செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை வெளியீடு
31 தொகுதி 12000 பக்கங்கள் கொண்ட பேரகரமுதலி


1

10838

2769

3111

538

3554

677

1093

620

189

1004

402

2
க்
1

8212
கா
2579
கி
564
கீ
222
கு
4598
கூ
780
கெ
615
கே
391
கை
1101
கொ
2417
கோ
1754
கௌ
110
ங்
1

2
ஙா
2
ஙி
1
ஙீ
1
ஙு
1
ஙூ
1
ஙெ
1
ஙே
1
ஙை
1
ஙொ
5
ஙோ
1
ஙௌ
1
ச்
1

5235
சா
1186
சி
2424
சீ
439
சு
1261
சூ
420
செ
1529
சே
470
சை
23
சொ
409
சோ
365
சௌ
1
ஞ்
1

15
ஞா
44
ஞி
3
ஞீ ஞு ஞூ ஞெ
34
ஞே
5
ஞை
2
ஞொ
3
ஞோ
2
ஞௌ
1
ட்
1

1
டா
1
டி
1
டீ
1
டு
1
டூ
1
டெ
2
டே
1
டை
1
டொ
1
டோ
1
டௌ
ண்
1

1
ணா
1
ணி
1
ணீ ணு
1
ணூ
1
ணெ
2
ணே
1
ணை
1
ணொ
1
ணோ
1
ணௌ
த்
3113
தா
1530
தி
2203
தீ
393
து
1238
தூ
411
தெ
694
தே
856
தை
39
தொ
878
தோ
459
தௌ
ந்
1

2789
நா
204
நி
1860
நீ
1161
நு
14
நூ
18
நெ
892
நே
318
நை
89
நொ
210
நோ
159
நௌ
2
ப்
1

4560
பா
1824
பி
492
பீ
25
பு
2224
பூ
1133
பெ
1064
பே
483
பை
127
பொ
1218
போ
478
பௌ
2
ம்
4760
மா
1422
மி
535
மீ
268
மு
3016
மூ
949
மெ
396
மே
751
மை
152
மொ
284
மோ
242
மௌ
ய்
1

119
யா
426
யி
1
யீ
1
யு
46
யூ
20
யெ
9
யே
1
யை
1
யொ
1
யோ
98
யௌ
1
ர்
87
ரா
107
ரி
11
ரீ
7
ரு
24
ரூ
20
ரெ
6
ரே
16
ரை
10
ரொ
8
ரோ
23
ரௌ
ல்
117
லா
44
லி
8
லீ
5
லு
8
லூ
3
லெ
13
லே
21
லை லொ
20
லோ
63
லௌ
3
வ்
1

3800
வா
1329
வி
1638
வீ
515
வு
1
வூ
1
வெ
2164
வே
834
வை
229
வொ
1
வோ
3
வௌ
ழ்
1

1
ழா
1
ழி
1
ழீ
1
ழு
6
ழூ
1
ழெ
1
ழே ழை ழொ ழோ
1
ழௌ
ள்
1

2
ளா
1
ளி
1
ளீ
1
ளு
1
ளூ
1
ளெ
2
ளே
1
ளை
1
ளொ
1
ளோ
1
ளௌ
ற்
1

1
றா
1
றி
1
றீ
1
று
1
றூ
1
றெ
2
றே
1
றை
1
றொ
1
றோ
1
றௌ
ன்
1

1
னா
1
னி
1
னீ
1
னு
1
னூ
1
னெ
2
னே
1
னை னொ
1
னோ
1
னௌ
தலைசொல் பொருள்
கீகசம்

கீகசம்ākasam, பெ.(n.)

   உடலில் எலும்பை ஒட்டியுள்ள தசை; flesh on the bone.

     “வசைகீகசமென் றிருவகையாய்த் துன்னும் புலவு” (சேதுபு.வேதாள.30);.

     [Skt.{} → த.கீகசம்.]

கீசதாருகம்

 கீசதாருகம்ācatārugam, பெ.(n.)

   மூங்கில் மரம்; bamboo tree (சா.அக.);.

கீசபாதிகம்

 கீசபாதிகம்ācapātigam, பெ.(n.)

   நீலிச்செடி; Indigo plant (சா.அக.);.

கீசம்

கீசம்ācam, பெ.(n.)

   1. குரங்கு; monkey.

   2. குருவீ; chirping bird.

   3. நிருவாணம்; nakedness (சா.அக);.

     [கீச்சு-கீசம்]

கீசவல்லி

 கீசவல்லிācavalli, பெ.(n.)

கீசபர்ணி பார்க்க;see{} (சா.அக.);.

கீசா

 கீசாācā, பெ.(n.)

   பொய் (யாழ்.அக.);; falsehood.

கீசுதி

கீசுதிācudi, பெ.(n.)

   இசைக் கருவிகளுள் ஒன்றாகிய வீணை வகை (பரத.ஒழிபி.15);; a kind of lute.

     [P]

கீச்சான்

 கீச்சான்āccāṉ, பெ.(n.)

   அடைப்புக் குரலில் பேசுபவன்; one speaks in shrill voice.

     [கீச்சு-கீச்சான்]

கீடகம்

கீடகம்āṭakam, பெ.(n.)

   1.புழு; worm.

   2.பூச்சி; insect (சா.அக.);.

     [கிள் – கிடகம்]

கீடதந்தம்

 கீடதந்தம்āṭadandam, பெ.(n.)

   நச்சுப் பற்களை உடைய விலங்கு; creature having cenomous teeth (சா.அக.);.

     [கீடம் + தந்தம்.]

     [Skt.kidam → த.கீடம்.]

கீடரி

 கீடரிāṭari, பெ.(n.)

   கந்தகம்; sulphur (சா.அக.);.

கீதகோவிந்தம்

 கீதகோவிந்தம்ātaāvindam, பெ.(n.)

   ஒரு வடநூல்; வடமொழி இசை நூல்; a sanskrit music book (த.சொ.அக.);.

     [Skt.gita+{} → த.கீதகோவிந்தம்.]

கீதசாத்திரம்

 கீதசாத்திரம்ātacāttiram, பெ.(n.)

   இசை குறித்த நூல்; sciene of music.

     [Skt.{}+ → த.கீதசாத்திரம்.]

கீதசாலை

கீதசாலைātacālai, பெ.(n.)

   இசை பயிலுங் கூடம்; hall where music is taught; music hall.

     “கீதசாலையுங் கேள்விப்பந்தரும்” (பெருங்.இலாவாண.7, 131);.

த.வ. இசைக்கல்லூரி.

     [கீதம் + சாலை.]

     [Skt.{} → த.கீதம்.]

கீதநடை

 கீதநடைātanaḍai, பெ.(n.)

   நான்கு வகை மறைகளுள் ஒன்றாகிய சாம மறை (வேதம்); (திவா.);;{}, as composed of chants.

     [கீதம் + நடை.]

     [Skt.{} → த.கீதம்.]

கீதம்

கீதம்1ātam, பெ.(n.)

   1. இசைப்பாட்டு; song, chant.

     “மங்கையரமுதகீதம்” (கம்பரா.கார்முக.40);.

   2. இசை; melody, music.

     “கீதமினிய குயிலே” (திருவாச.18, 1);.

   3. வண்டு (திவா.);; beetle, bee.

த.வ. இசைப்பாடல்.

     [Skt.{} → த.கீதம்.]

 கீதம்2ātam, பெ.(n.)

   1. நொய்; ghee.

   2. பழமை; oldness (த.சொ.அக.);.

கீதவம்

 கீதவம்ātavam, பெ.(n.)

   கற்றிலும்முள்ளாலான காய் காய்க்கக் கூடிய செடிவகை (திவா.);; thorn-apple – Datura (செ.அக.);.

     [கீள்+(தோவை); தவம்]

 கீதவம்ātavam, பெ.(n.)

   ஊமத்தஞ் செடி; thorn apple tree

த.வ. உம்மத்தஞ்செடி

     [P]

கீதவீதி

கீதவீதிātavīti, பெ.(n.)

   இசை ஒலி வருகின்ற வழி; avenue through which music sounds proceed.

     “கனிந்த கீதவீதியே….. தடங்கணார்….. எய்தினார்” (சீவக.2039);.

     [கீதம் + வீதி.]

     [Skt.gita → த.கீதம்.]

கீதவுறுப்பு

கீதவுறுப்புātavuṟuppu, பெ.(n.)

   இசைப்பாட்டின் கூறு (சிலப்.3, 150, உரை);; limbs or componet elements of a musical piece, which are four.

     [கீதம் + உறுப்பு.]

     [Skt.{} → த.கீதம்.]

அவையாவன; உக்கிரம், துருவை, ஆபோகம், பிரகலை.

கீதவேதம்

 கீதவேதம்ātavētam, பெ.(n.)

   நான்கு வகை மறைகளில் ஒன்றாகிய சாமமறை (வேதம்);;{}, as composed of chants.

     [கீதம் + வேதம்.]

     [Skt.{} → த.கீதம்.]

கீதாங்கம்

கீதாங்கம்ātāṅgam, பெ.(n.)

   இசைக்கு வாசிக்கும் வாச்சியக்கூறு (சிலப்.3, 14, உரை);; instrumental accompaniment to vocal music.

     [Skt.{}+{} → த.கீதாங்கம்.]

கீதாநுகம்

கீதாநுகம்ātānugam, பெ.(n.)

கூத்து வேறுபாடுகளுக்கிசைந்த இசைக்கூறுகளில் ஒன்று (சிலப்.3:14, அரும்.);

 music classification which accomodate with different pantomince (த.சொ.அக.);.

கீதானுகம்

 கீதானுகம்ātāṉugam, பெ.(n.)

கீதாங்கம் பார்க்க;see {}.

     [Skt.{}+{} → த.கீதானுகம்.]

கீதி

கீதி1āti, பெ.(n.)

   பாடகன் (யாழ்.அக.);; musician.

     [Skt.gita → த.கீதி.]

 கீதி2āti, பெ.(n.)

   1. பாடுகை; singing, chanting.

   2. பாட்டு; song.

     [Skt.{} → த.கீதி.]

 கீதி3āti, பெ.(n.)

   மரவகை; coromandal ebony of mysore.

கீதை

கீதைātai, பெ.(n.)

   1. நல்ல அறங்களைக் கூறும் தெய்வப் பாடல்; sacred song or poem containing religious doctrines, by an inspired sage.

   2. அருச்சுனன் பொருட்டுக் கண்ணன் போர்க்களத்தில் அறிவுரை கூறிய மொழிகள் உடையது, 18 பகுதிகள் கொண்டதுமான மகாபாரதத்தில் அடங்கியதுமான வடமொழி அறிவு (ஞான); நூல்; a section of 18 chapters in the {}, containing the sacred instruction of {} to {}.

     “கண்ணன்….. ஸ்ரீ கீதையருளிச் செய்து” (மதுரைக்.763, உரை);.

     [Skt.{} → த.கீதை.]

கீத்துருணி

 கீத்துருணிātturuṇi, பெ.(n.)

கேந்திப்பூ

 a flower (சா.அக.);.

     [கீத்து+உருணி]

கீனன்

 கீனன்āṉaṉ, பெ.(n.)

   இழிந்தவன், ஈனமானவன்; low person.

     [கீழ்→கீல்-→கீனம் → கீனன்.]

கீனம்

கீனம்āṉam, பெ.(n.)

   1. இழிவு; Iowness, vileness

   2. குறைவு;,

 defect, want.

     [கீல் + கீனம்]

கீனம்பிடித்தவன்

கீனம்பிடித்தவன்āṉambiḍittavaṉ, பெ.(n.)

   1. பித்துப்பிடித்தவன்,

 a whimsical fellow.

   2. கிறுக்கன்; crazy or crambly fellow (சா.அக.);.

     [கீல் → கீனம் + பிடித்தவன்.]

கீனு

 கீனுāṉu, பெ.(n.)

   சீமை காண்டாமிருக அரத்தம்; kino (சா.அக.);.

கீன்றல்

 கீன்றல்āṉṟal, பெ.(n.)

   கீறுகை (திவா.);; burrowing, cleaving.

     [கீல் → கீறு ? கீறுகை.]

கீயாக்கணக்கு

 கீயாக்கணக்குāyākkaṇakku, பெ.(n.)

   வடமொழியிலுள்ள கூட்டு மெய்யெழுத்துகளைக் குறித்து கூறும் நூல்; work dealing with conjunct consonants in sanskrit.

கீரக்காய்

 கீரக்காய்ārakkāy, பெ.(n.)

   வெள்ளரிக்காய்; cucumber.

     [கீர்-கீர-காய்]

கீரங்கீரனார்

 கீரங்கீரனார்āraṅāraṉār, பெ.(n.)

   புலவர் கீரனின் மகனாகிய கீரனார்; son of {}.

கீரந்தை

 கீரந்தைārandai, பெ.(n.)

   ஒரு புலவர் பெயர்; name of a Tamil poet.

து. கீர் (பழமையான);.

     [கீழ்-கீர்[பழமை,தொன்மை]-கீரன்+அந்தை [ஐயன்]கீரந்தை]

கீரம்

 கீரம்āram, பெ.(n.)

   விளக்கு (அகநி);; lamp (செ.அக.);.

     [கீள் – கிரம்]

கீரைக்காய்

 கீரைக்காய்āraikkāy, பெ.(n.)

   முள்வெள்ளி (சூடா.);; kakri-melon – Cucumis meloutilissimus (செ.அக.);.

     [கீரை+காய்]

கீரைக்கும்மட்டி

 கீரைக்கும்மட்டிāraikkummaṭṭi, பெ.(n.)

   குமட்டிக்கீரை; a variety of greens – Celosia nodiflora (சா.அக.);.

     [கீரை+கும்மட்டி]

கீர்

கீர்1ār, பெ.(n.)

   1. ஓரொலிக்குறிப்பு; onom sound.

   2. சொல்; word (த.சொ.அக.);.

 கீர்2ār, பெ.(n.)

   பாட்டு; verse, song.

     “கீர்என்று பாட்டாய் அதுக்கு நிறம் சிவப்பாகி” (திவ்.பெரியாழ்.1, 5, அவ. பக்.86);.

 கீர்3ār, பெ.(n.)

   பாயச வகை; a semi-liquid food prepared with milk.

த.வ.கன்னலமுது.

கீர்கப்பல்

 கீர்கப்பல்ārkappal, பெ.(n.)

   கைத்தறிநெசவில் பயன்படுத்தும் சிறு கம்பி; a smallstring used I in handloom weaving.

     [கீள்-கிர்+கப்பல் [கப்பல்+காந்த சிறு குச்சி]]

கீர்த்தனம்

 கீர்த்தனம்ārttaṉam, பெ.(n.)

கீர்த்தனை பார்க்க;see {}.

     [Skt.{} → த.கீர்த்தனம்.]

கீர்த்தனை

கீர்த்தனைārttaṉai, பெ.(n.)

   1. இசைப்பாட்டு; song, psalm, hymn.

   2. புகழ்ச்சி; praise.

த.வ. இசைப்பாடல்.

     [Skt.{} → த.கீர்த்தனை.]

கீர்த்தி

கீர்த்திārtti, பெ.(n.)

   புகழ்; fame, celebrity, renown, distinction, glory.

     “விண்சுமந்த கீர்த்தி வியன்மண்டலத்தீசன்” (திருவாச.8, 8);.

த.வ. மிகுபுகழ்.

     [Skt.{} → த.கீர்த்தி.]

கீர்த்தி-த்தல்

கீர்த்தி-த்தல்ārttittal,    11 செ.கு.வி.(v.i.)

   புகழுதல்; to praise, extol.

     “தன்சொல்லாற்றான்றன்னைக் கீர்த்தித்த மாயன்” (திவ்.திருவாய்.7, 9, 2);.

     [Skt.{} → த.கீர்த்தி-த்தல்.]

கீர்த்தித்தானம்

 கீர்த்தித்தானம்ārttittāṉam, பெ.(n.)

   பிறப்பு நல்லோரை (சங்.அக.);; ascendant, house of one’s birth.

     [Skt.{}+{}+ → த.கீர்த்தித்தானம்.]

கீர்த்திபூடணபாண்டியன்

 கீர்த்திபூடணபாண்டியன்ārttipūṭaṇapāṇṭiyaṉ, பெ.(n.)

   அதுலகீர்த்தி பாண்டியனின் மகன்; son of {}.

கீர்த்திப்பிரதாபம்

கீர்த்திப்பிரதாபம்ārttippiratāpam, பெ.(n.)

   1. புகழும் ஆற்றலும்; fame and splendour.

   2. மிகு புகழ்; lustre of fame, glory, renown.

     [Skt.{}+{}+{} → த.கீர்த்திப்பிரதாபம்.]

கீர்த்திமதி

 கீர்த்திமதிārddimadi, பெ.(n.)

   மன்னர் குலத்தைச் சேர்ந்த சுகனின் பெண்; daughter of kind {} (அபி.சிந்.);.

கீர்த்திமான்

கீர்த்திமான்1ārttimāṉ, பெ.(n.)

   வசுதேவருக்குத் தேவகியிடம் பிறந்த குமரன்; son of {} and {} (அபி.சிந்.);.

 கீர்த்திமான்2ārttimāṉ, பெ.(n.)

   புகழ் பெற்றவன்; celebrated person, illustrious personage.

     [Skt.{} → த.கீர்த்திமான்.]

கீர்த்திலட்சுமி

 கீர்த்திலட்சுமிārttilaṭcumi, பெ.(n.)

   புகழாகிய திரு; fame personified as {}.

     [Skt.{}+{} → த.கீர்த்திலட்சுமி.]

கீர்த்திவர்த்தனசோழன்

 கீர்த்திவர்த்தனசோழன்ārttivarttaṉacōḻṉ, பெ.(n.)

   ஒரு சோழ அரசன்; a {} king.

கீர்வாணம்

 கீர்வாணம்ārvāṇam, பெ.(n.)

   வானுலகில் வாழும் தேவர்கள் பேசக்கூடியதாகக் கருதப்படும் வடமொழி;{}, believed as the language of the gods.

     [Skt.{} → த.கீர்வாணம்.]

கீறல்

கீறல்āṟal, பெ.(n.)

   1. கிழிகை; scratching,

     “எள்ளுபு கழிக்கும் கீறலியை பழங்கந்தை” (குசேலோ. குசே. வைசன்.);.

   2. வரிவரைகை; marking, drawing, lines.

   3. கீறற் கையெழுத்து; mark of a person unable to write as a cross.

   4. எழுதுகை; writing, scribbling.

   5. கையொப்பமித் தெரியாதவன்; illiterate person.

     [கீறு → கீறல்.]

கீறிக்கம்பு .

 கீறிக்கம்பு .āṟikkambu, பெ.(n.)

கட்டடத்துக்குரிய

   மரச்சாமான்; timber for building purposes.

     [கீறு → கீறி + கம்பு.]

கீறிக்காயப்போடு-தல்

கீறிக்காயப்போடு-தல்āṟikkāyappōṭudal,    18 செ.குன்றாவி. (v.t.)

கீறிக்காயவை பார்க்க;See. {kiri-k-kāyavai}

     [கீறி + காய + போடு.]

கீறிக்காயவை-த்தல்

கீறிக்காயவை-த்தல்āṟikkāyavaittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   உப்புக்கண்டம் உலத்துதல் (வின்.);; to slit and dry in the sun, as fish or meat.

     [கீறு → கீறி + காயவை.]

கீறிப்பார்-த்தல்

கீறிப்பார்-த்தல்āṟippārttal,    4 செ.கு.வி. (v.i.)

   ஆய்ந் தறிதல்; to dissect, as a corpse, an argument.

     [கீறி + பார்-.]

கீறியாற்றல்

 கீறியாற்றல்āṟiyāṟṟal, பெ.(n.)

   கட்டி, சிலந்தி, முதலியவைகளை அறுத்து ஆறவைத்தல்; opening an ulcer or abscess and then healing it upper (சா.அக.);.

     [கீறி + ஆற்றல்.]

கீறியாற்று-தல்

கீறியாற்று-தல்āṟiyāṟṟudal,    5 செ.கு.வி. (v.i.)

   உட்கருத்தை வெளிப்படுத்தி மனத்தாங்கலை நீக்கிக்கொள்ளுதல் (உ.வ.);; to remove misunderstanding by open discussion of the actual facts.

     [கீறி + ஆற்று-.]

கீறியுப்பிடல்

கீறியுப்பிடல்āṟiyuppiḍal, பெ.(n.)

   1. மீனைப் பிளந்து உப்பிடல்; slitting and salting fish.

   2. உடம்பில் கத்தியால் அறுத்து உப்பிட்டுச் சுடுதல்; making a incision and applying salt (சா.அக.);.

     [கீறி + உப்பு + இடல்.]

கீறு

கீறு1āṟudal,    5 செ.குன்றாவி.(v.t.)

   1. வரிகீறுதல்; to draw lines.

   2. எழுதுதல்; to scribble, make marks, write, engrave.

   3. கிறுக்கியடித்தல்; to score out.

   4.கிழித்தல்; to slit, tear, rend.

   5. பறண்டுதல்; to scratch, as a cat, a fowl, to work over, as one’s toes.

   6. ஆய்தத்தால் அறுத்தல்; to cut, gash, lance, dissect.

     “புண்கீறிய குருதிப்புனல்” (கம்பரா. பரசுராமப்);.9);

   7. வகிர்தல்; to slice, cut off longitudinally.

   8. குறிப்பித்தல்; to give a clue to, as a subject.

   ம. கீறுக, கீளு குட. கீறு;   து. கீறுனி;   தெ. கீறு, கீயு, கீளு;   துட., கோத. கீற்;   கொலா. கீற;   கொண்., பர். கீர்;   கூ.கீர;பட கீயி,

 Fln. kirjotta,FD. kiruttoa;

 Es. kirjata, Mong. ziru, Q. qilqay.

     [குல் → கில் → கில் → கீறு.]

 கீறு2āṟu, பெ. (n.)

   1. வரி; stroke, mark, line.

   2. பிளப்பு; furrow, incision, cut.

     “அந்தச் சுவரிற் கீறுள்ளது.

   3. துண்டம்; sice, piece. மாம்பழத்தில் ஒரு கீறு தா (உ.வ.);

   4. எழுத்து; scrawl, writing.

   5. தென்னோலை அல்லது பனங்கிழங்கின் பாதி (யாழ்ப்.);; half of a coconut leaf or an esculent palmyraroot.

     [கீல் → கீறு.]

கீறுகப்பல்

 கீறுகப்பல்āṟugappal, பெ.(n.)

   பாவைத் தெளிவு செய்வதற்காகப் பொரும்பாவைக் கீறப்பயன்படுத்தும் கம்பி அல்லது மூங்கில் குச்சி; stick used to stir liquid.

     [கீறு + கப்பல் (குச்சி);]

கீற்கட்டி

 கீற்கட்டிāṟkaṭṭi, பெ.(n.)

கீலெண்ணெய்யுடன் கலக்கும், மரத்திலிருந்து வடிந்து உறைந்த பால் (பிசின்);; pitch (செ.அக.);.

     [கீல்+கட்டி]

கீற்கதவு

கீற்கதவுāṟkadavu, பெ. (n.)

   கீல் தைக்கப்பட்ட கதவு; door turning on hinges. dist, fr, {kudumikkatavu.}

     [கீழ்1 + கதவு.]

கீற்கொண்டை

கீற்கொண்டைāṟkoṇṭai, பெ. (n.)

   மயிர் முடித்தலின் வகை; coil or hairdressed in a special way.

     [கீல்1 + கொண்டை.]

கீற்பாய்

 கீற்பாய்āṟpāy,    கிலெண்ணெய் பூசின துணி; tarpaulin, tarred canvas (செ.அக.).

     [கீல்+பாய்.]

கீற்பிடிப்பு

 கீற்பிடிப்புāṟpiḍippu,    ஊதைப்பிடிப்பு நோய்; rheumatism.

     [கீல் + பிடிப்பு.]

கீற்றன்

 கீற்றன்āṟṟaṉ, பெ. (n.)

   குறுக்குக்கோடுள்ள புடவை (யாழ்ப்.);; striped cloth.

     [கீற்று + அன்.]

கீற்றரைக்கால்

 கீற்றரைக்கால்āṟṟaraikkāl, பெ. (n.)

   து, நு. முதலிய எழுத்துகளில் உகரத்தைக் குறிக்க வளைத்தெழுதுங் குறி; the sign “r” denoting ‘உ’ while writing the vowel consonants து. நு.

     [கீறு → கீற்று + அரைக்கால்.]

கீற்று

கீற்றுāṟṟu, பெ. (n.)

   1. வரி; mark, stroke, line.

   2. துண்டு; slice, piece.

   3.கூறைவேயுங் கிடுகு; of a coconut leaf plaited for thatching.

   4. வயிரக் குற்றம் பன்னிரண்டனுள் ஒன்று; a flaw in a diamond, one of 12 {vaira-(k);-kurram.}

   5. பச்சை (மரகத);க் குற்றம் எட்டனுள் ஒன்று; a flaw in emerald one of 8 {marakada-k-kiltram}

   ம. கீற்று;   க,து., கீது;குட.. கிடி.

     [கீல் → கீறு → கீற்று.]

கீற்றுக்கால்

 கீற்றுக்கால்āṟṟukkāl, பெ. (n.)

   வெடிப்புள்ள பாதம் (வின்.);; fissured or cracked foot.

     [கீறு → கீற்று + கால்.]

கீற்றுக்கொட்டகை

 கீற்றுக்கொட்டகைāṟṟuggoṭṭagai, பெ. (n.)

   தென்னங்கீற்று வேய்ந்த கொட்டகை; thatche: shed with plaited coconut.

     [கீற்று + கொட்டகை.]

கீற்றுநாமம்

 கீற்றுநாமம்āṟṟunāmam, பெ. (n.)

   அந்தணருள் ஒரு சாரார் கீற்றாக நெற்றியிலிடும் முக்கோடு (நாமம்);; thin tridental mark worn on the forehead by some sects of Smarta Brahmans.

ம. கீற்றுநாமம்

     [கீற்று + நாமம்.]

கீற்றுநோய்

 கீற்றுநோய்āṟṟunōy, பெ. (n.)

   உடம்பில் சதை பிளந்து காணும் ஓர் தோல் நோய்; aveneral disease characterised by fissures (சா. அக.);.

     [கீற்று + நோய்.]

கீற்றுமதி

 கீற்றுமதிāṟṟumadi, பெ. (n.)

   மூன்றாம் பிறை நிலவு; crescent moon as seen on the third day from

 the new moon.

ம. கீற்றுமதி

     [கீற்று + மதி]

கீற்றுவண்ணம்

 கீற்றுவண்ணம்āṟṟuvaṇṇam, பெ.(n.)

   புடைவை வகை; kind of saree.

     [கீற்று + வண்ணம்]

கீற்றுவெடிப்பு

 கீற்றுவெடிப்புāṟṟuveḍippu, பெ.(n.)

   கத்தியால் கீறியதைப் போன்ற வெடிப்பு; cleft like an incised wound (சா.அக.);.

     [கீற்று + வெடிப்பு]

கீலக

கீலகālaga, பெ.(n.)

   ஆண்டுகள் அறுபதில் நாற்பத்திரண்டாம் ஆண்டு (பெரியவரு.);; the 42nd year of the Indian cycle of 60 years.

கீலகம்

கீலகம்ālagam, பெ.(n.)

   கலகம்; intrigue, trouble.

     ‘ஏவர் கீலகத்தினால்…. மெத்தவுங் காய்கிறாய்’ (சீவக்.பிரபந்.கசரபேந்திர.குற.17, 7);.

     [Skt.{} → த.கீலகம்.]

கீலகை

 கீலகைālagai, பெ.(n.)

   கீழ்மை (யாழ்.அக.);; lowness.

கீலம்கீலமாக

 கீலம்கீலமாகālamālamāka, வி.அ. (adv.)

   துண்டு துண்டாக; into pieces.

கீலம் கீலமாகக் கிழித்த ஓலை.

     [Skt.{}+{} → த.கீலம்கீலமாக.]

கீல்

 கீல்āl, பெ.(n.)

   கருமை நிறங் கொண்ட பூசுங் கீலெண்ணெய்; pitch, tar – pix liquida (செ.அக.);.

     [U.gir த. கீல். M. ki→த. கீல்.]

கீல்பூசு-தல்

கீல்பூசு-தல்ālpūcutal,    4 செ.கு.வி.(v.i.)

   கீலெண்ணெய் பூசுதல்; to tar (செ.அக.);.

     [கில்+பூசு-]

கீல்வத்தி

 கீல்வத்திālvatti, பெ.(n.)

   கீலெண்ணெய் பூசப்பட்ட திரி; tarred wick (செ.அக.);.

     [கில்+வத்தி]

கீல்வாயு

 கீல்வாயுālvāyu, பெ.(n.)

   உடற்சந்துகளில் உண்டாகும் ஊழை நோய்; rhematism, as in the joints (செ.அக.);.

     [கில்+வாயு.]

கீளி

கீளிāḷi, பெ. (n.)

   கடல்மீன் வகை; mullet, purplish, attaining 8 1/2 inc. in length.

     [கீழ் + கீள் → கீளி.]

கீளுடை

 கீளுடைāḷuḍai, பெ. (n.)

   கோவணம்; loun cloth.

     [கீள் + உடை – கீளுடை (கிழித்த துணி.);]

கீள்

கீள்1āḷḷudal, செ.குன்றாவி. (v.t.)

   கிழித்தல்; to rend, split, tear.

     “கீண்டிலென் வாயது கேட்டு நின்றயான்” (கம்பரா பள்ளி. 71);.

     [கீழ் + கீள்.]

 கீள்2āḷḷudal,    16 செ.கு.வி. (v.i.)

   உடைதல்; to burst, as the bund of an overfull tank;

     “தெண்ணீர்ச் சிறுகுளங் கீள்வது மாதோ” (புறநா:118,3.);

   {Fin.kiduttā;   } Es.kiduda; Hung. kikezd:Mong. kidu, Jap, kisu.

     [குல் → கில் → கில் → கீள்.]

 கீள்3āḷ, பெ. (n.)

   1. கூறு; part, portion, section.

     “கீளிரண் டாகக் குத்தி” (சீவக. 2248);.

   2. அரையிற் சுட்டுந் துணியாலாகிய கோவணம்; strip of cloth used as awaist-band.

     “வெறுத்தமைந்த கீளொடு கோவணமுந் தற்று;

     [குல் → கில் → கீல் → கீள்.]

கீழக்கரை

 கீழக்கரைāḻkkarai, பெ. (n.)

   தஞ்சாவூர் மாவட்டத்து ஒர் ஊர்; a village of Tanjavur district.

     [கீழ் + அ + கரை.]

கீழங்கம்

 கீழங்கம்āḻṅgam, பெ. (n.)

   பின்னத்தின் கீழ்த் தொகை; denominator of a fraction.

     [கீழ் + அங்கம் அங்கம் = உறுப்பு.]

கீழங்கவெலும்பு

 கீழங்கவெலும்புāḻṅkavelumpu, பெ.(n.)

உடம்பின் கீழ்ப்பகுதிஉறுப்புகளின் எலும்புகள்

 bones of the organs in the lower region of the body(சா.அக.);.

     [கீழ்+அங்க+எலும்பு]

கீழண்டை

கீழண்டைāḻṇṭai, பெ. (n.)

   1. கிழக்குப் பக்கம்; eastern direction.

   2. கீழ்ப்புறம்; lower side.

     [கீழ் + அண்டை,அண்டை= பக்கம்.]

கீழது

கீழதுāḻtu, பெ. (n.)

   கீழுள்ளது; that which is under or below.

     “கிழது முப்புன ரடுக்கிய முறைமுதற் கட்டில்”(புறநா. 6);.

     [கீழ் + அது,]

கீழரை

கீழரைāḻrai, பெ. (n.)

   1/640 என்னும் கீழ்வாயிலக்க வெண்ணெக் குறிக்கும் பெயர்; a fraction, half of Muntiri 1/640.

ம. கீழா

     [கீழ் + அறை]

கீழரைக்காணி

கீழரைக்காணிāḻraikkāṇi, பெ. (n.)

   1/51200 என்னும் கீழ்வாயிலக்க வெண்ணைக் குறிக்கும் பெயர்; a fraction, one sixteenth part of {arai-k-kāni.}

     [கீழ் + அரைக்காணி]

கீழரைக்கால்

கீழரைக்கால்āḻraikkāl, பெ.(n.)

   ஒரு பின்னவெண் 1/2560; atraction (செ.அக.);.

     [கீழ்+அரை+கால்.]

கீழரைமா

 கீழரைமாāḻraimā, பெ. (n.)

   முந்திரியின் நாற்பதில் ஒரு பங்கு; one fortieth part of mundiri.

ம. கிரமா

     [கீழ் + அரை + மா.]

கீழறு

கீழறு2āḻṟuttal,    4 செ.கு.வி. (v.i.)

   நிலத்திற் சுரங்கஞ் செய்தல்; to burrow, excavate, make a sub-terranean passage, undermine.

ம. கீழறுக்குக

     [கீழ் + அறு-.]

 கீழறு3āḻṟuttal,    4 செ.குன்றாவி. (v.t.)

   மறைமுக மாகப் பிறரைக் கெடுக்கப் பணிசெய்தல்; to injure by any underhand, treacherous means.

     “பகைமை தோன்றாமல் உள்ளாயிருந்தே கீழறுத்தலின்” (குறள், 883 உரை.);.

     [கீழ் + அறு-.]

கீழறு-தல்

கீழறு-தல்āḻṟudal,    4 செ.கு.வி.(v.i.)

   சேனைகளின் மனப்போக்குப் பகைவரால் வேறுபடுத்தப்படுதல் (சிலப்.4:60. அரும்.);; to be undermined, to become disaffected, to become treacherous as an army corrupted by foes.

   2. பதறுதல் அல்லது அச்சப்படுதல்; to be perplexed or frightened.

ம. கீழறுக

     [கீழ் + அறு.]

கீழறுப்பான்

 கீழறுப்பான்āḻṟuppāṉ, பெ. (n.)

   சூழ்ச்சி செய்து பிறரைக் கெடுப்பவன்; one who injures insidiously or inperceptibily, one who undermines.

     [கீழ் + அறுப்பான்.]

கீழறுப்பு

 கீழறுப்புāḻṟuppu, பெ. (n.)

   மறைமுகமாகப் பிறரைக் கெடுத்தற்குச் செய்யும் செயற்பாடு; undergrounc work.

     [கீழ் + அறுப்பு.]

கீழறை

கீழறைāḻṟai, பெ. (n.)

   1. கீழறுக்கை (சிலப்.5: 130,உரை); ; undermining, treachery.

   2. நிலவரை (சிலப். 10:191, உரை.); ; underground room, cellar.

   3. பொந்து (வின்.);; cavern, cell, hole.

     [கீழ் + அறை.]

கீழாக்கு-தல்

கீழாக்கு-தல்āḻākkudal,    5 செ.குன்றாவி.(v.t.)

   1. தாழ இறக்குமாறு செய்தல்; to bring down, lower.

   2. கட்டுப் பாட்டிற்குக் கொண்டு வருதல்; to subdue, bring under control.

   ம. கீழாக்குக;க.கிழ்மாடு

     [கீழ் + ஆக்கு.]

கீழாடை

 கீழாடைāḻāṭai, பெ. (n.)

   கூத்து முதலிய வற்றில் ஆண்கள் இடுப்புக்குக் கீழ் அணியும் ஆடை; outer garments worn below the hip by male folk artistes.

     [கீழ்+ஆடை]

கீழாண் டைச்சிகை

கீழாண் டைச்சிகைāḻāṇṭaiccigai, பெ. (n.)

   செலுத்த வேண்டிய பழைய நிலுவை; arears of past years.

     “நான் படுகிற கிலேசம் போதாதென்று கீழாண்டைச்சிகை வாசியாநின்றார்” (ஈடு. 1,4:7);.

     [கீழ் + அண்டை + சிகை.]

கீழாண்டு

 கீழாண்டுāḻāṇṭu, பெ. (n.)

   கடந்த ஆண்டு; last year, preceding year.

ம. கீழாண்டு

     [கீழ் + ஆண்டு.]

கீழாதல்

கீழாதல்āḻātal,    6 செ.கு.வி. (v.t.)

   1. தாழ்தல்; to become low.

   2. பயனற்றப்போதல்; to becomee useless.

து. கீட் அப்புனி

     [கீழ் + ஆ.]

கீழாநெல்லி

கீழாநெல்லிāḻānelli, பெ. (n.)

   1. மஞ்சள் காமாலைக்கு மருந்தாகும் மூலிகைச் செடி; a small plant with slendergreen main branches.

   2. சிறிய மரவகை; forestsmall-leaved feather foil.

   ம. கிழாநெல்லி, கிழாற் நெல்லி;து. கிளாரநெல்லி, கீளாரநெல்லி.

     [கீழ்வாய் + நெல்லி-கீழ்வாய் நெல்லி → கீழாநெல்லி.]

     [P]

கீழாநெல்லி

கீழாநெல்லித்தைலம்

 கீழாநெல்லித்தைலம்āḻānellittailam, பெ. (n.)

   கீழாநெல்லி சமூலத்துடன் மற்றக் கடைச்சரக்கு களை நல்லெண்ணெயில் சேர்த்து இறக்கிய தலைமுழுக்கு மருந்து எண்ணெய்; a medicatedoi for anoiting the head, prepared by boilinggingelly oil mixedwith the nirus plantas a chief ingredient along with other appropriate bazzar drugs (சா.அக.);.

     [கிழாம் + நெல்லி தைலம்)

கீழாறு

 கீழாறுāḻāṟu, பெ. (n.)

   நிலத்தடியில் ஒடும் ஆறு; undergroundstream.

     [கீழ் + ஆறு.]

கீழாறுகொண்டுபோ-தல்

கீழாறுகொண்டுபோ-தல்āḻāṟugoṇṭupōtal,    8 செ.கு.வி. (v.i.)

   காரணம் வெளிப்படாமல் சொத்து முதலியன உள்ளுறச் சிதைதல்; to lose wealth, property, etc. imperceptibly, unaccountably, as if carried away by an underground stream.

     [கீழ் + ஆறு + கொண்டுபோ.]

கீழாறெடு-த்தல்

கீழாறெடு-த்தல்āḻāṟeḍuttal,    4 செ.கு.வி. (v.i.)

கீழாறுகொண்டுபோ-, பார்க்க;See. {klaru koոցաpծ.}

     [கீழ் + ஆறு + எடு-.]

கீழாலவத்தை

 கீழாலவத்தைāḻālavattai, பெ. (n.)

   விழிப்பினின்றும் (சாக்கிரத் தினின்று); கடந்த நிலை வரையிலுள்ள ஐந்து நிலையிலும் அதன் கீழ்நோக்கி நெற்றியிலிருந்து மூலாதாரத்திற்குச் செல்லும் நிலை; state of the soul descending from the forehead to {mulatāramas} it passes through the five stages from {sákkiram} to the stage of absolute uncon sciousness.

     [கீழ் + ஆல் + அவத்தை.]

கீழாள்

 கீழாள்āḻāḷ, பெ. (n).

   குற்றேவலன்; menial.

க. கீழாள், கீழாளு, கினான், கினாளு

     [கீழ் + ஆள்.]

கீழிசை

கீழிசைāḻisai, பெ. (n.)

   பாடுதற் குற்றங்களுள் ஒன்று; a defect in singing.

     “பேசாக் கீழிசை” (கல்லா. 21:4);.

     [கீழ் + இசை.]

கீழிடம்,

 கீழிடம், பெ. (n).     கீழான இடம்; the lower part or side.

ம. கீழிடம் க. கிழ்நெல, கின்னெல, கிள்நெல. (கீழ் இடம்);

கீழிடு

கீழிடுāḻiḍu, பெ. (n.)

   1. தலைமைக் குத்தகைக் காரரிடமிருந்து பெறும் கீழ்க்குத்தகை (T.A.S. Ill. 194);.

   2. கீழ்க்கோயில்; subordinate or subsidiary temple.

     “ஆச்சிரமம் கோயில் சுசீந்திரம் கோயிலுக்குக் கீழிடு.”

     [கீழ் + இடு.]

கீழிடு-தல்

கீழிடு-தல்āḻiḍudal,    18 செ.குன்றாவி. (v.t.)

   தாழ்த்துதல்; to degrade.

     “தன்னை நிலைகலக்கிக் கீழிடுவானெனும்” (நாலடி. 248);.

ம. கீழிடுக

     [கீழ் + இடு.]

கீழிதழ்

 கீழிதழ்āḻidaḻ, பெ. (n.)

   கீழுதடு (பிங்.);; the lowerlip.

     [கீழ் + இதழ்.]

கீழிரு-த்தல்

கீழிரு-த்தல்āḻiruttal,    3 செ.கு.வி. (v.i.)

   உட்பட்டிருத்தல்; to be under control;

 to submit.

     [கீழ் + இடு.]

கீழிருமா

கீழிருமாāḻirumā, பெ. (n.)

   1/3200 என்னும் கீழ்வாயிலக்க எண்ணைக் குறிக்கும் பெயர்; a fraction.

     [கீழ் + இருமா.]

கீழிரைப்பை

கீழிரைப்பைāḻiraippai, பெ. (n.)

   கீழ்வயிறு; abdomen.

   2. வயிறு; hypogastric region, the lower and front portion of the belly (சா.அக.);.

     [கீழ் + இரைப்பை.]

கீழிறைப்பாட்டம்

கீழிறைப்பாட்டம்āḻiṟaippāṭṭam, பெ. (n.)

   மீன்பாட்டம், ஆற்றுப்பாட்டம் போன்ற சிறுவரிகள் (S.I.I.V. 365);; petty leirs orta, es, such as minpattam, arruppāttam, etc.

     [கீழிறை + பாட்டம்.]

கீழுக்குப்போ-தல்

கீழுக்குப்போ-தல்āḻukkuppōtal,    8 செ.கு.விவி. (v.i.)

   தாழ்நிலைக்கு வருதல்; to degenerate, to be on the decline, to be degraded, to be reduced.

அவன் அறிவும் கல்வியும் வரவரக் கீழுக்கப் போகின்றன (உ.வ.);.

     [கீழ் + பீழுக்கு + போ.]

கீழுடை

 கீழுடைāḻuḍai, பெ. (n.)

   கோவணம்; loin cloth.

மறுவ. கீறுடை

     [கீள் + கீழ் + உடை.]

கீழுதடு

 கீழுதடுāḻudaḍu, பெ. (n.)

கிழிதழ் பார்க்க;See. {kilida/.}

க. கெளதுடி

     [கீழ் + உதடு.]

கீழுப்பு

கீழுப்புāḻuppu, பெ. (n.)

   1. அமுரியுப்பு; uric salt.

   2. பாறையுப்பு; rock salt (சா.அக.);.

     [கீழ் + உப்பு.]

கீழுறுப்பு

கீழுறுப்புāḻuṟuppu, பெ.(n.

   1உடம்பின் கீழ்ப் பகுதியில் உள்ள உறுப்பு; the organs of the lower region of the body.

   2 ஆண் அல்லது பெண் குறி; the genital of the male orfemale.

   3. மல வாயில்; the anus (சா.அக.);.

     [கீழ்+உறுப்பு]

கீழுலக

கீழுலகāḻulaga, பெ. (n.)

   1. கீழேழுலகம் பார்க்க;See. {kieபlagam,}

     “கீழுலகி லசுரர்களைக் கிழங்கிருந்து கிளராமே” (திவ். பெரியாழ். 4.8:6);.

   2. நாகலோகம் (உரி.நி.);; the world of {Nāgās.}

ம. கீழுலகு

     [கீழ் + உலகு.]

கீழுலகம்

 கீழுலகம்āḻulagam, பெ. (n.)

   நிலவுலகின் கீழுள்ள உலகம்; the nether world.

   க. கொலேக;து. கீள்லோக

     [கீழ் + உலகம்]

கீழெண்

 கீழெண்āḻeṇ, பெ. (n.)

   பின்னவெண்களுள் கீழிடமுள்ள இலக்கம்; denominator ofa fraction.

ஒ.நோ. கீழ்வாயிலக்கவெண்.

     [கீழ் + எண்.]

கீழே

கீழே1āḻē, வி.எ.(adv)

   தரையில், நிலத்தில்; below; on the ground or floor.

மாடியிலிருந்து பார்த்தால் கீழே செல்பவர் சிறு புள்ளிகளாகத் தெரிவர்.

 கீழே2āḻē, இ.சொ. (part.)

   அடியில்; பின்பக்கத்தில்; below under.

கருவிழி இமைக்குக் கீழ் செருகிற்று தலையணையின் கீழ் பணம் வைத்திருக்கிறேன்.

     [கீழ்+கீழே,]

 கீழேāḻē, வி.எ.(adv.)

   தாழ; down, below.

ம. கீழே. க. கீழெ, கெளகெ படகீயெ

     [கீழ் → கீழே.]

கீழேழுலகம்

 கீழேழுலகம்āḻēḻulagam, பெ. (n.)

   நிலவுலகின் கீழுள்ள ஏழு உலகங்கள்; seven nether worlds, viz., Atalam, Vitalam, Sutalam, Taratalam, Mahatalam, Rasatalam, Patalarn-situate one below another dist.fr {mélë-ulagam.}

மறுவ. கீழுலகு, கீழுலகம்

     [கீழ் + ஏழு : உலகம்.]

கீழை

 கீழைāḻai, பெ.அ.(adj.)

கிழக்கத்திய,

 eastern; oriental.

கீழை நாடுகள். கீழைமொழிகள்.

     [கிழ்+கீழை,]

கீழைக்கடல்

 கீழைக்கடல்āḻaikkaḍal, பெ. (n.)

கீழ்க்கடல் பார்க்க;See. {kil-k-kaga}

     [கீழ் + ஐ + கடல்.]

கீழைத்திசை

 கீழைத்திசைāḻaittisai, பெ. (n.)

கீழ்த்திசை பார்க்க;See. {kil-t-tisai}

     [கீழக்கு → கீழை + திசை.]

கீழைத்தெரு

 கீழைத்தெருāḻaitteru, பெ. (n.)

   கிழக்குத் திசைத் தெரு; the eastern side street.

     [கீழ் + ஐ + தெரு]

கீழைநாள்

கீழைநாள்āḻaināḷ, பெ. (n.)

   விடியற்காலம்; early hours of the morning,

     “தொன்மனை கீண்டதால் வானவே றெறியக் கீழைநாள்”(கம்பரா. காட்சிப் 42);.

     [கீழக்கு + கீழை + நாள்.]

கீழைமொழிகள்

 கீழைமொழிகள்āḻaimoḻigaḷ, பெ. (n.)

   கீழ்த்திசை நாடுகளில் பேசப்படும் மொழிகள்; oriental languages.

     [கிழை + மொழிகள்]

கீழையகத்தாழ்வான்

 கீழையகத்தாழ்வான்āḻaiyakattāḻvāṉ, பெ.(n.)

   நாதமுனிகளிடம் பனுவலை இசையுடன் கேட்ட மாலியர்; a vainava sage (அபி.சிந்);.

கீழையூர் சடகோபாதாசர்

 கீழையூர் சடகோபாதாசர்āḻaiyūrcaṭaāpātācar, பெ.(n.)

   அரிசமய தீபம் என்னும் நூலின் ஆசிரியர்; author of arišamaya-tipam (அபி.சிந்.);.

     [கீழையூர்+சடகோபா+தாசர்]

கீழோங்கி

 கீழோங்கிāḻōṅgi, பெ. (n.)

   செம்படவரிற் கீழ்த் தரத்தார் (யாழ்ப்.);; inferior class of fishermen opp.to. {mēlõñgi}

     [கீழ் + ஓங்கி.]

கீழோசை

 கீழோசைāḻōcai, பெ. (n.)

கீழிசை பார்க்க;See. {kijisai}

     [கீழ் + ஓசை.]

கீழோன்

 கீழோன்āḻōṉ, பெ. (n.)

கீழோர் பார்க்க;See. {kiன.}

   ம. கீழோன்;து. கீடகி கிடதெ.

     [கீழ் + ஒன். ஆன் → ஒன்.]

கீழோர்

கீழோர்āḻōr, பெ. (n.)

   1.தாழ்ந்தோர்; personsinferior in status, the low, the vulgur.

     “கீழோராயினுந் தாழ வுரை” (கொன்றைவே);.

   2. இழிந்த (குணமுடையவர்; a base or rude fellow.

   3. உழவர்; cultivators.

     “கீழோர் வயல்பரக்கும்” (பரிபா. 17.40);.

     [கீழ் + கீழோர்]

கீழ்கண்ட

 கீழ்கண்டāḻkaṇṭa, பெ.அ.(ad.)

   கீழ்காணும் பார்க்க; see kil-kānum

     [கீழ்+கண்ட].

கீழ்க்கண்பார்வை

 கீழ்க்கண்பார்வைāḻkkaṇpārvai, பெ.(n.)

   கீழ்ப்பார்வை; down look; a squint or awry look; looking askance (சா.அக.);.

     [கீழ்+கண்+பார்வை]

கீழ்க்காணும்

 கீழ்க்காணும்āḻkkāṇum, பெ.அ.(adi)

கீழே கொடுக்கப்பட்டுள்ள அடியில் குறிப்பிடப்பட்ட,

 the following.

     ‘அந்த வேலைக்கு விண்ணப்பம் வேண்டுபவர்கள் கீழ்கண்ட முகவரிக்கு எழுதவும்’

     [கீழ்+காணும்.]

கீழ்ச்சாதி

கீழ்ச்சாதிāḻccāti, பெ.(n.)

   இழி குலம் (நன்.226, உரை);; low caste (செ.அக.);.

கீழ்த்தாடையெலும்பு

கீழ்த்தாடையெலும்புāḻttāṭaiyelumpu, பெ.(n.)

   1. கீழ் வரிசைப் பற்கள் நிறைந்த கீழ்வாய் எலும்பு; the lower jaw in which the lower teeth are fixed.

   2. வில் போல் வளைந்த மோவாய்க்கட்டை எலும்பு; bone o the chin bent like arrow (சா.அக.);.

     [கீழ்+தாடை+எலும்பு]

கீழ்நாலுமா

கீழ்நாலுமாāḻnālumā, பெ. (n.)

   1/1600 என்னும் கீழ்வாயிலக்க எண்; afraction.

     [கீழ் + (நான்கு); நாலு + மா.]

கீழ்நிலை

கீழ்நிலைāḻnilai, பெ. (n.)

   1. தாழ்ந்த நிலைமை; low position or status.

   2. கீழ்மாடம்; ground floor, lower storey.

     “இழிந்து கீழ்நிலை” (சீவக.2673);.

   3. நில வறை (பிங்.);; underground room, cellar, opp, to {mēnilai.}

ம. கீழ்நில

     [கீழ் + நிலை]

கீழ்நீர்

 கீழ்நீர்āḻnīr, பெ. (n.)

   நிலத்தடி நீரூற்று; underground spring of water.

     [கிழ் + நீர்]

கீழ்நெல்லி

 கீழ்நெல்லிāḻnelli, பெ. (n.)

கீழாநெல்லி பார்க்க;See. {kļānelli}

ம. கீழ்நெல்லி

     [கீழ் + நெல்லி]

கீழ்நோக்கம்

கீழ்நோக்கம்āḻnōkkam, பெ. (n.)

   1. கீழ்ப்பார்வை; downward look.

   2. கீழானவற்றில் மனம் விரும்புகை; vicious tendency, base inclination.

     [கீழ் + நோக்கம். கீழ்மை → கீழ் +நோக்கம்]

கீழ்நோக்கி

 கீழ்நோக்கிāḻnōkki, பெ. (n.)

   நேர்வாளம் (மலை.);; croton, as a purgative.

     [கீழ் + நோக்கி]

கீழ்நோக்கித்திட்டு-தல்

கீழ்நோக்கித்திட்டு-தல்āḻnōkkiddiṭṭudal,    12 செ.குன்றாவி. (v.t.)

   . இழிசொற்கூறி வைதல் (வின்.);; to abuse with obscene language.

     [கீழ் + நோக்கி + திட்டு.]

கீழ்நோக்கிராசி

 கீழ்நோக்கிராசிāḻnōkkirāci, பெ. (n.)

கீழ்நோக்கி ஒரை பார்க்க;See. {ks-nokku-ðra}

     [கீழ் + நோக்கி + ராசி.]

கீழ்நோக்கு – தல்

கீழ்நோக்கு – தல்āḻnōkkudal,    15 செ.கு.வி (v.i.)

   1. கீழ்முகமாதல்; to look down tend downward.

   2. தரையின் கீழாதல்; to be beneath the surface, under-ground.

   3. தாழ்ந்த நிலைக்குச் செல்லுதல்; to be on the declineas wealth;

 to goto ruin, decay, deteriorate.

   4. கீழானவற்றில் மனஞ் செல்லுதல்; to be sensual, to have low or base desires.

   5. கழிச் சலாதல்; to have diarrhoea.

     [கீழ் + நோக்கு-.]

கீழ்நோக்குஒரை

கீழ்நோக்குஒரைāḻnōkkuorai, பெ. (n.)

   நிலத்தில் நடுகை, கிணறு வெட்டுகை முதலியவற்றுக்கேற்ற கடகம், நளி (விருச்சிகம்); என்ற ஒரைகள் (விடும.உள்.127,உரை.);; lit, a zodiacal sign with is favourable for plantesculent roots, sinking wells, etc., of which there are two viz., karkkadagam and viruccigam.

     [கீழ் + நோக்கு + ஒரை.]

கீழ்நோக்குநாள்

கீழ்நோக்குநாள்āḻnōkkunāḷ, பெ. (n.)

   கிணறு வெட்டுகை முதலியவற்றுக்கேற்ற உடுக்கள் (பெரியவரு.37);; lit., constellations or naksatras that look downward, constellations that are favourable for planting esculent roots and sinking wells, numbering 9.

     [கீழ் + நோக்கு + நாள்.]

கீழ்பாகம்

 கீழ்பாகம்āḻpākam, பெ. (n.)

   காழ் உள்ள பகுதி; the lower portion.

க. கெளடளக

     [கீழ் + பாடு.]

கீழ்புறம்

கீழ்புறம்āḻpuṟam, பெ. (n.)

   1. தாழ்ந்த பகுதி; the lower side.

   2.கிழக்குப் பக்கம்; eastern side.

ம. கீழ்புறம்

     [கீழ் + புறம்.]

கீழ்போகம்

 கீழ்போகம்āḻpōkam, பெ. (n.)

   கிழங்குகளின் விளைவு (யாழ்ப்.);; cultivation of edible roots.

     [கீழ் + போகம்.]

கீழ்ப்பகுதி

 கீழ்ப்பகுதிāḻppagudi, பெ. (n.)

கீழ்ப்பாகம் பார்க்க;See. {ki-p-pāgam.}

     [கீழ் + பகுதி]

கீழ்ப்பக்கம்

கீழ்ப்பக்கம்āḻppakkam, பெ.(n.)

   1. கீழாக உள்ள பாகம்; the lower part.

   2. உள் பாகம்

 the under or inner side of a thing

   3. அடிப்பாகம்; the bottom portion; the under surface (சா.அக.);.

     [கீழ்+பாகம்.]

கீழ்ப்படி-தல்

கீழ்ப்படி-தல்āḻppaḍidal,    2 செ.கு.வி. (v.i.)

   அடங்கி நடத்தல்; to submit, yield, obey.

நீதிமன்றத்தின் ஆணைக்குக் கீழ்ப்படியாமல் இருக்கமுடியாது (உ.வ.);.

   ம. கீழ்பற்றுக;க.கிழ்படு

     [கீழ் + படி]

கீழ்ப்படிவு

 கீழ்ப்படிவுāḻppaḍivu, பெ. (n.)

   அடங்கிப் பணிகை; submission, obedience.

ம. கீழ்ப்படி

     [கீழ் + படிவு.]

கீழ்ப்படு

கீழ்ப்படு1āḻppaḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   1. அடங்குதல்; to submit, succumb, yield.

   2. இழிவுபடுதல்; to be degraded, mean, base, to become degenerate.

ம. கீழ்ப்பெருக 2

     [கீழ் + படு]

கீழ்ப்படு-த்தல்

கீழ்ப்படு-த்தல்āḻppaḍuttal,    18 செ.குன்றாவி. (v.t.)

   கீழ்மைப் படுத்துதல்; to subdue, put down.

     “கிறியெலா மிகக் கீழ்ப்படுத்தாய்”(திருவாச.5:32);.

     [கீழ் + படு.]

கீழ்ப்பட்டவர்

 கீழ்ப்பட்டவர்āḻppaṭṭavar, பெ. (n.)

   தாழ்ந்தவர் (உ.வ.);; inferiors, social inferior.

     [கீழ் + பட்டவர்]

கீழ்ப்பயிர்

கீழ்ப்பயிர்āḻppayir, பெ. (n.)

   1. பயிருக்குக்கீழ் உண்டாகும் பயிர் (வின்.);; grain or herbage in the shade of, or overtopped by, another plant;

 undergrowth.

   2. புன்செய்ப்பயிர்; dry crop, as inferior.

     [கீழ் + பயிர்.]

கீழ்ப்பல்

 கீழ்ப்பல்āḻppal, பெ.(n.)

கீழ் வரிசைப் பல்

 the lower set of teeth (சா.அக.);.

     [கீழ்+பல்.]

கீழ்ப்பல்முளை-த்தல்

கீழ்ப்பல்முளை-த்தல்āḻppalmuḷaittal,    4 செ.கு.வி. (v.i.)

   குழந்தைகட்கு முதலாகப் பாற்பல் முளைத்தல்; the dentition of stomach toothin children (சா.அக.);.

     [கீழ் + பல் + முளை.]

கீழ்ப்பாடு

 கீழ்ப்பாடுāḻppāṭu, பெ. (n.)

   கீழ்ப்பக்கம் (வின்.);; lower side, lower part.

   ம. கீழ்பாடு;க.கித்தட்டு.

     [கீழ் + பாடு]

கீழ்ப்பாதி

கீழ்ப்பாதிāḻppāti, பெ. (n.)

   1. அடியிலுள்ள பாதி; the lower half.

   2. குடிவாரம்; tenant’s share of the crop.

     “சந்ததி சந்ததியே கீழ்ப்பாதி அனுபவிப்ப தாக” (T.A.S I,6);.

ம. சீழ்ப்பாதி

     [கீழ் + பாதி]

கீழ்ப்பாய்ச்சல்

 கீழ்ப்பாய்ச்சல்āḻppāyccal, பெ. (n.)

   மலசிறுநீர் இறக்கம்; the descent of faces and urine, running down of excretions (சா.அக.);.

     [கீழ்மை – கீழ் + பாய்ச்சல்]

கீழ்ப்பாய்ச்சி

கீழ்ப்பாய்ச்சி1āḻppāycci, பெ. (n.)

   ஆடவர் கீழ்வேட்டியைக் கட்டிக்கொள்ளும் முறை; fashion, among men, of tying cloth so that one corner is tucked behind while the otherhangs down.

மறுவ. மூலைக்கச்சங்கட்டுதல்

     [கீழ் + பாய்ச்சி.]

 கீழ்ப்பாய்ச்சிāḻppāycci, பெ. (n.)

   எருவாய்வழியாக நீர், உணவு அல்லது மருந்தைப் பாய்ச்சுங் கருவி; a clyster employed for conveying water, nourishment or medicine through the rectum.

     [கீழ் + பாய்ச்சி.]

கீழ்ப்பாய்ச்சிக்கட்டு-தல்

கீழ்ப்பாய்ச்சிக்கட்டு-தல்āḻppāyccikkaṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   மூலைக் கச்சங்கட்டுதல்; to draw one’s cloth up between the legs and tuckit behind.

     [கீழ் + பாய்ச்சி + கட்டு.]

கீழ்ப்பார்வை

கீழ்ப்பார்வைāḻppārvai, பெ. (n.)

   1. கீழ்நோக்குகை; low, cast down.

   2. வஞ்சகப் பார்வை; deceptive, trickish look, as of an elephant.

     [கீழ் + பார்வை.]

கீழ்ப்பாறை

 கீழ்ப்பாறைāḻppāṟai, பெ. (n.)

   கீழறை (வின்.);; sub-terranean cell or cavern.

     [கீழ் + பாறை.]

கீழ்ப்பால்

கீழ்ப்பால்āḻppāl, பெ. (n.)

   கீழ்ப்பால் பிரிவினர்; low caste,

     “கீழ்ப்பா லொருவன் கற்பின்” (புறநா:183);.

ம.கீழ்ப்பால்

     [கீழ் + பால்.]

கீழ்ப்பாவல்

 கீழ்ப்பாவல்āḻppāval, பெ. (n.)

   மரக்கலத்தின் ஓர் உறுப்பு; the lower spare of a doney the top of which is attached to the sail to keep it to the wind.

     [கீழ் + பாவல்.]

கீழ்ப்பிள்ளை

 கீழ்ப்பிள்ளைāḻppiḷḷai, பெ. (n.)

   முதுமரங்களின் கீழ்நடும் தெங்கு முதலியவற்றின் கன்று (யாழ். அக.);; young coco-palm reared underneath old palms.

     [கீழ் + பிள்ளை.]

கீழ்ப்புரைச்சவ்வு

 கீழ்ப்புரைச்சவ்வுāḻppuraiccavvu, பெ. (n.)

   கருப்பையில் கரு உயிர்ப்பு வரையில் கருவைச் சுற்றிக் கொண்டிருக்கும் நாதப்பை; a temporary coat surrounding the ovum produced at the period of conception and thrown off from the uterus after carturition (சா.அக.);.

     [கீழ் + புரை + சவ்வு.]

கீழ்ப்புறம்

கீழ்ப்புறம்āḻppuṟam, பெ. (n.)

   1. கீழ்ப்பக்கம்; lower side.

   2. கப்பலின் சாய்வுப்பக்கம் (வின்.);; the leeward or the leaning side of a vessel.

     [கீழ் + புறம்.]

கீழ்ப்போக்கி

 கீழ்ப்போக்கிāḻppōkki, பெ. (n.)

கீழ்க்குமிழி பார்க்க;See. {kil-k-kumili}

     [கீழ் + போக்கி]

கீழ்மகன்

கீழ்மகன்āḻmagaṉ, பெ. (n.)

   1. ஒடுக்கப்பட்டவர், கீழ்ப்பிரிவினர் (சிலப்.15:95);; low caste man.

   2. இழிந்தவன்; low, mean person.

   3. காரி (சனி); (திவா.);; saturn.

     [கீழ் + மகன்.]

கீழ்மக்கள்

கீழ்மக்கள்āḻmakkaḷ, பெ. (n.)

   1. ஒடுக்கப்பட்டவர், இழிந்தோர்; low people, the base, the vulgar.

     “கீழ்மக்கள் கீழாய சொல்லயக்கால்” (நாலடி. 70);.

     [கீழ் + மக்கள்.]

கீழ்மடை

கீழ்மடைāḻmaḍai, பெ. (n.)

   1. கடைமடை; lower most sluice of a tank.

     “கீழ்மடைக் கொண்ட வாளையம்” (புறநா.42);.

   2. மடைநீர் பாய்தற்குத் தொலைமான நிலம் (C.G.);; and far removed from the sluice, as last-watered opp, to mutal {maợai}

     [கீழ் + மடை]

கீழ்மட்டம்

கீழ்மட்டம்āḻmaṭṭam, பெ. (n.)

   1. தாழ்ந்த நிலை; lower status.

   2. அடிமட்டம்; base.

     [கீழ் + மட்டம்]

கீழ்மரம்

கீழ்மரம்āḻmaram, பெ. (n.)

   1..அச்சுமரம்; axle-tree.

     “கீழ்மரத் தியாத்த சேமவச் சன்ன” (புறநா. 102: 5);

   2. பாய்மரத்தின் அடிப்பாகம் (M.Nari.81);; lower mast.

     [கீழ் + மரம்.]

கீழ்மாரி

 கீழ்மாரிāḻmāri, பெ. (n.)

   அடிவானத்தை அடுத்துப் பெய்யும் மழை; rain at a distance, as apparently near the horizon.

     “கீழ்மாரி கொண்டு முழங்குகிறது” (வின்.);

     [கீழ் + மாரி]

கீழ்முக்கன்

 கீழ்முக்கன்āḻmukkaṉ, பெ. (n.)

   கற்றாழை; aloe vera.

     [கீழ் + (முக்கன்); முக்கன்]

கீழ்முக்காணி

கீழ்முக்காணிāḻmukkāṇi, பெ. (n.)

   13/25600 என்னும் கீழ்வாயிலக்கவெண்ணைக் குறிக்கும் பெயர்; a fraction.

     [கீழ் + முக்காணி]

கீழ்முக்கால்

கீழ்முக்கால்āḻmukkāl, பெ. (n.)

   3/1280 என்னும் கீழ்வாயிலக்கவெண்ணைக் குறிக்கும் பெயர்; a fraction.

     [கீழ் + முக்கால்]

கீழ்முந்திரி

கீழ்முந்திரிāḻmundiri, பெ. (n.)

   1/102400 என்னும் கீழ்வாயிலக்கவெண்ணின் பெயர்; the fraction of 1/ 102400.

     [கீழ் + முந்திரி.]

கீழ்மும்மா

கீழ்மும்மாāḻmummā, பெ. (n.)

   3/1280 என்ற கீழ்வாயிலக்கவெண்ணின் பெயர்; a traction.

     [கீழ் + (மூன்று); + மும் + மா.]

கீழ்மூக்கன்

 கீழ்மூக்கன்āḻmūkkaṉ, பெ.(n.)

கற்றாழை

 aloe genus (சா.அக.);.

     [கீழ்+மூக்கன்.]

கீழ்மூன்றுவீசம்

கீழ்மூன்றுவீசம்āḻmūṉṟuvīcam, பெ. (n.)

   3/5120 என்ற கீழ்வாயிலக்கவெண்ணின் பெயர்; afraction.

     [கீழ் + மூன்று + வீசம்.]

கீழ்மேலா-தல்

கீழ்மேலா-தல்āḻmēlātal,    2 செ.கு.வி. (v.i.)

   தலை கீழாதல்; to be turned upside down, to become topsy turny.

     “பள்ளந்தா முறுபுனலிற் கீழ்மேலா” (திருவாச. 5:21);.

க.கெளகெமேலாகு

     [கீழ் + மேல் + ஆ.]

கீழ்மேல்

 கீழ்மேல்āḻmēl, பெ.. (n.)

   தலைகீழ்; upside, down.

   ம. கீழ்மேல்;க.கீள்மேலு.கெளாகமேலெ.

     [கீழ் + மேல்.]

கீழ்மை

கீழ்மைāḻmai, பெ. (n.)

   1. இழிவு; degradation.

     “கடைய னாயினேன் பட்ட கீழ்மையே” (திருவா.5,91);.

   2. பணிவு (சங்.அக.); humility.

   ம. கீழ்ம;க. கீழதன

     [கீழ் + கீழ்மை.]

கீழ்வகைப்புணர்ச்சி

கீழ்வகைப்புணர்ச்சிāḻvagaippuṇarcci, பெ. (n.)

விலங்குகளின் புணர்ச்சி,

 the copulation of animals.

   2. விலங்குகளைப் போலப் புணருதல்; having intercourse like animals.

   3. கீழ்வகைப் விலங்குகளுடன் சேர்தல்,

 men’s intercourse with lower animals (சா. அக.);.

     [கீழ் + வகை + புணர்ச்சி]

கீழ்வணை

கீழ்வணைāḻvaṇai, பெ.(n.)

   சிற்று ஆளுவத்தின் கீழ் குமுகாயப் பணி செய்யும் தொழிலாளர்கள்; service of a village department of labour.

     “இந்த குணமே நகை புரத்து ஏறின வியாபாரிகளும் வெள்ளாளரும், சங்கரப்பாடியரும் பட்டனவரும் உள்ளிட்ட குடிகளும், தச்சர் கொல்லர், தட்டார். கோவியர் உள்ளிட்ட கி. வனைகளும்”(தெ.கல்.தொ.4 கல்,233);.

     [கிழவு + அணை.]

கீழ்வயிறு

 கீழ்வயிறுāḻvayiṟu, பெ. (n.)

   அடிவயிறு; lower part of the abdomen.

மறுவ அடிவயிறு

ம. கீழ்வயறு

     [கீழ் + வயிறு.]

கீழ்வயிற்றுக்கட்டு

கீழ்வயிற்றுக்கட்டுāḻvayiṟṟukkaṭṭu, பெ. (n.)

   கீழ்வயிறு நழுவாமற் இருப்பதற்காக இறுகிக் கட்டும் கட்டு; light abdominal bandage used to prevent hanging down (worn by males.);.

   2. கருப் ப சுருங்கவும், நழுவாமல் இருக்கவும் கரு வுயிர்ப்புக்குப் பின் பெண்கள் வயிற்றை இறுகக் கட்டுதல்; bandage after confinement to insure contraction of the womb and also to keep it in position (சா.அக.);.

     [கீழ் + வயிறு + கட்டு.]

கீழ்வயிற்றுபாகம்

கீழ்வயிற்றுபாகம்āḻvayiṟṟupākam, பெ.(n.)

   1. வயிற்றின் அடிப்பாகம்; the lowe abdomen – Abdominal region.

   2. அடி வயிறு; the lower part of the belly Abdomen (சா.அக.);.

     [கீழ்+வயிற்று+பாகம்]

கீழ்வாடை

 கீழ்வாடைāḻvāṭai, பெ. (n.)

   கொண்டல், கீழ்க்காற்று (மீனவ.);; eastern wind.

     [கிழ் + வாடை.]

கீழ்வானம்

 கீழ்வானம்āḻvāṉam, பெ. (n.)

   கிழக்கு திசை வானம்; the eastern sky.

     [கீழ் + வானம்]

கீழ்வாயிலக்கம்

கீழ்வாயிலக்கம்āḻvāyilakkam, பெ. (n.)

   1 ஒன்றுக்குக் கீழ்ப்பட்ட எண் வாய்பாடு; multipli cation of fractions, dist, fr. {mē/-vāy-flakkam.}

   2. மேல் கீழாக எழுதும் பின்ன வெண்ணின் கீழ்த் தொகை; denominator of a fraction opp. to. {mel..ay-ilakkam.}

     [கீழ்வாய் + இலக்கம்.]

கீழ்வாயு

கீழ்வாயுāḻvāyu, பெ. (n.)

   1. எருவாய்க் காற்று; fart.

   2.காலின் கீழ்ப்புறத்தில் காணும் காற்று; inflamma tion of the joints of the leg.

   3. கால் பிடிப்பு; rheumatism of the joints of the legs (சா.அக.);.

     [கீழ் + வாயு.]

கீழ்வாய்

கீழ்வாய்āḻvāy, பெ. (n.)

   1. மோவாய் (யாழ்.அக.);;  chin, lower jaw.

   2. கீழ்வாயிலக்கம் பார்க்க;See. {kj-väy- lakkam.}

   3. குய்யம்; pudendum muliebre posteriors.

     [கீழ் + வாய்]

கீழ்வாய்நெல்லி

 கீழ்வாய்நெல்லிāḻvāynelli, பெ. (n.)

கீழாநெல்லி பார்கக;See. {Kila-mesh}

     [கீழ் + வாய் + நெல்லி.]

கீழ்வாய்ப்பாய்ச்சி

 கீழ்வாய்ப்பாய்ச்சிāḻvāyppāycci, பெ. (n.)

   நோனித் துளையைத் தூய்மைப்படுத்தும் ஒரு கருவி; an instrument used for effecting a douche to the vagina (சா.அக.);.

     [கீழ் + வாய் + பாய்ச்சி]

கீழ்வாரப் பச்சை

 கீழ்வாரப் பச்சைāḻvārappaccai, பெ. (n.)

   பழைய வரிவகை; ancient tax in kind.

     [கீழ் + வாரம் + பச்சை.]

கீழ்விலாஎலும்பு

 கீழ்விலாஎலும்புāḻvilāelumbu, பெ. (n.)

   சிறிய விலா எலும்பு; shortrib (சா.அக.);.

     [கீழ் + விலா + எலும்பு.]

கீழ்வீசம்

கீழ்வீசம்āḻvīcam, பெ. (n.)

   1/5120 என்னும் கீழ்வாயிலிக்க வெண்ணைக் குறிக்கும் பெயர்; a fraction.

     [கீழ் + வீசம்.]

கீழ்வீடு

 கீழ்வீடுāḻvīṭu, பெ. (n.)

   தரைத்தளவீடு; groundfoor of the house (யாழ்.அக.);.

     [கீழ் + வீடு.]

கீழ்வு

கீழ்வுāḻvu, பெ. (n.)

   கீழிடம்; place below or undemeath.

     “கீழ்வுற வீழ்வுறு மளவில்” (ஞானவா. சித்த. 24);.

     [கீழ் + கீழ்வு.]

கீழ்வெட்டு

கீழ்வெட்டுāḻveṭṭu, பெ. (n.)

   1. சூழ்ச்சி செய்து கெடுக்கை; undermining, supplanting.

   2. தடுத்துப் பேசுகை; refuting, speaking against.

என் சொல்லுக்கு அவன் கீழ்வெட்டுச் சொல்லு கின்றான் (உ..வ.);.

     [கீழ் + வெட்டு]

கீழ்வெட்டுவெட்டு-தல்

கீழ்வெட்டுவெட்டு-தல்āḻveṭṭuveṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. சூழ்ச்சி செய்தல்; to undermine.

   2. தடுத்துப்பேசுதல்; to refute, speak against.

     [கீழ் + வெட்டு + வெட்டு-.]