செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை வெளியீடு
31 தொகுதி 12000 பக்கங்கள் கொண்ட பேரகரமுதலி


1

10838

2769

3111

538

3554

677

1093

620

189

1004

402

2
க்
1

8212
கா
2579
கி
564
கீ
222
கு
4598
கூ
780
கெ
615
கே
391
கை
1101
கொ
2417
கோ
1754
கௌ
110
ங்
1

2
ஙா
2
ஙி
1
ஙீ
1
ஙு
1
ஙூ
1
ஙெ
1
ஙே
1
ஙை
1
ஙொ
5
ஙோ
1
ஙௌ
1
ச்
1

5235
சா
1186
சி
2424
சீ
439
சு
1261
சூ
420
செ
1529
சே
470
சை
23
சொ
409
சோ
365
சௌ
1
ஞ்
1

15
ஞா
44
ஞி
3
ஞீ ஞு ஞூ ஞெ
34
ஞே
5
ஞை
2
ஞொ
3
ஞோ
2
ஞௌ
1
ட்
1

1
டா
1
டி
1
டீ
1
டு
1
டூ
1
டெ
2
டே
1
டை
1
டொ
1
டோ
1
டௌ
ண்
1

1
ணா
1
ணி
1
ணீ ணு
1
ணூ
1
ணெ
2
ணே
1
ணை
1
ணொ
1
ணோ
1
ணௌ
த்
3113
தா
1530
தி
2203
தீ
393
து
1238
தூ
411
தெ
694
தே
856
தை
39
தொ
878
தோ
459
தௌ
ந்
1

2789
நா
204
நி
1860
நீ
1161
நு
14
நூ
18
நெ
892
நே
318
நை
89
நொ
210
நோ
159
நௌ
2
ப்
1

4560
பா
1824
பி
492
பீ
25
பு
2224
பூ
1133
பெ
1064
பே
483
பை
127
பொ
1218
போ
478
பௌ
2
ம்
4760
மா
1422
மி
535
மீ
268
மு
3016
மூ
949
மெ
396
மே
751
மை
152
மொ
284
மோ
242
மௌ
ய்
1

119
யா
426
யி
1
யீ
1
யு
46
யூ
20
யெ
9
யே
1
யை
1
யொ
1
யோ
98
யௌ
1
ர்
87
ரா
107
ரி
11
ரீ
7
ரு
24
ரூ
20
ரெ
6
ரே
16
ரை
10
ரொ
8
ரோ
23
ரௌ
ல்
117
லா
44
லி
8
லீ
5
லு
8
லூ
3
லெ
13
லே
21
லை லொ
20
லோ
63
லௌ
3
வ்
1

3800
வா
1329
வி
1638
வீ
515
வு
1
வூ
1
வெ
2164
வே
834
வை
229
வொ
1
வோ
3
வௌ
ழ்
1

1
ழா
1
ழி
1
ழீ
1
ழு
6
ழூ
1
ழெ
1
ழே ழை ழொ ழோ
1
ழௌ
ள்
1

2
ளா
1
ளி
1
ளீ
1
ளு
1
ளூ
1
ளெ
2
ளே
1
ளை
1
ளொ
1
ளோ
1
ளௌ
ற்
1

1
றா
1
றி
1
றீ
1
று
1
றூ
1
றெ
2
றே
1
றை
1
றொ
1
றோ
1
றௌ
ன்
1

1
னா
1
னி
1
னீ
1
னு
1
னூ
1
னெ
2
னே
1
னை னொ
1
னோ
1
னௌ
தலைசொல் பொருள்
கு

கு1 ku,    ககரமெய்யும் உகர உயிரும் சேர்ந்து உண்டாகும் உயிர்மெய் எழுத்து; the syllable formed by adding back short vowel (u) to the velar voiceless stop (k), one of the secondary alphabet of the Tamil language.

     [க்+உகு.]

 கு2 ku,    இடை (part) நான்கனுருபு(தொல்.சொல். 76); dative case marker.

   ம. கு,க்கு;   க.கெ, க்கெ, இகெ;   தெ. கு. கி;   பட.க, து;   து.கு;   குட.க.த;   துட.க.க;   குரு.கை;   கோத தெ;   எரு.கு;கை. கு.

 H. {kõ,} Beng. {kẽ,} Sind. {khẽ,} Sinh. ghai, Tib. gya. Ori, kui, Bodo, khö, Turk. ke, ka, ga, ghah, Scy, ka, ki, ku, Pkt. {kiē;} Mong, dou;

 Tatar. ke, Fin, le, ke;

 Ost ga;

 Mord. va, ga: Jap. he, ye, e, Sia. ke: Mal.. ka, äkam, Chin. kih Burm. go.

     [குல் = கூடுதல் கருத்துவேர். குல் → கு.]

 கு3 ku, இடை. (part)

   1. ஒரு சாரியை (கரித்.79:18);; connective particle, as in அறிகுவோன்.

   2. (அ); பண்புப் பெயர் ஈறு; abstract noun enching as நன்கு (ஆ); தொழிற்பெயர் ஈறு;

 verbal noun tending, as. போக்கு (இ); தன்மையொருமை எதிர்கால வினைமுற்று ஈறு;

 sufix of firite verbs in Ist pers. Sing. fut., as உண்கு.

   3. இருமடி ஏவலீறு; imperative verb additional suffix.

     [குல் → கு]

 கு4 ku, பெ.(n.)

   புவி (திவா.);; earth.

ம. க. கு.

     [குவலயம் → கு]

 கு5 ku, இடை.(part)

   1. குறுமை முன்னொட்டு; diminutive prefix.

குக்கிராமத்தில் வாழ்ந்தார் (உ.வ.);.

   2.இழிவு, தாழ்வு குறித்த முன்னொட்டு; a pronom, base… a prefix implying deterioration depreciation, deficiency.

     [குல் → கு (குல் = சிறிதாதல், தாழ்தல்); குல் + வலி – குவலி (இலந்தை); குல் + சரி→குச்சரி(ஒரு பண்);, குல்+ (பாகு – பாக்கு); வாகம்-குவாகம் (பாக்குமரம்);. குல் + வாதம் (வாள்

– வாளம் (பேசுதல்); → வாதம்); – குவாதம், குவாது(குதர்க்கம்,);]

     ‘குல்’ முன்னொட்டின் பின் வருமொழி முதலில் வல்லெழுத்துவரின் வந்தவல்லெழுத்தே மிகும்.நல்+கீரன் நக்கீரன், நல் + செள்ளை நச்செள்ளை, நல் + பின்னை –

நப்பின்னை, ‘குல்’ முன்னொட்டின் பின் வரும் வருமொழி வட சொல்லாயின் ஈற்றுலகரமெய் கெட்டு குல் + கிராமம் – குக்கிராமம், குல் + தர்க்கம் – குதர்க்கம் எனப் புணரும். இம்முன்னொட்டைத் தமிழினின்று வடமொழி கடன் கொண்டது.

 கு6 ku, இடை. (part)

   நன்மை, உயர்வு குறித்த முன்னொட்டு; prefix used in the sense of auspicious, greatness.

     [குல் = கூடுதல், பெருக்கம் மேன்மை, உயர்வு, குல் → கு.]

குகண்டம்

 குகண்டம் gugaṇṭam, பெ.(n.)

   வெண்கருங்காலி; egg fruited ebony (சா.அக.);.

     [குச்கள் → குச்சுண்டம்.]

குகதி

குகதி gugadi, பெ.(n.)

   முடவன்; lame person.

     “‘குகதிகள் குருடர் மூகர்”(மேமருமந். 351.);

     [குல் + கதி]

குகநன்

குகநன் guganaṉ, பெ.(n.)

   1.பாம்பு; snake.

   2. எலி; rat(கோ.தமி. கை.);.

     [குழி→குழை→குகை + நன். குகை = இருள், கருப்பு.]

குகனேரியப்பமுதலியார்

 குகனேரியப்பமுதலியார் gugaṉēriyappamudaliyār, பெ.(n.)

   தமிழில் உபதேச காண்டம் பாடிய ஆசிரியர்; the author of the Tamil {}.

குகன்

குகன்1 gugaṉ, பெ.(n.)

   1. முருகன் (திவா.);; God Murugan.

     “ஆருயிர்க் குகைதோறும் வதிதலாற் குகனென்று” (தணிகைப்பு. நாட்டுப். 33);.

   2. இராமனது நண்பனாகிய ஒரு வேட்ன்; a {Nisada} ferryman and friend of {Rāmā}

     “கூரணிந்த வேல் வலவன் குகனோடும்” (திவ். பெரியாழ். 4.10:4);.

     [குக்கல் = நாய். குக்கலன்→குகன் (நாயை வேட்டைக்கு உடனழைத்துச் செல்பவன், வேடன்);,குகன் = வேடர்குலத்து வள்ளியை மணந்தவன், முருகன்.]

 குகன்2 gugaṉ, பெ.(n.)

   ஆசிரியர், குரு (யாழ். அக.);; preceptor.

     [குரவன்→குவன் → குகன்.]

குகன்வேர்

 குகன்வேர் kukaṉvēr, பெ.(n.)

   வேல மரத்து வேர்; root of acacia tree (சா.அக.);.

     [குகன்+வேர்]

குகமுனிவர்

 குகமுனிவர் gugamuṉivar, பெ.(n.)

   ஒரு இருடி; a saint.

குகம்

குகம் kukam, பெ.(n.)

   1. மலைக்குகை,

 cave, cavern.

     “மலைக்குகரத்து” (அரிசமய. பக்திசார.37);.

   2. சுரங்கம்; cavity, hollow, subterranean passage.

     ‘குகர நீணெறி” (பாரத.வேத்.2); (செ.அக.);.

     [Skt. guha → த.குகம்]

குகரம்

குகரம் gugaram, பெ.(n.)

   1. மலைக்குகை; cave. Cavern

     “மலைக்குகரத்து” (அரிசமய. பக்தி சார. 37);.

   2. சுரங்கம்; cavity, hollow, subterranean passage.

     “குகர நீனெறி” (பாரத வேத். 2);.

     [குகை → குகம் → குகரம்(கொ.வ.);.]

குகரர்

குகரர் gugarar, பெ.(n.)

   சாகத்தீவில் வாழும் ஒரு குலத்தார்; inhabitants of the annular continent, {caka-t-tivu.}

     “சாகத் தினெல்லை தன்னில்…… குகரராண்டு வாழ்வார்” (கந்தபு. அண்டகோ. 48.);.

     [குகன் + குகர் → குகரர்.குகர்=வேடர், படகோட்டிகள்.]

குகர்த்தமன்

 குகர்த்தமன் gugarttamaṉ, பெ.(n.)

   ஒரு மன்னன்; a king.

குகவேளாளர்

 குகவேளாளர் gugavēḷāḷar, பெ.(n.)

இராமன் கங்கை கடக்குமாறு துணைபுரிந்த குகனது மரபினராகச் செம்படவர் சிலர் வழங்கிக்கொள்ளும்

   குலப்பெயர் (E.T.);; name assumed by a sect of {cempadavas,} tracing their descent from Kuga who ferried {Rāmā} over the Ganges.

     [குகள் + வேளாளர்.]

குகாவிருட்சம்

 குகாவிருட்சம் kukāviruṭcam, பெ.(n.)

   மலை மா; hill balsam – Balsmodendron caudatum(சா.அக.);.

     [குகா+Skt. விருட்சம்]

குகு

குகு gugu, பெ.(n.)

   1. காருவா (அமாவாசை );; new moon.

     “குகுவைத் தொடர் பூரணை” (சேதுபு. தேவிபு. 60.);

   2. பத்துநாடியுளொன்று; a principal tubular vessel of the human body, one of {tacamad} ‘குகு கன்னியலம்புடை’ (சிலப். 3:26, உரை.);.

 Skt. kuhu

     [குல் → குவ் → குகு (குகை, இருள்);.]

குகுதன்

 குகுதன் kukutaṉ, பெ.(n.)

   பத்து (தச); வகை நாடியுளொன்று; a principal tubular vessel of the human body, one of taša-nadi (செ.அக.);.

     [குங்கு – குகு – குகுதன்.]

குகுரன்

 குகுரன் guguraṉ, பெ.(n.)

   நாய்; dog.

ம. குகுரம்

     [குக்கல் → குக்குான் → குகுரன் (கொ.வ.);.]

குகுரம்

குகுரம் guguram, பெ.(n.)

   ஐம்பத்தாறு தேசங்களுள் ஒன்று; a country in Ancient India, the kingdom of Yadu, one of 56 [tēcam.}

     “அவந்தியொடு சேதி

குகுரம்”(திருவேங். சத.97);.

ம. குகுரம்

 Skt. kukura

     [குகர் = வேடர், படகோட்டிகள். குகர் → குகுரம்.]

குகுலா

குகுலா1 kukulā, பெ.(n.)

   ஒருவகைப் பூண்டு (மலை);; christmas rose, herb-Helleforus niger.

     [குகு – குகுலா]

 குகுலா2 kukulā, பெ.(n.)

   தேனீ; honey bee (செ.அக.);.

     [குங்குல் – குகுலா]

குகூகண்டம்

 குகூகண்டம் kuākaṇṭam, பெ.(n.)

   குயில் (யாழ்.அக.);; the Indian cuckoo.

     [Skt.{}_{} → த.குகூகண்டம்.]

குகை

குகை gugai, பெ.(n.)

   1.மலைக்குகை (பிங்.);; cave, mountain cavern, grotto.

   2. முனிவர் இருப்படிம் (பிங்.);; hermit’s cell.

   3. சிமிழ்(சீவக.1906, உரை);; scent box, casket.

   4. மாழைகளை உருக்குங் கலம்; crucible.

     “கருமருவு குகையனைய காயத்தி னடுவுள்”(தாயு. 32);.

   5. கல்லறை; cellar subtera. nean walled room for the ascetic in trance, serving as sepulchre after his death, when he is intered in it in a sitting posture.

     “அந்தவுடறான் குகைசெய் திருத்திடின்” (திருமந். 1913);.

   6. மலைமகள்(கூர்மபு. திருக்கலியாண.23);;{Parvati}

மறுவ, கெவி, அனை, குடவு, நூழை, பொதும்பு. போறை முழை, வங்கு விடர்.

   க.,தெ., து. கவி;கூய். க்ராஉ.

 Skt. guha

 Fin. {kāva,} Es. kava, Hung. keb:Mong. keb, O.Turk, kib. Jap. gawab:Q. hawa

     [குழி + குழை → குகை. ஒநோ: முழை → முகை.]

குகைக்காமன்

 குகைக்காமன் gugaiggāmaṉ, பெ.(n.)

   கல்நார் (மூ.அ.);; asbestos.

     [குகை + காமன்.]

குகைச்சட்டி

 குகைச்சட்டி gugaiccaṭṭi, பெ.(n.)

   சட்டிவகை; kettle.

     [குகை + சட்டி.]

குகைச்சி

 குகைச்சி gugaicci, பெ.(n.)

   கறையான் புற்று (யாழ். அக.);; white ant’s nest.

     [குகை → குகைச்சி.]

குகைநமச்சிவாயமூர்த்திகள்

 குகைநமச்சிவாயமூர்த்திகள் kukainamaccivāyamūrttikaḷ, பெ.(n.)

   திருவண்ணாமலையில் ஒரு குகையில் உள் ளொடுக்கி (நிட்டை);யில் இருந்த சித்தர்;Šiddhar(அபி.சிந்.);.

     [குகை+நமச்சிவாயம்+மூர்த்தி]

குகைநமச்சிவாயர்

குகைநமச்சிவாயர் gugainamaccivāyar, பெ.(n.)

   பதினெட்டாம் நூற்றாண்டில் திருவண்ணா மலைக் குகையில் வசித்து வந்தவரும் அருணகிரி யந்தாதி முதலிய நூல்களின் ஆசிரியருமான ஒரு முனிவர்; author of {Aruna-kiri-y-antát} and other works, who lived in a cave at {Tiruvannāmalai} in the 18″ C.

     [குகை + நமச்சிவாயர்.]

குகைப்புடம்

 குகைப்புடம் gugaippuḍam, பெ.(n.)

   மூசையில் வைத்து இடும் புடம்(வின்);; calcination or refining of metal in a crucible.

     [குகை + புடம். குகை = மூசை.]

குகைமறைஞானசம்பந்தநாயனார்

 குகைமறைஞானசம்பந்தநாயனார் kukainamaccivāyammūrttikukaimaṟaiñāṉacampantanāyaṉār, பெ.(n)

   சிதம்பரத்தில் இருந்த சிவ ஆசாரியர்; the Šava teacher in Chidambaram.

இவர் தமிழில் அருணகிரிபுராணம் பாடியுள்ளார் (அபிசிந்);.

குகைமேனாதத்தீ

 குகைமேனாதத்தீ kukaimēṉātattī, பெ.(n.)

   தங்கத்தை (சுவர்ண பேதி); இளக்கச் செய்யும் நீர்மம் (மு.அ);; a drug which dissolves gold (செ.அக.);.

     [குகை+மேல்+ஆதவதீ]

குகைவீசம்

 குகைவீசம் kukaivīcam, பெ.(n.)

   கல்நார்; asbestos (சா.அக.);.

     [குகை+வீசம்]

குக்கன்

குக்கன் kukkaṉ, பெ.(n.)

   நாய்; dog (திவா.);.

க.குக்கர, குக்கல.

     [குக்கு → குக்கல் → குக்கள். ‘அன்’ ஒன்றன் பாலீறு (வே.க.151);.]

குக்கம்

 குக்கம் kukkam, பெ.(n.)

   இந்திரகோபம்; தம்பலப்பூச்சி; cochineal insect – Coccus cacti (சா.அக.);.

குக்கர்

குக்கர் kukkar, பெ.(n.)

   மிக இழிந்தோர்; contemptible or despicable persons of low birth, as a dog.

     “குடிமையிற் கடமைப்பட்ட குக்கரில்” (திவ். திருமாலை 39);.

க. குக்கா, குக்கல.

 kurkura, a dog. Gt makes it a reduplicated form, derived from M. Kure, T. Kurai, to sound, to make a noise See the so-called Sk. verbal theme kur Skurkuta (К.К.Е. D.ХХ);

     [குக்கல் → தாழ்தல், இழிதல், குக்கல் → குக்கர்.]

குக்கலாதி

 குக்கலாதி kukkalāti, பெ.(n.)

   வாலுளுவை; spindle tree – Celastrus paniculata (சா.அக.);.

     [குக்கல்+ஆதி]

குக்கலிங்கோ

 குக்கலிங்கோ kukkaliṅā, பெ.(n.)

   கொம்மட்டி; bitter melon (சா.அக.);.

     [குக்கல் → குக்கலிங்கம் → குக்கலிங்கோ (கொ.வ.);.]

குக்கல்

குக்கல்1 kukkal, பெ.(n.)

   கக்குவான் (யாழ்ப்.);; whooping cough.

     [குக்கு → குக்கன்]

 குக்கல் kukkal, பெ.(n.)

   நாய் (சூடா.);; dog.

     “குக்கலைப் பிடித்து நாவிக் கூண்டினி லடைத்து வைத்து”(விவேகசிந்);.

தெ. க. குக்க

 Skt. Kukkura

     [குல் → குக்கு = உட்கார்தல், இருத்தல் குக்கு → குக்கல் உட்காந்திருக்கும் விலங்கு (நாய்);.]

குக்கி

குக்கி1 kukki, பெ.(n.)

   வயிறு (திவா.);; belly, cavity of the abdomen.

 Skt. kukshi

     [குல் + வளைதல் கருத்துவேர். குல் → குக்கு → குக்கி.]

 குக்கி2 kukki, பெ.(n.)

   கன்றுகள், கண்டவற்றை மேயாதவண்ணம் வாய்ப்பகுதிக்கு இடும் வலை, முக்காணி; mouth covering of calves made of fibre string.

     [குல் + குக்கி]

குக்கிக்கழிச்சல்

 குக்கிக்கழிச்சல் kukkikkaḻiccal, பெ.(n.)

   வயிற்றுக் கழிச்சல்; purging, purgation (சா.அக.);.

     [குக்கி + கழிசல்.]

குக்கிசம்

 குக்கிசம் kukkisam, பெ.(n.)

   இடுப்புப்பக்கம்; the hip region (சா.அக.);.

     [குக்கு → குக்கிசம்]

குக்கிச்சுரம்

 குக்கிச்சுரம் kukkiccuram, பெ.(n.)

   வயிற்றுக் கோளாறினால் உண்டாகும் காய்ச்சல்; fever relating to the gastric disorder in the stomach (சா.அக.);.

     [குக்கி + சுரம்.]

குக்கிடமண்டபம்

 குக்கிடமண்டபம் kukkiṭamaṇṭapam, பெ. (n.)

காசியில் உள்ள முத்தி மண்டபம்:

 muttimandapam in kaśi (அபி.சிந்.);.

     [குக்கிட+மண்டபம்]

குக்கிநீர்

 குக்கிநீர் kukkinīr, பெ.(n.)

   இரைப்பையினுள் உண்டாகும் செரிமான நீர்; gastric juice or fluid (சா.அக.);.

     [குக்கி + நீர்]

குக்கிப்பிளிகை

 குக்கிப்பிளிகை guggippiḷigai, பெ.(n.)

   குடலை மூடிய சவ்வு; a membrane attached to the intestines, appendices (சா.அக.);.

     [குக்கி + பிளிகை.]

குக்கிரம்

 குக்கிரம் kukkiram, பெ.(n.)

   வயிற்றுக் கோளாற்றி னால் உண்டாகும் பெருவழற்சி; acute disorder of the stomach (சா.அக.);.

     [குக்கி + குக்கிரம்]

குக்கிராமம்

 குக்கிராமம் kukkirāmam, பெ.(n.)

   சிற்றூர்; small village.

ம. குக்கிராமம்

 Skt. Kugrama

     [குல்(குறுமை); +கிராமம்.]

குக்கிரி

 குக்கிரி kukkiri, பெ.(n.)

   மண்புழு, நண்டு ஆகியவை வெளித்தள்ளிய மண்; the soil thrown out by earthworms or crabs.

ம. குக்கிரி குக்கின் அகுக்கிரி)

குக்கிரேகி

 குக்கிரேகி kukkirēki, பெ.(n.)

   வயிற்றிலுள்ள நீர் அல்லது நீர்த்தன்மையான பொருள்களை வெளியேற்ற அல்லது உட்புகுத்தப் பயன்படும் நீர்க்குழாய்; a small pump, used for emptying the stomach or pumping some liquid into it, stomach pump (சா.அக.);.

     [குக்கில் →குக்கிலகி→குக்கிரேகி(கொ.வ.);.]

குக்கிற்சூரணம்

 குக்கிற்சூரணம் kukkiṟcūraṇam, பெ.(n.)

   தூளாக உள்ள ஒருவகை மருந்து; a kind of medicinal powder prepared by stuffing a fowl with dammer-resin, calcinating and pulverising it (செ.அக.);.

     [குக்கில்+சூரணம்]

குக்கிற்பொடி

 குக்கிற்பொடி kukkiṟpoḍi, பெ.(n.)

   குங்கிலியம் கலந்த ஒருவகைப்பொடி மருந்து(வின்.);; a kind of medicinal powder prepared by stuffing a fowl with dammer-resin, calcinating and pulverising it.

     [குக்கில் + பொடி.]

குக்கிலம்

 குக்கிலம் kukkilam, பெ.(n.)

   அதிவிடயம் என்னும் ஒரு மருந்துச் சரக்கு (மலை.);; atees.

     [குக்குல் + குக்கிலம்.]

குக்கிலி

 குக்கிலி kukkili, பெ.(n.)

செம்போத்து (யாழ்.அக.);

 crow pheasant (செஅக.);.

     [குக்கில்-குக்கிலி]

 குக்கிலி kukkili, பெ.(n.)

   செம்போத்து (கழ.தமி. கை.);; crow-pheasant.

     [குக்கில்→குக்கிலி.]

குக்கிலிற்கண்

 குக்கிலிற்கண் kukkiliṟkaṇ, பெ.(n.)

   செங்கண்; blood shot eyes (சா.அக.);.

     [குக்கில்(எரிதல், சிவப்பு); + இல் + கண்.]

குக்கில்

குக்கில்1 kukkil, பெ.(n.)

   செம்போத்து; prob. onom, crow pheasant.

     “குக்கிற் புறத்த சிரல்வாய” (களவழி.5);.

     [குக்கு – ஒலிக்குறிப்பு. குக்கு → குக்கில்.]

 குக்கில்2 kukkil, பெ.(n.)

   1.குங்கிலிய மரம்; piney varnish tree.

   2.ஒரு சிறுமரம்; Indian bdellium.

   3. கருங்குங்கிலியம்; black damma tree.

   4. குங்கிலி யப்பிசின் (பிங்.);; black dammar-resin.

ம. குக்கில் க. குக்குள, குக்கின.

     [உல் → குல் → எரிதல் கருத்துவேர். குல் → குக்கு → குக்கில்.]

குக்கில்பால்

 குக்கில்பால் kukkilpāl, பெ.(n.)

   குங்கிலியம்; resin of Indian dammer(சா.அக.);.

     [குக்கில் + பால்.]

குக்கில்புகை

 குக்கில்புகை kukkilpukai, பெ.(n.)

   குங்கிலியப் புகை; fumes or incense of Indian dammer (சா.அக.);.

     [குக்கில்+புகை]

குக்கு

குக்கு1 kukkudal,    5 செ.கு.வி.(v.i.)

   இருமுதல்; onom, to whoop, hoop, as in whooping cough.

     “பிணியுற்றவனாகிக் குக்கிக் கக்கி”(திருப்பு.430);.

ம. குக்குக(சூடாதல்);

     [குக் (ஒலிக் குறிப்பு); + குக்கு.]

 குக்கு2 kukkudal,    5 செ.கு.வி.(v.i.)

   ஒடுங்குதல்; to be restrained as the senses or the resigned. to calm down.

     [குல் + குற்கு → குக்கு.]

 குக்கு2 kukkudal,    5 செ.குன்றாவி.(v.t.)

   1. துணிகளைத் துவைக்க மெல்ல கல்லின் மேல் அளித்தல்; to beat cloth somewhat seny by in

 washing.

   2. கைமுட்டியால் குத்துதல்; to strike with the first culf.

க., பட.குக்கு.

     [குல் + குக்கு.]

 குக்கு4 kukkudal,    5 செ.குன்றாவி.(v.t.)

   1. குனிதல், வளைதல்; to bend.

   2. தாழ்தல்; to become low in position.

   3. கெடுதல் அழிதல்; to get ruined.

க.தெ. குக்கு.

     [குல் + குக்கு.]

 குக்கு5 kukku, பெ.(n.)

குக்கர்பார்க்க;See. kukkar.

     [குக்கல் → குக்கு.]

குக்குடசருப்பம்

 குக்குடசருப்பம் kukkuḍasaruppam, பெ.(n.)

   பறவைநாகம்; flying snake or cobra, a winged serpent – basilik. (சா.அக.);.

     [குக்குடம் + சருப்பம்.]

குக்குடசிவப்புக்காரம்

 குக்குடசிவப்புக்காரம் kukkuḍasivappukkāram, பெ.(n.)

   சிவப்புச் சேவலின் கழிவு; the dung of a red cock (சா.அக.);

     [குக்குடம் + சிவப்பு + காரம்.]

குக்குடச்சூட்டு

 குக்குடச்சூட்டு kukkuḍaccūḍḍu, பெ.(n.)

   கோழித் தலைக் கந்தகம் (வின்.);; a kind of sulphur.

     [குக்குடம் = கோழி, சேவல். சூட்டு = தலைக்கொப்பு. குக்குடம் + சூட்டு.]

குக்குடதீபம்

குக்குடதீபம் kukkuḍatīpam, பெ.(n.)

   கோழி வடிவாகச் செய்யப்பெற்ற கோயில்விளக்கு (பரத. ஒழிபி. 42. உரை.);; a fowl-shaped lamp used in temples.

     [குக்குடம் + தீபம். குக்குடம் = கோழி.]

குக்குடத்தண்டம்

 குக்குடத்தண்டம் kukkuḍattaṇḍam, பெ.(n.)

   கோழிமுட்டை; fowl’s egg (சா.அக.);.

க. குக்கடாண்ட

     [குக்குடத்து + அண்டம்.]

குக்குடத்தவரை

 குக்குடத்தவரை kukkuṭattavarai, பெ.(n.)

   கோழியவரை; west Indian sea-side beanCanavelia obtusifolia (சா.அக.);.

     [குக்குடத்து+அவரை]

குக்குடபுடம்

குக்குடபுடம் kukkuḍabuḍam, பெ.(n.)

   கோழியின் அளவாகப் பத்து வறட்டி கொண்டு இடப்படும் புடம் (கந்தபு. மார்க்கண். 134);; calcination of metals in pile often dried dung cakes approximating to the height of a cock.

ம. குக்குடபுடம்

     [குக்குடம் + கோழி. குக்குடம் + புடம்.]

புடத்தின் வகை:

   1. ஆயுர்வேதப்படி I சாண் உயரம் I சாண் ஆழமுள்ள பள்ளத்தில் காட்டு முட்டையை, புடம் போடும் மருந்திற்குக் கீழுமேலுமாக நிரப்பிப்போடும் புடம்.

   2. சித்தநூலின் முறைப்படி 5 எருவைக் கோழி உயரம் அடுக்கிப் போடுதல். இதன் சுற்றளவு 16 அங்குலமெனச் சொல்லப்படும்.

   3. வேறுசில நூல்களில் ஆசிரியர்கள் 10

எருவைக் கொண்டு போடும் புடமெனக் கருதுவார்கள்.

குக்குடம்

குக்குடம் kukkuḍam, பெ.(n.)

   1.கோழி; gallinaceous fowl, cock, hen.

     “குக்குடம் வாழ்க்” (கந்தபு. வள்ளி261);.

   2. இறகுள்ள பாம்பு (பிங்.);; wingedserpent.

   ம. குக்குடம்;   கது.குக்குட; Skt.kukkuia.

     [கொக் – ஒலிக்குறிப்பு. கோழி எழுப்பம் ஒசை. கொக் + கொக்-கொக் – கொக்கொக் → குக்குக் → குக்குடு → குக்குடம்.]

 kurkuta, kukkuta, a cock a wild cock: kukkuf, ahen CfD. kuk kura, kara kugu1 and

   2. and also Sk kurkura (No.44);. There is the Sk-verbal theme kur, to sound, that has apparently been formed of the T and M verbs adduced s kurkura Kurkusa (contracted into

 kukkufa); is either a reduplication of a {kusakuta,} or more probably a composition of kur, sound, cry (i.e. T. kurai); and D. {kuta,} beater, utterer (cry-beater or-utterer, i.e. crier, crower);. The present and only D, word for a cock, a fowl, is {köss,} q.v., which bird is found wild in the southern jungles. {Kosis} of course a contraction of some ancient D, term, and {kurkuta} and {kö/7} certainiy are cognate (K.K.D.E.XX);

குக்குடம்பாம்பு

குக்குடம்பாம்பு kukkuḍambāmbu, பெ.(n.)

   வாணாள் நீட்டித்தலால் உடல் குறைந்து கோழி பறக்குமளவு பறந்து செல்லுந்தன்மையதான பாம்பு (சீவக. 1271,உரை);; winged serpent, a variety of serpents said to become shorter with age, get wings ultimately and fly like domestic fowls.

ம. குக்குடசர்ப்பம்

     [குக்குடம் + பாம்பு. குக்குடம் = கோழி.]

குக்குடவிருக்கை

குக்குடவிருக்கை kukkuḍavirukkai, பெ.(n.)

   கோழியைப் போல்; sitting posture like cock.

   இருகால்களையும் கீழ்வைத்துக் குந்தியிருந்து ஒகஞ்செய்யும் இருக்கை வகை (திருமந்.561);; sitting posture in yogic practic, the solestouching the ground like those of a cock.

     [குக்குடம் + இருக்கை.குக்குடம் = உட்கார்ந்தநிலை.]

குக்குடி

குக்குடி kukkuḍi, பெ.(n.)

   1. இலவமரம்; silk cotton tree.

   2. பெட்டைக்கோழி; hen (சா.அக.);.

ம.குக்குடி

     [குக்குடம் + குக்குடி]

குக்குரன்

 குக்குரன் kukkuraṉ, பெ.(n.)

   நாய்; dog.

   ம. குக்குரம்;   து. குக்கரெ; Skt.kukkura.

     [குக்கல் → குக்குரன்.]

குக்குரம்

 குக்குரம் kukkuram, பெ.(n.)

   கோடகசாலை என்னும் பூடு(மலை.);; a very small plant.

     [குக்குல் → குக்குரம் = தரையில் படரும் பூடுவகை.]

குக்குரி

 குக்குரி kukkuri, பெ.(n.)

   பெண்நாய்; a bitch.

ம., க.குக்குரி.

     [குக்கல்→குக்கலி→குக்குரி.]

குக்குறம்

 குக்குறம் kukkuṟam, பெ.(n.)

   குடசப்பாலை; Conessibark.

     [குக்கல்(சிறியது); → குக்குறம்.]

குக்குறம்பொத்தை,

 குக்குறம்பொத்தை, kukkuṟambottai, பெ.(n.)

   கன்னியாக்குமரி மாவட்டத்துச் சிற்றூர்; a village in Kanniya-k-kumari distict.

குக்குறுப்பான்

 குக்குறுப்பான் kukkuṟuppāṉ, பெ.(n.)

குக்குறு வான் பார்க்க;See. {kukkuruvām.}

     [குக்குறுவான் → குக்குறுப்பான்.]

குக்குறுவான்

 குக்குறுவான் kukkuṟuvāṉ, பெ.(n.)

   கீச்சென்று ஒலிக்கின்ற பசுமைநிறமுள்ள பறவைவகை (யாழ்ப்.);; agreen, screeching barbet.

     [கிக் – ஒலிக்குறிப்பு. கிக் + கிக் + உறு. கிக்கிறு + அன் -கிக்கிறுவான் → குக்குறுவான்.]

     [P]

குக்குலம்

 குக்குலம் kukkulam, பெ.(n.)

   சிறு இனப் பிரிவு; tribe.

     [குறு+குலம்]

குக்குலவம்

 குக்குலவம் kukkulavam, பெ.(n.)

   குக்கிலிலிருந்து எடுக்கும் எண்ணெய்; a medicated oil orghee prepared from bedallium (சா.அக.);.

     [குக்கில்→குக்குலவம்.]

குக்குலு

குக்குலு kukkulu, பெ.(n.)

   1. ஒருவகை மரம் (பதார்த்த.1120);; tripterocarp dammar.

   2. வெள்ளைக் குங்கிலியம்; piney varnish tree.

   3. ஒருவகைப் பெருமரம்; konkani resin.

   4.ஒருவகை சிறுமரம்; Indian bdellium.

     [குக்கில்→ குட்டையானது. குக்குல்→ குக்குலு.]

குக்குலுவம்

குக்குலுவம் kukkuluvam, பெ.(n.)

குங்கிலியம் பார்க்க;See. {kurgisyam.}

     “குக்குலுவப்புகை” (கந்தபு, தேவகிரி. 29);.

மறுவ. குங்கலியம்

     [குக்கில் → குக்குலுவம்.]

குக்கூடல்

குக்கூடல் kukāṭal, பெ.(n.)

   முட்டாக்கு; vell or covering for the head.

     “பொன்னொத்த வாடைக்குக்கூடலிட்டு,

     “திவ்பெருமாள்.6:5).

     [குல் – வளைதல் கருத்துவேர். குல் → குக்கு → குக்குடல் → குக்கூடல் = வளைத்துப் போர்த்துக் கொள்ளம் போர்வை.] –

குக்கூவெனல்

குக்கூவெனல் gugāveṉal, பெ.(n.)

   ஓர் ஒலிக் குறிப்பு; onom. expr: signifying crowing sound, as of a cock;

 cooing sound, as of a dove, hooting noise, as of an owl.

     “குக்கூவென்றது கோழி” (குறுந்.157);.

     [குக் + கூ – ஒலிக்குறிப்பு) குக் + கூ + எனல்.]

குக்கை

 குக்கை kukkai, பெ.(n.)

   மூங்கிலால் முடைந்த சிறு கூடை; small basket made of bamboo.

   க. குக்கெ, குக்கி;   து., பட.குக்கெ;கோத. கிக்.

     [குக்கு→குக்கை]

 குக்கை kukkai, பெ.(n.)

மாடு விளைநிலத்தில் மேயாமலிருக்கவாய்க்குப்போடும் முச்சாணி.

 a rope-cover fixed on the mouth of the cow to prevent it from grasing in the fields of ) cгор.

மறுவ வாய்க்கூடு

     [குக்கி-குக்கை]

குங்கமச்செந்தொட்டி

 குங்கமச்செந்தொட்டி kuṅgamaccendoṭṭi, பெ.(n.)

   சிவப்பு செந்தொட்டி அல்லது சிவப்புக் காஞ்சொறி; a red variety of {kāfjors}(சா.அக.);.

     [குங்குமம் + செந்தொட்டி]

குங்கிப்போ-தல்

குங்கிப்போ-தல் kuṅgippōtal,    8 செ.கு.வி.(v.i.)

   குறைதல்; decreasing, becoming less (சா.அக.);.

தெ. குங்கு, கூகு, க்ருங்கு (மூழ்குதல், மறைதல்);.

     [குறுகு → குக்கு → குங்கு → குங்கி+ போ.]

குங்கியாஇசுதீங்கி

குங்கியாஇசுதீங்கி kuṅkiyāicutīṅki, பெ.(n.)

   கப்பற் சதுரப்பாய்களின் கீழ் மூலைகளை மேலிழுப்பதற்குக் கட்டியிருக்குங் கயிறு: (M.Navi.86);; clew lines (செ.அக.);.

குங்கிலி

குங்கிலி kuṅgili, பெ.(n.)

   1. தலூரம்; bastard saul.

   2. காட்டுமா; wild mango (சா.அக.);.

     [குக்குல் → குங்குல் → குங்கிலி.]

குங்கிலிகம்

குங்கிலிகம் guṅgiligam, பெ.(n.)

   1. ஒருவகை மரம்; tripterocarp dammar.

   2. வாலுளுவை; black oil.

     [குங்கிலியம் → குங்கிலிகம்.]

குங்கிலியக் களிம்பு

 குங்கிலியக் களிம்பு kuṅgiliyakkaḷimbu, பெ.(n.)

   ஆறாத புண்களுக்குப் பூச உதவும் வெள்ளைக் குங்கிலியக் களிம்பு; an ointment prepared from olibanum. It is applied for unhealed sores(சா.அக.);.

     [குங்கிலியம் + களிம்பு.]

குங்கிலியக்கலய நாயனார்

குங்கிலியக்கலய நாயனார் kuṅgiliyakkalayanāyaṉār, பெ.(n.)

   அறுபத்து மூன்று நாயன்மாருள் ஒருவர்(பெரியபு.);; name of a cononized {savasaint,} one of 63.

     [குங்கிலியம் + கலயம் + நாயனார்.]

குங்கிலியக்கலயர்

 குங்கிலியக்கலயர் kuṅgiliyakkalayar, பெ.(n.)

குங்கிலியக் கலய நாயனார் பார்க்க;See. {kurgiyak-kasaya-nāyatjär.}

     [குங்கிலியம் + கலயம் + அர் – குங்கிலியக் கலயர்.]

குங்கிலியக்கலையர்

குங்கிலியக்கலையர் kuṅkiliyakkalaiyar, பெ. (n.)

   சிவனடியார் அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவர் (பெரியபு);; name of a canonized Šva saint, one of 63 Nayanmars (செ.அக.);.

     [குங்கிலியம்+கலையர்]

குங்கிலியத்துள்

 குங்கிலியத்துள் kuṅgiliyattuḷ, பெ.(n.)

   குங்கி லியப்பொடி; powder of Indian olibanum (சா. அக.);.

     [குங்கிலியம் + தூள்.]

குங்கிலியன்

 குங்கிலியன் kuṅkiliyaṉ, பெ.(ո.)

   கள்ளரினத்தார்க்கு வழங்கப்படும் பட்டம்; tittle of kallar’s (அபி.சிந்.);.

குங்கிலியம்

குங்கிலியம் kuṅgiliyam, பெ.(n.)

   1. ஒருவகை மரம் (பதார்த்த. 1120.);; tripterocarp dammar.

   2. சாலமரம்; bastard sal.

   3. சாலவகை; sal.

   4. வெள்ளைக் குங்கிலியம்; pineyvarnishtree.

   5. ஒருவகைப் பெருமரம்; Konkan resin.

   6. ஒரு சிறுமரம்; Indian bdellium tree.

   7. மலைக்கிளுவை; downy hill balsam tree.

   8. கருங்குங்கிலியம்; black dammar tree.

   9 ஆத்திரேலியாவிலுள்ள மரவகை; Australian dammar.

ம. குங்கிலியம்

     [குக்கில் → குங்கிலியம்.]

     [P]

 குங்கிலியம் kuṅgiliyam, பெ. (n.)

பொழுது

 time (யாழ்.அக.);.

குங்கு-தல்

குங்கு-தல் kuṅgudal,    5 செ.கு.வி.(v.i.)

   1. குன்றுதல்; to decrease, diminish, sink;

 to be humbled.

     “உன்பொங்கு குங்க” (யாழ்ப்.);.

   2. வணங்குதல்; to bend sralute.

   3. குவிதல்; to close.

   4. சுருங்குதல்; to condense.

   ம.குங்வுக;   க.குக்கு,குங்கு;   தெ. குங்கு;   து.குக்குனி;   துட.க்விச்;   கூ. க்ரும்ப, க்ருவ;   குவி. க்ரூஇயலி;பட.குக்கு.

     [குல் → குங்கு → குங்குதல்.(தமி.வ.219);.]

குங்கும மந்தாரை

 குங்கும மந்தாரை kuṅgumamandārai, பெ.(n.)

   சிவப்பு மந்தாரை அல்லது செம்மந்தாரை; pink and yellow mountain ebony (சா.அக.);.

     [குங்கும் + மந்தாரை.]

குங்கும மரம்

 குங்கும மரம் kuṅgumamaram, பெ.(n.)

   குங்குமப் பூச்செடி (சா.அக.);; saffron, bulbous-rooted plant.

     [குங்குமம் + மரம்.]

குங்குமக்காவி

 குங்குமக்காவி kuṅgumakkāvi, பெ.(n.)

   செங்காவி (வின்.);; saffron ochre.

மறுவ. குங்குமக்கவவி

ம.குங்குமக்காவி

     [குங்குமம் = சிவப்பு. குங்குமம் + காவி.]

குங்குமக்குருவிக்கார்

 குங்குமக்குருவிக்கார் kuṅgumakkuruvikkār, பெ.(n.)

   நெர்வகை(A);; a kind of paddy.

     [குங்குமம் + குருவி + கார்.]

குங்குமக்கோதை

 குங்குமக்கோதை kuṅgumakātai, பெ.(n.)

   சிவப்புச்சத்திசாரணை; red shauranay. red trianthema.

     “குங்குமக் கோதைகுடல் பிடுங்கி” (சா.அக.);.

மறுவ, குங்குமச்சத்தி

     [குங்குமம்+கோதை.]

குங்குமக்கோவை

 குங்குமக்கோவை kuṅkumakāvai, பெ.(n.)

   செங்கோவை; red bitter melon – Соссіпеa indica (சா.அக.);.

     [குங்கும+கோவை]

குங்குமச்சம்பா

 குங்குமச்சம்பா kuṅgumaccambā, பெ.(n.)

   மஞ்சள் நிறமுள்ள சம்பா நெல் வகை(வின்.);; a yellow variety of rice.

     [குங்குமம் + சம்பா.]

குங்குமச்சிமிழ்

 குங்குமச்சிமிழ் kuṅgumaccimiḻ, பெ.(n.)

   குங்குமம் வைக்கும் பெட்டி; small casket for holding kungumampowder.

மறுவ. குங்குமச்செப்பு. குங்குமப்பரணி.

     [குங்குமம் + சிமிழ்.]

குங்குமச்சிவதை

 குங்குமச்சிவதை kuṅgumaccivadai, பெ.(n.)

   சிவப்புச் சிவதைக் கீரை; a red variety of cats greens (சா.அக.);.

     [குங்குமம் + சிவதை.]

குங்குமச்சீதா

 குங்குமச்சீதா kuṅgumaccītā,    சிவப்புச் சீதா செங்கழுநீர், அல்லது சிவப்பு நெய்ச்சிட்டிக் கீரை; a red varietyofash-coloured fleabane (சா.அக.). [குங்குமம் + சீதா.]

குங்குமச்செப்பு

 குங்குமச்செப்பு kuṅgumacceppu, பெ.(n.)

குங்குமச்சிமிழி பார்க்க;See. {kunguma-c-cimis.}

ம. குங்குமச்செப்பு

     [குங்குமம் + செப்பு]

குங்குமச்செம்பரத்தை

 குங்குமச்செம்பரத்தை kuṅgumaccembarattai, பெ.(n.)

   சிவப்புச் செம்பரத்தை; flesh coloured shoeflower (சா.அக.);.

     [குங்குமம் + செம்பரத்தை.]

குங்குமச்செழுமலர்

 குங்குமச்செழுமலர் kuṅgumacceḻumalar, பெ.(n.)

   சிவப்புக்கொன்றை; a kind of red cassia tree (சா.அக.);.

     [குங்குமம் + செழுமலர்.]

குங்குமச்செவ்வந்தி

 குங்குமச்செவ்வந்தி kuṅgumaccevvandi, பெ. (n.)

   செவ்வந்தி வகை (மூ.அ.);; a species of chrysanthemum.

     [குங்குமம் + செவ்வந்தி.]

குங்குமச்சோரன்

குங்குமச்சோரன் kuṅgumaccōraṉ, பெ.(n.)

   ஒருவகைக் குதிரை (அகவசா. 152);; a species of horse.

     [குங்குமம் + சோரன்.]

குங்குமதூபம்

 குங்குமதூபம் kuṅgumatūpam, பெ.(n.)

   வெள்ளைப் போளம்; white myrrh (சா.அக.);.

     [குங்குமம் + தூபம்]

குங்குமபாடாணம்

குங்குமபாடாணம் kuṅkumapāṭāṇam, பெ.(n.)

   பிறவி நஞ்சு வகை (மூ.அ.);; a prepared arsenic, one of 32 (செ.அக.);.

     [குங்குமம்+பாடாணம்]

குங்குமபாண்டியன்

 குங்குமபாண்டியன் kuṅkumapāṇṭiyaṉ, பெ.(n.)

   மதுரையை ஆண்ட வாகுவலய பாண்டியனின் மகன்; son of vāguwalayapandiyan (அபி.சிந்.);.

     [குங்கும+பாண்டியன்.]

குங்குமப்பயறு

 குங்குமப்பயறு kuṅkumappayaṟu, பெ.(n.)

   பாசிப்பயறு இனத்தைச் சேர்ந்த ஒருவகை சிகப்புப் பயறு; a red variety of the species of green-gram (சா.அக.);.

     [குங்கும+பயறு]

 குங்குமப்பயறு kuṅgumappayaṟu, பெ.(n.)

   பாசிப் பயறு இனத்தைச் சேர்ந்த ஒரு சிவப்புப்பயறு; a red variety of the species of green gram (சா.அக.);.

ம. குங்குமப்பயறு

     [குங்குமம்+ . பயறு.]

குங்குமப்பரணி

 குங்குமப்பரணி kuṅgumapparaṇi, பெ.(n.)

குங்குமச்சிமிழ் பார்க்க;See. {kunguma-c-cimil}

     [குங்குமம் + பரணி.]

குங்குமப்பருத்தி

 குங்குமப்பருத்தி kuṅgumapparutti, பெ.(n.)

   செம்பருத்தி; Bengal cotton (சா.அக.);.

     [குங்குமம் + பருத்தி.]

குங்குமப்பாடாணம்

குங்குமப்பாடாணம் kuṅgumappāṭāṇam, பெ.(n.)

   குங்குமச்செய் நஞ்சு (மூ.அ.);; a prepared arsenic one of 32.

     [குங்குமம் + பாடாணம். {Skt. pāšapa→} த. பாடாணம்.]

குங்குமப்பிரண்டை

 குங்குமப்பிரண்டை kuṅgumappiraṇṭai, பெ.(n.)

   சிவப்புப் புளியம் பிரண்டை; heavy wild wine (சா.அக.);.

     [குங்குமம் + பிரண்டை.]

குங்குமப்பூ

 குங்குமப்பூ kuṅgumappū, பெ.(n.)

   குங்குமச் செடியின் பூ; saffron flower.

ம. குங்குமப்பூ

     [குங்குமம் + பூ.]

குங்கமப்பூ காசுமீரத்தில் விளைவாகி மற்ற இடங்களுக்கு ஏற்றமதியாகிறது. இது ஒரு மணப்பொருள் கருவுற்ற பெண்களுக்கு இதைக் கொடுப்பார்கள்.

குங்குமப்பேரிகம்

 குங்குமப்பேரிகம் guṅgumappērigam, பெ.(n.)

   சிவப்பாத்தி; crimson climbing mountain ebony (சா.அக.);.

     [குங்குமம் + பேரிகம்.]

குங்குமப்பொட்டு

 குங்குமப்பொட்டு kuṅgumappoṭṭu, பெ.(n.)

   குங்குமப்பொடியால் நெற்றியிலிடும் பொட்டு; a mark of {kungumam} powderworn onthefore-head.

     [குங்குமம் + பொட்டு.]

குங்குமம்

குங்குமம் kuṅgumam, பெ.(n.)

   1. ஒருவகைச் செடி; saffron, bulbous-rooted plant.

   2. சாப்பிராவிரை; arnotto.

   3. குரங்குமஞ்சணாறி; kamela.

   4. செஞ்சாந்து; a kind of red paint.

     “மார்பிற் கலவாக் குங்கும நிலவிய குங்குமப்பொடி;

   5. நெற்றியிலிடும் குங்குமப்பொடி; saffron powder worn on the forehead.

   6. செந்நிறம்; red colour

   7. சிவப்பு; redness.

   ம. குங்குமம்;   க. குங்கும, குங்குவ;தெ. குங்கும.

{Skt. kufikuma}

     [கும் + கும். (நறுமண ஒலிக்குறிப்பு); கும் + கும் + அம்- குங்குமம்.]

குங்குமவண்ண

குங்குமவண்ண kuṅgumavaṇṇa, பெ.(n.)

   1.அரிதாரம்; yellow sulphuret of arsenic.

   2. மஞ்சட்கல்; saffron stone.

ம. குங்குமவர்ண்ணி

     [குங்குமம் + வர்ணி.]

குங்குமவண்ணக்கல்

 குங்குமவண்ணக்கல் kuṅkumavaṇṇakkal, பெ.(n.)

   மஞ்சள் கல்; yellow stone; saffron stone (சா.அக.);.

     [குங்குமம்+வண்ணம்+கல்.]

 குங்குமவண்ணக்கல் kuṅgumavaṇṇakkal, பெ.(n.)

   மஞ்சட்கல்; yellow stone, saffron stone (சா.அக.);.

     [குங்குமம் + வண்ணம் + கல்.]

குங்குமவண்ணம்

 குங்குமவண்ணம் kuṅgumavaṇṇam, பெ.(n.)

   குங்குமத்தின் நிறம், சிவப்பு நிறம்; the colour of saffron, red colour.

ம. குங்குமவர்ணம்

     [குங்குமம் + வண்ணம்.]

குங்குமவலரி _

 குங்குமவலரி _ kuṅgumavalari, பெ.(n.)

   அலரிவகை, செவ்வலரி; Sweet oleander Or red oleander or oleander role bay, as containing a yellow poisonous resin in its root.

     [குங்குமம் = குங்குமத்தின் நிறம். குங்குமம் + அலரி.]

குங்குமவாடை

 குங்குமவாடை kuṅgumavāṭai, பெ.(n.)

   குங்கும மணம்; saffron odour(சா.அக.);.

     [குங்குமம் + வாடை.]

குங்குமவாணிச்சி

 குங்குமவாணிச்சி kuṅgumavāṇicci, பெ.(n.)

   தாளகம் (யாழ்.அக.);; yellow sulphuret of arsenic.

     [குங்குமம்+ . வாணிச்சி.]

குங்குலு

குங்குலு kuṅgulu, பெ.(n.)

   1.குங்கிலிய மரம் (தைலவ. தைல.74);; tripterocarp dammar.

   2. ஒரு வகை நீண்டமரம்; bastard sal.

     [குங்குல் + குங்குலு.]

குசக்கணக்கு

 குசக்கணக்கு kusakkaṇakku, பெ.(n.)

குயக் கணக்கு பார்க்க;See. {Kuya-k-kanakku.}

     [குயவன்+கணக்கு→குயக்கணக்கு→குசக்கணக்கு.]

குசக்கருவி

 குசக்கருவி kusakkaruvi, பெ.(n.)

   குயவர் பயன்படுத்தும் திரிகை, கல், தட்டுப்பலகை முதலியன; tools used by the potters namely potter wheel, beating plate & stone.

குயக்கருவி பார்க்க;See. {Kuya-k-karuvi}

     [குயவன் + கருவி – குயக்கருவி → குசக்கருவி.]

குசக்கலத்தி

 குசக்கலத்தி kusakkalatti, பெ.(n.)

குயக்கலத்தி பார்க்க;See. {kuya-k-kaatti}

     [குயம் → குசம் + கலத்தி.]

குசக்கலம்

 குசக்கலம் kusakkalam, பெ.(n.)

குயக்கலம் பார்க்க;See. {kuya-k-kalam.}

ம.குசக்கலம்

     [குயவன் → குசவன் + சகலம் – குசக்கலம்.]

குசக்காணம்

 குசக்காணம் kusakkāṇam, பெ.(n.)

குயக் காணம் பார்க்க;See. {Kuya-k-känam.}

     [குயவன் → குசவன் + காணம் – குசக்காணம்.]

குசக்கிரம்

 குசக்கிரம் kucakkiram, பெ.(n.)

   நாணலின் (தருப்பை); நுனி; the top portion of a sacrificial grass (சா.அக.);.

குசக்குழாய்

 குசக்குழாய் kusakkuḻāy, பெ.(n.)

குயக்குழாம் பார்க்க;See. {Kuya-k-kulay}

     [குயவன் → குசவன் + குழாய் – குசக்குழாய்.]

குசடதச்சன்

 குசடதச்சன் kucaṭataccaṉ, பெ.(n,)

எட்டி,

 nux vomica (சா.அக.);.

     [குசடன்+தச்சன்.]

குசடம்

 குசடம் kucaṭam, பெ. (n.)

வெட்பாலை அரிசி,

 tellicherry bark-Hollarbhna antidysentericum alias Nerium antidysentericum (சா.அக.);

     [குடசம்+குசடம்]

குசத்தலி

 குசத்தலி kucattali, பெ.(n.)

   இரேவதன் என்னும் ஞாயிறு (சூரிய); குல மன்னன் ஆண்ட நாடு; the city where ruled by king lrevåtan (செ.அக.);.

குசத்தி

குசத்தி1 kusatti, பெ.(n.)

குயத்தி பார்க்க;See. {kuyattis}

ம. குசத்தி.

     [குயவன் + குசவன் → குசத்தி.]

 குசத்தி kusatti, பெ.(n.)

   பூவழலை(வின்.);; earth impregnated with soda.

     [குய்யம் → குயம் → குயத்தி → குசத்தி.]

 குசத்தி kusatti, பெ.(n.)

   1. சாதிக்காய்; nutmeg.

   2. ஒடு; tile (சா.அக.);.

     [குயத்தி + குசத்தி.]

குசத்தின்பாதி

குசத்தின்பாதி kucattiṉpāti, பெ.(n.)

   1. சிறு புள்ளடி; unifoliate trefoil, Hedysarum gangeticum.

   2. பற்பாடகம்; sparrow leg; fever plant – Mollugo cerviana (சா.அக.);.

     [குசம்+அத்து+இன்+பாதி]

குசத்தீவு

 குசத்தீவு kusattīvu, பெ.(n.)

குசைத்தீவு பார்க்க;See. {kusa-f-tivu}

     [குசை-→குசம் + திவு.]

குசத்துவசன்

குசத்துவசன் kucattuvacaṉ, பெ.(n.)

   1. சீதையின் தந்தையான சனகனின் தம்பி; brother of Janagan.

   2. வேதவதியின் தந்தை; father of védavadi

குசந்தனம்

 குசந்தனம் kusandaṉam, பெ.(n.)

   செஞ்சந்தனம் (மலை.);; red sandalwood.

     [குரு = சிவப்பு. குரு + சந்தனம் – குருச்சந்தனம் → குசந்தனம்.]

குசந்தம்

 குசந்தம் kusandam, பெ.(n.)

   தருப்பைப்புல்; sacrificial grass (சா.அக.);.

     [குயம் → குசம் + குசந்தம்.]

குசன்

 குசன் kusaṉ, பெ.(n.)

   செவ்வாய் (திவா.);; the plane mars, as born of the earth.

     [குய் = எரிதல், சிவப்பு. குய் → குயன் → குசன்.]

 குசன் kusaṉ, பெ.(n.)

   செவ்வாய்; the planet Mars.

த.வ. செங்கோள்.

     [Skt.ku-ja → த.குசன்.]

குசபலம்

குசபலம் kusabalam, பெ.(n.)

   1. மாதுளை மரம்; pomegranate tree.

   2. பெண்ணின் முலையைப் போன்ற பழங்கள்; fruits of the shape of the female breast.

   2.விளா; wood apple (சா.அக.);.

     [குயம் →குசம் + பலம். பழம் {→Sktூ palam,]

குசப்புத்தி

 குசப்புத்தி kucapputti, பெ.(n.)

   மடமை, அறிவின்மை; stupidity, dullness, as a term of contempt (செ.அக.);.

குசப்புல்

 குசப்புல் kucappul, பெ.(n.)

   நாணல் (தருப்பைப்); புல்; sacrificial grass.

இந்தப் புல்லைப் பூசனையில் இருக்கையாகப் பயன்படுத்துவது உண்டு (சா.அக.);.

குசமசக்கு

குசமசக்கு kusamasakku, பெ.(n.)

   1.குழப்பம்; confusion, chaotic condition.

   2. செயற்சிக்கல்; intricacy, difficulty.

   3. பொய்; falsehood.

   4.வீண்மயக்கு; vain show

     [குயம் → மயக்கு → குயமயக்கு → குசமசக்கு.]

குசமண்ணாலி

 குசமண்ணாலி kusamaṇṇāli, பெ.(n.)

   குசமண் நாழி, குயவன் மண்ணால் செய்த நாழி அளவைப்படி; a measure {Nâlîmad} of pottery.

     [குயம்→குசம் + மண் + நாழி. நாழி → நாலி(கொ.வ.);.]

குசமரம்

 குசமரம் kucamaram, பெ.(n)

   குசப்புல் பார்க்க; see kusa-p-pul (சா.அக.);.

குசமுகம்

 குசமுகம் kucamukam, பெ.(n.)

முலைக் காம்பு.

 nipple (சா.அக.);.

     [குயம் – குசம்+முகம்]

குசம்

குசம்1 kusam, பெ.(n.)

   1. தருப்பை; sacrifical grass.

     “ஈரக் குசங்கள் கிழிக்குந் தொழிற் கேற்ற வாலோ” (பாரத. சம்பவ. 55);.

   2. நீர் (பிங்.);; water.

     [குல் -→ குய் → குசம்.]

 குசம்2 kusam, பெ.(n.)

   மரம் (சூடா.);; tree.

     [குல் → குய் → குசம்.]

 குசம்3 kusam, பெ.(n.)

   முலை; woman’s breast.

     “பாரக்குசங்கள் பலதைவரும் பான்மை நீங்கி” (பாரத.சம்பவ. 55);.

     [குல் (முளைத்தல், தோன்றுதல்); → குய் → குசம்.]

 குசம்4 kusam, பெ.(n.)

   1.காட்டுத்துளசி; wild basil.

   2. தொப்புள்; navel.

   3. சாமைப்புல்; millet grass.

   4. மூடம்; ignorance.

   5. குற்றம்; mistake (சா.அக.);.

   6. புறங்கூறல் (யாழ். அக.);; back biting.

     [குல் → குள் → குய் → குயம் → குசம்.]

குசயுட்பம்

 குசயுட்பம் kucayuṭpam, பெ.(n.)

இறப்பை உண்டாக்கும் நச்சுக் கிழங்கு

 a poisonous root causing death (சா.அக.);.

     [குசம்+புட்பம்.]

குசர்

 குசர் kucar, பெ.(n.)

 anything extra obtained from shop keeper as a bargain (செ.அக.);.

குசலக்காரன்

குசலக்காரன் kusalakkāraṉ, பெ.(n.)

   1.மந்திரக் காரன்; sorcerer, wizard.

   2. ஏமாற்றுக்காரன்; crafty person.

     [குல் → குய் → குயல் → குசல் → குசலம் + காரன்.]

குசலக்காரி

 குசலக்காரி kusalakkāri, பெ.(n.)

   ம்ந்திர வித்தையள்; a woman supposed to display super [na/Ural} powers through evil spirits, witch(சா.அக.);.

     [குய் → குயலம் → குசலம்+ காரி.]

குசலனி

 குசலனி kusalaṉi, பெ.(n.)

   மாயவித்தை செய்பவன் (சா.அக.);; expert in magic.

     [குயலன் → குசலன் → குசலனி.]

குசலன்

குசலன் kusalaṉ, பெ.(n.)

   1. மிகவல்லோன் (திவா.);; skilful person, expert.

   2. அறிஞன் (யாழ். அக.);; wiseman.

   3. தந்திரசாலி (இ.வ.);; artful person.

     [குயல் → குயலன் → குசலன்.]

குசலபுத்தி

குசலபுத்தி kusalabutti, பெ.(n.)

   1.கூர்மையான அறிவு; sharp intelligence acuteness of intellect.

   2. தந்திரவறிவு(யாழ்ப்.);; crafty, cunning wit.

     [குய் → குயலம் → குசலம் + புத்தி.]

குசலப்பிரசினம்

 குசலப்பிரசினம் kusalappirasiṉam, பெ.(n.)

   நலம் குறித்து உசாவுதல்; friendly enquiry after a person’s welfare.

த.வ. நன்னலம் கேட்டல்.

குசலம்

குசலம் kusalam, பெ.(n.)

   1.நலம்; well-being, prosperty.

     “குசலவார்த்தை பேசி”(உத்தரரா. சம்பு. 37);.

   2. நற்குணம் (பிங்.);; virtue, goodness.

   3. மாட்சிமை (பிங்.);; excellence.

   4 திறமை; ability, skill, dexterity.

   5. தந்திரம்; craftiness, cunning, wile, trickiness.

   6. மந்திரிகம்; witchcraft, magic, sorcery.

     [குல் →குய் → குயல் →குயலம் → குசலம்]

குசலம்பண்-தல்

குசலம்பண்-தல் kusalambaṇtal,    5 செ.கு.வி. (v.i.)

   மந்திரம் செய்தல்; to practise the black art, work magic.

     [குல் → குய் → குயலம் → குசலம் + பண்ணு.]

குசலர்

குசலர் kusalar, பெ.(n.)

   1. அறிஞர்; skillful person, expert.

     “அறநூலிற் குசலராகிய மாதவர்” (சேதுபு.இலக்கும்.21); (த.சொ.அக.);.

த.வ. திருவோர்.

குசலவதி

 குசலவதி kucalavati, பெ.(n.)

   கங்கை யாற்றங்கரையில் உள்ளதும் கோசலத்தில் உள்ளதுமான ஒரு பட்டணம்; a city in Kõšalam (அபி.சிந்..);.

     [குசலம்+பதி]

குசலவர்

குசலவர் kusalavar, பெ.(n.)

   இராமபிரானது இரட்டை மகனான குசனும் இலவனும் (உத்தரரா. இலவண.75);; Kusa and Lava sons of Rama.

     [குசன் → இலவன் → குசலவன் → குசலவர்.]

குசலவித்தை

 குசலவித்தை kusalavittai, பெ.(n.)

   மகளிர்க்குரிய எண்ணல், எழுதல், இலைகிள்ளல், பூத்தொடுத்தல், யாழ்வாசித்தல் முதலிய கைத்தொழில்கள்; accomplishments of women, being five viz. {yeana, ye/uta/haiki/a/Autogutta, yā/vāsitta/}

     [குல் → குய் → குயலம் → குசலம் + வித்தை.]

குசலவேதனை

 குசலவேதனை kusalavētaṉai, பெ.(n.)

   இன்ப உணர்ச்சி; pleasurable sensation.

     [குல் → குய் → குயலம் → குசலம் + வேதனை.]

குசலவைத்தியன்

 குசலவைத்தியன் kusalavaittiyaṉ, பெ.(n.)

   நோய்களின் கூறுபாடுகளை நன்கறிந்த மருத்துவம் செய்யும் மருத்துவன் (சா.அக.);; an able or expert physician skillful in diagnosis as well as treatment.

     [குயலம் → குசலம் + வைத்தியன்.]

குசலி

குசலி kusali, பெ.(n.)

   தந்திரமுள்ளவள்; artful woman.

     “கதைச்சிறுக்கிகள் குசலிகள்” (திருப்பு. 267, புதுப்.);.

     [குயல் → குயலி → குசலி.]

குசலை

 குசலை kusalai, பெ.(n.)

   சுவர்த்தலையில் கட்டும் ஆரல்; coping of a wall.

     [குச்சலை → குசலை.]

குசவன்

 குசவன் kusavaṉ, பெ.(n.)

   மண்வினைஞன், குயவன்; potter.

   ம. குசவன்;து.குசவே.

     [குயவன் → குசவன். குயவன் பார்க்க See {kuyavan.}]

குசவன்கலம்

 குசவன்கலம் kusavaṉkalam, பெ.(n.)

சட்டி:

 earthern potorvessel (சா.அக.);.

     [குயவன் → குசவன் + கலம்.]

குசவன்கைவழித்தமண்

 குசவன்கைவழித்தமண் kusavaṉkaivaḻittamaṇ, பெ.(n.)

   நுண்ணிய களிமண்; fine clayclinging to a potters hand, refined clay (சா.அக.);.

     [குசவன் + கை + வழித்த + மண்.]

குசவன்சூளை

 குசவன்சூளை kusavaṉsūḷai, பெ.(n.)

   குயவன் மட்பாண்டம் சுடுவதற்கு ஏற்பட்ட இடம்; potters kin (சா.அக.);.

     [குயவன் → குகசவன் + சூளை.]

குசவம்

 குசவம் kusavam, பெ.(n.)

   கொய்சகம்; folds of cloth put on by Indian women.

     [கொய்சகம் → குசவம்.]

குசவர்

குசவர் kucavar, பெ.(n.)

   1. மண்ணால் ஏனங்கள் செய்து சூளை போட்டுப் பிழைப்பவர்; potter.

   2. குயவர் பார்க்க; see kuyavar.

     [குய் (சுடுதல்); – குயவர்-குசவர்]

குசவீசம்

 குசவீசம் kusavīsam, பெ.(n.)

   காட்டாத்தி; holy mountain ebony (சா. அக.);.

     [குயம் → குசம் + வீசம்.]

குசவோடு

 குசவோடு kusavōṭu, பெ.(n.)

குயவன் செய்த ஒடு:

 pot tile.

     [குயவன் → குசவன் + ஓடு.]

குசாண்டு

குசாண்டு kucāṇṭu, பெ.(n.)

   அற்பத்தன்மை; meanness, littleness.

     “நன்மை தீமைகளைக் கணக் கிட்டுப் படிவைக்குங் குசாண்டுள்ள ஈச்வர கோஷ்டியை”(திவ்.திருப்பா.4, மூவா.);.

     [குசை = புல். குசை -→குசாண்டு.]

குசாமந்தி

 குசாமந்தி kucāmandi, பெ.(n.)

   முகமன் (முகஸ்துதி);; flattery, coaxing, wheedling.

     “குசாமத்தித்தனம்”.

     [U.{} → த.குசாமத்தி.]

குசாமியம்

 குசாமியம் kucāmiyam, பெ.(n.)

   மலைமா; hill balsam tree (சா.அக.);

     [குயம் (குயவு = உயரம்); → குயாமம் → குசாமியம்.]

குசாரத்து

 குசாரத்து kucārattu, பெ.(n.)

   கைவழி; through a person.

     [U.{} → த.குசாரத்து.]

குசாரன்

 குசாரன் kucāraṉ, பெ.(n.)

   நாரத்தை; bitter orange.

     [குய் → குயவு → குயால் → குயாலன் → குசாரன்.]

குசாற்காரன்

குசாற்காரன் kucāṟkāraṉ, பெ.(n.)

   1.மனக் களிப்புள்ளவன்; a merry, care-free happy-go-lucky person.

   2. ஆடம்பரக்காரன்; beau, fop.

     [குயால் → குசால் + காரன்.]

குசாலிங்கனம்

குசாலிங்கனம் kucāliṅgaṉam, பெ.(n.)

   1. களித்து விளையாடி ஒருவரை ஒருவர் தழுவிக்கொள்ளல்; sexual embrace due to excess of delight and passion.

   2. ஆசையால் தழுவல்; embrace out of love (சா. அக.);.

     [குசால் + ஆலிங்கனம்.]

குசால்

குசால் kucāl, பெ.(n.)

   மனக்களிப்பு; meriment, joy.

     “குசாலொடு சாய்ந்து கொண்டவர்” (மதுரகவி.70);.

   2. நடையுடைகளின் மினுக்கு; styleshness, gaudiness, finery, as in furniture, in dress, in perfumегу.

     [குல் → குய் → குயவு(இளமை, மகிழ்வு); → குயால்→குசால்.]

 Fin. kuje;

 Es. kuju,koju;

 Mordvin, koj;

 Q. kuyay,

த. குயால் → {ukhušā}

குசிகன்

 குசிகன் gusigaṉ, பெ.(n.)

   விசுவாமித்திரனின் தந்தையாகிய ஒரு முனிவன்; a sage, the father of {}.

     [Skt.{} → த.குசிகன்.]

குசிகம்

குசிகம் gusigam, பெ.(n.)

   1. குதிரைச்செவி; horse ear.

   2. குங்கிலிய மரம்; Indian dammer tree.

   3. ஒரு வகைக் கள்ளி; a kind of spurge the leaf of which resembles the horse ear.

   4. எண்ணெய்க்கசடு; the sediment of oil.

   5. தான்றி; the devil’s abode (சா.அக.);.

     [குய் → குசி → குசிகம்.]

குசிசுக்கட்டு-தல்

குசிசுக்கட்டு-தல் kusisukkaṭṭudal,    5 செ.குன்றாவி (v.t.)

   கூந்தல் முடித்தல் (வின்.);; to braid the hair.

     [குச்சு = சிறியது, சிறிய முடிச்சு. குச்சு + கட்டு.]

குசினி

குசினி1 kusiṉi, பெ.(n.)

   சிறியது(யாழ்ப்.);; anything very small, tender slender (சா.அக.);.

   க. குசி;தெ. கூ.க.

     [குல் → குள் → குய் → குசி → குசனி.]

 குசினி2 kusiṉi, பெ.(n.)

   சமையலறை; cook-room, kitchen, galley.

 F. cuisine

     [குல் குய்(எரிதல்); → குயின்→குசினி.]

குசினிக்காரன்

குசினிக்காரன் kusiṉikkāraṉ, பெ.(n.)

   1. சமையற் காரன்; cook, house-keeper as working in the kitchen.

   2. குதிரைக்காரன்; syce. horseg-room.

     [குய் → குயினி → குசினி – கான்.]

குசினிப்பயிர்

 குசினிப்பயிர் kusiṉippayir, பெ.(n.)

இஎம்பயிர் (யாழ்ப்.);;See.dling, tender plant.

     [குள் → குய் → குயினி + பயிர்.]

குசினிமேட்டி

 குசினிமேட்டி kusiṉimēṭṭi, பெ.(n.)

சமையற் காரனுடைய உதவியாளர்:

 cook’s matew or under-Servant.

     [குசினி+ மேட்டி (மேலாள் மேட்டைக்காரன்);.]

குசிராத்தி

 குசிராத்தி kusirātti, பெ.(n.)

   கூர்ச்சர நாடு;{}.

த.வ. குச்சரம்.

குசு

 குசு kusu, பெ.(n.)

   கீழ்க்காற்று; fart. windor gas generated in the bowels and broken downwards.

க. குசு

     [குல் → குய் → குசு.]

குசுகுசு-த்தல்

குசுகுசு-த்தல் gusugusuttal,    4 செ.கு.வி.(v.i.)

   காதுக்குள் முணுமுணுவென்று ஒதுதல்; to whisper.

   ம. குசுகுசுக்க;   க. குசு, குச;   து.குசி, குசு, குச்சி, குசு, குசுகுக;   தெ. குசகுச;   பட. குசுகுசு;குரு. குசமுசாநா.

     [குசு + குசு – குசுகுக.]

குசுகுசுப்பு

 குசுகுசுப்பு gusugusuppu, பெ.(n.)

   காதுக்குள் ஓதுகை; whispering.

     [குசு + குசுப்பு.]

குசுகுசெனல்

 குசுகுசெனல் gusuguseṉal, பெ.(n.)

   காதுக்குள் ஒதுதற்குறிப்பு; onom.expr signifying whispering.

     [குசு + குசு + எனல்.]

குசுமசத்தம்

 குசுமசத்தம் kusumasattam, பெ.(n.)

   நாணல்; reed (சா.அக.);.

     [குசுமம் + சத்தம்.]

குசுமம்

குசுமம் kusumam, பெ.(n.)

   1. பூ (திவா.);; flower

   2. காயா (மலை.); பார்க்க;See. {kayச்}

   3. மலை யிலுப்பை (காட்டிலுப்பை);; wild mowah.

   4. சங்கங்குப்பி; smooth volkameria (சா.அக.);.

ம. குசுமம்

     [குய் → குசு → குகமம்.]

குசுமவரி

 குசுமவரி kusumavari, பெ.(n.)

   செம்பரத்தை; Chinese rose mallow (சா.அக.);.

     [குகமம் + அரி.]

குசுமாகரம்

 குசுமாகரம் kusumākaram, பெ.(n.)

   வெயிற்காலம்; summer (சா.அக.);.

     [குய் + குசுமம் → குகமாகரம்.]

குசுமை

 குசுமை kusumai, பெ.(n.)

   சுதன்மன் என்னும் மறையோனின் இளைய மனைவி; younger wife of {}.

குசும்பகம்

 குசும்பகம் gusumbagam, பெ.(n.)

   ஒரு நச்சுப்பூச்சி; avenomous insect(சா.அக.);.

     [குய் → குசும்பு → குசும்பகம்.]

குசும்பம்

குசும்பம்1 kusumbam, பெ.(n.)

செந்துருக்கம் செந்துருக்கம் பார்க்க;See. {sendurukkam.}

     “குசும்பமலர்க் கந்தம்” (திருமந். 2818);.

     [குய் → குசு → குசம்பை → குசம்பம்.]

 குசும்பம்2 kusumbam, பெ.(n.)

   குங்குமப்பூச்செடி; safflower(சா.அக.);.

     [குய் → குசு → குசும்பம்.] ‘

குசும்பா

குசும்பா1 kusumbā, பெ.(n.)

செந்துருக்கம் பார்க்க;See. {sendurukkam.}

     [குய் → குசு → குசும்பம் → குகம்பா.]

 குசும்பா2 kusumbā, பெ.(n.)

   1.ஒருவகைக் குடிப்பு; a kind of drink.

   2. வெண் சிவப்பு நிறம்; a whitish pink colour (சா.அக.);. குசும்பா வேட்டி (யாழ். அக.);.

     [குய் → குசு → குகம்பம் → குகம்பா.]

குசும்பாச்சேலை

 குசும்பாச்சேலை kusumbāssēlai, பெ.(n.)

   குசும்பாச்சாயம் ஏற்றிய சேலை; cloth dyed red in a solution of safflower seeds.

     [குசும்பா + சேலை.]

குசும்பாப்பூ

 குசும்பாப்பூ kusumbāppū, பெ.(n.)

   குங்குமப்பூச் செடி; safflower (சா.அக.);.

மறுவ. லாலாப்பூ

     [குசும்பா + பூ.]

குசும்பாப்பூ வெண்ணெய்

 குசும்பாப்பூ வெண்ணெய் kusumbāppūveṇīey, பெ.(n.)

   குசும்பாப் பூவினின்று வடிக்கும் எண்ணெய்; oil extracted from safflover, it brings on haemoptysis (சா.அக.);.

     [குசும்பா + பூ + வெண்ணெய்.]

குசும்பாவிதை

 குசும்பாவிதை kusumbāvidai, பெ.(n.)

குசும்ப மரத்தின் விதை;seed of false saffron tree.

     [குசும்பா + விதை.]

குசும்பாவெண்ணெய்

 குசும்பாவெண்ணெய் kusumbāveṇīey,    குசும்பா விதையினின்றுவடிக்கும் எண்ணெய்; safflower oil, used in confectionery.

     [குசும்பா + எண்ணெய்]

குசும்பு

 குசும்பு kusumbu, பெ.(n.)

   குறும்புத்தனம்; mischief.

     [குறும்பு → குதும்பு → குசும்பு(கொ.வ.);.]

குசும்பை

குசும்பை kusumbai, பெ.(n.)

குசும்பா பார்க்க;See. {kusumb3.}

     “குசும்பையி னறுமலர்” (கம்பரா. அதிகாய 89);.

     [குய் → குசு → குகம்பை.]

குசும்பைமலர்மணி

 குசும்பைமலர்மணி kusumbaimalarmaṇi, பெ.(n.)

   ஒன்பான் மணிகளில் ஒன்று (கோவரங்கப் பதுமராகம்); (யாழ். அக.);; a kind of Topaz.

     [குகம்பை + மலர் + மணி.]

குசேசியம்

 குசேசியம் kucēciyam, பெ.(n.)

செந்தும்பை, red leucas flower(சா.அக.);.

குசேலன்

குசேலன் kucēlaṉ, பெ.(n.)

   கண்ணன் நண்பனும் அவரால் வறுமை நீங்கிப் பெருஞ்செல்வம் பெற்றவனுமாகிய ஒரு முனிவன் (பாகவத. 10.45:1);; a poverty-stricken Brahmin sage who through the friendship of Krishna became exceedingly wealth.

     [குல்(எழுச்சி, உயர்வு, நன்மை);கு + சீலன் → குசீலன் → குசேலன். வ.கு. = நல்ல.]

குல் என்னும் தமிழ் முன்னொட்டினை வடமொழி கடன் பெற்றது.

குசேலர்

 குசேலர் kucēlar, பெ.(n.)

   கண்ணனுடன் படித்த பார்ப்பன நண்பர்; friend of kannan.

இவர் வறுமையுற்றிருந்த போது இவர் மனைவியார், கண்ணனிடம் சென்று நிலை மையைக் கூறிப்பொருள் பெற்று வருமாறு கூறினர். இவரும் அவலில் தின்பண்டம் செய்து கொண்டு கண்ணனைக் காணச் சென்றார். கண்ணனும் இவரிடம் நலம் பாராட்டி அவர் கொண்டு வந்த அவலில் ஒரு பிடி உண்டார். மற்றொரு பிடி எடுக்கையில் கண்ணனின் மனைவி அவரைத் தடுக்கவே, கண்ணனும் உண்ணாது குசேலருக்கும் ஒன்றும் கொடுக்காமல் அனுப்பி வைத்தார். வருத்தத்துடன் வீடு வந்த குசேலர் அங்கிருந்த பெருஞ்செல்வத்தைக் கண்டு வியந்து மகிழ்ந்தார் (அபி.சிந்);.

குசை

குசை1 kusai, பெ.(n.)

தருப்பை பார்க்க;See. {taruppai}

     “குசைசுடு மறையோர்” (பிரபுலிங் கோரக்கர்.);.

     [குல் → குய் → குயை → குகை.]

 குசை2 kusai, பெ.(n.)

   1.குதிரையின் வாய்க் கருவியிற் கோத்து முடியுங் கயிறு (நெடுநல். 178. உரை);; rein.

   2. கடிவாளம்; bridle, bit.

     “அசைவி றொடை யடி கசைகுசை”(பாரத. பதினாறாம் போ. 27);.

     [கசை → குசை]

 குசை3 kusai, பெ.(n.)

   மகிழ்ச்சி; gladness, joy.

     “குகைதரு வினோதம்”(ஞானவா. தாசூர. 85);.

     [குல் → குய் → குயை → குசை]

 குசை4 kusai, பெ.(n.)

   குதிரைப் பிடரிமயிர் (பிங்.);; horse’s mane.

     [குல் → குய் → குசை]

குசைக்கயிறு

 குசைக்கயிறு kusaikkayiṟu, பெ.(n.)

   குதிரையின் வாய்வடம் (திவா.);; rein.

     [குசை + கயிறு.]

குசைக்கிரந்தி

குசைக்கிரந்தி kusaikkirandi, பெ.(n.)

   தருப்பைப் புனித முடிச்சு; knot in a finger-ring, made of darbha grass.

     “கண்டிவிசிட்டங் குசைக்கிரந்தி கனிட்டம்”(சிவதரு. ஐவகை. 4);.

     [குசை + கிரந்தி.]

குச்சகம்

குச்சகம் kuccakam, பெ.(n.)

   1. சடையொட்டிப் புல்; a kind of grass.

   2. பற்பாடகம்; fever plant (சா.அக.);.

     [குச்சு – குச்சகம்.]

குச்சகர்

 குச்சகர் kuccakar, பெ.(n.)

   கடகம் என்னும் பட்டணத்திலிருந்த முனிவர்; a saint who lived in kataga city.

குச்சகாதிதம்

 குச்சகாதிதம் kuccakātitam, பெ.(n.)

   சத்தி சாரணை; spreading hogweed – Boerhaevia repens(சா.அக.);.

குச்சதந்திகம்

 குச்சதந்திகம் kuccatantikam, பெ.(n.)

   வாழை; plantain tree – Musa sapientum (சா.அக.);.

குச்சத்தின்பாதி

 குச்சத்தின்பாதி kuccattiṉpāti, பெ.(n.)

   சிறு புள்ளடி வகை (மலை.);; a species of tick-trefoil.

     [குச்சம்+அத்து+இன்+பாதி.]

குச்சபலம்

குச்சபலம் kuccapalam, பெ.(n.)

   1. தேத்தான்; water-clearing nut – Strichnos potatorum.

   2. கணுப்பாவை; Indian mimusops-Mimusops hexandra.

   3. கொடி முந்திரி; the vine,

   4. முள்ளி:

 Indian night shade – Solanum indicum.

   5. கண்டங்கத்திரி; yellow-berried night shade – Solanum jacquini (சா.அக.);.

     [குச்சம்+பலம்]

குச்சபுட்பம்

 குச்சபுட்பம் kuccapuṭpam, பெ.(n.)

   ஏழிலைப் பாலை; seven-leafed milk plant-Alstonia scholaris(சா.அக.);.

     [P]

குச்சம்

குச்சம் kuccam, பெ.(n.)

பொருக்கு

 flake (செ.அக.);.

     [கொச்சு – குச்சு]

 குச்சம்1 kuccam, பெ.(n.)

   1.கொத்து (சூடா.);; bunch of flowers, cluster, tuff.

   2. அழகுக்குஞ்சம்; tassel of thred, hung as an omament.

   3. பற்படகம்(மலை.);; fever plant.

     [குல் = கூடுதல் கருத்துவேர். குல் → (குலவு);குச்சம்.]

 குச்சம்2 kuccam, பெ.(n.)

   குன்றிமணி (மலை.); பார்க்க; crab’s eye.

     [குன்றி → குற்றி → குச்சி → குச்சம். (கொ.வ.);.]

 குச்சம்3 kuccam, பெ.(n.)

   நாணல் (மலை.); பார்க்க; kaus, a large and coarse grass.

     [கச்சம் + குச்சம்.]

 குச்சம்4 kuccam, பெ.(n.)

புறந்துாற்றுமொழி (வின்.);:

 slander, as persion.

     [குற்றம் → குத்தம் → குச்சம்.]

குச்சரக்குடிசை

 குச்சரக்குடிசை kussarakkuḍisai, பெ.(n.)

   சோலையின் இடையில் அமைக்கப்பட்ட குடிசை விடு (கட்டடம்);; thatched house in a garden.

     [குச்சரம் + குடிசை.]

குச்சரம்

குச்சரம் kuccaram, பெ.(n.)

   கூர்ச்சரம்; Gujarat

     “குச்சரக் குடிகைக்குமரி”(மணிமே. 18:152);.

     [குச்சரம் = ஆலமரம் அம்மரத்தின் நடந்த குச்சர வாணிகம், வணிகரின் குடிப்பெயர். வணிகரால் பெயர் பெற்ற நிலப்பகுதி.]

குச்சரர்

குச்சரர் kuccarar, பெ.(n.)

   கூர்ச்சர நாட்டினர்; people of Gujarat.

     “குலிங்க ரவந்தியர் குச்சரர் கச்சியரே” (கலிங். 33);.

     [குச்சரம் → குச்சரர்.]

குச்சரி

குச்சரி1 kuccari, பெ.(n.)

   1. ஒரு பண்(இராகம்);; amu. sical mode.

     “குச்சரிகுறுங்கலிசொல் கொல்லியது பாடா”(இரகு. தேனு. 25);.

   2. முற் காலத்து வழங்கிய துகில்வகை (சிலப். 14:100, உரை.);; a kind of garment used in ancient times.

     [குல் + சரி – குச்சரி.]

 குச்சரி2 kuccarittala,    4 செ.கு.வி.(v.i.)

   அருவருப்புக் கொள்ளுதல்; to feel disgusted.

     “கருமச் சழக்கிற் குச்சரிப்பன்” (ஞானவா. நிருவா.11);.

     [குழை + தரு – குழை தரு → குச்சரு → குச்சரி.]

குச்சரிசி

 குச்சரிசி kussarisi, பெ.(n.)

   நொய்யரிசி; broken rice.

ம. குச்சரி.

     [குற்றரிசி(குற்றிய அரிசி); → குத்தரிசி → குச்சரிசி.]

குச்சலிர்

 குச்சலிர் kuccalir, பெ.(n.)

   ஒருவகை மரம்; கல்லவி; honey-sweet tree – Meliosma simplicifolia (சா.அக.);.

குச்சவகந்தம்

 குச்சவகந்தம் kuccavakantam, பெ.(n.)

   ஒரு தின் கிழங்கு; an esculent root (சா.அக.);.

     [குச்சவம்+கந்தம்]

குச்சா

 குச்சா kuccā, பெ.(n.)

   மயில் சிகைப்பூடு; peacock’s crest plant – Actiniopteris dichotoma (சா.அக.);.

     [குச்சம் – குச்சா]

குச்சாகரம்

 குச்சாகரம் kuccākaram, பெ.(n.)

   செந்துவரை; red dholl (சா.அக.);.

குச்சி

குச்சி1 kucci, பெ.(n.)

   1.மரக்குச்சி; splinter, peg, stick.

   2. கொண்டையூசி; hairpin.

   3. ஒருவகைச் செடி (மலை.);; sickle leaf.

ம., து., பர்.குச்சிழு

     [குல் → குச்சி. குல் = சிறியது.]

 குச்சி2 kucci, பெ.(n.)

   1. முகடு; highest point, crest, summit.

     “உதயத்தின் குச்சிச் சென்றா னொத்துளன்”(கம்பரா.வானர.20);.

   2. சிறு குடிசை; hut.

     [குள் → குறு → குற்றி → குச்சி(த.வ.47);.]

 குச்சி kucci, பெ.(n.)

   1.மயிற்சிகைப்பூடு (யாழ். அக.);; peacock-fan, a fern.

   2. திறவுகோல்; key.

     [குல் → குச்சி.]

 குச்சி4 kuccittal,    4 செ.குன்றாவி.(v.t.)

   அருவருத்தல்; to loathe, detest.

     “குச்சித்த லின்றி நுகர்ந்தாள்”(பாரத. திரெள. 74);.

     [குல் → குச்சி.]

குச்சிகை

குச்சிகை guccigai, பெ.(n.)

   வீணைவகை (பரத.ஒழிபி.15);; a kind of lute.

ம. குச்சிக

     [குச்சி + குச்சிகை.]

குச்சிக்கரும்பு

 குச்சிக்கரும்பு kuccikkarumpu, பெ.(n.)

தட்டைக் கரும்பு, கரும்பின் நுனிப்பகுதி,

 the top portion of a sugar-cane without juice (சா.அக.);.

     [குச்சி+கரும்பு]

குச்சிக்கால்

 குச்சிக்கால் kuccikkāl, பெ.(n.)

   தூலத்தின் மீது வீட்டுக்கூரையைத் தாங்குங் கால் (தருமபுரி);; roof supporting rafter.

     [குச்சி + கால்.]

 குச்சிக்கால் kuccikkāl, பெ.(n.)

தூலத்தின் மீது கூரையைத்தாங்குவதற்காக செங்குத்தாகப்பொருத்தப்பட்ட மரக்கால்

 a supporting pole fixed on the wooden beam under the roof of thatched or tuked house.

மறுவ, குத்துக்கால்

     [குத்து-குச்சு-குச்சி+கால்]

குச்சிடுக்கி

 குச்சிடுக்கி kucciṭukki, பெ.(n.)

   சங்கு திருகி; cork-screw (சா.அக.);.

     [குச்சி+இடுக்கி]

குச்சிதம்

 குச்சிதம் kuccidam, பெ.(n.)

   இழிவு; contemptibleness, despicableness, loathsomeness.

அவன் எப்பொழுதும் மற்றவர்களைக் குச்சிதமாய்ப் பேசுகிறான் (உ.வ.);.

     [குத்து → குச்சு → குச்சி → குச்சிதம். குத்திப்பேசுதல். தவறுகளைச் சுட்டிக்காட்டி இழிவுபடுத்துதல்.]

குச்சித்தமரத்தை

 குச்சித்தமரத்தை kuccittamarattai, பெ.(n.)

   புளிச்சக்காய் மரம் (இ.வ.);; bilimbi tree.

     [குச்சி + தமரத்தை]

குச்சிப்பட்டை

 குச்சிப்பட்டை kuccippaṭṭai, பெ.(n.)

குச்சில் அமைத்த ஒருவகைக் குஞ்சம்

 a stick composed of bristles and used for cleaning and brushing (சா.அக.);.

     [குச்சி+பட்டை]

குச்சிப்பதக்கம்

 குச்சிப்பதக்கம் kuccippadakkam, பெ.(n.)

   பதக்க அணிவகை; jewel pendant set with small rubies.

     [குச்சி+ பதக்கம்.]

குச்சிப்புல்

குச்சிப்புல் kuccippul, பெ.(n.)

குச்சுப்புல் பார்க்க;See. {kuccuppய}

     “தடையறவே குச்சிப்புற் சாத்தி” (சிவரக. பசாக. மோசந.10);.

     [குச்சு + புல் – குச்சுப்புல் → குச்சிப்புல்.]

குச்சிமஞ்சள்

 குச்சிமஞ்சள் kuccimañcaḷ, பெ.(n.)

   மர மஞ்சள்; tree-turmeric – Coscinium fenestratum (சா.அக.);.

     [குச்சி+மஞ்சள்.]

குச்சிமூலிகம்

 குச்சிமூலிகம் kuccimūlikam, பெ.(n.)

   ஒரு வகை மூலிகைப் புல்; a kind of club grass Scirpus kysoor (சா.அக);.

     [குச்சி+மூலிகம்]

குச்சிராகிதம்

 குச்சிராகிதம் kuccirākitam, பெ.(n.)

சந்திரகாந்திச் செடி,

 moon plant(சா.அக.);.

குச்சிலியப்பொட்டு

 குச்சிலியப்பொட்டு kucciliyappoṭṭu, பெ.(n.)

   தளுக்குப் பொட்டு; a fancy mark of mica worn on the forehead by women.

     [குச்சிலியம் + பொட்டு.]

குச்சிலியர்

குச்சிலியர் kucciliyar, பெ.(n.)

   குச்சர நாட்டவர்; Gujaratis, people of Gujarat.

     “குச்சிலிய மாதர் குயமும்” (தனிப்பா.ii,75,190);.

     [குச்சில் → குச்சிலியர்]

குச்சில்

குச்சில்1 kuccil, பெ.(n.)

   சிறியவீடு; small house.

ம.குச்சில் (பெண்கள் அறை, சமையலறை);

     [குற்றில் → குச்சில் (த.வ.74);.]

 குச்சில்2 kuccil, பெ.(n.)

   குச்சுப்புல்; clustergrass.

     “குச்சினிரைத்த குரூஉமயிர் மோவாய்” (புறநா. 257.);.

     [குச்சு → குச்சி → குச்சில்.]

 குச்சில் kuccil, பெ.(n.)

   குச்சரம்; Gujarat.

மறுவ, குச்சரம், கூர்ச்சரம்.

     [குச்சரம் → குச்சில்]

குச்சு

குச்சு1 kuccu, பெ.(n.)

   1.மரக்குச்சு; splinter, plug, any bit of stick, stalk.

   2. கடாவுமுளை; tent-peg.

   3. கொண்டையூசி; hairpin.

   ம. க. குச்சு;   தெ. குட்சி;து., பர். குச்சி.

     [குல் → குள்(குட்டை, சிறியது); → குச்சு.]

 குச்சு2 kuccu, பெ.(n.)

   1.சிறுகுடில்; hut, shed made of palm leaves.

     “என்னிலங் குச்சல”(தனிப்பா.i, 384,34);.

   2. சிற்றறை; small lroom.

ம. குச்சகம், குச்சு.

     [குல் → குள் → குச்சு.]

 குச்சு3 kuccu, பெ.(n.)

   1.குஞ்சம்; tassel, bunch, collection, cluster, tuft.

     “கவரி மேனிலாப்படக் குச்சொடுந் தூக்கினர்” (உபதேசகா. சிவ புண்ணிய.63);.

   2. குச்சுப்புல் பார்க்க;(புறநா. 257,உரை.); see {kuccu-p-put}

   3. ஒரு வகைக் காதணி(வின்.);; small bell-shaped gold pendant worn in a girl’s ear.

   4. ஊராளி மகளின் கழுத்தணி வகை; pencil-shaped ornament suspended from the neck, worn by {Urāff} women.

   5. சீலையின் முன்மடி; folds, as of a woman’s cloth when worn.

   6. வண்ண ஓவியன் தூரிகை; painters brush.

{Skt. kürca}

     [கொத்து → குத்து → குச்சு(வ.மொ.வ.121);.]

 குச்சு4 kuccu, பெ.(n.)

   பாவாற்றி என்னும் நெசவுக் கருவி; weaver’s long brush with which the warp threads when laid out between trestes are separated from one another.

     “குச்சென நிரைத்த யானைக் குள்ழாம்” (சீவக. 1153);.

     [குல் + குள் → குச்சு.]

குச்சுக்கயிறு

 குச்சுக்கயிறு kuccukkayiṟu, பெ.(n.)

   நெய்தற் குரிய கைப்பிடி; handle like knot made by coconut fibre.

     [குச்சு + கயிறு.]

குச்சுக்காரி

குச்சுக்காரி kuccukkāri, பெ.(n.)

   1.சிறுகுடிலில் வாழ்பவ; woman residing in a hut.

   2. இழிந்த விலைமகள்; a low prostitute.

     [குச்சு = கூரை வீடு, குடில். குச்சு + காரி – குச்சுக்காரி.]

குச்சுக்கெம்பு

 குச்சுக்கெம்பு kuccukkembu, பெ.(n.)

   புறவிடம் மேடான சிவப்பு மணி; ruby with convex surface.

     [குக்சு + கெம்பு. கெம்பு = செம்மணி.]

குச்சுபிடித்துக்கட்டல்

 குச்சுபிடித்துக்கட்டல் kuccupiṭittukkaṭṭal, தொ.பெ.(vbl.n.)

மடித்த துணியில்

   கட்டுதல்; tying in a folded cloth (சா.அக.);.

     [குச்சு+பிடித்து+கட்டல்.]

குச்சுப்பிடி-த்தல்

குச்சுப்பிடி-த்தல் kuccuppiḍittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   1.ஆடையைக் கொய்து வைத்தல்; to make folds in cloth when putting it on

   2. குஞ்சம் வைத்தல்; to make tassels.

     [குஞ்சம் → குஞ்சு → குச்சு + பிடி.]

குச்சுப்புற்சாத்து-தல்

குச்சுப்புற்சாத்து-தல் kuccuppuṟcāddudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   கோயிற்சிலைகளைக் குச்சுப்புல்லால் தூய்மைசெய்தல்; to wipe the temple idols with fine grass.

     [குச்சு + புல் + சாத்து.]

குச்சுப்புல்

குச்சுப்புல் kuccuppul, பெ.(n.)

   1.ஒருவகைப் புல்; cluster-grass.

குச்சுப்புல் நிரைத்தாற் போன்ற நிறம் பொருந்திய மயிரினையுடைய தாடியினையும் (புறநா. 257, உரை.);.

   2. கொத்தாயுள்ள புல்; tassel of grass.

     [குச்சு + புல்.]

குச்சுமட்டை

குச்சுமட்டை kuccumaṭṭai, பெ.(n.)

   1.ஓவியரின் கருவி வகை; painter’s coarse brush.

   2. வெள்ளை யடித்தற்குரிய மட்டை; brush used in white washing.

     [குச்சு + மட்டை.]

குச்சுமணி

 குச்சுமணி kuccumaṇi, பெ.(n.)

   பரவ மகளிர் கழுத்தணி வகை; a neckornament.

     [குச்சு + மணி.]

குச்சுள்

 குச்சுள் kuccuḷ, பெ.(n.)

   வீட்டின் முன்பாகத்திலுள்ள அறை; a room infront portion of the house.

     [குச்சு → குச்சுள்.]

குச்சுவாங்கு-தல்

குச்சுவாங்கு-தல் kuccuvāṅgudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   குச்சியிற் பதித்து ஒன்பான் மணிகளை ஒப்பஞ்செய்தல்; to polish gems after setting them in a stick.

     [குச்சு + வாங்கு.]

குச்சுவாசம்

 குச்சுவாசம் kuccuvācam, பெ.(n.)

மேல் மூச்சு

 dyspnoea (சா.அக.);.

குச்சுவீடு

குச்சுவீடு kuccuvīṭu, பெ.(n.)

   சிறுகூரைவீடு; cottage.

     [குச்சு + வீடு(வே.க. 153);.]

குச்செறி-தல்

குச்செறி-தல் kucceṟidal,    2 செ.கு.வி.(v.i.)

   மயிர்சிலிர்த்தல்; to horripilate.

     [குல் → குத்து → குச்சு + எறி.]

குச்சை

 குச்சை kuccai, பெ.(n.)

   கொய்சகம்; fold or plait of a woman’s cloth.

     [குஞ்சு → குச்சு → குச்சை.]

குச்சோ

 குச்சோ kuccō, பெ.(n.)

   புங்க மரம்; Indian beech – Dalbergia arborea (சா.அக.);.

குஞ்சகம்

 குஞ்சகம் kuñcakam, பெ.(n.)

   குன்றிமணி; the berry of abrus precatorius (சா.அக.);.

     [குஞ்சம் – குஞ்சகம்]

குஞ்சகாரம்

 குஞ்சகாரம் kuñcakāram, பெ.(n.)

   புளி நரளைக் கிழங்கு; for-grape – Cissus carnosа (சா.அக.);.

     [குஞ்ச + காரம்]

குஞ்சக்குறவர்

 குஞ்சக்குறவர் kuñjakkuṟavar, பெ.(n.)

பாவாற்றி செய்யும் குறவர் வகையினர் (E.T.);:

 the Kuravas who manufacture weavers brushes from roots, and are employed as shikaris.

     [குஞ்சம் + குறவர்.]

குஞ்சங்கட்டு-தல்

குஞ்சங்கட்டு-தல் kuñjaṅgaṭṭudal,    5 செ.கு.வி.(v.i.)

   அணியழகுக்காகத் தொங்கவிடுதல்; to hang up tassels as ornamentsh.

     [கும் + குஞ்சு → குஞ்சம் – கட்டுதல்.]

குஞ்சட்டி

 குஞ்சட்டி kuñjaṭṭi, பெ.(n.)

   சிறுகட்டி(யாழ்.ப்.);; small earthen vessel.

     [குறுமை + சட்டி – குறுஞ்சட்டி → குஞ்சட்டி]

குஞ்சணம்

 குஞ்சணம் kuñcaṇam, பெ.(n.)

சிவதை,

 Indian jalap – Ipomaea turpethum (சா.அக.);.

குஞ்சன்

 குஞ்சன் kuñjaṉ, பெ.(n.)

   குறளன் (பிங்.);; dwarf.

     [குஞ்சு → குஞ்சன்.]

குஞ்சப்புல்

 குஞ்சப்புல் kuñcappul, பெ.(n.)

   காட்டுக் கேழ்வரகு; cluster grass; wild raggy – Eleusine indica.

     [குஞ்சம்+புல்]

     (இதன் அடித்தண்டு நேராக இருக்கும். தவசம் உண்பதற்குப் பயன்படாது); (சா.அக.);.

குஞ்சம்

குஞ்சம்1 kuñjam, பெ.(n.)

   1.குறள், குள்ளம் (திவா.);; dwarf.

   2. கூன் (அக.நி.);; hump-back.

   3. குறளை (திவா.);; calumny, aspersion, slander

     [குள் → குஞ்சு → குஞ்சம்]

இச் சொல்லிற்கு ‘குப்ஜ’ என்னும் வடசொல்லை மூலமாகச் சென்னைப் பல்கலைக்கழகம் அகர முதலியில் குறித்திருப்பது தவறு. வளைந்தது என்பதே வடசொற்பொருள் (வே.க.:60);

 குஞ்சம்2 kuñjam, பெ.(n.)

   1. பூங்கொத்து; bunch of flowers.

   2. தவசக் கதிர்; an ear of corn.

   3. புல்லின் குச்சி; tassel cluster of grass.

   4. புடைவையகலத்தின் அரைக்காற்பாகம்; a measure in the width of cloth = 120 threads of the warp.

   4. கொய்சகம்; fold of cloth.

   ம. குஞ்சம்; Skt. guccha

 குஞ்சம்3 kuñjam, பெ.(n.)

   ஈயோட்டி (சூடா.);; chowy, bushy tail of the yak, often set in a richy decorated handle for use as a fly-flapper.

ம. குஞ்சம்

 Fin, kassa;

 Karel, kassa, kassu:ED. Kassa

     [குச்சு + குஞ்சு → குஞ்சம்.]

     [P}

குஞ்சம்

 குஞ்சம்4 kuñjam, பெ.(n.)

   குன்றி பார்க்க (திவா.);; crab’s eye.

     [குறு → குறுஞ்சம் → குஞ்சம். குறுதல் = முகத்தல்.]

 குஞ்சம்5 kuñjam, பெ.(n.)

   நாழி (திவா.);; a measure of capacity.

     [குய் → குய்ஞ்சம் → குஞ்சம். குய்தல் = முகத்தல்.]

 குஞ்சம்6 kuñjam, பெ.(n.)

   1.புளிநாளை (மூ.அ.); பார்க்க;  bristly trifiate vine.

   2. சீதாங்கச் செய்நஞ்சு (மூ.அ.);; a mineral poison.

குய் → குய்ஞ்சம் →குஞ்சம்.]

 குஞ்சம் kuñjam, பெ.(n.)

   கைத்தறி நெசவில் பயன்படுத்தும் சிலுப்பையில் ஏழில் ஒரு பகுதி; one seventh of ciluppai, as used in handloom weaving.

     [குள்-குஞ்சு-குஞ்சம்]

குஞ்சம்விசு-தல்

குஞ்சம்விசு-தல் kuñsamvisudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   ஈயோட்டியால் காற்றுவர வீசுதல்; to fanwith a chowry.

     [குஞ்சம் + வீசு.]

குஞ்சரகரணம்

குஞ்சரகரணம் kuñcarakaraṇam, பெ.(n.)

   கரசை என்னுங் காலக்கரணம்; karasai, a division of time.

     ‘குஞ்சரகரண மென்னார்’ [பறாளைபள்ளு24); (செஅக);.

     [குஞ்சரம்+சிகரணம்]

குஞ்சரக்கன்று

 குஞ்சரக்கன்று kuñjarakkaṉṟu, பெ.(n.)

   குட்டியானை; young elephant.

     “நற்குஞ்சரக் கன்று நண்ணின்'” (அருட்பா. காப்பு);.

     [குஞ்சரம் + கன்று.]

குஞ்சரக்கோடு

 குஞ்சரக்கோடு kuñcarakāṭu, பெ.(n.)

   யானைக் கொம்பு; elephant’s tusk (சா.அக.);.

     [குஞ்சரம்+கோடு]

குஞ்சரசுரபி

 குஞ்சரசுரபி kuñcaracurapi, பெ.(n.)

   செவ்வந்தி; chamomile – Chrysanthe mum Сагопаrium (சா.அக.);.

குஞ்சரத்தானம்

குஞ்சரத்தானம் kuñcarattāṉam, பெ.(n.)

யானைகளைப் பழக்கும் திறந்த வெளி (யானைச்செண்டு வெளி);

 open space for training elephants,

     ‘குஞ்சரத்தானத்து நின்றோர் குறுகி (பெருங்.வத்தவ,4,48); (செஅக);.

     [குஞ்சரம்+தானம்]

குஞ்சரத்தீ

குஞ்சரத்தீ kuñjarattī, பெ.(n.)

   யானைத்தீ (சீவக. 396);; a disease causing great hunger.

     [குஞ்சரம் + தீ. மிகுபசிக்கு உவமை.]

குஞ்சரன்

குஞ்சரன் kuñcaraṉ, பெ.(n.)

   1. அனுமான் என்னும் குரங்கின் பாட்டனும், அஞ்சனா தேவியின் தந்தையுமான ஒரு வானரன்; a monkey grandfather of Hanumān.

   2. காசிய முனிவர், கத்துருவின் குமரன்; son of saint Kāšipāand katru (அபி.சிந்.);.

குஞ்சரபிப்பிலி

 குஞ்சரபிப்பிலி kuñcarapippili, பெ.(n.)

   யானைத் திப்பிலி; elephant – pepper (சா.அக.);.

குஞ்சரபுட்பி

 குஞ்சரபுட்பி kuñcarapuṭpi, பெ.(n.)

   கருங்கொடி; common delight of the woods – Hiptage madablota (சா.அக.);.

குஞ்சரமணி

 குஞ்சரமணி kuñjaramaṇi, பெ.(n.)

   கழுத்தணி வகை(பர.);; necklace worn by women.

     [ஒருகா. குஞ்சரம் (குன்றி); +மணி.]

குஞ்சரமேற்புல்லுருவி

 குஞ்சரமேற்புல்லுருவி kuñcaramēṟpulluruvi, பெ.(n.)

   அத்திமேற் புல்லுருவி; a parasite grown on the fig tree (சா.அக.);.

     [குஞ்சரம்+மேல்+புல்லுருவி]

குஞ்சரம்

குஞ்சரம்1 kuñjaram, பெ.(n.)

   1. கருங் குன்றிமணி; crab’s eye.

   2. கருமை; black.

   3.யானை; elephant.

     “குஞ்சர வொழுகை பூட்டி” (பதிற்றுப். 5, பதி.);.

   3. ஒரு சொல்லைச் சார்ந்து உயர்வு குறிக்கும் மொழி; a epithet to denote excellence used in compounds like.

கவிகுஞ்சரம்.

     [குஞ்சரம் = கருமை. கரிய யானை.]

 குஞ்சரம்2 kuñjaram, பெ.(n.)

   கருங்குவளை (மலை.);; blue nelumbo.

     [குஞ்சரம் = கருமை. குஞ்சரம் = கருங்குவளை.]

குஞ்சரவொழுகை

குஞ்சரவொழுகை guñjaravoḻugai, பெ.(n.)

   யானை கட்டிய சகடம்; elephant cart.

     “குஞ்சர வொழுகை பூட்டி”(பதிற்றுப் 5.பதி.);

     [குஞ்சரம் + ஒழுகை.]

குஞ்சராகிதம்

 குஞ்சராகிதம் kuñcarākitam, பெ.(n.)

   சங்கங் குப்பி; smooth volkamerica – Cleodendron inerme (சா.அக.);.

குஞ்சராசனம்

 குஞ்சராசனம் kuñjarācaṉam, பெ.(n.)

   பார்க்க அரசு(பிங்.);; pipal as elephants food.

     [குஞ்சரம் = யானை, குச்சராசனம் = யானை விரும்பித் தின்னும்இலை கொண்ட மரம்.]

குஞ்சரி

குஞ்சரி kuñjari, பெ.(n.)

   1 பெண்யானை; female elephant.

   2. முருகக்கடவுளின் மனைவியான தெய்வானை; a consort of Murugan.

     “குஞ்சரிகுயம் புயம்பெற”(திருப்பு.);.

     [குஞ்சு → குஞ்சரி.]

குஞ்சலகக்கம்

 குஞ்சலகக்கம் kuñcalakakkam, பெ.(n.)

   தாமரைத் தாது; pollen of lotus (சா.அக.);.

     [குஞ்சலம்+கக்கம்]

குஞ்சலம்

 குஞ்சலம் kuñcalam, பெ.(n.)

   பெரும்பாலும் பெண்கள் சடையில் இணைத்துத் தொங்கவிடும் கயிற்றில் இணைக்கப்பட்ட நூல் கொத்து அல்லது துணிப்பந்து போன்ற ஒப்பனைப் பொருள்; tassel mostly tied to the end of a woman’s plaited leeuy.

மறுவ. குஞ்சம்.

 குஞ்சலம் kuñjalam, பெ.(n.)

   மேல்மதகுகட்டை; upper log of a sluice.

     [குஞ்சு → குஞ்சல் → குஞ்சாலம்.]

குஞ்சா

 குஞ்சா kuñcā, பெ.(n.)

குன்றிமணி,

 crab’s eye (சா.அக.);.

மறுவ, குறுகுஞ்சி

     [குஞ்சு – குஞ்சா]

குஞ்சான்

குஞ்சான் kuñjāṉ, பெ.(n.)

   குழந்தையின் ஆண்குறி; membrum virile, especiallyofachild(வே.க.149);.

     [குஞ்சு → குஞ்சான்.]

குஞ்சாமணி

 குஞ்சாமணி kuñjāmaṇi, பெ.(n.)

   ஆண் குழந்தை களின் அரையிற்கட்டும் மணி வகை; a waist ormament of male children.

     [குஞ்சு + குஞ்சான் + மணி.]

குஞ்சாலாடு

 குஞ்சாலாடு kuñjālāṭu, பெ.(n.)

   கடலைமாவைச் சலித்துச் செய்த சிறுமணிகளைச் சருக்கரைப்பாகிற் கலந்து செய்த உருண்டை வடிவமான ஒரு தின்பண்டம்; a kind of sweet-meat made of dough of dhal or Bengal gram flour fried in ghee, and shaped like a ball of abrus-seeds.

ம., க. குஞ்சாலாடு

     [குஞ்சு (சிறியது); + லாடு – குஞ்சுலாடு → குஞ்சலாடு]

குஞ்சி

குஞ்சி1 kuñji, பெ.(n.)

   1.சிறுமையானது; anything small.

குஞ்சிப்பெட்டி .

   2. பறவைக்குஞ்சு; young bird, chicken.

     “கரியகுஞ்சியின் றாகமார் பசி” (சி.சி.பரமாயாவாதி மறு.1.);.

   3. தாயின் தங்கை (யாழ்ப்.);; mother’s younger sister.

   4. சிற்றப்பன் (யாழ்ப்.);; father’s younger brother (யாழ்ப்.);.

   5 ஆண்குறி; membrum virile as small.

   ம.குஞ்சி;   க.குன்னி(நாய்க்குட்டி);,குன்ன(சிறிய);;   தெ. குன்ன(விலங்குக்குட்டி); கூன(குழந்தை);;   குட.குஞ்சி(குழந்தை);;கொலா. குன (நாய்க்குட்டி);.

     [குஞ்சு + குஞ்சி.]

 குஞ்சி2 kuñjittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   கால் தூக்கி வளைத்தல்; to upraise and bend, as the leg, to cause to bend.

     “கால்குஞ்சித் தாடி னானும்” (தேவா. 521.4);.

     [குஞ்சு + குஞ்சி.]

 குஞ்சி3 kuñjittal,    4 செ.கு.வி.(v.i.)

   காற்படங் குந்தி நிற்றல் (சூடா.);; to stand on tip-toe.

     [குஞ்சு + குஞ்சி.]

 குஞ்சி4 kuñji, பெ.(n.)

   1. கொடிநாட்டுங் குழி; pit for erecting a flagstaff

     “குஞ்சி மாண்கொடி” (சீவக. 143);

   2. கொடிக்கழை; fagstaff (சீவக. 143.உரை.);.

     [குள் → குஞ்சி.]

 குஞ்சி5 kuñji, பெ.(n.)

   1.குடுமி (திவா.);; tuft of hair, especially man’s.

   2.யானை, மயில் முதலியவற்றின் உச்சி மயிர்; hair, ason the head of an elephant crest of peacock.

     “குஞ்சிக்களியானை” (சீவக. 2792);.

     “குஞ்சி மா மஞ்ஞை”(சீவக. 301.);.

   3. தலை; head

     “குஞ்சு குறங்கின்மேற் கொ ண்டிருந்து'”(பதினொ. ஷேத். 5.);.

   4. சிற்றணுக் கனென்னும் விருது; tassels, as insignia of royalty

     “புனைமயிற்குஞ்சு பிச்சமின்றவழ் கொடியோ டிட்டு”(சீவக. 437);.

 Fin. kalki, Jap. ke;

 Mordvin. kalgo;

 Turk. kyl, Q. Kili

     [கொடிஞ்சி → கொஞ்சி → குஞ்சி.]

 குஞ்சி6 kuñji, பெ.(n.)

   குன்றி; crab’s eye.

     [குறு குறுஞ்சி → குஞ்சி.]

குஞ்சி-த்தல்

குஞ்சி-த்தல் kuñcittal,    4 செ.கு.வி.(v.i.)

   ஒற்றைக் காலில் நிற்றல்; standing on one foot or tip-toe (சா.அக.);.

குஞ்சிகம்

குஞ்சிகம் kuñcikam, பெ.(n.)

   1. குருந்த மரம்,

 Indian wild lime – Atlantia monophylla.

   2, குன்றி; crab’s eye-Abrus precatorius (சா.அக.);.

     [குஞ்சி – குஞ்சிகம்]

குஞ்சிகாரர்

 குஞ்சிகாரர் kuñcikārar, பெ.(n.)

   சேலம் மாவட்டத்திலுள்ள வேளாண் குடியினர் (உழுது பயிரிடும் இனத்தவர்);; the peasants in Śēlam district (அபி.சிந்.);.

குஞ்சிக்காய்

 குஞ்சிக்காய் kuñcikkāy, பெ.(n.)

   சீரகம்; cumin seed – Cuminum cyminus (சா.அக.);.

     [குஞ்சி+காய்]

குஞ்சிக்கூடை

குஞ்சிக்கூடை kuñjikāṭai, பெ.(n.)

   சிறுகூட;,wicker-basket, small of a basket(w.); (வேக.150);.

     [குஞ்சி + கூடை.]

குஞ்சிதம்

குஞ்சிதம் kuñcitam, பெ.(n.)

   1. செண்பகம்,

 champauk – Michelia Champaca.

   2. வளைந்தது; that which is curved or crooked.

   3. ஒற்றைக் காலில் நிற்கை; standing on one foot.

   4. வளைவு; crooked or contracted.

   5. வழி தெரியாது நாளத்தை அறுக்கை; an unskinful way of

 opening the vein (சா.அக.);.

     [கொஞ்சி – குஞ்சிதம்]

குஞ்சிதாமியம்

 குஞ்சிதாமியம் kuñcitāmiyam, பெ.(n.)

   சங்கமஞ் செடி; four-spined monetia – Monetia tetracantha (சா.அக.);.

குஞ்சிப்பூ

 குஞ்சிப்பூ kuñcippū, பெ.(n.)

குங்குமப்பூ:

 English saffron flower- Crocus sativus (சா.அக.);.

     [குஞ்சி+பூ]

குஞ்சிப்பூரம்

 குஞ்சிப்பூரம் kuñcippūram, பெ.(n.)

   ஆமணத்தி (கோரோசனை);; bezoar especially the concretion found in a cow (சா.அக.);.

குஞ்சிமணி

 குஞ்சிமணி kuñjimaṇi, பெ.(n.)

குஞ்சாமணி பார்க்க;See. {kuñcāmani}

     [குஞ்சி + மணி.]

குஞ்சியன்

 குஞ்சியன் kuñjiyaṉ, பெ.(n.)

குஞ்சி யப்பன் பார்க்க;See. {kurӱiyapрад.}

     [குஞ்சி → குஞ்சியன்.]

குஞ்சியப்பன்

குஞ்சியப்பன் kuñjiyappaṉ, பெ.(n.)

   1.தந்தை யின் தம்பி; father’s younger brother,

   2. தாயின் தங்கை கணவன்; mother’s younger sister’s husband.

   3. தாயின் இரண்டாம் கணவன்; step-father.

ம. குஞ்ளுப்பன்

     [குஞ்சி + அப்பன்.]

குஞ்சியப்பு

 குஞ்சியப்பு kuñjiyappu, பெ.(n.)

குஞ்சியப்பன் பார்க்க;See. {kшлуїуаррад.}

     [குஞ்சி + அப்பு.]

குஞ்சியாத்தை

 குஞ்சியாத்தை kuñjiyāttai, பெ.(n.)

குஞ்சி யாய்ச்சி (யாழ்ப்.); பார்க்க;See. {kuriyaycci}

     [குஞ்சி → ஆத்தை.]

குஞ்சியாயி

 குஞ்சியாயி kuñjiyāyi, பெ.(n.)

பார்க்க குஞ்சியாய்ச்சி (யாழ்ப்.);

     [குஞ்சி + (ஆய்ச்சி);.ஆயி.]

குஞ்சியாய்ச்சி

குஞ்சியாய்ச்சி kuñjiyāycci, பெ.(n.)

   1.தாயின் தங்கை; mother’s younger sister.

   2. தந்தையின் தம்பிமனைவி; father’s younger brother’s wife.

   3. தந்தையின் இரண்டாந்தாரம்; step-mother (யாழ்ப்.);.

ம. குஞ்ளும்ம

     [குஞ்சி = சிறிய, இளைய. குஞ்சி + ஆய்ச்சி.]

குஞ்சிரிப்பு

 குஞ்சிரிப்பு kuñjirippu, பெ.(n.)

   புன்னகை; smile (W.);.

     [குமிண்சிரிப்பு → குஞ்சிரிப்பு.]

குஞ்சு

குஞ்சு kuñju, பெ.(n.)

   1.பறவைக்குஞ்சு (பிங்.);; young of birds.

   2. எலி, அணில் முதலியவற்றின் பிள்ளை; young of any living being as fish, oysters, rats, lizards, frogs, squirrels etc.

   3. ஆண்குறி; membrun virile.

   4. சிறுமையானது; anything small.

   ம: குஞ்து, குஞ்சி;   க. குன்னி (விலங்குக் குட்டி);;   தெ.குன்ன(விலங்குக் குட்டி);, கூன(குழந்தை);;   கோத.குன்ச்;   துட. கூக்;குட. குஞ்ஞி (குழந்தை); கொலா. கூன

     [குள் → குய் → குய்ஞ்சு → குஞ்சு (வே.க.150.);]

குஞ்சு குழந்தைகள்

 குஞ்சு குழந்தைகள் guñjuguḻndaigaḷ, பெ.(n.)

   சிறியவும் பெரியவுமான குழந்தைகள்; infants and children.

குஞ்சு குழந்தைகளெல்லாம் நலந் தானே? (கொ.வ.);

     [குஞ்சு + குழந்தை + கள்.]

குஞ்சுகுளுவான்

 குஞ்சுகுளுவான் kuñcukuḷuvāṉ, பெ.(n.)

   வெவ்வேறு அகவையில் உள்ள குழந்தைகள்; a group of children of different ages; a gathering of kids.

கல்யாண மண்டபம் குஞ்சு குளுவான்களின் சத்தத்தால் அதிர்ந்தது.

     [குஞ்சு+குளுவான்.]

குஞ்சுகுழந்தை

 குஞ்சுகுழந்தை kuñcukuḻntai, பெ.(n.)

   கைக்குழந்தை; பெரிய குழந்தை; baby and child (சா.அக.);.

     [குஞ்சு+குழந்தை]

குஞ்சுகுழுமன்

 குஞ்சுகுழுமன் kuñcukuḻumaṉ, பெ.(n.)

   பலவகை அகவையில் உள்ள குழந்தைகளின் கூட்டம்; a number of children of different ages (சா.அக.);.

     [குஞ்சு + குழுமன்]

குஞ்சுக்கடகம்

 குஞ்சுக்கடகம் guñjuggaḍagam, பெ.(n.)

   சிறிய ஓலைப்பெட்டி (யாழ்ப்.);; small ola basket.

     [குஞ்சு + கடகம்.]

குஞ்சுக்குவை-த்தல்

குஞ்சுக்குவை-த்தல் kuñjukkuvaittal,    4செ.குன்றாவி. (v.t.)

   முட்டையைக் குஞ்சு பொரிக்கும்படி செய்தல் (யாழ்ப்);; to set eggs for hatching.

     [குஞ்சு + கு+ வை.]

குஞ்சுங்குழுமானும்

குஞ்சுங்குழுமானும் kuñcuṅkuḻumāṉum, பெ.(n.)

   1. பூச்சித்திரள்; swarm of insects.

   2. பல அகவையிலுள்ள குழந்தைகளின் கூட்டம்; a group of children of different ages.

     “குஞ்சுங் குழுமானுமாக வீடு கலகலவென்றிருக்கின்றது”(செஅக);.

     [குஞ்சு+குழுமான்+உம்]

குஞ்சுங்குழுவானும்

குஞ்சுங்குழுவானும் kuñjuṅguḻuvāṉum, பெ.(n.)

   1. பூச்சித்திரள்; swarm of insects.

   2. பல அகவையிலுள்ள குழந்தைகளின் கூட்டம்;  a group of children of different ages.

     “குஞ்சுங் குழுவானு மாக விடு கலகலவென்றிருக்கின்றது”(கொ.வ.);.

மறுவ.குஞ்சங்குழுமானும், குஞ்சுங்குழுவும்.

     [குஞ்சு + உம் + குழுவான் + உம்.]

குஞ்சுங்குழுவும்

 குஞ்சுங்குழுவும் kuñcuṅkuḻuvum, பெ.(n.)

   குஞ்சுங்குழுமானும் பார்க்க; see kunjun-kulumanum, (செ.அக.);.

குஞ்சுச்சிப்பி

 குஞ்சுச்சிப்பி kuñjuccippi, பெ.(n.)

   முற்றாத முத்துச்சிப்பி; immature bivalves, as young mussels, oysters.

     [குஞ்சு + சிப்பி.]

குஞ்சுநறுக்கு-தல்

குஞ்சுநறுக்கு-தல் kuñjunaṟukkudal,    5 செ.கு.வி. (v.i.)

   ஆண்குறியின் நுனி மேல் தோலை நீக்குதல்; to circumcise.

மறுவ கன்னத்துச் செய்தல்

     [குஞ்சு + நறுக்கு.]

குஞ்சுபொரி-த்தல்

குஞ்சுபொரி-த்தல் kuñjuborittal,    4 செ.கு.வி.(v.i.)

   முட்டையினின்று குஞ்சு வெளிவரல்; to hatch produce young from eggs.

     [குஞ்சு + பொரி.]

குஞ்சுப்பெட்டி

 குஞ்சுப்பெட்டி kuñjuppeṭṭi, பெ.(n.)

   சிறிய ஓலைப்பொடி(யாழ்ப்.);; small {Óla} basket.

     [குஞ்சு + பெட்டி.]

குஞ்சுரம்

 குஞ்சுரம் kuñjuram, பெ.(n.)

   குன்றிமணி; crab’s eye.

     [குஞ்சு → குஞ்சுரம்.]

குஞ்சுறை

 குஞ்சுறை kuñjuṟai, பெ.(n.)

   பறவைக்கூடு (சூடா.);; bird’s nest.

     [குஞ்சு + உறை.]

குஞ்சுவாயன்

 குஞ்சுவாயன் kuñjuvāyaṉ, பெ.(n.)

   கைப்பெட்டி; small hand box (யாழ்ப்.);.

மறுவ. குஞ்சுப்பெட்டி

     [குஞ்சு + வாயன்.]

குஞ்சை

 குஞ்சை kuñjai, பெ.(n.)

   நெய்வோர் பாவில் தேய்க்கும் குஞ்சம்; the big broad, heavy sized brush of which the {pa} is twined into the venti sometimes double handled, with which men runswiftly back and forth.

     [குஞ்சு + குஞ்சை]

குட-த்தல்

குட-த்தல் kuḍattal,    2 செ.கு.வி. (v.i.)

   வளைதல்; to curve, bend.

     [குள் → குட.]

குட., கோத. தேய் தேய்

குட., கோத. தேய் தேய்2 kuḍaātatēytēyttal,    4 செ.குன்றாவி. (v.i.)

   1. உரைசச் செய்தல்; to rub, rub away, waste by rubbing.

     “மாநாகங் கொண்டாற் கொப்புளாம் விரலிற் றேய்த்தால்” (சீவக 1288);.

   2. குறைத்தல்; to reduce.

     “அழுத கண்ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை” (குறள், 555);.

   3. அழித்தல்; to kill, destroy.

     “செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கை” (திருமுருகு 5);.

   4. துவக்குதல்; to scour, scrub, polish by rubbing, as a wall, as a vessel;

 to clean, as teeth.

பாத்திரத்தைத் தேய்த்து வைத்தாள் (உவ.); காலையில் படுக்கையினின்று எழுந்தவுடனும் இரவில் படுக்கச் செல்லும் முன்பும் பல் தேய்த்தல் நலம்.

   5. துடைத்தல்; to efface, erase, obliterate by rubbing.

எழுத்தைத் தேய்த்து விட்டான்.

   6. செதுக்குதல்; to pare, shave, cut, as a gem.

     “மணியிற் நேய்த்த வள்ளமும்” (கம்பரா. வரைக். 40);.

   7. எண்ணெய் முதலிய அழுந்தப் பூசுதல்; to rub in, as oil, ointment or liniment.

காரிக்கிழமை தோறும் எண்ணெய்த் தேய்த்துக்குளிப்பது அவர் வழக்கம் ம. தேய்க்குக

குடகன்

குடகன் guḍagaṉ, பெ.(n.)

   1.சேரன் (சூடா.);;{cera} king as a ruler of {kuganādu.}

   2. மேல்நாட்டான்; westerner.

     “குடகர் குண கடலென் றார்த்தார்” (தமிழ்நா. 157.);.

   3. குடகு நாட்டைச் சார்ந்தவன்; a coorgman.

க.கொடக

     [குடகு → குட்கன்.]

குடகபாலை

குடகபாலை kuṭakapālai, பெ.(n.)

   1. வெட்பாலை; conession tellicherry bark – Nerium nti-dysentericum.

   2.கொடிப் பாலை; cotton milk plant – Dregea volubilis; twining swallow-wort –

 Asclepias volubilis. 3. ஊசிப்பாலை; needle-leaved swallow-wort – Oxystelma esculentum (சா.அக.);.

     [குடகம்+பாலை]

குடகம்

குடகம்1 guḍagam, பெ.(n.)

   யாழ் மீட்டும் முறைகளுள் ஒன்று (சீவக. 657 a உரை.);; one of several modes of playing the {yal,}

     [குடக்கம் + குடகம்.]

 குடகம் guḍagam, பெ.(n.)

   1.மேற்கு; west.

     “குடச வானின் வயங்கிய … திங்கள்”(கம்பரா. ஒற்றுக். 201);

   2. தமிழ்நாட்டின் மேற்பாலுள்ள ஒரு நாடு (நன் 272மயிலை.);; Coorg, the hill country west = Mysore, forming the western boundary of the Tamil Nadu.

   3. குடகுமலை (புறநா.166.உரை);; a metain in Coorg.

ம.குடகம்

     [குடத்தல் = வளைதல், மறைதல்.குட → குடக்கு. கதிரவன் மறையும் மேற்குத்திசை, குட → குடக்கு → குடகம்.]

 குடகம்3 guḍagam, பெ.(n.)

   கோளகச் செய்நஞ்சு (மலை.);; a mineral poison.

கூடு → கூடகம் → குடகம் (பலவற்றைக் கூட்டிச் செய்தது.]

குடகரம்

 குடகரம் guḍagaram, பெ.(n.)

   வேலிப்பருத்தி(மலை.);; hedge cotten.

     [குடகம் → குடகரம்.]

குடகாற்று

குடகாற்று kuḍakāṟṟu, பெ.(n.)

   மேல்காற்று; westerly wind.

     “குடகாற்றெறிந்து கொடி நுடங்கு மறுகின்”(சிலப். 14:70);.

     [குடகு → காற்று.]

குடகு

குடகு guḍagu, பெ.(n.)

   1. மேற்கு; west.

   2. தமிழ் நாட்டிற்கு மேற்கே அமைந்த நாடு; the coorg country.

   3. குடகு மொழி; the {kuợagu} language.

   ம. குடகு;   க., து. கொடகு;   தெ. கொடுகு;குட. கொடவி.

     [குட → குடகு. கு – சொல்லாக்க ஈறு.]

குடகு மலை

 குடகு மலை guḍagumalai, பெ.(n.)

குடகு மலை பார்க்க;See. {kudagumaa.} [குடகு + மலை.]

குடகுகிச்சிலி

 குடகுகிச்சிலி  kuṭakukiccili, பெ.(n.)

குடகு நாட்டில் விளையும் கிச்சிலி; coorge orange – Citrus aurantium nobilis (சா.அக.);.

     [குடகு+கிச்சிலி]

குடகுவெட்பாலை

 குடகுவெட்பாலை  kuṭakuveṭpālai, பெ. (n.)

தலைச்சேரியில் விளையும் வெட்பாலை; tellicherry bark (சா.அக.);.

     [குடகு+வெட்பாலை]

குடக்கனி

குடக்கனி kuḍakkaṉi, பெ.(n.)

   பலாப்பழம்; jack fruit, as being potshaped.

     “களைப்பழுத்த மென்குடக்கனி”(காசிக, அருணாதி.22);

     [குடம் → குடக்கனி.]

குடக்கம்

குடக்கம் kuḍakkam, பெ.(n.)

   வளைவு (யாழ்.அக.);; bend, curve, crookedness.

     [குட → குடக்கம் (மு.தா.249);.]

குடக்கா

 குடக்கா kuṭakkā, பெ.(n.)

   கோபுரப்பூடு; tower plant (சா.அக.);.

குடக்காற்று

 குடக்காற்று kuḍakkāṟṟu, பெ.(n.)

   மேல்காற்று; western wind.

     [குடக்கு + காற்று.]

குடக்கால்

குடக்கால் kuḍakkāl, பெ.(n.)

   குடம் போன்ற விளக்குத்தண்டு (சிலப்.6, 138, உரை.);; pot shaped lamp stand.

மறுவ. குடத்தண்டு

     [குடம் + கால் → குடக்கால்.]

குடக்கி

குடக்கி kuḍakki, பெ.(n.)

   1.வளைவானது (யாழ்.அக);; that which is crooked.

   2. பித்தளை (யாழ்ப்);; brass.

     [குடக்கு → குடக்கி. குடம் செய்யப் பயன்பட்ட பித்தளையும்குடக்கி எனப்பட்டது.]

குடக்கினி

குடக்கினி kuḍakkiṉi, பெ.(n.)

   1.காசுக்கட்டி; dowryfoliaged cutch.

   2. கருங்காலி (மலை.);; glabrousfoliaged cutch.

     [குடக்கு + குடக்கினி.]

குடக்கியன்

 குடக்கியன் kuḍakkiyaṉ, பெ.(n.)

கூனன் humpback.

     [குடக்கு → குடக்கியன்.]

குடக்கு

குடக்கு kuḍakku, பெ.(n.)

   மேற்கு (திவா.);; west.

     “தொன்றுமுதிர் பெளவத்தின் குடக்கும்”(புறநா.6);.

ம.குடக்கு

     [குடத்தல் = வளைதல், மறைதல் குடம் → குடக்கு (கதிரவன் மறையும் மேற்குத் திசை);.]

குடக்குழி

 குடக்குழி guḍagguḻi, பெ.(n.)

   நீர்க்குண்டு (யாழ்.அக.);; water pond

ம.குடக்கு

     [குட → குழி.]

குடக்கூத்து

குடக்கூத்து kuḍakāttu, பெ.(n.)

   தனது பேரனாகிய அநிருத்தனை வாணன் சிறைப்படுத்த, அவனது நகர வீதியிற் சென்று கண்ணன் குடமெடுத்தாடிய கூத்து; பதினோர்வகைக் கூத்துகளுள் ஒன்று (சிலப். 6,55. உரை.);; a dance with potrs performed by Krishna, when {Vanan} imprismed his grand son ániruttapone ofelevan {kūftu.}

     [குடம் + கூத்து.]

கூத்தின் வகைகள்:

   1. கொடுகொட்டி,

   2. பாண்டரங்கம்,

   3. குடை

   4. துடி,

   5. அல்லியம்,

   6 மல்லு,

   7. குடம்,

   8. பாவை,

   9. மரக்கால்,

   10, பேடி

   11. கடையம்.

நின்றாடலுக்குரியவை: கொடுகொட்டி, பாண்டரங்கம், குடை குடம் அல்லியம், மல்லு,

வீழ்ந்தாடலுக்குரியவை: துடி, கடையம்,

பேடி(டு);, மரக்கால், பாவை.

குடக்கூலி

 குடக்கூலி kuḍakāli, பெ.(n.)

குடிக்கூலி பார்க்க(சென்னை);: see {kug-k-küs,}

ம. குடக்கூலி.

     [குடி → குட + கூலி.]

குடக்கோ

குடக்கோ kuḍakā, பெ.(n.)

   சேரன்;{Cera} king as ruling the western country.

     “குடக்கோ நெடுஞ் சேரலாதற்கு”(பதிற்றுப். 60. பதி.);.

மறுவ, குடக்கோன்

     [குடக்கு + கோ.குடக்கு = கதிரவன் வளையும்(மறையும் திசை. குடம் → குடக்கு கோன் → குடக்கோ(க.வி.72);.]

குடக்கோஇளஞ்சேரலிரும்பொறை

 குடக்கோஇளஞ்சேரலிரும்பொறை  kuṭakāiḷañcēralirumpoṟai, பெ. (n.)

பெருங்குன்றுார்க்கிழாரால் பாடப்பெற்ற சேர மன்னன்; a Cēraking.

     [குடக்கோ+இளம்+சேரம்+இரும்பொறை]

குடக்கோடுவான்

 குடக்கோடுவான் kuḍakāḍuvāṉ, பெ.(n.)

   கதிரவன்; Sun.

குடக்கு = மேற்கு, குடக்கு + ஓடுவான்.]

குடக்கோன்

 குடக்கோன் kuḍakāṉ, பெ.(n.)

   சேர மன்னன்; {Céra} king.

     [குடக்கு மேற்கு கோன்-அரசன் குடக்கு சகோ’

குடங்கரை

 குடங்கரை kuḍaṅgarai, பெ.(n.)

   தண்ணீர்க்குடம் வைக்கும் இடம் (யாழ்.அக.);; place for keepingwater-pots.

     [குடம் → கரை.]

குடங்கர்

குடங்கர்1 kuḍaṅgar, பெ.(n.)

   1. குடம்; waterpot.

     “குடங்கர் கொணர்ந்திடா… கொண்டு கொண்டனர்”(கந்தபு தேவகிரி.24);.

   2. கும்ப ஓரை (சூடா.);; a quarius, a constellation of the zodiac.

     [குடம் → குடங்கர்.]

 குடங்கர்2 kuḍaṅgar, பெ.(n.)

   குடிசை; hut, cottage

     “குடங்கரில் பாம்போடு உடன்உறைந்தற்று” (குறள்,890);.

     [குடங்கு → குடங்கர்).]

வடமொழியாளர் குடிசை என்னும் பொருளில் குடங்கர் என்னும் சொல்லைக் குட்டங்கக {(kuttargaka);} என்று திரிப்பர். ஆட்டுக் குடில் போன்ற அரை யுருண்டை வடிவான குடிசைகளில் குறவரும், பன்றி யாடிகளும் போன்ற பழங்குடி மாந்தர் இன்றும் வதிந்து வருதல் காண்க. (வே.க.159);.

குடங்கல்

 குடங்கல் kuḍaṅgal, பெ.(n.)

   சிறுகுடிசை; small hut.

     [குடங்கு → குடங்கல்.]

குடங்கவிழ்-தல்

குடங்கவிழ்-தல் kuḍaṅgaviḻtal,    2 செ.கு.வி.(v.i.)

   வண்டி குடஞ்சாய்ந்து விழுதல்; to be upset, be overturned, tipover, tip upon end, fall topsy-turvy as a cart.

     [குடம் + கவிழ்.]

குடங்கால்

குடங்கால் kuḍaṅgāl, பெ.(n.)

   மடி; lap.

     “மருவிக் குடங்காலிருந்து” (திவ்.பெரியதி.10.4:3);.

     [குடங்கு → குடங்கால்.]

குடங்கு-தல்

குடங்கு-தல் kuḍaṅgudal,    5 செ.கு.வி.(v.i.)

   வளைதல் (யாழ்.அக.);; to bend.

     [குட → குடங்கு.]

குடங்கை

குடங்கை kuḍaṅgai, பெ.(n.)

   1.உள்ளங்கை; palm of the hand.

     “தன்குடங்கை நீரேற்றான் தாழ்வு” (திவ்.இயற்.3:62);.

   2. எல்லா விரலுங் கூட்டி உட்குழிக்கும் இணையா வினைக்கை (சிலப்.3:18, உரை.);; a pose with a single hand in which all the fingers are joined and the palm is hollowed like a cup, one of 33 {inaya-Vidakka.}

ம.குடங்கை

     [குடம் + கை.]

 குடங்கை kuḍaṅgai, பெ.(n.)

ஒரு கையளவு:

 handful of measure.

     [குடம்+குடங்கை [வளைந்த+கை]

குடசப்பாலை

குடசப்பாலை kuḍasappālai, பெ.(n.)

   1. கசப்பு வெட்பாலை (பதார்த்த.235);; conessi bark.

   2. கொடிப்பாலை; green wax-flower

   3. கறிப்பாலை (வின்.);; wild olive.

     [குட்சம் + பாலை.]

குடசம்

குடசம் kuḍasam, பெ.(n.)

   1. குடசப்பாலை1பார்க்க;See. {kudasapala,}

     “வடவனம் வாகை வான்பூங் குட்சம்” (குறிஞ்சிப்.67);

   2. மலைமல்லிகை (மலை.);; Indian cork.

     [குட → குட்சம்.]

குடசோ

 குடசோ  kuṭacō, பெ.(n.)

குடசபாலை பார்க்க; see kugasa-pāla (சா.அக.);.

குடச்சிப்பி

 குடச்சிப்பி kuḍaccippi, பெ.(n.)

   வளைவுள்ள இப்பி (வின்.);; rounded shell.

     [குடம் + சிப்பி.]

குடச்சூல்

 குடச்சூல் kuḍaccūl, பெ.(n.)

   காற்சிலம்பு வகை (திவா.);; tinkling anklet.

     [குடம் + சூல்.]

குடச்சைலம்

 குடச்சைலம்  kuṭaccailam, பெ.(n.)

மலைப்புரசு; hill palaus – Butea frondosa (சா.அக.);.

குடஞ்சாய்-தல்

குடஞ்சாய்-தல் kuḍañjāytal,    2 செ.கு.வி. (v.i.)

குடங்கவிழ்-தல் பார்க்க;See. {kudari-kavil}

     [குடம் + காய்.]

குடஞ்சுட்டவர்

குடஞ்சுட்டவர் kuḍañjuḍḍavar, பெ.(n.)

   ஆனிரை மேய்க்கும் இடையர்; cowherds.

     “புல்லினத் தார்க்கும் குடஞ்சுட்ட வாக்கும்”(கலித்.107:2);.

     [குடஞ்சுட்டு(மாடு); + அவர்.]

குடஞ்சுட்டு

குடஞ்சுட்டு kuḍañjuḍḍu, பெ.(n.)

   ஆ; cow as offering a {kugam} of milk.

     “நீரார் நிழல குடஞ்சுட் டினத்துள்ளும்” (கலித்.109:3);.

     [குடம்1 + கட்டு(குடம் பால் கறக்கும் மாடு);.]

குடதாடி

குடதாடி kuḍatāḍi, பெ.(n.)

   தூணின்மேல் வைக்குக் குடவடிவிலான உறுப்பு (சீவக.593, உரை);; capita of a pillar.

     [குடம்1 + தாடி.]

குடதிசை

 குடதிசை kuḍadisai, பெ.(n.)

   மேற்குப் பக்கம்; western direction.

ம. குடதிச

     [குட + திசை.]

குடதேவர்

குடதேவர் kuḍatēvar, பெ.(n.)

   மேற்கு மலை (பொதிகை மலை);யில் இருந்த முனிவர் அகத்தியர் (S.I.I.II — troduction p.41);; sage Agastya who stayed a Western hill.

     [குட + தேவர்.குடு-மேற்கு. குடமுனிபார்க்க]

குடத்தண்டு

குடத்தண்டு kuḍattaṇḍu, பெ.(n.)

குடக்கால் பார்க்க (சிலப்.6:138,உரை.);;See. {kudakkal}

ம. குடத்தண்டு

     [குடம் + தண்டு.]

குடத்தண்டு விளக்கு

 குடத்தண்டு விளக்கு kuḍattaṇḍuviḷakku, பெ.(n.)

   குடம் போன்ற வடிவில் தண்டமைந்த விளக்கு; a kind of lamp with pot-shaped stand

ம. குடத்தண்டு விளக்கு

     [குடம் + தண்டு + விளக்கு.]

குடத்தி

குடத்தி1 kuḍatti, பெ.(n.)

   இடைச்சி(சூடா.); குடவன்;  faminine of shepherdess.

     [குடம்(பால் நிரப்பி குடம்); → குடத்தி.]

 குடத்தி2 kuḍatti, பெ.(n.)

   1. கழுதைப்புலி; hyena.

   2 ஒநாய்; wolf.

     [குறம் (குன்று); குறத்தி → குடத்தி.]

குடத்திநாய்

 குடத்திநாய் kuḍattināy, பெ.(n.)

   நாய்வகை(பாண்டி.);; a kind of dog.

     [குடத்தி + நாய்.]

குடநகர்

குடநகர் guḍanagar, பெ.(n.)

   நாடு என்ற உட்பிரிவின் மேற்குப்புறம் அமைந்த நகர்;{Kumba kanam.}

     “ஜெயங் கொண்ட சோழ மண்டலத்து காலியூர்க் கோட்டத்து காலியூர் நாட்டுக் குடநகர்” (தெ.கல்.தொ.7,கல்.96);.

     [குடம் = மேற்கு குடம் + நகர்.]

குடநாசனி

 குடநாசனி  kuṭanācaṉi, பெ.(n.)

வெண்கடுகு; white mustard – Brassica alba alias Sinapis alba (சா.அக.);.

குடநாசினி

 குடநாசினி kuḍanāciṉi, பெ.(n.)

   வெண்கடுகு; white mustard (சா.அக.);.

     [குடம் + நாசினி.]

குடநாடன்

 குடநாடன் kuḍanāḍaṉ, பெ.(n.)

சேரன் (திவா.);:

{Céra} king.

     [குடக்கு + நாடன்.]

குடநாடு

குடநாடு kuḍanāḍu, பெ.(n.)

   1. மேல்நாடு (புறாந.17,உரை);; western region.

   2. கொடுந்தமிழ் நாடு பன்னிரண்டனுள் ஒன்று (நன்.273);; the region where a dialect of Tamil was spoken, probably a portion of modern Malabar, one of 12 {Kogun-famil-nādu. }

ம. குடநாடு

     [குடம் – குடக்கு + நாடு குடக்கு = கதிரவன் வளையும் திசை.]

குடநாழி

குடநாழி kuḍanāḻi, பெ. (n. )

   கள்வரி (T.A.S.ii.67);; a tax on toddy.

     [குடக்கு + நாழி.]

குடந்தம்

குடந்தம் kuḍandam, பெ.(n.)

   1. கைகூப்பி பேட வளைத்துச் செய்யும் வழிபாடு; joining the hands to gether and bending the body, in worship.

     “குடந்தப் பட்டுக் கொழுமலர் சிதறி” (திருமுரு.229

   2. நால்விரல் முடக்கிப் பெருவிரல் நிறுத்தி நெஞ்சிடை வைக்கை (திருமுரு. பக்_கீழ்க்குறிப்பு);; clenching the fingers and placing the ends of the thumbs on the chest.

   3. குடம் (பிங்.);; pot.

   4. திரட்சி (அக.நி.);,

 roundness.

ம. கு_ந்த

     [குட → குடம் → குடந்தம்.]

குடந்தம்படு-தல்

குடந்தம்படு-தல் kuḍandambaḍudal,    18செ.குன்றாவி.(v.t.)

   வழிபடுதல்; to bow in reverence, make obeisance.

     “குடந்தம் பட்டெதிர் நின்றிடும்…. அரசன்” (காஞ்சிப்பு.கழுவாய்.96);.

     [குட → குடந்தம் + படு.]

குடந்தை

குடந்தை1 kuḍandai, பெ.(n.)

   வளைவு; curve.

     “குடந்தையஞ் செவிய கோட்டெலி”(புறநா.321);.

     [குட + குடந்தை.]

 குடந்தை2 kuḍandai, பெ.(n.)

   குடமுக்கு கும்பகோணம்;{Kumbakoram,}

     “கன்னார் மதில்சூழ் குடந்தைக் கிடந்தாய்”(திவ்.திருவாய்,5,8,3);.

மறுவ. குடநகர்

     [குடம் → குடந்தை. குடநகர் பார்;See. {kidanagar}

பழங்கால நகரத்தின் குடதிசையில் (மேற்கில்); இருந்த குடியிருப்பு குடந்தை எனப் பெயர் பெற்றிருத்தல் வேண்டும்.

குடனோவு

குடனோவு kuḍaṉōvu, பெ.(n.)

   கொலைமுட்டி என்னும் கால்நடைநோய் (M.C.M.D(1887);24); ; a cattle disease involving congestion of the lung and swelling of the belly with the respiration checked.

     [குடல் + நோவு.]

குடபலை

குடபலை  kuṭapalai, பெ.(n.)

   1 மணித் தக்காளி, black-berried nigrum.

   2.கடம்பு மரவகை; oak – Carcua arborea.

   3. இலந்தை; jujube.

   4. களர்வா; tooth-brush tree – Salvadora persica (சா.அக.);.

 குடபலை kuḍabalai, பெ.(n.)

   1. மணித்தக்காளி (தைலவ.பாயி.57);; black night shade.

   2. இலந்தை; jujube.

   3. களர்வா; toothbrush tree (சா.அக.);.

     [குள்→குட + (பலம்);பலை.]

குடபாசி

குடபாசி kuḍapāci, பெ.(n.)

   1. குடத்தைப் போன்ற பாசி; pot moss.

   2. முட்டைப்பாசி; oval moss (சா.அக.);.

     [குடம் + பாசி.]

குடபுட்பம்

குடபுட்பம் kuḍabuḍbam, பெ.(n.)

   இலுப்பைப்பூ; mowar flower.

   2. காட்டிலுப்பை; wild mowah (சா.அக.);.

     [குடம் + புட்பம்.]

குடபுலம்

குடபுலம் kuḍabulam, பெ.(n.)

   மேல்நாடு; western region.

     “குடபுலங் காவலர் மருமான்”(சிறுபாண்.47);.

     [குடம் + புலம்.]

குடபுலவியனார்

 குடபுலவியனார்  kuṭapulaviyaṉār, பெ.(n.)

பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாடிய தமிழ்ப் புலவர்; Tamil poet, who celebrated Păngiyap-neguñjesiyap(அபி.சிந்.);.

     [குட+புலவியன்+ஆர்]

குடப்படை

குடப்படை kuḍappaḍai, பெ.(n.)

   உட்கோயிலின் அடிமட்டத்திலுள்ள குடம் போன்று அமைந்த கட்டடப்பகுதி (M.E.R.143 of 1925);; a horizontal section above the basement of the innershrine of a temple.

     [குடம் + படை.]

குடப்பனிநீர்

 குடப்பனிநீர் kuḍappaṉinīr, பெ.(n.)

   கருப்பையில் தங்கிய பனிக்குடத்து நீர்; the field inside the membrance which immediately surrounds the foet us in the womb (சா.அக.);.

     [குடம் + பணி+ நீர்.]

குடப்பம்

 குடப்பம் kuḍappam, பெ.(n.)

இருப்பை (மலை.); பார்க்க;South Indian mahua.

     [குடவளப்பம் → குடப்பம்.]

குடப்பறை

 குடப்பறை kuḍappaṟai, பெ.(n.)

   குடவடிவான பன்றிப்பறை (திவா.);; pot-shaped drum.

     [குடம் + பறை.]

குடப்பாணா

 குடப்பாணா kuḍappāṇā, பெ.(n.)

   குடவகை (யாழ்.அக);; a kind of pot.

     [குடம் + பாணா]

     [குடம் → பாணா]

குடப்பாம்பிற்கையிடு-தல்

குடப்பாம்பிற்கையிடு-தல் kuḍappāmbiṟkaiyiḍudal,    20 செ.கு.வி.(v.i.)

   பாம்பை அடைத்த குடத்திற் கையிட்டுச் சூளுரை செய்தல்; to demonstrate by the ordeal of inserting one’s handinto a pot containing a serpent.

     [குடம் + பாம்பு + இல் + கை + இடு.]

குடப்பாம்பு

குடப்பாம்பு kuḍappāmbu, பெ.(n.)

   மதிற்பொறி வகை(சிலப்.15 : 216,உரை.);; a machine mounted on a fort as a defence.

     [குடம் + பாம்பு.]

குடப்பாலை

 குடப்பாலை kuḍappālai, பெ.(n.)

   குடசப்பாலை; conessi bark.

   ம.குடப்பால;   க.கொடசிமெ கிட;தெ.கொடிசசெட்டு.

 skt. kulajam

     [குடம் + பாலை.]

குடப்பிழுக்கை

குடப்பிழுக்கை kuḍappiḻukkai, பெ.(n.)

   வரிக்கூத்து வகை (சிலப்.3:13,உரை.);; a kind of masquerade dance.

     [குடம் + இழுக்கை.]

குடப்பெட்டி

 குடப்பெட்டி kuḍappeḍḍi, பெ.(n).

   நெல்வகை; a kind of paddy.

     [குடப்பட்டி + குடப்பெட்டி.]

குடமஞ்சரி

 குடமஞ்சரி kuḍamañjari, பெ.(n.)

   மிளிரை என்னும் அரியப்படா மூலிகை; an unknown plant (சா.அக.);.

     [குடம் + மஞ்சரி.]

குடமணம்

 குடமணம் kuḍamaṇam, பெ.(n.)

   கருஞ்சீரகம் (மலை.);; black cumin.

மறுவ, குடம்பன், குடமானகம்

     [குடம் + மணம்.]

குடமண்

 குடமண் kuḍamaṇ, பெ.(n.)

   வெண்மணல்; white sand.

     [குடம் + மண்.]

குடமண்டூரம்

 குடமண்டூரம் kuḍamaṇḍūram, பெ.(n.)

   அரத்த சோகைக்குக் கொடுப்பதற்கான. மண்டூரத்தில் செய்த ஆயுர்வேத மருந்து; an Aurvedic medicine prepared from hydrated oxide of iron and prescribed for anemia and bloodlessness (சா.அக.);.

     [குடம் + மண்டூரம்.]

குடமது

குடமது  kuṭamatu, பெ.(n)

   1. குடத்தில் வைத்த கள்; toddy secured in pots.

   2. குடத்தில் புளிக்க வைத்த கள் அல்லது சாராயம்; toddy, arrack or anyother liquor fermented in a water-pot (சா.அக.);.

     [குடம்+மது]

குடமலை

குடமலை kuḍamalai, பெ.(n.)

   குடகுமலை; a mountain in Coorg, source of the {Kāveri}

     “குடமலைப் பிறந்த கொழும்பஃ றாரமொடு” (சிலப்.10:106);.

     [குடக்கு + மலை = குடமலை.]

குடமலைநாடு

குடமலைநாடு kuḍamalaināḍu, ,பெ.(n.)

   குடக நாடு; Coorg,

     “குடமலை நாடுங் கொல்லமுங் கலிங்கமும்” (S.I.I.II, 68);

     [குடமலை + நாடு.]

குடமல்லிகை

 குடமல்லிகை guḍamalligai, பெ.(n.)

   மல்லிகை வகை; Arabian jasmine.

     [குடம் + மல்லிகை.]

குடமாடல்

 குடமாடல் kuḍamāḍal, பெ.(n.)

குடக்கூத்துபார்க்க;See. {kuda-k-kottu.}

     [குடம் + ஆடல்.]

குடமானகம்

 குடமானகம் guḍamāṉagam, பெ.(n.)

குடமணம் பார்க்க (சா.அக.);;See. {kuda-maram.}

     [குடமணம் + குடமாணகம்.]

குடமாலை

 குடமாலை kuḍamālai, பெ.(n.)

   உருட்சியான மாலை வகை; round garland.

     [குடம் + மாலை.]

குடமிளகாய்

 குடமிளகாய் kuḍamiḷakāy, பெ.(n.)

   மிளகாய் வகை; bell-pepper.

     [குடம் + மிளகாய்.]

குடமுடைத்தல்

குடமுடைத்தல் kuḍamuḍaittal, பெ. (n.)

   கொள்ளி வைப்பவன் பிணத்தைச் சுற்றி வந்து நீர்க்குடம் உடைக்கும் இறுப்புச் சடங்கு; the ceremony of breaking water-pots before a corpse in a funeral rite.

     “கொன்பெற்ற மைந்தரும் பின்வலம் வந்து குடமுடைத்தார்”(பட்டினத். திருப்பா. பொது.28);.

     [குடம் + உடைத்தல்.]

குடமுனி

குடமுனி kuḍamuṉi, பெ.(n.)

   மேற்குப் பொதிய மலையில் இருந்த முனிவர், அகத்தியர்;  the sage Agastya, the venerable sage of the western hill.

ம.குடமுனி

     [குடம் + முனி. குட = மேற்கு.]

குமரிநாட்டைக் கடல்கொண்டபின் பாண்டியன் தலைநகர் பெருநை (தாமிரபரணி); முகத்திலிருந்த கபாட புரத்திற்கு மாற்றப்பட்டது. அகத்தியரும் தமது இருக்கையைப் பொதியமலைக்கு மாற்றிக் கொண்டபொதியம் என்பது பொதியில் என்பதன் மரூஉ, பொதுஇல் – பொதியில் – அம்பலம். (இலக்கணப் போலி); . அக்காலத்து ஆசிரியரெல்லாம் முனிவராதலின் மலைகளே இருக்கைகளாயிருந்தன. பொதியிலுக்கு மறுபெயர் மலையம். மலை என்னும் பொதுப் பெயரே அம்சாரியை பெற்றுப் பொதியிலைச் சுட்டுவதை மலையமுனி என்னும் தொடரிற் காண்க. மேற்கு: தொடர்ச்சி மலைகள் அக்காலத்தில் குடமலை.

யெனப்பட்டன. மகேந்திரமும், பொதியமும் குடமலைப்பகுதிகளாகும். குடதிசை யிலிருந்தது பற்றி அகத்தியர் குடமுனிவர் எனப்பட்டார். அதை யுணராதார் குடத்திற் பிறந்தவரென்று தொன்மம் (புரணங்); கட்டிவிட்டனர். அதன் பின்பு கும்பமுனி, கலசமுனி என அதன் இன மொழிகளாலும் பெயர் வழங்கத் தலைப்பட்டன (செல்வி. 1981. சிலம்பு 9, பரல் 8, பக்379);

குடமுருட்டி

குடமுருட்டி1 kuḍamuruḍḍi, பெ.(n.)

   காவிரியின் கிளையாறுகளுள் ஒன்று; a river branch of {kaviri} (சா.அக.);.

     [குடம் + உருட்டி.]

 குடமுருட்டி2 kuḍamuruḍḍi, பெ.(n.)

   மந்திர விச்சைக்கு உதவும் ஒரு மூலிகை; a plant with magical virtues used in preparing an amulet (சா.அக.);.

     [குடம் + உருட்டி.]

குடமுல்லை

 குடமுல்லை kuḍamullai, பெ.(n.)

   பெரிய பூக்கள் பூக்கும் முல்லை வகை; Arabian jasmine.

ம. குடமுல்ல

     [குடை → குடி + முல்லை.]

குடமுழ

குடமுழ kuḍamuḻ, பெ.(n.)

குடமுழா பார்க்க;See. {kuda-mபக}

     “குடமுழநந்திலனை” (தேவா.1233.11);.

     [குடம் + (முழவு); முழ.]

குடமுழவம்

குடமுழவம் kuḍamuḻvam, பெ.(n.)

குடமுழா பார்க்க;See. {Kபda-mபக.}

     “வான் குடமுழவமாதிப் பல்லியம்” (கந்தபு. ஏமகூட.21);.

     [குடம் + முழவம்.]

குடமுழவு

குடமுழவு kuḍamuḻvu, பெ.(n.)

   முழவு எனும் தோற்கருவி; large hemispherical lovd-sounding drum.

     “குடமுழவென்பது பயிற்றினேன்” (பெருங்.மகத.14:184);.

ம. குடமுழா

     [குடம் + முழவு(முழக்கும் கருவி);.]

குடமுழா

குடமுழா kuḍamuḻā, பெ.(n.)

குடமுழவுபார்க்க;See. {kugamபa.}

     “குடமுழாத் திழிலை மொந்தை” (சேதுபு.இராமநா. 65);.

     [குடம் + முழவு(முழா);.]

குடமுழுக்கு

 குடமுழுக்கு  kuṭamuḻukku, பெ.(n.)

புதிதாகக் கட்டிமுடிக்கப்பட்ட கோவில், புதுப்பிக்கப்பட்ட கோவில் இவைகளின் கோபுரக் கலசத்துக்கும், மூலவருக்கும் செய்யும் நீராட்டு விழா; pouring the sanctified water over the temple structure at the time of installation.

     [குடம்+முழுக்கு]

குடமூக்கில்

குடமூக்கில் kuḍamūkkil, பெ.(n.)

குடமூக்கு பார்க்க;See. {Kபga-makku.}

     “குடமூக்கில் கோயிலாக் கொண்டு” (திவ்.இயற்.2 : 97);.

     [குடமுக்கு → குடமூக்கில்.]

குடமூக்கு

குடமூக்கு kuḍamūkku, பெ.(n.)

   கும்பகோணம்;{kumbakram,}

     “தண்குடமூக் கமர்ந்தான்” (தேவா.431:11);.

ம.குடமுக்கு

     [குடம் + (முக்கு);மூக்கு. குடம்உடைந்த பகுதி குடமூக்கு என்பர். எனினும் பழைய நகரத்தின் மேற்கிலிருந்த குடியிருப்பு குடந்தை, குடநகர் எனப்படுதலின் குடமுக்கு → குடமூக்கு – என்னும்திரிபு பொருத்தமாகத் தோன்றுகிறது.);

குடமூது-தல்

குடமூது-தல் kuḍamūdudal,    5 செ.கு.வி.(v.i.)

   குடத்தினுள்ளே ஊதி ஒலி பிறப்பித்தல்; to make a sound by blowing into pots, as an accompaniment to dancing among low caste women at marriages, and in some places of temples.

     [குடம் + ஊது.]

குடமூலம்

 குடமூலம் kuḍamūlam, பெ.(n.)

   தண்டுக்கீரை வகை; a kind of garden spinach (சா.அக.);.

     [குடம் + மூலம்(மூலிகை – முளைத்தது.]

குடம்

குடம்1 kuḍam, பெ.(n.)

   1. மண் அல்லது மாழை (உலோகம்);யினால் செய்யும் சிறிய வாயுள்ள ஏனம் (பிங்.);; water-pot.

   2. கும்பவோரை (பன்னிருபா.163);: aquarius, sign of the zodiac.

   3. குடக்கூத்து பார்க்க;a dance of Krishna.

     “நீணிலம் அளந்தோ னாடிய குடமும்” (சிலப்.6:55);.

   4. குடதாடி பார்க்க: see [kuga-tag.}

   5. வண்டிக்குடம்; hub of a wheel.

   6. திரட்சி (வின்.);; globe, ball, sphericity.

   7. ஆன் (சூடா.);; cow.

   ம. குடம்;   க. கொட, குடிகெ;   தெ. குடக, குடுக;   து. குட்கி, குட்கெ, குட்க;   குட, பட. கொட;   துட. குட்க்ய;   மா. குண்ட;குரு குண்டா.

     [குள் (வளைவு); → குடம்.]

     [P]

குடம்

 குடம் kuḍam, பெ.(n.)

   1. நகரம்(பிங்.);; town

   2. கொடிறு (பூசம்);; the eighth {naksatra.}

ம. குடம்

{Skt. kuta}

     [கூடல் → கூடம்-குடம்.]

 குடம்3 kuḍam, பெ.(n.)

குடநாடு பார்க்க;See. {kudaாசdய}

     “தென்பாண்டி குட்டங் குடங்கற்கா” (நன். 273,உரை);.

     [குடம் = மேற்கு மேற்கிலுள்ள நாடு.]

 குடம்4 kuḍam, பெ.(n.)

   கரும்புக் கட்டி (பிங்.);; iaggery.

     [குடம் = வெல்லப்பாகு நிரப்பிய மட்பாண்டம், வெல்லப்பானை.]

 குடம்5 kuḍam, பெ.(n.)

   சதுரக்கள்ளி (தைலவ. தைல.9);; Square spurge.

     [குடம் + பாற்குடம் போல் பால் சுரப்பது.]

 குடம்6 kuḍam, பெ.(n.)

   தூணில் குடம்போன்று அமைந்த ஒர் உறுப்பு (கட்டடம்);; the part of a pillar shaped like a water opoem.

     [குள் → குடம்]

குடம் வைத்தல்

 குடம் வைத்தல் kuḍamvaittal, பெ.(n.)

   முட்டியான கைகளை ஒன்றன்மேல் ஒன்றாக வைத்துத் தயிர்க்குடம், பாற்குடம் என்று கூவித் தட்டி ஆடும் பிள்ளை விளையாட்டு; playing with the fists one on another, and knocking them offin sucession, a child’s play.

     [குடம் + வைத்தல்.]

குடம்பன்

 குடம்பன் kuḍambaṉ, பெ.(n.)

   கருஞ்சீரகம்; black cumin (சா.அக.);.

மறுவ. குடமணம்

     [குள் + குடம் → குடம்பின்.]

குடம்பு

 குடம்பு kuḍambu, பெ.(n.)

   உடம்பு; body.

மறுவ, குடம்பை

     [குடம்- குடம்பு]

குடம், குடம்பு கூட்டின் பெயர்கள். உடல் கூடு போற் கருதப்பட்டது.

குடம்பை

குடம்பை kuḍambai, பெ.(n.)

   1. கூடு; nest.

     “குடம்பைநூ றெற்றி”(கல்லா. கணபதிதுதி வரி.26);.

   2. முட்டை (பிங்.);; egg.

     “குடம்பை தனித்தொழியப் புட்பறந்தற்றே” (குறள்,338);.

மறுவ. உடல், உடம்பு, கூடு, மெய், யாக்கை, முடை, கட்டை.

     [குடம் → குடம்பை.]

குடம்விட்டுக்கட்டு-தல்

குடம்விட்டுக்கட்டு-தல் kuḍamviḍḍukkaḍḍudal,    5 செ.குன்றாவி.(v.t.)

   திருமணத்திற்கு நடுங் காலை அடுக்குக்குடம் போலச் சீலையால் பொத்தி அழகு செய்தல்; to decorate the marriage post with stiffened cloth, so as to resemble a column of pots placed one over another.

     [குடம் + விட்டு + கட்டு.]

குடராசன்

 குடராசன்  kuṭarācaṉ, பெ.(n.)

ஒரு வகைப் பூரான்; a kind of centipede (சா.அக.);.

குடராசம்

 குடராசம் kuḍarācam, பெ.(n.)

   பூரான் வகை (சங்.அக.);; a kind of centipede.

     [குடர் → குடராசம்.]

குடரி

 குடரி kuḍari, பெ.(n.)

   கோடரி, யானைத் துறட்டி; axe elephant goad.

மறுவ. அங்குசம்

     [குடர் → குடரி.]

குடர்

குடர் kuḍar, பெ.(n.)

   குழல் போன்ற உட்டுளையுள்ள உறுப்பு, குடல்; bowels.

     “குடருங் கொழுவும்” (நாலடி,46);.

ம.குடர்

     [குடல் → குடர்.]

குடற்கட்டு

 குடற்கட்டு kuḍaṟkaḍḍu, பெ.(n.)

   குடல் அசை வுராமை; absence or cessation of the movements of the intestines due to the lack of stimulus to Auerbach’s plexus (சா.அக.);.

     [குடல் + கட்டு.]

குடற்கண்ணம்

 குடற்கண்ணம்  kuṭaṟkaṇṇam, பெ.(n.)

நஞ்சுக் கொடியினின்று செய்யும் ஒரு வகைச் சுண்ண மருந்து: an alkaline compound prepared or extracted from the naval-cord of children (சா.அக.);.

     [குடல்+கண்ணம்]

குடற்கரிரோகம்

 குடற்கரிரோகம் kuḍaṟkarirōkam, பெ.(n.)

   காற்று அதிகரித்துக் குடலில் தங்குவதால் உணவு செரியாமை, ஏப்பம், குடல்வலி முதலிய குணங் களைக் காட்டுமோர் குன்ம நோய்; a kind of dyspepsia due to wind or gas in the intestines. It is characterised by indigestion, belching intestinal colic etc. (சா.அக.);.

     [குடல் + களிரோகம்.]

குடற்கிருமி

 குடற்கிருமி kuḍaṟkirumi, பெ.(n.)

   ஒருவகை நுண்ணுயிரி (கிருமி);; a kind of worm.

மறுவ. குடற்புழு

     [குடல் + கிருமி.]

குடற்கொழுப்பு

 குடற்கொழுப்பு  kuṭaṟkoḻuppu, பெ.(n.)

வயிற்றைக் குடத்தைப் போல் பருக்கச் செய்யும் குடலின் மேற் சவ்வில் காணப்படும் அதிகக் கொழுப்பு; excess of fat of the omentum which gives rotundity to the abdomen (சா.அக.);,

     [குடல்+கொழுப்பு]

குடற்கோளாறு

 குடற்கோளாறு  kuṭaṟāḷāṟu, பெ.(n.)

குடலுக்கு ஏற்படும் பலவகைக் குற்றங்கள்; intestinal disorders arising form various causes (சா.அக.);.

     [குடல்+கோளாறு]

குடற்சரிவு

 குடற்சரிவு kuḍaṟcarivu, பெ.(n.)

குடலிறக்கம் பார்க்க;See. {kuda/rakkam.}

     [குடல் + சரிவு.]

குடற்சல்லி

 குடற்சல்லி  kuṭaṟcalli, பெ.(n.)

குடல் துறை (துவாரம்);; holes or perforation occurring in the intestines (சா.அக.);.

     [குடல்+சல்லி]

குடற்சவ்வு

 குடற்சவ்வு kuḍaṟcavvu, பெ.(n.)

   வயிற்றின் உறுப்பை மூடியிருக்கும் தென்சவ்வு; mentum.caul.

     [குடல் + சவ்வு. குடற்புழு பார்க்க;See. {kudarpulu)}

குடற்சுருள்

 குடற்சுருள்  kuṭaṟcuruḷ, பெ.(n.)

குடல் மடிப்பு intestinal fold (சா.அக.);. [குடல்+சுருள்.]

குடற்சூலை

 குடற்சூலை kuḍaṟcūlai, பெ.(n.)

   குடலில் ஏற்படும் சூலை நோய்; pricking pain of the intestines (சா.அக.);.

     [குடல் + சூலை.]

குடற்படுவன்

குடற்படுவன் kuḍaṟpaḍuvaṉ, பெ.(n.)

   குழந்தை யின் குடர்நோய் வகை; an intestinal disease of children.

     “திருகு குடற்படுவன் நீர்ப்பாடுந் தீரும்” (பாலவா.452);.

     [குடல் + படுவன்.]

குடற்பாடம்

 குடற்பாடம் kuḍaṟpāḍam, பெ.(n.)

   குடலிருந்த இடத்தை விட்டுப் பல கரணியங்களை முன்னிட்டுப் பெயருதல்; the fold at the junction of the small and the large intestines (சா.அக.);.

     [குடல் + கபாடம் (பாடம்.);]

குடற்பிசகு

குடற்பிசகு guḍaṟpisagu, பெ.(n.)

   குடலிருந்த இடத்தை விட்டுப் பல கரணியங்களை முன்னிட்டுப் பெயருதல்; displacement of the bowels dueto various causes.

   2. குடற் கோளாறு; disorder or derangement of the intestines.

     [குடல் + பிசகு.]

குடற்பிடுங்கி

 குடற்பிடுங்கி kuḍaṟpiḍuṅgi, பெ.(n.)

     “கக்க லெடுக்கச் செய்வதாகிய துரிசு” (சங்.அக.);;

 blue vitriol, as causing vomiting sensation.

     [குடல் + பிடுங்கி.]

குடற்பிரிவு

 குடற்பிரிவு kuḍaṟpirivu, பெ.(n.)

   குடல் பிறழுகை (யாழ்ப்.);; dislodgement of the bowels.

     [குடல் + பிரிவு.]

குடற்புண்

குடற்புண்  kuṭaṟpuṇ, பெ.(n.)

   1. பல கரணியங்களினால் குடலில் ஏற்படும் புண்; ulceration of the bowels due to various

 causes, as tuberculosis, typhoid, syphilis etc.

   2. சிறுகுடலுக்கு ஏற்படும் புண், duodenal ulcer(சா.அக.);.

     [குடல்+புண்.]

குடற்புரை

 குடற்புரை kuḍaṟpurai, பெ.(n.)

குடலின் உள்ளீடு: hollow, tubular, space inside the intestines.

     [குடல் + புரை.]

குடற்புளிப்பு

 குடற்புளிப்பு  kuṭaṟpuḷippu, பெ.(n.)

வயிற்றுப் புளிப்பு; acidity of the stomach (சா.அக.);.

     [குடல்+புளிப்பு]

குடற்புழு

 குடற்புழு kuḍaṟpuḻu, பெ.(n.)

   குடலில் வாழும் ஒருவகைப் புழு; a kind of worm.

     [குடல் + புழு.]

குடற்பெருக்கு

குடற்பெருக்கு  kuṭaṟperukku, பெ.(n.)

   1. குடலில் அதிகமாகக் கொழுப்பு பிடிப்பதால் குடல் பருத்தல்; enlargement of the intestines due to undue formation offat. 2. குடலில் காற்று தங்குவதால் உப்பிக் காணுதல்; distension of bowels with gas or air in the testines – Flatulence (சா.அக.);.

     [குடல்+பெருக்கு.]

குடற்பை

 குடற்பை kuḍaṟpai, பெ.(n.)

   கருப்பை; uterus womb.

மறுவ. குடற்போர்வை

     [குடல் + பை.]

குடற்போர்வை

குடற்போர்வை kuḍaṟpōrvai, பெ.(n.)

   கருப்பை; womb. uterus.

     “குடற் போர்வைக்குள்” (சூடா. 12,20);.

     [குடல் + போர்வை.]

குடற்றிமிர்

குடற்றிமிர்  kuṭaṟṟimir, பெ.(n.)

   1. குடல் இயக்கம் வலிமை இழக்கை; மலக்கட்டு; constipation.

   2. குடல் உணர்ச்சியற்று இருக்கை; numbness or inactivity of the bowels – Torpor intestinum (சா.அக.);.

     [குடல்+திமிர்]

குடற்றுடக்கு

குடற்றுடக்கு kuḍaṟṟuḍakku, பெ.(n.)

   அரத்தக் கலப்பான் உறவு; consanguinity kinship, relationship.

     “இவற்றினுடைய ரட்சணம் உன் பேறாம் படியான குடற்றுடக்கையுடையவனே” (ஈடு 4:9,2);.

     [குடல் + துடக்கு.]

குடற்றொடர்

 குடற்றொடர்  kuṭaṟṟoṭar, பெ.(n)

குடலின் தொடர்ச்சி; that portion of the alimentary canal either above or below the region of the intestines (சா.அக.);.

     [குடல்+தொடர்]

குடலண்டம்

 குடலண்டம் kuḍalaṇḍam, பெ.(n.)

குடல்லிறக்கம் பார்க்க;See. {kuda/-irakkam.}

     [குடல் + அண்டம்.]

குடலண்டவிருத்தி

 குடலண்டவிருத்தி kuṭalaṇṭavirutti, பெ.(n.)

குடல்வாயு பார்க்க (பைஷஜ);;see kudal-wayu (செ.அக.);.

குடலம்

 குடலம் kuḍalam, பெ.(n.)

   பித்தளை; brass,

     [குடல் + குடலம்.]

குடலற்ற

 குடலற்ற  kuṭalaṟṟa, பெ.எ.(adj.)

உள்ளே சதைப் பற்றில்லாத pithless (சா.அக.);.

     [குடல்+அற்ற]

குடலளைச்சல்

 குடலளைச்சல் kuḍalaḷaiccal, பெ.(n.)

   பெருங் குடலில் தோன்றும் நோய்வகை; uneasy sensation in the larger intestine as a result of gastric irregularities.

     [குடல் + அளைச்சல்.]

குடலழற்சி

 குடலழற்சி kuḍalaḻṟci, பெ.(n.)

   குடல் வெந்து புண்ணாதல்; informmation of the intestines or bowels.

     [குடல் + அழிற்சி.]

குடலி

 குடலி kuḍali, பெ.(n.)

   துளையுள்ள பொருள்; hollow things.

     [குடு → குடல் → குடலி.]

குடலிசிவு

 குடலிசிவு  kuṭalicivu, பெ.(n.)

குடலை இழுத்துப் பிடிப்பது போல் உண்டாகும் வலி, cramps or the spasm of the bowels (சா.அக.);.

     [குடல்+இசிவு]

குடலியக்கம்

 குடலியக்கம்  kuṭaliyakkam, பெ.(n.)

குடல் அசைவு குடல் புழுக்கள் போல் நெளியும் தன்மை; the worm like movement of the

 intestines for carrying the contents from one section of the colon to the other

 Intestinal peristalsis (சா.அக.);.

     [குடல்+இயக்கம்]

குடலிரைச்சல்

 குடலிரைச்சல் kuḍaliraiccal, பெ.(n.)

   வயிற்றிரைவு; flatulence, rumbling of the bowels.

     [குடல் + இரைச்சல்.]

குடலிறக்கம்

 குடலிறக்கம் kuḍaliṟakkam, பெ.(n.)

   குடல் தன்னிருப்பிடத்தை விட்டு நழுவி, கவுட்டியின் வழியாய் விதைப்பையில் இறங்குதல்; protruson or the descent of the bowels from its place into the scrotum through the groin.

     [குடல் + இறக்கம்.]

குடலுக்குரிய

 குடலுக்குரிய  kuṭalukkuriya, பெ.எ. (adj.)

குடல் தொடர்பான; relating to bowels (சா.அக.);.

     [குடலுக்கு+உரிய]

குடலுப்பிசம்

குடலுப்பிசம்  kuṭaluppicam, பெ.(n.)

   1. குடல் பருத்துக் காணல்; enlargement of the bowels.

   2. வயிற்றுப்புசம்; distension of the abdomen (சா.அக.);. [குடல்+உப்பிசம்]

குடலுறுப்பு

 குடலுறுப்பு  kuṭaluṟuppu, பெ.(n.)

வயிற்றுள் இருக்கும் குடலைச் சார்ந்த உறுப்புகள்; abdominal viscera or entrails (சா.அக.);.

     [குடல்+உறுப்பு]

குடலுள்வாங்கு-தல்

குடலுள்வாங்கு-தல்  kuṭaluḷvāṅkutal,    5 செ.கு.வி.(v.i.)

குடலின் ஒரு பகுதி மற்றொரு பகுதியில் அடங்கல்; the invagination of a portion of the intestines into the adjacent part – Intussusception (சா.அக.);.

     [குடல்+உள்+வாங்கு-தல்.]

குடலூதை

 குடலூதை kuḍalūtai, பெ.(n.)

   குடலைப் பற்றிய ஒருவகை ஊதைநோய் ; a disease in the intestines.

     [குடல் + ஊதை.]

குடலெடு-த்தல்

குடலெடு-த்தல் kuḍaleḍuttal,    4 செ.கு.வி.(v.i.)

குடல்தட்டுதல் பார்க்க;See. {kugas-tattu.}

     [குடல் + எடுத்தல்.]

குடலெடுத்துவிடல்

குடலெடுத்துவிடல்  kuṭaleṭuttuviṭal, தொ.பெ.(vbl.n.)

   1. குடலைப் பிடுங்கி வெளியே எடுத்தல்; pulling and drawing out the entrails or viscera- Embowelling.

   2. குடல் தட்டுதல்; tapping the bowels by massage (சா.அக);.

     [குடல்+எடுத்து+விடல்.]

குடலெரிச்சல்

குடலெரிச்சல் kuḍalericcal, பெ.(n.)

   1. வயிறு காந்துகை; inflammation of bowels.

   2. வயிற் றெரிச்சல் (உ.வ.);; heart-burning.

     [குடல் + எரிச்சல்.]

குடலேறு-தல்

குடலேறு-தல் kuḍalēṟudal,    7 செ.கு.வி.(v.i.)

   குடல் இடம்மாறி மேலேறுதல்; to have intestinal disorder.

     [குடல் + ஏறு.]

குடலேற்றம்

குடலேற்றம்  kuṭalēṟṟam, பெ.(n.)

   1. குழந்தைகளுக்குக் குடல் பிசகி இடத்தை விட்டு மாறுவதால் ஏற்படும் நோய்; spasm or derangement of the intestines especially in children.

   2. வயிற்றிரைச்சல்; the gurgling noise of the belly (சா.அக.);.

     [குடல்+ஏற்றம்]

 குடலேற்றம் kuḍalēṟṟam, பெ.(n.)

   குடல் இடம் மாறி மேலேறுதலால் உண்டாகும் நோய்; twisting or derangement of the intestines, especially in children.

     [குடல் + ஏற்றம்.]

குடலை

குடலை kuḍalai, பெ.(n.)

   1. பூக்குடலை; long cylindrical basket of palm leaf for fruits and flowers.

   2. கதிர்க்குடலை (யாழ்ப்.);; ears of grain swollen and ready to shoot forth.

   3. கிணற்றுக் குடலை (யாழ்ப்.);; ring of wicker-workfora well.

   4. பழக்கூடு (யாழ்ப்.);; cover or screen for fruits.

   5. கீற்றுக்கூடு (யாழ்ப்.);; cover of palm leaf carried as a protection against rain.

   6. குடல்; intestines, entrails.

     [குட → குடலை.]

     [P]

குடலைக்காளை

 குடலைக்காளை kuḍalaikkāḷai, பெ.(n.)

   இளங் காளை (வின்.);; young bullock.

     [குடலை + காளை.]

குடலைக்கிணறு

 குடலைக்கிணறு kuḍalaikkiṇaṟu, பெ.(n.)

   உறைக் கிணறு வகை; well walled with wicker-works.

     [குடலை + கிணறு]

குடலைக்குழப்பு-தல்

குடலைக்குழப்பு-தல் kuḍalaikkuḻppudal,    5 செ.கு.வி. (v.i.)

   கக்கல் (வாந்தி); செய்யும்படி வயிற்றைப் புரட்டுதல்; to movement to stomach as to create a vomiting sensation, to produce nausea.

     [குடலை + குழப்பு.]

குடலைப்பற்றியநோய்

குடலைப்பற்றியநோய்  kuṭalaippaṟṟiyanōy, பெ.(n.)

   1. பொதுவாகக் குடலுக்கு ஏற்படும் நோய்கள்; disease in general of the intestines.

   2. வயிற்றுவலி; intestinal colic (சா.அக.);.

மறுவ. குடல்நோய்

     [குடலை+பற்றிய+நோய்]

குடலைப்பற்று-தல்

குடலைப்பற்று-தல்  kuṭalaippaṟṟutal,    5 செ.கு.வி.(v.i.)

குடலைத் தாக்குதல்; affecting or attacking the bowels (சா.அக.);.

     [குடலை+பற்று-தல்.]

குடலைப்பிடுங்கு-தல்

குடலைப்பிடுங்கு-தல் kuḍalaippiḍuṅgudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. பசியால் வயிறு கிண்ட்ப்படுதல்; to painfully affector pinch the bowels, as hunger. .

பசிகுடலைப் பிடுங்குகிறது (உ.வ.);.

   2. வாந்தி யெடுக்க வருதல்; to cause retching.

நாற்றம் குடலைப்பிடுங்குகிறது (உ.வ.);.

   3. அருவருப் பாதல்; to be unclean, unsightly.

     [குடலை + பிடுங்கு-.]

குடலைப்புரட்டு-தல்

குடலைப்புரட்டு-தல்  kuṭalaippuraṭṭutal,    5 செ.கு.வி.(v.i.)

கக்கும்படிக் குடலைப் புரட்டுதல்; affection of the bowels as to feel a vomiting sensation (சா.அக.);.

     [குடலை+புரட்டு-தல்.]

குடலைப்பூச்சி

 குடலைப்பூச்சி kuḍalaippūcci, பெ.(n.)

   பூச்சிவகை (யாழ்.அக.);; a kind of worms.

     [குடலை + பூச்சி.]

குடலைமுறுக்கு-தல்

குடலைமுறுக்கு-தல்  kuṭalaimuṟukkutal,    5 செ.கு.வி.(v.i.)

குடலைப் புரட்டுதல்; a twisting sensation of the bowels from various causes so as to feel nauseous(சா.அக.);.

     [குடலை+முறுக்கு-தல்.]

குடலைமூடியசவ்வு

 குடலைமூடியசவ்வு  kuṭalaimūṭiyacavvu, பெ.(n.)

குடற்சவ்வு; a membrane enveloping the intestines (சா.அக.);.

     [குடலை+மூடிய+சவ்வு.]

குடலையாகு-தல்

குடலையாகு-தல் kuḍalaiyākudal,    7 செ.கு.வி. (v.i.)

   கதிர் ஈனுதல் (யாழ்ப்.);; to be ready to shoot forth as corn-ears.

     [குடலை + ஆகு-.]

குடலையிட்டிலி

 குடலையிட்டிலி kuḍalaiyiḍḍili, பெ.(n.)

   இட்டிலி வகை; a kind of ittilli

     [குடலை + இட்டிலி.]

குடலையுங் கதிரும்

 குடலையுங் கதிரும் kuḍalaiyuṅgadirum, பெ.(n.)

   கருக்கொண்டதும் கொள்ளும் நிலையில் உள்ளது மான கதிர்; corn-ears or spikes partially shot forth.

     [குடலை + கதிர்.]

குடலையேற்றம்

 குடலையேற்றம் kuḍalaiyēṟṟam, பெ.(n.)

   ஏற்ற வகை (வின்.);; a kind of iccottah.

     [குடலை + ஏற்றம்.]

குடலைவயிறு

 குடலைவயிறு kuḍalaivayiṟu, பெ.(n.)

   குழைந்த வயிறு; shriveled abdomen (உ. வ.);.

     [குடலை + வயிறு]

குடலோடல்

 குடலோடல்  kuṭalōṭal, பெ.(n.)

வயிற்றுப் போக்கு; having a loose motion of the bowels (சா.அக);.

     [குடல்+ஒடல்.]

குடல்

குடல் kuḍal, பெ.(n.)

   1. குழல் போன்ற உட்டுளை யுள்ள இரைப்பையைத் தொடர்ந்துள்ள குழாய்; bowels, intestines, entrails.

   2. காயின் குடல்; fungus matter, as in the hollow of a gourd.

குடலழுகின பூசணிக்காய் (வின்.);.

   3. மரக்குடல் (வின்.);; pith in the body of trees.

   4. பழக்குடல் (வின்.);; streaks running downinthe interior of plantains and other fruits.

ம. குடல்

     [குழல் → குடல்.]

குடல், சிறுகுடல், பெருங்குடல் என இருவகைப்பட்டாலும், குடலின் தன்மை குணம், தொழில் இவைகளைக் கருதி குடல் பலவகைப்படும்.

   1. கல்குடல்,

   2. சிறுகுடல்,

   3. பெருங்குடல்,

   4. இரைக்குடல்,

   5. மணிக்குடல்,

   6. மலக்குடல்,

   7. கோழிக்குடல், (எளிதில் செரிக்கக் கூடியது);,

   8. ஓட்டைக் குடல் (எப்போதும் கழிச்சலாகும் குடல்);,

   9. தீனிக்குடல் (சா.அக.);.

குடல் நெளி-தல்

குடல் நெளி-தல் kuḍalneḷidal,    3.செ.கு.வி.(v.i.)

   குடல் புழுப்போல் அசைதல்; vermicular or undulatory motion of the intestines in digestion, peristaltic motion (சா.அக.);.

     [குடல் + நெளி.]

குடல்காய்-தல்

குடல்காய்-தல்  kuṭalkāytal,    1செ.கு.வி.(v.i.) பட்டினியாய் இருத்தல்; starving (சா.அக.).

     [குடல் + காய்-தல்.]

குடல்காய்கை

 குடல்காய்கை kuḍalkāykai, பெ.(n.)

   பசியால் வயிறு ஒட்டிக் கொள்ளுகை; shrinkage of the intestines from starvation.

     [குடல் + காய்கை]

குடல்கொழு-த்தல்

குடல்கொழு-த்தல்  kuṭalkoḻuttal,    4 செ.கு.வி. (vi.)

குடலில் கொழுப்பு பற்றுதல்; bowels growing fat(சா.அக.);.

     [குடல்+கொழு-த்தல்]

குடல்தட்டு-தல்

குடல்தட்டு-தல் kuḍaldaḍḍudal,    5 செ.கு.வி.(v.i.)

   குடலின் பிறழ்வை (குடலேற்றத்தை);த் தட்டி ஒழுங்குப் படுத்துதல்; to pat the bowels by way of massage.

     [குடல் + தட்டு.]

குடல்தாங்கி

குடல்தாங்கி kuḍaltāṅgi, பெ.(n.)

   குடல் நழுவாதபடி கட்டும் கட்டு; a bandage used in cases of rupture of the intestines.

   2. குடல் கீழிறங்காவண்ணம் நிறுத்தி வைக்கும் ஓர் கருவி; an apparatus for holding up the reduced hernia and preventing it (சா.அக.);.

     [குடல் + தாங்கி.]

குடல்திருகு-தல்

குடல்திருகு-தல் guḍaldirugudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. குடல்பிசகுதல்; derangement of the intestines.

   2.குடல் நடுக்கம்; trembling of the bowels (சா.அக.);.

     [குடல் + திருகு.]

குடல்நீர்

 குடல்நீர் kuḍalnīr, பெ.(n.)

   குடலில் சுரக்கும் நீர்; fluid secreted in the intestines (சா.அக.);.

     [குடல் + நீர்.]

குடல்நீர்க்கமம்

 குடல்நீர்க்கமம் kuḍalnīrkkamam, பெ.(n.)

   உறுப்புத் தள்ளல்; prolapsuani (சா.அக.);.

     [குடல் + நீர் + கமம்.]

குடல்நோய்

குடல்நோய் kuḍalnōy, பெ.(n.)

   1. பொதுவாகக் குடலுக்கு ஏற்படும் நோய்கள்; diseases in general of the intestines.

   2. வயிற்று வலி; suso, intestinal colic (சா.அக.);.

     [குடல் + நோய்.]

குடல்பதறு-தல்

குடல்பதறு-தல் kuḍalpadaṟudal,    5 செ.கு.வி.(v.i.)

   வருத்தம் மிகுதி முதலியவற்றால் வயிறு கலங்குதல்; to feel as if the bowels would jump out of their place, to feel frightened, to feel troubled from excessive grief.

     [குடல் + பதறு.]

குடல்பற்று

 குடல்பற்று  kuṭalpaṟṟu, பெ.(n.)

குடல் தொடர்பு connection, with the bowels (சா.அக.);.

குடல்பாகம்

 குடல்பாகம் kuḍalpākam, பெ.(n.)

   மலவாய்க்கடுப்பு; inflammation of theanus (சா.அக.);.

     [குடல் + பாகம்.]

குடல்பிடுங்கு-தல்

குடல்பிடுங்கு-தல் kuṭalpiṭuṅkutal,    5 செ.கு.வி. (v.i.)

குடலைக் களைதல்; disembowelling (சா.அக);.

     [குடல்+பிடுங்கு-தல்]

குடல்மடிப்பு

 குடல்மடிப்பு  kuṭalmaṭippu, பெ.(n.)

வயிற்றுக்குள் இருக்கும் குடலின் மடிப்புகள்; intestinal folds (சா.அக.);.

     [குடல்+மடிப்பு]

குடல்மறுகல்

 குடல்மறுகல் guḍalmaṟugal, பெ.(n.)

குடலேற்றம் பார்க்க;See. {kugalérram} (சா.அக.);.

     [குடல் + மறுகல்.]

குடல்மாலை

 குடல்மாலை kuḍalmālai, பெ.(n.)

   குழந்தைகள் பிறக்கும்பொழுது கழுத்தில் சுற்றிக்கொண் டிருக்கும்அ நஞ்சுக்கொடி; cord found round the neck of the new-born baby (சா.அக.);.

     [குடல் + மாலை.]

குடல்முறுக்கு

குடல்முறுக்கு kuḍalmuṟukku, பெ.(n.)

   வாந்தி செய்வதற்குமுன் காணும் உணர்வு; a twisting sensation of the stomach just before vomitting

   2. குடல்வலி; intestinal colic.

   3. பெருங்குடல் முறுக்கடைந்தது போல் தோன்றுவதுடன் கொடிய வலியும் காணும் ஓர் சூலை நோய்; a kind of violent spasmodic colic in which the large intestines seen, as it were twisted into knots (சா.அக.);.

     [குடல் + முறுக்கு.]

குடல்வர்த்தம்

 குடல்வர்த்தம் kuḍalvarttam, பெ.(n.)

   மலச்சிக்கல்; constipation (சா. அக.);.

     [குடல் + வர்த்தம்.]

குடல்வறட்சி

 குடல்வறட்சி kuḍalvaṟaḍci, பெ.(n.)

   மலவறட்சி; constipation (சா.அக.);.

     [குடல் + வறட்சி.]

குடல்வலி

 குடல்வலி kuḍalvali, பெ.(n.)

   உணவு மிகுதி முதலியவற்றாற் குடலிற் ஏற்படும் வலி; painin bowels, as from over-eating, indigestion etc.

     [குடல் + வலி.]

குடல்வளி

 குடல்வளி kuḍalvaḷi, பெ.(n.)

   குடலின் பிதுக்கம்; protrusion of the bowels Rupture (சா.அக.);.

     [குடல் + வளி.]

குடல்வாங்கு-தல்

குடல்வாங்கு-தல்  kuṭalvāṅkutal,    5 செ.கு.வி.(v.i.)

   1. குடலைப் பிடுங்கி வெளியிடுத்தல்; removing the entrails from the body – Exenterate.

   2. குடல்தட்டுதல்; tapping the bowels by massage.

   3. குடல் பிடுங்கல்; removing the entrails or the viscera; eviscerating (சா.அக.);.

     [குடல்+வாங்கு-தல்.]

குடல்வாதம்

 குடல்வாதம் kuḍalvātam, பெ.(n.)

குடலுாதை பார்க்க;See. {kuda/Uday}

ம. குடல்வாதம்

     [குடல் + வாதம்.]

குடல்வாயு

குடல்வாயு  kuṭalvāyu, பெ.(n.)

   1. குடலிறக்கம்; rupture, scrotal hernia.

   2. விரை ஊதை (விரைவாதம்);; inflammation of the testis – Orchitis.

குடல்விளக்கஞ்செய்தல்

குடல்விளக்கஞ்செய்தல் kuḍalviḷakkañjeytal,    1 செ.குன்றாவி. (v.t.)

   பிறந்த வயிற்றைப் பெருமை பெறச் செய்தல்; lit., to cause the womb to shine, to bring fame, as a son to his mother who gave him birth by himself becoming illustrious.

     “குடல் விளக்கஞ் செய்ததாமோதரனை” (திவ். திருப்பா.18);.

     [குடல் + விளக்கம் + செய்.]

குடல்வீக்கம்

குடல்வீக்கம் kuḍalvīkkam, பெ.(n.)

   குடலில் காணும் அழற்சி, புண், சூலை முதலிய காரணங்களினால் ஏற்படும் வீக்கம்; swelling due to inflammation, ulcers, Colic, etc., of the intestines enteritis.

   2. குடலுப்பிசம்; distension of the bowels with gas (சா.அக.);.

     [குடல் + வீக்கம்.]

குடல்வெப்பம்

 குடல்வெப்பம் kuḍalveppam, பெ.(n.)

குடலழற்சி பார்க்க;See. {kuda-a/arc.}

     [குடல் + வெப்பம்.]

குடல்வேக்காடு

 குடல்வேக்காடு kuḍalvēkkāḍu, பெ.(n.)

குடலழற்சி பார்க்க;See. {kuga/a/arci} (சா.அக.);.

     [குடல் + வேக்காடு.]

குடவண்டிபோடு-தல்

குடவண்டிபோடு-தல் kuḍavaṇḍipōḍudal,    19 செ.கு.வி. (v.i.)

   1. குடங்கவிழ்தல்; to have the cart capsized.

   2.தலைகீழாய்க் கவிழ்தல்; to capsize, over-turn, upset.

     [குட + வண்டி + போடு-தல்.]

குடவண்டியடி-த்தல்

குடவண்டியடி-த்தல் kuḍavaṇḍiyaḍittal,    4 செ.கு.வி. (v.i.)

குடவண்டிபோடு பார்க்க;See. {kսցa-vaրցi-pծցս.}

     [குடவண்டி + அடி.]

குடவண்டிவை-த்தல்

குடவண்டிவை-த்தல் kuḍavaṇḍivaittal,    4 செ.கு.வி. (v.i.)

   தொந்தி தள்ளுதல்; to become potbellied.

     [குடவண்டி + வைத்தல்.]

குடவன்

குடவன்1 kuḍavaṉ, பெ.(n.)

   இடையன்; cowherd.

 shepherd.

     “ஆம்பாற் குடவர் மகளோ” (சீவக.492);

     [குடம் + அன்.]

 குடவன்2 kuḍavaṉ, பெ.(n.)

   1. பித்தளை; brass

   2. பனங்காய் முதலிய ஒற்றைக் கொட்டைக் காய்; palmyra or mahua fruit with a single stone or seed.

   3. கணிகை; dancing girl.

     “குடவற்குந் தாட்டிக்குங் கொத்திட்டு மாய்வ தல்லால்”

    4.குடவுண்ணி; a kind of cattle Tick.

     “வாய்ப்படைக் குடவனும்” (குமர. பிர.காசிக்.57);.

     [குட → குடவன்.]

 குடவன்3 kuḍavaṉ, பெ.(n.)

   நறுமணப்பொருள். கோட்டம் (மலை.);; Arabian costum

     [குடம் (மேற்கு); → குடவன்]

குடவன் பனங்காய்

குடவன் பனங்காய் kuḍavaṉpaṉaṅgāy, பெ.(n.)

குடவன்2 பார்க்க;See. {kugavad=.}

     [குடவன் + பனங்காய்.]

குடவன்செம்பு

 குடவன்செம்பு kuḍavaṉcembu, பெ.(n.)

   பித்தளையைக் கொண்டு அணியமாக்கும் ஒரு வகை களிம்பற்ற செம்பு; pure copper free from ally verdigris.

     [குடவன்+ செம்பு.]

குடவன்பருவதம்

 குடவன்பருவதம்  kuṭavaṉparuvatam, பெ.(n.)

பித்தளை மலை; mountain containing brass (சா.அக.);.

     [குடவன்+Skt. பருவதம்]

குடவன்பொடி

குடவன்பொடி kuḍavaṉpoḍi, பெ.(n.)

   1. பித்தளை அராவிய பொடி; brassings.

   2. பித்தளை முதலிய மாழைகள் சேர்ந்த பொடி; powder of several metals with brassaschief ingredients (சா.அக.);.

     [குடவன் + பொடி.]

குடவன்பொன்

 குடவன்பொன் kuḍavaṉpoṉ, பெ.(n.)

   வேதியியல் பித்தளையைக் கொண்டு அணியமாக்கிய பொன்; gold prepared by transmiting brass through alchemical process (சா.அக.);.

     [குடவன் + பொன்.]

குடவப்புரசு

 குடவப்புரசு kuḍavappurasu, பெ.(n.)

   முதிரை; satin -wood.

     [குடவம் + புரசு.]

குடவம்

 குடவம் kuḍavam, பெ.(n.)

   பித்தளை; brass.

     [குடம் + குடவம்.]

குடவயம்

 குடவயம்  kuṭavayam, பெ.(n.)

பெருந்தக்காளி; edible winter cherry – Pysalis peruviana(சா.அக.);.

குடவயிறன்

 குடவயிறன் kuḍavayiṟaṉ, பெ.(n.)

   பெருவயிறு உள்ளவன்; a pot-bellied person.

ம. குட வயறன்

     [குடம் + வயிறு + அன்.]

குடவயிறு

 குடவயிறு kuḍavayiṟu, பெ.(n.)

   குடத்தைப் போன்ற பெருவயிறு; belly.

மறுவ, சட்டிவயிறு

ம. குடவறு

     [குடம் + வயிறு.]

குடவரை

குடவரை kuḍavarai, பெ.(n.)

   மேற்கில் உள்ள மலை; the western mountain.

     “குடவரை நெற்றி பாய்ந்த கோளரி போன்று” (சீவக.980);.

     [குட + வரை.]

குடவரைக்கோயில்

 குடவரைக்கோயில்  kuṭavaraikāyil, பெ.(n.)

மலைச் சரிவை அல்லது பாறையைக் குடைந்து சிற்பங்கள் செதுக்கிய மண்டபம் போன்ற அமைப்பு; rock-cut temple

     [குடவரை+கோயில்.]

     [P]

குடவரைவாசல்

 குடவரைவாசல் kuḍavaraivācal, பெ.(n.)

   கோபுரவாயில்; gateway under the tower of a temple.

     [குடை + வரை + வாசல்.]

குடவர்

குடவர் kuḍavar, பெ.(n.)

   மேற்கிலுள்ள குட நாட்டினர்; people of the western country.

     “வடவர் வாடக் குடவர் கூம்ப” (பட்டிப். 276.]

குட → குடவர்.]

குடவறை

குடவறை kuḍavaṟai, பெ.(n.)

   1. நிலவறை (யாழ்.அக.);; underground cellar, cave.

   2. சிற்றறை; smallroom.

     [குட + அறை]

குடவளப்பம்

 குடவளப்பம் kuḍavaḷappam, பெ.(n.)

   இருப்பை (மலை.);; South Indian mahua.

     [குட + வளப்பம்]

குடவாடிகம்

 குடவாடிகம் kuṭavāṭikam, பெ.(n.)

   சடாமாஞ்சில்; valerian root – Valeriana jatamansi (சா.அக.);.

     [குட+வாடிகம்]

குடவாயில் நல்லாதனார்

 குடவாயில் நல்லாதனார்  kuṭavāyilnallātaṉār, பெ.(n.)

பெருஞ்சாத்தனைப் பாடிய தமிழ்ப் புலவர்; the Tamil poet who celebrated peruñjättan (அபி.சிந்.);.

     [குடவாயில்+நல்+ஆதன்.]

குடவாளி

 குடவாளி kuḍavāḷi, பெ.(n.)

   நீர் இறைக்க உதவும் மட்குடம்; a pot used to draw water from the well.

     [குடம்+வாளி]

கடவாளி என்பது கொச்சை வழக்கு.

குடவியிடு-தல்

குடவியிடு-தல் kuḍaviyiḍudal,    19 செ.குன்றாவி. (v.t.)

   வளைத்து அகப்படுத்துதல்; to coax entice, inverge.

     “குடவியிடு மரிவையர்கள்” (திருப்பு.514);.

     [குட → குடவு. குடவி + இடு.]

குடவிளக்கு

குடவிளக்கு kuḍaviḷakku, பெ.(n.)

   1. தொங்க விடுவதும் மாழையினால் அமைந்ததுமான குடவடிவுள்ள விளக்கு; hanging lamp with the oilcan shaped like a small water-pot.

   2. மண வறையில் தென்கிழக்கு (நெருப்பு); மூலையில் குடத்தின் மேல் வைக்கும் விளக்கு; light placed on a pot in the south-east corner of a marriage dais.

ம. குட விளக்கு

     [குடம் + விளக்கு.]

குடவு

குடவு1 kuḍavudal,    5.செ.கு.வி.(v.i.)

   வளை வாதல் (வின்.);; to be crooked, bent curved (w.);.

     [குட → குடவு.]

 குடவு2 kuḍavu, பெ.(n.)

   1. வளைவு; bend, curve.

   2. குகை; cave, grotto.

   3.குமரனாடிய குடைக்கூத்து (யாழ்.அக.);; a dance of god {kumaran.}

     [குட → குடவு.]

குடவுண்ணி

 குடவுண்ணி kuḍavuṇṇi, பெ.(n.)

   ஒருவகைப் பெரியவுண்ணி (வின்.);; a large kind of tick.

     [குடம் + உண்ணி.]

குடவுபுரசு

 குடவுபுரசு kuḍavuburasu, பெ.(n.)

   கரும்புரசு; east Indian stain wood (சா.அக.);.

     [குடவு + புரசு.]

குடவுழுந்தர்

 குடவுழுந்தர் kuḍavuḻundar, பெ.(n.)

   ஒவ்வோர் உருவுக்கும் ஒவ்வொன்று மேனி, குடம் நிறை யுமளவும் உழுந்தையிட்டுப் பாடம் வரப் பண்ணிக் கல்வி நிரம்பியவராகச் சொல்லப்படும் ஒரு புலவர் (வின்.);; a reputed poet, who in his youth took as much time in learning a lesson by rote as was required to filla pot with {uluntu} grain, one for every time he repeated it, as an example of great perseverance.

     [குடம் + உழுந்தர்.]

குடவெழுத்தாணி

 குடவெழுத்தாணி kuḍaveḻuttāṇi, பெ.(n.)

   தலையிடம் குண்டுகுண்டாய்த் திரண்டிருக்கும் எழுத்தாணி (வின்.);; iron style with knobs or balls at the top, one above another, tapering to a point.

     [குடம் + எழுத்தாணி.]

குடவோலை

குடவோலை kuḍavōlai, பெ.(n.)

   உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கக் குடத்தில் இடுஞ் சீட்டு; vote by ballot, as recorded on {Öla} and cast into a pot

     “குடவோலை எழுதிப் புக இடுவதாகவும்” (சோழவமி.53);.

     [குடம் + ஒலை.]

குடவோலைமுறை

 குடவோலைமுறை kuḍavōlaimuṟai, பெ.(n.)

   சோழர்கால தேர்தல் முறை; an election of {cūlā} period.

     [குடவோலை + முறை.]

குடா

குடா kuṭā, பெ.(n.)

   1. வளைவு; bend, curve.

     “எண்கின் குடாவடிக் குருளை” (மலைபடு.501);.

   2. குடைவு(வின்.);; cavity, hollow, cavern.

   3. குடாக்கடல் (மூன்றுபக்கம் நிலஞ்சூழ்ந்த கடல்); மன்னார்குடா.

   4. மூலை; remote part of a large country or field.

     [குட + குடா.]

குடாகரன்

 குடாகரன்  kuṭākaraṉ, பெ.(n.)

ஒரு அரக்கன்; a giant.

     [குட+அசுரன்.]

குடாகாயம்

குடாகாயம் kuṭākāyam, பெ.(n.)

   குடத்தால் அளவுபடுத்தப்பட்ட வானம்; space limited by a pot, a term frequently used in Indian philosophy.

     “குடாகாய வாகாயக் கூத்து” (சி.போ.2.3:2);.

     [குடம் + ஆகாயம்.]

குடாக்கடல்

 குடாக்கடல் kuḍākkaḍal, பெ.(n.)

   மூன்றுபக்கம் நிலஞ்சூழ்ந்த கடல்; bay, gulf.

     [குடா + கடல்.]

குடாக்கு

குடாக்கு kuṭākku, பெ.(n.)

   1. புகைப்பதற்குப் பயன்படும் குழாய்,

 hookah,

   2. புகையிலை, பாகு, பழம், சந்தனம் இவற்றைச் சேர்த்துத் திரட்டிய குழாய் மருந்து; ball made of tobacco, treacle, plantain and sandal, used in a hookah (செ.அக.);.

     [P]

     [Mhr. gwgåkù → த.குடாக்கு. U.gurākù → த.குடாக்கு]

குடாக்குடல்

 குடாக்குடல் kuḍākkuḍal, பெ.(n.)

   குடைவுள்ள (குடல்);; a branch of the intestines (சா.அக.);.

     [குடா + கடல்.]

குடாக்கை

 குடாக்கை kuṭākkai, பெ.(n.)

   வயலின் மூலை; corner of a field.

     [குடா → குடாக்கு → குடாக்கை.]

குடாசகம்

குடாசகம் guṭācagam, பெ.(n.)

   1. ஏய்ப்பு; fraud, duplicity, guile, dissimulation.

   2. ஏமாற்று; deception, cheating.

   3. அல்வழிப்படுத்தல்; ill advice, bad counsel.

     [குடம் → குட்சம் → குடாசகம்.]

குடாசு-தல்

குடாசு-தல் kuṭācudal,    5 செ.கு.வி.(v.i.)

   ஏமாற்றுதல்; to commit fraud.

     [குடத்துதல் = வளைத்தல். குடத்து – குடாத்து → குடாக.]

குடாது

குடாது kuṭātu, பெ.(n.)

   1.மேற்கிலுள்ளது; that which: is in the west.

     “குடாஅது தொன்றுமுத்த பெளவத்தின்” (புறநா.6);.

   2. மேற்கு; west:

     “குடாதுங் குணாது மவற்றுட்படு கோண நான்கும் (பாரத.பதின்மூ.80);.

     [குடக்கு → குடாத்து → குடாது.]

குடாநாடு

 குடாநாடு  kuṭānāṭu, பெ.(n.)

மூன்று பக்கமும் நீர் சூழ்ந்த நிலம் (தீப கற்பம்); (இலங்.);; peninsula. யாழ்ப்பாணக் குடாநாடு: மறுவ. தீவக்குறை (தீபகற்பம்);

     [குடவு-குடா+நாடு]

குடானசம்

 குடானசம் kuṭāṉasam, பெ.(n.)

   செம்முள்ளி; common red nail dye (சா.அக.);.

     [குட → குடா → குடானசம். வளைந்த முள்ளுடையது.]

குடானன்

 குடானன் kuṭāṉaṉ, பெ.(n.)

   தாளி; ipomaea genus (சா.அக.);.

     [குடு → குடம் → குடானன்.]

குடானம்

குடானம் kuṭāṉam, பெ.(n.)

   1. குடம்; pot.

க. குடானம்

     [குடம் + அனம் – குடானம். ‘அனம்’ சொல்லீறு.]

குடான்

 குடான் kuṭāṉ, பெ.(n.)

   செம்முள்ளி (மலை.);; thony nail dye.

     [குடா + குடான்.]

குடான்னம்

 குடான்னம் kuṭāṉṉam, பெ.(n.)

   சருக்கரைப் பொங்கல்; a preparation of boiled rice mixed with jaggery and ghee (சா.அக.);.

     [குடம் + அன்னம்.]

குடாப்பு

குடாப்பு kuṭāppu, பெ.(n.)

   கூடு; plaited coop or fowls, pigs, lambs, etc., shaped like a cone.

மறுவ. கொடாப்பு

     [குடா → குடாப்பு= கோழி, ஆட்டுக்குட்டி — முதலியவற்றை அடைக்கும்.அரையுருண்டை வடிவானசு.]

 குடாப்பு kuṭāppu, பெ.(n.)

   1.மிகக்குறுகலான பகுதி,

 narrow place 2.மா,வாழை போன்ற வற்றின் காய்களைப்பழுக்க வைக்கும் இடம்;

 a place enrising fruit.

   3. ஆட்டுக் குட்டிகளை அடைத்து வைக்கும் பனை நாரினால் செய்த சிறு குடில்; a semiglobal weed on litar basket used to shelter the lambs.

     [குடை-குடாப்பு]

குடாரம்

குடாரம்1 kuṭāram, பெ.(n.)

   கோடாலி; axe, hatcr=

     “மழுவுந் தறுகட் குடாரமும்” (சூளா. சீய. 72);.

     [குட → குடா → குடாரம்.]

 குடாரம்2 kuṭāram, பெ.(n.)

   1. தயிர் கடைவதற்கு நட்ட தறி; fixed post used to keep the churr; stick in position.

   2.தயிர்கடை தாழி (திவா.);; cr— ing pot.

ம. குடரம்

குடாரி

குடாரி1 kuṭāri, பெ.(n.)

   1. கோடாலி; axe.குடாதுர்ககோவலர் (தொல்.பொருள்.329, உரை);.

   2. வளைந்த யானைத் தோட்டி (பிங்.);; elephant-r:

     [கோடரி → குடாரி.]

 குடாரி2 kuṭāri, பெ.(n.)

   திப்பிலி (மலை.);;   :-; pepper.

     [குடம் → குடாரி.]

குடாவடி

 குடாவடி kuḍāvaḍi, பெ.(n.)

   வளைந்த அ யுடையதாகிய கரடி (திவா.);; bear, as having cro-or feet.

     [குட → குடா + அடி.]

குடாவு

 குடாவு kuṭāvu, பெ.(n.)

   குடைவு; cavity, hellow cavern.

     [குட – குடா → குடாவு.]

குடி

குடி1 kuḍittal,    4 செ.குன்றாவி.(v.i.)

   1.பருகுதல்; to drink, as from a cup, from the breast.

     “கடலைவற்றக் குடித்திடுகின்ற செவ்வேற் கூற்றம்” (கந்தபு.தாரக.183);.

   2. உட்கொள்ளுதல்; to inhale, absorb, imbibe, as air, tobacco, smoke.

புகைச்சுருட்டுக் குடிக்கிறான் (உ.வ.);.

க. குடி {(kudi);} ம. குடி {(kuli);,} தெ. குடுக {(kudušu);}

     [குள் → குடி.]

 குடி2 kuḍi, பெ.(n.)

   1 பருகுகை; drinking.

பால்குடி மறந்த பிள்ளை.

   2. மது; drink beverage.

   3. மது வுண்ட மயக்கம்; drunkenness, intoxication.

   ம., க., குட., பட. குடி;   தெ. குடுபு;து. குட்செலு, குடிசெலு.

     [குள் → குடி.]

 குடி3 kuḍi, பெ.(n.)

   புருவம் (பிங்.);; eye brow.

     [குள் (வளைவு); → குடி.]

 குடி4 kuḍi, பெ.(n.)

   1. குடியானவன்; ryot.

     “கூடு கெழிஇய குடிவயினான்” (பொருந.182);.

   2.குடி யிருப்போர்; tenants.

   3. ஆட்சிக்குட்பட்ட குடி மக்கள்; subjects citizens

     “மன்னவன் கோனோக்கி வாழுங் குடி” (குறள்.542);.

   4. குடும்பம்; family.

     “ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்” (புறநா.183);.

   5. கொடிவழி (பிங்.);; lineage, descent.

   6. குலம் (குடி.);:

 caste, race.

   7. வீடு; house home, mansion.

     “சிறுகுடி கலக்கி” (கந்தபு. ஆற்று. 12);.

   8. ஊர்; village.

     “குன்றகச் சிறுகுடிக் கிளைடன் மகிழ்ந்து” (திருமுரு.196);.

   9 வாழ்விடம்; abode residence.

     “அடியாருள்ளத் தன்பு மீதூரக் குடியாக் கொண்ட” (திருவாச.2:8);.

   ம., குட. குடி;   க. குடி (கோயில்); குடில். குடிலு. குடிசலு;   தெ. குடி (கோயில்);, குடிசெ;   கொலா., து., பட., பர். குடி (கோயில்);;   கோத. குட்சல். குடள்;   துட. குட்ய (கோயில்);;   குரு. குட்யா;   கூ. குடி (வீட்டின் நடுவரை);;பிரா. குடீ, குட்டீ.

 OE. Cot;

 MDU., MLG., ON. «c: E. cc: OE. cote;

 MLG.. kote;

 R. cote.

 Fin. kota, Es. kodu: O.Jap. «a Jap. «c «ate kataku;

 Mong, kote,xota,

     [குட → குடி. குட = வளைந்த]

குடி-த்தல்

 குடி-த்தல் kuḍittal, செ.குன்றாவி.(v.t.)

உண்ணு தல்:

 to eat.

சோறு குடித்தாயா. (கொங்.வ.);

சிந்தி. குந்தன்.

     [குள்-குடு-குடி]

குடித்தல்-கஞ்சி குடித்தல், நீரில் அல்லது மோரில் கரைத்துக் குடிக்கும் உணவு கஞ்சி வடிவில் இருத்தலின் குடித்தல் உண்ணுதல் பொருள் பெற்றது.

குடிகாரன்

 குடிகாரன் kuḍikāraṉ, பெ.(n.)

   குடியன்; drunkard

     [குடி + காரன்.]

குடிகெடு-தல்

குடிகெடு-தல் guḍigeḍudal,    20 செ.கு.வி.(v.i.)

   குடும்பம் அடியோடு அழிதல்; to be utterly ruined as a family.

     “குடிகெடினு நள்ளே னினதடிய ரொடல்லால்” (திருவாச.5:2);.

ம.குடிகெடு

     [குடி + கெடு.]

குடிகெடுத்தவுவர்க்காரம்

 குடிகெடுத்தவுவர்க்காரம்  kuṭikeṭuttavuvarkkāram, பெ. (n.)

கல்லுப்பு: sea-salt (சா.அக.);.

குடிகெடுத்தோன்

 குடிகெடுத்தோன் guḍigeḍuttōṉ, பெ.(n.)

   கள் சாராயம் முதலிய போதைப் பொருள்கள்; intoxicant; such as toddy, arrack or spiritious liquor (சா.அக.);

     [குடி + கெடுத்தோன்.]

குடிகேடன்

 குடிகேடன் kuḍiāḍaṉ, பெ.(n.)

   தீயொழுக்கத்தால் குலத்தையழிப்போன்; one who spoils the fair name of a family by his foul deeds.

     [குடி + கேடன்.]

குடிகேடி

குடிகேடி kuḍiāḍi, பெ.(n.)

   குலத்தையழிப்பவ-ன்-ள்; one who is the ruin of a family.

     “விலை மாதர்கள் இளைஞர்கள் குடிகேடிகள்” (திருப்பு.625);.

     [குடி + கேடி.]

குடிகேடு

குடிகேடு kuḍiāḍu, பெ.(n.)

   குடும்ப அழிவு; ruin of a family

     “குதிரையின் மேல்வந்து கூடிடுமேர்” குடிகேடு கண்டீர்” (திருவாச.36:2);.

     [குடி + கேடு.]

குடிகை

குடிகை1 guḍigai, பெ.(n.)

   ஓலைக் குடிசை; hut made of leaves, hermitage

     “உண்டு கண்படுக்க முறையுட் குடிகையும்” (மணி.6,63);.

   2. கோயில்; temple.

     “முதியாள் குடிகையும்” (மணிமே.24:161);.

     [குடி → குடிகை.]

 குடிகை2 guḍigai, பெ.(n.)

   ஏலவரிசி (மலை.);; cardamom seed.

     [குடி + குடிகை.]

 குடிகை3 guḍigai, பெ.(n.)

   கமண்டலம்; ascetic’spitcher.

     “அரும்புனற் குடிகை மீது” (கந்தபு காவிரி.49);.

     [குடுவை → குடுகை → குடிகை.]

குடிகொள்ளு-தல்

குடிகொள்ளு-தல் guḍigoḷḷudal,    12 செ.கு.வி. (v.i.)

   நிலையாகத் தங்கியிருத்தல்; to occupy, take possession of the mind, as a deity, to haunt, infest as demons, bats snakes;

 to be deep-seated as a chronic disease.

     “குரைகழல்கள் குறுகினம் நங்கோவிந்தன் குடிகொண்டான்” (திவ்.திருவாய். 10.6;7);.

ம.குடிகொள்ளுக

     [குடி + கொள்ளு-.]

குடிகோள்

குடிகோள் kuḍiāḷ, பெ.(n.)

   வேண்டுமென்றே வஞ்சகம் செய்து குடியைக் கெடுக்கை; ruining a family by deep-laid schemes.

     “உறுப்பறை குடிகோ ளலைகொலை” (தொ.பொருள்.258);.

     [குடி + கோள்.]

குடிக்காக

குடிக்காக kuḍikkāka, பெ.(n.)

   சிற்றூர்க் குடிவரி (I.M.PTg.1068);; a village cess.

     [குடி + காசு.]

குடிக்காடு

குடிக்காடு kuḍikkāḍu, பெ.(n.)

   சிற்றூர்; village

     “ஐவர்க்கும் ஐந்து குடிக்காடு நல்குதியோ கூறு” (பாரதவெண். வாசுதேவன்றூ.69);.

     [குடி + காடு.]

குடிக்காணம்

குடிக்காணம் kuḍikkāṇam, பெ.(n.)

   குடிவரி; a fee paid by tenants. (I. M.P.Cm,22);.

     [குடி + காணம். காணம் = வரி.]

குடிக்காணி

 குடிக்காணி kuḍikkāṇi, பெ.(n.)

   நிலைத்த உழவுத் தொழில் உரிமை (தஞ்சை);; permanent tenancy, as of temple lands.

     [குடி + காணி.]

குடிக்காணியாட்சி

 குடிக்காணியாட்சி kuḍikkāṇiyāḍci, பெ.(n.)

   மரபு வழிச் சொத்துரிமை; inheritance, ancestral prop erty.

     [குடிக்காணி + ஆட்சி.]

குடிக்காவல்

குடிக்காவல் kuḍikkāval, பெ.(n.)

   ஊர்க்காவல் (G.Tn.D.134);; the system of village watch.

     [குடி + காவல்.]

குடிக்குச்சகுனி

 குடிக்குச்சகுனி guḍigguccaguṉi, பெ.(n.)

   குடியோட்டிப் பூண்டு; prickly poppy.

     [குடிக்கு + சகுனி.]

குடிக்கூலி

குடிக்கூலி kuḍikāli, பெ.(n.)

   1. வீட்டுவாடகை;  house rent.

   2. வாடகை; hire.

மறுவ, குடக்கூலி

ம. குடக்கூலி

     [குடி + கூலி.]

குடிக்கூலிக்கெடு-த்தல்

குடிக்கூலிக்கெடு-த்தல் kuḍikālikkeḍuttal,    18 செ.குன்றாவி.(v.t.)

   வாடகைக்கு வாங்குதல்; to obtain for rent, as a house, for hire, as a cart.

     [குடி + கூலிக்கு + எடுக்கு.]

குடிங்கு

குடிங்கு kuḍiṅgu, பெ.(n.)

   பறவை; bird.

     “கோட்டகம் பரிதியங் குடிங்கு கூடுமே” (இரகு. நாட்டுப் 40);.

     [குள் → குடு → குழங்கு.]

குடிசகன்

 குடிசகன் kuṭicakaṉ, பெ.(n.)

   நான்கு வகையானத் துறவிகளுள் கடைசி யானவனாய்த் தன் புதல்வர் அல்லது சுற்றத்தாரால் உண்டி முதலியன பெற்று இலை வேய்ந்த குடிலில் வசிக்குந் துறவி; an ascetic who lives in a hermitage and is fed by his sons or relations, the lowest of four kinds of Šanniyasi (செ.அக.);.

குடிசகம்

குடிசகம் kuṭicakam, பெ.(n.)

   நான்கு வகையான துறவுகளுள் மிக எளிதானதும், தன் புதல்வர் அல்லது சுற்றத்தாரால் உண்டி முதலியன பெற்று இலை வேய்ந்த குடிலில் வசித்தற்குரியதுமான துறவு (சன்னியாசம்);; a kind of asceticism, the lowest of four orders of Šanniyasam, which permits the ascetic to get his meals through his sons or relations, though living separately in a hermitage.

     “பட்டதுயர் கெடுங் குடிசகம்”(கைவல்.சந்தே.158); (செ.அக);.

     [skt.kuticaloa –த.குடீசகம்.]

குடிசனம்

 குடிசனம் kuḍisaṉam, பெ.(n.)

   குடிமக்கள்; nhabitans, subjects.

     [குடி + சனம்.]

குடிசன்னாகம்

 குடிசன்னாகம்  kuṭicaṉṉākam, பெ.(n.)

கரிசலாங்கண்ணி; bee plant or eclipse plant- Eclipta alba alias E.prostata alias verbesina alba (சா.அக.);.

     [P]

குடிசரம்

 குடிசரம் kuḍisaram, பெ.(n.)

   நீர்ப்பன்றி; hog, living in the star (சா. அக.);.

     [குடி + சரம்.]

குடிசல்

 குடிசல் kuḍisal, பெ.(n.)

   குடிசை; hut.

     [குடி → குடிசை → குடிசல்.]

குடிசாய்-தல்

குடிசாய்-தல் kuḍicāytal,    8 செ.கு.வி. (v.i.)

   குடியின் அழிவு; ruin of a family.

     [குடி + சாய்-.]

குடிசிகை

 குடிசிகை guḍisigai, பெ.(n.)

   நிலவரி நிலுவை; arrears of land revenue or rent.

     [குடி + சிகை.]

குடிசில்

குடிசில் kuḍisil, பெ.(n.)

   குடிசை;  hut.

     “மனைவியை யிலாக் குடிசில் (நூற்றெட்டுத். திருப்புகழ்.98);.

     [குடி + சில்.]

குடிசீலை

 குடிசீலை kuḍicīlai, பெ. (n.)

   கோவணம்; loin cloth.

     [குடி + சீலை.]

குடிசெய்-தல்

குடிசெய்-தல் kuḍiseytal,    1 செ.கு.வி.(v.i.)

   1. பிறந்த குடியை யுயர்த்துதல்; to bring credit to one’s family, as making it.

     “குற்றமிலனாய்க் குடிசெய்து வாழ்வானை” (குறள்,1025);.

   2. வாழ்தல்; to dwell, reside, settle.

     ” மனவாரமுடையார் குடிசெயுந் திருநலூரே” (தேவா.413:10);.

     [குடி + செய்.]

குடிசை

 குடிசை kuḍisai, பெ.(n.)

   சிறு குடில் (பிங்.);;  small hut, cottage.

   தெ.குடிசெ, குடுக;   ம. குடிஞ்ஞில்;க. குடிசலு. து. குடிசில், குடிசல்.

 Fin. koju;

 Hung. haj, Jap.koya E. cot cottage. A.S. cote, a small dwelling

     [குடி → குடிசில் → குடிசை]

குடிசைதுக்கு-தல்

குடிசைதுக்கு-தல் kuḍisaidukkudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. குடிசையெடுத்தல் பார்க்க;See. {Kபasa-yedu-.}

   2. இருப்பிடம் மாற்றுதல்; to change habitation.

     [குடிசை + தூரக்கு.]

குடிசைத்தொழில்

 குடிசைத்தொழில்  kuṭicaittoḻil, பெ.(n.)

மின்சாரத்தின் தேவையும், இயந்திரங்களின் உதவியும் இல்லாமல் வீட்டில் இருப்பவர்கள் உதவியுடன் வீட்டிலேயே செய்யப்படும் சிறு தொழில; cottage industry

     [குடிசை+தொழில்.]

குடிசையெடு-த்தல்

குடிசையெடு-த்தல் kuḍisaiyeḍuttal,    4 செ.கு.வி. (v.i.)

   குடிசையை வேற்றிடம் மாற்றுதல்; to remove one’s hut to another place.

     [குடிசை + எடு-.]

குடிச்சி

குடிச்சி kuḍicci, பெ.(n.)

   1. சாதிபத்திரி; mace.

   2. செந்திராய்; Indian chickweed.

   3. சீந்தில்; moon creeper (சா.அக.);.

     [குள் → குடி → குடிச்சி.]

குடிச்செருக்கு

குடிச்செருக்கு kuḍiccerukku, பெ.(n.)

   1. குடிப் பிறப்பாலுண்டான உயர்வெண்ணம் (கருதும்);; pride of birth.

   2. குடிவளம்; dense population.

     [குடி + செருக்கு.]

குடிஞை

குடிஞை1 kuḍiñai, பெ.(n.)

   1. ஆறு; river.

     “கொண்மூ வரவொத் துளதக் குடிஞை” (கந்தபு.காளிந்தி.3);.

     [குள் → குடி(வளைவு); குடிஞை.]

 குடிஞை kuḍiñai, பெ.(n.)

   குடிசை; small hut.

     “தூசக் குடிஞையும்” (பெருங்.இலாவாண. 12:43);.

ம. குடிஞ

     [குடிசை → குடிஞை.]

 குடிஞை3 kuḍiñai, பெ.(n.)

   கோட்டான்; rock horned

 owl.

     “குடிஞை பிரட்டு நெடுமலை யடுக்கத்து” (மலைபடு.141);.

   2. பறவை (பிங்.);; bird.

     [கு → குடிஞை.ஹ]

ஒருகா. வளைந்த மூக்குடையதாகலின் கோட்டானுக்கு குடிஞை என்ற பெயர் பொருத்தமாகலாம்.

 குடிஞை4 kuḍiñai, பெ.(n.)

   1. கோட்டையின் ஏவறை; bastion.

நெடுமதிலுங் குடிஞைகளும் (நீலகேசி,268);.

   2. ஊர் (யாழ்.அக.);; town, village.

     [குடி → குடிஞை.]

குடிஞைக்கல்

குடிஞைக்கல் kuḍiñaikkal, பெ.(n.)

   சோழர் காலத்து வழங்கிய ஒருவகை எடைக்கல்; a standard weight current during {Cola} sovereignty.

     “ஆட வல்லா னென்னுங் குடிகுஞைக் கல்லால்” (S.I.I. II, 69);.

மறுவ. குடிநற்கல்

     [குடி + நல் + கல் – குடிநற்கல் → குடிஞைக்கல்.]

குடிஞைப்பள்ளி

குடிஞைப்பள்ளி kuḍiñaippaḷḷi, பெ.(n.)

   கண்ணுளாளர் தங்குதற்குரிய நாடக அரங்கின் பகுதி (சிலப்.3:105,உரை);; a portion in green-room occupied by {kannulasar}

     [குடிஞை + பள்ளி.]

குடிதாங்கி

குடிதாங்கி kuḍitāṅgi, பெ.(n.)

   குலத்தைத் தாங்கு பவன்; the mainstay of a family.

     “என்னிருங் கலியின் குறும்பைத் துரத்துங் குடிதாங்கியை” (பெருந்தொ.1153);.

     [குடி + தாங்கி.]

குடிதாங்கிக்கோல்

 குடிதாங்கிக்கோல் kuḍitāṅgikāl, பெ.(n.)

   ஒரு பழைய அளவுகோல் (கல்);; an ancient measuringrod.

     [குடி + தாங்கிக்கோல்.]

குடிதாங்கிமுதலியார்

 குடிதாங்கிமுதலியார்  kuṭitāṅkimutaliyār, பெ. (n.)

ஒருவள்ளல்; a patron. (அபி.சிந்);

     [குடி+தாங்கி+முதலியார்]

குடிதிருத்து-தல்

குடிதிருத்து-தல் kuḍidiruddudal,    5 செ.கு.வி.(v.i.)

   1. ஆட்சிக்குட்பட்ட குடிகளை நன்னிலையில் நிறுத்துதல்; to secure the welfare of one’s sublects.

     “துளங்குகுடி திருத்திய” (பதிற்றுப்.37:7);.

   2. பிறந்த குலத்தை மேம்படுத்துதல்; to advance one’s family in wealth, status, reputation etc.

     [குடி + திருத்து.]

குடித்தனக்காரன்

குடித்தனக்காரன் kuḍittaṉakkāraṉ, பெ.(n.)

   1. பயிரிடுவோன்; cultivator, farmer.

   2. ஊரில் செல்வாக்கு உள்ளவன்; man of wealth and influence in a willage.

அந்தச் சிற்றூரில் அவர் பெரிய குடித்தனக்காரர்.

   3. வீட்டுத் தலைவன் (வின்.);:

 house-holder, landlord.

     [குடித்தனம்+ +காரர்.]

குடித்தனக்காரர்

 குடித்தனக்காரர்  kuṭittaṉakkārar, பெ.(n.)

வீட்டில் வாடகைக்குக் குடியிருப்பவர்; tenant.

குடித்தனப்படு-தல்

குடித்தனப்படு-தல் kuḍiddaṉappaḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   இல்வாழ்க்கை நிலையை அடைதல்; to enter married life.

     [குடித்தனம் + படு.]

குடித்தனப்பாங்கு

 குடித்தனப்பாங்கு kuḍittaṉappāṅgu, பெ.(n.)

   இல்வாழ்க்கை யொழுங்கு; domestic propriety, domestic economy.

     [குடித்தனம் + பாங்கு.]

குடித்தனம்

குடித்தனம்1 kuḍittaṉam, பெ.(n.)

   1.இல்வாழ்க்கை; family, domestic life;

 household affairs

     “ஒரஞ்சொன்னவன் குடித்தனம்போல் தேய்ந்தது” (இராமநா.உயுத்.29);.

   2. வாடகைக்குடி; tenancy.

இந்த வீட்டில் நாலு குடித்தனம் உண்டு (உ.வ.);.

   3. குடிவாழ்க்கையின் ஒழுங்கு (வின்.);; domestic economy, domestic order.

     [குடி + குடித்தனம்.]

குடித்தனவுறுப்பு

 குடித்தனவுறுப்பு kuḍittaṉavuṟuppu, பெ.(n.)

   குடும்பத்திற்கு அங்கங்களான இடம், பொருள், ஏவல் முதலியன (யாழ்ப்.);; things necessary for a family as chattels, furniture, dependants, servants cattle.

     [குடித்தனம் + உறுப்பு.]

குடித்தரம்

 குடித்தரம் kuḍittaram, பெ.(n.)

   தனித்தனியான குடித்தீர்வை; separate assessmentforeach individual ryot.

     [குடி + தரம்.]

குடித்திண்ணை

 குடித்திண்ணை kuḍittiṇṇai, பெ.(n.)

   வீட்டின் உட்பகுதியில் கூடத்திலமைந்த திண்னை (நெல்லை);; a inside the house pial.

     [குடி + திண்ணை.]

குடித்தெய்வம்

குடித்தெய்வம் kuḍitteyvam, பெ.(n.)

   குலதெய்வம்; family deity.

     “நங்குடித் தெய்வங் கண்டீர்” (சீவக.547);.

ம. குடிதைவம்

     [குடி + தெய்வம்.]

குடித்தைலம்

குடித்தைலம்  kuṭittailam, பெ.(n.)

   1. உள்ளுக்குக் குடிக்கக் கொடுக்கும் எண்ணெய்; a medicated oil taken or adoministered internally,

   2. ஆமணக்கு எண்ணெய்; caster oil (சா.அக.);.

     [குடி+Skt. தைலம்.]

குடித்தொகை

 குடித்தொகை  kuṭittokai, பெ.(n.)

மக்கள் தொகை (இலங்.);; population [குடி+தொகை]

குடிநற்கல்

குடிநற்கல் kuḍinaṟkal, பெ.(n.)

குடிஞைக்கல் (S.I.I.ii.69); பார்க்க;See. {kudoas-k-ka/}

     [குடி + நல் + கல்.]

குடிநாட்டு-தல்

குடிநாட்டு-தல் kuḍināḍḍudal,    5 செ.கு.வி.(v.i.)

   குடியேற்றுதல்; to plant a colony.

     [குடி + நாட்டு.]

குடிநிலம்

குடிநிலம் kuḍinilam, பெ.(n.)

   1. குடியிருக்கும் மனை நிலம்; house site, house premises.

   2. மகட் கொடையாகக் கொடுத்த மனை; building sites, as an item in dowry.

ம. குடிநிலம்

     [குடி + நிலம்.]

குடிநிலுவை

 குடிநிலுவை kuḍiniluvai, பெ.(n.)

குடிசிகை பார்க்க;See. {kud-Siga.}

     [குடி + நிலுவை.]

குடிநிலை

குடிநிலை kuḍinilai, பெ.(n.)

   வீரக்குடியின் பழமையையும் அஞ்சாமையையும் கூறும் புறத்துறை(பு.வெ.2:14);; theme of extolling the greatness of a warrior’s family.

     [குடி + நிலை.]

குடிநிலையுரைத்தல்

குடிநிலையுரைத்தல் kuḍinilaiyuraittal, பெ.(n.)

குடிநிலை பார்க்க (புறநா.290);;See. {Kபd-nia}

     [குடி + நிலை + உரைத்தல்.]

குடிநீங்காக் காராண்மை

குடிநீங்காக் காராண்மை kuḍinīṅgākkārāṇmai, பெ.(n.)

   நிலத்தில் குடியிருப்பதோடு. பயிரிடும் உரிமையும் நிலையாகப் பெற்று ஆண்டு தோறும் உரிமையாளருக்கு உரிய தவசங்களை முறைப்படி செலுத்தும் உழர் உரிமை; right of tenants to live and cultivate paying share of the crop.

     “ஆண்டுதோறும் இரண்டாயிரத்ததுதாற்றுக்கல நெல் அட்டுவார்களாகவும், இப்பரிசு இந்நிலம் விற்றும், ஒற்றி வைச்சும் கொள்ளப் பெறுவார்களாகவும். இப்பரிசு நீங்காக் காராண்மையாக கல்மேல் வெட்டுவிச்சு” (தெ.கல். தொ.14, கல்.154);.

     [குடி + நீங்கா + காராண்மை.]

குடிநீங்காச்சாவாமூவாப்பேராடு

குடிநீங்காச்சாவாமூவாப்பேராடு kuḍinīṅgāccāvāmūvāppērāḍu, பெ.(n.)

   புரக்கும் இடையர் வாரிசு மாறாதநிலையில், எண்ணிக்கையில் என்றும் குறையாத அளவில் வைத்திருக்கும் ஆடுகள்; number of sheep to be maintained perpetually by shepherds for temple use.

     “இவ்வாடு இருநூற்று, தொண்ணூற்று இரண்டுங் குடிநீங்காச் சாவா மூவாப் பேராடு ஆகக் கொண்டு” (தெ.கல்.தொ.5, கல்.517);.

     [குடி + நீங்கா + சாவா + மூவா + போராடு.]

குடிநீங்காத்திருவிடையாட்டம்

குடிநீங்காத்திருவிடையாட்டம் kuḍinīṅgāttiruviḍaiyāḍḍam, பெ.(n.)

   பயிர் செய்யுங் குடிகளோடு கோவிலுக்கு அளிக்கப்பட்ட முற்றூட்டு (P.Insc.224);; endowment to a temple, of lands already in the occupation of cultivating tenants.

     [குடி + நீங்கா + திருவிடையாட்டம்.]

குடிநீங்காத்தேவதானம்

குடிநீங்காத்தேவதானம்1 kuḍinīṅgāttēvatāṉam, பெ.(n.)

குடிநீங்காத்திருவிடை யாட்டம் பார்க்க (M.E.R.45 of 1922);;See. {kud-nirikā-ttiruvidayāţţam.}

     [குடி + நீங்கா + தேவதானம்.]

 குடிநீங்காத்தேவதானம் kuḍinīṅgāttēvatāṉam, பெ.(n.)

   பழங்குடி வாரிசு நீங்கா உழவர் வாழும் கோயிலுக்குரிய இறையிலி நிலம்; taxfree land gifted to temple, from which tillers are not removed.

     “ஆகப்பாடகம் நாற்பத்திரண்டும் இவ் நாயனார்க்குடி நீங்காத் தேவதானமாக விட்டோம்” (தெ.கல்.தொ.7 கல்.402);.

     [குடி + நீங்கா + தேவதானம்.]

குடிநீர்

குடிநீர் kuḍinīr, பெ.(n.)

   1. குடித்தற்குரிய நீர்; drinking water, potable water.

     “இட்ட குடிநீ ரிருநாழி” (பதினொ.க்ஷேத். 16);.

   2.கியாழமருந்து; decoction, tincture, medicinal infusion.

     “நோய்க்குத் தாயிரே குடிநீர் குடிப்பாள்” (திவ்.பெருமாள்.5. 1வியா);.

   ம.குடிநீர், குடி வெள்ளம்;   க. குடியுவநீரு;தெ. குடிநீரு.

     [குடி + நீர்.]

குடிநீர்த்திரவியம்

 குடிநீர்த்திரவியம்  kuṭinīrttiraviyam, பெ.(n.)

காய்ச்சிய மருந்துக் குடிநீர் (கஷாயச் சரக்குகள்); (பைஷஜ.);; ingredients of a tincture (செ.அக.);.

     [குடிநீர்+Skt. திரவியம்]

குடினை

குடினை kuḍiṉai, பெ.(n.)

   குடிநற்கல்; a standard weight.

     “குடினை எடைபொன் 30-ன் கழஞ்சு” (S.I.I.vii,400);.

     [குழல் → குழலை → குடினை.]

குடிபடை

 குடிபடை kuḍibaḍai, பெ.(n.)

   குடிமக்கள் (உ.வ.);; in habitants.

     [குடி + படை.]

குடிபுகு-தல்

குடிபுகு-தல் guḍibugudal,    2 செ.கு.வி.(v.i.)

   1. வேறு வீட்டிற்கு வாழச் செல்லுதல்; to occuppya new home.

   2. புதுக்குடி சேர்தல்; to immigrate,

 settle and colnize, seek a fresh refue.

     “தாமரை துறந்து குடிபுக்கா ளென” (கம்பரா.வரைக்.12);.

   3. புதுமனை புகுதல்; to occupya newly-builthouse with appropriate ceremonies to do house-warm

 Ing.

     [கு + புகு.]

குடிபெயர்-தல்

குடிபெயர்-தல்  kuṭipeyartal,    4 செ.கு.வி. (v.i.)

ஓர் இடத்தை விட்டு வேறோர் இடத்துக்கு வாழச் செல்லுதல்; migrate. நிலத்தை இழந்த உழவர்கள் நகர்ப்புறத்திற்குக் குடிபெயர்ந்து வருகிறார்கள்.

     [குடி+பெயர்-தல்.]

குடிபோ-தல்

குடிபோ-தல் kuḍipōtal,    8 செ.கு.வி.(v.i.)

   1. வேறு வீட்டிற்குக் குடிமாறிச் செல்லுதல்; to remove one self to a new home.

   2. புதுமனை புகுதல்; to occupy a newly-built house with appropriate ceromenies.

   3. இருப்பிடத்தை விட்டு வெளியேறுதல்; to quit, give up, abandon, as a house.

     “ஆவி குடிபோன வவ்வடிவும்” (சிலப்.20: வெண்பா.);.

   4. வலசை போதல்; to emigrate, flee from home.

   5. காற்றாகவேனும் ஆவியாகவேனும் பண்டங் கரைதல்; to evaporate, escape, as essential oil camphor.

     [குடி + போ.]

குடிபோதை

 குடிபோதை kuḍipōtai, பெ.(n.)

குடிமயக்கம் பார்க்க;see {kugimayakkam}

     [குடி + போதை.]

குடிப்படு-த்தல்

குடிப்படு-த்தல் kuḍippaḍuttal,    20 செ.குன்றாவி. (v.t.)

   குடும்பத்தை நல்லநிலைமையில் நிறுத்துதல்; to establish a family in good position.

     “குடிப் படுத்துக் கூழீந்தான்” (ஏலா.42);.

     [குடி + படு.]

குடிப்படை

 குடிப்படை kuḍippaḍai, பெ.(n.)

   குடிமக்களாலான சேனை; militia, volunteer corps as opposed to a mercenary army.

     [குடி + படை.]

குடிப்பறையன்

 குடிப்பறையன் kuḍippaṟaiyaṉ, பெ.(n.)

   பறையாக்க முடிமழிக்கும் தொழிலாளி (M.M.);; barber {} shaves Pariahs.

     [குடி + பறையன்.]

குடிப்பற்று

குடிப்பற்று kuḍippaṟṟu, பெ.(n.)

   குடியிருப்பு நிலம்;  housing site.

நிலத்தைப் பயிரிடும் உரிமை பெற்றான அந் நிலப்பகுதியிலேயே குடியிருப்பமைத்து வாழ்வதற்கும் குடி பற்றாகும் (புதுப். கல்.195);.

     [குடி + பற்று.]

குடிப்பழக்கம்

 குடிப்பழக்கம் kuḍippaḻkkam, பெ.(n.)

   குடிக்கும் பழக்கம்; drinking habit

க. குடிகதன

     [குடி + பழக்கம்.]

குடிப்பழி

குடிப்பழி kuḍippaḻi, பெ.(n.)

   குலத்திற்கு ஏற்ப நிந்தை; stigma, disgrace, slur, disrepute, onfa– ily.

     “காணிற் குடிப்பழியாம்” (நாலடி.84);.

ம. குடிப்பழி

     [குடி + பழி.]

குடிப்பழுது

 குடிப்பழுது kuḍippaḻudu, பெ.(n.)

குடிப்பழி பார்க்க (வின்.);;See. {kudo-p-past}

     [குடி + பழுது.]

குடிப்பாங்கு

குடிப்பாங்கு kuḍippāṅgu, பெ.(n.)

   1. குடித்தனம் பாங்கு பார்க்க;See. {kudi-tana-p-ra}

   2. குடியானவன் பின்பற்றுதற்குரிய ஒழுங்கு; corper or proper conduct of a farmer.

   3. குடிமகளின் ஏற்பாடு (வின்.);; usage, customs of cultivators or agroturists.

     [குடி + பாங்கு.]

குடிப்பாழ்

குடிப்பாழ் kuḍippāḻ, பெ.(n.)

   1. குடிகள் விட்டு நீங்குதலால் ஊருக்கு உண்டாகும் அழிவு; r — village owing to depopulation one or three-ro of {pal,}

   2. குடிகளற்றுப் போன ஊர்; a deseாe:_ lage.

அந்த ஊர் குடிப்பாழ் (உ.வ.);.

     [குடி + பாழ்.]

குடிப்பிறப்பாளர்

குடிப்பிறப்பாளர் kuḍippiṟappāḷar, பெ.(n.)

   உயர்குடியிற் பிறந்தோர்; persons of birth, of noble lineage.

     “குடிப்பிறப்பாளர் தங்கொள்கையிற் குன்றார்” (நாலடி.141.);

     [குடி + பிறப்பாளர்.]

குடிப்பிறப்பு

குடிப்பிறப்பு kuḍippiṟappu, பெ.(n.)

   உயர்குடியில் தோன்றுகை; noble birth, nobility, birth in a distinguished family.

     “குடிப்பிறப் பழிக்கும்” (மணிமே.11:76);.

ம. குடிப்பிறவி

     [குடி + பிறப்பு.]

குடிப்பிள்ளை

குடிப்பிள்ளை kuḍippiḷḷai, பெ.(n.)

   1. பனமழிப்புவேலை செய்யும் ஒரு பிரிவினர்;    2. ஒரு இனத்தில் தாங்கள் சோக துள்ளவர்களாக சொல்லிக் கொண்டு, அதன் பெயரால் தங்களை வழங்கிக் கொள்ளும் இனத்தார் (இ.வ.);; sects which trace their origin to particular castes and adopt their titles.

   3. ஊர்ச் செட்டி யார்க்கு அவர் இட்ட வேலையை முடித்தற் குரிய எடுபிடி ஆள்; an errand boy for chettiar grantee.

     [குடி + பிள்ளை.]

குடிப்பெண்

குடிப்பெண் kuḍippeṇ, பெ.(n.)

   1. குலப்பெண் (யாழ்.அக.);; woman of noble birth and respectability, wedded lawful wife.

   2. முறையாகத் திருமணமான பெண்; a lawfully wedded wife.

ம. குடிப்பெண்ணு

     [குடி + பெண்.]

குடிப்பெயர்

குடிப்பெயர் kuḍippeyar, பெ.(n.)

   சேர, சோழ, பாண்டியர் என்றாற் போல, பிறந்த குலம் பற்றி வழங்கும் பெயர் (பன்னிருபா.145:சிலப்.1,33. அரும்.);; family name as {Césad, Cosas, Pändyas.}

     [குடி + பெயர்.]

குடிப்பொருள்

குடிப்பொருள் kuḍipporuḷ, பெ.(n.)

   1. ஒரு குடும்பத்தின் அல்லது கொடிவழியின் வரலாற்றுத் தொடர்பான பெருமை

 honesty and dignity belonging to ancestry of clam or royal family.

     “குடிப்பொருள் அன்று நும் செய்கை” (புறம் 45);.

   2. நாட்டு நலன், பொது

 spousis;

 public interestwelfare of the society.

     “குடி செய்வல்” (குறள்);.

     [குடி+பொருள்]

குடிமகன்

 குடிமகன்  kuṭimakaṉ, பெ.(n.)

முடி திருத்தாளன்; barber (அபி.சிந்);.

குடிமகள்

குடிமகள் guḍimagaḷ, பெ.(n.)

   1. நற்குடிப் பிறந்தவன்; person of noble birth.

     “பொருளைக் குடிமகனல்லான் கைவைத்தல்” (பழமொ.209);.

   2.படியாள்; hired servant, one whose wages are paid by grain.

     “குடிமகனொரு வனுக்கு ஐயனாரேறி வலித்து நலிந்த வாறே” (ஈடு, 4.6:2);.

ம. குடிமகன்

     [குடி + மகன்.]

குடிமக்கள்

குடிமக்கள் kuḍimakkaḷ, பெ.(n.)

   1.(ஊர்களில்);பணி செய்தற்குரிய பதினெண்வகைக் சிற்றூர்க் குடிமக்கள்; sub-caste is rendering service in a village, being 18 in number.

   2. அடிமைகள்; slaves.

     “இந்திரியங்களுக்குக் குடிமக்களாய் வர்த்திக்கிற லீலா விபூதி” (திவ்.திருமாலை.13,வியா.);.

     [குடி + மக்கள்.]

வண்ணான், நாவிதன், குயவன், தட்டான், கன்னான். கற்றச்சன், கொல்லன், தச்சன், எண்ணெய் வாணிகன். உப்பு வாணிகன், இலைவாணிகன், பள்ளி, பூமாலைக்காரன், பறையன், கோவிற்குடியான், ஒச்சன்,

வலையன், பாணன்,

குடிமக்கள் மானியம்

 குடிமக்கள் மானியம் kuḍimakkaḷmāṉiyam, பெ.(n.)

   பணி செய்யும் குடிமக்கட்கு விடப்பட்ட இறையிலி நிலம்; land given free of rent to washermen, barbers etc., for the services rendered by them to villagers.

     [குடி + மக்கள் + மானியம்.]

குடிமதிப்பு

குடிமதிப்பு kuḍimadippu, பெ.(n.)

   1. சிற்றூர் வரித்திட்டம் (வின்.);; valuation of property for purposes oftaxation.

   2. மக்கள் தொகை கணக்கெடுப்பு; ceՈՏuՏ.

ம. குடிமதிப்பு

     [குடி + மதிப்பு]

குடிமம்

 குடிமம்  kuṭimam, பெ.(n.)

துத்தம்; blue vitriol (சா.அக.);.

குடிமயக்கம்

குடிமயக்கம் kuḍimayakkam, பெ.(n.)

   1. குடிப் பதனால் ஏற்படும் வெறி; intocication through drunkenness;

   2. குடிவெறியினாலேற் படும் மனக்கலக்கம், தடுமாற்றம் முதலியன; a form of temporary alecoholicinsanity characterised by mental cloud Ing.

     [குடு + மயக்கம்.]

குடிமராமத்து

 குடிமராமத்து kuḍimarāmattu, பெ.(n.)

   கால்வாய், குளக்கரை முதலியவற்றைச் சீர்படுத்துவதற்காக வழக்கமாய்க் குடிமக்கள் செய்தற்குரிய பணிக் கொடை (R.F.);; customary contributions of labour by ryots for petty repairs to channels, tank-bunds, suices etc.

ம. குடிமராமத்து

     [குடி + மராத்து.]

குடிமார்க்கம்

 குடிமார்க்கம் kuḍimārkkam, பெ.(n.)

குடிவழி பார்க்க; see {kugivali}

     [குடி + மார்க்கம்.]

குடிமிக்குயவன்

 குடிமிக்குயவன்  kuṭimikkuyavaṉ, பெ.(n.)

நான்முகனின் தலைமுடியில் பிறந்தவன்; the person who born in nanmuga’s hair (அபி.சிந்);.

குடிமிராசி

 குடிமிராசி  kuṭimirāci, பெ.(n.)

தலைமுறை, தலைமுறையாக வரும் நிலவுரிமை: right or privilege of a hereditary occupant (செ.அக.);.

குடிமிராசு

 குடிமிராசு kuḍimirācu, பெ.(n.)

   நிலவுரிமை; right or privilege of a hereditary occupant.

     [குடி + மிராசு.]

குடிமுறை

 குடிமுறை kuḍimuṟai, பெ.(n.)

   குடித்தனம் (யாழ்.அக.);; household affairs.

     [குடி + முறை.]

குடிமுழுகிப்போ-தல்

 குடிமுழுகிப்போ-தல் guḍimuḻugippōtal,    குடும்ப நிலை முதலாயின முழுவதும் அழிதல்; to ruin ulterly, as a family completely washed away by flood.

     [குடி + முழுகி + போ-.]

குடிமுழுகு-தல்

குடிமுழுகு-தல்  kuṭimuḻukutal,    5 செ.கு.வி. (v.i.)

கேடு விளைதல்; அழிவு ஏற்படுதல்; be lost; be desperate. ஒரு வேளை சாப்பிடாவிட்டால் குடிமுழுகி விடாது!

     [குடி+முழுகு-தல்.]

குடிமை

குடிமை kuḍimai, பெ.(n.)

   1. உயர்குலத்தாரது ஒழுக்கம் (தொல்.பொருள். 273);; manners and customs of the higher classes of nobility.

   2. பிறந்த குடியை உயரச் செய்யும் தன்மை; supreme quality of advancing the status of a family.

     “மடிமை குடிமைக்கட்டங்கின்” (குறள்,608);.

   3. குடிப்பிறப்பு; lineage, family, descent.

     “குணனுங் குடிமையும்” (குறள்,793);.

   4. அரசரது குடியாயிருக்குந் தன்மை; allegiance, homage, as of subjects to their sovereign.

     “குடிமை மூன்றுலகுஞ் செயுங் கொற்றத்து” (கம்பரா.நிந்தனை.37);.

   5. குடித்தனப் பாங்கு; domestic economy.

   6. அடிமை; slavery, servitude, feudal dependance, feudatory in reference to his chief.

     “குடிமை செய்யுங் கொடும்புலையன்” (அரிச்.பு.சூழ்வினை.70);.

   7. குடிகளிடமிருந்து பெறும் ஒருவகை வரி (S.I.I.III, 110);; a tax, certain dues from tenants.

ம. குடிம

     [குடி + குடிமை.]

குடிமைப்பணி

 குடிமைப்பணி kuḍimaippaṇi, பெ.(n.)

   படைத்துறை நீங்கலாக அரசுப் பணியாளர்; civil service.

     [குடிமை+பணி]

குடிமைப்பாடு

குடிமைப்பாடு kuḍimaippāḍu, பெ.(n.)

   ஊழியம்; service (S.I.I.III, 48);.

     [குடிமை + பாடு.]

குடிமைப்பொருள்

 குடிமைப்பொருள்  kuṭimaipporuḷ, பெ.(n.)

அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அரிசி, எண்ணெய் போன்ற பொருள்கள்; civil supplies. குடிமைப் பொருள் வாணிபக் கழகம்

     [குடிமை+பொருள்.]

குடியன்

 குடியன் kuḍiyaṉ, பெ.(n.)

   குடிகாரன்; drunkard.

   ம.குடியன்;   க. குடக, குடிக;து.குட்செலெ, குடிசெலெ.

     [குடி + அன்.]

குடியமர்த்து-தல்

குடியமர்த்து-தல்  kuṭiyamarttutal,    5 செ.கு.வி. (v.i.)

புதியதாக ஓர் இடத்தில் தங்கி

வாழச் செய்தல்; குடியேற்றுதல்; settle in a place or country. புயலால் வீடு இழந்தவர்கள் ஏதிலியர் முகாமில் இப்போது குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

     [குடி+அமர்த்து-தல்.]

குடியம்பலம்

 குடியம்பலம் kuḍiyambalam, பெ.(n.)

   குடிகள் அரசிற்குச் செலுத்தும் வரிகளின் கணக்கை ஒழுங்குபடுத்துதற்கு உதவி செய்ய அமர்த்தப்படும் ஒரு சிற்றூர்ப் பணி; village office established with a view to assist the ryots in keeping accounts of payments made by them to the government.

     [குடி + அம்பலம்.]

குடியரசு

 குடியரசு kuḍiyarasu, பெ.(n.)

   குடிமக்களால் நடத்தப்பெறும் அரசு; republic – a government, government by the people, democracy.

     [குடி + அரசு.]

குடியரசுத்தலைவர்

 குடியரசுத்தலைவர்  kuṭiyaracuttalaivar, பெ.(n.)

குடியரசு அரசியல் அமைப்பில் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளும் தலைவர் அல்லது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளுவ (நிருவாக);த் தலைவர்; President of a republic.

     [குடியரசு+தலைவர்]

குடியழிவு

குடியழிவு kuḍiyaḻivu, பெ.(n.)

   1. குடும்பக்கேடு; ruin of a family.

   2. பெருங்கேடு (வின்.);; great evil.

     [குடி + அழிவு.]

குடியாட்சி

குடியாட்சி kuḍiyāḍci, பெ.(n.)

   1. குடித்தனத்தை நடத்துகை (யாழ்.அக.);; domestic management.

   2. குடியரசு; government by the people; democгасу.

     [குடி + ஆட்சி.]

குடியாட்டம்

 குடியாட்டம் kuḍiyāḍḍam, பெ.(n.)

   குடிவாழ்க்கை (யாழ்.அக.);; domestic life.

     [குடி + ஆட்டம்.]

குடியான கவுண்டர்

குடியான கவுண்டர் guḍiyāṉagavuṇḍar, பெ.(n.)

   கொங்கு வேளாளர் (G.Sm. Di, 144);;{końgu-vēlāļa Caste}

     [குடி + ஆன + கவுண்டர்.]

குடியானவன்

குடியானவன் kuḍiyāṉavaṉ, பெ.(n.)

   1. பயிரிடுவோன்; cultivator, farmer, ryot.

   2. கீழ்க்குடி; caste {Šūdra.}

ம. குடியானவன்

     [குடி + ஆனவன்.]

குடியான்

 குடியான் kuḍiyāṉ, பெ.(n.)

குடியானவன் பார்க்க;see {kudiyānawan.}

ம. குடியான்

     [குடி + ஆன்.]

குடியாயக்கட்டு

 குடியாயக்கட்டு kuḍiyāyakkaḍḍu, பெ.(n.)

   சிற்றூர்க் குடும்பங்களின் மொத்தத் தொகை; total number of families in a village.

     [குடி + ஆயக்கட்டு.]

குடியாள்

குடியாள்1 kuḍiyāḷ, பெ.(n.)

பண்ணையாள்;tenant.

மறுவ: குடியால்

     [குடி + ஆள்.]

 குடியாள் kuḍiyāḷ, பெ.(n.)

   தாளகம் (ச.ங்அக.);; yellow sulphuret of arsenic.

     [குடி + ஆள்.]

குடியிரு-த்தல்

குடியிரு-த்தல் kuḍiyiruttal,    3 செ.கு.வி.(v.i.)

   1. வாழ்தல்; to reside, settle down.

     “எப்படியினிக் குடியிருப்பது” (உபதேசகா.சூராதி.28);.

   2. குடிக் கூலிக் கிருத்தல்; to live in rented quarters.

ம.குடியிருக்குக

     [குடி + இரு.]

குடியிருக்கை

குடியிருக்கை kuḍiyirukkai, பெ.(n.)

   1. குடியாகத் தங்கியிருக்கை; living, residing.

   2.சிற்றூர்க் குடிகள் வாழும் இடம்; quarters occupied by the ryots in a village.

     “இவ்வூர் நத்தங் குடி யிருக்கையும்” (S.l.l. II,57);.

     [குடி + இருக்கை.]

குடியிருப்பு

குடியிருப்பு kuḍiyiruppu, பெ.(n.)

   1. குடியிருக்கை; living, residing.

   2. வாழ்வு; life, existence.

குடியிருப்புச் சுகமில்லை (கொ.வ.);

   3. சிற்றூர்; village.

     “அதன் பகுதியாகிய குடியிருப்பும்” (தொல்.பொருள்.114,உரை.);.

   4. சில இனத்தார்கள்

   தனியாக வாழ்ந்து வரும் இடம்; quarters occupied by a special class, as ryots.

ம. குடியிருப்பு

     [குடி + இருப்பு.]

குடியிருப்புநத்தம்

 குடியிருப்புநத்தம் kuḍiyiruppunattam, பெ.(n.)

   சிற்றூரில் மக்கள் வீடுகட்டி வாழும் நிலப்பகுதி; the portion of a village site where villagers have their places of residence.

     [குடி + இருப்பு + நத்தம்.]

குடியிறங்கு-தல்

குடியிறங்கு-தல் kuḍiyiṟaṅgudal,    5 செ.கு.வி.(v.i.)

   நிலைக் குடியாகத் தங்குதல்; to fix or establish permanently one’s abode;

 to settle down, as a fam

 ily.

     [குடி → இறங்கு.]

குடியிறை

 குடியிறை kuḍiyiṟai, பெ.(n.)

   குடிகள் செலுத்தும் வரி (திவா.);; tax imposed upon ryots.

     [குடி → இறை.]

குடியிலார்

 குடியிலார் kuḍiyilār, பெ.(n.)

   குடிகள் (TA.S.);; tenants, ryots.

ம. குடியிலார்

     [குடி → குடியில் (அர்); ஆர்.]

குடியுடம்படிக்கை

குடியுடம்படிக்கை kuḍiyuḍambaḍikkai, பெ.(n.)

   1. உரிமைச் சீட்டு பட்டா; title-deed registry of holdings.

   2. குத்தகைச் சீட்டு; lease-deed.

     [குடி + உடன்படிக்கை.]

குடியுந்தடியும்

குடியுந்தடியும் kuḍiyundaḍiyum, பெ.(n.)

   வீடும் நிலமும்; houses and lands.

     “ஸம்ஸாரத்திலே குடியுந் தடியுமாயிருக்க நினைத்தார்” (திவ்.இயற். திருவிருத்.6, ஸ்வா.வியா,பக்.56);.

     [குடியும் + தடியும்.]

குடியுரிமை

குடியுரிமை  kuṭiyurimai, பெ.(n.)

   1. ஒரு நாட்டில் தங்குவதற்கான அரசு தரும் உரிமை (அங்கீகாரம்);; citizenship. சில நாடுகளில் பிறந்து சில ஆண்டுகள் வாழ்ந்திருந்தாலே குடியுரிமை கிடைத்து விடுகிறது.

   2. ஒரு நாட்டுக் குடிமகனுக்கு உள்ள உரிமை rights of a citizen, மக்களின் குடியுரிமையை மதிக்க வேண்டிய கடமை அரசுக்கு உண்டு.

   3. ஒரு வீட்டில் குடியிருப்பதற்கான தகுதி: rights of tenancy. வாடகை வீட்டுக்கு முன்பணம் செலுத்திய நாளிலிருந்தே ஒருவர் அந்த விட்டுக்குக் குடியுரிமை பெறுவார்.

     [குடி+உரிமை]

குடியெழுப்பு-தல்

குடியெழுப்பு-தல்  kuṭiyeḻupputal,    5 செ.கு.வி.

     [குடி+எழுப்பு-தல்]

குடியெழும்பு-தல்

குடியெழும்பு-தல் kuḍiyeḻumbudal,    5 செ.கு.வி.(v.i.)

   கலகம் முதலிய நிகழ்ச்சியால் குடிநீங்கிப் போய் விடுதல் (வின்.);; to evacuate a house, leave a village, commonly from disastrous events oranticpations.

     [குடி + எழும்பு.]

குடியேறிகள்

 குடியேறிகள் guḍiyēṟigaḷ, பெ.(n.)

   பிழைப் பிற்காக ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டில் குடியேறியவர்கள்; emigrant.

தமிழர் குடியேறி களல்லர் இந்தத் தமிழ்மண்ணின் மைந்தர்கள்.

     [குடி+ஏறிகள்]

குடியேறு-தல்

குடியேறு-தல் kuḍiyēṟudal,    5 செ.கு.வி.(v.i.)

   1. தம் நாடுவிட்டு வேற்றுநாடு சென்று வாழ்தல்; to colonize, settle in a new country.

   2. நிலைத்துவிடுதல்; to secure a sure place or footing, to be firmy rooted.

     “சிந்தை குடியேறியிருக்கின்ற மாலொழியும்” (ஏகாம்.உலா,168);.

ம. குடியேறுக

     [குடி + ஏறு.]

குடியேற்றநாடு

 குடியேற்றநாடு kuḍiyēṟṟanāḍu, பெ.(n.)

   மக்கள் புதிதாகக் குடியேறிய நாடு; colony.

     [குடி + ஏற்றம் + நாடு.]

குடியேற்றம்

குடியேற்றம் kuḍiyēṟṟam, பெ.(n.)

   1. புதிதாக ஒரு நிலப்பகுதியில் குடியேறுகை; colonization, newly populating a country or land area.

   2. ஓர் ஊரின் பெயர்; name of a village.

ம. குடியேற்றம்

     [குடி + ஏறு-குடியேறு → குடியேற்றம் = மக்கள் குடியேறிய ஊர் குடியேற்றம் என்பது இன்று குடியாத்தம் என மருவி வழங்குகிறது.]

குடியேற்று-தல்

குடியேற்று-தல் kuḍiyēṟṟudal,    5 செ.குன்றாவி.(v.i.)

   குடியேறச் செய்தல்; to people, populate colonize.

     “பொன்னெடு நாட்டையெல்லாம் புதுக்குடி யேற்றிற் றன்றே”(கம்பரா.இந்திரசித்.48);.

     [குடி + ஏற்று.]

குடியோட்டி

 குடியோட்டி kuḍiyōḍḍi, பெ.(n.)

குடியோட்டிப் பூண்டு பார்க்க;see {kūdīyoffi-p-pungu.}

     [குடி + ஒட்டி.]

குடியோட்டிப்பூண்டு

குடியோட்டிப்பூண்டு kuḍiyōḍḍippūṇḍu, பெ.(n.)

   பூடுவகை (பதார்த்த.293);; prickly poppy.

     [குடி + ஒட்டி + பூண்டு.]

குடிரகம்

 குடிரகம் guḍiragam, பெ.(n.)

   துளசி; holy basil (சா.அக.);.

     [குள் → குடு → குடி → குடிரம்(குட்டையானது);.]

குடிரம்

 குடிரம் kuḍiram, பெ.(n.)

   காரைச்செடி (மலை.);; alow shrub with sharp axillary spines.

     [குள் → குடு → குடிரம்.]

குடிராகதி

 குடிராகதி  kuṭirākati, பெ.(n.)

கோழியவரை, cock-bean – Canavaiia obtusifolia (சா.அக.);.

குடிலகண்டகம்

குடிலகண்டகம்  kuṭilakaṇṭakam, பெ.(n.)

கருங்காலி மரம்; black sundra tree –

 Acacia catechu typica alias Diospyra: melanoxylon.

மறுவ. உடுக்கை மரம்

இம்மரம் 20-30 அடி உயரம் இருக்கும் கிளைகள் முள்ளுள்ளவை. இதன் இலைகள் சுணையாயும் பால் ஒதனை மரத்தின் பாலை போன்றும் இருக்கும். இம்மரம் சிலசமயம் முள் இல்லாமலும் இருக்கும். சிறிய மஞ்சள் நிறமுள்ள பூ உடைய இம்மரத்தில் இருந்து பிசின் எடுக்கலாம் (சா.அக.);.

குடிலகாவிதம்

 குடிலகாவிதம்  kuṭilakāvitam, பெ.(n.)

சடைக்குறண்டி; a thorny shrub Lepidagathis scariosa (சா.அக.);.

குடிலச்சி

குடிலச்சி kuḍilacci, பெ.(n.)

   1. கருவண்டு வகை (வின்.);; a black beetle.

   2. ஒருவகைச் செய்நஞ்சு (சங்.அக.);; a prepared arsenic.

     [குடில் → குடிலச்சி.]

குடிலப்பாட்டு

 குடிலப்பாட்டு kuḍilappāḍḍu,    இசை; music (கழக.அக.).

     [குடிலம் + பாட்டு.]

குடிலம்

குடிலம் kuḍilam, பெ.(n.)

   1. வளைவு (திவா.);; bend, curve, fexure.

     “கூசும் நுதலும் புருவமுமே குடிலமாகி விருப்பாரை” (யாப். வி. மேற்கோள்);.

   2. வானம் சூடா.); space.

   3. சடை (பிங்.);; tangled, matted hair.

   4. வஞ்சகம்; deceit, guile, cunning.

     “பெருங்குடிலமெல்லாங் குடி யிருக்குங் கருவிழி யாள்” (குற்றா.தல. தருமசாமி. 47);.

   5. உள்வாங்கிப் பாடும் இசைத் தொழில்; a modulation of voice in singing.

     “குடிலமுள் வாங்கிப் பாடல்” (சீவக.735, உரை.);

   6. குராமரம் (திவா.);; common bottle flower.

     [குடு → குடி → குடில் → குடிலம்.]

 குடிலம்2 kuḍilam, பெ.(n.)

   1. ஈயமணல்; lead ore.

   2. வெள்ளீயம்; white lead.

     [குடு → குடில் → குடிலம்.]

 குடிலம்3 kuḍilam, பெ.(n.)

   குதிரை நடைவகை (சுக்கிரநீதி,72);; a pace of horse.

     [குடில் (வட்டம்); → குடிலகம்.]

குடிலி

குடிலி  kuṭili, பெ.(n)

   1. செம்பல்லிப்பூடு; ar unknown lizard plant used by the Siddhars for rejuvenation.

   2. நீலஞ்சோதி; another unknown plant used by the Siddhars for rejuvenation (சா.அக.);.

     [குடில் – குடிலி]

குடிலை

குடிலை kuḍilai, பெ.(n.)

   1. மூலமந்திரமாகிய ஓங்காரம்; the mystic syllable Om:

     “குடிலை யம்பொருட்கு” (கந்தபு. கடவுள்வா. 14);.

   2. தூயமாயை (சி.போ.பா.2:2, பக் 133, புதுப்.);;{puremaya}

     [குண்டலி → குடிலி.]

குடிலை → வ. குட்டிலா (kutila);

குண்டலி, குடிலை என்னும் மெய்ப் பொருளியற் சொற்கட்கு வடமொழியில் வேர் மூலமில்லை.

     “ஓங்காரத் துள்ளே யுதித்தவைம் பூதங்கள்

ஓங்காரத் துள்ளே யுதித்த சராசரம்

ஓங்கார தீதத் துயிர் மூன்று முற்றன

ஓங்கார சீவ பரமசிவ ரூபமே” (திருமந் 2677);

இத்திருமந்திரப்பாடல் பேருலகத் தோற்று வாய்க்குக் குடிலை என்னும் பெயர்த் தோற்றக் கரணியத்தை விளக்குகின்றது (வே,க. 162);.

குடிலைவாயு

 குடிலைவாயு kuḍilaivāyu, பெ.(n.)

   விறகு கட்டுக்குள் மூஞ்சுறு உலாவுதல் போல் உடம்பில் வளைந்து வளைந்து ஓடும் ஒருவகை நாடி; alternative ascending and descending motion of pulses in the human body (சா.அக.);.

     [குடிலை + வாயு.]

குடில்

குடில்1 kuḍil, பெ.(n.)

   1. குடிசையினும் சிறிய இல், குற்றில், குடிசை; hut, shed.

     “என்ன மாதவஞ் செய்ததிச் சிறுகுடில்”(பாரத.கிருட்.80);.

   2. ஆட்டுக் கிடை முதலியவற்றை மூடுதற்கு உதவும் குடில்; movable, conoidal roof for sheltering beasts or stacks of straw orgate-ways from the weather

   3. வீடு; abod dwelling place.

     “குடிலுறு காமர் பொன்னகர்” (கந்தபு.கடவுள்.14);.

   4. தேர்ச் சக்கரங்களைத் திருப்பிச் செலுத்தற்குக் கொடுக்கும் மரக்கட்டை (இ.வ.);; a cone-shaped block of wood used to prevent big cars from running fast and to turn them at street-corners.

     [குள் + (வளைவு); – குடி → குடில்.]

 குடில் kuḍil, பெ.(n.)

   வட்டவடிவமாக தோன்றும் காயம், வானம் (திவா.);; space.

     [குள்(வளைவு); → குடி → குடில்);.]

குடிவகைபாவி-த்தல்

குடிவகைபாவி-த்தல் guḍivagaipāvittal,    4 செ.கு.வி. (v.i.)

   குடித்துப் பழக்கப்படுத்தல்; taking to the habit of drinking (சா.அக.);.

     [குடி + வகை + பாவி.]

குடிவருணி

 குடிவருணி kuḍivaruṇi, பெ.(n.)

   செவ்விளநீர்; water of ared coloured tender co-conut (சா.அக.);.

     [குடி + வருணி → வாரிணி (வார் + நீர்); → வருணி.]

குடிவா-தல், குடிவருதல்

குடிவா-தல், குடிவருதல் kuḍivādalkuḍivarudal,    8 செ.கு.வி. (v.i.)

   குடியேறுதல்; to settle, take residence

     “மேவினன் குடிவர” (கந்தபு.கடவுள்.14);.

     [குடி + (வரு);வா.]

குடிவாங்கு

குடிவாங்கு1 kuḍivāṅgudal,    7 செ.கு.வி.(v.i.)

   இருப்பிடம் விட்டுப் பெயர்தல்; to remove, shift, abandon one’s home, change place.

     [குடி + வாங்கு.]

 குடிவாங்கு2 kuḍivāṅgudal, செ.கு.வி.(v.i.)

   குடியிருத்தல்; to stay to reside.

     “அடையவளைந் தானுக்குள்ளே குடிவாங்கியிருந்து” (ஈடு,1.3:9);

     [குடி + வாங்கு.]

குடிவாணர்

 குடிவாணர் kuḍivāṇar, பெ.(n.)

   குடிமக்கள்; citizen.

மறுவ, குடிமக்கள்.

     [குடி+வா[வாழ்கர்]வாணர்]

குடிவாரக்கம்

குடிவாரக்கம் kuḍivārakkam, பெ.(n.)

   பயிர் செய்வோருக்குக் கொடுக்கும் விதை கூலி முதலியன; cultivation expenses.

குடிவாரக் கமாய்க் குடிமேல் வைத்தெழுதி (சரவண. பணவிடு.138);.

     [குவாரம் + (அஃகம் = தவசம்);அக்கம்.]

குடிவாரநிலம்

 குடிவாரநிலம் kuḍivāranilam, பெ.(n.)

   குடிகட்குப் பயிரிடும் உரிமையுள்ள நிலம்; land over which tenants have a vested right to cultivate.

     [குடி + வாரம் + நிலம்.]

குடிவாரம்

குடிவாரம் kuḍivāram, பெ.(n.)

   1. நிலத்தை உழுது பயிரிடுவதற்குக் குடிகளுக்குரிய உரிமை;  occupancy right, opp. to {mēlvāram.}

   2. குடிவாரத்தில் குடியானவன் பங்குக்குரிய விளைபாங்கு; the share of the produce to which a ryot having such right is entitled. opp, to {mēlvāram.}

     [குடி + வாரம். வாரம் = உரிமை.]

குடிவாழ்க்கை

குடிவாழ்க்கை kuḍivāḻkkai, பெ.(n.)

   1. இல் வாழ்க்கை; domestic life.

     “:மாந்தர் குடிவாழ்க்கை சாந்தனையுஞ் சஞ்சலமே”(நல்வழி,28);.

   2. குடும்ப. ஆளுவம்; domestic economy, house-keeping

   3. வாழ்வின் ஒழுங்கு; life, mode or manner of life

     [குடி + வாழ்க்கை.]

குடிவிட்டோடல்

 குடிவிட்டோடல் kuḍiviḍḍōḍal, பெ.(n.)

   நேரம் உடம்பைவிட்டு வேரற நீங்கல்; to be completely or radically cured as in chronic disease (சா.அக);.

     [குடி + விட்டு + ஒடல்.]

குடிவிளங்குதல்

குடிவிளங்குதல் kuḍiviḷaṅgudal, பெ.(n.)

   1. குலம் முதலியன செழிக்கை; flourishing state of a family the people of town, village, etc.,

   2. மக்கட்பேறு மிகதியாதல்; increase of children.

     [குடி + விளங்குதல்.]

குடிவீடு

 குடிவீடு kuḍivīḍu, பெ.(n.)

   கருவின் மண்டை; the skull of a foetus (சா.அக.);.

     [குடி + வீடு.]

குடிவெறி

 குடிவெறி kuḍiveṟi, பெ.(n.)

   மது அருந்திய மயக்கம்;  intoxication inebriety, drunkenness.

     [குடி + வெறி.]

குடிவை-த்தல்

குடிவை-த்தல் kuḍivaittal,    4 செ.கு.வி.

   1. வீட்டைக் குடிக்கூலிக்கு விடுதல்; to let a house for rent.

   2. குடியை நிலைபெறச் செய்தல்; to settle or establish a family.

     “அமரர் பதியினிலே குடிவைத்தற் குற்ற” (திருப்பு:632);.

ம. குடிவய்க்குக

     [குடி + வை.]

குடீரகம்

குடீரகம் guṭīragam, பெ.(n.)

குடீரம் பார்கக;see {}.

     “குறியுறுஞ் செபத்தர் மேவுங் குடீரகங் குலவி” (வேதாரணிய. பலபத்.21);.

     [Skt.{} → த.குடீரகம்.]

குடீரம்

குடீரம்  kuṭīram, பெ.(n.)

   1. குடிசை; hut cottage.

   2. இலை வேய்ந்த குடில் (பர்ணசாலை);; hermitage(செ.அக.);.

     [P]

 குடீரம் kuṭīram, பெ.(n.)

   1. குடிசை; hut, cottage.

     “படகுடீபாவம்” (த.நி.போ.115);.

   2. இலைக்குடில் (பர்ணசாலை);; hermitage.

     [Skt.{} → த.குடீரம்.]

குடு

 குடு kuḍu, பெ.(n.)

 toddy, fermented liquor.

     [குள் → குடு.]

குடு குடு வென் று

 குடு குடு வென் று  kuṭukuṭuveṉṟu, வி.அ.(adv)

குறுகிய எட்டு வைத்துவேகமாக உருண்டு வருவது போல; with short quick steps as if rolling down. கலியாண வீட்டில் அவர் குடுகுடுவென்று ஒடி ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்டிருந்தார்.

     [குடுகுடு+என்று.]

குடுக

 குடுக guḍuga, பெ.(n.)

   தரையைத் தோண்டப் பயன்படும் கருவி; an instrument used to dig.

     [குடு + (குடம்);குடான் → குட்டுசு → குடுக. (மண்வெட்டி போன்றது);.]

குடுகு

குடுகு  kuṭuku, பெ.(n.)

   1. தேங்காய் முதலியவற்றாலான குடுவை; coconut o other hard shell used as a vessel

   2.கரகம்(கமண்டலம்);; earthen orwooder pitcher of an ascetic.

   3. இடக்கை யென்னும் தோற்கருவி (சிலப்.3,27, உரை);; hand drum.

   4. வீணையின் உறுப்பு; belly of a lute (செ.அக.);.

     [குடு – குடுகு]

குடுகுடு

குடுகுடு1 guḍuguḍuttal,    4 செ.கு.வி. (v.i.)

   1. ஒலித்தல்; to rumble, rattle.

   2. விரைவுபடுதல்; to be in a great hurry.

ம. குடுகுடுக்குக

     [குடு + குடு.]

 குடுகுடு2 guḍuguḍu, பெ.(n.)

   மிக்க அகவை தளர்ந்த; of extreme old age, man or woman.

   2. வயிற்றி ரைச்சல்; gurgling sound or rumbling noise of the stomach (சா.அக.);.

     [குடு + குடு (நடுக்கம் குறித்த ஒலிக்குறிப்பு.]

குடுகுடுகிழம்

 குடுகுடுகிழம் kuṭukuṭukiḻm, பெ.(n.)

நடப்பதற்கே தட்டுத்தடுமாற வேண்டிய தள்ளாத நிலையில் இருக்கும் ஆள்; tottering old man or woman. ஏதத்தை (விபத்தை); வேடிக்கை பார்க்கப் பொடியனி லிருந்து குடுகுடுகிழம் வரை எல்லோரும் வந்துவிட்டார்கள்.

     [குடுகுடு+கிழம்]

குடுகுடுகிழவன்

 குடுகுடுகிழவன் guḍuguḍugiḻvaṉ, பெ.(n.)

   தளர்ந்து தடுமாறி நடக்கும் கிழவன்; tottering decrepitold man.

     [குடுகுடு + கிழவன்.]

குடுகுடுக்கை

 குடுகுடுக்கை guḍuguḍuggai, பெ.(n.)

   கொப்பரைத் தேங்காய்; ripe coconut in which the kernel rattles.

     [குடு + குடுக்கை.]

குடுகுடுத்தான்

 குடுகுடுத்தான் guḍuguḍuttāṉ, பெ.(n.)

   எப்போதும் எதிலும் விரைவாக இருப்பவன்; one who is always in a hurry.

     [குடுகுடு → குடுகுடுத்தான்.]

குடுகுடுப்பாண்டி

 குடுகுடுப்பாண்டி guḍuguḍuppāṇḍi, பெ.(n.)

   குடுகுடுப்பை அடித்துக் குறி கூறும் இரவலன்; professional beggar who goes about rattling a {kuɖukuɖuppai} and telling fortunes.

ம. குடுகுடுப்பாண்டி

     [குடுகுடுப்பை + ஆண்டி.]

குடுகுடுப்பு

 குடுகுடுப்பு guḍuguḍuppu, பெ.(n.)

   பரபரப்பு; hury, haste.

     [குடுகுடு → குடுகுடுப்பு.]

குடுகுடுப்பை

குடுகுடுப்பை1 guḍuguḍuppai, பெ.(n.)

   1. குடுகுடு என்று ஒலிக்கும் பொருள்; anything making a rattlingsound.

   2. குடுகுடுப்பாண்டி ஆட்டி யொலிக்கும் சிறிய உடுக்கை; a small tambourine.

   2. பறவை யோட்டும் மரத்தட்டை; wodden clapper for scaring birds.

   4. எப்பொழுதும் பரபரப்பாக இருப்பவன் (அவசரப்படுபவன்);; a person who is always in a hury,

   5. கஞ்சாக் குடுக்கை; shell used as a raceptacle for bhang.

   6. வறட்சி; dryness.

தலை குடுகுடுப்பை பற்றியது.

     [குடுகுடு → குடுகுடுப்பை.]

 குடுகுடுப்பை2 guḍuguḍuppai, பெ.(n.)

   1. குருக்கு; mexican poppy.

   2. அதிகச் சுறுசுறுப்புள்ளவன்; one who is over busy.

   3. ஒலிக்கும் சிறிய தோற்கருவி; a tiny musical drum.

     [குடுகுடு → குடுகுடுப்பை.]

குடுகுடுப்பைக்காரன்

குடுகுடுப்பைக்காரன் guḍuguḍuppaiggāraṉ, பெ.(n.)

குடுகுடுப்பாண்டி பார்க்க (பரத.பா.வ. 38. உரை.);;see {kսցukսցu-p-paրdi}

மறுவ, காலங்கொண்டாடி

     [குடுகுடுப்பை + காரன்.]

     [P]

குடுகுடுப்பைக்காரன்

குடுகுடெனல்

குடுகுடெனல் guḍuguḍeṉal, பெ.(n.)

   1. ஓர் ஒலிக்குறிப்பு; onom. expr. signifying gurgling, rattling sound.

   2. விரைவுக் குறிப்பு; expr. signifying great haste.

     [குடு + குடு + எனல்.]

குடுக்கம்

குடுக்கம் kuḍukkam, பெ.(n.)

   துணைத்தாளம் ஐந்தனுள் ஒன்று (பரத.தாள.3);; a secondary time beat, one of five {upa-ta’am.}

     [குள் → குடு → குடுக்கு → குடுக்கம்.]

குடுக்கி

 குடுக்கி kuḍukki, பெ.(n.)

   காற்சட்டை; drawers; pants.

     [குள் → குடு (தைத்தல்); → குடுத்தம் → குடுத்தா → குடுக்கி.]

குடுக்கு-தல்

குடுக்கு-தல் kuḍukkudal, செ.குன்றாவி.(v.t.)

   1வலையிட்டுப் பிடித்தல்; to catch, throwing net.

   2.சுருக்குக் கயிறிட்டுப்பிடித்தல்; to catch by noose.

   3.குழியில் வீழ்த்திப்பிடித்தல்; to by making to fall in a pit.

   4.குகை வாயிலை அடைத்துப்பிடித்தல்; logo; to catch by closing the cave entrance.

     [குடங்கு-குடுங்கு-குடுக்கு-தன்-குடுக்கு (வலை);]

குடுக்குக்குடுக்கெனல்

 குடுக்குக்குடுக்கெனல் kuḍukkukkuḍukkeṉal, பெ.(n.)

   ஒரொலிக்குறிப்பு (யாழ்.அக.);; onom, expr. of rattling noise.

     [குடுக்கு + குடுக்கு + எனல்.]

குடுக்கை

குடுக்கை1 kuḍukkai, பெ.(n.)

   1. தேங்காய் முதலிய வற்றாலான குடுவை; coconut or other hard shell used as a vessel.

   2. துறவியின் கைப்பாத்திரம்; earthen or wooden pitcher of an ascetic.

   3. இடக்கையென்னும் தோற்கருவி (சிலப்.3:27, உரை);; a hand drum.

   4. வீணையின் உறுப்பு; a soup belly of alute.

   ம. குடிக்க;   க. குடிகெ;   தெ. குடக, குடுக;   து.குட்கி, குட்கெ;   து. குட்க்;பட.குடகெ.

     [குடு → குடுக்கை.]

 குடுக்கை kuḍukkai, பெ.(n.)

   1. கஞ்சாக் குடுக்கை; the dried shell of a bottle gourd.

   2. வாலையில் பயன்படுத்தும் ஒரு மண் ஏனம்;   3. பிடுக்கு; scrotum.

     [குடு → குடுக்கை = துளையுள்ள பொருள்.]

வகைகள்:

   1. கரைக் குடுக்கை

   2 தீக்குடுக்கை

   3. தென்னங்குடுக்கை

   4. வில்வக் குடுக்கை

   5, விளாங் குடுக்கை

   6. கஞ்சாக் குடுக்கை

   7, புகைக் குடுக்கை

குடுக்கை தாங்கி

 குடுக்கை தாங்கி kuḍukkaitāṅgi, பெ.(n.)

   குடுக்கையை ஏந்தும் ஒரு கருவி; retort stand (சா.அக.);.

     [குடுக்கை தாங்கி.]

குடுத்தா

 குடுத்தா kuḍuttā, பெ.(n.)

குடுத்துணிபார்க்க;see {kսցuttարi}

{U. kurtā.}

     [குள் → குட்டு (தைத்தல்); குடு + துணி – குடுத்துணி → குடுத்தா (கொ.வ.);.]

குடுத்துணி

 குடுத்துணி kuḍuttuṇi, பெ.(n.)

   அரைக்கைச் சட்டை; half arm jacket, shirt without sleeves.

ம. குடுத்துணி

     [குள் → குட்டு(தைத்தல்); → குடு + துணி → குடுத்துணி;தெ. குட்டு = தைத்தல்.]

குடுப்பம்

குடுப்பம் kuḍuppam, பெ.(n.)

   நான்கு பலமுள்ள அளவு (தைலவ.தைல.59);; a dry measure of capacity -4 palams.

     [குள் → குடு → குடுப்பம்.]

குடுப்புக்கார்

 குடுப்புக்கார் kuḍuppukkār, பெ.(n.)

   கார்நெல் வகை; a kind of paddy.

     [குடுப்பு + கார்.]

குடுமான்

 குடுமான் kuḍumāṉ, பெ.(n.)

   தவசம் கொட்டி வைக்கும் சிறிய மட்பாண்டம்; small size storage earthen pot.

     [குடுவை-குடுமான்]

குடுமி

குடுமி1 kuḍumi, பெ.(n.)

   1. ஆண்மக்களது மயிர் (திவா.);; tuft of hair, especially of men.

   2. மலையுச்சி; summit or peak, of a mountain.

     “வடவரைக் குடுமி” (கம்பரா.திருவவ.8);.

   3.மாடத்தின் உச்சி; top of a building.

     “புயறொடு குடுமி… மாடத்து’ (கம்பரா.நகர.4);.

   4. தலையுச்சி; crown of the head.

     ” குடுமிக் கூந்தலிற் நறுநெய் பெய்து” (இறை.1, உரை);.

   5. உச்சிக்கொண்டை; bird’s crest.

     “குடுமிக்கூகை” (மதுரைக்.170);.

   6. நுனி; tip, end.

     “குடுமிக் கூர்ங்கல்”(அகநா.5);

   7. தலையிற் சூடும் அணிகலன் (கிரீடம்);; crown, diadem.

     “குடுமி கொண்ட மண்ணு மங்கலம்” (தொல்.பொருள்.68);.

   8. கதவின் குடுமி; projecting corners on which a door swings.

     “தேயத் திரிந்த குடுமியவே” (பெருந்தொ.603);.

   9. மேழிக்குடுமி; handle of a plough.

   10. முதுகுடுமிப் பெருவழுதி என்ற பாண்டியன்; name of a {Pandia} king.

     “குடுமிக் கோமாற் கண்டு” (புறநா.64);.

   11. முடிபு; determination, resolve.

     “அவன் கொண்ட குடுமித்து” (புறநா.32:10);.

   12. வெற்றி (பிங்.);; victory, success.

ம. குடும

     [குடு – குடுமி.]

 குடுமி2 kuḍumi, பெ.(n.)

   பாம்பாட்டி; snake charmer and dealerin antidotes for snake-bite.

     [குட → குடு → குடுமி.]

 குடுமி3 kuḍumi, பெ.(n.)

   வில்; bow.

     [கொடு → குடு + குடுமி.]

குடுமிகளை-தல்

குடுமிகளை-தல் guḍumigaḷaidal,    3 செ.கு.வி. தலைவன் நீக்குதல்; to shave, as in cause

     “குடுமி களைந்த நுதல்”(புறநா.77:2);.

   2. மயிர் சிகையைக் கூட்டி முடித்தல்; to dress and tie the {kudumi,}

குடுமி + களை-.]

குடுமிகொள்(ளு)-தல்

குடுமிகொள்(ளு)-தல் guḍumigoḷḷudal,    7 செ.குன்றாவி. (v.t.)

   வெல்லுதல்; lit, to hold check by forelock, to win, conquer

     “புத்திசேனை மன்னரைக் குடுமி கொண்டான்” (சீவக.2249

     [குடுமி + கொள்(ளு);.]

குடுமிக்கதவு

 குடுமிக்கதவு kuḍumikkadavu, பெ.(n.)

   கீலின்றிக் கீழும் மேலும் உள்ள முனைகளால் ஆடி அடைக்கவும் திறக்கவும் பெறுங் கதவு; door that turns on projecting corners instead of hinges.

     [குடுமி + கதவு.]

குடுமிக்கலியாணம்

 குடுமிக்கலியாணம் kuḍumikkaliyāṇam,    பெ.(n. குடுமி வைக்கும் திருமணச்சடங்கு; tonsure ortufproviding ceremony of Hindus.

     [குடுமி + கலியாணம்.]

குடுமிக்காரன்

 குடுமிக்காரன் kuḍumikkāraṉ, பெ.(n.)

   குடுமி மயிர் மிகுதியுள்ளவன்; one who has a luxuriant grown of hair on the head, as actors.

     [குடுமி + காரன்.]

குடுமிக்குயவன்

 குடுமிக்குயவன் kuḍumikkuyavaṉ, பெ.(n.)

   குயவர் தலைவன்; chief of potters.

     [குடுமி + குயவன்.]

குடுமிக்கூந்தல்

குடுமிக்கூந்தல் kuḍumikāndal, பெ.(n.)

   உச்சக் கூந்தல்; hair on the crown of the head.

     “குடும்க கூந்தலில் நறுநெய் பெய்து” (இறை.1,உரை.);.

     [குடுமி + கூந்தல்.]

குடுமிதட்டு-தல்

குடுமிதட்டு-தல் kuḍumidaḍḍudal,    5 செ.கு.வி. சண்டைக்கு அணியமாதல்; make onese_ _ for starting a fight.

   2. அளக்கும்போது மாக்களின் தலையிடத்துள்ள தவசத்தைத் தட்டி வழித்தல்; strike off the top in measuring grain.

     [குடுமி + தட்டு.]

குடுமிப்பருந்து

 குடுமிப்பருந்து kuḍumipparundu, பெ.(n.)

   உச்சிச் சூட்டுடைய ஒருவகைப் பருந்து (யாழ்ப்);; Ceylonese crested falcon.

     [குடுமி + பருந்து.]

குடுமியன்

 குடுமியன் kuḍumiyaṉ, பெ.(n.)

பார்க்க குடுமிப்பருந்து பார்க்க;see {kudumi-p-parundu.}

     [குடுமி → குடுமியன்.]

குடுமியை முடிந்துவிடு-தல்

குடுமியை முடிந்துவிடு-தல் kuḍumiyaimuḍinduviḍudal,    18 செ.குன்றா.வி.(v.t.)

   சண்டை மூட்டுதல்; to create a quarrel between two persons, as by tying their {kudumi} together;

 to set persons by the ear or at logger heads.

     [குடுமியை + முடிந்து + விடு.]

குடுமியைப்பிடி-த்தல்

குடுமியைப்பிடி-த்தல் kuḍumiyaippiḍittal,    4 செ.கு.வி. (v.i.)

   சண்டையிடுதல்; to quarrel, as by grappling another’s hair tuft.

     [குடுமியை + பிடி]

குடுமிவாங்கு

குடுமிவாங்கு1 kuḍumivāṅgudal,    5 செ.கு.வி. (v.i.)

   தெய்வத்திற்கு நேர்ந்து கொண்ட முடியை எடுத்தல்; to have a complete shave of the head in fulfilment of a vow.

     [குடுமி + வாங்கு.]

 குடுமிவாங்கு2 kuḍumivāṅgudal,    5 செ.கு.வி. (v.i.)

   அவமதித்தல்; to disgrace, divest one of office and power, as causing the removal of the kudumi.

     [குடுமி + வாங்கு.]

குடுமிவை-த்தல்

குடுமிவை-த்தல் kuḍumivaittal,    4 செ.கு.வி. (v.i)

   குழந்தைக்குத் தலையணி சூட்டுமுன்னர் நடத்தும் ஒருவித மயிர் நீக்கும் சடங்கு; to perform the ceremony of providing a child with a tuft of hair on the crown after tonsure.

     [குடுமி + வை.]

குடும்ப அட்டை

 குடும்ப அட்டை  kuṭumpaaṭṭai, பெ.(n.)

உணவுப் பொருள்கள், மண்ணெண்ணெய் முதலியவற்றை முறையான விலைக்குப் பெற அரசால் குடும்பத்திற்கு ஒன்று என்ற வீதத்தில் வழங்கப்படும், உறுப்பினர்களின் எண்ணிக்கை, வருமானம் முதலியவை பதிவு செய்யப்பட்ட பங்கீட்டு அட்டை ration card

     [குடும்பம்+அட்டை]

குடும்பக்கட்டுப்பாடு

 குடும்பக்கட்டுப்பாடு  kuṭumpakkaṭṭuppāṭu, பெ.(n.)

கருத்தடை, அறுவை மருத்துவம் முதலியவற்றின் மூலம் குழந்தைகளைக் குறைவாகப் பெற்றுக் கொள்ளும் குடும்பத் திட்டம்; planned family; family planning

     [குடும்பம்+கட்டுப்பாடு]

குடும்பச்சுமை

 குடும்பச்சுமை kuḍumbaccumai, பெ.(n.)

   குடும்பத்தைத் தாங்கும் பொறுப்பு; burden or resposibility of a family.

     [குடும்பம் + சுமை.]

குடும்பத்தானம்

 குடும்பத்தானம் kuḍumbattāṉam, பெ.(n.)

   ஓரைச் சக்கரத்தில் குடும்பத்தின் நிலைமையை உணர்த்துவதும் பிறப்பு ஓரைக்கு இரண்டாவதும் ஆகிய இடம்; second house from the ascendant indicating the condition of one’s family.

     [குடும்பம் + தானம்.]

குடும்பத்தியாச்சியம்

 குடும்பத்தியாச்சியம்  kuṭumpattiyācciyam, பெ.(n.)

இல்லற வாழ்வை முற்றும் துறந்து வாழ்க்கை; renunciationoffamily ties, as an ascetic (செ.அக.);.

குடும்பன்

குடும்பன்1 kuḍumbaṉ, பெ.(n.)

   1. குடும்பத் தலைவன்; head of a family

   2. இல்வாழ்வோன், குடும்பத்தான் (சமுசாரி);; house holder,

     “ஏழைக் குடும்ப னாகி” (தாயு.தேசோ.4);.

   3. பள்ளர் தலைவன் வின்.); headman of the {Palla} caste

     [குடும்பு → குடும்பம் → குடும்பன்.]

 குடும்பன்2 kuḍumbaṉ, பெ.(n.)

   ஊரில் சாகுபடியான நிலங்களை அளப்பவன்; the person who measures the extent of land under cultivation in a village.

     [குடு → குடும்பு → அன்.]

குடும்பபாரம்

குடும்பபாரம் kuḍumbapāram, பெ.(n.)

   குடும்பத்தைத் தாங்கும் பொறுப்பு; burden or responsibility of a family.

     “இவரொடு நெடுநாட் டங்கினன் குடும்பபாரத்தில்” (ஞானவா.சித்த.20);.

     [குடும்பம் + பாரம்.]

குடும்பப்பிரதிட்டை

 குடும்பப்பிரதிட்டை  kuṭumpappiratiṭṭai, பெ.(n.)

நிலையழிந்த குடும்பத்தை நிலை நிறுத்தல்; maintaining or stabilising a family by rescuing it from distress (செ.அக.);.

     [குடும்பம்+Skt, பிரதிட்டை]

குடும்பம்

குடும்பம் kuḍumbam, பெ.(n.)

   1.கணவனும் மனைவி மக்களும் சேர்ந்த கூட்டம், குடும்ப அமைப்பு; household, family including husband, wife and children.

     “குடும்பத்தைக் குற்ற மறைப்பான்” (குறள்,1029);.

   2. உறவினர்; relatives.

     “குடும்பந் தாங்குங் குடிப்பிறந்தாரினே” (கம்பரா.சேதுப.53);.

   3. குலம்; caste, family.

அவன் என் குடும்பத்தைச் சார்ந்தவன் (உ.வ.);.

   4.மனைவி; wife.

     “பாகத்தார் குடும்ப நீக்கி” சிவக.1437).

     [குடும்பு → குடும்பம்.]

{Skt. kutumba.}

குடும்பாண்டி

 குடும்பாண்டி kuḍumbāṇḍi, பெ.(n.)

   வீடுதோறும் படித்துக் கொண்டு வழிவழியாகவே (பம்பனையாகவே); பிச்சை யெடுத்து வாழ்பவன்; proessonal beggar who legs from house to house “rçrg” a bell.

     [குடும்பு + ஆண்டி.]

குடும்பி

குடும்பி kuḍumbi, பெ.(n.)

   இல்வாழ்வோன்; householder, head of a large family.

     “குடும்பியெனும் குறிப்பை மாற்றி” (ஞானவா.உற்ப.69);.

     [குடும்பு → குடும்பி.]

குடும்பினி

 குடும்பினி kuḍumbiṉi, பெ.(n.)

   மனைவி (பிங்.);;  wite.

     [குடும்பு → குடும்பினி.]

குடும்பு

குடும்பு1 kuḍumbu, பெ.(n.)

   1. பல குடும்பங்கள் சேர்ந்த கூட்டம்; assembly of families.

   2. ஊரின் உட்பிரிவு வட்டம், தொகுதி; a ward of a village or area, division.

     “இவ்வாட்டை குடும்புவாரிய பெருமக்களும்” (தெ.கல்.தொ.19,கல்.179);.

     [குழும்பு + குடும்பு.]

 குடும்பு2 kuḍumbu, பெ.(n.)

   1. பூங்கொத்து; bunch of flowers.

   2. காய்க்குலை; bunch of fruits (சா.அக.);.

     [குழும்பு + குடும்பு.]

 குடும்பு3 kuḍumbu, பெ.(n.)

   பண்டைய நகரமைப்பில் 80 சதுர கயிறு பரப்பளவு கொண்ட நிலப்பரப்பு (மயமதம்.அக.9);; an area measure of 80 square {kayifu,} inancient tour planning.

     [குடும்பு → குடும்பம் (ஒரு குடும்பம் பயிர் செய்து வாழ்வதற்குப் போதுமானதாகக் கருதப்பட்ட உழவு நிலத்தின் பரப்பளவு.]

பண்டைய அளவைகள்:

நீட்டலளவு:

கோல்(சிறு கோல், தச்சுமுழம்); = 2% அடி

   8 கோல்= 1 கயிறு (22 அடி);

பரப்பளவு:

   8 கோல் (சிறுகோல்); = 1 காணி (8 கோல் சதுரம்);

=22 x 22_484 ச.அடி

   4 காணி = 1 மாடம் (மாஷம்); –

   88 X22 = 1936 ச.அடி

   4 மாடம் = 1 பத்தி (வர்த்தனம்); – 88 X 38

= 7744 ச.அடி

   5 பத்தி = 1 பாடகம் (வாடிகை); 88 X 440

= 88,720 ச.அடி

   4. பாடகம் = 1 குடும்பு- 352 X 440

   1,54,880 ச.அடி

   90காணி = 1 ஏக்கர் (43, 560 ச.அடி);

   820 காணி = 1 குடும்பு (3.5 ஏக்கர்);

குடுவிச்சு

குடுவிச்சு kuḍuviccu, பெ.(n.)

   1. தேங்காய்; coconut.

   2. பாளைச்செடி; any plant or tree with spathe(சா.அக.);.

     [குடு + விச்சு.]

குடுவிதிப்பாளம்

 குடுவிதிப்பாளம்  kuṭuvitippāḷam, பெ.(n.)

இலுப்பை மரம்; south Indian mahua – Bassia longifolia (சா.அக.);.

குடுவை

குடுவை1 kuḍuvai, பெ.(n.)

   1. வாய்குறுகிய குண்டு ஏனம் (திவா);; vessel with a small narrow mouth.

   2. கமண்டலம்; pitcher of an ascetic.

     “குடுவை செங்கையினானை” (கந்தபு.அயனைச் சிறைநீக்.9);.

   3. கள்ளிறக்கும் சிறுகலசம்; small pot used in collecting palmyra juice or toddy.

     “குடுவையிற் றென்னங்கள்ளும்” (குற்றா.குற.118:3);.

     [குள் → குடு → குடுவை.]

 குடுவை2 kuḍuvai, பெ.(n.)

   இரண்டு அல்லது மூன்று சாக்கி பெற்றுள்ள ஓர் ஆட்டக்காரன் தான் கேள்வி கேளாமலிருந்து கேட்டவற்கு உதவிபுரிந்து விளையாடும் ஒருவகைச் சீட்டாட்டம்; a game at cards in which a player having two or more jacks is prohibited from bidding, but is given the option of assisting the bidder or remaining passive.

     [கொடு + குடுவை.]

குடுவைப்பறி

 குடுவைப்பறி kuḍuvaippaṟi, பெ.(n.)

   மருந்திடு மட்பாண்டம்; a small earthern pot used for securing medicine, for purposes of calcination (சா.அக.);.

     [குட → குடுவை + பறி.]

குடுவைப்பொறையிடு-தல்

குடுவைப்பொறையிடு-தல் kuḍuvaippoṟaiyiḍudal,    20 செ.கு.வி.(v.i.)

   குடோரியாடி குடுவை வைத்தல்; a treatment consisting in the abstraction with the aid of a cupping glass (சா.அக.);.

     [குடுவை + பொறையிடு.]

இது உடம்பினின்று அாத்தத்தை எடுக்கச் செய்ய வேண்டி செய்யும், மருத்துவமுறை.

குடூசி

 குடூசி kuṭūci, பெ.(n.)

   சீந்திற்கொடி; moon creeper (சா.அக.);.

     [குள் → குடுச்சி – குடுசி.]

குடேசி

 குடேசி  kuṭēci, பெ.(n.)

கற்றாழை; Indian aloe – Allooe officinalis (சா.அக.);.

குடேரசம்

 குடேரசம்  kuṭēracam, பெ.(n.)

வெண் துளசி, white basil (சா.அக.);.

குடை

குடை1 kuḍaidal,    2 செ.குன்றாவி. (v.t.)

   1. கிண்டுதல்; to work through, as bees in gathering honey from flowers.

     “குடைந்து வண்டுன் ணுந் துழாய் முடியானை” (திவ். திருவாய்.1.7,1);.

   2. துளைத்தல்; to scoop, hollow out, to bore with a tool;

 to perforate, to make holes, as beetles in wood.

வண்டு உத்திரத்தைக் குடைந்துவிட்டது (உவ);.

   3.கடைதல்; to churn.

     “நெய்குடை தயிரின்” (பரிபா.16:3);.

   4. குடைந்தாற்போல்; to worry, harass, trouble. அவன் என்னைக் குடைகிறான் (உ.வ.);.

   5. வேண்டாதவற்றில் தலையிடுதல்; to meddle, interfere. ஏன் இந்தச் செய்தியிற் குடைந்து கொண்டிருக்கிறாய்? (உ.வ);.

   6. துருவுதல்; to search through.

புத்தகமெல்லாம் குடைந்து பார்க்கிறான் (உ.வ.);.

   ம. குடயுக;   க. கொடபு, கொடவு;   து. குட்புனி;   கோத. கெட்வ்;   துட. க்விட்ய்;   குட. கொட, கொடக்;பட. கொடெ.

     [குள் → குழை → குடை.]

 குடை2 kuḍaidal,    2 செ.கு.வி.(v.i.)

   1. உட்புகுதல்; to work one’s way, penetrate.

     “குடைந்துல கனைத்தையும் நாடும்” (கம்பரா. உருக்காட்.23);.

   2. நீரில் மூழ்குதல்; to dive, bathe, plunge in water.

     “குடைந்து நீராடு மாதர்” (கம்பரா. நீர்வி.12);.

   3. உளைவு நோவெடுத்தல்; to pain, as the ear, the leg.

கால் குடைகிறது (உவ.);.

     [குழை → குடை → குடைதல்); (வே.க.193);.

 குடை3 kuḍai, பெ.(n.)

   1. கவிகை; umbrella, parasol, canopy.

     “குடைநிழன் மரபு” (தொல். பொருள்.91);.

   2. அரசாட்சி; government.

     “குடையுங் கோலும் பிழைத்தவோ” (சிலப்.27,77);.

   3. குடைக் கூத்து; a dance of skanda

     “குடைவீழ்த் தவர்மு னாடிய குடையும்”(சிலப்:6,53);.

   4. பாதக்குறட்டின் குமிழ் (சூடா.);,

 knob in sandals.

   5. நீர் முதலியன வுண்ணும் ஓலைப்பட்டை

{Öla} basket for eating and

 drinking from.

     “வேணீ ருண்ட குடையோ ரன்னர்”(கலித்.23);.

   6. குடைவேல்; umbrella thorn babul.

   7. உள்ளிடம் குடைவுபட்ட பொருள்; anything hollow.

   மகுட;   க., பட., து., குட. கொடெ;   தெ. கொடுகு;   துட. க்வாட்;கோத.கொட்.

{Skt. uttũta, Sinh. kute.}

     [குள் → குடு → குடை.]

 குடை3 kuḍaidal,    4 செ.குன்றாவி.(v.t.)

   அராவுதல்; to file, grate.

     “அரங்குடைந்த அயில்” (கம்பரா. கும்பகர்.22);.

     [குள் → குடு → குடை.]

குடைகல்

 குடைகல் guḍaigal, பெ.(n.)

   ஆட்டுக்கல்; grinding stone.

     [குடை + கல்.]

குடைகவிழ்-தல்

குடைகவிழ்-தல் guḍaigaviḻtal,    2 செ.கு.வி.(v.i.)

   யண்டி குடங்கவிழ்தல்; to be upset, as a cart;

 to be overturned, totip over.

     [குடை + கவிழ்.]

குடைக்கல்

குடைக்கல் kuḍaikkal, பெ.(n.)

   1. கல்லறையின் மூடுகல்(M.M.);; ortholithic stone with a wide cross slab used for covering graves.

   2. ஊறவைத்த அரிசி. பருப்புப் போன்றவற்றை அறைக்குங்கல்; grinder.

ம.குடக்கல்லு

     [குடை + கல்.]

குடைக்காம்பு

குடைக்காம்பு kuḍaikkāmbu, பெ.(n.)

   1. குடையின் கைப்பிடி; handle of an umbrella.

   2. குடை யின் நடுவில் அமைந்த நீண்ட தண்டு; the central sha. of an umbrella.

ம. குடக்கால்

     [குடை + காம்பு.]

குடைக்காளான்

 குடைக்காளான் kuḍaikkāḷāṉ, பெ.(n.)

   நாய்க் குடை; mushroom, as umbrella shaped.

     [குடை + காளான்.]

குடைக்காவலன்

குடைக்காவலன்  kuṭaikkāvalaṉ, பெ.(n.)

   1. சிற்றரத்தை; lesser galangal – Alpinia galanga.

   2. சேனைக் கிழங்கு; elephant-foot yam – Amorphophallus campanulatus (சா.அக.);.

     [குடை+காவலன்.]

குடைக்கிழங்கு

 குடைக்கிழங்கு kuḍaikkiḻṅgu, பெ.(n.)

   சிற்றரத்தை (மலை.);; lesser galangal.

     [குடை + கிழங்கு.]

குடைக்கூத்து

குடைக்கூத்து kuḍaikāttu, பெ.(n.)

   தன்னொடு பொருத அசுரர் பின்வாங்கித் தம் ஆய்தங்களைக் கீழே போட்ட காலத்துக் குடையைச் சாய்த்து அதனையே திரையாகக் கொண்டு ஆடிய முருகனாடல் (சிலப்.6,53,20);; Skanda’s dance with an umbrella, when the Asuras unable to withstand =s furious onslaught threwdown their weapons and beat a retreal one of 11 {kūttu.}

ம. குடக்கூத்து

     [குடை + கூத்து.]

குடைக்கொள்

குடைக்கொள்1 kuḍaikkoḷḷudal,    16 செ.கு.வி. (v.i.)

   மேலெழுதல்; to overflow, as milk, to come to the surface, as some cakes in frying, to be pushed up as a cloth in water.

     [குடை + கொள்ளு-.]

 குடைக்கொள்2 kuḍaikkoḷḷudal,    6 செ.கு.வி. (v.i.)

   குடஞ்சாய்தல்(யாழ்ப்.);; to capsize, to be upset, as a cart (J);.

     [குடை + கொள்.]

குடைசாய்-தல்

குடைசாய்-தல்  kuṭaicāytal,    1செ.கு.வி.(v.i.)

மாட்டு வண்டி போன்ற வண்டிகள் ஒரு பக்கமாகவோ, தலைகீழாகவோ விழுதல்; of bullock cart, vehicles overturn. காளைகள் மிரண்டதால் வண்டிக் குடை சாய்ந்து உருண்டது. சீராகப் போய்க் கொண்டிருந்த வாழ்க்கை குடை சாய்ந்து விட்டது

     [குடை+சாய்-தல்.]

குடைச்சல்

குடைச்சல் kuḍaiccal, பெ.(n.)

   ஊதையால் உண்டாகும் குடைச்சல் நோவு (தைலவ.தைல.15);; neuralgia, gnawing pain.

     [குள் → குடை → குடைதல் → குடைச்சல்.]

குடைச்சி

 குடைச்சி  kuṭaicci, பெ.(n.)

சிறுகீரை; piggreens – Amaranthus campestris (சா.அக.);.

     [குடை – குடைச்சி]

குடைச்சிணுங்கி

 குடைச்சிணுங்கி  kuṭaicciṇuṅki, பெ.(n.)

கொடிச் சிணுங்கி; a sensitive creeper of the mimosa genus (சா.அக.);.

குடைச்சூல்

குடைச்சூல் kuḍaiccūl, பெ.(n.)

   1. சிலம்பு; anklet.

     “அவ்வரிக் குடைச்சூல்” (பதிற்றுப்.68.18);.

   2. உள்ளிடம் குடைவுபடுகை; the state of being hollow.

     “குடைச்குற் சித்திரச் சிலம்பின்” (சிலப். 16:118);.

     [குடை + சூல். சிலம்பு, குடைச்சூல். உட் கருப்பம் உடைமை பற்றி இப் பெயர் பெறுவதாயிற்று. குடைச்சூல் – குடை படுதலென்டாருமுளர் என்பர் அடியார்க்கு நல்லா நற்.90:48, உரை.)]

குடைச்செலவு

குடைச்செலவு kuḍaiccelavu, பெ.(n.)

   எதிர்த்து வந்த பகையைத் தடுத்துக் காக்கச் செல்லுமுன் தன் கொற்றக் கொடையை நல்வேளையிற் புறவீடுவிடும் காஞ்சித்திணைத் துறை (பு.வெ.4:8); (Purap.);; theme of a kind sending the royal umbrella in advance in an auspicious hour, before he actually sets out to defend his territory from an advancing enemy.

     [குடை + செலவு.]

குடைச்செவி

 குடைச்செவி kuḍaiccevi, பெ.(n.)

   வெகுளி முதலிய கரணியத்தால் வளைவுபட்ட விலங்கு களின் செவி; ears pricked up and bent, forward as those of an elephant, tiger, horse insurprise or rage.

     [குடை + செவி.]

குடைச்சொருகி

 குடைச்சொருகி  kuṭaiccoruki, பெ.(n.)

செந்நாவி; red aconite (சா.அக.);.

     [குடை+சொருகி.]

குடைநாட்கோள்

குடைநாட்கோள் kuḍaināḍāḷ, பெ.(n.)

   பகை யரணைக் கொள்ள நினைந்து மேற்சென்ற வேந்தன் தன் குடையை நல்வேளையிற் புறவீடு விடும் உழிஞைத்துறை (பு.வெ.6:2);; theme of a king sending the royal umbrella in advance in an auspicious hour, before he actually sets out to capture his enemy’s fortress.

     [குடை + நாள் + கோள்)

குடைநிலை

குடைநிலை kuḍainilai, பெ.(n.)

   பகைமேற்செல்லும் அரசன் தன் குடையை நல்வேளையிற் புறவீடு விடும் வஞ்சித்திணைத் துறை (பு.வெ.3:3);; theme of a king sending the royal umbrella in advance in an auspicious hour, before he actually sets out on an expedition.

     [குடை + நிலை.]

குடைநிலைவஞ்சி

குடைநிலைவஞ்சி kuḍainilaivañji, பெ.(n.)

குடை நிலை பார்க்க;see {kugaj-nilai}

     [குடை + நிலை + வஞ்சி.]

குடைநாட்கோள் தொப்பியத்து உழிஞைத் தினையிற் கூறி இருப்ப, வெண்பாமாலையில் வஞ்சி, உழிஞை என்னும் இருதிணைக் கண்ணும் கூறப்பட்டுள்ளது. இளங்கோ வடிகள் வஞ்சியிற் குடைநிலை கூறியது பன்னிரு படத்தைத் தழுவிய தாகும் (சிலப்.25:141, உரை);.

குடைநிழற்றல்

குடைநிழற்றல் kuḍainiḻṟṟal, பெ.(n.)

   உலகைக் காத்தல்; save the world.

   2. குடைபிடித்தல் (கழ.அக.); (கழ.தமி.அக.);.

     [குடை + நிழற்றல்.]

குடைநிழல்

குடைநிழல் kuḍainiḻl, பெ.(n.)

   மன்னனது ஆட்சி; reign of a king.

     “கடனறி மன்னர் குடைநிழற் போலப்” (நற்.146:4);.

     [குடை + நிழல்.]

குடைநீழல்

குடைநீழல் kuḍainīḻl, பெ.(n.)

குடைநிழல்பார்க்க;see {kudal-nila}

     “எறித்தரு கதிர்தாங்கி யேந்திய குடைநீழல்”(கலித்.9:1);.

     [குடை + (நிழல்); நீழல்.]

குடைந்தாடு-தல்

குடைந்தாடு-தல் kuḍaindāḍudal,    5 செ.கு.வி.(v.i.)

   அமிழ்ந்து நீராடுதல்; to bathe by immersion.

     “புனல் குடைந்தாடினோ மாயின்” (சிலப்.24 பாட்டுமடை.);.

     [குடைந்து + ஆடு.]

குடைப்பனை

 குடைப்பனை kuḍaippaṉai, பெ.(n.)

   தாளிப்பனை; talipot palm.

ம. குடப்பன

     [குடை + பனை.]

குடைப்பறவை

 குடைப்பறவை  kuṭaippaṟavai, பெ.(n.)

காக்கை போன்ற உருவம் கொண்ட பறவை; the bird which look like a crow.

     [குடை+பறவை.]

இது தென் அமெரிக்காவில் அமேசான் ஆற்றங்கரையில் உள்ளது. இதன் தலைமீது வளர்ந்துள்ள கொண்டையிறகு குடை போன்று விரிக்கக்கூடியதாய் இருக்கிறது. இதன் கழுத்தில் அலைதாடி போன்று இறகுகள் அடுக்கி வைக்கப்பட்டது போல் வளர்ந்திருக்கும். பூச்சி, புழுக்களைத் தின்று உயிர் வாழ்கிறது (அபி.சிந்);.

குடைப்பாலி

 குடைப்பாலி  kuṭaippāli, பெ.(n.)

மடையன் சாம்பிராணி; false copaiba – Hardwickia pinnata (சா.அக.);.

குடைப்புல்

 குடைப்புல் kuḍaippul, பெ.(n.)

   மயிற்கொண்டை புல்; trail grass.

     [குடை + புல்.]

குடைப்பூ

குடைப்பூ kuḍaippū, பெ.(n.)

   குடையைப் போன்ற பூ; flower of fulge tragacanth tree.

     “புல்லிதழ் கோங்கின் மெல்லிதழ்க் குடைப்பூ” (நற்.48:3);.

     [குடை + பூ.]

குடைமங்கலம்

குடைமங்கலம் kuḍaimaṅgalam, பெ.(n.)

   நான்கு திக்கும் புகழ்மிக வீற்றிருந்த அரசனது குடையைப் புகழ்ந்து கூறும் பாடாண்டுறை (பு.வெ.9:34);; theme eulogizing the state umbrella of a king whose fame has spread far and wide.

     [குடை + மங்கலம்.]

குடைமரம்

 குடைமரம்  kuṭaimaram, பெ.(n.)

வேலமரம்; குடைவேல்; umbrella thorn-babool – Acacia planifrous alias A.Latronum (சா.அக.);.

குடைமல்லிகை

குடைமல்லிகை  kuṭaimallikai, பெ.(n.)

   1. செண்டு மல்லிகை; Arabian jasmine – Jasminum sambac.

   2. கூடல் மல்லிகை; shining trifoliata jasmine – Jasminum calophyllum (சா.அக.);.

     [குடை+மல்லிகை]

குடைமிளகாய்

 குடைமிளகாய் kuḍaimiḷakāy, பெ.(n.)

   காப்பினி மிளகாய்(L.);; bell-pepper.

     [குடை + மிளகு + காய்.]

குடைமுல்லை

குடைமுல்லை kuḍaimullai, பெ.(n.)

   போரில் வெற்றி கொண்ட அரசனது குடையைப் புகழ்ந்து கூறும் வாகைத்துறை (பு.வெ.8:28);; theme of eulogizingto state umbrella of a king who returned from taladen with victory.

குடை + முல்லை.]

குடைமேற்குடை

 குடைமேற்குடை kuḍaimēṟkuḍai, பெ.(n.)

   மாட்டுச்சுழிவகை; a curi mark on cattle.

     [குடை + மேல்குடை.]

குடையடி-த்தல்

குடையடி-த்தல் kuḍaiyaḍittal,    4 செ.கு.வி.(v.i.)

பார்க்க குடங்கவிழ்தல்; See {kugari-kavis}

     [குடை + அடி.]

குடையாணி

குடையாணி kuḍaiyāṇi, பெ.(n.)

   1. உருண்டை யான தலையுடைய ஆணி; pin or nail with round head.

   2. கோயிற் குடையிற் செருகும் ஆணி; large pin used to keep a temple umbrella open.

ம. குடயாணி

     [குடை + ஆணி.]

குடையின்பருவதம்

 குடையின்பருவதம்  kuṭaiyiṉparuvatam, பெ.(n.)

பித்தளை brass (சா.அக.);.

குடையிப்பி

 குடையிப்பி  kuṭaiyippi, பெ.(n.)

கடலில் பாறைகளைத் துளைக்கும் சிப்பி; a genus of marine mollusc which pierces rocks, woods etc. – Pholas (சா.அக);.

     [குடை+இப்பி]

குடையூதை

 குடையூதை kuṭaiyūtai, பெ.(n.)

குடைச்சலை உண்டாக்கும் வளி வகை neuralgic pain (சா.அக.);.

     [குடை+ஊதை]

குடையோலை

குடையோலை kuḍaiyōlai, பெ.(n.)

   எளிய மக்களின் உண் கலமான ஒலைப்பட்டை (திவா.);;{0la} basket out of which low-caste people eat and drink.

     [குடை + ஓலை.]

குடைராட்டினம்

 குடைராட்டினம்  kuṭairāṭṭiṉam, பெ.(n.)

பொருட்காட்சி, திருவிழா நடக்கும் இடங்களில் பெரிய குடை போன்ற அமைப்பின் கீழ்த்தொங்கவிடப்பட்ட பல வடிவ இருக்கைகளில் சிறுவர் ஏறிச் சுற்றி வரும் விளையாட்டுக் கருவி; meerrry-go-round.

     [குடை+ராட்டினம்.]

குடைவண்டு

 குடைவண்டு kuḍaivaṇḍu, பெ.(n.)

   துளைக்கும் வண்டு வகை; perforating bettle, borer.

     [குடை + வண்டு.]

குடைவாய்வு

 குடைவாய்வு  kuṭaivāyvu, பெ.(n.)

குடையூதை பார்க்க; see Kudal-y-sidas (சா.அக.);.

குடைவிருத்தி

 குடைவிருத்தி  kuṭaivirutti, பெ.(n.)

திருவிழாக் காலங்களில் இறைவனுக்குக் குடைபிடிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட மானியம்; grant of land for holding the ornamental umbrella over the village deity during festivals (செ.அக.);.

     [குடை+Skt. விருத்தி]

 குடைவிருத்தி kuḍaivirutti, பெ.(n.)

   திருவிழாக் காலங்களில் தெய்வங்கட்குக் குடை பிடிப்பதற்காக ஏற்பட்ட முற்றூட்டு; grant of land for holding the ornamental umbrella over the village deity during festivals.

ம. குடவிருத்தி

     [குடை + விருத்தி.]

குடைவு

குடைவு kuḍaivu, பெ.(n.)

   1. பொந்து; hollow.

   2. குகை; cavity.

     [குள் → குடை → குடைவு.]

குடைவேல்

குடைவேல் kuḍaivēl, பெ.(n.)

   1. குடைவேல்மரம் (திவா.);; umbrellathorn babul.

   2. நீருடை மரம்; buf—thorn cutch.

     [குடை + வேல்.]

குடோச்சம்

 குடோச்சம்  kuṭōccam, பெ.(n.)

கஞ்சாங்கோரை; white-basil – Ocimum album.

குடோரமுட்சி

 குடோரமுட்சி  kuṭōramuṭci, பெ.(n.)

வெள்ளைக் கழற்கொடி; a white variety of kalar-kodi (சா.அக.);.

குடோரம்

 குடோரம் kuṭōram, பெ.(n.)

   கடூரம் (யாழ்.அக.);; harshness, cruelty.

     [கடு → கடூரம் → குடோரம்(கொ.வ.);.]

குடோரி

குடோரி kuṭōri, பெ.(n.)

   1. கீறுகை; slitting scratching.

   2. பாம்புக்கடி முதலியவற்றால் நின்றுபோன உயிர்ப்பு மீளுதற்கு மண்டையைக் கீறி மருந்து இடுகை; scarifying the skin of the skull and inserting mercurial or other medicinal pill to revive suspended animation.

   3. வங்கமணல்; lead ore.

   4. வெங்காரம்; borax.

   5. வெள்ளைச் செய்நஞ்சு; a prepared arsenic.

     [கீள் → கீனுறு → குடுரி → குடோரி.]

குடோரிமண்

 குடோரிமண்  kuṭōrimaṇ, பெ.(n.)

தூய்மையான மண்; pure alkaline earth (சா.அக.);.

     [குடோரி+மண்]

குடோரியாடு-தல்

 குடோரியாடு-தல் kuṭōriyāṭudal, செ.கு.வி.(v.i.)

குடோரிவைத்தல் பார்க்க;see {kuddr.a.}

     [குடோரி + ஆடு.]

குடோரிவை-த்தல்

குடோரிவை-த்தல் kuṭōrivaittal,    4 செ.கு.வி.(v.i.)

   மண்டையைக் கீறி மருந்து; to perform the [kugor,} operation.

     [குடோரி + வை-.]

குட்கரம்

 குட்கரம் kuṭkaram, பெ.(n.)

வேலிப்பருத்தி,

 hedge-cotton – Daemia extensa (சா.அக.);.

     [குட்கரம்+வெண்மை]

     [P]

குட்சி

குட்சி kuṭci, பெ.(n.)

   வயிறு; stomach.

     [குள் → குட்டம் (குழி); → குட்சி.]

 குட்சி2 kuṭci, பெ.(n.)

   உருட்டியாடும் கருவியில் விழும் ஒற்றைத் தாயம்; the number marked one that is turned upwards in a game played with cowries, etc. (கொ.வ.);.

     [குள் → குட்சி(ஒற்றைக் குழி, ஒன்று.]

குட்சுரகாண்டம்

 குட்சுரகாண்டம்  kuṭcurakāṇṭam, பெ..(n.)

வெள்ளைக் கரும்பு; white-coloured sugarcane (சா.அக.);.

குட்டகண்டு

 குட்டகண்டு  kuṭṭakaṇṭu, பெ.(n.)

பேயத்தி, devil fig – Ficus hispida (சா.அக.);.

குட்டகந்தம்

 குட்டகந்தம்  kuṭṭakantam, பெ..(n.)

கொம்புப்பாகல்; palgal bitter gourd – Trichosanthes dioeca (சா.அக.);.

குட்டகந்தி

 குட்டகந்தி  kuṭṭakanti, பெ. (n.)

வெள்ளி லோத்திரப் பட்டை; the fragrant bark of woodapple tree-Feronia elephantum; Lodhra bark (சா.அக.);.

     [குட்டம்+கந்தி]

குட்டக்கனிபலா

குட்டக்கனிபலா  kuṭṭakkaṉipalā, பெ.(n.)

   1. கருப்புத் தக்காளிச்செடி; a black tomatio plant.

   2. மிளகுத் தக்காளி; mad apple – Solanum melongena (சா.அக.);.

     [குட்டம்+கனி+பலா]

குட்டக்கரப்பான்

 குட்டக்கரப்பான் kuṭṭakkarappāṉ, பெ.(n.)

   படர்நோய் வகை; white scabby scurf, a kind of eruption spreading over the whole surface of the body.

     [குட்டம் + கரப்பான்.]

குட்டக்கினம்

குட்டக்கினம்  kuṭṭakkiṉam, பெ.(n.)

   1. குட்டத்தைத் தீர்க்கும் பூடு; plant curing leprosy.

   2. குட்டத்தைத் தீர்க்கும் மருந்து a remedy for leprosy.

   3. பேயத்தி; wild fig – Ficus oppositifolia.

   4. காட்டுச்சீரகம்; wild cumin – Vernonia anthelmintica (சா.அக.);.

குட்டக்கினி

குட்டக்கினி  kuṭṭakkiṉi, பெ.(n.)

   1. கருங்காலி, black sundra tree – Acacia catechu typica alias Diospyros melanoxylon.

   2.தான்றிக்காய்; belleric myrobalan (சா.அக.);.

குட்டக்குறடு

 குட்டக்குறடு kuḍḍakkuṟaḍu, பெ.(n.)

   சிறுகுறடு (வின்.);; a kind of brazier’s pincers.

     [குட்டை + குறடு – குட்டைக்குறடு → குட்டக்குறடு.]

குட்டங்கொள்ளு-தல்

குட்டங்கொள்ளு-தல்  kuṭṭaṅkoḷḷutal,    16 செ.கு.வி.(v.i.)

குட்ட நோயால் தாக்கப்படல்; to be attacked with leprosy (சா.அக.);.

     [குட்டம்+கொள்ளு-தல்.]

குட்டசூதனம்

குட்டசூதனம்  kuṭṭacūtaṉam, பெ.(n.)

   1. குட்டம் தெளிதல்; subduing leprosy.

   2. கொன்றை மரம்; cassia tree – Cathartocarpus fistula (சா.அக.);.

குட்டணம்

 குட்டணம்  kuṭṭaṇam, பெ.(n.)

கருஞ்சீரகம், black cumin – Nigella sativa (சா.அக.);.

குட்டத்தக்காளி

 குட்டத்தக்காளி  kuṭṭattakkāḷi, பெ.(n)

சிறு தக்காளி; black-berried solanum – Solanum nigrum (சா.அக.);.

     [குட்டம்+தக்காளி]

குட்டநாசனம்

 குட்டநாசனம்  kuṭṭanācaṉam, பெ.(n.)

கடுகு வகை (பிங்.);; white mustard.

குட்டநாசனி

குட்டநாசனி  kuṭṭanācaṉi, பெ.(n.)

   1. கருப்பு அகரம் என்னும் மருந்துவகை; a kind of drug.

   2. வெள்ளைக் கிலுகிலுப்பை white flowered Crotolaria – Cratolaria verrucosa.

   3. தகரை; ring worm plantCassia tora.

   4. காட்டுச் சீரகம்; wild cumin – Vernonia authlmintica.

   5. குட்டத்தை அழிக்கும் மருந்து: any medicine curing leprosy (சா.அக.);.

     [குட்டம்+நாசனி]

குட்டநாடன்

 குட்டநாடன் kuṭṭanāṭaṉ, பெ.(n.)

   குட்ட நாட்டைச் சேர்ந்தவன்; one who belonges to {kuttanādu.}

ம.குட்டநாடன்

     [குட்டம் + நாடு + அன்.]

குட்டநாடு

குட்டநாடு kuṭṭanāṭu, பெ.(n.)

   திருவாங்கூர் நாட்டைச் சேர்ந்ததும், கோட்டயம், கொல்லமென்று வழங்குகின்ற நகரங்களைக் கொண்டதும் ஏரிகளை மிகுதியாக உடையதுமாகிய ஒரு கொடுந்தமிழ் நாடு; the region full of lakes, where a vulgar dialect of Tamil was spoken, corresponding to area ofthe modern towns of Kottayam and Quilon in Travancore one of 12 {Koduntamil Nadu.}

     “குட்டநாட்டுத் திருப்புவியூர்”(திவ்திருவாய். 8.9:1);.

ம. குட்டநாடு

     [குண்டு → குட்டு → குட்டம் (வே.க.194);.]

குட்டநோய்கடியகாரா

 குட்டநோய்கடியகாரா  kuṭṭanōykaṭiyakārā, பெ. (n.)

குட்ட நோயைத் தீர்க்கும் கருப்பரிசி; a kind of black rice said to cure leprosy (சா.அக.);.

     [குட்டநோய்+கடியகாரா.]

குட்டன்

குட்டன்1 kuṭṭaṉ, பெ.(n.)

   1 சிறுபிள்ளை, சிறுவன்; laddie, lassie as a term of endearment.

     “என் சிறுக்குட்டன்”(திவ். வெரியாழ். 14:2);.

     “குயிலெனப் பேசு மெங்குட்டனெங்குற்றது”(திருக்கோ.224);.

   2. ஆட்டுக்குட்டி (திவா.);; kid or lamb

   3. விலங்கின் குட்டி; young of an animal.

     “நாயின்வெங்கட் சிறு குட்டனை” (கம்பரா. நகர்நீ.117);.

   ம. குட்டன்;   க. குட்ட;   தெ. கிட்ட;   து. கிட்டெலெ;   குட. குட்டி;   துட. குட்;   கூ. குட;   குரு;   கிட்ரு;பிரா. குட்டூ.

     [குள் → குட்டு → குட்டன்.]

குட்டப்பாண்டுநாசனி

 குட்டப்பாண்டுநாசனி  kuṭṭappāṇṭunācaṉi, பெ.(n.)

கருமருது இரும்பிலி; black satinwood – Maba buxifolia (சா.அக.);.

     [குட்டை+பாண்டு+நாசனி]

குட்டப்புழுதியாக்கு-தல்

குட்டப்புழுதியாக்கு-தல் kuṭṭappuḻudiyākkudal,    5 செ.கு.வி. (v.i.)

   கும்மாளமடித்தல் (நெல்லை);; to be tumultuously playful.

     [குட்பம் → புழுதி + ஆக்கு.]

குட்டமிடு-தல்

குட்டமிடு-தல்  kuṭṭamiṭutal,    20 செ.கு.வி. (vi.)

பள்ளந் தோண்டுதல்; to dig out. “குட்டமிட்டிடந்தான்காணும்”(ஈடு 10.64);.

     [குட்டம்+இடு-தல்]

குட்டம்

குட்டம்1 kuṭṭam, பெ.(n.)

   1.ஆழம்; depth, profundity.

     “இருமூந்நீர்க் குட்டமும்” (புறநா. 20:1);.

   2. மாடு; tank, pond.

     “நெடுநீர்க் குட்டத்துத் துடுமென்ப் பாய்ந்து” (புறநா. 243:9);.

   3. குட்டநாடு பார்க்க;See. {kuttanadய}

     “தென்பாண்டி குட்டம்” (நன்.272, மயிலை.);.

   4. பரப்புள்ள இடம்; expanse, region.

     “பெருங்கடற் குட்டத்து”(மதுரைக்.540);.

     [குள் → குட்டு → குட்டம்.]

 குட்டம்2 kuṭṭam, பெ.(n.)

   1திரள்; multitude, collection, heap.

   2. அவை; assembly.

     “படைக்கலம் பிடித்துக் குட்டத்துக்குச் செல்லப்பெறார் (T.A.S.I.9);.

     [கூட்டம் → குட்டம் .]

 குட்டம்3 kuṭṭam, பெ.(n.)

   1.சிறுமை; smallness, littleness.

   2. குரங்குக்குட்டி; the young of a monkey.

     “தங்குட்டங்களை… மந்திகள் கண் வளர்த்தும்”(திவ். பெரியாழ். 3.5:7);.

   3. குறைந்த சீருள்ள அடி (தொல். பொருள்.427);; verse-line with less than the required number of cir.

   4. கலிப்பாவின் உறுப்புள் ஒன்றாகிய தரவு; a memberina kali verse.

     [குள் → குட்டு → குட்டம்(வே.க.148);.]

 குட்டம்4 kuṭṭam, பெ.(n.)

   1.குட்டநோய்; leprosy.

     “குட்டநோய்” (சீவக.253);.

   2.கோட்டம் என்னும் மருந்துவேர் (மலை.);; Arabian costum.

     [குட்டை + குட்டம்.]

குட்டம்போக்கி

குட்டம்போக்கி  kuṭṭampōkki, பெ.(n.)

   1 வெண்கடுகு; white mustard,

   2 குட்டத்தைப்போக்கும் மருந்து; that which cures leprosy.

   3 பாற்சோற்றி; caoutchouc plant – Euphorbia cattimandu.

   4. கரபுன்னை; soora poon – Ochrocarpus longifolius(சா.அக.);

குட்டவிசர்த்தி

 குட்டவிசர்த்தி  kuṭṭavicartti, பெ..(n.)

வெட்டிவேர்; khus khus root-Andropogon aromaticus (சா.அக.);.

குட்டவிரணம்போக்கி

 குட்டவிரணம்போக்கி  kuṭṭaviraṇampōkki, பெ.(n.)

செங்கோட்டை; marking nut – Semecarpus anacardium (சா.அக.);.

குட்டவ்வை

 குட்டவ்வை kuṭṭavvai, பெ.(n.)

   ஒரு பெண் சிவப்பற்றாளர்; a Siva Diety.

குட்டான்

குட்டான்2 kuṭṭāṉ, பெ.(n.)

   1.குட்டை விரல்; a little finger.

   2. பெருவிரல் அல்லது கட்டைவிரல்; toe.

     [குள் → குட்டு → குட்டன்.]

 குட்டான்3 kuṭṭāṉ, பெ. (n.)

   1. சிறுபடப்பு; small basket.

   2. சிறியஓலைப்பெட்டி; little ola case.

     [குட்டம் → குட்டான் (வே.க.152.);.]

குட்டான்கட்டு-தல்

குட்டான்கட்டு-தல் kuṭṭāṉkaṭṭudal, பெ.(n.)

   5 செ.கு.வி. (v.i.);

   பறவை முதலியன கொத்தாத படியும். அணில் கடியாதபடியும் காய்கள்ன மீது மூடிக்கட்டுதல்(வின்.);; to put a cover over fruits for protection from birds and squirrile

குட்டாம்

 குட்டாம்  kuṭṭām, பெ.(n.)

பெருங்காயம்; asafoetida (சா.அக.);.

குட்டாரி

 குட்டாரி  kuṭṭāri, பெ.(n.)

கந்தகம், sulphur (சா.அக.);.

     [குட்டு-குட்டாரி]

குட்டி

குட்டி1 kuṭṭi, பெ.(n.)

   1.நாய், பன்றி, புலி, நரி ஆகியவற்றின் குட்டி (தொல்.பொருள்.மரபு. 20);; young of dog, pig, tiger, etc.

   2. ஆட்டுக்குட்டி; lamb.

   3. சிறுமி (உ.வ.);; small girl.

   4.கடைசிப்பிள்ளை; child, especially the youngest, in endearment (w.);.

   5. விலங்கின் பிள்ளைப் பொது; yound of animals.

   6. கரு அல்லது சினை; embryo. குட்டிபடுதல் = சினைப்படுதல்.

   7. ஒரறி வுயிரிப்பெயரின் இளமைப் பொருள் முன்னொட்டு; prefix of single sense being.

     “குட்டிப் பிடவம், குட்டிவிளா” (பிள்ளை விளாத்தி);.

   8. சிற்றப்பன் சிற்றன்னையர் பெயர் முன்னொட்டு; prefix of uncle and aunt.

குட்டியப்பன், குட்டியாத்தாள்.

   9. சிறுமைப் பெயர்; smallness.

குட்டித்தொல் காப்பியம்.

   ம. குட்டி;க.குட்டி.

 E. kid, a young goat, kid, kiddy(s); Child, ME. kid, kidde, Dan.,Swed., Norw., kid, ON. kithi;

 OHG. kizzi, chizzi. МнG., G.К. kitze

     [குட்டு → குட்டி.]

 குட்டி2 kuṭṭi, பெ.(n.)

   கோட்டம்; Arabian costum.

     “பருங்காயங்குட்டி”(தைலவ. தைல.77);.

     [குட்டு → குட்டி.]

 குட்டி3 kuṭṭi, பெ.(n.)

   1.பல்லாங்குழி முதலிய விளையாட்டில் அதிகமாகக் கூடுங்காய்(வின்.);; additional coin or seed which a player gets in excess of another in games like {passàrikus,} etc.,

   2. பயன்; additional sum claimed or allowed in respect of a debt, as a share of the net profit.

   3. காக்கைப் பலா; esculent-leaved false kamela.

   4. கடிச்சை; downy-leaved false kamela.

     [குள் → குட்டி.]

குட்டி நரை

 குட்டி நரை  kuṭṭinarai, பெ.(n.)

இளமையில் ஏற்படும் நரை; premature gray hair(சா.அக.);.

குட்டிகம்

 குட்டிகம்  kuṭṭikam, பெ.(n.)

ஒரிலைத் தாமரை, single leaf lotus.

குட்டிகாதக்காளி

 குட்டிகாதக்காளி  kuṭṭikātakkāḷi, பெ.(n.)

குட்டித்தக்காளி பார்க்க; see kuft-takkal (சாஅக.);.

     [குட்டிக்காய் +தக்காளி]

குட்டிக்கரணம்

குட்டிக்கரணம் kuṭṭikkaraṇam, பெ.(n.)

   1.தலைகீழாக மறிந்துவிழும் ஒரு வித்தை; performing a somersault on the ground, as minor acrobatics.

   2. பெருமுயற்சி; making strenuous efforts, using all possible means, taking the utmost pains.

     “குட்டிக்கரணம் போட்டென்னாலானமட்டும்” (இரமநா.உயுத். 77);.

ம. குட்டிக்கரணம்

     [குட்டி + கரணம்.]

குட்டிக்கலகம்

குட்டிக்கலகம் guṭṭiggalagam, பெ.(n.)

   1.சிறு கலகம்; squabble, domestic quarrel, as rising out of trifes.

   2. கோட் சொல்லால் விளையும் கலகம்; quarrel rising from backbitbing, talebearing.

     [குட்டி + கலகம்.]

குட்டிக்கழுதை

 குட்டிக்கழுதை  kuṭṭikkaḻutai, பெ.(n.)

கழுதைக் குட்டி; the young of an ass (சா.அக.);.

     [குட்டி+கழுதை]

குட்டிக்கானாங்கெளிறு

 குட்டிக்கானாங்கெளிறு  kuṭṭikkāṉāṅkeḷiṟu, பெ.(n.)

கெளிற்று மீன் குஞ்சு, the young of a cat-fish (சா.அக.);.

     [குட்டி+கானாம்+களிறு]

குட்டிக்கிழங்கு

 குட்டிக்கிழங்கு kuṭṭikkiḻṅgu, பெ.(n.)

   ஒரு கிழங்கின் பக்கத்தில் அதனையொட்டி உண்டாகும் கிழங்கு; small esculent root growing by the side of a large one.

     [குட்டி + கிழங்கு.]

குட்டிக்கும்பிடு-தல்

குட்டிக்கும்பிடு-தல் kuḍḍikkumbiḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   தலையிற் குட்டிக் கொண்டு பிள்ளையாரை வணங்குதல்; to cuff the head three times, and raise the hands in worship of {(Ganeśa); pilliyar.}

     [குட்டு → குட்டி + கும்பிடு.]

குட்டிக்கொக்கான்

 குட்டிக்கொக்கான் kuṭṭikkokkāṉ, பெ.(n.)

   சிறு கற்களைக் கொண்டு ஆடும் விளையாட்டு வகை; a kind of play with pebbles.

     [குட்டி + கொக்கான்.]

குட்டிச்சாத்தன்

 குட்டிச்சாத்தன் kuṭṭiccāttaṉ, பெ.(n.)

   குறளித் தேவதை; elf, imp., little goblin invoked in performing jugglery, etc.

   ம. குட்டிச்சாத்தான்;க. குட் சாத.

     [குட்டி + சாத்தன்.]

குட்டிச்சாத்தி

 குட்டிச்சாத்தி  kuṭṭiccātti, பெ.(.n)

ஒரு பெண் தெய்வம்; a female spirt(சா.அக.);.

குட்டிச்சாத்திக்காரன்

 குட்டிச்சாத்திக்காரன் kuṭṭiccāttikkāraṉ, பெ.(n.)

   பேயோட்டும் மந்திரக்காரன்(வின்.);; enchanter, sorcerer, one who is supposed to have power overfamiliar spirits.

     [குட்டி + சாத்திக்காரன்.]

குட்டிச்சுவரா(கு)-தல்

குட்டிச்சுவரா(கு)-தல் kuṭṭiccuvarākudal,    6 செ.கு.வி. (v.i.)

   பழுதாதல், அழிதல்; to run, damage.

ம.குட்டிச்சோராவுக

     [குட்டிக்கவர் + ஆகு.]

குட்டிச்சுவர்

குட்டிச்சுவர் kuṭṭiccuvar, பெ.(n.)

   1.இடிந்த சிறுகவர்; ruined wall.

     “குட்டிச் சுவரெனிலோமாடு முரைஞ்சு மறைவாகும்” (பெருந்.தொ.288);.

   2. பாழ் மனை; ruins of a building.

அந்தக் குட்டிச்சுவரிற் கழுதை மேய்கிறது (உ.வ.);.

   3. பழுது; ruin, damage:

காரியம் குட்டிச்சுவராயிற்று (உ.வ.);.

ம. குட்டிச்சுவரு

     [குட்டி + சுவர்.]

குட்டித்தக்காளி

 குட்டித்தக்காளி kuṭṭittakkāḷi, பெ.(n.)

   சிறு தக்காளி (வின்.);; black night shade.

     [குட்டி + தக்காளி.]

குட்டித்தாய்ச்சி

 குட்டித்தாய்ச்சி kuṭṭittāycci, பெ.(n.)

   சினையான விலங்கு; pregnant animal.

     [குட்டி + தாய்ச்சி. ஒ.நோ.பிள்ளைத்தாய்ச்சி.]

குட்டித்திருவாசகம்

 குட்டித்திருவாசகம் guṭṭittiruvācagam, பெ.(n.)

   கருவைச் சிவபிரான் மேல் அதிவீரராமபாண்டியர் பாடியனவாக வழங்கும் மூன்று அந்தாதிகள்;{antati} on {swa} at Karuvai, three in number ascribed to {Ativira-rāma-pāndiyan} and considered as {Tiruvasagamin} miniature.

     [குட்டி + திருவாசகம்.]

குட்டித்தேவி

 குட்டித்தேவி  kuṭṭittēvi, பெ.(n.)

விளாமரம், wood apple tree(சா.அக.);. [குட்டி+தேவி]

குட்டித்தொல்காப்பியம்

 குட்டித்தொல்காப்பியம் kuṭṭittolkāppiyam, பெ.(n.)

   தொல்காப்பியத்தைத் தழுவி ஐநதிலக் கணங்களையும் கொண்டதாக வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம்; the {Isakkanavilakkam,} by {Vattiya nata-fésikar,} as a compendium of the great {Tolkāppiyam.}

     [குட்டி + தொல்காப்பியம்.]

தொல்காப்பிய மரபும் இலக்கணவிளக்க மரபும் வேறுபடுதலின் இவ்வாறு பெயரிடல் அத்துணைப் பொருத்த முடையதன்று.

குட்டிநடிகை

குட்டிநடிகை guḍḍinaḍigai, பெ.(n.)

சிறுபருவத்தில் நாடகம், திரைப்படம் போன்றனவற்றில் நடிக்கும்

   குட்டிப்பயல் 33 QLstor; a small girl who acts on the stage, in films etc.

குட்டினம்

 குட்டினம் kuṭṭiṉam, பெ.(n.)

கருஞ்சீாகம் (மலை.);

 black cumin.

     [குட்டு + குட்டினம்.]

குட்டினி

குட்டினி kuṭṭiṉi, பெ.(n.)

   1.கற்பிழந்தவள் (சூடா.);; unchaste woman.

   2. கூட்டிக் கொடுப்பவள்(வின்);; bawd, procaress.

ம. குட்டினி

{Skt. kuttin}

     [கூட்டினி → குட்டினி.]

குட்டிபஞ்சரம்

 குட்டிபஞ்சரம் kuṭṭibañjaram, பெ.(n.)

   கோயில் விமானத்தில் அமையும் கொடிய மூக்குடைய வடிவம் (மது.);; a figure on a temple gopuram.

 Skt. apanäsi.

     [குட்டி + பஞ்சரம்.]

குட்டிபடல்

 குட்டிபடல் kuḍḍibaḍal, பெ.(n.)

   சினைப்படுகை; becoming pregnant, as a sheep, goat, dog.

     [குட்டி + (படுதல்); → படல்.]

 குட்டிபடல் kuḍḍibaḍal, பெ.(n.)

   விளையாட்டில் தவறியடிக்கை; striking a wrong coin or seed in games.

தெ. குட்டி

குட்டிபோடு

குட்டிபோடு1 kuṭṭipōṭudal,    19 செ.குன்றாவி. (v.t.)

   விலங்கு குட்டியீனுதல்; to bring forth young, as beasts.

ம.குட்டிப்பெடுக (பெற்றறெடுத்தல்);

     [குட்டி + போடு.]

 குட்டிபோடு2 kuṭṭipōṭudal,    19 செ.கு.வி. (v.i.)

   விளையாட்டில் அதிகப் பந்தயம் வைத்து விளையாடுதல்; to put down a forfeited seed or coin in gambling as stakes to be played for.

     [குட்டி + போடு.]

குட்டிப்பனை

 குட்டிப்பனை  kuṭṭippaṉai, பெ. (n.)

பனையைச் சுற்றிலும் முளைக்கும் சிறு பனை, small stunted palmyra young ones growing at the bottom of a main tree

     [குட்டி+பனை.]

குட்டிப்பயல்

 குட்டிப்பயல்  kuttppaya. பெ.(n.)

குட்டிப்பையல் பார்க்க;See. {Kuffippaya/}

     [குட்டி + (பையல்); → பயல்.]

குட்டிப்பலா

 குட்டிப்பலா kuṭṭippalā, பெ.(n.)

   பிராய்மரம்; paper -tree.

     [குட்டி + பலா.]

குட்டிப்பல்

குட்டிப்பல் kuṭṭippal, பெ.(n.)

   1. ஒட்டிமுளைக்கும் சிறுபல்; extra or dwarf tooth.

   2. பாற்பல், அரும்புப்பல்; milk-tooth.

ம.குட்டிப்பல்லு

     [குட்டி + பல்.]

குட்டிப்பாடம்

 குட்டிப்பாடம் kuṭṭippāṭam, பெ.(n.)

   பொருளு ணராது பாராமல் ஒப்பிக்கும்படி பண்ணும் நெட்டுரு. (மணப்பாடம்);; blind recital, learning by rote.

தெ. குட்டிபாதமு

     [த குருடு → தெ. குட்டு. குட்டு → குட்டி + பாடம்.]

குட்டிப்பாடித்தி

 குட்டிப்பாடித்தி  kuṭṭippāṭitti, பெ.(n.)

சிற்றரத்தை; lesser galangal – Alpinia galanga (சா.அக.);.

     [குட்டி+பாடித்தி]

குட்டிப்பிடவம்

குட்டிப்பிடவம் kuḍḍippiḍavam, பெ.(n.)

   ஒருவகை மரம் (சிலப்.13:158 உரை.);; bedaly emetic-nut.

     [குட்டி + பிடவம்.]

குட்டிப்பிலா

குட்டிப்பிலா  kuṭṭippilā, பெ.(n.)

   1. குட்டிப் பலா; small jack tree – Artocarpus integrifolius.

   2. பேய் முன்னை; charcoal tree – Sponia wight.

   3. பிராய் மரம்; paper tree – Streblus asper.

   4. குற்றிப் பலா; stunted jack – Epicarpurus orientalis (சா.அக.);.

     [குட்டி+பலா]

குட்டிப்பை

 குட்டிப்பை  kuṭṭippai, பெ.(n.)

விலங்கின் வயிற்றில் குட்டியின் மேல் மூடிக் கொண்டு இருக்கும் பிண்டப் பை; foetal membranes in animals filled with liquor amni which dilates the mouth of the womb (சா.அக.);.

     [குட்டி+பை]

குட்டிப்பையல்

 குட்டிப்பையல் kuṭṭippaiyal, பெ.(n.)

   சிறுவன்; small boy.

     [குட்டி + (பைதல்); பையல்.]

குட்டிமணியம்

 குட்டிமணியம் kuṭṭimaṇiyam, பெ.(n.)

   உதவி மணியக்காரன்; assistant to {Maniyakaran,}

குட்டிமம்

குட்டிமம் kuṭṭimam, பெ.(n.)

   கற்பாவின தரை; paved floor, pavement, ground paved with mosaic ground smoothed and plastered.

     “கோயிற் குட்டிய வன்றலத்து” (கம்பரா. கிட்கிந்.109);.

ம. குட்டிமம்

     [குட்டு → குட்டிமம்.குட்டுதல் = இடித்துச் செறித்து வலிமைப்படுத்துதல்.]

குட்டிமரம்

 குட்டிமரம்  kuṭṭimaram, பெ.(n.)

சணல், Indian hemp-Crotolaria juncea(சா.அக.);.

குட்டியச்சம்

 குட்டியச்சம்  kuṭṭiyaccam, பெ.(n.)

இளம் அகத்திச் செடி; young sesbane plant – Sesbania grandiflora (சா.அக.);.

குட்டியடி-த்தல்

குட்டியடி-த்தல் kuḍḍiyaḍittal,    4 செ.கு.வி.(v.i.)

குட்டிவை பார்க்க;See. {kutiya}

தெ.குட்டியடித்தல்.

     [குட்டி+ அடி.]

குட்டியப்பன்

 குட்டியப்பன் kuṭṭiyappaṉ, பெ.(n.)

   சிறிய தகப்பன்; father’s younger brother.

ம. குட்டியச்சன்

     [குட்டி + அப்பன்.]

குட்டியழி-த்தல்

குட்டியழி-த்தல் kuṭṭiyaḻittal,    4 செ.கு.வி.(v.i.)

   கள்ளக்கருவை மருந்திட்டுக் கரைத்தல்; to cause miscarriage, abortion of a child conceived in adulterу.

     [குட்டி + அழி.]

குட்டியழிவு

 குட்டியழிவு  kuṭṭiyaḻivu, பெ.(n.)

கருவிற்கு ஏற்படும் கேடு; abortion (சா.அக.);.

     [குட்டி+அழிவு]

குட்டியாண்டவன்

 குட்டியாண்டவன் kuṭṭiyāṇṭavaṉ, பெ.(n.)

   பட்டினவர் வணங்கும் தெய்வம்; sea-god of Pattinavarcaste, represented by a small conical heap of wet sand and mud.

     [குட்டி + ஆண்டவன்.]

குட்டியாத்தாள்

 குட்டியாத்தாள் kuṭṭiyāttāḷ, பெ.(n.)

   சிறியதாய் (பர.);; mother’s younger sister.

     [குட்டி + ஆத்தாள்.]

குட்டியிடு-தல்

குட்டியிடு-தல் kuḍḍiyiḍudal,    20 செ.கு.வி.(v.i.)

   விலங்கு முதலியன கருவுயிர்த்தல் (கொ.வ.);; to bring forth young, especially said of animals.

ம.குட்டியிடு

     [குட்டி + இடு-.]

குட்டியிடுக்கி

குட்டியிடுக்கி kuḍḍiyiḍukki, பெ.(n.)

   1.சிற்றரத்தை வகை (மலை.);; lesser galangal.

   2. கோட்டம் (மலை.);; arabian costum.

   3. பயிருடன் வளரும் பல்வகை(வின்.);; a kind of grass or weed in rice fields.

     [குட்டி + இடுக்கி.]

குட்டிவாசுகி

 குட்டிவாசுகி  kuṭṭivācuki, பெ.(n.) சப்பாத்துக் கள்ளி; prickly pear – Opuntia топоcantha (சா.அக.).

குட்டிவிரல்

குட்டிவிரல் kuṭṭiviral, பெ.(n.)

   1. கால்கைகளில் ஐந்துக்கு அதிகமாவுள்ள விரல்; sixth or extra finger or toe as smaller than the rest.

   2. சுண்டு விரல்; a little finger or toe.

ம.குட்டிவிரல்

     [குட்டி + விரல்.]

குட்டிவிலாங்கு

 குட்டிவிலாங்கு  kuṭṭivilāṅku, பெ. (n.)

கடலில் பொரிக்கப்பட்டு முட்டையினின்று வெளிவந்தவுடன் ஆறுகளுக்கு வந்து சேரும் ஒரு வகை விலாங்கு மீன்; a kind of riverfish or Ee|fish – Elve.

     [குட்டி+விலாங்கு]

குட்டிவிளா

குட்டிவிளா kuṭṭiviḷā, பெ.(n.)

   1. வினா; wood apple.

   2. பார்க்க நாய்விளா; musk-deer-plant.

     [குட்டி + விளா.]

குட்டிவேல்

 குட்டிவேல் kuṭṭivēl, பெ.(n.)

   வேலமாவகை(இ.வ.);; kind of acaua

     [குட்டி + வேல்.]

குட்டிவை

குட்டிவை1 kuṭṭivaittal,    4 செ.கு.வி.(v.i.)

   1.விளையாட்டில் தவறான காயை அடித்தல் (யாழ்ப்.);:

 to hit the wrong coin or seed.

   2. சூதிற் பந்தயமிழத்தல்; to forfeit a coin of seed in gambling.

     [த.குருடு → தெ. குட்டு. குட்டு → குட்டி + வை.]

குட்டு

குட்டு1 kuṭṭudal,    5 செ.குன்றாவி.(v.t.)

   கை முட்டியால் தலையில் இடித்தல்; to cuff. strike with the knuckles on the head or temples.

     “அவன் தலையில் குட்டினான்” (பிங்.);. (வே.க.174);.

   ம.குட்டுக;   க.,தெ. குட்டு;   து.குட்டுனி;   துட.,கோத., குட. குட்;   நா., கொலா. குட்க் பர். குடிப்;   கோண். கோட்டானா;   மா. குட்யெ;   பிரா. குட்டிங்க்;பட குத்து (கை முட்டியால் இடித்தல்);.

 Skt. kuttayat (to bruise, Pound, strike lightly);, Pkt kutte;

 Pali otteti

     [குள் → குட்டு ஒ.நோ. வள் → வட்டு.]

 குட்டு2 kuṭṭu, பெ.(n.)

   கைமுட்டியால் தலையில் இடிக்கை; blow with knuckles or the fist on the head, cuff (வே.க.174);.

ம. குட்டு

     [குள் + குட்டு.]

 குட்டு3 kuṭṭu, பெ.(n.)

   1. மந்தணம்; secret (விறவிவிடு. 108.);

   2. மானம்(வின்.);; honour, dignity.

அவன் குட்டு வெளிப்பட்டது (உ.வ.);.

தெ. குட்டு

     [குள் → குட்டு.]

 குட்டு4 kuṭṭu, பெ.(n.)

   1.குட்டம் (தைலவ. தைல.124);; leprosy.

   2. கோட்டம் (தைலவ.தைல.43);; Arabian costum.

     [குள் + குட்டு(குட்டம்);வ.மொ.வ.121);.]

குட்டுனி

 குட்டுனி kuṭṭuṉi, பெ.(n.)

   பிறரால் குட்டுண்பவன்; intractable, shameless person, as cuffed about by everyone.

     [குள் குட்டு + உணி.]

குட்டுப்படு-தல்

குட்டுப்படு-தல் kuḍḍuppaḍudal,    20 செ.கு.வி.(v.i.)

   அடிக்கடி இடருறுதல்; to undergo reverses.

     [குட்டு + படு.]

குட்டுப்பட்டவன்

 குட்டுப்பட்டவன் kuṭṭuppaṭṭavaṉ, பெ.(n.)

   ஒரு தொழிலில் இடர்ப்பட்டுப் பட்டறிவு (அனுபவம்); பெற்றவன்; one who grows wise by experiencing reverses.

     [குட்டு + பட்டவன்.]

குட்டுமம்

 குட்டுமம் kuṭṭumam, பெ.(n.)

   பூவரும்பு; emerging bud of flower.

     [குட்டு → குட்டுமம்.]

குட்டுவன்

குட்டுவன் kuṭṭuvaṉ, பெ.(n.)

   1.குட்நாட்டிலுள்ளவன்; inhabitant of the {Kuttam} courtry.

     “பல்குட்டுவர் வெல்கோவே” (மதுரைக். 105);.

   2. கோட்டம் பகுதியை ஆண்ட சேரன்;{Chera} king as ruling over {kuttam.}

     “எழுவுறழ் திணிதோளிய றேர்க குட்டுவன்” (சிறுபாண்.49);.

ம. குட்டுவன்

     [குள் → குட்டு + அவன்.]

 குட்டுவன் kuṭṭuvaṉ, பெ.(n.)

   சேர மன்னரின் குடிப்பெயர்; name of the clan among the kings of chera dynasty.

     [கட்டு-குட்டம் [திரள், அவை]-குட்டு+அன்குட்டுவன்]

குட்டுவன்கண்ணன்

 குட்டுவன்கண்ணன்  kuṭṭuvaṉkaṇṇaṉ, பெ. (n.)

கடைக்கழகக் காலத்துப் புலவர்களில் ஒருவர்; one of the poets who belonged to the last Šargam.

     [குட்டுவன் + கண்ணன்.]

இவர் பெயர் கண்ணனாக இருக்கலாம். இவர் சேரர் குடியினராதலின் குட்டுவன் கண்ணன் எனப்பட்டார் (அபி.சிந்);.

குட்டுவன்கீரனார்

 குட்டுவன்கீரனார்  kuṭṭuvaṉāraṉār, பெ.(n.)

ஆய் என்னும் வள்ளலைப் பாடிய புலவர்; the poet who celebrated to ay (அபி.சிந்);.

     [குட்டுவன் + கீரன்+ஆர்.]

குட்டுவன்சேரல்

 குட்டுவன்சேரல்  kuṭṭuvaṉcēral, பெ.(n.)

சேர மன்னன்; cërà king.

     [குட்டுவன் + சேரல்.]

குட்டுவம்

 குட்டுவம் kuṭṭuvam, பெ.(n.)

   நீரைக் காயவைக்குப் பெரிய செம்பு ஏனம்; big copper pot for heating water.

ம. குட்கம்

     [குள் → குட்டு → குட்டுவம்.]

 குட்டுவம் kuṭṭuvam, பெ.(n.)

   கொப்பரை (இ.வ.);; a large brass vessel, cauldron.

ம. குட்கம்

     [குள் → குட்டு → குட்டுவம்.]

குட்டேறு

குட்டேறு kuṭṭēṟu, பெ.(n.)

   1.சிறிய காளை; smal bull.

     “குட்டேற்றைக் கோவர்த்தனனைக் கண்டிரே” (திவ் நாய்ச். 14:2);.

   2. எருத்தின் திமில் (கலித்.102:24 உரை.);; hump of an ox.

     [குட்டு + (இளமை); + ஏறு.]

குட்டை

குட்டை1 kuṭṭai, பெ.(n.)

   1.குறுகிய உருவம்.

 shortnesh, dwarfishness.

   2. குட்டேறு’ பார்க்க; see {ku[feru.}

   3. சிறுதுணி; kerchief, towel, small stro of cloth.

   4. சிறுகுளம்; pool, small pond.

   5 குட்டைமரம் பார்க்க;See. {kuttaimaram.}

குட்டையிற கட்டி அடித்தான்.

   6. குறுணி (தொல்,சொல்.400. உரை.);; a dry measure of capacity.

   7. தலைப்பாகை turban.

   ம. குட்ட;   க. கிட்டு, குட்டு;   து. கிட்ட;   கூ. கூட;   குடி குட்ரூ;பிராகுட்டூ.

 Aust. katoa (short);

     [குட்டு → குட்டை (வே.க.152.);]

 குட்டை kuṭṭai, பெ.(n.)

   வெள்ளைக் குட்டம்; laucoderma, white leprsy.

     [குள் + குட்டை.]

 குட்டை kuṭṭai, பெ.(n.)

   பிரம்பு, கோரை ஆகிய வற்றைக் கொண்டு முடைந்த கூடை; a basket made of reeds or {rattan.}

     “பெரிய பிரப்பங்குட்டையும் (குருகூர்ப். 25);.

ம.குட்ட

     [குள் (குறுமை); → குட்டை.]

குட்டைக்கால்

குட்டைக்கால்  kuṭṭaikkāl, பெ. (n.)

   1. குள்ளமான கால் short leg.

   2. உறுப்புக் கேடான கால் deformed leg (சா.அக.);.

     [குட்டை+கால்]

குட்டைக்குறுவை

 குட்டைக்குறுவை kuṭṭaikkuṟuvai, பெ.(n.)

   நெல்வகை(A);; a kind of paddy.

     [குட்டை + குறுவை.]

குட்டைக்கை

குட்டைக்கை  kuṭṭaikkai, பெ.(n.)

   1. குறைந்த கை; short arm.

   2. உறுப்புக் கேடான கை; deformed arm (சா.அக);.

     [குட்டை+கை]

குட்டைச்சி

 குட்டைச்சி kuṭṭaicci, பெ.(n.)

குள்ளமானவள்,

 short woman.

     [குட்டை + குட்டைச்சி.]

குட்டைச்சுருட்டை

 குட்டைச்சுருட்டை  kuṭṭaiccuruṭṭai, பெ.(n.)

ஒருவகைப் பாம்பு; a kind of coiled snakeOligodon subgriseus (சா.அக.);.

     [P]

குட்டைச்சேம்பு

 குட்டைச்சேம்பு kuṭṭaiccēmbu, பெ.(n.)

   ஒரு வகைச் சோம்பு; a variety of colocasia.

ம. குட்டச்சேம்பு

     [குட்டை + சேம்பு.]

குட்டைப்புடல்

 குட்டைப்புடல் kuḍḍaippuḍal, பெ.(n.)

   கொம்புப் புடல்; short snake-gourd, climber.

     [குட்டை + புடல்.]

குட்டைமரம்

 குட்டைமரம் kuṭṭaimaram, பெ.(n.)

   தொழுமரம்; stocks for legs or hauds as an instrument of punishment (உ.வ.);.

     [குட்டை + மரம்.]

குட்டையநெல்

 குட்டையநெல் kuṭṭaiyanel, பெ.(n.)

   நெல்வகை (A);; a kind of paddy.

     [குட்டை + நெல் – குட்டைநெல் → குட்டையநெல்.]

குட்டையன்

 குட்டையன் kuṭṭaiyaṉ, பெ.(n.)

   குள்ளன்; dwarf, short man.

     [குட்டு → குட்டைன்.]

குட்டையிடுக்கி

குட்டையிடுக்கி  kuṭṭaiyiṭukki, பெ.(n.)

   1. சிற்றரத்தை; lesser galangal – Alpinia galanga.

   2. கோட்டம் (கோ.ஷ்டம்);; Arabian costus – Costus speciosus,

   3. பயிரின் களை; corn weed.

   4. கற்றாழை; aloe genus (சா.அக.);.

     [குட்டை+இடுக்கி]

குட்டையிலடி-த்தல்

குட்டையிலடி-த்தல் kuḍḍaiyilaḍittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   தொழு மரத்தில் கட்டிடித்தல்; to confine in stocks.

     [குட்டையில் + அடித்தல்.]

குட்டையைக்குழப்பு-தல்

குட்டையைக்குழப்பு-தல்  kuṭṭaiyaikkuḻpputal,    5 செ.கு.வி.(v.i.)

தெளிவு ஏற்படுத்துவதற்குப் பதிலாகக் குளறுபடி செய்தல்; add to the confusion; muddle up. ஏற்கனவே இங்கே எல்லாம் குழப்பமாக இருக்கிறது, மேலும் குட்டையைக் குழப்பாதே

     [குட்டையை+குழப்பு-தல்.]

குட்டைவிரல்

 குட்டைவிரல் kuṭṭaiviral, பெ. (n.)

குட்டிவிரல் பார்க்க;See. {kustawira.}

     [குட்டை + விரல்.]

குணகண்டி

 குணகண்டி guṇagaṇṭi, பெ.(n.)

   சிவதை (மலை.);; Indian jalap.

     [குணம் + கண்டி.]

குணகன்

 குணகன் guṇagaṉ, பெ.(n.)

   கணக்கன்; mathematician.

     [குண்டு → குணகன்.]

குணகம்

 குணகம் guṇagam, பெ.(n.)

   பெருக்குந்தொகை; multiplier

     [குள்(கூடுதல்); → குணகு + அக.]

 குணகம் guṇagam, பெ.(n.)

   நகங்கறுத்துக் கெட்டி யாகி விடுதல்; a condition of nail in which it is discoloured and becomes hard (சா.அக.);.

     [குல் → குன் → குனகம்.]

குணகர்

 குணகர் guṇagar, பெ.(n.)

   கணக்கர்; accountant

     [கணி → குணி → குணகர்.]

குணகாங்கி

குணகாங்கி kuṇakāṅgi, பெ.(n.)

குணகாங்கியம் பார்க்க; see {kuma-kargiyam.}

     “குணகாங்கி யென்னுங் கருநாடகச் சந்தமும்” (யாப்.வி.96,பக்-490);.

     [குணம் → குணகங்கி (நற்பண்பினள்);.]

குணகாங்கியம்

 குணகாங்கியம் kuṇakāṅgiyam, பெ.(n.)

   பழைய தொரு கன்னட யாப்பு நூல்; an ancient treatise on prosody in Kanarese.

     “குணகாங்கியமென்னுங் கருநாடகச் சந்தமே போல மகடூஉ முன்னிலைத் தாய்”(காரிகை, பாயிரவுரை);.

     [குணம் → குணகாங்கி → குணாகங்கியம்.]

குணகாரம்

 குணகாரம் kuṇakāram, பெ.(n.)

   பெருக்கல் (சூடா.); (Arith.);; multiplication.

     [குள் → குழி(பெருக்குதல்); → குணிகாரம் – குணிகாரம் → குணகாரம்.]

குணகி

 குணகி guṇagi, பெ.(n.)

   குணவான் (யாழ்.அக.);; person of good qualities.

     [+ குணகன் குணகி.]

குணகு

குணகு1 guṇagudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. வளைதல்; to become bent or crooked.

   2. சோர்தல்; to sink, faint, fade, droop.

   3. மனந்தளர்தல்; to be dejected.

   4 மாறுதல்; to feel uneasy, to be vexed.

ம. குணகுக

     [குணக்கு → குணகு.]

 குணகு 2 guṇagu, பெ.(n.)

குணங்கு பார்க்க;see {kսրariցս:}

     [குணக்கு → குணகு.]

 குணகு3 guṇagu, பெ.(n.)

   பூத பிசாசம்; goblin.

     [குள் → குளகு → குணகு (குள்ளமானது);.]

குணகுணி

 குணகுணி guṇaguṇi, பெ.(n.)

   குணமும் குணமுடைய பொருளும்; an object and its attributes.

     [குணம் + குணி.]

குணக்கம்

 குணக்கம்  kuṇakkam, பெ.(n.)

குருந்த மரம், a species of wild lime – Atlantia racemosa (சா.அக.);.

குணக்காசிகம்

 குணக்காசிகம் guṇaggācigam, பெ.(n.)

   கடைச் சரக்குகளைச் சேர்த்து செய்யும் ஒரு மருந்து; a medcine prepared by bazaar drug (சா.அக.);

     [குனம் + காசிகம்.]

குணக்காய்ப்பேசு-தல்

குணக்காய்ப்பேசு-தல் kuṇakkāyppēcudal,    5 செ.கு.வி. (v.i.)

   வீண்வாதஞ் செய்தல்; to talk per versely, advance captious argument.

     [குணக்கு + ஆய் + பேசு.]

குணக்காரி

 குணக்காரி  kuṇakkāri, பெ.(n.)

குன்றிமணி, jeweller’s bead (சா.அக.);.

குணக்கிராகி

 குணக்கிராகி kuṇakkirāki, பெ.(n.)

   நற்குணத்தையே கொள்பவன்; one who recognises and appriceates the good points only (செ.அக.);.

     [குணம் + கிராகி (கிரகித்துக் கொள்பவன் குணங்கொளி எனின் முற்றுந்தமிழாம்.]

குணக்கு

குணக்கு1 kuṇakkudal,    5செ.குன்றாவி.(v.t.)

   வளைத்தல்; to bend.

     [குள் + குணக்கு.]

 குணக்கு2 kuṇakku, பெ.(n.)

   1. கிழக்க; east.

     ” கரைபொரு தொடுகடற் குணக்கும்” (புறநா.6:3);.

   2. கோணல்; crookedness, curvature.

நாயின் வாளைக் குணக்கெடுக்கலாமா? (உ.வ.);.

   3. எதிரிடை; crossness, opposition.

குணக்குப் பண்ணாதே (உ.வ.);.

   4. நோய்முற்றிச் சிக்கலாதல்; complicatun in sickness.

அவனுக்கு உடம்பு குணக்காயிருக்கிறது.

     [குள் → குணக்கு.]

 குணக்கு3 kuṇakkudal,    5 செ.கு.வி.(v.i.)

   1. பின்னிற்றல் (யாழ்.அக.);; to be backward;

 to lag behind.

   2 சிக்கலாதல்; to become etangled, as threads.

     [குள் → குணகு → குணக்க.]

குணக்குன்று

 குணக்குன்று kuṇakkuṉṟu, பெ.(n.)

   நற்குணம் மிக்கவன்; lit. a mountain of good qualities, person of noble character.

     [குணம் + குன்று.]

குணக்குமணல்

 குணக்குமணல்  kuṇakkumaṇal, பெ.(n.)

வெள்ளி மணல்; silver.ore (சா.அக.);. [குணக்கு+மணல்]

குணக்குரல்

 குணக்குரல் kuṇakkural, பெ.(n.)

கொன்னக்கோல் என்னும் தாளக்கட்டுக் குரலிசை, பண்ணின் அளவுகளை அடிப்படையாகவைத்து பல் வகையான அலகுகளை சித்தரித்து முழக்குவது:

 musical time measure through voice.

     [கணி-குணி-குணக்கு+குரல்]

குணக்கேடன்

குணக்கேடன் kuṇakāṭaṉ, பெ.(n.)

   நற்குண மற்றவன்; ill-natured person.

     “இரங்காக் குணக்கேடன்”(சைவசஆசா. 17);.

     [குணம் + கேடன்.]

குணக்கேடு

குணக்கேடு kuṇakāṭu, பெ.(n.)

   1. கெட்ட பண்பு; bad disposition, ill-nature.

   2. நோய் குணமாக்க முடியாத நிலைக்கு மாறுகை; unfavourable symptom in disease.

     [குணம் + கேடு.]

குணங்கர்

குணங்கர் kuṇaṅgar, பெ.(n.)

   பூதங்கள், தீக்குணப் பேய்கள்; devil, goblin, evil spirit.

     “திரண்டன குணங்கரீட்டம்” (கந்தபு.முதனாட்பானு.312);.

     [குணங்கு + குணங்கர்.]

குணங்கு

குணங்கு1 kuṇaṅgudal,    5 செ.கு.வி.(v.i.)

   வளைதல்; to bend.

     [குணகு → குணங்கு.]

 குணங்கு2 kuṇaṅgu, பெ.(n.)

   பூதம், பிசாசம்; devil gobin

     “குணங்கினம் கானம் பாடி” (கல்லா.34:4); (பிங்.);.

     [குணகு → குணங்கு.]

குணங்குறி

குணங்குறி kuṇaṅguṟi, பெ.(n.)

தன்மையும் வடிவிம் form and attribute characteristics.

     “குணங்குறியற் றின்பநிட்டை கூடவன்றோ” (தாயு.நின்றநிலை.3);.

     [குணம் + குறி.]

குணசந்தி

குணசந்தி kuṇasandi, பெ.(n.)

   அ, ஆ முன், இ = வந்தால் அவ்விரண்டுங் கெட ஏகாரமும், உ, ஊ வந்தால் அவ்வாறே ஒகாரமுந் தோன்றும் வட மொழிச் சந்தி (நன்.239,உரை);; sandhi or euphonic combination in Sanskrit of

     ‘a’ or

     ‘a’ with I and

     ‘u’ short or long, resulting repectively in

     ‘e’ and

     ‘c’ as. தேவேந்திரன், ஞானோதயம்.

     [குணம் + சந்தி.]

குணசலி

 குணசலி  kuṇacali, பெ.(n.)

வல்லாரை; Indian penny-wort – Hydrocotyle asiatica (சா.அக.);.

     [P]

குணசாகரர்

 குணசாகரர் kuṇacākarar, பெ.(n.)

   யாப்பருங்கலக் காரிகையின் உரையாசிரியர்; commentator of {Yăpparurigalakkārigai}

     [குணம் + சாகரர்.]

குணசாலி

 குணசாலி kuṇacāli, பெ.(n.)

   நற்குணமுள்ளவன்; good and virtuous person, one of noble character.

     [குணம் + சாலி.]

குணசாலினி

 குணசாலினி  kuṇacāliṉi, பெ.(n.)

தனபதி என்னும் வணிகரின் மனைவி; wife of merchant Tanapadi (அபி.சிந்.);.

குணசீலன்

 குணசீலன் kuṇacīlaṉ, பெ.(n.)

   நற்குண நற்செயலு நடபவன்; a man of noble character and actions.

     [குண + சீலன்.]

குணசுபாவம்

 குணசுபாவம்  kuṇacupāvam, பெ.(n.)

தனபதி என்னும் வணிகரின் மனைவி; natural disposition (சா.அக.);.

     [குணம்+Skt. சுபாவம்]

குணச்சித்திரம்

குணச்சித்திரம்  kuṇaccittiram, பெ.(n.)

   1. கதை, நாடகம் முதலியவற்றின் மாந்தர்; portrayal of a character in a story, etc. இந்தச் சிறுகதையில் வரும் குணச்சித்திரங்களை வாழ்க்கையில் சந்தித்த உணர்வு ஏற்படுகிறது.

   2. கதை மாந்தர்க்கு உரியதாகக் காட்டப்படும் குண விளக்கம் characterization. கதை மாந்தர்களின் குணச்சித்திரம் சிறப்பாக அமைந்திருக்கிறது.

     [குணம்+சித்திரம்]

குணஞ்ஞன்

குணஞ்ஞன் kuṇaññaṉ, பெ.(n.)

   பிறர் குணங்களை அறிந்து மகிழ்பவன்; one who understands and appreciates the good qualities of others.

   2. இனிய குணமுள்ளவன்; pleasant, good-natured, agreeable terson, one of sweet disposition (கொ.வ.);.

     [குணம் + குணஞ்ஞன்.]

குணட்டு

குணட்டு1 kuṇaṭṭudal,    5 செ.குன்றாவி.(v.t.)

   மயக்கிப் பேசுதல்; to coax, wheedle speak amorously, as a courtesan.

     [குள் → குண → குணட்டு.]

 குணட்டு2 kuṇaṭṭudal,    5 செ.கு.வி.(v.i.)

   1. செல்லங் கொஞ்சுதல்; to whine in jest, to speak saucily, as petted children.

   2. குதித்து விளையாடுதல்; to caper about.

   3. பகட்டுப் பண்ணுதல்(இ.வ.);; to fascinate, attract by fine dress etc., (இ.வ.);.

ம.குணட்டுக

 Fin. kina, Es. kone:Mong. kina, Jap, kenasu, Q. enjuchiy,

     [குள் → குண → குணட்டு.]

 குணட்டு3 kuṇaṭṭu, பெ.(n.)

   கதிர் முதலியவற்றின் சிறுகொத்து; small bunch in a spike of grain ora cluster of grapes.

     [குள் → குணட்டு.]

குணதத்துவம்

குணதத்துவம் kuṇadadduvam, பெ.(n.)

   1. விளங் காமல் நின்ற மூலப்பகுதி முக்குணமாய்ப் பகுப்படைந்து விளங்கிச் சமமாய் நின்ற நிலை (சி.போ.பா.2:2 பக்.161);; condition in which the Primordial Matter manifests in itself the three-fold division of primary qualities, {satva, rājas, támas} in equal proportion.

   2. குண தத்துவத்திற்குரி உலகம்; the world in which the above condition prevails.

     [குணம் + தத்துவம்.]

குணதரன்

குணதரன் kuṇadaraṉ, பெ.(n.)

   1. நற்குண முள்ளவன்; person of noble character.

     “குணதரனாகிய குசனும்”(இரகு.வாகு1);.

   2. முனிவன்; sage.

     “குணதரரே முனிமங்கை யரே” (திருநூற்.59);.

     [குணம் + தரன்.]

குணதிசை

குணதிசை kuṇadisai, பெ.(n.)

   கிழக்கு; east.

     “குணதிசை பாதம் நீட்டி” (திவ்.திருமாலை,19);.

ம. குனதிச

     [குணம் + திசை. குணம் = கிழக்குத்திசை.]

குணதோடம்

 குணதோடம் kuṇatōṭam, பெ.(n.)

குணத்தீமை பார்க்க;see {kuna-t-timal}

     [குணம் + (தோஷம்); தோடம்.]

குணத்தி

குணத்தி  kuṇatti, பெ.(n.)

   1. வல்லாரை; Indian pennywort – Hydrocotyle asiatica.

   2. சிவகரந்தை; fever toolsy-Sphoeranthus amaranthoides(சா.அக);.

     [குணம் – குணத்தி]

குணத்தித்தரு

 குணத்தித்தரு  kuṇattittaru, பெ.(n.)

வேலிப்பருத்தி; hedge-twiner (சா.அக.);.

குணத்திரயம்

குணத்திரயம் kuṇattirayam, பெ.(n.)

   சால்பு (சத்துவம்);, கொடுமை (இராசதம்); மடிமை (தாமசம்); என்னும் மூவகை மூலகுணங்கள்; the three-fold fundamental qualities.

     “குணத்திரயங் குலஞ்சு” (மருதூ:59);.

     [குணம் → திரயம்.]

குணத்தீமை

 குணத்தீமை kuṇattīmai, பெ.(n.)

   நன்மை தீமைகள்; virtue and vice; merits and demerits.

     [குணம் + தீமை.]

குணத்தீவு

 குணத்தீவு kuṇattīvu, பெ.(n.)

   கீழ்த்திசைத் தீவு; an eastern island.

     [குணம் [கிழக்கு]+தீவு]

குணத்துக்குவா-தல் (குணத்துக்குவருதல்)

குணத்துக்குவா-தல் (குணத்துக்குவருதல்) kuṇaddukkuvādalkuṇaddukkuvarudal,(v.i.)    1. சீர்படுதல்; to grow better, reform.

   2. நோயினின்று நலம்பெறுதல்; to recover health, as from illness.

   3. இணங்குதல்; yield, assent.

மறுவ. குணப்படுதல்

     [குணம் + அத்து + கு + வா.]

குணத்தொகை

குணத்தொகை guṇattogai, பெ.(n.)

   பண்புத் தொகை (நன்.365);; an appositional compound in which the first memberstands in adjectival relation to the second.

     [குணம் + தொகை.]

குணத்தொனி

 குணத்தொனி kuṇattoṉi, பெ.(n.)

   வில்லின் நாணோசை; twang of a bowstring.

     [குணம்(வளைவு, வில்); + தொனி.]

குணநலன்

 குணநலன்  kuṇanalaṉ, பெ.(n.)

ஒருவரின் நல்ல இயல்பு; of a person positive qualities. வியக்கத்தக்க குணநலன்கள் கொண்டவர்.

     [குணம்+நலன்.]

குணநாற்பது

குணநாற்பது kuṇanāṟpadu, பெ.(n.)

   நாற்பது பாடலாலாகிய இறந்துபட்ட ஒரு பழைய நூல் (தொல்.பொருள். 246, உரை);; an ancient poem of 40 stanzas, not extant.

     [குணம் + நாற்பது.]

குணநிதி

 குணநிதி kuṇanidi, பெ.(n.)

   நற்குணம் நிறைந்தவன்; lit., storehouse of good qualities; person of noble character.

     [குணம் + நிதி.]

குணநிவர்த்தி

 குணநிவர்த்தி  kuṇanivartti, பெ.(n.)

நாரத்தை bitter orange – Citrus aurantium (சா.அக.);,

குணநூல்

குணநூல் kuṇanūl, பெ.(n.)

   நாடகத் தமிழ்நூல்களுள் ஒன்று (சிலப்.3:12,உரை);; an ancient treatise on the art of dancing.

     [குணம் +நூல்.]

குணந்துல்லியம்

 குணந்துல்லியம்  kuṇantulliyam, பெ.(n.)

வெண்பாதிர்ப்பூ; white coloured fragrant trumpet flower – Stereospermum chelonoides (சா.அக.);.

     [குணம்+துல்லியம்]

குணனம்

 குணனம் kuṇaṉam, பெ.(n.)

   எண்வகைக் கணிதத்துள் ஒன்றாகிய பெருக்கல் (திவா.); ; multiplication, one of {atta-kamidam.}

     [குணல் → குணலம் → குணளம்.]

குணனீயம்

 குணனீயம் kuṇaṉīyam, பெ.(n.)

   பெருக்கற்படுந்தொகை; multiplicand.

     [குணல் → குணலியம் குணனிம்.]

குணனைவில்லாக்கினோன்

 குணனைவில்லாக்கினோன்  kuṇaṉaivillākkiṉōṉ, பெ.(n.)

துரிசு; blue vitriol – Сорpersulppһate (சா.அக.);.

குணன்

குணன் kuṇaṉ, பெ.(n.)

   1. குணமுள்ளவன்; person possessing attributes, qualities used usually in compounds as எண்குணன்.

   2. புழு; worm.

     [குணம் + அன்.]

குணபத்திரன்

குணபத்திரன் kuṇabattiraṉ, பெ.(n.)

   1. அருகக் கடவுள் (யாழ்.அக.);; arhat.

   2. கடவுள்; God.

     [குணம் + பத்திரன்.]

குணபம்

குணபம் kuṇabam, பெ.(n.)

   1. பிணம்; corpse

     “கோழைய ரவரே யல்லாற் குணபம்வே நுலகத் துண்டோ” (பிரபோத.31:28);.

   2. சுடுகாட்டிலுள்ள பேய் (பிங்.);; spirit supposed to haunt burning grounds.

     [குள் → குணம் → குணவம் → குணம்.]

குணபரன்

 குணபரன்  kuṇaparaṉ, பெ.(n.)

பல்லவர்களில் ஒருவன்; a king who belonged to Pallavas. சோழநாட்டை ஆண்டுதிருச்சிராப்பள்ளி மலை மேல் உள்ள சிவன் கோவிலைப் புதுப்பித்தவன். இவனுக்குப்புருடோத்தமன், சத்துருமல்லன், சத்திய சந்தன் எனவும் பெயர் உண்டு (அபிசிந்);.

குணபலம்

 குணபலம் kuṇabalam, பெ.(n.)

   அதிவிடையம் (மலை.);; atees.

     [குணம் + பலம்.]

குணபாகம்

குணபாகம் kuṇapākam, பெ.(n.)

   1.தன்மையான நிலை; favourable turn, as of a disease.

நோய் கண்பாகமாயிருக்கிறது (உ.வ.);.

   2. ஏற்ற பக்குவம்; R-rableness of preparation, as in medicine.

பருத்தைக் குணபாகமாகச் செய்க (உ.வ.);.

     [குணம் + பாகம்.]

குணபாடம்

 குணபாடம் kuṇapāṭam, பெ.(n.)

   பதார்த்த குனநூல்; that branch of medical science which reas with medicinal drug and their uses (சா.அக.);.

     [குணம் + பாடம்.]

குணபாடலியற்றுவோன்

 குணபாடலியற்றுவோன் kuṇapāṭaliyaṟṟuvōṉ, பெ.(n.)

   நோயின் கூறுபாடுகளை அறிந்தவன்; one and stnoroughly acquainted with the nature of these and their symptoms (சா.அக);.

     [குணம் + பாடல் + இயற்றுவோன்.]

குணபாடல்

 குணபாடல் kuṇapāṭal, பெ.(n.)

குணவாகடம் பார்க்க; see {kuna-vagadam.}

     [தணம் + பாடல்.]

குணபேதம்

குணபேதம் kuṇapētam, பெ.(n.)

   1. குணம் ; change of disposition for the worse, -eracy.

   2. நோய் நலமாகாத நிலைக்கு ; Unfavourable symptom of a disease.

     [குணம் + பேதம்.]

குணபேதி

 குணபேதி kuṇapēti, பெ.(n.)

   ஒருவரின் பண்பை இருந்து; any drugs which bring about orpes – one’s character such as intoxicants,-cero-g drug etc (சா.அக.);.

     [குணம் + பேதி.]

குணப்படு-தல்

குணப்படு-தல் kuṇappaḍudal,    20 செ.கு.வி.(v.i)

   1. சீர்ப்படுதல்; to change for the better, to reform.

   2. நோயினின்று நலமடைதல்; to recover health, as from disease.

   3. செழிப்படைதல்; to improve, grow, thrive, as crops.

   4. கழிவிரக்கம் கொள்ளுதல்; to repent, to become penitent.

     [குணம்+ படு.]

குணப்படுத்து-தல்

குணப்படுத்து-தல் kuṇappaḍuddudal,    5செ.குன்றாவி. (v.t.)

   1. சீர்ப்படுத்துதல்; to make better, reform

   2. நோயைக் குணப்படுத்துதல்; to effect a cure as of disease.

     [குணம் + படுத்து.]

குணப்பண்பு

குணப்பண்பு kuṇappaṇpu, பெ.(n.)

   தன்மை குறிக்கும் பண்புச் சொல் (சீவக.11 உரை);; attributes as qualities of objects.

     [குணம் + பண்பு.]

குணப்பிழை

 குணப்பிழை kuṇappiḻai, பெ.(n.)

   குணக்கேடு; ba: temper.

     [குணம் + பிழை.]

குணப்பெயர்

குணப்பெயர் kuṇappeyar, பெ.(n.)

   1. பண்பு குறிக்கும் பெயர்ச்சொல் (நன்.132);; nouns of quaities, abstract nouns, as கருமை, அழகு

   2. பண்பினடியாகப் பிறந்த பெயர்ச்சொல்; nouns derived from abstract nouns as கரியன், அழகன்

   3. சிறப்பியல்புபற்றி மக்கட்குப் புலவரால் கொடுக்க. பட்டு வழங்கும் பெயர்(பன்னிருபா.147);; names give by poets to persons on account of their speca qualities.

     [குணம் + பெயர்.]

குணமணி

 குணமணி kuṇamaṇi, பெ.(n.)

   நற்குணமுள்ளவன்; person of excellent character.

     [குணம் + மணி.]

குணமா-தல்

குணமா-தல் kuṇamātal,    6 செ.கு.வி.(v.i.)

   நலமாதல்; to become cured, healed restored to health.

     [குணம் + ஆ.]

குணமாக்கு-தல்

குணமாக்கு-தல் kuṇamākkudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. நலப்படுத்துதல்; to cure, heal, restore to health.

   2. சீர்திருத்துதல்; to reform, amend, correct.

     [குணம் + ஆக்கு.]

குணமாயிரு-த்தல்

குணமாயிரு-த்தல்  kuṇamāyiruttal,    3 செ.கு.வி. (v.t.)

நலமாய் இருத்தல்; being in sound health; to be well – conditioned (சா.அக.);.

     [குணமாய்+இரு-த்தல்.]

குணமாய்ப்பேசு-தல்

குணமாய்ப்பேசு-தல் kuṇamāyppēcudal,    5 செ.கு.வி. (v.i)

   1. அறிவோடு பேசுதல்; talking with reason and sense, talking banely.

   2. இசிவு, மயக்கம், வலிப்பு முதலியவற்றால் நினைவு தடுமாறிப் பேசுவதினின்று தெளிந்து இயல்பாய்ப் பேசுதல்; after recovery from delirum, giddiness fits, etc., involving incoherant taiks (சா.அக.);.

     [குணமாய் + பேசு.]

குணமாய்ப்போ-தல்

குணமாய்ப்போ-தல் kuṇamāyppōtal,    8 செ.கு.வி. (v.i.)

   நோயினின்று தெளிதில்; to recovefrom illness (சா.அக.);.

     [குணம் + ஆய் + போ.]

குணமாலி

 குணமாலி kuṇamāli, பெ.(n.)

   மாவிலிங்க மரம்; lingam tree (சா.அக.);.

     [குணம் + மாலி.]

குணமாலை

 குணமாலை  kuṇamālai, பெ.(n.)

சீவக சிந்தாமணி நாயகன் சீவகனின் மனைவியரில் ஒருத்தி; one of the wive’s of Šivagan in Šivaga-Šintāmaņi (சா.அக);.

குணமுற்றவன்

 குணமுற்றவன் kuṇamuṟṟavaṉ, பெ.(n.)

   நற்குண பண்பு வாய்ந்த; man of good qualities (சா.அக.);.

குணம் + உற்றவன்.]

குணமுள்ளது

குணமுள்ளது kuṇamuḷḷadu, பெ.(n.)

   நலமாகக் கூடியது; that which has curative virtues or heal

 ing power.

   2. நற்பண்பு வாய்தநது; anything having good qualities (சா.அக.);.

     [குணம் + உள்ளது.]

குணமுள்ளவன்

 குணமுள்ளவன் kuṇamuḷḷavaṉ, பெ.(n).

   நற்குணம் உடையவன்; person of noble character.

     [குணம் + உள்ளவன்.]

குணமூலி

 குணமூலி kuṇamūli, பெ.(n.)

   குணமாக்கும்மருந்துகள்; drugs having healing power, curative drugs (சா.அக.);.

     [குணம் + மூலி.]

குணம்

குணம்1 kuṇam, பெ.(n.)

   1. பொருளின் தன்மை; attribute, property, quality.

     “அதன் குணங் கருதி” (தொல்.சொல்.416);.

   2. ஒழுக்கத் தன்மை; character.

     “மாண்ட குணத்தொடு மக்கட்பே றில் லெனினும்” (நாலடி,56);

   3.மூலகுணங்களாகிய சால்பு (சத்துவம்);, கொடுமை (ராட்சசம்);, மடிமை (தரமசம்);; fundamental qualities.

   4. கொள்கை (திவா.);; opinion, belief.

   5. காப்பியத்தைச் சிறப்பிக்கும் செறிவு, தெளிவு முதலிய தன்மை; inherent excellence of style in a poetic composition.

     “அவற்றுள் சொற்சுவை குணம் அலங்காரமென இரு வகைத்து” (குறள்,420, உரை);.

   6. நன்மை; favourableness.

காரியம் குணமாயிற்று (உ.வ.);.

   7. நலமாதல்; convalescence.

நோய் நலமாயிற்று.

   8. மேன்மை (உ.வ,);; excellence merit. virtue.

   9.அறிவுத் தெளிவு; soundness of intellect.

   10. நிறம் (பிங்.);; colour.

   11. கயிறு (திவா.);; rope, cord.

   12. வில்லின் நாண்; bow-string.

     “தன் சிலை … குணத்தினிசை காட்டினன்” (கந்தபு. அமரர். சிறை. 44);.

   13. குணவிரம்; see {kumaviladam.}

     “குணநூற்றுக் கோடியும்” (சீவக.2818);.

     [குள் → குணம் (வளைவு அடங்கிய தன்மை, பணிவு, ஒத்துவரும் இயல்வு, நலம், மேன்மை மேம்பட்டு விளங்கும் நிறம், அறிவு);.]

 குணம்2 kuṇam, பெ.(n.)

   குடம் (பிங்.);; waterpot. pitcher.

     [குள் (வளைவு); → குணம்.]

 குணம்3 kuṇam, பெ.(n.)

   1.கடலாற்பள்ளமான கிழக்கு; east.

     [குள் → குண் → குணம் = தாழ்ந்த கீழ்த்திசை.]

குணம்பாழ்

 குணம்பாழ் kuṇambāḻ, பெ.(n.)

   மிதித்தால் திகைப்புண்டாக்கும் மூலிகை; a plant supposed to cause perplexity or bewilderment whentouched(சா.அக.);.

     [குணம் + பாழ்.]

குணம்பேதி-த்தல்

 குணம்பேதி-த்தல் kuṇambētittal, செ.கு.வி.(v.i.)

   பண்பு மாறுதல்; change of temprament of mind or disposition as in some diseases (சா.அக.);.

     [குணம் + பேதி.]

குணரஞ்சிதம்

 குணரஞ்சிதம்  kuṇarañcitam, பெ.(n.)

மனோரஞ்சிதம்; cupid’s plant-Artabotrys odoratissimus (சா.அக.);.

குணலாகிதம்

 குணலாகிதம்  kuṇalākitam, பெ.(n.)

சம்பங்கிப் பூ; Champauk – Michelia Champaka(சா.அக.);.

குணலி

குணலி kuṇali, பெ.(n.)

   1. சீந்தில்; moon creeper.

   2. செவ்வகத்தி; red sesbane (சா.அக.);.

     [குள் (வளைவு); → குண → குணலி.]

குணலை

குணலை1 kuṇalai, பெ.(n.)

   1. ஆரவாரத்துடள் நடிக்குங் கூத்து; a dance attended with shouting

     “அந்தணர் குணலை கொள்ள” (திருவாலவா.4,22);.

   2. வீராவேசத்தாற் கொக்கரிக்கை; warrior’s shout of triumph, valour, ordefiance.

     [குணல் (வளைதல், வளைந்தாடுதல்); → குண → கூத்து.]

 குணலை kuṇalai, பெ.(n.)

   நாணத்தால் உடல் வளைகை; bending of the body through bashfulness

     “கூச்சமுமாய்ச் சற்றே குணலையுமாய்”(பணவிடு.310);.

     [குள் → குனல் → குணலை.]

குணலையிடு-தல்

குணலையிடு-தல் kuṇalaiyiḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   1. கொக்கரித்தல்; to shout

   2. இரைந்து கூத்தாடுதல்; to dance and shout.

     [குணலை + இடு.]

குணவதம்

குணவதம் kuṇavadam, பெ.(n.)

   1. குணவிரதம் பார்க்க;see {kuna-Viratam.}

   2. நற்குணம்; good qualities, nobility.

     “களியுணர்வி னாரைக் குணவதங் கொளுத்த லாமோ” (சீவக.378);.

     [குணம் + குணவந்தம் → குணவதம்.]

 குணவதம் kuṇavadam, பெ.(n.)

   1. நற்குண முடையவன்; person of noble character.

     “பரமன் குணவதன் பரத்தி லொளியோன்” (சிலப்.10:181);.

   2. குணநோன்பை நோற்பவன் (சிலப்.10:181 உரை);; one who observes {kuna-nónbu.}

     [குணம் + அந்தன்-குணவந்தன் →குணவதன்.]

குணவதி

 குணவதி kuṇavadi, பெ.(n.)

   நற்குணமுள்ளவள்; woman of noble character.

     [குணம் + அந்தி-குணவந்தி → குணவதி.]

குணவந்தன்

 குணவந்தன் kuṇavandaṉ, பெ.(n.)

குணவான் பார்க்க;see {kunavān}

     [குணம் + அந்தன்-குணவந்தன்.]

குணவல்லயை

 குணவல்லயை kuṇavallayai, பெ.(n.)

   அதிவிடயம்; Indian atees (சா.அக.);.

     [குணம் + வல்லபை.]

குணவாகடம்

குணவாகடம் kuṇavākaḍam, பெ.(n.)

   மருந்தின் தன்மை, நோய்க் குறிகளைப் பற்றிக் கூறும் ஒரு மருத்துவ நூல்; a medical treatise on the symptoms of diseases.

     “பேர்பெறுங் குணவாகடஞ் சோதித்து”(அறப். சத்.51);.

     [குணம் + வாகடம்.]

குணவாகு

 குணவாகு kuṇavāku, பெ.(n.)

   பண்பின் இயல்பு; natural disposition (சா.அக.);.

     [குணம் + வாகு.]

குணவாகுபெயர்

 குணவாகுபெயர் kuṇavākubeyar, பெ.(n.)

   பண்புப் பெயர் பண்பிக்கு ஆகி வருவது; noun literally signifying abstract quality used figuratively to denote the concrete object having that quality, as, நீலஞ்சூடினாள்.

     [குணம் + ஆகுபெயர்.]

நீலஞ்சூடினாள் என்பதில் நீலம் என்னும் பண்புப்பெயர் நீலமலருகு ஆகிவந்தது.

குணவாக்கு

 குணவாக்கு kuṇavākku, பெ.(n.)

   சிறப்பாயமைந்த பண்பு; peculiar characters.

     [குணம் + வாக்கு.]

குணவான்

 குணவான் kuṇavāṉ, பெ.(n.)

நற்குணமுள்ளவன்,

 man of noble character.

     [குணம் + ஆன்.]

குணவாயில்

 குணவாயில் kuṇavāyil, பெ.(n.)

கீழ்த்திசை.

     [குணக்கு + வாயில்.]

குணவியது

குணவியது  kuṇaviyatu, பெ.(n.)

மேன்மையானது; that which is superior. ‘குணவியது ஒன்று உட்பட நிறை”(தெஇக ll, 431); (செ.அக);.

குணவியன்

குணவியன் kuṇaviyaṉ, பெ.(n.)

   மாணிக்க வகையு ளொன்று; a kind of ruby (S.I.I.ii,78);.

     [குணம் + குணவியன்.]

குணவிரதம்

குணவிரதம் kuṇaviradam, பெ.(n.)

   பெருநோன்பிற்கு (மகா விரதத்திற்கு); அடுத்தபடியாகக் கொள்ளும் ஒரு சைன நோன்பு (சீவக.2818,உரை);; vow of secondary importance.

     [குணம் + விரதம்.]

குணவிலக்கணம்

 குணவிலக்கணம் kuṇavilakkaṇam, பெ.(n.)

   நோயின் பண்பைப் பற்றிய நூல்; a treatise on the nature and symptom and peculiar to a disease (சா.அக.);.

     [குணம் + இலக்கணம்.]

குணவீரபண்டிதர்

குணவீரபண்டிதர் kuṇavīrabaṇṭidar, பெ.(n.)

   13-ஆம் நூற்றாண்டிலிருந்த நேமிநாத நூலாசிரியர்; the author of {Néminátam} who lived in the 13th century.

     [குணம் + வீரம் + பண்டிதர்.]

குணவேற்றுமை

குணவேற்றுமை kuṇavēṟṟumai, பெ.(n.)

   ஆறாம்வேற்றுமை(தொல்.எழுத்.216, உரை);; genitive case.

     [குணம் + வேற்றுமை.]

குணாகுணம்

குணாகுணம்1 kuṇākuṇam, பெ.(n.)

   நன்மையும் தீமையும்; good and evil, merit and defect.

     [குணம் + அகுணம்.]

 குணாகுணம்2 kuṇākuṇam, பெ.(n.)

   நோயின் இயல்வு இயலாமைகள் (யாழ்.அக.);; curability or otherwise of a disease.

     [குணம் + அகுணம்.]

 குணாகுணம் kuṇākuṇam, பெ.(n.)

   நோயை நீக்கமுடியும் தன்மை அல்லது நீக்க முடியாத் தன்மை (யாழ்.அக.);; curability or otherwise of disease.

     [Skt.guna + aguna → த.குணாகுணம்.]

குணாகுணவிளக்கம்

 குணாகுணவிளக்கம் kuṇākuṇaviḷakkam, பெ.(n.)

   நோயின் பண்பையும் மாறுபாட்டையும் கூறும் நூல்; a book which tells the nature of a disease with its changes (சா.அக.);.

     [குணம் + அகுணம் + விளக்கம்.]

குணாகுனா

 குணாகுனா kuṇākuṉā, பெ.(n.)

   குனுகுணு. மூக்கின் வழியாய்ப் பேசல்; speaking through the nose (சா.அக.);. குனுக்கல் பார்க்க;see {kurukka}

     [குணுகுணு → குண, குணா.]

குணாக்கரநியாயம்

 குணாக்கரநியாயம் kuṇākkaraniyāyam, பெ.(n.)

   மரம், புத்தகம் முதலியவற்றில் புழுவின் அரிப்பு எழுத்தாதல் போலத் தற்செயலாக நேர்வதைக் குறிக்கும் நெறி (நுண்பொருள்மாலை.);; illustration of letters formed by chance by worm-mark on wood, leaf of a book, etc., to denote any fortuitous or chance occurence.

     [குணை(புழு); + அக்கரம் (அட்சரம்); + நியாயம்.]

குணாசகம்

 குணாசகம் guṇācagam, பெ.(n.)

சிறுகாஞ்சொறி

 small alimbing nettle (சா.அக.);.

     [குணல்(வளைவு); → குனப் சகம், குணாசகப்(கொ.வ.);]

குணாட்டம்

குணாட்டம் kuṇāṭṭam, பெ.(n.)

   ஒருவகை வரிக்கூத்து (சிலப்.3:13,உரை..);; a kind of masqueade dance.

     [குணல் → குணலாட்டம் + குணாட்டம்.]

குணாதிசயம்

 குணாதிசயம்  kuṇāticayam, பெ.(n.)

குணாம்சம் பார்க்க; see kunām šam.

     [குணம்+அதிசயம்]

 குணாதிசயம் kuṇātisayam, பெ.(n.)

   பண்புச் சிறப்பு;  excellence of character, qualities, predominent characteristics.

     [குணம் + அதிசயம்.]

குணாதிதம்

 குணாதிதம் kuṇādidam, பெ.(n.)

   குணங் கடந்தது; that which is absolute, above all attributes as referring to God.

     [குணம் (அதைத்தல்); + அதிதம்.]

குணாது

குணாது kuṇātu, பெ.(n.)

   கிழக்கிலுள்ளது; that which is in the east.

     “குணாஅது கரைபொரு தொடுகடல்” (புறநா.6:3);.

     [குணம் (கிழக்கு); – குணாது.]

குணாநிதிபாண்டியன்

 குணாநிதிபாண்டியன்  kuṇānitipāṇṭiyaṉ, பெ. (n.)

ஒரு பாண்டிய மன்னன்; a Pandiya king.

மறுவ, கந்தரபாண்டியன்

குணானன்

குணானன் kuṇāṉaṉ, பெ.(n.)

   நற்குணமிக்கவ்ன; persor of noble character.

     “ரட்சிக்குங் குணாளனே” (கவிகுஞ்.10);.

     [குணன் → குணாளன்.]

குணானுபவம்

 குணானுபவம் kuṇāṉubavam, பெ.(n.)

   பண்பின் நுகர்ச்சி; experience of nature, as of diseases (சா.அக.);.

     [குணம் + அனுபவம் (குணநுகர்ச்சி.);]

குணாம்சம்

குணாம்சம்  kuṇāmcam, பெ.(n.)

   1. குணச் சிறப்பு; predominant characteristics. அவருடைய இந்தக் குணாதிசயத்தை எல்லோரும் அறிந்திருப்பார்கள். தாத்தா வினுடைய குணாதிசயங்களை யாரால் மாற்ற முடியும்?

   2. ஒன்றிற்கே உரித்தான பண்பு; characteristic feature. வெளிநாட்டு வங்கி என்பதற்கான எல்லா குணாதிசயங்களும் இருந்தன.

     [குணம்+Skt. அம்சம்]

குணாம்பி

 குணாம்பி kuṇāmbi, பெ.(n.)

   கோமாளி; ludic_s comical, droll fellow, buffoon.

ம. குணாம்பி

     [குள் → குண → குணம்பி → குணாம்பி (குழப்புபவன்,நகையாட்டு செய்பவன்);.]

குணாம்பு

குணாம்பு1 kuṇāmbudal,    5 செ.கு.வி.(v.i.)

   பகடி பேசுதல்; to speak insultingly, to taunt, to use invective, irony, sarcasm.

ம.குனாப்பிக்குக

     [குள் → குண → குணம்பு → குணாம்பு.]

குணாலங்கிருதன்

 குணாலங்கிருதன்  kuṇālaṅkirutaṉ, பெ.(n.)

நற்குணங்களைத் தன்னிடத்தே கொண்டவன்; one adorned with good qualities (செ.அக.);.

குணாலம்

குணாலம்1 kuṇālam, பெ.(n.)

   ஒருவகை மகிழ்ச்சிக் கூத்து; riotous dancing.

     “குணாலடித் திரிமினோ” (திவ்.பெரியாழ்..4:6.9);.

   2. வீரத்தால் முழக்கமிடுகை; warrior’s shout of trimph.

     “குணாலமிடு சூரன்” (திருப்பு.185);.

     [குணல் → குணலம் → குணாலம்(வளைந்தாடுதல்.);

குணாலயன்

 குணாலயன் kuṇālayaṉ, பெ.(n.)

   குணங்களுக்கு இருப்பிடமானவன்; one who is the abode of all virT-Es.

     [குணம் + ஆலயன்.]

குணாலயம்

குணாலயம்2 kuṇālayam, பெ.(n.)

   ஒரு பறவை; a bird.

     “காகங் குணாலஞ் சிலம்புமே” (கம்பரா. ஊர் தேடு 151);.

     [குணலம் → குணாலம்.]

குணாலை

குணாலை kuṇālai, பெ.(n.)

குணலை (சிலப்.3:13 உரை. பக். 89); பார்க்க;see {kunalai}

     [குணலை → குயாலை.]

குணி

குணி2 kuṇi, பெ.(n.)

   1. முடமானது (சூடா.);; that which is lame.

   2. சொத்தைக் கையன்; person with a withered hand, useless arm.

     “கஞ்சன் குணி கூனன்” (சைவச.ஆசா.10);.

     [குள் → குண → குணி.]

 குணி3 kuṇittal,    4 செ.குன்றாவி.(v.t.)

   1. கணித்தல்; to estimate calculate, compute, reckon.

     “அவர்குழுக் குணிக்கின்” (கந்தபு. அசுரர்தோ.25);.

   2. ஆய்தல் (ஆலோசித்தல்);; to reflect, consider.

     “கொணரும்வகை யாவதெனக் குணிக்கும் வேலை” (கம்மரா.திருவவ.38);.

   3. வரையறுத்தல் (திவா.);; to determine, define, limit.

   4. பெருக்குதல்; to multiply.

     [குழித்தல் = பெருக்குதல். குழி→குணி.]

 குணி4 kuṇi, பெ.(n.)

   வில் (யாழ்.அக.);; bow.

     [குள் + குணி.]

 குணி kuṇi, பெ.(n.)

   வில்; bow (யாழ்.அக.);.

     [Skt.gunin → த.குணி.]

குணிகார்க்கியர்

 குணிகார்க்கியர்  kuṇikārkkiyar, பெ.(n.)

கார்க்கிய குலத்தில் தோன்றியவர்; one who came from Karkkiya line age (.அபி.சிந்.);.

குணிக்கரி-த்தல்

குணிக்கரி-த்தல் kuṇikkarittal,    4 செ.கு.வி.(v.i.)

   பெருக்கல்; multiplicate.

     [குழி → குணி + கரி.]

குணிக்காரம்

 குணிக்காரம் kuṇikkāram, பெ.(n.)

   பெருக்கல் (யாழ்.அக.);; multiplication.

     [குணகு → குணகு → குணிக்காரம்.]

குணிதம்

குணிதம் kuṇidam, பெ.(n.)

   1. பெருக்கி வந்த தொகை; product of multiplication.

   2. மடங்கு; fold as in two-fold.

     “இவற்றினிருகுனிதஞ் செய்திடுக (சைவச.பொது:16);.

     [குழி + குணி + குணிதம்.]

குணிப்பானவன்

 குணிப்பானவன் kuṇippāṉavaṉ, பெ.(n.)

   நன்கு மதிக்கற்பாடுடையவன்; a respected person.

     [குணப்பு + ஆனவன்.]

குணிப்பு

குணிப்பு kuṇippu, பெ.(n.)

   1. அளவு; estimate, reck oning,

     “சேனையின் குணிப்பி லாமையும் (கம்பரா.பிணிவீ.23);.

   2. ஆராய்ச்சி; investigation consideration.

     “குணிப்பின்றி…… பணித்த பிரான்(திருநூற்.23);.

   3. மதிப்பு; esteem regard.

குணிப்பான மனிதன் (இ.வ.);.

     [குழி → குணி → குணிப்பு.]

குணிப்பெயர்

 குணிப்பெயர் kuṇippeyar, பெ.(n.)

   பண்பியைக் காட்டும் பெயர்ச்சொல்; concrete noun, dis tfr . {kuna p-peyar} as āfluor.

     [குணம் → குணி + பெயர்.]

குணிறு

குணிறு kuṇiṟu, பெ.(n.)

   தடிக்கம்பு; stick

     “பிடித்தாயமா மடப்பாவைநீள், குணிற்றால் விட தடித்தேகவே”(நூற்றெட்டுத்.திருப்புகழ்.12);.

     [குள் → குணில் → குணிறு.]

குணில்

குணில் kuṇil, பெ.(n.)

   1. குறுந்தடி; short-stick cudgel.

     “கரும்பு குணிலா மாங்கனி யதிர்க்கும் (ஐங்குறு.87);

   2. பறையடிக்கும் கடிப்பு; drum stic

     “குணில்பாய் முரசி னிரங்கு மருவி” (புறநா.143:9.);

   3. கவண் (பிங்.);; sling.

     [குள் → குணல் → குணில் (வளைவானது);.]

குணு

குணு kuṇu, பெ.(n.)

   1. வளைவு; bend.

   2. புழு (அக.நி.);; worm, meggot.

     [குள்(வளைவு); → குணு.]

குணுகுணு-த்தல்

குணுகுணு-த்தல் guṇuguṇuttal,    4 செ.கு.வி.(v.i.)

   மூக்காற்பேசுதல்; to speak through the nose.

   2. முணுமுணுத்தல்; to whine, murmur, grumble.

   ம. குணுகுணுக்குக;   க. கொணகு;து. குணுகுணு, ஆகட்டு, குனகுன

     [குனுகுணு = ஒலிக்குறிப்பு. ஒ.நோ. முணுமுணு.]

குணுகுணெனல்

 குணுகுணெனல் guṇuguīeṉal, பெ.(n.)

   முணுமுணுத்தற்குறிப்பு; onom, expr. signifying -r-pering, whining.

     [குணுகுணு + எனல்.]

குணுக்கன்

 குணுக்கன் kuṇukkaṉ, பெ.(n.)

   மூக்காற் பேசுபவன் (யாழ்.அக.);; one who talks through his nose.

     [குணுக்கு + அன்.]

குணுக்கம்

 குணுக்கம் kuṇukkam, பெ.(n.)

வருத்தம் (யாழ்.அக.);:

 suffering, distress.

     [குள் → குணு → குணுக்கம்.]

குணுக்கு

குணுக்கு1 kuṇukkudal,    5 செ.குன்றாவி.(v.t.)

   1. வளைத்தல்; to bend.

   2. நுணுக்குதல்; to powder

     [குள் → குணு → குணுக்குதல்.]

 குணுக்கு2 kuṇukku, பெ.(n.)

   1. கடிப்பிணை என்னும் காதணி (பிங்.);; an ear-ornament.

   2. செவி வடித்தற்கு இடும் குதம்பை (சினேந்.109,உரை.);; ring of lead or brass suspended in the lobe of the ear to stretch it.

   3. மீன்வலையின் ஈயக்குண்டு; lead for a fish-net.

   4. வெள்ளி; silver

   5. பணியாரவகை; a kind of sweet meat.

ம.குணுக்கு

     [குள் + குனுக்கு.]

காது வளர்க்கும் போது அணிவது குதம்பையும் வளர்த்தபின் அணிவது குழையும் கடிப்பிணையுமாகும். குதம்பை இன்று குனுக்கு என வழங்குகின்றது (பண்.நா.ப.54);.

     [P]

குணுக்கு

குணுங்கர்

குணுங்கர் kuṇuṅgar, பெ.(n.)

   1. இழிந்தோர்; base, — persons.

   2. புலையர்; low caste men

     “கட்வித்தோ றின்னுங் குணுங்கர்நாய்” (நாலடி,322);.

   3. தோற்கருவியாளர் (திவா.);; drummers.

   4. குயிலுவர் (சூடா.);; lute-players.

     [குணுங்கு → குணுங்கர்.]

குணுங்கலூர்வெட்டு

குணுங்கலூர்வெட்டு kuṇuṅgalūrveṭṭu, பெ.(n.)

   பழையநாணயவகை (பணவிடு.32);; an ancient coin.

தணுங்கலூர் + வெட்டு.]

குணுங்கு

குணுங்கு1 kuṇuṅgudal,    5 செ.கு.வி.(v.i.)

   வருந்துதல் (யாழ்.அக.);; to suffer to be in distress.

     [குள் → குணு → குணுங்கு.]

 குணுங்கு2 kuṇuṅgu, பெ.(n.)

   1. பேய் (உரி.நி.);; devil, goblin.

   2. கொச்சை நாற்றம்; smell of cattle, buffer,etc.

     “வெண்ணெ யளைந்த குணுங்கும்” (திவ்.பெரியாழ்.2.4:1);.

ம. குணுக்குமணம்

     [குள் → குணு → குணுக்கு.]

குணேடகம்

 குணேடகம் guṇēṭagam, பெ.(n.)

குணேட்டம் பார்க்க;see {Kuněffam.}

     [குள் → குணேட்டம் → குணேடகம்.]

குணைவண்டு

 குணைவண்டு kuṇaivaṇṭu, பெ.(n.)

   வண்டு வகை; a kind of beetle.

     [குள் → குணை + வண்டு.]

குண்டகன்

 குண்டகன்  kuṇṭakaṉ, பெ.(n.)

சிவ கணத்தவரில் ஒருவர்; one of the celestial host of Śiva (அபி.சிந்.);.

     [குண்டு-குண்டகன்.]

 குண்டகன் guṇṭagaṉ, பெ.(n.)

   கள்ளக் கணவனுக்குப் பிறந்தவன் (திவா.);; son born in adultery, bastard of an adulteress.

     [குண்டு + குண்டகன்.]

குண்டகம்

 குண்டகம் guṇṭagam, பெ.(n.)

   மண்பறிக்குங் கருவிவகை; garden hoe, scuffler.

தெ. குண்டக

     [குள் + குண்டு → குண்டகம்.]

குண்டக்கணிகை

குண்டக்கணிகை guṇṭaggaṇigai, பெ.(n.)

கற்பழிந்து வேசையானவள் (சிலப்.10:219.உரை.);:

 prostitute.

     [குண்டு(முழுமை); → குண்ட + கணிகை.]

குண்டக்கமண்டக்கம்

குண்டக்கமண்டக்கம் kuṇṭakkamaṇṭakkam, பெ.(n.)

   சுருண்டு கிடக்கும் நிலை(இ.வ.);; state of lying down in a crooked manner.

குண்டக்க மண்டக்கமாய்க் கிடக்கிறது (உ.வ.);.

ம. குண்டக்க மண்டக்கம்

     [குண்டலமண்டலம் = சுருண்டு வளைதல். குண்டலமண்டலம் → குண்டக்க மண்டக்கம்.]

ஒருவன் சுருண்டு கிடக்கும் நிலை குண்டக்க மண்டக்கம் எனவும், ஒருவனைத் தலையும், காலும் சுருட்டிச் சேர்த்துக் கட்டும் வகை குண்டுக்கட்டு என்றும் சொல்லப்படும் (வே.க.157);.

குண்டக்கம்

குண்டக்கம் kuṇṭakkam, பெ.(n.)

   1. குறளைச் சொல்; slander, calumny.

   2. வஞ்சனை (யாழ்.அக.);; fraud, duplicity.

   3. வளைவு; bend.

     [குள் → குண்டு → குண்டகம் → குண்டக்கம்.]

குண்டக்காய்ச்சி

 குண்டக்காய்ச்சி kuṇṭakkāycci, பெ.(n.)

   பானையைப் போல் காய்க்கும் ஒருவகைத் தேங்காய்;  a species of rounding cocoanut resemble a pot (சா.அக.);.

     [குண்டு → குண்ட → காய்ச்சி.]

குண்டக்கிரியா

குண்டக்கிரியா kuṇṭakkiriyā, பெ.(n.)

இசைப்பண்ணில் ஒரு வகை (பரத.இராக.56);; a specific melody-type (செ.அக.);.

குண்டக்கிரியை

குண்டக்கிரியை kuṇṭakkiriyai, பெ.(n.)

   ஒருவகைப் பண் (இராகம்); (பரத.இராக.56);; a specific melodytype.

     [குண்டம் + கிரியை.]

குண்டக்குமண்டக்கு

 குண்டக்குமண்டக்கு kuṇṭakkumaṇṭakku, பெ.(n.)

தப்பு, தவறு,

 something wrong.

எலே குண்டக்க மண்டக்க பேசாதே.(இ.வ.);

மறுவ, ஏறுமாறு, எக்கு தப்பு, தாறுமாறு.

     [குண்டு-குழிபள்ளம், இடைஞ்சல்குண்டக்கு மண்டக்கு -எதுகை மரபிணைச்சொல்]

குண்டசன்

 குண்டசன்  kuṇṭacaṉ, பெ.(n.)

திருதராட்டிரன் குமரன்; son of Tirudarāttiran(அபி.சிந்.);.

குண்டச்சம்பா

 குண்டச்சம்பா  kuṇṭaccampā, பெ.(n.)

உருண்டைச் சம்பா நெல்; a species of round paddy (சா.அக.);.

     [குண்டு+சம்பா]

குண்டஞ்சு

 குண்டஞ்சு kuṇṭañju, பெ.(n.)

   கரைக்கோடு அமைந்த ஆடவர் உடுக்கும் ஆடைவகை; a kind of cloth with fine border worn by men.

     [கண்டு → குண்டு + அஞ்சு (கரை);.]

குண்டடி-த்தல்

குண்டடி-த்தல் kuṇḍaḍittal,    4.செ.கு.வி.(v.i.)

   1.கோலி, இரும்புக்குண்டு முதலியவற்றால் விளையாடுதல்; to play with marbles, small metal ballsh etc.,

   2. பங்கியடித்தல்; to take in bhang.

   3. தேர்வு முதலியவற்றில் தவறுதல் (வின்.}; to fail, as in an examination.

தேர்வில் அடிக்கடிக் குண்டடிக்கிறான்.

     [குண்டு + அடி.]

குண்டடிகாயம்

குண்டடிகாயம் kuṇḍaḍikāyam, பெ.(n.)

   1. துப்பாக்கியினாற் சுட்ட காயம்; gun shot wound

   2. நோய் கொண்ட பெண்ணைப் புணருவதாலலேற்படும் அரையாப்புக் கட்டி; a veneral bubo of the groins as a result of veneral or syphilitis contact (சா.அக.);.

     [குண்டடி + காயம்.]

குண்டடியன்

 குண்டடியன் kuṇḍaḍiyaṉ, பெ.(n.)

   ஆண்சிறுத்தைப் புலி(வின்.);; male hunting leopard.

     [குண்டு + அடியன்.]

குண்டடுப்பு

 குண்டடுப்பு kuṇḍaḍuppu, பெ.(n.)

   ஒருவகைக் குழியடுப்பு (இந்துபாக.);; earthern oven like a pt with a side opening for putting in fuel.

ம. குண்டடுப்பு

     [குண்டு + அடுப்பு.]

     [P]

குண்டடுப்பு

குண்டணி

 குண்டணி kuṇṭaṇi, பெ.(n.)

   குறளைச் சொல்; sader, calumny.

மறுவ. கோள் சொல்லுதல்

   ம. குண்டனி;   க. கொண்டெய, கொண்டே கொண்டெக;தெ. கொண்டெமு.

     [குண்டு → குண்டணி.]

குண்டனி

 குண்டனி kuṇṭaṉi, பெ.(n.)

   குறளை (யாழ்.அக.);; calumny.

     [குள் → குண்டு → குண்டனி (வளைவு, ஒரம் சொல்லுதல்.]

குண்டன்

குண்டன்  kuṇṭaṉ, பெ.(n.)

   1. காசிய முனிவர் மனைவி கத்துருவின் குமரன்; son of katru and saint kāšipā.

   2. திருதராட்டிரன் மகன்; son of Tirudarāțțiran.

   3. ஒரு சிவ கணத்தவன்; a celestial host of Śiva (அபி.சிந்);.

     [குண்டு+அன்.]

 குண்டன்1 kuṇṭaṉ, பெ.(n.)

   1. விலைமகளுக்குப் பிறந்த மகன்; son born in adulery.

   2. பருத்து வலுத்தவன்; strong, stout person.

   3. இழிந்தோன்; man low in caste or character.

     “சமண் குண்டர்” (திவ்.பெரியதி.2:6.6);.

   ம. குண்டன்;   க. குண்ட;தெ. குண்டடு.

     [குள் → குண்டு → குண்டன்.]

 குண்டன்2 kuṇṭaṉ, பெ.(n.)

   1. அடிமை; slave.

   2. வளைந்தது; that which is bent.

   3. குண்டனி,

 backbiter,

குண்டுணி சொல்வோன்,

 calumniator.

     [குள் → குண்டு → குண்டன் (ஒ.நோ.புள் → புண்டு);.]

குண்டபேதி

 குண்டபேதி  kuṇṭapēti, பெ.(n.)

திரிதராட்டிரன்; son of Tiridarāțțiran (அபி.சிந்);.

     [குண்டம்+பேதி]

குண்டப்பணிவிடை

 குண்டப்பணிவிடை kuṇḍappaṇiviḍai, பெ.(n.)

   கீழ்த்தரமான ஊழியம்; menial service.

     [குண்டம் + பணிவிடை.]

குண்டம்

குண்டம் kuṇṭam, பெ.(n.)

   பன்றி; pig.

     [குண் → குண்டு → குண்டம்.]

 குண்டம்2 kuṇṭam, பெ.(n.)

   குளம்; tank.

     “சோம குண்டம் சூரிய குண்டம் துறை மூழ்கி (சிலப்.9.64);.

தெ. குண்ட

     [குள → குண்டு → குண்டம்.]

 குண்டம்3 kuṇṭam, பெ.(n.)

   1. வேள்விப்பள்ளம் (ஒமகுண்டம்);; hollowin the ground for the sacred fire of the Hindus.

     “மறையவன் குண்ட முறைமுறை வாய்ப்ப” (கல்லா.94:12);.

   2. குழி; deep cavity, plt.

   3. வாவி (திவா.);; pool, tank.

   4. குடுவை (திவா.);:

 small hollow vessel with a narrow mouth.

   5. பானை (பிங்.);; pot.

   6. கற்பழிந்து வேசையானவள் (சிலப்.10:219, உரை);; unchaste woman.

   ம. குண்டம்;   க.குண்ட, குண்டெ;   தெ.குண்ட, குண்ட;   து. குண்ட;   குட., பட. குண்டி;பர். குட்ட.

     [குண்டு + குண்டம்.]

குண்டம்பாய்-தல்

குண்டம்பாய்-தல் kuṇṭambāytal,    2 செ.கு.வி.(v.i.)

   நேர்ந்துகொண்டு தீக்குழியில் நடத்தல்; to walk on fire in fulfilment of a vow.

     [குண்டம் + பாய்-.]

குண்டரம்

 குண்டரம் kuṇṭaram, பெ.(n.)

   திரட்சியுள்ள அரம்; round file.

மறுவ. உருட்டாம்

     [குண்டு + அரம்.]

குண்டர்

குண்டர்  kuṇṭar, பெ.(n.)

   1. பொதுச் சொத்துக்களுக்குக் கேடு விளைவித்தல்; ஆட்களை அடித்துப்பயமுறுத்துதல் கலவரம் செய்கை போன்ற மக்களுக்குத் தீங்கு விளைவிக்கும் செயல்களைச் செய்யும் ஆள்; hooligan; in India “goonda’. குண்டர் தடுப்புக் காவல் சட்டம்.

குண்டற்கச்சி

குண்டற்கச்சி  kuṇṭaṟkacci, பெ.(n.)

தென்னை வகைகளுள் ஒன்று (பதார்த்த71); a kind of coconut (செ.அக.);.

குண்டற்காய்ச்சி

 குண்டற்காய்ச்சி kuṇṭaṟkāycci, பெ.(n.)

   ஒரு வகைத் தென்னை; a kind of cocoanut discriminated according to its fructility (சா.அக.);.

மறுவ. குண்டற்கச்சி

     [குண்டல் + காய்ச்சி.]

குண்டலகேசி

குண்டலகேசி kuṇṭalaāci, பெ.(n.)

   1. பிற மதத்தாரை வாதில் வென்று தன் மதத்தை நிலைநாட்டிய ஒரு புத்தமதப் பெண் துறவி (நீலகேசி);; a Buddhistic nun who stabilised Buddhism by vanquishing the representatives of other religions in disputation.

   2. ஐம்பெருங் காப்பியத்துள் ஒன்றானதும் நாதகுத்தனார் இயற்றியதும் குண்டலகேசியின் வரலாறு உணர்த்துவதுமான நூல் (யாப்.வி.);; an epic poem by {Nātakuttapår} describing the life and work of {Kundalakéci} one of {Imperurikāppiyam}

     [குண்டலம் + கேசி.]

குண்டலகேசி விருத்தம்

குண்டலகேசி விருத்தம் kuṇṭalaāciviruttam, பெ.(n.)

   விருத்தப் பாவகையினால் இயன்ற குண்டலகேசி யென்னும் நூல் (மணிமே.பக்.448);; the poem {Kundalakesi} as composed in viruttam metre.

     [குண்டல + கேசி + விருத்தம்]

குண்டலக்கடுக்கன்

 குண்டலக்கடுக்கன் kuṇḍalakkaḍukkaṉ, பெ.(n.)

   வட்டக் கடுக்கன் வகை; a large ear-ring.

குண்டலம்+கடுக்கன்)

குண்டலன்

குண்டலன் kuṇṭalaṉ, பெ.(n.)

   குண்டல மணிவோன்; one who wears the {kundalam}

     “ஓர் குண்டலன்” (சூடா.1:10);.

     [குண்டலம் + குண்டலன்.]

குண்டலபோகி

 குண்டலபோகி  kuṇṭalapōki, பெ.(n.)

துரியோதனன் தம்பி; brother of Duri-y-ötanan (அபி.சிந்.);.

குண்டலபோசன்

 குண்டலபோசன்  kuṇṭalapōcaṉ, பெ.(n.)

குண்டலபோகி; see kwndala-pogi- (அபி.சிந்);.

குண்டலப்பாலை

குண்டலப்பாலை kuṇṭalappālai, பெ.(n.)

   23 சிறந்த மூலிகைகளுள் ஒன்றான கற்பக மூலிகை;  it is one of the 23 all healing drugs contemplated in the Siddhar’s medicine (சா.அக.);.

     [குண்டலம் + பாலை.]

குண்டலப்புழு

குண்டலப்புழு kuṇṭalappuḻu, பெ.(n.)

குண்டலப் பூச்சி பார்க்க;see {kundala-p-pucci}

     “கோழி விட்டெறி குழையினைக் குண்டலப் புழுவென்று” (திருவானைக். திருநாட்.122);.

     [குண்டலம் + புழு.]

குண்டலப்பூச்சி

குண்டலப்பூச்சி kuṇṭalappūcci, பெ.(n.)

   வளைந்து சுருண்டு கொள்ளும் புழுவகை; a kind of worm that rolls itself up.

     “சுண்டுவிரலிலே குண்டலப்பூச்சி சுருண்டு கிடப்பானேன்”(குற்றா.குற.123:3);.

     [குண்டலம் + பூச்சி.]

குண்டலமண்டலம்

 குண்டலமண்டலம் kuṇṭalamaṇṭalam, பெ.(n.)

   சுருண்டு வளைகை; colling round.

     [குண்டலம் + மண்டலம்.]

குண்டலம்

குண்டலம் kuṇṭalam, பெ.(n.)

   1. ஆடவர் காதணி வகை; gold ear-ring worn by men.

     “குண்டல மொருபுடை குலாவி வில்லிட” (சீவக.1009);.

   2. வானம் (பிங்.);; sky, atmosphere, heaven.

   3. வட்டம்; circle.

   4. சுழி; zero.

   க. குண்டல, குண்டல, கொண்டலு;தெ.

   குண்டல்மு;பட. கொண்மாகெ.

{Skt. kundala}

     [குள் + குண்டு → குண்டலம்.]

குண்டலம்பாலை

குண்டலம்பாலை  kuṇṭalampālai, பெ.(n.)

ஒரு (கற்ப); மூலிகை; a rejuvenating drug.

     [குண்டம்+பாலை]

இது 23 பெரிய மூலிகைகளில் ஒன்று (சா.அக.);.

குண்டலரேகை

 குண்டலரேகை kuṇṭalarēkai, பெ.(n.)

   கைவரை வகை (திருவாரூ.குற);; a line in palm of hand.

     [குண்டலம் + (வரைகை); ரேகை.]

குண்டலவாசி

 குண்டலவாசி kuṇṭalavāci, பெ.(n.)

   விண்வெளிப் பாமில் உலவுபவன்; one who travels in the etheric region of the sky (சா.அக.);.

     [குண்டலம் + வாசி. வசி → வாசி.]

குண்டலவுழுவை

 குண்டலவுழுவை kuṇṭalavuḻuvai, பெ.(n.)

   நன்னீரிலும் கழியிலும் வாழும் மஞ்சள் நிறமுள்ள மீன்வகை; a yellowish fish found in fresh water and in backwater.

     [குண்டலம் + உழுவை.]

குண்டலாத்தி

 குண்டலாத்தி kuṇṭalātti, பெ.(n.)

   சங்கன் வேர்; mistletoe berry-thorn (சா.அக.);.

     [குண்டலம் + குண்டலத்தி.]

குண்டலி

குண்டலி1 kuṇṭali, பெ.(n.)

   1.தொப்புள்; umbilical region

     “குண்டலியா னனலை யோம்பி” (சி.சி.9:8);..

   2.குய்யத்திற்கும் எருவாய்க்கும் நடுவில் இருப்பதாகக் கருதும் மூலாதாரம் (ஒளவை.கு. நினைப்புறு.2);; mystic circle situated between the anus and generative organ.

     [குண்டு + குண்டலி.]

 குண்டலி kuṇṭali, பெ.(n.)

   1. சீந்தில் (தைலவ. தைல56);; gulancha.

   2. சங்கஞ்செடி (திவா.);; mistletoeberry-thorn.

     [குண்டலம் + குண்டலி.]

 குண்டலி kuṇṭali, பெ.(n.)

   தூயமாயை (சி.போ.பா. 2:2, பக்.133);;{Primal-Maya,} as the presiding power in {kundali.}

     [குண்டல் → குண்டலி.]

 குண்டலி4 kuṇṭali, பெ.(n.)

   1. பாம்பு; snake.

   2.மயில்; peacock.

   3. மான் (யாழ்.அக.);; deer.

     [குண்டல் + குண்டலி.]

 குண்டலி kuṇṭali, பெ.(n.)

   தாளகம் (யாழ்.அக.);’; yellow orpiment.

     [குள் → குண்டு → குண்டலி.]

குண்டலிகம்

குண்டலிகம் guṇṭaligam, பெ.(n.)

   1. சீந்தில்; moon creeper.

   2. மூலாதாரம்; the first and the lowes psycical region in the human body.

   3. மான்; deer

   4. குண்டலி ஆற்றல்; serpents power.

   5. தாளகம்; orpiment.

   6. பாம்பு; snake.

   7. மயில்; peacock.

   8. தொப்புள்; the navel region.

   9. சுருட்டை; carpet snake.

   10.’ஓம்’ என்னும் மந்திரம்; the mystic sound {öm’}

   11. உயிர்வளி; the prana (சா.அக.);.

     [குண்டலி → குண்டலிகம்.]

குண்டலிகா

 குண்டலிகா  kuṇṭalikā, பெ.(n.)

சம்பங்கோரை; a kind of sedge-grass (சா.அக.);.

     [குண்டலிகம்-குண்டலிகா]

குண்டலிக்கவிசை

 குண்டலிக்கவிசை kuṇṭalikkavisai, பெ.(n.)

   வயிற்றிலேற்படும் ஒருவகை விக்கம்; abdomina dropsy (சா.அக.);.

     [குண்டலி + கவிசை.]

குண்டலிக்குள் காயசித்தி

 குண்டலிக்குள் காயசித்தி kuṇṭalikkuḷkāyasitti, பெ.(n.)

   நாகதாளி; snake hood (சா. அக.);.

     [குண்டலி → குள் → காயம் → சித்தி.]

குண்டலிங்கம்

 குண்டலிங்கம்  kuṇṭaliṅkam, பெ.(n.)

மலாக்கா நறும்புகைத்தி; malacca benzoin – Styrax benzoin (சா.அக.);.

குண்டலிசக்தி

 குண்டலிசக்தி kuṇṭalisakti, பெ.(n.)

குண்டலினி பார்க்க;see {kundalni.}

     [குண்டலி(னி); + சக்தி.]

குண்டலிசம்பங்கி

 குண்டலிசம்பங்கி kuṇṭalisambaṅgi, பெ.(n.)

   புல் சம்பங்கிப் பூ;சுருட்டைச் சம்பங்கி; a species of coiled champauk (சா.அக.);.

     [குண்டலி + சம்பங்கி.]

குண்டலித்தாய்

குண்டலித்தாய்  kuṇṭalittāy, பெ.(n.)

   1. சத்தி; the universal.

   2. துர்க்கை; the goddess Durga (சா.அக.);.

     [குண்டலி+தாய்.]

குண்டலினி

குண்டலினி kuṇṭaliṉi, பெ.(n.)

   1. மாமாயை_5.சிவாக்); primal {maya,}

   2. மூலாதாரத்தி

   லுள்ள பாம்பின் வடிவமைந்த ஒரு ஆற்றல் (பிரபோத. 44:20);; a Sakti or principle in the form of a serpent, abiding in the {mūsādāram.}

     [குண்டலி → குண்டலினி.]

குண்டலிப்பாம்பு

 குண்டலிப்பாம்பு kuṇṭalippāmbu, பெ.(n.)

   குண்டலிசக்தி, வல்லபை சக்தி; the serpent’s power colled up at the end of the spinal column (சா.அக.);.

     [குண்டலி + பாம்பு.]

குண்டலிப்பாலை

 குண்டலிப்பாலை kuṇṭalippālai, பெ.(n.)

   ஒருவகைப் பாலை; a kind of paulay (சா.அக.);.

     [குண்டலி + பாலை.]

குண்டலியா

 குண்டலியா  kuṇṭaliyā, பெ.(n.)

சீந்தில்; moon creeper – Menispermum Cordi; Folium (சா.அக.);.

     [குண்டலி+ஆள்.]

குண்டலியோகம்

 குண்டலியோகம் kuṇṭaliyōkam, பெ.(n.)

   சிவயோகம்; a kind of yoga practice (சா.அக.);.

     [குண்டலி+ ஒகம்.]

குண்டலிவளி

குண்டலிவளி kuṇṭalivaḷi, பெ.(n.)

குண்டலினி பார்க்க;see {kundaint}

   2. வயிற்றில் குத்தலை உண்டாக்கும் ஒருவகை வளி; a kind of flatulency air or gas in the stomach or the intestines. It is attended with acute pain (சா.அக.);.

     [குண்டலி + வளி.]

குண்டழி-த்தல்

குண்டழி-த்தல் kuṇṭaḻittal,    4 செ.குன்றாவி.(v.t.)

   விலங்கின் விதையடித்தல்; castrating, depriving of virility (சா.அக.);.

     [குண்டு + அழி.]

குண்டவண்டன்

 குண்டவண்டன் kuṇṭavaṇṭaṉ, பெ.(n.)

   குள்ளமாய்த் தடித்தவன்; short, stumpy person (j);.

     [குண்டன் + வண்டண்.]

குண்டா

 குண்டா kuṇṭā, பெ.(n.)

   உருண்டு திரண்ட கலம்; kind of vessel.

மரா. குண்டா

     [குண்டு → குண்டா.]

குண்டாக்கன்

குண்டாக்கன் kuṇṭākkaṉ, பெ.(n.)

   தலைவன்; leader, chief.

     “சமணர்க்கோர் குண்டாக்கனாய்” (தேவா.963:8);.

     [குண்டன் + குண்டாக்கன்.]

குண்டாங்கரணம்

 குண்டாங்கரணம் kuṇṭāṅgaraṇam, பெ.(n.)

   குட்டிக்கரணம்; somersault.

     [குண்டு + அம் + கரணம்.]

குண்டாச்சட்டி

குண்டாச்சட்டி kuṇṭāccaṭṭi, பெ.(n.)

குண்டான் சட்டி பார்க்க;see {kungä0-catti}

     [குண்டான் சட்டி → குண்டாச்சட்டி.]

குண்டாஞ்சட்டி

குண்டாஞ்சட்டி kuṇṭāñjaṭṭi, பெ.(n.)

குண்டான் சட்டி பார்க்க;see {Kungä0-catty.}

     [குண்டான் சட்டி → குண்டாஞ்சட்டி.]

குண்டாணி

குண்டாணி kuṇṭāṇi, பெ.(n.)

குடையாணி1 பார்க்க;see {kuda-y-ani}

     [குண்டு + ஆணி.]

குண்டாணிக்கொடி

 குண்டாணிக்கொடி kuṇḍāṇikkoḍi, பெ.(n.)

குந்தாணிக் கொடி பார்க்க;see {kungāņi-k-kogi}

     [குண்டாணி + கொடி.]

குண்டாதி

 குண்டாதி  kuṇṭāti, பெ.(n.)

பீ நாறிச் சங்கு smooth volkameria – Cleodendron inerте (சா.அக.);.

குண்டாந்தடி

 குண்டாந்தடி kuṇḍāndaḍi, பெ.(n.)

   பருத்துக் குறுகிய கைத்தடி; short stout stick.

     [குண்டு → குண்டான் + தடி.]

குண்டானி

 குண்டானி  kuṇṭāṉi, பெ.(n.)

கொம்மட்டிக் கொடி; mortar-flower bindweed – Ipomaca bracteata (சா.அக.);.

     [குண்டலி – குண்டானி]

குண்டான்

 குண்டான் kuṇṭāṉ, பெ.(n.)

குண்டான் சட்டி பார்க்க;see {kundan-catfi}

     [குண்டு + குண்டான்.]

குண்டான்சட்டி

 குண்டான்சட்டி kuṇṭāṉcaṭṭi, பெ.(n.)

   வாயகன்ற ஏன வகை; vessel with wide mouth.

     [குண்டான் + சட்டி.]

குண்டாமண்டி

 குண்டாமண்டி kuṇṭāmaṇṭi, பெ.(n.)

   குறும்பு; mischief.

ம. குண்டாமண்டி

     [குண்டு + மண்டி).]

குண்டாலக்கட்டி

 குண்டாலக்கட்டி kuṇṭālakkaṭṭi, பெ.(n.)

   செவ்வாப்புக் கட்டி; blisters in several parts of the body specially in children (சா.அக.);.

     [குண்டலம் → குண்டாலம் + கட்டி.]

குண்டாலம்

 குண்டாலம் kuṇṭālam, பெ.(n.)

குண்டாலக்கட்டி;see {kundalak-kaff}

     [குண்டு + குண்டாலம்.]

குண்டாலரோகம்

 குண்டாலரோகம் kuṇṭālarōkam, பெ.(n.)

   தலையிலுண்டாகும் செவ்வாப்புக் கட்டி (பைஷஜ.);; tumour in the head (செ.அக.);.

     [குண்டு→குண்டாலம்+Skt. ரோகம்]

குண்டாலி

 குண்டாலி kuṇṭāli, பெ.(n.)

சங்கஞ்செடி,

 mistletoe berry-thorn (சா.அக.);.

     [குண்டு → குண்டாலி.]

குண்டி

குண்டி kuṇṭi, பெ.(n.)

   1. உருண்டு திரண்டபுட்டம் (ஆசனப்பக்கம்);; buttocks, posteriors, ramp of an animal, any rump-like protuberance.

   2. குண்டிப் போன்ற அடிப்பக்கம்; the end of a fruit or nut opposite to the stalk, bottom as of a vessel.

   3. இதயம்; heart.

குண்டிக்காய்.

   4. சிறுநீரகம்; kidney.

   5. மீன் சினை; roe of fish, spawn.

   ம.குண்டி;   க. குண்டெ;   தெ. குட்டெ;   து. குல்லிகெ;     [குண்டு → குண்டி.]

குண்டிகம்

குண்டிகம்1 guṇṭigam, பெ.(n.)

   எரு, வறட்டி; cow durg cake.

   2. பேரேலம்; large cardamon (சா.அக.);.

     [குண்டு → குண்டிகம்.]

 குண்டிகம்2 guṇṭigam, பெ.(n.)

   துகள் (யாழ்.அக.);; power.

     [குள் → குண்டு → குண்டிகம்.]

 குண்டிகம்3 guṇṭigam, பெ.(n.)

   எருவறட்டி (யாழ்.அக.);; dried cow-dung cake.

     [குள் → குண்டிகம் (வட்டமானது);.]

குண்டிகாய்-தல்

குண்டிகாய்-தல் kuṇṭikāytal,    3 செ.கு.வி.(v.i.)

   உணவின் மையால் வயிறு காய்தல்; lit, to be thinned of the outtocks. To become emacitated on acrart-of insufficient food, etc., to grow lean.

     [குண்டி + காய்.]

குண்டிகை

குண்டிகை guṇṭigai, பெ.(n.)

   1. கமண்டலம்; pitcher.

     “நான் முகன் குண்டிகை _த (திவ். இயற்.நான்.9);.

   2. குடுக்கை; cocoa– riter shell, used as a receptacle.

     “குண்டி பருத்தி” (தொல்.பாயி.உரை);.

   3. நூற்றெட்டு ஒன்று;  one of an Upanisad among

ம. குண்டிக

{Skt. kundika}

     [குண்டு → குண்டிகை.]

குண்டிக்காயெரிச்சல்

 குண்டிக்காயெரிச்சல் kuṇṭikkāyericcal, பெ.(n.)

   சிறுநீரகத்தில் காணும் ஒரு நோய்; inflammation of =::neys.

     [குண்டிக்காய் + எரிச்சல்.]

குண்டிக்காய்

குண்டிக்காய் kuṇṭikkāy, பெ.(n.)

   1. சிறுநீரகம்; kidneys.

   2.இதயம்; heart.

   3. உட்காரும் பக்கம் (பிருட்டபாகம்);; buttocks posteriors.

   ம. குண்டிக்காய்;   க. குண்டு (ஆண்குறி விதை);;   தெ. குண்டு;   நா. குண்டுர்காய்;   பர்.குன்டெர்காய்;கோண். குன்துர்காய்.

     [குண்டி + காய்.]

குண்டித்துணி

 குண்டித்துணி kuṇṭittuṇi, பெ.(n.)

அரைத்துணி:

 waist cloth.

     [குண்டி + துணி.]

குண்டினபுரம்

 குண்டினபுரம்  kuṇṭiṉapuram, பெ.(n.)

விதர்ப்ப நாட்டுத் தலைநகரம் ; an ancient capital of Vidarpa (அபி.சிந்.);.

     [குண்டினம்+புரம்]

குண்டிப்பட்டை

 குண்டிப்பட்டை kuṇṭippaṭṭai, பெ.(n.)

   உருண்டு திரண்ட புட்டம்; buttocks.

     [குண்டி + பட்டை.]

குண்டிப்பி

 குண்டிப்பி kuṇṭippi, பெ.(n.)

   சிப்பி முத்து; pearl of oysters (சா.அக. );.

     [குண்டு → குண்டி → குண்டிப்பா.]

குண்டிப்புறம்

 குண்டிப்புறம் kuṇṭippuṟam, பெ.(n.)

   புட்டம்; buttocks (சா.அக.);.

     [குண்டி + புறம்.]

குண்டிமற-த்தல்

குண்டிமற-த்தல் kuṇṭimaṟattal,    3 செ.கு.வி.(v.i.)

   நினைவுமறதி மிகவுமுடையனாதல்; to be extremely absent-minded.

     [குண்டி + மற.]

குண்டிமுனை

 குண்டிமுனை kuṇṭimuṉai, பெ.(n.)

   இடுப்பெலும்புக் கூட்டின் முன்பக்கத்துக்குமேலிருக்கும் ஒரு முனை; the anterior upperbone of the pelvis (சா.அக.);.

     [குண்டி + முனை.]

குண்டியடி-த்தல்

குண்டியடி-த்தல் kuṇḍiyaḍittal,    4 செ.கு.வி.(v.i.)

   நிலத்திலிட்ட விதைகள் மூடுமாறு உழவுமாட்டையோட்டுதல்; to level ploughed land by a drag, after sowing.

     [குண்டி + அடி.]

குண்டியம்

குண்டியம் kuṇṭiyam, பெ.(n.)

   1. குறளை (உரி.நி.);; slander.

   2. மந்தணத்தை வெளிப்படுத்துகை; exposure of secrets.

   3. பொய்; falsehood, lie.

     [குண்டு → குண்டி.]

குண்டியெலும்பு

 குண்டியெலும்பு kuṇṭiyelumbu, பெ.(n.)

   இருக்கை (ஆசனம்); எலும்பு; os sacrum.

     [குண்டி + எலும்பு.]

குண்டில்

குண்டில்  kuṇṭil, பெ.(n.)

முதுகு; backside, the region of the spine.

 குண்டில்1 kuṇṭil, பெ.(n.)

   1.சிறுசெய் (திவா.);; small field or plot.

   2. முதுகு; back.

     [குண்டு + குண்டில்.]

 குண்டில் kuṇṭil, பெ.(n.)

   செடிவகை (யாழ்.அக.);; a shrub.

     [குண்டி + இல்.]

குண்டிளுத்து-தல்

 குண்டிளுத்து-தல் kuṇṭiḷuddudal, செ.கு.வி.(v.i.)

வைத்தல் பார்க்க;see {kuta-wattal}

     [குண்டி + குத்து.]

குண்டிவற்று-தல்

குண்டிவற்று-தல் kuṇṭivaṟṟudal,    5 செ.கு.வி.(v.i.)

குண்டிகாய் பார்க்க;see {kund-kay.}

     [குண்டி → வற்று.]

குண்டு

குண்டு1 kuṇṭu, பெ.(n.)

   1. பந்துபோல் உருண்டு கனப்பது; ball, anything globular and heavy.

   2. நிறைகல் வகை (பிங்.);; a standard weight.

   3. துலாக்கோல் (பிங்.);; scales.

   4. உருண்டை வடிவான ஒருவகை ஏனம்; round vessel of medium size.

   5.பீரங்கிக் குண்டு; cannon ball bullet.

   6. உருண்டையான பொன்மணி; globular gold bead.

     “பொன்னின் பட்டைமேற் குண்டு வைத்த’ (S.I.I.ii.182);.

   7. கஞ்சா முதலிய மயக்கம் தரும் உருண்டை; bolus of bhang or other narcotic drug.

   8. விலங்குகளின் விதை; testicle of beasts.

   9. ஆண்குதிரை (சூடா.);; stallion, adult male horse.

   10. காதர்ப்பசந்து என்னும் மாவகை; a kidney shaped graft mango.

   ம. குண்டு;   க. குண்டு, குண்ட;   தெ., து., பட.குண்டு;கோத. குண்ட்கல் (உருண்டையான கல்);.

{Mar. guņợa}

     [குள் → குண்டு.]

குண்டூசி, குண்டுச்சம்பா, குண்டுமல்லிகை என்பவற்றில் குண்டு என்னுஞ் சொல் உருட்சி பற்றியது. உருட்சிக் கருத்தும், திரட்சிக் கருத்தை தோற்றுவிக்கு மாதலால், குண்டு, குண்டன், குண்டை, குண்டாந்தடி, குண்டடியன், குண்டுக்கழுதை என்பவற்றை வளைவுக் கருத்து வேரடிப் பிறந்தனவாகவும் கொள்ள இடமுண்டு (வே.க. 157);.

 குண்டு2 kuṇṭu, பெ.(n.)

   1.ஆழம்; depth.

     “வண்டுண மலர்ந்த குண்டுநீரிசிலஞ்” (மணிமே.8:8);.

   2. தாழ்வு (சூடா.);; sinking in, hollow, Iowness.

   3. சிறுசெய் (S.I.I.III, 105);; a small field.

   4. 1089 சதுர அடியுள்ள ஒரு நிலவளவு; a land measure = 1089 sq. ft. = 1/ 40 acre (R.F.);.

   5. குளம் (சங்.அக.);; pool, pond.

   6. உரக்குழி; manure-pit.

   7.நீர்நிறைந்த கிடங்கு; ditch, trench.

   8.கிடங்கு; ware house,storehouse.

   ம. குண்டு;   க. குண்டி, குண்டெ;   தெ. குண்ட, குண்ட;   து. குண்ட, கொண்ட;   குட. குண்டி;   படகுண்டி;   பர். குட்ட;கோண். குண்ட.

{Skt. kundam}

     [குள் → குண்டு.]

குண்டு தலையணை

 குண்டு தலையணை kuṇṭudalaiyaṇai, பெ.(n.)

   வட்டத் தலையணை; small round pillow.

     [குண்டு + தலையணை.]

குண்டு தைரியம்

 குண்டு தைரியம் kuṇṭudairiyam, பெ.(n.)

   முரட்டுத் துணிவு; rash courage, fool hardiness.

     [குண்டு + தைரியம்.]

குண்டு மாலை

 குண்டு மாலை kuṇṭumālai, பெ.(n.)

   மணி யாலமைந்த கழுத்தணி வகை(இ.வ.);; necklace of beads.

     [குண்டு + மாலை.]

குண்டுகட்பாலியாதனார்

குண்டுகட்பாலியாதனார்  kuṇṭukaṭpāliyātaṉār, பெ.(n.)

கழகக் காலப் புலவர்; a Šangam poet. –

     [குண்டுகண்+பாலி+ஆதனார்]

இவர் இயற்பெயர் ஆதன். ஊர் பாலி. ஆழ்ந்த கண் உடையவராதலால் குண்டுகனென்று அடைமொழி கொடுக்கப்பட்டார் போலும். இவர்

சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதனைப் பாடிப் பரிசில் பெற்றவர். இவர் பாடியதாக புறநானூற்றில் (387); ஒரு பாடலும், நற்றிணையில் (220); ஒரு பாடலும் காணப்படுகின்றன (அபி.சிந்);.

குண்டுக்கட்டாக

 குண்டுக்கட்டாக kuṇṭukkaṭṭāka, வி.அ. (adv.)

கழுத்தையும், காலையும் ஒன்று சேர்த்துப் பந்து போல் சுருட்டி; bundling someone up. அவனைக் குண்டுக்கட்டாகத் துரக்கிக் கொண்டு போய் விட்டார்கள்.

     [குண்டு+கட்டாக]

குண்டுக்கட்டு

குண்டுக்கட்டு kuṇṭukkaṭṭu, பெ.(n.)

   1. திரளச் சேர்த்துக் கட்டுங்கட்டு; tying anything en masse.

   2. ஒருவனுடைய கழுத்தையும் காலையும் ஒன்று சேர்த்துத் திரளாகக்ந் கட்டும் கட்டு; binding one’s neck and heels and forcing him into a position like a ball.

     [குண்டு + கட்டு.]

குண்டுக்கட்டு விளக்கு

 குண்டுக்கட்டு விளக்கு kuṇṭukkaṭṭuviḷakku, பெ.(n.)

   சொட்டுச்சொட்டாக எண்ணெய் திரியில் விழுமாறு குண்டு உள்ள விளக்கு; a kind of lamp which has a driping oil bowl.

     [குண்டு + கட்டு + விளக்கு.]

     [P]

குண்டுக்கட்டு விளக்கு

குண்டுக்கட்டை

 குண்டுக்கட்டை kuṇṭukkaṭṭai, பெ.(n.)

   பிளக்காத உருண்டை விறகு; unhewn or unsplit pieces of wood.

     [குண்டு + கட்டை.]

குண்டுக்கயம்

குண்டுக்கயம் kuṇṭukkayam, பெ.(n.)

   ஆழமான நீர்நிலை; deep-pond.

     “விழுந்தோர் மாய்க்குங் குண்டு கயத்து அருகா”(மலை.220);.

     [குண்டு + கயம்.]

குண்டுக்கலம்

குண்டுக்கலம் kuṇṭukkalam, பெ.(n.)

   24 மரக்கால் கொண்ட அளவு(C.G.);; a standard measure of capacity = 24 {marakkal} (G.);.

     [குண்டு + கலம்.]

குண்டுக்கல்

குண்டுக்கல் kuṇṭukkal, பெ.(n.)

   1.வேலை செய்து செப்பனிடப்படாத கல்; unshaped or undressed stone, rubble.

   2. துலைகோலின் நிறைகல்; weights of a balance.

     [குண்டு + கல்.]

குண்டுக்கழுதை

 குண்டுக்கழுதை  kuṇṭukkaḻutai, பெ.(n.)

ஆண் கழுதை, he-ass (சா.அக.);.

 குண்டுக்கழுதை kuṇṭukkaḻudai, பெ.(n.)

   ஆண் கழுதை (பஞ்சதந்.);; he-ass.

     [குண்டு + கழுதை.]

குண்டுக்காயம்

 குண்டுக்காயம்  kuṇṭukkāyam, பெ.(n.)

வெடி குண்டு பட்டதனால் உண்டான புண், gun-shot wound (சா.அக.);.

     [குண்டு+காயம்]

 குண்டுக்காயம் kuṇṭukkāyam, பெ.(n.)

   துப்பாக்கிக் குண்டு பட்டதனால் உண்டான புண்; gunshot wound.

     [குண்டு + காயம்.]

குண்டுக்காளை

 குண்டுக்காளை kuṇṭukkāḷai, பெ.(n.)

   பொலி யெருது; bull.

     [குண்டு + காளை.]

குண்டுக்கிராமம்

குண்டுக்கிராமம் kuṇṭukkirāmam, பெ.(n.)

   1690 ஆம் ஆண்டில் கடலூரிலுள்ள புனித டேவிட் கோட்டையிலிருந்து சுடப்பெற்ற குண்டு விழுந்த தொலைவிற்கு உட்பட்டவையும், மராட்டிய களால் கம்பெனியார்க்கு விற்கப்பட்டவையுமான 11 சிற்றூர்கள் (G.S.A. 143);; villages, 11 in number included within random shot of a brass gun fired from Ft. St. David at Cuddalore in 1690, and forming the territory sold to the East Indian Company by the Maharastras.

     [குண்டு + கிராமம்.]

குண்டுக்குதிரை

 குண்டுக்குதிரை kuṇṭukkudirai, பெ.(n.)

   ஆண்குதிரை; stallion, adult male horse.

     [குண்டு + குதிரை.]

குண்டுக்குழல்

 குண்டுக்குழல் kuṇṭukkuḻl, பெ.(n.)

குண்டுக் குழாய் பார்க்க;see {kungu-k-kusal}

     [குண்டு + குழல்.]

குண்டுக்குழாய்

 குண்டுக்குழாய் kuṇṭukkuḻāy, பெ.(n.)

   ஒருவகைத் துப்பாக்கி; small cannon, blunderbuss.

     [குண்டு + குழாய்.]

குண்டுக்கெம்பு

 குண்டுக்கெம்பு kuṇṭukkembu, பெ.(n.)

குச்சுக் கெம்பு (C.G.); பார்க்க;see {kuccu-k-kembu.}

     [குண்டு + கெம்பு.]

குண்டுங் குழியுமாய்

 குண்டுங் குழியுமாய் kuṇṭuṅguḻiyumāy,    மேடும் பள்ளமுமாய்; uneven.

     [குண்டும் + குழியும் + ஆய்.]

குண்டுசட்டி

குண்டுசட்டி kuṇṭusaṭṭi, பெ.(n.)

   உருண்டையான சட்டிவகை; round earthen vessel.

     “கூனையும் குடமும் குண்டு சட்டியும்” (தனிப்பா.I 169,20);.

     [குண்டு + சட்டி.]

குண்டு சட்டியில் குதிரை ஒட்டுதல் என்பது ஒரே வகையான பணி செய்தல் எனப் பொருள் தரும் பழமொழி. மிகவும் பருமனாக இருப்பவனை குண்டுசட்டி என்பது நகையாட்டுக் குறிப்புமொழி. குண்டுசட்டியில் கரணம் போடுகிறான் என்பது இயலாமையைக் காட்டும் இகழ்வு.

குண்டுசாலை

 குண்டுசாலை kuṇṭucālai, பெ.(n.)

   பெருநகரின் எல்லை; boundary of a principal town.

     [குண்டு + சாலை.]

குண்டுசொக்காய்

குண்டுசொக்காய் kuṇṭusokkāy, பெ.(n.)

   ஒருவகைச் சட்டை; a kind of jacket

     “குண்டு சொக்காய் தந்தான்”(விறலிவிடு.113);.

     [குண்டு + சொக்காய்.]

குண்டுச்சட்டி

 குண்டுச்சட்டி  kuṇṭuccaṭṭi, பெ.(n.)

உருண்டை வடிவச் சட்டி வகை (பாத்திரம்);; a small round bottomed vessel. குண்டுச்சட்டிக்குள் குதிரை ஒட்டுவது போல!

     [குண்டு+சட்டி.]

குண்டுச்சம்பா

 குண்டுச்சம்பா kuṇṭuccambā, பெ.(n.)

   ஆறு மாதத்தில் விளையும் சம்பாநெல் வகை; a kind of {camba} paddy that matures in six months.

     [குண்டு + சம்பா.]

குண்டுச்சுழி

 குண்டுச்சுழி kuṇṭuccuḻi, பெ.(n.)

   உயிர்மெய் யெழுத்துகளின் கொம்பில் வளைக்கும் சுழி; the circular portion of kombu which forms part of the symbols of certain vowel-consonants, as in கெ, கோ etc.

     [குண்டு + சுழி.]

குண்டுச்சூளை

 குண்டுச்சூளை kuṇṭuccūḷai, பெ.(n.)

   வட்டமாக அமைக்கப்படும் காளவாய் (இ.வ.);; circle kin.

     [குண்டு + சூளை.]

குண்டுணி

குண்டுணி kuṇṭuṇi, பெ.(n.)

   1. கலகமூட்டுகை; inciting, instigating to a quarrel.

   2. கோட்சொல்; slander, calumny.

   3. கோட் சொல்லுவோன்; tale bearer.

     “யாரோடுங் குண்டுணியாய்த் திரிய வேண்டாம் (உலக.);.

     [குண்டு + குண்டுணி.]

குண்டுண்ணுதல் = ஒருவனை ஏதேனும் ஒரு நோக்கத்திற்காக அடிக்கடி அணுகி வளைய வளைய வந்து நயப்புறுத்துதல். குண்டுணிச் செயலில் ஈடுபட்டுப் பிறரை வயப்படுத்துபவன் குண்டுணி.

குண்டுநீர்

குண்டுநீர் kuṇṭunīr, பெ.(n.)

   கடல்; the sea, as being deep.

     “குண்டுநீர் வையத்து”(நாலடி.94);.

     [குண்டு + நீர்.]

குண்டுநூல்

 குண்டுநூல் kuṇṭunūl, பெ.(n.)

   நுனியில் ஈயக்குண்டு கட்டப்பட்டிருக்கும் அளவுநூற் கயிறு; plumb line used by masons.

ம. குண்டுநூலு:க. குண்டு.

     [குண்டு + நூல்.]

     [P]

குண்டுநூல்

குண்டுனிநாரதர்

 குண்டுனிநாரதர் kuṇṭuṉināradar, பெ.(n.)

   கோட் சொல்லிக் கலக மூட்டுபவன்; lit {Narada,} the talabearer. Talebearere, instigator of quarrels (கொ.வ.);.

     [குண்டுணி + நாரதர்.]

குண்டுபடு-தல்

குண்டுபடு-தல் kuṇḍubaḍudal,    20 செ.கு.வி.(v.i.)

   வெடிகுண்டால் தாக்கப்படுதல்; to be shot, to be wounded with bullet.

குண்டுபட்டுச் செத்தான் (உ.வ.);.

     [குண்டு + படு.]

குண்டுபாய்-தல்

குண்டுபாய்-தல் kuṇṭupāytal,    2 செ.கு.வி.(v.i.)

   ஆழம்படுதல்; to become hollow.

முள்ளுக்குத்திய இடம் குண்டு பாய்ந்து விட்டது (கொ.வ.);.

     [குண்டு + பாய்.]

குண்டுபோடு-தல்

குண்டுபோடு-தல் kuṇṭupōṭudal,    20 செ.கு.வி. (v.i.)

   1. அரசில் உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் வரும். நேரத்திலும், பிற சிறப்பு நேர்வுகளிலும் மரியாதையின் பொருட்டு வெடிபோதல்; to fire a salute as a sign of honor to distinguished persons etc.

   2. காலத்தை உணர்த்துவதற்காக வெடிபோடுதல்; to mark the time of day by gun-fire.

   3. இறத்தல்; to die.

   4. தொழில், தேர்வு முதலி யவற்றில் தோல்வி யடைதல்; to fail, to be unsuccessful, as in an undertaking, examination etc.

     [குண்டு + போடு-.]

குண்டுப்பி

 குண்டுப்பி kuṇṭuppi, பெ.(n.)

   சிப்பிமுத்து; pearl of oysters (சா.அக.);.

     [குண்டு + இப்பி. இப்பி = சிப்பி.]

குண்டுப்பிணையல்

 குண்டுப்பிணையல் kuṇṭuppiṇaiyal, பெ.(n.)

   கீல்வகை(யாழ்ப்.);; a kind of hinge.

     [குண்டு + பிணையல்.]

குண்டுப்பூக்கொன்றை

குண்டுப்பூக்கொன்றை  kuṇṭuppūkkoṉṟai, பெ.(n.)

கொன்றை வகை; sulphur flowered senna – Cassia glauca (செ.அக.);.

     [குண்டு+பூ+கொன்றை]

 குண்டுப்பூக்கொன்றை1 kuṇṭuppūkkoṉṟai, பெ.(n.)

   வெள்ளைத் தகரை; sulphure flowered senna (சா.அக.);.

     [குண்டு + பூ + கொன்றை.]

 குண்டுப்பூக்கொன்றை2 kuṇṭuppūkkoṉṟai, பெ.(n.)

   கொன்றைவகை; sulphur-flowered senna.

     [குண்டு + பூ + கொன்றை.]

குண்டுமணி

 குண்டுமணி kuṇṭumaṇi, பெ.(n.)

குன்றிமணி பார்க்க;see {kut/imani}

     [குண்டு + மணி-.]

குண்டுமரக்கால்

குண்டுமரக்கால் kuṇṭumarakkāl, பெ.(n.)

   எட்டுப்படி கொண்ட அளவு (G.Th.D.I.238);; a grain measure of capacity 8 {padi.}

     [குண்டு + மரக்கால்.]

குண்டுமரம்

 குண்டுமரம் kuṇṭumaram, பெ.(n.)

   நெசவுத்தறியின் ஓர் ஒஉறுப்பு; lower half of the batten, the heavy round bottom piece of the batten of which the upperpartis the palakai, which gives it its force.

     [குண்டு + மரம்.]

குண்டுமருந்து

 குண்டுமருந்து kuṇṭumarundu, பெ.(n.)

   வெடி மருந்து; bullet and powder, Gun powder.

     [குண்டு + மருந்து.]

குண்டுமல்லி

 குண்டுமல்லி  kuṇṭumalli, பெ.(n.)

அதிக இதழ்களைக் கொண்ட, பெரிய அளவுடைய மல்லிகை வகை; arabian jasmine.

     [குண்டு+மல்லி]

குண்டுமல்லிகை

 குண்டுமல்லிகை guṇṭumalligai, பெ.(n.)

   குடமல்லைகை (மூ.அ.);;{tuscah} jasmine.

மறுவ. குடமல்லிகை

     [குண்டு + மல்லிகை.]

குண்டுமாணிக்கம்

 குண்டுமாணிக்கம்  kuṇṭumāṇikkam, பெ.(n.)

தூம்புர வாலி; safflower-Carthamus tinctorius (சா.அக.);.

     [குண்டு+மாணிக்கம்.]

குண்டுமாற்றுக்குழிமாற்று

குண்டுமாற்றுக்குழிமாற்று kuṇṭumāṟṟukkuḻimāṟṟu, பெ.(n.)

   1. பெண்ணைக் கொடுத்துப்பெண் எடுக்கை; exchange between families, of daughters in marriage.

   2. ஏமாற்றுக் காரியம்; deceitful action.

     [குண்டுமாற்று + குழிமாற்று.]

குண்டுமிளகாய்

 குண்டுமிளகாய்  kuṇṭumiḷakāy, பெ.(n.)

குட மிளகாய்; bell-pepper – Capsicum grosum (சா.அக.);.

     [குண்டு+மிளகாய்.]

குண்டும்குழியும்

 குண்டும்குழியும்  kuṇṭumkuḻiyum, பெ.(n.)

சிறு பள்ளங்கள்; potholes, சாலை குண்டும் குழியுமாக இருக்கிறது. குண்டும் குழியுமான பாதை.

     [குண்டும்+குழியும்.]

குண்டுரம்

 குண்டுரம் kuṇṭuram, பெ.(n.)

   குழியிற் சேர்த்து வைக்கும் சாணம் முதலிய உரம்; manure of cowdung etc., as stored in a pit.

     [குள் + குழி → குண்டு + உரம்.]

குண்டுருட்டாய்க் கட்டு-தல்

குண்டுருட்டாய்க் கட்டு-தல் kuṇṭuruṭṭāykkaṭṭudal,    5 செ.குன்றாவி.(v.t.)

   1. திரளச் சேர்த்துக் கட்டுதல்; to tie anything enmasse.

   2. ஒருவனுடைய தலை கால்களை ஒன்று சேர்த்துத் திரளக் கட்டுதல்; to tie up head to heel, as rolling one into a ball.

     [குண்டு + உருட்டாய் + கட்டு.]

குண்டுரோசனை

 குண்டுரோசனை  kuṇṭurōcaṉai, பெ.(n.)

நறுமணமும், உருண்டை வடிவுமுள்ள ஒருவகை மருந்துக் கிழங்கு (மலை.);; an odoriferous root growing in circular masses (செ.அக.);.

குண்டுர்க்கூற்றம்

 குண்டுர்க்கூற்றம்  kuṇṭurkāṟṟam, பெ.(n.)

சேரநாட்டின் ஒரு பகுதி: one of the parts of Šēra-nādu (அபி.சிந்.);.

     [குண்டுர்+கூற்றம்]

குண்டுலகரம்

 குண்டுலகரம் guṇṭulagaram, பெ.(n.)

   கழித்து தொடங்குவதாகிய பொதுலகரம் (இ.வ.);; the Tam letter ‘ல’ as beginning with a loop.

     [குண்டு + லகரம்.]

குண்டுவட்டில்

 குண்டுவட்டில் kuṇṭuvaṭṭil, பெ.(n.)

   உட்குழிந்தவட்டில்; a hollow dish.

     [குண்டு + வட்டில்.]

குண்டூசி

 குண்டூசி kuṇṭūci, பெ.(n.)

தலைதிரண்டுள்ள ஊசி pin.

   ம. குண்டூசி;   க. குண்டு சூசி;தெ. குண்டு சூதி.

     [குண்டு + ஊசி.]

குண்டெறிதல்

 குண்டெறிதல்  kuṇṭeṟital, தொ.பெ.(vbl.n.)

மாழையிலான குண்டை எறியும் விளையாட்டுப் போட்டி: shotput.

     [குண்டு+எறிதல்.]

குண்டெழுத்தாணி

 குண்டெழுத்தாணி kuṇṭeḻuttāṇi, பெ.(n.)

   தலை பக்கம் திரண்டுள்ள எழுத்தாணிவகை; style wit knob at the top.

     [குண்டு + எழுத்தாணி.]

குண்டெழுத்து

 குண்டெழுத்து kuṇṭeḻuttu, பெ.(n.)

   திரண்டு தடித்த எழுத்து; bold round hand.

     [குண்டு + எழுத்து]

குண்டேந்தி

 குண்டேந்தி  kuṇṭēnti, பெ.(n.)

மலைதாங்கி; wound plant-Sida carpinifolia (செ.அக.);.

     [குண்டு+ஏந்தி]

குண்டேறு

 குண்டேறு kuṇṭēṟu, பெ.(n.)

   மீன்வகை; a kind & fish.

     [குண்டு + ஏறு.]

குண்டை

குண்டை1 kuṇṭai, பெ.(n.)

   1. எருது; bull.

     “வைய பூண்கல்லா சிறுகுண்டை” (நாலடி;350);

   2. இடபவோரை (பிங்.);; taurus a sign of th zodiac.

   3. குறுகித்தடித்தது; that which is sho and stout.

     “குண்டைக் குறட்பூதம்”(தேவா.944:);

   4. குறுமை; shortness.

     “குண்டைக் கோட்குறுமுட் கள்ளி” (அகநா.184);.

ம. குண்ட

     [குள் → குண்டு → குண்டை.]

 குண்டை2 kuṇṭai, பெ.(n.)

   சட்டி(யாழ்.அக.);; ear the pot.

     [குண்டு→ குண்டை.]

குண்டைச்சம்பா

 குண்டைச்சம்பா kuṇṭaiccambā, பெ.(n.)

   சம்பா நெல்வகை(வின்..);; a kind of {cambāpaddy}

     [குண்டை + சம்பா.]

குண்டைத்துக்கிப்போடு-தல்

குண்டைத்துக்கிப்போடு-தல்  kuṇṭaittukkippōṭutal,    20 செ.கு.வி.(v.i.)

அதிர்ச்சி தரும் செய்தியைக் கூறுதல்; disclose a shocking news; drop a bombshell. வேலையை விட்டு விட்டேன் என்று ஒரு குண்டைத்துக்கிப் போட்டான்.

     [குண்டை+தூக்கி+போடு-தல்.]

குண்டையம்

 குண்டையம் kuṇṭaiyam, பெ.(n.)

   பிட்டு செ சுறாமீன்; shark fish.

     [குண்டு → குண்டையம்.]

குண்டோசனை

 குண்டோசனை  kuṇṭōcaṉai, பெ.(n.)

குண்டுரோசனை பார்க்க; see kundu-rõšanai (செ.அக.);.

குண்டோதரன்

குண்டோதரன் kuṇṭōtaraṉ, பெ.(n.)

   1. பெருவயிறு குறுவடிவம் உடையனான சிவகணத்தவருள் ஒருவன்; a short gluttonous goblin in the hos – Siva, having a capacioush round be

     “குண்டோதரனெனு நாமப் பூண்டு”(திருவால 4:22);.

   2. பெருந்தீனிக் காரன்; a stout big-bel=: glutton.

     [குண்டு + உதரன் – குண்டோதரன்.]

குண்டோதினி

 குண்டோதினி  kuṇṭōtiṉi, பெ.(n.)

நிறைந்த மடியுள்ள மாடு; a cow with a full udder (சா.அக.);.

குண்ணம்

 குண்ணம்  kuṇṇam, பெ.(n.)

பெருமருது: Indian birth wort – Aristolochia indica (சா.அக.);.

     [குண் – குண்ணம்]

குண்ணவாடை

 குண்ணவாடை kuṇṇavāṭai, பெ.(n.)

   வடகீழக்கு காற்று; north-east wind.

குண்ணவாடை கூனாலும் கூட்டும், கலைத்தாலும் கலைக்கும் (இ.வ.);

     [குண்ணம் குணக்கு = கிழக்கு + வாடை.]

குண்ணி

 குண்ணி kuṇṇi, பெ.(n.)

   குன்றிமணி; crab’s eye. jeweller’s bead (சா.அக.);.

     [குள் → குண்ணி.]

குண்ணிச்செடிச்சி

 குண்ணிச்செடிச்சி  kuṇṇicceṭicci, பெ.(n.)

தொழு கண்ணி; a medicinal plant – Hedysarum gyrans (சா.அக.);.

     [குண்ணி+செடிச்சி]

குண்ணியம்

 குண்ணியம் kuṇṇiyam, பெ.(n.)

பெருக்கப்படும் என multiplicand.

     [குள் →குண்ணி → குண்ணியம்.]

குண்ணுவர்

 குண்ணுவர்  kuṇṇuvar, பெ.(n.)

தாராபுரம், காங்கேயம், பழனிமலை முதலிய இடங்களில் பயிரிடும் குடிமக்கள்; the peasents who cultivate in Tarapuram, Kangeyam, Palani-malai

     [குண் – குண்னுவா.]

இவர்கள் தங்களை வேளாளர் என்பர். கோயம்புத்துார் மாவட்டத்தில் உள்ள குண்னுரி லிருந்து வந்ததால் இப்பெயர் பெற்றனர். பெரிய குண்ணுவர், சிறிய குண்ணுவர் என இருவகை உண்டு (அபி.சிந்);.

குதகீலம்

 குதகீலம் kudaālam, பெ.(n.)

   மூலநோய்; piles hemorrhoids.

     [குதம் + கீலம்.]

குதக்கு-தல்

குதக்கு-தல் kudakkudal,    5 செ.குன்றாவி.(v.t.)

   மெல்லுதல்; to turn about edibles in the mouth munch.

     [உதப்பு → குதப்பு → குதக்க.]

குதக்கேடு

குதக்கேடு1 kudakāṭu, பெ.(n.)

   மூலநோய்; piles

     [குதம் + கேடு.]

 குதக்கேடு2 kudakāṭu, பெ.(n.)

   சீர்கேடு (யாழ்.அக.);; ruin;degeneration.

     [குதை + குதம் + கேடு.]

குதட்டு-தல்

குதட்டு-தல் kudaṭṭudal,    5 செ.குன்றாவி.(v.t.)

   1.குதப்பு-தல் பார்க்க;see {kudapu-}

     “குமுதவாகுதட்டிப் பழங்கொடத்தை” (கல்லா49);.

   2. குழறிட் பேசுதல்; to babble, prattle

     “தீஞ்சொல்… குதட்டியே” (பெரியபு.கண்ணப்.22);.

     [குது → குதட்டு.]

குதண்டகம்

 குதண்டகம் gudaṇṭagam, பெ.(n.)

   ஆதொண்டை (சா.அக.);; thorny creeper.

     [குதண்டம் → குதண்டகம்.]

குதநாயகம்

 குதநாயகம் gudanāyagam, பெ.(n.)

   பெருமருந்து; Indian birth-wort (சா.அக.);.

     [குதம் + நாயகம்.]

குதநெகிழ்ச்சி

 குதநெகிழ்ச்சி gudanegiḻcci, பெ.(n.)

   அண்டு தள்ளுகை; prolapsus.

     [குதம் + நெகிழ்ச்சி.]

குதனம்

குதனம்  kutaṉam, பெ.(n.)

   1. அசட்டை, negligence, carelessness, slovenliness.

   2. துப்புரவின்மை; filthiness.

   3. திறமையின்மை; want of dexterity, clumsiness, awkwardness (செ.அக.);.

     [குது-குதனம்]

குதனாசனம்

 குதனாசனம்  kutaṉācaṉam, பெ.(n.)

பெருங்காய்ம்; asafoetida – Ferula aSafoetida (சா.அக.);.

குதனு

 குதனு kudaṉu, பெ.(n.)

   அழகில்லாத உடம்பு; body with disagreable appearance (சா.அக.);.

     [குதல் → குதலு.]

குதனை

 குதனை kudaṉai, பெ.(n.)

குதனைக்கேடு பார்க்க;see {kudañas-k-kédu.}

     [குதல் → குதனை.]

குதனைக்கேடு

குதனைக்கேடு kudaṉaikāṭu, பெ.(n.)

   1. புறக்கணிப்பு (அலட்சியப்போக்கு);; negligence, slovenliness.

   2. துப்புரவின்மை; filthiness.

   3. திறமையின்மை; want of dexteritty, clumsiness, awkwardness.

     [குதல் → குதனை + கேடு.]

குதபன்

குதபன் kudabaṉ, பெ.(n.)

   1. சூரியன்; Sun.

   2. தீ; fire (யாழ்.அக.);.

     [குல்(எரிதல்); → குதவன் → குதபன்.]

குதபம்

குதபம் kudabam, பெ.(n.)

   1. பதினைந்தாகப் பகுக்கப்பட்ட பகற்காலத்தின் எட்டாம் பாகம் (சங்.அக.);; midday, the eighth of the 15 divisions of the daytime.

   2. தருப்பை (மூ.அ.);; darbha grass.

     [குத்து → குத்துவம் → குத்துபம் → குதபம்(கொ.வ.);.]

குதபாகம்

 குதபாகம் kudapākam, பெ.(n.)

   குழந்தைகளுக்கு எருவாயில் ஏற்படும் சீழ்ஒழுக்கு; suppuration in the anal region of the child (சா.அக.);.

     [குதம் + பாகம்.]

குதப்பன்

குதப்பன் kudappaṉ, பெ.(n.)

   சவரியாற்செய்த தேய்ப்புக்கருவி (பெரிய.24);; coir brush.

     [குது + குதப்பன்.]

குதப்பியவுணவு

 குதப்பியவுணவு  kutappiyavuṇavu, பெ.(n.)

விழுங்குவதற்கு முன் உள்ள மென் உணவு; the food after mastication and just before deglutition – Alimentary bolus (சா.அக.);.

     [குதப்பிய+உணவு.]

குதப்பிரம்சம்

குதப்பிரம்சம் kudappiramcam, பெ.(n.)

   அண்டு தள்ளுகை (பைஷஜ.232);; prolapsus.

குதப்பு-தல்

குதப்பு-தல்  kutapputal,    5 செ.கு.வி. (v.i.)

   1. உள்ளாக மெல்லாமலே வாயை அசைத்தல்; eating with the lips close – Mumble.

   2. மெல்லுதல்; masticating.

   3. உதப்புதல்; chewing food to increase the saliva and prepare for swallowing and digestion; stuffing the mouth with food (சா.அக.);.

     [குது – குதப்பு]

 குதப்பு-தல் kudappudal,    5 செ.குன்றாவி.(v.t.)

   மெல்லுதல்; to turn about food in the mouth, munch.

     [உதப்பு → குதப்பு.]

குதப்பூரிகம்

 குதப்பூரிகம் gudappūrigam, பெ.(n.)

   சம்பு நாவல்; large fruit jaumoon (சா.அக.);.

     [குதுப்பு → குதுப்பூரி → குதுப்பூரிகம் → குதப்பூரிகம்.]

குதப்பை

குதப்பை kudappai, பெ.(n.)

   மலக்குடலின் உட்சவ்விலுண்டாகும் பை; sacciform muscous membrane of the rectum.

   2. குதப்பைப் பிணி; sacciform disease of the anus (சா.அக.);.

     [குது → குதுப்பு → குதப்பை.]

குதமகாயம்

 குதமகாயம்  kutamakāyam, பெ.(n.)

வெங்காயம்; onion (சா.அக.);.

குதமூலம்

 குதமூலம் kudamūlam, பெ.(n.)

   எருவாயில் உண்டாகும் முளைமூலம், இதனின்று சீழும் இரத்தமும் ஒழுகும்; small round tumour situates at the verge of anus and attended with the discharge of pus and blood (சா.அக.);.

     [குதம் + மூலம்.]

குதம்

குதம்1 kudam, பெ.(n.)

   வேள்வி; homa, oblation

     ‘குதஞ்செய்யு மங்கி’ (திருமந்.423);.

     [குத்து → குத்தும் → குதம்(தருப்பைப்யுல் கொண்டு செய்யும் வேள்வி.]

 குதம்2 kudam, பெ.(n.)

   தருப்பை (மலை.);; darba grass.

     [குத்து → குத்தம் → குதம்(குத்துப்யுல்);.]

 குதம்3 kudam, பெ.(n.)

   மலங்கழியும் வாயில்; anus.

     “இலிங்கத் தொருகா லைங்காற் குதத்தில்” (காசிக. இல்லொழுக். 19);.

தெ. குத்த

     [குல் (துளை); குத்து → குத்தம் → குதம்.]

 குதம்4 kudam, பெ.(n.)

தும்மல்,

 sneeze.

     “கோவின் குதமது நாசம்” ( செகராச. யாத்திரை.22: சங்.அக.);.

     [குது → குதம்.]

 குதம்5 kudam, பெ.(n.)

   வெங்காயம் (மலை.);; onion.

     [குது → குதம்.]

குதம்பு

குதம்பு1 kudambudal,    5 செ.குன்றாவி.(v.t.)

   1. துணியை நீரில் அலசுதல்; to wash cloth gently in water, causing splash.

   2. பனம்பழத்தின் தோலை அலசுதல்; to wash the fibre skin or other parts of palmyra fruit in order to get the pulp.

     [குது → குதும்பு → குதம்பு.]

 குதம்பு2 kudambudal,    15 செ.கு.வி.(v.i.)

   1. கொதித்தல்; to boil up, to bubble up, as boiling water.

   2. வெகுளியடைதல்; to get angry, furious.

     [குது → குதும்பு → குதம்பு.]

குதம்பேய்ச்சித்தர்

 குதம்பேய்ச்சித்தர்  kutampēyccittar, பெ.(n.)

பதினெண் சித்தர்களில் ஒருவர்; one of eighteen Šiddas.

     [குதம்பை+பேய்+சித்தர்]

குதம்பை

குதம்பை1 kudambai, பெ.(n.)

   1. காது பெருக்கு வதற்காக இடும் ஒலை, சீலை முதலியவற்றின் சுருள்; role of palmyra leaves or cloth worn in the earlobe to widen the perforation.

     “சீலைக் குதம்பை பொருகாது” (திவ்.பெரியாழ்.3.3:1);.

   2. காதணிவகை; A kind of ear-ring.

     “திருக்குதம்பை யொன்று பொன் இருகழஞ்சே எட்டு மஞ்சாடி” (Sl.l.II,143);.

   3.காதில் குதம்பை அணிந்த பெண்; lady wearing kudamba ear-sing.

     [குதம்பு → குதம்பை.]

 குதம்பை kudambai, பெ.(n.)

   பூடு வகை (யாழ்.அக.);;  a shrub.

   2. பெண்; women.

     [குடம்பு → குதம்பு → குதம்பை. குதம்பை = காதி குதம்பை அணிந்தவள்).]

குதம்பைச்சித்தர்

 குதம்பைச்சித்தர் kudambaicciddar, பெ.(n.)

   தம் பெயரால் ஒரு சிறு நூல் இயற்றிய ஒரு சித்தர்; a cittar, author of a small work named after him.

     [குதம்பை + சித்தர்.]

காதில் குதம்பை அணிந்த பெண்ணைக் குதம்பாய் என விளித்துப் பாடும் நூலியற்றியதால் குதம்பைச் சித்த எனப் பெயர் பெற்றார்.

குதயந்திரம்

 குதயந்திரம் kudayandiram, பெ.(n.)

   எருவாயைச் சோதிப்பதற்காகவும், கார மருந்திடவும் பயன்படும் ஒரு கருவி; an instrument containing two aper tures, one for seeing the interior of the rectum and the otherfor applying an alkali (சா.அக.);.

     [குதம் + சயந்திரம்.]

குதர்

குதர்1 kudardal,    4 செ.குன்றாவி.(v.t.)

   1. கோதி யெடுத்தல்; to peck, at, stroke.

     “சேவல்… மென்யூக்குதர் செம்மலூரன்” (திருக்கோ.369);

   2. அடியோடு எடுத்தல்; to lift up, as a stone, to throw up, as clouds on a furrow.

     “திண்கோட்டில் வண்ணப் புற்றங்குதர்ந்து” (திருக்கோ. 346);

   3. குதர்க்கவாதம் பண்ணுதல் (இனி.நாற்.12);; to al gue perwersly.

     [குது → குதர்.]

 குதர்2 kudar, பெ.(n.)

   பிரிவு; separation.

     [குது → குதர்.]

குதர்க்கக்காரன்

 குதர்க்கக்காரன் kudarkkakkāraṉ, பெ.(n.)

   வேண்டுமென்றே வழக்காடுபவன்; frivolous disputant, sophist;disputatious person.

     [குதர்க்கம் + காரன்.]

குதர்க்கம்

குதர்க்கம் kudarkkam, பெ.(n.)

   1.வேண்டுமென்றே புரியும் வழக்கு; fallacious, captious argument, sophistry.

     “கோதுறுங் குதர்க்க மென்றே கோர விரவாளி”(பிரபோத.34,22);.

   2. குந்தகம்; impedment in business, embarrassment.

     [குது → குதுர் → குதுர்க்கம் → குதர்க்கம்.]

குதர்க்கி

 குதர்க்கி kudarkki, பெ.(n.)

   வீண்பேச்சு பேசுபவன்; frivolous disputant, sophist.

     [குதர்க்கம் → குதர்க்கம்.]

குதர்செல்(லு)-தல்

குதர்செல்(லு)-தல் kudarcelludal,    13 செ.கு.வி.(v.i.)

   நெறிதவறிச் செல்லுதல்; to deviate from the right Course. miss the way.

     “குதர்சென்று கொள்ளாத கூர்மை” (இனி.நாற்.12);.

     [குது → குது → குதர் + சொல்.]

குதறாதி

 குதறாதி kudaṟādi, பெ.(n.)

   புளி; tamarind (சா.அக.);.

     [குதல் + ஆதி – குதலாதி → குதறாதி.]

குதறு

குதறு1 kudaṟudal,    5 செ.குன்றாவி.(v.t.)

   1. சிதறுதல்; to dig up and scatter, to tear up;

 to scratch up and scatter, as fowls, to spill out.

   2. கிண்டுதல்; to stirup, loosen, grubup, as earth about plants.

     [குதல் → குதறு.]

 குதறு2 kudaṟudal,    5 செ.கு.வி.(v.i)

   1. நெறி தவறுதல் (திவ்.திருவாய்.10.1:6.அரும்..);; to deviate from the right course, to go astray, to miss the way.

   2. புண் மிகுதல்; to be blistered, covered with sores.

   3. குலைதல்; to become loose, rough, daranged, dishevelled, as the hair, to be disturbed, inflamed;as the eyes (W.);.

     [குதல் → குதறு.]

குதற்கம்மல்

 குதற்கம்மல் kudaṟkammal, பெ.(n.)

   ஒரு வகைக் கண்ணோய்; an eye disease (சா.அக.);.

     [குத்தல் + கம்மல் – குத்தற்கம்மல் → குதற்கம்மல்.]

குதற்று

குதற்று kudaṟṟu, பெ.(n.)

   நெறிதவறுகை; missing the way, deviating from the right course.

     “குதற்று வல்லசுரர்கள் கூற்றம்”(திவ். திருவாய். 10,1:6);.

     [குதறு → குதற்று.]

குதலை

குதலை kudalai, பெ.(n.)

   மழலைச் சொல்; lisps prattle of children.

     “இதழ்குவித்துப் பணித்த குதலையுந் தெரியாது” (கல்லா.5);

   2.இனியமொழி; soft talk, pleasant speech, as of young girls.

     “குதலைச் செவ்வாய்க் குறுந்தொடி மகளிர்” (சிலப்.30:114);.

   3. அறிவில்லான் (திவா.);; simpleton ignorant fellow.

     [ஒருகா. குழறு → குதரு → குதலை.]

குதலைமை

குதலைமை kudalaimai, பெ.(n.)

   1. பொருள் விளங்காமை (திருக்கோ.140,உரை);; indistinctness as in child’s prattle.

   2. தளர்ச்சி; failure of strength. straitened circumstances.

     “குதலைமை தந்தைக்கட் டோன்றின்” (நாலடி.197);.

     [குமுறு → குதரு → குதலு → குதலை → குதலைமை.]

குதல்(லு)-தல்

குதல்(லு)-தல் kudalludal,    13 செ.குன்றாவி.(v.t.)

   1. குத்தல் ; to prick, pierce.

   2. சினத்தல்; to dig up and scatter.

     [குல் → குத்து → குதல்.]

குதவளையம்

 குதவளையம் kudavaḷaiyam, பெ.(n.)

   எருவாயைச் சுருக்கும் வண்ணம் வாய்ந்த வளையம்; circular or ring like muscles which close the external orifice ofthe anus (சா.அக.);.

     [குதம் → வளையம்.]

குதவாய்

 குதவாய் kudavāy, பெ.(n.)

   எருவாய்; anal orifice (சா.அக.);.

     [குதம் → வாய்.]

குதாங்குரம்

 குதாங்குரம் kutāṅguram, பெ.(n.)

   மூலமுளை; piles.

குதம் → அங்குரம்(முளை); – குதங்குரம் – குதாங்குரம் (கொ.வ.);]

குதாதோசம்

 குதாதோசம் kutātōcam, பெ.(n.)

   சித்தா மல்லி; short-tubed arabian jasmine – Jasminum sambuc (சா.அக.);.

குதானத்திகம்

 குதானத்திகம் kutāṉattikam, பெ.(n.)

   சம்பங்கி; champauk – Michelia Сһатраса (சா.அக.);.

குதானன்

 குதானன் kutāṉaṉ, பெ.(n.)

   தாளி; convolvulus creeper;american bindweed (சா.அக.);.

     [குத்து → குத்தன் → குத்தனன் → குதானன்.]

குதாம்

 குதாம் kutām, பெ.(n.)

   பொருட்களைப் பாதுகாத்து சேர்த்து வைக்கும் இடம்; godwon.

த.வ. பண்டகசாலை, கிடங்கு.

     [U.{} → த.குதாம்.]

குதாம்பு

குதாம்பு1 kutāmbu, பெ.(n.)

   பண்டசாலை; godown.

     [குடாம்பு → குடாம்பு → குதாம்பு.]

 குதாம்பு2 kutāmbu, பெ.(n.)

   அரிசி குத்தும் யந்திரசாலை; rice mill.

     [குத்து → குத்தாம்பு → குதாம்பு.]

குதாவடை

 குதாவடை kutāvaḍai, பெ.(n.)

குதாவிடை பார்க்க;see{ kudāvidai -}

     [குதாவிடை → குதாவடை.]

குதாவிடை

குதாவிடை kutāviḍai, பெ.(n.)

   1. அலங்கோலம்; embarrassment, dislocation in business.

     “காரியம் குதாவிடையாயிருக்கிறது” (ய.);.

   2. காலச் கணக்கம்; delay.

     [குதிரா + இடை – குதிராவிடை → குதாவிடை.]

குதி

குதி1 kudiddala,    4 செ.கு.வி.(v.i.)

   1. பாய்தல் (திவா.);; to jump, leap, spring, bound.

   2. நீர் முதலியன எழும்பிவிழுதல்; to splash, as water, to spurt out.

     “மலர் தேன் குதிக்க” (தஞ்சைவா.67);.

   3. கூத்தாடுதல்; to dance with joy, frolic.

   4. செருக்குக் கொள்ளுதல்; to be hautghy arrogant.

அதிகமாகக் குதிக்கிறான் (உ.வ.);.

     [குது → குதி.]

 குதி2 kudiddal,    4 செ.குன்றாவி.(v.t.)

   கடந்து விடுதல்; to leap over, overcome, escape from.

     “கூற்றங் குதித்தலுங் கைகூடும்” (குறள். 269);.

     [குது → குதி.]

 குதி3 kudi, பெ.(n.)

   1. குதிப்பு; jump, leap.

ஒரு குதி குதித்தான் (உ.வ.);.

   2. குதிங்கால்; heel of the foot.

     “குதிபந்தி னிரம்பு பேரெழில் வாய்ந்திடில்” (காசிக. மகளிர்.10);.

     [குது → குதி.]

 குதி4 kudi, பெ.(n.)

   முயற்சி (யாழ்.அக.);; endeavour.

     [குல் → குது → குதி.]

 குதி5 kudidal,    4 செ.குன்றாவி.(v.t.)

   காலைத் தளைதல்; to bind, as the legs of animals.

     [குல் → குத்து → குதி.]

குதிஇப்பூளை

குதிஇப்பூளை kudiippūḷai, பெ.(n.)

   சிறுதுளை பார்க்க;{seesirulula}

     “குரீஇப்பூளை குறு நறுங்கண்ணி”(குறிஞ்சிப்72);;

 wolly caper.

     [குரீஇ→பூளை.]

குதிகள்ளம்

 குதிகள்ளம்  kutikaḷḷam, பெ.(n.)

குதிப்பிளவை; boilor abscess on the heel (செ.அக.);.

     [குதி+கள்ளம்]

குதிகள்ளான்

 குதிகள்ளான் gudigaḷḷāṉ, பெ.(n.)

குதிக்கள்ளன் பார்க்க;see {kudo-k-kasan}

     [குதிக்கள்ளன் → குதிகள்ளான்.]

குதிகாலெலும்பு

 குதிகாலெலும்பு  kutikālelumpu, பெ.(n.)

குதிகால் உள்ளாக இருக்கும் எலும்பு; heel bone – Calcaneum; Oscalcis (சா.அக.);.

     [குதிகால்+எலும்பு]

குதிகால்

குதிகால்  kutikāl, பெ.(n.)

   1 உள்ளங்காலின் பின்பக்கம்; the hind most part of the foot.

   2. காற்குதி; heel of the foot (சா.அக.);.

     [குதி+கால்.]

குதிகால்வலி

குதிகால்வலி  kutikālvali, பெ.(n.)

   1. குதிகால் நோவு; pain in the heel – Talalgia.

   2. குதிகாலை அழுந்த வைக்கும் போது தோன்றும் வலி; pain caused by pressure on the heel – Painful heel (சா.அக.);.

     [குதிகால்+வலி]

குதிகால்வாதம்

குதிகால்வாதம்  kutikālvātam, பெ.(n.)

   1. குதிகால் ஊன்றுவதற்கு முடியாமல் இருக்கும் ஒரு நரம்பு தொடர்பான ஒரு நோய்; a disease of the heel rendering one unable to rest on the heel owing to excessive neuralgic pain – Pododynia.

   2. முன்னங்காலில் நின்று பிறகு குதிகாலை ஊன்ற முடியாமல் வலி கொள்ளும் நரம்பு நோய்; pain experienced in raising the toes and suddenly bringing the heels to this ground – Heel jar(சா.அக.);.

     [குதி+கால்+வாதம்]

குதிகால்வெடிப்பு

 குதிகால்வெடிப்பு  kutikālveṭippu, பெ.(n.)

குதிகாலில் ஏற்படும் பித்தம் அல்லது பணியினாற் காணும் வெடிப்பு; crack or fissure of thbeel arising from the bilious condition of the system or frost-bite (சா.அக.);.

     [குதிகால்+வெடிப்பு]

குதிகாளான்

 குதிகாளான் kudikāḷāṉ, பெ.(n.)

   குதிக்காலி லுண்டாகும் காளானைப் போன்ற கழலை; a tumour in the heel resembling fungus (சா.அக.);.

     [குதிக்கால் → குதிகாளன்.]

குதிகொள்(ளு)-தல்

குதிகொள்(ளு)-தல் gudigoḷḷudal,    6 செ.கு.வி.(v.i.)

   1. குதித்தல்; to jump.

   2. பெருகுதல்; to increase.

   3. பொலிவொடு விளங்குதல்; to be resplendent.

     [குத்து → குதி + கொள்.]

குதிக்கள்ளன்

 குதிக்கள்ளன் kudikkaḷḷaṉ, பெ.(n.)

   குதிப் பிளவை (M.L.);; boil or abscess on the heel.

     [குதி + கள்ளன்.]

குதிக்காலிசிவு

 குதிக்காலிசிவு kudikkālisivu, பெ.(n.)

   குதிகாலிற் காணும் இசிவு வலி; cramp in the heels (சா.அக.);.

     [குதிக்கால் + இசிவு.]

குதிக்காலூதை

 குதிக்காலூதை kudikkālūdai, பெ.(n.)

   ஊன்றுவதற்கு முடியாமல் நோய் கொள்ளும் ஓர் ஊதை நோய்; a disease which unable one to rest on the heel due to neurolgic pain (சா.அக.);.

     [குதிக்கால் + ஊதை(வாதம்);.]

குதிக்கால்

 குதிக்கால் kudikkāl, பெ.(n.)

குதிங்கால் பார்க்க;see {kudo-ri-kāl}

     [குதி + கால்.]

குதிக்கால் மேகப்புடை

 குதிக்கால் மேகப்புடை kudikkālmēkappuḍai, பெ.(n.)

   மேகத்தினால் குதிகால் எலும்பு வளர்ந்து பிதுங்கிக் காணல்; exostoses on the heal due to gonorrheal infection (சா.அக.);.

     [குதிக்கால் + மேகம் + புடை.]

குதிக்கால்வலி

குதிக்கால்வலி kudikkālvali, பெ.(n.)

   குதிக்கால் நோவு; pain in the heel.

   2. குதிக்கால் அழுந்த வைக்கும்போது தோன்றும் வலி; pain caused by pressure onthe heel (சா.அக.);.

     [குதிக்கால் + வலி.]

குதிக்கால்வாதம்

 குதிக்கால்வாதம் kudikkālvādam, பெ.(n.)

குதிக்காலூதை பார்க்க;see {kudo-k-kas-uda}

     [குதிக்கால் + வாதம்.]

குதிக்கால்விரணம்

 குதிக்கால்விரணம் kudikkālviraṇam, பெ.(n.)

   குதிக்காலிற் காணும் புண்; ulcertation of the heel (சா.அக.);.

     [குதிக்கால் + விரணம்.]

குதிக்கால்வெடிப்பு

 குதிக்கால்வெடிப்பு kudikkālveḍippu, பெ.(n.)

   குதிகாலிற் பித்தம் அல்லது பனியினாற் காணும் வெடிப்பு; crack of the heel due to bilious condition or frost-bite (சா.அக.);.

     [குதிகால் + வெடிப்பு.]

குதிக்கால்வெட்டி

 குதிக்கால்வெட்டி kudikkālveṭṭi, பெ.(n.)

   ஏமாற்றுக்காரன்; cheat, deceiver (நெல்லை.);.

     [குதி + கால் + வெட்டி.]

குதிங்காற்சிப்பி

 குதிங்காற்சிப்பி kudiṅgāṟcippi, பெ.(n.)

   குதிக்கா வெலும்பு; heel bone.

     [குதி + கால் =குதிக்கால் → குதிங்கல் + சிப்பி.]

குதிங்கால்

 குதிங்கால் kudiṅgāl, பெ.(n.)

   உள்ளங்காலின் பின்பகுதி; heel of the foot.

     [குதி + கால் = குதிக்கால்→ குதிங்கால்.]

குதிங்கால்வெட்டி

 குதிங்கால்வெட்டி kutiṅkālveṭṭi, பெ.(n.)

ஏமாற்றுக்காரன்; cheet, deceiver (செ.அக.);.

     [குதிகால்+வெட்டி]

குதிச்சந்து

 குதிச்சந்து kudiccandu, பெ.(n.)

   உடலில் நாடி இயங்கும் பத்து இடங்களுள் ஒன்று; one of the ten places in the human body slected for feeling the pulsation (சா.அக.);.

     [குதி + சந்து.]

குதிப்பணிகம்

 குதிப்பணிகம் gudippaṇigam, பெ.(n.)

   பலாவினிச் செடி அல்லது பலா வீழி; an unidentified plant (சா.அக.);.

     [குதி + பணிகம்.]

குதிப்பிளவை

 குதிப்பிளவை kudippiḷavai, பெ.(n.)

   குதிக்காலில் உண்டாகும் புற்றுநோய்; cancer of the heel (சா.அக.);.

     [குதி + பிளவை.]

குதிப்பு

குதிப்பு kudippu, பெ.(n.)

   1. குதிக்கை; leaping, jumping.

   2. கருவங்கொள்கை; haughtiness, arrogance.

   3. சுதும்பு என்னும் மீன்; milk-fish.

     [குதி → குதிப்பு.]

குதிப்புண்

 குதிப்புண் kudippuṇ, பெ.(n.)

   குதிக்காலில் வரும் புண், கட்டி பிளவை முதலியன; a common name for wound or sore abscess, ulceration carbuncle etc. of the heel (சா.அக.);.

     [குதி – பண்.]

குதிப்புற்று

 குதிப்புற்று kudippuṟṟu, பெ.(n.)

   குதிக்காலிற் காணும் புற்று; cancer of the heel (சா.அக.);.

     [குதி + புற்று.]

குதிமுள்

 குதிமுள் kudimuḷ, பெ.(n.)

   குதிரைமுள் ; spur.

     [குதி + முள்.]

குதியன்

குதியன் kudiyaṉ, பெ.(n.)

   1. குதிப்பு; jump.

   2. அதிமதி பண்ணுகை; ostentatious.

மறுவ. குதிப்பு.

     [குதி → குதியன்.]

குதியாணி

 குதியாணி kudiyāṇi, பெ.(n.)

   குதிக்காலில் உண்டாகும் புண்ணாணி; corn on the heel.

     [குதி + ஆணி.]

குதியைப்பாதி

 குதியைப்பாதி  kutiyaippāti, பெ.(n.)

வெட்டி வேர்; khus khus root-Andropogon muricatus (சா.அக.);.

குதியோடு-தல்

குதியோடு-தல்  kutiyōṭutal,    20 செ.கு.வி. (v.i.)

மகிழ்ச்சியைக் காட்டும் வகையில் துள்ளிக் குதித்தல்; jumb about; frolic.

உன்னையும் கூட்டிக்கொண்டு போகிறேன்

என்றதும் குழந்தை குதி போட்டது. அவள்

இருக்கும் இடத்தில் குறும்பும் கும்மாளமும்

குதிபோடும்.

     [குதி+போடு-தல்.]

குதிரம்

குதிரம் kudiram, பெ.(n.)

   35 கழஞ்சளவுள்ள எரியணம் (கருப்பூரம்); (கணக்கதி.);;   35 {kalariu} of camphor.

     [குதி + குதிரம்.]

குதிரி

குதிரி kudiri, பெ.(n.)

   அடங்காதவன்; unruly, reftractory woman, virago.

     “குதிரியாய் மடலூர்துமே” (திவ்.திருவாய்.5,3,9);.

     [குதிரி → குதிரி.]

குதிரை

குதிரை1 kudirai, பெ.(n.)

   1. பரி; horse

     “குதிரை யுளாணினை” (தொல்.பொருள்.623);.

   2. கயிறு முறுக்கு கருவி; twisting, stick for making rope, timber-frame for twisting cable.

   3. யாழின் ஓர் உறுப்பு;   4. துப்பாக்கியின் உறுப்பு; cock of a gun, hammer in the lock of a fire-arm.

   5. குதிரைத் தறி பார்க்க;see {kudra-t-tari}

   6. பீப்பாய் முதலியன தாங்கும் சட்டம்; crate for casks.

   7. குதிரைமரம் பார்க்க;gymnastic horse-bar

   8. ஊர்க்குருவி (மூ.அ.);; sparrow.

   9. அதியமானுக்குரிய குதிரை மலை (புறநா.168);; a mountain which belonged to the ancient {atiyamän.}

க. குதுரே

     [குதி → குதிரை.]

 kudirei, ahorse, Can, kudur-e, probably from kudi, to leap. Comp Sans. {ghosa,} a horse. The Dravidian languages have borrowed {ghosa,} from Sans (in Tamil {göram, gódagam);,} said to be from ghus to retaliate;

 but kudirei is regarded as an underived, indigenous Dravidian word. It is possible, however, that the two words are ultimately related. (C.G.D.F.L. Pg.584);.

 குதிரை2 kudirai, பெ.(n.)

   நீர்ப்போக்கைத் திருப்புதற்காக அமைக்கும் மரத்தாலான தடுப்பு; a wooden contrivance to divert the course of water.

     “துங்கக்கரைக் குதிரை” (பெருந்தொ.1583);.

     [குதி → குதிரை.]

 குதிரை kudirai, பெ.(n.)

கைத்தறி நெசவில் பாவினைத் தாங்கிப்பிடிக்க உதவும் மூங்கில்

 softa device in handloom weaving.

     [குதிர்-குதிரை (குதிர் போன்றது);]

குதிரை நிலை

குதிரை நிலை  kutirainilai, பெ.(n.)

குதிரைகளைக் கட்டி வைக்கும் இடம் (இலாயம்); (சினேந்.174);; place where horses are kept, stable (செ.அக.);.

மறுவ. குதிரைக்கொட்டில்

     [குதிரை+நிலை.]

குதிரைகொடுத்தல்

 குதிரைகொடுத்தல்  kutiraikoṭuttal, பெ.(n.)

சிறுவர் விளையாட்டில் வென்றோரைத் தோற்றார் முதுகிற் சுமக்கை (யாழ்.அக.);; the penalty of the defeated person carrying the victor on his back, in children’s play (செ.அக.);.

     [குதிரை+கொடுத்தல்.]

 குதிரைகொடுத்தல் gudiraigoḍuddal, பெ.(n.)

   சிறுவர் விளையாட்டில் வென்றோரைத் தோற்றோர் முதுகிற் சுமக்கை; the penalty of the defeated person carrying the victor on his back, in children’s play (யாழ்.அக.);.

     [குதிரை + கொடுத்தல்.]

குதிரைகொல்லி

குதிரைகொல்லி  kutiraikolli, பெ.(n.)

   1. ஒருவகைப் புன்செய்ப் பயிர்; poor man’s horse-tail millet – Panicum verticillatum.

   2. கொடி வகை; purple wreath – Petracea volubilis (செ.அக.);.

மறுவ. குதிரைவாலி

     [குதிரை+கொல்லி]

குதிரைக்கயிறு

 குதிரைக்கயிறு kudiraikkayiṟu, பெ.(n.)

   குதிரை யின் வாய்வடம்; halter of a horse.

     [குதிரை+ கயிறு.]

குதிரைக்கலணை

 குதிரைக்கலணை kudiraikkalaṇai, பெ.(n.)

   குதிரைச் சேணம் (பிங்.);; horse-saddle.

     [குதிரை + கலணை.]

குதிரைக்கவிசனை

 குதிரைக்கவிசனை kudiraikkavisaṉai, பெ.(n.)

   குதிரையுடுப்பு (யாழ்.அக.);; accoutrements of a horse.

     [குதிரை + (கவி); கவிசனை.]

குதிரைக்காசு

குதிரைக்காசு kudiraikkācu, பெ.(n.)

   1. குதிசை யுருப் பதிக்கப் பெற்ற நாணயவகை; coin bearing the impression of a horse.

   2. குதிரைப் பவுன் பார்க்க;see {kudirai-p-pavus,}

     [குதிரை+ காசு.]

குதிரைக்காரன்

குதிரைக்காரன் kudiraikkāraṉ, பெ.(n.)

   1. குதிரையைப் பாதுகாப்போன்; horse-keeper, groom.

   2. குதிரை வைத்திருப்பவன்; a man who has horse or horses.

   3. குதிரைவீரன்; mounted warrior.

   4. திப்புசுல்தான் காலத்தில் கொள்ளை யடித்து வந்த குதிரைவீரன் (I.M.P..Tj.579); ; plundering trooper, cavalier of the time of Tippusultan.

க.,கு. துரெயவ, குதிரைகார.

     [குதிரை + காரன்.]

குதிரைக்காரன்கலகம்

 குதிரைக்காரன்கலகம் gudiraiggāraṉgalagam, பெ.(n.)

   ஐதல் முதலியோர் குதிரைப்படைகொண்டு அடித்த கொள்ளை; the cavalry raid of Haidar etc.

     [குதிரை + காரன் + கலகம்.]

குதிரைக்காற்கண்டுவாதம்

 குதிரைக்காற்கண்டுவாதம் kudiraikkāṟkaṇṭuvādam, பெ.(n.)

குதிரை வலி பார்க்க;see {kudirai Vasi,}

     [குதிரை + கால் + கண்டு + வாதம் (வலி);.]

குதிரைக்காலிரும்பு

 குதிரைக்காலிரும்பு kudiraikkālirumbu, பெ.(n.)

   தேய்ந்த பரட்டுப்பூண், லாடம்; worn out horse shoe (சா.அக.);.

     [குதிரை + கால் + இரும்பு.]

குதிரைக்காலூதை

 குதிரைக்காலூதை kudiraikkālūdai, பெ.(n.)

   குதி ஊதை, கால் ஊன்றமுடியாமல் வலிகாணும் ஒரு ஊதை; a disease which unable one to rest on the heel, owingto excessive pain (சா.அக.);.

குதிரைகாலூதை பார்க்க;see {kudrā-k-kā-sida}

     [குதிரைக்கால் + வாதம்.]

குதிரைக்கால்

 குதிரைக்கால் kudiraikkāl, பெ.(n.)

   சதுரவடிவ அமைப்பில் குதிரை வடிவம் பின்னங்கால்களில் நின்று முன்னங்கால்களை உயர்த்திய தோற்றமுடன் அமைக்கப்பட்ட தூண் (கம்.வழக்.);; kind of column.

     [குதிரை + கால்.]

குதிரைக்காவல்

 குதிரைக்காவல் kudiraikkāval, பெ.(n.)

   குதிரையைக் காத்தல்; tending horses.

ம.குதிரெகாவலு, குதிரெகாபு.

     [குதிரை + காவல்.]

குதிரைக்குளம்படி

குதிரைக்குளம்படி1 kudiraikkuḷambaḍi, பெ.(n.)

நீர்ச்சேம்பு (பதார்த்த.288); பார்க்க;arrow-head.

     [குதிரை + குளம்பு + அடி.]

 குதிரைக்குளம்படி2 kudiraikkuḷambaḍi, பெ.(n.)

   கொடி வகை; goat’s-foot creeper.

குதிரை + குளம்பு + அடி.]

குதிரைக்குளம்பன்

 குதிரைக்குளம்பன் kudiraikkuḷambaṉ, பெ.(n.)

   ஒருவகைப் பொற்காசு (யாழ்.அக.);; a kind of gold coin.

     [குதிரை + குளம்பன்.]

குதிரைக்குளம்பு

குதிரைக்குளம்பு kudiraikkuḷambu, பெ.(n.)

   1. குதிரையின் குரம்; horse’s hoof.

   2. குதிரைக் குளம்படி பார்க்க;see {kudira-k-kulambagi}

     [குதிரை + குளம்பு.]

குதிரைக்கொத்திவாலி

 குதிரைக்கொத்திவாலி kudiraikkoddivāli, பெ.(n.)

   தவசவகை; a kind of grain, penicum frumentaceum.

     [குதிரை + கொத்து + வலி.]

குதிரைக்கொல்லி

 குதிரைக்கொல்லி kudiraikkolli, பெ.(n.)

குதிரை வாலிப்பூ பார்க்க; see {kudrawā/od} purplewreath.

     [குதிரை + கொல்லி.]

குதிரைக்கோப்பு

 குதிரைக்கோப்பு kudiraikāppu, பெ.(n.)

   சேணம்; horse-trappings.

     [குதிரை + கோப்பு.]

குதிரைக்கௌசனை

 குதிரைக்கௌசனை kudiraikkausaṉai, பெ.(n.)

   குதிரைக்கு மேலிடும் அழகு போர்வை; horse-cloth, caparison.

     [குதிரை + கெளசனை.]

குதிரைசதை

 குதிரைசதை  kutiraicatai, பெ.(n.)

ஆடு சதை;தொங்கும் சதை; calf muscle.

     [குதிரை+சதை.]

குதிரைசத்தி

 குதிரைசத்தி  kutiraicatti, பெ.(n.)

ஓர் இயந்திரத்தின் இயங்கும் ஆற்றலை அளவிடப் பயன்படுத்தும் அலகு, a measurement used to estimate the power, called one horsepower, two horse power and so on (க்ரியா.);. [குதிரை+சத்தி]

குதிரைச் சேவகன்

குதிரைச் சேவகன் gudiraiccēvagaṉ, பெ.(n.)

   குதிரைவீரன்; cavalier,

     “குதிரைச் வேசகனாகிய கொள்கையும்” (திருவாச.2, வரி.45);.

     [குதிரை + சேவகன்.]

குதிரைச்சம்மட்டி

 குதிரைச்சம்மட்டி kudiraiccammaṭṭi, பெ.(n.)

   குதிரைச் சாட்டை; horse-whip.

     [குதிரை + சம்மட்டி. சவட்டு → சமட்டு → சம்மட்டு →சம்மட்டி.]

குதிரைச்சயம்

 குதிரைச்சயம் kudiraiccayam, பெ.(n.)

   குதிரைக்கு வரும் ஈளை நோய்; glanders, adisease of horses.

     [குதிரை + சயம்.]

குதிரைச்சவரன்

 குதிரைச்சவரன் kudiraiccavaraṉ, பெ.(n.)

குதிரைப்பவுன்பார்க்க;see {kudirappavபா.}

     [குதிரை + சவரன்.]

குதிரைச்சாணி

குதிரைச்சாணி kudiraiccāṇi, பெ.(n.)

   1. குதிரைக்காரன்; horse keeper.

   2. குதிரை மருத்துவன்; horse doctor.

     [குதிரை + சாணி.]

குதிரைச்சாரி

 குதிரைச்சாரி  kutiraiccāri, பெ.(n.)

குதிரையின் சுற்றியோடும் கதி; circuitous course of a horse (செ.அக.);.

குதிரைச்சாலி

 குதிரைச்சாலி kudiraiccāli, பெ.(n.)

   துயிலிக் கீரை; a kind of greens (சா.அக.);.

     [குதிரை + சாலி.]

குதிரைச்சீட்டு

 குதிரைச்சீட்டு kudiraiccīṭṭu, பெ.(n.)

   குதிரைப் பந்தயச் சீட்டு; lottery ticket in horse-races.

     [குதிரை + சீட்டு.]

குதிரைச்செட்டி

குதிரைச்செட்டி kudiraicceṭṭi, பெ.(n.)

   குதிரை வணிகன்; horse-dealer.

     “திரு முன்னின்றி

கூறுவான் குதிரைச்செட்டி” (திருவாலவா.28,62);.

     [குதிரை + செட்டி.]

குதிரைச்செவி

குதிரைச்செவி kudiraiccevi, பெ.(n.)

   1. குதிரைக் காதைப் போன்ற இலையுடைய ஒர் கள்ளி; a kind of spurge tree, the leaf of which resembles the horse’s ear.

   2. குங்கிலிய மரம்; indian dammer(சா.அக.);.

     [குதிரை + செவி.]

குதிரைச்சேவிதம்

 குதிரைச்சேவிதம் kudiraiccēvidam, பெ.(n.)

   சடைத்தும்பை; a kind of leucas (சா.அக.);.

     [குதிரை + சேவிதம்.]

குதிரைத்தறி

குதிரைத்தறி kudiraiddaṟi, பெ.(n.)

   நீருடைப்பை அடைத்தற்கு வைக்கோல் முதலியவற்றோடு நிறுத்தும் மரச்சட்டம்; wooden contrivance stuffed with grass and straw to close up a breach in an embankment.

     “படுங்குருதிக் கடும்புனலை யடைக்கப்பாய்ந்த பலகுதிரைத் தறிபோன்ற” (கலிங்.புது.463);.

     [குதிரை + தறி.]

குதிரைத்தறியனார்

 குதிரைத்தறியனார் kutiraittaṟiyaṉār, பெ.(n.)

ஒரு கடைக்கழகப்புலவர்; a poet,

 belonged to sangam era.

     [குதிரை+தறியனார்.]

இவர் பாலைத் திணையைப் பாராட்டிப் பாடியுள்ளார்.

குதிரைத்திறன்

 குதிரைத்திறன்  kutiraittiṟaṉ, பெ.(n.)

குதிரைசத்தி பார்கக்; see kutira-satti

     [குதிரை+திறன்]

குதிரைத்தேர்வு

குதிரைத்தேர்வு kudiraiddērvu, பெ.(n.)

   1. குதிரையேற்றம்; horse manship.

   2. குதிரையியல்பை யறிவும் விச்சை; science dealing with horses and its nature.

     [குதிரை + தேர்வு.]

குதிரைநடை

 குதிரைநடை kudirainaḍai, பெ.(n.)

   குதிரை யோட்டத்தின் விரைவுநிலை; pace of a horse.

மறுவ. குதிரைப்பாய்ச்சல்

     [குதிரை + நடை.]

குதிரைநம்பிரான்

 குதிரைநம்பிரான் kudirainambirāṉ, பெ.(n.)

   கோயில் ஊர்வலத்திருமேனி சுமக்கும் குதிரை ஊர்தி (வைணவ.);; wooden horse used as a vehicle for carrying idols.

     [குதிரை + நம் + (பெருமான்);பிரான்.]

குதிரைநோய்

குதிரைநோய் kudirainōy, பெ.(n.)

   1. குதிரைக்குக் காணும் நோய்; disease of horse of general.

   2. மனிதருக்குக் காணும் குதிரை நோய்; a mild form of glanders seen in man and contracted from horses (சா.அக.);.

     [குதிரை + நோய்.]

குதிரைப்கொம்பு

 குதிரைப்கொம்பு kudiraipkombu, பெ.(n.)

   கிடைத்தற்கரியது; anything non-existent or impossible of attainment, as a horse’s horn.

துன்பத்திற்குதவும் நண்பர்கள் குதிரைக் கொம்பானார்கள் (உ.வ.);.

க. குதுரெயகொம்பு

     [குதிரை + கொம்பு.]

உலகில் இல்லாதது. கிடைத்த கரியது எனும் பொருள் சுட்டியது.

குதிரைப்பசலை

 குதிரைப்பசலை kudiraippasalai, பெ.(n.)

   சாரணை வகை; a kind of spinach (சா.அக.);.

     [குதிரை + பசலை.]

குதிரைப்பசிரி

 குதிரைப்பசிரி kudiraippasiri, பெ.(n.)

   சாரணை வகை; dog milk greens.

     [குதிரை + பகிரி.]

குதிரைப்படை

 குதிரைப்படை kudiraippaḍai, பெ.(n.)

   நால்வகைப் படையுள் ஒன்று (சூடா.);; cavalry, as one of the fourfold division ofan army.

     [குதிரை + படை.]

குதிரைப்பட்டை

குதிரைப்பட்டை kudiraippaṭṭai, பெ.(n.)

   1. மேற்கூரை தாங்கும் கட்டை; beam placed underneath the roof of a house to support the tiles (இ.வ.);.

   2. கூரையின் ஓடு நழுவாமலிருக்கும்படி அடுக்கிய ஓட்டின் முகப்பில் பட்டையாகப் பூசப்படும் சாந்து; thick construction of lime at the edge of a tiled roof preventtiles from slipping.

     [குதிரை + பட்டை.]

குதிரைப்பந்தயம்

 குதிரைப்பந்தயம் kudiraippandayam, பெ.(n.)

   குதிரைகளை ஓடவிட்டு அதன்மேல் பணம் கட்டி விளையாடும் பந்தய விளையாட்டு; horse-race.

     [குதிரை + பந்தயம்.]

குதிரைப்பந்தி

குதிரைப்பந்தி kudiraippandi, பெ.(n.)

   1. குதிரை நிரை; row of horses.

   2. குதிரை கட்டும்கொட்டில் (லாயம்);; horse stable.

மறுவ. குதிரைநிரை

     [குதிரை + பந்தி.]

குதிரைப்பந்தித்தேவை

 குதிரைப்பந்தித்தேவை kudiraippandiddēvai, பெ.(n.)

   குதிரைகளைக் கட்டும் கொட்டில் பராமரிப்புக்காகப் பெறும் வரி (கல்.க.சொ.அ.க.);; a kind of tax.

     [குதிரை + பந்தி + தேவை.]

குதிரைப்பயிரி

 குதிரைப்பயிரி  kutiraippayiri, பெ.(n.)

பூடு (சாரணை); வகை; dog milk-grass – Trianthema crystallina (செ.அக.);.

     [குதிரை+பயிரி]

குதிரைப்பரிட்சை

 குதிரைப்பரிட்சை kudiraippariṭcai, பெ.(n.)

குதிரைத் தேர்வு பார்க்க;see {kudra-t-têrvu.}

     [குதிரை + பரிட்சை.]

குதிரைப்பற்செய்நஞ்சு

குதிரைப்பற்செய்நஞ்சு kudiraippaṟceynañju, பெ.(n.)

   கனிம செய்நஞ்சு வகை (மூ.அ.);; a mineral poison, one of 32.

     [குதிரை + பல் + செய் + நஞ்சு.]

குதிரைப்பற்பாடானம்

குதிரைப்பற்பாடானம்  kutiraippaṟpāṭāṉam, பெ.(n.)

பிறவி நஞ்சு வகை (மூ.அ.);; a mineral poison, one of 32 (செ.அக.);.

குதிரைப்பல்லன்

 குதிரைப்பல்லன் kudiraippallaṉ, பெ.(n.)

வெள்ளைப்பூண்டு (மூ.அ.); பார்க்க;garlic.

     [குதிரை + பல்லன்.]

குதிரைப்பல்லி

 குதிரைப்பல்லி kudiraippalli, பெ.(n.)

   பெரிய பல்லையுடைய பெண்; a woman having large teeth (சா.அக.);.

மறுவ. மாட்டுப்பல்

     [குதிரை + பல்லி.]

குதிரைப்பவுன்

 குதிரைப்பவுன் kudiraippavuṉ, பெ.(n.)

   குதிரை முத்திரை கொண்ட பொன்னாணயம்; sovereign bearing the stamp of a horse on one side.

     [குதிரை + பவுன.]

குதிரைப்பாடாணம்

 குதிரைப்பாடாணம் kudiraippāṭāṇam, பெ.(n.)

   குதிரைப்பற்பாடாணம் எனும் செய்நஞ்சு (வை.மூ.);; a mineral poison.

     [குதிரை + பாடாணம்.]

குதிரைப்பாய்ச்சல்

 குதிரைப்பாய்ச்சல் kudiraippāyccal, பெ.(n.)

   பாய்ந்து செல்லும் குதிரையின் கதி; gallop of a horse.

     [குதிரை + பாய்ச்சல்.]

குதிரைப்பால்

 குதிரைப்பால்  kutiraippāl, பெ.(n.)

குதிரையின் பால்; horse’s milk.

     [குதிரை+பால்.]

இது உடம்பிற்கு வலிமையை உண்டாக்கும். எளிதில் செரிக்கக் கூடியது. உடம்பிற்கு வெப்பமானது. சுவைக்கத் துவர்ப்பாய் இருக்கும் (சா.அக.);.

குதிரைப்பிடுக்கன்

 குதிரைப்பிடுக்கன் kudiraippiḍukkaṉ, பெ.(n.)

   பீநாறி மரம் (மூ.அ.);; field tree.

குதிரை+பிடுக்கள்)

குதிரைப்பிடுக்கு

குதிரைப்பிடுக்கு  kutiraippiṭukku, பெ.(n.)

குதிரைப் பிடுக்கன் என்னும் செடி, horse almond-Sterculia foetida.

     [குதிரை+பிடுக்கு.]

இதன் காய்கள் நீள நீளமாய்த் தொங்குவதால் பார்வைக்கு அழகாக இருக்கும். ஆகவே இது தோட்டம், அரண்மனை, சோலைகளில் வைத்து வளர்க்கப்படும். இம்மரத்தின் இலை வலிமையையும், வியர்வையையும் உண்டாக்கும். இதன் விதைகள் கறுப்பாயும், நீளமாயும் இருக்கும்.

இதன் பூ கெட்ட நாற்றம் வீசுமாதலால் இதற்குப் ‘பீநாறி என்று ஒரு பெயரும் உண்டு. இதற்குச் சிறுநீரை வடிக்கும் குணமும் உண்டு. ஆகவே சிறுநீர் தொடர்பான நோய்களுக்குப் பெரிதும் பயன்படும் (சா.அக.);.

குதிரைப்பீசன்

பெ.(n.);

   1. உயரமாய் வளர்ந்த மரம்; any tree rising to great height; any tall majestic tree.

   2.ஒரு முள் மரம்; camel tree; camel thistle – Echinops echinatus (சா.அக);.

     [குதிரை+பீசன்.]

குதிரைமசாலி

 குதிரைமசாலி kudiraimacāli, பெ.(n.)

   மரவகை; a kind of tree.

     [குதிரை + மசாலி.]

குதிரைமசாலை

 குதிரைமசாலை kudiraimacālai, பெ.(n.)

   குதிரை மருந்து; mash, a mixture, of certain ingredients used as a tonic or medicine for horses.

     [குதிரை + மசாலை.]

குதிரைமட்டம்

 குதிரைமட்டம் kudiraimaṭṭam, பெ.(n.)

   வேகமுள்ள குட்டைக்குதிரை; a fleet-footed pony, (w.);.

     [குதிரை + மட்டம்.]

குதிரைமரம்

குதிரைமரம் kudiraimaram, பெ.(n.)

   1. உடற் பயிற்சிக்குரிய தாண்டுமரம்; gymnastic horse-bar.

   2.குதிரைத்தறி பார்க்க (கொ.வ.); see {kudiraltari}

   3. மதகு கதவு (யாழ்.அக.);; sluice gate.

   4. நெசவிற்பாவு தாங்குதற்குரிய மரச்சட்டம்;  wooden frame, shaped like the letter ‘X’ and fixed to the ground to support the warp stretched out.

     [குதிரை + மரம்.]

குதிரைமறம்

குதிரைமறம் kudiraimaṟam, பெ.(n.)

   போர்க் குதிரையின் திறப்பாட்டைக் கூறும் புறத்துறை (பு.வெ.77);; theme describing the prowess of a warhorse.

     [குதிரை + மறம்.]

குதிரைமறி

குதிரைமறி kudiraimaṟi, பெ.(n.)

   1. குதிரைக்குட்டி; filly.

   2. பெட்டைக் குதிரை; mare.

     [குதிரை + மறி.]

குதிரைமலை

 குதிரைமலை  kutiraimalai, பெ.(n.)

தென் கன்னடத்தில் உள்ள குதிரை மூக்கு மலை; hill in south-kappada (அபி.சிந்.);.

குதிரைமாறி

குதிரைமாறி kudiraimāṟi, பெ.(n.)

   1. குதிரை விற்பவன்; petty horse-dealer.

   2. ஏமாற்றுவேலை செய்பவன்; one who works in an underhand manner.

     [குதிரை + மாறி.]

குதிரைமாற்று

குதிரைமாற்று1 kudiraimāṟṟudal,    5 செ.கு.னவி. (v.i.)

   கெடிதோறும் குதிரைகளை மாற்றிக் கொள்ளுதல்; to relieve horses by relays.

     [குதிரை + மாற்று.]

 குதிரைமாற்று kudiraimāṟṟu, பெ.(n.)

   குதிரை முத்திரையிட்ட நாணயவகை; a coin with horse emblem

     “காசாயமான குதிரை மாற்றுக்கு” (S.I.I.iv.134);.

     [குதிரை + மாற்று.]

குதிரைமால்

 குதிரைமால் kudiraimāl, பெ.(n.)

   அரண்மனையைச் சார்ந்த குதிரைக் கொட்டகை; royal stable.

     (குதிரை சமால்);

குதிரைமீன்

குதிரைமீன்1 kudiraimīṉ, பெ.(n.)

   குழாய்மீன்; pipe fish (சா.அக.);.

     [குதிரை + மீன்.]

 குதிரைமீன் kudiraimīṉ, பெ.(n.)

   மீன்வகை; akind of fish.

     “குதிரைமீனோ டானைமீன்” (குருகூர்ப். பக்.7);.

     [குதிரை + மீன்.]

     [P]

குதிரைமுகம்

குதிரைமுகம் gudiraimugam, பெ.(n.)

   1. முழந் தாளெலும்பு; tibia, shin bone.

   2. குளத்தின் கரைக் கட்டிற்கு வலியாகும் முட்டுக்கட்டடம்; prop of an embankment.

     [குதிரை + முகம்.]

குதிரைமுகவோடம்

குதிரைமுகவோடம் gudiraimugavōṭam, பெ.(n.)

   குதிரையின் உருவை முகப்பிற் கொண்ட தோணி (சிலப்13:176,உரை);; boat with a horse shaped prow.

     [குதிரை + முகம் + ஓடம்.]

குதிரைமுள்

 குதிரைமுள் kudiraimuḷ, பெ.(n.)

   குதிரையை விரைவுப்படுத்துதற்கு ஏறுவோர் காலில் இட்டுக் கொள்ளும் முட்கருவி; spur used by a horsemen.

     [குதிரை + முள்.]

குதிரையடி

 குதிரையடி kudiraiyaḍi, பெ.(n.)

   சதுரங்க விளையாட்டில் குதிரை செல்லும் வழி; knight’s move in the game of chess.

     [குதிரை + அடி.]

குதிரையடிப்பச்சிலை

 குதிரையடிப்பச்சிலை kudiraiyaḍippaccilai, பெ.(n.)

   குதிரைக்குளம்படியிலை, நீர்ச்சேம்பு; arrow. head (சா.அக.);.

     [குதிரை + அடி + பச்சிலை.]

இதன் இலைகளை வீக்கங்களுக்குக் கட்டுவர்.

குதிரையாட்டம்

 குதிரையாட்டம் kudiraiyāṭṭam, பெ.(n.)

   பொய்க்கால் குதிரையாட்ட; a kind of dance using the effigy of a horse.

ம.குதிரயாட்டம்

     [குதிரை + ஆட்டம்.]

குதிரையாளி

குதிரையாளி kudiraiyāḷi, பெ.(n.)

   1. குதிரை ஏறி நடத்துவோன்; horseman.

   2. வைரவன்; Bhairava.

     [குதிரை + ஆளி.]

குதிரையிராவுத்தன்

குதிரையிராவுத்தன் kudiraiyirāvuddaṉ, பெ.(n.)

   குதிரைவீரன்; cavalier, trooper, equestrian

     “கொன்றை மாலைக் குதிரையிராவுத்தன்” (திருவாலவா.46,28.);.

     [குதிரை + இராவுத்தன்.]

குதிரையிழைப்புளி

 குதிரையிழைப்புளி kudiraiyiḻaippuḷi, பெ.(n.)

   இழைப்புளிவகை (கட்டட.நாமா.);; a kind of jointers.

     [குதிரை + இழைப்பு + உளி.]

குதிரையுடலன்

 குதிரையுடலன் kudiraiyuḍalaṉ, பெ.(n.)

   குதிரை யுடல் போலும் உடலுள்ள காளைமாடு; bull that has its belly pulled up straight and narrow, as that of a horse.

     [குதிரை + உடலன்.]

குதிரையேறு-தல்

குதிரையேறு-தல் kudiraiyēṟudal,    5 செ.குன்றாவி. (v.t).

   1. குதிரை மேலேறிச் செலுத்துதல்; to mount a horse.

   2. சிறுவர்கள் பச்சைக்குதிரை விளையாடுதல்; to play leap-frog.

   3. பிறரைக் கீழ்ப்படுத்தி அடக்கியாளுதல்; to ride roughshod, domineer.

அவனைக் குதிரையேறுகிறான் (உ.வ.);.

     [குதிரை + ஏறு.]

குதிரையேற்றம்

குதிரையேற்றம் kudiraiyēṟṟam, பெ.(n.)

   குதிரை யேறி நடத்தும் (வித்தை);;(பதார்த்த:1452);; horsemanship.

     [குதிரை + ஏற்றம்.]

குதிரையோடு-தல்

குதிரையோடு-தல்  kutiraiyōṭutal,    5 செ.கு.வி.(v.i.)

ஒருவர் தனக்குப் பகரமாக மற்றொருவரைத் தேர்வு எழுத வைத்து ஆள் மாறாட்டம் செய்தல் (இலங்.);; write an examination by praxy. அவன் குதிரையோடித்தான் தேர்வில் வெற்றி யடைந்தான். [குதிரை+ஒடு-தல்.]

குதிரைவாவிகம்

பெ.(n.);

கோரைப்புல்; koray grass (சா.அக.);.

     [குதிரை+வாவிகம்]

குதிரைவடிப்போர்

 குதிரைவடிப்போர் kudiraivaḍippōr, பெ.(n.)

   குதிரை நடத்துவோர் (திவா.);;  horse-drivers.

     [குதிரை + வடிப்போர்.]

குதிரைவண்டி

 குதிரைவண்டி kudiraivaṇṭi, பெ.(n.)

   குதிரையைப் பூட்டி ஓட்டும் வண்டி; a carriage drawn by horse.

   ம. குதிரவண்டி;க. குதுரெகாடி.

     [குதிரை + வண்டி.]

குதிரைவரி

குதிரைவரி kudiraivari, பெ.(n.)

   வரிவகை; a tax (S.I.I.iv.79);.

     [குதிரை + வரி.]

குதிரைவலி

 குதிரைவலி kudiraivali, பெ.(n.)

   பெண்களுக்குப் பேறு காலத்தில் உண்டாகும் பெருவலி; excessive labour pains.

     [குதிரை + வலி.]

குதிரைவலிப்பு

குதிரைவலிப்பு kudiraivalippu, பெ.(n.)

   குதிரையின் காற்சுண்டுவாதம் வலிப்பு (M.CM.D. (1887);.249);; a horse disease attended with quivering in the legs.

ம. குதிரவலி

     [குதிரை + வலிப்பு.]

குதிரைவாய்க்கருவி

 குதிரைவாய்க்கருவி kudiraivāykkaruvi, பெ.(n.)

   கடிவாளம்; bridle of a horse.

     [குதிரை + வாய் + கருவி.]

குதிரைவாரப்பட்டை

 குதிரைவாரப்பட்டை kudiraivārappaṭṭai, பெ.(n.)

   வீட்டுக்கூரை இறவாணத்தின் கூடல்வாய்மரம்; hrafter in sloping roofs.

     [குதிரை + வாரம் + பட்டடை.]

குதிரைவாற்புல்

 குதிரைவாற்புல்  kutiraivāṟpul, பெ.(n.)

குதிரைவாலிப்புல்; ஒட்டுப்புல்; horse tail grass, panicum brizoides (சா.அக.);.

     [குதிரை+வாற்+புல்]

குதிரைவாலி

குதிரைவாலி kudiraivāli, பெ.(n.)

   1. ஒருவகைப் புன்செய்ப்பயிர்; poor man’s horse-tail millet.

   2. குதிரைவாலிப்பூ; purple wreath.

   3. ஒருவகை நெல்; a kind of paddy.

ம.குதிரவாலி

     [குதிரை + வாலி.]

குதிரைவாலிகம்

குதிரைவாலிகம் gudiraivāligam, பெ.(n.)

   1. கொடிப்பாசி; moss creeping upon water

   2. கோரைப்பில்; horay grass (சா.அக.);.

     [குதிரை + வாலிகம்.]

குதிரைவாலிக்கியாழம்

 குதிரைவாலிக்கியாழம் kudiraivālikkiyāḻm, பெ.(n.)

   குதிரைவாலிப் புல் அல்லது பூவினின்று இறங்குங் கியாழம் (சா.அக.);; decoction prepare from horse tail grass or purple wrath.

     [குதிரைவாலி + கியாழம்.]

குதிரைவாலிச்சம்பா

 குதிரைவாலிச்சம்பா kudiraivāliccambā, பெ.(n.)

   சம்பா நெல்வகை; a kind of paddy, like horse a millet.

ம.குதிரவாலி

     [குதிரை + வாலி + சம்பா.]

குதிரைவாலிச்சாமை

குதிரைவாலிச்சாமை kudiraivāliccāmai, பெ.(n.)

   1. ஒரு வகைச் சாமை; horsetail millet.

   2. ஒட்டுப்பண்;  sticking grass (சா.அக.);.

     [குதிரை + வாலி + சாமை.]

குதிரைவாலிப்புல்

 குதிரைவாலிப்புல் kudiraivālippul, பெ.(n.)

   புல்வகை; a species of grass.

ம. குதிரவால்ப்புல்

மறுவ, குதிரைவாற்றல்

     [குதிரை + வாலி + புல்.]

குதிரைவாலிப்பூ

 குதிரைவாலிப்பூ kudiraivālippū, பெ.(n.)

   கொடிவகையுள் ஒன்று; purple wreath.

     [குதிரை + வாலி + பூ.]

குதிரைவால்

குதிரைவால் kudiraivāl, பெ.(n.)

   1. குதிரையின் வால்;  the tail of a horse.

   2. ஒரு வகைச் கொடி; the horsetail creeper.

ம.குதிரவால்

     [குதிரை + வால்.]

குதிரைவிசிகயிறு

 குதிரைவிசிகயிறு gudiraivisigayiṟu, பெ.(n.)

   குதிரைமரத்தை நிலைப்பட நிறுத்துதற்குக் கட்டும் கயிறு; rope for fixing the kudirai-maram in position.

     [குதிரை விசி + கயிறு.]

குதிரைவிடு-தல்

குதிரைவிடு-தல் kudiraiviḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   1. குதிரையைச் சாரியாக விடுதல்; to set of in a gallop or trot.

   2. குதிரைப்பந்தயம் விடுதல்;  to compete in a horse race.

     [குதிரை + விடு-.]

குதிரைவிட்டை

 குதிரைவிட்டை kudiraiviṭṭai, பெ.(n.)

   குதிரைச் சாணி ; horse dung (சா.அக.);.

     [குதிரை + விட்டை.]

குதிரைவிலாடம்

குதிரைவிலாடம் kudiraivilāṭam, பெ.(n.)

   வரிவகை; a tax (M.E.R.86 of 1928-9);.

     [குதிரை + இலாபம்.]

குதிரைவீரர்

 குதிரைவீரர் kudiraivīrar, பெ.(n.)

   குதிரைப் படையாளர்; cavalry, troopers cavaliers.

     [குதிரை + வீரர்.]

குதிரைவையாளிவீதி

 குதிரைவையாளிவீதி kudiraivaiyāḷivīdi, பெ.(n.)

   குதிரை செலுத்தற்குரி செண்டுவெளி (சூடா.);; the place where horses are trained in different kinds of exercise.

     [குதிரை + வையாளி + வீதி.]

குதிர்

குதிர் kudir, பெ.(n.)

   1. ஒருவகை மரம்; a low shrub with sharp axillary spines.

     “கரிகுதிர் மாரத்த கான வாழ்க்கை” (அகநா.75);.

   2. நெல் முதலிய தவசங்கள் வைக்கும் கூடு; large earthern receptacle for storing grain.

     “காப்பதற்கோர் குதிர்பண்ணி” (ஞானவா.மித்தை.11);.

க. குதிர்

     [குது – குது → குதிர்.]

குதிர்-தல்

குதிர்-தல் kudirdal,    4 செ.கு.வி.(v.i.)

   தீர்மானப்படுதல்; to be settled, determined, fixed up.

வீட்டின் விலை குதிர்ந்தது(உ.வ.);.

தெ. குடுரு

     [குது → குதுர் → குதிர்.]

குதிர்ப்பாடு

 குதிர்ப்பாடு kudirppāṭu, பெ.(n.)

   தீர்மானப்படுகை; settlement, arrangement.

தெ. குடுரு பாகு

     [குதுர் → குதிர் + பாடு.]

குதிவாதம்

 குதிவாதம் kudivādam, பெ.(n.)

குதிஆதை பார்க்க;see {kudo-v-Joa.}

     [குதில் + வாதம்.]

குதிவூதை

 குதிவூதை kudivūdai, பெ.(n.)

   குதிங்கால் ஊதை; neuralgiac pain in the heels.

     [குதில் + ஊதை.]

குது

 குது kudu, பெ.(n.)

   மகிழ்ச்சி; joy.

     [குல் + குது.]

குதுகம்

 குதுகம் gudugam, பெ.(n.)

   விருப்பம் (யாழ்.அக.);; desire, longing.

     [குல் → குது → குதுகம்.]

 குதுகம் gudugam, பெ.(n.)

   விருப்பம் (யாழ்.அக.);; desire, longing.

     [Skt.kautuka → த.குதுகம்.]

குதுகலம்

குதுகலம் gudugalam, பெ.(n.)

குதூகலம் பார்க்க;see {kudūkalam.}

     “குதுகலம்பொங்க” (தணிகைப்பு.பிரமன்.சிருட்.83);.

     [குதூகலம் → குதுகலம்.]

 குதுகலம்1 gudugalam, பெ.(n.)

   அகக்களிப்பு;  joy, delight, rapture.

     [குது. + ஆகுலம் – குதாகுலம் → குதூகலம்.]

 குதுகலம் gudugalam, பெ.(n.)

குதுகம் பார்க்க (யாழ்.அக.);;see {kudugam.}

     [குல் → குது → குதுகல் → குதுகலம் → குதூகலம்

குதுகலி-த்தல்

குதுகலி-த்தல் gudugaliddal,    4 செ.கு.வி.(v.i.)

   1. கரிப்பு உண்டாக்குதல்; to make joyful.

     “குதுகலித் தாவியை யாகுலஞ் செய்யும்” (திவ்.நாய்ச்5:7);.

     [குதூகலி → குதுகல.]

 குதுகலி-த்தல் gudugaliddal,    4 செ.கு.வி.(v. அகமகிழ்தல்; to rejoice, to delight in.

     “அருளின் மூழ்கிக் குதூகலித் தூடுதலோடும்” (கந்தபு.வீரவாகு.51);.

     [குதூகலம் → குதூகலி.]

குதுகலிப்பு

 குதுகலிப்பு gudugalippu, பெ.(n.)

   மகிழ்ச்சி; ecstasy joyfulness, rapture.

     [குதுகலி → குதுகலிப்பு.]

குதுகுது

குதுகுது1 gudugududdal,    4 செ.குன்றாவி.(v.t.)

   ஆசைப்படுதல்; to desire eagerly.

     “நாற்றங் குது குதுப்ப”(பரிபா.20.13);.

     [குது + குது.]

 குதுகுது2 gudugududdal,    4 செ.கு.வி.(v.i.)

   குளிரால் நடுங்குதல்; to shiver from cold.

     [குது + குது.]

குதுகுதுப்பு

குதுகுதுப்பு guduguduppu, பெ.(n.)

   1. ஆவல்; desire, eagarness.

     “குதுகுதுப்பின்றி நின்று” (திருவாச6:34);.

   2. குளிரால் நடுங்குகை; shivering with cold.

     [குது + குதுப்பு.]

குதுகுதெனல்

 குதுகுதெனல் gudugudeṉal, பெ.(n.)

   குளிர்சுரக் குறிப்பு; expr. signifying feverishness attended with shivering.

     [குது + குது + எனல்.]

குதுகுலம்

குதுகுலம் gudugulam, பெ.(n.)

குதுரகலம் பார்க்க;see {Kudigalam,}

     “குதுகுலத் துளவின் றாமம்” (அரிசமய பதுமை. 103);.

     [குது + குலம்.]

குதுகுலி-த்தல்

குதுகுலி-த்தல் guduguliddal,    14 செ.கு.வி.(v.i.)

   1. மிகுகளி கொள்ளுதல் (யாழ்.அக.);; to be rapturous;

 to be enthusiastic.

   2. மகிழ்ச்சி மிகுதியால் பூரித்தல் (யாழ்.அக.);; to swell with joy.

இளங்கொங்கை குதுகுலிப்ப” (திவ்.பெரியாழ்.3,6,2);.

     [குது + (கலி); குலி.]

குதுகுலிப்பு

குதுகுலிப்பு  kutukulippu, பெ.(n.)

   1. மிகு மகிழ்சசி; ecstasy; rapture.

   2. மயிர்ச் சிலிர்ப்பு; hair standing on ends – Horripillation (சா.அக.);.

     [குது+குலிப்பு]

குதும்பகர்

 குதும்பகர் gudumbagar, பெ.(n.)

   தும்பை (மலை.);; bilter toom-bay.

     [குதும்பு → குதும்பகர்.]

குதும்பை

 குதும்பை kudumbai, பெ.(n.)

   மூக்கொற்றிப் பூ; Indian dantana indico.

     [குதும்பு + குதும்பை.]

குதுவை

 குதுவை kuduvai, பெ.(n.)

   கொதுவை; mortage.

தெ. குதுவ

     [கொதுவை → குதுவை.]

குதூகலம்

 குதூகலம் kutūkalam, பெ.(n.)

   அகக்களிப்பு; delight, rapture.

த.வ. அகமகிழ்வு.

     [Skt.{} → த.குதூகலம்.]

குதூணகம்

 குதூணகம் gutūṇagam, பெ.(n.)

   கண்ணொய்களு ளொன்று (யாழ்.அக.);; a disease of the eye.

     [குத்துண் → குத்துணகம் → குதுரணகம்.]

குதூனகம்

 குதூனகம் gutūṉagam, பெ.(n.)

   குழந்தைகளுக்குக காணும் ஒரு கண்ணோய்; an eye, disease cotmon in children (சா.அக.);.

     [குது + (ஊனம்); ஊனகம் – குதுனகம்.]

குதேட்டி

 குதேட்டி kutēṭṭi, பெ.(n.)

   மயிலடிக்குருந்து; peacock’s-foot tree.

     [குத்தட்டி → குதேட்டி.]

குதை

குதை1 kudai, பெ.(n.)

   1. விற்குதை; notch at the end of a bow to secure the loop of a bow strong

     “குதைவரிச் சிலைநூதல்” (கம்பரா.நகர.49);

   2. அம்பினடி (சங்.அக.);; notch at the feather end of an arrow.

   3. அம்பு; arrow.

     “குதை யென்றினைத்துருந்தே” (கந்தபு.அக்கினி.85);.

   4. அணிகலனின் பூட்டு; bow, loop, running not, button or clasp of a bracelet.

   5. முயற்சி; effort.

     “கொண்ட குதை மாறாதே” (ஈடு, 6:10,2);.

     [குது – குதை.]

 குதை2 kudaiddal,    4 செ.கு.வி.(v.i.)

   விற்குதைபின் நாணைப்பூட்டுதல்; to fasten the bow-string at the notch.

     “குதைக்கின்றன நிமிர்வெஞ்சிலை” (கம்பா. இராவணன்வ.46);.

     [குது → குதை.]

 குதை3 kudaidal,    3 செ.கு.வி.(v.i.)

   செலுத்துதல்; to discharge, propel.

     “குதைந்தவார் பகழி வேடன்” (பிரமோத்.17,12);.

     [குது → குதை.]

 குதை4 kudaidal,    2 செ.கு.வி.(v.i.)

   தடுமாறச் செய்தல்; to cause bewilderment, embarrassment

     “குதையும் வினையாவி தீர்ந்தேன்” (திவ்.இயற். நான்மு.81);.

     [குது → குதை.]

 குதை5 kudai, பெ.(n.)

   பசி (அக.நி.);; hunger.

     [குது → குதை.]

 குதை6 kudaidal,    2 செ.குன்றாவி.(v.t.)

   துளையிடுதல்; to perforate.

     [குல் → குத்து → குதை.]

குதைச்சு

குதைச்சு kudaiccu, பெ.(n.)

   1. சொக்காயில் பொத்தானிடும் துளை; button-hole.

   2. தாலியுரு வகை; a pendant in {tali,} representing the {navatāli.}

     [குல் → குத்து → குதை → குதைச்சு.]

குதைபோடு-தல்

குதைபோடு-தல் kudaipōṭudal,    19 செ.கு.வி.(v.i.)

   முடிச்சுப் போடுதல்; to button, to fasten as with a button.

     [குதை + போடு.]

குதைமணி

 குதைமணி kudaimaṇi, பெ.(n.)

   கொக்கிவகை; a kind of hook, button.

     [குதை + மணி.]

குதைமுடிச்சு

 குதைமுடிச்சு kudaimuḍiccu, பெ.(n.)

   சுருக்கு முடிச்சு; button of a running knotor noose.

     [குதை + முடிச்சு.]

குதையாணி

 குதையாணி kudaiyāṇi, பெ.(n.)

   கரையாணி; fastening pin or bolt in jewellry.]

     [குதை + ஆணி.]

குதோதரி

 குதோதரி kutōtari, பெ.(n.)

   அரக்கர் இனப்பெண்; anthropomorlphous demoness.

குத்தகை

குத்தகை guttagai, பெ.(n.)

   1. நிலக்குத்தகை ஒப்பந்தம்; contract of lease.

     “பொழில் குத்தகையாத் தந்தீர்” (குமர.பிர.திருவாரூர்.27);.

   2. குத்தகைத் தொகை; lease amount.

தெ. து. குத்த க.guttige ம.குத்தக

     [கொத்து → குத்து → குத்தகை.]

குத்தகைக்கடை-த்தல்

குத்தகைக்கடை-த்தல் guttagaiggaḍaittal,    4 செ.குன்றாவி. (v.t.)

குத்தகைக்குக் கொடுத்தல்:

 to let out, farm, lease out, as land.

     [குத்தகைக்கு + அடை-.]

குத்தகைக்காரன்

 குத்தகைக்காரன் guttagaiggāraṉ, பெ.(n.)

   குத்தகை வாங்குபவன்; contractor, lessee

     [குத்தகை + காரன்.]

குத்தகைச்சரக்கு

 குத்தகைச்சரக்கு guttagaiccaraggu, பெ.(n.)

   ஒப்பந்தம் செய்த சரக்கு; goods secured by contract.

     [குத்தகை + சரக்கு.]

குத்தகைச்சீட்டு

 குத்தகைச்சீட்டு guttagaiccīṭṭu, பெ.(n.)

   குத்தகை ஆவணம்; lease deed.

     [குத்தகை + சீட்டு.]

குத்தகைதாரன்

 குத்தகைதாரன் guttagaitāraṉ, பெ.(n.)

குத்தகைக் காரன் பார்க்க;see {kuttaga-k-kārap.}

     [குத்தகை + தாரன்.]

குத்தகைதாரர்

 குத்தகைதாரர்  kuttakaitārar, பெ..(n.)

குத்தகைக்கு எடுப்பவர்; leasee.

     [குத்தகை+தாரர்]

குத்தகைதார்

 குத்தகைதார்  kuttakaitār, பெ.(n.)

நிலக்குத்தகை (கவுல்); வாங்குபவன்; contractor, leasee (செ.அக.);.

குத்தகைப்பொருள்

 குத்தகைப்பொருள் guttagaipporuḷ, பெ.(n.)

   குத்தகை ஒப்பந்தப்படி கட்டவேண்டிய பொருள்; money payable by a lessee for the lease.

     [குத்தகை + பொருள்.]

குத்தகைமாறுதல்

 குத்தகைமாறுதல் guddagaimāṟudal, பெ.(n.)

   குத்தகைக் காலம் முடிவு பெறுகை; expiry of the period of lease.

     [குத்தகை + மாறுதல்.]

குத்தகையெடு-த்தல்

குத்தகையெடு-த்தல் guttagaiyeḍuttal,    4 செ.குன்றாவி.(v.t.)

   குத்தகைக்கு வாங்குதல்; to obtain a contract of lease.

     [குத்தகை + எடு.]

குத்தசி

 குத்தசி kuttasi, பெ.(n.)

   உயர் முத்து; superior solid pearis (சா.அக.);.

     [குத்தச்சி → குத்தசி → குரு – ஒளி.]

குத்தன்

குத்தன்  kuttaṉ, பெ.(n)

எமனிடம் உள்ள கணக்கனான சித்திரகுத்தன்; accountant of Lord yama (அபி.சிந்.);.

 குத்தன் kuttaṉ, பெ.(n.)

   1. காப்பவன்; protector.

     “விசுவ குத்தனகி” (சேதுபு.சேதுயாத்.13);.

   2. வைசியர் பட்டப்பெயர்; a {Vaisya} title.

     “அரதனதத்த னென்னும்… பெருங்குடி வணிகன்” (செவ்வந்திப்பு.தாயான. 8);.

   3. குப்த குல அரசன் கலிங்.319, புதப்); king of the Gupta family.

     [காப்பன் → குப்பன் → -Skt Gupta→ → குத்தன்.]

குத்தம்

 குத்தம் kuttam, பெ.(n.)

   எருது (பிங்.);; bull.

     [குட்டம் + குத்தம்.]

குத்தரசம்

 குத்தரசம் kuttarasam, பெ.(n.)

   பெருங்காயம்(மூ.அ.);; asafoetida.

     [குய்த்தல் + அசம் → குய்த்தலசம் → குய்த்தரசம்.]

குத்தரிசிக்காரி

 குத்தரிசிக்காரி kuttarisikkāri, பெ.(n.)

   அரிசி குற்றி விற்பவள் (வின்.);; woman who pounds and sells rice.

     [குத்து + அரிசி + காரி.]

இதனைக் கூத்தரிசிக்காரி என வின்சுலோ அகரமுதலிகுறித்திருப்பது தவறு.

குத்தலம

 குத்தலம kuttalama, பெ.(n.)

   முக்குருந்து; wild lime (சா.அக.);.

     [குற்றலம் → குத்தலம்.]

குத்தலரிசி

குத்தலரிசி kuttalarisi, பெ.(n.)

   குற்றித்தீட்டிய அரிசி; husked rice.

     “குத்தலரிசி இருநாழியும்” (S.I.I.III,96);.

     [குத்தல் + அரிசி.]

குத்தலை

 குத்தலை kuttalai, பெ.(n.)

   மேட்டுப்பாங்கான இடத்தில் விளையும் ஒரு வகை நெல்; paddy growing on high ground.

ம. குத்தல

     [குத்து → குத்தலை.]

குத்தல்

குத்தல்1 kuttal, பெ.(n.)

   1. உடம்பின் உள்நோவு; internal pain, aching, throbbing.

உடம்பிற் குத்தலுங் குடைச்சலும் பொறுக்க முடியவில்லை (உ.வ.);.

   2. மனம் நோகச் செய்கை; htting wounding.

அவன் பேச்சு எப்போதும் குத்தல்தான் (உ.வ.);.

   3. தெருவிற்கு எதிராக வீடு அமைந்திருப்பது முதலிய குற்றம்; inauspicious position, as of a house opposite to a street, a well opposite to a doorway.

   4. நீர்க்குத்தலான இடம்; land or site exposed to the dash of water-currents.

   5. குத்தலரிசி(இந்துபாக.54); பார்க்க;see {kutta-amsi}

   ம. குத்தல்;   து. குத்தட, குத்தாட;   கோத. குத்ல்;பட. குத்தலு

     [குத்து → குத்தல்.]

 குத்தல்2 kuttal, பெ.(n.)

   கொடுக்கை (அக.நி.);; giving.

     [குல் → குத்து.]

குத்தல்குடைச்சல்

குத்தல்குடைச்சல்  kuttalkuṭaiccal, பெ.(n.)

   1. காற்றினால் ஏற்படும் நரம்பு வலி; piercing and boring pain in the course of the

 nerves due to aggravated condition of air.

   2. மூட்டு வலி; pain experienced in rheumatism (சா.அக.);.

     [குத்தல்+குடைச்சல்]

குத்தவை-த்தல்

குத்தவை-த்தல் kuttavaittal,    4 செ.கு.வி.(v.i.)

   குந்துதல்; to sit on the heels.

     [குந்து → குத்து → குத்த + வை.]

குத்தவைத்தல்

 குத்தவைத்தல் kuttavaittal, பெ.(n.)

   புட்டம் நிலத்திற் படியுமாறு உட்கார்தல் (நெல்லை);; a kind of sitting position.

     [குத்து → குத்த + வைத்தல்.]

குத்தாகம்

குத்தாகம் kuttākam, பெ.(n.)

   1. ஓர் அடிக்குள் டார்வதும், சளி, காய்ச்சலுக்கு மருந்தாகும் தன்மையுடையதுமான குட்டிவிளா எனும் சிறிய பூடு; it is a small plant of the earonia genus about 1ft right which cures cold and fever (சா.அக.);.

   மருந்துச் செடி; herbaclous plant.

     [குத்து → குத்தகம் → குத்தநாகம்.]

குத்தாங்கல்

 குத்தாங்கல் kuttāṅgal, பெ.(n.)

   செங்குத்தாக உக்கும் கல் அல்லது செங்கல்; stone or bricklaid -crghton edge.

     [குத்து + ஆம் + கல்.]

குத்தானி

 குத்தானி kuttāṉi, பெ.(n.)

   மரக்கைப்பிடியமைந்த நீண்ட ஊசி வகை; a long needle with a wooden handle.

ம. குத்தாணி

     [குத்து + ஆணி.]

குத்தாமணக்கு

 குத்தாமணக்குkuttāmaṇakku, பெ.(n.)

   உரலா கணக்கு; species of castor-plant.

     [குத்து + ஆமணக்கு.]

குத்தாமணி

 குத்தாமணி kuttāmaṇi, பெ.(n.)

   உத்தாமணி; hedge=-Ter

     [கொத்து → குத்து → ஆமணி.]

குத்தாமற்குத்து-தல்

குத்தாமற்குத்து-தல் kuddāmaṟkuddudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. குறிப்பாகக் குற்றத்தைச் சொல்லிக் காட்டுதல்; to make a covert, sarcastic hit at a person.

   2. காயம்படாமற் குத்துதல்; causing contusion without intlicting apparant injury(சா.அக.);.

     [குத்தாமல் + குத்து.]

குத்தார்க்கு

 குத்தார்க்கு kuttārkku, பெ.(n.)

   குத்தூசியால் வாங்கித் தைக்கும் பனைமட்டை நார்; palmyra with or card used for stitching with {kuttàs:}

     [குத்து + ஆர்க்கு. ஈர்க்கு → ஆர்க்கு.]

குத்தாலகம்

குத்தாலகம்  kuttālakam, பெ.(n.)

   1 பருத்தி, cotton – Gossypium herbaceum.

   2. காட்டாத்தி; திருவாத்திச் செடி, holy mountain ebony – Bauhinia tomentosa.

   3. கடுகு ரோகிணி; black hellebore –

 Helleborus niger(சா.அக.);.

குத்தாலம்

 குத்தாலம் kuttālam, பெ.(n.)

   திருவாத்தி (மலை.);; holy mountain ebony.

     [குத்து + ஆலம்.]

குத்தாலா

 குத்தாலா kuttālā, பெ.(n.)

   கடுகுச்சிவலை (மலை.);; Christmas rose.

     [குற்று + ஆல் – குற்றால் → குற்றாலா → குத்தாலா.]

குத்தாலிகம்

 குத்தாலிகம்  kuttālikam, பெ.(n.)

குடமிளகாய்; bell pepper – Capsicum grosum (சா.அக.);.

குத்தாளை

குத்தாளை kuttāḷai, பெ.(n.)

   வானவாரியாக (மழையின் உதவியால் மட்டும்); விளையும் நெல் வகை (G.T.J.D. 1.95);; a paddy growing only with the help of rain.

     [குறு + தாள் – குற்றாள் → குத்தாள் → குத்தாளை.]

குத்தாவகம்

 குத்தாவகம் guttāvagam, பெ.(n.)

   சணல்; hemp, flas (சா.அக.);.

     [குறு → குற்று + ஆவகம்-குற்றாவகம் – குத்தாவகம்.]

குத்தி

குத்தி kutti, பெ.(n.)

குற்றிபார்க்க;see {kurr}

     [குற்றி → குத்தி.]

 குத்தி kutti, பெ.(n.)

   1. கோணி மூட்டையினின்றும் அரிசி முதலியவற்றைக் குத்தியெடுக்குங் குத்தூசி; iron probe to test the contents of a sack, as of grain, sugar, etc.

   2. கலப்பைக்கூர் (செந்.4:212);; coulter of a plough.

மறுவ. மூட்டைக்குத்துசி

     [குத்து + குத்தி.]

 குத்தி3 kutti, பெ.(n.)

மனம், மெய், மொழி ஆகிய முப்புலனடக்கம்,

 restraint, as in thought, speech, or deed.

     “குற்றம் விட்டார் குத்திமூன் றுடையார்” (திருநூற்.75);

     [குள் – குத்து(அடக்குதல்); → குத்தி.]

 குத்தி4 kutti, பெ.(n.)

   1. குப்பி; bottle.

     “குத்தியி லரக்குங் கள்ளும்” (குற்றா.குற.118:3);.

   2. எண்ணெய் வைத்தற்குதவும் சிறுகுடுவை; vial for oil or ointment.

     [குறு → குற்றி → குத்தி.]

 குத்தி5 kutti, பெ.(n.)

   மண் (சூடா.);; earth, ground, soil.

     [கொத்து → கொத்தி → குத்தி.]

 குத்தி kutti, பெ.(n.)

   மாறுபாடு; wrangle.

     “குத்திபடும் வாதுபொரு ளொத்த மருங்கினாள்:” (காளத்.உலா,427);.

     [குள் → குத்து → குத்தி.]

 குத்தி kutti, பெ.(n.)

தொண்டை:

 throat.

மறுவகுத்திகை.

து குத்திகெ.

     [குள்-குழி-குழித்தி-குத்தி]

குத்திக்காட்டு-தல்

குத்திக்காட்டு-தல் kuddikkāṭṭudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   ஒருவன் குற்றத்தைச் சுட்டிக் காட்டி அவன் மனத்தைப் புண்படச் செய்தல்; to wound one’s feelings by bluntly pointing out his weakness.

     [குத்தி + காட்டு.]

குத்திக்குத்தியிருமுதல்

 குத்திக்குத்தியிருமுதல்  kuttikkuttiyirumutal, தொ.பெ.(v.bl.n.)

புகைந்து இருமுகை; caughing often due to irritation (சா.அக.);.

     [குத்திக்குத்தி+இருமுதல்.]

குத்திக்கொல்லன்

 குத்திக்கொல்லன் kuttikkollaṉ, பெ.(n.)

   படையாளனாய்க் கருவூலங் கொண்டு செல்பவன்; a person with the {cinkäns} bow employed to carry treasure.

தெ. golla.

     [குத்தி + கொல்லன்.]

குத்திச்சரித்தல்

குத்திச்சரித்தல் kutticcarittal,    4 செ.குன்றாவி. (v.t).

   வயிற்றில் குத்திக் குடலை வெளிப்படுத்தல்; bringing out the bowels or entrails by stabbing in the abdomen (சா.அக.);.

     [குத்தி + சரி.]

குத்திச்செருப்பு

 குத்திச்செருப்பு kutticceruppu, பெ.(n.)

   குதியிற் கனமுள்ள செருப்பு; shoes with thick soles.

     [குத்தி + செருப்பு.]

குத்திச்சேவகன்

 குத்திச்சேவகன் gutticcēvagaṉ, பெ.(n.)

   படைகலம் ஏந்தி கருவூலப் பணம் எடுத்துச் செல்லப் பாதுகாப்பு அளிக்கும் பணியாளன்; a person armed with weapon employed to carry treasure.

     [குத்தி + சேவகன்.]

குத்திடி

குத்திடி kuttiḍi, பெ.(n.)

   1. கடல்மீன்வகை; a genus of sea-fish.

   2. பொன்னிறங் கொண்ட கடல் மீன்வகை; a sea-fish, more or less golden, attaining 20 inch in length.

     [குத்தி + குத்திடி.]

     [P]

குத்திடி

குத்திடு-தல்

 குத்திடு-தல்  kuttiṭutal, செ.கு.வி. (v.i.)

பார்வை, கவனம் முதலியன ஒருவரின் மேல், ஒன்றில் நிலைத்தல்; வெறித்தல்; attention etc., get fixed on. உயிர் பிரியும் நேரத்தில் கண் குத்திட்டது. கவனம் பாட்டின் மேல் குத்திட்டுநிலைத்தது.

     [குத்து+இடு-தல்.]

குத்திட்டி

 குத்திட்டி kuttiṭṭi, பெ.(n.)

   ஈட்டி வகை; ponard.

     [குத்து + ஈட்டி.]

     [P]

குத்தீட்டி

குத்திட்டு

குத்திட்டு  kuttiṭṭu, வி.எ. (adv)

   1. உட்காரும் போது குத்துக்காலிட்டு; squat while sitting. கணப்புக்கு அருகில் குத்திட்டு உட்காந்து கொண்டான்.

   2. நெட்டுக்குத்தாக வளையாமல் நீட்டிக் கொண்டு; erect; straight. தாடி முள்முள்ளாகக் குத்திட்டு நின்றது.

     [குத்து+இடு]

குத்தினி

 குத்தினி kuttiṉi, பெ.(n.)

   ஒருவகைப் பட்டுச்சீலை; a kind of striped silk.

     [U.{} → Skt.khutani → த.குத்தினி.]

குத்திப்பாய்ச்சு-தல்

குத்திப்பாய்ச்சு-தல் kuddippāyccudal,    5 செ.குன்றாவி. (v.t.)

கட்டடத்தின் சந்துகளிற் சல்லிச் கண்ணாம்பினாற் வலுப்படுத்துதல் (கட்டட.நாமா);:

 to underpin.

     [குத்தி + பாய்ச்சு.]

குத்திப்பிடுங்கு-தல்

குத்திப்பிடுங்கு-தல் kuddippiḍuṅgudal,    5 செ.கு.வி. (v.i.)

   கக்கல் உணர்வு உண்டாதல்; to have a tendency to vomit.

சோற்றைக் கண்டால் அவனுக்குக் குத்திப் பிடுங்குகிறது (கொ.வ.);.

     [குத்தி + பிடுங்கு.]

குத்திப்பேசு-தல்

குத்திப்பேசு-தல் kuddippēcudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   நோவுண்டாம்படி ஒருவரைச் சுட்டிப் பேசுதல்; to make a cutting remark by using wounding words.

     [குத்தி+ பேசு.]

குத்தியள-த்தல்

குத்தியள-த்தல் kuttiyaḷattal,    3 செ.குன்றாவி.(v.t.)

   அளவுக் கருவியைத் தவசத்தில் பாய்ச்சியளத்தல்; to measure by diving the measure deep into the grain (கொ.வ.);.

     [குத்தி + அள.]

குத்தியிருமல்

 குத்தியிருமல் kuttiyirumal, பெ.(n.)

   புகைந்து இருமும் இருமல்; coughing often due to irritation (சா.அக.);.

     [குத்தி + இருமல்.]

குத்தியோட்டம்

 குத்தியோட்டம் kuttiyōṭṭam, பெ.(n.)

   இரண்டு விலாப் பக்கங்களிலும் கூரான கம்பிகளைக் குத்திக் கொண்டு கோயிலை வலம்வரும் ஒரு நேர்வு; fulfilment of a vow by going round a temple with sharp spikes thrust on the sides (இ.வ.);.

ம. குத்தியோட்டம்

     [குத்தி + ஓட்டம்.]

குத்திரக்காரன்

 குத்திரக்காரன் kuttirakkāraṉ, பெ.(n.)

   வஞ்சகன்; ecitful, crafty fellow.

     [குத்திரம் + காரன்.]

குத்திரசங்கம்

 குத்திரசங்கம் kuttirasaṅgam, பெ.(n.)

   ஊமச்சி (நாமதீப.);, நத்தை; snail.

குத்திரப்பேச்சு

 குத்திரப்பேச்சு kuttirappēccu, பெ.(n.)

   இகழ்ந் துரைக்கும் சுடுசொல்; sarcastic language, cutting speech.

     [குத்திரம் + பேச்சு.]

குத்திரம்

குத்திரம்2 kuttiram, பெ.(n.)

   மலை (பிங்.);; hill, mountain.

     [குன்று → குற்று → குற்றிரம் → குத்திரம்(கொ.வ.);.]

 குத்திரம்3 kuttiram, பெ.(n.)

   பொய் (யாழ்.அக.);; false hood.

     [குள் (வளைவு-பொய்); → குட்டிரம் → குத்திரம்.]

குத்திரம்’

 அஅன்ன ஆவன்னா aaṉṉaāvaṉṉā, பெ. (n.)

   அரிவரி யென்னும் தமிழ் வண்ணமாலை (குறுங்கணக்கும் நெடுங்கணக்கும்);;  Tamil Alphabet.

   எழுத்துகளைக் கல்லா மக்கள், சிறப்பாகச் சிறுவர் சிறுமியர், எளிதாக ஒலித்துக் கற்கும் பொருட்டு, பண்டைத் தொடக்கப்பள்ளி யாசிரியர் உயிரும் உயிர்மெய்யுமாகிய இருவகைக் குறிலுக்கும்’அன்ன’ச் சாரியையும், இருவகை நெடிலுக்கும் அன்னா’ச் சாரியையும் ஏற்படுத்தினர்;     ‘அஆ’ என்னும் ஈரெழுத்தும் தமிழ் வண்ணமாலையின் முதலெழுத்துகளாதலின், அவை முதற்குறிப்பாகி, அம் முதற்குறிப்பே’அஅன்ன ஆவன்னா’ என்று வண்ணமாலைப் பெயராயிற்று. இது ‘alpha’, ‘beta’ என்னும் கிரேக்க இரு முதலெழுத்துகளும் சேர்ந்து”alphabetum’ என்று இலத்தீனிலும், ‘alphabet’ என்று ஆங்கிலத்திலும், வண்ணமாலைப் பெயராக வழங்குவது போன்றது;

   அ, இ, க, கி என்று ஒரு மாத்திரை யொலிக்குங்குறிலெழுத்துகளை விட்டொலிப்பது, சிறுபிள்ளைகட்குச் சற்று வருத்தமுற மூச்சு வாங்குவதால்,’அஅன்ன’ என்பது”ஆனா” என்றும் இஅன்ன என்பது’ஈனா’ என்றும், மாணாக்க நிலையிலும் பின்னும் ஒலிக்கப்பட்டுவந்தன. இவ்வொலிப்புமுறை குறில்களின் உண்மையான ஒலியளவை உடனே தெரிந்துகொள்ளத் தடையாயிருந்தமையின், இந்நூற்றாண்டுத் தொடக்கத்தில் அரசியற் கல்வித்துறையறிஞர், சாரியையின்றி ஒலிநூன் முறைப்படி அ, ஆ, இ, ஈ,… என்று ஒலித்துப் பயிலும் முறையைப் புகுத்திவிட்டனர். அதனால், இன்று ‘அஆ’ என்பது வண்ணமாலைப் பெயராக வழங்கி வருகின்றது. இது புணர்ச்சியில்’அவ்வா’ என்றாகும்;

குத்திரவித்தை

குத்திரவித்தை kuttiravittai, பெ.(n.)

   1. தந்திரம்; craftiness, subtlety, knavery,

   2.கரும்வித்தை; sorcery, black magic.

     [குத்திரம் + வித்தை.]

குத்திரி

 குத்திரி kuttiri, பெ.(n.)

   சிறிய கட்டுமரம்; small size catamaran.(மீனவ);.

     [குள்-குட்டை-குத்து-குத்திரி]

குத்திருட்டு

 குத்திருட்டு kuttiruṭṭu, பெ.(n.)

   அடர் இருட்டு; dense darkness.

மறுவ, கும்மிருட்டு.

     [குழுமு-கும்மு-குத்து+இருட்டு]

குத்திருமல்

 குத்திருமல் kuttirumal, பெ.(n.)

   கக்குவானிருமல்; whooping cough.

     [குத்து + இருமல்.]

குத்திலை

 குத்திலை kuttilai, பெ.(n.)

   தொன்னை; cup made of leaf (இ.வ.);;

 a container made of stitched leaves.

ம. குத்தில

     [குத்து + இலை.]

குத்திவை-த்தல்

குத்திவை-த்தல் kuttivaittal,    4 செ.கு.வி. (v.i.)

   1. ஊற்றுதல்; to pour.

விளக்கில் எண்ணெய் ஊற்றி வைத்தல். (உ.வ.);.

   2. நிறுத்திவைத்தல்; to put right to street.

மூட்டையைக் குத்திவை (உ.வ.);.

     [குத்தி + வை.]

குத்து

குத்து1 kuddudal,    5 செ.குன்றாவி.(v.t.)

   1. ஊசி முதலியவற்றால் துளையிடுதல்; to puncture, pierce, bore, perforate.

     “உன்னைக் காதுகுத்த’ (திவ்.பெரியாழ்..2,3,1);.

   2. ஊசியாற் குத்துதல்; to stab, wound.

   3. தைத்தல்; to sew.

     “பூம்புன னுரையும் புரையக் குத்தி” (பெருங்.வத்தவ.12:48);.

   4. கொம்பினால் முட்டுதல்; to gore

     “வைவாய் மருப்பினான் மாறாது குத்திலின்” (கலித்.106:12);.

   5. முட்டியினாற் குத்துதல், இடித்தல்; to strike with the fist, cuff, buffet, box.

     “குத்துமோதை” (கம்பரா. வாலிவ.43);.

   6. புள்ளிகுத்துதல்; to insert punctuation marks, to draw a line of dots.

   7. முத்திரை குத்துதல்; to stamp impress.

   8. உலக்கையால் இடித்தல்; to pound as in mortar.

   9. துப்பாக்கி முதலியன கெட்டித்தல்; to ram down, as in a gun (W.);.

   10. பறித்தல்; to pick off, pluck, as young coconuts.

குறும்பை குத்தினான் (யாழ்ப்.);.

   11. களைதல் (பிங்.);; to remove.

   12. பறவை கொத்துதல்; to peck, strike with beak, as a stork, crow

   13. தின்னுதல்; to feed on, pick up, as a bird.

     “கானக்கோழி கதிர்குத்த” (பொருந.222);.

   14. ஊன்றுதல்; to plant, set, fix in the ground.

     “பூந்தலைக் குந்தம் குத்தி” (முல்லைப்.41);.

   15. செங்கல் முதலியவற்றைச் செங்குத்தாக வைத்தல்; to set on edge, as bricks in arching terracing.

கல்லைக் குத்திக் கட்டு (உ..வ..);.

   16. கிண்டுதல்; to dig, break up, hollow out

     ”வையை கொதித்த கண்கரை குத்தி” (திருவிளை விடை.10);.

   17. சுடுசொற் சொல்லுதல்; to make cutting remarks;

 to use wounding words.

அவனை அடிக்கடி குத்தாதே (உ.வ.);.

   18. சிறுக வார்த்தல்; to pour out as a liquid, in small quantities (கொ.வ.);.

   19. வருத்துதல்; to afflict injure.

அவன் செய்த பாவம் அவனைக் குத்துகிறது (உ.வ.);.

   20. தடைசெய்தல்; to thwart, defeat, as a design, to appose, as a measure or scheme.

   ம. குத்துக;   க. பட. குத்து;   தெ. குத்து, க்ருத்து;   து. குத்துணி;   கோத., துட. குத்;   குட. குத்த்;   கூ. குத;   குவி. குத்தினை;பிரா. குத்திங்

     [குள் → குத்து.]

 குத்து2 kuddudal,    5 செ.கு.வி.(v.i.)

   1. தலை முதலியன குத்துநோவெடுத்தல்; to pain, ache, as the head.

   2. எதிர்க்கெடுத்தல்; to puke, vomit. belch up.

   உண்ட சோறு நெஞ்சிற் குத்துகிறது (உ.வ.);;   3. உறைமோர் ஊற்றுதல்; to pour buttermilk for curdling,

பாலில் உறைமோர் குத்திவை.

     [குல் → குத்து.]

 குத்து2 kuddudal,    5 செ.குன்றாவி.(v.t.)

   1. துளித் துளியாய் விடுதல்; pouring in drops as into the ear or eye.

   2. எண்ணெய் குத்தல்; letting oil in drops.

   3. கத்தியாற் குத்தல்; stabing with a knife (சா.அக.);.

     [குல் → குத்து.]

 குத்து3 kuttu, பெ.(n.)

   1. கைமுட்டியால் தாக்கும் இடி; blow with the fist, cuff, buffet, box.

     “கைக்குத்தது படலும்” (கம்பரா.முதற்போ.176);.

   2.ஈட்டி முதலியவற்றால் தாக்குகை; thrust, stab, puncture, prick, incision, goading.

   3. உரலிற்குத்துகை; pounding as in a mark.

   4. புள்ளி; dot, point, stop, punctuation mark.

   5. நோவு; acute pain, twing, ache.

     “தலைகுத்துத் தீர்வு சாத்தற்கு” (வள்ளுவமா.11);.

   6. பிடி; handful.

ஒருகுத்துச் சோறு (உ..வ..);

   7. செங்குத்து; perpendicularity, steepness.

   8.தெரு முதலியவற்றின் பாய்ச்சல்; nauspicious position as of a house opposite to a street, or a well opposite to a doorway.

ம.குத்து

     [குல் → குத்து.]

 குத்து kuttu, பெ.(n.)

   சணல்; sunn hemp.

     [குள் → குத்து.]

குத்து-தல்

குத்து-தல்  kuttutal,    5 செ.கு.வி.(v.i.)

   1. துளித் துளியாய் விடுதல்; pouring in drops as into the ear or eye.

   2. எண்ணெய்க் குத்தல்; letting oil in drops.

   3. கத்தியால் குத்தல்; stabbing with a knife.

   4. நுழைத்தல்; the act of thrusting.

   5. கையாற் குத்தல்; giving a blow with the fist.

   6. துளை செய்தல்; pricking; boring as ear.

   7. இடித்தல்; pounding as of rice.

   8.அலகு குத்தல்; hook swinging.

   9. பறித்தல்; plucking(சா.அக.);.

குத்துக் குளம்பு

 குத்துக் குளம்பு kuttukkuḷambu, பெ.(n.)

   குதிரை முதலிய விலங்கின் நெட்டான குளம்பு; hool of a horse oran ox, slightly vertical as indicative of its high speed in running.

     [குத்து + குளம்பு.]

குத்துக்கட்டை

 குத்துக்கட்டை kuttukkaṭṭai, பெ.(n.)

   ஒன்றைத் தாங்குவதற்கு நட்டு நிறுத்தப்படும் கட்டை; log of wood planted, as a prop.

     [குத்து + கட்டை.]

குத்துக்கண்டங்கத்தரி

 குத்துக்கண்டங்கத்தரி kuttukkaṇṭaṅgattari, பெ.(n.)

   கொத்துக் கொத்தாக முளைக்குங் காட்டு கண்டங்கத்திரி; cluster brinjal (சா.அக.);.

     [குத்து + கண்டங்கத்தரி.]

குத்துக்கம்பி

 குத்துக்கம்பி kuttukkambi, பெ.(n.)

   காது முதலியன குத்துங் கம்பி; wire used to pierce the ear or nose.

     [குத்து + கம்பி.]

குத்துக்கம்பு

 குத்துக்கம்பு kuttukkambu, பெ.(n.)

   நுனி கூர்மையான வழி; stick with a sharp end.

ம. குத்துக்கம்பு

     [குத்து + கம்பு.]

குத்துக்கரணம்

 குத்துக்கரணம் kuttukkaraṇam, பெ.(n.)

   குட்டிக் கரணம்; somersault (W.);

     [குட்டிக்கரணம் → குத்துக்கரணம்.]

குத்துக்கரந்தை

 குத்துக்கரந்தை kuttukkarandai, பெ.(n.)

   செடிவகை; a species of fleabane.

     [குத்து + கரந்தை.]

குத்துக்கல்

குத்துக்கல் kuttukkal, பெ.(n.)

   1. செங்குத்தான கல்; sone standing on edge.

   2. கட்டுஞ் செங்கல்; bricks placed on edge, as in arching terracing.

   3.ஏரிநீரின் ஆழத்தைக் காட்டும் அளவுகல்; stone marking the depth of waterina tank.

ம.குத்துகல்லு

     [குத்து + கல்.]

குத்துக்கழி

 குத்துக்கழி kuttukkaḻi, பெ.(n.)

   கட்டை வண்டியின் பாரில் இருபக்கத்திலும் நடும் கழி; short stout stokes planted on either side of atopless cart.

     [குத்து + கழி.]

குத்துக்காயம்

 குத்துக்காயம் kuttukkāyam, பெ.(n.)

   ஆயுதங் கொண்டு குத்துவதனால் உண்டாகிய புண்; incised wound, stab.

     [குத்து + காயம்.]

குத்துக்காரன்சம்மட்டி

 குத்துக்காரன்சம்மட்டி  kuttukkāraṉcammaṭṭi, பெ.(n.)

செடிவகை; a herbaceous plant (சா.அக.);.

     [குத்துக்காரன்+சம்மட்டி]

குத்துக்காரி

 குத்துக்காரி kuttukkāri, பெ.(n.)

   கூலிக்கு நெல் முதலியன குற்றுபவள்; woman whose work is to pound paddy lime etc.

     [(குத்து + காரி.]

குத்துக்காரை

குத்துக்காரை1 kuttukkārai, பெ.(n.)

   காரைச் செடி வகை; a small species of {kāra shrub.}

     [குத்து + காரை]

 குத்துக்காரை kuttukkārai, பெ.(n.)

   குற்றிய கலவைச் சுண்ணம்பு; mortarmixed and pounded.

     [குத்து + காரை.]

குத்துக்காற்சம்மட்டி

 குத்துக்காற்சம்மட்டி kuttukkāṟcammaṭṭi, பெ.(n.)

   செடிவகை; a plant, Indigofera pancifolia.

     [குத்து + கால் + சம்மட்டி.]

குத்துக்காற்சிமிட்டி

 குத்துக்காற்சிமிட்டி kuttukkāṟcimiṭṭi, பெ.(n.)

   கீல்வாதம்; முழங்கால் வளி முதலிய வாதவலிக்குப் பயன்படுத்தும் ஒரு பச்சிலை; a plant useful for arthritic and rheumatic complaints (சா.அக.);.

     [குத்து + கால் + சிமிட்டி.]

குத்துக்காற்பயறு

 குத்துக்காற்பயறு kuttukkāṟpayaṟu, பெ.(n.)

   உளுத்தம் பயறு; black gram (சா.அக.);.

     [குத்துக்கால் + பயறு.]

குத்துக்காலிடு-தல்

குத்துக்காலிடு-தல் kuddukkāliḍudal,    20செ.கு.வி. (v.i.)

   காலைக் குத்திட்டு உட்காருதல்; to stupright with folded legs.

     [குத்து + கால் + இடு.]

குத்துக்கால்

குத்துக்கால் kuttukkāl, பெ.(n.)

   1. தாங்குகால்

 upright stand of a frame, as of a car,

 side post;

 support, as of aroof.

   2. நெசவுத் தறியின் ஓர் உறுப்பு (M.M.41);; upright post of a loom.

   3.தடை; obstruction, impediment, hindranece.

     “பணி குத்துக்காற்படாது செய்விப்பது” (TA.S. I,6);.

     [குத்து + கால்.]

குத்துக்குடைச்சல்

 குத்துக்குடைச்சல் kuttukkuḍaiccal, பெ.(n.)

   வளியால் (வாயுவால்); உண்டாகும் நோவு; pinching or shooting moving pain as from rheumatism.

     [குத்து + குடைச்சல்.]

குத்துக்குத்தாக முளை-த்தல்

குத்துக்குத்தாக முளை-த்தல் kuttukkuttākamuḷaittal,    4 செ.கு.வி. (n.)

   கொத்துக் கொத்தாக முளைத்தல்; growing in clusters (சா.அக.);.

     [குத்துகுத்தாக + முளை.]

குத்துக்குநில்-தல் (குத்துக்குநிற்றல்)

குத்துக்குநில்-தல் (குத்துக்குநிற்றல்) kuttukkuniltalkuttukkuniṟṟal,    14 செ.கு.வி.(v.i.)

   1. எதிர்த்து நிற்றல்; to buffet and oppose, to contend, to contest hotly.

உண்பான் உடுப்பான் சிவப்பிராமணன் குத்துக்கு நிற்பான் வீரமுட்டி.

   2. வாதிடுதல்; to haggle, as in purchases.

     [குத்துக்கு + நில்.]

குத்துக்குமிளன்

 குத்துக்குமிளன் kuttukkumiḷaṉ, பெ.(n.)

   கண்ணில் கெட்ட சவ்வுச் சதையை வளர்ப்பிக்கும் ஒரு ஒரு கடைக்கண் நோய்; a disease of the corner orangle of the eye developing a membraneous growth(சா.அக.);.

     [குத்து + (குமிழன்); குமிளன்.]

குத்துக்கூலி

 குத்துக்கூலி kuttukāli, பெ.(n.)

   நெல் முதலியவை குற்றுவதற்குக் கொடுக்குங் கூலி; wages for husking paddy.

ம. குத்துகூலி

     [குத்து + கூலி.]

குத்துக்கொம்பு

 குத்துக்கொம்பு kuttukkombu, பெ.(n.)

   விலங்கின் நேர்கொம்பு; straight, erect horn of animal.

     [குத்து + கொம்பு.]

குத்துக்கோடரி

 குத்துக்கோடரி kuttukāṭari, பெ.(n.)

   குத்திவெட்டுங் கோடரி; axe.

     (குத்து கோடரி);

குத்துக்கோரை

 குத்துக்கோரை kuttukārai, பெ.(n.)

   கோரை வகை; wet-land sedge.

     [கொத்து → குத்து + கோரை.]

குத்துக்கோல்

குத்துக்கோல்  kuttukāl, பெ.(n.)

தாக்கும் ஆயுதமாகப் பயன்படுத்தும் கூர்மையான முனை உடைய கம்பு; pointed pole used as a weapon. கையில் குத்துக்கோல், அரிவாள் ஆயுதங்களுடன் பத்து பேர் புறப்பட்டார்கள்.

     [குத்து+கோல்.]

 குத்துக்கோல் kuttukāl, பெ.(n.)

   1. தாற்றுக் கோல்; goad.

   2. பரிக்கோல் (திருக்கோ.111, உரை);; elephant hook.

   3. முனையிற் கூரிய இரும்புள்ள கோல் (சிலப்.16:142. அரும்.);; pike-staff.

ம.குத்துக்கோல்

     [குத்து + கோல்.]

குத்துசாதம்

குத்துசாதம்  kuttucātam, பெ.(n.)

   1. பிடி சோறு; a grasp-ful of boiled rice.

   2. கையினால் எடுக்கும் அளவு கொண்ட சோறு; handful of boiled rice (சா.அக.);.

     [குத்து+சாதம்]

குத்துசி

குத்துசி kuttusi, பெ.(n.)

   1. குத்தித் தைக்கும் ஊசிவகை; a pricker, bradawl.

   2. கூரைவேயும் ஊசி; long needle used for thatching or hedging.

   3. கோணி மூட்டைகளில் நெல் முதலியவற்றைக் குத்தியெடுக்கும் கருவி; testing needle for thrusting into a sack of grain and bringing out a few grains as a specimen.

   ம. குத்துகுசி;த. ஊசி→skt soci

     [குத்து + ஊசி.]

குத்துச்சண்டை

 குத்துச்சண்டை kuttuccaṇṭai, பெ.(n,)

குத்துப்போர் பார்க்க;see {kuttu.ppor}

     [குத்து + சண்டை.]

குத்துச்சீந்தில்

 குத்துச்சீந்தில்  kuttuccīntil, பெ.(n.)

சீந்திற் செடி; a species of moon-creeper (சா.அக.);.

     [குத்து+சிந்தில்.]

குத்துச்செடி

 குத்துச்செடி kuttucceḍi, பெ.(n.)

   சிறுசெடி; low shrub.

     [கொத்து → குத்து + செடி]

குத்துச்செடிகண்டங்கத்திரி

 குத்துச்செடிகண்டங்கத்திரி  kuttucceṭikaṇṭaṅkattiri, பெ.(n.)

குத்தாக முளைக்கும் பாப்பார முள்ளிச் செடி, Brahmin mully growing in clusters – Solanum indicum (சா.அக.);.

     [குத்துச்செடி+கண்டங்கத்திரி]

குத்துணி

குத்துணி1 kuttuṇi, பெ.(n.)

   1.குத்துப்பட்டவன்; one who has been stabbed.

   2. இழிவுபட்டவன்; a scorn to persons, despised person.

     [குத்து + உணி – குத்துணி.]

 குத்துணி2 kuttuṇi, பெ.(n.)

   பட்டுகலந்த துணிவகை; a cloth woven with a silk and cotton woof.

 Mhr. khutani.

     [குத்து → குத்துணி.]

 குத்துணி3 kuttuṇi, பெ.(n.)

   ஆடைவகை (யாழ்.அக.);; a kind of cloth.

     [குத்து + உணி → குத்துணி.]

குத்துண்(ணு)-தல்

குத்துண்(ணு)-தல் kudduṇṇudal,    5 செ.கு.வி.(v.i.)

   செங்குத்தாக நிற்றல்; to stand upright.

     “இறுவரை போலக் குத்துண்டு நிற்கும் இருகரை” (பரிபா.7,உரை.);

     [குத்து + உண்.]

குத்துத்திராய்

குத்துத்திராய் kuttuttirāy, பெ.(n.)

   கீரைவகை (M.M.902);; wild Indian chickweed edible herb.

     [குத்து + திராய்.]

குத்துநாம்பழம்

 குத்துநாம்பழம்  kuttunāmpaḻm, பெ.(n.)

பேரீச்சம் பழம்; wild date fruit – Phoenix acaulis (சா.அக.);.

     [குத்துநாம்+பழம்]

குத்துனாம்பழம்

 குத்துனாம்பழம் kuttuṉāmbaḻm, பெ.(n.)

   பேரீச்சம்பழம்; wild date fruit (சா.அக.);.

     [கொத்து → கொத்தனம் → குத்தனம் + பழம் – குத்தனாம்பழம்.]

ஒ.நோ.வித்து-தெ. வித்தனம்.]

குத்துனி

குத்துனி kuttuṉi, பெ.(n.)

குத்துணி பார்க்க;see {kutturi} (G.Tr. 2.118);.

     [குத்து +உண் – குத்துண் → குத்துணி → குத்துணி.]

குத்துப்பகன்றை

குத்துப்பகன்றை guttuppagaṉṟai, பெ.(n.)

   1. குத்துச் சீந்தில்; a species of moon creeper.

   2. ஒரு பகன்றைச் செடி; a species of bind-weed (சா. அக.);.

     [குத்து + பகன்றை.]

குத்துப்பசளை

 குத்துப்பசளை kuttuppasaḷai, பெ.(n.)

   கொத்துப் பசளை; heart-leaved Malabar night shae.

     [குத்து + பசளை.]

குத்துப்பன்னீர்

குத்துப்பன்னீர்1 kuttuppaṉṉīr, பெ.(n.)

   குத்தாக முளைக்கும் பன்னீர்ச் செடி; dew flower plant (growing in cluster); (சா.அக.);.

     [குத்து + பன்னீர்.]

 குத்துப்பன்னீர் kuttuppaṉṉīr, பெ.(n.)

   மரவகை (யாழ்.அக.);; a kind of tree.

     [குத்து + பன்னீர்.]

குத்துப்பலா

 குத்துப்பலா kuttuppalā, பெ.(n.)

   குட்டைப்பலாமரம்; a species of stunted jack. It is capable of turning milk into curd (சா.அக.);.

இது பாலைத் தயிராக மாற்றும்.

     [குத்து + பலா.]

குத்துப்பழி

 குத்துப்பழி kuttuppaḻi, பெ.(n.)

   பெருஞ்சண்டை; violent quarrel.

     [குத்து + பழி.]

குத்துப்பாகல்

 குத்துப்பாகல்  kuttuppākal, பெ.(n.)

நிலப்பாகல்; ground pagal – Momordica humilis (சா.அக.);.

     [குத்து + பாகல்.]

குத்துப்பாடு

குத்துப்பாடு kuttuppāṭu, பெ.(n.)

   1. பிறர் மனத்தைத் துன்புறுத்துகை; insinuation, covert insuelt.

   2. குற்றம்; fault, defect.

அந்த வேலைக்குக் குத்துப்பாடு சொல்லுகிறான் (உ.வ.);.

ம. குத்துபாடு

குத்துப்பாரை

 குத்துப்பாரை kuttuppārai, பெ.(n.)

   குத்தப் பயன்படுத்தும் கடப்பாரை; crow bar used for digging.

க. குத்துவாரெ

     [குத்து + பாரை.]

குத்துப்பாறை

குத்துப்பாறை kuttuppāṟai, பெ.(n.)

   1. செங்குத் தான பாறை; steep rock,

   2. நெற்குற்றும் பாறை; shelf of rock where paddy is pounded (இ.வ.);.

   3. மலைப்பக்கத்திலுள்ள செங்குத்தான கற்குவியல்; small perpendicular heap of stones in the vicinity of a rock.

ம. குத்துபாற

     [குத்து + பாறை.]

குத்துப்பாலாடை

 குத்துப்பாலாடை kuttuppālāṭai, பெ.(n.)

   குட்டையாக வளரும் பலா மரம்; a species of stunted jack (சா.அக.);.

     [குத்து + பாலாடை.]

குத்துப்பிடாரி

 குத்துப்பிடாரி  kuttuppiṭāri, பெ.(n.)

வனதேவிச் செடி; an unknown plant (சா.அக.);.

     [குத்து+பிடாரி]

குத்துப்பிராய்

 குத்துப்பிராய் kuttuppirāy, பெ.(n.)

   கும்பலாய் வளரும் ஒரு வகைப் பிராய்; cluster pirai (சா.அக.);.

     [குத்து + பிராய்.]

குத்துப்புரை

 குத்துப்புரை kuttuppurai, பெ.(n.)

   நெற்குற்றும் இடம்; a shed where paddy is pounded.

ம. குத்துபுர.

     [குத்து புரை.]

குத்துப்புள்

 குத்துப்புள் kuttuppuḷ, பெ.(n.)

   கிட்டிப்புள் செங்குத்தாய் விழும் இடம்; the place where the pul in the game of tip-cat falls on edge when struck(J);.

     [கிட்டிப்புள் → குட்டிப்புள் → குத்துப்புள் (கொ.வ);.]

குத்துப்பூகியம்

 குத்துப்பூகியம் kuttuppūkiyam, பெ.(n.)

   பாவட்டை; Indian pavetta (சா. அக.);.

     [குத்து + பூகியம்.]

குத்துப்போர்

குத்துப்போர் kuttuppōr, பெ.(n.)

   1. செங்குத்தாக வைக்குங் கதிர்ச்சூடு; the first layer of sheaves in a stack, placed with ears uppermost.

   2. குத்துச்சண்டை; boxing, fisticuffs.

   3. தீராப் பகை; violentenmity.

அவ்விரு குடும்பத்துக்கும் எப்பொழுதும் குத்துப்போர்தான் (உ.வ.);.

ம. குத்துபோர்

     [குத்து + போர்.]

குத்துமதிப்பாய்

 குத்துமதிப்பாய் kuddumadippāy,    ஓர் அளவாய்; approximately.

குத்து மதிப்பாய் அதன் விலையைச் சொல் (உ.வ.);.

     [குத்து + மதிப்பு + ஆய்.]

குத்துமதிப்பு

 குத்துமதிப்பு  kuttumatippu, பெ.(n.)

முறையாகக் கணக்கிடாத மதிப்பீடு; தோராயம்; rough estimate; approximate value. அறுபது கலம் நெல் என்று எப்படிச் சொல்கிறாய்? எல்லாம் ஒரு குத்து மதிப்புதான். குத்துமதிப்பாகச் சொன்னால் இந்த வீடு முப்பதாயிரம் பெறும்.

     [குத்து+மதிப்பு]

 குத்துமதிப்பு kuddumadippu, பெ.(n.)

   தோராயமாகக் குறிப்பிடும்அளவு; an estimate by guess.

ம. குத்துமதிப்பு

     [குத்து + மதிப்பு.]

குத்துமானம்

 குத்துமானம் kuttumāṉam, பெ.(n.)

   கட்டட வளைவுக்கு (கமானுக்கு); மேல்குத்தாக வைக்கும் செங்கல் வேலை; brick-work just above an arch with bricks placed on edge.

     [குத்து + மானம்.]

குத்துமி

 குத்துமி kuttumi, பெ.(n.)

   தவிடு சலிக்கப்பெறாத உமி;  husk with bran separated from rice by pounding.

     [குத்து + உமி.]

குத்துமுள்

 குத்துமுள் kuttumuḷ, பெ.(n.)

   குதிரைமுள்; spur.

ம. குத்துமுள்ளு

     [குத்து + முள்.]

குத்துயரம்

 குத்துயரம்  kuttuyaram, பெ.(n.)

முக்கோணத்தில் அடிப்பக்கத்தையும் மேல் முனையையும் இணைக்கும் செங்குத்துக் கோடு; attitude in a triangle.

     [குத்து+உயரம்]

குத்துயிர்கொலையுயிர்

 குத்துயிர்கொலையுயிர் kuttuyirkolaiyuyir, பெ.(n.)

   கத்திக் குத்தினால் ஏற்பட்ட அஞ்சத்தகு நிலைமை; an endangered condition of life in a case of stabbing condition of life and death (சா.அக.);.

     [குற்றுயிர் → குத்துயிர் + கொலையுயிர்.]

குத்துறுத்தல்

 குத்துறுத்தல் kuttuṟuttal, பெ.(n.)

   தைத்தல்; sewing.

     [குத்து + உறுத்தல்.]

குத்துளி

 குத்துளி kuttuḷi, பெ.(n.)

   துளை உண்டாக்கப் பயன்படுத்தும் ஒரு வகை உளி; a kind of chrel used to make holes.

ம. குத்துளி

     [குத்து + உளி.]

 குத்துளி kuttuḷi, பெ.(n.)

   களைவெட்டி, களை கொத்து; small hoe for weeding out grass.

     [குத்து+உளி]

குத்துளைச்சல்

 குத்துளைச்சல் kuttuḷaiccal, பெ.(n.)

   பூச்சி யாலுண்டாகும் காதுவலி; ear ache or acute pain in the ear due to some microbes (சா.அக.);.

     [குத்து + உளைச்சல்.]

குத்துவலி

 குத்துவலி kuttuvali, பெ.(n.)

   இசிவுநோவு; shooting pinching pain.

தேகமெல்லாம் குத்துவலியாயிருக்கிறது (உ.வ.);.

     [குத்து + வலி. வலி = வலிப்பு.]

குத்துவலிப்பிடிப்பு

 குத்துவலிப்பிடிப்பு kuttuvalippiḍippu, பெ.(n.)

   மேகத்தினால் உடம்பின் மூட்டு அல்லது பொருத்து களில் அழற்சி கண்டு இறுகி அசைக்கவொட்டவர் செய்யும் ஓர் ஆதை (வாத); நோய்; acute artic rheumatism frequently producing ankylosis ofre joints (சா.அக.);.

     [குத்துவலி + பிடிப்பு.]

குத்துவலை

 குத்துவலை kuttuvalai, பெ.(n.)

   மீன்பிடிக்கும் வலை வகையுள் ஒன்று (பர.);; afishing-net.

ம. குத்துவல்

குத்துவல்லயம்

 குத்துவல்லயம் kuttuvallayam, பெ.(n.)

   கையிர் கொண்டு குத்துதற்கு உதவும் ஈட்டி; hand javelin.

     [குத்து + வல்லயம்.]

குத்துவல்லாரை

 குத்துவல்லாரை  kuttuvallārai, பெ.(n.)

மலை வல்லாரை; a species of Indian pennywort – Hydrocotyle asiatica (சா.அக.);.

     [குத்து+வல்லாரை.]

குத்துவா

 குத்துவா kuttuvā, பெ.(n.)

   கடல்மீன்வகை; a herring, golden, glossed with purple.

     [குத்துவாய் + குத்துவா(கொ.வ.);.]

குத்துவாகை

 குத்துவாகை kuttuvākai, பெ.(n.)

   நிலவாரை; east indian senna (சா.அக.);.

     [குத்து + வகை.]

குத்துவாதம்

 குத்துவாதம் kuttuvātam, பெ.(n.)

குத்தூதை பார்க்க;see {kultūdai}

     [குத்து + வாதம்.]

குத்துவாதை

குத்துவாதை kuttuvātai, பெ.(n.)

   பசிவருத்தம்; pain of hunger.

     “குத்துவாதை மிக நலிந்து” (உத்தரா.இராவணன் பிறப்.18);.

     [குத்து வாதை.]

குத்துவான்

 குத்துவான் kuttuvāṉ, பெ.(n.)

   ஊசி, அச்சங் காரணமாக இரவில் வழங்கும் பெயர்; needle, the word being used only at nights from a superstitious fear.

     [குத்து → குத்துவான் அச்சுறுத்தும் நோக்கில் இடப்படும் பெயர்.]

குத்துவாமீன்

 குத்துவாமீன் kuttuvāmīṉ, பெ.(n.)

குத்துவா பார்க்க;see {kuttuva,}

     [குத்துவாய் + மீன் – குத்துவாய் மீன் → குத்துவா மீன்.]

குத்துவாய்

குத்துவாய்1 kuttuvāy, பெ.(n.)

   கடிவாய்; the seat of bite.

   2. வெட்டுவாய்; the mouth of an incised wound (சா.அக.);.

     [குத்து + வாய்.]

 குத்துவாய் kuttuvāy, பெ.(n.)

   பூச்சி முதலியவற்றின் கடிவாய் (யாழ்.அக.);; spot where a scorpion has stung or an insect has bitten.

     [குத்து + வாய்.]

குத்துவாள்

 குத்துவாள் kuttuvāḷ, பெ.(n.)

   உடைவாள்; poniard, dagger.

     [குத்து + வாள்.]

குத்துவிளக்கு

குத்துவிளக்கு kuttuviḷakku, பெ.(n.)

   1. கூரான அடிமுனையை நிலத்தில் குத்தி நிலையாக நிறுத்தும் விளக்கு; standing brass lamp.

     “குத்து விளக்கெரிய”(திவ்.திருப்பா.19);.

   2. பாதமும், தண்டும் அகலமாக அமைந்த மாழை விளக்கு (குத்திட நிற்கும் விளக்கு);; standing brass lamp.

     “தொண்டைமானார் வார்ப்பீத்துக் குடுத்த திருக் குத்துவிளக்கு இரண்டில்” (தெ.கல்.தொ.7கல்93);.

   ம.குத்துவிளக்கு;க. குத்துவௌகு.

     [குத்து + விளக்கு.]

     [P]

குத்துவெட்டு

குத்துவெட்டு kuttuveṭṭu, பெ.(n.)

   1. சண்டையிற் படும் காயங்கள்; stabs and cuts, as infighting with deadly weapons.

   2. தீராப்பகை; violent enmity.

அவனுக்கும் இவனுக்கும் குத்து வெட்டாயிருக்கிறது (உ.வ.);.

   3. எழுத்துக் கிறுக்கு; dots and strokes, as erasures.

   4. நாணயம் முதலிய வற்றில் படும் பழுது; blemishes, as in coins from wear and tear (கொ.வ.);.

     [குத்து + வெட்டு.]

குத்துாதை

 குத்துாதை kuttai, பெ.(n.)

   ஊதை மிகுந்து உடம்பு நொந்து, சயித்தியமும் ஒக்கக் கூடி எரிச்சலையும் குத்தலையும் உண்டாக்கும் ஒரு நோய்; a kind of acute rheumatism due to the aggravated condition of vatha (wind); it is marked by bodily pain, burning sensation and piercing pain in the affected parts (சா.அக.);.

     [குத்து + ஊதை.]

குத்தெனவிழு-தல்

குத்தெனவிழு-தல் kuddeṉaviḻudal,    2 செ.கு.வி.(v.i.)

   1. தலைகீழாய் விழுதல்; to fall headlong.

   2. செங்குத்தாக விழுதல்; to fall on edge or in a perpendicular position.

     [குத்து + என + விழு.]

குத்தோக்காளம்

 குத்தோக்காளம் kuttōkkāḷam, பெ.(n.)

   வயிற்றுப்புரட்டலோடு வரும் கக்கல்; vomiting attended with twisting pain in stomach.

     [குத்து + ஒக்காளம்.]

குநகம்

 குநகம்  kunakam, பெ.(n.)

நகத்திற் காணும் நோய்; a disease of the nails (சா.அக.);.

குநகவெலி

 குநகவெலி gunagaveli, பெ.(n.)

   மரக்காலைப் போல் உடல் உள்ள ஒரு வகை எலி; a species of rat with a cylinderical body resembling a wooden measure.

குநகி

குநகி gunagi, பெ.(n.)

   கெட்டுப் போன நகத்தை உடையவன்; one whose nails are rotten.

     “சிந்திய குநகியாவான் செம் பொனைத் திருடினானும்” (சிவதரு.சுவர்க்க நரகசேட.10);.

     [Skt.ku-nakhin → த.குநகி.]

குநர்ச்சகம்

 குநர்ச்சகம் kunarccakam, பெ.(n.)

   சிறு கஞ்சொறி; small leaved climbing nettlemercury-Tragia involucrata (சா.அக.);.

குந்தகத்தசைநார்

 குந்தகத்தசைநார் gundagattasainār, பெ.(n.)

   தடைப்படுத்தும் தசைநார்; obturator ligament (சா.அக.);.

     [குந்தகம் + தசை + நார்.]

குந்தகன்

குந்தகன்2 gundagaṉ, பெ.(n.)

   குங்கிலியம்; Indian olibanum (சா.அக.);.

     [குல் → குந்து → குத்தகம்.]

குந்தகம்

குந்தகம்1 gundagam, பெ.(n.)

   தடை; obstrucle, obstacle.

   2. குறைந்த விலை; low price.

   க. குந்தகமு;தெ. குத்தகமு.

   தெ. குந்தகமு;   க, குந்தகமு;   மராட்;குந்த

     [குல் → குந்து → குந்தகம்.]

 குந்தகம்2 gundagam, பெ.(n.)

   கீழ்மகன்; low, mean, fellow.

     “குந்தகனாமிந்தக் குறியுடையான்” (பஞ்ச.திருமுக.690);.

     [குண்டகன் + குந்தகன்.]

குந்தக்கம்

குந்தக்கம் kundakkam, பெ.(n.)

குந்தகம் பார்க்க;see kundagam.

     [குத்தகம் → குந்தக்கம்.]

 குந்தக்கம்2 kundakkam, பெ.(n.)

   1. குந்தகம், குழப்பம்; confusion.

   2. குண்டக்கம், கோள்; backbiting.

     [குந்தக → குத்தக்கம்.]

குந்தக்குந்தம்

 குந்தக்குந்தம் kundakkundam, பெ.(n.)

   புனுகு; civet (சா.அக.);.

     [குந்தம் + குந்தம்.]

குந்தந்தள்ளுகை

 குந்தந்தள்ளுகை gundandaḷḷugai, பெ.(n.)

   கண்ணிற் குந்தநோய் விழுகை; staphy-loma.

     [குந்தம் + தள்ளுகை.]

குந்தனக்காரன்

 குந்தனக்காரன் kundaṉakkāraṉ, பெ.(n.)

   ஒன்பான் மணிகளை அணிகலன்களில் பதிப்போன்; one who enchases or sets precious stones.

     [குந்தனம் + சகாரன்.]

குந்தனம்

குந்தனம் kundaṉam, பெ.(n.)

   1. ஒன்பான் மணிகளை அணிகலன்களில் பதிக்குமிடம்; interspace for enchasing or setting gems in jewel.

     “குந்தனத்தி லழுத்தின….. ரத்தினங்கள்” (திவ். திருநெடுந்.வியா.பக்.17);.

   2. தங்கம் (சங்.அக.);; gold, fine gold.

     [குந்து + குந்தனம்.]

குந்தனை

குந்தனை kundaṉai, பெ.(n.)

   எண்ணெய் காய்ச்கம் போது, காய்ச்சும் கலம் சிதையுமாயின் அதிலுள்ள எண்ணெய் வீணாகாமற் காத்தற்பொருட்டு, அப்பாத்திரத்திற்கு ஆதாரமாய் வைக்கப்படும் இரும்பு அணட் (தைலவ. பாயி.19);; special iron cauldron holding the vessel in which medicinal oil is prepared and serving as receptacleifthe vessel gives way.

     [குந்து + அணை. குந்து = பழுது, திது. அணை = தடை, தடுப்பு.]

எண்ணெய் மருந்து (கிருதம்); காய்ச்சும் பொழுது, ஏனம் விரிந்து பழுதுண்டாகக் கூடுமெனக் கருதி, அதற்குத் துணையாக, எண்ணெய் முடியும் வரையில் பொருந்தியிருக்கும் படி வைக்கும் ஓர் ஏனம். இது மருந்து எண்ணெய் ஏனத்தின் வயிறு மட்டும் கொள்ளும்படியாக அமைந்து அடிப்பாகத்தில் கரி நெருப்பின் புகையானது வெளியே போகும்படி துளை ஏற்படுத்தி, வட்டமாயுள்ள அடிகளமைத்து அண்டாவைப்போல் இரும்பினாற் செய்யப்பட்டது (சா.அக.);.

குந்தன்

குந்தன் kundaṉ, பெ.(n.)

   1. திருமால்;{višnu}

     “வல்வினை மாய்த்தறஞ் செய் குந்தன்றன்னை” (திவ்.திருவாய்.79:7);.

   2. தூய தன்மையுடையவன்; holy person.

     “வண்டீங் கவிசெய்குந்தன்” (திவ்.திருவாய்.7.9.7);.

     [குந்து → குந்தன்.]

குந்தமம்

 குந்தமம் kundamam, பெ.(n.)

   பூனை (யாழ்.அ.க.);; Cat.

     [குந்து + அம்மை – குந்தம்மை → குந்தமம்.]

குந்தமர்

 குந்தமர் kundamar, பெ.(n.)

   ஓர் இருடி; a saint.

குந்தம்

குந்தம்1 kundam, பெ.(n.)

   குதிரை; horse

     “வெற்றிசேர் குந்தம்”(திருவிளை.நரிபரி.106);.

     [குருவிந்தம் → குந்தம்.]

 குந்தம்2 kundam, பெ.(n.)

   1. கற்செய்நஞ்சு; mineral .poison.

   2. நான்கு பலங்கொண்ட ஒரு நிறை (தைலவ.தைல.100);; a standard weight 4 palam.

     [குல் → குந்து → குந்தம்.]

 குந்தம்3 kundam, பெ.(n.)

   வைக்கோற்படப்பு; hay stack.

     [குது + குந்து → குந்தம்.]

 குந்தம்4 kundam, பெ.(n.)

   1. கண்ணோய்வகை (மூ.அ.);; tulercle on the cornea of the eye, staphyloma.

   2. துன்பந்தருவது; that which gives distress.

     “மெய்குந்தமாக” (திவ்.இயற்.4:79);.

     [குந்து → குந்தம்.]

 குந்தம்5 kundam, பெ.(n.)

   1. எறிகோல்; javelin for throwing: barbed dart.

     “வைவ ளிருஞ்சிலை குந்தம்” (சீவக. 1678);.

   2. வேல்; spear, lance

     “குந்தமலியும் புரவியான்”(பு:வெ4:7);.

   3. குத்துக்கோல்; pike, stake.

     “பூந்தலைக் குந்தங்குத்தி” (முல்லைப்.41);.

   4. தீப்பந்தம்; torch.

   ம. குந்தம்;தெ. குந்தமு.

 Skt. kunta

     [குல் → குத்து → குந்து → குந்தம்.]

 குந்தம்6 kundam, பெ.(n.)

   1. குபேரனது ஒன்பன நிதியங்களுள் ஒன்று; one of the nine treasures of Kubera.

   2. குந்துருக்கம்; Konkany resin.

     [குருந்து → குந்து → குந்தம்.]

 குந்தம்1 kundam, பெ.(n.)

   1. குருந்த மரம்; wild lime

   2. கள்; toddy.

   3. ஓர் மல்லிகை; a kind jasmine.

   4. குங்கிலியம்; Indian olibanum.

   5. அலரி; fragrar oleander.

   6.குதிரை; horse.

   7. கவளம்; handful quantity.

     [குருந்தம் → குந்தம்.]

குந்தம்புறப்பாடல்

 குந்தம்புறப்பாடல் kundambuṟappāṭal, பெ.(n.)

   கண் விழியில் கொப்புளம் உண்டாதல்; the rising of a lbercle in the eye, protrusion of the eye-ta. (சா.அக.);.

     [குந்தம் + புறப்படல்.]

குந்தம்பூ

 குந்தம்பூ kundambū, பெ.(n.)

   கண்ணிலுண்டாகும் பூ; cataract in the eye (சா.அக.);.

     [குந்தம் + பூ.]

குந்தரம்

 குந்தரம்  kuntaram, பெ.(n.)

ஒரு புல்; a kind of grass (ஒரு புல்.);.

குந்தரை-த்தல்

குந்தரை-த்தல் kundaraittal,    4 செ.கு.வி.(v.i.)

   — வீணாயிருத்தல் (யாழ்.அக.);; to sit idly.

     [குந்து + அரை (உட்கார்ந்து பொழுதுபோக்குதல்.]

குந்தலகீடி

 குந்தலகீடி kundalaāṭi, பெ.(n.)

   பெருங்குடலில் வளரும் ஓர் நீண்ட நாகப்பூச்சி; long thread-worm inhabiting the large intestines (சா.அக.);.

     [குந்தலம் + கீடி. வ. க்ரீட → த.கீடி.]

குந்தலம்

 குந்தலம் kundalam, பெ.(n.)

   வடநாட்டில் பல்லாரியில் உள்ள நாடு; the city in North {} (அபி.சிந்.);.

குந்தலவராளி

குந்தலவராளி kundalavarāḷi, பெ.(n.)

   ஒரு பண் வகை (இராகம்); இசை (பரத.இராக.55);; a musical mode.

     [குந்தலம் + வராளி.]

குந்தலிக்கம்

 குந்தலிக்கம்  kuntalikkam, பெ.(n.)

வெள்ளைப்போள மரத்தின் பிசின் (யாழ்.அக);; myrrh-resin – Gummi resina myrrha (செ.அக.);.

குந்தலிங்கம்

 குந்தலிங்கம்  kuntaliṅkam, பெ.(n.)

மரவகை; benzoin tree – Styrax benzoin (செ.அக.);.

குந்தலீகம்

 குந்தலீகம்  kuntalīkam, பெ.(n.)

முண்டினி மரம்; an unknown tree said to possess occult virtues (சா.அக.);.

குந்தளம்

குந்தளம் kundaḷam, பெ.(n.)

   1. பெண்டிர் தலை மயிர்; woman’s hair.

     “சந்தமலி குந்தளநன் மாதினொடு” (தேவா.107:1);.

   2.மயிர்க்குழற்சி(பிங்.);; hair crinkles curls.

   3. குழற்கொத்து (பிங்.);; woman’s locks.

   4. சாளுக்கியர் நாடு; country of the {châluckyas.}

   ம.குந்தளம்;   க. கூதலு;தெ. குந்தலமு.

 skt kunfala

     [கூதளம் → குந்தளம்.].

குந்தளர்

குந்தளர் kundaḷar, பெ.(n.)

   குந்தள நாட்டில் ஆட்சிபுரிந்த சாளுக்கிய வேந்தர்; chalukyas, as rulers of Kundalam

     “குந்தளரைக் கூடற் சங்கமத்து வென்ற” (கலிங்.193,புதுப்.);

     [குந்தளம் → குந்தார்.]

குந்தளை

 குந்தளை kundaḷai, பெ.(n.)

   மருந்து எண்ணெய்ப் ஏனம் வைக்கும் புரிமணை; a stand or seat made of straw for kepping medicated oil pots, any round wooden base for keeping pots (சா.அக.);.

     [குந்து + குந்தளை.]

குந்தவிளக்கம்

 குந்தவிளக்கம்  kuntaviḷakkam, பெ.(n.)

வெள்ளைப் போளம்: white myrrh or

 women’s bole – Balsomdendra myrrh (சா.அக.);.

     [குந்தம்+விளக்கம்.]

குந்தவை

குந்தவை kundavai, பெ.(n.)

   சோழப்பேரரசன் முதல் இராசராசனின் தமக்கையாரின் பெயர்; name of elder sister of the great {Chõla} Emperor {Rājarājan}

   1.”ஶ்ரீ ராஜராஜவேதர் திருத்தமக்கையார் வல்லவரையர் வந்தியத்தேவர் மகாதேவியார் ஆழ்வார் பராந்தகன் குந்தவையார் எழுந்தருளுவித்த திருமேனிகள்” (S.I.l.i6);.

     [குந்தம் = நறுமணமிக்க குண்டுமல்லிகை. குண்டு → குந்து → குந்தம் + அவ்வை, குந்தவ்வை → குந்தவை. குண்டு மல்லிகை மலரின் பெயரமைந்த பெண்.]

குந்தவை சிநாலயத்துத் தேவர்

குந்தவை சிநாலயத்துத் தேவர் kundavaisinālayattuttēvar, பெ.(n.)

   முதல் இராசராசனின் தமைக்கையாரும் வல்லவரையன் வந்தியத்தேவரின் தேவியாருமாகிய குந்தவையாரின் பெயரால் கட்டப்பட்ட சமணதெய்வக் கோயிலெழுந்தருளி யுள்ள தீர்த்தங்கரர்(தெ.கல்.தொ.2.2கல்.43);; one of holy person, Arhat.

     [குந்தவை + சிநாலயம் + அத்து + தேவர்.]

குந்தா

குந்தா  kuntā, பெ.(n.)

   1. துமுக்கியின் அடி: stock of a gun.

   2. கப்பலின் பின்பக்கம்; stern of a vessel (செ.அக.);.

     [குந்தல் (மரம்); – குந்தா]

குந்தாங்குச்சி

 குந்தாங்குச்சி kundāṅgucci, பெ.(n.)

   சிறுவர்கள் நொண்டியாடித் தொடும் விளையாட்டு; game in which a player hops on one foot in order to touch or catch any of the other players within bounds.

     [குந்தம் + குச்சி – குந்தாங்குச்சி.]

குந்தாடு-தல்

குந்தாடு-தல் kundāṭudal,    5 செ.கு.வி.(v.i.)

   நொண்டிக் கொண்டு விளையாடுதல்; to play hopping on one foot (கோவை.);.

     [குந்து + ஆடு.]

குந்தாணி

குந்தாணி1 kundāṇi, பெ.(n.)

   1. பேருரல்; large mortar.

குந்தாணி போல் இருக்கிறாள் (உ.வ.);

   2.உரலின் வாய்க்கூடு (இந்துபாக.44);; protective ring placed over a mortar to prevent the grainfrom scattering.

     [குண்டு + ஆணி – குண்டாணி → குந்தாணி,

     ‘ஆணி’ சொல்லாக்க. ஈறு.]

     [P]

குந்தாணி

 குந்தாணி2 kundāṇi, பெ.(n.)

   கண்ணோய்வகை; an eye disease.

     [குந்தம் + ஆணி.]

குந்தாணிக்கொடி

 குந்தாணிக்கொடி kundāṇikkoḍi,    கொடிவகை; mortar-flower bindweed.

     [குந்தாணி + கொடி.]

குந்தாணிப்பீரங்கி

 குந்தாணிப்பீரங்கி kundāṇippīraṅgi, பெ.(n.)

   வெடிகுண்டுளை மேலெறிந்துவீசும் உரல் வடிவான பீரங்கி; mortar for throwing shells at high angles.

     [குந்தாணி + பீரங்கி.]

குந்தாலம்

குந்தாலம்1 kundālam, பெ.(n.)

குந்தாலி1 பார்க்க;see {kundall}

     [குந்தாலி → குந்தாலம்.]

 குந்தாலம்2 kundālam, பெ.(n.)

   புள்வகை (யாழ்.அக.);; a kind of bird.

     [குந்து → குந்தாலம்.]

 குந்தாலம் kundālam, பெ.(n.)

   புண் வகை (யாழ்.அக.);; a kind of bird.

     [Skt.gundala → த.குந்தாலம்.]

குந்தாலி

குந்தாலி kundāli, பெ.(n.)

   1. குத்தித் தோண்டும் கருவி வகை; pick-axe with one prong. pick-axe

     “குந்தாலிக்கும் பாரை வலிது” (திருமந்.2909);.

   2. கணிச்சி (பு.வெ.9:38,உரை);; battle-axe.

   ம. குந்தாலி;   க. குத்தா, குத்தலி, குத்லி;   தெ., பட., குட. குத்திலி;   து. குத்தலி, குத்தொலி;   கோத. குதய்;மா.க்வாதலி.

{Skt. kuddâla}

     [குத்து → குந்து → குந்தாலி.]

குந்தாளி

குந்தாளி1 kundāḷi, பெ.(n.)

குந்தாலி1 பார்க்க;see {kundali.}

     [குந்தாலி → குந்தாளி.]

 குந்தாளி2 kundāḷittal,    4 .செ.கு.வி. (v.i.)

   1. களித்துக் கூத்தாடல்; to leap for joy.

   2. முன்னங் காலைப் பதியவைத்து நடத்தல்; to tread on one’s toes, to walk on tiptoe.

   3. குதிப்பதற்கு முயற்சி செய்தல்; to attempt to leap.

ம.குந்தாளிக்குக

     [கொந்தளி → குந்தாளி.]

குந்தி

குந்தி1 kundi, பெ.(n.)

   கள் (திவா.);; toddy.

     [குத்தி → குந்தி.]

 குந்தி2 kundi, பெ.(n.)

   பாண்டு மனைவியருள் மூத்தாள் மூத்தாள் (பாரத);; Kundi, the first wife of {Pāngu}

     [குள் → குந்து → குந்தி = குள்ளமானவள்.]

குந்திகறையான்

 குந்திகறையான்  kuntikaṟaiyāṉ, பெ.(n.)

பச்சோந்தி; green-lizard – Chameleon (சா.அக.);.

     [P]

குந்திகறையோன்

 குந்திகறையோன் gundigaṟaiyōṉ, பெ.(n.)

   பச்சோந்தி; green lizard (சா.அக.);.

     [ஒருகா. குந்தி + (கரைவோன்); கறையோன்.]

குந்திநட-த்தல்

குந்திநட-த்தல் kundinaḍattal,    3 செ.கு.வி.(v.i.)

   முன்னங்காலை மாத்திரம் ஊன்றி நடத்தல்; to walk on tiptoe.

ம. குந்திநட

     [குந்து → குந்தி + நட.]

குந்திநில்-தல் (குந்தி நிற்றல்)

குந்திநில்-தல் (குந்தி நிற்றல்) kundiniltalkundiniṟṟal,    14 செ.கு.வி. (v.i.)

   1. ஒற்றைக் காலால் நிற்றல் (பிங்.);; to stand on one leg.

   2. முன்னங்காலால் நிற்றல்; to stand on tiptoe.

     [குந்தி + நில்.]

குந்திபுதல்வன்

 குந்திபுதல்வன்  kuntiputalvaṉ, பெ.(n.)

பாண்டவர்களுள் மூத்தவனான தருமன் (குந்தியின் புதல்வன்); (சூடா);; son ofkundi, daruma (செ.அக.);.

     [குந்தி+புதல்வன்.]

குந்திபுரி

 குந்திபுரி  kuntipuri, பெ.(n.)

தற்போதுள்ள குவாலியர் நகரம்; recent kuwaliyar city (அபி.சிந்);.

     [குந்தில் – குந்திலி+புரி]

குந்திபோசன்

 குந்திபோசன்  kuntipōcaṉ, பெ.(n.)

இடைய (யாதவ); மன்னன்; yatava king.

பாரதப் போரில் முதல் நாளில் அசுவத்தாமனுடன் போர் புரிந்தான். இவனே குந்தியை வளர்த்தவன் (அபி.சிந்);.

குந்தியடித்தல்

 குந்தியடித்தல் kundiyaḍittal, பெ.(n.)

   நொண்டி யடித்தல் என்னும் விளையாட்டு (யாழ்.அக.);; a game.

     [குந்து → குந்தி + அடி.]

குந்திரம்

குந்திரம்1 kundiram, பெ.(n.)

   ஒரு பறவை; a bird (சா.அக.);.

   2. தென்னை; coconut tree.

     [குந்து → குந்திரம்.]

 குந்திரம்2 kundiram, பெ.(n.)

   புல்வகை (யாழ்.அக.);; a kind of grass.

     [குந்து → குந்திரம்.]

 குந்திரம் kundiram, பெ.(n.)

   புல்வகை (யாழ்.அக.);; a kind of grass.

     [Skt.gundra → த.குந்திரம்.]

குந்திரா

 குந்திரா kundirā, பெ.(n.)

குந்திராத்தீவு பார்க்க;see {kundiráttivu.}

     [குந்திராத்தீவு → குந்திரா.]

குந்திராத்தீவு

 குந்திராத்தீவு kundirāttīvu, பெ.(n.)

   மாலத்தீவு; Maldive Islands.

     [குந்திரம்(தென்னை); + தீவு.]

குந்திராத்தோணி

 குந்திராத்தோணி kundirāttōṇi, பெ.(n.)

   மாலத் தீவார் தென்னை மரத்தாற் செய்யும் படகு; canore in the Maldives constructed wholly from the coconut tree.

     [குந்திரம் + தோணி. குந்திரம் = தென்னை.]

குந்திரிகம்

குந்திரிகம்  kuntirikam, பெ.(n.)

   1. பெரிய மரவகை; salai tree – Indian olibanum – Boswellia serrata typica.

   2. மர வகைகளுள் ஒன்று; konkani resin – Boswellia serrataglabra (செ.அக.);.

குந்திவை-த்தல்

குந்திவை-த்தல் kundivaittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   முன்னங்காலை மட்டும் ஊன்றி நடத்தல்; to walk on tiptoe.

     “நெட்டி குந்தி வைத்து”(பிரபோத.11:17);.

     [குந்தி + வை.]

குந்து

குந்து1 kundudal,    5 செ.கு.வி.(v.i.)

   1. இரு காலையும் ஊன்றி வைத்து உட்காருதல்; to sit on the heels with legs folded upright.

   2. உட்காருதல்; to sit, squat.

   3. முன்னங்கால்களை மட்டும் ஊன்றி நிற்றல்; to stand on tiptoe.

     “குந்தியுறித் தயி ருண்டவர்” (பாரத.கிருட்.199);.

   4. நொண்டி நடத்தல்; to hop on one leg.

     “அடியொன்று கடிதோட்டிக் குந்தி வந்தனனெடுஞ் சிலைமுதற் பகம்பாகும்பக348.

   5. வளைதல்;  to bend, as abow,

     “குந்து வன்னெடுஞ் சிலைமுதற் படைகளும்”(கம்பரா பிரமாத்56);.

ம.குந்திக்குக

     [குல் → குள் → குந்து.]

 குந்து2 kundu, பெ.(n.)

   1. உட்காருகை; sitting on the heels, squatting.

   2. திண்ணையொட்டு; pial or raised floor of a verandah used as a seat.

   3. நொண்டுகை; hopping.

 I.sid, sed;

 A.S. sitt: E, sit, Goth. sit;

 ON-siti;

 OHG. Sizz. Skt. Sad.

     [குல் – குள் – குந்து.]

 குந்து3 kundudal,    5 செ.கு.வி.(v.i.)

   தவறுதல்; to fail, to miss.

     “குந்தாவருந் தீமை” (திவ்.திருவாய். 2:6.1);.

     [குல் → குள் → குந்து.]

 குந்து4 kundu, பெ.(n.)

   1.பழத்தின் சிம்பு; fibre in fruits or roots.

   2. கூந்தல்; hair.

     [குருத்து → குந்து.]

 குந்து5 kundu, பெ.(n.)

   எலி; mouse, rat (சா.அக.);.

     [குத்து → குந்து.]

 குந்து6 kundu, பெ.(n.)

   தீர்த்தங்கரருள் ஒருவர் (ஶ்ரீபுராணம்.);; a {třttarikara}

     [குல் → குள் → குந்து.]

 குந்து1 kundu, பெ.(n.)

   கதவை அரிகாலுடன் இணைக்கும் இரும்புக்கருவி; iron accessary connecting door and the frame.

     [குள்-குந்து]

 குந்து kundu, பெ.(n.)

   மாட்டுக்கு வரும் காய்ச்சல்; fever affecting cow.

     [குள்-குந்து]

குந்துகாலன்

குந்துகாலன் kundukālaṉ, பெ.(n.)

   1. முன்கால் களால் நடப்பவன்; one who walks with raised heels (கொ.வ.);.

   2. காலை இழுத்து நடப்பவன்; one who hobbles or limps.

     [குந்து + காலன்.]

குந்துகாலி

 குந்துகாலி kundukāli, பெ.(n.)

   முன்னங்காலால் நடப்பவள்; a woman walking on tip-toe (சா.அக.);.

     [குந்து + காலி.]

 குந்துகாலி kundukāli, பெ.(n.)

   அடிவலுவற்ற மரம் (யாழ்.அக.);; post which is weak at the base.

     [குள் → குந்து → காலி.]

குந்துகால்

குந்துகால் kundukāl, பெ.(n.)

   1. முன்புற மட்டும் ஊன்றிய கால்; tiptoe.

   2. குந்தியிருக்கை; squatting, sitting on the heels.

   3.தாங்கி நடக்கும் கால், நொண்டிக்கால்; a limping or lame leg.

ம.குந்துகால்

     [குந்து + கால்.]

குந்துக்கால்

 குந்துக்கால் kundukkāl, பெ.(n.)

   இராமேசுவரம் அருகிலிருந்த பழைய முகவைத் துறைமுகம்; old {mugavai-t-turaimugam} near to Rameshwaram.

     [குன்று → குந்து → கால்.]

குந்துதிண்ணை

 குந்துதிண்ணை kundudiṇṇai, பெ.(n.)

   ஒட்டுத் திண்ணை; a small platform or pial adjoining a verandah used as a seat.

     [குந்து + திண்ணை.]

குந்துத்தடி

 குந்துத்தடி kunduttaḍi, பெ.(n.)

   பனைநார் உரிக்கும் முட்கருவி;  stick with several prongs or forks to extrac fibre from the palmyra.

     [குந்து + தடி.]

குந்துப்பு

 குந்துப்பு kunduppu, பெ.(n.)

   ஒற்றைக் காலால் நடந்தாடும் சிறுவர் விளையாட்டு; a boy’s game of hopping on one leg.

     [குந்து → குந்துப்பு.]

குந்துமணி

 குந்துமணி kundumaṇi, பெ.(n.)

குன்றிமணி பார்க்க;see {kunrimani}

     [குன்றிமணி → குந்துமணி(கொ.வ.);.]

குந்துரு

 குந்துரு kunduru, பெ.(n.)

குந்துருக்கம்பார்க்க;see {kundurukkam.}

     [குந்துருக்கம் → குந்துரு.]

குந்துருக்கன்

 குந்துருக்கன் kundurukkaṉ, பெ.(n.)

   கருங்குங்கிலியம்; black hammer (சா.அக.);.

     [குந்துருக்கம் → குந்துருக்கன்.]

குந்துருக்கம்

குந்துருக்கம் kundurukkam, பெ.(n.)

   1. மேல் நாட்டுச் சாம்பிராணி; salai tree (மலை.);

   2. வெள்ளைக் குங்கிலியம்; Konkany resin.

     [குந்துள் → குந்துருக்கம்.]

குந்தேசிகம்

 குந்தேசிகம்  kuntēcikam, பெ.(n.)

கோபுரக் கள்ளி; a kind of spurge tree; tower spurge(சா.அக.);.

 குந்தேசிகம் gundēcigam, பெ.(n.)

   கோபுரக்கள்ளி; a kind of spurge tree (சா.அக.);.

     [குந்து + ஊசி – குத்தூசி → குந்தேசி – குந்தேசிகம்.]

குனகு-தல்

குனகு-தல் guṉagudal,    5 செ.கு.வி.(v.i.)

   கொஞ்சிப் பேசுதல்; to prattle sweetly.

     “குனகியல

ருடனிருந்து” (திருப்பு. 20);.

     [குல் → குன் → குனகு.]

குனகுனிபாவம்

குனகுனிபாவம் guṉaguṉipāvam, பெ.(n.)

   பண்பும் பண்பியும் போலப் பிரியாமலிருக்கும் நிலை; state of inseparableness as an object and its attributes.

     “அனல் வெம்மையும் போல் … குணகுனிபாவமாகி” (சி.சி4:6);.

     [குணம் + குனி + பாவம்.]

குனகோளார்த்தம்

 குனகோளார்த்தம் kuṉaāḷārttam, பெ.(n.)

   புவியின் கிழக்குப் பாதிக்கோளம்; eastern hemisphere.

     [குணக்கு + கோளம் + அர்த்தம். அர்த்தம் = பாதி.]

குனங்காட்டு-தல்

குனங்காட்டு-தல் kuṉaṅgāṭṭudal,    5.செ.கு.வி.(v.i.)

   1. இயற்கைக் குணத்தை வெளிப்படுத்துதல்; to come out in one’s true colours, reveal one’s true character.

   2. நோய் குணமாகுங் குறிகாட்டுதல்; to show signs of cure, as discese.

     [குணம் + காட்டு.]

குனசைவம்

குனசைவம் kuṉasaivam, பெ.(n.)

   பதினாறு வகைச் சிவசமயங்களுள் சிவபிரானை எண் குணங்களுடை பவராக மனத்தில் நினைத்து அடிமை செய்பவர்க்கே வீடு என்னுங் கொள்கை யுள்ள சிவசமயம் (த.நி.போ. வாதிகள் சமயம், 200);; a Saiva sect which holds that salvation is for those who contemplate Siva as having eight attributes and worship Him as -is devoted slaves, one of 16Saivam.

     [குணம் + சைவம்.]

குனடி

 குனடி kuṉaḍi, பெ.(n.)

   நேப்பாளத்திருந்து வரும் ஒரு கடைச்சரக்கு; a bazar drug exported from Nepa (சா.அக.);.

     [குல் → குள் → குனடி.]

குனட்டம்

 குனட்டம் kuṉaṭṭam, பெ.(n.)

அதிவிடையம்(மலை.); பார்க்க;See. {advigayam}

     [குனட்டு → குண்ட்டம்.]

குனட்டை

குனட்டை kuṉaṭṭai, பெ.(n.)

   1. குறும்பு; bomischief, pranks.

   2. நோய் கொடியதாக மாறுகை; bounfavourable turn, as of a disease.

க.குனஷ்டா; ம.குனஷ்டம்.

     [Skt.ku-nasta → த.குனட்டை.]

குனருத்திரர்

குனருத்திரர்  kuṉaruttirar, பெ.(n.)

குணதத்துவ நிலையராய் வெட்டவெளியில், அழிக்குந் தொழிலைச் செய்யும் சிவன் (உத்திரர்); (சதாசிவ.77);; the Lord of relative destruction who functions in the region of Kuna-tattuva (செ.அக.);.

     [குணம்+Skt, உருத்திரர்]

குனவெட்டு

குனவெட்டு kuṉaveṭṭu, பெ.(n.)

   1. ஏரியைப் பழுது பார்த்தல்; tank repair.

   2. ஏரி பழுது பார்த்தலுக்குக்குடிகள் செலுத்தும் வரி; a cess paid by the ryots to the land-holderson account of tank repair.

     [குளம் + வெட்டு.]

குனா

 குனா kuṉā, பெ.(n.)

   குற்றம்; fault, crime (செ.அக.);.

     [u.ցսոah → த.குனா.]

 குனா kuṉā, பெ.(n.)

   குற்றம் (வின்.);; fault, crime.

     [U.{} → த.குனா.]

குனாசகம்

குனாசகம் kuṉācakam, பெ.(n.)

   உடலில் பட்டால் தினவுண்டாகக் கூடிய இலையைக் கொண்ட ஒரு செடி வகை (மலை.);; small climbing nettle, which cause itching in the body – Tragia involucrata-Cannabina

 குனாசகம் guṉācagam, பெ.(n.)

   1. சிறுகஞ்சொறி (மலை);; small climbing nettle.

     [Skt.{} → த.குனாசகம்.]

குனாசம்

 குனாசம் kuṉācam, பெ.(n.)

   குன்றி என்னும் செடிவகை (மலை);; a plant called crab’s eye-Abrus precatorius (சா.அக.);.

 குனாசம் kuṉācam, பெ.(n.)

   குன்றி (மலை);; crab’s eye.

     [Skt.{} → த.குனாசம்.]

குனாதீதம்

 குனாதீதம்  kuṉātītam, பெ.(n.)

ஒழுக்கங் கடந்தது; that which is absolute above all attributes, as referring to god (செ.அக.);.

     [குணம்+Skt. அதீதம்]

குனாம்பு

குனாம்பு2 kuṉāmbu, பெ.(n.)

   பகடி; merry talk, 3rollery, idle joke.

     [குள் → குண → குணம்பு → குணாம்பு.]

குனாவகம்

 குனாவகம் guṉāvagam, பெ.(n.)

கூத்தன் குதம்பை pointed leaved hog weed (சா.அக.);.

     [குல் → குன் → குனவு → குனவகம் → குனாவகம்]

குனி

குனி1 kuṉi,    1. பண்பி; object, as possessing attributes;

குணத்தின் பெயர் குணிமேல் நின்றது(குறள்,53,உரை);.

   2. நற்குணமுடையவன்; one endowed with good qualities.

     [குணம் + குணி.]

 குனி1 kuṉittal,    4 செ.குன்றாவி. (v.t..)

   வளைத்தல்;  to bend, curve.

     “குனித்த புருவமும்” (தேவா.11:4);.

     [குனி → குனித்தல்.]

 குனி2 kuṉittal,    4 செ.கு.வி. (v.i.)

   1. ஆடுதல்; to dance.

     “அன்பரென் பூடுருகக் குனிக்கும்பாம்பலங் காரப்பரன்” (திருக்கோ:1);.

   2.குரல் நடுங்குதல்; to quaver, quiver, shake, as the voice in singing.

     [குனி + குனித்தல்.]

 குனி3 kuṉi, பெ.(n.)

   1. வளைகை; curvature

     “குனிகொள் பாக வெண்மதி” (சீவக. 704);.

   2. வில் (சதுர.);; bow.

     [குல் → குன் → குனி.]

குனி-தல்

குனி-தல் kuṉidal,    2 செ.கு.வி.(v.i.)

   1 வளைதல்; to bend, as a bow.

     “குனிவளர் சிலை” (சீவக. 486);

   2. வணங்குதல் (சூடா.);; to bow, make obeisance

   3. தாழ்தல் (சூடா.);; to stoop, to descend low

     “குனிந்த வூசலிற் கொடிச்சி” (கம்பரா. சித்திர. 24);

   4. வீழ்தல்; to fall, as in battle.

     “குஞ்சரங் குனிம நூறி” (சீவக. 2293);.

   5. இரங்குதல் (சது.);; to pity commiserate, relent.

   ம.குனி;   க.குனி;தெ.குங்கு.

     [குல் → குன் → குனி. குல் = வளைதல்.]

குனிந்த

 குனிந்த kuṉinta, பெ.எ.(adj.)

   தலை முன் பக்கம் கவிழ்ந்த; with the head bent downward and forward (சா.அக.);.

     [குனி-குனிந்த]

குனிந்ததலை

குனிந்ததலை kuṉintatalai, பெ.(n.)

   1. கவிழ்ந்த தலை; bent head.

   2. கீழ்ப் பார்வை; downward look

     ‘இந்தப் பெண் குனிந்த தலை நிமிராமல் நடந்து செல்லும் இயல்புடையவள்.

     [குனிந்த+தலை]

குனிந்தபார்வை

 குனிந்தபார்வை kuṉintapārvai, பெ.(n.)

   கீழ்ப் பார்வை; downward look (சா.அக.);.

     [குனிந்த+பார்வை]

குனிந்தமுதுகு

 குனிந்தமுதுகு kuṉintamutuku, பெ.(n.)

   கூன்; hunch-back (சா.அக.);.

     [குனிந்த+முதுகு]

குனிப்பம்

குனிப்பம் kuṉippam, பெ.(n.)

ஆடல், dance. கொம்பனைய மாதர் குனிப்பமிட (சொக்கஉலா.73);,

     [குனி + குனிப்பம்]

 குனிப்பம் kuṉippam, பெ.(n.)

   ஆடல்; dance.

     “கொம்பனைய மாதர் குனிப்பமிட” (சொக்க. உலா.73);.

     [குனி → குனிப்பம்.]

குனிப்பாய்ப்பார்-த்தல்

குனிப்பாய்ப்பார்-த்தல் kuṉippāyppārttal,    4 செ.கு.வி. (v..i)

   கவனமாய் உற்றுப்பார்த்தல்; looking with special attention (சா.அக.);.

     [குனிப்பு + ஆய் + பார்-.]

குனிப்பு

குனிப்பு kuṉippu, பெ.(n.)

   செய்யுள் சந்த வகை; a peculiar rhythem in verse.

     “அணியுடன்றபரி பரியுடன்றகரிகரியுடன்றகொடி”(செஅக);

     [குழிப்பு→குளிப்பு→குனிப்பு]

 குனிப்பு kuṉippu, பெ.(n.)

   வளைகை; bending.

     [குனி → குனிப்பு.]

 குனிப்பு2 kuṉippu, பெ.(n.)

   1. ஆடல்; dance.

     “ஆனந்தத் தேன் சொரியும் குனிப்புடையானுக்கே” (திருவாச. 10:3);;

   2. கூத்துவகை (பிங்.);; a kind of dance.

     [குல் → குனி → குனிப்பு.]

குனிவி-த்தல்

குனிவி-த்தல் kuṉivittal, பி.வி.(cas.v.)

   வளைத்தல்; to bend.

     “கொன்படைத் தகுனிவிற் குனிவித்தே” (கந்தபு:தாரக.122);.

     [குனி → குனிவி.]

குனு

 குனு kuṉu, பெ.(n.)

   கடம்பை(கடமான்);போன்ற காட்டு விலங்கு; a wild animal which look like a kadampai

     [குன்- குனு]

இதன் கொம்புகள் நீண்டு வளைந்து மேலெழுந்திருக்கும். கழுத்தில் பிடரி மயிருண்டு. நான்கு அடி உயரம் கொண்டது. ஆப்பிரிக்கக் காடுகளில் அதிகம் காணப்படுகிறது (அபி.சிந்);.

குனுகினி

 குனுகினி guṉugiṉi, பெ.(n.)

   நோய்க் குறுமி (கிருமி);க் கொல்லி; a remedy which expels worms from animal bodies (சா.அக.);.

     [குணுகு → குணுகினி.]

குனுகு-தல்

குனுகு-தல் guṉugudal,    5 செ.கு.வி.(v.i.)

   1. கொஞ் சுதல்; to caress, prattle, talk pleasantly.

     “குணுகி பிட்டுள பொருள் பறித்து” (திருப்பு.676);.

   2.வளைதல்; to bend.

க. குணுகு

     [குள் → குணு → குணுகு,]

 குனுகு-தல் guṉugudal,    5 செ.கு.வி.(v.i.)

குனகு பார்க்க;See. {kunagu.}

     [குனகு →: குனுகு.]

குனுக்குத்தடி

 குனுக்குத்தடி kuṉukkuttaḍi, பெ.(n.)

   இரும்புப் பூணிட்ட கனத்த கழி; club or heavy stick with an iron ferrule.

     [குணுக்கு + தடி.]

குனேட்டம்

 குனேட்டம் kuṉēṭṭam, பெ.(n.)

   அதிவிடயம் என்னும் மருந்துச் சரக்கு; a bazzar drug called Indan ateas (சா.அக.);.

     [குள் → குணட்டம் → குணேட்டம்.]

குனை

 குனை kuṉai, பெ.(n.)

   கூர்மையான பக்கம்; the sharp point or tip of a thing.

     “பிரம்பின் குனை படலால்”

     [குல் → குனை]

குனைபுல்மேய்-தல்

குனைபுல்மேய்-தல் kuṉaipulmēytal,    2 செ.கு.வி. (v.i.)

   ஆழமாகக் கருத்துன்றி படிக்காமல், மேலெழுந்தவாறு படித்தல்; to have a cursory or superficial study (செ.அக.);.

மறுவ. நுனிப்புல் மேய்-தல்

     [குனை+புல்+மேய்தல்.]

குனைப்புல்

 குனைப்புல் kuṉaippul, பெ.(n.)

   மேம்புல்; the tip of grass (சா.அக.);.

     [குனை + புல்.]

குனைவண்டு

 குனைவண்டு kuṉaivaṇṭu, பெ.(n.)

   பருத்தியில் விழும் பூச்சி வகை; a cotton pest (செ.அக.);. [குனை+வண்டு]

குன்னம்

குன்னம் kuṉṉam, பெ.(n.)

   1. மதிப்புக்குறைவு; disgrace, dishonor.

     “இங்கே யொருத்திநா னிருந்ததே பெருங்குன்னம்” (இராமநா.);.

   2. பழி; scandal.

     “கன்னிமேலே யெறிந்தாற் குன்னஞ் சொல் லாரோ” (இராமநா. உயுத். 82);.

     [குல் → குன்னம்.]

குன்னல்

 குன்னல் kuṉṉal, பெ.(n.)

   சளி சுரத்தோடு மாட்டுக்கு வரும் நோய்; a cattle disease with cold and fever.

     [குல் → குன் → குன்னல்.]

குன்னா-த்தல்

குன்னா-த்தல் kuṉṉāttal,    6 செ.கு.வி.(v.i.)

   குளிரால் உடம்பு கூனிப் போதல் (நெடுநெல்.9, உரை);; to shrink and crouch with cold, to contract limbs and look small.

     [குல் → குன்னு → குன்னா-.]

குன்னாங்குருச்சியாக

குன்னாங்குருச்சியாக kuṉṉāṅgurucciyāka,    பெ.(adv.) ஏகாந்தமாக; privately, secretly.

     “இது தன்னைக் குன்னாங்குருச்சியாக வன்றிக்கே எல்லாருமறியும்படி ப்ரஹித்தமாகச் சொன்னேன்” (திவ்.பெரியாழ்.2.2:5, வியா.பக்.259);.

     [குன்னா + குருச்சியாக.]

குன்னான்

 குன்னான் kuṉṉāṉ, பெ.(n.)

   ஒரு வகை எலி; a kind of rat.

     [குல்→குன்→குன்னான்.]

குன்னி

 குன்னி kuṉṉi, பெ.(n.)

   குன்றிமணி; crabis eye, jewellers lead (சா.அக.);.

மறுவ. குண்டுமணி

 Fin. kovyt;

 Es. kebi;

 Hung. keves;

 Mong. gopi Jap, kuwashii.O.Jap. kupasi

     [குல் → குன் → குன்றி→குன்னி (கொ.வ.);.]

குன்பாண்டு

 குன்பாண்டு kuṉpāṇṭu, பெ.(n.)

   வெண்பாதிரி; white trumpet flower (சா.அக.);.

     [குல் + பாண்டு – குல்பாண்டு → குன்பாண்டு. பாண்டு = வெண்மை.]

குன்மக்கட்டி

 குன்மக்கட்டி kuṉmakkaṭṭi, பெ.(n.)

   வயிற்றில் உண்டாகும் ஒருவகைக் கட்டி; Billy; glandular enlargement in the abdomen, tumour.

     [குன்மம் + கட்டி.]

குன்மக்கழிச்சல்

 குன்மக்கழிச்சல் kuṉmakkaḻiccal, பெ.(n.)

   செரியாமையினால் ஏற்படும் கழிச்சால்; diarrhoea due to indigestion (சா.அக.);.

     [குல் → குன்மம் + கழிச்சல்.]

குன்மக்காசம்

 குன்மக்காசம் kuṉmakkācam, பெ.(n.)

குன்ம

   நோயினால் ஏற்பட்ட காசநோய்;{kāsam} arising due to dyspepsia(சா.அக.);.

     [குன்மம் + காசம்.]

குன்மக்காமாலை

 குன்மக்காமாலை kuṉmakkāmālai, பெ.(n.)

   குன்ம நோயினால் உண்டான காமாலை; jaundice connected with dyspepsia due to obstruction of the liver (சா.அக.);.

     [குன்மம் + காமாலை.]

குன்மக்குடோரி

குன்மக்குடோரி kuṉmakkuṭōri, பெ.(n.)

   குன்மத்தைப் போக்க வல்ல ஒருவகை நீர்ப்பூடு (பதார்த்த. 244);; a water-plant capable of curing chronic dyspepsia.

     [குன்மம் + (கோடாலி); குடோரி.]

குன்மக்கோடாலி

 குன்மக்கோடாலி kuṉmakāṭāli, பெ.(n.)

   மரத்தைக் கோடாலி கொண்டு வேரறப் பிளப்பது போல், உடம்பிலுள்ள நோயை வேரறக் களைந்து குணமாக்கும் மருந்து; a medicine capable of curing radically diseases in the system in the same way as a tree is uprooted with an axe severing all connections with the ground (சா.அக.);.

     [குல் + குன்மம் + கோடாலி.]

குன்மக்கோளாறு

 குன்மக்கோளாறு kuṉmakāḷāṟu, பெ.(n.)

   செரியாமையினால் ஏற்படும் குற்றங்கள்; dyspeptic disorders (சா. அக.);.

     [குன்மம் + கோளாறு.]

குன்மசூலை

 குன்மசூலை kuṉmacūlai, பெ. (n.)

   செரியாமை யால் உண்டாகும் வயிற்று வலி முதலிய நோய் வகைகள் (இங்.வை.);; chronic dyspepsia;glandularenlargement in the abdomen, as of the mesenteric gland, causing indigestion, colic and emaciation (செ.அக.);.

     [குன்மம்+குலை.]

குன்மச்சூலை

குன்மச்சூலை kuṉmaccūlai, பெ.(n.)

   குன்மத்தினால் வயிற்றில் உண்டாகும் குத்தல் நோய்; colicky pain in the abdomen experienced in case of dyspepsia.

     [குன்மம் + சூலை.]

 குன்மச்சூலை kuṉmaccūlai, பெ.(n.)

குன்மம்1 பார்க்க (இங்.வை.);;See. {kunmam’.}

     [குன்மம் + சூலை.]

குன்மத்தலைவலி

 குன்மத்தலைவலி kuṉmattalaivali, பெ.(n.)

   குடல் ஈரல் போன்ற உறுப்புகள், குன்மக் கோளாறடை வதினால் ஏற்படும் தலைவலி; head-ache arising from the derangment of the stomach, bowel or liver due to dyspepsia (சா.அக.);.

     [குன்மம் + தலைவலி.]

குன்மத்தைப்போக்கி

 குன்மத்தைப்போக்கி kuṉmattaippōkki,    பெ.(n. மான்செவிக் கள்ளி; leafy tree-spurge. It is so called from its virtue of curing dyspepsia (சா.அக.).

     [குன்மம் + அத்து + ஐ + போக்கி.]

குன்மநித்திரிஞ்சம்

 குன்மநித்திரிஞ்சம் kuṉmanittiriñcam, பெ.(n.)

   இலைக்கள்ளி;   மான் செவிக்கள்ளி; leafy tree, spurge – Euphorbia nereifolia (சா.அக.);.

     [P]

குன்மப்புரட்டு

 குன்மப்புரட்டு kuṉmappuraṭṭu, பெ.(n.)

   செரியாமையால் வாந்தியுண்டாகும் வயிற்று நோய் வகை; chronic dypepsia, acute pain attending the kunmam disease causing vomiting (செ.அக.);.

     [குன்மம்+புரட்டு]

குன்மப்போக்கு

 குன்மப்போக்கு kuṉmappōkku, பெ.(n.)

   குன்மத்தினால் உண்டாகும் வயிற்றுப்போக்கு; diarrhoea due to indigestion (சா.அக.);.

     [குல் = கூடுதல் கருத்துவேர். குல் → தண்டு →

குன்மம்.]

குன்மம்

குன்மம்1 kuṉmam, பெ.(n.)

   செரிமானமின்மை, வயிற்றுவலி முதலியன காணும் வயிற்றுநோய் (சீவரட்.);; chronic dyspepsia; glandular enlargement in the abdomen, as of the mesenteric gland, causing indigestion, colic and emaciation.

   2. 9 யானை,9 தேர், 27 குதிரை, 45 காலாள்கள் கொண்ட படைவகுப்பு (சூடா.);; a division of an army consisting of elephants, 9 chariots, 27 horses and 45 foot soldiers.

   3. அடர்ந்த தூறு (சூடா,);l; dense thicket, bush.

     [குல் (குத்தல், வலி); → குன்மம்.]

 குன்மம்2 kuṉmam, பெ.(n.)

   1. புரளச் செய்தல்; causing to roll.

   2. உள்கட்டி; internal tumour.

   3. அடி வயிற்றுக் கட்டி; abdominal tumour (சா.அக.);.

     [குல் → குல்மு → குன்மு → குன்மம்.]

 குன்மம்3 kuṉmam, பெ.(n.)

   பித்தம் அதிகரித்து, செரியாமையினால் ஏப்பத்தோடு வலியை உண்டாக்கும் ஒரு நோய்; dyspepsia arising from chronic enlargement of the spleen.

     [குல் (குத்தல், வலி → குன்மம்.]

வகைகள்:

   1.எரிகுன்மம்டிவி

   2. வலி குன்மம்

   3. சத்தி குன்மம்

   4. கா.சகுன்மம்

   5. தொந்தகுன்மம்

   6. கன்னிகுன்மம்;   7. வாய்நீர் குன்மம்

   8. புரட்டு குன்மம்

   9. பித்த குன்மம்

   10. வாதகுன்மம்

   11. சிலேட்டும குன்மம்

   12. கரிக் குன்மம்

   13. புளிப்புக் குன்மம் (சா.அக.);.

குன்மவலி

 குன்மவலி kuṉmavali, பெ.(n.)

   செரியாமை காரணமாக வயிற்றில் உண்டாகும் உளைச்சல்; colic pains or gripes consequent on chronic dyspepsia (செ.அக.);.

     [குன்மம்+ வலி]

குன்மவல்லி

 குன்மவல்லி kuṉmavalli, பெ.(n.)

கொடிக்கள்ளி: moon-creeper – Sarcostemma viminale (சா.அக);.

     [குன்ம+வல்லி]

குன்மவாயு

 குன்மவாயு kuṉmavāyu, பெ. (n.)

   செரியா மையுடன் இணைந்து வரும் காற்று (வாயு); நோய்த் துன்பம்; flatulency connected with chronic dyspepsia (செ.அக.);.

     [குன்மம்+Skt. வாயு]

குன்மை

 குன்மை kuṉmai, பெ.(n.)

   சிறுகாஞ்சொறி; small climbing nettle (சா.அக.);.

     [குல் → குன்மு → குன்மம்.]

குன்றகத்தலை அறு-த்தல்

குன்றகத்தலை அறு-த்தல் guṉṟagattalaiaṟuttal,    4 செ.குன்றாவி. (v.t.)

   பெரிய தலையைத் தானே அறுத்தல்;ஶ்ரீகம்பருமற்கு யாண்டு இருபதாவது – படாரிக்கு நவகண்டங் குடுத்து குன்றகத்தலை அறுத்துப் பிடலிகைமேல் வைத்தானுக்கு திருவான் மூர் ஊரார் வைத்த பரிசாவது” (தெ.கல்.தொ.12, கல்.106); (செங்கம் நடுகல்);.

     [குன்றகம் + தலை + அறு-.]

செஞ்சோற்றுக் கடன் தப்பாமல் தன் அரசனுக்கு வெற்றி வேண்டி வீரன் தன்னைத் தானே பலியிடல் இச்செயலை, புறப்பொருள் வெண்பாமாலை வாகையுள் அவிப்பலி என்று சிறப்பித்துக் கூறும். தமிழகத்தில் வடி ஆர்க்காடு மாவட்டத்திலுள்ள செங்கம் நடுகற் பொறிப்பு இதனைப் புலப்படுத்தும்.

குன்றக்கூறல்

குன்றக்கூறல் kuṉṟakāṟal, பெ.(n.)

   பத்துவகை நூற்குற்றங்களுள் கூறவேண்டியதைக் குறைவு படச் சொல்லுகையாகிய குற்றம் (தொல். பொருள். 664);; incomplete statement, a defect in composition one often {nor-kusram,}

     [குன்றுதல் = குறைதல். குன்று → குன்ற + கூறல்.]

குன்றக்கூற்றம்

 குன்றக்கூற்றம் kuṉṟakāṟṟam, பெ.(n.)

   திருச்சிராப்பள்ளி மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் நடுநாட்டின் தென் எல்லைப் பகுதியில் குன்றம் என்னும் ஊரைத் தலைநகரமாகக் கொண்டுள்ள கூற்றமாகும் (கல்.க.சொ.அ.மு.);; name of a {kūtram} in {udayāpālayam} taluk.

     [குன்றம் + கூற்றம்.]

குன்றத்தில்நயந்தசத்தி

 குன்றத்தில்நயந்தசத்தி kuṉṟattilnayantacatti, பெ.(n.)

   தாலம்ப பாடாணம்; a kind of native arsenic (சா.அக.);.

குன்றத்துச்சித்தி

 குன்றத்துச்சித்தி kuṉṟattuccitti, பெ.(n.)

   தாலம்ப பாடாணம் என்னும் பிறவி நஞ்சு வகை; a mineral poison (செ.அக.);.

குன்றத்தூர்

 குன்றத்தூர் kuṉṟattūr, பெ.(n.)

   பெரிய புராணம் இயற்றிய சேக்கிழார் பிறந்த ஊர்; birth place of Sekkilar.

இவ்வூர் தொண்டை நாட்டிலுள்ளது (அபிசிந்);.

     [குன்றம் + அத்து+ ஊர்]

குன்றத்தூர்முதலியார்

 குன்றத்தூர்முதலியார் kuṉṟattūrmutaliyār, பெ. (n.)

   சேக்கிழாரின் தந்தை; father of Šēkkilār(அபி.சிந்);.

குன்றபலம்

 குன்றபலம் kuṉṟabalam, பெ.(n.)

   ஒருவகைக் கருந்திணை; akind of black millet (சா.அக.);

     [குன்று + பலம் (தவசம்); – குன்றபலம்.]

குன்றம்

குன்றம் kuṉṟam, பெ.(n.)

   மலை; hill, mountain.

     “பொதியிற் குன்றத்துக் கற்கால் கொண்டு” (சிலப். 25:122);.

     [குன்று → குன்றம்.]

குன்றம்பூதனார்

 குன்றம்பூதனார் kuṉṟampūtaṉār, பெ.(n.)

   கடைக் கழக காலத்துப் புலவர்; the poetwho belonged to the last Šangam.

இவர் பரிபாடலில் பாண்டி நாட்டு முருகனின் தலமாகிய திருப்பரங்குன்றத்தை மிக வருணித்திருத்தலின் இவர்க்கு இப்பெயர் வந்திருக்கலாம் (அபிசிந்);.

     [குன்றம்+பூதன்+ஆர்]

குன்றர்

குன்றர் kuṉṟar, பெ.(n.)

   குன்றவாணர்; hill tribes

     “குன்றர் முழங்குங் குரவை” (திருக்கோ. 127);.

     [குன்று + அர் – குன்றர்.]

குன்றல்

குன்றல் kuṉṟal, பெ.(n.)

   1. குறைகை; diminishing, decreasing.

   2. கெடுதல் விகாரம் (Gram.);; elision, omission.

     “மெய்பிறி தாதல் மிகுதல் குன்ற லென்று” (தொல். எழுத்து. 109);.

     [குன்று → குன்றல்.]

குன்றவர்

 குன்றவர் kuṉṟavar, பெ.(n.)

குன்றவாணர் (திவா.); பார்க்க;See. {kudravämar.}

ம. குன்னவன்

     [குன்று → குன்றவர்.]

குன்றவாணர்

குன்றவாணர் kuṉṟavāṇar, பெ.(n.)

   குறிஞ்சிநில மக்கள்; mountaineers, inhabitants of the hilly tract.

     “இருங்குன்ற வாண ரிளங்கொடியே” (திருக்கோ. 15);.

     [குன்றம் + வாணர்.]

குன்றவில்லி

 குன்றவில்லி kuṉṟavilli, பெ.(n.)

   சிவன் (திவா.);;{Siva,} as having Mt. {Meru} for his bow.

மேரு மலையை வில்லாகக் கொண்டவன்.

     [குன்றம் + வில்வி.]

குன்றாவாடை

 குன்றாவாடை kuṉṟāvāṭai, பெ.(n.)

   வடகீழ்க் காற்று; north-east wind.

     [குன்று + ஆ + வாடை. ஆ – எதிர்மறை.]

குன்றி

குன்றி1 kuṉṟittal,    4 செ.கு.வி.(v.i.)

   1. குன்று போல் குவித்தல், ஒன்றாகக் கூட்டுதல்; to heap up, make a lump of, to hill.

   2. வளர்தல்; to be increased, grow(சேரா.நா.);.

   3. குன்றிமணி வளர்தல்; to be increased, grow (சேரா.நா.);.

ம. குன்னிக்குக

     [குல் → குன் → குன்றி.]

 குன்றி2 kuṉṟi, பெ.(n.)

   1. குன்றிச் செடி; crab’s eye creeper.

   2. குன்றிமணி1 பார்க்க;See. {kunrimani.}

   3. குன்றிமணி1 பார்க்க;See. {kurimani.}

     “குன்றுவ குன்றி யனைய செயின்” (குறள்.965);.

   4. மனோ சிலை (வின்.);; a mineral poison.

     [குல் → குன்று → குன்றி.]

குன்றிநிறக் கண்ணன்

குன்றிநிறக் கண்ணன் kuṉṟiniṟakkaṇṇaṉ, பெ.(n.)

   1. குன்றிமணி போற்சிவந்த கண்ணு டையவன்; one whose eyes are as red as the kuri.

   2. சிவந்த கண்களையுடைய காட்டுப்பன்றி; Indian wild hog.

     [குன்றி + நிறம் + கண்ணன்.]

குன்றிநேசி

 குன்றிநேசி kuṉṟinēci, பெ.(n.)

   வீட்டுப்பல்லி; house lizard (சா.அக.);.

     [குன்றி + நேசி.]

குன்றிபோல்செடிச்சி

 குன்றிபோல்செடிச்சி kuṉṟipōlceḍicci, பெ.(n.)

   தொழுகண்ணிச் செடி; a medicinal plant resem bling liquorice plant (சா.அக.);.

இதுகுன்றிச்செடியைப்போலிருப்பதால் இப்பெயர் பெற்றது.

குன்றிப்பிரமாணம்

 குன்றிப்பிரமாணம் kuṉṟippiramāṇam, பெ.(n.)

   குன்றிமணியளவு; as big as crab’s eye.

மறுவ. குன்றியளவு

     [குன்றி + பிரமாணம். குன்றியளவு பார்க்க;See. {kudri-y-alavu.]}

குன்றிப்போ-தல்

குன்றிப்போ-தல் kuṉṟippōtal,    8 செ.கு.வி.(v.i.)

   மெலிவுறல்’; being emaciated, as through disease or mental worry (சா.அக.);.

     [குன்று → குன்றி + போ-.]

குன்றிமணி

குன்றிமணி kuṉṟimaṇi, பெ.(n.)

   1. குன்றிச் செடியின் சிவப்பு வித்து; thered seedor crab’s eye

   2. குன்றி1 பார்க்க;See. {kur}.

   3. 4 நெல் அல்லது ½ மஞ்சாடி எடையுள்ள பொன் நிறுக்கும் நிறைவகை (கணக்கதி.);; a standard weight for gold = paddy grains =2gr. troy = {massagi} = 1/12 pagoda

   4. அதிமதுரம்; liquorice,

     [குன்றி + மணி.]

குன்றிமணிச்சம்பா

குன்றிமணிச்சம்பா kuṉṟimaṇiccambā, பெ.(n.)

   செந்நிறமுள்ள சம்பா நெல்வகை (பதார்த்த. 319);; a kind of reddish {cambā-paddy.}

     [குன்றி + மணி + சம்பா.]

குன்றிமேனி

 குன்றிமேனி kuṉṟimēṉi, பெ.(n.)

நிழல்பட்டால்

   தலை கவிழ்ந்திருக்கும் ஒரு பூடு; an unknown plan having a peculiar virtue of drooping when shad: falls on it (சா.அக.);.

     [குன்றி + மேனி.]

குன்றியனார்

 குன்றியனார் kuṉṟiyaṉār, பெ.(n.)

   ஒரு புலவர்; a poet, of sangam age whose pen name couldnot be comprehend by any.

     [குன்றியன்+ஆர்]

இவரது பெயர்க் காரணம் விளங்கவில்லை. குறுந்தொகையில் மேலைக் கடற்கரைத் தொண்டியைச் சிறப்பித்து பாடியமையால் இவர் சேர நாட்டவர் எனக் கொள்ளலாம். இவர் பாடியனவாக நற்றிணையில் இரண்டு (ககள், உங்சா);, குறுந்தொகையில் ஆறு, அகத்தில் இரண்டெனப் பத்துப் பாடல்கள் கிடைத்துள்ளன (அபி.சிந்:);.

குன்றியலுகரம்

குன்றியலுகரம் guṉṟiyalugaram, பெ.(n.)

   குற்றியலுகரம்; shortened ‘u’

     “குடுதுறு வெண்னூ குன்றிய லுகரமொடு” (நன். 331);.

     [குன்று + இயல் + உகரம்.]

குன்றிவேர்

குன்றிவேர் kuṉṟivēr, பெ.(n.)

   அதிமதுரம் (தைலவ. தைல. 4);; liquorice root.

     [குன்றி + வேர்.]

குன்று

குன்று1 kuṉṟudal,    5 செ.கு.வி.(v.i.)

   1. குறைதல்; to decrease, diminish, become reduced.

   2. அழிவடைதல்; to be ruined.

     “குன்றா முது குன்றுடையான்” (சிவப். பிரபந். பிக்ஷாட.2);.

   3. நிலைகெடுதல்; to fall from high position.

     “குன்றின் அனையாரும் குன்றுவர்” (குறள், 965);.

   4.எழுத்துக் கெடுதல் (தொல்.எழுத்து.109); (Gram);; to be omitted, as a letter.

   5. வாடுதல்; to droop, languish to be dispirited.

அவன் துயரத்தால் மனங்குன்றினான்.

   6. வளர்ச்சி யறுதல்; to become stunted to be arrested in growth.

சிறுகன்றுகளின் முதுகிற் கையை வைத்தாற் குன்றிவிடும் (இ.வ.);.

   ம. குன்னுக;   க., தெ. குந்து;   து. குந்துனி;   குட. கொறு;   கோத. குர்க்;   துட. குறக்;   கூ. கோக்;பட. குக்கு.

     [குல் → குன்று.]

 குன்று2 kuṉṟu, பெ.(n.)

   1. குறைவு (சூடா.);; defIciency.

   2. சிறுமலை; hill.

     “குன்றுமலை நாடுகாடு” (புறநா.17);.

   3.மலை (திவா.);; mountain.

   4. சிறுகுவடு (திருக்கோ. 95, உரை);; hill top.

   5. சதய விண்மீன் (பிங்.);; the 24th nakstra.

   ம. குன்னு;   க., தெ., குற. கொண்ட;   குட. குந்தி;   பர். கொந்தி;கோண். குறு.

 Fin, kunnas;

 Es, kangar;

 Q. kancha,

     [குல் → குன்று.]

குன்று-தல்

குன்று-தல் kuṉṟutal,    5 செ.கு.வி.(v.i.)

   1. மேனி குன்றல்; being diminished in lustre or beauty.

   2. குறைதல்; decreasing or diminishing.

   3. மெலிதல்; being reduced or emaciated.

   4. மனம் வாடுதல்; being dispirited in mind.

   5.வளர்ச்சியடையாமை; being stunted in growth.

   6. துன்பத்தால் மெலிவுறல்; growing weak with pain, grief, anguish etc. (சா.அக.);.

குன்றுகூப்பிடு-தல்

குன்றுகூப்பிடு-தல் kuṉṟuāppiḍudal,    20 செ.கு.வி.(v.i.)

   குன்றானது எதிரொலி செய்யுமாறு கூவி விளையாடுதல்; to rouse the echoes of the hill by shouting in play.

     [குன்று + கூம்பிடு-.]

குன்றுபயன்

குன்றுபயன் kuṉṟubayaṉ, பெ.(n.)

   கள வொழுக்கம்; clandestine union, as of lovers.

     “கொள்ளாரிக் குன்றுபயன்” (பரிபா. 9:26);.

     [குன்று + பயன்.]

குன்றுமுத்துக்கொடி

குன்றுமுத்துக்கொடி kuṉṟumuttukkoḍi, பெ.(n.)

   கொடிவகை (விவசா.6);; a creeper.

     [குன்று + முத்துக்கொடி.]

குன்றுவர்

குன்றுவர் kuṉṟuvar, பெ.(n.)

   1. குறிஞ்சிநிலமக்கள் (தொல். பொருள். 20, உரை);; people of the hilly tract, mountaineers.

   2. பழனிமலையிற் பயிரிட்டு வாழும் ஓர் இனத்தார்; name of the principal cultivating caste on the Palani hills.

     [குன்று → குன்றுவர். குன்று → குன்றவர் என்பதே மரபு. எனினும் குன்று → குன்றுவர் என்பது குன்றவர் என்னும் பொருளில் வழக்கூன்றிய இடவழக்கு.]

குன்றுவாடை

 குன்றுவாடை kuṉṟuvāṭai, பெ.(n.)

வடமேல்

   காற்று; north west wind dist. fr. {kunrā-vāgai} (கடல்வ);.

     [குன்று + வாடை.]

குன்றுார்க்கிழார்மகனார்கண்ணத்தனார்

 குன்றுார்க்கிழார்மகனார்கண்ணத்தனார் kuṉrkkiḻārmakaṉārkaṇṇattaṉār, பெ.(n.)

   ஒரு புலவர்; a poet of Šañgam age belonging to Vellala Community.

     [குன்றுர்+ கிழார்+ மகனார்+ கண்ணத்தன் + ஆர்]

இவர் நற்றிணை ங்ங்உ_ஆம் பாட்டில் குறிஞ்சித் திணையைப் பாடியுள்ளார் (அபிசிந்);.

குன்றெறிந்தோன்

 குன்றெறிந்தோன் kuṉṟeṟindōṉ, பெ.(n.)

   முருகக் கடவுள் (பிங்.);; lit., one who clove a mountain with hislance.

குன்றத்தைத் தனது வேலால் எறிந்தவன்.

     [குன்று + எறிந்தோன்.]

குன்றை வில்லாக்கினோன்

 குன்றை வில்லாக்கினோன் kuṉṟaivillākkiṉōṉ, பெ.(n.)

   துரிசு (சங்.அக.);; blue vitriol.

     [குன்றை + வில்லாக்கினோன்.]

குன்றைத்தான்

 குன்றைத்தான் kuṉṟaittāṉ, பெ.(n.)

   துரிசு; blue vitrio (சா.அக.);.

     [குன்று → குன்றைத்தான்.]

குபசுபா

 குபசுபா  kupacupā, பெ.(n.)

எட்டி; nuxvomica – Strychnos nux-vomica (சா.அக.);.

     [குப+கபா]

குபம்

குபம்  kupam, பெ.(n.)

   1.கோட்டம்; Arabian coatus – Costus speciosus.

   2. தழும்பு: scar, cicatrix (சா.அக.);.

குபயம்

 குபயம்  kupayam, பெ.(n.)

சிறுபுள்ளடி: unifoliate tick-trefoiI – Desmonium latifolium (சா.அக.);.

குபலம்

குபலம்1 kupalam, பெ.(n.)

வலிமை இன்மை; weakness (செ.அக.);.

 குபலம்2 kupalam, பெ.(n.)

இழப்பு: loss, detriment (செ.அக.);. –

     [Skt. ku-phala → த.குபலம்]

குபாகும்பர்

 குபாகும்பர் kupākumbar, பெ.(n.)

   மார்வாட நாட்டுக் குயவர்; potter in {} city.

குபாடி

குபாடி kupāṭi, பெ.(n.)

   இழிவான சொற்களைப் பேசுபவன்; woman using foul language.

     ‘நகையால்மய லெழுப்புங் குபாடிகள்’ (நூற்றெட்டுத்.திருப்பு.15);.

     [Skt.{} → த.குபாடி.]

குபாண்டன்

 குபாண்டன் kupāṇṭaṉ, பெ.(n.)

   பாணாசுரனின் அமைச்சன்; minister of {} (அபி.சிந்.);.

குபாரா

 குபாரா kupārā, பெ.(n.)

குபார் பார்கக;see {}.

குபார்

குபார் kupār, பெ.(n.)

   1. கூச்சலிடுகை; outcry, complaint.

   2. ஒவ்வாமையால் ஏற்படும் வாந்தி பேதி; cholera.

     [U.{} → த.குபார்.]

குபிகை

குபிகை gubigai, பெ.(n.)

   1. எள்; sesamum seed.

   2. நல்லெண்ணெய்; gingelly oil (சா.அக.);.

குபிதன்

குபிதன் kubidaṉ, பெ.(n.)

   சினங் கொண்டவன்; angry man.

     “இகழ்திட வவன் குபிதனாய்” (உத்தரரா.வரையெடு.67);.

     [Skt.kupita → த.குபிதன்.]

குபினன்

 குபினன் kubiṉaṉ, பெ.(n.)

   வலைஞன் (யாழ்.அக.);; fisherman.

     [குப்பினி(வலை); → கும்பினன் + குயினன்.]

 குபினன் kubiṉaṉ, பெ.(n.)

   வலைஞன் (யாழ்.அக.);; fisherman.

த.வ.மீனவன்.

     [Skt.kupinin → த.குபினன்.]

குபினி

 குபினி kubiṉi, பெ.(n.)

   மீன்பிடிக்கும் வலைவகை (யாழ்.அக.);; a kind of fishing net.

     [குப்பினி → குயினி.]

 குபினி kubiṉi, பெ.(n.)

   மீன் பிடிக்கும் வலை வகை (யாழ்.அக.);; a kind of fishing net.

     [Skt.kupini → த.குபினி.]

குபிலன்

 குபிலன் kubilaṉ, பெ.(n.)

   அரசன் (யாழ்.அக.);; king.

     [குவை → குவி → குவிரன் → குயிலன்.]

 குபிலன் kubilaṉ, பெ.(n.)

   அரசன் (யாழ்.அக.);; king.

     [Skt.gupila → த.குபிலன்.]

குபீரிடு-தல்

குபீரிடு-தல்  kupīriṭutal,    20 செ.கு.வி.(v.i.)

அரத்தம் வேகமாகப் பாய்தல்; flowing forcible or gushing out in streams; spurting as of blood (சா.அக.);.

     [குயிர்+இடு-தல்.]

குபீரெனல்

குபீரெனல் kupīreṉal, பெ.(n.)

   வேகமாதற் குறிப்பு; onom, expr signifying burning fiercely, rushing suddenly, flowing, forcibly gushing out in streams.

     “ஆலயத்துளிருந்து குபீர் குபீரென”(திருப்பு.296);.

     [குபூர் + எனல்.]

குபீரென்று

 குபீரென்று  kupīreṉṟu, வி.அ. (adv.)

திடீரென்று; like a flash or shot; suddenly. துரங்கிக் கொண்டிருந்தவன் யாரோ தொட்டவுடன் குபிரென்று எழுந்து உட்கார்ந்தான் குபிரென்று கண்களில் நீர் ததும்பியது

     [குயிர் என்று.)

குபீர்

 குபீர்  kupīr, பெ.அ.(adj.)

பீறிட்டு வரும்; எதிர்பாராத; a fit of ; burst of; sudden. குயிர்ச் சிரிப்பு குயீர்ப்பாய்ச்சல்,

குபீலெனல்

 குபீலெனல் kupīleṉal, பெ.(n.)

குபீரெனல் பார்க்க;see {kubiredal}

     [குயிலெனல் → குயிரெனல்.]

குபுகுபுவென்று

 குபுகுபுவென்று  kupukupuveṉṟu, பெ.(n.)

திடீரென்று பெருக்கெடுத்தாற் போல்; வேகமாகவும், மிகுதியாகவும், தொடர்ச்சியாகவும்; of water etc., gushing out; of smoke vigorously puffing out. தோண்டிய இடத்தில் குபுகுபுவென்று தண்ணிர் பெருகியது. அடுப்பிலிருந்து புகை குபுகுபுவென்று வந்தது.

குபுர்

 குபுர் kubur, பெ.(n.)

   நம்பிக்கையின்மை; disbelief.

     ‘குபுரான காரியம் செய்தான்’ (முகம்மதிய);.

     [Arab.kufr → த.குபுர்.]

குபேரகம்

 குபேரகம்  kupērakam, பெ.(n.)

சின்னிமரம், Indian shrubby copper leaf.

 குபேரகம்  kupērakam, பெ.(n.)

ஒரு வகைச் செடி (மூ.அ.);; Indian shrubby copper leaf – Acalypha fruticosa (செ.அக.);.

குபேரசம்பத்து

 குபேரசம்பத்து  kupēracampattu, பெ.(n.)

செல்வத்தின் அரசனான குபேரனுக்குரியது போன்ற பெருஞ்செல்வம் immense wealth, as that of kubéra (செ.அக.);.

     [குபேரன்+சம்பத்து.]

குபேரன்

குபேரன் kupēraṉ, பெ.(n.)

   எட்டுத்திக்குப்பாலகருள் வடதிசைக்கு உரியவனும் நிதியின் கிழவனும், இயக்கர்களுக்குத் தலைவனுமான தேவன்;{Kubera}the god of wealth, lord of Yaksas, regent of th North

     “ஒருவனோ குபேரனின்னோ டுடன் பிறந்தவர்கள்” (கம்பரா.குர்ப்.53);.

   2. பணக்காரன்;  rich man.

     “வாக்கினால் குபேர னாக்கினான் (தமிழ்நா.206);.

   3. சந்திரன்; moon.

     “சூரன் குலத்தோர் குபேரன் குலத்தோர்” (பாரத இராச.116);.

     [குப்பை → செல்வம் குப்பை → குப்பையன் → குப்பரன் → குபேரன்.]

குபேரம்

 குபேரம் kupēram, பெ.(n.)

கோட்டம்; Arabian costus – Costus speciosus alias Carabicus (சா.அக.);.

குபேராட்சி

குபேராட்சி  kupērāṭci, பெ.(n.)

   1. கொடிப் புன்கு; hog-creeper – Derris scandens.

   2. பாதிரி; trumpet flower tree – Bignonia Chelonoides (சா.அக.);.

குபேரிகை

குபேரிகை gupērigai, பெ.(n.)

   வட்டத்திருப்பி (தைலவ.தைல.4);; sickle leaf.

     [குப்புரிகை → குபேரிகை.]

குபையம்

குபையம்  kupaiyam, பெ.(n.)

சிறுபுள்ளடி: a species of ticktrefoil.

 குபையம்  kupaiyam, பெ.(n.)

செடிவகை (பதார்த்த.366);; scabrous ovate unifoliate tick-trefoil – Desmodium latifolium (செ.அக.);.

குபையாதீதம்

 குபையாதீதம் kupaiyātītam, பெ.(n.)

   கோரைப்புல்; sedge grass (சா.அக.);.

குபோதகம்

 குபோதகம் kupōtakam, பெ.(n.)

   மஞ்சள் செவ்வந்தி; chinese flower or Indian Chamomile – Chrysanthenum Coronarium (சா.அக.);.

குபோதகி

 குபோதகி kupōtaki, பெ.(n.)

   பசலை; Malabar nightshade-Baselia Cordifolia (சா.அக.);.

குப்தம்

 குப்தம் kuptam, பெ.(n.)

   பூனைக்காலி; cowhage (சா.அக.);.

     [P]

குப்தி

 குப்தி kupti, பெ.(n.)

   மூன்று வகை செயல்களின் அடக்கம்; restraint, as in thought, speech or deed.

     [Skt.gupti → த.குப்தி.]

குப்பஅஞ்சனா

 குப்பஅஞ்சனா  kuppaañcaṉā, பெ.(n.)

நெற்பொலியின் மதிப்பு; estimate of the

 produce of a field after the crop is gathered in, but before it is measure

     [குப்பல்+அஞ்சனா]

குப்பக்காடு

 குப்பக்காடு kuppakkāṭu, பெ.(n.)

   பட்டிக்காடு; rural parts, village with straggling huts.

     [குப்பம் + காடு.]

குப்பக்காட்டான்

 குப்பக்காட்டான் kuppakkāṭṭāṉ, பெ.(n.)

   நாட்டுப்புறத்தான்; rustic, boor.

     [குப்பம் காட்டான்)

குப்பக்கூளி

 குப்பக்கூளி kuppakāḷi, பெ.(n.)

   பூரான், செய்யான்; a venomous centipede (சா.அக.);.

     [குப்பை + கூளி.]

குப்பங்குடியேற்று-தல்

குப்பங்குடியேற்று-தல் kuppaṅguḍiyēṟṟudal,    5 செ.கு.வி. (v.i.)

   சிற்றூர் உண்டாக்குதல்; to establish a kuppam or petty village.

     [குப்பம் + குடி + ஏற்று.]

குப்படம்

 குப்படம் kuppaḍam, பெ.(n.)

   களத்தில் நெல்லடித்த பிறகு நிலக்கிழாருக்குக் கொடுக்கப்படும் விளைச்சலின் பாகம்; the portion of the produce of the lands in a village, given to the mirasdarafter the grain is threshed.

     [குப்பை → குப்படம்.]

குப்பதம்

 குப்பதம் kuppadam, பெ.(n.)

   பூனைக்காலி; cow hage (சா.அக.);.

     [குப்பை → கும்பத்தம் → குப்பதம்.]

குப்பத்தம்

 குப்பத்தம் kuppattam, பெ.(n.)

   நில உரிமையாளருக் (குரிய துண்டு; mirasdar’s share of the produce or yield.

தெ. குப்பத்தமு

     [குப்பம் → குப்பத்தம்.]

குப்பன்

 குப்பன் kuppaṉ, பெ.(n.)

முன்னிரண்டு குழந்தை

களுந்தவறியபின் பிறக்கும் மூன்றாம் மகனுக்கு

   இடும் பெயர்; name given to the son corn after the death of the first two children.

     [குப்பை → கும்பன்.]

தொடர்ந்து பிறந்த குழந்தை இருக்காமலிருக்க குப்பையில் கிடத்தி எடுத்துக் குப்பன் எனப் பெயரிட்டால் எமன் குழந்தை உயிரை கவர பாட்டான் எனும் நாட்டுப்புற நம்பிக்கையில் ஆண் குழத்தைகளுக்கு இடப்படும் பெயர்.

குப்பமன்னி

 குப்பமன்னி kuppamaṉṉi, பெ.(n.)

   குப்பைமேனி; rubblish plant (சா.அக.);.

     [குப்பை + மன்னி – குப்பைன்னி → குப்பமன்னி.]

குப்பமரம்

 குப்பமரம் kuppamaram, பெ.(n.)

   நெசவுக்கருவி வகை; vertical peg with a hole to fit in the rounded centre in the left end of the web beam.

     [குப்பு + மரம்.]

குப்பம்

குப்பம்1 kuppam, பெ.(n.)

   1. ஊர் (திவா.);; village.

   2. செம்படவர் முதலியோர் வாழும் சிற்றுார்; small village of fishermen and other low caste people.

   3.காடு (பிங்.);; jungle.

   4. அச்சி நாட்டு நாணயம்; a coin from Acheen.

     [குழு → கும்பு → குப்பு → குப்பம்.]

 குப்பம்2 kuppam, பெ.(n.)

   1. கூட்டம்; multitude

     ‘குப்ப மந்திமந்திரங்களெல்லாம்’ (குற்றா.தல.கவுற்சன.8);.

   2. குவியல்; heap (நெல்லை.);.

   க.குப்பெ;தெ.குப்ப.

     [குழு → கும்பு → குப்பு → கும்பம்.]

 குப்பம்3 kuppam, பெ.(n.)

   திடர் (யாழ்.அக.);; mount raised earth.

     [குல் → குப்பு → கும்பம்.]

 குப்பம் kuppam, பெ.(n.)

   முப்பது முடி நாற்றுக் கட்டு; paddy sapling of 30 number.

     [குப்பு-குப்பம்]

குப்பலை

குப்பலை1 kuppalai, பெ.(n.)

குப்பளை பார்க்க;see {kuppalai}

     [குப்பல் → குப்பலை.]

 குப்பலை2 kuppalai, பெ.(n.)

   செடிவகை (யாழ்.அக.);; a shrub.

     [குல் → குப்பு → கும்பலை.]

குப்பல்

குப்பல் kuppal, பெ.(n.)

   1. குவியல்; heap, as of manure.

   2. மேடு (திவா.);; high ground, mound.

   3. கூட்டம்; multitude, company.

     [குழு → கும் → குப்பு → கும்பல்.]

குப்பல்விளையாட்டு

 குப்பல்விளையாட்டு kuppalviḷaiyāṭṭu, பெ.(n.)

   பிள்ளைகளின் விளையாட்டு வகை; a children’s play in sand.

     [குப்பல் + விளையாட்டு.]

குப்பளை

 குப்பளை kuppaḷai, பெ.(n.)

   வெதுப்படக்கி; Indian birth wort (சா. அக.);.

     [குப்பல் → குப்பளை.]

குப்பா

 குப்பா kuppā, பெ.(n.)

   மீன்கள் வந்து விழும்படி துரிவலையிற் சேர்த்துள்ள பை; the bag forming part of a shore-net.

தெ. குப்பாசமு

     [குள் → குவ் → குப்பு → குப்பாயம் → குப்பா(கொ.வ);.]

குப்பாசம்

குப்பாசம் kuppācam, பெ.(n.)

   1. மெய்ச்சட்டை; coat, bodice, jacket, cuirass.

     “குப்பாசமிட்டுக் குறுக்கே கவசமிட்டு” (தமிழ்நா.192);

   2.பாம்புச் சட்டை; slough, cast-off skin of serpent.

     “பாம்பு குப்பாசங் கழற்றின பொழுது” ‘(சி.சி.பாயி.பக்.42);.

   க. கபசெ;தெ. குப்பசமு

     [குப்பாயம் → குப்பாசம்.]

குப்பாசிவிதை

 குப்பாசிவிதை kuppācividai, பெ.(n.)

   சிறு சீமை துத்தி விதை; maroh mallow (சா.அக.);.

     [குப்பாசி + விதை.]

குப்பான்

 குப்பான் kuppāṉ, பெ.(n.)

   மூடன்; fool.

     [குப்பை → குப்பான்.]

குப்பாமணி

 குப்பாமணி kuppāmaṇi, பெ.(n.)

   குப்பைமேனி; rubbish plant (சா.அக.);.

ம. குப்பமேனி

     [குப்பைமேனி → குப்மைன்னி → குப்பாமணி (கொ.வ.);.]

குப்பாயம்

குப்பாயம் kuppāyam, பெ.(n.)

   1. சட்டை; jacket, coat

     “வெங்கணோக்கிற் குப்பாய மிலேச்சனை” (சீவக.431);.

   2. மெய்ச்சட்டை; bodic.

   ம. குப்பாயம்;   க., பட., குப்பச;தெ. குப்பாசமு.

{Skt. kUrpåsa, Pkt.kuppåsa,}

     [குள் → குவ் → குப்பு → குப்பாயம்.]

குப்பி

குப்பி1 kuppi, பெ.(n.)

   1. ஒருவகைக் குடுவை (புறநா.56,உரை.);; vial, flask, bottle.

   2. கடைக் குச்சு; an ornament worn on hair-tuft.

     “குருகை யூரார் தந்த குப்பியுந் தொங்கலும்” (குற்றா.குற.124);.

   3. குப்பிக் கடுக்கன்; ear-ring of a particular shape.

   4. சிமிழ்; jewel case.

     “குப்பியில் மாணிக்கம் போலே” (ஈடு, 1.8:5);.

   5.வைரவகை; a species ofdiamond

     “குருவிந்த மூன்றுங் குப்பி மூன்றும்” (S.I.I.II.429);.

   6. யாழின் முறுக்காணி; adjusting screw of a lute.

   7. மாட்டுக்கொம்பு முதலியவற்றிற் செருகும் பூண்; ferrule at the end of a scabbard on the horn of an ox, on the tusk of an elephant on the end of a pestle, cover on the spout of a kettle.

   8. சாணி; cowdung.

மார்கழி மாதத்தில் சிறுமியர் குப்பிமுட்டைத் தட்டுவார்கள்.

   ம. குப்பி;   க., து. குப்பி;தெ.குப்பெ.

 H.kuppi, Pall., {Pkt.kUppa.} L.cuppa It coppa, F coupe;

 A.S.,E. heap, G. haufe.

     [கொம்பி → குப்பி.]

 குப்பி2 kuppi, பெ.(n.)

   சங்கங்குப்பி (தைலவ.தைல. 125);; smooth volkameria.

     [சங்கங்குப்பி → குப்பி]

 குப்பி3 kuppi, பெ.(n.)

   முன்னிரண்டு குழந்தைகளுந் தவறியபின் பிறக்கும் மூன்றாம் மகளுக்கு இடும் பெயர்; name given to the daughter born after the death of the first two children.

     [குப்பை → குப்பி.]

 குப்பி kuppi, பெ.(n.)

   எருதுகளின் கொம்பில் அணிவிக்கும் அணிகலன்; a metal flash worn cow’s horn during the days of Pongal.

மறுவ கொம்பளிக

குப்பிக்கடுக்கன்

 குப்பிக்கடுக்கன் kuppikkaḍukkaṉ, பெ.(n.)

   ஒருவகைக் கடுக்கன்; a kind of ear-ring.

     [கும்பி + கடுக்கண்.]

குப்பிக்கல்

 குப்பிக்கல் kuppikkal, பெ.(n.)

   குப்பி செய்வதற்காக பயன்படுத்தும் கல்; a species of glass of which fling was formerly an ingredient, used formaking bottle etc. (சா.அக.);.

ம. குப்பிக்கல்லு

     [குப்பி + கல்.]

குப்பிக்குட்சமைந்தகன்னி

 குப்பிக்குட்சமைந்தகன்னி guppigguṭcamaindagaṉṉi, பெ.(n.)

ஐம்புட்செய் நஞ்சு:

 a prepared arsenic (w.);.

     [குப்பி – குப்பிக்குள் + சமைந்த + கன்னி.]

குப்பிக்கெந்தம்

 குப்பிக்கெந்தம் kuppikkendam, பெ.(n.)

   வீட்டின் பின்புறமும் தோட்டங்களிலும் தானாக வளரும் ஒரு கீரைச்செடி; rubbish plant which grows largily in the backyards and gardens of the houses (சா.அக.);.

மறுவ. குப்பைமேனி

     [குப்பி + கெந்தம். கந்தம் → கெந்தம்.]

குப்பிக்கேற்றல்

குப்பிக்கேற்றல் kuppikāṟṟal, தொ.பெ.(vbl.n.)

   1. புடம் போடுவதற்காக மருந்தைப் புட்டியி லடைத்தல்; securing medicine in a bottle for purposes of calcination.

   2. புடம் போட்டபின் மருந்தை புட்டியிலடைத்தல்; filling in a bottle as medicine ofter calcination (சா. அக.);.

     [குப்பிக்கு + ஏற்றல்.]

குப்பிச்சரக்கு

 குப்பிச்சரக்கு kuppiccarakku, பெ.(n.)

   குப்பியில் வைத்து நீற்றிய சிந்தூர வகை; medicinal powder prepared in bottles.

     [குப்பி + சரக்கு.]

குப்பிச்சாரம்

 குப்பிச்சாரம் kuppiccāram, பெ.(n.)

   காசிச் சாரம்; mineral salt.

     [குப்பி + சாரம்.]

குப்பிச்சுக்கு

 குப்பிச்சுக்கு kuppiccukku, பெ.(n.)

   பொடி செய்து புட்டியில் அடைத்த சுக்குத் தூள்; powdered dried ginger secured in a bottle (சா.அக.);.

     [குப்பி சுக்கு.]

குப்பிச்செந்தூரம்

 குப்பிச்செந்தூரம் kuppiccendūram, பெ.(n.)

   துப்புரவு செய்த இரசத்தை மற்ற மருந்துகளோடு கூட்டி அரைத்துக் காசிக் குப்பியில் வைத்து முறைப்படி சீலை மண் செய்து, வாலுகா எந்திரத்தில் வைத்து எரிக்க, மேற்பக்கத்தில் படிந்திருக்கக் காணும் சிவப்புச் செந்தூரம். (இரசப்பதங்கம்);; sulbimate of mercury (சா.அக.);.

     [குப்பி + செந்தூரம்.]

குப்பித்தைலம்

 குப்பித்தைலம் kuppittailam, பெ.(n.)

நெற்

   குவியலிற் பல திங்களாகப் புதைத்து வைத்து வேகமாற்றி தைலம்; medicinal oil seasoned by being buried in paddy for several months.

     [குப்பி + தைலம்.]

குப்பிப்பூ

 குப்பிப்பூ kuppippū, பெ.(n)

   குரா;  bottle flower tree (சா.அக..);.

     [குப்பி + பூ.]

குப்பிப்பொங்கல்

 குப்பிப்பொங்கல் kuppippoṅgal, பெ.(n)

   சுறவ(தை); மாதம் முதல் நாளில் குப்பியெருவை யெரித்துப் பொங்கல் சமைத்து உண்ணும் சிறுமியரின் பண்டிகை; feast observed by Hindu girls on the first day of the month of Tai when they prepare pongal using kuppi cakes as fuel.

     [குப்பி + பொங்கல்.]

குப்பிமா

 குப்பிமா kuppimā, பெ.(n)

   மாக்கல் (சங்.அக.);; soap-stone.

     [குப்பி + மா.]

குப்பிமுடித்தல்

குப்பிமுடித்தல் kuppimuḍittal,    4 செ.கு.வி.(w.i.)

   சடைக்குச்சு என்னும் அணியைக் கூந்தலில் வைத்துப் பின்னுதல்; to fasten the cadaikkuccu ornament in the hair-tuft.

     [குப்பி + முடி.]

குப்பிமுறை

 குப்பிமுறை kuppimuṟai, பெ.(n )

   பதங்கமுறை; the process of sublimation (சா.அக.);.

     [குப்பி + முறை]

குப்பியசாலை

 குப்பியசாலை kuppiyacālai, பெ.(n)

   பித்தளைப் பாத்திரஞ் செய்யும் இடம் (யாழ்.அக.);; braziery.

     [குப்பியம் + சாலை]

குப்பியம்

குப்பியம்1 kuppiyam, பெ.(n)

   1. பொன், வெள்ளி யல்லாத மற்ற மாழை; metals other than gold and silver.

   2.இழிந்த மாழை; inferior or base metal.

   3. வங்க மணல்; lead mixed with sand, lead ore (சா.அக.);.

     [குப்பி → குப்பியம்.]

 குப்பியம்2 kuppiyam, பெ.(n)

   பொன் வெள்ளி யொழிந்த மாழை (உலோகம்); (யாழ்.அக.);; base metal; metal other than silver and gold.

     [குப்பி → குப்பியம் (குப்பி அல்லது குடுவைகளில் காய்ச்சும் கலப்பட மாழை);.]

குப்பியலரி

 குப்பியலரி kuppiyalari, பெ.(n,)

   ஈழத்தலரி; pagodatree.

     [குப்பி + அலரி]

குப்பிராட்டி

 குப்பிராட்டி kuppirāṭṭi, பெ.(n,)

   சிறுபெண்கள் தட்டும் வறட்டி; small cow-dung cakes, prepared by young girls.

     [குப்பி + வறட்டி → குப்பி + சிறிய).]

குப்பிராட்டிப்பொங்கல்

 குப்பிராட்டிப்பொங்கல் kuppirāṭṭippoṅgal, பெ.(n.)

   தைத்திங்களில் சிறுமியரின் குப்பிப்பொங்கல்; afestivity observed by girls in the month of tai.

     [குப்பி + வறட்டி →குப்பிராட்டி +பொங்கல்.]

குப்பிலவனம்

 குப்பிலவனம் kuppilavaṉam, பெ.(n.)

   வளையலுப்பு; a mineral salt.

     [குப்பி +லவணம்.]

குப்பிவயிரம்

குப்பிவயிரம் kuppivayiram, பெ.(n.)

   வயிர வகை; a species of diamond.

     “குப்பி வயிரம் இருத்தாரம் பளிங்கு வயிரம் நாலும்”(S.I.I.II.431);.

     [குப்பி + வயிரம்]

குப்பிவைப்பு

குப்பிவைப்பு1 kuppivaippu, பெ.(n)

   1. ஒரு வேதியியல் முறை; process of chemical preparation in an alembic; a kind of sublimation.

   2.வேதிச்சரக்கு; materials for chemical preparation.

     [குப்பி + வைப்பு.]

குப்புகுப்பெனல்

 குப்புகுப்பெனல் guppuguppeṉal, பெ.(n,)

   தீ முதலியன மூண்டெழும்போது உண்டாகும் ஓர் ஒலிக்குறிப்பு; onom. expr: signifying jerking, effervescing, bubbling, crackling noise, as of flames, etc.

     [குப்பு +. குப்பு + எனல்.]

குப்புசம்

 குப்புசம் kuppusam, பெ.(n.)

   புன்கு;{puñgam} tree (சா.அக..);.

     [குப்புயம் → குப்புசம்.]

குப்புற

 குப்புற  kuppuṟa, வி.அ.(adv.) முகம், வயிற்றுப் பகுதி, மார்பு ஆகியவை தரையைப் பார்த்தபடி, கவிழ்ந்து; பெட்டி, கூடை முதலியவை தலைகீழாக; of a person face downwards; on one’s belly, of objects upside down.

குப்புற படுத்துத் துரங்கிக் கொண்டிருந்தான். பழக்கூடை குப்புறச் சரிந்து கிடந்தது

     [குப்பு+உறு.]

குப்புறக்கவிழ்-த்தல்

குப்புறக்கவிழ்-த்தல் kuppuṟakkaviḻttal,    4 செ.கு.வி (v.i)

   தலைகீழாய்க் கவிழ்த்தல்; turning up side down (சா.அக.);.

குப்புற → குப்புறம் +கவிழ்_.]

குப்புறக்கிட_த்தல்

குப்புறக்கிட_த்தல் kuppuṟakkiḍattal,    3 செ.கு.வி. (v.i.)

   கவிழ்ந்து கிடத்தல்;  to lie prone orface downwards.

     [குப்புற → குப்புறம் + கிட.]

குப்புறத்தள்ளு-தல்

குப்புறத்தள்ளு-தல்  kuppuṟattaḷḷutal,    5 செ.கு.வி.(v.i.)

முகம் கீழ் நோக்கித் 5iro56);; throwing down upon the face (சா.அக.);.

     [குப்புற+தள்ளு]

குப்புறப்பிடி

குப்புறப்பிடி kuppuṟappiḍi,    4 செ.கு.வி. (v.i.)

   முகம் கவிழும்படிப் பிடித்தல்; holding anything with the face down-ward (சா.அக.);.

     [குப்புற → கும்புறம் + பிடி.]

குப்புறல்

 குப்புறல் kuppuṟal, பெ.(n,)

   குப்புறப்படுத்தல்; lying upon the belly (சா.அக.);.

     [குப்புறு → குப்புறல்.]

குப்புறவிழு _தல்

குப்புறவிழு _தல் kuppuṟaviḻudal,    2 செ.கு.வி(v.i.)

   தலைகவிழ விழுதல்; to trip and fall forward, to fall flat. On the face.

     [குப்புற + விழு_.]

குப்புறு

குப்புறு1 kuppuṟudal,    20 செ.குன்றாவி.(v.i.)

   கடத்தல்; to traverse, cross.

     “குப்புறற் கருமை யாலக் குலவரைச் சாரல் வைகி” (கம்பரா. வரைக்35);.

     [குப்பு + உறு_.]

 குப்புறு2 kuppuṟudal,    20 செ.கு.வி.(v.i.)

   1.பாய்ந்தது கடத்தல்; to spring or leap across,

     ” குறுமுனி குடித்த வேலை குப்புறுங் கொள்கைத் தாதல்” (கம்பரா.கடறா.15);.

   2. தலைகவிழ விழுதல்; to fall head long.

     “கதிரவனும்…குடபாற் கடலிற் குப்புற்றான்”

   3.தலைகுனிதல்; to hang one’s face downs (செ.அக.);

 Fin. Kompastua: Es. Kumistada: Q. kumpay.

     [கவிழ்ப்பு → கப்பு → குப்பு உறு_.]

குப்புற்றுக் கொள்(ளு)-தல்

குப்புற்றுக் கொள்(ளு)-தல் kuppuṟṟukkoḷḷudal,    7 செ.குன்றாவி. (v.t.)

   குழந்தைகள் மூன்றாம் மாதத்தில் கவிழ்ந்து கொள்ளுதல்; turning orlying with the face downwards as children do in the third month (சா.அக.);.

     [குப்புறு → குப்புற்று + கொள்-.]

குப்புளா

குப்புளா kuppuḷā, பெ.(n.)

மீன்வகை

     “மயிந்தன் குப்புளாவுடன்” (பறாளை.பள்ளு.74);;

 a kind of fish.

     [குப்பு + குப்புளா (சிறியது);.]

குப்புழாய்

 குப்புழாய் kuppuḻāy, பெ.(n.)

குப்புழை பார்க்க;see {kսppաթi}

     [குப்புழை → குப்புழாய்.]

குப்புழை

 குப்புழை kuppuḻai, பெ.(n.)

   கால்நடைகட்கு உணவாகும் இலைகளையுடைய கொடிவகை; a creeper whose leaves serve as food for cattle.

ம. குப்புழ

     [குப்பூழ் → குப்புழை.]

குப்பெனல்

 குப்பெனல் kuppeṉal, பெ.(n,)

   திடீரெனல்; expr. Signifyingsuddenness.

     [குப்பு + எனல்_.]

குப்பென்று

குப்பென்று  kuppeṉṟu, வி.அ.(adv.)

தன் மேல் திருட்டுக் குற்றம் சாட்டப் பட்டதைக் கேட்டு அவனுக்குக் குப்பென்று வியர்த்தது. வெட்கத்தால் முகம் குப்பென்று சிவந்தது. 2. ஒரேடியாகத் திரண்டு வருவது போல்; of smell, smoke in a sudden whiff, சாக்கடையில்லிருந்து நாற்றம் குப்பென்று அடித்தது. சமையல்கட்டிலிருந்து ஏதோ தாளிக்கும் மனம் குப்பென்று மூக்கைத் துளைத்தது.

     [குப்பு+என்று]

குப்பை

குப்பை1 kuppai, பெ.(n,)

   1. குவியல்; collection. heap.

     “உப்பின் பெருங்குப்பை நீர்படியி னில்லாகும்'(திரிகடு.83);.

   2. கூட்டம்; clump, group.

     “ஆம்பலங் குப்பையை” (கல்லா. 43:28);.

     “குன்றெனக் குவைஇய குன்றாக் குப்பை” (பொருந.244);.

   4. செத்தை; sweetings rubbish. refuse.

   5. மேடு (சூடா.);; mound high ground

   6. மலம்; dung, excrement. ordure.

குப்பை எடுக்கிறவன் (இ.வ.);.

   ம. குட்ப;   க. குப்பே குப்பே தெ. குப்பம்;து.

   குப்பெ,குப்பெ,கிப்பெ;   கோத. சிபட துட. க்ட் கொலா. குப்பகல் (ஒன்று சேர்த்தல்);;   கூய். குள்.குன்று பர். (மேடு);;   கோண். குப்பம்;குரு.கெப்பா-மால். கபெட் பட. குப்பெ.

 A.S., OE., E. heap OS, -:- ME – Du, – ccc Icel. hopr, Dan. hobi Swed.–: G.CHG. – w R. kupa;

 Lith. Kaupas

     [குவி → குவிப்பு → குப்பு → குப்பை.]

{kupp-ei,} sweepings

 குப்பை kuppai, பெ.(n.)

   சதகுப்பை (தைலவ. தைல.24);; dill.

     [கும்பு → குப்பு → குப்பை.]

 குப்பை2 kuppai, பெ.(n.)

   ஓம குண்டத்தின் வேதிகை (யாழ்.அக.);; enclosure round a sacrificial pit.

     [Skt.{} → த.கும்பை.]

குப்பைகிளர்-த்தல்

குப்பைகிளர்-த்தல் guppaigiḷarttal,    14.செ.கு.வி. (v.i.)

குப்பைகிளை… பார்க்க;see {kuppakia}

     “குப்பை கிளர்த்தன்ன செல்வத்தை” (திவ். திருவாய்.3.9:5);.

     [குப்பை + கிளர்.]

குப்பைகிளறு-தல்

குப்பைகிளறு-தல் guppaigiḷaṟudal,    5 செ.கு.வி.(v.i.)

குப்பைகிளை-, பார்க்க;see {kuppaikia}

     [குப்பை + கிளறு.]

குப்பைகிளை-த்தல்

குப்பைகிளை-த்தல் guppaigiḷaittal,    4 செ.கு.வி.(v.i.)

   குப்பையைக் கிண்டுதல்; to scratch up a heap of refuse, as a hen.

     “குப்பை கிளைப்போவாக் கோழிபோல்” (நாலடி. 341);.

   2. குற்றம் வெளிப் படுவதற்குத் துருவித் துருவி உசாவுதல்; to enquire into for exposing unsavoury details.

     [குப்பை + கிளை.]

குப்பைகொட்டு-தல்

குப்பைகொட்டு-தல்  kuppaikoṭṭutal,    5 செ.கு.வி.(v.i.)

சொல்பவர் நோக்கிலும், கேலியாகவும் பயனற்ற வேலையில் பங்கு பெறுதல்; பயனற்ற ஒரே வேலையைச் செய்தல்; jocularly take part in an unproductive work; do the same . Suseless job again and again. நீயும் அந்த

அலுவலகத்தில் தான் குப்பை கொட்டினாய் இவ்வளவு நாள் கதை எழுதிக் குப்பைக் கொட்டியது போதும்!

     [குப்பை+கொட்டு-தல்.]

குப்பைகொளுத்தி

 குப்பைகொளுத்தி guppaigoḷutti, பெ.(n.)

   குப்பைகளைக் கொளுத்திச் சாம்பலாக்கும்படி பயன்படுத்தும் அடுப்பு அல்லது எந்திரம்; shut in fire for burning waste material, a furnace for burning rubbish to ashes (சா.அக.);.

     [குப்பை + கொளுத்தி.]

குப்பைக்காட்சி

 குப்பைக்காட்சி kuppaikkāṭci, பெ.(n.)

பறையர் நத்தத்திற்குரிய நிலவரி (நெல்லை.);:

 ground rent payable by parayås for putting up huts on the lands.

ம. குப்பக்காழ்ச

     ‘[குப்பை + காட்சி.]

குப்பைக்காரன்

 குப்பைக்காரன் kuppaikkāraṉ, பெ.(n.)

   குப்பை வாருவோன்; street-sweeper. scavenger.

     [குப்பை + காரன்.]

குப்பைக்கார்த்திகை

 குப்பைக்கார்த்திகை guppaiggārttigai, பெ.(n.)

   பிற்கார்த்திகை; the day following {kārttikai} festival, when lamps are lit.

     [குப்பு → குப்பை → கார்த்திகை.]

குப்பைக்காலன்

குப்பைக்காலன் kuppaikkālaṉ, பெ.(n.)

   ஆகூழ்க் காலுடையவன்; auspicious person, one who brings good fortune, even as he comes.

     ‘ஒருவன் செய்தது வாய்த்துவரப் புக்கவாறே அவன் குப்பைக் காலன் காண்… என்னக்கடவது” (ஈடு,79:9);.

     [குப்பை = செல்வம். குப்பை + காலன்.]

குப்பைக்கீரை

குப்பைக்கீரை kuppaikārai, பெ.(n)

   1. குள்ளத் தண்டுக் கீரை; a weed of cotton soils.

   2. அறைக் கீரை; a vigorous potherb much esteemed.

ம. குப்பக்கீர

     [குப்பை + கீரை.]

குப்பைக்குடையாள்

 குப்பைக்குடையாள் kuppaikkuḍaiyāḷ, பெ.(n.)

   சிறுகீரை; field spinach (சா.அக.);.

     [குப்பை + குடையாள்.]

குப்பைக்குழி

 குப்பைக்குழி kuppaikkuḻi, பெ.(n.)

   குப்பைகளைப் போடும் குழி; a pit to collect rubbish and sweepings.

ம. குப்பக்குழி

     [குப்பை + குழி.]

குப்பைக்கூடை

 குப்பைக்கூடை  kuppaikāṭai, பெ.(n.)

குப்பை போடுவதற்கான கூடை வடிவப் பொருள்; waste paper basket; dustbin

     [குப்பை+கூடை]

 குப்பைக்கூடை kuppaikāṭai, பெ.(n.)

   குப்பை களைப் போடப் பயன்படுத்தும் கூடை; dustbin made up of wicter basket.

     [குப்பை + கூடை.]

குப்பைக்கூளம்

 குப்பைக்கூளம்  kuppaikāḷam, பெ.(n.)

தேவையற்றவை, செத்தை முதலியன; sweepings, rubbish (செ.அக.);.

 குப்பைக்கூளம் kuppaikāḷam, பெ.(n.)

   செத்தை முதலியன; sweepings, rubbish.

     [குப்பை + கூளம். மரபிணைமொழி.]

குப்பைக்கோழியார்

 குப்பைக்கோழியார்  kuppaikāḻiyār, பெ.(n.)

ஒரு புலவர்; a poet, lived in the Šañgam age.

     [குப்பை+கோழி+ஆர்]

இவர் தாம் பாடிய குறுந்தொகையில் குப்பைக் கோழியின் தனிப்போரினைத் தலைவி நோய்க்கு உவமித்த சிறப்பால் இப்பெயர் பெற்றார் எனக் கருதுவர். இவர் பெண்பாலராக இருக்கலாம் (அபி.சிந்:);.

குப்பைச்சம்பா

 குப்பைச்சம்பா kuppaiccambā, பெ.(n.)

   நெல்வகை; a kind of paddy.

     [குப்பை + (கம்பு); சம்பா.]

குப்பைத்தொட்டி

குப்பைத்தொட்டி  kuppaittoṭṭi, பெ.(n.)

   1. குப்பை போடுவதற்காக வீட்டுக்கு வெளியே அல்லது தெருவில் வைத்திருக்கும் கற்காரையால் (சிமெண்ட்); செய்த தொட்டி போன்ற அமைப்பு; dustbin, garbase can.

   2. குப்பைக் கூடை; waste paper basket [குப்பை+தொட்டி]

 குப்பைத்தொட்டி kuppaittoṭṭi, பெ.(n.)

   குப்பைகளைப் போட பயன்படுத்தும் தொட்டி; dus bin.

     [குப்பை + தொட்டி.]

குப்பைநோய்

 குப்பைநோய் kuppainōy, பெ.(n.)

   குதிரைகளுக்கு வரும் ஒருவகை நோய்; a disease attackig horses (சா.அக.);.

     [குப்பை + நோய்.]

குப்பைப்பருத்தி

 குப்பைப்பருத்தி kuppaipparutti, பெ.(n.)

   உப்பம் பருத்திவகை; a species of cotton.

     [குப்பை + பருத்தி.]

குப்பைமஞ்சள்

குப்பைமஞ்சள் kuppaimañjaḷ, பெ.(n.)

   1. இழிந்த மஞ்சள்; an inferior kind of turmeric.

   2. குரங்கு மஞ்சள்; monkey turmeric (சா.அக.);.

     [குப்பை + மஞ்சள்.]

குப்பைமன்னி

குப்பைமன்னி kuppaimaṉṉi, பெ.(n.)

   1. குப்பை மேனிக்கீரை; lndian acalypha.

     [குப்பை + மன்னி.]

குப்பைமுள்ளி

 குப்பைமுள்ளி kuppaimuḷḷi, பெ.(n.)

   சிவப்புமுள்ளிக் கீரை; red prickly-spinach (சா.அக.);.

     [குப்பை + முள்ளி.]

குப்பைமூலிகை

 குப்பைமூலிகை guppaimūligai, பெ.(n.)

   முடக் கொத்தான்; paisy curer (சா.அக.);.

     [குப்பை + மூலிகை.]

குப்பைமேடு

 குப்பைமேடு kuppaimēṭu, பெ.(n.)

   கூளக்குவியல் (பிங்.);; dung hill, heap of sweepings, of rubbish.

     [குப்பை + மேடு.]

குப்பைமேனி

 குப்பைமேனி  kuppaimēṉi, பெ.(n.)

இலை தண்டோடு சேரும் இடத்தில் சிறுசிறு காய்கள் காய்க்கும் ஒரு வகைச் செடி, Indian acalypha. [குப்பை+மேனி]

     [P]

 குப்பைமேனி kuppaimēṉi, பெ.(n.)

   குப்பையில் வளரும் ஒரு வகைக் கீரை; indian acalypha.

   ம. குப்பமேனி;   க. குப்பை, குப்பெகிட;தெ. குப்பி, குப்பெண்டசெடு.

     [குப்பை + (மன்னி); மேனி.]

குப்பைமேனிக்கீரை

 குப்பைமேனிக்கீரை  kuppaimēṉikārai, பெ.(n.)

குப்பையில் வளரும் ஒரு வகைக் கீரை; rubbish plant – Acalypha indica (சா.அக.);.

     [குப்பை+மேனி+கீரை.]

குப்பைமேனிமெழுகு

 குப்பைமேனிமெழுகு guppaimēṉimeḻugu, பெ.(n.)

   குப்பைமேனியை மற்றச் சரக்குகளோடு சேர்த்துச் செய்யும் மெழுகு; a wax like preparation from rubbish plant mixed with other ingredients (சா.அக.);.

குப்பையணை-தல்

 குப்பையணை-தல்  kuppaiyaṇaital, செ.கு.வி.(v.i.)

குப்பையைச் சேர்த்தல்; resorting to a dung-hill gather the clutters (சா.அக.);.

     [குப்பை+அணை-]

குப்பையன்

 குப்பையன் kuppaiyaṉ, பெ.(n.)

   அழுக்கடைந்தவன்; slovenly person, used in contempt.

     [குப்பை + அன்.]

குப்பையலரி

 குப்பையலரி kuppaiyalari, பெ.(n.)

   ஈழத்தலரி; pagoda tree (சா.அக.);.

     [குப்பை + அலரி.]

குப்பையெரு

 குப்பையெரு kuppaiyeru, பெ.(n.)

   நாட்டெரு; country manure.

     [குப்பை + எரு.]

குப்பைவாரி

குப்பைவாரி kuppaivāri, பெ.(n.)

   குப்பை வாருவோன்; scavenger.

   2. செத்தை கூட்டுங் கருவி; stiff broom made of withes or bamboo, rake.

     [குப்பை + வை.]

குப்பைவை-த்தல்

குப்பைவை-த்தல் kuppaivaittal,    4 செ.கு.வி.(v.i.)

   பயிர்களுக்கு உரம்போடுதல்; to manure with sweepings, rubbish, refuse.

     [குப்பை + வை.]

குமக்கி

 குமக்கி kumakki, பெ.(n.)

   கடுகுரோகிணி; black hellebore (சா.அக.);;

     [கும் → குமக்கி.]

குமஞை

 குமஞை kumañai, பெ.(n.)

   ஆந்தை; owl (சா.அக.);.

     [குமஞ்சி→குமஞை.]

குமஞ்சம்

குமஞ்சம் kumañjam, பெ.(n.)

   1. பறங்கிச்சாம்பி ராணி; salaitree.

   2. நறும்புகை; frankincense.

     [கும் + குமஞ்சம்.]

குமஞ்சான்

குமஞ்சான்2 kumañjāṉ, பெ.(n.)

குமஞ்சம் பார்க்க;See. {kumasjam.}

     [குமஞ்சம் → குமஞ்சான்.]

குமஞ்சி

 குமஞ்சி kumañji, பெ.(n.)

   ஆந்தை; owl (சா.அக.);.

     [கும்→கும்மந்தி→கும்மஞ்சி→குமஞ்சி.]

குமடு

 குமடு kumaḍu, பெ.(n.)

   கன்னம்; cheek.

     [கும் → குமடு.]

குமடெறிவான்

குமடெறிவான் kumaḍeṟivāṉ, பெ.(n.)

   கருப்பூரவகை (சிலப்.14,109,உரை.);; a kind of cam.

 phor.

     [குமடு → எறிவான்.]

குமட்டல்

 குமட்டல்  kumaṭṭal, பெ.(n.)

   வாந்தியெடுக்கும் உணர்வாக வயிற்றைப் புரட்டல்;  nausea, retching.

சாப்பாட்டைப் பார்த்தாலே குமட்டுகிறது. குமட்டலை ஏற்படுத்தும் நாற்றம்

     [குமட்டு+அல்.]

குமட்டி

குமட்டி kumaṭṭi, பெ.(n.)

   சுரைக்கொடி; bottle gourd creeper.

   2. காட்டுப் பூவம்; eye-balltree (சா.அக.);.

     [கும்→கும்மந்தி→குமைந்தான்→குமஞ்சான்.]

குமட்டிக்காளான்

 குமட்டிக்காளான் kumaṭṭikkāḷāṉ, பெ.(n.)

   மரக்காளான்; mushrooms growing on trees (சா.அக.);.

     [குமட்டி + காளான்.]

குமட்டிக்கீரை

 குமட்டிக்கீரை kumaṭṭikārai, பெ.(n.)

   ஒருவகைக் கறிக்கீரை; a kind of vegetable green (சா.அக.);.

     [கும்மட்டி→குமட்டி+கீரை.]

குமட்டிக்கொண்டிரு-த்தல்

குமட்டிக்கொண்டிரு-த்தல் kumaṭṭikkoṇṭiruttal,    3 செ.கு.வி.(v.i.)

   ஒக்காளித்திருத்தல்; being nausecous (சா.அக.);.

     [கும்→குமட்டு→குமட்டி + கொண்டிரு-.]

குமட்டு

குமட்டு2 kumaṭṭudal,    5 செ.கு.வி.(v.i.)

   1. கக்குதல்; to vomit, elect.

     “வடவை குமட்டி யெதிரெடுத்து வயங்குஞ் சூலப்படை” (காசிக. வயிர.22);.

   2. அருவருத்தல்; to Ioathe, detest;

 to feel repugnant about.

     [கும் → குமட்டு.]

 குமட்டு3 kumaṭṭu, பெ.(n.)

   அருவருப்பினால் உண்டாகும் கக்கல்; vomiting with loathing, kecking.

அதை உண்டதும் ஒருகுமட்டுக் குமட்டியது. [கும் → குமட்டு.]

குமட்டு-தல்

குமட்டு-தல் kumaṭṭudal,    5 செ.கு.வி.(v.i.)

   1. வாயால் எடுத்தல்; to have vomiting sensation, keck.

   2. நிறையவுண்டு தெவிட்டுதல்; to retch from overeating.

     “பொழிந்த மாநிலம் புற்றாக் குமட்டிய புனிற்றா” (கம்பரா. கார்கா.47);.

குமட்டுகை

 குமட்டுகை gumaṭṭugai, பெ.(n.)

   குமட்டுதல்; a sudden feeling of nausea (சா.அக);.

     [குமட்டு→குமட்டுகை.]

குமட்டூர்க்கண்ணனார்

 குமட்டூர்க்கண்ணனார் kumaṭṭūrkkaṇṇaṉār, பெ.(n.)

   பதிற்றுப்பத்தின் இரண்டாம் பத்தினை இயற்றிய புலவர்; the author of the second ten of {patirru-p-pattu.}

     [குமட்டூர் + கண்ணன் + ஆர்.]

குமணதனுசாதி

 குமணதனுசாதி kumaṇadaṉucādi, பெ.(n.)

   இச்சையின் அடிப்படையில் பிரித்திருக்கும் ஆண் சாதி நான்கு வகையுள் ஒன்று; one of the four classes of men divided according the lust

     [குமணம் + தனு + சாதி.]

குமணன்

குமணன் kumaṇaṉ, பெ.(n.)

   தன்தலையை வெட்டி அதனை விரும்பிய தம்பி கையிற் கொடுத்து வேண்டியபொருளைப் பெறுமாறு தன்னிடம் இரந்த புலவனுக்குத் தன் வாளையீந்த ஒரு பெருவள்ளல் (புறநா.164);; an ancient chief, who was so liberal as to give away his sword to a needy poet for cutting his head off and taking it over to his brother who had set a price on it.

     [கும்→கும்மல்→குமள்→குமளம்(மென்மை, இளமை இனிமை); →குமணம் →குமணன்(இனிய பண்பினன்);. குமனம் பார்க்க; see {kumakam]}

குமணம்பாசு

குமணம்பாசு kumaṇambācu, பெ.(n.)

   இரண்டடி நீளமுள்ள; tawnyfish, bluish, attaining 2 ft. in length.

     [குமளம் + பாசு.]

குமண்டை

குமண்டை kumaṇṭai, பெ.(n.)

   1. ஒருவகை மகிழ்ச்சிக்கூத்து; a dance of delight, merry dance.

     “இட்டகுமண்டைய பேய்… உகளித்தனவே” (பாரத.பதினாறாம்.51);.

   2. செருக்குமேலிட்டுச் செய்யும் செயல்; head strong haughty deed.

     “தக்கனார் கொண்ட வேள்விக் குமண்டையது கெட” (தேவா.441,5);.

     [கும் → குமள் → குமண்டை.]

குமண்டையிடு-தல்

குமண்டையிடு-தல் kumaṇḍaiyiḍudal,    20 செ.கு.வி.(v.i.)

   1. மகிழ்ச்சியாற் குதித்தல்; to cut capers;

 to leap for joy.

   2. நிறையவுண்டு தெவிட்டுதல் (யாழ்.அக.);; to retch from over-eating.

     [கும் → குமள் → குமண்டை + இடு.]

குமதி

குமதி1 kumati, பெ.(n.)

   அறிவு கெட்டவன், அறிவில்லாதவன்;  a perverse intellect, evil-minded person.

     “குமதியாயினும் பேர்சுமதியென்பரால்” (சேதுபு,கலிசம்பு.18); (செஅக.);

 குமதி2 kumati, பெ.(n.)

   இந்திரனால் கொல்லப்பட்ட ஓர் அரக்கி;  a giant, who was killed by Indira (அபி.சிந்);.

குமனீம்

குமனீம் kumaṉīm, பெ.(n.)

   1. பறங்கிச் சாம்பிராணி; Indian resin.

   2. குங்குலியம்; saul dammer.

   3. சாம்பிராணி; frankincemse (சா.அக.);.

     [கும்மல்→கும்மலம்→கும்மலிம்→குமனீம் (கொ.வ);.]

குமம்

 குமம் kumam, பெ.(n.)

   கூட்டம்; Arabian costus

     [கும்→ குமம்.]

குமரகச்சாணம்

குமரகச்சாணம் gumaragaccāṇam, பெ.(n.)

   பழைய வரிவகை; an ancient tax (S.I.I.iii.115);.

     [குமரகம் + சாணம்.]

குமரகண்டன்

குமரகண்டன் gumaragaṇṭaṉ, பெ.(n.)

குமர கண்டம் பார்க்க;See. {kumara-kansam,}

     “குமரகண்டன் முதலியன விடும்பையினைப் பெருக்கும்” (சேதுபு.துராசார.35);.

     [குமரம் + கண்டன்.]

குமரகண்டம்

குமரகண்டம் gumaragaṇṭam, பெ.(n.)

   ஒருவகை வலிப்பு; epileptic fits attended with violent convulsions.

     “குமரகண்ட வலிப்புவருஞ் சிலநேரம்” (தனிப்பா.i,264,2);.

     [குமரம் + கண்டம்.]

குமரகண்டவலி

 குமரகண்டவலி gumaragaṇṭavali, பெ.(n.)

   ஒர்வகை இழுப்பு அல்லது தணுப்பினால் (சிலேட்டுமத்தால்); பிறந்து, காய்ச்சல், தலைவலி கண்டு, முன் கழுத்தையும், முகத்தையும் முறுக்கித் தோளின் பக்கம் வைத்தல் தாடை, கண், செவி, உதடு இவற்றை கோணச் செய்தல் முதலிய குறிகளோடு காணும் வலிப்புநோய்; a kind of epilipte form fits marked by fever and head ache altended with violent convulsions when neck and face are distorted to one side of the shoulder thereby twisting the face especially chin, eyes and ears. It is due to concerted action of the deranged vaycu(gas); (சா.அக.);.

     [குமுறல்→குமரல் + கண்டம் + வலி. கண்டம் = திங்கு. வலி = வலிப்பு.]

குமரகன்

குமரகன் gumaragaṉ, பெ.(n.)

   1. கோழி; towl.

   2. சேவல்; cock.

     [குமரன் (முருகன்); → குமரகன் (முருகனின் கொடி

யான சேவல்).]

குமரகன் பூடு

 குமரகன் பூடு gumaragaṉpūṭu, பெ.(n.)

   கோழிக்கால் பூடு; plant resembling the leg of fowl (சா.அக.);.

     [குமரகன் + பூடு.]

குமரகன் பெண்டீர்

 குமரகன் பெண்டீர் gumaragaṉpeṇṭīr, பெ.(n.)

   வள்ளிக்கொடி; sweet potato creeper (சா.அக.);.

     [குமரகன் + பெண்டிர்.]

குமரகமூலி

 குமரகமூலி gumaragamūli, பெ.(n.)

   கோழிக்கால் கீரை.புதினாக் கீரை; Indian pepper mint (சா.அக.);.

     [குமரகன் – மூலி. குமரகன் = கோழி.]

குமரகம்

 குமரகம்  kumarakam, பெ.(n.)

   மாவிலங்கை வகை;  a species of garlic-pear – Crafaeva religiosa-nurvala (செ.அக.);.

குமரகுருதாசசுவாமிகள்

 குமரகுருதாசசுவாமிகள்  kumarakurutācacuvāmikaḷ, பெ.(n.)

   யாழ்ப்பாணத்தைச் சார்ந்த ஒரு துறவி;  a hermit who belonged to yalppanam.

இவரைப் பாம்பன் சுவாமிகள் என்பர். சிவனியத்தில் வல்லவர். நாலாயிரப் பிரபந்த விசாரம், சைவசமய சரபம் எனும் நூல் இயற்றியவர் (அபி.சிந்:);.

குமரகுருபரர்

குமரகுருபரர் gumaragurubarar, பெ.(n.)

   நீதிநெறி விளக்கம் முதலிய சிற்றிலக்கியங்கள் இயற்றியவரும் பதினேழாம் நூற்றாண்டில் விளங்கியவருமான ஆசிரியர்; the author of {nitineri-vilakkam} and other poems 17th c.

     [குமரன் + குரு + பார்.]

குமரகோட்டம்

குமரகோட்டம் kumaraāṭṭam, பெ.(n.)

   கச்சியிலுள்ள முருகக்கடவுள் கோயில்; a shrine in conjeevaram sacred to Skanda.

     “குமரகோட்டம்வா”(ழாறுமாமுகப்பிரான்” (கந்தபு.கடவுள்.18);

     [குமரன் + கோட்டம்.]

குமரக்கிரியை

 குமரக்கிரியை kumarakkiriyai, பெ.(n.)

   சிரித்தல், சிறுநீர்க்குடித்தல், தரையைக் குத்தல், கல் பொறுக்கல் முதலிய குணங்களை யுண்டாக்கும் ஓர் அரத்தப் பிரமை; a state of unsound mind manifesting such tendencies as laughing drinking urine, striking with the feet on the ground gathering pebbles etc.,

     [குமரம் + கிரியை.]

குமரதண்டம்

குமரதண்டம் kumaradaṇṭam, பெ.(n.)

   குமரக் கடவுளைப் படைத்தலைவராகக் கொண்ட தேவர்படை; army of gods under Skanda’s command.

     “குமரதண்டம் புகுந்திண்டிய வெள்ளம்” (திவ்.திருப்பள்ளி.6);.

     [குமரன் + தண்டம்.]

குமரனேறும் பச்சிலை

 குமரனேறும் பச்சிலை kumaraṉēṟumbaccilai, பெ.(n.)

   மயிற்சிகைப் பூடு; peacock’s cress (சா.அக.);.

     [குமரன்(முருகன்); + ஏறும் + பச்சிலை.]

குமரனேறும் புள்

 குமரனேறும் புள் kumaraṉēṟumbuḷ, பெ.(n.)

   மயில்; pea-cock (சா.அக.);.

     [குமரன் + ஏறும் + புள் (பறவை);.]

குமரனோசிகம்

 குமரனோசிகம்  kumaraṉōcikam, பெ.(n.)

   பிள்ளை மருது;  flowering murdah – Terminalia paniculata (சா.அக.);.

குமரன்

குமரன் kumaraṉ, பெ.(n.)

   1. இளைஞன்; yourg man, youth.

     “இருந்த குலக்குமரர்தமை… பருக நோக்கி” (கம்பரா.மிதிலைக்.157);.

   2. புதல்வன்; sor

     “முருகன்;

 Skanda, as son of {Šiva}

     “குன்று தோறாடிய குமரற் போற்றுவோம்” (கந்தபு. கடவுள்.15.);

   4. வைரவன் (சூடா.);; Bhairava.

     [கும் → குமர் → குமரன்.]

குமரன்மாலிகம்

 குமரன்மாலிகம்  kumaraṉmālikam, பெ.(n.)

   பிராய் முட்டி;  rose-coloured sticky mallow – Pavonia zeylanica (சா.அக.);.

குமரப்பாரை

குமரப்பாரை kumarappārai, பெ.(n.)

   பெரிய கடல்மீன்வகை (M.M.668);; horse mackerel, glossy green, attaining 5 ft. in length.

     [குமரம் + பாரை.]

குமரப்பிள்ளை

 குமரப்பிள்ளை kumarappiḷḷai, பெ.(n.)

   குமரி; virgin (சா.அக.);.

     [குமர் + பிள்ளை.]

குமரமூக்கன்

 குமரமூக்கன் kumaramūkkaṉ, பெ.(n.)

   கொம் பேறிமூக்கன்; krait.

     [கொம்பேறிமூக்கன் → குமரமூக்கன்.]

குமரம்

குமரம்1 kumaram, பெ.(n.)

   கொம்பில்லாத விலங்கு (சூடா.);; hornless animal.

     [கும் → குமர் → குமரம்.]

 குமரம்2 kumaram, பெ.(n.)

   பழங்காலத்திலிருந் ததாகச் சிலர் கருதுகின்ற ஓர் தமிழ் இலக்கண நூல்; a fictitious work on tamil grammer believed to have perished.

     [குமரன் → குமரம்.]

குமரலண்டம்

 குமரலண்டம் kumaralaṇṭam, பெ.(n.)

   பிடுக்கில் இரைச்சலிடும் ஒருவகை அண்டநோய்; reducible hernia (சா.அக.);.

     [குமுறல்→குமுரல் + அண்டம்.]

குமரவலி

குமரவலி kumaravali, பெ.(n.)

   காக்கைவலிப்பு நோய் வகை (திருப்பு.176,புதுப்.);; a kind of epileptic fit.

     [குமரம் + வலி.]

குமரவேள்

குமரவேள் kumaravēḷ, பெ.(n.)

   முருகக் கடவுள் ; Skanda

     “வலவனை… குமரவேள் முன்னருய்த்தான்” (கந்தபு:ஏமகூட.6);.

     [குமரன் + வேள்.]

குமராகு-தல்

 குமராகு-தல்  kumarākutal,    பெண் பருவமடைதல்;  of girls come of age; attain puberty,

மகள் குமராகி விட்டாள்.

மறுவ. சமைதல்

     [குமர்+ஆகு-தல்.]

குமரி

குமரி1 kumari, பெ.(n.)

   1. கன்னி; virgin, maiz

     “குமரிமணஞ் செய்துகொண்டு” (திவ்.

பெரியாழ்.3.8:3).

   2. பருவமடைந்த பெண்; grown-up;

 unmarried girl.

   3. புதல்வி; daughter.

     ” தக்கனீன்ற… குமரியான” (கந்தபு.பாயி.57);.

   4. கொற்றவை {durga,}

     “விழிநுதற் குமரி (சிலப்.11,214);. 5.

   குமரியாறு; a river.

     “வடவேங்கடந் தென் குமரி (தொல்.பாயி.);;

   6. குமரி முனை; Cape Comorin. 7.

   கன்னிக் குமரிக்கடல் நீர்; sacred watersat cape Comorin.

     “தென்றிசைக்குமரி யாடிய வருவோள்” (மணி.13,7);.

   8. அழிவின்மை; perpetuayouthhood

 uncorrupt, unspoitcondition.

     “குமரிக் கூட்டிற் கொழும் பல்லுணவு” (சிலப்.10, 123);.

   9. கற்றாழை (திவா.);; aloe.

     [கும் → குமர் → குமரி.]

குமரிருட்டு (குமரியிருட்டு); குமரிவாழை என்பன இளமையையும், குமரி வேட்டம் குமரிப்போர் என்பன முதல் நிகழ்ச்சியையும், குமரிப்படை, குமரிமதில்

என்பன அழியா நிலைமையையும் உணர்த்தும்.

குமர். குமரன். குமரி என்னும் சொற்கட்குக்

திரண்ட இளமை என்பதே அடிப்படை பொருள். ஒ.நோ. முருகு = இளமை. முருகு = முருகன், இளைஞன், குமரன்

வள்ளிமணாளன், குறிஞ்சி நிலத் தெய்வம்.

வடமொழியாளர், குமாகுமரியரை ஆரியத் தெய்வமாகவும், அவர் பெயரை ஆரியச்சொல்லாகவுங் காட்டல் வேண்டி, குமரன் என்பதைக் குமார என்றும் குமரி என்பதைக் குமாரி என்றும், ஈற்றயலுயிர் நீட்டி, மகன் மகள் என்று முறையே பொருள் குறித்து, குமார என்பதைக் கு_மார என்று சிதைத்து, எளிதில் இறப்பது

குமரன் குமரி என்னுஞ் சொற்கட்குத் தமிழில் இளைஞன், இளைஞை என்றேயன்றி, மகன், மகள் என்னும் பொருளில்லை. இவ்விரு சொற்கட்கும் ‘கும்’ என்பதே மூலம் என்றும், ஆரியத்தொன்மக் கதைப்படி முருகன் சிவனுக்கு மகன் எனினும், காளி அவனுக்கு மகளாகாள் என்றும் எளிதிலிறப்பது குழப்பருவத்திலும், கிழப்பருவத்திலுமன்றி மழப்பருவத்திலில்லையென்றும்

அறிதல் வேண்டும்.

மணமாகாத இளைஞனையும் இளைஞையையும் செல்வன், செல்வி என்று அடை கொடுத்துப் பெயர் குறிப்பது, குமரன், குமரி என்பன வடசொல்லென்னும் அறியாமையை அடிப்படையாகக் கொண்டது. செல்வன் செல்வி என்று மணமக்களைக் குறிப்பதே மாயாதலால் Master, Miss என்னும் அடைகளை இனிக்

குமரன் குமரி என்றே தமிழிற் குறிக்க.

     [குமர் →குமரி (செல்வி. ’78,ஏப்ரல். பக்.407);

 குமரி2 kumari, பெ.(n.)

   மலைநிலத்துச் செய்யும் வேளாண்மை; cultivation in hills.

     [குய் → கும் → குமரி.]

குமரி மஞ்சனத்தி

 குமரி மஞ்சனத்தி kumarimañjaṉatti, பெ.(n.)

   பூசு மஞ்சள்; Indian saffron(சா.அக.);.

     [குமரி + மஞ்சணத்தி.]

குமரிகற்பம்

குமரிகற்பம் gumarigaṟpam, பெ.(n.)

   1. சோற்றுக் கற்றாழையிற் கொள்ளும் காயகற்ப மருந்து; medcine taken along with aloe-pulp for rejuvenation.

   2. பெண்ணின் நாதத்தோடு மருந்தைச் சேர்த்துக் கொள்ளும் காயகற்ப மருந்து; a rejuvenating medicine in which the female vaginal secretion forms the ingredient amongst other drugs used for the purpose (சா.அக.);.

     [குமரி + கற்பம். கற்பம் = கலுவத்தில் (கல்வம், இட்டரைத்த மருந்து.]

குமரிகாசம்

 குமரிகாசம் kumarikācam, பெ.(n.)

   கண்ணுக் கேற்படும் ஒருவகைக் காசநோய்; cataract of the eyes. It is marked by a bluish-white appearance like contrusion, intolerable pain and irritation, muco purulent discharge, piercing pain in the iris. As a result of deranged vayu (humour); It is also characterised by dilatation of the pupil, swelling due to the collection of morbid fluid in the eye and impaired vision (சா.அக.);.

     [குமுறுல்→குமரன்→குமரி+காசம்.]

இதனால் கண்கள் கலங்கித் தாங்க முடியாத கடுப்புடன் வலியுண்டாகிப் பீளை சேர்ந்து, நடு விழியில் குத்தலும், அதனுடன் கண்ணில் வலியுங் கொண்டு கண்மணி பெருத்துவிங்கித்திரண்டு நீர்கோத்துக்கொண்டு பார்வைக்குக் கெடுதி நேரிடும்.

குமரிக்கடல்

குமரிக்கடல் kumarikkaḍal, பெ.(n.)

   குமரி யருகிலுள்ள கடல் (சிலப்.8,1, உரை);; sea near {Kumari}

     [குமரி + கடல்.]

குமரிக்கண்டம்

குமரிக்கண்டம் kumarikkaṇṭam, பெ.(n.)

   தென்கடலில் மூழ்கி விட்டதாகக் கருதப்படும் தமிழர் வாழ்ந்த நிலப்பகுதி; land submerged in the Indian Ocean where ancient Tamils suposed to have lived for along period.

     “மெய்ந்நெறி சேர்வது குமரிகண்டம்” (கந்தபு.அண்டகோ.47);.

     [குமரி + கண்டம்.]

குமரிக்கருப்பினி

 குமரிக்கருப்பினி kumarikkaruppiṉi, பெ.(n.)

   சிறுபெண்ணாயிருக்கும் போதே கருப்பமடையும் பெண்; a young pregnant girl (சா.அக.);.

மறுவ, குமரிக்கருவத்தி, குமரிக்கருவாளி

     [குமரி + கருப்பினி.]

குமரிக்கற்றாழை

குமரிக்கற்றாழை kumarikkaṟṟāḻai, பெ.(n.)

   1. சோற்றுக்கற்றாழை; aloe pulp

   2. செங்கற்றாழை; red aloe (சா.அக.);.

     [குமரி + கற்றாழை.]

குமரிக்காமம்

 குமரிக்காமம் kumarikkāmam, பெ.(n.)

   பெண்ணின் நாதம்; sexual discharge in women. semen muliebre.

     “கொள்ளடா கொள்ளடா குமரிக்காமம். கொண்டவனே உயிர்பிழைப்பான் மற்றோன் சாவான்” (பூரணசந்திரரோதயம்); (சா.அக);.

     [குமரி + காமம்.]

குமரிக்காவிகம்

 குமரிக்காவிகம்  kumarikkāvikam, பெ.(n.)

   சிவப்புக் கற்றாழை;  red aloe (சா.அக.);.

     [குமரி+காவிகம்]

குமரிக்கோடு

குமரிக்கோடு kumarikāṭu, பெ.(n.)

   குமரிக்கடற் பக்கத்திருந்த ஒரு மலை; a mountain or banks of a river said to have existed near {Kumari.}

     “குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள” (சிலப்.11:20);.

     [குமரி + கோடு.]

குமரிச்சாறு

 குமரிச்சாறு kumariccāṟu, பெ.(n.)

   கற்றாழைச் சாறு; aloe juice.

     [குமரி + சாறு.]

குமரிச்சீவன்

 குமரிச்சீவன் kumariccīvaṉ, பெ.(n.)

   புத்திரச் சீவிப் பூடு; childs amule ttree (சா.அக.);.

     [குமரி + சீவன்.]

குமரிச்சுறா

குமரிச்சுறா kumariccuṟā, பெ.(n.)

   15 அடி நீளமுள்ள குரங்கன்சுறாமீன்(M.M.851);; zebra shark, tawny, attaining 15 ft. in length.

     [குமரி + சுறா.]

குமரிச்சேர்ப்பன்

 குமரிச்சேர்ப்பன் kumariccērppaṉ, பெ.(n.)

   குமரித்துறைக்குரிய பாண்டியன் (திவா.);; the {pandya} king. as lord of cape comorin.

     [குமரி + சேர்ப்பன்.]

குமரிச்சோறு

 குமரிச்சோறு kumariccōṟu, பெ.(n.)

   கற்றாழை சோறு; aloe pulp (சா.அக.);.

     [குமரி + சோறு.]

குமரிஞாழல்

குமரிஞாழல் kumariñāḻl, பெ.(n.)

   1.மல்லிகை; as mine.

   2. சங்கம் பூ; cinnamon.

     [குமரி + ஞாழல்.]

குமரிதபோதம்

 குமரிதபோதம் kumaridapōdam, பெ.(n.)

   துயின நிலை; the highest degree or state of the sour which yogis attain entire quiescence (சா.அக.);

     [குமரி + இத + போதம்.]

குமரித்துறை

குமரித்துறை kumarittuṟai, பெ.(n.)

   கன்னியாகுமரி நீர்த்துறை; the bathing-ghat at Cape Comorin.

     “பொருநைத்துறையொடு குமரித் துறையவள் புதுநீரோடுகவே (மீனாட்.பிள்ளைத். நீராடற்.10);.

     [குமரி + துறை.]

குமரித்தெய்வம்

 குமரித்தெய்வம் kumaritteyvam, பெ.(n.)

   கன்னியாகுமரித் தெய்வம்; the goddess Kumar at Cape Comorin.

     [குமரி + தெய்வம்.]

குமரித்தைலம்

 குமரித்தைலம் kumarittailam, பெ.(n.)

   சோற்றுக கற்றாழையை முதன்மையாகக் கொண்டு உண்டாக்கும் மருந்து எண்ணெய்; a.medicatec prepared with aloe as a chief-ingredients among with other drugs which is used for anointing the head (சா.அக.);.

மறுவ. குமரியெண்ணெய்

     [குமரி + தைலம்.]

குமரிநாதம்

 குமரிநாதம் kumarinātam, பெ.(n.)

குமரிக் காலம் sexual discharge in women.

     [குமரி + நாதம்.]

குமரிநாதம் என்பதற்கு மாதவிலக்குக் குருதி எனப் பிற மருத்துவ அகரமுதலிகளில் குறிக்கப் பட்டிருப்பது தவறு என மருத்துவர் சாம்பசிவம் பிள்ளை தெளிவாக்கியிருக்கிறார்.

குமரிநீர்

குமரிநீர் kumarinīr, பெ.(n.)

   1. பெண்ணின் காமக்களைநீர் (குமரிக்காமம்);; sexual discharge in women.

   2. கற்றாழை நீர்; aloe juice.

   3. வெடியுப்புச் செய்நீர்; nitric acid.

   4. சிறுமியின் சிறுநீர்; girls urine (சா.அக.);.

     [குமரி + நீர்.]

குமரிநீலி

 குமரிநீலி kumarinīli, பெ.(n.)

   குமரி நஞ்சு; a kind of prepared arsenic (சா.அக.);.

     [குமரி + நீலி.]

குமரிப்பகவதி

 குமரிப்பகவதி gumarippagavadi, பெ.(n.)

குமரித்தெய்வம்;See. {kumari-t-teyvam.}

     [குமரி + பகவதி.]

குமரிப்படை

குமரிப்படை kumarippaḍai, பெ.(n.)

   அழியாச்சேனை; invincible army.

     “குமரிப்படைதழீ இய” (புறநா.294);.

     [குமரி + படை.]

குமரிப்பருவம்

 குமரிப்பருவம் kumaripparuvam, பெ.(n.)

   கருத்தரித்தற்குரிய பருவம், பருவகாலம்; the reproductive period of a woman’s life (சா.அக.);.

     [குமரி + பருவம்.]

குமரிப்பால்

குமரிப்பால் kumarippāl, பெ.(n.)

   1.குமரிச்சாறு; aloe juice.

   2. பருவப் பெண்ணின் முலைப்பால்; the breast milk of a young woman (சா.அக.);.

     [குமரி + பால்.]

குமரிப்பூ

 குமரிப்பூ kumarippū, பெ.(n.)

   இளம் பெண்ணின் மாதவிலக்கு அரத்தம்; the menstrual blood of a virgin girl (சா.அக.);.

     [குமரி + பூ.]

குமரிப்போர்

குமரிப்போர் kumarippōr, பெ.(n.)

   கன்னிப்போர்; first military engagement of a prince.

     “குமரிப்போருள்… கொன்றதன்றே” (சீவக.806);.

     [குமரி + போர்.]

குமரிமடல்

 குமரிமடல் kumarimaḍal, பெ.(n.)

   கற்றாழை மடல் (சா.அக.);; leaf of aloe.

     [குமரி + மடல்.]

குமரிமணி

 குமரிமணி kumarimaṇi, பெ.(n.)

   பருவப் பெண்ணின் நோனி (யோனிலிங்கம்);; the small elongated organ or elitoris of a young woman (சா.அக.);.

     [குமரி + மணி.]

குமரிமதில்

குமரிமதில் kumarimadil, பெ.(n.)

   அழியாக்கோட்டை (சீவக.336);; pregnable fortress.

     [குமரி + மதில்.]

குமரிமூ-த்தல்

குமரிமூ-த்தல் kumarimūttal,    4 செ.கு.வி.(v.i.)

   1. கன்னிகையாகவேயிருந்து மூப்படைதல்; to live and die as a virgin;

 to live ones days in virginity.

     “குமரிமூத்தவக் கொடுங்குழை நல்லாள்” (மணிமே.22:143);;

 pregnable fortress.

   2. பயினின்றிக் கழிதல்; to be wasted to lie fruitless.

     “குமரி மூத்தவென் பாத்திரம்” (மணிமே.14:77);.

     [குமரி + மூத்தல்.]

குமரிமூலம்

 குமரிமூலம் kumarimūlam, பெ.(n.)

   கற்றாழை வேர்; aloe root (சா.அக.);.

     [குமரி + மூலம்.]

குமரியச்சரம்

 குமரியச்சரம் kumariyaccaram, பெ.(n.)

   குழந்தைகளுக்கு அழிற்சியினால் நாக்குக் கொப்புளிக் காமலே தடித்து, வெடித்து, சுரங்காய்ந்து, அரத்தமாய் வயிற்றுப் போக்குதடன் கக்கலையும் உண்டாகும் ஒரு நோய்; a kind of stomatitis due to alimentary disorder. It is marked by swollen tongue, fissure from inflammation without ulceration, fever, dysentery and vomiting (சா.அக.);.

     [குமரி + அச்சரம்.]

குமரியன்னம்

 குமரியன்னம் kumariyaṉṉam, பெ.(n.)

   குமரிச்சோறு,கற்றாழைச் சோறு; aloe pulp (சா.அக.);.

     [குமரி + அன்னம்.]

குமரியாடு-தல்

குமரியாடு-தல் kumariyāṭudal,    5 செ.கு.வி.(v.i.)

   1. கன்னியாகுமரி நீரில் நீராடி தென்புலத்தார் கடன் முதலியவை செய்தல்; to perform sacred ablutions at cape comorin.

     “தென்றிசைக் குமரியாடிய வருவோன்” (மணி.13,7);.

   2. கன்னியோடு மருவுதல்; to copulate with a virgin.

     “சிந்தை நலிகின்ற திருநீர்க் குமரியாட” (சீவக.2020);.

     [குமரி + ஆடு.]

குமரியாறு

குமரியாறு kumariyāṟu, பெ.(n.)

   தமிழகத்துக்குத் தெற்கெல்லையாய்க் கடலாற் கொள்ளப்பட்டதாகக் கூறப்படுங் கன்னியாறு; the kumara river mentioned in Tamil literature as having been once the southern boundary of the Tamil land, and afterwards submerged in the Indian ocean.

     “குமரியாறும் பனைநாட்டோடு கெடுவதற்கு முன்னையது” (தொல்.பொ.649, உரை);.

     [குமரி + ஆறு.]

குமரியிசை

 குமரியிசை kumariyisai, பெ.(n.)

   பேரீச்சம் பழம்; wild date fruit (சா.அக.);.

     [குமரி + இசை.]

குமரியிருட்டு

 குமரியிருட்டு kumariyiruṭṭu, பெ.(n.)

   கன்னி யிருட்டு; darkness just before dawn.

     [குமரி + இருட்டு.]

குமரிரு-த்தல்

குமரிரு-த்தல் kumariruttal,    3 செ.கு.வி.(v.i.)

   விணே கழிதல்; to pass away unused;

 to be wasted.

     “ஆத்மகுணங்கள் குமரிருந்துபோமித்தனை” (ஈடு,2.8:1);.

     [கும்மல் → குமல் → குமர் + இரு.]

குமரிருட்டு

 குமரிருட்டு  kumariruṭṭu, பெ.(n.)

   வைகறைக்கு முன் தோன்றும் இருள்;  darkness before dawn (செ.அக.);.

மறுவ விடியல்

     [குமரி+இருட்டு]

குமரிலிங்கம்

 குமரிலிங்கம் kumariliṅgam, பெ.(n.)

   பெண்ணின் நோனி; clitoris of a young woman (சா.அக.);.

மறுவ, குமரிமணி

     [குமரி + லிங்கம்.]

குமரிவளி

 குமரிவளி kumarivaḷi, பெ.(n.)

   ஒரு காற்றுப் பிடிப்பு; a kind of windy humour (சா.அக.);.

     [குமரி + வளி.]

குமரிவாழை

குமரிவாழை kumarivāḻai, பெ.(n.)

   ஈனாத இளவாழை; young plantain that has not yet yielded.

     “குமரிவாழையின் குருத்தகம் விரித்து” (சிலப்,16:42);.

     [குமரி + வாழை.]

குமரு

 குமரு  kumaru, பெ.(n.)

இளம்பெண் குமரி,

 unmarried young girl.

குமருகளாகச் சேர்ந்து கிணற்றில் தண்ணிர் எடுக்கச் செல்கிறார்கள்

     [குமரி-குமரு.]

குமரேசசதகம்

குமரேசசதகம் gumarēsasadagam, பெ.(n.)

   குமரேசனை முன்னிலைப்படுத்திக் குருபாததாசர் இயற்றிய சதகநூல்; ethical poem of 100 stanzas addressing {kumarécan, bykuru-pâta-tacar.}

     [குமரேசர் + சதகம்.]

குமர்

குமர் kumar, பெ.(n.)

   1. கன்னிமை; virginity.

     “குமரிருக்குஞ் சசிபோல்வாள் (குற்றா.தல.தருமசாமி.47);.

   2. கன்னி; grown-up unmarried girl.

   3. அழியாத்தன்மை; impregnability, unsullied condition.

     “குமருறப் பிணித்த பைம்பொற்கொடி” (பாரத.இந்திரப்.32,ஹ ‘

கும் → குமர்.]

குமர்ப்பிள்ளை

 குமர்ப்பிள்ளை  kumarppiḷḷai, பெ.(n.)

குமரி,

 Virgin (சா.அக.);.

குமலி

 குமலி kumali, பெ.(n.)

   துளசி; holy basil (சா.அக.);.

     [கும் → குமலி.]

குமல்

 குமல் kumal, பெ.(n.)

   அரிவாள் (அக.நி.);; sickle.

     [கும்மல் → குமல்.]

குமளம்

குமளம் kumaḷam, பெ.(n.)

   1. மென்மை; softness.

   2. இளமை; youthfulness.

   3. இனிமை; sweetness.

   4. நறுமணம்; fragrance.

 Guj. kumaka

     [கும் → கும்மு கும்மளம் குமளம்.]

த. குமளம்» skt. {kõmala.}

குமாத்தா

குமாத்தா kumāttā, பெ.(n.)

   1. செயலன்; agent, steward.

   2. எழுத்தர் முதலிய வேலை பார்க்கும் கீழ்ப் பதவியிலிருப்பவன்; writer, clerk.

த.வ. எழுத்தர்.

     [U.{} → குமாஸ்தா → த.குமாத்தா.]

குமாரகம்

குமாரகம் gumāragam, பெ.(n.)

   ஒருவகை ஈயம்; a kind of lead.

   2. மாவிலங்கம்; lingam tree.

   3. பத்து, பன்னிரண்டு அகவைப் பெண்; a girl of 10 or 12 years.

   4. கற்பழியாப்பெண்; a chaste woman.

   5. இரட்டை மல்லிகை; double flowered jasmine (சா.அக.);.

     [கும்→குமல்→குமரம்→குமாரகம்.]

குமாரகாலம்

குமாரகாலம் kumārakālam, பெ.(n.)

   குமரப் பருவம்; the period of youth.

     “குமாரகால நிறைவுற வுய்த்து” (பெருங்,நரவாண.8,44);.

     [குமரம் → குமாரம் + காலம்.]

 குமாரகாலம் kumārakālam, பெ.(n.)

   இளையபருவம்; the period of youth.

     “குமார கால நிறைவுற வுய்த்து” (பெருங்.நரவாண.8, 44);.

     [குமார + காலம்.]

     [Skt.{} → த.குமார(ம்);.]

குமாரசரசுவதி

 குமாரசரசுவதி  kumāracaracuvati, பெ.(n.)

   ஒரு புலவர்;  a poet(சா.அக.);.

இவர் விசயநகரத்து அரசர் கிருட்டிணதேவராயர் காலத்தவராக இருக்கலாம். அவரைப் புகழ்ந்து இப்புலவர் பாடியுள்ளார் (அபி.சிந்);.

குமாரசுவாமி

குமாரசுவாமி kumārasuvāmi, பெ.(n.)

   முருகக் கடவுள்; Skanda, as the son of {Šiva.}

     “நக்கீரனாரால் உரைகண்டு குமாரசுவாமியாற் கேட்கப்பட்ட தென்க” (இறை.1,உரை,பக்.8);.

     [குமரன் + சுவாமி.]

குமாரசுவாமியம்

 குமாரசுவாமியம் kumārasuvāmiyam, பெ. (n.)

   நல்லூர்க் குமாரசுவாமிதேசிகர் இயற்றிய ஒரு சோதிடநூல்; a treatise in astrology by {na/ür-kkumâracuvâmi-desigar.}

     [குமார் → சுவாமியம்.]

குமாரதந்திரம்

குமாரதந்திரம்1 kumāradandiram, பெ.(n.)

   முருகக்கடவுளின் வழிபாட்டு நெறியை தெரிவிக்கும் ஆகமம்; an agama in sanskrit dealing with skanda and his worship.

     “குமாரதந்திர நெறிப்படி… பூசனை புரிந்தனர்”(கந்தபு.மீட்சி.24);.

     [குமாரன் + தந்திரம்.]

 குமாரதந்திரம்2 kumāradandiram, பெ.(n.)

   இராவணன் (கோகர்ணத்தில்); தவம் செய்து இயற்றிய ஓர் மருத்துவ நூல் (வடமொழியில் மொழிபெயர்க்கப்பட்ட ஆயுள் வேதத்தின் ஒரு பாகம்);; one of the divisions of {Ayurvèda} in to sanskrit originally written by Ravana (சா.அக.);.

     [குமாரம் + தந்திரம்.]

குமாரதாரிகை

 குமாரதாரிகை  kumāratārikai, பெ.(n.)

   திருவேங்கடத்தில் உள்ள தூய நீர்த்துறை (தீர்த்தம்);;  sacred bath-ghate in tiruvéhgadam(அபி.சிந்.);.

குமாரதெய்வம்

குமாரதெய்வம் kumāradeyvam, பெ.(n.)

குமாரசுவாமி பார்க்க;See. {kumâra-Suwami}

     “அவன் குமாரதெய்வம்”(இறை.1,உரை, பக்.7);.

     [குமாரன் + தெய்வம்.]

குமாரதேவர்

 குமாரதேவர்  kumāratēvar, பெ.(n.)

   கன்னட நாட்டு மன்னன்;  king who ruled kannadanãợu.

     [குமார+தேவர்]

குமாரத்தி

 குமாரத்தி kumāratti, பெ.(n.)

   மகள்; daughter.

     [குமாரன் → குமாரத்தி.]

குமாரன்

குமாரன் kumāraṉ, பெ.(n.)

   1. புதல்வன்; son.

   2. இளைஞன்; young man.

   3. முருகக்கடவுள்; Skanda, as son of {Šiva.}

     “கோயில்செல்லுபு குமார னிருந்தான்” (கந்தபு.குமார.16);.

     [குமரன் → குமாரன்.]

குமாரபிரமசாரி

 குமாரபிரமசாரி  kumārapiramacāri, பெ.(n.)

குமரக் கடவுள் சினத்துடன் தங்கிய கிரவுஞ்ச(கிரி); மலை; kiravuriagiri

 mountain, which God Kumaranstayed with anger.

குமாரபிருத்தியம்

குமாரபிருத்தியம் kumārabiruttiyam, பெ.(n.)

   குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் வரும் நோய்களின் காரணம், குறி, குணம், முறை முதலியவற்றைப் பற்றிக் கூறும் ஆறு மருத்துவ நூல்கள்;   6 books in Ayurveda, which tells the diseases peculiar to infants and women. It contains etymology, symptomatology etc (சா.அக.);.

     [குமாரம் + மிருத்தியம்.]

குமாரபோசனம்

 குமாரபோசனம்  kumārapōcaṉam, பெ.(n.)

பூணுரல் அணிவிக்கும் சடங்கில் காயத்திரி நல்லுரை (உபதேசம்); செய்வதற்கு முன் அச்சடங்கு பெறும் மாணவனுக்கு, உடனொத்த சில மணமாகாதவர் (பிரம்மசாரி);களோடு அளிக்கும் உணவு,

 feast given to a Brahman boy along with some bachelors just before his initiation to Brahmanhood (செ.அக.);.

குமாரப்பல்லக்கு

 குமாரப்பல்லக்கு kumārappallakku, பெ.(n.)

   சிறுபல்லக்கு; small palankeen.

     [குமரன் → குமாரன் + பல்லக்கு.]

குமாரப்பாறை

குமாரப்பாறை kumārappāṟai, பெ.(n.)

   5 அடி நீளமுள்ள ஒரு கடல்மீன்; a kind of horse mackerel, its length is about 5 feet (சா.அக.);.

     [குமாரம் + பாறை.]

குமாரமடைப்பள்ளி

 குமாரமடைப்பள்ளி kumāramaḍaippaḷḷi, பெ.(n.)

   அரச குமரர்க்குச் சமையல் செய்தோதது மரபில்வந்தவர்கள்; a sub-caste of {mata p-pa/} who got their name from their ancestors having been cooks of princes.

     [குமரர் → குமாரர் + மடை + பள்ளி.]

குமாரம்

 குமாரம் kumāram, பெ.(n.)

   உருக்கி ஓடவிட்ட பொன் (யாழ்.அக.);; gold melted and refined.

     [குமர் → குமாரம்.]

குமாரராசா

 குமாரராசா  kumārarācā, பெ.(n.)

   கோமகன், இளவரசன், அரசகுமாரன் (இராசபுத்திரன்);;  prince (செ.அக.);.

குமாரவனம்

 குமாரவனம்  kumāravaṉam, பெ.(n.)

   மலைமகளுக்கென்று உள்ள காடு;  the district forest of Malai-magal.

குமாரவர்க்கம்

 குமாரவர்க்கம்  kumāravarkkam, பெ.(n.)

   குலம்;  lineage, progeny (செ.அக.);.

குமாரவாகனம்

குமாரவாகனம் kumāravākaṉam, பெ.(n.)

   1.மயில்; peacock.

   2. யானை; elephant (சா.அக.);.

     [குமாரன் + வாகனம்.]

குமாரவிருத்தியை

 குமாரவிருத்தியை kumāraviruttiyai, பெ.(n.)

   மருத்துவச்சி; mid-wife (சா.அக.);.

     [குமாரம் + விருத்தியை.]

 குமாரவிருத்தியை kumāraviruttiyai, பெ.(n.)

   மருத்துவச்சி (யாழ்.அக.);; mid-wife child’s nurse.

     [Skt.{}-{} → த.குமார விருத்தியை.]

குமாரி

குமாரி kumāri, பெ.(n.)

   1.புதல்வி; daughter.

   2. காளி;{kal}

   3. அழியா இளமையினள்; woman of perpectual youth ever in the prime of life.

     “அமர்செய் கயற்கட் குமாரியைக் காக்க” (மீனாட்.பிள்ளைத்காப்பு. 4);.

   4. தங்கத்தைக் கரைக்குமோர் கரைப்பான்; solvent of gold (W.);.

     [கும் → குமரி → குமாரி.]

குமாரிகா

 குமாரிகா kumārikā, பெ.(n.)

காய்ப்பாகல்.

     [குமரி _ பாய் = குமளிக்காய் → குமாரிகா.]

குமாரிகை

குமாரிகை gumārigai, பெ.(n.)

   பத்துமுதல் பன்னிரண்டு அகவைப் பெண்; a girl of 10-12years (சா.அக.);.

     [குமரி → குமாரி + கை.]

குமார்க்கம்

 குமார்க்கம்  kumārkkam, பெ.(n.)

   தீ நெறி;  wrong course, evil ways (செ.அக.);.

குமி

குமி1 kumidal,    2 செ.கு.வி.(v.i.)

   திரளுதல்; to accumulate, to be heaped up, to crowd (கொ.வ.);.

     [கும் → குமி-.]

 குமி2 kumittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   திரளச் செய்த; to accumulate, heap up, to gather.

     [கும் → குமி-.]

 குமி3 kumittal,    4 செ.குன்றாவி. (v.t.)

அரிசி

   முதலியவற்றை அதிகமாகக் குற்றுதல்; to coverpound, as rice.

     [குமி → குமி-த்தல்.]

குமிகை

குமிகை gumigai, பெ.(n.)

   முதிராத எள்ளு (பிங்.);; immature sesamum.

   2. வெள்ளெள்ளு (மலை.);; white sesamum.

     [கும் → குமிகை.]

குமிகைச் சோளம்

 குமிகைச் சோளம் gumigaiccōḷam, பெ.(n.)

   வெண்சோளம்; white guinea-corn (சா.அக.);.

     [குமிகை + சோளம்.]

குமிடு

 குமிடு kumiḍu, பெ.(n.)

   குன்று; hill.

     “காடுங் குமிடு பிடமாக” (பாடு.போற்றி.);.

     [கும் → குமி → குமிடு.]

குமிட்டல்

 குமிட்டல் kumiṭṭal, பெ.(n.)

   கிட்டம்; iron dross (W);.

     [குமிடம் + கல்.]

குமிட்டி-த்தல்

குமிட்டி-த்தல் kumiṭṭittal,    4 செ.கு.வி.(v.i.)

   குமிழ் போலாதல்; to swell, form as a tumour.

     [குமிழ் → குமிட்டித்தல்.]

குமிட்டிக்கல்

 குமிட்டிக்கல் kumiṭṭikkal, பெ.(n.)

   கற்கிட்டம்; over burnt brick (சா.அக.);.

     [குமிட்டி + கல்.]

குமிட்டிக்காய்

 குமிட்டிக்காய் kumiṭṭikkāy, பெ.(n.)

   கறிக்குமிட்டி’; a vegetable variety of {kumatti} (சா.அக.);.

மறுவ..கல்யாணபூசணி

     [கும்மட்டி → குமட்டி → குமிட்டி + காய்.]

குமிட்டிக்காளான்

  குமிட்டிக்காளான்  kumiṭṭikkāḷāṉ,  பெ.(n.)

    மரக்காளான்;   mushrooms growing on trees (சா.அக.);.

     [குமிட்டி+காளான்.]

குமிட்டிக்கீரை

 குமிட்டிக்கீரை kumiṭṭikārai,  பெ.(n)

    ஒரு வகைக் கறிக்கீரை;   a kind of vegetable green – Celosia nodiflora (சா.அக.);.

     [குமிட்டி+கீரை.]

குமிட்டிமாதுளை

 குமிட்டிமாதுளை kumiṭṭimātuḷai, பெ.(n.)

   கொம்மட்டி மாதுளை; melon lime-citrus(சா.அக.);.

மறுவ. சீதளை

     [கொம்மட்டி → குமட்டி + மாதுளை.]

குமிட்டில்

 குமிட்டில் kumiṭṭil, பெ.(n.)

   ஒரு கீரை; a vegetable green (சா.அக.);.

     [குமிட்டி → குமிட்டில்.]

குமிட்டு

 குமிட்டு kumiṭṭu, பெ.(n.)

   குவியல் (யாழ்.அக.);; heар.

     [கும் → குமிழ் → குமிட்டு.]

குமிண்சிரிப்பு

குமிண்சிரிப்பு kumiṇcirippu, பெ.(n.)

   புன்சிரிப்பு; gentle smile.

     “குளித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்” (தேவா.11.4);.

     [குமிழ் + சிரிப்பு = குமிண் சிரிப்பு.]

குமிண்டி

குமிண்டி kumiṇṭi, பெ.(n.)

   கீரைவகை; a kind of greens.

     “குமிண்டியும் பண்ணையும் கூட முளைக்கின்ற” (தனிப்பா.142,38);.

     [குமுள் → குமுழ்→குமுண்→ குமிண். குமுழ் = ஒருவகை மணம் வீசுதல்மட்டிக்கீரை.]

குமிதம்

 குமிதம் kumidam, பெ.(n.)

   தேக்குமரம்; teak wood;

 Indian oak (சா.அக.);.

     [கும்மு → கும்மிதம் → குமிதம் (திரண்டது);.]

குமிதிகம்

 குமிதிகம்  kumitikam, பெ.(n.)

மரவகை,

 teak – Tectona grandis (செ.அக.);.

குமின்குமினெனல்

குமின்குமினெனல் kumiṉkumiṉeṉal, பெ.(n.)

   சிலம்பு முதலிய அணிகலன்களின் ஒலிக்குறிப்பு; onom. Expr. signifying tinkling sound, as of anklets.

     “மின்னனார் குமின் குமின்னலங்காரம் பெற நடஞ்செய்”(கம்பரந்.6);.

     [குமின் + குமின் + எனல்.]

குமிறு-தல்

குமிறு-தல் kumiṟudal,    5 செ.கு.வி.(v.i.)

   ஒலித்தல் (சூடா.);; to resound, roar.

     [கும்→குமிறு-.]

குமிலம்

 குமிலம் kumilam, பெ.(n.)

   பேரொலி (பிங்.);; uproar, tumult, great noise, roar, acclamation shout.

     [குமுல்→குமில்→குமிலம்.]

குமிலயம்

 குமிலயம் kumilayam, பெ.(n.)

   குப்பைமேனி. இது குப்பையில் வளரும் ஒருவகைக் கீரை; rubbish plant. It is common in indian gardens and backyards of houses (சா.அக.);.

மறுவ. மயிலக்கீரை

     [குமிலி→குமிலியம்→குமிலயம்.]

குமிலவோதை

குமிலவோதை kumilavōtai, பெ.(n.)

   பேரார வாரம்; tremendous noise, uproar.

     “சாப நாணறு குமிலவோதை” (இரகு. யாக.87);.

     [குமுல்→குமில்→குமிலம் + ஒதை.]

குமிலி

 குமிலி kumili, பெ.(n.)

   துளசி; sacred basil.

     [குமுல்→குமில்→குமிலி.]

குமிளம்

 குமிளம் kumiḷam, பெ.(n.)

   கடைக்கண்ணின் வெள்விழியில் குமிழ்போல் கொப்புளத்தை உண்டாக்கும் ஒரு கண்ணோய்; a tubercle on the white or sclerotic coat of the eye. (சா.அக.);.

     [குமிழ் → குமிள் → குமிளம்.]

குமிளா

குமிளா kumiḷā, பெ.(n.)

   மீன்வகை; a kind of fish.

     “கிளிகுமிளா மாசினி” (பறாளை.பள்ளு,74);.

     [குமிள் → குமிளா.]

குமிளி

குமிளி1 kumiḷi, பெ.(n.)

   நீர்க்குமிழி; bubble on water (சா.அக.);.

     [கும் → குமிள் → குமிளி.]

 குமிளி2 kumiḷi, பெ.(n.)

   குப்பி; bottle.

     [குமிழ் → குமிள் + குமிளி.]

குமிளிக்கண்

 குமிளிக்கண் kumiḷikkaṇ, பெ.(n.)

   குருக்கள் எழும்பிய கண்; eye marked by vesicles (சா.அக.);.

     [குமிளி + கண்.]

குமிளிபாய்-தல்

குமிளிபாய்-தல் kumiḷipāytal,    2 செ.கு.வி.(v.i.)

   நீர்க்குமிழியைப் போல் எழும்பல்; rising like bubbles (சா.அக.);.

     [குமிளி+ பாய்-.]

குமிழகம்

 குமிழகம் kumiḻkam, பெ.(n.)

   குமிழ் மரம்; kashmere commonly foundin Himalayas, Nilgris in the east and west coasts including Malabar (சா.அக.);.

மறுவ. குமிழ், கும்பிடுதேக்கு, குமிழங்கொடி.

     [குமிழ் + அகம்.]

இது இமாலயம், நீலகிரி மலையாளம் ஆகிய இடங்களில் வளரும். இதன் நிழல் உடம்பிற்கு நன்மையைத் தரும்.

குமிழஞ்சுளுந்து

 குமிழஞ்சுளுந்து kumiḻñjuḷundu, பெ.(n.)

   குமிழங்கழியில் ஏற்றும் தீப்பந்தம் (சங்.அக);; torches made of tamil sticks.

     [குமிழ் → குமிழம் + சுளுந்து. சுள் = எரிதல். சுள் → சுளுந்து.]

குமிழஞ்சூழ்

 குமிழஞ்சூழ் kumiḻñjūḻ, பெ.(n.)

குமிழஞ்சுளுந்து பார்க்க;See. {kumilar-culundu.}

     [குமிழஞ்சுளுந்து → குமிழஞ்சூழ்.]

குமிழன்

 குமிழன் kumiḻṉ, பெ.(n.)

குமிழம் பார்க்க;See. {umilam}

     [குமிழ் → குமிழன்.]

வகைகள்: நிலக்குமிழ்,பெருங்குமிழ்(சா.அக.);.

குமிழம்

 குமிழம் kumiḻm,    பெ.(n). குமிழ மரம்; a tree of teak variety.

மறுவ, குமிழகம், கும்பிடுதேக்கு, குமிழம், குமிழ்.

     [குமிழ் → குமிழம்.]

குமிழாணி

குமிழாணி kumiḻāṇi, பெ.(n.)

   1. தலையிற் குமிழ் கொண்ட ஆணி; stud nail (C.E.M.);.

   2. குமிழ்ப்பிடி பார்க்க;See. {kumis-p-pig,}

     [குமிழ் + ஆணி.]

குமிழி

குமிழி1 kumiḻi, பெ.(n.)

   நீர் முதலியவற்றிலெழுங் குமிழி; bubble.

     “குமிழிவிட் டுமிழ் குருதி” (சீவக. 2239.

   2. பாதக் குறட்டின் குமிழ்; boss, knob, as 5f wooden sandals.

   3. ஊற்றுவாய்; spring, as the source of a stream.

     “கிண்ணகத்தில் குமிழிக் கீழே சாவிபோமா போலே” (ஈடு,5:3,7);.

     [கும் → குமிழ் → குமிழி.]

 குமிழி2 kumiḻi, பெ.(n.)

கீழ்க்குமிழி பார்க்க;See. (S.I.I.iii.411);.

     [குமிழ் → குமிழி.]

குமிழி நீருண்(ணு)-தல்

குமிழி நீருண்(ணு)-தல் kumiḻinīruṇṇudal,    12 செ.கு.வி.(v.i.)

   ஒரு பொருளில் ஆழங்காற்பட்டுக் கிடத்தல்; lit., to dive deep causing bubbles, to dive deep into a subject.

     “கிடாம்பியாச்சானோடு வாசியறக் குமிழ் நீருண்டது” (ஈடு, 10:6,1);.

     [குமிழ் → குமிழி + நீருண்-.]

குமிழி-த்தல்

குமிழி-த்தல் kumiḻittal,    4 செ.கு.வி.(v.i.)

   குமிழி கொள்ளுதல்; to bubble, to rise in bubbles, in pustules.

     [குமிழி → குமிழித்தல்.]

குமிழிஞாலார்நப்பசலையார்

 குமிழிஞாலார்நப்பசலையார்  kumiḻiñālārnappacalaiyār, பெ.(n.)

   கடைச் சங்கப் பெண்பால் புலவர்;  a poetess who belonged to the last sangam era.

     [குமிழி+ஞாழல்+ஆர்+நட்பசலை+ஆர்]

குமிழியிடு-தல்

குமிழியிடு-தல்  kumiḻiyiṭutal,    18 செ.கு.வி. (v.i.)

   1. நீரில் குமிழி தோன்றுதல்;  bubble,

பாறைகளுக்கு இடையில் நீர் குமிழியிட்டுச் சுழன்று கொண்டிருந்தது.

    2. ஒருவரிடத்தில் மகிழ்ச்சி, உற்சாகம் முதலியன பெருகுதல்;   happiness, enthusiasm, etc., bubble up.

எனக்கும் சொற்களில் குமிழியிட்டது.

     [குமிழ் + இடு-தல்]

குமிழ்

குமிழ்1 kumiḻttal,    4 செ.கு.வி.(v.l.)

   1. குமிழி யிடுதல்; to grow into a conical shape, to be spherical, globular, to form in to bubble.

     “செழுங்குருதி கொழித்திழிந்து குமிழித்தெறிய” (திவ்.பெரியாழ். 4:8,7);.

   2. மயிர்சிலிர்த்தல்; to stand on end, as hair, to horripilate.

     [கும் → குமிழ் → குமிழ்த்தல்.]

 குமிழ்2 kumiḻttal,    4 செ.குன்றாவி.(v.t.)

   1. ஒலிக்கச் செய்தல்; to cause to sound.

     “அதிர்முக முடைய வலம்புரி குமிழ்த்து” (திவ்.பெரியாழ். 4:7,3);.

   2. கொழித்தல் (தைலவ. வைத்திய.12);; to winnow.

     [கும் → குமிழ்.]

 குமிழ்1 kumiḻ, பெ.(n.)

   1. நீர்க்குமிழி (பிங்.);; water bubble.

   2. உருண்டு திரண்ட வடிவம்; knob, as of wooden sandals, stud, pommel, anything round or convex, as the head of a nail.

   3. எருத்தின் திமில்; hump of an ox.

   4. உள்ளங்கால் வீக்கம்; swelling in the sole of the foot.

     [கும் → குமிழ்.]

 குமிழ்2 kumiḻ, பெ.(n.)

   1. நிலக்குமிழ்; small cashmere tree.

   2. பெருங்குமிழ் (தொல்.எழுத்.386);; Coomp teak.

   3. நீரைச் வடிக்கும் செடிவகை; mucilaginous shrub that yields water.

   4. நாணல் (மலை.);; kaus, a large and coarse grass.

     [கும் → கும்மு (திரள்தல்); →குமுல் →குமில் →குமிழ்.]

குமிழ்-தல்

குமிழ்-தல் kumiḻtal,    4 செ.கு.வி.(v.i.)

   சித்திரவேலை செதுக்கப்படுதல்; to be embossed or worked in relief.

மரத்திற் குமிழ்ந்த யானை.

     [குமி → குமிழ்.]

குமிழ்குமிழ்-த்தல்

குமிழ்குமிழ்-த்தல் kumiḻkumiḻttal,    4 செ.குன்றாவி. (v.t.)

   பிறர்க்குத் தோன்றாமல் மறைத்தல்; to hide from others, hush.

     “கோட்டமின் முற்றங் குமிழ் குமிழ்த் துரைப்ப” (பெருங். உஞ்சைக் 34:184);.

     [குமிழ் +குமிழ்.]

குமிழ்க்கட்டை

 குமிழ்க்கட்டை kumiḻkkaṭṭai, பெ.(n.)

   பாதக்குறடு; knobbed or studded wooden Sandlas.

     [குமிழ் + கட்டை.]

குமிழ்க்கொடி

 குமிழ்க்கொடி kumiḻkkoḍi, பெ.(n.)

   நிலக்குமிழ்; small cashmere tree.

     [குமிழ் + கொடி.]

குமிழ்நோய்

குமிழ்நோய் kumiḻnōy, பெ.(n.)

   குமிழ்போற் படலத்தைப் புடைப்பிக்கும் கண்ணோய் (சீவரட். 270);; tubercle in the cornea of the eye.

     [குமிழ் + நோய்.]

குமிழ்ப்பிடி

 குமிழ்ப்பிடி kumiḻppiḍi, பெ.(n.)

   கதவு முதலியவற்றில் தைத்த குமிழ்க் கைப்பிடி; rounded handle, knob (கொ.வ.);.

     [குமிழ் + பிடி.]

குமிழ்ப்பு

குமிழ்ப்பு kumiḻppu, பெ.(n.)

   1. குமிழெழுகை; bubbling up.

   2. மயிர்ச்சிலிர்ப்பு(உரி.நி.);; hairs standing on end, horripilation.

   3. கொழிக்கை (தைலவ. வைத்திய.12);; winnowing.

     [குமிழ் → குமிழ்ப்பு.]

குமிழ்மிட்டான்

 குமிழ்மிட்டான் kumiḻmiṭṭāṉ, பெ.(n.)

   தண்ணீர் மிட்டான்; water root (சா.அக.);.

     [குமிழ் + (மீட்டான்); → மிட்டான்.]

குமிழ்ரோகம்

 குமிழ்ரோகம் kumiḻrōkam, பெ.(n.)

குமிழ்நோய் பார்க்க;See. {kumilhõy.}

     [குமிழ் + ரோகம்.]

குமிழ்வண்டு

 குமிழ்வண்டு kumiḻvaṇṭu, பெ.(n.)

   வண்டு வகை; carpenter bee (வின்.);.

     [குமிழ் + வண்டு.]

குமு

குமு kumu,    4 செ.கு.வி.(v.i.)

   1.பெருகுதல், பரவுதல்; to spread.

   2. உடைதல், இடிதல்; to be broken, into pieces to fall down and perish.

     [கும்→குமு.]

குமுகம்

குமுகம் gumugam, பெ.(n.)

   1. பன்றி; hog.

   2. பிரப்பங் கொடி; cane creeper, water-rattan (சா.அக.);.

     [கும் → கும்மு → கும்முகம்→குமுகம் (திரட்சி);.]

குமுகுமு-த்தல்

குமுகுமு-த்தல் gumugumuttal,    4 செ.கு.வி.(v.i.)

   மணம் மிக வீசுதல்; to spread fragrance, to send whiffs of odour.

     “பசுமஞ்சள் குமுகுமுக்க” (அழகர்கல.10);.

     [கும் → குமு + குமு. கும் = பெருகு. பரவு.]

குமுகுமெனல்

குமுகுமெனல் gumugumeṉal, பெ.(n.)

   1. பேரொலிக்குறிப்பு; onam. expr. signifying uproar.

     “குடமுழ வாண னீராயிரங் கரங்கொண்டு குமுகுமெனவே முழக்க” (திருப்போ. சந்.பிள்ளைத்.சிறுபறை.2);.

   2. மணம் வீசுதற் குறிப்பு; expr. signifying sending out whiffs of odour.

     “மணந்தான் குமுகுமென் றடிக்கவில்லை” (தனிப்பா. 1,389,44);.

     [குமு + குமு + எனல்.]

குமுக்கு

குமுக்கு1 kumukku, பெ.(n.)

   1. மொத்தம்; whole, total, lump, gross, wholesale.

பண்டங்களையெல்லாம் குமுக்காய் வாங்கினான் (உ.வ.);.

   2. பெருந்தொகை; lion’s share;

 large number;

 considerable quantity.

   3. கூட்டம்; band, clan, crowd, party (இ.வ.);.

     [கும்→குமு→முக்கு.]

 குமுக்கு2 kumukku, பெ.(n.)

   உதவி; aid, help, assistance.

     “குமுக்குப்பண்ண” (வின்.);

     [கும்→குமுக்கு.]

 குமுக்கு3 kumukku, பெ.(n.)

   கமுக்கம்; secrecy.

மறுவ. கமுக்கம், மந்தணம், உள்ளாளம்.

     [கமுக்கு → குமுக்கு.]

 குமுக்கு1 kumukkudal,    5 செ.குன்றாவி.(v.t.)

   1. ஊமைக்காயம் படக் கையாற் குத்தல்; to beat with fists, pommel.

   2. ஆடை கும்முதல்; to wash cloth by wetting and gently presshing it with hands;

துணியைச் சற்று குமுக்கு (உ.வ.);.

தெ. குமுகு

     [கும் → கும்மு → குமுக்கு.]

குமுங்கு-தல்

குமுங்கு-தல் kumuṅgudal,    5 செ.கு.வி.(v.i.)

   மசிதல்; to mash.

     “உரலிற் குமுங்க விடித்து” (தைலவ.தைல.49);;

   2. உள்ளாக இறங்குதல்; to sink, as a building.

கட்டடம் குமுங்கி விட்டது (கொ.வ.);.

     [கும் → குமு.]

குமுசியார்

 குமுசியார்  kumuciyār, பெ.(n.)

   பிரெஞ்சு ஆட்சியின் காவல்துறைத் தலைவர்;  french commissioner of police (செ.அக.);.

குமுடக்கனிவழி

 குமுடக்கனிவழி kumuḍakkaṉivaḻi, பெ.(n.)

   மட்டைச் சிலந்தி; an ulcer of the size of an egg an egg shaped veneral boil (சா.அக.);.

     [குமுடம் + கனி + (முழி); வழி.]

குமுணன்

 குமுணன்  kumuṇaṉ, பெ.(n.) க

ுமணன் என்னும் மன்னன்

 king kumaņaŋ.

தொண்டை நாட்டைச் சேர்ந்த இம்மன்னன் பெரிய கொடையாளி. இவன் தன் தம்பி அமணனுக்கு நாட்டை ஆளக் கொடுத்து விட்டு காட்டில் வேடுவனைப் போல் வாழ்ந்து வந்தான். அப்பொழுது ஒப்பில்லாமணி எனும் புலவர் குமணனைப் பாடிப் பரிசில் பெறச் சென்று அவனில்லாமையால் வருந்தினார். இவன் தம்பி தன் தமயனின் தலை கொணர்வோர்க்கு ஆயிரம்பொன் தருவதாக அறிவித்திருந்தான். இப்புலவர் காட்டில் குமணனைக் கண்டு தன் நிலை கூற, குமணனும் தன் தலையைத் தரமுன் வந்தான். புலவர் தடுத்து அமணனிடம் பேசி மீண்டும் அரச பதவியைக் குமணனுக்கே அளித்தார் (அபி.சிந்);.

குமுதகம்

குமுதகம்1 gumudagam, பெ.(n.)

   கட்டடத்தின் எழுதகவகை; a kind of moulding (W);.

     [குமு → குமுது → குமுதகம்.]

 குமுதகம்2 gumudagam, பெ.(n.)

   1.செவ்வாம்பல்; red lily.

   2. தருப்பை; sacrificial grass.

   3. வெள்ளி; silver.

   4. வெள்ளைநஞ்சு; a white arsenic(சா.அக.);.

குமுதகி

 குமுதகி kumutaki, பெ.(n.)

   வெள்ளாம்பல்; white Indian water lily – Nymphaea Pubescens (சா.அக.);.

     [குமுதம் – குமுதகி]

குமுதசகாயன்

 குமுதசகாயன்  kumutacakāyaṉ, பெ.(n.)

குமுதநாதன் பார்க்க (பிங்.); see kumuda-nadar (செ.அக.);.

குமுதச் சிலந்தி

 குமுதச் சிலந்தி kumudaccilandi, பெ.(n.)

கொப்புளமாகாமல் சீழ் வடியும் புண்வகை

 a kind of ulcer.

     [குமுதம் + சிலந்தி.]

குமுதநண்பன்

குமுதநண்பன் kumudanaṇpaṉ, பெ.(n.)

   நிலவு (அல்லிப் பூவிற்குத் தலைவன்);; lit, lord of the water lily, moon.

     “காமக் கருத்தாக் குமுதநாதன் கங்குல் வரக்கண்டும்” (தனிப்பா.1: 334,40);

மறுவ. குமுதநாதன்

     [குமுதம் + நண்பன்.]

குமுதநாதன்

குமுதநாதன்  kumutanātaṉ, பெ.(n.)

   அல்லிப் பூவுக்குத் தலைவனாகக் கருதப்படும் நிலவு;  moon, Lord of the water-lily.

     “காமக்கருத்தாக் குமுதநாதன் கங்குல் வரக்கண்டும்” (தனிப்பா. 334, 40); (செஅக);.

     [குமுதம்+நாதன்.]

குமுதபதிமங்கை

 குமுதபதிமங்கை kumudabadimaṅgai, பெ.(n.)

   செவ்வல்லி; red-indian water lily (சா.அக.);.

     [குமுதம் + பதி + மங்கை.]

குமுதபத்திரம்

 குமுதபத்திரம் kumudabaddiram, பெ. (n.)

   பெருங்குமிழ் (சா.அக.);; coomb teak.

     [குமுதம் + பத்திரம்.]

குமுதபாந்தவம்

 குமுதபாந்தவம்  kumutapāntavam, பெ.(n.)

   கற்பூரம்;  camphor (சா.அக.);.

குமுதப்படை

குமுதப்படை1 kumudappaḍai, பெ.(n.)

   1. கோயிற்கருவறையின் வெளிப்புற மதிலில் வேலைப்பாடமைந்த அடிப்பகுதி; decorated part at the bottom of the wall of the inner sanctuary of a Hindu-temple.

     “குமுதப் படையிலே கல்வெட்டிக் கொடுத்தபடி” (S.1.1.1, 138);.

   2. குமுதம்’ பார்க்க;See. kumudam.

     [குமுதம் + படை.]

 குமுதப்படை2 kumudappaḍai, பெ.(n.)

   கருங்கற் கோயில் கட்டடத்தில், அடிப்படைத் தளவரிசை மட்டத்தின் மேல், கீழ்நோக்கிய இதழ்களாக அமைக்கப்பெறும் சிற்ப வரி; floral decoration of the temple.

     “இறையனார் கோயில் திருஅக்கிய மண்டபம் முன்பு திருக்கற்செய்து நின்ற குமுதப்படை மேல் – கல்லடிப்” (தெ.கல். தொ.1 கல்561);.

     [குமுதம் + படை.]

குமுதப்பிரியா

 குமுதப்பிரியா  kumutappiriyā, பெ.(n.)

   பண் வகைகளுள் ஒன்று;  a musical mode (செ.அக.);.

     [குமுதம்+பிரியா]

குமுதம்

குமுதம்1 kumudam, பெ.(n.)

   கருப்பூரம் (யாழ்.அக.);; camphor.

     [கும் + குமுதம்.]

 குமுதம்2 kumudam, பெ.(n.)

   1. வெள்ளாம்பல் (திவா.);; esculent white water-lily.

   2. செவ்வாம்பல்; red Indian water-lily

     “துவரித ழலர்வன குமுதம்”

 elephantat the south west quarter, one of {asta-tik-kasam.}

   4. வெள்ளைச் செய்ந்நஞ்சு; a mineral poison.

   5. கற்செய்நஞ்சு; prepared arsenic.

   6. ஒரு படைப் பிரிவு; a block of army.

   9 யானையும் 9 தேரும், 27 குதிரையும், 45 காலாள்குளும் கொண்ட படை (பிங்.);; an army consisting of 9 elephants, 9 choriots, 27 norses, and 45 infantry.

   7. பல்லாயிரமம் அக்குரோணி கொண்ட சேனைத் தொகை (பிங்.);; an army consisting of several thousands of akkuroni.

   8. மிகுதி; abundance, as of produce, largeness, as of income (J);.

   9. கட்டடத்தின் எழுதகவகை;   10. கருவிழியில் உண்டாகும் ஒருவகை நோய்; a disease of the pupil of the eye.

     [கும்→ குமு (தோன்றுதல், பெருகுதல்); → குமுது→குமுதம்.]

 குமுதம்3 kumudam, பெ.(n.)

   அடுப்பு (திவா.);; over, Stove.

   தெ.,க. கும்படி;க.கும்படை.

     [குய் → கும் → கும்மு (வேதல், எரிதல்); → குமுது→குமுதம்.]

 குமுதம்4 kumudam, பெ.(n.)

   பேரொலி; uproar, confusion.

     “கதறிமிகு குமுதமிடு பரசமயம்” (திருப்பு.948);.

     [கும் → குமு (பெருகுதல்); → கும்முது→குமுது→குமுதம்.]

 குமுதம்5 kumudam, பெ.(n.)

   தருப்பைப் புல் (பிங்.);; sacrificial darbha grass.

     [கும் → கும்மு → குமு→ குமுது→குமுதம்.]

 குமுதம் kumudam, பெ.(n.)

   கருப்பூரம் (யாழ்.அக.);; camphor.

     [Skt.kumuda → த.குமுதம்.]

குமுதர்

 குமுதர்  kumutar, பெ.(n.)

   மதுர கவியாழ் வாராகப் பிறந்தவர் (அவதரித்தவர்);;  one who incarnation to Madurakavi (அபி.சிந்.);.

குமுதவதி

குமுதவதி  kumutavati,    1. விமரிசன் எனும் வேட்டுவ அரசனின் மனைவி;  wife of a hunter’s king vimarišan.

   2. இராமபிரானின் மகனான குசனை மணந்த நாக கன்னிகை;  wife of a Rāma’s son kušan.

   3. விந்தியமலையில் தோன்றி ஓடும் ஆறு.

 a river, origin from vindiya-malai,

குமுதவல்லி

 குமுதவல்லி  kumutavalli, பெ.(n.)

    திருமங்கையாழ்வாரின் மனைவி;   wite of Tirumanga-y-ālvār (அபி.சிந்.);.

குமுதிகை

 குமுதிகை gumudigai, பெ.(n.)

   பூசணி; sweet pumpkin (சா.அக.);.

     [கும் → கும்மு → கும்முதிகை→குமுதிகை.]

குமுதிசை

 குமுதிசை kumudisai, பெ.(n.)

   மணம் வீகம் மரம்; a fragrant tree (சா.அக.);.

     [கும்→கும்மு + திகை – கும்முதிகை→குமுதிசை. திகு (திகழ்); → திகைதல் = தெளிதல் விளங்குதல் மணம் வீசுதல். இது உங்களுக்கு விளங்கியதா என்பதை இது உங்களுக்குத் திகைஞ்சுதா என வழங்குவது நாட்டுப்புற வழக்கு.]

குமுதிப்பனை

 குமுதிப்பனை kumudippaṉai, பெ.(n.)

   கிச்சிலிப்பனை; Malayan sago palm.

     [குமுது → குமுதி + பனை.]

குமுது

குமுது kumudu, பெ.(n.)

   1. பெருக்கம், வளர்ச்சி; largeness, growth.

   2. தோற்றம்; appearance.

     [கும் → கும்மு → கும்முது → குமுது.]

குமுதை

குமுதை1 kumudai, பெ.(n.)

   1. குமிழ்மரவகை; Coomb teak.

   2. பூடுவகை (யாழ்.அக.);; a shrub.

     [குமுது → குமுதை.]

 குமுதை2 kumudai, பெ.(n.)

   ஒரு மரம்; a tree.

   2. கல் நஞ்சு; a kind of native arsenic (சா.அக.);.

     [குமுது→குமுதை.]

குமுந்தம்

 குமுந்தம் kumundam, பெ.(n.)

   கற்செய் நஞ்சு (மூ.அ.);; mineral poison.

     [குமுல்→குமுந்தம்.]

குமுர்தா

 குமுர்தா kumurtā, பெ.(n.)

   தட்சன் பெண்; daughter of {} (அபி.சிந்.);.

குமுறக்காய்-தல்

குமுறக்காய்-தல் kumuṟakkāytal,    2 செ.கு.வி.(v.i.)

   நன்றாகக் காய்தல்; to be boiling hot, as oil heated to a high degree, to boil up (இ.வ.);.

     [குமுல்→குமுறல்→குமுற + காய்-.]

குமுறக்காய்ச்சு-தல்

குமுறக்காய்ச்சு-தல் kumuṟakkāyccudal,    5 செ.கு.வி.(v.i.)

   கொதிக்கும்படி மிகுந்த தீயிட்டுக் காய்ச்சுதல்; heating any liquid to boiling point (சா.அக.);.

     [குமுற + காய்ச்சு-.]

குமுறப்பிழி-தல்

குமுறப்பிழி-தல் kumuṟappiḻidal,    2 செ.கு.வி.(v.i.)

   இறுகப்பிழிதல்; to press out hard, as juice (இ.வ.);.

குமுற + பிழி-.]

குமுறலண்டம்

குமுறலண்டம் kumuṟalaṇṭam, பெ.(n.)

   அண்ட ஊதை வகை (சீவரட்.112);; rupture, hernia.

     [குமுறல் + அண்டம்.]

குமுறல்

 குமுறல் kumuṟal, பெ.(n.)

பேரொலி (திவா.);

 roaring, rumbling, resounding.

     [குமுறு → குமுறல்.]

குமுறவிடி-த்தல்

குமுறவிடி-த்தல் kumuṟaviḍittal,    4 செ.குன்றாவி.

   நெல் முதலியவற்றை நன்கு இடித்தல்; to pound, comminucate forcibley in a mortar, as grain.

     [குமுறு → குமுற + இடி-.]

குமுறவெடி-த்தல்

குமுறவெடி-த்தல்  kumuṟaveṭittal,    4 செ.கு.வி.(v.i.)

   அதிரும்படி இடித்தல்;  pounding forcibly in a mortar (சா.அக);.

குமுறவெரி-த்தல்

 குமுறவெரி-த்தல் kumuṟaverittal,    எரித்தல்; heating or boiling anything to a great heat (சா.அக.).

     [குமுற + எரி-.]

குமுறு-தல்

குமுறு-தல் kumuṟudal,    5 செ.கு.வி.(v.i.)

   1. அதிரொலி செய்தல்; to resound, to trumpet, as an elephant, to bellow, to rumble, crash, as thunder.

     “குத்திடக் குமுறிப் பாயும்” (கம்பரா. வரைக்.34);.

   2. கலப்போசை யெழுதல்; to have confused, uproar.

     “குமுறுமோசை விழவு”(திவ்.திருவாய்.6:52);.

   3. மனத்தினுள்ளேயே வருந்துதல்; to burst with distress.

     “கண்கணீர் மல்க நின்று நின்று குமுறுமே” (திவ்.திருவாய்.6:5,1);. 4.பீரிடுதல்;

 to gush out, as milk from the breast.

     “வெம்முலை குமுறு பாலுக” (கம்பரா. பள்ளி.118);.

   5. கொதித்தல்; to effervesce, bubble up, as in boiling.

     [கும்→குமுறு-.]

குமுலி

குமுலி kumuli, பெ.(n.)

   1. துளசி; sacred basil (வின்.);.

   2. பெருந்தும்பை; large leucas (சா.அக.);.

     [கும்→கும்மு→குமுல்→குமிலி.ஒ.நோ.குமலி,குமிலி.]

குமுலு

குமுலு kumulu,    5 செ.கு.வி.(v.i)

   1. உள்ளுக்குள் நீடித்து வேதல், உட்கொதித்தல்; to boil

 Inernally.

   2. வெந்து அழிதல்; to get spoiled by over boiling.

   3. அழிந்து போதல்; to get ruined.

     [குமுல் → குமிலு.]

குமுல்

குமுல் kumul,    5 செ.கு.வி.(v.i.)

   1. வேதல்; to boil

   2. எரிதல்; to burn.

     [கும் → குமு → குமுல்.]

குமூஉ

குமூஉ kumūu, பெ.(n.)

   கூட்டம்; class, assembly, crowd.

     “சாதிகுழூஉ” (நன்.211);.

     [குழூவு → குழூஉ.]

குமேதகம்

 குமேதகம் gumētagam, பெ.(n.)

   நீர்ச்சுருக்கு; difficulty in passing urine attended with the pain and a sense of heat (சா.அக.);.

     [கும்மு+உதகம்-கும்முதகம்→குமேதகம்.]

குமேரு

 குமேரு kumēru, பெ.(n.)

   பேய், பிசாசுகளுக்கு இருப்பிடமான ஞாலத் தென்முனை (துருவம்);; south pole as the region of demons.

     [குமுல்→குமிறு→குமேறு→குமேரு.]

தென்கடல் வளாகத்துக் குமரிக் கண்டத்தின் படிப்படியான அழிவு காரணமாக தென்திசையும் தென்முனையும் அஞ்சத்தக்கனவாயின.

குமை

குமை1 kumaidal,    4 செ.கு.வி.(v.i.)

   1. குழைய வேதல்; to be over-boiled, to be boiled soft to a mash, as greens.

சோறு குமையச் சமைத்தா (உ.வ.);.

   2. குழம்புதல்; to be mixed up.

எல்லாம் ஒன்றாய்க் குமைந்து கிடக்கின்றன (உ.வ.);.

   3. வெப்பத்தாள் புழுங்குதல்; to be hot, sultry.

   4. கண்முதலியன இறுகிக்கொள்ளுதல்; to close together, as the eyelids from heatin the system (வின்.);.

   5. சோர்தல்; to faint, droop, as one in a

 swoon.

   6. அழிதல்; to be destroyed.

   7. வருந்துதல்; to distressed, worried.

     “கொசுகு கடியாலுங் குமைந்தோம்” (தமிழ்நா.259);.

     [கும்→குமை.]

 குமை2 kumaittal,    18 செ.குன்றாவி.(v.t.)

   1. துவைத்தல்; to tread down, tread out into a mash.

     “கூற்றைக் குரை கழலா லன்று குமைத்தார் போலும்” (தேவா.44:6);.

   2. உரலில் வைத்து இடித்தல்; to beat or pound in a mortar

   3. குழைய வேகச் செய்தல்; to over-boil, boil soft, reduce to a mash by boiling.

   4. வருந்துதல்; to annoy, afflct, vex.

     “ஆவி திகைக்க வைவர் குமைக்கும் சிற்றின்பம்” (திவ்.திருவா. 6:9,9);.

   5. அழித்தல்; to destroy.

     “வெளிற்றறி விரண்டுங் குமைப்ப” (தணிகைப்பு.விநா.காப்பு.2);.

     [கும் → குமை.]

 குமை3 kumai, பெ.(n.)

   1. அழிவு; destruction, ruin.

     “குமைத்தொழில் புரிந்த வீரர்” (கம்பரா. பிரமாத்.23);.

   2. துன்பம்; trouble, distress.

     “ஐவராற் குமைதீற்றி” (திவ்.திருவாய். 7:1,1);.

   3. அடி; blow. stroke, lash.

     “குமை தின்பர்கள்” (திவ். திருவாய்.4:1,2);.

   4. அழுக்குத்துணி முதலியன இடும்பெட்டி; clothes-basket (இ.வ.);.

     [கும் → குமை.]

 குமை kumai, பெ.(n.)

   பவளம் முத்து நீங்கலாக மற்ற வயிர வகைமணிகளை நிறுப்பதற்குதவுஞ் சிறு எடை (சுக்கிரநீதி,188);; smallest weight used in weighing precious stones other than Corals and pearls, being the weight of a linseed.

     [கும் → குமை.]

 குமை kumai, பெ.(n.)

   பவளம் முத்து நீங்கலாக மற்ற மணிகளை நிறுப்பதற்கு உதவும் சிறு எடை (சுக்கிர நீதி.188);; smallest weight used in weighing precious stones other than corals and pearls being the weight of linseed.

     [Skt.{} → த.குமை.]

குமை நாற்றம்

 குமை நாற்றம் kumaināṟṟam, பெ.(n.)

   நீர் குறைவினால் சரியாகவேகாமலிருந்து தீய்ந்து போகும் பொங்கல் பானையிலிருந்து வீசும் புகை நாற்றம்; over boiled smell.

     [குமை+நாற்றம்]

குமைச்சல்

 குமைச்சல் kumaiccal,  பெ.(n.)

    மனப் புழுக்கம்;   of emotions state of being pent-up.

      [குமை – குமைச்சல்]

குமைஞ்சான்

குமைஞ்சான் kumaiñjāṉ, பெ.(n.)

   1. ஆண் குமஞ்சான், குங்கிலியம்; male frankincense.

   2. பெண் குமஞ்சான் அல்லது சாம்பிராணி; female

 frankincense.

   3. நறும்புகை வகை; different varieties of incense.

   4. பறங்கிச் சாம்பிராணி; benzamin

     [குமை → குமைந்தான் → குமைஞ்சான்.]

குமைதின்(னு)-தல்

குமைதின்(னு)-தல் kumaidiṉṉudal,    13 செ.கு.வி.(v.i.)

   அடியுண்ணுதல்; to suffer, thrashing.

     “கானகம் போய்க் குமை தின்பர்கள்” (திவ்.திருவாய்.4:1,2);.

     [குமை + தின்-.]

குமைந்துபோ-தல்

குமைந்துபோ-தல்  kumaintupōtal,    8 செ.கு.வி.(v.i.)

   1. புழுக்கமாய் இருத்தல்;  to be close as the air; sultry.

   2. குழையும்படி வேகுதல்; being over;  boiled as to become slimy.

   3. சோர்வடைதல்; getting fainted (சா.அக.);.

     [குமைந்து+போதல்.]

கும்ஞ்சான்

கும்ஞ்சான்1 kumñjāṉ, பெ.(n.)

   1. ஆண் குமஞ்சான் அல்லது குங்கிலியம்; male frankincerse.

   2. பெண்குமஞ்சான் அல்லது சாம்பிராணி; female frankincense.

   3. நறுமணப் புகை வகை; different varieties of incense.

   4. பறங்கிச் சாம்பிராணி; banzam in (சா.அக.);.

     [கும்மல்→குமைதல்→குறைந்தான்→குமஞ்சளன்.]

கும்டைப்பாம்பு

 கும்டைப்பாம்பு kumṭaippāmbu, பெ.(n.)

   செந்நிற நச்சுப்பாம் (மீனவ.);; reddish poisonus snake

     [குட்டை + பாம்பு.]

கும்ப நிறுத்து-தல்

கும்ப நிறுத்து-தல்  kumpaniṟuttutal,    5 செ.கு.வி.(v.i.)

   மந்திரக்குடம் நிறுவுகை;  to set up, with mantras, a pot of water, on ceremonial occasions (செ.அக.);.

     [கும்பம்+நிறுத்து-தல்.]

கும்பகம்

கும்பகம்  kumpakam, பெ.(n.)

கற்றாழை, aloes. 2. தொட்டிப்பாடாணம்; a prepared arsenic.

     [கும்பு+கும்பகம்]

 கும்பகம்1 kumpakam, பெ.(n.)

பூரித்த காற்றை உள்ளே நிறுத்தும் இருக்கை (பிராணாயாம); வகை; retention, holding in of breath, suspension of breath, a part of pirāņāyānam. “ஆறுதல் கும்பகம்” (திருமந்:568); (செஅக);.

     [கும்பு – கும்பகம்]

     [Skt. kumbhaka → த.கும்பகம்)

 கும்பகம்2 kumpakam, பெ.(n)

   1. கற்றாழை, aloe genus.

   2. சாலாங்க பாடாணம்; a kind of native arsenic.

   3. தொட்டி பாடாணம்; another kind of native arsenic.

   4. பாதிரிப்பூ; trumpet flower – Bignonia suovalens.

   5. மருதம்; box myrtle- Myrica sapida.

   6. இரப்பையைப் பற்றிய ஒரு கண்ணோய்; a disease of the eye lids (சா.அக.);.

கும்பகயம்

 கும்பகயம் gumbagayam, பெ.(n.)

   பேய்த்தேற்றாl;  a bitter veriety of clearing nut (சா.அக.);.

     [கும்பம் + காயம்.]

கும்பகருணன்

கும்பகருணன் gumbagaruṇaṉ, பெ.(n.)

   1. இராவணன் தம்பியருள் ஒருவன்; kumba karuna younger brother of {Ravana,} as pot-eared

     “கும்பகருணனுந் தோற்று முனக்கே பெருந்துயிதான் தந்தானோ” (திவ். திருப்பா.10);.

   2. பெருந் தூக்கமுள்ளவன்; sound sleeper (கொ.வ.);.

     [கும்பம் + கருணன், கும்பகருணன் = குடம் போன்ற காதுடையவன்.]

 Skt. karna → த. கருணன்.

கும்பகர்ணன்

 கும்பகர்ணன்  kumpakarṇaṉ, பெ.(n.)

அதிக நேரம் ஆழ்ந்து தூங்குபவன்; one who sleeps soundly for long hours. அவன் சரியான கும்பகர்ணன், இடி இடித்தாலும் கேட்காது

மறுவ,குடக்கோ

கும்பகலசம்

 கும்பகலசம்  kumpakalacam, பெ.(n.)

சடங்கு நாட்களில், நூல் சுற்றி மந்திரத்தால் தூய்மை செய்து தவசக் குவியலின் மீது வைக்கும் மந்திரக் குடம்; pot of water used on ceremonial occasions, usually wound round with thread, placed on a heap of grain and purified by mantras (செ.அக.);.

     [கும்பம்+கலசம்]

கும்பகவிம்பம்

 கும்பகவிம்பம்  kumpakavimpam, பெ.(n.)

தொட்டிப்பாடாணம் (யாழ்.அக.);; a prepared arsenic (செ.அக.);.

கும்பகாமாலை

 கும்பகாமாலை kumbakāmālai, பெ.(n.)

   காமாலை நோய் வகை; a kind of jaundice (சா.அக.);.

     [கும்பம் + காமாலை.]

கும்பகாம்போதி

 கும்பகாம்போதி  kumpakāmpōti, பெ.(n.)

பண் வகைகளுள் ஒன்று a musical mode (செ.அக.);.

     [கும்பம்+Skt. காம்போதி]

கும்பகாரன்

 கும்பகாரன்  kumpakāraṉ, பெ.(n.)

   மட்பாண்டங்கள் செய்வோன் (குயவன்); (திவா.);;  potter (செ.அக.);.

     [P]

கும்பகாரம்

கும்பகாரம் kumbakāram, பெ.(n.)

   1. கண்ணுக்கு வலிமையும், இரப்பைகளுக்கு அழகையம் கொடுக்கும் அஞ்சனம்; a mineral substance (antmony); used as collyrium to strengethen the eyes and beauty the lashes. (சா.அக.);.

மறுவ. கும்பகாரிகை

     [கும்பம் + (காரிகை);காரம்.]

கும்பகாரி

கும்பகாரி1 kumbakāri, பெ.(n.)

   சிவப்பு நஞ்சு; red arsenic (சா.அக.);.

     [கும்பம் + காரி.]

 கும்பகாரி kumbakāri, பெ.(n.)

   1. மண்பாண்டடம் செய்பவள் (யாழ்.அக.);;- potter woman.

   2. கண்ணிலிடும். மைவகை; a kind of collyrium.

   3. செம்பாடாணம் எனும் செய்நஞ்சு; a mineral poison.

     [கும்பம் + காரி.]

 கும்பகாரி kumbakāri, பெ.(n.)

   1. குயத்தி; potterwoman.

   2. கண்ணிலிடும் மை வகை; a kind of collyrium.

   3. செம்பாடாணம் என்னும் செய்ந்நஞ்சு வகை; a mineral poison.

     [Skt.kumbha-{} → த.கும்பகாரி.]

கும்பகாரிகை

 கும்பகாரிகை gumbagārigai, பெ.(n.)

   கண்ணுககிடும் மருந்து; collyrium for the eyes (சா.அக.);.

     [கும்பம் + காரிகை.]

கும்பகோணம்

 கும்பகோணம்  kumpaāṇam, பெ.(n.)

   பழங்காலத்தில் திருக்குடந்தை என வழங்கப்பட்டு, தற்போது தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒர் ஊர்;  kumbakonam, a place of pilgrimage in Thanjavur district in Tamilnadu (செ.அக.);.

மறுவ, குடவாயில்

கும்பக்கிருதம்

கும்பக்கிருதம்  kumpakkirutam, பெ.(n.)

நூற்றி பத்து ஆண்டு சென்ற நெய், clarified

 butter 110 years old (சா.அக.);.

     [கும்பம் (பானை); + Skt. கிருதம்]

கும்பக்குடம்

கும்பக்குடம் kumbakkuḍam, பெ.(n.)

   1. தேரின் உறுப்புக்களுளொன்று; dome of a temple car

   2. கரகம்; decorated water pot carried in procession.

கும்பக்குடம்

     [P]

கும்பங்கம்

 கும்பங்கம் kumbaṅgam, பெ.(n.)

   கருங்கழுகு கருங்கூளி; black eagle, it is so called probab of r its body resembling a pot in shape (சா.அக.);

     [கும்பம் + அங்கம்.]

கும்பங்கொட்டு-தல்

கும்பங்கொட்டு-தல்  kumpaṅkoṭṭutal,    5 செ.கு.வி.(v.i.)

   1. துர்க்கைக்கு வேண்டுதல் செலுத்துகை;  to perform a ceremoney to Durgaon recovery from small-pox or in fulfilment of a vow.

   2. பெருந்தீனி கொடுத்தல்;  to feed a glutton (செ.அக.);.

     [கும்பம்+கொட்டு-தல்.]

கும்பசன்

 கும்பசன்  kumpacaṉ, பெ.(n.)

கும்பசம்பவன் பார்க்க; see kumba-Sambavan (செ.அக.);.

கும்பசம்பவன்

கும்பசம்பவன்  kumpacampavaṉ, பெ.(n.)

   1. அகத்தியன் என்னும் துறவி (குடத்தினின்று பிறந்தவன்);;  Agattyan, one who ancient priest in the country.

     “கும்பசம்பவனுக்குபதேச நிகழ்த்தினானால்”

   2. துரோணன்;  Drona (செ.அக.);.

     [கும்பம்+சம்பவன்.]

கும்பசரம்

 கும்பசரம் kumbasaram, பெ.(n.)

   சிவதை; Indian jalap (சா.அக.);.

     [கும்பம் + சரம்.]

கும்பசலம்

 கும்பசலம் kumpacalam, பெ.(n.)

   மந்திரித்த குடத்து (கலச); நீர்;  water in the sacred pot, sprinkled on people or sipped by them, believed to possess mystic virtues (செ.அக.);.

     [கும்பம்+சலம்]

கும்பசாதி

 கும்பசாதி kumbacāti, பெ.(n.)

   பெண்களின் நாலுவகைச் சாதிகளில் ஒன்றாகிய சங்கினி சாதி; one of thefour clases of women characterised according to their lust (சா.அக.);.

     [கும்பம் + சாதி.]

கும்பசீனிதம்

 கும்பசீனிதம் kumbacīṉidam, பெ.(n.)

   பீநாறிச் சங்கு; smooth volkameria (சா.அக.);.

     [கும்பம் + சீனிதம்.]

கும்பச்சுரை

 கும்பச்சுரை  kumpaccurai, பெ.(n.)

கொடியில் காய்க்கும் கரைக்காய் வகைகளுள் ஒன்று

 a round gourd (செ.அக.);.

     [கும்பம்+சுரை.]

கும்பஞ்சரி-தல்

கும்பஞ்சரி-தல்  kumpañcarital,    3 செ.கு.வி. (V.i.)

கும்பஞ்சாய் பார்க்க; see kumbajãy (செ.அக.);.

     [கும்பம்+சரி-தல்.]

கும்பஞ்சான்

 கும்பஞ்சான் kumpañcāṉ, பெ.(n.)

   கொடி வகை;  Indian jalap – Ipomaea turpethum (செ.அக.);.

கும்பஞ்சாய்-தல்

 கும்பஞ்சாய்-தல்  kumpañcāytal, செ.கு.வி. (v.i.)

    இறப்பின் போது தலை சாய்ந்து விழுதல்;   to droop, as the head just at the point of death (செ.அக.);.

     [கும்பம்+சாய்-தல்.]

கும்பஞ்செய்-தல்

கும்பஞ்செய்-தல்  kumpañceytal,    1 செ.கு.வி.(v.i.)

   1 இறந்தோரைப் புதைக்கும் இடத்தின் மேல் மண்ணைக் குவித்து smsuāsmå;  to make a mound over a grave.

   2. பிணத்தைப் புதைத்தல்;  to inter the dead, especially such as have died of cholera (செ.அக.);.

     [கும்பம்+செய்-]

கும்பதட்சினை

 கும்பதட்சினை kumpataṭciṉai,  பெ.(n.)

மந்திர குடத்தில் இடும் காசு,

  coin put into the sacred pot of water (செ.அக.);.

     [கும்பம்+Skt. தட்சினை.]

கும்பதாசி

கும்பதாசி kumbatāci, பெ.(n.)

   1. சங்கதூதி; procuress.

   2. விலைமகள்; prostitute.

     [Skt.kumbha-{} → த.கும்பதாசி.]

கும்பதீபம்

கும்பதீபம்  kumpatīpam, பெ.(n.)

   குடவடிவான வழிபாட்டு விளக்கு (பரத. ஒழிபி 42);;  pot shaped temple lamp used in worship (செ.அக.);.

     [கும்பம்+Skt. தீபம்]

கும்பதும்பி

 கும்பதும்பி kumbadumbi, பெ.(n.)

   குடத்தைப் போன்ற சுரைக்காய்; a large round gourd resembling a pot (சா.அக.);.

     [கும்பம் + தும்பி.]

கும்பத்தாபனம்

 கும்பத்தாபனம்  kumpattāpaṉam, பெ.(n.)

   மந்திரக் குடம் நிறுவுகை;  setting up a pot of water for worship (செ.அக.);.

     [கும்பம்+Skt. தாபனம்]

கும்பநாயறு

 கும்பநாயறு kumbanāyaṟu, பெ.(n.)

கும்பஞாயிறு, மாசிமாதம் கும்பராசியில் கதிரவன் நிற்கும் நிலை (கல்.க.சொ.அ.மு.);.

     [கும்பம் + (ஞாயிறு); நாயிறு(கொ.வ.);]

கும்பநீர்

 கும்பநீர் kumbanīr, பெ.(n.)

   குடத்துத் தண்ணீர்; water contained in a drinking pot. (சா.அக.);.

     [கும்பம் + நீர்.]

கும்பந்தம்

 கும்பந்தம் kumpantam, பெ.(n.)

   வெண் கருங்காலி;  whitist black wood – Dуospyrosoocarpa (சா.அக.);.

 கும்பந்தம் kumbandam, பெ.(n.)

   வெண் கருங்காலி; whitish black wood (சா.அக.);.

     [கும்பம் → கும்பன்→கும்பந்தம். கும்பல் = சாம்பல் நிறம்.]

கும்பனாற்றம்

 கும்பனாற்றம் kumbaṉāṟṟam, பெ.(n.)

   தீய்ந்து போன உணவிலுண்டாகும் நாற்றம்; smell of charred rice, due to insufficient waterfor boiling(கொ.வ.);.

     [கும்பல்+நாற்றம்.]

கும்பன்

கும்பன் kumbaṉ, பெ.(n.)

   1. ஓர் அரக்கன்; a {rākšasa.}

   2. இழிந்தவன்; libertine.

     [குல் → கும்பு (எரிதல், வேதல்); → கும்பன்.]

 கும்பன் kumbaṉ, பெ.(n.)

   1. அரக்கன்; a raksasa.

   2. வஞ்சகன்; libertine.

     [Skt.kumba → த.கும்பன்.]

கும்பப்பிளவை _

 கும்பப்பிளவை _ kumpappiḷavai, பெ.(n.)

மேல் முதுகில் தோன்றும் பிளவை

 carbuncle on the upper part of the back (செ.அக.);. [

கும்பம்+பிளவை]

கும்பப்புடம்

கும்பப்புடம் kumbappuḍam, பெ.(n.)

   ஒரு பானையில் 40 துளைகளிட்டு, அதில் பாதிவரை அடுப்புக்கரியால் நிரப்பி, அதன்மீது மருந்தை வைத்து, அப்பானை வாயை மடக்கால் மூடி சீலைமண் செய்து உலர்த்தி அடுப்பில் ஏற்றி, அப்பானையின் மடக்கு மீது நெருப்பையிட்டு, மூன்று நாள்கள் அடுப்பில் வைத்து எரிக்கும் ஒரு முறை; a process of calcination in which a large round pot, containing 40 holes at the bottom, is half-filled with charcoal, over, which is placed the required medicine. The lid of the potis then covered with the dish, then hermitically sealed by uting the joint with clay and then getting it dried this apparatus is placed on an oven and heated for three days continuously (சா.அக.);

     [கும்பம்+புடம்.]

கும்பப்பூ

 கும்பப்பூ kumbappū, பெ.(n.)

   கும்ப(மாசி); மாதத்து அறுவடையாகும் பாசன விளைச்சல்; crop harvested in the month of {măci.}

     [கும்பம் (மாசிமாதம்); + பூ.]

கும்பமாதி

 கும்பமாதி kumbamāti, பெ.(n.)

   சிவதை; Indian jalap (சா.அக.);.

     [கும்பம் + ஆதி.]

கும்பமாமுனி

 கும்பமாமுனி kumbamāmuṉi, பெ.(n.)

   கும்பமுனி, அகத்தியர்; the sage agastya (சா.அக.);.

மறுவ. அகத்தியர்

     [கும்பம்+மா+முனி.]

குடமலை முனிவனாகிய அகத்தியனைக் குடமலையில் இருந்தவனாகக் கருதுவதே மரபு. வடவர் இதனையுணராது குடத்தில் (கும்பத்தில்); பிறந்தவன் என்று புனைந்துரைக்கும் தொல்கதை ஒரு கட்டுக் கதையாகும்.

கும்பமின்

 கும்பமின் kumbamiṉ, பெ.(n.)

   கடல் நத்தை; sea snail with a fissure in the shell, at the bottom portion (சா.அக.);.

     [கும்பம்+மீன்.]

கும்பமுத்திரை

கும்பமுத்திரை kumbamuttirai, பெ.(n.)

   வழிபாட்டு முத்திரை வகை (சைவாநுட்.வி.12);; a hand-pose, in worship.

     [கும்பம் + முத்திரை.]

 கும்பமுத்திரை kumbamuttirai, பெ.(n.)

   முத்திரை வகை (சைவாநுட்சி.12);; a hand pose in worship.

     [கும்பம் + முத்திரை.]

     [Skt. kumba → த.கும்பம்.]

கும்பமுனி

கும்பமுனி  kumpamuṉi, பெ.(n.)

அகத்திய முனிவர்; sage agaštiya, as pitcher-born.

     “கும்பமுனி கும்பிடுந் தம்பிரானே” (திருப்பு:57); (செஅக.);.

     [கும்பம்+முனி]

கும்பமூர்த்தன்

 கும்பமூர்த்தன் kumbamūrttaṉ, பெ.(n.)

   மாந்தரை நோயால் பிடிக்கச் செய்வதாகக் கருதப்பட்ட பேய்; a demon believed to cause diseases in human beings (சா.அக.);.

     [கும்பம்+மூர்த்தன்.]

கும்பமெடு-த்தல்

கும்பமெடு-த்தல்  kumpameṭuttal,    4 செ.கு.வி.(v.i.)

   சிற்றுார் தேவதைக்காக நீர்ப் பூங்குடம் (கரகம்); எடுக்கை;  to carry in procession sacred water pot for a village deity (செ.அக.);.

     [கும்பம்+எடு-த்தல்.]

கும்பம்

கும்பம்1 kumbam, பெ.(n.)

   1. குவிந்து திரண்டிருக்கும் கலம்; earthen pot, jar.

   2. கும்பவடிவான மேற்கட்டிடம்; dome.

   3.கும்பம் போன்ற யானை மண்டை; forntal glob of an elephant’s forehead.

     “கும்பத்தின் கரியைக் கோண்மா கொன்றென (கம்பரா. இரணியன்வ. 125);.

   4. கும்பவோரை; Aquarius, constellation of the zodiac.

   5. கும்பமாதம்; the eleventh Indian month.

   6.நெற்றி; forehead.

   7.இருபுயங்களுக்கும் இடையிலுள்ள முதுகின் மேற்பக்கம்; upper part of the back between the shoulders.

     [கும் → கும்பு → கும்பம்.]

 கும்பம்2 kumbam, பெ.(n.)

   1. குவியல்; heap.

   2.நூறுகோடி (திவா.);; a thousand million.

     [குழு → கும்பு → கும்பம்.]

 கும்பம்3 kumbam, பெ.(n.)

   ஒரு சிற்றூரின் காற்பங்கு அளவுள்ள பகுதி (சுக்கிரநீதி.27);; hamlet, one-fourth the size of a {kirāmam.}

     [குழு → கும்பு → கும்பம்.]

 கும்பம் kumbam, பெ.(n.)

   ஒரு சிற்றூரின் காற்பங்கு அளவுள்ள ஊர் (சுக்கிரநீதி, 27);; hamlet, one fourth the size of a {}.

     [Skt. kumbha → த.கும்பம்.]

கும்பம் செய்தல்

 கும்பம் செய்தல் kumbamceytal, பெ.(n.)

   பிணத்தைப் புதைத்தல்; burying the dead.

     [கும்பம் + செய்தல். கும்பம் = தாழி.]

கும்பம்பாலை

 கும்பம்பாலை kumbambālai, பெ.(n.)

   கோபுர முதலியற்றின்மேல் வைக்கும் ஒப்பனைக் கலசம்; pitcher-shaped finial as of a tower.

     [கும்பம் + சாலை.]

 கும்பம்பாலை kumbambālai, பெ.(n.)

   கோபுலம் முதலியவற்றின்மேல் வைக்கும் அணியழகுக் கலசம்; pitcher shaped finial as of a tower.

     [கும்பம் + பாலை.]

     [Skt.kumba → த.கும்பம்.]

கும்பம்போடு-தல்

 கும்பம்போடு-தல்  kumpampōṭutal, செ.கு.வி.(v.i.)

கும்பங்கொட்டு பார்க்க; see kumban-kottu (செ.அக.);.

     [கும்பம்+போடு-]

கும்பயோனி

கும்பயோனி kumpayōṉi,  பெ.(n.)

கும்பசம்பவன் பார்க்க; see kumbasambavar.

      “கும்பயோனி திருவருள் கூர்ந்து”(உபதேசகா.விபூதி 145);(செஅக);.

     [கும்பம்+Skt. யோனி]

கும்பரேகை

 கும்பரேகை kumbarēkai, பெ.(n.)

   கைவரை வகை (திருவாரூர்.குற.Ms.);; a line in palm of hand.

     [கும்பம் + (வரைகை); ரேகை.]

 கும்பரேகை kumbarēkai, பெ.(n.)

   கைவரிகை (திருவாரூர். குற.Ms.);;     [Skt.kumba+{} → த.கும்பரேகை.]

கும்பற்காடு

 கும்பற்காடு kumbaṟkāṭu, பெ.(n.)

   அடர்ந்த காடு; thick forest.

     [கும்பல்+காடு.]

கும்பற்சாதம்

கும்பற்சாதம் kumbaṟcātam, பெ.(n.)

   1. புகை சூழ்ந்த அன்னம்; smoked rice.

   2. தீய்ந்த சாதம்;сharred boiled rice (சா.அக.);.

     [கும்பல்+சாதம்.]

கும்பலக்கொடி

 கும்பலக்கொடி kumbalakkoḍi, பெ.(n.)

குமிழ் பார்க்க;see {kumi!}

மறுவ, குமிழங்கொடி

     [கும்பளக்கொடி→கும்பலக்கொடி]

கும்பலடி-த்தல்

கும்பலடி-த்தல் kumbalaḍittal, செ.கு.வி.(v.i.)

   1. குடி வாசனையடித்தல்; flavour of being over-boiled

   2. சுடு நாற்றம் வீசுதல்; throwing scorched smell of over burnt.

கும்பலம்

கும்பலம் kumbalam, பெ.(n.)

   1. குடத்தைப் போன்ற பூசணி; pumpkin so called because of its rese.– blance of water pot.

   2. சிறு குமிழ்; bell-verar.(சா.அக.);.

     [கும்பல் → கும்பலம்.]

கும்பலிகம்

 கும்பலிகம் gumbaligam, பெ.(n.)

   மூலாதாரம்; the lowest centre in the pelvic region of the human body (சா.அக);.

     [கும்பல் → கும்பலிகம்.]

கும்பல்

கும்பல்1 kumbal, பெ.(n.)

   1. குவியல்; heap.

   2. திரள் clump, cluster, tuft.

   3. கூட்டம்; company, crowd collection, group, mass.

     “கும்பலா வொருமிக்கக் கூட்டி” (இராமநா. உயுத்.33);.

     [கும் → கும்பு→கும்பல்.]

 கும்பல்2 kumbal, பெ.(n.)

கும்பனாற்றம் பார்க்க;see {kumbanassam.}

     [கும்பு → கும்பல்.]

கும்பளக்கொடி

 கும்பளக்கொடி kumbaḷakkoḍi, பெ.(n.)

   குமிழங்கொடி; kashmeretree (சா.அக.);.

     [கும்பளம் (பூசணி);+கொடி.]

கும்பளமோக

 கும்பளமோக kumpaḷamōka,  பெ.(n.)

    ஒரு வகைக் கருவாடு;   tunny fish cut and dried, brought from the maldives (செ.அக.);.

கும்பளம்

கும்பளம்  kumpaḷam, பெ.(n.)

   1. சாம்பற் பூசணி;  ash pumpkin – Cucurbita indica.

   2. இலைப்பாசி; species of duckweed – Lemna obedraata.

   3. குமிழ்;  kandahar tree.

   4. நீர்வெட்டி;  shining melon feather foil – Glochidion zeylanicum (சா.அக.);.

     [கும்பம்+கும்பளம்]

கும்பளா

கும்பளா kumpaḷā, பெ.(n.)

   மீன் வகை; black rock-cod, silvery-grey, attaining 30 in. in length – Sparus berda (செ.அக.);.

     [P]

கும்பளிக்காய்

 கும்பளிக்காய்  kumpaḷikkāy, பெ.(n.)

   தீவக்குறையில் (தீபகற்பத்தில்); விளையும் பருத்த தேங்காய்;  a round big cocoanut imported to india from the islands of Maldives and Nicobars (சா.அக.);.

     [கும்பளி+காய்]

கும்பளிமௌலி

 கும்பளிமௌலி kumpaḷimauli, பெ.(n.)

   மலைச் சூலி; a kind of cedar tree – Cedrela toona (சா.அக.);.

கும்பவத்திரம்

 கும்பவத்திரம்  kumpavattiram, பெ.(n.)

மந்திரக் குடத்திற்குக் கட்டும் புதிய ஆடை

 the new cloth tied round the sacred pot of water (செ.அக.);.

     [கும்பம்+வத்திரம். Skt.வஸ்த்திரம்→த. வஸ்த்திரம்]

கும்பவாதம்

 கும்பவாதம் kumbavātam, பெ.(n.)

தோள், கை மிக வலித்து, கன்னமும் கண்ணும் கடுத்து தலையில் துடிப்புண்டாகி, வாயுக் கோளாறடைந்து தொப்புளின் கீழ் வலி காணும் ஓர் ஊதை நோய் a kind of rheumatisnwithin the shoulder and ar-s

 inflammation of cheeks and eyes, tremor of the head, flatulent disorders and colicky pain below the navel (சா.அக.);.

     [கும்பம் + வாதம்.]

கும்பவிம்பம்

 கும்பவிம்பம்  kumpavimpam, பெ.(n.)

   தொட்டி பாடாணம்;  a kind of prepared arsenic (சா.அக.);.

     [கும்பம்+விம்பம்]

கும்பா

கும்பா kumbā, பெ.(n.)

   உண்கலவகை; shaped silveror brass vessel.

     “கொப்பரை கிடாரநற் கும்பை” (பிரபோத.11:31);.

     [கும்பு→கும்பா.]

கும்பாகாரம்

 கும்பாகாரம் kumbākāram, பெ.(n.)

   காட்டுக்கோழி; jungle fowl (சா.அக.);.

     [கும்பம் + (ஆகரம்);ஆகாரம்.]

கும்பாசம்

 கும்பாசம் kumbācam, பெ.(n.)

   பவளக்கொடி; coral Reef.

கும்பாசாரம்

கும்பாசாரம் kumbācāram, பெ.(n.)

கும்பாரம்1 பார்க்க; see {kumbāram,}

     [கூம்பு → கும்பு + ஆசாரம்.]

கும்பாண்டன்

கும்பாண்டன் kumpāṇṭaṉ, பெ.(n.)

   1. பாணாகரன் அமைச்சர்களில் ஒருவன்;  minister of pânăşuran.

   2. யசோதையின் தம்பி;  brother of yašödai

கும்பாதிரி

கும்பாதிரி1 kumbātiri, பெ.(n.)

   பெரிய மரவகை; lac tree.

     [கும்பம் + (அத்திரி); ஆதீரி.]

 கும்பாதிரி2 kumbātiri, பெ.(n.)

   அறிவுத்தந்தை; god father, sponser.

     [கும்பம் (அத்திரி); ஆதிரி.]

கும்பானு

 கும்பானு kumbāṉu, பெ.(n.)

   ஒரு அரக்கன்; a giant (அபி.சிந்.);.

கும்பாபிடேகம்

 கும்பாபிடேகம் kumpāpiṭēkam,  பெ.(n.)

    கோவில்களில் நிலைகோள் (பிரதிஷ்டை);செய்வதற்கும், துப்புரவு (சுத்தி); செய்வதற்கும் உரிய நடப்பு;   ceremony of consecration or purification in a temple (செ.அக.);.

மறுவ, குடமுழுக்கு

     [கும்பம்+Skt.அபிஷேகம்]

 கும்பாபிடேகம் kumbāpiṭēkam, பெ. (n.)

   கோயிலில் நிறுவுவதற்கும், தூய்மை செய்வதற்குமுரிய குடமுழுக்குச் சடங்கு; ceremony of consecration or purification in a temple.

த.வ. குடமுழுக்கு

     [Skt.kumbha+abhi-{} → த. கும்பாபிடேகம்.]

கும்பாரம்

கும்பாரம்1 kumbāram, பெ.(n.)

   அம்பாரம்; heap, pile.

     [கும்பு + கும்பாரம்.]

 கும்பாரம்2 kumbāram, பெ.(n.)

   கும்பம் (யாழ்.அக.);; pot.

     [கும்பு + கும்பாரம் (ஆரம்ப சொல்லாக்க ஈறு);.]

கும்பாலத்தி

கும்பாலத்தி  kumpālatti, பெ.(n.)

இறைவனுக்கு முன் எடுக்கும் குட விளக்கு

 light placed on a pot used in temple worship.

     “கும்பாலத்திக்குத் திரி பரிமாறி” (கோயிலொ.66); (செ.அக);.

     [கும்பம்+ஆலத்தி]

கும்பாளை

கும்பாளை kumbāḷai, பெ.(n.)

   மழையை நம்பியே விளையும் நெல்வகை(G.T.J.D.95);; a paddy growing solely with the help of rain.

     [கும்பளம் → கும்பாளை.]

கும்பி

கும்பி1 kumbi, பெ.(n.)

   1. சேறு (பிங்.);; mud, mire or slough emitting stinking smell.

   2. சுடுசாம்பல்; hot

 ashes.

தெ. கும்பி

     [கும்பு → கும்பி.]

 கும்பி2 kumbi, பெ.(n.)

   வயிறு; belly.

     “ஒருசாண் கும்பிதுர்க்கின்ற கொடியரால்” (பிரபோத. 11:13);.

     [கும்பு → கும்பி.]

 கும்பி3 kumbi, பெ.(n.)

   யானை(திவா.);; elephant.

     [கும்பு → கும்பி.]

 கும்பி4 kumbi, பெ.(n.)

   1. கும்பியாகம் பார்க்க;see {kumbbagam}

     “கும்பிநாகர்கள் (திவ்.திருவாய். 3,7,8.);.

   2. நரகம் (திவா.);; hell.

     [கும்பு → கும்பி.]

 கும்பி5 kumbi, பெ.(n.)

   குவியல்(வின்.);; heap

     [கும்பு → கும்பி.]

 கும்பி6 kumbittal,    4 செ.கு.வி.(v.i.)

   ஒக முறையில் மூச்சடக்குதல்; to hold or suppress the breath, suspend respiration, as a {yogi}

     “உட்கும்பித்து வாங்கவே” (திருமந்:572);.

     [கும்பு + கும்பி.]

 கும்பி7 kumbi, பெ.(n.)

   மரவகை; carey’s myrtle bloom.

     [கும்பு → கும்பி.]

 கும்பி8 kumbi, பெ.(n.)

   கும்பவோரை (கும்பராசி); (யாழ.அக.);; the zodiacal sign aquarius.

     [கும்பம் + கும்பி.]

 கும்பி9 kumbi, பெ.(n.)

   மட்பாண்டம் (யாழ்.அக.);; earthen vessel.

     [கும்பம் → கும்பி.]

 கும்பி10 kumbi, பெ.(n.)

   தீ (யாழ்.அக.);; fire.

     [குல் → கும்பு (வேதல், எரிதல்); → கும்பி.]

 கும்பி kumbi, பெ.(n.)

   மட்பாண்டம் (யாழ்.அக.);; the zodiacal sign Aquaries.

     [Skt.kumbhi → த.கும்பி.]

     [P]

கும்பி எருசாணி

 கும்பி எருசாணி kumbierucāṇi, பெ.(n.)

   எரிக்கப்பட்ட உமியின் சாம்பல், மாட்டுச்சாணம் (உழ.நெ.க.அக.);; ash of husk or cowding.

     [கும்பி + எரு + சாணி.]

கும்பிகபிடகம்

 கும்பிகபிடகம் gumbigabiḍagam, பெ.(n.)

   ஒரு கண்நோய்; an eye diesease (சா.அக.);.

மறுவ. கும்பிகம்

     [கும்பிகம் + பிடகம்.]

கும்பிகம்

கும்பிகம் gumbigam, பெ.(n.)

   நீலோற்பல விதை; seeds of blue Indian water lily.

   2. பெருக்குமிழ்.

   3. ஆண்குறி; male genital.

   4. ஓரு பூடு; a plant.

   5. கண்ணிமை ஓரத்தில் குருக்கள் எழும்புவதனால் உண்டாகும் வீக்கம்; swelling of the eye-lids, due to the number of boils (சா.அக.);.

     [கும்பு + கும்பிகம்.]

கும்பிகவேது

 கும்பிகவேது gumbigavētu, பெ.(n.)

   வேது பிடித்தல்; treatment by vapour (சா.அக.);.

     [கும்பு → கும்பிகம் + வேது.]

கும்பிகா

கும்பிகா kumbikā, பெ.(n.)

   நாவற் கொட்டையைப் போன்ற ஒருவிதக் கல் பரு; a black wart resembling the stone or the seed of jambolin fruit in shape.

   2. கழற்கொடி; bonduc-nut-creeper.

   3. வெண்பாதிரி; white trumpet flower.

   4. ஆகாச தாமரை; sky lotus (சா.அக.);.

     [கும்பிக்காய் → கும்பிகா.]

கும்பிகை

கும்பிகை gumbigai, பெ.(n.)

   வாத்தியவகை(கம்பரா. பிமாத். 5);; a kind of drum.

     [கும்பிடு + அரி.]

கும்பிடரி

 கும்பிடரி kumbiḍari, பெ.(n.)

   பயிரிடுவோர் நிலக்கிழார்க்கேனும், ஆலயத்திற்கேனும் காணிக்கையாக்கும் கதிர்க்கட்டு; bundle of sheaves presented by the ryot to the chief of a village or to the temple, as a mark of respect

     [கும்பிடு + அரி.]

கும்பிடானை

 கும்பிடானை kumbiṭāṉai, பெ.(n.)

   பிண்டம்; foetus (சா.அக.);.

     [கும்பி + (இடுவன் → இடான்);இடானை. கம்பி = வயிறு.]

கும்பிடு

கும்பிடு1 kumbiḍudal,    17 செ.குன்றாவி.(v.t.)

   1. கைகுவித்து வணங்குதல்; to join hands in worship, to make obeisance with the hands joined and rased.

     “தலையினாற் கும்பிட்டுக் கூத்துமாடி” (தேவா. 727,3);.

   2. கெஞ்சுதல்; to beg, solicit, entreat (இ.வ.);.

 Fin.kumartua:Mordwin. koma.Es. kummardada, Hanti, kumatali, Mong. kumri, Jap, kubomi

     [கூம்பு → கூம்பு + இடு =கும்பிடு.]

 கும்பிடு2 kumbiḍu, பெ.(n.)

   வணக்கம்; worship, obesisance with hands joined.

     “நான் கும்பிடும்போ தரைக்கும்பிடாதலால்” (தாயு. கருணா. 6);.

     [கூப்பு → கூம்பு + இடு =கும்பிடு.]

கும்பிடுகற்சுண்ணம்

 கும்பிடுகற்சுண்ணம் gumbiḍugaṟcuṇṇam, பெ.(n.)

   சுந்தரானந்தர் நூலிற் கூறியுள்ள வழலைச் சுண்ணம்; an alchamical compound of calcium referred to (Sandarananthar’s); work on Tamil medicine (சா.அக.);.

     [கும்பிடு + கல் + கண்ணம்.]

கும்பிடுகல்

 கும்பிடுகல் gumbiḍugal, பெ.(n.)

   பிண்டக்கல்; white lime stone, a secret term used in alchemy

     [கும்பி+இடு+கல். கும்பி = வயிறு.]

கும்பிடுகள்ளன்

 கும்பிடுகள்ளன் gumbiḍugaḷḷaṉ, பெ.(n.)

   வணக்கங்காட்டும் வஞ்சன்; servile, hypocrite, cringing dissembles.

     [கும்பிடு + கள்ளன்.]

கும்பிடுகிளிஞ்சில்

 கும்பிடுகிளிஞ்சில் gumbiḍugiḷiñjil, பெ.(n.)

   கிளிஞ்சல் வகை; a species of cokee, a bivalve shell.

     [கும்பிடு + கிளிஞ்சில்.]

கும்பிடுசட்டி

கும்பிடுசட்டி kumbiḍusaḍḍi, பெ.(n.)

   1. கணப்புச் சட்டி; chafing-dish orportable furnace.

   2. தட்டார் நெருப்பு வைக்கும் சட்டி; potsherdin which fire is kept by goldsmiths.

     [கும்பி + இடு + சட்டி.]

கும்பிடுசிப்பி

 கும்பிடுசிப்பி kumpiṭucippi,  பெ.(n.)

    ஒரு வகைக் கடற் சிப்பு;   a well known bi-valve shellfish or mollusc living in the sea.

     [கும்பிடு+சிப்பி]

கும்பிடுசேவை

 கும்பிடுசேவை kumbiḍucēvai, பெ.(n.)

கோயிலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்குதல்,

 to workship godbyfalling downflat on the ground.

     [கும்பிடு+சேவை]

     [P]

கும்பிடுபூச்சி

 கும்பிடுபூச்சி kumbiḍupūcci, பெ.(n.)

   முன்னங் கால்களைக் கூட்டிக் கும்பிடுவதுபோல் தோன்றும் ஒருவகை இலைப்பூச்சி; praying wisect, as holding its auterior legsina manner suggesting hands clasped in prayer (யாழ்ப்.);..

     [கும்பிடு + பூச்சி.]

கும்பிடுபோடு-தல்

கும்பிடுபோடு-தல் kumbiḍupōḍudal,    19 செ.கு.வி.(v.t.)

   கைகுவித்து வணங்குதல்; to worship with joined hands.

     [கும்பிடு + போடு.]

கும்பிட்டுக்கட்டு-தல்

கும்பிட்டுக்கட்டு-தல்  kumpiṭṭukkaṭṭutal,    5 செ.கு.வி.(v.i.)

   தழுவிக் கொள்ளுதல் (யாழ்.அக.);;  to enfold in a close embrace (செ.அக.);.

     [கும்பு+இடு-+கட்டு-தல்.]

 கும்பிட்டுக்கட்டு-தல் kumbiṭṭukkaṭṭudal,    5 செ.குன்றாவி.(v.t.)

   தழுவிக்கொள்ளுதல் (யாழ்.அக.);; to enfold in a close embrace.

     [கும்பு + இடு → கும்பிடு + கட்டு.]

கும்பித்திரு-த்தல்

கும்பித்திரு-த்தல் kumbittiruttal,    4 செ.கு.வி.(v.i.)

   ஊழ்க (சமாதி); நிலையிலிருத்தல்; being in a state in which the individuals consciousnes gets fused and is lost in the transcendental.

   2. மூச்சற்றிருத்தல்; being in a state of trance or suspended animation (சா.அக.);.

     [கும்பு → கும்பி→கும்பித்து + இரு.]

கும்பித்துபோ-தல்

கும்பித்துபோ-தல் kumbittupōtal,    8 செ.கு.வி. (v.i.)

   ஊழ்க (சமாதி); புக வேண்டித் தம்பித்தல்; causing respiration to cease so as to enter samadhi.

   2 மூச்சொடுக்கி நிற்றல்; being in a state of breathlessness (சா.அக.);.

     [கும்பி → கும்பித்து + போ.]

கும்பிநசம்

 கும்பிநசம் kumpinacam, பெ.(n.)

   பாம்பு (பிங்.);;  snake (செ.அக.);.

கும்பிநாசம்

 கும்பிநாசம் kumbinācam, பெ.(n.)

   பாம்பு(பிங்.);; Snake.

     [கும்பி + நசம்.]

கும்பிநாசி

 கும்பிநாசி kumbināci, பெ.(n.)

   குடத்தைப் போன்ற மூக்கு; jar nose (சா.அக.);.

     [கும்பம் → கும்பி + நாசி. நாளி→நாசி.]

கும்பிநாற்றம்

 கும்பிநாற்றம் kumbināṟṟam, பெ.(n.)

கும்பநாற்றம் பார்க்க;See. {kumbanassam.}

     [கும்பு(கும்பல்); → கும்பி + நாற்றம்.]

கும்பினி

 கும்பினி kumpiṉi,  பெ.(n.)

கும்பினியார் பார்க்க; see kumbiliyar (செ.அக.);.

     [Е.Сотрапу→ த.கும்பினி]

கும்பிபாகம்

கும்பிபாகம் kumbipākam, பெ.(n.)

   ஏழுநகரத்துள் ஒன்றானம் பாவஞ்செய்தவரைக் குயச் சூளையிற் சுடுவதுபோல் வாட்டுவதுமாகிய நரகம்; a hel in which the wicked are baked as if in potter’s kiln, one of {elu-maragam.}

     “கும்பிபாக நரகத்திடைக் குளிப்ப”(காசிக. சிவசன்மாவை.310);.

     [கும்பி + பாகம்.]

கும்பிப்போ-தல்

கும்பிப்போ-தல் kumbippōtal,    8 செ.கு.வி.(v.i.)

   புகைசூழல்; being clouded with smoke when charredor overburnt (சா.அக.);.

     [கும்பி + போ.]

கும்பிமுகம்

கும்பிமுகம் gumbimugam, பெ.(n.)

   நெருப்பைப் போற் சிவந்த புண்; a red inflamed wound.

   2. ஒரு சிவந்த நச்சுப்பூச்சி; a kind of red venomous insect (சா.அக.);.

     [கும்பி + முகம்.]

கும்பியழித்தல்

 கும்பியழித்தல் kumbiyaḻittal, பெ.(n.)

   ஒரு விளையாட்டு (யாழ்.அக.);; a game.

     [கும்பி + அழித்தல்.]

கும்பிரச்சரு

 கும்பிரச்சரு kumbiraccaru, பெ.(n.)

   பேரிலாழம்; bile of cobra snake (சா.அக.);.

     [கும்பிலம் + (சுரு); சரு.]

கும்பிலன்

கும்பிலன் kumbilaṉ, பெ.(n.)

   திருடன் (யாழ்.அக.);; house-breaker, thief.

     [கும்பு → கும்பில் (கழிவு); → கும்பிலன்]

 கும்பிலன் kumbilaṉ, பெ.(n.)

   1. திருடன்; house-breaker, theif.

   2. மனைவியின் தம்பி; wife’s brother, brother-in-law.

     [Skt.kumbhila → த.கும்பிலன்.]

கும்பிலம்

கும்பிலம் kumbilam, பெ.(n.)

   அகாலத்தில் பிறந்த குழந்தை; child begotton in undue season.

   2. கரு முற்றாத குழந்தை; a child of an imperfect pregnation.

   2. ஒரு மீன்; a kind of fish called gilt head.

   4. முதலை; crocodile (சா.அக.);.

     [கும்பு → கும்பிலம்.]

கும்பீடு

 கும்பீடு  kumpīṭu, பெ.(n.)

   மதிப்புரவின் (மரியாதை செலுத்தும்); பொருட்டு கைகுவித்து வணங்குதல்;  to join hands in worship; to make obeisance with the hands joined and raised (செ.அக.);.

கும்பீநசம்

 கும்பீநசம் kumbīnasam, பெ.(n.)

   பெரும் பாம்பு வகை (யாழ்.அக.);; a kind of large serpent.

     [Skt.kumbhinasa → த.கும்பீநசம்.]

கும்பீரம்

 கும்பீரம் kumbīram, பெ.(n.)

கும்பீலம் பார்க்க;See. {kumbiam.}

     [கும்பீலம்→கும்பீரம்.]

கும்பீலம்

கும்பீலம்1 kumbīlam, பெ.(n.)

   யானையையும் விழுங்கக்கூடிய பெரிய முதலை; a tremendously big crocodile capable of devouring even an elephant (சா.அக.);.

     [கும்பம்→கும்பிலம்→கும்பீலம்.]

 கும்பீலம்2 kumbīlam, பெ.(n.)

   முதலை (யாழ்.அக.);; crocodile.

     [கும்பில் (கழிவு); → கும்பீலம்.]

 கும்பீலம் kumbīlam, பெ.(n.)

   முதலை (யாழ்.அக.);; crocodile.

     [Skt.kumbhila → த.கும்பீலம்.]

     [P]

கும்பு

கும்பு1 kumbudal,    5. செ.கு.வி.(v.i.)

   சமைத்தஉணவு தீய்ந்துபோதல்; to become overburnt, charred, smoked, as food when boiled with insufficient water.

     [கும் → கும்பு.]

கும்பு-தல்

கும்பு-தல் kumbudal,    5 செ.கு.வி.(v.i.)

   திரள், குழு; crowd, collection, group.

   தெ. கும்பு;க.கும்பா.

     [கும் → கும்பு.]

கும்புகட்டு-தல்

 கும்புகட்டு-தல் gumbugaṭṭudal, செ.கு.வி. (v.t.)

   தனிக் குச்சியாக இருக்கும் மரமுந்திரி போன்ற மரக் கன்றுகள் கிளைத்துத் தழைத்து ; to grow thickas boughs.

     [குடு-குடும்பு+சுட்டு]

கும்புளிக்காய்

 கும்புளிக்காய் kumbuḷikkāy, பெ.(n.)

   தீவுப்பகுதியில் விளையும் பருத்த தேங்காய்; a round big coconut in the Isands of Andaman and Nicobars (சா.அக.);.

     [கும்பளம்→கும்புளி+காய். கும்பளம் = பூசணி.]

கும்பை

கும்பை1 kumbai, பெ.(n.)

   1. சிறுமரம்; White emetic nut.

   2. பெருங்கம்பளிமரம்; Broad gardenia.

   3. திக்காமல்லிகை; Dikmali gum-plant.

     [கும்பு → கும்பை.]

 கும்பை2 kumbai, பெ.(n.)

   சேரி; settlement, especially of {Pañcamas.}

தெ. கொம்ப I

     [கும்பு → கும்பை.]

 கும்பை3 kumbai, பெ.(n.)

   குடம் (யாழ்.அக.);; pot.

     [கும்பம் → கும்பை.]

 கும்பை4 kumbai, பெ.(n.)

   வேசி (யாழ்.அக.);; prostitute.

     [கும்பில் → கும்பிலி → கும்பை.]

 கும்பை5 kumbai, பெ.(n.)

   1. ஓமகுண்டத்தின் வேதிகை (யாழ்.அக.);; enclosure round a sacrificial pit.

   2. குடும்பம்; family.

க. கொம்பெ

     [குழு → கும்பு → கும்பை.]

 கும்பை6 kumbai, பெ.(n.)

   வாழைவகை (யாழ்.அக.);; a kind of plantain.

     [கும் → கும்பு(கொத்து); → கும்பை.]

 கும்பை1 kumbai, பெ.(n.)

   விலைமகள் (யாழ்.அக.);; prostitue.

     [Skt.kumbha → த.கும்பை.]

கும்பைப்பிசின்

 கும்பைப்பிசின் kumbaippisiṉ, பெ.(n.)

   கும்பை மரத்தின் பிசின்; combly resin (சா.அக.);.

     [கும்பை + பிசின்.]

கும்பைமரம்

 கும்பைமரம் kumbaimaram, பெ.(n.)

   கம்பிப் பிசின்; combly resin tree. It yields a yellow gum which is anti-spasmodic and insecticide (சா.அக.);.

     [கும்பை + மரம்.]

கும்போதரன்

 கும்போதரன்  kumpōtaraṉ, பெ.(n.)

   சிவகணத்தவன்;  celestial host of Śiva (அபி.சிந்);.

கும்போவச்சம்

 கும்போவச்சம் kumpōvaccam,  பெ.(n.)

குடசபாலை பார்க்க; see kugasa-pālai (சா.அக.);.

கும்மக்கு

 கும்மக்கு kummakku, பெ.(n.)

   உதவி; aid, help, assistance.

     “குமுக்குப் பண்ண”.

     [U.kumak → த.கும்மக்கு.]

கும்மட்டம்

கும்மட்டம்1 kummaṭṭam, பெ.(n.)

   ஒருவகைச் சிறுபறை; a small drum.

தெ. கும்மெட்ட I

     [கும் → கும்மட்டம்.]

 கும்மட்டம்2 kummaṭṭam, பெ.(n.)

   1. காகிதத்தாலான கூட்டுவிளக்கு; globe lights made of paper, chinese lantern.

   2. விமானக்கூண்டு; cupola, dome.

   3. கட்டடவளைவு; arch, vault, arched roof.

     [கும் + மட்டம்.]

கும்மட்டி

கும்மட்டி1 kummaṭṭi, பெ.(n.)

   1. கும்மாளம்,

   குதிக்கை; romping, jumping.

   2. கும்மாளமடித்து ஆடுங் கூத்து; a rustic dance.

     [கும் → கும்மு → கும்மட்டி.]

 கும்மட்டி2 kummaṭṭi, பெ.(n.)

கும்மட்டம்1 பார்க்க;See. {kummattam.}

     [கும்மட்டம் → கும்மட்டி.]

 கும்மட்டி3 kummaṭṭi, பெ.(n.)

   நெருப்புவைக்குஞ் சட்டி (திவ்.திருக்குறுந். 5, வ்யா);; chafing-dish.

   தெ. கும்பட்டி;க. கும்பட்டி.

     [குய் → கும் → கும்மட்டி.]

 கும்மட்டி4 kummaṭṭi, பெ.(n.)

கொம்மட்டி பார்க்க (பதார்த்த.700);; a small water-melon. see {kommatti}

     [கொம்மட்டி → கும்மட்டி.]

 கும்மட்டி kummaṭṭi, பெ.(n.)

   1.ஆற்றுத் தும்மட்டி; bitter apple.

   2. சர்க்கரைக் கொம்மட்டி; sweet water melon.

   3. கம்மாளர் நெருப்புச் சட்டி; chafingdish especially of goldsmith (சா.அக.);.

     [ஒரு கா: கும்மல் + சட்டி – கும்மட்டி.]

கும்மட்டிகுத்து-தல்

கும்மட்டிகுத்து-தல் gummaṭṭiguddudal,    5 செ.கு.வி.

   குதித்து விளையாடுதல்; to jump and romp about.

     [கும்மட்டி + குத்து.]

கும்மட்டிக்கீரை

 கும்மட்டிக்கீரை kummaṭṭikārai, பெ.(n.)

   ஒருவகைக் கறிக்கீரை; a kind of vegetable green (சா.அக.);.

     [கும்பு → கும்பல் → கும்மல் + சட்டி – கும்மல்சட்டி → கும்மட்டி + கீரை.]

கும்மலி

கும்மலி1 kummalittal,    4 செ.கு.வி.(v.i.)

   விளையாடுதல்; to revel, sport, flutter.

     “குருகினங் கூடியாங்கே கும்மலித் திறகுலர்த்தி” (தேவா.511,8);.

     [கும் → கும்மலி.]

 கும்மலி2 kummali, பெ.(n.)

   பருத்தவள்; corpulent stout woman.

     [குள் → கும் → கும்மலி.]

கும்மல்

கும்மல்1 kummal, பெ.(n.)

ஆடையை நனைத்து

   நெம்புகை; washing cloth by plunging it into water and pressing it with hands.

     [குல் → கும்மு → கும்மல்.]

 கும்மல்2 kummal, பெ.(n.)

கும்பல் பார்க்க;See. {kumbal.}

     [குழுமு → கும்மு → கும்மல்.]

 கும்மல்3 kummal, பெ.(n.)

   அரிசி, உப்பு, காய்கறி முதலிய பொருள்களின் குவியல்; heap of vegetables.

சந்தையில் காய்கறிகளைக் கும்மல் கும்மலாகக் குவித்து வைத்திருப்பார்கள். (உ.வ.);.

     [குழுமு → கும்மு → கும்மல்.]

 கும்மல்4 kummal, பெ.(n.)

   அரிவாள்; sickle.

     [குல் → குய் → கும் → கும்மல்.]

கும்மாயம்

கும்மாயம் kummāyam, பெ.(n.)

   1. குழையச் சமைத்த பருப்பு

     “பயற்றுத்தன்மை கெடாது கும்மாய மியற்றி (மணி.27, 185);;

 well-boiled dhal.

   2. சுண்ணாம்பு; lime, mortar.

     [குய் (சுடுதல்); → கும் → கும்மாயம்.]

கும்மாளங்கொட்டு-தல்

 கும்மாளங்கொட்டு-தல் kummāḷaṅgoṭṭudal, செ.கு.வி.(v.i.)

   குதித்து விளையாடுதல்; to jump and move sportively.

     [கும்மாளம் + கொட்டு.]

கும்மாளம்

கும்மாளம் kummāḷam, பெ.(n.)

   1. குதித்து விளையாடுகை; jumping, romping, moving sportively, as children, claves, etc.

   2. குதித்தாடும் ஓர் அநாகரிகக்கூத்து; a rustic dance.

     [குள் → கும் → கும்மாளம்.]

கும்மாளி

கும்மாளி1 kummāḷittal,    4 செ.கு.வி.(v.i.)

   மனநோயின் விளைவாகக் குதித்தல், கை கொட்டல், தன்னை உயர்வாகப் பேசிக்கொள்ளல்; mild form of mania in which the symptoms are manifested under the form of gaiety or sport, as jumping, clapping hands and indulging in other agreeable hallucinations (சா.அக.);.

     [கும்மல் → கும்மளி → கும்மாளி.]

 கும்மாளி2 kummāḷi, பெ.(n.)

   கும்மாளம் (யாழ்.அக.);; romp;

 jumping about. [கும்மாளம் → கும்மாளி.]

கும்மி

கும்மி kummi, பெ.(n.)

   1. மகளிர் கை கொட்டிப் பாடியாடும் விளையாட்டு; dance with clapping of hands to time and singing, especially among girls.

   2. கும்மிப்பாட்டு; poem composed in a adapted to kummi dance.

     [கொம்மை → கொம்மி → கும்மி.]

கும்மிடிசட்டிவேளாளர்

 கும்மிடிசட்டிவேளாளர்  kummiṭicaṭṭivēḷāḷar, பெ.(n.)

   வேளாளரின் இறப்பின் போது நெருப்புச் சட்டி கொண்டு உடன் செல்வோர்;  people of vellalar who carries the fire pot, and accompany with the corpse in the funeral procession.

கும்மியடி-த்தல்

கும்மியடி-த்தல் kummiyaḍittal,    4 செ.கு.வி.(v.i.)

   பாடிக் கொண்டு கைகொட்டியாடுதல்; to play the kummi dance.

     [கும்மி + அடி.]

கும்மிருட்டு

கும்மிருட்டு1 kummiruṭṭu, பெ.(n.)

   செறி விருட்டு; pitch darkness, intense darkness.

ம. குற்றாக்குற்றிருட்டு

     [கும் + இருட்டு. கும் = நெருக்கம், செறிவு ஆகியன குறிக்கும் ஒலிக்குறிப்புச் சொல்.]

 கும்மிருட்டு2 kummiruṭṭu, பெ.(n.)

   காரிருள்; cimmeriam, thick darkness.

     [கும் + இருட்டு.]

கும்மு-தல்

கும்மு-தல் kummudal,    5.செ.கு.வி.(v.i.)

   கைகூடுதல், உண்டாதல்; to happen, occur.

     “பண்டுநினைத்த பருவங் கும்முதடி” (கனம் கிருஷ்ணையர், கீர்த்.4);.

     [குல் → கும்மு.]

கும்மெனல்

கும்மெனல்1 kummeṉal, பெ.(n.)

   இருளடரச்சி, காதடைப்பு முதலியவற்றைக் கூறுமிடத்துவரும் குறிப்பு; onom. expr. signifying being over whelmed, as by excessive darkness or being confused, as by a sound in the ears when partly filled with water.

     “கொண்டைமலரே கும்கும்கும் என்னக் கோயம்புத்தூர்நாடி நடந்துவா பின்கூட்டி” (நாடோடிப் பாட்டு);.

     [கும்மு → கும்மெணல்-ஒலிக்குறிப்பு.]

 கும்மெனல்2 kummeṉal, பெ.(n.)

   மணம் வீசுதல்; to diffuseodor.

     “கொண்டைமலரே கும்கும்கும் என்னக் கோயம்புத்துர்நாடி நடந்துவா பின்கூடி” (நாடோடிப் பாட்டு);.

     [கும்மு → கும்மெனல்.]

குயக்கணக்கு

குயக்கணக்கு kuyakkaṇakku, பெ.(n.)

   1. தவறான கணக்கு; wrong, clumsy reckoning pottering in calculation.

   2. குயவரில் கணக்குப்

   பார்க்கும் ஒருவகையினர்; a sub-sect among potters, as doing the duties of an accountant.

     [குய்யன் + கணக்கு.]

குயக்கருவி

குயக்கருவி kuyakkaruvi, பெ.(n.)

   1. குயவர் பயன்படுத்தும் கருவி; potter’s imlements.

     [குயவன் +கருவி.]

குயக்கலத்தி

குயக்கலத்தி kuyakkalatti, பெ.(n.)

   1. மண் பாண்டவோடு; a piece of an earthenpot.

   2. மண்பாண்டம்; earthenpot or vessel.

     [குயம் + கலத்தி.]

குயக்கலம்

குயக்கலம் kuyakkalam, பெ.(n.)

   குசக்கலம், மட்பாண்டம்; potter’s vessel.

   2. ஒரு நூல் (நன்.274,மயிலை);; a treatise.

     [குயம் + கலம்.]

குயக்காணம்

குயக்காணம் kuyakkāṇam, பெ.(n.)

   1. குயவர் செலுத்திவந்த பழையவரி (S.I.I.II.509);; tax on potters.

     [குயவன் + காணம்.]

குயக்காலம்

 குயக்காலம் kuyakkālam, பெ.(n.)

   நிலக்கடம்பு (மலை.);; common cadamba.

     [குயக்கால் + அம் – குயக்காலம்.]

குயக்கால்

 குயக்கால் kuyakkāl, பெ.(n.)

   மட்பாண்டம் செய்யும் சக்கரம்; potter’s wheel.

     [குயம் + கால்.]

குயக்கினம்

 குயக்கினம்  kuyakkiṉam, பெ.(n.)

தகரை, ring worm plant – Cassia tora (சா.அக.);.

குயக்குண்டு

 குயக்குண்டு kuyakkuṇṭu, பெ.(n.)

   குயவர் மண்ணெடுக்குங் குழி; pit where from clay is taken by potters to make pots (கொ.வ.);.

     [குயம் + குண்டு. குண்டு = குழி, பள்ளம்.]

குயக்குழாய்

 குயக்குழாய் kuyakkuḻāy, பெ.(n.)

   கடு மண்ணாலான குழாய்; brick tube.

     [குயவன் + குழாய்).]

குயத்தி

குயத்தி kuyatti, பெ.(n.)

   குயக்குடிப்பெண்; female poter.

     “சக்கரந் தான்சுழற்றத் தகுங்குயத்தி” (சிவப்பிரபந்.பி.ஷாடன.6);.

     [குயவன்-குயத்தி.]

குயத்தினலகை

 குயத்தினலகை guyattiṉalagai, பெ.(n.)

நிலவாகை

 Tinnevelly senna.

     [குயம் = அரிவாள். குயம்+அத்து+இன்+அலகை (அலகு → அலகை); ‘அத்து’ , ‘இன்’ சாரியை. அரிவாள்முனை போன்ற செடி.]

குயபாசியம்

 குயபாசியம் kuyapāciyam, பெ.(n.)

   பீநாறிச் சங்கு; smooth, volkameria (சா.அக.);.

     [குயம் + பாசியம்.]

குயபிசகம்

 குயபிசகம் kuyapicakam, பெ.(n)

எட்டிமரம், nux-vomica tree (சா.அக.);.

குயபேதி

 குயபேதி kuyapēti, பெ.(n.)

குய்யபேதி பார்க்க;See. {Киуyapédi.}

     [குய்யபேதி → குயபேதி.]

குயமயக்கு

 குயமயக்கு kuyamayakku, பெ.(n.)

   தாறுமாறு; disorder, lack of method.

     [குயம் + மயக்கு.]

குயமாதுகம்

 குயமாதுகம் guyamātugam, பெ.(n.)

கடுக்காய், Indian galnut (சா.அக.);.

     [குயம் + (மதுகம்);மாதுகம்.]

குயம்

குயம்1 kuyam, பெ.(n.)

   1. அரிவாள்; sickle, reaping-hook, curved knife.

     “கொடுவாய்க் குயத்து” (சிலப்.16:30);.

   2. முடிமழிப்பாளன் கத்தி; razor.

     “அருங்குயந் தான்களைந்து” (சீவக.2500);.

   3. குயக்குடி; potter caste.

     [குல்→குய்→குயம்.]

 குயம்2 kuyam, பெ.(n.)

   இளமை (திவா.);; juvenility, youth.

     [குழ → குய → குயம்.]

 குயம்3 kuyam, பெ.(n.)

   முலை; women’s breast.

     “குச்சிலிய மாதர் குயமும்” (தனிப்பார்.ii, 75,190);.

     [குல் → குய் → குயம். குய் = துளை. குயம் = நுண்ணிய பால் சுரப்புத் துளையுள்ள மார்பகம்.]

 குயம்4 kuyam, பெ.(n.)

   தருப்பை; sacrificial darbha grass.

     [குல் (முள், கூர்மை); → குய் → குயம்.]

குயம்பிக்கடி

 குயம்பிக்கடி kuyambikkaḍi, பெ.(n.)

   சுரை; bottle gourd (சா.அக.);.

     [குயம் → குயம்பு + கடம் – குயம்புக்கடம்→குயம்பிக்கடி (கொ.வ.);.]

உட்டுளையும் குடம் போன்ற வடிவமும் கொண்ட

கரைக்காய்.

குயலன்

குயலன் kuyalaṉ, பெ.(n.)

   தேர்ந்தவன்; man of great skill, dexterity.

     “வஞ்சக் குயலர்க்கென்றுங் கரவனாம்” (தேவா.406,4);.

     [குயல் → குயலன்.]

குயல்

 குயல் kuyal, பெ.(n.)

   தேர்ச்சி, திறமை; skill, talent

     [குள் = கூர்மை. குள் → குய்→குயல்.]

குயவன்

குயவன்1 kuyavaṉ, பெ.(n.)

   மட்பாண்டம் வனைபவன்; potter.

     “திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்” (தேவா.736:1);.

மறுவ. குய்யன்

     [குய் (சுடுதல், எரித்தல்); → குய்யம்→ குய்யன்→குய்யவன்→குயவன் (கடுபவன்);. பசு மட்பாண்டங்களைச்

குளையிலிட்டுச் சுடும் தொழில் செய்வதால் பெற்ற பெயர்.]

 குயவன்2 kuyavaṉ, பெ.(n.)

   மறைபொருளானவன்; God, the invisible,

     “யானோர் குயவன்” (சிவப்.பிரபந்.பிட்சாடன.6);.

     [குய்யம் → குயவன்.]

குயவன் கைவழித்தமண்

 குயவன் கைவழித்தமண் kuyavaṉkaivaḻittamaṇ, பெ.(n.)

   மிகவும் மெல்லிய களிமண்; a very fine clay sticking to the hand of a potter at work (சா.அக.);.

     [குயவன்+கை+வழித்த+மண்.]

குயவன்மணை

 குயவன்மணை kuyavaṉmaṇai, பெ.(n.)

மட்பாண்டம் வனைய உதவும் சக்கரத்தின்

   அடிக்கட்டை; foot of a potter’s wheel.

     [குயவன் + மனை.]

குயவன்விட்டுமண்

 குயவன்விட்டுமண் kuyavaṉviṭṭumaṇ, பெ.(n.)

   குயவன் களிமண்; potter’s clay (சா.அக.);.

     [குயவன்+வீட்டு+மண்]

குயவரி

குயவரி kuyavari, பெ.(n.)

   வரிப்புலி (அரிவாள் போன்ற வரிகளையுடையது);; tiger, as having sickle-shaped strpes.

     “வேழங் குயவரி கோட்பிழைத்து” (திணைமாலை.25);.

     [குயம் + வரி.]

குயவு

குயவு kuyavu, பெ.(n.)

   1. தேர் (பிங்.);; car, chariot.

   2. கோங்கிலவு மரம்; false tragacanth.

     [குள் (கூர்மை);→குய்→ குயவு (கூர்மையான தேர் மொட்டு);.]

குயா

 குயா kuyā, பெ.(n.)

   கோங்கு (பிங்.); ; false tragacanth.

மறுவ, குயவு, குயாகம். குயவு குயா)

குயாகம்

 குயாகம் kuyākam, பெ.(n.)

குயா, கோங்கிலவு: false tragacanth (சா. அக.);.

குயவு → குயா→குயாகம்.]

குயினர்

குயினர் kuyiṉar, பெ.(n.)

   மணிகள் துளையிடுவோர்; those who polish and perforate gems.

     “திருமணி குயினரும்”(மதுரைக்.511);.

   2. தையற்காரர் (பிங்.);; tailor.

     [குயில் → குயிலு + நர் → குயினர்.]

குயின்

குயின்1 kuyiṉ, பெ.(n.)

   மேகம்; cloud.

     “குயினென் கிளவிடயிதுயகை யாகும்”(தொல்.எழுத்து.235);.

     [குள்→குய்→குயின். குள் = கூடுதல், திரளுதல்.]

 குயின்2 kuyiṉ, பெ.(n.)

   செயல் (இலக்.வி.126,உரை);; deed, work.

     [குல்→குள்→குய்→குயின்.]

குயின்மூக்கெலும்பு

குயின்மூக்கெலும்பு kuyiṉmūkkelumbu, பெ.(n.)

   முதுகின் அடியெலும்பு (இங்.வை.4);; coccyx, as resembling the koel’s beak.

     [குயில் + மூக்கு + எலும்பு.]

குயின்மொழி

குயின்மொழி kuyiṉmoḻi, பெ.(n)

   1. இன்மொழி; soft, sweet words, like the notes of the koel.

   2. அதிமதுரம் (மலை.);; liquorice.

     [குயில் + மொழி.]

குயிமாவதி

 குயிமாவதி kuyimāvadi, பெ.(n.)

   கொக்கிறகு; stork’s feather (சா.அக.);.

     [குயிமம் + அவதி.]

குயிற்கண்டிகை

 குயிற்கண்டிகை kuyiṟkaṇṭikai, பெ.(n.)

   பாற்குறண்டி; milk corandy-Lepidagathis pungens (சா.அக.);.

குயிற்கண்பப்பளி

 குயிற்கண்பப்பளி kuyiṟkaṇpappaḷi, பெ.(n.)

   சேலைவகை; a kind of saree.

     [குயில் + கண் + பப்பளி.]

குயிற்கண்மணி

 குயிற்கண்மணி kuyiṟkaṇmaṇi, பெ.(n.)

   வயிர மணி வகை (செளகந்திகப்பதுமராகம்); (யாழ்.அக.);; a kind of topaz.

குயில் + கண்மணி]

குயிற்று

குயிற்று1 kuyiṟṟudal,    5 செ.குன்றாவி.(v.t.)

   சொல்லுதல்; to tell, say, utter, to lay down, as rules.

     “சுமார்த்தத்திற் குயிற்றுபல கருமத்தும்” (விநாயகபு.73,24);.

     [குய்→குயில்→குயிற்று. குயிலல் = பேசுதல் ஒலித்தல்.]

குயிற்று-தல்

குயிற்று-தல் kuyiṟṟudal,    5 செ.குன்றாவி.(v.t.)

   1. செய்தல்; to make, construct, form, perform.

     “அருநடங் குயிற்று மாதி வானவனே” (பதினொ.பட்டினத். கோயினான்.32);.

   2. மணி பதித்தல்; to encase, set, as gems.

     “மணியொடு வயிரங் குயிற்றிய” (சிலப்.5:147);.

     [குள் → குய் → குயில்→குயிற்று. குள் = கூடுதல், சேர்தல்.]

குயிலண்டம்

குயிலண்டம் kuyilaṇṭam, பெ.(n.)

   துரிஞ்சில்; bat.

   2. குயில் முட்டை; of Indian cuckoo (சா.அக.);.

     [குயில் + அண்டம்.]

குயிலமோதி

 குயிலமோதி kuyilamōti, பெ.(n.)

   அதிமதுர; liquor rice (சா.அக.);.

     [குயில் (முழி →மொழி); மோதி.]

குயிலல்

 குயிலல் kuyilal, பெ.(n.)

   துளைத்தல்; boring, perforating (சா.அக.);.

     [குய் → குயில் → குயிலல்.]

குயிலாயம்

குயிலாயம்1 kuyilāyam, பெ.(n.)

   பறவைக்கூடு; bird’s nest.

   2. சுவருள் அறை; niche in a wall.

     [குயில் + ஆலயம் – குயிலாலயம் → குயிலாயம். ஆலயம் = சுற்றுச் சுவர் அமைந்த வளமனை அல்லது கோயில்.]

 குயிலாயம் kuyilāyam, பெ.(n.)

   மட்கலம் வனையும் கூடம்; pottery, potter’s workshop.

     [குய் = சுடுதல். குய்தகுயில்→குயிலாயம். மட்பாண்டம் சுடும் சூளை சார்ந்த இடம்.]

குயிலாலுவம்

 குயிலாலுவம் kuyilāluvam, பெ.(n.)

   இமயமலைக்கு அருகில் உள்ள சிவத்தலம்; sacred place near by Himalaya (அபி.சிந்);.

     [குயில்+ஆலுவம்]

குயிலின் மூக்கைப் போன்றுள்ளதால் இப்பெயர் பெற்றது. குயிலெனமரம்

 குயிலின் மூக்கைப் போன்றுள்ளதால் இப்பெயர் பெற்றது. குயிலெனமரம் kuyiliṉmūkkaippōṉṟuḷḷatālippeyarpeṟṟatukuyileṉamaram, பெ.(n.)

   கடம்ப மரம்; common cadamba tree.

     [குயில்+என+மரம்]

இம்மரம் நிழலுக்காகப் பயிரிடப்படும். இதன் பட்டையைக் காய்ச்சலுக்கும், வலிமைக்கும் பயன்படுத்துவதுண்டு. சீனத்தில் இதைக் குளிர்க் காய்ச்சல், காற்றுப் பிடிப்பு, குண்டிக்காய் வலி முதலிய நோய்களுக்குப் பயன்படுத்துவார்கள் (சா.அக.);.

குயிலுவக்கருவி

குயிலுவக்கருவி kuyiluvakkaruvi, பெ.(n.)

   இசைக்கருவிகள்; musical instruments with accompaniments.

     “கூடிய குயிலுவக் கருவிகண்மே டுயின்று” (மணி.7,45);.

     [குயில் = இசைத்தல், பாடுதல். குயில் → குயிலுவம் (இசைக்கப்படுவது);.]

குயிலுவத்தொழில்

 குயிலுவத்தொழில் kuyiluvattoḻil, குயிலுவம் (பிங்.) பார்க்க;See. {kuyiluvam.}

     [குயிலுவம் + தொழில்.]

குயிலுவம்

 குயிலுவம் kuyiluvam, பெ.(n.)

   வாச்சியங்கள் வாசிக்கை (திவா.);; playing on stringed musical instruments, drums, tabrets, clarionets, horns.

     [குயிலல் = பாடுதல், இசைத்தல், குயில்→ குயிலுவம் (இசைக்கப் பயன்படுவது);.]

குயிலுவர்

குயிலுவர் kuyiluvar, பெ.(n.)

   வாச்சியம் வாசிப்போர்; players on string instruments, drums, tablets, clarionets horns.

     “பயிறொழிற் குயிலுவர் நிற்ப” (சிலப்.5, 52.அரும்.]

     [குயில்→குயிலல் =பாடுதல், இசைத்தல், குயிலுவர் = இசைக்கருவி இயக்குபவர்.]

குயில்

குயில்3 kuyilludal,    15 செ.கு.வி.(v.i.)

   நடைபெறுதல்; to take place.

     “தெய்வ நடன மெதிர்குயில” (தணிகைப்பு.அகத்திய.83);.

   2. செறிதல் (திவா.);; to be thick, close, crowded.

   3. இசைக்கருவி ஒலித்தல்; to sound, play.

     “வீணை குழலொடு குயில” (சீவக.1255);.

     [குயில் → குயில்(லு);.]

 குயில்4 kuyil, பெ.(n.)

   1. சொல் (திவா.); word.

   2. குயில் பறவை (திவா.);; koel, Indian cuckoo.

   தெ. குக்கின்;   க. குகில்;   ம. குயில்;மகாராட். கொய்ல.

     [கூ→கூவு→கூயு→குயி→குயில்(கூவுவது);.]

     [P]

குயில்

 குயில்6 kuyil, பெ.(n.)

   துளை (பிங்.);; hole, perforation.

     [குல் (துளை);→குய்→குயில்.]

 குயில்6 kuyil, பெ.(n.)

   மேகம் (சூடா.);; cloud.

     [குள்→குய்→குயில். குள் = கூடுதல், திரளுதல்.]

குயில்(லு)-தல்

குயில்(லு)-தல் kuyilludal,    8 செ.குன்றாவி.(v.t.)

   1. சொல்லுதல்; to utter tell:

     “பொய் குயிலினுஞ் சோம்பினும்” (சிவப்.பிரபந்.நிரஞ்.18);.

   2. கூவுதல் (சூடா.);; to call, whoop, halloo.

     [குயில் → குயில்லு-.]

 குயில்(லு)-தல் kuyilludal,    13 செ.கு.வி.(v.i.)

   1. செய்தல்; to make, execute, shape, construct.

   2.நெய்தல்; to weave.

     “ஊசியொடு குயின்ற தூரகம் பட்டும்” (தொல்.சொல்.74,உரை);.

   3.பின்னுதல்; to plait, braid, in twine (வின்.);.

   4. துளைத்தல் (பிங்.);; to bore, perforate, tunnel.

     “குன்று குயின்றன்ன வோங்குநிலை வாயில்” (நெடுநல்.88);.

   5. மணி முதலியவை பதித்தல்; to encase, set, as precious stones.

     “சுடர்மணியின் பத்திகுயின்றிட்ட பழுப்பேணியில்” (கந்தபு.வள்ளி.50);.

     [குயில் → குயில்(லு);.]

குயில்கடவு-தல்

குயில்கடவு-தல் kuyilkaḍavudal,    5 செ.கு.வி.(v.i.)

   கண்ணுக்கினிதாய்த் தோன்றுதல் (யாழ்ப்.);; to present a pleasing, thriving aspect, as a field with luxuriant crop (யாழ்ப்.);.

அவனுக்கென்ன? தொட்டதெல்லாம் குயில் கூவுகிறது (உ.வ.);.

     [குயில் + கூவு-.]

பச்சைப்பசேலென இருக்கும் பூஞ்சோலையில் அல்லது பொதும்பரில் குயில் மகிழ்ந்து கூவும் எனும் கருத்தில் செழிப்பைச் சுட்டும் மரபுத் தொடராயிற்று.

குயில்மூக்கெலும்பு

 குயில்மூக்கெலும்பு kuyilmūkkelumpu, பெ.(n.)

   முதுகின் அடிப்பகுதி எலும்பு; coxcyx bone, which is situated in the lower extremity of the backbone. it is so called from its resemblance to koel’s back (சா.அக.);.

     [குயில்+மூக்கு+எலும்பு]

குயில்மொழி

 குயில்மொழி kuyilmoḻi, பெ.(n.)

அதிமதுரம் பார்க்க (சா.அக.);;See. {adimaduram}

     [குயில் + (முழி); மொழி.]

குயீ

 குயீ kuyī, பெ.(n.)

   ஒருவகை நாடி; a kind of artery (சா.அக.);.

     [குய் குயி → குயீ(கொ.வ.);.]

குய்

குய்1 kuytal,    2 செ.கு.வி. (v.i.)

   வேதல், எரிதல்; to bron, to boil.

     “குய்ப்புகை கிமழ” (அக.நா.);.

     [குல் → குய்.]

 குய்2 kuytal,    2 செ.கு.வி. (v.i.)

   1. துளைத்தல்; to make hole.

   2. குத்துதல்; to pierce.

     “குய்ப்புகை கிமழ” (அக.நா.);.

     [குள் → குய்.]

 குய்3 kuytal, பெ.(n.)

   1. தாளிப்பு; seasoning with spices.

     “கமழ்குய் யடிசில்” (புறநா.10);.

   2. தாளித்த கறி; spicy, seasoned curry.

     “பொரியுங் குய்யும் வறைகளு நிவந்த வாசம்” (சீவக.2971);.

   3.நறும்புகை (பிங்.);; burnt odours, insense, odorous smoke.

   4. சாம்பிராணி (தைலவ.தைல.94);; frankincense.

     [குள் → குள் → குய்(எரிதல், வேதல்);.]

குய்மனத்தாளர்

குய்மனத்தாளர் kuymaṉattāḷar, பெ.(n.)

   ஏய்ப்பாளர்; deceitful persons.

     “குய்மனத்தாளர் குறைப்பினங் காட்டி” (பெருங்.இலாவண.19:57);.

     [குய் + மனம் + அத்து + ஆளர். ‘அத்து’சாரியை.]

குய்யகர்

 குய்யகர் guyyagar, பெ.(n.)

   தொன்மக் கதைகளில் குபேரன் நிதியைக் காவல்புரியும் தேவ கூட்டத்தார்; a class of demigods in the service of Kuberato whose custody histreasures are comitted asper puranas.

     [குய் → குய்யகன் → குய்யகர்.]

குய்யகோடகம்

 குய்யகோடகம் guyyaāṭagam, பெ.(n.)

   கோவணம்; a piece of cloth worn in the loins to cover the genital (சா.அக.);.

     [குய்யம்(குதம்);+கோடகம்.]

குய்யதீபகம்

 குய்யதீபகம் guyyatīpagam, பெ.(n.)

   மின்மினிப் பூச்சி; fire fly (சா.அக.);.

     [குய்→குய்ய + தீபகம்.]

 குய்யதீபகம் guyyatīpagam, பெ.(n.)

   மின்மினி (யாழ்.அக.);; fire-fly.

த.வ. எரிபூச்சி

     [Skt.guhyadipaka → த.குய்யதீபனம்.]

குய்யதீயகம்

 குய்யதீயகம் guyyatīyagam, பெ.(n.)

   மின்மினி (யாழ்.அக.);; fire-fly.

     [குய் = எரிதல், குய் → குய்ய + தீயகம்.]

குய்யன்

 குய்யன் kuyyaṉ, பெ.(n.)

   குயவன்; potter.

     [குய் (சுடுதல்); →குய்யம்→குய்யன்.]

குய்யபாசிதம்

 குய்யபாசிதம் kuyyapācidam, பெ.(n.)

   கமுக்கச் சொல் (யாழ்.அக.);; secret speech.

     [Skt.guhya-{} → த.குய்யபாசிதம்.]

குய்யபீசம்

 குய்யபீசம் kuyyapīcam, பெ.(n.)

   கற்பூரப் புல்; lemon grass – Andropogon schoenanthes (சா.அக.);.

குய்யபீதம்

 குய்யபீதம் kuyyapītam, பெ.(n.)

   எட்டி மரம்; nux.vomica tree (சா.அக.);.

மறுவ, குய்ய பீசகம்.

     [குய்யம் + பீதம் பேதம்→பீதம்.]

குய்யபுட்பகம்

குய்யபுட்பகம் guyyabuṭbagam, பெ.(n.)

   மகிழமரம்; monkeyfacefloweredtree.

   2. அத்திமரம்; fig tree soalled from the hidden blossom (சா.அக.);.

     [குய்யம் + புட்பகம்.]

குய்யபேதி

 குய்யபேதி kuyyapēti, பெ.(n.)

   மலவாய் வழியாய் ஏற்படும் கழிவு; discharge of foeces from the anus (சா.அக.);.

     [குய்யம் (துளை, மலவாய்);பிள் → பேள்→பேதி.]

குய்யப்பத்திரம்

 குய்யப்பத்திரம் kuyyappattiram, பெ.(n.)

   அரசிலை; leaf of peepultree (சா.அக.);. [குய்யம் + பால் (குய்யம் = உட்டுளை, பால் சுரக்கும் நுண்துளை, மார்கம்);.]

குய்யப்பால்

 குய்யப்பால் kuyyappāl, பெ.(n.)

   முலைப்பால்; woman’s breast milk (சா.அக.);. [குய்யம் + பால் (குய்யம் = உட்டுளை, பால் சுரக்கும் நுண்துளை, மார்கம்);.]

குய்யப்புண்

குய்யப்புண் kuyyappuṇ, பெ.(n.)

   1. மலவாய்ப்புண்; ulcer of the anus.

   2. ஆண்குறிப்புண்; ulceration of the penis.

   3. பெண் குறிப்புண்; pudendal ulcer.

   4. ஆண் பெண் இருவருக்கும் குறியில் வரும் புண்; ulceration of the male and female genitals (சா.அக.);.

     [குள் → குய் → குய்யம் + புண். குய்யம் = குழி.

உட்டுளை.]

குய்யமல்லிகம்

 குய்யமல்லிகம் guyyamalligam, பெ.(n.)

   அழிஞ்சில்; alangium (சா.அக);.

மறுவ. அங்கோலம்

     [குய்யம் + மல்லிகம்.]

குய்யம்

குய்யம் kuyyam, பெ.(n.)

   1. மறைவானது (சூடா.);; that which is secret, mystical, hidden, private.

   2. பெண்குறி; genetive organ especially of women.

     “மென்துகிற் குய்யத் தடம் படிந்து” (குளா.சீய.49);.

   3. குதம் (பிங்.);; anus.

   4. ஏமாற்று, ஏய்ப்பு (வஞ்சகம்);; dissimilation, deceitfulness hypocirsy.

     “நட்பிடைக் குய்யம் வைத்தான்” (சீவக.358);.

     [குள் →குய் (துளை, பொய், மறைவு);→குய்யம்.]

குய்யோ முறையோவெனல்

 குய்யோ முறையோவெனல் kuyyōmuṟaiyōveṉal, பெ.(n.)

   கூச்சலோடு முறையிடுதற் குறிப்பு; onom, expr. signifying loud complaint.

     [குய்யோ + முறையோ + எனல்.]

குய்யோமுறையோவென்று

 குய்யோமுறையோவென்று kuyyōmuṟaiyōveṉṟu, வி.எ.(adv.)

   தன்னளவில் அந்நயம் (அநியாயம்); என்று நினைப்பதை அல்லது ஏதத்தை (ஆபத்தை); அறிந்து உரத்த குரலில் முறையிடுதல்; complaining loudly about what one thinks is unjust;aising alarm in danger.

உள்ளதைச் சொல்கிறாயா இல்லையா? என்று கேட்டுக் கம்பை ஓங்கியதும் பையன் குய்யோ முறையோவென்று கத்தத்தொடங்கி விட்டான்.

     [குய்யோ+முறையோ+என்று.]

குரகச்சின்னம்

 குரகச்சின்னம் kurakacciṉṉam, பெ.(n.)

   திலக மரம்; country cinnamon – Cinnamomum iners (சா.அக.);.

குரகதம்

குரகதம் guragadam, பெ.(n.)

   1. குதிரை; horse.

     “குரகதமுகம்புரை குலைக டுங்கிய……. வாழை” (கந்தபு.வரைபுனை,9);.

   2. குதிரைப்பற் செய்நஞ்சு (மூ. அக.);; a mineral poison.

     [குரகு → குரகதம்.]

குரகம்

குரகம் guragam, பெ.(n.)

   1. மைனாப்புள்; common myna, starling.

   2. நீர்வாழ் பறவைப் பொது; aquatic birds.

 Ag.,OF. grue (crane);;

 OHG., O.S. krano, OE. Cran;

 E. Crane.

     [குரகு → குரகம்(வினை);.]

குரகுமஞ்சள்

 குரகுமஞ்சள் guragumañjaḷ, பெ.(n.)

   சாப்பிராவிரை; arnotto.

     [குரு → குரகு + மஞ்சள்.]

குரக்கன்சாறு-தல்

குரக்கன்சாறு-தல் kurakkaṉcāṟudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. கேழ்வரகு விதைத்த பின் வயலைக் கிளறிக் கொடுத்தல்; to hoe in {kurakkapgrain} lightly after sowing.

   2. கேழ்வரகு விதைத்தல்; to sow {kurakkan.}

     [குரக்கன் + சாறு-.]

குரக்களி-த்தல்

 குரக்களி-த்தல் kurakkaḷittal, செ.கு.வி.(v.i.)

குரக்குவலி பார்க்க;See. {kurakkuvah}

     [குரக்கு + வலித்தல் → குரக்குவலித்தல் → குரக்களித்தல்).]

குரக்கு

குரக்கு kurakku, பெ.எ.(adj.)

   1. குரங்கு; monkey.

   2. குரங்கினுடைய; of or belonging to a monkey (சா.அக.);.

குரக்கு ஊதை

குரக்கு ஊதை kurakkuūtai, பெ.(n.)

   குரக்குவலி; spasmodi affection.

     “குரக்குவாதம் பிடித்து வலித்து”(கலிங்.138, புதுப்.);.

     [குரக்கு + ஊதை]

குரக்குகை

குரக்குகை kurakkukai, பெ.(n.)

   குரக்கு நோய் (வாதம்); பிடித்த கை; arms affected by cramps due to weakness, cold, etc.

     ‘குரக்குக் கைகொடு கூழ் துழாவி” (ஈடு 9, 2 4); (செஅக.);

 குரக்குகை guraggugai, பெ.(n.)

   குரக்குவலி (வாதம்); பிடித்த கை; arms affected by cramps due to weakness, cold, etc.,

     “குரக்குக் கைகொடு கூழ் து ழாவி” (ஈடு.9:2,4);.

     [குரக்கு + கை.]

குரக்குக்கால்கை

 குரக்குக்கால்கை kurakkukkālkai, பெ.(n.)

   குளிர் அல்லது வலுவின்மையால் குரக்கு வாங்கும் கால்கை; limbs affected with cramps due to cold or weakness (சா.அக.);.

     [குரக்கு + கால்கை.]

குரக்குபிடி-த்தல்

குரக்குபிடி-த்தல் kurakkupiṭittal,    4 செ.கு.வி.(v.i.)

   கை, கால் முதலியவற்றில் எதிர்பாராமல் குத்தி இழுப்பது போன்ற தசை வலி உண்டாகுதல்; suffer muscle pull or sprain;suffer cramps.

காலில் குரக்கு பிடித்து விட்டது.

     [குரக்கு+பிடி-த்தல்.]

குரக்குமுகம்

 குரக்குமுகம் kurakkumukam, பெ.(n.)

   குரங்கு முகம்; monkey-face (சா.அக.);.

     [குரக்கு+முகம்]

குரக்குவலி

 குரக்குவலி kurakkuvali, பெ.(n.)

   கைகால்களில் வரும் ஒருவகை வலிப்பு; pain in limbs attended with shivering, spasmodic affection.

     [குரங்குவலி → குரக்குவலி.]

குரக்குவலி-த்தல்

குரக்குவலி-த்தல் kurakkuvalittal,    4செ.கு.வி.(v.i.)

   குரக்குவலி உண்டாதல்; to suffer from {kurakkuva} (கொ.வ.);.

     [குரங்கு + வலி.]

குரக்குவாதம்

குரக்குவாதம் kurakkuvātam, பெ.(n.)

குரக்குவலி பார்க்க;See. {kurakkuval}

     “குரக்குவாதம் பிடித்து வலித்து” (கலிங்.138, புதுப்.);.

     [குரக்கு + வாதம்.]

குரக்கொளி

 குரக்கொளி kurakkoḷi, பெ.(n.)

குரக்குவலிபார்க்க;See. {kurakkuvali-,}

     “கைகால் குரக்கொளி வாங்குகிறது” (இழி.);

     [குரக்குவலி→குரக்களி→குரக்கொளி.]

குரங்ககம்

 குரங்ககம் guraṅgagam, பெ.(n.)

   ஓர் அவரை; a kind of bean (சா.அக.);.

     [குரங்குதல் = வளைதல். குரங்கு → குரங்ககம்.]

குரங்கதம்

 குரங்கதம் kuraṅgadam, பெ.(n.)

   மான்; deer (சா.அக.);.

     [குரகு → குரங்கு → குரங்கதம்.]

குரங்கன்

குரங்கன்2 kuraṅgaṉ, பெ.(n.)

குரங்கம் (மலை.); பார்க்க;See. {kurangam}

     [குரங்கு → குரங்கம் → குரங்கள்.]

குரங்கன்சுறா

குரங்கன்சுறா kuraṅgaṉcuṟā, பெ.(n.)

   1.சுறாமீன் வகை; zebra shark’ tawny with spots, attaining 15ft in length.

   2. ஒருவகைக் கடல்மீன்; fawn coloured shark, grey (M.M.850);.

ம. குரங்கன்

     [குரங்கு → குரங்கன் + சுறா.]

     [P]

குரங்கன்சுறா

குரங்கம்

குரங்கம்1 kuraṅgam, பெ.(n.)

   எட்டி (மூ.அ.);; strychnine tree.

     [குரங்கு → குரங்கம்.]

 குரங்கம்2 kuraṅgam, பெ.(n.)

   1. மான்; deer, antelope.

   2. விலங்கு; quadruped, beast.

     [குரகு = ஒலிக் குறிப்பு. குரகு → குரங்கு → குரங்கம்.]

 குரங்கம்3 kuraṅgam, பெ.(n.)

   மலைக்கொன்றை; Darjeeling red cedar.

     [குறங்கு → குரங்கம்.]

 குரங்கம்1 kuraṅgam, பெ.(n.)

   குரங்கு போலக் குறும்புத்தனம் செய்பவன்; mischievous fellow, as a monkey.

     [குரங்கு → குரங்கன்.]

குரங்காட்டம்

 குரங்காட்டம் kuraṅgāṭṭam, பெ.(n.)

   குரங்கின் கூத்து; apish tricks, anties.

அவனைக் குரங்காட்டம் ஆட்டிவைக்கிறான் (உ.வ.);.

     [குரங்கு + ஆட்டம்.]

குரங்காட்டி

 குரங்காட்டி kuraṅgāṭṭi, பெ.(n.)

   குரங்கை ஆடச் செய்து வித்தை காட்டி வாழ்வோன்; one who lives by exibiting monkey.

     [குரங்கு + ஆட்டி.]

குரங்கி

 குரங்கி kuraṅgi, பெ.(n.)

   நிலவு (பிங்.);; lit., on having antelop spote moon. மான்போன்ற

கறையையுடையவன்(உ.வ.);.

     [குரங்கு + குரங்கி.]

குரங்கிரத்தம்

குரங்கிரத்தம் kuraṅkirattam, பெ.(n.)

   1. குரங்கினுடைய அரத்தம்; monkey’s blood.

   2. பூவந்தி மரம்; soapnut tree – Sapindus emarginata (சா.அக.);.

     [(குரங்கு+அரத்தம் – குரக்கரத்தம்→குரக்கிரத்தம்]

குரங்கிலை

 குரங்கிலை kuraṅgilai, பெ.(n.)

   முசுமுசுக்கை இலை; leaf of musumusukkai, leaf of bristle bryony (சா.அக.);.

     [குரங்கு + இலை.]

குரங்கு

குரங்கு kuraṅgu, பெ.(n.)

   குரங்கு; monkey.

     [குரங்கு → குரக்கு (வலித்தல் திரிபு.]

 குரங்கு1 kuraṅgudal,    5 செ.கு.வி.(v.i.)

   1. வளைதல்; to bend, incline.

     “பாடினாள்… இலைப்பொழில் குரங்கின” (சீவக.719);.

   2. தொங்குதல்; to hang down, dangle.

     “குரங்குளைப் பரிமா” (திருவிளை.மெய்க்கா.16);.

   3. தங்குதல்; to repose, rest, lie.

     “நிகள மூழ்கிக் கோட்டத்துக் குரங்க” (சீவக.262);.

    4.குறைதல்; to diminish.

     “குரங்கா வாற்ற லெம்பியோ தேய்ந்தோன்” (கம்பரா.பாசப்.5);.

   5.இரங்குதல் (சது.);; to frelent, grieve, feel sorry.

   6.தாழ்தல்; to droop, wither.

     “சடப்பட்டுக் குரங்கி வெந்தது (சீவக.719);”.

     [குல் → குர → குரங்கு = குரங்குதல் = குன்றுதல் = வளைதல்.]

 குரங்கு2 kuraṅgu, பெ.(n.)

   1.வளைவு; bending, inclining.

     “குரங்கமை யுடுத்த மரம்பயிலடுக்கத்து” (சிலப்.10,157);.

   2. வானரம்; monkey, ape.

     “குரங்கு

செய்கடற் குமரியம் பெருந்துறை” (மணி.5,37);.

   3. முசுமுகக்கை (மலை.);; bristy bryony.

   4.கொக்கி (கொ.வ.);; hook, clasp, like in jewelry.

   ம.குரங்க;   க.கொங்கு, குரங்கி, கோடக;   தெ.கோதி, கோந்தி, கோமதி;   து. கொடங்ச, கொடங்சு, குரங்க;பட.

   கொரங்கு;   துட.கவரக்;கோத. கொர்க்.

     [குல் → குர → குரங்கு = குரங்கு = வளைவு.]

 குரங்கு3 kuraṅgudal,    5 செ.குன்றாவி.(v.t.)

   வளைத்தல்; to bend தென்னிலங்கை சாரங்கமே குரங்காச்சாதித்தான்” (மான்விடு.7);.

     [குல் → குர → குரங்கு.]

குரங்கு மஞ்சனத்தி

 குரங்கு மஞ்சனத்தி kuraṅgumañjaṉatti, பெ.(n.)

   ஒரு வகை நுணா; a kind of dying mulberry (சா.அக.);.

     [குரங்கு + மஞ்சணத்தி.]

குரங்கு மூஞ்சிப்பாலை

 குரங்கு மூஞ்சிப்பாலை kuraṅgumūñjippālai, பெ.(n.)

   கணுப்பாலை; monkey face paulay (சா.அக.);.

     [குரங்கு + மூஞ்சி + பாலை.]

குரங்குகடியன்

 குரங்குகடியன் kuraṅkukaṭiyaṉ, பெ.(n.)

   குரங்கு அல்லது அணிலால் முனையில் தீண்டப்பட்டுப் பழுதுற்ற தேங்காய்; a coconut injured at the top, as by a monkey or squirrel (செ.அக.);.

     [குரங்கு+கடியன்.]

 குரங்குகடியன் guraṅgugaḍiyaṉ, பெ.(n.)

   குரங்காலேனும், அணிலாலேனும் முனையிற் தீண்டப்பட்டு பழுதுற்ற தேங்காய்; a coconut injured atthe top, as by monkey or squirrel (யாழ்ப்.);.

     [குரங்கு + கடியன்.]

குரங்குகா

 குரங்குகா kuraṅkukā, பெ.(n.)

   முகமுசுக்கை இலை; leaf of bristle – Mukia scabrella alias Bryonia scabra (சா.அக.);.

     [குரங்கு+உகா]

=

குரங்குகை

__,

பெ.(n.);

   மெலிந்த கை; the wasting of the muscles of the hand-Ape-hand (சா.அக.);.

     [குரங்கு+கை]

குரங்குக்கல்

 குரங்குக்கல் kuraṅgukkal, பெ.(n.)

சுவரில்

   உத்தரம், விட்டம் தாங்க அடியிற் பதிக்கப்படும் கல்(மது.வழக்.);; stone to support the beam of a roof.

     [குரங்கு + கல்.]

குரங்குக்கா

 குரங்குக்கா kuraṅgukkā, பெ.(n.)

   முக முசுக்கை; leaf of bristle brynory (சா.அக.);.

மறுவ. குரங்கிலை

     [குல் → குர → குரங்கு + (காய்);கா.]

குரங்குக்காய்

 குரங்குக்காய் kuraṅgukkāy, பெ.(n.)

   விளங்காய்; wood apple (சா.அக.);.

     [குல்→குர→குரங்கு+காய்.]

குரங்குக்கை

 குரங்குக்கை kuraṅgukkai, பெ.(n.)

   சூப்பிய கை; the wasting of the muscles of the hand, Apehand (சா.அக.);.

     [குரங்கு + கை. குரங்குதல் = குன்றல். குறைதல், கும்பிப் போதல்.]

குரங்குக்கொடி

 குரங்குக்கொடி kuraṅgukkoḍi, பெ.(n.)

   ஆனைத்திப்பிலி; monkey creeper (சா.அக.);.

     [குரங்கு + கொடி.]

குரங்குச்சத்துவம்

குரங்குச்சத்துவம் kuraṅguccattuvam, பெ.(n.)

   பெண்களின் பத்து மெய்ப்பாடு (சத்துவம்);களுள் ஒன்று (கொக்கோ.4:27);; the natural disposition of a woman, classed under the monkey type, one of pattucattuvam.

     [குரங்கு + சத்துவம்.]

குரங்குச்சம்பந்தம்

 குரங்குச்சம்பந்தம் kuraṅguccambandam, பெ.(n.)

   குரங்குப்பிடி முறைமை; the principle of monkey’s grasp.

     [குரங்கு + சம்பந்தம்.]

குரங்குச்சேட்டை

 குரங்குச்சேட்டை kuraṅguccēṭṭai, பெ.(n.)

   குறும்பு செய்கை; mean, monkeyish tricks, Apish mischief.

     [குரங்கு + சேட்டை. த. கெடு → செடு → சேடு →சேட்டை.]

குரங்குச்சொறி

 குரங்குச்சொறி kuraṅguccoṟi, பெ.(n.)

   பூனைக்காலி; monkey’s itch (சா.அக.);.

     [குரங்கு + (சொற்றி); சொறி.]

குரங்குடாப்பு

 குரங்குடாப்பு kuraṅkuṭāppu, பெ.(n.)

   கதவு, பலகணி மேல் மழை, வெயில்களைத் தடுக்க அமைக்கும் மறைப்பு; projection over a window or door for protection from sun and rain (செ.அக.);.

     [குரங்கு+E. Top. டாப்பு]

குரங்குண்டகி

 குரங்குண்டகி guraṅguṇṭagi, பெ.(n.)

   மலை நாரத்தை; trifoliate, winged lime (சா.அக.);.

     [குரங்கு + உண்டகி-குரங்குண்டகி (வளைவுண்டது. வளைவுற்றது);.]

குரங்குதின்னி

 குரங்குதின்னி kuraṅgudiṉṉi, பெ.(n.)

   கருங் குரங்குகளைத் தின்பவராகிய கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைகளில் வாழுமோர் இன மக்கள்; A aboriginal tribe in the hills of Coimbatore, as eaters of the black monkey.

     [குரங்கு + தின்னி.]

குரங்குத்தாழ்ப்பாள்

 குரங்குத்தாழ்ப்பாள் kuraṅguttāḻppāḷ, பெ.(n.)

   கொக்கித் தாழ்ப்பாள்; door hook.

     [குரங்கு + தாழ்ப்பாள்.]

குரங்குநாபி

 குரங்குநாபி kuraṅgunāpi, பெ.(n.)

   மான்மணத்தி (கஸ்தூரி);; a strong scented substance found in a bag attached to the belly of the deer just above the navel (சா.அக.);.

     [குரங்கு +(நாவி); நாபி.]

குரங்குப்பட்டை

 குரங்குப்பட்டை kuraṅguppaṭṭai, பெ.(n.)

   கூரை யோடுகள் கலைந்து போகாதபடி முகட்டிலிருந்து அடிவரையிற் கட்டும் சுண்ணாம்புப் பட்டை; long narrow construction of lime running parallel from the top to the base of the rooftoprevent the tiles from being dislodged.

     [குரங்கு + பட்டை.]

குரங்குப்பலா

 குரங்குப்பலா kuraṅguppalā, பெ.(n.)

   சிறுபலா; small jack (சா.அக.);.

     [குரங்கு + பலா.]

குரங்குப்பிடி

குரங்குப்பிடி kuraṅguppiḍi, பெ.(n.)

   1. விடாப்படி; lit. grasp of a monkey, firm grasp.

   2. ஒட்டாரம் (பிடிவாதம்);; doggedness, stubborness, pertinacity, obstiriacy.

     [குரங்கு + பிடி.]

குரங்குப்புத்தி

 குரங்குப்புத்தி kuraṅgupputti, பெ.(n.)

   நிலையற்ற மனப்பாங்கு; roving tendency, unsteadiness.

     [குரங்கு + (புலம் → புந்தி); புத்தி.]

குரங்குமச்சு

 குரங்குமச்சு kuraṅgumaccu, பெ.(n.)

   கூரையின் கீழ் அமைக்கும் மச்சு; loft under the thathed roof of a house (இ.வ.);.

     [குரங்கு + மச்சு.]

குரங்குமஞ்சணாத்தி

 குரங்குமஞ்சணாத்தி kuraṅkumañcaṇātti, பெ.(n.)

ஒரு வகை நுணா,

 a kind of dyeing mulberry (சா.அக.);.

     [குரங்கு+மஞ்சணாத்தி]

     [P]

குரங்குமஞ்சணாறி

 குரங்குமஞ்சணாறி kuraṅgumañjaṇāṟi, பெ.(n.)

   ஒருவகைச் சிறுமரம்; kamela.

     [குரங்கு + மஞ்சல் + நாறி.]

குரங்குமஞ்சள்

 குரங்குமஞ்சள் kuraṅgumañjaḷ, பெ.(n.)

   ஒருவகை மஞ்சள்; west coast turmeric.

     [குரங்கு + மஞ்சள்.]

குரங்குமஞ்சள் விதை

 குரங்குமஞ்சள் விதை kuraṅkumañcaḷvitai, பெ.(n.)

   சாப்பிர விதை; butter seed;

 monkey turmeric tree-seed.

     [குரங்கு+மஞ்சள்+விதை.]

இதில் இருந்து சாயம் இறக்கப்படும். இவ்விதை வெள்ளை நோய்க்குச் சிறந்த மருந்து. காய்ச்சலுக்கும் மருந்தாகக் கொடுக்கலாம் (சா.அக.);.

குரங்குமார்க்கம்

குரங்குமார்க்கம் kuraṅkumārkkam, பெ.(n.)

   குதிரை நடையுள் ஒன்றான வானரகதி; a particular pace of the horse.

     “கூறரு மல்லமார்க்கமயின்மார்க்கங் குரங்குமார்க்கம்” (திருவாலவா.28, 58); (செஅக.);.

     [குரங்கு+மார்க்கம்.]

குரங்குமுசு

 குரங்குமுசு kuraṅkumucu, பெ.(n.)

   முசுமுசுக்கை; leaf of bristle bryony – Mukia scabrella alias (சா.அக.);.

     [குரங்கு+முக]

குரங்குமுரசு

 குரங்குமுரசு kuraṅgumurasu, பெ.(n.)

   இரு குரங்கின் கை அதாவது முசுமுசுக்கை; bristle bryony (சா.அக.);.

     [குரங்கு + முரசு.]

குரங்குமூஞ்சி

குரங்குமூஞ்சி kuraṅgumūñji, பெ.(n.)

   1. அழகில்லா முகம்; monkey face, ugly face.

   2. குரங்கு மஞ்சணாறி பார்க்க;See. {kuraigய mañjanāri -}

குரங்குமூஞ்சிக்காய்

 குரங்குமூஞ்சிக்காய் kuraṅgumūñjikkāy, பெ.(n.)

   முகப்பிற் சிவந்த மாங்காய்; red-faced mango fruit (இ.வ.);.

     [குரங்கு + மூஞ்சி + காய்.]

குரங்குமூஞ்சிப்பூ

 குரங்குமூஞ்சிப்பூ kuraṅgumūñjippū, பெ.(n.)

   மகிழம்பூ மரம்; ape face flower (சா.அக.);.

     [குரங்கு + மூஞ்சி + பூ.]

குரங்குமூஞ்சிமரம்

 குரங்குமூஞ்சிமரம் kuraṅgumūñjimaram, பெ.(n.)

   கபிலப்பொடி மரம்; monkey face tree (சா.அக.);.

     [குரங்கு + மூஞ்சி + மரம்.]

குரங்குவலி

 குரங்குவலி kuraṅguvali, பெ.(n.)

குரக்குவலி பார்க்க;See. {kurakkuvas,}

     [குரக்குவலி + குரங்குவலி.]

குரசு

 குரசு kurasu, பெ.(n.)

   குதிரைக் குளம்பு (பிங்.);; horse’s hoof.

     [குல் → குர → குரசு(வளைவு, வட்டம்);.]

குரச்சை

 குரச்சை kuraccai, பெ.(n.)

குரசு (பிங்.); பார்க்க;See. {kurasu.}

     [குரக → குரச்சை.]

குரஞ்சனம்

 குரஞ்சனம் kurañjaṉam, பெ.(n.)

   வெண்காரம்; boгах (சா.அக.);.

     [குல்→குர→குரஞ்சணம்.]

குரடன்

 குரடன் kuraḍaṉ, பெ.(n.)

சக்கிலியன் (யாழ்.அக.);: cobbler.

     [குரடு + குரடன்.]

குரணம்

 குரணம் kuraṇam, பெ.(n.)

   முயற்சி; effort, perseverance.

     [குல் → குரு → குரணம்.]

 குரணம் kuraṇam, பெ.(n.)

   முயற்சி (யாழ்.அக.);; effort, perseverance.

     [Skt.gurana → த.குரணம்.]

குரணாசனி

 குரணாசனி kuraṇācaṉi, பெ.(n.)

   குரலோசையைக் கெடுக்கும் உணவு வகை முதலியன; food substances that affect the voice of the throat (சா.அக.);.

     [குரல் + நாசனி.]

குரண்டகம்

குரண்டகம் guraṇṭagam, பெ.(n.)

   1. மருதோன்றி; henna with green flowers.

   2. பெருங்குறிஞ்சி(பிங்.);; a species of conehead.

   3.பழுப்புநிறம்; yellowish red colour.

   4. ஓதம்; hydrocele.

   5 மஞ்சள் வாடாமல்லிகை; yellow amaranth.

   ம. குறிஞ்ஞி;   க. கொரடெ, கோரடெ, கோரண்ட, கோரண்டி,கோரண்டெ;தெ. கோரண்ட கோராட் து. கோரண்மெ, கோரடெட்

{Skt. kurunta, kuruntaka, Pkt. korinta.}

     [குரல் = கொத்து குரல் → குரள் → குரண்டு →

குரண்டகம்.]

குரண்டநாசி

 குரண்டநாசி kuraṇṭanāci, பெ.(n.)

   பருத்திச்செடி; countery cotton plant (சா.அக.);.

     [குரண்ட + நாசி (நாளி → நாசி);.]

குரண்டநாசினி

 குரண்டநாசினி kuraṇṭanāciṉi, பெ.(n.)

   பருத்திச் செடி; country cotton plant – Gossypium herbaceum (சா.அக.);.

குரண்டம்

குரண்டம்1 kuraṇṭam, பெ.(n.)

குரண்டகம் பார்க்க;See. {kurangagam.}

     [குறல் → குரள்→குரண்டு → குரண்டகம்.]

 குரண்டம்2 kuraṇṭam, பெ.(n.)

   கொக்குவகை (திவா.);; Indian crane.

     [குல் → குர(வளைவு);→குரண்டு→குரண்டம்.]

குரண்டி

 குரண்டி kuraṇṭi, பெ.(n.)

   செடிவகை; ashrub.

     [குரண்டு → குரண்டி.]

குரதாரம்

குரதாரம் kuratāram, பெ.(n.)

   எட்டு வகையான மாநிரயங்களுள் ஒன்று (சி.போ.பா.2, 3);; a hell, one of eight {}.

த.வ.பெருநிரயம்.

குரத்தம்

 குரத்தம் kurattam, பெ.(n.)

ஆரவாரம் (சது.);

 noise, clamour, uproar.

     [குல் → குர → குரல் → குரற்று → குரற்றம் → குரத்தம்.]

குரத்தி

குரத்தி kuratti, பெ.(n.)

   1. குருவின் மனைவி; wife of a preceptor or priest.

     “குரத்தியை நினைத்த நெஞ்சை” (திருவிளை.அங்கம்.19);.

   2. குருவின் பதவியை ஏற்றிருப்பவள்; precepress priestess.

   3. தலைவி (திவா.);; mistress lady of the house.

     [குரவன் → குரத்தி.]

குரத்திகள்

 குரத்திகள் gurattigaḷ, பெ.(n.)

   சமணப்பெண் துறவியர்; ஆங்கிலம் சமணப்பெண் ஆசிரியை; female ascetic of jain order.

     “ஶ்ரீ திருமலைக் குரத்திகள் மாணாக்கன்” (கழுகுமலைக்கல்வெட்டுகள்);.

     [குரத்தி + கள்.]

குரநாசம்

 குரநாசம் kuranācam, பெ.(n.)

   வெங்காயம்; onion (சா.அக.);.

குரந்திகம்

 குரந்திகம் kurantikam, பெ.(n.)

   செந்நாயுருவி; red Indian burr – Achyranthes aspera (சா.அக.);.

 குரந்திகம் gurandigam, பெ.(n.)

   செந்நாயுருவி; red Indian purr (சா.அக.);.

     [குல் → குரு = செந்நிறம். குரு → குர→ குரந்து →குரந்திகம்.]

குரபகம்

 குரபகம் kurapakam, பெ.(n.)

   சிகப்பு வாடா மல்லிகை; red amaranth (சா.அக.);.

குரபம்

குரபம் kurapam, பெ.(n.)

   1. எள்; seasamum.

   2.ஒரு பூடு; a kind of barleria (சா.அக.);.

குரப்பம்

 குரப்பம் kurappam, பெ.(n.)

   குதிரை தேய்க்கும் கருவி; curry comb.

   தெ.கொரப்பழு;   க.கொரப்ப;ம.குரப்ப

     [குல் → குரப்பு → குரம்பம்.]

குரப்புல்

 குரப்புல் kurappul, பெ.(n.)

   தருப்பைப்புல்; sacrificial grass (சா.அக.);.

     [குல் → குர → குரல் + புல் – குரற்புல் → குரப்புல்.]

குரப்புவெட்டி

குரப்புவெட்டி kurappuveṭṭi, பெ.(n.)

   வரிவகை; a tax (S.I.I.viii,322);.

     [குரம்பு + வெட்டி.]

குரப்பூலிகம்

 குரப்பூலிகம் gurappūligam, பெ.(n.)

   சரக் கொன்றை; Indian laburnam (சா.அக.);.

     [குரப்பு + ஊலிகம்]

குரமடம்

 குரமடம் kuramaḍam, பெ.(n.)

   பெருங்காயம்; asafoetida.

     [குல் → குரு + (மட்டு);மட்டம் → குரமட்டம் → குரமடம்.]

குரமாலிங்கம்

 குரமாலிங்கம் kuramāliṅgam, பெ.(n.)

   பாதிரி; trumpet flower tree (சா.அக.);.

     [குரல் → குரம் + ஊலிகம் – குறமூலிகம் → குரமாலிகம்.]

குரமுளை

 குரமுளை kuramuḷai, பெ.(n.)

   வித்தினின்று தோன்றும் முளை; shoot, sprout.

     [குரு + முளை → குரமுளை.]

குரமேனிகம்

 குரமேனிகம்  kuramēṉikam, பெ.(n.)

   கோழிக்காற்பூடு; fowl’s leg plant(சா.அக.);.

குரமேலனிகம்

 குரமேலனிகம் guramēlaṉigam, பெ.(n.)

   கோழிக்காற் பூடு; fowl’s legplant (சா.அக.);.

மறுவ. குமரகன்பூடு

     [குறமூலிகம் → குரமேனிகம்(பர்திரிப்பூ போன்றது.]

குரம்

குரம்1 kuram, பெ.(n.)

   1. தருப்பை; dharba grass.

   2. பாகல் பார்க்க; balsam bear.

     [குல் → குர → குரம்.]

 குரம்1 kuram, பெ.(n.)

   குதிரைக் குளம்பு; horses hool.

     “குரந்தரு விசையினர் மொண்டு” (இரகு. இரகுவுற்.56);.

   2. பசு (திவா.);; cow.

     [குல் → குர → (குரசு); → குரம் (வளைவு);.]

குரம்பி

குரம்பி kurambi, பெ.(n.)

   1. அணைக்கட்டு; artificial bank, dam, couseway, bund.

   2. ஆற்றினின்று பாசனக் கால்களுக்கு நீரைத் திருப்பும் அணை; dam of sand, brushwood, loose stones, etc., running out from the banks of a river diagonally for a distance upstream, to turn the water into an irrigation channel.

   3. வரப்பு; ridge in a paddy field or garden.

     “மாநீர்க் குரம்பெலாம் செம்பொன்” (கம்பரா.நாட்டும்.2);.

   4. எல்லை; boundary limit.

     “குரம்பெழுந்து குற்றங் கொண்டேறார்” (நாலடி.153);.

     [குல் → குர → குரம்பு.]

குரம்பு

குரம்பு kurampu, பெ.(n.)

   1. நீரைத் தேக்கி வைக்கும் அணைக்கட்டு; artificial bank, dam, causeway, bund.

   2. ஆற்றிலிருந்து பாசனக் கால்வாய்களுக்கு நீரைத் திருப்பும் அணை; dam of sand, brushwood, loose stones, etc., running out from the banks of a river diagonally for a distance upstream, to turn the water into an irrigation channel.

   3. வரப்பு; ridge in a rice field or garden.

     “மாநீர்க் குரம்பெலாம் செம்பொன்”(கம்பரா.நாட்டுப்.2);,

   4. எல்லை; boundary, limit.

     “குரம்பெழுந்து குற்றங்கொண்டேறார்” (நாலடி.153); (செ.அக);.

     [குரை – குரம்பு]

குரம்பை

குரம்பை1 kurambai, பெ.(n.)

   1. சிறுகுடில்; small hut, hovel, shed.

     “இலைவேய் குரம்பை” (மதுரைக். 310);.

   2. பறவைக்கூடு; birds nest.

   3. உடல்; body.

     “பொருந்திய குரம்பை தன்னைப் பொருளெனக் கருத வேண்டா” (தேவா.488,1);.

   4. தவசப் கூடு (தானியக்கூடு);; granary, store house for grain.

     “நெற்குவை குரம்பையி னிரப்பு வித்தனார்”(கந்தபு. நாட்டு.26);.

   ம. குரவு;   க.கொம்பெ;தெ.கொம்ப.

     [குல் → குர → குரம்பு → குரம்பை.]

 குரம்பை2 kurambai, பெ.(n.)

   இசைவகை; a melody type.

     [குரம்பு → குரம்பை.]

குரரம்

குரரம் kuraram, பெ.(n.)

   1. ஒரு பூடு; plant.

   2. பெண் பருந்து; a female hawk or eagle.

   3. பெண்ணாடு; ewe, sheep. (சா.அக.);.

     [குரல் = (கொத்து, திரட்சி); திரண்ட பெண். குரல் → குரலம் → குரரம்(கொ.வ.);.]

குரரி

குரரி kurari, பெ.(n.)

   பறவைவகை; a kind of bird.

     “வானிற் சிறுகுரரி நின்றொதுங்கி” (விறலிவிடு.5.);.

     [குரலி → குரரி.]

குரற்கணப்பு

 குரற்கணப்பு kuraṟkaṇappu, பெ.(n.)

   குளிர்ச்சியால் தொண்டை கம்மல்; harsh, rough, grating voice, as when the throat is affected with cold (சா.அக.);.

இது காற்றுக் கோளாறினாலும் அதிகக் கூச்சலிடு வதாலும் உண்டாகி, குரல்வளையில் தங்கிப் பேச் சொலியை மாற்றும்.

     [குரல் + கனைப்பு.]

குரற்கந்து

 குரற்கந்து kuraṟkandu, பெ.(n.)

   சர்க்கரை அல்லது தேன் சேர்த்துப் பக்குவப்படுத்திய பனிநீர்ப்பூ ரோசாப்பூ; a confection of rose prepared in sugar or honey (சா.அக.);.

மறுவ. குல்கந்து

     [குரல் + கந்து. குரலை வலுப்படுத்துவது.]

குரற்கம்மல்

 குரற்கம்மல் kuraṟkammal, பெ.(n.)

   குரல்வளையில் உள்ளிரம் வறண்டு பேசமுடியாமல், கம்மிய பேச்சையுண்டாக்கும் ஒரு தொண்டைநோய்; a disease of the larynx due to dryness and the inablity to talk except with hoarse voice (சா.அக.);.

     [குரல் + கம்மல்.]

குரற்செப்பு

 குரற்செப்பு kuraṟceppu, பெ.(n.)

   குரள்வளை; glottis (சா.அக.);.

மறுவ:குரல்வளை

     [குரல் + செப்பு.]

குரலடைப்பு

குரலடைப்பு kuralaḍaippu, பெ.(n.)

   1. குரல் கம்முகை; hoarseness.

   2. பேசமுடியறாமற்போகை; loss of speech.

     [குரல் + அடைப்பு.]

குரலதிர்ச்சி

 குரலதிர்ச்சி kuraladircci, பெ.(n.)

   குரலசைவு; vocal vibration (சா.அக.);.

     [குரல் + அதிர்ச்சி.]

குரலி

குரலி kurali, பெ.(n.)

   1. தொண்டைக் குழி; glottis.

   2. பாதிரி மரம்; trumpet flower tree (சா.அக.);.

     [குரல் + குரலி.]

குரலிசைக்குறியீடு

 குரலிசைக்குறியீடு kuralisaikkuṟiyīṭu, பெ.(n.)

   பழந்தமிழிசையில் ஏழிசை ஒலிப்புச் சுரங்களான சரிகமபதநி என்னும் இசைநிரல் (சரளிவரிசை);; sa, ri, ga, ma, pa, dha, ni the seven musical basic tones of ancient Tamil music system.

     [குரலிசை + குறியீடு.]

குறிப்பிட்ட ஏழு பறவை விலங்கினங்களின் ஓசையை அடியொற்றி ஒலிப்பு ஒப்புமை கருதி நெருங்கிய எழுத்தொலிப்பாக ஏழிசைக்கு இடப்பட்ட குறியீடுகள் குரலிசைக் குறியீடுகள் எனப்பட்டன. குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்னும் ஏழனுள் கைக்கிளைக்குரிய ‘க’ ஓசை பெருநாரையின் குரலோசையைக் குறிக்கும். ஆரியர் வருகைக்குப் பின் இசைநூல்கள் இதனைக் குதிரையின் கனைப்பொலியாகக் குறிப்பிட்டிருப்பது ஏற்புடையதன்று.

பிற்காலத்தில் கருநாடக இசையென்று பெயர் பெற்ற பழந்தமிழிசையில் ஏழிசையின் (குரலிசையின்); குறியீடுகள் ச, ரி, க, ம, ப, த, நி என்றே இருந்தன என்பதைப் பின்வரும் சிகண்டியாரின் பஞ்சமரபு நூற்பாவிலிருந்தும் அறியலாம்.

சரிகம பதநியென் றேழெழுத்தாற் றானம்

வரிபரந்த கண்ணினாய் வைத்துத் – தெரிவரிய

ஏழிசையுந் தோன்று மிவற்றுள்ளே பண்பிறக்குஞ்

சூழ்முதலாம் கத்தத் துளை.

மேற்கண்ட இசைக் குறியீடுகளுக்கு முறையே குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்று பெயர் சூட்டப்பட்டன. மேல்கட்டையில் (மேல் ஸ்தாயி); பாடுவதைத் தாரத்தாயி என்று இன்றும் கூறுகின்றனர். இதில் ஏழாவது பெயர் தாம் ஆளப்படுதல் காண்க. குரல் என்பது வண்டின் ஒரு சீரான குரலை (ச);

குறித்தது. துத்தம் என்பது கிளியைக் குறித்த தத்தை என்ற சொல்லின் திரிபாய் கிளியின் ஓசையைக் (ரி); குறித்தது. கைக்கிளை என்பது கூட்டமாகவோ துணைப் பறவையுடனோ காணப்படாமல் தனித்து காணப்பட்டு, கனைப்பதுபோல் ஒசையெழுப்பும் பெருநாரைப் பறவையின் ஓசையைக் (க); குறித்தது. உழை என்பது உட்டுளையுடைய துதிக்கையை உயர்த்தி எழுப்பும் யானையின் மென்மை கலந்த (ம); பிளிறல் ஓசையைக் குறித்தது. இனி என்பது அசை நடை மயில் அடங்கி அகவும் இடைவிட்ட (ப); அகவலோசையைக் குறித்தது (இளிதல் – தாழ்தல், அடங்குதல்);. விளரி என்பது கன்றினை நினைந்து இனிமையாய்க் கதறும் மாட்டின் (த); குரலோசையைக் குறித்தது (விளர்தல் – கதறல்);. தாரம் என்னும் நீட்சி குறித்த சொல் ஒரே ஓசையை மீண்டும் மீண்டும் நீட்டித்தொலிக்கும் ஆட்டின் குரலோசையைக் (நி); குறித்தது.

   இனி, இக்காலத்தில் சரிகமபதநி என்பனவற்றி லுள்ள ஸ, க, த என்னும் ஒலிப்புகள் தமிழில் இல்லை என்பார் கூற்றும் ஏற்கத்தக்கதன்று. தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே நம் முன்னோர் தமிழில் மயங்கா மரபின் எழுத்துகளைக் காட்டியுள்ளனர். ஸ தமிழ் ஒலிப்பன்று. க, த, மொழியிடையிலும், ஈற்றிலும் மெல்லொலி பெறும் மாற்றொலிகள் (allophone);. எழுத்துகளுக்கு இசையில் மாத்திரை அளவே உரிய அளபாவதால் ‘அலகு’ எனப்படும். தமிழ் வல்லெழுத்துகளைப் பொருத்தவரை பிறங்கொலி (voiced: ka → ga); போன்றவை எத்தகைய பொருள் மாற்றமும் தருவனவல்ல;வெறும் மாற்றொலியன்களே (allophone); ஆகும்.

மாத்திரை அளவும்கூட பறவை விலங்குகளின் ஒலி ஒப்புமை கருதியே சரிகமபதநி எனக் குரலின் குறியீடுகளாகப் பழந்தமிழில் அமைக்கப்பட்டன. இதனை அறியாமல் இவற்றை வடமொழிச் சார்பு உடையன என்று கூறுவது முற்றிலும் அறியாமையால்

நேர்ந்த தவறு எனலாம்.

குரலின்மை

 குரலின்மை kuraliṉmai, பெ.(n.)

   குளிர்ச்சியால் தொண்டை கம்மல்; harsh rough, grating voice, when the throat is affected with cold (சா.அக.);.

     [குரல் + இன்மை.]

குரலிராவம்

 குரலிராவம் kuralirāvam, பெ.(n.)

   எதிரொலி பாயும் குரலோசை; vocal resonance (சா.அக.);.

     [குரல் + இராவம்.]

குரலீனம்

 குரலீனம் kuralīṉam, பெ.(n.)

   கழுதை; ass, so

 called from its hoarse voice (சா.அக.);.

     [குரல் + ஈனம்.(அருவருப்பான குரலோசை கொண்டது);.]

குரலுறுப்பு

 குரலுறுப்பு kuraluṟuppu, பெ.(n.)

   ஒசையின் உறுப்பு; organ of voice, larynx (சா.அக.);.

     [குரல் + உறுப்பு.]

குரலெடு-த்தல்

குரலெடு-த்தல் kuraleḍuttal,    4 செ.கு.வி.(v.i.)

   குரலை மேலே எடுத்து நிறுத்துதல்; to lift up the voice, ascend the musical scale, maintain a high pitch in singing.

மறுவ. குரல்வாங்கு, குரல்விடு

     [குரல் + எடு-.]

குரலெழுப்பு-தல்

குரலெழுப்பு-தல் kuraleḻupputal,    5 செ.கு.வி. (v.i.)

   எதிர்த்துக் கருத்துத் தெரிவித்தல்; raise one’s voice against something;voice one’s protest. oftopus offégé

குரல் கொடுக்க ஒரு சிலரே முன்வந்தார்கள்.

     [குரல்+எழுப்பு-தல்.]

குரலோசை

 குரலோசை kuralōcai, பெ.(n.)

   குரலின் ஓசை; vocal sound;voice (சா.அக.);.

     [குரல்+ஓசை]

குரல்

குரல்1 kural, பெ.(n.)

   1. கதிர்; cornear, spike.

     “வரகி னிருங்குரல்” (மதுரைக்.272);.

   2. பூங்கொத்து; flower cluster.

     “கமழ்குரற் றுழாய்” (பதிற்றுப்.31,8);.

   3.ஒன்றோடொன்றற்குள்ள சேர்க்கை; link, tie, band.

     “குரலமை யொருகாழ்” (கலித்.54.7);.

   4. தினை, வாழை முதலியவற்றின் தோகை; stalk, sheath of millet or plantain.

     “பரூஉக்குரற் சிறுதினை” (புறநா.168:6);.

   5. தினை (மலை.);; Italian millet.

   6. பாதிரி (மலை.); பார்க்க;See. {pâtiri}

   ம.குரல்;   க.கொலெ;   தெ. கொர்ரலு;து.கொர்லு.

 E. Craw, the threat of fowle;

 Dan. kroe, G. hragen, Scot. craog, Sans. kreeva, the neck E. crop, A.S. crop, Dut. crop the craw of a bird.

     [குல் → குர → குரல் (கொத்து);.]

 குரல்2 kural, பெ.(n.)

   1. பெண்டிர் தலை முடி (பிங்.);; woman’s hair.

     “நல்லார் குரனாற்றம்” (கலித்.88);.

   2. மகளிர் குழல் முடிக்கும் ஐவகையுள் ஒன்று (த.வெ.9,35,உரை.);; one of the five modesin which a woman dresses her hair.

   3. பறவையின் இறகு (திவா.);; feather, plumage.

     [குல் → குர → குரல்(காத்து, திரள்);.]

 குரல்3 kural, பெ.(n.)

   1. பேச்சொலி; voice.

     “சேவல் மயிற்பெடைக்குப் பேசும் சிறுகுரல் கேட்டு” (நளவெண்.சுயம்வ.41);.

   2. மொழி; word:

     “யாவருந் தண்குரல் கேட்ப” (கலித்.142:9);.

   3.குரல்வளம்; tone in singing.

     “காமன் காமுறப்படுங் குரறுகுமிது.” (சீவக.1218);.

   4. ஏழிசையுள் முதலாவது (திவா.);; first note of the Indian gainut.

   5. மிடறு; throat, wind pipe.

     “மணிக்குர லறுத்து” (குறுந்,263);.

   6. ஓசை; sound.

     “இடிகுரன் முரசு” (கம்பரா.எழுச்சி.1);.

   7. கிண்கிணிமாலை(பிங்.);; string of jingling bells.

   ம.குரல்;   க.கொரல், கொரள்;   தெ. குர்ம, கொண்டு;   து.குரல், குரெலு;   குட. கொர;   கோண். குர்ங்கா;பிரா. குட் (தொண்டை);.

     [குல் → குரு (தோன்றுதல், ஒலித்தல்);→குர→குரல்.]

 kur-al, Tam, noise, voice, root kur to make a noise. Comp. Sans. kar to shout;

 gar to sound. Possibly the Tam. {köri,} the gallus gallinaceous, is connected with kur, and if so, the word gallus itself will appear to be related to {köri,} gallus being instead of garrus, comp. garrulus. The ultimate root of the Tam. kurappears to be ku, to sound (probably a mimetic word);, as in ku-y-il, the Indian cuckoo (C.G.D.F.L. Pg.584);.

 குரல்4 kural, பெ.(n.)

   1.கற்றை; dense mass.

     “குரற் கூந்தல்” (கலித்.72:20);.

   2. யாழ் நரம்பு; string of a lute.

   3. எழுத்து; letter.

     [குரு → குரல்.]

குரல் கொடு-த்தல்

குரல் கொடு-த்தல் kuralkoḍuttal, செ.கு.வி.(v.t.)

   1. மறுமொழி தரும் முறையில் குரல் எழுப்புதல்;   கூப்பிடுதல்; respond to a call;

 call.

   2. எதிர்த்து கருத்துத் தெரிவித்தல்:

 raise one’s voice (one’s protest);.

   3.(திரைப் படத்தில்); சொந்த குரலில் பேசவியலாத நடிகர்களுக்குப் பிறர் தம்குரல் தந்து பேசுதல்;     [குரல்+கொடு]

குரல் திரிபு

 குரல் திரிபு kuraltiribu, பெ.(n.)

   குரலிசையில் செய்யப்படும் குரல்நிலை வேறுபாடு (கிரகபேதம்);; modulation of tonal differences in vocal music.

     (குரல்+திரிபு);

குரல் நிலை கருதி பெட்டியில் உள்ள குறிப்பிட்ட ஒரு நிலைக்கேற்ப குரலை நிறுத்திக்கொண்டு பாடாமல் வெவ்வேறு குரல் நிலைகளில் பாடும் திறமை குரல்திரிபு எனப்படும். இதனை வடமொழியாளர் கிரகபேதம் என்பர். பழந்தமிழரின் இசைக்கலை வளர்ச்சி நுட்பத்திற்கும்திட்பத்திற்கும் குரல்திரிபு சான்று பகர்வதாகும்.

குரல்கம்மல்

 குரல்கம்மல் kuralkammal, பெ.(n.)

   குரல்வளையில் உள்ளீரம் வறண்டு பேசமுடியாமல் கம்மிய பேச்சையுண்டாக்கும் ஒரு தொண்டை நோய்; a disease of the larynx due to dryness (சா.அக.);.

     [குரல் + கம்மல்.]

குரல்கம்மு-தல்

குரல்கம்மு-தல் kuralkammudal,    5 செ.கு.வி.(v.i.)

   குரல் வறண்டு பேசமுடியாமல் இடர்ப்படுதல்; to inconvenience to speak because od dryness in the larynx(சா.அக.);.

     [குரல் + கம்மு.]

குரல்காட்டு-தல்

குரல்காட்டு-தல் kuralkāṭṭutal,    5 செ.கு.வி. (v.i.)

   1. அழைத்தற் பொருட்டுக் குறிப்பொலி காட்டுதல்; to call a person by hemming and hawking.

   2. பறவையொலித்தல்; to Crow, as a cock;to Screech, as an owl.

   3. பெருஞ்சத்தமிடுதல்; to cry aloud, whoop, roar, bellow.

   4. பதில் தரும் முறையில் குரல் எழுப்புதல்;கூப்பிடுதல்; respond to a call;call.

சீக்கிரம் வந்து விடுகிறேன் என்று குரல் கொடுத்துக் கொண்டே ஓடினார். நீங்கள் ஒரு குரல் கொடுத்தால் போதும்மூ நான் வந்து விடுகிறேன்.

   5. எதிர்த்துக் கருத்து தெரிவித்தல்; raise one’s voice against something: voice one’s protest.

அந்நயத் (நியாயத்);தை எதிர்த்துக் குரல்கொடுக்க ஒரு சிலரே முன்வருவார்கள்.

   6. திரைப்படத்தில் தம் சொந்தக் குரலில் பேசாத நடிகர்களுக்குப் பிறர் தம் குரல் தந்து பேசுதல்; in films dub in voice.

பலருக்கும் இவரே குரல் கொடுக்கிறார்.

     [குரல்+கொடு-த்தல்.]

 குரல்காட்டு-தல் kuralkāṭṭudal,    5 செ.கு.வி.(v.i.)

   1. அழைத்தற்பொருட்டு குறிப்பொலி காட்டுதல்; to call a person byhemming and hawking.

   2.பறவை யொலித்தல்; to crow, as a cock, to screech, as an owl.

   3. பெருங்கூச்சலிடுதல்; to cry aloud, whoop, roar, bellow.

     [குரல் + காட்டு-.]

குரல்குளிறு-தல்

குரல்குளிறு-தல் kuralkuḷiṟudal,    16 செ.கு.வி.(v.i.)

   யாழ் முதலியவற்றில் சுருதி கலைதல்; to iar to in disharmony, as instruments out of tune.

     [குரல் + குளிறு.]

குரல்நெரி-த்தல்

குரல்நெரி-த்தல் kuralnerittal,    4 செ.குன்றாவி.(v.t.)

   தொண்டையை அழுத்திக் குரல்வளை முறியும்படிச் செய்தல்; fracturing the throat by pressing the anterior part of the neck (சா.அக.);.

     [குரல் + நெரித்தல்.]

குரல்பாய்ச்சு-தல்

குரல்பாய்ச்சு-தல் kuralpāyccudal,    5 செ.கு.வி.(v.i)

   அழுகையின் குரல் நீட்டுதல்; to prolong the voice unrestrainedly in wailing (இ.வ.);.

     [குரல் + பாய்ச்சு-.]

குரல்மாற்றம்

 குரல்மாற்றம் kuralmāṟṟam, பெ.(n.)

   வேற்றுக்குரல்; change of voice in the throat due to the affection of the larynix (சா.அக.);.

     [குரல் + மாற்றம்.]

குரல்வளம்

 குரல்வளம் kuralvaḷam, பெ.(n.)

   பலவகை ஏற்ற இறக்கங்களை எளிதாகவும், இனிமையாகவும் காட்டக்கூடிய குரலின் செழுமை range of voice; voice culture.

அவருடைய குரல்வளம் வியக்கத்தக்கது.

     [குரல்+வளம்]

குரல்வளை

குரல்வளை kuralvaḷai, பெ.(n.)

   மிடற்றின் உறுப்பு; Adam’s apple, projection of the thyroid cartilage of the larynx.

     “மணிக்காற் குரல் வளைக் கழுத்தில்” (பெருங்.மகத.14:55);.

     [குரல் + வளை.]

குரல்வளை நெரித்தல்

 குரல்வளை நெரித்தல் kuralvaḷainerittal, பெ.(n.)

   தெண்டையை அமுக்கல்; squeezing the throat (சா.அக.);.

     [குரல் + வளை + நெரித்தல்.]

குரல்வளைத்தபம்

குரல்வளைத்தபம் kuralvaḷaittabam, பெ.(n.)

   குரல்வளைக் கேற்படும் அழற்சி; affection of the larynx.

   2. தெண்டைப்புண்; an acute type of inflammation of the larynx (சா.அக.);.

குரல்வளை யழற்சி பார்க்க;See. {Kuravaas-y-alarco}

     [குரல்வளை +(தாபனம்);தபூம்.]

குரல்வளைத்தாபனம்

குரல்வளைத்தாபனம் kuralvaḷaittāpaṉam, பெ.(n.)

   குரல் வளையி (கண்டத்தி);ல் உண்டாகும் ஒரு வகை நோய் (இங்.வை.231);; laryngitis (செ.அக.);.

     [குரள்வளை+Sktதாபனம்]

குரல்வளைநோய்

 குரல்வளைநோய் kuralvaḷainōy, பெ.(n.)

   குரல்வளைக்கேற்படும் நோய்கள்; diseases in general of the larynx (சா.அக.);.

     [குரல்வளை + நோய்.]

குரல்வளைமுருந்து

 குரல்வளைமுருந்து kuralvaḷaimurundu, பெ.(n.)

   வட்டவடிவிலான குரல் வளையிலுள்ள இள யெலும்பு; ring like cartilage of the larynx (சா.அக.);.

     [குரல்வளை + முருந்து.]

குரல்வளையறு-த்தல்

குரல்வளையறு-த்தல் kuralvaḷaiyaṟuttal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. பேச்சின் ஒலியை குணபடுத்த வேண்டிச் குரல் வளையில் அறுவைச் சிகிச்சை செய்தல்; an operation for opening the larynxfor purposes of curing voice-defect.

   2. மருந்தினால் குரல்வளையைத் தூய்மைப்படுத்துதல்; curing voice defects by application of medicine (சா.அக.);.

     [குரல் + வளை + அறத்தல்.]

குரல்வளையறுத்துக்கொள்ளல்

 குரல்வளையறுத்துக்கொள்ளல் kuralvaḷaiyaṟuttukkoḷḷal, தெ.பெ..(v.b.l.n.)

    தற்கொலை புரிதல்; committing suicide by cutting the throat (சா.அக.);.

     [குரல்வளை + அறுத்து + கொள்ளல.]

குரல்வளையழற்சி

 குரல்வளையழற்சி kuralvaḷaiyaḻṟci, பெ.(n.)

   குரல்வளையில் ஏற்படும். ஒவ்வாமை; inflammation of larynx (சா.அக.);.

     [குரல்வளை + அழற்சி.]

குரல்வளையிசிவு

 குரல்வளையிசிவு kuralvaḷaiyisivu, பெ.(n.)

   தொண்டை ஊதையினால் மிடற்றிலுண்டாகும் இசிவு; a pulling sensation in the trachea (சா.அக.);.

     [குரல்வளை + இசிவு.]

குரல்வாக்கு

 குரல்வாக்கு kuralvākku, பெ.(n.)

   மன்றத்தில் எதிராடல் (விவாதம்); முடிந்ததும் தீர்மானிக்கப்பட வேண்டியதை ஆதரித்து அல்லது எதிர்த்து உறுப்பினர்கள் வாய்மொழியாகத் தெரிவிக்கும் வாக்கு; voting by saying ‘yes’ or ‘no’;voice vote.

     [குரல்+வாக்கு.]

குரல்வாங்கு-தல்

குரல்வாங்கு-தல் kuralvāṅgudal,    5 செ.கு.வி.(v.i.)

   குரலெடுத்துப்பாடுதல்; to raise the voice in music.

மறுவ. குரலெடு, குரல்விடு.

     [குரல் + வாங்கு.]

குரல்விடு-தல்

குரல்விடு-தல் kuralviḍudal,    20 செ.கு.வி.(v.i.)

குரலெடுத்தல் பார்க்க;See. {kuralpu.}

     [குரல் + விடு.]

குரவகம்

குரவகம் guravagam, பெ.(n.)

   1. வாடாக்குறிஞ்சி (பிங்.);; a plant whose flower does not change colourin withering.

   2. மருதோன்றி (மலை.);; henna.

     [குல் → குரல் → குரவகம்.]

குரவகி

குரவகி guravagi, பெ.(n.)

   1. கோழிக்கீரை; cocks greens.

   2. குறிஞ்சா; scammony swallow wort (சா.அக.);.

     [குரவு → குரவகி.]

குரவடிகள்

 குரவடிகள் guravaḍigaḷ, பெ.(n.)

சமண

ஆசிரியத்துறவியர்

     “ஶ்ரீ திருநறுங் கொண்ட பலதேவக் குரவடிகள் மாணாக்கர் கனகவீர அடிகள்” (கழுகுமலைக் கல்வெட்டு); (கல்.அக.);.

     [குரவு + அடிகள்.]

குரவன்

குரவன் kuravaṉ, பெ.(n.)

   அரசன், ஆசிரியன், தாய், தந்தை, தமையன் என்ற ஐங்குரவருள் ஒருவர்; elderly person, qualified by age, family connection, respectability, knowledge or authority to give advice and exercise control, any of {air-kuravan.}

     “நிகிரில் குரவரிவர்” (ஆசாரக்.17);.

   2. அமைச்சர் (பிங்.);; ministor.

   3. அயன் (திவா.);; brahma, as the father of all.

     [குரு → குருவன் → குரவன்.]

குரவம்

குரவம் kuravam, பெ.(n.)

   1. குரா; common bottle flower.

     “பல குரவ மழனகுவன” (சூளா.தூது.2);.

   2. பேரிந்து (மலை.);; date palm.

   3. கோட்டம் (சூடா.);; putchock, fragrant root of the costum plant.

     [குரா → குரவம்.]

குரவம்பாவை

குரவம்பாவை kuravambāvai, பெ.(n.)

   பாவையின் வடிவுடைய குரம்பூ; common bottle-flower blossom, as shapded like a doll.

     “குரவம் பாவை கொப்புளித்து” (சீவக.2690);.

     [குரவம் + பாவை. குரு → குரவம்.]

குரவரம்

 குரவரம் kuravaram, பெ.(n.)

   நச்சறுப்பான் கொடி; Indian ipecacuanha – Tylophora asthmatica (செ.அக.);.

குரவளை

குரவளை kuravaḷai, பெ.(n)

   1. ஒசை பிறப்பதற்காக மூச்சுக் குழலின் மேல் அந்தத்தோடு தொடங்கி, கழுத்தின் முன் மேற்பகுதியில் மூச்சுக் குழலுக்கும், அடி நாவுக்கும் இடையில் புடைத்திருக்கும் குழாய் பெட்டியைப் போன்ற உறுப்பு; a short tubular box, opening above idnto the pharynx and below into the top of the trachea, with vocal chords for production of Sound – Larynx.

   2. மிடறு; trachea (சா.அக.);.

மறுவ. குரல்வளை

     [குரல்+வளை.]

குரவிகம்

 குரவிகம் guravigam, பெ.(n.)

   பேரீஞ்சு; wild date palm (சா.அக.);.

     [குரவு → குரலிகம்.]

குரவிகா

 குரவிகா kuravikā, பெ.(n.)

   புல்லாமணக்கு; a plant resembling castor plant. (சா.அக.);.

     [குரு → குருவு → குரலிகம் → குரலிகர்.]

குரவிக்கோணிகம்

 குரவிக்கோணிகம் kuravikāṇikam, பெ.(n.)

   புளித்தகரை; a sour ringworm plant – Cassia tora (சா.அக.);.

     [குரவி+கோணிகம்]

குரவிளிம்பு

 குரவிளிம்பு kuraviḷimbu, பெ.(n.)

   பிடரி எலும்பையும் பித்திகை எலும்பையும் இணைக்கும் சுருக்கு விளிம்பு; lamboid suture which unites the occipital and the parietal bones (சா.அக.);.

     [குர + விளிம்பு.]

குரவு

குரவு1 kuravu, பெ.(n.)

குரா பார்க்க;See. {kura.}

     “குரவுவார் குழன்மடவாள்” (திருவாச.5,17);.

ஒ.நோ.குரா.

     [குல் → குர → குரவு.]

 குரவு2 kuravu, பெ.(n.)

   ஆசிரியத்தன்மை; office of a guru.

     “அருந்தமிழ்க் குரவு பூண்ட” (காஞ்சிப்பு.கடவுள்வா.9);.

     [குரு → குருவு → குரவு.]

 குரவு3 kuravu, பெ.(n.)

   நறுமணம்; fragrant smell (சா. அக.);.

     [குரு → குருவு → குரவு.]

 குரவு4 kuravu, பெ.(n.)

   நறுமணம் (யாழ்.அக.);; fragrance.

     [குல் → குரு → குரவு.]

குரவுநிறமணி

 குரவுநிறமணி kuravuniṟamaṇi, பெ.(n.)

   கோவரங்கப் வயிரமணி (பதுமராகம்); வகை (யாழ்.அக.);; a kind of topaz.

     [குரு → குரவு + நிறம் + மணி.]

குரவை

குரவை kuravai, பெ.(n.)

   1. முல்லை அல்லது குறிஞ்சிநில மகளிர் தம்முட் கைகோத்தாடும் கூத்துவகை; dance in a circle prevalent among the women of sylvan or hill tracts.

     “ஆய்ச்சியர் குரவை, குன்றக்குரவை” (சிலப்);.

   2. மகளிர், விழா நாள்களில் நாவாற் குழறி இடும் மகிழ்ச்சியொலி; chorus of shrill sound madeby women by wagging the tongue, uttered onfestive occassions.

   3. கடல்; sea.

     “பவத்தின் பரவைக் குரவையை……… கடப்பரிதால்” (வைராக.தீப.18);.

 E. chorus, L. chorus, G. choros, orig, a dance in a ring, cf. of E. coracle, a small oval rowboat. W. carwgt

 corwg. anything round. Gael. eurach, a wicker-boat.

ஒ.நோ. குலவை.ம.குரவ.

     [குலவை → குரவை, குலவையிடுதல், குடிவையிட்டு ஆடுதல்.]

குரவைக்கூத்து

குரவைக்கூத்து kuravaikāttu, பெ.(n.)

குரவை1 பார்க்க (சிலப்.3,12,உரை);;See. {kuraval}

     [குரவை + கூத்து.]

குரவைத்திகிரி

 குரவைத்திகிரி guravaittigiri, பெ.(n.)

   ஆண்துடரி என்னும் மூலிகை (சா.அக.);; a shrub-useful in kidney diseasses.

மறுவ: விரகச்செடி

     [குரவை + திகிரி.]

குரவைப்பறை

குரவைப்பறை kuravaippaṟai, பெ.(n.)

   ஒருவகைக் குறிஞ்சிப் பறை (இறை.1,17,உரை);; a drum of the hilly tracts.

     [குரவை + பறை.]

குரவையிடு-தல்

குரவையிடு-தல் kuravaiyiḍudal,    20செ.கு.வி.(v.i.)

   நாவாற் குழறி மகிழ்ச்சியொலி செய்தல்; to utter in chorus a shrill sound by wagging the tongue as done by women on festive and religious occasions (இ.வ.);.

     [குலவை → குரவை + இடு.]

குரா

குரா kurā, பெ.(n.)

   வெள்வெட்கி (குராமரம்); மரம்; common bortle flower.

     “குராநற் செழும்போது கொண்டு” (திவ். இயற் 2, 31);.

     [குரல் → குரவு → குரா.]

குராசானி

குராசானி kurācāṉi, பெ.(n.)

குராசானியோமம் பார்க்க (மூ.அ.);;see kuråsä0-Yôgam (செ.அக.);.

 குராசானி kurācāṉi, பெ.(n.)

   குரோசானி யோமம் (மூ.அ.); என்னும் ஓமம் விளையும் ஒருவகை மூலிகைச் செடி; black henbane.

குராசானிப்பூடு

 குராசானிப்பூடு kurācāṉippūṭu, பெ.(n.)

   ஓர் ஒமப்பூடு; a plant (சா.அக.);.

     [குராசானி + பூடு – குராசானி – ஊர்ப்பெயர்.]

குராசானியோமப்பத்திரி

 குராசானியோமப்பத்திரி kurācāṉiyōmappattiri, பெ.(n.)

   குராசானி இலை; the leaf of the khorassan omum plant (செ.அக.);.

குராசானியோமம்

 குராசானியோமம் kurācāṉiyōmam, பெ.(n.)

   குராசானி என்னும் ஒமமுண்டாகும் ஒருவகைப் பூடு; black henbane – Hyoscyamus niger(செ.அக.);.

 குராசானியோமம் kurācāṉiyōmam, பெ.(n.)

   குராசானி என்னும் ஓமம் உண்டாகும் ஒருவகை மூலிகைச் செடி; black henbane.

குராசோ

 குராசோ kurācō, பெ.(n.)

   தென் அமெரிக்காவிலுள்ள ஒரு வகைப் பறவையினங்களைச் சார்ந்தது; the bird belonged to a South America’s bird.

இது ஒரு வான்கோழி அளவில் இருக்கும் என்பர். குரோசா தீவில் வாழுகின்றதால் இப்பெயர் பெற்றது (அபி.சிந்.);

குராதர்

குராதர் kurātar, பெ.(n.)

   குணதத்துவ அதிபர் எண்மரில் ஒருவர் (சி.சி.8,2, மறைஞா);;     [குரு + ஆதர் – குராதர்.]

குரான்

 குரான் kurāṉ, பெ.(n.)

   முகமது நபி மூலமாக இறைவனால் அருளப்பட்டதாகக் கூறப்படும் மறை நூல்;{} (க்ரியா.);.

குராமசனம்

 குராமசனம் kurāmacaṉam, பெ.(n.)

   நில வேம்பு; ground neem – Justicia Paniculata (சா.அக.);.

குராமரம்

 குராமரம் kurāmaram, பெ.(n.)

   வறண்ட நிலத்தில் வளர்வதும், படகு செய்வதற்குப் பயன்படுவதுமான ஒருவகைமரம்; common bottle flower tree. It is very common in ceylon where fishing boats are made of its wood (சா.அக.);.

மறுவ:வெள்வெட்சி

     [குரவு → குரா + மரம்.]

குராற்பசு

குராற்பசு kurāṟpasu, பெ.(n.)

   கபிலைநிறப் பசு; tawny cow.

     “குராற் பசுவைக் கொன்றான்

பாவத்தை” (S.I.I.iii,121.);.

     [குரு → குரால் + பசு (பசு=பெற்றம்);.]

குரால்

குரால் kurāl, பெ.(n.)

   1. புகர்நிறம் (திவா.);; dim, tawny colour.

   2. பசு; cow.

     “குஞ்சர மெண்கு குராலரி யேனம்” (சேதுபு.மங்கல.27);.

   3. கோட்டான்; a kind of owl.

     “பலவூண் பொருந்திய

குராலின் குரலும்” (மணிமே.6,76);.

     [குரு → குரால்.]

குரிசில்

குரிசில் kurisil, பெ.(n.)

   1. பெருமையிற் சிறந்தோன் (திவா.);; person of dignity, illustrious person.

   2. வள்ளல்; philanthropist, benefactor.

     “குரிசினீ நல்க யாங் கொள்ளும் பரிசில்” (பு.வெ.9,5);.

   3. தலைவன்; lord, chief.

     “போர்மிகு பொருந குரிசிலென” (திருமுரு.276);.

     [குரு → குருசில் → குரிசில்.]

குரிச்சி

 குரிச்சி kuricci, பெ.(n.)

   நாற்காலி; chair (செ.அக.);.

குரிசு

__,

பெ.(n.);

குருக பார்க்க;see Kurusu (செ.அக.);.

குரிச்சி கட்டல்

 குரிச்சி கட்டல் guriccigaṭṭal, பெ.(n.)

   கைகளால் முடக்கல்; persistent, and organic contracture of a joint in certain diseases such as small box rheumatism attended with veneral disease

     [குரிச்சி + கட்டல்.]

குரிஞ்சி

குரிஞ்சி kuriñji, பெ.(n.)

   1. ஈந்து; wild date-palm.

   2. குரிங்கை; cone head.

   3. மருதோன்றி; common-nail dye.

   4. செம்முள்ளி; throny nail dye.

   5. வேங்கை; common vengai.

   6. வைரமணி; chalcedony (சா. அக.);.

     [குரு → குருஞ்சி → குறிஞ்சி.]

குரிந்தை

குரிந்தை kurindai, பெ.(n.)

   1. குருக்கத்தி (மலை.);; common delight of the woods.

   2. சிறுகுறிஞ்சா; small Indian pecauanha.

     [குரு → குருந்தை → குரிந்தை.]

குரிவியாலன்

 குரிவியாலன் kuriviyālaṉ, பெ.(n.)

   ஆலமரவகை; a common avenue-fig having stoutair-roots.

ம.குர்யாலு

     [குரு → குருவி → குரிவி + துலன்.]

குரீஇ

குரீஇ kurīi, பெ.(n.)

   1. குருவி; small bird.

     “குன்றத் திறுத்த குரீஇயினம்” (புறநா.19);. 2 பறவை (பிங்.);;

 bird.

     [குல் → குறு→குறுகு→குருவி→குரீஇ.]

குரீரம்

 குரீரம் kurīram, பெ.(n.)

   புணர்ச்சி, இணலாடுதல்; copulation(சா.அக.);.

     [குரீஇ→குரீஇலம்(குருவியின் செயல்);→குரீரம்.]

குரு

குரு1 kuruttal,    4 செ.கு.வி.(v.i.)

   1.தோன்றுதல், to appear.

     “அதினின்று மொருபுருடன் குருத்தான்” (விநாயகபு.72,4);.

   2. வேர்க்குரு உண்டாதல்; to break out, as prickly heat.

     [குல் (தோன்றல் கருத்து → குரு.]

 குரு1 kuruttal,    4 செ.கு.வி.(v.i.)

   வெகுளி யடைதல்; to be indignant, enraged.

     [குல் → குரு.]

 குரு3 kuru, பெ.(n.)

   1. அம்மை முதலிய கொப்புளங் காணும் நோய்; postule, blister, any eruptive, disease, as small-pox, measles.

     “வெப்பு நோயுங் குருவுந் தொடர” (சிலப்.உரைபெறு கட்டுரை);.

   2. புண்; boil.sore.

     “கிருமி குருவின் மிளிர்த்தத்து” (திவ்.இயற். திருவிருத்.48);.

   3. வேர்க்குரு (பிங்.);; prickly heat.

   4. புளகம்; horripilation.

     “மயிர்க்கண் குருக்கொண்டு” (அரிச்.பு.விவாக.288);.

   5. கொட்டை; nut.

     “பலாவின் குரு” (இ.வ);.

     [குல் + குரு.]

 குரு4 kuru, பெ.(n.)

   1. ஒளி; brilliance, lustre, effulgence.

   குருமணித்தாலி (தொல். சொல்.303, உரை.);;   2. முத்துக்குற்றங்களில் ஒன்று; a flaw in pearls.

     “குருவும் சுப்பிரமும் உட்பட முத்து” (S.I.I.II, 81);.

   3. துரிசு (மூ.அ.);; blue vitriol.

   4. மாழைகளைச் சிதைக்கும் சிந்தூரம்;   5. இதளியம்; mercury.

   6. பலண்டுறுகம் என்னும் செய்ந்நஞ்சு; a mineral poison.

     [குல் → குரு.]

 குரு5 kuru, பெ.(n.)

   1. அறிவாசிரியன்; spiritual preceptor.

     “பீதகவாடைப் பிரானார் பிரமகுரு வாகி வந்து” (திவ்.பெரியாழ்.5:2,8);.

   2. ஆசிரியன் (சூடா.);; teacher.

   3. ஐங்கரணன் (புரோகிதன்);; family priest.

     “குருவின் வாசகங் கொணடு கொற்றவன்” (கம்பரா.கையடை.16);.

   4. தந்தை; father. ‘”குருமொழி சிரத்திற் றாங்கினான்” (காஞ்சிப்பு.இரேணு.11);.

   5. அரசன் (பிங்.);; king.

   6.வியாழன் (திவா.);; the planet jupiter, as the priest of the gods (தேவகுரு.);

   7. பூசநாள்; the 8th {nakšatra} (விதாந. பஞ்சாங்க.18);.

   8. கடினத்தன்மை; heaviness,

 Weight.

     “பசுமட் குரூஉத் திரள் போல” (புறநா.32);.

   9. பருமன்; largeness (வின்.);.

   10. பெருமை (உரி.நி.);; eminence, excellence, exaltedness.

   11. நெடில்; long vowel.

   12. நெடிலும், நெடிலொற்றும், குறிலொற்றுமாகிய அசைகள் (வீரசோ.யாப்.26); (pros.);; a syllabic instant.

   13. இரண்டு மாத்திரையின் அளவு (அக.நி.);;   14. எட்டு எழுத்துக்காலங் கொண்ட தாள அங்கவகை (பரத.தாள.35); (Mus);; avariety of {argam} which consists of eight {aksarakālam.}

     [குல் → குரு.]

 குரு6 kuru, பெ.(n.)

   1.குருகுலத் தலைவன்; a prince of the lunar race after whom his family was called {kurukulam.}

     “குருவுமக குலத்திலங் குரித்தான்” (பாரத.குருகுல.31.);

   2. குருநிலப்பகுதி; a certain continent

   3. குருக் கொடிவழியினர் ஆண்ட நாடு (சூடா..);; the country of the Kurus, one of 56 {têcam.}

     [குல் → குரு.]

 குரு7 kuruttal,    4 செ.கு.வி.(v.i.)

   நிறம்பெறுதல்; to glisten.

     “குருக்குங் கலாமதிக் கூற்றம்” (சங்கர.அந்.32);.

     [குல் → குரு.]

குருகடம்

 குருகடம் gurugaḍam, பெ.(n.)

   அரத்தத்திலிருக்கும் அணுவுறுப்பு; blood corpuscle (சா.அக.);.

     [குரு → கடம்.]

குருகண்டகம்

குருகண்டகம் gurugaṇṭagam, பெ.(n.)

   முருங்கை; horse radish.

   2. கண்டகச்சிலை காகிக் கருகில் கண்டகி என்னும் நதியில் கிடைக்கும் பூசைக்குரிய கல்(சா.அக.);; worshipable stone obtained from kandaki viva in north india.

     [குரு + கண்டகம்.]

குருகந்தகம்

 குருகந்தகம் kurukantakam, பெ.(n.)

   மயில்; pea-cock, Pavo cristatus (சா.அக.);.

குருகன்வெட்டு

குருகன்வெட்டு kurukaṉveṭṭu, பெ.(n.)

   பழைய காசு வகை (பணவிடு.135);; anancient coin (செ.அக.);.

 குருகன்வெட்டு gurugaṉveṭṭu, பெ.(n.)

   பழைய நாணயவகை (பணவிடு.135);; an ancient coin.

     [குருகன் + வெட்டு.]

குருகாரம்

குருகாரம் kurukāram, பெ.(n.)

   பொரி காரம்; borax

   2. குரு முறைக்குப் பயன்படுத்தும் கார மருந்து; an alkaloid used for preparing a universal medicine known as philospher’s powder (சா.அக.);.

     [குரு + காரம்.]

குருகிதம்

 குருகிதம் gurugidam, பெ.(n.)

   முருந்துகளிலிருந்து எடுக்கும் ஒரு பொருள்; a peculiar substance obtained from cartilages (சா.அக.);.

     [குரு → குருகு → குருகிதம்.]

குருகிற்றாளி

 குருகிற்றாளி gurugiṟṟāḷi, பெ.(n.)

   ஒருவகைக் கிழங்கு; a kind of root.

     [குருகு → குருகில் + தாளி.]

குருகிலை

குருகிலை1 gurugilai, பெ.(n.)

   குருக்கிலை; leaves of erythrina (சா.அக.);.

     [குருக்கு → குருக்கு + இலை.]

 குருகிலை2 gurugilai, பெ.(n.)

   ஒருவகை மரம்; a tree.

     “பெய்ய முழங்கத் தளிர்க்குங் குருநிலை” (நான்மணி.37);.

     [குருகு + இலை.]

குருகு

குருகு1 gurugu, பெ.(n.)

   1.விலங்கு முதலியவற்றின் இளமை (சூடா.);; young, as of an animal.

   2. குட்டி; young of a beast.

     “சிங்கக் குருகு” (திவ். திருப்பா. 1,வ்யா);.

   3. குருத்து; pith, as of tree or elephant’s tusk.

     “குருகு பறியா நீளிரும் பனைமிசை” (பரிபா.2,43);.

     “ஆளிநன்மான் ……. வேழத்து வெண்கோடு வாங்கிக் குருத்தருந்தும்”(அகநா.381);.

   4. வெண்மை (திவா.);; whiteness.

   5. பறவை (சூடா.);; bird.

   6. தாரை; heron, stork, crane.

     “வான்பறைக் குருகி னெடுவரி பொற்ப”(பதிற்றுப்.83,2.);

   7. கோழி (பிங்.);; hen.

   8. அன்றில்; the {agri} bird.

     “குருகுபெயர்க் குன்றம்” (மணிமே.5,13);.

   9. மூலநாள் (திவா.);; the 19th naksatra

   10. துருத்தி வைத்தூதும் கொல்லுலை மூக்கு; hole in the centre of the smith’s forge for the nozzle of the bellows.

     “ஊதுலைக் குருகி னுயிர்த்தனர்” (சிலப்.4:59);.

   11. கைவளை; bracelet, armlet.

     “கைகுவி பிடித்துக் குருகணி செறித்த” (கல்லா.44:22);.

   12. குருக்கத்தி; common delight of the woods.

     “குருகுந் தளவமும்” (சிலப்.13:155);.

   13. கல்லால் வகை; white fig.

   14. இடைச் சங்க நூல்களுள் ஒன்று (இறை.உரை.);; a poem of the Middle Sangam.

     [குரு → குருகு (இளமை, மென்மை);.]

 குருகு2 gurugu, பெ.(n.)

   கூழைக்கடா இனப்பறவை; grey pelican.

     “அகன்கழி சிறகுளர்த்தும் பாரல்வாய்ச் சிறுகுருகே” (சம்பந்தர்.தேவா.321-5);

மறுவ. கூழைக்கடா, வண்டானம்.

 Fin. kurki;

 Es, kurg;

 Mordvin. kargo;

 Tungusic, karav;

 Jap. Kari

     [குருகு = கொல்லன் உலைமூக்கு, உலைத்துருத்தி, உலைமூக்கு போன்ற மூக்குடைய பறவை, உலைத்துருத்தி போன்று வாயின்கீழ் தோற்பை உடைமையும் ஒப்பு நோக்கத்தக்கது.]

குருகு வகைகள் :

   1. குருகு

   2. கருங்கால் வெண்குருகு

   3. வெள்ளங்குருகு

   4. சிறுவெள்ளங்குருகு

   5. பெருங்குருகு.

     [P]

குருகுக்கிழங்கு

 குருகுக்கிழங்கு guruguggiḻṅgu, பெ.(n.)

   உண்ணுதற்குரிய இளங்கிழங்கு; very young yams or other edible roots (வின்.);.

     [குருகு + கிழங்கு.]

குருகுணம்

குருகுணம் guruguṇam, பெ.(n.)

   எளிதில் செரிமானம் ஆகாமல் வயிறு, குடல்களுக்கு துன்பத்தை உண்டுபண்ணும் வன்மையான பொருள்களின் பண்பு; the nature of any substance that could not be easily digestible or one that gives trouble to the disgestive organs such as, the stomach, and the intestines.

   2. மென்மையான குணம்; sterling quality (சா.அக.);.

     [குரு + குணம்.]

குருகுதி

 குருகுதி kurukuti, பெ.(n.)

   பசு முருங்கை; tender drum-stick or moring (சா.அக.);.

குருகுபெயர்க் குன்றம்

குருகுபெயர்க் குன்றம் gurugubeyargguṉṟam, பெ.(n.)

கிரவுஞ்சமலை பார்க்க;See. {kiravuriamala} a mountain.

     “குருகு பெயர்க் குன்றங் கொன்றோன்” (மணிமே.5:13);.

     [குருகு + பெயர் + குன்றம்.]

குருகுமணல்

 குருகுமணல் gurugumaṇal, பெ.(n.)

   வெண்பொடி மணல்; fine white sand.

     [குரு + மணல்.]

குருகுமண்

 குருகுமண் gurugumaṇ, பெ.(n.)

   வெள்ளைமண்; white earth.

     [குருகு + மண்.]

குருகுரகம்

 குருகுரகம் guruguragam, பெ.(n.)

   குருகுரு ஒலிப்பு; gurgling Sound (சா.அக.);.

      [குரு + குரு → குருகுரு → குருகுரகம்.]

குருகுரம்

 குருகுரம் guruguram, பெ.(n.)

   சதையைத் துளைக்கும் புழு; a worm burrowing into the skin

     [குல் → குரு + குரம்.]

குருகுரு

குருகுரு1 guruguruttal,    16 செ.கு.வி.(v.i.)

   வேர்க்குரு உண்டாதல்; to to breat out, as prickly heat.

     [குருத்தல் = உண்டாதல். குரு → குருகுருத்தல்.]

 குருகுரு2 guruguruttal,    16 செ.கு.வி.(v.i.)

   1. நமைத்தல்; to itch and tingle.

   2. நெஞ்சை உறுத்துதல்; to rankle in one’s mind.

அவன் பேசியது நெஞ்சில் குருகுருக்கிறது (உ.வ.);.

     [குல் → குடு → குரு]

 குருகுரு3 guruguru, பெ.(n.)

   தொண்டையில் கொப்புளிக்கும் ஓசை; gurgling sound as in throat etc. (சா.அக.);.

     [குலு + குலு → குறு + குறு → குரு + குரு.]

குருகுலக்கல்வி

 குருகுலக்கல்வி kurukulakkalvi, பெ.(n.)

   குருவின் இல்லத்தைக் கல்விக்கூடமாகவும், வாழ்விடமாகவும் கொண்டு பெறும் கல்வி; formerly learning by living with the teacher.

இன்றும் சில இடங்களில் குருகுலக் கல்விமுறை வழக்கத்தில் இருக்கிறது

     [குருகுலம்+கல்வி]

குருகுலம்

குருகுலம்1 gurugulam, பெ.(n.)

   குருவின்கொடி வழியினர்; the Kurudynasty.

     “குருகுலத்துவ ரியற்கை நன்று” (பாரத.கிருட்டின.118);.

     [குரு + குலம்.]

 குருகுலம்2 gurugulam, பெ.(n.)

   குருவின் வாழ்விடம்; residence or home of a guru.

     [குரு + குலம்.]

குருகுலவாசம்

 குருகுலவாசம் gurugulavācam, பெ.(n.)

   கல்வியின் பொருட்டு மாணாக்கன் ஆசிரியன் மனையில் வாழ்கை; residence or life of a pupil in the guru’s home.

     [குருகுலம் + வாசம்.]

குருகுளிகை

 குருகுளிகை guruguḷigai, பெ.(n.)

   பெருமை வாய்ந்த குளிகை; reputed pill (சா.அக.);.

     [குரு (மேன்மை + குளிகை.]

குருகூர்

குருகூர் kuruār, பெ.(n.)

   சடகோபர் பிறந்த ஊராகிய ஆழ்வார் திருநகரி; Alvar Tirunagari, the birth-place of {šaợaGopar} in Thoothukkudi district.

     “குருகூர்ச் சடகோபன் சொல்” (திவ். திருவாய்.1:1,11);.

மறுவ. குருகை

     [குருகு + ஊர்.]

குருகூர் நம்பி

குருகூர் நம்பி kuruārnambi, பெ.(n.)

சடகோபர் பார்க்க (இலக்.வி.900, உரை);;See. {sadagdhar}

     [குருகூர் + நம்பி.]

குருகை

குருகை gurugai, பெ.(n.)

   குருகர்பார்க்க;{kurugப்} town

     “குருகைக் கோன் சடகோபள் சொல்”(திவ்.திருவாய்.3:6,11);.

     [குருகு → குருகை.]

குருக்கக் காய்ச்சல்

குருக்கக் காய்ச்சல் kurukkakkāyccal,    8 செ.குன்றாவி. (v.t.)

   கண்டக் காய்ச்சுதல்; boiling down as to become thick and consistent (சா.அக.);.

     [குறுக்க → குருக்க + காய்ச்சல்.]

குருக்கஞ்செடி

 குருக்கஞ்செடி kurukkañjeḍi, பெ.(n.)

   பிரமதண்டு; yellow thistle (சா.அக.);.

     [குரு → குருக்கம் + செடி.]

குருக்கண்

குருக்கண் kurukkaṇ, பெ.(n.)

   1. குருட்டுக் கண்; blind eye with eruptions or vesicles.

   2. பெண் முலை; woman’s breast.

   3. ஞானக்கண்; eye of wisdom, third eye (சா.அக.);.

     [குல் (துளை); → குரு + கண்.]

குருக்கத்தி

குருக்கத்தி1 kurukkatti, பெ.(n.)

   மாதவிக்கொடி; common delight of the woods.

     “குடந்தைக் கிடந்த கோவே குருக்கத்திப்பூச் சூட்ட வாராய்” (திவ்.பெரியாழ்.2:7,7);.

     [குல் → குரு → குருக்கன் → குருக்கத்தி.]

 குருக்கத்தி2 kurukkatti, பெ.(n.)

   கல்லால்; white fig.

     [குரு → குருக்கத்தி.]

குருக்கத்தியெண்ணெய்

 குருக்கத்தியெண்ணெய் kurukkattiyeṇīey, பெ.(n.)

   வசந்த கால மல்லிகை எண்ணெய்; oil of spring creeper(சா.அக.);.

     [குருக்கத்தி + எண்ணெய்.]

குருக்கன்

 குருக்கன் kurukkaṉ, பெ.(n.)

   காகச் செய்நஞ்சு (சங்.அக.);; a prepared arsenic.

     [குரு → குருக்கன்.]

 குருக்கன் kurukkaṉ, பெ.(n.)

   கேப்பை (மலை.);; ragi, a millet, Eleusine coracana.

த.வ.கேழ்வரகு.

     [Sinh.kurrakan → த.குரக்கன்.]

குருக்கம்

 குருக்கம் kurukkam, பெ.(n.)

   குறுக்கு, இடுப்பு; hip (சா.அக.);.

     [குறுக்கு → குறுக்கம் → குருக்கம்.]

குருக்கல்

குருக்கல் kurukkal, பெ.(n.)

   1. குருவுண்டாதல்; breaking out of prickly heat.

   2. அம்மைக் குருவெழும்பல்; rising of pocks as in small-pox (சா.அக.);.

     [குல் → குரு → குருத்தல் → குருக்கல்.]

குருக்கள்

குருக்கள்1 kurukkaḷ, பெ.(n.)

   1.ஆசிரியன் (சீவக.கடவுள்வா.1,உரை);; priests.

   2. சிவன் கோயிலிற் பூசனை புரியும் ஆரியச்சிவனியர்; officiating Brahman priests in {Siva} temples (கொ.வ.);.

   3.பார்ப்பனரல்லாத சைவர்க்குக் காரியங்கள் செய்விக்கும் சைவவேளாளர்;{Salva Wellalaprests} who ministered to non-Brahmins.

     [குல் → கள்.]

 குருக்கள்2 kurukkaḷ, பெ.(n.)

   நூற்றவர் கெளரவர்; Kauravas as descendants of Kuru.

     “குருக்கள் தமக்குப் படைத்தலைவரை வகுத்தது” (தொல். பொருள்.72, உரை,ப.231);.

     [குல் → கள். குரு – ஒரு மரபினத்தின் பெயர்.]

குருக்காணிக்கை

 குருக்காணிக்கை kurukkāṇikkai, பெ.(n.)

   வேதபாடம் படித்து முடித்தபின் சீடன் தன் ஆசிரியனுக்குக் காணிக்கை தருதல்; to present to a guru by his pupil after completing his védic studies under him.

     [குரு + காணிக்கை.]

குருக்காதி

 குருக்காதி kurukkāti, பெ.(n.)

   குரு மருந்துகள் முடிக்கப் பயன்படும் சரக்குகள்; the ingredients necessary for preparation of quintessential medicines (சா.அக.);.

     [குரு → குருக்கம் + ஆதி.]

குருக்காரம்

 குருக்காரம் kurukkāram, பெ.(n.)

   காரக்குரு; any substance added to a metal etc. (சா.அக.);.

     [குரு + காரம்.]

குருக்கி

குருக்கி kurukki, பெ.(n.)

   முழங்காற்கு மேல் வீக்கங் காணும் குதிரைநோய்வகை (அசுவசா.111);; a disease of the horse is which there is swelling just above the knees.

     [குருக்கு → குருக்கி.]

குருக்கிடை

 குருக்கிடை kurukkiḍai, பெ.(n.)

குருக்கிடை நூல்

   அல்லது குருமருந்து முறையைச் சொல்லும் நூல்; a treatise on the preparation of quite essential medicines or salt used in alchemy (சா.அக.);.

     [குரு + இடை.]

குருக்கினாதம்

 குருக்கினாதம் kurukkiṉātam, பெ.(n.)

   சங்கிலை; four-spined monetia – Azima tetracantha (சா.அக.);.

குருக்கிலை

 குருக்கிலை kurukkilai, பெ.(n.)

   பிரமதண்டின் இலை; prickly poppy (சா.அக.);.

     [குருக்கு + இலை.]

குருக்கு

குருக்கு1 kurukku, பெ.(n.)

   பிரமதண்டுச் செடி; prickly poppy.

உன்வீட்டிலே எருக்கும் குருக்கும் முளைக்க (உ.வ.);.

மறுவ. பிரண்டை

     [குரு → குருக்கு.]

 குருக்கு kurukku, பெ.(n.)

   இளம்பனை முதலியவை நெருங்கிய தோப்பு; plantation thick with young palm trees (இ.வ.);.

     [குல் → குரு → குருக்கு.]

 குருக்கு3 kurukku, பெ.(n.)

   நெருஞ்சி; cowthorn.

     [குல் → குரு → குருக்க/.]

குருக்குத்தி

குருக்குத்தி kurukkutti, பெ.(n.)

   1. குருக்கு பார்க்க;See. kurukku.

   2. பயிரில் விழும் நோய் வகை; a disease causing blight to growing grain.

     [குருக்கு → குருக்கத்தி.]

குருக்குப்பால்

 குருக்குப்பால் kurukkuppāl, பெ.(n.)

   கண் வலிக்குப் பயன்படும் பிரம்மதண்டுச் செடியின் மஞ்சள் பால்; the yellow juice of prickly poppy, used in opthamalmia (சா.அக.);.

     [குருக்கு + பால்.]

குருக்கேத்திரம்

குருக்கேத்திரம் kurukāttiram, பெ.(n.)

   1. குருசேத்திரம் பார்க்க;see kuru settiam,

     “குளியீருளங் குருக்கேத்திரம் தாவிரிகுமரி”(தேவா.1154, 6);.

   2. காற்று மண்டலத்திலுள்ள குய்யதராட்டகபுவனத்தில் ஒன்று (சி.போ.பா.2, 3);; a world in the aerial regions, one of kuyyada-rátfagabuwanam (செ.அக.);.

குருக்கொடு-த்தல்

குருக்கொடு-த்தல் kurukkoḍuttal,    4 செ.கு.வி. (v.i.)

   1. கோயிற்பூசை புரிதல்; to offer puja in temples.

     “குருக்கொடுக்கும் நம்பிமா ரென்றிருந் தோம்” (தமிழ்நா.216);.

   2. கொடுமை செய்யத் தூண்டுதல்; to incite, commonly to evil deeds (வின்.);.

     [குரு + கொடு.]

குருக்கொள்(ளு)-தல்

குருக்கொள்(ளு)-தல் kurukkoḷḷudal,    16 செ.கு.வி. (v.i.)

   குருவின் தன்மையை மேற்கொள்ளுதல்; to arrogate the function of a teacher.

     “இராசநீதி குருக்கொண்டு முதிர்ந்தனையோ” (பாரத. குதுபோர்.241);.

     [குரு + கொள்.]

குருங்கடியாள்

 குருங்கடியாள் kuruṅkaṭiyāḷ, பெ.(n.)

   தாளகம்; orpiment (சா.அக.);.

 குருங்கடியாள் kuruṅgaḍiyāḷ, பெ.(n.)

   தாளகம்; orpiment (சா.அக.);.

     [குரு → குரும + கடியாள்.]

குருங்காடகம்

 குருங்காடகம் guruṅgāṭagam, பெ.(n.)

   மூக்கு கண், காது, தொண்டை ஆக இந் நான்கு துளை களும் கூடுமிடம்; the place of union of the four cavities viz. nose, eyes, ears and throat (சா.அக.);.

     [குரும் +(கூடகம்);காடகம்.]

குருங்காடை

 குருங்காடை kuruṅgāṭai, பெ.(n.)

   உயர்ந்த காடை; a superior kind of quail (சா.அக.);.

     [குரும் + காடை.]

குருசகம்

 குருசகம் gurusagam, பெ.(n.)

   வெண்தோன்றி; skyroot (சா. அக.);.

     [குருக → குருசகம்.]

குருசந்திரயோகம்

 குருசந்திரயோகம் kurucantirayōkam, பெ.(n.)

   வியாழனும், நிலவும் (சந்திரனும்); ஒர் ஒரையில் (இராசியிற்); கூடுவது (சங்.அக.);;çonjunction of jupiter and moon (செஅக்);.

     [குரு+சந்திரயோகம்]

குருசம்

 குருசம் kurusam, பெ.(n.)

   வெண்டோன்றி(மலை.);; Malabar glory lily.

     [குரு → குருசம்.]

குருசம்பாவனை

 குருசம்பாவனை kurucampāvaṉai, பெ.(n.)

   ஆசிரியருக்கு மாணவர்கள் செய்யும் மரியாதை; honour or present offered to the preceptor (செ.அக.);.

     [குரு+சம்பாவனை.]

குருசாங்கலம்

 குருசாங்கலம் kurucāṅkalam, பெ.(n.)

   பாஞ்சால நாட்டிற்குத் தெற்கில் உள்ள நாடு; the city in South Päijälä

குருசாமி

குருசாமி kurucāmi, பெ.(n.)

   1. குருவின் நெஞ்சிற்குகந்தவன்; the most revered of masters, chief of preceptors.

   2.குருநாதன் பார்க்க;See. {kurunădan}

     [குரு → சாமி.]

குருசாரம்

குருசாரம் kurucāram, பெ.(n.)

   பொடிகாரம்; an alkaline powder.

   2. சிவசாரம்; an alkaloid preparation as opposed to.

சத்தி சாரம் (சா.அக.);.

     [குரு + சாரம்.]

குருசித்தன்

குருசித்தன் kurusittaṉ, பெ.(n.)

   இதளிய(இரசவாத); முறைகளில் வல்லோனாகிய சித்தன்; a {siddha} skilled in alchemy.

   2. சித்தர்களிற் சிறந்தோன் அதாவது அகத்திய முனி; saga Agastya, the chief of the Siddhar’s school (சா.அக.);.

     [குரு + சித்தன்.]

குருசில்

குருசில் kurusil, பெ.(n.)

குரிசில்பார்க்க;See. kuricil

     “போர்மிகு குருசில்” (பதிற்றுப்.31:36);.

     [குரு + குருசில்.]

குருசுரம்

 குருசுரம் kurusuram, பெ.(n.)

   உடம்பிற் றினைபோல் குருக்களை எழுப்பும் ஒருவகைக் காய்ச்சல்; an acute fever characterised by crop of pustules of the size of millet seeds (சா.அக.);.

மறுவ. நாய்முள் காய்ச்சல்

     [குரு + சுரம்.]

குருசூரியன்

 குருசூரியன் kurucūriyaṉ, பெ.(n.)

   வைரம்; diamond (சா.அக.);.

     [குரு + சூரியன்.]

குருசெயநீர்

 குருசெயநீர் kuruseyanīr, பெ.(n.)

   பூ நீருப்பு செயநீர்; a strong pungent fluid prepared by exposing to nights dew a mixture in which the efforescent salt of the soil of the fuller’s earth forms the chief-ingredients (சா.அக.);.

     [குரு + செயநீர்.]

குருசேடம்

 குருசேடம் kurucēṭam, பெ.(n.)

   ஆசிரியர் குடித்த பின் கலத்தில் எஞ்சிய தேவுணா (பிரசாதம்);; leavings of a guru’s food (செ.அக.);.

குருசேத்திரம்

 குருசேத்திரம் kurucēttiram, பெ.(n.)

   பாண்டவர்களுக்கும், கெளரவர்களுக்கு மிடையே போர் நடந்த தில்லி நகரின் அருகிலுள்ள நிலம்; a plain near Delhi, scene of the great battle between the Kauravāş and Pandavāśmentioned in the Mahābārada (செ.அக.);

     [குரு+சேத்திரம்]

குருசேவை

குருசேவை kurucēvai, பெ.(n.)

   ஆசிரியனை வழிபடுகை; service to a guru, of four kinds viz;

ஆத்தம் அங்கம், தானம், சற்பாவம்.

     “அதிகாரி செயும் குருசேவையினை” (வேதா.ஆ.11);.

     [குரு + சேவை.]

குருச்சாரகம்

 குருச்சாரகம் guruccāragam, பெ.(n.)

   இருள்விடு செடி; a plant (சா.அக.);.

     [குரு +(சாலகம்); சாரகம்.]

குருச்சி

 குருச்சி kurucci, பெ.(n.)

குரிச்சி பார்க்க;See. {kuricci}

     [குரு → குருச்சி.]

 குருச்சி kurucci, பெ.(n.)

   சீனக்காரம்; alum (வின்.);.

     [குரு + குருச்சி.]

குருச்சிகம்

 குருச்சிகம் kuruccikam, பெ.(n.)

   உறைக்குற்றிய; coagulated milk (சா.அக.);.

குருச்சுண்ணம்

 குருச்சுண்ணம் kuruccuṇṇam, பெ.(n.)

   முப்பு; the mystic three salts used in alchemy. It is the quintessence salt prepared by a secret process

     [குரு + கண்ணம்.]

குருச்சோவிருத்தம்

 குருச்சோவிருத்தம் kuruccōviruttam, பெ.(n.)

   நெட்டி தளம்; an unknown plant (சா.அக.);.

     [குரு கோ + இருத்தம்.]

குருஞ்சூல்

 குருஞ்சூல் kuruñjūl, பெ.(n.)

   அகச்சூலி;     [குரு → குரும் + குல்.]

குருஞ்சேபகம்

 குருஞ்சேபகம் kuruñcēpakam, பெ.(n.)

   மலை எருக்கு; mountain madar plant (சா.அக.);.

குருடகம்

 குருடகம் guruḍagam, பெ.(n.)

   கல்லுப்பனை; a kind of palmyra.

     [குருடு → குருட்கம்.]

குருடகா

 குருடகா kuruḍakā, பெ.(n.)

   உத்தாமணி;     [கருடகம் → குருடகா.]

குருடனாசனி

 குருடனாசனி kuruḍaṉācaṉi, பெ.(n.)

கஞ்சாங்

   கோரை; white basil (சா.அக.);.

     [குருடு + நாசினி.]

குருடன்

குருடன் kuruḍaṉ, பெ.(n.)

   1. கண்ணில்லாதவன்; bind man.

     “ஏதிலா ரிற்கட் குருடனாய்” (நாலடி.58);.

   2. சுக்கிரன்(அக.நி.);; venus.

   3 பிறவிக் குருடனாகிய திருதராட்டிரன்;{dirutharattiran,} as congenitally blind.

   ம.குருடன்;   க.குருட,குட்ட, குரட;   தெ.குட்டி, க்ருட்டி;   து.குருடெ, குர்டெ, குர்ட;   கோத. குர்ட்ண்;   மால. க்வொட்ரி;பட.குருட.

     [குருடு + அன்.]

குருடி

 குருடி kuruḍi, பெ.(n.)

   கண்ணில்லாதவன்; blind womап.

ம.,க., பட. குருடி.

     [குருடு → குருடி.]

குருடு

குருடு1 kuruḍu, பெ.(n.)

.

   1. பார்வையின்மை; blindness, absence of vision.

     “கூனுங் குருடும்” (தமிழ்நா.58);.

   2. ஒளியின்மை; dimness in gems opacity.

   3. ஆடை முதலியவற்றின் குருட்டுப்பக்கம்; the wrong side of a cloth, unfinished, unpolished, undressed side of a thing (வின்.);.

   4. மூடன்; blind ignorant fellow used in contempt.

   ம.,க., பட. குருடு;   தெ. குட்டி, க்ருட்டு;   து.குருடு, குர்டு;   கோத. குர்ட்;நா. குட்டி.

{kuru-du,} blindness, blind: ultimate basekuru (like

 kira, the ultimate base of {kiragu,} old). Comp. Persian {kūr;

 Kurdkor Ossete kurm, blind (C.G.D.F.L. Pg.593);.

     [குல் → குரு(கருமை); → குருள் → குருடு.]

 குருடு2 kuruḍu, பெ.(n.)

   1. காதின்

   வெளிப்புறத்துள்ள செவிள்; tragus.

   2. குருட்டுப் பாவலி பார்க்க;See. {kuruttu-p-pāvali}

     [குல் (வளைவு); → குரு → குருள் → குருடு.]

குருடுபற்று-தல்

குருடுபற்று-தல் kuruṭupaṟṟutal,    5 செ.கு.வி. (v.i.)

   எண்ணெய் இல்லாமல் விளக்குத் திரி கருகி ஒளி குறைகை (இலங்.);; of lamps become dim due to the burning of the wick for want of oil,

விளக்கு குருடு பற்றி மங்கியது.

     [குருடு+பற்று-தல்.]

குருட்டடி

 குருட்டடி kuruḍḍaḍi, பெ.(n.)

   சற்றும் நினைத்துப் பார்க்காமல் (யோசனையில்லாது); அடிக்கும் அடி; indiscrimenate unthinking beating (சா.அக.);.

     [குருடு + அடி.]

குருட்டாட்டம்

குருட்டாட்டம் kuruṭṭāṭṭam, பெ.(n.)

   கண்மூடித்தனமான செய்கை; blind, ineffective act, as the blind leading the blind.

     “குருடுங் குருடுங் குருட்டாட்ட மாடி” (திருமந்.1680);.

     [குருட்டு + ஆட்டம்.]

குருட்டாம்போக்காக

 குருட்டாம்போக்காக kuruṭṭāmpōkkāka, வி.அ.(adv.)

குருட்டாம்போக்கான பார்க்க;see kuruţţāmpõkkāpa.

     “குருட்டாம் போக்காகச் சொன்ன பதில் சரியாக இருந்தது”

குருட்டாம்போக்கான

 குருட்டாம்போக்கான kuruṭṭāmpōkkāṉa, பெ.அ.(adj.)

முன் எண்ணம் (யோசனை); இல்லாமல், முன் எண்ணம் இல்லாத

 blindly, blind.

குருட்டாம் போக்கான முடிவு.

     [குருட்டாம்+போக்கான]

குருட்டாம்போக்கில்

 குருட்டாம்போக்கில் kuruṭṭāmpōkkil, பெ.(n.)

குருட்டாம்போக்கான பார்க்க;see kuruţţām-põkkāpa.

     ‘குருட்டாம்போக்கில் நான் எடுத்த சிட்டுக்குப் பரிசு விழுந்தது’

குருட்டாம்போக்கு

 குருட்டாம்போக்கு kuruṭṭāmpōkku, பெ.அ. (adv.ladi.)

குருட்டாம் போக்கான பார்க்க;see kuruffāmpõkkāna

குருட்டீ

குருட்டீ kuruṭṭī, பெ.(n.)

   1. மாடு முதலியவற்றின் மேல் தங்கும் ஒரு வகை ஈ; gad-fly, horse fly,

   2. இருட்டிற்கண் தெரியாத ஒரு வகை ஈ; a kind of fly that cannot see in the night.

     [குருடு + ஈ]

குருட்டுக்கண்

 குருட்டுக்கண் kuruṭṭukkaṇ, பெ.(n.)

   பார்வை யில்லாக் கண்; blind eye (சா.அக.);.

குருட்டுக்கண்ணாடி

 குருட்டுக்கண்ணாடி kuruṭṭukkaṇṇāṭi, பெ.(n.)

   முகந்தெரியாத கண்ணாடி; unserviceable lookingglass, mirror that has lost its reflective power.

     [குருடு + கண்ணாடி.]

குருட்டுக்கல்

 குருட்டுக்கல் kuruṭṭukkal, பெ.(n.)

   ஒளிமங்கின மணி; turbid ordim gem (வின்.);.

ம.குருட்டுக்கல்லு

     [குருடு + கல்.]

குருட்டுக்கிரகம்

 குருட்டுக்கிரகம் guruṭṭuggiragam, பெ.(n.)

குழந்தைகளுக்குக் காணும் கோள்நிலைக் குற்றம்,

 a morbid condition in children due to the malinfluence of a particular planet perhaps venus

     [குருடு + கிரகம்.]

குருட்டுக்கொக்கு

குருட்டுக்கொக்கு kuruṭṭukkokku, பெ.(n.)

   நொள்ளை மடையான் என்ற கொக்கு; blind heron, squident-eyed (M.M.640);.

தெ. குட்டிக்கொங்க

     [குருடு + கொக்கு.]

குருட்டுச்சாயம்

 குருட்டுச்சாயம் kuruṭṭuccāyam, பெ.(n.)

   மங்கலான சாயம்; faint colours in dyeing.

     [குருடு + சாயம்.]

குருட்டுத்தனம்

குருட்டுத்தனம் kuruṭṭuttaṉam, பெ.(n.)

   1. குருட்டுத்தனம்; blindness.

   2.கண்மூடித்தனம்; foolishness, recklessness (கொ.வ.);.

   க.குருடதன;தெ. குட்டிதன.

     [குருட்டு + தனம்.]

குருட்டுத்திர்ப்பு

 குருட்டுத்திர்ப்பு kuruṭṭuttirppu, பெ.(n.)

   அறிவில்லாத தீர்மானம்; undiscerning judgement

     [குருடு + தீர்ப்பு.]

குருட்டுநாள்

குருட்டுநாள் kuruṭṭunāḷ, பெ.(n.)

   செவ்வாயும் சனியும் (சோதிட.சிந்.ப.36);; Tuesday and Saturday, as being considered blind.

ம. குருட்டுநாள்

     [குருடு + நாள்.]

குருட்டுநியாயம்

 குருட்டுநியாயம் kuruṭṭuniyāyam, பெ.(n.)

குருட்டு வழக்கு பார்க்க;See. {kurutfu-valakku.}

     [குருட்டு + நியாயம்.(நயன் → நயம் → நாயம் → வ. நியாயம்);.]

குருட்டுநோய்

குருட்டுநோய் kuruṭṭunōy, பெ.(n.)

   1. காரணம் தெரியாத நோய்; diseases for which no causes could be assigned.

   2. கண்குருடு; blindness

     [குருட்டு + நோய்.]

குருட்டுப்பக்கம்

 குருட்டுப்பக்கம் kuruṭṭuppakkam, பெ.(n.)

   அச்சடிச் சேலையின் மங்கலான பக்கம்; reverse side of printed cloth, as the blind side (இ.வ.);.

     [குருடு + பக்கம்.]

குருட்டுப்பணம்

 குருட்டுப்பணம் kuruṭṭuppaṇam, பெ.(n.)

   தேய்ந்த நாணயம்; worn out coin (கொ.வ.);.

     [குருடு → குருட்டு + பணம்.]

குருட்டுப்பத்தி

 குருட்டுப்பத்தி kuruṭṭuppatti, பெ.(n.)

   மூடப்பத்தி; blind faith, superstition.

     [குருட்டு + பத்தி.]

குருட்டுப்பனங்காய்

 குருட்டுப்பனங்காய் kuruṭṭuppaṉaṅgāy, பெ.(n.)

   உள்ளீடற்ற பனங்காய்; pulpless palmyra fruit

     [குருட்டு + பனங்காய்.]

குருட்டுப்பலகை

 குருட்டுப்பலகை guruṭṭuppalagai, பெ.(n.)

   அழுக்கடைந்த எழுதுபலகை; dirty slate (இ.வ.);.

     [குருட்டு + பலகை.]

குருட்டுப்பாடம்

 குருட்டுப்பாடம் kuruṭṭuppāṭam, பெ.(n.)

   பொருளுணர்ச்சியில்லாமற் செய்யும் மனப்பாடம்; lesson blindly committed to memory without regard to the meaning, anything learnt by rote.

     [குருட்டு + பாடம்.]

குருட்டுப்பாலை

 குருட்டுப்பாலை kuruṭṭuppālai, பெ.(n.)

   நந்தியா வட்டம்; eye flower (சா.அக.);.

     [குருட்டு + பாலை.]

குருட்டுப்பாவலி

 குருட்டுப்பாவலி kuruṭṭuppāvali, பெ.(n.)

   ஒருவகைக் காதணி; ear ornament worn in the tragus.

     [குருடு + பாவலி.]

குருட்டுமருத்துவன்

 குருட்டுமருத்துவன் kuruṭṭumaruttuvaṉ, பெ.(n.)

   நூலின் முறை தெரியாத மருத்துவன்; one who practices medicine, without the knowedge of science (சா.அக.);.

     [குருட்டு + மருத்துவன்.]

குருட்டுமருத்துவம்

 குருட்டுமருத்துவம் kuruṭṭumaruttuvam, பெ.(n.)

   கண்மூடித்தனமாய்ச் செய்யும் மருத்துவம்; the blind procedure and practice of aquack (சா.அக.);.

     [குருடு + மருத்துவம்.]

குருட்டுமாசு

 குருட்டுமாசு kuruṭṭumācu, பெ.(n.)

   ஓடி மறைகும் முகில் மேகம்; blinding mist.

     [குருடு + மாசு.]

குருட்டுமுத்து

 குருட்டுமுத்து kuruṭṭumuttu, பெ.(ո.)

   மங்கலான முத்து; dim lusterless peari.

     [குருட்டு + முத்து.]

குருட்டுமை

 குருட்டுமை kuruṭṭumai, பெ.(n.)

   எழுத்துத் தெரியாத மசி; pale ink.

     [குருடு + மை.]

குருட்டுயோகம்

 குருட்டுயோகம் kuruṭṭuyōkam, பெ.(n.)

   முயற்சியின்றிச் செல்வமுண்டாதற்கு காரணமாக ஓகம்; fluke, stroke, of fortune.

குருட்டு ஓகம் பார்க்க

     [குருடு(ஒகம்); + யோகம்.]

குருட்டுவளம்

 குருட்டுவளம் kuruṭṭuvaḷam, பெ.(n.)

   பார்வைக்குப் படாத புடவையின் உட்புறம்; inner side of a cloth orgarment opp. to {pārva-valam.}

     [குருடு + வளம்.]

குருட்டுவழி

 குருட்டுவழி kuruṭṭuvaḻi, பெ.(n.)

   கண்மூடித்தன மான முறை; blind procedure.

ம. குருட்டுவழி

     [குருடு + வழி.]

குருட்டுவவ்வால்

குருட்டுவவ்வால் kuruṭṭuvavvāl, பெ.(n.)

   பகலிற் கண்தெரியாத வாவல்வகை (M.M.156);; bat, as blind at daytime.

     [குருடு + வாவல் → வவ்வால். வாவுதல் = தாவுதல்.]

குருட்டுவாக்கில்

 குருட்டுவாக்கில் kuruṭṭuvākkil, து.வி (adv.)

   தற்செயலாய்; by chance (செ.அக.);.

     [குருட்டு+வாக்கில்.]

குருட்டுவெளவால்

குருட்டுவெளவால் kuruṭṭuveḷavāl, பெ.(n.)

குருட்டுவவ்வால் பார்க்க;See. {kurutuvawal}

வகைகள்:

   1. சிறகுநீண்டோன்

   2. வெண் வயிற்றோன்

   3. கருந் தாடியன்

   4. உதடுகருங்கி (சா.அக.);.

     [குருடு + வெளவால்.]

குருட்டுவைத்தியன்

 குருட்டுவைத்தியன் kuruṭṭuvaittiyaṉ, பெ.(n.)

குருட்டு மருத்துவன் பார்க்க;See. {kuruttu. masuttuvas.}

     [குருட்டு + வைத்தியன்.]

குருட்டுவைத்தியம்

 குருட்டுவைத்தியம் kuruṭṭuvaittiyam, பெ.(n.)

குருட்டு மருத்துவம் பார்க்க;See. {kuruttu. masuttuvam,}

     [குருட்டு + வைத்தியம்.]

குருட்டெலி

 குருட்டெலி kuruṭṭeli, பெ.(n.)

   கடித்தால் நச்சு உண்டாக்கும் ஒருவித எலி; a kind of rat, the bite of which is considered poisonous (சா.அக.);.

     [குருடு + எலி.]

குருட்டெழுத்து

 குருட்டெழுத்து kuruṭṭeḻuttu, பெ.(n.)

   மங்கலான எழுத்து; indistinct script or letter (வின்.);.

ம.குருட்டெழுத்து

     [குருடு + எழுத்து.]

குருட்ட்டியாக

 குருட்ட்டியாக kuruṭṭṭiyāka, வி.எ.(adv.)

குருட்டாம்போக்காக பார்க்க;see kuruffām-bdkkaga

குருட்ட்டியாய்

 குருட்ட்டியாய் kuruṭṭṭiyāy,    வி.அ.(adv.) தற்செயலாய்; by chance (சா.அக.).

     [குருட்டு+அடியாய்]

குருதட்சினை

 குருதட்சினை kurudaṭciṉai, பெ.(n.)

குருக்காணிக்கை பார்க்க;See.{kurukkamikkal}

     [குரு + காணிக்கை.]

குருதாளகம்

 குருதாளகம் gurutāḷagam, பெ.(n.)

   தாளகத்தைக் கொண்டு தயாரித்த குருமருந்து; a quintessence derived from orpiment by the process of calcination (சா.அக.);.

மறுவ. தாளகக்குரு

     [குரு + தாளகம்.]

குருதி

குருதி kurudi, பெ.(n.)

   1. அரத்தம் (திவா.);; blood.

   2. சிவப்பு ; red.

     “குருதித் துகிலின் னுறையை” (சீவக.926);.

   3. செவ்வாய் (திவா.);; Mars..

   4. மூளை; brain. ஒ.நோ.குருத்து

ம.குருதி

 Aust. Kruwe.

     [குல் → குரு(சிவப்பு); → குருதி.]

குருதிக்காகிதம்

 குருதிக்காகிதம் kurudikkākidam, பெ.(n.)

   சருக்கரைக் கிழங்கு; ground sugar root (சா.அக.);

     [குருதி + (காய்த்தம்); காயிதம் → காகிதம்.]

குருதிக்காந்தள்

குருதிக்காந்தள் kurudikkāndaḷ, பெ.(n.)

   செங்காந்தள் பார்க்க (சீவக.1651,உரை);; malabar glory lily.

     [குருதி + காந்தள்.]

குருதிக்குருகடம்

 குருதிக்குருகடம் gurudiggurugaḍam, பெ.(n.)

   அரத்தத்திலுள்ள சிறு நுண் அணுத்துகள்; corpuscles in the blood (சா.அக.);.

     [குருதி + (குருகளம்); குருகடம்.]

குருதிக்குழி

குருதிக்குழி kurudikkuḻi, பெ.(n.)

   அரத்தம் சொரியும் நோனித்து; the vagina of a woman serving as a channal for discharge of menstrual blood.

   2. இருதயம்; heart containing blood(சா.அக.);.

     [குருதி + குழி.]

குருதிக்கூத்தன்

 குருதிக்கூத்தன் kurudikāddaṉ, பெ.(n.)

   சிவப்புக் கூத்தன் குதம்பை; a red variety of கூத்தன் குதம்பை (சா.அக.);.

     [குருதி + கூத்தன்.]

குருதிசாலம்

 குருதிசாலம் kurudicālam, பெ.(n.)

   அரத்த உயிரணு; blood cell (சா.அக.);.

     [குருதி + சாலம்.]

குருதிசிந்தல்

 குருதிசிந்தல் kurudisindal, பெ.(n.)

   அரத்தம் சொரிதல்; shedding blood (சா.அக.);.

     [குருதி + சிந்தல்.]

குருதிநீர்

 குருதிநீர் kurutinīr, பெ.(n.)

   அரத்த நீர்; blood-plasma – Liquro sanguinia (சா.அக.);.

     [குருதி+நீர்]

குருதிப்பலி

குருதிப்பலி kurudippali, பெ.(n.)

   வீரன் தன் அரத்தத்தைக் கொற்றவைக்குக் கொடுக்கும் பலி (தொல்.பொருள், 59,உரை.);; oblation in which a warrior makes an offering of his own blood to {Durgā.}

     [குருதி + பலி.]

குருதிப்புனல்

குருதிப்புனல் kurudippuṉal,    அரத்தம்; blood.

     “விழுந்து கொழுங்குருதிப் புனலென்று” (கலிங். புதுப். 156);.

ம.குருதிப்புனல்

     [குருதி + புனல்.]

குருதிமாநக்கி

 குருதிமாநக்கி kurudimānakki, பெ.(n.)

   அரத்தத்தை உறிஞ்சும் அட்டை; leech sucking blood (சா.அக.);.

     [குருதி + மா + நக்கி.]

குருதியூட்டு-தல்

குருதியூட்டு-தல் kurudiyūṭṭudal,    15 செ.கு.வி.(v.i.)

   விலங்குகளை உயிர்ப்பலி கொடுத்தல்; lit, to feed with blood to offer animal sacrifice.

     [குருதி + ஊட்டு.]

குருதிரோகம்

 குருதிரோகம் kurudirōkam, பெ.(n.)

   அரத்தக் கதிப்பு, சோகை, அரத்த வேகம், அரத்தத்தைப் பற்றிய நோய்கள்; diseases relating to blood such as plethora (சா.அக.);.

     [குருதி + ரோகம்.]

குருதிவாரம்

குருதிவாரம் kurudivāram, பெ.(n.)

   செவ்வாய்க்கிழமை; Tuesday.

     “புதியசீலை…….. குருதிவாரந் தனக்குக் கொஞ்ச நாளிற் கிழியும்” (அறப்.சத.61);.

     [குருதி + வாரம். வாரம் = கிழமை.]

குருது

குருது1 kurudu, பெ.(n.)

   தவசங்களைக் கொட்டி வைக்கும் குதிர்i ; receptacle for storing grain, graпагу.

     [குதி → குருது.]

 குருது2 kurudu, பெ.(n.)

   நெய் (மூ.அ.);; clarified butter, ghee.

     [குல் → குரு → குருது.]

குருதுபலம்

 குருதுபலம் kurudubalam, பெ.(n.)

   மணப்பொருள்; Arabian costus (சா.அக.);.

     [குருது + பலம்.]

குருதுரியம்

 குருதுரியம் kuruduriyam, பெ.(n.)

   முத்தாத்துமாவின் தூயநிலை;     [Skt.guru+{} → த.குருதுரியம்.]

குருதோன்றல்

குருதோன்றல் kurutōṉṟal, பெ.(n.)

   அம்மை வார்த்தல்; appearance of pustules in small pox, chicken pox, measles etc.,

   2. குருவைக் கனவில் காணல்; appearance of a quru or spiritual teacher in the dream (சா.அக.);.

     [குரு + தோன்றல்.]

குருத்தடை-த்தல்

குருத்தடை-த்தல் kuruttaḍaittal,    4 செ.கு.வி.(v.i.)

   1. நெல் முதலிய பயிர்கள் குருத்து விடாதிருத்தல்; to bestunted, as grain, putting forth no new leaves.

   2. கதிர் பொதிநிரம்புதல்; to be big with sprouts

     [குருத்து + அடை-.]

குருத்தம்

 குருத்தம் kuruttam, பெ.(n.)

   வெள்ளியைப் போன்ற ஒரு மாழை (உலோகம்);; a metal resembling silver(சா.அக.);.

     [குரு → குருத்தம்.]

குருத்தானம்

குருத்தானம் kuruttāṉam, பெ.(n.)

   கோயில்களில் அருச்சனை செய்யும் குருக்கள் பணி; post of a priest.

     “குருக்கள் வரந்தரும் பெருமாளுக்கு குருஸ்தானமாக” (தெ.கல்.தொ.12.கல்.222);.

     [குரு + தானம். தானம் = இடம்.]

குருத்தாமரை

 குருத்தாமரை kuruttāmarai, பெ.(n.)

   ஆகாசத் தாமரை; sky lotus (சா.அக.);.

     [குரு + தாமரை.]

குருத்திருத்தல்

 குருத்திருத்தல் kuruttiruttal, பெ.(n.)

   வேர்க்குரு கொள்ளல்; breaking out of the prickly heat

     [குருத்து + இருத்தல்.]

குருத்திறகு

 குருத்திறகு guruttiṟagu, பெ.(n.)

   மெல்லிய உள்ளிறகு; soft feathers, down.

     [குருத்து + இறகு.]

குருத்திலை

 குருத்திலை kuruttilai, பெ.(n.)

   பனை, தென்னை, ஈச்சை முதலியவற்றின் இளவோலை; the tender and unexpande leaves of palm trees such as palmyra, coconut, date etc. (சா.அக.);.

     [குருத்து + இலை.]

குருத்து

குருத்து kuruttu, பெ.(n.)

   1. மரம் முதலியவற்றின் குருத்து; sprout, white tender leaves of a tree, shoots of grain and leguminous plants.

குருத்திற் கரும்புதின்றற்றே” (நாலடி.211);.

   2. காதுக் குருத்து; tender part of the internal ear, tympanum.

   3. தந்தம், மூளை யிவற்றின் குருத்து; pith, as of elephant’s tusk, brain matter.

   4. வெண்மை (பிங்.);; whiteness.

   5. இளமை; tenderness.

     [குல் (முளைத்தல்); → குரு → குருத்து.]

குருத்துக்கக்கு-தல்

குருத்துக்கக்கு-தல் kuruddukkakkudal,    15

செ.கு.வி.(v.i.);

   1. தவசக் குருத்துப் பிரிந்து அழிவுறுதல்; to part from the roots and perish, as tendershoots of grain by early flooding.

     [குருத்து + கக்கு.]

குருத்துக்குழந்தை

 குருத்துக்குழந்தை kuruttukkuḻndai, பெ.(n.)

   அப்பொழுது பிறந்த குழந்தை; just born baby (சா.அக.);.

     [குருத்து + குழந்தை.]

குருத்துஞாயிறு

 குருத்துஞாயிறு kuruttuñāyiṟu, பெ.(n.)

   குருத்தோலைகளுடன் இயேசுவின் புகழ் பாடிக் கொண்டாடப்படும் திருவிழா;ஈஸ்டர் திருவிழாவுக்கு முந்திய ஞாயிற்றுக் கிழமை; palm Sunday

மறுவ. குருத்தோலைஞாயிறு

     [குருத்து+ஞாயிறு]

குருத்துத்தாளி

 குருத்துத்தாளி kuruttuttāḷi, பெ.(n.)

   சிறுதாளி; hairy leaved creemy white bind weed (சா.அக.);.

     [குருத்து + தாளி.]

குருத்துப்பூச்சி

 குருத்துப்பூச்சி kuruttuppūcci, பெ.(n.)

   சோளப் பயிரை யழிக்கும் பூச்சிவகை; a pest that damages maize (இ.வ.);.

     [குருத்து + பூச்சி.]

குருத்துமணல்

 குருத்துமணல் kuruttumaṇal, பெ.(n.)

   பொடி மணல்; fine sand.

     [குருத்து + மணல்.]

குருத்துரோகம்

 குருத்துரோகம் kurutturōkam, பெ.(n.)

   ஆசிரியனுக்கு இரண்டகம் செய்கை; treachery towards one’s Guru (செ.அக.);.

     [குரு+Skt, துரோகம்.]

குருத்துவக்கறி

குருத்துவக்கறி kuruttuvakkaṟi, பெ.(n.)

   எளிதில் செரிமானம் ஆகாத புலால் அல்லது காய்; vegetable or animal food not easily digestible.

   2. அதிகம் காற்றை உண்டு பண்ணும் மாவுப் பண்டம்; any substance in food promoting flatulency,starchy food (சா.அக.);.

     [குருத்துவம் + கறி.]

குருத்துவம்

குருத்துவம் kuruttuvam, பெ.(n.)

   1. குருவின் தன்மை; state of a guru, priesthood.

   2. பெருமை; honour, nobility.

     “குருத்துவமான மனத்தின்” (ஞானவா.சித்.3);.

   3. உடலின் நிறை; heaviness of

 a body, gravity.

   4. நன்றி; gratitude

     “குருத்துவங் கெட்டவன்” (இ.வ.);.

     [குரு + குருத்துவம்.]

குருத்துவாங்கு-தல்

குருத்துவாங்கு-தல் kurudduvāṅgudal,    5 செ.கு.வி. (v.i.)

   குருத்து விடுதல்; to shoot forth ears.

பயிர் குருத்து வாங்குகிறது (உ.வ.);.

     [குருத்து + வாங்கு-.]

குருத்துவிடு-தல்

குருத்துவிடு-தல் kurudduviḍudal,    5 செ.கு.வி. (v.t.)

   பனை முதலியவற்றில் புது வோலை கிளம்பல்; shooting of new leaves (சா.அக.);.

     [குருத்து + விடு-.]

குருத்துவேலன்

 குருத்துவேலன் kuruttuvēlaṉ, பெ.(n.)

   முள்வேல்; thorn babool (சா.அக.);.

     [குருத்து + வேல் + அன்.]

குருத்தெலும்பு

 குருத்தெலும்பு kuruttelumpu, பெ.(n.)

   காதுமடல், மூக்கின் முன்பகுதி முதலிய வற்றில் இருப்பது போன்று, மடங்கக் கூடிய மென்மையான எலும்பு; cartilage.

ஒவ்வொரு மூட்டிலும் குருத்தெலும்பு இருக்கும்

     [குருத்து+எலும்பு]

 குருத்தெலும்பு kuruttelumbu, பெ.(n.)

   இளவெலும்பு; cartilage.

     [குருத்து + எலும்பு.]

குருத்தோலை

 குருத்தோலை kuruttōlai, பெ.(n.)

பனை

   முதலியவற்றின் குருத்தாயுள்ள ஓலை; young, tender unexpanded palm leaf.

ம.குருத்தோலா

     [குருத்து + ஒலை.]

குருத்தோலை ஞாயிறு

 குருத்தோலை ஞாயிறு kuruttōlaiñāyiṟu, பெ.(n.)

   ஞாயிறன்று கிறித்துநாதர் எருசலேம் நகர்க்குள் வெற்றி முழக்கத்துடன் நுழைந்ததைக் கொண்டாடும் கிறித்தவத் திருநாள்; Palm Sunday, the Sunday next before Easter, in commemoration of Christ’s triumphal entry into Jerusalem(கிறித்);.

     [குருத்தோலை + ஞாயிறு.]

குருத்தோலைப் பெருநாள்

 குருத்தோலைப் பெருநாள் kuruttōlaipperunāḷ, பெ.(n.)

குருத்தோலை ஞாயிறு பார்க்க;See. {kuruttösa-săyiru.}

     [குருத்தோலை + பெருநாள்.]

குருநகாரிலம்

 குருநகாரிலம் kurunakārilam, பெ.(n.)

   விழிப்பு நிலை (சாக்கிரம்);; walking state one of the stations of the soul (சா.அக.);.

     [குருநாகம் → குருநாகரிலம்.]

குருநகை

குருநகை gurunagai, பெ.(n.)

   புன்சிரிப்பு; smile.

     “குருநகையி னந்தி மகிழ்கொள்ள” (தணிகைப்பு. நந்திப்பு.7);.

     [குரு + நகை.]

குருநடைகொள்ளல்

குருநடைகொள்ளல் gurunaḍaigoḷḷal, பெ.(n.)

   1. குருவழியைப் பின்பற்றுதல்; following the footsteps of a guru or spiritual teacher.

   2. இரா உணவு முடிந்தவுடன்; உறங்குவதற்கு முன் சிறுநடையாக 100 அடியாவது உலாவுதல்; walking about a shor distance of at least 100ft. soon afternight meals and just before retiring to bed (சா.அக.);.

     [குரு + நடை + கொள்ளல்.]

குருநமச்சிவாயர்

குருநமச்சிவாயர் kurunamaccivāyar, பெ.(n.)

   16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்துவரும் அண்ணா மலை வெண்பாவை இயற்றியவருமாகிய ஒரு துறவி; a saint and poet, the author of Annamalai venba who lived in16th century.

     [குரு + நமச்சிவாயர்.]

குருநாகம்

குருநாகம் kurunākam, பெ.(n.)

   நாகத்தினால் செய்த குருபற்பம்; the highly concentrated extract of zinc.

   2. நாகப்பாம்பிலுயர்ந்தது; king of cobras (சா.அக.);.

     [குரு + நாகம்.]

குருநாடி

குருநாடி kurunāṭi, பெ.(n.)

   1. நாடி கொண்டு நோயியல்பு அறியும் வகைகளை உணர்த்தும் ஒரு மருத்துவநூல்; a treatise dealing with the dragnosis of disease by feeling the pulse.

   2 தேவ குருவின் அருளால் இயற்றப் பெற்றதாகக் கூறும் ஆரூட நூல்; a treatise on augury believed to be inspired by Brhaspathi.

     [குரு + நாடி.]

குருநாடு

 குருநாடு kurunāṭu, பெ.(n.)

   அத்தினாபுரத்தில் அடங்கிய ஒரு நாடு; a city in Attiņā-puram.

 குருநாடு kurunāṭu, பெ.(n.)

   குருவின் கொடி வழியினர் ஆண்ட நாடு; the country of the Kurus.

     [குரு + நாடு.]

குருநாதன்

குருநாதன் kurunātaṉ, பெ.(n.)

   1. பேராசான் (பரமகுர);; exalted guru, great master.

   2. தம் தந்தையாகிய சிவபெருமானுக்கு ஓம் என்னும் எழுத்தின் தன்மையை ஒருமுறை உணர்த்திய முருகக்கடவுள்; Skanda, as having once intiated his father {Šiva} into the mystic explanation of (pranavam); ‘om.’

     “முகமாறுடைக் குருநான்” (கந்தரலங்.71);.

     [குரு + நாதன்.]

குருநாத்தகடு

 குருநாத்தகடு gurunāttagaḍu, பெ.(n.)

   ஒளியுள்ள ஒருவகை மெல்லிய வண்ணத் தகடு; foliated tinsel.

     [குறு + நாகம் + தகடு.]

குருநாப்பட்டை

 குருநாப்பட்டை kurunāppaṭṭai, பெ.(n.)

குருநாத்தகடு பார்க்க;See. {kuru-na-ttagadu}

     [குறுமை + நாகம் + பட்டை.]

குருநாள்

குருநாள் kurunāḷ, பெ.(n.)

   அறிவன் கிழமை (வியாழக்கிழமை);; Thursday as Jupiter’s day (தேவகுருவுக்குரியது);.

   2. பூசம் (பிங்.); பார்க்க;  the 8th naksatra.

     [குரு + நாள்.]

குருநிந்தை

 குருநிந்தை kurunindai, பெ.(n.)

   ஐம்பெரும் கரிக (பாதகம்); களுள் ஒன்றாகிய குருவைப் பழித்தல்; dissrespect towardsor speaking ill of, one’s guru. one of {aimperum-pâtagam.}

     [குரு + நிந்தை.]

குருநிலம்

குருநிலம் kurunilam, பெ.(n.)

குருகொடிவழியினர்

   நாடு; country of the Kurus.

     “குருநிலத்திற் பாதி யினிக் கொடாதிருத்தால்” (பாரத. கிருட்டிண.7);.

     [குரு + நிலம்.]

குருநூல்

குருநூல் kurunūl, பெ.(n.)

   முதன்மையான நூல்; original work.

   2. மேன்மையான நூல்; a reputed work.

   3. குரு மருந்து முறைகளைப் பற்றி கூறும் மருத்துவநூல்; a medical work on the principles and preparation of quintessence salts (சா.அக.);.

     [குரு + நூல்.]

குருநெய்ப்பு கொள்-ளல்

குருநெய்ப்பு கொள்-ளல் guruneyppugoḷḷal, செ.கு.வி.(v.i.)

   சிறுசிரங்கு சீழ் கொள்ளல்; supperation of pustules.

   2. அம்மைப்பால் கொள்ளல்; pustules maturing in to small-pox.(சா.அக.);.

     [குரு + நெய்ப்பு + கொள்ளல்.]

குருநோய்

குருநோய் kurunōy, பெ.(n.)

   அம்மை முதலிய கொப்புளங் காணும் நோய் (சிலப்.உரைபெறு.1);; eruptive disease, as small pox.

     [குரு + நோய்.]

குருந்தகம்

 குருந்தகம் gurundagam, பெ.(n.)

   மயில்; pea-cock (சா.அக.);.

     [குருந்த → குருந்தகம்.]

குருந்தக்கல்

குருந்தக்கல்1 kurundakkal, பெ.(n.)

குருவிந்தக்கல் பார்க்க;See. {kuruvindakkal}

     [குருந்தம் + கல்.]

 குருந்தக்கல்2 kurundakkal, பெ.(n.)

   குருந்தமரம்; a tree.

   2. ஒரு வகை மாணிக்கம்; a kind of ruby.

   3. குருவிந்தக் கல்; a variety of corundam net to diamond, distinguished for its extreme hardness.

   4. வச்சிரக்கல்; diamond Speat (சா. அக.);.

     [குருந்தம் + கல்.]

குருந்தம்

குருந்தம்1 kurundam, பெ.(n.)

குருந்தக்கல் பார்க்க;See. {kurunda-k-ka/ }

     [குருவிந்தக்கல் → குருந்தக்கல்.]

 குருந்தம்2 kurundam, பெ.(n.)

குருந்து2 பார்க்க;See. {kurundu.}

     “குருந்தமொன் றொசித்தா னொடுஞ் சென்று” (திவ்.பெரியாழ்.4:4,7);.

     [குருந்து → குருந்தம்.]

குருந்தம்பொடி

 குருந்தம்பொடி kurundamboḍi, பெ.(n.)

   குருந்தக் கற்பொடி; emery powder.

     [குருத்தம் + பொடி.]

குருந்தான்

 குருந்தான் kurundāṉ, பெ.(n.)

   காட்டெலுமிச்சை; wild lime tree (சா.அக.);.

     [குரு → குருந்தான்.]

குருந்து

குருந்து1 kurundu, பெ.(n.)

   1.வெண்குருத்து (பிங்.);; white tender leaf, tender shoots.

   2.குழந்தை; infant.

     [குருத்து → குருந்து.]

 குருந்து2 kurundu, பெ.(n.)

   புனவெலுமிச்சை (பிங்.);; wild lime.

   2. காட்டெலுமிச்சை வகை; a species of wild lime.

   3. ஒருவகைச் சிறுமரம்; a species of wild lime.

   4. குருக்கத்தி (பிங்.);; common delight of the woods.

     [குரு → குருந்து.]

 குருந்து3 kurundu, பெ.(n.)

குருந்தக்கல் பார்க்க;See. {kurunda-k-ka/}

     [குரு + குருந்து.]

 குருந்து4 kurundu, பெ.(n.)

   குருந்தமரம்; wild lime tree.

   இது பலவகைப்படும்; the following are the different kinds.

     [குரு → குருந்து.]

வகைகள் :

   1. செங்குருத்து

   2. காட்டுக் குருந்து

   3. மலைக் குருந்து

   4.மாந்தக்குருந்து

   5.மயிலடிக் குருந்து

   6. பெருங் குருந்து

   7. பேய்க் குருந்து

   8. மூவிலைக் குருந்து (சா.அக.);.

     [குரு → குருந்து.]

குருந்துதிகம்

 குருந்துதிகம் gurundudigam, பெ.(n.)

   புன்னை மரம்; Alexandrian laurel (சா.அக.);.

குருந்துழாய்

 குருந்துழாய் kurunduḻāy, பெ.(n.)

   சிறுதுளசி; small leaved basil (சா.அக.);.

     [குரு → குரும் + துழாய்.]

குருந்தை

குருந்தை kurundai, பெ.(n.)

   குறிஞ்சா மரம்; common delight of the woods (சா.அக.);.

     [குரு → குருந்து → குருந்தை.]

 குருந்தை2 kurundai, பெ.(n.)

   நாகமல்லி; broad leaved jasmine.

     [குரு → குருந்தை.]

குருபக்குவம்

 குருபக்குவம் kurubakkuvam, பெ.(n.)

   சிறுதும்பி அல்லது சிறுதும்பை; small laucas. It is so called from its use in calcination of metals (சா.அக.);.

     [குரு + பக்குவம்.]

குருபடாதி

 குருபடாதி kurubaṭāti, பெ.(n.)

   புனுகு; civet (சா.அக.);.

     [குரு + படாதி.]

குருபண்ணல்

குருபண்ணல் kurubaṇṇal, பெ.(n.)

   பொடி செய்தல்; powdering.

   2. குருமுடித்தல்; the art of finding or preparing a universal remedy for curing all allments (சா.அக.);.

     [குரு + பண்ணல்.]

குருபதம்

குருபதம் kurubadam, பெ.(n.)

   பூநீறு; the efflorescent salt gathered from the soil of fuller’s earth.

   2. ஐந்திலை நொச்சி (சா.அக.);; five lead chaste tree.

     [குரு + பதம்.]

குருபதாருசம்

 குருபதாருசம் kurupatārucam, பெ.(n.)

   செவ்விறகு; red wood used as fuel in calcination of metals (சா.அக.);.

குருபத்தி

 குருபத்தி kurubatti, பெ.(n.)

   குருவினிடம் கொள்ளும் அன்பு; reverence towards guru.

     [குரு + பத்தி. வற்று-பத்தி.]

குருபத்திரகம்

 குருபத்திரகம் kurupattirakam, பெ.(n.)

வெள்ளியம்:tin (சா.அக.);.

     [குரு+பத்திரகம்]

குருபத்திரம்

குருபத்திரம் kurubattiram, பெ.(n.)

   1. துத்தநாகம்; zinc.

   2. புளியமரம்; tamarind tree.

   3. சிறிய இலை; small leaf.

   4. மேன்மையான இரும்பு அதாவது காந்தம்; magnet (சா.அக.);.

     [குரு + பத்திரம்.]

குருபன்னி

 குருபன்னி kurubaṉṉi, பெ.(n.)

   குருவின் மனைவி; wife of a guru.

     [குரு + (பத்தினி); பன்னி. Skt. patni(மனைவி.);.]

குருபரன்

குருபரன் kurubaraṉ, பெ.(n.)

   முருகன் குருவிற் கெல்லாம் சிறந்த குரு; great, supreme guru.

     “மெய்த்தவ நிலைமைத் தாய குருபரன்” (இரகு. இந்துமதி.87);.

     [குரு + பரன்.]

குருபரம்பரை

குருபரம்பரை kurubarambarai, பெ.(n.)

   1. (ஆசாரிய பரம்பரை); ஆசிரியப் பரம்பரை; regular succession of gurus.

   2. ‘ஆழ்வாராசாரியர்களின்’ வரலாறு கூறும் நூல்; a hagiology of {Alvārs} and Acharyas.

     [குரு + பரம்பரை.]

குருபரவுணி

 குருபரவுணி kurubaravuṇi, பெ.(n.)

   காட்டா மணக்கு; croton plant (சா.அக.);.

     [குரு + பரல் + (உளி); உணி. சிவந்த வித்து உடையது.]

குருபற்பமாங்குங்குணத்தி

 குருபற்பமாங்குங்குணத்தி kurupaṟpamāṅkuṅkuṇatti, பெ.(n.)

   வெள்ளை நீர் முள்ளி; white flowered water thistle plant – Hygrophila spinosa (சா.அக.);.

குருபற்பம்

குருபற்பம் kurubaṟbam, பெ.(n.)

   அனைத்து வகை மருந்துகள் செய்யப் பயன்படுத்தும் மருத்துவ முப்பு; in medicine quintessense of the three saltingredients for preparing all kinds of medicines.

   2. எல்லா நோய்களையும் குணப்படுத்தும் மருந்து; all healing drugs.

   3. வாதமுப்பு; a universal medicine for transmuting lesser metals into gold(சா.அக.);.

     [குரு + பற்பம்.]

குருபாகம்

குருபாகம் kurupākam, பெ.(n.)

   குருமூலமாய்க் கற்பிக்கப்பட்ட முறை; the method or process inspired by a guru (teacher);.

   2. குருமருந்தை முடிக்கும் முறை; the method of preparing an all healing drug (சா.அக.);.

     [குரு + பாகம்.]

குருபாததாசர்

 குருபாததாசர் kurupātatācar, பெ.(n.)

   குமரேச சதகம் இயற்றிய ஆசிரியர்; the author of {Kumarésa-Catagam.}

     [குறு + பாதம் + தாசர்.]

குருபாரம்பரியம்

 குருபாரம்பரியம் kurupārambariyam, பெ.(n.)

   ஆசாரிய பரம்பரை; regular succession of gurus.

     [குரு + பாரம்பரியம்.]

குருபீடம்

 குருபீடம் kurupīṭam, பெ.(n.)

   குருவினது இடம்; seat or office of a guru.

     [குரு + பீடம். பீடு = பெருமை, பீடு – பீடம்.]

குருபுறப்படல்

குருபுறப்படல் kurubuṟabbaḍal, பெ.(n.)

   குரு வெழும்பல்; the breaking out of pimples, pustules etc upon the skin as rash, vesicles etc. accompanying a disease

   2. அம்மை கொள்ளல்; being attacked with small-pox (சா.அக.);.

     [குரு + புறப்படல்.]

குருபூசை

 குருபூசை kurupūcai, பெ.(n.)

   குருவம் (தீட்சை); தந்த குருவிற்கு அவர் முத்தி அடைந்த நாளில் மாணாக்கர்களால் நடத்தப்படும் பூசனை; worship offered by the disciples to their Guru, who initiated them into a religious order, on his death anniversary

     [குரு+பூசை]

 குருபூசை kurupūcai, பெ.(n.)

   மறைந்த குருவின் இறந்தநாளில் ஆண்டுதோறும் சைவ மடங்கல், சிவனடியார்க்குச் செய்யும் உணவளிப்புடன், அக்குருவிற்குச் செய்யும் சிறு வழிபாடு; annual worship of deceased guru on the day of his death, often accompanied with feeding of devotees, chiefly in {Šaiva} mutts.

     [குரு + பூசை.]

குருப்பட்டம்

 குருப்பட்டம் kuruppaṭṭam, பெ.(n.)

   கிறித்தவ குருவுக்குக் கொடுத்தற்குரிய பட்டம்; title of an ordained Christian minister (கிறித்.);.

     [குரு + பட்டம்.]

குருப்பட்டுக்கறுப்பு

குருப்பட்டுக்கறுப்பு kuruppaṭṭukkaṟuppu, பெ.(n.)

   கல்லாடத்தில் சொல்லியுள்ள ஒரு கறுப்புக் குருமருந்து; a black universal medicine described In a Tamil medical treatise known as {“Kallādam”.}

   2. பட்டுக் கொளுத்திய சாம்பல்; ashes of burnt silk

     [குரு = மருந்து. குரு + பட்டு + கறுப்பு. பட்டுத் துணியைக் கொளுத்திய சாம்பல், சாம்பல் நிறமாயிருத்தலால் பட்டு கறுப்பு என்றுவந்தது.]

குருப்பி-த்தல்

குருப்பி-த்தல் gurubbiddal,    7 செ.கு.வி.(v.i.)

   பருவுண்டாதல்; to break out, as pimples. ம. குருப்பு

     [குரு → குரும்பி.]

குருப்பியம்

 குருப்பியம் kuruppiyam, பெ.(n.)

   துத்தநாகம்; zinc (சா.அக.);.

     [குரு → குருப்பியம்.]

குருப்பிரசாதம்

குருப்பிரசாதம் kuruppiracātam, பெ.(n.)

   1. குருவின் அருள்; favour, grace, blessing of the guru.

   2. குருவுண்ட உணவின் எச்சம்; leavings of a guru’s food.

     [குரு + பிரசாதம். குருவருள் பார்க்க;See. kயா-w. arսլ]

குருப்பு

 குருப்பு kuruppu, பெ.(n.)

   பரு; pimples, pustule.

தெ.குருப்பு.

     [குரு → குருப்பு.]

குருப்புகை

 குருப்புகை guruppugai, பெ.(n.)

   நறுமணப்புகை; a very fragrants smoke (சா.அக.);.

     [குரு + புகை.]

குருப்பூச்சி

 குருப்பூச்சி kuruppūcci, பெ.(n.)

   புள்ளியொடு கூடிய குளவி வகை; a kind of spotted wasp (வின்.);.

     [குரு + பூச்சி.]

குருமகன்

குருமகன் gurumagaṉ, பெ.(n.)

   1. குரு; priest.

     “எங்குருமக னிருந்தோ னவன்பால்” (மணி.16;64);.

   2. குருவின் மகன்; priest’s son.

     [குரு + மகன்.]

குருமடம்

 குருமடம் kurumaṭam, பெ.(n.)

   குருஆவதற்கு உரிய பயிற்சி பெறும் இடம்; seminary.

     [குரு+மடம்]

குருமணல்

குருமணல் kurumaṇal, பெ.(n.)

   1. வெள்ளி மணல்; white sand or silver ore.

   2. நுண்ணிய மணல்; fine sand (சா.அக.);.

     [குரு + மணல்.]

குருமணி

குருமணி kurumaṇi, பெ.(n.)

   குருவிற் சிறந்த குரு; exalted guru, highly esteemed guru, as a gem among gurus.

     “குருமணி தன்றாள்வாழ்க்” (திருவாச.1,3);.

     [குரு + மணி.]

குருமன்

 குருமன் kurumaṉ, பெ.(n.)

   ஒருசார் விலங்கு பறவைகளின் இளமைப்பெயர்; the young of certain animals and birds.

குட்டிகுருமன் (உ.வ.);.

     [குரு → குருமன்.]

குருமபட்டி

குருமபட்டி kurumapaṭṭi, பெ.(n.)

   1. காதின் உள்ளே சேரும் அழுக்கு; a thick viscous substance secrated by the glands of the ear, Ear-wax.

   2. தென்னை, பனை இவைகளின் இளங்காய்; immature fruit of coconut palmyra etc.

   3. இளநீர்; tender coconut with only water inside.

   4. பெருங்குரும்பை,

   5. புற்றாஞ்சோறு; the comb of white ant’s nest.

   6. சொரிகுரும்பை அல்லது மிளகு சம்பா; a kind of chamba paddy (சா.அக.);.

குருமம்

குருமம் kurumam, பெ.(n.)

   மலையிலுப்பை; oval mohwah.

   2. காட்டிலுப்பை; wild mohwah (சா.அக.);.

     [குரு → குருமம்.]

குருமருந்து

 குருமருந்து kurumarundu, பெ.(n.)

   மருத்துவத்தில் எல்லாவகை நோய்களைக் கண்டிக்கவும், உடம்பைப் பொன் போலாக்கவும், வாதத்தில் இரும்பு, செம்பு முதலிய இழிந்த உலோகங்களைப் பொன்னாக மாற்றவும் சக்தி வாய்ந்த முதன்மையான மருந்து; a universal medicine of high potent, which cures, not only all diseases of the systems, but also transmuting inferior metals such as iron, copper etc. into gold (சா.அக.);.

     [குரு + மருந்து.]

குருமலியம்

 குருமலியம் kurumaliyam, பெ.(n.)

   அசோக மரம்; wing leaved Asoka tree – Saraca Indica alias Jonesia asoka (சா.அக.);.

குருமலை

 குருமலை kurumalai, பெ.(n.)

   சாமிமலை (கழ.தமி.அக.);; Swamimalai.

     [குரு + மலை.]

குருமாணவன்

 குருமாணவன் kurumāṇavaṉ, பெ.(n.)

   குரு ஆவதற்குரிய பயிற்சி பெறுபவன்; seminarian.

     [குரு+மாணவன்.]

குருமாத்திரை

குருமாத்திரை kurumāttirai, பெ.(n.)

நோய்க்

   காகக் குழந்தைகளுக்கு முலைப்பாலில் இழைத்துக் கொடுக்கும் மான்மணத்தி (கத்தூரி); மாத்திரை;  musk pills macerated in women’s breast milk and given for indigestion to children.

   2. உயர்ந்த மாத்திரை; superior pill.

   3. சிறுமாத்திரை; small pill (சா.அக.);.

     [குரு + மாத்திரை.]

குருமான்

 குருமான் kurumāṉ, பெ.(n.)

குருமன் பார்க்க;See. {kսրսոmaր}

     [குல் → குரு → குருமான்.]

குருமார்

 குருமார் kurumār, பெ.(n.)

   சீக்கிய மதத்தின் முதன்மைக் குரு அல்லது தலைவர்; head priest or leader of Sikh religious institutions.

     [குரு+மார்]

குருமி-த்தல்

குருமி-த்தல் kurumittal,    4 செ.கு.வி.(v.i) பேரொலி செய்தல்; to make a crash, as a ship dashing against a rock.

     “குருமித்து மதலை பொங்கி” (சீவக.521);.

     [குல் → குரு → குருமி.]

குருமிளகு

 குருமிளகு gurumiḷagu, பெ.(n.)

   நல்ல மிளகு; superior pepper.

     [குரு + மிளகு.]

குருமுகம்

குருமுகம் kurumukam, பெ.(n.)

   1. அம்மை வார்த்த முகம்; pox-pitted face.

   2. குருக்கள் எழும்பிய முகம்; face full of pimples.

   3. சிறிய முகம்; small face (சா.அக.);.

     [குரு+முகம்]

குருமுகறன்

 குருமுகறன் gurumugaṟaṉ, பெ.(n.)

   குருமுகன்; one having face pisted with small pox (சா.அ.);.

     [குரு + முகறன்.]

 குருமுகறன் gurumugaṟaṉ, பெ.(n.)

குருமூஞ்சி பார்க்க;See. {kurumūñci}

     [குரு (வேர்க்குரு); + முகறன்.]

குருமுடி-த்தல்

குருமுடி-த்தல் kurumuḍittal,    1 செ.கு.வி.(v.i.)

   மாழைகளை (உலோகம்); நீற்றுதற்குதவும் மருந்து செய்தல் (யாழ்.அக.);; to make a preparation helpful for calcining metals.

     [குரு + முடி-.]

குருமுத்து

 குருமுத்து kurumuttu, பெ.(n.)

   சிவந்த புள்ளிகளுடன் விளைந்த முத்து; pear with red spots.

     [குரு + முத்து.]

முத்திற்கமைந்த குற்றங்களுள் இது ஒன்றாகும் (கல்.க.சொ.அ.மு.);.

குருமுனி

 குருமுனி kurumuṉi, பெ.(n.)

அகத்தியர் பார்க்க (சா.அக.);;See. agattiyar

குரு + முனி.]

குருமுனியழகி

 குருமுனியழகி kurumuṉiyaḻki, பெ.(n.)

ஊர்க்கள்ளி பார்க்க (சா.அக.);;See. {rkkal}

     [குரு + முனி + அழகு.]

குருமுப்பு

 குருமுப்பு kurumuppu, பெ.(n.)

   பூநீறு முப்பு; an alchamical preparation called muppu of ancient Siddhars supposed to have been in practice in the Dravidian period by which metals were transmitted into gold, all diseases were redically cured, and life prolonged by rejuvenation

     [குரு + முப்பு.]

குருமுறை

குருமுறை kurumuṟai, பெ.(n.)

   1. சவர்க்காரம்; soap.

   2. கோடாசொரி (வைப்புப் பாடான வகை);; a prepared arsenic (செ.அக.);.

     [குரு+முறை]

குருமூஞ்சி

 குருமூஞ்சி kurumūñji, பெ.(n.)

   அம்மை வடுவுள்ள முகத்தவன்-ள்; one having face pitted with small poх.

மறுவ, குருமுகன், குருமுகறன்

     [குரு + மூஞ்சி.]

குருமூர்த்தம்

குருமூர்த்தம் kurumūrttam, பெ.(n.)

குருவாக ஒத வந்த கடவுட் திருமேனி;(தனிப்பா.II.246ll,581);:

 manifestation of god in the form of a guruto his devotees.

     [குரு + மூர்த்தம் குருத்திருமேனி பார்க்க;]{kurய– tiruméni]

குருமூர்த்தி

குருமூர்த்தி kurumūrtti, பெ.(n.)

   1. குரு; guru.

   2. தென்முகக்கடவுள் பார்க்க;See. {tenmuga-kkadavu/}

     [குரு + மூர்த்தி.]

குருமூலி

குருமூலி1 kurumūli, பெ.(n.)

   காற்றுப்பிடிப்பு மருத்துவம் (ஒகம்);, காயகற்பம் இவற்றிற்கு உதவும் தென்பொதிகையிலுள்ள மூலிகைகள். இவற்றை உட்கொள்ள ஆணவம் அடங்கி, ஞானப்பாலுறும். இது மானிடர்க்குக் கிட்டாது; rare drugs useful in yoga rejuvenations. They kill pride and inprove wisdom, theyarenotprocurable forordinaryhuman beings (சா.அக.);.

     [குரு + மூலி.]

 குருமூலி2 kurumūli, பெ.(n.)

   கஞ்சா; gunjah.

   2. பொற்றலை கையாந்தகரை,

 mary-goldverbesena (சா.அக.);.

     [குரு + மூலி(ஆதி);.]

குருமெழுகு

 குருமெழுகு gurumeḻugu, பெ.(n.)

எலியிலிருந்து செய்யப்படும் ஒரு நஞ்சு மெழுகு,

 a wax like medcine prepared from rats bone.

     [குரு + மெழுகு.]

குருமேசீனம்

 குருமேசீனம் kurumēcīṉam, பெ.(n.)

இதிரக் கிழங்கு, காட்டுக் கருணைக் கிழங்கு

 the wild yam root – Dracontium Polyphillum alias Arun lyratum (சா.அக.);.

குருமை

குருமை1 kurumai, பெ.(n.)

   நிறம் (தொல்.சொல்.303);; lustre, brightness.

     [குரு → குருமை.]

 குருமை2 kurumai, பெ.(n.)

   பெருமை; dignity, superiority.

     ” குருமை யெய்திய குணநிலை” (சீவக.2748);.

     [குரு + குருமை.]

 குருமை2 kurumai, பெ.(n.)

   1. நிறம்; lustre.

   2. சிறந்த மந்திரத்திற்குப் பயன்படும் மை; a superior kind of black paint used in magic.

   3. பெருமை; greatness (சா.அக.);.

     [குரு + மை.]

குரும்பட்டி

 குரும்பட்டி kurumbaṭṭi, பெ.(n.)

   தென்னை, பனைகளின் குரும்பை; immature coconuts or palmyra nuts.

     [குரும்பை → குரும்பட்டி.]

குரும்பவன்

 குரும்பவன் kurumbavaṉ, பெ.(n.)

   நிலப்பனை; ground palm (சா.அக.);.

     [குரும் → குரும்பு → குரும்பவன்.]

குரும்பவரை

 குரும்பவரை kurumbavarai, பெ.(n.)

   வெள்ளை யவரை; white bean (சா.அக.);.

     [குரும்பு + அவரை.]

குரும்பாலை

 குரும்பாலை kurumpālai, பெ.(n.)

நிலப்பனை,

 ground palm – Curculigo Orchioides (சா.அக.);.

குரும்பி

குரும்பி1 kurumbi, பெ.(n.)

   . புற்றாஞ்சோறு; comb of white ant’s nest.

     “பாம்புறை புற்றிற் குரும்பி யேய்க்கும்” (பெரும்பாண்.277);.

     [குரு → குரும்பு → குரும்பி.]

 குரும்பி2 kurumbi, பெ.(n.)

   தென்னம் பூவினின்றும் காய்க்கும் தேங்காயின் ஆரம்பநிலை (உழ.நெ.க.அக.);; the stage of fruit buds of coconut.

     [குரு → குரும்பி.]

குரும்பிகம்

 குரும்பிகம் gurumbigam, பெ.(n.)

   ஒரு பூடு; stooing toombay flower plant. (சா. அக.);.

     [குரும்பி → குரும்பிகம்.]

குரும்பை

குரும்பை1 kurumbai, பெ.(n.)

   1. தெங்கு, பனைகளின் இளங்காய்; immature coconuts or palmyra nuts, fruit buds.

     “இரும்பனையின் குரும்பி நீரும்” (புறநா.24,2);.

   2. இளநீர்; tender coconut.

     “குன்றுங் குரும்பையும் வெறுத்தநின் னினமுலை” (கல்லா.52);.

   3. குரும்பி (புற்றாஞ்சோறு);; comb of white ants nest.

   4. பெருங்குரும்பை (தைலவ.தைல.24);; bow-string hemp.

     [குரு → குரும்பை.]

 குரும்பை kurumbai, பெ.(n.)

   காதினுள் திரளும் குறும்பி; ear-wax (இ.வ.);.

     [குரு → குரும்பை.]

குரும்பைகுத்து-தல்

குரும்பைகுத்து-தல் kurumpaikuttutal,    5 செ.கு.வி.(v.i.)

   தென்னங் குரும்பையைப் பறித்தல்; to pluck young coconuts (செ.அக.);.

     [குரும்பை+குத்து-தல்.]

குருராட்சம்

 குருராட்சம் kururāṭcam, பெ.(n.)

   ஆந்தை; Owl (சா.அக.);.

குருலிங்கசங்கம்ம்

 குருலிங்கசங்கம்ம் kuruliṅkacaṅkamm, பெ.(n.)

   ஆசாரியனும், சிவமும் திருக்கூட்டமும்; aggregate of the spiritual guru, Śiva’s emblem and the devotees of Śiva (செ.அக.);.

குருலிங்கம்

குருலிங்கம் kuruliṅgam, பெ.(n.)

   ஆறுவகை சிவத்திருமேனிகளுள் ஒன்று(சித்.சிகா.201);; atom of Siva, one of {satvita-liñkam,}

     [குரு + இலிங்கம்.]

குருளை

குருளை kuruḷai, பெ.(n.)

   1. நாய், பன்றி, புலி, முயல், நரி முதலிய ஒருசார் விலங்கின் இளமை (தொல்.பொருள்.564–565);; animals like dog, hog, tiger, rabbit, wolf etc. young of certain animals.

   2. பாம்பின் குட்டி; young of a snake.

     “சிறுவெள் ளரவினவ் வரிக் குருளை” (குருந்.119);

   3. குழந்தை; child.

     “அருட்குருவாங் குருளை” (சி.சி.பரபக்.பாயிரம்.4);.

   4. ஆமை (மூ.அ.);; tortoise.

 E.girl, female child, ME.gule, girle, gesse, LG, gor, child;

 COD., O.G., gor, a child.

     [குல் → குரு → குருள் → குருளை.]

குருள்

குருள்1 kuruḷ, பெ.(n.)

   1.பெண்டிர் தலைமயிர் (பிங்.);; womans’s hair.

   2. நெற்றியின் மயிர்ச்சுருள்; curl, lock of hair, especially on the forehead, love lock.

 LG.„Du. „OF. krul G.krol O.E.crol, crul E. Curi

     [குல் (குத்தல், துளை, இருள் – கருமை. கல் → குரு → குருள்.]

குருள்(ளு)

குருள்(ளு)2 kuruḷḷudal,    7 செ.கு.வி.(v.i.)

   சுருளாதல்; to curl.

     “குருண்ட வார்குழல்” (திருவிசை.திருவாலி.1:3);.

{Fin. kāria:Es. kāvida, Q. kuru, Kuruk. Kūrnā }

     [குல் → குரு → குருள்.]

குருவகம்

 குருவகம் guruvagam, பெ.(n.)

   வெண் சிவப்பு (யாழ்.அக);; pink.

     [குரு → குருவகம்.]

குருவங்கம்

குருவங்கம் kuruvaṅgam, பெ.(n.)

   வங்கக்குரு; lead quintessence.

   2. வெள்ளீயம்; tin (சா.அக.);.

     [குரு + வங்கம்.]

குருவடிம்பம்

 குருவடிம்பம் kuruvaḍimbam, பெ.(n.)

   நெல்லிப் பருப்பு; the kernel of Indian gooseberry (சா.அக.);.

     [குரு + வடிம்பு + அம்.]

குருவண்டு

குருவண்டு1 kuruvaṇṭu, பெ.(n.)

   முப்புக்குரு; a secret name for philospher’s powder (சா.அக.);.

     [குரு + வண்டு.]

 குருவண்டு2 kuruvaṇṭu, பெ.(n.)

   புள்ளியுள்ள குளவி வகை; a kind of spotted wasp.

வகைகள்:

   1. அறுபுள்ளிவண்டு – beetle or wasp with six spot on its back.

    2. கொளுஞ்சியடி வண்டு – beetle found under wild indigo tree.

    3. குழிவண்டு – beetle found under the earth.

    4. நீருக்குள் சுழலும் வண்டு – beetle found whirling in water.

   5. எரிவண்டு – teline fly or blistering beetle.

   6. துவரைச் செடிவண்டு – beetle found in the dholl plant.

   7. கழுதை வண்டு –another variety of beetle(சா.அக.);.

     [குரு + வண்டு.]

குருவண்டுப்பு

குருவண்டுப்பு kuruvaṇṭuppu, பெ.(n.)

   ஒரு வகைக் கல்லுப்பு; a kind of sea-salt.

   2. முப்புக்குரு. (சா.அக.);.

     [குரு + வண்டு + உப்பு.]

குருவன்

குருவன் kuruvaṉ, பெ.(n.)

   குரு; priest.

     “வானோர் குருவனே போற்றி” (திருவாச.5:68);.

     [குரு → குருவன்.]

குருவமண்

 குருவமண் kuruvamaṇ, பெ.(n.)

   இளகிய மண்; soft earth (கூவநூல்.); (கட்தொ.வரி);.

     [குரு → குருவம் + மண்.]

குருவரகு

குருவரகு guruvaragu, பெ.(n.)

   வரகுவகை (விவசா.நூன்மு.4.);; a kind of ragi.

     [குரு + வரகு.]

குருவரசன்

 குருவரசன் kuruvarasaṉ, பெ.(n.)

   மயில்துத்தம்; blue vitriol, copper sulphate (சா. அக.);.

     [குரு + அரசன்.]

குருவரன்

குருவரன் kuruvaraṉ, பெ.(n.)

   குருபரன்; kurubaran.

     “குருவரனிடத் துரைத்தான்” (திருவாலவா.1:2);.

     [குரு + பரன் – குருபரன் → குருவரன்(கொ.வ.);.]

குருவரிக்கற்றாழை

 குருவரிக்கற்றாழை kuruvarikkaṟṟāḻai, பெ.(n.)

   வரிக்கற்றாழை; striped aloe, so called probably for its usefulness in calcination (சா.அக.);.

     [குரு + வரி + கற்றாழை.]

குருவருடம்

 குருவருடம் kuruvaruḍam, பெ.(n.)

   ஒன்பது வருடங்களுள் ஒன்று; one of nava-varudam.

     [குரு + வருடம்.]

குருவாக்கம்

குருவாக்கம் kuruvākkam, பெ.(n.)

   1.குரு மருந்தைக் கொண்டு முடித்த ஊதை (வாத);ப் பொன்; gold obtained by employing the universal powder for purposes of transmutations.

   2. மாற்று உயர்ந்த பொன்; alchemical gold beyond the standared test. This concentrated gold when added to silver infusion can easily convert the whole mass into gold.

   3. தங்கச்செம்பு; concentrated gold (சா.அக.);.

     [குரு + ஆக்கம்.]

குருவாக்காலி

 குருவாக்காலி kuruvākkāli, பெ.(n.)

   பூனைக்காலி; cowhage plant (சா.அக.);.

     [குருவாக்கம் + காலி.]

குருவாக்கி

 குருவாக்கி kuruvākki, பெ.(n.)

   பெரிய அம்மை; a kind of small-pox in which the scabs fall off.

     [குரு + ஆக்கி.]

குருவாக்கு

 குருவாக்கு kuruvākku, பெ.(n.)

   குருமொழி; word or command of guru.

     [குரு + வாக்கு.]

குருவானவர்

 குருவானவர் kuruvāṉavar, பெ.(n.)

   ஆயர் தரும் பணிகளை நிறைவேற்ற நியமிக்கப்பட்டவர்; priest (க்ரியா.);.

     [குரு+ஆனவர்]

குருவாயரி-தல்

குருவாயரி-தல் kuruvāyaridal,    2 செ.குன்றாவி.(v.t.)

   பொடியாகக் கத்தியால் துணித்தல்; cutting into slices with a knife (சா.அக.);.

     [குரு + ஆய் + அரிதல்.]

குருவாரம்

 குருவாரம் kuruvāram, பெ.(n.)

   வியாழக்கிழமை; Thursday, as a Jupiter’s day.

     [குரு + வாரம்.]

குருவார்-த்தல்

குருவார்-த்தல் kuruvārttal,    4 செ.கு.வி.(v.i.)

   அம்மை வார்த்தல்; getting on, being attakked with smallрох (சா.அக);.

     [குரு + வார்.]

குருவால்

 குருவால் kuruvāl, பெ.(n.)

   இத்தி; white fig.

     [குரு + ஆல்.]

குருவாளி

 குருவாளி kuruvāḷi, பெ.(n.)

   குருமருந்தைச் செய்து முடிப்போன்; one who is skilled in preparing an all healing drug or panacea (சா.அக.);.

     [குரு + ஆளி.]

குருவி

குருவி1 kuruvi, பெ.(n.)

   பறவை வகை; small bird.

     “குருவிசேர் வரை” (சீவக. 2237);.

     [குல் → குரு → குருவி.]

வகைகள்:

   1. தூக்கணாங் குருவி 2. Indian tailor.

கருங்குருவி – black sparrow.

   3. சிட்டுக்குருவி – small sparrow.

   4. ஊர்க்குருவி -village sparrow.

   5. அடைக்கலாங் குருவி – house sparrow.

   6. மலைக் குருவி – hill sparrow.

   7. மஞ்சட் குருவி – weaver bird.

   8. கள்ளிக் குருவி – white headed balbler.

   9. பீக்குருவி – dung bird.

   10. தாசிரிக் குருவி – southern scumitar bird.

   11. தச்சன் குருவி – carpenter bird.

   12. வானம்பாடிக்குருவி – indian skylarh.

   13. மைனாக்குருவி – indian starling.

   14. கட்டலாங் குருவி – bee eater.

   15. காவல் குருவி – Indian hoopoe orhood hood.

   16. சீமைக் காவல் குருவி – European hoopoe.

   17. சூரைக் குருவி – cholum bird.

   18. விசிறிக்குருவி – white browed fan tail.

   19. மீன்கொத்திக் குருவி – king fisher.

   20. தவிட்டுக் குருவி – sparrow of the colour of bran.

   21. வாலாட்டிக் குருவி – wag tail bird (சா.அக.);.

 குருவி2 kuruvi, பெ.(n.)

   1.மூலநாள் (அக.நி.);;   ஒ.நோ. குருகு; the 19th {naksatra.}

   2. குன்றி (மலை.); பார்க்க;See. {kunri}

     [குரு (சிவப்பு); → குருவி.]

குருவி பாய்-தல்

 குருவி பாய்-தல் kuruvipāytal, செ.கு.வி.(v.t.)

   பனைமரத்தின் பாளைக்கு ஏற்படும் நோய்; a fungus disease in palmyra.

     [குருவி+பாய்]

குருவிகம்

குருவிகம் guruvigam, பெ.(n.)

   குன்றிமணி, குன்றிக்கொட்டை; the legume of this creeper consists of 4-6 seeds, which are roundish and polished (சா.அக.);.

     [குறு → குரு → குருவிகம்.]

குருவிக்கண்

குருவிக்கண் kuruvikkaṇ, பெ.(n.)

   1. சிறுகண்; small eyes.

   2. சிறுதுளை; small hole, eyelet.

     [குருவி + கண்.]

குருவிக்கல்

 குருவிக்கல் kuruvikkal, பெ.(n.)

   ஒருவகைச் செம்மண்; red soil (இ.வ.);.

     [குருவி + கல்.]

குருவிக்காதி

 குருவிக்காதி kuruvikkāti, பெ.(n.)

பச்சைக் கருப்பூரம், crude camphor (சா.அக.);.

     [குருவி+காதி]

குருவிக்காரன்

குருவிக்காரன் kuruvikkāraṉ, பெ.(n.)

   1. குருவி பிடிப்போன்; bird-catcher, bird fancier.

   2. மறைந் திருந்து குருவிகளைப் போல ஒலி செய்து குருவிபிடிக்கும் ஒருவகைக் குடியினன்;  a class of bird-catcher, who docoy birds by concealing themselves and successfully imitating their cries.

     [குருவி காரன்.]

குருவிக்கார்

 குருவிக்கார் kuruvikkār, பெ.(n.)

   கார்நெல்வகை; a small kind of black paddy (w.);.

     [குருவி + கார்.]

குருவிக்குடல்

 குருவிக்குடல் kuruvikkuḍal, பெ.(n.)

   அடிக்கடி உண்டாகும் உணவு விருப்பம்; frequent craving for food as the result of eating too little at a time (W);.

     [குருவி + குடல்.]

குருவிக்கூடு

 குருவிக்கூடு kuruvikāṭu, பெ.(n.)

   குருவிகட்டும் கூடு; small bird’s nest.

     [குருவி + கூடு.]

குருவிக்கொழுந்து

 குருவிக்கொழுந்து kuruvikkoḻundu, பெ.(n.)

   குன்றிமணி இலைக்கொழுந்து; tender leaves of crab’s eye plant (சா.அக.);.

     [குருவி + கொழுந்து.]

குருவிச்சம்வேர்

 குருவிச்சம்வேர் kuruviccamvēr, பெ.(n.)

   பேரீந்தின் வேர்; root of date tree (சா.அக.);.

     [குரு + ஈச்சம் + வேர்.]

குருவிச்சி

குருவிச்சி1 kuruvicci, பெ.(n.)

   புல்லுருவி; a parasitic plant.

   2. பேராமுட்டி; fragrant sticky mallow.

மறுவ. குருவிச்சை

     [குரு (விச்சக); → விச்சி.]

குருவிச்சி வகைகள்

   1. முள்ளுக்குருவிச்சி; prickly ivory wood.

   2. பட்டைக்குருவிரசு அல்லது காட்டு வெற்றிலை; rough ivory.

   3. வெள்ளைக் குருவிச்சி; white or gray ivory woods.

   4. ஈட்டிமுனைக் குருவிச்சி; lance leaved ivory wood.

   5. அண்டக் குருவிச்சி; oval leaved ivory wood.

   6. வானிலைக் குருவிச்சி; saw leaved ivory wood (சா.அக.);.

     [குரு → குருவித்தி → குருவிச்சி.]

 குருவிச்சி2 kuruvicci, பெ.(n.)

குருவிச்சை பார்க்க;See. {kuru Vicca}

     [குருவிச்சை → குருவிச்சி.]

குருவிச்சை

குருவிச்சை kuruviccai, பெ.(n.)

   1. குருவிஞ்சி;   2. ஒருவகை மரம்; ovate-leaved ivory wood.

   3. புல்லுருவி; a semi-parasite.

     [குரு → குருவிச்சை.]

குருவிஞ்சி

குருவிஞ்சி kuruviñji, பெ.(n.)

   1. பேராமுட்டி; pinktinged white sticky mallow.

   2. குருவிப்பூண்டு;See. {kuruvi-pôndu.}

     [குரு + இஞ்சி.]

குருவிதம்

 குருவிதம் kuruvidam, பெ.(n.)

   பெருமுத்தக் காசு, பெருங்கோரைக் கிழங்கு; a big variety of {kóray} root (சா.அக.);.

     [குரு → குருவிதம்.]

குருவித்தலைப்பைத்தியக்காரன்

 குருவித்தலைப்பைத்தியக்காரன் kuruvittalaippaittiyakkāraṉ, பெ.(n.)

   மூடன்; idiot, weak-headed or hare-brained person (செ.அக.);.

குருவித்தாலா

 குருவித்தாலா kuruvittālā, பெ.(n.)

   மொச்சை; Indian bean – Dolichosguens (சா.அக.);.

     [குருவி+தலை.]

குருவித்தேங்காய்

குருவித்தேங்காய் kuruvittēṅgāy, பெ.(n.)

   1. சிறு தேங்காய்; small coconut,

   2. ஒருவகைமரம்; a kind of tree.

     [குருவி + தேங்காய்.]

குருவிந்தகன்

 குருவிந்தகன் guruvindagaṉ, பெ.(n.)

   கோரைக் கிழங்கு;{karay} root (சா.அக.);.

      [குருவிந்தம் → குருவிந்தகன்.]

குருவிந்தகம்

 குருவிந்தகம் guruvindagam, பெ.(n.)

   காட்டு மொச்சை; a wild variety of bean (சா.அக.);.

     [குருவிந்தம் → குருவிந்தகம்.]

குருவிந்தக்கல்

குருவிந்தக்கல் kuruvindakkal, பெ.(n.)

   1. குரு விந்தம்; ruby.

   2. சாளைக்கல் செய்வதற்குதவும் ஒரு வகைக்கல்; grey flint, emery.

   3. காவிக்கல்; red ochre.

     “இரத்தின மறியாதா னொருவன் குருவிந்தக் கல்லோ டொக்கும் இது என்றால்’ (ஈடு.3:1,2);.

     [குருவிந்தம் + கல்.]

குருவிந்தம்

குருவிந்தம் kuruvindam, பெ.(n.)

   1. தரக்குறை வான மாணிக்க வகை (சிலப்.14:186,உரை);; inferior kind of ruby.

   2. குன்றி; crab’s eye.

   3. வாற் கோதுமை மணி; a corn of barley.

   4. சாதிலிங்கம்; vermilion.

   5. முத்தக்காசு; straight sedge.

     [குரு → குருவி → குருவிந்தம்.]

குருவிந்துநாதம்

 குருவிந்துநாதம் kuruvindunātam, பெ.(n.)

   மூன்று மாதத்தைய குருப்பிண்டக் குரு; the essence extracted from a three month’s old foetus (சா.அக.);.

     [குரு + விந்து + நாதம்.]

குருவினி

 குருவினி kuruviṉi, பெ.(n.)

   சூலி; a pregnant woman (சா.அக.);.

     [குரு → குருவினி.]

குருவிப்பசி

 குருவிப்பசி kuruvippasi, பெ.(n.)

   சிறுகச் சிறுக சாப்பிடுவதால் அதிகம் உண்டாகும் பசி; frequent experience of hunger due to eating a very small quantity (சா.அக.);.

     [குருவி + பசி.]

குருவிப்பாகல்

 குருவிப்பாகல் kuruvippākal, பெ.(n.)

குருவித் தலைப்பாகல் பார்க்க;See. {kuruvittasai-p-paga}

     [குருவித்தலை → குருவி + பாகல்.]

குருவிப்பாக்கு

 குருவிப்பாக்கு kuruvippākku, பெ.(n.)

குருவித்தலைப் பாக்கு பார்க்க;See. {kuruwitaa. p-pâkku.}

     [குருவி + பாக்கு.]

குருவிப்பூண்டு

 குருவிப்பூண்டு kuruvippūṇṭu, பெ.(n.)

   சிற்றா முட்டி; white small flowered rose mallow (சா.அக.);.

     [குருவி + பூண்டு.]

குருவிப்பேத்தை

குருவிப்பேத்தை kuruvippēttai, பெ.(n.)

   கடல் மீன்வகை; a sea-fish, greenish, attaining1ft.in length.

     [குருவி + பேத்தை.]

குருவிமீன்

 குருவிமீன் kuruvimīṉ, பெ.(n.)

   குருவிக்கு இரையான சிறிய மீன்; a greenish sea-fish (சா.அக.);.

     [குருவி + மீன்.]

குருவியால்

 குருவியால் kuruviyāl, பெ.(n.)

கித்தி பார்க்க (சா.அக.);;See. kitti

     [குருவி + ஆல்.]

குருவியினம்

 குருவியினம் kuruviyiṉam, பெ.(n.)

   குருவியைச் சேர்ந்த குலம்; birds of the sparrow kind (சா.அக.);.

     [குருவி + இனம்.]

குருவியுணவு

 குருவியுணவு kuruviyuṇavu, பெ.(n.)

   குறைந்த அளவாகக் கொள்ளும் சாப்பாடு; food taken in small quantity (சா.அக.);.

     [குருவி + உணவு.]

குருவியோகம்

 குருவியோகம் kuruviyōkam, பெ.(n.)

   குருவியைப் போல் அடிக்கடி மாதரைப் புணர்தல்; having cotion with a woman very frequently like sparrow (சா.அக.);.

     [குருவி + போகம்.]

குருவிரசு

குருவிரசு kuruvirasu, பெ.(n.)

   1. ஆசாதிமரம்; Ivory wood.

   2. பட்டை விரசா பார்க்க;See. {pattai-Virasa.}

     [குரு + விரசு.]

குருவிரத்தம்

 குருவிரத்தம் kuruvirattam, பெ.(n.)

   மிகச் சிவப்பு அரத்தம்; bright red blood (சா.அக.);

     [குருவி + அரத்தம்.]

குருவிரிஞ்சி

 குருவிரிஞ்சி kuruviriñji, பெ.(n.)

   மாதவிடாய்ச் சீலை; menstrual blood cloth (சா.அக.);.

     [குரு + விரிஞ்சி.]

குருவிருட்சம்

குருவிருட்சம் kuruviruṭcam, பெ.(n.)

   1. அரச மரம், peepul tree.

   2. மணமுள்ள மரம்; any fragrant tree (சா.அக.);.

குருவிருந்ததுறை

 குருவிருந்ததுறை kuruviruntatuṟai, பெ.(n.)

   மதுரைக்கு அருகில் உள்ள ஊர்; the town near by Madurai.

குருவித் துறையென இக்காலத்தில் வழங்கப்படுகிறது (அபிசிந்);.

குருவிலேகியம்

 குருவிலேகியம் kuruvilēkiyam, பெ.(n.)

   ஊர்க் குருவி, அடைக்கலாங் குருவி, அல்லது சிட்டுக் குருவி இவற்றைக் கொண்டு தயாரிக்கும் இளகம். இது பெண் போகவிச்சையை அதிகரிக் கும்; electuary prepared with the flesh of village house or small sparrow as a chief ingredients amongst otherbazzardrugs. It is considered as aphrodisiac (சா.அக.);.

     [குருவி+ (இளகியம்); லேகியம்.]

குருவிவாய்

 குருவிவாய் kuruvivāy, பெ.(n.)

   மிகச் சிறிய வாய்; a very small mouth (சா.அக.);.

     [குருவி + வாய்.]

குருவிவாலன்

 குருவிவாலன் kuruvivālaṉ, பெ.(n.)

   பெருநெல் வகை; a large kind of bearded paddy.

     [குருவி + வாலன்.]

குருவிவாலான்

 குருவிவாலான் kuruvivālāṉ, பெ.(n.)

   பெருநெல் வகை; a large kind of bearded paddy (செ.அக.);.

மறுவ. குதிரை வாலி, குதிரை வாலான்.

குருவிவேர்

குருவிவேர் kuruvivēr, பெ.(n.)

   1. ஒரு வாசனை வேர்; a fregrant root.

   2. வெட்டிவேர்; khus-khus root (சா.அக.);.

     [குருவி + வேர்.]

குருவீடு

 குருவீடு kuruvīṭu, பெ.(n.)

   நஞ்சுக்கொடி; umbili cal cord (சா.அக.);.

     [குரு + வீடு.]

குருவுக்காதி

குருவுக்காதி1 kuruvukkāti, பெ.(n.)

   பச்சைக் கற்பூரம் (மூ.க.);; crude camphor.

     [குருவுக்கு + ஆதி.]

 குருவுக்காதி2 kuruvukkāti, பெ.(n.)

   குருமருந்து செய்ய உதவியாக உள்ள பொருள்கள்; in alchamy.

     [குருவுக்கு + ஆதி.]

   1. பச்சைக் கற்பூரம்; crude camphor.

   2. வசநாபி; aconite.

   3. வேதை செந்தூரம்; a red oxide used in alchamy.

   4. கற்பூரம்; camphor cinnamomum.

குருவுபதேசம்

 குருவுபதேசம் kuruvubatēcam, பெ.(n.)

   போதனை; spiritual inspiration (சா.அக.);. குருமொழி பார்க்க;See. {kuru-most}

மறுவ. ஆசான் அறவுரை, குருமொழி.

     [குரு + உபதேசம்.]

குருவுப்பு

குருவுப்பு kuruvuppu, பெ.(n.)

   பிண்ட உப்புச் செயநீர்; a strong alkaline liquid prepared from the salt extracted from the foetus.

   2. முப்பு; the sacred three salts (சா.அக.);.

     [குரு + உப்பு.]

குருவெறும்பு

 குருவெறும்பு kuruveṟumbu, பெ.(n.)

   முசிறு என்னும் பெரிய சிவப்பெறும்பு; large red ant.

     [குரு + உறும்பு.]

குருவெள்ளிமதியோகம்

 குருவெள்ளிமதியோகம் kuruveḷḷimadiyōkam, பெ.(n.)

   பிறப்பியத்தில் வியாழன் வெள்ளி நிலவு மூவரும் ஓர் ஒரையிலிருப்பதாலுண்டாந் நல் வாய்ப்பு (யாழ்.அக.);; an ausicious combination of Juiter, Venus and Moon in the same zodiacal house in a horoscope.

     [குரு + வெள்ளி + மதி + ஒகம்.]

குருவெழும்பல்

 குருவெழும்பல் kuruveḻumbal, பெ.(n.)

   சிறு சிரங்கு உண்டாதல்; rising oferuptions orformation of pustules, vesicles etc (சா.அக.);.

     [குரு + எழும்பல்.]

குருவேர்

 குருவேர் kuruvēr, பெ.(n.)

குருவிவேர் பார்க்க;See. {kuruvi-Vér}

     [குரு + வேர்.]

குருவை

குருவை kuruvai, பெ.(n.)

   ஒரு மட்ட நெல்; an interior variety of paddy

   2. குருங்கத்தலை மீன்; small scianea (சா.அக.);.

     [குறு → குறுவை → குருவை.]

குருவைக்குமரி

 குருவைக்குமரி kuruvaikkumari, பெ.(n.)

   சிறு கற்றாழை; small Indian aloe (சா.அக.);

     [குறுவை → குருவை + குமரி.]

குருவைநம்பி

 குருவைநம்பி kuruvainampi, பெ.(n.)

   ஒரு குயவர்; a potter.

குருவைநெல்

குருவைநெல் kuruvainel, பெ.(n.)

   ஒரு மட்ட நெல்; there are different kinds of inferior paddy that comes from Tirunelveli and Thanjavur. வகைகள்

   1. அறுபதாங் குறுவை

   2. கருங்குருவை;   3. கற் குருவை; stone crop yielding hard rice difficult for digestion.

   4. மட்டக் குருவை; coarse

 paddy.

   5. மைக்குருவை; jet black paddy.

   6. செங்குருவை; red crop and so on (சா.அக.);.

     [குரு – குருவை – குறுவை → குருவை + நெல். (குரு -சிவப்பு.]

குருவைப்பூசல்

 குருவைப்பூசல் kuruvaippūcal, பெ.(n.)

   முப்பூவைப் பூசுதல்; a metal which is intended for transmutation will be coated with quintessence of three salts (சா.அக.);.

     [குறுவை → குருவை + பூசல் (பூசுதல்);.]

குருவையரிசி

 குருவையரிசி kuruvaiyarisi,    பெ.(n. நெல்லின் அரிசி; rice from kuruvai paddy (சா.அக.).

     [குருவை + அரிசி.]

குரூஉக்கனி

 குரூஉக்கனி kurūukkaṉi, பெ.(n.)

   கோட்டை மதிலில் அமைக்கப்பட்டிருக்கும் துளை; a hole made in the fort wall, through which they can see the enemies and attack them.

     [குரூஉ + கனி.]

குரூஉப்புகை

 குரூஉப்புகை gurūuppugai, பெ.(n.)

   மணமுள்ள புகை (திவா.);; savoury smoke.

குரூடகம்

குரூடகம் kurūṭakam, பெ.(n.)

   1. கல்லுப் பனை, மலைப்பனை, தொட்டிப்பனை; palmyra growing on hills;

 hill palmyra – Borassus flabellifer.

   2. ஆண்பனை; male palmyra – Borrasus flabelliformis (சா.அக.);.

குரூபகூபகம்

 குரூபகூபகம் gurūpaāpagam, பெ.(n.)

   வேறுபாட்டமைப்பு கொண்ட (விகாரப்பட்ட); இடுப்பு; a deformed pelvis, especially in a female distorted pelvis.

த.வ. சப்பாணிஇடுப்பு

     [Skt.krupa+kupakam]

குரூபசன்மம்

 குரூபசன்மம் kurūpasaṉmam, பெ.(n.)

   வேபாடுடைய (விகாரப்); பிறப்பு; monster birth.

த.வ.கொடுந்தோற்றப்பிறப்பு

குரூபதேசம்

 குரூபதேசம் kurūpatēcam, பெ.(n.)

மாணாக்கனுக்கு ஆசிரியர் கூறும் அறிவுரை,

 religious instructions to a disciple by his guru (செ.அக.);.

     [குரு→அகுரூ Skt. உபதேசம்]

குரூபபிண்டம்

 குரூபபிண்டம் kurūbabiṇṭam, பெ.(n.)

   வேறுபாடான (விகாரமான); பிண்டம்; monster fotus.

த.வ.கொடும்பிண்டம்

     [குரூப + பிண்டம்.]

     [Skt.{} → த.குரூப.]

புள் → (பின்); → பிண்டு → பிண்டம்.

குரூபம்

குரூபம் kurūpam, பெ.(n.)

   1. இயல்பிலிருந்து மாறுபட்ட (விகாரமான); உருவம், உறுப்புக்கோடு; deformity in features, in limbs.

   2. அழகின்மை; ugliness.

த.வ.கொடுஉரு.

     [கு + ரூபம்.]

     [Skt.ku- → த.கு.]

உருத்தல் = தோன்றுதல், உரு = தோற்றம், வடிவம், வடிவுடைப் பொருள், உடல். உரு → உருவு → உருவம்.

     [த.உருவம் → Skt.{}(வ.வ.1.92);]

வடமொழில் அழிகேடு, அவமதிப்பு, குறைபடு, குறை, சிறுமை, தடை, பழிக்கூறு, இகழ்ச்சி போன்ற பொருளுடன் ‘கு’ முன்னொட்டு இருக்கிறது.

குரூபி

 குரூபி kurūpi, பெ.(n.)

   இயல்பிலிருந்து மாறுபட்ட உருவமுள்ளவ-ன்-ள்; ugly, illshaped, deformed person.

த.வ. சப்பாணி.

     [Skt.ku- → த.கு.]

த.உருவம் → Skt.{} → {} → த.ரூபி.

குரூப்பியம்

 குரூப்பியம் kurūppiyam, பெ.(n.)

   துத்தநாகம்; zinc.

குரூப்புகை

 குரூப்புகை kurūppukai, பெ.(n.)

   நறுமணப் புகை; a very fragrant smoke (சா.அக);.

குரூரகோட்டம்

 குரூரகோட்டம் kurūraāṭṭam, பெ.(n.)

   கழிச்சல் (பேதி); மருந்தாலும் அசையா கெட்டிக் குடல்; costive bowels unaffected by even strong purgatives.

த.வ. கல்குடல்.

     [குரூர + கோட்டம்.]

குள் → கொள் → கோள் → கோடு → கோட்டம்.

குரூரகோட்டி

 குரூரகோட்டி kurūraāṭṭi, பெ.(n.)

   கற்குடலோன்; one with costive bowels.

குரூரன்

 குரூரன் kurūraṉ, பெ.(n.)

   கொடியவன்; cruel person.

த.வ.அரம்பன்.

     [Skt.{} → த.குரூரன். ‘ன்’ ஆ.பா.ஈறு.]

குரூரமருந்து

குரூரமருந்து kurūramarundu, பெ.(n.)

   1. கொடிய மருந்து; any medicine of a virulent type.

   2. வேகமான மருந்து; drastic medicine.

   3. உறைப்பான மருந்து; medicine with burning or pungent, acrimonious medicine.

த.வ.கடுமருந்து.

     [குரூர + மருந்து.]

     [Skt.{} → த.குரூர.]

மரு → மருந்து.

குரூரமாவு

 குரூரமாவு kurūramāvu, பெ.(n.)

   கொல்ல மாவு; penni-nerved cinnamon – Machilus тасrantһа (சா.அக.);.

     [குரூர+மாவு]

 குரூரமாவு kurūramāvu, பெ.(n.)

   கொல்ல மாவு; penni-nerved cinnamon-machilus maerantha.

     [குரூர + மாவு.]

     [Skt.{} → த.குரூர.]

மா → மாவு.

குரூரம்

குரூரம் kurūram, பெ.(n.)

   1. கொடுமை (உரிநி);; cruelty, savageness.

   2. வேறுபாடு (விகாரம்);; ugliness.

த.வ.கரூரம்.

     [Skt.{} → த.குரூரம்.]

வடமொழியில் kravi என்னும் மூலத்திலிருந்து பிறந்த {} என்னும் சொல்லிற்கு ஊறு, புண், ஊறுபாடு, வெம்புண், நோவு, தீங்கு, இரக்கமற்ற, கடுப்பான, முரண்பாடான போன்ற பலபொருள்கள் உள்ளன. (மா.வி.);. இவற்றுள் கொடுமை வேறுபாடு ஆகிய பொருள்களிலேயே இச்சொல் தமிழில் வழக்கூன்றியுள்ளது.

குரூரவதை

 குரூரவதை kurūravadai, பெ.(n.)

   துன்புறுத்திக் கொல்லுகை (சித்திரவதை);; cruel butchery, in human murder.

த.வ. துன்புறுத்தல்

     [Skt.{}+vatai → த.குரூரவதை.]

குரூரவாந்திபேதி

 குரூரவாந்திபேதி kurūravāndipēti, பெ.(n.)

   கொடிய கக்கல் கழிச்சல் (வாந்தி பேதி);; cholera of a virulent or severe type cholera morbus.

த.வ. கடுங்கக்கல் கழிச்சல்.

குரூராசயன்

 குரூராசயன் kurūrācayaṉ, பெ.(n.)

ள பார்க்க;see {}.

குரூராட்சம்

 குரூராட்சம் kurūrāṭcam, பெ.(n.)

   ஆந்தை; owl.

     [P]

குரை

குரை1 kuraittal,    4 செ.கு.வி.(v.i.)

   1. ஆர

   வாரித்தல்; to jubilate, shout.

     “குவவுக்குரையிருக்கை” (பதிற்றுப்.84:20);.

   2. குலைத்தல்; to bark as a dog.

     “ஞாளி குரைதருமே” (திருக்கோ.175);.

 E. blare, neigh, crow. A.S. hnoegan, Icel. hneggja, Scot, nicher Fin. karjua, kaijua:Es.

 karjuda, Komi. Gorsini.

     [குரு → குரை.]

 குரை2 kurai, பெ.(n.)

   ஒலி; noise, roar, shout.

     “துரைத்தலைக் குரைப்புனல்” (பொருந.240);.

     [குரு → குரை.]

 குரை3 kurai, பெ.(n.)

   1. பெருமை (ஈடு.4:9,9);; augustness, majesty.

   2. பரப்பு (ஈடு.4:3,6);; expanse.

     [குரம் → குரு → குரை.]

 குரை4 kurai,      (இடை.) (part.)

   1. ஓர் அசைநிலை (தொல்.சொல்.274);; an expletive.

   2.இசைநிறை (தொல்.சொல்.274);; additional syllable added for the sake of metre.

     [குரு → குரை.]

 குரை5 kurai, பெ.(n.)

   குதிரை (உரி.நி.);; horse. ஒ.நோ.குரா.

     [குதிரை → குரை (இடைக்குறை);.]

குரைக்கல்

 குரைக்கல் kuraikkal, பெ.(n.)

இதளை,

 Indian wild olive – Olea dioica (சா.அக.);.

குரைப்பு

குரைப்பு kuraippu, பெ.(n.)

   ஓசை; noise.

     “உங்காரக் குரைப்பினால்”(சேதுபு.தேவிபுர.47);.

     [குரு → குரை → குரைப்பு.]

குரைமுகன்

 குரைமுகன் guraimugaṉ, பெ.(n.)

   நாய்(பிங்.);; barking-mouthed dog.

     [குரை + முகன்.]

குரைய

குரைய kuraiya,    ஒர் அசைநிலை; an expletive.

     “கெடலருங் குரைய கொற்றம்” (சீவக.1914);.

     [குரு → குரை → குரைய.]

குரோசகம்

 குரோசகம் gurōcagam, பெ.(n.)

   துருக்கியிலுள்ள குராசன் என்னும் ஊரில் விளையும் ஓமம்; black henbane.

     [குராசன் → குரோசகம்.]

குரோசம்

குரோசம் kurōcam, பெ.(n.)

   1. குரலோசை பார்க்க;See. {kura/Ösal}

   2 1/4 மைல் கொண்ட தொலைவு; Indian leaque, kQs = about 2 1/4 miles = 2000 தண்டம்.

   2. கூப்பிடுதூரம் (திவா.);; distance of a call.

     [குரல் + ஓசை → குரலோசை → குரோசை → குரோசம். குரலோசை பார்க்க;See.kuratosa.]

குரோசாணியோமம்

 குரோசாணியோமம் kurōcāṇiyōmam, பெ.(n.)

குராசானியோமம் பார்க்க;see {}-{}.

     [U.{}+{} → த.குரோசாணி யோமம்.]

குரோசானி

 குரோசானி kurōcāṉi, பெ.(n.)

குரோசானியோமம் பார்க்க;see {}.

குரோசானியோமப்பத்திரி

 குரோசானியோமப்பத்திரி kurōcāṉiyōmappattiri, பெ.(n.)

   குராசான் நாட்டில் விளையும் ஓமச் செடியின் இலை (இது ஒரு கற்ப மூலிகை);; leaves of omum plant growing in {}, a re-juvenating drug.

     [குரோசான்+ஓமம்+பத்திரி.]

குரோசானியோமம்

 குரோசானியோமம் kurōcāṉiyōmam, பெ.(n.)

   குராசான்தேசத்தில் விளையும் ஓமம்; omum plant growing in {}.

குரோசியம்

 குரோசியம் kurōciyam, பெ.(n.)

   நவரை வாழை; a species of plantain (சா.அக.);.

     [குராசன் → குரோசியம்.]

குரோடம்

குரோடம் kurōṭam, பெ.(n.)

   பன்றி; hog.

   2. முட்பன்றி; porcupine (சா.அக.);.

     [குரோட்டம் → குரோடம்.]

குரோடீகரி-த்தல்

 குரோடீகரி-த்தல் kurōṭīkarittal, பெ.(n.)

   முறைப்படுத்துத் தொகுத்தல்; to systematise and summarise.

த.வ. முறைப்படுத்தல்.

     [Skt.{}- → த.குரோடீகரி-த்தல். ‘தல்’ தொ.பெ.ஈ.]

குரோட்டன்

 குரோட்டன் kurōṭṭaṉ, பெ.(n.)

   ஆண் நரி; male of afox. he-jackal (சா.அக.);.

     [குரு → குருட்டன் → குரோட்டன்.]

குரோட்டம்

குரோட்டம் kurōṭṭam, பெ.(n.)

   நரி (பிங்.);; jackal.

   2. பன்றி; hog.

     [குருட்டம் → குரோட்டம்.]

குரோட்டா

 குரோட்டா kurōṭṭā, பெ.(n.)

கரோட்டம் (சூடா.); பார்க்க;See. {kurottam,}

     [குரோட்டம் → குரோட்டா.]

குரோட்டு

 குரோட்டு kurōṭṭu, பெ.(n.)

   பன்றி; hog (சா.அக.);.

     [குரோட்டம் → குரோட்டு.]

குரோட்டுசிரிடம்

 குரோட்டுசிரிடம் kurōḍḍusiriḍam, பெ.(n.)

   முழங்கால் வீக்கம்; synovitis of the knee joints.

த.வ. மூட்டு வீக்கம்.

குரோட்டுபலம்

குரோட்டுபலம் kurōṭṭupalam, பெ.(n.)

   1. நாட்டு வாதுமை; Indian almond – Terminalia catappa,

   2, அக்ரோட்டு மரம்; walnut tree – Juglams regia alias Jovis glans (சா.அக.);.

 குரோட்டுபலம் kurōṭṭubalam, பெ.(n.)

   1. நாட்டு வாதுமை; Indian almond teminalia catappa.

   2. ஒரு பெரியமரம்; relnut tree.

   11. செகுன்றாவி. (vt);

குரோதன

குரோதன kurōtaṉa, பெ.(n.)

   அறுபதாண்டு வட்டத்தில் ஐம்பத்தொன்பதாம் ஆண்டு (வருடம்);; the 59th year of the Jupiter cycle of 60 years.

     [Skt.{} → த.குரோதன.]

குரோதனி

 குரோதனி kurōtaṉi, பெ.(n.)

   காமங்கொள்ளும் பெண் (காமி);; a passionate or amorous woman.

த.வ. காமி.

குரோதன்

குரோதன்1 kurōtaṉ, பெ.(n.)

   1. ஒரு வகைச் கோழை (சிலேட்டும);க் கூறு; a form of phlegmatic humour or tendency.

   2. கோழை மிகுதியினால் சினம் கொள்பவன்; a man angry, because of his phlegmatic tendency.

 குரோதன்2 kurōtaṉ, பெ.(n.)

   சினம் கொண்டவன் (கோபமுள்ளவன்); (வீரபத்திரன்.); (சூடா.);;{}, as being wrathful.

த.வ.காய் சினத்தன்.

     [Skt.{} → த.குரோதம் → குரோதன்.]

     ‘ன்’ ஆ.பா.ஈறு

குரோதபரணி

 குரோதபரணி kurōtaparaṇi, பெ.(n.)

   கண்டங் கத்திரி; prickly night shade – Solanum jacquini (சா.அக.);.

 குரோதபரணி kurōtabaraṇi, பெ.(n.)

   கண்டங் கத்தரி; prickly night shade solanum jacquini.

     [P]

குரோதம்

குரோதம்1 kurōtam, பெ.(n.)

   1. சினம் (கோபம்);; anger, wrath.

     “குரோதமே குணமாயிருந்தவர்” (சி.சி.பர.ரோகா.மறு.29);.

   2. செற்றம், காழ்ப்புணர்ச்சி; malice, rancour.

   3. காய்ச்சல்; fever.

த.வ. வன்மம்.

     [Skt.{} → த.குரோதம்.]

 குரோதம்2 kurōtam, பெ.(n.)

   மார்பு; breast, chest.

     [Skt.{} → த.குரோதம்.]

குரோதவல்லபம்

 குரோதவல்லபம் kurōtavallabam, பெ.(n.)

   ஒரு வகைக் கோரை; a variety of cyperus.

குரோதவல்லம்

 குரோதவல்லம் kurōtavallam, பெ.(n.)

   ஒரு கோரை; a variety of cyperus (சா.அக.);.

குரோதி

குரோதி1 kurōtittal,    11. செ.கு.வி.(v.i.)

   செற்றங் கொள்ளுதல்; to bear rancour.

த.வ. சீறுதல்.

     [Skt.{}- → த.குரோதி-.]

 குரோதி2 kurōti, பெ.(n.)

   செற்றங் கொண்டவன்-ள்; rancorous person.

த.வ. சீறாடி, சீறாளி.

     [Skt.{} → த.குரோதி.]

 குரோதி3 kurōti, பெ.(n.)

   அறுபதாண்டு வட்டத்தில் முப்பத்தெட்டாம் ஆண்டு (வருடம்);; the 38th year of the Indian cycle of 60 years.

     [Skt.{} → த.குரோதி.]

குரோதிமுகம்

 குரோதிமுகம் gurōtimugam, பெ.(n.)

   காண்டா விலங்கு; rhinoceros.

த.வ. கல்யானை.

குர்த்தனம்

குர்த்தனம் kurttaṉam, பெ.(n.)

   கூத்து ஆடும் பொழுது செய்யும் உடற்செயல்களுள் ஒன்று (சிலப்.81, கீழ்க்குறிப்பு);; a kind of gesticulation in dancing.

குர்னாப்பட்டை

குர்னாப்பட்டை kurṉāppaṭṭai, பெ.(n.)

   ஒளியுள்ள ஒரு வகை மெல்லிய வண்ணத்தகடு (விறலிவிடு.530);; foliated tinsel (செ.அக.);. [குருணை+பட்டை]

குற

குற1 kuṟattal,    4 செ.குன்றாவி.(v.t.)

   வெளிப் படுத்துதல்; to emit, give out.

     “கொந்தக் குழலைக் குறந்த புழுகட்டி” (திவ். பெரியாழ். 2.5:8);.

     [குல் → குறு → குற.]

 குற2 kuṟattal,    4 செ.குன்றாவி.(v.t.)

   வார்த்தல்; to pour.

     “புண்ணிலே புளியைக் கறந்திட்டால் கரிக்குமாபோலே” (திவ். பெரியாழ். 2.9:1, வியா, பக்.451);.

     [குல் → குற]

குறகுளம்

 குறகுளம் kuṟakuḷam, பெ.(n.)

   ஒருவகை மரம் (வெள்ளிலோத்திரம்);; the iodh tree – Symplocos racemosa (சா.அக.);.

     [குறகுள்_அம்]

 குறகுளம் guṟaguḷam, பெ.(n.)

   வெள்ளிலோத்திரம்; the lodh tree (சா.அக.);.

     [குறகு → குறகுளம்.]

குறக்கம்

 குறக்கம் kuṟakkam, பெ.(n.)

   நாணல்; reed, bulrush – Saccharum spontaneum (சா.அக.);.

     [குறக்கு – குறக்கம்]

 குறக்கம் kuṟakkam, பெ.(n.)

   நாணல்; bulrush. (சா.அக.);.

     [குற → குறக்கம்.]

குறக்கூத்து

 குறக்கூத்து kuṟakāttu, பெ.(n.)

   குறவராடுங் கூத்து; dance of {kuravar }

     [குறம் + கூத்து.]

குறக்கெஞ்சு

 குறக்கெஞ்சு kuṟakkeñju, பெ.(n.)

   குற்றஞ்செய்த குறவன் கெஞ்சுஞ்செயல்; cringing attitude of {kuravan.}

     [குறம் + கெஞ்சு.]

குறங்கன்

 குறங்கன் kuṟaṅgaṉ, பெ.(n.)

   மலைக்கொன்றை (L);; shingle tree.

     [குறங்கு + அன்.]

குறங்கறு-த்தல்

குறங்கறு-த்தல் kuṟaṅgaṟuttal, செ.கு.வி.(v.i.)

   கால்வாயினின்று வேறு தனிக்கால் பிரித்தல்; to branch out, as channels.

     “கண்ணன் வாய் நின்றும் இவ்வூர் நிலத்தாறே குறங்கறுத்துப் புறவூர்க்கு நீர் பாயும் வாய்க்காலும்” (S.I.I.ii.57,13);.

     [குறுங்கு + அறு-.]

குறங்கு

குறங்கு1 kuṟaṅgu, பெ.(n.)

   1. தொடை; thigh.

     “செறிந்த குறங்கின்…. அஃதை (அகநா.96);.

   2. கிளைக்கால்; branch channel. (S.I.I.ii, 352);.

   3. கொக்கி; clasp, catch link.

     [குறு → குற → குறங்கு (ஒ.நோ. உறு → உற → உறங்கு.]

 குறங்கு2 kuṟaṅgu, பெ.(n.)

   மலையடிவாரம்; foot of a mountain.

     “கட்டிக் குறங்கைக் குறங்காலு மோதி” (தக்கயாகப்.540);.

     [குல் → குற → குறங்கு.]

குறங்குசெறி

குறங்குசெறி kuṟaṅguseṟi, பெ.(n.)

   தொடையணி; ornament for the thigh

     “குறங்கு செறிதிரள் குறங்கினிற் செறித்து” (சிலப். 6:86);.

     [குறங்கு + செறி.]

குறங்குச்சம்பா

 குறங்குச்சம்பா kuṟaṅguccambā, பெ.(n.)

   கட்டைச்செம்பாளை நெல்; a kind of coarse {campa} paddy.

     [குறங்கு + சம்பா.]

குறங்கொட்டி

 குறங்கொட்டி kuṟaṅgoṭṭi, பெ.(n.)

   துலா முதலிய வற்றோடு இணைக்கும் மரக்கட்டை; short piece or strip of wood tied to the end of a well-sweep, to a rafter or to the broken leg of a chair.

     [குறங்கு + ஒட்டி.]

குறங்கொன்றகம்

 குறங்கொன்றகம் kuṟaṅkoṉṟakam, பெ.(n.)

   பெருமுத்தக் காசு, அதாவது பெருங்கோரைக் கிழங்கு; the root ofa big variety of koray grass – Cyperus rotundus (சா.அக.);.

     [குறும் – கொன்றகம்]

 குறங்கொன்றகம் guṟaṅgoṉṟagam, பெ.(n.)

   பெருங்கோரைக் கிழங்கு; the root of a big variety of {köray} grass (சா.அக.);.

மறுவ. பெருமுத்தக்காக

     [குறும் + கொன்றகம்.]

குறச்சாதனை

 குறச்சாதனை kuṟaccātaṉai, பெ.(n.)

   குற்றஞ் செய்த குறவனைப் போற் செய்யும் வன்செயல்; stubborn inflexible nature, as of a {kuravas.}

     [குறம் + சாதனை.]

குறஞ்சனம்

 குறஞ்சனம் kuṟañcaṉam, பெ.(n)

   வெண்காரம் என்னும் மருந்துச் சரக்கு வகை (மூ.அ.);; bo-rax.

     [குறு+அஞ்சனம்]

குறஞ்சால்

 குறஞ்சால் kuṟañjāl, பெ.(n.)

   குறையுழவுடைய நிலம் (யாழ்.அக.);; and partially ploughed.

     [குறும் + சால் – குறுஞ்சால் → குறஞ்சால்.]

குறஞ்சி

குறஞ்சி kuṟañji, பெ.(n.)

   1. மருதோன்றி (மலை.); ; henna.

   2. செம்முள்ளி (மலை.);; common yellow nail dye.

   3. ஈந்து (மலை.);; date palm.

     [குறிஞ்சி → குறஞ்சி.]

குறடா

 குறடா kuṟaṭā, பெ.(n.)

   குதிரைச் சவுக்கு; horse whip.

க.கொரடா

     [குறடு → குறடா (கொ.வ);.]

குறடு

குறடு1 kuṟaḍu, பெ.(n.)

   1. கம்மியரது பற்றுக்குறடு; pincers, tongs, forceps.

     “கொட்டி யுண்பாரும் குறடுபோற் கைவிடுவர்” (நாலடி.208);.

   2. சுவடி தூக்குங் கயிற்றுக் குறடு; satchel-pin, hook for hanging up school boy’s {da} books.

   3. நண்டு; crab.

   4. பாதக்குறடு (யாழ்.அக..); sandals.

தெ.கொரடு

     [குறு → குறள் → குறடு (வளைந்தது);.]

     [P]

குறடு

 குறடு2 kuṟaḍu, பெ.(n.)

   1. மரத்துண்டு; small block or clump of wood.

     “சந்தன மென்குறடு” (வாக்குண்.28);.

   2. பலகை (சூடா.);; plank, board.

   3. இறைச்சி கொத்தும் பட்டடை மரம்; block for cutting meat.

     “ஊனமர் குறடு போல” (சீவக. 2281);

   4. தேர் முதலியவற்றின் அச்சுக் கோக்கும் இடம்; axlebox of a cart.

     “நோன்குறட் டாரஞ் சூழ்ந்த…. நேமி” (சிறுபாண்.252);.

   5. சந்தனக் கல்; grinding-stone for preparing sandal perfume.

     “செழுமலைக் குறடுரிஞ்சிச் செய்ய சந்தனத்தின்” (சேதுபு. திருநாட்.26);.

   ம. குரடு;   க., தெ., பட. கொறடு; Fin, kurkihirsi:Q. kurku,

     [குறு → குறள் → குறடு (குட்டையானது சிறியது.]

 குறடு3 kuṟaḍu, பெ.(n.)

   1. திண்ணையொட்டு; edge of a veranda, extension of varandah.

   2. திண்ணை (பிங்.);; raised fioor or verandah, pial; pedestal.

   3. சுவர் முதலியவற்றிலுள்ள எழுதகம்; cornice ona wallor column.

   4. பறை வகை; a kind of drum.

     “கும்பிகை திமிலை செண்டை குறடு”

   ம. குரண்டி;   க. கொரட;தெ. து..கொறடு.

     [குறள் → குறடு (சிறியது);.]

குறட்டரியம்

 குறட்டரியம் kuṟaṭṭariyam, பெ.(n.)

   குறையை மெல்ல வெளியிடுகை; complaint, murmur, expression of dissatisfaction or discontent.

அவன் குறட்டரியம் பண்ணுகிறான் (இ.வ.);

     [குறு → குறட்டு + அரியம்.]

குறட்டாழிசை

குறட்டாழிசை kuṟaṭṭāḻisai, பெ.(n.)

   நாற்சீரின் மிக்க சீர்களால் வரும் அடியிரண்டாய் ஈற்றடி குறைந்து வருவனவும் வேற்றுத்தளை தட்டுக் குறள் வெண்பாவிற் சிதைந்து வருவனவுமாகிய பாவினம் (காரிகை, செய். 9,உரை);; verse of two unequal lines, of five or more feet, the second line being always shorter than the others.

     [குறள் + தாழிசை.]

குறட்டின்கண்

 குறட்டின்கண் kuṟaṭṭiṉkaṇ, பெ.(n.)

   குறட்டின் துளை; fenestrum or opening of forceps (சா.அக.);.

     [குறடு + இன் + கண்.]

குறட்டிழுப்பு

 குறட்டிழுப்பு kuṟaṭṭiḻuppu, பெ.(n.)

குறட்டுவலி பார்க்க;See. {kurattuvas}

     [குறள் → குறட்டு + இழுப்பு.]

குறட்டுக்கம்பு

குறட்டுக்கம்பு kuṟaṭṭukkambu, பெ.(n.)

   தலைப்பக்கத்தில் குமிழுள்ள கம்பு; cane with head.

     “முரட்டும் குறட்டுக் கம்பாலே யடிபடிவோ” (குரு.கூர்ப்.8);.

     [குறடு + கம்பு.]

குறட்டுச்சுவர்

 குறட்டுச்சுவர் kuṟaṭṭuccuvar, பெ.(n.)

   மண்தாங்கிச் சுவர் (CEM);; retaining wall.

     [குறடு + சுவர்.]

குறட்டுச்செருப்பு

 குறட்டுச்செருப்பு kuṟaṭṭucceruppu, பெ.(n.)

   பெருவிரலில் மாட்டத்தக்க மோதிரமுள்ள செருப்பு; a kind of sandals with a loop to admit the great toe.

     [குறடு + செருப்பு.]

குறட்டுப்பாக்குவெட்டி

 குறட்டுப்பாக்குவெட்டி kuṟaṭṭuppākkuveṭṭi, பெ.(n.)

   பாக்குவெட்டி வகை; arecanut-crackerwith a forked mouth.

     [குறடு + பாக்கு + வெட்டி.]

குறட்டுவலி

 குறட்டுவலி kuṟaṭṭuvali, பெ.(n.)

   உடல் நலிவாற் காணும் இழுப்பு; a spasmodic painful contraction of the limb or muscle through weakness (சா.அக.);

மறுவ. குறட்டிழுப்பு

     [குறடு + வலி.]

குறட்டுவாங்கல்

 குறட்டுவாங்கல் kuṟaṭṭuvāṅgal, பெ.(n.)

   குறட்டு வலியை நீக்குதல்; Curing Cramps (சா.அக.);.

     [குறடு → குறட்டு + வாங்கல்.]

குறட்டுவாதம்

 குறட்டுவாதம் kuṟaṭṭuvātam, பெ.(n.)

   வலிப்பு நோய்வகை; a kind of spasm, convulsion.

     [குறட்டு + வாதம்.]

குறட்டெழுதகம்

 குறட்டெழுதகம் guṟaṭṭeḻudagam, பெ.(n.)

   வாசல் நிலையில் அமைந்த அழகிய மரவேலை (கட்.தொ.வரி);; a kind of nice wood work on door frame.

     [குறடு → குறட்டு + எழுதகம்.]

குறட்டை

குறட்டை1 kuṟaṭṭai, பெ.(n.)

   1. சவரிக்கொடி; bitter snake gourd.

   2. காக்கணங்கொவ்வை; mussel shell creeper.

   3. எலிவகை; a kind of rat.

     [குறடு → குறட்டை..]

 குறட்டை2 kuṟaṭṭai, பெ.(n.)

   உறக்கத்தில் மூச்சு விடும் ஒலி; snoring, snorting.

     “கோட்டுவாயோடி வடியக குறட்டைவிட்டு” (இராமநா.உயுத்.32);.

 Fin. korista, Es, koriseda:Q. jorjuy.

     [குல் → குறட்டு → குறட்டை.]

குறட்டைக்கிழங்கு

 குறட்டைக்கிழங்கு kuṟaṭṭaikkiḻṅku, பெ. (n.)

   சவரிக் கிழங்கு; bulbous root of kuralia (சா.அக.);.

     [குறட்டை+ கிழங்கு]

குறட்டைப்பழம்

 குறட்டைப்பழம் kuṟaṭṭaippaḻm, பெ.(n.)

   சவரிப்பழம்; shavari fruit (சா.அக.);.

     [குறட்டை+பழம்]

 குறட்டைப்பழம் kuṟaṭṭaippaḻm, பெ.(n.)

வேலிகளில் படரும்கொடியில் பழுக்கும் சிவந்த நிற உண்ண முடியாத பழ வகை,

 unedible creeperfruit.

     [குறட்டை+பழம்]

குறட்டைவிடல்

 குறட்டைவிடல் kuṟaḍḍaiviḍal, பெ.(n.)

   தூக்கத்தில் விடும் ஒலி மூச்சு; breathing with a rough, hoarse noise in sleep (சா.அக.);.

     [குறட்டை + விடல்.]

குறட்பா

குறட்பா kuṟaṭpā, பெ..(n.)

   குறள்வெண்பா;{kural veņbã,} a two line metre in Tamil prosody.

     “வள்ளுவனா ரோது குறட்பா” (வள்ளுவமா.43);.

     [குறள் + பா.]

குறண்டற்கிழவன்

 குறண்டற்கிழவன் kuṟaṇṭaṟkiḻvaṉ, பெ.(n.)

   கூனற்கிழவன் (j);; hunch-backed old man.

     [குறண்டல் + கிழவன்.]

குறண்டற்சுறுக்கம்

 குறண்டற்சுறுக்கம் kuṟaṇṭaṟcuṟukkam, பெ.(n.)

   குழுப்பு வலி; spasmodic contraction (சா.அக.);.

     [குறண்டல் + சுறுக்கம்.]

குறண்டற்பனங்கிழங்கு

 குறண்டற்பனங்கிழங்கு kuṟaṇṭaṟpaṉaṅgiḻṅgu, பெ.(n.)

   சுருங்கிய அல்லது சுருண்டு வளைந்துள்ள பனங்கிழங்கு; palmyra root withered and bent (சா.அக.);.

     [குறண்டல் → பனங்கிழங்கு.]

குறண்டல்

குறண்டல் kuṟaṇṭal, பெ.(n.)

   1. குரக்குவலி; cramps.

   2. இசிவுண்டாதல்; being attacked with convulsion(சா.அக.);.

     [குறண்டு → குறண்டல்.]

குறண்டல்வாதம்

 குறண்டல்வாதம் kuṟaṇṭalvātam, பெ.(n.)

   ஒருவகை வலிப்புநோய்;     [குறண்டல் + வாதம்.]

குறண்டி

குறண்டி1 kuṟaṇṭi, பெ.(n.)

   செவ்வழிப் பண்வகை (பிங்.);; a secondary melody-type of the {sevvas} class.

     [குறண்டு → குறண்டி (குறைப்பண்வகை);]

 குறண்டி2 kuṟaṇṭi, பெ.(n.)

   1. முட்செடி வகை; a thorny shrub.

   2. தூண்டில் முள்; barb of fish hook.

     [குறு → குறண்டு → குறண்டி.]

குறண்டினகால்

குறண்டினகால் kuṟaṇṭiṉakāl, பெ.(n.)

   குறைந்த கால்; clubfoot.

   2. சப்பைக்கால்; short and distorted foot, of congenital origin (சா.அக.);.

     [குறண்டி + கால் → குறண்டினகால்.]

குறண்டிப்பிடி-த்தல்

குறண்டிப்பிடி-த்தல் kuṟaṇḍippiḍittal,    4 செ.கு.வி. (v.i.)

   மிகவும் கருமியாய் இருத்தல்; to be close fisted, grasping, miserly.

     [குறண்டி + பிடி-.]

குறண்டிப்போ-தல்

குறண்டிப்போ-தல் kuṟaṇṭippōtal,    8 செ.கு.வி. (v.i.)

   கூனலாதல்; to grow crooked, to be bent, hunch-backet.

     [குறண்டி + போ-.]

குறண்டிவளையம்

 குறண்டிவளையம் kuṟaṇṭivaḷaiyam, பெ.(n.)

   தொட்டிற் சங்கிலி மாட்டும் வளையம்; double hooks, fixed to a roof beam for hanging a cradle.

     [குறண்டி + வளையம்.]

குறண்டு-தல்

குறண்டு-தல் kuṟaṇṭudal,    5 செ.கு.வி.(v.i.)

   1. வளைதல்; to be crooked or bent, as horns, fingers, limbs, fruits.

   2. வலிப்பு கொள்ளுதல்; to be convulsed, to have spasms.

   3. சுருண்டு கொள்ளுதல்; to coil up, as a small reptile.

     [குறடு → குறண்டு.]

குறத்தனம்

 குறத்தனம் kuṟattaṉam, பெ.(n.)

   பாசாங்கு; pretence, dissimulation.

     [குறம் + தனம்.]

குறத்தி

குறத்தி1 kuṟatti, பெ.(n.)

   குறிஞ்சிநிலப் பெண்(இறை.1,உரை.);; woman of the hilly tract.

   2. குறச்சாதிப் பெண்; woman of the {kuravatribe,}

     [குறம் → குறத்தி.]

 குறத்தி2 kuṟatti, பெ.(n.)

   1. நிலப்பனை (மலை.);; a ground palmplant common in sandy tracts.

மறுவ. குறத்திகை, குறத்திகா.

     [குறம் → குறத்தி.]

     [P]

குறத்தி

குறத்திகம்

 குறத்திகம் guṟattigam, பெ.(n.)

   குடசப்பாலை (சா.அக.);; a kind of plant.

     [குறம் → குறத்திகம்.]

குறத்திகள்

குறத்திகள் guṟattigaḷ, பெ.(n.)

   1. குரத்திகள் பார்க்க;See. {kurattga!}

   2. சமணப்பெண் துறவியர்; female ascetics of Jain order.

     “ஶ்ரீதிருமலைக் குறத்திகள் மாணாக்கன் ஏனாதி குத்தனஞ் சாத்திச் செய்வித்த படிமம்” (தெ.கல்.தொ.5.கல். 370); (கல்.க.சொ.அக.);.

     [குரவன் (ஆசிரியன்); → குரத்தி + கள் – குரத்திகள் → குறத்திகள்(கொ.வ.);.]

குறத்திகா

 குறத்திகா kuṟattikā, பெ.(n.)

குறத்திகை பார்க்க;See. {kurattiga:}

     [குறத்திகை → குறத்திகா.]

குறத்திகை

 குறத்திகை guṟattigai, பெ.(n.)

   நிலப்பனை; ground palm (சா.அக.);.

     [குன்றம்→குறம்→குறத்தி→குறத்திகை.]

குறத்திசன்னி

குறத்திசன்னி kuṟatticaṉṉi, பெ.(n.)

   1. கறுப்புக் குண்டு மணி; a black bead of the plant of rhynchosia genus.

   2.கறுப்புக் குன்றி மணி; crab’s eye plant – Abrus precatorius melanospermus (சா.அக.);.

     [குறத்தி+சன்னி]

குறத்திப்பாசி

குறத்திப்பாசி kuṟattippāci, பெ.(n.)

   வெண்மையும் உருட்சியுமான காய்களையுடைய புல்வகை (M.M.669);; job’s tears, a small coarse grass, having large, round, white, shining fruits.

மறுவ. பூனாச்சிப்புல் (சா.அக.);.

     [குறத்தி + பாசி.]

குறத்திப்பாட்டு

குறத்திப்பாட்டு kuṟattippāṭṭu, பெ.(n.)

   தலைவிக்கு அவளது காதல் பற்றி குறத்தி குறி சொல்வதாகக் கூறும் ஒரு வகைச் சிற்றிலக்கியம் (தொன்.வி.283);; a poem in which a {kurava} woman is represented as describing to a maiden her fortune in her love affair.

     [குறத்தி + பாட்டு.]

குறத்திமுலைப்பால்

 குறத்திமுலைப்பால் kuṟattimulaippāl, பெ.(n.)

   தேன்; honey (சா.அக.);.

     [குறத்தி + முலை + பால். குறத்திமுலை = மலைமுகடு.]

குறப்பாசாங்கு

 குறப்பாசாங்கு kuṟappācāṅgu, பெ.(n.)

   குற்றஞ் செய்த குறவன் ஒன்றும் அறியாதவன்போல் காட்டும் போலி நடிப்பு; pretended simplicity or feigned innocense, as the trick of a {kuravar}

     [குறம் + பாசாங்கு.]

குறமகளிளவெயினி

குறமகளிளவெயினி guṟamagaḷiḷaveyiṉi, பெ.(n.)

   புறநானூற்றில் 157 ஆம் பாடலியற்றியவரும் குறச்சாதியினருமான ஒரு பெண்பாற்புலவர்; a {Kurava} poetess who composed the 157th stanza in {Puranāpūru.}

     [குறமகள் + இளவெயினி.]

குறம்

குறம் kuṟam, பெ.(n.)

   1. குறக்குடி;{kurava} tribe.

   2. குறத்தி சொல்லும் குறி (சங்.அக.);; palmistry, fortune-telling

   3. குறவர் கூற்றாக வரும் கலம்பகவுறுப்புள் ஒன்று; a theme in Kalampagam as representing the speech of {kuravad opus)tā}

     “தவங்குற மறம் பாண்” (இலக்.வி.812);;

   4. குறத்திப்பாட்டு பார்க்க;See. {kusatti-p-pattu,}

மீனாட்சியம்பை குறம்.

     [குன்று → குன்றம் → குறம்.]

குறம்படை

குறம்படை kuṟambaḍai, பெ.(n.)

   கோட்டை; fort. குறம்படை மழவர் (அக.நா.35);.

     [குறும் + படை.]

குறல்

 குறல் kuṟal, பெ.(n.)

பாதிரி மரம்,

 trumpet flower tree-Stercospermum chelonides (சா.அக.);.

     [குறு-குறல்]

குறளடி

 குறளடி kuṟaḷaḍi, பெ.(n.)

   இருசீரான் வரும் அடி (இலக்.வி.);; a line consisting of two {cir}

     [குறள் + அடி.]

குறளடி வஞ்சிப்பா

குறளடி வஞ்சிப்பா kuṟaḷaḍivañjippā, பெ.(n.)

   குறளடியால் மூன்றுமுதற் பலவடி கொண்டு தனிச்சொல்லும் கரிதகமும் பெற்றுவரும் வஞ்சிப்பா (காரிகை.செய்.24);; a kind of {vasji} verse consisting of three or more lines of {kusakad,} with a detached foot and {agavarcuridagam.}

     [குறள் + அடி + வஞ்சி + பா.]

குறளன்

குறளன் kuṟaḷaṉ, பெ.(n.)

   1. குள்ளன்; short person, dwarf.

   2. வாமனனாக உருவெடுத்த திருமால்;{Visnu,} as a dwarf.

ம. குறளன்

     [குறள் → குறளன்.]

குறளி

குறளி1 kuṟaḷi, பெ.(n.)

   1. குறியவள்; dwarfish woman.

     “ஒருதொழில் செய்யுங் குறளி வந்து” (சீவக. 1653, உரை.);.

   2. குறளிப்பிசாசு; dwarf goblin.

     “வாயிலிடிக்குது குறளி யம்மே” (குற்றா.குற.71);.

   3. குறளிவித்தை; trick of a dwarf goblin.

   4. கற்பிழந்தவள்;(சூடா.);; unchaste woman.

     [குறள் → குறளி.]

 குறளி2 kuṟaḷi, பெ.(n.)

   குறும்பன்; mischievous person.

     [குறள் → குறளி.]

குறளிக்கூத்து

 குறளிக்கூத்து kuṟaḷikāttu, பெ.(n.)

   குறும்புச் செயல்கள்; mischievous devilish act.

     [குறளி + கூத்து.]

குறளிப்பந்தம்

 குறளிப்பந்தம் kuṟaḷippandam, பெ.(n.)

   குறளிப் பேயால் வீடு கொளுத்த இடப்படுவதாகக் கருதப்படும் தீப்பந்தம்; burning ball of rags supposed to be used by the {kural} devil to set fire to houses.

     [குறளி + பந்தம்.]

குறளிப்பிசாசு

 குறளிப்பிசாசு kuṟaḷippicācu, பெ.(n.)

   மாயவித்தை செய்யும் பேய்வகை; dwarf-demon supposed to revel in black magic performances.

     [குறளி + பிசாசு.]

குறளிவித்தை

 குறளிவித்தை kuṟaḷivittai, பெ.(n.)

   குறளியின் உதவியாற் செய்யப்படும் மாயவித்தை; magical tricks, legerdemain, as aided by the {kuraldevil.}

     [குறளி + வித்தை.]

குறளை

குறளை kuṟaḷai, பெ.(n.)

   1. கோட்சொல்; calumny, aspersion, backbiting.

     “பொய்யே குறளை கடுஞ்சொல் பயனில் சொல்லென” (மணிமே.30:68);.

   2. வறுமை; poverty, adversity.

     “குறளை யுணட்பளவு தோன்றும்” (திரிகடு.37);.

    3.நிந்தனை; sarcastic expressions, censure, reproach.

   4. குள்ளம்; dwarfishness.

     [குறு → குறள் → குறளை.]

குறள்

குறள்1 kuṟaḷ, பெ.(n.)

   தமிழ் மறையாகிய திருக்குறள்;{Tirukkural,} the sacred book of the Tamils.

     “உலகெலாங் கொள்ள மொழிந்தார் குறள்” (வள்ளுவமா.33);.

     [குறு → குறள்.]

 குறள்2 kuṟaḷ, பெ.(n.)

   பாதிரி; trumpet flower tree (சா.அக.);.

     [குறு → குறள்.]

 குறள்3 kuṟaḷ, பெ.(n.)

   1. குறுமை; shortness, dwarfishness.

     “குண்டைக் குறட்பூதம்” (தேவா. 944:1);.

   2. ஈரடி உயரமுள்ள குள்ளன்; dwarf, about 2ft. highdist, {tr.cindu.}

     “தேரை நடப்பன போற் குறள்” (சீவக.631);

   3. பூதம் (பிங்.);; imp, goblin.

   4. சிறுமை; smallness.

     “வரகின் குறளவிழ்ச் சொன்றி” (பெரும்பாண். 193);.

   5. குறளடி; short venba(இலக்.வி.730:270);.

   6. குறள் வெண்பா (இலக்.வி.730);;See. {kuralVenbä.}

     [குறு → குறள்.]

குறள்செய்

 குறள்செய் kuṟaḷcey, பெ.(n.)

   குறுகிய நன்செய் நிலம், புன்செய் நிலத்தின் ஊடே வெட்டி அமைக்கப் படும் நன்செய்நிலம்; area of irrigated field formed amidst dry land.

     [குறள் + செய்.]

 குறள்செய் kuṟaḷcey, பெ.(n.)

   குறள் வெண்பாவினினமாக, எவ்வகைச் சீர்தளையடிகளாலும் செம்மையாகிய ஓசையும் பொருளுமுடையதாய்த் தம்முள் அளவொத்த இரண்டடியால் வரும் செந்துறை; a {sendura} metre of {kura/venbā} type of prosody comprising of various components and combination of syllabic cir ad talai with rythmic stanzas.

     “கொன்றைவேந்தன் செல்வனடியினை என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே” (கொன்றை. காப்பு);. [குறள் + வெண் + செந்துறை.]

குறள்வெண்பா

குறள்வெண்பா kuṟaḷveṇpā, பெ.(n.)

   முதலடி நாற்சீரும், இரண்டாமடி முச்சீருமாகி வரும் ஈரடி வெண்பா (இலக்.வி.730,உரை.);; distich of venba metre the firstline consisting offour and the second of three {cir}

     [குறள் + வெண்பா.]

குறழ்-தல்

குறழ்-தல் kuṟaḻtal,    2 செ.கு.வி. (v.i.)

   குனிதல் (வழூஉப்பொருள்);; to stoop, bend low.

     “அவனாங்கே பாராக் குறழா” (கலித்.65:10);.

     [குழறு → குழறா → குறழா(குறழ்); – சொல்வழு.]

     ‘குழறா’ என்பது எழுதுவோரால் ‘குறழா’ எனப் பிறழ எழுதப்பட்டு அதற்குக் குனிதல் என்னும் பொருளும் நச்சினியார்க்கினியரால் தரப்பட்டுள்ளது. குறழ்தல் என்னும் சொல் பண்டை இலக்கியத்தில் யாண்டும் ‘குனிதல்’ என்னும் பொருளில் பயின்றிலது. இச்சொல்லும் பொருளும் தவற்று வடிவினவாம். கலித்தொகையில் (65:10); ‘குறழா’ எனும் சொல் ‘குழறா’ எனத் திருத்தப்படல் வேண்டும்.

குறவஞ்சி

குறவஞ்சி kuṟavañji, பெ.(n.)

   1. குறிசொல்லும் குறமகள்; woman of the {kurava} tribe; fortune-teller.

   2. குறத்திப்பாட்டு; a kind of dramatic poem.

     [குறம் + வஞ்சி →குறவஞ்சி.]

குறவனவன்

 குறவனவன் kuṟavaṉavaṉ, பெ.(n.)

   எருக்குவிய லில் தோன்றும் வெண்புழு (யாழ்ப்.);; large white grub found in dung heaps.

     [குறு(வெள்); + வெண்வன் – குறுவணவன்.]

குறவன்

குறவன் kuṟavaṉ, பெ.(n.)

   1. குறிஞ்சிநில மகன்; inhabitant of the hilly tract.

     “குறவரு மருளுங் குன்றத்து” (மலைபடு.275);.

   2. பாலைநிலமகன் (பிங்.);; in habitant of the desert tract.

   3. வலை வைத்தல், பாம்பு பிடித்தல், கூடைமுடைதல், குறி சொல்லுதல் முதலிய தொழில்கள் செய்யும் குடியினன்;{kurava,} a caste of fowlers, snake catchers, basket-makers and fortune-tellers.

   4. பாசாங்கு பண்ணுகிறவன்; pretended cringing hypocrite.

   3. இதளியம் (மூ.அக.);; mercury, quicksilver.

     [குன்றம் → குறம் + அன் → குறவன்.]

குறவன்குடைந்தகாது

 குறவன்குடைந்தகாது kuṟavaṉkuṭaintakātu, பெ.(n.)

   துளையிடப்பட்ட காது; lobe of the ear perforated with a punch (சா.அக.);.

     [குறவன்+குடைந்த+காது.]

குறவம்

 குறவம் kuṟavam, பெ.(n.)

   கோட்டம் என்னும் நறுமண வேர்; Arabian costus (சா.அக.);.

     [குழு→குழுவம்→குறவம்(கொ.வ.);.]

குறவர்கள்

 குறவர்கள் kuṟavarkaḷ, பெ.(n.)

   இந்தியா முழுவதும் வாழும் பரந்து செல் இனத்தவர்; a sect of gypsy caste who live in India.

     [குறம் (குன்று); – குறவர்+கள்]

குறவழக்கு

குறவழக்கு kuṟavaḻkku, பெ.(n.)

   1. தீரா வழக்கு; complicated, involved lawsuit.

   2. வலக்காரமாய் ஒட்டாரம் பிடித்து (பிடிவாதமாய்); மேற்கொள்ளும் முறையற்ற வழக்கு; lawless contention obstinately maintained.

     [குறம் + வழக்கு.]

குறவாணர்

குறவாணர் kuṟavāṇar, பெ.(n.)

   மலைக்குறவர்; the {kurava} tribe of the mountain.

     “முடிந்த பொழுதிற் குறவாணர்” (திவ்.இயற்.3,89);.

     [குன்றம் → குறம் + (வாழ்நர்); வாணர்.]

குறவான்

 குறவான் kuṟavāṉ, பெ.(n.)

   ஒருவகைக் கடல்மீன்; a sea fish known as file or trigger fish (சா.அக.);.

     [குறவன் → குறவன்.]

     [P]

குறவான்

குறவி

குறவி kuṟavi, பெ.(n.)

   குறக்குடிப் பெண்; a woman of {kurava} caste, fem.of {kuravan}

     “குறவிதோண் மணந்த செல்வக் குமரவேள்” (தேவா.758:3);.

     [குறவன் → குறவி(பெண்பால்);.]

குறவிளிம்பு

 குறவிளிம்பு kuṟaviḷimbu, பெ. (n.)

   மண்டைப் பொருத்து; lamboidal suture (சா.அக.);.

     [குறம் + விளிம்பு.]

குறவை

குறவை1 kuṟavai, பெ.(n.)

   பத்தியத்திற்கு உதவும் குறவைமீன்; spotted doke, It is useful in diet.

வகைகள்:

   1. பெருங்குறவை

   2. கற்குறவை

   3. கருங் குறவை

   4. மணியாங் குறவை

   5. பறக்குறவை (சா.அக.);.

     [குறம் + வை → குறவை.]

குறாசம்

 குறாசம் kuṟācam, பெ.(n.)

   பெருங்காயம்; asafoetida – Ferula asafoetida (சா.அக.);.

     [குறு – அசம்]

குறாள்

குறாள் kuṟāḷ, பெ.(n.)

   1. கன்னி; virgin.

   2. பெண் ஆட்டுக்குட்டி; Ewe lamb.

     [குறு + ஆள்.]

குறாவிப்போதல்

குறாவிப்போதல் kuṟāvippōtal, பெ.(n.)

   1. மெலிதல்; growing lean.

   2. ஒடுங்குதல்; being reduced (சா.அக.);.

     [குறளவு → குறாவி + போ.]

குறாவு-தல்

குறாவு-தல் kuṟāvudal,    5 செ.கு.வி.(v.i.)

   1. வாடுதல்; to sink, as the spirit by disappointment, hunger;

 to droop, as plants by drought.

   2. ஒடுங்குதல் (யாழ்.அக.);; to shrink, contract, recede.

   3. மெலிதல் (யாழ்.அக.);; to become reduced, lean, as a person, animal.

   4. புண் ஆறி வடுவாதல்; to heal, as a Sore, cicatrice.

     [குறு → குறுகு → குறுவு → குறாவு.]

குறி

குறி1 kuṟittal,    4 செ.கு.வி. (v.i.)

   1. கருதுதல்; to design, intend, contemplate, consider, think.

     “கொலைகுறித் தன்ன மாலை” (அகநா.364);.

   2. ஊழ்கம் செய்தல்; to meditate.

     “ஞானியர்தாங் குறியெட்டக் கரத்தார்.” (அட்டப். திருவேங்கடமா. 57);.

   3. வரையறுத்தல் (பிங்.);; to determine, ascertain.

   4. கோடு வரைதல்; to draw, as a line.

     ‘புழுக்குறித்தது எழுத்தானாற் போல’ (ஈடு,2.4:3);.

   5. குறித்துக் கொள்ளுதல்; to note down, to make the first draft in writing, to sketch an outline in painting, to trace.

இந்நூலின் அரும்பதங்களைக் குறிக்க.

   6. சுட்டுதல்; to refer to denote, suggest, specify

   6. பற்றுதல்; to pertain, relate to,

எதைக் குறித்துப் பேசினாய்?”

   8.இலக்கு வைத்தல்; to aim at, as in shooting.

     “வெய்யோன் குறித்தெறி

பிறங்கல்” (கந்தபு.கயமுகன்வ.38);.

   9. அடைதல்; to reach, attach oneself to.

     “குரவன் பதத்தைக் குறித்து” (சைவச. பொது.125);.

   10. பாவித்தல்; to regard, tancy.

     “குறித்துச் சிவனெனக் கோபுரத்தை” (சைவச.பொது.126);.

   11. சொல்லுதல்; to narrate briefly, tell.

     “உற்றதுங் குறித்தான்” (கம்புரா.அகலிகை.41);.

   12. முன்னறி வித்தல்; to tore tell, predict, forebode.

தீச்சகுனம் பொல்லாங்கைக் குறிக்கும்.

   13. ஊதியொலித்தல்; to blow, as a conch;

 to sound

     “வலம்புரி குறித்து” (பாரத.பதினேழாம்.12.);

ம., க. குறி., தெ.,கு. குறி.

     [குல் → குறு → குறி.]

 குறி2 kuṟi, பெ.(n.)

   1. அடையாளம் (பிங்.);; mark, sign,

 stamp, emblem.

   2. இலக்கு; aim, mark to shoot at.

     “கூரிய குணத்தார் குறிநின்றவன்” (தேவா. 356:3);.

   3. குறியிடம் (தொல்.பொருள்.130);;   4. நினைத்த இடம்; goal, destination.

     “சென்று மீளாக்குறி” (கம்பரா. கடிமண.49);.

   5. நோக்கம்; motive, intention.

   6. குறிப்பு; suggestion, hint, insinuation.

   7.மதக்கொள்கை; doctrine.

     “குறிபலவுங் கொளுவினார்” (பெரியபு.திருநா. 38);.

   8. முன்னறிந்து கூறும் தன்மை; omen, presage, prognostic.

     “குறியிறைப் புதல்வரோடு” (குறுந்.394);.

   9. கூட்டம், சபை; assembly, village council.

     “மத்யஸ்தரைக் கொண்டு குறிகூட்டி” (சோழவமி.55);.

   10. தடவை; turn, occasion.

     “ஒருகுறி கேட்போன்” (நன்.42);.

   11. காலம்; time, days, season, as in,

இக்குறி-now-a-days.

   12. ஒழுக்கம்; character, principle of conduct.

   13. ஆண்குறி அல்லது பெண்குறி; generative or gan.

   14. அடி; stripes,lashes.

   15. இலக்கணம்; definition, accurate description.

     “குறியறிந் தோரே” (தொல்.பொருள்.47);.

     [குல் → குறு → குறி.]

 குறி3 kuṟi, பெ.(n.)

   குறியாடு; a sheep.

 Fin. karista;

 FD, karoo;

 Mong, xuray.

     [குறு → குறி.]

 குறி4 kuṟi, பெ.(n.)

   உணர்தல், தெளிதல் என்னும் இரு வகையில் நோயின் தன்மை அறிவிக்கும் சின்னங்கள்; symptoms of diseases they are of two kinds subjective and objective (சா.அக.);.

     [குல்→குறு→குறி.]

 குறி5 kuṟi, பெ.(n.)

   அளவு “ஸர்வேஸ்வரனுக்கும் கைக்குறி யாப்பை வாங்குவது இங்கேயிறே.” (ஈடு.1,4,6);; measure.

     [குல் → குறி.]

குறி-கூடுதல்

குறி-கூடுதல் kuṟiāṭudal,    12 செ.கு.வி.(v.i.)

   நோக்கம் நிறைவேறுதல்; to realise, achieve, as an object

     “கும்பிடவே குறிகூடும்” (தேவா.314:5);.

     [குறி + கூடு-.]

குறிகக்காய்ச்சல்

குறிகக்காய்ச்சல் kuṟikakkāyccal, தொ.பெ. (vbl.n)

   1. குழம்பாய்க் காய்ச்சுதல்; boiling anything into a thick consistence.

   2. கண்டக் காய்ச்சுதல்; boiling down a liquid as decoction (சா.அக.);.

     [குறு+காய்ச்சல்]

குறிகண்டுநோதல்

குறிகண்டுநோதல் guṟigaṇṭunōtal, பெ.(n.)

   பிள்ளைப்பேற்றின்போது (பிரசவத்தில்); பனிக்குட முடைந்து நோய் காணுதல்; commencement of labour after the discharge of liquoramni.

   2. வீங்கி வலித்தல்; pain from swelling (சா.அக.);.

     [குறி + கண்டு + நோதல்.]

குறிகண்டுவடித்தல்

 குறிகண்டுவடித்தல் guṟigaṇḍuvaḍittal, பெ.(n.)

   மருந்து, எண்ணெய் முதலியவற்றைப் பதம் பார்த்து இறுத்தல்; filtering at the proper stage as medicated oil etc. during their preparation (சா.அக.);

     [குறி + கண்டு + வடித்தல்.]

குறிகநறுக்கல்

 குறிகநறுக்கல் kuṟikanaṟukkal, தொ.பெ. (vbl.n.)

   சிறுசிறு துண்டுகளாய் (பொடியாய்); நறுக்குதல்; Cutinto small pieces (சா.அக.);.

     [குறுக+நறுக்கல்]

குறிகன்னி

 குறிகன்னி kuṟikaṉṉi, பெ.(n.)

சிறு துவரை,

 a small kind of dholl – Dolichos genus (சா.அக.);.

     [குறு-கன்னி]

குறிகவரிதல்

 குறிகவரிதல் kuṟikavarital, தொ.பெ. (vbl.n.)

   பொடியாய்க்கத்தி கொண்டு அரிதல்; cutting into very small or minute pieces (சா.அக.);.

     [குறு+அரிதல்.]

குறிகவிடித்தல்

 குறிகவிடித்தல் kuṟikaviṭittal, தொ.பெ. (vbl.n.)

   தூளாகும்படிச் செய்தல்; reducing to fine powder, pulverising (சா.அக.);.

     [குறுக+இத்தல்]

குறிகாண்(ணு)-தல்

குறிகாண்(ணு)-தல் kuṟikāṇṇudal,    12 செ.கு.வி.(v.i.)

   1. அறிகுறி தோன்றுதல்; to appear, as symptoms, signs.

   2. குறிப்பிடுதல்; to forebode, betoken, typify.

   3. பிள்ளைப் பேற்றுக்குரிய குறி தோன்றுதல்; to have slight discharge at or before the presentation at child birth.

     [குறி + காண்.]

குறிகாரன்

குறிகாரன் kuṟikāraṉ, பெ.(n.)

   1. குறிப்பாக அடிப்பவன்; good marksman.

   2. குறி சொல்வோன்; sooth sayer, diviner.

     [குறி + காரன்.]

குறிகு

குறிகு kuṟiku, பெ.(n.)

   1 குறிஞ்சா; clustered gaetnera – Hiptage madablota.

   2. குறுக்கத்தி; glossy long leaved, fig – Ficus tjakela.

   3.கல்ஆல்

 stone banyan tree – Ficus infextoria (சா.அக.);.

     [குறுஞ்சி-குறுகு]

குறிகூறுபவன்

 குறிகூறுபவன் kuṟiāṟubavaṉ, பெ.(n.)

   குறி சொல்வோன்; sooth sayer (சா.அக.);.

மறுவ. குறிகாரன்

     [குறி + கூறுபவன்.]

குறிகெட்டவன்

 குறிகெட்டவன் guṟigeṭṭavaṉ, பெ.(n.)

   நெறி யற்றவன்; dishonest, shameless, unprincipled .man

     [குறி + கெட்டவன்.]

குறிகேள்-தல் (குறிகேட்டல்)

குறிகேள்-தல் (குறிகேட்டல்) kuṟiāḷtalkuṟiāṭṭal,    4 செ.கு.வி.(v.i.)

   1. குறிசொல்லுமாறு குறிசொல்பவனை வினாவுதல்; to consult a fortune-teller, diviner.

   2. குறிகாரன் சொல்வதைச் செவிமடுத்தல்; to hear what the diviner foresays.

     [குறி + கேள்-.]

குறிகொள்ளு-தல்

குறிகொள்ளு-தல் kuṟikoḷḷutal,    16 செ.கு.வி. (v.i.)

   1. அடையாளத்தைப் பெற்றிருத்தல்; posessing symptoms as in diseases (சா.அக.);.

   2. மனதில் இருத்துதல்; to have in mind, to take in the consideration.

     [குறி+கொள்ளு-தல்.]

குறிகோள்

குறிகோள் kuṟiāḷ, பெ.(n.)

   1. மெய்யறிவு; wisdom.

   2. மனவொருமை; concentration of mind (சா.அக);.

     [குறி + கோள்(வினைத்தொகை குறிகோள் = மனத்துட்கொண்ட கோட்பாடு.]

குறிக்கடை

 குறிக்கடை kuṟikkaḍai, பெ.(n.)

   குறி, அளவுகோல்; measure.

     [குறிக்கு + அடை – குறிக்கடை.]

குறிக்கொட்டாங்கச்சி

 குறிக்கொட்டாங்கச்சி kuṟikkoṭṭāṅgacci, பெ.(n.)

   குறி வைத்தலுக்குரிய தேங்காய்க் கண்மூடி அளவு (உழ.நெ.க. அக.);; coconut shell used as a marker.

     [குறி + கொட்டாங்கச்சி (கொட்டான்காய் + சில்);.]

குறிக்கொள்(ளு)

குறிக்கொள்(ளு)1 kuṟikkoḷḷudal,    16 செ.குன்றா.வி. (v.t.)

   1. கைக்கொள்ளுதல்; to grasp, seize, hold.

     “கோது படலில்ல குறிக்கொண்டு” (சீவக. 499);.

   2. மனத்துக் கொள்ளுதல்; to comprehend, understand.

     “ஏத்த நில்லா குறிக்கொண்மினிடரே” (திவ்.திருவாய்.8:6,6);.

   3. கவனித்துப் பாதுகாத்தல்; to guard carefully.

     “பறவை யரையா வுறகல் பள்ளியறை குறிக்கொண்மின்” (திவ்.பெரியாழ். 5:2,9);.

   4. ஒன்றையே குறியாகப் பற்றுதல்; to fix the mind steadily on one subject, to concentrate.

     “குறிக்கொள் ஞானங்களால்” (திவ்.திருவாய், 2:3,8);.

க. குறிக்கொள்

     [குறி + கொள்.]

 குறிக்கொள்(ளு)2 kuṟikkoḷḷudal,    16 செ.கு.வி.(v.i.)

   மேன்மைப் படுதல்; to be remarkable, distinguised.

     [குறி + கொள்.]

குறிக்கொள்வோன்

 குறிக்கொள்வோன் kuṟikkoḷvōṉ, பெ.(n.)

   ஒன்றையே இடைவிடாது சிந்திப்பவன் (பிங்.);; one who sets his heart on one pursuit or object, one who concentrates his attention on one thing.

     [குறி + கொள்வோன்.]

குறிக்கோள்

குறிக்கோள் kuṟikāḷ, பெ.(n.)

   1. மனவொருமை (திவா.);; single-minded devotion, concentration.

   2. நினைவில் வைக்கை (திவா.);; cherishing in memory, remembering.

     “குறிக்கோட் டகையது கொள்கெனத் தந்தேன்” (சிலப். 30:63);.

   3. அறியுந்திறம்; comprehension or power of understanding.

     “என்றுணரும் குறிக்கோ ளில்லா” (கம்பரா.சூர்ப்.140);.

   4. உயர்ந்த கருதுகோள்; ideal.

     “குறிக்கோளி லாது கெட்டேன்” (தேவா. 632:9);.

   5. நல்லுணர்வு; wisdom, good sense, sagacity.

     “கொன்றேன் பல்லுயிரைக் குறிக்கோளொன் றிலாமையினால்” (திவ்.பெரியதி. 1:9,3);.

   6. யாழ் மிLற்றுதலிற் கருத்தோடு செய்ய வேண்டிய பண்ணல் முதலிய தொழில்கள்; acts needed to play upon a violin properly, numbering-8, viz,

பண்ணல், பரிவட்டணை, ஆராய்தல், தைவரல், செலவு, விளையாட்டு, கையூழ், குறும்போக்கு.

   7. மேன்மைப்பாடு (வின்.);; the state of being distinguished or illustrious.

     [குறி + கொள் – குறிக்கொள் → குறிக்கோள்.]

குறிசாடு-தல்

குறிசாடு-தல் kuṟicāṭudal,    19 செ.கு.வி.(v.i.)

   1. குறி தவறாது துப்பாக்கியாற் சுடுதல்; to shoot with out missing the mark.

   2. மாட்டுக்குச் சூடு இடுதல் (வின்.);; to brandmarks upon cattle.

     [குறி + சாடு-.]

குறிசாற்றல்

 குறிசாற்றல் kuṟicāṟṟal, பெ.(n.)

   கொம்பை ஊதிச் சிற்றூர் அவையைக் கூட்டுதல்; convening a meeting of the village assembly by blowing a horn.

மறுவ. சங்கூதல்

     [குறி + சாற்றல்.]

குறிசுடு-தல்

குறிசுடு-தல் kuṟicuṭutal,    20 செ.கு.வி (v.i.)

   1. குறி தவறாமல் துமுக்கியால் சுடுதல்; to shoot without missing the mark.

   2. மாட்டுக்குச் சூடு வைத்தல்; to brand marks upon cattle (செ.அக.);.

     [குறி + கடு-]

சிற்றுார்களில் ஊர் மாடுகளை மந்தையாக ஒட்டிச் சென்று மேய விடுவதற்கு ஊர் பொது ஆள் ஒருவர் அமர்த்தப்படுவார். தத்தம் மாடுகளை இனங் காண்பதற்கு மாட்டின் மீது சூடு வைத்து அடை யாளப்படுத்துவர்.

குறிசொல்(லு)-தல்

குறிசொல்(லு)-தல் kuṟisolludal,    8 செ.கு.வி.(v.i.)

   ஒருவரது ஆகூழ் முதலியவற்றைப் பற்றிக் குறிபார்த்துக் கூறுதல்; to tell one’s fortune, to divine.

     [குறி + சொல்-.]

குறிசொல்வோன்

குறிசொல்வோன் kuṟisolvōṉ, பெ.(n.)

   1. மந்திரக்காரன்; magician foretelling events.

   2. ஆருடம் சொல்வோன்; fortune teller.

   3. சேவல்; cock, fowl

     [குறி + சொல்வோன்.]

குறிச்சி

குறிச்சி1 kuṟicci, பெ.(n.)

   1. குறிஞ்சி நிலத்தூர்; village in the hilly tract.

     “குறிஞ்சி புக்க மான்போலவும்” (இறை.1, உரை);. 2 ஊர் (திவா.);;

 vilage.

ம. குறிச்சி க.குறிகை

     [குறிஞ்சி → குறிச்சி (வலித்தல் திரிவு);.]

 குறிச்சி2 kuṟicci, பெ.(n.)

   குழந்தைக்கு வருங் குத்திருமலுக்கு காப்பாக (இரட்சையாக);க் கட்டும் ஒலைச்சுருள்; an {Óla} amulet tied to a child’s waist and believed to ward off attacks of whooping cough.

     [குறி → குறிச்சி.]

 குறிச்சி kuṟicci, பெ.(n.)

சிறு குடியிருப்பு:

 a hamlet.

க. குறிகெ(சிற்றுர்); குறசி-சிறுமரக்காடு.

     [குறு-குறிச்சி]

குறிச்சிப்பி

 குறிச்சிப்பி kuṟiccippi, பெ.(n.)

   சிப்பிமுத்து; oyster -pear (சா.அக.);.

     [குறி + சிப்பி.]

குறிச்சூத்திரம்

 குறிச்சூத்திரம் kuṟiccūttiram, பெ.(n.)

   ஒரு நூலிற்ப் பயின்றுவரும் குறியீடுகளைத் தெரிவிக்கின்ற நூற்பா (தமி.இல.க.சொ. அக.);; sutra mentioning technical terms in a work.

     [குறி + சூத்திரம்.]

குறிஞன்

 குறிஞன் kuṟiñaṉ, பெ.(n.)

   வறியன் (அக.நி.);; poor person.

     [குறு → குறிஞன்.]

குறிஞ்சா

குறிஞ்சா1 kuṟiñjā, பெ.(n.)

   1. குருக்கத்தி; common delight of the woods.

   2. பெருங்குறிஞ்சா; a species of scammony swallow wort.

   3.நஞ்சறுப்பான்; Indian ipecacunha.

   4. குடசப் பாலை; green wax-flower.

   5. குறிஞ்சி நிலத்தில் விளையும் பூடு; any plant growing on inferior hilly soil.

     [குறிஞ்சி → குறிஞ்சா.]

குறிஞ்சா வகைகள் :

   1. சிறுகுறிஞ்சா

    2. பெருங்குறிஞ்சா

    3. கருங்குறிஞ்சா

    4. நீர்க்குறிஞ்சா

    5. மலைவண்ணக்குறிஞ்சா

    6. பவளக்குறிஞ்ச

    7. எருமைக் குறிஞ்சா

   8. கனைக் குறிஞ்சா

   9. அழகுக்குறிஞ்சா

   10. வாணக்குறிஞ்சா (சா.அக.);.

     [குறிஞ்சி → குறிஞ்சா.]

குறிஞ்சி

குறிஞ்சி1 kuṟiñji, பெ.(n.)

   1. ஐவகை நிலத்துள் ஒன்றாகிய மலையும் மலைசார்ந்த நிலமும்; hilly tract, one of five kinds of nilam.

   2. குறிஞ்சிப் பண்; a specific melody-type.

     “குறிஞ்சிப் பாடி” (திருமுருகு.239);.

   3. புணர்தலாகிய உரிப்பொருள்; clandestine union of lovers assigned by poetic convention to the hilly tract.

     “குறிஞ்சி சான்ற… மலை” (மதராக் 300);.

   4. குறிஞ்சிப்பாட்டு; a poem.

     “கோல்குறிஞ்சி பட்டினப்பாலை” (பத்துப்பா. தனிப்பா.);.

   5. மருதோன்றி (மலை.);; henna.

   6. பெருங்குறிஞ்சி ; a species of conehead.

   7. சிறுகுறிஞ்சி ; a species of conehead.

   8. செம்முள்ளி (சூடா.);; thorny nail dye.

   9. பூடுவகை; conehead, shrub.

   10. மரவகை; square branched conehead.

   11. ஈந்து (மலை.);; dwarf wild date palm.

     [குன்றம் → குறம் → குறும்பு → குறிஞ்சி.]

 குறிஞ்சி kuṟiñji, பெ.(n.)

குறிஞ்சிப்பூ {kuriflower.}

     “கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே” (குறுந்.3);.

மறுவ. குறிஞ்சிப்பூ, குறிஞ்சிமலர்.

ம. குறிஞ்ஞி.

     [குன்றம் → குறம் → குறஞ்சி→குறிஞ்சி.]

குறிஞ்சி மலர்களுள் ஐம்பது வகைகள் உள்ளன. இவை, வெண்மை, பொன்மை, செம்மை, நீலம், செந்நீலம் என்னும் ஐந்து நிறங்களில் மிகுதியாகப் பூப்பதால் ஜவண்ணக் குறிஞ்சி எனப்படும். இவற்றுள் செந்நீலக் குறிஞ்சி எனப்படும் வாடாக்குறிஞ்சி பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் இயல்புடையது. மூன்றாண்டுக்கு ஒருமுறையும் ஆண்டுக்கு ஒருமுறையும் பூக்கும் வகைகளும் உள்ளன.

வகைகள்:

   1. செங்குறிஞ்சி

   2. மஞ்சட் குறிஞ்சி

    3. வாடாக் குறிஞ்சி

    4. வெண்குறிஞ்சி

    5. கருங்குறிஞ்சி

    6. சின்னக்குறிஞ்சி

    7. பெருங் குறிஞ்சி

    8. காட்டுக்குறிஞ்சி

   9. மேக வண்ணக் குறிஞ்சி

   10, மோர்க் குறிஞ்சி

   11. பவளக்குறிஞ்சி அல்லது சீனப்பூ

   12.. சிறுகுறிஞ்சி

   13. கெட்டிக் குறிஞ்சி (சா.அக.);.

குறிஞ்சிகா

 குறிஞ்சிகா kuṟiñcikā, பெ. (n.)

பூவந்திக் கொட்டை,

 soap-nut(சா.அக.);.

மறுவ. பூந்திக்கொட்டை

குறிஞ்சிக்கருப்பொருள்

 குறிஞ்சிக்கருப்பொருள் kuṟiñcikkarupporuḷ, பெ. (n.)

   குறிஞ்சி நிலத்தின் தன்மையும் மலைபடு பொருள்களும்; nature and properties peculiar to a hilly tract and its soil (சா.அக.);.

     [குறிஞ்சி+கரு+பொருள்]

குறிஞ்சி நிலத்தின் கருப்பொருள்கள்:

தெய்வம் – முருகக் கடவுள்

உயர்ந்தோர் -பொருப்பன்,

குறவன், குறத்தி

தாழ்ந்தோர் – கானவர்

புள் – கிளி, மயில்

விலங்கு –அரிமா, புலி

ஊர் – சிறுகுடி

நீர் – அருவி, சுனை

பூ – காந்தள், வேங்கை

மரம் – சந்தனம், தேக்கு

உணவு – மூங்கிலரிசி, திணை

பறை – தொண்டகம்

யாழ் – குறிஞ்சியாழ்

பண் – குறிஞ்சி

தொழில் _ வெறியாடல், தினைகாத்தல்

கிழங்ககழ்தல்.

 குறிஞ்சிக்கருப்பொருள் kuṟiñjikkarupporuḷ, பெ.(n.)

   குறிஞ்சி நிலத்தின் தன்மையும் குணமும்; nature and properties peculiar to a hilly tract and its soil (சா.அக.);.

     [குறிஞ்சி + கருப்பொருள்.]

குறிஞ்சிக்கல்

 குறிஞ்சிக்கல் kuṟiñjikkal, பெ.(n.)

   மலையில் உள்ள சுக்கான் கல்; mountain lime stone (சா.அக.);.

     [குறிஞ்சி + கல்.]

குறிஞ்சிக்கல்நார்

 குறிஞ்சிக்கல்நார் kuṟiñcikkalnār, பெ.(n.)

   மலையில் விளையும் கல்நார்; mountain fbrous asbestos-Mountain flax (சா.அக.);.

     [குறிஞ்சி+கல்+நார்]

குறிஞ்சிக்கிறைவன்

 குறிஞ்சிக்கிறைவன் kuṟiñjikkiṟaivaṉ, பெ.(n.)

குறிஞ்சிக் கிழவன் (பிங்.);; பார்க்க see {kuri-kkila van}

     [குறிஞ்சிக்கு + இறைவன்.]

குறிஞ்சிக்கிழவன்

 குறிஞ்சிக்கிழவன் kuṟiñjikkiḻvaṉ, பெ.(n.)

   குறிஞ்சிநிலத்துத் தெய்வமான முருகக் கடவுள் (பிங்.);; Murugan, as the god of the hilly tracts.

மறுவ. குறிஞ்சிக் கிறைவன், குறிஞ்சிமன்.

     [குறிஞ்சி + கிழவன்/.]

குறிஞ்சித்திணை

 குறிஞ்சித்திணை kuṟiñjittiṇai, பெ.(n.)

   ஐவகை நிலத்துள் ஒன்றாகிய மலையும் மலையைச் சார்ந்த இடமும்; hilly tract.

     [குறிஞ்சி + திணை.]

குறிஞ்சித்தினை

 குறிஞ்சித்தினை kuṟiñjittiṉai, பெ.(n.)

   மலைப் பகுதியில் விளையும் தினை; millet growing inhilly tracts (சா.அக.);.

     [குறிஞ்சி + திணை.]

குறிஞ்சித்தேன்

குறிஞ்சித்தேன் kuṟiñcittēṉ, பெ.(n.)

   12 ஆண்டுகளுக்கு ஒரு முறைப்பூக்கும் குறிஞ்சி மலரிலிருந்து தேனிக்கள் திரட்டும் மிகத் தித்திப்பான தேன் (காடுபடு தேறல்; sweet); wild or mountain honey (சா.அக.);.

மறுவ மலைத்தேன்

     [குறிஞ்சி+தேன்.]

குறிஞ்சிநிலம்

 குறிஞ்சிநிலம் kuṟiñcinilam, பெ.(n.)

   மலையும் மலை சார்ந்த நிலமும்; hilly tract (அபி.சிந்);.

     [குறிஞ்சி+நிலம்]

குறிஞ்சிநீர்

குறிஞ்சிநீர் kuṟiñjinīr, பெ.(n.)

   மலைத் தண்ணீர்; mountain water.

   2. சுனை நீர்; hill spring water (சா.அக.);.

     [குறிஞ்சி + நீர்.]

குறிஞ்சிப்பண்

 குறிஞ்சிப்பண் kuṟiñjippaṇ, பெ.(n.)

   நால்வகைப் பெரும்பண்களுள் ஒன்று (பிங்.);; one of the four melody-types.

மறுவ. குறிஞ்சியாழ்

     [குறிஞ்சி + பண்.]

குறிஞ்சிப்பறவை

 குறிஞ்சிப்பறவை kuṟiñjippaṟavai, பெ.(n.)

   மலைப் பகுதியில் வாழும் நாட்டு மயில், கிளி முதலிய பறவைகள்; birds peculiar to hilly tracts as peacock, parrot etc. (சா.அக.);.

     [குறிஞ்சி + பறவை.]

குறிஞ்சிப்பறை

 குறிஞ்சிப்பறை kuṟiñjippaṟai, பெ.(n.)

   குறிஞ்சி நிலத்துக்குரிய தொண்டகப்பறை; a kind of drum peculiar to {kuruń.}

     [குறிஞ்சி + பறை.]

குறிஞ்சிப்பாட்டு

 குறிஞ்சிப்பாட்டு kuṟiñjippāṭṭu, பெ.(n.)

   பத்துப் பாட்டுள் ஒன்றானதும், தலைவியின் வேற்றுமை கண்டு வருந்திய செவிலிக்குப் பாங்கி அறத்தொடு நிற்குங் கூற்றாகக் கபிலர் பாடியதுமான செய்யுள்; a poem in {Pattu-p-pattu,} by {Kabilar} treating of the tactful way in which the confidante communicates to the foster mother, the heroine’s love affair.

     [குறிஞ்சி + பாட்டு.]

குறிஞ்சிப்புள்

 குறிஞ்சிப்புள் kuṟiñjippuḷ, பெ.(n.)

   குறிஞ்சிப் பறவை; hilly birds like pea-cock, parrots etc.

     [குறிஞ்சி + புள்.]

குறிஞ்சிப்பூ

குறிஞ்சிப்பூ kuṟiñjippū, பெ.(n.)

   குறிஞ்சி நிலத்துப்பூ; flowers peculiar to hilly regions.

   2. கார்த்திகைப் பூ (சா.அக.);; flowers of plough-root plant.

     [குறிஞ்சி + பூ.]

குறிஞ்சிமன்

 குறிஞ்சிமன் kuṟiñjimaṉ, பெ.(n.)

குறிஞ்சிக் கிழவன் பார்க்க(திவா.);;See. {kuriff-k-kijavan}

     [குறிஞ்சி + மன்.]

குறிஞ்சிமரம்

 குறிஞ்சிமரம் kuṟiñjimaram, பெ.(n.)

   குறிஞ்சி நிலத்தில் முளைக்கும் சந்தனமரம், வேங்கை, அகில், தேக்கு முதலியன; trees in general growing in hilly tracts such as kino, east Indian kino, sandal wood tree, eagle wood, teak etc. (சா.அக.);.

குறிஞ்சியாழ்

 குறிஞ்சியாழ் kuṟiñjiyāḻ, பெ.(n.)

குறிஞ்சிப்பண் (பிங்.); பார்க்க;See. {kurip-par.}

மறுவ. குறிஞ்சிப்பண்

     [குறிஞ்சி + யாழ்.]

குறிஞ்சியாழ்த்திறம்

குறிஞ்சியாழ்த்திறம் kuṟiñjiyāḻttiṟam, பெ.(n.)

   குறைந்த சுரங்கள் கொண்ட எண்வகைக் குறிஞ்சிப்பண் (திவா.);; secondary melody-type of the {kuriff} class played on a reduced scale, of which there are 8, viz. ,

நைவளம், காந்தாரம், படுமலை, பஞ்சுரம், மருள், அயிர்ப்பு, அரற்று, செந்திறம்.

     [குறிஞ்சி + யாழ் + திறம். (திறம் = ஐந்து சுரங்களைக் கொண்ட பண்வகை);.]

குறிஞ்சியுணவு

 குறிஞ்சியுணவு kuṟiñjiyuṇavu, பெ.(n.)

   குறிஞ்சி நிலமக்கள் கொள்ளும் உணவாகிய கிழங்கு தினை, தேன், மூங்கிலரிசி முதலியன; articles of food or staple food for those living in hilly tracts as bulbous roots, millet, honey, bamboo rice etc.(சா.அக.);.

     [குறிஞ்சி + உணவு.]

குறிஞ்சியுரிப்பொருள்

 குறிஞ்சியுரிப்பொருள் kuṟiñjiyuripporuḷ, பெ.(n.)

   குறிஞ்சிநில மக்களின் காம ஒழுக்கம்; the essen. tial characteristics of lovers in sexual inter course, the subject matter of {kuriñpoetry} (சா.அக.);.

     [குறிஞ்சி + உரிப்பொருள்.]

குறிஞ்சிலி

குறிஞ்சிலி kuṟiñjili, பெ.(n.)

   காதில் அணிதற்குரிய பூவகை; a kind of flower worn as an ear-ornament.

     “காதிடைக் குற்றமில் குறிஞ்சிலிக் கொத்தும்” (திருவாலவா.54:20);.

     [குறிஞ்சி → குறிஞ்சில் → குறிஞ்சிலி.]

குறிஞ்சிலைக்கல்

 குறிஞ்சிலைக்கல் kuṟiñjilaikkal, பெ.(n.)

   ஈரக்கல் (வின்.);; red stone.

     [குறும் + சிலை + கல்.]

குறிஞ்சில்

 குறிஞ்சில் kuṟiñjil, பெ.(n.)

   தொட்டிச் செய்ந்நஞ்சு (மூ.அக.);; a prepared arsenic.

     [குறிஞ்சி + இல் – குறிஞ்சில்.]

குறிஞ்சிவேந்தன்

 குறிஞ்சிவேந்தன் kuṟiñjivēndaṉ, பெ.(n.)

   குறிஞ்சிக் கிழவன் (சூடா.);;பார்க்க;See. {kuriர். k-kilavas);.}

     [குறிஞ்சி + வேந்தன்.]

குறிதளர்ச்சி

 குறிதளர்ச்சி kuṟitaḷarcci, பெ.(n.)

   ஆண் குறி எழுச்சியின்மை; inability to have an erection of the penis – Impotentia erigendi(சா.அக.);.

     [குறி+தளர்ச்சி]

குறித்த

 குறித்த kuṟitta, பெ.அ.(adj.)

பற்றிய,

 concerning;regarding.

ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு குறித்த அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியிடப்படும். சுற்றுப்புறச் குழ்நிலைப் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கு இன்று துவங்குகிறது.

     [குறி – குறித்த]

குறித்தகள்ளன்

 குறித்தகள்ளன் guṟittagaḷḷaṉ, பெ.(n.)

   பேர் பெற்ற பழந்திருடன்; notorious robber or thief.

     [குறித்த + கள்ளன்.]

குறித்தழை-த்தல்

குறித்தழை-த்தல் kuṟittaḻaittal,    4 செ.குன்றாவி.(v.t.)

   1. கூட்டத்திலுள்ள ஒருவனைக் குறிப்பிட்டழைத் தல்; to call or beckon one out of an assembly.

   2. பாதுகாக்கும்படி அழைத்தல்; to call upon one for protection,

   3. நேரில் வந்து காட்சி தரும்படி தேவதையைப் பேராலழைத்தல்; to invoke a deity by name to appear.

     [குறித்து + அழை-.]

 o

குறித்து

 குறித்து kuṟittu, வி.எ. (adv.)

   தொடர்புற்று நோக்கி; with the intention of; towards.

     [குறி → குறித்து-.]

குறிநட்டு

 குறிநட்டு kuṟinaṭṭu, பெ.(n.)

   கணுக்கால் எலும்பு; nkle bone (சா.அக.);.

     [குதிநாட்டு → குறிநாட்டு → குறிதட்டு (கொ.வ.);.]

குறிநிலையணி

குறிநிலையணி kuṟinilaiyaṇi, பெ.(n.)

   ஒரு பொருளைப் புகழும் சொற்களால் குறித்தற்குத் குதியாகிய பிறிதொரு பொருளையும் சொல்லும் அணி (அணியி.73);; a figure of speech in which an object worth knowing is referred to by associaon on the course of extolling a different object.

     [குறி + நிலை + அணி.]

குறிநோய்

 குறிநோய் kuṟinōy, பெ.(n.)

   ஆண்குறி அல்லது பெண்குறி நோய்; disease of the male or female enital.

     [குறி + நோய்.]

குறிபார்-த்தல்

குறிபார்-த்தல் kuṟipārttal,    4 செ.கு.வி.(v.i.)

   1.நிமித்தம் பார்த்தல்; to observe signs, omens.

   2. நன்மை தீமைகளைக் குறிபார்த்துச் சொல்லுதல்; to tell fortunes.

   3. இலக்குப் பார்த்தல்; to aim at a mark.

     [குறி + பார்-.]

குறிபிழை-த்தல்

குறிபிழை-த்தல் kuṟibiḻaittal,    4 செ.கு.வி.(v.i.)

   1. இலக்குத் தவறுதல்; to miss the mark, as in shooting.

   2. மழைக்குறி தோன்றியும் மழை பெய்யாது விடுதல்; to fail, as signs of rain.

     [குறி + பிழை-.]

குறிபோடு-தல்

குறிபோடு-தல் kuṟipōṭudal,    19 செ.கு.வி.(v.i.)

   1. அடையாளம் இடுதல்; to mark, sign.

   2. எண்ணுதற்குக் கோடு இடுதல்; to make marks for helping calculation.

     [குறி + போடு-.]

குறிப்பறி-தல்

குறிப்பறி-தல் kuṟippaṟidal,    2 செ.கு.வி.(v.i.)

   நோக்கமறிதல்; to take the clue, to guess one’s ntentions.

     “குறிப்பறிந்து காலங்கருதி” (குறள்.696);.

     [குறிப்பு + அறி-.]

குறிப்பாக

 குறிப்பாக kuṟippāka, வி.அ.(adv.)

   முதன்மையாக, சிறப்பாக; particularly;more specifically;especially.

நாட்டு மக்களின் குறிப்பாக கிராம மக்களின் உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு இத்திட்டம் துவங்கப் பட்டிருக்கிறது.

     [குறிப்பு+ஆக]

குறிப்பாளி

 குறிப்பாளி kuṟippāḷi, பெ.(n.)

   உய்த்துணர்பவன்; person of quick discernment, one who shrewdly eads hints and signs.

     [குறிப்பு + ஆளி.]

குறிப்பி-த்தல்

 குறிப்பி-த்தல் kuṟippittal, பி.வி. (caus.)

   குறிப்பினால் தினைப்பூட்டுதல்; to remind, call to mind by sign or hint.

     [குறி → குறிப்பி-.]

குறிப்பிடம்

குறிப்பிடம் kuṟippiḍam, பெ.(n.)

   1. குறித்த இடம்; appointed place, the place of assignation.

   2. சுருக்கம் (யாழ்.அக.);; summary, compendium, pitome.

   3. கிறித்து பட்ட பாடுகளைக் காட்டும் படிமம் (R.C.);; image representing the sufferings of Chirst

   4. வினாவிடையாயமைந்த சமய அறிவுறூஉ நூல் (கிறித்து);; Catechism.

     [குறிப்பு + இடம்.]

குறிப்பிடு-தல்

குறிப்பிடு-தல் kuṟippiṭutal,    20 செ.கு.வி.(v.i.)

   ஏதேனும் ஒரு காரணம் கருதிச் சுட்டிக் காட்டுதல்; make a specific mention of indicate.

தற்கால எழுத்தாளர்களில் யார் சிறந்தவர் என்று நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்?

   2. தெரிவித்தல்; mention;point out.

நீங்கள் வெளியூர் செல்ல இருப்பதை ஏன் உங்கள் கடிதத்தில் குறிப்பிடவில்லை? தமிழ் வளர்ச்சிக்கு அனைவரும்பாடுபட வேண்டும் என்று அவர் தன் பேச்சின் போது குறிப்பிட்டார்

     [குறிப்பு + இடு-தல்.]

குறிப்பிடைச்சொல்

 குறிப்பிடைச்சொல் kuṟippiḍaiccol, பெ.(n.)

   ஆங்கிலத்தில் ஒரு பொருளைச் சுட்டிக்காட்ட உதவும் உரிச்சொல்வகை; demonstrative.

     [குறிப்பு + இடைச்சொல்.]

குறிப்பிட்ட

குறிப்பிட்ட kuṟippiṭṭa, பெ.அ.(adj.)

   1. தேர்ந்தெடுத்த; selected;specified.

குறிப்பிட்டசில துறைகளுக்கு மட்டுமே இந்தச் சட்டம் பொருந்தும். குறிப்பிட்ட ஆட்கள் மட்டுமே தலைவரைச் சந்திக்க அனுமதிக்கப் படுவார்கள்.

   2. முன்பே தீர்மானிக்கப்பட்ட நேரம், காலம் முதலியவை; of time, period appointed.

குறிப்பிட்ட நேரத்தில் தான் மருத்துவரை நீங்கள் பார்க்க முடியும். குறிப்பிட்ட தேதியில் விண்ணப்பம் வந்து சேர வேண்டும்.

குறிப்பு

குறிப்பு1 kuṟippu, பெ.(n.)

   1. உள்ளக்கருத்து; intention, inmost thought, real purpose or motive.

     “இனியென் திருக்குறிப்பே” (திவ்.பெரியாழ்.5.4:1);.

   2. பொறியானன்றி மனத்தாற் குறித்துணரப் படுவது (தொல்.சொல்.297,சேனா);; object of mental apprehension dist, {fr.pambu.}

   3. ஒன்பது வகைச் சுவைகளில் உண்டாகும் மனநிலை (சிலப்.3:13 உரை); (Rhet.);; mental response to the nine sentiments.

   4. மனவொருமை(பிங்.);; concentration of thought.

   5. குறிப்பறிதல், இங்கிதம்; internal emotion attended with external gestures.

     “குறிப்பறிது” (குறள்.696);.

   6. சைகை; gesture, significant look or word:

     “உணர்த்தியே குறிப்பால்” (கந்தபு.கணங்கள்.29);.

   7. பிறர் கருதியதனைக் காணவல்ல கூரிய அறிவு; capacity to read into the minds of others, sharp, penetrative intellect.

     “குறிப்பிற் குறிப்புணரா வாயின்” (குறள்.705);.

   8. சுருக்கம்; summary, abstract.ம.குறிப்பு.

   9. ஓசை, நிறம் முதலிய பொருளைக் குறிப்பது; work suggestive of sound or colour etc.

     “வினையே குறிப்பே யிசையே பண்பே” (தொல்.சொல்.260);

   10. வெளிப்படையாகவின்றிப் பொருளுணர்த்துஞ் சொல்;     “இன்ன பிறவுங் குறிப்பிற் றருமொழி” (நன்.269);.

   11. அடையாளம்; mark, sign (க.குறிப்பு);.

   12. கைக் குறிப்புப் புத்தகம்; memorandum.

   13. நாட்குறிப்பு; journal, in book-keeping.

   14. பிறப்புக்குறிப்பு; horosope.

   15. சிறப்பியல்பு; description, distinguishing marks orcharacteristics.

   16. குறிப்புக் குறியீடு; symbolic terms abbreviations, shorthand writing.

   17. இலக்கு (சங்.அக.);; aim, mark, target.

   18. ஐந்து கந்தங்களுள் ஐம்பொறிகளும் மனமுமாகிய ஆறன் தொகுதி (Buddh);; mind and the five senses, as elements of a being one of {pasya-kantam}

     “உருவ நுகர்ச்சி குறிப்பே பாவனை” (மணிமே.30:189);.

   19. ஒவியத்தில் ஒருவகைக் குறிப்பு; sketch in painting, outlines, tracings (வின்.);.

     [குறி → குறிப்பு.]

 குறிப்பு2 kuṟippu, பெ.(n.)

   சான்று. எடுத்துக்காட்டு; example, illustration.

     “இது திருமந்திரார்த் தானுஸ்ந்தானத்திற்குக் குறிப்பாக அப்புள்ளார் அருளிச் செய்த விரகு” (ரஹஸ்ய.153);.

     [குறி → குறிப்பு.]

குறிப்புக்கட்டை

 குறிப்புக்கட்டை kuṟippukkaṭṭai, பெ.(n.)

   ஏதத்தை (ஆபத்தை);க் காட்ட நீரில் நடும்மரம்; a post or block at a ford to indicate danger from quicksand etc.

     [குறிப்பு + கட்டை..]

குறிப்புக்காரன்

 குறிப்புக்காரன் kuṟippukkāraṉ, பெ.(n.)

குறிகாரன், பார்க்க;See. {Kurkaram.}

     [குறிப்பு + காரன்.]

குறிப்புச்சொல்

குறிப்புச்சொல் kuṟippuccol, பெ.(n.)

   சொல்லு வோன் குறிப்பினால் நேர்பொருளன்றி வேறு பொருளை உணர்த்தும் சொல் (குறள்,711,உரை);;மறுவ. குறிப்புநிலை, குறிப்புமொழி.

     [குறிப்பு + சொல்.]

குறிப்புத்தொழில்

குறிப்புத்தொழில் kuṟipputtoḻil, பெ.(n.)

   குறிப்பாகச் செய்யும் செய்கை; significant gesture.

     “இவள்செய்த இக்குறிப்புத் தொழிலால்” (பரிபா. 12:90-92,உரை);.

     [குறிப்பு + தொழில்.]

குறிப்புநிலை

குறிப்புநிலை kuṟippunilai, பெ.(n.)

குறிப்புச்சொல், (நன்.460-.மயிலை.); பார்க்க;See. {kurippu.c-col}

     [குறிப்பு + நிலை.]

குறிப்புப்பெயரெச்சம்

 குறிப்புப்பெயரெச்சம் kuṟippuppeyareccam, பெ.(n.)

   செயலையும் காலத்தையும் வெளிப்படையாகக் காட்டாத பெயரெச்சம்;     [குறிப்பு + பெயர் + எச்சம்.]

குறிப்புப்பொருள்

குறிப்புப்பொருள் kuṟippupporuḷ, பெ.(n.)

   குறிப்பாலுணரப்படும் பொருள் (நன்.259,விருத்.); (Gram.);; implied meaning.

     [குறிப்பு + பொருள்.]

குறிப்புமுற்று

குறிப்புமுற்று kuṟippumuṟṟu, பெ.(n.)

குறிப்பு வினைமுற்று(நன்.351); பார்க்க;See. {kuppu-via. որսrրս:}

     [குறிப்பு + முற்று.]

குறிப்புமொழி

குறிப்புமொழி kuṟippumoḻi, பெ.(n.)

குறிப்புச் சொல் பார்க்க;See. {kurippu.c-col}

     “எழுத்தொடுஞ் சொல்லொடும் புணரா தாகிப் பொருட்புறத்ததுவே குறிப்புமொழி யென்ப” (தொல்.பொருள்.491);.

     [குறிப்பு + மொழி.]

குறிப்புமொழிகள்

 குறிப்புமொழிகள் kuṟippumoḻikaḷ, பெ.(n.)

குறிப்பாகப் பொருளுரை நிற்கும் மொழிகள்,

 a word indicating a meaning by implication.

அவையாவன: ஒன்றொழி பொதுச் சொல், விகாரம், தகுதி ஆகுபெயர், அன்மொழித் தொகை, முதற்குறிப்பு, தொகைக் குறிப்பு, வினைக் குறிப்பு, பிறவுமாம் (அபிசிந்);.

குறிப்புருவகம்

குறிப்புருவகம் guṟippuruvagam, பெ.(n.)

   குறிப்பினாற் பெறப்படும் உருவகவணி (குறள்,1030, உரை.);; implied metaphor.

     [குறிப்பு + உருவகம்.]

குறிப்புற்று

 குறிப்புற்று kuṟippuṟṟu, பெ.(n.)

   ஆண் பெண் குறியில் மேக நோய்த் தொடர்பாய் ஏற்படும் புற்றுப்புண்; hard industrated or infecting sore or ulcer on the genital of a male or female arising from the veneral causes (சா.அக.);.

     [குறிப்பு + புற்று.]

குறிப்புவமை

குறிப்புவமை kuṟippuvamai, பெ.(n.)

   குறிப்பா லுணரப்படும் உவமையணி (தொல்.பொருள்.278,உரை);;     [குறிப்பு + உவமை.]

குறிப்புவினை

குறிப்புவினை kuṟippuviṉai, பெ.(n.)

   பொருட் பெயர், இடப்பெயர் முதலியவற்றின் அடியாகப் பிறந்து செயலையும் காலத்தையும் வெளிப்படை யாகக் காட்டாமல் வினைத் தன்மையைக் கொண்டுள்ள சொல் (நன்.321.உரை);;     [குறிப்பு + வினை.]

குறிப்புவினைமுற்று

குறிப்புவினைமுற்று kuṟippuviṉaimuṟṟu, பெ.(n.)

குறிப்புவினை பார்க்க (வின்.323,உரை.);;See. {kurippuwidai}

மறுவ. குறிப்புமுற்று

     [குறிப்பு + வினை + முற்று.]

குறிப்புவினையாலணையும் பெயர்

குறிப்புவினையாலணையும் பெயர் kuṟippuviṉaiyālaṇaiyumbeyar, பெ.(n.)

முன்பு குறிப்பு வினையாய்ப் பின்பு பொருள்களைக் குறித்தற்கு வரும் பெயர் (நன்.321.விருத்.);

     [குறிப்பு + வினை + ஆல் + அணையும் + பெயர்.]

குறிப்புவினையெச்சம்

குறிப்புவினையெச்சம் kuṟippuviṉaiyeccam, பெ.(n.)

   தொழில் காலங்களைக் குறிப்பாகக் காட்டும் வினையெச்சம் (நன்.342,உரை);;     [குறிப்பு + வினை + எச்சம்.]

குறிப்பெச்சம்

குறிப்பெச்சம் kuṟippeccam, பெ.(n.)

   கூறிய சொற்களைக் கொண்டு அவற்றின் கருத்தாகக் கொள்ளும் பொருள் (குறள்.411, உரை);; suggested sense.

     [குறிப்பு + எச்சம்.]

குறிப்பெடு-த்தல்

குறிப்பெடு-த்தல் kuṟippeṭuttal,    4 செ.கு.வி. (v.i.)

   பேச்சு, பாடம், எதிராட்டு (விவாதம்); முதலியவற்றில் காணப்படும் முதன்மையான செய்திகளைச் சுருக்கமாக எழுதுதல்; take notes;take down;note down.

பத்திரிகை நிருபர் முதலமைச்சரின் பேச்சைக் குறிப் பெடுத்துக் கொண்டிருந்தார். கட்டுரைக் காகப் பல்வேறு புத்தகங்களைப் படித்துக் குறிப்பெடுத்திருக்கிறேன்.

     [குறிப்பு+எடு-த்தல்.]

குறிப்பெழுது-தல்

குறிப்பெழுது-தல் kuṟippeḻududal,    5 செ.கு.வி.(v.i.)

   1. கருத்துச் செய்திக்குறிப்பு எழுதுதல்; to write memoranda, notes, index, etc.

   2. பிறப்புக் குறிப்பெழுதுதல்; to note down the date, hour, etc., of a child’s birth.

   3. பேரேட்டில் எழுதுவதன் முன்னர் கணக்கைக் குறிப்புப் புத்தகத்தில் எழுதுதல்; to make entries in day book.

     [குறிப்பு + எழுது-.]

குறிப்பெழுத்து

 குறிப்பெழுத்து kuṟippeḻuttu, பெ.(n.)

   சுருக்கெழுத்து; abbreviation, contraction of names, words, etc. as எ-று for என்றவாறு.

     [குறிப்பு + எழுத்து.]

குறிப்பேடு

குறிப்பேடு kuṟippēṭu, பெ.(n.)

   1. நாள்தோறும் வரவு செலவுக் கணக்குகளைப் பதியும் புத்தகம்; day-book, the items of which are transferred to ledger.

   2. நினைவுக் குறிப்பேடு; memorandum book.

     [குறிப்பு + ஏடு.]

குறிப்பொலி

 குறிப்பொலி kuṟippoli, பெ.(n.)

   வழக்கப்படி சில கருத்துகளைப் பிறர்க்குத் தெரிவிக்கும் வகையில் அமைந்த குறிப்பு ஒலி; symbolic Sound.

     [குறிப்பு+ஒலி]

குறிப்போலை

குறிப்போலை kuṟippōlai, பெ.(n.)

   1.கணக்குக் குறிப்பு எழுதிய ஓலை; old record of a child’s birth, for casting its nativity.

     [குறிப்பு + ஒலை.]

குறிமொந்தை

 குறிமொந்தை kuṟimondai, பெ.(n.)

   நெற்குவியல் மீது அடையாளம் இடப்பயன்படுத்தும் சாணிப் பால் நிறைந்த துளை மொந்தை.(தஞ்.வ.);; symbol marking earthen pot.

     [குறி+மொந்தை]

குறிமோசம்

 குறிமோசம் kuṟimōcam, பெ.(n.)

   தவசக்குவிய லிலிருந்து சிறிதளவு திருடிக்கொண்டு பின்பு அக்குவியலில் திருட்டுக்குறி இடுவது (W.G.);; a fraudulent mark put upon a stock of grain after removing a portion of it clandestinely.

     [குறி + மோசம்.]

குறியன்

குறியன் kuṟiyaṉ, பெ.(n.)

   1. மடையான் பறவை; paddy bird.

   2. நாரை; crane (சா.அக.);.

     [குறு → குறி → குறியான்.]

குறியாக இரு-த்தல்

குறியாக இரு-த்தல் kuṟiyākairuttal,    3 செ.கு.வி.(v.i.)

   மிகுந்த கருத்துடன் தீவிரமாக இருத்தல்;முனைப்பாக இருத்தல்; be intent on;be keen on.

பணம் சேர்த்து விடவேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான். முன்னேறுவதில் குறியாக இரு!

     [குறியாக+இரு-த்தல்.]

குறியிடம்

 குறியிடம் kuṟiyiḍam, பெ.(n.)

தலைவனும்

   தலைவியும் கூடுதற்குக் குறித்த இடம்;     [குறி + இடம்.]

குறியிடையீடு

குறியிடையீடு kuṟiyiḍaiyīḍu, பெ.(n.)

   தலைவனும் தலைவியும் குறித்தவிடத்துக் கூடாதவாறு நேரும் இடையூறு (நம்பியகப்.155);;குறி + இடையீடு,ஹ ‘

குறியிறையார்

குறியிறையார் kuṟiyiṟaiyār, பெ.(n.)

   கடைக்கழக காலத்து வாழ்ந்த பெண்பாற் புலவர்; a poetess who belonged to the last Sangam. இவர்தாம் பாடிய குறுந்தொகைப் பாடலில் குறியிறைப் புதல்வர் எனக் கூறியிருத்தலால் இவருக்கு இப்பெயர் வந்தது (அபிசிந்);.

முழந்தாள் இரும்பிடிக் கயந்தலைக் குழவி

நறவுமலி பாக்கத்துக் குறமகள் ஈன்ற

குறியிறைப் புதல்வரொடு மறுவந் தோடி

முன்னாள் இனிய தாகிப் பின்னால்

அவர்தினை மேய்தந் தாங்குப்

பகையா கின்றவர் நகைவிளையாட்டே (குறுந் 394);

குறியீடு

 குறியீடு kuṟiyīṭu, பெ.(n.)

   குறியாக இட்டாளும் பெயர்; name given to a thing or concept, technical term.

     “அளபெடை யென்னும் குறியீடே”

     [குறி + ஈடு.]

குறியீட்டெண்

 குறியீட்டெண் kuṟiyīṭṭeṇ, பெ.(n.)

   பொருள்களின் விலை, வாழ்க்கைத் தரம் முதலியவற்றைக் கடந்த கால நிலையோடு ஒப்பிட்டுப் பார்ப்பதற்காகப் பயன்படுத்தப் படும் விழுக்காடு (சதவிகித); அடிப்படையிலான எண்முறை; price index.

     [குறியீடு+எண்.]

குறியெதிர்ப்பு

குறியெதிர்ப்பு kuṟiyedirppu, பெ.(n.)

   அளவு குறித்து வாங்கி வாங்கியவாறே எதிர்கொடுப்பது; exact return of things borrowed.

     “மற்றெல்லாங் குறியெதிர்ப்பை நீர துடைத்து” (குறள்.221);.

குறி + எதிர்ப்பு.]

குறியெழுத்து

குறியெழுத்து kuṟiyeḻuttu, பெ.(n.)

ஓம்’ பார்க்க;see om.

கூடகமான குறியெ ழுத்தைத் தாமறியில் விடகமாகும் விரைந்து”. (ஒளவைக் குறள்.136);

     [குறி+எழுத்து]

குறியோன்

குறியோன் kuṟiyōṉ, பெ.(n.)

   1.குள்ளன்; person of short stature.

   2. அகத்தியன்; Agastya, as short

     “குறியோ னிருந்த மலைபயில் வார்தமிழ்” (தஞ்சைவா.109);.

ம. குறியவன்

     [குறி → குறியோன்.]

குறிலவனம்

 குறிலவனம் kuṟilavaṉam, பெ.(n.)

   சோற்றுப்பு; common salt (சா.அக.);.

     [குறு → குறி + லவணம்.]

குறில்

குறில் kuṟil, பெ.(n.)

   1. குற்றெழுத்து (நன்.64); (Gram.); short vowel, opp. to {medi/}

   2. குறுமை; shortness, dwarfishness.

     “குறினெடி லளவு சான்ற கூளியும்” (கந்தபு. விண்குடி. 44);.

     [குறு → குறில்.]

குறிவில்லு

 குறிவில்லு kuṟivillu, பெ.(n.)

   பழுவெலும்பு; rib-bone (சா.அக.);.

     [குறி (எல்லு); வில்லு.]

குறு

குறு1 kuṟudal,    8 செ.குன்றாவி. (v.t.)

   1. பறித்தல்; to pluck.

     “பூக்குற் றெய்திய புனலணி யூரன்” (ஐங்குறு. 23);.

   2. மேலிழுத்து வாங்குதல்; to pull up.

     “கயிறுகுறு முகவை” (பதிற்றுப். 22:14);.

   3. ஒழித்தல்; to abandon, leave off, give up.

     “இச்சைமற் றாச்சிரயங் குற்றோன்” (ஞானா. 61,19);.

   4. நெல் முதலியன குற்றுதல்; to pound in a mortar, husk.

     “வெதிர்நெற் குறுவாம்” (கலித். 42);.

     [குல் → குறு.]

 குறு2 kuṟuttal,    4 செ.கு.வி.(v.i.)

   அளவிற் குறுகுதல்; to become short;

 to contract, diminish, shrink.

தெ., க., ம. குறு.

     [குல் → குறு.]

குறுகக்காய்ச்சு-தல்

குறுகக்காய்ச்சு-தல் guṟugaggāyccudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   சுண்டக்காய்ச்சுதல் (யாழ்ப்.);; to boil down a liquid.

     [குறுகு → குறுக…]

குறுகநறுக்கல்

 குறுகநறுக்கல் guṟuganaṟuggal, பெ.(n.)

   பொடியாய் நறுக்குதல்; crushing into small pieces (சா.அக.);.

     [குறுக + நறுக்கல்.]

குறுகன்னி

 குறுகன்னி guṟugaṉṉi, பெ.(n.)

   சிறுதுவரை; a small kind of dholl (சா.அக.);.

     [குறு + கன்னி.]

குறுகப்பிடி-த்தல்

குறுகப்பிடி-த்தல் guṟugappiḍittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   1. சுருக்குதல்; to make short;

 to curtail;

 as expenses;

 to retrench, to shorten, as a story.

   2. கிட்டப்பிடித்தல்; to hold near or close to.

     [குறுசு + பிடி-.]

குறுகலர்

குறுகலர் guṟugalar, பெ.(n.)

   பகைவர்; enemies, toes.

     “குறுகல ரூர்” (திருக்கோ.13);.

     [குறுகு + அல் + அர்.]

குறுகல்

குறுகல் guṟugal, பெ.(n.)

   1. குறைதல்; growing short in stature through old age as in கூனிக்குறுகல்.

   2. குறுகுதல்; decreasing. (சா.அக.);

   3. குறுகிய பொருள்(வின்.);; that which is short, dwarfish, stunted.

     [குறுகு → குறுகல்.]

குறுகல் முத்து

 குறுகல் முத்து guṟugalmuttu, பெ.(n.)

   இரட்டை முத்து; double peari.

     [குறுகல் + முத்து.]

குறுகவரிதல்

குறுகவரிதல் guṟugavaridal,    2 செ.குன்றாவி. (v.t.)

   பொடியாய் கத்தி கொண்டு அரிதல்; cutting into very small or minuite pieces (சா.அக.);.

     [குறுக + அரிதல்.]

குறுகவிடி-த்தல்

குறுகவிடி-த்தல் guṟugaviḍittal,    4 செ.கு.வி.(v.i.)

   தூளாகும் படி செய்தல் ; reducing to fine powder.

     [குறுக + இடி-.]

குறுகாதவர்

குறுகாதவர் kuṟukātavar, பெ.(n.)

   பகைவர்; enemies

     “குறுகாதவரூர்….. சரத்தாற் செற்றவன்” (தேவா. 169:1);.

மறுவ. குறுகலர் குறுகார்.

     [குறகு + ஆ (எதிர்மறைப் பின்னொட்டு); + த் + அ + அர்.]

குறுகார்

குறுகார் kuṟukār, பெ.(n.)

   பகைவர்; enemies.

     “குறுகார் தடந்தோ ளிரண்டுந் துணிந்து” (பாரத. முதற்போ. 29);.

     [குறுகு + ஆ + ஆர்.]

குறுகிய

குறுகிய kuṟukiya, பெ.அ. (adj)

   1. பரப்பளவில் அல்லது காலத்தில் குறைந்த

 marrow short.

குறுகிய சாலை, குறுகிய சந்து, குறுகிய காலப்பயிர்.

   2. தனக்குத் தெரிந்ததை மட்டும் அளவுகோலாகக் கொண்ட; parochial;marrow,

குறுகிய நோக்கம், குறுகிய

குறுகு

குறுகு1 guṟugudal,    5 செ.கு.வி.(v.i.)

   1. குள்ளமாதல்; to grow short, stumpy, dwarfish.

     “குறுகுறுகென விருத்தி” (கந்தபு. திருக்குற்றாலப்.15);.

   2. சிறுகுதல்; to shrink, contract;

 to be reduced;

 to decrease, diminish, decline.

     “உரைகுறுக நிமிர்கீர்த்தி” (கம்பரா. குலமுறை.4);.

   3. மாத்திரை குறைதல்;     “இடைப்படிற் குறுகு மிடனுமா ருண்ட” (தொல். எழுத்து. 37);.

     [குல் → குறு → குறுகு.]

 குறுகு2 guṟugudal,    5 செ.கு.வி.(v.i.)

   அணுகுதல்; to approach, draw near.

     “இளங்கோ வேந்தனி ருப்பிடங் குறுகி” (மணிமே. 18:42);.

     [குல் → குறு . குறுகுதல்.]

 குறுகு3 guṟugu, பெ.(n.)

   குறிஞ்சா; clustered gaertnera (சா.அக.);.

     [குறு → குறுகு.]

குறுகுதாளி

 குறுகுதாளி guṟugutāḷi, பெ.(n.)

   சிறுதாளி (மலை.);; hairy-leaved creamy-white bind weed.

     [குறுகு + தாளி.]

குறுகுறு-த்தல்

குறுகுறு-த்தல் guṟuguṟuttal,    4 செ.கு.வி.(v.i.)

   1. வெறுப்புத்தோன்ற முணுமுணுத்தல்; to mutter in displeasure, murmur.

   2. மனம் உறுத்திக் கொண்டிருத்தல்; to be pricked by conscience.

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் (பழ.);.

   3. அச்சம் உறுத்திக்கொண்டிருத்தல்; to be perturbed by fear of detection.

   4. தினவுறுதல்; to feel an itching or irritating sensation, as in the ear, in a sore. காது

குறுகுறுக்கிறது (உ.வ.);.

   ம. குறுகுறுக்குக;க. குர்ருகுர்ரு.

     [குல் → குறு-.]

குறுகுறுநட-த்தல்

குறுகுறுநட-த்தல் guṟuguṟunaḍattal,    3 செ.கு.வி. (v.i.)

   குறுகக் குறுக நடந்து செல்லுதல்; to wobble with short steps, as a child.

     “குறுகுறு நடந்து சிறுகைநீட்டி” (புறநா. 188);.

     [குறு + குறு + நட -. குறுகுறு – இரட்டைக்கிளவி ஒலிக்குறிப்பு.]

குறுகுறுப்பு

குறுகுறுப்பு1 guṟuguṟuppu, பெ.(n.)

   1. விருப்ப மின்மை தோன்ற முருமுருக்கை; muttering in displeasure.

   2. குறட்டை; snoring, stertorous breathing. தெ. குர்ர்ரு.

   3. அச்சக்குறி காட்டுகை; showing, signs of perturbation with fear.

   4. சுறுசுறுப்பு; briskness, bustling activity.

     [குறுகுறு → குறுகுறுப்பு.]

 குறுகுறுப்பு guṟuguṟuppu, பெ.(n.)

   கண்டத்திலும், மார்பிலும் கோழை கட்டுவதால் உண்டாகும் சத்தம்; an abnormal rattling noise in the ear (சா.அக.);.

     [குறுகுறு → குறுகுறுப்பு.]

குறுகுறுப்பை

 குறுகுறுப்பை guṟuguṟuppai, பெ.(n.)

   குறட்டை (வின்.);; snoring, stertorous breathing.

     [குறுகுறுப்பு → குறுகுறுப்பை.]

குறுகுறெனல்

குறுகுறெனல் guṟuguṟeṉal, பெ.(n.)

   1. விரைவுக் குறிப்பு; onom, expr. signifying (or); showing signs of haste.

அவன் குறுகுறென்று நடக்கிறான்.

   2. தினவுக் குறிப்பு; tingling, as in the ears, a sore.

காது குறுகுறென்கிறது.

   3. சினக்குறிப்பு; muttering in displeasure.

   4. அச்சக்குறிப்பு; being per

 turbed with fear.

புலியைக் கண்டால் மனம் குறுகுறென்கிறது.

   5. சுறுசுறுப்பாயிருத்தற் குறிப்பு; being brisk and active.

குழந்தை குறுகுறு வென்றிருக்கிறது (உ.வ.);.

     [குறுகுறு + எனல்.]

குறுகுறென்றிழுத்தல்

 குறுகுறென்றிழுத்தல் guṟuguṟeṉṟiḻuttal, பெ.(n.)

   சாகுங்காலத்தில் தொண்டையில் கோழை கட்டியிழுத்தல்; ratling noise due to obstruction of phlegm in the throat of dying persons (சா.அக.);.

     [குறுகுறு + என்று + இழுத்தல். குறுகுறு – ஒலிக்குறிப்பு.]

குறுகுறென்று விழி-த்தல்

குறுகுறென்று விழி-த்தல் guṟuguṟeṉṟuviḻittal,    4 செ.கு.வி.(v.i.)

   திருட்டுவிழி விழித்தல்; to have a look of fear, a thievish look.

புதுத்திருடன் குறுகுறென்று விழிக்கிறான் (உ.வ.);.

     [குறுகுறு + என்று + விழி-.]

குறுகூலி

குறுகூலி kuṟuāli, பெ.(n.)

   நெல்லைக் குற்றி அரிசி யாக்குதற்குரிய கூல; wages given for pounding anddehusking paddy.

     “குறுகூலி நெல் நாடுரியும்” (தெ.கல்.தொ. 5, கல் 642, 693); (நன்.400 மயிலை);.

மறுவ. குறுங்கூலி

     [குல் → குறு + கூலி. குறுதல் = குற்றுதல்.]

குறுக்க விளக்கம்

 குறுக்க விளக்கம் kuṟukkaviḷakkam, பெ.(n.)

   ஒரு செயல் அல்லது தொடரின் குறுக்க வடிவம், சுருக்கக் குறியீடு; abbreviation.

     [குறுக்கு[ம்]+விளக்கம்]

குறுக்கடி

குறுக்கடி kuṟukkaḍi, பெ.(n.)

   1. குறுக்கு வழிப்பாதை; short cut.

   2. நேர்வழியாலன்றிக் குறுக்கே புகுந்து செய்யுஞ்செயல்; anything done by way of short cut or in a compendious method.

   3. ஒழுங்கற்ற பேச்சு; short, abrupt speech, unreasoned talk.

குறுக்கடியாய்ப் பேசுகிறான் (உ.வ.);.

     [குறுக்கு + அடி.]

குறுக்கன்

குறுக்கன் kuṟukkaṉ, பெ.(n.)

   1. குள்ளநரி; jackal.

   2. கேழ்வரகு; ragi (சா.அக.);.

     [குறு → குறுக்கு → குறுக்கன்.]

குறுக்கம்

குறுக்கம்1 kuṟukkam, பெ.(n.)

   1. குறுகிய நிலை; shortness

     ‘ஐ’ ஒளக் குறுக்கம்’ (நன். 99);.

   2. சுருக்கம்; abridgement, albreviation, contraction, epitome, summary.

   3. 3/4 முதல் 7 ஏக்கர் வரை பலவிடங்களில் பல்வேறு வகையாக வழங்கும் புன்செய் அளவு வகை; measure of dry land varying in different parts of Tamil country from 3/4 acre to 7 acres(R.F);.

   4. கெளரிசெய்நஞ்சு; a prepared arsenic.

     [குறுகு → குறுக்கம்.]

 குறுக்கம்2 kuṟukkam, பெ.(n.)

   1. சுருக்கம்; reduction

   2. கௌரி நஞ்சு; a native arsenic (சா.அக.);.

     [குல் → குறு → குறுக்கம்.]

குறுக்கல்

குறுக்கல் kuṟukkal, பெ.(n.)

   1. குறைக்கை; reduction, contraction.

   2. நெடிலைக் குறிலாக்குஞ் செய்யுள் திரிபு (நன். 155);;     [குறுக்கு → குறுக்கல்.]

குறுக்களவு

 குறுக்களவு kuṟukkaḷavu, பெ.(n.)

   குறுக்குத் தூரம்; measurement across, diameter,

அந்த வீட்டின் குறுக்களவு என்ன?

     [குறுக்கு + அளவு.]

குறுக்கி

 குறுக்கி kuṟukki, பெ.(n.)

   நாறம் நாதம்; ovarian secretion in woman (சா. அக.);.

     [குல் → குறு → குறுக்கி.]

குறுக்கிடு-தல்

குறுக்கிடு-தல் kuṟukkiḍudal,    18 செ.கு.வி.(v.i.)

   1. குறுக்கே செல்லுதல்; to pass across, as animals of bad omen.

பூனை குறுக்கிட்டது.

   2. பிறர் செயலில் தலையிடுதல்; to interfere in another’s affair.

   3. தடையாக எதிர்ப்படுதல்; to crossthe path of, to intervene.

     “மீன்களைக் குறிக்கிட்டு மறித்துப் படுக்கும் வலையை யுடைய பரதவர்” (சிலப்.6:142, உரை);.

     [குறுக்கு + இடு-.]

குறுக்கிணைப்பு

 குறுக்கிணைப்பு kuṟukkiṇaippu, பெ.(n.)

     ‘ ஒரு மரத்தை மற்றொரு மரத்தின் குறுக்கு வாட்டத்தில் இணைக்கும் இணைப்பு (தச்.பொறி.);;

 a wooden piece fixed cross-wise.

     [குறுக்கு + இணைப்பு.]

குறுக்கீடு

 குறுக்கீடு kuṟukāṭu, பெ.(n.)

   குறுக்கிடுகை; crossing, intervention, interference.

     [குறுக்கீடு → குறுக்கீடு.]

குறுக்கு

குறுக்கு1 kuṟukkudal,    5 செ.குன்றாவி.(v.t.)

   1. குறையச் செய்தல்; to shorten, curtail, reduce, contract, lessen, retrench.

செலவைக் குறுக்க வேண்டும்.

   2. சுருக்குதல்; to abbreviate, abridge, epitomise, abstract.

அந்நூலைக் குறுக்கி யெழுதுக.

   3. நெருங்கச் செய்தல்; to cause to draw near, to bring within easy reach.

     “திருநாவாய் குறுக்கும்வகை யுண்டுகொலோ” (திவ். திருவாய்.9:8:1);.

   ம. குறுக்குக;   க. கொரெ;   து. குந்தாவுனி;கோத., துட. குர்க்.

     [குறுகு → குறுக்கு.]

 குறுக்கு2 kuṟukkudal,    5 செ.கு.வி.(v.i.)

   அண்மை யாதல்; to be near, close by

     “திருநாவாய் எத்தனையிடம் போகுமென்று எதிரே வருகின்றார் சிலரைக் கேட்டருள குறுக்கும் என்றார்களாய்’ (ஈடு,9.8:1);.

     [குறுகு → குறுக்கு.]

 குறுக்கு3 kuṟukku, பெ.(n.)

   1. நெடுமைக்கு மாறான அகலம்; transverseness, breadth.

   2. குறுக்களவு; diameter.

     “நெடுமையுங் குறுக்கு நூற்றெட் டங்குலம்” (காசிக. சிவ. அக.17);.

   3. குறுமை; shortness of distance.

     “நீண்ட நெடுமையும் அகலக் குறுக்கும் காட்டா” (தாயு. சிதம்பர. 13);.

   4. சுருக்கம்; contraction.

   5. மாறு; opposition, objection, hindrance.

அவன் எதற்குங் குறுக்குப் பேசுகிறவன்.

   6. இடுப்பு; hips, lions.

குறுக்கு வலிக்கிறது.

ம. குறுக்கு

 Fin. kesi(centre middle);;

 Es. kesk;

 Q. kuskan

     [குறுகு → குறுக்கு.]

குறுக்குக்கட்டு

குறுக்குக்கட்டு kuṟukkukkaṭṭu, பெ.(n.)

   பெட்டி முதலியவற்றைக் குறுக்காகக் கயிற்றாற் கட்டும் கட்டு; tying transversely or crosswise, as in fastening a case.

   2. மகளிர் நீராடும் பாது மார்புக்கு மேலேகட்டும் சேலைக்கட்டு; tying a cloth a little above the breasts and around the body, as women while bathing.

     [குறுக்கு + கட்டு.]

குறுக்குக்கால்

 குறுக்குக்கால் kuṟukkukkāl, பெ.(n.)

   நடக்கும் போது கால்கள் குறுக்காகப்படும் குற்றம்; cross-leg deformity.

     [குறுக்கு + கால்.]

குறுக்குக்கிளை

 குறுக்குக்கிளை kuṟukkukkiḷai, பெ.(n.)

   பக்கக்கிளை; lateral branch.

     [குறுக்கு + கிளை.]

குறுக்குக்கேள்வி

குறுக்குக்கேள்வி kuṟukkukāḷvi, பெ.(n.)

   1. முறைமன்ற வழக்கில் சான்றாளியை மடக்கிக் கேட்கும் கேள்வி; cross-questioning, cross-examination.

   2. ஒழுங்கற்ற கேள்வி; irrelevant question, perverse question.

   3. இருவர் வினாவிக் கொண்டிருக்க இடையில் பிறனொருவன் கேட்கும் கேள்வி; question by way of interruption or intrusion.

     [குறுக்கு + கேள்வி.]

குறுக்குக்புத்தி

 குறுக்குக்புத்தி kuṟukkukputti, பெ.(n.)

   கோணலறிவு; cross-grained mentality.

     [குறுக்கு + புத்தி.]

குறுக்குச்சார்

 குறுக்குச்சார் kuṟukkuccār, பெ.(n.)

   வீட்டின் குறுக்கிடம் (யாழ்ப்.);; short or cross side of a house, raised floor on either side of the shorter wall of a house.

     [குறுக்கு + சார்.]

குறுக்குச்சாலோட்டு-தல்

குறுக்குச்சாலோட்டு-தல் kuṟukkuccālōṭṭudal,    5 செ.கு.வி.(v.i.)

   தன்னலங் கருதிப் பிறர் செயலில் இடையிடுதல், ஊடு விழுதல்; lit; to run a furrow transversely, to interfere with another’s work for gaining one’s own ends.

     [குறுக்கு + சால் + ஒட்டு-.]

குறுக்குச்சால்

 குறுக்குச்சால் kuṟukkuccāl, பெ.(n.)

   முதலில் உவு செய்யப்பட்ட திசைக்குக் குறுக்காக மறு உழவு செய்தல். (உழ.நெ.க.அக);; cross ploughing.

     [குறுக்கு + சால்.]

குறுக்குச்சுவர்

 குறுக்குச்சுவர் kuṟukkuccuvar, பெ.(n.)

   பாகஞ் செய்து கொண்ட மனையில் எல்லை குறித்தற்குக் இடும் (C.E.M.); சுவர்; partition-wall.

     [குறுக்கு + சுவர்.]

குறுக்குச்சூத்திரம்

 குறுக்குச்சூத்திரம் kuṟukkuccūttiram, பெ.(n.)

   குறுக்கு நூற்பா (வின்.);; formula, brief comprehensive rule, theorem, expressing the shortest method of performing a calculation.

     [குறுக்கு + சூத்திரம். குறுக்கு நூற்பா பார்க்க;See. {kurukku-nuspá.)}

குறுக்குத்தசைநார்

 குறுக்குத்தசைநார் kuṟukkuttasainār, பெ.(n.)

   குறுக்கே ஓடும் தசைநார்; transverse muscular fibre (சா.அக.);.

     [குறுக்கு + தசை + நார்.]

குறுக்குத்தெரு

 குறுக்குத்தெரு kuṟukkutteru, பெ.(n.)

பெரிய

   தெருவிலிருந்து பிரிந்து செல்லும் சிறிய தெரு (பொ.வழக்.);; side street cutting across big street.

     [குறுக்கு + தெரு.]

குறுக்குநிமிர்-தல்

குறுக்குநிமிர்-தல் kuṟukkunimirtal,    2 செ.கு.வி. (v.i.)

   1. அளவுக்கு மிஞ்சி வேலை வாங்குதல்; to have one’s powers over taxed, to be overworked.

   2. சோம்பேறியாதல்; to grow lazy.

வேலை யில்லாமல் குறுக்கு நிமிர்ந்துவிட்டான்.

     [குறுக்கு + நிமிர்-.]

குறுக்குநூற்பா

 குறுக்குநூற்பா kuṟukkunūṟpā, பெ.(n.)

   கணிதத்தில் சுருக்கமாய் அறிதற்கு ஏற்ற வழியைத் தெரிவிக்கும் நூற்பா; formula, brief comprehensive rule, theorem, expressing the shortest method of performing a calculation.

மறுவ. குறுக்குச் சூத்திரம்

     [குறுக்கு + நூல் + பா.]

குறுக்குநோய்

குறுக்குநோய் kuṟukkunōy, பெ.(n.)

   இடுப்புநோய்; hip pain.

   2. சந்துப்பிடிப்பு; hip gout (சா.அக.);.

     [குறுக்கு + நோய்.]

குறுக்குப்பாடு

 குறுக்குப்பாடு kuṟukkuppāṭu, பெ.(n.)

   குறுக் கான பக்கம்; transverse direction.

     [குறுக்கு + பாடு.]

குறுக்குப்பாதை

 குறுக்குப்பாதை kuṟukkuppātai, பெ.(n.)

   குறுக்கு வழி; short cut.

     [குறுக்கு + பாதை.]

குறுக்குப்பிண்டம்

 குறுக்குப்பிண்டம் kuṟukkuppiṇṭam, பெ.(n.)

   பேறு (பிரசவ); காலத்தில் குறுக்காய்ப் பாய்ந்த குழந்தை; any abnormal presentation requiring the manual turning of the foetus in delivегу (சா.அக.);.

     [குறுக்கு + பிண்டம்.]

குறுக்குப்பிறப்பு

 குறுக்குப்பிறப்பு kuṟukkuppiṟappu, பெ.(n.)

   இருகுல (சாதி);ப் பிறப்பு; a person or an animal produced from a male or female of different race or castes or different breeds (சா.அக.);.

     [குறுக்கு + பிறப்பு.]

குறுக்குமறுக்கு

குறுக்குமறுக்கு kuṟukkumaṟukku, பெ.(n.)

   குறுக்கே மறுத்துப் பேசுகை; interrupting a person when he is speaking and contradicting him.

     “மணியக்காரன் கணக்குப் பார்க்கிறதும் அதற்குக் கோவில்குருக்கள் குறுக்குமறுக்குச் சொல்வதும்!” (தாசில்தார்நா.27);.

     [குறுக்கு + மறுக்கு.]

குறுக்குமறுக்கும்

 குறுக்குமறுக்கும் kuṟukkumaṟukkum, வி.எ.

     [குறுக்கும் + மறுக்கும்.]

குறுக்கும்நெடுக்குமாக

 குறுக்கும்நெடுக்குமாக kuṟukkumneṭukkumāka, ஒரே திசையில் இல்லாமல் மாறி மாறி, இங்குமங்குமாக,

 up and down;here and there.

அவர் கூட்டத்தில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார்.

     [குறுக்கும்+நெடுக்குமாக]

குறுக்கும்நெடுக்கும்

 குறுக்கும்நெடுக்கும் kuṟukkumneḍukkum, பெ.(n.)

   இங்குமங்கும்; lit.lengthwise and breathwise, here and there.

     [குறுக்கும் + நெடுக்கும்.]

குறுக்குவரி

 குறுக்குவரி kuṟukkuvari, பெ.(n.)

ஒரு சதுரத்தின்

   அல்லது நீட்டத்தின் குறக்காகச் செல்லும் கோடு (இ.வ.);; diagonal.

     [குறுக்கு + வரி.]

குறுக்குவலி

குறுக்குவலி1 kuṟukkuvalittal,    4 செ.கு.வி.(v.i.)

   பேறுகால வேதனைப்படுதல்; to suffer from labourpains.

     [குறுக்கு + வலி-.]

 குறுக்குவலி kuṟukkuvali, பெ.(n.)

   இடுப்புவலி; labour pain (சா.அக.);.

     [குறுக்கு + வலி.]

குறுக்குவழி

குறுக்குவழி kuṟukkuvaḻi, பெ.(n.)

   1. குறுக்குப்

   பாதை; short way.

   2. கோணல்வழி; crooked way, path of evil.

ம. குறுக்குவழி

     [குறுக்கு + வழி.]

குறுக்குவாதம்

 குறுக்குவாதம் kuṟukkuvātam, பெ.(n.)

   இடுப்பு ஊதை நோய் (வாதம்);; pain in the loin due to aggravated vayu in the system (சா.அக.);.

     [குறுக்கு + வாதம்.]

குறுக்குவிசாரணை

 குறுக்குவிசாரணை kuṟukkuvicāraṇai, பெ.(n.)

   முறைமன்ற வழக்கில் சான்றாளியை மடக்கிக் கேட்கும் கேள்வி; cross examination.

மறுவ. குறுக்குக்கோட்பாடு, குறுக்கு உசாவல், குறுக்கு உசாவனை, குறுக்கு வினா.

     [குறுக்கு + விசாரணை, குறுக்கு உசாவல் பார்க்க;See. {kurukku-usaval}

குறுக்குவிட்டத்தூலக்கட்டு

 குறுக்குவிட்டத்தூலக்கட்டு kuṟukkuviṭṭattūlakkaṭṭu, பெ.(n.)

   கூரையின் மேற்கோப்பு அமைப்புகளுள் ஒருவகை (கட்.தொ.வரி.);; a kind of shape of top of thatched roof.

     [குறுக்கு + விட்டம் + தூலம் + கட்டு,.]

குறுக்குவிட்டம்

 குறுக்குவிட்டம் kuṟukkuviṭṭam, பெ.(n.)

   அச்சுமரத்தின் மேற்பகுதிக்குக் கீழுள்ள சட்டம் (உழ.நெ.ச.அக.);; a cross bar cutting across the axis.

     [குறுக்கு + விட்டம்.]

குறுக்குவினா

 குறுக்குவினா kuṟukkuviṉā, பெ.(n.)

   குறுக்குக் கேள்வி; cross examination.

     [குறுக்கு + வினா.]

குறுக்குவெட்டுத்தோற்றம்

 குறுக்குவெட்டுத்தோற்றம் kuṟukkuveṭṭuttōṟṟam, பெ.(n.)

   கட்டடக் குறுக்குவெட்டு அமைப்பினை விளக்கும் வரைபடம் (பொ.வழக்.); (கட்.தொ.வரி);; transverse view shown in building plan.

     [குறுக்கு + வெட்டு + தோற்றம்.]

குறுக்கெலும்பு

 குறுக்கெலும்பு kuṟukkelumbu, பெ.(n.)

   இடுப் பெலும்பு; hip bone (சா.அக.);.

     [குறுக்கு + எலும்பு.]

குறுக்கே

குறுக்கே kuṟukā, வி.எ. (adv.)

   1. இடையே; crosswise, transversely, athwart, across.

பூனை குறுக்கே போயிற்று (உ,வ.);.

   2. நடுவில்; between, in the middle.

பெரியோர்கள் பேசுகையில் குறுக்கே பேசலாகாது (உ.வ.);.

   3. எதிராக; in opposition to.

நான் சொல்வதற்கெல்லாம் அவன் உறுக்கே சொல்லுகிறான் (உ.வ.);.

ம. குறுக்கனெ

     [குறுக்கு + ஏ.]

குறுக்கே விழு-தல்

குறுக்கே விழு-தல் kuṟukāviḻudal,    2 செ.கு.வி. (v.i.)

   ஒரு செயலின் இடையே தலையிடுதல்; to interfere, meddle.

     [குறுக்கே + விழு-.]

குறுக்கேநில்-தல் (குறுக்கே நிற்றல்)

குறுக்கேநில்-தல் (குறுக்கே நிற்றல்) kuṟukāniltalkuṟukāniṟṟal,    5.செ.கு.வி.(v.i.)

   இடையூறாக இருத்தல்; to be obstructive, to be a hindrance.

காரியம் முடிய வொட்டாமல் அவன் குறுக்கே நிற்கிறான் (உ.வ.);.

     [குறுக்கே + நில்.]

குறுக்கேமடக்கு-தல்

குறுக்கேமடக்கு-தல் kuṟukāmaḍakkudal,    1. இடையிற்பேசி வாயடக்குதல்; to interrupt rudely and refute;

 interrupt and silence one by a curt reply

   2. ஒரு பொருளை நினைத்துக்கொண்டிருக்கும் பொழுது மயங்க அடித்தல்; to create confusion in the mind of a person while he is thinking out a question.

     [குறுக்கே + மடக்கு-.]

குறுக்கேமுறி

குறுக்கேமுறி1 kuṟukāmuṟittal,    4 செ.குன்றாவி.(v.t.)

   ஒரு செயலை இடையே விட்டொழித்தல்; to break off in the middle of a business, to leave a work unfinished.

     [குறுக்கு + ஏ + முறி-.]

 குறுக்கேமுறி2 kuṟukāmuṟittal,    4. செ.குன்றாவி. (v.t.)

   வெறுப்பால் கூட்டத்தினின்று இடையே பிரிதல்; to leave a company in displeasure.

     [குறுக்கு + ஏ + முறி-.]

குறுக்கேற்றமாய்

 குறுக்கேற்றமாய் kuṟukāṟṟamāy,    வி.எ.(adv.) பொருத்தமில்லாமல்; irrelevently at a tangent.

     [குறுக்கு + ஏற்றமாய்.]

குறுக்கை

குறுக்கை1 kuṟukkai, பெ.(n.)

   அட்டவீரட்டங்களுள் ஒன்றானதும் சிவபிரான் காமனை எரித்ததுமான சோழநாட்டுத்தலம்; a shrine in {Tanjavor} district where Siva burnt {kāmap} to ashes one of {affa. wiallam}

     “குறுக்கைவீ ரட்டனாரே” (தேவா.191:1);.

     [குறுக்கு → குறுக்கை.]

 குறுக்கை2 kuṟukkai, பெ.(n.)

   1. புலி, (பெருங். இலாவாண.18,18.அரும்);; tiger.

   2.உடைவாள்; dagger, poniard.

     “குறுக்கை புக்க கொளுவமை கச்சையன்” (பெருங். இலாவாண. 18:18);.

   3. சுருங்கிய கை; withered handy (சா.அக);.

     [குறு + கை – குறுங்கை → குறிக்கை.]

குறுக்கையர்

குறுக்கையர் kuṟukkaiyar, பெ.(n.)

   வேளாள மரபில் திருநாவுக்கரசு நாயனார் பிறந்த குடியைச் சார்ந்தவர்; member of the family in the {Vēlāja} caste to which {Thirunavukkarasar} belonged.

     “வேளாண் குலத்தின் கண் வரும் பெருமைக் குறுக்கையர்தங் குடி விளங்கும்” (பெரியபு. திருநாவுக்.15);.

     [குறுக்கை + அர். குறுக்கை = புலி.]

குறுங்கணக்கு

குறுங்கணக்கு kuṟuṅgaṇakku, பெ.(n.)

   உயிர் பன்னிரண்டும் மெய் பதினெட்டுமாகிய முதலெழுத்து; basic letters of the Tamil alphabet,viz., 12 vowels and 18 consonants, opp. to {neduri-kanakku.}

ம. குறுங்கணக்கு (குறுகிய அல்லது எளிய கணக்கு);

     [குறுமை + கணக்கு.]

குறுங்கண்

குறுங்கண்1 kuṟuṅgaṇ, பெ.(n.)

   பலகணி, சாளரம்; a kind of lattice-window, with small apertious

     “குறுங்க ணடைக்குங் கூதிர்க் காலையும்” (சிலப். 14: 101);.

மறுவ. பலகணி, மான்கண், காலதர்.

     [குறு → குறும் + கண்.]

 குறுங்கண்2 kuṟuṅgaṇ, பெ.(n.)

நெருங்கின

   கணுவுடையது; that which is closely jointed, knotty.

     “குறுங்கண்ணான பசு மஞ்சளை” (திவ்.பெரியாழ். 1.1:6, வ்யா.பக்.14);.

     [குறும் + கண்.]

குறுங்கண்ணி

குறுங்கண்ணி kuṟuṅgaṇṇi, பெ.(n.)

   முடியில் அணியும் மாலை; wreath for the tuft.

     “குழவித் திங்களைக் குறுங்கண்ணியாக வுடைய” [இறை. களவி. 1,உரை).

     [குறும் + கண்ணி.]

குறுங்கற்றலை

குறுங்கற்றலை kuṟuṅgaṟṟalai, பெ.(n.)

   கடல்மீன் வகை; a sea fish, silvery-grey, attaining 1ft. in length.

     [குறுமை + கல் + தலை.]

குறுங்கலி

குறுங்கலி1 kuṟuṅgali, பெ.(n.)

   பாலையாழ்த் திறத்தொன்று (திவா.);; an ancient melody type of the {pāla class.}

     [குறுமை + கலி.]

 குறுங்கலி2 kuṟuṅgali, பெ.(n.)

   மனைவியைக் கைவிட்டுப் பிறமகளிரை நயக்கும் காமம் கெடுமாறு அறிவுரைக்கும் புறத்துறை;{(Pura);} theme of addressing a hero with a view to turn him away from his illicit loves.

     [குறும் + கலி. கலி = கேடு. குறு = சிறுமை.]

ஒருவன் மனத்தெழுந்த சிறுமைக் குணம் கெடக் கூறுதலின் இது குறுங்கலி எனப்பட்டது. இதனை

     “நாறிருங் கூந்தல் மகளிரை நயப்ப வேறுபடு வேட்கை வியக் கூறின்று” (பு.வெ.12.கொளு.87); என்னும் நூற்பாவாலும் அறியலாம். இதனை விளக்கும் மேற்கோள் செய்யுள்:

     “பண்ணவாம் தீஞ்சொல் பவளத் துவர்ச் செவ்வாய்ப்

பெண்ணவாம் பேரல்குற் பெய்வளை – கண்ணவாம்

நன்னலம் பீர்பூப்ப நல்கார் விடுவதோ

தொன்னலம் உண்டார் தொடர்பு”.

     (பு.வெ.12.கொளு.87 மேற்கோள்.);

குற்றிசையும் குறுங்கலியும் அகப்பொருட் துறைகளாயினும் அன்பின் ஜந்திணையைத் தழுவாது அறநெறி பிறழ்ந்த வாழ்க்கை முறைகளாதலின் பெருந் திணைக்குரியனவாகிப் புறத்தினை சார்ந்தனவாயின. அதனால் இவை புறப்பொருள் வெண்பாமாலையில் இடம் பெற்றன.

   தமிழர் பண்பாட்டில் திருமண வாழ்க்கை என்பது, இளமை நலம் நுகரவும் மகப்பேற்றுக்கும் மட்டுமாக அமைந்ததன்று. உண்மையான அன்பு நீரோட்டத்திற்கு அகவை என்னும் அணைக்கட்டுகள் இல்லை. காதல் என்பது உயிரன்பு, உயிருக்கப்பாலும் நீடிப்பது;உயிரோடு உயிர் இணைந்து பல பிறப்பிலும் வேர் கொண்டு விழுது

வீழ்ப்பது. அதனால் தான் அன்பு முதிர்ந்து அறமாகக் கனியும் காதல் வாழ்க்கை இல்லறம் எனப்பட்டது. தமிழர் பண்பாட்டில் இல்லற வாழ்க்கை உடல் நுகர்வு மட்டும் நோக்காமல் உயிர் நுகர்வைப் பெரிதாக நோக்கியது. மனைவியை நீத்துக் கணவன் துறவு மேற்கொள்ளும் பெளத்த நெறியும் செல்வன் அல்லது_அரசன் பல மனைவியரைக் கொள்ளலாம் என்னும் சமண இலக்கிய நெறியும் தமிழ்ச் சான்றோரால் ஏற்கப்படவில்லை இராமகிருட்டிணரும் சாரதா தேவியும் போல இருவரும் துறவு மேற்கொள்வது மறுக்கப்படவு மில்லை.

குறுங்கலித்தொகை

 குறுங்கலித்தொகை guṟuṅgalittogai, பெ.(n.)

   கலித்தொகை (புறநா. முகவுரை.);; an ancient Tamil classic.

     [குறும் + கலி + தொகை. பாலையாழ்த்திறத்தில் அமைந்த குறுங்கலித் துறை சார்ந்த பாடல் தொகுதி யாகலாம்.]

குறுங்களுசம்

 குறுங்களுசம் kuṟuṅgaḷusam, பெ.(n.)

   வீச்சுவலி; conic spasm (சா.அக.);.

     [குறும் + கருசம்.]

குறுங்காடு

குறுங்காடு kuṟuṅgāṭu, பெ.(n.)

   சிறுகாடு; thicket, small forest or jungle, copse, underwood.

     “குறுங்காட்டின்னகை மனையோள்” (ஐங்குறு.410);.

ம. குறுங்காடு

     [குறுமை + காடு.]

குறுங்கார்

 குறுங்கார் kuṟuṅgār, பெ.(n.)

   நெல்வகை; a kind of paddy.

     [குறும் + கார்.]

குறுங்காலெலி

 குறுங்காலெலி kuṟuṅgāleli, பெ.(n.)

   எலிவகை (வின்.);; a rat.

     [குறும் + கால் + எலி.]

குறுங்கால்

 குறுங்கால் kuṟuṅkāl, பெ.(n.)

   குள்ளங்கால்; short leg (சா.அக.);.

     [குறு+கால். குறுங்கால்-நீளங்குறைந்த கால்]

குறுங்கிண்ணி

 குறுங்கிண்ணி kuṟuṅgiṇṇi, பெ.(n.)

   வெண்கலம் (யாழ்.அக.);; bell metal.

     [குறுமை + கிண்ணி.]

குறுங்கீரனார்

குறுங்கீரனார் kuṟuṅāraṉār, பெ.(n.)

   கடைக் கழகப் புலவர்களில் ஒருவர்; one of the poets who belonged to the last Tamil academy.

உடலின் குறுமை பற்றி, குறுமுனி, குறுவழுதி என்பவற்றைப் போல இவர் பெற்றார் போலும். இவர் பாடியதாகக் குறுந்தொகை 382ஆம் பாடல் காணப்படுகிறது.

     ‘தண்துளிக் கேற்ற பைங்கொடி முல்லை

முகைதலைத் திறந்த நாற்றம் புதல்மிசை

பூமலி தளவமொடு தேங்கமழ்பு கஞல

வம்புப் பெய்யுமால் மழையே வம்பன்று

காளிது பருவம் ஆயின் வாரா ரோநம் காத லோரே” (குறுந் 382);.

குறுங்குடிமருதனார்

குறுங்குடிமருதனார் kuṟuṅkuṭimarutaṉār, பெ. (n.)

   கடைக் கழகக் கால புலவர்; the poet who belonged to the last Sangam age.

     [குறுங்குடி+மருதனார்.]

இவரது இயற்பெயர் மருதனார். குறுங்குடியாகிய பாண்டிநாட்டு மாலிய (விஷ்ணு); தலம் இவருடைய ஊர். இவர் அகநானூற்றில் ஒரு பாடலும் (4);, குறுந்தொகையில் ஒரு பாடலும் (344);

பாடியுள்ளார். இவ்விருபாடலும் முல்லைத்திணையைப் பற்றியே பாடியுள்ளார். குறுந்தொகையில் இவர் பாடிய பாடலில் இருந்து “மாலை காலத்தில் வீடு திரும்பும் தாய்ப்பகவின் வண்ணனை” படித்து மகிழத்தக்கது.

     “நோற்றோர் மன்ற தோழி திண்ணெனத்

துற்றுந் துவலைப் பனிக்கடுந் திங்கட்

புலம்பயிர் அருந்த அண்ணல் ஏற்றொடு

நிலந்துங் கனல வீங்குமுலைச் செருத்தல்

பால்வார்பு குழவி உள்ளி நிரையிறந்

துற்வயிற் பெயரும் புன்கண் மாலை

அரும்பெறற் பொருட்பிணிப் போகிப்

பிரிந்துறை காதலர் வரக்கான் போரே

குறுங்குடியாள்

 குறுங்குடியாள் kuṟuṅguḍiyāḷ, பெ.(n.)

   தாளகம் (மூ.அக.);; yellow sulphuret of arsenic.

     [குறும் + குடி + ஆள்.]

குறுங்கூலி

குறுங்கூலி kuṟuṅāli, பெ.(n.)

   நெல் முதலியன குற்றுங் கூலி (நன். 400. மயிலை);; husking wages.

மறுவ. குறுகூலி

     [குறும் + கூலி. குறுதல் = குற்றுதல்.]

குறுங்கெண்டை

குறுங்கெண்டை kuṟuṅgeṇṭai, பெ.(n.)

   1. நன்னீரில் வாழும் மீன்வகை; a fresh water fish, silvery, attaining 5 inches in length.

   2. ஆற்று மீன்வகை; a small river-fish, silvery.

     [குறும் + கெண்டை.]

குறுங்கை

குறுங்கை kuṟuṅkai, பெ.(n.)

   1. பூடுவகை; conehead, shrub – Strobilanthes.

   2. குறிஞ்சிச் செடி வகை; square-branched Conehead – Strobilanthes Kunthianus (செ.அக.);.

குறுங்கொள்ளி

 குறுங்கொள்ளி kuṟuṅgoḷḷi, பெ.(n.)

   ஒரு பகுதி எரிந்துபோன கொள்ளிக்கட்டை, குறைக் கொள்ளி; fire brand partially consumed.

     [குறுமை + கொள்ளி.]

குறுங்கோல்

குறுங்கோல் kuṟuṅāl, பெ.(n.)

   1. சிறிய கோல்; a

 tiny rod, small stick.

     “குறுங்கோ லெறிந்த நெடுஞ்செவிக் குறுமுயல்” (புறநா. 339);.

   2. ஒரு நீட்டலளவைக் கோல்; a yard-measure.

ம. குறுங்கோல்

     [குறும் + கோல்.]

குறுங்கோழியூர்க்கிழார்

குறுங்கோழியூர்க்கிழார் kuṟuṅāḻiyūrkkiḻār, பெ.(n.)

   கழகக்காலத் தமிழ்ப் புலவர்; Tamil poet, lived in the Śangam era.

     [குறுங்கோழி+ஊர்+கிழார்]

இவர் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறையைப் பாடியுள்ளார். இவர் ஊர் குறுங்கோழி. இவர் வேளாண் குடியினர். இவர் பாடியதாக புறநானூற்றில் மூன்று பாடல்கள் (17, 20, 22); காணப்படுகின்றன.

     “இருமுந்நீர்க் குட்டமும்

வியன்ஞாலத் தகலமும்

வளிவழங்கு திசையும்

வறிதுநிலைஇய காயமும், என்றாங்

கவையளந் தறியினு மளத்தற் கரியை

அறிவு மீரமும் பெருங்க னோட்டமும்

சோறு படுக்குந் தீயொடு

செஞ்ஞாயிற்றுத் தெறலல்லது

பிறிதுதெற லறியார்தின் னிழல்வாழ் வோரே

திருவிலல்லது கொலைவில் லறியார்

நாஞ்சி லல்லது படையு மறியார்

திறனறி வயவரொடு தெவ்வர் தேயவப்

பிறர்மண் ணுண்ணுஞ் செம்மனின் னாட்டு

வயவுறு மகளிர் வேட்டுணி னல்லது

பகைவருணனா வருமண் ணினையே

அம்புதுஞ்சுங் கடியரனால்

அறந்துஞ்சுஞ் செங்கோலையே

புதுப்புள் வரினும் பழம்புட் போகினும்

விதுப்புற வறியா வேமக் காப்பினை

அனையை யாகன் மாறே

மன்னுயி ரெல்லா நின்னஞ் சும்மே.” (புறநா.20);.

ஆசிரியர் குறுங்கோழியூர்கிழார் இப் பாட்டின்கண் யானைக்கட் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையின் செங்கோலாட்சியின் செம்மையைப் புகழ்ந்து “செம்மலே, நீ அறம் துஞ்சும் செங்கோலையுடையை, அதனால் நின்னாட்டவர் புதுப்புள் வரினும் பழம்புள் போகினும் நடுக்கம் சிறிதும் இலராய் இன்பத்திலே திளைத் திருக்கும் செம்மைப்பண்பு கருதி நின்னுயிர்க்கு ஏதேனும் ஏதம் வருமோ வென எண்ணி அன்பால் அஞ்சியிருக்கின்றனர்காண்” எனப் பாடுகிறார்.

குறுஞ்சம்பா

குறுஞ்சம்பா kuṟuñjambā, பெ.(n.)

   சம்பா நெல் வகை; a sub-species of {cambá,} paddy.

     “குறுஞ் சம்பா பித்தங் குடியிருக்கச் செய்யும்” (பதர்த்த. 812);.

     [குறும் + சம்பா.]

குறுஞ்சாண்காடை

 குறுஞ்சாண்காடை kuṟuñjāṇkāṭai, பெ.(n.)

   குறுகிய சாண் நீளமுள்ள காடை; short quail about a span in length (சா.அக.);.

     [குறும் + சாண் + காடை.]

     [P]

குறுஞ்சாண்காடை

குறுஞ்சாலி

 குறுஞ்சாலி kuṟuñjāli, பெ.(n.)

   இளமரம்; young tree (சா.அக.);.

     [குறும் + சாலி.]

குறுஞ்சாலிகை

 குறுஞ்சாலிகை guṟuñjāligai, பெ.(n.)

   சாலிமரம்; arrow thorn tree (சா.அக.);.

     [குறும் + சாலிகை.]

குறுஞ்சிரிப்பு

 குறுஞ்சிரிப்பு kuṟuñjirippu, பெ.(n.)

   புன்சிரிப்பு; smile.

     [குறும் + சிரிப்பு.]

குறுஞ்சிலைக்கல்

 குறுஞ்சிலைக்கல் kuṟuñjilaikkal, பெ.(n.)

   ஈரக்கல் (சங்.அக.);; red stone.

     [குறும் + சிலை + கல்.]

குறுஞ்சீட்டு

 குறுஞ்சீட்டு kuṟuñjīṭṭu, பெ.(n.)

   குடத்தில் இட்டுக் குலுக்கியெடுக்கும் சீட்டு; chits cast into a pot and taken at random.

     [குறும் + சீட்டு.]

குறுஞ்சீர்வண்ணம்

குறுஞ்சீர்வண்ணம் kuṟuñjīrvaṇṇam, பெ.(n.)

   குற்றெழுத்துப் பயின்றுவரும் சந்தம் (தொல். பொருள்.533);;     [குறும் + சீர் + வண்ணம்.]

குறுஞ்சுருட்டை

 குறுஞ்சுருட்டை kuṟuñjuruṭṭai, பெ.(n.)

   சுருட்டைப் பாம்பிற் சிறிய இனவகை; variety of echis carinata, short carpet snake, as being the smallest.

     [குறும் + சுருட்டை.]

குறுஞ்சூலி

குறுஞ்சூலி kuṟuñjūli, பெ.(n.)

   ஒருவகைப் பூடு (நன். 259, மயிலை.);; a kind of shrub.

     [குறும் + சூலி.]

குறுடககுச்சட்டம்

குறுடககுச்சட்டம் guṟuḍagaguccaḍḍam, பெ.(n.)

   1. குறுக்காகப் போடும் சட்டம்; cross piece in a frame.

   2. கூரையின் குறுக்குக் கட்டை; brace to connect a pair of rafters.

   3. குறுக்காக இடும் உத்தரம்; crossbeam.

     [குறுக்கு + சட்டம்.]

குறுணல்

 குறுணல் kuṟuṇal, பெ.(n.)

   குறுநொய் (வின்.);; broken rice, bruished grain, grit.

     [குறுநொய் → குறுணை → குறுணல்.]

குறுணி

குறுணி kuṟuṇi, பெ.(n.)

   எட்டுப்படி கொண்ட தவச அளவு; a grain measure = 1 {marakka/} or 8 measures (ங);.

     [குறு + குறுணி.]

குறுணிப்பாடு

 குறுணிப்பாடு kuṟuṇippāṭu, பெ.(n.)

   குறுணி விதைப்பாடுள்ள நிலம்; land requring one {kuruni} of paddy to sow it.

     [குறுணி + பாடு.]

குறுணை

 குறுணை kuṟuṇai, பெ.(n.)

   குறுநொய்; broken rice, grit.

மறுவ. குறுநொய், குருனல்

     [குறு + நொய்.]

குறுத்தவன்

 குறுத்தவன் kuṟuttavaṉ, பெ.(n.)

   குள்ளன் (யாழ்.அக.);; dwarf.

     [குறு → குறுத்தவன்.]

குறுநகை

குறுநகை guṟunagai, பெ.(n.)

   புன்சிரிப்பு; smile.

     “குருபரன்…. குறுநகை கொண்டு கூறும்” (பிரபுலிங். வசவண்ணாகதி, 30);.

     [குறுமை + நகை.]

குறுநடை

குறுநடை kuṟunaḍai, பெ.(n.)

   குழந்தை நடை; child’s walk.

   2. சிறுக அடி வைத்து நடக்கும் தளர் நடை ; a short walk with a short pace, as of children for pleasure (சா.அக.);.

     “குதலைச் செவ்வாய் குறுநடைப் புதல்வர்க்கு” (மணிமே.7:57);.

     [குறு + நடை..]

குறுநடைகொள்ளல்

 குறுநடைகொள்ளல் guṟunaḍaigoḷḷal, பெ.(n.)

   நோயாளிகள் அல்லது நலிந்தோர் (பலவீனர்கள்); சிறுக அடி வைத்து சிறிது தொலைவு செல்லல்; taking a short walk with a short pace, as of patients or convalescents (சா.அக.);

     [குறு + நடை + கொள்ளல்.]

குறுநணி

குறுநணி kuṟunaṇi, பெ.(n.)

   மிக்க அணிமை; close. proximity

     “நம்முட் குறுநணி காண்குவ தாக” (புறநா. 209:15);.

     [குறுமை + (நண்ணு); நணி.]

குறுநண்டுக்கால்வெட்டு

குறுநண்டுக்கால்வெட்டு kuṟunaṇṭukkālveṭṭu, பெ.(n.)

   பழைய நாணய வகை (பணவிடு.136);; an ancient coin.

     [குறு + நண்டுக்கால் + வெட்டு.]

குறுநரி

குறுநரி kuṟunari, பெ.(n.)

   குள்ளநரி; fox.

     “ஏதில் குறுநரி பட்டற்றால்” (கலித்.65);.

ம. குறுநரி

     [குறு + நரி.]

குறுநர்

குறுநர் kuṟunar, பெ.(n.)

   களை முதலியன பறிப்போர்; pluckers, as of weeds.

     “குறுந ரிட்ட குவளை” (சிலப் 10:86);.

     [குறு (பறித்தல்); → குறுநர்.]

குறுநறுங்கண்ணி

குறுநறுங்கண்ணி kuṟunaṟuṅgaṇṇi, பெ.(n.)

   குன்றிமணிப்பூ ; crab’s eye flower.

     “குரீஇப் பூளை குறுநறுங் கண்ணி” (குறிஞ்சிப். 72);.

மறுவ. குன்றிப்பூ

ம. குறுநறுங்கண்ணி

     [குறும் + நறும் + கண்ணி.]

குறுநாத்தகடு

 குறுநாத்தகடு guṟunāttagaḍu, பெ.(n.)

   பொன் போல் ஒளிரும் மெல்லிய தகடு; foliated tinsel.

மறுவ, குறுந்தகடு

     [குறு + நாகம் + தகடு – குறுநாகத்தகடு → குறுநாத்தகடு. நாகம் = துத்தநாகம்.]

குறுநாப்பட்டை

 குறுநாப்பட்டை kuṟunāppaṭṭai, பெ.(n.)

குறுநாத் தகடு பார்க்க;See. {kurunāt-tagadu.}

     [குறு + நாகம் + பட்டை.]

குறுநாவல்

 குறுநாவல் kuṟunāval, பெ.(n.)

   பொதுவாக, அளவில் சிறுகதையை விடப் பெரியதும் புதினத்தைவிடச் சிறியதுமான இலக்கிய susps; short novel.

     [குறு+நாவல்.]

குறுநிகழ்ச்சி

குறுநிகழ்ச்சி guṟunigaḻcci, பெ.(n.)

   எழுசெங்கழு நீரிதழை ஒரு குறட்டிலடுக்கி வலுவுள்ளவன் ஒருவன் மிகவும் கூரியதோருளி வைத்துக் கூடமிட்டுப் புடைத்தால் ஆறாம் புரையற்று, ஏழாம் புரையிற் செல்லுதற்கு வேண்டும் மிக நுண்ணிய அளவுள்ள காலம்; short duration of time taken by a sharp chisel to pass from the sixth lotus leaf to the seventh in a bunch of seven lotus leaves placed on a stone when the chisel is forcibly thrust into it by a strong man, opp to {neguniga/cci}

     “கணிகமெனுங் குறுநிகழ்ச்சியும்” (மணிமே.27:191);.

     [குறுமை + நிகழ்ச்சி.]

குறுநிலமன்னன்

 குறுநிலமன்னன் kuṟunilamaṉṉaṉ, பெ.(n.)

   சிற்றரசன் (பிங்.);; petty, tributary chief.

ம. குறுநிலமன்னன்

     [குறுநிலம் + மன்னன்.]

குறுநிலைவழக்கு

குறுநிலைவழக்கு kuṟunilaivaḻkku, பெ.(n.)

   குழூஉக்குறி வழக்கு (நேமி.சொல்.10,உரை);; terms peculiar to any class;

 conventional terms.

     [குறுநிலை + வழக்கு.]

குறுநெறி

குறுநெறி kuṟuneṟi, பெ.(n.)

   குறுகிய மயிர் நெறிப்பு; wave of curls of hair.

     “குறுநெறிக் கொண்ட கூந்தல்” (பெரும்பாண்.162);.

ம. குறுநிற

     [குறு + நெறி.]

குறுநெளிப்பு

 குறுநெளிப்பு kuṟuneḷippu, பெ.(n.)

   போலிப்பு நகையாட்டுக்காக (கேலியாக); உடலை நெளித்துக் காட்டுகை (யாழ்.);; affected twisting of the body as in mimicry.

     [குறு + தெளிப்பு.]

குறுநை

 குறுநை kuṟunai, பெ.(n.)

குறுநொய் பார்க்க;See. {kսրսոoy.}

     [குறுநொய்→குறுநை.]

குறுநொய்

 குறுநொய் kuṟunoy, பெ.(n.)

   அரிசி முதலிய வற்றின் சிறுநொய்; broken rice, bruised grain, grit.

மறுவ. குருணை

     [குறு + நொய்.]

குறுநோவு

 குறுநோவு kuṟunōvu, பெ.(n.)

   உடலின் கழிவு; bodily secretiod (சா.அக.);.

     [குறு + நோவு.]

குறுந்தடி

குறுந்தடி kuṟundaḍi, பெ.(n.)

   1. சிறிய கழி (திவா.);; short stick.

     “கோழிவெண் முட்டைக் கென் செய்வதெந்தாய் குறுந்தடி” (திவ். பெரியதி.10:9,7);.

   2. பறையடிக்குங்கோல்; drum stick.

     “கன்றைக் குறுந்தடியாக் கொண்டு’ (சிலப். 17, பாட்டு, 1, உரை.);.

   3. தாங்குதூண்; supporting pillar.

ம.குறுந்தடி

     [குறும் + தடி.]

குறுந்தடிப்பு

 குறுந்தடிப்பு kuṟundaḍippu, பெ.(n.)

   சிறிய தடிப்பு; small raised patches on the surface of the skin

     [குறும் + தடிப்பு.]

குறுந்தட்டி

 குறுந்தட்டி kuṟundaṭṭi, பெ.(n.)

   குறுந்தொட்டிச்செடி; a plant (சா.அக.);.

குறுந்தோட்டி → குறுந்தட்டி.]

குறுந்தறி

குறுந்தறி kuṟundaṟi, பெ.(n.)

   1. அணிவகையாகச் செய்யப்பெற்ற கற்றூண் (போதிகை);; ornamental capital of a column or pillar.

   2. சிறு முளை; stake.

   3. உத்தரத்தைத் தாங்கும்படி சுவரோடு ஒட்டித் தூண்போல் எழுப்பிய கட்டடம்; blocks built in a wall to support timbers.

     [குறும் + தறி.]

குறுந்தாளி

 குறுந்தாளி kuṟuntāḷi, பெ.(n.)

   சிறுதாளி; hairy-leaved creamy white bindweed – Ipomaea oscura alias Convolvulus gemellus (சா.அக.);.

     [குறும்+தாளி]

 குறுந்தாளி kuṟundāḷi, பெ.(n.)

   சிறுதாளி ; hairy leaved creamy-white bind weed.

     [குறும் + தாளி.]

குறுந்தாள்

குறுந்தாள்1 kuṟundāḷ, பெ.(n.)

   குறுகிய படிக்கட்டு; narrow steps.

     “குறுந்தாள் ஞாயில்” (பதிற்றுப். 71: 12);.

     [குறும் + தாள்.]

 குறுந்தாள்2 kuṟundāḷ, பெ.(n.)

   சிற்றடி; small step (சா.அக.);.

     [குறும் + தாள்.]

குறுந்திரட்டு

 குறுந்திரட்டு kuṟundiraṭṭu, பெ.(n.)

   தத்துவராயர் தொகுத்த ஒரு வேதாந்த நூல்; an anthology by {Tattuva-rayar,} treating of {Vēdànta, dist-fr. Perun-tirattu.}

ம. குறுந்திரட்டு (கணக்குச் சுருக்கம்);

     [குறும் + திரட்டு.]

குறுந்துளசி

 குறுந்துளசி kuṟunduḷasi, பெ.(n.)

   சிறுதுளசி (மலை.);; a small species of basil.

     [குறும் + துளசி.]

குறுந்துழாய்

 குறுந்துழாய் kuṟunduḻāy, பெ.(n.)

   குறுந்துளசி (மலை.);; a small species of basil.

மறுவ. குறுந்துளசி

     [குறுமை + துழாய்.]

குறுந்தேங்காய்

 குறுந்தேங்காய் kuṟundēṅgāy, பெ.(n.)

   சிறு தேங்காய் போல் தோற்றமளிக்கும் ஒருவகைப் பழம்; a fruit resembling a small coconut.

     [குறும் + தேங்காய்.]

குறுந்தை

 குறுந்தை kuṟundai, பெ.(n.)

   பூவன் வாழை; royal banana (சா.அக.);.

     [குறு → குறுந்தை.]

குறுந்தொகை

குறுந்தொகை guṟundogai, பெ.(n.)

   அகப் பொருளைப் பற்றியதும் அகவற்பாக்கள் 402 கொண்டு பூரிக்கோ என்பவரால் தொகுக்கப் பெற்றதும், எட்டுத் தொகையில் சேர்ந்ததுமாகிய ஒரு நூல்; an ancient anthology of Tamil stanzas 402 in number, compiled by {Púrikó} treating of agap-porus one of {effu-t-togai}

     “நற்றிணை நல்ல குறுந்தொகை” (புறநா. முகவுரை. ப. 1);.

     [குறும் + தொகை.]

குறுந்தொகை நானுாறு

குறுந்தொகை நானுாறு guṟundogaināṟu, பெ.(n.)

குறுந்தொகை பார்க்க (இறை.பாயி,பக்.5);;See. {Kurunsoga,}

     [குறுந்தொகை + நானூறு.]

குறுந்தொடி

குறுந்தொடி kuṟundoḍi, பெ.(n.)

   சிறு வளையலைப் பூண்ட பெண்; maiden wearing small bracelets.

     “தொடலைக் குறுந்தொடி” (குறள், 1135);.

     [குறும் + தொடி.]

குறுந்தொட்டி

குறுந்தொட்டி kuṟundoṭṭi, பெ.(n.)

   1. சிற்றாமுட்டி; rose-coloured sticky mallow.

   2. சிறுகாஞ்சொறி (மலை.);; small climbing nettle.

ம. குறுந்தோட்டி

     [குறும் + தொட்டி.]

குறுந்தோட்டி

குறுந்தோட்டி kuṟundōṭṭi, பெ.(n.)

   சிறிய அங்குசம்; short goad, dist, fr. {negu-n-tõți}

     ‘குறுந்தோட்டி யையும் நெடுந்தோட்டியையும் தம்மிற் பிணைத்து’ (சீவக. 1835, உரை);.

     [குறும் + தோட்டி.]

குறுப்பாலை

குறுப்பாலை kuṟuppālai, பெ.(n.)

   1.சிறுபாலை; small paulay of the mimusops genus.

   2. புத்திர சீவி; grey barked nageia (சா.அக.);.

     [குறு → பாலை.]

குறுப்பி

 குறுப்பி kuṟuppi, பெ.(n.)

   பொன்னிமிளை; gold pyrites (சா.அக.);.

     [குறு → குறுப்பி.]

குறுப்பிகம்

 குறுப்பிகம் guṟuppigam,    வெண்கொய்யா; white guava (சா.அக.).

     [குறு → குறும்பிகம்.]

குறுமகள்

குறுமகள் guṟumagaḷ, பெ.(n.)

   1. இளம்பெண்; girl, young woman.

     “வண்டிமிர் சுடர்நுதற் குறுமகள்” (ஐங்குறு. 254);.

    2.மனைவி; wite.

     “மெல்லியற் குறுமகள்” (புறநா. 196:14);.

     [குறுமை + மகள்.]

குறுமக்கள்

 குறுமக்கள் kuṟumakkaḷ, பெ.(n.)

   சிறுபிள்ளைகள் (சூடா.);; children, youngsters.

மறுவ. குறுமாக்கள்

ம. குறுமர், குறுமாரு.

     [குறுமை + மக்கள்.]

குறுமடல்

குறுமடல் kuṟumaḍal, பெ.(n.)

   திருநீறு வைக்கும் சிறிய மடல்; small receptacle for sacred ashes.

     “குறுமடல் ஒன்று பொன் இருபதின் கழஞ்சரை” (S.I.I. II, 144);.

     [குறும் + மடல்.]

குறுமணல்

 குறுமணல் kuṟumaṇal, பெ.(n.)

   வெள்ளி கலந்த மணல்; sand containing minute particles of silvet.

     [குறும் + மணல்.]

குறுமண்பூமி

 குறுமண்பூமி kuṟumaṇpūmi, பெ.(n.)

   இளகிய மண்தன்மையுடைய நிலம் (கட்.தொ.வரி.);; ground with fine loose soil.

     [குறு + மண் + பூமி.]

குறுமல்

 குறுமல் kuṟumal, பெ.(n.)

   பொடி (பிங்.);; powder.

ம. குறும்பல்

     [குறு → குறுமு → குறுமன்.]

குறுமா

 குறுமா kuṟumā, பெ.(n.)

   கூட்டாணம் (குழம்புணவின் வகை);; a kind of stew seasoned with condiments.

த.வ. கூட்டாணம்.

     [U.{} → த.குறுமா.]

குறுமாக்கள்

குறுமாக்கள் kuṟumākkaḷ, பெ.(n.)

   சிறு பிள்ளைகள்; children.

     “ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின்” (புறநா.94);.

மறுவ, குறுமக்கள்

ம. குறுமார், குறுமாரு.

     [குறுமை + மாக்கள்.]

குறுமாடி

 குறுமாடி kuṟumāṭi, பெ.(n.)

   வீட்டின் முகட்டுறுப்பு (கட்.தொ.வரி.);; portico.

     [குறு + மாடி.]

குறுமாந்தம்

 குறுமாந்தம் kuṟumāndam, பெ.(n.)

   குழந்தை நோய்வகை (ஆங்.மருத்.);; croup.

     [குறும் + மாந்தம்.]

குறுமீன்

 குறுமீன் kuṟumīṉ, பெ.(n.)

   பொடி மீன்; small lfish (அயிரை); (சா.அக.);.

ம. குறுமீன்

     [குறு + மீன்.]

குறுமுடிகுடி

குறுமுடிகுடி guṟumuḍiguḍi, பெ.(n.)

   சிற்றரசுரிமை யுடைய குலம்; family of petty chiefs.

     “குறுமுடி குடிப்பிறந்தோர் முதலியோருமாய் (தொல். பொருள்.50. உரை.);.

     [குறு + முடி + குடி.]

குறுமுட்டன்

 குறுமுட்டன் kuṟumuṭṭaṉ, பெ.(n.)

   முரடன் (வின்);; one daringly insolent, brute, savage.

     [குறுமுட்டு →குருமுட்டன்.]

குறுமுட்டான வேலை

 குறுமுட்டான வேலை kuṟumuṭṭāṉavēlai, பெ.(n.)

   வேண்டிய கருவிகளின்றிச் சுருக்கமாகச் செய்யப்படும் வேலை; work on a very small scale with insufficient materials.

     [குறுமுட்டு + ஆன + வேலை.]

குறுமுட்டு

குறுமுட்டு kuṟumuṭṭu, பெ.(n.)

   1. அளவு கடந்த செருக்கு; gross insolence, impertinence.

   2. ஒரு தொழிலைச் செய்யாமலே சுணக்கமாயிருந்து இறுதியில் முடித்தற்கு விரையும் விரைவு; great urgency, as for business put off until the last moment.

   3. ஒடுக்கம்; narrowness, closeness.

   4. வலுக்கட்டாயம்; coercion, compulsion.

   5. திடீரென்று எதிர்ப்படுகை; sudden encounter, as at a corner.

     [குறு + முட்டு.]

குறுமுத்து

குறுமுத்து kuṟumuttu, பெ.(n.)

   பிறப்பிலேயே வடிவில் சிறியதாக அமைந்த முத்து; a diminutive pearl.

     “ஶ்ரீராஜராஜ தேவர் ஶ்ரீபாத புஷ்பமாக அட்டித் திருவடி தொழுத ஒப்பு முத்தும், குறுமுத்தும்” (தெ.கல்.தொ.2.கல்:59);.

     [குறு + முத்து.]

குறுமுனி

குறுமுனி kuṟumuṉi, பெ.(n.)

   குறுமுனிவன் அகத்தியன்; sage Agattiya.

     “அகப்பொரு ளமுதினைக் குறுமுனி தேறவும்” (கல்லா. 62:20);.

ம. குறுமுனி

     [குறு + முனி.]

குறுமுனிவன்

குறுமுனிவன் kuṟumuṉivaṉ, பெ.(n.)

   அகத்தியன் (குறுகிய வடிவுடையவன்);; lit. dwarfish sage, Agastya.

     “படி நேர் நிறுவவரு குறுமுனிவன்” (சேதுபு. நாட்டுப்.1);.

     [குறு + முனிவன்.]

குறுமுயல்

 குறுமுயல் kuṟumuyal, பெ.(n.)

குழிமுயல் பார்க்க’ see {kuli-muya/}

     [குறு + முயல்.]

குறுமுறுவல்

 குறுமுறுவல் kuṟumuṟuval, பெ.(n.)

   புன்சிரிப்பு; smile.

     [குறு + முறுவல்.]

குறுமுள்ளி

 குறுமுள்ளி kuṟumuḷḷi, பெ.(n.)

   கொட்டைக்களா; small sweet thorn (சா.அக.);.

     [குறு + முள்ளி.]

குறுமூச்சு

 குறுமூச்சு kuṟumūccu, பெ.(n.)

   திணறின. மூச்சு (இ.வ.);; hard breathing.

     [குறு + மூச்சு.]

குறுமை

குறுமை kuṟumai, பெ.(n.)

   1. குறுகிய தன்மை; shortness, brevity, conciseness.

     “குறுமையாய் நெடுமையாகி” (கர்சிக.ஒங்காரவிலிங். 22);.

   2. குள்ளம்; dwarfishness, low stature.

   3. குறைவு; defectiveness, imperfection.

     “ஒருத்ன் மண்டிய குறுமையும்” (தொல். பொருள். 67);.

   4. அண்மை (பட்டினப்.28);; nearness, closeness, proximity.

   ம. குறும்;   க. குறுசு;   தெ. கொர, கொறுவ;   து. கொறதெ;   கோத. கொர்வ்;   துட. க்வர்சில்;குட. கொறு, கொறவு.

     [குறு + மை.]

குறுமொழி

 குறுமொழி kuṟumoḻi, பெ.(n.)

   கொச்சை வழக்கு; slang.

     [குறு + மொழி.]

குறுமொழிக்கோட்டி

குறுமொழிக்கோட்டி kuṟumoḻikāṭṭi, பெ.(n.)

   பிறரை இகழ்ந்து நகையாடுதலையே பொழுது போக்காகவுடைய கீழ்மக்கள்கூட்டம்; band of riffraffs who spend their time in mocking and revil

 ing others.

     “குறுமொழிக் கோட்டி நெடு நகைபுக்கு” (சிலப் 16:64);.

     [குறு + மொழி + கோட்டி.]

குறும்படி

 குறும்படி kuṟumbaḍi, பெ.(n.)

   வாசற்படி; threshold, sil.

நிலையும் குறும்படியும் (இ.வ.);.

     [குறும் + படி..]

குறும்படை

குறும்படை kuṟumbaḍai,    பெ.(n. ) கோட்டை; fort

     “குறும்படை மழவர்” (அகநா.35);.

     [குறும்பு + அடை.]

குறும்பனைநாடு

குறும்பனைநாடு kuṟumbaṉaināṭu, பெ.(n.)

   முற்காலத்தில் குமரிக்குத் தெற்கே கடல் கொள்ளப்பட்ட தமிழ்நாட்டுப்பகுதிகளுள் ஒன்று; an ancient province of the Tamil land believed to have been submerged by sea of kumari.

     ‘ஏழ்குறும்பனை நாடும்’ (சிலப். 8.1 உரை.);

     [குறும் + பனை + நாடு.]

குறும்பன்

குறும்பன் kuṟumbaṉ, பெ.(n.)

   1. குறும்பு; mischief.

   2. குறும்புக்காரன்; mischief maker.

   ம. குறும்பன்;க. குறும்புகார.

     [குறும்பு + அன்.]

குறும்பர்

குறும்பர் kuṟumpar, பெ.(n.)

   மலையாளத்தார்; Malayalees, People of Kerala (சா.அக.);.

     [குறும்பு (மலை);+ஆர்.]

 குறும்பர் kuṟumbar, பெ.(n.)

   1. குறுநிலமன்னர்; petty chieftains.

     “குறும்பருங் குழீஇய” (பெருங். உஞ்சைக்.43: 55);.

   2.ஒரு பழமையான குடியினர்; an aboriginal tribe.

   3. வேடர்; hunters, those wholive bychase.

     “கோண்டரு குறும்பர் வெம்போர்” (சீவக.. 1079);.

   4. இடையருள் முரட்டுக் கம்பளி நெய்யும் ஒரு பிரிவினர்; a caste of shepherds who weave coarse blankets.

   5. பள்ளருள் ஒரு பிரிவினர் (G.J.D.i.90);; a subdivision of the {Pasā} caste.

   ம. குறும்பன்;   க. குறுப;   தெ. குருப;து. குருபி.

     [குறும்பு → குறும்பர். குறும்பு = சிறுகுன்றம், காடு, வலிய கோட்டை.]

குறும்பர் கோட்டம்

 குறும்பர் கோட்டம் kuṟumbarāṭṭam, பெ.(n.)

   குறும்பரின் கோட்டை(வின்.);; stronghold of the {Kurumbās.}

     [குறும்பர் + கோட்டம்.]

குறும்பர்நாடு

 குறும்பர்நாடு kuṟumparnāṭu, பெ.(n.)

   கேரளநாடு;மலையாள நாடு; the modern Malabar (சா.அக.);.

     [குறும்பர்+நாடு]

குறும்பறை

குறும்பறை kuṟumbaṟai, பெ.(n.)

   பறவைப்பேடு; hen, female of the feathered kind as probably short in stature.

     “குறும்பறை யசைஇ” (புறநா. 67:9);

     [குறும் + பறை.]

குறும்பலா

குறும்பலா kuṟumbalā, பெ.(n.)

   1. ஒருவகைக் கூழைப்பலாமரம்; a kind of short jack tree.

   2. திருக்குற்றாலத்திலுள்ள சிவாலயம்; Siva shrine at {Thirukkuralam,}

     “குறும்பலா மேவிய கொல்லேற் றண்ணல்” (தேவா. 911:11);.

     [குறும் + பலா.]

குறும்பா

 குறும்பா kuṟumpā, பெ.(n.)

   ஐந்து அடியில் நகைச்சுவைத் தன்மை கொண்ட செய்யுள் வடிவம் (இலங்.);; humourous five line verse with a rhyme-scheme – limerick.

     [குறு+பா.]

குறும்பாடு

குறும்பாடு1 kuṟumbāṭu, பெ.(n.)

   குறும்பாட்டம்; wickedness.

     “குறும்பாட்டையு மோதிடும்” (அழகர் கல.41);.

     [குறும்பு + ஆடு.]

 குறும்பாடு kuṟumbāṭu, பெ.(n.)

   ஒருவகை ஆடு; short, woolly sheep with twisted horns.

     “குறும்பாட்டை மோதிடும்” (அழகர்கல.41);.

      [குறும்பு (குன்றம்); + ஆடு.]

குறும்பாட்டம்

 குறும்பாட்டம் kuṟumbāṭṭam, பெ.(n.)

   குறும்புத் குறும்பாட்டம்; wickedness. mischievousness.

     [குறும்பு + ஆட்டம்.]

குறும்பி

குறும்பி kuṟumbi, பெ.(n.)

   1. காதுள் அழுக்கு; ear wax.

     “உள்ளுங் குறும்பி யொழுகுங் காதை” (பட்டினத். திருப்பா. கச்சித்திருவகவல், வரி 37);.

   2. மலம், சிறுநீர் முதலியன.

 excretion of the body, as urine and faeces

     “குறும்பி யூர்வதோர் கூட்டகத் திட்டு’ (தேவா. 370:6);.

ம. குரும்பி

     [குல் → குறு → குறும்பு → குறும்பி.]

குறும்பி முடங்கு-தல்

குறும்பி முடங்கு-தல் kuṟumbimuḍaṅgudal,    5 செ.கு.வி. (v.i.)

   காதில் அழுக்குச் சேர்தல்; collection of the ear-wax. (சா.அக.);.

     [குறும்பி + முடங்கு-.]

குறும்பிடி

குறும்பிடி kuṟumbiḍi, பெ.(n.)

   1. சிறுகைப்பிடி; a very short handle.

   2. உடைவாள்; short scimitar.

     “குறங்கிடைப் பதித்த கூர்நுனைக் குறும்பிடி” (மதுரைக் 637);.

     [குறும் + பிடி.]

குறும்பின்மை

 குறும்பின்மை kuṟumbiṉmai, பெ.(n.)

   துன்பம் விளைக்கும் குறும்பரசர் இல்லாமையாகிய நாட்டமைதிவகை (பிங்.);; freedom from petty troublesome chieftains, as promoting the prosperity of a state.

     [குறும்பு + இன்மை.]

குறும்பிவாங்கி

 குறும்பிவாங்கி kuṟumbivāṅgi, பெ.(n.)

   காதுக் குறும்பி எடுக்குங் கருவி; ear pick.

     [குறும்பி + வாங்கி.]

குறும்பிவாங்கு-தல்

குறும்பிவாங்கு-தல் kuṟumbivāṅgudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   காது அழுக்கை நீக்கல்; cleaning the dirt of the ear (சா.அக.);.

     [குறும்பி + வாங்கு-.]

குறும்பு

குறும்பு1 kuṟumbu, பெ.(n.)

   1. குன்றம்; hill.

   2. பாலை நிலத்தூர்; village in a desert tract.

     [குன்றம் → குறம் → குறும்பு.]

 குறும்பு2 kuṟumbu, பெ.(n.)

   1. ஊர் (திவா.);; village.

   2. குறுநிலமன்னர்; petty chieftains.

     “குறும் படைந்த வரண்” (புறநா. 97);.

   3. பகைவர்; enemy.

     “இருட்குறும் பெறியும் வெய்யோன்” (கூர்மபு. பதிக.10);.

   4. அரண்; stronghold.

     “குறும்பல் குறும்பிற் றதும்ப வைகி” (புறநா. 177);.

   5. வலிமை; strength, power.

     “அரவுக் குறும்பெறிந்த சிறுகட் டீர்வை” (மலைபடு. 504);.

   6. தென்னாட்டிலுள்ள தொன்மையான மக்களுள் ஒரு பிரிவினர்; a class of tribes supposed to form a part of the aborigines of South India, divided into.

காட்டுக்குறும்பு, நாட்டுக்குறும்பு.

   9. போர்; battle, fight, war.

     [குல் → குறு (குற்றுதல், தாக்குதல், வலிமை); → குறும்பு.]

 குறும்பு3 kuṟumbu, பெ.(n.)

   1. போக்கிரித் தனம்; wickedness.

   2. நையாண்டி, வசை; mischief.

   3. தொல்லை; obstinacy.

   4. துடுக்குத்தனம்; insolvence.

ம. க. குறும்பு

     [குறு → குறும்பு.]

 குறும்பு4 kuṟumbu, பெ.(n.)

   1. சிறிய துணுக்கு; small pieces, as tobacco.

     “புகையிலைக் குறும்பு” (இ.வ.);.

   2. அழுக்கு; dirt.

ம. குறும்பல்

     [குல் → குறு → குறும்பு.]

குறும்புக்காரன்

 குறும்புக்காரன் kuṟumbukkāraṉ, பெ.(n.)

   குறும்பு செய்பவன்; mischief maker.

க. குறும்பு கார

     [குறும்பு + காரன்.]

குறும்புத்தனம்

 குறும்புத்தனம் kuṟumbuttaṉam, பெ.(n.)

   குறும்பு செய்தல்; wickedness, mischief.

     [குறும்பு + தனம்.]

குறும்புள்

 குறும்புள் kuṟumpuḷ, பெ.(n.)

காடை quail (சா.அக.);.

     [குறு+புள்]

     [P]

 குறும்புள் kuṟumbuḷ, பெ.(n.)

   காடை; quail (சா.அக.);.

     [குறும் + புள்.]

குறும்புழை

குறும்புழை kuṟumbuḻai, பெ.(n.)

   சிறிய வாயில்; trapdoor small entrance.

     “குறும்புழை போயினன்” (பெருங். உஞ்சைக். 36: 371);.

     [குறுமை + புழை.]

குறும்புவன்னியன்

 குறும்புவன்னியன் kuṟumbuvaṉṉiyaṉ, பெ.(n.)

   வன்னியருள் ஒருவகையார் (வின்.);; a sub-caste of {Vanniya tribe}

     [குறும்பு + வன்னியன்.]

குறும்பூழ்

குறும்பூழ் kuṟumbūḻ, பெ.(n.)

பெ.(n.);

   காடை; quail

     “குறும்பூழ்போற் கொழுங்கான் முகை சுமந்தன.” (சீவக. 1651);.

     [குறுமை + பூழ்.]

குறும்பெறி-தல்

குறும்பெறி-தல் kuṟumbeṟidal,    2 செ.குன்றாவி. (v.t.)

   காவலோடு இருந்த பகைவரின் சிற்றூரினை அழித்தல், தொல்லை தரும் பகைக்குழுவினை அழித்தல்; to destroy the settlement of the enemy, to destroy enemy force.

     “காவேரிக்கு வடகரையில் கஞ்சனூரகத்திலே விட்டுக் கொடு இருந்த குறும்பெறிந்து நிரைகொண்ட ஆடும், மாடும் எருமையும் கிடாவும்” (தெ.இ.கல்.தொ.VIll: 284:6,7);.

     [குறும்பு + எறி-.]

குறும்பொறி

குறும்பொறி kuṟumboṟi, பெ.(n.)

   ஒட்டியாணம் ; girdle;sash.

     “குறும்பொறிக் கொண்ட நறுந்தண் சாயல்” (திருமுருக. 213);.

     [குறும் + பொறி.]

குறும்பொறை

குறும்பொறை kuṟumboṟai, பெ.(n.)

   1. சிறுமலை (பிங்.);; hillock.

     “வரையக நண்ணிக் குறும்பொறை நாடி” (பதிற்றுப். 74:7);.

   2. குறிஞ்சிநிலம் (பிங்.);; the hilly tract.

   3. குறிஞ்சிநிலத்தூர் (பிங்.);; town in a hilly tract.

   4. காடு; forest, jungle

     “குருந்தவிழ் குறும்பொறை” (நற். 321.]

     [குறும் + பொறை. பொறை = கற்பாங்கான மலை.]

 குறும்பொறை kuṟumboṟai, பெ.(n.)

   முல்லை நிலத் தலைவன்; a chieftain of hilly forest area.

குறும் பொறைநாடன்.

     [குறும்+பொறை [கற்குன்று]]

குறும்பொறைநாடன்

குறும்பொறைநாடன் kuṟumboṟaināṭaṉ, பெ.(n.)

   முல்லைநிலத் தலைவன் (இறை.1.18);; chief of the Sylvan tract.

     [குறும்பொறை + நாடன்.]

குறும்போக்கு

குறும்போக்கு kuṟumbōkku, பெ.(n.)

   யாழ் மீட்டும் முறைகளுள் ஒன்று (சீவக. 657, உரை);; a mode of playing on the lute.

     [குறும் + போக்கு.]

குறும்போது

குறும்போது kuṟumbōtu, பெ.(n.)

   மலரும் பருவமுள்ள அரும்பு (பெருங். இலாவாண.15,21);; bud about to blossom.

     [குறும் + போது.]

குறும்விரியன்

 குறும்விரியன் kuṟumviriyaṉ, பெ.(n.)

   குட்டையான விரியன்; short viper of the viperidae genus (சா.அக.);.

     [குறும் + விரியன்.]

     [P]

குறுவஞ்சி

குறுவஞ்சி kuṟuvañji, பெ.(n.)

   படையெடுத்து வந்த பெருவேந்தனுக்குச் சிறுவேந்தன் பணிந்து திறை கொடுத்துத் தன் குடிகளைப் புரக்கும் புறத்துறை (பு.வெ.3,17);;     [குறு + வஞ்சி.]

குறுவட்டம்

 குறுவட்டம் kuṟuvaṭṭam, பெ.(n.)

   குறுக்களவு (கணக்கதி);; diameter.

     [குறு + வட்டம்.]

குறுவளை

 குறுவளை kuṟuvaḷai, பெ.(n.)

   கடல்மீன்வகை; a sea-fish, greenish.

ம. குறுவல

     [குறு + வளை.]

குறுவழுதியார்

 குறுவழுதியார் kuṟuvaḻutiyār, பெ.(n.)

   கடைச்சங்கம்மருவிய புலவர்; the poet who belonged to the last Sañgam (அபி.சிந்.);. [குறு+வழுதி]

 குறுவழுதியார் kuṟuvaḻutiyār, பெ.(n.)

   தேவையில்லாமல் மிகுதியாகக் கவலை கொள்ளுகை; gloomy state of mind, melancholy (செ.அக.);.

     [குறு+ Skt. விசனம்]

குறுவா

 குறுவா kuṟuvā, பெ.(n.)

   வரிக்கற்றலை மீன்; a seafish.

     [குறு + வாய் – குறுவாய் → குறுவா.]

குறுவால்

 குறுவால் kuṟuvāl, பெ.(n.)

   இச்சி மரம்; joined ovate leaved fig.

     [குறு + ஆல்.]

குறுவாழ்க்கை

குறுவாழ்க்கை kuṟuvāḻkkai, பெ.(n.)

   1.ஏழைமை (திவா.);; poverty.

   2. சின்னஞ்சிறு கால இன்பம்; short-lived enjoyment.

     [குறுமை + வாழ்க்கை.]

குறுவிசாரம்

 குறுவிசாரம் kuṟuvicāram, பெ.(n.)

குறுவிசனம் பார்க்க;see kuru-višanam (செ.அக.);.

     [குறு+Skt. விசாரம்]

குறுவியர்

குறுவியர் kuṟuviyar, பெ.(n.)

   குறுவேர்வை; slight perspiration.

     “குறுவியர் பொடித்த கோலவாண் முகத்தள்” (மணிமே. 18:40);.

     [குறு + வியர்.]

குறுவியர்வை

 குறுவியர்வை kuṟuviyarvai, பெ.(n.)

சிறு அளவாக உண்டாகும் வியர்வை

 slight or moderate perspiration (சா.அக.);.

     [குறு+வியர்வை]

குறுவிரியன்

 குறுவிரியன் kuṟuviriyaṉ, பெ.(n.)

   விரியன் பாம்பிற் சிறியவகை (M.M.);; short viper.

     [குறு + விரியன்.]

குறுவிற்று

 குறுவிற்று kuṟuviṟṟu, பெ.(n.)

   அடுத்தடுத்து ஈனும் பசு; cow that calves frequently.

     [குறு + ஈற்று. ஈன் → ஈன்று → ஈற்று.]

குறுவிலை

 குறுவிலை kuṟuvilai, பெ.(n.)

   பண்டங்கள் விலைக்கு அரிதாகக் கிடைத்தல் (வின்);; scarcity, dearth.

     [குறு + விலை.]

குறுவிழி

 குறுவிழி kuṟuviḻi, பெ.(n.)

அரைக் கண்,

 partially closed eyes (சா.அக.);.

     [குறு+விழி]

குறுவிழிக்கொள்

குறுவிழிக்கொள்1 kuṟuviḻikkoḷḷudal,    21 செ.கு.வி.(v.i.)

   இகழ்குவிதல்; to close, as eye-lids, flowers.

     “குவளை யஞ்சிக் குறுவிழிக் கொள்ளும் வாட்கண்” (சீவக 2998);.

     [குறு + விழி + கொள்.]

 குறுவிழிக்கொள்2 kuṟuviḻikkoḷḷudal,    21 செ.கு.வி.(v.i.)

   அரைக்கண்ணாற் பார்த்தல்; to see with eyes half-closed.

     “குறுவிழிக் கொண்டு வந்தார் போனார் நிழலாட்டம் பார்த்துக் கொண்டு கிடக்கையாலே” (திவ்.பெரியாழ்.2:5:3, வ்யா.பக். 340);.

     [குறு + விழி + கொள்.]

குறுவிழிவிழி-த்தல்

குறுவிழிவிழி-த்தல் kuṟuviḻiviḻittal,    4 செ.கு.வி. (v.i.)

   வெகுளி, அச்சம் முதலியவற்றால் வெறித்துப் பார்த்தல்; to stare, look intently through angeror fear.

     [குறு + விழி-.]

குறுவெண்பாட்டு

குறுவெண்பாட்டு kuṟuveṇpāṭṭu, பெ.(n.)

   இரண்டடியானும் மூன்றடியானும் வரும் அளவடிக்குரிய பாட்டு (இளம்.தொல்.செய்.114);. (உரை. சொ.களஞ்.);; verse with stanza each of two or three lines.

     [குறு + வெண் + பாட்டு.]

குறுவெறும்பு

 குறுவெறும்பு kuṟuveṟumbu, பெ.(n.)

   பெரிய சிவப்பெறும்பு; hup a large red ant (சா.அக.);.

     [குறு + எறும்பு. குறு = சிவப்பு.]

குறுவேர்

குறுவேர் kuṟuvēr, பெ.(n.)

   ஒருவகை நறுமணவர்(M.M.225);; black cuscus grass.

     [குறு + வேர்.]

குறுவேர்வை

குறுவேர்வை kuṟuvērvai, பெ.(n.)

   அச்சம் முதலியவற்றால் சிறிதாகத் தோன்றும் வியர்வை; slight perspiration through fear or any strong emotion.

     “முகங் குறுவேர் பொடித்த வாறும்” (திருவாச. 6:57);.

     [குறு + வேர்வை.]

குறுவை

குறுவை kuṟuvai, பெ.(n.)

   1. விடை மாதத்தில் (வைகாசியில்); விதைத்து இரண்டு மாதத்தில் அறுவடையாகும் கறுப்பு நெல்வகை; a dark species of paddy sown in {vaikaci} and reaped in two months.

   2. மூன்று மாதத்தில் பயிராகும் ஒருவகைச் செந்நெல்; an inferior reddish paddy, maturing in three months.

ம. குறுவ, குர்வ்வ.

     [குறு → குறுவை.]

குறுவைக்கிளையான்

குறுவைக்கிளையான் kuṟuvaikkiḷaiyāṉ, பெ.(n.)

   நெல்வகை; a kind of paddy.

     “மட்டுப்படாத குறுவைக்கிளையான்” (நெல்விடு.180);.

     [குறுவை + கு + இளையான்.]

குறுவைநோய்

 குறுவைநோய் kuṟuvainōy, பெ.(n.)

ஆடு, மாடுகளுக்கு உண்டாகும் தொண்டை நோய் அல்லது தொண்டை அடைப்பன்,

 malignant sore-throatin cattle (சா.அக.);.

     [குறுவை+நோய்]

குறுவைநோவு

 குறுவைநோவு kuṟuvainōvu, பெ.(n.)

   கால்நடைகட்குத் தொண்டையில் உண்டாகும் நோய்வகை; malignant sore throat, a disease of cattle.

     [குறுவை + நோவு.]

குறுவைமிளகாய்நெல்

 குறுவைமிளகாய்நெல் kuṟuvaimiḷakāynel, பெ.(n.)

   நெல்வகை; a kind of paddy.

     [குறுவை + மிளகாய் + நெல்.]

குறை

குறை1 kuṟaidal,    2 செ.கு.வி.(v.i.)

   1. சிறுகுதல்; to diminish, decrease, wane, divindle, decline.

     “மன்னுயிர் கண்முற்று நாடொறுங் குறைந்தவன்றே” (கந்தபுமேரு.28.);.

    2.மதிப்பு, இடம், பொருள், ஏவல் முதலியவற்றால் தாழ்தல்; to be reduced in value, in estimation, in circum-stances,in rank அவன் பெருமை குறைந்து விட்டது.

   3. பற்றாமற் போதல்; to be wanting, to prove insufficient, to be short,in weight, measure, or number.

பொருள் வாங்கக் கையிற் பணம் குறைவாயுள்ளது.

   4. அரைகுறையாதல்; to be imperfect, unfinished, defective, deficient.

இதுகுறை வேலை.

   5. விலையேறும்படி பண்டம் அருகுதல்; to be dear, difficult of attainment, scarce.

   6. எழுத்துக் கெடுதல்;     “ஒருமொழி மூவழிக் குறைதலு மனைத்தே” (நன்.156);.

   7. வருத்தி உயிரொடுங்குதல்; to droop in affiction.

     “கணவன் குறையக் குறைவாள்” (கம்பரா. நகர்நீங்.53);.

   8. குறைவுற்று வருந்துதல்; to languish from worries.

     “நாளுமிகும் பணிசெய்து குறைந்தடையு நன்னாளில்” (பெரியபு. திருநாவு. 45);.

   9. துணிவு குன்றுதல்; to lose courage.

     “அரிகுரலோசை யஞ்சி…ஆனை குறையு மனமாகி” (தேவா. 883:9);.

   10. வெட்டப்படுதல்; to be cut off.

     “கையுறிற் கால்குறையும்” (நாலடி. 84);.

   11. தோல்வியுறுதல்; to suffer, defeat.

     “எத்தனை போரிடைக் குறைந்தான்” (கம்பரா. யுத். மந்திரப் 112);.

   12.அழிதல்; to be ruined, destroyed.

     “அன்னார் குறைவது சரதம்” (கம்பரா. நிந்தனை, 56);.

 Fin, kerita, EO, kere:Mordvin. ker:Hung, ker;

 Mong. kerei;

 Q. guru.

     [குறை → குறைதல்.]

 குறை2 kuṟaittal,    4 செ.குன்றாவி. (v.i.)

   1. சுருக்குதல்; to Iessen, shortem, curtaii.

செலவைக் குறைத்தான்.

   2. தறித்தல்; to cut, fell, hew down.

     “மாந்தர் குறைக்குந் தனையும் குளிர் நிழலைத் தந்து மறைக்குமாங் கண்டிர் மரம்” (வாக்குண்.30);.

   3. அறுத்தல்; to reap, as a crop.

     “கதிர்ச்சாலி குறைக்குநர்” (காஞ்சிப்பு. இருபத். 60);.

   4. அராவுதல்; to file.

     “இருப்பரங் குறைத்திடும் எஃகவேல்” (கந்தபு. கடவுள் .12);.

   5. முகத்தல்; to draw as water.

     “மேகந்தான் அதனைக் குறைத்து அதன்கட் பெய்யாது விடுமாயின்’ (குறள்.17, உரை);.

     [குறை → குறைத்தல்.]

 குறை3 kuṟai, பெ.(n.)

   1. குறைபாடு; deficiency, imperfection, want, default.

     “குறைதவிர் நிலைமையாற் குயிற்றுஞ் சாலையுள்” (கந்தபு.வரைபுனை. 20);.

   2. குற்றம்; fault, defect, flaw.

     “என்பாற் குறையை நினைந்து மறாது” (தஞ்சைவா.388);.

   3.வறுமை (பிங்.);; indigence, poverty.

   4. எஞ்சியது; complement, balance, arrears, remander.

     “நிறைதவத்தின் குறை முடித்து” (கம்பரா.சூர்ப்ப. 114);

   5. மனக்குறை; dissatisfaction, grievance

     “என்னகுறை நமக்கே” (திவ்.திருவாய்.6:4.1);.

   6. நேர்த்திக்கடன்; vow requiring fulfilment.

திருப்பதிக்குக் குறை செலுத்தப்போனேன்.

   7. இன்றியமையாப் பொருள்; that which is indispensable.

     “வினைக்குறை தீர்ந்தாரின்” (குறள்.612);.

   8. காரியம்; business that has to be done.

     “கொற்றநீ கொடுக்கல் வேண்டுங் குறையென” (சீவக.1647);.

   9. வேண்டுகோள்; request

     “எம்மனந் தெளியக் காட்டுதல் குறையென” (பெருங். மகத. 5.37);.

   10. வேண்டுவது; needs

     “உறைசிறியா ருண்ணடுங்க லஞ்சிக் குறைபெறின்” (குறள்,680);.

   11. துண்டம்; piece, section.

     “கருப்புக் குறையும்” (சேதுபு. முத்தீர்.18);.

   12. ஆற்றிடைக் குறை; small isle, aitin a river.

     “குறையெலாஞ் சோலை”(கம்பரா. பூக்கொய்.2);.

   13. சொல்லின் எழுத்துக்குறை; apocope, aphaeresis.

     ‘கடைக்குறை’ (நன்.156);.

   14.ஆறாம்வேற்றுமை;     “விளிகுறை யிரண்டையும் விட்ட வேற்றுமை கள்” (இலக். கொத். 14);.

   15. உண்ணுவதற்குப் பக்குவப்படுத்திய தசை; piece of flesh, as prepared for table.

     “வல்லோனட்ட பல்லூன் கொழுங்குறை” (பெரும்பாண். 472);.

   16. ஒரு தாக்குடைய மிடற்றுப்பாடல் வகை; a kind of vocal music.

     “நிறைகுறை தோன்ற” (பரிபா. 17:18);.

   17. அரசிறை (வின்.);; tribute, revenue.

   க.கொறெ’;தெ.கொடி.

குறைகண்

 குறைகண் guṟaigaṇ, பெ.(n.)

   குறைந்த பார்வை; short sight (சா.அக.);.

     [குறை + கண்.]

குறைகண்ணுறங்கு

குறைகண்ணுறங்கு guṟaigaṇṇuṟaṅgu,    5 செ.கு.வி. (v.i.)

   1. கண் செருகல்; sleeping slightly.

   2. அரைக்கண் தூக்கங் கொள்ளல்; being half a sleep, sleeping with eyes partially closed.

     [குறை + கண் + உறங்கு.]

குறைகரகரப்பு

 குறைகரகரப்பு guṟaigaragarappu, பெ.(n.)

   கரகரவென மெதுவாய்க் கேட்கும் ஒசை; a low creaching noise (சா.அக.);.

     [குறை + கரகரப்பு.]

குறைகால்

 குறைகால் kuṟaikāl, பெ.(n.)

   அங்கப்பழுதுள்ள கால்; defective leg (சா.அக.);.

     [குறை + கால்.]

குறைகுடம்

 குறைகுடம் guṟaiguḍam, பெ.(n.)

   கல்வி கேள்விகளால் நிரம்பாதோன்; lit, a pot half-filed with water. A self conceited person, lacking in sound education and good manners, opp. to {mia.kulam.} அவன் ஒரு குறைகுடம்.

     [குறை + குடம்.]

குறைகூறு-தல்

குறைகூறு-தல் kuṟaiāṟutal,    9 செ.கு.வி. (v.i.)

   குற்றம் சாட்டுதல்;குற்றம் சொல்லுதல்; find fault with;criticize;blame.

எல்லாவற்றுக்கும் ஏன் ஆசிரியர்களையே குறை கூற வேண்டும்? ஒருவர் மீதும் நான் குறை கூற விரும்பவில்லை.

     [குறை+கூறு-தல்]

குறைகை

 குறைகை guṟaigai, பெ.(n.)

   ஊனப்பட்ட சிறுகை; deformed short arm (சா.அக.);.

     [குறை + கை.]

குறைகொள்(ளு)-தல்

குறைகொள்(ளு)-தல் guṟaigoḷḷudal,    11செ.கு.வி.(v.i.)

   1. மனக்குறையைப் பாராட்டுதல்; to take a thing amiss, to be piqued;

 to feel aggrieved, to complain.

   2. தன் குறையைக் கூறிக்கொள்ளுதல்; to represent one’s wants needs.

     “மந்திரி குறைகொண் டிரப்ப” (பெருங். மகத. 21:124);.

     [குறை + கொள்ளு-.]

குறைகோள்

 குறைகோள் kuṟaiāḷ, பெ.(n.)

   இரத்தல் (சூடா.);; begging, petitioning, mendicancy.

     [குறை + கோள்.]

குறைக்கண்ணுறங்கு-தல்

குறைக்கண்ணுறங்கு-தல் kuṟaikkaṇṇuṟaṅkutal,    9 செ.கு.வி. (v.i.)

   1. கண் சொருகல்; sleeping lightly.

   2. அரைக்கண் தூக்கம் கொள்ளல்; being half sleep;sleeping with eyes partially closed somnolescent (சா.அக.);.

மறுவ. அரைத்துக்கம்

     [குறை+கண்+உறங்கு.]

குறைக்கருமம்

குறைக்கருமம் kuṟaikkarumam, பெ.(n.)

   முடியாது எஞ்சிய செயல்; unfinished part of a business, affair etc.

     “உறுகுறைக் கருமம் உள்ளக மருங்கின்” (பெருங். இலாவண 10:27);.

     [குறை + கருமம்.]

குறைக்காரியம்

 குறைக்காரியம் kuṟaikkāriyam, பெ.(n.)

   காரியத்தின் முடியாத பகுதி; unfinished part of business, affair, etc.

அரைகுறையாய் இருக்கும் காரியம் (உ.வ.);.

     [குறை + காரியம்.]

குறைக்கொள்ளி

குறைக்கொள்ளி kuṟaikkoḷḷi, பெ.(n.)

   1. பாதி வெந்த கட்டை; fire-brand partially consumed.

   2. வீடுகளில் தீவைப்பதாகக் கருதப்படும் ஒருவகைப் பேய் (இ.வ.);; imp that is believed to set fire to houses.

     [குறை + கொள்ளி.]

குறைசெய்-தல்

குறைசெய்-தல் kuṟaiseytal,    1 செ.குன்றாவி. (v.t.)

   1. மதிப்புத் தாழ்வு பண்ணுதல்; to treat with disrespect.

   2. வெட்டுதல்; to cut off, disfigure by cutting off.

     “எனைச் செங்கை தீண்டிக் குறைசெய்து போவதுவோ” (கந்தபு. அசமுகிபுலம்.10);.

     [குறை + செய்-.]

குறைசொல்(லு)-தல்

குறைசொல்(லு)-தல் kuṟaisolludal,    6 செ.கு.வி.(v.i.)

   1. மனத்திலுள்ள குறையைப் பிறர் அறியக் கூறுதல்; to complain, state grievances, pray for redress, express, dissatisfaction.

   2.தனக்கு வேண்டுவனவற்றைச் சொல்லிக் கொள்ளுதல்; to represent one’s wants.

   3. குற்றஞ்சாட்டுதல்; to charge with fault, censure, criticise, blame.

     [குறை + சொல்லு-.]

குறைச்சல்

குறைச்சல் kuṟaiccal, பெ.(n.)

   1. குறைவு; deficiency,

 scarcity, as of an article; curtailment.

அவனுக்குச் செலவு குறைச்சல் (உவ.);.

   2. இழிவு; discredit, disparagement.

என்னைப்பற்றிக் குறைச்சலாய்ப் பேசினான் (உ.வ.);.

     [குறை → குறைச்சல்.]

குறைச்சால்

 குறைச்சால் kuṟaiccāl, பெ.(n.)

   உழவு நிலத்தில் சாலோடாத இடம் (வின்.);; balk in ploughing.

     [குறை + சால்.]

குறைச்சிஃறாழிசைக் கொச்சகம்

 குறைச்சிஃறாழிசைக் கொச்சகம் guṟaissiḵṟāḻisaiggossagam, பெ.(n.)

   ஈற்றடி குறைந்து சில தாழிசைகளால் வருவது; a kind of koccagam.

     [குறை + சில் + தாழிசை + கொச்சகம்.]

குறைஞ்சால்

 குறைஞ்சால் kuṟaiñjāl, பெ.(n.)

குறைச்சால் பார்க்க (யாழ்.அக.);;See. {kura-c-cã/}

     [குறைசால் → குறைஞ்சால் (கொ.வ.);.]

குறைதீர்

குறைதீர்1 kuṟaitīrtal,    2.செ.கு.வி.(v.i.)

   1. மனக் குறை நீங்குதல்; to have wants supplied, to be satisfied:

     “குறைதீர்ந்த கொடையே பகையைப் யுறவாக்கும்” (காஞ்சிப்பு. புராணவர.15);.

     [குறை + தீர்-.]

 குறைதீர்2 kuṟaitīrttal,    4 செ.கு.வி.(v.i.)

   1. வேண்டியவற்றை உதவுதல்; to supply, as one’s wants or needs;

 to satisfy.

   2. கடமையைச் செய்து முடித்தல்; to fulfil, as an obligation.

     [குறை + தீர்.]

குறைத்தலை

குறைத்தலை kuṟaittalai, பெ.(n.)

   தலையில்லாத பிணம்; headless body, belived to dance on the battlefield.

     “குரங்குபட மேதினி குறைத்தலை பட” (கம்பரா. யுத்த மந்திரப். 61);.

     [குறை + தலை.]

குறைநய-த்தல்

குறைநய-த்தல் kuṟainayattal,    3 செ.கு.வி.(v.i.)

   குறை தீர்க்க வேண்டுதல்; request to redress grivances.

     “கொலைவேற் கண்ணி குறை நயந்தது” (திருக்கோ. 158, கொளு);.

     [குறை + நய.]

செ.அக. முதலியில் குறை நயத்தலைக் குறை நேர்தலாகக் குறித்திருப்பது தவறு.

குறைநரம்பு

 குறைநரம்பு kuṟainarambu, பெ.(n.)

   குறைந்த சுரமுள்ள யாழ்த்திரம் (திவா.);; lit, lute with less than the normal number of strings. A musical mode deficientin notes, opp, to {niranarambu.}

     [குறை + நரம்பு.]

குறைநாடோன்

 குறைநாடோன் kuṟaināṭōṉ, பெ.(n.)

   கருநொச்சி (சா.அக.);; willow leaved justicia.

குறை + (நாடன்); நாடோன்.]

குறைநாள்

 குறைநாள் kuṟaināḷ, பெ.(n.)

   நாள், மாதம், ஆண்டு, வாழ்நாள் இவற்றில் மீதியிருக்குங் காலம்; ramaining portion of the day, month, year or lifetime,

குறைநாளும் கழிக்க வேணும் (உ.வ.);.

     [குறை + நாள்.]

குறைநிறை

குறைநிறை kuṟainiṟai, பெ.(n.)

   1. ஏற்றமும் குறைவும்; defect and excess.

   2. குடும்பத்திலுள் நலந்தீங்குகள்; domestic wants and comforts.

     [குறை + நிறை.]

குறைநேர்-தல்

குறைநேர்-தல் kuṟainērtal,    2 செ.கு.வி.(v.i.)

   குறையை நீக்க உடன்படுதல்; to consent to make up one’s wants.

     “முனியுமக் குறைநேர்ந்தோன்” (பாரத. சம்ப.10);.

     [குறை + நேர்-.]

குறைநோக்கு

 குறைநோக்கு kuṟainōkku, பெ.(n.)

   குறைந்த பார்வை; short sight (சா.அக.);.

     [குறை + நோக்கு-.]

குறைநோய்

 குறைநோய் kuṟainōy, பெ.(n.)

   குட்டநோய்; leprosy, as eating away one’s limbs.

     [குறை + நோய்.]

குறைநோய்ப்புண்

 குறைநோய்ப்புண் kuṟainōyppuṇ, பெ.(n.)

   பெருநோயிற் காணும் அழிபுண்; rottlen or putrid ulcers in leprosy (சா.அக.);.

     [குறை + நோய் + புண்.]

குறைந்த

 குறைந்த kuṟainta, பெ.அ.(adj.)

   அதிகம் இல்லாத, போதுமானதாக இல்லாத, சிறியளவு; not high;low;insufficient.

குறைந்த வாடகை மேட்டுர் அணைக்கு குறைந்த அளவு நீர் வருகின்றது.

குறைந்தஅளவு

 குறைந்தஅளவு kuṟaintaaḷavu, பெ.(n.)

மேலும் குறைக்க முடியாத அளவு,

 minimum.

குறைந்த அளவு ஆயிரம் பேர்களாவது கல்யாணத்திற்கு வருவார்கள். குறைந்தபட்சம்

குறைந்தது

 குறைந்தது kuṟaintatu, பெ.(n.)

   குறைந்த அளவு; minimum.

இந்த வேலைக்குக் குறைந்ததுநான்கு ஆண்டுபயிற்சி உள்ளவர் தேவை. குறைந்தது ஆறு மணி நேரமாவது துரங்க வேண்டும்.

குறைந்தபட்சம்

 குறைந்தபட்சம் kuṟaintapaṭcam, பெ.(n.)

குறைந்த அளவு பார்க்க;seekuraindaalavu

     [குறைந்த+Skt. பட்சம் த. அளவு]

குறைபடு

குறைபடு1 kuṟaibaḍudal,    20 செ.கு.வி.(v.i.)

   1. குறைவாதல்; to be wanting, to diminish, to become scarce.

   2. துணிப்படுதல்; to be broken into pieces, to be shivered into fragments.

     “நீர்கல் குறைபட வெறிந்து” (பரிபா, 20);.

     [குறை + படுதல்.]

 குறைபடு2 kuṟaibaḍuttal,    4 செ.குன்றாவி.(v.t.)

   1. முகத்தல்; to draw up, as water by the clouds.

     “கடல்குறைபடுத்தநீர்” (பரிபா. 20);.

   2. மதிப்புக் குறைவுண்டாக்குதல்; to put one to shame.

     [குறை + படு-.]

குறைபாடு

குறைபாடு kuṟaipāṭu, பெ.(n.)

   1. குறைவு; defciency, defect.

     “ஈசன் பூசை யியற்றினேன் குறைபாடின்றி” (பிரமோத், 17,19);.

   2. மனக்குறை; want, need, discontent.

     [குறைபடு → குறைபாடு.]

குறைப்பஃறாழிசைக் கொச்சகம்

 குறைப்பஃறாழிசைக் கொச்சகம் guṟaippaḵṟāḻisaiggossagam, பெ.(n.)

   ஈற்றடி குறைந்து பல தாழிசைகளால் வருவது; a kind of koccagam.

     [குறை + பல் + தாழிசை + கொச்சகம்.]

குறைப்பக்கம்

குறைப்பக்கம் kuṟaippakkam, பெ.(n.)

   தேய் பிறைநாள்; dark fortnight, period of waning moon.

     “குவைசேரவுற்று வருங் குறைபக்கச் சதுர்த்தசி பின்” (விதாந. பஞ்சாங்க.26);.

     [குறை + பக்கம் த. பக்கம்→Skt. paksa.]

குறைப்படு-தல்

குறைப்படு-தல் kuṟaippaḍudal,    20 செ.கு.வி.(v.i.)

   மனக்குறையுறுதல்; to be displeased, discontented.

     “குறைப்பட்டுக் கொண்டிருக்கிறான்” (பெருங்.இலாவாண. 19:7);.

     [குறை + படுதல்.]

குறைப்பட்டவர்

 குறைப்பட்டவர் kuṟaippaṭṭavar, பெ.(n.)

   குடும்பத்தில் நேர்ந்த இறப்பு முதலிய நிகழ்வுகளால் துன்பப்பட்டவர்; lit., persons bereaved of their near relations. Persons who have suffered great affection.

     [குறை + பட்டவர்.]

குறைப்பட்டவள்

 குறைப்பட்டவள் kuṟaippaṭṭavaḷ, பெ.(n.)

   கைம்பெண்; widow.

     [குறை + பட்டவள்.]

குறைப்பாடு

 குறைப்பாடு kuṟaippāṭu, பெ.(n.)

குறைவு:

 defect;deficiency (சா.அக.);.

     [குறைபடு – குறைப்பாடு]

குறைப்பிணம்

குறைப்பிணம் kuṟaippiṇam, பெ.(n.)

   அரை குறையாய் எரிந்து கிடக்கும் பிணம்; half-burnt corpse.

     “குய்ம்மனத்தாளர் குறைப்பிணங் காட்டி” (பெருங். இலாவாண. 19:7);.

     [குறை + பிணம்.]

குறைப்பிண்டம்

குறைப்பிண்டம் kuṟaippiṇṭam, பெ.(n.)

   முதிர்ச்சியடையாத பிண்டம்; undeveloped or immature foetus;

   2. காலத்திற்கு முன்னதாகவே வெளிவரும் பிண்டம்; foetus coming out before the full term or the time of maturity (சா.அக);.

     [குறை + பிண்டம்.]

குறைப்பிரசவம்

 குறைப்பிரசவம் kuṟaippiracavam, பெ.(n.)

   தொடக்க மாதங்கள் கழிந்த பின் கருப் பையில் இருக்கும் கரு குழந்தையாக முழு வளர்ச்சியடைவதற்கு முன்பு வெளிப்படுகை, பத்து மாதத்தில் குழந்தை முழுவளர்ச்சி யடைவதற்கு முன்பே குறைவான மாதத்தில் கரு வெளியேறுகை; miscarriage after the initial months of pregnancy.

     [குறை+ Skt, பிரசவம்.]

குறைப்பிராணன்

 குறைப்பிராணன் kuṟaippirāṇaṉ, பெ.(n.)

   எப்பொழுதேனும் உயிர் பிரியும் என்றிருக்கும் நிலை (குற்றுயிர்);; life almost extinct (செ.அக.);.

மறுவ. தொண்டைக்கும் நெஞ்சுக்கும் இழுத்திக் கிடத்தல்.

     [குறை + Skt, பிராணன்.]

குறைப்பிள்ளை

 குறைப்பிள்ளை kuṟaippiḷḷai, பெ.(n.)

   பருவம் நிரம்புமுன் பெற்ற கருப்பிண்டம்; undeveloped foetus delivered before time.

அவர் குறைப்பிள்ளை பெற்றாள்.

     [குறை + பிள்ளை.]

குறைப்பு

 குறைப்பு kuṟaippu, பெ.(n.)

எண்ணிக்கையில் குறைகை

 reduction.

படைக் குறைப்பு செய்யுமாறு வல்லரசுகளை உலக நாடுகள் கேட்டுக் கொண்டன.

குறைப்பேர்

குறைப்பேர் kuṟaippēr, பெ.(n.)

   1. மற்றவர்; other persons, rest, as of a company.

நீ வந்தாயே, குறைப் பேரெல்லாம் எங்கே? (உ.வ.);.

   2. சுருக்கிக் கூறும் இயற்பெயர்; abbreviated name, as {kittu} for Krishnan.

     [குறை + பேர்.]

குறைப்பொழுது

குறைப்பொழுது kuṟaippoḻudu, பெ.(n.)

   1. செல்ல வேண்டிய காலம்; unexpired portion of time.

   காலக்குறைவு; the remaining portion of the day, month, year, etc.,

     [குறை + பொழுது.]

குறைப்போக்கு

 குறைப்போக்கு kuṟaippōkku, பெ.(n.)

   மாதவிடாய்க் காலத்தில் பெண்களுக்குக் காணும் குறைவான குருதி; scanty discharge in menstruation (சா.அக.);.

     [குறை + போக்கு.]

குறைமகன்

குறைமகன் guṟaimagaṉ, பெ.(n.)

   நிலைமை யிழந்தவன்; one who has lost his status in life.

     “செல்வ நீத்த குறைமகன்” (பெருங். இலாவாண. 8,32);.

     [குறை + மகன்.]

குறைமதி

குறைமதி kuṟaimadi, பெ.(n.)

   தேய்பிறை; waning moon.

     “குறைமதி நீரோ நின்பேராற்றல்’ (கந்தபு. அசமுகிபு.11);.

     [குறை + மதி. மதி = நிலவு.]

குறைமாதக்கருப்பம்

குறைமாதக்கருப்பம் kuṟaimātakkaruppam, பெ.(n.)

   பத்து மாதமும் (40 வாரம்); கடவாத கருப்பம்; the period of pregnancy, in which the full term of 40 weeks is not completed (சா.அக.);.

     [குறை + மாதம் + கருப்பம்.]

குறைமாதக்காரி

 குறைமாதக்காரி kuṟaimātakkāri, பெ.(n.)

   மாத அளவு நிரம்புமுன் பிள்ளை ஈன்றவள்; woman who has given birth to a child prematurely.

     [குறை + மாதம் + காரி.]

குறைமாதப்பிள்ளை

 குறைமாதப்பிள்ளை kuṟaimātappiḷḷai, பெ.(n.)

   மாத அளவு நிரம்பு முன்பிறந்த பிள்ளை; child bom prematurely.

     [குறை + மாதம் + பிள்ளை.]

குறைமாதம்

குறைமாதம் kuṟaimātam, பெ.(n.)

   1. மாதத்தின் மீதி; remaining part of the month.

   2. கருமுற்றிப் பேற்றிற்குரிய கால அளவிற் குறைவுபட்ட மாதம்; deficiency in the period required for the full development of foetus, as in premature delivery.

     [குறை + மாதம்.]

குறையணி கொள்(ளு)-தல்

குறையணி கொள்(ளு)-தல் guṟaiyaṇigoḷḷudal,    16 செ.கு.வி.(v.i.)

   அரைகுறையாக ஒப்பனை செய்து கொள்ளுதல்; to be imperfectly dressed or adorned.

     “குறையணி கொண்ட வாறே” (சீவக. 2537);.

     [குறையணி + கொள்ளு-.]

குறையரவு

குறையரவு kuṟaiyaravu, பெ.(n.)

   குட்டையான பாம்புவகை; a kind of serpent, as being short.

     “குறையரவு திண்டி” (சீவக. 1271);.

     [குறை + அரவு.]

குறையறு

குறையறு1 kuṟaiyaṟudal,    2 செ.கு.வி.(v.i.)

   மனக்குறை நீங்குதல்; to be freed from wants, anxiety etc.

     [குறை + அறுதல்.]

 குறையறு2 kuṟaiyaṟuttal,    4 செ.குன்றாவி. (v.t.)

   குறைநீங்கக் கொடுத்தல்; to bestow liberally and free one from wants anxiety, etc.

     “சோறுந் தண்ணீரும் குறையறுத்துக் கொண் டிருக்குமா போலே’ (ஈடு, 9.3:1);.

     [குறை + அறு-.]

குறையலாளி

குறையலாளி kuṟaiyalāḷi, பெ.(n.)

   திருமங்கை மன்னன்;{Thirumanga-ālvås,} as the chief of {Kuraya}

     “மங்கையர் கோன் குறையலாளி” (திவ். பெரியதி. 4,4,10);.

     [குறையல் + ஆளி.]

குறையவை

குறையவை kuṟaiyavai, பெ.(n.)

   அறிவு குணங்களாற் குறைவுபட்டார் கூடிய அவையம் (யாப்.வி.96,515);; assembly of inferiors, opp. to {mira-y-ava:}

     [குறை + அவை.]

குறையாக்கேள்வி

குறையாக்கேள்வி kuṟaiyākāḷvi, பெ.(n.)

   நிரம்பிய அறிவு; perfect learning, sound erudition.

     “குறையாக் கேள்வி மாடலன்” (சிலப். 28:111);.

     [குறை + ஆ + கேள்வி. ஆ =எதிர்மறைப் பின்னொட்டு.]

குறையிர-த்தல்

குறையிர-த்தல் kuṟaiyirattal,    3 செ.குன்றாவி. (v.t.)

   தன் குறைகூறி வேண்டுதல்; to beg, supplicate, petition for one’s wants.

     “மாலைக் குறையிரந்து”(திவ். இயற்.2:17);.

     [குறை + இரத்தல்.]

குறையுடல்

குறையுடல் kuṟaiyuḍal, பெ.(n.)

   தலையில்லாத உடல்; headless body believed to dance on the battlefield.

     “குறையுடலும் கும்பிட்டு நிற்குமாலோ” (கலிங். 97);.

     [குறை + உடல்.]

குறையுணவு

குறையுணவு kuṟaiyuṇavu, பெ.(n.)

   1. பத்திய உணவு; food restricted by diet.

   2. அற்ப உணவு; simplefood.

   3. பசி தீர்க்காத குறைந்த உணவு; food not ordinarily satisfying hunger.

   4. துறவியர் கொள்ளும் ஒருவேளை உணவு; yogi’s diet.

   5. கெடுதியான உணவு; faulty diet such as indigestible food etc. (சா.அக.);.

     [குறை + உணவு.]

குறையுறவு

குறையுறவு kuṟaiyuṟavu, பெ.(n.)

   மனக்குறை கொண்டிருக்கை; being in distress.

     “தோழியிடைச் சென்று……. பின்னும் குறையுறவு தோன்ற நின்று” (திருக்கோ. 90.அவ.);.

     [குறை + உறவு.]

குறையுறு-தல்

குறையுறு-தல் kuṟaiyuṟudal,    18 செ.குன்றாவி. (v.t.)

   குறைகூறி வேண்டுல்; to beg, entreat, supplicate for one’s wants.

     “இரந்து குறையுற்ற கிழவனை” (தொல். பொருள். 237);.

     [குறை + உறு-.]

குறையொற்றுமை உருவகம்

 குறையொற்றுமை உருவகம் guṟaiyoṟṟumaiuruvagam, பெ.(n.)

   உருவகத்திலோர் குறை தோன்றச் சொல்வது; metaphor with one compoment modified.

நெற்றி விழியில்லாச் சங்கரன் (கழ.தமி.அக.);.

     [குறை + ஒற்றுமை + உருவகம்.]

குறைவங்கம்

 குறைவங்கம் kuṟaivaṅgam, பெ.(n.)

   குறையுறுப்பு; defective organ (சா. அக.);.

     [குறைவு + அங்கம்.]

குறைவயது

 குறைவயது kuṟaivayatu, பெ.(n.)

   குறுகிய வயது; short life as opposed to long life (சா.அக.);.

     [குறை+வயது]

குறைவயிறு

குறைவயிறு kuṟaivayiṟu, பெ.(n.)

   1. உணவு குறைவாகக் கொண்ட வயிறு; stomach partially filled with food.

   2. அரைவயிறு; half filled belly.

அரைவயிறு குறை வயிறாக உண்பவன் (கொ.வ.);.

     [குறை + வயிறு.]

குறைவறு-த்தல்

குறைவறு-த்தல் kuṟaivaṟuttal,    4 செ.குன்றாவி. (v.t.)

குறைதீர் பார்க்க (பெரியபு.கழறிற்.95);;See. {kurai}

     [குறை + தீர்.]

குறைவறுப்பு

குறைவறுப்பு kuṟaivaṟuppu, பெ.(ո.)

   1. அரண்மனைக்குரிய பண்டச்சுமை; head-load of articles, intended for the palace.

     “குறைவறுப்பு எடுக்கவும்” (S.I.I.vi.29);.

   2. மதிப்புரவாக அனுப்பும் பண்டங்கள்; supplies made, as to a superior. (பெரியபு:திருஞான.1072);.

     [குறைவு + அறுப்பு.]

குறைவலி

குறைவலி kuṟaivali, பெ. (n.)

   1. பிள்ளைப் பேற்றின் போது காணும் குறைந்த வலி; weak pain in labour.

   2. நோயின் போது காணும் குறைந்த வலி; slight pain felt in diseases (சா.அக.);.

     [குறை+வலி]

குறைவாளர்

குறைவாளர் kuṟaivāḷar, பெ.(n.)

   குறையுடையவர்; persons in want,

     “மாதா பிதாக்கள் ப்ரஜைகளில் குறைவாளர் பக்கலிலேயிறே இரங்குவது” (ஈடு. 4:5,8);.

     [குறைவு + ஆளர்.]

குறைவிரல்

குறைவிரல் kuṟaiviral, பெ.(n.)

   குட்ட நோயால் குறைந்த விரல்; mutilated digit in leprosy.

   2. விரற் பழுது; short deformed fingers (சா.அக.);.

     [குறை + விரல்.]

குறைவிரிவு

குறைவிரிவு kuṟaivirivu, பெ.(n.)

   1. முழுவதும் விரியாதது; partial distension as of cellular membrane.

   2. முழுவதும் பூக்காதது; not fully blossomed (சா.அக.);.

     [குறை + விரிவு.]

குறைவிலறிவுடைமை

 குறைவிலறிவுடைமை kuṟaivilaṟivuḍaimai, பெ.(n.)

   குறைவில்லாத அறிவைக் கொண்டிருத்த லாகிய இறைவன் எண்குணத்துள் ஒன்று (பிங்.);; possession of unlimited wisdom, one of God’s eight attributes.

     [குறைவு + இல் + அறிவுடைமை.]

குறைவில்

குறைவில் kuṟaivil, பெ.(n.)

   வானவில்; rainbow.

     “வானத்துக் குறைவிலேய்ப்ப” (பெரும்பாண். 292);.

     [குறை + வில்.]

குறைவு

குறைவு kuṟaivu, பெ.(n.)

   1. குறைபாடு; lack, want, deficiency, dearth, limit

     “நாடக நடித்ததோ குறைவில்லை” (தாயு. எங்குநிறை.5);.

   2. குற்றம்; defect, default.

   3. குறைந்த அளவுள்ளது; little, small, quantity.

   4. ஏழ்மை (திவா.);; indigence, poverty.

   5. காரியபலன்; use value, profit.

     “மாறாளன் கவராத மணிமாமை குறைவிலமே” (திவ். திருவாய். 4:8,1);.

     [குறை → குறைவு.]

குறைவுபடு-தல்

குறைவுபடு-தல் kuṟaivupaṭutal,    20 செ.கு.வி. (v.i.)

   குறைவாக இருத்தல்; falling short, shortage (சா.அக.);.

     [குறைவு+படு-தல்.]

 குறைவுபடு-தல் kuṟaivubaḍudal,    20 செ.குன்றாவி. (v.t.)

   குறைவாக விருத்தல்; falling short (சா.அக.);.

     [குறை → குறைவு.]

குறைவேண்டுநர்

குறைவேண்டுநர் kuṟaivēṇṭunar, பெ.(n.)

   நன்மையான செயல்களை விரும்புவோர்; persons petitioning for their wants.

     “முறைவேண்டுநர்க்கும் குறைவேண்டு நர்க்கும்” (பெரும்பாண். 443);.

     [குறை + வேண்டுநர்.]

குறோகணத்தி

குறோகணத்தி kuṟōkaṇatti, பெ.(n.)

   1. காக்கணம்; mussell-shell creeper – Clitoria ternatea.

   2. கொடிக் காட்டான்; sky blue blind weed;smaller morning glory – Ipoтaea hederacea (சா.அக.);.

     [குறு + உகணம் + அத்தி]

 குறோகணத்தி kuṟōkaṇatti, பெ.(n.)

காக்கணத்தி பார்க்க;see{}.

குறோக்கை

குறோக்கை kuṟōkkai, பெ.(n.)

   குறட்டை; snoring.

     “குரங்கு குத்தி கொண்டு குறோக்கை கத்தி” (ஒழிவி. யோக.10);.

மறுவ. குறட்டை

தெ. குரக

     [குறக்கு (ஒலிக்குறிப்பு); → குறக்கை → குறோக்கை. குறக்கை பார்க்க;See. {kurakka]}

குறோட்டை

குறோட்டை kuṟōṭṭai, பெ.(n.)

   1. காக்கணம்; mussell shell creeper.

   2. பீச்சு விளாத்தி; a species of wood-apple tree giving out fetid smell.

     [குறட்டை → குறோட்டை.]

குற்குலு

குற்குலு kuṟkulu, பெ.(n.)

   ஒரு வகைப் பெரு மரம்; konkani resin – Boswellia Serrata glabra.

     “குற்குலுத்தாவ முற்றெழுந்தகுய்” (சேதுபு. கந்தமா.67); (செஅக.);

குற்சங்கு

 குற்சங்கு kuṟcaṅgu, பெ. (n.)

முத்திருக்கும் சிப்பி (யாழ்ப்.);.

 shell, oyster containing pearls.

     [சூல் + சங்கு]

குற்சலை

 குற்சலை kuṟcalai, பெ.(n.)

   அவுரி; indigo plant (சா.அக.);.

     [குறு + சாலை – குறுசாலை → குற்சலை (கொ.வ.);.]

குற்சிதம்

 குற்சிதம் kuṟcitam, பெ.(n.)

   அருவருப்பானது (திவா.);; that which is deformed, disgusting, loathing (செ.அக.);.

குற்சை

குற்சை kuṟcai, பெ.(n.78)1.

அருவருப்பு:

 abhorrence, loathing, disgust.

   2. ஒன்பது வகைச் சுவைகளுள் ஒன்றாகிய இளிவாலென்னும் அருவருப்புச் சுவை (திவா.);; sentiment of disgust, one of nava-raśam (செ.அக.);.

குற்பகம்

 குற்பகம் guṟpagam, பெ.(n.)

   நாணல் (மலை.);; kaus, a large and coarse grass.

     [குற்று + பூகம் – குற்றுப்பூகம் → குற்பகம் (கொ.வ);.]

குற்பம்

 குற்பம் kuṟpam, பெ.(n.)

   பரடு; ankle (சா.அக.);.

     [குல் (பொருத்து); → குல்பு → குற்பு → குற்பம்.]

குற்பாதம்

 குற்பாதம் kuṟpātam, பெ.(n.)

   குறண்டிக்கால்;   குறைந்த கால்; club-foot (சா.அக.);.

     [குறு → குறை + பாதம் – குறைபாதம் → குற்பாதம். (கொ.வ.);

குற்ற ஞ் சுமத் து- த ல்

குற்ற ஞ் சுமத் து- த ல் kuṟṟañjumaddudal,    5 செ.குன்றாவி.(v.t.)

   ஒருவன்மீது குற்றத்தை ஏற்றுதல்;     [குற்றம் + சுமத்து-.]

குற்றஉணர்வு

 குற்றஉணர்வு kuṟṟauṇarvu, பெ.(n.)

   குற்றம் செய்ததை உணர்த்தும் மனநிலை; feeling of guilt.

குற்ற உணர்வு மனத்தில் முள்ளாகத் தைத்தது.

     [குற்றம்+உணர்வு.]

குற்றக்குறிப்பாணை

 குற்றக்குறிப்பாணை kuṟṟakkuṟippāṇai, பெ.(n.)

   ஒரு பணியாளர் செய்ததாகக் கூறப்படும் குற்றங்களைப் பட்டியலிட்டு அவர் தனது மறுப்பைத் தெரிவிக்க வாய்ப்பு அளிக்கும் நோக்கில் அலுவலகத்தால் அனுப்பப்படும் கடிதம்; charge memo.

     [குற்றம்+குறிப்பாணை.]

குற்றங்காட்டு-தல்

குற்றங்காட்டு-தல் kuṟṟaṅgāṭṭudal,    5 செ.கு.வி.(v.i.)

   குற்றத்தை எடுத்துச் சொல்லுதல்; to expose faults.

     [குற்றம் + காட்டு-.]

குற்றங்காண்(ணு)-தல்

குற்றங்காண்(ணு)-தல் kuṟṟaṅgāṇṇudal,    5 செ.கு.வி. (v.i.)

   தவறு கண்டுபிடித்தல்; to find fault;

 pick holes.

     [குற்றம் +காணு-.]

குற்றச்சாட்டு

 குற்றச்சாட்டு kuṟṟaccāṭṭu, பெ.(n.)

   குற்றவாளி யாக்குதல்; to accusation, charge.

     [குற்றம் + சாட்டுதல்.]

குற்றச்சாத்து

 குற்றச்சாத்து kuṟṟaccāttu, பெ.(n.)

குற்றப்பத்திரிகை பார்க்க;see kurra-p-pattirigai. (செ.அக.);.

     [குற்றம்+சாத்து.]

குற்றஞ்சாட்டு-தல்

குற்றஞ்சாட்டு-தல் kuṟṟañjāṭṭudal,    5 செ.குன்றாவி. (v.t.)

குற்றஞ்சுமத்து-தல் பார்க்க;See. {kuraர். Cunattu}

     [குற்றம் + சாட்டு.]

குற்றத்தண்டம்

குற்றத்தண்டம் kuṟṟattaṇṭam, பெ.(n.)

   செய்த குற்றத்திற்குரிய தண்டனை; penalty (I.M.P.N.A. 341:2);.

     [குற்றம் + தண்டம்.]

குற்றந்தீர்-த்தல்

குற்றந்தீர்-த்தல் kuṟṟandīrttal,    4 செ.குன்றாவி. (v.t.)

   துப்புரவு செய்தல்; cleaning the impurities as from metals and metallic compounds (சா.அக.);.

     [குற்றம் + தீர்-.]

குற்றப் பத்திரிகை

 குற்றப் பத்திரிகை guṟṟappattirigai, பெ.(n.)

புலனாய்வு முடிந்தவுடன்முறை(நீதி);மன்ற உசாவல் தொடங்குவதற்காக காவல் நிலைய அதிகாரியால் அனுப்பிவைக்கப்பெறும் குற்றம் பற்றிய தகவல்களடங்கிய அறிக்கை

 charge sheet;police report.

     [குற்றம்+பத்திரிகை]

குற்றப்படு-தல்

குற்றப்படு-தல் kuṟṟappaḍudal,    5 செ.கு.வி.(v.i.)

   குற்றத்திற்கு உள்ளாதல்; to be in fault, be guilty.

     “குடிக்குற்றப்பட்டாரை” (சிலப். 14:146,உரை);.

     [குற்றம் + படுதல்.]

குற்றப்படுத்து-தல்

குற்றப்படுத்து-தல் kuṟṟappaḍuddudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   குற்றம் ஆக்குதல்; to defile, befoul, pollute.

ம.குற்றப்படுத்துக.

     [குற்றம் + படுத்து. ‘படு’ த.வி. ‘படுத்து’ பி.வி.]

குற்றப்பத்திரம்

 குற்றப்பத்திரம் kuṟṟappattiram, பெ.(n.)

   குற்றச் சாட்டு ஏடு (குற்றப்பத்திரிகை);; charge sheet.

     [குற்றம் + பத்திரம்.]

குற்றப்பத்திரிகை

 குற்றப்பத்திரிகை kuṟṟappattirikai, பெ. (n.)

   முறை மன்றத்தில் ஒருவன் மீது குற்றத்தின் விளத்(விவரத்);தைக் காட்டிப் படிக்கப்படும் ஆவணம்; charge sheet (செஅக.);

மேனாள்(முன்னாள்); அமைச்சர்கள் மீது சொத்து குவிப்பு வழக்கில் முறை மன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.

     [குற்றம்+பத்திரிகை]

குற்றப்பாடு

குற்றப்பாடு kuṟṟappāṭu, பெ.(n.)

   1. குற்றத்திற்கு உட்படுகை; beig in fault, being accused.

   2. குற்றம்; fault, crime.

ம. குற்றப்பாடு

     [குற்றம் + (படு); பாடு.]

குற்றப்பாட்டேடு

 குற்றப்பாட்டேடு kuṟṟappāṭṭēṭu, பெ.(n.)

   முறை மன்றத்தில் ஒருவன் மீது குற்றத்தின் விவரங் காட்டிப் படிக்கப்படும் ஆவணம்; charge sheet.

     [குற்றம் + பாடு + ஏடு.]

குற்றப்பிடிப்பு

 குற்றப்பிடிப்பு kuṟṟappiḍippu, பெ.(n.)

   குற்றங் களைத் தெரிந்தெடுக்கை; censorship.

     [குற்றம் + பிடிப்பு.]

குற்றப்பிரிவு

 குற்றப்பிரிவு kuṟṟappirivu, பெ.(n.)

குற்றங்களைப் புலனாய்வு செய்வதற்கு என்று தனியாக அமைக்கப்பட்டிருக்கும் காவல் துறையின் பிரிவு

 crime branch of the police force.

     [குற்றம்+பிரிவு]

குற்றமற்றபற்பம்

 குற்றமற்றபற்பம் kuṟṟamaṟṟapaṟpam, பெ. (n.)

   தூய்மையான துகள்; pure metallic oxide (சா.அக.);

     [குற்றம்+அற்ற+பற்பம்]

குற்றம்

குற்றம்1 kuṟṟam, பெ.(n.)

   1. பிழை; fault, moral or physical blemish, defect, flaw, error.

     “ஏதிலார் குற்றம்போல் தங்குற்றம் காண்கிற்பின்” (குறள்.190);.

   2. பழி; reproach, stigma, blame.

     “குற்றமின் முனிவரும்” (கந்தபு. வரைபுனை.218);.

   3.துன்பம்; pain, distress.

     “குடும்பத்தைக் குற்ற மறைப்பான்” (குறள், 1029);.

   4. அங்கக்குறை; bodily deformity.

உறுப்புக் குற்றமுள்ளவன்.

   5. தீங்கு; crime oftence.

     “கோடாத வேதனுக் கியான்செய்த குற்றமென்” (கந்தரலங்.76);

   6. தெய்வத்தின் சினம் முதலியவற்றிற்குக் காரணமான தீட்டு; impurity, ceremonial or moral defilement, as cause of offence to the deity.

   7. தண்டம்; penalty, mulcting, fine.

குற்றமிறுத்தல்.

   ம.குற்றம்;   க.கொரதெ, குத்த தெ.கொத;   குட.கொரு, கொரவு;   துட.. க்வர்;கோத.கொர்வ்,

     [குல் → குறு → குற்றம்.]

 குற்றம்2 kuṟṟam, பெ.(n.)

   1 . துப்புரவின்மை, குப்படை (அசுத்தம்);; impurities;

   2. களங்கம்; stain, blemish.

   2. குறைவு; defect, fault;

   4. துன்பம்; distress.

   5. தீட்டு; defilement;

   6. நோய்; disease.

   7. கோள்குற்றம்; morbid affectious.

   8. முக்குற்றம் – காமம், வெகுளி, மயக்கம்; three kinds of guilt, lust, wrath and confusion;

   9. ஐங்குற்றம்; the five unbecoming behaviours in a person.

   1. கொட்டாவி; yawning, gaping.

   2. நெட்டை; knacking with the fingers or in walking.

   3. குறட்டை; snoring.

   4. கூன் கிடை; lying shrivelled.

   5. தூங்கி விழுதல்; nodding in drowsiness (சா.அக.);.

     [குல் → குறு → குற்றம்.]

குற்றம்சாட்டு-தல்

குற்றம்சாட்டு-தல் kuṟṟamcāṭṭutal,    5 செ.கு.வி. (v.i.)

   1. குற்றமாகக் கருதும் செயல், சட்டம் புரிந்ததை (நடவடிக்கை எடுப்பதற்காக); அறிவித்தல்; charge some one with an offence;accuse.

புகை வண்டியைக் கவிழ்க்க முயன்றதாகச் சிலர் குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப் பட்டுள்ளனர்.

   2. வரைமுறைகளுக்குப் புறம்பாக நடந்து கொண்ட தவற்றை ஒருவர் மேல் போடுதல்; find fault with;blame something on some one.

நடந்த தவற்றுக்கு என்னைக் குற்றம் சாட்டுவது போலப் பேசினார்கள். நான் மிகவும் விட்டுக் கொடுத்து விட்டதாகக் குற்றம் சாட்டாதே!.

     [குற்றம்+சாட்டு-தல்.]

குற்றம்சுமத்து-தல்

குற்றம்சுமத்து-தல் kuṟṟamcumattutal,    5 செ.கு.வி. (v.i.)

குற்றம்சாட்டு- பார்க்க:see kurram-Saffu.

குற்றம்சொல்-தல்

குற்றம்சொல்-தல் kuṟṟamcoltal,    13 செ.கு.வி. (v.i.)

   விரும்பத்தகாதது நடந்ததற்கு ஒருவரைப் பொறுப்பாக்குதல்;குறை கூறுதல்; blame some one.

நீயே சரி பார்த்து விட்டு பிறகு என்னைக் குற்றம் சொல்வது ஏன்?

     [குற்றம்+சொல்-தல்.]

குற்றம்பாராட்டு-தல்

குற்றம்பாராட்டு-தல் kuṟṟambārāṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   பிறர் குற்றத்தை மிகுதிப்படுத்துதல்; to exaggerate one’s faults, dwell too much upon one’s faults, magnify guilt.

     [குற்றம் + பாராட்டு-.]

குற்றம்போடு-தல்

குற்றம்போடு-தல் kuṟṟambōṭudal,    7 செ.கு.வி. (v.i.)

   தண்டம் விதித்தல் (வின்.);; to impase fine, mulct.

     [குற்றம் + போடு-.]

குற்றல்

குற்றல் kuṟṟal, பெ.(n.)

   1. நெரித்தல்; creeking.

   2. பறித்தல்; plucking (சா.அக.);.

     “வித்துக்குற் றுண்ணா விழுப்பம் மிக வினிதே” (இனி.நா.);.

     [குற்று → குற்றல்.]

குற்றவாளி

குற்றவாளி kuṟṟavāḷi, பெ.(n.)

   குற்றஞ்செய்தோன்; delinquent, offender, culprit, criminal.

   2. குற்றஞ்சாட்டப்பட்டவ;ம. குற்றவாளி

     [குற்றம் + ஆள் → ஆளி.]

குற்றவியல்

 குற்றவியல் kuṟṟaviyal, பெ.(n.)

   குற்றங்களைப் பற்றிய அறிவியல் அடிப்படையிலான விளக்கம்; criminology,

     [குற்றம்+இயல்.]

குற்றவீடு

குற்றவீடு kuṟṟavīṭu, பெ.(n.)

   காமம், வெகுளி முதலிய குற்றங்கள் நீங்குகை; faultlessness, sinlessness, suppression of human passions.

     “குற்றவீடெய்தி” (மணிமே. 26:51);.

     [குற்றம் + விடு → வீடு.]

குற்றவுணர்வு

 குற்றவுணர்வு kuṟṟavuṇarvu, பெ.(n.)

   தவறு இழைத்ததால் அல்லது தவறு இழைத்ததாக நினைத்துக் கொள்வதால் உண்டாகும் மனநிலை; guilt complex.

     [குற்றம் + உணர்வு.]

குற்றாக்குரவையர்

 குற்றாக்குரவையர் kuṟṟākkuravaiyar, பெ.(n.)

   ஆண்குழந்தைகளுக்குக் காதுகுத்துதல் சடங்கை முந்நூல் அணிவிக்கும்வரை செய்யாதிருக்கும் ஒருசார் பார்ப்பன வகுப்பினர்; a sect of Tamil speaking Brahmins who postpone the ear-boring ceremony of their boys till {munnú (upanayanam);.}

     [குற்றா + குரவையர், குல + ஐயர் – குலவையர் → குரவையர்.]

குற்றாய்

 குற்றாய் kuṟṟāy, பெ.(n.)

   மீன் வகை; a kind of fish.

ம. குற்றால்

     [குற்றால் → குற்றாய்.]

குற்றாலகம்

 குற்றாலகம் guṟṟālagam,    பெ(.n.) மலையாறு; mountain river (சா.அக).

     [குன்று + ஆலி (குளிர்நீர், பனிநீர்);- குன்றாலி → குற்றாலி → குற்றாலகம்.]

குற்றாலம்

குற்றாலம்1 kuṟṟālam, பெ.(n.)

   அருவியால் பெயர் பெற்றதும் உடல் நலத்திற்கேற்றதும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளதுமான ஒரு சிவத்தலம்; a village in Tinnavelly district, sacred of Siva and famous for its waterfalls, a sanatorium.

     “குற்றாலத்துறை கூத்தன்” (தேவா.1181.உற்றா.);.

மறுவ, குற்றாலம்

     [குன்று (குற்று); + (ஆலி);ஆலம் → குற்றாலம் (குளிர்ந்த மலையருவி);.]

குட்டையான ஆலமரம் (குறு + ஆலம்); என்னும் பொருளில் குற்றாலம் எனப் பெயர் வந்ததாகக் கூறுவர். எனினும் குளிர்ந்த மலையருவிக்குக் குற்றாலகம் (ஆலி – பனிநீர்); எனப் பண்டுதொட்டே பெயர் வழங்கியுள்ளது கருதத்தக்கது.

 குற்றாலம்2 kuṟṟālam, பெ.(n.)

   ஆடவை (ஆனி); முதல் கன்னி (புரட்டாசி); வரையுள்ள மாதங்களில் விதைக்கப் பெற்று ஐந்து மாதத்தில் விளையும் ஒரு வகை நெல்; a kind of paddy, sown between {An.} and {Purattaši} maturing onfive months.

ம. குற்றாலன்

     [குற்றி + நெல் – குற்றிநெல் → குற்றால் → குற்றாலம்.]

குற்றால்

 குற்றால் kuṟṟāl, பெ.(n.)

   மீன் வகை; a kind of fish.

ம.குற்றால்

     [குறு → குற்றால்.]

குற்றி

குற்றி1 kuṟṟi, பெ.(n.)

   மரக்கட்டை; stump, slab,

 stack block log.

     “கொல்லை யிரும்புனத்துக் குற்றி யடைந்த புல்” (நாலடி. 178);.

   ம. குற்றி;   க. குசி;   து. குத்தி;   பர். குச்சி;கோண். குத்திய.

     [குறு → குற்றி.]

 குற்றி kuṟṟi, பெ.(n.)

   வாய் குறுகிய சிறு எனவகை; a kind of small narrow-necked vessel.

     “சுண்ணக் குற்றியும்” (பெருங். உஞ்சைக். 38:168);.

     [குறு → குற்றி.]

குற்றிசை

குற்றிசை1 kuṟṟisai, பெ.(n.)

   1.குறுகிய சந்தம் (வின்);; short metre in viruttam verse, opp, to {nețišai}

     [குறு + இசை. குறு = குறுமை, சிறுமை.]

 குற்றிசை2 kuṟṟisai, பெ.(n.)

   தலைவன் தன் மனைவியோடு இறுதிக்காலம் வரையில் வாழாமல் துறவு வாழ்க்கை மேற்கொள்ளும் குறுகிய புகழ் தக்கதன்று என்று கூறம் புறத்துறை (பு.வெ.12, இருபாற்.17);;     [குறு + இசை – குற்றிசை. இசை = புகழ்.]

வாழ்நாள் வரையில் கூடி வாழ்வதற்காக அமைந்த வாழ்க்கைத் துணைவியாகிய மனைவியை, துறவு மேற்கொண்டு புகழ் பெறுவதற்காக விட்டு நீங்குவதும் தவறு என்று இடித்து அறம் கூறுவது குற்றிசை என்னும் துறையாம். எக்காரணத்தைக் கொண்டும் மனைவியைப் பிரிவது அறங்கண்

மாறுவதாகக் கருதப்பட்டது. இதனை

     “பொற்றார் அகலம் புல்லிய மகளிர்க்கு அற்றாங் கொழுகா தறங்கண் மாறின்று” (பு.வெ.12.கொளு.86); என்று புறப்பொருள் வெண்பாமாலை கூறும்.

காண்மாறுதல் = மறுத்தல்.

உரையாசிரியர் இதனை மேலும் விளக்கும் முகத்தான். ‘குற்றிசை – குறுகிய புகழ். அஃதாவது காமஞ் சான்ற கடைக் கோட்காலை ஏமஞ் சான்ற மக்களொடும் மனைவியொடுமிருந்து சிறந்தது பயிற்றாது பிறர் முற்றத் துறந்தார் என்று புகழும் சிறு புகழையே விரும்பி அறங்கண் மாறிக் கற்புடை இல்லாளைக் கைவிடுவாரும் உஊராகலின் அக்குறுகிய புகழைப் பழித்துக் கூறலின், இது குற்றிசை எனப்பட்டது’ என்று கூறுகின்றார். குற்றிசை என்னும் துறைப்பொருள் உணராது சென்னைப் பல்கலைக்கழக அகராதி ‘தலைவன் மனைவியைப் புறக்கணித்து அறநெறிப்பிறழ்ந்து ஒழுகுவதைக் கூறும் புறத்துறை என்று கூறியிருப்பது பொருள் விளக்கம்

போதாதது.

இக்கருத்தினை மேற்கோள் பாடல் தெளிவு படுத்துகிறது.

     “கரிய பெருந்தடங்கண் வெள்வளைக்கை யாளை

மரிய கழிகேண்மை மைந்த – தெரியின்

விளிந்தாங் கொழியினும் விட்டகலார் தம்மைத்

தெளிந்தாரில் தீர்வது தீது”.

புகழுமாகாது. அதைப் புகழ் என்று சொல்வதாயின் மிகச்சிறிய புகழே! குற்றிசையாகிய அச்சிறிய புகழைவிட மனைவியைப் பிரியாது வாழ்வதே முற்றிசை என்னும் பெரும் புகழைத் தரும். இதுவே தமிழ் மரபு இதனைத் தொல்காப்பியரும்

     “காமஞ் சான்ற கடைக்கோட் காலை

ஏமஞ்சான்ற மக்களொடு துவன்றி

அறம்புரி சுற்றமொடு கிழவனுங் கிழத்தியுஞ்

சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே”

என்று கூறுகின்றார்.

முதுமைக் காலத்துத் துறவு மேற்கொள்வதாயினும் வாழ்க்கைத் துணைவர் இருவரும் துறவு மேற்கொள்ள வேண்டும் என்பதே மரபு.

குற்றிப்பிராய்

 குற்றிப்பிராய் kuṟṟippirāy, பெ.(n.)

   குற்றிப்பலா; stunted jack (சா.அக.);.

     [குறு → குற்றி + பிராய், பலா → பிலா → பிரா → பிராய் (கொ.வ.);.]

குற்றிமரம்

 குற்றிமரம் kuṟṟimaram, பெ.(n.)

   கோக்காலி மரம்; plank placed in a house parallel to a wall as a support for utensils.

     [குற்றி + மரம்.]

குற்றியஉகரம்

குற்றியஉகரம் guṟṟiyaugaram, பெ.(n.)

சார் பெழுத்துகளுள் ஒன்றாய்ப் பெரும்பாலும் மொழி களின் ஈற்றில், அரைமாத்திரையாய்க் குறுகி

   வரும் உகரம்;     ‘உ’ having only half of a mattira found generally at the end of words, one of {carbeluttu} (தொல்.எழுத் ‘உ’;2);.

மறுவ. குற்றுகரம்

     [குறு + இயல் + உகரம்.]

குற்றியலிகரம்

குற்றியலிகரம் guṟṟiyaligaram, பெ.(n.)

   சார்பெழுத்துகளுள் ஒன்றாய், அரைமாத்திரையாகக் குறுகிய இகரம (தொல்.எழுத்து.2);; shortend ‘இ’ having ony half a {mättraasin} words கேண்மியா, நாகியாது, one of {sārbeluttu.}

     [குறு + இயல் + இகரம்.]

குற்றிருமல்

குற்றிருமல் kuṟṟirumal, பெ.(n.)

   சிணுக்கிருமல்; whooping cough.

   2. மென்மையான இருமல்; slight coսցհ (சா.அக.);.

     [குறு + இருமல்.]

குற்றிவிளா

 குற்றிவிளா kuṟṟiviḷā, பெ.(n.)

   நாய்விளா; dog wood apple (சா.அக.);.

     [குறு → குற்றி + விளா.]

குற்று

குற்று1 kuṟṟudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. இடித்தல் (சூடா.);; to pound.

   2. தாக்குதல்; to strike, hit, butt.

     “மூரற் பகுவாயிற் குற்றா நிற்கும் சிலவரை” (கந்தபு.சிங்கமு.139);.

   3. நெரித்தல்; to crush, as lice.

   4. ஊடுருவிக் குத்துதல்; to punch, prick, pierce.

     [குல் → குறு → குற்று.]

 குற்று2 kuṟṟu, பெ.(n.)

   உள்ளே பாயும்படியான குத்தல்; puncture (சா.அக.);.

     [குல் → குறு → குற்று.]

குற்றுகரம்

குற்றுகரம் guṟṟugaram, பெ.(n.)

குற்றியலுகரம் பார்க்க;See. {kurriya-sugaram} (தொல்.எழுத்.45, உரை.);.

     [குறு + உகரம்.]

குற்றுக்காயம்

 குற்றுக்காயம் kuṟṟukkāyam, பெ.(n.)

   கூரான கத்தி அல்லது வேறு விதக் கருவியால் துளையுறும் படிக்குத்துவதினால் ஏற்பட்ட காயம்; wound caused by pricking or piercing with a knife or other pointed instrument (சா.அக.);.

     [குற்று + காயம்.]

குற்றுடைவாள்

குற்றுடைவாள் kuṟṟuṭaivāḷ, பெ.(n.)

   திருமேனிகளின் இடைப்பட்டிகையில் செருகி ஒப்பனை செய்வதற்குரியதாகப் பொன்னால் செய்யப்பெறும் உடைய வாள்; short scimitar.

     ‘குற்றுடைவாள் ஆசும் கண்டமும் பொன்கட்டிற்று ஒன்று”(தெ.இ.கல்.தொ.22 கல்.46);.

     [குறு குற்று)+உடைவாள்.]

     [P]

 குற்றுடைவாள் kuṟṟuḍaivāḷ, பெ.(n.)

   கரிகை; small Ponard.

     “குற்றுடை வாள் ஆகங்கண்டமும் பொன் கட்டிற்று” (S.l.l.II,185);.

     [குறு + உடை + வாள்.]

குற்றுநெல்

குற்றுநெல் kuṟṟunel, பெ.(n.)

   நெற்குற்றுதற்கு ஏற்பட்ட ஒரு பழைய வரி; cess paid for pounding paddy (I.M.P.cg.1000);.

     [குற்று + நெல்.]

குற்றுமி

 குற்றுமி kuṟṟumi, பெ.(n.)

   குற்றிநீக்கிய உமி (வின்.);; broken husk.

     [குற்று + உமி.]

குற்றுயிராய்க்கிட-த்தல்

குற்றுயிராய்க்கிட-த்தல் kuṟṟuyirāykkiṭattal,    3 செ.கு.வி. (v.i.)

   மிகவும் இக்கட்டான (ஆபத்தான); நிலையில் கிடத்தல்; lying half dead or nearly dead, critical stage (சா.அக.);.

     [குற்றுயிராய்+கிட-த்தல்.]

குற்றுயிரும்குறையுயிருமாக

 குற்றுயிரும்குறையுயிருமாக kuṟṟuyirumkuṟaiyuyirumāka, வி.அ. (adv.)

   உடலை விட்டு உயிர் போகிற நிலை; of one griev. ously hurt trembling on the verge of death.

கத்தியால் வெட்டுப்பட்டவன் குற்றுயிரும் குறையுயிருமாகக் கிடக்கிறான்.

     [குற்றுயிரும்+குறை+உயிருமாக]

குற்றுயிர்

குற்றுயிர் kuṟṟuyir, பெ.(n.)

   1. குறையுயிர்; state of being half-dead.

   2. குற்றெழுத்து ; short vowel

     “குற்றுயி ரளயி னீறாம்” (நன்.108);.

     [குறுமை + உயிர்.]

குற்றுழிஞை

குற்றுழிஞை kuṟṟuḻiñai, பெ.(n.)

   பகைவரது கோட்டை மதிலின்மேல் வீரன் ஒருவன் தனியனாகவே நின்று தன் திறல் பெருமையைக் காட்டுவது கூறும் புறத்துளை (பு.வெ.6,13);;     [குறு + உழிஞை.]

குற்றுவாகை

 குற்றுவாகை kuṟṟuvākai, பெ.(n.)

   சிறுவாகை; stinted or mall sirissa (சா.அக.);.

     [குறு குற்று வாகை)

குற்றுவாய்

 குற்றுவாய் kuṟṟuvāy, பெ.(n.)

   கடல்மீன் வகை; a herring, golden glossed with purple fish.

மறுவ. குத்துவாய்

     [குற்று + வாய்.]

குற்றுவேலம்

 குற்றுவேலம் kuṟṟuvēlam, பெ.(n)

   கருவேல்; black babool-Acaciaarabica(சா.அக.);.

     [குற்று + வேலம்]

குற்றூசி

 குற்றூசி kuṟṟūci, பெ.(n.)

   உடம்பில் குத்தும் ஊசி; injection needle (சா.அக.);.

     [குறு + ஊசி.]

குற்றெழுத்து

குற்றெழுத்து kuṟṟeḻuttu, பெ.(n.)

   ஒரு மாத்திரையுள்ள உயிரெழுத்து (தொல்.எழுத்து.3.);; short vowel.

ம. குற்றெழுத்து

     [குறு + எழுத்து.]

குற்றேத்தம்

 குற்றேத்தம் kuṟṟēttam, பெ.(n.)

   ஆறு. பெருங்கால், குளம், ஏரி ஆகியவற்றின் கரையில் குத்திட்டு நிறுத்திய மரத்தின்வழி நீர் இறைக்க அமைக்கப் பெறும் ஏற்றம்; a well sweep or picottah set near water source for irrigational purpose.

     ‘இவ்வாய்க்கால்கள் கன்னியர் குறங்கறுத்துக் குத்தவும் விலங்கடைக்கவும் குற்றேத்தம் பண்ணவும் – பெறாதாகவும்’ (பெரியலெய்டன் செப்பேடுகள்);. மறுவ. குற்றேற்றம்

     [குறு + ஏற்றம் – குற்றேற்றம் → குற்றேத்தம்.]

குற்றேற்றம்

குற்றேற்றம் kuṟṟēṟṟam, பெ.(n.)

   சிறு ஏற்றம்; small picottah (தெ. இ.கல்.தொ.1:151);.

     [குறு + ஏவல் – குற்றேவல்.]

குற்றேல்

குற்றேல் kuṟṟēl, பெ.(n.)

   குற்றேவல்; menial service.

     “குலங்கெழு குமரரைக் குற்றே லருளி” (பெருங்.உஞ்சைக்.32,15);.

     [குறு + ஏவல் – குற்றேவல் → குற்றேல் (கொ.வ.);. குற்றேவல் பார்க்க;See. {Kபreval}

குற்றேவல்

குற்றேவல் kuṟṟēval, பெ.(n.)

   பணிவிடை; menial service.

     “குற்றேவ லெங்களைக் கொள்ளாமற் போகாது” (திவ்.திருப்பா.29);.

     [குறு + ஏவல் – குற்றேவல்.]

குற்றொற்று

 குற்றொற்று kuṟṟoṟṟu, பெ.(n.)

   குற்றெழுத்தின் பின்வரும் மெய்யெழுத்து;     [குறுமை + ஒற்று – குற்றொற்று.]

குலகம்

குலகம் gulagam, பெ.(n.)

   1. கருந்தும்பை; black toom-bay indica.

   2. பேய்ப்புடல் (கழி.தமி.அக.);; devils snake gourd.

     [குல் → குலகம்.]

குலகலகன்

குலகலகன் gulagalagaṉ, பெ.(n.)

   குலம் முதலிய வற்றோடு கலகஞ் செய்து தொலைப்பவன்; one who fights and overthrows a family or sect.

     “பரசமய, குலகலக சிவசமய குலதிலக” (திருச்செந். பிள்.தாலப்.9);.

     [குலம் + கலகன்.]

குலகா

 குலகா kulakā, பெ.(n.)

   பேய்ப்புடல் (மலை);; wild snak-gourd.

குலகாயம்

குலகாயம் kulakāyam, பெ.(n.)

   குலவொழுக்கம்; rules or customs of caste or tribe.

இச்செயல் உனக்குக் குலகாயமா?

     [குலம் + காயம்.]

 குலகாயம்2 kulakāyam, பெ.(n.)

   பேய்ப்புடல் (மலை.);; wild snake-gourd.

     [குல் → குலகம் → குலகாயம்.]

குலகாலன்

குலகாலன் kulakālaṉ, பெ.(n.)

   குலத்தை அழிப்பவன்; one who ruins a family or tribe.

     “அசுரர் குலகாலா” (திருப்பு.634);.

குலகாலம்

 குலகாலம் kulakālam, பெ.(n.)

   நிலக்கடம்பு(மலை.);; a plant.

     [குலம் + காலம்.]

குலகிரி

 குலகிரி gulagiri, பெ.(n.)

   எண்குலமலை (பிங்.);; chief mountain ranges in jambu-duipa.

மறுவ, குலபருவதம்

     [குலம் + கிரி.]

குலகுரு

 குலகுரு gulaguru, பெ.(n.)

   குலத்திற்குரிய ஆசிரியன் குரு; family guru.

     [குலம் + குரு.]

குலக்காய்

குலக்காய் kulakkāy, பெ.(n.)

   சாதிக்காய் (தைலவ.தைல.35);; nutmeg.

     [குல் → குல்லம் + காய் – குல்லாக்காய் → குலக்காய்.]

குலக்கினி

 குலக்கினி kulakkiṉi, பெ.(n.)

   ஒருவகை அம்மை நோய்; a kind of small pox in which the scabs fall off.

குலக்கு

 குலக்கு kulakku, பெ.(n.)

   இலை, பூ, பழம் முதலியவற்றின் சிறுகொத்து; small cluster or bunch, offruits, flowers and leaves (யாழ்ப்.);.

     [குல் → குலை → குலக்கு.]

குலக்கொடி

குலக்கொடி kulakkoḍi, பெ.(n.)

   நற்குலத்துப் பெண்; woman of noble birth.

     “வையை யென்ற பொய்யாக் குலக்கொடி” (சிலப்.13:170);.

     [குலம் + கொடி.]

குலக்கொழுந்து

குலக்கொழுந்து kulakkoḻundu, பெ.(n.)

   குலத்தை விளங்கச் செய்பவன்-ள்; one who brings glory to one’s family

     “இராமா னுசனெனுங் குலக்கொழுந்தே” (திவ்.இராமானுச.60);.

     [குலம் + கொழுந்து.]

குலங்கிழார்கள்

குலங்கிழார்கள் kulaṅgiḻārkaḷ, பெ.(n.)

   கோயில் பணிகளை நடத்தும் பொறுப்பாளர்கள், அர்ச்சகர் கள்; priests who are responsible for the conduct of temple activities.

     “திருவக்கரை மகாதேவர் கோயில்காணி உடைய குலங்கிழவன் பற்பநாபந் திருவேங்கடவன்” (தெ.கல்.தொ. XVII. கல்206.);

     “திருவல்லிக்கேணி குலங்கிழார்கள்” (கல்வெட்டு வெளியீட்டுத் தொகுதி.8.கல்.29); (கல்.க.சொ. அ.மு.);

     [குலம் = கோயில். குலம் + கிழார்கள். கோயிலைத் தேவகுலம், தேகுலம் என வழங்குதலும் உண்டு.]

குலங்கூறு

குலங்கூறு1 kulaṅāṟudal,    1 செ.கு.வி.(v.i.)

   1. உயர்குடிப் பிறப்பைப் பாராட்டுதல்; to boast of high birth.

     [குலம் + கூறுதல்.]

குலங்கூறு-தல்

குலங்கூறு-தல் kulaṅāṟudal,    11 செ.கு.வி.(v.t.)

   பிறன் குலத்தை இழித்துக் கூறுதல்; to belttle wit one, as of low perentage.

     [குலம் + கூறுதல்.]

குலங்கெட்டவன்

 குலங்கெட்டவன் kulaṅgeṭṭavaṉ, பெ.(n.)

   சாதியொழுக்கம் தவறியவன்; one who has disgraced his birth.

     [குலம் + கெட்டவன்.]

குலசங்கு

 குலசங்கு kulasaṅgu, பெ.(n.)

   முட்சங்கு; a species of conch with thorn-like points (சா.அக.);.

     [குலம் + சங்கு.]

குலசங்குலம்

 குலசங்குலம் kulasaṅgulam, பெ.(n.)

   நத்தைச்சூரி; bristly button weed (சா.அக.);

     [குலம் + சங்குலம்.]

குலசன்

குலசன் kulasaṉ, பெ.(n.)

   நற்குலத்தோன்; man of respectable family.

     [குலம் + அத்து + அன் – குலத்தன் → குலச்சன் →குலசன்.]

 குலசன் kulasaṉ, பெ.(n.)

   நற்குலத்தோன்; man of respectable family.

த.வ.குடிப்பிறப்பளான்.

     [Skt.kula-ja → த.குலசன்]

குல → குல → குலவு. குலவுதல் = கூடுதல்.

குல் → குலம் : கூட்டம், குடும்பம், வகுப்பு, குலப்பிரிவு, இனம். த.குலம் → Skt.kula.(வ.வ.1:127.

     [Skt.kula → kulaja → த.குலசன்.]

     ‘ன்’ ஆ. பா.ஈறு.

குலசம்

 குலசம் kulasam, பெ.(n.)

   செவ்வந்தி; Indian chamomile (சா.அக.);.

     [குல் + குலசம்.]

குலசிரேட்டன்

 குலசிரேட்டன் kulacirēṭṭaṉ, பெ.(n.)

   குடியிற் பிறந்தவருள் புகழ் மிக்கவன்; illustrious son of a family (செ.அக.);.

     [குலம்+Skt. சிரேட்டன்]

குலசுவேதகன்

 குலசுவேதகன் kulacuvētakaṉ, பெ.(n.)

   குறட்டைப்பழம்; pulp of the bitter snakegourd, a powerful purgative (செ.அக.);.

 குலசுவேதகன் gulasuvētagaṉ, பெ.(n.)

   குறட்டைக் கிழங்கு; the pulp of mussel shell creeper.

குலசேகர வர துங்கராமபாண்டியன்

 குலசேகர வர துங்கராமபாண்டியன் kulacēkaravaratuṅkarāmapāṇṭiyaṉ, பெ.(n.)

   வாயு சம்மிதையைத் தமிழில் செய்த பாண்டியன்; author of Vāyu-šammidai (அபி.சிந்);.

குலசேகரன்

குலசேகரன் kulacēkaraṉ, பெ.(n.)

   1. குலத்தின் புகழ்மிக்கவன்; illustrious person of a family.

   2. குலசேகரப் பெருமாள்; a Chera king.

     “சேரன் குலசேகரன் முடிவேந்தர் சிகாமணியே” (திவ்.பெருமாள். தனியன்);.

     [குலம் + சேகரன்.]

குலசேகரன்படி

 குலசேகரன்படி kulacēkaraṉpaḍi, பெ.(n.)

   திருமால் கோயிலின் கருவறை வாயிற்படியைக் குறிக்கும் பெயர்; the stone step at the entrance to the sanctuary of a Vishnu temple.

     [குலம் + சேகரன் + படி.]

குலசேகரபாண்டியன்

குலசேகரபாண்டியன் kulacēkarapāṇṭiyaṉ, பெ.(n.)

   1. மதுரையை ஆட்சிச் செய்த பாண்டியருள் ஒருவன்; a Pandiya king who ruled Madurai.

   2. பால்வண்ண நாதர் என்னும் மற்றோர் பெயருடைய பாண்டியன்; another name of Pälvannam.

   3. மணவூராண்ட பாண்டியன்; a king who ruled Mana-v-Qr.

   4. வங்கிய குலசேகர பாண்டியன் குமரன்; son of Vangiya-kulacégara-pândiyan. [

குலசேகரன்+பாண்டியன்.]

குலசேகரப்பெருமாள்

குலசேகரப்பெருமாள் kulacēkarapperumāḷ, பெ.(n.)

   சேரமன்னரும் பெருமாள் திருமொழி இயற்றியவரும் ஆழ்வார் பன்னிருவருள் ஒருவருமாகிய அடியாள்; a Chera king, on of the 12 canonized {vaiśnava} saint, who was the author of Perumal {Thirumos.}

     [குலசேகரன் + பெருமாள்.]

குலசேகராழ்வார்

 குலசேகராழ்வார் kulacēkarāḻvār, பெ.(n.)

குலசேகரப் பெருமாள் பார்க்க;See. {Kulasegarap-perumāl.}

     [குலசேகரன் + ஆழ்வார்.]

குலச்சங்கு

 குலச்சங்கு kulaccaṅku, பெ.(n.)

முட்சங்கு a speicies of conch with thorn, like lotus (சா.அக.);.

     [குல் – குல்ல குல+சங்கு.]

     [P]

குலச்சவ்வு

 குலச்சவ்வு kulaccavvu, பெ.(n.)

   தலைப் புலால்; the scalp, the skin of the top of the head (சா.அக.);.

     [குலம் + சவ்வு.]

குலச்சிறைநாயனார்

குலச்சிறைநாயனார் kulacciṟaināyaṉār, பெ.(n.)

   கூன் பாண்டியனது அமைச்சரும், திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் காலத்தவரும், நாயன்மார் அறுபத்து மூவருள் ஒருவருமாகிய அடியார் (பெரியபு.);; a canonized {šaiva} saint minister of {kü0pâfidiya,} and contemporary of {Thiru ñāna-campanthamUrthy nayanār,} one of 63.

     [குலம் + சிறை + நாயனார். குலச்சிறை = கோயில் குளம்.]

குலச்சுமார்

குலச்சுமார் kulaccumār, பெ.(n.)

குலச்சுமால் பார்க்க;see kulaccum3/ (செ.அக.);.

     [குலம் + Skt. சுமார்]

குலச்சுமால்

 குலச்சுமால் kulaccumāl, பெ.(n.)

   களத்திற்விற்குந் தவசம்; grain sold on the threshing floor(செ.அக.);.

     [குலம்+Skt. சுமால்.]

குலஞ்சம்

 குலஞ்சம் kulañcam, பெ.(n.)

   அரத்தை; galangal-Alpinia galanga (சா.அக.);.

 குலஞ்சம் kulañjam, பெ.(n.)

   அரத்தை; galangal-alpinia galanga.

குலஞ்செப்புதல்

குலஞ்செப்புதல் kulañjeppudal,    15 செ.கு.வி.(v.i.)

   தன் குலுப்பெருமை கூறுதல்; to boast of one’s family or birth.

     [குலம் + செப்புதல்.]

குலஞ்செய்-தல்

குலஞ்செய்-தல் kulañjeytal,    1 செ.கு.வி.(v.i.)

   குலத்தை நிலைநிறுத்துதல்; to found a family

     “குலஞ்செய்த குமரர்” (சீவக.2915);.

     [குலம் + செய்-.]

குலடன்

 குலடன் kulaṭaṉ, பெ.(n.)

   தத்தெடுத்து வளர்க்கும் மகன்; adopted son (செ.அக.);.

 குலடன் kulaḍaṉ, பெ.(n.)

   ஏற்பாரான்பிள்ளை (சுவிகார புத்திரன் (வின்.);; adopted son.

த.வ. ஏற்புப்பிள்ளை.

குலடி

 குலடி kulaḍi, பெ.(n.)

   ஒருவகைச் சிவப்பு செய்நஞ்சு (யாழ்.அக.);; a kind of red mineral poison.

     [குலடு → குலடி.]

குலடு

 குலடு kulaḍu, பெ.(n.)

   குலப்பெருமை அழிப்பவள்; unchart women.

     [குலடு → குலடி.]

குலடை

 குலடை kulaḍai, பெ.(n.)

   கற்பொழுக்கங் கெட்டவள் (யாழ்.அக.);; unchaste, fallen woman.

     [குலடு → குலடி → குலடை.]

குலட்கரி

குலட்கரி kulaṭkari, பெ.(n.)

   பொன்னுருக்கும் கரிக்குகை; piece of charcoal bored into a cup for Telting small nuggets of gold or silver.

     “படரிருட்குழாங் குடைகரியா….. என் பொன்னை பருக்குமாறு” (பெருந்தொ.1278);.

     [குடை + கரி.]

குலட்டம்

 குலட்டம் kulaṭṭam, பெ.(n.)

   கருநீலக்கல், நீலாஞ்சனக்கல்; a blue stone used in medicine, and applied as collyrium to the eye and an astringent of sores (சா.அக.);.

     [குலட்டு → குலட்டம்.]

குலட்டு

 குலட்டு kulaṭṭu, பெ.(n.)

 bunch of fruit. (சா.அக.);.

ஒ.நோ. குலக்கு

     [குலை → குலைத்து → குலட்டு.]

குலதனம்

 குலதனம் kuladaṉam, பெ.(n.)

   மேலான செல்வம், மதிப்பமைந்த செல்வம்;     “பலதனத்தொடு நிறை குலத்தனக் குவையும்” முதல் இராசேந்திரன் மெய்க்கிர்த்தி); (கல்.க.சொ.அ.மு.);.

     [குலம் + தனம்.]

குலதருமம்

 குலதருமம் kuladarumam,    பெ.(n .) குலவொழுக்கம்; time-honoured custom observed by a family or caste.

     [குலம் + தருமம். குலவொழுக்கம் பார்க்க;See. {kulavolukkam.]}

குலதிலகன்

குலதிலகன் guladilagaṉ, பெ.(n.)

   குலத்திற் சிறந்து விளங்குபவன்; one who adorns a family.

     “சிவசமய குலதிலக தாலோ தாலேலோ” (திருச்செந்.பிள். தாலப்.9);. குலக்கொழுந்து பார்க்க;See. {Kபa-k. ko/undu.}

     [குலம் + திலகன்.]

குலதீவிதிராட்சை

 குலதீவிதிராட்சை kulatīvitirāṭcai, பெ.(n.)

   நல்ல இனமான உயர்ந்த கொடி முந்திரி; vine of superior quality (சா.அக.);.

குலதெய்வம்

குலதெய்வம் kuladeyvam, பெ.(n.)

   ஒரு குலத்தார் வழிவழியாக வழிபட்டுவருங் கடவுள்; family deity

     “நினையாந் தொழத்தக்க குலதேவதையாய் வழிபட்டு” (சிவப்.பிரபந்.பிள்.சிற்றிற்.6);.

     [குலம் + தெய்வம்.]

குலதேவதை

குலதேவதை kulatēvatai, பெ.(n.)

   ஒரு குலத்தார் தலைமுறை, தலைமுறையாக வழிபட்டு வருங் கடவுள்; family deity.

     ‘நினையாந் தொழத்தக்க குல தேவதையாய் வழிபட்டு” (சிவப்.பிரபந்.பின்.சிற்றிற்.6); (செஅக);.

     [குலம்+தேவதை]

குலத்தன்

 குலத்தன் kulattaṉ, பெ.(n.)

   நற்குலத்தோன்; man of good family or birth (செ.அக.);.

     [குலம்+Skt. அத்தன்.]

 குலத்தன் kulattaṉ, பெ.(n.)

   நற்குலத்தோள்; man of good family or birth.

த.வ. குலமகன்.

     [குல் → குலம் → Skt.kulasta → த.குலத்தன்.]

குலத்தம்

குலத்தம்1 kulattam, பெ.(n.)

   கணுக்கால்; ankle.

   2. கொள்ளு; horse gram (சா.அக.);.

     [குல் → குலத்தம்.]

குலத்தம்பயறு

 குலத்தம்பயறு kulattambayaṟu, பெ.(n.)

   மொச்சைக் காய்; Indian bean (சா.அக.);.

     [குலத்தம் + பயறு.]

குலத்தி

 குலத்தி kulatti, பெ.(n.)

   இலந்தை (சா.அக.);; jujube

     [குலத்தம் → குலத்தி.]

குலத்திகம்

 குலத்திகம் gulattigam, பெ.(n.)

   மொச்சைக்காய்; Indian bean (சா.அக.);.

     [குலத்தி → குலத்திகம்.]

குலத்திகாலன்

 குலத்திகாலன் kulattikālaṉ, பெ.(n.)

   இடுகொள் (சா.அக.);; four leaved cassia.

     [குலத்தி + காலன்.]

குலத்திகை

 குலத்திகை gulattigai, பெ.(n.)

   காட்டுக்கொள் (சா.அக.);; wild horse gram.

     [குலத்தி → குலத்திகை.]

குலத்திரி

குலத்திரி kulattiri, பெ.(n.)

   1. கற்புக்கரசி (பதிவிரதை);; chaste woman.

   2. மனைவி (வின்.);; the lawful wife.

த.வ. குலமள்.

குல் → குலம் → Skt.kula.

     [Skt.{} → த.குலத்திரி.]

குலத்துருமம்

 குலத்துருமம் kulatturumam, பெ.(n.)

   வெடியுப்பு; pottasium nitrate.

குலநர்சகம்

 குலநர்சகம் gulanarcagam, பெ.(n.)

   ஒட்டகம் (யாழ்.அக.);; camel.

     [P]

குலநாசகம்

 குலநாசகம் kulanācakam, பெ.(n.)

ஒட்டகம்,

 camel (சா.அக.);.

குலந்தம்

 குலந்தம் kulandam, பெ.(n.)

   கொள்ளு; horse gram (சா.அக.);.

     [குல் (வளைவு); → குலந்தம்.]

குலந்தெரி-த்தல்

குலந்தெரி-த்தல் kulanderittal,    4 செ.கு.வி. (v.i.)

   குலப்பழி தூற்றுதல்; to dwell on another’s parentage commonly in ridicule.

     [குலம் + தெரித்தல். தெரித்தல் = சொல்லுதல்.]

குலனி

 குலனி kulaṉi, பெ.(n.)

   செவ்வந்தி; Indian chaomile (சா.அக.);.

     [குல் → குலனி.]

குலபதி

குலபதி kulabadi, பெ.(n.)

   குலத்துக்குத் தலைவன்; head of a family, caste or tribe.

     “முதுகவரைக் குலபதியாய்” (திவ்.பெரியதி.6:6,7);.

   2. 10,000 மாணவர்க்கு உணவு முதலியன அளித்துக் கல்வி கற்பிக்கும் ஆசிரியன்; the teacher who feeds 10,000 pupils and instructs them.

     [குலம் + பதி.]

குலபதிநாயனார்

 குலபதிநாயனார் kulapatināyaṉār, பெ.(n.)

   கடைச்சங்கப் புலவருள் ஒருவர் (திருவள்ளுவ மாலை);; a Sangam poet.

குலபருவதம்

 குலபருவதம் kulaparuvatam, பெ.(n.)

   எண் வகை மலைகள்; chief mountain-ranges in jambudvipa, eight in number.

     [குலம்+ Skt.பருவதம்]

அவை : இமயம், மந்தரம், கைலாசம், விந்தியம், நிடதம், ஏமகூடம், நீலம், கந்தமாதனம் (பிங்.); (செ.அக.);.

குலபாகலகம்

 குலபாகலகம் kulapākalakam, பெ.(n.)

   சூரத்து நிலாவாரை; tinnelvelly senna – Cassia angustifolia (சா.அக.);.

குலபுத்திரன்

 குலபுத்திரன் kulaputtiraṉ, பெ.(n.)

   மாசி பத்திரி; Indian absinth-Artemesia indica alias A. vulgaris (சா.அக.);.

குலபூடண பாண்டியன்

 குலபூடண பாண்டியன் kulapūṭaṇapāṇṭiyaṉ, பெ.(n.)

   பாண்டிய மன்னர்களுள் ஒருவன்; a Pandiya king.

குலபௌ

 குலபௌ kulabau, பெ.(n.)

   கணுக்கால்; ankle.

குலப்பகம்

குலப்பகம் gulappagam, பெ.(n.)

   கக்குவான்; whooping cough.

   2. செம்புமணல்; copper ore (சா.அக.);.

     [குலப்பு → குலப்பகம்.]

குலப்பகை

குலப்பகை gulappagai, பெ.(n.)

   1. வழிவழியாக உள்ள இனப்பகை; inbred malice or hatred, as between tribes prepetuated from generation to generation.

   2. பூனையெலிகளுக்கு உள்ளது போன்ற இயற்கைப் பகை; natural enmity between different species, as cats and rats.

     [குலம் + பகை.]

குலப்பசிமாது

 குலப்பசிமாது kulappacimātu, பெ.(n.)

சீந்திற் கொடி,

 moon-creeper – Meniapermum cordifolium (சா.அக.);.

     [P]

 குலப்பசிமாது kulappasimātu, பெ.(n.)

   சீந்திற் கொடி; moon – creeper – meniapermum cordifollum.

குலப்பன்

 குலப்பன் kulappaṉ, பெ.(n.)

   குயவன்; potter.

     [குவாளன் → குலப்பன் → குலப்பன்(கொ.வ.);.]

குலப்பம்

குலப்பம்1 kulappam, பெ.(n.)

   செம்புமணல்; sand containing copper.

     [குலப்பு → குலப்பம்.]

 குலப்பம்2 kulappam, பெ.(n.)

   கக்குவான் இருமல்; whooping cough.

     [குலை → குலைப்பம். ஒ.நோ.குலைப்பன்.]

குலப்பரத்தை

குலப்பரத்தை kulapparattai, பெ.(n.)

   ஒருவற்கே உரிமை பூண்டொழுகும் பரத்தையர் குலத்தவள் (நம்பியகப்.113);; woman of the courtesan class, who remains faithful to a single person.

   2. கணிகையர் குலத்தவர்; courtesan by birth.

     [குலம் + பரத்தை.]

குலப்பெயர்

குலப்பெயர் kulappeyar, பெ.(n.)

   குலம்பற்றி வழங்கும் பெயர்; caste names.

     “பார்ப்பா ரரசர் வணிகர் வேளாளரெனப் பாற்பாடு நாற்பெயர் குலப்பெயராகும்” (பன்னிருபா.144);.

     [குலம் + பெயர்.]

குலமகன்

குலமகன் gulamagaṉ, பெ.(n.)

   1. நற்குடியிற் பிறந்தோன்; man of good family, of noble birth.

   2. குலத்திற் பிறந்த மகன்; legitimate son.

     “குலமகடன் குலமகன்” (கலிங்.223);.

     [குலம் + மகன்.]

குலமகள்

குலமகள் gulamagaḷ, பெ.(n.)

   நற்குடியிற் பிறந்தவள்; woman of good family, of noble birth.

     “குலமகடன் குலமகனை” (கலிங்.223);.

     [குலம் + மகள்.]

குலமணி

குலமணி kulamaṇi, பெ.(n.)

   1. உயர்வகை மணிக்கல் (சாதிரத்தினம்);; superior, genuine gem.

   2. குலத்திற் சிறந்தோன்;See. {KulatiCirandõs).}

     [குலம் + மணி.]

குலமதம்

 குலமதம் kulamadam, பெ.(n.)

   உயர்குடிப்பிறப்பால் தோன்றுஞ் செருக்கு; pride of birth.

     [குலம் + மதம்.]

குலமரியாதை

 குலமரியாதை kulamariyātai, பெ.(n.)

   குலத்தின் ஒழுங்கு; propriety of conduct, established rule or custom of a family.

மறுவ, குலமதிப்பு.

     [குலம் + மரியாதை.]

குலமருது

 குலமருது kulamarudu, பெ.(n.)

   ஒரு வகை மருது; a kind of murudah tree (சா.அக.);.

     [குலம் + மருது.]

 குலமருது kulamarudu, பெ.(n.)

   வெள்ளைமருது; flowering mardah.

     [குலம் + மருது.]

குலமர்ச்சம்

 குலமர்ச்சம் kulamarccam, பெ.(n.)

   வெள்ளுள்ளி; gartic (சா.அக.);.

குலமாரி

 குலமாரி kulamāri, பெ.(n.)

   சிற்றூர்த் தெய்வம்;  a village goddess.

     [குலம் + மாரி.]

குலமீன்

குலமீன் kulamīṉ, பெ.(n.)

   உயர்ந்த மீன்; high class fish.

   2. உண்பதற்குத் தகுந்த மீன்; fish of a superior class fit for eating (சா.அக.);.

   3. அருந்ததி; Arundad

     “குலமீ னருகிய கற்பும்” (கல்லா.73,1);.

     [குலம் + மீன்.]

குலமுதற்பாலை

குலமுதற்பாலை kulamudaṟpālai, பெ.(n.)

   பண்வகை (சிலப்.13:109, உரை);.; a musical node.

     [குலம் + முதல் + பாலை.]

குலமுதல்

குலமுதல் kulamudal, பெ.(n.)

   1. கொடிவழியின் மூலகாரணன்; first ancestor, founder of a family.

     “தென்னர் குலமுதல்” (சிலப்.4:22);.

   2.மகன்; son.

     “குலமுதலைக் கொண்டொளித்த லன்றி” (பு.வெ. 10:6);.

   3. குலதெய்வம்; family god.

     “மலையரை கடவுள் குலமுதல் வழுத்தி” (ஐங்குறு.259);.

     [குலம் + முதல்.]

குலமுறை

குலமுறை kulamuṟai, பெ.(n.)

   1. கொடிவழி வரலாறு (பரம்பரை);; genealogy.

     “குலமுறை கிளத்து படலம்” (கம்பரா.);.

   2. கொடிவழியாய் வந்த குல வழக்கம்; custom of a family handed down by tradition.

குலமுறையை அனுசரிப்பதே அழகு (கொ.வ.);.

     [குலம் + முறை.]

குலமுள்ளோன்

 குலமுள்ளோன் kulamuḷḷōṉ, பெ.(n.)

   நற்குடிப் பிறந்தவன் (திவா.);; man of good family, of noble birth.

     [குலம் + உள்ளோன்.]

குலம்

குலம் kulam, பெ.(n.)

   1. குடி; family, lineage.

     “குலந்தாங்கு சாதிக ணாலினும்” (திவ்.திருவாய்.3:7,9);.

   2. உயர்குலம்; noble lineage, high birth.

     “குலம் வேண்டின் வேண்டுக யார்க்கும் பணிவு” (குறள்,960);.

   3. சாதி; caste, tribe, nation.

     “குலனுங் குடிமையும்” (நான்மணி.82);.

   4. மகன்; son.

     “குலத்தொடுங் கோற லெண்ணி” (சீவக.261);.

   5. இனம் (உரி.நி.);; class, sort, species, genus.

   6. குழு; community.

     “பிரபந்ந குலம்”

   7. கூட்டம்; her, block, school, collecton assemblage.

     “மாளிகைக் குலந் துகைத்து” (தணிகைப்பு.

சீபரி.373).

   8. வீடு (பிங்.);; house, abode.

   9. அரண் மனை

 royal place,

   10. கோயில்; temple.

     “நீலவனக் குலமனந்தம்” (இரகு.நகர.46);.

   11. இரேவதி என்னும் இருபத்தியேழாம் விண்மீன்; the 27th naksatra part of pisces.

   12. நன்மை; goodness, benevolence.

     “குலதெய்வமே” (திருக்கோ. 29);.

   13. அழகு (ஆ.நி.);; beauty.

   14. மலை; mountain.

     “நீலஞ்செய் குலத்தையும்” (இரகு.சிதைவ.32);.

   15. மூங்கில்; bamboo.

     “தலமிசை யுயர் குலத்தைச் சார்ந்து” (திருவாலவா. நாட்டுச்.4);.

 Fin, kyla, Es, {kūla;} Hung. gore;

 Mong, kyi(familyclan);;

 Turk. {kül,kil;} Jap.gara;

 Q. kailla,

     [குல் (வளைவு. குழ்தல் → குலம்.]

குலம்பம்

 குலம்பம் kulambam, பெ.(n.)

   செம்பு மணல்; copper ore (சா.அக.);.

     [குலம்பு → குலம்பம்.]

குலம்பா

 குலம்பா kulambā, பெ.(n.)

   பேய்ச்சுரை (மலை.);; wild bottle gourd.

     [குலம்பை → குலம்பா.]

குலம்புகுந்தவன்

 குலம்புகுந்தவன் gulambugundavaṉ, பெ.(n.)

   சாதி மாறியவன்; one who has mingled with persons of a different caste, a term of reproach.

     [குலம் + புகுந்தவன்.]

குலம்பெயர்-தல்

குலம்பெயர்-தல் kulambeyartal,    3 செ.கு.வி.(v.i.)

   மாறுபாடடைதல்; to change for the better or the worse, as a tree in transplanting, to improve or degenerate (யாழ்ப்.);.

     [குலம் + பெயர்.]

குலவஞ்சனாதி

 குலவஞ்சனாதி kulavañcaṉāti, பெ.(n.)

   வெட்டி வேர்; khus khus root (சா.அக.);.

குலவன்

குலவன் kulavaṉ, பெ.(n.)

   உயர்குலத்திற் பிறந்தவன்; person of noble birth.

     ‘பனிக்கதிர்க்குலவன் பயந்தருள் பாவையை’ (கல்லா.10);.

     [குலம் → குலவன்.]

குலவரி

குலவரி kulavari, பெ.(n.)

   1. சந்தனம்; sandal wood.

   2. செஞ்சந்தனம்; red sandal.

     [குலம் + வரி.]

குலவருத்தனை

 குலவருத்தனை kulavaruttaṉai, பெ.(n.)

   சிற்றூர் அலுவலர் குடிகளிடமிருந்தும் அரசுக்கு வரி செலுத்துபவரிடமிருந்தும் பெற்றுக்கொள்ளும் பொருள்; the perquisites of village officers, paid by farmers and by those who pay land revenue to Government.

     [குலம் + வருத்தனை.]

குலவரை

குலவரை kulavarai, பெ.(n.)

   1. எண்குல மலை (அட்டகுல பருவதம்); (திவா.);; chief mountain ranges of Jambu-dvipa.

   2. மேன்மையான மலை; lofty mountain.

     “அக்குலவரைச் சாரல் வைகி” (கம்பரா.வரைக்.35);.

   3. நாகம்; mineralized zinc.

   4. மந்தாரச்சிலை (சங்.அக.);; a black stone.

     [குலம் + வரை.]

குலவலி

 குலவலி kulavali, பெ.(n.)

   இலந்தை (சா.அக.);; jujube.

     [குலவல்லி → குலவலி.]

குலவல்லி

 குலவல்லி kulavalli, பெ.(n.)

   இலந்தை (சா.அக.);;     [குலம் + வல்லி.]

குலவள்ளிநெல்

 குலவள்ளிநெல் kulavaḷḷinel, பெ.(n.)

   நெல்வகை; a kind of paddy.

     [குலம் + வள்ளி +நெல்.]

குலவாரம்

 குலவாரம் kulavāram, பெ.(n.)

   செவ்வாய்க்கிழமை, வெள்ளிக் கிழமை; Tuesday,Friday (சோ.க.சொ.

அ.மு.).

     [குலம் + வாரம்.]

குலவாழை

குலவாழை kulavāḻai, பெ.(n.)

   1. 7 அல்லது 8 திங்களில் விளையும் ஒருவகைச் சம்பா நெல்; asub species of Camba paddy, taking 7 to 8 months to mature.

   2. ஒருவகைப் பிசின் மரம்; aspecies of gamboge.

   3. சிறந்த வாழை; superior kind of plantain (சா.அக.);.

     [குலம் + வாழை.]

குலவிச்சை

குலவிச்சை kulaviccai, பெ.(n.)

குலவித்தை பார்க்க;See. {kula-yital}

     “குலவிச்சை கல்லாமற் பாகம்படும்” (பழமொ.6);.

     [குலம் + வித்தை + விச்சை.]

குலவித்தை

 குலவித்தை kulavittai, பெ.(n.)

   குலத்தில் வழி வழியாய் வரும் கலையறிவு (வித்தை);; knowledge, learning, art, handed down in a family.

     [குலம் + வித்தை.]

குலவியூகம்

குலவியூகம் kulaviyūkam, பெ.(n.)

   படையணிகளுளொன்று (நவவியூகத்தொன்று); (சௌந்த, 1, உரை);; a kind of battle-array, one of nava-viyukam (q.v.);.

குலவிரி

 குலவிரி kulaviri, பெ.(n.)

   சந்தன மரம்; sandal tree (சா.அக.);

     [குலம் + விரி.]

குலவிருது

குலவிருது kulavirudu, பெ.(n.)

   1. குலத்திற்குரிய பட்டம்; title, insigma peculiar to family.

   2. கொடி முதலிய விருது; standard, banner.

   3. குலப் பிறப்பால் தோன்றும் சிறப்புப் பண்பு; pecularity or propensity in an individual which is a family trait (வின்.);.

     [குலம் + விருது.]

குலவிருத்தியை

 குலவிருத்தியை kulaviruttiyai, பெ.(n.)

   மருத்துவச்சி (யாழ்.அக.);; mid wite(செ.அக.);.

     [குலம்+Skt.விருத்தியை]

குலவிளக்கு

குலவிளக்கு kulaviḷakku, பெ.(n.)

   குலத்தை விளங்கச் செய்பவன்-ள்; shining light of a family.

     “கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே குல விளக்கே”திவ்திருப்பா.17).

     [குலம் + விளக்கு.]

குலவு

குலவு1 kulavudal,    9 செ.கு.வி.(v.i.)

   1. விளங்குதல்; to shine, gleam to be conspicuous.

     “குலவு கோலத்த கொடிநெடு மாடங்கள்” (தேவா.794.7);.

   2. மகிழ்ச்சி கொள்ளுதல்; to rejoice.

     “பாரிடங் குலவிச் செல்ல” (கந்தபு.தாரக.18);.

   3. உலாவுதல்; to walk, move about.

     “எமதன்னையை நினைத்தே குலவினனோ” (சிவரக.விசயை.14);. ஒ.நோ.உலவு.

   4. நெருங்கியுறவாடுதல்; to be on very intimate terms.

அவனோடு குலவுகிறான்

   5. தங்குதல்; to lie, remain.

     “பாற்கடலில் குலவுகின்றதோர் பொருளெலாம்” (கந்தபு.குமார.4);.

   6. வளைதல்; to bend, curve.

     “குலவுச்சினைப் பூக்கொய்து” (புறநா.11:4);.

   7. குவிதல்; to lie heaped, as sand.

     “குலவு மணல்” (ஐங்குறு.153);.

     [குல் → குல → குலவு.]

 குலவு2 kulavu, பெ.(n.)

   வளைவு; bend, curve.

     “குலவுக் கொடுஞ்சிலை” (பு.வெ.1:10);.

 E. curve, a bend;

 L. curvus, crooked.

     [குல் → குலவு.]

குலவுகாசம்

 குலவுகாசம் kulavukācam, பெ.(n.)

   நாணல் (மலை.); ; kaus.

     [குலவு + காசம்.]

குலவுக்கரசி

 குலவுக்கரசி kulavukkaraci, பெ.(n.)

   சூழ்ப்பிராய்; demontree-Streblus asper (சா.அக.);.

குலவுரி

குலவுரி kulavuri, பெ.(n.)

   1. சந்தன மரம்,

 sandal wood tree – Santalum albus.

   2. செஞ்சந்தனம் (பிங்.);; red sandal – Pterocarpus santalinus (செ.அக.);.

     [குலம்+உரி]

குலவேல்

 குலவேல் kulavēl, பெ.(n.)

   கஞ்சாங்கோரை (சா.அக.);; hoary basil.

     [குலம் + வேலி.]

குலவேளை

 குலவேளை kulavēḷai, பெ.(n.)

நல்வேளை

 a sticky plant growing in waste places.

     [குலம் + வேளை.]

குலவை

குலவை kulavai, பெ.(n.)

   பண்டிகை நாள்களில் மகளிர் நாவாற் குழறியிடும் மகிழ்வொலி; ululation chorus of shrill sounds made by women by wagging the tongue, uttered on festive occassions(G.Tn.D.135);.

     [குரவை → குலவை.]

குலா

குலா kulā, பெ.(n.)

   மகிழ்ச்சி; joy, delight, exultation.

     “நிலாவிரி முற்றத்துக் குலவோ டேறி” (பெருங்.வத்தவ.12,14);.

     [குலவு → குலா.]

குலாகலம்

குலாகலம் kulākalam, பெ.(n.)

   ஒரு பூடு; a plant.

   2. நாய்கள் சிறுநீர் கழிக்கும் முன் முகரும் பூடு; a plant which dogs are fond of smelling before they expell urine (சா.அக.);.

குலாகுலவாரம்

 குலாகுலவாரம் kulākulavāram, பெ.(n.)

   அறிவன் கிழமை; Wednesday, (சோ.க. சொ.அ.மு.);.

     [குலம் + குலம் + வாரம்.]

குலாங்குலி

 குலாங்குலி kulāṅguli, பெ.(n.)

   காவட்டம் புல் (மலை.);; citromella grass.

     [குலா + அங்குலி.]

குலாசலம்

 குலாசலம் kulācalam, பெ.(n.)

குலபருவதம் பார்க்க;see kula-paruvadam (செ.அக.);.

     [குலம்+ Skt.அசலம் →குலசலம் → குலாசலம்]

 குலாசலம் kulācalam, பெ.(n.)

   பனிமலை (அட்டகலபர்வதம்);; chief mountain ranges of Jambu-dvipa.

 Skt.kula+a-cala → த.குலாசலம்.]

குலாசா

 குலாசா kulācā, பெ.எ. (adj.)

   பரந்த; spacious, roomy, wide.

     [U.{} → த.குலாசா.]

குலாசாரம்

குலாசாரம் kulācāram, பெ.(n.)

   குலவொழுக்கம்; established or timehonoured custom or usage of a family or caste (செ.அக.);.

     [குலம்+ Skt. அசாரம் – குலசாரம்→குலாசாரம்]

 குலாசாரம் kulācāram, பெ.(n.)

   ஒரு குடும்பம் அல்லது ஒரு பிரிவினர்க்கான ஒழுக்க நடைமுறை, குலவொழுக்கம்; established or time honoured custom or usage of a family or caste.

த.வ.குடிப்பண்பு.

     [Skt.{} → த.குலாசாரம்.]

குல் → குல → குலவு. குலவுதல் = கூடுதல்.

குல் → குலம் = கூட்டம், குடும்பம், வகுப்பு, குலப்பிரிவு, இனம். த.குலம் → Skt.kula. (வ.வ.1: 127);.

குலம் + Skt. {} – குலாசாரம் வடமொழிப் புணர்ப்பு.

குலாசாரியன்

 குலாசாரியன் kulācāriyaṉ, பெ.(n)

   குல ஆசாரியன் (குரு);; family preceptor or priest (செ.அக.);.

     [குலம்+ஆசாரியன் – குலாசாரியன்.]

 குலாசாரியன் kulācāriyaṉ, பெ.(n.)

   குலகுரு; family preceptor or priest.

த.வ. குடிஆசான்.

     [த.குலம் → Skt.kula.]

     [Skt.{} → த.ஆசிரியன். ‘ன்’ ஆ.பா.ஈறு]

குலாசாரியன் வடமொழிப் புணர்ப்பு.

குலாட்டு

குலாட்டு kulāṭṭu, பெ.(n.)

   1. மகிழ்ச்சி,

 joy.

   2. உற்சாகம்; enthusiasm (செ.அக.);.

     [குலவு + ஆட்டு]

 குலாட்டு kulāṭṭu, பெ.(n.)

   1. மகிழ்ச்சி; joy.

   2. கிளர்ச்சி (உற்சாகம்);; enthusiasm.

குலாதனி

 குலாதனி kulātaṉi, பெ.(n.)

   ஒருவகைப் பூண்டு (மலை);; christmas rose, herb – Helleforus niger(செ.அக.);.

 குலாதனி kulātaṉi, பெ.(n.)

   கடுரோகினி (மலை);; christmas rose.

குலாதிக்கன்

 குலாதிக்கன் kulātikkaṉ, பெ.(n.)

   குலத்தின் முதன்மையானவன்; cheif man of the family (செ.அக.);.

     [குலம்+ஆதிக்கன் – குலதிக்கன்→குலாதிக்கன்.]

 குலாதிக்கன் kulātikkaṉ, பெ.(n.)

   குடும்பத்தில் உயர்ந்தவன், சிறந்தவன் (குலசிரேஷ்டன்); (வின்.);; chief man of the family.

த.வ. குடித்தலைவன்.

     [த.குலம் → Skt. kula.]

     [Skt.kula=adhika → த.குலாதிக்கன்.]

குலாதினி

குலாதினி kulātiṉi, பெ.(n.)

குலாதனி (தைலவ.தைல.1); பார்க்க;see {}.

     [Skt.{} → த.குலாதி.]

குலாபி

 குலாபி kulāpi, பெ.(n.)

குலாபு பார்க்க;see {}.

     [U.{} → த.குலாபி.]

குலாபிமானம்

 குலாபிமானம் kulāpimāṉam, பெ.(n.)

   பிறந்த குடியிடத்துக் கொள்ளும் பற்று; love of one’s family or caste.

த.வ. பிறந்தகப்பற்று.

     [குல(ம்); + அபிமானம்.]

     [த.குலம் → Skt.kula.]

     [Skt.{} → த.அபிமானம். வடமொழிப் புணர்ப்பு.]

குலாபு

குலாபு kulāpu, பெ.(n.)

   1. சிவப்பு முளரி (ரோசா);, முட்செவந்தி; damask rose.

   2. பன்னீர்; rose-water.

த.வ. செம்முளரி.

     [U.{} → த.குலாபு.]

குலாபுசாயம்

 குலாபுசாயம் kulāpucāyam, பெ.(n.)

   முளரி (ரோசா); நிறச் சாயம்; rose colour.

த.வ. முளரிச்சாயம்.

குலாபுப்பூ

 குலாபுப்பூ kulāpuppū, பெ.(n.)

   முளரி (ரோசா);ப்பூ; rose flower.

     [குலாபு + பூ.]

     [U.{} → த.குலாபு.]

குலாபுப்பூவித்து

 குலாபுப்பூவித்து kulāpuppūvittu, பெ.(n.)

   அரச (இராச);ப் பூ அல்லது முளரி (ரோசா);ப்பூ விதை; rose seed.

த.வ. முளரி வித்து.

     [குலாபு + பூ + வித்து.]

     [U.{} → த.குலாபு.]

புகு → பூ, விந்து → வித்து.

குலாபூ

 குலாபூ kulāpū, பெ.(n.)

   அடுக்கு முளரி (ரோசா); இதழ்; cabbage rose petal.

த.வ. முளரி இதழ்.

     [குலா + பூ.]

     [U.{} → த.குலா.]

குலாப்சான்

 குலாப்சான் kulāpcāṉ, பெ.(n.)

   இனிப்புப் பணியாரவகை (இ.வ.);; a kind of confectionery.

த.வ. பாகுபணியாரம், இன்மிதவை.

     [Ar.{}+{} → த.குலாப்+சான்.]

குலாமர்

குலாமர் kulāmar, பெ.(n.)

   பணத்திற்கு அடிமையானவர், இவறன்மார் (உலோபிகள்);; misers, as slaves to money.

     “இச்செல்வம்………… கொடுக்கறியா திறக்குங் குலாமருக்கு” (பட்டினத்.திருப்பா.திருவோ.மா.7);.

த.வ. தொழும்பர்.

     [U.{} → த.குலாமர்.]

குலாமல்லி

குலாமல்லி kulāmalli, பெ.(n.)

   முட்செவ்வந்தி; rose flower.

   2. வைத்திய முப்பு; a quintessence salt used in medicine (சா.அக.);.

     [குலவு → குலா + மல்லி.]

குலாமல்லிச்சுண்ணம்

 குலாமல்லிச்சுண்ணம் kulāmalliccuṇṇam, பெ.(n.)

   குடற்கண்ணம். நஞ்சுக் கொடியினின்று தயாரிக்கப்படும் ஒருவகைச் சுண்ண மருந்து; an alkaline prepared from the navel cord of children (சா.அக.);.

     [குலாமல்லி + சுண்ணாம்.]

குலாம்

 குலாம் kulām, பெ.(n.)

   அடிமை; slave, menial servant.

     ‘அந்தப் பிரவுக்கு அவன் குலாமாயிருக்கிறான்’.

     [U.{} → த.குலாம்.]

குலாயனம்

குலாயனம் kulāyaṉam, பெ.(n.)

குலாயம்2 (திவா.); பார்க்க;see {}.

     [Skt.{} → த.குலாயனம்.]

குலாயம்

குலாயம் kulāyam, பெ.(n.)

   1. பறவை கட்டுங் கூடு; bird’s nest.

     “சேனந் தனது குலாயந்தனில்”(கைவல்ய.சத்.124);.

   2. மக்களாற் செய்யப்படும் பறவைக்கூடு; bird’s cage.

     [குலா → குலாயம்.]

 குலாயம் kulāyam, பெ.(n.)

   1. பறவைகட்டுங் கூடு; bird’s nest.

     “சேனந் தனது குலாயெந்தனில்” (கைவல்ய.சந்.124);.

   2. மக்களாற் செய்யப்படும் பறவைக் கூடு (பிங்.);; bird’s cage.

     [Skt.{} → த.குலாயம்.]

     [P]

குலாரி

 குலாரி kulāri, பெ.(n.)

   ஒருவகை வண்டி; charriot, Indian coach.

   க.கொலாரு;   ம.குலால்;   தெ.கொல்லாபண்டி;     [குள் → கொள் → கொள்ளரி → குலாரி.]

 குலாரி kulāri, பெ.(n.)

   ஒரு வகை வண்டி (வின்.);; chariot, Indian coach.

த.வ. குடாரி.

க. குலாரூ; ம. குலால்.

     [Mhr.{}+த.குலாரி.]

குலாலன்

குலாலன் kulālaṉ, பெ.(n.)

   குயவன்; potter.

     “குலாலற் கேற்பப் பெருங்குய மருளி” (பெருங். வத்தவ.9,48);.

     [குலவு → குலாவு → குலாள் → குலாளன் → குலாலன்.]

குலாலம்

குலாலம் kulālam, பெ.(n.)

   காட்டுச்சேவல்; wild cock.

   2. ஒரு ஆந்தை; owl.

   3. ஒரு பூடு; a plant.

   4. நீலாஞ்சனக் கல்;   855u, a blue stone applied as a collyrium to the eyes (சா.அக.);.

     [குலம் → குலாலம்.]

குலால்

குலால் kulāl, பெ.(n.)

   1. சிவப்பு; redness.

   2. வடநாட்டில் அறுவடைக் காலத்தில் கொண்டாடப்படும் (Holi); பண்டிகையில் பயன்படுத்தும் ஒரு வகைச் செந்நிறப் பொடி (இ.வ.);; red powder thrown at the time of {} festival.

     [U.{} → த.குலால்.]

குலால்வண்டி

 குலால்வண்டி kulālvaṇṭi, பெ.(n.)

குலாரி (வின்.); பார்க்க;see {}.

     [குலால் + வண்டி.]

     [Mhr.{} → த.குலால்.]

வண்டு → வண்டி=சக்ரத்தையுடைய ஊர்தி.

குலாவு

குலாவு1 kulāvudal,    5 செ.கு.வி.(v.i)

   1. அங்கு மிங்கும் நடத்தல்; to walk or move about, haunt.

   2. நட்பாடுதல்; to be on intimate terms, to be friends.

அவனோடு அதிகமாகக் குலாவுகிறான்.

   3. விளங்குதல்; to shine, to be conspicuous.

   4. மகிழ்தல்; to rejoice, exult, delight.

   5. நிலை பெறுதல்; to settle, rest.

     “பூந்துகில்….. புகைகூடி…….. குலாய கொள்கைத்தே” (சீவக.1007);.

     [குலவு → குலாவுதல்.]

 குலாவு2 kulāvudal,    5 செ.குன்றாவி.(v.t.)

   கொண்டாடுதல் (பிங்.);; to admire, praise, extol.

     [குலவு → குலாவு.]

 குலாவு3 kulāvudal, செ.கு.வி.(v.i.)

   வளைதல்; to be bent, curved.

     “குலாவணங்கு வில்லெயினர் கோன்” (யாப்.வி.22);.

     [குல் → குலவு → குலாவு.]

குலி

 குலி kuli, பெ. (n.)

   கண்டங்கத்திரி; prickly night – shade (சா.அக.);.

     [குல் → குலி.]

குலிகச்செப்பு

குலிகச்செப்பு guligacceppu, பெ.(n.)

   சாதிலிங்கம் செப்பு; vexmillion box.

     “குலிகச் செப்பன கொம்மை வரிமுலை” (சீவக.641);.

     [குலிகம் + செப்பு.]

குலிகம்

குலிகம்1 guligam, பெ.(n.)

   1. சாதிலிங்கம்; vermilion.

     “பொருங்குலிக மப்பியன” (கம்பரா. வரைக்.25);.

   2. சிவப்பு (திவா.);

 redness.

     [குலிக்கம் → குலிகம்.]

 குலிகம்2 guligam, பெ.(n.)

   இருப்பை (பிங்.);; south Indian mahua.

     [குலிக்கம் → குலிகம்.]

குலிகா

 குலிகா kulikā, பெ.(n.)

   பூசணிக் கொடிக் கொடி; pumpkin creeper (சா.அக.);.

குலிகாயம்

 குலிகாயம் kulikāyam, பெ.(n.)

   நீர் வாழ்உயிரி; an aquatic animal(சா.அக.);.

 குலிகாயம் kulikāyam, பெ.(n.)

   ஒரு வகை நீர் வாழ் விலங்கு; an aquatic animal.

குலிக்கம்

 குலிக்கம் kulikkam, பெ.(n.)

   இலுப்பை; bassia (சா.அக.);.

     [குல் → குலுக்கு → குலுக்கம் → குலிக்கம்.]

குலிங்கன்

 குலிங்கன் kuliṅkaṉ, பெ(n.)

   துரியோதனனின் அமைச்சன்; minister of turi-y-ötanan (அபி.சிந்);.

குலிங்கம்

குலிங்கம் kuliṅgam, பெ.(n.)

   1. ஒரு நாடு; name of a country.

     “தேமரு வலங்காத குவிலங்கரில்” (பாரத.பத்தாம்.27);.

   2. ஊர்க்குருவி (சூடா.);; sparrow.

   3. தீங்கு செய்யலாகாது என்று மற்ற உயிர்கட்குப் போதித்துத் தான் தீங்கிழைக்கும் ஒரு பறவை. (வேதாரணிய சுக்கீவ.40);; a fabulous bird which preaches good behaviour, but itself persists in evil doing.

     [குல் → குலி → குலிங்கம்.]

குலிசக்குகை

 குலிசக்குகை gulisaggugai, பெ.(n.)

   அதிக வெப்பத்தைத் தாங்கக் கூடிய பாத்திரம்; crucible made to stand high temperature (சா.அக.);.

     [குலிச + குகை (குகை = பாத்திரம்);.]

குலிசத்துருமம்

 குலிசத்துருமம் kulicatturumam, பெ.(n.)

   ஒருவகைக் கள்ளி; a kind of opuntia tree (சா.அக.);.

     [குலிசம்+துருமம்]

 குலிசத்துருமம் kulisatturumam, பெ.(n.)

   ஒரு வகைக் கள்ளி; opuntia tree.

குலிசநாயகம்

 குலிசநாயகம் gulisanāyagam, பெ.(n.)

   ஒரு லீலை; a kind of Coitus (சா.அக.);.

     [குலிசம் + நாயகம்.]

குலிசன்

குலிசன்1 kulisaṉ, பெ.(n.)

   இந்திரன்; Indra, as armed with {kuliśan} (குலிசத்தை யுடையவன்.);.

   2. கற்பரிச் செய்ந்நஞ்சு (சங்.அக.);; a mineral poi. son.

     [குலிசம் → குலிசன்.]

குலிசபாணி

குலிசபாணி kulisapāṇi, பெ.(n.)

   1. இந்திரன்; Indra, as armed with thunde bolt.

     “தெவ்வடு தீறற் குலிசபாணி” (திருக்காளத்.பு.53:25);. (வைரத்தா லாகிய ஆயுதத்தைக் கையிலுடையவன்);.

     [குலிசம் + பாணி.]

குலிசம்

குலிசம்1 kulisam, பெ.(n.)

   வைரத்தாலாகிய ஆயுதம்; Indra’s thunderbolt.

     “குலிசத் தமரர்கோன்” (கம்பரா.நகர.4);.

   2. வைரம்; diamond.

     “வெயில் விடு குலிச கேயூரங்கள்” (திருப்போ.சந். திருப்பள்.9);

     [குல் (குத்துதல்); → குலிசம்.]

 குலிசம்2 kulisam, பெ.(n.)

   1. கற்பரிச் செய்நஞ்சு: a mineral poison.

   2. இருப்பை (மலை.); பார்க்க;See.{iruppa}

   3. வன்னி (மலை.); பார்க்க;See. {vanni} Indian mesquit.

     [குல் → குலிசம்.]

 குலிசம் kulisam, பெ.(n.)

   நிரயம் வகைகளுளொன்று (நரக விசேடம்); (சிவதரு.சுவர்க்க நரக.109);; a kind of hell.

குலிசல்

 குலிசல் kulisal, பெ.(n.)

   நாகச்செய்ந்நஞ்சு; a mineral poison.

     [குல் → குலி → குலிசல்.]

குலிசவேறு

குலிசவேறு kulisavēṟu, பெ.(n.)

   வைரத்தா லாகிய ஆயுதம்; Indra’s thunderbolt.

     “குலிச வேற்றா லற்றசிறை” (பெரியபு.திருஞான.1015);.

     [குலிசம் → குலிசன்.]

குலிசி

குலிசி kulisi, பெ.(n.)

   குலிசத்தையுடைய இந்திரன்; Indra, as armed with {kulisan.}

     “நேமியோ குலிசியோ” (கம்பரா.பிணிவீ.70);.

     [குலிசம் → குலிசி.]

குலிஞன்

 குலிஞன் kuliñaṉ, பெ.(n.)

   உயர்குலத்தோன்; man of noble birth.

     [குலிஞ்சன் → குலிஞன்.]

குலிஞ்சன்

 குலிஞ்சன் kuliñjaṉ, பெ.(n.)

   உயர்குலத்தோன் (திவா.);; man of noble birth.

     [குலத்தன் → குலஞ்சன் → குலிஞ்சன் (கொ.வ.);.]

குலிந்தம்

 குலிந்தம் kulindam, பெ.(n.)

   குளிந்தம் என்னும் நாடு (சது);; an ancient.

     [குளிந்தம் → குலிந்தம்.]

குலின்

 குலின் kuliṉ, பெ.(n.)

   காசித்தும்பை; balsam flower (சா.அக.);.

     [குல் → குலின்.]

குலிரம்

குலிரம் kuliram, பெ.(n.)

   1. நண்டு; crab.

   2.புற்று நோய்; cancer (சா.அக.);.

     [குல் → குலிர் → குலிரம்.]

குலிரவம்

 குலிரவம் kuliravam, பெ.(n.)

   கழலை; புற்றுப் போல் வளரக்கூடிய ஓர் கட்டி; an internal abscess or tumour (சா.அக.);.

     [குலி → குலிரவம்.]

குலிலி

குலிலி kulili, பெ.(n.)

   வீரமுழக்கொலி; shout of triumph, etc., as on a battle field.

     “குலிலியிட்ட களத்தில்” (திருப்பு.271);.

குல் → குலில் → குலி.]

குலிலேசம்

 குலிலேசம் kulilēcam, பெ.(n.)

   கருங்கொள்; black gram – Rynchosia genus (சா.அக.);.

குலிவம்

குலிவம் kulivam, பெ.(n.)

   இலுப்பை; mahua tree.

   2. வன்னி வயிரம்; core of vanni tree.

     [குல் → குலி → குலிவம்.]

குலீனன்

 குலீனன் kulīṉaṉ, பெ.(n.)

   உயர் குலத்தில் பிறந்தவன் (திவா.);; man of noble birth (செ.அக.);.

 குலீனன் kulīṉaṉ, பெ.(n.)

   உயர்குலத்தோன் (திவா.);; man of noble birth.

த.வ. குடிப்பிறப்பாளன்.

     [Skt.kulina → த.குலீனன்.]

குலீரம்

 குலீரம் kulīram, பெ.(n.)

   பனைமரம்; palmyra tree (சா.அக.);

     [குல் → குலிர் → குலிரம் → குலீரம்.]

குலுகம்

 குலுகம் gulugam, பெ.(n.)

   நாக்கில் படிந்த வெண்படலம்; the fur of the tongue. It is a coating seen upon the tongue in various diseases (சா.அக.);.

     [குல் → குலுகம்.]

குலுகுலு-த்தல்

குலுகுலு-த்தல் guluguluttal,    2 செ.கு.வி.(v.i.)

   1. குறுகுறுவென்று செல்லுதல்; to creep or crawl noisily, as vermin in a basket.

பாம்பு பெட்டிக் குள்ளே குலுகுலுக்கென்றது.

   2. குடுகுடென் றொலித்தல்; to make a buzzing sound, as anything in the ear.

காதுக்குள் ஏதோ குலுகுலுக்கின்றது.

     [குரு + குரு.]

குலுகுலுப்பு

 குலுகுலுப்பு guluguluppu, பெ.(n.)

   தினவு; itching (சா.அக.);.

     [குலு + குலு. குனுகுலு → குலுகுலுப்பு.]

குலுக்கம்

 குலுக்கம் kulukkam, பெ.(n.)

   ஒருவகைப் பறவை; an unknown bird (சா.அக.);.

     [குல் → குலுக்கு → குலுக்கம்.]

குலுக்கல்

குலுக்கல்1 kulukkal, பெ.(n.)

   1. வண்டி மேடு பள்ளத்தில் ஏறி இறங்குவதால் அல்லது ஏதேனும் தடையால் தூக்கிப் போடுகை, ஆட்டம்; of vehicles jolt, jerking.

மாட்டு வண்டியில் உட்கார முடியாத அளவுக்குக் குலுக்கல்! பேருந்து ஒரு குலுக்கலுடன் நின்றது.

   2. அருவருப்பான உடல் அசைவு:

 flirtatious body gesture.

அவளுடைய குலுக்கலும் தளுக்கு நடையும்.

     [குலுங்கல் – குலுக்கல்]

 குலுக்கல்2 kulukkal, பெ.(n.)

   எண்கள் அச்சடிக்கப்பட்ட சீட்டுகளை விற்றுச் சிலவற்றைப் பரிசுக்கு உரியதாகத் தேர்ந்தெடுக்கை; draw of lottery tickets.

ஒவ்வொர வெள்ளிக்கிழமையும் குலுக்கல் நடைபெறும்

     [குலுங்கல் – குலுக்கல்]

குலுக்கி

 குலுக்கி kulukki, பெ.(n.)

   பிலுக்குபவள்; gay, dressy, mincing woman.

தெ. குலுக்கலாடி

     [குலுக்கு → குலுக்கி.]

குலுக்கு-தல்

குலுக்கு-தல் kulukkudal,    5 செ.குன்றாவி.(v.t.)

   1. அசைத்தல்; to shake, as a vessel, a palanquin, to shake up and down, to agitate, to shake together in a mass.

     “நெடுவரை குலுக்கிய குலத்தோளை” (கம்பரா.ஊர்தேடு. 209);.

   2. குலுங்கச் செய்து கலத்தல்; to mix by shaking together, as in a bottle.

     [குலுங்கு → குலுக்கு.]

குலுக்குக்காரி

 குலுக்குக்காரி kulukkukkāri, பெ.(n.)

   பிலுக்குபவள்; gay, dressy, mincing woman.

     [குலுக்கு + வாரி.]

குலுக்குச்சீட்டு

 குலுக்குச்சீட்டு kulukkuccīṭṭu, பெ.(n.)

   சீட்டு களைக் குலுக்கிப்போட்டு எடுத்தவருக்குத் தொகை கொடுக்குஞ் சீட்டு வகை; chit-fund conducted on basis of casting lots.

     [குலுக்கு + சீட்டு.]

குலுக்கெனல்

 குலுக்கெனல் kulukkeṉal, பெ.(n.)

   சிரித்தற்குறிப்பு; onom. expr: signifying laughter.

குலுக்கென்று

நகைத்தான்.

     [குலுக்கு + எனல்.]

குலுக்கை

 குலுக்கை kulukkai, பெ.(n.)

   குதிர்; circular earthen bin for storing grain (இ.வ.);.

     [குலுக்கு → குலுக்கை.]

குலுங்கு

குலுங்கு2 kuluṅgu, பெ.(n.)

   1 . அசைப்பு; shake, jolt.

   2.பிலுக்கு; affected gestures, foppish airs.

   தெ. குலுக்கு. குலு;.க. குலுக்கு.

     [குலுங்கு → குலுக்கு.]

குலுங்கு-தல்

குலுங்கு-தல் kuluṅgudal,    8 செ.கு.வி.(v.i.)

   1. அசைதல்; to be shaken, agitated.

     “கொங்கை குலுங்கநின் றுந்தீபற” (திருவாச.14:11);;

 shudder, quake with fear.

   3. நிறைதல்; to abound, to be Full.

அந்த மரம் குலுங்கக் காய்த்திருக்கிறது.

     [குல் → குலு → குலுங்கு.]

குலுங்குடை-த்தல்

குலுங்குடை-த்தல் kuluṅguḍaittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   ஏலத்தொகையை ஏறவொட்டாமல் தடுத்தல்; to conspire together against the rise of prices at an auction.

     [குலுங்கை + உடை.]

குலுத்தம்

 குலுத்தம் kuluttam, பெ.(n.)

   கொள்ளு (திவா.);; horse gram.

     [குலு → குலுத்தம்.]

குலுத்தாகிதம்

 குலுத்தாகிதம் kuluddākidam, பெ.(n.)

   பூஞ்சாந்துப் பட்டை; a bazzara drug.

குலுத்திகா

 குலுத்திகா kuluttikā, பெ.(n.)

கருங்கொள்ளு பார்க்க;See. {karuriko/u.}

     [குலுத்திகை → குலுத்திகா.]

குலுப்பை

 குலுப்பை kuluppai, பெ.(n.)

   தானியம் சேமித்து வைப்பதற்கான உறைவடிவக் களஞ்சியம் (கட்.தொ.வரி.);; circular earthern fin for grain.

மறுவ. குலுக்கை. [குலு → குலுப்பை.]

குலுமமூலம்

 குலுமமூலம் kulumamūlam, பெ.(n.)

   இஞ்சி(மலை.);; Jamaica ginger.

     [குலுமம் + மூலம்.]

குலுமம்

குலுமம் kulumam, பெ.(n.)

   1. மண்ணீரல், மலக்குடல் முதலியவற்றின் பெருக்கத்தால் உண்டாகும் வயிற்றுநோய் வகை chornic enlargement of the spleen; grandular enlargement in the abdomen, as of the mesentric gland.

   2. 45 காலாட்களும், 27 குதிரைகளும், 9 தேர்களும், 9 யானைகளும் அடங்கிய படைப்பிரிவு (சூடா.);; a division of an army consisting of 45 foot, 27 horses, 9 chariots and 9 elephants.

     [குல் → குலு → குலுமம்.]

குலுமை

 குலுமை kulumai, பெ.(n.)

குலுக்கை பார்க்க (இ.வ.);;See. {kulukkai}

     [குலு → குலுமை.]

குலேசபாண்டியன்

 குலேசபாண்டியன் kulēcapāṇṭiyaṉ, பெ.(n.)

   ஒரு பாண்டிய மன்னன்; a Pandiya king.

குலேநிலோபர்

 குலேநிலோபர் kulēnilōpar, பெ.(n.)

   வெண்டாமரைப் பூ; white lotus flower nelumbium speciosum.

குலேநீலோபர்

 குலேநீலோபர் kulēnīlōpar, பெ.(n.)

வெண்தாமரைப் பூ:

 white lotus flower – Nelumbium speciosum (சா.அக.);.

குலை

குலை2 kulaittal,    4 செ.குன்றாவி.(v.t.)

   1. அவிழ்தல்; to untie, loosen, dishevel.

   2. பிரித்தல்; to rake down as a scaffolding, to remove, as the decorations of a car after festival.

   3.தாறுமாறாக்குதல்; to derange, disturb.

   4. அழித்ததல்; to destroy, ruin, to violate, as chastity.

   5. வீரத்தைக் குறைத்துப் பேசல்; to dishearten, discourage, disconcert.

   6. அசைத்தல்; to shake agitate.

     [குலை → குலைத்தல்.]

 குலை2 kulaittal,    4 செ.கு.வி.(v.i.)

   1. நாய் குலைத்தல்; to bark, as a dog.

   2. குழறிப்பேசுதல்; to talk inchoerently and confusedly (கொ.வ.);.

     [குல் → குலை.]

 குலை3 kulaittal,    4 செ.குன்றாவி (v.i.)

   குலையாக ஈனுதல்; to shoot forth in a bunch, as a plantain.

     “முல்லை குலைத்தன காண்” (திணை மாலை.112);.

     [குலை → குலைத்தல்.]

 குலை4 kulai, பெ.(n.)

   1. கொத்து; cluster, bunch as of fruits, flowers.

     “நீடுகுலைக் காந்தள்” (பெரும்பாண்.371);.

   2. ஈரற்குலைற முதலியன; viscera in the abdomen,intestines.

     “வீரர் குலைகளற்றி” (அரிச்.4, வேட்டஞ்.48);.

     [குல் → குலை.]

 குலை5 kulai, பெ.(n.)

   1. செய்கரை; artificial bank, ridge, dam.

     “நீரைக் கொடுவந்து….. குலை செய்து தகையவொண் ணாதபடி” (திவ்.திருமாலை. 24.வியா.);.

   2. பாலம்; bridge, causeway.

     “குலை கட்டி மறுகரை யதனாலேறி” (திவ்.பெருமாள்.10:7);.

     [குல் → குலை.]

 குலை6 kulai, பெ.(n.)

   1. வில்லின் குதை (பிங்.);:

 notch in a bow to keep the string in check.

   2. நாண்; bow string.

     “குலையிழி பறியாச் சாபத்து” (பதிற்றுப் 24:12);.

     [குல் → குலை.]

குலை-தல்

குலை-தல் kulaidal,    1 செ.கு.வி.(v.i.)

   1. அவிழ்தல்; to become loose;

 to be dishevelled, unravelled.

     “கொண்டை குலைந்து போயிற்று.”

   2. கலைதல்; to disperse, as a crowd, to scatter.

     “கூட்டம் குலைந்தது.”

   3. நிலைகெடுதல்; to bederanged, disordered, upset, thrown into confusion.

     “கோளி பங்கய மூழ்கக் குலைந்தவால்” (கம்பரா. வரைக்.621);.

   4. மனங்குழைதல்; to lose one’s heart become melted, softened.

     “முளரிமொட்டென்று

குலையுங் காமக்குருடர்க்கு” (பட்டினத்.திருப்பா. கஞ்சித்தரு.அடி.233);.

   5. நடுங்குதல்; to trumble, shudder, quiver, shiver.

     “வேழம் எதிரக் குலைவரால்” (இரகு.நகர.56);

   6. அழிதல்; to be annihilated, destroyed, put an end to.

     “உலகெலாங் குலைந்தன்று” (கந்தபு.திருநகரப்.11);.

   7. கோபக்குறி காட்டுதல் (பிங்.);; to show signs of anger.

     [குலை → குலைதல்.]

குலை-த்தல்

குலை-த்தல் kulaittal,    4 செ.கு.வி.(v.i.)

   1. நாய் கடித்ததால் வெறி ஏறி நாய் போல் குரைத்தல்; barking like a dog as in hydrophobia.

   2. குழறிப் பேசல்; talking in a confused manner (சா.அக.);.

     [குரைத்தல்-குலைத்தல் (பே.வ.);]

குலைகீசம்

 குலைகீசம் kulaiācam, பெ.(n.)

   ஆட்டுலா மரம்; a kind of tree.

குலைகுலை-தல்

குலைகுலை-தல் gulaigulaidal,    4 செ.கு.வி.(v.i.)

   பதறுதல்; to tremble;

 to be agitated greatly, as at sad news, to be in a state of trepidation.

     “உள்ளங் குலைகுலைந்து” (சீகாளத்.4, கன்னி.124);.

     [குலை + குலை.]

குலைக்கட்டி

 குலைக்கட்டி kulaikkaṭṭi, பெ.(n.)

   மண்ணீரல் பெரியதாக வீங்குதல்; enlargement of the spleen (சா.அக.);.

     [குலை + கட்டி.]

குலைக்கல்

 குலைக்கல் kulaikkal, பெ.(n.)

   கோரோசனை; bezoar (w);.

     [குலை + கல்.]

குலைக்கால்

குலைக்கால் kulaikkāl, பெ.(n.)

   முடவாட்டுக்கால்; coral stone.

   2. ஒருவகை மரம்; an unknown tree (சா.அக.);.

     [குலை + கால்.]

குலைக்கீசம்

 குலைக்கீசம் kulaikācam, பெ.(n.)

ஆட்டுலா மரவகை,

 akind of tree(சா.அக.);.

குலைசூலை

குலைசூலை kulaicūlai, பெ.(n.)

   ஈரற் குலையில் உண்டாகும் ஒரு குத்தல் நோய்; a disease of the liver.

   2. நெஞ்சுவலி; chest ache (சா.அக.);.

     [குலை + சூலை.]

குலைச்சல்

 குலைச்சல் kulaiccal, பெ.(n.)

   அழிவு; destruction, ruin (இ.வ);.

     [குலைத்தல் → குலைச்சல்.]

குலைஞ்சி

 குலைஞ்சி kulaiñji, பெ.(n.)

   பனஞ்செறும்பு; palmyra spathe.

     [குலை → குலைஞ்சி.]

குலைதறி

 குலைதறி kulaidaṟi, பெ.(n.)

   குலையை ஒரே வெட்டாக வெட்டுகை; cutting of a bunch of fruits at one stroke (w.);.

     [குலை → தறி.]

குலைதள்ளு-தல்

குலைதள்ளு-தல் kulaidaḷḷudal,    7 செ.கு.வி.(v.i.)

   குலையாக ஈனுதல்; to shoot forth in clustors, bunches, as fruits, flowers, etc (கொ.வ.);.

     [குலை + தள்ளு-.]

குலைத்துக்காட்டு-தல்

குலைத்துக்காட்டு-தல் kulaiddukkāṭṭudal,    11.செ.கு.வி. (v.i.)

   1. குலைத்து அறிவித்தல்; to give notice, warm, as dogs by barking.

   2. பூத பைசாசங்களின் வரவைக் கருநாய் குறிப்பிடுதல்; to point out demons in times ofepidemics, as black dogs whose sight is supposed to be especially keen.

     [குலைத்து + காட்டு-.]

குலைநெரியற்றேங்காய்

 குலைநெரியற்றேங்காய் kulaineriyaṟṟēṅgāy, பெ.(n.)

   குலை நெருக்கத்தால் சிறுகிய தேங்காய்; coconut not developed to its full size on account of pressure in the bunch.

     [குலை + நெரியல் + தேங்காய்.]

குலைநோய்

 குலைநோய் kulainōy, பெ.(n.)

குலையெரிவு பார்க்க;See. {kula-y-ervu.}

     [குலை + நோய்.]

 குலைநோய் kulainōy, பெ.(n.)

   ஈரல்நோய்; liver complaint.

     [குலை + நோய்.]

குலைபடுவன்

 குலைபடுவன் kulaibaḍuvaṉ, பெ.(n.)

   ஈரற்குலைப் புண்; tumours, ulcers, in liver or lungs.

     [குலை + படுவன்.]

குலைபிடித்தல்

குலைபிடித்தல் kulaibiḍittal,    4 செ.வி. (v.t.)

   குலையை இழுத்துப் பிடிக்கும் ஒரு நோய்; spasm of any of the visceral organs (சா.அக.);.

     [குலை + பிடி-.]

குலைபோடு-தல்

குலைபோடு-தல் kulaipōṭudal,    5 செ.கு.வி.(v.i.)

குலைதள்ளுதல் பார்க்க;;See. {kulai-tallutal}

     [குலை + போடு-.]

குலைப்பதைப்பு

குலைப்பதைப்பு kulaippadaippu, பெ.(n.)

   நெஞ்சுத் துடிப்பு; palpitation of the heart.

   2. பயம், குளிர் இவற்றால் ஈரற்குலை காணும் நடுக்கம்; a trembling movement of the internal organs, due to nervous anxiety, fear, cold or other causes (சா.அக.);.

     [குலை + பதைப்பு.]

குலைப்பன்

குலைப்பன் kulaippaṉ, பெ.(n.)

   1. குளிர்காய்ச்சல்; shivering fits in fever, rigor.

   2. கக்குவான்; whooping cough.

     [குலை → குலைப்பன்.]

குலைப்பரு

 குலைப்பரு kulaipparu, பெ.(n.)

   குலையி லுண்டாகும் பரு; a tumour orother swelling in the viscera (சா.அக.);.

     [குலை + பரு.]

குலைப்பு

குலைப்பு1 kulaippu, பெ.(n.)

நடுக்குவாதம் shivering fits.

     “முயலகன் குலைப்பொடு” (திருப்பு.252);.

     [குலை → குலைப்பு.]

 குலைப்பு2 kulaippu, பெ.(n.)

   குரைக்கை; barking, snarling (கொ.வ.);.

     [குலை → குலைப்பு.]

குலைப்புநடுக்குவாதம்

குலைப்புநடுக்குவாதம் kulaippunaḍukkuvātam, பெ.(n.)

 shaking palsy.

   2. நடுக்குவலி; shiveringfits.

   3. குரைக்கை; bark.

     [குவைப்பு + நடுக்கு + வாதம்.]

குலைமரம்

 குலைமரம் kulaimaram, பெ.(n.)

   இடலை மரம்; idalai

     [குலை + மரம்.]

குலைமுட்டி

 குலைமுட்டி kulaimuṭṭi, பெ.(n.)

குலையெரிவு பார்க்க;See. {kula-y-erwu}

     [குலை + (முட்டு); முட்டி.]

குலைமுட்டிநோய்

 குலைமுட்டிநோய் kulaimuṭṭinōy, பெ.(n.)

   மூச்சுப்பை இறுகுவதனால் மூச்சுத் திணறும்படி செய்யும் கால்நடைகளுக்கு வரும் நோய்; a disease in caltle marked by congestion of the lungs with hard breathing (சா.அக.);.

     [குலை + முட்டி + நோய்.]

குலையாத்திரம்

 குலையாத்திரம் kulaiyāttiram, பெ.(n.)

   தீராப்பசி’; insatiable appetite, craving for food.

     [குலை + ஆத்திரம்.]

குலையிலுதை-த்தல்

குலையிலுதை-த்தல் kulaiyiludaiddal,    4 செ.கு.வி. (v.i.)

   வயிற்றிலுதைத்தல்; kicking in the pit of the stomach (சா.அக.);.

     [குலையில் + உதை-.]

குலையுயிர்

 குலையுயிர் kulaiyuyir, பெ.(n.)

   இருதயத்தை விட்டுப் பிரியும் உயிர்; life expected to leave the heart, life in danger.

குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடந்தான் (சா.அக.);.

     [குலை + உயிர்.]

குலையெரிவு

குலையெரிவு kulaiyerivu, பெ.(n.)

   மார்பெரிச்சல் (ஆங்.மருத்.);; heart burn, irritation in the chest.

     [குலை + எரிவு.]

 குலையெரிவு kulaiyerivu, பெ.(n.)

   செரியாமை யினால் நெஞ்செரிச்சலையுண்டாக்கும் ஒரு நோய்; heart burning arising from dyspepsia.

   2. வயிற்றில் ஏற்படும் ஒரு குழப்பம்; an uneasy or painful sensation in the stomach (சா.அக.);.

     [குலை + எரிவு.]

குலையோடே

 குலையோடே kulaiyōṭē,    பெ.எ.(adv.) முழுதும்; wholly without exception, root and branch

     “கொத்தோடே குலையோ” (கொ.வ);.

     [குலை + ஓடு + ஏ.]

குலைவட்டம்

குலைவட்டம் kulaivaṭṭam, பெ.(n.)

   1. அம்புக் குதை; notch at the end of an arrow.

     “குலைவட்டக் குருதியம்பு” (சீவக.2184);.

     [குலை + வட்டம்.]

குலைவயிறு

 குலைவயிறு kulaivayiṟu, பெ.(n.)

ஈரலடி,

 the bottom portion of the liver adjoining the stomach (சா.அக.);.

     [குலை+வயிறு]

 குலைவயிறு kulaivayiṟu, பெ.(n.)

   ஈரலடி; the bottom portion of the liver, adjoining the stomach (சா.அக.);.

     [குலை + வயிறு.]

குலைவற்றல்

 குலைவற்றல் kulaivaṟṟal, பெ.(n.)

   ஈரற்குலை வற்றுதல்; atrophy of the liver.

ஈரல் குலை வற்றக் கத்தினேன் (சா.அக.);.

     [குலை + வற்றல்.]

குலைவளி

 குலைவளி kulaivaḷi, பெ.(n.)

   வளிநோய் வகை; poricarditis.

     [குலை + வளி.]

குலைவாயு

 குலைவாயு kulaivāyu, பெ.(n.)

குலைவளி பார்க்க;See. {kula}

     [குலை + வாயு.]

குலைவாழை

குலைவாழை kulaivāḻai, பெ.(n.)

   ஒருவகை வாழை; a species of plantain.

     “குலைவாழை பழுத்த” (சீவக. 1191);.

     [குலை + வாழை.]

குலைவியாதி

 குலைவியாதி kulaiviyāti, பெ.(n.)

குலைநோய் பார்க்க;See. {kulandy.}

     [குலை + வியாதி.]

குலைவிலை

 குலைவிலை kulaivilai, பெ.(n.)

   மரத்திலிருக்கும் போதே பனங்காய்க் குலையை விற்கை; sale of palmyra fruits while on the tree.

     [குலை + விலை.]

குலைவெட்டி

குலைவெட்டி kulaiveṭṭi, பெ.(n.)

   வரிவகை; a tax.

     “குலைவெட்டியும் குரப்புவெட்டியும்” (S.l.l.viii.322);.

     [குலை + வெட்டி.]

குலோடி

 குலோடி kulōṭi, பெ.(n.)

   தொப்புள் பகுதி; navel region.

குலோத்துங்கசோழனுலா

குலோத்துங்கசோழனுலா kulōttuṅgacōḻṉulā, பெ.(n.)

   பன்னிரண்டாம் நூற்றாண்டில் ஆண்ட இரண்டாங் குலோத்துங்க சோழன்மேல் ஒட்டக் கூத்தர் பாடிய உலாச் சிற்றிலக்கியம்; a poem on the chola king {kulöttunga} II by {Küttar,} 12th C.

     [குலோத்துங்க சோழன் + உலா.]

குலோத்துங்கன்

குலோத்துங்கன்1 kulōttuṅkaṉ, பெ.(n.)

   இராசேந்திரச் சோழனின் பெயரன்; grandson of Rajëndira-c-colad.

     [குலம்+அத்து+துங்கன்]

இவன் தாய் வழியில் சோழன். தந்தை வழியில் சாளுக்கியன். அநபாயன், அபயன்,

கரிகாலன், ஜயதரன் எனும் பெயர்களும் இவனுக்குண்டு. பெரியபுராணம், தண்டியலங்காரம், கலிங்கத்துப் பரணி, முதலிய சிற்றிலக்கியங்களில் இவனைக் குறித்துக் கூறப்பட்டுள்ளது. அம்மங்கை என்னும் பெண்ணும், குந்தவை என்னும் தமக்கையும் இருந்தனர். தனது தளபதி கருணாகரத் தொண்டைமானின் உதவியுடன் கலிங்க நாட்டை வென்றான். திரிபுவன சக்கரவர்த்தி, கங்கம் தவிர்த்த சோழன், பேரம்பலம் பொன் வேய்ந்த சோழன் முதலிய பட்டங்கள் உடையவன். ஒட்டக்கூத்தரிடம் கல்வி பயின்ற இவன் சிறந்த சிவபத்தன். பாடல் இயற்றுவதில் வல்லவன். திருநீற்றுச் சோழன் எனும் இவன் பெயரில் தென்னாட்டில் ஓர் ஊர் உள்ளது (அபி.சிந்:);.

 குலோத்துங்கன் kulōttuṅgaṉ, பெ.(n.)

   1. குலத்திற் சிறந்தவன்; eminent person of a family

   2. சோழவரசர்கள் சிலர் பூண்ட பெயர்; name ofsome Chola kings (Ins.);

     [குலம் + உத்துங்கன்.]

குலோத்துங்கபாண்டியன்

 குலோத்துங்கபாண்டியன் kulōttuṅkapāṇṭiyaṉ, பெ.(n.)

   ஒரு பாண்டிய மன்னன்; a Pandiya king (அபி.சிந்.);.

     [குலம்+அத்து+துங்கன்+பாண்டியன்.]

குலோப்சாமூன்

 குலோப்சாமூன் kulōpcāmūṉ, பெ.(n.)

   மைதாமாவைச் சில உருண்டைகளாக உருட்டிப் பொரித்து சருக்கரைப் பாகில் (சீராவில்); போட்டு ஊறவைத்துச் செய்யும் ஓர் இனிப்பு வகை; brownroasted-balls soaked in sugar treacle.

த.வ. பாகுபணியாரம்.

     [Ar.{} → த.குலோப்ஜாமூன்.]

குலோமன்

 குலோமன் kulōmaṉ, பெ.(n.)

   வலது நுரையீரல்; the right lung (சா.அக.);.

     [குலை → குலைமம் → குலோமம் → குலோமன்.]

குலோமம்

குலோமம் kulōmam, பெ.(n.)

   1. பக்கவிலாவின் சவ்வு; membrance.

   2. வலது பக்கத்துப் கீழ்ப்பகுதியில் குடித்த நீர், இறங்கி நிற்குமிடம்; that portion at the bottom of the stomach on the right side where the water drunk collects. (சா.அக.);.

     [குலை → குலைமம் →குலோமம்.]

குலோமி

 குலோமி kulōmi, பெ.(n.)

   வெள்ளறுகு (மலை.);; small chiretta, white doob grass.

     [குல் →குலமி → குலோமி.]

குலோமிசை

 குலோமிசை kulōmicai, பெ.(n.)

   மருந்திற்குப் பயன்படும் பொருட்களைத் தரும் செடிவகை; sweet flag – Acorus Calamus (செ.அக.);.

 குலோமிசை kulōmisai, பெ.(n.)

   வசம்பு; sweet-flag-calamus indicus.

குல்

குல்1 kul, வேர்.(v.r.)

   1. முற்படுதல்; to move forward, to go forward.

   2. அசைதல்; to move the body in a graceful and affected manner.

   3. மேலெழும்புதல், உயர்தல்; to go up.

   4. வளர்தல்; to grow.

   5. விரைதல்; to go fast, hasten.

   6. மிகுதிப்படுதல்; to become excess.

   7. பரவுதல்; to spread.

   த. குலுங்கு;   தெ. குலுகு (அசைதல்);;   குவி. குலு (பரவுதல்);, க்லை(தவசம்.அடிக்கும்.அகன்ற களம்);;கோத. குல்க் (அசைத்தல்);.

     [உல் → குல்.]

 குல்2 kul, வேர்.(v.r.) (தோன்றல் கருத்துல்)

   1. தோன்றுதல்; to orginate, to appear.

   2. முளைத்தல்; to spout.

   3. மென்மைப்படுதல்; to become thin.

   4. இளமையாதல், அழகாதல்; to become, young, beautiful.

   5. பெரிதாதல்; to grow big.

   6. மேலெழும்புதல்; to rise.

   7. குதித்தல்; to jump.

   பட குல்லுமாடு(அடையாளம் வெளிப்படுதல்);;   த.குல் → குன்னி (குஞ்சு);;நன்னி குன்னி (சின்னஞ் சிறியவை);, இளங்குழந்தைகள். து. குல்ல ஆபுனி (எல்லோருக்கும் தெரியும்படி வெளிப்படுத்துதல்);.

     [உல் → குல்.]

 குல் kul, வேர்.(v.r.) (பொருந்துதல் கருத்து)

   1. பொருந்துதல்; to fit, tofix.

   2. அளத்தல்; to measure.

   3. எண்ணுதல்; to count.

   4. சேர்த்தல், கூடுதல்; to join, to collect.

   5. திரளுதல், குவிதல்; to ammulate, to heap.

   6. குழுமுதல்; to assemble.

   த. குல் → குலவு → குலம் → குழு ? குடும்பு → குடும்பம் → குலை → கொலு. கோத. கில்(எலும்பு);பொருத்து, கதவுப்பொருத்து);;   கொலா. குல் (எண்ணிக்கை எண்ணுதல்;   குல்ல் (அளத்தல்);;   பர். குலுன்;     [உல் → குல்.]

 குல்4 kul, வேர்.(v.r.) (நெருங்குதல் கருத்து)

   1. நெருங்குதல்; to go near, to approach.

   2. தொடுதல்; to touch.

   3. உராய்தல்; rub.

   4. எரிதல்; to burn.

   5. சிவத்தல்; to become red.

   6. உலர்தல்; to dry.

   7. ஒளிர்தல்; to brighten.

   8. வெண்மை; white.

   த. குல் → கொல் → கொல்லன். பிராகு. குலி (அச்சம்); க.,தெ. குல்லு(பேரிரைச்சல்);;   க.குலி(கொலையாளி);, குலுகு (நோய்);;   குல்மெ(கொல்லன் உலை);;கீல் (குத்தும் ஆணி, ஆப்பு); மால். கல்கெ (கடித்தல்);.

     [உல் → குல்.]

 குல்5 kul, வேர்.(v.r.) (குத்துதல் கருத்து)

   1. குத்துதல்; to pierce.

   2. தோண்டுதல்; to dig.

   3. துளைத்தல்; to make a hole, bore.

   4. ஊடுருவுதல்; to penetrate.

த. குல் → கொல். ம.க. கொல்.

     [உல் → குல்.]

 குல்6 kul, வேர்.(v.r.) (தாக்குதல் கருத்து)

   1. அடித்தல்; to strike

   2. முழக்குதல், ஒசையெழுப் புதல்; to make noise.

   3. தாக்குதல், வெட்டுதல்; to attack, to cut.

   4. கொல்லுதல்; to kill.

   5. துன்புறுத்துதல்; to trouble, to annoy.

   6. அச்சுறுத்துதல்; to frighten.

   7. கெடுத்தல், அழித்தல்; to ruin, destroy.

   குல் → கொல் → கொல்லன். பிராகு. குலி (அச்சம்); க.தெ. குல்லு (பேரிரைச்சல்);;க.குலி(கொலையாளி); குலுகு (நோய்); குல்மெ(கொல்லன் உலை);, கீல் (குத்தும் ஆணி ஆப்பு); மால். கல்கெ (கடித்தல்);.

     [உல் → குல்.]

 குல்7 kul, வேர்.(v.r.) (வளைதல் கருத்து)

   1. வளைதல்; to bend

   2. சுற்றுதல், உலாவுதல்; to go round.

   3. சுழலல்; to rotate.

   4. வட்டமாதல்; to become round.

   த. குலுக்கை (வட்டமான குதிர்);;   க. கோல்;   தெ. கொலமு;   ம. கோலம் (வட்டப்படகு);;   பாலி. குல்ல(படகு);;   கொண். கல (இலைக்கலம்);;   குவி. கலி;ம. க.லெ. த. கலம்);.

     [உல் → குல்.]

 குல்8 kul, வேர்.(v.r.) (உள்ளொடுங்கல் கருத்து)

   1. உள்ளொடுங்குதல்; to become lean, to emaciate.

   2. சிறிதாதல்; to become small in size.

   3. தாழ்தல் கீழிறங்குதல்; to come down, to alight.

   4. உள்ளடங்குதல்; to be inside.

   5. ஒளிதல், மறைதல்; to hide, conceal. குல் → குள் → குளித்தல் (மூழ்குதல்);

     [உல் → குல்.]

 குல்9 kul, வேர்.(v.r.) (கருமைக் கருத்து)

   1. குழி; pit.

   2. இருள்; darkness.

   3. கருமை; blackness.

   குரு. கூல் (வயிறு);;   மா. கொலி (வயிறு);;பிராகு. கோல் (வயிறு);. து.க., கல்லி (பின்னிய பை);.

     [உல் → குல்.]

 குல் kul, பெ.(n.)

   மொத்தம்; all, total (C.G.);.

     [U.kull → த.குல்.]

குல்கந்து

 குல்கந்து kulkandu, பெ.(n.)

   சர்க்கரை அல்லது தேன் கலந்து பக்குவப்படுத்திய முளரி (ரோசா);ப்பூ இதழ்; a confection of rose prepared in sugar or honey-candied rose.

த.வ. தேன்முளரி.

     [Pers.gul=Ar.gand → த.குல்கந்து]

குல்பேரீசு

 குல்பேரீசு kulpērīcu, பெ.(n.)

   மொத்தத் தீர்வை; total revenue.

     [U.kul-{} → த.குல்கேரீசு]

குல்மகேது

 குல்மகேது kulmaātu, பெ.(n.)

   ஆரை; sorrel.

குல்மமூலம்

குல்மமூலம் kulmamūlam, பெ.(n.)

   1 இஞ்சி; ginger, zingiber offinale.

   2. குன்மத்தினால் எழுந்த மூலம்; piles as a result of dyspeptic trouble (சா.அக.);.

குல்மம்

 குல்மம் kulmam, பெ.(n.)

குலுமம் பார்க்க;See. kulmam.

     [குலுமம் → குல்மம்.]

குல்மரோகம்

 குல்மரோகம் kulmarōkam, பெ.(n.)

   மண்ணீரல், ஈரல் முதலியவற்றில் வீக்கம் கண்டு அதனால் ஏற்படும் செரிமானக் கோளாறு (அசீரணம்); முதலிய குணங்கள்; indigestionand its consequent symptoms, due to the enlargement of the spleen,liver etc. abdominal tumor.

த.வ. செரியாநோய்.

குல்மவாதம்

 குல்மவாதம் kulmavātam, பெ.(n.)

   மண்ணீரலைப் பற்றிய ஊதை (வாத); நோய்; a disease of the spleen.

த.வ. ஈரல் ஊதை.

குல்மாசம்

குல்மாசம் kulmācam, பெ.(n.)

   1. கழுநீர்,

 lotion with which wounds are cleaned

   2. புளித்த கஞ்சி; sour-gruel.

   3. ஒரு வகை மொச்சை; a kind of beans – Dolichos genus.

குல்மால்பண்ணு-தல்

குல்மால்பண்ணு-தல் kulmālpaṇṇutal, செ.கு.வி.(v.i.)

   1. புரட்டு செய்தல்; to cheat.

   2. குழப்பஞ் செய்தல்; to create a hubbub (செ.அக.);.

     [கோல்மால்- பண்ணு-தல்→குல்மால் பண்ணு-தல்.]

 குல்மால்பண்ணு-தல் kulmālpaṇṇudal,    5 செ.கு.வி.(v.i.)

   1. புரட்டுச் செய்தல் (இ.வ.);; to cheat.

   2. குழப்பஞ் செய்தல்; to create a hubbub.

த.வ. தகிடுதத்தம் செய்தல், தக்கடி செய்தல்.

     [குல்மால் + பண்ணு-]

     [U.{} → த.குல்மால்.]

குல்யம்

 குல்யம் kulyam, பெ.(n.)

குல்லியம் பார்க்க;see kulliyam.

குல்லகம்

குல்லகம் gullagam, பெ.(n.)

   வறுமை; poverty.

     “குல்லக வேடங் கொண்ட வள்ளல்” (யசோதர.1:23);.

     [குல் → குல்லம் → குல்லகம்.]

குல்லகி

 குல்லகி kullaki, பெ.(n.)

   பூலாச்செடி; black money shrub – Phyllanthus multiflorus (சா.அக.);.

 குல்லகி gullagi, பெ.(n.)

   பூலாச்செடி; black money shrub.

குல்லம்

 குல்லம் kullam, பெ.(n.)

   முறம்; winnowing basket, fan for sifting or winnowing, fanner.

     [குல் → குல்லம்.]

குல்லயம்

குல்லயம்1 kullayam, பெ.(n.)

   1. பிட்டம்; buttocks.

   2. இறைச்சி (மாமிசம்);; flesh, muscle.

 குல்லயம்2 kullayam, பெ.(n.)

   கருங்குவளை; blue nelumbo.

குல்லரி

 குல்லரி kullari, பெ.(n.)

இலந்தை பார்க்க;See. ilandaijujube tree.

ஒ.நோ.குல்வலி.

     [குல் + வரி – குல்வரி → குல்லரி.]

குல்லரிச்சோறு

 குல்லரிச்சோறு kullariccōṟu, பெ.(n.)

   கற்றாழைச்சோறு; aloe pulp (சா.அக.);.

     [குல்லரி+சோறு]

 குல்லரிச்சோறு kullariccōṟu, பெ.(n.)

   கற்றாழைச்சோறு; also pulp.

குல்லா

குல்லா1 kullā, பெ.எ.(adj.)

   வெளியான; open, plain, not hidden.

     [U.{} → த.குல்லா.]

 குல்லா2 kullā, பெ.(n.)

   1. தலைக்கவிப்பு; a kind of cap, skull-cap, night cap, fez.

     “குல்லாவும் தொங்கற் பரியட்டமாகப் பட்டும் பருத்தியும்” (கோயிலொ.36);.

   2. படகின் பாய்மரத்தைக் கட்டுங்கயிறு (யாழ்ப்);; out rigger of a boat.

   3. கவிப்பு (குல்லா);த் தோணி (வின்.);; boat or dhony with an out rigger.

த.வ. கவிப்பு.

     [U.{} → த.குல்லா]

     [P]

குல்லாக்கட்டை

 குல்லாக்கட்டை kullākkaṭṭai, பெ.(n.)

   தொப்பிக் கட்டை; post set up in shallow water to indicate the existence of channel.

மறுவ தொப்பிக்கட்டை

     [குல்லாய் + கட்டை.]

குல்லாச்சிப்பாய்

 குல்லாச்சிப்பாய் kullāccippāy, பெ.(n.)

   காவல் துறையினன்; lit. one who wears a kulla, policeman.

குல்லாச்சேவகன்

 குல்லாச்சேவகன் gullāccēvagaṉ, பெ.(n.)

குல்லாச்சிப்பாய் பார்க்க;see {}.

     [U.kulla → த.குல்லா]

     [Skt.{} → த.சேவகன்.]

குல்லான்

 குல்லான் kullāṉ, பெ.(n.)

   தோண்டுதற்குரிய கூர்மையான முளை; sharp pointed stake for digging (J.);

     [குல்லம் + ஆணி – குல்லாணி → குல்லான்.]

குல்லாப்போடு-தல்

குல்லாப்போடு-தல் kullāppōṭudal,    9 செ.குன்றாவி.(v.t) ஏமாற்றுதல்; lit., to cap one, to cajole coax.

     [குல்லா + போடு-,]

     [U.{} → த.குல்லா.]

குல்லாயிட்டுப்பிறத்தல்

 குல்லாயிட்டுப்பிறத்தல் kullāyiṭṭuppiṟattal, பெ.(n.)

   முகத்தில் சவ்வு மூடிப் பிறக்கை; birth of child with a piece of the amniotic membrance oceasionally covering its face like a veil being born with a caul.

த.வ. மூடுமுகப் பிறப்பு.

     [குல்லா + இட்டு + பிறத்தல்.]

     [U. kulla → த.குல்லா.]

குல்லாய்

குல்லாய் kullāy, பெ. (n.)

   1. தலைக்கு அணியும் தொப்பி; cap.

   2. பாய்மரம்; mart.

{U.kulāh}

     [குல் (வளைவு, மரம் → குல் → குல்லாய்.]

த. குல்லாய் → {ப.kulah}

 குல்லாய் kullāy, பெ.(n.)

குல்லா பார்க்க;see {}

     [U.kulla → த.குல்லாய்.]

குல்லாய்தோணி

 குல்லாய்தோணி kullāytōṇi, பெ. (n.)

   பாய்மரம் பொருத்திய தோணி; a boat with a mart.

{U. kulāh}

     [குல் (வளைவு); மரம் → குல் → குல்லாய்.]

குல்லாய்ப்போடு-தல்

குல்லாய்ப்போடு-தல் kullāyppōṭudal,    20 செ.கு.வி. (v.t.)

   ஏமாற்றுதல்; lit., to cap me, to cajole, coax.

   2. குல்லாய்ப்போடுதல் பார்க்க;See. {ku/āy-pôdu.}

     [குல்லாய் → குல்லா + போடு.]

குல்லாலி

குல்லாலி kullāli, பெ.(n.)

   1. எல்லாம் வல்லவன் (சர்வ சக்தன்);

 the omnipotent.

   2. திறமையானவன் (சாமர்த்தியசாலி);; clever person.

     ‘வைப்பு நிசமாச்சோ குல்லாலி நீயோ’ (விறலி விடுதூது.788);.

த.வ. திறலன்.

     [Ar.{} → த. குல்லாலி.]

குல்லி

 குல்லி kulli, பெ.(n.)

   ஒருவகைப் பூடு; a kind of shrub (j);.

     [குல் → குல்லி.]

குல்லிகம்

 குல்லிகம் gulligam, பெ.(n.)

   சிவப்புக் குன்றிமணி; crab’s eye – abrus precatorius.

த.வ. செங்குன்றி.

குல்லியம்

 குல்லியம் kulliyam, பெ.(n.)

   ஆலோசனை (யாழ்.அக.);; counsel.

     [குல் → குல்லியம்.]

 குல்லியம் kulliyam, பெ.(n.)

   எலும்பு; bone.

குல்லை

குல்லை1 kullai, பெ.(n.)

   1. புனத்துளசி (பிங்.);; wild basil.

   2. துளசி (திவா.);; sacred basil.

   3. வெட்சி

 scarlet ixora.

   4. கஞ்சா (அக.நி.); ; Indian hemp.

     [குள் → குல்லி → குல்லை.]

 குல்லை2 kullai, பெ.(n.)

   ஏய்ப்பு; deceit.

     “குல்லைத் திருடரைநீ கூடாதே” (தெய்வச்.விறலிவிடு.356);.

     [குல் → குல்லை.]

 குல்லை3 kullai, பெ.(n.)

   நாய்த்துளசி; white basil.

     [குல் → குல்லை.]

குல்லையம்

 குல்லையம் kullaiyam, பெ.(n.)

கருங்குவளை,

 black water lily;blue lotus or blue nelumbo – Monochoria vaginalis alias Ponteb deria vaginalis (சா.அக.);.

     [குல்லை+அம்]

குல்லோசிதம்

 குல்லோசிதம் kullōcitam, பெ.(n.)

   பூனைக்காஞ்சொறி; cowhage – Tragia cannabina (சா.அக.);.

 குல்லோசிதம் kullōcidam, பெ.(n.)

   பூனைக் காஞ்சொறி; cowhage-tragia cannabira.

     [P]

குல்வலி

 குல்வலி kulvali, பெ.(n.)

   இலந்தை (மலை.);; jujube tree.

     [குல் + வரி – குல்வரி → குல்வலி.]

குல்வார்

குல்வார் kulvār, பெ.(n.)

   குடியானவருடன் தனித்தனியே செய்யும் ஒப்பந்தம்; individual settlement with ryots. (C.G.119);.

த.வ. உழவர் ஒப்பந்தம்.

     [U.{} → த.குல்வார்.]

குளகச்செய்யுள்

குளகச்செய்யுள் kuḷakacceyyuḷ, பெ.(n.)

   பல பாட்டாய் ஒரு வினை கொண்டு முடிவது (தண்டி.3);; combination of three or more stanzas having a single finite verb, dist. fr. muttakam.

     [குளகம்+செய்யுள்]

குளகன்

குளகன் guḷagaṉ, பெ.(n.)

   இளமையோன்; youth.

     “குளகன் வந்துழி” (கந்தபு.குமார.1);.

     [குழகன் → குளகன்.]

குளகபயம்

குளகபயம் guḷagabayam, பெ.(n.)

   1. முட்துளசி; prickly basil.

   2. சுணையுள்ள துளசி; bristly or sharp basil (சா.அக.);.

     [குள் → குளக → பயம்.]

குளகம்

குளகம்1 guḷagam, பெ.(n.)

   1.மரக்கால் (பிங்.);; standard grain measure.

   2. ஆழாக்கு; dry or liquid measure 1/8 {nási} (V);.

   ம. குளகம்;   க.கொளக;   தெ.கொல;பட.கோக.

     [குளகு → குளகம்.]

 குளகம்2 guḷagam, பெ.(n.)

   பல பாடல்கள் ஒருவினை கொள்ளும் அமைதி (தண்டி.3);; combination of three or more stanzas having single finite verb, dist. fr. Muttakam.

ம. குளகம்

     [குளகு → குளகம்.]

 குளகம் guḷagam, பெ.(n.)

   குற்றெழுத்துத் தொடர்ந்த செய்யுள் (பிங்.);; a poem consisting only of short sounds.

     [குள் → குள்ளகம் → குளகம்.]

 குளகம்4 guḷagam, பெ.(n.)

குராம் பார்க்க;See. {kurām.}

     [குள் → குளகம்.]

குளகறி

குளகறி guḷagaṟi, பெ.(n.)

   வெஞ்சனவகை (பணவிடு.275);; a relish.

     [குளகு + கறி.]

குளகு

குளகு guḷagu, பெ.(n.)

   1. விலங்கின் இலையுணவு; herbs, grass, anything that serves as food for herbivorous animals.

     ‘வாரணமுள்குளகருந்தி’ (கலித்.42);.

   2. குறிஞ்சி நில மகளிர் உடையாகக் கொள்ளும் தழை; foliage,sewing as clothes for women of the hill tract.

     “குளகரைச் சுற்றியி குறமடந்தையர்” (காசிக.44:16);.

   3. இலைக்கறி; greens, pornerbs.

ஒ.நோ.குழை.

 Fin. kiltti;

 FD. killi,Koraga. killi(small);:Mong, kili

     [குள் → குளகு.]

குளகுள-த்தல்

குளகுள-த்தல் guḷaguḷattal,    4 செ.கு.வி.(v.i.)

   நெகிழ்ந்திருத்தல்; to grow soft, as jaggery, to become pulpy, to be loosely set.

     [குள + குள.]

குளகுளத்தபுண்

 குளகுளத்தபுண் guḷaguḷattabuṇ, பெ.(n.)

   அழுகிய புண்; putrid or rolton sore (சா.அக.);

     [குள + குள – குளகுள → குளகுளத்த புண்.]

குளகுளவெனல்

 குளகுளவெனல் guḷaguḷaveṉal, பெ.(n.)

   குளகுளெ என்னும் ஒலிககுறிப்பு; onom expr.

குளகுளவென்று கொதிக்கிறது.

     [குள + குள + எனல்.]

குளகுளெனல்

குளகுளெனல் guḷaguḷeṉal, பெ.(n.)

   1. ஓர் ஒலிக்குறிப்பு; onom. Expr. signifying gurgling sound, as water when boiled.

   2. நெகிழ்ந்திருக்கை; growing soft, as jaggery, becoming pulpy.

     [குள + குள + எனல்.]

குளக்கடவு

 குளக்கடவு kuḷakkaḍavu, பெ.(n.)

   குளத்தில் இறங்கிக் குளிக்கும் படித்துறை; a bathing ghat.

மறுவ. படித்துறை

ம. குளக்கடவு

     [குளம் + கடவு.]

குளக்கட்டியெனல்

 குளக்கட்டியெனல் kuḷakkaṭṭiyeṉal, பெ.(n.)

   ஊறுதியற்றுத் தளர்தலை யுணர்த்தும் குறிப்பு; expr. signigying the falling of anything infirm or loosely set, as the head of an infant.

     [குளக்கட்டி + எனல். ‘குளக்கட்டி’ ஒலிக்குறிப்புச் சொல்.]

குளக்கட்டு

குளக்கட்டு kuḷakkaṭṭu, பெ.(n.)

   1. குளத்தின் கரையைக் கட்டுகை; constructing the bund of a tank.

   2. குளத்திற்குக் கட்டப்பட்ட கரை; artificial bund of a tank.

     [குளம் + கட்டு.]

குளக்கன்

குளக்கன் kuḷakkaṉ, பெ.(n.)

   மீன்வகை; a kind of fish.

     “பறவையுறவி குளக்கன்றோகை” (பறாளை, பள்ளு.15);.

     [குள் → குளக்கன்.]

குளக்கமலம்

 குளக்கமலம் kuḷakkamalam, பெ.(n.)

   வைப்பரி தாரம்; a prepared orpiment (சா.அக.);.

     [குள் → குள + கமலம்.]

குளக்கரையில்வசித்தசத்தி

 குளக்கரையில்வசித்தசத்தி kuḷakkaraiyilvacittacatti, பெ.(n.)

   சத்தி சாரணை; spreading hogweed – Boerhavia repens (சா.அக.);.

குளக்கால்

 குளக்கால் kuḷakkāl, பெ.(n.)

   குளத்துக்கு நீர்வரும் வாய்க்கால்; fedding channel of a tank.

     [குளம் + கால்.]

குளக்கிழாத்தி

 குளக்கிழாத்தி kuḷakkiḻātti, பெ.(n.)

   ஒரு ஆற்றுமீன் (மீன்.பிடிசொ.தொ.);; a river fish.

     [குளம் + கிளாத்தி.]

குளக்கீழ்

 குளக்கீழ் kuḷakāḻ, பெ.(n.)

   குளத்தின் மதகையடுத்துள்ள வயல்; field in front of the sluice gate of a tank.

     [குளம் + கீழ்.]

குளக்குத்தல்

 குளக்குத்தல் kuḷakkuttal, பெ.(n.)

   குளத்தை அடுத்திருப்பதால் மனைகட்கு உண்டாகும் கேடு; insecurity to a house from its proximity to a tank.

     [குளம் + குத்தல்.]

குளக்குரிமையாசான்

 குளக்குரிமையாசான் kuḷakkurimaiyācāṉ, பெ.(n.)

   செம்பருந்து; red kite (சா.அக.);.

     [குளம் + கு + உரிமை + ஆசான்.]

குளக்குருவி

குளக்குருவி kuḷakkuruvi, பெ.(n.)

   1. நண்டு; crab. living in tanks.

   2. ஆற்று நண்டு; rivier crab. (சா.அக.);.

     [குளம் + குருவி.]

குளக்கெழுத்தி

குளக்கெழுத்தி kuḷakkeḻutti, பெ.(n.)

   1. ஆற்று மீன் வகை; largeriver-fish, silvery, attaining more than 4 ft. in length, 2.15 sitsusmã, cat-fish.

     [குளம் + கெழுத்தி.]

குளக்கொட்டி

 குளக்கொட்டி kuḷakkoṭṭi, பெ.(n.)

   ஒருவகை நீர்ப் பூடு; a tankplant.

     [குளம் + கொட்டி.]

குளக்கொட்டு

 குளக்கொட்டு kuḷakkoṭṭu, பெ.(n.)

   களைக் கொட்டு; kind of small hoe or spade for cutting weeds.

     [குள்ள → குள + கொட்டு.]

குளக்கோடன்

குளக்கோடன் kuḷakāṭaṉ, பெ.(n.)

   ஒரு மன்னன்; a king.

இவன் திருக்கோணை மலையில் பல திருப்பணிகள் செய்தான். இவன் குமாரன் குளங்கோட்டன் (அபி.சிந்);.

     [குளம்+கோடு+அன்.]

 குளக்கோடன் kuḷakāṭaṉ, பெ.(n.)

   ஈழத்துத் திருக்கோணமலையில்கோயில் கட்டிய வனாகவும் ஈழம் தனித்தீவாகப் பிரிவதற்கு முன்பு வாழ்ந்தவனாகவும் கூறப்படும் தமிழ் மன்னன்; A Tamil king considered to have built a temple at Thirukonamalai in Srilanka and lived before the deluge which separated Srilanka from Tamilnadu.

     “முன்னே குளக்கோடன் மூட்டு திருப் பணியை”(கல்வெட்டுவெண்பா);.

     [குளம்+கோடன்]

இவன் காலம் கலியாண்டு 512 (கி.மு.2590); எனக் குடந்தை ந. சேதுராமன் குறிப்பிடுகின்றார். (1994);.

குளக்கோரை

 குளக்கோரை kuḷakārai, பெ.(n.)

   பெட்டிக் கோரை; a glabrous rush like sedge.

     [குளம் + கோரை.]

குளங்கந்தம்

 குளங்கந்தம் kuḷaṅkantam, பெ.(n.)

   நஞ்சுப் பாலை; a kind of milky plant (சா.அக.);.

     [குளம்+கந்தம்]

குளங்கரை

குளங்கரை kuḷaṅgarai, பெ.(n.)

   தடாகத்தின் கரை (சீவக.1488.உரை.);; bank or bund of a tank.

     [குளம் + களை.]

குளங்காந்தம்

 குளங்காந்தம் kuḷaṅgāndam, பெ.(n.)

   நச்சுப் பாலை; a kind of milky plant, used as an antidote to snake pite (சா.அக.);.

     [குள் + அம் + காந்தம்.]

குளங்கி

 குளங்கி kuḷaṅgi, பெ.(n.)

   குன்றி; snake fruit (சா.அக.);.

     [குள் → குள்ளங்கி → குளங்கி.]

குளங்கோவை

 குளங்கோவை kuḷaṅāvai, பெ.(n.)

   நீர்ப்பிடியில் உண்டாகும் குளநெல் சாகுபடி; cultivation in the bed of a tank.

     [குளம் + கோவை.]

குளசு

 குளசு kuḷasu, பெ.(n.)

குழைச்சு பார்க்க;See. {kulaccu.}

     [குழைச்சு → குளசு.]

குளச்சம்பு

 குளச்சம்பு kuḷaccambu, பெ.(n.)

   பத்தியத்திற்கு உதவும் குளத்து நத்தை; tank snail useful in diet (சா.அக.);.

     [குளம் + சம்பு.]

குளச்சிப்பி

 குளச்சிப்பி kuḷaccippi, பெ.(n.)

   குளத்திலகப்படும் சிப்பி; oyester shell found in tanks (சா.அக.);

     [குளம் + சிப்பி.]

குளச்சு

 குளச்சு kuḷaccu, பெ.(n.)

குழைச்சு பார்க்க;See. {ku/accu.}

     [குழைச்சு + குளச்சு.]

குளச்செந்நெல்

 குளச்செந்நெல் kuḷaccennel, பெ.(n.)

குளநெல் பார்க்க;See. {kufane/}

     [குளம் + செந்நெல்.]

குளச்சேம்பு

 குளச்சேம்பு kuḷaccēmbu, பெ.(n.)

   ஒருவகைச் சேம்பு; a kind of colocasia.

ம. குளச்சேம்பு

     [குளம் + சேம்பு.]

குளஞ்சி

 குளஞ்சி kuḷañji, பெ.(n.)

   கிச்சிலி; sylhet orange.

     [கொழுஞ்சி → குளஞ்சி.]

குளத்தடி

 குளத்தடி kuḷattaḍi, பெ.(n.)

   குளத்தருகிலுள்ள வயல்; paddy field adjoining a tank.

ம. களத்தடி

     [குளம் + அத்து + அடி.]

குளத்தட்டி

 குளத்தட்டி kuḷattaṭṭi, பெ.(n.)

   மீன் பிடிக்க இடும் சிற்றணை; small dam across a channel, with a row of split bamboos in it, put up in fishing (செ.அக.);.

     [குளம்+தட்டி]

குளத்தாங்கரை

குளத்தாங்கரை1 kuḷattāṅgarai, பெ.(n.)

   குளத்தின் கரை; bank or bund of a tank.

ம.குளங்கரை

     [குளம் + அத்து + கரை.]

 குளத்தாங்கரை2 kuḷattāṅgarai, பெ.(n.)

குளத் தங்கரை பார்க்க;See. {kulattarikarai}

     [குளம் + அத்து + கரை.]

குளத்தி

குளத்தி kuḷatti, பெ.(n.)

   நாறுகரந்தை; Indian.globe thistle.

   2. சிவகரந்தை; Ceylon toolsy (சா.அக.);.

     [குள்ளம் → குளம் → குளத்தி(சிறியது.);]

குளத்தியா

 குளத்தியா kuḷattiyā, பெ.(n.)

   கொடி முந்திரி வகை; grapes (rசா.அக.);.

     [குளத்தி(சிறியது); → குளத்தியாள் → குளத்தியா.]

குளத்திலமர்ந்த மரத்தி

 குளத்திலமர்ந்த மரத்தி kuḷattilamarndamaratti, பெ.(n.)

   நாக சிங்கி; a tree supposed to be found growing in tanks (சா.அக.);.

     [குளத்தில் + அமர்ந்த + மரத்தி.]

குளத்தில் நிற்கும்துளசி

 குளத்தில் நிற்கும்துளசி kuḷattilniṟkumtuḷasi, பெ.(n.)

   அரத்த மண்டலிப்பூடு (சா.அக.);; a herb.

     [குளத்தில் + நிற்கும் + துளசி.]

குளத்து நண்டு

 குளத்து நண்டு kuḷattunaṇṭu, பெ.(n.)

   குளத்தில் வாழும் நண்டு; pond-crab – Potamon (சா.அக.);.

     [குளத்து+நண்டு.]

     [P]

குளத்துக்கடவு

 குளத்துக்கடவு kuḷattukkaḍavu, பெ.(n.)

   குளத்தில் இறங்கிக் குளிக்க ஏதுவாக அமைந்த இடம்; a bathing ghat.

ம. குளக்கடவு

     [குளம் + அத்து + கடவு.]

குளத்துக்கிழங்கு

 குளத்துக்கிழங்கு kuḷattukkiḻṅgu, பெ.(n.)

   குளத்தில் முளைக்குங் கொட்டிக் கிழங்கு; small bulbous root ofan aquatic plant (சா.அக.);.

     [குளத்து + கிழங்கு.]

குளத்துக்குப்போ-தல்

குளத்துக்குப்போ-தல் kuḷattukkuppōtal,    8 செ.கு.வி. (v.i.)

   மலங்கழித்தல் (கொ.வ.);; lit., to go to a tank, to go to a stool, evacuate.

     [குளம் + அத்து + கு + போதல்.]

குளத்துக்குருவி

 குளத்துக்குருவி kuḷattukkuruvi, பெ.(n.)

குள நண்டு பார்க்க;See. {kulanangu.}

     [குளம் + அத்து + குருவி.]

குளத்துக்குள் உருத்திராக்கம்

 குளத்துக்குள் உருத்திராக்கம் kuḷattukkuḷuruttirākkam, பெ.(n.)

   நத்தை; snail (சா.அக.);.

     [குளம் + அத்து + கு + உள் + உத்திராக்கம்.]

குளத்துக்குள் குறத்தி

குளத்துக்குள் குறத்தி kuḷattukkuḷkuṟatti, பெ.(n.)

   1. நீரறளி; water gannaire.

   2. வல்லாரை; Indian penny-wort(சா.அக.);.

     [குளம் + அத்து + கு + உள் + குறத்தி.]

குளத்துக்கொக்கு

 குளத்துக்கொக்கு kuḷattukkokku, பெ.(n.)

   ஒரு வகைப் பறவை; the pond-heron.

ம.குளக்கொக்கு

     [குளம் + அத்து. கொக்கு.]

குளத்துக்கோரை

 குளத்துக்கோரை kuḷattukārai, பெ.(n.)

   குளத்தில் முளைக்கும் கோரைப்புல்; a species of sedge-grass found in tanks (சா.அக.);.

     [குளத்து + கோரை.]

குளத்துக்கோழி

 குளத்துக்கோழி kuḷattukāḻi, பெ.(n.)

   நீரில் வாழும் ஒருவகைப் பறவை; the water fowl.

ம. குளக்கோழி

     [குளம் + அத்து + கோழி.]

     [P]

குனத்துக்கோழி

குளத்துச்சிப்பி

 குளத்துச்சிப்பி kuḷattuccippi, பெ.(n.)

   கிளிஞ்சில்; bi-valve shell (சா. அக.);.

     [குளத்து + சிம்பி.]

குளத்துத்திடல்

 குளத்துத்திடல் kuḷattuttiḍal, பெ.(n.)

கிளிஞ்சில்:

 bi-valveshell so called from its being found on or collected from tank beds (சா.அக.);.

     [குளத்து + திடல்.]

குளத்துநீர்

 குளத்துநீர் kuḷattunīr, பெ.(n.)

   வாத நோயை உண்டுபண்ணும் குளத்துத் தண்ணீர்; tank water promoting rheumatism (சா.அக.);.

     [குளம் + அத்து + நீர்.]

குளத்துப்படி

 குளத்துப்படி kuḷattuppaḍi, பெ.(n.)

   குளத்தில் இறங்கி வருவதற்கு ஏதுவாக அமைக்கப்படும் படிக்கட்டு; the paved steps of a pond.

ம.குளப்பட, குளப்படவு.

     [குளம் + அத்து + படி.]

குளத்துப்பாசி

 குளத்துப்பாசி kuḷattuppāci, பெ.(n.)

   குளத்தில் படரும் பாசி; moss or weed in tank water (சா.அக.);.

     [குளத்து+பாசி]

குளத்துப்புட்பம்

 குளத்துப்புட்பம் kuḷattuppuṭpam, பெ.(n.)

   குளத்தில் வளரும் தாமரை, அல்லி முதலியன; lotus, nymphae etc., growing in tanks (சா.அக.);.

     [குளத்து+புட்பம்]

குளத்துமுட்டை

 குளத்துமுட்டை kuḷattumuṭṭai, பெ.(n.)

   காய்ந்த எரு; dried cow dung found in grazing plains or maidans (சா.அக.);.

     [குளத்து + முட்டை.]

குளத்துள்வாய்

குளத்துள்வாய் kuḷattuḷvāy, பெ.(n.)

   1.குளத்தின் உள்ளிடம்; bed of a tank.

   2. குளத்தின் மடை யருகில் ஆழ்ந்துள்ள உள்ளிடம்; deep par of a tank near the flood gate (W);.

     [குளத்து + உள் + வாய்.]

குளத்தோண்டி

குளத்தோண்டி kuḷattōṇṭi, பெ.(n.)

   1. குளம் தோண்டும் தொழிலாளி; one who makes a living by digging wells,ponds, etc.

   2. அழிக்கும் வேலை செய்பவன்; one who ruins.

     [குளம் + தோண்டி.]

குளநண்டு

 குளநண்டு kuḷanaṇṭu, பெ.(n.)

   நண்டு வகை; pond crab.

     [குளம் + நண்டு.]

     [P]

குளநண்டு

குளநாவல்

 குளநாவல் kuḷanāval, பெ.(n.)

   குளத்தில் வசிக்கும் நண்டு; pond crab (சா.அக.);.

     [குளம் + நாவல்.]

குளநெல்

குளநெல் kuḷanel, பெ.(n.)

   குளத்தின் நீர்ப்பிடியில் தானாக விளையும் நெல்; wild rice, growing, spontaneously in the bed of a tank.

     “மெல்விரல் மெலியக் கொய்த குளநெல்லும்” (சீவக.355);.

ம. குளப்பாண்டி

     [குளம் + நெல்.]

குளநெல்லி

 குளநெல்லி kuḷanelli, பெ.(n.)

   குளத்து நீரால் பயிராகும் நெல்; paddy growing in ponds without cultivation (சா.அக.);.

     [குளம் + (நெல்);நெல்லி.]

குளபாகம்

 குளபாகம் kuḷapākam, பெ.(n.)

   மிக அழகானச் செய்யுள் நடை; lit., sugar-like style easy flowing style of composition.

     [குளம் + பாகம்.]

குளப்பச்சை

 குளப்பச்சை kuḷappaccai, பெ.(n.)

   குளத்தின் வடிவாகக் கையில் ஊசியால் குத்தியெழுதும் பச்சைக்குத்து; tattoo on the arm in the shape of a tank.

     [குளம் + பச்சை.]

குளப்படி

குளப்படி kuḷappaḍi, பெ.(n.)

   1.குளம்பு படிந்த சுவடு; hoof-marks.

     “குளப்பிடி நீருமளப்பருந் தன்மைப் பிரளய சலதியும்” (பதினொ. திருவிடைம. 7);.

   2. குளம்புச் சுவட்டில் தேங்கிய நீர்; puddles in hook marks.

     “அவர்கள் வியசனம் குளப்படி

யென்னும்படி” (அஷ்டாதச.தத்வத்.ஈக.11);.

     [குளம்பு + அடி – குளம்படி – குளப்படி.]

குளப்படிக் கோரை

 குளப்படிக் கோரை kuḷappaḍikārai, பெ.(n.)

   குளக்கரையில் உண்டாகும் கோரை வகை; a sedge growing on the banks of a tank.

     [குளம் + படி + கோரை.]

குளப்படுகை

 குளப்படுகை guḷappaḍugai, பெ.(n.)

   குளத்துக்கு அருகில் உள்ள நிலம்; a sirst south; lands adjacent to tanks.

     [குளம் + படுகை.]

குளப்பண்ணை

 குளப்பண்ணை kuḷappaṇṇai, பெ.(n.)

   காட்டுக் கொளுஞ்சி; orange tree (சா.அக.);.

     [குள்ள → குள → பண்ணை.]

குளப்பயறு

 குளப்பயறு kuḷappayaṟu, பெ.(n.)

   பயறுவகை; a kind of pulse.

     [குளம் + பயறு.]

குளப்பறிப்பு

 குளப்பறிப்பு kuḷappaṟippu, பெ.(n.)

   ஏரியின் வெட்டுக் கிடங்கு; hollow dug out in the bed of a tank.

     “குளமும் குளப்பறியும் உட்பட்ட நிலத்தில்” (கல்வெட்.);.

     [குளம் + பறிப்பு.]

குளப்பற்றுநெல்

 குளப்பற்றுநெல் kuḷappaṟṟunel, பெ.(n.)

குளநெல் பார்க்க;See. {kulanel}

     [குளம் + பற்று +நெல்.]

குளப்பாகல்

 குளப்பாகல் kuḷappākal, பெ.(n.)

   மிதிபாகல்; balsam pear.

     [குளம் + மாகல்.]

குளப்பாடு

 குளப்பாடு kuḷappāṭu, பெ.(n.)

குளப்படுகை பார்க்க;See. {kula-p-paguga.}

ம. குளப்பாடு

     [குளம் + பாடு.]

குளப்பாய்வு

குளப்பாய்வு kuḷappāyvu, பெ.(n.)

   ஏரிப்பாசனம் (பணவிடு.24);; tank irrigation (செ.அக.);.

     [குளம்+பாய்வு.]

குளப்பாலை

குளப்பாலை kuḷappālai, பெ.(n.)

   குடசப்பாலை; (பதார்த்த.234);; conessibark.

     [குடசப்பாலை → குளப்பாலை.]

குளப்பாலை இலை

 குளப்பாலை இலை kuḷappālaiilai, பெ.(n.)

   கசப்பு வெட்பாலை இலை; leaves of bister cleander (சா.அக.);.

     [குடசப்பாலை → குடப்பாலை → குளப்பாலை + இலை.]

குளப்பாலையிலை

 குளப்பாலையிலை kuḷappālaiyilai, பெ.(n.)

கசப்பு வெட்பாலை இலை

 leaves of bitter oleander – Holarrhena anti-dysenterica (சா.அக.);. [குளப்பாலை+இலை.]

குளப்பாலைவிதை

 குளப்பாலைவிதை kuḷappālaivitai, பெ.(n.)

   கசப்பு வெட்பாலை விதை; seeds of bitter oleander (சா.அக.);.

     [குளப்பாலை+விதை.]

குளப்புக்கூறுகொள்(ளு)-தல்

குளப்புக்கூறுகொள்(ளு)-தல் guḷappugāṟugoḷḷudal,    16செ.குன்றா.வி.(v.i.)

   பெருந்துன்பமுறுத்துதல்; lit, to trample with hoofs, to cause, great missery

     “திருமாலாற் குளப்புக் கூறு கொளப்பட்டு” (திவ். நாய்ச்.13,6);.

     [குளம்பு → குளப்பு.]

குளப்புரவு

 குளப்புரவு kuḷappuravu, பெ.(n.)

   குளத்தின் நீர்பாய்ந்து சாகுபடியாகத் தகுந்த நிலம்; the whole extent of land irrigable under a tank.

ம. குளப்புரவு

     [குளம் + புரவு.]

குளப்பூ

 குளப்பூ kuḷappū, பெ.(n.)

   ஓர் வகை முட்செவ்வந்தி; damask persian rose (சா.அக.);.

     [குளம் + பூ.]

குளப்பொருக்கு

 குளப்பொருக்கு kuḷapporukku, பெ.(n.)

   ஏரிக்குள் உண்டாகும் கரம்பைமண்; chapped mud in a tnak, used for mannure.

     [குளம் + பொருக்கு.]

குளமச்சம்

 குளமச்சம் kuḷamaccam, பெ.(n.)

   கோரை; sedge grass (சா.அக.);.

     [குளம் + மச்சம்.]

குளமருது

 குளமருது kuḷamarudu, பெ.(n.)

   ஆற்று மருது, நீர் மருது; narrow leaved myrolaban of Travancore

ம.குளமருது

     [குளம் + மருது.]

குளமழி-தல்

குளமழி-தல் kuḷamaḻidal,    3 செ.கு.வி.(v.i.)

   மீன் பிடிக்கும்படி குளம் நீர் வற்றுதல்; to have the water in a tank considerabley reduced to allow easy fishing.

     [குளம் + அழிதல்.]

குளமின்

 குளமின் kuḷamiṉ, பெ.(n.)

   குளத்துமீன்; tank fish which is useful in cases of fever and dropsy (சா.அக.);.

     [குளம் + மின்.]

குளமூடிகம்

 குளமூடிகம் guḷamūṭigam, பெ.(n.)

   தொடரிச்செடி; an unknown plant supposed to possess magic virtue (சா.அக.);.

     [குளம் + ஊடிகம்.]

குளம்

குளம் kuḷam, பெ.(n.)

   1. தடாகம் (பிங்.);; tank, pond, reservoir.

   2. ஏரி; lake.

     “குளக்கீழ் விளைந்த……, வெண்ணெல்” (புறநா.33.5);.

   3. சிலை, மார்கழி (பரிபா.11,76உரை.);; the month of {markali}

   4. நெற்றி; forhead.

     “திருக்குள முளைத்த கட்டாமரை” (கல்லா.31,9);.

   ம.குளம்;   க.கொலி, கொளகெ. கொண;   தெ.கொலனு, கொலகு, கொலகுவு;   து.குள, கொள;   பட.கொள;   பிரா.கும்பு; Skt. {k0ía}

   {küla} a pond, C. (p.456); and Gt (p.521); refer the word to {D. köka} 2 {(kusa);,} which may be right. They think {kö/a} or {kusa} comes from T. M. {kus,} to bathe; this is wrong, as {kök,} means

     “a hold, a reservoir” (of {köff,} etsc. cf. {kula} 2, {kulu);, kū a} might also be referred to {d. ku#} 1 and 2 ;

 cf . Sk. {cugâ,} a small well, and {cunți,} etc (No.150); (K.K.E.D.XXVI);.

     [குள் → குளம்.]

 குளம்2 kuḷam, பெ.(n.)

   1. சருக்கரை (திவா.);; sugar.

   2. வெல்லம் (சூடா.);; jaggery.

     [உள் → குள் → குளம்.]

குளம்படி

 குளம்படி kuḷambaḍi, பெ.(n.)

   குதிரை, ஆடு, மாடு, கழுதை முதலியவற்றின் பாதம்; the hoots of horse; sheep, cattle, ass etc. (சா.அக.);.

     [குளம்பு + அடி.]

குளம்பனார்

குளம்பனார் kuḷampaṉār, பெ.(n.)

   கழகக்காலப் புலவர்;Šangampoet.

குளம்பு என்னும் ஊரினராதலின் குளம்பனார் எனப்பட்டார். இது ஊர் பற்றி வந்த பெயர். இவர் குறிஞ்சித்தினை குறித்துப் பாடியுள்ளார். நற்றிணையில் 288ஆம் பாடல் இவருடையதே (அபி.சிந்.);

     ‘அருவி யார்க்கும் அணங்குடை நெடுங்கோட்டு

ஞாங்கர் இளவெயில் உணஇய ஓங்குசினைப்

பிலி மஞ்ஞை பெடையோ டாடுங்

குன்ற நாடன் பிரிவிற் சென்று

நன்னுதல் பரந்த பசலைகண்டு அன்னை

செம்முது பெண்டிரொடு நெல்முன் நிறீஇக்

கட்டிற் கேட்கும் ஆயின் வெற்பில்

ஏனற் செந்தினைப் பாலார் கொழுங்குரல்

குறுகிளி கடிகஞ் சென்றும்இந்

நெடுவேள் அணங்கிற் றெனுங்கொல்

அதுவே” (நற்.288);.

குளம்பல்

 குளம்பல் kuḷambal, பெ.(n.)

   சந்தனக் குழம்பு; semi solid sandal paste (சா.அக.);.

     [குளம்பு → குளம்பல்.]

குளம்பழுகல்

குளம்பழுகல் guḷambaḻugal, பெ.(n.)

   கால்நடையின் குளம்பு நோய்வகை (கால்.வி.132);; foot-rot, ulcer in the feet of sheep and goats.

     [குளம் + அழுகல்.]

குளம்பாசி

 குளம்பாசி kuḷambāci, பெ.(n.)

   குளத்தில் மீன் பிடிக்கும் உரிமை; fishing right in a tank.

     [குளம் + பாசி.]

குளம்பாதாயனார்

குளம்பாதாயனார் kuḷampātāyaṉār, பெ.(n.)

   கழகக் காலப்புலவர்; a Šañgampoet.

     [குளம்+பாதாயன்+ஆர்]

புறநானூறு 253ம் பாடலைப் பாடியவர். இவர் பாடிய புறப்பாடலில் வளையல் களைந்த மகளிர் கைகளுக்குப்பட்டை நீங்கிய மூங்கிலை உவமையாகக் கூறியுள்ளார். இவர் குளம்பாதயானார் என்றும் குறிக்கப்படுகிறார்.

     “என்றிறத் தவலங் கொள்ளல் இனியே

வவ்வார் கண்ணி இளையர் திளைப்ப

நகாஅலென வந்த மாறே யெழாநெற்

பைங்கழை பொதிகளைந் தன்ன விளப்பின்

வளையில் வறுங்கை ஒச்சிக்

கிளையு ளொய்வலோ கூறுநின் னுரையே”

குளம்பு

குளம்பு kuḷambu, பெ.(n.)

   ஒருவகை விலங்குகளின் காலடி; hoof of an animal.

     “வெள்ளுளைக் கலிமான் கவிகுளம் புகள” (புறநா. 15);.

   ம.குளம்பு.;   க.கொளக, கொளகு, கொனகு;   கோத.கொள்க;பட.கோகு.

     [குள் → குளம்பு.]

குளம்புகிள்ளு-தல்

குளம்புகிள்ளு-தல் guḷambugiḷḷudal,    15 செ.கு.வி. (v.i.)

   கன்றின் குளம்பு முனையைச்சீவுதல்; to clip off the edge of a calf’s hoof as soon as it is born.

     [குளம்பு + கிள்ளுதல்.]

குளம்புக்களிம்பு

குளம்புக்களிம்பு kuḷambukkaḷimbu, பெ.(n.)

   குளம்பிலிடும்பூச்சு மருந்து (கால்.வி.132);; ointment for hoof.

     [குளம்பு + களிம்பு.]

குளம்புச் சிலந்தி

குளம்புச் சிலந்தி kuḷambuccilandi, பெ.(n.)

   கால்நடைகளின் குளம்பிலுண்டாகும் சிலந்தி வகை (கால்.வி.132);l; foul, a hoof disease.

     [குளம்பு + சிலந்தி.]

குளம்புச்சீவல்

 குளம்புச்சீவல் kuḷambuccīval, பெ.(n.)

   துண்டு துண்டாக சீவியெடுத்த கொம்பு;  thin slices pared of hoofs (சா.அக.);.

     [குளம்பு + சீவல்.]

குளம்வளா

 குளம்வளா kuḷamvaḷā, பெ.(n.)

   குளப்பரப்பு; area of the tank.

     [குளம்(வளவு); வளா.]

குளறி

 குளறி kuḷaṟi, பெ.(n.)

   முகைப்புல்; couch-grass (சா.அக.);.

     [குளறு → குளறி.]

குளறிப்பேசு-தல்

குளறிப்பேசு-தல் kuḷaṟippēcudal,    12 செ.குன்றாவி. (v.t.)

   தடுமாறிப் பேசுதல்; indistinctness in utterance especially due to cleft palate (சா.அக.);.

     [குளறு → குளறி + பேசு.]

குளறியடி-த்தல்

குளறியடி-த்தல் kuḷaṟiyaḍittal,    4 செ.கு.வி.(v.i.)

   மார்பில் அடித்தழுதல்; to wail and beat the breasts in mourning.

     [குளறி + அத்தல்.]

குளறு-தல்

குளறு-தல் kuḷaṟudal,    6 செ.கு.வி.(v.i.)

   அச்சம் முதலியவற்றால் மொழி தடுமாறுதல்; to stammer through fear, anger, confussion of mind.

   2. நரிமுதலியன ஊளையிடுதல்; to howl, yell, make a hideous noise, as jackals.

ம.குளறுக

     [குழறு → குளறு.]

 குளறு-தல் kuḷaṟudal,    11 செ.குன்றாவி.(v.t.)

   1. தடு மாறிப்பேசுதல்; to falter to stumble in one’s speech.

     “பயனின் மொழிகள் குளறாமுன்” (சிவப். பிரபந்.வெங்கைக்கலம்96);.

   2. கெடுத்தல்; to spoil

காரியத்தைக் குளறாதே.

     [குழறு → குளறு.]

குளறுபடி

 குளறுபடி kuḷaṟubaḍi, பெ.(n.)

குழறுபடை பார்க்க;See. {kusarupadaf}

     [குளறு + படி..]

குளறுபடை

குளறுபடை kuḷaṟubaḍai, பெ.(n.)

   1. சொல் தடுமாற்றம்; incoherent talk.

   2. குழப்பம்; confusion.

     “நானானெக் குளறுபடை புடைபெயர்த்திடவும்” (தாயு.மெளன.5);.

     [குழறு → குளறு + படை.]

குளறுவாய்

குளறுவாய் kuḷaṟuvāy, பெ.(n.)

   நாக்குக் குளறும் வாய்; mouth with faltering tongue.

   2. குளறிப் பேசல்; defective utterances (சா.அக.);.

     [குழறு → குளறு + வாய்.]

குளவஞ்சி

 குளவஞ்சி kuḷavañji, பெ.(n.)

   வஞ்சிக்கொடி; slender rattan (சா.அக.);.

     [குளம் + வஞ்சி.]

குளவடம்பு

 குளவடம்பு kuḷavaḍambu, பெ.(n.)

   குளத்தி லுண்டாகுங் கொடிவகை; a creeper in tanks.

     [குளம் + அடம்பு.]

குளவடை

குளவடை kuḷavaḍai, பெ.(n.)

   பழைய ஏரிவரி; an ancient tax on tanks (S.I.I.ii.247);.

     [குளம் + அடை.]

குளவடைக்கடமை

 குளவடைக்கடமை kuḷavaḍaikkaḍamai, பெ.(n.)

ஏரிக்குளங்களைப் பராமரிப்பதற்கு உரியதாகப் பெறும்வரி (கல்.க.சொ.அக.);.

     [குளம் + அடை + கடமை.]

குளவட்டை

 குளவட்டை kuḷavaṭṭai, பெ.(n.)

   நீரட்டை; small kind of leech.

ம.குளயட்ட

     [குளம் + வட்டை.]

குளவன்

குளவன் kuḷavaṉ, பெ.(n.)

   முருகக் கடவுள்; God Murugan.

     “குளவன் வீற்றிருந்த வளர்புகழ்க் குன்றமும்” (விரவனப்பு. திருநாட்23);. (செஅக);.

     [குழவன் – குளவன்.]

 குளவன் kuḷavaṉ, பெ.(n.)

   முருகன் கடவுள்; god Murukan.

     ‘குளவன் வீற்றிருந்த வளர்புகழ்க் குன்றமும்’ (வீரவனப்பு. திருநாட்டு.23);.

குளவரகு

 குளவரகு guḷavaragu, பெ.(n.)

   வரகுவகை; tank millet.

     [குளம் + வரகு.]

குளவல்லிமா

 குளவல்லிமா kuḷavallimā, பெ.(n.)

   தழுதாழை; wind killer (சா.அக.);.

     [குளம் + வல்லி (மாய்);மா.]

குளவாம்பல்

 குளவாம்பல் kuḷavāmpal, பெ.(n.)

   குளத்தில் முளைக்கும் ஆம்பல்; white Indian water-lily found in tanks – Nymphaea lotus (சா.அக.);. [குளம்+ஆம்பல்.]

குளவார்

 குளவார் kuḷavār, பெ.(n.)

   குடியானவர்களோடு தனித்தனியாகச் செய்து கொள்ளும் நிலவரித் (தீர்வை); திட்டம்; settlement made with ryots individually (செ.அக.);.

குளவாழை

குளவாழை kuḷavāḻai, பெ.(n.)

   ஆடவை மடங்கல் (ஆணி, ஆவணி); மாதங்களில் விதைக்கப் பெற்று ஆறுமாதத்திற் பயிராகும் குளநெல்வகை; a coarse tank-paddy, sown in {ani-avani} maturing in six months.

     [குளம் + வாழை.]

 குளவாழை kuḷavāḻai, பெ.(n.)

   ஒரு மட்ட நெல்; a coarse paddy grown in tank bed.

   2. புளி, மாங்காய்; narrow medium leaved gambogo (சா.அக.);.

     [குளம் + வாழை.]

குளவி

குளவி kuḷavi, பெ.(n.)

   1. கொட்டுமியல்புள்ள ஈ வகை; wasp, clay-building fly.

     “சுற்றுங் கடுங்குளவிச் சூரைத் தூறு” (தனிப்பா.107,44);.

   2.வண்டுவகை; carpenter bee.

   3. காட்டுமல்லிகை; wild jasmine.

     “கரந்தை குளவி கடிகமழ் கலிமா” (குறிஞ்சிப்.76);.

   4.மலைமல்லிகை வகை; Indian cork.

     “கூதளங்க கவினிய குளவி” (புறநா.168,12);.

   5.பச்சிலைமரம்; mysore gamboge.

   ம.குளவி;க.கொளவி.

     [குள் → குள்ளகம் → குளகம்.]

     [P]

குளவி

குளவிக்கூடு

 குளவிக்கூடு kuḷavikāṭu, பெ.(n.)

   குளவி கட்டிய கூடி, தேனில் குழைத்துக் கொடுக்க வாந்தியை நிறுத்தும்; wasps nest, when mixed with honey stops vomitting (சா.அக.);.

     [குளவி + கூடு.]

குளவிக்கூண்டுக் கருக்கு

 குளவிக்கூண்டுக் கருக்கு kuḷavikāṇṭukkarukku, பெ.(n.)

   குளவிக் கூட்டின் களிமண்ணை நீரில் போட்டு இறக்கிய கியாழம்; the decoction prepared from the clay of the wasp which arrests hiccough (சா.அக.);.

     [குளவி + கூண்டு + கருக்கு.]

குளவிக்கொட்டு

 குளவிக்கொட்டு kuḷavikkoṭṭu, பெ.(n.)

   குளவி கடித்தல்; the sting of a wasp (சா.அக.);.

     [குளவி + கொட்டு.]

குளவிதைப்பு

 குளவிதைப்பு kuḷavidaippu, பெ.(n.)

   குகுளநெற் சாகுபடி; sowring in a tank bed.

     [குளம் + விதைப்பு.]

குளவித்தேன்

 குளவித்தேன் kuḷavittēṉ, பெ.(n.)

   குளவி கட்டுந்தேன்; honey extracted from beehive (சா.அக.);.

     [குளவி + தேன்.]

குளவிந்தம்

 குளவிந்தம் kuḷavindam, பெ.(n.)

   மருந்தாக உதவும் மஞ்சள்வகை; a kind of turmeric, used medicinally.

     [குளம் + விந்தம்.]

குளவிமண்

 குளவிமண் kuḷavimaṇ, பெ.(n.)

   குளவிக் கூட்டு மண்; mud in a warsp’s nest.

     [குளவி + மண்.]

குளவிமெழுகு

 குளவிமெழுகு guḷavimeḻugu, பெ.(n.)

   குளவிக் கூட்டின் மெழுகு; bees wax (சா.அக.);.

     [குளவி + மெழுகு.]

குளவுரி

 குளவுரி kuḷavuri, பெ.(n.)

   சந்தனம்; sandal wood (சா.அக.);.

     [குள + உரி.]

குளவெட்டுமானியம்

 குளவெட்டுமானியம் kuḷaveṭṭumāṉiyam, பெ.(n.)

   ஏரிவெட்டுக்கு ஆள் அமர்த்த விடப்படும் சலுகை நிலம்; inam granted for the service of procuring workmen for tank repair.

குளவெட்டு + மானியம்.]

குளவெள்ளரி

 குளவெள்ளரி kuḷaveḷḷari, பெ.(n.)

   ஏரியின் உள்வாயில் விளையும் வெள்ளரி; cucumbers raised in tank beds

     [குளம் + வெள்ளரி.]

குளாஞ்சி

 குளாஞ்சி kuḷāñci, பெ.(n.)

   மரவகை (யாழ்.அக.);; a kind of tree (செ.அக.);.

குளாம்பல்

குளாம்பல் kuḷāmbal, பெ.(n.)

   குளத்தில் தோன்றும் ஆம்பல் (நன்.256,மயிலை.);; water-lity.

     [குளம் + ஆம்பல்.]

குளி

குளி1 kuḷittal,    4 செ.கு.வி.(v.i.)

   1. நீராடுதல்; to bathe.

     “களிப்பர் குளிப்பர்” (பரிபா.6:103);.

   2. கழுத்துவரை குளித்தல்; to wash one’s body up to the neck.

   3. மாதவிலக்குக் குளியல்; to take purificatory bath after menstruation.

அவள் குளித்து நான்கு மாதம் ஆயிற்று (கொ.வ.);.

   4. தைத்தல்; to pierce, as an arrow.

     “கூர்ங்கணை குளிப்ப” (பு.வெ.10, சிறப்பிற்.10, கொளு.);.

   5. அழுந்துதல்; to press against.

     “மென்கொங்கை யென் னங்கத் திடைக்குளிப்ப” (திருக்கோ.351);.

   6.வலிய உட்புகுதல்; to enter the thick of a fight.

     “கடற்படை குளிப்ப மண்டி” (புறநா6);.

   7. மறைதல்; to hide, conceal oneself.

     “யானறித லஞ்சிக் குளித்து” (கலித்.98);.

   8. தோல்வியுறுதல்; to be defeated.

     “மீன் குளிக்குங் கற்பின்” (சீவக.2141);.

ம. குளி

     [உள் → குள் → குளி.]

 குளி2 kuḷittal, பெ.(n.)

   4 செ.குன்றாவி.(v.t.);

   முத்துகளை மூழ்கியெடுத்தல்; to dive for pearls.

     “பணிலம் பலகுளிக்கோ” (திருக்கோ.63);.

     [உள் → குள் → குளி.]

 குளி3 kuḷi, பெ.(n.)

   குளியல்; bath, ablution.

     “இது எத்தனை குளிக்கு நிற்கும்” (ஈடு.4:5,1);.

   2. முத்துக் குளி; diving, as for pears or chanks.

ம. குளி

     [உள் → குள் → குளி.]

 குளி3 kuḷir, பெ.(n.)

   1.குளிர்ச்சி(திவா.);; coldness, chilliness.

   2. சுரக்குளிர்; ague, cold fits.

   3. பனிக் காற்று (திவா.);; dewy chill blast.

   4. நடுக்கம்; shivering, trembling, shuddering, as with fear.

என்னைக் கண்டால் அவனுக்குக் குளிர்தான்.

   5. வெண்குடை (சூடா.);; white umbrella.

   6. மீனொழுங்கு (சூடா.);; shoal, school of fish.

   து. குளிர்பு;பட.கொரவு.

     [குள் → குளி → குளி-.]

குளிககாலம்

குளிககாலம் guḷigagālam, பெ.(n.)

   திருமணச் சடங்குகளுக்கு மங்கலமானதும், இறப்புச் சடங்குகளுக்கு அமங்கலமானதும் ஒவ்வொரு நாளும் குளிகன் தோன்றும் நேரத்திலிருந்து 3 3/4 நாழிகை வரை உள்ளதுமான காலம்; the period of time in each day extending to an hour and half from the rising of kulikan or kulikai considered auspicious for marriage ceremonies and inauspicious for funeral ceremonies.

மறுவ. குளிகைக்காலம்

     [குளிகன் + காலம்.]

குளிகன் என்பது காணாக் கோள்களுள் ஒன்று. அதற்குரிய காலத்தைக் குளிகன்காலம் அல்லது_. குளிகக்காலம் என்பதே பொருந்தும், குளிகைக்காலம் என்பது தவறு. குளிகை என்பது உருண்டையான மாத்திரையைக் குறிப்பதாகும்.

குளிகன்

குளிகன் guḷigaṉ, பெ.(n.)

   1. எண்பெரு நாகத் தொன்று; a divine serpent, one of {astamānāgam}

     “குளிகாதி…… வெங்கணாகம்” (கம்பரா. நாகபா.62);.

   2. காணாக் கோள்களுள் ஒன்று; name ofan invisible planet.

     [குளி → குளிகன்.]

குளிகம்

 குளிகம் guḷigam, பெ.(n.)

   மருந்தின் பொது; medicine in general (சா.அக);.

     [குளி → குளிகம்.]

குளிகாசித்தி

குளிகாசித்தி kuḷikācitti, பெ.(n.)

   குளிகை (இரச மாத்திரை); முதலியவற்றால் பெறக் கூடியதாகக் கருதும் வானத்தில் பறக்கும் மன ஆற்றல்; the power of flying through the air at an enormous speed believed to be acquired by means of mercurial or other pills (செ.அக.);.

     [குளிகை+சித்தி]

 குளிகாசித்தி kuḷikācitti, பெ.(n.)

   இதளியம் (இரச); குளிகை முதலியவற்றாற் பெறக்கூடியதாகக் கருதும் வான்வெளியில் பறக்கும் மிகு ஆற்றல் (ஆகாசகமன சக்தி); (வின்.);; the power of flying through the air at an enormous speed believed to be acquired by means of mercurial or other pills.

த.வ. குளிகைப்பேறு.

     [குளிகா + சித்தி.]

குளம் → குளிகை = உருண்டை மாத்திரை.

     [த.குளிகை → Skt.{} → த.குளிகா.]

சித்து → சித்தன் = அறிவன், முக்கால அறிவுள்ள முனிவன். சித்தன் ஆற்றலைத் தமிழிற் சித்து என்பதே மரபு (வ.வ.1:148);.

சித்து → சித்தி. த.சித்தி → Skt.siddhi.

குளிகாரன்

 குளிகாரன் kuḷikāraṉ, பெ.(n.)

   முத்துக்குளிப்பவன்; diver for pearls or chanks.

     [குளி + காரன்.]

குளிகுளி-த்தல்

குளிகுளி-த்தல் guḷiguḷittal,    4 செ.கு.வி.(v.i.)

   பிள்ளை பெறல்; to be delivered of a child.

     [குளி → குளித்தல்.]

குளிகை

குளிகை1 guḷigai, பெ.(n.)

   1.மாத்திரை; pill.

   2. மந்திர வலிமையுள்ள மாத்திரை; magic pill supposed to have supernatural powers

     “குளிகையிட்டுப் பொன்னாக்குவன்” (திருமந்.2709);.

     [குள் → குளி → குளிகை (உருண்டை);.]

 குளிகை2 guḷigai, பெ.(n.)

குளிகன்காலம் பார்க்க;See. {Kulgänkälam.}

     [குளிகன் → குளிகை.]

குளிகைகட்டு-தல்

குளிகைகட்டு-தல் guḷigaigaṭṭudal,    5 செ.கு.வி.(v.i.)

   1. மாத்திரை செய்தல்; to make pills.

   2. சித்திக் குளிகையை உடலிற் கட்டிக் கொள்ளுதல்; to fastem a magical pill on the body, either as an amulet against poisonous bites or as a means to attain supernatural powersuch as flying through the air.

     [குளிகை + கட்டு.]

குளிகைகட்டுக்கயிறு

குளிகைகட்டுக்கயிறு guḷigaigaṭṭuggayiṟu, பெ.(n.)

   கட்டு கட்டும் இடங்கல் பயன்படுத்தப் படும் இருவகையான கயிறுகள்; two kinds of strings used to make knobs when fastening poles etc. (உழ..நெ.க.அக.);.

   2. குளிகை கட்டிய பிறகு உயிர் கொடுத்தல்; the process of consolidating mercury into a pill and then animating it. (சா.அக.);.

     [குளிகை + கட்டு + கயிறு.]

குளிகைகூட்டு- தல்

குளிகைகூட்டு- தல் guḷigaiāṭṭudal,    5.செ.குன்றாவி.(v.t.)

   குளிகையாகச் செய்தல்; making into a pill (சா.அக.);.

     [குளிகை + கூட்டு-.]

குளிகைகோடிடல்

 குளிகைகோடிடல் guḷigaiāḍiḍal, பெ.(n.)

   குளிகைக்கு உறையிடல்; giving a coating to pills (சா.அக.);.

     [குளிகை + கோடிடல்.]

குளிகைக்கட்டு

குளிகைக்கட்டு guḷigaiggaṭṭu, பெ.(n.)

   1. பாவு கீறிச் சுற்றப்படும் முன், சிறு நூலால் சில குளிகைகள் சேர்த்துக் கட்டப்படுவது; fastening some globules with thread while fixing warp.

   2. தறியில் சில குளிகைகள் சேர்ந்து இழைகள் நீட்டிக் கட்டும் கலணைக் கோலுடன் சேர்த்துக் கட்டப்படும் கட்டு; fastening some globules when attaching warp thread to loom.

     [குளிகை + கட்டு.]

குளிகைக்கலை

 குளிகைக்கலை guḷigaiggalai, பெ.(n.)

   உயிர் வளியை இட மூக்குத்துளை வழியாகச் செலுத்தும் நிலவுக் (சந்திர);கலை; the vital air {(prān);} passing through the left nostril (சா.அக.);

     [குளிகை + கலை.]

குளிகைக்காலம்

 குளிகைக்காலம் guḷigaiggālam, பெ.(n.)

குளிககாலம் பார்க்க;See. {kugakālam.}

     [குளிகள் + காலம்→குளிககாலம்→குளிகைக்காலம்.]

குளிகைசித்தர்

குளிகைசித்தர் guḷigaisittar, பெ.(n.)

   சித்தரில் தேர்ந்தோர்; skilled men amongst {Siddhars,} who

 could perform miracles.

   2. இதளிய (இரச);க் குளிகையைக் கொண்டு வானம் பாயும் சித்தர்கள்;{Šiddhar’s} skilled in or capable of flying in the sky with the aid of animated mercurial pill(சா.அக.);.

     [குளிகை + சித்தர்.]

குளிகைசித்தி

 குளிகைசித்தி guḷigaisitti, பெ.(n.)

   இரசகுளிகை முதலியவற்றாற் கூடியதாகக் கருதும் வானுலாவும் வல்லமை; the power of flying in the air believed to be acquired by means of mercurial pills.

     [குளிகை + சித்தி.]

குளிகைபாடம்

குளிகைபாடம் guḷigaipāṭam, பெ.(n.)

   இதளிய (இரச);க் குளிகையைச் செய்யும் முறைகளையும் அதற்குச் சாரணை கொடுக்கும் விதிகளையும் பற்றிய நூல்; a treatise on the method of preparing mercury pilis and the principles to be observed in giving life to then.

   2. இதளிய (இரச);க் குளிகை இட்ட சாரணை; animation imparted to mercury pill (சா.அக.);.

     [குளிகை + பாடம்.]

குளிகைபோடல்

குளிகைபோடல் guḷigaipōṭal, பெ.(n.)

   இதளிய (இரச);க் குளிகையை வாயிலடக்கிக் கொள்ளுதல்; securing a mercurial pill in the mouth.

   2. அபினி உட்கொள்ளல்; swallowing opium pill (சா.அக.);.

     [குளிகை + போடல்.]

குளிகைப்போக்கு

 குளிகைப்போக்கு guḷigaippōggu, பெ.(n.)

   சத்துத் தீர்ந்த குளிகையின் தன்மை, வேகம், வலி முதலியன; the nature, force, or power etc. of an animated mercurial pill (சா.அக.);.

     [குளிகை + போக்கு.]

குளிகைமணி

 குளிகைமணி guḷigaimaṇi, பெ.(n.)

   இதளியமணி (இரசமணி);; mercurial pill (சா.அக.);.

     [குளிகை + மணி.]

குளிகையந்திரம்

 குளிகையந்திரம் guḷigaiyandiram, பெ.(n.)

   மருந்து மாத்திரைகள் செய்யுமோர் கருவி; a machine for preparing pills (சா.அக.);.

     [குளிகை + இயந்திரம்.]

குளிகையாடல்

குளிகையாடல் guḷigaiyāṭal, பெ.(n.)

   சத்துத் தீர்ந்த இதளிய (இரச);க் குளிகையை வாயிலடக்கிக் கொண்டு வானத்தில் காற்றினுடே பறத்தல்; flying in the atmosphere or aerial region by securing in the mouth the animated mercurial pill.

   2. அண்டம் பாய்தல்; flying in the etheric region from one planet to another with the aid of mercurial pill (சா.அக.);.

     [குளிகை + ஆடல்.]

குளிகையாட்டல்

 குளிகையாட்டல் guḷigaiyāṭṭal, பெ.(n.)

   மாத்திரை செய்தல்; making or preparing pills (சா.அக.);.

     [குளிகை + ஆட்டல்.]

குளிகையிடு-தல்

குளிகையிடு-தல் guḷigaiyiḍudal,    20 செ.கு.வி.(v.i.)

   சித்திக் குளிகையை உடம்பைக் கீறி உட்புகுத்துதல்; to insert a pill in an incision made in the body in order to counter act the influence of poisonous bites or to communicate supernatural power.

     [குளிகை + இடு-.]

குளிகையோட்டம்

 குளிகையோட்டம் guḷigaiyōṭṭam, பெ.(n.)

   குளிகையின் வேகம்; the dynamic force or power of mercury pill (சா.அக.);.

     [குளிகை + ஒட்டம்.]

குளிகைவேகம்

 குளிகைவேகம் guḷigaivēgam, பெ.(n.)

   குளிகை யின் வேகம்; the dynamic force or power of mercury pill (சா.அக.);.

     [குளிகை + வேகம்.]

குளிகைவேதை

 குளிகைவேதை guḷigaivētai, பெ.(n.)

   இதளிய (இரச);க் குளிகையைக் கொண்டு செய்யும் வேதிமுறை; the art of making gold with the aid of consolidated mercurial pill (சா.அக.);.

     [குளிகை + வேதை.]

குளிகோமணம்

 குளிகோமணம் kuḷiāmaṇam, பெ.(n.)

   நீர்ச்சீலை (லங்கோடு);; a kind of loin-cloth (செ.அக.);.

     [குளி+கோமணம். கோவணம்→கோமணம்]

 குளிகோமணம் kuḷiāmaṇam, பெ.(n.)

   நீர்ச்சீலை; a kind of loin-cloth.

     [குளி + (கோவணம்); கோமணம்.]

குளிக்காமலிரு-த்தல்

குளிக்காமலிரு-த்தல் kuḷikkāmaliruttal,    2 செ.கு.வி.(v.i.)

   கருவுறுதல்;   கருப்பம் தரித்தல்; be in the family way.

   2. உன் மகள் குளிக்காமலிருக்கிறாளா? எத்தனை மாதம்?

மறுவ முழுகாமலிருத்தல்

     [குளிக்காமல்+இரு-த்தல்.]

குளிசங்கட்டல்

 குளிசங்கட்டல் kuḷisaṅgaṭṭal, பெ.(n.)

   கோள் (கிரக); குற்றங்களை நீக்கம் செய்ய வேண்டி தாயத்து மந்திரித்துக் குழந்தை அல்லது பெண்களுக்கு உடம்பில் கட்டுதல்; tying an amulet to a child or woman after performing necessary ceremonial rites and chanting of mastrams so as to be free from morbid affections (சா.அக.);

     [குளிசம் + கட்டல்.]

குளிசங்கு

 குளிசங்கு kuḷisaṅgu, பெ.(n.)

   நீரூட் குளித் தெடுத்த சங்கு; chank obtained by diving (W);.

     [குளி + சங்கு.]

குளிசதோசம்

குளிசதோசம் kuḷicatōcam, பெ.(n.)

   கருப்பமாதலை வேண்டும் பெண்கள் நீருட் குளித்தெடுத்த சங்கினைக் கட்டிக் கொள்ளும் பொழுது எதிர்ப்பட்ட குழந்தை களுக்கு வரும் ஒரு நோய் (சீவரட்.221);; a child’s ailment believed to be the result of encountering a woman when an amulet is fastened on her for favouring pregnancy (செ.அக.);.

     [குள்→சகுளி→குளிசம்+Skt. தோசம்]

 குளிசதோசம் kuḷisatōsam, பெ.(n.)

   கருப்பமாதலை வேண்டும் மகளிர் குளிசங்கட்டிக் கொள்ளும் பொழுது எதிர்ப்பட்ட குழந்தைகளுக்கு வரும் ஒரு வகை நோய் (சீவரட்.221);; a child’s ailment believed to be the result of encountering a woman when an amulet is fastened on her for favouring pregnancy.

த.வ. குளிசநோய்.

     [குளிசம் + தோசம்.]

குளம் → குளிகை = உருண்டை மாத்திரை.

     [குளிகை → Skt.{} → த.குளிசம்.]

     [Skt.{} → த.தோசம்.]

குளிசமாடல்

 குளிசமாடல் kuḷisamāṭal, பெ.(n.)

   மந்திரித்துத் தகடு எழுதிக் கட்டல்; tying a talisman or as amulet after necessary incantations. It is done in the case of persons suffering from diseases or from the evil influence of demons, devils or other spirits (சா.அக.);.

     [குளிசம் + ஆடல்.]

குளிசம்

குளிசம்1 kuḷisam, பெ.(n.)

   1. பாதுகாப்பிற்காகக் கட்டிக் கொள்ளும் ஒருவகைத் தகடு; amulet (G.Sm.D.I.J. 145);.

   2. காப்புக் கட்டிற்குரிய மெல்லிய மாழைத்தகடு; thin piece of metal with magical characters worn as a charm against evil spirits ordisease.

   3. பாம்பாட்டிகள், நஞ்சு இறக்குவோர் முதலானோர் கையில் காப்பிற்காகக் கட்டிக் கொள்ளும் வேர்; root tied round the finger of a snake-charmer or poison charmes, as an amulet.

   4.சில மூலிகைகள் நன்றாகப் பயன்படுவதற்கு மந்திரமாகச் செய்யும் காப்பு; magical rites for securing the full medicinal efficacy of certain plants.

     [குள் → குளி → குளிசம்.]

 குளிசம்2 kuḷisam, பெ.(n.)

குளிகை பார்க்க (இ.வ.);;See. {kugal}

     [குள் → குளி → குளிசம்.]

 குளிசம்3 kuḷisam, பெ.(n.)

   வளையம் (யாழ்.அக.);; ring.

     [குளிகை → குளிசம்.]

குளிசிங்கி

 குளிசிங்கி kuḷisiṅgi, பெ.(n.)

   பேச்சினால் வயப்படுத்துகை; coaxing.

குளிசீலை

 குளிசீலை kuḷicīlai, பெ.(n.)

   கோவணம் (கொ.வ.);; loin cloth.

     [குளி + சீலை.]

குளிசை

 குளிசை kuḷicai, பெ.(n.)

மாத்திரை (இலங்.);:

 tablet, pill.

ஒரு குளிசை விழுங்கு தலைவலி உடனே குணமாகும்.

     [குள் – குளிசை]

குளிதுறை

குளிதுறை kuḷiduṟai, பெ.(n.)

   குளியல்துறை; bathing ghat.

     “குளிதுறையிற் சிதடனார்க்கு வலம்புரியின் மணி கிடைத்தவாறு” (குற்றாதல. திருமால்.84);.

     [குளி + துறை.]

குளிதேவதாரி

 குளிதேவதாரி kuḷitēvatāri, பெ.(n)

   சுனை உள்ள தேவதாரி மரம்; a kind of bristly deodar – Erythroxylon genus (சா.அக.);.

குளிதோசம்

குளிதோசம் kuḷitōcam, பெ.(n.)

   மாத விலக்கான பெண் குளித்த பின் வெறும் வயிற்றோடு பார்த்தலால் குழந்தைக்கு உண்டாவதாகக் கருதப்படும் தீட்டு (தோசம்); (பாலவா.117, தலைப்பு.);; malignant influence on an infant of being looked at by a woman wtih an empty stomach on her bath after menstruation (செ.அக.);.

     [குள்→ குளி+ Skt.தோசம்]

குளித்தல்

குளித்தல் kuḷittal, பெ.(n.)

   நீராடல்; having a bath, which removes lethargy bodily heat, sense of fatigue etc.

   2. சூதகமாதல்; menstruating (சா.அக.);.

     [குளி → குளித்தல்.]

குளித்தாமரை

 குளித்தாமரை kuḷittāmarai, பெ.(n.)

   ஆகாயத் தாமரை; a herbal plant (சா.அக.);.

     [குளிர்+ தாமரை-குளிர்தாமரை→குளித்தாமரை (கொ.வா.);.]

குளித்திப்பூடு

 குளித்திப்பூடு kuḷittippūṭu, பெ.(n.)

   இதன் இலைகள் வீக்கங்களுக்குக் கட்டப் பயன்படும் பூண்டு; arrow head, its leaves areapplied to swelling (சா.அக.);.

மறுவ. குதிலைக்குளம்படி

     [குளித்தி + பூடு.]

குளிந்தன்

 குளிந்தன் kuḷintaṉ, பெ.(n.)

   ஒரு மன்னன்; a king (அபி.சிந்);.

குளிந்தம்

 குளிந்தம் kuḷintam, பெ.(n.)

சரசுவதி ஆற்றங்கரையில் உள்ள நாடு,

 a city on the bank of river Šarašvati (அபி.சிந்.);.

குளிப்பச்சை

 குளிப்பச்சை kuḷippaccai, பெ.(n.)

   ஆற்றுப் பச்சைக் கல்; a green stone.

     [குளி + பச்சை.]

குளிப்பாட்டு

குளிப்பாட்டு1 kuḷippāṭṭudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   நீராட்டுதல்; to bath or wash.

     “பொருநைநீர் குளிப்பாட்டி” (காஞ்சிப்பு.தழுவ.288);.

     [குளிப்பு + ஆட்டு-.]

குளிப்பாட்டு-தல்

குளிப்பாட்டு-தல் kuḷippāṭṭudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   புகழ்ந்து வயப்படுத்துதல்; to win over, by flattery.

     [குளிப்பு + ஆட்டு-.]

குளிப்பிடப்பாறு

 குளிப்பிடப்பாறு kuḷippiḍappāṟu, பெ.(n.)

   முத்துக் குளிக்குந் துறை; the banks of a pearl or chank fishery.

     [குளிப்பு + இடம் +. பாறு. (பாறு = அகன்ற இடம், கரையோரக் கடற்பகுதி.]

குளிப்பித்தல்

 குளிப்பித்தல் kuḷippittal, பெ.(n.)

   நீராடச் செய்வித்தல்; causing to bathe (சா.அக.);.

     [குளி → குளிப்பித்தல்.]

குளிப்பு

 குளிப்பு kuḷippu, பெ.(n.)

   நீராடுகை; washing, bathing.

     [குளி → குளிப்பு.]

குளிமீட்டான்

குளிமீட்டான் kuḷimīṭṭāṉ, பெ.(n.)

   1. நத்தைச் சூரி; bristly button-weed.

   2.தண்ணீர்விட்டான் கிழங்கு; water root (சா.அக.);.

     [குளி → குளிமீட்டான்.]

குளியம்

குளியம்1 kuḷiyam, பெ.(n.)

   வேங்கைப்புலி (அக.நி.);; man-eates.

மறுவ. வரிப்புலி

     [குளி → குளியம் (உருட்சி, திரட்சி, வலிமை);.]

 குளியம்2 kuḷiyam, பெ.(n.)

   1. உருண்டை (அக.நி.);; ball, globe.

   2. மருந்து (பிங்.);; medicine.

     [குளி → குளியம்(உருட்சி, திரட்சி.]

குளியலாட்டல்

 குளியலாட்டல் kuḷiyalāṭṭal, பெ.(n.)

   நீராட்டல்; giving a bath (சா.அக.);.

     [குளியல் + ஆட்டல்.]

குளியல்

குளியல் kuḷiyal, பெ.(n.)

   நீராடுகை; bathing.

     “காலை மாலைக் குளியல்” (பதார்த்த. 1307, தலைப்பு.]

     [குளி → குளியல்.]

குளியல் அறை

 குளியல் அறை kuḷiyalaṟai, பெ.(n.)

   குளிப்பதற்குப் பயன்படுத்தும் அறை; room for taking bath (க்ரியா);.

     [குளியல்+அறை]

குளியாமலிரு-த்தல்

குளியாமலிரு-த்தல் kuḷiyāmaliruttal,    2 செ.கு.வி. (v.i.)

   கருப்பமாயிருத்தல் (கொ.வ.);; lit, to be without menstrual bath, to be pregnant.

     [குளியாமல் + இரு-.]

குளியாள்

 குளியாள் kuḷiyāḷ, பெ.(n.)

   முத்துக் குளிப்போன்; pearler, chank diver.

     [குளி + ஆள்.]

குளியிடிச்சான்

குளியிடிச்சான் kuḷiyiḍiccāṉ, பெ.(n.)

   நெல்வகை (விவசா. நூன்.2););; a kind of paddy.

     [குளி + (இத்தான்); இடிச்சான்.]

குளியோடு-தல்

குளியோடு-தல் kuḷiyōṭudal,    5 செ.கு.வி.(v.i.)

   முத்துச்சிப்பி முதலியவை எடுத்தற்காகக் குளித்தல்; to dive for pearls or chanks.

     [குளி + ஒடு-.]

குளிரநோக்கு-தல்

குளிரநோக்கு-தல் kuḷiranōkkudal,    5 செ.கு.வி. (v.i.)

   அருளோடு பார்த்தல்; to cast a gracious look on.

     “திருக்கண்களாலே குளிர நோக்கி” (ஈடு,1.10:10);.

     [குளிர + நோக்கு.]

குளிரப்பண்ணல்

 குளிரப்பண்ணல் kuḷirappaṇṇal, பெ.(n.)

   குளிர்ச்சியடையும்படி செய்தல்; cooling, refreshing (சா.அக.);.

     [குளிர + பண்ணல்.]

குளிரம்

 குளிரம் kuḷiram, பெ.(n.)

   நண்டு (சூடா.);; crab. (சா.அக.);.

மறுவ. குளிர்

குள்-குளி(சேற்றில் ஒளிதல்/குளிர் அகுளிரம்);

குளிரவை-த்தல்

குளிரவை-த்தல் kuḷiravaittal,    4 செ.குன்றாவி.(v.t.)

   விளக்கை அணைத்தல்; to put out, extinguish, as a light.

விளக்கைக் குளிரவை (இ.வ.);.

     [குளிர் → குளிர + வை.]

குளிரி

குளிரி1 kuḷiri, பெ.(n.)

   1. பீலிக் குஞ்சம் (பிங்.);; fan made of peacock’s feathers.

   2. நீர்ச்சேம்பு; arrow head, aquatic plant.

     [குளிர் → குளிரி (குளிர்ச்சித்தருவது); .]

 குளிரி2 kuḷiri, பெ.(n.)

   குடமுழவு; kettle drum.

குளிரிப் புடைப்பொலி (தஞ்சைவா.73);.

     [குளிறு → குளிரி.]

குளிரிக்குடம்

குளிரிக்குடம் kuḷirikkuḍam, பெ.(n.)

   பன்னீர்க்குப்பி (திவ்.நாய்ச்.7:4 வியா.);; rose-water bottle.

     [குளிர + பண்ணல்.]

குளிரீகம்

 குளிரீகம் kuḷirīkam, பெ.(n.)

பூவரசு,

 portia tree – Thespesia pepulnae (சா.அக.);.

குளிரூட்டும்நிலையம்

 குளிரூட்டும்நிலையம் kuḷirūṭṭumnilaiyam, பெ.(n.)

   பால், இறைச்சி முதலியவற்றைப் பக்குவப்படுத்தி குளிர்ச்சியடையச் செய்யும் நிலையம்; cold storage station where milk, meat, etc., are kept

     [குளிர்+ஊட்டும்+நிலையம்]

குளிர்

குளிர்2 kuḷirtal,    2 செ.கு.வி. (v.i.)

   தங்குதல்; to seal, rest.

     “குளிரு மரப்பலகை” (சீவக. 1782);.

     [குள்→குளி→குளிர்.]

 குளிர்4 kuḷir, பெ.(n.)

   தங்குகை (சூடா.);; seating, resting.

     [குள் → குளி → குளிர்).]

 குளிர்5 kuḷir, பெ.(n.)

   1. குடமுழவு (திவா.);; Kettledrum.

   2. கிளிகடி கருவி; contrivance to scare away parrots.

     “தட்டையும் குளிரும்” (குறிஞ்சிப். 43);.

   3. கவண் (பிங்.);; sling.

   ம.குளிர்;க. குளிர்.

     [குளிறு → குளிர் (குளிறு = ஒலி, ஒலித்தல்.);]

 குளிர்6 kuḷir, பெ.(n.)

   1.மழு (சூடா.);; battle-axe.

   2. சூலம்; trident.

   3. அரிவாள்; sickle.

     “குளிர்புரை கொடுங்காய்” (மலைபடு.110);.

   4. இலைமூக்கரி கத்தி (திவா.);; knife for cutting the stems of eaves.

     [குள் → குளி → குளிர்.]

 குளிர்7 kuḷir, பெ.(n.)

   1. நண்டு (பிங்.);; crab, lobster.

   2. கடக ஓரை (ராசி); (திவா.);; cancer, a sign of the zodiac.

   3. கடகத்திங்கள் (ஆடிமாதம்); (தைலவ.பாயி);; the month {Adi}

     [குளி → குளிர்.]

குளிர்-தல்

குளிர்-தல் kuḷirtal,    2 செ.கு.வி.(v.i.)

   1. பனிக்காற்று உறைத்தல்; to feel cold, chilly, as breeze.

குளிர்வாடை

   2. குளிர்ச்சியுறுதல்; to be cool, refreshing.

     “சிங்கி குளிர்ந்துங் கொலும்” (நீதி நெறி.59);.

   3. உடம்பு சில்லிடுதல்; to get numbed, as in death.

   4. கண்முதலிய பொறிகளுக்கு இனியதாதல்; to be pleasant to the sense of touch, sight or hearing.

     “என்புறக் குளிரு

நெஞ்சுருகும்” (கம்பரா.விபீடண.21);.

   5. கருணை யால் முகங்கனிதல்; to be benignant, as the countenance.

   6. ஆறுதலடைதல்; to be consoled, conforted;

 to be satisfied.

இப்போதுதான் என் மனம் குளிர்ந்தது.

   7.சின்னம்மை முதலியவற்றால் இறத்தல்; to die, as of an epidemic like small pox.

குழந்தை அம்மை போட்டுக் குளிர்ந்து போயிற்று (இ.வ.);.

   ம. குளிர்;க.குளிர்.

     [குள் → குளி → குளிர்.]

குளிர்காணல்

குளிர்காணல் kuḷirkāṇal, பெ.(n.)

   1. குளிர்ச்சி தாக்குகை; being affected with cold.

   2. உடம்பு நோயாற் சில்லிடுகை (வின்.);; becoming cold, as the body in serious illness.

     [குளிர் + காணல்.]

குளிர்காந்தி

 குளிர்காந்தி kuḷirkāndi, பெ.(n.)

   நிலவுக் (சந்திர); காந்தி; a flowering plant that turns towards the moon (சா.அக.);.

     [குளிர் காந்தி.]

குளிர்காய்-தல்

குளிர்காய்-தல் kuḷirkāytal,    2 செ.கு.வி.(v.i.)

   குளிர் வருத்தாதபடி வெப்பம் பிடித்தல்; to bask in the sun, to warm oneself.

     [குளிர் + காய்-.]

குளிர்காய்ச்சல்

குளிர்காய்ச்சல் kuḷirkāyccal, பெ.(n.)

   குளிரொடு தோன்றும் காய்ச்சல் நோய் (பதார்த்த. 842);; ague fever attended with chill.

மறுவ. குளிர்ச்சுரம்

     [குளிர் + காய்ச்சல்.]

குளிர்காற்று

 குளிர்காற்று kuḷirkāṟṟu, பெ.(n.)

   கூதற்காற்று; cold wind.

குளிர்காற்றைப் பொறுக்க முடிய வில்லை (உ.வ.);.

     [குளிர் + காற்று.]

குளிர்காலம்

 குளிர்காலம் kuḷirkālam, பெ.(n.)

   பனிக்காலம்; cold season.

     [குளிர் + காலம்.]

குளிர்கிறாகம்

 குளிர்கிறாகம் kuḷirkiṟākam, பெ.(n.)

   திலக மரம்; peacock flower fence – Adenanthera pavonia (சா.அக.);.

குளிர்குளிரல்

குளிர்குளிரல் kuḷirkuḷiral, பெ.(n.)

   குளிரால் விறைத்தல்; being benumbled with cold.

   2. சில்லிடுதல்; being attacked with chillness of the extremities, as a dying person in cholera(சா.அக.);.

     [குளிர் + குளிரல்.]

குளிர்குளிர்ந்துபோ-தல்

குளிர்குளிர்ந்துபோ-தல் kuḷirkuḷirndupōtal,    8 செ.கு.வி.(v.i.)

   1. குளிர்ச்சியால் உடல் விறைத்துப் போதல்; to be benumbed of cold.

   2. உடம்பு சில்லிடுதல்; to become cold, as a dying person.

     [குளிர் + குளிர்ந்து + போ-.]

குளிர்கொள்ளல்

குளிர்கொள்ளல் kuḷirkoḷḷal, பெ.(n.)

   1. தணுப்புறல், சீதளமடைதல்; becoming chill.

   2. குளிரால் வருந்தல்; suffering from cold (சா.அக.);.

     [குளிர் + கொள்ளல்.]

குளிர்கொள்ளு-தல்

குளிர்கொள்ளு-தல் kuḷirkoḷḷutal,    16 செ.கு.வி.(v.i.)

   1. குளிர்ச்சி அடைதல்; becoming chill.

   2. குளிரால் வருந்தல்; suffering from cold (சா.அக.);.

     [குளிர்+கொள்ளு-தல்.]

குளிர்கோணிகம்

 குளிர்கோணிகம் guḷirāṇigam, பெ.(n.)

   பூளைச் செடி; woolly herb (சா.அக.);.

     [குளிர் + கோணிகம்.]

குளிர்சாதனம்

 குளிர்சாதனம் kuḷircātaṉam, பெ.(n.)

வீடு, பேருந்து முதலியவற்றின் உட் பகுதியைக்

   குளிர்ச்சியாக இருக்கச் செய்வதற்கு உரிய கருவி; air-conditioner.

     [குளிர் + Skt.சாதனம்]

குளிர்சாதனவசதி

 குளிர்சாதனவசதி kuḷircātaṉavacati, பெ.(n.)

   வீடு, பேருந்து முதலியவற்றின் உட்பகுதியைக் குளிர்ச்சியாக இருக்கச் செய்யும் கருவி பொருத்தப்பட்ட ஏற்பாடு; facility of air-conditioning.

தணுப்பு ஏந்து உடைய பெட்டிகள் கோடைக் காலத்தில் இரயிலில் இணைக்கப்படும்.

     [குளிர் Skt.சாதனம்+Skt வசதி]

குளிர்சுரம்

 குளிர்சுரம் kuḷircuram, பெ.(n.)

குளிர்காய்ச்சல் பார்க்க;See. {kuso-kāycCal}

     [குளிர் + சுரம்.]

குளிர்ச்சி

குளிர்ச்சி kuḷircci, பெ.(n.)

   1. குளிர்மை; coolness, cold, coldness.

   2. மனங்குளிரச் செய்தல் (சீவக.1810, உரை.);; the act of cooling, refreshing with cordials, fans, etc.

   3. இனிமையானது; that which is sweet, gratifying or pleasing.

   2. மரத்துப் போய்ச் சில்லிடுகை; numbness, frigidity, as in death.

உடம்பில் குளிர்ச்சி கண்டுவிட்டது (உ.வ.);.

     [குளிர் → குளிர்ச்சி.]

குளிர்ச்சித்தைலம்

 குளிர்ச்சித்தைலம் kuḷirccittailam, பெ.(n.)

   சந்தனாதியைப் போல் தலைக்குக் குளிர்ச்சியை உண்டாக்கும் மருந்து எண்ணெய்; medicated oil affording cooling effects to the brain, as sandal wood oil (சா.அக.);.

     [குளிர்ச்சி + தைலம்.]

குளிர்ச்சிப்பாண்டம்

 குளிர்ச்சிப்பாண்டம் kuḷirccippāṇṭam, பெ.(n.)

   குளிர்ச்சி தரும் பொருள்; cooling substance (சா.அக.);.

     [குளிர்ச்சி + பாண்டம்.]

குளிர்ச்சிமருந்து

 குளிர்ச்சிமருந்து kuḷirccimarundu, பெ.(n.)

   வெப்பத்தைக் குறைக்கும்மருந்து;  cooling medicine.

     [குளிர்ச்சி + மருந்து.]

குளிர்ச்சியாயிரு-த்தல்

குளிர்ச்சியாயிரு-த்தல் kuḷircciyāyiruttal,    4 செ.கு.வி.(v.i.)

   1. சில்லென இருத்தல்; being cool.

   2. குளிர்ச்சியை உணர்தல்; to feel refreshing (சா.அக.);.

குளிர்ச்சி + ஆய் + இருத்தல்.]

குளிர்தாமரை

 குளிர்தாமரை kuḷirtāmarai, பெ.(n.)

   ஆகாயத் தாமரை; flotting lotus, sky lotus (சா.அக.);.

     [குளிர் + தாமரை.]

குளிர்திகா

 குளிர்திகா kuḷirtikā, பெ.(n.)

   கருங்கொள்;(சா.அக.);; black horse gram.

     [குளிர்த்திகை → குளிர்திகா(கொ.வ.);]

குளிர்தேசம்

 குளிர்தேசம் kuḷirtēcam, பெ.(n.)

குளிர்நாடு பார்க்க;See. {kulir-nādu.}

     [குளிர் + தேசம்.]

குளிர்த்தி

குளிர்த்தி1 kuḷirtti, பெ.(n.)

   குளிர்ச்சி; coolness

     ‘நாற்றங் குளிர்த்தி மென்மைகளைக் கொண்டு’ (ஈடு.1.2:2);.

     [குளிர்ச்சி → குளிர்த்தி.]

 குளிர்த்தி kuḷirtti, பெ.(n.)

   பூசை வகை (யாழ்.அக.);; a kind of propitiation.

     [குளிர் → குளிர்த்தி.]

குளிர்த்திக் குடிநீர்

 குளிர்த்திக் குடிநீர் kuḷirttikkuḍinīr, பெ.(n.)

   தாகத்திற்கு அருந்தும் குளிர்ந்த நீர்; cool drink (சா.அக.);.

மறுவ. தண்ணருந்தம்

     [குளிர்த்தி + குடிநீர்.]

குளிர்த்திப்பூண்டு

 குளிர்த்திப்பூண்டு kuḷirttippūṇṭu, பெ.(n.)

   இலைகளை வீக்கங்களுக்குக் கட்ட உதவும் நீர்ச்சேம்பு; arrow head (சா.அக.);.

மறுவ, குளித்திப்பூடு, குதிரைக்குளம்படி

     [குளிர்த்தி + பூண்டு.]

குளிர்நடுக்கம்

 குளிர்நடுக்கம் kuḷirnaḍukkam, பெ.(n.)

   குளிரால் ஏற்படும் நடுக்கம்; shivering from cold (சா.அக.);.

     [குளிர் + நடுக்கம்.]

குளிர்நாடு

 குளிர்நாடு kuḷirnāṭu, பெ.(n.)

   குளிர்ச்சி மிகுந்த நாடு; cold country.

     [குளிர் + நாடு.]

குளிர்நாவல்

 குளிர்நாவல் kuḷirnāval, பெ.(n.)

   தேவ நாவல்மரம்; a kind of superior jaumoon tree (சா.அக.);.

     [குளிர் + நாவல்.]

குளிர்நீர்

குளிர்நீர் kuḷirnīr, பெ.(n)

   1.குளிர்ந்த நீர்; chil water;cold water.

   2. குளிர வைத்த நீர்; boiled and cooled water.

   3. இள வெந்நீர்; luke warm water.

   4. பனிக்கட்டி நீர்;   பனி நீர்; ice water.

     [குளிர் + நீர்]

குளிர்ந்த அரத்தம்

 குளிர்ந்த அரத்தம் kuḷirndaarattam, பெ.(n.)

   உறைந்த குருதி; clotted blood (சா.அக.);.

     [குளிர்ந்த + அரத்தம்.]

குளிர்ந்த நீர்

குளிர்ந்த நீர் kuḷirndanīr, பெ.(n.)

   1. பச்சைத் தண்ணீர்; cold water.

   2. சுடவைத்து ஆறின நீர்; water cooled after boiling.

   3. ஒன்பான் மணிகளிலுள்ள நீரோட்டம்; fine glittering in gems (S.I.I. II,451);

     [குளிர்ந்த + நீர்.]

குளிர்ந்த பார்வை

 குளிர்ந்த பார்வை kuḷirndapārvai, பெ.(n.)

   இனிய நோக்கம்; benignant look, lookfull ofsweetness.

     [குளிர்ந்த + பார்வை.]

குளிர்ந்த பேச்சு

 குளிர்ந்த பேச்சு kuḷirndapēccu, பெ.(n.)

   இனிய பேச்சு; sweet words, pleasant, comforting, soothing words.

     [குளிர்ந்த + பேச்சு.]

குளிர்ந்தகாற்று

 குளிர்ந்தகாற்று kuḷirntakāṟṟu, பெ.(n.)

   தண்ணென்று அடிக்கும் காற்று; cold blast chill breeze (சா.அக.);.

     [குளிர்ந்த+காற்று.]

குளிர்ந்தகுரல்

 குளிர்ந்தகுரல் guḷirndagural, பெ.(n.)

   இனிய குரல்வளம்; pleasant or delectable voice, as in singing.

     [குளிர்ந்த + குரல்.]

குளிர்ந்தகொல்லி

 குளிர்ந்தகொல்லி kuḷirntakolli, பெ.(n.)

   சிங்கி நஞ்சு; a kind of killing poison (சா.அக.);.

குளிர்ந்தகொள்ளி

குளிர்ந்தகொள்ளி1 guḷirndagoḷḷi, பெ.(n.)

   ஏய்ப்புக் கள்ளன் (நயவஞ்சகன்);; lit, exiguous extinguish edfire-brand, honeytongued villain, person with a fair exterior but a foul interior.

   2. வெளிக்கு அமைதியாகவும், உள்ளே கொடுமையாகவும் உள்ள பெண்; a mischievous woman apearing mildbut cruel in her activities (சா.அக.);

     [குளிர்ந்த + கொள்ளி.]

குளிர்ந்தநிறம்

 குளிர்ந்தநிறம் kuḷirndaniṟam, பெ.(n.)

   கண்ணுக்கினிய நிறம்; agreeable, pleasant, fine colour.

     [குளிர்ந்த + நிறம்.]

குளிர்ந்தபரிமளம்

குளிர்ந்தபரிமளம் kuḷirntaparimaḷam, பெ.(n.)

   1. இனிய நறுமணம்; cool pleasant scent.

   2: சீதாங்கபாடாணம் என்னும் பிறவிப் பாடாண வகை; animal poison (செ.அக.);.

     [குளிர்ந்த+பரிமளம்]

குளிர்ந்தபூமி

 குளிர்ந்தபூமி kuḷirntapūmi, பெ.(n.)

   குளிர்ச்சி மிகுந்த நாடு; cold country (செ.அக.);.

     [குளிர்ந்த+Skt. பூமி]

குளிர்ந்தமணம்

 குளிர்ந்தமணம் kuḷirndamaṇam, பெ.(n.)

   நறுமணம்; fragrant smell (சா.அக.);.

     [குளிர்ந்த + மணம்.]

குளிர்ந்தமனம்

 குளிர்ந்தமனம் kuḷirndamaṉam, பெ.(n.)

   இரக்கமுள்ள நெஞ்சம்; kind, benevolent, heart.

குளிர்ந்த + மனம்.]

குளிர்ந்தமுகம்

 குளிர்ந்தமுகம் guḷirndamugam, பெ.(n.)

   அருள் விளங்கும் முகம்; benignant countenance.

     [குளிர்ந்த + முகம்.]

குளிர்ந்தரத்தம்

 குளிர்ந்தரத்தம் kuḷirntarattam, பெ.(n.)

   உறைந்த அரத்தம்; clotted blood (சா.அக.);.

     [குளிர்→குளிர்ந்த+அரத்தம்]

குளிர்ந்து வருதல்

 குளிர்ந்து வருதல் kuḷirnduvarudal, பெ.(n.)

   காய்ச்சல் கொள்ளுதல்; feeling feverish (சா.அக);.

     [குளிர்ந்து + வருதல்.]

குளிர்ந்துகிட-த்தல்

குளிர்ந்துகிட-த்தல் guḷirndugiḍattal,    3 செ.கு.வி. (v.i.)

   1. சூடறியிருத்தல்; to become-cool, as water after boiling.

   2. கைகால் சில்லிடுதல்; to become cold, as a dying person.

   3. இறத்தல்; to die, used euphemistically

     [குளிர்ந்து + கிடத்தல்.]

குளிர்ந்துகொல்லி

 குளிர்ந்துகொல்லி kuḷirntukolli, பெ.(n.)

   நயவஞ்சகன்; honey tongued villan, person with a fair exterior but a foul interior (செ.அக.);.

     [குளிர்ந்து+கொல்லி]

குளிர்ந்துபோதல்

 குளிர்ந்துபோதல் kuḷirndupōtal, பெ.(n.)

   சில்லிட்டுப் போதல்; getting cold and stiffjust before death.

     [குளிர்ந்து + போதல்.]

குளிர்பதனப்பெட்டி

 குளிர்பதனப்பெட்டி kuḷirpataṉappeṭṭi, பெ.(n.)

   மிகக் குறைந்த வெப்ப நிலையில் உணவு, காய்கறிகளை வைத்துப் பாதுகாக்க உதவும் பெட்டி போன்ற கருவி; refrigerator deep freeze;freezer.

     [குளிர்+பதனம்+பெட்டி]

குளிர்பானம்

 குளிர்பானம் kuḷirpāṉam, பெ.(n)

   குளிர வைக்கப்பட்ட பருகம் (பானம்);; cool drink(s);;bottled soft drink kept in cold storage.

     [குளிர்+பானம்]

குளிர்பொறுக்காமை

 குளிர்பொறுக்காமை kuḷirpoṟukkāmai, பெ.(n.)

   குளிர் தாங்காமை; extreme sensitiveness to cold;

 intolerance of cold (சா.அக.);.

     [குளிர் + பொறுக்காமை]

குளிர்ப்பித்தல்

குளிர்ப்பித்தல் kuḷirppittal,    4 செ.குன்றாவி.(v.t.)

   தண்ணீர், நறுமணப் பொருள் முதலியவற்றால் குளிர்ச்சி செய்தல்; refresing with water, perfumes etc.

   2. உடம்பின் சூடு போக்கல்; allaying the heat in the system (சா.அக.);.

     [குளிர் → குளிர்ப்பி.]

குளிர்ப்பு

 குளிர்ப்பு kuḷirppu, பெ.(n.)

குளிர்மை பார்க்க;See. {kufirmai}

     [குளிர் + குளிர்ப்பு.]

குளிர்மாதி

 குளிர்மாதி kuḷirmāti, பெ.(n.)

கொத்தமல்லி,

 coriander (சா.அக.);.

குளிர்மை

குளிர்மை kuḷirmai, பெ.(n.)

   1. குளிர்ச்சி; coolness.

   2. அன்பு; kindness, benevolence.

அவர்கள் குளிர்மையில்லாதவர்கள் (உ.வ.);.

ம. குளிர்ம்ம

     [குளிர் → குளிர்மை.]

குளிர்மை கொள்(ளு)தல்

குளிர்மை கொள்(ளு)தல் guḷirmaigoḷḷudal,    16 செ.கு.வி. (v.i.)

   நடுங்குதல்; to shiver.

     [குளிர்மை + கொள்ளுதல்.]

குளிர்மைக்கட்டி

 குளிர்மைக்கட்டி kuḷirmaikkaṭṭi, பெ.(n.)

   பொன்னுக்கு வீங்கி; mumps.

     [குளிர்மை + கட்டி.]

குளிர்மையான

 குளிர்மையான kuḷirmaiyāṉa, பெ.எ..(adj.)

குளிர்ச்சியான

 chilly (சா.அக.);.

குளிர்விடு-தல்

குளிர்விடு-தல் kuḷirviḍudal,    20 செ.கு.வி.(v.i.)

   அச்சம் நீங்குதல்; to be freed from fear.

அவனுக்கு குளிர்விட்டுப் போயிற்று (உ.வ.);.

     [குளிர் + விடு-.]

குளிர்வீக்கம்

 குளிர்வீக்கம் kuḷirvīkkam, பெ.(n.)

   குளிரா லேற்படும் வீக்கம்; inflammation or swelling caused in cold weather (சா.அக.);.

     [குளிர் + வீக்கம்.]

குளிறு

குளிறு1 kuḷiṟudal,    5 செ.கு.வி.(v.i.)

   1. ஒலித்தல் (திவா.);; to sound, rattle.

     [குளிர் → குளிறு-தல்.]

 குளிறு2 kuḷiṟu, பெ.(n.)

   1. ஒலி (சூடா.);

 sound, rattling noise.

   2 குடமுழவு; kettle drum.

   3.எறும்பு; ant.

     [குளிர் → குளிறு.]

 குளிறு3 kuḷiṟu, பெ.(n.)

   நண்டு; crab.

     “எழுகுளிறு மிதித்த வொரு பழம் போல” (குறுந்.24);.

     [குளி (சேற்றில் மறைதல்); → குளிர் → குளிறு.]

குளிவை

குளிவை kuḷivai, பெ.(n.)

குளுவை பார்க்க;See. {kuluva}

     “குளிவையும் புதாவும்” (பெருங்.உஞ்சைக் 51,70);.

     [குளுவை → குளிவை. குளுவை = நீர்ப்பறவை.]

குளுகுளு-த்தல்

குளுகுளு-த்தல் guḷuguḷuttal,    4 செ.கு.வி.(v.i.)

   1. செழித்து வளர்தல்; to grow luxuriantiy.

பயிர்கள் குளுகுளுத்திருக்கின்றன.

   2. சோகை பற்றுதல்; to become pale, sallow, wan, bloated, as in jaundice;

 to become weak through morbid state of the body.

   3. அழுகிப்போதல்; to become rotten, putrid, as fruits.

     [குளு + குளு-]

குளுகுளுப்பை

 குளுகுளுப்பை guḷuguḷuppai, பெ.(n.)

   காமாலை நோய்; the state of being pale and bloated in countenance, a kind of jaundice.

     [குளு + குளுப்பை.]

குளுகுளுவென்று

 குளுகுளுவென்று kuḷukuḷuveṉṟu, வி.அ. (adv.)

   குளிர்ச்சியாக; pleasantly cool.

     “காற்றுகுளுகுளுவென்று வீசுகிறது”.

     [குளுகுளு+என்று]

குளுகுளெனல்

குளுகுளெனல் guḷuguḷeṉal, பெ.(n.)

   கொதித்தற்குறிப்பு; onom expr. of boiling.

     “பார்ப்பான் குண்டிகை யிருந்த நீரும் குளுகுளு கொதித்ததன்றே” (கம்ப. வருணனை.61);.

     [குளு + குளு + எனல்.]

குளுத்தி

குளுத்தி kuḷutti, பெ.(n)

   1.குளிர்ச்சி (சீதளம்);; coolness, cold, coldness.

   2. குளுமைப் படுத்தல் (சைத்தி யோபகாரம்); (சீவக.1810, உரை);; the act of cooling, refreshing with cordials, fans, etc.

   3. இனிமையானது; that which is sweet, gratifying or pleasing.

   4. மரத்துப்போய் சில்லிடுகை; numbness, frigidity, as in death.

     “உடலில் குளிர்ச்சி கண்டுவிட்டது”(செஅக);.

     [குளிர்ச்சி→குளுத்தி]

 குளுத்தி kuḷutti, பெ.(n.)

வளர்ப்பு விலங்குகள் நீர் பருகுவதற்காக மண்ணால் செய்யப்பட்ட வாய்விரிந்த வட்டத்தாழி:

 round earthen pot – made for the cattle to drinkwater.

மறுவ. குழித்தி

     [குழி-குழித்தி-குளுத்தி]

குளுத்திப்பூச்சி

 குளுத்திப்பூச்சி kuḷuttippūcci, பெ.(n.)

   பிள்ளையார் எறும்பு (இலங்);; a kind of black ant with a painless sting.

     [குளுத்தி+பூச்சி]

குளுத்திமருந்து

 குளுத்திமருந்து kuḷuttimaruntu, பெ.(n.)

   சூட்டைக் குளிர்விக்கச் செய்யும் மருந்து; cooling medicine (செ.அக.);.

     [குளுத்தி+மருந்து]

குளுத்தியெண்ணெய்

 குளுத்தியெண்ணெய் kuḷuttiyeṇīey, பெ.(n.)

   குடுதணிக்கும் மருந்தெண்ணெய்; a cooling medcine in the form of oil.

     [குளிர்ச்சி → குளுத்தி + எண்ணெய்.]

குளுந்தண்ணீர்

 குளுந்தண்ணீர் kuḷundaṇṇīr, பெ.(n.)

முளைத் தண்ணீர் (உழ.நெ.க.அக.);.

 watering the seeds to sprout.

     [குளு → குளுந்தண்ணீர்.]

குளுந்தை

குளுந்தை kuḷundai,    பெ.(n). கொள் போன்ற மான்மணத்தி வகை (பதார்த்த.1081); musk that resembles horse gram, one of 5kinds of kasturi,

     [கொள் → குளு → குளுந்தை.]

குளுப்பை

 குளுப்பை kuḷuppai, பெ.(n.)

   நோயால் முகம் ஊதுகை; being bloated, as the face in jaundice.

     [குளு → குளும்பை.]

குளுப்பை பாய்-தல்

குளுப்பை பாய்-தல் kuḷuppaipāytal,    2 செ.கு.வி. (v.i.)

   நோயால் கன்னம் கதித்தல்; becoming turgid through disease as the cheeks (சா.அக.);.

     [குளுப்பை + பாய்தல்.]

குளுப்பைதட்டு-தல்

குளுப்பைதட்டு-தல் kuḷuppaidaṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   நோயால் முகம் ஊதித் தோன்றுதல்; to become bloated as the face in jaundice.

அவன் முகம் குளுப்பை தட்டியிருக்கிறது (உ.வ.);.

     [குளுப்பை + தட்டு-.]

குளுப்பைமுகம்

 குளுப்பைமுகம் guḷuppaimugam, பெ.(n.)

   அதைத்த முகம்;  bloated face (சா.அக.);.

     [குளும்பை + முகம்.]

குளுமி

 குளுமி kuḷumi, பெ.(n.)

   மதகு (P.T.L.);; sluice.

     [குள் → குளுமி.]

குளுமை

 குளுமை kuḷumai, பெ.(n.)

   குளிர்ச்சி; coldness, chillness.

 Fin. kylma;

 Es. kulm;

 Mordvin. kelma;

 Mong. kolmy, Jap. shimo:Q. culi

     [குளிர்மை → குளுமை.]

குளுமைகொள்ளல்

 குளுமைகொள்ளல் guḷumaigoḷḷal, பெ.(n.)

   நீர் கொள்ளுதல்; catching cold (சா.அக.);.

     [குளுமை + கொள்ளல்.]

குளுமைமூலம்

 குளுமைமூலம் kuḷumaimūlam, பெ.(n.)

   இஞ்சி; ginger (சா.அக.);.

     [குளுமை + மூலம்.]

குளும்பாறை

குளும்பாறை kuḷumbāṟai, பெ.(n.)

   ஒருவகைக் கடல்மீன்; horse mackerel, greenish, attaining 28 in. in length.

     [குளு → குளும்பாறை.]

குளுரி

 குளுரி kuḷuri, பெ.(n.)

   குளிரி, நீர்ச்சேம்பு; water archer (சா.அக.);.

     [குளிரி → குளூரி (கொ.வ.);]

குளுவன்

குளுவன் kuḷuvaṉ, பெ.(n.)

   குறவனுடைய பாங்கன்; a fowler’s attendant.

     “குளுவச்சிங்கன் வந்தான்” (குற்றா.குற.792.9);.

மறுவ, குழுவன்

     [குளு → குளுவை → குளுவன். (குளுவைப் பறவை வேட்டைக்குத் துணையானவன்.]

குளுவான்

 குளுவான் kuḷuvāṉ, பெ.(n.)

குஞ்சு என்பதோடு இணைந்து வரும் சொல்

 a word which occurs in combination with kuñju.

குளுவை

குளுவை kuḷuvai, பெ.(n.)

   ஊரற் பறவை (சிலப்.10:117,உரை.);; a water-bird.

     [குளு → குளுவை (சிறிய பறவை);.]

குளைச்சக்கரம்

 குளைச்சக்கரம் kuḷaiccakkaram, பெ.(n.)

   ஒடு (சங்.அக.);; tile.

     [குள் → குளை + சக்கரம். ஒருகா. குளைச்சக்கரம்.]

குளைச்சு

 குளைச்சு kuḷaiccu, பெ.(n.)

   நாலிலொன்று; onefourth.

     [குள் → குளை → குளைச்சு.]

குளைஞ்சி

 குளைஞ்சி kuḷaiñji, பெ.(n.)

   வஞ்சிக்கொடி; slender rattan (சா.அக.);.

     [குள் → குளை → குளைஞ்சி.]

குளையாள்

 குளையாள் kuḷaiyāḷ, பெ.(n.)

   பெண் காமக்களை; secretion from ovary in women (சா.அக.);.

     [குள் → குளை → குளையாள்.]

குளோப்பர்

 குளோப்பர் kuḷōppar, பெ.(n.)

   உருண்டை வடிவாய்த் தொங்கும் ஒருவகைக் கண்ணாடி விளக்கு; globe lamp.

த.வ. கோளவிளக்கு.

     [E.globe → த.குளோப்பர்.]

     [P]

குளோப்பு

 குளோப்பு kuḷōppu, பெ.(n.)

குளோப்பர் பார்க்க;see {}.

     [E.globe → த.குளோப்பு.]

குளோப்புக்கொன்னை

 குளோப்புக்கொன்னை kuḷōppukkoṉṉai, பெ.(n.)

   யானைப் புளிய மரம்; elephant tamarind tree.

த.வ. பப்பரப்புளி, பொந்தம், புளிமரம், பூரிமரம்.

குள்ளக்கார்

 குள்ளக்கார் kuḷḷakkār, பெ.(n.)

   குள்ளம், சித்திரைக்கடப்பு என்னும் நெல்; a kind of paddy.

     [குள்ளம் + கார்.]

குள்ளக்குடை-தல்

குள்ளக்குடை-தல் kuḷḷakkuḍaidal,    3. செ.கு.வி. (v.i.)

   நீருள் மிகவும் குடைநது மூழ்குததல் (அகநா.63, உரை);; to dive deep, plunge.

     [குள் + குடைச்சல்.]

குள்ளக்குடைச்சல்

 குள்ளக்குடைச்சல் kuḷḷakkuḍaiccal, பெ.(n.)

   ஆழ்ந்தவலி; deep seated pain (சா.அக.);.

     [குள்ள + குடைச்சல்.]

குள்ளக்குறுகவிரு-த்தல்

குள்ளக்குறுகவிரு-த்தல் guḷḷagguṟugaviruttal,    3 செ.கு.வி.(v.i.)

   மிகக்குட்டையாக இருத்தல்; to be very short dwarf-fish.

     [குள்ளம் + குறுக + இருத்தல்.]

குள்ளக்குறுக்கம்

 குள்ளக்குறுக்கம் kuḷḷakkuṟukkam, பெ.(n.)

   மிகவும் குட்டை; verys short in stature (சா.அக.);.

     [குள்ளம் + குறுக்கம்]

குள்ளக்குளிர்-தல்

குள்ளக்குளிர்-தல் kuḷḷakkuḷirtal,    3 செ.கு.வி.(v.i.)

   மிகக் குளிர்ந்திருத்தல்; to be intensely cool and refreshing.

     “குள்ளக்குளிரக்குடைந்து நீராடாதோ” (திவ்.திருப்பா.13);.

     [குள்ளம் + குளிர்தல்.]

குள்ளக்கெண்டை

 குள்ளக்கெண்டை kuḷḷakkeṇṭai, பெ.(n.)

   குறுங்கெண்டை மீன்வகை; carp, silvery small.

     [குள்ளம் + கெண்டை..]

குள்ளக்கேழ்வரகு

 குள்ளக்கேழ்வரகு guḷḷagāḻvaragu, பெ.(n.)

   மூனறு மாதத்தில் விளையும் கேழ்வரகுப் பயிரில் ஒரு வகை (உழ.நெ.க.அக.);; a kind of rags crop.

     [குள்ளம் + கேழ்வரகு.]

குள்ளத்தண்டுக்கீரை

 குள்ளத்தண்டுக்கீரை kuḷḷattaṇṭukārai, பெ.(n.)

   குப்பைக்கீரை; a weed of cotton soils.

     [குள்ளம் + தண்டு + கீரை.]

குள்ளத்தாரா

 குள்ளத்தாரா kuḷḷattārā, பெ.(n.)

   ஒருவகைச் சிறுவாத்து; a species of short duck.

     [குள்ளம் + தாரா.]

குள்ளநரி

 குள்ளநரி kuḷḷanari, பெ.(n.)

   நரிவகை; jackal.

 Fin. kettu, Karel. kettu;

 Jap, kitsune;

 Tulu. Kudige

     [குள்ளம் + நரி.]

     [P]

குள்ளநரிக்குசு

 குள்ளநரிக்குசு kuḷḷanarikkusu, பெ.(n.)

   திகைப் பூச்சி; an insect causing perplexity of mind when touched or otherwise come in contact with it.(சா.அக.);.

     [குள்ளநரி + குக.]

குள்ளன்

குள்ளன் kuḷḷaṉ, பெ.(n.)

   1. குறளன்; short, under-sized man, dwarf.

   2. தந்திரக்காரன்; artful, cunning fellow.

   ம.குள்ளன்;   க.,பட.குள்ள;கோத.குள்ளன்.

     [குள் + அன்.]

குள்ளன்கம்பு

 குள்ளன்கம்பு kuḷḷaṉkambu, பெ.(n.)

   அரிசிக்கம்பு; a short species of kambu.

     [குள்ளன் + கம்பு.]

குள்ளப்புடலை

 குள்ளப்புடலை kuḷḷappuḍalai, பெ.(n.)

   குள்ளப் புடலங்காய்; a short or stunted snake-gourd (சா.அக.);.

     [குள்ளம் + புடவை.]

குள்ளம்

குள்ளம் kuḷḷam, பெ.(n.)

   1. குறள்; shortness in stature, dwarfishness.

   2. கொடுமை; wickedness, cruelty (W.);

   3.தந்திரம்; craft, cunning.க. குள்ளு

     [குள் → குள்ளம்.]

குள்ளம்பாய்-தல்

குள்ளம்பாய்-தல் kuḷḷambāytal,    3 செ.கு.வி.(v.i.)

   1. குறுகிக் கொண்டு வருதல்; to become shorter and shorter.

   2. பிறர் அறிய முடியாதபடி தந்திரமாயிருத்தல்; to be crafty and cunning beyond detection.

கள்ளனுக்குள் குள்ளம் பாய்தல்.

     [குள்ளம் + பாய்தல்.]

குள்ளல்

 குள்ளல் kuḷḷal, பெ.(n.)

   குள்ளம்; shortness in stature, dwarfishness.

     [குள் + அல் – குள்ளல்.]

குள்ளவண்டு

குள்ளவண்டு kuḷḷavaṇṭu, பெ.(n.)

   1. சிறுகரு வண்டு; small black bee.

   2. செயலில் விரைவுள்ளவன்; prompt and deligent person. one who is swift and business like.

     [குள்ளம் + வண்டு.]

குள்ளவாழை

 குள்ளவாழை kuḷḷavāḻai, பெ.(n.)

குழிவாழை பார்க்க;See. {kuso-vasa.}

     [குள்ளம் + வாழை.]

குள்ளாரால்

 குள்ளாரால் kuḷḷārāl, பெ.(n.)

சேற்றாரால் பார்க்க;See. {cérrārā/}

     [குள்ளம் + ஆரால்.]

குள்ளி

 குள்ளி kuḷḷi, பெ.(n.)

   குள்ளமானவள்; a shortstatured woman,

ம., து., படகுள்ளி,

     [கள் → குள்ளி.]

குள்ளிக்கோழிமீன்

 குள்ளிக்கோழிமீன் kuḷḷikāḻimīṉ, பெ.(n.)

   பவளக் குன்றுகளிலும் பவளச்செடி நிறைந்த கடல் ஓரங்களிலும் அகப்படும் ஒரு வகை வண்ணாத்தி மீன்; a small sturgeon fish found usually in coral reefs on the sea-coasts (சா.அக.);.

     [குள்ளி + கோழி + மீன்.]

குள்ளிதாச்சான்

 குள்ளிதாச்சான் kuḷḷitāccāṉ, பெ.(n.)

   குளியிடிச்சான், நெல்வகை; a kind of paddy.

     [குள்ளி + தாச்சான்.]

குள்ளிமல்லிகை

 குள்ளிமல்லிகை guḷḷimalligai, பெ.(n.)

   ஒரு வகை மல்லிகை, சிறுமல்லைகை; very small jasmine (சா.அக.);.

     [குள்ளி + மல்லிகை.]

குள்ளிருமல்

 குள்ளிருமல் kuḷḷirumal, பெ.(n.)

   கக்கிருமல்; whooping-cough.

     [குள் + இருமல், குள் – ஒலிக்குறிப்பு.]

குழகன்

குழகன் kuḻkaṉ, பெ.(n.)

   1. இளையோன்; youth

     “நின்மணக் குழகன்” (திருவிளை.திருமண.44);.

   2. அழகன்; beautiful person.

     “கொட்கப் பெயர்க்குங் குழகன” (திருவாச.3,12);.

   3. முருகக் கடவுள் (பிங்.);; {skanda.}

   4. பிறர்க்கு இணங்குபவன்; person of yielding or accommodating nature.

     “குறவை கோத்த குழகனை” (திவ்.திருவாய்.3,6,3);.

     [குழ → குழகு → குழகன்.]

குழகயம்

 குழகயம் kuḻkayam, பெ.(n.)

   மனோரஞ்சித்ம்; cupids plant (சா.அக.);.

     [குழகு → குழகயம்.]

குழகு

குழகு kuḻku, பெ.(n.)

   1. இளமைச் செவ்வி; youth fulness.

     “கொம்மைக் குழகாடுங் கோலவரை மார்பர்” (சீவக.2790);.

   2. அழகு; beauty.

     “கொன்றை குடிக் குழகாக… விளையாடும்” (தேவா.468);

   3. குழந்தை; infant.

     “குழகென வெடுத்துகந்தவுமை” (திருப்பு.106);.

     [குழ → குழகு → குழகன்.]

குழகு-தல்

குழகு-தல் kuḻkudal,    6 செ.கு.வி. (v.i.)

   1. கொஞ்சி விளையாடுதல்; to prattle playfully.

     “கிளியோடுங் குழகேலே” (திவ்.திருவாய்.6,2,5);.

   2.கவர்தல்; to coax, wheedle.

     “குழகியெங்கள் குழமணன் கொண்டு” (திவ்.திருவாய்.6,2,6);.

     [குழ → குழகு.]

குழகுழ-த்தல்

குழகுழ-த்தல் kuḻkuḻttal,    4 செ.கு.வி.(v.i.)

   1. நெகிழ்ந்திருத்தல்; to be mashy pulpy.

   2. மன உறுதியறுதல்; to be timid, to be chicken hearted.

     [குழ → குழகு.]

குழகுழத்தபுண்

 குழகுழத்தபுண் kuḻkuḻttabuṇ, பெ.(n.)

   அழுகின புண்; putrid sore-ulcer (சா.அக.);.

     [குழ + குழத்த + புண்.]

குழகுழப்பு

 குழகுழப்பு kuḻkuḻppu, பெ.(n.)

பிசு பிசுப்போடு குழைவாக இருக்கும் தன்மை

 sticky and slimy nature.

விரலில் பசையின் குழகுழப்பு, குழகுழப்பான நீர்மம்.

     [குழ+குழப்பு]

குழகுழவெனல்

குழகுழவெனல் kuḻkuḻveṉal, பெ.(n.)

   இளகியிருக்கும் குறிப்பு; expr. signifying sliminess, softness as of {kū.}

     [குழ + குழ + எனல்.]

   �ொழி களின் ஈற்றில், அரைமாத்திரையாய்க் குறுகி ��கை; a kind of garland for the neck.

     “குழங்கன் மாலை…. மார்பீர்” (சீவக.743);.

     [குழ → குழங்கு → குழங்கல்.]

குழக்குக்குழக்கெனல்

குழக்குக்குழக்கெனல் kuḻkkukkuḻkkeṉal, பெ.(n.)

   1. ஓர் ஒலிக்குறிப்பு (வின்.);; onom. Expr. signifying, rumbling sound.

   2. வலியற்றுத் தெங்குதற் குறிப்பு; hanging loose, as arms with feebleness.

     [குழக்கு + குழக்கு + எனல்.]

குழக்குமழக்கெனல்

 குழக்குமழக்கெனல் kuḻkkumaḻkkeṉal, பெ.(n.)

   தடித்துப் பருத்தற்குறிப்பு; expr. signifying being fleshy and rounded, plump.

அந்தக் குழந்தை குழக்குமழக்கென்றிருக்கின்றது.

     [குழக்கு + மழக்கு + எனல்.]

குழச்சி

குழச்சி kuḻcci, பெ.(n.)

   பவளப்புற்று நஞ்சு; a kind of prepared arsenic.

   2. சேர்ந்தாடு பாவைச் செடி; an unknown plant (சா.அக.);.

     [குழ → குழச்சி.]

குழநெல்லி

 குழநெல்லி kuḻnelli, பெ.(n.)

   மிகுதியாகப் பழுத்த நெல்லி; over riped gooseberry (சா.அக.);.

     [குழ + நெல்லி.]

குழந்தை

குழந்தை kuḻndai, பெ.(n.)

   1. கைப்பிள்ளை; infant, baby suckling.

     “குழந்தையை உயிர்த்த மலடிக்கு” (கம்பரா.உருக்கா.65.);

   2.இளமைப்பருவம்; childhood, tender age.

     “குழந்தை வெண்மதி” (கம்பரா.உர்தேடு.209);.

   ம. குழந்த;   க.கொணசு;   தெ.கொடுகு (மகன்);;   கொண்டிகா;   து.கொரை (சிறிய); கொலா. கொச்சை;   நா.கொச்ச;   பர்.கொச்;கூ.கோடு.

 ME. E. child;

 OE. cild, Gothr. kilthei, womb

 Fin. kakara, Komi, kaga;

 Gondi, koko;

 Mong. caxa, Q. kaka;

 Jap, kaka

     [குழ + குழந்தை.]

   1. குருத்துக் குழந்தை

   2. அறைக் குழந்தை

   3. முலையுண் குழந்தை

   4. கைக்குழந்தை அல்லது இடுக்குப் பிள்ளை

   5. விளையாட்டுக் குழந்தை

   6. வயதுக் குழந்தை

    7. பச்சைக் குழந்தை

    8. சப்பானிக் குழந்தை

    9. தேரைக் குழந்தை

    10. இரட்டைக் குழந்தை

    11. சவலைக் குழந்தை

    12.. அழிகுழந்தை

    13. சாக் குழந்தை

    14. துயலைக் குழந்தை

    15. பேய்க்குழந்தை

    16, கன்னிக் குழந்தை

    17. தலைச்சன் குழந்தை

   18. இடைச்சன் குழந்தை

   19. நிறைவுக் குழந்தை

   20. வயிற்றுக் குழந்தை.

குழந்தைகுஞ்சு

 குழந்தைகுஞ்சு guḻndaiguñju, பெ.(n.)

குழந்தை குட்டி பார்க்க;See. {kulanda kutfi}

     [குழந்தை + குஞ்சு.]

குழந்தைகுட்டி

 குழந்தைகுட்டி guḻndaiguṭṭi, பெ.(n.)

   பல அகவை யினரான குழந்தைகள்; children varying in age.

அவனுக்குக் குழந்தை குட்டி அதிகம் (கொ.வ.);.

     [குழந்தை + குட்டி.]

குழந்தைகுட்டிக்காரன்

 குழந்தைகுட்டிக்காரன் guḻndaiguṭṭiggāraṉ, பெ.(n.)

   பெரிய குடும்பமுடையவன்; man with a large family (கொ.வ.);.

     [குழந்தை + குட்டிக்காரன்]

குழந்தைக்காரி

 குழந்தைக்காரி kuḻntaikkāri, பெ.(n.)

   தாய்ப்பால் கொடுக்கும் கைக்குழந்தை உடையவள்; a mother who has a nursing baby.

குழந்தைக்காரி பட்டினி கிடக்கக் கூடாது.

மறுவ. கைப்பிள்ளைக்காரி. பச்சை உடம்புக்காரி.

     [P]

குழந்தைச் செல்வம்

 குழந்தைச் செல்வம் kuḻndaiccelvam, பெ.(n.)

   இறைவனால் கொடுக்கப்பட்டதாகக் கருதப்படும் மழலைச் செல்வங்களாகிய குழந்தைகள்; off spring, children.

     [குழந்தை+செல்வம்]

குழந்தைச்சாமி

 குழந்தைச்சாமி kuḻndaiccāmi, பெ.(n.)

   முருகக் கடவுள் (குழந்தைத் தெய்வம்);; lit, child-god, skanda.

     [குழந்தை + சாமி.]

குழந்தைநீர்

 குழந்தைநீர் kuḻndainīr, பெ.(n.)

   இளநீர் (தைலவ.);; milk of the tender coconut.

     [குழ → குழந்தை + நீர்.]

குழந்தைப் பேறு

 குழந்தைப் பேறு kuḻndaippēṟu,    பெ.(n,) பிள்ளை பெறும்பெரும்பேறு; for tune of begetting child.

     [குழந்தை+பேறு]

குழந்தைப்பசி

 குழந்தைப்பசி kuḻndaippasi, பெ.(n.)

   அடிக்கடி உண்டாகும் பசி; hunger occuring in a short duration of time (சா.அக.);.

     [குழந்தை + பசி.]

குழந்தைப்புத்தி

 குழந்தைப்புத்தி kuḻndaipputti, பெ.(n.)

   சிறு பிள்ளையறிவு; childishness, puerility, youthful undiscretion.

     [குழந்தை + புத்தி.]

குழந்தைமதக்கனி

 குழந்தைமதக்கனி kuḻndaimadakkaṉi, பெ.(n.)

   நிலத் துளசி; holy basil (சா.அக.);.

     [குழந்தை + (மணக்கனி); மதக்கனி.]

குழந்தைமுதலியார்

 குழந்தைமுதலியார்பெ.(n.)    திருக்குற்றாலத்தில் வாழ்ந்த தமிழ்க்கவி; Tamil poet who lived in Tiruk-kurräsam.

     [குழந்தை+முதலி+ஆர்]

இவர் வீரராகவர் பிள்ளைத் தமிழை இயற்றியவர் (அபி.சிந்);.

குழந்தையறை

குழந்தையறை kuḻndaiyaṟai, பெ.(n.)

   1. குழந்தை களைக் காப்பாற்றி வளர்க்குமிடம்; a place where children are nursed and taken care of.

   2. குழந்தையைப் பெற்ற அறை; lying in room (சா.அக.);.

     [குழந்தை + இசிவு.]

குழந்தையிசிவு

 குழந்தையிசிவு kuḻndaiyisivu, பெ.(n.)

   தெற்கித்திக் கணை; an affection in children characterised by contraction of inter-coastal muscles (சா.அக.);.

     [குழந்தை + இசிவு.]

குழப்படி

 குழப்படி kuḻppaḍi, பெ.(n.)

   குழப்பம்; confusion, disturbance (கொ.வ.);.

     [குழப்பம் → குழப்படி.]

குழப்படிகாரன்

குழப்படிகாரன் kuḻppaḍikāraṉ, பெ.(n.)

   1. சண்டை செய்வோன்; quarrelsome person.

   2. கலகஞ்செய்வோன்; rioter.

   3. குறும்பன்; mischievous fellow.

     [குழம்பு + அடி + காரன்.]

குழப்பன்

 குழப்பன் kuḻppaṉ, பெ.(n.)

   கலகக்காரன் (யாழ்.அக.);; quarrelsome fellow, anarchist.

     [குழப்பு → குழப்பன்.]

குழப்பம்

குழப்பம் kuḻppam, பெ.(n.)

   1. தாறுமாறு; confusion, muddle, disorder, embroilment.

   2. மனக் கலக்கம்; perturbation, agitation, bewilderment, indecision.

   3. கலகம்; disturtance, quarrel, commotion, tumult,

   4. அரசகலகம்; sedition, insurection, rebellion.

   5. கொந்தளிப்பு (வின்.);; squall, storm, hurricane, boisterousness of the weather or sea.

   ம. குழப்பம்;க. கொழம்ப

     [குழம்பு → குழப்பு → குழப்பம்.]

குழப்பு

குழப்பு1 kuḻppudal,    5 செ.குன்றாவி.(v.t.)

   1. கலக்குதல்; to mix stir.

     “சேறெலாங் குழப்பி” (காஞ்சிப்.நாட்டுப்.74.);

   2. பிறழ்வித்தல்; to confuse,

 disturb, derange.

     “நடுக்குழப்பிய நா” (குற்றா.தல.கவுற்சன.53);

   3. வியப்படையச் செய்தல்; to bewil

 der perplex.

     “கடிமனை தொறுங் குழப்பி” (திருவாலவா.13,9);.

   4. மனத்தைக் கலக்குதல்; to disconcert, trouble, vex, annoy;

 to cause doubt, hesitation.

   2. காரியக் கேடாக்குதல்; to frustrate, as a design, to interrupt, to hinder, to spoil, as a business.

   6. குழப்பிப்பேசுதல்; to prevaricate, shuffle, evade questions.

ம. குழப்புக

     [குழம்பு → குழப்பு-.]

 குழப்பு2 kuḻppu, பெ.(n.)

   1. நீர்மங்களைக் கலக்குதல்; mixing liquids of different consistency, mixing powders with liquids.

   2. கலக்க முண்டாக்குவை; agitating, confusing.

     [குழம்பு → குழப்பு.]

குழமகன்

குழமகன் guḻmagaṉ, பெ.(n.)

   1.இளம்பருவமுள்ள

   தலைவன்; youthful-hero, as of a poem.

     “குழமகனைக் கலிவெண்பாக் கொண்டு…… விளங்க வுரைத்தாங்கு” (இலக்.வி.858);.

   2. மாதர்கள் குழமகனைப் புகழ்ந்து கூறும் ஒரு சிற்றிலக்கியம் (தொ.283);; A poetic composition in which women extol the worth of a youthful hero.

   3. மரப்பாவை; wodden doll.

     “உத்திரியம் பட்டுங் குழமகன்றனக்கு நல்கி” (பாரத.நிறைமீ.136);

     [குழ + மகன்.]

குழமணன்

குழமணன் kuḻmaṇaṉ, பெ.(n.)

   மரப்பாவை; wooden

 doll.

     “எங்கள் குழமணன் கொண்டு” (திவ். திருவாய். 6:2:6);.

     [குழமணம் → குழமணன்.]

குழமணம்

 குழமணம் kuḻmaṇam, பெ.(n.)

   பாவைக்குச் செய்யும் திருமணம் (பிங்.);; marriage of dolls.

     [குழ + மணம்.]

குழமணிதூரம்

குழமணிதூரம் kuḻmaṇitūram, பெ.(n.)

   வென்றவர் தம்மீது இரங்குமாறு பாடிக் கொண்டு தோற்றவர் ஆடும் ஒருவகை கூத்து (திவ்.பெரியதி.10.3);; a dance by the vanquished, accompanied with singing to excite the pity of the victors.

     [குழமணி + தூரம். குழமணி = பாவை, பதுமை, பாவைக்கூத்து. தோல் → தோரம் → தூரம் (தோற்பாவை);.]

குழம்பல்

குழம்பல் kuḻmbal, பெ.(n.)

   1. கலங்குகை, perturbation.

   2. குழும்பான பொருள்; anything of a thick consistency.

     [குள் + குழ → குழம்பு → குழம்பல்.]

குழம்பாய்க் காய்ச்சுதல்

குழம்பாய்க் காய்ச்சுதல் kuḻmbāykkāyccudal,    12.செ.கு.வி.(v.t.)

   குழம்பாயிருக்கும்படிக் காய்ச்சுதல்; boiling down to a thick consistence (சா.அக.);.

     [குழம்பு + ஆய் + காய்ச்சுதல்.]

குழம்பாய்ப்போ-தல்

குழம்பாய்ப்போ-தல் kuḻmpāyppōtal,    8 செ.கு.வி.(v.i.)

   மலம் இளகி நீராய்க் கழிதல்; semf-solid or watery fecal discharge (சா.அக.);.

மறுவ வயிறோட்டம்

     [குழம்பாய்+போ-தல்.]

குழம்பு

குழம்பு1 kuḻmbudal,    5 செ.கு.வி.(v.i.)

   1. கலங்குதல்; to become mixed, to be stirred up, mingled, as liquides of different consistency, as powders with liquids.

   2. மனங்கலங்குதல்; to be disconcerted, troubled, confused.

   அவன் குழம்பி நிற்கிறான். 3.நிலைக்குலைதல்; to be disturbed, agitated, to be boisterous, as the sea.

ம. குழம்புக

     [குள் → குழ → குழம்பு.]

 குழம்பு2 kuḻmbu, பெ.(n.)

   1. குழம்பான பொருள்; mixture, liquid of thick consistency, as sandal paste.

     “சந்தனக் குழம்பும்” (திவ்.இயற்.2:76);.

   2. காய்கறிக் குழம்பு (பிங்.);; thickened curry broth.

   3. குழைசேறு (வின்.);; mud, slime, macerated earth.

ம. குழம்பு

     [குள் → குழ → குழம்பு.]

குழம்பு காய்ச்சுதல்

குழம்பு காய்ச்சுதல் kuḻmbukāyccudal,    12 செ.குன்றாவி. (v.t.)

   குழம்பு காய்ச்சுதல்; preparing sauce for use in food (சா.அக.);.

     [குழம்பு + காய்ச்சுதல்.]

குழம்பு கூட்டல்

 குழம்பு கூட்டல் kuḻmbuāṭṭal, பெ.(n.)

   குழம் புக்காக வேண்டிய பொருள்களை ஒன்றாகக் கலத்தல்; mixing up curry stuffs for preparing sauce (சா.அக.);.

     [குழம்பு + கூட்டல்.]

குழம்புகறி

குழம்புகறி guḻmbugaṟi, பெ.(n.)

   1. குழம்பிலிட்ட கறி; vegetable or meat boiled in sauce.

   2. குழம்பிற்குப் பயன்படும் காய்கறி; vegetable or meat used in the preparation of sause.

   3. குழம் பாகச் செய்த கறி; curry sauce (சா.அக.);.

     [குழம்பு + காய்ச்சுதல்.]

குழம்புசாதி

குழம்புசாதி kuḻmbucāti, பெ.(n.)

   நன்மை தீமை கலப்பில் உண்டாவதாகக் கருதப்படும் மாந்தப் பிறவி அல்லது விலங்குப்பிறவி (திவ்.திருச்சந்த.16);; birth as man or animal, at tribute to the joint effect of {papa and punya.}

     [குழம்பு +சாதி.]

குழம்புதாளித்தல்

 குழம்புதாளித்தல் kuḻmbutāḷittal, பெ.(n.)

   கறிக்குழம்பிற் கறி மசாலையிட்டுத் தாளித்தல்; seasoning sauce with condiments foruse food (சா.அக.);.

     [குழம்பு → தாளித்தல்.]

குழம்புத்தான்

 குழம்புத்தான் kuḻmbuttāṉ, பெ.(n.)

   குழம்பிலிட்ட வெந்த காய்கறித் துண்டு; vegetable cut up and boiled soft in curry broth.

     [குழம்பு + தான். தாள் → தாண் → தான்(கொ.வ.);]

குழம்புத்தாள்

 குழம்புத்தாள் kuḻmbuttāḷ, பெ.(n.)

   குழம்பில் வெந்த காய்கறித் துண்டு; vegetables or meat boiled in curry broth (சா.அக.);.

     [குழம்பு + தான். தாள் = குழம்பு வைத்த ஏனத்தில் அடியில் தங்கிய காய்களின் துண்டு,.]

குழம்புபதம்

 குழம்புபதம் kuḻmpupatam, பெ.(n.)

   மருந்தெண்ணெய்ப் பதங்களுள் ஒன்று; a stage in the preparation of medicinal oil, one of marundemney-p-patam (செ.அக.);.

 குழம்புபதம் kuḻmbubadam, பெ.(n.)

   மருந்தெண்ணெய்ப் பதங்களுளொன்று; a stage in the preparation of medicinal oil, one of {manuntessley-p-padam.}

     [குழம்பு + பதம்.]

குழம்புப்பாகு

 குழம்புப்பாகு kuḻmpuppāku, பெ.(n.)

   தடித்த பாகு; thick syrup (சா.அக.);.

     [குழம்பு+பாகு.]

 குழம்புப்பாகு kuḻmbuppāku, பெ.(n.)

   தடித்த பாகு; thick syrub (சா.அக.);.

     [குழம்பு + பாகு.]

குழம்புப்பால்

 குழம்புப்பால் kuḻmbuppāl, பெ.(n.)

   வற்றக் காய்ச்சிய பால்; milk thicked by boiling.

     [குழம்பு + பால்.]

குழம்புவடகம்

 குழம்புவடகம் guḻmbuvaḍagam, பெ.(n.)

   கறி தாளிக்கும் வடகம்; curry condiments consisting of pulses onion, mustard curry leaf garlic etc. grounded together, made into balls or cakes and then dried in the sun. It is used for seasoning сurry preparation (சா.அக. );.

     [குழம்பு + வற்றல்.]

குழம்புவற்றல்

 குழம்புவற்றல் kuḻmbuvaṟṟal, பெ.(n.)

   குழம்பிற்கு உபயோகப்படும் மீன், கறி, காய்; dried fish or mutton ordried vegetable used for preparing sauce (சா.அக.);.

     [குழம்பு + வற்றல்.]

குழம்புவை-த்தல்

குழம்புவை-த்தல் kuḻmbuvaittal,    4 செ.கு.வி.(v.i.)

   1. குழம்பு காய்ச்சுதல்; to make thick curry.

   2. குழம்பு வடிவான மருந்து காய்ச்சுதல்; to make liquid medicine of a thick consistency.

     [குழம்பு + வைத்தல்.]

குழறு-தல்

குழறு-தல் kuḻṟudal,    15 செ.கு.வி.(v.i.)

   1. பேச்சுத் தெளிவின்றித் தடுமாறுதல்; to babble, as an infant to talk indistinctly, to gabble.

     “வாய் குழறா” (திருவாச.21,10);.

   2. கூவுதல்; to cry, as a bird;

 to crow, as a cock.

     “கூகை நன்பகற் குழற” (பட்டினப்.268);.

   3. கலத்தல்; to mingle, to be mixed up.

     “இருடாரகை குழறிற்றென்ன…. மலர் மயிர் சொருகி” (கோயிற்பு.பதஞ்.14);.

   4. கேடுதருதல்; to cause ruin, destruction.

     “குழறிய கொடுவினை யிலரே” (தேவா.249,7);.

     [குழல் → குழறு.]

குழறுபடை

குழறுபடை kuḻṟubaḍai, பெ.(n.)

   1. சொற்றடு மாற்றம்; incoherent talk.

   2. தாறுமாறு; confusion, as in business.

     [குழறு + படு – படை.]

குழற்கொத்து

குழற்கொத்து kuḻṟkottu, பெ.(n.)

   1. கூந்தற்கற்றை (பிங்.);; tuff of a woman’s hair.

   2. செயற்கைமுடி; false hair for dressing the head.

     [குழல் + கொத்து.]

குழற்கொப்புளம்

 குழற்கொப்புளம் kuḻṟkoppuḷam, பெ.(n.)

   உடம்பின் குழலுள் காணும் கொப்புளம்; an ulceron the walls of a vessel (சா.அக.);.

     [குழல் + கொப்புளம்.]

குழற்சவ்வு

 குழற்சவ்வு kuḻṟcavvu, பெ.(n.)

   உடம்பினுள் இருக்கும் குழாயின் சவ்வு; tubular membrane (சா.அக.);.

     [குழல் + சவ்வு.]

குழற்சி

குழற்சி kuḻṟci, பெ.(n.)

   1. சுருண்டிருக்கை (சீவக. 1092,உரை);; curling as of woman’s hair.

   2. சுருட்டி முடிக்கும் கொண்டை (பின்.);; roll or lock hair tied behind.

     [குபுல் → குழற்சி.]

குழற்சிகை

குழற்சிகை guḻṟcigai, பெ.(n.)

   தலைமயிர்; hair of the head.

     “குழற் சிகைக் கோதை குட்டி” (சீவக.252);.

     [குழல் + சிகை.]

குழற்சுருக்கம்

 குழற்சுருக்கம் kuḻṟcurukkam, பெ.(n.)

   குருதி குழுலுக்கேற்படும் சுருக்கம்; constriction or narrowing of a vessel (சா.அக.);.

     [குழல் + சுருக்கம்.]

குழற்சேதனம்

 குழற்சேதனம் kuḻṟcētaṉam, பெ.(n.)

   குருதிக் குழலைக் கத்தியால் அறுத்தல் அல்லது பிளத்தல்; the dissection of a blood vessel (சா.அக.);.

     [குடில் + சேதனம்.]

குழற்பிசகு

 குழற்பிசகு guḻṟpisagu, பெ.(n.)

   உடமபினுள் குருதிக் குழல் நழுகல்; displacement of a vessel in the body (சா.அக.);.

     [குழல் + பிசகு.]

குழற்பிட்டு

 குழற்பிட்டு kuḻṟpiṭṭu, பெ.(n.)

   மூங்கிற்குழலில் வைத்து அவிக்கும் பிட்டு; a kind of soft pastry steamed in the hellow of a bamboo piece.

     [குழல் + பிட்டு.]

குழற்றடை

 குழற்றடை kuḻṟṟaḍai, பெ.(n.)

   குருதி குழலியக்கத் தடை; obstructions to a vessel (சா.அக.);.

     [குடில் + தடை.]

குழற்றத்தனார்

 குழற்றத்தனார் kuḻṟṟattaṉār, பெ.(n.)

   கடைக்கழகக் காலப் புவர்களில் ஒருவர்; the poet who belonged to the last Šargam.

     [குழல்+தத்தனார்.]

இவர் பெயர் தத்தன். குழல் என்பது புல்லாங் குழலைக் குறிக்குஞ் சொல்லாக இருத்தல் கூடும். தலைவன் தலைவியுடன் இல்லறம் புரிதலைச் செவிலியின் கூற்றில் இவர் அமைத்திருப்பது படித்து இன்புறற் பாலது.

     “கானங் கோழிக் கவர்குரற் சேவல்

ஒண்பொறி யெருத்திற் றண்சிதர் உறைப்பப்

புதனி வாரும் பூநாறு புறவிற்

சிறுரோளே மடந்தை வேறுரர்

வேந்துவிடு தொழிலொடு செலினும்

சேந்துவரல் அறியாது செம்மல் தேரே”

குழற்றிறப்பு

 குழற்றிறப்பு kuḻṟṟiṟappu, பெ.(n.)

   துளையுள்ள திறவுகோல் (சாவி);; key with a hole.

     [குழல் + திறப்பு.]

குழற்று-தல்

குழற்று-தல் kuḻṟṟudal,    5 செ.கு.வி.(v.i.)

   குழறி யொலித்தல்; to make incoherent or indistrict sounds, as when affected with strong emotion.

     “குரவையிற் குழற்றுவாரும்” (கம்பரா. ஊர்தேடு. 188);.

     [குழறு → குழற்று.]

குழலப்பம்

 குழலப்பம் kuḻlappam, பெ.(n.)

   பிட்டு; a sweet cylinderical confection prepared from rice flour (சா.அக.);.

மறுவ, குழல்பிட்டு

     [குழல் + அம்பம்.]

குழலற்றகோளம்

குழலற்றகோளம் kuḻlaṟṟaāḷam, பெ.(n.)

   1. குழாய் இல்லாத கோளம்; ductless gland.

   2. ஊரலற்ற கோளம்; a gland like body, without any known secretory function (சா.அக.);.

     [குழல் + அற்ற + கோளம்.]

குழலாதொண்டை

 குழலாதொண்டை kuḻlātoṇṭai, பெ.(n.)

   ஒருவகை ஆதொண்டை, காத்தொட்டி, கற்ப வகையிலொன்று; caper shrub. It is classified as one of the drugs used in rejuvenation (சா.அக.);.

     [குழல் + ஆத்தொண்டை.]

குழலாள்பால்

 குழலாள்பால் kuḻlāḷpāl, பெ.(n.)

   முலைப்பால்; woman’s breast milk (சா.அக.);.

     [குழலாள் + பால்.]

குழலிசிவு

 குழலிசிவு kuḻlisivu, பெ.(n.)

   அரத்தக் குழாயின் இசிவுவலி; spasm of a vessel (சா.அக.);.

     [குழல் + இசிவு.]

குழலிதச்சம்

 குழலிதச்சம் kuḻlidaccam, பெ.(n.)

   சிறுகுறிஞ்சா; small Indians Specacuanha (சா.அக.);.

     [குழல் + தச்சம்.]

குழலூசி

குழலூசி kuḻlūci, பெ.(n.)

   பீச்சாங் குழலின் முனையூசி (கல்.வி.66);; injecting needle at the end of a syringe (செ.அக.);.

     [குழல்+ஊசி]

குழலூதி

 குழலூதி kuḻlūti, பெ.(n.)

   குழல் வாசிப்பவன்; one who plays flute.

ம. குழலூதி

     [குழல் + ஊதி.]

குழலொடுக்கம்

 குழலொடுக்கம் kuḻloḍukkam, பெ.(n.)

   குழல் சுருக்கம்; construction of a vessel (சா.அக.);.

     [குழல் + ஒடுக்கம்.]

குழலோன்

குழலோன் kuḻlōṉ, பெ.(n.)

   வேய்ங்குழல் ஊதுபவன்; one who plays on an aerophone (flutist, a trumpetch etc.); flute player.

     “வழுவின் றிசைக்கும் குழலோன் நானும்” (சிலப்.3,69);.

ம. குழல்காரன்

     [குழல் → குழலோன்.]

குழல்

குழல்2 kuḻl, பெ.(n.)

   1. மயிர்க்குழற்சி; curling hair.

     “குழலுடைச் சிகழிகை” (சீவக.1092);.

   2. ஐம்பாலுள் சுருட்டி முடிக்கப்படுவது; woman’s hairdressed by coiling and tying up behind in a roll one of {aimpā/}

   3. மயிர் (பிங்.);; woman hair.

     [குழை → குழல்.]

 குழல்3 kuḻl, பெ.(n.)

   1. துளையுடைய பொருள் (திவா.);; any tube-shaped thing.

   2. இசைக்குழல் (சூடா.);; flute, pipe.

   3. குழலிசை; music of the pipe.

     “குழலினிதி யாழினிதென்ப” (குறள்.66);.

   4. உட்டுளை; tubularity, hollowness.

     “குழற்கா லரவிந்தங் கூம்ப” (தமிழ்நா.63);.

   5. ஒருவகைக் கழுத்தணி; a kind of neck ornament (இ.வ.);. 6.மீன்வகை;

 milk-fish, brilliant glossy blue, attaining 3 or 4ft. in length.

     “வறற்குழற் ஆட்டின்’ (சிறுபாண்.163);.

   7. கடல்மீன்வகை; a sea-fish, bluish, attaining several feetin length.

     [குள் → குழ → குழல்.]

     [P]

குழல்

 குழல் kuḻl, பெ.(n.)

   துமிக்கி; gun.

     “கொட்டமிடும் புலியைக் குண்டுதுன்றுங் குழலால்” (கூளப்ப.90);.

     [குள் → குழல்.]

குழல்(லு)-தல்

குழல்(லு)-தல் kuḻlludal,    14 செ.கு.வி.(v.i.)

   1.சுருளுதல்; to curl.

     “கடைகுழன்ற கருங்குழல்கள்” (சீவக.164);.

   2. சுருட்டி முடிக்கப்படுதல் (வின்.);; to be folded back into a roll or tried in a lock, as the hair of women in {kusa.}

     [குழை → குழல்.]

குழல்சுடு-தல்

குழல்சுடு-தல் kuḻlcuḍudal,    4 செ.கு.வி.(v.i.)

   துப்பாக்கி; to fire a gun.

     [குழல் → சுடு.]

குழல்புட்டு

 குழல்புட்டு kuḻlpuṭṭu, பெ.(n.)

குழாய்ப் புட்டு பார்க்க;see kulay-p-puttu (க்ரியா.);.

குழல்மாது

 குழல்மாது kuḻlmātu, பெ.(n.)

   கரிசலாங்கண்ணி; eclipse plant (சா.அக.);.

     [குழல் → மாது.]

குழல்விசை

 குழல்விசை kuḻlvisai, பெ.(n.)

   அரத்தக் குழாயின் இழுப்பு; tension of a blood vessel (சா.அக.);.

     [குழல் + விசை.]

குழல்விரணம்

 குழல்விரணம் kuḻlviraṇam, பெ.(n.)

   இரத்தக் குழலுக்கு ஏற்படும் விரணப்புண்; ulceration of blood vessels (சா.அக.);.

     [குழல் + இரணம். குழற்புண் பார்க்க;See. {kularpum)}

குழல்விருத்தி

 குழல்விருத்தி kuḻlvirutti, பெ.(n.)

   குழுலூது வோர்க்கும் கொடுக்கும் சலுகை; rent-free lands assigned to pipers of a village (இ.வ.);.

     [குழல் + விருத்தி.]

குழல்விளக்கம்

 குழல்விளக்கம் kuḻlviḷakkam, பெ.(n.)

   குழலைப் பற்றிய விவரம்; description of a vessel (சா.அக.);.

     [குழல் + விளக்கம்.]

குழல்விளக்கு

 குழல்விளக்கு kuḻlviḷakku, பெ.(n.)

   உட்புறம் ஒளிரும் வேதியற் பொருள் பூசப்பட்ட நீண்ட குழாய் அமைப்புடைய வெண்ணிற ஒளி தரும் மின் விளக்கு; neon (tube); light.

பெரும்பாலான வீடுகளில் குழல் விளக்குகளையே வைத்திருக்கிறார்கள்.

     [குழல்+விளக்கு.]

குழல்விழு-தல்

குழல்விழு-தல் kuḻlviḻudal,    3 செ.கு.வி.(v.i.)

   துளை யுண்டாதல்; to form a hollow, as within a horn.

     [குழல் + விழுதல்.]

குழவல்லம்

 குழவல்லம் kuḻvallam, பெ.(n.)

   முருங்கை; drumstick-tree – Moringa pterogos permum (சா.அக.);.

     [குழை+வல்லம்.]

 குழவல்லம் kuḻvallam, பெ.(n.)

   முருங்கை; drum stick tree (சா.அக.);.

     [குழ + வல்லம்.]

குழவி

குழவி1 kuḻvi, பெ.(n.)

   1. கைக்குழந்தை; infant. babe.

     “ஈன்ற குழவி முகங்கண் டிரங்கி” (மணி.11,114);

   2. ஒருசார் விலங்கின் பிள்ளைப் பெயர் (தொல்.பொ.575);; young of certain animals, viz.

யானை, பசு, எருமை, கடமை, மரை, குரங்கு, முசு, ஊரகம்.

   3. புல்மர முதலிய ஓரறிவுயிரின் இளமைப் பெயர்; young of the vegetable kingdom.

     “வீழில் தாழைக் குழவி” (தொல்.பொ.579,உரை);.

     [குள் → குழ → குழவி.]

 குழவி2 kuḻvi, பெ.(n.)

   அம்மி கல்லுரல்களின் அரைக்குங்கல்; the roller of ammi and kallural, grinding pestle.

     “புரையறு குழவியின்…. அரைக்குநர்” (பரிபா.10,83);.

     [குள் → குழ → குழவி.]

 குழவி3 kuḻvi, பெ.(n.)

   பெருமை (யாழ்.அக.);; greatness.

     [குழு → குழுவி → குழவி.]

குழவி வளர்ப்பொலி

 குழவி வளர்ப்பொலி kuḻvivaḷarppoli, பெ.(n.)

குழந்தை வளர்ப்பில் இயல்பாக ஒலிக்கும் ஒலி,

 nursery sound.

     [குழவி+வளர்ப்பு+ஒலி]

குழவிகொள்பவர்

குழவிகொள்பவர் guḻvigoḷpavar, பெ.(n.)

   குழந்தையை வளர்ப்பவர்; those who bring up a child.

     “குழவிகொள்பவரினோம்புமதி” (புறநா.5);.

     [குழவி + கொள்பவர்.]

குழவிக்கல்

குழவிக்கல் kuḻvikkal, பெ.(n.)

குழவி2 பார்க்க;See. {kulavi}

     [குழவி + கல்.]

குழவிஞாயிறு

குழவிஞாயிறு kuḻviñāyiṟu, பெ.(n.)

   எழுஞாயிறு (தொல்.பொ.579,உரை);; rising sun.

     [குழவி + ஞாயிறு.]

குழவிதோசம்

 குழவிதோசம் kuḻvitōcam, பெ.(n.)

   குழந்தைக்குக் காணும் பலவகை குற்றப்பாடுகள் (தோசங்கள்);; different kinds of morbid affection in children from various causes (சா.அக.);.

மறுவ. குழந்தை நலி, குழந்தை நைப்பு.

     [குழவி + தோசம். Skt {Dasa→} த.தோசம்.]

குழவித்தாய்

குழவித்தாய் kuḻvittāy, பெ.(n.)

   1. மிளகரணை; lopez rool.

   2. குழந்தையின் தாய்; mother of a child.

   3. கடுக்காய்; indian galnut supposed to protect children like mother (சா.அக.);.

     [குழவி + தாய்.]

குழவித்திங்கள்

குழவித்திங்கள் kuḻvittiṅgaḷ, பெ.(n.)

   இளநிலா (அல்); பிறைநிலா (தொல்.பொ.759,உரை);; crescent moon.

     [குழவி + திங்கள்.]

குழவிப்பாம்பு

 குழவிப்பாம்பு kuḻvippāmbu, பெ.(n.)

   குழிமீன்; congereel.

     [குழவி + பாம்பு.]

குழவிப்பிண்டம்

குழவிப்பிண்டம் kuḻvippiṇṭam, பெ.(n.)

   1. இளங்கருப்பிண்டம்; tender factus, the young of an animal in its earliest stage of development (சா.அக.);.

     [குழவி + பிண்டம்.]

குழவிழைப்புளி

 குழவிழைப்புளி kuḻviḻaippuḷi, பெ.(n.)

இழைப் புளி

   வகை; a kind of smoothing plane.

     [குழைவு + இழைப்புளி, குழை விழைப்புளி → குழவிழைப்புளி.]

குழவு

குழவு kuḻvu, பெ.(n.)

   இளமை (தொல்.சொல்.312);; young, tenderage juvenility.

     [குழ → குழவு.]

குழவுண்டை

 குழவுண்டை kuḻvuṇṭai, பெ.(n.)

   ஒரு வகைக் கொழுக்கட்டை; a kind of sweet puff or light pastery (சா.அக.);.

     [குழ + (உருண்டை); உண்டை.]

குழாஅல்

குழாஅல் kuḻāal, பெ.(n.)

   கூடுகை; gathering flocking together.

     “நாரை…. மரத்தொறுந் குழாஅலின்” (பதிற்றுப்.29);.

     [குழுவு → குழா → குழாஅல்.]

குழாங் கொண்டாடு-தல்

குழாங் கொண்டாடு-தல் kuḻāṅgoṇṭāṭudal,    12 செ.கு.வி.(v.i.)

   நெருங்கி உறவாடுதல்; to move closely or on intimate terms (இ.வ.);.

     [குழம் + கொண்டாடு.]

குழாம்

குழாம் kuḻām, பெ.(n.)

   1. கூட்டம்; herd, flock, swarim, shoal.

     “மயிற்குழாத்தொடும் போடுகு மன்னம்” (கந்தபு.திருநகரப்.31);.

   2. சபை; society company, association.

     “சான்றோர் குழாஅத்து” (குறள்.840);.

     [குழு → குழுவம் → குழாம்.]

குழாம்பல்

 குழாம்பல் kuḻāmbal, பெ.(n.)

   குழம்பியிறுகிய பொருள்; any liquid of a thick consistency, as curry, mud.

     [குழம்பல் → குழாம்பல்.]

குழாயிரும்பு

 குழாயிரும்பு kuḻāyirumbu, பெ.(n.)

   உருக்கி அச்சில் வார்த்த இரும்பு; cast iron (சா.அக.);.

     [குழாய் + இரும்பு.]

குழாயோடு

 குழாயோடு kuḻāyōṭu, பெ.(n.)

   உட்குழலாயுள்ள ஒருவகை ஓடு; kind of tublar tile.

     [குழாய் + ஒடு.]

குழாய்

குழாய் katti-k-kulay, பெ.(n.)

   விலங்குகட்கு மருந்தூட்டும் குழாய்; bamboo or othertubeforadministering medicine to animals.

     [குத்தி + குழாய் – குத்திக்குழாய் → கத்திக்குழாய்.]

 குழாய்1 kuḻāy, பெ.(n.)

   1. துளையுடைய பொருள் (பிங்.);; tube, pipe.

   2. துளை; tubular cavity, hollow.

     [குள் → குழை → குழாய்.]

 குழாய்2 kuḻāy,    1. வாயு தண்ணீர் ஆவி முதலியவை களைக் கொண்டு வரப் பயன்படுத்தும் உள்துளைக் கருவி; hollow cylindrical tube of wood, metal, etc. for the conveyance of gas, water, vapour etc.

   2. உடம்பினுள் உள்ள தாரை, கால்வாய் முதலிய உட்டுளைக் கருவி; a tublar organ, passage, canal or vessel in an animal body often preceded by a defining word as mention below.

குழாய் வகைகள்:

   1.காற்றுக்குழாய்

   2. சுவாசக் குழாய்

   3. இரத்தக் குழாய்

   4. கேள்விக்குழாய்

    5. கரு விழிக்குழாய்

    6. கருப்பைக்குழாய்

    7. நாதக்குழாய்

    8. சிறுநீர்க்குழாய்

    9. அன்னாசக்குழாய்

    10. உதரக்குழாய்

    11.ஊட்டுங்குழாய்

    12. இணைக்குங்குழாய்

    13. ஊதுகுழாய்

   14. மூங்கிற் குழாய்

   15. பீச்சுக் குழாய்

   16. சோதனைக் குழாய் (சா.அக.);.

     [குள் → குழை → குழாய்.]

குழாய்க்கந்தகம்

 குழாய்க்கந்தகம் guḻāyggandagam, பெ.(n.)

   வாணக் கந்தகம்; roll or stick sulphur (சா.அக.);.

     [குழாய் + கந்தகம்.]

குழாய்க்கிணறு

 குழாய்க்கிணறு kuḻāykkiṇaṟu, பெ.(n.)

   குழா யிறக்கி உண்டாக்கிய கிணறு; Artesian well, ‘obe-well.

     [குழாய் + கிணறு.]

குழாய்த்தண்ணிர்

 குழாய்த்தண்ணிர் kuḻāyttaṇṇir, பெ.(n.)

   குழாயினின்று வரும் குடித் தண்ணிர்; drinking water (சா.அக.);.

     [குழாய்+தண்ணிர்]

குழாய்ப்பிட்டு

 குழாய்ப்பிட்டு kuḻāyppiṭṭu, பெ.(n.)

   குழற்பிட்டு; a kind of soft pastry.

     [குழல் → குழாய் + பிட்டு.]

குழாய்ப்புட்டு

 குழாய்ப்புட்டு kuḻāyppuṭṭu, பெ.(n.)

   குழாய் போன்ற நீண்ட கழுத்துடைய ஏணத்தில் அரிசி மாவை அடைத்து ஆவியில் வேகவைத்துச் செய்யும் புட்டு; dish prepared by filling a long-tube like structure with rice flour and steaming it

     [குழாய்+புட்டு]

குழாய்மீன்

 குழாய்மீன் kuḻāymīṉ, பெ.(n.)

   குழல்மீன்; pipe fish (சா.அக.);.

     [குழாய் + மீன்.]

     [P]

குழல்

குழாய்மூங்கில்

 குழாய்மூங்கில் kuḻāymūṅgil, பெ.(n.)

   உள்ளே தொளையுள்ள மூங்கில்; cornmon bamboo.

     [குழாய் + மூங்கில்.]

குழி

குழி1 kuḻidal,    4 செ.கு.வி.(v.i) உட்குழிவாதல்; to be hollowed out, as a hole, a pit, acanity, to sink,hollow.

     “குழிந்தாழ்ந்த கண்ணவாய்” (நாலடி,49);.

   ம. குழியுக;   க.குழி;கெ. க்ரொய்யு, க்ரொய்யி.

 Fin, {kava,} Es, kaeva;

 Mari. koem, Turk. kazy, Cl. Gaywi

     [குழி → குழிதல்.]

 குழி2 kuḻittal,    4 செ.கு.வி.(v.i.)

   1.குழியாக்குதல்; to form pits, hollows, cavities, to sink, excavate.

     “குழித்து நிற்பது நீர்” (நான்மணி.30);.

   2. செதுக்குதல்; to inscribe, engrave.

     “குழித்த மோதிரம்” (கலித்.84,உரை.);.

   ம.குழிக்குக;   க.குழி;   து.குரைபுனி, குரெபினி, கொரெபுனி, கொரையினி;தெ. க்ரொச்சு, க்ரெச்சு,

     [குழி → குழித்தல்.]

 குழி3 kuḻi, பெ.(n.)

   1. பள்ளம் (திவா.);; pit hole, hollow, cavity, dimple, depression, excavation.

   2. நீர்நிலை (பிங்.);; tank, pond.

   3. கிணறு (திவா.);: well.

   4. வயிறு (அக.நி.);; stomach.

   5. பட்டைக் கிடங்கு; cavity at the bottom of a well.

   6. பாத்தி; garden bed, irrigated portion of a garden.

     “இன்சொற்குழியின்’ (நான்மணி.16);.

   7. ஓர் எண்ணின் வருக்கம்; square of a number.

   8. சதுர அடி (இ.வ.);; square foot.

   9. கனவடி (இ.வ.);; cubic foot.

   10.பன்னீரடிச் சதுரக்குழி; twelve feet square in land measure.

   11. 144 சதுர அடி முதல் 576 சதுர அடிவரை பற்பல இடங்களில் வெவ்வேறாய் வழங்கும் ஒரு நிலவளவு; a land measure varying in different places from 144 sq.ft to 576 sq.fr.

   12. 33 அலங்குலங் கொண்ட தச்சுக்கோலின் சதுர நிலவளவை; a unit of square measurement for building sites the square of a {tacca-k-kö/} of 33 in (G.Th.D.239);.

   13. உடம்பினுள்ளாவது, அதன் உறுப்பினுள்ளாவது ஏற்படும் குழி, அவ்விடத்தைப் பொறுத்தே பெயர் பெறும்; hollow space or place with in the body or in one of its organs.

     [குல் → குள் → குழி.]

 E. hole, A.S. hol, Dut. hol, Dan, hul, G. hohl, Gk. koilos, E. hollow.

குழி வகைகள்:

   1. வயிற்றினுட் குழி

   2. பல் லிடைக்குழி

   3. பிண்டக்குழி பார்க்க

   4. அம்மைக்குழி

   5. நாசிக்குழி

   6. உதரக்குழி

   7. செவிக்குழி

   8.புண்குழி

   9. கன்னக்குழி

   10. இரத்தக்குழி

   11. சோற்றுக்குழி

   12. கசக்குழி இரத்தம் சொரியும் குழி

   13.க.பாலக்குழி

   14. அக்குட்குழி

   15. பெருங்குழி பார்க்க எண்.12.

   16. வாய்க்குழி

   17. இடைக்குழி

   18. மார்புக்குழி

   19. நாபிக்குழி

   20. கண்குழி

    21. கருப்பக்குழி அல்லது கருக்குழி

    22. உச்சிக்குழி

   23. கைக்குழி

   24. நாற்றக்குழி

   25. ஊாற்குழி

   26. படுகுழி

   27. ஊற்றுக்குழி

   28. பிரேதக்குழி

   29. புடக்குழி

   30. நெற்புடக்குழி

   31. சமாதிக்குழி (சா.அக.);.

குழிகை

 குழிகை kuḻikai, பெ.(n.)

உள்ளங்கை,

 palm of the hand சா.அக.).

     [குழி+கை]

குழிக்கணக்கு

 குழிக்கணக்கு kuḻikkaṇakku, பெ.(n.)

   ஒருவகை நிலவளவை; square measure of land.

ம. குழிக்கணக்கு

     [குழி + கணக்கு.]

குழிக்கண்

 குழிக்கண் kuḻikkaṇ, பெ.(n.)

பெ.(n.);

   குழிவான கண்; sunken eye.

க. குழிகண், குணிகண்ணு, குளிகண்ணு, குளிகண்.

     [குழி + கண்.]

குழிக்கண்ணன்

 குழிக்கண்ணன் kuḻikkaṇṇaṉ, பெ.(n.)

   குழிந்த கண்ணுள்ளவன்; a sunken eyed man.

ம. குழிகண்ணன், குழிக்கண்ணன்.

     [குழி + கண்ணன்.]

குழிக்கண்ணி

குழிக்கண்ணி kuḻikkaṇṇi, பெ.(n.)

   குழிவான கண்ணுள்ளவள்; woman with sunken eyes.

     “பெருகு குழிக்கண்ணி செங்கண்ணி” (பரத.ஒழிபி.39);.

ம. குழிகண்ணி, குழிக்கண்ணி,

     [குழி + கண்ணி.]

குழிக்கலம்

 குழிக்கலம் kuḻikkalam, பெ.(n.)

   குழிவாயுள்ள ஏனம்; a basin or pot with a deep hollow.

     [குழி + கலம்.]

குழிக்கல்

 குழிக்கல் kuḻikkal, பெ.(n.)

குழியம்மி பார்க்க;See. {kūsī-y-ammi}

     [குழி + கல்.]

குழிக்கிட்டி

 குழிக்கிட்டி kuḻikkiṭṭi, பெ.(n.)

   கிட்டி விளையாட்டு; the game of tip-cat.

     [குழி + கிட்டி.]

குழிக்குத்து

 குழிக்குத்து kuḻikkuttu, பெ.(n.)

   செடி முதலிய வற்றைப் பிடுங்கி நடுங்குழி; pit made for transplantation.

     [குழி + குத்து.]

குழிங்கை

 குழிங்கை kuḻiṅgai, பெ.(n.)

உள்ளங்கை (இ.வ.);:

 palm of the hand.

     [குழியும் + கை – குழியுங்கை → குழிங்கை.]

குழிசி

குழிசி kuḻisi, பெ.(n.)

   1. பானை; pot, cooking vessel.

     “சோறடு குழிசி” (பெரும்பாண்.366);.

   2. மிடா (திவா.);; large pot.

   3. சக்கரத்தின் குடம்; hub of a wheel.

     “கூகுளி முகம்பொரக் குழிசி மாண்டன” (சீவக.2229);.

     [குழி → குழித்தி → குழிசி.]

குழிசீலை

 குழிசீலை kuḻicīlai, பெ.(n.)

   கோவணம் (இ.வ.);; a narrow piece of cloth wornover the privities, loin-cloth.

ம. குழிச்சீலை

     [கிழி → குழி + சீலை.]

குழிசோதனை

 குழிசோதனை kuḻicōtaṉai, பெ.(n.)

   விளைந்த வயலில் குழியளவுள்ள இடத்தில் வளர்ந்த கதிரை அறுத்தளந்து விளைவு மொத்தத்தை மதிப்பீடு செய்தல் (இ.வ.);; estimation of the total produce of a field from that of a single {kuliharvested.}

     [குழி + சோதனை.]

குழிச்சட்டி

குழிச்சட்டி kuḻiccaṭṭi, பெ.(n.)

   1. பணியாரஞ்சுடும் குழியுள்ள மண்சட்டி; earthen pan with hollow cavities for frying cakes.

   2. ஆழமான மண்சட்டி; a hollow earthern cooking pot (சா.அக.);.

ம. குழிகலம்

     [குழி + சட்டி.]

குழிச்சிலந்தி

 குழிச்சிலந்தி kuḻiccilandi, பெ.(n.)

   குழிவிழும் ஒரு சிலந்திப்புண்; any sore or ulcer with a hole or cavity (சா.அக.);.

     [குழி + சிலந்தி.]

 குழிச்சிலந்தி kuḻiccilandi, பெ.(n.)

   சிலந்திவகை; a species of spider.

     [குழி + சிலந்தி.]

குழிதந்தம்

 குழிதந்தம் kuḻidandam, பெ.(n.)

   நகம்; nail (சா.அக.);.

     [குழி + தந்தம்.]

குழிதாழி

 குழிதாழி kuḻitāḻi, பெ.(n.)

   பூத்தொட்டி; flower pot.

     [குழி + தாழி.]

குழிதிற-த்தல்

குழிதிற-த்தல் kuḻidiṟaddal,    3 செ.கு.வி.(v.i.)

   சில விழாக்களின் முடிவில் தீயில் நடந்து சென்று நேர்ந்து கொண்டதை நிறைவேற்றுவதற்காகக் குழிகளில் தழல் பரப்பி வைத்தல்; to open the sacred fire pit with appropriate ceremonies, as in muharram feast.

     [குழி + திறத்தல்.]

குழித்தட்டு

குழித்தட்டு kuḻittaṭṭu, பெ.(n.)

   தாம்பாளவகை; a kind of plate or salver (S.I.I.iii.295);.

     [குழி + தட்டு.]

குழித்தருப்பணம்

 குழித்தருப்பணம் kuḻittaruppaṇam, பெ.(n.)

   இறந்த நாள் முதல் பத்தாம் நாள் முடிய இறந்தவர் பொருட்டு நட்ட கல்லுள்ள குழியில் செய்யும் நீர்க்கடன்; libation offered to the deceased, for ten days from the day of death in a pit in which is placed a stone representing the deceased.

     [குழி + தருப்பணம்.]

குழித்தறி

 குழித்தறி kuḻittaṟi, பெ.(n.)

   குழியில் கால்மிதிகளைக் கொண்ட தறி; loom having treadles in a pit.

     [குழி+தறி]

குழித்தளிகை

 குழித்தளிகை guḻittaḷigai, பெ.(n.)

கோவிலிற் கறி கன் கன்னல் முதலியவற்றோடு இடும் படையல்:

 boiled rice and relish, offered to gods in temples.

     [குழி + தளிகை.]

குழித்தாமரை

 குழித்தாமரை kuḻittāmarai, பெ.(n.)

   கொட்டைப் பாசி (மலை.);; root lees nelumbo, floating in tanks and ditches.

ம. குழித்தாமர

     [குழி + தாமரை.]

குழித்தாழி

 குழித்தாழி kuḻittāḻi, பெ.(n.)

   கால்நடைகளுக்கு நீர் கொடுக்க பயன்படுத்தும் திண்மையான ஏனம்; a large earthern vessel used to water cattle.

ம. குழித்தாளி

     [குழி + தாளி.]

குழித்தி

 குழித்தி kuḻitti, பெ.(n.)

குழித்தாழி பார்க்க;See. {kush-t-tä//}

மறுவ. குழிதாழி

     [குழி → குழித்தி.]

குழித்தைலம்

குழித்தைலம் kuḻittailam, பெ.(n.)

   குடத்தில் மூலிகைகளை நிரப்பி எரித்துவடிக்கும் தைலம்; lit. pit oil extracted by burying and heating the pot containing medicinal herbs.

     “காந்தட் கிழங்கை குழித்தைலமாக இறக்கி” (இராசவைத். 96,உரை);.

     [குழி + தைலம்.]

குழிநரி

குழிநரி kuḻinari, பெ.(n.)

   1.குள்ளநரி; jackal.

     “காயும்

   சிந்தைக் குழிநரிக் கள்ளத்தான்.” (குற்றா. தல. வேடன்வலம்.13);. 2.மணலிற் குழி செய்து கொண்டு அதனுள் விழும் எறும்பு முதலியவற்றை உணவாகக் கொள்ளும் சிறுபூச்சி; ant-lion, neuropterous insect the larva of which makes in the sand a pit-fall to capture ants.

ம. குழிநரி

     [குழி + நரி.]

 குழிநரி kuḻinari, பெ.(n.)

குழிப்பன்றி பார்க்க;See. {kսի-paորi}

     [குழி + நரி.]

குழிநாவல்

 குழிநாவல் kuḻināval, பெ.(n.)

   நாவல் மரவகை; common, myrtle.

     [குழி + நாவல்.]

குழிந்தம்

 குழிந்தம் kuḻindam, பெ.(n.)

நகம் nail (சா.அக.);.

     [குழி → குழிந்தம்.]

குழிந்திரு-த்தல்

குழிந்திரு-த்தல் kuḻindiruttal,    3 செ.கு.வி.(v.i.)

   குழியாயிருத்தல்; being hollow like a cavity

     [குழிந்து → இருத்தல்.]

குழிந்தெடு-த்தல்

குழிந்தெடு-த்தல் kuḻindeḍuttal,    4 செ.குன்றாவி.(v.t.)

   ஆராய்ந்து பார்த்தல்; to scrutinize, dive deep, to bevery inquistive about.

     [குழிந்து + எடுத்தல்.]

குழிபறி-த்தல்

குழிபறி-த்தல் kuḻibaṟittal,    4 செ.கு.வி. (v.i.)

   1. குழி

   தோண்டுதல்; to dig a pit.

     “குழிபறித்தரக்கரோடு மல்லரை யிருத்தி” (பாரத.இருட்.179);.

   2. சூழ்ச்சிக் கலந்துரையாடிப் (சதியாலோசனை செய்து); பிறர்க்குத் தீங்கு செய்ய முயலுதல்; to try to run, undermine.

     [குழி + பறி-.]

குழிப்பணம்

குழிப்பணம் kuḻippaṇam, பெ.(n.)

   18ஆம் நூற்றாண்டில் மதுரைப் பகுதியில் வழங்கிவந்த ஒருவகை நாணயம்; a Madura coin, currentin the 18th c (I.M.P. Mr.3-A);.

     [குழி + பணம்.]

குழிப்பணியாரம்

 குழிப்பணியாரம் kuḻippaṇiyāram, பெ.(n.)

   பணியாரவகை; a kind of cake.

     [குழி + பணியாரம்.]

குழிப்பன்னா

குழிப்பன்னா kuḻippaṉṉā, பெ.(n.)

   கடல்மீன்கள்; species of sea-fish, (a); brownish-red, attaining more than 21/2 ft. in length (b); greyish, attaining

   16. in length, (c); silvery-grey, attaining 9in, length.

     [குழி + பன்னா.]

குழிப்பன்றி

 குழிப்பன்றி kuḻippaṉṟi, பெ.(n.)

   பூச்சிவகை; antlion.

     [குழி + பன்றி.]

குழிப்பறங்கி

 குழிப்பறங்கி kuḻippaṟaṅki, பெ.(n.)

   கோடைப்பூசணி; a species of pumpkin cultivated in summer (சா.அக.);.

     [குழி+பறங்கி]

குழிப்பறங்கிக்காய்

குழிப்பறங்கிக்காய் kuḻippaṟaṅgikkāy, பெ.(n.)

   கோடைப் பூசணி (பதார்த்.699);; a species of pumpkin.

     [குழி + பறங்கி + காய்.]

குழிப்பறை

 குழிப்பறை kuḻippaṟai, பெ.(n.)

   பழங்குடி இனத் தாரின் குடிப்பெயர் (வின்.);; a kind of scheduled class people.

     [குழி + பறை.]

குழிப்பாடி

குழிப்பாடி kuḻippāṭi, பெ.(n.)

   குழிப்பாடி என்னும் ஊரில் நெய்த துணிவகைகள் (தொல்.சொல். 116,உரை);; cloth made in town of {kus-p-pādī}

     [குழி + பாடி – குழிப்பாடி (இடவாகுயெர்);]

குழிப்பாம்பு

 குழிப்பாம்பு kuḻippāmbu, பெ.(n.)

குழிமீன் பார்க்க;See. {kulimin}

     [குழி + பாம்பு.]

குழிப்பாறை

 குழிப்பாறை kuḻippāṟai, பெ. (n.)

   பாறைமீன்வகை; a kind of {parafish.}

     [குழி + பாறை.]

குழிப்பிள்ளை

 குழிப்பிள்ளை kuḻippiḷḷai, பெ.(n.)

   ஆழத்தில் நடுந்தென்னங்கன்று; young coconuttree planted deep.

     [குழி + பிள்ளை.]

குழிப்பு

குழிப்பு kuḻippu, பெ.(n.)

   1. குழி செய்கை; forming pits, hollows.

   2. தாழ்வு; depression.

   3. செய்யுட் சந்த வகை; a peculiar harmonic rythem inverse, as

     “அணியுடன்ற பரி பரியுடன்ற கரி கரியுடன்ற கொடி”.

     [குழி → குழிப்பு.]

குழிப்புண்

குழிப்புண் kuḻippuṇ, பெ.(n.)

   1. குழிவிழுந்த புண்; ulcer in which holes are formed.

     “கானா வாழைக்கு முலைக்கண் குழிப்பு ணாறிவிடும்” (பதார்த்த.365);.

   2. வாய்ப்புண் (இ.வ.);; inflammation in the mouth.

     [குழி + புண்.]

குழிப்பூதரம்

 குழிப்பூதரம் kuḻippūtaram, பெ.(n.)

   மீனைமரம்; a kind of tree (சா.அக.);.

     [குழி + பூதரம்.]

குழிப்பூப்புடம்

 குழிப்பூப்புடம் kuḻippūppuḍam, பெ.(n.)

   முப் பூப்புடங்களுள் மருந்தைக் குழியில் வைத்து எடுக்கும் புடவகை; calcining medicine by putting it into a closed pit or hole for some time, one of {mu-p-pup-pս!am.}

     [குழிப்பூ + புடம்.]

குழிப்பெருக்கம்

 குழிப்பெருக்கம் kuḻipperukkam, பெ.(n.)

குழி மாற்று பார்க்க;See. {kulimarru.}

மறுவ குழிமாற்று

ம. குழிப்பெருக்கம்

     [குழி + பெருக்கம்.]

குழிமாடம்

 குழிமாடம் kuḻimāṭam, பெ.(n.)

   சவக்குழிக்குமேல் கட்டப்படும் கட்டடம்; a tomb.

ம. குழிமாடம்

     [குழி + மாடம்.]

குழிமாத்தி

 குழிமாத்தி kuḻimātti, பெ.(n.)

   மலை வேம்பு; Indian mahogany (சா.அக.);.

     [குழி (மரத்தி);மாத்தி.]

குழிமாந்தம்

 குழிமாந்தம் kuḻimāndam, பெ-(n)

   உச்சியில் குழிவிழுமாறு தோன்றும் மாந்தநோய் வகை (சீவரட்);; a child’s disease in which the fontanel of the head sinks.

     [குழி + மாந்தம்.]

குழிமாறு-தல்

குழிமாறு-தல் kuḻimāṟudal,    8 செ.குன்றாவி. (v.t.)

   1. வருக்கித்தல் (வின்.);; to square.

   2 பெருக்குதல்; to multiply.

     [குழி + மாறு.]

 குழிமாறு-தல் kuḻimāṟudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   குழியை நிரப்பிப் பரப்பாக்குதல் (யாழ்.அக.);; to level up.

     [குழி + மாறு.]

குழிமாற்று

குழிமாற்று kuḻimāṟṟu, பெ.(n.)

   1. வருக்க வாய்ப்பாடு; table of squares.

   2. பெருக்கல் வாய்ப்பாடு; multiplication table.

மறுவ. குழிப்பெருக்கம்

     [குழி + மாற்று.]

குழிமி

குழிமி kuḻimi, பெ.(n.)

   1. மதகு; sliuce.

   2. பாத்திரத்தின் மூக்கு; spout of a vessel.

     [குழி → குழிமி.]

குழிமிட்டான்

குழிமிட்டான் kuḻimiṭṭāṉ, பெ.(n.)

   1. நத்தைச்சூரி நாணல் வகை (மலை.);; bristly button weed.

   2. தண்ணீர் விட்டான் கிழங்குக் கொடி; a common climber with many thick fleshy roots.

   3. செடிவகை; rough basil.

     [குழிமி → குழிமிட்டான்.]

குழிமீட்டான்

குழிமீட்டான் kuḻimīṭṭāṉ, பெ.(n.)

குழிமிட்டான் (பதார்த்த.295); பார்க்க;See. {kulimittān}

     [குழி + மீட்டான்.]

குழிமீண்டான்

 குழிமீண்டான் kuḻimīṇṭāṉ, பெ.(n.)

   உயிர் போனதாக நினைத்துக் குழியில் வைத்துப் பின்னர், எடுத்த பிள்ளை; child which with a view to avert its premature death is treated as dead, placed in a grave and then taken back.

     [குழி + மீண்டான்.]

குழிமீன்

குழிமீன் kuḻimīṉ, பெ.(n.)

   பாம்பு வடிவான மீன்வகை; congereel, olive, attaining more than 10ft in length.

     [குழி + மீன்.]

குழிமுசடி

 குழிமுசடி kuḻimusaḍi, பெ.(n.)

   மீன் கொல்லி; fish killer (சா.அக.);.

     [குழி (மூயடி);முசடி.]

குழிமுயல்

 குழிமுயல் kuḻimuyal, பெ.(n.)

   முயல்வகை; rabbit.

ம. குழிமுயல்

     [குழி + முயல்.]

குழிமுயல்வளை

 குழிமுயல்வளை kuḻimuyalvaḷai, பெ.(n.)

   சீமை முயல் வசிக்குமிடம்; cony burrow (சா.அக.);.

     [குழி + முயல் + வளை.]

குழியச்சு

 குழியச்சு kuḻiyaccu, பெ.(n.)

   பொன்மணி உருவாக்கும் அச்சு; mould for making gold beads.

     [குழி + அச்சு.]

குழியடிச்சான்

 குழியடிச்சான் kuḻiyaḍiccāṉ, பெ.(n.)

   ஆவணி புரட்டாசி மாதங்களில் விதைக்கப்பெற்று நான்கு மாதங்களில் விளையும் நெல்வகை (இ.வ.);; a course paddy sown in {avani-purattaci} maturing in four months.

     [குழி + அடிச்சான்.]

குழியடுப்பு

 குழியடுப்பு kuḻiyaḍuppu, பெ.(n.)

   தரையைத் தோண்டி உருவாக்கும் அடுப்பு; an oven dig out in the earth.

ம. குழியடுப்பு

     [குழி → குழித்தி.]

குழியம்

குழியம் kuḻiyam, பெ.(n.)

   1. திரள்வடிவு (திவா.);; globular, round shape.

   2. நறுமண உருண்டை (14,171.அரும்.);; perfume ball.

     [குழி → குழியம்.]

குழியம்மி

 குழியம்மி kuḻiyammi, பெ.(n.)

   மருந்தரைக்கும் கலுவம்; a kind of hollow stone mortar used for macerating medicines.

ம. குழியம்மி

     [குழி + அம்மி.]

குழியறி-தல்

குழியறி-தல் kuḻiyaṟidal,    4 செ.கு.வி.(v.i.)

   பள்ளம் விழுதல் (யாழ்.அக.);; to become hollow, to be full of its or ruts.

     [குழி + பறி.]

குழியல்

குழியல் kuḻiyal, பெ.(n.)

   1. மாழையாற் செய்யப்பட்ட ஒருவகைக் குழிவான ஏனம்; a kind of hollow metallic vessel.

   2. அகப்பை; a ladle, spoon.

ம. குழியல்

     [குழி → குழியல்.]

குழியவிடு-தல்

குழியவிடு-தல் kuḻiyaviḍudal,    3.செ.குன்றாவி. (v.t.)

   பொன்னைக் குழியுண்டாம்படி அச்சிடுதல்; to form the halves of hollowgold beads to be afterwards soldered together, in jewellery.

     [குழி – குழியவிடு.]

குழியாடி

 குழியாடி kuḻiyāṭi, பெ.(n.)

   உட்புறம் குழிவான அரைக்கோள வடிவத்தில் எதிரொளிக்கும்பரப்பைப் கொண்ட ஆடி; concave mirror or lens

     [குழி+ஆ.]

குழியானை

 குழியானை kuḻiyāṉai, பெ.(n.)

குழிதரிபார்க்க;See. {kulinari}

மறுவ. குழிநரி

ம. குழியான

     [குழி + யானை.]

குழியில் விழு-தல்

குழியில் விழு-தல் kuḻiyilviḻudal,    3 செ.கு.வி.(v.i.)

   தீநெறிப்படுதல்; lit, to fall into a pit; to fall into evil ways, vice.

     [குழி + இல் + விழு.]

குழியில் வை-த்தல்

குழியில் வை-த்தல் kuḻiyilvaittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   1.பிணத்தைப் புதைத்தல்; burrying as the dead.

   2. மருந்தப் புடக்குழியில் வைத்தல்; placing a medicine in a pit for purposes of calcinations (சா.அக.);.

     [குழி + வை.]

குழியுரல்

குழியுரல் kuḻiyural, பெ.(n.)

   உரல் வகை; a kind of mortar (செ.அக.);.

     [குழி+உரல்]

     [P]

 குழியுரல் kuḻiyural, பெ.(n.)

   1. தரையில் பதிக்கப்பட்ட உரல்; a mortar which is fixed in the ground.

ம. குழியுரல்

     [குழி + உரல்.]

குழிவண்டு

 குழிவண்டு kuḻivaṇṭu, பெ.(n.)

   குழியில் வசிக்கும் வண்டு; beetle living in holes under ground (சா.அக.);.

     [குழி + வண்டு.]

குழிவயிறு

குழிவயிறு kuḻivayiṟu, பெ.(n.)

   1.வயிறு; belly.

   2. கருக்குழி; womb.

   3. பள்ளம்; cavity or depression.

   4. புடமிடும் குழி; a pit of varied depth intended for calcination. (சா.அக.);.

     [குழி + வயிறு.]

குழிவரியேற்று-தல்

குழிவரியேற்று-தல் kuḻivariyēṟṟudal,    5 செ.கு.வி. (v.i.)

   . அரசிறையிடுதல் (S.I.I.iii,12);; to levyland tax.

     [குழி + வரி + ஏற்று,ஹ ‘

குழிவலை

 குழிவலை kuḻivalai, பெ.(n.)

   கச்சல் எனும் குறுக்குக் கட்டைகளால் இணைக்கப்பட்டு நடு நடுவே குழிகள்அமைத்துக் கட்டப்பட்ட வலை; dipnet connected by splinters.

மறுவடிகச்சா வலை.

     [குழி+வலை]

கழிச்சல்-கச்சல்(கட்டை);. குறுக்குக் கட்டை யிடப்பட்டதால் கச்சா வலை என்றும் கூறுவர்.

குழிவாளை

 குழிவாளை kuḻivāḷai, பெ.(n.)

   குழிவிழும் ஒரு தோல் நோய் (கிரந்தி);ப்புண்; a kind of syphilitic ulcer with a cavity or depression in the centre (சா.அக.);.

     [குழி + வாளை.]

குழிவாழை

 குழிவாழை kuḻivāḻai, பெ.(n.)

   வாழைவகை; a species of plantain.

     [குழி + வாழை.]

குழிவித்து வை-த்தல்

குழிவித்து வை-த்தல் kuḻivittuvaittal,    3 செ.கு.வி. (v.i.)

   உழவு காலில் கொஞ்சங் கொஞ்சமாக விதையையிட்டுப் புழுதி மண்ணையிட்டு மூடி வைத்தல்; to as the land is furrowed, and cover it with dust.

     [குழி → குழிவி → குழிவித்து + வை.]

குழிவு

குழிவு kuḻivu, பெ.(n.)

   1. குழிந்திருக்கை; holowness, depression.

   2. மாணிக்கக் குற்றங்களுள் ஒன்று; a flaw in ruby.

     “மாணிக்கம் குழிவும் பிரகரமும்” (S.I.I.ii,81);.

ம. குழிவு

     [குழி → குழிவு.]

குழிவெட்டி

 குழிவெட்டி kuḻiveṭṭi, பெ.(n.)

   பிணக்குழி தோண்டு பவன்; grave digger.

     [குழி + வெட்டி.]

குழிவெட்டு

 குழிவெட்டு kuḻiveṭṭu, பெ.(n.)

   வயல் நிலத்தைச் சமப்படுத்த மேட்டை வெட்டும் வெட்டு; digging in a field for the purpose of levelling it.

     [குழி + வெட்டு.]

குழிவேர்

 குழிவேர் kuḻivēr, பெ.(n.)

   நிலத்துக்குள் புதைந்த வேர்; root burried under the earth (சா.அக.);.

     [குழி + வேர்.]

குழு

குழு kuḻu, பெ.எ. (adj.)

   இளமையான; young tender.

     “மழவும் குழவும் இளமைப்பொருள” (தொல்.சொல்.312);.

     [குல் → குள் → குழ.]

 குழு1 kuḻu, பெ.(n.)

   1. மக்கட்கூட்டம் (திவா.); class, society, band, assembly.

   2. பெண்கள் கூட்டம் (பிங்.);; assembly orgathering of women.

   3. ஆடு முதலியவற்றின் கூட்டம்; flock, herd, swarm, shoal.

   4. தொகுதி; bundle, heap.

     “இந்தனக் குழுவை’ (ஞானா.63.11);.

ம. குழு

     [குல் → குள் → குழு.]

 குழு2 kuḻu, பெ.(n.)

   1. சூழ்ச்சி, தந்திரம்; Ingenuity.

   2 தந்திரமான சொல்; shrewd utterance.

   3.திறமையான சொல்; wit, witty, expression.

     [குல் → குள் → குழு.]

 குழு3 kuḻu, பெ.(n.)

   அடங்காமை (யாழ்.அக.);; intractability.

     [குல் → குல்லு → குறு → குறுவன் → குழு.

குழுஉப்பெயர்

குழுஉப்பெயர் kuḻuuppeyar, பெ.(n.)

   கூட்டம் பற்றி வரும் பெயர்ச்சொல்; collective noun.

     “சாதிகுழுஉப்பெயர்” (நன்.211);.

     [குழுஉ + பெயர்.]

குழுகூலி

 குழுகூலி kuḻuāli, பெ.(n.)

   களவு போனதை மீட்டுக் கொடுப்பதற்காகப் பொருட்குரியவர் கொடுக்கும் பொருளில் இடைநின்று அக்காரியத்துக்கு உதவிய சிற்றுார் காவற் காரனுக்குரிய பங்கு; share of money paid to the village watchman for acting as intermediary and restoring the stolen property to the owner (செ.அக.);.

மறுவ. துப்புக்கூலி

     [குழு+கூலி]

குழுக்கடா

 குழுக்கடா kuḻukkaṭā, பெ.(n.)

   காட்டெருமை; wik buffalo (சா.அக.);.

     [குழு + கடா.]

குழுக்காலி

 குழுக்காலி kuḻukkāli, பெ.(n.)

   கட்டுக்கடங்காமற் கொழுத்திருக்கும் மந்தைமாடு (இ.வ.);; well shapet intractable bull in a herd.

     [குழு + காலி.]

குழுக்கூலி

 குழுக்கூலி kuḻukāli, பெ.(n.)

   களவு போனதை மீட்டுக் கொடுப்பதற்காகப் பொருட்குரியவ கொடுக்கும் பொருளில் இடைநின்று அச் செயலுக்கு உதவிய சிற்றூர்க் காவற்காரனுக்குரிய பங்கு; share of money paid to the villags watchman for acting as intermediary an restoring the stolen property of to the owner.

     [குழு + கூலி.]

குழுக்கெண்டை

 குழுக்கெண்டை kuḻukkeṇṭai, பெ.(n.)

   வால்மீன் (மீன்பிடி.சொ.தொ.);; a kind of fish.

     [குழு + கெண்டை.]

குழுதாடி

 குழுதாடி kuḻutāṭi, பெ.(n.)

குழுதாழி பார்க்க;See. {kusutā/}

     [குழு + (தாழி);தாடி.]

குழுதாழி

குழுதாழி kuḻutāḻi, பெ.(n.)

   1. குழுதாழி, மாட்டுத் தொட்டி; cattle trough, made of clay and burnt.

   2. குழுதாழி பார்க்க;See. {kபlutal}

மறுவ. குழித்தி

     [குழு → குழு + தாழி.]

குழுதி

 குழுதி kuḻuti, பெ.(n.)

   கிரகப் பூச்சி; a kind of insect (சா.அக.);.

 குழுதி kuḻudi, பெ.(n.)

   கிரகப்பச்சி; a kind of insect (சா.அக.);. [குழு → குழுதி.]

குழுப்படை

குழுப்படை kuḻuppaḍai, பெ.(n.)

   அரசனால் அமர்த்தப்பட்ட தலைவனையுடைய படை (சுக்கிரநீதி,303);; forces under the command of a general appointed by the king.

     [குழு → படை.]

குழுமம்

குழுமம் kuḻumam, பெ.(n.)

   1. ஒரு நோக் கத்தைக் குறிப்பிட்டு அதை நிறைவேற்றச் சில அமைப்புகள் ஒன்று சேர்ந்து தனி நெறிமுறைகளை அமைத்து உருவாக்கம் ஓர் அமைப்பு; corporation.

   2. ஒருவரே முடிவுகளை மேற்கொள்ளாமல் தொடர்புடைய வர்கள் ஒரு குழுவாகச் சேர்ந்து கலந்தாய்ந்து முடிவுகளை மேற்கொள்ள அமைக்கப்படும் குழு

 council.

   3. குறிப்பிட்ட நோக்கத்துக்காக அமைக்கப்படும் ஒரே துறையைச் சேர்ந்தவர்களின் குழு; a body of professionals, etc.

குழுமல்

குழுமல் kuḻumal, பெ.(n.)

   1. கூடுகை; assembling, crowding.

     “விண்ணவர் யாவரும் குழுமலுற்று” (கந்தபு.தேவகிரி.21);.

   2.கூட்டம் (பிங்.);; assembly, crowd.

     [குழு → குழுமல்.]

குழுமு-தல்

குழுமு-தல் kuḻumudal,    7 செ.கு.வி.(v.i.)

   1. கூடுதல்; to collect in large numbers, as men, animals.

     “மாத ரெண்ணிலார் குழுமி” (காஞ்சிப்பு. பன்னிரு.134);.

   2. கலத்தல்; to gather to gether, mix.

     “கொன் றையும் துளவ மும் குழுமத் தொடுத்த” (சிலப்.12, உரைப்பாட்டு மடைக்குப்பின் செய்யுள்.10);

   3. கூடி முழங்குதல்; to roar in company, as tigers.

     “கூட்டுறை வயமாப்புலியொடு குழும” (மதுரைக். 677);.

ம. குழுமுக

 Fin. kummuta;

 Es, kummuda;

 Hanti.kump:Hung. hab, Jap. Kab

     [குழு → குழுமுதல்.]

குழுமுரல்

 குழுமுரல் kuḻumural, பெ.(n.)

   ஒருவகை முரல் மீன்; a species of thick needle-fish.

     [குழு → குழுமுறல்.]

குழுமேதி

 குழுமேதி kuḻumēti, பெ.(n.)

   காட்டெருமை; wild buffalo (சா.அக.);.

      [குழு + மோதி. போத்து → மோத்து → மோதி → மேதி.]

குழுமை

 குழுமை kuḻumai, பெ.(n.)

   ஒற்றுமை, ஒன்று பாட்டுணர்பு; integrity colesion.

     [குழு → குழுமை.]

குழுமைக்கட்டி

குழுமைக்கட்டி kuḻumaikkaṭṭi, பெ.(n.)

   1. உமிழ்நீர்ச் சுரப்பியில் எரிச்சலை உண்டுபண்ணி, கழுத்தைச் சுற்றி வீக்கங் காணும் ஒரு நோய்; a disease consisting of inflammation of the salivary glands with swelling along its neck.

   2. குளுமக் (சைத்திய); கட்டி; a tumour orswelling of the tonsils from cold (சா.அக.);.

     [குளுமை → குழுமை + கட்டி.]

குழும்பு

குழும்பு1 kuḻumbu, பெ.(n.)

   குழி; pit.

     “ஆழ்ந்த குழும்பிற் றிருமணி கிளர” (மதுரைக் 273);.

     [குழு → குழும்பு.]

 குழும்பு2 kuḻumbu, பெ.(n.)

   திரள்; herd, flock,

 swarm, crowd.

     “களிற்றுக் குழும்பின்” (மதுரைக்.24);.

     [குழு → குழும்பு.]

குழுவன்

குழுவன்1 kuḻuvaṉ, பெ.(n.)

குளுவன் (சங்.அக.); பார்க்க;See. {kuluvan}

     [குழு → குழுவன்.]

 குழுவன்2 kuḻuvaṉ, பெ.(n.)

   சொற்கேளாதவன் (யாழ்.அக.);; intractable person.

     [குறுவன் → குழுவன்.]

குழுவல்

குழுவல் kuḻuval, பெ.(n.)

   1. கூடுகை; crowding, assembling.

     “குமரருமங்கைமாருங் குழுவலால்” (கம்பரா.வரைக்.28);.

   2.கூட்டம்; crowd, assembly.

     [குழு → குழுவல்.]

குழுவு-தல்

குழுவு-தல் kuḻuvudal,    6 செ.கு.வி. (v.i.)

   1. கூடுதல்; to assemble inlarge numbers, to crowd.

     “மள்ளர் குழீஇய விழவினானும்” (குறுந்.31);.

   2. கலத்தல்; to associate, mingle.

     “இகலில ரெஃகு டையார் தம்முட் குழீஇம்” (நாலடி.137);.

     [குழு – குழுவு.]

குழூஉக்குறி

குழூஉக்குறி kuḻūukkuṟi, பெ.(n.)

   1. சிற்சில கூட்டத்தார்க்குள் வழங்கும் குறிப்பு மொழி (நன்.267);; conventional term, peculiar to a society or profession one of three {tagudi. Valakku.}

     [குழூஉ +குறி.]

குழூஉநிலை

குழூஉநிலை kuḻūunilai, பெ.(n.)

கோபுரமுதலிய

   கட்டடத்தின் தளநிலைகள்; series of stories in a

 building.

     “குழுஉநிலைப் புதவின்” (பதிற்றுப்.53.16);.

     [குழூஉ + நிலை.]

குழை

குழை1 kuḻaidal,    4 செ.கு.வி.(v.i.)

   1. இளகு பதமாதல்; to become soft, mashy 6, pulpy, as wellcooked.

     ‘குழையச் சமைத்த பகுப்பு’ (திவ். பெரியாழ்.3, 1,3.வ்யா);.

   2. மனமிளகுதல்; to melt, become tender as the mind.

     “தொண்டரினம் குழையாத் தொழும்” (பதினொ.பட்டினத்.திருவே. 28);.

   3.சோறு அளிதல்; to be overboiled, as rice.

   4. நெருங்கி உறவாடுதல்; to be in close intimacy, to be hand in glove with.

குழைந்து பரிமாறுகிறார்கள்.

   5. வளைதல்; to be bent, as a bow.

     “திண்சிலை குழைய” (சூளா.அரசியற்.319);.

   6.வாடுதல்; to fade, languish become spoilt, as flowers or twigs.

     “மோப்பக்குழையும் அனிச்சம்” (குறள்.90);.

   7. துவளுதல்; to wave, as a flag, to sway to and fro.

     “குழைந்த நுண்ணிடை” (கம்பரா.சித்திர.9);

   8. தளர்தல்; to be tired to be weighed down

     “கோதைசூழ் கொம்பிற் குழைந்து” (பு.வெ.12, பெண்பாற்.14);.

   9. வருந்துதல்; to be troubled.

     “மகளிர் குழைகின்ற குழைவை” (கம்பரா.பிரமாத்.31);.

   ம.குழயுக;   க. கொழெ;   தெ. க்ருள்ளு;   து. குறையுனி, குரைவுனி,குரிவுனி, குரியுனி;   துட. க்வஸ்;கோத. கொள்வ, குத்: குரு.கொச்ச்னா.

 Fin…kura;

 Es.kura;

 Q. kurpa

     [குழை → குழைதல்.]

 குழை2 kuḻaittal,    4 செ.குன்றாவி.(v.t.)

   1. குழையச் செய்தல்; to macerate, mas, reduce to fult, pulp make soft by mixing with water.

சோற்றைக் குழைத்து விட்டாள்.

   2. மருந்துப் பொடியை தேன் முதலியனவிட்டுக் கலத்தல்; to mix, as powder with a liquid.

   3. கலக்கப் பண்ணுதல்; to melt and blend in union, fuse.

     “உன்னையென்னுள்ளே குழைத்தவெம் மைந்தா” (திவ்.திருவாய.2,6,9);.

   4. தழையச் செய்தல்; to cause sprout or shoot forth.

     “மழை குடக்கேர்பு குழைத்த சிறுகோல்” (நற்.140);.

   5.திரட்டுதல்; to gather in a lump, as boiled rice.

     “கருணை யாற் குழைக்கும் கைகள்” (சீவக.257);.

   6.இளகுவித்தல்; to cause to melt.

     “அத் தன்மெய் குழைத்தநங்கை” (கந்தபு.16);.

   7. வளைத்தல்; to bend, as a bow.

     “பொன் வரை குழைத்து” (கூர்மபு. பிரமவிஷ்.உல);.

   8. அசைத்தல்; to wave, as the chowry fan. To wag,

 as a dog its tail.

     “குழைக்கின்ற கவரியின்றி” (கம்பரா.நகர்தீ.21);.

     [குழை → குழைத்தல்.]

 குழை3 kuḻai, பெ.(n.)

   1. தளிர்; tender leaf, sprout, shoot.

     “பொலங்கு ழையுழிஞை” (புறநா.50);.

   2. சேறு (திவா.);; soft mud, mire.

   3. துளை; hole.

     “கோடிநுண் டுகிலுங் குழையும் (சீவக.1369);.

   4. குழல் (பிங்.);; tube, pipe.

   5. சங்கு(பிங்.);; conch.

   6. காது; ear. ‘மணித்தோடுங் குழையிலாட’ (அஷ்டப் சீரங்க நாயகி.ஊச.3);.

   7. குண்டலம்; a kind of ear-ring ‘மின்னுக் குழையும் பொற்றோடும்’ (சீவக. 1658);.

   8. வானம் (பிங்.);; sky.

   9. காடு (பிங்.);; jungle.

   10. நெய்தல்; indian water lily.

   க. கொளசி;ம.குழ.

     [குழ → குழை.]

 குழை4 kuḻai, பெ.(n.)

   1. மயிர்; hair.

   2. தளிர்; tender leaf, foliage.

   3. நெய்தல்; white indian water lily.

   4. துளை; hole.

   5. காடு; jungle.

   6. காது; ear.

   7. வானம், ஆகாயம்; sky.

   8. குழாய்; tube(சா.அக.);.

 Fin. kurva;

 Es, {kõrv,} Komi. {kõr;

} Mong, xulki Turk, kulak,kulka, O.Jap, kura,

     [குள் → குழ → குழை.]

குழைகறி

 குழைகறி guḻaigaṟi, பெ.(n.)

   குழைந்தகறி; vegetable curry softened by boiling.

     [குழை + கறி.]

குழைகுழை-த்தல்

குழைகுழை-த்தல் guḻaiguḻaittal,    4 செ.கு.வி.(v.i.)

   குழம்பிக்கிடத்ல்; to be confused.

     “குழைகுழைத்த கல்வியினுங் கேள்வியினுங் கல்லாமை குணமே” (தண்டலை.83);.

     [குழை + குழைத்தல்.]

குழைக்கடி-த்தல்

குழைக்கடி-த்தல் kuḻaikkaḍittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   குழையடித்தல் (யாழ்.அக.);; to effect a cure by magic, passing a handful of neem twigs over the patient’s body.

     [குழைக்கு + அடி.]

குழைக்காடு

குழைக்காடு kuḻaikkāṭu, பெ.(n.)

   1. நாட்டுப்புறம்; country, as distinct from city.

   2. காட்டுப்புறம்; jungle, as distinct from cultivated tract (செ.அக.);.

     [குழை+காடு]

குழைக்காட்டான்

 குழைக்காட்டான் kuḻaikkāṭṭāṉ, பெ.(n.)

   நாட்டுப் புறத்தான்; rustic, boor.

     [குழைக்காடு → குழைக்காட்டான்.]

குழைசாந்து

 குழைசாந்து kuḻaicāntu, பெ.(n.)

   கட்டடம் பூசுதற்கு உதவும் கலவைச் சாந்து; softened mortar, as used in rough plastering (செ.அக.);.

     [குழை+சாந்து]

குழைசேறு

 குழைசேறு kuḻaicēṟu, பெ.(n.)

   கலங்கற்சேறு (திவ.);; softmire, slime.

     [குழை + சேறு.]

குழைச்சரக்கு

குழைச்சரக்கு kuḻaiccarakku, பெ.(n.)

   1. சார மற்ற பண்டம்; worthless stuff.

     “குழைச்சரக்கே யாகிலும் விடவொண்ணாத” (திவ். திருப்பா.4. வ்யா);.

   2. காக்கப்படும் பொருள்; that which is protected preserved.

     “நாங்கள் உனக்குக் குழைச் சரக் கானபடி” (திவ். திருப்பா.10.வ்யா);.

     [குழை + சரக்கு.]

குழைச்சல்

 குழைச்சல் kuḻaiccal, பெ.(n.)

   வணக்கங்காட்டுகை (கொ.வ.);; obsequiousness servility.

     [குழை → குழைச்சல்.]

குழைச்சாந்து

 குழைச்சாந்து kuḻaiccāndu, பெ.(n.)

   கட்டடம் பூசுதற்கு உதவும் கலவைச்சாந்து; softended mortar, as used in rough plastering.

     [குழை + சாந்து.]

குழைச்சான்

 குழைச்சான் kuḻaiccāṉ, பெ.(n.)

   எப்பொழுதும் குழைந்து பணிந்து நிற்பவன், அடிமைக் குணமுள்ளவன்; slavery person.

     [குழை → குழைச்சான்.]

குழைச்சான் கொட்டுக் கொட்டு-தல்

குழைச்சான் கொட்டுக் கொட்டு-தல் kuḻaiccāṉkoṭṭukkoṭṭudal,    5 செ.கு.வி.(v.i.)

   அடிமை போல் வணக்கவொடுக்கமாய் நடத்தல்; to behave in a servile or obseduious manner.

குழைச்சான் + கொட்டு + கொட்டுதல்.]

குழைச்சி

குழைச்சி1 kuḻaicci, பெ.(n.)

   புற்றாஞ்சோறு(சங்.அக.);; comb of white ant’s nest.

     [குழை → குழைச்சி.]

 குழைச்சி kuḻaicci, பெ.(n.)

குழைச்சு பார்க்க;See. {kufaiccu.}

     [குழை → குழைச்சி.]

 குழைச்சி3 kuḻaicci, பெ.(n.)

   மண்வெட்டியின் காம்பு (முகவை);; handle of spade.

     [குழை → குழைச்சி.]

குழைச்சு

குழைச்சு kuḻaiccu, பெ.(n.)

   1. கயிற்றுச் சுருக்கு; loop, noose in a string or cord.

   2. முடிச்சு; tie, knot.

   3. உடம்பிலுள்ள எலும்பின் சந்து; joint of the body, especially the socket joint of the shoulder or thigh.

   4. ஆயுதக் குளசு; eye or socket of a hoe, adze, etc.

     [குழை → குழைச்சு.]

குழைச்சு மண்வெட்டி

 குழைச்சு மண்வெட்டி kuḻaiccumaṇveṭṭi, பெ.(n.)

   மண்வெட்டிவகை; hoe with a socket for the handle.

     [குழைச்சு + மண்வெட்டி.]

குழைச்சுப்படு-தல்

குழைச்சுப்படு-தல் kuḻaiccuppaḍudal,    4 செ.கு.வி. (v.i.)

   1. சுருக்கிப்படுதல்; to be coiled, looped, as a rope.

   2. சிக்குப்படுதல்; to be knotted, tangled.

     [குழைச்சு + படுதல்.]

குழைச்சுவிடு-தல்

குழைச்சுவிடு-தல் kuḻaiccuviḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   1. உடல்மூட்டு விடுதல்; to be disjointed, dislocated.

   2. மண்வெட்டியின் காது முறிதல்; to be broken, as the socket of hoe.

     [குழைச்சு + விடுதல்.]

குழைநாற்றம்

 குழைநாற்றம் kuḻaināṟṟam, பெ.(n.)

   அழுகிய இலைநாற்றம்; rotten smell of a leaf (சா.அக.);.

     [குழை + நாற்றம்.]

குழைந்தசோறு

 குழைந்தசோறு kuḻaindacōṟu, பெ.(n.)

   அதிகமாக வெந்து குழைந்த சோறு; over boled rice (சா.அக.);.

     [குழை → குழைந்த + சோறு.]

குழைந்தநீர்

 குழைந்தநீர் kuḻaindanīr, பெ.(n.)

   இளநீர்; water of tender coconut (சா.அக.);.

     [குழை → குழைந்த + நீர்.]

குழைந்தபதம்

 குழைந்தபதம் kuḻaindabadam, பெ.(n.)

அழிந்த

   பதம்; over boiled condition (சா.அக.);.

     [குழை → குழைந்த + பதம்.]

குழைந்தவன்னம்

 குழைந்தவன்னம் kuḻaindavaṉṉam, பெ.(n.)

   குழைந்தசோறு; over boiled rice. (சா.அக.);.

     [குழைந்த + வன்னம். வரைநெல் → வன்ன → வன்னம்(மூங்கிலரிசிச் சோறு.]

குழைபிடி-த்தல்

குழைபிடி-த்தல் kuḻaibiḍittal,    4 செ.கு.வி.(v.i.)

   ஒரு செயலைத் தடைசெய்தல்; lit., to hold a bough, to

 obstruct an affair.

     [குழை + பிடித்தல்.]

குழைப்பாசி

 குழைப்பாசி kuḻaippāci, பெ.(n.)

   இலைப்பாசி; large leaved moss (சா.அக.);.

     [குழை + பாசி.]

குழைமறைவு

குழைமறைவு kuḻaimaṟaivu, பெ.(n.)

   1. பார்வையை மேற்செல்ல விடாது தடுக்கும் தழையின் செறிவு; dense foliage, shrubbery ortrees, as intercepting vision.

   2. மறைந்து ஒதுங்குகை; skulking, evading.

     [குழை + மறைவு.]

குழைமுகப்புரிசை

குழைமுகப்புரிசை guḻaimugappurisai, பெ.(n.)

   அந்தப்புரம்; lit., the apartment guarded by women. women’s apartment in a palace,harem zenana.

     “குழைமுகப் புரிசையும் குரிசிறானகப்பட” (சீவக.275);.

     [குழைமுகம் + புரிசை.]

குழைமுகம்

 குழைமுகம் guḻaimugam, பெ.(n.)

   கட்டட அமைப்பு வகை; a type of building construction.

     [குழை + முகம்.]

குழையடி-த்தல்

குழையடி-த்தல் kuḻaiyaḍittal,    4 செ.குன்றாவி.(v.t.)

   1. வேப்பிலையால் உடம்பில் அடித்து மந்திரித்து நோய் தீர்த்தல்; to effect a magic cure bypassing a handful ofneem twigsover the body.

   2. வயப்படுத்த சூழ்வினை (தந்திரஞ்); செய்தல்; to wheedle, use artful means to secure a selfish interest.

   3. தழையை உரமாக இடுதல்; to apply green manureto paddy fields.

     [குழை + அடித்தல்.]

குழையற்கறி

குழையற்கறி kuḻaiyaṟkaṟi, பெ.(n.)

   1. குழைய வெந்தகறி; mashy or pulpy curry.

   2. அதிகமாக வெந்தகறி; curry overboiled.

     [குழையல் + கறி.]

குழையற்பனாட்டு

 குழையற்பனாட்டு kuḻaiyaṟpaṉāṭṭu, பெ.(n.)

   பனம்பழச்சாற்றின் இறுகல்; juice of palmyra fruits, dried into a jelly.

     [கழையல் + பனாட்டு.]

குழையல்

 குழையல் kuḻaiyal, பெ.(n.)

   குழைந்தபொருள்; that which is mashed or softened, as over boiledrice.

குழையற்சோறு (உ.வ.);.

     [குழை → குழையில்.]

குழையவடி-த்தல்

குழையவடி-த்தல் kuḻaiyavaḍittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   சிறிது இளக்கமாகச் சோறு வடித்தல்; boiling down rice so as to be soft when eating (சா.அக.);.

     [குழை → குழைய + வடி.]

குழையாணி

 குழையாணி kuḻaiyāṇi, பெ.(n.)

   கொண்டையானி; stub-nail.

     [குழை + ஆணி.]

குழையுரம்

 குழையுரம் kuḻaiyuram, பெ.(n.)

   மரக்குழையாகிய உரம்; green manure.

     [குழை + உரம். குழை = இலை, தழை.]

குழைவாயிரு-த்தல்

குழைவாயிரு-த்தல் kuḻaivāyiruttal,    3 செ.கு.வி. (v.i.)

   1. மெதுவாயிருத்தல்; being soft (சா.அக.);.

   2. மென்மையாகவும் பக்குவமாகவும் நடந்து கொள்ளுதல்; to behave gently and obediently.

     [குழைவு + ஆய் + இரு.]

குழைவு

குழைவு kuḻaivu, பெ.(n.)

   1. நெகிழ்கை (சூடா.);; mashy condition.

   2. இரக்கம்; tenderness of mind, pity.

     “கொடுமை தலைக்கொண்டு சற்றுங் குறைவிலாமல்” (சிவரக.சித்திரகேது.1);.

   3. வாடுகை; fading, languishing.

     “கொடி போலுருவாள் குழைவுற்றனளோ” (சிவரக. கணபதிவந்.4);.

     [குழை → குழைவு.]

 குழைவு kuḻaivu, பெ.(n.)

   1. அணைவு; embrace.

   2. கலப்பு; mixture, combination.

   3. வளைவு; bend.

     [குள் → குழை → குழைவு.]

குழைவுசீனி

 குழைவுசீனி kuḻaivucīṉi, பெ.(n.)

   வெள்ளைச் சருக்கரை; refined, white sugar.

     [குழைவு சீனி.]

குழைவுதிரனை

 குழைவுதிரனை kuḻaivudiraṉai, பெ.(n.)

   வளைவாகவுள்ள திரணை (கட்டட.நாமா.);; cordon work.

     [குழைவு + திரணை.]

குழைவுப்பலமுனை

 குழைவுப்பலமுனை kuḻaivuppalamuṉai, பெ.(n.)

   வளைவான பகுதிகளில் கல்லிழைக்கப் பயன்படும் பலமுனை உளிவகை (மது.வழ.); (கட்.தொ.வரி.);; a kind of chisel.

     [குழைவு + பல முனை.]

குழைவுளி

 குழைவுளி kuḻaivuḷi, பெ.(n.)

   உளிவகை (C.E.M.);; socket chisel.

     [குழைவு → குள்ள + குடை.]

குவங்கம்

குவங்கம் kuvaṅgam, பெ.(n.)

   1. ஈயம்; lead.

   2. காரீயம்;  black lead (சா.அக.);.

     [குருவங்கம் → குவங்கம்.]

குவங்கியா

 குவங்கியா kuvaṅgiyā, பெ.(n.)

   ஈயத்தண்டுச் செடி, கிண்டல் கொடி (சா.அக.);; a creeper.

     [குருவங்கியம் → குவங்கியா.]

குவசிமரம்

 குவசிமரம் kuvacimaram, பெ.n.)

ஒரு ஐரோப்பிய நாட்டு மரம்

 jamaica quassia Qussia excelsa (சா.அக.);.

 குவசிமரம் kuvasimaram, பெ.(n.)

   ஐரோப்பிய நாட்டு மரவகை; jamaica quassia – quassic excelga, a native of Europe.

குவசியாசக்கை

 குவசியாசக்கை kuvasiyāsakkai, பெ.(n.)

   ஒரு மரத்தின் கசப்புச் சக்கை; the bark of quassiar

     [குவச்சியம் + சக்கை.]

குவசிவேம்பின்பட்டை

 குவசிவேம்பின்பட்டை kuvasivēmbiṉpaṭṭai, பெ.(n.)

   மலை வேம்பின் பட்டை; bark of quassia (சா.அக.);.

     [குவடு → குவட்டு → குவத்து → குவச்சி → குவேசி → குவேம்பின்பட்டை.]

குவசிவேம்பு

 குவசிவேம்பு kuvacivēmpu, பெ.(n.)

இமய மலையில் உள்ள ஒரு வகை வேம்பு

 a kind of Himalayan quassia – Brucea quassioides (சா.அக.);.

குவடு

குவடு kuvaḍu, பெ.(n.)

   தங்கத்தைக் கரைக்கும் ஒரு வேதிப் பொருள் (யாழ்.அக.);; a mineral solvent of gold.

     [குவட்டு + முலைச்சி.]

 குவடு kuvaḍu, பெ.(n.)

   1.திரட்சி (பிங்.);; roundness, rotundity anything round.

   2. மலை (திவா.);; mountain hill.

   3. குன்று (பிங்.);; hillock.

   4. மலையுச்சி (திவா.);; top of a hill, peak

   5. மரக் கிளை (பிங்.);; branch of a tree.

   6. சங்கச் செய்நஞ்சு (சங். அக.);; a mineral poison.

ம.குவடு ஒ.நோ.குலவு..

     [குவி → குவ்வு → குவடு.]

குவடுறு

 குவடுறு kuvaḍuṟu, பெ.(n.)

கலைச் செம்பு(சா.அக.); பார்க்க;See. {kalaccembu.}

     [குவடு + உறு.]

குவட்டிடைக்குச்சு

 குவட்டிடைக்குச்சு kuvaḍḍiḍaikkuccu, பெ.(n.)

   தாம்பூரச்சிகை; an unknown plant with alchemical virtues (சா.அக.);.

     [குவட்டு இடை + குச்சு.]

குவட்டினியம்

 குவட்டினியம் kuvaṭṭiṉiyam, பெ.(n.)

   நீலாஞ்சனக் கல்; sulphuret of antimony (சா.அக.);.

     [குவடு → குவட்டு + இன் + ஈயம்.]

குவட்டினுறு கண்ணி

 குவட்டினுறு கண்ணி guvaṭṭiṉuṟugaṇṇi, பெ.(n.)

   கோவைக் கொடி; Indian creeper (சா.அக.);.

     [குவட்டின் + உறு + கண்ணி.]

குவட்டிற்புளிதம்

 குவட்டிற்புளிதம் kuvaṭṭiṟpuḷidam, பெ.(n.)

   சுங்கச் செய்ந்நஞ்சு; a mineral poison.

     [குவட்டில் + புளிதம்.]

குவட்டிலுதித்தோன்

 குவட்டிலுதித்தோன் kuvaṭṭiludiddōṉ, பெ.(n.)

   தங்கத்தைக் கரைக்கும் வேதிப்பொருள்; a mineral – solvent of gold.

     [குவடு → குவட்டில் + உதித்தோன்.]

குவட்டிலுறுசாமை

 குவட்டிலுறுசாமை kuvaṭṭiluṟucāmai, பெ.(n.)

கலைச் செம்பு (சா.அக.);.

     [குவட்டில் + உறு + சாமை.]

குவட்டிலுற்பவித்தகூர்மை

 குவட்டிலுற்பவித்தகூர்மை kuvaṭṭiluṟpavittaārmai, பெ.(n.)

தொட்டிபாடாணம்,

 a mineral poison probably red arsenic (சா.அக.);.

குவட்டுக்கல்

 குவட்டுக்கல் kuvaṭṭukkal, பெ.(n.)

   மலையில் மேயும் ஆடுகளின் மணத்தி (கோரோசனை);; bezoar found in sheep feeding in mountains (W);.

     [குவடு → குவட்டு + கல்.]

குவட்டுக்கூர்மை

 குவட்டுக்கூர்மை kuvaṭṭukārmai, பெ.(n.)

   தொட்டிச் செய்ந்நஞ்சு; a mineral poison.

     [குவடு → குவட்டு + கூர்மை.]

குவட்டுநுண்முலைச்சி

 குவட்டுநுண்முலைச்சி kuvaṭṭunuṇmulaicci, பெ.(n.)

குவட்டு முலைச்சி பார்க்க;See. {kuvattu mulaicci}

     [குவடு → குவட்டு.]

குவம்

 குவம் kuvam, பெ.(n.)

ஆம்பல் (மலை.);: water-lily.

     [கூவம் → குவம்.]

குவரம்

 குவரம் kuvaram, பெ.(n.)

   துவர்ப்பு; astringence (சா.அக.);.

     [துவர் → குவர் → குவரம்.]

குவரி

 குவரி kuvari, பெ.(n.)

   வாலுளுவை (சா.அக.);; black oil tree.

     [குவர் → குவரி.]

குவரிகுண்டல்

 குவரிகுண்டல் guvariguṇṭal, பெ.(n.)

   வாலுளுவை (மலை.);; black oil tree.

     [குவரி + குண்டல்.]

குவரியா

 குவரியா kuvariyā, பெ.(n.)

   பூனைக்காலி; cowhage plant (சா.அக.);.

     [குவரி → குவரியா.]

குவர்

குவர் kuvar, பெ.(n.)

   மேலாக மூடும் பாய் (பாய்மரப் பாய்க்கு மேலுள்ள பாய்);; sky-sail. (M.Navi.84);.

த.வ. மீப்பாய்.

     [E.cover → த.குவர்.]

குவலகம்

 குவலகம் guvalagam, பெ.(n.)

   நெய்தற் பூ; white Indian water lily (சா.அக.);.

     [குவலி → குவலிகம் → குவலகம்.]

குவலந்தம்

 குவலந்தம் kuvalandam, பெ.(n.)

   செங்கழுநீர்; red Indian water-lily (சா.அக.);.

     [குவலி → குவலந்தம்.]

குவலமயம்

 குவலமயம் kuvalamayam, பெ.(n.)

   மருவு; organy an aromatic shrub (சா.அக.);.

     [குவலம் + அயம்.]

குவலம்

 குவலம் kuvalam, பெ.(n.)

   ஒருவகைச் செய்நஞ்சு; a mineral poison.

     [குவு → குவல் → குவலம்.]

குவலயம்

குவலயம்1 kuvalayam, பெ.(n,)

   உலகம்; the earth, world.

     ‘குவலயமிசைக் குப்புற்று” (கந்தபு:தாரக51); (செ.அக.);.

 குவலயம்2 kuvalayam, பெ.(n.)

   1. வெள்ளாம்பல் (திவா.);; white Indian water lily – Nymphaea lotus alba.

   2. நீலோற்பலம், குவளை வகை; blue nelumbo – Ponfederia monochoria vaginalis,

     ‘குவலயத் திருமலர்” (குடா.);.

   3. கொடி வகைகளில் ஒன்றான

   செங்குவளை; purple Indian water-lilyNymphacu odorata (செ.அக.);.

     [குவளம் – குவலயம்]

 குவலயம் kuvalayam, பெ.(n.)

   நிலவுலகம்; the earth, world.

     “குவலய மிசைக் குப்புற்று” (கந்தபு.தாரக.51);.

த.வ. உலகம்.

     [கு+வலயம்.]

     [Skt.ku- → த.கு.]

வள் → வளை → வளையம் = வட்டம், வளையல்.

     [த.வளையம் → Skt.valaya.(வ.வ.2:85);]

 குவலயம்2 kuvalayam, பெ.(n.)

   1. நெய்தல் (திவா.);; white Indian water – lily.

   2. கருங்குவளை; blue nelumbo.

     “குவலியத் திருமலர்” (சூடா.);.

   3. செங்குவளை (வின்.);; purple Indian water lily.

     [த.குவளை → Skt.kuvala, kuvalaya → த.குவலயம்.]

குவலயாநந்தம்

 குவலயாநந்தம் kuvalayānantam, பெ.(n.)

   ஒப்பனை கலை பற்றிய இலக்கணம்; a rhetorical grammer.

     [குவளையன்+நந்தம்]

குவலயாபீடம்

குவலயாபீடம் kuvalayāpīṭam, பெ.(n.)

கம்சன் கண்ணனைக் கொல்லும்படி ஏவிய யானை,

 the el. elephant which {kamsā} despatched agains Krishna.

     “கூற்றமென்னமேற் றுாண்டினன் குவலயாபீடம்” (பாகவத.11, கஞ்சனைக்.14);.

     [குவலயம் + பீடம்.]

குவலி

 குவலி kuvali, பெ.(n.)

   இலந்தை (சூடா.);; jujubetree

     [குவல் → குவலி.]

குவலிடம்

 குவலிடம் kuvaliḍam, பெ.(n.)

   ஊர் (சது.);; village.

     [குவவு → குவலிடம்.]

குவலியம்

குவலியம் kuvaliyam, பெ.(n.)

   1. நெய்தல் (திவா.);; white Indianwater-lily.

   2. கருங்குவளை; blue nelumbu.

     “குவலியத்திருமலர்” (சூடா.);.

   3. செங் குவளை; purple Indian water-lily (W);.

     [குவலி → குவலியம்.]

குவலை

குவலை kuvalai, பெ.(n.)

   1. கஞ்சா (மலை.);; Indian hemp.

   2. துளசி (மலை.);; sacred-basil.

     [குவல் → குவலை.]

குவலையன்

 குவலையன் kuvalaiyaṉ, பெ.(n.)

   துரிசு; blue vitriol.

     [குவலை + அன்.]

குவலையம்

குவலையம் kuvalaiyam, பெ.(n.)

   1. நீலோற்ப மலர்; blue Indian water lily.

   2. அரக்காம்பல், செவ்வாம்பல்; red water lily.

குவளச்சி

 குவளச்சி kuvaḷacci, பெ.(n.)

   புற்றாஞ்சோறு (யாழ்.அக.);; comb of white ant’s nest.

     [குவள் → குவளச்சி.]

குவளம்

 குவளம் kuvaḷam, பெ.(n.)

   வில்வம்; bael tree (சா.அக.);.

     [குவள் + குவளம்.]

குவளாளபுரம்

 குவளாளபுரம் kuvaḷāḷaburam, பெ. (n.)

   பண்டைக் கொங்கு நாட்டைச்சேர்ந்த ஓர் ஊர்; a village of ancient korgu country.

     [குவளால[ம்]+புரம்]

குவளை

குவளை1 kuvaḷai, பெ.(n.)

   1. கருங்குவளை; blue nelumbo.

     “குவளை… கொடிச்சி கண்போன் மலர்தலும்” (ஐங்குறு.299);.

   2.செங்கழுநீர்; purple Indian water-lily.

     “விளக்கிட்டன்ன கடிகமழ் குவளை” (சீவக.256);.

   3. ஒரு பேரெண்; a large number.

     “நெய்தலும் குவளையும் ஆம்பலும் சங்கமும் நுதலிய செய்குறியீட்டம்” (பரிபா.2:13);.

     [குவள் → குவளை.]

 குவளை2 kuvaḷai, பெ.(n.)

   1. அணிகளில் மணி பதிக்குங்குழி; socket or bed for a gem in a jewel.

   2. அக்கமணி முதலியன பதிக்குங் கடுக்கண் குவளை; socket in an ear ring for insetting {ruaråksa} or other bead.

   3.மகளில் கழுத்தணிகளில் ஒன்று; a neck ornament (இ.வ.);.

   4. கண்குழி; socket of the eye.

   5. கண்ணின் மேலிமை; eyelid.

   6. கண்ணின் மூக்கடி மூலை; inner corner of the eye (இ.வ.);.

   7. ஒருவகைப் பாத்திரம்; wide-mouthed vessel, cup.

   8. பாத்திரத்தின் விளிம்பு; brim of a vessel.

     [குவள் → குவளை.]

 குவளை kuvaḷai, பெ.(n.)

   கோடி எனும் பேரெண்ணைக் குறித்த பழந்தமிழ்ச்சொல்; ancient Tamil word which meant the number one crore.

     “forth goomsm” (சுக்கிரநீதி.106);

     “நெய்தலும் குவளையும் ஆம்பலும் சங்கமும்” (பரிபா.2:13);.

     (குவளை – மலரின் பெயர் கோடி எனும் எண்ணுக்கு ஆயிற்று. குவளை என்பது பூவிதழின் அடுக்குக் கருதியதாதலின் இதனை பண்பாகு பெயர் எனலாம்);.

குவளைக் கடுக்கண்

 குவளைக் கடுக்கண் kuvaḷaikkaḍukkaṇ, பெ.(n.)

   மணியழுத்தின கடுக்கண்வகை; ear-ring with a bead or gem enchased in it.

     [குவளை + கடுக்கன்.]

குவளைக்காசம்

 குவளைக்காசம் kuvaḷaikkācam, பெ.(n.)

   புருவம் வலித்து குத்தலுண்டாகிக் கனத்து, கடைக்கண் வீங்கி பார்வை நீலநிறமடைந்து தலைவலி உண்டாகி, வெளிவிழியைச் சுற்றி சிறு முளைகள் எழும்பும் ஓர் கண்ணோய்; a disease of the eyes characterised by the following symptoms viz pain in the eyebrows, piercing pain and heaviness of the eye, swelling of the angle of the eye, blue tint in the lens, head-ache, and small vesicle on the white of the eye (சா.அக.);.

     [குவளை + காசம்.]

குவளைத்தாரான்

 குவளைத்தாரான் kuvaḷaittārāṉ, பெ.(n.)

   தருமன் (சூடா.);; lit., one who wears kuvalai garland.

     [குவளை + தாரான். குவளை = மாலையணிந்தவன்.]

குவளைமலை

 குவளைமலை kuvaḷaimalai, பெ.(n.)

   காரீய மலை; mountain containing black lead-ore (சா.அக.);.

     [குவளை + மலை.]

குவளைமாலையர்

 குவளைமாலையர் kuvaḷaimālaiyar, பெ.(n.)

   வேளாளர் (குவளை மாலையணிந்தோர்);; it., those who wear kuvalai garland (வின்.);.

     [குவளை + மாலையர்.]

குவளையச்சு

 குவளையச்சு kuvaḷaiyaccu, பெ.(n.)

   கடுக்கனில் குவளை அமைத்தற்குரிய அச்சு; mould for making the kuvalai of an ear-ring.

     [குவளை + அச்சு.]

குவளையெலும்பு

 குவளையெலும்பு kuvaḷaiyelumbu, பெ.(n.)

   கண்குழி முன்பாக இருக்கும் எலும்பு; socket bone of the eye (சா.அக.);

     [குவலை + எலும்பு.]

குவளைவிக்கம்

குவளைவிக்கம் kuvaḷaivikkam, பெ.(n.)

   கண் குவளை வீக்கம்; swelling over the socket of the eye.

   2. இமை வீக்கம்; swelling of the eye-lic (சா.அக.);.

     [குவளை + வீக்கம்.]

குவளைவிப்புருத்தி

குவளைவிப்புருத்தி kuvaḷaivippurutti, பெ.(n.)

   1.இமை கனத்து, கடைக்கண் குத்தல், சீழ்வடிதல், தினவெடுத்தல், கண்ணுறுத்தல், விழிக்க வொட்டாமை, கண் சிவந்து எரிதல் முதலிய குணங்களைக் காட்டும் நோய்; disease of the eye lids accompanies by thickeing of the lids, pain in the corner of the eye, muco-prulent discharge intohing, irritation, inablity to open the eyes.

   2. இடுப்பு, முழங்கால், கைகள், விலா, நெஞ்சு, முதுகு, இவ்விடங்களில் வலியுண்டாகி, குதத்தில் குத்தலை உண்டாக்கி சீழ் ஒழுகும் ஒரு கோப்பு; a disease marked by pain in the groin, the limbs chest and in the anus attended with discharge o pus (சா.அக.);.

     [குவளை + விப்புருத்தி.]

குவவு

குவவு2 kuvavu, பெ.(n.)

   1. திரட்சி; roundness, fullness, plumpness.

     “ஓங்கு மணற் குவவுத் தாழை” (புறநா.24.);

   2. குவியல் (பிங்.);; heap, pile.

   3. கூட்டம்; assemblage, collection, clump, group army (பதிற்றுப் 84.20);.

   4. ஒன்றோடொன்று பிணைகை; interwining.

     “குவவுக்குர லேனல்” (மலைபடு.108);.

   5. பெருமை (சூடா.);; greatness, largeness.

   6. நிலவுகம் (சது.);; earth.

   7. மேடு; mound, hillock (W);.

     [குல் → குள் → குவ் → குவவு.]

குவவு-தல்

குவவு-தல் kuvavudal,    10 செ.கு.வி. (v.i.)

   குவிதல் (சூடா.);; to be piled up.

   2. குவித்தல்; to heap up, gather.

     “காட்டகத் தமிர்துங் காண்வரக் குவவி” (சீவக.2110);.

     [குல் → குள் → குவ் → குவவு.]

குவா

 குவா kuvā, பெ.(n.)

   ஆரொட்டி ; east Indiar arrowroot.

     [குவவு + குவா.]

குவாகசாரவரிட்டம்

 குவாகசாரவரிட்டம் kuvākacāravariṭṭam, பெ.(n.)

   சீமைப்பிசின் கொண்டு அணியமாக்கிய அரிட்டம்; ammonlated tincture of gulacum.

த.வ. பிசினி.

குவாகம்

குவாகம்1 kuvākam, பெ.(n.)

   கமுகு (மலை.);;  Arecapalm.

     [கமுகு → கமுகம் → குவாகம்(கொ.வ.);.]

 குவாகம்2 kuvākam, பெ.(n.)

   ஒரு வகைப் பிசின் மரம்; lignum-vitae.

     [குவ்வு → குவ்வகம் → குவாகம்.] ”
குவாகு”

குவாகுலம்

 குவாகுலம் kuvākulam, பெ.(n.)

ஒட்டகம் (சா.அக.); பார்க்க;See. {offagam}

     [குவாகு → குவாகிலம் (குவாகுமரம் போல் நெட்டையானது);.]

குவாக்குவாவெனல்

 குவாக்குவாவெனல் kuvākkuvāveṉal, பெ.(n.)

   அறைக்குழந்தையின் அழுகைக் குறிப்பு; onom. expr signigying squalling crying, as a new-born infant.

     [குவா + குவா + எனல்.]

குவாசகம்

 குவாசகம் guvācagam, பெ.(n.)

   பூனை முட்குறண்டி; a thorny shrub (சா.அக.);

     [குவ்வு + சாகம்.]

குவாசவம்

 குவாசவம் kuvācavam, பெ.(n.)

   மணித்தக்காளி; black-berried solanum (சா.அக.);.

     [குவ்வு + ஆசவம்.]

குவாட்சுக்கல்

 குவாட்சுக்கல் kuvāṭcukkal, பெ.(n.)

   படிகக்கல்; a name given to the purer variety of silica such as rock crystal etc (சா.அக.);.

     [குவாட்டி + கல் – குவாட்டிக்கல் → குவாட்சுக்கல் (கொ.வ.);.]

குவாட்டி

 குவாட்டி kuvāṭṭi, பெ.(n.)

   ஒரு வகைச் சிப்பி; oyster.

     [கவை → கவைத்தி → கவாட்டி → குவாட்டி.]

குவாதநூல்

 குவாதநூல் kuvātanūl, பெ.(n.)

   வடமொழியில் எழுதப்பெற்ற ஒரு மூலிகை நிகண்டு; a herbal dixtionary in Sanskrit (சா.அக.);.

     [குவாதம் + நூல். மருந்துச் சாறுகள் காய்ச்சி வடிப்பது தொடர்பான நூல்).]

குவாதம்

குவாதம்1 kuvātam, பெ.(n.)

   கியாழம் (தைலவ. தைல.114);; decoction, extract.

     [குய் + ஒதம் – குயோதம் → குயாதம் → குவாதம்.]

 குவாதம்2 kuvātam, பெ.(n.)

   வீண்பேச்சு; captious argument, perverse talk.

     [குறு + வாதம் – குறுவாதம் → குவாதம்.]

குவாதி

 குவாதி kuvāti, பெ.(n.)

   கொதிக்க வைக்கப் பயன்படுத்தும் பாண்டம்; boiling pot (சா.அக.);.

     [குய் + ஆதி – குயாதி → குவாதி.]

குவாதிகத்திரவம்

 குவாதிகத்திரவம் guvātigattiravam, பெ.(n.)

   சாராயம்; a spiritious liquor.

     [குவாதிகம் + திரவம்.]

குவாதிகம்

 குவாதிகம் guvātigam, பெ.(n.)

   பால் சேர்ந்த கியாழம்; a decoction made with milk (சா.அக.);.

     [குய்யாதி → குய்யாதிகம் → குயாதிகம் → குவாதிகம்.]

குவாதிதம்

குவாதிதம் kuvādidam, பெ.(n.)

   மஞ்சள், பெருங் காயம், பால் இவைகள் சேர்ந்த கியாழம்; a decoction prepared with turmeric, asafoetida and milk.

   2. தேன் சேர்ந்த மது; a spiritious liquor prepared with honey (சா.அக.);.

     [குவாதிகம் → குவதிதம்.]

குவாது

குவாது kuvātu, பெ.(n.)

   வீண்பேச்சு; fallacious argument.

     “அசடு மாதர் குவாதுசொல் கேடிகள்” (திருப்பு. 479);.

     [குறு + வாது. குறுவாது → குவாது.]

குவாதோத்பவம்

 குவாதோத்பவம் kuvātōtpavam, பெ.(n.)

   கொதிக்க வைத்தது; produced as collyrium.

த.வ. கடுங்காய்ச்சு.

குவானாகோ

 குவானாகோ kuvāṉāā, பெ.(n.)

கடம்பை இனத்தைச் சேர்ந்த விலங்கு,

 a animal which belonged to kadambai lineage.

இது கூட்டமாக வாழும். நான்கு அடி உயரம் கொண்ட இது அமெரிக்காவில் உள்ளது. இவை தங்களில் ஏதாவதொன்று இறந்தால் ஒன்று கூடும் என்பர் (அபி.சிந்);.

குவாமா

 குவாமா kuvāmā, பெ.(n.)

   கூவைக் கிழங்கிலிருந்து எடுக்கப்படும் மாவு; Indian arrow-root flour.

த.வ. குச்சுவள்ளி மாவு.

குவாயு

குவாயு kuvāyu, பெ.(n.)

   1. நோயாளியின் உடம்பி னின்று வீசும் நச்சுக் காற்று; a volatile deletrious principle arising from the bodies of the sick.

   2.நச்சுக் காய்ச்சல்,

 malaria (சா.அக.);.

     [குல் → குறு → வாயு.]

குவால்

குவால் kuvāl, பெ.(n.)

   1. குவியல் (பிங்.);; heap, pile

   2. கூட்டம்; collection, group.

     “மரகதக் குவாஅன் மாமணிப் பிறக்கம்” (திருவாச.3.1:24);.

   3.மேடுதிவா.); mound, hillock.

   4. மிகுதி; abundance, excess.

     “இத்தையே திருவுள்ளத்திலே குவாலாகக் கொண்டு” (ஈடு.2.7:3);. ‘

   5. நெற்போர் (திவா.);; heap of threshed paddy.

     [குவை → குவால்.]

குவி

குவி1 kuvidal,    4 செ.கு.வி.(v.i.)

   1. கூம்புதல்; to close, as flowers by night.

     “குவிந்த வண்குமுதங்களே” (கம்பரா. கைகேசி.53);.

    2.வாயினாற் கூடுதல்; to assume a circular form, as the lips in kissing or in pronouncing labial vowels.

     “மணித்துவர் வாயிதழைக் குவித்து விரித்தழுது” (திருச்செந். பிள்ளைத்.வாரணைப்.5);.

   3. நெருங்கக் கூடுதல் (திவா.);; to crowd.press as people, assandgrain, to become conical);.

   4. குவியாதல்; to be piled up formed in heaps, as sand, grain, to become conecal.

   5. உருண்டு திரளுதல்; to become round globular.

     “மேருவிற் குவிந்த தோளான்” (கம்பரா.நிகும்ப.92);.

   6. கூடுதல்; to be accumulated, stored up, hoarded as treasure.

வேண்டிய பணம் குவிந்து விட்டது.

   7. சுருங்குதல்; to contract decrease.

     “குவிதலுடன் விரிதலற்று” (தாயு.சின்மயா.8);.

   8. ஒருமுகப்படுதல்; to coverage, tobe concentrated, as the mind, to be absorbed, as in contemplation.

மனம் கடவுளின் வழிபாட்டிற் குவிந்துள்ளது.

     [குல் → குள் → குவ்வு → குவி.]

 குவி2 kuvittal,    4 செ.குன்றாவி.(v.t.)

   1.கும்பலாக்குதல்; to heap up, to pileup, concially.

   2. தொகுத்தல்; to accumulate, hoard up, astreasure.

     “கத்திக் குவித்த பல்புத்தகத்தீர்” (அஷ்டப். திருவேங்கடத்-33);.

   3. கைகூப்புதல்; tojoin hands, as in prayer.

     “இரு கரங்குவித்து” (தாயு. பொருள்வன.11);.

   4. கூம்பச்செய்தல்; to close, as a flower.

   கதிரவனின் கதிர்கள் குவளை மலரைக் குவித்தன. 5.சுருக்குதல் (வின்.);; to drawin asthe sun its rays insetting.

   6. உதடுகளைக் கூட்டுதல்; to round the lips, as in kissing orin pronouncing ‘u’ or or ‘U’.

     “துவர் வாயிதழைக் குவித்து விரித்தழுது” (திருச்செந்.பிள்ளைத். வாராணைப்.5);.

 குவி3 kuvi, பெ.(n.)

   சுவர்; wall.

     “உயர்ந்த மட்டுங் குவிவைக்கு மொட்டர்க்கும்” (தனிப்பார.ii,131,331);.

     [குவை → குவி குவை = நீரில் பிசைந்து உருட்டிய மண் திரளை.]

குவிகம்

 குவிகம் kuvikam, பெ.(n.)

   இலுப்பை மரம்; South Indian mahua – Bassia longifolia (சா.அக.);.

குவிஞ்சு

 குவிஞ்சு kuviñcu, பெ.(n.)

   சீமை மாதுளை; the fruit of a tree allied to the pearand apple – Qince (சா.அக.);.

குவிந்தமனம்

 குவிந்தமனம் kuvindamaṉam, பெ.(n.)

   ஒடுங்கிய மனம்; mind brought to a common centre, concentrated mind(சா.அக);.

     [குவி → குவிந்த → மனம்.]

குவிப்பு

 குவிப்பு kuvippu, பெ.(n.)

   சேர்ந்து ஒன்றாகிக் காணும் நிலை; ping up.

எல்லைப்பகுதியில் படைக் குவிப்பு. ஆறுகளால் அடித்து வரப்பட்ட வண்டல் மண்குவிப்பே இந்தச் சிறு தீவு

     [குவி- குவிப்பு.]

குவிமாடம்

 குவிமாடம் kuvimāṭam, பெ.(n.)

   நெடுநிலை மாடங்களில் இறுதி மாட; upper storey of the building.

     [குவி + மாடம் = உச்சிக் குவிந்த மேல் மாடம்.]

குவிமுட்கருவி

குவிமுட்கருவி kuvimuṭkaruvi, பெ.(n.)

   யானையை அடக்கும் ஒர் ஆயுதம்; a kind of elephant goad.

     “குவிமுட் கருவியும் கோணமும்” (மணி.18,163);.

     [குவி + முள் + கருவி.]

குவிமுனை

 குவிமுனை kuvimuṉai, பெ.(n.)

குவிமையம் பார்க்க;see kuvimaiyam,

குவிமையம்

 குவிமையம் kuvimaiyam, பெ.(n.)

   ஒளிக் கதிர்கள் ஊடகத்தின் வழியாகச் சென்று மறுபுறத்தில் அல்லது எதிர்ப்புறத்தில் ஒரு சிறு புள்ளியாகக் குவியும் இடம்; principal focus;

 focal point

     [குவி+மையம்]

குவியல்

 குவியல் kuviyal, பெ.(n.)

   குவித்திருப்பது; heap, pile.

     [குவி + குவியல்.]

குவியாடி

 குவியாடி kuviyāṭi, பெ.(n.)

   குவிந்த கண்ணாடி வில்லை; concave lens (சா.அக.);.

குவிரம்

 குவிரம் kuviram, பெ.(n.)

   காடு; forest (சா.அக.);.

கவி- குவி- குவிரம்)

குவிலேசம்

 குவிலேசம் kuvilēcam, பெ.(n.)

   கருங்கொள்; black gram.

குவில்

குவில் kuvil, பெ.(n.)

   1. அறுக்கை (சது.);; reaping, curting.

   2. கைப்பிடியளவுள்ள கதிர்க்கொத்து (வின்.);; handful of reaped grain in stalks.

     [கிள் → கிவ் → கிவுல் → குவில்.]

குவிவு

குவிவு kuvivu, பெ.(n.)

   1. குவியல்; heap, councical pile, accumulation.

   2. கும்பவடிவு (வின்.);; conicalness, anything conical in shape.

     [குல் → குள் → குவ் → குவி → குவிவு.]

குவேகசுமரம்

 குவேகசுமரம் kuvēkasumaram, பெ.(n.)

   ஓக்கு மரம்; oak tree.

குவேலம்

 குவேலம் kuvēlam, பெ.(n.)

   ஆம்பல் (சா.அக.);; lly.

     [குவலி → குவேலம்.]

குவேலயம்

 குவேலயம் kuvēlayam, பெ.(n.)

   ஆம்பல் (சா.அக.);; lily.

     [குவலி → குவலயம் → குவலயம்.]

குவை

குவை kuvai, பெ.(n.)

   1. குவியல் (திவ.); heap, conical.

   2. குப்பைமேடு (திவா.);

 dunghil.

   3. தொகுதி; collection accumulatiťn, crowd, shoal, row.

     “சிரக்குவை நெளித்தான்” (கம்பரா. மாரீச.04);. 4.

   கண்ணின் வெண்படலத்தில் உண்டாகும் நோய்வகை (சீவரட்.);; a disease of the sclerotic or the white of the eye.

     [குல் → குள் → குவ் → குவ்வு → குவை.]

 குவை2 kuvai, பெ.(n.)

   பொன்னுருக்கும் குகை; crucible, melting-pot.

     “இருந்தைக் குவை யொத்தன” (தணிகைப்பு. திருநாட்டுப்.63);.

ம. குவ

     [குகை → குவை.]

குவைனா

 குவைனா kuvaiṉā, பெ.(n.)

   கொய்னா; quinine (சா.அக.);.

 குவைனா kuvaiṉā, பெ.(n.)

   கொய்னா; quinine.

குவையெழுச்சி

 குவையெழுச்சி kuvaiyeḻucci, பெ.(n.)

   கண்ணின் வெள்விழியில் உளுந்தைப் போல் சதை உண்டாகித் துன்புறுத்தும் ஓர் கண் நோய்; a malignant growth of flesh of the size of a black-gram on the white of the eye (சா.அக.);.

     [குவை + எழுச்சி. குவை = திரட்சி, தட்டி.]