செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை வெளியீடு
31 தொகுதி 12000 பக்கங்கள் கொண்ட பேரகரமுதலி


1

10838

2769

3111

538

3554

677

1093

620

189

1004

402

2
க்
1

8212
கா
2579
கி
564
கீ
222
கு
4598
கூ
780
கெ
615
கே
391
கை
1101
கொ
2417
கோ
1754
கௌ
110
ங்
1

2
ஙா
2
ஙி
1
ஙீ
1
ஙு
1
ஙூ
1
ஙெ
1
ஙே
1
ஙை
1
ஙொ
5
ஙோ
1
ஙௌ
1
ச்
1

5235
சா
1186
சி
2424
சீ
439
சு
1261
சூ
420
செ
1529
சே
470
சை
23
சொ
409
சோ
365
சௌ
1
ஞ்
1

15
ஞா
44
ஞி
3
ஞீ ஞு ஞூ ஞெ
34
ஞே
5
ஞை
2
ஞொ
3
ஞோ
2
ஞௌ
1
ட்
1

1
டா
1
டி
1
டீ
1
டு
1
டூ
1
டெ
2
டே
1
டை
1
டொ
1
டோ
1
டௌ
ண்
1

1
ணா
1
ணி
1
ணீ ணு
1
ணூ
1
ணெ
2
ணே
1
ணை
1
ணொ
1
ணோ
1
ணௌ
த்
3113
தா
1530
தி
2203
தீ
393
து
1238
தூ
411
தெ
694
தே
856
தை
39
தொ
878
தோ
459
தௌ
ந்
1

2789
நா
204
நி
1860
நீ
1161
நு
14
நூ
18
நெ
892
நே
318
நை
89
நொ
210
நோ
159
நௌ
2
ப்
1

4560
பா
1824
பி
492
பீ
25
பு
2224
பூ
1133
பெ
1064
பே
483
பை
127
பொ
1218
போ
478
பௌ
2
ம்
4760
மா
1422
மி
535
மீ
268
மு
3016
மூ
949
மெ
396
மே
751
மை
152
மொ
284
மோ
242
மௌ
ய்
1

119
யா
426
யி
1
யீ
1
யு
46
யூ
20
யெ
9
யே
1
யை
1
யொ
1
யோ
98
யௌ
1
ர்
87
ரா
107
ரி
11
ரீ
7
ரு
24
ரூ
20
ரெ
6
ரே
16
ரை
10
ரொ
8
ரோ
23
ரௌ
ல்
117
லா
44
லி
8
லீ
5
லு
8
லூ
3
லெ
13
லே
21
லை லொ
20
லோ
63
லௌ
3
வ்
1

3800
வா
1329
வி
1638
வீ
515
வு
1
வூ
1
வெ
2164
வே
834
வை
229
வொ
1
வோ
3
வௌ
ழ்
1

1
ழா
1
ழி
1
ழீ
1
ழு
6
ழூ
1
ழெ
1
ழே ழை ழொ ழோ
1
ழௌ
ள்
1

2
ளா
1
ளி
1
ளீ
1
ளு
1
ளூ
1
ளெ
2
ளே
1
ளை
1
ளொ
1
ளோ
1
ளௌ
ற்
1

1
றா
1
றி
1
றீ
1
று
1
றூ
1
றெ
2
றே
1
றை
1
றொ
1
றோ
1
றௌ
ன்
1

1
னா
1
னி
1
னீ
1
னு
1
னூ
1
னெ
2
னே
1
னை னொ
1
னோ
1
னௌ
தலைசொல் பொருள்
கூ

கூ1ā, பெ.(n.)

   உயிர்மெய் எழுத்து; the syllable formed by adding back long vowel (u); to the velar voiceless stop (k);, one of the secondary alphabet of the Tamil language.

     [க் + ஊ –கூ.]

 கூ2ā, பெ.(n.)

   புவி; earth.

     “கூநின் றளந்த குறளென்ப” (வள்ளுவமா.14.);.

ம.,க, கூ

     [ஒருகா. குவலயம் →குவயம்→குவை→கூ.]

 கூ3ā, பெ.(n.)

   1. குயில் கூவும் ஒலி; cooing, as of koel.

   2. கூவிளம் வாய்ப்பாட்டில் நேரசையைக் குறிக்கும் எழுத்து; a letter of {kūVijam} tables, {nérasa.}

   3. கூக்குரதல் (முறையீட்டொலி);; piteous cry.

   4. ஒரு பெண் பேய் (த.சொ.அக.);; female devil.

     [கூ = விளிக்குரல், ஒலிக்குறிப்பு, பேசிரைச்சல், அரற்றும் பெண்பேய்.]

 கூ4ā, பெ.(n.)

   கூழ்; porridge.

     [கூழ் → கூ (கொ.வ..);.]

 கூ5ā, பெ.(n.)

   1. உடற்கழிவு (மலம்); (த.சொ.அக.);; excretion of the body.

   2. உடற்கழிவை வெளியேற்றுவகை (மலங்கழிக்கை); (யாழ்.அக.);; evacuating, passing stools.

     [கூளம் → கூள்→ கூ.]

கூஉய்

கூஉய்āuy, வி.எ.(adv.)

   1. கூவியெனப் பொருள்படும் அளபெடுத்த தெரிநிலை வினையெச்சம்; elongated adverb denoting the meaning “having beckoned”.

     “நம்பி தன்னைக் கூஉய்க் கொணர்மி னென்றான்” (சீவக. 1282);.

     [கூவு →கூவி→ கூஉய்.]

கூககண்

கூககண்2āgagaṇ, பெ.(n.)

   இடுங்கிப்பார்க்கும்படி செய்யும் கண்ணோய் வகை (வின்.);; a kind of near sightedness, causing one to keep the eyes nearly shut.

     [கூசு → கண்.]

கூகத்தாள்

 கூகத்தாள்ākattāḷ, பெ.(n.)

   புன்னை; common punna (சா.அக.);.

கூகனகம்

 கூகனகம்āgaṉagam, பெ.(n.)

   இழிவழக்கு (யாழ்.அக.);; indecent language.

     [கூகனம் → கூகனகம்.]

கூகனம்

கூகனம்ākaṉam, பெ.(n.)

   1. மறைந்த பொருளுடைய சொல் (வின்.);; a term of hidden significance

   2. இழிவழக்கு, கீழ்த்தரமான மொழி; indecent term.

   3. மாய்மாலம் (யாழ்.அக.);; pretence deceit.

     [கூகல்→கூகலம் → கூகனம்.]

கூகமானம்

 கூகமானம்ākamāṉam, பெ.(n.)

   மறைபொருள் (யாழ்.அக.);; hidden or secret thing.

     [ஊகம் → கூகம் → மானம்.]

கூகம்

கூகம்1ākam, பெ.(n.)

   மறைவு, உன்னிப்பு, மந்தணம்; the state of being hidden, disguised, secret.

கூகமாய்ச் சொன்னான் (நெல்லை.);.

 கூகம்2ākam, பெ.(n.)

   1. கோட்டான் {(Pond.);;}

 rock horned-owl.

   2. ஆந்தை (யாழ்.அக.);; owl.

     [கூ → கூகம். கூ = கூவுதல்.]

கூகாகம்

 கூகாகம்ākākam, பெ.(n.)

   கமுகு (மலை.);; Arecapalm.

     [கா – கூ(உயரம்); + (கமுகு → காகு); காகம்.]

கூகாரி

 கூகாரிākāri, பெ.(n.)

   காக்கை; crow (சா.அக.);.

     [கூ (கூவு); + காரி (சனி);.]

கூகாவெனல்

கூகாவெனல்ākāveṉal, பெ.(n.)

   1. பேரொலிக் குறிப்பு; bawling, screeching.

     “கூகாவென வென்கிளை கூடியழ’ (கந்தரனு:11);.

   2. முறையிடு

   தற்குறிப்பு; complaining, lamenting.

     [சு + கா + எனல்.]

கூகு

 கூகுāku, பெ.(n.)

   எட்டு அகவைப் பெண்; eight years old girl.

     [குழ→குழகு→கூகு.]

கூகூ

கூகூāā, பெ.(n.)

   1. ஒலிக்குறிப்பு வகையு ளொன்று; onom. clamour, outcry.

     “ஏற்றெழுந்த கூகூவொலித் திரள்” (காஞ்சிப்பு. அரிசாப. 4);.

   2. அச்சப்பொருள் தரும் ஓர் இடைச்சொல் (த.சொ.அக.);; particle denoting fear.

     [கூ + கூ.]

கூகூவெனல்

கூகூவெனல்āāveṉal, பெ.(n.)

கூகாவெனல் பார்க்க;See. {k-ka.w-era }

     “நல்லடிக் கன்பாகா தவரெனக் கூகூவென்று” (வெங்கைக்கோ. 210);.

     [கூ + கூ + எனல்.]

கூகை

கூகை1ākai, பெ.(n.)

   1. கோட்டான்; rock hornedowl.

     “கோழி கூகை யாயிரண் டல்லவை” (தொல்.பொருள்.மரபு.56);.

   2. குரங்கு முகமும் மஞ்சள் நிறமும் உடைய ஆந்தை; barn owl. கூகைகள் குரலெழுப்பும் பாழ்மண்டபம்.

   3. ஒருவகைப் பருந்து; a species of kite (சா.அக.);.

   ம. கூமன்;   க. கூகி, கூ.கெ, கூம்பெ;   தெ. கூம்பி, கூம்ப;   து.கும்ம, கூ.கெ பட. கும்ம;   கொலா. கூப;   பர். குஞஞி;கூ.

குஞ்சி.

 Skt. ghUka, Mar. ghubad.

     [கூவல் → கூகு → கூகை.]

சாகப் போகின்றவரை கூப்பிடும் பறவை என்பது பழங்காலக் கருத்து.

     [P]

கூகை

 கூகை2ākai, பெ.(n.)

   கூவைச் செடி; east Indian arrow root.

     “கூகையுங் கோட்டமும்…. பரந்து” (சீவக. 1905);.

     “சாவோப் பயிருங் கூகையின் குரலும்” (மணிமே.6:75);.

     [கூவை → கூகை.]

கூகைகுழறு-தல்

கூகைகுழறு-தல்āgaiguḻṟudal,    5 செ.கு.வி.(v.i.)

   ஆந்தை அலறுதல்; to hoot, as an owl.

     [கூகை + குழறு-]

கூகைக்கட்டு

 கூகைக்கட்டுākaikkaṭṭu, பெ.(n.)

   கூகை போல முகத்தை வீங்கச் செய்யும் ‘பொன்னுக்கு வீங்கி’ என்னும் புட்டாளம்மைக்கட்டு; mumps, as making the face look like an owl.

மறுவ. பொன்னுக்கு வீங்கி, புட்டாளம்மை, கூகை

நீர்க்கட்டி, கூகைவீக்கம்

     [கூகை + கட்டு.]

கூகைக்கிழங்கு

 கூகைக்கிழங்குākaikkiḻṅgu, பெ.(n.)

கூகை நீறு பார்க்க;See. {kilgai.niய} (சா.அக.);.

     [கூகை + கிழங்கு.]

கூகைக்கோழியார்

கூகைக்கோழியார்ākaikāḻiyār, பெ.(n.)

   புறநானூறு 364 ஆம் பாடலைப் பாடிய புலவர்; Sangam poet.

     [கூகை + கோழி + ஆர்.]

கூகைதாளி

கூகைதாளிākaitāḷi, பெ.(n.)

   1. தாளி வகையைச் சார்ந்ததும், தொட்டிகளில் வைத்துப்பயிர் செய்வதும், கழிச்சல், வாந்தி இவற்றை உண்டாக்கு வதுமான தேவதாளி; a kind of the convolvulus genus. If is an emetic and purgative; and can cure piles, leprosy etc.

   2. நுரைபீர்க்கு; snack luffa (சா.அக.);.

     [கூவை→கூகை + தாளி.]

கூகைநீர்

 கூகைநீர்ākainīr, பெ.(n.)

   கூகைக்கிழங்குச் சாறு; the juice of arrow root plant (சா.அக.);.

     [கூகை + நீர்.]

கூகைநீர்க்கட்டி

 கூகைநீர்க்கட்டிākainīrkkaṭṭi, பெ.(n.)

கூகைக்கட்டு (வின்.); பார்க்க;See. {kügař-k-katfu.}

     [கூகை + நீர் + கட்டு.]

கூகைநீறு

கூகைநீறுākainīṟu, பெ.(n.)

   கூவைக் கிழங்கின் மாவு; arrow-root four.

     “கூகை நீற்றால்…. மார்புநோ யண்டுமோ” (பதார்த்த. 1013);.

     [கூகை + (நூறு); நீறு.]

கூகைநீறு வகைகள்:

   1. சிவப்புக்கூவை

   2. பெருங்கூவை

   3. மலையிஞ்சிக்கூவை

   4. சினக்கூவை

   5. மலைக்கூவை

   6. மரவள்ளிக்கிழங்கு

   7. மஞ்சள் மர

வள்ளிக்கிழங்கு

   8. சீமை மரவள்ளிக்கிழங்கு (சா.அக.);.

கூகைநீலி

 கூகைநீலிākainīli, பெ.(n.)

   கொடிச்சிணுங்கி; a kind of sensitive creeper (சா.அக.);.

     [கூகை + நீலி.]

கூகைமஞ்சள்

 கூகைமஞ்சள்ākaimañjaḷ, பெ.(n.)

மலை வசம்பு (L.);, sweet costus.

     [கூகை + மஞ்சள்.]

கூகைவீக்கம்

 கூகைவீக்கம்ākaivīkkam, பெ.(n.)

கூகைக்கட்டு (வின்.); பார்க்க;See. {kùgař-k-katfu.}

மறுவ புட்டாளம்மை, பொன்னுக்கு விங்கி.

     [கூகை + வீக்கம்.]

கூக்குரலாய்செய்-தல்

கூக்குரலாய்செய்-தல்ākkuralāyceytal,    2 செ.கு.வி. (v.i.)

   வெளிப்படையாக அல்லது எல்லோரும் அறியும்படிச் செய்தல்; making no secret of one’s doing (சா.அக.);. [கூக்குரலாய்+செய்-தல்.]

கூக்குரல்

கூக்குரல்1ākkural, பெ.(n.)

   1. பேரொலி; shout, outcry, uproar, clamour.

     “நும்மேங்கு கூக்குரல் கேட்டுமே” (திவ்.திருவாய்.9,5,3);.

   2. குறைதீர்க்க வேண்டி முறையிடும் ஒலி; Piteous cry, as in seeking redress.

     [கூவு + குரல்- கூவுகுரல் → கூக்குரல்.]

 கூக்குரல்2ākkural, பெ.(n.)

   1. குழந்தைகள்

   கத்துவதுபோன்ற கூவென்னும் ஒலி; cry, as of children or koel.

     “குழவி யேங்கிய கூஉக் குரல் கேட்டு” (மணிமே.13,17);.

     [கூவு + குரல் – கூவுகுரல் → கூக்குரல்.]

கூக்கேட்டல்

கூக்கேட்டல்ākāṭṭal, பெ.(n.)

   ஏவல் கேட்கை; lit.,

 responding to a call, waiting one’s command,

 serving.

     “நாடொரு வழித்தாய்க் கூக்கேட்ப” (பு.வெ.6:31);.

     [கூ + கேட்டல்.]

கூசனம்

 கூசனம்ācaṉam, பெ.(n.)

   மதியாமை (யாழ்.அக.);; nonchalance.

     [கூசல் → கூசனம்.]

கூசம்

கூசம்1ācam, பெ.(n.)

   கூச்சம்; shyness.

     “பேசுமின் கூசமின்றி” (திவ்.= திருவாய்.10:2:4);.

 கூசம்2ācam, பெ.(n.)

   கொங்கை (யாழ்.);; female breast.

     [கூச்சு1 → கூசம்.]

கூசல்

கூசல்1ācal, பெ.(n.)

   1. நாணம், கூச்சம்; shyness.

     “பேசிடீர் கூச லின்றி” (திருவாலவா. 27:72);.

   2. மனங்குலைகை (பிங்.);; perplexity, confusion.

   3. அச்சம் (திவா.);; fear.

     “கூசலின்றிக் குற்றேவல் கொண்டனரோ” (கந்தபு.மேரு.71);.

ம.கூசல்

     [கூக → கூசல்.]

 கூசல்2ācal, பெ.(n.)

   கூச்சல், பேரொலி; outcry, clamour.

     [கூவு → கூசல்.]

கூசா

 கூசாācā, பெ.(n.)

 a small round, short-necked vessel with a lid, golet, water-monkey.

த.வ. கைச்சாடி.

     [U.{} → கூஜா → த.கூசா.]

     [P]

கூசாக்கல்

 கூசாக்கல்ācākkal, பெ.(n.)

   சிற்பம் முதலிய வேலைக்குப் பயன்படுத்தாத கல் (இ.வ.);; undressed stone.

     [கூச்சு → கூசா கல்.]

கூசாதூக்கு-தல்

கூசாதூக்கு-தல்ācādūkkudal,    9 செ.கு.வி. (v.i.)

   தான் சார்ந்தவரை மனநிறைவுபடுத்த செய்ய சிறு பணிகள் செய்து தாழ்ந்து நடத்தல்; to do menial things in support of one to please him.

     [கூஜா + தூக்கு-,]

     [U.{} → த.கூஜா → கூசா-,]

கூசான்மலி

 கூசான்மலிācāṉmali, பெ.(n.)

   பட்டுநூல் மரம்; silkworm tree; Indian mulberry tree.

     [கூசான் + மலி.]

கூசி

கூசிāci, பெ.(n.)

   கரிக்கோல் (எழுதுகோல்); (யாழ்.அக.);; pencil.

     [கூச்சு1 → கூசு → கூசி.]

கூசிகை

 கூசிகைācigai, பெ.(n.)

   கரிக்கோல் (எழுதுகோல்);; pencil.

     [கூசி → கூசிகை.]

கூசிக்கரி

 கூசிக்கரிācikkari, பெ.(n.)

   காரீயக் கல்; black lead (சா.அக.);.

     [கூசி + கரி.]

கூசிதம்

கூசிதம்ācidam, பெ.(n.)

   1. பறவைகளின் ஒலி (யாழ்.அக.);; bird’s cry.

   2. ஒசை (த.சொ.அக.);; sound.

     [கூச்சு → கூசு → கூசி.]

கூசிப்பார்-த்தல்

கூசிப்பார்-த்தல்ācippārttal,    4 செ.குன்றாவி. (v.t.)

   1. கூசிவிழி பார்க்க;See. {kisit}

   2. அரைக் கண்ணால் பார்த்தல்; looking with half-closed eyes.

     [கூசி + பார்-.]

கூசிவிழி-த்தல்

கூசிவிழி-த்தல்āciviḻittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   1. கண் கூச்சத்துடன் நோக்குதல்; to look with dazzled eyes.

   2. அருளுடன் பார்த்தல் (வின்.);; to look with eyes of grace.

     [கூசி + விழி.]

கூசு

கூசு1ācudal,    5 செ.கு.வி.(v.i.)

   1. நாணுதல்; to be shy, bashful.

     “அச்சமுங் கொண்டு கூசி” (திருவிளை. திருநாட். 31);.

   2. உடல் கூச்சங் கொள்ளுதல்; to be ticklish.

   3. கண், பல் முதலின கூசுதல்; to be tender, weak, sensitive, as an eye, a limb;

 to be set on edge, as a tooth.

     “காணக்கண் கூசுதே” (தனிப்பா.);.

     [கூ → கூசு.]

 கூசு2ācudal,    5 செ.கு.வி.(v.i.)

   1.அஞ்சிப் பின் வாங்குதல்; to recoil, shrink back as from fear.

     “கூசின வல்ல பேச நாணின” (கம்பரா. பால பூக்கொய். 6);.

   2. நிலைகுலைதல் (பிங்.);; to be routed as on army.

     [கூ → கூக.]

கூசுகண்

கூசுகண்1ācugaṇ, பெ. (n.)

   1. கூ. சிவிழி –த்தல் பார்க்க;{see kūšMilf-}

     [கூக + கண்.]

கூசுமாண்டம்

 கூசுமாண்டம்ācumāṇṭam, பெ.(n.)

   பூசணி; white gourd cucurbita pepo.

     [Skt.{} → த.கூசுமாண்டம்.]

கூசுமாண்டர்

கூசுமாண்டர்ācumāṇṭar, பெ.(n.)

   நிரைய (நரக); வுலகின் தலைவர்; lord of hells.

     “கூசுமாண்டர்

முப்பத்திரண்டு நரகங்களுக்கும் அதிபதியாய்” (சி.போ.பா.2:3, பக்.204);.

     [கூசு + மாண்டர்.]

 கூசுமாண்டர்ācumāṇṭar, பெ.(n.)

   நிரைய (நரக); உலகங்களுக்குத் தலைவர்;     “கூசுமாண்டர் முப்பத்திரண்டு நரகங்களுக்கும் அதிபதியாய்” (சி.போ.பா.2,3,பக்.204);.

     [Skt.{} → த.கூசுமாண்டர்.]

கூச்சக்கண்

 கூச்சக்கண்āccakkaṇ, பெ.(n.)

   கூகங்கண்; tender eyes or eyes sensitive to light (சா.அக.);.

     [கூகம் + கண்.]

கூச்சக்காரன்

கூச்சக்காரன்āccakkāraṉ, பெ.(n.)

   1. வெட்கப் படுபவன்; shy, bashful, person.

   2. உடற்கூச்சமுள்ளவன்; ticklish person.

     [கூச்சம் + காரன்.]

கூச்சங்காட்டு-தல்

கூச்சங்காட்டு-தல்āccaṅgāṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   உடற்கூச்சம் உண்டாக்குதல்; to tickle, titillate.

     [கூச்சம் + காட்டு-.]

கூச்சத்தம்

 கூச்சத்தம்āccattam, பெ.(n.)

   கூக்குரல் (யாழ்.அக.);; out cry.

     [கூ + சத்தம்.]

கூச்சப்பார்வை

 கூச்சப்பார்வைāccappārvai, பெ.(n.)

   மந்தப் பார்வை; sight dimmed by light (சா.அக.);

     [கூச்சம் + பார்வை.]

கூச்சமயிர்

 கூச்சமயிர்āccamayir, பெ.(n.)

   சிலிர்த்த மயிர்; erectile hairs (சா.அக.);.

     [கூச்சம் + மயிர்]

கூச்சம்

கூச்சம்1āccam, பெ.(n.)

.

   1. நாணுகை; shyness, bashfulness, modesty, delicacy, shame.

     “கைதொழூஉங் கூச்சங் களைந்து” (சைவச. ஆசாரிய. 68.);.

   2. உடல் கூககை; ticklishness.

   3. கண், பல் முதலியன கூககை; delicacy, as of on eye, unpleasant tingling, as of a tooth.

   4. அக்குட் கூச்சம்; titilation.

   5. மனமெழாமை; hesitating, shrinking.

அந்தக் கொடியவனது வீட்டிற் புகக் கூச்சம் உண்டாயிற்று (உ.வ.);.

   6. அச்சத் தாலுண்டாகும் நடுக்கம்; tremulousness;

 timidity, fear.

அவனைப் பார்க்கும் போதே கூச்சமெடுக் கிறது (உ.வ.);.

   7. அச்சம்; fear

     “கூச்சமாநு ஷிகமென்று கூட்டமாட்டார்” (போ.நிக.568);.

     [கூசு → கூச்சம்.]

 கூச்சம்2āccam, பெ.(n.)

   1. கட்டடத்திற்கு உதவும் சிறு மரக்கட்டை (இ.வ.);; small-sized post, used in building.

   2. தருப்பைப்புல்; sacrifical grass.

   க. கூசுஇ கூச;   தெ. கூசமு, குஞ்ச;து. குச்சி, குச்ச.

கூச்சல்

கூச்சல்āccal, பெ.(n.)

   1. பேரொலி; outcry, clamour, hue and cry.

   2. கக்கல் (வாந்தி);, வயிற்றுப்போக்கு (இ.வ.);; epidemic cholera.

ம. கூச்சல்

     [கூவு → கூச்சல்.]

கூச்சி

 கூச்சிācci, பெ.(n.)

   விளாம்பழத்தின் சதைப் பற்று (வின்.);; the pulp of the fruit of wood-apple.

ம. கூஞ்து, கூஞ்ஞி, கூஞ்ஞை து.கூஞ்சி, கூஞ்சி.

     [கூக → கூச்சி.]

கூச்சிதம்

கூச்சிதம்āccidam, பெ.(n.)

   1. கூச்சிரம் (வின்.); பார்க்க;See. {kicciam.}

   2. நிலக்கடம்பு (சா.அக.);; ground cadamba.

     [கூச்சிரம் → கூச்சிதம்.]

கூச்சிரம்

 கூச்சிரம்ācciram, பெ.(n.)

   வெண்கடம்பு (மலை.);; seaside, Indian oak or common Indian oak.

     [கூச்சு → கூச்சிரம்.]

கூச்சிலகம்

 கூச்சிலகம்āccilagam, பெ.(n.)

   கோப்பிரண்டை; a kind of adamantine creeper (சா.அக.);.

     [குச்சு → கூச்சில் → கூச்சிலகம்.]

கூச்சீரிடம்

 கூச்சீரிடம்āccīriṭam, பெ.(n.)

   திருநாமப்பாலை; hill lotus, smilax macrophylla (சா.அக.);.

     [குச்ச+சீரிடம்]

கூச்சு

கூச்சு1āccu, பெ.(n.)

   கூரிய முனை; sharp point, cone shaped point as in developed abscess.

தெ.கூ.சி

     [கூ → கூச்சு.]

 கூச்சு2āccu, பெ.(n.)

   1. மயிர்ப்புளகம்; horripilation.

     “மயிர்க் கூச்சுமறா” (திவ்.பெரியாழ்.5:3:5);.

   2. விசைப்பிசின்; India rubber (சா.அக.);.

     [குச்சு → கூச்சு.]

கூச்சுத்தலை

கூச்சுத்தலைāccuttalai, பெ.(n.)

   கோபுரத்தலை; steeple-head (சா.அக.);.

     [கூச்சு1 + தலை.]

கூட

கூட1āṭa, வி.எ.(adv.)

   1. உடன்; with together, with.

     “கூடநின்று” (குற்றா. தல. கவுற்சன. 65);.

   2. மேற்பட; more than due, more than enough, in addition to.

   ம. கூடெ;   க., தெ., து. கூட;பட. கோட.

     [கூடு → கூட.]

 கூட2āṭa,    இடை. (part.) உம்மைப்பொருள் தரும் இடைச்சொல்; a particle having the force of also.

 Even.

     “பிரியமொடு பகையாளி கூட வுறவாகுவன்” (குமரேச. சத. 67);.

     [கூடு → கூட.]

கூடகண்மி

 கூடகண்மிāṭakaṇmi, பெ. (n.)

   வெண்தகரை; white ringworm plant – Cassia tora (சா.அக.);.

கூடகம்

கூடகம்āṭagam, பெ.(n.)

   வஞ்சகம்; fraud, deceit.

     “கூடகத் தொழில்செய்யுங் கொடியனை” (குற்றாதல. கவுற்சன. 65);.

     [குள் → குடு → குடகம் → கூடகம்.]

கூடகவெலும்பு

 கூடகவெலும்புāṭagavelumbu, பெ.(n.)

   நாசியறை இரண்டின் பிற்பகுதியில் குறுக்கே இலம்பாயுள்ள தகட்டெலும்பு; the bone across the nostrils in the back of the nose (சா.அக.);.

     [கூடகம் + எலும்பு.]

கூடகாரம்

கூடகாரம்1āṭakāram, பெ.(n.)

   1. மேன்மாடம் (இறை. 21,112);; hall in the topmost floor of a house.

   2.மாளிகையின் நெற்றிக் கூடு (சீவக. 2328, உரை);; balcony.

மறுவ. கூடாகாரம்

     [கூடம் + கரம் – கூடகரம் → கூடகாரம்.]

 கூடகாரம்2āṭakāram, பெ.(n.)

   கூடம்; mansion,

 House.

     “கூடகாரத்திற்குத் துப்பாகும்” (புறத்திரட்டு. 1104);.

     [கூடம் + கரம் – கூடகரம் → கூடகாரம்.]

கூடகோபுரம்

 கூடகோபுரம்āṭaāpuram, பெ.(n.)

   பல நிலைகளை உடைய கோபுரம்; temple tower with many tiers,

மாடமாளிகை கூடகோபுரம் எல்லாம் வரலாற்றுச்சின்னங்கள்.

     [கூட்டு+கோபுரம்]

கூடக்கீரை

 கூடக்கீரைāṭakārai, பெ.(n.)

   கலவைக்கீரை; a mixture of various greens (சா.அக.);.

     [கூடு → கூட + கீரை.]

கூடக்குறைய

கூடக்குறையāṭakkuṟaiya, வி.அ.(adv.)

   1. எடுத்துக் கொண்ட அளவிலிருந்து அல்லது எண்ணிக்கையிலிருந்து அதிகமாக வேறுபடாமல் இருத்தல்; a little more or a little less;settle for more or less.

   2. பேச்சில் சற்று எல்லை மீறுதல்; transgressing a little.

பெரியவர் கூடக் குறைய பேசிவிட்டாலும் பொறுத்துக் கொள்ள வேண்டியதுதான்.

கூடங்கம்

கூடங்கம்āṭaṅgam, பெ.(n.)

   மறைவான அங்கம்; hidden body.

   2. ஆமை; tortoise (சா.அக.);.

மறுவ. கூடாங்கம்

     [கூடு + அங்கம்.]

கூடசதுக்கம்

கூடசதுக்கம்āṭasadukkam, பெ.(n.)

   நான்காமடியிலுள்ள எழுத்துகள் யாவும், ஏனை மூன்றடிகளுள்ளும், மறைந்து நிற்குமாறு பாடப்பெறுஞ் சித்திரகவி (தண்டி.95);; stanza of four lines in which the letters constituting the last line are all found amongst the first three lines.

     [கூடம் + சதுக்கம்.]

கூடசதுர்த்தம்

கூடசதுர்த்தம்āṭacaturttam, பெ.(n.)

   செய்யுளின் நான்காம் அடியிலுள்ள எழுத்துகள் யாவும் ஏனைய மூன்றடிகளுள்ளும் மறைந்து நிற்குமாறு பாடப்பெறுஞ் சித்திரகவி (தண்டி.95);; stanza of four lines in which the letters constituting the last line are all found among those of the first three lines (செ.அக.);.

     [கூடம்+ Skt. சதுர்த்தம்]

கூடசன்

 கூடசன்āṭasaṉ, பெ.(n.)

   பன்னிரண்டு வகை(ப்புத்திரருள்); மகன்களுள் கணவன் வீட்டிலில்லாதகாலத்தில் இன்னானென்றறியப்படாத ஒருவனுக்கு ஒருத்தியிடம் தோன்றிய மகன்; son born secretly of a woman when her husband is absent, the real father being unknown, one of twelve {}.

த.வ. தப்பல்.

     [Skt.{} → த.கூடசன்.]

கூடசன்மலி

கூடசன்மலிāṭasaṉmali, பெ.(n.)

   முள்ளிலவு நிரம்பிய நிரையம்; a hell abounding in thorny red silk-cotton.

     “கூட சன்மலிக் கும்பியிற் றள்ளி” (குற்றா.தல.கவுற்சன. 65);.

     [கூடம் + சன்மலி.]

கூடசம்

 கூடசம்āṭasam, பெ.(n.)

   வெட்பாலை; dysentary rosebery (சா.அக.);.

     [கூடு → கூட்சம்.]

கூடசாசனம்

கூடசாசனம்āṭacācaṉam, பெ.(n.)

உண்டாக்கிய ஓலைகள் (சிருஷ்டித்த fabricated document சாசனம்); (கலைமகள் x 56);.

கூடசாரன்

 கூடசாரன்āṭacāraṉ, பெ.(n.)

   மந்தணத்தூதுவன் (யாழ்.அக.);; secret emissary.

     [கூடு → கூடம் + (சரம்); சாரன்.]

கூடசாலம்

 கூடசாலம்āṭacālam, பெ.(n.)

   எழுநிரையத் தொன்று (சூடா.);; a hell.

     [கூடசன்மலி → கூடசாலம்.]

கூடசித்திரி

 கூடசித்திரிāṭacittiri, பெ.(n.)

   சதுரக்கள்ளி; square-spurge- Euphorbia antiquorum alias E. Quadrangularis (சா.அக.);.

     [கூடம்+சித்திரி]

கூடச்சித்திரி

 கூடச்சித்திரிāṭaccittiri, பெ.(n.)

சதுரக்கள்ளி (சங்.அக.); பார்க்க;See. square spurge.

     [கூடம் + சித்திரி]

கூடணை

 கூடணைāṭaṇai, பெ.(n.)

   மயில்தோகைக் கண்; eye of the pea-cock’s feather (சா.அக.);.

     [கூடு+அணை.)

 கூடணைāṭaṇai, பெ.(n.)

   மயிற் (பீலி); கண் (யாழ்.அக.);; eye of peacock.

கூடத்தசைதன்னியம்

 கூடத்தசைதன்னியம்āṭaddasaidaṉṉiyam, பெ.(n.)

   மேலான அறிவுருவாய் விளங்கும் நிலையான முழுமுதற்பொருள்; the immutable Brahman as the embodiment of supreme knowledge.

த.வ. முதற்பொருள்.

கூடத்தன்

கூடத்தன்1āṭattaṉ, பெ.(n.)

   1. முழு முதற் பொருள் (பரப்பிரமம்);; supreme soul, eternal and unchangeable (வேதா.சூ.79, உரை);.

   2. குலத்தின் முன்னோன் (மூல புருஷன்);; the founder of a family.

     [Skt.{} → த.கூடத்தன்.]

 கூடத்தன்2āṭattaṉ, பெ.(n.)

கூடசன் பார்க்க;see {}.

     “நும்முடைய கூடத்தர் கூறிய வாக்குக்களே” (சித்.மரபுகண்.19);.

     [Skt.{} → த.கூடத்தன்.]

கூடத்தப்பிரமம்

 கூடத்தப்பிரமம்āṭattappiramam, பெ.(n.)

   நிலைப்பேறான முழுமுதற் பொருள் (நிர்விகாரப் பிரமம்);; the immutable Brahman.

த.வ. முழுமுதல்வன்.

     [Skt.{} → த.கூடத்தப்பிரமம்.]

கூடனை

 கூடனைāṭaṉai, பெ.(n.)

   பீலிக்கண் (யாழ்.அக.);; eye of pea-cock feather.

     [கூடு → கூடனை]

கூடன்

 கூடன்āṭaṉ, பெ.(n.)

கூடசன் பார்க்க;see {}.

கூடபதம்

 கூடபதம்āṭapatam, பெ.(n.)

   பாம்பு; snake (சா.அக.);.

     [கூட+பதம்]

     [P]

 கூடபதம்āṭabadam, பெ.(n.)

   பாம்பு (வின்);; snake.

     [P]

கூடபலம்

கூடபலம்āṭapalam, பெ.(n.)

   1. இலந்தை; jujube tree – Zizyphus jujuba.

   2. நீர்நிலை; water tank (சா.அக.);.

     [கூட+ பலம்]

கூடபாகலம்

கூடபாகலம்āṭapākalam, பெ.(n.)

   யானைக்கு வரும் கடுஞ்சரநோய்; bilious fever which elephants are subject to.

     “கூடமாகலந் தெளிந்து மெல்லக்கயந் தெளிவுற்ற தென்ன” (பாரத. பதின்மூ.159);.

     [கூடு → கூட + பாகலம்.]

கூடபுட்பம்

கூடபுட்பம்āṭapuṭpam, பெ.(n.)

   1 இலுப்பை; South Indian mahua – Bassia longifolia.

   2.மகிழ மரம்; ape flower tree – Mimusoo elengi (சா.அக.);. [கூடம்+புட்பம்]

கூடபுருசன்

கூடபுருசன்āṭapurucaṉ, பெ. (n.)

   1 ஒற்றன்

 spy.

   2. கள்ள நாயகன்; clandestine lover (செஅக);.

     [கூடு – கூட+புருசன்.]

கூடபூரி

 கூடபூரிāṭapūri, பெ.(n.)

   ஒரு வகை நாரை; a kind of crane (சா.அக.);.

     [கூடு → கூட + பூரி]

கூடப்பிறத்தல்

 கூடப்பிறத்தல்āṭappiṟattal, பெ.(n.)

   பிறவன் பிறவிமாருடன் பிறத்தல்; being born with brothers and sisters (சா.அக.);.

     [கூட + பிறத்தல்.]

கூடப்பிறந்த

கூடப்பிறந்தāṭappiṟanta, பெ.அ. (adj.)

   1. ஒரே பெற்றோருக்குப்பிறந்த உடன்பிறந்த, born of the same parents; related by blood, siblings, consanquity,

இவர் உன் பெரியப்பா பையனா? இல்லை, என் உடன்பிறந்த சகோதரன். நான் உன்னை உடன்பிறந்த சகோதரனாகவே கருதுகிறேன்.

   2. பிறந்ததிலிருந்தே உள்ள, இயல்பாகவே அமைந்த in born. ஏழைக்கு உதவுவது என்பது அவருக்கு கூடப்பிறந்த குணம்

     [கூட+ பிறந்த]

கூடப்பிறந்தவன்

 கூடப்பிறந்தவன்āṭappiṟandavaṉ, பெ.(n.)

   உடன் பிறந்தவன்; brother.

ம. கூடப்பிறந்தவன்

     [கூட + பிறந்த + அவன்.]

கூடப்பிறப்பு

கூடப்பிறப்புāṭappiṟappu, பெ.(n.)

   உடன்பிறப்பு; brother or sister.

   2. இரட்டைப்பிறப்பு அதாவது ஒன்றுசேர்ந்து பிறத்தல்; being born together as twins (சா.அக.);.

உனக்குக் கூடப் பிறந்தவர் எத்தனையர்?

ம. கூடப்பிறப்பு

     [கூட + பிறப்பு]

கூடப்பொன்

 கூடப்பொன்āṭappoṉ, பெ.(n.)

   கலப்புப் பொன்; an alloy of gold (சா.அக.);.

     [கூடு → கூட + பொன்.]

கூடமாட

 கூடமாடāṭamāṭa,    வி.எ.(adv.) செயற்றுணை யாய்; as a helping hand.

     “கூடமாடக் கொஞ்சம் நின்று வேலை செய்” (இ.வ.);.

     [கூடு → கூட + மாட. (எதுகை மரபிணைச் சொல்);.]

கூடமைதுனம்

 கூடமைதுனம்āṭamaituṉam, பெ(n.)

காகம்,

 Crow (சா.அக.);.

கூடம்

கூடம்1āṭam, பெ.(n.)

   1. வீடு (பிங்.); house.

   2. வீட்டின் கூடம்; drawing room, hall.

   3. தாழ்வாரம் (இ.வ.);; verandah.

   4. யானைச்சாலை; elephantstall.

     “மதிலைநட் டமைத்ததன் பழங்கூடம்”(கல்லா. 60.22);.

   5. மேலிடம்; top.

     “கூடக் கூம்பு” (பெருங். உஞ்சைக். 40:72);.

   6.கோபுரம் (பிங்.);; temple tower.

   7. அரண்மனைக் கோபுரம்; palace tower.

   8. மன்றாக அமைந்த தேவகோட்டம்; open space under trees, considered as a shrine.

     “கூடஞ்செய் சாரல்” (திருக்கோ. 129);.

     [கூடு → கூடம்.]

 கூடம்2āṭam, பெ.(n.)

   1. சம்மட்டி (பிங்.);; blacksmith’s sledge.

   2. மலையுச்சி (பிங்.);; mountain peak.

   3. அண்ட கோளகை (பிங்.);; shell supposed to envelope the world.

   4. திரள் (விரி.நி);; heap, multitude.

     [குள் → குடு → கூடு → கூடம்.]

 கூடம்3āṭam, பெ.(n.)

   1. மறைவு (பிங்.);; concealment, privacy, secrecy.

   2. மறைபொருள்; secret, anything hidden, concealed, mysterious.

     [குள் (மறைதல்); → குடு → கூடு → கூடம்.]

 கூடம்4āṭam, பெ.(n.)

   1. ஏய்ப்பு; fraud, deception.

     “கூடம் மடியோம்பு மாற்றலுடைமை” (ஏலா. 17.);.

   2. பொய்; false-hood, untruth.

     “கூட சாட்சியார்” (வேதாரணி. நிரையவ. 18);.

     [குள் (ஒளிதல்); → குடு → கூடு → கூடம்.]

 கூடம்5āṭam, பெ.(n.)

   இசை வாராது ஒசை மழுங்கல்; dullness of tone in lute strings.

     “செம்பகை யார்ப்பே கூட மதிர்வே” (சிலப். 329);.

     [கூடு → கூடம்.]

 கூடம்6āṭam, பெ.(n.)

   கோளக வைப்புநஞ்சு (சங்.அக.);; a mineral poison.

   2. எள் (வின்.);; sesame.

     [குள் (சிறியது); குடு→ கூடு → கூடம்.]

கூடம்பில்

 கூடம்பில்āṭambil, பெ.(n.)

   கரை (மலை.);; calabash.

     [குடம் → குடம்பில் → கூம்பில்.]

கூடயந்திரம்

கூடயந்திரம்āṭayantiram, பெ.(n.)

   1. மறைவாக அமைத்த பொறி; secret trap.

   2. வலை; net(செ.அக.);.

கூடரணம்

கூடரணம்āṭaraṇam, பெ.(n.)

   பொன், வெள்ளி, இரும்புகளால் செய்யப்பட்டனவும், சிவனால் எரிக்கப்பட்டனவும் விண்ணில் திரிந்தனவுமான மூன்று நகரங்கள்; the three aerial cities of gold, silver and iron burntby Sva.

     “அழலுணச் சீறிய கூடரணம்” (பு.வெ.5, 1); (செ.அக.);

     [கூடம்+ Skt. அரணம்]

கூடற்கரை

 கூடற்கரைāṭaṟkarai, பெ.(n.)

   பேய்ச்சுரை; false calabash (சா.அ க.);.

     [கூடல் + கரை]

கூடற்கிழார்

 கூடற்கிழார்āṭaṟkiḻār, பெ.(n.)

   குன்றத்தூரில் இருந்த வேளாண் குலத்தவர்; a farmer who lived in kunrattúr(அபி.சிந்.);.

     [கூடல்+ கிழார்]

கூடற்குறி

 கூடற்குறிāṭaṟkuṟi, பெ.(n.)

   தலைமகன் பிரிந்துழித் தலைவி பார்க்குங் குறி; divination resorted by heroine when seperated from her lover.

     [கூடல் + குறி.]

கூடற்கோ

 கூடற்கோāṭaṟā, பெ.(n.)

   பாண்டியன்; any king of the Pandiya dynasty (இரு.நூ.அக);.

     [கூடல் + கோ]

கூடற்கோமான்

கூடற்கோமான்1āṭaṟāmāṉ, பெ.(n.)

   பாண்டியன் (திவா.);;{Pārigya} the king of Madura.

     [கூடல் + கோமான்.]

கூடற்சங்கமம்

கூடற்சங்கமம்āṭaṟcaṅkamam, பெ.(n.)

   துங்கபத்திரை ஆறு, கிருட்டிணா ஆற்றுடன் கூடும் இடம்; confluence orjunction of the Tungabatra and Krițțiņa.

     “குந்தளரைக் கூடற்சங்கமத்து வென்றே”(கலிங்.புதுப்193);

     [கூடல்+ Skt. சங்கமம்]

கூடற்பற்றை

 கூடற்பற்றைāṭaṟpaṟṟai, பெ.(n.)

   புதர் (யாழ்ப்.);; thicket.

     [கூடல் + பற்றை]

கூடற்றெய்வம்

கூடற்றெய்வம்āṭaṟṟeyvam, பெ.(n.)

   கூடற்சுழிக்குரிய பெண் தெய்வம் (திருக்கோ. 180, உரை.);; the deity of {kūdacus.}

     [கூடல் + தெய்வம்.]

கூடலர்

கூடலர்āṭalar, பெ.(n.)

கூடாதார் பார்க்க;See.

{kagada}

     “கூடலர் குடர்மாலை சூட்டி” (பு.வெ.2:9,கொளு);.

ம. கூடலர்

     [கூடு + அல் + அர்]

கூடலி-த்தல்

கூடலி-த்தல்āṭalittal,    4 செ.கு.வி.(v.i.)

   கிளர்ந்து வளைதல்; to over hang, as the eye brows

     “குறுபெயர்ப் புருவங் கூடலிப்ப” (திவ்.பெரியாழ். 3: 6,8);.

     [கூடல் → கூடலி]

கூடலிழை-த்தல்

கூடலிழை-த்தல்āṭaliḻaittal,    4 செ.கு.வி.(v.i.)

   கூடற்சுழி வரைதல்; to draw {küdas} on sand.

     “நீடலந் துறையிற் கூடலிழைத்து” (திருக்கோ 186);.

     [கூடல் + இழை.]

கூடலூர்கிழார்

 கூடலூர்கிழார்āṭalūrkiḻār, பெ.(n.)

   முதுமொழிக்காஞ்சி இயற்றியவரும், ஐங்குறுநூறு தொகுத்தவருமான புலவர்; the poet who composed {mudumoff-k-kāsī} and compiled {Air guruընրա}

     [கூடலூர் + கிழார்]

கூடலூர்ப்பல்கண்ணனார்

கூடலூர்ப்பல்கண்ணனார்āṭalūrppalkaṇṇaṉār, பெ.(n.)

கழகக் காலப் புலவர் a Šangam poet.

     [கூடலூர்+பல்கண்ணனார்]

இவர் நீர் நாட்டின் கணுள்ள கூடலூரினராக இருத்தல் வேண்டும். மருதத் திணையில் பாணனை மறுத்துக் கூறும் துறையைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். நற்றினை 200, 380 பாடல்களைப் பாடியுள்ளார் (அபி.சிந்);.

கண்ணி கட்டிய கதிர அன்னன்

ஒண்குரல் நொச்சித் தெரியல் குடி

யாறுகிடந்தன்ன அகனெடுந் தெருவில்

சாறென நுவலும் முதுவாய்க் குயவ

இதுவும் ஆங்கண் நுவன்றிசின் மாதோ

ஆம்பல் அமன்ற தீம்பெரும் பழனத்துப்

பொய்கை ஊர்க்குப் போவோய் ஆகிக்

கைகவர் நரம்பிற் பனுவற் பாணன்

செய்த அல்லல் பல்குவ வையெயிற்று

ஐதகல் அல்குல் மகளிர் இவன்

பொய்பொதி கொடுஞ்சொல் ஒம்புமின் எனவே (நற்.200);.

கூடல்

கூடல்1āṭal, பெ.(n.)

   1. பொருந்துகை (உரி.நி.);; joining, uniting.

   2. புணர்ச்சி; sexual union.

     “கூடற்கட் சென்றதென் னெஞ்சு” (குறள், 1284);.

   3. ஆறு கடலில் கலக்குமிடம்; mouth of a river.

     “மலியோதத் தொலி கூடல்” (பட்டினப்.98.);.

   4.ஆறுகள் ஒன்றோடொன்று கூடுமிடம்; confluence of rivers.

   5. தேடுகை (பிங்.);;See.king.

   6.தலைவனைப் பிரிந்த மகளிர் அவன் வரும் நிலையறிதற் பொருட்டுத் தரையில் சுழிக்குஞ் சுழிக்குறி (அகப்.);; loops.drawn on sand by a love-lorn lady for divining the safe arrival of her lord.

     “வசுதேவர்தங் கோமகன் வரிற் கூடிடு கூடலே” (திவ்.நாய்ச்.3);.

ம. கூடல்

     [கூடு → கூடல்]

 கூடல்2āṭal, பெ.(n.)

   1. மதுரை; Madurai

     “கூடனெடுங் கொடி யெழவே” (கலித். 31);.

   2. அடர்த்தியான தோப்பு; thick grove, commonly of palmyras.

     “செயலைக் கூடலே” (இரகு.தேனுவந். 70);.

     [கூடு → கூடல்.]

கூடல் வளைத்தல்

 கூடல் வளைத்தல்āṭalvaḷaittal, பெ.(n.)

   மகளிர் விளையாட்டில் ஒன்று (சா.அக.);; a game of young girls.

     [கூடல் + வளைத்தல்.]

கூடல்கிழான்

கூடல்கிழான்āṭalkiḻāṉ, பெ.(n.)

   வேளாளர் குடிகளுள் ஒருவகை (சேக்கிழார். 4:12);; a sub-sect of the {vésàacaste.}

     [கூடல் + கிழான்.]

கூடல்சங்கமம்

கூடல்சங்கமம்āṭalcaṅkamam, பெ .(n.)

   துங்கபத்திரை ஆறும் கிருட்டிணா ஆறும் கூடும் இடம், சாளுக்கிய நாட்டின் தென்பகுதி, விசயராசேந்திர சோழனும் சாளுக்கிய மன்னன் ஆகவ மல்லனும் போரிட்ட இடங்களுள் ஒன்று; confluence or junction of the Tuñgabadra and the Krisha.

     “கூடல் சங்கமத்து ஆகவமல்லன் மகனாகிய விக்கலன் சிங்களன் என்றிவர் தம்மோடு எண்ணில் சாமந்தரைவென்று” (தெ.கல்.தொ.3, 1 பக்33);.

     [கூடல்+Skt. சங்கமம்]

கூடல்சரம்

 கூடல்சரம்āṭalcaram, பெ.(n.)

   இரண்டு கைமரங்களின் இணைப்பு (செங்.வழக்);; joint of two wooden rasters.

     [கூடல் + சரம்.]

கூடல்நாரத்தை

 கூடல்நாரத்தைāṭalnārattai, பெ.(n.)

   கடார நாரத்தை; lemon citron (சா.அக.);;

 akind of {nārattai}

     [கூடல் + நாரத்தை]

கூடல்வாசரம்

 கூடல்வாசரம்āṭalvācaram, பெ.(n.)

   ஓடுவேய்ந்த வீட்டில் பக்கவாட்டில் வரும் மரச்சட்டம்(செங். வழக்); (கட்.தொ.வரி.);; wooden frame used to support tailes in tiled roof

     [கூடல் + (வாய்ச்சரம்); வாசலம்]

கூடல்வாயோடு

 கூடல்வாயோடுāṭalvāyōṭu, பெ.(n.)

   கூடல்வாய் மூலையை மூட உதவும் ஒடு (C.E.M.);; gutter tiles used to cover hip of a roof.

     [கூடல் + வாய் + ஒடு]

கூடல்வாய்

 கூடல்வாய்āṭalvāy, பெ.(n.)

   கூரையின் சேர்க்கை மூலை(இ.வ.);; hip of a roof.

     [கூடல் + வாய்.]

கூடவர்த்தாகி

 கூடவர்த்தாகிāṭavarttāki, பெ.(n.)

பெருவழுதலை

 a big variety of brinjalplant – Solanum indicum (சா.அக.);.

     [கூட+வர்த்தாகி]

கூடவற்சை

 கூடவற்சைāṭavaṟcai, பெ.(n.)

தவளை,

 frog (சா.அக.);.

 கூடவற்சைāṭavaṟcai, பெ.(n.)

   தவளை; frog.

கூடவிமானம்

 கூடவிமானம்āṭavimāṉam, பெ.(n.)

   சதுரமான அடித்தளமுள்ள மேற்கட்டு (விமானம்); (பொ.வழக்); (கட்.தொ.வரி.);; temple tower with a square base.

     [கூடல் + விமானம்]

கூடவே

 கூடவேāṭavē,    இ.சொ.(part.) மேலும்;   அதனோடு; along with besides.

வறுமையை அகற்றுவதற்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும், கூடவே கல்விப் பெருக்கத்தையும் உண்டாக்க வேண்டும்.

     [கூட +வ் + ஏ.]

கூடா-தல்

கூடா-தல்āṭātal,    6 செ.கு.வி.(v.i)

   1. உயிர் நீங்கிய வெற்றுடம்பாதல்; becoming a life less body.

   2. இறத்தல்; dying (சா.அக.);.

     [கூடு+ஆதல்]

 கூடா-தல்āṭātal,    6 செ.கு.வி.(v.i.)

   1. உயிர் நீங்கிய வெற்றுடம்பாதல்; becoming a lifeless body.

   2. இறத்தல்; dying.

     “கூடலான் கூடாயினான்” (சிலப். 20:2 வெண்.);.

     [கூடு + ஆதல்]

கூடாகயம்

 கூடாகயம்āṭākayam, பெ.(n.)

   வெண் மிளகாய்; white chilli – Capsicum

 frutescesns(சா.அக.);.

     [கூடு+ஆகயம்]

கூடாகாரம்

 கூடாகாரம்āṭākāram, பெ.(n.)

   மேல்வீடு (யாழ்.அக.);; upper storey.

     [கூடம் + கரம் – கூடகரம் → கூடாகாரம்.]

கூடாக்கு

கூடாக்கு1āṭākku, பெ.(n.)

குடாக்கு (வின்.); பார்க்க;See. {kudakku.} ball of tobacco etc. used in hookah.

     [கூடு + ஆக்கு]

 கூடாக்கு2āṭākku, பெ.(n.)

   உக்கா புகையிலை; tobacco used in hookah. (சா.அக.);.

     [கூடு → கூடாக்கு]

கூடாங்கம்

 கூடாங்கம்āṭāṅgam, பெ.(n.)

   ஆமை (யாழ்.அக);; tortoise.

     [கூடு + அங்கம்]

கூடாதார்

கூடாதார்āṭātār, பெ.(n.)

கூடார் பார்க்க;See. {kiga}

     “கூடாதா ர் சேனை” (சினேந். 379);.

     [கூடு + ஆ + த் + ஆர். ‘ஆ’ எ.ம.இ.நி. ‘த்’ சாரியை.]

கூடாது

கூடாதுāṭātu, கு.வி.எ. (adv.)

   1. ஒரு செயலைச் செய்யத் தடை விதிக்கும் சொல்; a prohibitive; not allowed to do something; order one not to do something.

தேர்வு முடியும் வரை நீ விளையாடப் போகக் கூடாது. இந்த மாத்திரையைத் தொடர்ந்து சாப்பிடக் கூடாது.

   2. செய்த செயலைச் செய்திருக்க வேண்டியதில்லை என்பதைத் தெரிவிக்கும் சொல்; a form of disapproval; shout not door have done

நீ அம்மாவிடம் அப்படிச் சண்டை போட்டிருக்கக் கூடாது.

     [கூடு+ஆ+து]

கூடாநட்பு

கூடாநட்புāṭānaṭpu, பெ.(n.)

   அகத்தாற் கூடாது புறத்தாற் கூடியொழுகும் நட்பு (குறள். அதி.83);; insincere and unreal friendship.

     [கூடா(த); + நட்பு]

கூடாப்பெண்

 கூடாப்பெண்āṭāppeṇ, பெ.(n.)

   கலவியறியாக் கன்னி; a woman who has no carnal knowledge of man (சா.அக.);.

     [கூடு → கூடா(த); + பெண்]

கூடாமகளிர்

 கூடாமகளிர்āṭāmagaḷir, பெ.(n.)

   புணரக்கூடாத அல்லது தகாத பெண்கள்; women unfit to visit and they are classified.

     [கூடா + மகளிர்]

கூடாமையணி

கூடாமையணிāṭāmaiyaṇi, பெ.(n.)

   அணிவகையு ளொன்று (அணியி.36);; figure of speech in which an impossibility is predicated to have occurred.

     [கூடாமை + அணி]

கூடாரக்கட்டில்

 கூடாரக்கட்டில்āṭārakkaṭṭil, பெ.(n.)

   மூடுகட்டில் (யாழ்ப்.);; bed with tent and curtains.

     [கூடாரம் + கட்டில்]

கூடாரப்பண்டி

கூடாரப்பண்டிāṭārappaṇṭi, பெ.(n.)

கூடார வண்டி (சிலப். 6,120. அரும்.); பார்க்க;See. {kidara vangi}

     [கூடாரம் + (வண்டி); பண்டி]

கூடாரப்பண்டிகை

 கூடாரப்பண்டிகைāṭārappaṇṭigai, பெ.(n.)

   கிறித்துவம் கொண்டாடும் திருநாள் (கிறித்.);; feast of tabernacles.

     [கூடாரம் + பண்டிகை]

கூடாரப்பல்லக்கு

 கூடாரப்பல்லக்குāṭārappallakku, பெ.(n.)

   மூடுபல்லக்கு (யாழ்.அக.);; closed palanquin.

     [கூடாரம் + பல்லக்கு]

கூடாரமாடம்

 கூடாரமாடம்āṭāramāṭam, பெ.(n.)

   கோபுர உறுப்புகளுள் ஒன்று (கட்.தொ.வரி.);; a detail on temple towers.

     [கூடாரம் + மாடம்]

கூடாரம்

கூடாரம்1āṭāram, பெ.(n.)

   1. கூம்பு வடிவான கூரையையுடைய குடில், படவீடு, படுக்கை; tent pavilion, tabernacle, booth, awning, tent covering for a bed.

   2. வண்டடிக்கூடு (இ.வ.);; hood covering of a cart.

   ம. கூடாரம்;   க., து., பட. கூடார;தெ. கூடாரமு.

{skt. kutaru}

     [கூடு → கூடாரம்]

 கூடாரம்2āṭāram, பெ.(n.)

   மாளிகையின் உப்பரிகை; balcony of the palace. ‘

     “கூடார மாடமயில் போல” (சீவக. 2328);.

     [கூடு → கூடாரம்]

கூடாரம் போடு-தல்

கூடாரம் போடு-தல்āṭārambōṭudal,    19 செ.கு.வி.(v.i.)

   1. படவீடு அமைதல்; to pitch a tent.

   2. வண்டிக்கு மேற்கூடு இடுதல் (இ.வ.);; to put a covering orhooded top over a cart.

     [கூடாரம் + போடு]

கூடாரவண்டி

 கூடாரவண்டிāṭāravaṇṭi, பெ.(n.)

   மேற்கூடுள்ள வண்டி (இ.வ.);; cart with hooded top.

     [கூடாரம் + வண்டி]

கூடார்

கூடார்āṭār, பெ.(n.)

   பகைவர்; enemies, foes.

     “கூடாரரனெரி கூட

     ” (திருக்கோ. 161);.

மறுவ. கூடாதார்

     [கூடு + ஆ + ஆர். ‘ஆ’ எ.ம.இ.நி. புணர்ந்து கெட்டது.]

கூடார்த்தம்

கூடார்த்தம்āṭārttam, பெ.(n.)

மறைந்து கிடக்குங் கருத்து,

 hidden meaning.

     “தாம் உபதேசித்தருளிய கூடார்த்தத்தை வெளியிடலாகா தென்று சொல்லியிருந்தும்” (திவ்யசூரி.213);.

     [கூடா(த); (கிடைக்காத); + அர்த்தம்.]

கூடாவியற்கை

 கூடாவியற்கைāṭāviyaṟkai, பெ.(n.)

   பெண்களைப் புணருவதற்கு ஆண்மையற்ற தனம்; functional impotency. (சா.அக.);.

     [கூடா (த); + இயற்கை]

கூடாவுவமை

 கூடாவுவமைāṭāvuvamai, பெ.(n.)

   ஒரு பொருட்கு இயல்பில்லாதவற்றை உள்ளதாகச் சொல்லி, அதனை ஒன்றற் குவமையாக்கி உரைப்பது; a simile in which the comparison is made with a thing having only a hypothetical existence

     “காமுகர்க்குத்தண் மதியந் திக்கால்வ போலும்”

மறுவ. மருட்கை உவமை

     [கூடா (த); + உவமை]

கூடாவெலும்பு

 கூடாவெலும்புāṭāvelumbu, பெ.(n.)

   பொருந்தாத எலும்பு; a bone which does not unite (சா.அக.);.

     [கூடா (த); + எலும்பு]

கூடாவொழுக்கம்

கூடாவொழுக்கம்āṭāvoḻukkam, பெ.(n.)

   தகாத ஒழுக்கம் (குறள், அதி.28);; improper or immoral conduct, as in appropriate to one’s mode of life.

     [கூடா(த); + ஒழுக்கம்]

கூடிநாடித்திரி-தல்

கூடிநாடித்திரி-தல்āṭināṭiddiridal,    2 செ.கு.வி. (v.i.)

   பிறருடன் விடாதுசேர்ந்திருத்தல்; to be always in the company of.

     [கூடி + நாடி + திரி]

கூடினரைப்பிரி-த்தல்

கூடினரைப்பிரி-த்தல்āṭiṉaraippirittal,    4 செ.குன்றாவி.(v.t.)

   பகையரசர்களைத் தம்முட் பிளவுண்டாக்கிப் பிரிக்கை (பு.வெ. 9,37.உரை.);; separating enemy-kings by creatingdissensions between them.

     [கூடி→கூடு →கூடின + அவர் + ஐ + பிரி]

கூடிய

 கூடியāṭiya, இடை.(part.) ஒன்றோடு இணைந்திருக்கிற சேர்ந்த,

 having in addition; with.

கணவனோடு கூடிய மனைவி

     [கூடு+இ+அ]

கூடியமட்டும்

 கூடியமட்டும்āṭiyamaṭṭum, வி.எ.(adv.)

கூடியவரை பார்க்க;See. {kudiya-Varai}

     [கூடிய + மட்டும்]

கூடியற்பெயர்

கூடியற்பெயர்āṭiyaṟpeyar, பெ.(n.)

   கூட்டத்தைக் குறிக்கும் பெயர் (நேமி.சொல். 31);; collective noun.

     [கூடு + இயல் + பெயர்]

கூடியவரை

 கூடியவரைāṭiyavarai, பெ.(n.)

   இயன்றவரை (கொ.வ.);; asfaras possible, as much as one is able, to the utmost.

     [கூடிய + வரை]

கூடியவிரைவில்

 கூடியவிரைவில்āṭiyaviraivil, வி.அ. (adv.)

   மிகக் குறுகிய காலத்தில்; at the earliest, in the immediate future.

கூடிய விரைவில் தேர்தல் நடக்கும்.

     [கூடிய+விரைவில்.]

கூடியாடு-தல்

கூடியாடு-தல்āṭiyāṭudal,    5 செ.கு.வி.(v.i.)

   1. கூடிச்சேர்ந்து ஆடுதல்; to dance or dally together.

   2. சேர்ந்து பணியாற்றுதல்; to mingle with, come in touch with, work in company with.

ம. கூடியாடுக

     [கூடு + ஆடு]

கூடியிருக்கை

கூடியிருக்கை1āṭiyirukkai, பெ.(n.)

   புணர்ச்சியாயிருத்தல்; being in the act of copulation (சா.அக.);.

     [கூடு → கூடி + இருக்கை]

 கூடியிருக்கை2āṭiyirukkai, பெ.(n.)

   1.இணையர் (கணவன் மனைவி); வாழ்க்கை; living as husband and wife.

   2. ஒன்றாக வாழுகை; living together.

     [கூடு → கூடி + இருக்கை]

கூடிலி

 கூடிலிāṭili, பெ.(n.)

   புலால் தின்போன் (பிங்.);; flesh eater (செ.அக.);.

     [கூடு+இலி]

 கூடிலிāṭili, பெ.(n.)

   புலால் தின்போன்; flesh eater.

த.வ. புலால்உண்ணி.

கூடிவா-தல் (கூடிவருதல்)

கூடிவா-தல் (கூடிவருதல்)āṭivādalāṭivarudal,    18 செ.கு.வி. (v.i.)

   1. சேர்ந்து வருதல்; to accompany, to move in company.

   2. கைகூடி வருதல்; to succeed, be prosperous, as in an undertaking.

   3.மிகுதியாதல்; to increase,

அவனுக்கு நாளுக்குநாள் பொருள் கூடிவருகிறது (கொ.வ.);.

     [கூடி + வரு (வா);]

கூடு

கூடு1āṭudal,    5 செ.கு.வி.(v.i.)

   1. ஒன்று சேர்தல்; to come together, join, meet, to become one as rivers.

     “அங்கை மலர்கூடத் தலைமேற் குவித்தருளி”.

   2. திரளுதல்; to collect, crowd together, assemble, congregate, muster.

     “கூடிய வண்டினங்காள்” (திவ். திருவாய். 6:8,3);.

   3. பொருந்துதல் (திவா.);; to combine, coalesce, reunite, as broken bones.

   4. கிடைத்தல்; to be available.

     “உவமை இவ்வுலகிற் கூடுமோ”(கம்பரா. உருக்கா.44);.

   5. இயலுதல்; to be possible, practicable attainable.

     “ஈவது கூடா வெல்லை” (கந்தபு.மேரு. 20);.

   6. நேரிடுதல்; to come, to pass, to happen.

     “திருவாறன்விளை கைதொழக் கூடுங் கொலோ” (திவ்.திருவாய். 7:103.);.

   7.இணங்குதல்; to become reconciled, pacified, conciliated.

   8. தகுதியாதல்; to be fit, suitable, appropriate, proper, decent, expedient.

   9. தொகை சேர்தல்; to accumulate, to be hoarded, stored up.

   10. மிகுதியாதல், வீங்குதல்; to abound, swell, increase.

     “உள்ளங் கூடின துயரம்”(கந்தபு. காமத.97);.

   11. தொடங்குதல் (வின்.);; to commence, be gin.

   12. கைகூடுதல்; to be achieved.

   13. உடன் படுதல்; to agree, consent.

     “கொன்றிடக் கூடாதுள்ளம்” (திருவாலவா. 1:15);.

   ம. கூடுக;   க., தெ., பட., கொலா. கூடு;கோத., துட., கூ. கூட்.

     [குல்→குள்→கூடு]

 கூடு2āṭudal,    5 செ.குன்றாவி (v.t.)

   1. ஒன்றுகூடி அன்பு பாராட்டுதல், நட்பாயிருத்தல்; to associate or be friend.

     “கூடிப்பிரியேல்” (ஆத்திசூடி.);.

   2. புணர்தல்; to cohabit.

     “கொம்மைத் துணை மென்முலை யண்ணலைக்கூட” (கந்தபு. மகாசத்.17);.

   3.அடைதல்; to reach, arrive at.

     “நகரங் கூடினான்” (பிரமோத். 13:64);.

     [குல்→குள்→கூடு]

 கூடு3āṭu, பெ.(n.)

   1. பறவை முதலியவற்றின் கூடு (திவா.);; nest, bird-cage, coop, hive, cocoon, shell.

   2. விலங்குக் கூடு; pen, sty, kennel, cage for animals.

     “கூடார் புலியும்” (சீவக. 2328);.

   3. நெற் கூடு; receptacle for grain.

   4. உருண்டு திரண்டு கூடு போலுள்ளது; hollow, globular or prismatical as a balloon, as the lamp of a light house.

   5. கட்டடத்தின் முகடு (கட்டடக்);; dome, cupola

   6. ஆயுதம் முதலியவற்றின் உறை; quiver, sheath, case, envelope.

     “கோறுவக்கும் கூடுகுறைந்த கொடுமதனை” (சிலப்.பிர.வெங்கைக் கலம்.93);.

   7. மைக்கூடு; small receptacle, as an ink stand.

   8. வண்டிக்கூடு; covering or top of a cart.

   9. துரப்பணக் கூடு; top of the drill for boring holes.

   ம.கூடு;   க., தெ., து., பட. கூடு;   குட. கூட;   கோத., துட. கூட்;   கோண்., பர். கூட;   கட. கூடெ;   கூ. கிரேந்நு;குவி. கூத.

     [குல்→குள்→கூடு]

 கூடு4āṭu, பெ(n.)

   1. மீன்பறி; basket for catching fish.

   2. சான்றாளர் கூண்டு; witness box.

   3. கழுந்துக்கூடு (வின்.);; mortise groove, in carpentry.

   4. உடம்பு; body, as the sheath, encasing the soul.

     “கூட்டை விட்டுயிர் போவதன் முன்னமே” (தேவா. 376:2);.

     [குல்→குள்→கூடு]

 கூடு5āṭu, பெ.(n.)

   வயிறு; stomach.

     “உண்டுழியெங் கூடாரப் போதுங்கொல்” (கலிங்.217);.

     [குள் → கூடு]

கூடுகொம்பன்

 கூடுகொம்பன்āṭugombaṉ, பெ.(n.)

   முனைப்பகுதி தம்முட்கூடிய கொம்புகளுள்ள மாடு (வின்.);; oxwhose horns almost meet at the points.

     [கூடி + கொம்பன்]

கூடுங்கொடிச்சி

 கூடுங்கொடிச்சிāḍuṅgoḍicci, பெ.(n.)

   தொழுகண்ணி; telegraph plant (சா.அக.);.

     [கூடும்+ கொடிச்சி]

கூடுதலை

 கூடுதலைāṭudalai, பெ.(n.)

   அறச்சாலை (இ.வ.);; an asylum.

     [கூடு + தலை (இடம்);]

கூடுதல்

கூடுதல்1āṭudal, பெ.(n.)

   1. மிகுதி, அதிகம்; excess.

அவனுக்கு கூடுதலாகவே கொடுத்திருக்கிறது (உ.வ.);.

   2. வெற்றி; success.

அவனுக்கு எல்லாம் கூடுதலாயிருக்கிறது (உ.வ.);.

     [கூடு → கூடுதல்]

 கூடுதல்2āṭudal, பெ.(n.)

   1. மொத்தம் (இ.வ.);; total.

   2. பெருமம் மேலெல்லை; maximum.

கூடுதல் எட்டனா கூலி கிடைக்கும்.

     [கூடு → கூடுதல்]

கூடுபரிலை

 கூடுபரிலைāṭuparilai, பெ.(n.)

ஒருபிசின்மரம்,

 west India copal – Hymenaea Courbaril (சா.அக.);.

     [கூடு+பளி+இலை.]

கூடுபூரி-த்தல்

கூடுபூரி-த்தல்āṭupūrittal,    4 செ.குன்றாவி.(v.t.)

   நிரப்புதல்; to fill up, stuff.

அதிருஷ்டத்துக்குத் தாரித்ரயத்தைக் கூடுபூரித்த இத்தனை (திவ். திருமாலை.6. வியா.33);.

     [கூடு + பூரி]

கூடுமானவரையில்

 கூடுமானவரையில்āṭumāṉavaraiyil, வி.அ.(adv.)

ஒன்றைச் செய்வதில் எந்த அளவு முடியுமோ அந்த அளவு

 as far as possible; to the extent possible. gyam

எனக்குக் கூடுமானவரை உதவி செய்தார். கூடுமானவரையில் எல்லோரோடும் ஒத்துப் போக வேண்டும். [கூடும்+ஆன+வகையில்.]

கூடும்

 கூடும்āṭum, வி.மு.(adv)

   கூற்றை ஏற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு ஓரளவுக்காவது இருக்கிறது என்பதைத் தெரிவிக்கப் பயன்படுத்தும் ஒரு வினைமுற்று; a predicate form expressing the idea of likelihood or a possibility; may; might; could. அவன் சொல்வது உண்மையாக இருக்கக் கூடும்.

கூடுவாய்

 கூடுவாய்āṭuvāy, பெ.(n.)

   இரண்டு மரச்சட்டங்கள் பொருந்தும் இடம்; joint of two wooden pieces.

கூடுவாய் சரிபார்த்துப் பொருத்து வழக்கு. (தச்சு.தொ.வரி);.

     [கூடு + வாய்]

கூடுவாய்மூலை

 கூடுவாய்மூலைāṭuvāymūlai, பெ.(n.)

   மேற்கூரையிணையும் மூலை; the ridge of a roof.

     [கூடு + வாய் + மூலை]

கூடுவிடு-தல்

கூடுவிடு-தல்āḍuviḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   1. இறத்தல்; to die. lit., to leave the body.

     “கூடுவிட்டிங் காவிதான் போயினபின்” (நல்வழி, 22);.

   2. எலும்பு தோன்ற இளைத்தல்; being to be reduced to a skeleton as in wasting diseases.

அவனுடைய மார்பு கூடுவிட்டிருக்கிறது (உ.வ.);.

     [கூடு + விடு]

கூடுவிட்டுக்கூடுபாய்-தல்

கூடுவிட்டுக்கூடுபாய்-தல்āṭuviṭṭukāṭupāytal,    2 செ.கு.வி.(v.i.)

   தன்னுயிரை மற்றொரு உடலிற்கு மாற்றிக் கொள்ளும் மந்திரக்கலை; the magic art of leaving one’s own body and entering another body at will.

     [கூடு + விட்டு + கூடு + பாய்]

கூடுவிட்டுப்போ-தல்

கூடுவிட்டுப்போ-தல்āṭuviṭṭuppōtal,    8 செ.குன்றாவி. (v.i.)

   இறத்தல்; dying (சா.அக.);.

     [கூடு + விட்டு + போ.]

கூடுவிழு-தல்

கூடுவிழு-தல்āṭuviḻudal,    2 செ.கு.வி.(v.i.)

   1. இறத்தல் (யாழ். அக.);; to die.

   2. ஆணிச்சிதல் விழுதல்; droping off the polypus in the anus.

   3. நோயின் வேர் கழலுதல்; being rooted out as disеases.

     [கூடு + விடு]

கூடுவை-த்தல்

கூடுவை-த்தல்āṭuvaittal,    4 செ.கு.வி.(v.i.)

   1. ஆணிச்சிதல் காய்ந்து சவ்வுபற்றுதல் (யாழ்.அக.);; to begin to heal, after the dropping of the core of anulcer.

   2.நோய் வேர்வைத்துப் பலத்தல் (யாழ்.அக.);; to become critical, as the condition of a patient.

   3. புண் புரையோடுதல் (இ.வ.);; to form a running sore.

     [கூடு + வைl]

கூடை

கூடை1āṭai, பெ.(n.)

   1. பிரம்பு முதலியவற்றாற் பின்னப்படும் பெட்டி; basket made of rattan, {Öla} or bamboo.

   2. மழைநீர் படாதபடி உடல்மேல் இட்டுக்கொள்ளும் சம்பைக் கொங்காணி; palm-leaf Cover worn over the personas a protection from rain.

   ம. கூட;   க. கூடெ, கூட;   தெ. கூட;   து. பட. கூடெ;   கோத., துட. கூட்;கோண். கூல.

 Fin. kaha;

 Jap. katama:Gondi, {kūca}

     [கூடு + கூடை]

 கூடை2āṭai, பெ.(n.)

   1. முத்திரைக்கை வகை (சிலப். 3:20);; a kind of hand-pose.

   2. கூடைப்பாடல் பார்க்க; {seekūda-p-pāda,}

     [கூடு + கூடை]

கூடைகட்டி

 கூடைகட்டிāṭaikaṭṭi, பெ.(n.)

   வன்னியர் அல்லது பள்ளியின மக்களில் ஒரு வகையினர்; one the divisions of vanniyar or palli

     [கூடை+கட்டி]

கூடைக்காரன்

கூடைக்காரன்āṭaikkāraṉ, பெ.(n.)

   1. கூடையிற் காய்கறி விற்போன்; one who sells vegetables, carrying them in a basket.

   2. கூடையிற் பண்டமெடுத்து வருங் கூலிக்காரன்; coolie with a basket for carrying goods.

     [கூடை + காரன்]

கூடைக்குத்தகை

 கூடைக்குத்தகைāṭaigguttagai, பெ.(n.)

   மதிப்பாகத் தீர்மானிக்கும் குத்தகை (C.G.);; lt.lease by the basket. Rental fixed on a rough estimate.

     [கூடை + குத்தகை]

கூடைச்சாதம்

 கூடைச்சாதம்āṭaiccātam, பெ.(n.)

   திருமண நடப்பில் மாப்பிள்ளை வீட்டார் தம் வீடுசெல்லும்பொழுது அவர்களுக்குப் பெண் வீட்டார் அனுப்பும் சோறு முதலிய தின்பண்டம்; basketfuls of food and dainties presented by the bride’s people to the bridegroom’s party when the latter depart homeward (செ.அக.);.

     [கூடை+சாதம்]

கூடைச்சோறு

 கூடைச்சோறுāṭaiccōṟu, பெ.(n.)

   திருமணத்தில் மண உறவினர் (சம்பந்திகள்); தம் வீடு செல்லும்பொழுது அவர்களுக்கு பெண் வீட்டார் அனுப்பும் சிற்றுணா (இ.வ.);; basketfuls of food and dainties presented by the bride’s people to the bridegroom’s party when the latter depart homeward.

     [கூடை + சோறு]

கூடைதட்டிப்புறம்பு

 கூடைதட்டிப்புறம்புāṭaitaṭṭippuṟampu, பெ.(n.)

மதுரையிலுள்ள ஓர் ஊர்; a town, in Madurai.

     [கூடை+ தட்டி+ பறம்பு]

இது திருப்பரங்குன்றத்திற்கு வடக்கே பூதங்கண்ட குளத்திற்குத் தென்கிழக்கே உள்ளது. கூடையும் தட்டிகளும் செய்த இடமாகலாம்.

கூடைநாற்காலி

 கூடைநாற்காலிāṭaināṟkāli, பெ.(n.)

   கூடை போன்ற அமைப்பில் செய்த ஒரு வகை நாற்காலி; chair with a basket-like seat

     [P]

     [கூடை+நாற்காலி]

கூடைப்பணியாரம்

 கூடைப்பணியாரம்āṭaippaṇiyāram, பெ.(n.)

   திருமணத்தில் மணையிலுள்ள மாப்பிள்ளைக்கு முன் கூடைகளில் வைக்கும் தின்பண்டம் (இ.வ.);; basketfull of confections presented to the bridegroom by the bride’s people at the time of marriage.

     [கூடை + பணியாரம்]

கூடைப்பந்து

 கூடைப்பந்துāṭaippantu, பெ.(n.)

   இருஅணியினராகப் பிரிந்து ஆடுகளத்தின் இரு புறமும் அமைக்கப்பட்டிருக்கும் கம்பத்தில் உள்ள கூடை போன்ற வளையத்தினுள் பந்தை போடும் விளையாட்டு; basketball.

     [கூடை+பந்து]

     [P]

கூடைப்பாடல்

கூடைப்பாடல்āṭaippāṭal, பெ.(n.)

   சொற்செறிவும் இசைச்செறிவுமுடைய பாடல் (சிலப்.3:67, உரை);; a song which combines wealth of words with richness of melody.

     [கூடை + பாடல்]

கூடையன்

 கூடையன்āṭaiyaṉ, பெ.(n.)

   பருத்தவன் (யாழ்.அக.);; corpulent person.

     [கூடை + அன்]

கூட்டக்கட்டு

 கூட்டக்கட்டுāṭṭakkaṭṭu, பெ.(n.)

   ஒற்றுமையோடு உதவக் கூடிய சுற்றத்தாரின் கட்டுப்பாடு; ties of blood, the bond of union among relations.

     [கூட்டம் + கட்டு.]

கூட்டக்கலகம்

 கூட்டக்கலகம்āṭṭaggalagam, பெ.(n.)

   மாந்தர் கூட்டமிட்டு விளைக்கும் கலகம்; riot.

     [கூட்டம் + கலகம்.]

கூட்டக்கொள்ளை

 கூட்டக்கொள்ளைāṭṭakkoḷḷai, பெ.(n.)

   கூட்டமாகச் சேர்ந்து புரியுங் கொள்ளை; dacoity.

ம. கூட்டக்கவர்ச்ச

     [கூட்டம் + கொள்ளை.]

கூட்டச்சாலை

 கூட்டச்சாலைāṭṭaccālai, பெ.(n.)

நிழற்சாலை,

   இரு பக்கங்களிலுமுள்ள மரநெருக்கத்தால் நிழல் செறிந்த பாதை (வின்.);; public road shaded with thickly grown trees on its sides, avenue.

மறுவ. நிழற்சாலை

     [கூட்டம் + சாலை.]

கூட்டடி

 கூட்டடிāḍḍaḍi, பெ.(n.)

   அளத்தில் உப்பைக் குவியலாக இட்டிருக்கும் இடம்; place ina salt-pan where saltis heaped up.

     [கூட்டம் + அடி.]

கூட்டணி

 கூட்டணிāṭṭaṇi, பெ.(n.)

   தனித்தனியான அணிகள் ஒரு திட்டத்தை அல்லது சில கொள்கைகளை மேற்கொண்டு இணைந்து செயற்பட வகுக்கப்பட்ட அமைப்பு; front of individual units or parties to work with a programme

உயர்வுக்கான ஆசிரியர் கூட்டணியின் வேலை நிறுத்தம் இன்னும் தொடர்கிறது. மூவேந்தர் கூட்டணி வைத்திருந்தனர் எனக் காரவேலனின் அத்திகும்பா கல்வெட்டு கூறுகிறது.

     [கூட்டு + அணி]

கூட்டத்தார்

கூட்டத்தார்āṭṭattār, பெ.(n.)

   1. பழங்குடியைச் சார்ந்தத ஒரு வகுப்பினர்; members of a tribe.

   2. குமுகாயத்தின் ஒரு பிரிவினர்; members of a society.

     [கூட்டம் → கூட்டத்தார்.]

கூட்டத்தொடர்

 கூட்டத்தொடர்āṭṭattoṭar, பெ.(n.)

   ஒரு நாட்டின் சட்டசபை, மக்களவை(பாராளுமன்றம்); முதலியவற்றில் குறிப்பிட்ட காலம் வரை உறுப்பினர்கள் நாள்தோறும் கூடும் கூட்டம்; session of parliment, etc.

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கியது.

     [கூட்டம்+ தொடர்]

கூட்டநாட்டம்

 கூட்டநாட்டம்āṭṭanāṭṭam, பெ.(n.)

   மாந்தர் கூடுதற்குரிய நிலைமை; possibility of people gathering.

     [கூட்டம் + நாட்டம்.]

கூட்டப்பிராய்

 கூட்டப்பிராய்āṭṭappirāy, பெ.(n.)

   குற்றிப்பலா; stunted jack (சா.அக.);.

     [கூட்டம் + பிராய்.]

கூட்டமாமூலி

கூட்டமாமூலிāṭṭamāmūli, பெ.(n.)

   ஆயிரத்தெட்டு மூலி; a classification consisting of a group 1008 plants or herbs (சா.அக.);.

     [கூட்டம் + ஆ (ஆயிரம்); + மூலி.]

கூட்டமை

கூட்டமை1āṭṭamaidal,    2 செ.கு.வி.(v.i.)

   பலவகை உறுப்புகளும் சேர்ந்தமைதல்; to be mixed,

 as the ingredients of sandal paste, to be set in order, as the different parts of a musical instrument.

     “கூட்டமை வனப்பிற் கோட்பதிக் குரல்” (பெருங். வத்தவ. 3:123);.

     [கூட்டு + அமை-.]

 கூட்டமைāṭṭamai, பெ.(n.)

   காய்கறியமுது (பிங்.);; cooked vegetable food.

     [கூட்டு + அமை.]

கூட்டமைதி

கூட்டமைதிāṭṭamaidi, பெ.(n.)

   திருமணத்தின் போது கூட்டும்வேள்வித்தீ; sacrificial fire at the wedding ceremony.

     “கூட்டமை தீமுதற் குறையா நெறிமையின்” (பெருங். வத்தவ. 17:113);.

     [கூட்டு + அமை + தீ.]

கூட்டமைப்பு

 கூட்டமைப்புāṭṭamaippu, பெ.(n.)

   ஒன்றுக்கு மேற்பட்ட கழகங்(சங்கங்);களின் இணைப்பு; association of more than one union, etc.;federation.

தொழிற்சங்க்க் கூட்டமைப்பு இன்று ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் மேற்கொண்டது.

     [கூட்டு+அமைப்பு]

கூட்டமைவு

கூட்டமைவுāṭṭamaivu, பெ.(n.)

   கூடியிருக்கை; residing together.

     “அவளொடு பின் கூட்டமைவும்” (பெருங். இலாவாண. 17,16);.

     [கூட்டு + அமைவு.]

கூட்டம்

கூட்டம்1āṭṭam, பெ.(n.)

   1. கூடுகை; union, combination, meeting.

   2. திரள் (திவா.);; crowd, flock, clump, swarm, group.

   3. மந்தை; herd.

   4. அவை (பிங்.);; association, society, assembly, confederation.

     “கூட்டம் பாவையு மன்னவன் றொண்டு செய் கூட்டம்” (கந்தபு.திருநகர. 44);.

   5. இனத்தார்; kindred, relations, tribe.

   6. நட்பினர் (சூடா.);; friends. companions.

   ம. கூட்டம்;   க., து., பட. கூட;   தெ. கூடமு;   கோத., துட கூட்ம்;குட. கூடி.

     [கூடு → கூட்டம்.]

 கூட்டம்2āṭṭam, பெ.(n.)

.

   1. வகை (வின்.);; class, kind, series, set, species, genus.

   2. கூட்டவணி (திவா.); பார்க்க;See. {kita-y-am}

   3. போர் (திவா.);; battle, fighting.

   4. மெய்யுறு புணர்ச்சி; copulation, sexual intercourse.

     “எல்வளையாள் கூட்டம்

புணராமல்” (பு. வெ. 11, ஆண்பாற்,8);.

   5. மிகுதி (வின்.);; abundance, numerousness.

   6. பிண்ணாக்கு (அக. நி.);; oil-cake.

   ம. கூட்டம்;   க., து., பட. கூட;   தெ.கூடமு;கோத.,

   துட. கூட்ம்;குட. கூடி.

     [கூடு → கூட்டம்.]

 கூட்டம்3āṭṭam, பெ.(n.)

   மலையுச்சி (பிங்.);; summit of mountain, peak.

     [கூடு → கூட்டம்.]

கூட்டரக்கு

கூட்டரக்குāṭṭarakku, பெ.(n.)

   செவ்வரக்கு;     “கூட்டரக் கெறிந்த பஞ்சின்” (சீவக. 1166);.

     [கூட்டு + அரக்கு.]

கூட்டரளி

 கூட்டரளிāṭṭaraḷi, பெ.(n.)

பார்க்க இரட்டையலரி (சா.அக.);;See. {irattai-y-alari – }

     [கூட்டு + அரளி.]

கூட்டரவு

கூட்டரவுāṭṭaravu, பெ.(n.)

   1. கூடுகை; uniting, joining.

   2. உடனுறைகை; association, acquaintance.

     “போதமிக்கவர் கூட்டரவு” (ஞானவா. முமுட்.25);.

   3. பொருட்கூட்டம் (வின்.);; collection aggregate, series.

   4. சேர்க்கை; combination, union

     “இவற்றின் கூட்டரவின் ஒருணர்வுண்டாம்” (சி.போ.பா.அவையடக். ப.36);.

     [கூடு → கூட்டு + அரவு.]

கூட்டரிசி

 கூட்டரிசிāṭṭarisi, பெ.(n.)

   கறியிற் கூட்டுவதற்கு அரைத்த அரிசிமா (யாழ்.அக.);; rice flour used in preparing curry.

     [கூடு → கூட்டு +அரிசி.]

கூட்டர்

கூட்டர்āṭṭar, பெ.(n.)

   1. தோழர்; companions.

   2. இனத்தார்; members of the same clan or tribe.

     “ன் கூட்டரா மரக்கர்” (கம்பரா. சடாயுவு. 84);.

ம. கூட்டர்

     [கூட்டு → கூட்டார்.]

கூட்டறிக்கை

 கூட்டறிக்கைāṭṭaṟikkai, பெ.(n.)

   நாடுகள் அல்லது அமைப்புகள் ஒன்றாகச் சேர்ந்து விடுக்கும் அறிக்கை; joint communique.

தீவிரவாதத்தை ஒடுக்க இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து கூட்டறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

     [கூட்டு+அறிக்கை]

கூட்டற்றவன்

கூட்டற்றவன்āṭṭaṟṟavaṉ, பெ.(n.)

   1. சேரத்தகாதவன் (வின்.);; one unfit for company.

   2. ஒன்றுக்கும் பயனற்றவன்; useless person.

   3. இனத்தினின்று விலக்குண்டவன்; outcaste excommunicated person.

கூட்டல்

கூட்டல்āṭṭal, பெ.(n.)

   1. கூடுகை, இணைகை; uniting, joining.

   2. வலிய அரசனது துணையைத் தேடுகை; See.king the alliance of powerful kings.

     “கூடினரைப் பிரித்தல் கூட்டல்” (பு.வெ.9,37,உரை);.

   3. எண்களை ஒன்றோடொன்று கூட்டுதலாகிய கணிதவகை; addition (Arith.);.

ம. கூட்டல்

     [கூடு → கூட்டல்.]

கூட்டவணி

கூட்டவணிāṭṭavaṇi, பெ.(n.)

ஒரு காலத்தி லுண்டாகும் பல தொழில்களின் கூட்டத்தைக் கூறுவதாகவேனும், தனித்தனியே தொழிலை விளைத்தற்குரிய பல காரணங்களை ஒன்று கூடியதால் ஒரு தொழில் பிறப்பதாகக் கூறுவதாக வேனும் வரும் அணிவகை; (அணியி.55);

 a figure of speech which consists in enumerating together various actions or causes associated with some common object or result.

     [கூட்டம் + அணி.]

கூட்டவியல்

 கூட்டவியல்āṭṭaviyal, பெ.(n.)

   காய்கறிகள், தயிர் முதலியவற்றால் செய்யப்படும் ஒருவகை கூட்டுக்கறி; a kind of curry in semiliquid form made of vegetables, curd etc.

     [கூட்டு + அவியல்.]

கூட்டாக்கு-தல்

கூட்டாக்கு-தல் kattakku-    5 செ.குன்றாவி (v.t.)

   பொருட்படுத்துதல் (திருநெல்.);; to take into account, to mind.

     [கூட்டு + ஆக்கு.]

கூட்டாக்குழப்பம்

 கூட்டாக்குழப்பம்āṭṭākkuḻppam, பெ.(n.)

   தாறுமாறு (வின்.);; confusion of things, disorder.

     [கூட்டா + குழப்பம்.]

கூட்டாஞ்சோறு

கூட்டாஞ்சோறுāṭṭāñjōṟu, பெ.(n.)

   1. கூடியுண்ணும் உணவு (இ.வ.);; common meal, as at a picnic.

   2. காய்கறிகளைச் சேர்த்துப் பொங்கிய சோறு (நெ.வ.);; rice boiled with vegetables.

ஆடிப்பெருக்கு நாளன்று கூட்டாஞ்சோறு உண்டோம் (உ.வ.);.

     [கூட்டு + ஆம் + சோறு.]

கூட்டாணி

 கூட்டாணிāṭṭāṇi, பெ.(n.)

   மரப்பலகை முதலியவற்றை இணைக்கும் ஆணி; nail for joining two or more pieces of wood.

     [கூடு → கூட்டு + அணி.]

கூட்டாளன்

கூட்டாளன்āṭṭāḷaṉ, பெ.(n.)

கூட்டாளி பார்க்க;See. {kital,}

     “கூட்டாளாசிவகாமக் கொடிக் கிசைந்த கொழுநா” (அருட்பா. vi, அருள்வி. 14);.

ம. கூட்டாள்

     [கூட்டு + ஆளன்.]

கூட்டாளி

கூட்டாளிāṭṭāḷi, பெ.(n.)

   1. நண்பன்; associate, companion.

   2.பங்காளி; partner in trade, co-partner.

   3. பணவணிக முகவர்; agent of money lending business.

   4. உடனொத்தவன்; equal compeer. என் கூட்டாளியானால்

   4. இணையி லொன்று (வின்.);; fellow, one of a pair, as oxen, horses.

ம. கூட்டக்காரன்

     [கூட்டு + ஆளி.]

 கூட்டாளிāṭṭāḷi, பெ(n.)

   செயலில் ஒருவருக்குத் துணையாக ஈடுபடுபவர்; associate;

 companion,

   2. கூட்டுத்தொழிலை நடத்து பவருள் ஒருவர்; partner.

     [கூட்டு+[ஆள்]→ ஆளி]

கூட்டி

கூட்டிāṭṭi, பெ.(n.)

   1. சேவல்; cock fowl.

   2. புன்னை மொக்கு; the bud of common poon tree – Calophyllum inophyllum.

   3. மருளி; an unknown plant.

   4. கூட்டிக் கொடுப்போன்; bawd;pander(சா.அக.);.

     [கூட்டு-கூட்டி]

கூட்டிக்கட்டு-தல்

கூட்டிக்கட்டு-தல்āṭṭikkaṭṭudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. சேர்த்துக் கட்டுதல்; to gather and tie together

   2. பிறர்நிலத்தைத் தன்னதாகச் சேர்த்துக் கொள்ளுதல்; to encroach on another’s land.

     [கூட்டு → கூட்டி + கட்டு.]

கூட்டிக்கொடு-த்தல்

கூட்டிக்கொடு-த்தல்āḍḍikkoḍuttal,    4 செ.குன்றாவி. (v.t.)

   1. முன்னிருந்ததோடு சேர்த்துக் கொடுத்தல்; to give more, increase, add to.

   2. பெண்களைப் பரத்தமைக்குக் கூட்டிவிடுதல்; to play the pimp, pander.

     [கூட்டி + கொடு.]

கூட்டிக்கொண்டுசெல்-தல்

கூட்டிக்கொண்டுசெல்-தல்āṭṭikkoṇṭuceltal,  Sel,3.செ.கு.வி. (vi.)

   இருக்கிற இடத்திலிருந்து வேறு இடத்திற்கு அழைத்துக் கொண்டு செல்லுதல்; take along;bring along.

கடற்கரைக்குக் குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு சென்றேன்.

     [கூட்டி+ கொண்டு+ செல்-தல்]

கூட்டிக்கொள்ளு-தல்

கூட்டிக்கொள்ளு-தல்āṭṭikkoḷḷudal,    16 செ.குன்றாவி. (v.t.)

   1. கூட்டமுதலியவற்றில் சேர்த்துக் கொள்ளுதல்; to take, admit one as into society, company etc.

   2. மருந்து உணவு முதலியவற்றில் வேண்டும் பொருள்களைச் சேர்த்தல்; to add ingredients, as in medicine food, etc.

   3. உணவு உட்கொள்ளுதல்; to take in, as food.

இன்று என்ன கூட்டிக் கொண்டாய்? (உ.வ.);.

     [கூட்டி + கொள்.]

கூட்டிப்பிடி-த்தல்

கூட்டிப்பிடி-த்தல்āḍḍippiḍittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   1. சேர்த்துப்பற்றுதல்; to hold together, as by the hand

   2. பிறர்க்குரிய நிலத்தைத் தன்னதாக்குதல் (வின்.);; to encroach upon, as another’s lands.

   3. துணி முதலியவற்றை அதிகமாக அளப்பதற்கு இழுத்துப்பிடித்தல் (வின்.);; to grasp too much, as in measuring cloth.

   4. ஒருவனை மன்னித்து ஏற்றுக்கொள்ளுதல் (இ.வ.);; to receive and treat with kindness, as a repenting prodigal.

     [கூட்டி + பிடி.]

கூட்டிப்பேசமுடியாமை

 கூட்டிப்பேசமுடியாமைāḍḍippēcamuḍiyāmai, பெ.(n.)

   சொற்களைச் சேர்த்துத் தொடர்ச்சியாகப் பேசக்கூடாமை; inablity to arrange words into sentences synthetically (சா.அக.);.

     [கூட்டி + பேச + முடியாமை.]

கூட்டிப்போ-தல்

கூட்டிப்போ-தல்āṭṭippōtal,    15 செ.குன்றாவி. (v.t.)

   கூட அழைத்துக்கொண்டு செல்லுதல்; to take along.

     [கூட்டி + போ.]

கூட்டிமுடி-த்தல்

கூட்டிமுடி-த்தல்āḍḍimuḍittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   1. கூந்தல் முதலியவற்றைச் சேர்த்துக் கட்டுதல்; to gather and tie, as hair.

   2. முற்றுவித்தல்; to accomplish, achieve.

     [கூட்டி + முடி.]

கூட்டியரை-த்தல்

கூட்டியரை-த்தல்āṭṭiyaraittal,    4செகுவி (vi.)

   1. மருந்துகள் சரியாகக் கலக்கும்படி அரைத்தல்; grinding medicine so that the ingredients are properly mixed up.

   2. சேர்க்க வேண்டியதைச் சேர்த்து அரைத்தல்; grinding with the required or necessary ingredients (சா.அக.);.

     [கூட்டி+அரை-த்தல்.]

கூட்டியுரை-த்தல்

கூட்டியுரை-த்தல்āṭṭiyuraittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   ஒரு சொல்லை மற்றோரிடத்தும் சேர்த்துப் பொருள் கூறுதல் (புறநா.140, உரை. );; to construe a sentence by imparting into it a word or phrase from a neighbouring passage.

     [கூட்டி + உரை.]

கூட்டிலிப்பாதி

 கூட்டிலிப்பாதிāṭṭilippāti, பெ.(n.)

   மொச்சைக் காய்; country bean-dolichos (genus);.

கூட்டிவாசி-த்தல்

கூட்டிவாசி-த்தல்āṭṭivācittal,    4 செ.கு.வி. (v.i.)

   எழுத்துக் கூட்டிப் படித்தல்; to read letter by letter, to spell out words (செ.அக.);.

 M. lūțțivāyikka → த.கூட்டிவாசி

     [கூட்டி+ Skt. வாசி-]

கூட்டிவிடு-தல்

கூட்டிவிடு-தல்āḍḍiviḍudal,    20 செ.குன்றாவி.(v.t.)

   1. கூட்டியனுப்புதல்; to send one along with another.

   2. கூட்டிக்கொடுத்தல் பார்க்க;See. {ki-k. kogu-}

   3. கூட்டிவை பார்க்க;See. {kūți-vai}

     [கூட்டி + விடு-.]

கூட்டிவிப்பனாதி

 கூட்டிவிப்பனாதிāṭṭivippaṉāti, பெ.(n.)

   மொச்சைக்காய்; Country bean – Dolichos (சா.அக.);.

கூட்டிவிழுங்கல்

 கூட்டிவிழுங்கல்āṭṭiviḻuṅgal,    ஒன்றுசேர்த்து விழுங்குதல்; swallowing after collecting the fragments in the mouth (சா.அக.).

     [கூட்டி + விழுங்கல்.]

கூட்டிவை-த்தல்

கூட்டிவை-த்தல்āṭṭivaittal,    4 செ.குன்றாவி (v.t.)

   1. சேர்த்து வைத்தல்; to accumulate, lay up, hoard.

   2. வேண்டியன புரிந்து நன்மை செய்தல்; to bless with success, to bestow prosperity on one.

கடவுள் உனக்குக் கூட்டி வைப்பார்.

   3. மாறுபாட்டாரை இணங்கி யொன்றுபடச் செய்தல்; to effect reconciliation, as between hostile parties.

     [கூட்டி + வை-.]

கூட்டு

கூட்டு1āṭṭudal,    5 செ.குன்றாவி.(v.t.)

   1. இணைத்தல்; to unite, join, combine, connect.

     “திருவடிக்கட் கூட்டினை” (திவ்.திருவாய்.4:9,9);.

   2. கலத்தல்; to compound, mingle, mix, amalga mate.

   3. அதிகப்படுத்துதல்; to increase பேசியதற்குமேல் வட்டி கூட்டித்தர வேண்டும்.

   4. தொகை கூட்டுதல்; to add sum up.

   5. அவை கூட்டுதல்; to convene, convoke, as an assembly.

   6. துடைப்பத்தாற் பெருக்குதல்; to gather up with a broom.

   7. முடித்தல்; to finish.

     “கூறுமாக்கதை கூட்டுமுன்” (பிரமோத். 22-23);.

ம. கூட்டுக

     [கூடு → கூட்டு.]

 கூட்டு2āṭṭudal,    5 செ.கு.வி.(v.i.)

   சீழ் முதலியன உண்டாதல் (யாழ்ப்.);; to form, as pus.

     [கூடு → கூட்டு.]

 கூட்டு4āṭṭu, பெ.(n.)

   1. ஒரினமான பொருள்; persons or things of the same class.

     “மனுஷ்யர்களுக்குக் கூட்டல்லர்” (ஈடு. 9:8,9);

   2. நட்பு; companionship, fellowship, friendship.

     “அம்புக்குங் காலனுக்கு மென்ன கூட்டா!” (இராமநா.உயுத்.31);.

   3. துணை; assistance, help

     “கூட்டொருவரையும் வேண்டா” (கம்பரா. வாலிவ.81);

   4. உறவு (வின்.);; relationship, consanguinity.

   5. கூட்டு வாணிகம் (கொ.வ.); பார்க்க;See. {kutuvāngam.}

   6. திரள்; horde, throng.

     “கொடியணிதேர் கூட்டணங்கும் போழ்தின்” (பு.வெ.10, பொதுவியற்.2);.

   7. பிறன்மனை சேர்தல்; illicit intercourse.

   8. ஒப்புமை; likeness, comparison.

     “மடங்கல் கூட்டுற வெழுந்தரி வெகுளியன்” (கம்பரா. அதிகாய.);.

     [கூடு → கூட்டு.]

 கூட்டு5āṭṭu, பெ.(n.)

   1. பொருள் மிகுதி; compound, mixture.

   2. கறி உசிலை; curry stuff’s ground together.

   3. கூட்டுக்கறி; curry boiled in semiliquid form.

   4. நீராற் பதப்பட்ட மண்திரள்; clod, lump of moist clay.

     “கூட்டுற முறுக்கிவிட்ட குயமகன் றிகிரி போல” (சீவக. 786);.

   5. வண்டி முதலியவற்றின் சக்கரத்துக்கும் இடும் மை (சீவக.786);; grease applied to wheels and carts etc.

ம. கூட்டு

     [கூடு → கூட்டு.]

 கூட்டு6āṭṭu, பெ.(n.)

   பொருள் மிகுதி; plenty, abundance.

     “புணர்கூட் டுண்ட…. சிறப்பின்” (மதுரைக். 762);.

   2. திறை’; tribute.

     “தார்மன்னருங் கூட்டளப்ப” (பு.வெ. 8,29);.

   3. அரையிற் கட்டுந் துகிலாகிய அரைஞான்; strip of cloth used as a waist-band

     “கூட்டு மகப்படக் கோவண நெய்து” (பதினொ.நம்பியாண்.திருத்தொண்டர் திருவந்.80);

   4. வீட்டின் மேற்கோப்பு, கீழ்க்கோப்பு முதலியன (இ.வ.);; roofframe, etc., of a house.

     [கூடு → கூட்டு.]

கூட்டு-தல்

கூட்டு-தல்āṭṭudal,    5 செ.கு.வி.(v.i.)

   அருளுரை வழங்குதல்; to teach.

     “உஜ்ஜீவிக்க வாராயென்று தம் திருவுள்ளத்தோடே கூட்டுகிறார்” (ஈடு. 1:1,1);.

     [கூடு → கூட்டு.]

கூட்டுக்கச்சவடம்

 கூட்டுக்கச்சவடம்āḍḍukkaccavaḍam, பெ.(n.)

கூட்டு வாணிகம் பார்க்க;See. {kittu-vangam.}

     [கூட்டு + கச்சவடம்.]

கூட்டுக்கணக்கு

கூட்டுக்கணக்கு1āṭṭukkaṇakku, பெ.(n.)

   கூட்டல்; addition.

     [கூட்டு + கணக்கு.]

 கூட்டுக்கணக்கு2āṭṭukkaṇakku, பெ.(n.)

   1.பலர் ஒன்று சேர்ந்து வரவுசெலவு செய்யுங் கணக்கு; joint Account.

   2. கூட்டு வணிகக் கணக்கு (இ.வ.);; partnership account.

     [கூட்டு + கணக்கு.]

கூட்டுக்கறி

கூட்டுக்கறிāṭṭukkaṟi, பெ.(n.)

   1. காய்கறியும் பருப்புங் கலந்து செய்த கறியுணவு; a vegetable curryin semiliquid form.

     “கூட்டுக்கறியிலே கலந்த பேராசை” (அருட்பா.VI, அவாவறு.4);.

     [கூட்டு + கறி.]

கூட்டுக்கலவை

 கூட்டுக்கலவைāṭṭukkalavai, பெ.(n.)

   பல மருந்துகளைக் கூட்டிக் கலந்தது; compound mixture (சா.அக.);.

     [கூட்டு + கலவை.]

கூட்டுக்காரன்

 கூட்டுக்காரன்āṭṭukkāraṉ, பெ.(n.)

   கூட்டாளி; partner, associate.

ம. கூட்டுக்காரன்

     [கூட்டு + காரன்.]

கூட்டுக்கால்

 கூட்டுக்கால்āṭṭukkāl, பெ.(n.)

   பாய்ந்தோடுகை; gallop.

குதிரை கூட்டுக்காலிற் செல்லுகிறது. இ.வ.).

     [கூட்டு + கால்.]

கூட்டுக்கால்கட்டு-தல்

கூட்டுக்கால்கட்டு-தல்āṭṭukkālkaṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. விலங்கின் முன்னங்கால்களைக் கூட்டிக் கட்டுதல்; to tie a beast’s fore-legs to gether.

   2. வலியற்ற தூணிற்கு முட்டுக்கொடுத்தல் (இ.வ.);; to set up an additional prop as a support to a weak pillar.

     [கூட்டு + கால் + கட்டு.]

கூட்டுக்கீரை

 கூட்டுக்கீரைāṭṭukārai, பெ.(n.)

   கலவைக்கீரை (Pond.);; edible greens, mixed together and cooked as a dish.

     [கூட்டு + கீரை.]

கூட்டுக்குடிநீர்

 கூட்டுக்குடிநீர்āḍḍukkuḍinīr, பெ.(n.)

பலவகை

   மருந்து சேர்ந்த கருக்கு (கியாழம்); அல்லது பழுகு சாறு; a mixture of medicine taken in (சா.அக.);.

     [கூட்டு + குடி + நீர்.]

கூட்டுக்குடும்பம்

 கூட்டுக்குடும்பம்āḍḍukkuḍumbam, பெ.(n.)

   பிரிவினையாகாத தனிப்பெருங் குடும்பம் (இ.வ.);; joint family.

ம. கூட்டுகுடும்பம்

     [கூட்டு + குடும்பம்.]

கூட்டுக்குளிகை

 கூட்டுக்குளிகைāṭṭugguḷigai, பெ.(n.)

   பல மருந்துகள் சேர்ந்த மாத்திரை; a compound pill (சா.அக.);.

     [கூட்டு + குளிகை.]

கூட்டுக்கூட்டு-தல்

கூட்டுக்கூட்டு-தல்āṭṭukāṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   சந்தனத்தில் நறுமணஞ்சேர்த்தல் (இ.வ.);; to mix scents in preparing sandal paste.

     [கூட்டு + கூட்டு.]

கூட்டுச்சரக்கு

 கூட்டுச்சரக்குāṭṭuccarakku, பெ.(n.)

   மருந்தில் சேர்க்க வேண்டிய கடைச்சரக்குகள்; bazar drugs that are necessary to drugs to be added (சா.அக.);.

     [கூட்டு + சரக்கு.]

கூட்டுச்சீட்டு

 கூட்டுச்சீட்டுāṭṭuccīṭṭu, பெ.(n.)

   பலர் ஒருங்குசேர்ந்து குறித்த தவணைகளில் பணங்கட்டி, ஏலமூலமாகவோ, குலுக்குச்சீட்டு மூலமாகவோ உறுதிசெய்யப்பட்டவருக்கு ஒரே தொகையாகக் கொடுக்கும் சீட்டுவகை; association chit-fund where the amount of the bid or the sum total of the premia is paid periodically either to be lowest bidderorto one whose nameis decided casting lots.

     [கூட்டு + சீட்டு.]

கூட்டுச்சேரா நாடு

 கூட்டுச்சேரா நாடுāṭṭuccērānāṭu, பெ.(n.)

வல்லரசு நாடுகளுடன் சேராமல் நடுநிலைக் கொள்கை மேற்கொள்ளும் நாடு

 non-aligned country.

மறுவ. அணிசேரா நாடு

     [கூட்டு+ சேரா+ நாடு]

கூட்டுச்சேராக்கொள்கை

 கூட்டுச்சேராக்கொள்கைāṭṭuccērākkoḷkai, பெ.(n.)

   வல்லரசு நாடுகளுடன் சேராமல் தனித்துச் செயற்படுவதைக் கடைபிடிக்கும் கொள்கை; principle of nonalignment

     [கூட்டு+சேரா+கொள்கை]

கூட்டுச்சொல்

 கூட்டுச்சொல்āṭṭuccol, பெ.(n.)

தனிப் பொருளைத் தரும் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட சொற்களின் கூட்டு,

 compound word.

     [கூட்டு + சொல்.]

கூட்டுண்(ணு)

கூட்டுண்(ணு)1āṭṭuṇṇudal,    12 செ.குன்றாவி. (v.t.)

   1. கூடியுண்ணுதல்; to dine together, as at a feast.

     “வரிவண்டு பண்னலங் கூட்டுண்ணும் (பு. வெ.949);.

   2. முழுமையாகக் கலவியின்பம் நுகர்தல்; to enjoy to the full.

     “என்னுண்ணலங், கூட்டுண்டான்” (புவெ. 9:49);.

     [கூட்டு + உண்-.]

 கூட்டுண்(ணு)2āṭṭuṇṇudal,    12 செ.குன்றாவி. (v.i.)

   1. திறைகொள்ளுதல்; to accept tribute.

     “கொடித்திண்டே மன்னராற் கூட்டுண்டு வாழ்வார்” (பழ. 266);.

    2.கலவி செய்தல்; to have sexual intercourse

     “கூட்டுண்டு நீங்கிய…… கண்ணன்” (திவ்.திருவாய். 9:5.7);.

     [கூட்டு + உண்-.]

கூட்டுண்டாகல்

கூட்டுண்டாகல்āṭṭuṇṭākal, பெ.(n.)

   கலவி செய்தல்; having copulation.

   2. கலவியேற்படல்; the happening or occurence of a sexual act. (சா.அக.);.

     [கூட்டு + உண்டாகல்.]

கூட்டுண்டாக்கு-தல்

கூட்டுண்டாக்கு-தல்āṭṭuṇṭākkudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   கூடும்படிசெய்தல்; effecting a union (சா.அக.);.

     [கூட்டு + உண்டாக்கு.]

கூட்டுத் தொடரியம்

 கூட்டுத் தொடரியம்āḍḍuttoḍariyam, பெ.(n.)

   ஒன்றுக்கு மேற்பட்ட தொடரியம் (வாக்கியம்); கொண்ட கூட்டுத் தொடர்; compound sentence.

     [கூட்டு+தொடரியம்]

கூட்டுத்தட்டு

 கூட்டுத்தட்டுāṭṭuttaṭṭu, பெ.(n.)

   கறிக்குரிய குழம்புப் பொடிகள் வைக்கும் பல அறை களையுடைய தட்டு (வின்.);; tray with a set of compartments for holding curry powders.

     [கூட்டு + தட்டு.]

கூட்டுநீர்

 கூட்டுநீர்āṭṭunīr, பெ.(n.)

   மருந்து கலந்த நீர்; lotion (சா.அக.);.

     [கூட்டு + நீர்.]

கூட்டுப்பங்கு

 கூட்டுப்பங்குāṭṭuppaṅgu, பெ.(n.)

   வாணிகத்தில் சேர்ந்துகொள்ளும் பங்கு (இ.வ.);; share in a partnership concern.

     [கூட்டு + பங்கு.]

கூட்டுப்படகு

கூட்டுப்படகுāḍḍuppaḍagu, பெ.(n.)

   16, பயணிகள்வரை செல்லுதற்கோ, மூன்று முதல் 7 கல்லெடை (டன்); பொருள்களை யேற்றுவதற்கோ பயன்படுவதும், மேற்கூடுள்ளதுமான தோணிவகை (M.M.915);, boats provided with movable tops, to carry about 16 passengers or cargo varying from 3 to 7 tons.

{கூட்டு + படகு.]

கூட்டுப்படை

கூட்டுப்படைāḍḍuppaḍai, பெ.(n.)

   துணைப்படை (ஈடு. 10:3.5);; auxiliary force.

     [கூட்டு + படை.]

கூட்டுப்பண்ணை

 கூட்டுப்பண்ணைāṭṭuppaṇṇai, பெ.(n.)

பலர் ஒன்று சேர்ந்து கூட்டுறவு முறையில் ஆளுவ (நிர்வாக);ம் செய்து மிகு ஊதிய (லாப);த்தைத் தக்கவாறு பிரித்துக் கொள்ள அமைத்த வேளாண்பண்ணை,

 co-operative farm.

நம் நாட்டிற்குத் தேவை கூட்டு. பண்ணை வேளாண்மை.

     [கூட்டு+பண்ணை.]

கூட்டுப்பயிர்

 கூட்டுப்பயிர்āṭṭuppayir, பெ.(n.)

   பிறருடன் சேர்ந்து செய்யும் வேளாண்தொழில் (இ.வ.);; joint cultivation.

     [கூட்டு + பயிர்.]

கூட்டுப்பல்லக்கு

 கூட்டுப்பல்லக்குāṭṭuppallakku, பெ.(n.)

   செருகு கதவுள்ள பல்லக்கு; palan quin with sliding doors.

     [கூட்டு + பல்லக்கு.]

கூட்டுப்புழு

 கூட்டுப்புழுāṭṭuppuḻu, பெ.(n.)

   முத்தோன்றிப் புழு (திரியவதாரப் புழு);. இது கூட்டைப் பின்னிக் கொண்டு அதனுள் அசையாமற் சிலநாள் வரை இரைகொள்ளாமல் இருந்து பூச்சியாக மாறும்; an insect or moth which assumes the state of metamorphosis before changing from the larva, to the winged state (சா.அக.);.

     [கூட்டு + புழு.]

கூட்டுப்பெருங்காயம்

 கூட்டுப்பெருங்காயம்āṭṭupperuṅkāyam, பெ. (n.)

   பிற பொருள்களைக் கலந்து செய்த பெருங்காயம் ; compound asafetida manufactured for cooking purpose.

     [கூட்டு+பெருங்காயம்]

கூட்டுமரம்

 கூட்டுமரம்āṭṭumaram, பெ.(n.)

   பாய்மரத்தைச் சார்ந்த மரம் (Pond.);; mast.

     [கூட்டு + மரம்.]

கூட்டுமருந்து

 கூட்டுமருந்துāṭṭumarundu, பெ.(n.)

   கலவை மருந்து; a compound of different ingredients blended together (சா.அக.);

     [கூட்டு + மருந்து.]

கூட்டுமா

 கூட்டுமாāṭṭumā, பெ.(n.)

   கறியிற் சேர்க்கும் மா (இ.வ.);; flour used in curry.

     [கூட்டு + மா.]

கூட்டுமார்பு

 கூட்டுமார்புāṭṭumārpu, பெ.(n.)

   மேல் எழும்பிய மார்பு; a prominent medium ridge in the brest bone known as pigeon or chicken breast;keeled-breast – Pectus carinatum (சா.அக.);.

     [கூட்டு+மார்பு – கூட்டுமார்பு -கூடுபோல் அமைந்த மார்பு]

கூட்டுமாறு

 கூட்டுமாறுāṭṭumāṟu, பெ.(n.)

   விளக்குமாறு (இ.வ.);; broom.

     [கூட்டு + மாறு.]

கூட்டுமூட்டு

கூட்டுமூட்டுāṭṭumūṭṭu, பெ.(n.)

   1. ஒரு செயலைச் செய்வதற்குப் பலருங் கூடுகை (வின்.);; combination and co-operation of persons for effecting an object.

   2. சூழ்ச்சி செய்யுமுன் கூடும் ஆய்வுக்கூட்டம்; league, confederacy, conspiraey.

   3. பழிப்புரை; slander, aspersion calumny.

     [கூட்டு + மூட்டு.]

கூட்டுமெழுகு

 கூட்டுமெழுகுāṭṭumeḻuku, பெ.(n.)

   பிசுபிசுப்பான பல பொருட்களைக் கூட்டிச் செய்த மெழுகு; a wax prepared by mix| ing several sticky, tenacious or resinous substances (சா.அக.);.

     [கூட்டு+மெழுகு.]

கூட்டுறவாக்கல்

 கூட்டுறவாக்கல்āṭṭuṟavākkal, பெ.(n.)

   மருந்துகள் ஒன்றோடொன்று கலக்கும்படி வேதியியற் கூட்டாகச் செய்தல்; causing medicines to combine chemically (சா.அக.);.

     [கூட்டு + உறவாக்கல்.]

கூட்டுறவினியக்கம்

 கூட்டுறவினியக்கம்āṭṭuṟaviṉiyakkam, பெ.(n.)

   கூட்டுறவுத் தொடர்பால் ஒன்றுக்கேற்படும் இயக்கத்தினால் மற்றவை தானாகவே இயங்கு நிலைமை; the coincident movement voluntarily taking place in others, when the primary one is affected (சா.அக.);.

     [கூட்டுறவின் + இயக்கம்.]

கூட்டுறவு

கூட்டுறவுāṭṭuṟavu, பெ.(n.)

   1. நெருங்கிய உறவு; intimate connection.

     “கொள்ளை வினைக் கூட்டுறவால்” (அருட்பா,VI, அருள்விள.84);.

   2. நட்பு; friendship, alliance.

     [கூட்டு + உறவு.]

 கூட்டுறவு2āṭṭuṟavu, பெ.(n.)

   ஒற்றுமையாய் வேலைசெய்கை (Mod.);; co-operation.

     [கூட்டு + உறவு).]

     [P]

கூட்டுறவு

கூட்டுறவு முறைமை

 கூட்டுறவு முறைமைāṭṭuṟavumuṟaimai, பெ.(n.)

   இயற்பியல் அல்லது வேதியியல் முறைப்படி மாற்றம் அடையும் முறைமை; the system of chemical or alchemical combination (சா.அக.);.

     [கூட்டுறவு + முறைமை.]

கூட்டுறவுக்கழகம்

 கூட்டுறவுக்கழகம்āṭṭuṟavukkaḻkam, பெ.(n.)

   பலர் இணைந்து செயற்படும் கூட்டமைப்பு (mod.);; co-operative society.

     [கூட்டுறவு + கழகம்.]

கூட்டுறவுச்சங்கம்

 கூட்டுறவுச்சங்கம்āṭṭuṟavuccaṅkam, பெ.(n.)

   பலர் ஒன்றிணைந்து உருவாக்கிய குழும்ம்; co-operative society (செ.அக.);.

     [கூட்டுறவு+ Skt. சங்கம்]

கூட்டுவட்டி

 கூட்டுவட்டிāṭṭuvaṭṭi, பெ.(n.)

   கடாவு வட்டி (இ.வ.);; compound interest.

     [கூட்டு + வட்டி.]

கூட்டுவணிகம்

 கூட்டுவணிகம்āṭṭuvaṇikam, பெ.(n.)

   பலர் கூடிச் செய்யும் வணிகம்; joint concern partnership in trade.

     [கூட்டு+வணிகம்]

கூட்டுவண்டி

 கூட்டுவண்டிāṭṭuvaṇṭi, பெ.(n.)

   மேற்கூடுள்ள வண்டி (இ.வ.);; cart with hood or curved top, opp. to {motta-Vand.}

     [கூண்டு → கூட்டு + வண்டி.]

     [P]

கூட்டுவண்டி

கூட்டுவருக்கம்

 கூட்டுவருக்கம்āṭṭuvarukkam, பெ.(n.)

   நறுமண மருந்து எண்ணெயின் கலவை; a mixture of several odoriferous ointments (சா.அக.);.

     [கூட்டு + வருக்கம்.]

கூட்டுவர்த்தகம்

 கூட்டுவர்த்தகம்āṭṭuvarttakam, பெ.(n.)

கூட்டுவியாபாரம் பார்க்க;see Kittuviyäbáram (செ.அக.);.

     [கூட்டு+ Skt. வர்த்தகம்]

கூட்டுவாணிகம்

 கூட்டுவாணிகம்āṭṭuvāṇikam, பெ.(n.)

கூட்டுவணிகம் பார்க்க;see Kittu. vanigam.

     [கூட்டு+வாணிகம்]

 கூட்டுவாணிகம்āṭṭuvāṇigam, பெ.(n.)

   பலர் கூடிச் செய்யும் வணிகம்; joint concern, partnership in trade.

     [கூட்டு + வாணிகம்.]

கூட்டுவான்

கூட்டுவான்āṭṭuvāṉ, பெ.(n.)

   1. கறியிற் கூட்டப்படும் கறியமுது வகைகள் (இ.வ.);; condiments.

   2. கறி; curry.

   ம. கூட்டான், கூட்டுவான்;க. கூடு.

     [கூட்டு → கூட்டுவான்.]

கூட்டுவாய்

 கூட்டுவாய்āṭṭuvāy, பெ.(n.)

   செம்பு, ஏனம் முதலியவற்றின் பொருத்து(இ.வ.);; dove-tail joint in a metal vessel, etc.

     [கூட்டு + வாய்.]

கூட்டுவியாபாரம்

 கூட்டுவியாபாரம்āṭṭuviyāpāram, பெ.(n.)

கூட்டுவணிகம் பார்க்க;see kittu- vanigam.

     [கூட்டு + Skt. வியாபாரம்]

கூட்டுவிரல்

 கூட்டுவிரல்āṭṭuviral, பெ.(n.)

   ஒன்றுசேர்ந்த விரல்கள்; toes or fingers united by a membrane (சா.அக.);.

     [கூட்டு + விரல்.]

கூட்டெழுத்து

கூட்டெழுத்துāṭṭeḻuttu, பெ.(n.)

   1. விரைவாகக் கூட்டியெழுதும் எழுத்து; cursive writing, running hand.

   2. எழுத்துகளைச் சேர்த்தெழுதும் எழுத்து; two or more letters written conjointly.

   3. இரண்டு முதலாகிய மெய்கள் இணைந்த வடவெழுத்து (நன். 146, மயிலை.);; conjunct consonants as க்ஷ் (ks);.

     [கூட்டு + எழுத்து.]

கூட்டை

 கூட்டைāṭṭai, பெ.(n.)

   கூத்துவகையுளொன்று (அக.நி.);; a kind of dance.

     [கூடு + கூட்டை.]

கூட்டோடு

கூட்டோடுāṭṭōṭu, வி.எ. (adv.)

   அடியோடு; completely, root and branch.

     “கொன்றான்காண் புறமூன்றுங் கூட்டோடே சாழலோ” (திருவாச. 12:16);.

     [கூடு → கூட்டு + (ஒடு); ஒடு.]

கூட்டோடு கைலாசம்

 கூட்டோடு கைலாசம்āṭṭōṭugailācam, பெ.(n.)

   உயிரோடு உடல் மறைதல்; disappearig or vanishing of the body with the soul (சா.அக.);

     [கூட்டோடு + கைலாசம்.]

கூட்டோடுகளை-தல்

கூட்டோடுகளை-தல்āṭṭōṭugaḷaidal,    2 செ.குன்றாவி. (v.trans) வேரற அல்லது அடியோடு நீக்கல்; uprooting or curing radically as diseases in the system (சா.அக.).

     [கூட்டோடு + களைதல்.]

கூட்டோடுபோ-தல்

கூட்டோடுபோ-தல்āṭṭōṭupōtal,    8 செ.கு.வி. (v.i.)

   உயிரோடு உடல் மறைதல்; disappearance or vanising of the body with the soul (சா.அக.);.

     [கூட்டோடு + போதல்.]

கூட்டோடுவிழு-தல்

கூட்டோடுவிழு-தல்āṭṭōṭuviḻudal,    2 செ.கு.வி. (v.i.)

   மயிர் திரட்சியாய் உதிரல்; falling of the hair in patches (சா.அக5.);.

     [கூட்டோடு + விழல்.]

கூணன்முதுகு

 கூணன்முதுகுāṇaṉmudugu, பெ.(n.)

கூன்முதுகு பார்க்க;See. {k mudugu}.

     [கூனல் + முதுகு.]

கூண்டடுப்பு

கூண்டடுப்புāṇḍaḍuppu, பெ.(n.)

அனலடுப்பு (இந்துபாக.67);:

 analaguppu covered brick over.

     [கூண்டு + அடுப்பு]

கூண்டா-தல்

கூண்டா-தல்āṇṭātal,    8 செ.கு.வி.(v.i.)

   மயிர் சிக்குப்படுதல்; to get matted or interlocked, as the hair.

     [கூண்டு + ஆ(கு);]

கூண்டில் ஏற்று-தல்

 கூண்டில் ஏற்று-தல்āṇṭilēṟṟutal, செ.கு.வி.(v.i.)

   உசாவ (விசாரணைக்காக முறைமன்றத்தில் நிறுத்துதல்; putsomeone in the dock; bring one to the witness box for trial.

ஒழுங்காக வாடகைப் பாக்கியைத் தராவிட்டால் கூண்டில் ஏற்றிவிடுவேன்.

     [கூண்டில்+ஏற்று-தல்.]

கூண்டு

 கூண்டுāṇṭu, பெ.(n.)

   கூடு; nest.

     [குள் → குண்டு → கூண்டு → கூடு]

கூண்டு-தல்

கூண்டு-தல்āṇṭudal,    5 செ.கு.வி.(v.i.)

   1. கூடுதல்; to accrue, to be added,

     “வண்ட வெட்டாதான்”

   2. குழுமுதல் (இ.வ.);; to assemble.

     [குள் → குண்டு → கூண்டு]

கூண்டுப்புழு

 கூண்டுப்புழுāṇṭuppuḻu, பெ.(n.)

   புழுவகை; chrysalis.

     [கூண்டு + புழு]

கூண்டெலும்பு

கூண்டெலும்புāṇṭelumbu, பெ.(n.)

 rib bone.

   2. உடம்பின் கோவை எலும்பு; skeleton (சா.அக.);.

     [கூண்டு + எலும்பு.]

கூண்டோடு

 கூண்டோடுāṇṭōṭu, வி.அ. (adv.)

   இனம் உறவு அனைத்தோடும்; பூண்டோடு; in entirety; root and branch,

இனச் சண்டையில் கூண்டோடு அழிந்த குடும்பங்கள் உண்டு.

     [கூண்டு+ஒடு]

கூதனம்

 கூதனம்ātaṉam, பெ.(n.)

   இடக்கர்ச் சொல் (திவா.);; indecent, obscene, terms (செ.அக.);.

 கூதனம்ātaṉam, பெ.(n.)

   இடக்கர்ச் சொல் (திவா.);; indecent, obscene tems.

த.வ.இடக்கர்.

கூதறை

கூதறைātaṟai, பெ.(n.)

   1. இழிந்தது (இ.வ.);; that which is mean, base, vulgar.

   2. இழிந்த குணமுடையவன்-ள்; base, vulgar, disreputable.

     “மாண்ட மனமுடைய ராகாத கூதறைகள்” (பழ.106);.

   3. கிழியல் (சங். அக.);; mutilation.

     [குள் → குது → கூது→ கூதறை.]

கூதற்காய்-தல்

கூதற்காய்-தல்ātaṟkāytal,    2 செ.கு.வி.(v.i.)

   குளிர்காய்தல் (இ.வ.);; to warm oneself.

     [கூதள் + காய்]

கூதற்காற்று

 கூதற்காற்றுātaṟkāṟṟu, பெ.(n.)

   சில்லென்று அடிக்குங் குளிர்காற்று ; chill breeze in cold weather (சா.அக.);

     [கூதல் + காற்று.]

கூதல்

கூதல்ātal, பெ.(n.)

   1. குளிர்; sensation of cold, chillness.

     “கூர்மழை போற் பனிக்கூதல்” (திவ். பெருமாள். 6:1.);.

   2. காய்ச்சற் குறிர் (வின்.);; chils before intermittent fever.

     [குது → குதல்→ கூதல்.]

கூதல்விறை-த்தல்

கூதல்விறை-த்தல்ātalviṟaittal,    4 செ.கு.வி.(v.i.)

   குளிரினால் விறைத்தல்; being stiffened with cold. (சா.அக.);.

     [கூதல் + விறை-.]

கூதளச்சான்

 கூதளச்சான்ātaḷaccāṉ, பெ.(n.)

   பெருங்கோரை; a kind of {köraygrass} (சா.அக.);.

     [குதள் → கூதள் + அச்சன்.]

கூதளம்

கூதளம்ātaḷam, பெ.(n.)

   1. தூதுவளை (மலை.);; three-lobed night shade.

   2. கூதாளி பார்க்க;See. {kadai.}

     “கூதளங் கவினிய குளவிமுன்றி” (புறநூ. 168,12);.

   3. வெள்ளரி; mottled melon.

     [கூதள் → கூதளம்.]

கூதாரி

 கூதாரிātāri, பெ.(n.)

   வெள்ளரி (மலை.);; mottled melon.

     [கூதல் → கூதாரி.]

கூதாளம்

 கூதாளம்ātāḷam, பெ.(n.)

கூதாளி(திவா.); பார்க்க;See. {küdâsı}

     [கூதளம் → கூதாளம்.]

கூதாளி

கூதாளிātāḷi, பெ.(n.)

   1. செடிவகை (திவா.);; convolvulus.

   2. தூதுவளை (வின்.);; three lobed night shade.

     [கூதளம் → கூதாளி.]

கூதி

 கூதிāti, பெ.(n.)

   பெண்குறி; pudendum muliebre.

மறுவ. துள், பூக்கு, புண்டை.

ம.,து. கூதி

     [குள் (துளை); → குத்து → கூதி.]

கூதிர்

கூதிர்ātir, பெ.(n.)

   1. பனிக்காற்று (பிங்.);; chil wind.

   2. காற்று (பிங்.);; wind.

   3. சாரற் காலமெனப்படும் துலை (ஐப்பசி); நளி (கார்த்திகை); மாதங்கள் (தொல். பொருள். 6);; autumn, the months of {Aippaši and Kārttiga,} one of six seasons.

   4. குளிர் (வின்.);; sensation of cold.

     [கூதல் → கூதிர்.]

கூதிர்ப்பாசறை

கூதிர்ப்பாசறைātirppācaṟai, பெ.(n.)

   போர்மேற் சென்ற அரசன் கூதிர்காலத்தில் தங்கும் படைவீடு (தொல். பொருள்.76);; winter encampment of a king waging war.

     [கூதல் → கூதிர் + பாசறை.]

கூதேகம்

 கூதேகம்ātēkam, பெ.(n.)

வேர்ப்பலா

 trunk jack fruit – Atrocarpus integrifolia (சா.அக.);.

கூதை

 கூதைātai, பெ.(n.)

   காற்று (திவா.);; wind.

     [ஊதை → கூதை]

கூதைசெய்தல்

கூதைசெய்தல்ātaiseytal,    1 செ.குன்றாவி. (v.t.)

   காதை மூளியாக்குதல்; to mutilate the ear.

     “காது செய்வான் கூதை செய்து” (திவ். திருவாய் 9:19);.

     [கூதை + செய்.]

கூத்தக்காணி

கூத்தக்காணிāttakkāṇi, பெ.(n.)

   கோயில் திருவிழாநாளில் கூத்தாடும் குழுவினர்க்கு அளிக்கப்பெறும் இறையிலி நிலம்; land gifted to those who stage dramas in temple festivals.

திருநாளுக்குக் கூத்தாடுகைக்குக் காணியாக அளிக்கப்பெறும் நிலம் (புதுக்.கல். 139);. (கல்.க.சொ.அ.மு.);.

     [கூத்தன் + காணி.]

கூத்தச்சாக்கையன்

கூத்தச்சாக்கையன்āttaccākkaiyaṉ, பெ.(n.)

   கூத்து நிகழ்த்தும் சாக்கையர் குலத்தான்; a person of {cakkaya} caste whose profession is dancing and acting.

     “கொட்டிச்சேதம்…. ….பறையூர்க் கூத்தச் சாக்கைய னாடலின்” (சிலப். 28:77);.

     [கூத்தன் + சாக்கையன்]

கூத்தடி-த்தல்

கூத்தடி-த்தல்āttaṭittal,    4 செ.கு.வி.(v.i.)

   விரும்பத்தகாத முறையில் ஆர்ப்பாட்டமாக நடந்து கொள்ளுதல்; create a noisy scene; behave in an unruly way,

குடித்துவிட்டு வந்து கூத்தடிக்கிறான். [கூத்து+அடி-த்தல்.]

கூத்தட்டு

கூத்தட்டுāttaṭṭu, பெ.(n.)

   நடிப்பு; dancing, acting on the stage.

     “கூத்தாட் டவைக்குழாத் தற்றே” (குறள். 332);.

     [கூத்து + ஆட்டு.]

கூத்தநூல்

கூத்தநூல்āttanūl, பெ.(n.)

   ஆடற்கலை முத்திரை பற்றிய நூல் (சீவக. 124, உரை.);; treatise on gesticulation in dancing.

     [கூத்து + நூல் – கூத்துநூல் → கூத்தநூல். ‘அ’ ஈறு ஆறன் உருபு. ஒ.நோ. (ஆறன் உருபு ‘அது’ என்பதன் ஈற்றுக்குறை.]

கூத்தனம்

 கூத்தனம்āttaṉam, பெ.(n.)

   தில்லை மரம்; tiger’s milk tree (சா.அ க.);.

     [கூத்து → கூத்தனம்.]

கூத்தனூரப்பன்

 கூத்தனூரப்பன்āttaṉūrappaṉ, பெ.(n.)

   கிருட்டிணதேவராயர் காலத்து இருந்த தமிழ்க்கவி; the poet who belonged to the kiruttina-têvarayå period (அபி.சிந்.);.

     [கூத்தனூர்+அப்பன்.]

கூத்தன்

கூத்தன்āttaṉ, பெ.(n.)

   1.நாட்டியக்காரன்; dancer, actor குழியும்ப ரேத்துமெங் கூத்தன்” (திருக்கோ. 135);.

   2. ஆதன் (ஆன்ம); வாழ்வாகிய பெருநாடகத்தை நடத்துவிப்பவன்; lit, the stage manager who enacts the great drama of life, soul, spirit.

     “கூத்தன் புறப்பட்டக்கால்” (நாலடி. 26);.

   3. சிவன், {siva,}

     “சிற்றம்பலத்து மாணிக்கக் கூத்தன்” (திருக்கோ. 23);.

   4. ஒட்டக்கூத்தர்;{ottak-küttar,} the famous poet.

     “கூத்தன் கவிச்சக்கரவர்த்தி வாழியே” (தக்கயாகப்பரணி, முடிவு);.

   5. துரிசு (சங்.அக.);; suplhate of copper.

     [கூத்து → கூத்தன்.]

கூத்தன் குதம்பை

 கூத்தன் குதம்பைāddaṉkudambai, பெ.(n.)

   மூக்கொற்றி; pointed-leaved hogweed.

     [கூத்தன் + குதம்பை.]

கூத்தன்குதம்பை

கூத்தன்குதம்பைāttaṉkutampai, பெ (n.)

   1.காட்டுச் செவ்வந்தி; Indian wild chamomile -Pyrethrumindicum.

   2. தேராத் தாழை:

 akind ofscrew-pine,

   3. மூக்குத்திக் கொடி:

 pointed or blunt leaved hogweed – Boerhaavia rependa alias B. Verticillata (சா.அக.);.

     [கூத்தன்+குதம்பை]

கூத்தன்செம்பு

 கூத்தன்செம்புāttaṉcembu, பெ.(n.)

   துரிசுச் செம்பு; copper extracted from blue vitriol (சா.அக.);.

     [கூத்தன் + செம்பு.]

கூத்தப்பள்ளி

கூத்தப்பள்ளிāttappaḷḷi, பெ.(n.)

அரண்

   மனையைச் சார்ந்த நாடகவரங்கு (இறை:21, ப.112.);; theatre hall attached to a palace.

     [கூத்து + பள்ளி.]

கூத்தம்பலம்

கூத்தம்பலம்āttambalam, பெ.(n.)

   வளைக்கை பிடித்தாடுதற்குரிய கோயிலரங்கு (TA. S.II.143);; theatre hall in temple.

     [கூத்து + அம்பலம்.]

கூத்தராற்றுப்படை

கூத்தராற்றுப்படைāttarāṟṟuppaḍai, பெ.(n.)

   பரிசில் பெறச் செல்லும் கூத்தனைப் பரிசில் பெற்றவன், ஒரு தலைவனிடம் ஆற்றுப்படுத்தும் புறத்துறை (பு.வெ.9: 29);; theme of a dancer, himself a recipient of unstinted favours at the hands of a king or chieftain, directing and exhorting his brother in the profession to avail himself of the royal bounty.

   2. பத்துப்பாட்டினுள் பத்தாவதாகிய மலைபடுகடாம் (தொலை. சொல். 462, சேனா.);; the tenth poem of the {Pattu-p-pâttu.}

     [கூத்தர் + ஆற்று + படை.]

கூத்தரிசி

 கூத்தரிசிāttarisi, பெ.(n.)

   கைக்குத்தலரிசி; hand pounded rice as distinguished from milled rice. It is a corrupt form for {kuttalariš} (சா.அக.);.

     [குற்று + அரிசி – குற்றரிசி → கூத்தரிஇ (கொ.வ.);.]

கூத்தர்

கூத்தர்āttar, பெ.(n.)

   கூத்து நடிப்போர்; actors, dancers.

     “கூத்தரும் பாணரும்” (தொல். பொருள்.91);.

     [கூத்து + அர்.]

கூத்தறுப்பு

 கூத்தறுப்புāttaṟuppu, பெ.(n.)

பிறர் பயிரைத்

   திருட்டுத்தனமாக அறுத்துக்கொண்டு போகை (இ.வ.);; clandestine removal of crops.

     [கூத்து (விளையாட்டு); + அறுப்பு.]

கூத்தவாதி

 கூத்தவாதிāttavāti, பெ.(n.)

   சிவனார் வேம்பு; Shiva’s neem (சா. அக.);.

     [கூத்த(ன்); + ஆதி.]

கூத்தாடி

கூத்தாடிāttāṭi, பெ.(n.)

   1. நாட்டியக்காரன்; dancer, player, actor

     “கூத்தாடிப் பையலுக்கோ” (தனிப்பா. II.7.14);.

   2. கழைக்கூத்தன்; pole dancer, acrobat.

   3. மனம்போனபடி நடப்பவன்; reckless, self willed, unprincipled person.

     [கூத்து + ஆடி.]

கூத்தாடிச்சி

கூத்தாடிச்சிāttāṭicci, பெ.(n.)

   1.கூத்து நடிப்பவள்; dancing-girl.

   2. அடங்காது ஓலமிட்டுத் திரிபவள் (இ.வ.);; boisterous, unruly woman.

     [கூத்து + ஆடிச்சி.]

கூத்தாடு-தல்

கூத்தாடு-தல்āddāṭudal,    5 செ.கு.வி.(v.i.)

   1. நடித்தல் (சிலப். 12, ப.319);; to dance, act on the stage.

   2. மகிழ்ச்சி (வின்.);; to be elacted with success, etc.

   3. செழித்திருத்தல்; to prosper, thrive.

அவ்வீட்டில் செல்வம் கூத்தாடுகிறது.

   4. வலிந்து வேண்டுதல்; to importune, persistently request.

தனக்கு அது வேண்டுமென்று கூத்தாடுகிறான் (உ.வ.);.

   ம. கூத்தாடுக;க., து. கூதாடு.

     [கூத்து + ஆடு.]

கூத்தாடுசன்னி

கூத்தாடுசன்னிāttāṭusaṉṉi, பெ.(n.)

   1. கூத்தாடச் செய்யும் வலிப்பு நோய் (சன்னி);; dancing mania.

   2. பருவப் பெண்களுக்கு காணும் ஒருவகை சூலக வலிப்பு; dancing chorea (சா.அக.);.

     [கூத்தாடு + சன்னி.]

கூத்தாண்டவர்

 கூத்தாண்டவர்āttāṇṭavar, பெ.(n.)

   சிற்றூர்ச் சிறுதெய்வம் (இ.வ.);; a village deity.

     [கூத்து + ஆண்டவர்.]

குறிப்பாகப்பேடுகளும் அலிகளும் வழிபடும் சிற்றுார்த் தெய்வமாகக் கருதப்படுகிறது.

கூத்தி

கூத்திātti, பெ.(n.)

   1. நாடகக்கணிகை (திவா.);; female actor, dancer, dancing.

   2. விலைமகள் (கொ.வ.);; courtesan, prostitute.

   3. வைப்பாட்டி; concubine, kept mistress.

     “நட்டணைசேர் கூத்திமா ரோடு” (பணவிடு.225);.

     [கூத்து → கூத்தி.]

கூத்திக்கள்ளன்

 கூத்திக்கள்ளன்āttikkaḷḷaṉ, பெ.(n.)

   கூத்திகளோடு மிகவும் உறவாடுபவன் (இ.வ.);; whoremonger.

     [கூத்தி + கள்ளன்.]

கூத்தியார்

 கூத்தியார்āttiyār, பெ.(n.)

   வைப்பாட்டி (கொ.வ.);; concubine, kept mistress.

     [கூத்து→கூத்தி + ஆர்.]

கூத்தியாள்

 கூத்தியாள்āttiyāḷ, பெ.(n.)

வைப்பாட்டி:

 derogatorily mistress; concubine.

காலம் முழுவதும் கூத்தியாள் வைத்திருந்தார்.

     [கூத்து + ஆள்.]

கூத்து

கூத்துāttu, பெ.(n.)

   1. நளிநயம், நடனம்; dance, dancing.

     “ஆடுதுங் கூத்தே” (திவ். திருவாய், 1:5);. அல்லியம், கொட்டி, குடை, குடம், பாண்டரங்கம், மல், துடி, கடையம், பேடு, மரக்கால், பாவை என்னும் பதினொருவகைக் கூத்து;

 divine dances, eleven in number, viz alliyam, {kotti kūdai kudam, pandarargam, ma/ tugi kagayam, pēgu, marakkalpavai}

     “கொட்டியிவை காண் பதினோர் கூத்து” (சிலப். 3:14, உரை);.

   3. நாடகம்; dramatic performance, action.

     “பிறவி மாமாயக் கூத்தினையே” (திவ். திருவாய் 8:4,11);.

   4.விந்தைச் செயல்; strange event or incident.

அங்கே ஏதாவது கூத்து நடக்கும் (உ.வ.);.

   5. கேலிக்கூத்து; roll or ludicrous action, as a pantomime.

   6. குழப்பம்; confusion.

   7. நாடகம் பற்றியமைந்த ஒரு கடைக்கழக நூல் (இறை.1 ப.5);; a treatise of the last Sangam, on the art of dancing.

   ம., க. கூத்து;துட. கூத்.

{skt. kUrdda}

     [குல் → குத்து → கூத்து (பலவகைகளில் கால் குத்திட்டு ஆடுவது);.]

கூத்துக்களரி

 கூத்துக்களரிāttukkaḷari, பெ.(n.)

   நாடகச்சாலை; play-house, theatre.

     [கூத்து + களரி.]

கூத்துக்காரன்

கூத்துக்காரன்āttukkāraṉ, பெ.(n.)

   1. கூத்தாடு வோன்; actor dancer.

   2. கூத்தாட்டுவோன் (வின்.);; dancing-master.

   3. நகையாடி (வின்.);; buffoon, mimic, comical person.

ம. கூத்துகாரன்

     [கூத்து + காரன்]

கூத்துப்பண்ணு-தல்

கூத்துப்பண்ணு-தல்ādduppaṇṇudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. வேடிக்கைபண்ணுதல்; to make fun, to do a droll or funny action.

   2. குழப்பஞ்செய்தல் (வின்.);; to confound, derange.

     [கூத்து + பண்ணு.]

கூத்துப்பாட்டு

 கூத்துப்பாட்டுāttuppāṭṭu, பெ.(n.)

   நாடகப்பாடல் (வின்.);; songs sung in dancing and dramatic performances.

     [கூத்து + பாட்டு]

கூத்துப்பொட்டல்

 கூத்துப்பொட்டல்āttuppoṭṭal, பெ.(n.)

   நாடகவெளி; maiden or the open space for dramatic performances.

     [கூத்து + பொட்டல்]

கூத்துள் படுவோன்

கூத்துள் படுவோன்āttuḷpaḍuvōṉ, பெ.(n.)

   ஆடலாசிரியன்; one who teaches dancing.

     “கூத்தள் படுவோன் காட்டிய முறைமையின்… இருங்கல நல்கி” (சிலப். 26:125);.

     [கூத்து + உள்படு + (ஆன்); ஒன்.]

கூத்துவிடு-தல்

கூத்துவிடு-தல்ādduviḍudal,    20 செ.கு.வி.(v.i.)

   1. நாடகக் கதை மாந்தரை அவைக்கு அறிவித்தல்

 to introduce the actors in a play.

   2. வேடிக்கை செய்தல் (யாழ்ப்);; to say something odd or droll, to do a funny or humorous thing to amuse an audience.

   3. தெருக்கூத்து நடத்துதல்; to arrange for a street play.

     [கூத்து + விடு.]

கூத்ம்

கூத்ம்ātm, பெ.(n.)

   1. குதம்; anus.

   2. தூதுளை; three lobed night shade.

   3. வெள்ளரிக்காய்; cucumber.

     [குள் → குது → குதம்.]

கூந்தன்மா

கூந்தன்மாāndaṉmā, பெ.(n.)

   குதிரை; horse.

     “கூந்தன்மாவென்று கண்டார் சொல்லும்படி” (பரிபா. 31, உரை.);.

     [கூந்தல் = பிடரி மயிர். கூந்தல் + மா.]

கூந்தற்கணவாய்

 கூந்தற்கணவாய்āndaṟkaṇavāy, பெ.(n.)

   மீன்வகை (வின்.);; a species of cuttlefish.

     [கூந்தல் + கணவாய்]

கூந்தற்கமுகு

கூந்தற்கமுகுāndaṟgamugu, பெ.(n.)

   1. கமுகு

   வகை(பிங்.);; Areca palm.

   2. தாளிப்பனை (இராட்.);; talipot palm.

     [கூந்தல் + கமுகு.]

கூந்தற்தைலம்

 கூந்தற்தைலம்āntaṟtailam, பெ.(n.)

தலை மயிரை வளர்க்கும் எண்ணெய்,

 hair oil – Pomatum (சா.அக.);.

     [கூந்தல்+Skt. தைலம்.]

கூந்தற்பனை

கூந்தற்பனைāndaṟpaṉai, பெ.(n.)

   1.தாளிப்பனை (பிங்.);; talipot palm.

   2. திப்பிலிப்பனை; jaggery palm.

     [கூந்தல் + பனை.]

கூந்தற்பனைக்கள்

 கூந்தற்பனைக்கள்āndaṟpaṉaikkaḷ, பெ.(n.)

   கூந்தற்பனையின் பாளையினின்று எடுக்கும் கள்; toddy extracted from the spathe of the blastered sagtree (சா. அக.);.

     [கூந்தல் + பனை + கள்.]

இதனைப் புளிக்க வைத்து வாலையிலிட்டுக் காய்ச்சி ஒரு வித வெறிநீர் இறக்கலாம். இதை மருந்தில் பயன்படுத்துவர். இது மலச்சிக்கலைப் போக்கும்.

இக்கள்ளைக்காய்ச்சி எடுக்கும்வெல்லம் கூந்தல் வெல்லம்.

கூந்தற்பனைச்சாராயம்

 கூந்தற்பனைச்சாராயம்āndaṟpaṉaiccārāyam, பெ.(n.)

கூந்தற்பனைக்கள் பார்க்க;See. {kündar-pana-k-ka/}

     [கூந்தற்பனை + சாராயம்.]

கூந்தற்பனைவெல்லம்

 கூந்தற்பனைவெல்லம்āndaṟpaṉaivellam, பெ.(n.)

   கூந்தற்பனையின் சாற்றினின்று எடுக்கும் வெல்லம்; jaggery obtained from the sap of bastard sags tree (சா.அக.);.

     [கூந்தற்பனை + வெல்லம்.]

கூந்தற்பாசி

 கூந்தற்பாசிāndaṟpāci, பொ.(n.)

   நீர்ப்பூடுவகை (யாழ்.அக.);; trailing moss.

     [கூந்தல் + பாசி.]

கூந்தற்பூகம்

கூந்தற்பூகம்āndaṟpūkam, பெ.(n.)

கூந்தற் கழுகு1 பார்க்க;See. {kündar-kamugu.}

     [கூந்தல் + பூகம்.]

கூந்தலறுகு

 கூந்தலறுகுāndalaṟugu, பெ.(n.)

   அறுகம் புல்வகை (வின்.);; hairy-grass.

     [கூந்தல் + அறுகு.]

கூந்தலழகி

 கூந்தலழகிāndalaḻki, பெ.(n.)

   ஒரு மரம்(சா.அக.);; a tree.

     [கூந்தல் + அழகி.]

கூந்தலாற்று-தல்

கூந்தலாற்று-தல்āndalāṟṟudal,    5 செ.கு.வி.(v.i.)

   ஈரமயிரைக் கோதி உலர்த்துதல்; to loosen and dry one’s hair after bathing.

     [கூந்தல் + ஆற்று.]

கூந்தலெழில் மாணிக்கம்

 கூந்தலெழில் மாணிக்கம்āndaleḻilmāṇikkam, பெ.(n.)

   மயிர்மாணிக்கம்; morning mallow (சா.அக.);.

     [கூந்தல் + எழில் + மாணிக்கம்.]

கூந்தல்

கூந்தல்1āndal, பெ.(n.)

   1. பெண்டிர் தலைமயிர் (பிங்.);; long flowing tresses of a woman.

   2. மயிற்றோகை; peacock’s tail.

     “கூந்தன் மென்மயில்” (கம்பரா.சித்திரகூட.31);.

   3. குதிரைப் பிடரிமயிர்; horses mane.

     “கூந்தற் குதிரை” (கலித். 163: 53);.

   4. யானைக் கழுத்து மயிர்; hair of an elephant’s neck.

     “கூந்தலம் பிடியின்” (நைடத. அன்.தூது.23);.

   5. குதிரை; horse.

     “கூந்த லென்னும் பெயரொடு” (பரிபா. 3.31);.

   ம. கூந்தல்;   க. கூதல்;து. கூசல்.

{skt. kündæa}

     [குல் → குய் → குய்ந்தல் (கருமை); → கூந்தல்]

 கூந்தல்2āndal, பெ.(n.)

   கேசியென்னும் அரக்கன்; an {/Asuraslain by Krishnad,}

     “கூந்த லெரிசினங் கொன்றோய்” (பரி.பா.3:31);.

     [கூந்தன் → கூந்தல்.]

 கூந்தல்2āndal, பெ.(n.)

   1. தலையிடம்; head, as of plants.

     “கூந்த லேந்திய கமுகங் காய்க்குலை” (சீவக. 2403);.

   2. கூந்தற்பனை (வின்.); பார்க்க;See. {kữndar-panai,} jaggery palm.

   3. கழுகு பனை

   இவற்றின் ஒலை (வின்.);; leaves of palmyra and areca palms.

   4. விழாக்காலங்களில் வாயிலை அழகுபடுத்தும் குருத்தோலைத் தோரணம் (யாழ்ப்.);; tender coconut leaves formed into festoons and used to decorate arched portals on festive occasions.

   5. கமுகங்குலைக் கூந்தல் (வின்.);; spathe of arecanut trees.

   6. பூ முதலிவற்றின் மெல்லியதோர் உறுப்பு; filaments, treads, fibres, fringes.

   7. குதிரைவாற்சாமை (தைவெ.தைல.17);; horse-tails millet.

     [கூந்தல் = கூந்தல் போன்றது. கூந்தல் உள்ள இடம்]

 கூந்தல்4āndal, பெ.(n.)

   காரைக்குட்டிமீன்; seafish, pale, dull-read, attaining 1st in length.

     [குந்தல் → கூந்தல்]

 கூந்தல்5āndal, பெ.(n.)

   1. தேங்காயை மூடியிருக்கும் நார் (திருநெல்.);; the fibrous covering of coconut.

   2. கமுகு (அக.நி.);; areca palm.

     [கூந்தல் + கூந்தல்5.]

கூந்தல்கொள்(ளு)-தல்

கூந்தல்கொள்(ளு)-தல்āndalkoḷḷudal,    16 செ.கு.வி. (v.i.)

   மகளிரைத் தழுவுதல்; lit., to lay hold of a woman’s tresses, to embrace a woman.

     “யாரிவனெங் கூந்தல் கொள்வான்” (கலித். 89);.

     [கூந்தல் + கொள்-.]

கூந்தல்சேகம்

 கூந்தல்சேகம்āndalcēkam, பெ.(n.)

   தென்னை மரத்தின் மட்டை; the stem of coconut leaves (சா.அக.);.

     [கூந்தல் + சேகம்.]

கூந்தல்தொடு-தல்

கூந்தல்தொடு-தல்āndaldoḍudal,    20 செ.கு.வி.(v.i.)

கூந்தல்கொள்(ளு);-தல் பார்க்க;See. {kindai-kol,}

     “பூங்கோதை வேண்டேங் கூந்தல் தொடேம்” (சீவக. 1229);.

     [கூந்தல் + தொடு-.]

கூந்தல்மாரி

 கூந்தல்மாரிāndalmāri, பெ.(n.)

   தேவதாரு; deccani deodar (சா.அக.);.

     [கூந்தல் + மாரி. ]

கூந்தல்முள்ளி

 கூந்தல்முள்ளிāndalmuḷḷi, பெ.(n.)

   நீண்ட முட்களையுடைய ஒருவகை முள்ளி; a thishts with long thorns (சா.அக.);.

     [கூந்தல் + முள்ளி.]

கூந்தல்வர்த்தனம்

 கூந்தல்வர்த்தனம்āntalvarttaṉam, பெ.(n.)

   கரிசாலை; eclipse plant – Eclipta prostata (சா.அக.);.

     [கூந்தல்+வர்த்தனம்]

கூந்தல்வாலி

கூந்தல்வாலிāntalvāli, பெ. (n.)

   1. குதிரைவாலிச் சம்பா; horse tail paddy.

   2.குதிரைவாலிச் சாமை; horse tail milletPanicum verticillatum alias Pcrusgalli.

   3. குதிரை வாலிப் புல்; horse tail grass – Panicum brizoides.

   4. குதிரை வாலைப் போன்ற பூடு வகை; equisetacae family of plants – Horse-tails (சா.அக.);.

     [கூந்தல்+வாலி+வால்→வாலி]

கூந்தல்வீரிகம்

 கூந்தல்வீரிகம்āntalvīrikam, பெ.(n.)

கெண்டைக்காரி பார்க்க; see Kendai-kkāri (சா.அக.);.

     [கூந்தல்+வீரிகம்]

கூந்தல்வேல்

 கூந்தல்வேல்āndalvēl, பெ.(n.)

   ஒருவகை வேலமரம்;   சாலி; elephant thorn (சா.அக.);.

     [கூந்தல் + வேல்.]

கூந்தளம்பாவை

கூந்தளம்பாவைāndaḷambāvai, பெ.(n.)

   பூவகை; convolvulus flower.

     ‘காந்தமணி கூந்தளம் பாவை நீண்டு” (சீவக. 1671);.

     [கூந்தல் + அம் + பாவை.]

கூந்தாலம்

 கூந்தாலம்āndālam, பெ.(n.)

கூந்தாலி பார்க்க;See. {kūndāh}

     [கொந்து → குந்தாலம் → கூந்தாலம்.]

கூந்தாலி

 கூந்தாலிāndāli, பெ.(n.)

   கடப்பாரை (வின்.);; crowbar, pick-axe.

ம. குந்தாலி

     [கொந்து → கொந்தாலி → கூந்தாலி.]

     [P]

கூந்தாலி

கூந்தியாவுழுந்து

 கூந்தியாவுழுந்துāndiyāvuḻundu, பெ.(n.)

   உழுந்துவகையு ளொன்று (நாஞ்சி.);; a kind of blackgram.

     [கொத்து → கொந்து → கொந்தியம் → கூந்தியம் + உழுந்து.]

கூந்து

கூந்துāndu, பெ.(n.)

கூந்தல்3,4 பார்க்க;See. {kinda}

     “கூந்திளம் பிடி” (சூளா. நாட்டு. 19);.

     [குல் → கூல் → கூந்து.]

கூனத்தை

 கூனத்தைāṉattai, பெ.(n.)

ஏலம்; cardamon (சா.அக.);.

கூனன்

 கூனன்āṉaṉ, பெ.(n.)

   கூனலுள்ளவன் (பிங்.);; humpback.

     [கூன் + அன்]

கூனம்

 கூனம்āṉam, பெ.(n.)

ஏலரிசி; seeds of Cardamon (சா.அக.);.

கூனயிக்குடையாள்

கூனயிக்குடையாள்āṉayikkuṭaiyāḷ, பெ.(n.)

   1. இலைக்கள்ளி, கள்ளி வகை; fivetubercled spurge – Euphorbia nerifolia.

   2. கானாங்கள்ளி; spiral five-tubercled spurge – Euphorbianivulia (சா.அக.);.

கூனற்கிழவன்

 கூனற்கிழவன்āṉaṟkiḻvaṉ, பெ.(n.)

   உடல் வளைந்த மூதாளன்; bendoldma.

     “கூன்ற்கிழவன் கொடுக்கும் பண்யமதில்” (விறலிவிடு.);.

     [கூனல் + கிழவன்.]

கூனற்கிழவி

 கூனற்கிழவிāṉaṟkiḻvi, பெ.(n.)

   முதுகு வளைந்த கிளவி; an old woman with a crooked back (சா.அக.);.

மறுவ, கூனி

     [கூனல்+கிழவி]

கூனலங்காய்

கூனலங்காய்āṉalaṅgāy, பெ.(n.)

   புளியங்காய்; green tamarind.

     “கூனலங்காய் தினையவரை” (திருவிளை.நாட்டு.42.);

     [கூனல் + அம் + காய்.]

கூனலன்

கூனலன்1āṉalaṉ, பெ.(n.)

   1. நத்தை,

 snail.

   2. நாரை; carmorant, stork (சா.அக.);.

 கூனலன்2āṉalaṉ, பெ.(n.)

   கூனில்லாதவன்; one free from crookedness (சா.அக.);.

கூனலாயிரு-த்தல்

கூனலாயிரு-த்தல்āṉalāyiruttal,    3 செ.கு.வி. (v.i.)

   முதுகு வளைந்து இருத்தல்; being crooked; being hunch, baeked (சா.அக.);.

     [கூனலாய்+இரு-த்தல்.]

கூனல்

 கூனல்āṉal, பெ.(n.)

   வளைவு; bend, curve

   ம.கூனன்;   க.கூன,கூன;பட கூன .

     [கூன் → கூனல்.]

கூனாள்

கூனாள்āṉāḷ, பெ.(n.)

   கூனி (நன். 276, மயிலை.);; hunch backed woman.

     [கூன் + (அள்); ஆள்.]

கூனி

கூனி1āṉi, பெ.(n.)

   1. கூனலுள்ளவள்; hunchbacked woman.

     “கூனி தன்னொடு மணமனை புக்கு” (சிலப்.3:171);.

   2. இராமபிரான் முடிசூடுதலைச் சூழ்ச்சி செய்து தடுத்த மந்தரை; Mandaraia a slave of {Kaikeyi,} who intrigued with her mistress on the day of {Rama’s} coronation and prevented it.

   3. வானவில்; rainbow.

     “கிழக்கில் ஆனிமாதம் கூனிபோட்டால் அறுபதுநாள் மழையில்லை” (யாழ்ப்.);.

   4. கூனியிறால் பார்க்க;See. {kilayiral}

     “கூனிகொத்தி… கொக்கிருக்கும் பண்ணை” (குற்றா.குற.94);.

   ம. கூனி;   க;   ககூனி,கூனி;   தெ. கூனிதி;   து. கடன, கூனெ;பட. கூனி

     [கூன் → கூனி.]

 கூனி2āṉi, பெ.(n.)

   மீனமாதம் (பங்குனி);;{Paiguni,} the 12th Tamil month. March-April.

     “ஆனி அடிகோலாதே கூனி குடிபோகாதே”

     [கூன் → கூனி.]

 கூனி3āṉi, பெ.(n.)

   கொலையாளி (இ.வ.);; murderer.

     [குல் (கொல்); → குன் →கூனி.]

கூனிக்குயம்

 கூனிக்குயம்āṉikkuyam, பெ.(n.)

   அரிவாள் (அக்.நி.);; sickle.

     [கூனி (வளைந்த); + குயம். (கொய் → குய் → குயம்);.]

கூனிக்குறுகு-தல்

கூனிக்குறுகு-தல்āṉikkuṟukutal,    3 செ.கு.வி. (v.i.)

     [முதுகு வளைந்து உடம்பு சிறுத்தல்;

 becoming hunched – backed and short in stature (சா.அக.);.

     [கூனி+குறுகு-தல்.]

கூனிக்கெண்டை

 கூனிக்கெண்டைāṉikkeṇṭai, பெ.(n.)

   சிறு கெண்டை மீன்; small crap fish – Cyprinus fimbriakus (சா.அக.);.

கூனிதாரன்

 கூனிதாரன்āṉitāraṉ, பெ.(n.)

   கொலையாளி; killer, murderer (செ.அக.);.

கூனிதாரம்

 கூனிதாரம்āṉitāram, பெ.(n.)

   கொலையாளி (இ.வ.);; murder.

     [கூனி + தாரம்.]

     [U.{} → த.கூனி.]

கூனிப்பார்-த்தல் __,

கூனிப்பார்-த்தல் __,   4 செ.கு.வி. (v.i.)    குனிந்து பார்த்தல்; looking at a thing stooping (சா.அக.).

     [கூனி+பார்-த்தல்.]

கூனிப்பொடி

 கூனிப்பொடிāṉippoḍi, பெ.(n.)

   கூனியிறால் பாக்க;{see kūni-y-irā/}

     [கூனி + பொடி.]

கூனிப்போ-தல்

கூனிப்போ-தல்āṉippōtal,    7 செ.கு.வி.(v.i.)

   மூப்பு முதலியவற்றால் உடல் வளைதல்; to be bent with age, to stoop from infirmity.

     [கூனி + போ.]

கூனிமித்திரம்

 கூனிமித்திரம்āṉimittiram, பெ.(n.)

   மந்திரத்தால் கொல்லும் இறப்பு; killing by witchcraft or sorcery.

த.வ. சாவிப்பு, சாவம்.

கூனிமிர்-த்தல்

கூனிமிர்-த்தல்āṉimirttal,    3 செ.கு.வி.(v.i.)

   முதுகின் வளைவை நிமிர்த்தல்; to correct the hunch on the back (சா.அக.);.

     [கூன்+நிமிர்-த்தல்.]

கூனியிறால்

கூனியிறால்āṉiyiṟāl, பெ.(n.)

இறால்மீன்வகை (M.M.373);: common shrimp, as hunch backed.

மறுவ. கூனிப்பொடி

     [கூனி + இறால்.]

கூனிரும்பு

கூனிரும்புāṉirumbu, பெ.(n.)

   1.வளைந்த இரும்பு; lit., curved iron. 2.அரிவாள்;

 sickle.

     “கூனிரும்பினிற் குறைத்து” (நைடத.நாட்டுப்.10.);.

     [கூன் + இரும்பு.]

கூனிவலை

 கூனிவலைāṉivalai, பெ.(n.)

   மிகச் சிறிய மீன் களைப் பிடிக்க உதவும் வலை; fish net catching small tiny fish.

     [கூனி [மிகச்சிறிய மீன்]+வலை]

கூனு-தல்

கூனு-தல்āṉudal,    5 செ.கு.வி.(v.i.)

   1. வளைதல்; to curve, to become crooked, to bend down.

     “கூனிக் குயத்தின் வாய்நெல் லரிந்து” (பொருக. 242);.

   2. முதுகு வளைதல்; to become hunch-backed.

   ம. கூனுக;   க. கோத., கூட. கூனு;   தெ.பட.கூனு;   து கூனு;   கூரு;     [கூன் → கூனு.]

கூனை

கூனைāṉai, பெ.(n.)

   1. மிடா; large earthen boiler.

     “கரும்பேந்திரத் தொழுகு சாறகன் கூனையின்”

   2. நீர்ச்சால்; baling bucket

     “விழுந்த பேரைக் கூனைகொண் டமிழ்த்துவார் போல்”

     [கூல் → கூன் → கூனை (வளைந்த மிடா);.]

கூனைவண்டு

 கூனைவண்டுāṉaivaṇṭu, பெ.(n.)

   பூச்சிவகை (இ.வ.);; a kind of small insect.

     [கூனை + வண்டு.]

கூன்

கூன்āṉ, பெ.(n.)

   1. வளைவு; bend, curve.

     “கூனிரும்பினிற் குறைத்து” (நைடத.நாட்டுப்.10);.

   2. உடற்கூனல் (திவா.);; humpon the back of the

 body. 3.கூனன்;

 hump-back.

     “சிறுகுறுங் கூனுங் குறளுஞ் சென்று” (சிலப்.27:214);.

   ம.,க.,துட. கூன்;தெ.,து.,பட., கூனு:

     [குல் → குன் → கூன்.]

 கூன்2āṉ, பெ.(n.)

   1. நத்தை (திவா.);; snail.

   2. ஆந்தை (உரி.நி.);; owl.

   3. கொப்பரை கடாரம்; cauldron.

     “குருதி சாறெனப் பாய்வது குரைகடற் கூனில்” (கம்பரா.கிங்கர.40);.

   4. செய்யுளில் அளவுக்கு மேல்வரும் அசையுஞ் சீரும்; extra detached foot of a verse.

     “சீர் கூனாத னேரடிக் குரித்தே” (தொல்.பொருள்.361);.

     [குல் → குன் → கூன்.]

 கூன்3āṉ, பெ.(n.)

   ஒருவகை வளைந்த கத்தி; a kind of curved sword.

கூன்மாறன் (கூன் என்னும் வாள் தாங்கிய பாண்டியன்);

     [குல் → கூல் → கூன்.]

கூன்கிடை

 கூன்கிடைāṉkiḍai, பெ.(n.)

   ஐவகை மெய்க் குற்றங்களுள் ஒன்றாகிய உடல் கூனிக்கிடக்கை (பிங்.);; lying with the body disposed in a crooked posture, one of five {mey-k-kurram.}

     [குல் → குன் → கூன் + கிடை.]

கூன்பாண்டியன்

 கூன்பாண்டியன்āṉpāṇṭiyaṉ, பெ.(n.)

   திருஞானசம்பந்தர் காலத்து அரசு செய்த பாண்டியன்; the hunch backed {Pandya} king, who was a contemporary of {TirunanaSambandar.}

     [கூன் + பாண்டியன்.]

கூன்முதுகு

கூன்முதுகுāṉmudugu, பெ.(n.)

   1. கூனலானமுதுகு; lit., back with a hunch.

   2.ஆமையோடு (மூ.அக.);; tortoise shell.

     [கூன் + முதுகு.]

கூன்வாள்

 கூன்வாள்āṉvāḷ, பெ.(n.)

   வளைவான வாள் (பிங்.);; scimitar, sickle.

     [கூன் + முதுகு.]

கூபகத்திபந்தனம்

 கூபகத்திபந்தனம்ābagattibandaṉam, பெ.(n.)

   இடுப்பெலும்பைக் கவர்ந்துள்ள நார்; ligaments of the pelvis.

கூபகத்துருவம்

 கூபகத்துருவம்āpagatturuvam, பெ.(n.)

   இடுப்பெலும்புக் கூட்டின் ஒடுவம் (மையம்);; axix of the pelvis.

கூபகமானம்

 கூபகமானம்āpagamāṉam, பெ.(n.)

   இடுப்பெலும்புக் கூடு அல்லது இடுப்புக்குழி (அனாமிகை);யின் குறுக்கு அளவு; the transverse measurement of the pelvis.

கூபகமானி

 கூபகமானிāpagamāṉi, பெ.(n.)

   இடுப்புக்குழி (அனாமிகை);யின் குறுக்களவை உறுதிப்படுத்தும் கருவி; an instrument used for measuring the diameter of the pelvis-pelvimeter.

கூபகம்

கூபகம்1āpagam, பெ.(n.)

   இடுப்பிலுள்ள எலும்புக் கூட்டின் குழிவிடம் (இங்.வை.13);; pelvis.

     [குள் → குவ் → கூவல் → கூவகம் → கூபகம்.]

 கூபகம்2āpagam, பெ.(n.)

   மலைநாட்டிற் கொல்லத்தைத் தலைநகராகக் கொண்ட ஒரு நாடு; name of a country whose capital was Quilon.

     “கூபக மிரட்ட மொட்டம்” (பாரத. படை.19); (TA.S.II.16);.

     [கூவல் → கூபம் (பள்ளம், பள்ளத்தாக்கு); → கூபகம்.]

கூபக்கண்ணன்

 கூபக்கண்ணன்āpakkaṇṇaṉ, பெ.(n.)

   மாவலிச் சக்கரவர்த்தியின் வழி வந்த வாணனின் நண்பன்; vanana’s friend who came from Māpāli-c-cakkaravatti’s dynasty (அபி.சிந்.);.

     [கூபம்+கண்ணன்]

கூபம்

கூபம்āpam, பெ.(n.)

   1. கிணறு, well.

   2. ஊற்றுக் குழி; spring (சா.அக.);.

     [கூவல் → கூவம் → கூபம்.]

கூபரம்

 கூபரம்āparam, பெ.(n.)

   முழங்கை; elbow.

     [கூப்புறம் → கூபரம் (கொ.வ.);.]

கூப்பரம்

 கூப்பரம்āpparam, பெ.(n.)

முழங்கை; elbow (சா.அக.);.

கூப்பாடு

கூப்பாடு1āppāṭu, பெ.(n.)

   பேரொலி; great noise, up roar (சா.அக.);.

மெதுவாகப் பேசுவரை விட்டு ஏன் கூப்பாடு போடுகிறாய்? (உ.வ.);.

     [கூ3 + பாடு – கூப்பாடு.]

 கூப்பாடு2āppāṭu, பெ.(n.)

   1. கூப்பிடுகை; call, summoning.

   2. பேரொலி; clamour, great noise.

ம. கூப்பாடு

     [கூ + பாடு – கூம்பாடு.]

கூப்பாடுதூரம்

 கூப்பாடுதூரம்āppāṭutūram, பெ.(n.)

கூப்பிடு தூரம் பார்க்க;See. {kūppidu-tūram.}

     [கூப்பாடு + தூரம்.]

கூப்பிடாரொட்டி

 கூப்பிடாரொட்டிāppiṭāroṭṭi, பெ.(n.)

   கரு நொச்சி (சா.அக.);; a plant.

     [கூப்பு + இடர் + ஒட்டி – கூப்பிடாரொட்டி.]

கூப்பிடு

கூப்பிடு1āppiḍudal,    9 செ.குன்றாவி.(v.t.)

   1. அழைத்தல்; to call, call by name, summon.

   2. வரவழைத்தல்; to invite.

 Fin. kutsua;

 Hunti, kutta, Lap, goccot;

 Jap, kuch;

 Q. Jotokay.

     [கூவு → கூவிடு → கூப்பிடு.]

 கூப்பிடு2āppiḍudal,    19 செ.கு.வி.(v.i.)

   1. அச்சம், துயரம் முதலியவற்றாற் கத்துதல்; to call out, cry out, halloo, shriek.

   2. உதவி வேண்டிக் கரைதல்; cry for help.

ம. கூப்பிடுக

     [கூவு → கூவிடு → கூப்பிடு.]

 கூப்பிடு3āppiḍudal,    20 செ.குன்றாவி.(v.i.)

   தொழுதற்குக் கைகுவித்தல்; to join hands in worship.

     “கூப்பிட்டேன் சொல்கைதனை” (தனிப்பா.ll, 98,251);.

     [கூ + இடு – கூவிடு → கூப்பிடு.]

 கூப்பிடு4āppiḍu, பெ.(n.)

   1. முறையீடு; calling for aid supplication.

     “எழுந்தன னமரர் கூப்பிட்டால்” (உத்தரரா. வரையெடு.77);.

   2. கூப்பிடு தொலைவு; calling distance

     “கூப்பிடு கடக்குங் கூர்நல் லம்பின்” (மலைபடு. 421);.

     [கூப்பிடு1 → கூப்பிடு4]

கூப்பிடுதூரம்

 கூப்பிடுதூரம்āppiḍutūram, பெ.(n.)

கூப்பிடு தொலைவு பார்க்க;See. {kuppidu-tolavu.}

     [கூப்பிடு + தூரம்.]

கூப்பிடுதொலைவு

 கூப்பிடுதொலைவுāppiḍudolaivu, பெ.(n.)

   கூப்பீடு, ஒரு குரோசவளவு (திவா.);; lit, the distance at which a shout can be heard Indian league.

ஒருவன் கூப்பிட்டாற் பிறன் கேட்குந்தொலைவு.

மறுவ, கூப்பிடுதொலைவு

     [கூப்பிடு + தொலைவு.]

எண்சாண் கோல் ஐந்நூறு கொண்டதொலைவு ஒரு கூப்பீடு (குரோசம்); எனப்படும்.

கூப்பிடுவான்

 கூப்பிடுவான்āppiḍuvāṉ, பெ.(n.)

   கதறிக் கொண்டே இறக்கச் செய்வதாகிய ஆட்டுநோய் (யாழ்ப்.);; a kind of lung disease especially among goats, causing continuous bleating and sudden death.

     [கூவிடு → கூப்பிடு → கூப்பிடுவான்.]

கூப்பில்

 கூப்பில்āppil, பெ.(n.)

   பூசுணைக்காய்; pumpkin (சா.அக.);.

மறுவ. கும்பளம்

     [கும்பு → கூம்பு → கூப்பில்.]

கூப்பீடு

கூப்பீடுāppīṭu, பெ.(n.)

   1. கூப்பாடு; call, whoop.

     “வருந்திக் கூப்பிடுங் கூப்பீட்டைக் கேட்கவும்” (புறநா.44, உரை);.

   2. கூப்பிடுதூரம்; calling distance.

     “முழநான்குகோல் அக்கோலைஞ்துறு கூப்பீடு” (வீரசோ.யாப்.33.உரை);.

     [கூப்பிடு → கூப்பீடு.]

கூப்பு

கூப்பு1āppudal,    18 செ.குன்றாவி.(v.t.)

   1. கைகுவித்தல்; to join hands as in worship.

     “வாளொடுங் கோலொடுங் கூப்பு” (சீவக. 430);.

   2. குவித்தல்; to heap up, as sand or grain.

     “கூப்பிய கனக மாழையால்” (சீவக. 913);.

   3.சுருக்குதல்; to close, contract, shut in, as an umbrella, to withdraw, draw in, as the sun his rays.

சூரியன் கிரணங்களைக் கூப்பிட்டுக் கொண்டு மறைந்தான் (வின்.);.

ம. கூப்புக

     [குவிப்பு → கூப்பு.]

 கூப்புāppu, பெ.(n.)

   குவியச் செய்கை; joining hands as in worship.

     “என் கைகூப்புச் செய்கையே” (திவ். திருவாய். 4:3,2);.

     [குவி → குவிப்பு → கூப்பு.]

கூப்புரம்

கூப்புரம்āppuram, பெ.(n.)

கூப்புறம் பார்க்க;See. {kմppսրaո7.}

     [குவி + புறம் – குவிபுறம் → கூப்புறம் (கொ.வ.);.]

கூப்புறம்

 கூப்புறம்āppuṟam, பெ.(n.)

   முழங்கை; elbow (சா.அக.);.

     [குவி + புறம் – குவிபுறம் → கூப்புறம் (கொ.வ.);.]

கூமம்

 கூமம்āmam, பெ.(n.)

   நீர்நிலை (யாழ்.அக.);; pond, pool.

     [கூவல் → கூபம் → கூமம் (கொ.வ.);.]

கூமரை

 கூமரைāmarai, பெ.(n.)

காட்டிலவு(மலை.); பார்க்க;See. {kåtfijavu.}

     [கூம்பு + உறை – கூம்புறை → கூவுரை → கூமரை (கொ.வ.);.]

கூமா

 கூமாāmā, பெ.(n.)

கூவமா (யாழ்ப்.); பார்க்க;See. {kŪVamā.}

     [கூவமா → கூமா.]

கூமாகியம்

 கூமாகியம்āmākiyam, பெ.(n.)

   தேற்றாங்கொட்டை; water clearing nut – Strychnos Potatorum (சா.அக.);.

கூமுட்டாள்

 கூமுட்டாள்āmuṭṭāḷ, பெ.(n.)

   பெருமூடன் (இ.வ.);; stupid, fool, a term of abuse.

மறுவ. கூமுட்டை, கூழ்முட்டை

     [கூழ் + முட்டை + ஆள். கெட்டுப்போன முட்டை போன்று பயன்படாத ஆள்.]

கூமுட்டை

 கூமுட்டைāmuṭṭai, பெ.(n.)

கூழ்முட்டை (இழி.வ.); பார்க்க;See. {kūl-muffa}

     [கூழ்முட்டை → கூமுட்டை.]

கூம்பரிட்டம்

கூம்பரிட்டம்āmpariṭṭam, பெ.(n.)

   1. ஆமை ஓடு; the shell of a tortoise.

   2. ஆமணக்கு; castor plant (சா.அக.);.

 கூம்பரிட்டம்āmbariṭṭam, பெ.(n.)

   1. ஆமையோடு; the shell of a tortoise.

   2. ஆமணக்கு; castor plant.

கூம்பல்

 கூம்பல்āmbal, பெ.(n.)

   குமிழமரம் (திவா.);; coomb teak.

ம. கூம்பன்

     [கூம்பு → கூம்பல்.]

கூம்பாதிரி

கூம்பாதிரிāmpātiri, பெ.(n.)

   1. ஒரு வகைப் பாதிரிப் பூ மரம்; a kind of trumpet-flower.

   2. பூவத்தி அல்லது கொழும்பு மரம்:

 Ceylon oak – Sehleichera trijuga (சா.அக.);.

     [கூம்பு+பாதிரி]

கூம்பு

கூம்பு1āmbudal,    5 செ.கு.வி.(v.i.)

   1. குவிதல்; to close, to shut, as a flower

     “செய்ய கமல மலர்கூம்ப” (நைடத. சந்திரோ.2.);.

   2. ஒடுங்குதல், சுருங்குதல் (சூடா.);; to contract, shrink.

   3. ஊக்கங் குறைதல்; to lose courage, zeal or enthusiasm,

     “வடவர் வாடக் குடவர் கூம்ப” (பட்டினப். 276);.

   4. சேறு (வின்.);; mud. கூம்பினிற் புதைத்த கல் (W.);.

ம. கூம்புக

     [குவி → கும்பு → கூம்பு.]

 கூம்பு2āmbu, பெ.(n.)

   1. பாய்மரம்; mastofa vessel.

     “கூம்புமுதன் முறிய வீங்குபிணி ய’விழ்ந்து” (மணிமே. 4.30);.

   2. தேர்மொட்டு (திவா.);; cone shaped pinnacle of a chariot.

   3. பூமொட்டு; bud.

     “தாழைக் கூம்பவிழ்ந்த வொண்பூ” (ஐந்.ஜம்.49);. [குழும்பு → கும்பு → கூம்பு.]

கூம்பூரணம்

 கூம்பூரணம்āmbūraṇam, பெ.(n.)

   கொள்ளுக் காய்வேளை; purple wild indigo (சா.அக.);.

     [கூம்பு + பூரணம்.]

 கூம்பூரணம்āmbūraṇam, பெ.(n.)

   கொள்ளுக்காய் வேளை; purple wild indiger-tephrosia purperea.

கூரணம்

கூரணம்āraṇam, பெ.(n.)

   1. கோடகசாலை (மலை.); பார்க்க;See. {ködagasāla} Coromandel gendarussa.

   2. பாகல் (யாழ்.அக.);; balsam pear.

     [கூர் → கூரணம். கூர் = பகுதி, கசப்பு மிகுதி.]

கூரண்டம்

கூரண்டம்āraṇṭam, பெ.(n.)

   1. கூர்மையான முட்டை

 oval shaped egg.

   2. பருத்த பிடுக்கு; enlarged scrotum (சா.அக.);.

     [கூர்+அண்டம்]

கூரத்தாண்டாள்

 கூரத்தாண்டாள்ārattāṇṭāḷ, பெ.(n.)

   கூரத்தாழ்வார் மனைவி; wife of Kurattālvār (அபி.சிந்.);.

     [கூரத்து+ஆண்டாள்.]

கூரத்தாழ்வார்

 கூரத்தாழ்வார்ārattāḻvār, பெ.(n.)

   ஆழ்வார்களில் ஒருவர்; one of the devotees of Tirumal.

     [கூரத்து+ஆழ்வார்)

மறுபெயர் : வச்ச சின்னமிச்ரர், நடையாடு பதஞ்சலி, யதீந்திர சரணன்.

இவர் சோழனால் கண்ணிழந்து திருவரங்கத்தில் இருந்து பெருமாளை வழிபட்டு உடையவர் கால் நீர் பெற்று திருநாட்டுக்கு எழுந்தருளினார் (அபி.சிந்);.

கூரன்

கூரன்1āraṉ, பெ.(n.)

   நெல்வகை (வின்.);; abearded kind of paddy.

     [கூர் → கூரன்.]

 கூரன்2āraṉ, பெ.(n.)

   நாய் (பிங்.);; dog.

     [குக்கல் → குக்கரன் → கூரன்.]

 கூரன்āraṉ, பெ.(n.)

   ஆண்பாற் பெயர்வகை (யாப்.வி.537);; a term indicative of the masculine gender.

     [கூர் + அன்.]

கூரன்புல்

 கூரன்புல்āraṉpul, பெ.(n.)

வரகு,

 little millet (சா.அக.);.

     [கூரன்+புல்.]

கூரம்

கூரம்1āram, பெ.(n.)

   யாழ்; a kind of, stringed musical instrument.

     “கூர நாண் குரல்” (பரிபா.19:44);.

     [குல் → கூல் (வளைவு); → கூர் → கூரம்.]

 கூரம்2āram, பெ.(n.)

   கூரணம் (மலை.);; very small plant.

     [கூரணம் → கூரம்.]

 கூரம்3āram, பெ.(n.)

   1. கொடுமை; cruelty severity.

     “கூரமிக்கவன்” (தேவா.893.5);.

   2. பொறாமை (திவா.);; envy, jealousy.

   3. அழிவு; destruction.

     [கூல் (அழித்தல், கெடுத்தல்); → கூரம். கூர் = மிகுதல், பொங்குதல், கெடுதல்.]

கூரம்பாகம்

 கூரம்பாகம்ārambākam, பெ.(n.)

   கோடகசாலை (சா.அக.);;     [கூரம் + பாகம்.]

கூரம்பு

கூரம்புārambu, பெ.(n.)

   நிரையம்; a hell.

     “கூரம்பு வெம்மணல்” (ஏலா.67);.

ம. கூரம்பு

     [கூர் → கூரம்பு.]

கூரரம்

 கூரரம்āraram, பெ.(n.)

   முழங்கை; elbow (சா.அக.);.

     [கீழ்ப்புறம் → கூர்ப்புறம் → கூரம் (கொ.வ);.]

கூரறுக்கும்வாள்

 கூரறுக்கும்வாள்āraṟukkumvāḷ, பெ.(n.)

அரம்பவகை (c.);

 dovetail saw.

     [கூர் + அறுக்கும் + வாள்.]

கூரல்

கூரல்1āral, பெ.(n.)

   1. பெண்களின் தலைமயிர் (பிங்.);; woman’s hair.

   2. இறகு (பிங்.);; feathers.

     [குரல் (கொத்து); → கூரல்.]

 கூரல்2āral, பெ.(n.)

   குடலினின்று பண்ணை என்னும் கூழ்ப்பசை செய்யப் பயன்படும் மீன்வகை; a large fish from the intestines of which a glue is made.

   2. பறவையிறகு; plume of bird, feather.

ம. கூரல்

     [குரல் (கொத்து); → கூரல்.]

கூராக்கு-தல்

கூராக்கு-தல்ārākkudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   கத்தி முதலியவற்றைக் கூர்படுத்துதல்; to make point, shaper.

ம. கூர்ப்பிடுக

     [கூர் + ஆக்கு.]

கூராசாகிகம்

 கூராசாகிகம்ārācākikam, பெ.(n.)

தேயிலை; tea (சா.அக.);.

 கூராசாகிகம்ārācāgigam, பெ.(n.)

   தேயிலை; tea.

கூராணி

 கூராணிārāṇi, பெ.(n.)

   ஆணிவகை (வின்.);; sharp nail or pin.

ம. கூராணி

     [கூர் + ஆணி.]

கூரான்

கூரான்ārāṉ, பெ.(n.)

   ஒரு வகைப் பூடு; an unknown plant (சா.அக.);. [கூர் – கூரான்]

 கூரான்ārāṉ, பெ.(n.)

   1. குல்லான் (யாழ்.அக.);; sharp pointed stake for digging.

   2. பூடுவகை; a shrub.

     [குல் → கூல் → கூர் → கூரான். குல் = குத்துதல்.]

கூராம்பாய்ச்சி

 கூராம்பாய்ச்சிārāmpāycci, பெ.(n.)

   மண் கொத்துவதற்குப் பயன்படுத்தும் மரக்கருவி; a kind of pointed wooden shovel for grubbing up the earth (செ.அக.);.

     [கூர்+ஆம்+பாய்ச்சி]

கூராம்பிளாச்சு

 கூராம்பிளாச்சுārāmbiḷāccu, பெ.(n.)

   மண் கொத்தும் மரக்கருவி (யாழ்ப்.);; a kind of pointed wooden shovel for grubbing up the earth.

     [கூர் + ஆம் + பிளாச்சு.]

கூரியகண்

 கூரியகண்āriyagaṇ, பெ.(n.)

   கூர்மையான.கண்; keen eye (சா.அக.);.

     [கூர் → கூரிய + கண்.]

கூரியசிரசு

கூரியசிரசுāriyaciracu, பெ.(n.)

   1. கூர்மையான தலை; cone head; tower head.

   2. உள்ளங்கால், உள்ளங்கையின் மேற்பாகம்; the upper part of the palm of the hand and the sole of the feet (சா.அக.);.

     [கூரிய+Skt. சிரசு]

கூரியசேகரம்

 கூரியசேகரம்āriyacēkaram, பெ.(n.)

   தென்னை; coconuttree (சா.அக.);.

கூரியன்

கூரியன்āriyaṉ, பெ.(n.)

   1. கூர்மையுள்ளவன்; sharp, clever person

     “கூரியருங் கூரியரை யல்லாரை” (சிவதரு. பாயிர. 6);.

   2. அறிவன் (புதன்);; mercury.

     “சுக்கில பக்க மேவுங் கூரியன்” (சேதுபு. இராமனரு.87);.

     [கூரி → கூரியன்.]

கூரியபரணி

 கூரியபரணிāriyabaraṇi, பெ.(n.)

   சிறுகுறிஞ்சா; small Indian ipecacuanha (சா.அக.);.

     [கூரிய + பரணி.]

கூரியம்

கூரியம்1āriyam, பெ.(n.)

   கை, கால்; certain parts of the body as hands, feet etc. (சா.அக.);.

     [கூறு → கூறியம் → கூரியம்.]

 கூரியம்2āriyam, பெ.(n.)

   கூர்மை (யாழ்.அக.);; sharpness.

     [கூர் → கூரியம்.]

கூரியலவணம்

 கூரியலவணம்āriyalavaṇam, பெ.(n.)

   துரிசு; blue vitriol (சா.அக.);.

     [கூரிய + லவணம்.]

கூரியவன்னி

 கூரியவன்னிāriyavaṉṉi, பெ.(n.)

   கொடிவேலி (சங்.அக.);; ceylon leadwood.

     [கூர் → கூரி + வன்னி.]

கூரியவான்

 கூரியவான்āriyavāṉ, பெ.(n.)

   நுண்ணறி வுள்ளோன்; man of acute intelligence, genius

     [கூர் → கூரியவன் → கூரியவான்.]

கூரிலவணம்

 கூரிலவணம்ārilavaṇam, பெ.(n.)

   அமரியுப்பு (வின்.);; salt taken from urine.

     [கூரி + லவணம்.]

கூருமி

 கூருமிārumi, பெ.(n.)

   உமி மூக்கு (வின்.);; sharp tip of the husk.

     [கூர் + உமி – கூருமி (உமி மூடிய கூர்முனை);.]

கூரெள்

 கூரெள்āreḷ, பெ.(n.)

   எள்வகை; a variety of sesame.

     [கூம் + எள்.]

கூரெள்ளெண்ணெய்

 கூரெள்ளெண்ணெய்āreḷḷeṇīey, பெ.(n.)

   கூரெள் ஆட்டிய எண்ணெய்; oil extracted from the sesamum seed (சா.அக.);.

     [கூர் + எள் + எண்ணெய்.]

கூரை

கூரைārai, பெ.(n.)

   1. இறக்கச்சரிவு; sloping roof, commonly thatched with grass or palm leaf.

     “குறுங்கூரைக் குடிநாப்பண்” (பட்டினப்.81);.

   2. குடில் (பு.வெ.10,முல்லைப். 9,உரை);; small hut, shed, cottage.

   ம. கூர;பிரா. உர (வீடு);

     [கூர் → கூரை (கூர் முனை வடிவான விட்டு முகடு, முகடு கொண்ட வீடு);.]

கூரைக்கட்டு

 கூரைக்கட்டுāraikkaṭṭu, பெ.(n.)

   கூரை வீடு(வின்.);; thatched house.

     [கூரை + கட்டு.]

கூரைக்கணக்காயனார்

 கூரைக்கணக்காயனார்āraikkaṇakkāyaṉār, பெ.(n.)

   கடைக்கழகம் மருவிய புலவர்; the poet who belonged to the last Sangam (அபி.சிந்.);.

கூரைக்கொட்டில்

 கூரைக்கொட்டில்āraikkoṭṭil, பெ.(n.)

   மாட்டுக்கொட்டில்; thatched cattle shed.

     [கூரை + கொட்டில்.]

கூரைச்சால்

 கூரைச்சால்āraiccāl, பெ.(n.)

   மனப்பந்தலில் வைக்குங் தண்ணீர்ச்சால் (இ.வ.);; water-pot.placed on a marriage dais.

     [கூரை + சால்.]

கூரைதட்டு-தல்

கூரைதட்டு-தல்āraidaṭṭudal,    5 செ.கு.வி.(v.i.)

   ஆண்பிள்ளை பிறந்தமைபற்றி மாமனோ அல்லது மற்ற உற்றாரோ மகிழ்ச்சிக் குறியாகக் கூரை யைத் தட்டுதல் (யாழ்ப்.);; to tap the roof for joy, as the uncle or other relations do when a male child is born.

     [கூரை + தட்டு-.]

கூரைத்தகடு

 கூரைத்தகடுāraittagaḍu, பெ.(n.)

   கூரையை மூடப் பயன்படும் இரும்புத்தகடு அல்லது மாழை (உலோக);த் தகடு (கட்.தொ.வரி.);; metal sheets used as roofing material.

கூரைமானம்

 கூரைமானம்āraimāṉam, பெ.(n.)

கூரைப்

   பகுதியை மூடப் பயன்படும் ஒடு, புல், தகடு முதலிய பொருள்கள் (பொ.வழக்.);; tiles, grass, thatch etc. used as roofing materials.

மறுவ, கூரைச்சாதனம்

     [கூரை + மானம்.]

கூரையில்லாச்சுவர்

 கூரையில்லாச்சுவர்āraiyillāccuvar, பெ.(n.)

   சவர்க்காரம்; washing soda (சா.அக.);.

     [கூரை + இல்லா + சுவர். மரஞ்செடி கொடி நிழலின்றிக் கட்டாந்தரையாகக் காணப்படும் (சுவம்); சவுள் நிலம்.]

கூரைவீடு

 கூரைவீடுāraivīṭu, பெ.(n.)

   ஒலையாலேனும் புல்லாலேனும் வேய்ந்த வீடு; thatched house.

     [கூரை + வீடு.]

கூர்

கூர்1ārtal,    16 செ.கு.வி.(v.i.)

   1. மிகுதல்; to be abundant, excessive.

     “பெருவறங் கூர்ந்த கானம்” (பெரும்பாண். 23);.

   2. விருப்பங்கொள்ளுதல்; to covet hanker after.

     “எங்கையர் தோள் கூடினான்பின் பெரிது கூர்ந்து” (திணைமாலை. 124);.

   3. வளைதல்; to bend.

     “மெய்கூர்ந்த பனியொடு” (கலித். 31:6);.

   4. அளவு குறைதல், குன்னாத்தல் (நெடுநல், 9 உரை);; to contractwith cold.

     [குல் → கூடல் → கூழ். குல் = கூடுதல் கருத்து வேர் மிகுதல், மேற்செல்லுதல், வளைதல், கருங்கல் பொருள்களில் விரிந்தது.]

 கூர்3ār, பெ.(n.)

   1. மிகுதி; exuberance, abundance.

     “கூரி லாண்மைச் சிறியேன்” (புறநா.75:4);.

   2. கூர்மை; sharpness, as of a point or edge.

     “கூர்வேற் கோன்” (திவ்.பெரியாழ்.4:2,7);.

   3. கூர்மை

   யுள்ள நுனி (இ.வ.);; pointed edge.

   4. குயவன் சக்கரத்தைத் தாங்கும் ஓர் உறுப்பு; the stand or support of a potter’s wheel.

     “கூரினை யிழந்து போய்க் குலாலன் சக்கர நீர்மைய தானது” (கந்தபு. தாரக.136);.

   5. இலையின் நடுநரம்பு (யாழ்ப்.);; fibre, leafrib, asof the neem.

   6. கதிர்க்கூர் (வின்.);; awn, beard of grain.

   7. கதவுக்குடுமி; projecting pivots on which a door swings.

   8. காரம்(வின்.);; pungency.

   9. குத்துப்பாடான பேச்சு; cutting or sarcastic speech.

 Fin. karki:Es. kark:Mong. gurca

     [குல் → கூல் → கூர்.]

   {ksir} a sharp point. Comp. HEB. {klif} to pierce, to bore; SANS. khur, to cut.

 கூர்4ār, பெ.எ.(adj.)

   1. மிக்க; intense, excessive

     “கூரிருட் பிழம்பே” (நைடத.மாலை. 11);.

   2. சிறந்த; fine

     “கூர்ஞ்செக்கரே” (திருக்கோ. 346);.

     [குல் → கூல் → கூர்.]

கூர்-த்தல்

கூர்-த்தல்ārttal,    12 செ.கு.வி.(v.i.)

   1. மிகுதல்; to be abundant, excessive.

     “கூர்ப்புங் கழிவு முள்ளது சிறக்கும்” (தொல்.சொல்.314);.

   2. கூர்மையாதல்; to be sharp, as the edge or point of an instrument

     “கூர்க்குநன் மூவிலைவேல்” (தேவா.367:8);.

   3. அறிவு நுட்பமாதல்; to be keen, acute, penetrating, as the intellect.

   4. உவர்த்தல்; to be saltish, brackish.

     “மென்று றைப்புனல் கூர்ப்புறக் கடலேறி” (தணிகைப்பு. திருநாட்.164);.

   5. சினத்தல்; to be enraged, become furious.

     “கூர்த்துநாய் கவ்விக் கொளக்கண்டும்” (நாலடி.70);.

     [குல் → கூல் → கூர்.]

கூர்கண்

 கூர்கண்ārkaṇ, பெ.(n.)

   பார்வை கூர்மையாக உள்ள கண்; sharp eyes (சா.அக.);.

     [கூர்+கண்.]

கூர்கெடல்

 கூர்கெடல்ārkeḍal, பெ. (n.)

   அறிவு மழுங்கல்; becoming dullwitted (சா.அக.);.

     [கூர் + கெடல்.]

கூர்கெடு-தல்

கூர்கெடு-தல்ārkeḍudal,    20 செ.கு.வி.(v.i.)

   1. நுனி மழுங்குதல்; to become blunt, dull, to lose

 point, as a tool.

   2. அறிவு மழுங்குதல்; to become dull-witted, to lose one’s sharpness of intellect, as in old age.

     [கூர் + கெடு.]

கூர்கெட்டுப்-போதல்

கூர்கெட்டுப்-போதல்ārkeṭṭuppōtal,    8 செ.குன்றாவி. (v.t.)

   அறிவு மழுங்குதல்; becoming dull witted through old age (சா.அக.);.

கூர்கெட்டவனாயிருக்காதே.

     [கூர் + கெட்டு + போ-.]

கூர்கேவு

 கூர்கேவுārāvu, பெ.(n.)

வெண்கடுகு (மலை.); பார்க்க;See. {vess-kadugu.}

     [கூர் + கேவு. கடுகு → கடுவு → கேவு (கொ.வ.);.]

கூர்க்கறுப்பன்

 கூர்க்கறுப்பன்ārkkaṟuppaṉ, பெ.(n.)

   உயர்ந்த நெல்வகை (வின்.);; a kind of bearded paddy of superior quality.

     [கூர் + கறுப்பன். (கறுப்பன் = தாடியுடைய கறுப்பன் தெய்வம்);.]

கூர்க்கா

 கூர்க்காārkkā, பெ.(n.)

   நேப்பாள நாட்டில் இருந்து வந்து காவல் காக்கும் பணி செய்பவர்; Nepali employed as a guard.

த.வ. சேமக்காவலன்.

கூர்ங்கண்

 கூர்ங்கண்ārṅgaṇ, பெ.(n.)

   ஊடுருவிப் பார்க்குங் கண்; sharp, piercing eyes.

     [கூர் → கூர்ம் + கண்.]

கூர்சீட்டு

 கூர்சீட்டுārcīṭṭu, பெ.(n.)

கூறுச்சீட்டு பார்க்க; see kuru-cittu (செ.அக.);.

கூர்சீவியபாக்கு

 கூர்சீவியபாக்குārcīviyapākku, பெ.(n.)

   இழைத்த பாக்குச் சீவல்; scraped betel nut (ச.அக.);.

     [கூர் + சீவிய + பாக்கு.]

கூர்சீவு

கூர்சீவு1ārcīvudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. கூராக்குதல்; to sharpen, make pointed.

   2. சீவுதல்; to scrape, slice of as areca nut.

கூர்சிவின பாக்கு (இ.வ.);.

     [கூர் + சீவு.]

கூர்சீவு-தல்

கூர்சீவு-தல்ārcīvudal,    10 செ.கு.வி. (v.i.)

   2. கொம்பு சீவுதல்; to sharper the horn of an ox to pierce the opponent.

   2. பகை மூட்டுதல் (இ.வ);; to incite, as to a quarrel.

     [கூர் + சீவு-.]

கூர்ச்சகம்

 கூர்ச்சகம்ārccagam, பெ.(n.)

   பல்லுக்குச்சி (யாழ்.அக.);; tooth brush.

     [கூர் + (சாகம்); சகம்.]

கூர்ச்சசேகரம்

 கூர்ச்சசேகரம்ārccacēkaram, பெ.(n.)

   தென்னை மரம்; coconut tree (சா.அக.);.

     [கூர் → கூர்த்த (உயரமான); → கூர்ச்ச + சேகரம். செம் + கேரம் – செங்கேரம் → சேகரம் (தென்னை);.]

கூர்ச்சம்

கூர்ச்சம்1ārccam, பெ.(n.)

   கட்டடத்திற்கு உதவுஞ் சிறுகால் (இ.வ.);; small-sized post used in building.

     [கூர் → கூர்த்தம் (நெடுங்கழி); → கூர்ச்சம் (கொ.வ.);.]

 கூர்ச்சம்2ārccam, பெ.(n.)

   1. தருப்பை (பிங்.);; darbha grass.

   2. மறை (வேதக்);க் கருமங்களிற் பயன்படுத்தும் தருப்பைக் கொத்து; bundle of darbha grass used in ceremonies and sacrifices

     “கோலும் புல்லும் ஒரு கையிற் கூர்ச்சமும்” (தேவா.497:8);.

     [கூர் → கூர்த்தம் (நெடும்புல்); → கூர்ச்சம்.]

கூர்ச்சரம்

கூர்ச்சரம்ārccaram, பெ.(n.)

   1. குச்சர மாநிலம்; Gujarat state.

   2. ஐம்பத்தாறு நாடுகளுளொன்று; Gujarat, one of 56 ancient countries.

 Gur, Gujjar, Gujari, Gurjar

     [குச்சரம் → கூச்சரம்: குச்சரம் = ஆலமரம். அம்மரத்தின் கீழ் நடந்த குச்சரர் வாணிகம், வணிகரின் குடிப்பெயர், வணிகரால் பெயர் பெற்ற நிலப்பகுதி.]

கூர்ச்சரி

கூர்ச்சரிārccari, பெ.(n.)

   பண்வகையு ளொன்று (பரத.இராக.56);; a specific melody-type.

     [குச்சம் → குச்சரி = இடுப்பில் கட்டிக் கொள்ளும் மணி, அம் மணியோசைக்கு ஏற்ப ஆடும் ஆடல்.]

கூர்ச்சாரம்

 கூர்ச்சாரம்ārccāram, பெ.(n.)

   சிவச்சாரம் (சா.அக.);;{sivacaram.}

     [கூர் + சாரம்.]

கூர்ச்சி

கூர்ச்சி1ārcci, பெ.(n.)

குருச்சி1 பார்க்க;See. {kurucci}

     [குருச்சி → கூர்ச்சி.]

 கூர்ச்சி2ārcci, பெ.(n.)

   கூர்மை; sharpness, keenness, pointedness.

     “கூர்ச்சிவா யரவம் வீழ்த்தி” (குற்றா.தல.கவுற்.10);.

     [கூர் → கூர்ச்சி.]

கூர்ச்சிகை

கூர்ச்சிகைārccigai, பெ.(n.)

   1. பூவரும்பு; flowerbud.

   2. ஊசி; needle (சா.அக.);.

   3. தூரிகை

   கரிக்கோல் (எழுதுகோல்); (யாழ்.அக.);; pencil, painter’s brush.

     [கூர் → கூர்ச்சி → கூர்ச்சிகை.]

கூர்ச்சு

கூர்ச்சுārccu, பெ.(n.)

   1. கூர்ச்சி2 பார்க்க;See. {kürcci”}

   2. கூரிய முளை; pointed stick, stake.

கூர்ச்சுக் கட்டையாய்ப் போயிற்று (இ.வ.);.

     [கூர் → கூர்ச்சு.]

கூர்ச்சுக்குல்லா

 கூர்ச்சுக்குல்லாārccukkullā, பெ.(n.)

   நெடுங்குல்லா (வின்.);; conical shaped cap.

     [கூர்ச்சு + குல்லா.]

கூர்ச்சேகரம்

 கூர்ச்சேகரம்ārccēkaram, பெ.(n.)

   தென்னை (பிங்);; coconut palm – Cocos nucifera (செ.அக.);.

 கூர்ச்சேகரம்ārccēkaram, பெ.(n.)

   தென்னை (மலை);; coconut palm.

கூர்ச்சை

 கூர்ச்சைārccai, பெ.(n.)

   தருப்பைப் புல்; sacrifical grass (சா.அக.);.

கூர்துளை இணைப்பு

 கூர்துளை இணைப்புārtuḷaiiṇaippu, பெ.(n.)

   இழைத்த இரு சட்டங்களிலும் ‘நல்புறம்’ வரைந்து இணைக்கும் இணைப்பு (தச்.தொ.வரி.);; a mode of joining two wooden frames in joinery.

     [கூர் + துளை + இணைப்பு.]

கூர்த்த

 கூர்த்தārtta, பெ.அ.(adj.)

கூர்ந்த பார்க்க: see kinda,

கூர்த்த மதி உடையவர்.

     [கூர்-கூர்த்த]

கூர்த்தலை

கூர்த்தலைārttalai, பெ.(n.)

   1. கூர்மையான தலை; cone head, tower head.

   2. உள்ளங்கால், உள்ளங்கையின் மேற்பாகம்; the upper part of the palm of the hand and the sole of the feet(சா.அக.);.

     [கூர் + தலை.]

கூர்த்தல்

கூர்த்தல்ārttal, பெ.(n.)

   மிகுதியாதல்; being excessive.

   2. உவர்த்தல்; being saltish (சா.அக.);.

     [கூர் → கூர்த்தல்.]

கூர்த்திகை

கூர்த்திகைārttigai, பெ.(n.)

   1. மட்டிப்படைக்கலம் (திவா.);; a weapon shaped like a sledge – hammer.

   2. படைக்கலம்; arms, weapons.

     [கூர் + திகை.]

கூர்நாடி

 கூர்நாடிārnāṭi, பெ.(n.)

   கடு (துரித); நாடி; sharp pulses (சா.அக.);.

     [கூர் → கூர்ந்த + பஞ்சமம்.]

கூர்ந்த பஞ்சமம்

 கூர்ந்த பஞ்சமம்ārndabañjamam, பெ.(n.)

   மருதயாழ்த்திற வகை (பிங்.);; an ancient secondary melody type of Marudam class.

     [கூர் → கூர்ந்த + பஞ்சமம்.]

கூர்ந்து

 கூர்ந்துārntu, வி.அ.(adv.)

முழுக் கவனத்தையும் செலுத்தி உற்று

 keenly, intently, with rapt attention,

நாட்டிற்கு எதிரான செயல்களை அரசு கூர்ந்து கவனித்து வருகிறது.

     [கூர்-கூர்ந்து]

கவனி, பார், நோக்கு, கேள் போன்ற வினைகளுடன் வரும் சொல்.

கூர்ப்பகழி

கூர்ப்பகழிārppagaḻi, பெ.(n.)

   1. கனிம நஞ்சு (சங்.அக.);; a mineral poison.

   2. கூரான அம்பு; sharp arrow.

     [கூர் + பகழி.]

கூர்ப்படைதறை

 கூர்ப்படைதறைārppaḍaidaṟai, பெ.(n.)

   கீழ்க்காய் நெல்லி; small leaved feather foil (சா.அக.);.

     [கீழ்ப்படு + (அத்துறு); அத்துறை – கீழ்ப்படைத்துறை → கூர்ப்படைதறை (கொ.வ.);.]

கூர்ப்பம்

 கூர்ப்பம்ārppam, பெ.(n.)

   புருவநடு; middle of the eye-brows (சா.அக.);.

     [கூர் → கூர்ப்பம்.]

கூர்ப்பரம்

 கூர்ப்பரம்ārpparam, பெ.(n.)

   முழங்கை (பிங்.);; elbow.

     [கூர் → கூர்ப்பம்.]

கூர்ப்பிஞ்சு

 கூர்ப்பிஞ்சுārppiñju, பெ.(n.)

   மிதிபாகற் பிஞ்சு; ground bitter gourd creeper (சா.அக.);.

     [கூர் + பிஞ்சு.]

கூர்ப்பிடு-தல்

கூர்ப்பிடு-தல்ārppiḍudal,    20 செ.கு.வி.(v.i.)

   தீட்டிக் கூர்மையாக்குதல்; to sharpen, as a tool.

     “படையைக் கூர்ப்பிடுத லோடும்” (சீவக. 2303);.

     [கூர் → கூர்ப்பு (கூர்மை); + இடு.]

கூர்ப்பு

கூர்ப்புārppu, பெ.(n.)

   1. உள்ளது சிறந்து மிகுகை (தொல்.சொல்.314);; abundance, excess, improvement.

   2. கூர்மை; sharpness, pointedness.

     “கூர்ப்புக் கொண்டகட்கொடிச்சியர்” (கந்தபு. திருநாட்டு.45);.

   3. அறிவுக்கூர்மை; keenness of

 perception, acuteness of intellect

     “கூர்ப்பில்லா மனுடனும்” (சூடா.11:132);.

   4. உவர்ப்பு; brackishness, saltness.

   ம. கூர்ப்பு;க., து.கூர்பு

     [கூர் → கூர்ப்பு.]

கூர்மகன்னியான்

 கூர்மகன்னியான்ārmagaṉṉiyāṉ, பெ.(n.)

   சிவனார் வேம்பு;{shiva’s} neem (சா.அக.);.

     [கூர் → கூர்மம் + (கண்ணி); கன்னி + ஆன்.]

கூர்மக்கருடமூலி

 கூர்மக்கருடமூலிārmakkaruḍamūli, பெ.(n.)

   வெள்ளை நாயுருவி; a white species of {nayuruvi} (சா.அக.);.

     [கூர்மம் + கருடன் + மூலி.]

கூர்மக்கெருடமூலி

 கூர்மக்கெருடமூலிārmakkeruṭamūli, பெ.(n.)

   வெள்ளை நாயுருவி; a Indian burrAchyranthes aspera (செ.அக.);.

கூர்மக்கை

கூர்மக்கைārmakkai, பெ.(n.)

   பெருவிரலை நீட்டி மற்றை விரல்களை வளைத்துக் கீழ்நோக்கிப் பிடிக்கும் நாட்டிய முத்திரைக் கை (பரத.பாவ.39);; gesticulation in dancing, in which the thumb is held straight and the other fingers are bent and pointed downwards.

     [கூர்மம் + கை.]

கூர்மசம்மாரமூர்த்தி

 கூர்மசம்மாரமூர்த்திārmacammāramūrtti, பெ.(n.)

   சிவனின் திருவுரு; figure of Šiva.

     [கூர்ம+சம்மாரம்+மூர்த்தி]

ஆமை (கூர்மம்); தோற்றளவு(அவதாரம்);கொண்ட திருமாலின் பெருமிதம் அடக்கி, ஆமையுருவின் ஒட்டினைப் பெயர்த்து மார்பணியாகக் கொண்ட சிவனது திருவுரு (அபி.சிந்);.

கூர்மசெயந்தி

 கூர்மசெயந்திārmaseyandi, பெ.(n.)

   திருமால் எடுத்த ஆமைத் தோற்றரவத்தை (கூர்மாவதாரத்தை);க் கொண்டாடுதற்குரிய திருநாள்; the sacred day on which visnu incarnated himself as tortoise, a day of festivity.

கூர்மச்சக்கரம்

கூர்மச்சக்கரம்ārmaccakkaram, பெ.(n.)

   ஒவியப்பா வகையுளொன்று (யாப்.வி.497);; a kind of {cittirakavi.}

     [கூர்மம் + சக்கரம். கூர்மம் = ஆமை.]

கூர்மண்டர்

கூர்மண்டர்ārmaṇṭar, பெ.(n.)

கூசுமாண்டர் பார்க்க;see {}.

     “பாரிடப் படையுடைக் கூர்மாண்டர்” (திருவினை.திருமணப்.82.);.

     [Skt.{} → த.கூர்மாண்டர்]

கூர்மதாசர்

 கூர்மதாசர்ārmatācar, பெ.(n.)

ஒரு திருமால் பக்தர்; a devotee of Tirumal (அபி.சிந்);.

     [கூர்மம் + தாசர்]

கூர்மத்தானம்

 கூர்மத்தானம்ārmattāṉam, பெ.(n.)

   சம்மணம் அல்லது கால்மேல் கால் போட்டு உட்காருகை; a posture with folded legs (சா.அக.);.

     [கூர்மமம் + தானம்.]

கூர்மத்துவாதசி

கூர்மத்துவாதசிārmattuvātaci, பெ.(n.)

ஆனி மாதத்துத் துவாதசியில் கடைபிடிக்கும்

   ஒரு நோன்பு; a fast on the 12th lunar day of the Tamil month Ani(செ.அக.);.

     [கூர்ம+ Skt, துவாதசி]

 கூர்மத்துவாதசிārmattuvātasi, பெ.(n.)

   ஆடவை (ஆனி); மாதத்து 12 ஆம் நாள் மேற்கொண்ட (துவாதசியில்); ஒரு நோம்பு (விரதம்);; a fast on the 12th lunar day of the month of {}.

த.வ. ஆடவைப் பன்னீரி.

கூர்மத்தோடு

 கூர்மத்தோடுārmattōṭu, பெ.(n.)

   ஆமையோடு; the shell of a turtle (சா.அக.);.

     [கூர்மம் + அத்து + ஒடு.]

கூர்மன்

 கூர்மன்ārmaṉ, பெ.(n.)

   பத்து வகையான காற்றுகளுள் இமைத்தல், விழித்தல்களைச் செய்யும் காற்று (பிங்.);; the vital air of the body which causes closing and opening of eyelids, one often type of airs (செ.அக.);.

     [கூர் – கூர்மன்.]

 கூர்மன்ārmaṉ, பெ.(n.)

   பத்து (தச); காற்றுகளுள் இமைத்தல், விழித்தல்களைச் செய்யும் காற்று (பிங்.);; the vital air of the body which causes closing and opening of eyelids, one of tasa-vayu.

த.வ. விழிப்புவளி.

கூர்மபற்பம்

 கூர்மபற்பம்ārmabaṟbam, பெ.(n.)

   ஆமையோட்டுச் சாம்பல் (இ.வ.);; calcinated medicinal powder of tortoise shell.

த.வ. ஆமையோட்டுப்பொடி

     [Skt.{}+bhasman → த.கூர்மபற்பம்.]

கூர்மபிரிட்டம்

 கூர்மபிரிட்டம்ārmabiriṭṭam, பெ.(n.)

   ஆமையின் முதுகோடு; shell of the tortoise.

கூர்மபுத்தி

 கூர்மபுத்திārmabutti, பெ.(n.)

   நுண்ணிய அறிவு; keen intellect (சா.அக.);.

     [கூர்மம் + புத்தி. புலம் → புந்தி → புத்தி.]

கூர்மபுராணம்

கூர்மபுராணம்ārmapurāṇam, பெ.(n.)

   பதினெண் தொன்ம (புராண);ங்களுள், திருமால் ஆமைத் தோற்றம் கொண்ட பொழுது கூறிய தொன்மம் (புராணம்);; a chief topma, narrated by tirumal, in his incarnation as tortoise, one of patinen-tonmam.

   2. வட்மொழியிலிருந்து அதிவீரராம பாண்டியன் செய்யுள் வடிவில் தமிழிலியற்றிய நூர்; a metrical translation of the above in Tamil by Adwirarama Pāņợiyan (செ.அக.);.

     [கூர்ம+ Skt. புராணம்]

கூர்மப்புராணம்

கூர்மப்புராணம்ārmappurāṇam, பெ.(n.)

   1. பதினெண் தொன்ம (புராணங்);களுள் திருமால் ஆமை (கூர்மா); தோற்றரவம் எடுத்தபொழுது அறிவுறுத்திய நல்லுரைகள்; a chief {} narrated by Visnu, in his incarnation as tortoise, one of patinen-{}.

   2. வட மொழியிலிருந்து அதிவீரராம பாண்டியன் செய்யுளுருவமாகத் தமிழிலியற்றிய நூல்; a metrical translation of the above in Tamil by {}-{}-{}.

     [Skt.{}+{} → த.கூர்மப் புராணம்.]

கூர்மமகோதரம்

 கூர்மமகோதரம்ārmamaātaram, பெ.(n.)

   காற்றுத் திரட்சியால் வயிற்றில் கட்டியைப்போல் வீக்கங் கண்டு, சோறு செல்லாமல் ஆமைபோல் வயிறு விம்மி இரைச்சலை உண்டாக்கும் ஒருவகை நோய்; a kind of abdominal dropry, swelling or enlargement of the abdomen resembling, the shape of a turtle (சா.அக.);.

கூர்மம் + மகோதரம். ஆமைவயிறு பார்க்க;See.{āmavayiru.]}

கூர்மமுனிமுறிப்பு

 கூர்மமுனிமுறிப்புārmamuṉimuṟippu, பெ.(n.)

   மாழைகளை (உலோகங்களை);ச் செய்வதற்கான கூர்மமுனி சொன்ன முறை; the method in the works of the sage Kurmarishi for alterning the virtues of metals for the purposes of purifying them (சா.அக.);.

     [கூர்மம் + முனி + முறிப்பு. கூர்மம் = நுண்ணறிவு.]

 கூர்மமுனிமுறிப்புārmamuṉimuṟippu, பெ.(n.)

மாழைகளை முறித்து தூய்மை (சுத்தி); செய்வதற்கான கூர்ம முனி (ரிஷி); சொன்ன பாகம்;’

 the method or principle laid down in the works of the sage {} for altering the virtues of metals for purposes of purifying them.

     [கூர்மமுனி + முறிப்பு.]

முறி → முறிப்பு.

கூர்மமூர்த்தி

 கூர்மமூர்த்திārmamūrtti, பெ.(n.)

   திருமாலின் தோற்றரவு (அவதாரம்);; incarmation of Tirumāl (அபி.சிந்.);.

     [கூர்ம+மூர்த்தி]

கூர்மம்

 கூர்மம்ārmam, பெ.(n.)

   ஆமை; tortoise.

மறுவ. ஆமை, யாமை

     [குல் (வளைதல், தாழ்தல், பின்வாங்குதல்); கூல் → கூர் → கூர்மம். (கால்களை உள்ளிழுத்துக் கொள்வது. ஒ.நோ. கூர்மிகை (பின்முனை வளைந்த வீணை);.]

கூர்மயோகம்

 கூர்மயோகம்ārmayōkam, பெ.(n.)

   ஒருவன் பிறக்குங் காலத்தில், அவனுக்கு உயர்ந்த நிலையைக் கொடுக்குமாறு கோள்கள் சேர்ந்திருக்கும் ஒரு ஒகம் (யோகம்); (சங்.அக.);; a peculiar conjunction of planets at the time of one’s birth indicative of great success in life (செ.அக.);.

     [கூர்ம + Skt. யோகம்]

 கூர்மயோகம்ārmayōkam, பெ.(n.)

   ஒருவன் பிறக்குங் காலத்து அவனுக்கு உயர்ந்த நிலையைக் கொடுக்குமாறு கோள்கள் நிலை சேர்ந்த ஒரு நல்லூழ் (யோகம்); (சங்.அக.);; a peculiar conjunction of planets at the time of one’s birth indicative of great success in life.

த.வ. நற்கோள்நிலை.

கூர்மரிசிமுறிப்பு

 கூர்மரிசிமுறிப்புārmarisimuṟippu, பெ.(n.)

கூர்மமுனிமுறிப்பு பார்க்க;see {}-{}.

கூர்மல்லி

 கூர்மல்லிārmalli, பெ.(n.)

   ஊசிமல்லிகை (சா.அக);; slender jasmine.

     [கூர் + மல்லி.]

கூர்மவளி

 கூர்மவளிārmavaḷi, பெ.(n.)

   மயிர்க் கூச்செறிப் பையும், விழி இமைப்பையும் உண்டாக்கும் பத்து வளிகளில் ஒன்று; one of the ten vital airs of the system causing the hairs stand in the ends, and winking of the eye lids (சா.அக.);.

மறுவ, கூர்மன்

     [கூர்மம் + வளி.]

கூர்மவாயு

 கூர்மவாயுārmavāyu, பெ.(n.)

கூர்மவளி பார்க்க;See. {kūrma-vaf}

     [கூர்மம் + வாயு.]

கூர்மவிருக்கை

 கூர்மவிருக்கைārmavirukkai, பெ.(n.)

   சம்மணம் அல்லது கால்மேல் கால் போட்டு உட்காருகை; a posture with folded legs (சா.அக.);.

     [கூர்மம் + இருக்கை.]

கூர்மாசனம்

 கூர்மாசனம்ārmācaṉam, பெ.(n.)

கூர்ம விருக்கை பார்க்க;See. {kūrma-v-irukkal}

     [கூர்மம் + ஆசனம்.]

கூர்மாண்டர்

கூர்மாண்டர்ārmāṇṭar, பெ.(n.)

   நிரய’ (நரக); உலகங்களுக்குத் தலைவர்; Lord of hells.

     “பாரிடப்படையுடைக் கூர்மாண்டர்” (திருவிளை,திருமணம்.82);.

     [கூர்+மாண்டர்]

கூர்மாதனம்

கூர்மாதனம்ārmātaṉam, பெ.(n.)

   1. கால் மடித்து உட்காருகை; squating on the floor with the legs crossed.

   2. உள் ளொடுக்கத்தின்போது (அனுஷ்டானாதி களுக்கு); பயன்படுத்துவதும், ஆமையின் வடிவமாக அமைந்ததுமான இருக்கை வகை; wooden seat in the form of a tortoise or with the figure of tortoise on it, used for

 meditation. “வில்வாதியினாற் செய்க….. கூர்மாதனம்”(சைவச.பொது,57); (செ.அக);.

     [கூர்மம்+ஆதனம்]

 கூர்மாதனம்ārmātaṉam, பெ.(n.)

   1. கால்மடித்து உட்காருகை; squatting on the floor with the legs crossed.

   2. (ஊழ்கத்தின் போது அமர்வதற்குப் பயன்படுத்தும்); ஆமையின் வடிவமைந்த இருக்கை (ஆசன); வகை; wooden seat in forms of a tortoise or with figure of tortoise on it, used for meditation.

     “வில் வாதியினாற் செய்க…….. கூர்மதானம் (சைவச.பொது.57);.

த.வ. பாதமடிப்பு இருக்கை.

     [Skt.{}+{} → த.கூர்மாதனம்.]

கூர்மாநந்தர்

 கூர்மாநந்தர்ārmānantar, பெ.(n.)

   ஒக பயிற்சியுடையவன்; follower of the yoga system of philosophy; adept in yogic practices (அபி.சிந்);.

கூர்மிகை

கூர்மிகைārmigai, பெ.(n.)

   வீணைவகை யுளொன்று (பரத.ஒழிபி.15);; a kind of lute.

     [கூர்மி → கூர்மிகை.]

கூர்முக்கோணம்

 கூர்முக்கோணம்ārmukāṇam, பெ.(n.)

   ஒவ்வொரு கோணமும் நேர்கோணத்துக்குக் குறைந்ததாயுள்ள முக்கோணம் (வின்.);; acuteangled triangle.

     [கூர் + முக்கோணம்.]

கூர்முள்

கூர்முள்ārmuḷ, பெ.(n.)

   குதிரை செலுத்துங் கருவி; spurs.

     “கூர்முட் பிடித்துத் தேர்மு னின்ற திசைமுகன்” (சிலப். 6:44,உரை.);.

ம. கூமுள்ளு (ஒரு மருந்துச் செடி);

     [கூர் + முள்.]

கூர்மை

கூர்மைārmai, பெ.(n.)

   1. படைக்கலன் முதலிய வற்றின் கூர்; sharpness, pointedness.

     “கூர்மையின் முல்லை யலைக்கு மெயிற்றாய்” (நாலடி, 287);.

   2. நுண்மை (திவா.);; keenness of sight, acuteness, intellect, penetration, subtlety சிறப்பு (திருக்கோ. 346,உரை.);;

 excellence, superiority.

   4. கல்லுப்பு (சங்.அக.);; rock-sait.

   5. வெடியுப்பு (சங்.அக.);; saltpetre.

ம. கூர்மை

     [கூர் → கூர்மை.]

கூர்மைக்கரிவாள்

 கூர்மைக்கரிவாள்ārmaikkarivāḷ, பெ.(n.)

   வழலை (சவர்க்காரம்); (வின்.);; soap.

     [கூர்மை + கரிவாள் (கரிப்புள்ளது.);]

கூர்மைச்சி

 கூர்மைச்சிārmaicci, பெ.(n.)

   குதிரைக் காதைப் போன்ற இலையுடைய ஒரு கள்ளி; a kind of spurge tree, the leaf of which resembles the horse’s ear (சா.அக.);.

     [கூர்மை → கூர்மைச்சி.]

கூர்மைநாரி

 கூர்மைநாரிārmaināri, பெ.(n.)

   கெந்திலவணம் என்னும் உப்புவகை; a kind of salt (சா.அக.);.

     [கூர்மை + நாரி.]

கூர்மைபார்

கூர்மைபார்1ārmaipārttal,    14 செ.கு.வி.(v.i.)

   படைக்கலனின் கூர்மையைச் சரிபார்த்தல்; to try the sharpness of an instrument.

மறுவ, கூர்பார்

     [கூர்மை + பார்.]

கூர்மைப்பார்வை

 கூர்மைப்பார்வைārmaippārvai, பெ.(n.)

   நுட்பமான பார்வை; sharp sight.

     [கூர்மை + பார்வை.]

கூர்மைமணல்

கூர்மைமணல்ārmaimaṇal, பெ.(n.)

   வெள்ளி மணல்; white sand or silver ore.

   2. நுண்ணிய மணல்; fine sand.

மறுவ, நுண்மணல்

     [கூர் + மணல்.]

கூர்மையார்

கூர்மையார்2ārmaiyārttal,    4 செ.குன்றாவி. (v.t.)

   ஒருவன் திறமையைத் தெரிவுசெய்தல்; to test one’s acuteness of intellector ability.

மறுவ, கூர்பார்

     [கூர்மை + பார்.]

கூர்மையாளன்

 கூர்மையாளன்ārmaiyāḷaṉ, பெ.(n.)

சவர்க்காரம்; soap (சா.அக.);.

     [கூர்மை+ஆளன்.]

கூர்மையில்லோன்

 கூர்மையில்லோன்ārmaiyillōṉ, பெ.(n.)

   அறிவற்றவன், மந்தன் (பிங்.);; dullard, stupid person.

     [கூர்மை + இல்லோன்.]

கூர்மையுப்பு

 கூர்மையுப்புārmaiyuppu, பெ.(n.)

   கல்லுப்பு; salt (சா.அக.);.

     [கூர்மை + உப்பு.]

கூர்வலகம்

 கூர்வலகம்ārvalagam, பெ.(n.)

   நாணல் (சா.அக.);; kaus, a large and coarse grass.

     [கூர் + அலகு + அம்.]

கூர்வாங்கு-தல்

 கூர்வாங்கு-தல்ārvāṅgudal, செ.குன்றாவி. (v.t.)

   படைக்கலன் முதலியவற்றைக் கூர்மையாக்குதல் (இ.வ.);; to sharpen the edge, whet.

     [கூர் + வாங்கு.]

கூர்வாயிரும்பு

 கூர்வாயிரும்புārvāyirumbu, பெ.(n.)

   அரிவாள் மணை (பிங்.);; knife blade fastened to a piece of wood for cutting vegetables.

மறுவ, அரிவாள்மனை

     [கூர் + வாய் + இரும்பு.]

கூர்வாலி

 கூர்வாலிārvāli, பெ.(n.)

   செம்பருந்து; red hawk (சா.அக.);.

     [கூர் + வாலி.]

கூர்வை

 கூர்வைārvai, பெ.(n.)

   கப்பலின் குறுக்குக்கட்டை (கடற்.);; transom, beam across the stern post of a ship.

     [கூர் + கூர்வை.]

கூறடை-த்தல்

கூறடை-த்தல்āṟaḍaittal,    4 செ.குன்றாவி.(v.i.)

   பகுதியாகப் பிரித்தல்; to divide into lots.

     “கூறடைத்த பரிசே” (S.I.I.I.65);.

     [கூறு + அடை-.]

கூறம்

கூறம்1āṟam, பெ.(n.)

   1.பாகல்; balsam pear – Momordica Charantia.

   2. நவாச்சாரம்; chloride of ammonia.

   3. சுரை; bottle gourd – Cucurbita lagenaria.

   4. கொடிப்பாலை; cotton milk plant – Dregea volubilis; twiningswallow wort – Ascepias volubilis.

   5. ஊசிப் பாலை; needleleaved swallow wort – Oxystelina esculentum.

   6.வெட்பாலை; conessi or tellicherry bark – Nerium anti – dysentericum (சா.அக.);.

 கூறம்2āṟam, பெ.(n.)

   ஆமை; tortoise; turtle (சா.அக.);.

     [குறு – கூறம்]

கூறல்

கூறல்1āṟal, பெ.(n.)

   1. நாகபாடானம்; a kind of prepared arsenic,

   2. இறகு; feather (சா.அக.);.

     [குறு – குறல் – கூறல்]

 கூறல்2āṟal,    பெ.(n.) ஆமை; tortoise; turtle (சா.அக.).

     [குறு+கூறல்]

கூறாகிவேம்பு

 கூறாகிவேம்புāṟākivēmpu, பெ.(n.)

நில வேம்பு

 ground neem – Justiela Paniculata (சா.அக.);.

     [கூறாகி+வேம்பு]

கூறாப்பு

 கூறாப்புāṟāppu, பெ.(n.)

   கவிந்த மேகம் (திருநெல்.);; gathering clouds, cloudy sky.

     [குதுப்பு → குறுப்பு → கூறாப்பு (கொ.வ.);.]

கூறி

கூறிāṟi, பெ.(n.)

   கறுப்பு மட்டிவாய் மீன்; black rockcod, silvery-grey attaining 30 in length.

     [குதுப்பு = திரட்சி, கூடம், குதுப்பு → குறுப்பு → கூறாப்பு (கொ.வ.);.]

கூறிடு-தல்

கூறிடு-தல்āṟiḍudal,    20 செ.குன்றாவி (v.t.)

   1. துண்டாக்குதல்; to cut into pieces or slices, bisect, divide.

   2. பங்கிடுதல்; to distribute in portions.

     “மலைந்தார்க்கு மொற்றாய்ந் துரைத்தார்க்கும்…. புலவர்க்கும்….. கூறிட்டார் கொண்ட நிரை” (பு.வெ.1, 14);.

     [கூறு + இடு.]

கூறிட்டுமொழிதல்

கூறிட்டுமொழிதல்āṟiṭṭumoḻidal, பெ.(n.)

   வினாக் களுக்கு ஏற்பப் பகுத்துக் கூறும் விடை; answering questions seriatim.

     “கூறிட்டு மொழிதலென விளம்புவர்” (மணிமே.30:243);.

     [கூறு + இட்டு + மொழிதல்.]

கூறியதுகூறல்

கூறியதுகூறல்āṟiyaduāṟal, பெ.(n.)

   முன் மொழிந்ததனையே பயனின்றிப் பின்னும் மொழிவதாகிய நூற்குற்றம்; tautology, a defect in literary composition, one of ten {“nűr-kurram.}

     “கூறியது கூறன் மாறுகொளக் கூறல்” (தொ.பொருள்.664);.

     [கூறியது + கூறல்.]

கூறியான்

 கூறியான்āṟiyāṉ, பெ.(n.)

   பல்லக்கி லேறிச் செல்லும் செல்வனது சிறப்புப் பெயர்களை யெடுத்துக் கூறுவோனாகிய சிவியார் பிரிவினரின் தலைவன் (யாழ்ப்.);; headman of the {Civiyar} or palanguin bearers proclaiming the titles of the person seated in it.

     [கூறு → கூறியான் (கூறுபவன்);.]

கூறு

கூறு1āṟudal,    5 செ.குன்றாவி.(v.t.)

   1. சொல்லுதல்; to speak, say, declare, assert.

     “கூறிய முறையின்” (தொல்.சொல்70);.

   2. விலை கூறுதல்; to cry out the price, as an auctioner.

   3. உரத்த குரலில் அறிவித்தல் (வின்.);; to cry aloud. promulgate, proclaim.

 Fin.kerota;

 Es.kordus Hung. kerd,keres;

 Mong. gere;

 Jap, kuringoto(repeat);.

     [குல் → கூல் → கூறு. குல் = பொருத்து (பொருத்தமாய் சொல்);.]

 கூறு2āṟudal,    5 செ.குன்றாவி.(v.t.)

   கூறு செய்தல்; to divide.

     “இது பண்டாரங் கூறுமாறு கூறிற்று” (குறள்.386,மணக்.);.

     [குல் → கூல் → கூறு. குல் = குத்து, வெட்டு, பங்கிடு.]

 கூறு3āṟu, பெ.(n.)

   1. கூறுபாடு; section, division, classification.

     “கூறிட்டு மொழிதல்” (மணிமே.30, 236);.

   2. பங்கு; part, portion, lot, share.

     “காற்கூறு காய்நீரால்” (பதார்த்த.78);.

   3. பிளவுபட்ட துண்டு; broken pieces of anything.

     “நெஞ்சம் கூறாகி யோடாத இத்துணையே”

   4. பாதி (பிங்.);; half.

   5. தன்மை; properties, as of heat, effects, characteristic symptoms, as of disease.

நோயின் கூறு அறிந்து மருந்து கொடு (உ.வ.);.

     [குல் → கூல் → கூறு. குல் = குத்து. வெட்டு, பங்கிடு. பிரி.]

 கூறு4āṟu, பெ.(n.)

   எள் (மலை.);; sesame.

     [குல் → கூல் → கூறு.]

கூறுகம்

கூறுகம்āṟukam, பெ..(n.)

 srsit; a kind of gingelly seed (சா.அக.);.

 கூறுகம்āṟugam, பெ.(n.)

   எள்; sesame.

     [கூறு3 → கூறுகம்.]

கூறுகாக

 கூறுகாகāṟukāka, பெ.(n.)

   பங்குத்தொகை (இ.வ.);; share-money.

     [கூறு → காசு.]

கூறுகிள்ளல்

 கூறுகிள்ளல்āṟugiḷḷal, பெ.(n.)

   குழி தோண்டிக் கால்நடும்போது கடப்பாரையின் மறுமுனையால் கம்பைச் சுற்றியுள்ள மண்ணைக் கிட்டித்தல் (நெல்லை.);; ramming the earth around a pole erected in the earth.

மறுவ. கூறுகுத்துதல்

     [கூறு + கிள்ளல். கிள்ளல் = கிட்டித்தல், கெட்டிப் படுத்துதல்.]

கூறுகுத்து-தல்

கூறுகுத்து-தல்āṟuguddudal,    5.செ.கு.வி. (v.i.)

   நட்ட காலைச் சுற்றியுள்ள மண்ணைக் குத்தி வலுப்படுத்துதல்; to tam the earth around a pole, erected in the earth.

     [கூறு + குத்து-.]

கூறுகெடல்

 கூறுகெடல்āṟugeḍal, பெ.(n.)

   கூறுகெட்டுப் போதல்; mental, disorder due to old age (சா.அக.);.

     [குல் → கூல் → கூறு + கெடல்.]

கூறுகெட்டுப்போ-தல்

கூறுகெட்டுப்போ-தல்āṟugeṭṭuppōtal,    8 செ.கு.வி. (v.i.)

   முதுமை காரணமாக மனத் தடுமாற்றம் ஏற்படல்; mental disorder coming on in aged person.

     [கூறு + கெட்டு + போ-.]

கூறுகொள்(ளு)

கூறுகொள்(ளு)1āṟugoḷḷudal,    10 செ.குன்றாவி. (v.t.)

   வாயில் திணித்துக் கொள்ளுதல்; to stuft, cram.

     “குழந்தை மண்ணைக் கூறு கொள்ளு கிறது” (வின்.);.

     [கூறு + கொள்.]

 கூறுகொள்(ளு)2āṟugoḷḷudal,    10 செ.குன்றாவி (v.t.)

   தனதுடைமையாக்கிக் கொள்ளுதல்; to appropriate.

     “கூனி மருந்திட்டுக் கூறு கொண்டாள்” (விறலிவிடு.883);.

     [கூறு + கொள்-.]

கூறுசட்டம்

 கூறுசட்டம்āṟusaṭṭam, பெ.(n.)

   நல்ல மாதுளை; sweet pomagranate (சா.அக.);.

     [கூறு + சட்டம்.]

கூறுசீட்டு

 கூறுசீட்டுāṟucīṭṭu, பெ.(n.)

   பிரிவினை ஆவணம் (இ.வ.);; deed of partition.

மறுவ. பாகக்பிரிவினை ஆவணம்

     [கூறு + சீட்டு. கூறு = பங்கு, பாகம்.]

கூறுசெய்

கூறுசெய்1āṟuseytal,    1 செ.குன்றாவி. (v.t.)

   1. துண்டாக்குதல்; cut in pieces, divide.

   2. பங்கிடுதல்; to distribute in portions or small quantities.

     [கூறு + செய்_.]

 கூறுசெய்2āṟuseytal,    1செ.கு.வி.(v.i.)

   மணியம் பண்ணுதல்; to exercise authority as in the assessment of taxes, etc.,

     “கூறு செய்த ஊரிலே குறும்பு செய்து” (அஷ்டாதச.71);.

     [கூறு + செய்-.]

கூறுசெய்வான்

கூறுசெய்வான்āṟuseyvāṉ, பெ.(n.)

   மணியகாரன்; lit., one who apportions. village revenue officer.

     “ராஜாக்கள் ஊர்தோறுங் கூறு செய்வார்களை வைக்குமா போலே” (ஈடு.5:2,8);.

     [கூறு + செய்வான். தனக்குரிய ஊர்களில் நிலவரி தண்டுபவன்.]

கூறுச்சீட்டு

 கூறுச்சீட்டுāṟuccīṭṭu, பெ.(n.)

   பங்கு ஆவணம் (பாகப் பிரிவினைப்பத்திரம்);; deed of partition (செ.அக);.

     [கூறு+சிட்டு]

கூறுபடியான ஊர்கள்

கூறுபடியான ஊர்கள்āṟubaḍiyāṉaūrkaḷ, பெ.(n.)

   பாடி காவலுக்குரியதான பங்குப்படி பிரிக்கப்பட்ட ஊர்கள்; apportionment of villages for {kaval.}

     “குலோத்துங்கச் சோழகச் சிராயனேன் – என் கூறுபடியான ஊர்களில் இத்தேவர் தேவதானம்” (தெ.கல்.தொ.8, கல் 319); கல்.க.சொ.அ.மு.);.

     [கூறு + படி + ஆன + ஊர்கள்.]

கூறுபடு_தல்

கூறுபடு_தல்āṟubaḍudal,    20 செ.கு.வி.(v.i.)

   பிரிவுபடுதல்; to be divided.

     [கூறு + படு-.]

கூறுபடுத்து_தல்

கூறுபடுத்து_தல்āṟubaḍuddudal,    4 செ.குன்றாவி. (v.t.)

   பிரிவு செய்தல்; to divide, analyse, classify.

     [கூறு + படுத்து.]

கூறுபாடல்

கூறுபாடல்āṟupāṭal, பெ.(n.)

   வாய்ப்பாட்டு; vocal music

     “கூறுபாடலுங் குழலின் பாடலும்” (கம்பரா.நாட்டுப்.56);.

மறுவ. வாய்ப்பாட்டு, குரலிசை

     [கூறு + பாடல்.]

கூறுபாடு

கூறுபாடுāṟupāṭu, பெ.(n.)

   1.பாகுபாடு; division, sub division, classification.

   2. பகுதி (திவா.);; portion, section.

   3. தன்மை; quality, nature. நோயின்

கூறுபாடு தெரிந்து மருந்து கொடுக்க.

     [கூறு + பாடு.]

கூறுபாட்டு வேதியல்

 கூறுபாட்டு வேதியல்āṟupāṭṭuvētiyal, பெ.(n.)

   பொருள்களின் இயற்பியல் வேதியல் பகுதிகளைப் பற்றிக் கூறும் நூல்; analytical chemistry.

     [கூறுபாடு → கூறுபாட்டு + இதனியம்.]

கூறுவசம்

 கூறுவசம்āṟuvasam, பெ.(n.)

   ஓமம்; Indian dill seed.

     [கூறு + வசம்.]

கூறுவிக்குறு

கூறுவிக்குறு1āṟuvikkuṟudal,    20 செ.குன்றாவி (v.t.)

   பிறரைக் கொண்டு சொல்வித்தல்; to make another speak on one’s behalf.

     “கொத்தவிழ் கோதையாற் கூறுவிக்குற்றது” (திருக்கோ.263,கொளு.);.

     [கூறு → கூறுவிக்கு.]

கூறை

கூறைāṟai, பெ.(n.)

   1. ஆடை; cloth, cloths, garment

     “அத்திட்ட கூறையரைச் சுற்றி” (நாலடி, 281);.

   2. கூறைப்புடவை பார்க்க;See. {kirappupaiya}

     [கூறை = ஊர்ப்பெயர்.அவ்வூரில் நெய்த புடவை. கூறை நாடு எனக் கூறுவது மரபு.]

கூறைகோட்படு-தல்

கூறைகோட்படு-தல்āṟaiāḍpaḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   ஆடையைப் பறிகொடுத்தல்; to be

 robbed of one’s cloths.

     “இக்காட்டிற் போகிற் கூறை கோட்பட்டான்” (நன்.383, மயிலை.);.

     [கூறை + கோள் + படு.]

கூறைநாடு

 கூறைநாடுāṟaināṭu, பெ.(n.)

   மயிலாடுதுறைக்கு அருகில் சேலைகள் மிகுதியாக நெய்யப்படும் ஓர் ஊர்; a village near {Mayiladutural}

 noted for the manufacture of sarees.

     [கூறை + நாடு.]

கூறைப்பாய்

 கூறைப்பாய்āṟaippāy, பெ.(n.)

   தோணிப்பாய் (வின்.);; canvas sail.

     [கூறை + பாய்.]

கூறைப்புடவை

 கூறைப்புடவைāṟaippuḍavai, பெ.(n.)

   தாலி கட்டும் நேரத்திற்கு முன் மணமகளுக்கு மணமகன் வீட்டார் கொடுக்கும் சேலை; clothe presented to the bride by the bridegrooms’s parents and worn by her before { taff} } is tied.

     [கூறை + புடவை. கூறை = புத்தாடை, துணி, புதுப்புடவை]

கூறைப்பை

கூறைப்பைāṟaippai, பெ.(n.)

   1. துணியாற்செய்த

   பணப்பை; purse, made of cloth.

   2. சேலைகள் வைக்கும் பை; bag for keeping sarees.

     “தானே கூறைப்பையும் சுமந்துகொண்டுபோய்” (ஈடு.4:1,2);.

     [கூறை + பை.]

கூறையுடுத்தல்

 கூறையுடுத்தல்āṟaiyuḍuttal, பெ.(n.)

   நாத்தூணார் மணமகட்குக் கூறைப்புடைவை உடுத்துகை; dressing bride with the wedding cloth by the bridegroom’s sister.

     [கூறை + உடுத்து-.]

கூற்கேவு

 கூற்கேவுāṟāvu, பெ.(n.)

கடுகு,

 mustard (சா.அக.);.

     [கூற்+கேவு]

 கூற்கேவுāṟāvu, பெ.(n.)

   கடுகு; mustard (சா.அக.);.

     [கூழ் → கூல் + கு + அவி. (அவி = தாளிப்பதற்கு உதவும் கடுகு);. கூற்கவி → கூற்கேவு (கொ.வ.);.]

கூற்றங்குமரனார்

கூற்றங்குமரனார்āṟṟaṅkumaraṉār, பெ.(n.)

   சங்கப் புலவர்களுள் ஒருவர்; a poet, belong to Šangamage.

முகம்புகு கிளவி பாடியவரில் ஒருவர். நற்றிணை 244ஆம் பாடலில் குறிஞ்சித் திணையைப் பாடியுள்ளார் (அபி.சிந்);.

கூற்றன்

கூற்றன்āṟṟaṉ, பெ.(n.)

   எமன்; the god of death.

     “வெட்டுங் கடாமிசைத் தோன்றும் வெங்கூற்றன்” (கந்தரலங் .65);.

     [கூறு → கூற்று → கூற்றன். உடலையும் உயிரையும் கூறுபடுத்துபவன் கூற்றன்.]

கூற்றன் கொலையோன்

 கூற்றன் கொலையோன்āṟṟaṉkolaiyōṉ, பெ.(n.)

   துரிசு (சங்.அக.);; blue vitriol.

     [கூற்றன் + (கொலையான்); கொலையோன்.]

கூற்றன்வாய்

கூற்றன்வாய்āṟṟaṉvāy, பெ.(n.)

   தலைமதகு; main sluice.

     “கூற்றன்வாய்மீதே உவன்றி செய்து நீர்கொண்டு போந்து” (S.I.I.II.521);.

     [கூற்றன் + வாய்.]

கூற்றம்

கூற்றம்1āṟṟam, பெ.(n.)

   1. பகுதி; species, class.

     “கூற்றங்கள் பலவுந் தொக்க கூற்றத்தில்” (சீவக. 1143);.

   2. உயிரை உடலினின்று பிரிப்பவன்; lit., one who separates soul from body.

   3. எமன்; Yama.

     “மாற்றருங் கூற்றம்” (தொல். பொருள். 79);.

   3. அழிவுண்டாக்குவது; that which ruins, destroys.

     “அல்லவை செய்வார்க் கறங்கூற்றம்”(நான்மணி. 84);.

   4. பழங்காலத்தில் நாட்டின் ஒரு பகுதி; division

 of a country, in ancient times.

     “மிழலைக்

கூற்றத்துடனே … முத்தூற்றுக் கூற்றத்தைக் கொண்ட” (புநறா. 24,உரை);.

     [கூறு → கூற்று → கூற்றம். கூறு = பங்கு.]

 கூற்றம்2āṟṟam, பெ.(n.)

   சொல்; word.

     “அறைகின்ற கூற்றமு மொன்றே” (திருவிளை. பழியஞ்.27);.

     [கூறு = பேசு. கூறு → கூற்றம்.]

கூற்றரிசி

 கூற்றரிசிāṟṟarisi, பெ.(n.)

   குத்தலரிசி; pounded rice.

     “எற்சோறு கூ ற்றரிசி” (insc.);.

     [குற்று + அரிசி – குற்றரிசி → கூற்றரிசி.]

கூற்றிலக்கை

 கூற்றிலக்கைāṟṟilakkai, பெ.(n.)

   ஊர்ப் பொது விடத்தில் செயல் நிகழ்த்துவதற்குரியதாக இடங் கொள்ளுகைக்குச் செலுத்தும் காணிக்கை வரி; a tax paid for conducting function at the common space of a village.

     [கூற்று + இலக்கை.]

கூற்று

கூற்று1āṟṟu, பெ.(n.)

   1. கூறுகை; utterance, declaration, proclamation.

   2. மொழி, சொல்; word, speech.

     “கூற்றுக் கிளியே” (ஞானா.பாயி.1.8);.

   3. கூறத்தக்கது; that which is fit to be spoken.

     “திருநாமங் கூறுவதே யாவர்க்குங் கூற்று” (திவ்.இயற்.நான்.49);.

     [கூறு → கூற்று.]

 கூற்று2āṟṟu, பெ.(n.)

   1. எமன்; Yama, the god of death

     “கூற்றுடன்று மேல்வரினும்” (குறள், 765);.

   2. காலன் (பிங்.);;{Kāla,} the chief attendant of Yama.

மறுவ, கூற்றுவன் கூற்றம்

     [கூறு → கூற்று.]

கூற்றுதைத்தோன்

கூற்றுதைத்தோன்āṟṟudaiddōṉ, பெ.(n.)

   சிவன் (எமனைக் காலால் உதைத்தவன்);; lit. one who trampled Yama under foot, Siva.

     “கூற்றுதைத் தார் நெல்வேலி குறுகினாரே” (பெரியபு. திருஞான.886);.

     [கூற்று + உதைத்தோன்.]

கூற்றுநெல்லு

கூற்றுநெல்லுāṟṟunellu, பெ.(n.)

   தவசக் கடமைகளுளொன்று (S.I.V.196);; a tax in grain.

     [கூறு → கூற்று + நெல்லு.]

கூற்றுவநாயனார்

கூற்றுவநாயனார்āṟṟuvanāyaṉār, பெ.(n.)

   அறுபத்து மூவர் நாயன்மாருள் ஒருவர் (பெரியபு.);; a Cononized Saiva Saint. one of 63.

     [கூற்றுவன் + நாயனார்.]

கூற்றுவன்

கூற்றுவன்āṟṟuvaṉ, பெ.(n.)

   எமன்; Yama, the god of death.

     “இவன் வெங்கூற்றுவன்” (நைடத. நளன்றூது.16);.

மறுவ. கூற்று கூற்றம்.

     [கூறு → கூற்று → கூற்றுவன்.]

 கூற்றுவன்āṟṟuvaṉ,  as the lord of the south.

     “தென்புலக்கோன் பொறி யொற்றி” (திவ். பெரியாழ்.5,2,2);.

     [தென்புலம் + கோன்]

கூற்றுவன்தங்கைச்சி

 கூற்றுவன்தங்கைச்சிāṟṟuvaṉtaṅgaicci, பெ.(n.)

சிறுகீரை (சங்.அக.); amaranth.

     [கூற்றுவன் + (தங்கை); தங்கைச்சி.]

கூலகம்

 கூலகம்ālagam, பெ.(n.)

   கறையான் புற்று; ant hill (சா.அக.);.

     [குல் → கூல் → கூலகம்.]

கூலக்கடை

கூலக்கடைālakkaḍai, பெ.(n.)

   பலதவசக் கடை (சிலப்.14,211,உரை.);; grain shop.

     [கூலம் + கடை.]

இன்று கூலக்கடை விதியில் பொன் வாங்கலாம்(நெ.வழ.);

கூலங்கசமாய்

 கூலங்கசமாய்ālaṅgasamāy,    வி.எ.(adv.) (இரண்டுகரையும் உராய்ந்து கொண்டு) முழுவதும்; completly, washing off both the banks.

த.வ. இருகரை புரளி

     [கூலங்கசம் + ஆய்.]

     [Skt.{} → த.கூலங்கசம்.]

     ‘ஆய்’ – வி.எ.ஈறு.

கூலசிங்கி

 கூலசிங்கிālaciṅki, பெ.(n.)

   சிறுவழுதலை; Indian night shade – Solanum indicum (சா.அக.);.

     [கூலி+சிங்கி]

கூலத்தாடிகம்

 கூலத்தாடிகம்ālattāṭigam, பெ.(n.)

   நாறு கரந்தை; sweet basil (சா.அக.);.

     [கூலம் + தாளிகம் – கூலத்தாளிகம் → கூலத்தாடிகம்.]

கூலபிந்து

 கூலபிந்துālapintu, பெ.(n.)

   மரவகை (சங்.அக.);; strychnine-tree – Strychnos nux-vomica (செ.அக.);.

 கூலபிந்துālabindu, பெ.(n.)

   எட்டி (சங்.அக.);; strychnine-tree.

கூலம்

கூலம்1ālam, பெ.(n.)

   மூங்கில் நெல், மணல் நெல் (ஐவனம்);, நெல், புல், வரகு, தினை, சாமை, இறுங்கு (சோளம்);, துவரை, இறகி, எள்ளு, கொள்ளு, பயறு, உழுந்து, அவரை, கம்பு, காராமணி, குதிரைவால் முதலிய பதினெண்வகைப் பண்டம்; grains specially of 18 kinds, viz., nel, pul, varagu, {tinai sāmai irungu, tuvaraiiragiellu, kollu, payaru,ulundu, avarai kaợalai,} moccai

     “கூலங்குவித்த கூல விதியும்” (சிலப்.14:211);.

 Fin. {kylva;

   } Karel, kulva, Es, kulvata; Hung. koles (millet.);

     [குல் → கூல் (நீட்சி, கூரான கதிர்); → கூலம்.]

 கூலம்2ālam, பெ.(n.)

   சோறு, உணவு; boiled rice.

 கூலம்3ālam, பெ.(n.)

   கடைத்தெரு; street having shops and stalls on either side, bazaar street

     “விளக்கொலி பரந்த வெறிகமழ் கூலத்து” (பெருங். உஞ்சைக் 33:82);.

     [கூல் → கூலம். கூலம் விற்கும் இடம், கடைத்தெரு.]

 கூலம்4ālam, பெ.(n.)

   பண்ணிகாரம் (பிங்.);; confectionery.

     [கூல் → கூலம்.]

 கூலம்5ālam, பெ.(n.)

   பாகல் (திவா.);; balsam pear.

     [கூல் → கூலம்.]

 கூலம்6ālam, பெ.(n.)

   1. நீர்க்கரை (திவா.);; bank of a river or tank, seashore.

   2. வரம்பு (பிங்.);; ridge in a paddy field.

   3. முறை; regulation, rule.

     “கூல நீங்கிய விராக்கதப் பூசுரர்” (கம்பரா.பிரமாத்.164);.

     [குல் → கூல் → கூலம். கூல் = நீட்சி.]

 கூலம்7ālam, பெ.(n.)

   1. மாடு, ஆன் (பசு); (பிங்.);; cow.

   2. மரை (வின்.);; elk.

   3. மான்; deer.

     [கூழ் → கூழ்ம் → கூலம் (புல் மேய்வது);. கூழ் = பயிர்வகை, புல்வகை.]

 கூலம்8ālam, பெ.(n.)

   நெல், எள்ளு, துவரை முதலியவற்றிற்கு விதிக்கும் வரி (S.I.I.I.157);; a tax on grains and pulses.

     [குல் → கூல் → கூலம்.]

 கூலம்9ālam, பெ.(n.)

   1. விலங்கின் வால்; tail of animals in common.

   2. மந்தி; a female monkey.

   3. செங்குரங்கு; red faced monkey.

   4. முசு; male monkey (சா.அக.);.

     [கூல் (நீட்சி, வால்); → கூலம்.]

கூலவாணிகன் சாத்தனார்

 கூலவாணிகன் சாத்தனார்ālavāṇigaṉcāttaṉār, பெ.(n.)

   கூலவாணிகஞ் செய்தவரும் மணிமேகலையை இயற்றியவருமான கழகப்புலவர்; the trade-poet who {wrote-Manimégalai. Külavānigam} means one who trades inprains.

     [கூலம் + வாணிகன் + சாத்தன் + ஆர்.]

கூலவிந்து

 கூலவிந்துālavindu, பெ.(n.)

   காஞ்சிரை; nux vomica (சா.அக.);.

     [கூலம் + விந்து.]

கூலி

கூலி1āli, பெ.(n.)

   1. வேலைக்குப் பெறும் ஊதியம்; wages, pay.

     “முயற்சி மெய்வருத்தக் கூலிதரும்” (குறள்,619);.

   2. வாடகை (வின்.);; fare, hire, freight.

தெ.,து. கூலி

     [கூலம் → கூலி.]

உடலுழைப்புத் தொழிலாளர் தம் உழைப்புக்கு ஈடாகத் தவசமாக (கூலமாக);ப் பெற்று வந்த ஊதியம் நாளடைவில் நாணயமாகப் பெறும் ஊதியத்தையும் குறித்தது.

 கூலி2āli, பெ.(n.)

   கூலிக்காரன்; worker on daily wage.

ம., க.தெ.,து.பர்.கோண். கூலி

     [கூலம் – கூலி. கூலமாக ஊதியம் பெறுபவன்.]

கூலிக்காரன்

 கூலிக்காரன்ālikkāraṉ, பெ.(n.)

   கூலிக்காக வேலை செய்பவன்; cooly, day-labourer.

   மறுவ. கூலியாள் ம. கூலிக்காரன்;   க. கூலிகார;து.

   கூலிதாயெ;   கோத.கூலிகார்ன்;பட கூலிகார

     [கூலி + காரன்.]

கூலிக்குமாரடி-த்தல்

கூலிக்குமாரடி-த்தல்ālikkumāraḍittal,    4 செ.கு.வி. (v.i.)

   மனமின்றித் தொழில் செய்தல் (கொ.வ.);; lit., to beat the breasts for hire at a funeral, to work insincerely.

     [கூலி + கு + மார் + அடி.]

தொடர்பில்லாத பிணத்தருகில் கூலிப்பணத்திற்காக மாரடித்து ஒப்பாளி வைத்து அழும் மகளிர் செயல் போன்ற போலித் தொழில்.

கூலிச்சேவகன்

கூலிச்சேவகன்āliccēvagaṉ, பெ.(n.)

   1. கூலிப் படையாளன் (M.E.R.262/195);; mercenary soldeir.

   2. கூலிக்கு வேலை செய்வோன் (திவ். அமலனாதி.5.வியா.ப.68);; hired labourer.

     [கூலி + சேவகன்.]

கூலிப்படை

கூலிப்படைālippaṭai, பெ.(n.)

   பணத்திற் காக அடிதடி, கொலை முதலியன செய்யுமோர் கூட்டத்தினர்; mercenary force.

     [கூலி+படை]

 கூலிப்படைālippaḍai, பெ.(n.)

   1. கூலிக்கு அமர்த்தும் சேனை (குறள்,762,உரை.);; mercenary.

   2. கூலிக்காக அமர்த்தப்படும் அடியாள்கள்; men employed to attack the enemy.

     [கூலி + படை.]

கூலிப்பட்டாளம்

 கூலிப்பட்டாளம்ālippaṭṭāḷam, பெ.(n.)

கூலிப்படை பார்க்க; see ktilip-padai [கூலி+பட்டாளம்]

கூலிப்பாடு

 கூலிப்பாடுālippāṭu, பெ.(n.)

கூலிப்பிழைப்பு பார்க்க;See. {kū/Ho-pilappu.}

     [கூலி + பாடு. பாடு = உழைப்பு.]

கூலிப்பிழைப்பு

 கூலிப்பிழைப்புālippiḻaippu, பெ.(n.)

   அற்றைக் கூலி பெற்று நடத்தும் வாழ்க்கை (வின்.);; life of a hired labourer, making a living by day-labour.

     [கூலி + பிழைப்பு.]

கூலியாள்

கூலியாள்āliyāḷ, பெ.(n.)

   கூலிக்காரன்; hired labourer cooly.

     “கூலியாளாய்வன் கரை யடைப்பா ரில்லை” (திவருவாத.பு.மண்சுமந்த.28);.

மறுவ. கூலியாள்

     [கூலி + ஆள்.]

கூல்

கூல்āl, பெ.(n.)

   1. கூர்மை; sharpness.

   2. நீட்சி; length.

     [குல் → கூல்]

கூல்(லு)-தல்

கூல்(லு)-தல்ālludal,    5 செ.கு.வி.(v.i.)

   1. அழிதல்; to ruin, to destroy.

   2. இடிந்து விழுதல்; to fall down.

க., தெ. கூலு

     [குல் → கூல்]

கூளன்

கூளன்āḷaṉ, பெ.(n.)

   பயனற்றவன்; worthless, useless person

     “ஊனடி பேணாக் கூளன்” (திருப்பு.109);.

     [உள் → குள் → கூள் → கூளன்.]

கூளப்படை

கூளப்படைāḷappaḍai, பெ.(n.)

   பலவகையினர் கலந்த கூட்டுப்படை (ஈடு:6:6,1,அரும்);; army constituted of various classes of persons.

     [குள் → கூள் → கூளம் + படை.]

கூளம்

கூளம்āḷam, பெ.(n.)

   1. சண்டு; broken pieces of straw, of hemp chaff.

   2. திப்பி (யாழ்.);; sediment, lees, dregs, chips.

{Chin. ku.}

     [குள → கூள் → கூளம்(கூடுவது அல்லது திரள்வது);.]

கூளி

கூளி1āḷi, பெ.(n.)

   1. கூட்டம் (பிங்.);; company, multitude.

   2. குடும்பம் (பிங்.);; family.

   3. படைத் தலைவன் (சூடா.);; commander of an army.

     [கூள் → கூளி.]

 கூளி2āḷi, பெ.(n.)

   1. பேய்; devil, demon.

     “கணங்கொள் கூளியொடு” (பட்டினப் 259);;

 dwafish malformed race of goblins constifuting the army of {Śiva.}

   2. பெருங்கழுகு (வின்.);; large species of eagle.

     [குல் (கொல்); → கூல் கூளி (கொல்லுவது);.]

 கூளி3āḷi, பெ.(n.)

   1. குள்ளம் (அக.நி.);; dwarfishness, shortness.

   2. கற்பில்லாதவள் (சூடா.);; unchaste woman.

     [குள் → கூள் → கூளி (குட்டை, சிறுமை, இழிவு);.]

 கூளி4āḷi, பெ.(n.)

   1. எருது (பிங்.);; ox.

   2. பொலி யெருது (பிங்.);; stud bull.

     [கூள் (கூடுதல்); → கூளி.]

கூளிப்பனை

 கூளிப்பனைāḷippaṉai, பெ.(n.)

தாளிப்பனை (சங்.அக.); talipot palm.

     [கூளி + பனை.]

கூளியர்

கூளியர்āḷiyar, பெ.(n.)

   1. படைவீரர் (பிங்.);; soldiers, warriors.

   2. வேட்டுவர்; hunters, those who live by chase.

     “காய்சின முன்பிற் கடுங்கட் கூளியர்” (மதுரைக். 691);.

   3. வழிப்பறி செய்யும் கள்வர்; highway robbers, plunderers.

     “குரங்கன்ன புன்குறுங் கூளியர்” (புறநா. 136:13);.

   4. குறவர் (பிங்.);; mountaineers.

   5. ஏவல் செய்வோர்; attendants.

     “வேறுபல் லுருவிற் குறும்பல் கூளியர்” (திருமுருகு.28.2);.

   5. நண்பர் (சூடா.);; friends.

     [குள் → கூள் (கூடுதல், கூட்டம்); → கூளி → கூளியர்.]

கூளிவாசமூலி

 கூளிவாசமூலிāḷivācamūli, பெ.(n.)

   கருமத்தை; black dhatura (சா.அக.);. [கூளிவாச(ம்); + மூலி]

 கூளிவாசமூலிāḷivācamūli, பெ.(n.)

   கருவூமத்தை; purple stramony.

     [கூளிவாச + மூலி.]

கூளைக்கல்

 கூளைக்கல்āḷaikkal, பெ.(n.)

   செங்கல்; brick (சா.அக.);.

     [கூளை+கல்.]

கூள்(ளு)-தல்

கூள்(ளு)-தல்āḷḷudal,    16 செ.கு.வி.(v.i.)

   திரளுதல்; to crowd together, assemble, muster.

     “கூண்டன கரிகள்” (இரகு.மீட் சி.42);.

     [குள் → கூள்.]

கூழகம்

 கூழகம்āḻkam, பெ.(n.)

   எள்ளு; gingelly seed (சா.அக.);.

மறுவ, கூழம்

     [கூழ் + கூழகம்.]

கூழக்கெளுத்தி

கூழக்கெளுத்திāḻkkeḷutti, பெ.(n.)

   கெளுத்தி மீன்வகை; a river fish, silvery, altaining 4ft in length.

     [கூழை + கெளுத்தி – கூழைக்கெளுத்தி → கூழக் கெளுத்தி.]

கூழங்கை

 கூழங்கைāḻṅgai, பெ.(n.)

   முடமான கை; maimed hand.

     “கூழங்கைத் தம்பிரான்” (இ.வ.);

     [கூழை + கை – கூழைக்கை → கூழங்கை.]

கூழங்கைத்தம்பிரான்

 கூழங்கைத்தம்பிரான்āḻṅkaittampirāṉ, பெ. (n.)

   தொண்டை மண்டலத்துக் காஞ்சியில் இருந்த வேளாளர்; the peasent who live in Kärji

இவர் இலக்கிய, இலக்கணங்களில் வல்லவர். சில தனிப் பாடல்களும், சித்தி விநாயகர் இரட்டை மணிமாலையும் இயற்றியுள்ளார் (அபி.சிந்);.

கூழன்

கூழன்1āḻṉ, பெ.(n.)

   1. கூழன்பலா பார்க்க;See. {kalappala.}

   2. கூழான் (சங்.அக.); பார்க்க;See. {kú/ān.}

     [கூழை → கூழன்.]

 கூழன்2āḻṉ, பெ.(n.)

   தெளிந்த அறிவில்லாதவன் (பெருங்.பக்.732, நீலகேசியுரை);; one devoid of clear understanding.

     [கூழை + அன் – கூழையன் → கூழன்.]

கூழன்கல்

 கூழன்கல்āḻṉkal, பெ.(n.)

   வழவழப்பான சிறு கல்; pudding stone; loose pebbles especially those on the sea-shore; shingle (சா.அக.);.

மறுவ. கூழாங்கல்

     [கூழன்+கல்.]

கூழன்பலா

 கூழன்பலாāḻṉpalā, பெ.(n.)

   பலாவகை (யாழ்ப்.);; a kind of jack tree.

     [கூழை → கூழன் + பலா. கூழை = குட்டையானது.]

கூழமணத்தான்

 கூழமணத்தான்āḻmaṇattāṉ, பெ.(n.)

   வெள்ளைக் கூளி; white coloured vulture (சா.அக.);.

     [கூழை → கூழ + மணத்தான்.]

கூழம்

 கூழம்āḻm, பெ.(n.)

   எள்; sesame.

     [கூழ் → கூழம் (உணவாக அமைவது);.]

தரைவழியாகவும் கடல் வழியாகவும் செல்வோர் எள்ளுருண்டைகளை உணவாக எடுத்துச் செல்லுவதால் இது உணவு எனப்பட்டது.

கூழா

கூழா1āḻātal,    7 செ.கு.வி.(v.i.)

   சோறு குழைதல் (கொ.வ.);; to be over-boiled, as rice.

   2. முட்டை பதனழிதல்; to become addled, as eggs.

     [கூழ் + ஆ-.]

 கூழாāḻā, பெ.(n.)

   நறுவிலி (யாழ்ப்.);; sebesten.

     [கூழை → கூழா.]

கூழாங்கல்

கூழாங்கல்1āḻāṅgal, பெ.(n.)

   வழவழப்பான சிறுகல் வகை; shingles, loose pebbles, especially those on the sea-shore.

     [கூழை + கல் – கூழைக்கல் → கூழாங்கல்.]

கூழாங்கல் ஒட்டு-தல்

கூழாங்கல் ஒட்டு-தல்āḻāṅgaloṭṭudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   சுவர்களில் அழகு வேலைக் காக சில உருண்டையான பழுப்பு மற்றும் பல வண்ணக் கற்களை ஒட்டுதல். (பொ.வழக்.); (கட்.தொ.வரி.);; fixing pebbles etc. to coverwalks, as a mode of decoration.

     [கூழாங்கல் + ஒட்டு.]

கூழான்

கூழான்1āḻāṉ, பெ.(n.)

   கண்டகிக்கல், கூழாங்கல் (யாழ்.அக.);; salagram, a kind of stone found in the {Gandagi}

     [கூழை → கூழான்.]

 கூழான்2āḻāṉ, பெ.(n.)

   இராவணன் மீசைப்புல் (சா.அக.);; a kind of grass.

     [கூழை (கட்டை, தடிப்பு); → கூழான்.]

கூழாமட்டி

 கூழாமட்டிāḻāmaṭṭi, பெ.(n.)

   மந்த அறிவும் அச்சமும் உள்ளவன் (வின்.);; dull and cowardly man.

     [கூழை → கூழா + மட்டி.]

கூழாமணம்

 கூழாமணம்āḻāmaṇam, பெ.(n.)

   சமையற்காரர் பயன்படுத்தும் பிடிதுணி (இ.வ.);; bit of cloth or piece of gunny used by cooks.

     [கூழ் + ஆமணம். ஆவணம் (சுற்றுத்துணி); → ஆமணம்.]

கூழாமணி

 கூழாமணிāḻāmaṇi, பெ.(n.)

கூழ்முன்னை

பார்க்க;See. {kūl-munsal so}

     [கூழ்முன்னை → கூழாமணி (கொ.வ.);.]

கூழாம்பாணி

 கூழாம்பாணிāḻāmbāṇi, பெ.(n.)

   சர்க்கரை கரைந்து கூழ் போலுள்ள நீர் (யாழ்);; treacle, mo. lasses.

     [கூழ் + ஆம் + பாணி.]

கூழாள்

கூழாள்āḻāḷ, பெ.(n.)

   உணவின் பொருட்டு எவர்க்கேனும் தன்னை எழுதிக் கொடுப்பவன்; one who sells himself for livelihood.

     “கூழாட்பட்டு நின்றவர்களை” (திவ்.திருப்பல்.3);.

     [கூழ் + ஆள்.]

கூழிக்கொற்றன்

 கூழிக்கொற்றன்āḻikkoṟṟaṉ, பெ.(n.)

   கடைக் கழகம் மருவிய புலவர்களில் ஒருவர்; one of the poets who belonged to the last Šañgam (அபி.சிந்.);.

கூழிச்சந்தான்

 கூழிச்சந்தான்āḻiccandāṉ, பெ.(n.)

கூழமணத்தான் பார்க்க;See. {kia-mapattan} (சா.அக.);.

     [கூளி → கூழி + (சந்தன்); சந்தான்.]

கூழை

கூழை1āḻai, பெ.(n.)

   1. பெண்டிர் தலைமயிர்; woman’s hair.

     “கூழை விரித்தல்” (தொல்.பொ. 262);.

   2. இறகு (திவா.);; feathers, plumage.

   3. மயிற் றோகை (பிங்.);; peacock’s tail.

   4. வால்; tail.

     “புன் கூழையங் குறுநரி”

     [குழை (கொத்து); → கூழை.]

 கூழை2āḻai, பெ.(n.)

   நடு(திவா.);; middle, centre.

     [உள் → குள் → கூள் → கூழ் → கூழை.]

 கூழை3āḻai, பெ.(n.)

   1. குட்டையானது; that which is short.

     “நாய் கூழைவாலாற் குழைக்கின்றது போல” (திவ்.திருவாய்,9:4,3);.

   2. அறிவுக்குறைவு; dullness of intellect, stupidity.

     “கூழைமாந்தர்தஞ் செல்கதி” (தேவா.462:9);.

     [குள் → குழ் → கூழ் → கூழை.]

 கூழை4āḻai, பெ.(n.)

   1. கூழைத்தொடை; a.mode of versification.

     “ஈறிலி கூழை” (காரிகை,உறுப்.19);.

   2. கூழைப்பாம்பு (சங்.அக.);; dwarf snake.

     [குள் → கூழ் → கூழை.]

 கூழை5āḻai, பெ.(n.)

   சேறு; mud, mire.

     “கூழை பாய்வயக்” (தேவா.473:8);.

   2. பொன் (அக.நி.);; gold.

     [குழை → கூழை.]

 கூழை6āḻai, பெ.(n.)

   படையின் பின்னணி; rear of an army.

     “கூழைதார் கொண்டியாம் பொருதும்” (புறநா.88,J);.

   2. கடைசி வரிசை; hindmost row, as of a herd of cows.

     “அவன்றான்….. பிற்கூழையிலே நிற்குமாய்த்து”(ஈடு 9:9.ப்ர);.

     [குள் → கூழ் → கூழை.]

 கூழை7āḻai, பெ.(n.)

   முரசு (அக.நி.);; drum.

     [குழை → கூழை. குழை = இழைதல், அதிர்தல்.]

கூழைக்கிடா

கூழைக்கிடாāḻaikkiṭā, பெ.(n.)

   1. நீர்வாழ் பறவை வகை; pelican, as tailless.

   2. வாலில்லாத எருமைக் கடா; tailless he-buffalo.

     [கூழை + (கடா); கிடா.]

கூழைக்கும்பிடு

 கூழைக்கும்பிடுāḻaikkumpiṭu, பெ.(n.)

   காரியம் நிறைவேற்றுவதற்காக உடலை நெளித்துக்கொண்டு போடும் கும்பிடு; bowing serviely.

கூழைக்கும்பிடு போட்டே வேலை வாங்கி விட்டான்.

     [கூழை+கும்பிடு]

கூழைக்கும்பீடு

 கூழைக்கும்பீடுāḻaikkumbīṭu,    பொய் வணக்கம்; hypocritical, insincere obeisance.

     [கூழை + (கும்பிடு); கும்பீடு.]

கூழைக்கும்பிடு போட்டு ஏமாற்றாதே

கூழைக்குரங்கு

 கூழைக்குரங்குāḻaikkuraṅgu, பெ.(n.)

   வாலில்லாக் குரங்கு; tailess monkey (சா.அக.);.

     [கூழை + குரங்கு.]

கூழைக்குறும்பு

 கூழைக்குறும்புāḻaikkuṟumbu, பெ.(n.)

   பிறர் அறியாமற் செய்யுங் குறும்பு; secret mischief.

     [கூழை + குறும்பு.]

கூழைக்கை

 கூழைக்கைāḻaikkai, பெ.(n.)

   குறைக்கப்பட்ட கை; maimed hand.

     [கூழை + கை.]

கூழைக்கையன்

 கூழைக்கையன்āḻaikkaiyaṉ, பெ.(n.)

   குட்டைக்கை உள்ளவன்; a person with a maimed hand (சா.அக.);.

     [கூழை + கையன்.]

கூழைக்கொம்பன்

 கூழைக்கொம்பன்āḻaikkombaṉ, பெ.(n.)

   மழுங்கின கொம்புள்ள மாடு; ox with blunt horns.

     [கூழை + கொம்பன்.]

கூழைத்தண்டுக்கீரை

கூழைத்தண்டுக்கீரைāḻaittaṇṭukārai, பெ.(n.)

   கீரைவகை (விவசா.4);; a kind of greens.

     [கூழை + தண்டு + கீரை.]

கூழைத்தனம்

கூழைத்தனம்āḻaittaṉam, பெ.(n.)

   பொய்மை வேடம் பூண்டு குழைந்து காட்டுகை; false humility dissimulation.

     “நீங்கள் கோயிற் கூழைத்தனம் அடிக்கிறபடி இதுவோ” (திருவிருத். 99,வியா.468);.

     [கூழை + தனம்.]

கூழைத்தொடை

கூழைத்தொடைāḻaittoḍai, பெ.(n.)

   அளவடியுள் இறுதிச் சீர்க்கனன்றி ஒழிந்த மூன்று சீர்க் கண்ணும் மோனை முதலாயின வரத் தொடுப்பது (இலக்.வி.723, உரை);; versification which requires {móna,} etc., to occur in the first three feet of a four-footed line of a verse.

     [கூழை + தொடை]

கூழைநரி

 கூழைநரிāḻainari, பெ.(n.)

   வால் குட்டையான நரி; short tailed fox.

     [கூழை + நரி.]

கூழைப்பாம்பு

கூழைப்பாம்புāḻaippāmbu, பெ.(n.)

   தலைக்கும் உடலுக்கும் இடையில் கழுத்தின்றி ஒன்றுபோல் தடித்துள்ள குள்ளமான பாம்புவகை (M.M.224);; dwarf snake, whose head is not marked off from the body by constriction of neck.

     [கூழை + பாம்பு.]

கூழைப்பார்வை

கூழைப்பார்வைāḻaippārvai, பெ.(n.)

   ஏமாற்றுப் பார்வை; sly look.

     “இன்றுணை நாரைக் கிரை தேடிக் கூழைப் பார்வைக் கார்வயல் மேயும்” (திவ். பெரியதி.9:6,3);.

     [கூழை + பார்வை.]

கூழைமுட்டை

 கூழைமுட்டைāḻaimuṭṭai, பெ.(n.)

   அழுகின முட்டை (R.);; rotten egg.

மறுவ, கூழ்முட்டை, கூமுட்டை

     [குழை → கூழ் → கூழை + முட்டை.]

கூழைமை

கூழைமைāḻaimai, பெ.(n.)

   1. கடமை; duties fusiners.

     “கூத்தனுக் காட்பட் டிருப்ப தன்றோ நந்தம் கூழைமையே”(தேவா.11:5);.

   2. குழைந்து நடக்கை; fondling, caressing.

     “கொவ்வைக் கனிவாய் கொடுத்துக் கூழைமை செய்யாமே” (திவ்பெரியாழ். 3:2,5);.

     [குழை → கூழை → கூழைமை.]

கூழையன்

கூழையன்āḻaiyaṉ, பெ.(n.)

   1. குள்ளன்; short, stunted person.

   2. முழு மடையன்; dolt, idiot.

     [கூழை + அன்.]

கூழைவாலன்

கூழைவாலன்āḻaivālaṉ, பெ.(n.)

   குட்டையான பாம்புவகை (M.M.224);; short-tailed snake which lives underground belonging to the family of uropeltidce.

     [கூழை + வாலன்.]

கூழ்

கூழ்1āḻ, பெ.(n.)

   மாவு முதலியவற்றால் குழையச் சமைத்த உணவுவகை (திவா.);; thick gruel, por. ridge, semi liquid food.

   2. பலவகை உணவு; food.

     “கொளக்கொளக் குறைபடாக் கூழுடை வியனகர்” (புறநா.70:7);.

   3. பயிர் (திவா.);; growing crop.

   4. பொருள்; wealth.

     “கூழுங் குடியு மொருங் கிழக்கும்” (குறள்,554);.

   5. பொன் (திவா.);; gold.

     [கூல் (கூலம், தவசம்); → கூள் → கூழ்.]

 கூழ்2āḻ, பெ.(n.)

   கலக்கம்; doubt, confusion.

     “தத்துவநூல் கூழற்றது” (திவ்.இராமநூச.65);.

     [குல் → குள் → கூழ் → கூழ்த்தல்]

 கூழ்2āḻttal,    4 செ.குன்றாவி. (v.t.)

   ஐயுறுதல்; to doubt, suspect

     “அவனிவனென்று கூமன் மின்” (திவ்.திருவாய்.3:6,9);.

     [குழத்தல் → கூழ்த்தல்.]

கூழ்க்கஞ்சி

 கூழ்க்கஞ்சிāḻkkañji, பெ.(n.)

   மாவுக் கஞ்சி; porridge prepared from flour.

     [கூழ் + கஞ்சி.]

கூழ்க்கெளுத்தி

 கூழ்க்கெளுத்திāḻkkeḷutti, பெ.(n.)

   குள்ளக் கெளிற்று மீன்; cat fish of stunted growth (சா.அக.);.

     [குழை + கெளுத்தி → கூழைக்கெளுத்தி → கூழ்க் கெளுத்தி.]

கூழ்படு-தல்

கூழ்படு-தல்āḻpaḍudal,    20 செ.கு.வி.(v.i.)

   கலக்க முண்டாதல், தெளிவின்றியிருத்தல்; to be confused

     “செல்படை யின்றிக் கூழ்பட வறுப்ப” (பெருங்.மகத.27:31);.

     [கூழ் + படு.]

கூழ்ப்பசை

கூழ்ப்பசைāḻppasai, பெ.(n.)

   1. கஞ்சிப்பசை; rice gruel for starching cloths.

   2. மாப்பசை; paste.

     [கூழ் + பசை.]

கூழ்ப்பண்டம்

 கூழ்ப்பண்டம்āḻppaṇṭam, பெ.(n.)

   சாம்பற் பூசணிக்காய், கலியாணப்பூசணி; a variety of white pumpkin (சா.அக.);

     [கூழ் + பண்டம்.]

கூழ்ப்பதம்

 கூழ்ப்பதம்āḻppadam, பெ.(n.)

   பாம்பு (அக.நி.);; snake.

     [குள் → குழ் → கூழ் + பதம். கூழ் = தெளிவில்லாத, கண்ணுக்குத் தெரியாத. பதம் = பாதம், கால்.]

கூழ்ப்பாண்டம்

கூழ்ப்பாண்டம்āḻppāṇṭam, பெ.(n.)

   1. சாம்பற் பூசணி; ash-coloured pumpkin or summer squash – Cucurbita alba.

   2. பெருங்காயம்; asafoetida,

   3. கூழ்ப் பானை; porridge pot; pap-pot (சா.அக.);.

     [கூழ்+பாண்டம்]

கூழ்ப்பு

கூழ்ப்புāḻppu, பெ.(n.)

   ஐயம்; doubt, suspicion.

     “எல்லை யிலாதன கூழ்ப்புச் செய்யுமத்திற நிற்க” (திவ்.திருவாய. 8,2:6);.

     [குள் → குழ் → கூழ் → கூழ்ப்பு.]

கூழ்மணத்தான்

 கூழ்மணத்தான்āḻmaṇattāṉ, பெ.(n.)

   வெண் கழுகு; white coloured vulture.

மறுவ. கூழமணத்தான், கூழிச்சந்தான்

     [கூழை → கூழ் + மணத்தான்.]

கூழ்முட்டை

 கூழ்முட்டைāḻmuṭṭai, பெ.(n.)

   கெட்டுப்போன முட்டை; addled egg.

     [கூழ் + முட்டை.]

கூழ்முன்னை

 கூழ்முன்னைāḻmuṉṉai, பெ.(n.)

   தென்னாட்டி லுள்ள ஒரு சிறு மரவகை (மலை.);; ovate leave firebrand teak of the deccan.

மறுவ. கூழாமணி

     [கூழ் + முன்னை.]

கூழ்வடகம்

 கூழ்வடகம்āḻvaḍagam, பெ.(n.)

   அரிசிமாக் கூழால் செய்யப்படும் வடக வற்றல்; water cakes of flour, seasoned and dried in the sun.

மறுவ, கூழ்வடாம்

     [கூழ் + வடகம். (வட்டு → வட்டகம் → வடகம்.]

கூழ்வடாம்

 கூழ்வடாம்āḻvaṭām, பெ.(n.)

கூழ்வடகம் பார்க்க;See. {Kū/vadagam.}

     [கூழ்வட்டு + கூழ்வட்டகம் → கூழ்வடகம் →,

கூழ்வடாம்.]

கூழ்வட்டு

 கூழ்வட்டுāḻvaṭṭu, பெ.(n.)

கூழ்வடகம் பார்க்க;See. {kūl-Vadagam.}

     [கூழ் + வட்டு வட்டு = வட்டமாக வார்த்தது.]

கூழ்வரகு

 கூழ்வரகுāḻvaragu, பெ.(n.)

கேழ்வரகு (மலை.); பார்க்க;See. {ké/-varagu.}

     [கேழ்வரகு → கூழ்வரகு.]

கூழ்வற்றல்

 கூழ்வற்றல்āḻvaṟṟal, பெ.(n.)

   உப்பும், உறைப்பும் சேர்த்த அரிசி மாவுக் கூழைத் துணியில் சிறிது சிறிதாக ஊற்றி அல்லது அச்சால் பிழிந்து காயவைத்து எடுத்து வேண்டும் போது பொரித்துப் பயன்படுத்தும் துணை உணவு வகை; slightly salted and spiced rice flour paste distributed on a cloth in thick drops or squeezed through a press, left to dry and collected to be fried

     [கூழ்+வற்றல்.]

கூவகம்

 கூவகம்āvakam, பெ.(n.)

நேர் வாளம்,

 true Croton oil plant-Croton tigilium (சா.அக.);.

கூவகர்

கூவகர்āvagar, பெ.(n.)

   கூபக நாட்டார்; inhabitants of {Kūpaga} country.

     “கூவகர் சாவகர்” (கலிங்.புதுப்.316);.

மறுவ, கூபகர்

     [கூவகம் → கூவகர்.]

கூவதிரை

 கூவதிரைāvatirai, பெ.(n)

கடுகுரோகிணி,

 black heelebore – Helleborus niger (சா.அக.);.

     [கூவ+திரை.]

கூவத்துநாரணன்

 கூவத்துநாரணன்āvattunāraṇaṉ, பெ. (n.)

   கூவத்தில் புலவர்க்கும், மற்றோர்க்கும் வாரி வாரி கொடுத்து வந்த பெருஞ் செல்வந்தன்; a wealthy person, who patronized the poets, and the poors near village of koovam.

     [கூவத்து+நாரணன்.]

கூவநூல்

 கூவநூல்āvanūl, பெ.(n.)

கூவனூல் (சங்.அக.); பார்க்க;See. {kūva-mo/}

     [கூவல் + நூல். கூவல் = கிணறு.]

கூவனூலோர்

 கூவனூலோர்āvaṉūlōr, பெ.(n.)

   கிணறுவெட்டும் கலையில் வல்லவர் (திவா.);; persons skilled in science of {kūvanūl.}

     [கூவல் + நூலோர்.]

கூவனூல்

 கூவனூல்āvaṉūl, பெ.(n.)

   கிணறு வெட்டுதற் குரிய இடமுதலியவற்றையுணர்த்தும் நூல்; science of determining sites suitable for sinking wells.

மறுவ. கூவநூல்

     [கூவல் + நூல்.]

கூவனை

 கூவனைāvaṉai, பெ.(n.)

நல்ல பாம்பு; Cobra (சா.அக.);.

கூவன்மைந்தன்

 கூவன்மைந்தன்āvaṉmaintaṉ, பெ.(n.)

   கடைக் கழகம் மருவிய புலவருள் ஒருவர்; the poet who belonged to the last Šangam.

     [கூவல்+மைந்தன்.]

இவர் பெயர் மைந்தன் என்றிருக்கக் கூடும். குறுந்தொகையில் இவர் பாடிய ‘கூவற்குரலான்’ எனும் வரியால் இப்பெயர் வந்தது எனக் கருதலாம் (அபி.சிந்.);.

கூவமா

 கூவமாāvamā, பெ.(n.)

   மரவகை (யாழ்ப்.);; a kind of tree.

மறுவ. கூமா

     [கூவல் + மா. மா = மரம்.]

கூவமூரிகம்

 கூவமூரிகம்āvamūrikam, பெ.(n.)

   நாங்கில்; a plant of mesuagenus (சா.அக.);.

     [கூவ+மூரிகம்.]

கூவம்

கூவம்āvam, பெ.(n.)

   கிணறு; well.

     “கூவத்தின் சிறுபுனலைக் கடலயிர்த்த தொவ்வாதோ” (கம்பரா. விபீடண.103);.

     [கூவல் → கூவம்.]

கூவரகு

 கூவரகுāvaragu, பெ.(n.)

   காட்டுவரகு (சித்.வை.);; akind of millet.

     [கூழ் + வரகு – கூழ்வரகு → (கூவகு);.]

கூவலம்

கூவலம்āvalam, பெ.(n.)

   1. பல நிறமுடைய ஆம்பற் பூ; Indian water-lily of varied colours.

   2. துவரை; dholl – Dolichos (சா.அக.);. [கூவல் – கூவலம்]

கூவல்

கூவல்1āval, பெ.(n.)

   கூவுகை; crying aloud, bawling, crowing.

     “தேவி மாரொடுங் கூவல்செய்

தொழிலினர்” (கம்பரா.சடாயுவுயிர்.31);.

ம. கூகல்

     [கூ → கூவு → கூவல்.]

 கூவல்2āval, பெ.(n.)

   1. கிணறு; well

     “கூவலன்ன விடரகம்” (மலைபடு. 366);.

   2. குழி (வின்.);; hollow, hole, pit.

     [குள் + குள் → குவ் → குவ்வல் → கூவல்.]

கூவளம்

 கூவளம்āvaḷam, பெ.(n.)

கருங்குவளை,

 blue nelambo (சா.அக.);. [குவளம் – கூவளம்]

கூவழிஞ்சல்

 கூவழிஞ்சல்āvaḻiñcal, பெ.(n.)

   கொடியழிஞ்சல்; alangium creeper as distinguished from its tree (சா.அக.);.

     [கூவ+அழிஞ்சில்]

கூவா

கூவா1āvā, பெ.(n.)

   1. கூகை பார்க்க; see kugai

   2. ஆந்தை; owlet,

   3. ஒரு வகைப் பருந்து; a species of kite.

   4. கோட்டான்; a large owl – Bubo bengalensis.

     [கூகை – கூவா (கொ.வ.);]

கூவா’

 அஅன்ன ஆவன்னா aaṉṉaāvaṉṉā, பெ. (n.)

   அரிவரி யென்னும் தமிழ் வண்ணமாலை (குறுங்கணக்கும் நெடுங்கணக்கும்);;  Tamil Alphabet.

   எழுத்துகளைக் கல்லா மக்கள், சிறப்பாகச் சிறுவர் சிறுமியர், எளிதாக ஒலித்துக் கற்கும் பொருட்டு, பண்டைத் தொடக்கப்பள்ளி யாசிரியர் உயிரும் உயிர்மெய்யுமாகிய இருவகைக் குறிலுக்கும்’அன்ன’ச் சாரியையும், இருவகை நெடிலுக்கும் அன்னா’ச் சாரியையும் ஏற்படுத்தினர்;     ‘அஆ’ என்னும் ஈரெழுத்தும் தமிழ் வண்ணமாலையின் முதலெழுத்துகளாதலின், அவை முதற்குறிப்பாகி, அம் முதற்குறிப்பே’அஅன்ன ஆவன்னா’ என்று வண்ணமாலைப் பெயராயிற்று. இது ‘alpha’, ‘beta’ என்னும் கிரேக்க இரு முதலெழுத்துகளும் சேர்ந்து”alphabetum’ என்று இலத்தீனிலும், ‘alphabet’ என்று ஆங்கிலத்திலும், வண்ணமாலைப் பெயராக வழங்குவது போன்றது;

   அ, இ, க, கி என்று ஒரு மாத்திரை யொலிக்குங்குறிலெழுத்துகளை விட்டொலிப்பது, சிறுபிள்ளைகட்குச் சற்று வருத்தமுற மூச்சு வாங்குவதால்,’அஅன்ன’ என்பது”ஆனா” என்றும் இஅன்ன என்பது’ஈனா’ என்றும், மாணாக்க நிலையிலும் பின்னும் ஒலிக்கப்பட்டுவந்தன. இவ்வொலிப்புமுறை குறில்களின் உண்மையான ஒலியளவை உடனே தெரிந்துகொள்ளத் தடையாயிருந்தமையின், இந்நூற்றாண்டுத் தொடக்கத்தில் அரசியற் கல்வித்துறையறிஞர், சாரியையின்றி ஒலிநூன் முறைப்படி அ, ஆ, இ, ஈ,… என்று ஒலித்துப் பயிலும் முறையைப் புகுத்திவிட்டனர். அதனால், இன்று ‘அஆ’ என்பது வண்ணமாலைப் பெயராக வழங்கி வருகின்றது. இது புணர்ச்சியில்’அவ்வா’ என்றாகும்;

கூவாக்கட்டு

 கூவாக்கட்டுāvākkaṭṭu, பெ.(n.)

   அம்மைக் கட்டு, பொன்னுக்குவீங்கி (இலங்.);; mumps (க்ரியா.);.

     [கூவா+கட்டு]

கூவாச்சாவல்

 கூவாச்சாவல்āvāccāval, பெ.(n.)

   இளஞ் சேவல்; young cock (சா.அக.);. [கூவா+சாவல்]

கூவியர்

கூவியர்āviyar, பெ.(n.)

   1. உணவு சமைப்போர் (திவா.);; cooks.

   2. அப்பவாணிகர்; pancake sellers

     “தீஞ்சேற்றுக் கூவியர் தூங்குவன ருறங்க” (மதுரைக். 627);.

     [குவ்வு → கூவு → கூவி (குழியப்பம்); → கூவியர்.]

கூவிரம்

கூவிரம்1āviram, பெ.(n.)

   1. sólsusuth (stiil.);; bael.

   2. Insmou unsousmé (5slášálū.66);; a mountain tree.

     [குவி → குவிரம் → கூவிரம்.]

 கூவிரம்2āviram, பெ.(n.)

   1. நேரில் இருக்கைக்கு எதிராக நடப்பெற்று கையாற் பற்றிக்கொள்ளு தற்குப் பயன்படுவதும், தாமரை மொட்டு வடிவில் அமைந்ததுமான ஓர் உறுப்பு; ornamental stake in the form of a lotus bud, fixed in front of the seat in a chariot and held by the hand for support.

     “கூவிரஞ்செறி….. தேரொடும்” (கம்பரா.இராவ.176);.

   2. தேர் (பிங்.);; chariot, car.

   3. தேர்க்கொடி (சூடா.);; streamers or banners of car.

   4.தேரின் அழகு படுத்தப்பட்ட தலைப்பகுதி; decorated pinnacle of a chariot

     “கூவிரத்திகிரி யூர்வோன்”(ஞானா.7:17);.

     [குவி → குவிரம் → கூவிரம்.]

கூவிரி

கூவிரிāviri, பெ.(n.)

   1. தேர் மொட்டு கொண்டது கூவிரத்தை யுடையது; lit.., one having {kỦviram.}

   2. தேர் (திவா.);; chariot, car.

     [கூவிரம் → கூவிரி.]

கூவிளக்குடுக்கை

 கூவிளக்குடுக்கைāviḷakkuḍukkai, பெ.(n.)

   பழக் குடுக்கை; empty shell of bael fruit (சா.அக.);.

     [கூவிளம் + குடுக்கை.]

கூவிளங்கனி

கூவிளங்கனி1āviḷaṅgaṉi, பெ.(n.)

   நேர் நிரை நிரை குறிக்கும் வாய்பாடு (காளிகை. உறுப்.7,உரை.);; mnemonic for the metrical foot of {nér-niraj-nirai}

 கூவிளங்கனி2āviḷaṅgaṉi, பெ.(n.)

   வில்வப்பழம்; beal fruit (riped); (சா.அக.);.

     [கூவிளம் + கனி.]

கூவிளங்காய்

கூவிளங்காய்āviḷaṅgāy, பெ.(n.)

   நேர்நிரை நேர் குறிக்கும் வாய்பாடு (காரிகை.உறுப்.7,உரை.);; mmemonic for the metrical foot of {nés-niras-nēr.}

     [கூவிளம் + காய்.]

கூவிளநறுநிழல்

கூவிளநறுநிழல்āviḷanaṟuniḻl, பெ.(n.)

   நேர் நிரை நிரை நிரை குறிக்கும் வாய்பாடு (காரிகை, உறுப்.8.உரை.);; mnemonic for the metrical foot of {nër-nira-niras-nira}

     [கூவிளம் + நறு + நிழல்.]

கூவிளநறும்பூ

கூவிளநறும்பூāviḷanaṟumbū, பெ.(n.)

நேர் நிரை

   நிரை நேர் குறிக்கும் வாய்பாடு (காரிகை. உறுப்.8,உரை);; mnemonic for the metrical foot of {nérmira-mira-nēr.}

     [கூவிளம் + நறும் + பூ.]

கூவிளந்தண்ணிழல்

கூவிளந்தண்ணிழல்āviḷandaṇṇiḻl, பெ.(n.)

நேர்

   நிரை நேர் நிரை குறிக்கும் வாய்பாடு (காரிகை.உறுப்.8,உரை.);; mnemonic for the metrical foot of {nērmira-nēr-nirai}

     [கூவிளம் + தண் + நிழல்.]

கூவிளந்தண்பூ

கூவிளந்தண்பூāviḷandaṇpū, பெ.(n.)

   நேர் நிரை நேர் நேர் குறிக்கும் வாய்பாடு (காரிகை. உறப்.8, உரை.);; mnemonic for the metrical foot of {nérinfra-nēr-nēr.}

     [கூவிளம் + தண் + பூ.]

கூவிளமாதிகம்

 கூவிளமாதிகம்āviḷamātigam, பெ.(n.)

   விளா; wood-apple tree (சா.அக.);.

     [கூவிளம் + ஆதிகம்.]

கூவிளம்

கூவிளம்1āviḷam, பெ.(n.)

   1.வில்வம் (குறிஞ்சி.65);; bael.

   2. பெரியமாவிலங்கம் (L.);; a species of garlic pear.

     [கோ + விளம் – கோவிளம் → கூவிளம்.]

 கூவிளம்2āviḷam, பெ.(n.)

   நேர்நிரை குறிக்கும் வாய்பாடு (காரிகை, உறுப்.7,உரை);; mnemonic for the metrical foot of {nés-niral}

     [கூ + விளம்.]

 கூவிளம்3āviḷam, பெ.(n.)

   கோளகவைப்பு நஞ்சு (சங்.அக.);; a mineral poison.

     [குய் → குய்வு → குய்வுளம் → கூவுளம் → கூவிளம்.1]

கூவிளம்பத்திரி

 கூவிளம்பத்திரிāviḷambattiri, பெ.(n.)

   வில்வ இலை; beal leaf. It is not only capable of cooling the system, but also tends to invigorate it and this is very well explained in the verses of Thirumular.

     “பச்சிளங் கூவிளம் பத்திரி யுண்டிர்

நிச்சயம் சொன்னோம் நெருப்புங் குளிர்ந்திடும்

அச்சமுமில்லை அழகாந் திருமேனி

வச்சிரம் போல வந்திடும் விந்துவே” (திருமந்திரம்.);

     [கூவிளம் + பத்திரி.]

கூவிளி

கூவிளிāviḷi, பெ.(n.)

   1. கூப்பிடும் ஓசை; long continuous roar or trumpet, as of an elephant.

     “நிறையழி யானை நெடுங்கூமே விளியும்” (மணி. 7:67);.

   2. கூப்பிடுதொலைவு; calling distance.

     “அஞ்சு கூவிளிச் சேய்த்தென்ன” (திருவிளை. யானை.29);.

     [கூவு + விளி – கூவுவிளி → கூவிளி.]

கூவிளித்தல்

 கூவிளித்தல்āviḷittal, பெ.(n.)

   உண்ணுதல்; eating (சா.அக.);.

     [கவ்வளித்தல் → குவ்வளித்தல் → குவளித்தல் → கூவிளித்தல்.]

கூவிளை

கூவிளைāviḷai, பெ.(n.)

   1. கூவிளம்1 (திவா.); {kaviam.}

   2. வில்வமரம்; beal tree (சா.அக.);.

     [கூவிளம் → கூவிளைவு.]

கூவு

கூவு1āvudal,    5 செ.கு.வி.(v.i.)

   1. பறவை கூவுதல்; to crow, as a cock, to scream, as peacocks to cry, as a cuckoo or birds in general.

     “கூவின பூங்குயில்” (திருவாச.20:3);.

   2. கதறுதல், ஒலி யெழுப்புதல்; to call out, whoop, hallow.

   3. யானை முதலியன பிளிறுதல்; to trumpet, as an elephant

     “கூங்கை மதமா” (பரிபா.10:49);.

   4. ஒலமிடுதல்; to cryoutfor help.

     “வந்த வீரன் கூவிய சசியை நோக்கி” (கந்தபு.மகாகாளர்.6);.

   ம.கூகுக;   க., பட. கூகு;   தெ. கூய;   து. கூகுனி;   குட. கூ;   கொலா. நா.கூக்;   பர். கூய், கூப், கோண். கூச்சானா;   கூ. கூப்க;ம. கூக்ரெ.

     [கூ → கூவு-.]

 கூவு2āvudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   அழைத்தல்; to call, summon.

     “மழலை முற்றாத விளஞ் சொல்லா லுன்னைக் கூவுகின்றான்” (திவ். பெரியாழ்.1:4,5);.

 Aust.cooее

     [கூ → கூவு.]

 கூவு3āvu, பெ.(n.)

   வெள்ளைக் கரும்பு; white sugar-cane (சா.அக.);.

     [குருவு → கூவு.]

கூவுகணங்கன்

 கூவுகணங்கன்āvukaṇaṅkaṉ, பெ.(n.)

   நாய்க்குட்டி மரம்; an unknown tree (சா.அக.);.

     [கூவு+சுணங்கன்.]

கூவுதூரம்

 கூவுதூரம்āvutūram, பெ.(n.)

   கூப்பிடு தொலைவு (இ.வ.);; calling distance.

மறுவ. கூப்பிடுதொலைவு, கூவுதொலைவு.

     [கூவு + தூரம்.]

கூவுவான்

கூவுவான்1āvuvāṉ, பெ.(n.)

   1. கூவுதல் செய்வோன்; lit., that which crows.

   2. சேவல்; cock.

     [கூவு → கூவுவோன் → கூவுவான்.]

கூவை

கூவை1āvai, பெ.(n.)

   செடிவகை; East Indian arrow root

     “புலவுவிற் பொலிகூவை” (மதுரைக்:142);.

     [கூவல் (பள்ளம்); கூவை.]

 கூவை2āvai, பெ.(n.)

   கூட்டம்; crowd, horde, gathering.

     “விற்கூளியர் கூவை காணின்” (மலைபடு.422);.

     [குழு → குழுவு → கூவு → கூவை.]

கூவைக்கட்டு

 கூவைக்கட்டுāvaikkaṭṭu, பெ.(n.)

   பொன்னுக்கு வீங்கி, புட்டாளம்மை எனும் அம்மைநோய்; mumps (சா.அக.);.

மறுவ, கூகைக்கட்டு

     [கூவை + கட்டு.]

கூவைக்கார்

 கூவைக்கார்āvaikkār, பெ.(n.)

   கார் நெல்வகை (A);; a kind of {kärpaddy.}

     [கூவை + கார்.]

கூவைச்சம்பா

 கூவைச்சம்பாāvaiccambā, பெ.(n.)

   சம்பா நெல்வகை (A);; a kind of {cambapaddy.}

     [கூவை + சம்பா.]

கூவைநீறு

கூவைநீறு1āvainīṟu, பெ.(n.)

   கிழங்கின் மாவு; flour of {kūvai} root.

     [கூவை + (நூறு); நீறு.]

 கூவைநீறு2āvainīṟu, பெ.(n.)

கூகை நீறுபார்க்க;See. {kilgai.niய}

     “கூவை நீறுங் கொழுங்கொடிக் கவலையும்” (சிலப்.25:42);.

     [குய் → குய்வு → குய்வுளம் → கூவுளம்.]

கூவைவல்லி

 கூவைவல்லிāvaivalli, பெ.(n.)

   ஒரு நோய்; an unknown disease (சா.அக.);.

     [கூவை + வல்லி.]

கூவைவாய்மணி

 கூவைவாய்மணிāvaivāymaṇi, பெ.(n.)

   பலவிதமாக உண்டாகும் முத்துகள்; many kinds of pearls.

     [குவவு → கூவு → கூலை + வாய் + மணி.]

கூவோ

 கூவோāvō, பெ.(n.)

தன்னைப் பின் தொடர அல்லது மாடு மேய்ப்போர் மாலையில் மாட்டுப் பட்டிக்குத் திரும்புவதற்காக மாடுகளைத் திரும்புமாறுசெய்வதற்கு எழுப்பும் நீள் ஒலி:

 a long sound with the world kūvö to alert the cattle to return from grazing in the evening orinstruct the cattle to follow him.

     [கூ-கவோ(ஒலிக்குறிப்பு);]