செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை வெளியீடு
31 தொகுதி 12000 பக்கங்கள் கொண்ட பேரகரமுதலி


1

10838

2769

3111

538

3554

677

1093

620

189

1004

402

2
க்
1

8212
கா
2579
கி
564
கீ
222
கு
4598
கூ
780
கெ
615
கே
391
கை
1101
கொ
2417
கோ
1754
கௌ
110
ங்
1

2
ஙா
2
ஙி
1
ஙீ
1
ஙு
1
ஙூ
1
ஙெ
1
ஙே
1
ஙை
1
ஙொ
5
ஙோ
1
ஙௌ
1
ச்
1

5235
சா
1186
சி
2424
சீ
439
சு
1261
சூ
420
செ
1529
சே
470
சை
23
சொ
409
சோ
365
சௌ
1
ஞ்
1

15
ஞா
44
ஞி
3
ஞீ ஞு ஞூ ஞெ
34
ஞே
5
ஞை
2
ஞொ
3
ஞோ
2
ஞௌ
1
ட்
1

1
டா
1
டி
1
டீ
1
டு
1
டூ
1
டெ
2
டே
1
டை
1
டொ
1
டோ
1
டௌ
ண்
1

1
ணா
1
ணி
1
ணீ ணு
1
ணூ
1
ணெ
2
ணே
1
ணை
1
ணொ
1
ணோ
1
ணௌ
த்
3113
தா
1530
தி
2203
தீ
393
து
1238
தூ
411
தெ
694
தே
856
தை
39
தொ
878
தோ
459
தௌ
ந்
1

2789
நா
204
நி
1860
நீ
1161
நு
14
நூ
18
நெ
892
நே
318
நை
89
நொ
210
நோ
159
நௌ
2
ப்
1

4560
பா
1824
பி
492
பீ
25
பு
2224
பூ
1133
பெ
1064
பே
483
பை
127
பொ
1218
போ
478
பௌ
2
ம்
4760
மா
1422
மி
535
மீ
268
மு
3016
மூ
949
மெ
396
மே
751
மை
152
மொ
284
மோ
242
மௌ
ய்
1

119
யா
426
யி
1
யீ
1
யு
46
யூ
20
யெ
9
யே
1
யை
1
யொ
1
யோ
98
யௌ
1
ர்
87
ரா
107
ரி
11
ரீ
7
ரு
24
ரூ
20
ரெ
6
ரே
16
ரை
10
ரொ
8
ரோ
23
ரௌ
ல்
117
லா
44
லி
8
லீ
5
லு
8
லூ
3
லெ
13
லே
21
லை லொ
20
லோ
63
லௌ
3
வ்
1

3800
வா
1329
வி
1638
வீ
515
வு
1
வூ
1
வெ
2164
வே
834
வை
229
வொ
1
வோ
3
வௌ
ழ்
1

1
ழா
1
ழி
1
ழீ
1
ழு
6
ழூ
1
ழெ
1
ழே ழை ழொ ழோ
1
ழௌ
ள்
1

2
ளா
1
ளி
1
ளீ
1
ளு
1
ளூ
1
ளெ
2
ளே
1
ளை
1
ளொ
1
ளோ
1
ளௌ
ற்
1

1
றா
1
றி
1
றீ
1
று
1
றூ
1
றெ
2
றே
1
றை
1
றொ
1
றோ
1
றௌ
ன்
1

1
னா
1
னி
1
னீ
1
னு
1
னூ
1
னெ
2
னே
1
னை னொ
1
னோ
1
னௌ
தலைசொல் பொருள்
கிங்கிசாலம்

 கிங்கிசாலம் kiṅkicālam, பெ.(n.)

   வேல மரம்; bobool tree – Acacia indica (சா.அக.);.

     [கிங்கி+சாலம்]

கிங்கிரா

 கிங்கிரா kiṅkirā, பெ.(n.)

   நந்தியா வட்டம்; common wax -flower — Tabernae montana coronaria alias Marium coronariuт (சா.அக.);.

     [கிங்கி+கிங்கிரா]

கிசிமிசி

 கிசிமிசி kisimisi, பெ.(n.)

   ஏசு கிறித்து பிறந்த நாள்; Christmas.

     [E.Christmas → கிறிஸ்மஸ் → த.கிசிமிசி.]

கிசுகிசு

கிசுகிசு1 kicukicuttal,    4 செ.கு.வி.(v.i.)

பிறர் கேட்காதவாறு ஒருவருடைய காதில் மெதுவாக ஒன்றைச் சொல்லுதல்; கமுக்கமாகப் (இரகசியம்); பேசுதல்; something into the ears tell a secret in whispering voice.

     [கிசு+கிசு-த்தல்.]

 கிசுகிசு2 kicukicu, பெ.(n)

கிசுகிசுப்பு,

   1 பார்க்க; see kisu-kişuppu, 1.

கிசுகிசுப்பு

கிசுகிசுப்பு  kicukicuppu, பெ. (n.)

   1. ஒருவருடைய சொந்த வாழ்க்கையைப் பற்றி மறைவாகப் பேசிக் கொள்ளும் பேச்சு; juicy talk about a person’s private life.

புது நடிகையைப் பற்றிப் பல கிசுகிசுப்புகள் வரத்

தொடங்கிவிட்டன.

   2. பிறர் கேட்காதபடியான மெல்லிய ஓசை; whisper; soft voice,

கிசுகிசுப்பான குரலில் கேட்டாள் [கிசு+கிசுப்பு]

கிசுதி

 கிசுதி kisudi, பெ.(n.)

   நிலச் சொந்தக்காரர்களிடம் பெறப்பட்ட நிலவரி; kist, land revenue payable in instalments.

     [U.quist → கிஸ்தி → த.கிசுதி.]

கிசுதிபந்தி

 கிசுதிபந்தி kisudibandi, பெ.(n.)

   நிலவரியின் வரையறைத் திட்டம்; settlement of kists.

     [U.{} → கிஸ்திபந்தி → த.கிசுதிபந்தி]

கிசுதிபேரீத்து

 கிசுதிபேரீத்து kisudipērīddu, பெ.(n.)

   சிற்றூரின் மொத்தத் தீர்வை; total revenue of a village.

     [U.quist+U.{} → கிஸ்திபேரீஸ்து → த.கிசுதிபேரீத்து.]

கிசுமிசு

 கிசுமிசு kisumisu, பெ.(n.)

   விதையில்லாத கொடி முந்திரிப் பழம்; small seedless raisins, originally imported from Persia, Sultana raisin.

     [U.kishmish → த.கிசுமிசு.]

கிசோரம்

 கிசோரம் kicōram, பெ.(n.)

   ஒரு செடி; an unknown plant (சா.அக.);.

கிச்சிலிக்கசாயம்

 கிச்சிலிக்கசாயம் kiccilikkacāyam, பெ.(n)

   கிச்சிலிக்குடிநீர் பார்க்க; see kiccil. k-kud-nir.

     [கிச்சிலி+Skt. கசாயம்]

கிச்சிலிக்காடி

கிச்சிலிக்காடி kiccilikkāṭi, பெ.(n.)

   1. கிச்சிலிப் புளிப்பு; fermented orange juice.

   2. புளி நாரத்தைச் சாற்றைப் புளிக்க வைத்த காடி; acetic acid from bitter orange by the acetous fermentation (சா.அக.);.

     [கிச்சிலி+காடி]

கிச்சிலிக்குடிநீர்

 கிச்சிலிக்குடிநீர் kiccilikkuṭinīr, பெ.(n.)

   நாரத்தைத் தோலினின்று வடித்த குடிநீர்; tincture of orange peel- Tinctura auranti (சா.அக.);.

     [கிச்சிலி+குடி+நீர்]

கிச்சிலிச்சாறாயம்

 கிச்சிலிச்சாறாயம் kicciliccāṟāyam, பெ.(n.)

   கிச்சலி மது; orange wine (சா.அக.);.

     [கிச்சிலி+சாறாயம்]

கிச்சிலிச்சாறு

 கிச்சிலிச்சாறு kicciliccāṟu, பெ.(n.)

கிச்சிலிப் பழத்தைப் பிழிந்த சாறு

 orange juice (சா.அக.);.

     [கிச்சிலி+சாறு]

கிச்சிலித்தோலெண்ணெய்

 கிச்சிலித்தோலெண்ணெய் kiccilittōleṇīey, பெ.(n)

   கிச்சிலித் தோலினின்று வடிக்கும் எண்ணெய்; oil from the rind of orange – Zest (சா.அக.);.

     [கிச்சிலி+தோல்+எண்ணெய்]

கிச்சிலித்தோல்

 கிச்சிலித்தோல் kiccilittōl, பெ.(n.)

   கிச்சிலிப் பழத்தின் தோல்; orange peel (சா.அக.);.

     [கிச்சிலி+தோல்]

கிச்சிலிப்பழம்

 கிச்சிலிப்பழம் kiccilippaḻm, பெ.(n.)

   கொழுஞ்சிப் பழம்; orange fruit – Citrus aurantium (சா.அக.);.

     [கிச்சிலி+பழம்]

கிச்சிலிப்பாகு

 கிச்சிலிப்பாகு kiccilippāku, பெ.(n.)

   சர்க்கரைப் பாகில் இட்ட புளிப்பும் கசப்புமுள்ள கிச்சிலி எலுமிச்சை முதலிய ஊறுகாய்; preserves made from bitter and acid fruits such as orange, lemon etc. – Marmalade (சா.அக.);.

     [கிச்சிலி+பாகு.]

கிச்சிலிப்பாணி

 கிச்சிலிப்பாணி kiccilippāṇi, பெ.(n.)

கிச்சிலிச் சாற்றுடன் சர்க்கரை இட்டுப் பயன்படுத்தும் குடிநீர்; orange sweet drink; a solution of orange-juice and sugar (சா.அக.);.

     [கிச்சிலி+பாணி]

கிச்சிலிப்பாணிதம்

 கிச்சிலிப்பாணிதம் kiccilippāṇitam, பெ.(n)

   கிச்சிலிப்பாணி பார்க்க; see kiccil. р-pani(சா.அக.);.

கிச்சிலிப்புல்

 கிச்சிலிப்புல் kiccilippul, பெ.(n.)

ஒரு

   நறுமணப் புல்; orange grass – Andropogonnardus (சா.அக.);.

     [கிச்சிலி+புல்]

கிச்சிலிப்பூக்குடிநீர்

 கிச்சிலிப்பூக்குடிநீர் kiccilippūkkuṭinīr, பெ.(n)

   கிச்சிலிப்பூத் தீ நீரில் சர்க்கரை இட்டு பாகாகக் காய்ச்சிப் பயன்படுத்தும் குடிநீர்; syrup of orange flower – Syrupus aurantifloris (சா.அக.);.

     [கிச்சிலி+பூ+குடி+நீர்]

கிச்சிலிப்பூத்தண்ணிர்

 கிச்சிலிப்பூத்தண்ணிர் kiccilippūttaṇṇir, பெ.(n.)

   கிச்சிலிப்பூவை ஊறவைத்து எடுத்த நறுமண நீர்; a fragrant liquid obtained by soaking orange flowers in water (சா.அக.);.

     [கிச்சிலி+பூ+தண்ணி]

கிச்சிலிப்பூத்தீநீர்

 கிச்சிலிப்பூத்தீநீர் kiccilippūttīnīr, பெ.(n.)

   கிச்சிலிப்பூச்சாற்றில் இருந்து வாலையிறக்கிய நீர்; water distilled from the juice of orange flowers.

     [கிச்சிலி+பூ+தீ+நீர்]

இது மாதவிலக்கு, நரம்புவலி, இழுப்பு இவற்றைக் குணமாக்கும் (சா.அக.);.

கிச்சிலிப்பூப்பாணிதம்

 கிச்சிலிப்பூப்பாணிதம் kiccilippūppāṇitam, பெ.(n)

   கிச்சிலிப்பூக்குடிநீர் பார்க்க; see kiccil-p-pükkudinir(சா.அக.);.

     [கிச்சிலி+பூ+பாணிதம்]

கிச்சிலிரசம்

 கிச்சிலிரசம் kicciliracam, பெ.(n.)

   கிச்சிலிச்சாறு பார்க்க; see kiccic-aru [கிச்சிலி + Skt. ரசம்]

கிச்சிலிவாழை

 கிச்சிலிவாழை kiccilivāḻai, பெ.(n.)

   வாழை மரவகை (ரசதாளி);; a species of plantain (சா.அக.);.

     [கிச்சிலி+வாழை,]

கிச்சிலிவூறுகாய்

 கிச்சிலிவூறுகாய் kiccilivūṟukāy, பெ. (n.)

   கிச்சிலிக்காய் அல்லது கிச்சிலிப் பழத் தோலை கறிக்கூட்டுடன் சேர்த்து எண்ணெயில் ஊறப்போட்ட ஊறுகாய்; a seasoned pickled of orange raw fruit or rind of orange ripe fruit prepared by mixing it with condiments and keeping it soaked in gingelly oil (சா.அக.);.

     [கிச்சிலி+ஊறுகாய்]

கிச்சிலிவேர்

கிச்சிலிவேர் kiccilivēr, பெ.(n.)

   1. சீமைக் கிச்சிலிக் கிழங்கு

 orange root or camphor zedoary – Hedychium spicatum.

   2. கருப்பூரக் கிச்சிலிக் கிழங்கு

 orange root or camphor root-Curcuma zedoaria (சா.அக.);. [கிச்சிலி+வேர்]

கிச்சுக்கிச்சுக்காட்டு-தல்

கிச்சுக்கிச்சுக்காட்டு-தல் kiccukkiccukkāṭṭutal,    5 செ.கு.வி.(v.i.)

ஒருவருடைய அக்குள், விலாப்புறம் முதலிய இடங்களில் கையால் வருடிச் சிரிப்பு வரும்படிக் கூச்சம் உண்டாக்குதல்; tickle so as to make one laugh.

     [கிச்சு+கிச்சு+காட்டு-தல்.]

கிஞ்சிக்கியத்துவம்

 கிஞ்சிக்கியத்துவம் kiñjikkiyattuvam, பெ.(n.)

   சிற்றறிவுடைமை; state of being limited in knowledge.

     [Skt.{} → த.கிஞ்சிக்கியத்துவம்.]

கிஞ்சிஞ்ஞன்

கிஞ்சிஞ்ஞன் kiñjiññaṉ, பெ.(n.)

   1. சிற்றறிவினன்; one having limited knowledge.

   2. ஆதன் (சீவான்மா);;{}, the individual soul.

     [Skt.{} → த.கிஞ்சிஞ்ஞன்.]

கிடகு

கிடகு kiṭaku, பெ.(n.)

   இருபத்து நான்கு விரலளவு கொண்ட முழம் (சர்வா.சிற்.27);; cubit of 24 finger breaths (செ.அக.);.

     [கிட – கிடகு.]

கிடக்கை

கிடக்கை kiṭakkai, பெ.(n.)

   1. படுத்தபடி கிடக்கை; recumbent posture,

   2. கட்டில்; cot; couch.

   3. நிலம்; earth.

   4. இடம்; place (சா.அக.);.

     [கிட-கிடக்கை]

கிடங்கல் காவிதிகிரங்கண்ணனார்

 கிடங்கல் காவிதிகிரங்கண்ணனார் kiṭaṅkalkāvitikiraṅkaṇṇaṉār, பெ.(n.)

ஒரு புலவர்; a poet.

     [கிடங்கில்+காவிதி+கீரன்+கண்ணன்+ஆர்]

கிடங்கி ற்கு லபதி ந க் கண் ண னார்

கிடங்கி ற்கு லபதி ந க் கண் ண னார் kiṭaṅkiṟkulapatinakkaṇṇaṉār, பெ.(n.)

   கழகம் (சங்கம்); மருவிய காலப் புலவர்; the poet who belonged to last ancient Šañgam.

     [கிடங்கில்+குலபதி+நக்கண்ணனார்.]

இவர் பெயர் கண்ணனாராக இருக்கலாம். மற்றைய அடைமொழிகள் இவரது ஊரைக் குறிப்பதாக இருக்கலாம். இவர் குறுந்தொகை 252-ஆம் பாடலைப் பாடியவர் (அபி.சிந்);.

கிடங்கில்காவிதிபெருங்கொற்றனார்

கிடங்கில்காவிதிபெருங்கொற்றனார் kiṭaṅkilkāvitiperuṅkoṟṟaṉār, பெ.(n.)

   கழகக் காலப் புலவர்; a poet in Šangam age.

     [கிடங்கில்+காவிதி+பெரும்+கொற்றனார்.]

நற்றிணை 364-ஆம் பாடலைப் பாடியவர். கொற்றன் எனப் பலர் இருத்தலின் அவர்களில் இருந்து தனித்துத் தெரிய பெருங்கொற்றனார் எனப்பட்டார். இவர் முல்லைத் திணையைப் பாடுவதில் வல்லவர் (அபி.சிந்);.

கிடந்து

 கிடந்து kiṭantu, வி.அ.(adv.)

   குறிப்பிட்ட நிலையில் சிக்கி; மாட்டிக் கொண்டு; விடுபட முடியாமல்; having got caught in a specified state with no way out.

வறுமையில் கிடந்து உழல்கிறோம் (உ.வ.);. மகனைக் காணோம் என்று நான் கிடந்து தவிக்கிறேன் (உவ);.

     [கிட – கிடந்து.]

கிடந்துருளு-தல்

கிடந்துருளு-தல் kiṭanturuḷutal,    16 செ.கு.வி. (v.i.)

   படுக்கையில் படுத்து உருளுதல்; rolling in bed; restlessness in bed (சா.அக.);.

     [கிடந்து+உருளு-தல்.]

கிடப்பில்இரு-த்தல்

கிடப்பில்இரு-த்தல் kiṭappiliruttal,    3 செ.கு.வி. (v.i.)

   திட்டம், தீர்மானம் போன்றவற்றை செயற்படுத்தாமல் காலம் செல்ல விட்டிருத்தல்; நிறுத்தியிருத்தல்; allow a plan, etc., to be in cold storage.

     “இந்தத் திட்டம் மூன்று ஆண்டுகளாகக் கிடப்பில் இருந்து வருகிறது.

     [கிடப்பில்+இரு-த்தல்.]

கிடப்பில்போடு-தல்

கிடப்பில்போடு-தல் kiṭappilpōṭutal,    20 செ.கு.வி.(v.i.)

திட்டம், தீர்மானம் போன்றவற்றைச் செயற்படுத்தாமல் காலம் செல்ல விடுதல், விட்டு வைத்தல், நிறுத்தி வைத்தல்; put a plan, etc., incold storage; put on ice.

ஆறுகளை இணைப்பது பற்றிய முடிவு நெடு நாட்களாகவே கிடப்பில் போடப்பட்டுள்ளது.

     [கிடப்பில்+போடு-தல்.]

கிடம்

கிடம் kiḍam, பெ.(n.)

   1. வலிமை ; strength, vigour power.

     “பிச்சையெடுக்கவோ திடமில்லை” அருட்பா 6 அபயங்க. பக் 737, 1)

   2. உறுதி; firmness.

   3. கலங்கா நிலை;  courage, boldness, intrepidity.

     “பொறைதிட ஞானம் (காசிக தீர்த்த 7);:

   4. மனவுறுதி ; certainty, assurance, positiveness.

     “வார்த்தை திடம்படக் கேட்டு” (தேவா. 17, 14);.

   5. உண்மை; truth.

     “உயர்கதி பெறுவது திடனே” (தேவா. 67,7,2);

   6. நிலை தவறாமை; steadiness, inflexibility.

திடவிசும் பெரிவளி” (திவ் திருவாய் 1.17);

     [திட்டம்→திடம்]

கிடாம்பிநயினார்

 கிடாம்பிநயினார் kiṭāmpinayiṉār, பெ.(n.)

மணவாள மாமுனிக்கு ஆசிரியர்

 teacher of manavala-mă-mudi (அபி.சிந்.);.

     [கிடாம்பி+நயினார்.]

கிடாரங்காய்

 கிடாரங்காய் kiṭāraṅkāy, பெ.(n.)

   கடாரங்காய்; citron (சா.அக.);.

     [கிடாரம்+காய்]

கிடாரமுக்கி

 கிடாரமுக்கி kiṭāramukki, பெ.(n.)

ஒரு மூலி,

 an unknown plant (சா.அக.);.

     [கிடாரம்+அமுக்கி]

கிடிபகுட்டம்

 கிடிபகுட்டம் kiṭipakuṭṭam, பெ.(n.)

   பன்றித் தோல் போல் கனத்துக் காணும் ஒரு வகைக் குட்ட நோய்; a kind of leprosy characterised by the thickening of the skin like hog’s skin, which is often the first manifestation of the diseases.

     [கிடிய+குட்டம்]

இதனால் உடம்பு பச்சை நிறம் அடைந்து, நமைச்சல் உண்டாகி, சதை வழுவுண்டு, கொப்புளங்கள் எழும்பி ஊன் வடிந்து நாற்றம் வரும் (சா.அக.);.

கிடுகிடு

 கிடுகிடு kiṭukiṭu, பெ.அ.(adj.)

தலைச் சுற்றல் ஏற்படக் கூடிய அளவுக்கு ஆழமுடைய, deep, enogh to cause dizziness.

கிடுகிடு பள்ளம் கிடுகிடு பாதாளம்.

     [கிடு+கிடு]

கிடுகிடுவென்று

கிடுகிடுவென்று kiṭukiṭuveṉṟu, வி.அ. (adv.)

   1. ஒரு செயலைச் செய்கையில் தடங்கல் எதுவும் இல்லாமல்; in doing quickly; quickly.

நேராமாகிறது, கிடுவென்று புறப்படு (உ.வ.);. கிடுகிடு வென்று வேகமாக நடந்தான் (உ.வ.);. தேர்வுக்குப் போவதற்கு முன் ஒரு முறை பாடத்தைக் கிடுகிடுவென்று பார்த்துக் கொள்! (உ.வ.);.

   2. மிக விரைவாக; indicating price rapidly.

நெல் விலை கிடுகிடுவென்று இறங்கிவிட்டது.

     [கிடுகிடு+என்று.]

கிடுக்கிப்பிடி

 கிடுக்கிப்பிடி kiṭukkippiṭi, பெ.(n.)

விடுபட முடியாதபடி கையாலோ, காலாலோ பிடித்துக் கொள்கிற அல்லது பின்னிக் கொள்கிற ஒரு

 lily; vice-like grip; wrenching hold.

அவனுடைய கிடுக்கிப் பிடியில் இருந்து யாரும் திமிர முடியாது.

     [கிடுக்கி+பிடி]

கிடைதலை

 கிடைதலை kiṭaitalai, பெ.(n.)

   சாகும் காலம் (யாழ்.அக.);; moment of death.

     [கிடை+தலை.]

கிடைபொருந்தாமை

 கிடைபொருந்தாமை kiṭaiporuntāmai, பெ.(n.)

   படுக்கையிற் பொருந்தாமை; restlessness in bed as of sick persons (சா.அக.);.

     [கிடை+பொருந்தாமை]

கிடைவரை

 கிடைவரை kiḍaivarai, பெ.(n.)

   உலகப்படத்தில் நிலநடுக்கோட்டின் இருபாலுமுள்ள வரை கற்பனைக் கோடு; latitude.

     [கிடை+வரை]

கிட்டல்

 கிட்டல் kiṭṭal, பெ.(n.)

   நெருங்குகை, பல் கிட்டுகை; close setting of the teeth (சா.அக.);.

     [கிட்டு-கிட்டல்]

கிட்டிணகாரம்

 கிட்டிணகாரம் kiṭṭiṇakāram, பெ.(n.)

   சவர்க்காரம்; fuller’s earth; soap (சா.அக.);.

     [கிட்டிணம்+காரம்.]

     [Skt.krsna → த.கிட்டிணம்.]

கிட்டிணசாசி

 கிட்டிணசாசி kiṭṭiṇacāci, பெ.(n.)

   கருஞ்சீரகம்; black cumin, Nigella sativa (சா.அக.);.

     [கிருட்டிணம்+சாசி.]

     [Skt.krsna → த.கிட்டிணம் + சாசி.]

கிட்டிணசாரம்

 கிட்டிணசாரம் kiṭṭiṇacāram, பெ.(n.)

   திப்பிலி; long-pepper, Piper longam (சா.அக.);.

     [கிருட்டிணம் + சாரம்.]

     [Skt.krsna → த.கிட்டிணம்.]

கிட்டிணன்

 கிட்டிணன் kiṭṭiṇaṉ, பெ.(n.)

   கண்ணன்; Kirsna, son of {}, one of ten incarnations of Visnu.

     [Skt.krsna → த.கிட்டிணம்.]

கிட்டிணபேடம்

 கிட்டிணபேடம் kiṭṭiṇapēṭam, பெ.(n.)

   கடுகுரோகிணி, ஒரு கடைச்சரக்கு; black hellebore, Helleborous niger (சா.அக.);.

     [Skt.krsna → த.கிட்டிணம்.]

கிட்டிணபோளம்

 கிட்டிணபோளம் kiṭṭiṇapōḷam, பெ.(n.)

   கரிய போளம்; black murrh (சா.அக.);.

     [Skt.krsna → த.கிட்டிணம்.]

கிட்டினவுறவு

 கிட்டினவுறவு kiṭṭiṉavuṟavu, பெ.(n.)

   நெருங்கிய உறவினர்; near relation, close relationship (செ.அக.);.

     [கிட்டு→கிட்டின+உறவு.]

கிட்டிபோடு-தல்

கிட்டிபோடு-தல் kiṭṭipōṭutal,    8 செ.கு.வி. (v.i.)

   1. கிட்டியில் மாட்டுகை; நெருக்குப் பிடித்தல்; put in a clasp so as to prevent moving.

   2. மற்றவர் தனக்குத் தர வேண்டிய வாடகை, வட்டி முதலியவற்றைத் திருப்பித் தருமாறு விடாது நெருக்குதல்; urge in a forcible manner; put the squeeze on.

ஆளைக் கிட்டி போட்டுக் கொடுத்த கடனை வாங்கிவிட்டார்.

     [கிட்டி+போடு-தல்.]

கிட்டிலம்

 கிட்டிலம் kiṭṭilam, பெ.(n.)

   செவ்வாம்பல்; அரக்காம்பல்; red variety water-lily (சா.அக.);.

கிட்டுபடி

 கிட்டுபடி kiḍḍubaḍi, பெ.(n.)

   ஆதாயம் (லாபம்);; profit.

தெ. கிட்டுபடி மறுவ

ஆதாயம், ஆகு.

     [கிட்டு+படி-கிட்டுபடி]

முதலீட்டுக்குமேல் அதிகமாகக் கிட்டிய(கிடைத்த); தொகையான ஆதாயம் (லாபம்);]

இச்சொல்லே நாளடைவில் கட்டுபடி எனத் திரிந்து விட்டது.

கிட்டுமானம்

 கிட்டுமானம் kiṭṭumāṉam, பெ.(n.)

   அருகாமை; nearness, proximity, vicinity (செ.அக.);.

     [கிட்டு+மானம்]

கிட்டே

கிட்டே kiṭṭē, வி.அ.(adv.)

   1. அருகில்; பக்கத்தில்; near closer.

கிட்டே வந்து மெதுவாகப் பேசு (உவ);, ஊர்வலம் மிகவும் கிட்டே வந்துவிட்டது (உ.வ.);.

   2. வயது, நேரம் போன்றவை குறிப்பிட்ட எண்ணிக்கையை

   ஒட்டி வருதல் அல்லது நெருங்குதல்; of time, age around; about

     [கிட்டு→கிட்ட→கிட்டே]

கிணற்றுச்சத்தம்

 கிணற்றுச்சத்தம் kiṇaṟṟuccattam, பெ.(n.)

   கிணற்றொலி பார்க்க; see kinarrol (சா.அக.);.

     [கிணற்று+Skt. சத்தம்]

கிணற்றொலி

 கிணற்றொலி kiṇaṟṟoli, பெ.(n.)

   மெலிவான ஓசை; weak or dull sound (சா.அக.);.

     [கிணற்று+ஒலி]

கிணீலெனல்

 கிணீலெனல் kiṇīleṉal, பெ.(n.)

   ஒர் ஒலிக்குறிப்பு; signifying ringing, tinkling, clinking sound (செ.அக.);.

     [கினில்+எனல்]

கிணுகிணுப்பு

 கிணுகிணுப்பு kiṇukiṇuppu, பெ.(n.)

   காதில் எழும் ஒரு வகை ஒலி; Pool; a peculiar tinkling sound of the ear – Tinnitus aurium (சா.அக.);.

     [கிணு+கினுப்பு]

கிணுகினி

 கிணுகினி kiṇukiṉi, பெ.(n.)

   உயிர்க் (கிருமிக்); கொல்லி; a remedy which expels worms from animal bodies-Vermifuge (சா.அக.);.

     [கிணு+கினி]

கிணைப்பறை

 கிணைப்பறை kiṇaippaṟai, பெ.(n.)

   ஒருவகைத் தோற் கருவி (உறுதி);; a kind of drum.

     [கிணை+பறை]

பண்டைய நாளில் நெல்வயலில் உழும் போதும் அறுவடை செய்யும் போதும் கிணைப் பறை கொட்டப்பட்டது.

     [P]

கிண்கிண்ணிருமல்

 கிண்கிண்ணிருமல் kiṇkiṇṇirumal, பெ.(n.)

   கிண்ணென்று ஒசையெழுப்பும் இருமல்; cough with a metallic sound (சா.அக.);.

     [கிண்கிண்+இருமல்.]

கிண்ணாக்கு

 கிண்ணாக்கு kiṇṇākku, பெ.(n.)

   வண்ணச் குழிப்புப் பாட்டில் (சந்தப்பாட்டு); உரையசை போன்று இன்னோசைக்காகச் சேர்க்கப்படும் குறிப்புச் சொல்; empty morph added a the end of a stanza in songs of folklore.

     “பாடும் குயிலுக்கு – போடு கிண்ணாக்கு – பவள மணி மாலைகளாம் – போடு கிண்ணாக்கு”

     [கிண்-கிண்ணாக்கு (ஒலிக் குறிப்பு);]

கிண்ணிக்கருப்பூரம்

 கிண்ணிக்கருப்பூரம் kiṇṇikkaruppūram, பெ.(n.)

   கருப்பூரத்தைக் கிண்ணி வடிவில் ஊற்றுகை; refind camphor cast in a mould of cup – Cup-camphor.

     [கிண்ணி+கருப்பூரம். கிண்ணி-சிறு வட்டில்.]

கிண்ணிக்கால்

 கிண்ணிக்கால் kiṇṇikkāl, பெ.(n.)

   நாயின் மாறுபட்ட கால்; a deformed leg of a dog (சா.அக.);.

     [கிண்ணி+கால்.]

கிண்ணித்தைலம்

 கிண்ணித்தைலம் kiṇṇittailam, பெ.(n.)

கிண்ணியின் உட்பக்கம் பதங்கம் ஏறும்படி செய்த எண்ணெய்; medicated oil which is prepared by process of sublimation in which the vapour is made to condense again as a deposit on the inner side of a cup or receiver (சா.அக.);.

     [கிண்ணி+Skt. தைலம்.]

கிதபம்

 கிதபம் kidabam, பெ.(n.)

   ஊமத்தைச் செடி வகை; thorn-apple, Datura (சா.அக.);.

கிதபாடணம்

 கிதபாடணம் kidapāṭaṇam, பெ.(n.)

   தீயசொல்; evil, wicked words.

     “பாங்கிலர்வாய்க் கிதபாடணனே” (சிவதரு.பலசிவி.); (த.சொ.அக.);.

த.வ. தீச்சொல், கடுஞ்சொல்.

கிதம்

 கிதம் kidam, பெ.(n.)

   நெய்; ghee (சா.அக.);.

கிதயுகம்

 கிதயுகம் gidayugam, பெ.(n.)

கிருதயுகம் பார்க்க;see kiruda-yugam.

     [Skt.krta+yuga → த.கிதயுதம்.]

கிதவன்

 கிதவன் kidavaṉ, பெ.(n.)

கிதபம் பார்க்க;see kitabam (சா.அக.);.

கிதவபன்

கிதவபன் kidavabaṉ, பெ.(n.)

   போக்கிலி (நீலகேசி, 286, உரை);; rogue.

     [Skt.kitava → த.கிதவபன்.]

கிதாப்பு

கிதாப்பு kitāppu, பெ.(n.)

   1. பொத்தகத்தின் பெயர்; title of a book.

   2. பொத்தகம்; book.

     [U.{} → த.கிதாப்பு.]

கித்தம்

கித்தம் kittam, பெ.(n.)

   செய்யப்பட்டது (திருக்கோ.388, உரை);; that which is made.

     [Skt.krta → த.கித்தம்.]

கித்தா

 கித்தா kittā, பெ.(n.)

   துரைப்பான் (தரங்.);; rubber.

     [Danish. kitta → த.கித்தா.]

கித்தான்

கித்தான்1 kittāṉ, பெ.(n.)

   ஒரு வகை உரப்புத்துணி; linen, canvas.

த.வ.உரப்பு.

     [U.{}, M.{} → த.கித்தான்.]

 கித்தான்2 kittāṉ, பெ.(n.)

   ஒரு நூல்; cotton thread.

த.வ.முரட்டுநூல்.

     [U.{}, M.{} → த.கித்தான்.]

கித்தான்கட்டில்

 கித்தான்கட்டில் kittāṉkaṭṭil, பெ.(n.)

   உரப்புத் (கித்தான்); துணி வைத்துத் தைத்த கட்டில்; canvas cot.

த.வ.உரப்புக்கட்டில்.

     [கித்தான் + கட்டில்.]

     [U.{} → த.கித்தான்.]

கித்தான்கயிறு

 கித்தான்கயிறு kittāṉkayiṟu, பெ.(n.)

   சணற் கயிறு; hemp rope.

த.வ.உரப்புக்கயிறு.

     [கித்தான் + கயிறு.]

     [U.{} → த.கித்தான்.]

கித்தான்பஞ்சு

 கித்தான்பஞ்சு kittāṉpañju, பெ.(n.)

   கப்பலின் கலகை மூட்டுக்களை நீர்க் காப்புடையதாகச் செய்யப் பயன்படும் சணற்கூளம்; tow, oakum for caulking ships.

த.வ. சனற்கூளம்

     [கித்தான்+பஞ்சு.]

     [U.{} → த.கித்தான்.]

கித்தான்பாய்

 கித்தான்பாய் kittāṉpāy, பெ.(n.)

   கப்பலில் காற்றை முகப்பதற்காக முரட்டுச் சீலையாலமைந்த பாய்; canvas sail.

     [கித்தான்+பாய்.]

     [P]

     [U.{} → த.கித்தான்.]

கித்தாப்பு

 கித்தாப்பு kittāppu, பெ.(n.)

   கண்ணியமான பட்டம்; title, degree, honour.

த.வ.பட்டம்.

     [U.{} → த.கித்தாப்பு.]

கித்தார்

 கித்தார் kittār, பெ.(n.)

   மரவகை; fiddle wood, Citharexylon subseratum.

த.வ.கின்னர மரம்.

     [E.guitar → த.கித்தார்.]

கித்தில்

கித்தில் kittil, பெ.(n.)

   1. ஒருவகைக் கூந்தற் கமுகு; jaggery-palm.

   2. கூந்தற் கமுகின் நார்; kittul-fibre obtained from the leaf stalks of the jaggery-palm.

த.வ. கமுகுநார்.

     [Skt.kitul → த.கித்தில்.]

கித்துள்

 கித்துள் kittuḷ, பெ.(n.)

   கமுகு வகை (பிங்.);; areca palm.

த.வ. கமுகம்பாக்கு.

     [Sinh. kitul → த.கித்துள்.]

கித்மிவிதை

 கித்மிவிதை kidmividai, பெ.(n.)

   சீமைத்துத்தி விதை; seeds of marsh-mallow (சா.அக.);.

கிந்துக்கினம்

கிந்துக்கினம் kindukkiṉam, பெ.(n.)

   ஐந்திய (பஞ்சாங்க);க் கரணங்களுன் ஒன்றாய் வளர்பிறையின் முதனாளின் முதற் பகுதியாகிய வேளை (விதான.பஞ்சாங்க.29);; a division of the day, the first half of the first day of the bright fortnight, one of 11 karanam.

     [Skt.kintughna → த.கிந்துக்கினம்.]

கினாரா

 கினாரா kiṉārā, பெ.(n.)

   ஆறு முதலியவற்றின் கரை; side, bank, shore.

     [U.{} → த.கினாரா.]

கின்னரகண்டி

 கின்னரகண்டி giṉṉaragaṇṭi, பெ.(n.)

கின்னரகீதம் பார்க்க;see {}.

     [Skt.kinnara+kanta → த.கின்னரகண்டி.]

கின்னரகீதம்

கின்னரகீதம் kiṉṉaraātam, பெ.(n.)

   யாழ் இசைக் கலைஞ(கின்னர);ர்களால் பாடப்படும் இசை; the music of the celestial minstrels.

     “கின்னரகீதத்துக் கேள்வி மாந்தர்” (பெருங்.உஞ்சைக்.37, 103);.

     [Skt.{}+{} → த.கின்னரகீதம்.]

கின்னரப்பறவை

 கின்னரப்பறவை kiṉṉarappaṟavai, பெ.(n.)

   இனிய இசைபாடும் பறவை; a bird singing with a sweet voice – Canary bird (சா.அக.);.

கின்னரப்பிரமையர்

 கின்னரப்பிரமையர் kiṉṉarappiramaiyar, பெ.(n.)

   ஒரு சிவனடியார்; a pious of Švā.

கின்னரமிதுனம்

கின்னரமிதுனம் kiṉṉaramituṉam, பெ. (n.)

   1. ஆண், பெண்ணாக இணைந்து இரட்டையாகக் காணப்படும் கின்னரப் பறவைகள் (சீவக.657, உரை);; a species of bird that goes in pairs.

   2. வானுலகில் வாழும் ஒரு வகைக் கடவுளரி(தேவர்களி);ன் ஆண், பெண்ணினை; celestial choristers that go in pairs.

     “கின்னர மிதுனங்களுந் தந்தங்கின்னரந் தொடுகிலோ மென்றனரே” (திவ்.பெரியாழ்.3 6, 5); (செஅக);.

     [Skt. kionara + மிதுனம்)

கின்னரிக்கன்னி

 கின்னரிக்கன்னி kiṉṉarikkaṉṉi, பெ.(n.)

   ஆளி விதை; linseed(சா.அக.);.

கின்னரிச்சுரை

 கின்னரிச்சுரை kiṉṉariccurai, பெ.(n.)

   உருண்டையான சுரைக்காய்; lute-gourd ог calabash climber – Lagenaric vulgaris.

     [கின்னரி+கரை]

இதன் ஒடு கின்னரி, வீணை முதலிய தந்தியாலான இசைக்கருவிகளுக்குப் பயன்படும் (சா.அக.);.

கின்னாரப்பெட்டி

 கின்னாரப்பெட்டி kiṉṉārappeṭṭi, பெ.(n.)

   ஆர்மோனியம் முதலிய வாத்தியப் பெட்டி; musical instrument, as harmonium, piano (செ.அக.);.

     [Skt. Kippåra+பெட்டி.]

     [P]

கிபாயத்து

 கிபாயத்து kipāyattu, பெ.(n.)

   நன்மை, ஊதியம்; profit, advantage, gain from lands held at reduced rent or tax.

     [U.{} → த.கிபாயத்து.]

கிம்புருடவருடம்

கிம்புருடவருடம் kimburuḍavaruḍam, பெ.(n.)

   ஒன்பது (நவ); ஆண்டுகளுள் ஒன்று (கந்தபு.அண்டகோ.37);; land between {} and {}, one of navavarutam.

     [Skt.kimpurusa+varuda → த.கிம்புருட வருடம்.]

கிம்மீரன்

 கிம்மீரன் kimmīraṉ, பெ.(n.)

   ஓர் அரக்கன்; a giant.

வீமனால் கொல்லப்பட்ட பகாசுரனின் தம்பி. பாண்டவர்கள் காட்டில் வாழ்ந்திருந்த போது பாஞ்சாலியைக் கவர வந்து வீமனால் கொல்லப்பட்டவன். இவனுக்குக் கிம்மீரணம் எனவும் பெயர் (அபி.சிந்.);.

கியமதம்

 கியமதம் kiyamadam, பெ.(n.)

   நலிவு (யாழ்.அக.);; weakness.

கியாதம்

 கியாதம் kiyātam, பெ.(n.)

கியாதி (பிங்.); பார்க்க;see {}.

     [Skt.{} → த.கியாதம்.]

கியாதி

கியாதி1 kiyāti, பெ.(n.)

   புகழ் (சூடா.);; fame.

த.வ. பாடாண்.

     [Skt.{} → த. கியாதி.]

கியானம்

 கியானம் kiyāṉam, பெ.(n.)

   அறிவு (யாழ்.அக.);; wisdom, knowledge.

     [Skt.{} → த.கியானம்.]

கியாரசம்பர்

 கியாரசம்பர் kiyārasambar, பெ.(n.)

   சரக்கொன்றைப் புளி; a unani term referring to Indian laburnam (சா.அக.);.

கியால்

 கியால் kiyāl, பெ.(n.)

   ஒரு வகை இந்துத்தானிப் பாட்டு; a Hindustani musical composition, or anything similar to it in Tamil.

     [U.{} → த.கியால்.]

கியாழமிறக்கல்

 கியாழமிறக்கல் kiyāḻmiṟakkal, தொ.பெ.(vbl.n.)

   மருந்தைக் காய்ச்சி வடித்து இறக்கல்; preparation of decoction or infusion (சா.அக.);.

த.வ.கருக்கிறக்கல்.

     [கியாழம்+இறக்கல்.]

     [Skt.{} → த.கியாழம்.]

கியாழம்

கியாழம் kiyāḻm, பெ.(n.)

   காய்ச்சிய மருந்துக் குடிநீர் (கஷாயம்);; decoction.

     “கலிகங் கியாழம்” (திருவேங்.சத.68);.

த.வ.கருக்கு.

     [Skt.{} → த.கியாழம்.]

கிரககதி

 கிரககதி giragagadi, பெ.(n.)

   கோளின் (கிரகத்தின்); நடை; planetary motion.

த.வ. கோள்நடை.

     [Skt.graha → த.கிரகம்.]

கிரககபோதம்

 கிரககபோதம் giragagapōtam, பெ.(n.)

   வீட்டுப் புறா; house-pigeon (சா.அக.);.

த.வ.வீட்டுப்புறா.

     [P]

     [Skt.graha+{} → த.கிரக+கபோதம்.]

கிரகக்கழிப்பு

 கிரகக்கழிப்பு giragaggaḻippu, பெ.(n.)

கிரகசாந்தி பார்க்க;see kiraga-{}.

த.வ. கோளமைதி.

     [Skt.graha+ → த.கிரகம்+கழ்ப்பு.]

கிரகங்கழி-த்தல்

 கிரகங்கழி-த்தல் giragaṅgaḻittal, செ.கு.வி.(v.i.)

   கோள்களை அமைதியடையச் செய்தல்; to perform a propitiatory ceremony to avert or mitigate the evil influence of planets.

த.வ. கோள்கழித்தல்.

     [கிரகம்+கழி-,]

     [Skt.graha → த.கிரகம்.]

கிரகசன்

 கிரகசன் giragasaṉ, பெ.(n.)

   ஒரு காபாலிக மதத்தவன்; one who belonged to {} religion.

கிரகசபுடம்

 கிரகசபுடம் giragasabuḍam, பெ.(n.)

   பிறப்புக் கணியத்தில் (ஜாதகம்); கோள்களின் நிலையை வரையறுக்கை; determining the correct position of planets, at the time of one’s birth.

த.வ. கோள்வரையறை.

     [Skt.graha → த.கிரகம்.]

கிரகசம்

கிரகசம் giragasam, பெ.(n.)

   ஒரு வகை நிரயம் (சிவதரு.சுவர்க்க.115);; hell.

     [Skt.krakaca → த.கிரகசம்.]

கிரகசாந்தி

 கிரகசாந்தி giragacāndi, பெ.(n.)

   கோள்களால் உண்டாகக் கூடிய தீமைகள் கழியும் பொருட்டுச் செய்யும் நீக்கவினை; propitiation of planets by offering oblation prayer, etc.,

த.வ. கோளமைதி.

     [Skt. graha+{} → த.கிரகம்+சாந்தி.]

கிரகசாரம்

கிரகசாரம் giragacāram, பெ.(n.)

   1. கோள்களின் சுழற்சி நிலை; planetary motion.

   2. தீமை தரும் கோளின் பயன்; evil influence of planets, as pain, poverty, sickness.

த.வ. கோள்பயன்.

     [Skt.graha → த.கிரகம்.]

கிரகசுரம்

 கிரகசுரம் giragasuram, பெ.(n.)

   பண்ணின் தொடக்க இசை; initial note of a melody-type.

த.வ. தொடக்கப்பண்.

     [Skt.graha+svaram → த.கிரகசுவரம்.]

கிரகசெபம்

 கிரகசெபம் giragasebam, பெ.(n.)

   கோள்களினால் ஏற்படக் கூடிய தீமை கழியும் பொருட்டு உருவேற்றுகை; prayer offered to planets to propitiate them toward off their evil influence.

த.வ. கோளுரு.

     [Skt.graha+{} → த.கிரகசெபம்.]

கிரகச்சித்திரம்

கிரகச்சித்திரம் giragaccittiram, பெ.(n.)

   குடும்பக் கலகம் (சச்சரவு);; family dissensions.

     “சென்மித்த வருடமு முண்டான வத்தமுந் தீதாங் கிரகச் சித்திரமும்” (அறப்.சத.39);.

த.வ. இல்லக்கலகம்.

     [கிரகம்+சித்திரம்.]

     [Skt.graha → த.கிரகம்.]

கிரகச்சுற்று

 கிரகச்சுற்று giragaccuṟṟu, பெ.(n.)

   கோள்கள் சுழலும் பாதை; revolution ofplanets.

த.வ. கோள்சுற்று.

     [கிரகம்+சுற்று.]

     [Skt.graha → த.கிரகம்.]

கிரகணசத்தி

 கிரகணசத்தி giragaṇasatti, பெ.(n.)

   உணர்ந்து கொள்ளுந் திறமை; power of comprehension.

த.வ. உள்ளுணர்திறன்.

     [Skt.grahana → த.கிரகணசக்தி.]

கிரகணச்சந்துக்கட்டு

 கிரகணச்சந்துக்கட்டு giragaṇaccanduggaṭṭu, பெ.(n.)

   கோள் மறைப்புத் தொடங்கி, விடுமளவும் உள்ள காலம்; duration of an eclipse.

த.வ. கோள்மறைப்புக்காலம்.

     [Skt.grahana+sandhi+ → த.கிரகணச் சந்து+கட்டு.]

கிரகணதோடம்

கிரகணதோடம் giragaṇatōṭam, பெ.(n.)

   சூலுற்றிருக்கும் காலத்தில் தாய், கோள் மறைப்பைக் காண்பதால், குழந்தைக்கு உண்டாவதாகக் கருதப்படும் மேலுதட்டுப் பிளவுநோய் (பைஷஜ.207);; harelip in a child, supposed to be the result of the mother’s seeing an eclipse when pregnant.

த.வ. கோட்குற்றம்.

     [Skt.grahana+{} → த.கிரகணதோடம்.]

கிரகணமோசனம்

 கிரகணமோசனம் giragaṇamōcaṉam, பெ.(n.)

கிரகணமோட்சம் பார்க்க;see kiragana-{}.

த.வ. கோட்பேறு.

     [Skt.grahana+ → த.கிரகணமோசனம்.]

கிரகணமோட்சம்

 கிரகணமோட்சம் giragaṇamōṭcam, பெ.(n.)

   கோள் மறைப்பு நீங்குகை; end of an eclipse.

த.வ. கோட்பேறு.

     [Skt.girahana+{} → த.கிரகண மோட்சம்.]

கிரகணம்

கிரகணம் giragaṇam, பெ.(n.)

   1. பற்றுகை; holding fast, grasping, seizure.

   2. மனத்தில் உணர்ந்து கொள்ளுகை; comprehension.

   3. நிலவு மற்றும் ஞாயிற்றின் கோள் மறைப்பு; eclipse, as the seizing of the sun or moon by the nodes {} or {}.

த.வ. கோள்பற்று, கோள்மறைப்பு.

     [Skt.grahana → த.கிரகணம்.]

கிரகணி

 கிரகணி giragaṇi, பெ.(n.)

   செரியாமையால் உண்டாகும் வயிற்றுப் போக்கு (பைஷஜ.);; continual looseness of the bowels, chronic diarrhoea of six kinds.

     [Skt.grahani → த.கிரகணி.]

கிரகணி-த்தல்

கிரகணி-த்தல் giragaṇittal, செ.கு.வி. (v.t.)

   1. கோள் பிடித்தல்; to eclipse.

   2. உறிஞ்சுதல்; to seize grasp.

     [Skt. grhana → த. கிரகணி-,]

கிரகதானம்

 கிரகதானம் giragatāṉam, பெ.(n.)

   ஒன்பது கோள்களின் நன்மைகளைப் பெறும் பொருட்டு செய்யும் கொடை; gift intended to avert the malignant influence of planets.

த.வ. கோள்கொடை.

     [Skt.graja+{} → த.கிரகதானம்.]

கிரகதோடம்

 கிரகதோடம் giragatōṭam, பெ.(n.)

   கோள்களினால் ஏற்படும் தீமை; affliction, calamity, suffering from the malignant influence of planets.

த.வ கோள்குற்றம்.

     [Skt.graha+{} → த.கிரகதோடம்.]

கிரகத்தி

 கிரகத்தி giragatti, பெ.(n.)

   இல் வாழ்க்கையிலிருப்பள்; married woman (யாழ்.அக.);.

த.வ. இல்லாள், மனைவி.

     [Skt.grha-sthi → த.கிரகத்தி.]

கிரகநடை

 கிரகநடை giraganaḍai, பெ.(n.)

   கோள்களின் நகர்வுநிலை; planetary motion.

த.வ. கோளியக்கம்.

     [கிரகம்+நடை.]

     [Skt.graha → த.கிரகம்.]

கிரகநிலை

 கிரகநிலை giraganilai, பெ.(n.)

   கோள் நிற்கும் ஐந்து நிலைமை; aspect of planets of which there are five.

அவை; நட்பு, ஆட்சி, உச்சம், பகை, நீசம்.

த.வ. கோள்நிலை.

     [Skt.graha+ → த.கிரகம்.]

கிரகநோக்கு

 கிரகநோக்கு giraganōggu, பெ.(n.)

   கோள்களின் பார்வை; relative aspect of planets, one to another; configuration, in four aspects,

அவையாவன; கால்நோக்கு, அரை நோக்கு, முக்கால் நோக்கு, முழு நோக்கு,

த.வ. கோள்நோக்கு.

     [Skt.graha → த.கிரகம்.]

கிரகன்

 கிரகன் giragaṉ, பெ.(n.)

   ஒரு வகைப் பறவை; a kind of bird (சா.அக.);.

கிரகபதனம்

 கிரகபதனம் giragabadaṉam, பெ.(n.)

   கிடைவரை (அட்சரேகை);; latitude of a planet.

     [Skt.graha+patana → த.கிகபதனம்.]

கிரகபதி

 கிரகபதி giragabadi, பெ.(n.)

   ஞாயிறு; sun, as lord of planets.

த.வ. கோள்தலைவன்.

     [Skt.graha+pati → த.கிரகபதி.]

கிரகபரிவிருத்தி

 கிரகபரிவிருத்தி giragabarivirutti, பெ.(n.)

   கோள்களின் சுழற்சி; revolution of a planet.

த.வ. கோள்சுழற்சி.

     [Skt.graha+parivirutti → த.கிரகபரி விருத்தி.]

கிரகபலம்

 கிரகபலம் giragabalam, பெ. (n.)

   கோளின் ஆட்சிச் செல்வாக்கு; planetary influence.

     [Skt. graha+bala → த. கிரகபலம்.]

கிரகபீடை

 கிரகபீடை giragapīṭai, பெ.(n.)

கிரக தோடம் பார்க்க;see kiraga-{}.

த.வ. கோள்குற்றம்.

     [Skt.graha+{} → த.கிரகபீடை.]

கிரகபுடம்

 கிரகபுடம் giragabuḍam, பெ. (n.)

   பிறப்பியத்தில் கோள்களின் நிலையை வரையறுக்கை; determining the correct position of planet at the time of one’s birth.

கிரகப்பாடு

 கிரகப்பாடு giragappāṭu, பெ.(n.)

   கதிரவனோடு வேறு கோள் இணைந்து ஓர் ஓரையில் நிற்கை (யாழ்.அக.);; the conjunction of the sun and a planet.

த.வ. கோள்நிலை.

     [Skt.graha → த.கிரகம்.]

கிரகப்பிரவேசம்

 கிரகப்பிரவேசம் giragappiravēcam, பெ.(n.)

கிருகப்பிரவேசம் பார்க்க;see kirugappravesam,

   புதிதாகக் கட்டிய அல்லது வாங்கிய வீட்டில் நடப்பு (சடங்குகள்); செய்து குடியேறும் நிகழ்ச்சி; a ceremony performed at the time of occupying a newly built house; house warming.

த.வ. புதுமனை புகுவிழா.

கிரகப்பிரவேசம் என்பது தவறு.

கிரகப்பிரீதி

 கிரகப்பிரீதி giragappirīti, பெ.(n.)

   கோள்களுக்குக் கொடை முதலியவற்றால் அன்பு செய்கை; propitiation of planets, by prayer, offerings, etc.

த.வ. கோள்விருப்பம்.

     [Skt. graha+{} → த.கிரகப்பிரீதி.]

கிரகப்பிழை

 கிரகப்பிழை giragappiḻai, பெ.(n.)

கிரகதோடம் பார்க்க;see kiraga-{}.

த.வ.கோள்குற்றம்.

     [Skt.graha → த.கிரகம்.]

கிரகப்பெயர்ச்சி

 கிரகப்பெயர்ச்சி giragappeyarcci, பெ.(n.)

   கோள்கள் இடமாறுகை; transit of a planet from one zodiacal sign to another.

த.வ. கோள்பெயர்நிலை.

     [கிரகம்+பெயர்ச்சி.]

     [Skt.graha → த.கிரகம்.]

கிரகமண்டலம்

 கிரகமண்டலம் giragamaṇṭalam, பெ.(n.)

கிரகவீதி பார்க்க;see kiraga-{}.

த.வ. கோள்மண்டிலம்.

     [கிரகம் + மண்டலம்.]

     [Skt.graha → த.கிரகம்.]

கிரகமாலிகை

 கிரகமாலிகை giragamāligai, பெ.(n.)

கிரகமாலை பார்க்க்;see kiraga-{}.

த.வ. கோள்மாலை.

     [கிரகம்+மாலிகை.]

     [Skt.graha → த.கிரகம்.]

கிரகமாலை

 கிரகமாலை giragamālai, பெ.(n.)

   கோள்கள் மாலை போன்று தொடர்ந்து நிற்கும் நிலை; position of two or more plants in the zodiacal signs following each other as a garland in their own order.

த.வ. கோள்மாலை.

     [கிரகம்+மாலை.]

     [Skt.graha → த.கிரகம்.]

கிரகம்

கிரகம்1 giragam, பெ.(n.)

   1. கோள்கள்; planets of which there are nine in the Hindu System.

அவை; ஞாயிறு, திங்கள், செவ்வாய், அறிவன் (புதன்);, இராகு, கேது.

   2. இசைப்பாட்டின் (கீர்த்தனை); தொடக்க காலத்தை உணர்த்துவதாகிய தாள அளவுகளுளொன்று (பரத.தாள.42);; the element of time-measure which specifies the starting beat of a song, of four kinds அவை;

அதீதம், அநாகதம், சமம், விஷயம், one of ten {}.

     [Skt.graha → த.கிரகம்.]

 கிரகம்2 giragam, பெ.(n.)

கிருகம் பார்க்க;see kirugam.

த.வ. இல்லம்.

     [Skt.grha → த.கிரகம்.]

கிரகவக்கிரம்

 கிரகவக்கிரம் giragavaggiram, பெ. (n.)

   கோள் பின்னோக்கிச் செல்லும் நிலை; retrogression of planet.

     [Skt. grha+ vakra → த. கிரகவக்கிரம்]

கிரகவட்டம்

கிரகவட்டம் giragavaṭṭam, பெ.(n.)

கிரகவீதி பார்க்க;see kiraga-{}.

   2. கோள்கடிளின் சுழற்சி; revolution of a planet.

த.வ. கோள்வட்டம்.

     [கிரகம்+வட்டம்.]

     [Skt.graha → த.கிரகம்.]

கிரகவீதி

 கிரகவீதி giragavīti, பெ.(n.)

   கோள் செல்லும் வழி; planetary orbit.

த.வ. கோள்வழி.

     [கிரகம்+வீதி.]

     [Skt.graha → த.கிரகம்.]

கிரகாகமம்

 கிரகாகமம் kirakākamam, பெ.(n.)

   பேய்ப் பிடிக்கை; demoniacal possession (சா.அக.);.

த.வ. பேய்ப்பிடி.

கிரகாராதனை

 கிரகாராதனை kirakārātaṉai, பெ.(n.)

   ஒன்பது கோள்களுக்கும் செய்யப்படும் பூசை; prayer, etc., offered to planets.

த.வ. கோட்பூசை.

     [Skt.graha+{} → த.கிரகாராதனை.]

கிரகி-த்தல்

கிரகி-த்தல் giragittal,    11 செ.கு.வி.(v.i.)

   1. பற்றுதல்; to seize, grasp.

   2. நுண்ணிதின் உயர்ந்து கொள்ளுதல்; to comprehend, discern, understand.

   3. ஏற்றுக் கொள்ளுதல்; to receive, accept.

   4. குறிப்பாலறிதல்; to infer, deduce, conjecture.

   5. துப்பறிதல்; to draw out, as secrets; to get information about.

   6. தொகுப்பை (சாரம்); வாங்குதல்; to extract, as essence.

த.வ. உள்வாங்குதல்.

     [Skt.graha → த. கிரகி-த்தல்.]

கிரணன்

கிரணன் kiraṇaṉ, பெ.(n.)

   ஞாயிறு, பகலவன், கதிரவன்; sun, as having rays.

     “கிளைத்த பல்பெருங் கிரணனில் வயங்கொளி கிளர்ந்தான்” (பாரத. பதினான்காம்.108);.

     [Skt. kirana → த.கிரணன்.]

கிரணமாலி

 கிரணமாலி kiraṇamāli, பெ.(n.)

   பகலவன் (சூடா.);; sun, as emitting rays.

த.வ. கதிரவன்.

     [Skt.kirana-{} → த.கிரணமாலி.]

கிரணம்

கிரணம் kiraṇam, பெ.(n.)

   1. கதிர்; ray of light, beam.

   2. ஒளி; light. brightness, brilliancy.

     “கிரணக் கலாபி” (கந்தரலங்.21);.

   3. சிவத் தோன்றியங்கள் இருபத்தெட்டனுள் ஒன்று (சைவ.பொது.335, உரை);; an ancient {} scripture in sanskrit one of 28 {}.

த.வ. கதிரொளி.

     [Skt.kirana → த.கிரணம்.]

கிரணம்வீசு-தல்

கிரணம்வீசு-தல் kiraṇamvīcudal,    5. செ.கு.வி. (v.i.)

   ஒளியடித்தல்; to emit rays.

த.வ. கதிரொளித்தல்.

     [கிரணம்+வீசு-,]

     [Skt.kirana → த.கிரணம்.]

கிரது

கிரது kiradu, பெ.(n.)

   1. வேள்ளி; sacrifice.

     “கிரதுக்கடவுடானும்” (அரிசமய.பத்திசார.93);.

   2. நிரய (நரக); வகை (சிவதரு.சுவர்க்கந.115);; a hell.

   3. ஒரு முனிவர்; an ancient rsi.

     [Skt.kratu → த.கிரது.]

கிரந்தகர்த்தா

 கிரந்தகர்த்தா girandagarttā, பெ.(n.)

   நூலாசிரியன்; author of a book, writer.

     [Skt.grantha → த.கிரந்தகர்த்தா.]

கிரந்தகாரன்

கிரந்தகாரன் kirandakāraṉ, பெ.(n.)

   1. கிரந்தகர்த்தா பார்க்க;see kiranda-{}.

   2. மதிப்புரவில்லாதவன்; impudentfellow.

     [Skt. granta → த.கிரந்த. ‘காரன்’-உடைமைப் பெயரீறு.]

கிரந்தனம்

கிரந்தனம் kirandaṉam, பெ.(n.)

   1. அழுகை; weeping.

   2. ஒலி; cry, as of birds (யாழ்.அக.);.

     [Skt.granta → த.கிரந்தனம்.]

கிரந்தித்தொய்வு

 கிரந்தித்தொய்வு kirandittoyvu, பெ.(n.)

   புண்களால் தோன்றும் நோய்வகை; a disease (யாழ்.அக.);.

     [கிரந்தி+தொய்வு.]

     [Skt.granthi → த.கிரந்தி.]

கிரமக்காரன்

 கிரமக்காரன் kiramakkāraṉ, பெ.(n.)

   ஒழுங்காக நடப்பவன் (யாழ்.அக.);; well behaved person, man of good conduct.

த.வ. நன்னடையன்.

     [Skt.krama → த.கிரமம்.’காரன்’-உடைமைப் பொருள்ஈறு.]

கிரமசிருட்டி

கிரமசிருட்டி kiramasiruṭṭi, பெ.(n.)

   இயற்கை (பிரகிருதி); முதல் மண் (பிருதி); வரை ஒன்றன்பின் ஒன்று அடைவே படைக்கப்படுகை (வேதா.சூ.80);; creation of elements one after another, dist.fr.{}-{}.

     [Skt.krama+{} → த.கிரமசிருட்டி.]

கிரமச்சா

 கிரமச்சா kiramaccā, பெ.(n.)

   கோள் கணக்கின் உறுப்பு; sine of a planet’s declination.

     [Skt.krama+{} → த.கிரமச்சா.]

கிரமதாடி

கிரமதாடி kiramatāṭi, பெ.(n.)

   மறையின் ஒழுங்குமுறை தவறாமல் (கிரமபாட); ஓதுவதில் வல்லவன்; one well-versed in the krama method of reciting the {}.

     “இவனவதானியிவன் கிரமதாடி” (பிரபோத.11, 5);.

     [Skt.krama+{} → த.கிரமதாடி.]

கிரமதாவா

 கிரமதாவா kiramatāvā, பெ.(n.)

   ஒழுங்கு வழக்கு; original suit, regular suit.

     [Skt.kirama+{} → த.கிரமதாவா.]

கிரமப்பிரசவம்

கிரமப்பிரசவம் kiramappirasavam, பெ.(n.)

   இயல்பான பிள்ளைப்பேறு (இங்.வை.393);; normal, easy delivery.

த.வ. பிள்ளை நற்பேறு.

     [Skt.kirama+pra-sava → த.கிரமப்பிரசவம்.]

கிரமி

கிரமி kirami, பெ. (n.)

   1. ஒழுங்காய் நடப்பவ-ன்-ள்; well behaved person.

   2. சமய ஒழுக்க விதிப்படி நடப்பவன்-ள்; one who conforms to orthodox rules of conduct.

     [Skt. krama → த. கிரமம் → கிரமி.]

கிரமுகம்

 கிரமுகம் giramugam, பெ.(n.)

   பாக்குமரம்; areca palm.

த.வ. கமுகம்.

     [Skt.kramuka → த.கிரமுகம்.]

கிரயசாசனம்

 கிரயசாசனம் kirayacācaṉam, பெ.(n.)

   விற்பனை ஆவணம்; bill of sale, sale-deed.

     [Skt.kraya+{} → த.கிரயாசனம்.]

கிராகதி

 கிராகதி kirākadi, பெ.(n.)

   செடிவகை; french, chiratta.

கிரான்

 கிரான் kirāṉ, பெ.எ.(adj.)

   விலை மிகுந்த; dear, high priced.

     [U.{} → த.கிரான்.]

கிராமக்கணக்கன்

 கிராமக்கணக்கன் kirāmakkaṇakkaṉ, பெ.(n.)

   ஊர்க் கணக்கு வேலை பார்ப்போன்; village accountant.

த.வ. ஊர்க்கணக்கன்.

     [கிராமம்+கணக்கன்.]

     [Skt.{} → த.கிராமம்.]

கிராமக்காவல்

கிராமக்காவல் kirāmakkāval, பெ.(n.)

   1. ஊர்க்காவன்; service of a village watchman.

   2. ஊர்க்காவற்காரன்; village watchma.

த.வ. ஊர்க்காவலன்

     [கிராமம்+காவல்.]

     [Skt.{} → கிராமம்.]

கிராமசடகம்

 கிராமசடகம் girāmasaḍagam, பெ.(n.)

   ஊர்க்குருவி; domestic sparrow (சா.அக.);.

     [கிராமம் + சடகம்.]

     [P]

கிராமசமுதாயம்

 கிராமசமுதாயம் kirāmasamutāyam, பெ.(n.)

   வருமானமுள்ள ஊர்ப்பொதுச் சொத்து; rights enjoyed in common by villagers, as the produce or income from trees on common land,tanks, fisheries etc.

     [Skt. {}+samudaya → கிராம சமுதயாம்.]

கிராமசாந்தி

 கிராமசாந்தி kirāmacāndi, பெ.(n.)

   சிற்றூரின் நன்மைக்காகக் அவ்வூர்த் தெய்வத்திற்குச் செய்யும் பூசை (சடங்கு);; propitiatory ceremony to the tutelary deity of a village.

     [கிராமம் + சாந்தி.]

     [Skt.{} → த.கிராமம்.]

கிராமசிம்மம்

கிராமசிம்மம் kirāmasimmam, பெ.(n.)

   நாய்; dog, as the lion of the village.

     “கிராமசிம்மம் போலே படுத்திருந்து” (குருபரம்.பன்னீ.177);.

     [Skt.{}+{} → கிராமசிம்மம்.]

கிராமச்சாவடி

 கிராமச்சாவடி kirāmaccāvaḍi, பெ.(n.)

   ஊர்ப் பொதுவிடம்; public building in a village.

த.வ. ஊர்ச்சாவடி.

     [கிராமம்+சாவடி.]

     [Skt.{} → த.கிராமம்.]

கிராமச்செலவு

 கிராமச்செலவு kirāmaccelavu, பெ.(n.)

   ஊர்ப் பொதுவில் செய்யப்படும் செலவு; village contribution for the performance of public functions like festivals.

த.வ. ஊர்நலச் செலவு.

     [கிராமம்+செலவு.]

     [Skt.{} → கிராமம்.]

கிராமணி

கிராமணி kirāmaṇi, பெ.(n.)

   1. சிற்றூரின் தலைவன்; headman of a village.

   2. தலைமையானவன் (கூர்மபு.ஆதவர்.4);; leader or chief.

   3. சிற்றூரான்; peasant, villager.

   4. சான்றோரிலும், கைக்கோளரிலும் ஒரு வகையினர்க்கு வழங்கும் சிறப்புப் பெயர்; title of some {} and {}.

த.வ. ஊர்த்தலைவன்.

     [Skt.{} → த.கிராமணி.]

கிராமதேவதை

 கிராமதேவதை kirāmadēvadai, பெ.(n.)

   ஊரைக் காவல் செய்து மக்களைக் காக்குந் தேவைதை; tutelary deity of a village.

த.வ. ஊர்க்காவல்தெய்வம்.

     [கிராமம் + தேவதை.]

     [Skt.{} → த.கிராமம்.]

கிராமத்தான்

 கிராமத்தான் kirāmattāṉ, பெ.(n.)

   நாட்டுப்புறத்தான்; rustic, uncivilized person.

த.வ. ஊரான்.

     [Skt.{} → த.கிராமம் → கிராமத்தான்.]

கிராமத்தார்

 கிராமத்தார் kirāmattār, பெ.(n.)

   சிற்றூரில் வாழும் மக்கள்; inhabitants of a village.

த.வ. ஊர்மக்கள்.

     [Skt.{}+ → த.கிராமம் → கிராமத்தார்.]

கிராமநத்தம்

 கிராமநத்தம் kirāmanattam, பெ.(n.)

   ஊரையடுத்து வீடுகள் கட்டக்கூடிய இடம்; ground in a village set apart for building houses, village site.

த.வ. ஊர்ப்புறம்.

     [கிராமம் + நத்தம்.]

     [Skt.{} → த.கிராமம்.]

கிராமபாகம்

 கிராமபாகம் kirāmapākam, பெ.(n.)

   தாங்கள் விட்டுக்கொடுத்த சில உரிமைகளுக்காக நிலக்கிழாருக்குச் சிற்றூரார் செலுத்தும் விளைச்சலின் ஒரு பகுதி; portion of the crop delivered to the {} if a village in lieu of their miras rights.

த.வ. பகுதி.

     [கிராமம் + பாகம்.]

     [Skt.{} → த.கிராமம்.]

கிராமப்பிரதட்சிணம்

 கிராமப்பிரதட்சிணம் kirāmappiradaṭciṇam, பெ.(n.)

   ஊரைச் சுற்றுதல் (ஊர்வலம்);; procession round a village from left to right.

த.வ. ஊர்வலம்.

     [Skt.{}+piradatcina → த.கிராமப் பிரதட்சிணம்.]

கிராமப்பிரவர்த்திகம்

 கிராமப்பிரவர்த்திகம் girāmappiravarttigam, பெ.(n.)

   ஊர் அவை; village council.

     [Skt.{} + iravartiga → த.கிராமப் பிரவர்த்திகம்.]

கிராமமானியம்

 கிராமமானியம் kirāmamāṉiyam, பெ.(n.)

   பல, தலைமுறையாகக் கொடை பெற்றோர் (இனாம்தார்); நுகரும் இறையிலி நிலம்; land enjoyed rent-free by a hereditary proprietor of a part of the village lands.

த.வ. இறையிலிநிலம்.

     [Skt.{}+{} → த.கிராமமானியம்.]

கிராமமுன்சீபு

 கிராமமுன்சீபு kirāmamuṉcīpu, பெ.(n.)

   ஊரை நிருவாகம் செய்பவர்; ஊரையாளக் கூடிய பதவியிலிருப்பர்; head of a village, vested with judicial, criminal and police powers, an office created by the British.

த.வ. ஊர்நில அலுவலர், ஊர் நாயகம்.

     [Skt.{}+ → த.கிராமம்+முன்சீபு.]

கிராமமேரை

 கிராமமேரை kirāmamērai, பெ.(n.)

   சிற்றூர்களில் வேலைக்காரரின் உரிமை (சுதந்திரம்);; allowance of a portion of the crop to the village officers and servants.

     [Skt.{}+{} → த.கிராமமேரை.]

கிராமம்

கிராமம்1 kirāmam, பெ.(n.)

   1. மருத நிலத்தூர்; village in an agricultural tract.

     “அந்தணருறைதருங் கிராமம்” (மணிமே.13: 102-3);.

   2. ஊர்; village.

   3. பண்களின் சேர்க்கை வகை (பரத. இராக.80);; combination of musical notes going up and down the scale.

     [Skt.{} → த.கிராமம்.]

 கிராமம்2 kirāmam, பெ.(n.)

   நீர்ப்பறவை (பிங்.);; water fowl.

     [{}.{} → த.கிராமம்.]

     [P]

கிராமாதிகாரி

 கிராமாதிகாரி kirāmātikāri, பெ.(n.)

கிராமாதிபதி பார்க்க;see {}.

     [Skt.{}+{} → த.கிராமாதிகாரி.]

கிராமாதிபதி

 கிராமாதிபதி kirāmādibadi, பெ.(n.)

   ஊர்த்தலைவன்; head of a village, either the proprietor, headman or collector of the revenue on government account.

த.வ. ஊர்நாயகன்.

     [Skt.{}+adhipati → த.கிராமாதிபதி.]

கிராமாந்தரம்

 கிராமாந்தரம் kirāmāndaram, பெ.(n.)

   நாட்டுப்புறம்; rural parts.

     [Skt.{}+antara → த.கிராமாந்தரம்.]

கிராமியன்

 கிராமியன் kirāmiyaṉ, பெ.(n.)

   நாட்டுப் புறத்தவன் (சூடா.);; villager, rustic, pleasant.

த.வ. நாட்டான், நாட்டுப்புறத்தான்.

     [Skt.{} → த.கிராமியன்.]

கிராமியம்

கிராமியம் kirāmiyam, பெ.(n.)

   1. தாழ்ந்தோருடைய கொச்சைப் பேச்சு (இலக்.வி.635, உரை);; rustic, vulgar speech; language of uncultured people.

   2. இழிவானது; barbarism, that which is corrupt.

     “கிராமியமாங் கருமச் சழக்கில்” (ஞானவா.நிருவா.11);.

     [Skt.{} → த.கிராமியம்.]

கிராம்

 கிராம் kirām, பெ.(n.)

   கடிவாளம் (பிங்.);; bridle.

     [Skt.{} → த.கிராம்.]

கிராம்பாணி

 கிராம்பாணி kirāmbāṇi, பெ.(n.)

   கிராம்பு வடிவிலான ஆணி வகை; nail resembling a clove.

த.வ. இலவங்கவடிவாணி.

     [கிராம்பு + அணி.]

கிராம்பு

கிராம்பு kirāmbu, பெ.(n.)

   1. இலவங்கம் (திவா.);; clove.

   2. கிராம்பு (இலவங்கம்); மரம் (சீவக.1901);; clove-tree.

     [U.qaranful → த.கிராம்பு.]

     [P]

கிராயடி-த்தல்

கிராயடி-த்தல் kirāyaṭittal,    4 செ.கு.வி.(w.i.)

   புற்பற்றை போடுதல்; to turf(செ.அக.);.

     [கிராய்+அடித்தல்.]

கிராயது

 கிராயது kirāyatu, பெ.(n.)

   செடிவகை; chiretta – Swertia chirata (செ.அக.);.

கிராய்

கிராய் kirāy, பெ.(n.)

   1. புற்காடு; turf.

   2. கருஞ்சேற்று நிலம்; a kind of soil in

 agricultural track, black and marshy (செ.அக.);.

     [கிறு-கிறாய் – கிராய்.]

கிராய்த்தல்

கிராய்த்தல் kirāyttal,    11 செ.கு.வி.(v.i.)

   சுவர் முதலியவற்றைத் தேய்த்துத் துலக்குதல்; to make level and smooth by rubbing, polishing (செ.அக.);.

     [சிராய் – கிராய்.]

கிராவாதி

 கிராவாதி kirāvāti, பெ.(n.)

   இரும்பு (யாழ்.அக.);; iron.

த.வ. இரும்பொன்.

கிரி

கிரி1 kiri, பெ.(n.)

   பன்றி; hog-boar.

     “கிரியுங் கிரியும் பேரையுஞ் சீரையுங் கேட்டு” (வெங்கைக்கோ.122);.

     [Skt.kiri → த.கிரி.]

     [P]

 கிரி2 kiri, பெ.(n.)

   மலை; hill, mountain.

     “கொண்டல்கொள் கிரி” (ஞான.50, 10);.

     [Skt.giri → த.கிரி.]

 கிரி3 kiri, பெ.(n.)

   பிணையாளி; hostage.

     “கிரியிருக்கிறவன்”.

     [Perh.கரி → த.கிரி.]

கிரிகிரி

 கிரிகிரி girigiri, பெ.(n.)

   மருட்டுப் பன்றி (திவா.);; wild hog.

த.வ. காட்டுப்பன்றி.

     [Skt. giri+kiri → த.கிரிகிரி.]

கிரிகை

கிரிகை1 girigai, பெ.(n.)

கிரியை பார்க்க;see kiriyai.

     [Skt.{} → த.கிரிகை.]

கிரிசன்

கிரிசன் kirisaṉ, பெ.(n.)

   சிவன்;{}, as dwelling in Mt. {}.

     “கிரிசனை யுன்னி” (பாரத.அருச்சுனன்றவ.26);.

     [Skt.{} → த.கிரிசன்.]

கிரிசம்

 கிரிசம் kirisam, பெ.(n.)

   மென்மை (யாழ்.அக.);; slenderness, thinness, tenderness.

த.வ. இளந்தை.

     [Skt.krsa → த.கிரிசம்.]

கிரிசரம்

 கிரிசரம் kirisaram, பெ.(n.)

   மலையிற் பிறந்த யானை (திவா.);; elephant, as born in mountain.

த.வ. மலையானை.

     [Skt.giri+cara → த.கிரிசரம்.]

கிரிசு

 கிரிசு kirisu, பெ.(n.)

கிரிசுக்கத்தி பார்க்க;see {}.

     [T.kirusu → த.கிரிசு.]

கிரிசுக்கத்தி

 கிரிசுக்கத்தி kirisukkatti, பெ.(n.)

   குறுவாள்; malay dagger, small double edged sword.

த.வ. சூரிக்கத்தி.

     [கிரிசு+கத்தி.]

     [Skt.kirisu → த.கிரிசு.]

     [P]

கிரிசுவா

 கிரிசுவா kirisuvā, பெ.(n.)

   தக்கசன் மருகன்; son in law of {} (அபி.சிந்.);.

கிரிசை

கிரிசை1 kirisai, பெ.(n.)

   மலைமகள்;{}, as born of the himalaya.

     “பார்ப்பதியே வம்பறு கிரிசை” (திருவானைக்.கோள்செங்.81);.

     [Skt.giri-{} → த.கிரிசை.]

 கிரிசை2 kirisai, பெ.(n.)

கிரியை பார்க்க;see kiriyai.

கிரிச்சம்

கிரிச்சம் kiriccam, பெ.(n.)

   வருத்தம், துன்பம்; difficulty, trouble, hardship.

     “காளைநீ கிரிச்சமெல்லாங் கழித்தி” (கம்பரா.திருமுடி.28);.

த.வ. ஏதம்.

     [Skt.krcchra → த.கிரிச்சம்.]

கிரிச்சரம்

கிரிச்சரம் kiriccaram, பெ.(n.)

கிருச்சிரம் பார்க்க;see kirucciram.

     “கிரிச்சர மென்ப மன்னே” (காசிக.வியாதன்.சாப.14);.

     [Skt.krcchra → த.கிரிச்சரம்.]

கிரிச்சரரோகம்

 கிரிச்சரரோகம் kiriccararōkam, பெ.(n.)

   சிறுநீர் நோய் வகை (சீவரட்.);; a urinary disease.

     [Skt.krcchra+ → த.கிரிச்சரரோகம்.]

கிரிச்சிரம்

கிரிச்சிரம் kiricciram, பெ.(n.)

கிருச்சிரம் பார்க்க;see kirucciram.

     “சாந்திராயண கிரிச்சிரம் (காஞ்சிப்பு.சிவபு.57);.

     [Skt.krcchra → த.கிரிச்சிரம்.]

கிரிச்சிரீட்டம்

 கிரிச்சிரீட்டம் kiriccirīṭṭam, பெ.(n.)

கிரிச்சரீடம் பார்க்க (யாழ்.அக.);;see {}.

கிரிட்டணம்

 கிரிட்டணம் kiriṭṭaṇam, பெ.(n.)

   உறைப்பு (யாழ்.அக.);; pungency.

கிரிட்டம்

 கிரிட்டம் kiriṭṭam, பெ.(n.)

கிரிட்டணம் பார்க்க;see {}.

கிரிதுர்க்கம்

கிரிதுர்க்கம் kiridurkkam, பெ.(n.)

   மலையாலான அரண்; hill fort, mountain stronghold.

     “பேரரணான கிரிதுர்க்க நீக்குதல்” (ஒருதுறைக்.41);.

த.வ.மலையரண்.

     [Skt.giri+durga → த.கிரிதுர்க்கம்.]

கிரிபுட்பகம்

 கிரிபுட்பகம் giribuṭbagam, பெ.(n.)

   நறும் புகைத்தி (சாம்பிராணி);; benzoin (சா.அக.);.

கிரிப்பிரதட்சிணம்

 கிரிப்பிரதட்சிணம் kirippiradaṭciṇam, பெ.(n.)

   இறைவன் உறையும் நல்லிடமாய் உள்ள மலையை வலம் வருகை; going round a sacred hill from left to right.

த.வ. மலைவலம்.

     [Skt.giri+piradatcina → த.கிரிப் பிரதட்சிணம்.]

கிரிமல்லிகை

கிரிமல்லிகை girimalligai, பெ.(n.)

   1. கசப்பு வெட்பாலை (மரவகை); (பதார்த்த.235);; consessibark.

   2. நீண்ட மரமல்லிகை; Indian cordk, Millingtonia hortensis.

த.வ. காட்டுமல்லிகை.

     [கிரி+மல்லிகை.]

     [Skt.giri → த.கிரி.]

கிரிமிஞ்சி

 கிரிமிஞ்சி kirimiñji, பெ.(n.)

   ஒருவகைச் சிவப்புச் சாயம்; cochineal, the dried female insect; scarlet dyestuff.

     [U.qirmiz → த.கிரிமிஞ்சி.]

கிரிமிஞ்சிப்புழு

 கிரிமிஞ்சிப்புழு kirimiñjippuḻu, பெ.(n.)

   புழு வகை; cochineal insect, Coccus cacti.

     [கிரிமிஞ்சி+புழு.]

     [Skt.qirmiz → த.கிரிமிஞ்சி.]

கிரியன்

 கிரியன் kiriyaṉ, பெ.(n.)

   சேரன் (யாழ்.அக.);; the {}.

கிரியாங்கக்கட்டளை

 கிரியாங்கக்கட்டளை kiriyāṅgakkaṭṭaḷai, பெ.(n.)

   நடப்பு நெறி (சடங்கு விதி);; ceramonials.

     [கிரியாங்கம் + கட்டளை.]

     [Skt.kriya → த.கிரியா.]

கிரியாசக்தி

கிரியாசக்தி kiriyācakti, பெ.(n.)

   ஐந்து (பஞ்ச); ஆற்றல்களுள் ஒன்றாகி உலகப் படைப்புக்களைச் செய்து, அச்செயல்களுக்கு ஈடாக உள்ளுணர்வுகளை ஆதன்களுக்குக் கொடுக்குஞ் சிவஆற்றல் (சி.சி.1, 63);;{} energy which provides the souls with gross and subtle bodies and with experience-planes according to their karma, one of {}.

த.வ. ஆக்கசத்தி.

     [கிரியா+சத்தி.]

     [Skt.{} → த.கிரியா.]

கிரியாசைவம்

கிரியாசைவம் kiriyācaivam, பெ.(n.)

   பதினாறு வகை சிவனிய சமயங்களுள் செயல்களையே முகாமையாகக் கொள்ளுஞ் சமயம் (த.நி.போ.256);; a saiva sect which gives prominence to rites and ceremoneis, one sect of 16 {}.

     [Skt. kriya+{} → த.கிரியாசைவம்.]

கிரியாதிகாரன்

 கிரியாதிகாரன் kiriyātikāraṉ, பெ.(n.)

   பிள்ளையார் (யாழ்.அக.);; God {}.

     [Skt.{} → த.கிரியாதிகாரன்.]

கிரியாதீக்கை

 கிரியாதீக்கை kiriyātīkkai, பெ.(n.)

கிரியாவதி பார்க்க;see {}.

     [Skt.{} → த.கிரியா. கிரியா + திக்ஷை → தீக்கை.]

கிரியாத்து

 கிரியாத்து kiriyāttu, பெ.(n.)

   செடிவகை; chiretta.

     [Skt.{} → த.கிரியாத்து.]

கிரியாபதம்

 கிரியாபதம் kiriyāpadam, பெ.(n.)

   வினைமுற்றுச் சொல்; finite verb, as the word denoting action.

     [கிரியா+பதம்.]

     [Skt.{} → த.கிரியா.]

கிரியாபாதம்

 கிரியாபாதம் kiriyāpātam, பெ.(n.)

   சிவாகமத்தில் பராபராக்கிரியைகளின் வகைகளைக் கூறும் பகுதி; the section of the {}, which deals with the modes of worship.

     [கிரியா+பாதம்.]

     [Skt.{} → த.கிரியா.]

கிரியாபூசை

 கிரியாபூசை kiriyāpūcai, பெ.(n.)

   சிவாகமத்தில் கூறியுள்ள வழிபாட்டுமுறை; the worship offered to {} through kiriyai.

     [கிரியா+பூசை.]

     [Skt.{} → த.கிரிய.]

கிரியாமார்க்கம்

 கிரியாமார்க்கம் kiriyāmārkkam, பெ.(n.)

   முத்தியடைவதற்கு வழி வகையான (உபாயம்); செயல்கள்; rites and ceremonies as the means to attain salvation.

     [Skt.{}+{} → த.கிரியாமார்க்கம்.]

கிரியாலோபம்

 கிரியாலோபம் kiriyālōpam, பெ.(n.)

   வேத ஒழுங்கு நடப்பை (வைதீகச் சடங்கு); கடைப்பிடிக்கும் போது சுருதி முதலியவை உறுப்புகளால் செய்யும் செயல்களில் நேருங்குறை; omission to perform duties ordained by {}, etc.,

     [Skt.{}+{} → த.கிரியாலோபம்.]

கிரியாவதி

கிரியாவதி kiriyāvadi, பெ.(n.)

   குண்டல மண்டலாதிகளையும் மறை(வேதி);களையும் புறத்தே அமைத்து ஆகமத்திற் கூறியபடி செய்யும் ஔத்திரி தீக்ஷை வகை (சி.சி.8, 3, சிவாக்.);; initiatory ceremony in which the guru actually performs the necessary rites, as dist. fr. {}, a kind of auttiri-{}.

     [Skt.{} → த.கிரியாவதி.]

கிரியாவான்

கிரியாவான்1 kiriyāvāṉ, பெ.(n.)

   ஒழுங்கே முள்ளவன்; one who duly performs his duties as ordained in Hindu {}.

த.வ. நெறிமுறையாளன்.

     [Skt.{} → த.கிரியாவான்.]

 கிரியாவான்2 kiriyāvāṉ, பெ.(n.)

   மனத்தால் பூசனை செய்பவன் (ஞானபூசா.14, உரை);; one who mentally worships God.

     [Skt.{} → த.கிரியாவான்.]

கிரியாவுத்திரி

 கிரியாவுத்திரி kiriyāvuttiri, பெ.(n.)

கிரியாவதி பார்க்க;see {}.

கிரியாவூக்கி

 கிரியாவூக்கி kiriyāvūkki, பெ.(n.)

   தான் எந்த வகை மாற்றத்திற்கும் உள்ளாகாமல் தான் சேர்ந்துள்ளதில் வேதியியல் மாற்றத்தைத் தூண்டுவதற்கான பொருள்; catalyst.

த.வ. செயலூக்கி.

     [Skt.{} → த.கிரியா.]

கிரியேந்திரியம்

 கிரியேந்திரியம் kiriyēndiriyam, பெ.(n.)

   செயற் கருவிகள் அதாவது ஐவகைப் புலன்கள்; organs of motor action and they are so called from their five different actions in the body (சா.அக.);.

     [கிரியா + இந்திரியம்.]

கிரியை

கிரியை kiriyai, பெ.(n.)

   1. செய்கை; act, action, deed.

   2. சிவனை மறைகளில் கூறியவாறு புறத்தாலும், அகத்தாலும் வழிபடுகை (சி.போ.பா.359);; second of the fourfold means of attaining salvation, which consists in worshipping {} with rites and ceremonies prescribed in the {}.

   3. இறந்தோர் பொருட்டு செய்யும் செய்கை; funeral rites and solemnities, ceremony of offering oblations to the deceased ancestors.

   4. தாளப் பிராணத்தொன்று; mode of measuring time, one of ten {}.

   5. வினை; verb.

   6. கிரியாசத்தி பார்க்க;see {}.

   7. கிரியாவதி பார்க்க (சி.சி.8, 3);;see {}.

த.வ. செயல்.

     [Skt.{} → த.கிரியை.]

கிரியைகெடு-தல்

கிரியைகெடு-தல் giriyaigeḍudal,    4 செ.கு.வி. (v.i.)

   ஒழுங்கறுதல்; to be disorderly. solvenly. destitute of good conduct, irregular in habits.

     “கிரியை கெட்டவன்”.

     [கிரியை+கெடு-,]

     [Skt.kriya → த.கிரியை.]

கிரியைக்கேடு

 கிரியைக்கேடு kiriyaikāṭu, பெ.(n.)

   முறைகேடு; slovenliness, debauchery, disorderliness.

     [கிரியை+கேடு.]

     [Skt.kriya → த.கிரியை.]

கிரியையிற்கிரியை

கிரியையிற்கிரியை kiriyaiyiṟkiriyai, பெ.(n.)

   சிவாகமத்திற் கூறிய வாலிப்பு முறைப்படி (சுத்தி முன்னாக); சிவகுறி (சிவலிங்கம்); வடிவிற் செய்யும் பூசனை (சி.போ.பா.பக்.357);; purificatory ceremonies enjoined in {}.

     [Skt.{}+{} → த.கிரியையிற்கிரியை.]

கிரியையிற்சரியை

கிரியையிற்சரியை kiriyaiyiṟcariyai, பெ.(n.)

   சிவபூசனைக்கு வேண்டப்படும் துணைப் பொருட்களெல்லாம் செய்கை (சி.போ.பா.பக்.357);; collecting materials for the worship of {}.

     [Skt.{}+{} → த.கிரியையிற்சரியை.]

கிரியையில்ஞானம்

கிரியையில்ஞானம் kiriyaiyilñāṉam, பெ.(n.)

   மனத்தால் பூசனை செய்யும் பொழுது நிகழும் நுகர்வு உணர்வு (சி.பொ.பா.8, 1, 2, பக்.358);; ecstatic condition during mental worship.

     [Skt.kriyayil+{} → த.கிரியையில் ஞானம்.]

கிரியையில்யோகம்

கிரியையில்யோகம் kiriyaiyilyōkam, பெ.(n.)

   மனத்தால் செய்யப்படும் பூசனை (சி.போ.பா.8, 1, 2, பக்.358);; mental worship of {}.

     [Skt.{}+{} → த.கிரியையில்யோகம்.]

கிரிராசன்

 கிரிராசன் kirirācaṉ, பெ.(n.)

   பனி (இமய); மலை (பிங்.);;{}, as the king of mountains.

     [கிரி+ராசன்.]

     [Skt.giri → த.கிரி.]

கிரிராளி

 கிரிராளி kirirāḷi, பெ.(n.)

   பச்சைக் கருப்பூரம்; crude camphor (சா.அக.);.

கிரிவாணம்

 கிரிவாணம் kirivāṇam, பெ.(n.)

   நீலாஞ்சனக் கல்; antimony.

     [Skt.kiri+ → த.கிரிவாணம்.]

கிரீசன்

 கிரீசன் kirīcaṉ, பெ.(n.)

   சிவன் (பிங்.);;{}, as lord of Mt.Kailasa.

     [Skt.giri+{} → த.கிரீசன்.]

கிரீச்செனல்

 கிரீச்செனல் kirīcceṉal, பெ.(n.)

   ஓர் ஒலிக்குறிப்பு; onom, signifying creaking sound.

     [க்ரீச் + எனல்.]

கிரீடதாரணம்

 கிரீடதாரணம் kirīṭatāraṇam, பெ.(n.)

   முடிசூடுதல்; crowning, coronation.

     [கிரீடம்+தாரணம்.]

     [Skt.{} → த.கிரீடம்.]

கிரீடதாரி

 கிரீடதாரி kirīṭatāri, பெ.(n.)

   முடிவேய்ந்தோன்; one who wears a diadem, crowned prince, kind.

     [Skt.{}+{} → த.கிரீடதாரி.]

கிரீடம்

கிரீடம்1 kirīṭam, பெ.(n.)

   மணிமுடி (திவா.);; crown, diadem.

     [Skt.{} → த.கிரீடம்.]

     [P]

கிரீடாதிபதி

 கிரீடாதிபதி kirīṭādibadi, பெ.(n.)

   முடி சூடிய மன்னன்; crowned king.

     [Skt.{}+{} → த.கிரீடாதிபதி.]

கிரீடாபர்வதம்

 கிரீடாபர்வதம் kirīṭāparvadam, பெ.(n.)

   விளையாடுவதற்கென அமைக்கப் பெற்ற செய்குன்று; mound erected for pastime.

     [Skt.{}+பர்வதம் → பருவதம்.]

கிரீடாப்பிரமவாதி

கிரீடாப்பிரமவாதி kirīṭāppiramavāti, பெ.(n.)

   உலகத்திலுள்ள தோற்றங்களெல்லாம் முழுமுதற் பொருளி (பிரமத்தி);ன் விளையாட்டென்று எடுத்துரைக்கும் சமயத்தான் (தத்துவநிஜா.94);; a sect of {} who hold that all the manifestations in the universe are but the sport of brahman.

கிரீடி

கிரீடி1 kirīṭi, பெ.(n.)

   1. அருச்சுனன் (திவா.);; Arjuna.

   2. மணிமுடி அணிந்த மன்னன்; king.

     [Skt.{} → த.கிரீடி.]

 கிரீடி2 kirīṭittal,    11 செ.கு.வி.(v.i.)

   1. விளையாடுதல்; to sport, play.

     “கிரீடிக்கும் பாடும்” (பதினொ.பொன்வண்.47);.

   2. புணர்தல்; to copulate.

     [Skt.{} → த.கிரீடி2-த்தல்.]

கிரீடை

கிரீடை kirīṭai, பெ.(n.)

   1. விளையாட்டு; play, sport, amusement.

   2. மகளிர் விளையாட்டு (திவா.);; pastime of women.

   3. புணர்ச்சி (சூடா.);; copulation, coition.

     [Skt.{} → த.கிரீடை.]

கிரீட்டுமம்

 கிரீட்டுமம் kirīṭṭumam, பெ.(n.)

   முதுவேனிற் காலம் (பிங்.);; hot season, the months of {} and {}.

     [Skt.{} → த.கிரீட்டுமம்.]

கிரீட்மருது

 கிரீட்மருது kirīṭmarudu, பெ.(n.)

   முதுவேனிற் காலம்; summer, the months of {} and {}, one of six rutu.

     [Skt.{} → கிரீட்மருது.]

கிரீதம்

கிரீதம் kirītam, பெ.(n.)

   மென் சுண்ணம்; chalk (சா.அக.);.

 கிரீதம் kirītam, பெ.(n.)

   பெற்றோரிடமிருந்து விலைக்கு வாங்கப்பட்ட தன்னேற்பு (சுவீகார);ப் புதல்வன் (ஏலா.31);; son, purchased from his natural parents and adopted, one of 12 puttiran.

     [Skt.{} → த.கிரீதம்.]

கிரீவநாடி

 கிரீவநாடி kirīvanāṭi, பெ.(n.)

   கழுத்து நாடி; carotid artery (சா.அக.);.

     [கிரீவம் + நாடி.]

கிரீவம்

 கிரீவம் kirīvam, பெ.(n.)

   கழுத்து (திவா.);; neck.

     [Skt.{} → த.கிரீவம்.]

கிருககருசம்

 கிருககருசம் girugagarusam, பெ.(n.)

   குழந்தைகளைத் தாக்கும் ‘கொல்’ எனும் இருமலும், துன்பமாக மூச்சு விடுகையும்; a spasmodic state of the glottis, specially characterised by crowing inspiration, occasioned by the narrowing of the glottis (சா.அக.);.

     [கிருகம் + கருசம்.]

கிருகசாரி

கிருகசாரி girugacāri, பெ.(n.)

   இல்லற நிலையிலுள்ளவன்; house holder.

     “பேரறமோம்கிடுங் கிருகசாரியை யூட்டிய கேண்மையர்” (சிவதரு.கோபுர.179);.

த.வ. இல்லறத்தான்.

     [Skt. {} → த.கிருகசாரி.]

கிருகசுதி

 கிருகசுதி girugasudi, பெ. (n.)

   இல்லத்தரசி; married woman.

     [Skt. grha+stha → த. கிரகசுதி.)

கிருகசுவரம்

 கிருகசுவரம் girugasuvaram, பெ. (n.)

   எடுப்புப்பண்ணோசை; initial note of a melody type.

     [Skt. grha + svara → த. கிரகசுவரம்.]

கிருகச்சித்திரம்

 கிருகச்சித்திரம் girugaccittiram, பெ.(n.)

   குடும்பச் சச்சரவு; family dissension.

த.வ. குடும்பச் சண்டை.

     [Skt. grha+chidra → த.கிருகச்சித்திரம்.]

கிருகத்தன்

கிருகத்தன் girugattaṉ, பெ.(n.)

   1. இல்வாழ்வான்; householder, opne in the second stage of life or {}.

   2. சிறப்பான நிலையிலுள்ளவன்; honest, worthy man; man of status.

த.வ. இல்லறத்தாள்.

     [Skt.gr ha-stha → கிருகஸ்தன் → த.கிருகத்தன்]

கிருகத்தம்

 கிருகத்தம் girugattam, பெ.(n.)

   நான்கு வகையாகக் கூறப்படும் நிலைகளுள் ஒன்றான இல்லறநிலை; life of a householder, one of four {}.

     [Skt.grha-stha → த.கிருகத்தம்.]

கிருகபதி

கிருகபதி1 girugabadi, பெ.(n.)

   1. வீட்டுத் தலைவன்; master of the house.

   2. இல்லறத்தான்; house holder.

     “பரிகாரங் கிருகபதிக்கும் பிரமசரிக்கும் பகர்ந்திடுவாம்” (சிவதரு.பரிகார.2);.

த.வ. குடும்பத்தலைவன்.

     [Skt. gr ha+ → த.கிருகபதி.]

 கிருகபதி2 girugabadi, பெ.(n.)

   ஒரு நெருப்புக் கடவுள்; God of fire, fire God.

த.வ. அங்கியங்கடவுள்.

கிருகப்பிரதிட்டை

 கிருகப்பிரதிட்டை girugappiradiṭṭai, பெ.(n.)

   புது வீடு கட்டிக் கொடுத்து ஏழைக் குடும்பத்தைக் குடியேற்றுகை; settling a poor family by providing it with house, provisions, etc.,

த.வ. குடிபுகல்.

     [Skt.gr ha+ → த.கிருகப்பிரதிட்டை.]

கிருகப்பிரவேசம்

கிருகப்பிரவேசம் girugappiravēcam, பெ.(n.)

   1. புது வீட்டிற் குடிபுகும் போது செய்யும் நடப்பு (சடங்கு);; ceremony performed when occupying a newly built house.

   2. மணப்பெண்ணைக் கணவன் வீட்டிற்கு முதன் முறை அழைத்துக் கொள்ளும்போது செய்யும் நடப்பு (சடங்கு);; ceremony performed when a bride is first taken to her husband’s house.

த.வ.புதுமனைபுகுவிழா.

     [Skt.gr ha+{} → த.கிருகப்பிரவேசம்.]

கிருகம்

கிருகம்1 girugam, பெ.(n.)

   வீடு; house.

     “கிருகத்தின் மைந்தர்கண் மேவுறாமையில்” (விநாயகபு.20, 10);.

த.வ. மனை, இல்.

     [Skt.grha → த.கிருகம்.]

 கிருகம்2 girugam, பெ.(n.)

   மிடறு (யாழ்.அக.);; throat.

கிருகரன்

கிருகரன் girugaraṉ, பெ.(n.)

   பசி, சினம் முதலியவற்றை உண்டாக்கும் பத்து வகைக் காற்றுகளுள் ஒன்று (சிலப்.3, 26, உரை);; a vital air of the body, causing hunger, anger, etc., one of {}.

     [Skt.kr kara → த.கிருகரன்.]

கிருகவாயில்

 கிருகவாயில் girugavāyil, பெ.(n.)

   சோறு, தண்ணீர் முதலியவை வாயின் வழியாக இறங்கும் குழாய்; the passage in the neck by which food and water are carried through into the stomach; carrier of food and drink, Oesophagus or gullet (சா.அக.);.

த.வ. உணவுக்குழாய்.

     [கிருகம் + வாயில்.]

     [Skt.grha → த.கிருகம்.]

கிருகாராதனை

 கிருகாராதனை kirukārātaṉai, பெ.(n.)

   வீட்டுத் தெய்வ வழிபாடு; worship in the house.

த.வ. மனைத் தெய்வவழிபாடு.

     [Skt.{} → த.கிருகாராதனை.]

கிருகிணி

 கிருகிணி girugiṇi, பெ.(n.)

   மனைவி; mistress of the house, wife.

த.வ. இல்லாள்.

     [Skt.gr hini → த.கிருகிணி.]

கிருசம்

கிருசம்1 kirusam, பெ.(n.)

   இளைப்பு (சூடா.);; leanness, thinness, weakness.

த.வ. இளைப்பு நோய்.

     [Skt.krca → த.கிருசம்.]

 கிருசம்2 kirusam, பெ.(n.)

   1. உழவு; ploughing.

   2. கலப்பை; plough.

   3. கொழு; ploughshare.

     [P]

கிருசயம்

 கிருசயம் kirusayam, பெ.(n.)

   மலைப்பூவரசு; hill portia (சா.அக.);.

கிருசரான்னம்

கிருசரான்னம் kirusarāṉṉam, பெ.(n.)

   சோற்றுடன் எள்ளுப் பொடி கலந்த உணவு (சைவ.பொது.544, உரை);; a dainty made of sesamam and rice.

த.வ.எள்ளுச்சோறு, எட்சோறு.

     [Skt.krsara+anna → த.கிருசரான்னம்.]

கிருசரோகம்

கிருசரோகம் kirusarōkam, பெ.(n.)

   உடலை வற்ற வைத்து ஒடுக்கும் நோய் (பைஷஜ.230);; emaciating disease.

த.வ. உயிர்க்கொல்லிநோய்.

     [Skt.{}+{} → த.கிருசரோகம்.]

கிருசாட்சம்

 கிருசாட்சம் kirucāṭcam, பெ.(n.)

   சிலந்தி (யாழ்.அக.);; spider.

     [P]

கிருசாணு

கிருசாணு kirucāṇu, பெ.(n.)

   1. பவளக் கொடி; coral reef.

   2. நெருப்பு; fire (சா.அக.);.

கிருசாநாசி

 கிருசாநாசி kirucānāci, பெ.(n.)

   மெல்லிய மூக்கு; a thin nose (சா.அக.);.

த.வ. இல்லிமூக்கு.

கிருசாந்தன்

 கிருசாந்தன் kirucāndaṉ, பெ.(n.)

   நெருப்பு; fire (சா.அக.);.

     [கிரு + சாந்தன்.]

கிருசி

கிருசி kirusi, பெ.(n.)

   1. வேளாண்மை; cultivation of soil, tillage, agriculture.

   2. முயற்சி; effort, activity.

த.வ. வெள்ளாண்மை.

     [Skt.{} → த.கிருசி.]

கிருசிகன்

 கிருசிகன் girusigaṉ, பெ.(n.)

   உழவன்; cultivation, ryot, farmer.

த.வ. ஏருழவன்.

     [Skt.{} → த.கிருசிகன்.]

கிருச்சினம்

 கிருச்சினம் kirucciṉam, பெ.(n.)

கிரிச்சரம் பார்க்க;see kiriccaram (சா.அக.);.

கிருச்சிரம்

கிருச்சிரம் kirucciram, பெ.(n.)

   1. கழுவாயாகக் (பிராயச்சித்தமாக); கடைப்பிடிக்கப்படும் நோம்பு; religious observance for the expiation of sin.

     “கிருச்சிரஞ் சாந்தபன முதலரிதாய விரதம்” (பிரபோத.13, 19);.

   2. நீர்ச்சுருக்கு நோய்; urethral stricture.

த.வ. நேர்ந்த நோன்பு.

     [Skt.krcchra → த.கிருச்சிரம்.]

கிருச்சிராகரம்

 கிருச்சிராகரம் kiruccirākaram, பெ.(n.)

   கலிங்க நாட்டில் உள்ள ஒரு தூய நீர்த்துறை; sacred bath-ghat in kalinga (அபி.சிந்.);.

கிருச்சிரோன்மீலனவர்த்தமம்

 கிருச்சிரோன்மீலனவர்த்தமம் kiruccirōṉmīlaṉavarttamam, பெ.(n.)

   ஒரு கண் நோய்; a disease of the eye.

     [கிருச்சிரோன் + மீலன + வர்த்தமம்.]

கிருட்டவிரணம்

 கிருட்டவிரணம் kiruṭṭaviraṇam, பெ.(n.)

   ஆறாத காயம் அல்லது புண்; a wound or sore not completely healed up (சா.அக.);.

த.வ. ஆறாப்புண்.

     [கிருட்ட + விரணம்.]

     [Skt.grsti+virana → த.கிருட்டவிரணம்.]

கிருட்டி

கிருட்டி1 kiruṭṭi, பெ.(n.)

   தலையீற்றுப் பசு (சூடா.);; young cow that has calved once.

த.வ. தலையீற்று ஆ(ன்);.

     [Skt.grsti → த.கிருட்டி.]

 கிருட்டி2 kiruṭṭi, பெ.(n.)

   பன்றி; hog.

     “எதிர்த்த கிருட்டியின்” (அரிச்.பு.வேட்டஞ்.70);.

த.வ. கேழல்.

     [Skt. ghrsti → த.கிரட்டி.]

 கிருட்டி3 kiruṭṭi, பெ.(n.)

   1. கொடி வகை; square stalked vine.

   2. பறவை வகை (பதார்த்த.893);; a kind of bird.

 கிருட்டி4 kiruṭṭi, பெ.(n.)

   1. அறிஞன்; wiseman.

   2. வேள்வி செய்தவன்; one who has performed a sacrifice.

த.வ. வல்லுநன்.

கிருட்டிகம்

 கிருட்டிகம் giruṭṭigam, பெ.(n.)

   கொட்டையில்லா முந்திரிக் கொடி; creeper of seedless raisins (சா.அக.);.

த.வ. கொடிமுந்திரி.

     [கிருட்டி + அகம்.]

கிருட்டிசாகியம்

 கிருட்டிசாகியம் kiruṭṭicākiyam, பெ.(n.)

   கடற்பழம் என்னும் பெயருடைய மரம்; south sea island bottle-brush tree (சா.அக.);.

கிருட்டிசாரம்

 கிருட்டிசாரம் kiruṭṭicāram, பெ.(n.)

   தீம்பிரண்டை; a variety of sweet adamant creeper (சா.அக.);.

த.வ. இனிப்புப் பிரண்டை.

     [கிருட்டி + சாரம்.]

கிருட்டிணகந்தகம்

 கிருட்டிணகந்தகம் giruṭṭiṇagandagam, பெ.(n.)

   கிடைப்பதற்கு அரிதான ஒரு வகைக் கறுப்புக் கந்தகம்; a black or dark and rare variety of sulphur (சா.அக.);.

த.வ. கருங்கந்தகம்.

     [கிருட்டிணம் + கந்தகம் – கிருட்டிணகந்தகம் வண்ணம்பற்றி வந்த சொல்லாகும்.]

கிருட்டிணகந்தம்

கிருட்டிணகந்தம் giruṭṭiṇagandam, பெ.(n.)

   1. கறுப்பு அல்லி; black lotus, Nymphae tringra.

   2. முருங்கை; moringa-Hyarin-thera moringa (சா.அக.);.

     [கிருட்டிணம் + கந்தம்.]

கிருட்டிணகரித்துருமம்

 கிருட்டிணகரித்துருமம் giruṭṭiṇagaritturumam, பெ.(n.)

   பேய்த் தும்மை; wild leucas (சா.அக.);.

த.வ. கருந்தும்பை.

     [கிருட்டிணம் + கரி + துருமம்.]

கிருட்டிணகருமம்

கிருட்டிணகருமம்1 giruṭṭiṇagarumam, பெ.(n.)

   வெள்ளை விழுந்த காயத் தழும்பைக் கறுப்பாக்குகை; the blackening of a white cicatrix, due to a bad or defective granulation (சா.அக.);.

த.வ. காயமாற்றி.

     [கிருட்டிணம் + கருமம்.]

 கிருட்டிணகருமம்2 giruṭṭiṇagarumam, பெ.(n.)

   புண்களைச் சூடிடல் அல்லது தீய்க்கை; a peculiar way of cauterising a wound or sore (சா.அக.);.

த.வ. சூட்டுக்கோல்போடுதல்.

     [கிருட்டிணம் + கருமம்.]

கிருட்டிணகர்க்கடகம்

 கிருட்டிணகர்க்கடகம் giruḍḍiṇagarggaḍagam, பெ.(n.)

   கறுப்பு நண்டு; black crab (சா.அக.);.

த.வ. கருநண்டு.

     [கிருட்டிண+கல்+கடகம்.]

கிருட்டிணகர்ப்பம்

 கிருட்டிணகர்ப்பம் giruṭṭiṇagarppam, பெ.(n.)

   ஒரு வகைப்பூடு; a kind of plat (சா.அக.);.

த.வ. கருங்கருப்பம்.

கிருட்டிணகற்பம்

 கிருட்டிணகற்பம் giruṭṭiṇagaṟpam, பெ.(n.)

   கருப்பத்திற்காக வேண்டிச் செய்யும் அயக் காந்தச் செந்தூரம்; calcined red oxide prepared with iron and magnet for purposes of rejuvenation (சா.அக.);.

த.வ. காயகற்ப செந்தூரம்.

     [கிருட்டிணம் + கற்பம்.]

கிருட்டிணகாம்போசி

 கிருட்டிணகாம்போசி kiruṭṭiṇakāmbōci, பெ.(n.)

   பூலா என்னும் ஒருவகைச் செடி; black honey shrub (சா.அக.);.

த.வ. கரும்பூலா.

கிருட்டிணகாயா

 கிருட்டிணகாயா kiruṭṭiṇakāyā, பெ.(n.)

   பனை மரம்; palm tree (சா.அக.);.

த.வ. கரும்புல், பனை.

     [P]

கிருட்டிணகுச்சம்

 கிருட்டிணகுச்சம் giruṭṭiṇaguccam, பெ.(n.)

   கண்ணில் உண்டாகும் பூ; cataract of the eye (சா.அக.);.

த.வ. கண்பூ.

கிருட்டிணகுட்டம்

 கிருட்டிணகுட்டம் giruṭṭiṇaguṭṭam, பெ.(n.)

   ஒரு வகைக் குட்ட நோய்; black leprosy.

த.வ. கருங்குட்டம்.

     [கிருட்டிணம் + குட்டம்.]

கிருட்டிணகெந்தம்

 கிருட்டிணகெந்தம் giruṭṭiṇagendam, பெ.(n.)

   பனை மரம்; palm tree (சா.அக.);.

த.வ. கரும்புல்

கிருட்டிணகெந்தா

 கிருட்டிணகெந்தா giruṭṭiṇagendā, பெ.(n.)

   முருங்கை; drum-stick tree (சா.அக.);.

த.வ. கருப்பு முருங்கை.

கிருட்டிணகேளி

 கிருட்டிணகேளி kiruṭṭiṇaāḷi, பெ.(n.)

   கொடி வகை; brazilian hogweed, Bougainvillea spectabilis.

கிருட்டிணகேழி

 கிருட்டிணகேழி kiruṭṭiṇaāḻi, பெ.(n.)

   ஒரு செடி; brazilian hog weed (சா.அக.);.

கிருட்டிணசகாயம்

 கிருட்டிணசகாயம் kiruṭṭiṇasakāyam, பெ.(n.)

   பாண்டவர்களில் ஒருவரான அருச்சுனன் (பிங்.);; Arjuna as having Krs na for his comrade.

     [Skt.krsna+ → த.கிருட்டிணசகாயன்.]

கிருட்டிணசகுனி

 கிருட்டிணசகுனி giruṭṭiṇasaguṉi, பெ.(n.)

   காக்கை; crow (சா.அக.);.

த.வ. அண்டங்காக்க.

     [கிருட்டிணம் + சகுனி.]

     [P]

கிருட்டிணசதுகம்

 கிருட்டிணசதுகம் giruṭṭiṇasadugam, பெ.(n.)

   கறுப்பு சதுக மரம்; a black variety of ‘Sadugam’ an unknown tree (சா.அக.);.

கிருட்டிணசன்னுகம்

 கிருட்டிணசன்னுகம் giruṭṭiṇasaṉṉugam, பெ.(n.)

   கறுப்புக் கடலை; black Bengal gram (சா.அக.);.

த.வ. கருங்கடலை.

     [கிருட்டிணம் + சன்னுகம்.]

கிருட்டிணசயந்தி

 கிருட்டிணசயந்தி kiruṭṭiṇasayandi, பெ.(n.)

   ஆண்டு தோறும் கண்ணன் பிறந்த நாளில் கொண்டாடப்படும் விழா; celebration of {} birthday.

     [Skt.{} → கிருட்டிணம் + செயந்தி.]

கிருட்டிணசர்ப்பம்

கிருட்டிணசர்ப்பம் kiruṭṭiṇasarppam, பெ.(n.)

   1. ஒரு வகைக் கரும்பாம்பு; a black snake.

   2. கருநாகம்; lance hooded black cobra (சா.அக.);.

த.வ. கருப்புநாகம், கருநாகம்.

     [கிருட்டிணம் + சர்ப்பம்.]

கிருட்டிணசாபம்

 கிருட்டிணசாபம் kiruṭṭiṇacāpam, பெ.(n.)

   நிலப்பனை; ground palm (சா.அக.);.

த.வ. கரும்பனை.

கிருட்டிணசாரம்

 கிருட்டிணசாரம் kiruṭṭiṇacāram, பெ.(n.)

   கறுப்புப் புள்ளிகளை உடலில் கொண்ட மான்; deer whereon the black dots in whole body (சா.அக.);.

த.வ. கரும்புள்ளிமான்.

     [P]

கிருட்டிணசாலி

 கிருட்டிணசாலி kiruṭṭiṇacāli, பெ.(n.)

   ஒரு கறுப்பு நெல்; a black variety of paddy (சா.அக.);.

த.வ. கருஞ்சாலி.

     [கிருட்டிணம் + சாலி.]

கிருட்டிணசாலிச்சம்

 கிருட்டிணசாலிச்சம் kiruṭṭiṇacāliccam, பெ.(n.)

   கறுப்பரிசி; a variety of black rice (சா.அக.);.

த.வ. கருஞ்சாலியரிசி.

கிருட்டிணசிங்குவாததோடம்

 கிருட்டிணசிங்குவாததோடம் kiruṭṭiṇasiṅguvātatōṭam, பெ.(n.)

   நாக்குக் கறுத்து இறப்பிற்கேதுவாகும் ஒரு நோய்; a fatal disease marked by the dark appearance of the tounge (சா.அக.);.

     [கிருட்டிணம் + சிங்கு + வாதம் + தோடம்.]

கிருட்டிணசீரகம்

கிருட்டிணசீரகம் giruṭṭiṇacīragam, பெ.(n.)

   சீரக வகை (பதார்த்த.1034);; black cumin, Nigella sativa.

த.வ. கருஞ்சீரகம்.

கிருட்டிணசுக்கிலை

கிருட்டிணசுக்கிலை kiruṭṭiṇasukkilai, பெ.(n.)

   கதிரவனைச் சுற்றிக் காணப்படும் ஒளியுள்ள பகுதி (செந்.10, 238);; penumbra.

த.வ. ஒளிவட்டம்.

     [Skt.{} → த.கிருட்டிணசுக்கிலை.]

கிருட்டிணசுரம்

 கிருட்டிணசுரம் kiruṭṭiṇasuram, பெ.(n.)

   ஒரு வகைக் காய்ச்சல்; a kind of fever.

த.வ. கருஞ்சுரம்.

     [கிருட்டிணம் + சுரம்.}

     [Skt.krsna → த.கிருட்டிணம்.]

இக்காய்ச்சல் ஏற்பட்டால் உடம்பில் கருப்புத் தழும்பும், நாக்கு, பல், உதடு, முதலியவை கருப்பாயும் காணப்படும் (சா.அக.);.

கிருட்டிணசூரணம்

 கிருட்டிணசூரணம் kiruṭṭiṇacūraṇam, பெ.(n.)

இரும்புத் துரு; iron rust (சா.அக.);.

த.வ. கருந்தூறு.

     [கிருட்டிணம் + சூரணம்.]

     [Skt.{} → த.கிருட்டிணசூரணம்.]

கிருட்டிணசூரிகை

 கிருட்டிணசூரிகை giruṭṭiṇacūrigai, பெ.(n.)

   பாம்பின் நஞ்சு முறியும்படிக் கொடுக்கும் ஒரு மூலிகை வேர்; the root of an unknown plant given as an antidote for snake poison (சா.அக.);.

த.வ. கருவேர்.

கிருட்டிணதுளசி

கிருட்டிணதுளசி kiruṭṭiṇaduḷasi, பெ.(n.)

   துளசி வகை (பதார்த்த.304);; purple-stalked basil, Ocimum sanctumtypica.

த.வ. கருந்துளசி.

     [கிருட்டிண(ம்); + துளசி.]

     [Skt.{} → த.கிருட்டிணம்.]

கிருட்டிணதேவராயர்

 கிருட்டிணதேவராயர் kiruṭṭiṇatēvarāyar, பெ.(n.)

   தொண்டை நாட்டுச் சிற்றரசர்; a petty king of Tondai-{} (அபி.சிந்.);.

கிருட்டிணதோடம்

 கிருட்டிணதோடம் kiruṭṭiṇatōṭam, பெ.(n.)

   ஒருவகை நச்சுக் காய்ச்சல்; typhus fever.

த.வ. கருங்காய்ச்சல்.

     [Skt.{}த.கிருட்டிணம்.]

கிருட்டிணன்

கிருட்டிணன் kiruṭṭiṇaṉ, பெ.(n.)

   1. கண்ணபிரான்; kirusna, son of {}, one of ten incarnations of visnu.

   2. கண்மணிப் பாவை; Iris of the eye.

   3. அருச்சுனன் (பிங்.);; Arjuna.

த.வ. கருங்கொண்டல்.

     [Skt.krsan → த.கிருஷ்ணன்.]

கிருட்டிணபரணி

 கிருட்டிணபரணி kiruṭṭiṇabaraṇi, பெ.(n.)

   ஒரு வகைத் துளசி; a kind of basil (சா.அக.);.

த.வ.கருந்துளசி.

     [கிருட்டிணம் + பரணி.]

கிருட்டிணப்பக்கம்

 கிருட்டிணப்பக்கம் kiruṭṭiṇappakkam, பெ.(n.)

   இருள் பக்கம்; dark half of a lunar month or the period of the waning moon.

     [கிருட்டிணம் + பக்கம்.]

     [Skt.{} → த.கிருட்டிணம்.]

கிருட்டிணமாது

 கிருட்டிணமாது kiruṭṭiṇamātu, பெ.(n.)

   கருப்புத் துளசி; black basil.

த.வ. கருந்துளசி.

     [கிருட்டிணம் + மாது.]

கிருட்டிணமிச்ரர்

 கிருட்டிணமிச்ரர் kiruṭṭiṇamicrar, பெ.(n.)

   ஒரு பார்ப்பனர்; a Brahmin (அபி.சிந்த.);.

கிருட்டிணமிருகம்

 கிருட்டிணமிருகம் giruṭṭiṇamirugam, பெ.(n.)

   கருநிறமுள்ள மான் வகை; black antelope.

கிருட்டிணமூர்த்தி

 கிருட்டிணமூர்த்தி kiruṭṭiṇamūrtti, பெ.(n.)

   கண்ணபிரான்; Lord {}

த.வ. திருமால்.

கிருட்டிணமூலி

 கிருட்டிணமூலி kiruṭṭiṇamūli, பெ.(n.)

   துளசி (மலை);; holy hasil.

கிருட்டிணயசுர்வேதம்

 கிருட்டிணயசுர்வேதம் kiruṭṭiṇayasurvētam, பெ.(n.)

   எசுர் மறையின் (வேதத்தின்); இருபகுதிகளுள் மந்திரமும், மந்திரம் அல்லாத மறை (வேத);ப் பகுதி (பிராமணம்);யும் கலந்து கிடக்கும் பகுதி; the black {}, as having the mantras and brahmanas mixed up, dist. fr.{}-{}-{}.

     [Skt.{}+{}+{} → த.கிருட்டிணயசுர்வேதம்.]

கிருட்டிணராசன்

கிருட்டிணராசன் kiruṭṭiṇarācaṉ, பெ.(n.)

   1. சூடாமணி நிகண்டில் புகழப்பட்டவன்; one who celebrated by {}.

   2. செஞ்சியை ஆண்ட மன்னன்; a king of {}.

கிருட்டிணராயன்

கிருட்டிணராயன் kiruṭṭiṇarāyaṉ, பெ.(n.)

   பதினாறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் விஜய நகரத்தை ஆண்ட முக்கியமான மன்னருள் ஒருவர்;{} the famous kind of the narasimha dynasty of vijayanagar, 1509-1530.

     “கிருட்டிண ராயன் கைபோற் கொடை மடமென்பது” (சூடா.9.10);.

கிருட்டிணவெலி

 கிருட்டிணவெலி kiruṭṭiṇaveli, பெ.(n.)

   கறுப்பு எலி; black variety of rat, Musrattas.

த.வ. காரெலி.

     [கிருட்டிணம் + எலி.]

     [Skt.krsna → த.கிருட்டிணம்.]

இது கடித்தால் அடிக்கடி அரத்தமாகக் கக்குவதோடன்றி, மழைக் காலத்தில் மிகுதியாக அரத்தம் விழும் (சா.அக.);.

     [P]

கிருட்டிணா

கிருட்டிணா1 kiruṭṭiṇā, பெ.(n.)

   இந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு ஆறு; one river in Andrapradesh, India.

கிருட்டிணாசினம்

 கிருட்டிணாசினம் kiruṭṭiṇāciṉam, பெ.(n.)

   கறுப்பு மானின் தோல்; skin of black antelope, used as a seat during religious meditation.

     [Skt.{}+{} → த.கிருட்டிணாசினம்.]

கிருட்டிணாசுரன்

 கிருட்டிணாசுரன் kiruṭṭiṇācuraṉ, பெ.(n.)

   ஓர் அரக்கன்; a giant.

கிருட்டிணாஞ்சனம்

கிருட்டிணாஞ்சனம் kiruṭṭiṇāñjaṉam, பெ.(n.)

   1. கருப்பு மை; black collyrium.

   2. கருங்குமிழம் பூ மரம்; black kandahar tree, bearing blue or black flowers (சா.அக.);.

     [கிருட்டிணம் + அஞ்சனம்.]

கிருட்டிணாட்டமி

 கிருட்டிணாட்டமி kiruṭṭiṇāṭṭami, பெ.(n.)

   கண்ணன் பிறந்த நாள்; birthday of {}, the eighth day of the dark half of the month {}.

     [Skt.{}+{} → த.கிருட்டிணாட்டமி.]

கிருட்டிணாப்பிரகம்

 கிருட்டிணாப்பிரகம் giruṭṭiṇāppiragam, பெ.(n.)

   அப்பிரக வகை; mica.

     [Skt.kr s na + abhraka → த.கிருட்டிணாப்பிரகம்.]

கிருட்டிணார்ப்பணம்

 கிருட்டிணார்ப்பணம் kiruṭṭiṇārppaṇam, பெ.(n.)

   செயலின் முடிவில் அதனைக் கண்ணனுக்குக் கொடுக்கும் தொடர்; expression used generally at the close of ablutions, rituals, etc., dedicating them to {}.

     [Skt.{}+arppana → த.கிருட்டிணார்ப்பணம்.]

கிருட்டிணை

கிருட்டிணை1 kiruṭṭiṇai, பெ.(n.)

   கதிரவனைச் சுற்றிக் காணப்படும் கருமையுள்ள பகுதி (செந். X, 238);; umbra, round the solar disc.

 கிருட்டிணை kiruṭṭiṇai, பெ.(n.)

   1. திரௌபதை; Draubadai.

   2. நான்கு வகை ஆற்றலுள் (பராசத்தியுள்); ஒன்று (சைவச.பொது.74, உரை);; a form of {}, one of 4.

     [Skt.{} → த.கிருட்டிணை.]

கிருதகன்

 கிருதகன் girudagaṉ, பெ.(n.)

   கண்ணனின் தந்தையாகிய வாசுதேவருக்குப் பத்திரையிடம் பிறந்த மகன்; son of {} from pattirai.

கிருதகிருத்தியன்

கிருதகிருத்தியன் girudagiruddiyaṉ, பெ.(n.)

   செய்தற்குரிய கடமையைச் செய்து முடித்தவன் (சிலப்.10:177, உரை);; who has done his duty.

த.வ. செய்வினையாளன்.

கிருதகோடி

 கிருதகோடி kirudaāṭi, பெ.(n.)

   அளவை நூல் இயற்றிய முனிவன்; a saint authority of logic book.

கிருதகௌசகம்

 கிருதகௌசகம் girudagausagam, பெ.(n.)

   விதர்ப்ப நாட்டிலுள்ள ஒரு பட்டணம்; ancient city in vidarpa country.

கிருதக்கினதை

 கிருதக்கினதை kirudakkiṉadai, பெ.(n.)

   நெய்ந்நன்றி கோறல்; ingratitude.

த.வ. செய்ந்நன்றிகொல்லல்.

     [Skt.{} → த.கிருதக்கினதை.]

கிருதக்கினன்

 கிருதக்கினன் kirudakkiṉaṉ, பெ.(n.)

   நன்றி கொன்றவன்; ungrateful person.

த.வ.நன்றிமறந்தவன்.

கிருதக்கிருமி

 கிருதக்கிருமி kirudakkirumi, பெ.(n.)

   நெய்யில் உண்டாகும் புழு; a worm found in putrified ghee (சா.அக.);.

த.வ. நெய்புழு.

     [Skt.krta+krmi → த.கிருதக்கிருமி.]

கிருதக்கு

 கிருதக்கு kirudakku, பெ.(n.)

   குறும்பு, போக்கிரித்தனம் (வக்கிரம்);; roguery, perveristy.

த.வ. போக்கிலித்தனம்.

     [Pkt.krtaka → த.கிருதக்கு.]

கிருதக்குளபாளிதபோசனம்

 கிருதக்குளபாளிதபோசனம் kirudakkuḷapāḷidapōcaṉam, பெ.(n.)

   சர்க்கரைப் பொங்கல்; the rice mixed with sugar.

த.வ. அக்காரவடிசில்.

     [கிருதம் + குளம் + பாளிதம் + போசனம்.]

கிருதசமகன்

 கிருதசமகன் girudasamagaṉ, பெ.(n.)

   ஒரு இருடி; a saint.

கிருதசூடன்

 கிருதசூடன் kirudacūṭaṉ, பெ.(n.)

   உச்சிக் குடுமிக்காரன் (யாழ்.அக.);; man who has a knotted lock of hair on the crown of the head.

த.வ. உச்சிக்குடுமி.

     [Skt.kr ta+ → த. கிருதசூடன்.]

கிருதஞ்ஞதை

 கிருதஞ்ஞதை kirudaññadai, பெ.(n.)

   செய் நன்றியறிகை; gratitude.

த.வ. செய்ந்நன்றிஅறிதல்.

     [Skt.{} → த.கிருதஞ்ஞதை.]

கிருதஞ்ஞன்

 கிருதஞ்ஞன் kirudaññaṉ, பெ.(n.)

   செய்நன்றி அறிபவன்; grateful person.

த.வ. செய்ந்நன்றிஉடையான்.

     [Skt.{} → த.கிருதஞ்ஞன்.]

கிருததன்வா

 கிருததன்வா kirudadaṉvā, பெ.(n.)

   கண்ணனால் வெல்லப்பட்ட மன்னன்; a king defeated by Lord {}.

கிருதன்

 கிருதன் kirudaṉ, பெ.(n.)

   செருக்குடையவன்; arrogant, insolent fellow.

த.வ. செருக்காளன்.

கிருதபாகம்

 கிருதபாகம் kirudapākam, பெ.(n.)

   நெய்யினால் செய்த மருந்து; a medicinal preparation made of ghee (சா.அக.);.

த.வ. நெய்ம்மருந்து.

     [கிருதம் + பாகம்.]

     [Skt.krta → த.கிருதம்.]

கிருதபிராயச்சித்தம்

கிருதபிராயச்சித்தம் kirudabirāyacciddam, பெ.(n.)

   ஒழுக்கக் கேட்டிற்கு நெய்யினால் வேள்வி செய்தல்; expiration, atonement, expiratory ceremoney for past sins.

     “கிருதப்ராயஸ்சித்தஞ்செய்துசுற்றராயினார்-வாரியத்துக் குடவோலை யெழுதிப்புகவிடப் பெறாததாகவும்” (உத்தரமேரூர் கல்வெட்டு, முதல் பராந்தகன், கி.பி.921);.

த.வ. கழுவாய்.

     “வழுவாய் மருங்கிற் கழுவாயுமுளவென” (புறநா.34,4);.

கிருதமண்டாது

 கிருதமண்டாது kirutamaṇṭātu, பெ.(n.)

   சிறு புள்ளடி; unifoliate trefoil-Hedysarum gangeticum (சா.அக.);.

     [கிருத+மண்டாது.]

கிருதமாலிகை

 கிருதமாலிகை kirutamālikai, பெ.(n.)

   கொன்றை; cassia – Cassia fistula (சா.அக.);.

     [கிருத+மாலிகை]

கிருதம்

கிருதம்3 kirutam, பெ.(n.)

மரவகை,

 red Indian laburnum – Cassia marginata (செ.அக.);.

     [குருதி (மாம்); – கிருதம்]

 கிருதம்1 kirudam, பெ.(n.)

   1. செய்யப்பட்டது; that which is done, made.

   2. கிருதயுகம் பார்க்க;see kiruda-yugam.

     [Skt.krta → த.கிருதம்.]

 கிருதம்2 kirudam, பெ.(n.)

   1. நெய் (திவா.);; gree.

   2. நெய் கலந்த குழம்பு வடிவான மருந்து; a medicinal preparation having ghee as the vehicle.

த.வ. நெய்ம மருந்து.

     [Skt.gr ta → த.கிருதம்.]

கிருதயுகம்

கிருதயுகம் girudayugam, பெ.(n.)

   நான்கு உகங்களுள் 17,28,000 ஆண்டு கொண்ட முதல் உகம்; the first of four yugas, golden age of the Hindus, consisting of 17,28,000 years.

     [Skt.kt ta+ → த.கிருதயுகம்.]

கிருதவன்மன்

கிருதவன்மன் kirudavaṉmaṉ, பெ.(n.)

   1. பாரதப் போரில் முதல் நாள் கேகயனுடன் போர் புரிந்தவன்; the person who quarrel with {} in {} war.

   2. இருதயன் மகன்; son of {}.

   3. தேவமீடனுக்குத் தம்பி; brother of {}.

கிருதவீரியன்

 கிருதவீரியன் kirudavīriyaṉ, பெ.(n.)

   தனகன் என்னும் மன்னனின் மகன்; son of king {}.

கிருதவேதனா

 கிருதவேதனா kirutavētaṉā, பெ.(n.)

   பேய்ப்பீர்க்கு; wild bitter gourd (சா.அக.);.

     [கிருத+வேதனா]

கிருதா

 கிருதா kirutā, பெ.(n.)

   கன்ன மீசை; ringlets on the cheeks almost touching the curls of moustache, whiskers.

     [U.{} → த.கிருதா.]

     [P]

கிருதாசி

கிருதாசி kirutāci, பெ.(n.)

   1. குசநாபன் மனைவி; wife of {}.

   2. ஒரு தேவ மகள்; a deity damsel.

   3. ஒரு தெய்வக் கணிகை; a deity harlot.

     [Skt.{} → த.கிருதாசி.]

கிருதாந்தன்

 கிருதாந்தன் kirutāndaṉ, பெ.(n.)

   இயமன் (யாழ்.அக.);; yama.

த.வ.எமன்.

     [Skt.{} → த.கிருதாந்தன்.]

கிருதாந்தம்

 கிருதாந்தம் kirutāndam, பெ.(n.)

   முடிந்த முடிவு (யாழ்.அக.);; established truth.

த.வ.கொண்முடிபு.

     [Skt.{} → த.கிருதாந்தம்.]

கிருதாமீசை

 கிருதாமீசை kirutāmīcai, பெ.(n.)

கிருதா பார்க்க;see kiruda

த.வ.கன்னமீசை.

     [கிருதா + மீசை.]

     [U.{} → த.கிருதா.]

கிருதார்த்தன்

 கிருதார்த்தன் kirutārttaṉ, பெ.(n.)

   பெரும் பேறு பெற்றவன்; one who has attained his object.

த.வ. பெரும்பேறாளன்.

     [Skt.krta+artha → த.கிருதார்த்தன்.]

கிருதாளி

 கிருதாளி kirutāḷi, பெ.(n.)

   தாளிப்பனை; talipot tree – Corypha umbraculifera (சா.அக.);.

     [கிரு+தாளி]

கிருதி

 கிருதி kirudi, பெ.(n.)

   ஓர் இசைப்பாட்டு (கீர்த்தனம்);; musical composition.

     “இரண்டு கிருதி பாடினான்”.

த.வ. இசைப்பாடல்.

     [Skt.kr ti → த.கிருதி.]

கிருதிமாசம்

 கிருதிமாசம் kirutimācam, பெ.(n.)

ஆனைத்திப்பிலி கொடிவகை

 elephant pepper climber- Scindapsus officinalis (சா.அக.);.

     [கிருதி+மாசம்]

கிருதிவந்தன்

 கிருதிவந்தன் kirudivandaṉ, பெ.(n.)

   வாசுதேவருக்குத் தேவகியிடம் பிறந்த குமரன்; son of {} and Devaki.

கிருதுப்பாகை

 கிருதுப்பாகை kiruduppākai, பெ.(n.)

   ஒரு பக்கமாக அணியும் தலைப்பாகை; turban slipped on one side of the head, heap near fixed on one side of the head.

த.வ. சாய்தலைப்பாகை.

     [கிருது + பாகை.]

     [Skt.krudi → த.கிருது.]

கிருதுவுடை

 கிருதுவுடை kiruduvuḍai, பெ.(n.)

   இயல்பல்லாத உடை; foppish dress, finery.

த.வ.செயற்கெயுடை.

     [கிருது + உடை.]

     [Skt.krtu → த.கிருது.]

கிருத்தம்

கிருத்தம் kiruttam, பெ.(n.)

   செய்யப்பட்டது; that which is done, made, produced.

     “சத்தமணித்தங் கிருத்தத் தாலெனின்” (மணிமே.29: 395);.

     [Skt. krta → த.கிருத்தம்.]

கிருத்தி

 கிருத்தி kirutti, பெ.(n.)

   தோல் (சூடா.);; skin, hide.

     [Skt.krtti → த.கிருத்தி.]

கிருத்திகாதீபம்

 கிருத்திகாதீபம் kiruttikātīpam, பெ.(n.)

   கார்த்திகை விளக்கு; lights lit on theevening of {}.

     [Skt.{} → த.கிருத்திகா.]

     [தீ → தீவம் → Skt.{} → த.தீபம்.]

     [P]

கிருத்திகை

கிருத்திகை1 giruttigai, பெ.(n.)

   1. ஏழு இருடிகளில் வசிட்டர் ஒழிந்த மற்ற அறுவரின் மனைவிமார்; six saints wives.

   2. தீக்கடவுளின் (அக்னி); மனைவி; wife of Agni.

   3. ஒரு விண்மீன்; constellation pleiades.

 கிருத்திகை2 giruttigai, பெ.(n.)

   ஒரு விண்மீன் (திவா.);; the constellation pleiades, part of {} and {}.

த.வ. கார்த்திகை.

கிருத்திமம்

கிருத்திமம்1 kiruttimam, பெ.(n.)

கிருத்தி பார்க்க;see kirutti.

 கிருத்திமம்2 kiruttimam, பெ.(n.)

   1. செயற்கையானது (சூடா.);; that which is artificial.

   2. பொய் (சூடா.);; falsehood, lie, fraud.

   3. பூதம்; a class of demons.

     “கிருத்திமவினம் பல குதித்தன கிளைத்தே” (இரகு.திக்குவி.113);.

த.வ. செய்மம்.

கிருத்தியமுறை

 கிருத்தியமுறை kiruttiyamuṟai, பெ.(n.)

   செய்முறை; modus-operandi (சா.அக.);.

த.வ. வினைமுறை.

     [கிருத்திய + முறை.]

     [Skt.krtya → த.கிருத்திய.]

கிருத்தியம்

கிருத்தியம் kiruttiyam, பெ.(n.)

   1. தொழில்; act, action, operation, functon.

     “பூதங்கள் கிருத்தியகர்த்தாவென்று” (சி.சி.1, 4, மறைஞா.);.

   2. ஆதன் மும்மலங்களை ஒழித்து வீடு பெறுவதற்குத் துணையாயிருக்கும் படைப்பு (கிருட்டி); (சி.சி.1, 36);; the five functions of God, designed by divine grace for the deliverance of the souls.

அவையாவன; சிருட்டி, திதி, சங்காரம், திரோபவம், அனுக்கிரகம் என்ற கடவுளின் ஐந்தொழில்.

   3. அபரக் கிரியை (உத்தரக் கிரியை);; funeral rites, obsequies.

த.வ. வினை.

     [Skt.krtya → த.கிருத்தியம்.]

கிருத்திரகூடம்

 கிருத்திரகூடம் kiruttiraāṭam, பெ.(n.)

   மகதநாட்டில் உள்ள மலை; a hill in {}.

     [கிருத்திர + கூடம்.]

     [Skt.krtya → த.கிருத்திர(ம்);.]

கிருத்திரசிவாதம்

கிருத்திரசிவாதம் kiruttirasivātam, பெ.(n.)

   தொடை நரம்புகளைப் பற்றிய நோய் (இங்.வை.227);; sciatica.

த.வ. தொடைநரம்பிசிவுநோய்.

     [Skt.fr harasi+{} → த.கிருத்திரசி வாதம்.]

கிருத்திரம்

 கிருத்திரம் kiruttiram, பெ.(n.)

   கழுகு (நிகண்டு);; eagle.

த.வ. பருந்து, கலுழன்.

     [Skt.gr dha → த.கிருத்திரம்.]

     [P]

கிருத்திராசுரன்

 கிருத்திராசுரன் kiruttirācuraṉ, பெ.(n.)

   ஒரு அரக்கன்; giant.

கிருத்திரிமன்

கிருத்திரிமன் kiruttirimaṉ, பெ.(n.)

   பெற்றோர் இசைவின்றி தன்னேற்பு (சுவீகார); மகனாகச் செய்து கொள்ளப்பட்டவன்; aftificial or adopted son; adult son adopted without the consent of his natural parents, one of 12 {}.

கிருத்திரிமபுத்திரன்

 கிருத்திரிமபுத்திரன் kiruttirimabuttiraṉ, பெ.(n.)

கிருத்திரிமன் பார்க்க;see {}.

     [Skt. Krtrima+ → த.கிருத்திரிமபுத்திரன்.]

கிருத்திரிமம்

கிருத்திரிமம் kiruttirimam, பெ.(n.)

   1. போலியானது; that which is artificial sham.

     “கிருத்திரிமவேடம்”.

   2. கரவடம் (வஞ்சனை);; deception, fraud.

     “கன்னியர் கிருத்திரிமத்தைக்காணரிது” (பஞ்ச.அர்த்தநா.61);.

   3. குறும்பு (சேட்டை);; mischief.

     [Skt. krtrima → தி.கிருத்திரிமம்.]

கிருத்திவாசன்

 கிருத்திவாசன் kiruttivācaṉ, பெ.(n.)

   காசியில் எழுந்தருளி இருக்கம் சிவன்; God {}.

த.வ. உலகநாயகன்.

கிருத்துக்கினம்

கிருத்துக்கினம் kiruttukkiṉam, பெ.(n.)

   1. கிந்துக்கினம் பார்க்க;see {}.

   2. புழு; worm.

     [Skt.kintughna → த.கிமித்துக்கினம்.]

கிருத்துருணி

 கிருத்துருணி kirutturuṇi, பெ.(n.)

   பம்பந்திராய்; Indian chick weed (சா.அக.);.

கிருந்தி

கிருந்தி kirunti, பெ.(n.)

   கஞ்சாங்கோரைச் செடி; a kind of plant – Ocimum album.

     [கிரந்தி – கிருந்தி]

இது 1-2 அடி உயரமிருக்கும். வீட்டுப் புறக் கடைகளிலும் குப்பைகளிலும் இது முளைத்திருக்கும். இதன் சாற்றைப் பிழிந்து குழந்தைகளுக்கு வரும் செரியாமை, காய்ச்சல், இருமல் இவைகளுக்குக் கொடுப்பார்கள். இது குடல்களுக்கும் இரைப்பைக்கும் வலுவைக் கொடுத்து செரிக்கும் தன்மையைக் கூட்டும் (சா.அக.);.

கிருனம்பீரம்

கிருனம்பீரம் kiruṉambīram, பெ.(n.)

   1. வெங்காயம்; onion.

   2. வெள்ளைப்பூண்டு; garlic (சா.அக.);.

த.வ.ஈருள்ளி.

     [கிருனம் + பீரம்.]

     [P]

கிருபணத்துவம்

 கிருபணத்துவம் kirubaṇattuvam, பெ.(n.)

   கடுங்கஞ்சத்தனம்; niggardliness, miserliness.

த.வ.கடுங்கஞ்சம்.

     [Skt.Kr pana-tva → த.கிருபணத்துவம்.]

கிருபணன்

 கிருபணன் kirubaṇaṉ, பெ.(n.)

   கடுங்கஞ்சன்; niggard, miser.

த.வ. ஈர்ங்கைவிதிரான்.

     [Skt.krpana → த.கிருபணன்.]

கிருபணம்

 கிருபணம் kirubaṇam, பெ.(n.)

கிருபணத்துவம் பார்க்க;see kirubanattuvam.

     [Skt.kr pana → த.கிருபணம்.]

கிருபன்

கிருபன்1 kirubaṉ, பெ.(n.)

கிருபாசாரியன் பார்க்க;see {}.

     [Skt.krpa → த.கிருபன்.]

 கிருபன்2 kirubaṉ, பெ.(n.)

   கௌதமர் குலத்தில் பிறந்தவன்; one who born in Kautama’s lineage.

கிருபாகடாட்சம்

 கிருபாகடாட்சம் kirupākaṭāṭcam, பெ.(n.)

   அருட்பார்வை; benign, gracious look; look of mercy, compassion.

     [Skt.{}+{} → த.கிருபாகடாட்சம்.]

கிருபாகரன்

கிருபாகரன் kirupākaraṉ, பெ.(n.)

   திருவருள்; divine grace.

     “உனது கிருபாகரமேதோ” (திருப்பு.499);.

த.வ. திருவருட்கருணை.

     [Skt.krpakaram → த.கிருபாகரன்.]

 கிருபாகரன் kirupākaraṉ, பெ.(n.)

   அருளுக்கு இருப்பிடமானவன்; the fountain of mercy or grace, as god.

     “கிருபாகர ஞானாகர” (கந்தரலங்.21);.

த.வ. அருளாளன்.

     [Skt.{}+{} → த.கிருபாகரன்.]

கிருபாசனம்

 கிருபாசனம் kirupācaṉam, பெ.(n.)

   அருட்செல்வத்திற்கு இருப்பிடமான கடவுள்; mercy-seat, god, as the seat of mercy and grace.

த.வ. அருட்செல்வன்.

     [Skt.{}+{} → த.கிருபாசனம்.]

கிருபாசமுத்திரம்

 கிருபாசமுத்திரம் kirupācamuttiram, பெ.(n.)

   அருட்கடல்; oceanof grace, as god.

     [Skt.{}+samudra → த.கிருபா சமுத்திரம்.]

கிருபாசாரியன்

 கிருபாசாரியன் kirupācāriyaṉ, பெ.(n.)

   கௌரவர்கள் மற்றும் பாண்டவர்களுக்கு வில்லித்தை கற்றுக் கொடுத்த ஆசிரியர்களுள் ஒருவர் (பாரத.);; a preceptor who taught archery to the Kauravas and {}, one of seven, {}.

     [Skt.{}+{} → த.கிருபாசாரியன்.]

கிருபாணம்

 கிருபாணம் kirupāṇam, பெ.(n.)

   வாள் (யாழ்.அக.);; sword.

     [Skt.{} → த.கிருபாணம்.]

கிருபாமூர்த்தி

 கிருபாமூர்த்தி kirupāmūrtti, பெ.(n.)

   அருள் வடிவானவன்; one who is the embodiment of mercy.

த.வ. அருளாளன்.

     [Skt.{}+moorthy → த.கிருபாமூர்த்தி.]

கிருபாளு

கிருபாளு kirupāḷu, பெ.(n.)

   உள்ளத்தில் அருள் உடையவன்; merciful, compassionate person.

     “மாம்ஸத்தை மாற்றி அன்னாதிகளினால் உருசிக்கப் பண்ணிற் கிருபாளுவாவான்” (சி.சி.பர.சௌத்.ம.6);.

த.வ.அருளுள்ளமுடையான்.

     [Skt.{} → த.கிருபாளு.]

கிருபி

 கிருபி kirubi, பெ.(n.)

   நான்முகன் பேரன் சதாநந்தர் பெண்; great grand daughter of {} and {}.

     [Skt.krti → த.கிருபி.]

கிருபீடாபாலம்

 கிருபீடாபாலம் kirupīṭāpālam, பெ.(n.)

   கடல் (யாழ்.அக.);; ocean.

     [Skt.{}+{} → த.கிருபீடபாலம்.]

கிருபை

 கிருபை kirubai, பெ.(n.)

   அருள் (பிங்.);; grace, mercy, clemency, compassion, benevolence.

த.வ. அருள்.

     [Skt.{} → த.கிருபை.]

கிருபைக்கண்

 கிருபைக்கண் kirubaikkaṇ, பெ.(n.)

   அருட்பார்வை (யாழ்.அக.);; gracious or merciful look.

த.வ.அருட்கண்.

     [கிருயை + கண்.]

     [Skt.kr pa → த.கிருபை.]

கிருமநிசத்தினி

 கிருமநிசத்தினி kirumanicattiṉi, பெ.(n.)

   திப்பிலி; long-pepper – Piper longum (சா.அக.);.

     [கிரும+நிசத்தினி]

கிருமி

கிருமி kirumi, பெ.(n.)

   இல்வாழ்வான்; householder.

     “பிரமசரி கிருகியென்னவே பேசு மிருவருமே” (சைவ.ஆசா.60);.

த.வ. இல்லறத்தான்.

     [Skt.grhin → த.கிருமி.]

 கிருமி1 kirumi, பெ.(n.)

   புழு; worm, insect, maggot.

     “ஈனமில் கிருமிச் செருவினிற் பிறைத்தும்” (திருவாச.4, 14);.

த.வ. பூச்சி.

     [Skt.krmi → த.கிருமி.]

 கிருமி2 kirumi, பெ.(n.)

   மன்னன் உசீநரனின் நான்காவது மகன்; fourth son of a king {}.

கிருமிகண்டசோழன்

 கிருமிகண்டசோழன் girumigaṇṭacōḻṉ, பெ.(n.)

   சோழ மன்னன்;{} king.

     [இவன் கூரத்தாழ்வார் கண்ணைப் பிடுங்கினவன் என்பர். ஆனால் வைணவர்கள், கூரத்தாழ்வாரே இவரைப் பார்க்கக் கூடாது எனத் தம் கண்ணைப் பிடுஙகி இவன் மேல் எறிந்தார். எனவே இவனுக்குக் கிருமி நோய் உண்டாயிற்று. அதனால் கிருமிகண்டசோழன் என்ற பெயர் பெற்றான் என்பர் (அபி.சிந்.);.]

கிருமிகொல்லி

 கிருமிகொல்லி girumigolli, பெ.(n.)

   புழுக்கொல்லி; an agent either killing or rendering powerless the intestinal germs or parasites, vermicide (சா.அக.);.

த.வ.பூச்சிக்கொல்லி.

     [கிருமி + கொல்லி.]

     [Skt.krmi → த.கிருமி.]

கிருமிக்கிரந்தி

 கிருமிக்கிரந்தி kirumikkirandi, பெ.(n.)

   அரிபுண் (யாழ்.அக.);; canker, an eatging, spreading sore.

     [Skt.krmi+ → த.கிருமிக்கிரந்தி.]

கிருமிசத்துடரு

கிருமிசத்துடரு kirumisattuḍaru, பெ.(n.)

   1. புரசம் விதை; seed of palaus tree.

   2. பலாசம் விதை; seed of portia tree.

   3. ஆடு தின்னாப் பாலை; worm-killer, woody.

   4. ஒரு பூடு; a plant (சா.அக.);.

த.வ. நுண்ணுயிரிப்பகை.

     [Skt.krmi + {} → த.கிருமிசத்துரு.]

கிருமிச்சத்துரு

கிருமிச்சத்துரு kirumiccatturu, பெ.(n.)

   1. பலாசு; Palas tree.

   2. பலாசம் விதை; palas seed.

த.வ. பூச்சிப்பகை.

     [Skt.krmi + {} → த.கிருமிச்சத்துரு.]

கிருமிச்சுரம்

 கிருமிச்சுரம் kirumiccuram, பெ.(n.)

   நுண்ணுயிரிகளால் உண்டாகும் காய்ச்சல் வகை (மூ.அ.);; fever caused by worms.

த.வ. நுண்ணுயிரிக்காய்ச்சல்.

     [கிருமி + சுரம்]

     [Skt.krmi → த.கிருமி.]

கிருமிச்சூலை

 கிருமிச்சூலை kirumiccūlai, பெ.(n.)

   நுண்ணுயிரிகளால் உண்டாகும் சூலை நோய் வகை (மூ.அ.);; gnawing pain caused by intestinal worms.

த.வ. நுண்ணுயிரிவலி.

     [கிருமி + சூலை.]

     [Skt.krmi → த.கிருமி.]

கிருமிச்சொறி

 கிருமிச்சொறி kirumiccoṟi, பெ.(n.)

   நுண்ணுயிர்களால் உண்டாகும் நொறி நோய் வகை (மூ.அ.);; itching caused by worms.

த.வ. நுண்ணுயிரிசொறி.

     [கிருமி + சொறி.]

     [Skt.krmi → த.கிருமி.]

கிருமிநாசம்

கிருமிநாசம் kiruminācam, பெ.(n.)

   1. குராசானியோமம் (மலை.);; black henbane.

   2. பலாசம் விதை (மூ.அ.);; Palas seed.

   3. கொடிவகை; bitter luffa.

     “சுரையொடு பேய்ப்பீர்க்குஞ் சுமந்த” (பு.வெ.3,25);.

   4. புழுக்கொல்லிப்பூடு; worm killer.

     [கிருமி + நாசம்.]

     [Skt.krmi → த.கிருமி.]

கிருமிநாசி

 கிருமிநாசி kirumināci, பெ.(n.)

   செடி வகை (மலை.);; tinnevelly senna.

     [கிருமி + நாசி.]

     [Skt. krmi → த.கிருமி.]

கிருமிநாசினி

 கிருமிநாசினி kirumināciṉi, பெ.(n.)

   தீமை விளைவிக்கும் நுண்ணுயிரிகளைக் கொள்ளப் பயன்படும் திண்ம அல்லது நீர்ம வடிவில் இருக்கும் மருந்து; germicide; antiseptic.

     [கிருமி + நாசினி.]

     [Skt.krmi → த.கிருமி.]

கிருமிநிசயம்

கிருமிநிசயம் kiruminisayam, பெ.(n.)

   எட்டு வகையான அரச நிரயங்களுள் ஒன்று (சி.போ.பா.2, 3, 1);; a hell, one of eight {}.

     [Skt. krmi + {} → த.கிருமிநிசயம்.]

கிருமிமலடு

 கிருமிமலடு kirumimalaḍu, பெ.(n.)

   கருப்பையில் புழுக்கள் உண்டாவதால் உண்டாகும் மலட்டுத் தன்மை (மூ.அ.);; sterility from animalculae in the uterus.

     [கிருமி + மலடு.]

     [Skt. krmi → த.கிருமி.]

கிருமியரி

 கிருமியரி kirumiyari, பெ.(n.)

   வாயு விளங்கத்தி (கொடிவகையி);ன் அரிசிபோன்ற மணி; wind-berry pepper-corn (செ.அக.);.

     [Skt. krmi + hari→த.கிருமியரி.]

கிருமியுணா

கிருமியுணா kirumiyuṇā, பெ.(n.)

   ஒரு வகை நிரயம்; a hell where souls in the form of worms eat and are eaten by worms.

     “கிருமியுணா வெனுநரகந் தனிற்புகுந்து-கிருமிகளுக்குணவாகித் தாமுவைதின்று” (சேதுபு.தனுக்.12);.

த.வ. புழுநிரயம்.

     [கிருமி + உணா.]

     [Skt. krmi → த.கிருமி.]

கிருமியோமம்

 கிருமியோமம் kirumiyōmam, பெ.(n.)

   மருந்து வகை; a vermifuge containing omum.

     [கிருமி + ஓமம்.]

     [Skt.krmi → த.கிருமி.]

கிருமிரோகம்

கிருமிரோகம் kirumirōkam, பெ.(n.)

   நாக்குப் பூச்சியை உண்டாக்கும் நோய் (பைஷஜ.231);; worms, as a disease.

த.வ. பூச்சிநோய்.

     [Skt.krmi + {} → த. கிருமிரோகம்.]

கிருமிவை-த்தல்

 கிருமிவை-த்தல் kirumivaittal, செ.கு.வி.(v.i.)

   புண்ணில் புழு உண்டாதல்; to breed maggots, as in a sore.

த.வ. புழுப்புண்.

     [கிருமி + வை-,]

     [Skt.krmi → த.கிருமி.]

கிருமுதலாடை

 கிருமுதலாடை kirumudalāṭai, பெ.(n.)

   பொடுதலை; creeping vervain (சா.அக.);.

கிருவைசூரி

 கிருவைசூரி kiruvaicūri, பெ.(n.)

   தட்டம்மை; measles; flat variola (சா.அக.);.

த.வ. பெரியம்மை.

     [கிரு + வைசூரி.]

கிரேணு

 கிரேணு kirēṇu, பெ.(n.)

   சிவபத்திமை கொண்ட பெண்; pious of {}.

     [இவள் மக்கட்பேறு வேண்டித் தவம் செய்து கங்கையைக் குழந்தையாக அடைந்தாள். அக்குழந்தையை வியிரமலையரசன் வளர்த்தான். பின் அக்குழந்தை சிவனை மணந்தது (அபி.சிந்.);.]

கிரேதம்

 கிரேதம் kirētam, பெ.(n.)

கிருதயுகம் பார்க்க;see kiruda-yugam.

த.வ. கிரேதை.

     [Skt.krta → த.கிரேதம்.]

கிரேதயுகம்

 கிரேதயுகம் girētayugam, பெ.(n.)

கிருதயுகம் பார்க்க;see kiruda-yugam.

     [Skt.krta → த.கிரேதம்.]

கிரேந்தி

 கிரேந்தி kirēndi, பெ.(n.)

   ஏலத்தோல் (மூ.அ.);; cardamom husk.

த.வ. ஏலக்காய்த்தோல்.

கிரேனிடல்

 கிரேனிடல் kirēṉiḍal, பெ.(n.)

   அஞ்சி ஒடுங்குதற் குறிப்பு; expr. signifying startling, standing aghast, being panic-stricken.

கிரோ

 கிரோ kirō, பெ.(n.)

   அடைமானம் (P.T.L.);; pledge, mortgage, pawn.

     [Persn.{} → த.கிரோ.]

கிரௌஞ்சத்துவீபம்

 கிரௌஞ்சத்துவீபம் kirauñjattuvīpam, பெ.(n.)

கிரவுஞ்சத்துவு பார்க்க;see {}.

     [Skt.{} → த.கிரௌஞ்சத்து வீபம்.]

கிரௌஞ்சன்

 கிரௌஞ்சன் kirauñjaṉ, பெ.(n.)

   தேவர் உலகத்தவன்; heavenly men.

சௌபரி முனிவரின் மனைவி மனோமயை தனியாக இருக்கும் போது அவன் அவளின் கையைப் பிடித்தான். இதைக் கண்ட முனிவன் அவனைப் பெருச்சாளியாகுமாறு தீமொழி கூறினான். பின் இவனது வேண்டுதலால் பிள்ளையாருக்கு வாகனமாக அருள் புரிந்தார் (அபி.சிந்.);.

கிரௌஞ்சம்

கிரௌஞ்சம் kirauñjam, பெ.(n.)

கிரவுஞ்சம் பார்க்க:see {}.

     [Skt.{} → த.கிரெஞ்சம்.]

 கிரௌஞ்சம் kirauñjam, பெ.(n.)

   1. ஒரு பட்டணம்; a city.

   2. கிரவுஞ்சன் பார்க்க;see {}

   1. இது எமபுரிக்குச் செல்லும் வழியில் உள்ளது. இந்த இடத்திற்கு உடலை நீங்கிய ஆதன் சேர ஆறு மாதம் ஆகம் (அபி.சிந்.);

கிரௌஞ்சாதனம

கிரௌஞ்சாதனம kirauñjātaṉama, பெ.(n.)

   1. தாமரை நூல்; the 0. fibres of the stalk of the lotus.

   2. திப்பிலி; long pepper.

   3. தாமரைக் கொட்டை; the seed of the lotus (சா.அக.);.

கிரௌரியம்

 கிரௌரியம் kirauriyam, பெ.(n.)

   கொடுமை; cruelty, hard-heartedness.

     [Skt.kraurya → த.கிரௌரியம்.]

கிறக்கம்

 கிறக்கம் kiṟakkam, பெ.(n.)

   மிகுந்த தூக்கம், குடிபோதை முதலியவற்றால் கண்கள் உள்ளிழுத்துக் கொள்ளும் மயக்க நிலை; stupor; drowsiness; languor.

தூக்கக் கிறக்கம்.

கிறக்கு-தல்

கிறக்கு-தல் kiṟakkutal,    5 செ.கு.வி.(v.i.)

ஒருவரைத் தூக்கம், காமம் முதலியன நிலைதடுமாறச்செய்தல், மயக்குதல்

 induce languor, stupor, etc.,

தூக்கக் கிறக்குகிறது.

கிறங்கு-தல்

கிறங்கு-தல் kiṟaṅkutal,    5 செ.கு.வி.(v.i.)

   1. ஒருவர் தூக்கம், குடிபோதை முதலிய வற்றால் நிலை தடுமாறுதல்; மயங்குதல்; be in languor, stupor, etc.,

போதைப் பொருள்கள் நரம்பைத் துரண்டிக் கிறங்க வைக்கும். கேட்பவரைக் கிறங்க வைக்கும்

கனிரென்ற குரல்

   2. சோர்வடைதல்; get jaded.

வெயிலில் நடந்து வந்ததால் குழந்தை கிறங்கி போய்விட்டா,

கிறாக்கிபண்ணு-தல்

 கிறாக்கிபண்ணு-தல் kiṟākkibaṇṇudal, செ.கு.வி. (v.i.)

   அருமைப்படுத்திக் கொள்ளுதல்; to affect reserve.

கிறிக்காட்டு-தல்

கிறிக்காட்டு-தல் kiṟikkāṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. குறிப்பாய் உணர்த்துதல் (நெல்லை.);; to hint, suggest.

   2. வெளிப்படையாக உணர்த்துதல்; to give out plainly.

அந்தச் செய்தியைக் கீறிக் காட்டிச் சொல்லுதல் முடியாது (உ.வ.);.

     [கீறி + காட்டு.]

கிறிசு

 கிறிசு kiṟisu, பெ.(n.)

கிரிசுக்கத்தி பார்க்க;see {}.

     [Malay.kris → த.கிறிசு.]

கிறிச்சனம்

 கிறிச்சனம் kiṟiccaṉam, பெ.(n.)

   நோய் வகை (செ.அக.);; a disease (செ.அக.);.

கிறித்து

 கிறித்து kiṟittu, பெ.(n.)

   இயேசு கிறித்து; christ, the messiah.

     [Gr.kristos → த.கிறித்து.]

கிறித்துமசு

 கிறித்துமசு kiṟittumasu, பெ.(n.)

   இயேசு பிறந்த நாள்; the day who birth in jesus.

     [E.{} → த.கிறித்துமசு.]

கிறித்துமார்க்கம்

 கிறித்துமார்க்கம் kiṟittumārkkam, பெ.(n.)

   கிறித்துவ மதம்; christianity.

     [கிறித்து + மார்க்கம்.]

     [Gr.kristos → த.கிறித்து.]

கிறிவை-த்தல்

கிறிவை-த்தல் kiṟivaittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   1. கத்தியாலறுத்துத் திறந்துவைத்தல்; cut and open by knife.

   2. கத்தியால் பிளந்து மருந்து வைத்தல்; to open and apply medicine.

   3. அறுவை செய்தல்; operating.

   4. காயம்படுதல்; inflicting injury (சா.அக.);.

     [கீறி + வை-.]

கிறு

கிறு3 kiṟu, பெ.(n.)

   பன்றி; hog,

     [கீறு → கீறி.]

கிறுதாசிகம்

 கிறுதாசிகம் kiṟutācikam, பெ.(n.)

   நீர் முள்ளி; water thistle – Barleria longifolia (சா.அக.);.

கிறுதுவேதன்

 கிறுதுவேதன் kiṟutuvētaṉ, பெ.(n.)

   கொடிவகை; சமையலுக்குப் பயன்படும் காய் காய்க்கும் கொடிவகை (திவா.);; sponge gourd, strainer-vine – Luffa acutangula (செ.அக.);.

கில

கில kila, பெ.(n.)

   எதிர்பார்த்தல் முதலிய பொருளையுணர்த்தும் வடமொழி இடைச் சொல்; a sanskrit word signifying expectation, probability, etc.

     “சுவாகதங்’ கிலவென்று” (திருவிளை. இரசவாத.15);.

     [Port.kila → த.கில.]

கிலம்

கிலம் kilam, பெ.(n.)

   1. சிதைகை; that which is ruined, dilapidated, laid waste, destroyed.

     “வீடு கிலமாய்விட்டது”.

   2. இழிவு (சூடா.);; that which is insufficient; trifle.

த.வ. பகுது.

     [Skt.khila → த.கிலம்.]

கிலவம்

 கிலவம் kilavam, பெ.(n.)

   கழுத்து (யாழ்.அக.);; neck.

கிலாசம்

கிலாசம் kilācam, பெ.(n.)

   1. சதையை மூடிக்கொண்டிருக்கும் ஏழு வகைத் தோல்களில் ஒன்று; one of the seven layers of the skin covering the muscles of the body.

   2. தேமல்; a form of skin disease.

கிலாசு

 கிலாசு kilācu, பெ.(n.)

   கப்பல் தொழிலாளி; lascar; indian sailor.

த.வ. மாலுமி.

     [U.{} → த.கிலாசு.]

கிலாதன்

 கிலாதன் kilātaṉ, பெ.(n.)

   இரண்யகசிபுவின் குமரன்; son of {}.

இவன் மனைவி தெமனி. மகன் வாதாபி. பிரகலாதனின் தம்பியான இவனுக்கு அனுக்கிலாதன் எனவும் பெயருண்டு (அபி.சிந்.);.

கிலாபத்து

 கிலாபத்து kilāpattu, பெ.(n.)

   இசுலாம் மதத்தின் தலைமைப் பதவி; caliphate.

     [Ar.{} → த.கிலாபத்து.]

கிலாம்

கிலாம் kilām, பெ.(n.)

   சினம்; indignation, vexation.

     “கிலாந்தோற்றச் சொல்லுகிறாள்” (ஈடு, 6, 1, 1);.

கிலிகை

 கிலிகை giligai, பெ.(n.)

   சிற்றெலி; small rat (சா.அக.);.

த.வ. சுண்டெலி.

கிலிகோலம்

 கிலிகோலம் kiliālam, பெ.(n.)

   சீர்கேடு; slovenliness, disorder,confusion.

கிலிசம்பறை

 கிலிசம்பறை kilisambaṟai, பெ.(n.)

கிலிகோலம் பார்க்க;see {}.

கிலிசைகெட்ட

 கிலிசைகெட்ட gilisaigeṭṭa, பெ.எ.(adj.)

   வேலையற்ற; idle, unemployed, good for nothing.

கிலிட்டம்

 கிலிட்டம் kiliṭṭam, பெ.(n.)

   எளிதில் பொருள் விளளங்காமையாகிய குற்றம்; obscurity of a passage, unintelligibility.

     [Skt.{} → த.கிலிட்டம்.]

கிலியம்பறை

 கிலியம்பறை kiliyambaṟai, பெ.(n.)

கிலிசம்பறை பார்க்க;see {}.

கிலீடகம்

கிலீடகம் gilīṭagam, பெ.(n.)

   1. ஒரு பூடு; a plant.

   2. ஒரு நச்சு கிழங்குடைய பூடு; a plant with a poisonous bulbous root (சா.அக.);.

கிலீபம்

 கிலீபம் kilīpam, பெ.(n.)

   ஆண், பெண் அல்லாதது (அலி); (உரி.நி.);; person or animal that is neither male nor female, hermaphrodite.

த.வ. பேடு.

     [Skt.{} → த.கிலீபம்.]

கிலுங்காகிதம்

 கிலுங்காகிதம் kiluṅkākitam, பெ.(n.)

   நாங்கில் மரம்; Ceylon iron-wood – Mesua ferrea (சா.அக.);.

கிலுசிதம்

 கிலுசிதம் kilusidam, பெ.(n.)

   வறுமை (யாழ்.அக.);; poverty.

     [Skt.{} → த.கிலுசிதம்.]

கிலுப்தம்

 கிலுப்தம் kiluptam, பெ.(n.)

   எப்பொழுதும்; readiness, settled order, certainty.

     [Skt.klpta → த.கிலுப்தம்.]

கிலேசம்

 கிலேசம் kilēcam, பெ.(n.)

   துயர்; affliction, distress, pain, anguish, sorrow, grief.

     [Skt.{} → த.கிலேசம்.]

கிலேசி-த்தல்

கிலேசி-த்தல் kilēcittal,    11 செ.கு.வி.(v.i.)

துன்பப்படுதல்; to be in anguish, distress, to be afflicted.

     [Skt.{} → த.கிலேசி-த்தல்.]

கிலேசு

 கிலேசு kilēcu, பெ.(n.)

   கீழ்மை (யாழ்.அக.);; lowness.

கிலேதம்

கிலேதம் kilētam, பெ.(n.)

   உடலின் மேல் இடும் மருத்துநீர் (இங்.வை.21);; lotion.

த.வ. நீர்மமருந்து.

     [Skt.{} → த.கிலேதம்.]

கில்-தல் (கிற்றல்)

கில்-தல் (கிற்றல்) kiltalkiṟṟal, செ.கு.வி.(v.i.)

   சம்மதித்தல்; to agree, consent.

     ‘இறைவி கிற்குமே’ (தக்கயாகப்.57);.

கில்பிச(ஷ)ம்

கில்பிச(ஷ)ம் kilpisašam, பெ.(n.)

   இரக்கம் (பாவம்); (கோயிலொ.45);; sin.

     [Skt.{} → த.கில்பிச(ஷ);ம்.]

கில்லத்து

 கில்லத்து killattu, பெ.(n.)

   பெரியோர் அல்லது மன்னர்களால் பரிசாகக் கொடுக்கப்படும் ஆடை; robe of honour conferred by the nobility or royalty.

     [Ar.Khilat → த.கில்லத்து.]

கில்லிதாண்டு

 கில்லிதாண்டு killitāṇṭu, பெ.(n)

   கிட்டிப்புள்; tip-cat

     [கில்லி+தாண்டு]

கில்லேதார்

 கில்லேதார் killētār, பெ.(n.)

   கோட்டை உசாவல் (விசாரணை); தலைவன்; commandant of a fort.

     [U.{} → த.கில்லேதார்.]

கிளட்டன்

 கிளட்டன் kiḷaṭṭaṉ, பெ.(n.)

   ஒரு வகைக் கீரிப்பிள்ளை இனம்; common Indian mungoose – Indian ichneumon.

இது தான் பிடிக்கும் உயிர்களை விழுங்கும் தன்மையது (அபிசிந்);.

     [கிள – கிளத்தன்.]

கிளபுறம்

 கிளபுறம் kiḷapuṟam, பெ.(n.)

   காற்றுப் படாத பக்கம்; leeward (செ.அக.);.

கிளப்

கிளப் kiḷap, பெ.(n.)

   1. உணவகம்; restaurant; hotel.

   2. பொழுதுபோக்காகக் கூடும் இடம்; recreation club.

     “கிளப்பில் சீட்டு விளையாடலாம்” (க்ரியா.);.

த.வ.சாப்பாட்டிடம்.

கிளப்போசு

 கிளப்போசு kiḷappōcu, பெ.(n.)

   சோற்றுக்கடை; உணவகம்; a restaurant, an eating-house, a hotel.

     [E.Club → த.கிளப்போசு.]

கிளா

கிளா kiḷā, பெ.(n.)

   1. களா வகை; a low

 spreading spiny evergreen shrub – Carissa spinarum.

     ‘தீம்புளிக் களாவொடு துடரிமுனையின்”

   2.மரவகை,

 largebengal current – Carissa carandas.

   3. களா வகை; small lance-crenate-acute-leaved whortle berry – Vaccinium nilgherrense.

   4. செடிவகை; whortle berry – Vaccinium (செ.அக.);.

     [களா-கிளா]

கிளாக்கி

 கிளாக்கி kiḷākki, பெ.(n.)

   விலையேற்றம்; high price.

     [U.khiragi → த.கிறாக்கி.]

கிளாசுக்காரன்

கிளாசுக்காரன் kiḷācukkāraṉ, பெ.(n.)

   1. கப்பல் வேலையாள்; lascar.

   2. மூட்டைகளைத் தைத்து ஒழுங்கு படுத்துபவன்; one who attends to packing of things by stitching, etc. (செ.அக.);.

     [ப.khatசsi→த.கிளாசுக்காரன்.]

கிளாச்சி

 கிளாச்சி kiḷācci, பெ.(n.)

   புல்வகை; a kind of

 grass (செ.அக.);.

கிளிக்கால்

 கிளிக்கால் kiḷikkāl, பெ.(n.)

   கிளிகால் போல் செதுக்கிய பீடத்தின் கால்; a moult resembling a parrot leg engraving.

     [கிளி+கால்]

கிளிசமாரீகம்

 கிளிசமாரீகம் kiḷicamārīkam, பெ.(n.)

   மாம்பழ வகை; a kind of mango – Mangifera indica (சா.அக.);.

கிளிசோசியம்

 கிளிசோசியம் kiḷicōciyam, பெ.(n.)

   பரப்பி வைக்கப்பட்டிருக்கும் சீட்டுகளில் ஒன்றைக் கிளியை விட்டு எடுக்கச் செய்து ஒருவருக்குச் சொல்லப்படுகிற கணியம்; a kind of fortunetelling where trained parrots pick out cards containing readings regarding the fortunes of individuals.

     [கிளி+Skt. சோசியம்]

கிளிச்சிறைப்பொன்

 கிளிச்சிறைப்பொன் kiḷicciṟaippoṉ, பெ.(n.)

கிளியின் சிறகைப் போன்ற வண்ணமுடைய மாற்றுயர்ந்த பொன்; one of the four varieties of refined gold resembling the colour of a parrot’s wing (சா.அக.);.

     [கிளி+சிறை+பொன்.]

கிளிஞ்சல்

 கிளிஞ்சல் kiḷiñcal, பெ.(n.)

இரு சம ஓடுகளால் மூடப்பட்டிருக்கிற உடல் அமைப்பை உடைய கடலில் வாழும் உயிரினம்.அந்த உயிரினத்தின் ஓடு; oyster or its shell, கிளிஞ்சலைச் சிலர் உண்கிறார்கள்(உவ);. கடற்கரையில் கிளிஞ்சல் பொறுக்கலாம்(உவ);.

     [கிழி – கிளி – கிளிஞ்சல்]

     [P]

கிளிஞ்சல்கண்ணாம்பு

 கிளிஞ்சல்கண்ணாம்பு kiḷiñcalkaṇṇāmpu, பெ.(n.)

கிளிஞ்சலை நீற்றியெடுக்கும் சுண்ணாம்பு,

 shell lime.

     [கிளிஞ்சல் + சுண்ணாம்பு]

கிளிப்பிள்ளைப்பாடம்

 கிளிப்பிள்ளைப்பாடம் kiḷippiḷḷaippāṭam, பெ.(n.)

   கிளிப்பிள்ளைபோல சொன்னதையே சொல்லுவது; ready made speech out of compultion,

     [கிளி+பிள்ளை+பாடம்]

கிளிமூக்குமாங்காய்

 கிளிமூக்குமாங்காய் kiḷimūkkumāṅkāy, பெ.(n.)

   ஒரு மாமரம்; a mango tree,

     [கிளி+மூக்கு+மாங்காய்.]

இதில் கிளி மூக்கைப் போன்ற காய் அரிதாகக் காய்க்கும். இலை அரசிலை போல் இருக்கும். பூப்பூத்த பத்தாம் நாள் காய் காய்க்கும். இப்பழத்தை உண்டு வேகமாக ஓடலாம். சித்தர்கள் உடல் இளமைக்காக வெகுநாள் காத்திருந்து இதை உண்பார்கள் (சா.அக.);.

கிளிமூக்குமின்

 கிளிமூக்குமின் kiḷimūkkumiṉ, பெ.(n.)

   கிளி மூக்கைப் போல் வளைந்த மீன்; parrot-fish – Dourada (சா.அக.);.

     [கிளி+மூக்கு+மீன்.]

     [P]

கிளியாந்தட்டு

 கிளியாந்தட்டு kiḷiyāndaṭṭu, பெ.(n.)

   சிறுவர் விளையாட்டு; a children’s game.

     [கிள்ளி-கிளி+அம்+தட்டு]

கிளிவன்னம்

 கிளிவன்னம் kiḷivaṉṉam, பெ.(n.)

   செடி வகை; a kind of plant (செ.அக.);.

கிளிவாய்க்கால்

 கிளிவாய்க்கால் kiḷivāykkāl, பெ. (n.)

   அணையில் தேங்கும் அதிக நீரைப் பிரித்து மீண்டும் ஆற்றில் போக்குவதற்காக அமைந்த வாய்க்கால்; surplus channel above the head sluice (செ.அக.);.

     [கிளி+வாய்க்கால்.]

கிளிவிருத்தம்

 கிளிவிருத்தம் kiḷiviruttam, பெ.(n.)

திரு ஞானசம்பந்தர் காலத்தில் வழங்கி வந்த புத்த நூல்; Buddis’t book (அபி.சிந்.);.

     [கிளி+விருத்தம்]

கிளிவெட்டுப்பாக்கு

 கிளிவெட்டுப்பாக்கு kiḷiveṭṭuppākku, பெ.(n.)

   பாக்கு வகை (யாழ்.அக.);; a kind of are canut (செ.அக.);.

     [கிளி+வெட்டு+பாக்கு.]

கிளுகிளுப்பு

 கிளுகிளுப்பு kiḷukiḷuppu, பெ.(n.)

ஆண்,பெண் இடையே ஏற்படும் சிலிர்ப்பான உணர்வு

 sexual excitement

அவளுடைய அசைவே அவனுள் கிளுகிளுப்பை ஏற்படுத்தியது.

     [கிளு – கிளுப்பு]

கிளைநதிகள்

 கிளைநதிகள் kiḷainatikaḷ, பெ.(n.)

   கிளையாறுகள் பார்க்க; see kiay-aruga!

     [கிளை+சந்திகள்]

கிளைமொழி

 கிளைமொழி kiḷaimoḻi, பெ.(n.)

   இலக்கண அமைப்பு, சொற்கள், உச்சரிப்பு ஆகிய வற்றால் பொது மொழியிலிருந்து அல்லது தரப்படுத்தப்பட்ட மொழியிலிருந்து சில மாறுபாடுகளுடன் ஒரு வட்டாரத்தில் அல்லது ஒரு பிரிவினரால் பேசப்படும் மொழி வகை; dialect

     [கிளை+மொழி]

கிளையாறுகள்

 கிளையாறுகள் kiḷaiyāṟukaḷ, பெ.(n.)

   பெரிய ஆற்றில் இருந்துபிரியும் சிற்றாறுகள்; tributary rivers (அபி.சிந்);.

     [கிளை+ஆறுகள்.]

கிளைவாய்க்கால்

 கிளைவாய்க்கால் kiḷaivāykkāl, பெ.(n.)

தாய் வாய்க்காலில் இருந்து பிரியும் சிறு வாய்க்கால்; channel branching from the main channel (செ.அக.);.

     [கிளை+வாய்க்கால்.]

கிள்ளவடு

 கிள்ளவடு kiḷḷavaṭu, பெ.(n.)

   கரண்டகம் (இலங்.);; small metal box for keeping quicklime.

     [கிள்ள+வடு]

கிள்ளாக்கை

 கிள்ளாக்கை kiḷḷākkai, பெ.(n.)

   உண்டியற் சீட்டு (யாழ்.அக.);; bill of exchange, hundi (செ.அக.);.

     [கிள்-கிள்ளாக்கை]

கிள்ளி

 கிள்ளி kiḷḷi, பெ.(n.)

   சோழரின் குடிப்பெயர்; name of a clan among royal chola king dynasty.

     [கிள்-முளைத்தல், தோன்றுதல் +இ – கிள்ள [தோன்றல் பெரியோன்]]

கிள்ளி நடு-தல்

 கிள்ளி நடு-தல் kiḷḷinaḍudal, செ. குன்றாவி.(v.t.)

   நாற்றை அளவு பார்த்துச் சிறுகப்பிரித்த நடுதல்; to transplant with a calculation.

     [கிள்ளி+நடு]

கிள்ளிமங்கலம்கிழார்

 கிள்ளிமங்கலம்கிழார் kiḷḷimaṅkalamkiḻār, பெ. (n.)

   கடைச் சங்கம் மருவிய புலவர்; the poet who belonged to the last Šañgam (அபி.சிந்.);.

     [கிள்ளி+மங்கலம்+கிழார்]

கிள்ளியெறி-தல்

கிள்ளியெறி-தல் kiḷḷiyeṟital,    3 செ.கு.வி. (vi.)

   எண்ணம், நினைவு போன்றவற்றை நீக்குதல்; nip off one’s thoughts, memories, etc.

கடந்தகால நிகழ்ச்சிகள் அனைத்தையும் கிள்ளியெறிந்துவிட முயன்றான்.

     [கிள்ளி+எறி-தல்.]

கிள்ளிவளவன்

 கிள்ளிவளவன் kiḷḷivaḷavaṉ, பெ.(n.)

   புகாரை ஆண்ட சோழ மன்னர்களில் ஒருவர்; one of

 the Cölä king who ruled Pugar. glassir

கரிகாற்சோழனின் மகனாக இருக்கலாம் (அபிசிந்);.

     [கிள்ளி+வளவன்.]

கிழக்கி

கிழக்கி kiḻkki, பெ.(n.)

ஒன்றரை அடி நீளமுள்ள கடல் மீன் வகை (பதார்த்த941);; whiting sea-fish-Olive-green, attaining 1 ft. in length- Sillago sihama (செ.அக.);.

     [கிழக்கி – கிழக்கி]

     [P]

கிழக்கோட்டான்

 கிழக்கோட்டான் kiḻkāṭṭāṉ, பெ.(n.)

வீட்டில் நடக்கும் எல்லாச் செயல்களையும் கவனித்துக் கொண்டிருக்கும் வயதானவரை இகழ்ச்சியாகக் கூறுகை; said contemp

-tuously old hag; old geezer.

அந்தக் கிழக்கோட்டான் தான் எப்போதும் பேசிக் கொண்டு வாசலிலேயே உட்கார்ந்திருக்கும்.

     [கிழம்+கோட்டான்.]

கிழஙகுப்பிரண்டை

 கிழஙகுப்பிரண்டை kiḻṅakuppiraṇṭai, பெ.(n.)

   மணிப்பிரண்டை; bulbous root creeper-Cissus bifida (சா.அக.);.

     [கிழங்கு+பிரண்டை]

கிழங்குக்கொடி

கிழங்குக்கொடி kiḻṅkukkoṭi, பெ.(n.)

   1. வள்ளிக்கொடி; creeper of sweetpotato.

   2. பிரண்டைக் கொடி; a adamantine creeper (சா.அக.);.

     [கிழங்கு+கொடி.]

கிழங்குமணி

 கிழங்குமணி kiḻṅkumaṇi, பெ.(n.)

   கிழங்குப்பிரண்டை பார்க்க; see kilargup-piranda (சா.அக.);.

கிழடுதட்டு-தல்

கிழடுதட்டு-தல் kiḻṭutaṭṭutal,    5 செ.கு.வி. (v.i.)

   வெளிப்படையாகத் தெரியும் வகையில் முதுமைத் தோற்றம் ஏற்படுதல்; age in a visible way,

பழைய நடிகர் தற்போது கிழடுதட்டிப் போய் பார்க்கவே அருவருப்பாக இருக்கிறார்.

     [கிழடு+தட்டு-தல்.]

கிழத்து

 கிழத்து kiḻttu, பெ.(n)

   ஒரு வகை மீன்; a kind of fish (சா.அக.);.

     [கீழ்த்து- கிழத்து.]

கிழமரம்

கிழமரம் kiḻmaram, பெ.(n)

   1 முதிர்ந்த மரம்,

 old tree.

   2. நாட்சென்ற மரம்; long-standing tree (சா.அக.);.

     [கிழம்+மரம்]

கிழார்க்கிரனெயிற்றியார்

 கிழார்க்கிரனெயிற்றியார் kiḻārkkiraṉeyiṟṟiyār, பெ.(n.)

   கடைக் கழகம் மருவிய காலப் புலவர்; the poet who belonged to the last Sangam age (அபி.சிந்);.

     [கிழார்+கீரன்+எயிற்றியார்]

கிழிகடை

 கிழிகடை kiḻikaṭai, பெ.(n.)

   மிக இளப்பம் (யாழ்.அக.);; extreme lowness, as of a person or thing (செ.அக.);.

     [கிழி+கடை]

கிழிசல்

கிழிசல் kiḻical, பெ.(n.)

   1. கிழிவு:

 tear, rent in cloth.

   2. கிழிந்தது; that which is torn, tattered garment (செ.அக.);.

     [கிழி – கிழிசல்.]

கிழியஞ்சட்டி

 கிழியஞ்சட்டி kiḻiyañcaṭṭi, பெ.(n.)

மண்ணால் செய்த அகல்,

 earthen bowl (செ.அக.);.

மறுவ. கார்த்திகை சட்டி

     [கிழியல் + சட்டி.]