant resin (சா.அக.);. [கெந்தம்+Skt. ரசம்] கெந்தரசம் kendarasam, பெ.(n.) நறும்பிசின்; fragrant resin. |
கெந்தரத்தியாதி | கெந்தரத்தியாதி kentarattiyāti, பெ.(n.) சிவப்புச் செவ்வந்தி அல்லது சிவப்புச் சாமந்தி; red chamomile – Chrysanthemum indicum (சா.அக.);. |
கெந்தரம் | கெந்தரம் kendaram, பெ.(n.) கார்முகில்நஞ்சு; a kind of prepared arsenic. [காந்து → கெந்து → கெந்தரம்.] |
கெந்தரி | கெந்தரி kendari, பெ.(n.) பொன்னிமிளை; gold pyrites. [காந்து → கெந்து → கெந்தரி.] |
கெந்தருசு | கெந்தருசு kendarusu, பெ.(n.) சுராலை (சாம்பிராணி);; frankincense. [காந்து → கெந்து → கெந்தருசு (கொ.வ.);.] |
கெந்தலவனம் | கெந்தலவனம் kendalavaṉam, பெ.(n.) கெந்திலவணம் பார்க்க;see kendi-lavanam. [கெந்தம் + இலவணம்.] |
கெந்தவடி | கெந்தவடி kendavaḍi, பெ.(n.) மணமுள்ள எண்ணெய்ப் பொருள்; odoriferous essential punguent. [கெந்தம் + வடி.] |
கெந்தவாசம் | கெந்தவாசம் kendavācam, பெ.(n.) மணப்பொருள்: scented perfume. [கந்தம் → கெந்தம் + வாசம்.] |
கெந்தா | கெந்தா kendā, பெ.(n.) 1. வேளைப்பூடு, a vailay plant. 2.பேராமல்லி; a kind of jasmine. 3.ஒருமருந்துச்செடி; a medicinal plant. [கந்தம் → கெந்தம் → கெந்தா.] |
கெந்தாளி | கெந்தாளி kendāḷi, பெ.(n.) செரிமானம் இன்மையால் ஏற்படும் வயிற்று நோய்; gastritis through in digestion, குந்து → கெந்து → கெந்தாளி.] |
கெந்தாளியாட்சி | கெந்தாளியாட்சி kentāḷiyāṭci, பெ.(n.) பாலிருள் செடி; a kind of plant (சா.அக.);. |
கெந்தாளிரோகம் | கெந்தாளிரோகம் kentāḷirōkam, பெ.(n.) செரியாமையால் ஏற்படக்கூடிய வயிற்று வலி முதலிய வயிறு குறித்த நோய் (குன்மநோய்);; gastritis (செ.அக.);. [குந்து+கெந்து கெந்தாளி +Skt. ரோகம்] கெந்தாளிரோகம் kendāḷirōkam, பெ.(n.) குன்ம நோய்; gastritis (M.L.);. |
கெந்தி | கெந்தி1 kendittal, 4 செ.கு.வி.(v.i.) தத்துதல்: to hop, skip. “கெந்தியா வுகளுங் கெண்டை” (திருவிசை.கருவூர்.பதி 3.10);. தெ.,க.கந்து. [கிந்து → கெந்து → கெந்தி.] கெந்தி2 kendi, பெ.(n.) 1. கந்தகம்; sulphur. 2. பொன்னிமிளை (சங். அக.);; gold-colouredantimony. [காந்து → கெந்து → கெந்தி.] |
கெந்திகபாளை | கெந்திகபாளை kentikapāḷai, பெ.(n.) ஆடுதின்னாப் பாளை (சித்.அக.);; worm killer (செ.அக.);. |
கெந்திகம் | கெந்திகம் gendigam, பெ.(n.) பாம்புகொல்லிப்பூடு; a kind of plant. [காந்து → கெந்து → கெந்திகம்.] |
கெந்திகயம் | கெந்திகயம் gendigayam, பெ.(n.) ஊசலாங் கொடி; a creeper. [கந்தம் → கெந்தம் → கெந்தி + கயம்(காயம்);.] |
கெந்திகாரச்சிலை | கெந்திகாரச்சிலை kendikāraccilai, பெ.(n.) 1. கந்தக காரகச்சீலை, a blistering plaster containing sulphur as one of its ingredients. [கந்தகம் → கெந்தி. கெந்தி + காரம் + சீலை.] இது குழிப்புண்ணுக்கு இடப்படும். |
கெந்திச்செம்பு | கெந்திச்செம்பு kendiccembu, பெ.(n.) 1. புறங்கை நாறி; a; plant. 2. கந்தகத்தால் செய்த ஏனம்; a vessel made of consolidated sulphur. 3. கந்தகச் செம்பு; copper extracted from sulphur. [கெந்தி + செம்பு.] |
கெந்திபரம் | கெந்திபரம் kendibaram, பெ.(n.) ஆடுதின்னாப் பாளை; a kind of plant which goat will not eat, worm-killer. [கெந்திபாளை + கெந்திபரம்.] |
கெந்திபாடாணம் | கெந்திபாடாணம் kendipāṭāṇam, பெ.(n.) கந்தக நஞ்சு; mineral poison. [கெந்தி + பாடாணம். பாஷாணம் Skt. த.பாடாணம்.] |
கெந்திபாளை | கெந்திபாளை kendipāḷai, பெ.(n.) ஆடுதின்னாப் பாளை (சித்.அக.);; worm killer. [கெந்து → கெந்தி + பாளை.] |
கெந்திப்புகை | கெந்திப்புகை gendippugai, பெ.(n.) கந்தகப்புகை; sulphur-fumes. [கெந்தி + புகை. கந்தகம் → கெந்தி.] |
கெந்திமூலம் | கெந்திமூலம் kendimūlam, பெ.(n.) கிச்சிலிக் கிழங்கு; orange root. [கெந்தி + மூலம்.] |
கெந்தியதைசுத்தியாக்கி | கெந்தியதைசுத்தியாக்கி kentiyataicuttiyākki, பெ.(n.) ஆற்று முள்ளங்கி; சுவற்று முள்ளங்கி wild country radish, wall radish – Blumea aurita (சா.அக.);. |
கெந்தியுப்பு | கெந்தியுப்பு kendiyuppu, பெ.(n.) கந்தகவுப்பு; sulphur. [கெந்தி + உப்பு.] |
கெந்தியுரிநஞ்சு | கெந்தியுரிநஞ்சு kendiyurinañju, பெ.(n.) வைப்பு நஞ்சு (சித்.அக.);; a prepared arsenic. [கெந்தி + உரி + நஞ்சு.] |
கெந்திரகாண்டம் | கெந்திரகாண்டம் kendirakāṇṭam, பெ.(n.) பாகல்; bitter gourd. [கெந்தரம் → கெந்திரம் + காண்டம்.] |
கெந்திரதூதிசம் | கெந்திரதூதிசம் kentiratūticam, பெ.(n.) பெரு வழுதலை; brinjal of a larger species – Solanum indicum (சா.அக.);. கெந்திரதூதிசம் kendiratūtisam, பெ.(n.) பெரு வழுதலை; brinjal of a larger specis. |
கெந்திலவணம் | கெந்திலவணம் kendilavaṇam, பெ.(n.) 1. காய்ச்சுப்பு; a salt prepared by heating a mixture of rotten eggs, sulphur and sea-salt. 2. சிவப்புப்பு; Sulphur Salt. [கெந்தி + இலவணம்.] |
கெந்திவாருணி | கெந்திவாருணி kendivāruṇi, பெ.(n.) பேய்க் கொம்மட்டி; bitter apple. மறுவ. பேய்த்தும்மட்டி. [கெந்தி + (வாலுளி);வாருணி.] |
கெந்திவிருட்சம் | கெந்திவிருட்சம் kentiviruṭcam, பெ.(n.) முன்னை; spinous fire brand teak – Premna integrifolia (சா.அக.);. [கந்தி+விருட்சம்] கெந்திவிருட்சம் kendiviruṭcam, பெ.(n.) கெந்திவிருட்சோகம் பார்க்க;see {}. |
கெந்திவிருட்சோகம் | கெந்திவிருட்சோகம் kentiviruṭcōkam, பெ.(n.) முன்னை மரப்பொது (சங்.அக.);; fire brand teak- Premna (சா.அக.);. கெந்திவிருட்சோகம் kendiviruṭcōkam, பெ.(n.) முன்னை; spino fire-brand teak. |
கெந்து | கெந்து1 kendudal, 5.செ.கு.வி.(v.i.) 1.தத்துதல்; to hop, skip. 2. நெளிதல், (யாழ்.);; to crawl or creep, as worms in a sore, to writhe, wriggle. 3. கிட்டிப்புள்ளடித்தல்; to strike the stick in the game of tipcat, 4. ஒற்றைக் கால் ஊன்றியும் மறுகால் ஊன்ற முடியாமலும் விந்தி விந்தி நடத்தல்; walk with one leg pressed and the other leg not capable of pressing. அவன் ஒருகாலில் புண்பட்டதால் கெந்துகிறான். தெ.,து. கந்து. [கெந்தி → கெந்து.] கெந்து2 kendu, பெ.(n) ஒற்றைக்காலாற் கெந்தியாடும் பிள்ளை விளையாட்டு; a game ofchildren, in which each member of a side can put out any number of the other side by chasing and touching them [P] கெந்து as long as he can hop continuously on one leg. 2. கிட்டிப்புள் விளையாட்டு; the game of tip-cat. [கெந்தி → கெந்து.] |
கெந்துசடகம் | கெந்துசடகம் gendusaḍagam, பெ.(n.) ஒருவகைப் புழு; a kind of worm. [கெந்து + சடகம்.] |
கெந்துதல் | கெந்துதல் kendudal, தொ.பெ.(vbl.n.) கிட்டிப்புள் விளையாட்டு வகை; a type of game. [காந்து-கெந்து] |
கெனகாரி | கெனகாரி keṉakāri, பெ.(n.) முன்னை; spiny fire brand teak. [கனம் → கெனம் + காரி.] கே |
கெபி | கெபி kebi, பெ.(n.) 1.குகை; cave. 2.குழி:a bit. 3.வளை; a hole. [கவி → கெவி → கெபி(கொ.வ.);.] |
கெபூரமயம் | கெபூரமயம் kepūramayam, பெ.(n.) கொடி மாதுளை; lemon citron – Limonimedica (சா.அக.);. கெபூரமயம் kepūramayam, பெ.(n.) கொடி மாதுளை; lemon citron. |
கெப்பம் | கெப்பம் keppam, பெ(n.) நிறைவு, முழுமை; come to an end, completion. தெ. தெப்பக. [தளும்பு-தம்பு-தெம்பு-தெப்பம்-கெம்பம்] |
கெப்பிதம் | கெப்பிதம் keppidam, பெ.(n.) நிந்தை; reproach, blasphemy, abuse. [கவ்வை → கப்பை → கெப்பை → கெப்பிதம்(கொ.வ.);] |
கெப்புறு | கெப்புறு keppuṟu, பெ.(n.) குறும்பு, துடுக்குத்தனம்; mischief. உனக்குக் கெப்புறு அதிகம்.(மீனவ); [கைப்பு+ஊறு-கைப்புறு-கெம்புறு [கை ஊறுதல்]] ஏதேனும் குறும்பு செய்வதற்காகக் கை திணவெடுக்கிறது என்பது குறிப்புமொழி. |
கெமிளி-த்தல் | கெமிளி-த்தல் kemiḷittal, பெ.(n.) 4 செ.கு.வி.(v.i.); மகிழ்தல் (கெம்பளித்தல்);; to enjoy. [குமளி → கெமளி → கெமிளி.] |
கெமுதாகி | கெமுதாகி kemutāki, பெ.(n.) செங்கொட்டை; markiոց ոսt. மறுவ. சேரான்கொட்டை: வண்ணத்தான்கொட்டை. [கெம் → கெம்பு : கருஞ்சிவப்பு, கெம்பு → கெமுதாகி.] |
கெம்பட்டி | கெம்பட்டி kembaṭṭi, பெ.(n.) தருமபுரி மாவட்டத்துச் சிற்றூர்; a village in Dharmapuri Dt. [செம் + பட்டி – செம்பட்டி → கெம்பட்டி (கொ.வ.);.] |
கெம்பட்டிகை | கெம்பட்டிகை gembaṭṭigai, பெ.(n.) பதக்கம்வைத்துக் கல்லிழைத்த கழுத்தணி; ruby necklace with locket in the middle. [கெம்பு + அட்டிகை.] |
கெம்பத்து | கெம்பத்து kembattu, பெ.(n.) பகட்டு(வின்.);; pomp splendour. [கெம்பு → கெம்பல் → கெம்பத்து.] |
கெம்பநாயக்கன்பாளையம் | கெம்பநாயக்கன்பாளையம் kembanāyakkaṉpāḷaiyam, பெ.(n.) ஈரோடு மாவட்டத்துச் சிற்றுார்; a village in Erode Dt. [செம்பியன் → செம்பன் → கெம்பன் + நாயக்கன் + பாளையம்.] |
கெம்பரை | கெம்பரை kembarai, பெ.(n.) 1. கூடை (யாழ்.அக.);; basket. 2. நெற்கூடை; paddy basket. க. கம்பெ,;தெ. கம்ப. [கெம்பு + அரை – கெம்பரை. சம்பு → கம்பு →கெம்பு.] |
கெம்பல் | கெம்பல் kembal, பெ.(n.) 1. ஆரவாரம்; loud noise. 2. எழும்பல்; ascend, rise. [கெம்பு + அல் – கெம்பல்.] |
கெம்பளி-த்தல் | கெம்பளி-த்தல் kembaḷittal, 4 செ.கு.வி.(v.i.) மகிழ்வுறுதல் (யாழ்.அக.);; to exult, to be merry. [கெம்பு = அளி-.] |
கெம்பளிப்பு | கெம்பளிப்பு kembaḷippu, பெ.(n.) 1.மகிழ்ச்சி(வின்.);; exultation. Mirth. 2. ஆடம்பரம்; pomp, ostentation. [கெம்பு + அளிப்பு கெம் : துள்ளுதல். கெம்பு : ஆரவாரித்தல்.] |
கெம்பிரிக்கம்பண்ணு-தல் | கெம்பிரிக்கம்பண்ணு-தல் kembirikkambaṇṇudal, 9 செ.கு.வி.(v.i.) 1.இட்டுக்கட்டிப்பேசுதல்; to concoct. 2.தம்பட்டமடித்தல்; to spread. [கெம்பல் → கெம்பரிக்கம் → கெம்பிரிக்கம் + பண்ணு-.] |
கெம்பீரசன்னி | கெம்பீரசன்னி kembīrasaṉṉi, பெ.(n.) சிரிப்பு, வலிப்புகளுடன் கூடிய இசிவு(சன்னி);; a kind of deliriumhighly characterised by incessant laughter, convulsion, fits, etc. [கம்பீர → கெம்பீர → சன்னி.] |
கெம்பீரம் | கெம்பீரம் kembīram, பெ.(n.) 1. ஆழம்; depth. 2. பரிமளிப்பு; shine. 3. மேன்மை; excellence. 4. வீரம்; courage. 5. வீறு; manliness. 6.ஆழ்ந்த அறிவு; profound knowldege. [கம்பீரம் → கெம்பீரம்.] |
கெம்பீரி-த்தல் | கெம்பீரி-த்தல் kembīrittal, 4 செ.குன்றாவி.(v.t.) வீரங்காட்டுதல் (யாழ்.அக.);; to display manliness, majesty of spirit. 2. எடுப்பான குரலாற் பேசுகை; to exult, to speak in a majestic tone. [கம்பீரி → கெம்பீரி.] |
கெம்பீரியம் | கெம்பீரியம் kembīriyam, பெ.(n.) 1.இளம்பிசின்; soft gum. 2.கம்பீர்பிசின்; gambier resin. [கம்பீரி → கெம்பீரி → கெம்பீரியம். கம்பீரி தாம்பூலத்துடன் சேர்க்கும் ஒருவகைத் துவர்ப்புச் சரக்கு.] |
கெம்பு | கெம்பு1 kembudal, 5.செ.கு.வி.(v..i) கொந்தளித்தல் (வின்.);; to rise, as waves; to be violent as the wind; to swell, heave, as the sea (W.);. 2. அரத்தங்கொதித்தல் (வின்.);; to riseup,boil, as blood in rage (W.);. 3.உரத்துப்பேசுதல்; to speak loud, cry out, clamour. 4. ஆரவாரித்தல் (வின்.);; to create tumult,to rise with indignation. 5. நெம்புதல்; to lift. [கம்பு → கெம்பு.] கெம்பு2 kembu, பெ.(n.) 1. கரும்சிவப்பு நிறக்கல் (பதுமராகம்);; ruby, கெம்புத்தோடுவாங்க வேண்டும். 2. கருஞ்சிவப்பு; dark-red colour. உனக்குக் கெம்புநிறப் புடைவை அழகாக இருக்கும் (உ.வ.);. 3. கருஞ்சிவப்புச் சாணைக்கல்; dark red whetstone. 4. மாணிக்க (இரத்தின);க் கல்; sardius. க.,தெ. கெம்பு. [செம் → கெம் → கெம்பு.] |
கெம்புக்கட்டிக்கல் | கெம்புக்கட்டிக்கல் kembukkaṭṭikkal, பெ.(n.) தாழ்ந்தவகைக் குருந்தக்கல்; low quality of diamond. [கெம்பு + கல்.] |
கெம்புதல் | கெம்புதல் kembudal, தொ.பெ.(vbl.n) குதித்தல்; jumping. [கிளர்-கிம்பு-கெம்பு] |
கெம்புநீலம் | கெம்புநீலம் kembunīlam, பெ.(n.) 1.உயர்ந்த நீலம்; superior sapphire. 2. சிவப்பு நிறமான சாணைக்கல்; red whetstone. [கெம்பு + நீலம்.] |
கெம்புமல்லிகை | கெம்புமல்லிகை gembumalligai, பெ.(n.) மயிர்மாணிக்கம்; cypress vine. [கெம்பு + மல்லிகை.] |
கெம்மரம்பாளையம் | கெம்மரம்பாளையம் kemmarambāḷaiyam, பெ.(n.) கோவை மாவட்டத்துச் சிற்றூர்; a village in Kovai Dt. [செம்மரம் கெம்மரம்+பாளையம்) கெமி-த்தல் kemi-, 4 செ.கு.வி.(v.i.); 1.போதல்:to go. “அயல் கெமித்து”(இரகு. தேனுவ. 8);. 2. புணர்தல்:to copulate. [கும் → கம் → கெம் → கெமி.] |
கெய் | கெய்1 key, பெ.(n.) ஒருவகைமீன் (யாழ்.அக.);; a kind of fish. [கள் → கய் → கெய்.] கெய்2 keytal, 1 செ.குன்றாவி(v.t.) 1.வினையாற்றுதல்; to perform, to do. 2. உருவாக்குதல், உண்டு பண்ணுதல்; to prepare,to make. 4.வேலைசெய்தல், உழுதல்; to work, to till. க.கெய், கெயி, கெயு,கெய்யு;பட.கீய். key, to do. In all the Dravidian dialects kei is hand. In Telugu kelu is also found. The most common form of this word in Telugu is chey-I or cheyi. The word signifying to do is almost identical,viz.,key.chey,etc……… Hungariankēz(pronounced keis);, Finnish kchēsi (rootkå-e.g. genitivekå-an);, Estainkāsi, Ostiak ket, Lappish kăt, Perimian ki, Lasian kē, Mingrelian che, Quasi-Qumuq(a Turkish dialect);kūya, Turkishkol, Mongol ghar, Tungusian gala. The Hungarian has both kar and këz; but the former is used to signify arm, the later hand-a distinction which seems to prove that those roots, though perhaps ultimately related, have long been independent of one another. The word in the various Scythian languages signifying to do appear to stand in the same relation to the word for hand that they do in the Aryan and Dravidian languages Comp. The Turkish kyl, to do; Mongol ki, Manchu gai, Mordvin kā. These words resemble the Aryan kar, to do, but still more closely the Dravidian ki, kê, etc. (CG.DEL.617,618);. [கை + கய் → கெய்.] |
கெரடி ¬¬ | கெரடி ¬¬ keraḍi, பெ.(n.) 1. சிலம்பம்; a kind of martial art. 2.புரட்டு; deceit, falsehood. ‘கெரடி கற்றவன் இடறி விழுந்தால் அதுவும் ஒருவரிசைஎன்பான்'(பழ.);. [கரடி → கெரடி (கொ.வ.] |
கெரட்டிக்கு-தல் | கெரட்டிக்கு-தல் keraṭṭikkudal, செகுன்றாவி (v.t.) கோள் மறைப்புக் (கிரகணம்); காலங்களில் கருவுற்ற பெண்கள் பூவைக் கிள்ளுவதால் பிறக்கும் குழந்தைகள் உறுப்புக்குறைபாடாகப் பிறக்கும் என நம்புதல்; to believe that during eclipse period the pregnant ladies will be affected and give birth of physically handicapped child. [குறை-குறட்டி-கெரட்டிக்கு] |
கெரட்டிப்பு | கெரட்டிப்பு keraṭṭippu, பெ.(n.) கோள்மறைப்புக் (கிரகணம்); காலங்களில் கருவுற்ற பெண்கள் பூவைக் கிள்ளுவதால் பிறக்கும் குழந்தைகள் உறுப்புக் குறைபாடாகப் பிறக்கும் என்னும் நம்பிக்கை; during eclipse period the pregnant ladies will be affected and give birth of physically handicapped child a belief. [கிரக+அடிப்பு] |
கெரட்டுக்கெரட்டெனல் | கெரட்டுக்கெரட்டெனல் keraṭṭukkeraṭṭeṉal, சளி முதலியவற்றால் அல்லற்பட்டு விடும் மூச்சின் ஒலிக்குறிப்பு; onom.expressionஎsignifying hoarse sound or rattle,as in hard or difficult breathing. [கரள் → கரட்டு → கெரட்டு+கெரட்டெனல்.] |
கெராசி | கெராசி kerāci, பெ.(n.) பூலா; a tall plant of the phyllanthus genus (சா.அக.);. கெராசி kerāci, பெ.(n.) பூலா; a tall plant of the phyllanthus genus. |
கெராளி கொள்ளு – தல் | கெராளி கொள்ளு – தல் gerāḷigoḷḷudal, செ.கு.வி.(v.i.) மிரண்டோடுதல்; suddenly running with fear. [கிறங்கு-கிறளி-கெராளி+கொள்] |
கெரி-த்தல் | கெரி-த்தல் kerittal, 4 செ.கு.வி. (v.i.) 1. உப்புச்சுவை மிகுதல்; to become salty, to irritate. 2. சிறு எரிச்சல்; to irritate as in the eyes on contact with external malter. [கரி → கெரி.] |
கெரிகோடி அள்ளி | கெரிகோடி அள்ளி keriāṭiaḷḷi, பெ.(n.) தருமபுரி மாவட்டத்துச் சிற்றூர்; a village in Dharumapuri dt. [த. சிறை (ஏரி); → க. கெரெ → கெரி + கோடி + (பள்ளி); அள்ளி.] |
கெரிட்டம் | கெரிட்டம் keriṭṭam, பெ.(n.) சினம்; angry, annoyed. [கரி → கெரி → கெரிட்டம்.] |
கெருகம் | கெருகம் gerugam, பெ.(n.) கோரைக்கிழங்கு; fragrant tuber or root of koray. [கருக்கு → கெருக்கு → கெருகம்.] |
கெருகம்பாக்கம் | கெருகம்பாக்கம் gerugambāggam, பெ.(n.) திருவள்ளூர் மாவட்டத்துச் சிற்றூர்; a village in Tiruvallüar Dt. [குருகு → கெருகு + அம் + பாக்கம்.] |
கெருடக்கல் | கெருடக்கல் keruḍakkal, பெ.(n.) 1.நஞ்சுக்கரசன்; king of poisons. 2.கருடன்தலைக்குள்ளிருப்பதாகக் கருதப்படும் கல்; a concretion said to be in the head of Brahminy kite. [கெருடன் + கல்.] |
கெருடக்காந்தகம் | கெருடக்காந்தகம் keruṭakkāntakam, பெ.(n.) செம்பருந்து; red kite – Haliastur indus (சா.அக.);. [கருட+காந்தகம்] கெருடக்காந்தகம் geruḍaggāndagam, பெ.(n.) செம்பருந்து; red kit-hallastur indus. [P] |
கெருடக்காய் | கெருடக்காய் keruḍakkāy, பெ.(n.) 1.நத்தைச்சூரி; bristly button weed. 2. தண்ணீர்விட்டான் கிழங்கு; water root. [கருடன் → கெருடன் + காய்.] |
கெருடக்கிழங்கு | கெருடக்கிழங்கு keruṭakkiḻṅku, பெ.(n.) கொல்லன் கோவைக் கிழங்கு ஆகாச கருடன் கிழங்கு; demon root; sky-rootCorallocarpus epigea (சா.அக.);. [கருடன்+கிழங்கு.] |
கெருடக்கொடி | கெருடக்கொடி keruḍakkoḍi, பெ.(n.) 1. கருஞ் சீந்தில்; a black variety of moon-creeper. 2. தலைச் சுருள் வள்ளி; a creeper. [கருடன் → கெருடன் → கொடி.] |
கெருடத்தொட்டி | கெருடத்தொட்டி keruḍattoḍḍi, பெ.(n.) காக்கை கொல்லி விதை ; a kind of seed to kill crows(சா. அக.);. [கருடன் → கெருடன் + தொட்டி.] |
கெருடன் | கெருடன் keruḍaṉ, பெ.(n.) 1. வெண்மையும் செம்மையும் கலந்த பருந்து; white headed kite, bird. 2. மாலவன் ஊர்தி; vehicle of Visnu, [கருடன் → கெருடன்.] |
கெருடப்பச்சை | கெருடப்பச்சை keruḍappaccai, பெ.(n.) படிகக்கல்: pearl-aquamarina(சா.அக.); [கருடப்பச்சை → கெருடப்பச்சை.] |
கெருடமுகம் | கெருடமுகம் geruḍamugam, பெ.(n.) மாடுகளின் முகம்மட்டும் வெண்மையாயிருக்கை(பெரியமாட்.15);; being white in the nose only, as cattle. [கருடன் → கெருடன் + முகம்.] |
கெருடவாகனப்பூடு | கெருடவாகனப்பூடு keruṭavākaṉappūṭu, பெ. (n.). கோபுரந் தாங்கி பூடு; coromandel chiretta – Andrographis echioides (சா.அக.);. |
கெருடாபதி | கெருடாபதி keruṭāpati, பெ.(n.) விஷ்ணு காந்தி; Vishnu basil; Vishnu plant – Evolvulus alsinoides (சா.அக.);. [கலுமுன்→ கருடன்→ கெருடன்+பதி] கெருடாபதி keruṭāpadi, பெ.(n.) விஷ்ணு காந்தி; Vishnu basil; Vishnu plant ersolvulus alsimoides. |
கெருடி | கெருடி keruḍi, பெ.(n.) 1. சிலம்பம்; fencing. “கெருடிகட்டி யளவிலா மைந்தர்க் கூட்டி” (திருவாலவா. 35:4);. 2.கரடிக்கூடம்; fencing school. மறுவ..கெரடி. க.கருடி; தெ.கரிடி;து.கரொடி. [கரடி → கொடி → கெருடி.] |
கெருமத்தம் | கெருமத்தம் kerumattam, பெ.(n.) பறவை; bird. [கருமத்தம் → கெருமத்தம்(கொ.வ.);.] |
கெருவிதன் | கெருவிதன் keruvidaṉ, பெ.(n.) செருக்குடையவன் (கருவமுடையவன்);; proudperson. “நடமாடுகனபத கெருவிதா” (திருப்பு:132);. [கருவம் + அன் – கருவன் → கருவதன் → கெருவிதன்.] |
கெரோசின் | கெரோசின் kerōciṉ, பெ.(n.) சீமைத்தண்ணி, மண்ணெய்; kerosine. [E.kerosine → த.கெரோசின்.] |
கெர்ச்சி-த்தல் | கெர்ச்சி-த்தல் kerccittal, 4செ.கு.வி.(v.i.) 1.முழங்குதல்; To roar. 2. உரப்புதல் பார்க்க;see urappu-. மறுவ. உரப்புதல், கருச்சித்தல். க. கெய், கெயி, கெயு.கெய்யு;பட. கீய். [கருச்சி → கர்ச்சி → கெர்ச்சி (கொ.வ.); வழங்காமல் தவிர்க்க வேண்டும்.] கருச்சித்தல் என்பதே செவ்விய வடிவம். |
கெர்ச்சினை | கெர்ச்சினை kercciṉai, பெ.(n.) 1. அரிமாவின் முழக்கம்; roar of lion. 2. முழக்கம்; roar like a lion, 3. உரப்பல் பார்க்க;see uarappal. மறுவ. உரப்பல், கருச்சனை. [கருச்சி → கர்ச்சனை → கெர்ச்சனை (கொ.வ.);. வழங்காமல் தவிர்த்தல் வேண்டும்.] கருச்சனை என்பதே செவ்விய வடிவம். |
கெர்ப்பதத்தலைவன் | கெர்ப்பதத்தலைவன் kerppadaddalaivaṉ, பெ.(n.) சவ்வீரம்; corrosive sublimate. [கெர்ப்ப + தலைவன்.] |
கெர்ப்பம் | கெர்ப்பம் kerppam, பெ.(n.) மரங்களில் நடுவில் காணப்படும் கடினமான சதைப்பகுதி, வைரம்: hardcore in a bar. [கருப்பம்-கெர்ப்பம்] |
கெர்ப்பீகரி-த்தல் | கெர்ப்பீகரி-த்தல் kerppīkarittal, 4 செ.கு.வி.(v.i.) கருவாய் மாறுதல்; to form into an embryo. “சுத்தசடமான சுக்கிலங் கெர்ப்பீகரித்து” (சொரூபசாரம், 61);. [கருப்பம் → கெர்ப்பம் + கரி(கொ.வ.);.] |
கெர்வம் | கெர்வம் kervam, பெ.(n.) ஆணவம், செருக்கு; pride, arrogance. [Skt.garva → த.கெர்வம்.] |
கெர்விதம் | கெர்விதம் kervidam, பெ.(n.) செருக்குள்ள சொல்; words spoken in pride. “மாந்தர் கெர்விதங்கள் பேசி வந்து” (பட்டனத்துப்.பத்திரகிரி.பக்.343);. |
கெறாவுதல் | கெறாவுதல் keṟāvudal, தொ.பெ.(vbl.n.) புலம்புதல்; Crying. [கிறாறு-கிறாவு-கெறாவு (கொ.வ.);] |
கெற்சி | கெற்சி keṟci, பெ.(n.) சிறுவழுதலை(சங்.அக.);; Indian nightshade. [கில் → கில்சி →கெற்சி.] |
கெற்பக்கல் | கெற்பக்கல் keṟpakkal, பெ.(n.) கருப்பையில் காணப்படும் கல்; a mole which has undergone calcareous degeneration in the womb. (சா.அக.);. [கருப்பம் + கல்-கருப்பக்கல்-கெற்பக்கல்(கொ.வ.);.] |
கெற்பக்கழலை | கெற்பக்கழலை keṟpakkaḻlai, பெ.(n.) கருக் கலைவாலுண்டாகும் சதைக் கட்டி; a fleshy mass occurring due to degeneration (சா,அக.);. [கருப்பம் → கெற்பம் (கொ.வ.); + கழலை – கெற்பக்கழலை.] |
கெற்பக்காய்ச்சல் | கெற்பக்காய்ச்சல் keṟpakkāyccal, பெ.(n.) பெண் கருவுற்றிருக்கும்போது உண்டாகும் சுரம்; fever occurring in woman during pregnancy. [கருப்பம் → கெற்பம் + காய்ச்சல் – கெற்பக்காய்ச்சல்.] |
கெற்பக்கிராணி | கெற்பக்கிராணி keṟpakkirāṇi, பெ.(n.) பேறு காலத்தில் உண்டாகும் நோயிலிருந்து விடுபடல்; relief found by pregnant woman from diarrhoea (சா.அக.);. [கருப்பம் → கெற்பம் + கிராணி.] |
கெற்பக்குருவிந்தம் | கெற்பக்குருவிந்தம் keṟpakkuruvindam, பெ.(n.) சாதிலிங்கம்; vermilion(சா.அக.);. [கருப்பம் → கெற்பம் + குருவிந்தம்.] |
கெற்பக்குவளை | கெற்பக்குவளை keṟpakkuvaḷai, பெ.(n.) கருப்பை; uterus; [கருப்பை + குவளை – கருப்பைக்குவளை → கெற்பக்குவளை (கொ.வ.);.] |
கெற்பக்கொழுப்பு | கெற்பக்கொழுப்பு keṟpakkoḻuppu, பெ.(n.) பொய்க்கற்பத்தில் காணப்படும் அடிவயிற்றின் கொழுப்பு; accumulation of fatin the abdominal wall found in cases of false pregnancy(சா.அக.);. [கருப்பம் → கெற்பம் + கொழுப்பு.] |
கெற்பக்கோளிலக்கணம் | கெற்பக்கோளிலக்கணம் keṟpakāḷilakkaṇam, பெ.(n.) கருப்பைக் கோளாறுபற்றிய நூல்; a treatise on diseases of the uterus and disorders of pregnancy (சா.அக.);. [கருப்பம் → கெற்பம் + கோள் இலக்கணம்.] |
கெற்பக்கோள் | கெற்பக்கோள் keṟpakāḷ, பெ.(n.) 1. கருப்பங் கொள் தன்மை; the state of being pregnant. 2. கருப்பத்தின் குற்றங்கள்; disorders of pregnancy (சா.அக.);. [கருப்பம் → கெற்பம் + கோள்.] |
கெற்பச்சதைக்கழலை | கெற்பச்சதைக்கழலை keṟpaccadaikkaḻlai, பெ.(n.) கருப்பையில் காணப்படும் அரத்தத் திரள்; a blood mole in the womb. 2.. சிதையுவுண்ட கருச்சிதை போற் காணப்படல்; a mole formed by dead ovum assuming a flesh like appearance in the womb (சா.அக.);. [கருப்பம் → கெற்பம் + சதை + கழலை.] |
கெற்பச்சன்னி | கெற்பச்சன்னி keṟpaccaṉṉi, பெ.(n.) கருவுற்ற பெண்களைத் தாக்கும் இசிவு (சன்னி: delirium attacking a pregnant woman சா.அக.);. [கருப்பம் → கெற்பம் + சன்னி.] |
கெற்பச்சூடு | கெற்பச்சூடு keṟpaccūṭu, பெ.(n.) கற்பக் குழந்தையைத்தாக்கும்சூட்டுநோய்:congenital lheat affecting children while in the womb(சா.அக.);. [கருப்பம் → கெற்பம் + சூடு.] |
கெற்பச்சூரை | கெற்பச்சூரை keṟpaccūrai, பெ.(n.) கருவுற்ற பெண்களுக்குக் காணும் சூலைநோய்; dating pain in the abdomen occuring to pregnant women (சா.அக.);. [கருப்பம் → கெற்பம் + சூரை.] |
கெற்பநாசம் | கெற்பநாசம் keṟpanācam, பெ.(n.) கருச்சிதைவு; abortion (சா.அக.);. [கருப்பம் → கெற்பம்:நசி → நாசம்; கெற்பம் + நாசம்.] |
கெற்பநாசினி | கெற்பநாசினி keṟpanāciṉi, பெ.(n.) கருவைக் கரைக்கும் மருந்து; medicinal agents responsible for causing abortion(சா.அக.);. [கெற்பம் + நாசினி.] |
கெற்பப்புழு | கெற்பப்புழு keṟpappuḻu, பெ.(n.) கருத்தரிப்பதைத் தடுக்கும் மலட்டுப் புழு; germs in the uterus destructive to conception(சா.அக.);. கருப்பப்புழுபார்க்க;see karuppa-p-pulu. [கருப்பம் → கெற்பம் + புழு.] |
கெற்பம் | கெற்பம் keṟpam, பெ.(n.) பெண்ணின் கருப்பையில் கரு உண்டாதல்; ovum formed in woman’s uterus with the help of male sperm. [கரு : கருப்பம.குருத்தல் : தோன்றுதல்; குரு → கரு → கருப்பம் கரு : சூல், பீள், முட்.டை, சேய், குட்டி.. வடமொழியாளர்க்ரு (விளி); என்றும் grabh=grah (பற்று); என்றும் மூலங்காட்டுவது பொருந்தாது (வ.மொ.வர.ப.108);.] |
கெற்பம்கீழ்வீழ்தல் | கெற்பம்கீழ்வீழ்தல் keṟpamāḻvīḻtal, பெ.(n.) குழந்தை பிறத்தல்: delivery of child (சா.அக.);. [கருப்பம் → கெற்பம் + கீழ் + வீழ்தல்.] |
கெற்பவிப்புருதி | கெற்பவிப்புருதி keṟpavippurudi, பெ.(n.) பெண்கள் வயிற்றில் கட்டி (சூதகம்); கட்டுவதனால் மாதவிடாய் காலத்தில் வயிற்றில் வலியுள்டாகி, சூலுண்டாகாது, உடல் மெலிந்து காணும் ஒரு நோய்; a swelling in the womb occasioned by the suspended flow or failure of the monthly course and it is marked by pain in the abdomen, absence of conception, emaciation etc. |
கெற்பவெட்டை | கெற்பவெட்டை keṟpaveṭṭai, பெ.(n.) குழந்தையைத் தாக்கும் தாய்தந்தையரின் பால்வினை நோய்; vene Realorsyphilitictints of congenitalorigin in children. [கருப்பம் → கெற்பம் + வெட்டை.] |
கெற்பாச்சன் | கெற்பாச்சன் keṟpāccaṉ, பெ.(n.) பெருவழுதலை; a big variety of brinjal plant. [கில் (வன்மை); + சி – கிற்சி → கெற்சி + (பெருத்தான்); பாச்சான்.] |
கெற்பாதகினி | கெற்பாதகினி geṟpātagiṉi, பெ.(n.) சேவகனார் கிழங்கு; a kind of root, used medicinally. |
கெற்பாதனம் | கெற்பாதனம் keṟpātaṉam, பெ.(n.) கர்ப்பாதானம் பார்க்க;see {}. [கெற்ப(ம்); + ஆதனம்.] குருத்தல் = தோன்றுதல். குரு → கரு → (கருப்பு); – கருப்பம். கரு = சூல், பீள், முட்டை, சேய், குட்டி. த. கரு → Skt.garbha (வ.வ.1:107);. [Skt.{} → த.ஆதனம்.] |
கெற்பாதபூதகி | கெற்பாதபூதகி geṟpātapūtagi, பெ.(n.) சிற்றுயிரிகளுக்கு எதிரானது (கிருமி எதிரி);; that which destroys worms. |
கெற்பி | கெற்பி2 keṟpittal, 4 செ.கு.வி. (v.i.) கருவுறல்; getting pregnant. [கரு → கருப்பி → கெற்பி(கொ.வ.);.] |
கெற்பிணி | கெற்பிணி keṟpiṇi, பெ.(n.) கருவுற்ற பெண்; a pregnant woman(சா.அக.);. [கருப்பிணி → கெற்பிணி(கொ.வ.);.] |
கெற்பிரி-தல் | கெற்பிரி-தல் keṟpiridal, 4செ.கு.வி.(v.i.) பற்றியெரிதல் (யாழ்.அக.);; to blaze. [கிற்பு → கெற்பு(வலிமை); + எரி – கெற்பெரி → கெற்பிரி (கொ.வ);.] |
கெற்பு | கெற்பு keṟpu, பெ.(n.) 1.வலிமை; strength. 2. திறன்; power. 3. மெய்ப்பொருள்; philosophy. ம. கெல்பு [கிற்பு → கெற்பு.] |
கெற்போட்டம் | கெற்போட்டம் keṟpōṭṭam, பெ.(n.) தென்திசை நோக்கி நகரும் முகில்; southern passage of clouds. [கருப்பம் → கெற்பம் + ஒட்டம்.] |
கெலமங்கலம் | கெலமங்கலம் kelamaṅgalam, பெ.(n.) தருமபுரி மாவட்டத்துச் சிற்றூர்; a village in Dharmapuri Dt. [கீழ் → கீழ + மங்கலம் – கீழமங்கலம் →க. கெலமங்கலம்.] |
கெலி | கெலி1 kelittal, 4 செ.குன்றாவி.(v.t.) வெல்லுதல்; to conquer, overcome. க., து.கெல்: தெ.கெலுசு. [கலி → கெலி.] கெலி2 kelittal, 4 செ.கு.வி. (v.i.) 1. ஆசை கொள்ளுதல்; to desire eagerly, feel a craving for 2. அச்சங்கொள்ளுதல் ; to be struck with terror; to start with fear. [கலி + கெலி.] கெலி3 keli, பெ.(n.) ஆசை (யாழ்ப்.); eagerness; greediness, insatiable desire for food. [கலி → கெலி.] கெலி4 keli, பெ.(n.) பெரும்அச்சம்; terror.extreme fear. [கிலி + கெலி.] கெலி5 keli, பெ.(n.) பெருவயிறு(யாழ்.அக.);: pot-belly. [கலி → கெலி.] |
கெலிக்கடி | கெலிக்கடி kelikkaḍi, பெ.(n.) வைப்பு நஞ்சு; a mineral poison. [கலி → கெலி + கடி.] |
கெலிசு | கெலிசு kelisu, பெ.(n.) கெளிசு (யாழ்ப்.); பார்க்க;see kelisu. [கெவி → கெலிசு.] |
கெலிபிடி-த்தல் | கெலிபிடி-த்தல் kelipiṭittal, செ.குவி(v.i.) பயம் உண்டாதல்; getting afraid or shocked (சா.அக.);. [கிலி – கெலி+பிடி] மறுவ. கிலிபிடித்தல். |
கெலிப்பு | கெலிப்பு kelippu, பெ.(n.) 1. வெற்றி; winning, success, victory. 2. மகிழ்ச்சி; joy, happiness. 3. அச்சம்; fear. 4. ஆசை; desire, wish. ம. கெலிப்பு; க. கெலுவு; குட. கெல்லு; தெ. கெலுபு, கெல்பு:து. கெல்பு,கெலுபு; நா. கெல்லு;கொலா. கெல். [வெல் → கெல் → கெலி → கெலிப்பு.] |
கெலுழன் | கெலுழன் keluḻṉ, பெ.(n.) கருடன்; kite. “கெலுமுனோ நந்தனென்னா” (சீவக.1926);. [கலுமுன் → கெலுழன்.] |
கெல்-தல் | கெல்-தல் keltal, 13செ.கு.வி.(v.i.) புறப்படுதல்,போதல்; to go. Fin. kulkea (togo. towalk);; Est.kulgeda; Hung.kel; Mong.yulyu; Turk.gelmek(tocome);; J.kuru; O. chullai. [குல் → கெல்.] |
கெல்லத்தொந்தி | கெல்லத்தொந்தி kellattondi, பெ. (n.) செல்வச் செழிப்பில் இளமையிற் பெருத்த வயிறு; paunch belly due to luxurious living. [செல்வம் + தொந்தி] |
கெல்லு-தல் | கெல்லு-தல் kelludal, 5.செ.குன்றாவி(v.t.) 1.கல்லுதல்; to dig out as a hole. “கிணறு கெல்ல”(தனிப்பா. 2.140,356);2.வயிற்றை அரித்துவிடுதல்(யாழ்ப்.);:to irritate or corrode and waste the stomach, as excessive stimulus. 3. கிண்டுதல்; to stir. 4. தோண்டுதல்:to dig up; to pluck, uproot, மலையைக் கெல்லி எலியைப் பிடிப்பது போல் (உ.வ.);. [கில் → கெல் → கெல்லு.] |
கெல்லுகம்பு | கெல்லுகம்பு gellugambu, பெ.(n.) கல்லுகொம்பு; stake for digging the earth. [கல்லுகொம்பு → கெல்லுகம்பு.] |
கெல்லுவி-த்தல் | கெல்லுவி-த்தல் kelluvittal, பி.வி.(caus.v.) தோற்றுவித்தல்; cause to make. “மல்லாபுரத்தில் புதிதாகக்கெல்லுவித்த இராமானுசன் கால்வாய்க்கும் திருவிடை யாட்டம் ஏரிகால்வாய்க்கும்”(திருப்.கல். தொ.2, கல்.134-3);. [கெல்லு → கெல்லுவி.] |
கெள | கெள1 keḷa, பெ.(n.) ககர மெய்யும் ஒளகார நெட்டுயிரும் சேர்ந்த பின்னண்ண வல்லின உயிர்மெய் சார்பெழுத்தாகிய அசையெழுத்து; vowel consonant secondary letter, being a compound of velar consonant ‘k’ and vowel ‘au’ syllable in character. [க் + ஒள → கெள.] கெள2 keḷa, பெ.(n.) கொள்ளு; horse-gram (மலை.);. |
கெளசலன் | கெளசலன் keḷacalaṉ, பெ.(n.) மன்னன் அம்சத்துவசன் குமரன்; son of a king amšattuvašavaŋ. இவன் கன்னிகாரக்காட்டிற்கு வேட்டைக்குச் சென்று அங்கு ஒரு பொன்மானைக் கண்டு பின்தொடர, அம்மான் மறைந்தது. அவ்விடம் சிறப்பான இடமென்று எண்ணிச் சிவபூசனை செய்தான் (அபி.சிந்);. |
கெளசலை | கெளசலை keḷacalai, பெ.(n.) 1. யயாதியின் மகனான பூருவின் மனைவி; wite of Puru. 2. வீமராசன் மகள்; daughter of Vima-rasan. 3.மன்னன் மீளியின் மனைவி; wife of a king mili(அபி.சிந்.);. |
கெளசல்யன் | கெளசல்யன் keḷacalyaṉ, பெ.(n.) தட்சிண கோசலத்தின் மன்னன்; king of tatcina-kõšalam(அபி.சிந்.);. |
கெளசிகதாரி | கெளசிகதாரி keḷacikatāri, பெ.(n.) குங்கிலியம்; Indian dammer, Shorea robusta (சா.அக.);. [கெளசிக +தாரி] |
கெளசிகை | கெளசிகை keḷacikai, பெ.(n.) விசுவாமித்திரரின் தமக்கை; sister of Višuvamitirar. |
கெளசிப்பி | கெளசிப்பி keḷasippi, பெ.(n.) முத்தின் மேலுள்ள கூடு; shell covering the pearl. தெ. கெளசிப்ப. [கவ்வு → கெளவு + சிப்பி.] |
கெளசியல் | கெளசியல் keḷaciyal, பெ.(n.) தென்னை மரம், coconuttree (சா.அக.);. [கெளசி + பல்] |
கெளசுகம் | கெளசுகம் geḷasugam, பெ.(n.) 1. ஒருவகை மரம்; a kind of tree, tripterocarp dammer (மலை.);. 2. குங்கிலியம் பார்க்க;see kurigiliyam. |
கெளச்சிகர் | கெளச்சிகர் keḷaccikar, பெ.(n.) ஒரு முனிவர்; a Saint. இவர் திருமாலை எண்ணி தவம் செய்தார். விருத்தை என்பவளை மணந்து மிருகண்டுவைப் பெற்றனர் (அபி.சிந்);. |
கெளஞ்சிகன் | கெளஞ்சிகன் keḷañcikaṉ, பெ.(n.) பொன் வினைஞன் (யாழ்.அக);; goldsmith(செ.அக.);. |
கெளடசாட்சி | கெளடசாட்சி keḷaḍacāḍci, பெ.(n.) பொய்ச்சாட்சி; false witness. [கவல் → கவடு → கெளடம் + சாட்சி.] |
கெளடதம் | கெளடதம் keḷaṭatam, பெ. (ո.) 1. வெள்ளுள்ளி; garlic. 2. வெட்பாலை; tellicherry bark, Nerium antidysentericum (சாஅக.);. |
கெளடநடை | கெளடநடை keḷaḍanaḍai, பெ.(n.) கெளடநெறி பார்க்க (w);;see kauda-neri. [கெளடம் + நடை.] |
கெளடநெறி | கெளடநெறி keḷaḍaneṟi, பெ.(n.) செறிவு முதலிய வைதருப்ப நெறிக்குரிய குணங்கள் நிரம்பி வாராமல் சொற்பெருகத் தொடுக்குஞ் செய்யுனெறி; the Kauda style of poetry characterised mainly by verbosity dist. fr. Vaidharbaneri. [கெளடம் = வங்கநாடு. வெல்லம் காய்ச்சுதலினால் பெயர் பெற்ற நாடு. கெளடம் + நெறி.] |
கெளடம் | கெளடம்1 keḷaḍam, பெ.(n.) 1.வங்காள நடுவில் உள்ள ஒரு நாடு; the district of Gaur, central part of Bengal extending from Vanga to the borders of Orissa. 2. கெளட நெறி பார்க்க (தண்டி.4);;see kaudaneri. [கருப்பட்டி – கொர்டு = கூடு (வெல்லம்); → கெளடு → கெளடம் (வெல்லம் காய்ச்சியதால் இப்பெயர் பெற்ற வங்க நாடு] கெளடம்2 keḷaḍam, பெ.(n.) ஒருவகைக் கொடி; a medicinal creeper. |
கெளடி | கெளடி1 keḷaḍi, பெ.(n.) கவடி, பலகறை; [கவடி (சோழி, பலகறை); → கௌடி.] கௌடி2 ஒரு பண்; a musical mode. [கவ்வு→கவ்வுளி→கவுளி→கவுடி→கெளடி.] கெளடி3 keḷaḍi, பெ.(n.) 1. வழிமுறையாகக் காட்டப்படுகிறது; a sample of the thing. 2. கோலிகை (மாதிரி);; specimen, illustrative or typical example. தெ. கவுடுவு, கெளடி. கைவடி கைவளி. [கைவழி→கைவடி→கெளடி. கைவழி = (வழிமுறை); அதன் வழிவந்தது. வழிமுறை எனப்பொருள்பட்ட இத்தமிழ்ச்சொல் வழக்கிழந்தது.] |
கெளடிபாய்-தல் | கெளடிபாய்-தல் keḷaḍipāytal, 13 செ.கு.வி.(v.i.) ஒருவகை விளையாட்டு; a kind of play. [கவுடி → கௌடி + பாய்-.] |
கெளடு | கெளடு keḷaḍu, பெ.(n.) கவடு, கள்ளம்;தெ.கெளடு. [கவல் → கவடு → கெளடு(கொ.வ.);] |
கெளட்டம் | கெளட்டம் keḷaṭṭam, பெ.(n.) மாட்டின் கால் நோய்; a disease affecting the legs of cattle. தெ. கெளட்ட [கவுட்டம் → கெளட்டம்.] |
கெளணப்பொருள் | கெளணப்பொருள் keḷaṇapporuḷ, பெ.(n.) இலக்கண வகையாற் கொள்ளும் பொருள் (சி.சி. பாயி. 2. ஞானப்.);; secondary meaning or sense of a word, metaphorical sense, opp. to, mukkiyapporul. [கமுக்கம் → கமுணம் → கவுணம் → கௌணம் + பொருள்.] |
கெளணியன் | கெளணியன் keḷaṇiyaṉ, பெ.(n.) கவுணியக் குலத்தான்; one born in the Kaundinya gotra. மறுவ. கவுணியன். [கோ = மாடு, ஆனிரை, கோ → கோன் → கோனியன் → கௌணியன் (கவுணியன்); → கவுணியன் – ஆனிரை பேய்க்குடியினன்.] ஐந்திரவிட மொழிகளான குச்சா மொழியில் கோணனி என்னும் சொல்லும் மராத்தியில் கவ்வுள என்னும் சொல்லும் கால்நடை மேய்ப்போரைக் குறித்தல் காண்க. |
கெளதபெருந்தச்சன் | கெளதபெருந்தச்சன் keḷadaberundaccaṉ, பெ.(n.) மாமல்லபுரத்தை உருவாக்கிய தலைமைக் கட்டுமானக் கலைஞருள் ஒருவர்; one of the chief Sthapathis, who were responsible for the rock cut caves and buildings of Mamallapuram. கௌதப் பெருந்தச்சன் என்னும் எழுத்துப் பொறிப்பு, பூஞ்சோலை எனும் சிற்றூர்ப் புடைப்புக் கல்லில் காணப்படுகிறது. [கோதை = பெரியவன், தலைவன். கோதை → கெளதம் + பெருந்தச்சன்.] கௌதம்1 மீன்கொத்தி; kingfisher. [கவ்வு → கவுதம் → கெளதம்.] |
கெளதமநதி | கெளதமநதி keḷadamanadi, பெ.(n.) கெளதமை நதி; river Kaudamai. [கெளதம் + நதி.] |
கெளதமநாடி | கெளதமநாடி keḷatamanāṭi, பெ. (n.) கெளதமரால் தமிழில் செய்யப்பட்ட ஒரு கணிய நூல்; a work an astrology written by sage kowtama(சா.அக);. [கெளதம+ நா.] |
கெளதமனார் | கெளதமனார் keḷadamaṉār, பெ.(n.) 1. தலைக் கழகப் புலவருள் ஒருவர் (தொல். பொருள்.75. உரை);; a poet of the first Sangam. 2. கோதமன் பார்க்க;see kõdaman. [கோ → கோதை → கோதமன் → கெளதமன். கெளதமன் என்பது வடமொழியில் பெற்ற திரிபு.] |
கெளதமன் | கெளதமன் keḷadamaṉ, பெ.(n.) 1. கவுதம புத்தன்; the Buddha. 2. ஒரு முனிவர்; an ancient saint. [கோ → கோதை = பெரியவன், தலைவன். கோதை → கோதமன் → கெளதமன்.] கோதை எனும் சொல் பெரிய மாலையையும் ஆற்றல் மிக்க தலைவன் எனும் பொருளில் சேர மன்னனையும் குறித்தல் காண்க. |
கெளதம் | கெளதம்2 keḷadam, பெ.(n.) மழைநீரால் சுவர் நனையாதிருக்கச் சுவரின் உச்சியில் கட்டப்படும் கட்டட அமைப்பு (Tinn);; cornice. [கோ → கோதை (அகன்றது. பெரியது); → கெளதம்.] |
கெளதாரி | கெளதாரி keḷatāri, பெ.(n.) ஒரு பறவை; Indian partridge. [கதுவாலி → கவுதாரி → கௌதாரி.] |
கெளந்தி | கெளந்தி1 keḷandi, பெ.(n.) 1.வால்மிளகு(மலை.);; cubele. 2. கடுக்காய்வேர் (மூ.அக.);; chebulic myrobalan root. [காந்து → காந்தி → கெளந்தி.] கெளந்தி keḷandi, பெ.(n.) சைன தவப்பெண் (திவா.);; female Jain ascetic. [காந்து → காந்தி → கெளந்தி.] |
கெளனு | கெளனு keḷaṉu, பெ.(n.) 1. நடுப்பகுதி; middle. 2. நடுவு; centre. 3. இலைகளால் செய்த செருப்பு; a slipper made of leaves. தெ. கவுனு. கெளனு. [குள்→குவ்→கவ்→கவல் (பள்ளம், நடுக்குழி);→கவுல்→கவுன் (கவுள்); →கவுனு→கெளனு.] பள்ளமான நடுப்பகுதியும், குழிந்த உள்ளங்காலுக்குப் பொருந்துமாறு பொருத்திக் கட்டிய இலைகளாலான மிதியடியும் கவுன் எனும் சொல்வடிவம் பெறலாயின. ங |
கெளபள்ளி | கெளபள்ளி keḷabaḷḷi, பெ.(n.) தருமபுரி மாவட்டத்துச் சிற்றூர்; a village in Dharmapuri Dt. [கேளன் + பள்ளி – கேளண்பள்ளி → கெளபள்ளி.] |
கெளமாரம் | கெளமாரம் keḷamāram, பெ.(n.) 1.இளம்பருவம்; childhood. 2. முருகக்கடவுளே பரம்பொருளென்று வழிபடும் சமயம்; the religion of the Skanda as supreme being and whose followers are exclusively devoted to his worship. 3. கவுமாரம்;see kavumáram. [குமரன்→குமரம்→கெளமாரம்] |
கெளமாரி | கெளமாரி keḷamāri, பெ.(n.) 1. தூய பெண்களுள் ஒருத்தி; one of Catta-mădar. the female principle of Kumara or Skanda. 2. மாகாளீ (பிங்.);; Kali. [குமரி → கெளமாரி] |
கெளரம் | கெளரம் keḷaram, பெ.(n.) 1. வெண்மை; whiteness. 2. பொன்னிறம் (சிலப். 12:67, உரை);; yellow colour. 3. அச்சம்; fear. 4. தூய்மை; cleanliness. 5. தாமரை; lotus. 6. நூல்; thread. 7. பொன்; gold. 8. கவுரம் பார்க்க;see kavuram. [கோடு = யானைக் கொம்பு செங்குத்தான செம்மண்மேடு. உயரம் (அச்சம்); கோடு → கோடம் → கோரம் (கொ.வ.);.] |
கெளரி | கெளரி1 keḷari, பெ.(n.) 1. மலைமகள், பார்வதி; Parvati. “பேருங் கெளரியென் றழைத்தனர்.” (திருவிளை. விருத்த. 4);. 2. காளி; Kali. “அம்பிகை மாதரி கெளரி” (அரிச். 4. துதி);. 3. எட்டு அல்லது பத்தகவைப் பெண்; young girl of 8 or 10 years. 4. பொன்னிறம் (W.);; yellow colour. 5. கடுகு; mustard (மலை.);. 6. கொடிவகை; bristly trifoliate vine. [குமரி → குவரி → கெளரி] |
கெளரிகாளை | கெளரிகாளை keḷarikāḷai, பெ.(n.) எக்காள வகை; a long brass trumpet. [குமரி → குவரி → கெளரி + காளை.] |
கெளரிக்கங்கை | கெளரிக்கங்கை keḷarikkaṅgai, பெ.(n.) ஒர் ஆறு;а river. [குமரி → குவரி → கெளரி + கங்கை.] |
கெளரிசிப்பி | கெளரிசிப்பி keḷarisippi, பெ.(n.) வழிபாட்டுக் கலனாகப் பயன்படும் பெருஞ்சங்கு(W);; a big conch which is used as a thing to be worshipped. [குமரி → குவரி → கெளரி சிப்பி.] |
கெளரிபாத்திரம் | கெளரிபாத்திரம் keḷaripāttiram, பெ.(n.) கௌரிசிப்பி பார்க்க;see kauri-cippi (W.);. [கெளரி + பாத்திரம்.] |
கெளரிமைந்தன் | கெளரிமைந்தன் keḷarimaindaṉ, பெ.(n.) முருகக்கடவுள் (பிங்l.);; Skanda, as son of Parvati. [குமரி → குவரி → கெளரி + மைந்தன்.] |
கெளரியச்சம் | கெளரியச்சம் keḷariyaccam, பெ.(n.) ஒரு பூடு; an unknown plant (சா.அக.);. [கெளரி +அச்சம்] |
கெளரியம் | கெளரியம் keḷariyam, பெ.(n.) பாண்டியன் பட்டப் பெயர்; Pandiyas title. “தவிரா வீகைக் கெளரியர் மருக” (புறநா. 3:5);. மறுவ. குமரியர். [குமரி = குமரிநாடு. பாண்டியர்களில் பழை நாடு. கடல் கொண்ட தென்னாடு. குமரி → குமரியர் → குவரியர் → கெளரியர் = பாண்டியர்.] |
கெளரு | கெளரு keḷaru, பெ.(n.) முதிர்வண்ணம். அழுத்தமான நிறம்; bright colour. தெ. கெளரு, கவுரு. [கவிர் → கவுர் → கெளரு.] |
கெளளம் | கெளளம் keḷaḷam, பெ.(n.) இசைவகை, பண்வகை (பரத.இராக.55);; a primary melody-type. [கவ்வு → கவ்வுளம் (செறிந்த பண் வகை); → கெளளம்.] |
கெளளி | கெளளி1 keḷaḷi, பெ.(n.) 1. பல்லி; lizard. 2. கவுளி பார்க்க;see kavuli. [கவ்வு → கவ்வுளி → கவுளி → கெளளி.] கெளளி2 keḷaḷi, பெ.(n.) 1. ஒரு பண்வகை (பரத. இராக. 56);; a specific melody – type. 2. நூறு வெற்றிலை கொண்ட கட்டு; bundle of 100 betel leaves. [கவ்வு → கவ்வுளம் → கவுளம் → கெளளி (செறிந்த பண்வகை);.] |
கெளளிக்கட்டாயச்சொல்(லு)-தல் | கெளளிக்கட்டாயச்சொல்(லு)-தல் keḷaḷikkaṭṭāyaccolludal, 8 செ.கு.வி.(v.i.) குறிசொல்லி ஏமாற்றுதல் (இ,வ.);; to deceive a person by professing to foretell, to mislead by soothsaying. [கௌளி + கட்டாயம் + சொல்.] |
கெளளிக்கட்டு | கெளளிக்கட்டு keḷaḷikkaṭṭu, பெ.(n.) கெளளிக் காதல் பார்க்க; [கொளளி + கட்டு.] |
கெளளிக்காதல் | கெளளிக்காதல் keḷaḷikkātal, பெ.(n.) நன்மை தீமைகளை அறிவிக்கும் பல்லி ஒலி (W.);; chirp of a lizard, as presaying good or evil. [கௌளி + காதல், கதைத்தல் (பேசுதல்); = காதல்.] |
கெளளிசாத்திரம் | கெளளிசாத்திரம் keḷaḷicāttiram, பெ.(n.) பல்லிச் சொற்குப் பலன் கூறும் நூல்; treatise interpreting the chirps of lizards. [கவுளி → கௌளி + சாத்திரம்.] |
கெளளிச்சொல் | கெளளிச்சொல் keḷaḷiccol, பெ.(n.) கெளளிக் காதல் பார்க்க;see kauli-k-kādal (Loc.);. [கெளளி + சொல்.] |
கெளளிபத்திரம் | கெளளிபத்திரம் keḷaḷibattiram, பெ.(n.) வெள்ளை வெற்றிலை வகை; white betel-leaf. [கொளி = வெண்மை. கெளளி + பத்திரம்.] |
கெளளிபாத்திரம் | கெளளிபாத்திரம் keḷaḷipāttiram, பெ.(n.) 1. மஞ்சள் நிறமான காய்கள் காய்க்குந் தெங்குவகை; a variety of coconut tree bearing yellow coconuts (Loc.);. 2. தேங்காயோட்டினால் செய்யப்பட்டுத் துறவியர் நீர் அல்லது உணவுகொள்ளப் பயன்படுத்தும் ஏனம்; coconut shell used by ascetics as a begging bowl, water – vessel, etc. [கௌளி = வெண்மை. கெளளி + பாத்திரம்.] |
கெளவல் | கெளவல் keḷaval, பெ.(n.) கெளவுதல்; grasp with eagerness, to seize with mouth. [கவ்வு → கவ்வல் → கெளவல்.] |
கெளவானம் | கெளவானம் keḷavāṉam, பெ.(n.) குறிஞ்சி யாழ்த்திறங்களுள் ஒன்று; an ancient secondary melody. type of the kurinji classs. [கெளளம் + வாணம் = கெளளவானம் → கெளவாணம்.] |
கெளவாளன் | கெளவாளன் keḷavāḷaṉ, பெ.(n.) மீன்வகை; a kind of fish. [கவ் → கெள + ஆளன்-கெளவாளன்.] |
கெளவிக்கொள்-தல் | கெளவிக்கொள்-தல் keḷavikkoḷtal, 16 செ. குன்றாவி (v.t.) 1. வாயால் பற்றிக் கொள்ளுதல்; to catch by mouth. 2. கைப்பற்றிக்கொள்; to take by force. தெ. கெளங்கிலி (வலக்காரமாகச் சேர்த்துக்கொள்ளல், அணைத்துக் கொள்ளல்); [கவ்வு → கெளவு + கொள்-கெளவிக்கொள்.] |
கெளவியம் | கெளவியம் keḷaviyam, பெ.(n.) ஆனைந்து பசுவினின்று பெறப்படும் பால், தயிர், மோர், வெண்ணெய், நெய் ஆகிய பொருள்கள்; the five choice products of a cow. “தீதில் கௌவியங் கூட்டுபுபிசைந்தனர்” (சூத, சிவமா 2:23);. [கோ(மாடு); → கோவியம் → கவ்வியம். .கவ்வியம் பார்க்க;see Kavviyam.] |
கெளவு-தல் | கெளவு-தல் keḷavudal, செ.குன்றாவி.(v.t.) 1. வாயால் பிடித்தல்; to seize with mouth, grasp with eagerness. “கூர்த்துநாய் கெளவிக் கொளக்கண்டும்” (நாலடி. 70);. 2. கவர்தல்; to absorb, engross. “அகங்கௌவிய களிப்பெய்தி” (திருவிளை. யானை. 24);. [கவ்வு → கெளவு.] |
கெளவுகண் | கெளவுகண் geḷavugaṇ, பெ.(n.) கீழ்ப்பார்வை; downcast furtive look. கெளவுகண் போட்டுப் பார்க்கிறான் (நாஞ்.);. [கவ்வு → கெளவு + கண்.] |
கெளவுதடி | கெளவுதடி keḷavudaḍi, பெ.(n.) 1.கவரான கழி (அகநா. 34, உரை.);; forked stick. 2. குத்துக்கோல் (சிலப்.16, 162.அரும்.);; pike staff. 3. கவைக்கோல் பார்க்க (W.);;see kavai-k-köl. [கவை → கவ்வு → கெளவு + தடி.] |
கெளவை | கெளவை1 keḷavai, பெ.(n.) 1. ஒலி; sound. “குயிற் கெளவையிற் பெரிதே” (ஐங்குறு.369);. 2.வெளிப்பாடு; disclosure. “கற்பொடு புணர்ந்த கெளவை” (தொல்.பொருள். 41);. 3. பழிச்சொல்; ill report, scandal. “கல்லென் கெளவை யெழாஅக் காலே”(ஐங்குறு. 131);. 4. துன்பம் (பிங்.);; affliction, distress. 5. கள் (பிங்.); toddy. [கவ்வை→கெளவை.] கெளவை2 keḷavai, பெ.(n.) 1.வினை; concern, business, affair. 2. எள்ளிளங்காய்; green sesamum seed. “கெளவை போகிய கருங்கா” (மலைபடு.105);. 3. ஆயில்யம்; the nineth naksatra. [செய் → கெய் → கய் → கவ் → கவ்வை → கெளவை.] |
கெளவை மரம் | கெளவை மரம் keḷavaimaram, பெ.(n.) அடைப்புக்குள் விலங்குகள் வாராமல் தடுக்குங்கட்டை; cross bar at the entrance of an enclosure to prevent animals from straying (Loc.);. கெளவைமரம் [கவ்வு → கெளவை + மரம்.] |
கெளி-த்தல் | கெளி-த்தல் keḷittal, 4செ.கு.வி.(v.i.) நெளிந்துபோதல் (யாழ். அக.);; to wriggle, crawl, as a worm. Skt. gal. [குல் → கெல் → கெளி.] |
கெளிசு | கெளிசு keḷisu, பெ.(n.) 1. காமாலை வீக்கம்; swelling in jaundice. 2. பாண்டு; dropsy (சா.அக.);. 3. முகம் வயிறுகளிற் காணும் வீக்கம் (யாழ்ப்.);; bloatedness, as of the face or stomach. [குல் → கெல் → கெள் → கெளிசு.] |
கெளிசுபற்று-தல் | கெளிசுபற்று-தல் keḷisubaṟṟudal, 5 செ.கு.வி. (v.i.) முகம்முதலியனவீங்குதல்(யாழ்.அக.);; to be bloated, as the face or stomach. [கெளிசு+பற்று-.] |
கெளிச்சாறு | கெளிச்சாறு keḷiccāṟu, பெ.(n.) நிலத்துளசி; ground basil (சா.அக.);. [கெளி → சாறு.] |
கெளிதம் | கெளிதம் keḷidam, பெ.(n.) பெருங்கல் (சது.);; large Stone. Skt. galita. [குல் → கெல் → கெள் → கெளிதம்.] |
கெளித்தி | கெளித்தி keḷitti, பெ.(n.) கெளிற்றுமீன், நன்னீர் உள்ள இடங்களில் வாழும் மீன்; a river fish. [கெளிறு → கெளிற்றி → கெளித்தி.] |
கெளித்திப்பச்சை | கெளித்திப்பச்சை keḷittippaccai, பெ.(n.) பச்சை எரியணம் (கற்பூரம்);; crude camphor(சா.அக.);. [கெளித்தி + பச்சை.] |
கெளிப்பு | கெளிப்பு keḷippu, பெ.(n.) 1.வளைவு; bend. 2.நெளிவு: twist. [குல் → கெல் → கெள் → கெளிப்பு.] |
கெளிர்ச்சல்லியம் | கெளிர்ச்சல்லியம் keḷirccalliyam, பெ.(n.) மீனெலும்பு (வின்.);; fish bone. [கெளிறு + சல்லியம்.] |
கெளிறு | கெளிறு keḷiṟu, பெ.(n.) கெளுத்திபார்க்க;see kelutti. “கேவேடராகிக்கெளிறதுபடுத்தும்” (திருவாச.2:17);. [குள் → கெள் → கெளிறு.] |
கெளிற்றுமீன் | கெளிற்றுமீன் keḷiṟṟumīṉ, பெ.(n.) கெளிறு, a kind of tumy or cat fish (சா.அக.);. [கெளிறு+மீன்.] சிற்றுார்களில் ஏரி, குளம், குட்டை கண்மாய் போன்ற நீர்நிலைகளில் இவ்வகை கெளிற்று மீன்கள் காணப்படுகிறது. [P] |
கெளிற்றுமுள்ளி | கெளிற்றுமுள்ளி keḷiṟṟumuḷḷi, பெ.(n.) கெளிற்று மீனைப் பிடித்தற்குரிய தூண்டில்; tackle used in catching kesirru-mia (செ.அக.);. கெளிற்றுமுள்ளி keḷiṟṟumuḷḷi, பெ.(n.) கெளிற்று மீனைப்பிடித்தற்குரிய தூண்டில்(இ.வ.);; tackle used in catching kelirru-min. [கெளிறு + முள்ளி.] |
கெளுசி சந்தனம் | கெளுசி சந்தனம் keḷusisandaṉam, பெ.(n.) பேய்ப் புடல்; devil’s gourd. [கெளிசு → கெளிசி + சந்தனம்.] |
கெளுத்தி | கெளுத்தி keḷutti, பெ.(n.) 1. எட்டங்குல நீளமுள்ள கெளிற்றுமீன்: fiddler-keliru, silvery or golden, attaining 8 in. in length. 2.நன்னீரில் வாழும் மீன் வகை; a fresh-waterfish, brownish attaining considerable size. 3. பதினெட்டு விரல் நீளமுள்ள மீன்வகை; a fresh-waterfish-bird, bluish-brown,attaining 18in. in length. 4. தேளிமீன்; scorpion-fish, leaden, attaining more than 1 ft. in length. [P] கெளுத்தி மீன் ம.கென்னலு. [கெளிறு → கெளுத்தி.] வகைகள்: 1. பொன் கெளுத்தி, 2. கானாங்கெளுத்தி, 3.கோழக்கெளுத்தி, 4.ஆற்றுக்கெளுத்தி. |
கெளுத்திபிலாச்சை | கெளுத்திபிலாச்சை keḷuttibilāccai, பெ.(n.) கெளுத்திபோலத் தோற்றமுள்ள ஒருவகைமீன்; a kind of fish like kelutti. [கெளுத்தி + பிலாச்சை) |
கெளுத்திப்பூண்டு | கெளுத்திப்பூண்டு keḷuttippūṇṭu, பெ.(n.) மீனெரிஞ்சான் செடி; a species of rattlewort (சா.அக.);. [கெளுத்தி + பூண்டு.] |
கெழி | கெழி keḻi, பெ.(n.) நட்பு; friendship. “ஒருவன் கெழியின்மை கேட்டாலறிக” (நான்மணி.63);. ம.கெழி;க.கெளெ. [கெழுவு → கெழி.] |
கெழீஇயினர் | கெழீஇயினர் keḻīiyiṉar, பெ.(n.) சுற்றத்தார்; relatives. “கேளல்கேளிர்கெழிஇயினர்ஒழுகவும்” (அகம். 93:2);. [கெழீஇ + இனர்.] |
கெழீஇயின்மை | கெழீஇயின்மை keḻīiyiṉmai, பெ.(n.) கெழீஇயிலி பார்க்க;see Keliyili. “கண்டறிவார் போலார் கெழீஇயின்மைசெய்வாரைப்பண்டறிவார் போலாது” (பழ.140:1);. [கெழீஇ + இன்மை.] |
கெழீஇயிலர் | கெழீஇயிலர் keḻīiyilar, பெ.(n.) விருப்பமில்லார் (மணக்குடவர்);; one who does not like. “வீழப்படுவார் கெழீ இயிலர் தாம்வீழ்வார் வீழப் படாஅர் எனின்” (குறள் 1194);. [கெழு → கெழி → கெழீ + இலர்.] |
கெழீஇயிலார் | கெழீஇயிலார் keḻīiyilār, பெ.(n.) நன்மை யடையாதவர்; one who has not benefited. “பெரியாரைச்சார்ந்துகெழீயிலார்இல்” (பழ.257);. [கெழீஇ → (அல்லர்); → அலார்.] |
கெழீஇயிலி | கெழீஇயிலி keḻīiyili, பெ.(n.) பகைவன் (தொல். சொல்.57. உரை);; enemy, as one not on amicable terms. [கெழு → கெழி → கெழீ + இலி.] |
கெழு | கெழு1 keḻudal, 2செ.கு.வி.(v.i.) 1.அடர்தல்,செறிதல், நெருக்கமாதல்; to become tense, crowded. 2. இறுக்கமாதல், to get tightened. Fin. kirea (tight, tense);: kiristaa(to tighten);: Kere. kirei; Est.kiristada; Mordvin. Kirems; Q.giruy-firuy. [குல் → கெல் → கெழு.] கெழு2 keḻu, பெ.(n.) 1.ஒரு சாரியை; an euphonic increment. “உம்முங்கெழுவுமுளப்படப்பிறவும்(தொல், எழுத்து.481.);. 2.நிறம்; Colour. “குருவுந்கெழுவுநிறனா கும்மே” (தொல்.சொல்.303);. 2. இடைச்சொல்; participle. “வேல்கெழுதடக்கை”. [குல் → கெல் → கெழு.] கெழு3 keḻu, பெ.(n.) 1.நிறம்; colour. “குருவுங்கெழுவு நிறனா கும்மே.”(தொல்.சொல்.303);. 2. அதிக ஒளி: brightness, luminosity, brilliance. [குல் → கெல் → கெழு.] கெழு4 keḻu, பெ.(n.) குணகம்; coefficient (Maths);. [குல் → குழு → கெழு.] |
கெழுதகை | கெழுதகை geḻudagai, பெ.(n.) கெழுதகைமை பார்க்க;see kelutagama “கிள்ளி வளவனொடு கெழுதகை வேண்டி”(மணிமே.25:14);. [கெழு + தகை.] |
கெழுதகைமை | கெழுதகைமை geḻudagaimai, பெ.(n.) உரிமை; right. Intimacy. “கேளிழுக்கங் கேளாக் கெழுதகைமை” (குறள். 808);. [கெழுதகை → கெழுதகைமை.] |
கெழுத்தை | கெழுத்தை keḻuttai, பெ.(n.) நஞ்சுடைய முட்களைக் கொண்ட ஒரு வகை மீன்; a kind of poisonous thorny fish. [கள் → கழு → கெழு → கெழுத்தை.] |
கெழுமல் | கெழுமல் keḻumal, பெ.(n.) 1. முளைத்தல்; germination. 2. அமைதல்; formulation. 3. கற்றல்; studying. 4. நிறைதல்; becoming full. [குள் → கெழு → கெழுமல்.] |
கெழுமு | கெழுமு1 keḻumudal, பெ.(n.) 22செ.கு.வி.(v.i.); 1.நிறைதல்; to become full, plentedus, abundant. “கெழுமி யெங்கணுமாய்க் கிளரொளிச் சடையனை”(வள்ள. சத்தியஞான. பதியியல், 9);. 2 முதிர்தல்; to become ripe. ‘கெழுமுதல் ஈண்டு முற்றுதலை யுணர்த்திற்று’ (மலைபடு. 114, உரை);. 3. முளைத்தல் (அக.நி.);; to spring up, shoot forth (அக.நி.);. 4. பாலுணர்ச்சி கொள்ளுதல் ; to be affected with lust. “கிரிகையை நினைந்துடல் கெழுமி” (பாரத. குருகு. 104);. [குள் → கெழு → கெழுமு(மு.தா.40);.] |
கெழுமு-தல் | கெழுமு-தல் keḻumudal, 5 செ.குன்றாவி (v.t.) 1. பொருந்துதல்; to attain, join, unite. “தேரோட துகள்கெழுமி”(பட்டினப். 47.); 2. கிட்டுதல்; to approach. “ஒன்னாதார் படைகெழுமி”(பு.வெ. 3:12, கொளு);. 3. கற்றல் (திவா.);; to learn, practise. [குள் → குழு → கெழு → கெழுவு → கெழுமு(மு.தா.40.);] |
கெழுமை | கெழுமை1 keḻumai, பெ.(n.) 1:முளைக்குகை;.germinating. 2. வளமை; opulence. 3. நிறம்; colour. 4. ஒளி; brightness, shine. [குள் → கெழு → கெழுமல்.] |
கெழுவ | கெழுவ keḻuva, இடை.(part.) ஓர் உவமவுருபு; a term denoting comparison (தொல்.பொருள்.286, உரை.);. [குல் → குழுவு → கெழுவு.] |
கெழுவல் | கெழுவல் keḻuval, பெ.(n.) 1. தழுவுதல்; embracing. 2. நிறைதல்; become full. [கெழு → கெழுவல்.] |
கெழுவு | கெழுவு1 keḻuvudal, 5 செ.குன்றாவி, (v..t) 1. பொருந்துதல்; to unite, to embrace. “மங்கை யைக் கெழுவினயோகினர்” (தேவா.951:5);. 2.நிறைதல்:to be full. “கெழுவிய காதலையென் றெமதுள்ளம்” (தணிகைப்பு.களவு. 530);. 3.மயங்குதல்(சூடா.);:to be confused, deluded(சூடா.);: 4. பற்றுக் கொள்ளுதல் (சூடா.);; to be attached,as the mind to earthly things (சூடா.);. [குள் → கெழு → கெழுவு.] கெழுவு2 keḻuvu, பெ.(n.) நட்பு; friendship. “கேளிர் மணலின் கெழுவுமிதுவோ” (பரிபா. 8:63);. [குள் → குழு → கெழு → கெழுவு.] |
கெவரி | கெவரி kevari, பெ.(n.) வெள்ளைக்காக்கணம்; a kind of creeper with large white flowers and black fruit that turns red when ripe. மறுவ. காக்கனங்கோவை, கருவிளை, காக்கட்டான். |
கெவரிகம் | கெவரிகம் gevarigam, பெ.(n.) பல்லிப்பூடு; lizzard plant. [கவுளி → கெவளி → கெவரிகம்] |
கெவலிகபூடு | கெவலிகபூடு gevaligapūṭu, பெ.(n.) கொல்லைப் பல்லி (சித்.அக.);; a flowering parasitic plant. [கவுளி →.கெவளி → கெவலி → கெவலிகம் + பூடு.] |
கெவி | கெவி kevi, பெ.(n.) 1. பள்ளம்; depth, deep valley. 2. குகை; cave, cavern. “புவிதாவுங் கெவிதாவும்” (இராமநா.உயுத். 95. பக்.391);. தெ.,க.கவி (gavi);. [கவி → கெவி.] |
கெவிடு | கெவிடு keviḍu, பெ.(n.) 1.மந்திரக்கூடு(அட்சரக்கூடு); யாழ்.அக.);; case for talisman. 2. எழுத்துப் பலகையின் அறை; compartments of a type case. [கவுள் → கவுடு → கெவிடு.] |
கெவின்பலுக்கா | கெவின்பலுக்கா keviṉpalukkā, பெ.(n.) கப்பலறைக் கதவு; companion door (Naut.);. [கெவின் + பலுக்கா.] [E.cabin → த.கெவின்.] |
கெவின்வாசல் | கெவின்வாசல் keviṉvācal, பெ.(n.) கப்பலறைக்குச் செல்லும் வழி; companion way, stair-case leading to the cabin (Naut);. [கெவின் + வாசல்.] [E.cabin → த.கெவின்.] வாயில் → வாசல். |
கெவியூதி | கெவியூதி keviyūti, பெ.(n.) நாலரைக் கல் (மைல்); தொலைவு; a distance of 2 Indian leagues = 41/2 miles, “குரோச மிரட்டி சேர்ந்தது கெவியூதி” (தணிகைப்பு.அகத். 443.);. [காவதம் → கெவியூதி(கொ.வ.);] |
கெவுடு | கெவுடு kevuḍu, பெ.(n.) பொன் அல்லது வெள்ளிக் குவளைக்குள் வைத்துக் கட்டிக் கையில் அல்லது கழுத்தில் அணிந்து கொள்ளும் அக்கமணி (உருத்திராக்கம்);; rudrāksa bead enclosed in gold or silver case and tied on the arm or neck, as a badge, amulet or charm. [குவி → குவிர் → குவிரு → கெவுரு → கெவுடு.] |
கெவுதவரானி | கெவுதவரானி kevudavarāṉi, பெ.(n.) வெண்காக்கணம்; white-flowered mussel shell creeper. |
கெவுதவாரனி | கெவுதவாரனி kevutavāraṉi, பெ.(n.) வெள்ளைக் காக்காணம், white mussell shell creeper, Clitorea ternatea (சா.அக.);. [கவுத+வாரனி] |
கெவுதும்பா | கெவுதும்பா kevutumpā, பெ.(n.) 1. u, கவிழ்ந்துள்ள ஒரு வகைத் தும்பைச் செடி, stooping toombay flower, Leucas Procumbens alias Nepata Indica. 2. மலைத் தும்பை; his toombay, Phlomis biflora (சா.அக.);. [கவிழ்+ தும்பை] |
கெவுனகம் | கெவுனகம் kevuṉakam, பெ.(n.) கணங்கன் மரம்; an unknown tree supposed to possess high virtues (சா.அக.);. கெவுனகம் gevuṉagam, பெ.(n.) கணங்கன் மரம் (விருட்சம்);; an unknown tree supposed to posses high virtues. |
கெவுனகலை | கெவுனகலை gevuṉagalai, பெ.(n.) சூரிய கலை; vital air or prana passing through the right nostril. [கெவுனம் + கலை.] கல் → கலை. |
கெவுனகுளிகை | கெவுனகுளிகை gevuṉaguḷigai, பெ.(n.) வானில் பறப்பதற்காகச் சித்தார்கள் பயன்படுத்தும் ஒரு வகை இதன் (இரச);க் குளிகை; animated mercurial pills used by Siddharsw for flying in the aerial region. [கெவுனம் + குளிகை.] குள் → குளி → குளிகை. |
கெவுனசித்தி | கெவுனசித்தி kevuṉasitti, பெ.(n.) வானத்தில் பறப்பதற்குண்டான ஆற்றல் (சித்தி);; success in the art of flying in the aerial region. |
கெவுனம் | கெவுனம் kevuṉam, பெ.(n.) காக்காய்ப்பொன் (சங்.அக.);; mica. [கனவு → கவுனம் → கெவுனம்.] கெவுனம் kevuṉam, பெ.(n.) 1. வானம்; sky. 2. காக்கைப் பொன் (அப்பிரகம்);; mica. 3. பல புடவி (அண்டம்);களுக்கு இடையிலி லுள்ள இடைவெளி; the inter-spacews or regions between the several planets. |
கெவுனம்பாய்-தல் | கெவுனம்பாய்-தல் kevuṉambāytal, 2 செ.கு.வி. (v.i.) வானில் பறத்தல்; to fly in the air. [கெவுனம் + பாய்-,] |
கெவுனயோகம் | கெவுனயோகம் kevuṉayōkam, பெ.(n.) ஒரு வகை ஓமம் (யோகம்);; a kind of yoga practice. |
கெவுனலிகம் | கெவுனலிகம் gevuṉaligam, பெ.(n.) மூலாதாரம்; one of the six psychic centres in the human system known as sacral plescus. |
கெவுனி | கெவுனி kevuṉi, பெ.(n.) கோட்டைவாயில்(இ.வ.);; city gate, agate of a fort, castle. மறுவ, கவுனி. தெ. கவினி. [கவாடம் → கவானி → கவுனி.] கெவுனி kevuṉi, பெ.(n.) வானில் பறக்கக் கூடிய ஆற்றல் (சித்தி); வாய்ந்த சித்தன்; a Siddha skilled in the art of flying in the sky. |
கெவுரா | கெவுரா kevurā, பெ.(n.) துளசி (மலை.);; basil, a sacred plant for Vaisnavites. மறுவ. கெவுராசிகம். [கவிர் → கெவுரா] |
கெவுராசிகம் | கெவுராசிகம் kevurācikam, பெ.(n.) 1. துளசி; holy basil, Ocimum sanctum. 2. கடுகு; mustard (சா.அக.);. [காவு + ராசிகம்.] |
கெவுரிகாரம் | கெவுரிகாரம் kevurikāram, பெ.(n.) ஞாழல்; a tree (சா.அக.);. [குவி → குவிர் → குவிரி → கெவுரி → கெவுரிகாரம் (கொ.வ.);.] |
கெவுரிசங்கம் | கெவுரிசங்கம் kevurisaṅgam, பெ.(n.) 1. சிவனியர் (சைவர்கள்); மாலையாக அணியும் ஒருவகைக் கொட்டை; double rudrāksa bead. [குவி → குவிர் → குவிரி → கெவுரி+சங்கம்.] |
கெவுரியாதியம் | கெவுரியாதியம் kevuriyātiyam, பெ.(n.) பறங்கிப்பட்டை; China rod(சா.அக.);. [கவுரி → கெவுரி+ஆதியம்.] |
கெவுளா | கெவுளா kevuḷā, பெ.(n.) ஒரு மணமுடைய நெய்மம்; an aromatic substance. |
கெவுளி | கெவுளி1 kevuḷi, பெ.(n.) பல்லி; lizard. [கவுளி → கெவுளி.] கெவுளி2 kevuḷi, பெ.(n.) 1. மஞ்சள் நிறமான காய்கள் உண்டாகும்.தென்னைவகை(வின்.);; a species of coconut-palm bearing yellowish fruit. 2. சிவந்த சங்கு; a reddish sea shell conch. [கேளி : தெங்கு(வின்.);: கேளி → கெவுளி.] |
கெவுளிசாத்திரம் | கெவுளிசாத்திரம்1 kevuḷicāttiram, பெ.(n.) பல்லியின் ஒலிக்குப் பலன் கூறும் நூல்; a scientific treatise dwelling on the chirps of Lizzard. [கவுளி → கெவுளி + சாத்திரம்.] கெவுளிசாத்திரம்2 kevuḷicāttiram, பெ.(n.) 1. மந்திரக்கூடு (அட்சரக் கூடு); (யாழ்.அக.);; case for talisman. 2. எழுத்துப் பலகையின் அறை; compartments of a type case. [கவுளி → கெவுளி + சாத்திரம்.] |
கெவுளிச்செவ்விளை | கெவுளிச்செவ்விளை kevuḷiccevviḷai, பெ.(n.) ஒரு வகைத் தெங்கு; a kind of coconut. [கேளி : தெங்கு; கேளி → கெவுளி → செவ்விளை.] |
கெவுளிபாத்திரம் | கெவுளிபாத்திரம் kevuḷipāttiram, பெ.(n.) 1. ஒரு வகை தென்னை; a kind of coconut. 2. பிச்சை எடுக்கும் தேங்காய் ஓடு; Coconut-shell for taking alms. [கெவுளி + பாத்திரம்.] |
கெவ்வியமலம் | கெவ்வியமலம் kevviyamalam, பெ.(n.) தயிர்; curd. |
கெவ்வியம் | கெவ்வியம் kevviyam, பெ.(n.) நாய்வேளை (மலை.);: a sticky plant that grows in sandy places. [கவ்வு → கெவ்வு + அம் : கெவ்வியம்.] |