தலைசொல் | பொருள் |
---|---|
கா | கா1 kā, ககரமெய் முன்னும் ஆகார உயிர் பின்னுமாகிய, ஒலிப்பு வடிவும் கூட்டெழுத்து வரி வடிவும் கொண்ட, தமிழ் நெடுங்கணக்கில் சார் பெழுத்துகளுள் ஒன்றாகிய வல்லின அசை யெழுத்து ; opened syllable of velar voiceless plosive and long vowel (k + a- ka, vowel consonant) grammatically grouped with carbu eluttu, a classification among Tamil alphabets. கா2 kāttal, 4.செ.குன்றாவி (v.t) 1.காவல் செய்தல்; to guard, keep guard over, watch. “சிறைகாக்கும் காப்பு எவன் செய்யும்?” (குறள்,57);. 2. கெடாது பேணுதல்; to keep safe from harm or loss. குளிர்ப்பதனத்தில் பழங்களைப் பல நாள் காத்து வைக்கலாம் (உவ);. 3.அழியாது காத்தல்; to keep safe from danger or death. இடையன் ஆடுகளைக் காத்து வளர்க்கிறான் (உ.வ.);. 4. உயிருடன் வைத்துப் பேணுதல்; to keep alive. முடமான சிறுவனை அவன் தாய் காத்து வருகிறாள் (உவ);. 5. நடைமுறையில் இருக்குமாறு செய்தல்; to keep in existence. பாவாணர் அறக்கட்டளையை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் காத்து வருகிறது (உவ);. 6. பாதுகாத்தல்; to preserve, shelter. “காக்கக் கடவியநீ காவா திருந்தக்கால்” (திருமுரு.இறுதி 8.); 7. அரசாளுதல்; to govern, rule, reign. “மன்னுயிர் காக்கு மாயிரத் தோரெட் டரசுதலைக் கொண்ட” (சிலம்.5:163,164);. 8. பின் பற்றுதல்; to observe, as vow, a fast. அவள் நோன்பு காத்தாள் (உ.வ.); 9. அரண்காப்புச் செய்தல்; to keep ‘watch. 10. பேணி வளர்த்தல், பேணிக் காத்தல்; to tend, to nourish. 11. கவனித்துப் பேணுதல்; to take care of. 12. ஆடுமாடு முதலியன மேய்த்தல்; to graze cattle. மாடுகாத்த மாயவன் (உ.வ.);. ம.கா, காக்குக; க. கா, காய், காயு; தெ. காச்சு; து. காபுனி; கோத. காவ்; துட. கோவ்; குட. கா; கொலா. கய்; பர்.,கட. காப்; கோண். கே.பனா; கூ. காப; குவி. காசலி; குரு. காப்ன; மா. க்வபெ; பிரா. க்வாப்ங்க்; பட. காலு. [கல் → கள் → கவ்(வு); → கா. கவ்வுதல்=பிடித்தல், பேணிக்காத்தல். இதிலிருந்து தோன்றிய ‘கா’ வினையடி பாதுகாத்தல். பொருளுடையதாயிற்று. கவ்வுதல் நெருங்குதல் பொருள் தருதலின், துணையாக வழங்கும் செறிவு (அடர்த்திப் பொருளும் தந்தது); கா3 kāttal, 4 செ.குன்றாவி (v.t.) 1.விலக்குதல்; to prohibit. “எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை” (குறள்,429);. 2. தடுத்தல்; to restrain. “குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயுங் காத்த லரிது” (குறள்,29);. 3. தீமை வரவொட்டாமல் காப்பாற்றுதல்; to rescue. safeguard, ‘கண்ணினைக் காக்கின்ற இமையிற் காத்தனர்”(கம்பரா.பால.வேள்வி.41);. ம. காக்குக [கல் → கள் → கவ் → கா= செறிதல், செறித்தல், தீங்கு வராமல் தடுத்தல், விலக்குதல்.] கா4 kāttal, 4 செ.கு.வி. (v.i.) எதிர்பார்த்திருத்தல்; To wait for, to maintain. அவனுக்காகக் காத்திருந்தாள் (உ.வ.); குட. க [கா2 → கா4] கா5 kāttal, 4 செ.கு.வி. (v.i.) கா என்னும் ஏவல்; imperative verb. “காதலையா னின்னடியே வணங்க” (மருதூரந்.84);. [கல் → கள் → கவ் → கா] கா6 kā, பெ.(n.) காப்புநிலை (திவா.); preservation, protection [கா2→கா6] கா7 kā, பெ.(n.) 1. காக்கப்படுஞ் சோலை, பூந்தோட்டம்; forest, pleasure grove garden. இளமரங்கள் காட்சிக்கினியது (உ,வ,); 2.மரங்களும் புதர்களும் அடர்ந்த பெரிய நிலப்பரப்பு, காடு; forest, jungle, wood.. “கடிமரந் துளங்கிய காவும்” (புறநா23:9);. 3.விருமபியதைத் தருவதாகக் கருதப்பட்ட கற்பக மரம் (அக.நி);; the kaplpaka tree. 4. ஆல்; the banyan tree (சா.அக.);, ம.கா.காப்பு, காவு; க.கா;தெ., து.கான. [கா5→ கா7] கா8 kā, பெ.(n.) 1.செறிவு, அடர்த்தி; thickness, density. 2. தோட்சுமை (அக.நி.);; a load or pack, hung at either end of a pole and carried on the shoulders. “காவினது ஒருதலைக்கண்ணே பதலை தூங்க” (புறநா.103, உரை);, 3.இருபக்கமுஞ் சுமை தாங்கும் காவடித் தண்டு; pole with ropes hung on each eand, used to carry loads or gifts to a temple easily on the shoulder. “காமமு நாணு முயிர்காவாத் தூங்கும்” (குறள்.1163);, 4. துலாங்கோல் (வின்.);; lever or bean for a well-sweep; lever of a steel-yard; scales. 5. 100 பலம் கொண்ட நிறையளவு; a standard weight = 100 பலம். “பனையென் அளவும் காவென்னிறையும்” (தொல்.எழுத்து.தொகை 27);. 6. பூ அல்லது இதழ் முதலியன வைக்கும் பெட்டி; receptacle, basket, as for betel or flowers. “இவர்தரு மெல்லிலைக் காவும்” (சீவக-826);. ம.காவு, காவடி; கா.காகடி, காவடி; தெ.காவடி, காடி (நுகம்);; து.காவடி; கொலா.காவரி; பர்.காங்; கட.காசல்; கொண்.காஞ்ச்;குவி-காச. [கல்→கள்→கவ்→கா=செறிவு, அடர்த்தி, சுமை, எடை, சுமை தூக்கும் பெட்டி.] கா9 kā, இடை (part.) ஓர் அசைச்சொல்; a poetic expletive. “புறநிழற் பட்டாளோ விவளிவட் காண்டிகா” (நான் – இடை.22 உரை);. கா2→கா9. கா என்னும் கடிவினை பேணிகாத்தல், துணையாதல் பொருள் தருதலின் உண்கா (உண்ணத் துணையாகு);, செல்கா (செல்லத் துணையாகு); என்னும் சொற்களில், துணைவினையாகப் பெருக ஆட்சி பெற்றதால் துணைவினைகளாக வருபவை உரிச்சொற்களாகவும் அசைச்சொற்களாகவும் வளரும் என்னும் நெறிமுறைக் கிணங்க அசைச்சொல்லாயிற்று.); கா10 kā, பெ.(n.) கல்விக்குத் தெய்வமான கலைமகள்; goddess of learning; Brahma’s spouse. மா. கா [க2 →கா10] கா11 kā, பெ.(n.) தென்னை, பனை இவற்றின் கள் (த.சொ.அக.);; toddy. [கல் →கள் = கூடுதல், சேர்தல், திரளுதல், ஊறுதல். கள் → கவ் → கா = உறிய கள்.] கா12 kā, பெ.(n.) 1. துன்பம்; distress. 2. வலி ; pain, ache. [கப = செறிவு, அடர்த்தி, மிகுதி, துன்பம், வலி.] கா13 kā, பெ.(n.) உளுந்து ; blockgram (சா.அக.) [காய் →கா.] கா14 kā, பெ.(n.) காக்கை கரைதலைக் குறிக்கும் ஒலிக்குறிப்புச் சொல் (கருநா.);; onomotopoeic expr. to refer to the cawing of caws. க. கா |
கா.கண்ணான் | கா.கண்ணான் kākaṇṇāṉ, பெ.(n.) சாதிக்காய்: a kind of nutmeg – Goniothaiamus wyanadensis (சா.அக.);. [கா + கண்ணான்.] |
காக சி | காக சி kākaci, பெ.(n.) மணித்தக்காளி: black-berried solanum – Solanum nigrum (சா.அக.);. [கா+கசி] |
காக ணந்தி | காக ணந்தி kākaṇanti, பெ.(n.) காகணந்திரை; see Kagana-n-tirai (சா.அக.);. |
காக ணந்திரை | காக ணந்திரை kākaṇantirai, பெ.(n.) குன்றிக்கொடி; country liquorice – Abrus precatorius (சா.அக.);. [காகனம் + திரை.] |
காக தாளி | காக தாளி kākatāḷi, பெ.(n.) மரவகை; Ceylon ebony (செ.அக.);. [காகம்+தாளி] |
காக நாமன் | காக நாமன் kākanāmaṉ, பெ.(n.) 1. உட்சூடு; internal heat. 2. உடம்பின் சூடு, bodily heat. 3. உடம்பினுள் இருக்கும் நெருப்பு; internal or gastric fire. 4. பசி; hunger. 5. மனக்கொதிப்பு; anger. 6. உள்ளறிவு, internal knowledge. [காகம்+நாமன்] உட்சூடாவன : வெட்டைச்சூடு, பித்தச்சூடு, கணச்சூடு, கருப்பச்சூடு, மூலச்சூடு, காமச்சூடு முதலியன (சா.அக.);. |
காககங்கு | காககங்கு kākakaṅku, பெ.(n.) ஒரு வகைப்புல்; a kind of panic grass – Panicum milliaceum (சா.அக.);. [காகம்+கங்கு.] |
காககுடம் | காககுடம் kākakuṭam, பெ.(n.) எள்; sessamum seed (சா.அக.);. [காகம்+குடம்] |
காகக்கரிப்பன் | காகக்கரிப்பன் kākakkarippaṉ, பெ.(n.) கருங் கையாந்தகரை; a black-coloured eclipse plant. “கவிர் முடக்கற்றான் காகக்கரிப்பனீர் வல்லி” (தைலவ.தைல.94);. [காக்கை + கருப்பன் – காக்கைக்கருப்பன் →காக்கைக்கருப்பான்- காகக்கரிப்பன் (கொ.வ);.] |
காகக்கரிப்பான் | காகக்கரிப்பான் kākakkarippāṉ, பெ.(n.) கருப்புக் கரிசலாங்கண்ணி; a black variety of eclipse plant- Eclipta prostata (சா.அக.);. [காகம்+கரிப்பான்.] |
காகக்கல் | காகக்கல் kākakkal, பெ.(n.) கறுப்புநிறக் காந்தக்கல்; black load stone (சா. அக.); [காக்கை + கல் – காக்கைக்கல் – காகக்கல்.] |
காகக்குடம் | காகக்குடம் kākakkuḍam, பெ.(n.) எள் (த.சொ.அக.);; sesame. [காகம் + குடம் = காகக்குடம்.] |
காகசகுட்டம் | காகசகுட்டம் gāgasaguṭṭam, பெ.(n.) கொப்புளங்கள் சிவந்த நிறத்துடனுண்டாகிப் பின் கறுத்துக் கிராம்பு முகிழினுருவத்தைப் பெற்று உடைந்து காயமாகும் தொழுநோய்வகை (சீவரட்1 51.);, kind of leprosy, with reddish shinning spots followed by an eruption of dark nodules. [காக்கை + குட்டம் – காக்கைக் குட்டம் → காக்கசக்குட்டம் → காகசகுட்டம் (கொ.வ);. ‘காக்கை கருநிறம் குறித்தது. காக்கையின் பிறப்பைப்போல் முதற்சிவந்து பின்பு கறுப்பதால் இப் பெயர் பெற்றது (த.சொ.அக.);] |
காகசத்துவம் | காகசத்துவம் kākasattuvam, பெ.(n.) மகளிரின் பத்து மெய்ப்பாடுகளுள் ஒன்று (கொக்கோ. 4.26);: (Erot.); the natural disposition of a women, classed under the crow type, one of the tencattuvams. Skt.satva → த. சத்துவம் [காக்கை- காகம் + சத்துவம்] |
காகசம்பு | காகசம்பு kākacampu, பெ.(n.) 1. கறுப்பு நாவற்பழம்; black jaumoon – Ardisia humilis. 2. சம்பு நாவல்; malacca jaumoon (சா.அக.);. [காகம்+சம்பு] |
காகசிஞ்சை | காகசிஞ்சை kākasiñsai, பெ.(n.) குன்றிக்கொடி (த.சொ.அக);; climber of crab’s eye. [காக்கை → காகம்+(செஞ்சி); சிஞ்சை.] |
காகசுரம் | காகசுரம் kākasuram, பெ.(n.) [காக்கை → காகம்+சுரம் ‘காக்கை’ கருநிறம் குறித்துக் குற்றப்பொருள் உணர்த்திற்று.] |
காகச்சிலந்தி | காகச்சிலந்தி kākaccilanti, பெ.(n.) ஒரு வகைச் சிலந்திப் பூச்சி; a species of spider. [காகம் + சிலந்தி] இது உடம்பில் பட்ட இடத்தில் வெளுத்தும், சிவந்தும் கொப்புளமெழுப்பும். அதனால் விக்கல், இரைப்பு, அதிக தாகம், மூர்ச்சை, உறக்கம் கெடுதல், மார்புநோய் முதலிய துன்பங்கள் ஏற்படும் (சா.அக.);. [P] |
காகச்சிலை | காகச்சிலை kākaccilai, பெ.(n.) காந்த ஆற்றல் உள்ள ஒருவகை இரும்புக்கட்டி (வின்);; black load stone, magnetic oxide of iron. மறுவ. கருமுகிற்சிலை [கா2 → காக்கு → காக்கன்+சிலை-காக்கஞ்சிலை → காகச்சிலை (கொ.வ.);.] |
காகச்சுக்கான் | காகச்சுக்கான் kākaccukkāṉ, பெ.(n.) கருஞ் சுக்கான் (வின்..);; black marble. [காக்கை + சுக்கான் – காக்கைச்சுக்கான் →காகச்சுக்கான் (கொ.வ); ‘காக்கை’ கருநிறம்குறித்தது.] |
காகச்சுரம் | காகச்சுரம் kākaccuram, பெ.(n.) கரும் புள்ளிகளை எழுப்பும் ஒரு வகைக் காய்ச்சல், a kind of developing black or dark eruptions or spots in the body (சா.அக.);. [காகம்+சகரம்.] |
காகணம் | காகணம் kākaṇam, பெ.(n.) ஒரு வகைக் குட்ட நோய்: a kind of leprosy. [கா + கணம்] இது கருஞ் சிவப்பு கொப்புளங்களை எழுப்பும் பூச்சிகளின் குற்றத்தினால் உண்டாவது (சா.அக.);. |
காகண்டகம் | காகண்டகம் kākaṇṭakam, பெ.(n.) 1.மருக்காரை; common emetic nut – Randia dumetorum. 2. பறவைக் கொல்லி அல்லது பருந்து; destroyer of birds or hawk; falcon (சா.அக.);. [கா+கண்டகம்] |
காகண்டம் | காகண்டம் kākaṇṭam, பெ.(n.) பிரண்டை; adamant creeper-Vitex quadrangularis (சா.அக.);. [கா + கண்டம்] |
காகதாலியம் | காகதாலியம் kākatāliyam, பெ.(n.) காகதாலீயம் பார்க்க; see ‘விளங்கிலிரோ….காக தாலிய மென்பதுவே” (வெங்கைக்கோ.10);. [காகம்+தாலம்-காகதாலம் → காகதாலியம். தாலம் = பனைமரம்.] |
காகதாலீயம் | காகதாலீயம் kākatālīyam, பெ.(n.) காக்கை பனையில் வந்து அமர, பனம்பழம் வீழ்ந்தது போல எதிர்பாராமல் இயல்பாக ஒத்து நிகழும் நிகழ்வு ; lustration of the sitting of the crow on the palmtree followed by the fall of palm-fruit as an instance of post hoc ergo propter hoc. “காகதாலீயம்போல் வாதனையின் வசத்திலுளங் கலந்து நிற்குமேகமுற” (ஞானவா.உற்ப.66); [காகதாலியம் → காகதாலீயம், காக்கை உட்கார்ந்ததால்தான் பனம்பழம் கீழே வீழ்ந்தது என வலியப் பொருத்தியுரைக்கும் ஏரணத்தாரின் வலக்காக்கூற்று] |
காகதிக்தம் | காகதிக்தம் kākatiktam, பெ.(n.) குன்றி, crab”s eye – Abruos precatorious (சா.அக.);. [காகம்+திக்தம்] |
காகதிண்டு | காகதிண்டு kākatiṇṭu, பெ.(n.) ஒருவகைக் கருங்காலி; a kind of ebony – Diospyros tomentosa (சா.அக.);. [காகம்+திண்டு.] |
காகதித்தம் | காகதித்தம் kākatittam, பெ.(n.) குருஞ்சூலி மரவகை; toon tree – Cedrela toona (சா.அக.);. [காகம்+தித்தம்] |
காகதிறம் | காகதிறம் kākatiṟam, பெ.(n.) குறிஞ்சா; Indian or country ipecacuanha – Asclepias asthmatica (சா.அக.);. [காகம்+திறம்] |
காகதுண்டகம் | காகதுண்டகம் kākatuṇṭakam, பெ.(n.) ஒரு நீர்க்கோழி; a kind of water-fowl (சா.அக.);. [காகம்+துண்டகம்] |
காகதுண்டம் | காகதுண்டம் kākaduṇṭam, பெ.(n.) அகில்; eaglewood, “ஏந்தெழிற் காகதுண்டம்” (சூளா. சீய.105); [காக்கை → காகம் + துண்டம். காக்கை கருநிறம் குறித்தது. துண்டம் = அகிற்கட்டையின் துண்டு.] |
காகதுண்டி | காகதுண்டி kākatuṇṭi, பெ.(n.) காக்கைப் பொன்; tinsel of brass leaf (சா.அக.);. [காகம்+துண்டி] |
காகதும்பி | காகதும்பி kākatumpi, பெ.(n.) 1. ஒரு வகைக் கருப்புத் தும்பி மீன், கடல் மீன்; a brownish black sea fish called black toombyGymna-Pistusniger. 2. முதுகின் புறம் கருப்பாயுள்ள தும்பி மீன்; another variety of toomby – Pterois volitans. 3. மற்றொரு வகைத் தும்பி மீன்; another variety – Pterois miles. 4. குருங்காலி; Mysore coromandal ebony – Diospyros tupru. 5. கருப்பு மரம்; black ebony – Diospyros melan-oxylon. 6. ஒரு நரும்பிலி மரம்; south Indiam pine-Podo carpus latifolia. [காகம்+தும்பி] |
காகதூண்டி | காகதூண்டி kākatūṇṭi, பெ.(n.) காகதுண்டி பார்க்க; see kaga-tundi(சா.அக.);. |
காகதேரி | காகதேரி kākatēri, பெ(n.) மணித்தக்காளி (மலை);; black night shade. [காக்கை → காகம்+தேரி. காக்கை கருநிறம் குறித்தது.) |
காகத் திருப்பி | காகத் திருப்பி kākattiruppi, பெ.(n.) திப்பிலி; long pepper – piper longum (சா.அக.);. [காக்கம்+திருப்பி] |
காகத்தீருகம் | காகத்தீருகம் kākattīrukam, பெ.(n.) காட்டுப் புகையிலை; wild tobacco – Lobelia nicotianaefolia (சா.அக.);. [காகம்+திருகம்] |
காகத்துரத்தி | காகத்துரத்தி kākatturatti, பெ.(n.) ஆதொண்டை (மலை);; thorny caper. [காக்கை + துரத்தி – காக்கைத்துரத்தி – காகத்துரத்தி.] |
காகத்துவசத்தாள் | காகத்துவசத்தாள் kākattuvasattāḷ, பெ.(n.) காக்கைக்கொடியாள் பார்க்க; see _ Skt. twaja < த. துவசம் [காக்கை → காகம் + துவசத்தாள்] |
காகநகம் | காகநகம் kākanakam, பெ.(n.) கருப்பும், சிவப்புமானத் தழும்புகளை உடம்பில் உண்டாக்கும் ஒரு தோல் நோய்; a skin disease characterised by dark-red or black-coloured patches with burning pain in the affected parts (சா.அக.);. [காகம்+நகம்] |
காகநாசத்துவம் | காகநாசத்துவம் kākanācattuvam, பெ.(n.) 1. நாக மல்லிகை, snake jasmineRhinacanthus communis. 2. பேய்ச்சேம்பு; a bitter plant (சா.அக.);. [காகம்+நாசத்துவம்] |
காகநாசம் | காகநாசம் kākanācam, பெ. (n.) 1. நரிமுருங்கை; a short or stunted variety of coral tree. 2. தவசு முருங்கை; Tranquebar gendarussa. 3. காக்கை கொல்லி , ஒருவகைக் கொடி; crow-killer (சா.அக.);. [காக்கை → காகம் + (நாற்று → நாத்து → நாச்சு → (நாச்சம்); → நாசம்.] காகநாசனி _. பெ.(n.); சேவகனார் கிழங்கு; plough root (சா. அக.); [காக்கை → காகம் → நாசனி.] |
காகநாசி | காகநாசி kākanāci, பெ.(n.) 1.பாற்சொற்றி (மூ.அ);; Indian guttapercha. 2. சிறுகொவ்வை (மலை);.);; crow’s beak. [காக்கை → காகம் + நாசி] த. நாளி → வ.நாசி. |
காகநாசிகம் | காகநாசிகம் kākanācikam, பெ.(n.) ஒரு பூடு; a plant – Leca hirta (சா.அக.);. [காக்கை+பாலை] |
காகநாசிகை | காகநாசிகை gāganācigai, பெ.(n.) சிறுகோவை; crow’s beak (சா.அக.);. [காக்கை → காகம் + நாசிகை] |
காகநாபி | காகநாபி kākanāpi, பெ.(n.) கருநாவிக் கிழங்கு; black aconite root – Glorisa superba (சா.அக.);. [காகம்+நாபி] |
காகநிந்துகம் | காகநிந்துகம் kākanintukam, பெ.(n.) 1.கருந்தும்பை; black tumbai flower of the leucas genus. 2. பெருந்தும்பை; large black toombay – Aniso meles malabarica. 3. எட்டி; nux vomica – Strychnos nux vomica (சா.அக.);. [காகம்+திந்துகம்] |
காகநிமிளை | காகநிமிளை kākanimiḷai, பெ.(n.) 1. கருநிமிளை (மூ.அ);; antimony. 2. ஈயக்கரடு; an alloy of tin and antimony. 3. காக்கைப்பொன்; brass tinsel or brass leaf glittering like gold (சா.அக.);. [காக்கை → காகம்+நிமிளை) |
காகநீலை | காகநீலை kākanīlai, பெ.(n.) நாவல்மரம்; a kind of jaumoon-plum tree. [காகம் + (நீலம்); நீலை.] |
காகநேமி | காகநேமி kākanēmi, பெ.(n.) ஒரு பளபளப்பான கருப்புப் பிசின்; black dammer; resin. இது மேற்குக் கரை காடுகளில் விளையும் ஒரு மரத்தின் அடி பகுதியைக் கீறி எடுக்கப்படும் உறைந்த பால். இது கருப்பூரத் தைலத்தை விட அதிகமாகப் புகையும் (சா.அக.);. [காகம்+நேமி] |
காகநேரி | காகநேரி kākanēri, பெ.(n.) மணித்தக்காளி (மலை);; black nightshade (த.சொ.அக);. [காகம் + நேரி] காகப்புள் _ , பெ.(n.); 1. காக்கை; crow. 2.23ஆம் நாண்மீன், பறவை (அவிட்டம்); (பிங்);.; the 23rd star Avittam. [காக்கை → காகம் + புள். புள் = பறவை] |
காகந்தகம் | காகந்தகம் kākantakam, பெ.(n.) ஆற்று முள்ளங்கி; wall radish – Blumea arita [கா+(கந்தம்); கந்தகம்.] |
காகந்தம் | காகந்தம் kākantam, பெ.(n.) 1. கருவக்களை மரம்; a kind of ebony – Diospyros tementosa. 2. ஒரு சிலந்திப் பூச்சி; a kind of spider (சா.அக.);. [கா+கந்தம்] |
காகந்தி | காகந்தி kākandi, பெ. (n.) காவிரிப்பூம்பட்டினம்; so named after one of its kings “ககந்தன் காத்தலிற் காகந்தியென்றே” (மணிமே. 22:37);. [ககந்தன் – காகந்தி] காகநதி _ பெ. (n.); காவிரியாறு ; river Kaviri (த.சொ.அக.);. [காகம் + நதி. காக்கையால் உண்டாக்கப்பட்ட ஆறு. நீர் → நீத்தம் → நத்தம் → நத்தி → நதி. ‘நதா’ எனில் ஒலியெழுப்புதல்; அதனால் ஒலியெழுப்பி ஒடும் ஆறு. நதி என்றாயிற்று என்பர் வடநூலார். ஒலிக்குறிப்பு எல்லா மொழிக்கும் பொதுவானதாதலின் இது பொருந்தாது.) |
காகந்துரத்தி | காகந்துரத்தி kākanturatti, பெ.(n.) 1. ஆதொண்டை; thorny caper-Capparis horrida. 2. காத்தொட்டி; Ceylon caperCapparis zeylanica (சா.அக.);. [காகம்+துரத்தி] |
காகனாசனி | காகனாசனி kākaṉācaṉi, பெ.(n.) 1. சேவகனார் கிழங்கு; plough root – Methonica superba. 2. சிற்றாமல்லி; shorttubed Arabian jasmine – Jasminum sambuc (typica); (சா.அக.);. [காகம்+நாசினி] |
காகனார் | காகனார் kākaṉār, பெ.(n.) நான்மணிக் கடிகை இயற்றிய புலவர்; the versor of nānmani-k-kagigai (அபி.சிந்.);. [காகன்+ஆர்] |
காகபதம் | காகபதம் kākabadam, பெ.(n.) 1. அறுபத்தையாயிரத்து ஐந்நூற்று முப்பத்தாறு (65,536);. கணங்கொண்ட காலவகை (பரத.தாள.27);; 2. வயிரக்குற்றங் களுளொன்று; a kind of diamond fault. காகபாதம் பார்(உவ);. 3. எழுத்து வரிப்பிளப்பைக் குறிக்கும் புள்ளடி (உ.வ.);; caret. [காக்கை → காகம்+ (பாதம்); பதம்.] |
காகபரணி | காகபரணி kākabaraṇi, பெ.(n.) நரிப்பயறு; a variety of greengram (த.சொ.அக.);. [காக்கை → காகம் + பரணி] |
காகபரி | காகபரி kākapari, பெ.(n.) காக்கைப் பொன்; brass tinsel (சா.அக.);. [காகம்+பறி] |
காகபலம் | காகபலம் kākabalam, பெ.(n.) 1. வேம்பு; neem. 2. நாவல்வகை; a kind of jamboo. 3. எலுமிச்சை; lime tree (சா.அக.);. [காக்கை → காகம் + பலம்] |
காகபலி | காகபலி kākabali, பெ.(n.) 1. பகலில் உணவு கொள்ளுதற்கு முன்பு காகத்துக்கு இடும் உணவு; ball of rice thrown to crows by Hindus just before their mid-day meal. 2. இறந்தவர் (ஆன்மாவு);க்காக காகத்துக்கு இடும் உணவு; ball of rice and other ingredients placed to crows for the soul of the dead person by the relatives. மறுவ. காக்கைப்பலி [காக்கை → காகம்+பலி] |
காகபாடாணம் | காகபாடாணம் kākapāṭāṇam, பெ.(n.) காக்கை நஞ்சு பார்க்க; see _. Skt. _ → த. பாடாணம். [காக்கை → காகம் + பாடாணம்] காகபாடாணம் kākapāṭāṇam, பெ.(n.) வைப்பு நஞ்சு வகை; a prepared arsenic, one of 32. [Skt.{}+{} → காகபாஷாணம் → த.காக பாடாணம்.] |
காகபாதம் | காகபாதம்1 kākapātam, பெ.(n.) 1. பன்னிருவகை வயிரக்குற்றங்களுள் ஒன்று); a flaw in diamond, one of 12 vayira-k-{}. “காகபாதமும் களங்கமும் விந்துவும்”(சிலப் 14:180);. [காக்கை → காகம் + பாதம்] காகபாதம்2 kākapātam, பெ.(n.) எழுத்து வரிப்பிளப்பைக் குறிக்கும் புள்ளடி (இ.வ.);; caret. [காக்கை → காகம்+பாதம். விடுபட்டுப்போன எழுத்து அல்லது சொல்லை.இடைச்செருக இடப்படும் காக்கையின் கால் போன்ற அடையாளக் குறி.] |
காகபிந்து | காகபிந்து kākabindu, பெ.(n.) கரும்புள்ளி; black dot. “வயிரம் ரக்தபிந்துவும் காகபிந்துவும் உடையன.” (S.I.I.ii,78);. மறுவ. காக்கைப்புள்ளி Skt. bindu → த. பிந்து [காக்கை → காகம் + பிந்து] |
காகபீலி | காகபீலி kākapīli, பெ.(n.) குன்றிக்கொடி, crab’s eye creeper(சா.அக.);. [காகம் + பீலி. பீலி = தழைத்த கொடி.] |
காகபுச்சம் | காகபுச்சம் kākapuccam, பெ.(n.) குயில்; Indian cuckoo – Cuculus orientalis (சா.அக.);. [காகம்+புச்சம்] |
காகபுட்டம் | காகபுட்டம் kākapuṭṭam, பெ.(n.) காகபுச்சம் பார்க்க; see kaga-puccam. |
காகப்பீருகம் | காகப்பீருகம் kākappīrukam, பெ.(n.) 1. கருப்புத் தும்பை; black toombay indica. 2. கதும்பை, பேய் மருட்டி; Malabar catmint – Anisomeles malabarica. 3. கருங்காலி; coromandal ebony. 4. கருப்பு மரம்; black ebony – Diospyros melanoxylon (சா.அக.);. [காகம்+பிருகம்] |
காகமஞ்சி | காகமஞ்சி kākamañji, பெ.(n.) காட்டுச் சாதிக்காய்; wild nut-meg (சா.அக.);. [காகம் – மஞ்சி] |
காகமர்த்தம் | காகமர்த்தம் kākamarttam, பெ.(n.) ஒருவகைக் கொம்மட்டி; a kind of colocynth (சா.அக.);. [காகம் → மருத்தம்] |
காகமலடி | காகமலடி kākamalaḍi, பெ.(n.) ஐவகை மலட்டுப் பெண்களுள் ஒருத்தி; one of the five classes of barren women (சா.அக.);. [காகம் + மலடி.] இரண்டு பிள்ளைப் பெற்றுப் பிறகு பிள்ளை பெறாதவள். ஐவகை மலடு: 1. ஆதி மலடு 2. காகமலடு 3. கதலிமலடு 4. கருப்பமலடு 5. ஆண்மலடு. |
காகமலடு | காகமலடு kākamalaṭu, பெ.(n.) முதலில் இரண்டு பிள்ளைகளைப் பெற்றுப் பின்பு இல்லாதிருக்கை; a woman who has begot two children (சா.அக.);. [காகம்+மலடு.] |
காகமல்லிகை | காகமல்லிகை gāgamalligai, பெ.(n.) காட்டு மல்லிகை பார்க்க; see _. ம. காகமாலிக [காக்கை + மல்லிகை] |
காகமாசி | காகமாசி kākamāci, பெ. (n.) 1. கருந்தக்காளி; black _. 2. செம்மணித்தக்காளி; a red variety of nightshade. “சதபுட்பி துஸ்பரிசமுண்டி வீழி சங்கரத்தை வாராகி காகமாசி” (தைல. தைலவ.76);. 3.மணித்தக்காளி; black nightshade. “காகமாசிப் பாதுகைமோரடமுருக்கு” (தைலவ. தைல:135); (த.சொ.அக.); [காக்கைமாசி → காகமாசி] |
காகமாசிகம் | காகமாசிகம் gāgamācigam, பெ. (n.) வழுதலை; brinjal (சா.அக);. [காகம் → மாசிகம்] |
காகமாசித்தைலம் | காகமாசித்தைலம் kākamācittailam, பெ.(n.) செம் மணித்தக்காளிச் சாற்றுடன் சில கடைச் சரக்குகளைச் சேர்த்து வடித்த எண்ணெய்; a medicated oil in which the red-berried nightshade forms the chief ingredient along with other drugs (சா.அக.);. [காகமாசி + Skt. தைலம்.] |
காகமுண்ணுங்காசம் | காகமுண்ணுங்காசம் kākamuṇṇuṅkācam, பெ.(n.) காக்கைகள் விருப்பப்பட்டு உண்ணும் கோழையையும், சளியையும் வெளிப்படுத்தும் ஈளை நோய்; a kind of asthma attended with a discharge of phlegm or mucous fondly picked up by Crows (சா.அக.);. [காகம்+உண்ணும்+Skt. காசம்] |
காகம் | காகம் kākam, பெ.(n.) 1. காக்கை; crow “காகபந் தரிற் கருமுகிற் காளிமங்கஞலும்”(கந்தபு.ஆற்றுப். 13);. 2. 23 ஆம் நாண்மீன் பறவை (அவிட்டம்);; the 23rd star (avitam);. “புடையுறு காகம் வசுக்கை நாள் பறவையுள்ளு மாவணியு மேயவிட்டம்” (சாதகசிந். காலநிகண். 20);. 3. கீரி; mongoose. 4. கற்பகமரம்; kalpaga tree. மறுவ. காணுகம் [காக்கை → காக்கய் → காக்கம் → காகம்] |
காகயவம் | காகயவம் kākayavam, பெ.(n.) பதர்; chaff. [காகம் + (அவம்); யவம்] |
காகயா | காகயா kākayā, பெ.(n.) காத்தொட்டிக் கொடி; a thornycreeper – Ceylon caper (சா.அக.);. [கா+கயா] முட்செடியாகிய இதற்கு ஆதண்டன், ஆதொண்டன், காத்தொட்டி என்று பல பெயர் களுண்டு. இதன் இலைகள் அழற்சியைப் போக்கி, பசியை உண்டாக்கும். வேர்ப்பட்டை வலியையும், வேட்கையும் போக்கும். கக்கலையும் போக்கும் (சா.அக.);. |
காகரி | காகரி kākari, பெ.(n.) திப்பலி (மலை);; long pepper. Skt. krkara [ஒருகா. கருங்கரை → காகரை → காகரி] |
காகருகம் | காகருகம் gāgarugam, பெ.(n.) 1.எள்ளுச்செடி; sesame seed plant. 2.எட்டி; nux vomica. 3. குரு விச்சை; a parasitic plant (சா.அக.);. [கரு → கருக்கல் → கருக்கலகம் → காகருகம்] |
காகருடி | காகருடி kākaruṭi, பெ.(n.) 1. குயில்; Indian cuckoo. 2. பன்றி; hog (சா.அக,.);. [காகம்+ரூ.டி.] காகருடி kākaruḍi, பெ(n.) 1. பன்றி; pig. 2. குயில்; Indian cuckoo (சா.அக.);. [கரு + கருளி → காக்கருளி → காகருடி] |
காகருபலா | காகருபலா kākarubalā, பெ.(n.) பூசணிக்காய்; pumpkin (சா.அக.);. [காகல் → காகரு + பலா (கொ.வ);.] |
காகலிநிசாதம் | காகலிநிசாதம் kākalinicātam, பெ.(n.) ஏழாம் இசை வகையுள் ஒன்று; highest variety of the seventh note of the gamut, one of the cotaccuram. [காகளி → காகலி + நிசாதம்] |
காகலீரவம் | காகலீரவம் kākalīravam, பெ.(n.) காகரூடி பார்க்க; see ka-karupi(செ.அக.);. காகலீரவம் kākalīravam, பெ.(n.) குயில்; Indian cuckoo (சா.அக); [காகல் → ஈரவம்(நிலவு);.] |
காகலூகம் | காகலூகம் kākalūkam, பெ.(n.) ஆந்தை; owl (சா.அக.);. [காகல் + ஊகம்] |
காகலோத்திரம் | காகலோத்திரம் kākalōttiram, பெ.(n.) அரக் காம்பல்; red Indian water-lily (சா.அக.);. [காகல் + ஒத்திரம்] |
காகல் | காகல் kākal, பெ.(n.) கருமை; black. [கரு → கருகல் → காகல்] |
காகளகம் | காகளகம் kākaḷakam, பெ.(n.) குரல்வளை, larynx (சா.அக.);. [கா+களகம்.] |
காகளம் | காகளம்1 kākaḷam, பெ.(n.) 1. எக்காளம்; trumpet. “கல்லென விரங்குறு கரடி காகளம்” (கந்தபு. சரவண,9);. 2. பித்தளையாலான நீண்ட குழலிசைக் கருவி (கோயில் விழாக்களிலும், மதிப்புரவு வரவேற்பு நிகழ்ச்சிகளிலும் இயக்கப்பெறும்);; a kind of cornet (with a heavy sound, used in temple processions, and in welcome ceremonies);. “அக நாழிகைச் சென்னடைக்கு அடுத்தன தட்டழி மத்தளி, கரடிகை, தாளம், காகளம் ஏற்றி” (பார்த்திப சேகரபுரச் செப்பேடுகள் கி.பி.9 ஆம் நூற்றாண்டு); 3.புள்ளோசை; bird’s noise (த.சொ.அக.);. Skt. kahala [காகாளம் → காகளம்] காகளம்2 kākaḷam, பெ.(n.) 1. தொண்டையின் எலும்பு முருந்து; the thyroid cartilage (சா.அக.);. 2. ஒருவகைக் கழுத்தணி; a kind of necklace. [காகாளம் → காகளம்] |
காகளி, | காகளி, kākaḷi, பெ.(n.) இன்னிசை; a musical, melody, tune. [கா+களி. கா = பெரிய. காகளி = பெருங்களிப்பு மிகப் பாடுவது.] |
காகவசுகம் | காகவசுகம் kākavacukam, பெ.(n.) ஆலமரம்; banyan tree (சா.அக.);. [காகம்+வசுகம்] |
காகவல்லாரி | காகவல்லாரி kākavallāri, பெ.(n.) குன்றிச்செடி; creeper Indian Licorice (சா.அக.);. [காகம் + வல்லாரி] |
காகவாகனன் | காகவாகனன் kākavākaṉaṉ, பெ.(n.) காகவூர்தி யான் பார்க்க; see _. [காகம் + வாகனன்] |
காகவிருட்சம் | காகவிருட்சம் kākaviruṭcam, பெ.(n.) புல்லூரி; parasite or mistle-toe (சா.அக.);. [காகம்+விருட்சம்] |
காகவிருந்தம் | காகவிருந்தம் kākavirundam, பெ.(n.) ஒருவகை வைரம்; a kind of Diamond. “ஒன்றிற் கட்டின வயிரங்காக விருந்தமும் உருளையுமாக ஐஞ்சும்” (SII.ii.79-143 p.396);. [காகம்+விருந்தம்] காகவிருந்தம் kākavirundam, பெ.(n.) வயிரமணி வகை; a variety of diamond. “வயிரம் காகவிருந்தமும் உருளையுமாக ஐந்தும்” (S.I.I.I. 79-143 பக்.396);. [காக்கை → காகம் + விருந்தம்] |
காகவூர்தியான் | காகவூர்தியான் kākavūrtiyāṉ, பெ.(n.) காக்கையை ஊர்தியாகக் கொண்ட சனி (காரி);க் கடவுள்;_. as riding a crow. [காக்கை → காகம் + ஊர்தியான்] |
காகவேப்பிலை | காகவேப்பிலை kākavēppilai, பெ.(n.) கருப்பு வேப்பிலை; false wampee tree – Micromelum pubescens (சா.அக.);. [காகம்+வேப்பிலை.] காகவேப்பிலை kākavēppilai, பெ.(n.) கறுப்பு வேப்பிலை; false wampee tree (சா.அக.);. [காக்கை → காகம்+வேப்பிலை] |
காகவோசை | காகவோசை kākavōcai, பெ. (n.) காக்கை கத்துவது போன்ற காட்டோசை; cawing note, adefect in singing. ‘வினைபடு காகவோசை” (திருவாலவா.57:26.); [காக்கை → காகம்+ஒசை. காக்கை கருநிறம் குறித்துக் குற்றப்பொருள் உணர்த்துகிறது. இசைவாணர்க்கு ஒவ்வாத ஓசைக்குற்றம். இதனை அவச்சுரம் என்பர்.] |
காகா | காகா kākā, பெ.(n.). 1. காக்கையின் ஓசை; the cawing of crow. 2. நாணல்; reeds (சா.அக.);.. [கா + கா – காகா = கால்காலாக (குச்சிக் குச்சியாக);இருக்கும் நாணலும் இப்பெயர் பெற்றது] |
காகாங்கி | காகாங்கி kākāṅgi, பெ.(n.) சிறுகோவை; a small variety of crow creeper of the clitcrea genus (சா.அக.);. [காகம் → காகாங்கி] |
காகாசி | காகாசி kākāci, பெ.(n.) ஒருவகைக் கடல்மீன்; a kind of sea-fish (சா.அக.);. [காக்காச்சி → காகாசி.] |
காகாட்சிகோள நியாயம் | காகாட்சிகோள நியாயம் kākāṭciāḷaniyāyam, பெ.(n.) காகத்தின் இரு கண்களுக்கும் ஒன்றே மணியானாற் போல ஒரே சொல் அல்லது தொடர் ஈரிடத்து இயைந்து பொருள் விளக்கும் நெறி; illustration of the single eye-ball of the crow functioning through both the eyes, to explain the same word or phrase being construed twice (செ.அக.);. [காகாட்சி+கோளம்+Skt:நியாயம்] |
காகாண்டம் | காகாண்டம் kākāṇṭam, பெ.(n.) வெள்ளைக் கரும்பு; white sugar-cane (சா.அக.);. [ஒருகா. கோ + கண்டம் – கோகண்டம் + காகண்டம்] |
காகாபாலை | காகாபாலை kākāpālai, பெ.(n.) காக்கைப் பாலை பார்க்க; see kākkai-p-pălaj (சா.அக.);. |
காகாபிசாசு | காகாபிசாசு kākāpicācu, பெ.(n.) அரத்த முண்ணும் வெளவாற் பறவை; a kind of vampire-bat of black colour and bristling hair (செ.அக.);. [காகம்+பிசாக] |
காகாரண்டகி | காகாரண்டகி kākāraṇṭaki, பெ.(n.) காகண்டம் பார்க்க; see kakandam (சா.அக.);. |
காகாரி | காகாரி kākāri, பெ.(n.) ஆந்தை; owl. (த.சொ.அக.);. [காகல்(கருமை); → காகாலி + காகாரி] |
காகாலன் | காகாலன் kākālaṉ, பெ. (n.) அண்டங்காக்கை; raven. [கருங்காலன் → காகாலன்] |
காகாளம் | காகாளம் kākāḷam, பெ.(n.) காளம் பார்க்க; see _. [கா+காளம். கா = பெரியது. காளம் – எக்காள இசைக்கருவி] |
காகாவல்லி | காகாவல்லி kākāvalli, பெ.(n.) காகதித்தம் பார்க்க; see kāga-tittam (சா.அக.);. |
காகாவிரிச்சி | காகாவிரிச்சி kākāviricci, பெ. (n.) குருதியுண்ணும் வாவல் பறவை (யாழ்ப்.);; a kind of vampire-bat of black colour and bristling hair (J.);. மறுவ. காகாபிசாக [காக்கை → காக்கா → காகா + (வெருட்சி); விரிச்சி (கொ.வ);. காக்கைகளை அஞ்சியோடச் செய்யும் இயல்புடைய வாவல்பறவை என்பது கருத்து] |
காகிதம் | காகிதம் kākidam, பெ.(n.) 1. கடுதாசி; paper. 2. கடிதம்; epistle written on paper. U.{}. த.வ.தாள். [Mhr.{} → த.காகிதம்.] |
காகித்தம் | காகித்தம் kākittam, பெ.(n.) காகித்திரம் பார்க்க; see kagittiram (செ.அக.);. |
காகித்திரம் | காகித்திரம் kākittiram, பெ.(n.) குறிஞ்சா; lindian ipecacuanha – Tylophora asthmatica (சா.அக.);. [காகம்+அத்திரம்] |
காகிமசாரி | காகிமசாரி kākimacāri, பெ.(n.) காகித்திரம் பார்க்க; see kāgittiram (சா.அக.);. |
காகிமம் | காகிமம் kākimam, பெ.(n.) காகி பார்க்க; see kagi (சா.அக.);. |
காகிவெல்லம் | காகிவெல்லம் kākivellam, பெ.(n.) பழுப்புவெல்லம் (மதி.கள.ii.112);; crude jaggery. [காக்கை → காக்கி(தரம் குறைந்தது); காக்கி+வெல்லம் – காக்கிவெல்லம் → காகிவெல்லம்] |
காகு | காகு kāku, பெ.(n.) கூறப்படாத அல்லது வேண்டாத பொருளைத் தரக்கூடிய சொல்லின் ஓசை வேறுபாடு. (குறள்.1318, உரை);; modulation of voice which indicates an implied meaning. க.காவு [காவு → காகு (களத்தில் கதிடிக்கும்போது தவசங்களில் சேர்ந்துவிடும் கதிர்பொதி கூளங்கள் காவு எனப்படும். இதுகாகு எனத் திரிந்தது.);] |
காகுகீரை | காகுகீரை kākuārai, பெ.(n.) இனிப்பான ஒரு வகைச் சிறுகீரை; a kind of small sweet greens – Amaranthus genus (சா.அக.);. [காகு+கீரை.] |
காகுதம் | காகுதம் kākutam, பெ.(n.) அண்ணம்; palate (சா.அக.);: [காகு- காகுதம்] |
காகுத்தன் | காகுத்தன் kākuttaṉ, பெ.(n.) காகுத்தக் குலத்தில் தோன்றிய இராமன்; Rama, the hero of the _. as a Kakutstha. “உற்ற ஞாலத்தொரு நகர் காகுத்தன், அற்றமில் கவியாற் றந்தது” (சேதுபு. சேதுச11); (த.சொ.அக.);. |
காகுராசி | காகுராசி kākurāci, பெ.(n.) 1. கொடிவகை; snake-gourd – Trichosanthes anguina. 2. பேய்ப்புடல்; wild snake-gourd (செ.அக.);. [காகு+ராசி] |
காகுளி | காகுளி kākuḷi, பெ.(n.) 1. பேய் கத்தினாற்போல் அஞ்சத்தக்க வல்லோசையில் பாடுவது (கல்லா. 21:40);; harsh demoniac sound produced while singing. வெள்ளை காகுளி கீழோசை வெடிகுரனாசி” (திருவிளை.விறகு.30);. 2. மிடற்றில் எழும் தாழ்வு ஓசை(பிங்.);; guttural sound. [களவு → காகு → காகுளி] காவு = தவசங்களில் கலந்துள்ள கதிர்பொதி கூளங்கள், குப்பையாகக் கருதப்படும் கதிரின் புடைக்கூறுகளான கொம்மை. இவை வேண்டாதவையென உழவர் களால் நீக்கப்படுதலின் விரும்பத்தகாத ஓசை காகுளி எனப்பட்டது. இதனோடு விரும்பத்தக்க காகளி இசையை ஒப்பாகக் கருதிச் செ.அக. காகுளி என்னும் சொல்லுக்கு மூன்றாம் பொருளாக ‘இசை’ எனப் பொருள் தந்திருப்பது தவறு. காகுளி2 kākuḷi, பெ. (n.) மெத்தை, இருக்கை (பிங்.);; bed, seat. [காவு → காகு → காகுளி கதிர் பொதிவளங்களான காவு கொம்மை உள்ளடைத்த மெத்தை.] |
காகூவெனல் | காகூவெனல் kāāveṉal, பெ.(n.) ஓர் ஒலிக்குறிப்பு; onom. expr. as in wailing. [கா + கூ + எனல். ‘கா’ ‘கூ’ என்பன வெற்றோசைக் குறிப்புகள். கந்தரனுபூதியில் “கூகாவென வென்கிளைகூடியது” என மாற்றிக் கூறினமை காண்க.] |
காகெந்து | காகெந்து kākentu, பெ.(n.) காகப்பிருகம் பார்க்க; see kaga-p-pirugam (சா.அக.);. |
காகேடளி | காகேடளி kāāṭaḷi, பெ.(n.) ஒரு கடைச்சரக்கு (கருஞ்சீரகம்);; black cumin [காகு+ஏடளி] |
காகேந்து | காகேந்து kāāntu, பெ.(n.) காகெந்து பார்க்க; see ka-kendu. |
காகொடி | காகொடி kākoḍi, பெ.(n.) எட்டிமரம் (மலை.);; nux vomica tree (சா.அக);. [கா + கொடி (கொடியது);.] |
காகோடகம் | காகோடகம் kāāṭakam, பெ.(n.) காட்டுமுருங்கை; jungle moringa; senna-leaved French honey suckle – Ormocarpum sennoides (சா.அக.);. [கா + கோடகம்] |
காகோடகி | காகோடகி gāāṭagi, பெ.(n.) வாலுளுவை (மலை);; spindle tree. [ஒருகா. கார் → கா + கோடகி] |
காகோடரிசி | காகோடரிசி kāāṭarici, பெ.(n.) வாலுளுவை; spindle tree – Celastrus paniculata (சா.அக.);. [கா + கோடரிசி] |
காகோடி | காகோடி kāāṭi, பெ. (n.) காகொடி பார்க்க; see _. [கா+கோடி. கொடு → கொடி → கோடி (கொடியது);. கா. பெரிய] |
காகோடியன் | காகோடியன் kāāṭiyaṉ, பெ.(n.) கழைக்கூத்தன் (அக.நி.);; strolling dancer. [கா + கோடியன். கா + தண்டு, தடி, கழை. கோடியன் = கூத்தன்.] |
காகோட்சி | காகோட்சி kāāṭci, பெ.(n.) 1. பாகற்கொடி, spiked bitter cucumber – Momordica charantia . 2 ஒரு வகைக் கசப்புப்பாகல்; an unknown bitter variety of pagal plant (சா.அக.);. [கா+கோட்சி] |
காகோதம் | காகோதம் kāātam, பெ.(n.) காகோதரம் பார்க்க; see _. “கங்குலிரைதேருங் காகோத ராசனும்” (திருப்பு);. [கால்கொள் உதரம் → காகோதரம் → காகோதம்.] |
காகோதரம் | காகோதரம் kāātaram, பெ.(n.) பாம்பு (பிங்.);; snake, that which moves on its belly in a zigzag way. [கால்கொள்+உதரம்(வயிறு);-காகோதரம் (கொ.வ.); வயிற்றைக் காலாகக் கொண்டது.] |
காகோதும்பரிகை | காகோதும்பரிகை kāātumparikai, பெ.(n.) பேயத்தி மரம், wild fig tree; devil”s fig tree – Ficus hispida alias F daemonum (சா.அக.);. [கா+கோதும்பரி+கை] |
காகோனியம் | காகோனியம் kāāṉiyam, பெ.(n.) காகேடளிபார்க்க; seeka-kedal(சா.அக.);. |
காகோர்ப்பலம் | காகோர்ப்பலம் kāārppalam, பெ.(n.) செவ்வாம்பல்; red water-lilly – Nymphae rubra (சா.அக.);. [காக+உற்பலம்] |
காகோறினி | காகோறினி kāāṟiṉi, பெ.(n.) அசோகு, Asoka tree-Saracaindica (சா.அக.);. [கா+கோலினி] |
காகோலம் | காகோலம் kāālam, பெ. (n.) அண்டங்காக்கை (உரி.நி.);; black jungle crow, raven. [கார் + கோலம் – கார்க்கோலம் → காகோலம் (கருநிறத்தது);.] |
காகோலி | காகோலி kāāli, பெ.(n.) தண்ணீர் விட்டான் கிழங்கின் இயல்பையுடைய ஒரு பூடு a plant having qualities a kin to that of the water-root – Asparagus racemosus [கா+கோல.] |
காகோளி | காகோளி kāāḷi, பெ.(n.) 1.அசோக மரம் (திவா.);; tree _. 2. தேட்கொடுக்கி (மலை.);; Indian tutnsole. 3. கொடியரசு (மலை.);; wild pipal. [கா (பெரிய); + கோளி (பூவாது காய்க்கும் மரம்);.] |
காகோளிகா | காகோளிகா kāāḷikā, பெ.(n.) தேட்கொடுக்கி; Indian turnsole or Indian heliotrope – Heliotropiumindicum (சா.அக.);. [கா+கோளிகம்] |
காகோளிச்சிறுமி | காகோளிச்சிறுமி kāāḷicciṟumi, பெ.(n.) சிரகாகோளி; caper shrub – Capparissphylla (சா.அக.);. [கா+கோளி+சிறுமி] |
காக்கசந்தி | காக்கசந்தி kākkasandi, பெ.(n.) உளுந்து; blackgram (சா.அக.);. க.கா [காய் → கா → காக்கம் + (சத்தி); சந்தி.] |
காக்கடா | காக்கடா kākkaṭā, பெ.(n.) தீப்பந்தம்; flambeau. [கா → காக்கு →காக்கடம் → காக்கடா. காக்கு = செறிவு, எரிவு, அனல்.] |
காக்கட்டான். | காக்கட்டான். kākkaṭṭāṉ, பெ.(n.) 1. கொடிவகை; mussell-shell creeper. 2. கொடிக்காக்கட்டான் (L.);; sky-blue bindweed. மறுவ. காக்கணம்,காக்கனங்கொவ்வை, காக்கணத்தி கருவினை, சங்குப்பூ, காக்கணா, கருவிளை. ம. காக்ணம், காக்காய் வல்லி, [கா2 →காக்கு →காக்கணம் → காக்கட்டான். காக்கட்டான்-இதனைக் காக்கரட்டான் என்பது விலக்கத்தக்க கொச்சை வழக்கு.] வகைகள்: 1.வெண்காக்கணம், 2.நீலக்காக்கணம், 3.கருங்காக்கணம் 4.இரட்டைக்காக்கணம். |
காக்கட்டான்விதை | காக்கட்டான்விதை kākkaṭṭāṉvitai, பெ.(n.) கொடிக்காக்கட்டான் விதை, kaladana seeds or seeds of the plant. கசப்பான இவ்விதை பெருவயிறு, தொண்டைக் கம்மல், தோல் நோய் இவற்றிற்கும் சளியைப் மல வழியாய் வெளிப்படுத்தவும் பயன்படும் (சா.அக.);. |
காக்கட்டான்வேர் | காக்கட்டான்வேர் kākkaṭṭāṉvēr, பெ.(n.) காக்கணங் கொடியின் வேர்; mussell-shell TOOt. [காக்கட்டான்+வேர்] நீரைப் பிரித்து, மலத்தை இளக்கும், காக்கணங்கொடியின் வேர் மூத்திரப்பை, மூத்திரத் தாரை ஆகியவற்றில் ஏற்படும் அழற்சியைப் போக்கி வெள்ளை, வெட்டை நோய்களையும் குணமாக்கும். இவ்வேரின் பொடி குழந்தைகளின் மாந்தம், காய்ச்சல், இருமலைப் போக்கும் (சா.அக.);. |
காக்கணக்கிரியம் | காக்கணக்கிரியம் kākkaṇakkiriyam, பெ.(n.) காட்டுச்சுரை; forest bottle-gourd (சா.அக.);. [காக்கணம் + கிரியம்] |
காக்கணங்கொடி | காக்கணங்கொடி kākkaṇaṅkoṭi, பெ.(n.) கொடிக்காக்கட்டான்; sky-blue blind weed, smaller morning glory – Ipomaea hederacea (சா.அக.);. [காக்கணம்+கொடி] |
காக்கணங்கொவ்வை | காக்கணங்கொவ்வை kākkaṇaṅgovvai, பெ.(n.) காக்கட்டான் பார்க்க; see _. [காக்கணம் + கொவ்வை] |
காக்கணத்தி | காக்கணத்தி kākkaṇatti, பெ.(n.) காக்கட்டான் பார்க்க; see _. [காக்கணம் → காக்கணத்தி] |
காக்கணம் | காக்கணம் kākkaṇam, பெ.(n.) 1. காக்கட்டான் பார்க்க; see _. 2. கருப்பு, சிவப்பு புள்ளிகளைக் கொண்ட ஒருவகைத் தொழுநோய்; a kind of leprosy with black and red spots. மறுவ. காக்கம் ம. காக்கணம் வகைகள்: 1.வெண்காக்கணம், 2.நீலக்காக்கணம், 3.கருங்காக்கணம் 4.இரட்டைக்காக்கணம். |
காக்கணா | காக்கணா kākkaṇā, பெ.(n.) காக்கட்டான் பார்க்க: see _. [காக்கணம் → காக்கணா] |
காக்கண்டம் | காக்கண்டம் kākkaṇṭam, பெ.(n.) காவடி; pole or stave of wood used for carrying burdens (சேரநா.);. ம. காகண்டம் [கா + கண்டம்] |
காக்கண்டல் | காக்கண்டல் kākkaṇṭal, பெ.(n.) சதுப்புநில மரவகை; calycine mangrove (சா.அக.);. [கா + கண்டல்] |
காக்கத்துவான். | காக்கத்துவான். kākkattuvāṉ, பெ.(n.) கிளிவகை; Cockatoo. [கா + கத்துவான்.] |
காக்கனம் | காக்கனம் kākkaṉam, பெ.(n.) காகனம் பார்க்க; see kagaram (சா.அக.);. |
காக்கன் | காக்கன்1 kākkaṉ, பெ.(n.) 1. கடல்மீன் வகை (M.M);; a sea-fish, grey, attaining 1½ ft. in length. 2. காக்கை; a crow. 3. கருப்பன்; a black man. ம. காக்கள் [கரு → காக்கு → காக்கன்.] காக்கன்2 kākkaṉ, பெ.(n.) 1. காப்பவன், protector. 2. தாய்மாமன்; maternal uncle. 3. மதிக்கத்தக்கவன்; respectable person. குச். காகா [கா → காக்கன்] |
காக்கன்போக்கன் | காக்கன்போக்கன் kākkaṉpōkkaṉ, பெ.(n.) 1. ஊர் பேர் தெரியாதவன்; stranger, unknown person. “காக்கனுக்கும் போக்கனுக்கும் பூத்தாயோ முல்லை “(நாட்டுப்பா);. 2. தீயவன்(வின்.); idle vagrant. க. து. காகபோக [காக்கறையன் = காக்கன். போக்கறையன் = போக்கன். இவ்விடைக் குறைச் சொற்கள் காக்கன் போக்கன் என எதுகை குறித்த இணைமொழி வடிவுற்றமை காணலாம்] |
காக்கம் | காக்கம் kākkam, பெ.(n.) சவரிக் கொடி; bitter snake-gourd. 2. கொவ்வைக் கொடி ; a common creeper of the hedges, [கா2 →காக்கு → காக்கம் (செறிந்துபடரும் கொடி);] |
காக்கரட்டான் | காக்கரட்டான் kākkaraṭṭāṉ, பெ.(n.) காக்கட்டான் பார்க்க; see _. [காக்கட்டான் → காக்கரட்டான் (கொ.வ);.] |
காக்கரை | காக்கரை kākkarai, பெ.(n.) கரிசல் நிலம் (மதுரை);; black, stiff, clayey soil, cracking widely in dry weather, requiring a good soaking before being ploughed. தெ. கக்கரை [கார் + கரை=காக்கரை.] |
காக்கறை மூக்கறை | காக்கறை மூக்கறை kākkaṟaimūkkaṟai, பெ.(n.) 1. அசடன் (இ.வ.);; nincompoop (Loc); 2. அறிவற்றவன் fool. ம. காக்கரம் பூக்கரம் (ஒழுங்கற்ற நிலை); [காக்கறை + மூக்கறை] காக்கறை மூக்கறை என வரும் எதுகை குறித்த மரபிணைச் சொல் ‘எதனையும் காக்கும் திறனற்றவன்’ (காப்பில் அறை போயவன்);, ‘புகழ் பெறத்தக்க தோற்றம் இழந்தவன்’ எனப் பொருள் தருவதாகும் (மூக்கு அறை-மூக்கிழந்ததோற்றம்);. |
காக்கலாதிதம் | காக்கலாதிதம் kākkalādidam, பெ.(n.) காளான்; mushroom (சா.அக.);. |
காக்கலை | காக்கலை kākkalai, பெ.(n.) குறட்டை, bitter-gourd – Trichosanthes palmata (சா.அக.);. |
காக்களி | காக்களி kākkaḷi, பெ.(n.) தேட்கொடுக்கி; Indian turnsole or Indian heliotrope – Heliotropium indicum (சா.அக.);. [கா+களி] [P] காக்களி kākkaḷi, பெ.(n.) தேட்கொடுக்கி என்னும் மூலிகை; Indian heliotrope (சா.அக.);. [கா + கொளி-காக்கொளி → காக்களி.] |
காக்கா | காக்கா kākkā, பெ.(n.) அண்ணன் (மு.வ.);; elder brother. [U.{} → த.காக்கா.] |
காக்காச்சி | காக்காச்சி1 kākkācci, பெ.(n.) 1.கடலிலும் ஆற்றிலும் வாழ்வதும், ஆறுவிரலம் நீளமுடையதுமன வெளிறிய மீன் வகை; a sea and river fish, silvery, attaining 6 in. in length. 2. 11 ¼ விரலம் வளரக்கூடிய கடல்மீன் வகை; a sea-fish, roseate, attaining 11 ¼ in. in length. 3, ஒரு வகை கிளிஞ்சில்; cockle. [கா2 → காக்கு → காக்காச்சி] காக்காச்சி2 kākkācci, பெ.(n.) காக்கையினத்தில் பெண்பால் (பேச்சு வடி.);; female crow. [காக்கை + ஆச்சி – காக்காச்சி.] |
காக்காந்தோல் | காக்காந்தோல் kākkāndōl, பெ.(n.). குதிகாலில் உண்டாகும் கொப்புளவகை (நெல்லை.);; abscessin the heel. மறுவ. காக்காய்க்கொப்புளம், காக்காய்த்தோல், காக்காய்த்தோலி, காக்காய்ப்புண். [கா2 → காக்கு → காக்கன் + தோல்-காக்கந்தோல் → காக்காந்தோல். காக்கு = திரட்சி (செறிவு);. இதனைக் காக்காய்த்தோல் என்று செ.அ.க. குறித்திருப்பது கொச்சை வழக்கு); |
காக்காய் | காக்காய் kākkāy, பெ.(n.) காக்கை பார்க்க; see _ ‘காக்காய் உட்காரப் பனம்பழம் விழுந்தது’ (பழ); [கா+கா-காக்கா→ காக்கை → காக்காய் (ஐகார ஈறுஆய் ஈறாகத் திரிவது கொச்சைவழக்கு);.] |
காக்காய் மரங்கொத்தி | காக்காய் மரங்கொத்தி kākkāymaraṅgotti, பெ(n.) ஒருவகை மரங்கொத்தி; the Malabar great black woodpecker (சேரநா.);. ம. காக்க மரங்கொத்தி [காக்கை → காக்காய் + மரங்கொத்தி. ‘காக்கை’ கருநிறம் குறித்தது.] |
காக்காய்க்கடி | காக்காய்க்கடி kākkāykkaṭi, பெ.(n.) பெரும்பாலும் சிறுவர்கள் தின்பண்டம் போன்றவற்றை எச்சில் படாமல் துணியால் மூடிக் கடிக்கும் முறை; practice of splitting sweet meats, etc., in which the object is not directly bitten but through a cloth prevalent among children. அந்த மிட்டாயில் எனக்குக் காக்காய்க் கடி கடித்துக் கொடு “காக்காய் கடி கடிச்சு கொடுத்த கமருகட்டு மிட்டாயி சோக்கா வாங்கி போட்டுக்கிட்டு விட்டானப்யா கொட்டாவி (நா.பா.);” [காக்காய்+கடி] காக்காய்க்கடி kākkāykkaḍi, பெ.(n.) பெரும் பாலும் சிறுவரிடையே காணப்படும் தின்பண்டம் போன்ற வற்றை எச்சில் படாமல் துணியால் மூடிக் கடிக்கும் முறை; practice of splitting sweets nuts etc; in which the object is not directly bitten but through a cloth (prevalent among children);. அந்த வெல்லக்கட்டியில் எனக்குக் காக்காய்க்கடி கடித்துத்தா (உவா);. [காக்காய் + கடி] |
காக்காய்க்காய்க் குளியல் | காக்காய்க்காய்க் குளியல் kākkāykkāykkuḷiyal, பெ.(n.) முழு உடம்பையும் நனைக்காமல் தண்ணீரை அள்ளித் குளித்தல்; have wash in a hurry. காக்காய்க்குளியல் போட்டு விட்டு ஐந்து நிமிடத்தில் வந்துவிடுகிறேன் (உ.வ.);. க. காகச்நான |
காக்காய்க்கால் | காக்காய்க்கால் kākkāykkāl, பெ.(n.) 1. காய்ந்த வயலிற் காணும் வெடிப்பு (இ.வ);; splits or clefts in dried fields of wet cultivation. 2. காக்கையின் கால்போற் காணும் வயிரக்குற்ற வகை (உவ);; flaw in a gem, esp. a diamond, so called from its resembling a crow’s foot. 3.குழந்தைகள் வரைபடம் கிறுக்கலான கையெழுத்து; drawing made by children, ugly hand-writing. 4.எழுத்து வரிப்பிளப்பைக் குறிக்கும் புள்ளடி(இ.வ.);; caret (loc.);. 5. மிளகுக் கொடி, வெற்றிலைக் கொடி போன்றவற்றின் கணுக்களில் தோன்றும் சிறிய பற்று வேர்; roots at the nodes of climbers like betelvine, peppervine etc. 6.கற்றை கட்டுவதில் ஒரு வகை one of the nodes of binding the sheaves of corn. ம. காக்கக்கால் [காக்கை → காக்காய் + கால் (கோணலான கோடு);] |
காக்காய்க்கால் தையல் | காக்காய்க்கால் தையல் kākkāykkāltaiyal, பெ(n.) தையல்வேலைப்பாடுகளுள் ஒன்று feather setching. [காக்கை → காக்காய்+கால்+தையல்.] |
காக்காய்க்குறவன். | காக்காய்க்குறவன். kākkāykkuṟavaṉ, பெ.(n.) காக்கை தின்னும் ஓர் இனத்தார்; crow eating people மறுவ. காக்கைக்குறவன் ம. காக்கக்குறவன் [காக்கை → காக்காய் + குறவன்] |
காக்காய்க்குளியல் | காக்காய்க்குளியல் kākkāykkuḷiyal, தொ.பெ. (vbl.n.) முழு உடம்பையும் நனைக்காமல் தண்ணிரை அள்ளித் தெளித்துக் குளிக்கை; wash head in a hurry. காக்காய்க் குளியல் போட்டு விட்டு ஐந்துநிமையத்தில் வந்து விடுகிறேன். [காக்காய் + குளியல்.] |
காக்காய்க்கொப்புளம் | காக்காய்க்கொப்புளம் kākkāykkoppuḷam, பெ.(n.) காக்காந்தோல் பார்க்க; see _ [காக்கை → காக்காய் +கொப்புளம்] |
காக்காய்க்கொல்லி | காக்காய்க்கொல்லி kākkāykkolli, பெ.(n.) காக்கைக் கொல்லி பார்க்க see _ , [காக்கை → காக்காய் + கொல்லி] |
காக்காய்க்கொல்லிவிதை | காக்காய்க்கொல்லிவிதை kākkāykkollivitai, பெ.(n.) மருந்தாகப் பயன்படும் காக்கைக் கொல்லிக்கொடியின் விதை; berries of crow-creeper or bitter creeper-Fructus cocculi of chemists (சா.அக.);. [காக்கைக்கொல்லி→ அகாக்காய்க்கொல்லி+விதை.] |
காக்காய்க்கொள் | காக்காய்க்கொள் kākkāykkoḷ, பெ.(n.) காக்காய்க்கொல்லி எனும் செடிவகை; a plant – Coeculus indicus. [காக்காய்+கொள்.] |
காக்காய்ச்சிப்பி | காக்காய்ச்சிப்பி kākkāyccippi, பெ.(n.) ஏரிகளிலும் குளங்களிலும் காணும் நத்தை வகை; cockles in lakes and tanks (சா.அக);. மறுவ. காக்கைச்சிப்பி [காக்கை → காக்காய் + சிப்பி. காக்கை நிறம், கறுப்பு நிறச் சிப்பி.] |
காக்காய்ச்சோளம் | காக்காய்ச்சோளம் kākkāyccōḷam, பெ.(m.) காக்கைச்சோளம் பார்க்க; see _ மறுவ. காக்கைச்சோளம் ம. காக்கச்சோளம் க. காகெசோள. [காக்கை → காக்காய் சோளம்-காக்காய்ச்சோளம். ‘காக்கை’கருநிறம் குறித்தது] |
காக்காய்த்தாளி | காக்காய்த்தாளி kākkāyttāḷi, பெ(n.) கருங்காலி வகை (L);; Ceylon ebony. மறுவ. காக்கைத்தாளி [காக்கை →காக்காய் + தாளி] |
காக்காய்த்தும்பை | காக்காய்த்தும்பை kākkāyttumbai, பெ.(n.) காக்கைத்தும்பை பார்க்க; see _ name of a plant, Malabar catmint(சேரநா);. மறுவ. காக்கைத்தும்பை ம. காகத் தும்ப; க.கரிதும்பெ. [காக்கை → காக்காய்+தும்பை] |
காக்காய்த்தோலி | காக்காய்த்தோலி kākkāyttōli, பெ.(n.) காக்காந்தோல் பார்க்க; see _ [காக்காய்த்தோல் → காக்காய்த்தோலி] |
காக்காய்த்தோல் | காக்காய்த்தோல் kākkāyttōl, பெ.(n.) காக்காந் தோல் பார்க்க; see _ [காக்கு → காக்கன்-காக்காய் + தோல். காக்கு = திரட்சி (கொ.வ] |
காக்காய்நீர் | காக்காய்நீர் kākkāynīr, பெ.(n.) இளநீர் போன்ற தெளிவான தண்ணீர் (இ.வ.);; clear limpid water (loc.);. [கால் + காய்-காக்காய் + நீர். வழுக்கை ஒருசிறிதும் திரளாத இளநீர் கால்காய் (தேங்காயின் காற்பகுதி வளர்ச்சி எனப்படுதலின் இது இப்பெயர் பெற்றது); |
காக்காய்பிடி-த்தல் | காக்காய்பிடி-த்தல் kākkāypiḍittal, 4 செ.குன்றாவி. (v.t) கால்கைபிடி-த்தல் பார்க்க: see _. ம. காக்கபிடிக்குக: க. காக்காய் கிடி; தெ. காக்கா பாட்டு. |
காக்காய்ப்பாலை | காக்காய்ப்பாலை kākkāyppālai, பெ.(n.) மரவகை(L.);, cluster-flowered croton. மறுவ. காக்கைப்பாலை [காக்கை → காக்காய் + பாலை] |
காக்காய்ப்பிசின் | காக்காய்ப்பிசின் kākkāyppisiṉ, பெ.(n.) கருவேலமரத்தினின்று வடியும் கொற கொறப்பான கரிய போலிப்பிசின்; gum-like back extrusion. மறுவ. காக்கைப்பிசின் [காக்கை → காக்காய் + பிசின். ‘காக்கை’ கருநிறம் குறித்தது] |
காக்காய்ப்புண் | காக்காய்ப்புண் kākkāyppuṇ, பெ.(n.) காக்காந் தோல் பார்க்க ; see _. [கா2 →காக்கு → காக்கன் → காக்காய் + புண். காக்கு = திரட்சி] |
காக்காய்ப்பூ | காக்காய்ப்பூ kākkāyppū, பெ.(n.) 1. தொட்டிகளில் வைத்து வளர்க்கும் ஒரு பூஞ்செடி (M.M);. sispara creeper, herbaceous pot plant, which bears small purple flowers. 2.அனிச்சம்; the plant. hibiscus furcatus(சேரநா.);. ம. காக்கப்பூ [காக்கை → காக்காய் + பூ, ‘காக்கை’ கருநிறம் குறித்தது] |
காக்காய்ப்பொன். | காக்காய்ப்பொன். kākkāyppoṉ, பெ.(n.) காக்கைப்பொன் பார்க்க; see _. [காக்கை = காக்காய் + பொன்] |
காக்காய்மீன் | காக்காய்மீன்1 kākkāymīṉ, பெ. (n.) கொருக்கை என்னும் கடல்மீன் வகை; a kind of sea-fish. [காக்கை → காக்காய் + மீன். ‘காக்கை’ கருநிறம் குறித்தது.] காக்காய்மீன்2 kākkāymīṉ, பெ. (n.) பொன்னிறப் பிசின்; gold-coloured gum (சா.அக.);. [காக்காய் + மின் = காக்காய்மீன். செவுள்களின் பசை போன்ற தாகலாம்) |
காக்காய்முள் | காக்காய்முள் kākkāymuḷ, பெ. (n.) 1. கூடுகட்டக் காக்கை பயன்படுத்தும் முள்; thorns used by crows in building their nests. 2. ஆனை நெருஞ்சி (M.M.); crow thorn, elephant caltrop pedalium murex. ம. காக்கமுள்ளு [காக்கை → காக்காய் முள்] |
காக்காய்மூக்கன் | காக்காய்மூக்கன் kākkāymūkkaṉ, பெ.(n.) நீண்ட மூக்குள்ளவன் (இ.வ);; man with sharp long nose. ம. காக்கமூக்கன் [காக்கை → காக்காய் + முக்கன்] |
காக்காய்மூக்கி | காக்காய்மூக்கி kākkāymūkki, பெ.(n.) கருமுகிற் செய்நஞ்சு(வின்.);; a prepared arsenic. [காக்கை → காக்காய் + மூக்கி] |
காக்காய்மூக்கு | காக்காய்மூக்கு1 kākkāymūkku, பெ.(n.) நட்ட தென்னை நெற்றினின்று தோன்றும் முளை; sprout from a coconut seedling just as it begins to grow, resembling a crow’s beak. [காக்கை → காக்காய் + மூக்கு] காக்காய்மூக்கு2 kākkāymūkku, பெ.(n.) கருமுகிற் செய்நஞ்சு (யாழ். அக);; a prepared arsenic. [காக்கை → காக்காய் + முக்கு] காக்காய்வடை _. பெ.(n.); நீத்தார் நினைவுநாளில் அல்லது ஈம இறுதி நாளில் தென் புலத்தார்க்குப் படைக்கும் வடை, cake offered to manes at the end of the last rites or annual ceremony of the deceased ancesstors. [காக்கை → காக்காய் + வடை. காக்கைக்கு இடும்வடை எனப் பொருள்படும்] |
காக்காய்வலிப்பு | காக்காய்வலிப்பு kākkāyvalippu, பெ(n.) கால்கை வலிப்பு பார்க்க; see _. ம. காக்கவலி [கால்+கை – காக்கை+வலிப்பு – காக்கை வலிப்பு = காக்காய் வலிப்பு எனத் திரிந்தது கடுங்கொச்சை வழக்கு.] |
காக்காய்வல்லி | காக்காய்வல்லி kākkāyvalli, பெ.(n.) காக்கணம் பார்க்க; see _ (சா.அக.);. |
காக்காய்வெருட்சி | காக்காய்வெருட்சி kākkāyveruṭci, பெ.(n.) காக்கைகட்கு மன வெருட்சியை உண்டாக்கும் வௌவால் வகை (M.M.);; lit., crow-terror, vampire bat of which crows are scared. [காக்கை = காக்காய்+வெருட்சி] |
காக்காரர் | காக்காரர் kākkārar, பெ.(n.) பல்லக்கின் காத்தண்டு களைச் சுமப்போர் (வின்.);; palanquinbearers; persons who carry loads suspended from a pole on their shoulders. [கா+காரர்-காக்காரர்.] |
காக்காவல்லி | காக்காவல்லி kākkāvalli, பெ.(n.) கொடிவகை (விவசா.நூன்மு.7);; a kind of creeper. [கா2 → காக்கு → காக்கன் → காக்கா + வல்லி) |
காக்காவெனல் | காக்காவெனல் kākkāveṉal, பெ.(n.) காக்கை கரையும் ஒலிக்குறிப்பு; onom. expression signifying the cawing of the crow. Skt. _ க.காகா [கா + கா + எனல். காக்கையின் ‘காகா’ என்னும் தொடரோசை. தொல்லைதரும் வெற்றோசை என்பது குறிப்பு) |
காக்கி | காக்கி1 kākki, பெ.(n.) 1. கருநிறத்துப் பெண் a woman of black colour. 2. காக்கை; crow. [காருக்கி → காக்கி. ஒ.நோ. கருக்கன் (ஆ.பா); = கருக்கி (பெ.பா);.] காக்கி2 kākki, பெ.(n.) ஒருவகைப் பழுப்பு நிறத்துணி; light drabor chocolate-coloured cloth produced by boiling myrobalans and sulphate of iron together. [கால் →காக்கு →காக்கி] |
காக்கினி | காக்கினி kākkiṉi, பெ.(n.) குருஞ்சூலி மரம், toon tree – Cedrela toons (சா.அக.);. மறுவ. அகச்குலி |
காக்குத்துவான். | காக்குத்துவான். kākkuttuvāṉ, பெ.(n.) காக்கத் துவான் பார்க்க; see _. காக்கத்துவான் காக்குத்துவான் (கொ.வ);.] |
காக்குநாயகன் | காக்குநாயகன் gāggunāyagaṉ, பெ.(n.) 1. ஒரு குடி; a community in TamilNadu; 2. ஒரு படை முதல்வர்; a main of the army. “இருப்பைபாக்கிழான் தாழி காக்குநாயகன், ஏறி அருளப் பண்ணின முதலியார் காக்கு நாயகர்க்கு காக்கு நாயகன் விசையன் செம்பிய தரையன் வைத்த”(SIl.vi330-4 p.328);. [காக்கு+நாயகன்.] |
காக்குமிளம் | காக்குமிளம் kākkumiḷam, பெ.(n.) நீர்க்குளிரி அல்லது நீர்ச்சேம்பு; waterarcher – Saggitaria obtusifolia (சா.அக.);. [காக்கு+மிளம்] |
காக்குறட்டை | காக்குறட்டை kākkuṟaṭṭai, பெ.(n.) 1. காக்கணங் கொவ்வை; mussell-shell creeper. 2. கருங் காக்கணத்தி; palmated gourd; blue mussell-shell creeper – Clitoria ternatea (சா.அக.);. [கா+குறட்டை] காக்குறட்டை kākkuṟaṭṭai, பெ.(n.) காக்கண வகை (மலை);; mussell-shell creeper. மறுவ. கருங்காக்கணம் [காக்கரட்டை →காக்குறட்டை] |
காக்கை | காக்கை1 kākkai, பெ.(n.) 1. கருநிறமுடையதும் கா கா வென்று கத்துவதுமான இந்தியப் பறவை; country crow. ‘காக்கை கரவா கரைந்துண்ணும்” (குறள்,527);. 2. 23 ஆம் நாண்மீன், பறவை (அவிட்டம்); (திவா.);; the 23rd nakšatra. ம.காக்க; க.காகி,காகி,காகெ:தெ.காகி; து.காக்கெ காக; கோத. காக் காய்க்; துட. காக்; குட., பட., காகெ; கொலா. காக; பர்.காகன்; கட. காகன்; கோண்.காகர்; கூ. காக; குவி. காவ்வ, காவ; குரு. காகா; மா. க்வக்வெ; பிரா. காகொ. Skt.kāka, Nep.kāk Beng.kāk, Guj. kagto; H.U., howā; Punj.ka; Kash. käv, Sind, kāngum, Mar. kāvlā, Ass. Kāyuri Ori. kuwā,kāvu. Aust. koa. kāka, kāga, a male crow, kāki, a female crow Cf. D. kāge, etc. kā3, kāvu 3. As Samskrita, in the Amarakö sa alone, has nine other names for the Crow, it is certain that kāka, kāki, and kāga have been borrowed from D. wherein ige and its dialectical forms are the only names for the crow, that is so very common also in the South of India (K.K.E.D.XX);. [கா + கா →காக்கா→ காக்கை. காகாவெனக் கத்துதலால் காக்கை எனப்பெயர்பெற்றது. காகா வெனும் அஃறிணை உயிர் ஒலிக் குறிப்பினின்று தோன்றிய சொல் (முதா.2);.] வகைகள்: 1. காக்கை, 2. அண்டங் காக்கை, 3. சீமைக் காக்கை, 4.நீர்க்காக்கை, 5. மணியங்காக்கை. காக்கை2 kākkai, பெ.(n.) பேணிக்காத்தல், பாதுகாத்தல்; preserving. protecting. “மண் காக்கைக்கு மாய்க்கைக்கும்” (அஷ்டப். திருவரங் கத்தந்:9);. [கா2 →காக்கை (காத்தல்);] |
காக்கை மெய்ப்பாடு | காக்கை மெய்ப்பாடு kākkaimeyppāṭu, பெ.(n.) காகசத்துவம் பார்க்க; see kāga-sattuvam. [காக்கை + மெய்ப்பாடு] |
காக்கைகொல்லி | காக்கைகொல்லி gāggaigolli, பெ.(n.) கொடிவகை; Coculus -indicus. மறுவ. பேன்கொட்டை [காக்கை +கொல்லி. இதன்விதை மிகுந்த நச்சுத்தன்மையுடையது; மயக்கந்தரவல்லது.] |
காக்கைக் கண் | காக்கைக் கண் kākkaikkaṇ, பெ.(n.) 1. ஒருக் கணிப்பு கண்; squint-eye. 2. கூர்ந்து நோக்குதல்; fixing one’s eyes or one spot, close attention. ம. காக்கத்ரும்டி; க. காகெகண்ணு. [காக்கை + கண்] |
காக்கைக் கருப்பி | காக்கைக் கருப்பி kākkaikkaruppi, பெ.(n.) 1. மிகக் கருப்பு நிறத்தவள்; a female of utter dark. complexion. 2. அழகற்றவள்; an ugly woman. ம. காக்கக்குடிக்கி [காக்கை + கருப்பு + இ] |
காக்கைக் கருப்பு | காக்கைக் கருப்பு kākkaikkaruppu, பெ.(n.) மிகக் கருப்பு; utter dark complexion. ம. அட்டக் கருப்பு [காக்கை + கருப்பு] |
காக்கைக் குயில் | காக்கைக் குயில் kākkaikkuyil, பெ.(n.) கருங்குயில்; the black Indian cukkoo bird. ம.காக்ககுயில்;து. காக்குயில்: Skt. kākajāta. [காக்கை+குயில்.] |
காக்கைக் குறவன் | காக்கைக் குறவன் kākkaikkuṟavaṉ, பெ.(n.) 1. காக்கை தின்னுங்குறவன்; crow eating kurava. 2. அழகில்லாத கருப்பு நிற ஆள்; a black ugly person. 3.காக்காய்க் குறவன் பார்க்க; see _. _ ம. காக்க குறவன் [காக்கை + குறவன்] |
காக்கைக்கண்ணன் | காக்கைக்கண்ணன் kākkaikkaṇṇaṉ, பெ.(n.) ஒற்றைப்பார்வை உடைய கண்ணன், squiant-eyed man (சா.அக.);. [காக்கை+கண்ணன்.] |
காக்கைக்கண்ணன். | காக்கைக்கண்ணன். kākkaikkaṇṇaṉ, பெ.(n.) காக்கை போல் செருகட் பார்வையுடையோன், மாறுகண்ணன்; squint-eyed or cross-eyed person. “கற்புளார் செயலை நொய்து கழறினன் காக்கைக் கண்ணன்” (சிவதரு.சுவர்க்கநரகசே. 31);. [காக்கை + கண்ணன். காக்கை ஒரு கண்ணைச் சாயத்து நோக்கும் இயல்புடையதாதலின் மாறுகண்ணுள்ள வனைக் காக்கை கண்ணன் என்பது உலகியலாயிற்று.] |
காக்கைக்கரிச்சான் | காக்கைக்கரிச்சான் kākkaikkariccāṉ, பெ.(n.) 1. ஈயத்தண்டுச்செடி; a plant with lead like stem. 2. கறுப்புக் கரிசலாங்கண்ணி; black eclipse plant (ச_அக.);. [காக்கை + கரிச்சான்] |
காக்கைக்குணம் | காக்கைக்குணம் kākkaikkuṇam, பெ.(n.) காக்கைக்குரிய ஐந்து தன்மைகள் (திருக்கோ. 235; உரை);. characteristics of a crow being five. [காக்கை+குணம். காக்கைக்குணங்கள் ;மடியின்மை, கலங்காமை, நெடுகக் காண்டல், பொழுதிறவா திடம்புகுதல், மறைந்த புணர்ச்சி] |
காக்கைக்குரல் | காக்கைக்குரல் kākkaikkural, பெ.(n.) 1. காக்கை கரைதலின் ஒலி; the cry of a crow 2. கரகரத்த குரல்; a harsh or coarse sound. 3. வசை இசை (அபஸ்வரம்);; solecism. ம. காகச்வரம் [காக்கை + குரல்.] |
காக்கைக்கொடியாள் | காக்கைக்கொடியாள் kākkaikkoḍiyāḷ, பெ.(n.) மூதேவி, சோம்பலுக்குரிய பெண்தெய்வம் (திவா.);; the goddess of ill-luck, who has a crow on her banner. மறுவ. முகடி, தவ்வை [காக்கை+கொடி+ஆள் = காக்கைக்கொடியாள். காக்கை வடிவம் பொறித்த கொடியுடையவள்.] |
காக்கைச் சுரம் | காக்கைச் சுரம் kākkaiccuram, பெ.(n.) கால்கை வலிப்பு பார்க்க; see kālkaivalippu. ம. காகச்வரம் [கால்கைச்சுரம் → காக்கைச்சுரம்] |
காக்கைச் சுள்ளி | காக்கைச் சுள்ளி kākkaiccuḷḷi, பெ.(n.) 1. சிறிய மிளாறுகள்; small twigs. 2. காகம் கூடு கட்டப் பயன்படுத்துவது போன்ற சிறு குச்சிகள்; small sticks collected by crows to build their nests. ம. காக்கச் சுள்ளி [காக்கை + சுள்ளி = காக்கை கூடுகட்டுதற்குப்பயன் படுத்தும் சுள்ளி) காக்கைச்சேல் _ , பெ.(n.); நல்ல தண்ணீரில் வாழும் கெண்டை மீன்வகை; a fresh water coast-fish, yellowish, attaining 3 in. in ngth, very pugnacious. [கால்காய்+சேல்-காற்காய்ச்சேல் → காக்கைச் சேல். கால்காய் →இளநீர் (தெளிவான நீர்); காற்காய்ச் சேல்மீனை காக்கைச்சேல் என்பது கொச்சைவழக்க] |
காக்கைச் சோளம் | காக்கைச் சோளம் kākkaiccōḷam, பெ.(n.) கருஞ்சோளம்; bleak cholam. ம. காக்கச்சோளம் [காக்கை + சோளம். நிறத்தால் பெற்ற பெயர். அளவில் சிறியசோளம்.) |
காக்கைத் தனம் | காக்கைத் தனம் kākkaittaṉam, பெ.(n.) 1. கெட்ட இயல்பு; bad notion. 2. காக்கையின் இயல்பு; the character of a crow. க. காகுதன Skt. kākatra [காக்கை + தனம்] |
காக்கைத் தும்பை | காக்கைத் தும்பை kākkaittumbai, பெ.(n.) கருந் தும்பை; name of a plant, Malabar catanint (சேரநா.);. ம. காக்கத்தும்ப; க.கனிந்தும்பை [காக்கை + தும்பை] |
காக்கைநஞ்சு | காக்கைநஞ்சு kākkainañju, பெ.(n.) ஒருவகைச் செய்நஞ்சு; a prepared arsenic. [காக்கை+நஞ்சு] |
காக்கைபாடினியம் | காக்கைபாடினியம் kākkaipāṭiṉiyam, பெ.(n.) காக்கைபாடினியார் இயற்றிய யாப்பிலக்கண நூல்; an ancient work on Tamil prosody by not extant, only a few sutras of which are found quoted in the old commentaries. [காக்கை +பாடினி +அம்-காக்கைபாடினியம்.] வகைகள்: 1. பெருங்காக்கை பாடினியம் 2. சிறுகாக்கை பாடினியம். |
காக்கைபாடினியார் | காக்கைபாடினியார் kākkaipāṭiṉiyār, பெ.(n.) காக்கைபாடினியம் என்னும் யாப்பிலக்கணஞ் செய்த பழைய ஆசிரியர் (தொல்.பொருள்.மரபு. 98, உரை);; author of _ Tamil prosodi. [காக்கை + பாடினி + ஆர்-காக்கைபாடினியார். காக்கையை வியந்து பாடியதால் பெற்ற சிறப்புப்பெயர். ‘ஆர்’ உயர்வுப்பன்மையீறு.] |
காக்கைபாடினியார் நச்செள்ளையார் | காக்கைபாடினியார் நச்செள்ளையார் kākkaipāṭiṉiyārnacceḷḷaiyār, பெ.(n.) காக்கை கரைதலைப் பாராட்டிப்பாடியமை பற்றிக் காக்கை பாடினி எனப் பெயர் பெற்றவரும் பதிற்றுப் பத்தின் ஆறாம் பத்தினை இயற்றியவருமான பெண்பாற் புலவர்; a famous poetess, author of the sixth decade of _-p-pattu, so named because she vividly described the cawing of a crow, [காக்கை + பாடினி + ஆர்+ நல் + செள்ளை +ஆர். ‘ஆர்’ உ.ப. ஈறு. நச்செள்ளை என்பது இயற்பெயர். பதிற்றுப்பத்தில் ஆறாம்பத்தினைப் பாடியவர். மேலும், குறுந்தொகை 210, புறம் 278 ஆகியவையும் இவர் பாடியவை. “விருந்து வரக் கரைந்த காக்கையது பலியே” என்னும் குறுந்தொகை வரிகளால், காக்கை பாடினியார் என்று சிறப்புப் பெயர் பெற்றார்.] |
காக்கைப் பார்வை | காக்கைப் பார்வை kākkaippārvai, பெ.(n.) ஒற்றைப்பார்வை; an oblique look (சா.அக.);. [காக்கை + பார்வை.] |
காக்கைப் புள்ளி | காக்கைப் புள்ளி kākkaippuḷḷi, பெ.(n.) சிறிய கருத்த புள்ளி, மச்சம்; a small black spot. [காக்கை+புள்ளி] |
காக்கைப் பேச்சு | காக்கைப் பேச்சு kākkaippēccu, பெ.(n.) கெட்ட பேச்சு; evil talk. க. காகுநுடி [காக்கை + பேச்சு] |
காக்கைப்பலா | காக்கைப்பலா kākkaippalā, பெ.(n.) ஒருவகைப் கருப்பு பலா; a black variety of Jackfruit. [கா2 → காக்கு → காக்கன் + பலா – காக்கன்பலா → காக்கைப்பலா (கொ.வ);. (நெருங்கக்காய்க்கும் இயல்பு பற்றிக் காக்கன் பலா எனப்பட்டது.);] |
காக்கைப்பலி | காக்கைப்பலி kākkaippali, பெ.(n.) தென்புலத்தார் (இறந்த முன்னோர்); பொருட்டுக் காக்கைக்கு இடும் சோற்றுருண்டை; ball of rice and other ingredients placed to crows for the soul of the dead persons by the relatives. “காக்கைக்குப்பலி காட்டிய வாறே” (திருமந்.191);. [காக்கை+பலி) |
காக்கைப்பாலை | காக்கைப்பாலை1 kākkaippālai, பெ.(n.) பாலை மரவகை; cluster-flowered Croton – Gelonium lanceolatum (சா.அக.);. [காக்கை+பாலை] காக்கைப்பாலை2 kākkaippālai, பெ.(n.) கருப்புவேப்பிலை மரம்; false wampeetree – Micromelum Pubescens (சாஅக.);. [காக்கை+பாலை.] |
காக்கைப்பித்து | காக்கைப்பித்து kākkaippittu, பெ.(n.) காக்கையின் பித்தம்; the bile of crow”s bladder (சா.அக.);. [காக்கை+பித்து] |
காக்கைப்பிலை | காக்கைப்பிலை kākkaippilai, பெ.(n.) ஒரு வகைப்பூடு; false kamela – Casearia esculenta (சா.அக.);. [கால்+கைப்பு+இலை.] |
காக்கைப்பொன் | காக்கைப்பொன் kākkaippoṉ, பெ.(n.) 1. பொன்னிறத்தில் இருக்கும் ஒருவகைப்பித்தளை; kind of tinsel, resembling gold leaf, used for decoration at weddings and other festivals. ஒருவன் ஒரு, குழகனைப் பண்ணி அதன்கழுத்திலே காக்கைப் பொன்னைத் தொற்றி (ஈடு,3:1.10);. 2. பொன்னிறப் பிசின்; a gum having gold colour (த.சொ.அக.);. 3. மின்னு (அப்பிரக);த் தகடு; mica in flakes (சா.அக.);. ம. காக்கபொன்னு: க. காகிபங்கார; தெ. காகிபங்காரு. [காக்கை + பொன். பளபளக்கும் எளிய மாழைத்தகடு, காக்கையின் கண்களுக்குக் கவர்ச்சியாகத் தோன்றுமாதலின் காக்கை விரும்பும் பொன் என்னும் பொருள் குறித்ததாகலாம்.] |
காக்கைமனம் | காக்கைமனம் kākkaimaṉam, பெ.(n.) தீய மனம்; evil mind. க. காகுமன [காக்கை + மனம்.] |
காக்கைமரங்கொத்தி | காக்கைமரங்கொத்தி kākkaimaraṅgotti, பெ(n.) ஒரு வகை மரங்கொத்தி: the Malabar great black wood pecker. ம. காக்கமரங்கொத்தி [காக்கை + மரங்கொத்தி] |
காக்கைமல்லி | காக்கைமல்லி kākkaimalli, பெ.(n.) நுணா; wild jasmine (சா. அக);. ம. காக்கமல்லி [காக்கை + மல்லி) |
காக்கைமாசி | காக்கைமாசி kākkaimāci, பெ.(n.) காகமாசி பார்க்க; see _ [காக்கை + மாசி] காக்கைமீன் கொத்தி _;பெ.(n.); ஒரு வகை மீன் கொத்தி; brown headed stork hilled king fisher. ம. காக்க மீன்கொத்தி [காக்கை + மீன்கொத்தி] |
காக்கைமுகம் | காக்கைமுகம் gāggaimugam, பெ.(n.) காக்கை போன்ற முகம், crow-faced; Skt. kākamukha [காக்கை + முகம்] |
காக்கைமூக்கன் | காக்கைமூக்கன் kākkaimūkkaṉ, பெ.(n.) நீண்ட கூர்மையான மூக்குள்ளவன்; a person with long nose. ம. காக்க மூக்கன் [காக்கை + மூக்கன்] |
காக்கைமூக்கு | காக்கைமூக்கு kākkaimūkku, பெ.(n.) குறடு, இடுக்கிப்பொறி; pincers, tongs. ம. காக்கவா; பட. காக்கெ மூக்கு [காக்கை + மூக்கு] |
காக்கைவலி | காக்கைவலி kākkaivali, பெ.(n.) கால்கை வலிப்பு பார்க்க; see Kāl-ka-valippu. ம. காக்கவலி [கால் + கை + வலி – கால்கை வலி – காக்கைவலி (கொ.வ.);] |
காக்கைவலிச்சுழற்சி | காக்கைவலிச்சுழற்சி kākkaivaliccuḻṟci, பெ.(n.) கால்கை வலியால் ஏற்படும் தலைச் சுழற்சி; vertigo which attends orfellows an epileptic attack – Epileptic vertigo (சா.அக.);. [கால்+கைவலி+சுழற்சி] |
காக்கைவளையல் | காக்கைவளையல் kākkaivaḷaiyal, பெ.(n.) ஒரு வகைக் கருப்பு நிறக் கண்ணாடி வளையல்; a kind of black glass bangle. ம. காக்கவளை [காக்கை + வளையல்] |
காக்கைவிளக்கு | காக்கைவிளக்கு kākkaiviḷakku, பெ.(n.) ஒருவகை இரும்பு விளக்கு; a kind of iron lamp. ம. காக்கவிளக்கு [காக்கை + விளக்கு] |
காக்கைவேர் | காக்கைவேர் kākkaivēr, பெ.(n.) காக்கட்டான் வேர் பார்க்க; see kākkațão-věr (சா.அக.); [காக்கை+வேர்] |
காக்கைவேலி | காக்கைவேலி kākkaivēli, பெ.(n.) கொடிவகை; stinking swallow wort – Damia extensa (சாஅக.);. [காக்கை+வேலி] காக்கைவேலி kākkaivēli, பெ.(n.) வேலிப்பருத்தி; headge-Cotton. [காக்கை + வேலி] |
காக்கொரட்டை | காக்கொரட்டை kākkoraṭṭai, பெ.(n.) கருப்புக் காக்கட்டான்; blue flowered mussell-shell creeper-clitorea ternatea (typica); (சா.அக.);. [கா+குறட்டை] |
காங்கயநாடு | காங்கயநாடு kāṅgayanāṭu, பெ. (n.) கொங்கு நாட்டின் 24 நாடுகளுள் ஒன்று; one of the 24 _. of kongu country. [காங்கயம் + நாடு.] |
காங்கயம் | காங்கயம் kāṅgayam, பெ.(n.) ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒரு மாவட்டத்தின் தலைநகரம்; capital of taluk in Erode dt. [கங்கை → கங்கையர் → காங்கையர் → காங்கேயம் → காங்கயம்.] |
காங்கயம்காளை | காங்கயம்காளை kāṅgayamkāḷai, பெ.(n.) வேளாண் வேலைகளுக்கு உகந்த காளைகள்; bulls fit for agriculture. [காங்கயம் + காளை] |
காங்கி | காங்கி kāṅgi, பெ.(n.) பேராசைக்காரன்; avaricious person. “மற்றவன் கைத்துணபான் காங்கி யெனப் படுவான்” (நான்மணிக். 6); [காங்கு – காங்கி. காங்குதல் = பேராசை கொள்ளுதல்.] காங்கி1 kāṅgi, பெ.(n.) பணியாளர் தொகுதி; company of workmen. த.வ.களமர். [E.Gang → த.காங்கி.] காங்கி2 kāṅgi, பெ.(n.) பேராசைக்காரன்; avaricious person. “மற்றவன் கைத்துண்பான் காங்கி யெனப்படுவான்” (நான்மணி.61);. [Skt.{} → த.காங்கி.] |
காங்கிசை | காங்கிசை kāṅgisai, பெ.(n.) விருப்பம்; desire. “காங்கிசை மிக்க மறக்கொடி வெற்றியில்” (திருப்பு. 263);. [காங்கு + இசை] |
காங்கு | காங்கு1 kāṅgu, பெ.(n.) 1. கருநீல நிறம்; dark blue colour. “காங்கிட்ட கச்சையுமாய்க் கானவர்கள் வந்து கண்டு” (கூளப்ப. 66);. 2.கருநீலப்புடைவை; dark blue colour saree. [கங்கு → காங்கு] காங்கு2 kāṅgu, பெ.(n.) கோங்கு (L.);; common caung. [கோங்கு → காங்கு] காங்கு3 kāṅgudal, 5 செ.கு.வி.(v.i). பேராசை கொள்ளுதல்; to get arathicious. [கா = பெரிதாதல். கா → காங்கு] காங்கு kāṅgu, பெ.(n.) பெரும்பானை; large earthen pot. [த. காங் → Chin, _.] [கா (பெரியது); → காங்கு.] |
காங்குப்புடவை | காங்குப்புடவை kāṅguppuḍavai, பெ.(n.) நிறமூட்டப்பட்ட புடவை (G.Sm.D.i.265);; a kind of Coloured saree. ம. காங்கி; க.காங்கு காகு; து. காங்கு [காங்கு + புடவை] |
காங்கூலம் | காங்கூலம் kāṅālam, பெ.(n.) ஆட்காட்டிவிரல், பெருவிரல், நடுவிரல் ஆகியவை ஒட்டிநிற்க மோதிரவிரல் முடங்கிச் சுண்டுவிரல் நிமிர்ந்து நிற்கும் 33 இணையாவினைக்கை வகைகளுள் ஒன்றான நாட்டிய நளிநயக்கை (சிலப்.3:18, உரை);; a gesture with one hand in which the thumb, the forefinger and the middle finger are joined and bent forward while the ring-finger is folded and the little finger is held upright, one of 33 _.. [ஒருகா. நாஞ்சில் →நாங்கில் → நாங்கூலம் → காங் கூலம் (கொ.வ);. நாஞ்சில் = ஏர்] வகை: 1. குவிகாங்கூலம், 2. முகிழ்காங்கூலம், 3.விரிகாங்கூலம். |
காங்கெயம் | காங்கெயம் kāṅgeyam, பெ.(n.) பொன்; gold. “காங்கெயத் தொழிற் கம்மியர்”(இரகு. திக்கு. 189);. [கங்கம் → காங்கெயம் (கங்க நாட்டில் கிடைத்த பொன்); |
காங்கெயர் | காங்கெயர் kāṅgeyar, பெ.(n.) 1. கங்கநாட்டினர்; inhabitants of the country ruled by the Gangas. “பொப்பண காங்கெயர்கோன்” (சிலப்.பக்.11);. 2. உரிச்சொல் நிகண்டு செய்த ஆசிரியர்; name of the author of the Uriccol -_.. “முந்துகாங் கெய னுரிச்சொல்” (ஆ.நி); [காங்கம் → கங்கயர் → கங்ககெயர் (கொ.வ);.] |
காங்கேயன் | காங்கேயன் kāṅāyaṉ, பெ.(n.) 1. முருகன்; God Muruga. “ஈங்கனம் நமது கண்ணினெய்திய குமரன் கங்கை தாங்கினள் கொண்டு சென்று சரவணத் திடுதலாலே காங்கெயனெனப் பெயர்பெற்றான்” (கந்தபு. திருவிளை. 16);. 2. வீட்டுமன் (சூடா.);; Bishma. “காங்கேய னுள்ளிட்ட காவலர்கள்” (பாரத வெண். ஸ்ரீவாசுதேவன் 46.);. [கங்கை → கங்கையன் → காங்கேயன்.] |
காங்கேயம் | காங்கேயம் kāṅāyam, பெ.(n.) கோரைக் கிழங்கு;_. (சா.அக.);. [கங்கம் → காங்கேயம்.] |
காங்கேயர் | காங்கேயர் kāṅāyar, பெ.(n.) 1. திருச்செங் கோட்டிற்கு அருகில் மோரூரில் வாழ்ந்த கொங்கு வேளாளர் தலைவர்; a leader kongu _. who lived at Morur. [கங்கம் → கங்கயம் → காங்கயம் → காங்கேயர்] கொங்கு நாட்டு வேளாளர்களில் காங்கேயர் குடி வள்ளண்மை மிக்கது. மோரூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்த குறுநிலத்தலைவர்கள். திருச்செங்கோடு நகரில் நிலத்தம்பிரான் கோயிலிலும், மலைமேல் உள்ள உமையொரு பாகர், வேலவர் கோயிலிலும் பல திருப்பணிகள் செய்துள்ளனர். சிலப்பதிகாரத்திற்கு உரையெழுதிய அடியார்க்கு நல்லாரை ஆதரித்தவர்கள். “காங்கேயர் கோனளித்த சோற்றுச் செறுக்கல்லவோ மூன்றுரை கண்டதுவே” என்று அடியார்க்கு நல்லார் உரை போற்றும். திருச்செங்கோடு திருப்பணி மாலையும் பாம்பலங்காரர் கோவையும் இவர்களைப் பற்றிய கூடுதல் விவரம் தரும் நூல்கள். |
காங்கேருகம் | காங்கேருகம் kāṅārukam, பெ.(n.) நாகபலை; sweet smelling hare footUrarialagopoides (சா.அக.);. [காங்கு+ஏறுகம்] |
காங்கேருகி | காங்கேருகி kāṅāruki, பெ.(n.) 1. ஒருமரம், a tree. 2. பீர்க்கு; gourd plant – Luffa acutangula (சா.அக);. [காங்கு+ஏறுகி] |
காங்கை | காங்கை kāṅgai, பெ.(n.) வெப்பம், சூடு; heat, feverishness, pyrexia (radiation of heat);. திருச்சியை விட மதுரை காங்கையான இடம் (உவ.); மறுவ. வெம்மை, வெக்கை, சூடு, உருப்பம், உருமம். க. பட காங்கெ; தெ.காக. [காய் → காய்ங்கு → காங்கு → காங்கை (வே.க. 186);.] காய் → வ. காச் (_.); ய.ச.போலி எ.டு. இயை → இசை, நெயவு → நெசவு, நேயம் → நேசம், வாயில் → வாசல். இங்கனம் யகர சகரப் போலியால் ஒளிவீசுதலைக் குறிக்கும் காய் என்னும் தென்சொல் வடமொழியில் ‘காச்’ என்று திரிந்துள்ளது. வடமொழியில் இச் சொல்லிற்கு வேரில்லாமலிருப்பதுடன், இதிலுள்ள சகரம் தமிழ்ச் சகரமாய் இருப்பதும் கவனிக்கத் தக்கது. ப்ர என்னும் முன்னொட்டுப் பெற்று இச்சொல் ப்ரகாச் என்று பெரிதும் வழங்குகிறது (செல்வி 78. பிப்ரவரி,285);. |
காங்கைதணிக்குமருந்து | காங்கைதணிக்குமருந்து kāṅkaitaṇikkumaruntu, பெ.(n.) 1. உடம்பில்ஏற்படும்காய்ச்சல், வெள்ளைநோய், கபாலச்சூடு, முதலியநோய்களால்ஏற்படும்வெப்பத்தைஆற்றும்மருந்து; the medicine which abates or allays the heat in the system due to diseases such as fever, venereal heat, brain-heat etc., and tends to cool the system, Refrigerant. 2. அழற்சியைத்தணிக்கும்மருந்து; any medicine counter acting the inflammation or irritation caused by fever, etc., Antiphlogestics (சா.அக.);. [காங்கை+தணிக்கு+மருந்து] |
காங்கைபூமி | காங்கைபூமி kāṅkaipūmi, பெ.(n.) வெப்பநிலம்; hot place (சா.அக.);. [காங்கை+பூமி] |
காங்கையன் | காங்கையன் kāṅgaiyaṉ, பெ.(n.) நீலச் செய்நஞ்சு (வின்);; a prepared arsenic. [காங்கு = எரிதல், காய்தல். காங்கு → காங்கை → காங்கையன்.] |
காசகந்தம் | காசகந்தம் kācakantam, பெ.(n.) ஒருவேர்; a species of root (சா.அக.);. |
காசகம் | காசகம் gācagam, பெ.(n.) 1. கல்; stone. 2.காரச் சாம்பல்; alkaline ashes (சா.அக.);. [காய்ச்சு → காச்சுகம் → காசகம்.] |
காசகாமலம் | காசகாமலம் kācakāmalam, பெ.(n.) ஒரு கண் நோய், a disease of the eye(சா.அக.);. [காசம்+காமலம்] |
காசகுப்பி | காசகுப்பி gācaguppi, பெ.(n.) காரச் சாம்பலினாற் செய்த குப்பி; a glass bottle made out of alkaline ashes (சா.அக.);. [காய்ச்சு → காச்சம் → காசம் + குப்பி] |
காசக்கினி | காசக்கினி kācakkiṉi, பெ.(n.) சிறு தேக்கு bettle-killer – CIeodendron serratum (சா.அக.);. [கய- காய – காச+நெக்கினி] |
காசக்கூறு | காசக்கூறு kācakāṟu, பெ.(n.) ஈழை நோயின் வகை; various kinds of asthma (சா.அக.);. [காசம்+கூறு] |
காசசிலேட்டுமம் | காசசிலேட்டுமம் kāsasilēṭṭumam, பெ.(n.) ஈளை நோயினால் எழும் கோழை அல்லது சளி; the mucous sputum or phlegm arising from asthma (சா.அக.);. த.வ.ஈளைச்சளி. [Skt.{}+{} → த.காசசிலேட்டுமம்.] |
காசசுவாசம் | காசசுவாசம் kāsasuvāsam, பெ.(n.) ஈளை நோய் இழுப்பு (காச இழுப்பு); (பதார்த்த. 24.);; asthmatic breathing, difficult breathing as in asthma (சா.அக.);. த.வ.ஈளை இழுப்பு. [Skt.{}+{} → த.காசசுவாசம்.] |
காசச்சுரம் | காசச்சுரம் kācaccuram, பெ.(n.) ஈளை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்டாகும் காய்ச்சல்; fever of an asthmatic patient followed by cough (சா.அக.);. [காசம்+சுரம்.] [Skt.{} → த.காசம்.] |
காசண்டி | காசண்டி kācaṇṭi, பெ.(n.) வாயகன்ற ஏனம்; a kind of vessel with a wide mouth. “கெண்டிகை, காசண்டி செப்புக் கும்பம்”(பிரபோத.11:13);. மரா. காசகண்டி [கா + கெண்டி – காகெண்டி → காசெண்டி → காசண்டி (கொ.வ); கா. பெரியது.] |
காசதிலகம் | காசதிலகம் gācadilagam, பெ.(n.) கருப்பு உப்பு: a black salt. [கா → காசம் + திலகம்] |
காசத்துரு | காசத்துரு kācatturu, பெ.(n.) பறவைக் கொல்லிப் பூடு; a plant so called from being an enemy of bird (சா. அக.); [காசம் + சத்துரு] |
காசநீர் | காசநீர் kācanīr, பெ.(n.) தலையில் சேர்ந்து காசநோயை விளைக்கும் ஒருகெட்டநீர் (வின்.);; a morbid fluid collected in the head supposed to cause asthma. [காசம் + நீர்.] |
காசனம் | காசனம் kācaṉam, பெ.(n.) கொலை (வின்);; killing, slaying. [Skt.{} → த.காசனம்.] |
காசபத்திரம் | காசபத்திரம் kācapattiram, பெ.(n.) பூச பத்திரி; an unidentified drug (சா.அக.);. [காசம்+பத்திரம்.] |
காசபாகயந்திரம் | காசபாகயந்திரம் kācapākayandiram, பெ.(n.) வாலைக்குப் [நீர்மம் (திரவம்); வடிக்கும் பாண்டம்] பயன்படுத்தும் மூக்கு நீண்ட ஏனம்; a glass retort (சா.அக.);. த.வ.மூக்குஏனம். [Skt.{}+{}+{} → த.காசபாக யந்திரம்] |
காசபிந்து | காசபிந்து kācabindu, பெ.(n.) 1.கருவிழி யிலேற்படும் ஒருவகைக் கண்ணோய்; disease of the cornea of the eye. 2. கருவிழியில் புள்ளிகளை உண்டாக்கும் ஒருவகைக் கண்ணோய்; a disease causing spots on the black of the eye (சா.அக.);. [காசம் + (விந்து); பிந்து.] |
காசப்புல் | காசப்புல் kācappul, பெ.(n.) ஒரு பொன்னிறமான புல் வகை; a yellow or gold-coloured grass (சா.அக.);. [காசம்+புல்] காசப்புல் kācappul, பெ.(n.) பொன்னிறமான ஒரு புல்வகை; a yellow or gold – coloured grass (சா.அக.);. [காசம் + புல்] |
காசமர்த்தகம் | காசமர்த்தகம் gācamarttagam, பெ.(n.) பெரும் புல்; a kind of large grass. “களாவிழுது காசமர்த் தகம்” (தைலவ. தைல. 76);. [காசம் + மருத்தகம்] |
காசமலம் | காசமலம் kācamalam, பெ.(n.) கண் நோயினால் உண்டாகும் கண்ணழுக்கு; morbid fluid or other impurities secreted by the eye in cataract etc. (சா.அக.);. [காசம்+மலம்] |
காசமல்லிகை | காசமல்லிகை gācamalligai, பெ.(n.) த்தைச் சூரி; [காசம் + மல்லிகை] |
காசமாதாரி | காசமாதாரி kācamātāri, பெ.(n.) பொரும்பிலி; a species of horse gram plant (சா.அக.);. [காசம்+மாதாரி] |
காசமுறுக்கி | காசமுறுக்கி kācamuṟukki, பெ.(n.) கருப்பு விழியில் நரம்பு சிவந்து, வெள்ளை விழியில் தசை வளர்ந்து, கீழிமையை உறுத்தி நீர் வடிந்து, மிகுந்த வலியோடு, பல் வலியையும், தலை வலியையும் உண்டாக்கும் ஒரு கண்ணோய் (அகநய.விதி.);; a disease of the eye marked by inflammation of the optic-nerve, morbid growths on the white of the eye, irritation of the lower lid, watery discharge, distressing pain, tooth-ache, headache etc. (சா.அக.);. [காசம்+உறுக்கி] |
காசம் | காசம்1 kācam, பெ.(n.) 1.பொன்; gold. 2. கல்நஞ்சு; a mineral poison. 3. பளிங்கு; crystal. [காய்ச்சு → காசு → காசம் (கொ.வ.);] காய்ச்சி வடிவமைக்கப்பட்ட பொன்னும் பொற் காசும் காசு-காசம் எனப்பட்டது. காய்ச்சி வடிக்கப்படும் கல்நஞ்சுக்கும் அதுவே பெயராயிற்று. காசம்2 kācam, பெ.(n.) 1. நாணல்; a large corse grass. 2. வானம்; sky. “காச மாயின. வெல்லாங் கரந்து” (கம்பரா.யுத்த . மருத்து.40);. 3.வெளி; space 4. கருமை; blackness. வ. ஆகாச [கா.= நீட்சி, உயரம். கா → காயம் → காசம் (நீண்ட நாணல்); (வே.க.5); இச்சொல் பரந்த வானத்தையும் திறந்த வெளியையும் குறிப்பதாயிற்று. காயம் பார்க்க; See _.] காசம்3 kācam, பெ.(n.) 1. பெரும்பாலும் நுரையீரலைத் தாக்கி உடலை இளைக்கச் செய்யும் ஈளை நோய்; tuberculosis. 2. கோழை (பிங்);; phlegm. 3. கண்ணோய் வகை; a disease of the eyes, cataract, affection of the optic nerve. “கண்ணின் காசகாமலாதி தோஷம்” (சி.சி.2:85, சிவாக்.);. [கால் → கார் → காய் → காசம் (வெளிவருவது);. காலுதல் = வெளிவருதல், உழிழ்தல்.] |
காசரணவாதம் | காசரணவாதம் kācaraṇavātam, பெ.(n.) ஈளை நோய் ஏற்பட்டு நெஞ்சு புண்ணாகிக் காணும் ஒரு இழுப்பு நோய்; a kind of rtheumatism attributed to irritation of the mucous membrane of the bronchial tubes (சா.அக.);. த.வ. ஈளை இழுப்பு. [Skt.{}+vrana+{} → த.காசரண வாதம்.] |
காசரம் | காசரம் kācaram, பெ.(n.) 1. எருமை; buffalo. 2. நாணல்; reed. 3. காட்டெருமை; wild buffalo (சா.அக.);. 4. இருள்; darkness. [காசம் (நீட்சி); + காசரம்.] |
காசரளி | காசரளி kācaraḷi, பெ.(n.) ஆற்றரளி; a kind of oleander (சா.அக.);. [காசம் + அரளி] |
காசரிமுத்திரை | காசரிமுத்திரை kācarimuttirai, பெ.(n.) மூன்றங்குலத் தொலைவில் கண்ணுக்கு நேராகப் பார்வையை நாட்டி அசைவற்றிருக்கும் நிலை (யோகஞானா.34);; a posture in which the gaze is fixed steadily on a spot in front about three inches from the eyes. [காசரம் (இருள்); → காசரி + முத்திரை.] |
காசரைக் கீரை | காசரைக் கீரை kācaraikārai, பெ.(n.) கொடிக் காசரை; a kind of edible greens. [காசல் → காசரை + கீரை.] |
காசரோகம் | காசரோகம் kācarōkam, பெ.(n.) நாசித் துளை எரிச்சலால் உடம்பில் ஏற்படும் ஈளை நோய்; bronchitis or asthma due to irritation of the mucous membrane of the bronchial tubes (சா.அக.);. த.வ. ஈளைநோய். [Skt.{}+{} → த. காசரோகம்.] |
காசறை | காசறை1 kācaṟai, பெ.(n.) 1. மணத்தி மான் (கத்தூரி மான்);; musk deer “காசறைக் கருவும்” (சிலப். 25:52);. 2.மான் மணத்தி: musk. “காசறைத் திலகக் கருங்கறை” (சிலப்.28:27);. 3. மயிர்ச்சாந்து; pomatum. “குழன்மேல் வாசக்காசறை வழியப்பெய்து” (திருவிளை.திருமணப் 156);. 4. மயிருக்கிடும் எண்ணெய்; hair-oil. [காசு +அறை.] காசறை2 kācaṟai, பெ.(n.) மணி (அக.நி.);; gem, precious stone. [காசு + அறை.] |
காசறைக்கரு | காசறைக்கரு kācaṟaikkaru, பெ.(n.) மான் மணத்தி மானின் குட்டி; fawn of the musk deer. “காசறைக் கருவு மாசறு நகுலமும்” (சிலப். 25.52);. [காசறை + கரு.கன்று → கறு → கரு (கொ.வ.);.] |
காசலவணம் | காசலவணம் kācalavaṇam, பெ.(n.) ஐந்து வகை உப்புகளில் (பஞ்சலவணத்துள்); ஒன்று; one of pañca-lavanam, salt of potash or soda in crystalline state (செ.அக.);. [காச Skt. இலவணம்.] காசலவணம் kācalavaṇam, பெ.(n.) ஐவகை உப்புகளுள் ஒன்று; salt of potash or soda in crystalline state, one of {}-lavanam. [Skt.{}+lavana → த.காசலவணம்.] ஐவகையுப்புகள்: 1.காசலவணம், 2. பிடாலவணம், 3. சயிந்த வலவணம், 4. சவ்வர்ச்சலலவணம், 5. சமுத்திரலவணம். |
காசல் கீரை | காசல் கீரை kācalārai, பெ.(n.) ஒருவகைக் கீரை; a kind of edible greens (சா.அக.);. [காசல் + கீரை.] |
காசல்விதை | காசல்விதை kācalvitai, பெ.(n.) காசல்கீரையின் விதை; seed of kāsal-kirai(சா.அக.);. [காச்சல் + விதை.] |
காசவெளி | காசவெளி kācaveḷi, பெ.(n.) ஒருவகைக் கண் நோய் a kind of eye disease. [காசம்+வெளி. வலி → வெளி. (கொ.வ.);] எழுத்தைப் பார்த்த பின் மனிதரைப் பார்த்தால் இருள் போலத் தோற்றமளிக்கும் ஒருவகை கண்நோய் (சா. அக.);. |
காசா | காசா1 kācā, பெ.(n.) காயாமலர்; flower of _. tree. “காசா கடன்மழை யனையானை ” (கம்பரா. கங்கை.53);. ம. காயாவு [காயா → காசா (கொ.வ);] காசா2 kācā, பெ.(n.) 1. எருமை (பிங்);; buffalo. 2. நாணல் (மலை.); ; kaus a large and coarse grass. [காயா → காசா (கொ.வ.);.] காசா3 kācā, பெ.(n.) பொன்னாவாரை; occidental cassia (சா.அக.);. [காயா → காசா.] காசா1 kācā, பெ.எ.(adj.) முதல் தரமான; excellent, pure, good. [U.{} → த.காசா.] காசா2 kācā, பெ.(n.) பதினாறு அகவையாகும் போது குதிரைப் பற்களில் ஏற்படும் கருஞ் சிவப்பு நிறம் (அகவசா.6);; deep-red colour of the teeth of horses when they are sixteen years old. [U.{} → த.காசா.] காசா3 kācā, பெ.(n.) உடையில் பொத்தானைப் பொருத்த அளவாக வெட்டித் தைக்கப்படும் சிறிய துளை; button hole. ‘இந்தச் சட்டைக்கு எத்தனை காசா எடுக்க வேண்டும்? காசா வெட்டத் தேவையான இடங்களில் குறி போட்டுக் கொடு’. [U.{} → த.காசா.] காசா4 kācā, பெ.(n.) துணிவகை; a kind of cloth. காசா கச்சா. [Hi.kaccha → த.காசா.] காசா5 kācā, பெ.(n.) தலைவன் (எசமான்);; master, proprietor. [Persn.{} → த.காசா.] காசா6 kācā, பெ.(n.) 1. சொந்தம்; one’s own, personal possession. 2. உண்மை விலை (அசல் விலை);; original price. [U.{} → த.காசா.] காசா7 kācā, பெ.எ.(adj.) மிகவுஞ் சிறந்த; fine, capital, elegant. [U.{} → த.காசா.] காசா kācā, பெ. (n.) சுமார் பதினாறு ஆண்டாகும் பொழுது குதிரைப் பற்களிலேற்படுங் கருஞ்சிவப்பு நிறம் (அசுவசா. 6);; deep red colour of the teeth of horses when they are sixteen years old. |
காசாகிதம் | காசாகிதம் kācākitam, பெ.(n.) அரைக்கீரை; round-headed amaranth – Amarantus gangeticus (சா.அக.);. |
காசாகுவாகு | காசாகுவாகு kācākuvāku, பெ.(n.) 1. கருப்புத் தக்காளிச் செடி. இது சூதத்தைக் கட்டும்; a black takkasi plant; it is supposed to consolidate mercury, 2. மிளகுத் தக்காளி, mad apple-Solanum melongena (சா.அக.);. [காசா+ஆகு+வாகு.] |
காசாக்காரன் | காசாக்காரன் kācākkāraṉ, பெ.(n.) உரிமையாளன், சொந்தக்காரன்; owner, proprietor. [U.{} → த.காசா + காரன்] |
காசாக்கிழங்கு | காசாக்கிழங்கு kācākkiḻṅku, பெ.(n.) மஞ்சள் கலந்த சிவப்பு நிறமான முள்ளங்கி இனத்தைச் சேர்ந்த ஒரு வகைக் கிழங்கு. a kind of yellowish red root resembling horse radish (சா.அக.);. [காசம்+கிழங்கு.] |
காசாக்கு-தல் | காசாக்கு-தல் kācākkutal, செ.கு.வி.(v.i.) தன்னலத்தையே குறியாகக் கொண்டு எதையும் விற்றுப் பணம் சேர்த்தல்; cash in on something. நடிகையின்தந்தை மகளின் புகழைக் காசாக்குவதில் குறியாக இருக்கிறார். அவன் மண்ணைக் கூடக் காசாக்கி விடுவான். [காசு+ஆக்கு-தல்.] காசாக்கு-தல் kācākkudal, 5 செ.கு.வி. (v.i) 1. தன் வருவாயையே குறியாகக் கொண்டு எதையும் விற்றுப் பணம் சேர்த்தல்; cashing on something. நடிகையின் தந்தை மகளின் புகழைக் காசாக்குவதில் குறியாக இருக்கிறார் (உ.வ.);. [காசு + ஆக்கு] |
காசாசை | காசாசை kācācai, பெ.(n.) பணத்தாசை; love of money. “காசாசை சற்று மிலாதவனாய்” (தனிப்பா.); [காசு+ஆசை] |
காசாண்டி | காசாண்டி kācāṇṭi, பெ.(n.) 1. ஒருவகைச் செம்பு (த.சொ.அக.); ; a kind of copper. 2. வாயகலமுள்ள ஒருவகை ஏனம்; a kind of copper vessel with a wide mouth. மரா. காசண்டி [காசண்டி → காசாண்டி.] |
காசாநிறம் | காசாநிறம் kācāniṟam, பெ.(n.) 1. திப்பிலி மூலம்; root of piper longum. 2. ஒரு சிகப்பு மூலம், a sort of deep red colour (சா.அக.);. [காசம்+நிறம்] |
காசானிஇலை | காசானிஇலை kācāṉiilai, பெ.(n.) காயாச் செடியின் இலை, leaves of ironwood tree – Memicylon tinctoria (சா.அக.);. [காயா – காசானி+இலை.] |
காசாப்பற்று | காசாப்பற்று kācāppaṟṟu, பெ.(n.) தனது பற்று; dues, as to a shop, bank, etc. (செ.அக.);. [U. Khåså → + த.காசா.] [காசு+பற்று.] காசாப்பற்று kācāppaṟṟu, பெ.(n.) தனதுபற்று; dues, as to a shop, bank, etc. [கசா + பற்று.] [U.{} → த.கசா + பற்று.] |
காசாமண்டிகை | காசாமண்டிகை gācāmaṇṭigai, பெ.(n.) கோதுமை மாவினாலும், அரிசி மாவினாலும் செய்யப்படும் ஒருவகைப் பணியாரம் (இந்துபாக.326.);; a kind of cake made of wheat and rice flour. [U.{}+Skt.{} → த.காசாமண்டிகை.] |
காசாமுந்திரிகை | காசாமுந்திரிகை gācāmundirigai, பெ.(n.) கொடி முந்திரி; common grape vine (சா.அக.);. [காசா + முந்திரிகை.] |
காசாம்பாரை | காசாம்பாரை kācāmbārai, பெ.(n.) மீன் வகை; a kind of fish. [காசம் → காசாம் + பாரை. காசம் → காசாம் (கருநிறம்);. பாரை = கடற்பகுதிகளில் நீண்டிருக்கும் பாறைகளின் உட்புறத்தில் இரைதேடும் மீன் வகை. பார் = நீட்டுப்பாறை . பாரை → பார் = பாறைகளின் அருகிலுள்ள மீன்.); காசாம்பாரை |
காசாம்பூ | காசாம்பூ kācāmpū, பெ.(n.) காயாவின் பூ flower of the kaya tree (சா.அக.);. [காயாம் – காசாம்+பூ] |
காசாம்பூவண்ணன் | காசாம்பூவண்ணன்1 kācāmbūvaṇṇaṉ, பெ.(n.) காயாம்பூவண்ணன் பார்க்க; see _. [(காயம்பூ → காசாம்பூ + வண்ணன் (கொ.வ);.] காசாம்பூவண்ணன்2 kācāmbūvaṇṇaṉ, பெ.(n.) 1. துரிசு (மூ.அ);; vitriol. 2. காய்ச்சல் நஞ்சு (மு.அ.);; a mineral poison. [காயாம்பூ → காசாம்பூ + வண்ணன்(கொ.வ.);] |
காசாம்பூவர்ணத்தான் | காசாம்பூவர்ணத்தான் kācāmpūvarṇattāṉ, பெ.(n.) 1. துரிசு; blue vitriol. 2. காய்ச்சற் பாடாணம்; a mineral poison (சா.அக.);. [காயாம்பூ+வண்ணத்தான்.] |
காசாயக்குடி | காசாயக்குடி kācāyakkuḍi, பெ.(n.) சிற்றூரில் உள்ளோர் இடும்பணிகளை அவ்வப்போது செய்யும் கட்டுப்பாட்டோடு, சிற்றூர்ப் பொதுவிடத்தில் வீடுகட்டிக்கொண்டு வாழும் தொழிலாளிகள்; a kind of village labour. [காசு + ஆயம் + குடி.] |
காசாயங்கொடு-த்தல் | காசாயங்கொடு-த்தல் kācāyaṅgoḍuttal, 4 செ.கு.வி.(v.i.) காவி வண்ண ஆடையைக் கொடுத்துத் துறவி (சன்னியாசி); ஆக்குதல்; to initiate one into the order of {}, as by giving him a cloth dyed brown-red. [காசாயம் + கொடு-,] [Skt.{} → த.காசாயம்.] |
காசாயநாதாந்தி | காசாயநாதாந்தி kācāyanātāndi, பெ.(n.) செம்பு; copper (சா.அக.);. |
காசாயமூட்டு-தல் | காசாயமூட்டு-தல் kācāyamūṭṭudal, 5 செ.கு.வி.(v.i.) காவி வண்ணம் ஊட்டல்; to dye a cloth with ochre. [காசாயம் + ஊட்டு-,] [Skt.{} → த.காசாயம்.] |
காசாயம் | காசாயம் kācāyam, பெ.(n.) அரசு காசாகப் பெறும் சுங்கவரி; வழிநடைச் சுமைச் சாரிகை வரி; revenue in money. “பொன்வரி காசுக் கடமை உள்ளிட்ட பல காசு ஆயங்களும்” (தெ.கல்.தொ.VII கல்.82);. [காசு + ஆயம்] காசாயம் kācāyam, பெ.(n.) செங்காவி வண்ணம் ஊட்டப் பெற்ற ஆடை; brown-red cloth of a {}. [Skt. {} → த.காசாயம்.] |
காசாயம்வாங்கிகொள்(ளு)-தல் | காசாயம்வாங்கிகொள்(ளு)-தல் gācāyamvāṅgigoḷḷudal, 16 செ.கு.வி. (v.i.) காவி வண்ண ஆடையைப் பெற்றுத் துறவியாதல்; to be admitted to the order of {}. த.வ. துறவறம் ஏற்றல். [காசாயம் + வாங்கி + கொள்(ளு);-,] [Skt.{} → த.காசாயம்.] |
காசாயேலம் | காசாயேலம் kācāyēlam, பெ (n.) சிவப்பு ஏலக்காய்; a red variety of cardamom (சா.அக..);. [காசு → காசா + ஏலம்] |
காசாலினி | காசாலினி kācāliṉi, பெ.(n.) பழு பாகல், buffalo carolah – Momordica hispida (சா.அக.);. |
காசாளர் | காசாளர் kācāḷar, பெ.(n.) வங்க, அலுவலகம் முதலியவற்றில் பணம் தருதல், பெறுதல் ஆகியவற்றையும் அவை தொடர்பான பிற பணிகளையும் கவனிக்கும் பதவி வகிப்பவர்; Cashier. [காசு+ ஆளர்] காசாளர் kācāḷar, பெ.(n.) வங்கி, அலுவலகம் முதலியவற்றில் பணம் தருதல், பெறுதல் ஆகியவற்றையும் அவை தொடர்பான பிற பணிகளையும் செய்பவர்; cashier. [காசு + ஆளர்] |
காசாவசம் | காசாவசம் kāsāvasam, பெ.(n.) பற்றுவரவுக் கணக்கில் தன் வயமானது; that which is received or paid personally by the individual in whose name the account stands. [U.{}+{} → த.காசாவசம்] |
காசாவர்க்கம் | காசாவர்க்கம்1 kācāvarkkam, பெ.(n.) குடிக்கூலி கொடுக்கும் நல்ல குடிகள்; good tenants. [U.{} + Skt.varga → த.காசாவர்க்கம்] காசாவர்க்கம்2 kācāvarkkam, பெ.(n.) ஊர்ப்பொதுவேலை செய்வதென்னும் கட்டுப் பாட்டின் மேல் சிற்றூர் பொது மனைக்கட்டில் குடியிருக்கை; occupying the {} of a village, free or rent, in return for common village service. [Ar.{} + Skt.varga → த.காசாவர்க்கம்.] |
காசாவிருட்சம் | காசாவிருட்சம் kācāviruṭcam, பெ.(n.) குடசபாலை; milk plant – Dregea volubilis (சா.அக.);. |
காசாவில்லை | காசாவில்லை kācāvillai, பெ.(n.) சிறப்புச் சந்தனக் கூட்டு (யாழ்.அக.);; sandal paste with special fragrant ingredients (செ.அக.);. [காசா+வில்லை] காசாவில்லை kācāvillai, பெ.(n.) சந்தனத்துடன் பல நறுமணப் பொருள்கள் சேர்ந்த சிறப்புச் சந்தனக் கூட்டு (யாழ்.அக.);; sandal paste with special fragrant ingredients. [காசா + வில்லை.] [Ar.{} → த.காசா.] |
காசாவெடு-த்தல் | காசாவெடு-த்தல் kācāveḍuttal, 4. செ.கு.வி. (v.i.) சட்டயின் பொத்தான் துளையைத் தைத்தல்; to stitch a buttonhole. த.வ.பொல்லம் பொத்தல் [U.{} → த.காசா.] |
காசி | காசி kāci, பெ.(n.) சிவ நகரங்கள் ஏழில் ஒன்று: _.; the sacred city on the Ganges, one of catta-puri, an abode of Siva. [காழ் → காசு → காசாயம் (காவித்துணி); → காசாயி → காசி துறவி);. துறவிகள் வாழும் ஊர்.] காசி என்பதற்கு வடமொழியாளர் காசிய என்னும் முனிவன் பெயரால் அமைந்த ஊர் என்றும் (காசு – காசி); எனத் திரிந்த திரிபால் பொன் என்னும் பொருளில் அமைந்த ஊர் என்றும் பெயர்க்காரணம் கூறுவர். பொன்போல் ஒளிவிடும் நகரம் என்பதும் பொருந்தவில்லை. உலக அழிவின் போது அண்டவெளியிலுள்ள அண்டபேரண்டங்கள் அனைத்தும் தன்னுள் ஒடுங்கும் சிவன், குடிகொண்டிருத்தலால் காய்தல் = எரிதல், காய் – காசி எனப் பெயர் வந்ததாகக் கூறுவாரும் உளர். காசாயம் என்பது காவித்துணி. பிராகிருத மொழியில் காவித்துணி அணிந்த பெண் துறவியை, காசவி என்றும் ஆண் துறவியை, காசவ என்றும் வழங்கினர். Pkt. காசாயிய → காவித்துணி. Pkt. _. An ascetic telling long-drawn scriptural stories at the houses of house holders. காவித்துணி உடுத்துதல் பழந்தமிழ் முனிவர் மரபு. இல்லங்கள் தோறும் வாயிலில் நின்று அறநெறிகளும் அறநெறிக்கதைகளும் கூறி நற்பண்புகள் வளர வழிவகுத்த காரணத்தால் ‘காசிய’ என்றழைக்கப்பட்ட முனிவர்களின் பெயராலே இந்நகருக்குக் காசி எனப் பெயரமைந்தது என்பர். காசி2 kāci, பெ.(n.) சீரகம் (மலை);; cumin. [காய் → காசு → காசி] காசி3 kāci, பெ.(n.) 1. முட்டுப்பாடு; difficulty. தண்ணீருக்குக் காசியாயிருக்கிறது. 2. பல்லாங்குழி யாட்டத்திற் காய்கள் சேர்தற்குரிய நடுக்குழிகள்; the hollow in the centre of each row of _. தெ. காசி [காய் → காய்ச்சி (வெம்மை, வறுமை); → காசி (கொ.வ);.] காசி4 kāci, பெ.(n.) 1. சிறுசெப்புக்காசு; a small copper coin. 2. ஒருவகைத்தாது; a kind of mineral. [காசு → காசி (கொ.வ.);.] |
காசிகண்டம் | காசிகண்டம் gācigaṇṭam, பெ.(n.) அதிவீரராம பாண்டியன் இயற்றிய காசியின் பெருமை கூறும் தொன்ம நூல்; as tasa-_. in Tamil by _. on _. [காசி + கண்டம்] |
காசிகம் | காசிகம் kācikam, பெ.(n.) புழுக்கொல்லிப் பூடு; worm killer-Aristolochia bracteata (சா.அக.);. [காசு-காசிகம்] |
காசிகாவகத்தி | காசிகாவகத்தி kācikāvakatti, பெ.(n.) அகத்தி மரவகை; west Indian pea-treeSesbania grandiflora (சா.அக.);. [காசிகம் + அகத்தி] |
காசிக்கட்டி | காசிக்கட்டி kācikkaṭṭi, பெ.(n.) காசுகட்டி பார்க்க; see kāsu-kaffi(சா.அக.);. |
காசிக்கமலம் | காசிக்கமலம் kācikkamalam, பெ.(n.) பட்டை தீட்டிய வயிரக்கல் வகை; a variety of cut diamond. [காசு → காசி + கமலம்.] காசு = பொற்காசு. பொன்போல் ஒளிவிடும் இயல்பால் பெற்ற பெயராகலாம். |
காசிக்கம்பு | காசிக்கம்பு kācikkambu, பெ.(n.) ஆடவை (ஆனி);யில் விதைத்துக் கன்னி (புரட்டாசி);யில் அறுவடை செய்யும் கம்புப்பயிர் (G.SM.D.i.219);; a variety of kambu, sown in Ani and harvested in _. [காய்ச்சல் → காய்ச்சி (கோடைக்காலம்); → காசி+கம்பு.] எல்லாப் பயிர்களும் பொதுவாகக் கடக (ஆடி);த் திங்களில் விதைக்கப்படினும் இக் கம்பு ஒரு மாதம் முன்னதாகக் விதைக்கப்படுதலின் இப் பெயர் பெற்றதாகலாம். |
காசிக்கலம்பகம் | காசிக்கலம்பகம் gāciggalambagam, பெ.(n.) குமரகுருபரர் இயற்றிய சிற்றிலக்கிய நூல்களுள் ஒன்று; a kalampagam poem on _. by _. [காசி + கலம்பகம்.] |
காசிக்கல் | காசிக்கல் kācikkal, பெ.(n.) காகச்சிலை பார்க்க; see _. [காய்ச்சு → காச்சி → காசி + கல்.] |
காசிக்கிருட்டி | காசிக்கிருட்டி kācikkiruṭṭi, பெ.(n.) பறவை வகை (யாழ்.அக.);; a bird. |
காசிக்கிருட்டிணன் | காசிக்கிருட்டிணன் kācikkiruṭṭiṇaṉ, பெ.(n.) 1. சீரகம்; cummin seed – Cuminum cyminum. 2. சாதிபத்திரி; mace; nut-meg (சா.அக.);. மறுவ. சாதிக்காய் [காசி + கிருட்டிணன்.] |
காசிக்குடபதி | காசிக்குடபதி kācikkuṭapati, பெ.(n.) கழுதை, ass(சா.அக.);. [காசி + குடபதி] |
காசிக்குப்பி | காசிக்குப்பி kācikkuppi, பெ.(n.) உழை மண்ணால் (உவர் மண்);செய்யப்பட்டு கங்கை நீர் அடைத்த குப்பி (வின்.);; a phial containing holy water taken from the Gangas at _. and other places. [காசி + குப்பி.] இது புடமிடவும், மருந்து அடைத்து வைக்கவும் பயன்படும். |
காசிச்சம்பா | காசிச்சம்பா kāciccambā, பெ.(n.) நெல்வகை (A);; a kind of paddy. [காசி+சம்பா] |
காசிச்சாரம் | காசிச்சாரம் kāciccāram, பெ.(n.) ஒருவகைத் தாதுப்பு; a mineral salt. மறுவ. அணங்கன் [காயம் → காசம் → காசி + சாரம்.] |
காசிச்சீரம் | காசிச்சீரம் kāciccīram, பெ.(n.) 1. சிறு சீரகம்; cumin seed as opposed to. 2. பெருஞ்சீரகம்; sweet – fennel (சா.அக.);. [காசி + சீரம். சீரகம் → சீரம்] |
காசிச்செம்பு | காசிச்செம்பு kāciccembu, பெ.(n.) ஒருபாதி செம்பினாலும் மறுபாதி பித்தளையினாலும் செய்யப்பட்ட (கங்கைநீர் கொணர்தற்குரிய); ஏனம்;_. water-pot, made partly of copper and partly of brass. [காசி + செம்பு] |
காசிடு-தல் | காசிடு-தல் kāciḍudal, 20 செ.கு.வி. (v.i.) பணஞ்செலுத்துதல்; to remit. “நெல்லுக்குத் தலை அகப்படி காசு இடவும்” (தெ.இக.தொ. VII.1039,18);. [காசு + இடு] |
காசிடை | காசிடை kāciṭai, பெ.(n.) காசினிறை அளவு: the weight of a pie (an old Indian copper coin); (சா.அக.);. [காசு+எடை+காசெடை →அகாசிடை] |
காசிடைபுகட்டல் | காசிடைபுகட்டல் kāciṭaipukaṭṭal, பெ.(n.) காசிளைவு உள்ளுக்குச் செலுத்துகை; to administer internally anything weighing a pie as medicinal oil (சா.அக.);. [காசு+எடை+புகட்டல்.] |
காசிதாக்கியம் | காசிதாக்கியம் kācitākkiyam, பெ.(n.) கொம்புப் புடலை; common snake-gourd (சா.அக.);. [காசி (கருப்பு, கருங்கோடு); + (தூக்கியம்); தாக்கியம்] |
காசித்து | காசித்து kācittu, பெ.(n.) உடலை நரைதிரையின்றி நெடுநாள் இருக்கச் செய்யும் பேறு, rejuvenation (சா.அக.);. [காசி+சித்து.] |
காசித்தும்பை | காசித்தும்பை kācittumbai, பெ.(n.) 1. செடிவகை (வின்.);; garden balsam. 2. பேய்த்தும்பை; cucus. [காய் → காய்ச்சி → காசி + தும்பை (காய்க்கும் தும்பை);.] |
காசினி | காசினி1 kāciṉi, பெ.(n.) நிலவுலகம் (பு.வெ.9:42. உரை);; earth. “காசினி யளந்து” (கந்தபு. இந்திரனருச்.9);. [கா + இன் + இ – காயினி – காசினி. (பசுமையான சோலைகள் நிறைந்த நிலவுலகம்);. கா – சோலை, இன் – சாரியை, இ-ஒருமையீறு); காசினி2 kāciṉi, பெ.(n.) 1. அரைக் கீரை; a potherb. 2. சிக்கரி, சிவந்த முள்ளங்கிச் செடி; chicory wild endive (சா.அக.);. [காசல் → காசிலி → காசினி] |
காசினிக்குப் பாண்டம் | காசினிக்குப் பாண்டம் kāciṉikkuppāṇṭam, பெ.(n.) பூசணிக்காய்; pumpkin (சா.அக.);. [காசல் (சிவப்பு); + நிறக்கும் + பாண்டம் – காசினிக்குப்பாண்டம் (கொ.வ.);.] |
காசின் வாய் | காசின் வாய் kāciṉvāy, பெ.(n.) ஒரு காசுக்கு இவ்வளவு (வட்டி); என்ற படிமுறை; rate as part a _. “ஆட்டை வட்டம் காசின் வாய் அரைக் காற்காக பொலிசைக்காக” (Sll.ii:26-3 p.129);. [காசு + இன் + வாய்.] |
காசிபன் | காசிபன் kācipaṉ, பெ.(n.) அத்தியிடம் தேவர்களையும், திரியிடம் அசுரர்களையும் பெற்ற ஒரு முனிவன்; sir; a rsi, said to be the father of Devas by aditi, and of asuras by diti. “காசிபனார் தந்தது” (வள்ளுவமா.14);(செ.அக.);. [காயன்-காயிபன் – காசிபன்.] |
காசிப்பட்டு | காசிப்பட்டு kācippaṭṭu, பெ.(n.) ஒருவகைப் பட்டாடை; Benares silk. [காசி + பட்டு] |
காசிப்பலிகம் | காசிப்பலிகம் kācippalikam, பெ.(n.) கேந்திர வல்லி; an unidentified creeper (சா.அக.);. [காசி + பலிகம்] |
காசிமணிமாலை | காசிமணிமாலை kācimaṇimālai, பெ.(n.) காசுமணி மாலை பார்க்க; see _. [காகமணிமாலை → காசிமணிமாலை (கொ.வ.);.] |
காசியரளி | காசியரளி kāciyaraḷi, பெ.(n.) தங்க அரளி; a species of oleander with yellow flowers (சா.அக.);. [காசி + அரளி.] |
காசியலரி | காசியலரி kāciyalari, பெ.(n.) அலரிவகை (இ.வ.);; a kind of oleander. [காசி + சாரம்.] |
காசியாத்திரை | காசியாத்திரை kāciyāttirai, பெ.(n.) 1. காசிச் செலவு; pilgrimage to _. 2. திருமணத்துக்குமுன் நோன்புமுடிவில் மணமகன் நிகழ்த்தும் ஒரு சடங்கு; mock pilgrimage before the beginning of a marriage ceremony. (wherein the bridegroom leaves the bride’s house in the role of a pilgrim to Benares, when the girl’s father meets him and begs him to accept the hands of his daughter);. [காசி + யாத்திரை] மாப்பிள்ளை காசிக்குச் செல்வது என்பது தமிழ் மரபன்று. இஃது ஆரிய வரவால் கடன் பெற்ற சடங்கு. |
காசியார் | காசியார் kāciyār, பெ.(n.) சட்டப்படி தீர்ப்பு வழங்கும் முறை மன்றாளரும் (நீதிபதியும்); முகம்மதிய குருவும், ஆனவர்; Muhammadan judge having jurisdiction over all cases of law, religious, moral, civil and criminal. [U.{} → த.காசியார்.] |
காசிரோர்த்தம் | காசிரோர்த்தம் kācirōrttam, பெ.(n.) தொட்டாற் சுருங்குஞ் செடிவகை; sensitive plant called touch-me-not – Mimosa pudica (செ.அக.);. [கா+சிரம்+ஊர்த்தம்] |
காசிலவனம் | காசிலவனம் kācilavaṉam, பெ.(n.) காசிச்சாரம் பார்க்க;_. [காசி + லவணம்] |
காசிலிக்கீரை | காசிலிக்கீரை kācilikārai, பெ.(n.) புளிச்சக்கீரை (சுவை.ர.448);; Indian brown hemp. [காசல்(சிவப்பு); + காசிலி +கீரை] |
காசிவாசனி | காசிவாசனி kācivācaṉi, பெ.(n.) குறும் பூசினி; a kind of pumpkin (சா.அக.);. [காகி+வாசனி] |
காசீ | காசீ kācī, பெ.(n.) காசியார் பார்க்க;see {}. [U.{} → த.காசீ.] |
காசீசம் | காசீசம் kācīcam, பெ.(n.) அன்ன பேதி; green-vitriol, Iron sulphate (சா.அக.);. |
காசீயார் | காசீயார் kācīyār, பெ.(n.) காசியார் பார்க்க;see {}. |
காசு | காசு1 kācu, பெ.(n.) 1. குற்றம்; defect, fault. “காசறு விரையே” (சிலப்.2 : 74);. 2. கவறாடுங் கருவி(திவா.);; dice. [கள் → காள் → காய் → காசு. காசு = கருநிறமுடையது, குற்றமுடையது.] புளியங்கொட்டை போன்ற வித்துகளை, தாயக்கட்டைக் காய்களாகப் பயன்படுத்தியதால் சூதாடும் கருவியையும் குறித்தது. காசு2 kācu, பெ.(n.) 1. முற்காலத்தில் ஓர் உருபாயில் 320 பங்கில் ஒன்றான குறைந்த மதிப்புடைய செப்புக்காசு; a copper coin of lowest value i.e., 1/320th of a rupee in olden days. “நெஞ்சே உனையோர் காசாமதியேனான் காண்” (தாயு.உடல் பொய்.72);. 2.ஆங்கிலேயர் காலத்தில் ஒர் உருபாவில் 192 பங்கில் ஒன்றான செப்புக்காசு; a copper coin of the value of 1/192th of a rupee in English period. 3. இக்கால இந்திய உருபாவில் 100 பங்கில் ஒன்றாக பாசு; one hundredth of a present rupee. ம. காசு; கோத். காச்; E. cash; L.z casca; OF. casse. [காய்ச்சு → காசு. காய்ச்சு = காய்ச்சிச்செய்யப்பட்டது] காசு3 kācu, பெ.(n.) 1. பொன் (ஆ.நி.);; gold. 2. அச்சுத்தாலி; necklace of gold coins. “காசும் பிறப்புங் கலகலப்ப” (திவ்.திருப்பா.7);. 3 ஒரு பழைய பொன் நாணயம்; an ancient gold coin = 28 gr. troy. 4. கைப்பணம்; coin, cash, money. “ஏரி மீன்காசு, இநவரி வகைத்த காசு, பட்டோலைக் காசு மற்றுமெப் பேர்ப்பட்ட பல காசாயங்களும்”(S.I.I.i.60-5 பக் 89);. 5.மணி; gem. “நாண்வழிக் காசு போலவும்”(இறை. 2 உரை,பக்.29);. 6. மணிமேகலை என்னும் அணிகலன்; girdle strung with gems. “பட்டுடை சூழ்ந்த காசு” (சீவக.468);. 7. பல்லாங்குழியாட்டத்திற் காய்கள் சேர்தற்குரிய நடுக்குழிகள்; the hollow in the centre of each row of _. [காய்ச்சு → காசு (காய்ச்சி உருக்கிய பொன்னால் செய்யப்பட்டது);. இது பளப்பளப்புடைய பிறவற்றுக்கும் ஆகிவந்தது.] காசு4 kācu, பெ.(n.) வெண்பாவின் இறுதிச்சீர் வாய்பாட்டுள் ஒன்று (யா.கா.செய். 7);; a formula of a foot of two {} the letter ending in ‘u’ occurring in the last foot of a _. எ-டு : மங்கலமென்ப மனைமாட்சி மற்றதன் நன்கலம் நன்மக்கட் பேறு. [காசு – நேர்நேர் வாய்ப்பாடு. அதாவது குற்றியலுகரம் ஈறு கொண்ட நேரசை நேரசைச் சீராகிய ஈற்றுச்சீர்.] காசு5 kācu, பெ.(n.) கோழை (பிங்.);; phlegm. [(கால் → காள் → காய் → காசு(கொ.வ);காலுதல் = உமிழ்தல், வெளியிடுதல்] காசு kācu, பெ.(n.) ஒரு பணம் என்பதின் 64இல் ஒரு பங்காகிய சிறு நாணயம் a small coin 1/64″ in value of a panam. [காய்ச்சு-காசு] |
காசுகடமை | காசுகடமை kācukaṭamai, பெ.(n.) காசாகப் பெரும் வரி, tax payable in money (செ.அக.);. [காசு+கடமை.] |
காசுகட்டு-தல் | காசுகட்டு-தல் gācugaṭṭudal, 5 செ.கு.வி.(v.i.) 1 செப்புக்காசால் விளையாடுதல் (வின்.);; to play with copper coins. 2. பணம் வைத்துச் சூதாடுதல் (இ.வ..);; to bet, wager, as in gambling. 3. வணிகம் முடிந்தபின் விற்பனைத் தொகையைக் கணக்குப் பார்த்தல்; to count the total sale-amount. 4.பணம் செலுத்துதல்; to pay or deposit. [காசு + கட்டு] |
காசுகரப்பன் | காசுகரப்பன் kācukarappaṉ, பெ.(n.) உடம்பில் நமைச்சல் ஏற்பட்டு, சொறிந்த இடத்தில் சிவந்து, காசு மாதிரி தடித்துக் குருக்கள் கிளம்பும் ஒரு கரப்பன்; eruption of small round patches of the size of a pie resembling the effects of nettlestings (சா.அக.);. [காசு+கரப்பன்.] |
காசுகல் | காசுகல் kācukal, பெ.(n.) நிறைகல்; standard weight for weighing jewels (செ.அக);. [காசு+கல்.] |
காசுகொள்ள விறையிலி | காசுகொள்ள விறையிலி gācugoḷḷaviṟaiyili, பெ.(n.) ஒருவகை வரியுமின்றி அளிக்கப்பட்ட நிலம்; land granted free of tax. “காசு கொள்ளா விறையிலியக விட்ட நிலம்” (S.I.I.V. 989, 35-37);. [காசு + கொள்ள + இறை + இலி] |
காசுக்கடமை | காசுக்கடமை kācukkaḍamai, பெ.(n.) பணமாகச் செலுத்தும் வரி;(S.I.I.II. 114);; tax payable in money. “கடமை, குடிமை, காசுக் கடமை ஒடுக்கும்படி” (S.I.I.ii.22 பக் 114);. [காசு + கடமை. காசு = பணம். கடமை = செலுத்தக் கடமைப்பட்டிருக்கும் வரி.] |
காசுக்கடை | காசுக்கடை kācukkaḍai, பெ.(n.) 1.பணம் மாற்றுங் கடை ; money-changer’s shop. 2. பொன் வெள்ளி விற்கும் இடம்; shop dealing in gold and silver. 3. வட்டிக்கடை; money lending shop. 4 அடகுகடை; pawn broker’s shop. [காசு + கடை – காசுக்கடை. காசு – தொடக்கத்தில் பொற்காசை மட்டும் குறித்து நாளடைவில் பொதுவாகப் பணத்தைக் குறிப்பதாயிற்று.] |
காசுக்கட்டல் | காசுக்கட்டல் kācukkaṭṭal, பெ.(n.) காசுபோடல் பார்க்க; see kasu-p0pal (சா.அக.);. |
காசுக்கட்டளை | காசுக்கட்டளை kācukkaṭṭaḷai, பெ.(n.) பணவிடை (ஈழநா.);; money order. மறுவ. பணவிடை [காசு + கட்டளை] |
காசுக்கட்டி | காசுக்கட்டி1 kācukkaṭṭi, பெ.(n.) தங்கக்கட்டி, mass of gold. [காசு + கட்டி.] காசுக்கட்டி2 kācukkaṭṭi, பெ.(n.) ஒருவகைக் கூட்டு மருந்துச் சரக்கு; a compound of a catechu formed with the juice of tender coconuts, arecanuts, and other spices. [காய்ச்சு → காசு + கட்டி.] காசுக்கட்டி3 kācukkaṭṭi, பெ.(n.) மரவகை; downy foliaged cutch. [காசு + கட்டி.] |
காசுக்கட்டிப்பில்லை | காசுக்கட்டிப்பில்லை kācukkaṭṭippillai, பெ.(n.) காய்ச்சுக் கட்டியை மருந்துச் சரக்குகளோடு கலந்து சக்கரை இட்டுத் திரட்டிய வில்லைகள்; tablets prepared by mixing catechu and other medicinal drugs with sugar, Catechu lozenges (சா.அக.);. [காசுகட்டி+வில்லை.] |
காசுக்கருதி | காசுக்கருதி kācukkaruti, பெ.(n.) பொற் காசுகளில் முதல் தரமானது, நற்காசென்றும் பெயர் பெறும்; superior quality gold coins. “காசுக் கருதித் துளையிலும் உரையிலும் நிறையலும் வழுவாதது தீப்போக்குச் செம்பொன்”(தெஇல்.கல்.தொ.க கல்.199);. (கல்அக);. [காசு+கருதி] |
காசுக்கல் | காசுக்கல் kācukkal, பெ.(n.) நிறைகல்; standard weight for weighing jewels. “காசு கல்லால் துளைநிறை செம்பொன் முக்கழஞ்சு”(S.I.I.III. 45);. [காசு + கல். காசின் எடைக்குச் சமமான நிறுத்தல் அளவு, எடைகல்.] |
காசுக்கள்ளன் | காசுக்கள்ளன் kācukkaḷḷaṉ, பெ.(n.) இவறன் (உலோபி); (இ.வ.);; miser. [காசு + கள்ளன்.] |
காசுக்காரச்செட்டி | காசுக்காரச்செட்டி kācukkāracceṭṭi, பெ.(n.) செட்டிகளுள் ஒரு பிரிவினராகிய பொன்வாணிகர்; a sub-division of the Tamil Chetti caste who are by profession money-changers, dealers in coins, gold, silver and gems. [காசு + காரன் + செட்டி – காசுக்காரச்செட்டி. காசு = பணம், செல்வம், கைப்பணமாகவே இருக்கும் பெரிய முதலீடு.] |
காசுக்காரன் | காசுக்காரன் kācukkāraṉ, பெ.(n.) 1. காசுக் கடைக்காரன்; money-changer. 2. பணக்காரன்; rich man. [காசு + காரன் – காசுக்காரன்.] |
காசுசங்கம் | காசுசங்கம் kāsusaṅgam, பெ.(n.) வளையலுப்பு; salt used in the manufacture of bangles known as glass gall (சா.அக.);. [காய்ச்சு → காசு + சங்கம்.] |
காசுசவாரி | காசுசவாரி kāsusavāri, பெ.(n.) பெரியோரின் சுற்றுலா (P.T.L.);; tour of a high or noble person. [Ar.{} + U.{} → த.காசுசவாரி] |
காசுசின்னம் | காசுசின்னம் kācuciṉṉam, பெ.(n.) சோழ பாண்டியர் ஆட்சியில் உயர்ந்த முதல் மதிப்புக் காசு; first made coin of the pomdya and chola perif. ஒரு காசு தலையாக ஒரு சின்னங் கடையாகவும்” (தெ.கல்.தொ.8 கல்.148);. [காசு+சின்னம்] கடைசியாக கொள்ளப்பட்ட பின்ன மதிப்பு சின்ன காசு-சின்னம் என்பதாகும். உருபா-பைசா போன்றதாகும். இது சோழ நாட்டில் நடைமுறையில் இருந்த காக மதிப்பீட்டு முறை. |
காசுதாரி | காசுதாரி kācutāri, பெ.(n.) குதிரைக்காரன்; groom, syce, horsekeeper. [Ar.{} + {} → த.காசுதாரி.] |
காசுபோடல் | காசுபோடல் kācupōṭal, பெ.(n.) காசு எடை மருந்து கூட்டல் அல்லது சேர்த்தல்; adding or mixing a pie-weight of medicine (சா.அக.);. [காசு+எடை] |
காசுமணிமாலை | காசுமணிமாலை kācumaṇimālai, பெ.(n.) காசுகளும், மணிகளும் கோர்த்த மாலை; necklace decorated with _. & gems. [காசு + மணி + மாலை] |
காசுமண் | காசுமண் kācumaṇ, பெ. (n.) காவிக்கல்; [காசு + மண். காசுமண். காசு = செந்நிறம். காவிநிறம் பொன்னின் நிறம், காவி நிறத்துக்கும் ஆகிவந்தது.] |
காசுமரி | காசுமரி kācumari, பெ.(n.) 1. பெருங்குமிழ்; kāshmere tree. 2. நன்னாரி; Indian sarsaparippa. 3.கொடிமுந்திரிகை; grap- vine (சா.அக.);. [காசு (செந்நிறம்); + மரி(மருவியது = பொருந்தியது.] |
காசுமாலை | காசுமாலை kācumālai, பெ.(n.) பெண்கள் அணியும், வட்ட வடிவப் பொற்காசுகளைக் கோத்துச் செய்யப்பட்ட கழுத்தணிகலன்; necklace of gold coins worn by women. [காசு + மாலை. காசு = பொற்காசு.] |
காசுரண்டம் | காசுரண்டம் kācuraṇṭam, பெ.(n.) நாயுருவி; Indian burr – Achyrantnes aspera (சா.அக.);. |
காசுலவணம் | காசுலவணம் kāculavaṇam, பெ.(n.) வளையலுப்பு; salt used in the manufacture of bangles known as glass gall (சா.அக.);. [காய்ச்சு – காசு+லவணம்] |
காசுலவம் | காசுலவம் kāculavam, பெ.(n.) காகலவனம் பார்க்க; see kasu-avanam (சா.அக.). |
காசை | காசை kācai, பெ.(n.) ஈளை நோய் (வின்.);; consumption. [Skt.{} → த.காசை.] |
காசையாடை | காசையாடை kācaiyāṭai, பெ.(n.) காவி வண்ணம் ஊட்டப்பட்ட ஆடை; brown-red cloth worn by ascetics. “காசையாடை மூடியோடி” (திவ். பெரியதி.2.2:1);. [காசா + ஆடை.] [Skt.{} → த.காசாயம்.] |
காசோலை | காசோலை kācōlai, பெ.(n.) சேமித்து வைத்திருக்கும் பணத்திலிருந்து குறிப்பிட்ட தொகையைத் தான் குறிப்பிடுபவருக்கு வழங்கு மாறு வங்கிக்கு அனுப்பும் ஆணைத்தாள்; cheque. [காசு + ஓலை] |
காச்கலவணவுப்பு | காச்கலவணவுப்பு kāckalavaṇavuppu, பெ.(n.) காச்சுலவனம் பார்க்க; see kAccயlavaṇam (சா.அக);. |
காச்சகம் | காச்சகம் gāccagam, பெ.(n.) பேய்ப் புடல்; devil’s gourd (சா.அக.);. [காய் – காய்ச்சகம் – காச்சகம்] |
காச்சகற்கீரை | காச்சகற்கீரை gāccagaṟārai, பெ.(n.) முன்னைக் கீரை; leaves of the Indian headache tree (சா.அக.);. [காய் – காய்ச்சு + அகல் + கீரை] |
காச்சக்கீரை | காச்சக்கீரை kāccakārai, பெ.(n.) புளிச்சைக்கீரை; Indian brown hemp – Hibiscus cannabinus (சா.அக.);. [காச்சல்+கீரை.] காச்சக்கீரை kāccakārai, பெ.(n.) புளிச்சைக்கீரை (வின்);; Indian brown hemp. தெ.காசி [கச்சல் → காச்சல் + கீரை காச்சக்கீரை. கச்சல் = இளமை.] |
காச்சப்பட்டா | காச்சப்பட்டா kāccappaṭṭā, பெ.(n.) சூநாறிமரம்; umbelled yellow-flowered resin seed (செ.அக.);. [காச்சல்+பட்டு] |
காச்சப்பட்டை | காச்சப்பட்டை kāccappaṭṭai, பெ.(n.) ஒருமரப்பட்டை, resin-seed shrub – Pittosporum tetraspermum (சா.அக.);. [காச்சல்+பட்டை] |
காச்சம் | காச்சம் kāccam, பெ.(n.) காச்சக்கீரைபார்க்க; seekäcca-k-kira (சா.அக);. |
காச்சரக்கிழங்கு | காச்சரக்கிழங்கு kāccarakkiḻṅgu, பெ.(n.) மஞ்சள் முள்ளங்கி; carrot (சா.அக.);. [காய் – காய்ச்சல் – காச்சல் → காச்சலம் → காச்சரம் + கிழங்கு] |
காச்சரக்கு | காச்சரக்கு kāccarakku, பெ.(n.) காச்சக்கீரைபார்க்க; seekacca-k-kirai (சா.அக.);. காச்சரக்கு kāccarakku, பெ.(n.) காச்சக்கீரை பார்க்க; see _. (சா.அக.);. [காச்சக்கீரை → காச்சரக்கு] |
காச்சரக்குநார் | காச்சரக்குநார் kāccarakkunār, பெ.(n.) புளிச்சைக்கீரை; Indian brown hemp (செ.அக.);. [காச்சரக்கு+நார்] |
காச்சற்கட்டி | காச்சற்கட்டி kāccaṟkaṭṭi, பெ.(n.) 1. வெப்புநோயால்வயிற்றுள்காணுங்ஈரற்கட்டி: enlargement of the spleen from fever. 2. காய்ச்சியெடுத்தக்கட்டி; lump of any substance derived from boiling (சா.அக.);. [காய்ச்சல் + கட்டி] |
காச்சலம் | காச்சலம் kāccalam, பெ.(n.) தேவதாரு; red cedar (சா.அக.);. [கா (பெரியது); + காச்சலம்.] |
காச்சல் | காச்சல் kāccal, பெ.(n.) வெப்புநோய்; fever (சா.அக.);. மறுவ. காய்ச்சல் காச்சல் kāccal, பெ.(n.) காய்ச்சல் பார்க்க; see _. [காய்ச்சல் → காச்சல்] |
காச்சாத்திரம் | காச்சாத்திரம் kāccāttiram, பெ.(n.) காட்டாத்தி; yellow mountain ebony – Bauhinia tomentose (சா.அக.);. [காச+சாத்திரம்] |
காச்சி | காச்சி1 kācci, பெ.(n.) துவரை (மலை.);; common dhal. [காய் → காய்ச்சி → காச்சி (அடர்ந்து காப்ப்பது);.] காச்சி2 kācci, பெ.(n.) காய்ச்சிய உப்பு என்னும் வளையலுப்பு; glass-gall (சா.அக.);. [காய்ச்சி → காச்சி.] |
காச்சிகம் | காச்சிகம் gāccigam, பெ.(n.) துவரை; common dhal (சா.அக.);. [காச்சி → காச்சிகம்.] |
காச்சிக்கிழங்கு | காச்சிக்கிழங்கு kāccikkiḻṅgu, பெ.(n.) பெரு வள்ளிக் கிழங்கு; white yam (சா.அக.);. [காய் → காச்சி + கிழங்கு] |
காச்சிரக்கு | காச்சிரக்கு kāccirakku, பெ.(n.) புளிச்சைக்கீரை; Indian brown hemp – Hibiscus Cannabinus (செ.அக.);. [T Kaci →த. காச்சி] |
காச்சிரம் | காச்சிரம் kācciram, பெ.(n.) நிலப் பனைக் கிழங்கு; root of ground palm (சா.அக);. [காய் → காய்ச்சி → காச்சி → காச்சிரம்.] |
காச்சிலை | காச்சிலை kāccilai, பெ.(n.) கஞ்சா இலை; Ganjah leaf (சா.அக.);. [காஞ்சம் → கச்சம் → காச்சம் + இலை.] |
காச்சுப்பீச்செனல் | காச்சுப்பீச்செனல் kāccuppīcceṉal, பெ.(n.) காச்சுமூச்செனல் பார்க்க; see _. [காச்சு + பீச்சு + எனல். காக்கபீச்சு என்பன ஒலிக்குறிப்பு குறித்த எதுகை மரபிணைச் சொல்.] |
காச்சுப்பு | காச்சுப்பு kāccuppu, பெ.(n.) காய்ச்சுப்பு பார்க்க; see kay-c-cபppu (சா.அக.);. |
காச்சுமூச்செனல் | காச்சுமூச்செனல் kāccumūcceṉal, பெ.(n.) ஓர் ஒலிக்குறிப்பு; onom.expr. signifying noise or clamour. as in a family of children and women. [காச்சு + மூச்சு + எனல். காச்சுமூச்சு என்பன ஒலிக்குறிப்புக் குறித்த எதுகை மரபிணைச்சொல்.] |
காச்சுரக்கை | காச்சுரக்கை kāccurakkai, பெ.(n.) உலர்ந்த கரக்குடுக்கை; dried bottle-gourd (சா.அக.);. [காய் (காய்ந்து);+சுரக்கை] காச்சுரக்கை kāccurakkai, பெ.(n.) உலர்ந்த சுரைக் குடுக்கை; dried bottle-gourd (சா.அக.);. [காய்ச்சுரக்கை → காச்சுரக்கை.] |
காச்சுரக்கைநார் | காச்சுரக்கைநார் kāccurakkainār, பெ.(n.) புளிச்சைக்கீரை; Indian brown hemp-Hibiscus Cannabinus (சா.அக.);. [காய்+சுரக்கை+நார்] |
காச்சுரம் | காச்சுரம் kāccuram, பெ.(n.) காச்சக்கீரை பார்க்க; see käcca-k-kira (சா.அக.);. |
காச்சுரை | காச்சுரை kāccurai, பெ.(n.) புளிச்சைக்கீரை(வின்.);; Indian brown hemp. [காய்ச்சற்கீரை → காச்சிரக்கு → காச்சுரை (கொ.வ.);] |
காச்சுறுக்குக்கீரை | காச்சுறுக்குக்கீரை kāccuṟukkukārai, பெ.(n.) காச்சக்கீரை பார்க்க; see kaccak-kia(சா.அக.);. காச்சுறுக்குக்கீரை kāccuṟukkukārai, பெ.(n.) புளிச்சக்கீரை; Indian brown hemp (சா.அக.);. [காய்ச்சுரை – காச்சிறுக்கு + கீரை.] |
காச்சுலவனம் | காச்சுலவனம் kācculavaṉam, பெ.(n.) 1.சவட்டுப்பு; salt produced from the earth impregnated with soda. 2.துருசு குருவாகு; a salt capable of converting copper sulphate or copper acetate into a quintessence salt having.alchemical virtues (சா.அக.);. [காய்ச்சு+இலவணம்] |
காச்சுவா | காச்சுவா kāccuvā, பெ.(n.) சிற்றாமல்லி, short-tubed Arabian jasmine-Jasminus sambac (சா.அக.);. [காய்+சுவல்] காச்சுவா kāccuvā, பெ.(n.) சிற்றா மல்லி; shorttubed Arabian jasmine (சா.அக.);. |
காச்சுவாதம் | காச்சுவாதம் kāccuvātam, பெ.(n.) பிள்ளைப் பேற்றுக் காய்ச்சல்; puerperal fever (சா.அக.);. [காய்ச்சல்+வாதம்] |
காச்சை | காச்சை kāccai, பெ.(n.) காயாச்செடி a plant. [கய- காயா-காச்சை] இதற்குக் காயாம் பூச்செடி அல்லது சிறுகாசா என்றும் பெயர். 10-12 அடி உயரம் வளரும் இச்செடி குட்டையாகவும், இதன் இலைகள் சிறு காம்புகளாகவும், பூக்கள் நீல நிறமாயும் இருக்கும். இதன் இலைகளைக் கொண்டு வண்ணமூட்டலாம். இதன் வகைகள் : 1.சிறுகாசா — small ironwood tree, Meme – Cylon edule; 2. பெருங்காசா – big variety; 3. காகைக் காசா – wild ironwood tree; 4. வெள்ளைக் காசா – narrowmall ironwood tree, Meme – Cylon edule; 5. பூங்காசா; manyflowered iron wood – Memecylon edule (சா.அக.);. |
காச்சொறிக்கீரை | காச்சொறிக்கீரை kāccoṟikārai, பெ.(n.) காச்சக்கீரை பார்க்க; see kacca-k-kirai (சா.அக.);. காச்சொறிக்கீரை kāccoṟikārai, பெ.(n.) புளிச்சக் கீரை; Indian brown hemp (சா.அக.);. [காய்ச்சுரை → காச்சொறி + கீரை] |
காஞ்சச்சம் | காஞ்சச்சம் kāñjaccam, பெ.(n.) புங்கமரம் ;_.tree (சா.அக.);. [காய்ச்சு → காஞ்சு → காஞ்சச்சம்] |
காஞ்சதம் | காஞ்சதம் kāñcatam, பெ.(n.) புங்க மரம், puñgu tree – Dalbergia arborea (சா.அக.);. [காஞ்சனம்+நதம்] |
காஞ்சநாகரம் | காஞ்சநாகரம் kāñcanākaram, பெ.(n.) ஒரு கடைச்சரக்கு; a bazzaar drug (சா.அக.);, |
காஞ்சன காரிணி | காஞ்சன காரிணி kāñjaṉakāriṇi, பெ.(n.) தண்ணீர்விட்டான் கிழங்கு; water root (சா.அக.);. [காஞ்சு – காஞ்சனம் + காரிணி.] |
காஞ்சனகம் | காஞ்சனகம் gāñjaṉagam, பெ.(n.) மந்தாரை; mountain ebony (சா.அக.);. [காய்ச்சு → காஞ்சு → காஞ்சல் → காஞ்சலகம் → காஞ்சனகம்.] |
காஞ்சனத்தூள் | காஞ்சனத்தூள் kāñjaṉattūḷ, பெ.(n.) 1. பொன் மணல்; gold ore. 2.பொன் அராவிய தூள்; gold filings (சா.அக.);. [காஞ்சனம் + தூள்] |
காஞ்சனபுட்பி | காஞ்சனபுட்பி kāñcaṉapuṭpi, பெ.(n.) மஞ்சள் பூவுள்ள ஒரு பூடு; a plant akin to premna spinosa with yellow flowers (சா.அக.);. [காஞ்சனம்+புட்டு] |
காஞ்சனமாலை | காஞ்சனமாலை kāñcaṉamālai, பெ.(n.) 1. கண்ணன் (கர்ணன்); மனைவி; wife of karna 2. மலையத்துவச பாண்டியன் மனைவி; wife of Malaya-t-tuvasa Pandya. 3. பாண்டியன் மகள்களில் ஒருத்தி; one of the daughter of Pāngīyā king, 4. பெருங்கதையின் தலைவி வாசவ தத்தையின் உயிர்த் தோழி; the close friend of väsava-tatta (அபி.சிந்.);. [காஞ்சனம்+மாலை] |
காஞ்சனமாலைகோயில் | காஞ்சனமாலைகோயில் kāñcaṉamālaiāyil, பெ.(n.) ஏழு கடல்களும் தம்முள் அடங்கிய தடாகத்தின் தென் மேற்கில் உள்ள பழமையான கோவில்; an ancient temple in South West direction of a tank seven Sea. [காஞ்சனமாலை+கோயில்] இதில் சலகண்டேசுவரரென்ற பெயருடைய சிவபெருமானும், அவரைக் கண்டு வணங்கிய நிலையில் காஞ்சனமாலையின் வடிவமும் அமைக்கப்பட்டுள்ளது (அபி.சிந்);. |
காஞ்சனம் | காஞ்சனம் 1 kāñjaṉam, பெ.(n.) 1.தாமரைக் கொத்து; bunch of lotus. 2. மருதோன்றி; fragrant nail dye. 3. செஞ்சந்தனம்; red sandal. 4. பொன்னூமத்தை; yellow thorn – apple, 5. நீர் விளா; water feronia. 6. காட்டாத்தி, mountain ebony. 7.சண்பகம்; champak. 8. மஞ்சள்; turmeric. 9. பொன் (திவா.);; gold. 10. புன்கு (பிங்.);;_. tree [காய் → காய்ச்சு → காஞ்சு → காஞ்சனம். (காய்ச்சி உருக்கிச்செய்த பொற்காசு போன்ற செந்நிறப்பூக்களைக் கொண்ட மரம்.);.] காஞ்சனம்2 kāñjaṉam, பெ.(n.). பொன் (திவா.);; gold. 2. தங்கம்; refined gold. 3.இலிங்கச் செய்நஞ்சு; an arsenic poison. [காய் → காய்ச்சு → காய்ஞ்சு → காஞ்சு → காஞ்சனம் (கொ.வ.); (இது வடதமிழ் வழக்காகக் காய்ச்சி உருக்கிச்செய்த பொற்காசைக் குறித்தது. காசு – தென் தமிழ். காஞ்சு, காஞ்சனம் = வடதமிழ்.] |
காஞ்சனாகுவயம் | காஞ்சனாகுவயம் kāñcaṉākuvayam, பெ.(n.) சண்பகம்; champak, Michelia сһатраса (சா.அக.);. |
காஞ்சனாவயம் | காஞ்சனாவயம் kāñcaṉāvayam, பெ.(n.) ஊமத்தைச் செடிவகை; thorm apple – Datura (சா.அக.);. |
காஞ்சனி | காஞ்சனி kāñjaṉi, பெ.(n.) 1. மஞ்சள் (பிங்.);; turmeric. 2. பொன்னிறம் (பிங்.);; colour of gold. 3. ஊமத்தை ; datura plant. 4.காட்டாத்தி; mountain ebony, 5.கொடிப்புன்கு ; hog creeper. 6.சண்பகம்; Indian magnolia (சா.அக.);. [காய் → காய்ச்சு → காய்ஞ்சு → காஞ்சு → காஞ்சனி.] பொற்காசைக்குறித்த சொல் அந் நிறமுள்ள பிறவற்றுக்கும் ஆகிவந்தது. இது வடதமிழ்த் திரிபாகிய கொச்சை வழக்கு. |
காஞ்சன் | காஞ்சன் kāñjaṉ, பெ.(n.) சாதிலிங்கம்; vermion (சா.அக.);. [காய்ச்சு – காஞ்சு (சிவப்பு); → காஞ்சன்] |
காஞ்சன்மாலிதம் | காஞ்சன்மாலிதம் kāñcaṉmālitam, பெ.(n.) கொத்தவரை; cluster bean – Cysmopsis psoralioides (சா.அக.);. |
காஞ்சம் | காஞ்சம் kāñjam, பெ.(n.) துருசு; blue vitriol (சா.அக.);. [காஞ்சு → காஞ்சம்] |
காஞ்சா | காஞ்சா kāñjā, பெ.(n.) கஞ்சா எனப்படும் கஞ்சரங் குல்லை; Indian hemp. [கஞ்சரம் குல்லை → கஞ்சரம் → கஞ்சா → காஞ்சா (கொ.வ.);.] |
காஞ்சான் | காஞ்சான் kāñjāṉ, பெ.(n.) 1. கண்டிப்புள்ளவன் (நாஞ்);; strict man. 2. இவறன் (உலோபி); (இ.வ.);; miser. [காய் – காஞ்சான்.] |
காஞ்சான்கட்டு-தல் | காஞ்சான்கட்டு-தல் kāñjāṉkaṭṭudal, 5 செ.கு.வி. (v.i) உளுத்துப்போதல் (யாழ்);; to become rotten. [காஞ்சான் + கட்டு.] |
காஞ்சி | காஞ்சி1 kāñji, பெ.(n.) 1. ஆற்றுப்பூவரசு; river portia. “குறுங்காற் காஞ்சிக் கொம்பர்” (சிறுபாண்.179);. 2. காஞ்சிப்பூமாலை; garland of _. flowers worn by soldiers while defending themsleves against the onslaught of the enemy. “காஞ்சிசூடி நின்றனன்” (திருவாலவா. 43:8);. 3. காஞ்சித் திணை பார்க்க; see _. “கண்ணிய காஞ்சித் துறையென மொழிய” (புவெ.4, தலைப்பு நூற்பா.);. 4. வேற்றுமன்னன் படையெடுத்து வரும்போது அரசன் காஞ்சியென்னும் பூவைச் சூடித் தன் காவலிடத்தைக் காக்கும் புறத்துறை (பு.வெ.4:1);; theme describing the defence of a fortress on the approach of an enemy by a king decked with _. flower appropriated to the occastion. 5. நிலையாமை; instability, transiency. “காஞ்சி சான்ற செரு” (பதிற்றுப். 84:19);. 6. செவ்வழிப்பண் வகை (திவா.);; an ancient secondary melody-type of the _. class, 7. கோவை மாவட்ட வழியோடிக் கொடுமுடிக்கு அருகில் காவிரியுடன் கலக்கும் நொய்யலாறு; a tributary of the _.} flowing through Coimbatore district. “காஞ்சிவாய்ப் பேருர்” (பெரியபு. ஏயர்கோன், 88);. 8. மருதப்பண்; melodytype peculiar to agricultural tracts. “தண்காஞ்சி மென்சினைப் பூங் கொம்பர் ஆடல் சார்ந்தசைய வதன் மருங்கு சுரும்பு தாழ்ந்து பண்காஞ்சி யிசைபாடும் பழனவேலிப் பணைமருதம் புடையுடைத்தாய்” (பெரியபு. திருக்குறிப்.86);. 9. பாலாற்றுக்கும் சேயாற்றுக்கும் இடையில் உள்ள காஞ்சிமாநகரம்; the great city of _. between _. and _., “கங்கை காளிந்தி யிடைப்படுந் தலத்தின் முற்படுங் காஞ்சி மாநகரம்” (கந்தபு.நகர.76);. [காய்ச்சு → காஞ்சு → காஞ்சி. = (பொன்னிறமுடையது நிறத்தாலும் அழகாலும் பெருமையாலும் சிறந்தவற்றுக்கு ஆகிவந்தது. காஞ்சி என்னும் பூவரசு மரங்கள் இருந்த பகுதி காஞ்சி நகராகப் பெயர் பெற்றது.);] காஞ்சி2 kāñji, பெ.(n.) 1. நாதாங்கி (வின்);; staple of bolt. 2.மகளிர் இடையில் அணியும் ஏழு கோவையுள்ள அணி; woman’s waist-girdle con-sisting of seven strings of beads of bells. “காஞ்சி யெழுகோவை” (சிலப்.4:30,உரை);. [கா = அகலம், விரிவு. கா → காஞ்சி = வாய்விரிந்தது, அகன்றது. வாயகன்றிருத்தலால் நாதாங்கியையும், மகளிர் இடுப்பிலணியும் காஞ்சி அணிகலனையும் குறித்தது.] காஞ்சி kāñji, பெ.(n.) மயிர்; hair. “காஞ்சியொடு கேசமொரு பொருட்கிளவி யாகும்” (காஞ்சிப்பு. தழுவக்.70.);. [குஞ்சி → காஞ்சி(கொ.வ.);.] காஞ்சி4 kāñji, பெ.(n.) 1.பெருமை; greatness. 2.அறிவு; knowledge, wisdom. [கா = விரிவு, பெருக்கம் கா → காஞ்சி.] |
காஞ்சிகம் | காஞ்சிகம் gāñjigam, பெ.(n.) 1. அரிசி, வாற் கோதுமை முதலிய தவசங்களிலிருந்து வடித்த காடி; a sour liquid with a vinous smell produced from the acetus fermentation of powdered rice, barley or other grains. 2.கழுநீர்; water of cleansed rice. 3. தோட்டத்துக் களை; a destructive weed in garden. 4. காடி; vinegar. மறுவ. கொல்லைப்பல்லி (சா.அக.);. [கஞ்சி → காஞ்சி → காஞ்சிகம்.] |
காஞ்சிகவடகம் | காஞ்சிகவடகம் kāñcikavaṭakam, பெ.(n.) 1. உசிலை (மசலா); இட்ட கூழ் வடகம்; rice gruel seasoned with condiments. 2. புளித்த கூழும், துவையலும் சேர்ந்த உணவுப் பொருள்; a dish consisting of sourgruel meal and paste ground with several condiments (சா.அக.);. |
காஞ்சிகா | காஞ்சிகா kāñjikā, பெ.(n.) காஞ்சிரங்காய் பார்க்க; see _. க., து. காசர. [காஞ்சிரம் + காய் – காஞ்சிரங்காய் → காஞ்சிகா (கொவ.);.] |
காஞ்சிகி | காஞ்சிகி kāñciki, பெ.(n.) கொழுமிச்சை, citron; bitter orange – Citrus aurantium (சா.அக.);. |
காஞ்சிகை | காஞ்சிகை gāñjigai, பெ.(n.) 1. சிறுபாலை; a kind of _. 2. பலாசு; Bengal kino (சா.அக.);. [காஞ்சி →காஞ்சிகை.] |
காஞ்சிதம் | காஞ்சிதம் kāñcitam, பெ.(n.) கூத்துக்குரிய அசைவுக(பாதங்க);ளுள் ஒன்று (சிலப்.);; a kind of pose. காஞ்சிதம் kāñjidam, பெ.(n.) கூத்துக்குரிய நடை வகையுள் ளொன்று (சிலப்.ப.81);; a kind of pase. [காஞ்சி + காஞ்சிதம்] |
காஞ்சித்திணை | காஞ்சித்திணை kāñjittiṇai, பெ.(n.) 1.அகத்திணை ஏழனுள் பெருந்திணைக்குப் புறனாகி வீடுபேறு நிமித்தமாகப் பல்வேறு நிலையாமைகளைச் சாற்றும் புறத்திணை (தொல்பொருள்.78);; major theme inculcating a belief in the instability of earthly things as a necessary preliminary to attain liberation. 2. வீரன் காஞ்சிமலர் மாலை அணிந்து பகைவர்முன் எதிரூன்றி நிற்றலைக்குறிக்கும் புறத்திணை; major theme describing a warrior defending his position wearing a garland of _. flowers. “வட்கா ரெதிரூன்றல் காஞ்சி” (பிங்.);. [காஞ்சி + திணை.] அகத்தினை ஏழனுள் பெருந்திணைக்குப் புறனாகியது காஞ்சித்திணை. அஃது ஒன்றற்கொன் றுரிமையாதல், யாக்கை செல்வம் இளமை முதலிய பலநெறியானும் நிலையாதவுலக இயற்கைக்குப் பொருந்திய நெறியினை யுடையது (இலக்.வி.614. உரை);. எண்வகை மணத்தினும் நான்கு மணம் பெற்ற பெருந்திணை போல இக்காஞ்சியும் அறமுதலாய மும்முதற்பொருளும் அவற்றது. நிலையின்மையுமாகிய ஆறனுள்ளும், நிலையின்மை மூன்றற்குமுரித்தா யெல்லாத் திணைகட்குமொத்த மரபிற் றாகலானும், “பின்னர் நான்கும் பெருந்திணைபெறு” மென்ற நான்குஞ் சான்றோ ரிகழ்ந்தாற் போல அறமுதலியவற்றது நிலையின்மை யுணர்ந்து அவற்றை அவரிகழ்தலானும் ஏறிய மடற்றிற முதலிய நான்கும் பொருந்தாக்காம மாயினவாறு போல உலகியல் நோக்கி நிலையாமை நாற் பொருளன்றாகலானும் உரிப் பொருளிடம் மயங்கி வருதலன்றித் தனக்கு நிலமில்லாத பெருந்திணை போல அறம்பொருளின்பம் பற்றி யன்றி வேறு நிலையாமை யென்றோர் பொருளின் றாதல் ஒப்புமையானும் காஞ்சித்திணை பெருந்தினைக்குப் புறத்திணையெனப் பட்டது (த.சொ.அக.);. |
காஞ்சிநதி | காஞ்சிநதி kāñcinati, பெ.(n.) மேலைச் சிதம்பரம் அல்லது பேரூரிலுள்ள ஆறு, a river in west Chidambaram or a river in Perur (அபி.சிந்);. |
காஞ்சினி | காஞ்சினி kāñjiṉi, பெ.(n.) 1. மஞ்சள்; turmeric. 2. கொக்குச் சிறகு; stork’s feather. 3. சண்பகம்; Indian magnolia champak. 4. காட்டாத்தி; mountain ebony. 5. மஞ்சிட்டி (மலை.);; Indian madder (சா.அக.);. [காஞ்சு → காஞ்சினி.] |
காஞ்சிபுரம் | காஞ்சிபுரம் kāñcipuram, பெ.(n.) பழங்காலத்தில் இருந்த சிறந்த ஏழு நகரங்களுள் ஒன்று; Kässjipuram, one among the sacred city of Tamil Nadu (சா.அக.);. காஞ்சிபுரம் kāñjiburam, பெ. (n.) காஞ்சி பார்க்க; see _. [காஞ்சி + புரம் – காஞ்சிபுரம். காஞ்சி + ஆற்றுப்பூவரசு மரம், அம்மரம் மிகுந்த ஊர்] |
காஞ்சிபுரம் சபாபதி முதலியார் | காஞ்சிபுரம் சபாபதி முதலியார் kāñcipuramcapāpatimutaliyār, பெ.(n.) சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பணிபுரிந்த தமிழ்ப்புலமை உடைய புலவர்; a Tamil scholar who stuited at Pacciappan college. பெரியபுராணம், திருவிளையாடல் மற்றும் சில தல புராணங்களுக்கு உரை இயற்றி உரையாசிரியர் எனப் பெயர் பெற்றவர். எழுபது வருடங்களுக்கு முன் வாழ்ந்தவர். தமிழில் அருணாசல சதகம் முதலியன இயற்றியவர் (அபி.சிந்:);. |
காஞ்சிப்புராணம் | காஞ்சிப்புராணம் kāñjippurāṇam, பெ.(n.) 18ஆம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்தைப்பற்றிச் சிவஞான முனிவர், கச்சியப்ப முனிவர் ஆகிய இருவராலும் இயற்றப்பெற்ற தொன்மம் (புராணம்);; a Saiva _. about _. by Siva-_.-_. and Kacciyappa-munivar, 18th c. [காஞ்சி + புராணம்] த.பழைய → Skt. purna → _. → த.புராணம் |
காஞ்சிப்புலவனார் | காஞ்சிப்புலவனார் kāñcippulavaṉār, பெ.(n.) மதுரைக்காஞ்சி பாடிய மாங்குடி மருதனார்; the vers or of madurai-k-käsji [காஞ்சி+புலவனார்] தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டிய நெடுஞ்செழியனை நிலையாமை அறிவுறுத்த வேண்டி மதுரைக்காஞ்சி பாடியதனால் மதுரைக் காஞ்சி புலவரென்றும், காஞ்சிப் புலவரென்றும் கூறப்பெறுவாராயினர். மாங்குடிக் கிழார் என்பவரும் இவரே. வேளாண் குடியினரான இவர் பாண்டியனது அவைக்களப் புலவராகவும் விளங்கினார் (அபி.சிந்);. |
காஞ்சிமாலை | காஞ்சிமாலை kāñjimālai, பெ.(n.) 1. தொண்ணூற்றாறு சிற்றிலக்கியங்களுள் ஒன்று, அது காஞ்சிமாலை சூடிப் பகைவரைத் தடுத்தற்கு எதிரூன்றி நிற்றலைக் கூறும் இலக்கியம். (தொன்.வி.283, உரை);; poem on the firm stand of warriors wearing the _. garland ready to face the assaing enemy. 2. படை முன் எதிர்த்து நிற்கும் வீரர் சூடும் மாலை; a kind of garland worn warrior (த.சொ.அக.);. [காஞ்சி + மாலை.] |
காஞ்சியம் | காஞ்சியம் kāñjiyam, பெ.(n.) வெண்கலம்; bel metal. [கஞ்சு → காஞ்சு → காஞ்சியம்.] |
காஞ்சியெதிர்வு | காஞ்சியெதிர்வு kāñjiyedirvu, பெ.(n.) எதிரூன்றுஞ் சேனையை மேலிடாது தடுக்கும் வீரனுடைய திறமையைக் கூறும் புறத்துறை (பு.வெ.4:2.);; theme of a warrior defending himself against the onslaught of his enemies. [காஞ்சி + எதிர்வு] |
காஞ்சிரக்கொட்டை | காஞ்சிரக்கொட்டை kāñjirakkoṭṭai, பெ.(n.) காஞ்சிரமரத்தின் கொட்டை; nut of _. [காஞ்சிரம் + கொட்டை. சாம்பசிவம் மருத்துவ அகரமுதலி போன்றவை எட்டிக்கொட்டை என்று குறித்திருப்பது தவறு.] |
காஞ்சிரங்களம் | காஞ்சிரங்களம் kāñciraṅkaḷam, பெ.(n.) 1. இனிகம்; sweetness. 2. எட்டி மரம்; strychnine tree – Strychncs nux vomica (சா.அக.);. |
காஞ்சிரங்காய் | காஞ்சிரங்காய் kāñjiraṅgāy, பெ.(n.) கருநாடக மாநிலத்தில் வளரும் நச்சு மரத்தின் காய்; a poisonous nut of a tree known as _. in Karnataka, _. in Tamilnadu, and _. in Malayalam. “கற்பகத்தைச் சேர்ந்தோர்க்குக் காஞ்சிரங்கா யீந்தேல்”(வாக்குண்.2.);. ம. காஞ்சிரா; க. காசரக [காஞ்சி → காஞ்சில் → காஞ்சிலம் → காஞ்சிரம் + காய் காஞ்சிரங்காய்.] பூவரச மரத்தைப்போல் தோற்றமளிக்கும் நச்சுமரத்தின் காய். இதனை எட்டிமரத்தின் காய் என உரையாசிரியர்கள் குறித்திருப்பது தவறு. இது எட்டியைப்போல் கசப்புடையதன்று. தின்றால் ஓரளவு இனிப்பதும், உண்டாரைக் கொல்வதுமாகிய பழங்களைக் காய்க்கும் மரம். மேலைமலைத் தொடர்களில் வளரும் பாங்குடையது. இதனைச் சென்னைப் பல்கலைக்கழக அகரமுதலியும்,சாம்பசிவம் மருத்துவ அகரமுதலியும், பிற அகரமுதலிகளும் எட்டிக் கொட்டை எனக் குறித்திருப்பது தவறு. |
காஞ்சிரம் | காஞ்சிரம் kāñjiram, பெ.(n.) காஞ்சிரை பார்க்க; see _. “காஞ்சிர மரத்தி னல்ல தீங்கனி பழுப்பவும்” (திருவிளை.எல்லா.11);. [காஞ்சில் → காஞ்சிலம் → காஞ்சிரம்.] |
காஞ்சிரம்பழம் | காஞ்சிரம்பழம் kāñcirampaḻm, பெ.(n.) எட்டிப்பழம்; fruit of the strychnine tree (சா.அக.);. |
காஞ்சிரை | காஞ்சிரை kāñjirai, பெ.(n.) காஞ்சிரங்காய் பார்க்க; see _. [காஞ்சில் – காஞ்சிலம் – காஞ்சிரம் – காஞ்சிரை.] |
காஞ்சிரைப் புல்லுருவி | காஞ்சிரைப் புல்லுருவி kāñjiraippulluruvi, பெ.(n.) காஞ்சிர மரத்தின்மேல் முளைக்கும் புல்லுருவி; a parasite on the _. tree (சா.அக.);. [காஞ்சிரை + புல்லுருவி.] |
காஞ்சிரைமேற்புல்லுருவி | காஞ்சிரைமேற்புல்லுருவி kāñciraimēṟpulluruvi, பெ.(n.) எட்டி மரத்தின் மேல் முளைக்கும் புல்லுருவி; a parasite on the strychnine tree (சா.அக.);. – |
காஞ்சில் | காஞ்சில் kāñjil, பெ.(n.) பூவரசமாத்தின் வகை; a kind of pivaram tree. [காய்தல் (எரிதல், கொல்லல்); → காஞ்சு → காஞ்சில்.] |
காஞ்சீரகம் | காஞ்சீரகம் kāñcīrakam, பெ.(n.) செந்தொட்டி; scorpion leaf – Tragia involucrata (சா.அக.);. |
காஞ்சுகன் | காஞ்சுகன் gāñjugaṉ, பெ.(n.) சட்டையிட்ட மெய்க் காப்பாளன்; lit., he who wears a jacket, king’s attendant, body guard. “காஞ்சுகர் வினைசெய்ய” (திருவிளை. திருமணப். 108);. [காஞ்சுகம் → காஞ்சுகன்.] |
காஞ்சுகம் | காஞ்சுகம்1 gāñjugam, பெ.(n.) சட்டை (பிங்.);; jacket, shirt. ம. காஞ்சுகம்; Skt. _. [கஞ்சுகம் → காஞ்சுகம்.] காஞ்சுகம்2 gāñjugam, பெ.(n.) முருங்கை; drum stick (சா.அக.);. [காஞ்சு → காஞ்சுகம் மேற்சட்டைபோன்ற புறப்பட்டை கொண்ட காய்] |
காஞ்சுகி | காஞ்சுகி1 gāñjugi, பெ.(n.) காஞ்சுகன் பார்க்க; see _. “காஞ்சுகன் அவன்முன்வரு காஞ்சுகி வன்கண் மாக்கள்” (திருவிளை.கல்லா.4);. [காஞ்சுகன் → காஞ்சுகி] காஞ்சுகி2 gāñjugi, பெ.(n.) சட்டை (பிங்.);; jacket. [காஞ்சுகம் → காஞ்சுகி] |
காஞ்சுரை | காஞ்சுரை kāñcurai, பெ.(n.) 1. உலர்ந்த சரைக்காய்; dried bottle-gourd. 2. சுரைக்சுடுக்கை; fruit of bottle-gourd which when dried and emptied of its contents is used by beggars as a feeder-bottle – Fakeer”s bottle. 3. எட்டி; strychnine tree – Srychncs nux vomica (சா.அக.);. |
காஞ்சூரை | காஞ்சூரை kāñcūrai, பெ.(n.) காஞ்சுரை பார்க்க; see kaiyurai(சா.அக.). |
காஞ்சொறி | காஞ்சொறி kāñjoṟi, பெ.(n.) செந்தொட்டி; scorpion leaf. மறுவ. செந்தட்டி, காண்டூதி வகைகள் : 1. எருமைக் காஞ்சொறி. 2. பூனைக் காஞ்சொறி . 3. வெள்ளைக் காஞ்சொறி. 4. சிறு காஞ்சொறி. 5. பெருங் காஞ்சொறி. 6. கறுப்புக் காஞ்சொறி. 7. எட்டிக் காஞ்சொறி. |
காஞ்சொறியொற்றல் | காஞ்சொறியொற்றல் kāñcoṟiyoṟṟal, தொ.பெ.(vbl.n.) காஞ்சொறிப்பூடை உடம்பிற்படும்படிச் செய்து தினவை உண்டாக்கல்; touching one with a nettle plant to cause itching sensation (சா.அக.);. காஞ்சொறி+ஒற்றல்.] |
காஞ்சோன்றி | காஞ்சோன்றி kāñjōṉṟi, பெ.(n.) காஞ்சொறி பார்க்க; see _. [காஞ்சொறி → காஞ்சோன்றி] |
காடகச்சக்கரம் | காடகச்சக்கரம் gāṭagaccaggaram, பெ.(n.) சித்திரப்பாவகை (யாப்.வி. 497);; a kind of metrical composition. [காடகம் + சக்கரம்] |
காடகம் | காடகம்1 gāṭagam, பெ.(n.) ஆடை (திவா.);; cloth [காழகம் → காடகம் (கொ.வ); காழகம் பார்க்க; See _.] காடகம் gāṭagam, பெ.(n.) காட்டுமுள்ளி; large nali dye (சா.அக.);. [காடு → காடகம்.] |
காடசத்திரி | காடசத்திரி kāṭasattiri, பெ.(n.) பழமுண்ணிப் பாலை; edible paulay (சா.அக.);. [கடு → காடு → காட + சத்திரி.] |
காடச்சரம் | காடச்சரம் kāṭaccaram, பெ.(n.) ஒரு நீர் நோய்; a urinary disease (சா.அக.);. [காடம்+ சரம்] |
காடன் | காடன் kāṭaṉ, பெ.(n.) மீன்வகை (வின்);; a species of fish (w.);. [கடு→காடு→காட + அன்] |
காடபந்தம் | காடபந்தம் kāṭabandam, பெ.(n.) தீவட்டி; large torch for festive occasions (சா.அக.);. [கடு → காடு → காட + பந்தம்] |
காடமர்செல்வி | காடமர்செல்வி kāṭamarcelvi, பெ.(n.) கொற்றவை; Korrava, as dwelling in the forest. “காடமர்செல்வி கழிபெருங்கோட்டமும்”(மணிமே 6:53);. [காடு + அமர் + செல்வி] |
காடம் | காடம் kāṭam, பெ.(n.) 1/ உறுதி; strength. 2. கடினம்; hard. 3. அடர்த்தி; density. 4. மிகுதி; abundence (த.சொ.அக.);. [கடு → காடு + அம்.] |
காடம்பரம் | காடம்பரம் kāṭambaram, மரவயிரம்; hardness, as of timber. “காட்புடைச் சிலையின்” (கந்தபு. சிங்க.194);. [காழ் →காழ்ப்பு →காட்பு (கொ.வ.);] காடம்பரம் kāṭambaram, பெ.(n.) 1. பிரைகுத்திய பாலிற் மேற்படரும் ஆடை ; the surface or skin of coagulated milk. 2. கடப்பம் பூவினின்று வாலையைக் கொண்டு இறக்கிய ஒருவகை மது a spiritu. ouslquor distilled from the flowers of Kadamba. 3.கடப்பமரம் நன்றாகப் பூத்துத் தேன் பொருந்திய காலத்து, அம்மரத்தின் குழிகளில் தங்கி நிற்கும் மழை தண்ணீர்; the rain water that collected in the hollow spots of the tree (Nauclea Kadamba); when the flowers are in full bloom and are found impregnated with honey 4. மது; a spirituous liquor in the general. 5. யானை மதம்; the fluid which issues from the temple of an elephant in rut. 6. குயில்; Indian cuckoo, preaching crow. [கடு + காடு + அம்பரம்.] |
காடம்பூ | காடம்பூ kāṭampū, பெ.(n.) மஞ்சள் பூ பூக்கும் ஒரு செடி; hairy yello-flowered laurustinus – Viburnum hebanthum (சா.அக.);. [காடம்+ பூ] |
காடர் | காடர் kāṭar, பெ.(n.) 1. காட்டில் வாழும் குடிகள்; hil tribes, dwellers in the forest. “குன்றகஞ் சேர்ந்து காடரில்” (இறை.23. உரை. பக்126);. 2. ஆனை மலையில் வாழும் ஓரினத்தார்; hill tribes occupying the Anaimalai hills, of strong build with woolly hair and African features. [காடு → காடர் (காட்டில் வாழ்பவர்);] |
காடவன் | காடவன்1 kāṭavaṉ, பெ.(n.) பல்லவர்களின் சிறப்புப்பெயர் (பெரியபு.ஐயடிகள்,7);; title of the Pallava kings. [காடு + அவன் – காடவன். காடுகளை அழித்து விளைநிலங்களாக மாற்றிய வேளாண் மரபின் பழங்கிளை மரபினன். வடதமிழராகியும் பிறகு பல்லவராகியுங் கூட மறவாமல் புனைந்து கொண்ட மரபுப்பெயர்.] காடவன்2 kāṭavaṉ, பெ.(n.) கழற்சிங்கனின் சிறப்புப் பெயர் (பெரியபு. ஐயடிகள்.7);; title of the KalarŠiñgan king. [காடு + அவன் – காடவன். காடுகளை அழித்து விளைநிலங்களாக மாற்றிய வேளாண் மரபின் பழங்கிளை மரபினர் வடதமிழராகியும் பிறகு பல்லவராகியுங்கட மறவாமல் புனைந்து கொண்ட மரபுப்பெயர்.] |
காடவர் | காடவர் kāṭavar, பெ.(n.) கடிலம் ஆற்றங்கரையிலமைந்த சேந்தமங்கலத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த குறுநில மன்னர் குடி; local chieftien, who ruled from Sendamangalam on the banks of kadilam river in Villuppuram dt. “சகல புவனச் சக்கரவர்த்திகள் காடவராயன் கோப்பெருஞ்சிங்கன்” |
காடவர்கோன் | காடவர்கோன் kāṭavarāṉ, பெ.(n.) காஞ்சியை ஆண்ட அரசமரபைச் சார்ந்தவர்; a king who ruled kāsīji. [காடவர்+ கோன்.] இவர் காஞ்சியில் சிவாலயம் கட்டி அதற்கு குடமுழுக்கு செய்ய நாள் குறித்தார். சிவன் இவருக்குக் காட்சியளித்து, பூசலார் நாயனார் செய்யும் குடமுழுக்கிற்குப் போவதால் நாள் மாற்றி வைக்குமாறு வேண்டினார். இவர் நாளை மாற்றி வைத்து, பூசலாரைத் தேடிக்கண்டு களித்து இன்பமடைந்தார் (அபி.சிந்);. |
காடவிளக்கு | காடவிளக்கு kāṭaviḷakku, பெ.(n.) பெருவிளக்கு (வின்);; lamp formed by putting oil and wick in large vessels for illumination on great occasions. [அகடு+விளக்கு-அகட்டுவிளக்கு →அகடவிளக்கு → காடவிளக்கு (கொ.வ.); அகடுவிளக்கு வயிறு பெருத்த அல்லது அகன்று பெரிய வடிவுடைய விளக்கு] [P] காடவிளக்கு |
காடா | காடா kāṭā, பெ.(n.) நன்றாக முறுக்கிய கடினத் தன்மையுள்ள தடித்த இழைகளால் நெய்யப்பட்ட துணி; fabric woven with coarse yarn. ஒரு மீட்டர் காடா வாங்கிவா. [கடுவு → கடா → காடா] |
காடாக்கினி | காடாக்கினி kāṭākkiṉi, பெ.(n.) 1.பெருநெருப்பு (வின்);; great fire, conflagration. 2.மருந்து எரிப்பதற்காக இருவிரல் கனமுள்ள 4 அல்லது 5 விறகால் எரிக்கும் பெருநெருப்பு; a strong fire produced in order to prepare medical powder, from four or five sticks each as thick as two fingers and encircling the melting pot containing herbs. [காடு + அக்கினி] |
காடாந்தகாரம் | காடாந்தகாரம் kāṭāndakāram, பெ.(n.) கனத்த இருள், பேரிருள் (சி.சி.2:58, சிவாக்.);; pitch darknes, thick darkness. [காடு + அந்தகாரம்] skt. antakara. த. அந்தகாரம். காட்டிருள் பார்க்க see. _. |
காடாய்ப்போ-தல் | காடாய்ப்போ-தல் kāṭāyppōtal, 8 செ.கு.வி. (v.i.) மரமடர்ந்துநிலம் பயனின்றி ஒழிதல்; to lie waste, grow woody as land. மறுவ. காடுபற்றுதல், காடமண்டுதல். [காடு+ (ஆகி); ஆய் +போ = காடாய்ப்போ] |
காடாரம்பம் | காடாரம்பம் kāṭārambam, பெ.(n.) புன்செய் நிலப்பகுதி (G.TN.D. 1,293);; drytract, rain-fed land where only dry crop can be raised, opp. to _. (நீராரம்பம்);. க. காடாரம்ப தெ. காடாரம்பமு. [காடு + ஆரம்பம் → காடாரம்பம் ஏர் →ஏரம்பம் – ஆரம்பம் (கொ.வ.); ஏரம்பம் பார்க்க;See _.] |
காடாரம்பற்று | காடாரம்பற்று kāṭārambaṟṟu, பெ.(n.) காட்டுப் புறம் (யாழ்.அக.);; forest region. [காடாரம்பம் + பற்று-காடாரம்பற்று] |
காடாற்று-தல் | காடாற்று-தல் kāṭāṟṟudal, 8 செ.கு.வி.(v.i.) இறந்தவரை எரியூட்டிய பின்னர் நெருப்பை நீர்விட்டு ஆற்றியபின் புதுப்பானையில் அங்கம் (எலும்பு முதலியன சேர்த்தல்);; to perform the ceremony connected with quenching the fire when a corpse has been burnt, and collecting the bones in a new earthern pot. “இரண்டு மூன்று நாளுறுங் காடாற்றாமுன்”(மச்சபு: பிண்டி.19);. [காடு + ஆற்று-காடாற்று காடு சுடுகாடு, ஈமம் ஆற்றிச் குடுதணிக்கும் கடன்] |
காடாற்றுமுன்னெலும்பு | காடாற்றுமுன்னெலும்பு kāṭāṟṟumuṉṉelumpu, பெ.(n.) சுடுகாட்டில் பிணம் சுட்ட எலும்பு; unburnt bones left after the cremation of a dead body (சா.அக.);. [காடு+ஆற்று+முன்+எலும்பு] |
காடாலிங்கனம் | காடாலிங்கனம் kāṭāliṅgaṉam, பெ.(n.) இறுகத்தழுவுகை; close embrace. [Skt.{}+{} → த.காடாலிங்கனம்.] |
காடாவிளக்கு | காடாவிளக்கு kāṭāviḷakku, பெ.(n.) காடவிளக்கு பார்க்க; see kāda-Vilakku [காடவிளக்கு→ + காடாவிளக்கு] |
காடி | காடி1 kāṭi, பெ.(n.) 1. புளித்த கஞ்சி (பதார்த்த:49);; fermented gruel or rice-water. 2. புளித்தகள்; vinegar. 3. கஞ்சி; gruel. “காடி கொண்ட கழுவுறு கலிங்கத்து” (நெடுநல்.134);. 4. புளித்த பழச்சாறு ; acetous fermentation of sweet fruits. “துப்புர வில்லார்துவரத் துறவாமை யுப்பிற்குங் காடிக்குங் கூற்று” (குறள்.1050);. 5. ஊறுகாய்; pickles. “கயிறுபிணித்துக் காடிவைத்த கலனுடைமுக்கின்” (பெரும்பாண்:57);. 6. சோறு. (அகநி.);; rice food. ம., தெ. காடி [கடு → கடி → காடி. கடு → உறைப்பு அல்லது புளிப்பு மிகுதி.] காடி வகைகள்: 1. பழக்காடி 2. அரிசிக் காடி 3. கள்ளுக் காடி 4. சருக்கரைக்காடி 5.கடலைக்காடி 6, ஈச்சங்காடி. 7. பனங் காடி 8. தென்னங் காடி 9, திராட்சைக் காடி 10, கஞ்சிக் காடி. 11. ஆறு மாதக் காடி. 12 சீமைக்காடி (சா.அக.);. காடி2 kāṭi, பெ.(n.) நெய் (பெரும்பாண்.57, உரை);; ghee. [கடி→காடி. கடி = மிகுதி, நறுமணமிகுதி. நறுமணமுள்ள நெய்.] காடி3 kāṭi, பெ.(n.) 1. கழுத்து; neck; nape of the neck. “காடியின் மிதப்ப வயின்ற காலை” (பொருந.115);. 2. மிடா முதலியன வைப்பதற்குத் தரையில் கழுத்துப்போலமைக்கப்பட்ட மேடை (பெரும்பாண். 57.2 உரை);; neck-like elevation on the floor for placing big pots. 3. மூளை; brain. [கடி → கடிகை → காடிகை- காடி (கொ.வ);. கடி = கடித்தல், இறுக்கப்பிடித்தல், சுருக்குதல், சிறிதாக்குதல் சிறிய வாயினையுடைய பானை.] காடி4 kāṭi, பெ.(n.) தவசம் அளக்கும் முகத்தலளவுள் ஒன்று; a measure of capacity for grain. “எழுத்து சடையன் பக்கல் ஆயிரக்காடி நெல் கொண்டோம்” (S.I.I.Ill,6-1 pg.9);. [கடிகை → காடிகை → காடி. கடிகை = குறிப்பிட்ட அளவுக்குரிய மட்பாண்டம்] காடி5 kāṭi, பெ.(n.) வண்டி; cart, carriage. க., தெ. காடி, ப., H. _. [சகடு→சாகாடு → காடு → காடி (கொ.வ);. சாகாடு= சகடம் (வண்டியின் சக்கரம்);. சக்கரத்தைக் குறித்த சொல், வண்டியைக் குறிப்பதாயிற்று. வடபுலத்து மொழிகளில் பொதுவாக அனைத்து ஊர்திகளுக்கும் பொதுப்பெயராயிற்று. இதனை உருதுச்சொல் என்பது பொருந்தாது.] காடி6 kāṭi, பெ.(n.) 1. அகழி; trench of a fort. 2. கோட்டையடுப்பு; a fireplace in the form of a long ditch. 3. மாட்டுக்கொட்டில் (உ.வ.);; manger. 4. மர வேலையின் பொளிவாய்; groove in woodwork rabbet. மரத்தில் காடிவெட்டினான் (உ.வ);. [அகழ் →அகழி →காழி →காடி. (கொ.வ);. குழி , பள்ளம் அல்லது வெட்டுவாயைக் குறித்த பழந்தமிழ்ச்சொல். காடி எனத் திரிந்து கொச்சை வழக்காயிற்று] |
காடிகட்டுண்டழுவாள் | காடிகட்டுண்டழுவாள் kāṭikaṭṭuṇṭaḻuvāḷ, பெ.(n.);மாவிலங்கம், garlic near-Crataeva religiosa (சா.அக.);. [காடி+கட்டுண்டு+அழுவான்] |
காடிகம் | காடிகம் gāṭigam, பெ.(n.) சீலை (சூடா);; cloth, stiffened with starch or gruel. [காழ் → காழகம். காழ் = வித்து. ஆடைகளுக்குச் செந்நிறம் ஊட்டுதற்குப் பயன்பட்ட வித்து. செந்நிறம் ஊட்டப்பட்ட துணி காழகம் எனப்பட்டது] |
காடிகானா | காடிகானா kāṭikāṉā, பெ.(n.) வண்டியை நிறுத்தப் பயன்படும் கட்டடம்; cart-stand, carriage-house, shed for keeping carts (செ.அக.);. [U-gadi-khawa→த. காடிகானா] காடிகானா kāṭikāṉā, பெ.(n.) வண்டியை நிறுத்தும் இடம் (கட்டிடம்);; cart-stand carriage-house, shed far keeping carts. [U.{}+{} → த.காடிகானா.] |
காடிக்காரத்தழும்பு | காடிக்காரத்தழும்பு kāṭikkārattaḻumpu, பெ.(n.) காடிக்காரத்தை அடிக்கடி பயன் படுத்துவதனால் சதை கறுத்து ஏற்படும் தழும்பு; discoloration of the skin caused by prolonged or frequent application of nitrate of silver-Argyria [காடி+காரம்+தழும்பு] |
காடிக்காரம் | காடிக்காரம் kāṭikkāram, பெ.(n.) நெருப்புக்கல் (மூ.அ.);; nitrate of silver, lunar, caustic. மறுவ. ஆயக்கல் (சா.அக.);. [கடி → காடி → காரம்-காடிக்காரம். காடி = உறைப்பு, எரிதல்] |
காடிக்கூழ் | காடிக்கூழ் kāṭikāḻ, பெ.(n.) புளிக்கவைத்த கூழ்; sour pap (சா.அக.);. [காடி1 + கூழ்] |
காடிச்சத்து | காடிச்சத்து kāṭiccattu, பெ(n.) புளித்த காடியை வாலையிலிட்டு இறக்கிய மயக்கமூட்டும் பொருள் ; the intoxicating principle obtained from fermented liquors (சா.அக.);. [காடி4 + சத்து] |
காடிச்சால் | காடிச்சால்1 kāṭiccāl, பெ(n.) காடி வைக்குஞ் சால் மட்பாண்டம் (சினேந்.172.);; broad-mouthed pot. keeping sour rice-water. [காடி + சால்] காடிச்சால் kāṭiccāl, பெ.(n.) மரவேலையின் பொளிவாய்; groove in woodwork, rabbet. [காடி + சால்.] |
காடிச்சால்மூலை | காடிச்சால்மூலை kāṭiccālmūlai, பெ.(n.) வேள்விச்சாலையில் காடி வைக்கப்படும் வட கிழக்குத்திசை; north-eastern corner where waste water is emptied in a pot at sacrifice. “காடிச்சால் மூலையில் தேவதையை ஆசிரமித் தாராகில்”(திவ் கண்ணிநுண்.வ்யா. அவ பயக் 5);. [காடி + சால்+ மூலை] வடகிழக்குத் திசையில் முதன்முதலாகப் பொன்னேர் கட்டத்தொடங்குதல், அறுவடை தொடங்குதல் போன்றன தொன்றுதொட்டுப் பழந்தமிழர் வழக்கமாதலின் வடபுலத்து ஆரியரும் இதனை மேற்கொண்டிருக்கலாம். |
காடிச்செயநீர் | காடிச்செயநீர் kāṭicceyanīr, பெ.(n.) இளநீரையும், இள வழுக்கையையும் சேர்த்துக் கரைத்துத் தெளிவித்து, அத்துடன் கண்ணாம்பு நீர் விட்டுக் கலக்கி, சூரிய ஒளியில் வைத்துப் பிறகு தெளிவிறுத்து வடித்த காடி. இது சிந்துாரம் செய்ய உதவும்: a strong pungentfermented liquid filtered after exposing to the sun”s rays a solution of lime water and the Cocoanut extract obtained from a mixture of tender cocoanut and its water. This is used for preparing red oxides (சா.அக.);. [காடி+செயநீர்] |
காடிச்சோறு | காடிச்சோறு kāṭiccōṟu, பெ(n.) 1.புளித்த கஞ்சி; sour gruel. 2 புளித்தகஞ்சியின்று எடுக்கப் பட்ட சோறு; rice taken out of sour _. 3. சொன்டிச்சோறு; an intoxicating liquor extracted from the fermentation of boild-fice. மறுவ. குசாண்டிச்சோறு. ஊறவைத்த சோறு. [காடி + சோறு] |
காடித்தாய் | காடித்தாய் kāṭittāy, பெ(n.) காடிக்காதி; mother of vinegar (சா. அக.);. [காடி + தாய்] |
காடித்தெளிநீர் | காடித்தெளிநீர் kāṭitteḷinīr, பெ.(n.) தெளிய வைத்த காடிநீர் ; vinegar (சா. அக.);. [கா + தெளிநீர்] இது நோய்களுக்குக் கொடுக்கவும், புடம் போடுவதற்கு மருந்துகளை அரைக்கவும் பயன்படும். இது கருங் குருவை அரிசியிலிருந்து செய்யப்படும். |
காடித்தேன் | காடித்தேன் kāṭittēṉ, பெ.(n.) தேனிலிருந்து செய்யப்படும் காடி; vinegar prepared from honey (சா. அக.);. [காடி + தேன்.] |
காடிநீர் | காடிநீர் kāṭinīr, பெ.(n.) 1. காடி; vinegar. 2. கழுநீரை வெயிலில் வைத்து வடித்தெடுக்கப்படும் புளித்த நீர்; rice-water fermented by exposing it to the Sun (சா. அக.);. [காடி + நீர்] |
காடினம் | காடினம் kāṭiṉam, பெ.(n.) மூளையின் முன்பக்கத்து கூரிய முனை (கூச்சு); என்னும் உருண்டை வடிவம்; oval prominences at the sides of the anterior pyramids of the oblongata – Olivery body (சா.அக.);. [காடு+இனம்.] |
காடினியம் | காடினியம் kāṭiṉiyam, பெ.(n.) கடினத்தன்மை இறுகுத் தன்மை; hardness, rigidity, thoughness. [Skt.{} → த.காடினியம்.] |
காடிப்பால் | காடிப்பால் kāṭippāl, பெ.(n.) பனங்கள் ; palmyra toddy, (சா. அக.);. [காடி + பால்] |
காடிமூலி | காடிமூலி kāṭimūli, பெ.(n.) பருத்தி; cotton (சா.அக.);. [காடி + மூலி] |
காடியடுப்பு | காடியடுப்பு kāḍiyaḍuppu, பெ.(n.) பெருகச் சமைப்பதற்காக ஆழமற்ற நீண்ட கால்வாய் போன்று குழிவெட்டி அமைக்கப்பட்ட அடுப்பு, கோட்டையடுப்பு; a fire place in the form of a long ditch used for cooking on a large scale. மறுவ. கோட்டையடுப்பு [காடி + அடுப்பு] [காடி6 + அடுப்பு.] |
காடியலகு | காடியலகு gāṭiyalagu, பெ.(n.) பொளிவாய் செதுக்குங் கருவி [C.E.M.]; groove cutter. [காடி6 + அலகு. அலகு = உளியின் வாய்] |
காடியிலை | காடியிலை kāṭiyilai, பெ.(n.) புளித்தகீரை: Indian brown hemp (சா.அக.);. [கா + இலை. காடி = புளிப்பு] |
காடியிழைப்புளி | காடியிழைப்புளி kāṭiyiḻaippuḷi, பெ.(n.) தச்சுக் கருவி வகை (C.E.M.);; plough-plane. [காடி6+ இழைப்பு +உளி] [P]காடியிழைப்புளி |
காடியுளி | காடியுளி kāṭiyuḷi, பெ.(n.) வியர்வையிலுள்ள ஒருவகைப் புளிப்பு; the sour substance found in sweat (சா. அக.);. [காடி + புளி] காடியுளி kāṭiyuḷi, பெ.(n.) இழைப்புளி வகை [C.E.M.]; rabbet-plane. [காடி10 + உளி] |
காடிலை | காடிலை kāṭilai, பெ.(n.) கல்லுமா; kidney plum – Pygeum gardneri (சா.அக.);. [காடு+ இலை]) |
காடிவகை | காடிவகை kāṭivakai, பெ.(n.) பல வகைக்காடி; the different varieties of vinegar – Aceta (சா.அக.);. [காடி+வகை] |
காடிவெட்டு-தல் | காடிவெட்டு-தல் kāṭiveṭṭudal, 5 செ.கு.வி.(v.i.) பள்ளந்தோண்டுதல், குழிவெட்டுதல், துளை செய்தல் (வின்.);; to scoop, cut into hollowness. [காடி6 + வெட்டு] |
காடிவைப்பு | காடிவைப்பு kāṭivaippu, பெ.(n.) காடி செய்யும் முறை; the process in the manufacture or preparation of vinegar (சா.அக.);. [காடி+வைப்பு] |
காடீசம் | காடீசம் kāṭīcam, பெ.(n.) வெங்காரம்; borax or biborate of soda – Soda biborous (சா.அக.);. |
காடு | காடு1 kāṭudal, 5 செ.குன்றாவி (v.t.) அலைக்கழித்தல், துன்புறுத்துதல்; to treat harsly give trouble. க. காடு, து. காட்யுனி, காடியுனி. காடு2 kāṭu, பெ.(n.) 1. மரங்கள் செறிந்த நிலப்பகுதி ; forest jungle. “காடே கடவுண் மேன (பதிற்று. 13:20);. 2. மிகுதி; excessiveness, abun dance. எங்கும் வெள்ளக்காடாயிருக்கிறது (உ.வ.); 3.நெருக்கம்; density. “தாமரைக் காடு போன்றார் “(சீவக. 2199);. 4. செத்தை (பிங்.);; chaft, straw etc. 5. சோலை; park. “அரம்பையங் காட்டுக்கு” (மருதுரரந். 22);. 6. கடற்கரை; sea shore. “கட்டுமரத்தை மேற்கில் வலித்துக்கொள் அதோ காடு தெரிகிறது (மீனவ);. ம. க., தெ., து. காடு. [கடு → காடு. கடு = அடர்த்தி மிகுதி செறிவு] காடு3 kāṭu, பெ.(n.) 1. சுடுகாடு; burning-ghal burial ground. “நெய்தல் கல்லென வொலிக்குங் காடு”(பு.வெ.10, காஞ்சிப். 6, கொளு); 2. இடம்; place tract of land, வயற்காடு, பட்டிக்காடு (பிங்.);. 3. புன் செய்நிலம்[C.G.]; dry land. “காடுகாரையுழு பிழைப்பு ” (தனிப்);. 4. சிறிய ஊர் (பிங்);; smalvi lage. 5. எல்லை (பிங்);; border, boundary. 6. நான்கு அணைப்புள்ள ஒரு நிலவளவு ; a measure of anappu = more than 2 acres. 7. தாழி (பரணி); நாண்மீன்;_. 8. முரட்டுத்தன்மை; roughness. [கடு →காடு. கடு = மிகுதி, செறிவு, அடர்த்தி மரங்களின் செறிவு மிக்க இடம் காடு எனப்பட்டது] காடுவெட்டி நிலந்திருத்தியபோது விளைநிலம், விளைநிலத்தையடுத்த ஊர் எல்லை; ஊரெல்லையிலுள்ள சுடுகாடு ஆகிய பொருள்களில் புடைபெயர்ந்தது. ஓர் உழவன் அரைநாளில் உழும் நிலப்பரப்பு ஓர் அணைப்பு எனப்படுதலால் இரண்டு உழவர்கள் ஒருநாளில் அல்லது ஓர் உழவன் இரண்டுநாளில் உழும் நான்கு அணைப்புநிலம் ஒரு சாராராங் காடு என்னும் நிலஅளவாகக் கருதப்பட்டது. காடு3 kāṭu, இடை [part]. ஒரு தொழிற்பெயர் ஈறு; an ending ofverbal nouns, a sin. காடு2 → அகாடு] இடம் குறித்தசொல் சிறுபகுதியையுங் குறித்தலான் தொடர்புடையது என்னும் பொருளில் புடைபெயர்ந்து முதற்சொல்லின் பொருளை விரிப்பதற்காகப் பெயரீறு வடிவுற்றது.ஒ.நோ.தூக்கம்-→துக்காடு,நோவு→ நோக்காடு. காடு4 kāṭu, இடை[part] வளப்பம், இடம், தன்மை, நிலைமை ஆகிய பொருள்களைச் சுட்டும் பெயரீறு; a noun suffix denoting fertility, situation, nature and state. [கடு → காடு] வளப்பம் குறித்த பெயரிறு-மலைக்காடு,வயற்காடு, பருத்திக்காடு,மாங்காடு தன்மை குறித்த பெயரீறு-வெள்ளக்காடு இடம் குறித்த பெயரீறு-இடுகாடு, சுடுகாடு நிலைமை குறித்தபெயரிறு-கரம்பைக்காடு, புற்காடு, புழுதிக்காடு,மணற்காடு.புதர்க்காடு.புகைக்காடு, பிணக்காடு. |
காடு மேடு | காடு மேடு kāṭumēṭu, பெ.(n.) மேடாயுள்ள கரம்பு நிலம் (இவ.); ; rough, uneven waste land. க. காடுமேடு [காடு + மேடு] |
காடு வாழ்த்து | காடு வாழ்த்து1 kāṭuvāḻttu, பெ.(n.) எல்லோரும் இறந்துபோகவும் தான் இறப்பின்றி நிலைபெற்ற புறங்காட்டை வாழ்த்தி உலகவியல்பை விளக்கும் ஒரு புறத்துறை (தொல். பொருள். புறத்.24);; [காடு + வாழ்த்து] பிறப்பெடுத்த எல்லா உயிர்களும் இறந்துபடுதலால் நிலையாமையே நிலையாகிவிட்ட உலகியல்பைச் சுட்டிக்காட்டி மக்களை அறநெறிப்பாற் படுத்தும் பாடல் வகைமையது. |
காடுகட்டு-தல் | காடுகட்டு-தல் gāṭugaṭṭudal, 5 செ.கு.வி.(v.i.) விலங்கு, பறவைகளைக் குறித்தவிடத்தில் வராமல் தடைசெய்தல்; to prevent, with incantations, wild beasts and birds of prey from frequenting a particular place, ‘காக மனுகாமலெங்குங்காடுகட்டி’ (குற்றா குற, 23]. [காடு +கட்டு. காடு= எல்லை, அரண், பாதுகாப்பு, வேலி அமைப்பு] காடுகட்டு-தல் gāṭugaṭṭudal, 5 செ.கு.வி.(v.i.) செடிகளும் மரங்களும் வளர்ந்து அடர்ந்திருத்தல்: to over grow of Vegetation. ம. காடுகெட்டுக. [காடு கட்டு காடு எல்லை, அரண் பாதுகாப்பு வேலி அமைப்பு] |
காடுகரை | காடுகரை gāṭugarai, பெ.(n.) வயலும் அதனைச் சார்ந்த பகுதியும்; cultivable land and adjacent area, காடுகரையெல்லாஞ் சுற்றி வந்தேன், களைப்பாயிருக்கிறது (உவ);. [காடு + கரை] |
காடுகலை-த்தல் | காடுகலை-த்தல் gāṭugalaittal, 4 செ.கு.வி.(v.i) 1. வேட்டைக்காரர்கள் விலங்கு பறவைகளைக் கலைத்தெழுப்புதல்; to beat the bush for starting the game. 2. வேலைக்காரரை அச்சுறுத்தல்; to threaten subordinates or servants by calling them to a strict account. [காடு கலை.] |
காடுகாட்டு | காடுகாட்டு1 kāṭukāṭṭudal, 5 செ.குன்றாவி. [vt.] 1. ஏமாற்றுதல் (வின்);; to show the burning ghat, to deceive, disappoint. 2. கொல்லுதல் (யாழ்.அக);; to kill. [காடு + காட்டு] விளைநிலம் காட்டுவதாக அழைத்துச்சென்று விளைச்சலுக்குதவாத புதர்க்காடுகளைக் காட்டி ஏமாற்றுதல் பொருளிலும், இடுகாட்டைக் காட்டுதல் எனக் கொல்லுதல் பொருளிலும் புடைபெயர்ந்தது. காடுகாட்டு2 kāṭukāṭṭudal, 5 செ.கு.வி.(v.i) வெறிச்சென விடுதல் (யாழ்.அக.);; to be desolate. [காடு + காட்டு] |
காடுகாள் | காடுகாள் kāṭukāḷ, பெ.(n.) காடுகிழாள் பார்க்க; see _. கோயில் ஊர்எல்லையில் உள்ளது (நெல்லை);. “காடுபோக்கில் அரைமாவும், காடுகாள் வாரத்து அரைமாவும்”(தெ.கல்.தொ.19, கல்7); H. Gadakali [காடு +கிழாள்-காடுகிழாள்-→ காடுகாள் /தொகுத்தல் திரிபு);. காடுகிழாள் என்பது காடு காளென மருவிற்று. வரலாற்றுச் சிறப்பு மிக்க உச்சயினி மாநகரக எல்லையிலுள்ள மாகாளிகோயில் இன்றளவும் கடகாளி காமந்திரீஇ காடுகாள் மந்திரம் (கோயில்); என வழங்கி வருதல் குறிப்பிடத்தக்கது] |
காடுகி | காடுகி gāṭugi, பெ.(n.) சிற்றெழுத்தாணிப்பூண்டு; a small variety of style plant (சா. அக.);. [காடு + காடுகி.] |
காடுகிழவோள் | காடுகிழவோள் gāṭugiḻvōḷ, பெ.(n.) 1. காடுகிழாள் பார்க்க ; see _. “காடு கிழவோட் கரைத்திருந்த சாந்தை” (யாம்.வி.93);. 2. (பரணி); நாண்மீன் (திவா.);; the second star presided over by Durga. [காடு + கிழவோள்.] |
காடுகிழாள் | காடுகிழாள் gāṭugiḻāḷ, பெ.(n.) கொற்றவை (திருமுருகு. 256. உரை);;_., asgodess of the forest. மறுவ. காடுகிழவோள், காடுகாள். [காடு +(கிழவோள்); கிழாள்-காடுகிறாள்.] பாலை நிலத்தின் தெய்வமாகவும் ஊரெல்லைத் தெய்வமாகவும் வழிபடப்பட்டுவரும் கொற்றவை வழிபாடு இந்தியப் பெருநிலம் முழுவதிலும் பரவிய ஒன்றாகும். உதயணன் ஆண்ட உஞ்சை (உச்சயினி); மாநகரத்துக் காடுகிழாள் இன்றும் அம்மொழியில் கடகாள் எனப்படுதல் காண்க. நெல்லை மாவட்டத்துக் கொற்றவை கோயில்கள் காடுகாள் கோயில் என்றே வழங்கப்படுகின்றன. |
காடுகிழாள்வெயில் | காடுகிழாள்வெயில் gāṭugiḻāḷveyil, பெ.(n.) பொழுதுசாயும்போது தோன்றும் மஞ்சள்வெயில் (சிலப்.4:5,2-உரை);; refracted light at sunset. [காடு +கிழாள்+வெயில்.கொற்றவையை வழிபட்டால் வெம்மை தணியும் என்னும் நம்பிக்கையால் மாலை நேரத்து வெயில் காடுகிறாழ் வெயில் எனப் பெயர் பெற்றது] |
காடுகெடு-த்தல் | காடுகெடு-த்தல் gāḍugeḍuttal, 4 செ.கு.வி.(v.i.) காடழித்தல்; to clear the forest. “காடுகெடுத்து நாடாக்கி'(தொல். பாயி.உரை); மறுவ. காடழித்தல், காடுவெட்டுதல், காடுகொல்லுதல். [காடு + கெடு] |
காடுகெழுசெல்வி | காடுகெழுசெல்வி gāṭugeḻuselvi, பெ.(n.) கொற்றவை;_. as dwelling in the forest. “காடுகெழு செல்விக்குப் பரணிநாட் கூழுந் துணங்கையுங் கொடுத்து (தொல்பொருள்.461. உரை);. [காடு + கெழு + செல்வி] காடுகிழாள் பார்க்க; see _. |
காடுகொல்(லு)-தல் | காடுகொல்(லு)-தல் gāṭugolludal, 13 செ.கு.வி (v.i) காட்டை வெட்டியழித்தல்; to clear the forest. “காடுகொன்று நாடாக்கி” (பட்டினம்.283);. [காடு + கொல்] |
காடுகொள்(ளு)-தல் | காடுகொள்(ளு)-தல் gāṭugoḷḷudal, 16 செ.கு.வி. (v.i.) வேளாண் நிலமாக இருந்த பகுதி பயிரிடப் படாமையால் புல் பூண்டுகள் மரங்கள் முளைத்து காடாக மாறுதல்; covering arable land with jungle growth. [காடு + கொள்.] |
காடுகோள் | காடுகோள் kāṭuāḷ, பெ.(n.) வேளாண் நிலம் காடுபற்றுகை, காடாக மாறுகை; arable land co vered with jungle growth. “ஏரி உடைந்து காடுகோளாய்ப் பாழ்கிடந் தமையில்'(S.I.I.IV133-2 pg.9);. [காடுகொள் → காடுகோள்.ஒ.நோ. கடல்கோள்] |
காடுதரிசு | காடுதரிசு kāṭudarisu, பெ.(n.) செடிகள் முளைத் துத் தரிசாகக் கிடக்கும் நிலம்; waste land with bushy growth. “நஞ்சை புஞ்சை, நத்தம், செந்தலைக்கை, கரைகாடு, காடுதரிசு மாவடை, மரவாடை, பாசிவிலை, ஆயந்தற்கு” (SI.V410-10 pg. 137);. [காடு + தரிசு] |
காடுபடு-தல் | காடுபடு-தல் kāḍubaḍudal, 20 செ.கு.வி. (v.i) 1. நிரம்புதல்; to abount, as wealth. “ஐசுவரியம் அவனுக்குக் காடுபடும்படியிறே அவன் பார்த்தது” (ஈடு59.5);. 2. வீணாதல்; to go waste. ‘இப்பரப் பெல்லாம். காடுபட்டுக் கிடக்குமோ'(ஈடு1.1.1);. [காடு +படு. காடு = செறிவு, அடர்த்திமிகுதி] |
காடுபடுபொருள் | காடுபடுபொருள் kāḍubaḍuboruḷ, பெ.(n.) காட்டில் கிடைக்கும் அரக்கு இறால் தேன், மயிற்பீலி, நாவி போன்றவை; forest produce, as arakku, _. மறுவ. காடுபாடுதிரவியம் [காடு +படு+ பொருள்] |
காடுபடுவளன் | காடுபடுவளன் kāṭupaṭuvaḷaṉ, பெ.(n.) அரக்கு, தினை, தேன், கருந்தினை, நாவி, மயிற்பீலி முதலியன; forest products. [காடு+படு+வளம்] |
காடுபட்டி | காடுபட்டி kāṭubaṭṭi, பெ.(n.) காடுவெட்டி2 பார்க்க; see _. “காடுபட்டிகள் நந்திப் போத்தரையர்” (S.1.1. III, 124-3Pg.261);. [காடு + (வெட்டி); பட்டி] |
காடுபற்று-தல் | காடுபற்று-தல் kāṭubaṟṟudal, 5 செ.கு.வி.(v.i) காடாக மாறுதல்; to become forest. [காடு + பற்று] |
காடுபலியூட்டு-தல் | காடுபலியூட்டு-தல் kāṭubaliyūṭṭudal, 5.செ.கு.வி. (v.i) வேடர் குறவர் முதலியோர் காட்டில் உள்ள தெய்வங்களுக்குப் பலியிடுதல்; to sacrifice cock, etc., to the forest deities before hunting to ensure a good game. “காட்டிலுறை தெய்வங்கள் விரும்பியுண்ணக் காடுபலியூட் டென்றான். கவலை யில்லான்” (பெரியபு கண்ணப்ப.50); [காடு + பலி+ ஊட்டு] |
காடுபார்த்தகொம்பு | காடுபார்த்தகொம்பு gāṭupārttagombu, பெ.(n.) மாடுகளின் குற்ற வகையில் ஒன்று (பெரியமாட்.16);: a defect in cattle. [காடு + பார்த்த + கொம்பு] |
காடுபிறாண்டி | காடுபிறாண்டி kāṭubiṟāṇṭi, பெ.(n.) காடுவாரி (யாழ்.அக.);; garden rake. [காடு + பிறாண்டி] |
காடுமறை-தல் | காடுமறை-தல் kāṭumaṟaidal, 4 செ.கு.வி.(v.i.) இறத்தல்; to die. கொண்ட கணவரும் போய்க் காடு மறைந்தார்(உ.வ.);.. [காடு + மறை] |
காடுமேய்-தல் | காடுமேய்-தல் kāṭumēytal, 2 செ.கு.வி. (v.i) வீணாய்த் திரிதல் (இ.வ.);; to wander uselessly, aimlessly. [காடு + மேய்] |
காடுறைநிலை | காடுறைநிலை kāṭuṟainilai, பெ.(n.) வாழ்க்கை யின் மூன்றாவது நிலை (வானப்பிரத்தம்); [சுக்கிர, நீதி.219]; the third stage of life, “living in the forest”. [காடு +உறை + நிலை] |
காடுவசாதி | காடுவசாதி kāṭuvacāti, பெ.(n.) காடுகளில் வாழக்கூடிய ஒருவகைக் குலம்; one of the caste who living in forest (செ.அக.);. [காடு+வாழ்+சாதி] |
காடுவசாதியாய்த்திரி-தல் | காடுவசாதியாய்த்திரி-தல் kāṭuvacādiyāyddiridal, 3 செ.கு.வி. (v.i) மலைவாழ்நர் கோலத்தோடு திரிதல்; to be slovenly, negligent of one’s dress. 2. யாருமற்ற ஏதிலியாய்த்திரிதல்; to bevagrant, as a neglected orphan. [காடுவாழ்சாதி →காடுவசாதி + ஆய் + திரி (கொ.வ.);.] |
காடுவாரி | காடுவாரி kāṭuvāri, பெ.(n.) 1. செத்தைவாருங் கருவி; garden rake. 2. கண்ட பொருளெல்லாஞ் சேர்ப்பவன்; one who scrapes up all he can. 3. பிழைப்புக்கென்று எத்தொழிலையுஞ் செய்பவன்; he who resorts to any kind of profession however low to maintain himself. [காடு + வாரி] |
காடுவாழ்சாதி | காடுவாழ்சாதி kāṭuvāḻcāti, பெ.(n. ) காடு வாழ்நர் பார்க்க: see _. “காடுவாழ் சாதியு மாகப்பெற்றான்”(திவ் நாய்ச்சி.12.8.);. Skt. jati → த.சாதி. [காடு + வாழ் + சாதி] |
காடுவாழ்த்து | காடுவாழ்த்து2 kāṭuvāḻttu, பெ.(n.) காட்டுத் தெய்வங்களை வேடர்கள் வாழ்த்துதல்; praising the forest dwelling gods, as the hunters. [காடு + வாழ்த்து] C: Pv15 KAA2-3. PM5 [C] |
காடுவாழ்நர் | காடுவாழ்நர் kāṭuvāḻnar, பெ.(n.) காட்டில் வாழும் பழங்குடிமக்கள்; savage tribe, as forest dwellers. [காடு + வாழ்நர்] |
காடுவெட்டி | காடுவெட்டி kāṭuveṭṭi, பெ.(n.) சிறியமண் வெட்டி (யாழ்.அக.);; a kind of small hoe. [காடு + வெட்டி] காடுவெட்டி kāṭuveṭṭi, பெ.(n.) பல்லவ அரசர் களுக்குரிய சிறப்புப்பெயர்களுள் ஒன்று; a title of Pallava king. “வக்ரிமாதித்த வாணதாயின் விண்ணயந்தாலும் காடுவெட்டித் தமிழ்பேரயன் ஆணத்தியாலும் (தெ.கல்.தொ.);. ம. காடுவெட்டி [காடு + வெட்டி] |
காடுவெட்டி’ | அஅன்ன ஆவன்னா aaṉṉaāvaṉṉā, பெ. (n.) அரிவரி யென்னும் தமிழ் வண்ணமாலை (குறுங்கணக்கும் நெடுங்கணக்கும்);; Tamil Alphabet. எழுத்துகளைக் கல்லா மக்கள், சிறப்பாகச் சிறுவர் சிறுமியர், எளிதாக ஒலித்துக் கற்கும் பொருட்டு, பண்டைத் தொடக்கப்பள்ளி யாசிரியர் உயிரும் உயிர்மெய்யுமாகிய இருவகைக் குறிலுக்கும்’அன்ன’ச் சாரியையும், இருவகை நெடிலுக்கும் அன்னா’ச் சாரியையும் ஏற்படுத்தினர்; ‘அஆ’ என்னும் ஈரெழுத்தும் தமிழ் வண்ணமாலையின் முதலெழுத்துகளாதலின், அவை முதற்குறிப்பாகி, அம் முதற்குறிப்பே’அஅன்ன ஆவன்னா’ என்று வண்ணமாலைப் பெயராயிற்று. இது ‘alpha’, ‘beta’ என்னும் கிரேக்க இரு முதலெழுத்துகளும் சேர்ந்து”alphabetum’ என்று இலத்தீனிலும், ‘alphabet’ என்று ஆங்கிலத்திலும், வண்ணமாலைப் பெயராக வழங்குவது போன்றது; அ, இ, க, கி என்று ஒரு மாத்திரை யொலிக்குங்குறிலெழுத்துகளை விட்டொலிப்பது, சிறுபிள்ளைகட்குச் சற்று வருத்தமுற மூச்சு வாங்குவதால்,’அஅன்ன’ என்பது”ஆனா” என்றும் இஅன்ன என்பது’ஈனா’ என்றும், மாணாக்க நிலையிலும் பின்னும் ஒலிக்கப்பட்டுவந்தன. இவ்வொலிப்புமுறை குறில்களின் உண்மையான ஒலியளவை உடனே தெரிந்துகொள்ளத் தடையாயிருந்தமையின், இந்நூற்றாண்டுத் தொடக்கத்தில் அரசியற் கல்வித்துறையறிஞர், சாரியையின்றி ஒலிநூன் முறைப்படி அ, ஆ, இ, ஈ,… என்று ஒலித்துப் பயிலும் முறையைப் புகுத்திவிட்டனர். அதனால், இன்று ‘அஆ’ என்பது வண்ணமாலைப் பெயராக வழங்கி வருகின்றது. இது புணர்ச்சியில்’அவ்வா’ என்றாகும்; |
காடுவெட்டியசோழன் | காடுவெட்டியசோழன் kāṭuveṭṭiyacōḻṉ, பெ.(n.) காஞ்சி நாடாண்ட சோழர்களில் ஒருவன்; a king who ruled kāfji [காடு+வெட்டிய+சோழன்.] குலபூடண பாண்டியன் மதுரையை ஆண்ட காலத்தில் இவன் மதுரைக்கு வந்து வணங்க எண்ணினான். பாண்டியனுக்கு அஞ்சி வராமல் இருந்த சோழனை, சிவன் சித்தர் உரு கொண்டு வழித்துணையாய் வந்து மதுரையை வணங்க உதவினார். கோவிலில் இருந்த மீன் முத்திரையை, புலி முத்திரையாக சிவன் மாற்றினார். இதனைப் பாண்டியனுக்கு உணர்த்தி, சோழனுடன் நட்பு கொள்ளச் செய்தார் (அபி.சிந்);. |
காடெழுகரம்பு | காடெழுகரம்பு kāṭeḻukarampu, பெ.(n.) செடிகொடிகள் மண்டிக்காடாக எழுந்து நிற்கும் சமனில்லாத நிலப்பரப்பு place tract of land, “ஏரிக்கு மேற்கு காடெழு கரம்பு” (தெ.கல்.தொ.17 கல்.304);, (கல்.அக);. [காடு+எழுகரம்பு] காடெழுகரம்பு gāṭeḻugarambu, பெ.(n.) செடி கொடிகள் மண்டிக் காடாக எழுந்துநிற்கும் சமனில்லாத நிலப்பரப்பு ;பn cultivable land, “ஏரிக்கு மேற்கு காடெழு கரம்பு” (தெ.கல் தொ.17,கல்.304);. [காடு + எழு + கரம்பு] |
காடேறு-தல் | காடேறு-தல் kāṭēṟudal, 5.செ.கு.வி (v.i) 1. காட்டிற்கு ஓடுதல்; to flee away to aforest “காடேற் நாடேறித் திரிவார் கண்டீர்” (தமிழ்நா. 235);. 2. சாகுந்தறு வாயில் நோய்த்தெளிவு உண்டாதல்; to seemingly disappear, as a disease, just before the death of a person who suffered from it. க.காடுவாய் [காடு + ஏறு] |
காடை | காடை1 kāṭai, பெ.(n.) தவிட்டுநிற இறகுகளை யுடைய குறும்பூழ்ப்பறவை (திவா.); rain quail. ம. காட; க.,து. காடெ Skt. casa. [காடு →காடை (காட்டில் அண்டி வாழ்வது);.]. வகைகள் : 1. பெரியகாடை 2. கருங்காடை 3. நீல காடை 4. மலைக்காடை 5, வண்ணக்காடை 6. சாலைக் காட்டுக் காட்டுள் காடை 7. குறுஞ்சான் காடை 8. குறுங்காடை காடை2 kāṭai, பெ.(n.) கொங்கு வேளாளர் குடிகளுள் ஒன்று; a clan of korguvelaar. கொங்கு வேளாளர் குடிகளுள் பல பறவையின் பெயரில் அமைந்துள்ளன. ஆந்தை குலம், காடை குலம் போன்றன. காடை குலம், சாகாடை, பனங்காடைஎன இருவகைப்படும். “எழுமாத்துார் இருந்து வாழும் சாகாடைச் சிற்றன் அவன் இதில் பட்டான்” (செங்கம். நடுகற்கள்);. |
காடைக்கண்ணி | காடைக்கண்ணி kāṭaikkaṇṇi, பெ.(n.) காடை யின் கண்போன்ற தினைவகை (பதார்த்த.1400);; common millet, having the colour of quail’s eyes. மறுவ. கவந்தலைக்கண்ணியரிசி [காடை + கண்ணி] C:FiNALAKAA2-3.PM6 [C] |
காடைக்கறுப்பன் | காடைக்கறுப்பன் kāṭaikkaṟuppaṉ, பெ.(n.) நெல்வகை ; a kind of paddy, “பொன்னாயகன் சொற்காடைக் கறுப்பன்” (பறாளை, பள்ளு);. [காடை + கறுப்பன்] |
காடைக்கழுத்தன் | காடைக்கழுத்தன் kāṭaikkaḻuttaṉ, பெ.(n.) ஐந்து திங்களில் விளையக்கூடிய நெல்வகை (வின்.);; quailneck paddy maturing in five months, raised in the southern Tamil districts (W);. ம. காடகழுத்தன் (ஒருவகை நெல்); [காடை + கழுத்தன். காடையின் கழுத்தின் நிறமுள்ள கதிர்களையுடைய நீளமான நெல்வகை] |
காடைக்கழுத்தி | காடைக்கழுத்தி kāṭaikkaḻutti, பெ.(n.)முன்னைமரம் ; Indian head-ache tree. [காடை + கழுத்தி] |
காடைக்கொக்கு | காடைக்கொக்கு kāṭaikkokku, பெ.(n.) காடை இனத்தைச் சார்ந்த ஒருவகைப் பறவை; the green sand piper. ம. காடக்கொக்கு காடக்கொற்றி. [காடை + கொக்கு] |
காடைக்கொம்பன் | காடைக்கொம்பன் kāṭaikkombaṉ, பெ.(n.) நெல்வகை (நெல்லை);; a kind of paddy. [காடை + கொம்பன்] |
காடைச்சம்பா | காடைச்சம்பா kāṭaiccambā, பெ.(n.) சம்பா நெல்வகை (பதார்த்த.818);; a kind of camba paddy, [காடை + சம்பா = காடைச்சம்பா] |
காடைச்சாறு | காடைச்சாறு kāṭaiccāṟu, பெ.(n.) காடை இறைச்சியினின்று இறங்கிய சாறு essence of the flesh of quail boiled with various other ingredients. [காடை+சாறு] இதனால் இளைத்த உடல் பருக்கும். படுக்கையாய்க் கிடப்பவர்கள் தேறுவர் (சா.அக.);. |
காடைத்தனம் | காடைத்தனம் kāṭaittaṉam, பெ.(n.) முரட்டுத்தனம் (ரெளடித்தனம்); (இலங்.);; rowdyism. அவர்களின் காடைத்தனத்தால் பல உயிர்கள் இரை(பலியாயின(க்ரியா);. [காடு – காடை+தனம்] காடைத்தனம் kāṭaittaṉam, பெ.(n.) முரட்டுக் குணம் ; rowdyism. அவன் செய்யும் காடைத்தனத் தால் பல உயிர்கள் அழிந்தன (இலங்.வழ);. [கடு →காடு →காடை + தனம்] |
காடைப்புடம் | காடைப்புடம் kāḍaippuḍam, பெ.(n.) காடை யளவாக ஒரே எருவிட்டு எரிக்கும் மருந்துப்புடம் (மூ.அ.); [P] [P] a measure determining the strength of fire in the calcination or reduction of metals with a single dried dung cake. [காடை + புடம்] |
காடைமீன் | காடைமீன் kāṭaimīṉ, பெ.(n.) வெண்மையான சிறு கடல்மீன்; a small whitish or silvery sea-fish, (சா.அக);. [காடை + மீன்.] |
காடையன். | காடையன். kāṭaiyaṉ, பெ.(n.) வன்முறையைக் கையாள்பவன்; gangster, rowdy. [கடு →காடு →காடை →காடையன்.] |
காடையிறகு | காடையிறகு gāṭaiyiṟagu, பெ.(n.) நாடகம் நடிப்போர் தலையிலணியும் பலவண்ண இறகு (வின்.);; crest made of variegated feathers worn by stage players (W);. [காடை + இறகு] |
காடோடி | காடோடி kāṭōṭi, பெ.(n.) 1. காட்டில் திரிபவன்; one who roams about in forest, savage, rustic. 2. வீட்டில் தங்காமல் வெளியில் திரிபவன்; an ide wanderer, vagrant. ம. காடோடி [காடு + ஒடி] காண்1 (ணு);-தல் _ 16 செ.குன்றாவி.(v.t.); 1 பார்த்தல்; to see, perceive, view, “காணிற் குடிப்பழியாம்’ (நாலடி,84);. 2. இறைவன் பெரியமனிதர், முழுநிலவு போன்றவற்றை காணுதல்; to gain sight of, as a deity, a great person, the moon. திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்” (திவ்இயற்.31);. 3.கண்டறிதல்; to discover find out. “காணாதாற் காட்டுவான் தான்காணான்”(குறள்,849);. 4 உண்டாக்குதல்; to make, create. “முனைவன் கண்டது” (தொல், பொருள்.மரபு.95);. 5. பொறியாலறிதல்; to perceive by the sensse. “அவன் பேச்சைக் கண்டு” (திருவாலவா.16:28);. 6. ஆராய்தல்; to consider, investigate. ‘அறம் பொருள் கண்டார் கணில்” (குறள்:14);. 7. தானே நுகர்ந்து அறிதல்; to experience. 8.மதித்தல்; to regard, ‘தானெனக் கண்டும்” (கல்லா.51:7);. 9. வணங்குதல் (பிங்.);; to worship, venerate, reverence. 10, புறங்காணுதல்; to put to flight, drive away, asseeing the back of enemies. ‘நிலவுக் காண்பது போல’ (கலித்.119.4);. 11. பெறுதல்; to attain, abtain, get. “முற்று மிடங்கண்டபின்”(குறள்,491]. 12. சொல்லுதல்; totel say. “யாவருங் கண்ட நெறி” (ஆசாரக்17);. 13. ஒத்திருத்தல்; to look like, resemble. “மழைகாணு மணிநிறத்தோய்”(கம்பரா. அயோத் குகப்.26);. 14. பொருந்துதல்; to be fit. “மற்கானுந்திரடிண்டோள்” (கம்பரா. குக26);. [கண்(ணு);-தல் →காண்ணு-தல். கண்(ணு);தல் = பொருந்துதல்] |
காட்சி | காட்சி kāṭci, பெ.(n.) 1.கண்ணுறல்; sight, view. “தரும மூர்த்தியைக் காட்சியே யினிக்கடன்” (கம்பரா. யுத்த. விபீடண.18);. 2.தோற்றம் ; form appearance. “கையென லாயிற்றன்றே… மணியின் காட்சி” (கம்பரா. கந்தர. திருவடி.47);. 3. தோன்றி யருளல்; vision of a deity, sight of a great personage audience. “எதிரேநின்று காட்சி தந்தருளி” (பெரியபு மெய்ப்பொ.23);. 4. கண்காட்சி; exhibition. 5.புதுமையான நிகழ்ச்சி; attractive object of sight. அஃது ஒரு கண்கொள்ளாக் காட்சி யாயிருந்தது. (உ.வ);. 6. நேர்த் தோற்றம்; perception. “மருடீர்ந்த மருளில் காட்சி யைவகை யாகும்” (மணிமே.27:14);. 7. அறிவு; knowledge. “மாசறு காட்சி” (குறள், 199);. 8. தலைவன் தலைவியை முதன்முதற் காணுதலைக் கூறும் ஒரு கைக்கிளைத் துறை (பு.வெ. 11:ஆண் பால்.);; theme describing the first sight of a maiden by a man who falls in love with her. 9.வீரருக்கோ, வீரரின் கற்பில் சிறந்த மனைவியருக்கோ எடுத்த நடுகல்லை ஆராய்ந்து காணும் புறத்துறை (தொல்.பொருள்.60; உரை:சிலப்.25 அரும்);; 10. நடுகல்லை வீரர் வணங்குவதைக் கூறும் புறத்துறை (தொல்.பொருள். 60, உரை);; 11.ஒரு பொருளைக் கண்ட இடம்; place, site, where something was once seen or found. “கண்டு நின்று வந்த காட்சியு மிதுவே” (கல்லா.6:28);. 12.அழகு; beauty. “அணங்கு மெய்ந்நின்ற வமைவரு காட்சி” (பொருந. 20);. 13 தன்மை; nature. “கற்குழித்து நெறிசெயுங் காட்சியே” (சேதுபு. அவை. 4);. 14. திருவடிப்பேறு “கணக்கறிந் தார்க்கன்றி கைகூடா காட்சி” (திருமந்.303);. 15. வேடிக்கை; joke. கண்டதே காட்சி (பழ.);. 16. வியப்பு; wonder. “காட்சிமேய வக்கழதிற் கதலிகை (கந்தபு. திருநகர.23);. 17. தேற்றம்; precisim. ஆடும்பவுரியவன் பொய்க்காட்சியாகாது போலேயறி (ஒழிவி. பொதுகரி. 34);. [காண்+சி – காட்சி ‘சி’ பண்புப்பெயரீறு.] வகைகள்: 1. ஐயக் காட்சி. 2. திரிபுக் காட்சி. 3. விகற்பக் காட்சி. 4.பொறிவாயில் காட்சி. 5. மனக் காட்சி. 6. நுகர்வுகாட்சி. 7.ஓகக் காட்சி(சா. அக.);. |
காட்சிகொடு-த்தல் | காட்சிகொடு-த்தல் gāḍcigoḍuttal, 5 செ.கு.வி.(v.i.) தோற்றமளித்தல்; to appear or manifest oneself, as God to worshippers, to give audience, as a king to his subjects. “பேதையுந் தாமுமாங், காட்சிமுன் கொடுத்தார்” (பெரியபு. அமர்நீதி.46);. [காட்சி + கொடு] |
காட்சிப்பிரமாணம் | காட்சிப்பிரமாணம் kāṭcippiramāṇam, பெ.(n.) ஆறுவகை அளவைகளுள் ஒன்று: perception, means of perception (செ.அக.);. [காட்சி+Skt, பிரமாணம்] |
காட்சிப்பொருள் | காட்சிப்பொருள் kāṭcipporuḷ, பெ.(n.) கட்புலனாற் காணும் பொருள் (தொல். பொருள்.1. உரை.);; thing seen, object of sight opp. to karuttu-p-porul. [காட்சி + பொருள்] |
காட்சிமறைத்தல் | காட்சிமறைத்தல் kāṭcimaṟaittal, பெ.(n.) தோற்ற மறைப்பு (தரிசனாவரணீயம்); (சூடா.);; [காட்சி + மறைத்தல்.] |
காட்சியணி | காட்சியணி kāṭciyaṇi, பெ.(n.) அணியிலக் கணங்களுள் ஒன்று (அணியி:19.);; [காட்சி + அணி] ஒரு பொருளின் செயல் முதலியன மற்றோர் பொருளுக்கு நன்மையோ தீமையோ புலப்பட நிகழ்வதாகக் கூறும் அணிவகை (தண்டி.88);. |
காட்சியர் | காட்சியர் kāṭciyar, பெ.(n.) காட்சியவர் பார்க்க; see _. [காட்சியவர் → காட்சியர்] |
காட்சியறிவு | காட்சியறிவு kāṭciyaṟivu, பெ.(n.) தெளிவான அறிவு; perceptual cognition. [காட்சி+அறிவு] |
காட்சியளவை | காட்சியளவை kāṭciyaḷavai, பெ.(n.) எதிரும் தோற்றம் காண்டலளவை (சி.போ.சிற்.1:1, ப.15);; perception, means of perception. [காட்சி+அளவை. இதனை வடமொழியாளர் காட்சிப் பிரமாணம் எணத்திரித்துக்கொண்டனர்.] |
காட்சியளி-த்தல் | காட்சியளி-த்தல் kāṭciyaḷittal, 4 செ.கு.வி. (v.i.) 1 ஒருவர் அல்லது ஒர் இடம் தொடர்பாக ஏதேனும் ஒரு தோற்றம் தருதல்; appear, present oneself in a particular manner. அந்த மருத்துவர் எப்போதும் சிரித்த முகத்துடன் காட்சியளிப்பார். திருவிழாக் கோலத்தில் நகரமே ஒளிமயமாகக் காட்சியளித்தது. 2. இறைவன், பெரியோர் காட்சி தருதல்; appear of God, devotees, holy person. [காட்சி+அளி-த்தல்.] |
காட்சியவர் | காட்சியவர் kāṭciyavar, பெ.(n.) அறிஞர்; the wise. “புன்மையில் காட்சியவர்”குறள்.174). [காட்சி + அவர். காட்சி = அறிவு) |
காட்சியா-தல் | காட்சியா-தல் kāṭciyātal, 6 செ.கு.வி.(v.i.) தூக்கத்தில் தோன்றல், கனவில் தோன்றல்; appearance in a vision (சா.அக.);. [காட்சி+ஆ-தல்.] |
காட்சியாள் | காட்சியாள் kāṭciyāḷ, பெ.(n.) வழக்கு நேர் கேட்கும்போதுநேரிற் கண்டவராக நிகழ்ந்தது கூற முன் வருபவர்(சாட்சி);; witness. மறுவ. சான்றாளர், கரி, நேர்காட்சி, காட்சி. [காண்-காட்சி+ஆள்] காட்சி எனும் தமிழ்ச்சொல், வடமொழியில் சாட்சி எனத் திரிந்தது. |
காட்சியுணர்வு | காட்சியுணர்வு kāṭciyuṇarvu, பெ.(n.) காட்சி யறிவு பார்க்க; see _. [காட்சி+உணர்வு] |
காட்சியெருதுக்காசு | காட்சியெருதுக்காசு kāṭciyerudukkācu, பெ.(n.) ஒரு பழைய வரி (S.I.I.II.,425);; an ancient tax probably on bulls kept for sale. “காட்சி எருது காசும் ஊர்க்கழஞ்சுக்காசும் உட்பட இவ்வூர் இறைகட்டின காணிக்கடன்”(S.l.l.ii.92.- பக்425);. [காட்சி +எருது+காசு.] |
காட்சியோகு | காட்சியோகு kāṭciyōku, பெ.(n.) மெய்யுணர்வு பெறுதற்கான நிலை; realisation of true insight thought and conduct. “கட்படு மிமைத் துணை காட்சி யோகினை நுட்பமனதாகவே நுதலிக் காட்டினோன்”(கந்தபு: மோனநீங்.33);. [காட்சி + ஒகு.] |
காட்சிவரி | காட்சிவரி1 kāṭcivari, பெ.(n.) தன்வருத்தத்தைப் பலருங் காணும்படி நடிக்குங் கூத்து (சிலப்.8: 106 உரை);; [காட்சி + வரி] காட்சிவரி2 kāṭcivari, பெ.(n.) திரைப்படக் காட்சிகளுக்காக வாங்கப்படும் வரி; entertainment tax. [காட்சி+வரி. வரி = வாங்கப்படும் வரிப்பணம்) |
காட்சிவாதி | காட்சிவாதி kāṭcivāti, பெ.(n.) உலகியற் பொருண்மையன்றி வேறு பொருண்மையில்லை யெனக் கூறும் உலகியலாளர் (சி.போ.பர.அவை.ப. 40);; materialist, who holds that perception is the only means of acquiring knowledge. [காட்சி + வாதி. வாளுதல் = பேசுதல். வாள் → வாளி → வாதி(பேசுபவன்);.] கண்ணால் கண்டு தெளிவதுதான் ‘அறிவு’ என்னும் கொள்கையோன் (சா.அக);. |
காட்டகத்தமிர்து | காட்டகத்தமிர்து gāṭṭagattamirtu, பெ.(n.). காட்டகத்தமிழ்து பார்க்க; see _. “காட்டகத்தமிழ்துங் காண்வரக் குவவி” (சீவக.2110);. [காடு+அகத்து = காட்டகத்து + அமிழ்து] |
காட்டகத்தமிழ்து | காட்டகத்தமிழ்து gāṭṭagattamiḻtu, பெ.(n.) மக்கட்குப் பயன்படும் காட்டுப்பொருள்கள்; forest produce. [காடு + அகத்து – காட்டகத்து+அமிழ்து).] அரக்கு, உலண்டு, தேன், மயிற்பீலி, நாவி போன்றவை. |
காட்டகத்தி | காட்டகத்தி gāṭṭagatti, பெ.(n.) வீழிச்செடிப்புதர் (மலை.);; a straggling shrub. [காடு + அகத்தி – காட்டகத்தி] |
காட்டகம் | காட்டகம் gāṭṭagam, பெ.(n.) காழகில்; aloe wood. (சா.அக.);. [காடு → அகம் – காட்டகம்) |
காட்டகி | காட்டகி gāṭṭagi, பெ.(n.) காட்டுக்கொன்றை; wild kondra (சா.அக.);. [காட்டகம் → காட்டகி] |
காட்டகுட்டம் | காட்டகுட்டம் kāṭṭakuṭṭam, பெ.(n.) ஒரு பறவை; an unidentified bird (சா.அக.);. |
காட்டசை | காட்டசை kāṭṭasai, பெ.(n.) காட்டுச்சீரகம்; purple feabane. “நீர்முத்தங் காட்டசை சத்தி யெல்லெண்” (தைலவ.தைல.69);. [காடு + அசை-காட்டசை. அசை = சீரகம்] |
காட்டஞ்சம் | காட்டஞ்சம் kāṭṭañcam, பெ.(n.) செவ்விறகு red fuel or firewood. It is said to be used in alchemy, because of its fumes having extraordinary virtues (சா.அக.);. |
காட்டட்டம் | காட்டட்டம் kāṭṭaṭṭam, பெ.(n.) வெண்பாதிரி; white flowered fragrant trumpet tree (சா.அக.);. [காட்டு + அட்டம்] |
காட்டணம் | காட்டணம் kāṭṭaṇam, பெ.(n.) பெருங்குமிழ் (மலை.); coomb teak, [காடு + ஆணம். காட்டாணம் → காட்டணம்) |
காட்டதாதி | காட்டதாதி kāṭṭatāti, பெ.(n.) படர் முன்னை அல்லது கொடிமுன்னை; spreading or creeper premna (சா.அக.);. [காடு + அதைதி-காட்டதைதி → காட்டதாதி] |
காட்டதிமதுரம் | காட்டதிமதுரம் kāṭṭadimaduram, பெ.(n.) காட்டில் விளையும் அதிமதுரம் என்னும் வேர்; root of wild lndian liquorice as opposed to. நாட்டு அதிமதுரம் (சா.அக.);. [காடு →காட்டு+அதிமதுரம்] |
காட்டத்தி | காட்டத்தி kāṭṭatti, பெ.(n.) 1. பேயத்தி (மலை.);; devil fig. 2 மரவகை; gaub. [காடு + அத்தி – காட்டத்தி] |
காட்டப்பெறு-தல் | காட்டப்பெறு-தல் kāṭṭappeṟudal, 18 செ.குன்றாவி. (v.t.) உரிமை கொண்டாடுதல்; to lay claim. “இந்நிலத்துக்கு வேலிக்காசும் நீர்விலைக் காகம் சில்லிறை சோறு மாட்டுள்ளிட்டு. எப்பேர்ப்பட்டதுங் காட்டப் பெறாதோமாகவும் “(S.I.I.III,68-5);. [காட்டு →காட்ட(வி.எ.); + பெறு.] |
காட்டமிர்தம் | காட்டமிர்தம் kāṭṭamirtam, பெ.(n.) தில்லைப்பால்; tiger”s milk – Excoecaria agallocha. [காட்டு+அமிர்தம்] இதைக் காட்டிலுள்ள சித்தர்கள் அருந்து வதால் இப்பெயர் பெற்றது. (சா.அக.);. |
காட்டமிர்து | காட்டமிர்து kāṭṭamirtu, பெ.(n.) காட்டில் விளையும் பொருட்கள்; forest produce. [காட்டு+அமிர்து.] அவையாவன : அரக்கு, கருந்தினை, தேன், நாவி, மயிற்பீலி, தேன்கூடு முதலியன (சா.அக.);. |
காட்டம் | காட்டம்1 kāṭṭam, பெ.(n.) 1. விறகு (திவா.);; fire wood. 2. காய்ந்த குச்சி; small stick, as of pipal tree, used in ritual. “தண்டே குண்டிகை வெண்குடை காட்டம்”(சிலப்.23:77);. த.கட்டை Skt._. → த.காட்டம் (கொ.வ.);. காட்டம்2 kāṭṭam, பெ.(n.) 1. உறைப்பு (இ.வ.);. pungency, anything hot to the taste. 2. புளிப்பு; Sourness. 3.எரிநோவு; burning sensation. சாராயம் மிகக் காட்டமாக இருக்கிறது (உ.வ);. க., தெ. காட்டு [கடு →கடுப்பு →காட்டி →காட்டு →காட்டம். கடுப்பு உறைப்பு.] காட்டம்3 kāṭṭam, பெ.(n.) வெண்கலம் (வின்.);; bell-metal. [த. கண்டி → தெ.கண்ட்டெ காட்டெ→ த.காட்டம். வெண்கலமணி செய்யப்பட்ட மாழையும் வெண்கலமணியின் பெயர் பெற்றது.] காட்டம்4 kāṭṭam, பெ.(n.) பதினைந்து மணித்துளி கொண்டகாலம் (கால்மணிநேரம்);(விணி.291);; quarter hour. [காட்டை →காட்டம். காட்டை பார்க்க; see _.] காட்டம்5 kāṭṭam, பெ.(n.) 1. சினம்; anger. என்மீது கட்டமாக இருக்கிறார் (உ.வ.);. 2. மிகுதி (அக.நி.);; abundance. தெ. காடு [காட்டம் →காட்டம்5.] |
காட்டரண் | காட்டரண் kāṭṭaraṇ, பெ.(n.) நால்வகை அரண்களுள் காடாகிய அரண்(திவா.);; forest, as a source of defence, one of four kinds of aran. [காடு + அரண்-காட்டரண்.] |
காட்டரலி | காட்டரலி kāṭṭarali, பெ.(n.); jungle mango – Gerbera odollam (சா.அக.). |
காட்டரளி | காட்டரளி1 kāṭṭaraḷi, பெ.(n.) காட்டு அரளி மரம்; wild nerium or jungle mango – Cerebra odallam alias C. lactaria (சா.அக.);. [காட்டு+அரளி] காட்டரளி2 kāṭṭaraḷi, பெ.(n.) 1. காட்டரளி, wild gannair; willow leaved water croton – Homonoia riparia. [காட்டு + அலகு] |
காட்டலகு | காட்டலகு kāṭṭalaku, பெ.(n.) காட்டு அலகு மரம்; an unidentified tree; but believed to be referring to kättaras, which see (சா.அக.);. [காட்டு+அரளி] |
காட்டலகுக்குழல் | காட்டலகுக்குழல் kāṭṭalakukkuḻl, பெ.(n.) மருந்தை வைத்து அவிப்பதற்காகப் பயன்படுத்தும் காட்டலகு மரத்தினாற் செய்த குழாய்; a wooden tube made out of the alagu tree used for roasting medicine (சா.அக.);. [காட்டு+அலகு+குழல்] |
காட்டலரி | காட்டலரி kāṭṭalari, பெ.(n.) 1. அலரிவகை (L.);, willow-leaved water croton. 2. நச்சுப்பாலுள்ள ஒரு மரம்; jungle mango. 3.பாலைவகை (L.);; mango-like cerbera. [காடு + அலரி-காட்டலரி.] |
காட்டலாகிரி | காட்டலாகிரி kāṭṭalākiri, பெ.(n.) கொடி மாதுளை; creeping emanaur- Punicum genus (சா.அக.);. |
காட்டழகியவாணன் | காட்டழகியவாணன் kāṭṭaḻkiyavāṇaṉ, பெ.(n.) ஒருவகை நெல் (இ.வ.);; a kind of coarse paddy. [காடு + அழகு + வாணன்] |
காட்டழல் | காட்டழல் kāṭṭaḻl, பெ.(n.) காட்டுத்தீ (சூடா.);; forest confiagration. [காடு + அழல். அழல் = தீ; நெருப்பு.] |
காட்டவரை | காட்டவரை kāṭṭavarai, பெ.(n.) காட்டுமொச்சை (மூ.அ.);; country-bean. [காடு + அவரை-காட்டவரை] |
காட்டவீணை | காட்டவீணை kāṭṭavīṇai, பெ.(n.) மரத்தால் செய்த வீணை;_., made of wood. [காடு + விணை] |
காட்டவுரி | காட்டவுரி kāṭṭavuri, பெ.(n.) 1. அவுரி வகை; silveryleaved indigo. 2. புனல் முருங்கை; three-leaved indigo. [காடு + அவுரி-காட்டவுரி.] |
காட்டா | காட்டா kāṭṭā, பெ.(n.) காட்டான்2 பார்க்க; see _. [காடு + ஆ = ஆன் ஆ = மாடு பெற்றம்] |
காட்டாகு | காட்டாகு kāṭṭāku, பெ.(n.) கொடிமுல்லை; eared jasmine (சா. அக.);. [காடு + ஆகு] |
காட்டாக்கி | காட்டாக்கி kāṭṭākki, பெ.(n.) கட்டையைக் கடைந்துண்டாக்கும் நெருப்பு ; fire produced from fuel by churning. “காட்டாக்கிற் றோன்றி.” (சி.போ.9.3:2);. [காடு+அக்கி-காட்டக்கி → காட்டாக்கி(கொ.வ.);.] [த. அழல் (தீ); → அழனி Skt.→ agni→ தெ. அக்கி→ த. அக்கு → அக்கி.] |
காட்டாக்கினி | காட்டாக்கினி kāṭṭākkiṉi, பெ.(n.) கட்டையைக் கடைந்து உண்டாக்கும் நெருப்பு; fire produced from sticks by friction. [Skt.{}+agni → காஷ்டாக்கினி → த.காட்டாக்கினி] |
காட்டாசான் | காட்டாசான் kāṭṭācāṉ, பெ.(n.) திருநெல்வேலி மாவட்டம் முதலிய இடங்களில் வாழும் குறுந்தொழிற் பிரிவினர்; a sect ot people who live in tirunelveli; district. [காட்டு+ஆசான்.] இவர்கள் கூடைகட்டுவர் கிளிஞ்சல் சுடுவர் (அபி.சிந்:);. |
காட்டாசாரி | காட்டாசாரி kāṭṭācāri, பெ.(n.) தச்சன் (வின்.);; carpenter. [காடு + ஆசாரி-காட்டாசாரி] காட்டாசாரி kāṭṭācāri, பெ.(n.) தச்சன்; carpenter. [Skt.{}+{} → காஷ்டாசாரி → த.காட்டாசாரி.] [P] |
காட்டாஞ்சி | காட்டாஞ்சி kāṭṭāñji, பெ.(n.) மரவகை [L.]; entire-leaved staff tree. ம. காட்டாடு [காடு+ஆஞ்சி-காட்டாஞ்சி] |
காட்டாடு | காட்டாடு kāṭṭāṭu, பெ.(n.) காட்டில் வாழும் ஆட்டைப் போன்ற விலங்கு; jungle sheep, barking deer. [காடு + ஆடு – காட்டாடு] இது ஆட்டைப்போல் தாவும், நரியைப் போல் ஊளையிடும். [P] |
காட்டாட்சி | காட்டாட்சி kāṭṭāṭci, பெ.(n.) அறநெறி தவறிச் செய்யும் அரசாட்சி; unjust rule, tyranny. [காட்டு+ஆட்சி] |
காட்டாணி | காட்டாணி kāṭṭāṇi, பெ.(n.) காட்டேணி பார்க்க; see _. [காட்டேணி → காட்டாணி] |
காட்டாதளை | காட்டாதளை kāṭṭātaḷai, பெ.(n.) காட்டாமணக்கு பார்க்க; see _. (சா. அக.);. [காடு + ஆதளை.] |
காட்டாதாரிகம் | காட்டாதாரிகம் gāṭṭātārigam, பெ.(n.) கொடியத்தி; creeper fig (சா. அக.);. [காடு + ஆதரிகம்] |
காட்டாத்தி | காட்டாத்தி kāṭṭātti, பெ.(n.) திருவாத்தி; holy mountain ebony. “காட்டாத்திப் பூமார்ச் சாலஞ் சடிலை வீரை” (தைலவ. தைல. 5);. ம. காட்டத்தி; க. காடத்தி. [காடு + ஆத்தி-காட்டாத்தி.] |
காட்டானை | காட்டானை kāṭṭāṉai, பெ.(n.) காட்டில்வாழும் யானை (பழக்கப்படுத்தப் படாதயானை);; wild elephant. ம. காட்டான [காடு + யானை] |
காட்டான் | காட்டான்1 kāṭṭāṉ, பெ.(n.) 1. நாகரிகமாகப் பழகும் இயல்பு இல்லாதவன்; person of rough manners, rustic. 2. அயலான் (யாழ்ப்.);; stranger. ம. காட்டன், காடன் ;கா.து. காட [காடு + ஆன்-காட்டான். ‘ஆன்’ ஆண்பாலிறு.] காட்டான்2 kāṭṭāṉ, பெ.(n.) காட்டு மாடு; wild cow. “வெல்லரிய கரடி காட்டான் பூனை” (அறப். சத. 62); ம. காட்டி, க. காட்டா [காடு + ஆன்-காட்டான். ஆன் =மாடு, பெற்றம்] |
காட்டாமணக்கு | காட்டாமணக்கு kāṭṭāmaṇakku, பெ.(n.) 1. ஆமணக்கு வகை (பதார்த்த. 541);; common physic nut. 2. பேயாமணக்கு [L.]; red physicnut. மறுவ. காட்டாதளை, காட்டாமணத்தி, ம. காட்டாவணக்கு [காடு + ஆமணக்கு – காட்டாமணக்கு] [P] |
காட்டாமணத்தி | காட்டாமணத்தி kāṭṭāmaṇatti, பெ.(n.) காட்டா மணக்கு பார்க்க;_. [காடு + ஆமணத்தி] |
காட்டாமணி | காட்டாமணி kāṭṭāmaṇi, பெ.(n.) உத்தாமணி பார்க்க; see _. (சா. அக.);. [காடு + ஆமணி] |
காட்டாரியம் | காட்டாரியம் kāṭṭāriyam, பெ.(n.) கேழ்வரகின் வகை; [காடு + ஆரியம் – காட்டாரியம்.] |
காட்டாரை | காட்டாரை kāṭṭārai, பெ.(n.) கல்லாரை பார்க்க; see _. (சா. அக.); [காடு + ஆரை] |
காட்டாறு | காட்டாறு kāṭṭāṟu, பெ.(n.) 1. காட்டில் ஒடும் ஆறு. a forest-river. 2. மழைக் காலத்தில் மட்டும் ஒடும் ஆறு; the river where water flows only in rainy season, ம. காட்டாறு [காடு+ஆறு] |
காட்டாலம் | காட்டாலம் kāṭṭālam, பெ.(n.) பேயால மரம், wild banyantree, demonfig (சா. அக.); ம. காட்டால் [காடு + ஆலம்] |
காட்டால் | காட்டால் kāṭṭāl, பெ.(n.) பேய் ஆல் அல்லது கல் ஆல்; forest banyan tree or demon fig. – Ficus citrifolia. [காட்டு+ஆல்.] இதன் பட்டை மருந்திற்குப் பயன்படும் (சா.அக.);. |
காட்டாளத்தி | காட்டாளத்தி kāṭṭāḷatti, பெ.(n.) இசையின் விரிவோசை (சிலப்.3:26,2, உரை);; systematic elaboration of a musical mode in all its variation. [காடு + ஆளத்தி-காட்டாளத்தி. ஆளத்தி என்னும் தமிழ்ச்சொல் வடமொழியில் ஆலாபனை ஆயிற்று] |
காட்டாளி | காட்டாளி kāṭṭāḷi, பெ.(n.) கடற்கரை மரம் சோலைகளை அடையாளமாகக் கொண்டு கடலில் மீன்பிடிக்கும் இடங்களைக் கண் டறியும் திறமை வாய்ந்த மீனவன்; fisherman efficientin identifying the fishing areas by calculating the distance by sighting the sea shore vegetation. [காடு+ஆளி] |
காட்டாளை | காட்டாளை kāṭṭāḷai, பெ.(n.) ஒருவகைச் சுழல் வண்டு; a whirling beetle (சா. அக.);. |
காட்டாள் | காட்டாள் kāṭṭāḷ, பெ.(n.) 1. நாகரிகமற்ற முரட்டாள்; rustic, savage, uncivilised rude man. 2. காட்டில் இருப்பவன், வேடன்; a forest-dweller, hunter. ம. காட்டாள்; க. து.காட [காடு +ஆள்-காட்டாள்] |
காட்டாள் காசு | காட்டாள் காசு kāṭṭāḷkācu, பெ.(n.) வரிக்கூறு செய்பவர்களுக்கு நிலத்தை அடையாளம் காட்டுவதற்கான கூலி; payment for identifying the land for the tax assessers. “வரிக்கூறு செய்வார்களுக்கும் சொல்ல காட்டாள் காசு 25” (S.I.I.VIII, 263-9);. [காட்டாள் + காசு.] |
காட்டாவங்கம் | காட்டாவங்கம் kāṭṭāvaṅkam, பெ.(n.) வெள்ளைக் கழற் கொடி; a white species of bonducella (சா.அக.);. |
காட்டாவரை | காட்டாவரை kāṭṭāvarai, பெ.(n.) காட்டாவிரை பார்க்க; see _. mountain downy senna (சா.அக.);. [காடு + ஆவரை.] |
காட்டாவிரை | காட்டாவிரை kāṭṭāvirai, பெ.(n.) மலையாவாரை; small-stipuled downy rachis glandular senna. [காடு + ஆவிரை – காட்டாவிரை] |
காட்டி | காட்டி kāṭṭi, பெ.(n.) optative mood with final ‘I’. காட்டி2 kāṭṭi, பெ.(n.) பன்றி.(அக.நி.);; pig |
காட்டிக்கொடு-த்தல் | காட்டிக்கொடு-த்தல் kāḍḍikkoḍuttal, 5 செ.குன்றாவி. (v.t.) 1. கற்றுக் கொடுத்தல்; to put one in the way, to teach or show the method of doing anything. 2. தன்பக்கத்தானொருவனை எதிரி கைக்கொள்ளும் நிலைமையை உண்டாக்குதல்; to play false, to accuse; to betray, as a person to his enemy, 3. சோதனை முறையைக் கையாண்டு வெளிப்படுத்துதல்; reveal. பையில் வைத்திருக்கும் பேனாக் கத்தியைக்கூட இந்த மின்கருவி காட்டிக் கொடுத்துவிடும் (உ.வ);. [காட்டு = காட்டி + கொடு] |
காட்டிக்கொள்(ளு)-தல் | காட்டிக்கொள்(ளு)-தல் kāṭṭikkoḷḷutal, 13 செ.கு.வி.(v.i.) ஒன்றைப் போல் போலியாக (பாவனை); செய்தல்; try to pass for someone; put on airs. அவன் தன்னை அறிவாளி போல் காட்டிக் கொண்டான். [காட்டி+ கொள்(ளு);-தல்.] |
காட்டிக்கொள்ளு-தல் | காட்டிக்கொள்ளு-தல் kāṭṭikkoḷḷudal, 16 செ.குன்றாவி, (v.t.) இல்லாததை உள்ளதுபோலக் காட்டிக் கொள்ளுதல்; try to pass for; put on airs. அவன் தன்னை அறிவாளி போலக் காட்டிக் கொண்டான் (உ.வ.);. [காட்டு = காட்டி + கொள்.] |
காட்டிச்சி | காட்டிச்சி kāṭṭicci, பெ.(n.) கல்லத்தி; stone fig (சா.அக.);. [காடு + இச்சி] |
காட்டிஞ்சி | காட்டிஞ்சி kāṭṭiñji, பெ.(n.) 1.இஞ்சிவகை (L);]; wild ginger. 2. சரணை (மலை);; purslane – leaved trianthema. ம. காட்டிஞ்சி [காடு + இஞ்சி-காட்டிஞ்சி] |
காட்டிஞ்சிமூலம் | காட்டிஞ்சிமூலம் kāṭṭiñcimūlam, பெ.(n.) வெள்ளைச் சாரண வேர்; one styled trianthema – Trianthema Obcordata (சா.அக.);. |
காட்டிஞ்சு | காட்டிஞ்சு kāṭṭiñju, பெ.(n.) காட்டீந்து பார்க்க: see _. [காட்டிந்து → காட்டீஞ்சு] |
காட்டிண்டு | காட்டிண்டு kāṭṭiṇṭu, பெ.(n.) copious narrowleaved soap pod. [காடு + இண்டு-காட்டிண்டு] |
காட்டிதோசணா | காட்டிதோசணா kāṭṭitōcaṇā, பெ.(n.) திப்பிலி; long pepper- Piper longum (சா.அக.);. |
காட்டிந்து | காட்டிந்து kāṭṭindu, பெ.(n.) ஈச்சம்பனை; wild date palm. மறுவ. காட்பீச்சை. ம. காட்டீந்தல் [காடு + ஈந்து-காட்டீந்து] |
காட்டினாமணத்தி | காட்டினாமணத்தி kāṭṭiṉāmaṇatti, பெ.(n.) 1. பேய் ஆமணக்கு wild castor – Baliospermum axillare. 2.சீமை ஆமணக்கு; bronze-leaved physic nut Jatropha gossy-pifolia (சா.அக.);. |
காட்டினாவாடை | காட்டினாவாடை kāṭṭiṉāvāṭai, பெ.(n.) நன்னாரி; Indian sarsaparilla (சா.அக.);. |
காட்டிமறை-த்தல் | காட்டிமறை-த்தல் kāṭṭimaṟaittal, 4 செ.குன்றாவி, (v.t.) எளிதில் கிடைப்பது போல் தோற்றுவித்து ஏமாறச் செய்தல்; to tantalise a person by presenting something desirable to his view and snatching it away just at the moment of his taking it. “கருணை மூர்த்தி காட்டி மறைத்தலும்” (திருவிளைவாதவூ.54); [காட்டு → காட்டி (வி.எ); + மறை.] |
காட்டியானை | காட்டியானை kāṭṭiyāṉai, பெ.(n.) காட்டில் வாழும் யானை (திவா.);; wild elephant. [காடு + யானை – காட்டியானை. ஒ.நோ. கற்றி யானை] |
காட்டியும் | காட்டியும் kāṭṭiyum, இடை(part) காட்டிலும்; a case-sign, the ablative of comparison. “என்னைக் காட்டியு முண்டோ”(குருகூர்ப். 96);. [காட்டிலும் = காட்டியும் (கொ.வ.); காட்டில்1 பார்க்க; See _.– காட்டாஞ்சி] |
காட்டிராட்சி | காட்டிராட்சி kāṭṭirāṭci, பெ.(n.) அரத்தை; galangal-Alpinia galanga (சா.அக.);. |
காட்டிருப்பவல் | காட்டிருப்பவல் kāṭṭiruppaval, பெ.(n.) ஒரு கொடி; a kind of creeper – Indian cudweed, Gnaphalium indicum (சா.அக.);. [காட்டு+இருப்பு+அவல்.] இதற்குப் புத்தர்கைச் சம்மட்டி, காயசித்தி, உப்புநீக்கி, காரீய செந்தூரி, கானல் கள்ளி முதலிய பல பெயர்கள் உண்டு (சா.அக.);. |
காட்டிருப்பை | காட்டிருப்பை kāṭṭiruppai, பெ.(n.) காட்டிலுப்பை பார்க்க; see _. [காட்டிலுப்பை → காட்டிருப்பை] |
காட்டிருள் | காட்டிருள் kāṭṭiruḷ, பெ.(n.) கனத்த இருள்; பேரிருள்; pitch-darkness, thick darkness, [காடு + இருள்] |
காட்டிருள்ளி | காட்டிருள்ளி kāṭṭiruḷḷi, பெ.(n.) நரிவெங்காயம்; jungle onion or jackal onion. க. காடீருள்ளி. மறுவ. காட்டுவெள்ளை வெங்காயம் [காடு + ஈருள்ளி – காட்டீருள்ளி.] |
காட்டிலந்தை | காட்டிலந்தை kāṭṭilandai, பெ.(n.) இலந்தை மரவகை; a species of jujube. ம. காட்டிலந்த [காடு + இலந்தை] |
காட்டிலமிர்து | காட்டிலமிர்து kāṭṭilamirtu, பெ.(n.) காட்டகத் தமிழ்ந்துப் பார்க்க; see _. [காட்டகத்தமிழ்து → காட்டகத்தமிந்து → காட்டிலமிர்து. சீவக.2110 உரையில் காட்டிலமிர்து என ஆண்டிருப்பது கொச்சை வழக்கு.] |
காட்டிலம் | காட்டிலம் kāṭṭilam, பெ.(n.) வாழை வகை (மலை.);; a kind of plantain. [காட்டேலம் → காட்டிலம். ஏலவாழையின் வகைகளுள் ஒன்று) |
காட்டிலவு | காட்டிலவு kāṭṭilavu, பெ.(n.) 1. கோங்கிலவு; false traganth. 2. பாறையிலவு; large flowered silk cotton (சா.அக.);. மறுவ. காட்டுப்பருத்தி [காடு + இலவு – காட்டிலவு.] [P] [P] |
காட்டிலா | காட்டிலா kāṭṭilā, பெ.(n.) 1. வெள்ளெருக்கு; white flowered giant swallow wort. 2. வாழை; plantain tree (சா.அக);. [காடு +ஈலை-காட்டீலை = காட்டிலா] |
காட்டிலுப்பை | காட்டிலுப்பை kāṭṭiluppai, பெ.(n.) 1. காட்டிலுப்பை மரம்; wild mowah 2. கற்பாலை; East Indian star apple. 3. பாற்சோற்றிப் பாலை; oval mowah (சா.அக.);. [காடு + இலுப்பை] |
காட்டிலுமிழி | காட்டிலுமிழி kāṭṭilumiḻi, பெ.(n.) நாகர வண்டு (வின்.);; a large kind of beetle. [காட்டில் + (உ.முறி); உமிழி. உமுறி + ஒசையெழுப்புவது] |
காட்டிலும் | காட்டிலும்1 kāṭṭilum, இடை. (conj.) உறழ்ச்சிப் பொருள் குறிக்கும் இடைச்சொல்; than. அதைக் காட்டிலும் இது நல்லது (உ.வ.);. [காண் →காட்டு →காட்டில் → காட்டிலும். காட்டில் பார்க்க ; see _.] காட்டிலும்2 kāṭṭilum, வி.எ. (adv.) உடன்; as soon as, at the very instant. விடியுங்காட்டிலும் வந்தான் (உ.வ.);. [காண் → காட்டு → காட்டில் → காட்டிலும். காட்டில் பார்க்க ,see _.] |
காட்டிலேபோ-தல் | காட்டிலேபோ-தல் kāṭṭilēpōtal, 8 செ.கு.வி. (v.i.) வீணாய்க்கழிதல் (யாழ்ப்.);; to be lost, wasted. [காடு + இல் +ஏ – காட்டிலே + போ.] காடு = இடுகாடு. இச் சொல் மறைந்தொழிதல், கழிந்துபோதல், பயனற்றுப்போதல் என்னும் பொருள்களின் அடியாக வீணாகப்போதலைக் குறித்தது. |
காட்டில் | காட்டில்1 kāṭṭil, இடை[conj] உறழ்ச்சிப் பொருள் காட்டும் இடைச்சொல் than. “ஒழிந்த பெருத்த உறுப்புகளில் காட்டில் பெரிய அழகையுடைய’ (சீவக.1461உரை);. ம. காட்டில் [காண் → காட்டு → காட்டில். ஒன்றை ஒப்புமையாகக் காட்டும்போது எனப் பொருள்படும் இடைச்சொல் ‘அதனைவிட’ என்னும் உறழ்ச்சிப்பொருள் தந்தது.] காட்டில்2 kāṭṭil, வி.எ.(adv.) 1. அளவில்; when. “தவநெறி என்னுங் காட்டில் பக்தியைச் சொல்லிற் றாமோ”(ஈடு. 10.4:1); 2. உடன்; as soon as, at the very instant. “ஒரு குயில் ஒருகாற் கூவுங்காட்டில் விடிந்ததோ” (திவ்.திருப்பா.18, வியா.171);. [காட்டில்1 → காட்டில்2] |
காட்டீகை | காட்டீகை kāṭṭīkai, பெ.(n.) இண்ட முள்ளு fine-leaved acacia – Acacia pennata (சா.அக.);. |
காட்டீரகம் | காட்டீரகம் gāṭṭīragam, பெ.(n.) கொட்டைமுந்திரி; cashew nut (சா.அக.);. |
காட்டீலை | காட்டீலை kāṭṭīlai, பெ.(n.) 1. வாழை; plantain tree. 2. கடுக்காய்; gallnut. [காடு + ஈலை.] |
காட்டு | காட்டு1 kāṭṭudal, 5 செ.குன்றாவி (v.t.) 1. காண்பித்தல்; to show, exhibit, display, “எம்மிலா காட்டுதும்”(நாலடி,293); 2. அறிவித்தல்; to reveal, disclose, set forth. “காணாதாற் காட்டுவான்” (குறள்,849);. 3. நிறுவுதல்; to prove. “நிறைமொழி மாந்தர்…. மறைமொழி காட்டிவிடும்” (குறள்,28);. 4. நினைவூட்டுதல்; to remind. “முறுவற் குறிகாட்டி முத்தே யுலகை முடிப்பாயோ” (கம்பரா. கடல் காண்:8);. 5. திருவமுது படைத்தல்; to offer to a deity. “ஆழ்வார்க்குக் காட்டுகின்ற திருவமுர்தும்” (S.I.I.I.49-3:102);. 6.நிழலுருச் செய்தல்; to reflect, as a mirror or water. “அடுத்தது காட்டும் பளிங்கு போல்”(குறள் 706);. 7. உண்டாக்குதல்; to create, bring to pass “களையாத துன்பமிக் காரிகைக்குக் காட்டி” (சிலம் 19:17);. 8. அறிமுகஞ் செய்வித்தல்; to introduce. “செவ்வழி யுள்ளத் தோனைக் காட்டுதி தெரிய வென்றான்”(கம்பரா. கிட்கிந் அனுமப்.23);. 9. நறுமண முதலியன ஊட்டுதல்; to apply as incense or perfume to the hair. “ஆவிகாட்டி சோர்குழல்” (கம்பரா. கிட்கிந் நாடவி. 59);. 10. வெப்பம் உறைக்கச் செய்தல்; to heat, as a vessel of ghee. நெய்ப்பாத்திரத்தை நெருப்பிற்காட்டி உருக்கினான் (உ.வ.);. 11. மீட்டுத்தருதல்; to bring back. “ஆழிகாட்டியென் னாருயிர் காட்டினாய்” (கம்பரா. சுந்தர பிணிவீட்டு,34); ம. காட்டுக; க. காணிசு; கானிபின்க; து. காணுசாபுனி, காணிசாவுனி குட; கோத காட் ; துட. கோட். [காண் (த.வி); காட்டு (பி.வி);.] காட்டு2 kāṭṭu, பெ.(n.) 1.காண்பிக்கை; showing; exhibition, presentation. 2.சான்று; instance, example. “கருத்துப் பதப்பொருள்காட்டு மூன்றினும்” (நன்.22);. 3. துணைக்கருவி; means, implements. “இவ்வுடலே காட்டொடுங்க காணாதே” (சி.போ.. 3.5:1], 4. ஒளி (சி.சி.5:4.);; brightness, light. [காண் → காட்டு. ஏவலடியே பெயராகிக் காட்டுதலையும், காட்டுதற்கும் காணுதற்கும் காரணமாகிய பொருள்களையும் பொருளால் புடைபெயர்ந்து சுட்டியது.] காட்டு3 kāṭṭu, பெ.(n.) உறைப்பு; pungency, acridity. தெ.காட்டு [காட்டம் → காட்டு.] காட்டு4 kāṭṭu, பெ.(n.) குப்பை; rubbish. காட்டுக் “களைந்து கலங்கழீஇ” (ஆசாரக். 46);. தெ.காட்டு |
காட்டு நீரடிமுத்து | காட்டு நீரடிமுத்து kāḍḍunīraḍimuttu, பெ.(n.) காட்டு நீர்வெட்டி; forest tamana oil tree (சா.அக.);. [காடு + நீரடி + முத்து] |
காட்டு மஞ்சரி | காட்டு மஞ்சரி kāṭṭumañjari, பெ.(n.) காட்டில் வளரும் சிறுமரவகை (L.);; dichotomous flowered hill olive. [காடு+மஞ்சரி] |
காட்டு மந்தாரை | காட்டு மந்தாரை kāṭṭumandārai, பெ.(n.) காட்டத்தி பார்க்க; see _. [காடு மந்தாரை.] |
காட்டு வெள்ளாகிகம் | காட்டு வெள்ளாகிகம் gāṭṭuveḷḷāgigam, பெ.(n.) மலை முருங்கை; bitter moringa (சா.அக.);. [காடு + வெள்ளாகிகம்] |
காட்டு வெள்வெங்காயம் | காட்டு வெள்வெங்காயம் kāṭṭuveḷveṅgāyam, பெ.(n.) நரிவெங்காயம்; jungle onion. [காடு +வெள்+ வெங்காயம்] |
காட்டுஓமவல்லி | காட்டுஓமவல்லி kāṭṭuōmavalli, பெ.(n.) ஓமவல்லி வகை; a variety of Ömavalli (சா.அக.);. [காடு + ஓமவல்லி] |
காட்டுகஞ்சா | காட்டுகஞ்சா kāṭṭukañcā, பெ.(n.) இமயமலை, காசுமீரம் இக்காடுகளில் தானாகவே பயிராகும் மதமதக்கச் செடி, wild hemp found growing wild in western Himalayas and Kasmere – Cannabis sativa (சா.அக);. [காட்டு+கஞ்சா] |
காட்டுகை | காட்டுகை kāṭṭukai, பெ.(n.) புகை காட்டுதல்; the act of applying smoke – Fumigation (சா.அக.);. |
காட்டுகொழுமிச்சை | காட்டுகொழுமிச்சை kāṭṭukoḻumiccai, பெ.(n.) 1. கசப்பு எலுமிச்சை; bitter lime, 2. கசப்பு நாரத்தை; bitter orange(சா.அக.);. [காட்டு+கொழுமிச்சை] |
காட்டுக் கப்பற்கிழங்கு | காட்டுக் கப்பற்கிழங்கு kāṭṭukkappaṟkiḻṅgu, பெ.(n.) காட்டுக்கிழங்கு; a wild root (சா.அக);. [காடு + கப்பற்கிழங்கு] |
காட்டுக் கரந்தை | காட்டுக் கரந்தை kāṭṭukkarandai, பெ.(n.) ஒரு வகைக் கரந்தை; wild sweet basil of the Sphoeranthes genus (சா.அக.);. [காடு + கரந்தை] |
காட்டுக் காட்டாமணி | காட்டுக் காட்டாமணி kāṭṭukkāṭṭāmaṇi, பெ.(n.) காட்டு உத்தாமணி; wild hedge twiner. [காடு + காட்டாமணி] |
காட்டுக்கசகசா | காட்டுக்கசகசா gāṭṭuggasagasā, பெ.(n.) கசகசா வகை; wild poppy. [காடு + கசகசா] [P] |
காட்டுக்கஞ்சாங்கோரை | காட்டுக்கஞ்சாங்கோரை kāṭṭukkañjāṅārai, பெ.(n.) செடிவகை (மூ.அ.);; sage tea plant [காடு + கஞ்சு + அம் + கோரை. காட்டுக்கஞ்சாங் கோரை. ‘அம்’ சாரியை ‘ஆம்’ என நீண்டது] |
காட்டுக்கடன் | காட்டுக்கடன் kāḍḍukkaḍaṉ, பெ.(n.) ஈமக்கடன்; obsequies or funeral rites at the burning ghat. மறுவ. காட்டுக்கிரியை. [காடு + கடன்] |
காட்டுக்கடலி | காட்டுக்கடலி kāḍḍukkaḍali, பெ.(n.) பூனைப் பிடுக்கன் செடிவகை(வின்.); roughish roundleaved Indian linden. [காடு + கடலி] |
காட்டுக்கடலை | காட்டுக்கடலை kāḍḍukkaḍalai, பெ.(n.) புதர்ச் செடிவகை (வின்.);; rough small-leaved spider flower shrub. ம. காட்டுகடலை [காடு + கடலை – காட்டுக்கடலை] |
காட்டுக்கடுகு | காட்டுக்கடுகு gāḍḍuggaḍugu, பெ.(n.) நாய் வேளை (M.M.937);; a sticky plant that grows best in sandy places. ம. காட்டுகடுகு. [காடு + கடுகு] |
காட்டுக்கட்டை | காட்டுக்கட்டை kāṭṭukkaṭṭai, பெ.(n.) பலவகை மரங்களின் விறகு; firewood of various kinds. [காடு + கட்டை] |
காட்டுக்கண்ணி | காட்டுக்கண்ணி kāṭṭukkaṇṇi, பெ.(n.) முட்டை நாறி. first claw-flowered laurel (சா. அக.);. [காடு + கண்ணி] |
காட்டுக்கதலி | காட்டுக்கதலி kāṭṭukkadali, பெ.(n.) காட்டு வாழை (மூ.அ.);; wild plantain, [காடு + கதலி] |
காட்டுக்கத்தரி | காட்டுக்கத்தரி kāṭṭukkattari, பெ.(n.) செடிவகை; hedge caper. [காடு+கத்தரி] |
காட்டுக்கத்தூரி | காட்டுக்கத்தூரி kāṭṭukkattūri, பெ.(n.) பெட்டகத் துத்தி எனும் மூலிகைச் செடி (மலை.);; musk mallow, hairy shrub. [காடு + கத்தூரி – காட்டுக்கத்தூரி] Skt. _.→த. கத்தூரி |
காட்டுக்கத்தோதிகம் | காட்டுக்கத்தோதிகம் kāṭṭukkattōtikam, பெ.(n.); சாமை; little millet – Panicum miliare (சா.அக.). |
காட்டுக்கனி | காட்டுக்கனி kāṭṭukkaṉi, பெ.(n.) காட்டெழுமிச்சை; Indian wild lime (சா.அக.); [காடு + கனி] |
காட்டுக்கமுகு | காட்டுக்கமுகு gāṭṭuggamugu, பெ.(n.) இலங்கைக்கமுகு; betel palm of srilanka (சா.அக.);. ம. காட்டுகமுகு [காடு + கமுடு] |
காட்டுக்கம்பம்புல் | காட்டுக்கம்பம்புல் kāṭṭukkambambul, பெ.(n.) ஒருவகைக் கம்பம் புல்; a wild coraly (சா.அக.);. [காடு +கம்பம் + புல்] |
காட்டுக்கரணை | காட்டுக்கரணை kāṭṭukkaraṇai, பெ.(n.) பாவட்டை; Indian pavatta – Pavetta indica (சா.அக.);. |
காட்டுக்கருஞ்சீரகம் | காட்டுக்கருஞ்சீரகம் kāṭṭukkaruñcīrakam, பெ.(n.) ஒரு கடைச் சரக்கு; black cumin, Nigellasativa (சா.அக.);. [காட்டு+கரும்+சீரகம்] |
காட்டுக்கருணை | காட்டுக்கருணை kāṭṭukkaruṇai, பெ.(n.) 1. ஒரு வகைப் பூடு. (பதார்த். 417);; purple stalked dragon, s.sh., synantherias sylvatica. 2. சேனைக்கிழங்கு வகை (வின்.);; tahiti arrow-root. [காடு + கருணை-காட்டுக்கருணை.] |
காட்டுக்கருப்பூரக்கிச்சிலிக்கிழங்கு | காட்டுக்கருப்பூரக்கிச்சிலிக்கிழங்கு kāṭṭukkaruppūrakkiccilikkiḻṅgu, பெ.(n.) காட்டுப் பூலாங் கிழங்கு; forest orange root of Curcuma genus (சா. அக.);. [காடு + கருப்பூரம் + கிச்சிலி + கிழங்கு] |
காட்டுக்கருமிளகு | காட்டுக்கருமிளகு gāṭṭuggarumiḷagu, பெ.(n.) மிளகு வகை; kind of pepper. ம. காட்டுகரிமுளகு. [காடு + கருமிளகு] |
காட்டுக்கரும்பு | காட்டுக்கரும்பு kāṭṭukkarumbu, பெ.(n.) பேய்க்கரும்பு; wild sugarcane (சா.அக.);. ம. காட்டுகரிம்பு. [காடு + கரும்பு] |
காட்டுக்கருவா | காட்டுக்கருவா kāṭṭukkaruvā, பெ.(n.) 1. காட்டில வங்கம்; jungle cloves. 2.சீனமிளகு; China pepper. ம. காட்டுகறுவா [காடு + கருவா – காட்டுக்கருவா. கருவேல்→கருவா (கொ.வ); ஒரு சிறிய மரம்.] |
காட்டுக்கருவேப்பிலை | காட்டுக்கருவேப்பிலை kāṭṭukkaruvēppilai, பெ.(n.) ஆனாந்தளை, axil flowered shrubby Indian warmpee – Clansena wildenovi (சா.அக.);. [காட்டு+ கரு+ வேப்பிலை.] காட்டுக்கருவேப்பிலை kāṭṭukkaruvēppilai, பெ.(n.) கறிவேப்பிலை வகை(L.);; axil flowered shrubby Indian warmpee. மறுவ. ஆனாந்தனை. [காடு + கருவேப்பிலை.] |
காட்டுக்கரையாம்பூ | காட்டுக்கரையாம்பூ kāṭṭukkaraiyāmbū, பெ.(n.) மலைநாவல்; clove-like black plum (சா.அக.);. [காடு + கரையாம்பூ] |
காட்டுக்கரோசயம் | காட்டுக்கரோசயம் kāṭṭukkarōcayam, பெ.(n.) சாரப் பருப்பு; pulp of cuddapah almond (சா.அக.);. [காட்டு+கரோசயம்] |
காட்டுக்கர்ப்பூரகிச்சிலிக்கிழங்கு | காட்டுக்கர்ப்பூரகிச்சிலிக்கிழங்கு kāṭṭukkarppūrakiccilikkiḻṅku, பெ.(n.) காட்டு பூலாங் கிழங்கு; forest orange root of – Curcuma genus (சா.அக.);. [காட்டு+கர்ப்பூர+கிச்சிலி+கிழங்கு.] |
காட்டுக்கறிவேப்பிலை | காட்டுக்கறிவேப்பிலை kāṭṭukkaṟivēppilai, பெ.(n.) காட்டுக்கருவேப்பிலை பார்க்க; see kaffu-k-karu-véppilai; (சா.அக.);. [காட்டு+ கறிவேப்பிலை.] |
காட்டுக்கற்றாழை | காட்டுக்கற்றாழை kāṭṭukkaṟṟāḻai, பெ.(n.) ஆனைக் கற்றாழை; wild aloe or hill aloe. [காடு + கற்றாழை] [P] |
காட்டுக்கல் | காட்டுக்கல் kāṭṭukkal, பெ.(n.) 1. ஒருவகை முருட்டுக்கல் (வின்.);; a rough unshaped stone. 2. வெள்ளைக்கல்; white stone. (சா.அக.);. [காடு +கல் – காட்டுக்கல்] |
காட்டுக்கல்லுண்டை | காட்டுக்கல்லுண்டை kāṭṭukkalluṇṭai, பெ.(n.) நெல்வகை; a kind of paddy. [காடு + கல்லுண்டை] |
காட்டுக்கள்ளி | காட்டுக்கள்ளி kāṭṭukkaḷḷi, பெ.(n.) மலைக்கள்ளி; hill kalli; leper”s plant. [காட்டு+ கள்ளி] இதன் பூ மஞ்சள் நிறம். இலைகளை வதக்கிக் காயம், புண் முதலியவைகளுக்கு வைத்துக் கட்ட, அழற்சி அல்லது எரிச்சல் போம். (சா.அக.);. காட்டுக்கள்ளி kāṭṭukkaḷḷi, பெ.(n.) மலைக்கள்ளி; hill _. (சா. அக.); [காடு + கள்ளி] இதன் இலைகளை வதக்கிக் காயம், புண் முதலியவற்றில் வைத்துக் கட்ட எரிச்சல் நீங்கும். |
காட்டுக்கழுதை | காட்டுக்கழுதை kāṭṭukkaḻudai, பெ.(n.) காட்டில் வாழும் (பழக்கப்படுத்தப்படாத); கழுதை; a wid-ass. ம. காட்டுகழுத. [காடு + கழுதை] |
காட்டுக்காசினி | காட்டுக்காசினி kāṭṭukkāciṉi, பெ.(n.) காட்டில் விளையும் காசினி; wild endive (சா.அக.);. [காடு + காசினி] |
காட்டுக்கானாங்கோழை | காட்டுக்கானாங்கோழை kāṭṭukkāṉāṅāḻai, பெ.(n.) கானாவாழை (மூ.அ.);; calfs grass. [காடு + கானாங்கோழை.] |
காட்டுக்கானாவாழை | காட்டுக்கானாவாழை kāṭṭukkāṉāvāḻai, பெ (n.) கானா வாழைவகை (யாழ்.அக.);; a species of colf’s grass, [காடு + கானாவாழை] |
காட்டுக்காய்ச் சாறுமுட்டி | காட்டுக்காய்ச் சாறுமுட்டி kāṭṭukkāyccāṟumuṭṭi, பெ.(n.) ஓர் அவுரிப் பூடு; curved podded fiveleaved indigo (சா.அக.);. [காடு + காய் + சாறுமுட்டி] |
காட்டுக்காய்வள்ளி | காட்டுக்காய்வள்ளி kāṭṭukkāyvaḷḷi, பெ.(n.) 1. வள்ளிக்காய் (மூ.அ.);; cultivated yam, dioscorea sativa. 2. காய்ச்சீரக வள்ளிவகை (வின்.);; cummin yam. [காடு + காய்வள்ளி] |
காட்டுக்காரை | காட்டுக்காரை kāṭṭukkārai, பெ.(n.) மலைக்காரை; gland petioled saw-leaved olive linden (சா.அக.); ம. காட்டுகார. [காடு + காரை.] |
காட்டுக்காளை | காட்டுக்காளை kāṭṭukkāḷai, பெ.(n.) மாட்டு வகையைச் சார்ந்த ஒரு காட்டு விலங்கு; a wild an mal of the cow family. ம. காடுகாள. [காடு + காளை] |
காட்டுக்கிச்சிலி | காட்டுக்கிச்சிலி kāṭṭukkiccili, பெ.(n.) 1.காட்டெலுமிச்சை (L.);; wild lime. 2. காட்டில் விளையும் கிச்சிலிப்பழம்; wild orange (சா.அக);. [காடு+கிச்சிலி] |
காட்டுக்கிச்சிலிக்கிழங்கு | காட்டுக்கிச்சிலிக்கிழங்கு kāṭṭukkiccilikkiḻṅku, பெ.(n.) ஒரு மணமுள்ள கிழங்கு jungle zedoary of the hedychium genus (சா.அக.);. [காட்டு+கிச்சிலி+கிழங்கு.] |
காட்டுக்கிட்டம் | காட்டுக்கிட்டம் kāṭṭukkiṭṭam, பெ.(n.) மலை கிட்டம்; iron crust; spongy stones such as prunic etc. found in mountains or mountainous tract (சா.அக);. [காடு + கிட்டம்] |
காட்டுக்கிராம்பு | காட்டுக்கிராம்பு kāṭṭukkirāmbu, பெ.(n.) நீர் கிராம்பு (மூ.அ.);; primrose-willow. [காடு+கிராம்பு-காட்டுக்கிராம்பு (கொ.வ); குறும் → குறும்பு → கிராம்பு (கொ.வ);] |
காட்டுக்கிரியை | காட்டுக்கிரியை kāṭṭukkiriyai, பெ.(n.) காட்டு கடன் பார்க்க; see _. மறுவ. ஈமக்கடன் Skt. kriya→ த. கிரியை [காடு + கிரியை] |
காட்டுக்கிளிப்பிள்ளை | காட்டுக்கிளிப்பிள்ளை kāṭṭukkiḷippiḷḷai, பெ.(n.) காட்டில் வசிக்கும் கிளிப்பிள்ளை; jungle parrot – Taccocua leschenaultii alias zandostomers sirkeer(சா.அக.);. [காட்டு+கிளிப்பிள்ளை] |
காட்டுக்கிளுவை | காட்டுக்கிளுவை kāṭṭukkiḷuvai, பெ.(n.) கற்பூரக் கிளுவை; hill kiluvai or hill mango. [காடு + கிளுவை] |
காட்டுக்கிள்ளை | காட்டுக்கிள்ளை kāṭṭukkiḷḷai, பெ.(n.) நகுதாளி மில்லை; common cherry nutmeg (சா.அக.);. [காடு + கிள்ளை] |
காட்டுக்கிழங்கு | காட்டுக்கிழங்கு kāṭṭukkiḻṅku, பெ.(n.) 1. சிறு வள்ளிக் கிழங்கு; small sweet yam or chinese yam – Dioscorea aculeata. 2. காட்டில் விளையுங் கிழங்கு bulbous roots found grown in forests; forest esculent roots so called from its growth in the forest (சா.அக.);. [காட்டு+ கிழங்கு.] |
காட்டுக்கீரை | காட்டுக்கீரை kāṭṭukārai, பெ.(n.) காட்டி லுண்டாகும் பலவகைக் கீரை (வின்);; wild greens of different kinds. [காடு + கீரை.] |
காட்டுக்கீழாநெல்லி | காட்டுக்கீழாநெல்லி kāṭṭukāḻānelli, பெ.(n.) பூலாவகை (L.);; black-honey shrub, large, often Scandent. [காடு + கீழ் + ஆம் + நெல்லி] |
காட்டுக்குணம் | காட்டுக்குணம் kāṭṭukkuṇam, பெ.(n.) விலங் கியல்பு (யாழ்.அக.);; rudeness; savagery. [காடு + குணம்] |
காட்டுக்குதிரை | காட்டுக்குதிரை kāṭṭukkudirai, பெ.(n.) 1. காட்டில் வாழும்குதிரை; a wild-horse. 2. வரிக்குதிரை; a zebra. ம. காட்டுகுதிர. [காடு + குதிரை] |
காட்டுக்குமிழ் | காட்டுக்குமிழ் kāṭṭukkumiḻ, பெ.(n.) 1. மரவகை; French mulberry of the Western ghauts. 2. பாமரக் குமிழ்; false white teak. ம. காட்டு குமிழ் [காடு + குமிழ்] |
காட்டுக்குயின் | காட்டுக்குயின் kāṭṭukkuyiṉ, பெ.(n.) மரவகை, a kind of tree. ம. காட்டுகுருந்த [காடு +குயின்.] |
காட்டுக்குருக்கு | காட்டுக்குருக்கு kāṭṭukkurukku, பெ.(n.) காட்டுநெருஞ்சில் (புதுவை); பார்க்க; see _. [காடு + குருக்கு] |
காட்டுக்குருந்து | காட்டுக்குருந்து kāṭṭukkurundu, பெ.(n.) காட்டெலுமிச்சை (மலை);; Indian wild lime. மறுவ. காட்டு நாரத்தை ம. காட்டுகுருந்த [காடு + குருந்து] |
காட்டுக்குருந்தோட்டி | காட்டுக்குருந்தோட்டி kāṭṭukkurundōṭṭi, பெ.(n.) ஆனைக்குருந்தோட்டி; forest morning mellow (சா.அக);. [காடு+குருந்தோட்டி] |
காட்டுக்குறி | காட்டுக்குறி kāṭṭukkuṟi, பெ.(n.) மாலியப் (வைணவ); பார்ப்பனருள் ஒரு சாராருக்குரிய குடிபெயர்; a sect of vaishnava parpar”. “இவ்வூர் பண்டிதவத்ஸலச்சேரி காட்டுக்குறி பஞ்ளுகிரமவித்தன்”(தெ.கல் தெ.19 கல்.58); “ஸ்ரீகிருஷ்ணபட்டனும் காட்டுக்குறி வெண்ணய கிரமவித்தனும்”(தெ.கல்.தொ.IV கல்-133); (கல்,அகர.);. |
காட்டுக்குறிஞ்சி | காட்டுக்குறிஞ்சி kāṭṭukkuṟiñji, பெ.(n.) குறிஞ்சா; country ipecacuanha (சா.அக.); [காடு+குறிஞ்சி] |
காட்டுக்குளஞ்சி | காட்டுக்குளஞ்சி kāṭṭukkuḷañci, பெ.(n.) காட்டுக்குளாஞ்சி பார்க்க; see kattu-k. kulari(சா.அக.);. [காட்டு+குளாஞ்சி] |
காட்டுக்கூந்தல் | காட்டுக்கூந்தல் kāṭṭukāndal, பெ.(n.) புல்வகை (யாழ். அக.);; a kind of grass. [காடு + கூந்தல்] |
காட்டுக்கொக | காட்டுக்கொக kāṭṭukkoka, பெ.(n.) காட்டில் உலாவும் கொசு wild mosquitoes (சா.அக.);. [காட்டு+கொசு.] |
காட்டுக்கொங்கை | காட்டுக்கொங்கை kāṭṭukkoṅkai, பெ.(n.) ஒரு வகைக் கோங்கு; prussic acid tree – Pygerum wightiana (சா.அக.);. [காட்டு+கொங்கை] |
காட்டுக்கொஞ்சி | காட்டுக்கொஞ்சி kāṭṭukkoñji, பெ.(n.) கொழிஞ்சிச் செடிவகை (மூ.அ.);; Opal Orange. [காடு+ கொழுஞ்சி = காட்டுக்கொழுஞ்சி (கொ.வ);] |
காட்டுக்கொடி | காட்டுக்கொடி kāḍḍukkoḍi, பெ.(n.) 1.கசப்புள்ள ஒருவகைக் கொடி; broom-creeper. 2. நன்னாரி வகை (L);; square branched sarsaparilla. 3. வாயு விளங்கம்; wind-berry climber. [காடு + கொடி.] |
காட்டுக்கொடிமுந்திரிகை | காட்டுக்கொடிமுந்திரிகை gāḍḍuggoḍimundirigai, பெ.(n.) முந்திரி வகை (L.);; jungle grape-vine, [காடு + கொடி + முந்திரிகை] |
காட்டுக்கொட்டி | காட்டுக்கொட்டி kāṭṭukkoṭṭi, பெ.(n.) கொட்டிக்கிழங்கு; a variety of Indian water-lily root (சா.அக.);. [காட்டு+கொட்டி] |
காட்டுக்கொட்டை | காட்டுக்கொட்டை kāṭṭukkoṭṭai, பெ.(n.) காட்டாமணக்கு; physic nut. [காடு + கொட்டை] |
காட்டுக்கொத்தமல்லி | காட்டுக்கொத்தமல்லி kāṭṭukkottamalli, பெ.(n.) காட்டில் விளையும் கொத்தமல்லி, wild coriander (சா.அக.);. [காட்டு+கொத்தமல்லி] |
காட்டுக்கொன்னை | காட்டுக்கொன்னை kāṭṭukkoṉṉai, பெ.(n.) காட்டுக் கொன்றை; wild condray, wight”s inga – Mimosa bigemina. [காட்டு+கொன்றை] இதன் இலையை இட்டு காய்ச்சிய நீரினாற் குட்டம் போம், தலைமயிர் வளரும் (சா.அக.);. |
காட்டுக்கொன்றை | காட்டுக்கொன்றை kāṭṭukkoṉṟai, பெ.(n.) 1.கருங்கொன்றை; rox-bugh’s cassia. 2. மலைக்கொன்றை, hill cassia (சா.அக.); மறுவ. காட்டுக்கொன்னை. [காடு + கொன்றை] |
காட்டுக்கொய்யா | காட்டுக்கொய்யா kāṭṭukkoyyā, பெ.(n.) மலைச் சிறுகொய்யா; wild guava of Ceylon (சா. அக.);. [காடு + கொய்யா] |
காட்டுக்கொள் | காட்டுக்கொள் kāṭṭukkoḷ, பெ.(n.) 1. கருங் காணம் (மூ.அ.);; black horse-gram. 2. காலியாந் துவரை (L.);; black dhal, low twining weed. [காடு + கொள் – காட்டுக்கொள். கொள் = வளைவு வளைந்த காய்.] குதிரைக் கொள்ளைப்போல் இருக்கும், மருந்துக்குப் பயன்படும். |
காட்டுக்கொள்ளி | காட்டுக்கொள்ளி kāṭṭukkoḷḷi, பெ.(n.) தின்றிடந் தீய்ஞ்சான்; a plant c.f. மல்லைப்பூடு (சா.அக.);. [காட்டு+கொள்ளி] |
காட்டுக்கொழுகி | காட்டுக்கொழுகி gāṭṭuggoḻugi, பெ.(n.) சிறு கீரை; pig-greens (சா.அக.); [காடு + கொழுகி] |
காட்டுக்கொழுஞ்சி | காட்டுக்கொழுஞ்சி kāṭṭukkoḻuñji, பெ.(n.) 1. கொள்ளுக்காய் வேளை; purple wild indigo. 2. காட்டெலுமிச்சை; a species of wild lime. [காடு + கொழுஞ்சி] |
காட்டுக்கோங்கு | காட்டுக்கோங்கு kāṭṭukāṅgu, பெ.(n.) கோங்கு மரவகை; prussic-acid tree. [காடு + கோங்கு] |
காட்டுக்கோதிகம் | காட்டுக்கோதிகம் gāṭṭugātigam, பெ.(n.) சிறுகுமிழ்; small Kashmir tree (சா.அக.);. [காடு + கோதிகம்] |
காட்டுக்கோதுமை | காட்டுக்கோதுமை kāṭṭukātumai, பெ.(n.) 1. வாற்கோதுமை; barley or tail wheat. 2.காட்டில் விளையும் கோதுமை; wild wheat. [காடு + கோதுமை] |
காட்டுக்கோரை | காட்டுக்கோரை kāṭṭukārai, பெ.(n.) பெருங்கோரை; large sedge grass (சா. அக.);. [காடு + கோரை.] |
காட்டுக்கோழி | காட்டுக்கோழி kāṭṭukāḻi, பெ.(n.) 1.சம்பங் கோழி ; jungle-fowl. 2. கற்கவுதாரி (M.M.);; common sand-grouse. 3. சாம்பற் காட்டுக்கோழி; grey jungle fowl or Indian woodcock. 4. சிவப்பு காட்டுக் கோழி; red jungle fowl. 5. சிறகுகோழி; red spur fowl(சா.அக.);. ம. காட்டுகோழி; க. காடுகோழி; து. காடுகோரி. [காடு + கோழி] [P] |
காட்டுக்கோவை | காட்டுக்கோவை kāṭṭukāvai, பெ.(n.) 1. பெருங் கோவை; large flowered bryony. 2.இராமகோவை அல்லது கருங்கோவை; Rama’s caper or black caper. [காடு + கோவை] |
காட்டுசாதிக்காய், | காட்டுசாதிக்காய், kāṭṭucātikkāy, பெ.(n.) 1. பொதுவாகக் காட்டில் விளையும் மரங்கள்; forest trees in general. 2. காட்டுச்சாதி பத்திரி; wild mae – Myristica malabarica. 3. பெரிய காட்டு சாதிக்காய்; malabar nutmeg – Myristica malabarica. [காட்டு+ சாதிக்காய்] இதன் உள்சதைப் பற்றை எடுத்து இடித்து கொதிக்க வைத்து மஞ்சள் நிறமான ஓர் எண்ணெய் எடுப்பார்கள். இது வலியில்லா புண்களுக்குப் பூசுவதற்கு உதவும். இதை நல்ல எண்ணெயோடு கலந்து காற்றுப் பிடிப்புக்குப் பூசலாம். எண்ணெய் விளக்கும் எரிக்கலாம் (சா.அக.);. |
காட்டுசெட்டிப்பூ | காட்டுசெட்டிப்பூ kāṭṭuceṭṭippū, பெ.(n.) மாசி பத்திரி; Indian absinth – Artimeslavulgaris (சா.அக.);. |
காட்டுச் சந்தனம் | காட்டுச் சந்தனம் kāṭṭuccandaṉam, பெ.(n.) தேவதாரு என்னும் மரவகை; red cedar. காடு + சந்தனம் – காட்டுச்சந்தனம். சாந்து → சாந்தனம் → சந்தனம்.] |
காட்டுச் சல்லாத்து | காட்டுச் சல்லாத்து kāṭṭuccallāttu, பெ.(n.) சல்லாத்துக் கீரை; garden lettuce or cabbage lettuce (சா.அக.);. [காடு+சல்லாத்து. உனானி மருத்துவத்தில் பயன்படும் இலை.] |
காட்டுச் சாரை | காட்டுச் சாரை kāṭṭuccārai, பெ.(n.) மருகு ; marjoram (சா.அக.); [காடு + சாரை. இதன் எண்ணெய் பல் வலிக்கு மருந்தாகும்] |
காட்டுச்சங்கம் | காட்டுச்சங்கம் kāṭṭuccaṅgam, பெ.(n.) நாகர வண்டு; a kind of beetle (சா.அக.);. [காடு + சங்கம்] |
காட்டுச்சண்பகம் | காட்டுச்சண்பகம் gāṭṭuccaṇpagam, பெ.(n.) நீலகிரி சண்பகப்பூ; white-stalked fruited tulip tree of the Nilgiris. மறுவ. காட்டுச்சம்பங்கி [காடு + சண்பகம் – காட்டுச்சண்பகம். செம் → செம்பகம் → சம்பகம் → சண்பகம்] |
காட்டுச்சதகுப்பை | காட்டுச்சதகுப்பை gāṭṭuccadaguppai, பெ.(n.) சதகுப்பை போலவே இருக்கும் கடைச்சரக்கு. a plant akin to common dill (சா. அக.);. [காடு + சதகுப்பை.] |
காட்டுச்சதுரகள்ளி | காட்டுச்சதுரகள்ளி kāṭṭuccaturakaḷḷi, பெ.(n.) புகை காட்டுதல்; square spurge – Euphorbia antiquorum (சா.அக.);. [காட்டு+சதுரக்கள்ளி] |
காட்டுச்சம்பங்கி | காட்டுச்சம்பங்கி kāṭṭuccampaṅki, பெ.(n.) 1. நீலகிரிச் சண்பகப் பூ white stalked tulip tree of Nilgiris; white champak – Michelia nilgrica. 2. உரோம வாசனி; forest champak – Plumeria aculifolia (சா.அக.);. [காட்டு+ சம்பங்கி] |
காட்டுச்சம்புநாவல் | காட்டுச்சம்புநாவல் kāṭṭuccambunāval, பெ.(n.) காட்டுப் பெருநாவல்; munro’s wax rose apple (சா.அக.);. [காடு + சம்புநாவல்.] |
காட்டுச்சருக்கரை | காட்டுச்சருக்கரை kāṭṭuccarukkarai, பெ.(n.) நிலச் சருக்கரைக் கிழங்கு; ground sugar-root (சா.அக.);. [காடு + சருக்கரை] |
காட்டுச்சாதி | காட்டுச்சாதி kāṭṭuccāti, பெ.(n.) 1. காட்டில் விளையும் மரங்கள்; forest trees in general. காட்டுச்சாதியில் செய்த மேசை (உ.வ.);. 2. காட்டுச் சாதிக்காய்; jungle nutmeg. 3.காட்டுச்சாதி பத்திரி; wild mace. ம. காட்டு சாதி. [காடு + சாதி-காட்டுச்சாதி. சாதிக்காய் மரம்) இது பால் மர வகையைச் சார்ந்ததாகலின் யாதிக்காய் →சாதிக்காய் எனத் திரிந்தது. த. யா→Skt.→ sati த.சாதி] |
காட்டுச்சாதிபத்திரி | காட்டுச்சாதிபத்திரி kāṭṭuccātipattiri, பெ.(n.) 1. பொதுவாகக் காட்டில் விளையும் மரங்கள்; forest trees in general. 2. கான் (வன); சாதிப் பத்திரி forest mace – Myristica horsfieldii (சா.அக.);. [காட்டு+சாதிபத்திரி] இதற்கு வாசனையிராது. |
காட்டுச்சாம்பல் | காட்டுச்சாம்பல் kāṭṭuccāmbal, பெ.(n.) 1. சிறுமர வகை (இலம்பிலி); (L.);; munro’s rose wax apple. 2. காட்டுச் சம்புநாவல் பார்க்க; see _. மறுவ. இலம் பிலி. [காடு + சாம்பல். வெண்ணிறத் தோற்றத்தால் பெயரிடப்பட்ட மரம்.] |
காட்டுச்சாயவேர் | காட்டுச்சாயவேர் kāṭṭuccāyavēr, பெ.(n.) காட்டு இம்பூற்ற செடி; wild chay root (சா.அக.);. மறுவ. பாப்பன் பூண்டு. [காடு + சாயவேர்] |
காட்டுச்சாரணை | காட்டுச்சாரணை kāṭṭuccāraṇai, பெ.(n.) மூக்கரைச் சாரணை; white trianthema (சா.அக.);. [காடு+சாரணை] |
காட்டுச்சார்வளை | காட்டுச்சார்வளை kāṭṭuccārvaḷai, பெ.(n.) மூக்கரனைச் சாரணை, white trianthema – Trianthema decandra (சா.அக.);. காட்டுச்சார்வளை kāṭṭuccārvaḷai, பெ.(n.) காட்டுச் சாரணை பார்க்க; see _. [காடு + சாவளை] |
காட்டுச்சிகை | காட்டுச்சிகை gāṭṭuccigai, பெ.(n.) 1. காட்டுச் சீயக்காய்; sensitive tree. 2 பேய்ச்சீயக்காய்; rusty mimosa (சா.அக.);. [காடு + சிகை] |
காட்டுச்சின்னி | காட்டுச்சின்னி kāṭṭucciṉṉi, பெ.(n.) கான் (வன);ச்சின்னி; a wild species of Indian shrubby copper leaf-Acalypha fruticosa (சா.அக.);. [காட்டு+சின்னி] |
காட்டுச்சிறுகீரை | காட்டுச்சிறுகீரை kāṭṭucciṟuārai, பெ.(n.) காட்டில் விளையும் சிறுகீரை வகை; fine-leaved amarnath. [காடு+சிறுகீரை.] |
காட்டுச்சிறுசாமை | காட்டுச்சிறுசாமை kāṭṭucciṟucāmai, பெ.(n.) காட்டில் விளையும் சாமை; wild small millet – Panicum antipodum (சா.அக.);. [காட்டு+சிறுசாமை] |
காட்டுச்சிறுதுளசி | காட்டுச்சிறுதுளசி kāṭṭussiṟuduḷasi, பெ.(n.) சிறிய இலைகள் உள்ள ஒருவகைத் துளசிச் செடி; a variety of basic. ம. காட்டுச்செறு துளசி. [காடு + சிறு + துளசி] |
காட்டுச்சிலந்தி | காட்டுச்சிலந்தி kāṭṭuccilandi, பெ.(n.) காட்டுச் செருந்தி; forest gold champak (சா.அக.);. [காடு + சிலந்தி] |
காட்டுச்சிவிகை | காட்டுச்சிவிகை gāṭṭuccivigai, பெ.(n.) பாடை (திருமந்.153);; bier. “காட்டுச்சிவிகையொன்றேறி” (திருமந்:197);. [காடு+ சிவிகை] |
காட்டுச்சீயக்காய் | காட்டுச்சீயக்காய் kāṭṭuccīyakkāy, பெ.(n.) 1. காட்டுச்சிகை, sensitive tree – Mimosarubicaulis. 2. பேய்ச்சீயக்காய்; rusty mimosa; narrow-leaved soap pod – Аcaciapennata (சா.அக.);. [காட்டு+சியக்காய்] |
காட்டுச்சீரகம் | காட்டுச்சீரகம் gāṭṭuccīragam, பெ.(n.) சிற்றிலைச் சீரகம்; wild cumin (சா.அக.);. ம. காட்டுசீரகம் மறுவ. நெய்ச்சிட்டி [காடு + சீரகம் + கசப்புச் சுவையுடையது. பலவகை மருத்துவக் குணமுடையது] |
காட்டுச்சீரகவள்ளி | காட்டுச்சீரகவள்ளி gāṭṭuccīragavaḷḷi, பெ.(n.) 1. காயா வள்ளி; humped yam (சா.அக.);. 2. காட்டுக்காய் வள்ளி-1 பார்க்க; see _. (சா.அக.);. [காடு + சீரகவள்ளி] |
காட்டுச்சுண்டெலி | காட்டுச்சுண்டெலி kāṭṭuccuṇṭeli, பெ.(n.) காட்டில் வாழும் கண்டெலி, forest mouse Mus rodentia. [காட்டு+கண்டெலி) இது உனாணி மருத்துவத்தில் மிகுதியாக மருந்திற்குப் பயன்படும் (சா.அக.);. |
காட்டுச்சுண்டை | காட்டுச்சுண்டை kāṭṭuccuṇṭai, பெ.(n.) ஒரு வகை சிறுமரம்; Indian tree potato. [காடு + சுண்டை] காய் பழுத்து முதிர்ந்ததும் தானாகவே உள்ளீரம் சுண்டிச் சுருக்கம் விழுந்து சுருங்கிப் போவதால் சுண்டைக்காய் எனப் பெயர் பெற்றது. |
காட்டுச்சுரம் | காட்டுச்சுரம் kāṭṭuccuram, பெ.(n.) மலைச்சுரம்; malarial fever(சா.அக.);. [காட்டு+கரம்] |
காட்டுச்சுரை | காட்டுச்சுரை kāṭṭuccurai, பெ.(n.) கசப்புச்சுரை: false calabash (சா.அக.);. [காடு + சுரை] |
காட்டுச்சுரைக்காய் | காட்டுச்சுரைக்காய் kāṭṭuccuraikkāy, பெ.(n.) 1.சுரை வகை; a species of bottle gourd. 2.புளிச்ச வகை (வின்);; deccan hemp. 3. முட்புளிச்சை (M.M.83);; thorny hemp bendy, herbaceous plant. [காடு + காய்ச்சுரை.] |
காட்டுச்சுள்ளி | காட்டுச்சுள்ளி kāṭṭuccuḷḷi, பெ.(n.) 1. ஒருவகை முள்ளி; Mysore prickly nail-dye. 2. சிறு விறகு; small tie wood. [காடு+சுள்ளி] |
காட்டுச்சூட்டி | காட்டுச்சூட்டி kāṭṭuccūṭṭi, பெ.(n.) மந்திர விச்சைக்குப் பயன்படும் பூடுவகை (M.M.);; mandrake. [காடு+குட்டி] |
காட்டுச்சேங்கொட்டை | காட்டுச்சேங்கொட்டை kāṭṭuccēṅgoṭṭai, பெ.(n.) பெரியசேங்கோட்டை; glabrous marking nut (சா.அக.);. மறுவ. தேன்சேரான் [காடு + சேங்கொட்டை] |
காட்டுச்சேனா | காட்டுச்சேனா kāṭṭuccēṉā, பெ.(n.) நிலவாவிரையில் ஒருவகை; a species of senna growing wild. [காடு+சேனா] |
காட்டுச்சேனை | காட்டுச்சேனை kāṭṭuccēṉai, பெ.(n.) நிலவா விரையில் ஒருவகை (வின்.);; a species of senna growing wild. ம. காட்டுச்சேன [காடு+சேனை-காட்டுச்சேனை.] |
காட்டுச்சேப்பங்கீரை | காட்டுச்சேப்பங்கீரை kāṭṭuccēppaṅārai, பெ.(n.) அடிக்காம்பு வெண்மையாகவும், இலை நீள்வட்ட மாகவும் உள்ள சமையலுக்குதவும் கீரை; a vegetable green with white pedicle at the bottom; leaves oval and edible (சா.அக.);. [காடு + சேப்பங்கீரை.] |
காட்டுச்சேப்பன் | காட்டுச்சேப்பன் kāṭṭuccēppaṉ, பெ.(n.) காட்டில் விளையும் சேப்பங் கிழங்கு: Egyptiam yam – Colocasia antiquorum (சா.அக.);. [காடு + சேப்பன் சேம்பு→அசேப்பன்.] |
காட்டுச்சேம்பு | காட்டுச்சேம்பு kāṭṭuccēmbu, பெ.(n.) காட்டில் விளையும் சேப்பங்கிழங்கு; Egyptian yam, jungle variety of colo casia (சா.அக.);. ம. காட்டுச்சேம்பு [காடு + சேம்பு] |
காட்டுச்சேரான் | காட்டுச்சேரான் kāṭṭuccērāṉ, பெ.(n.) கருஞ் சாரை; jungle marking nut (சா.அக.);. [காடு +சேரான்] |
காட்டுச்சேவல் | காட்டுச்சேவல் kāṭṭuccēval, பெ.(n.) காட்டில் இருக்கும் சேவற் கோழி, woodcock. [காட்டு+ சேவல்.] இதன் இறைச்சி அதிக சூடு, தாது ஊட்டத்தைத் தரும். அழற்சியைப் போக்கும். வியர்வையை உண்டாக்கும்; மேலும் வலிமையைத் தரும் (சா.அக.);. |
காட்டுச்சோதி | காட்டுச்சோதி kāṭṭuccōti, பெ.(n.) சோதி மரம்; an unidentified tree supposed to be luminous in the dark (சா.அக.);. |
காட்டுச்சோளம் | காட்டுச்சோளம் kāṭṭuccōḷam, பெ.(n.) அடவிச் சோளம்; wild sage, wild cholum (சா.அக.);. ம. காட்டுசோளம் [காடு + சோளம்] |
காட்டுடுகு | காட்டுடுகு gāḍḍuḍugu, பெ.(n.) ஒடுகு மரம் (கருப்பு ஆச்சா);; twin-leaved false copaiba. மறுவ. காராச்சா [காடு + உடுகு] |
காட்டுண்ணி | காட்டுண்ணி kāṭṭuṇṇi, பெ.(n.) காட்டில் காணப்படும் ஒரு வகை நஞ்சுண்ணி; a poisonous, tick or blood sucker found in forests. [காட்டு+உண்ணி] இது கடித்தால் வீக்கம், தடிப்பு இவைகள் காணும் (சா.அக.);. |
காட்டுத் துரிஞ்சில் | காட்டுத் துரிஞ்சில் kāṭṭutturiñjil, பெ.(n.) கற்றுரிஞ்சில்; stone sirissa (சா.அக.);. [காடு+துரிஞ்சில்] |
காட்டுத்தகரை | காட்டுத்தகரை gāṭṭuttagarai, பெ.(n.) நாற்றத் தகரை (மூ.அ.);; wild fetid cassia. ம. காட்டுதகர. [காடு + தகரை] |
காட்டுத்தனம் | காட்டுத்தனம் kāṭṭuttaṉam, பெ.(n.) முருட்டுத் தன்மை; recklessness, being rude and uncivilised rusticity. காட்டுத்தனமாகக் காரை ஒட்டுவான் (உ.வ.);. [காடு + தனம்-காட்டுத்தனம். தன்மை → தனம்] |
காட்டுத்தமரத்தை | காட்டுத்தமரத்தை kāṭṭuttamarattai, பெ.(n.) மலைத் தமரத்தை; hill carambola (சா.அக.);. [காடு+தமரத்தை] |
காட்டுத்தம்பட்டன் | காட்டுத்தம்பட்டன் kāṭṭuttambaṭṭaṉ, பெ.(n.) காட்டுவாளவரை; wild sword-bean. [காடு+தம்பட்டன்] |
காட்டுத்தர்பார் | காட்டுத்தர்பார் kāṭṭuttarpār, பெ.(n.) வரைமுறை இல்லாமல் தன்னிச்சையாகச் செயல்படும் போக்கு (நிர்வாகம்);, anarchy. [காட்டு+தர்பார்] காட்டுத்தர்பார் kāṭṭuttarpār, பெ.(n.) ஒரு முறையும் இன்றித் தன்னிச்சையாக நடைபெறும் ஆட்சி; anarchy. குற்றவாளியை விட்டுக் குற்றம் சுமத்தியவனைத் தண்டிக்கும் காட்டுத்தர்பார் (உ.வ.);. [காடு + தர்பார் + காட்டாட்சி] |
காட்டுத்தர்ப்பை | காட்டுத்தர்ப்பை kāṭṭuttarppai, பெ.(n.) முழு முதல் (பிரம); தர்ப்பைப் புல்; cock”s skin grass – Panicum crusgalli (சா.அக);. [காட்டு+தர்ப்பை] |
காட்டுத்தாரா | காட்டுத்தாரா kāṭṭuttārā, பெ.(n.) வாத்துவகை (யாழ்ப்);; wild duck. ம. காட்டுதாராவு [காடு + தாரா] [P] |
காட்டுத்தாளி | காட்டுத்தாளி kāṭṭuttāḷi, பெ.(n.) கொடிவகை (மூ.அ.);; purple moon flower. [காடு + தாளி] |
காட்டுத்தினை | காட்டுத்தினை kāṭṭuttiṉai, பெ.(n.) தினைவகை (மூ.அ.);; forest millet. [காடு+ தினை] |
காட்டுத்திப்பிலி | காட்டுத்திப்பிலி kāṭṭuttippili, பெ.(n.) திப்பிலி வகை (L.);; long pepper. ம. காட்டுதிப்பிலி. [காடு + திப்பிலி] |
காட்டுத்திப்பிலிக்கொடி | காட்டுத்திப்பிலிக்கொடி kāṭṭuttippilikkoṭi, பெ.(n.) சிறு மூலம்; long pepper – Piper longum (சா.அக.);. [காட்டு+திப்பிலி+கொடி.] |
காட்டுத்தீ | காட்டுத்தீ kāṭṭuttī, பெ.(n.) காட்டில் பற்றிய பெருந்தீ; forest conflagration. ம. காட்டுத்தீ ; க. காடுகிச்சு, காடுரி. [காடு + தீ] |
காட்டுத்துத்தி | காட்டுத்துத்தி kāṭṭuttutti, பெ.(n.) துத்திவகை. (M.M.399);; bristly-leaved Jew’s mallow. ம. காட்டுதுத்தி. [காடு + துத்தி] |
காட்டுத்தும்பை | காட்டுத்தும்பை kāṭṭuttumbai, பெ.(n.) ஒருவகைச் செடி; wild dead nettle. ம. காட்டுதும்ப. [காடு + தும்பை] |
காட்டுத்தும்மட்டி | காட்டுத்தும்மட்டி kāṭṭuttummaṭṭi, பெ.(n.) பேய்த்தும்மட்டி; wild melon. ம. காட்டுதும்மட்டி [காடு + தும்மட்டி] |
காட்டுத்துருக்கம் | காட்டுத்துருக்கம் kāṭṭutturukkam, பெ.(n.) காட்டுக் குந்துருக்கம்; forest dammer (சா.அக.);. [காட்டு+சதுருக்கம்] |
காட்டுத்துளசி | காட்டுத்துளசி kāṭṭuttuḷasi, பெ.(n.) துளசி வகை (மூ.வ.);; wild basil. ம. காட்டுத்துளசி [காடு+தும்மட்டி.] [P] |
காட்டுத்துழாய் | காட்டுத்துழாய் kāṭṭuttuḻāy, பெ.(n.) 1. இலட்சுமித் துளசி; wild basil or black basil – Ocimum adscendens. 2. கருந்துளசி; a black variety of holy basil found in forests. 3. நாய்த் துளசி; white basil or dog basil – Ocimum canum (சா.அக.);. [காட்டு+துழாய்] |
காட்டுத்துவரை | காட்டுத்துவரை kāṭṭuttuvarai, பெ.(n.) 1. துவரை வகை (மூ.வ.);; jungle dhal. 2.இரும்புலி; CochinChina eboney. ம. காட்டுத்துவர [காடு + துவரை] |
காட்டுத்தெங்கு | காட்டுத்தெங்கு kāṭṭutteṅgu, பெ.(n.) பனை வகையைச் சேர்ந்த ஒரு வகை மரம்; single leaved sugar palam. ம.காட்டுதெங்வு [காடு +தெங்கு] |
காட்டுத்தேக்கு | காட்டுத்தேக்கு kāṭṭuttēkku, பெ.(n.) சிறுதேக்கு; small kind of teak (சா. அக.);. ம. காட்டுதேக்கு [காடு+ தேக்கு] |
காட்டுத்தேன். | காட்டுத்தேன். kāṭṭuttēṉ, பெ.(n.) காட்டில் கட்டும் தேன்; honey found collected in forests, wild honey or wood honey (சா. அக.);. [காடு + தேன்.] |
காட்டுத்தேற்றா | காட்டுத்தேற்றா kāṭṭuttēṟṟā, பெ.(n.) காட்டுத் தேற்றான் கொட்டை; forest water-cleaning nut (சா.அக);. [காடு+தேற்றா] |
காட்டுத்தொட்டியன் | காட்டுத்தொட்டியன் kāṭṭuttoṭṭiyaṉ, பெ.(n.) நரி எலி முதலியவற்றை உண்ணும் தொட்டியரினத்தைச் சார்ந்தவன் (நெல்லை);; a sub-division of the _. caste, who eat jackals and rats. [காடு+ தொட்டியன்] |
காட்டுத்தொனி | காட்டுத்தொனி kāṭṭuttoṉi, பெ.(n.) 1.பிண்டி; tree – Saraca indica. 2. நெட்டிலிங்கம்; Indian mast-tree (சா.அக.);. [காட்டு+தொனி] |
காட்டுநத்தை | காட்டுநத்தை kāṭṭunattai, பெ.(n.) காட்டில் வாழும் நத்தை; a kind of snail found in forests (சா. அக.);. [காடு + நத்தை] |
காட்டுநறுவள்ளி | காட்டுநறுவள்ளி kāṭṭunaṟuvaḷḷi, பெ.(n.) காட்டுக் காய்வள்ளி பார்க்க; see _.(சா.அக);. [காடு+நறுவள்ளி] |
காட்டுநறுவிலி | காட்டுநறுவிலி kāṭṭunaṟuvili, பெ.(n.) பெரு நறுவிலி; large or broad-leaved sebesten(சா. அக.);. [காடு + நறுவிலி] |
காட்டுநாடு | காட்டுநாடு kāṭṭunāṭu, பெ.(n.) களவேள்வி நாடு; the kasavé/vi city (அபி.சிந்);. [காட்டு+நாடு] காட்டுநாடு kāṭṭunāṭu, பெ.(n.) காட்டினுள்ளாகிய குடிவாழ்பகுதி; in habited region in a forest. “காட்டுநாட் டேமென”(புறநா.150 19);. [காடு +நாடு] |
காட்டுநாபி | காட்டுநாபி kāṭṭunāpi, பெ.(n.) காட்டுக் கலப்பைக் கிழங்கு; forest plough root (சா. அக.);. [காடு + நாபி] |
காட்டுநாயகம் | காட்டுநாயகம் kāṭṭunāyakam, பெ.(n.) கிரந்தி நாயகம்; a lant supposed to cure syphitic sores, and glandular swellings. it is so called from its great usefulness in medicine as a forest plant (சா.அக.);. [காட்டு+நாயகம்] |
காட்டுநாயகர் | காட்டுநாயகர் gāṭṭunāyagar, பெ.(n.) கேரளத்து மலபார் பகுதியில் வாழும் ஒரு இனத்தார்; name of a hill tribe of North Malabar. ம. காட்டுநாயகன் [காடு +நாயகர்] |
காட்டுநாய் | காட்டுநாய் kāṭṭunāy, பெ.(n.) காட்டில் வாழும் நாய்; a wild-dog. ம. காட்டுநாய், காட்டுபட்டி. [காடு +நாய்] |
காட்டுநாரகம் | காட்டுநாரகம் gāṭṭunāragam, பெ.(n.) காட்டுக் கொழுஞ்சி; raceme-floweredwild lime (சா. அக.);. [காடு + நாரகம்] |
காட்டுநாரங்கம் | காட்டுநாரங்கம் kāṭṭunāraṅgam, பெ.(n.) நாயெலுமிச்சை; dog wood apple (சா.அக);. [காடு + நாரங்கம்] |
காட்டுநாரஞ்சி | காட்டுநாரஞ்சி kāṭṭunārañji, பெ.(n.) குருந்து obtuse-leaved wild lime (சா.அக);. [காடு + நாரஞ்சி] |
காட்டுநாரத்தை | காட்டுநாரத்தை kāṭṭunārattai, பெ.(n.) காட்டு நாரத்தை (மலை);; Indian wild lime. ம. காட்டு நாரத்தை [காடு + நாரத்தை] |
காட்டுநிலாவிரை | காட்டுநிலாவிரை kāṭṭunilāvirai, பெ.(n.) வெள்ளைப் பொன்னாவிரை; Italian senna (சா.அக.);. [காடு +நிலம் + ஆவிரை] |
காட்டுநீரடிமுத்து | காட்டுநீரடிமுத்து kāṭṭunīraṭimuttu, பெ.(n.) காட்டு நீர் வெட்டி; forest tamana oil tree – Hydnocarpus venenata (சா.அக.);. [காட்டு+நீரடி+முத்து.] |
காட்டுநீரூறி | காட்டுநீரூறி kāṭṭunīrūṟi, பெ.(n.) மணிப்புல்லாஞ்சி ; Indian snow berry (சா.அக.);. [காடு + நீருறி] |
காட்டுநூறன்கிழங்கு | காட்டுநூறன்கிழங்கு kāṭṭunūṟaṉkiḻṅgu, பெ.(n.) காட்டுக்கிழங்கு வகை; forest prickly yam (சா.அக.);. [காடு + நூறன்கிழங்கு] |
காட்டுநெரிஞ்சில் | காட்டுநெரிஞ்சில் kāṭṭuneriñjil, பெ.(n.) ஆனை நெரிஞ்சில்; elephant _. (சா.அக.);. மறுவ. காட்டுக்குருக்கு காட்டுநெருஞ்சி. ம. காட்டுநெரிஞ்ஞில் [காடு + நெரிஞ்சில்.] |
காட்டுநெல் | காட்டுநெல் kāṭṭunel, பெ.(n.) காட்டில் வளரும் நெல்; wild paddy. மறுவ. காட்டுநெல்லு ம. காட்டுநெல்லு [காடு + நெல்] |
காட்டுநெல்லி | காட்டுநெல்லி kāṭṭunelli, பெ.(n.) நெல்லிவகை (மூ.அ);; emblic myrobalan. ம. காட்டுநெல்லி. [காடு + நெல்லி] |
காட்டுநேர்வாளம் | காட்டுநேர்வாளம் kāṭṭunērvāḷam, பெ.(n.) மலையாமணக்கு; coral plant. [காடு + நேர்வாளம் – காட்டு நேர்வாளம் நீர்வாளம் → நேர்வாளம். மலையாமணக்குக்குக் காட்டு நீர்வாளம் என்னும் பெயரும் உண்டு.] |
காட்டுநொச்சி | காட்டுநொச்சி kāṭṭunocci, பெ.(n.) 1.நொச்சி மர வகை; tall chaste tree. 2. நீர்நொச்சி: water peacock’s foot tree. ம. காட்டுநொச்சி மறுவ. மயிலடி நொச்சி [காடு + நொச்சி] |
காட்டுநோய் | காட்டுநோய் kāṭṭunōy, பெ.(n.) மாட்டுக்கு ஆண்டின் முதல் மழையில் முளைக்கும் புல்லினால் ஏற்படும் கழிச்சல் நோய்; dysentery amoung cattle due to eating the first-grown grass after the annual rain. க. காடுரோக (கெட்டநோய்); [காடு + நோய்] |
காட்டுனா | காட்டுனா kāṭṭuṉā, பெ.(n.) மயிலைமரம்; peacock’s foot tree (சா.அக.);. [காடு +உனா] |
காட்டுபூவரசு | காட்டுபூவரசு kāṭṭupūvarasu, பெ.(n.) ஒரு வகை பூவரசு; false fern tree. ம. காட்டுபூவரசு: க. காடுகூவரசு; [காடு + பூவரசு] |
காட்டுப்பசு | காட்டுப்பசு kāṭṭuppasu, பெ.(n.) காட்டா பார்க்க; see _. Skt. pasu → த.பசு. [காடு + பக] [P] |
காட்டுப்பச்சிலை | காட்டுப்பச்சிலை kāṭṭuppaccilai, பெ.(n.) காட்டு வெள்ளங்கு என்னும் மரவகை; forest rose wood (சா.அக);. [காடு + பச்சிலை] |
காட்டுப்பச்சைப்பயிறு | காட்டுப்பச்சைப்பயிறு kāṭṭuppaccaippayiṟu, பெ.(n.) காட்டுப்பாசிப்பயிறு ; wild green gram (சா.அக.);. [காடு + பச்சைப்பயிறு] |
காட்டுப்பஞ்சு | காட்டுப்பஞ்சு kāṭṭuppañju, பெ.(n.) காட்டிலவு (L.);; false tragacanth. [காடு + பஞ்சு] |
காட்டுப்படை | காட்டுப்படை kāḍḍuppaḍai, பெ.(n.) காடுவாழ் மக்களினின்று திரட்டப்பெற்ற படை (குறள், 762, உரை]; forest-force, one of six kind of forces. [காடு + படை] |
காட்டுப்பனச்சி | காட்டுப்பனச்சி kāṭṭuppaṉacci, பெ.(n.) காட்டுக்கறிவேப்பிலை பார்க்க; see kattu-k-kari-Véppilas (சா.அக);. |
காட்டுப்பன்றி | காட்டுப்பன்றி kāṭṭuppaṉṟi, பெ.(n.) வாயின் இருபுறமும் வெளியே நீண்டிருக்கும். இரு கோரைப்பற்களைக் கொண்ட பன்றி வகை (பதார்த்த, 854);; wild boar. மறுவ. மிறுதாறு ம. காட்டுபன்னி; க. காடகந்தி [காடு + பன்றி] [P] |
காட்டுப்பயறு | காட்டுப்பயறு kāṭṭuppayaṟu, பெ.(n.) பயறுவகை; wild green gram. ம. காட்டுபயறு [காடு + பயறு] |
காட்டுப்பயற்றங்கொடி | காட்டுப்பயற்றங்கொடி kāḍḍuppayaṟṟaṅgoḍi, பெ.(n.) காட்டுத்தட்டைப் பயற்றின் கொடி; kidney bean creeper (சா. அக.);. [காடு+பயற்றங்கொடி] |
காட்டுப்பயிர் | காட்டுப்பயிர் kāṭṭuppayir, பெ.(n.) 1. தானே விளையும் பயிர் (வின்.);; wild uncultivated crops, vegetables that grow of themselves. 2.புன்செய்ப் பயிர் (இ.வ.);; dry crop. 3. புல்; grass. க. காடஅசறு [காடு + பயிர்] |
காட்டுப்பருத்தி | காட்டுப்பருத்தி kāṭṭupparutti, பெ.(n.) 1. காட்டிலவு; false tragacanth. 2.கத்தூரி வெண்டை (l.p.);; musk mallow. 3. மலை வெண்டை; hill rose mallow (சா.அக.);. ம. காட்டுப்பருத்தி ;க. காடுகத்தி மறுவ. காட்டுப்பஞ்சு. [காடு + பருத்தி] |
காட்டுப்பலம் | காட்டுப்பலம் kāṭṭuppalam, பெ.(n.) சவ்வரிசி; sago (சா.அக.);. [காடு + பலம்] |
காட்டுப்பலா | காட்டுப்பலா kāṭṭuppalā, பெ.(n.) 1. பலா, jungle jack tree – Artocarpus hirsuta. 2. மலைப்பலா; mountain jack – Nauclea purpures (சா.அக.);. [காட்டு+பலா] காட்டுப்பலா kāṭṭuppalā, பெ.(n.) பலாவகை; jungle jack. மறுவ. கானற்பலா [காடு +பலா-காட்டுப்பலா] |
காட்டுப்பலிதம் | காட்டுப்பலிதம் kāṭṭuppalitam, பெ.(n.) கருவாப் பட்டை; bark of small cinnamon – Cinnamomum verum (&m. 9,5.);. [காட்டு+பலிதம்] |
காட்டுப்பழுபாகல் | காட்டுப்பழுபாகல் kāṭṭuppaḻupākal, பெ.(n.) பழுபாகல்; buffalo carolah; prickly carolah – Momordica hispida (சா.அக);. [காட்டு+பழுபாகல்] |
காட்டுப்பாகல் | காட்டுப்பாகல் kāṭṭuppākal, பெ.(n.) பழுபாகல் (மூ.அ.);; prickly carolah. [காடு + பாகல்] |
காட்டுப்பாகிகம் | காட்டுப்பாகிகம் kāṭṭuppākikam, பெ.(n.) குறண்டி; corandy – Lepidagathis Scariosa (சாஅக);. |
காட்டுப்பாதை | காட்டுப்பாதை kāṭṭuppātai, பெ.(n.) 1.காட்டிற் செல்லும் வழி; path in jungles. 2. நாட்டுப்புறத்து வழி; country track. [காடு + பாதை] |
காட்டுப்பாலை | காட்டுப்பாலை kāṭṭuppālai, பெ.(n.) வெட்பாலை; downy oleander (சா. அக.);. [காடு + பாலை] |
காட்டுப்பாலை வள்ளி | காட்டுப்பாலை வள்ளி kāṭṭuppālaivaḷḷi, பெ.(n.) ஒரு வகை காட்டு மூலிகை; a forest milk creeper. (சா.அக.); [காடு + பாலைவள்ளி] |
காட்டுப்பால் வள்ளி | காட்டுப்பால் வள்ளி kāṭṭuppālvaḷḷi, பெ.(n.) ஒரு காட்டு மூலி; a forest milk creeper – Cryptolepis bucbanania (சா.அக.);. ” [காட்டு+பால்வள்ளி] |
காட்டுப்பின்னை | காட்டுப்பின்னை kāṭṭuppiṉṉai, பெ.(n.) 1. கேரள (மலையாள);த்தில் வளரும் புன்னை மரம்; Malabar poon – Calophyllum tomentosum, 2. காட்டுப் புன்னை மரம்; forest poon tree – Rhizophora mucronata (சா.அக.);. [காட்டு+பின்னை.] |
காட்டுப்பிரசினம் | காட்டுப்பிரசினம் kāṭṭuppiraciṉam, பெ.(n.) பிணங்களை எரித்தற்குரிய (அபரக்கிரியைக்குரிய); மந்திரமடங்கிய மறைப்பகுதி (வேதப்பகுதி);; section of the vèdaconsisting mostly of mantras used in funeral rites (செ.அக.);. [காட்டு+Skt, பிரசினம்] |
காட்டுப்பிரண்டை | காட்டுப்பிரண்டை kāṭṭuppiraṇṭai, பெ.(n.) பிரண்டைவகை (L.);; pedate seven-leaved vine. ம. காட்டுப்பிரண்ட [காடு + பிரண்டை] [P] |
காட்டுப்பிரா | காட்டுப்பிரா kāṭṭuppirā, பெ.(n.) காட்டுப்பிராய் பார்க்க; see kattu-p-piray (சா.அக.);. |
காட்டுப்பிராயம் | காட்டுப்பிராயம் kāṭṭuppirāyam, பெ.(n.) காட்டில் வளரும் பிராய் மரம்; cododepas Calycinum (சா.அக.);. |
காட்டுப்பிராய் | காட்டுப்பிராய் kāṭṭuppirāy, பெ.(n.) மரவகை (பதார்த்த. 117);; a species of mercury. [காடு + பிராய்] |
காட்டுப்பிள்ளை | காட்டுப்பிள்ளை kāṭṭuppiḷḷai, பெ(n.) ஆதரவற்ற குழந்தை (வின்.);; a neglected orphan, foundling. [காடு + பிள்ளை] |
காட்டுப்பீ | காட்டுப்பீ kāṭṭuppī, பெ.(n.) குழந்தை பிறந்தவுடன் கழிக்கும் உடற்கழிவு (மலம்); (வின்.);; first black excrement of a new-born child or calf. [காடு + பீ] |
காட்டுப்புகையிலை | காட்டுப்புகையிலை gāṭṭuppugaiyilai, பெ.(n.) புகையிலை வகை; wild tobacco. ம. காட்டுபுகையில [காடு + புகை + இலை.] |
காட்டுப்புங்கிகம் | காட்டுப்புங்கிகம் kāṭṭuppuṅkikam, பெ.(n.) திரளங் கொடி; an unidentified Creeper (சா.அக.);. [காட்டு+புங்கிகம்.] |
காட்டுப்புங்கு | காட்டுப்புங்கு kāṭṭuppuṅgu, பெ.(n.) மணிப்புங்கு; rusty soap-nut (சா. அக.);. [காடு + புங்கு] |
காட்டுப்புடல் | காட்டுப்புடல் kāḍḍuppuḍal, பெ.(n.) பேய்ப்புடல்; devils gourd (சா. அக.);. [காடு + புடல்] |
காட்டுப்புத்தி | காட்டுப்புத்தி kāṭṭupputti, பெ.(n.) அறியாமை, மூடவறிவு (வின்.);; stupidity, senselessness. [காடு + புத்தி-காட்டுப்புத்தி த. புலம் புந்தி → Skt. buddhi, ? த.புத்தி] |
காட்டுப்புன்னை | காட்டுப்புன்னை kāṭṭuppuṉṉai, பெ.(n.) சேர நாட்டில் வளரும் நீண்ட மரவகை (L.);; Malabarpoon. ம. காட்டுபுன்ன [காடு + புன்னை] |
காட்டுப்புரசு | காட்டுப்புரசு kāṭṭuppurasu, பெ.(n.) வெள்ளைப் புரசு; bastard satin wood (சா. அக.);. [காடு + புரசு] |
காட்டுப்புறா | காட்டுப்புறா kāṭṭuppuṟā, பெ.(n.) 1. கபோதம் என்னும் புறாவகை (மூ.அ.);; wood-pigeon. 2. காட்டில் வாழும் ஒருவகைப் புறா; turtle-dove. ம. காட்டுப்ராவு [காடு+ புறா.] [P] |
காட்டுப்புளி | காட்டுப்புளி kāṭṭuppuḷi, பெ.(n.) கொடுக்காய்ப் புளி; sweet babool (சா. அக.);. [காடு + புளி] |
காட்டுப்புளிச்சை | காட்டுப்புளிச்சை kāṭṭuppuḷiccai, பெ.(n.) 1. புளிச்சக்கீரை (மூ.அ.);; Indian brown hemp. 2. முட்புளிச்சை; thorny hemp bendy. [காடு + புளிச்சை] |
காட்டுப்புளிச்சைமரம் | காட்டுப்புளிச்சைமரம் kāṭṭuppuḷiccaimaram, பெ.(n.) ஒரு வகைப் புளிச்சை மரம், a tree – Aatidesma acida (சா.அக.);. [காட்டு+புளிச்சை+மரம்.] |
காட்டுப்பூசுணி | காட்டுப்பூசுணி kāṭṭuppūcuṇi, பெ.(n.) காட்டுப் பறங்கிக்கொடி; jungle pumpkin creeper (சா. அக.);. [காடு+ பூசுணி] |
காட்டுப்பூனை | காட்டுப்பூனை kāṭṭuppūṉai, பெ.(n.) கோழி களைத் தெரியாமல் தூக்கிப்போகும் பூனை; wild cat. ம. காட்டுபூச்ச. காட்டுபோக்கன்;க. காடுபெக்கு: பட காடுகொத்தி. [காடு + பூனை] [P] காட்டுப்பூனை |
காட்டுப்பூலாங்கிழங்கு | காட்டுப்பூலாங்கிழங்கு kāṭṭuppūlāṅgiḻṅgu, பெ.(n.) காட்டுக் கருப்பூரக் கிச்சிலிக் கிழங்கு; wild orangeroot. [காடு+ பூலாங்கிழங்கு] |
காட்டுப்பூலிகம் | காட்டுப்பூலிகம் gāṭṭuppūligam, பெ.(n.) ஒரு வகை காட்டுப்புல்; a variety of wild grass (சா.அக.);. மறுவ. பினசப்புல் [காடு + பூலிகம்] |
காட்டுப்பூளை | காட்டுப்பூளை kāṭṭuppūḷai, பெ.(n.) 1.பாறையிலவு; large-flowered and capsuled silk cotton. 2.பூளைக்கொடி; forest wool plant (சா.அக.);. ம. காட்டுபூள [காடு + பூளை] |
காட்டுப்பூவன் | காட்டுப்பூவன் kāṭṭuppūvaṉ, பெ.(n.) பூவம், eye-ball tree – Nephelium longasa (சா.அக.);. [காட்டு+பூவன்.] |
காட்டுப்பூவம் | காட்டுப்பூவம் kāṭṭuppūvam, பெ.(n.) பூவம் மரவகை (L.);; longan. [காடு + பூவம்] |
காட்டுப்பூவாணன் | காட்டுப்பூவாணன் kāṭṭuppūvāṇaṉ, பெ(n.) நெல் வகை (A);; a kind of paddy. [காடு+ பூவாணன்] |
காட்டுப்பெண்சாதி | காட்டுப்பெண்சாதி kāṭṭuppeṇcāti, பெ.(n.) வைப்பாட்டி; concubine. பெண்சாதி வேம்பும் காட்டுப் பெண்சாதி கரும்பும் (வின்.);. [கர்டு +பெண்சாதி.] |
காட்டுப்பேய்ப்புடல் | காட்டுப்பேய்ப்புடல் kāḍḍuppēyppuḍal, பெ.(n) காட்டுப்புடல் பார்க்க; see _. [காடு + பேய்+புடல்] |
காட்டுப்பேரிகை | காட்டுப்பேரிகை gāṭṭuppērigai, பெ.(n) கிலுகிலுப்பை; a species of rattle-wort (சா.அக.);. [காடு + பேரிகை] |
காட்டுமசகம் | காட்டுமசகம் kāṭṭumacakam, பெ.(n.) காட்டுக்கொசு; a species of mosquito. இது கடித்த இடத்தில் நமைச்சலும், விக்கமும், எரிச்சலும் உண்டாகும்(சா.அக.);. [காட்டு+மசகம்.] |
காட்டுமஞ்சள் | காட்டுமஞ்சள் kāṭṭumañjaḷ, பெ.(n.) ஒருவை மஞ்சள்; wild turmeric. ம. காட்டு மஞ்ஞள் [காடு + மஞ்சள்] |
காட்டுமனிதன் | காட்டுமனிதன் kāṭṭumaṉitaṉ, பெ.(n.) 1. நாகரிகமற்றவன்; wild, uncivilized man. 2.வாலில்லாக் குரங்கு; man of the woods, chimpanzee, orangoutang (செ.அக.);. [காட்டு+மனிதன். மனுஷன் →அமனுடன்→ அமனிடன்→ அமனிதன்.) காட்டுமனிதன் kāṭṭumaṉidaṉ, பெ.(n.) காட்டு மாந்தன் பார்க்க; see _. ம. காட்டுமனுழ்யன் [காடு + மனிதன்] |
காட்டுமனோரஞ்சிதம் | காட்டுமனோரஞ்சிதம் kāṭṭumaṉōrañcitam, பெ.(n.) மர மனோரஞ்சிதம்; forest cananga tree – Cycas circinalis (சா.அக.);. [காட்டு+மனோரஞ்சிதம்] |
காட்டுமயிரங்காய் | காட்டுமயிரங்காய் kāṭṭumayiraṅgāy, பெ.(n.) காட்டு மாங்காய்; jungle mango (சா.அக.); [காடு +(மயிலங்காய்); மயிரங்காய்] |
காட்டுமயிலம் | காட்டுமயிலம் kāṭṭumayilam, பெ.(n.) நொச்சி மாவகை; tall chaste tree. மறுவ. காட்டுமயிலை [காடு + மயிலம்] |
காட்டுமயிலை | காட்டுமயிலை kāṭṭumayilai, பெ.(n.) 1. நொச்சி மரவகை; tall chaste tree – Vitex altissima. 2.மரவகை; water peacock”s foot tree – Vitex leucoxylon (செ.அக.);. [காட்டு+மயிலை] |
காட்டுமரம் | காட்டுமரம் kāṭṭumaram, பெ.(n.) 1.காட்டில் வளரும் மரவகை; forest trees in general. 2. காட்டு மா மரம்; wild mangotree (சா.அக.);. [காடு + மரம்] |
காட்டுமரவள்ளிக்கிழங்கு | காட்டுமரவள்ளிக்கிழங்கு kāṭṭumaravaḷḷikkiḻṅgu, பெ.(n.) மலை சக்கரைவள்ளி ; mountain sweet potato. [காடு + மரம்.வள்ளி + கிழங்கு] |
காட்டுமராட்டி | காட்டுமராட்டி kāṭṭumarāṭṭi, பெ.(n.) குருவிக்காரன்; kuravan. |
காட்டுமரி | காட்டுமரி kāṭṭumari, பெ.(n.) காட்டில் வளரும் உமரிச்செடி; marsh samphire. [காடு + உமரி] |
காட்டுமருக்கொழுந்து | காட்டுமருக்கொழுந்து kāṭṭumarukkoḻundu, பெ.(n.) மணமில்லா மருக்கொழுந்து; southern Wood. மறுவ. பனிதாங்கி [காடு + மருக்கொழுந்து] |
காட்டுமருது | காட்டுமருது kāṭṭumarutu, பெ.(n.); 1. கருப்பு மருத மரம்; black marutham or negroe”s olive – Terminalia tomentosa. 2. இரும்பிலி; black satinwood – Maba buxifolia (சா.அக.);. [காட்டு+மருது] |
காட்டுமல்லி | காட்டுமல்லி kāṭṭumalli, பெ.(n.) நீண்ட மர மல்லிவகை; Indian cork. மறுவ. காட்டுமல்லிக [காடு + மல்லி] |
காட்டுமல்லிகை | காட்டுமல்லிகை gāṭṭumalligai, பெ.(n.) 1. மல்லிகை வகை(பதார்த்த:478);; wid jasmine. 2. சிறுமல்லிகை; narrow-leaved jasmine and rivers (சா. அக.);. ம. காட்டுமல்லிக [காடு + மல்லிகை] |
காட்டுமழை | காட்டுமழை kāṭṭumaḻai, பெ.(n.) நாட்டில் ஆறாகப் பெருக்கெடுக்கும் வகையில் மலைக்காட்டிற் பெய்யும் மழை; rain in mountain-forest flooding the streams and rivers. [காடு+மழை] |
காட்டுமா | காட்டுமா kāṭṭumā, பெ.(n.) 1. சாரப்பருப்புமரம் (L.); ; Cuddapah almond. 2. மரவகை (K.R.);; buchanan’s mango. 3. புளிமா (L.);; Indian hogplum. 4. உதளை; jungle mango. ம. காட்டுமாவு [காடு + மா-காட்டுமாமா-மா மரத்தின் வகையைச் சார்ந்ததாகப் பொதுமக்களால் கருதப்பட்ட மரவகை. இதன்காய் ஊதாநிறமாக இருக்கும்.] காட்டுமா kāṭṭumā, பெ.(n.) 1. காட்டுக்குதிரை; wild horse. 2. காட்டில் வாழும் விலங்கின் பொதுப்பெயர்; name refering to animals living in forest. [காடு + மா] |
காட்டுமா விலங்கை | காட்டுமா விலங்கை kāṭṭumāvilaṅgai, பெ.(n.) சின்னமாவிலங்கை (L.);; a species of garlic pear. [காடு + மாவிலங்கை] |
காட்டுமாங்காய் | காட்டுமாங்காய் kāṭṭumāṅkāy, பெ.(n.) 1. காட்டில் காணப்படும் மாமரம்; jungle mango tree – Mangifera indica. 2. புளி மாங்காய்; sour mango; buchananis mango – Buchanania angustifolia (சா.அக.);. [காட்டு+மாங்காங்] |
காட்டுமாசிகம் | காட்டுமாசிகம் gāṭṭumācigam, பெ.(n.) பொத்தைக்கள்ளி; stout spurge (சா.அக.);. [காடு + மாசிகம்] |
காட்டுமாஞ்சரி | காட்டுமாஞ்சரி kāṭṭumāñjari, பெ.(n.) பசலை; dichotomus flowered will olive (சா. அக.);. [காடு + மாஞ்சரி] |
காட்டுமாடு | காட்டுமாடு kāṭṭumāṭu, பெ.(n.) காட்டா (இ.வ.); பார்க்க; see _. ம. காட்டுமாடு [காடு + மாடு] |
காட்டுமாதளை | காட்டுமாதளை kāṭṭumātaḷai, பெ.(n.) மலைத் தனக்கு; wild anaur (சா.அக.);. [காடு + மாதளை] |
காட்டுமாந்தன் | காட்டுமாந்தன் kāṭṭumāndaṉ, பெ.(n.) 1. நாகரிக மற்றவன்; wild, uncivilized man. 2. காட்டில் வளரும் குரங்கு போன்ற மனிதன், வாலில்லாக் குரங்கு; lit. man of the woods, chimpanzee, orangoutang. [காடு + மாந்தன்] |
காட்டுமாம்பருப்பு | காட்டுமாம்பருப்பு kāṭṭumāmbaruppu, பெ.(n.) சாரப்பருப்பு the seed of Cuddapah almond (சா.அக.);. [காடு + மாம்பருப்பு] |
காட்டுமாம்பழம் | காட்டுமாம்பழம் kāṭṭumāmpaḻm, பெ.(n.) 1. காட்டு மா மரம்; jungle mango-Spondias mangifera. 2. ஊதனை; odallum called also jungle mango from the resemblance of the fruit – Cerbera Odallum alias Cerbera ոmaոցհաs. 3. காட்டு மாமரம்; jungle mango or Cuddappa almond-Buchanania latifolia alias Spondias mangifera (சா.அக.);, [காட்டு+மாம்பழம்] |
காட்டுமாவிதை | காட்டுமாவிதை kāṭṭumāvitai, பெ.(n.) சாரப் பருப்பு, the seed of jungle mango or cuddappa almond seed (சா.அக.);. |
காட்டுமாவிரை | காட்டுமாவிரை kāṭṭumāvirai, பெ.(n.) சாரப்பருப்பு (மூ.அ.);; the seed of Cuddapah almond (சா.அக.);. [காடு + மாவிரை] |
காட்டுமிராண்டி | காட்டுமிராண்டி kāṭṭumirāṇṭi, பெ.(n.) காட்டு மாந்தன் பார்க்க; see _. மிராண்டி வாழ்க்கை; savage life. Skt mriga → த மிருகம்+ ஆண்டி-மிராண்டி [காடு + மிருகம் – ஆண்டி] |
காட்டுமிருகாண்டி | காட்டுமிருகாண்டி kāṭṭumirukāṇṭi, பெ.(n.) காட்டுமிறாண்டி (யாழ்.அக.);; rude fellow, savage (செ.அக.);. [காட்டு+ மிருகம்+ ஆண்டி, Skt. Mrga →த. மிருகம்] |
காட்டுமிறாண்டி | காட்டுமிறாண்டி kāṭṭumiṟāṇṭi, பெ.(n.) நாகரிகமில்லா மாந்தன்; rustic, rude, ill-bred-person, savage (சா.அக.);. மறுவ. விலங்காண்டி [காட்டு+மிருகம்+அண்டி, Skt. Mrga→ த. மிருகம்] |
காட்டுமிளகு | காட்டுமிளகு gāṭṭumiḷagu, பெ.(n.) 1. வால்மிளகு; wild pepper, flat branched pepper, 2.முள்ளு கரணை அல்லது கிச்கிலிக்கரணை; forest pepper (சா.அக.);. ம. காட்டுமிளகு [காடு + மிளகு] |
காட்டுமுசுக்கை | காட்டுமுசுக்கை kāṭṭumusukkai, பெ.(n.) பித்தத்தைப் போக்கும் குணமுடைய கீரை; bristly bryony (சா.அக.);. [காடு + முகக்கை] |
காட்டுமுசுட்டை | காட்டுமுசுட்டை kāṭṭumusuṭṭai, பெ.(n.) மலைக் கொட்டை ; mountain bindweed creeper (சா. அக.);. [காடு + முகட்டை] |
காட்டுமுட்டை | காட்டுமுட்டை kāṭṭumuṭṭai, பெ.(n.) 1. காட்டு எருமுட்டை dung of cattle naturally found dried in forests. 2. ஆவின் உலர்ந்த சாணம் (காட்டு விரட்டி);; dried cow dung, dried dung of cattle in general (சா.அக.);. [காட்டு+முட்டை] |
காட்டுமுட்டைநெருப்பு | காட்டுமுட்டைநெருப்பு kāṭṭumuṭṭaineruppu, பெ.(n.) காட்டு முட்டையை எரித்த நெருப்பு; fire obtained from kattu-mutta (சா.அக.);. [காட்டு+முட்டை+நெருப்பு] |
காட்டுமுந்திரி | காட்டுமுந்திரி kāṭṭumundiri, பெ.(n.) 1. காட்டுக் கொடிமுந்திரிகை; jungle grape vine, 2. காட்டுக் கொட்டை முந்திரிச்செடி; wild cashew nut. மறுவ. காட்டு முந்திரிகை [காடு + முந்திரி] |
காட்டுமுந்திரிகை | காட்டுமுந்திரிகை kāṭṭumuntirikai, பெ.(n.) 1. காட்டுக் கொடி முந்திரிகை, jungle grape vine – Vitis latifolia. 2. காட்டுக் கொட்டை முந்திரிச்செடி, wild cashew nut – Anacardium occidentale (சா.அக.);, [காட்டு+முந்திரிகை] |
காட்டுமுன்னை | காட்டுமுன்னை kāṭṭumuṉṉai, பெ.(n.) பேய் முன்னை; oriental nettle (சா. அக.);. [காடு + முன்னை] |
காட்டுமுயல் | காட்டுமுயல் kāṭṭumuyal, பெ.(n.) காட்டில் வாழும் முயல்; jungle hare (சா. அக.);. மறுவ. முளவு, முளவுமா [காடு + முயல்.] [P] |
காட்டுமுருக்கு | காட்டுமுருக்கு kāṭṭumurukku, பெ.(n.) 1.பலாசு; dhak tree, gum lac tree. 2. பூனை முருக்கு; bastard kino. [காடு + முருக்கு] |
காட்டுமுருங்கை | காட்டுமுருங்கை kāṭṭumuruṅgai, பெ.(n.) 1.பலாசு; dhak tree. 2. வனமுருங்கை; wild Indian horse radish. 3. ஆடாதோடை (L);; Malabar-nut tree. 4.மாவிலங்கை [மலை.]; garlic pear. 5. புனல் முருங்கை; oval-leaved Indigo. 6. பூனைமுருங்கை; jungle moringa. 7. பவளப்பூலா; coral berry tree. 8. கசப்பு முருங்கை; bitter moringa. [காடு + முருங்கை] |
காட்டுமுல்லை | காட்டுமுல்லை kāṭṭumullai, பெ.(n.) காட்டு மல்லிகை (சித்.அக.);; wild jasmine. [காடு+முல்லை.] |
காட்டுமுள்ளங்கி | காட்டுமுள்ளங்கி kāṭṭumuḷḷaṅgi, பெ.(n.) முள்ளங்கி வகை [MM.237]; forest country radish. 2. நாறு நாரத்தை; a forest plant. [காடு + முள்ளங்கி] |
காட்டுமுள்ளி | காட்டுமுள்ளி kāṭṭumuḷḷi, பெ.(n.) பெருமுள்ளி; large nail-dye (சா. அக.);. 2. மரமல்லிகை; Indian cork. [காடு + முள்ளி + முள்ளுடையது] |
காட்டுமூக்கிரட்டை | காட்டுமூக்கிரட்டை kāṭṭumūkkiraṭṭai, பெ.(n.) மூக்கிரட்டைக்கீரை; spreading hog weed (சா.அக.);. [காடு + மூக்கிரட்டை] |
காட்டுமூங்கில் | காட்டுமூங்கில் kāṭṭumūṅgil, பெ.(n.) சிறுமூங்கில் (L.);; swollen node-ringed semi-solid bamboo. மறுவ. கல்மூங்கில் [காடு + மூங்கில்] |
காட்டுமூரி | காட்டுமூரி kāṭṭumūri, பெ.(n.) நாகர வண்டு(யாழ். ஆக);; a kind of beetle. [காடு + மூரி] |
காட்டுமூலிகை | காட்டுமூலிகை gāṭṭumūligai, பெ.(n.) காட்டில் வளரும் மருந்திற்குப் பயன்படும் செடி கொடிகள்; syluan herbs (சா.அக.);. [காடு + மூலிகை] |
காட்டுமைச்சீரகம் | காட்டுமைச்சீரகம் gāṭṭumaiccīragam, பெ.(n.) கருஞ்சீரகம்; black cumin (சா.அக.);. [காடு + மைச்சீரகம்] |
காட்டுமொச்சை | காட்டுமொச்சை kāṭṭumoccai, பெ.(n.) காட்டவரை (மூ.அ.);; country bean [காடு மொச்சை] |
காட்டுயானை | காட்டுயானை kāṭṭuyāṉai, பெ.(n.) காட்டில் வாழும் யானை; wild elephant. [காடு+யானை] |
காட்டுயேணி | காட்டுயேணி kāṭṭuyēṇi, பெ.(n.) காட்டு ஆன் அல்லது காட்டெருது; wild cowor wild ox (சா.அக.);. [காடு + ஏணி] |
காட்டுரோகம் | காட்டுரோகம் kāṭṭurōkam, பெ.(n.) காட்டுநோய் பார்க்க; see _. [காடு + தோகம்] |
காட்டுர்கிழார் மகனார் கண்ணனார் | காட்டுர்கிழார் மகனார் கண்ணனார் kāṭṭurkiḻārmakaṉārkaṇṇaṉār, பெ.(n.) கடைச்சங்கம் மருவிய புலவர்; the poet who belonged to the last ancient Šangam (அபி.சிந்);. |
காட்டுலவங்கம் | காட்டுலவங்கம் kāṭṭulavaṅkam, பெ.(n.) காட்டு இலவங்கப் பட்டை, wild cinnamon tree or country cinnamon,Cinnamomum iners alias c.eucalyptoidus. [காட்டு+இலவங்கம் இலவங்கம்-கருவாப் பட்டை இணைப்பு).] இது ஒரு சிறிய மரம். இதன் இலையைக் கசக்க மணமாயிருக்கும்; உள் பட்டையைச் சாதாரணமாகக் கருவாப்பட்டைக்குப் பதிலாய் விற்று ஏமாற்றுவார்கள். இது மிக்க பருமையாகவும், பெரிதாயும் இருக்கும் வளைவாயிருக்குமே அல்லது மற்றொன்றைப் போல் கருட்டையாய் இராது;மணமும், சுவையும் வேறுபட்டு இருக்கும். இதன் காய்ந்த மொக்கு கருவாப் பட்டையைப் போல் காற்றைப் போக்கிப் பசியை உண்டாக்கும் தன்மை கொண்டது. இதன் விதைகளை இடித்துத் தேன் அல்லது சர்க்கரையில் கலந்து சீதபேதி, இருமல் இவைகளுக்குக் கொடுக்கலாம்; மற்ற கடைச் சரக்குகளோடு சேர்த்து காய்ச்சலுக்குப் பயன்படுத்தலாம். இதன் பட்டை கறிக்கூட்டா (மசாலா);கவும் வழங்கலாம் (சா.அக.);. |
காட்டுளுந்து | காட்டுளுந்து kāṭṭuḷuntu, பெ.(n.) காட்டில் விளையும் உளுந்து; forest black gram (சா.அக.);. [காட்டு+உளுந்து] |
காட்டுள்ளான். | காட்டுள்ளான். kāṭṭuḷḷāṉ, பெ.(n.) ஒருவகைக் குருவி; wood snipe. [காடு + உள்ளான்] [P] |
காட்டுள்ளி | காட்டுள்ளி kāṭṭuḷḷi, பெ.(n.) நரிவெங்காயம் ; jungle onion. “ஈருளி காட்டுள்ளி நிம்பத்தின் சளிகத் தூரிகை” (தைல.தைலவ.135);. மறுவ. காட்டுவெங்காயம் க. காடுள்ளி [காடு + உள்ளி] |
காட்டுள்ளிக்கிழங்கு | காட்டுள்ளிக்கிழங்கு kāṭṭuḷḷikkiḻṅku, பெ.(n.) காட்டில் விளையும் வெங்காயக் கிழங்கு; the bulbous root of the jungle onions (சா.அக.);. [காட்டு+உள்ளி+கிழங்கு.] |
காட்டுழாய் | காட்டுழாய் kāṭṭuḻāy, பெ.(n.) நாய்த்துளசி; white basil. மறுவ. கஞ்சாங்கோரை [காடு + துழாய்] |
காட்டுவக்கு | காட்டுவக்கு kāṭṭuvakku, பெ.(n.) மலைவிராலி; fish poison cedar (சா.அக.);. [காடு + வக்கு] |
காட்டுவரகு | காட்டுவரகு gāṭṭuvaragu, பெ.(n.) வரகுவகை (சித். அது.);; wild varagu. ம. காட்டு வரகு [காடு + வரகு] |
காட்டுவருச்சம் | காட்டுவருச்சம் kāṭṭuvaruccam, பெ.(n.) கடலாத்தி; falcate trumpet flower (சா.அக.);. [காடு + வருச்சம்] |
காட்டுவல்லாரை | காட்டுவல்லாரை kāṭṭuvallārai, பெ.(n.) காட்டில் விளையும் வல்லாரை; Indian penny wort (சா.அக.);. [காடு + வல்லாரை.] |
காட்டுவல்லி | காட்டுவல்லி kāṭṭuvalli, பெ.(n.) 1. காட்டில் படரும் கொடி; any forest spreading creeper. 2. பேய்ச் சீந்தில்; moon-creeper. 3. காட்டுக்காய் வள்ளி பார்க்க; bulbous rooted yam. [காடு + வல்லி] |
காட்டுவள்ளி | காட்டுவள்ளி kāṭṭuvaḷḷi, பெ.(n.) 1. சீரகவள்ளி (L.);; cultivated yam, cuminyam. 2. வள்ளிக்கொடிவகை, (A.);; five leaved yam. 3. காய்வள்ளி; malacca yam. 4. மலைவள்ளிக் கிழங்கு; otaheite potato. 5. காட்டு நூறன் கிழங்கு; mouse root. [காடு+வள்ளி] |
காட்டுவா | காட்டுவா kāṭṭuvā, பெ.(n.) 1. பேயத்தி, devil fig – Diospyros embryopteris. 2. காட்டில் விளையும் அத்தி; wild fig – Ficus hispida (சா.அக.);. |
காட்டுவாகடத்தான் | காட்டுவாகடத்தான் kāḍḍuvākaḍattāṉ, பெ.(n.) கண்டங்கத்திரி; wild thorny brinjal (சா.அக.);. [காடு+வாகடத்தான்] |
காட்டுவாகை | காட்டுவாகை kāṭṭuvākai, பெ.(n.) வாகை மரவகை; siris. மறுவ. அடுக்குவாகை ம. காட்டுவாகை [காடு + வாகை] [P] |
காட்டுவாதுமை | காட்டுவாதுமை kāṭṭuvātumai, பெ.(n.) கசப்பு வாதுமை; wild orbitter almond (சா. அக.);. [காடு + வாதுமை] |
காட்டுவாரி | காட்டுவாரி kāṭṭuvāri, பெ.(n.) காட்டாறு; jungle stream. [காடு +வாரி = வார்தல் நீருதல் வாரி நெடுகப் பாய்ந்தோடும் ஆறு] |
காட்டுவாரியையும், அவன் மகன் குட்டுவன் v/ சோலையும் பாடிப் பரிசில் பெற்றார் (அபி.சிந்). கோச்சேரமான்யானைக்கட்சேய்மாந்தரஞ் சேரலிரும்பொறை | காட்டுவாரியையும், அவன் மகன் குட்டுவன் v/ சோலையும் பாடிப் பரிசில் பெற்றார் (அபி.சிந்). கோச்சேரமான்யானைக்கட்சேய்மாந்தரஞ் சேரலிரும்பொறை kāṭṭuvāriyaiyumavaṉmakaṉkuṭṭuvaṉcōlaiyumpāṭipparicilpeṟṟārapicināccēramāṉyāṉaikkaṭcēymāntarañcēralirumpoṟai, பெ. (n) ஒரு சேர மன்னன்; a cera king, [கோ+சேரமான்+யானை+கண்+சேய் – மாந்தரன்+சேரல்+ இரும்பொறை] கொல்லி மலைக்குத் தலைவன். சோழன் இராசசூயம்வேட்ட பெருநற்கிள்ளியுடன் போர் செய்தவன். கூடலூர்கிழாரால் பாடப்பெற்றவன். ஐங்குறுநூற்றைத் தொகுப்பித்தான் (அபி.சிந்);. |
காட்டுவாளவரை | காட்டுவாளவரை kāṭṭuvāḷavarai, பெ.(n.) காட்டில் வளரும் வாள் போன்ற அமைப்புடைய அவரை; wild a word bean, Canavalia ensiformis (சா.அக.);. [காட்டு+வாள்+அவரை.] |
காட்டுவாழை | காட்டுவாழை kāṭṭuvāḻai, பெ.(n.) வாழைவகை; wild plantain. ம. காட்டுவாழ;க. காடுபளெ. [காடு+ வாழை.] |
காட்டுவாழ்புங்கம் | காட்டுவாழ்புங்கம் kāṭṭuvāḻpuṅkam, பெ.(n.) ; செந்நாய்; a red variety of ferocious dog; hound (சா.அக.). [காட்டு+ வாழ்+ புங்கம்.] காட்டுவாழ்புங்கம் kāṭṭuvāḻpuṅgam, பெ.(n.) செந்நாய்; a red variety of ferocious dogs; hound (சா.அக.);. [காடு +வாழ் +புங்கம்] |
காட்டுவிரட்டி | காட்டுவிரட்டி kāṭṭuviraṭṭi, பெ.(n.) காட்டு முட்டை பார்க்க; see kattu-multa இது புடத்திற்குச்சிறந்தது(சா.அக.);. [காட்டு+விரட்டி] |
காட்டுவிறட்டி | காட்டுவிறட்டி kāṭṭuviṟaṭṭi, பெ.(n.) மருந்துப் புடத்திற்குச் சிறந்ததாகச் சொல்லப்படும் காட்டு எருமுட்டை ; dung of cattle, naturally found dried in forests (சா. அக.);. [காடு +லிறட்டி- வறட்டி→ விரட்டி] |
காட்டுவிலங்கு | காட்டுவிலங்கு kāṭṭuvilaṅgu, பெ.(n.) காட்டில் வளரும் உயிரி; awild animal. 2.நாகரிகமற்றவன்; an uncivilised man. ம. காட்டுசந்து க. கான்மிக [காடு + விலங்கு] |
காட்டுவிளா | காட்டுவிளா kāṭṭuviḷā, பெ.(n.) நாய் விளா அல்லது நாயெலுமிச்சை; dog wood apple (சா.அக.);. [காடு + விளா] |
காட்டுவெக்காலி | காட்டுவெக்காலி kāṭṭuvekkāli, பெ.(n.) கானமடக்கு மரம்; patridge peatree (சா.அக.);. [காடு + வெக்காலி] |
காட்டுவெங்காயம் | காட்டுவெங்காயம் kāṭṭuveṅgāyam, பெ.(n.) நரிவெங்காயம்; Jackal onion. ம. காட்டுவெங்காயம் க. காடீருள்ளி. [காடு + வெங்காயம்] |
காட்டுவெங்குகம் | காட்டுவெங்குகம் gāṭṭuveṅgugam, பெ.(n.) மலைப்பச்சை; long-leaved gamboge (சா.அக.);. [காடு +வெங்குகம்] |
காட்டுவெண்சாமை | காட்டுவெண்சாமை kāṭṭuveṇcāmai, பெ.(n.) காட்டுவெள்ளைச்சாமை பார்க்க; see kattu-vellai-c-cămaj(சா.அக.);. [காட்டு+வெண்சாமை] |
காட்டுவெண்டை | காட்டுவெண்டை kāṭṭuveṇṭai, பெ.(n.) பேய் வெண்டைச் செடி; white wild musk mallow. [காடு + வெண்டை] |
காட்டுவெறிப் புகையிலை | காட்டுவெறிப் புகையிலை gāṭṭuveṟippugaiyilai, பெ.(n.) 1. மலைப் புகையிலை; wild or mountain tobacco. 2. காட்டுப் பெரிய புகையிலை; larger wukd tobacco (சா. அக.);. [காடு + வெறிப்புகையிலை] |
காட்டுவெற்றிலை | காட்டுவெற்றிலை kāṭṭuveṟṟilai, பெ.(n.) குறிஞ்சிவி; box-leaved ivory wood. 2. மலை வெற்றிலை; hill betel. ம. காட்டுவெற்றில [காடு + வெற்றிலை] |
காட்டுவெள்ளரி | காட்டுவெள்ளரி kāṭṭuveḷḷari, பெ.(n.) பேய்க் கொம்மட்டி (மலை);; bitter cucumber. ம. காட்டுவெள்ளரி [காடு + வெள்ளரி] |
காட்டுவெள்ளைச்சாமை | காட்டுவெள்ளைச்சாமை kāṭṭuveḷḷaiccāmai, பெ.(n.) காட்டில் விளையும் சாமை; wild white millet, Panicum prostatum (சா.அக.);. [காட்டு+வெள்ளை+சாமை] |
காட்டுவேந்தன் | காட்டுவேந்தன் kāṭṭuvēndaṉ, பெ.(n.) கற்செய் நஞ்சு; a kind of arsenic (சா. அக.);. [காடு + வேந்தன்] |
காட்டுவேப்பிலை | காட்டுவேப்பிலை kāṭṭuvēppilai, பெ.(n.) கறிவேம்பு ; curry-leaf tree. 2. செடிவகை; a species of wampee. மறுவ. கறிவேப்பிலை [காடு + வேப்பிலை-காட்டுவேப்பிலை] |
காட்டுவேம்பு | காட்டுவேம்பு kāṭṭuvēmbu, பெ.(n.) வேப்ப மரத்தையொத்த ஒரு வகை மரம் ; a kind of tree. ம. காட்டுவேப்பு [காடு + வேம்பு] |
காட்டூசிமல்லி | காட்டூசிமல்லி kāṭṭūcimalli, பெ.(n.) காட்டிவளரும் ஊசி மல்லிகை; cured jasminum growing in forest (சா.அக.);. [காடு + ஊசிமல்லி] |
காட்டெரி | காட்டெரி kāṭṭeri, பெ.(n.) 1. ஒருவகை மணமுள்ள மரம்; eagle wood – Aquilaria agallocha. 2.கள்ளி ; spurge (சா.அக.);. |
காட்டெரு | காட்டெரு kāṭṭeru, பெ.(n.) காட்டில் உலர்ந்து கிடக்கும் எரு; forest manure, esp. dried dung of cattle. “நிலந்திருத்திக் காட்டெருவும் போட்டு” (அருட்பா, vi, உறுதிகூறல்.2:2); [காடு + எரு] |
காட்டெருக்கு | காட்டெருக்கு kāṭṭerukku, பெ.(n.) மலை யெருக்கு; hillswellow-wort. [காடு + எருக்கு] |
காட்டெருமுட்டை | காட்டெருமுட்டை kāṭṭerumuṭṭai, பெ.(n.) 1. காட்டுமுட்டை பார்க்க; see kattu-muttai, 2. வயலில் இருந்து எடுத்த ஆவினது சாணம் (வயலெரு முட்டை);; cow dung of cattle dung found dry on pasture lands (சா.அக.);. |
காட்டெருமை | காட்டெருமை kāṭṭerumai, பெ.(n.) 1.எருமையினம்; wild buffalo. 2. எருக்கு; madar. 3. திருகுகள்ளி; milk-hedge. 4. சதுரக்கள்ளி (மலை);; spuare spurge. 5. கூவைக்கிழங்கு; East Indian arrowroot. 6. காட்டுவெள்ளை வெங்காயம்; jungle white onion. ம. காட்டெரும; க. காடெம்மெ, காடெர்மெ; பட. காடெம்மெ. [காடு+எருமை-காட்டெருமை] [P] |
காட்டெருமைக்கள்ளி | காட்டெருமைக்கள்ளி kāṭṭerumaikkaḷḷi, பெ.(n.) 1. சதுரக்கள்ளி; square spurge. 2. எருக்கு; madar plant. [காட்டெருமை + கள்ளி] [P] |
காட்டெருமைத்தொக்கு | காட்டெருமைத்தொக்கு kāṭṭerumaittokku, பெ.(n.) நச்சுப்புல்; a poisonous grass (சா.அக.);. [காடு+ எருமை + தொக்கு] |
காட்டெருமைப்பால் | காட்டெருமைப்பால் kāṭṭerumaippāl, பெ.(n.) 1. எருக்கம்பால்; milky juice drawn from madar plant. 2. திருக்கள்ளிப்பால்; milky juice of _. 3.சதுரக்கள்ளிப் பால்; milky juice of square spurge. 4.கூகைநீறு; flour of Indian arrow root. [காடு + எருமை + பால்] |
காட்டெருமைவிருட்சம் | காட்டெருமைவிருட்சம் kāṭṭerumaiviruṭcam, பெ.(n.) எருமை மரம்; unknowned tree (சா.அக.);. [காட்டு+எருமை+விருட்சம்] இது தில்லை மரத்தைப் போல் பாலுள்ள மரம். இது உடல் இளமைக்குப் பயன்படும். இது வேப்பந்துருள்ள இடங்களில் முளைக்கும். இதனருகில் போய் எருமைக் கன்றைப் போல் கனைனக்க ஓரிலை உதிரும். ஆகவே இதற்கு இப்பெயர் வந்தது. அடிமரத்தைக் கொத்தினால் பால் வழியும். அது மிகவும் காரமானது. தில்லைப் பாலைக் காட்டிலும் கொடியது. பட்டவிடமெல்லாம் வெந்து புண்ணாகும். இதனால் 64 வித நஞ்சும் சுத்தியாகும். அதைக் கொண்டு மெழுகு, நீற்றினம் முதலியவைகள் செய்யலாம் (சா.அக.);. |
காட்டெறி | காட்டெறி kāṭṭeṟi, பெ.(n.) கள்ளி; spurge plant (சா.அக.);. [காடு + எறி] |
காட்டெறும்பு | காட்டெறும்பு kāṭṭeṟumbu, பெ.(n.) ஒரு வகை பெரிய எறும்பு; a kind of big ant. ம. காட்டுறும்பு [காடு + எறும்பு] |
காட்டெலி | காட்டெலி1 kāṭṭeli, பெ.(n.) 1. காட்டில் வாழும் எலி; jungle rat. 2. மலையெலி; mountain rat (சா. அக.);. ம. காட்டெலி [காடு + எலி] காட்டெலி2 kāṭṭeli, பெ.(n.) கருஞ்சீரகம்; black cumin seed. [காடு + எலி] |
காட்டெலிச்செவி | காட்டெலிச்செவி kāṭṭeliccevi, பெ.(n.) 1. உண்ணத்தகுதியுடைய சிவப்பு எலிச்செவிக் கீரை; rat’s ear plant. 2. எலிச்செவிக்கள்ளி; a kind of sedge (சா. அக.);. [காட்டெலி + செவி] |
காட்டெலுமிச்சந்துளசி | காட்டெலுமிச்சந்துளசி kāṭṭelumiccantuḷaci, பெ.(n.) காட்டில் விளையும் எலுமிச்சந்துளசி; a forest variety of elumicca-ntulaši (சா.அக.);. [காட்டு+ எலுமிச்சை+துளசி] |
காட்டெலுமிச்சை | காட்டெலுமிச்சை kāṭṭelumiccai, பெ.(n.) 1. காட்டு நாரத்தை; Indian wild lime. 2. காட்டுக்கொழுஞ்சி; wild lime organge. 3. நாய்விளா; musk lime. 4. மலை நாரத்தை (M.NA.D.i:30);; trifoliate winged lime. 5. கசப்பு எலுமிச்சை; wild bitter lime 6. மலை எலுமிச்சை; mountain lime. க. காடுலிம்பெ, காட்டுநிம்பெ. [காடு + எலுமிச்சை] |
காட்டெள் | காட்டெள் kāṭṭeḷ, பெ.(n.) 1. காட்டில் தானாகவே விளையும் எள்; wild gingally. 2. பேய் எள்; kersem or niger seed. 3. ஒருவகைப் புல் [M.M.310]; ram til. ம. காட்டெள்ளு க. காடெள்ளு காடெள். [காடு + எள்] |
காட்டேணி | காட்டேணி kāṭṭēṇi, பெ.(n.) காட்டுமாடு அதாவது காட்டு ஆ அல்லது காட்டெருது: wild cow or wild ox, bison – Gaveous ganrus (சா.அக.);. [காடு+ஏணி] காட்டேணி kāṭṭēṇi, பெ.(n.) காட்டில் வாழும் எருது; bison. [காடு + ஏணி-காட்டேணி. ஏண் = உயரம் உயர்வு செம்மை, திரட்சி, அழகு. ஏண் → ஏணி [நல்ல தோற்றமுடையது). நாட்டு எருதுகளைவிடக் காட்டெருது மிகுந்த வலிவும் தோற்றப் பொலிவுமுடையதாகலின் இப்பெயர்பெற்றது. இச்சொல் இக்காலத்தில் காட்டாணி எனத் திரிபுற்றது] |
காட்டேரிமூலி | காட்டேரிமூலி kāṭṭērimūli, பெ.(n.) கரூமத்தை; black dhatura or stramonium (சா.அக.);. [காட்டேறி→ அகாட்டேரி+மூலி] |
காட்டேறி | காட்டேறி kāṭṭēṟi, பெ.(n.) தீண்டிவருத்தும் பெண்ணாகக் கருதப்படும் அணங்கு, பேய்; an evil spirit. ம. காட்டேரி [காடு + ஏறி-காட்டேறி காடு துன்பம் கொடுமை கொடுமை செய்யும் இயல்பு; தன்னுள் ஏறப்பெற்றவள் காட்டேறி] |
காட்டேலம் | காட்டேலம் kāṭṭēlam, பெ.(n.) பேரேலம் (பதார்த்த:1030);; greater cardamom. [காடு + ஏலம்] |
காட்டை | காட்டை1 kāṭṭai, பெ.(n.) 1. திசைகாட்டும் குச்சி; direction, point of compass. 2.திசை (திவா);; direction. 3. எல்லை (சூடா);; limit, boundary. 4. நொடி கண்ட கால்அளவு; a measure oftime-12 seconds. 5. நுனி (வின்);; point, extremity, top, tip, apex. 6.மேலானது; that which is great and beautiful. 7. இடம்; place. [காடு + காட்டை (காட்டிலுள்ள சிறுகுச்சி);.இதனைக் காட்டுத்தரும்பு எனவும் கூறுவர். புதுமனைக்கு அடிமானம் (கடைகால்); _அளவுக்குறி இடுவோரும், கோயில், அரண் மனை, நகரம் ஆகியவற்றைச் சமைப்போரும் சரியான கிழக்குத்திசை அறிதற்காக அவ்வூரில் கதிரவன் செவ்விய உச்சிக்கு வரும் நாள் பார்க்க நட்டுவைக்கும் குச்சியைக் காட்டை (காட்டுத்துரும்பு); என்பர். குச்சியின் நிழலை அளந்த பகற்காலத்தில் நாழிகை குறிக்கும் பழங்கால இயல்பு பற்றி இச்சொல் மிகச்சிறு கால அளவையும் குறித்தது. இச்சொல் வடமொழியில் _. எனத்திரிந்தது] கணம் – இமையளவு (கண்ணிமைக்கும் நேரம்); 4 கணம் – 1 உயீர் 4 உயீர் – 1நொடி (மாத்திரை – seconds); 12 நொடி (மாத்திரை); – காட்டை 2 காட்டை – 1 வினாடி (24 seconds); 60 வினாடி – 1 நாழிகை (24 minutes); 3 3/4 நாழிகை – 1 முழுத்தம் 2 முழுத்தம் – l யாமம் 4 யாமம் – 1பொழுது 2 பொழுது – 1 நாள் காட்டை1 kāṭṭai, பெ.(n.) 1. ஒரு நுட்பமான காலவளவு; a measure of time = 1/30 {}. 2. எல்லை; boundary, limit. [Skt.{} → த.காட்டை.] காட்டை2 kāṭṭai, பெ.(n.) விருப்பம்; desire. [Skt.{} → த.காட்டை.] |
காட்டைப்புடம் | காட்டைப்புடம் kāṭṭaippuṭam, பெ.(n.) 1. காடை உயரமளவு அதாவது மூன்று எருவில் போடும் புடம்; a small fire with three cow dung cackes used for calcining oxidising metals and metallic compounds. 2. ஓரெருப்புடம்; calcination with a single dried cow-dung cake (சா.அக.);. [காடை+புடம்] |
காட்டைவிடம் | காட்டைவிடம் kāṭṭaiviṭam, பெ.(n.) காட்டில் உள்ள நஞ்சுப் பூடு, deadly poison plant Haemodicty on suberectum (சா.அக.);. [காட்டு+விடம்] |
காட்டொலி | காட்டொலி kāṭṭoli, பெ.(n.) ஒளிப்புல்; grass, lumi nous in the dark (சா.அக.);, [காடு + ஒளி] |
காட்டொலிவம் | காட்டொலிவம் kāṭṭolivam, பெ.(n.) சீமைமர வகை (விவிலி.11,17]; wild olive. [காடு + ஒலிவம்] |
காட்டோங்கம் | காட்டோங்கம் kāṭṭōṅkam, பெ.(n.) 1. காட்டில் வாழும் எருமை; wild buffalo – Bubulusanni. 2. கடகை நீறு; a farinaceous substance procured from the Indian arrow root – Curcuma angustifolia. 3. சதுரக்கள்ளி; square spurge – Euphorbia antiquorum. 4. எருக்கு; madar plant – Caltropis gigantea. 5. காட்டு வெள்ளை வெங்காயம்; gungle white onion – Urginia indica. 6. கள்ளிப்பொது; milk spurge-Euphorbia genus. 7. திருகு கள்ளி; twist-spurge – Euphorbia tirucalli (சா.அக.);. [காடு+ஓங்கு+ஒங்கம்] |
காட்டோமம் | காட்டோமம் kāṭṭōmam, பெ.(n.) காட்டில் விளையும் ஓமம்; jungle sison (சா.அக.);. [காடு + ஒமம்] |
காட்டோமவல்லி | காட்டோமவல்லி kāṭṭōmavalli, பெ.(n.) 1. ஒரு வகை மருந்துச் செடி, thick-leaved lavender-Anisochilus carnosum. 2.ஒரு வகை நறுமணச் செடி; country borage – Coleus aromaticus (சா.அக.);. [காட்டு+ஓமவல்லி] |
காட்டோலை | காட்டோலை kāṭṭōlai, பெ.(n.) பனையோலை; palmyra leaf (சா.அக.);. [காட்டு + ஒலை] |
காணடி-த்தல் | காணடி-த்தல் kāṇaḍittal, 4 செ.குன்றாவி, (v.t.) காணாமல் செய்தல், போக்கடித்தல் (இ.வ.);; to lose. [காண +அடி] |
காணநாழி | காணநாழி kāṇanāḻi, பெ.(n.) ஒரு பெய்தல் அளவு; a measure of capacity. “கான நாழியால் நிசதி அட்டக்கடவ நெய் இருநாழி” (SII.XIV.10-19 pg.6); [கணம் → காணம்+நாழி.] |
காணன் | காணன் kāṇaṉ, பெ.(n.) ஒருகண் குருடன், ஒற்றைக்கண்ணன்; one-eyed man. “கஞ்சன், குணிகூனன் காணனிரு கண்ணுமில்லான்” (சைவச.ஆசாரி.10);. ம. காணன்; Skt. _. [காண் + அல் + அன்-காணலன் → காணன்] |
காணப்பத்தியம் | காணப்பத்தியம்1 kāṇappattiyam, பெ.(n.) கொள்ளுக்கஞ்சி பத்தியம்; regimeninwhich horsegram conjee is prescribed as a diet for paetients (சா.அக.); [காணம் + பத்தியம்] காணப்பத்தியம்2 kāṇappattiyam, பெ.(n.) பிள்ளையாரை முதற்கடவுளாக வழிபடுஞ்சமயம்; the religion of the Ganapati adoing him as the Supreme Being. மறுவ. காணாபத்தியம் [கணம் (கூட்டம்); + பதி = கணபதி → காணயத்தியம்] |
காணம் | காணம்2 kāṇam, பெ.(n.) 1. வட்டமான செக்கு(சூடா);; oil-press. கானக் கடையில் வருமெண்ணெயென'(தைலவ.கடவு 3);. 2. ஒரு செக்களவுள்ள முகத்தலளவை (வின்.);; a measure of capacity, as much as will fill an oil-press, 3. நிலம்; land, (தொல்,சொல். சேனா.20]. ம. காணம் க., து. காண; தெ. கானக கானகு, கானுக. [கோணம் → காணம்] செக்குகள் பெரும்பாலும் மரத்தைச் செதுக்கிச் செய்யப்பட்டிருக்கும்.கருங்கல்லால் ஆன செக்குகளும் உண்டு. மாத்தால் ஆனவை மரக்கானம் என்றும் கல்லால் ஆனது கல்காணம் என்றும் அழைக்கப்படும். |
காணரூட்டம் | காணரூட்டம் kāṇarūṭṭam, பெ.(n.) இது ஒரு கடைச் சரக்கு; black hellebore – Helleborumniger (சா.அக.);. [கானார்+ஊட்டம்] |
காணலன் | காணலன் kāṇalaṉ, பெ.(n.) பகைவன்; enemy, as one whose sight is unbearable. “காணலாற் செற்ற காளை” (பாரத.வேத். 20);. [கான் + அல் + அன்] |
காணலிங்கம் | காணலிங்கம் kāṇaliṅgam, பெ.(n.) சிவனின் ஏவலர்களாகிய கணங்களால் உருவாக்கப்பட்ட சிவலிங்கம் (சைவவி. 203);; Siva-lingam established -the celestial hosts of Śiva. [கணம் → காணம் + லிங்கம். கணம்-சிவகணங்கள்] |
காணல் | காணல் kāṇal, பெ.(n.) 1. காண்கை; beholding. ‘கானலுறுகின்றேன் (திவ்.இயற்.4:41.);. 2. மனத்தால் குறிக்கை (சூடா);; seeing with the mind’s eye, thinking, considering. 3.வணங்குகை (உரி);; reverencing, worshipping. 4. தோற்றம்; appearance. 5. பெரியோரை நேர்காணல்; visiting people. [காண் + காணல்] |
காணவட்டம் | காணவட்டம் kāṇavaṭṭam, பெ.(n.) ஊர் அலுவலர்க்கும், பணியாளர்க்கும் நாள்தோறும் எண்ணெய் ஆட்டும் செக்கார் கொடுக்கும் எண்ணெய் வரி (W.G.);; a small quantity of oil given daily, as a perquisite by the oil-mongers to the villaged officers and servants. [காணம் + வட்டம்] |
காணா | காணா kāṇā, பெ.(n.) சிறுபாம்பு; small reptile of the snake species. [குள் → குண் → குண்னு → குண்ணா → காணா] |
காணாக்கடி | காணாக்கடி kāṇākkaḍi, பெ.(n.) இன்னது கடித்தது என்று அறிய முடியாத நஞ்சுக்கடி ; bite or sting of a reptile in the dark. 2.சிறுபாம்புக்கடி; bite of a reptile named _. [காண் + கடி. ‘ஆ’ எதிர்மறை இடைநிலை] |
காணாக்கடிசொறி | காணாக்கடிசொறி kāṇākkaṭicoṟi, பெ.(n.) பூச்சிக் கடியினால் உண்டாகும் சொறி, itching due to poisonous bites (சா.அக.);. [கானா+கடிசொறி] |
காணாக்கடிநஞ்சு | காணாக்கடிநஞ்சு kāṇākkaṭinañcu, பெ.(n.) 1. சில் நஞ்சு; the poisonous effects of an unknown insect or creature. 2. சிறு பாம்பு நஞ்சு; small snake poison (சா.அக.);. [காணா+கடி+நஞ்சு] |
காணாக்கண்ணிடு-தல் | காணாக்கண்ணிடு-தல் kāṇākkaṇṇiḍudal, 18 செ.குன்றாவி (v.t.) பார்த்தாலும் பாராததுபோல் இருத்தல்; to overlook, connive. “இவன் செய்க குறையைத்தான் காணாக்கண்ணிட்டி ருக்கை யன்றிக்கே” (ஈடு 6.10.10);. [காண் + ஆ + கண்ணிடு] |
காணாக்காட்சி | காணாக்காட்சி kāṇākkāṭci, பெ.(n.) காண்பதற்குரிய அரிய காட்சி; a rare spectacle, a wonderful sight, exhibition, as not seen before. [காண் + ஆ + காட்சி] |
காணாக்கிரகணம் | காணாக்கிரகணம் gāṇāggiragaṇam, பெ.(n.) கீழுலக ஒளிமறைப்பு (பாதாளக்கிரகணம்);(வின்.);;கானாக்கிரகம் கண்ணால் காணமுடியாத ஒளிமறைப்பு: invisib eclipse. [காண் + ஆ + கிரகணம்] |
காணாக்கிரந்தி | காணாக்கிரந்தி kāṇākkiranti, பெ.(n.) 1. உடம்பில் உண்டாகும் கிரந்திப் புண்; internal ulcers orvenereal sore. 2. ஆண் அல்லது பெண் குறியிற் காணும் கிரந்திப்புண், a syphilitic sore forming on the genital of a male or female-Chancre(சா.அக.);. |
காணாக்கோல் | காணாக்கோல் kāṇākāl, பெ.(n.) திடீரென வந்து தைக்கும் அம்பு; arrow shot unseen _. “காணாக்கோலாகவந்து தைக்கிறபடி” (திவ்.இய. திருவிருத்.75.வியா.); ம. காணாக்கோல் [காண் + ஆ+ கோல்] |
காணாக்கோள் | காணாக்கோள் kāṇākāḷ, பெ.(n.) மறைவாக உண்கோள்; phenomena of the heavens, som times visible and sometimes not, opp, to _. மறுவ காணாக்கிரகம் [காண் +ஆ+ கோள். கரந்துறைகோள் பார்க்க] |
காணாதகண் | காணாதகண் gāṇātagaṇ, பெ.(n.) அறிவுக்கண் (ஞானக்கண்);; mind’s eye. “காணாத கண்ணுடன்” (திருமந்:1610); [காண் +ஆ +கண் – காணாதகன். எ.இ. நி.] |
காணாதன் | காணாதன் kāṇātaṉ, பெ.(n.) கணாத மதத்தினன்; adherent of the school of {}. “கண்டகராய்நின்ற காணாதர் வாதங் கழற்றுவமே” (தேசிகப்.5:30.);. [Skt.{} → த.காணாதன்.] |
காணாதுகடல்புகு-தல் | காணாதுகடல்புகு-தல் kāṇātukaṭalpukutal, செ.கு.வி.(v.i.) நோய் மீண்டும் வாராது இருத்தல்; total sappearance without relapse, said of disease (சா.அக.);. [காணாது+கடல்+புகு] |
காணாத்தலம் | காணாத்தலம் kāṇāttalam, பெ.(n.) ஆண்பெண் குறிப்பொது (வின்.);; private parts, genitals, askept concealed from view. [காண்+ஆ +தலம்] |
காணாத்திருத்தி | காணாத்திருத்தி kāṇāttirutti, பெ.(n.) பிறர் பார்க்கக் கூடாத இடம் அதாவது ஆண், பெண் குறி; the genitals which are the private parts in a male or a female (சா.அக.);. |
காணாப்பத்தியம் | காணாப்பத்தியம் kāṇāppattiyam, பெ.(n.) அவ மருந்துணவு; deviation from the observance of the prescribed diet (சா.அக.);. [காணா+பத்தியம்] |
காணாப்புள்தோடம் | காணாப்புள்தோடம் kāṇāppuḷtōṭam, பெ.(n.) குழந்தைகளுக்குக் காணும் பறவைக் குற்றம் (தோஷம்);; a morbific diathesis in children said to be due to the evil influence reflected on them while birds are retiring to their nest. இதனால் உச்சி, கண் முதலிய இடங்களில் குழி விழல், முலையுண்ணாமை, பச்சை நிறமாய்க் கழிதல், பறவையைப் போல் சீறி அழுதல் முதலிய குணங்கள் காணும் (சா.அக.);. |
காணாமேகம் | காணாமேகம் kāṇāmēkam, பெ.(n.) ஆண் அல்லது பெண் குறிகளில் வரும் வெள்ளை (மேக);ப் புண்; a venereal sore found on the genitals – Chancroid (சா.அக.);. [கானா+மேகம்] |
காணாம்படுவோம் | காணாம்படுவோம் kāṇāmpaṭuvōm, பெ.(n.) காணப்பொன் தண்டப்படுவோம் (காணாம்பொற்காக);; a kind of tax. நிலைப் பொலியூட்டாகத் திங்கடோறுமாக குடும்போமானோம் முட்டு வதாயிற் தர்மாஸ்தத்து நிசதி நாலேகால் காணம் படுவோமானோம்” (தெ.கல்.தொ.12 கல்.70);, [காணம்-பொற்காக. காணம்+படுவோம்] |
காணார் | காணார் kāṇār, பெ. (n.) 1. குருபர்; blind me. “காணார் கேளார் கான்முடப் பட்டோ” (மணிமே.13:111);. 2. பகைவர்; enemies. [காண் +ஆ+ அர்] |
காணாவஞ்சனி | காணாவஞ்சனி kāṇāvañcaṉi, பெ.(n.) மறைப்பு மை, அதாவது சித்தர்கள் தங்களை மறைத்துக் கொள்வதற்காகப் பயன்படுத்தும் soup; a blackd paint prepared by siddhars and used by them to become invisible to others (சா.அக.);. [கானா+ (அஞ்சனம்); அஞ்சனி] |
காணாவியாதி | காணாவியாதி kāṇāviyāti, பெ.(n.) 1. கரணியம் இன்னதெனத் தெரியாத நோய், a disease which could not be diagonised. 2. உள் நோய்; internal disease which could not be ascertained without operation. 3. பார்க்கக்கூடாத இடங்கள் அதாவது ஆண் அல்லது பெண் குறிகளில் காணும் நோய்; a disease of the genitals either in males or females. 4. உள்ளுறுப்புகளில் காணும் நோய்; disease of internal organs (சா.அக.);. |
காணாவுயிர் | காணாவுயிர் kāṇāvuyir, பெ.(n.) கண்ணால் தெளிவாகக் காண்பதற்கரிய நுண்ணிய உடம்புள்ள உயிரி; an insect too small to be seen. “காணாவுயிர்க்குங் கையற் றேங்கி” (மணிமே.3:89); [காண் + ஆ + உயிர்] |
காணி | காணி1 kāṇittal, பெ.(n.) 4 செகுன்றாவி (v.t); காட்டுதல் (நாஞ்);; to show. ம. காணிக்கு; க. காணிசு; தெ. கனுபின்சு. [காண் → காணி] காணி2 kāṇi, பெ.(n.) 1. காணியாட்சி (வின்.);; landed property, estate, possession. 2. கொடிவழியுரிமை; right of possess, hereditary rights. “மனுமுறைக் காணி வேந்தரைக் கொல்லக் கருதினாய்” (சேதுபு இராமதி:48); ம.க., தெ., து. காணி. [காண் + காணி] காணி3 kāṇi, பெ.(n.) 1. நில அளவில் ஒரு வேலியில் ஐந்தில் ஒரு பகுதி 400 குழிப்பரப்பு; an area of 400 kuzhi; one fifth of a veli in land measure. 2. நகரப் பரப்பில் ஒரு குடும்பில் 320இல் ஒரு பங்கு; 4 குழி; 2 பெருங்கோல் சதுரம் (22×22அடி);; குடும்பு பார்க்க; see _. 3. நிலம்; land. “ஊரிலேன் காணியில்லை” (திவ்.திருமாலை, 29);. ஒரு பெருங்கோல் (11 அடி); சதுரம் ஒரு குழி ஆகும். 100 குழி = ஒரு மா; 400 குழி-1 காணி. 2000 குழி ஒரு வேலி, காணி என்பது 20 பெருங்கோல் சதுரம் (220 அடி X.220 அடி);. [காண் + காணி] காணி4 kāṇi, பெ.(n.) 180 மதிப்புடைய கீழ்வாய் இலக்க எண்; a fraction of value 1/80, ” முந்திரிமேல் காணி மிகுவதேல்” (நாலடி, 346);. பழந்தமிழரின் பின்னமுறை கணக்குகளை எளிதில் செய்யும் வண்ணம் அமைந்தவை. ஒருமுழு எண்ணை 320 பகுதியாகப் பகிர்ந்து, அதில் ஒரு பகுதி முந்திரி எனப்படும். முந்திரியை மேலும் 320 கூறிட்டால் அதில் ஒரு கூறு கீழ் முந்திரி எனப்படும். கீழ் முந்திரியை மேலும் 320 கூறிட்டால் அதில் ஒரு கூறு கீழ்க்கீழ் முந்திரி ஆகும். முந்திரி = 1/32O கீழ் முந்திரி = 1/320 X 1/32O கீழ் கீழ் முந்திரி = 1/320 x 1/320 x 1/320 முந்திரி = 1/320 காணி = 1/80 மா = 1/20 மாகாணி _1/20+1/80 =1l16 = வீசம்/அரை = 1/2 கால் = 114; பாழ் = 0 காணி5 kāṇi, பெ.(n.) பொன்னாங்காணி (தைலவ. சைலவ);; a plant growing in damp places. [பொன்னாங்காணி → காணி] |
காணிகொண்டாரும் அடைகொண்டாரும் | காணிகொண்டாரும் அடைகொண்டாரும் kāṇikoṇṭārumaṭaikoṇṭārum, வி.அ.(adv.) நிலத்தைப் பரம்பரையாக உரிமையுடன் நுகரும் உரிமையாளரும், பயிரிடும் பகுதி உரிமை கொண்டாரும் (உரிமையாளர் – குத்தகையாளர் பகுதி உரிமை-உள்குத்தகை);; contractor, lessee, to let out farm lease out as land. “இக்கோயில் காணி கொண்டாரும் அடை கொண்டாரும் இக்கோயில் திறந்து முறை செய்தாரே இவ்விளக்கு எரிக்கக் கடவோ மானோம்” (முதற் குலோத்துங்கன், கி.பி.105 தெ.இ.கல்.தொ.5 கல்…1001);, (கல்அக.); [காணிகொண்டாரும்+அடைகொண்டாரும்] |
காணிக்கடன் | காணிக்கடன் kāṇikkaḍaṉ, பெ.(n.) நிலவரி; land tax. “இவ்வூர் இறை கட்டின காணிக்கடன்” (S.I.I.III,35);. ம. காணிக்கடன் [காணி + கடன்] காணிக்கடன் kāṇikkaḍaṉ, பெ..(n.) நிலவரி; land tax. இறையிலி நீங்கு நிலம் முக்காலாலே இரண்டு மாகாணி அரைக்காணி முந்திரிகை கீழக்காலே நான்குமா அரைக்காணி முந்திரிகை கீழ் நான்கு மாவினால் இறை கட்டின காணிக்கடன். [1/5-2000 எனும் கீழ் வாய் இலக்க எண்] இறை கட்டின காணிக்கடன்-கல்வெட்டு [காணி+கடன்] |
காணிக்காரன் | காணிக்காரன் kāṇikkāraṉ, பெ.(n.) 1. சிற்றூர் பங்காளி (இ.வ.);; hereditary proprietor of land, Coparcener in village lands held in common. 2 தென்பாண்டி நாட்டிலுள்ள மலைவாழ் மக்களின் ஓரினம் [G.Tn.D.7.]; a hill tribe in Tirunelveli district and Thiruvidhangur, one belonging to that tribe. ம. காணிக்காரன்; க. காணிகாற. [காணி+காரன்.] |
காணிக்கை | காணிக்கை1 kāṇikkai, பெ.(n.) தெய்வத்திற்கும் திருவடியார்க்கும் படைக்கும் அன்பளிப்புப் பொருள்; voluntary offering, commonly in money, gold, fruits, gifts to a temple or church or greatmen; present to a guru or other great person. “வேதாள நாதன் மகிழுங் காணிக்கை யாகி “(சேதுபு வேதாள 34);. ம. காணிக்க க., காணிகெ; தெ.கானுக. [காணி → காணிக்கை] காணிக்கை2 kāṇikkai, பெ.(n.) கடன்; debt, loan. “காணிக்கையானேன்… மாலையை வைத்து நான் காணிக்கை தீர்ந்த மறு மாதம்”(விறலிவிடு. 296.); [காணி → காணிக்கை] |
காணிக்கைச்சாசனம் | காணிக்கைச்சாசனம் kāṇikkaiccācaṉam, பெ.(n.) காணிக்கை முறி பார்க்க ; see _. “இம்முடிக் காணிக்கைச்சாசனந் தந்தனனே.” [பெருந்தொ.1338]. [காணிக்கை + சாசனம்] |
காணிக்கைத்தட்டு | காணிக்கைத்தட்டு kāṇikkaittaṭṭu, பெ.(n.) காணிக்கை வாங்கு தட்டு; salvar for receiving gifts. [காணிக்கை + தட்டு] |
காணிக்கைமுறி | காணிக்கைமுறி kāṇikkaimuṟi, பெ.(n.) உரிமை முறி ; document conferring a right to properties. மறுவ. காணிக்கைச் சாசனம் [காணிக்கை + முறி] |
காணிக்கோல் | காணிக்கோல் kāṇikāl, பெ.(n.) 11′,-0″ பண்டைய நிலம் அளக்கும் கோல்; an ancient linear measure to measure lands. 6 விரல் = 1 சாண் (814 அங்குலம்); 2 சாண் = 1 முழம் (1612 அங்குலம்); 2 முழம் = 1 கோல் (சிறுகோல்); (2′.9″); 4 கோல் = 1காணிக்கோல் (11′-0″); [காணி + கோல்] |
காணிச்சாறு | காணிச்சாறு kāṇiccāṟu, பெ.(n.) 1. பொன்னாங்காணிச்சாறு; the juice of the leaves of the eclipse plant. (சா.அக.); [காணி + சாறு] |
காணித்தாய வழக்கு | காணித்தாய வழக்கு kāṇittāyavaḻkku, பெ.(n.) பங்காளிகளின் நிலவழக்கு (யாழ்ப்.);. dispute between coparceners about heriditary land. மறுவ காணித்தாயம் [காணி + தாயம் + வழக்கு] |
காணித்துண்டு | காணித்துண்டு kāṇittuṇṭu, பெ.(n.) நிலத்தின் சிறுபகுதி (வின்);; piece or strip of land. [காணி+துண்டு] |
காணிநிலம் | காணிநிலம்1 kāṇinilam, பெ.(n.) உரிமைநிலம் (வின்);, land in full ownership. மறுவ. காணிப்பூமி [காணி + நிலம்] காணிநிலம்2 kāṇinilam, பெ.(n.) ஒரு காணி நிலம் ; land measuring one käni “காணி நிலம் வேண்டும்” (பாரதி); மறுவ. காணிப்பூமி [காணி + நிலம்] |
காணிப் பிடிபாடு | காணிப் பிடிபாடு kāṇippiḍipāḍu, பெ.(n.) நில விளைவு ஒலை (பத்திரம்);[ (.E.R.66 of 1916, p.123);; deed of lease for cultivation. [காணி+பிடிபாடு] |
காணிப்பற்று | காணிப்பற்று kāṇippaṟṟu, பெ.(n.) உரிமை ஊர் village in full ownership. “குருகுலராமன் காணிப்பற்று மணவிலிருக்கை” (கல்.); [காணி + பற்று] |
காணிப்பூமி | காணிப்பூமி kāṇippūmi, பெ.(n.) காணிநிலம் பார்க்க; see _. [காணி + பூமி] |
காணிப்பேறு | காணிப்பேறு kāṇippēṟu, பெ.(n.) நிலச் சொத்து படைத்திருப்பதால் உண்டாகும் பெருமை(W.G.);; the dignity of a land-holder, a term used in conveyances of mirasi rights. [காணி + பேறு] |
காணிமாடு | காணிமாடு kāṇimāṭu, பெ.(n.) குத்தகை காணியைப் போன்று இடையர் உரிமையுடன் பெற்றுள்ள பயன்தரும் மாடு; to let out and lease out as a cow. “மலையம் பாக்கத்து மன்றாடி பெருமாள் மகன் கேரக் கோனேன் இவ்வெருமை பத்தும் காணி மாடா கக்கைக் கொண்டு அருண்மொழி தேவன் உழக்கால்”(தெ.கல்.தொ.7 கல்.539);. (கல்அக);. [காணி+மாடு] தவச விளைவினால் பயன்தரும் நிலங்களைக் காணியாட்சியாகப் பெறுதலைப் போன்று, பால்வளம் தருதல் மாடெனும் செல்வத்தாலாதனான். மாடு காணி மாடென்று கருத்துடன் கூறப்பட்டுள்ளது. காணியாட்சி போன்ற உரிமையுடன் இடையர் பெறும் மாடு. |
காணிமானியம் | காணிமானியம் kāṇimāṉiyam, பெ.(n.) 1. குடிவழி மானியம் (சர்வமானியம்);; hereditary land exempt from all taxes. 2. ஊர்ப் பங்காளிகளுக்குப் பொதுவான மானியம்; inam land enjoyed in common by the whole community of mirasdars in a village. [காணி +மானியம்] |
காணிமாறின.நிலம் | காணிமாறின.நிலம் kāṇimāṟiṉanilam, பெ.(n.) காணியாட்சி நிலத்திணை. அப்பணி செவ்வனே நிகழாத குற்றத்தால், காணியாட்சி உரிமையினை மாற்றி மற்றொரு பணியாளனுக்கு உரிமை செய்யும் நிலம்; to obtain a contract of lease. “இந்நாட்டு குலோத்துங்க சோழன் கருப்பூரில் துரோகஞ் செய் நாரை காணி மாறின நிலமும்” (தெ.கல்.தொ.5 கல்.708);, (கல்,அக.); [காணி+மாறின.நிலம்] |
காணிமாறு-தல் | காணிமாறு-தல் kāṇimāṟudal, 5 செ.கு.வி.(v.i.) உரிமைநிலத்தை இழக்கச் செய்தல்; to disposses a person of his land. “கருப்பூரில் துரோகம் செய்தாரைக் காணிமாறின நிலமும்’ (S.I.I.V, 708. 5, 298);. [காணி + மாறு] |
காணிமேரை | காணிமேரை kāṇimērai, பெ.(n.) நில உடைமையாளர், விளைவைப் பொறுத்து அதிகப்படியாகப் பெற்றுக் கொள்ளும் விளைவின் பகுதி (W.G.);; a portion of the produce claimed extra by mirasdars as their customary perquisite. [காணி + மேரை] |
காணியாட்சி | காணியாட்சி kāṇiyāṭci, பெ.(n.) உரிமை நிலம்; hereditary right to land, to offices, to fees, to an estate or to a kingdom; domain obtained by inheritance; that which is held as free and hereditary property, estate, one’s own possession. “மேலைத் தெருவில் ஒரு மடமும் காணியாட்சியும் கொடுத்த அளவுக்கு”(S.I.i.i. 124);. மறுவ. காணாசி (கொ.ஆ); க., தெ. காணயாசி. [காணி + ஆட்சி] |
காணியாட்சியூர் | காணியாட்சியூர் kāṇiyāṭciyūr, பெ.(n.) குடியுரிமையுள்ள ஊர் hereditary village. [காணி + ஆட்சி + ஊர்] |
காணிவெட்டி | காணிவெட்டி kāṇiveṭṭi, பெ.(n.) sவரிவகை; a kind of tax. இவ்வூர்ப் பிடாகை ஒபாதி இறை என்றும் நீர்விலை என்றும் தவணைக்காடி என்றும் நெலெ இத்தன் என்றும் ஆயம் அந்தராயமென்றும் இறையிலிக்காசு என்றும், மாவிறையென்றும் உளச்சேவக மென்றும் காணிவெட்டி என்றும்” [காணி + வெட்டி] |
காணீலம் | காணீலம் kāṇīlam, பெ.(n.) கொடிவேலி; Ceylon leadwork (சா.அக.);. [காள் + நீலம்] |
காணுகம் | காணுகம் gāṇugam, பெ.(n.) காகம்; crow (த.சொ.அக.);. [காள் → கானகம் (கருப்பு); → காணுகம்] |
காணுங்கோள் | காணுங்கோள் kāṇuṅāḷ, பெ.(n.) கண்ணுக்குப் புலனாகும் கோள் (வின்);; visible planets, opp, to _. [காணும் + கோள்] |
காணும் | காணும்1 kāṇum, இடை (part.) முன்னிலைப் பன்மையில்வரும் ஓர் அசை; expl. in the 2nd pers. pl. in compounds. “நீர்போங்காணும்” (தஞ்சை);. [காண் + காணும்] காணும்2 kāṇum, வி.மு.(v.fin) போதுமானது; suffi cient. இந்த அரிசி இரண்டு மாதத்துக்குக் காணும் (உ.வ.);.. [காணுதல் = பார்வைக்கு ஒப்பாயிருத்தல், நிறைவளித்தல்] chin. _. Gothic. kunnama . |
காணும்பொங்கல் | காணும்பொங்கல் kāṇumboṅgal, பெ.(n.) மாட்டுப் பொங்கலை அடுத்து ஒருவரை ஒருவர் கண்டு நலம் உசாவும் கொண்டாட்ட நாள்; the day of social visit, following the _. மறுவ. காண்பொங்கல் [காண்பொங்கல் → காணும்பொங்கல்] |
காணும்பொழுது | காணும்பொழுது kāṇumboḻudu, பெ.(n.) கதிரவன் தோற்றம்; sunrise. “படுத்திருந்து காணும்பொழுதி லெழுந்து” (தெய்வச். விறலி 44); [காண் + உம் + பொழுது] |
காண் | காண் kāṇ, இடை[int] முன்னிலையில் வரும் ஓர் உரையசை; expletive of the 2nd pers, meaning behold. “துவ்வாய் காண்” (குறள் 294); [காண்-1 → காண்-4.] |
காண்’ | அஅன்ன ஆவன்னா aaṉṉaāvaṉṉā, பெ. (n.) அரிவரி யென்னும் தமிழ் வண்ணமாலை (குறுங்கணக்கும் நெடுங்கணக்கும்);; Tamil Alphabet. எழுத்துகளைக் கல்லா மக்கள், சிறப்பாகச் சிறுவர் சிறுமியர், எளிதாக ஒலித்துக் கற்கும் பொருட்டு, பண்டைத் தொடக்கப்பள்ளி யாசிரியர் உயிரும் உயிர்மெய்யுமாகிய இருவகைக் குறிலுக்கும்’அன்ன’ச் சாரியையும், இருவகை நெடிலுக்கும் அன்னா’ச் சாரியையும் ஏற்படுத்தினர்; ‘அஆ’ என்னும் ஈரெழுத்தும் தமிழ் வண்ணமாலையின் முதலெழுத்துகளாதலின், அவை முதற்குறிப்பாகி, அம் முதற்குறிப்பே’அஅன்ன ஆவன்னா’ என்று வண்ணமாலைப் பெயராயிற்று. இது ‘alpha’, ‘beta’ என்னும் கிரேக்க இரு முதலெழுத்துகளும் சேர்ந்து”alphabetum’ என்று இலத்தீனிலும், ‘alphabet’ என்று ஆங்கிலத்திலும், வண்ணமாலைப் பெயராக வழங்குவது போன்றது; அ, இ, க, கி என்று ஒரு மாத்திரை யொலிக்குங்குறிலெழுத்துகளை விட்டொலிப்பது, சிறுபிள்ளைகட்குச் சற்று வருத்தமுற மூச்சு வாங்குவதால்,’அஅன்ன’ என்பது”ஆனா” என்றும் இஅன்ன என்பது’ஈனா’ என்றும், மாணாக்க நிலையிலும் பின்னும் ஒலிக்கப்பட்டுவந்தன. இவ்வொலிப்புமுறை குறில்களின் உண்மையான ஒலியளவை உடனே தெரிந்துகொள்ளத் தடையாயிருந்தமையின், இந்நூற்றாண்டுத் தொடக்கத்தில் அரசியற் கல்வித்துறையறிஞர், சாரியையின்றி ஒலிநூன் முறைப்படி அ, ஆ, இ, ஈ,… என்று ஒலித்துப் பயிலும் முறையைப் புகுத்திவிட்டனர். அதனால், இன்று ‘அஆ’ என்பது வண்ணமாலைப் பெயராக வழங்கி வருகின்றது. இது புணர்ச்சியில்’அவ்வா’ என்றாகும்; |
காண்'(ணு)-தல் | அஅன்ன ஆவன்னா aaṉṉaāvaṉṉā, பெ. (n.) அரிவரி யென்னும் தமிழ் வண்ணமாலை (குறுங்கணக்கும் நெடுங்கணக்கும்);; Tamil Alphabet. எழுத்துகளைக் கல்லா மக்கள், சிறப்பாகச் சிறுவர் சிறுமியர், எளிதாக ஒலித்துக் கற்கும் பொருட்டு, பண்டைத் தொடக்கப்பள்ளி யாசிரியர் உயிரும் உயிர்மெய்யுமாகிய இருவகைக் குறிலுக்கும்’அன்ன’ச் சாரியையும், இருவகை நெடிலுக்கும் அன்னா’ச் சாரியையும் ஏற்படுத்தினர்; ‘அஆ’ என்னும் ஈரெழுத்தும் தமிழ் வண்ணமாலையின் முதலெழுத்துகளாதலின், அவை முதற்குறிப்பாகி, அம் முதற்குறிப்பே’அஅன்ன ஆவன்னா’ என்று வண்ணமாலைப் பெயராயிற்று. இது ‘alpha’, ‘beta’ என்னும் கிரேக்க இரு முதலெழுத்துகளும் சேர்ந்து”alphabetum’ என்று இலத்தீனிலும், ‘alphabet’ என்று ஆங்கிலத்திலும், வண்ணமாலைப் பெயராக வழங்குவது போன்றது; அ, இ, க, கி என்று ஒரு மாத்திரை யொலிக்குங்குறிலெழுத்துகளை விட்டொலிப்பது, சிறுபிள்ளைகட்குச் சற்று வருத்தமுற மூச்சு வாங்குவதால்,’அஅன்ன’ என்பது”ஆனா” என்றும் இஅன்ன என்பது’ஈனா’ என்றும், மாணாக்க நிலையிலும் பின்னும் ஒலிக்கப்பட்டுவந்தன. இவ்வொலிப்புமுறை குறில்களின் உண்மையான ஒலியளவை உடனே தெரிந்துகொள்ளத் தடையாயிருந்தமையின், இந்நூற்றாண்டுத் தொடக்கத்தில் அரசியற் கல்வித்துறையறிஞர், சாரியையின்றி ஒலிநூன் முறைப்படி அ, ஆ, இ, ஈ,… என்று ஒலித்துப் பயிலும் முறையைப் புகுத்திவிட்டனர். அதனால், இன்று ‘அஆ’ என்பது வண்ணமாலைப் பெயராக வழங்கி வருகின்றது. இது புணர்ச்சியில்’அவ்வா’ என்றாகும்; |
காண்கம் | காண்கம் kāṇkam, வி.மு (v.fin.) காண்போம்; letus see. “வானுயர் நெடுமணலேறி யானது காண்கம் வம்மோ”(ஐங்குறு.199);. [காண் →காண்கம்] |
காண்கை | காண்கை kāṇkai, பெ.(n.) 1.அறிவு; knowledge. “பொய்யா. காண்கையர்” (முல்லைப். 56); 2. காணுதல்; seeing. அவர்க்குத் தோன்றியது பொய்யாகக் காண்கையிலே தோன்றாத”(ஒழிவி யோகக்.1);. க. காண்கெ காணிகெ. [காண் → காண்கை] |
காண்கொடு-த்தல் | காண்கொடு-த்தல் kāṇkoḍuttal, 4 செ.குன்றாவி. (v.t.) பார்க்கும்படி செய்தல்; to enable to see. “கனவினுட் காண்கொடாக் கண்ணும்” (புறத்திரட்டு. 1524);. [காண் + கொடு] |
காண்டகம் | காண்டகம்1 gāṇṭagam, பெ.(n.) 1. காடு (பிங்.);; jungle, desert, woods. 2. நோய் (மூ.இ.);; sickness, malady, disease. 3. நிலவேம்பு; ground neem. 4. கல்யானைக் கொம்பு; the tusk of reinoceros, 5. நீர்; water. 6. சீந்தில்; moon-creeper (சா.அக.);. [காள் → காண்→ காண்டு→காண்டம் → காண்டகம் . காள் = கருமை, இருள் இருண்டகாடு துன்பம், நோய்] |
காண்டகாகம் | காண்டகாகம் kāṇṭakākam, பெ.(n.) பாகல்; spiked bitter cucumber (சா.அக.);. [கண்டு = முள் – கண்டு →கண்டகம் →காண்டகம் + ஆகம்.] |
காண்டகுண்டம் | காண்டகுண்டம் gāṇṭaguṇṭam, பெ.(n.) ஒருவகை கோரைப்புல்; a variety of sedge grass (சா.அக.);. [கண்டு =முள் – கண்டு → கண்டகம் → காண்டகம் +உண்டம்] |
காண்டகை | காண்டகை gāṇṭagai, பெ.(n.) காட்டுக்கருணை; a species of forest elephantyam (சா.அக.);. [கண்டு → காண்டு →காண்டகை] |
காண்டஞ் சூலி | காண்டஞ் சூலி kāṇṭañjūli, பெ.(n.) கரிச்சுள்ளி; Indian purple nail dye (சா.அக.);. [காண்டம் + சூலி] |
காண்டமந்திரம் | காண்டமந்திரம் kāṇṭamandiram, பெ.(n.) நளனுக்குத் தெரிந்திருந்ததாகக் கூறப்படுவதும், குதிரையை விரைவாக வானில் ஓடச்செய்வதுமான மந்திரம்; the art of making horse run faster with the aid of mantrams. It is said that Nala an expert in the art and was aware of this Mantram. [காண்டம்(விரைவு, முடுக்கம்); சமந்திரம் (சீவக.793 உரை);] |
காண்டமோசனம் | காண்டமோசனம் kāṇṭamōcaṉam, பெ.(n.) திருமறையின் ஒவ்வொரு காண்டத்தையும் பாடிமுடிக்குங்காற் செய்யும் செயல்கள் (திருவானைக் கோச்செங்.14.); ; ceremony performed at the close of the study of a kånga of a Vēda. [காண்டம் + மோசனம்] |
காண்டம் | காண்டம் kāṇṭam, பெ.(n.) 1.மலைவேம்பு hill margosa – Melia azadirach alias M.Composita. 2. கானற்பலா; jungle jack – Artocarpus hirsuta (சா.அக.);. [கா+அண்டம்] காண்டம்1 kāṇṭam, பெ.(n.) 1. காடு [(ிவா.);; jungle. desert, wilderness. 2.மலை (பிங்);; mountain, hill. 3. மலை வேம்பு; hill margose. 4. நிலவேம்பு; ground neegn. 5.சீந்தில்; moon-creeper. 6.வஞ்சிமரம்; South Indian willow [காள் → காண் → காண்டு → காண்டம் . காள் = கருமை இருள் இருளடர்ந்த காடு காடடர்ந்தமலை] காண்டம்2 kāṇṭam, பெ.(n.) 1.நீர்; water, sacred water. “திருத்திவா யதுக்கிய குங்குமக் காண்டமும்” (கல்லா49:16);. 2. கோல் (சூடா);; staft, rod. 3 அடித் தண்டு (யாழ்.அக);; stem, stalk 4.அம்பு (சூடா);; arrow . 5. படைக்கலன் (சூடா);; weapon. 6 நூலுட் பெரும்பிரிவு (பிங்);; a large section of a book. 7. முடிவு (சூடா); ; end, limit. 8. சமயம்; opportunity, season, 9.திரள் (அக.நி);; collection, multitude, assemblage. [கண்டம் → காண்டம் → கண்டம் = வெட்டப்பட்ட கண்தெணி சிறுபகுதி/] கண்டம் என்னும் சொல்லை _. என்றும் காண்டம் என்னும் சொல்லை _. என்றும் முதலெழுத்தை வேற்படுத்தி வடமொழியாளர் மயக்கியிருக்கின்றனர்(வ.வ.114.); காண்டம்3 kāṇṭam, பெ.(n.) 1.அணிகலச்செப்பு: jewel-box. 2. கமண்டலம்; ewer. [கண்டம் → காண்டம். கண்டம் = பகுதி, துண்டு, சிறியது] காண்டம்4 kāṇṭam, பெ.(n.) 1. திரைச்சீலை (பிங்.);; curtain. 2.ஆடை (சூடா.);; cloth, garment. [கண்டம் → காண்டம் → கண்டம் = வெட்டப்பட்ட பகுதி.கள் = வெட்டு, நீக்கு, கள் →கண்டு→ கண்டம்] காண்டம் kāṇṭam, பெ.(n.) அறிவு (புத்தி); (அக.நி);; mind, intellect. [காண் → காண்டம்] காண்டம்6 kāṇṭam, பெ.(n.) நீர்க்காக்கை ; water crow. [காருண்டம் → காண்டம்] காண்டம்7 kāṇṭam, பெ(n.) முகமன் (த.சொ. அக.); flattery, greetings. [காண்கு →காண்டு →காண்டம்] |
காண்டம்பனை | காண்டம்பனை kāṇṭampaṉai, பெ.(n.); மலைக்கமுகு; hill areca-nut palm of Travancore – Bentinckis Coddapana (சா.அக.). [கா_அண்டம்+பனை.] காண்டம்பனை kāṇṭambaṉai, பெ.(n.) மலைக் கமுகு; hilareca-nutpalm of Travancore (சா.அக.);. [காண்டம் + பனை] |
காண்டம்பலா | காண்டம்பலா kāṇṭambalā, பெ.(n.) காட்டுப்பலா wild-jackfruit (சா.அக.);. [கண்டு → கண்டம் → காண்டம் + பலா.] |
காண்டரிக்கன் | காண்டரிக்கன் kāṇṭarikkaṉ, பெ.(n.) காண்டரிசாரணை பார்க்க; see kandar. Säranai (சா.அக.);. |
காண்டரிசாரணை | காண்டரிசாரணை kāṇṭaricāraṇai, பெ.(n.) சத்தி சாரணை அல்லது மூக்கிரட்டை; spreading hogweed – Boerhaavia repens(சா.அக.). |
காண்டலளவை | காண்டலளவை kāṇṭalaḷavai, பெ.(n.) கண்ணால் பார்த்தல், கண்கூடாகப் பார்த்தல்; perception: means of perception. “oகாண்டவனை நோக்குபு ககத்திறைவன் ககத்திறைவன்” (சேதுபு கத்துரு.77.); [காண்டல் + அளவை] |
காண்டல் | காண்டல் kāṇṭal, பெ.(n.) காண்டலளவை பார்க்க; See _. “காண்டல் கருத-லுவம மாகமம்” (மணிமே27:9);. [காண் → காண்டல்] |
காண்டவசூரணம் | காண்டவசூரணம் kāṇṭavacūraṇam, பெ.(n.) 1. தாளிசபத்திரி, கக்கு, மிளகு, திப்பிலி, சீரகம், இலவங்கப் பட்டை, ஏலம் முதலிய தணிகை மருந்துகளைச் சேர்த்து இடித்து ஈளை நோய்க்குக் கொடுக்கும் ஒரு பொடி மருந்து; a sedative medicine consisting of a mixture of several powdered drugs such as dried giner, pepper, long pepper, cumin seed; cardamom and other sedative agents, 2. காற்றை (வாயுவை);; கண்டிக்கக் கொடுக்கும் மருந்து; a drug formerly used against futulence-zeodoti (சா.அக.);; [காண்டவம்+குரணம்] |
காண்டவதகன் | காண்டவதகன் gāṇṭavadagaṉ, பெ.(n.) பாண்டவரில் நடுப்பிறந்த அருச்சுனன்; Arjuna, who burnt down the kåndava forest. [காண்டவம் + தகனன்.] |
காண்டவம் | காண்டவம் kāṇṭavam, பெ.(n.) தேவர் தலைவனுக்கு விருப்பமானதும் அருச்சுனனால் நெருப்பூட்டப்பட்டதுமான ஒரு காடு; a forest, sacred to Indra and burnt by Arjuna as an offering to Agni (சா.அக.);. ‘காண்டவத்தைக் கனலெரிவாய் பெய்வித்தானை'(திவ்.பெரியதி2-5-2] [கண்டு →காண்டு (பகுதி);→ காண்டவம்] காண்டவம் kāṇṭavam, பெ.(n.) நிலவேம்பு; ground neem (சா.அக.);. [கண்டு→காண்டு → காண்டவம்] |
காண்டாதிக்கிருதம் | காண்டாதிக்கிருதம் kāṇṭātikkirutam, பெ.(n.) நில வேம்புடன் வேறு கடைச் சரக்குகளைச் சேர்த்து நெய்யிலிட்டுக் காய்ச்சி வடித்த மருந்து நெய்; a medicinal ghee prepared with ground neem as a chief ingredient along with other bazaar drugs (சா.அக.);. [காண்டம்+ஆதி+கிருதம்] |
காண்டாதிநெய் | காண்டாதிநெய் kāṇṭātiney, பெ.(n.) நிலவேம்பு முதலியவற்றால் ஆன நெய்வடிவாயுள்ள ஒரு கூட்டு மருந்து (வின்);; medicinal preparation of chiretta, etc with ghee as vehicle. [காண்டாதி+ நெய்] |
காண்டாமிருகம் | காண்டாமிருகம் gāṇṭāmirugam, பெ.(n.) கல்யானை; rhinoceros. மறுவ. கால்யானை ம. காண்டாமிர்கம் [காண்டு → காண்டம் + மிருகம்] |
காண்டாமிருகரத்தம் | காண்டாமிருகரத்தம் gāṇṭāmirugarattam, பெ.(n.) 1. வேங்கை மரம்; Indian kino tree. 2. பெருமரவகை (L);; dragon’s-blood tree. 3.பிரம்பு வகை(L.);; dragon’s blood cane. 4. பிசின் வகை (வின்.);; resin from these trees. [காண்டாமிருகம் + அரத்தம். ஒரு மரத்தின்பிசினில் செய்த அரக்கு] |
காண்டாவணன் | காண்டாவணன் kāṇṭāvaṇaṉ, பெ.(n.) இந்திரன்; Indra the lord of Kandava. [காண்டாவனம் →காண்டாவணன்] |
காண்டாவனம் | காண்டாவனம் kāṇṭāvaṉam, பெ.(n.) காண்டவம் பார்க்க; see _. “காண்டா வன மென்பதோர் காடு'(திவ். பெரியதி.242.); [காண்டவம் → காண்டாவனம்] |
காண்டிகை | காண்டிகை gāṇṭigai, பெ.(n.) நூற்பாப்பொருளைச் சுருக்கமாக விளக்கும் உரைவகை; brefexposition of the salient points in a text. “சூத்திரம் புரைபவுடன்படக் காண்டிகை புணர்ப்பினும்” (தொல்/ பொருள்.மரபு.102);. [கண்டு = தொகுப்பு, பிரிவு. கண்டு → கண்டி. கண்டிகை →காண்டிகை] |
காண்டிகையுரை | காண்டிகையுரை kāṇṭikaiyurai, பெ.(n.) காண்டிகை பார்க்க; see kandigai, |
காண்டியகாலம் | காண்டியகாலம் kāṇṭiyakālam, பெ.(n.) முதுவேனிற்காலம்; mid summer (சா.அக.);. [காண்டியம் (வெப்பம்);→காலம்] |
காண்டியம் | காண்டியம் kāṇṭiyam, பெ.(n.) வெக்கை; intensity of heat; heat as felt in the hot season. [காள்→காண்டு→காண்டியம் .] |
காண்டியயம் | காண்டியயம் kāṇṭiyayam, பெ.(n.) வெக்கை; intensity of heat (சா.அக.);. [காண்டி+அயம்] |
காண்டிர் | காண்டிர் kāṇṭir, பெ.(n.) “முன்னிலைப்பன்மையசை, வேளைத்தருவன் காண்டிர்”(கந்தபு. காமதகன.13); [காண்→காண்டி →காண்டிர்] |
காண்டில் | காண்டில் kāṇṭil, பெ.(n.) ஒருவகைச் செய்நஞ்சு: a kind of prepared arsenic [(சா.அக);. [காள்→காண்டு (வெப்பம்); →காண்டில்] |
காண்டிவம் | காண்டிவம் kāṇṭivam, பெ.(n.) காண்டிவம் பார்க்க ; see _. ‘காண்டிவங் கரத்தேந்தி” (பாரத.காண்டவ.8);. [காண்டிவம் → காண்டிவம்] |
காண்டீபன் | காண்டீபன் kāṇṭīpaṉ, பெ.(n.) காண்டீவன் பார்க்க ; see _. [காண்டிவர் → காண்பன்] |
காண்டீரம் | காண்டீரம் kāṇṭīram, பெ.(n.) யானைத்திப்பிலி: a bog variety of tippali (சா.அக.);. [கண்டு→ கண்டீரம்-→காண்டிரம்] |
காண்டீவன் | காண்டீவன் kāṇṭīvaṉ, பெ.(n.) காண்டீவம் என்னும் வில்லையுடைய அருச்சுனன் (பிங்.); Arjuna, as armed with kändwan. மறுவ. காண்டிபன் [கா→காண்டு →கண்டீவன்.] |
காண்டீவம் | காண்டீவம் kāṇṭīvam, பெ.(n.) அருச்சுனன் வில்; Arjuna’s bow. 2.சிலையோரை (தனு ராசி); (வின்.);; sagittatius, a constellation of the zodiac. மறுவ. காண்டிவம். காண்டியம், காண்டிபம். [க → காண்டு → காண்டிவம்] |
காண்டு | காண்டு1 kāṇṭu, பெ.(n.) கூப்பிடு தொலைவு (வின்);; earshot; hearing distance. [காண் → காண்டு] காண்டு 2 kāṇṭu, பெ.(n.) 1. சினம்; anger. 2.துன்பம்; difficulty, உனக்கு அதைச் செய்ய என்ன காண்டு? (உ.வ.);. க. காண்டு தெ. காடு [gadu] [காள் + காண்டு] |
காண்டுமதம் | காண்டுமதம் kāṇṭumadam, பெ.(n.) துன்பம் (யாழ்.அக.);; suffering, palm, [காள் → காண்டு + மதம்] |
காண்டை | காண்டை1 kāṇṭai, பெ.(n.) 1. கற்குகை, கற்பாழி [சூடா]; cave cavern. 2.தவம் செய்வோர் இருப்பிடம் (பிங்.);; dwelling of a sage, hermitage. [காள் → காண்டை.] காண்டை2 kāṇṭai, பெ.(n.) காண் என்னும் ஓர் ஏவல்வினை; imperative. ‘முயங்கு முறைநாள் கழிதலுறாமைக் காண்டை “(கலித்.12.); [காண் → காண்டை] |
காண்பவன் | காண்பவன் kāṇpavaṉ, பெ.(n.) அறிபவன்; one who knows. “காண்பவன் முதலிய திறமும்” (கந்தபு:கடவுள்வா.6); [காண் → காண்பவன்] |
காண்பி-த்தல் | காண்பி-த்தல் kāṇpittal, 1.பி.வி.(v.caus] 1.காட்டுதல்; to show, exhibit, display. 2. மெய்ப்பித்தல், சரியென்று காட்டுதல்; to prove, demonstrate. [காண் + பி.(பி.வி.ஈறு);] |
காண்பு | காண்பு kāṇpu, பெ.(n.) காட்சி; seeing sight. “கார்ப்பெய றலைஇய காண்பின் காலை” (புறநா.119:1);. [கான் → காண்பு] |
காண்புநேரம் | காண்புநேரம் kāṇpunēram, பெ.(n.) காண் பதற்கு நேரம் ஒதுக்குகை; an appointment. |
காண்பேழை | காண்பேழை kāṇpēḻai, பெ.(n.) காட்சிப்பொருள் களை வைக்கும் கண்ணாடிக் காட்சிப் பெட்டி; show case. [காண்+பேழை] |
காண்பொங்கல் | காண்பொங்கல் kāṇpoṅgal, பெ.(n.) காணும் பொங்கல் பார்க்க; see _. மறுவ. காணும்பொங்கல், கருநாள். [காண் + பொங்கல்] |
காண்போர் மாடம் | காண்போர் மாடம் kāṇpōrmāṭam, பெ.(n.) பொதுமக்கள் வசதியாக இருந்து நல்ல காட்சிகளைப் பார்க்க ஒதுக்கப்பட்ட இடம்; viewers gallery. [காண்போர் + மாடம்] |
காண்யாட்சிமிராசு | காண்யாட்சிமிராசு kāṇyāṭcimirācu, பெ.(n.) ஊர்நிலவுரிமை (C.G.);; proprietary right in village lands. [காணி + ஆட்சி + மிராக] |
காண்வரி | காண்வரி kāṇvari, பெ.(n.) பிறர் காணும்படி அடிக்கடி வந்து நடிக்குங்கூத்து dances performed at frequent and repeated intervals by expert dancers on the stage. “கருநெடுங் கண்ணி காண்வரிக் கோலமும்'(சிலம் 8.83); [காண் + வரி] |
காண்வா-தல் (காண்வருதல்) | காண்வா-தல் (காண்வருதல்) kāṇvādalkāṇvarudal, 18 செ.கு.வி.(v.i.) காட்சி வருதல்; to come into view, to be sighted, “காண்வர வியன்றவிக் கவின்பெறு பனித்துறை” (கலித்.127:14);. [காண் + வா] |
காதகன் | காதகன் gātagaṉ, பெ.(n.) 1. கொடுந்திறல் படைத்தவன்; astute man. 2. கொலையாளி; murderer (பிங்.);. [காது → காதுவன் → காதகன்] |
காதகம் | காதகம் gātagam, பெ.(n.) 1. கொலை; killing. 2. துன்புறுத்துதல்; harassing. [கொல் → கோறு → சாறு → சாது → சாதுகம் → சாதகம்] |
காதடி | காதடி kātaṭi, பெ.(n.) செவியடி, that portion behind the lobe of the ear(சா.அக);. [காது+அடி] |
காதடை-த்தல் | காதடை-த்தல் kātaḍaittal, 4 செ.கு.வி.(v.i.) நோய், பசி முதலியவற்றால் செவி கேளாது போதல்; to experience a choking sensation in the ear owing to fatigue, hunger, disease etc. ம. காதடயுக [காது + அடை] காதடை-த்தல் kātaḍaittal, செ.கு.வி. (v.i.) 1உரத்த ஒலி, கூச்சல் போன்றவற்றால் கேட்க இயலாதவாறு செய்தல்; to deafen. 2. நெடும் பசியால் காது பஞ்சடைத்துப்போதல், extreme hunger. [காது+அடை-,] |
காதடைப்பு | காதடைப்பு kātaḍaippu, பெ.(n.) பசி, நோய் முதலியவற்றால் காது கேளாமை; deafness occasioned by fatigue, disease, etc., [காது + அடைப்பு] |
காதட்டி | காதட்டி kātaṭṭi, பெ.(n.) ஆதொண்டை: thony caper-Capparis horrida alias Czeylanica (சா.அக.);. [கால்+(தொடு); தொட்டி] |
காதணி | காதணி kātaṇi, பெ.(n.) காதுக்கிடும் அணிகலன் (திவா.);; ear ornament. [காது. அணி] |
காதனவிரணம் | காதனவிரணம் kātaṉaviraṇam, பெ.(n.) அரிபுண்; rodent ulcer (சா.அக.);. |
காதன் | காதன் kātaṉ, பெ.(n.) கொலை செய்பவன் (வின்.);; murderer. [காதுதல் = வெட்டுதல். காது → காதன்] |
காதன்மை | காதன்மை kātaṉmai, பெ.(n.) 1. அன்பு; affection, attachment. “காதன்மை கந்தாவறி வறியார்த் தேறுதல்” (குறள், 507);. 2. விருப்பம், desire. “காதன்மை கையல் லதன் கட் செயல்”(குறள் 832); [காதல் → காதன்மை] |
காதம் | காதம்1 kātam, பெ.(n.) 1. பண்டைய நீட்டல் அள்வு a linear measure of ancient times. ‘”ஆறைங்காதம்” (சிலப்.); 2 ஏழறை நாழிகை வழி; a distance of walk of three hours. க. காவத, காவுத; மகாதம்; து.காவுத. [கா (நீட்சி); → காவு → காவதம்] காதம்2 kātam, பெ.(n.) 1. கள்; toddy. 2. நாற்சதுரமான துரவு (கிணறு);; small, square well. [கள் → கதம் → காதம்] காதம்3 kātam, பெ.(n.) 1. கொலை (வின்.);; killing, slaughter, murder. [கொல் → கோறு → காறு → காது → காதம்] |
காதம்பம் | காதம்பம்1 kātambam, பெ.(n.) 1.அன்னப் புள்வகை (வின்.);; a kind of swan with dark grey wings. 2. கானாங்கோழி (பிங்.);; a kind of wood-fowl with long legs. 3. தயிரோடு; cream on curded milk. [கது (சிறியது); → கதும்பம் → காதம்பம்] காதம்பம்2 kātambam, பெ.(n.) 1. கரும்பு; sugarcane. 2. அம்பு ; arrow (சா.அக.);. [காழ் → காடு → காது → காதம்பம்] |
காதம்பரம் | காதம்பரம்3 kātambaram, பெ.(n.) 1. தயிரேடு; cream deposited on curdled milk. 2. கருக்கரை; sugar (சா.அக.);. [காழ் → காடு ;காது ; காதம்பரம்] |
காதம்பரி | காதம்பரி kātambari, பெ.(n.) ஆதிவராக கவியால் வடமொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட தமிழ்க் காவியம் (செந்.5:492);; Tamil rendering of the Sanskrit Kādambari of Băna by Adi-varăgakavi [கடம்பு (மரம்); → காதம்பரம் (கடம்பு மலர்); → காதம்பரி] பாணபட்டர் என்பவரால் வடமொழியில் இயற்றப்பட்ட நூல். |
காதரன் | காதரன் kātaraṉ, பெ.(n.) அச்சமுடையவன் (பிங்.);; timid person. [காதரம் → காதரன்.] |
காதரம் | காதரம் kātaram, பெ.(n.) 1. அச்சம்; timidity, want ofcourage. “காதரந் தீர்த்தருளும்” (திருக்கோ.17);. 2. தீவினைத் தொடர்பு; effect of evil deeds upon the soul. “காதரமடைந்தாள் போலக் கவலையுஞ் சிறிதுதோன்ற” (திருவிளை.வலை. 3);. [காத்திரம் → காதரம்] |
காதரவு | காதரவு kātaravu, பெ.(n.) பாதுகாப்பு; protection. “காதரவு செய்துநலங் கற்பித்து” (அருட்பா, 1 நெஞ்சறி.170);. [காத்தல் → அரவு → காத்தரவு → காதரவு (ஆதரவு);] |
காதரி | காதரி kātari, பெ.(n.) மரமஞ்சள்; tree-turmeric (சா.அக.);. [காதுதல் (சினத்தல், எரிதல், மஞ்சள்நிறம்);→ காத்தரி →காதரி] |
காதரோகம் | காதரோகம் kātarōkam, பெ.(n.) கரப்பான் (கிரந்தி); நோய்; glandular swellings; syphilis (சா.அக.);. |
காதர் | காதர் kātar, பெ.(n.) அனைத்து வல்லமைகளும் உடைய இறைவன் (முகமதி);; almighty. ம.காதர். [U.{} → த.காதர்.] |
காதர்பசந்து | காதர்பசந்து kātarpasandu, பெ.(n.) சிறுநீரக வடிவில் இருக்கும் சுவைமிக்க மாம்பழவகை; a kidney-shaped graft mango, fleshy and of milky flavour when ripe. [U.{}+pasand → த.காதர்பசந்து.] |
காதறு | காதறு1 kādaṟudal, 4 செ.கு.வி.(v.i.) 1. காதின் துளை அறுதல்; to have the perforated lobe of the ear cut or torn. 2.ஆவணம் தீர்க்கப்பெற்று கிழிபடுதல்; to be cancelled, as a bond, by mut lation. 3. செருப்பின் வாரறுதல் (இ.வ.);; to smap, a the thong of a sandal. 4. ஊசிதுளை முறிதல்; to have the eye of a needle broken. “காதற்ற ஊசியும் வாராதுகாணும்” (பட்டினத்திருப்பா. பொது. 10); 5. கவனிற் கல்வைக்கும் இடம் அற்றுப்போதல்; tohaw that part of the sling snapped from which the stone is generally thrown. “காதறு கவண தேய்க்கும்” (ஜங்குறு பக்143 பாட்டு,1);. 6.பகை கொள்ளுதல் (யாழ். அக.);; to become inimical, [காது + அறு] காதறு2 kātaṟuttal, 4 செ.குன்றாவி.(v.t.) 1. காதின் துளையை அறுத்தல்; to rend the ear, a: by tearing off the ear-rings. “காதறுத்த கூலி கைமேலே” (வின்.);. 2. ஆவணத்தை அறுதியாகத் தீர்த்து கிழித்து விடுதல்; to cancel a bond, as b. mutilating it. [காது + அறு] |
காதறுப்பான் | காதறுப்பான் kātaṟuppāṉ, பெ.(n.) காதைச் சுற்றி வரும் புண் (வின்.);; a sore that appears around the ear. [காது + அறுப்பான்] |
காதறை | காதறை1 kātaṟai, பெ.(n.) 1. காதறுபட்ட ஆள்; one whose ear has been cut off or mutilated 2. காதுக்குழி; cavity of the ear. 3. கெட்டது; that which is spoiled. 4. செவிடு; deaf. Fin. kūro:Karel.kūmeh Es, kurt:Livonian. kūrii:Q karu, [காது+அறு-காதறு → காதறை] காதறை2 kātaṟai, பெ.(n.) சம்பங்கிப்புல்; fragran champak grass (சா.அக.);. [கா = பரவுதல், மணம் பரவுதல். கா → காதல் → காதறை] |
காதறை கூதறை | காதறை கூதறை kātaṟaiātaṟai, பெ.(n.) ஒழுக்கங்கெட்டவள் (இ.வ.);; a disreputable woman. [காதறை + கூதறை] |
காதறைச்சி | காதறைச்சி kātaṟaicci, பெ.(n.) சண்டைபிடிப்பவள். (யாழ்.அக.);; quarrel some woman, as one who rends the ear. [காது → அறு → காதறு → காதறைச்சி] |
காதற்பரத்தை | காதற்பரத்தை kātaṟparattai, பெ.(n.) சேரிப் பரத்தையின் மகளாய்த் தலைவனது காதற்குரிமை பூண்டு அவனையே சார்ந்திருப்பவள் (ஐங்குறு.90, உரை);; “யாரையு நயவா வியல்பிற் சிறந்த சேரிப்பரத்தையர் மகளி ராகிக் காதலிற் புணர்வோர் காதற் பரத்தையர்” (அகம். அகத்.14);. [காதல் + பரத்தை] |
காதற்பாங்கன் | காதற்பாங்கன் kātaṟpāṅgaṉ, பெ.(n.) தலைவனுக்கு உற்ற நண்பர்; intimate friend of the hero. “மன்னவன் றனக்குக் காதற் பாங்க னாதலின்” (மணிமே.28.125);. [காதல் + பாங்கன்] |
காதற்பிள்ளை | காதற்பிள்ளை kātaṟpiḷḷai, பெ.(n.) காதலிக்குப்பிற வளர்ப்பு மகன்; foster child. “அரசர் காதற் பிள்ளையாய்” (பெரியபு. தடுத்தாட்.6);. [காதல் + பிள்ளை] |
காதற்ற முறி | காதற்ற முறி kātaṟṟamuṟi, பெ.(n.) செலுத்தற் குரியதை செலுத்தித் தீர்த்துக் கிழித்துவிட்ட ஓலையாணம் (வின்.);; cancelled bond written on a palmyra leaf. [காது→ அறு + முறி – காதற்றமுறி] |
காதற்றோழி | காதற்றோழி kātaṟṟōḻi, பெ.(n.) தலைவியின் அன்புக்குரிய பாங்கி (திருகோ.50.அவ);; confidant of a heroine. [காதல் + தோழி] |
காதலன் | காதலன் kātalaṉ, பெ.(n.) 1. அன்புள்ளவன் (பிங்.);: lover, suitor. 2.கணவன்; husband. “காதல ரிரறப்பிற் கனையெரி பொத்தி”(மணிமே.242);. 3. நண்பன்; intimate friend, choice associate, “தீயின் காதலன் விடை கொண்டேகி” (கந்தபு:திருவவ.10); 4. மகன்; son. ‘அறத்தின் காதலன்”(பாகவ1.6:1); ம. காதலன்; க. காதல். [காதல் → காதலன்.] |
காதலம் | காதலம் kātalam, பெ.(n.) ஒருவகை மீன்; a kind of fish, (சா.அக.); [கது → கதலம் →காதலம்] |
காதலவர் | காதலவர் kātalavar, பெ.(n.) 1. அன்புக் குரிய மனைவி மக்கள் முதலியோர்; wife, children, etc., as objects of one’s affection. 2.சுற்றத்தார்; relatives. “கைம்மக வோடுங் காதலவரொடும்”(பரிபா.15:47);. [காதல் → காதலவர்] |
காதலான் | காதலான் kātalāṉ, பெ.(n.) காதலன் பார்க்க ; see _. “கரை காணாக் காதலான்” (கம்பரா. குகம் 26);. “காதலான் காதல் போல” (சீவக.1666);. [காதல்→ காதலன்.] |
காதலி | காதலி1 kātalittal, 4 செ.குன்றாவி.(v.t.) 1. அன்புகூர்தல்; to love, delight in;to befondof; to be warmly attached to. “காதலித் தாதுநா மென்னுமவாவினை” (நாலடி. 1812); 2. விரும்புதல்; to long for desire. “கந்தவேள் புராணந் தன்னைக் காதலித் தோதுவார்” (கந்தபுபாயி. நூற்பய);. [காதல் → காதலி] காதலி kātali, பெ.(n.) 1. அன்பு கொண்டவள்; abeloved woman, sweet heart. 2. மனைவி; wife. “காதலி தன்னொடு கைதொழு தெடுத்து ” (மணிமே.13:20);. 3. மகள்; daughter, “காதலிதன் காதலனைக் கண்ணுற்றான்’ (நள.கலிநீ.67);. 4. தோழி; lady’s maid. “காதலி மாரொடும் – பெருகுங் காதலைப் பேசுகின் றார்சிலர்” (கந்தபு. திருக்கல்.21);. [காதல் → காதலி] |
காதலித்தவன் | காதலித்தவன் kātalittavaṉ, பெ.(n.) காதலித் தோன் (சூடா.); பார்க்க; see _. [காதலி → காதலித்தவன்.] |
காதலித்தோன் | காதலித்தோன் kātalittōṉ, பெ.(n.) அன்பன் (பிங்.);: friend, lover. [காதலி → காதலித்தோன்.] |
காதலோன் | காதலோன் kātalōṉ, பெ.(n.) 1. அன்பன், கணவன்,தலைவன்; lover husband. “தாம்வந்த னர்நங் காத லோரே”(ஐங்குறு.270);. 2 மகன் (ஐங் 501.);; Son. [காதலன் → காதலோன்] |
காதல் | காதல்1 kātal, பெ.(n.) 1. அன்புடைமை; warm attachment, fondness, love, affection. “காதல் வேண்டி யெற்றுறந்து போதல் செல்லா வுயிர்” (அகநா.55); 2. காமவிச்சை; lust. 3.இறையுணர்வு: reverence, devotion. “காதலா நெஞ்சமன்பு கலந்திலேன்” (திவ்.திருமாலை,26); 4. வேட்கை; desire, longing. “காதலாற் காம பூமிக் கதிரொளி காதலான் யவரு மொத்தார்'(சீவக.169.5. ஆவல் (வின்);; earnestness, intentness, eagerness. 6.மகன்; son, as an object of love. “இராவணன் காதல்” (கம்பரா. பிரமா. 164);. 7. சிற்றிலக்கிய வகை; a kind of poem with amorous theme. “கூளப்ப நாயக்கன் காதல” ம. க. காதல்; தெ.காதிலி: கூ. காதி. காதல்2 kātal, பெ.(n.) 1. கொல்லுகை (சூடா);; kil. ing. 2. தாக்குகை ; fighting. “காலனென்மேற் காதலையானின் புறந்தோற்றிமாற்று”(மருதூ.84); 3.தறிக்கை (வின்.);; cutting in pieces, breaking. snapping. 4. ஆந்தை முதலியவற்றின் ஒலி; cry, chirp of certain birds, as ominous. 5. எதிராப்பு (வின்.);; peg fordriving out nails. |
காதளிகம் | காதளிகம் gātaḷigam, பெ.(n.) சிறுசின்னி; birch leaved acalypha (சா.அக.);. [காழ் → காடு → காது → காதுளி → காதளிகம்] |
காதழற்சி | காதழற்சி kātaḻṟci, பெ.(n.) மிகுவெப்பத்தினால் காதிற்குள் ஏற்படும் எரிச்சல், inflammation of the ear-Otitis (சா.அக.);. [காது+அழற்சி அழற்சி கொதிப்பு, எரிவு] |
காதழுக்கு | காதழுக்கு kātaḻukku, பெ.(n.) குறும்பீ; earwax – Cerumen (சா.அக.);. [காது+அழுக்கு] |
காதவடி | காதவடி kātavaṭi, பெ.(n.) காதடிபார்க்க; see kadadi (சா.அக.);. |
காதவம் | காதவம்1 kātavam, பெ.(n.) வான்கோழி (யாழ்.அக.);; turkey fowl. [கது → கதுவம்→ காதவம்] காதவம்2 kātavam, பெ.(n.) 1. சீந்தில்; moon, treeper. 2. நிலவேம்பு; ground neem. 3.ஆல்; banyan [கதம் (சாறு); → கதவம் → காதவம்] |
காதா | காதா kātā, பெ.(n.) பற்றுவரவுக் கணக்கு (C.G.);; current account in a person’s name; ledger. [U.{} → த.காதா.] |
காதாங்கி | காதாங்கி kātāṅgi, பெ.(n.) பாற்சொற்றிப்பாலை (மலை);; Indian guttapercha. [கதம் (சாறு பால்); → காதம் → காதாங்கி] |
காதார | காதார kātāra, வி.எ.(adv.) 1. தன் காதுகளில் பட; with one”s own ears. அவள் சொன்ன சொல்லை என் காதாரக் கேட்டேன்(வட்வழ);. 2.நிரம்ப; to the full satisfaction of the ears (செ.அக.);. [காது+ஆர.] |
காதார்-தல் | காதார்-தல் kātārtal, 2 செ.குன்றாவி.(v.t.) 1. காதில் அணிகலன் அணிதல் (தேவா);: to wear on the ear as a jewel “காதார் குழையாட”. 2.தன் செவிப்புலவன் நிரம்புதல்; to near to the full satisfaction of the ears. [காது1-ஆர்-காதார் =காதார] |
காதி | காதி kāti, பெ.(n.) இரட்டுத் துணி; double-threaded coarse cloth. [U.{} → த.காதி.] |
காதிதம் | காதிதம் kādidam, பெ.(n.) ஓர் எண்ணை அதனாலேயே ஒருமுறையேனும் பலமுறையேனும் பெருகிவந்த தொகை (வின்.);; result arising from the multiplication of a number by itself. [காது = மோதுதல், பெருக்குதல். காது → காதிதம் (பெருக்கல்);] |
காதித்தம் | காதித்தம் kātittam, பெ.(n.) 1.கஞ்சா; ganjah. 2. குறிஞ்சா; Indian ipecacuanha (சா.அக.);. [காதித்தல் + கதித்தம் – காதித்தம்] |
காதினருகு | காதினருகு kātiṉaruku, பெ.(n.) 1. காதின் வெளிப்புறம்; the external portion of the ear, Concha. 2. காதின் இதழ்; lob of the ear. 3.கதமஙன முருந்து; gristle of the ear (சா.அக.);. [காது+இன்+அருகு] |
காதின்பின்பொகுட்டு | காதின்பின்பொகுட்டு kātiṉpiṉpokuṭṭu, பெ.(n.) காதிற்குப் பின் புறத்திலுள்ள முலைக்காம்பொத்த சிறிய பொகுட்டு; the tiny bony prominence of the skull just behind the ear – Mastoid process (சா.அக.);. [காது+பின்+பொகுட்டு] |
காதின்புறம் | காதின்புறம் kātiṉpuṟam, பெ.(n.) வெளிக்காது; the outer ear – Concha (சா.அக.);. [காது+புறம் – காதுபுறம்→அகாதின்புறம்] |
காதியம் | காதியம் kātiyam, பெ.(n.) மென்று தின்னும் மருந்து; a medicine to be taken by mastication (சா.அக.);. |
காதிரைச்சல் | காதிரைச்சல் kātiraiccal, பெ.(n.) காதடைப் பால் உண்டாகும் குமுறல் (வின்.);; ringing in the ear. [காது + இரைச்சல்] |
காதிற்சவ்வு | காதிற்சவ்வு kātiṟcavvu, பெ.(n.) காதிலுள்ள குருத்து; ear-rum, tympanum. [காதில் + சவ்வு] |
காதிலடிபடு-தல் | காதிலடிபடு-தல் kādilaḍibaḍudal, 20 செ.கு.வி. (v.i.) அடிக்கடி செய்தி கேட்கப்படுதல்; to be heard frequently,as news. [காது → காதில் + அடி + படு] |
காதிலி | காதிலி kātili, பெ.(n.) செவிடன், செவிடி; deat person. [காது + இலி] |
காதிலோது-தல் | காதிலோது-தல் kādilōdudal, 5 செ.குன்றாவி. (v.t) 1. மந்திரம் சொல்லிக்கொடுத்தல்; to initiate a disciple by whispering a mantra in his ear. 2. மறைபொருள் (இரகசியம்); சொல்லுதல்; to whisper in the ear, as secrets. 3. கோட் சொல்லுதல் (உ.வ.);; to back-bite, to carry tales [காதில் + ஒது] |
காதில்சீழ்வடி-தல் | காதில்சீழ்வடி-தல் kātilcīḻvaṭital, 4 செ.கு.வி. (v.i.) காதில் புண்கட்டி ஏற்பட்டு அதனால் சீழ் வெளிப்படுதல்; a purulent discharge from the ear – Otorrhoea (சா.அக.);. [காதில்சிழ்+வடி-தல்.] |
காதில்பூசுற்று-தல் | காதில்பூசுற்று-தல் kādilpūcuṟṟudal, செ.கு.வி. (v.i.) ஏமாற்று வேலை; cheating. [காதில்+பூ+சுற்று] |
காதில்போட்டுக்கொள்(ளு)-தல் | காதில்போட்டுக்கொள்(ளு)-தல் kātilpōṭṭukkoḷḷutal, 16 செ.கு.வி.(v.i.) பிறர் சொல்வதைக் கேட்டு உரிய கவனம் செலுத்துதல்; pay head to; listen to, நான் வீடு மாற்ற வேண்டும் என்று சொல்வதை நீங்கள் காதில் போட்டுக் கொள்வதே இல்லை. கைத்தறி நெசவாளர்களின் கோரிக்கைகளைக் காதில் போட்டுக் கொள்ளாமல் செயல்படுகிறார்கள். [காதில்+போட்டு+கொள்-தல்.] |
காதில்போட்டுவை-த்தல் | காதில்போட்டுவை-த்தல் kātilpōṭṭuvaittal, 4 செ.கு.வி.(v.i.) கவனத்தில் கொள்ளும்படி ஒன்றைத் தெரிவித்தல்; putin a word; mention. என் பையன் வேலை பற்றிய செய்தியை உங்கள் காதில் போட்டு வைக்கிறேன். [காதில்+போட்டு+வை-த்தல்.] |
காதில்வாங்கு-தல் | காதில்வாங்கு-தல் kātilvāṅkutal, 5 செ.கு.வி. (v.i.) 1. ஒருவர் சொல்வதைக் கவனமாகக் கேட்டல்; pay head to; lend one”s ear அவர் கூறுவதைக் காதில் வாங்காமல் நீ பேசிக்கொண்டே போனால் என்ன அர்த்தம்? 2. காதில்போட்டுக் கொள்-தல் பார்க்க; see kadil-pottu-k-kol, [காதில்+வாங்கு-தல்.] |
காதில்விழு-தல் | காதில்விழு-தல் kādilviḻudal, 2 செ.கு.வி. (v.i.) காதுக்குச் செய்தியெட்டுதல்; to reach one’s ears, to be heard. ம. காதில் வீழுக [காது → காதில் + விழு] |
காது | காது1 kātu, பெ.(n.) 1. ஒலியைப்பற்றும் செவி; ear . “வடிந்துவிழ் காதினள்” (சிலப்.4:51);. 2. ஊசி முதலியவற்றின் துளை; hole through which thread, rope. hook, pin or shaft is passed; as the eye of a needle, “காதற்ற ஊசியும்” (பட்டினத். திருப்பா.பொது.10], 3.கவண்கல் வைக்குமிடம்; the groove in a sling in which is placed the slinge “காதறு கவனதேய்க்கும்” (ஐங்குறு பக்.143 பாட்டு1.); 4. புகையிலையின் காம்பு (இ.வ.);; part near the stem of a tabacco leaf. 5. ஏனங்களின் விளிம்புப்பிடி; ear of a jar; projection in the rim of a vessel serving as a handle. 6. அடித்து இறுக்கப்படும் ஆப்பு (வின்.);; small wedge to hold in its place a tenon, a handle, a peg. ம.காது H., V., Guj., Ben., Ori. {}, Punj. kash, kan, Sind. kann: Ass. Kanu. Afri. Koraofanian. Ki-t kicu, Charian. kuwo. Hansa. ka-nne; Nigero-cameroonian. n-kki. [கது → காது (மு. தா. 210.);] காது2 kādudal, 5 செ.குன்றாவி (v.t.) 1. கொல்லுதல்; to kill, slay, murder. “அவுணர் தங்கிளையைக் காதி” (கந்தபு. விடை.43);. 2. வெட்டுதல்; to cut “குயத்தாற் காதி” (கந்தபு. வில்வலன் வாதாவிவதை.15);. 3. பிரிவு செய்தல் (வின்.);; to divide, dissect. க., பட காது; து.காதுநி. Fin{ }:Karel. koada;ED. {}, Jap. katsu;Q. fatikaca. [கொல் → கோறு→ கோது → காது.] காது3 kātu, பெ.(n.) கொலை (சூடா);; murder. [கொல் → கோறு → கோது → காது] |
காதுகடி-த்தல் | காதுகடி-த்தல் gātugaḍittal, 4 செ.கு.வி.(v.i) 1. மந்தணம் (ரகசியம்);மாகச் சொல்லுதல்; to whisper in the ear. ம. காதுகடிக்குக. [காது + கடி.] |
காதுகன் | காதுகன் gātugaṉ, பெ.(n.) 1. கொலைகாரன்; murderer. 2. கொடியோன் (சங்.அக.);; wicked person. [கொல் → கோறு → கோது →காது → காதுகன்] |
காதுகிள்ளு-தல் | காதுகிள்ளு-தல் gādugiḷḷudal, 5செ.குன்றாவி (v.t.) 1. காது.கிழி- (இ.வ.); பார்க்க; see {}. 2. காதுக்குத்து-2 பார்க்க; see {} [காது + கிள்ளு.] |
காதுகிழி-த்தல் | காதுகிழி-த்தல் gātugiḻittal, 4 செ.குன்றாவி (v.t.) 1.ஆவணத்தை அறுதியாக்கிக் கிழித்தல் (இ.வ.);; lit. to tear the ear, to tear the top of a bond written on a palmyra-leaf as faras the hole through which it is filed, to tear the stamped part of an indenture or bond, in token of its discharge. [காது + கிழி] |
காதுகுடை-தல் | காதுகுடை-தல் gāduguḍaidal, 4 செ.கு.வி.(v..i) 1. காதிற் குடைச்சல்நோய் உண்டாதல்; to have itching or tingling pain in the ear. 2. காதுக்குறும்பி எடுத்தல்; to clear the ear of wax. 3. காதில் குறுகுறுப்பு ஏற்படும் போது பறவை இறகால் தடவுதல்; to rule with birds feather when he ear feels for it. ம. காதுகுத்து [காது + குடை] |
காதுகுத்தல் | காதுகுத்தல் gātuguttal, பெ.(n.) 1. காதுகுத்துந் திருவிழா; ear-boring ceremony. 2. காதுநோய் வகை; a disease of the ear. [காது + குத்தல்] |
காதுகுத்து | காதுகுத்து1 gāduguddudal, 5 செ.குன்றாவி. (v.t.) 1. காதில் அணிகலன் அணிய துளை போடுதல்; to bore the ear for wearing ear ornaments. “கேசவ நம்பி யுன்னைக் காதுகுத்த’ (திவ்.பெரியாழ். 2,3:1); 2.வஞ்சித்தல்; to beguile, deceive, mislead. ம. காதுகுத்துக. [காது + குத்து] காதுகுத்து2 gāduguddudal, 5 செ.குன்றாவி. (v.i.) காதுக்குள் நோவெடுத்தல்; to feel pain in the inner part of the ear. [காது + குத்து] |
காதுகுத்துகிறவர் | காதுகுத்துகிறவர் gātuguttugiṟavar, பெ.(n.) 1. காதுகுத்துந் தொழிலையுடைய தட்டாரி வகையினர்; a class of goldsmith whose profession is to perforate the ear-lobes. [காது + குத்துகிறவர்] |
காதுகுற்று-தல் | காதுகுற்று-தல் kātukuṟṟutal, செ.கு.வி. (v.i.) காதில் ஊசி அல்லது வேறு கருவியிட்டு துளையிடுதல், boring a hole in the lobe of the ear with a needle or other sharp instrument; to bore or pierce the ear, as a ceremony (சா.அக.);. [காது+குற்று.] |
காதுகுளிர்-தல் | காதுகுளிர்-தல் gātuguḷirtal, 2 செ.கு.வி.(v.i.) செவிப்புலனுக்கு இன்பமாதல்; to experience a pleasant sensation in the ear, as in hearing sweet music; to hear good news. [காது + குளிர்] |
காதுகை | காதுகை gātugai, பெ.(n.) கொல்லுகை killing. “மால்க ளிற்றினைக் காதுகை நீக்கி” (கந்தபு. மார்க்கண். 283); [காது + காதுகை] |
காதுகொடு-த்தல் | காதுகொடு-த்தல் gātugoḍuttal, 4 செ.கு.வி. (v.i.) கவனித்துக் கேட்டல்; to give ear, hearken, listen, give atention to. காது கொடுத்துக் கேட்டேன் குவா குவா சத்தம் (உ.வ.);.. ம. காதுகொடுக்குக [காது + கொடு] |
காதுகொடுத்துக்கேள்-தல் | காதுகொடுத்துக்கேள்-தல் kātukoṭuttukāḷtal, 16 செ.கு.வி. (v.i.) உன்னிப்பாகக் கேட்டல்; give one”s ear to: listen attentively. அவன் சொல்வதைச் சிறிது நேரம் காது கொடுத்துக் கேள். [காது+கொடுத்து+கேள்.] |
காதுக்கரப்பான் | காதுக்கரப்பான் kātukkarappāṉ, பெ.(n.) காதின் வெளிப்புறத்திற் காணும் நோய் (M.L.);; inflammation of the external part of the ear. [காது + கரப்பான்] |
காதுக்கருவி | காதுக்கருவி kātukkaruvi, பெ.(n.) காது கேட்பதில் குறைபாடு உள்ளவர்களின் கேட்கும் திறனை மிகுதிப்படுத்த காதில் பொருத்திக் கொள்ளும் குறு மின் கருவி, hearing aid. [காது+கருவி] |
காதுக்கற்சட்டி | காதுக்கற்சட்டி kātukkaṟcaṭṭi, பெ.(n.) காதுள்ள மாக்கற் சட்டி (உ.வ.);; eared vessel made of soapstone. [காது + கல் + சட்டி] |
காதுக்கிண்ணம் | காதுக்கிண்ணம் kātukkiṇṇam, பெ.(n.) விளிம்பிலே பிடிப்புள்ள கிண்ணம்; vessel with projections in the rim for lifting. [காது + கிண்ணம்] |
காதுக்குடைச்சல் | காதுக்குடைச்சல் kātukkuḍaiccal, பெ.(n.) காது நோய் வகை (M.L.);, inflammation of the ear. [காது + குடைச்சல்] |
காதுக்குடைவான் | காதுக்குடைவான் kātukkuṭaivāṉ, பெ.(n.) காதைக் குடைந்து தூய்மை செய்ய பயன்படுத்தும் கருவி an instrument sorceaning the ear-Ear-pick (சா.அக.);. [காது+குடைவான்] |
காதுக்குத்தல் | காதுக்குத்தல் kātukkuttal, பெ.(n.) காதுக் குத்து பார்க்க; see kadu-k-kutu. [காது + குத்தல்] |
காதுக்குத்து | காதுக்குத்து kātukkuttu, பெ.(n.) உட்காதில் உண்டாகுங் குத்து நோய் (M.L.);; ear-ache. மறுவ. காதுக்குத்தல் [காது + குத்து] |
காதுக்குறும்பி | காதுக்குறும்பி kātukkuṟumbi, பெ.(n.) 1. காதுப் பீளை; ear-wax, cerumen. 2. குறும்பி வாங்கி; earcleaner. [காது + குறும்பி] |
காதுக்கொப்புளம் | காதுக்கொப்புளம் kātukkoppuḷam, பெ.(n.) வெளிக்காதில் காணும் கொப்புளம்; boilin the external ear. இது உடம்பின் வலிமை குறைவினாற்கானும் இதனால் குத்தல், வலி மிகுதியாகும் (சா.அக.);. |
காதுசெய்-தல் | காதுசெய்-தல் kātuseytal, பெ.(n.) 1 செ.கு.வி. (v.i.); காதுவளர்- பார்க்க ; see _. “காது செய்வான் கூதைசெய்து” (திவ் திருவாய்.1:9); [காது + செய்] |
காதுச்சில்லறை | காதுச்சில்லறை kātuccillaṟai, பெ.(n.) காதணிவகை; ear-ornament. [காது+ சில்லறை] |
காதுச்சோணை | காதுச்சோணை kātuccōṇai, பெ.(n.) காதுத் தண்டு பார்க்க; see _. [காது + சோணை] |
காதுடனிருக்கான் | காதுடனிருக்கான் kātuḍaṉirukkāṉ, பெ.(n.) தூக்கணாங்குருவி; Indian tailor-bird (சா. அக.);. [காது + உடல்(கூடு); இருக்கான்] |
காதுடனெட்டி | காதுடனெட்டி kātuṭaṉeṭṭi, பெ.(n.) நெருஞ்சி; caltrops – Tribulus terrestris (சா.அக.);. [கால்+தொடுவன்+எட்டி.] |
காதுடம் | காதுடம் kātuḍam, பெ.(n.) வாலைப்பூ நீறு; distilled liquid extracted from a solution of fuller’s earth (சா.அக.);. [காது → காதுளம் → காதுடம்] |
காதுணம் | காதுணம் kātuṇam, பெ.(n.) பாகல்; balsam pear (சா.அக.);. [காதுதல் → கோதுண்டி → கோதுண்டி] |
காதுண்டி | காதுண்டி kātuṇṭi, பெ.(n.) குறுஞ்சூலி மரம் ; toon tree (சா. அக.);. [கோது → கோதுண்டி → கோதுண்டி] |
காதுதூர்-தல் | காதுதூர்-தல் kātutūrtal, பெ.(n.) 2 செ.கு.வி.(v.i.); காது மடலின் துளை தூர்தல்; the hole made for the ear ring in the ear lobe getting closed. “வாமன் நம்பியுன் காது தூரும்” (திவ்.பெரியார். 23.8); [காது + தார்] |
காதுத்தண்டு | காதுத்தண்டு kātuttaṇṭu, பெ.(n.) 1. கீழ்க்காது சேரணை, ear-flap. 2. காதினருகு; lobes of the ear (சா.அக.);. காதுத்தண்டு kātuttaṇṭu, பெ.(n.) காது மடலின் பகுதி (உ.வி.);; lobe of the ear. [காது + தண்டு] |
காதுத்துவாரம் | காதுத்துவாரம் kātuttuvāram, பெ.(n.) காதின் வழி; ear-hole; external passage of the ear-Aurium meatus (சா.அக.);. |
காதுநடு | காதுநடு kātunaṭu, பெ.(n.) செவிப்பறை, middle ear or ear-drum-Tympanum (சா.அக.);. |
காதுநறுக்கு-தல் | காதுநறுக்கு-தல் kādunaṟukkudal, பெ.(n.) 5 செ.குன்றாவி. [vt.] காது கிழி பார்க்க; see _. [காது + நறுக்கு] |
காதுநோய் | காதுநோய் kātunōy, பெ.(n.) 1. காதில் உண்டாகும் நோய்கள்; disease of the ear in general. 2. காதுவலி; ear-ache – Otalgia (சா.அக.);. [காது+நோய்] |
காதுநோவு | காதுநோவு kātunōvu, பெ.(n.) காதுநோய் பார்க்க; see kadu-noy.(சா.அக.);. |
காதுபட | காதுபட kātupaṭa, பெ.(n.) செய்தி கேட்கும் அளவுக்குத் தெரியும்படியாக; in one”s hearing. உன்னைப் பற்றி மோசமாக அவன் காதுபடப் பேசினாள். [காது+பட] |
காதுபெருக்கு-தல் | காதுபெருக்கு-தல் kāduberukkudal, பெ.(n.) 5 செ.கு. வி. (v.i.); காதுவளர் பார்க்க; see kadu-vasar “காதுபெருக்கித் திரியவுங் காண்டி” (திவ். பெரியாழ்.23:10); [காது + பெருக்கு] |
காதுப்பறை | காதுப்பறை kātuppaṟai, பெ.(n.) காதின் ஒலிச் சவ்வு; ear-drum (சா.அக.);. [காது+பறை] |
காதுப்பானை | காதுப்பானை kātuppāṉai, பெ.(n.) விளிம்புப் பிடியுள்ள பானை; vessel with projections in the rim serving as handle. [காது + பானை] |
காதுப்பி | காதுப்பி kātuppi, பெ.(n.) காதுக்குறும்பி பார்க்க See _. |
காதுப்பிதுக்கம் | காதுப்பிதுக்கம் kātuppitukkam, பெ.(n.) வெளிக்காது உள்ளடங்காமல் விரிவாய்க் காணல், marked protrusion of the ears (சா.அக.);. [காது+பிதுக்கம்] |
காதுப்புண் | காதுப்புண் kātuppuṇ, பெ.(n.) காதில் புண், புரை முதலியவற்றால் ஏற்படும் கட்டி: sores or ulcers from abscesses etc., ulceration of the ear (சா.அக.);. [காது+புண்.] |
காதுப்புற்று | காதுப்புற்று kātuppuṟṟu, பெ.(n.) காது நரம்புகளில் சளி நீர் நிறையப் பெற்று அதனால் கெடு சதை வளர்ந்து பருக்கும் ஒரு புண்; herpes zoster of the ear, due to herpetic inflammation of the facial nerve arising from accumulation of bad fluidZoster oticus. இது அக்கியைப் போல் இருக்கும்(சா.அக.);. [காது+புற்று.] |
காதுப்புழு | காதுப்புழு kātuppuḻu, பெ.(n.) காதில் ஈ புகுந்து முட்டை வைப்பதனாலும், அல்லது நோய் புண்கட்டி முதலிய கரணியங்களாலும் காதிற்குள் உண்டாகும் புழு அல்லது பூச்சிகள்; worms orgerms formed in the ear due to a fly depositing its egg therein or through other causes such as diseases, wounds, injuries etc (சா.அக.);. [காது+புழு] |
காதுப்பூ | காதுப்பூ kātuppū, பெ.(n.) பூவடிவான காதணி வகை (வின்.);; flower-shaped ear-ornament of women. [காது + பூ] |
காதுப்பூச்சி | காதுப்பூச்சி kātuppūcci, பெ.(n.) செவிப் பாம்பு (யாழ்ப்.);; typhlope, as crawling into the ear. [காது + பூச்சி] |
காதுமடல் | காதுமடல் kātumaḍal, பெ.(n.) புறக்காது; external ear, Conch. [காது + மடல்] |
காதுமத்திமம் | காதுமத்திமம் kātumattimam, பெ.(n.) குறைவான கேட்கும் திறன்; dulness of hearing-Amblyacusia (சா.அக.);. [காது+மத்திமம்.] மறுவ, காது மந்தம் |
காதுமந்தன் | காதுமந்தன் kātumantaṉ, பெ.(n.) காது கேளாதவன்; a deafman; one who is thick of hearing (சா.அக.);. [காது+மந்தன்] |
காதுமந்தம் | காதுமந்தம் kātumandam, பெ.(n.) செவிப்புலன் நன்றாகக் கேளாமை; dullness of hearing. [காது + மந்தம்] |
காதுமலம் | காதுமலம் kātumalam, பெ.(n.) காதுக் குறும்பி, ear_wax (சா.அக.);. [காது+மலம்] |
காதுமூர்ச்சை | காதுமூர்ச்சை kātumūrccai, பெ.(n.) காது நோயினால் ஏற்படும் களைப்பு: a swoon or fainting observed in patients suffering from aural diseases – Ear-faint (சா.அக.);. [காது+மூர்ச்சை] |
காதுமூளி | காதுமூளி kātumūḷi, பெ.(n.) 1 அறுந்த காது; tom ear. 2. அந்தக் கேடா (அவலட்சணமா);ன காது ; deformed ear(சா.அக.);. [காது+மூளி] |
காதுவலி | காதுவலி kātuvali, பெ.(n.) காதுக்குத்து2 பார்க்க; see kadu-k-kuttu2 [காது + வலி] |
காதுவளர்-த்தல் | காதுவளர்-த்தல் kātuvaḷarttal, பெ.(n.) 4 செ.கு.வி.[vi.] காதின் அடித்தண்டிலுள்ள துளையைப் பெருக்குதல்; to enlarge the perforation of the ear for wearing ear-rings. [காது + வளர்] |
காதுவளையம் | காதுவளையம் kātuvaḷaiyam, பெ.(n.) 1 ஏற்றச் சாலின் காதுவளையம்; a ring in the ladder for pulling water from well. 2. &moof sus memuth; round earring. [காது+வளையம்] [P] |
காதுவாதை | காதுவாதை kātuvātai, பெ.(n.) 1. உட்காதின் குத்தல் வலி; acute boring pain in the ear, Otalgia. 2. காதின் தொந்தரவு, trouble or sufferings from pain in the ear-Otalgia (சா.அக.);. [காது+வாதை.] |
காதுவிடாய் | காதுவிடாய் kātuviṭāy, பெ.(n.) பசி முதலியவற்றால் உண்டாகுஞ் செவியடைப்பு ; weakness,lassitude in hearing caused by hunger, sickness, etc. [காது + விடாய்] |
காதுவிடு-தல் | காதுவிடு-தல் kāduviḍudal, பெ.(n.) செ.கு.வி.(v.i.); காதுவெட்டு பார்க்க; see kadu-vettu [காது + விடு] |
காதுவிறைப்பு | காதுவிறைப்பு kātuviṟaippu, பெ.(n.) காதுமுறைப்பு; stiffness of the outer ear (சா.அக.);. [காது+விறைப்பு] |
காதுவீக்கம் | காதுவீக்கம் kātuvīkkam, பெ.(n.) காதிற்குள் ஏற்படும் நோய் அல்லது புண்ணினால் உண்டாகும் வீக்கம்; swelling of the ear through inflammatory diseases (சா.அக.);, [காது+வீக்கம்] |
காதுவெட்டு | காதுவெட்டு1 kāduveṭṭudal, 5 செ.குன்றாவி (vt.) காதுகிழி – பார்க்க; see _. [காது + வெட்டு] காதுவெட்டு2 kāduveṭṭudal, 5.செ.கு.வி (vi.) ஏனத்தில் துளை விழுதல்; to punch a hole, as ir an embossed stamp. [காது + வெட்டு] |
காதுவெளியா-தல் | காதுவெளியா-தல் kātuveḷiyātal, பெ.(n.) 1. காதடைப்பு நீங்குதல்; to be free from dullness of hearing. 2. செவிடு குணப்படுதல்; the curing of deafness (சா.அக.);. |
காதெலும்பு | காதெலும்பு kātelumpu, பெ.(n.) கன்னப்பொறி எலும்பு; temporalbone (சா.அக.);. [காது+எலும்பு] |
காதெளிவு | காதெளிவு kāteḷivu, பெ.(n.) பொற்றலைக் கையாந்தகரை; verlisinia marigold (சா.அக.);. [க + தெளிவு] |
காதெழுச்சி | காதெழுச்சி kāteḻucci, பெ.(n.) தேவையற்ற சதை வளர்ந்து காதைச் செவிடுபடுத்தும் நோய் வகை ; tumour visible in meatus causing loss of hearing. [காது + எழுச்சி] |
காதேமார் | காதேமார் kātēmār, பெ.(n.) மிகப்பெரிய காய்களையுடைய புளிப்பான மாவகை; a mango tree that bears very big fruits sour to that taste. [U.{} → த.காதேமார்.] |
காதை | காதை1 kātai, பெ.(n.) 1. வரலாறு; story narrative. “காதைகள் செப்பென” (சீகாலித்.4, நான்மு.155);. 2. சொல் (திவா.);; word term vocable. 3. கதை; tale. “காதைமுகங்கண்டலராகம தாடகமா மெழிற் காரிகையாள்” (புலியூரந்:22); ‘காதைகள் சொரிவன செவிநுகர் கனிகள்” (இராமா.நாட்டு.51);. [கதை → காதை] காதை2 kātai, பெ.(n.) 1. பாட்டு (நீல.);; poem. 2.கதையைக் கொண்ட பகுதி (சீலப்பதி.63 உரை);; division of a poem containing a narrative. [கதை → காதை.] காதை3 kātai, பெ.(n.) 1. கொலை (வின்.);; killing, murder. 2. தாளத்தின் அடிப்பு; beating time, as of the right palm on the left. [காதுதல் = மோதல். காது → காதை] |
காதைகரப்பு | காதைகரப்பு gātaigarappu, பெ.(n.) ஒரு செய்யுளை முடிய எழுதி அதன் ஈற்று மொழியுள் முதலெழுத்துந் தொடங்கி ஒரோர் எழுத்து இடையிட்டுப் படிக்கப் பிறிதொரு செய்யுள் வரப் பாடும் மிறைக்கவி (இலக். வி.690.உரை);; stanzaso composed, that, by begining with the first letter of the last word and reading backwards every alternate letter only, a new stanza is formed. [காதை + கரப்பு] |
காதைக்கடி-த்தல் | காதைக்கடி-த்தல் kātaikkaṭittal, செ.கு.வி. (v.i.) காதைக் கடிப்பதுபோல் நெருங்கி வந்து செய்தியை மெதுவாகச் சொல்லுதல்; கிசுகிசுத்தல்; whisper, வெளிப்படையாகச் சொல் காதைக் கடிக்காதே. [காதை+கடி-த்தல்.] |
காதைநெறி-த்தல் | காதைநெறி-த்தல் kātaineṟittal, 4 செ.கு.வி.(v.i.) உற்றுக்கேட்கும்படி குதிரை முதலிய விலங்குகள் காதை நிமிர்த்தல் (வின்.);; to cock the ear, as horses on hearing a frightful noise. [காதை + நெறி] |
காதைப்பொத்து-தல் | காதைப்பொத்து-தல் kātaippottutal, செ.கு.வி. (v.i.) ஓசை கேட்காதபடிக் காதை மூடுதல்; to shut the ears to prevent hearing (சா.அக.);. [காதை+பொத்து.] |
காதொட்டி | காதொட்டி kātoṭṭi, பெ.(n.) 1. அறுந்து போன காதை ஒட்டச் செய்யும் மருந்து a medicine or drug capable of re-uniting the two edges of a torn ear of a female. 2. சிற்றாமுட்டி; fragrant sticky mallow – Pavonia odorata (சா.அக.);. [காது+ஒட்டி.] |
காதொலி | காதொலி kātoli, பெ.(n.) 1. காதின் ஒலி, sound of the ear. 2. உள்ளொடுக்க (யோகாப்பியாசத்);த்தில் காதில் கேட்கும் சிலம்பொலி, சங்கு ஒலி முதலியன; the different kinds of melodius sounds heard at a certain stage in yoga practice, such as, the creeking of anklet, the blowing of conch etc. (சா.அக.);. [காது+ஒலி] |
காதொழுக்கு | காதொழுக்கு kātoḻukku, பெ.(n.) காதில் சீழ் வடிகை; discharge of pus from the ear (சா.அக.);. |
காதோடம் | காதோடம் kātōṭam, பெ.(n.) வெண்கடம்பு white cadamba-Anthocephalus cadumba (சா.அக.);. |
காதோடுகாதாக | காதோடுகாதாக kātōṭukātāka, வி.அ. (adv.) மிகவும் மெதுவான குரலில் கமுக்கமாக; in a hushed voice; in a whisper, காதலர் இருவரும் கட்டிலில் அமர்ந்து காதோடு காதாகப் பேசிக் கொண்டிருந்ததைக் கண்டேன். [காது+ஒடு+காது+ஆக] |
காதோதி | காதோதி kātōti, பெ.(n.) தீய எண்ணத்தோடு கமுக்கமாகப் பேசுவோன் (வின்.);; malicious whisperer. [காது + ஓதி] |
காதோலை | காதோலை kātōlai, பெ.(n.) 1.காதுக்கிடும் பனங்குருத்தின் ஒலைச்சுருள்; small roll of a palmyra leaf often stained with magenta, used by women as an ornament inserted in the lobe of the ear. 2. மகளிர் காதணி வகை; ear ornament made of gold, gems, diamond, etc. worn by women. ம. காதோல [காது + ஒலை] |
காதோலை கருமாரி | காதோலை கருமாரி gātōlaigarumāri, பெ.(n.) தமிழ் நாட்டில் ஏழுகன்னிமார் வணக்கத்தின்போது படைக்கப் பெறும் ஓலை வளையமும் கறுப்பு வளையல்களும்; ring of palm leaf and black bangled placed for the worship of seven virgius. [காது + ஓலை+ கருமாரி] |
காத்தடி | காத்தடி kāttaḍi, பெ.(n.) காவடித்தண்டு (வின்.); pole for carrying burdens. [கா + தடி] |
காத்தட்டி | காத்தட்டி kāttaṭṭi, பெ.(n.) ஆதொண்டை (வின்);. என்னும் முட்செடி வகை; thorny creeper. மறுவ.காற்றோட்டிக்கொடி; காத்தொட்டி ; காத்தோட்டி. [காற்றோட்டி → காத்தட்டி] |
காத்தண்டு | காத்தண்டு1 kāttaṇṭu, பெ.(n.) காவடியின் தண்டு (குறள்,1163, உரை);; pole for carrying on the shoulder weights balanced at both ends. மறுவ.சீர் [கா + தண்டு] காத்தண்டு2 kāttaṇṭu, பெ.(n.) 1. தோட்டத்தில் விளையும் தண்டாகிய கீரைத்தண்டு; a kind ofgar den green. 2.வாழைத்தண்டு; amaranthus blitum (சா.அக.);. [கா + தண்டு] |
காத்ததூலம் | காத்ததூலம்2 kāttatūlam, பெ.(n.) அதிகமாய்க் கள்ளைக் குடிப்பதால் ஏற்படும் உடல் பாதிப்பு: stout ness of the body through drinking too much of toddy (சா.அக.);. [கா + துலம்] |
காத்தய்யன் | காத்தய்யன் kāttayyaṉ, பெ.(n.) ஓர் ஊர்த் தெய்வம் avillage deity. “பாரிய காத்தய்யா” (பஞ்சதிருமுக 655);. [காச + அய்யன்] |
காத்தவராயன் | காத்தவராயன் kāttavarāyaṉ, பெ.(n.) 1.வரலாற்றில் மறைவுண்ட மக்களைளத் துன்பத்தினின்று காப்பாற்றிய மறவனின் பெயர்; name of a hero who protected people from great danger or calamity. 2. மலைமகள் அமைத்த பூங்காவைக் (நந்தவனத்திற்குக்); காவல் செய்தவன்; a village deity. [காத்த+அரையன்.] இரண்டாம் பொருள் பின்வரும் தொன்மக் கதை தழுவியது. சிவன் உலக உயிர்கள் எல்லாவற்றையும் காப்பவர் என்னும் கருத்தில் மாறுபட்ட மலைமகள் ஒரு எறும்பைப் பிடித்துப் பரணியில் அடைத்து வைத்தார். மறுநாள் அதைத் திறந்து பார்க்க, அவ்வெறும்பின் வாயில் ஒரு சிறு அரிசி இருந்தது. தான் செய்த செயலைச் சிவனிடம் தெரிவித்தார். சிவன் மலைமகளை நோக்கி அந்த எறும்பைத் துன்பஞ் செய்ததற்கு நீ ஒரு பூங்காவை ஏற்படுத்தி அந்தக் கழுவாயை (பாவம்); போக்குக என்றார். மலைமகளும் அவ்வாறே பூங்காவை ஏற்படுத்தி அதன் காவலுக்குச் சிவனிடமே ஒருவனைப் பெற்று அவனுக்கு காத்தான் என்று பெயரிட்டார். அவனே காத்தவராயன் ஆவான். இவன் ஆரியமாலை முதலிய பல பெண்களை மணந்தவன் (அபி.சிந்);. காத்தவராயன் kāttavarāyaṉ, பெ.(n.) 1. ஊரில் காணப்படும் சிறு தெய்வங்களுள் ஒன்று a village deity. 2.காவல் புரிபவன் (W.G.);; watchman, guard. [காத்தான் + அரையன்] |
காத்தானம் | காத்தானம் kāttāṉam, பெ.(n.) மரப்பொந்து; the hollow of a tree (சா.அக.);. [கா + தானம்] |
காத்தான் | காத்தான் kāttāṉ, பெ.(n.) காத்தவராயன் பார்க்க: See _. |
காத்தாயி | காத்தாயி kāttāyi, பெ.(n.) சிற்றுரில் காணப்படும் சிறு பெண் தெய்வங்களுள் ஒன்று; a willage goddess. [காத்தாள் + ஆயி] |
காத்தாலை | காத்தாலை kāttālai, பெ.(n.) விடியற்காலம்; early morning (செ. அக.);. காலங்காத்தாலை எழுந்துகழனி வேலைக்குப் போக வேண்டும் (வ.வரி);. [காலை+அத்தில் காலத்தில் – காத்தாலை (கடுங்கொச்சை);.] |
காத்தி | காத்தி kātti, பெ.(n.) காவென்னும் அடியாற் பிறந்த ஓர் ஏவல் வினைமுற்று; imperative finite verb. “நன்று காத்தி யென்றி ராமனு மெதிர் செல நடந்தான்” (இராமா. கரன். 48); [கா + காத்தி] |
காத்திடல் | காத்திடல் kāttiḍal, தொ.பெ.(v.bl.n) காத்தல்; to guard. “ஒருசத்தி… காத்திடலால்” (கந்தபு. திருநகர.65);. [கா → காத்து → இடல்] |
காத்தியம் | காத்தியம் kāttiyam, பெ.(n.) கடித்துண்ணும் உணவு; food munched and eaten. [Skt.{} → த.காத்தியம்.] |
காத்தியாயனம் | காத்தியாயனம் kāttiyāyaṉam, பெ.(n.) அறநூல் பதினெட்டனுள் காத்தியாயனரால் இயற்றப்பட்டது (திவா.);; a treatise in Sanskrit on Hindu law, ascribed to {} one of 18 {}. [Skt.{} → த.காத்தியாயனம்.] |
காத்தியாயனர் | காத்தியாயனர் kāttiyāyaṉar, பெ.(n.) 1. அற (தரும); நூலாசிரியருள் ஒருவர்; name of a Hindu-law-giver. 2. வரருசி, சமற்கிருத இலக்கண ஆசிரியர் (பி.வி.1.);; Vararuci, a Sanskrit grammarian, as a descendant of Kata. [Skt.{} → த.காத்தியாயனர்.] |
காத்தியாயனி | காத்தியாயனி kāttiyāyaṉi, பெ.(n.) 1. மலை மகள் (சிவரக. தாருக. 30.);;{}. 2. கொற்றவை (பிங்.);;{}. [Skt.{} → த.காத்தியாயனி.] |
காத்திரன் | காத்திரன் kāttiraṉ, பெ.(n.) வலியோன் (யாழ்.அக.);; strong man. [கா + காத்திரன்] |
காத்திரம் | காத்திரம் kāttiram, பெ.(n.) சினம் (பிங்.); anger. [ஆத்திரம் → காத்திம்] காத்திரம்1 kāttiram, பெ.(n.) 1. உடல்; body. “காத்திரங் கரணஞ்சேர்த்தி” (வைராக். தீப. 39);. 2. உறுப்பு (திவா.);; limb, member. 3. யானையின் முன்னங்கால்; fore leg of an elephant. “காத்திரங்களாற் றலத்தொடுந் தேய்த்ததொர் களிறு” (கம்பரா. வரைக். 6);. 4. கனம், நெருக்கம், இறுக்கம் (சூடா.);; thickness, solidity. 5. உடலின் பருமன்; corpulence. 6. இன்றியமையாதது; importance. [Skt.{} → த.காத்திரம்.] காத்திரம்2 kāttiram, பெ.(n.) காத்திரவேயம் பார்க்க;see {}. |
காத்திரவேயம் | காத்திரவேயம் kāttiravēyam, பெ.(n.) பாம்பு (உரி.நி.);; serpent. [Skt.{} → த.காத்திரவேயம்.] |
காத்திரவேயர் | காத்திரவேயர் kāttiravēyar, பெ.(n.) கீழ்த்திசையில் வாழ்வதாகக் கருதப்படும் நாகர்; a class of {} or serpent demons supposed to inhabit the lower regions, as the children of Kadru. “காத்திரவேயரை மன்னன் மைந்தரு மொத்தார்” (பாரத. சம்பவ. 119);. [Skt.{} → த.காத்திரவேயர்.] |
காத்திராந்தலேபனி | காத்திராந்தலேபனி kāttirāndalēpaṉi, பெ.(n.) நறுமணச் சந்தனம்; perfumed sandal paste. (சா.அக.); |
காத்திரி | காத்திரி1 kāttiri, பெ.(n.) கீரி (திவா.);; mungoose. [Skt.{} → த.காத்திரி.] [P] காத்திரி2 kāttiri, பெ.(n.) சினம், வெகுளி (கோபம்);; displeasure, anger. [Skt.{} → த.காத்திரி.] |
காத்திரு-த்தல் | காத்திரு-த்தல் kāttiruttal, 4 செ.குன்றாவி. (v.t.) 1. எதிர்பார்த்திருத்தல்; to wait, expect, watch for. look for. 2. காவல் பூண்டிருத்தல்; to safeguard, as one’s property. “பொருள் காத்திருப்பனேல் அஆ இழந்தான்” (நாலடி, 9.); து.காதொதுநி [கா + இரு] |
காத்திரை | காத்திரை kāttirai, பெ.(n.) காத்திரி3 (அக.நி.); பார்க்க;see {}. |
காத்துட்டு-தல் | காத்துட்டு-தல் kādduṭṭudal, 5 செ.குன்றாவி (v.t.) தன் கொள்கையை அடிக்கடி பயன்படுத்தி மகிழ்வூட்டுதல்; to make frequent use of one’s dogma in such a way as to make it pleasant. “அது நிலைநிற்கைக்காகவும் அத்தைக் காத்தூட்டு கைக்காகவும் (திவ்.திருப்பா. 29.வியா);. [காத்து + ஊட்டு] |
காத்தூலம் | காத்தூலம்1 kāttūlam, பெ.(n.) பழங்காலத்து வழங்கிய துகில் வகை (சிலப்.14:108,உரை);; a gar ment of ancient times. [கா = பாவல், அகலம். கா + துலம்] |
காத்தேனி | காத்தேனி kāttēṉi, பெ.(n.) மணித்தக்காளி, black-berried solanum – Solanum nigrum (சா.அக.);. |
காத்தை | காத்தை kāttai, பெ.(n.) இடை(part.); ஒர் அசை நிலை (தொல். சொல். 426, உரை);; an expletive. [ஆத்தாள் → ஆத்தை → காத்தை] |
காத்தொட்டி | காத்தொட்டி kāttoṭṭi, பெ.(n.) ஆதொண்டைச் செடி ; thorny creeper. [காற்றோட்டி → காத்தொட்டி] |
காந்தஅயசு | காந்தஅயசு kāntaayacu, பெ.(n.) அயச்சிலை; iron ore (சா.அக.);. |
காந்தஊசி | காந்தஊசி kāndaūci, பெ.(n.) காந்தவூசி பார்க்க: see _. [காந்தம் → ஊசி] |
காந்தகன் | காந்தகன் gāndagaṉ, பெ.(n.) ஒருவகைச் செய்நஞ்சு; a kind of arsenic (சா.அக.);. [காந்தம் → காந்தகன்] |
காந்தக்கம்பி | காந்தக்கம்பி kāndakkambi, பெ.(n.) 1. இடி தாங்கி; strio lightning rod. 2. மின்கம்பி; electric wire. ம. காந்தக்கம்பி [காந்தம் + கம்பி] |
காந்தக்கல் | காந்தக்கல் kāndakkal, பெ.(n.) அயக்காந்தம் (வின்.);; magnet, loadstone. ம. காந்தக்கல்லு [காத்தம் + கல்] |
காந்தக்களிமண் | காந்தக்களிமண் kāntakkaḷimaṇ, பெ.(n.) திருமண் அல்லது திருமால் அன்பர்கள் அணியக்கூடிய வெண்மை கலந்த மஞ்சள் நிறமுடைய திருமண் (கோபிச் சந்தனம்);; common magnesian clay used by a class of the Hindus for putting on naman the sectarian mark on the forehead. 2. நாமவெள்ளை; white earth used by Vaishnavites for namam obtained from duwaraka, 3. மஞ்சள் திருச்சுண்ணம்; aluminous yellow earth obtained from the Ganges at Haridwar used by Madhwas (சா.அக.);. [காந்தம்+களிமண்] |
காந்தக்கழி | காந்தக்கழி kāndakkaḻi, பெ.(n.) 1.கழியைப்போற் செய்த காந்தம்; bar-magnet. 2.மாத்திரைக் கோல்: magic wand, magnetic rod (சா.அக.);. [காந்தம் → கழி] |
காந்தக்கவர்ச்சி | காந்தக்கவர்ச்சி kāntakkavarcci, பெ.(n.) காந்தத்திற்கு இயல்பிலேயே இரும்பு முதலியவைகளிடத்து உண்டான இழுக்குந் தன்மை; the influence of a magnet upon certain metallic substances cheifly iron – Magnetic attraction (சா.அக.);. [காந்தம்+கவர்ச்சி] |
காந்தக்கிண்ணம் | காந்தக்கிண்ணம் kāntakkiṇṇam, பெ.(n.) காந்தத்தினால் செய்த ஒரு வாயகன்ற ஏணம்; a baism made out of magnetic mettalic compound. [காந்தம்+கிண்ணம்] இதில் பாலை விட்டால் பொங்கினாலும் வழியாதென்றும், இச ரிய (பாதரச);த்தை விட்டால் இதளியங் கட்டி, வெள்ளியைப் போல் ஆகுமென்றும் கூறப்படுகிறது. இதைச் சித்தர்கள் உடல் நரை திரையின்றி வெகு நாள் இருக்க வேண்டி உண்பதற்கு முன் கற்பத்தை இதில் இட்டு காதுகாப்பார்கள். இக்கிண்ணம் செய்யும் முறை மிகவும் கமுக்க (இரகசிய);மானது (சா.அக.);. [காந்தம்+கிண்ணம்] |
காந்தக்கிண்ணி | காந்தக்கிண்ணி kāntakkiṇṇi, பெ.(n.) காந்த உண்கலம்; magnetic eating dish. [காந்தம்+கிண்ணி] இதைச் செய்யும் முறை : காந்தத்தைக் கல்லுப்பு, மெழுகு இவைகளுடன் கலந்து உருக்கி விந்தினால் சுருக்குக் கொடுக்க கண் விட்டாடும். அப்போது வார்ப்பில் ஊற்றிக் கிண்ணியாக அடித்துக் கொள்வது (சா.அக.);. |
காந்தசத்துரு | காந்தசத்துரு kāndasatturu, பெ.(n.) காந்தத்துக்கு மாற்றுச் சரக்கு (வின்.);; that which counteracts the magnetic power, as blue vitriol, sal-ammoniac, saltpetre. [காந்தம் + சத்துரு] |
காந்தசிந்தூரம் | காந்தசிந்தூரம் kāndasindūram, பெ.(n.) காந்தத் தைப் புடமிட்டுச் செய்யப்படும் சிந்துாரம் [unomião.1205]; loadstone powder of redcolour prepared by chemical process [red-oxide]. [காந்தம் + சிந்தூரம்] |
காந்தச்சத்தி | காந்தச்சத்தி kāntaccatti, பெ.(n.) காந்தத்திற்கு உள்ள இழுக்கும் ஆற்றல்; magnetic power [காந்தம்+சத்தி] |
காந்தச்சத்து, | காந்தச்சத்து, kāntaccattu, பெ.(n.) 1. காந்தத்தின் வலிமை; magnesium, essence of magnesia. 2. காந்தசாரம்; (GIT. 985.);. [காந்தம்+சத்து] |
காந்தச்சத்துக்கிண்ணி | காந்தச்சத்துக்கிண்ணி kāntaccattukkiṇṇi, பெ.(n.) காந்தக்கிண்ணம் பார்க்க: See kända-k-kinnam (&m.95.);. |
காந்தச்சத்துச்சுண்ணம் | காந்தச்சத்துச்சுண்ணம் kāntaccattuccuṇṇam, பெ.(n.) காந்தத்தில் இருந்து வலிமையை (சத்து); எடுத்து அதை மற்ற பொருள்களோடு சேர்த்து புடத்திலிட்டு எடுத்த கண்ணம்; an alchemical compound obtained by the calcination of a mixture of several alkaline compounds in which the essence of magnet forms the cheif ingredient. இது வாதத்திற்கு உதவும் (சா.அக.);. [காந்தம்+சத்து+சுண்ணம்] |
காந்தச்சத்துவம் | காந்தச்சத்துவம் kāntaccattuvam, பெ.(n.) காந்தத்தின் இயல்பான வலிமை; natural magnetic power (சா.அக.);. [காந்தம்+சத்துவம்] |
காந்தச்சவளை | காந்தச்சவளை kāndaccavaḷai, பெ.(n.) காந்த மணல்; magnetic iron ore (சா.அக.);. [காந்தம் → வளை] |
காந்தச்சாரம் | காந்தச்சாரம் kāntaccāram, பெ.(n.) காந்தத்தின் வலிமை; a pecular property or power possessed by bodies or animals whereby they naturally attract or repel one another, Magnetism (சா.அக.);. [காந்தம்+சாரம்] காந்தச்சிகிச்சை 1. காந்தம் கலந்த மருந்தைக்கொண்டுசெய்யும் மருத்துவம்; a treatment effected through medicine prepared from magnetmixed with otheringredients – Magneto-theraphy. 2. மந்திர உச்சரிப்பினால் அல்லது மனோ சத்தியினால்நோய்களைக் குணப்படுத்துகை; magnetic treatment effected by chanting of mantrams or a cure effected through animal magnetism – Hypnotic cure (சா.அக.);. [காந்தம்+சிகிச்சை] |
காந்தச்சிங்கி | காந்தச்சிங்கி kāntacciṅki, பெ.(n.) காந்தம் சேர்ந்த ஒரு நஞ்சு மருந்து; a poisonous compound containing magnet as one of the ingredients (சா.அக.);. [காந்தம்+சிங்கி] |
காந்தச்சுண்ணம் | காந்தச்சுண்ணம் kāntaccuṇṇam, பெ.(n.) காந்தத்தைப் புடமிட்டு சுண்ணச் சத்தாக மாற்றிய மருந்து; an alkaline compound of magnet obtained by calcination. [காந்தம்+கண்ணம்] இதைப் பாலுடன் சேர்த்து நாற்பது நாட்கள் உண்ண உடம்பின் காந்தல், வெக்கை, வெதுப்பு, சூலை, பாண்டு, வயிற்றுப்போக்கு (கிராணி); முதலிய நோய்கள் போம் (சா.அக.);. |
காந்தச்சூசி | காந்தச்சூசி kāntaccūci, பெ.(n.) காந்த ஊசி; magnetic needle (சா.அக.);. |
காந்தச்செந்துாரம் | காந்தச்செந்துாரம் kāntaccenram, பெ.(n.) காந்தத்தைப் புடமிட்ட சிவப்புத் தூள்; a redoxide obtained by calcination of magnet – Magnetic oxide of iron (சா.அக.);. [காந்தம்+செந்தூரம்] |
காந்தச்செம்பு | காந்தச்செம்பு kāndaccembu, பெ.(n.) ஊதைச்செம்பு; an alchemical copper prepared from magnetism (சா.அக.);. [காந்தம் → செம்பு] |
காந்தண்மலரான் | காந்தண்மலரான் kāntaṇmalarāṉ, பெ.(n.) சவர்க்காரம்; fuller”s earth; bleaching powder (சா.அக.);. [காந்தம்+மலரான்.] |
காந்தத்துருவம் | காந்தத்துருவம் kāntatturuvam, பெ.(n.) காந்தத்தின் வலிமுனை, susly smoor; magnetic pole (சா.அக.);. [காந்தம்+துருவம்] |
காந்தன் | காந்தன் kāndaṉ, பெ.(n.) கணவன்; husband. “திருமடந்தை காந்தன்” (கம்பரா.நகர்நீங். 95);. [காந்து → காந்தன்] |
காந்தபசாசம் | காந்தபசாசம் kāndabacācam, பெ.(n.) காந்தக்கல்; loadstone, magnet. “காந்தபசா சம்போ லவ்வினையைப் பேராம லூட்டும்” (சி.போ.சிற்.2.2:2);. [காந்தம் + பசாசம்] |
காந்தபற்பம் | காந்தபற்பம் kāndabaṟbam, பெ.(n.) காந்தத் தினின்று செய்யப்படும் பொடி; load stone powdel made by chemical process. [காந்தம் + பற்பம்] |
காந்தபுராணம் | காந்தபுராணம் kāndaburāṇam, பெ.(n.) பதினெண்தொன்மத்துள் ஒன்று; a chief purana one of the 18 puranas. மறுவ. காந்தம் [கந்தபுராணம் → காந்தபுராணம்] |
காந்தப்பட்சி | காந்தப்பட்சி kāntappaṭci, பெ.(n.) மயில்; pea-cock – Pavo cristatus (சா.அக.);. |
காந்தப்பன்னிகம் | காந்தப்பன்னிகம் kāntappaṉṉikam, பெ.(n.) சன்னி நாயகம்; a plant prescribed as a specific for apoplexy or in cases of delirium (சா.அக.);. [காந்தம்+பன்னிகம்] |
காந்தப்பர் | காந்தப்பர் kāndappar, பெ.(n.) காந்தருவர் பார்க்க; see _. [காந்தருவர் → காந்தப்பர்] |
காந்தப்பலம் | காந்தப்பலம் kāntappalam, பெ.(n.) காந்த ஆற்றல்; magnetic power (சா.அக.);. |
காந்தப்பாடாணம் | காந்தப்பாடாணம் kāntappāṭāṇam, பெ.(n.) பிறவி நஞ்சு வகை; a mineral” poison (செ.அக.);. [காந்தம் + Skt. பாடாணம்] |
காந்தப்பாத்திரம் | காந்தப்பாத்திரம் kāntappāttiram, பெ.(n.) காந்தக்கிண்ணம் பார்க்க; see kånda-k-kinnam (சா.அக.);. |
காந்தப்புடம் | காந்தப்புடம் kāntappuṭam, பெ.(n.) மந்தாரை; mountain ebony (சா.அக.);. |
காந்தப்பெட்டி | காந்தப்பெட்டி kāndappeṭṭi, பெ.(n.) திசையறி கருவி (வின்.);; mariner’s compass, engineers compass. ம. காந்தப்பெட்டி [காந்தம் + பெட்டி] |
காந்தமணி | காந்தமணி kāndamaṇi, பெ.(n.) காந்தக்கல் (வின்.); பார்க்க; see _. [காந்தம் + மணி] |
காந்தமண் | காந்தமண் kāndamaṇ, பெ.(n.) காந்தச் சத்துள்ள செம்மண் (வின்.);; magnesite where in is found carbonate of magnesia, red earth. [காந்தம் + மண்] |
காந்தமண்சத்து | காந்தமண்சத்து kāntamaṇcattu, பெ.(n.) காந்த மண்ணைப்போதுமான அளவு எரித்து எடுக்கும் ஒரு வெண்ணிறமான ஊட்டம் (சத்து);; magnesia or oxide of magnesia extracted from magnesium carbonate by application of heat (சா.அக.);. [காந்தம்+மண்+சத்து.] |
காந்தமண்ணுப்பு | காந்தமண்ணுப்பு kāndamaṇṇuppu, பெ.(n.) வேதியுப்பு; epsom Salt (சா.அக.);. [காந்தமண் + உப்பு] |
காந்தமண்பற்பம் | காந்தமண்பற்பம் kāntamaṇpaṟpam, பெ.(n.) காந்த மண்ணினின்று அணியம் (தயாரிக்கும்); செய்யும் பற்பம்; magnesium carbonate obtained from magnesite – Magnisial carbonas. [காந்தம்+மண்+பற்பம்] இது காந்தமண் கலந்த கண்ணாம்புக் கல்லுக்குள் இயற்கையாகவே இருக்கும். இது வெண்ணிறமான பொடி, மருந்திற்குப் பயன்படும் (சா.அக.);. |
காந்தமதீர்த்தம் | காந்தமதீர்த்தம் kāntamatīrttam, பெ.(n.) தென் கடற்கரையிலுள்ள நீர்நிலை; dool near southern seashore. [காந்தமன்+தீர்த்தம்] |
காந்தமயமாலை | காந்தமயமாலை kāndamayamālai, பெ.(n.) காந்தமும் இரும்பும் கலந்து கிடைக்கப்பெற்ற மலை; mountain containing magnet mixed with iron ore (சா.அக.);. [காந்தம் + அயம் + மலை] |
காந்தமயம் | காந்தமயம் kāntamayam, பெ.(n.) 1. கவர்ச்சியான அல்லது மேன்மையான காந்த ஆற்றல்; influence or predominence of magnetic power. 2. காந்தமும், இரும்பும் சேர்ந்தது an alloy of magnet and iron(சா.அக.);. [காந்தம்+மயம்] |
காந்தமலை | காந்தமலை kāndamalai, பெ.(n.) நிலப்பகுதியின் வடகோடியிற் காந்தமயமாயுள்ளதாகக் கருதப்படும் மலை (வின்.);; mountainfarnorth regarded as the centre of attraction to the magnet; the magnetic pole. [காந்தம் + மலை] |
காந்தமாட்டு-தல் | காந்தமாட்டு-தல் kāntamāṭṭutal, செ.கு.வி. (v.i.) 1. காந்த மூட்டுதல்; to induce-mag netic properties, that is to render a piece of iron magnetic. 2, காந்தத்தை அறைத்தல்; to grind loadstone into a powder (சா.அக.);. [காந்தம்+ஆட்டுதல்.] |
காந்தமின்சாரம் | காந்தமின்சாரம் kāntamiṉcāram, பெ.(n.) காந்தத்தைக் கொண்டு மூட்டும் மின்சாரம்: electricity induced by means of a magnet – Magneto electricity (சா.அக.);. [காந்தம் + மின்சாரம்] |
காந்தமின்னிராயம் | காந்தமின்னிராயம் kāntamiṉṉirāyam, பெ.(n.) காந்த மின்சார ஓட்டம், magneto electric current (சா.அக.);. [காந்தம்+மின்+இரையம்] |
காந்தமின்னுபகாரம் | காந்தமின்னுபகாரம் kāntamiṉṉupakāram, பெ.(n.) காந்த மின்சாரக் கருவிகள்; magneto-electric current (சா.அக.);. |
காந்தமூசை | காந்தமூசை kāntamūcai, பெ.(n.) காந்தத்தினால் செய்த குகை; a crucible made of magnet (சா.அக.);. [காந்தம்+மீசை] |
காந்தமூட்டு-தல் | காந்தமூட்டு-தல் kāndamūṭṭudal, 5 செ.கு.வி (v.i) காந்த, சக்தி கொடுத்தல்; inducing magnetism (சா.அக);. [காந்தம் + ஊட்டு] |
காந்தம் | காந்தம்1 kāndam, பெ.(n.) 1. காந்தக்கல் பார்க்க ; see _. “நாராசத் திரிவிற் கொள்ளத் தகுவது காந்தம்” (மணிமே.27:56); 2. ஒருவகைப் பளிங்கு; a class of crystals, as _. 3. அழகு (உரி.நி);; beauty, love liness, attractiveness. 4. உலக நடையை தடவாது பொதுவாக யாவரும் மகிழும்படி புகழ் வதாகிய செய்யுட் குணம் (தண்டி.22);; Rhet descriptior within conventional limits, satisfying the aesthetic sense, a merit of poetie composition. 5. மின்சாரம்; electricity. Skt. kārta, [காந்து காந்தம்] காந்தம்2 kāndam, பெ.(n.) காந்தபுராணம் (திவா.); பார்க்க; see _. |
காந்தம்பிடி-த்தல் | காந்தம்பிடி-த்தல் kāndambiḍittal, 4 செ.கு.வி.(v.i.) காந்தம்வலி பார்க்க; see _. [காந்தம் + பிடி.] |
காந்தம்பிடித்தபொடி | காந்தம்பிடித்தபொடி kāntampiṭittapoṭi, பெ.(n.) காந்தத்தில் ஒட்டியுள்ள பொடி; a mass of soft iron at the extremity of a magnet-Armature (சா.அக.);. [காந்தம்+பிடித்த+பொடி] |
காந்தம்வலி-த்தல் | காந்தம்வலி-த்தல் kāndamvalittal, 4செ.கு.வி (v.i.) காந்தம் இரும்பை இழுத்தல்; to attractaniron piec with magnetic force. [காந்தம் + வலி] |
காந்தயச்சாரி | காந்தயச்சாரி kāntayaccāri, பெ.(n.) காய்ப்பூவரசு அல்லது காட்டுப்பூவரசு; false fern tree – Fillicium decipiens (சா.அக.);. [காந்தம்+அயச்சாரி] |
காந்தரசவிருட்சம் | காந்தரசவிருட்சம் kāntaracaviruṭcam, பெ.(n.); ஒளிமரம்; a tree luminous in the dark. இதில் காந்தம், பாதரசம் இலைகளின் ஆற்றல் உள்ளதாகக் கருதி இப்பெயர் அமைந்தது போலும், இதன் வெளிச்சத்தினால் இரவு, பகல் தோன்றாது. இம்மரம் வாதத்திற்குப் பயன்படும் என்று கருதப்படும் (சா.அக.);. |
காந்தருப்பம் | காந்தருப்பம் kāndaruppam, பெ.(n.) காந்தர்ப்பம் பார்க்க; see _. “காந்தரும்பம் மெனுங் கடவுண் மாப்படை” (கம்பரா.மூலபல.182.); [காந்தர்ப்பம்: காந்தருப்பம்] |
காந்தருவப்புணர்ச்சி | காந்தருவப்புணர்ச்சி kāndaruvappuṇarcci, பெ.(n.) காந்தருவம், 1 (சங்.அக.); பார்க்க; see _. [காந்தருவம் + புணர்ச்சி] |
காந்தருவம் | காந்தருவம் kāndaruvam, பெ.(n.) 1. காதலர் தம்முள் மனமொத்துக் கூடுங்கூட்டம் (தொல். பொருள்.92, உரை);; a form of marriage which results entirely from love and which has no ritual whatever, as common among Gandharvas. 2. இசைப்பாட்டு (சூடா.);; music. 3. காந்தருவமறை; musical composition. “வில்வேதமமல் காந்தருவ வேதம்” (காஞ்சிப்பு: சனற். 4);. 4. யாழ் ; harp. [காந்தருவம் → காந்தருவம்] |
காந்தருவர் | காந்தருவர் kāndaruvar, பெ.(n.) 1.யாழிசைப்போர் கந்தருவர் (சிலப்.5:176,உரை);; Gandharvas. 2.பாடுவோர் (கல்);; songsters, minstrels, [காந்தருவம் (யாழ்); → கந்தருவர் → காந்தருவர் → யாழோர்);] |
காந்தருவி | காந்தருவி kāndaruvi, பெ.(n.) பாடுபவள்; songstress, “தளிச்சேரிப் பெண்டுகளுக்கும் காந்தருவி களுக்கும் நாயகஞ்செய்ய'(S.I.I.I.66-13pg:276); [காந்தருவம் → காந்தருவி] |
காந்தர்ப்பம் | காந்தர்ப்பம் kāndarppam, பெ.(n.) காந்தருவம் பார்க்க; see kandaruvam, “காந்தர்ப்ப மென்ய துண்டால்… மறைகளே வகுத்த கூட்டம்”(கம்பரா. சூர்ப்பண:54);. [காந்தருவம் →காந்தர்ப்பம்] |
காந்தற்சோறு | காந்தற்சோறு kāndaṟcōṟu, பெ.(n.) கரிந்த சோறு ; rice partly charred by over-heating. [காந்தல் + சோறு] |
காந்தலாடம் | காந்தலாடம் kāndalāṭam, பெ.(n.) குதிரை வடத்தைப்போற்செய்து வலுவூட்டிய இரும்பு; horseshoe magnet (சா.அக.);. [கந்தம் + லாடம்] |
காந்தலாய்ப்போ-தல் | காந்தலாய்ப்போ-தல் kāntalāyppōtal, 8 செ.கு.வி.(v.i.) தீய்ந்து போதல்; to become scorched (சா.அக.);. [காந்தல்+ஆய்+போதல்.] |
காந்தலோகம் | காந்தலோகம் kāntalōkam, பெ.(n.) 1. காந்தம்; magnet 2. வார்த்த இரும்பு; cast-iron. 3. காந்தமும் இரும்பும்; magnet and iron. 4. நில உலகம்; earth which in itself is a magnet (சா.அக.);. [காந்தம்+உலோகம். கந்து→காந்து→காந்தம். கந்துதல் பற்றுதல், கந்து பற்றுக்கோடு] |
காந்தல் | காந்தல் kāndal, பெ.(n.) 1.காந்துகை; burning. 2உமி, ஒலை முதலியவற்றின் எரிந்த கருகல்; burnt takes of straw, palm leaves, paper, chaff etc. 3. காய்ந்த பயிர் (வின்.); ; growing crop scorched by =e sun. 4. சினம் (வின்.);; anger. ம. காந்தநள [காந்து → காந்தல்] |
காந்தளம் | காந்தளம் kāndaḷam, பெ.(n.) கலப்பைக் கிழங்கு; plough root (சா.அக.);. [காந்தள்→ காந்தளம்] |
காந்தளிகம் | காந்தளிகம் gāndaḷigam, பெ.(n.) சின்னிமரம்; Iirch leaved acalypha (சா.அக.);. [காந்தள் → காந்தளிகம்] |
காந்தளூர்ச்சாலை | காந்தளூர்ச்சாலை kāndaḷūrccālai, பெ.(n.) கேரள நாட்டைச் சார்ந்த விழிஞ்சம் அல்லது நெய்யாற்றின் கரைப் பக்கத்தில் இருந்ததாகச் சொல்லப்படும் ஒரு பழைய ஊர்; name of a ol place, said to be near vilifjam or Neyyarrinkar. of kerala. [காந்தளூர் + சாலை] திருவனந்தபுரத்திலுள்ள வலிய சாலையே காந்தளூர்ச்சாலை என்ற கருத்தும் உண்டு. |
காந்தள் | காந்தள் kāndaḷ, பெ.(n.) 1. செங்கோடல் கார்த்திகைப்பூ; Malabar glorylily,red orwhite spe: cies காந்தள் மலராக்கால்” (நாலடி,283); 2.காந்தள் மலரணிந்து வேலன் வெறியாடுவதைக் கூறும் புறத்துறை (தொல்.பொருள். 80);; theme of describ. ing a dance of one possessed by the spirit of skanda and wearing the kändas flower. 3. முருகக்கடவுளுக்குரிய காந்தளைச் சிறப்பித்துச் கூறும் புறத்துறை (பு.வெ.6:9);; theme of singing the praises. 4.சவர்க்காரம் (வின்.);; soap ம. காந்தல் [காந்தல் → காந்தள் (வேக 185);.] காந்தள் வகைகள்: 1. செங்காந்தள் 2. வெண்காந்தள் 3 சிறுகாந்தள் 4.கருங்காந்தள் 5.நரிக்காந்தள் 6 காய்க்காந்தள் (சா.அக.); |
காந்தள் மலரான் | காந்தள் மலரான் kāndaḷmalarāṉ, பெ.(n.) உழமண்; Fuller earth (சா.அக.);. [காந்தள் →மலரான்] |
காந்தவட்டை | காந்தவட்டை kāndavaṭṭai, பெ.(n.) காந்தவூசி பொருத்திய வட்டத்தட்டு; circular instrument fitted with magnetic needle. [காந்தம்+வட்டை-காந்த வட்டை] கட்டடங்களின் நிலையைத் தரையில் குறித்திடப் பொறியாளர்களும், கடலில் பயணம் செய்யும்போது திசையறிவதற்கு மாலுமிகளும் பயன்படுத்துகின்றனர். |
காந்தவண்டி | காந்தவண்டி kāndavaṇṭi, பெ.(n.) இருப்புப் பாதையிற் செல்லும் மின்வண்டி; electric train electric tramcar. [காந்தம்+வண்டி] |
காந்தவயக | காந்தவயக2 kāntavayaka, பெ.(n.) காந்த மருந்துகளைச் சாப்பிட்டு அதனால் அடைந்த அகவை முதிர்பு life pralonged by the use of the calcined preparations of magnet (சா.அக.);. [காந்தம்+Skt. வயசு] |
காந்தவயசு | காந்தவயசு1 kāntavayacu, பெ.(n.) அயமண்; iron ore. [காந்தம்+அயசு] |
காந்தவர் | காந்தவர் kāndavar, பெ.(n.) காந்தருவர், பதினெண்கணத்துள் ஒரு தொகுதியார் (திவா.);; a celestical group of singers, “காந்தவர் சேனை யெல்லாம்”(உத்தரரா.கந்திருவ.43); [காந்தருவர் → காந்தவர்] |
காந்தவலி | காந்தவலி kāntavali, பெ.(n.) காந்தத் திற்குள்ள இழுக்கும் ஆற்றல்; the attractive power of magnet (சா.அக.);. [காந்தம்+வலி] |
காந்தவி | காந்தவி kāntavi, பெ.(n.) சிறுவழுதலை; prickly night shade – Solanum indicum (சா.அக.);. [காந்தம்- காந்தவி] |
காந்தவிருசு | காந்தவிருசு kāntavirucu, பெ.(n.) காந்தத்தினால் செய்த அச்சு (இருக);; magnetic axis (சா.அக.);. [காந்தம்+இருக] |
காந்தவிளக்கு | காந்தவிளக்கு kāndaviḷakku, பெ.(n.) ஊர் வலங்களில் தலைமேல் தூக்கிச் செல்லும் எரிவளி விளக்கு; gas light carried over persons. [காந்தம் + விளக்கு] |
காந்தவூசி | காந்தவூசி kāndavūci, பெ.(n.) காந்தம் ஏற்றிய திசை காட்டும் முள்; magnetic needle, steelpointer of a compass. [காந்தம் + ஊசி] |
காந்தவை-த்தல் | காந்தவை-த்தல் kāndavaittal, 4 செ.கு.வி.(v.i.) தீயவைத்தல்; allowing to be scorched (சா.அக.); [காந்தல் + வை] |
காந்தானம் | காந்தானம் kāndāṉam, பெ.(n.) நாய்வேளை; dog mustard (சா.அக.);. [காந்து → காந்தானம்] காந்தி1 பெ.(n.); 1. ஒளி (சூடா);, brightness, light, glare. 2.அழகு (பிங்);; beauty. 3.ஒளிக்கதிர் (வின்.);; ray. 4. வெப்பம் (மூ.அ.); ; heat. 5. காவிக்கல் (வின்);; ochre. 6. வைடூரியம் (வின்);; cat’s-eye. [காந்து → காந்தி] |
காந்தாமற்கருகாமலெடு- த்தல் | காந்தாமற்கருகாமலெடு- த்தல் kāntāmaṟkarukāmaleṭuttal, செ.கு.வி (v.i.) பக்குவ நிலையழியாதபடியும், தீயாமலும் பொங்கி எடுக்கும் நிலை; a stage at which boiled substances are taken out without being over-boiled or scorched (சா.அக.);. [காந்தாமல்+கருகாமல்+எடு] |
காந்தாயசம் | காந்தாயசம் kāntāyacam, பெ.(n.) அயக்காந்தம்; iron mixed with magnet or the containing magnetic power (சா.அக.);. [காந்தம்+ஆயசம்] |
காந்தாரகம் | காந்தாரகம் kāntārakam, பெ.(n.) ஒரு வகைக் கரும்பு; a kind of sugarcane (சா.அக.);. [காந்தம்+ராகம்] |
காந்தாரக்கிராமம் | காந்தாரக்கிராமம் kāndārakkirāmam, பெ.(n.) தேவர் உலகத்து வழங்குவதாகக் கருதப்படும் இசைப்பண்வகை (பரத இராக.80);; a musical note of the celestials. [காந்தாரம் + கிராமம்] |
காந்தாரபஞ்சமம் | காந்தாரபஞ்சமம் kāndārabañjamam, பெ.(n.) பாலையாழ்த்திறங்களுள் ஒன்று (சிலப்.4,75, உரை.);; an ancient secondary melody type of the palai class. [காந்தாரம் + பஞ்சமம்] |
காந்தாரம் | காந்தாரம்1 kāndāram, பெ.(n.) 1. ஐம்பத்தாறு நாடுகளுள் ஒன்று; Kandahar, a country northeast of Peshawar, one of ancient 56 nadu. “காந்தார மென்னுங் கழிபெரு நாட்டு”(மணிமே. 9:12);. 2. ஏழிசைகளுள் ஒன்று (பரத இராக,42);; third note of the gamut, one of Satta-suram. 3. பாலை யாழ்த்திறவகை (சிலப்8,35, உரை);. an ancient secondary melody-type of the pāla class. [காந்தருவம் → காந்தாரம்] காந்தாரம்2 kāndāram, பெ.(n.) 1. காடு (திவா.);; jungle, forest, wood. [கான் → காந்து → காந்தாரம் → ஒ.நோ.மன் → மந்து (அரசன்);] |
காந்தாரி | காந்தாரி kāndāri, பெ.(n.) 1. காந்தார நாட்டு இளவரசி;துரியோதனன் தாய்; name of a princess of Kandhar. mother of Duryodana. “காந்தாரி கிளையோடி ன்றேகெடும்” (பாரதசூதுபோர்.222.);. 2. கொடியவன் (வின்.);; hard-hearted cruel woman. 3. சிவனார் வேம்பு; wiry indigo. “அரிக்காந்தி காந்தாரி நவ மொவ்வொன்றுக் கவ்வி” (தைலவ. தைல,135);. 4. பத்து நாடியிலொன்று (சிலப்.3:26, உரை);; a principal tubular vessel of the human body one of taca-nadi. 5. ஒருவகைப் பண் (பாரத. இராக.56);; a specific melody-type. 6. சத்திசாரம் (வின்.);; a kind of salt, of burning and acrid nature. [காந்தாரம் → காந்தாரி] |
காந்தாரி செம்மல் | காந்தாரி செம்மல் kāndārisemmal, பெ.(n.) துரியோதனன் (சூடா.);; Duriyodana, the son of Kandhari. மறுவ. காந்தாரிமைந்தன் [காந்தாரி + செம்மல்] |
காந்தாரி மிளகாய் | காந்தாரி மிளகாய் kāndārimiḷakāy, பெ.(n.) சீமை மிளகாய் (சு.வை.ரை. 509);; a kind of chilly. ம. காந்தாரிமுளகு [காந்து → காந்தாரி →மிளகாய்] |
காந்தாரியுப்பு | காந்தாரியுப்பு kāndāriyuppu, பெ.(n.) ஒருவகை உப்பு; an acrid salt. [காந்தாரி + உப்பு] |
காந்தாளம் | காந்தாளம் kāndāḷam, பெ.(n.) சினம் (வின்.);; anger. [காய் → காந்து→ காந்தாளம்] |
காந்தாளி | காந்தாளி kāntāḷi, பெ.(n.) சின்னி மரம், birch-leaved acalypha – Acalypha fruiticosa (சா.அக.);. [காந்து + ஆளி] |
காந்தாளிகம் | காந்தாளிகம் gāndāḷigam, பெ.(n.) சின்னி; Indian copper leaf, m.sh., [காந்தாளம் → காந்தாளிகம் (வேக186);] |
காந்தாள் | காந்தாள் kāndāḷ, பெ.(n.) காந்தன் பார்க்க; see _. [காந்து (ஒளி); + ஆள்.] |
காந்தி | காந்தி2 kāndi, பெ.(n.) ஒரு சொல்லணி வகை (யாழ்.அக.);; a figure of speech. [காந்து → காந்தி] |
காந்திகம் | காந்திகம் kāntikam, பெ.(n.) காந்த ஆற்றல்; magnetism. [காந்து+இகம்] இவ்வாற்றலினால் நோய்களைக் குணப் படுத்தலாம். இது ஆங்கிலேயருக்கும், செருமானி யருக்கும் தெரியும் முன்னமே வெகு காலமாய் நமது நாட்டில் பயன்படுத்தப்பட்டு வந்தது (சா.அக.);. |
காந்திகாட்டு-தல் | காந்திகாட்டு-தல் kāntikāṭṭutal, பெ.(n.) வெப்பம் தாக்குகை; imparting heat (சா.அக.);. [காந்தி+காட்டல்.] |
காந்திகொள்(ளு)-தல் | காந்திகொள்(ளு)-தல் gāndigoḷḷudal, 16 செ.கு.வி. (vi.) 2. உடம்பு வெப்பமாதல் (வின்.);; to become morbidly inflamed, as the bodily system from neglect of bathing, from taking hot medicine, etc. [காந்தி + கொள்] |
காந்திதாயகம் | காந்திதாயகம் kāntitāyakam, பெ.(n.) ஒரு மரம்; an unknown tree (சா.அக);. |
காந்திப்போ-தல் | காந்திப்போ-தல் kāndippōtal, 8 செ.கு.வி.(v.i.) சோறு முதலியவை கரிந்துபோதல்; to be charred, as rice or curry by over-heating. [காந்தி + போ] |
காந்திமதி | காந்திமதி kāntimati, பெ.(n.) ஒளியுடையவன்; woman having bright features (செ.அக.);. [காந்தி+மதி Skt. மத்→ த.மதி] |
காந்தியதிகமேனி | காந்தியதிகமேனி kāntiyatikamēṉi, பெ.(n.) காவி நிறமுடைய கல்; reddle (செ.அக.);. [காந்தி+அதிகமேனி] |
காந்தியானமருந்து | காந்தியானமருந்து kāntiyāṉamaruntu, பெ.(n.) சூட்டை உண்டாக்கும் மருந்து; warmth producing medicine (சா.அக.);. |
காந்தியிரு-த்தல் | காந்தியிரு-த்தல் kāntiyiruttal, செ.கு.வி. (vi.) அதிகச் சூட்டினால் கருத்தல்; blackened by being over-burnt or scorched (சா.அக.);. [காந்தி+இரு] |
காந்தியுடமூலி | காந்தியுடமூலி kāntiyuṭamūli, பெ.(n.) 1. ஒளிமரம்; a plant luminous in the dark. 2. நீல ஒளி; bright blue leaved plant (சா.அக.);. [காந்தி+உடல்+மூவி] |
காந்தியெரி-தல் | காந்தியெரி-தல் kāndiyeridal, 4 செ.கு.வி.(v.i.) தலையிலும் உடம்பிலும் வெப்பத்தால் எரிச்சல் உண்டாதல்; to experience burning sensation, as the head or any other part of the body. [காந்தி + எரி] |
காந்தியெறி-த்தல் | காந்தியெறி-த்தல் kāndiyeṟittal, 4 செ.கு.வி. (v.i) வெப்பம் தாக்குதல்; to strike hot, as rays of the Sun etc. [காந்தி எறி] |
காந்து | காந்து1 kāndudal, 5 செ.கு.வி.(v.i.) 1. எரி வெடுத்தல்; to burn, smart as a sore. கைப்புண் காந்துகிறது. 2. வெப்பங்கொள்ளுதல்; to feel burning sensation in the body. 3. கருகுதல்; to be scorched, charred, reduced to cinder. சோறு சாந்திப் போயிற்று. 4. மனங்கொதித்தல்; to be not with indigation. “புத்திபோய்க் காந்துகின்றது” (கம்பரா. சடாயுகா.37);. 5. ஒளிவிடுதல்; to shine, give out lustre, emit rays. “பரம்பிற் காந்து” (கம்பரா. நாட்டும்.7);. 6. பொறாமை கொள்ளுதல்; to burn with envy. அவளைக் கண்டு காந்துகிறான். 7. வீணாய் எரிதல்; to burn without use, as oven. ம. காந்துக [காய் → காய்ந்து → காந்து → காந்துதல் (வேக. 185);.] காந்து – L. Candeo, to glow with heat, to shine, glitter, to be of a shining white. இலத்தீன் வினைச் சொற்களைத் தன்மை யொருமை யீறாகிய ‘o’ அல்லது நிகழ்கால வினையெச்ச ஈறாகிய ‘re’ சேர்த்துக் குறிப்பது மரபு. இவற்றை நீக்கின் எஞ்சி நிற்பது வினைமுதனிலை என அறிக. L. Candela. a wax or tallow candie. A.S. candel. OE. Candel, An, OF. candel (1);e E.candle (f. candere, to glow); cylinder of wax, tallow spermaceti, etc., enclosing wick, for giving light L. candidus, shining white, white, candidum, n.white colour, a honest, straight forward. E. candid, white, fair, sincere, honest, E.candescent, glowing with whiteheat, f. L. candeseere, f, candere, be white. L. candidaus, clothed in white; a candidate for office, who among the Romans was always clothed in white, for the consulship. E. candidate, one who offeres himself or is put forward to be elected to an office, orig. white-robed L. candor, whiteness, sincerity, E. candour, openmindedness, frankness, impartiality. E.chandler, dealer in candles. ME., AF. chandeler, OF, chandelier f. L. candela. இலத்தீன் தகர முதற் சொல்லாயிருந்தது. பிற்காலத்தில் ஆங்கிலப் பிரெஞ்சு மொழியிலும் இடையாங்கிலத்திலும் சகர முதற் சொல்லாகத் திரிந்து விட்டமையை நோக்குக. இச்சகர முதற் சொல்லே வேத மொழியிலும் சமற்கிருதத்திலும் முதலுயிர் குறுகியும் குறுகாதும் உள்ளது. Skt. cand, to shine, be bright; to gladden. canda, the moon, L. candaka, pleasing, W; the moon W., moon light, W., candira, the moon, Bham, ii, 120. candra, glittering, shining (as gold);, having the brilliancy or hue of light (said of gods, of water (RV. x.121, 9, TS. vi); & of Soma);, RV.; V.S., T.S. vi. TBr 1, m. the moon. Candra, lunar Scand, to shine. Scandra, shining, radiant. இங்ஙனம் திகழ்தலையும் திகழும் திங்களையும் குறிக்கும் வடசொற்கள், காந்து என்னும் தென்சொல்லை அடிமூலமாகவும், இலத்தீன் வழியாக வந்த திரிசொல்லை நேர்முகமாகவும், கொண்டனவாயிருத்தல் காண்க. ஒ.நோ. திகழ் → திங்கள். தகம் தங்கம். ‘திகழ்’ என்னும் வடிவம் இறந்துபட்டது. புரள் பிரள் → பிறழ் என்னும் திரிபில் இடைப்படு சொல் இறந்துபட்டமை காண்க. தகுதல் – எரிதல், விளங்குதல், தகதகவென்று சொலிக்கிறது என்னும் வழக்கை நோக்குக. ஆரியர் வருகைக்கு முற்பட்ட பழம்பாண்டி நாடும் தனித் தமிழிலக்கியமும் முற்றும் மறைந்து போனமையால், பல இணைப்புண்ட சொற்களை இன்று காட்ட இயலவில்லையென்பதை அறிக. (செல்வி பெப்ரவரி 78 பக்.286);. காந்து2 kāndudal, 5 செ.குன்றாவி.(v.t.) 1.சினத்தல்; to be angry with. “காந்திமலைக்குத்து மால்யானை” (வள்ளுவமா.11);. 2. சுட வைத்தல் (யாழ்ப்);; to heat 3. சுவறச்செய்தல் (யாழ்ப்);; to absorb, exhaust by evaporation, as water, rain. 4. பல்லினாற் கறுவுதல் (யாழ்ப்);; to bite off, scrape out with the teeth, as a coconut. ம. காந்துக [காய் → காய்ந்து → காந்து.] |
காந்துகன் | காந்துகன் gāndugaṉ, பெ. (n.) 1. பந்தடிப்போன்; one who plays with ball. 2. தின்பண்டம் விற்பவன்; one who sells snacks (த.சொ.அக.);. [கந்து → கந்துகள் → காந்துகள்] |
காந்துகம் | காந்துகம் gāndugam, பெ. (n.) வெண்காந்தள் (சூடா);; white kanda/flower. [காந்து → காந்தகம்] |
காந்துவி | காந்துவி kānduvi, பெ.(n.) மண்ணீரல்; spleen. (சா.அக.); |
காந்தை | காந்தை kāndai, பெ. (n.) 1. மனைவி; beloved woman, wife. “குலக்காந்தை யொருத்தி” (பெருந்தொ. 1581);. 2 பெண்; woman. “காந்தையருக் கணியனைய சானகியார்” (கம்பரா. இராவணன்வ 241); [கந்து → காந்து → காந்தை → காந்து புற்றுக்கோடு] |
காந்தைக்கண் | காந்தைக்கண் kāndaikkaṇ, பெ. (n.) இரண்டு இமைகளையும் விரித்து விழித்து உள்ளக்குறிப்பைக் காட்டும் கண் (பரத. பாவ. 9);; an expressive ocular movement which consists in opening both the eyes wide. [காந்தை + கண்] |
காந்தோரகம் | காந்தோரகம் kāntōrakam, பெ.(n.) செங்கரும்பு: red-coloured sugarcane (சா.அக.);. |
கான கச்சாரி | கான கச்சாரி kāṉakaccāri, பெ.(n.) கோங்கு; golden silk cotten Cochlospermum gossypium (சா.அக.);. |
கானககீதம் | கானககீதம் kāṉakaātam, பெ.(n.) கருவண்டு (யாழ்.அக.);; black beetle (செ.அக.);. [கானகம்+கிதம்] |
கானகக்கூபரம் | கானகக்கூபரம் kāṉakakāparam, பெ. (n.) நாகப் பச்சை; a kind of emerald; a peculiar green stone forming one of the 120 kinds of natural substances. [கானகம்+கூபரம்] |
கானகக்கோழி | கானகக்கோழி kāṉakakāḻi, பெ.(n.) காட்டுக்கோழி; jungle fowl – Gallus sonneraii (சா.அக.);. [கானகம்+கோழி] [P] |
கானகச்சத்துரு | கானகச்சத்துரு kāṉakaccatturu, பெ..(n.) வெள்ளிய மணல்: tin-ore (சா.அக.);. [கானகம்+சத்துரு.] |
கானகச்சூதம் | கானகச்சூதம் kāṉakaccūtam, பெ.(n.) 1. மாமரம்; the mango-tree – Mangifera indica. 2. புளிய மரம்; the tamarind tree – Tamarindus indica. 3. புளிப்பு; Sourness (சா.அக.);. |
கானகத்தில்சிந்துமுட்டாணம் | கானகத்தில்சிந்துமுட்டாணம் kāṉakattilcintumuṭṭāṇam, பெ.(n.) பன்றி முள்; porcupine’s spine found scattered in the forest (சா.அக.);. [கானகத்தில்+சிந்து+முள்+தாணம்] |
கானகத்தீதம் | கானகத்தீதம் kāṉakattītam, பெ.(n.) 1. கருவண்டு; black beetle. 2. காட்டின் குளிர்ச்சி; chillness in the forest (சா.அக.);. [கானகம்+தீதம்] |
கானகத்துக்கதிபதி | கானகத்துக்கதிபதி kāṉakattukkatipati, பெ.(n.) 1. தூதுவளை; three-lobed nightshade – Solanum trilobatum. 2. அரிமா; lion (சா.அக.);. [கானகம்+அத்து+அதிபதி] |
கானகன் | கானகன் kāṉakaṉ, பெ.(n.) கழுதை, ass (சா.அக.);. |
கானகப்புல் | கானகப்புல் kāṉakappul, பெ.(n.) காமாட்சிப்புல்; காவட்டம்புல்; citronella . Andropogon citratis (சா.அக);. [கானகம்+புல்.] |
கானகமருக்கொழுந்து | கானகமருக்கொழுந்து kāṉakamarukkoḻuntu, பெ.(n.) மணமில்லாத காட்டு மருக்கொழுந்து; forest maid’s love without fragrance; southern wood (சா.அக.);. [கானகம்+மருக்கொழுந்து] |
கானகவாட்சி | கானகவாட்சி kāṉakavāṭci, பெ.(n.) ஒரு வகைப் பெருமல்லிகை; tuscan jasmine; double-flowered jasmine – Jasminum sambuc (சா.அக.);. [கானகம்+வாட்சி] |
கானகுப்பிசம் | கானகுப்பிசம் gāṉaguppisam, பெ.(n.) ஐந்து நாடுகளுள் (பஞ்ச கௌடத்துள்); ஒன்றாகிய கானிய குப்த நாடு (சங்.அக.);; Kanouj, one of {}-gaydan (சா.அக.);. [Skt.{}< த.கானகுப்பிசம்.] |
கானக்கல் | கானக்கல் kāṉakkal, பெ.(n.) கானகக்கல் (சங்.அக.); பார்க்க; see kānaga-k-kal (செ.அக.);. [கானகம்+கல்] |
கானக்குதிரைமேல்தோல் | கானக்குதிரைமேல்தோல் kāṉakkutiraimēltōl, பெ.(n.) மாம்பட்டை; the bark of a mango tree (சா.அக.);. [கானம்+குதிரை+மேல்+தோல்.] |
கானக்குதிரைவிதை | கானக்குதிரைவிதை kāṉakkutiraivitai, பெ..(n.) கடம்பமர விதை; the seed of cadamba tree (சா.அக.);. [கானம்+குதிரை+விதை] |
கானக்கூபரம் | கானக்கூபரம் kāṉakāparam, பெ.(n.) பச்சைக்கல் வகை (யாழ்.அக.);; a variety of green stone (செ.அக.);. [கான+கூபரம்] |
கானசரம் | கானசரம் kāṉacaram, பெ.(n.) புல்வகை; kaus, a large and coarse grass – Saccharum sontaneum (செ.அக.);. [கான்+சரம்] |
கானனுசேதி | கானனுசேதி kāṉaṉucēti, பெ.(n.) நவ்வல் அதாவது நாவல்; jaumoon or black plum – Eugenia jambolina (சா.அக.);. [கான்+அனுசோதி] |
கானப்பத்திரம் | கானப்பத்திரம் kāṉappattiram, பெ.(n.) வில்வம்; Indiam bael – Aegle marmelos (சா.அக.);. |
கானப்பேரெயில்கடந்தஉக்கிரப்பெருவழுதி | கானப்பேரெயில்கடந்தஉக்கிரப்பெருவழுதி kāṉappēreyilkaṭantaukkirapperuvaḻuti, பெ.(n.) பாண்டிய மன்னன்; Pândia king. [கானம்+பெரு+எயில்+கடந்த (உக்கரம்); உக்கிரம்+பெருவழுதி] கடைக்கழகமிருத்தியபாண்டியர்களுள் ஒருவன். இவன் முன்பாகத் திருக்குறள் அரங்கேற்றப்பட்டது. அகநானூறு தொகுப்பித்தோன் இவனே. இவனைப் பாண்டியன் உக்கிரப்பெருவழுதி என்றும் கானப்பேர் எயில் கடந்த உக்கிரப் பெருவழுதி என்றும் கூறுவர் (அபி.சிந்);. |
கானமயில் | கானமயில் kāṉamayil, பெ.(n.) காட்டு மயில்; wild pea-cock (சா.அக.);. [கானம்+மயில்.] |
கானமல்லி | கானமல்லி kāṉamalli, பெ.(n) 1. சிறு மல்லிகை; narrow leaved jasmine – Jasminum triflorum. 2.காட்டு மல்லிகை; wild jasmine – Jasminum angustifolium alias J.acuriculatum (சா.அக.);. [கானகம்+மல்லி] |
கானமழை | கானமழை kāṉamaḻai, பெ.(n.) தேன்; honey (சா.அக.);. [கான+மழை] |
கானமவ்வல் | கானமவ்வல் kāṉamavval, பெ.(n.) கானமல்லிபார்க்க see kana-malli(சா.அக.);. [கானம்+மவ்வல்.] |
கானமுல்லை | கானமுல்லை kāṉamullai, பெ. (n.) கானமல்லி பார்க்க; see kana-mall (சா.அக.);. [கானம்+முல்லை.] |
கானம் | கானம்1 kāṉam, பெ.(n.) வளைந்த காயிலுள்ள கொட்பயிறு: horsegram, ‘ஆரமாடங் காணம் வெந்தநீர் படிபடி பெய்'(தைல.வதைல.72);. 2. பழைய நிறுத்தலளவையுள் ஒன்று (கல்);; an ancient weight. 3. பொன் (திவா.);; gold. 4. தாண மொத்த வடிவிலுள்ள பழைய பொற்காசு; an ancient gold coin. “ஒன்பதுகாப் பொன்னும் நூறாயிரங் காணமுங் கொடுத்து ” (பதிற்றுப். 60 பதி);. 5. பொருள்; wealth, riches. “மேற்கோண மின்மையால் ‘(நாலடி, 372);. 6.பாகம்; share. ம. காணம் [கோணம் → காணம்] |
கானம்போடு-தல் | கானம்போடு-தல் kāṉambōṭudal, 19 செகுன்றாவி (v.t.) 1. செக்காட்டி எண்ணெய் பிழிதல்; to extract oil by an oil-press, as from coconuts, etc. காணம் போடுவதற்காகக் கடலை உடைக்கிறார்கள் (உ.வ.);. 2 குழந்தைகளைப்போல் அடிக்கடி ஏதேனும் தின்று கொண்டேயிருத்தல் (இ.வ.);; to eat frequently, as chidren. [காணம் + போடு] |
கானயம் | கானயம் kāṉayam, பெ.(n.) காட்டு வெக்காலி மரம்; partidge pea tree – Anacolosa densiflora (சா.அக.);. |
கானரசம் | கானரசம் kāṉaracam, பெ.(n.) இசைச் கானரசம்; sweet charm of music (செ.அக.);. [கானம்+Skt. இரசம்] |
கானற்கன்னி | கானற்கன்னி kāṉaṟkaṉṉi, பெ.(n.) ஒருவகைக் கொடி (இருப்பவல்);; a kind of creeper – Indian cudweed, Gnaphalium indicum (சா.அக.);. [கானல் + கன்னி] |
கானற்சலம் | கானற்சலம் kāṉaṟcalam, பெ.(n) கானனீர் பார்க்க; see kananir (செ.அக.);. [கானல்+சலம்] |
கானற்பால் | கானற்பால் kāṉaṟpāl, பெ.(n.) கானல்பால் பார்க்க; see kanal-pal(செ.அக.);. [கானல்+பால்.] |
கானற்பீலிதம் | கானற்பீலிதம் kāṉaṟpīlitam, பெ.(n.) தும்பை; leucas flower (சா.அக.);. [கானல்+பீலிதம்] |
கானலக்கினி | கானலக்கினி kāṉalakkiṉi, பெ.(n.) 1. சித்தர்கள் உண்ணும் மூலிகைகளுள் ஒன்றான சிவப்புச் சதுரக் கள்ளி; red square-spurge- Euphorbia antiquorum. It is one of the drugs generally taken by Siddhars. 2. காட்டுத்தீ; wild-fire. 3. மருந்து செய்வதற்காக இரண்டு விரற் கனமுள்ள 4 அல்லது 5 விறகால் எரிக்கும் நெருப்பு: a big fire used for preparing medicines and got up with 4 or 5 pieces of fuel, each of 2 fingers width – Conflagration (சா.அக.);. [கானல்+அக்கினி] |
கானலாகினி | கானலாகினி kāṉalākiṉi, பெ.(n.) கானலக்கினி பார்க்க; s ee kapalakkii (சா.அக.);. |
கானலாவணி | கானலாவணி kāṉalāvaṇi, பெ.(n.) 1. சங்கங் குப்பி; a small-leaved glory tree – Cleodendron inerme. 2. சங்கஞ் செடி; four – spined monetia – Azima tetracantha (சா.அக.);. [கானல்+அவனி] |
கானல்நீர் | கானல்நீர் kāṉalnīr, பெ.(n.) வெப்பப் பகுதிகளில் அனல் காற்றால் நீரோடை ஒன்று அருகில் ஒடுவது போல இருக்கும் மாயத் தோற்றம்; பொய்த் தோற்றம்; sight resembling presence of water in a desert; mirage. திட்டங்கள் நிறைவேறினால் வறுமை ஒழிப்பு வெறும் கானல்நீர் ஆகாது. [கானல்+நீர்] |
கானல்பலா | கானல்பலா kāṉalpalā, பெ.(n.) காட்டுப் பலா; jungle jack – Artocarpus hirsuta (சா.அக.);. [கானல்+பலா-கானல்- காடு] |
கானல்பால் | கானல்பால் kāṉalpāl, பெ.(n.) 1. எருக்கம் பால்; milky juice drawn from madar plant. 2. கள்ளிப்பால்; milky juice of euphorbia genus. 3. கூகைநீறு; flour of Indian arrow-root- Curcuma anguostifolia. 4.காட்டு எருமையின் பால்; milk of wild buffalo (சா.அக.);. |
கானல்மா | கானல்மா kāṉalmā, பெ.(n.) காட்டு மாம்பழம்; see kāttu-māmbalam (சா.அக.);. [கானல்+மா] |
கானல்மிருகம் | கானல்மிருகம்1 kāṉalmirukam, பெ.(n.) 1. காட்டுப்பன்றி; wild boar. 2. மான்; deer (சா.அக.);. [கானல்+Skt. மிருகம்.] கானல்மிருகம்2 kāṉalmirukam, பெ.(n.) கொக்கு மந்தாரை; taper pointed mountain ebony – Bautinia acuminata. [கானல்+Skt. மிருகம்.] |
கானல்முருங்கை | கானல்முருங்கை kāṉalmuruṅkai, பெ.(n.) 1. காட்டு முருங்கை; wild Indian horse radish – Moringa concanensis. 2. புனல் முருங்கை; oval-leaved Indigo-Indigofera trita. 3. ஆடாதோடை; Malabar winter cherry or Malabar nut shrub – Adhatoda vesica alias A.pubescens. 4. மாவிலங்கை; forest small lingam tree – Crataeva religiosa. 5. பூனை முருங்கை; jungle moringa – Ormocarpum sennoides. 6. பவளப்பூலா; wild moringa or coral berry tree-Bryonia rhamnoides. 7.கசப்பு முருங்கை; bitter moringa (சா.அக.);. [கானல்+முருங்கை] |
கானல்வாகியம் | கானல்வாகியம் kāṉalvākiyam, பெ..(n.) சீரகம்; cumin seed – Cuminum cyminum (சா.அக.);. |
கானவல்லை | கானவல்லை kāṉavallai, பெ.(n.) 1. குரங்கு monkey, 2. கானல்முருங்கை பார்க்க; see kānak-murungai (சா.அக.);. [கான+வல்லை.] |
கானவிந்து | கானவிந்து kāṉavintu, பெ.(n.) மானசோத்ர மலையில் உள்ள கூகை owl which lived mānaśćtra hill. |
கானாக்கிரகம் | கானாக்கிரகம் gāṉāggiragam, பெ.(n.) காணாக்கோள்(வின்.); பார்க்க: see _. [காண் + ஆ+ கிரகம்] |
கானான்.வாழை | கானான்.வாழை kāṉāṉvāḻai, பெ.(n) நீர் வாழை; traveller’s palm – Ravenala madagascariensis (சா.அக.);. [கானான்+வாழை.] |
கானான்வேளை | கானான்வேளை kāṉāṉvēḷai, பெ.(n.) தைவேளை; a black variety of velai orfive leved cleome – Gynand (சா.அக.);. [கானான் + வேளை.] |
கானிசுமாரிக்கணக்கு | கானிசுமாரிக்கணக்கு kāṉisumārikkaṇakku, பெ.(n.) கானேசு மாரிக்கணக்கு பார்க்க;see {}-k-kanakku. [கானிசுமாரி + கணக்கு.] [Pers.{}-{} → த.கானிசுமாரி.] |
கானியாண்மை | கானியாண்மை kāṉiyāṇmai, பெ.(n.) காணியாட்சி (புது. கல்வெட்டு. 745);; hereditary right to land etc. [காணி ஆண்மை] |
கானிற்குன்று | கானிற்குன்று kāṉiṟkuṉṟu, பெ.(n.) வைக்கிராந்த நஞ்சு: a mineral poison (சா.அக.);. [கானில்+குன்று.] |
கானீனன் | கானீனன் kāṉīṉaṉ, பெ.(n). திருமணமாகாத பெண் (கன்னி); பெற்ற மகன் (திவா.);; son of an unmarried woman, as Vyāsa, one of 12puttiran. 2. கன்னன்(பிங்.);; Karņā, son of Šurya by Kunti, born during her maidenhood (செ.அக.);. [Skt. kănina→ த.கானீனன்.] |
கானுகோ | கானுகோ kāṉuā, பெ.(n.) முகம்மதிய அரசு ஊழியன் (C.G.);; village or district officer who, under Muhammadan governments, recorded full details regarding landed property within his sphere. [U.{}+go → த.கானுகோ.] |
கானுமோர் | கானுமோர் kāṉumōr, பெ.(n.) காண்போர்; those who see. “செலவு பெரிதினிது நிற்காணு மோர்க்கே” (பதிற்றும். 83:5);. [காண் → காணுமோர்] |
கானூன் | கானூன் kāṉūṉ, பெ.(n.) சட்டம் (C.G.);; rule, regulation, statute. [U.{} → த.கானூன்.] |
கானேசுமாரிக்கணக்கு | கானேசுமாரிக்கணக்கு kāṉēcumārikkaṇakku, பெ.(n.) குடிமதிப்புக் கணக்கு (P.T.L.);; census. [கானேசுமாரி+கணக்கு.] |
கான் | கான் kāṉ, பெ.(n.) 1. செவி; ear. 2. புகழ் (தக்கயாகப்.448, உரை.);; fame. [Skt.karna → Pkt.{} → த.கான்.] |
கான்சாகிப் | கான்சாகிப் kāṉcākip, பெ.(n.) முகம்மதியர்க்குக் கொடுக்கும் சிறப்புப் பெயர்களுள் ஒன்று; a title of honour bestowed on distinguished Muhammadans. [U.{} → த.கான்சாகிப்.] |
கான்பகதூர் | கான்பகதூர் gāṉpagatūr, பெ.(n.) முகமதியர்க்கு வழங்கப்படும் மதிப்புரவுப் பட்டப்பெயர்களுள் ஒன்று; a title of honour, higher than {}, bestowed on distinguished Muhammadans. [U.{} + Pkt.{} → த.கான்பகதூர்.] |
கான்புலி | கான்புலி kāṉpuli, பெ.(n.) காட்டுப்பூனை (பிங்.);; wild cat(செ.அக.);. [கான்+பூனை] |
கான்மிகம் | கான்மிகம் kāṉmikam, பெ.(n.) கான்மியம் பார்க்க; see kanmiyam (செ.அக.);. கான்மிகம் gāṉmigam, பெ.(n.) கான்மியம் பார்க்க (சி.சி.2:39, சிவாக்.);;see {}. [Skt.{} → த.கான்மிகம்.] |
கான்மியம் | கான்மியம் kāṉmiyam, பெ.(n) மும்மலத்துள் ஒன்றாய் ஏதிலியாய் (அநாதை); உள்ள கன்மலம் (சிசி2, 39, ஞானப்);; (sava); one of the three eternal obstructive principles which creates bondage for the soul as a result of good and evil deeds (செ.அக.);. [கருமம்-கன்மம்-கான்மியம்] கான்மியம் kāṉmiyam, பெ.(n.) மும்மலத்துள் ஒன்றாய் கருக்கொண்டபோதேயுள்ள கன்மமலம் (சி.சி.3, 39, ஞானப்.);; one of the three eternal obstructive principles which creates bondage for the soul as a result of good and evil deeds. [Skt.{} → த.கான்மியம்.] |
கான்மிரம் | கான்மிரம் kāṉmiram, பெ.(n.) காசுமீரம் பார்க்க; see kāšumiram. “தணிகான்மி நாட்டில் “(திருவிளைகல்லானை:7);(செஅக);. [கான்மி – கான்மிரம்] |
காபடிகன் | காபடிகன் gāpaḍigaṉ, பெ.(n.) மாயக்கலை (இந்திர சாலம்); செய்வோன்; a magician; one creating an illusion (சா.அக.);. |
காபட்டியம் | காபட்டியம் kāpaṭṭiyam, பெ. (n.) இரண்டகக் கபடத்தன்மை; guile, deceit. [கவடு → கவட்டியம் → காட்டிய → காபட்டிய ம் (கொ.வ.);] |
காபந்து | காபந்து kāpandu, பெ.(n.) காப்பு, பாதுகாப்பு; careful protection. ‘முந்தும் அரவம் நச்சுயிரிகளால் ஏதம் வந்து கெடாமலே காபந்து செய்தாயே’. (சர்வசமய சமரசக் கீர்த்தனை);. [U.{} → த.காபந்து.] |
காபந்துஅரசு | காபந்துஅரசு kāpanduarasu, பெ.(n.) மறு அரசு தேர்தெடுக்கப்படும் வரையுள்ள காலத்தில் நாட்டை ஆளும் அரசு; caretaker government. [காபந்து + அரசு.] [U.{} → த.காபந்து.] |
காபனங்கட்டு-தல் | காபனங்கட்டு-தல் kāpaṉaṅgaṭṭudal, 5. செ.கு. (v.i.) காப்புப்பணம் கட்டுதல் பார்க்க;see {}, [காப்புப்பணம் கட்டு → காயணங்கட்டு] |
காபனம் | காபனம் kāpaṉam, பெ. (n.) ஒற்றடம் (இ.வ.);; fomentation. ம. காபணம்;தெ.காபடமு. [கப்பணம் அகாயணம்] |
காபரா | காபரா kāparā, பெ.(n.) குழப்பம், மனக்கலக்கம்; disorder, confusion, alarm, excitement. ‘ஆள் மெத்த காபராகிவிட்டான்’ (உ.வ.);. [U.{} → த.காபரா.] |
காபாலம் | காபாலம்1 kāpālam, பெ. (n.) குட்டநோய் (தொழுநோய்);; leprosy (சா.அக.);. [கரும் + கொப்புளம் – கருங்கொப்புளம் → அகப்புளம் → அகாபாலம் (கொ.வ.);] |
காபாலம்’ | அஅன்ன ஆவன்னா aaṉṉaāvaṉṉā, பெ. (n.) அரிவரி யென்னும் தமிழ் வண்ணமாலை (குறுங்கணக்கும் நெடுங்கணக்கும்);; Tamil Alphabet. எழுத்துகளைக் கல்லா மக்கள், சிறப்பாகச் சிறுவர் சிறுமியர், எளிதாக ஒலித்துக் கற்கும் பொருட்டு, பண்டைத் தொடக்கப்பள்ளி யாசிரியர் உயிரும் உயிர்மெய்யுமாகிய இருவகைக் குறிலுக்கும்’அன்ன’ச் சாரியையும், இருவகை நெடிலுக்கும் அன்னா’ச் சாரியையும் ஏற்படுத்தினர்; ‘அஆ’ என்னும் ஈரெழுத்தும் தமிழ் வண்ணமாலையின் முதலெழுத்துகளாதலின், அவை முதற்குறிப்பாகி, அம் முதற்குறிப்பே’அஅன்ன ஆவன்னா’ என்று வண்ணமாலைப் பெயராயிற்று. இது ‘alpha’, ‘beta’ என்னும் கிரேக்க இரு முதலெழுத்துகளும் சேர்ந்து”alphabetum’ என்று இலத்தீனிலும், ‘alphabet’ என்று ஆங்கிலத்திலும், வண்ணமாலைப் பெயராக வழங்குவது போன்றது; அ, இ, க, கி என்று ஒரு மாத்திரை யொலிக்குங்குறிலெழுத்துகளை விட்டொலிப்பது, சிறுபிள்ளைகட்குச் சற்று வருத்தமுற மூச்சு வாங்குவதால்,’அஅன்ன’ என்பது”ஆனா” என்றும் இஅன்ன என்பது’ஈனா’ என்றும், மாணாக்க நிலையிலும் பின்னும் ஒலிக்கப்பட்டுவந்தன. இவ்வொலிப்புமுறை குறில்களின் உண்மையான ஒலியளவை உடனே தெரிந்துகொள்ளத் தடையாயிருந்தமையின், இந்நூற்றாண்டுத் தொடக்கத்தில் அரசியற் கல்வித்துறையறிஞர், சாரியையின்றி ஒலிநூன் முறைப்படி அ, ஆ, இ, ஈ,… என்று ஒலித்துப் பயிலும் முறையைப் புகுத்திவிட்டனர். அதனால், இன்று ‘அஆ’ என்பது வண்ணமாலைப் பெயராக வழங்கி வருகின்றது. இது புணர்ச்சியில்’அவ்வா’ என்றாகும்; |
காபாலி | காபாலி kāpāli, பெ. (n.) 1. சிவன்; Siva. “விடையேறு காபாலி யீசன்” (திவ்.பெரியாழ் 13:2);. 2. காபால சமயத்தான்; one who holds the kapala doctrine. “இம்மொழியைக் காபாலி யியம்புமுன்” (பிரபோத, 1829);. ம.காபாலி [கன்னப்புலம் → கப்பாளம் → கபாலி → காபாலி.] காபாலி kāpāli, பெ. (n.) திருகுதாளி என்னும் செடி வகை; twisledia. ‘தில்லைமுள்ளும் திருகுதாளியும்’ (பழ.); [கவல் → கவலி → காபாலி.] |
காபாலிகம் | காபாலிகம் gāpāligam, பெ. (n.) காபாலம் பார்க்க: see kabalam. “இவ்விரதங் காபாலிக மென்பது” (பிரபோத18:25);. [காபாலி → காபாலிகம்] காபினி |
காபி | காபி kāpi, பெ.(n.) காப்பி பார்க்க;see {}. [E.copy → த.காபி.] |
காபிசம் | காபிசம் kāpisam, பெ.(n.) காபிசாயனம் பார்க்க;see {} (சா.அக.);. |
காபிசாயனம் | காபிசாயனம் kāpicāyaṉam, பெ.(n.) கள்; toddy (சா.அக.);. |
காபித்தம் | காபித்தம் kāpittam, பெ.(n.) விளா; wood-apple – Feronia elephantum (சா.அக.);. |
காபினி | காபினி kāpiṉi, பெ. (n.) ஒருவகைப் பண்(பரத. இராக.55);; a musical mode. [ஒருகா. காப்பு → காப்பு → காப்பினி →காபினி] |
காபிரம் | காபிரம் kāpiram, பெ.(n.) சாம்பிராணி; frankincense benzoin. (சா.அக.); |
காபிரியமதம் | காபிரியமதம் kāpiriyamadam, பெ.(n.) ஒரு வகை மதம்; a kind of religion. இம்மதத்தவர்களின் படைப்புக் கடவுளுக்குக் குவினியாடிக்வோசா என்று பெயர். இவர்கள் பல சிலைகளைச் செய்து கோயில்களில் வைத்துப் பூசிப்பர். ஆடு, மாடுகளைப் பலியிடும் இவர்கள் மேபக் என்னும் புழுவை நல்லவற்றைத் தெரிவிக்கும் எனக் கருதிக் காப்பாற்றுவர். குருக்கள் தங்கள் விருப்பப்படிப் பெண்களை மணந்து கொள்ளலாம். இம்மத வழக்கப்படிக் கைம்பெண்கள் மறுமணம் செய்து கொள்ளலாம் (அபி.சிந்.);. |
காபிலம் | காபிலம் kāpilam, பெ.(n.) 1. கபிலரது மதமான சாங்கிய மதம்;{}, one of the Indian systems of philosophy whose founder or the earliest systematic exponent was Kapilar. “காபிலப் பொருளென் றுரைசெயு நூலின்” (பிரபோத.11:6);. 2. தலையிலிருந்து கால்வரை ஈரத் துணியால் உடம்பைத் துடைத்துக் கொள்ளுதலாகிய குளியல் வகை; a kind of bath which consists in wiping the body clean from head to foot with a wet cloth and which is generally resorted to by persons who are not in a position to take a both. 3. கபிலம் என்னும் ஆ (பசு);வினது நெய்; ghee from a brown cow. “திருவிளக்கைக் காபிலத்தா னிகழ்த்துகவே” (சிவதரு.சிவஞானதா.24.);. 4. துணைத் தொன்ம (உப புராண); வகையுள் ஒன்று; a secondary Purana one of 18 upa-{}. [Skt.{} → த.காபிலம்.] |
காபில் | காபில் kāpil, பெ.(n.) அனைத்துத் திறமைகளும் பொருந்தியவன்; a fit, clever or competent person. [U.qabil → த.காபில்.] |
காபுரம் | காபுரம் kāpuram, பெ.(n.) 1. வயிற்றுப்பிசம்; tympany, wind dropsy. 2. பாக்கு மரம்; areca nut tree. 3. ஒரு வகைக் கோரைப்புல்; a kind of sedge grass-Cyperus pertinuis. 4. ஒரு நறுமணம்; a perfume (சா.அக.);. |
காபுருசன் | காபுருசன் kāpurusaṉ, பெ.(n.) இழிந்தவன், சிறுமையுடையவன்; insignificant despicable person. “ஒரு காபுருசன் எடுக்கிலும்” (திவ்.திருநெடுந்.21, வியா.176);. [Skt.{} → த.காபுருசன்.] |
காபோதி | காபோதி kāpōti, 1. கண்ணிலி; blind person. 2. அறிவிலி; illiterate ignorant person. ‘அறிவிலாத காபோதி” (திருப்பு:530); [கண்போகி →கபோகி → கபோதி → காபோதி] |
காப்பகம் | காப்பகம் kāppakam, பெ.(n.) பொறுப்பேற்றுக் கவனிக்கும் இல்லம்: home for orphans, the aged, etc. குழந்தைகள் காப்பகம், மனநலக் காப்பகம், முதியோர் காப்பகம், ஊனமுற்றோர் காப்பகம். [காப்பு+அகம்] |
காப்பன் | காப்பன் kāppaṉ, பெ. (n.) காவலாளி; guard. “கடையருங் கணக்கருங் காப்பரு முளப்பட”(பெ.ருங் உஞ்சைக் 32.82);. [கா + காப்பன்] |
காப்பரிசி | காப்பரிசி kāpparisi, பெ.(n.) கோயிலில் அடிய வர்களுக்கு வழங்கும் இனிப்பு கலந்த பச்சரிசி, raw rice with jaggery offered to the devotees at the temple. [காப்பு+அரிசி] காப்பரிசி kāpparisi, பெ. (n.) 1. பிறந்த குழந்தைக்குக் காப்பிடும் நாளில் வழங்கும் பாகுகலந்த அரிசி; rice mixed with treacle generally distributed on the occasion when a new-born baby is provided with bangles. 2. மணவிழா முதலிய காலங்களில் காப்பு நாண் கட்டும்போது கையிலிடும் அரிசி (இ.வ.);; rice held in the hands of a person on his marriage occasion, when a string is tied round his wrist, with mantras to ward off evil. 3. இயேசு பிறந்த பதின்மூன்றாம் நாள் விழாவில் கோயிலில் வழங்கும் பாகு கலந்த அரிசி (R.C.);; rice mixed with treacle distributed in Roman Catholic churches on the Epiphany, the 13th day after the nativity. ம. காப்பரி [காப்பு + அரிசி] |
காப்பவிழ்-த்தல் | காப்பவிழ்-த்தல் kāppaviḻttal, 2. செ.கு.வி. (v.i.) மணம் முதலிய விழாவில் கையில் கட்டிய காப்பு நாணை நீக்குதல்; to untie the ceremonial string from the wrist with appropriate ceremonies. [காப்பு+ அவிழ்.] |
காப்பாடு-தல் | காப்பாடு-தல் kāppāṭudal, 5.செ.குன்றாவி. (v.t.) மறைத்துக்காத்தல்; to conceal, screen. “துறைவன் கொடுமை நம்முணாணிக் காப்பா டும்மே” (குறுந். 9);. தெ. காபாடு [காப்பு + ஆடு] |
காப்பாற்று-தல் | காப்பாற்று-தல் kāppāṟṟudal, 5 செ.குன்றாவி (v.i.) உதவி செய்து காப்பாற்றுதல்; to preserve, guard, watch, take care of, protect, save. உன்னைக் கடவுள் காப்பாற்றுவார் (உ.வ.);. ம. காப்பாற்றுக காப்பாத்துக;க.தெ. காபாடு [காப்பு +ஆற்று] |
காப்பாளர் | காப்பாளர் kāppāḷar, பெ.(n.) 1. விடுதி போன்றவற்றில் தங்கியிருப்போரைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பு ஏற்றவர்; warden. விடுதிக் காப்பாளர், எதிலியர் இல்லக் காப்பாளர். 2. பாதுகாப்பாளர்; guardian. [காப்பு+ஆளர்] |
காப்பாள் | காப்பாள் kāppāḷ, பெ. (n.) காவல்வீரன்; one who defends guards. “மாரிக் குன்றத்துக் காப்பாளன்’ (ஐங்குறு.206);. [காப்பு + ஆள்] |
காப்பி | காப்பி1 kāppi, பெ.(n.) 1. ஒரு வகையான செடி; Arabian coffee, Coffea arabica. 2. காப்பித் தூளைக் கொதிக்கும் நீரில் போட்டுத் தெளியவைத்துப் பால் கலந்து தேவையான அளவு இனிப்புச் சேர்த்துச் செய்யும் பருகக் கூடிய சிறப்பான சுவைப்பருகம்; coffee. த.வ.குளம்பி, காணீர் [E.coffee → த.காப்பி.] காப்பி2 kāppi, பெ.(n.) படி (நகல்);; copy. [E.copy → த.காப்பி.] |
காப்பிக்கசாயம் | காப்பிக்கசாயம் kāppikkacāyam, பெ.(n.) காப்பிப் பொடியிட்டுக் காய்ச்சிய கொதிநீர், காணீர்க் கருக்கு; coffee decoction (சா.அக.);. [E.coffee + Skt.கஷாயம் → த.காப்பிக்கசாயம்.] |
காப்பிக்கொட்டை | காப்பிக்கொட்டை kāppikkoṭṭai, பெ.(n.) காப்பிச் செடியின் பழத்தினின்று கொட்டையை எடுத்துக் காயவைத்துப் பதப்படுத்திய விதை; coffee seeds, coffea beans. It is from the ripe red berries that this seed is taken, washed and then dried. [காப்பி + கொட்டை.] [E.coffee → த.காப்பி.] இதற்குக் கோப்பிக் கொட்டையென்றும் பெயர். இக்கொட்டையின் தரம், காயின் வடிவு, நிறம், மணம், செழிப்பு முதலியவற்றைக் கருதி பலவகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதை வறுத்துப் பொடி செய்து |
காப்பிச்சூரை | காப்பிச்சூரை kāppiccūrai, பெ.(n.) காப்பிச் செடியில் பூச்சிகளினால் ஏற்படும் நோய்; a disease common to coffee crops caused by a fungus, coffee blight (சா.அக.);. [காப்பி + சூரை.] [E.coffee → த.காப்பி.] |
காப்பிச்செடிநோய் | காப்பிச்செடிநோய் kāppicceḍinōy, பெ.(n.) காப்பிச் செடியில் பூச்சி விழுந்து அதன் காய்ப்பைக் கெடுக்கும் ஒரு நோய்; a disease of the coffee plant caused by fungus (Hemibia vastatrix); which destroys the whole crops (சா.அக.);. [காப்பி + செடி + நோய்.] [E.coffee → த.காப்பி] |
காப்பிடம் | காப்பிடம் kāppiṭam, பெ.(n.) ஒற்றிடம்; fomentation (சா.அக.);. [கப்படம்-காப்படம்-காப்பிடம் (கொ.வ.);] |
காப்பிடு-தல் | காப்பிடு-தல் kāppiḍudal, 20 செ.கு.வி. (v.i.) 1. நெற்றியில் திருநீறு அல்லது மண்ணைக் குழைத்திட்டுக் காப்புச் செய்தல்; to rub sacred ashes or earth on the forehead. as a means of protection. “சீரார் செழும்புழுதிக் காப்பிட்டு” (திவ்.இயற். சிறிய.ம. 16);. 2. காப்புநாண் கட்டுதல்; to tie a string, round the wrist of a person on occasions like marriage, with mantras toward off evil. 3. பிறந்த குழந்தைக்கு ஐந்தாவது, ஏழாவது, ஒன்பதாவது நாளில் காப்புப் பூட்டுதல்; to provide a new born baby with bangles and anklets on the 5th, 7th or 9th day after its birth. 4. திருக்காப்புச் சாத்துதல்; to close the temple doors after worships. 5. ஆவணங்களில் அரச முத்திரை இடுதல்; to impress documents with the royal seal. [காப்பு # காப்பிடு] |
காப்பித்தண்ணீர் | காப்பித்தண்ணீர் kāppittaṇṇīr, பெ.(n.) காப்பித் துளை வெந்நீரில் கொதிக்க விட்டு, அந்நீரில் பாலும் சருக்கரையும் பலவாறாகக் கலந்துள்ள ஒருவகைப் பருகம்; coffee drink. It is a decoction of coffee powder to which are added milk and sugar in desired proportions (சா.அக.);. [காப்பி + தண்ணீர்.] [E.coffee → த.காப்பி.] |
காப்பித்தூள் | காப்பித்தூள் kāppittūḷ, பெ.(n.) கொட்டையை வெண்ணெய் அல்லது நெய்யிட்டு வறுத்து இடித்து எடுத்த பொடி; powder of coffee seeds prepared by adding some butter or ghee to the seeds and then roasted (சா.அக.);. [காப்பி + தூள்.] [E.coffee → த.காப்பி.] |
காப்பியக்கலித்துறை | காப்பியக்கலித்துறை kāppiyakkalittuṟai, பெ. (n.) நெடிலடி நான்காய்வருங் கலித்துறை (வீரசோ.யாப்.18. உரை);; a variety of {} verse. [காப்பியம் + கலித்துறை] |
காப்பியக்குடி | காப்பியக்குடி kāppiyakkuṭi, பெ.(n.) ஒரு குடிப்பெயர்; a family name (அபி.சிந்.);. [காப்பியன் (உழவன்);+குடி] காப்பியக்குடி kāppiyakkuḍi, பெ. (n.) 1. பழைய தமிழ்க் குடியின்; paḻaiyadamiḻkkuḍiyiṉ, பெயர்; name of an ancient Tamil clan_2 சீர்காழிக்கு அருகிலுள்ள ஓர் ஊர். (சிலப். 30.83. கீழ்க்குறிப்பு]; an ancient village near {} தெ. காப்புலு [காப்பு + காவல், காப்பியம் + உழவுத் தொழில். காப்பியன் + உழவன். காப்பியம் + குடி – காப்பியக்குடி : உவகுடி] |
காப்பியஞ்சேந்தனார் | காப்பியஞ்சேந்தனார் kāppiyañcēntaṉār, பெ.(n.) பாலைத் திணையைச் சிறப்பித்து நற்றிணைப் பாடல் பாடிய கழகப் புலவர் a šangam poet. [காப்பியம்+சேந்தனார்.] |
காப்பியடி-த்தல் | காப்பியடி-த்தல் kāppiyaḍittal, 4 செ.கு.வி. (v.i.) 1. தேர்வின் நெறிமுறைகளுக்குப் புறம்பாக வினாக்களுக்குப் புத்தகம் முதலியவற்றைப் பார்த்து எழுதுதல்; copy, the answer from sources that are not allowed in the examination. காப்பியடித்துப் பிடிபட்டால் மூன்றாண்டுகள் தேர்வு எழுத முடியாது. 2. ஒன்றில் இருப்பதைப் போன்று அல்லது ஒருவர் செய்யும் செயலைப் பார்த்து அப்படியே அது போன்றே செய்தல்; imitate. ‘தலை முடியை வாருவதில் கூட என்னைப் பார்த்துக் காப்பியடிக்க வேண்டுமா என்ன?’. [காப்பி + அடி-.] [E.copy → த.காப்பி.] |
காப்பியன் | காப்பியன் kāppiyaṉ, பெ. (n.) 1. உழவன்; farmer. 2. வெள்ளிமுனி (பிங்.);; Sukra, the son of Kavi or Bhrgu. ம. காப்பியன். [காப்பு → காப்பியன்] |
காப்பியம் | காப்பியம் kāppiyam, பெ. (n.) நால்வகை உறுதிப்பொருளையும் கூறுவதாய்க் கதைபற்றி வரும் தொடர்நிலைச் செய்யுள்; a narrative poem dealing with aram, porul, inpam and {} describing the exploits of a hero, being of two kinds. viz регu-{}-{}. “காபபியக் கவிகள்’ (சீவக.1585);. ம. காப்பியம் skt. kavya [காப்பு – இயம்] 2 காப்பு |
காப்பிரிக்கோழி | காப்பிரிக்கோழி kāppirikāḻi, பெ. (n.) மயிர்ச்சுருள் அடர்ந்த சிறகுகளையுடைய கோழிவகை; frizzled fowl, having curly feathers. ம. காப்பிரிக்கோழி [காப்பிரி + கோழி.] |
காப்பிரிசல்லாத்து | காப்பிரிசல்லாத்து kāppiricallāttu, பெ.(n.) சுருண்டு கிடக்கும் காட்டு சல்லாத்து curied endive – Chichorium endiva. [காப்பிரி+சல்லாத்து.] இது சுருட்டையுள்ள சல்லாத்துக் கீரைச் செடி. இது உடம்பின் சூட்டை அறுத்துக் குளிர்ச்சியைத் தரும் (சா.அக.);. |
காப்பிரிமிளகாய் | காப்பிரிமிளகாய் kāppirimiḷakāy, பெ. (n.) குடைமிளகாய் (M.M.170);. bell-pepper. [காப்பிரி + மிளகாய்] |
காப்பிரியெலுமிச்சை | காப்பிரியெலுமிச்சை kāppiriyelumiccai, பெ.(n.); காட்டு எலுமிச்சை; Indian wild lime – Atlantia monophylla (சா.அக.). [காப்பிரி+எலுமிச்சை] |
காப்பிலியர் | காப்பிலியர் kāppiliyar, பெ. (n.) திருநெல்வேலி போன்ற தென்மாவட்டங்களில் குடியேறிய கவந்தன் என்றழைக்கப்படும் கன்னட இனத்தவர்; a caste of Kanarease cultivator, found chiefly in Madura and Tirunalvelly districts, using the title Kavandan. [காப்பு → காப்புளார் → காப்பிலியர்] |
காப்பிலியெலுமிச்சை | காப்பிலியெலுமிச்சை kāppiliyelumiccai, பெ. (n.) காட்டெலுமிச்சை (யாழ்ப்);; Indian wild lime. [காப்பிலி + எலுமிச்சை] |
காப்பில் | காப்பில் kāppil, பெ.(n.) 1. மீனவர்கள் மீன் பிடிக்க பயன்படுத்தக்கூடிய கூரிய ஈட்டி போன்ற கருவி; barbed fishing-spear. 2. கப்பலின் பாயை முன்பாகவோ, பின்பாகவோ நீட்டுவதற்கு உதவும் கழி போன்ற தோணியின் உறுப்பு: a spar used in ships to extend the heads of fore-and aft sails (செ.அக.);. [காப்பு+இல்] [E, gaff → த.காப்பில்.] |
காப்பீடு | காப்பீடு kāppīṭu, பெ. (n.) 1. காப்பாற்று; safeguarding, protecting. 2. காக்கப்படுவது (சங்.அக.);; that which is protected. 3. உயிர் போனால் தொகை வழங்கும் திட்டம்; insurance scheme. [காப்பு + இடு – காப்பிடு → காப்பீடு] |
காப்பு | காப்பு kāppu, பெ. (n.) 1. காவல் (பிங்.); ; watching. 2. காவலாயுள்ளது; that which serves as a protective. “கண்ணேறு காத்திட்ட காப்பென” (குமர.பிர.மதுரைக்.101); 3. காப்புநாண் பார்க்க;see {} 4. மூலிகை கெடாமல் இருக்கவும் அதன் கெட்ட குணங்கள் நீங்கவும் அதைச் சுற்றிக் கட்டும் மந்திர கயிறு; string or cord tied round medicinal plants with mantras either by way of preserving them from injury, or by way of attenuating their pernicious effects, before using them in medicine. 5. தொடங்கிய செயல் இனிது முடிய வேண்டி நூலின் தொடக்கத்திற் செய்யும் கடவுள் வணக்கம்; invocation of deities at the commencement of a poem to facilitate its successful completion. 6. காப்புப் பருவம் (இலக்.வி. 806); பார்க்க: see {}. 7. திருநீறு; sacred ashes, as an amulet. ” விருத்தனாகிக் கூனிவந்துயர் காப்பிட்டான்’ (திருவாலவா.38, 56); 8. கைகால்களில் அணியும் வளை; bangle, bracelet, anklet. “மைந்தரும்… காப்பணியாக் கொள்ளுங் கலைசையே” (கலைசைச். 53. 9. வேலி (பிங்.);; fence, hedge. 10. மதில்; surrounding wall, fortification. “திருத் துஞ்சுந் திண்காப்பின்” (பட்டினப். 41); 11. கோட்டையின் உள்ளுயர் நிலம் (பிங்.);; Mound within a fort. 12. கதவு (பிங்.);; door. 13. கதவின் தாழ்; bolt of a door. “கதவுதனைச் காப்பவிழ்க்கப் புரிந்து” (அருட்பா. 4, அருட்பிர. 26);, 14. அரசமுத்திரை: royal seal. “ஒலைமுகடு காப்பியாத்து” (கலித். 94);. 15. ஏட்டுக்கயிறு; the running cord connecting the leaves of a cadjau manuscript. “புத்தகத்தின் காப்பொருவி வாசித்து” (விநாயகபு.62:15);. 16. காவலான இடம்; place of special protection. “கெடில வீரட்டமும்…….உறைவார் காப்புக்களே”. 17. ஊர்; village, as in a pastoral region. ‘கடிகொ ளிருங்காப்பின்” (கலித். 10.); 18. திசை நாயகர்கள்; guardian deities of the eight points of the compass. “காப்புக் கடைநிறுத்தி” (சிலப். 23:231);. 19. சிறை; prison. “பங்கயன் காப்பினை….. விடுத்தனன்” (கந்தபு. அயனைச்சிறைநீ. 12);. 20. காலணி; sandals. “காப்பணி தாளன்” (திருவிளை. பழியஞ்.13);. 21. அரசன் நுகர்தற்குரிய பொருள்கள்; objects of enjoyment by a king. “மஞ்சனத்தை யுள்ளுறுத்த காப்பும்” (சீவக. 1873);. ம. காப்பு. க.தெ. து.காடி [கா → காப்பு] |
காப்புகாவரிசி | காப்புகாவரிசி kāppukāvarici, பெ.(n.) கார்போகவரிசி பார்க்க; see karbogav arisi(சா.அக.);. |
காப்புக்கடவுள் | காப்புக்கடவுள் kāppukkaḍavuḷ, பெ. (n.) திருமால் (பிங்.);; as preserver. [காப்பு + கடவுள்] |
காப்புக்கட்டல் | காப்புக்கட்டல் kāppukkaṭṭal, பெ.(n.) பேய், பூதம் அல்லது கெடுதல் செய்கை, சூழியம் (சூனியம்); வைத்தல் இவைகள் அணுகாதபடி பாதுகாப்புக்காகக் கடவுளை வேண்டி மாழை (உலோகம்);யால் ஆன தகடு அல்லது மஞ்சள் கயிற்றை நோயாளிகளின் கையில் கட்டுகை; tying an amulet or a yellow string after praying to God, as a protective against the influence of evil spirits and other acts of malevolence (சா.அக.);. [காப்பு+கட்டல்.] |
காப்புக்கட்டிப்போடு-தல் | காப்புக்கட்டிப்போடு-தல் kāppukkaṭṭippōṭudal, 19 செ.குன்றாவி. (v.t.) 1. செயலை இடையில் நிறுத்துதல் (வின்.);; to leave a business half done. 2. பின் வரும் நிகழ்விற்காக முன்னமே மற்றொரு செயலை நிறுத்தி வைத்தல்; to reserve keep back anything for subsequent use. [காப்பு + கட்டி + போடு] |
காப்புக்கட்டு-தல் | காப்புக்கட்டு-தல்1 kāppukkaṭṭudal, 5 செ.கு.வி.(v.i.) 1. மஞ்சணூற்காப்பு அணிதல்; to tie an amulet, a yellow string on the arm in token of a vow and as a pledge of its fulfilment. 2, மூலிகைக்குக் காப்புநாண் கட்டுதல் (இ.வ.);; to tie a string round herbs in order to dispel any evil curse. 3, ஊக்கத்துடன் செயலைத் தொடங்குதல் (வின்.);; to engage in a pursuit with earnestness. 4. கோயிலில் திருவிழாத் தொடங்குதல்; to commence a temple festival. ம. காப்புகட்டுக [காப்பு. + கட்டு] காப்புக்கட்டு-தல் kāppukkaṭṭudal, 5 செ.கு.வி. (v.t.) கொங்கு நாட்டில் பொங்கல் நாளுக்கு முதல்நாள், வீட்டின் முகப்பில் பூளைப்பூ, ஆவாரம் பூ, வேப்பிலை ஆகிய மூன்றையும் கொத்தாகச் செறுகி வைத்தல்; inserting the bunch containing, {}, {} and neem. [காப்பு + கட்டு.] காப்புக்கட்டு-தல் kāppukkaṭṭudal, 5 செ.கு.வி. (v.t.) கொங்கு நாட்டில் பொங்கல் நாளுக்கு முதல்நாள், வீட்டின் முகப்பில் பூளைப்பூ, ஆவாரம் பூ, வேப்பிலை ஆகிய மூன்றையும் கொத்தாகச் செறுகி வைத்தல்; inserting the bunch containing, {}, {} and neem. [காப்பு + கட்டு.] காப்புக்கடவுள் |
காப்புக்கரப்பறி-தல் | காப்புக்கரப்பறி-தல் kāppukkarappaṟidal, 4 செ.கு.வி.(v.i.) பொருளறிந்து ஏட்டெழுத்தைப் படித்தல்; to read intelligently, as without confounding the letters கா and கர- காப்புக்கரப்பறியாமல் வாசிக்கிறான் (வின்.);. [காப்பு + கரப்பு + அறி] தமிழ் எழுத்துகளில் ஈ,ர ஆகிய இரு எழுத்துகளும் அடிக்கோடின்றி முன்பு எழுதப்பட்டன. இடத்திற்கேற்பப் பொருள் வேறுபாடு அறிந்து காப்பு என்றும் படிக்க வேண்டும். திண்ணைப்பள்ளியில் தொடக்கக் கல்வி பயிலும் மாணவர்களைக் “காடு, கரடு பிரித்துப் படிக்கக் கற்றுக் கொண்டானா வெனக்” கேட்பதும் மரபு. இன்றும் ர், ரி, ரீ என்றே ரகரத்திற்கு அடிக்கோடின்றி எழுதுகிறோம். |
காப்புக்காடு | காப்புக்காடு kāppukkāṭu, பெ. (n.) காவற் கட்டுள்ள காடு; reserved forest. ம. காப்புக்காடு [காப்பு + காடு] |
காப்புக்குரியகடவுள் | காப்புக்குரியகடவுள் kāppukkuriyakaṭavuḷ, பெ.(n.) காப்பாக நூன்முகத்து உரைக்கப்படும் தெய்வம்; a derty which protects. [காப்புக்கு+உரிய+கடவுள்.] |
காப்புச்செய்-தல் | காப்புச்செய்-தல் kāppucceytal, 1 செ.கு.வி. (v.i.) ஒலைச்சுவடியைக் கட்டிவைத்தல்; to tie up, as a cadjan bundle. “உடன்காப்பு செய்து” (தணிகைப்பு. அகத். 167); [காப்பு + செய்.] |
காப்புதாரி | காப்புதாரி kāpputāri, பெ. (n.) தற்காப்புரிமை (C.G.);; right of private defence. காப்புரிமை பார்க்க;see {}. [காப்பு + தாரி] |
காப்புதாரிக்காடு | காப்புதாரிக்காடு kāpputārikkāṭu, பெ. (n.) காப்புக்காடு (C.G.); பார்க்க;see {}.. [காப்பு + சதாரி + காடு] |
காப்புத்தடை | காப்புத்தடை kāpputtaḍai, பெ. (n.) கோயில் திருவிழாக்கள் தொடங்குவதற்குக் காப்புக் கட்டியபின் யாரும் ஊரை விட்டு வெளியே செல்லக்கூடாதென்ற மரபு; the practice of staying in the village and not going out after the temple celebration commenced. [காப்பு + தடை] 104 காப்புமாலை |
காப்புநாண் | காப்புநாண் kāppunāṇ, பெ. (n.) விழாக் காலங்களில் காப்பாகக் கையில்கட்டும் மஞ்சள் நனைத்த கயிறு; string tied round the wrist of a person with mantras to ward off evils, as an amulet, in times of marriage, illness, etc. “காப்பு நாண் கட்டக்கனாக்கண்டேன்” (திவ்.நாய்ச். 64);. [காப்பு + நாண்] |
காப்புநீக்கு-தல் | காப்புநீக்கு-தல் kāppunīkkutal, 5 செ.கு.வி. (v.i.) கட்டி வைத்துள்ள ஓலைச்சுவடியை அதன் கட்டை அவிழ்த்துத் திறத்தல்; to unloose and open, as a book of palmyra leaves. “பரந்தநூல் காப்பு நீக்கி” (தணிகைப்பு:அகத்.167);, (செ.அக.); [காப்பு+நீக்கம்.] |
காப்புப்பணம் கட்டு-தல் | காப்புப்பணம் கட்டு-தல் kāppuppaṇamkaṭṭudal, 5.செ.கு.வி. (v.i.) தெய்வத்துக்கு நேர்ந்துகொண்ட பணத்தை மஞ்சள் தோய்த்த துணியிற் கட்டி வைத்தல்; to tie up a coin in a piece of cloth dyed in saffron, as a vow to a deity in any temple. [காப்பு + பணம் + கட்டு] |
காப்புப்பருவம் | காப்புப்பருவம் kāppupparuvam, பெ. (n.) பிள்ளைத்தமிழ் கூறும் பத்துப் பருவங்களுள் முதற்பருவம் (இலக்.வி.808, உரை); ; the first section of {}-t-{}. [காப்பு + பருவம்.] |
காப்புமறம் | காப்புமறம் kāppumaṟam, பெ. (n.) காவல்வீரர்; military guard. “காப்புமறம் தான்விட்டான் அக்கோ” (பதிற்றுப். 90 பதி);. [காப்பு + மறம்] |
காப்புமாலை | காப்புமாலை kāppumālai, பெ. (n.) தெய்வங் காப்பதாக மூன்று ஐந்து அல்லது ஏழு செய்யுளார் காப்புவாவரிசி பாடப்படும் ஒரு சிற்றிலக்கியம் (இலக்.வி, 832);; poem of three, five or seven verses in which the protection of deities is implored. [காப்பு + மாலை.] |
காப்புரிமை | காப்புரிமை kāppurimai, பெ. (n.) 1. கண்டுபிடித்த ஒரு பொருளுக்கு அல்லது அதற்குச் சூட்டிய பெயருக்குக் குறிப்பிட்ட காலம் வரை அதைத் தான் மட்டுமே செய்து விற்பனை செய்ய அரசில் பதிவு செய்து பெறும் உரிமை; patent. இன்றியமையாத சிறிய மருந்து வகைகளுக்குக் கூடப் பெரிய நிறுவனங்கள் காப்புரிமை பெறுகின்றன. [காப்பு+உரிமை] |
காப்புறுதி | காப்புறுதி kāppuṟuti, பெ.(n.) காப்பீடு செய்தல்; insurance (க்ரியா.);. [காப்பு+உறுதி] |
காப்புறுதியளி-த்தல் | காப்புறுதியளி-த்தல் kāppuṟudiyaḷiddal, செ.கு.வி. (v.i.) ஒரு விளைபொருள் அல்லது கண்டுபிடிப்பை பயன்படுத்துவதற்கான தனி உரிமை கொடுததல்; to bestow patent right. [காப்பு+உறுதி+அளி-த்தல்] |
காப்புறை | காப்புறை kāppuṟai, பெ.(n.) நோய்கள் வராதபடிக்குக் காக்கும் மருந்துகள்: medicines which act as preventives in diseases. [காப்பு+உறை.] இது தமிழ் மருத்துவ முறைப்படி காப்பு. நீக்கம், நிறைப்பு ஆகிய மூவகை மருந்துகளுள் ஒன்று (சா.அக.);. |
காப்புவாவரிசி | காப்புவாவரிசி kāppuvāvarisi, பெ. (n.) கா போகரிசி (சு.வை.ர. 227);; seed of scurfy pea. [கார்புகா + அரிசி – காம்புவாவரிசி.] |
காப்பொன் | காப்பொன் kāppoṉ, பெ. (n.) நூறு பல நிறையுள்ள பொன் ; a weight of gold = 100 palam. “அவர்க்கு ஒன்பதுகாப் பொன்னுங்…. கொடுத்து” (பதிற்றும்.60 பதி); க.கப்பொன் [கா + பொன்.] |
காமகக்கோபி | காமகக்கோபி kāmakakāpi, பெ. (n.) செடிவகை; tuscan jasmine – Jasminum sambacfloremanoraepleno (சா.அக.);. [காமம்+கக்கோபி] |
காமகட்கதலம் | காமகட்கதலம் kāmakaṭkatalam, பெ. (n.) தாழை; common screw-pine of India Pandanus odoratissimus (சா.அக.);. |
காமகத்துரி | காமகத்துரி kāmakatturi, பெ. (n.) திருநீற்றுப்பச்சை; love-musk – Ocimum basilicum (சா.அக.);. |
காமகரம் | காமகரம் kāmakaram, பெ. (n.) காமுகம் அதாவது காமத்தை உண்டாக்கும் மருந்து, any medicine that promotes sexual desire – Aphrodisiac (சா.அக.);. [காமம்+கரம்] |
காமகருக்கல் | காமகருக்கல் kāmakarukkal, பெ. (n.) மூன்று மாதத்திய கரு (பிண்டம்);; foetus three month”s old (சா.அக.);. [காமம்+கருக்கல்.] |
காமகலை | காமகலை kāmakalai, பெ. (n.) ஒரு விலைமகளின் பெயர்; name of a prostitute. [காம+கலை.] இவள் காசிக்குச் சென்று கங்கையில் குளித்து தம் நாட்டு அரசன் வீரசேனனுக்குக் காசியின் பெருமையைக் கூறி முத்தியடைந்தவள் (அபி.சிந்:);. |
காமகாண்டம் | காமகாண்டம் kāmakāṇṭam, பெ. (n.) காமன் வில்லாகப் பயன்படும் ஒருவகைப்பூ; a kind of flower used by {} as a bow. “கயக்க ணின்ற பூவின்மிக்க காமகாண்டம்” (கந்தபு.காமத.62); [காமம் + காண்டம்] |
காமகாந்தம் | காமகாந்தம் kāmakāntam, பெ. (n.) காமுகம் பார்க்க; see kämugam(சா.அக.);. |
காமகாமின் | காமகாமின் kāmakāmiṉ, பெ. (n.) காமத்தினால் ஏற்படும் பல வகை விருப்பங்கள்; various desires or wishes following lust; the dictates of sexual passion (சா.அக.);. |
காமகாரம் | காமகாரம் kāmakāram, பெ. (n.) பொறுமை; envy, jealousy impelled by selfishness (செ.அக.);. [காமம்+காரம்] |
காமகுணம் | காமகுணம் kāmakuṇam, பெ. (n.) காமவெறி, passion (சா.அக.);. [காமம்+குணம்] |
காமகேசரி | காமகேசரி kāmaācari, பெ. (n.) மிகுதியான காமம்; excess of sexual desire (சா.அக.);. [காம+கேசரி] |
காமகேளி | காமகேளி kāmaāḷi, பெ. (n.) 1. காம விளையாட்டு; sexual perversion. 2. புணர்ச்சி; coition; copulation (சா.அக.);. [காமம்+கேளி] |
காமக்கடப்பு | காமக்கடப்பு kāmakkaḍappu, பெ. (n.) காம மிகுதி; inordinate passion, uncontrollable lust. “காமக் கடப்பினுட்பணித்த கிளவி” (தொல்பொருள்.16); [காடி – கடம்.] |
காமக்கடவுள் | காமக்கடவுள் kāmakkaḍavuḷ, பெ. (n.) 1. வழிபடு தெய்வம்: the particular manifestation of god which one chooses to worship as the god of one’s choice. “கண்டு மயரறுக்குங் காமக் கடவுள்” (பரிபா.15.37);. 2. மன்மதவேள், மதன், காமவேள்;{}, the God of love. [காமம் + கடவுள்] |
காமக்கணிப்பசலையார் | காமக்கணிப்பசலையார் kāmakkaṇippacalaiyār, பெ. (n.) கழகக் காலப் பெண்பாற் புலவர்; poetess of sangama age. இவர் பாடியனவாக நற்றிணையில் இரண்டு பாடல்கள் கிடைத்துள்ளன. மகளிர்க்குண்டாகும் பசலையைப் பாராட்டிப் பாடினமையின் இவர் பசலையாரெனப்பட்டார் போலும் (அபி.சிந்);. |
காமக்கண்ணி | காமக்கண்ணி kāmakkaṇṇi, பெ. (n.) காஞ்சியில் கோயில் கொண்டிருக்கும் காமாட்சியம்மன்; lit, she who has love-inspiring eyes, a name of Parvati as enshrined at {} param. “காமக்கண்ணியாம் பெயரெய்துவை” (காஞ்சிப்பு வீராட். 45);. [காமம் + கண்ணி] |
காமக்கலகம் | காமக்கலகம் gāmaggalagam, பெ. (n.) 1. புணர்ச்சி; copulation. “காமக்கலகந் தெளிந்த பின்” (தனிப்பா.1821.64);. 2. ஊடல்; lovers tiff. [காமம் + கலகம்] |
காமக்களை | காமக்களை kāmakkaḷai, பெ. (n.) பெண்ணின் காமத்தின் அளவாக கலவியில் குறி வழியாய் வெளிவரும் காமநீர்; a fluid discharge in a woman from orgasm in sexual intercourse. This is unknown in western science (சா.அக.);. [காமம்+களை] |
காமக்கவலை | காமக்கவலை kāmakkavalai, பெ. (n.) காம மிகுதியால் தோன்றும் நோய்; mental distress caused by sexual desire. [காமம் + கவலை] |
காமக்காணி | காமக்காணி kāmakkāṇi, பெ. (n.) காமக்கிழவு (சாச. தமிழ்க்.147); பார்க்க;see {}. [காமம் காணி] |
காமக்காய்ச்சல் | காமக்காய்ச்சல் kāmakkāyccal, பெ. (n.) காமநோய்; love sickness. காமக்கூட்டம் [காமம்+காய்ச்சல்] |
காமக்கினி | காமக்கினி kāmakkiṉi, பெ. (n.) காமத்தீ பார்க்க; see kāmatti(செ.அக.);. [காமம்+அக்கினி Skt Agni→த. அக்கினி] |
காமக்கிரீடை | காமக்கிரீடை kāmakkirīṭai, பெ. (n.) காம விளையாட்டு; amorous sport (சா.அக.);. [காமம்+கிரீடை Skt, kridai→த. கிரீடை] |
காமக்கிழத்தி | காமக்கிழத்தி kāmakkiḻtti, பெ. (n.) ஒருவர்க்கே உரிமை பூணுங் குலப்பரத்தை மகளாய்க் காமங்காரணமாகத் தலைமகனால் வரைந்து கொள்ளப்பட்டவள் (நம்பியகப். 113);; faithful concubine or mistress. [காமம் + கிழத்தி] |
காமக்கிழத்தியர் | காமக்கிழத்தியர் kāmakkiḻttiyar, பெ. (n.) பலருக்கும் உரியவர் அன்றி ஒருவருக்கே உரிமை பூண்டு வரும் குலப்பரத்தையர்; female the patren comeray from a proskitute family. [காமம்+கிழத்தி+ஆர்.] |
காமக்கிழவு | காமக்கிழவு kāmakkiḻvu, பெ. (n.) ஊர் உரிமை (சாச. தமிழ்க்.21,2);; proprietory right to a village. [காமம் + கிழவு. கிழவு + கிழமை, உரிமை] |
காமக்கிழான் | காமக்கிழான் kāmakkiḻāṉ, பெ. (n.) ஊர்க் காணியாளன் (சாச.தமிழ்க்.147);; proprietor of a village. [காமம் + கிழான்] |
காமக்குறிப்பு | காமக்குறிப்பு kāmakkuṟippu, பெ. (n.) 1. காதலிற்றோன்றும் மெய்ப்பாடு; bodily changes wrought by love. 2. காதலை வெளியிடும் சைகை; amorous gestures. [காமம் + குறிப்பு] |
காமக்கூட்டம் | காமக்கூட்டம் kāmakāṭṭam, பெ. (n.) தலைவனுந் தலைவியும் தம்முள் அன்பொத்துக் கூடுங் கூட்டம்; literary theme expounding clandestine inter course between lovers before marriage. [காமம் + கூட்டம்.] காமக்கொடி |
காமக்கொடி | காமக்கொடி kāmakkoḍi, பெ. (n.) காமக்கண்ணி பார்க்க;see {}; “கச்சிப்பொலி காமக்கொடியுடன் கூடி” (தேவா,7724);. [காமம் + கொடி] |
காமக்கொடியோன் | காமக்கொடியோன் kāmakkoṭiyōṉ, பெ. (n.) ஒருவகைச் செய் நஞ்சு: a kind of arsenic (சா.அக.);. [காமம்+கொடியோன்.] |
காமக்கொடுமை | காமக்கொடுமை kāmakkoṭumai, பெ. (n.) கர்மக்கேட்டால் கொடிய செயலைச் செய்கை; cruelty with sexual perversion Tyrannism (சா.அக.);. [காமம்+கொடுமை] |
காமக்கோட்டத்தி | காமக்கோட்டத்தி kāmakāṭṭatti, பெ. (n.) உமை (சூடா.);; Parvadi, who dwells in {}. [காமக்கோட்டம் → காமக்கோட்டத்தி] |
காமக்கோட்டம் | காமக்கோட்டம் kāmakāṭṭam, பெ. (n.) 1. காஞ்சியிலுள்ள காமக்கண்ணி கோயில்; temple of Kamaksi at {}. “காமக்கோட்டங் கர்வன் மெச்சி” (சிலம்:5:95உரை);. 2. கோயில்களில் இறைவிக்கான தனிக்கோயில்; separate temple for Goddess. [காமம் + கோட்டம்] |
காமக்கோட்டி | காமக்கோட்டி kāmakāṭṭi, பெ. (n.) 1. மலைமகள் (திவத.); Parvati, as enshrined at {}. 2. காமக்கோட்டம் பார்க்க;see {}. ‘உமையமர் காமக் கோட்டியை” (கந்தபு. நகரப். 78]); [காமம் + கோட்டி] காமக்கோட்டி2 kāmakāṭṭi, பெ. (n.) காமப்பித்து (நெல்லை);; mad, craving for sexual union. [காமம் + கோட்டி] |
காமசனனி | காமசனனி kāmacaṉaṉi, பெ. (n.) வெற்றிலை; betel-pepper – Piper betle (சா.அக.);. [காமம்+சனனி] |
காமசரம் | காமசரம் kāmacaram, பெ. (n.) மாமரம்; mango tree – Mangifera indica (சா.அக.);. |
காமசாதி | காமசாதி kāmacāti, பெ. (n.) கொக்கோக நூலின்படிவகுக்கப்பட்ட நான்கு வகை பெண் இனங்கள்; the four classes of women as stated above divided according to their Iust and enumerated in the Tamil erotic science of Kokkogamuni (சா.அக.);. [காமம்+சாதி] |
காமசாரம் | காமசாரம் kāmacāram, பெ. (n.) 1. கசகசாச் செடியின் பால்; opium, inspissated juice of Papaver somniferum. 2. மாமரம்; mango tree [காமம்+சாரம்] |
காமசாரி | காமசாரி kāmacāri, பெ. (n.) 1. அடைக்கலாங் குருவி; domestic sparrow. 2. காமுகன்; one who has mad craving for sexual union. 3. தன் காமதேவன் விருப்பப்படி உருவெடுத்து உலாவருவது; one who roam round with desired outlook. [காமம் + சாரி] |
காமசாலை | காமசாலை kāmacālai, பெ. (n.) சிற்றின்பத்துக்குரிய இடம்; a place intended for amorous dalliance. “தோகையர் மாதவக் காமசாலையுமே கணக்கில்லவே” (அரிச்.பு. நகரச். 14); [காயம் + சாலை] |
காமசீத்தங்கம் | காமசீத்தங்கம் kāmacīttaṅkam, பெ. (n.) காமக்கவலையும், காமத்தினவும் உள்ளவன்; one whose mind and body is overcome with sexual passion (சா.அக.);. [காமம்+சித்தங்கம்] |
காமசுந்தரம் | காமசுந்தரம் kāmacuntaram, பெ. (n.) ஆவு (பசு);, cow(சா.அக.);. [காமம்+சுந்தரம்] |
காமச்சுரம் | காமச்சுரம் kāmaccuram, பெ. (n.) புணர்ச்சியின் பொருட்டு மிக்க விருப்பத்தினால் ஏற்படும் காய்ச்சல்; amative fever or fever-lust. [காமம்+கரம்] இதனால் மனக்கவலை, மயக்கம், உணவு வெறுப்பு, நெஞ்சு வலி, இளைப்பு முதலிய குணங்களுண்டாம். மேலும் ஆண்குறி, பெண்குறி, தொப்புள், முலை முதலிய இடங்களில் ஓர் உணர்ச்சியையும் சில பொழுதுகளில் உடம்பில் எரிச்சலையும் உண்டாக்கும் (சா.அக.);. |
காமஞாலத்தி | காமஞாலத்தி kāmañālatti, பெ. (n.) 1. முன்மர வகை; jujube-tree – Zizyphus jujuba. 2. நீர்நிலை; water tank (சா.அக.);. [காமம்+ஞாலத்தி] |
காமஞ்சுருக்கி | காமஞ்சுருக்கி kāmañcurukki, பெ. (n.) காம விருப்பத்தைத் தணிக்கும் மருந்து; an agent that lessens the sexual impulse – Antaphrodisiac (சா.அக.);. [காமம்+சுருக்கி] |
காமஞ்சேர்குளத்தார் | காமஞ்சேர்குளத்தார் kāmañcērkuḷattār, பெ. (n.) கடை கழகக் காலத்துப் பெண்பாற் புலவர்; the women poet who belonged to the last ancient Šangam (அபி.சிந்.);. |
காமணி | காமணி1 kāmaṇi, பெ. (n.) நவச்சாரம் (யாழ். அக.);, nitre (செ.அக.);. [கா+மணி] காமணி2 kāmaṇi, பெ. (n.) 1. எரியுப்பு (வெண்காரம்);; ammonium chloride. 2. கையாந்தகரை; eclipse plant – Eclypta prostrata (சா.அக.);. [கா+மணி] |
காமதகனன் | காமதகனன் gāmadagaṉaṉ, பெ. (n.) சிவன் (திவா.);; Siva, as one who burnt {}, god of love. மறுவ. காமநாசன் [காமம் + சதகனன்.] |
காமதகனமூர்த்தி | காமதகனமூர்த்தி kāmatakaṉamūrtti, பெ. (n.) மன்மதனை எரித்த திருவுரு God siva. |
காமதனம் | காமதனம் kāmataṉam, பெ. (n.) ஊமத்தை datura plant (சா.அக.);. |
காமதம் | காமதம் kāmatam, பெ. (n.) நிலத்தில் விழுந்த பின் எடுத்துக் கொள்ளப்படும் ஆவின் (பகவின்); சாணம் (சைவச.பொது.169, உரை);; cow dung secured after it has fallen on the ground (செ.அக);. [கா+மதம்] |
காமதாலம் | காமதாலம் kāmatālam, பெ.(n.) குயில்; Indian cuckoo (சா.அக.);. [P] |
காமதுரம் | காமதுரம் kāmaturam, பெ. (n.) 1. சாராயம், arrack, liquor. 2. கள்ளு; toddy. 3. ஓர் இனிமை (மதுரம்);யான பருகம்; a sweet drink (சா.அக.);. [கா+மதுரம்] |
காமதூதி | காமதூதி kāmatūti, பெ. (n.) 1.பெண்குயில்; the female of an Indian cuckoo. 2. பாதிரி; trumpet flower tree – Bignonia suaveolens (சா.அக.);. [காமம்+துதி] |
காமதூதிகம் | காமதூதிகம் kāmatūtikam, பெ. (n.) ஒரு பூடு; a plant- Tiaridium indicum (சா.அக..);. [காமம்+தூதிகம்] |
காமதேனு | காமதேனு kāmatēṉu, பெ. (n.) விரும்பியதை யளிக்கும் தேவருலக ஆன் கறவை; celestial cow, which supplies every want. “போனக மமைந்த தெனவக் காமதேனு…. சொலுமே” (தாயு.மெளன.7);. ம. காமதேனு [காமம் + தேனு] |
காமதேவன் | காமதேவன் kāmatēvaṉ, பெ. (n.) காதல்தெய்வமாகிய காமன், மன்மதன்; Indian Cupid, the god of love. “முயன்றுன்னை நோற்கின்றேன் காமதேவா” (திவ். நாய்ச்.1,2.); காமதேனு ம. காமதேவன் [காமம் + தேவன்.] |
காமத்தானம் | காமத்தானம் kāmattāṉam, பெ. (n.) கொக்கோக நூலிற் கண்டபடி பெண்கள் உடம்பில் காமம் தங்கி நிற்பதாகக் கருதப்படும் சில இடங்கள்; certain parts of the female body the excitation of which caused by a male through impress of nails etc. [காமம்+தானம்] இவை நகக் குறி முதலியவைகளினால் கூச்சம் ஏற்படுத்திக் காமப் பெருக்கை உண்டாக்கக் கூடிய இடங்கள் (சா.அக.);. |
காமத்திராசமூலம் | காமத்திராசமூலம் kāmattirācamūlam, பெ. (n.) 1. கருப்புத் தக்காளிச் செடி, a black Takkali plant (un identified);. 2. மிளகுத் தக்காளி; mad apple – Solanum melongena (சா.அக.);. [காமத்திராச+மூலம்] |
காமத்தீ | காமத்தீ kāmattī, பெ. (n.) காமமாகிய நெருப்பு; venereal principle manifesting itself in the form of sexual desire. மறுவ. காமாக்கினி [காமம் + தீ] |
காமத்துப்பாலோர் | காமத்துப்பாலோர் kāmattuppālōr, பெ. (n.) ஒழுக்கமிலார் (திவா.);; lascivious persons. [காமம் + அத்து + பாலோர்.] |
காமத்துப்பால் | காமத்துப்பால் kāmattuppāl, பெ. (n.) காமத்தைப் பற்றிக் கூறும் 25 அதிகாரங்களைக் கொண்ட திருக்குறட் பகுதி; section of a book treating of love, in 25 chapters in Thirukkural. [காமம் + அத்து + பால்] |
காமத்தேகம் | காமத்தேகம் kāmattēkam, பெ. (n.) காம விருப்பத்தை மிகுதியாகக் கொண்ட உடல்; the body of a amorous person; the body of a person easily susceptitible to sexual passion (சா.அக.);. [காமம்+தேகம்.] |
காமத்தேகி | காமத்தேகி kāmattēki, பெ. (n.) காமவிகாரி பார்க்க; see kāma-Vigári (சா.அக.);. |
காமத்தைக்களையப்பண்ணி | காமத்தைக்களையப்பண்ணி kāmattaikkaḷaiyappaṇṇi, பெ. (n.) பூனைக்காலி; cowhage – Mucana pruriens (சா.அக.);. [காமத்தை+களையம்+பண்ணி] |
காமநாசன் | காமநாசன் kāmanācaṉ, பெ. (n.) சிவன் (பிங்.);; siva, the destroyer of love. [காமம் + நாசன்] |
காமநாயகம் | காமநாயகம் kāmanāyakam, பெ. (n.) காமத்தை விளைவிக்கும் ஒரு வகை ஒட்டுந் தன்மை கொண்ட பிசின்; a resin supposed to promote sexual desire. [காமம்+நாயகம்.] இது பாரசிக நாட்டில் இருந்து வரும் ஒரு யுனானிச் சரக்கு (சா.அக.);. |
காமநிலம் | காமநிலம் kāmanilam, பெ. (n.) இன்பம் துய்க்கும் நிலம்; world of enjoyment, paradise. “காதலாற் காமபூமிக் கதிரொளியவரு மொத்தார்” (சீவக.159.); [காமம் + நிலம்] |
காமநீர் | காமநீர் kāmanīr, பெ. (n.) காமமிகுதியால் தோன்றும் நீர்; veneral secretion as semen, virile. “கீண்ட பாறொறுமூறிய காமநீ ரொழுகிற் றென்ப” (கந்தபு.அசுரர்தோற்.15.); [காமம் + நீர்] |
காமநூல் | காமநூல் kāmanūl, பெ. (n.) 1. காமம் பற்றிய நூல்; science of sex. 2. காமகாண்டம் பார்க்க: (சிலப்.2, 44. உரை); see {}. [காமம் + நூல்] |
காமநோய் | காமநோய் kāmanōy, பெ. (n.) காமத்தால் உண்டாகும் நோய்; love-sickness. “உரவோர்கட் காமநோ யோஒ கொடிதே” (நாலடி, 88);. [காமம் + நோய்] 9 காமப்போர் |
காமனம் | காமனம் kāmaṉam, பெ. (n.) 1 சிறுமூலம்; small root. 2. திப்பிலி; long-pepper (சா.அக.);. [கா+மணம்] காமனம் kāmaṉam, பெ. (n.) திப்பிலி; long pepper (சா.அக.);. [காமன் + அம்] |
காமனாள் | காமனாள் kāmaṉāḷ, பெ. (n.) காமன் திருநாள் கொண்டாடும் பருவம்; spring season. [காமன் + நாள்.] காமனி |
காமனி | காமனி kāmaṉi, பெ. (n.) நவச்சாரம்; Ammonium chloride (ச.அக.);. [கமம் → கமனம் → கமன → காமனி] |
காமனூர்தி | காமனூர்தி kāmaṉūrti, பெ. (n.) தென்றல் (பிங்.);; south breeze, as the vehicle of {}. [காமன் + ஊர்தி] |
காமனை | காமனை1 kāmaṉai, பெ. (n.) சிறு கிழங்கு (மலை.);; goa potato. [கா+மனை.] காமனை2 kāmaṉai, பெ. (n.) விருப்பம்; desire. “காமனைகள் பூரித்து” (தேவா 134:9);. [கமம் → காமம் → காமன் → காமனை.] |
காமனைங்கனை | காமனைங்கனை kāmaṉaiṅgaṉai, பெ. (n.) காமனின் ஐந்து அம்புகள்;{} five arrows. க. காமபாண [காமன் + ஐங்கனை.] கமனின் ஐந்து அம்புகள் : 1. தாமரை மலர் 2. அசோகுமலர் 3. மாமலர் 4. முல்லைமலர் 5. கருங்குவளை மலர் |
காமன் | காமன்1 kāmaṉ, பெ. (n.) 1. காதற் கடவுள்; the Indian cupid. “பண்டாரங் காமன் படையிவள் கண்காண்மின்” (பரிபா.11.123ம்);. 2. புத்த சமயத்திற் கூறும் தீமைவிளைக்கும் தெய்வம்; the Buddhistic god of evil. 3. ஒருவகை வரிக்கூத்து (சிலப். 3,13, உரை]; a kind of masquerade dance. [கமம் → காமம் → காமன்] காமன் kāmaṉ, பெ. (n.) 1. வண்டு (சூடா);; beete, that abides in a grove. 2. திப்பிலி (திவா.);; long pepper. [கா+மன்-காமன்] |
காமன்கொடி | காமன்கொடி kāmaṉkoḍi, பெ. (n.) காமவேளின் அடையாள மீன் (பிங்.);; fish, as the emblem of {} banner. [காமன் + கொடி] |
காமன்கோட்டம் | காமன்கோட்டம் kāmaṉāṭṭam, பெ.(n.) காமன் கோவில்; the temple of kāman (சா.அக.);. [காமன்+கோட்டம்] இராசகிரியத்தின் புறநகரில் உள்ள சோலையில் இக்கோவில் இருந்தது. இதில் தலைவன், தலைவி இருத்தற்குரிய மணவறையும் தோட்டமும் இருந்தன. ஏழு நாட்கள் இங்கு விழா நடந்தது. பெருங்கதை உதயணன் பதுமாவதியை முதலில் கண்டு களித்தது இக்கோட்டத்தின் வாயிலிலேதான் (அபி.சிந்); |
காமன்பண்டிகை | காமன்பண்டிகை gāmaṉpaṇṭigai, பெ. (n.) காமனை எரிக்கும் திருவிழா; a spring festival in the lunar month of Magam to commemorate the burning of Kama by Siva. [காமன் + பண்டிகை] |
காமன்ரதி | காமன்ரதி1 kāmaṉradi, பெ. (n.) கருந்துளசி; black basil (ச.அக.);. [காமன் +ரதி skt.rat→த.ரதி.] |
காமன்வில் | காமன்வில் kāmaṉvil, பெ. (n.) கரும்பு (பிங்.);; sugar-cane, as {} bow. [காமன் + வில்] |
காமபலம் | காமபலம் kāmapalam, பெ. (n.) 1. காம விருப்பம், sexual desire. 2. காமத்தை விளைவிக்கும் ஒரு வகை மாம்பழம்; a species of mango-fruit promoting sexual passion. 3. காமத்தை உண்டாக்கும் பழம்; any fruit tending to increase sexual passion (சா.அக.);. [காமம் + பலம். Skt. palam → த.பலம்) |
காமபலை | காமபலை kāmapalai, பெ. (n.) மாம்பழம்; mango known as love-fruit – Mangifera indica (சா.அக.);. [காமம்+பலை.] |
காமபாணம் | காமபாணம் kāmapāṇam, பெ. (n.) காமன் அம்பு; arrow of God for love. “காமப் பாணம் படப்பட” (இரகு.மட்சி.1);. [காமம் + பாணம்] |
காமபாலன் | காமபாலன் kāmapālaṉ, பெ. (n.) பலராமன்; Balaraman, the brother of Krishna, as the fulfiller of his followers’ desires. “காம பாலனுஞ் சொன்னான்” (பாரத.உலா.க.3); [காமம் + பாலன்.] |
காமபீடம் | காமபீடம் kāmapīṭam, பெ. (n.) மனிதர்கள் அடைய விரும்பும் வீடுபேற்றினை அளிக்கக் கூடிய வல்லமையுள்ள காஞ்சிபுர நகரம்; the place where one”s desires are all fulfilled, conjeevaram. “முத்திபோகம்….கொடுத்திடுந் தன்மையற் காமபீடமென்று” (கந்தபு. திருநகரப்.70);(செ.அக.);. [Skt. kåma + பீடம்] |
காமபீடிதம் | காமபீடிதம் kāmapīṭitam, பெ. (n.) காம வேதனை; torment of plant (சா.அக.);. [காமம்+பிடிதம்] |
காமபூதம் | காமபூதம் kāmapūtam, பெ. (n.) 1. மக்களுக்குக் கனவில் மிகுதியாகக் காமவிருப்பத்தை மூட்டும் அரமகள் (மோகினி); என்னும் ஒரு பெண் பூதம்; a female demon known as mohini exciting excessive sexual desire in dreams of men or women. 2. தான் கருத்து வைத்த தலைவன் அல்லது தலைவியை நினைவிற் காணல்; the appearance of her lover in a woman”s dream or of his love in a man”s dream; the vision of a lover in dream. 3. காமத்தால் ஏற்படும் ஒரு நோய்; lovesickness (சா.அக.);. [காமம்+பூதம்] |
காமபூமி | காமபூமி kāmapūmi, பெ. (n.) காமநிலம் பார்க்க;see {}-nilam, “காதலாற் காமபூமிக் கதிரொளி அவருமொத்தார்” (சீவக.189); [காமம் + பூமி] |
காமபோகம் | காமபோகம் kāmapōkam, பெ. (n.) காம நுகர்ச்சி; gratification of lust of sexual desire (சா.அக.);. [காமம்+போகம்] |
காமபோகி | காமபோகி kāmapōki, பெ. (n.) குன்றி (யாழ்.அக.);; crab”s eye (செ.அக.);. |
காமபோசம் | காமபோசம் kāmapōcam, பெ. (n.) 1. கமேலா மாவு மரம்; kamela tree – Rottleria tinctoria. 2. ஓரூர்; Cambodia (சா.அக.);. [காமம்+போசம்] |
காமப்பயித்தியம் | காமப்பயித்தியம் kāmappayittiyam, பெ. (n.) காமவெறி பார்க்க: see kama-veri (சா.அக.);. |
காமப்பற்று | காமப்பற்று kāmappaṟṟu, பெ. (n.) 1. காம விருப்பம்; sexual desire. 2. மனதின் தீக்குணங்களுள் ஒன்று; libidinous propensities. 3. உலகப்பற்று; wordly desire (சா.அக.);. [காமம்+பற்று.] காமப்பற்று kāmappaṟṟu, பெ. (n.) காமவிருப்பு; sexual desire. “பாரிடை யுயிருங் காமப் பற்றுவிட் டிருந்த தன்றே” (கந்தபு.மேரு.17);. [காமம் + பற்று] |
காமப்பால் | காமப்பால் kāmappāl, பெ. (n.) முலைப்பால்; mother’s milk. “காமப்பால் விட்டரைப்பாய்” (சங்.அக.); [காமம் + பால்] |
காமப்பித்தன் | காமப்பித்தன் kāmappittaṉ, பெ. (n.) புணர்ச்சியின் மீதே நினைவுள்ளவன்; one who is affected with erotomania – Erotomaniac (சா.அக.);. [காமம்+பித்தன்.] |
காமப்பித்து | காமப்பித்து kāmappittu, பெ. (n.) அறிவினை யழிக்குந் தீராப் பெருங்காம்ம்; inordinate passion or lust maddening passion. 2.காமமிக்கவன்; person given to inordinate lust. [காமம் + பித்து] |
காமப்பிராந்தி | காமப்பிராந்தி kāmappirānti, பெ. (n.) 1. காமப்பித்து; emotional insanity characterised by exhibitions of extravagant affection for persons of the opposite sex or of excessive sexual desire – Erotomania. 2. காமமயக்கம்; delusion in love (சா.அக.);. [காமம்+பிராந்தி] |
காமப்பிரியகாரி | காமப்பிரியகாரி kāmappiriyakāri, பெ. (n.) அமுக்கிறா; burr wood – Physalis flexyosa (சா.அக.);. [காமம்+பிரியகாரி] |
காமப்புணர்ச்சி | காமப்புணர்ச்சி kāmappuṇarcci, பெ. (n.) இயற்கைப் புணர்ச்சி (தொல். பொருள்.498);; first union of lovers brought about by destiny. [காமம் + புணர்ச்சி] |
காமப்புரட்டு | காமப்புரட்டு kāmappuraṭṭu, பெ. (n.) காம நுகர்ச்சியின் மாறுபாடு; disorder of the sexual impulse – Erotopathy (சா.அக.);. [காமம்+புரட்டு] |
காமப்பூ | காமப்பூ kāmappū, பெ. (n.) மதனகாமப்பூ என்னும் ஒருவகைக் கொடி (மலை.);; cowslip Creeper. [காமம் + பூ] |
காமப்பேய் | காமப்பேய் kāmappēy, பெ. (n.) காமப்பித்து பார்க்க ;see {}. [காமம் + பேய்] |
காமப்பைத்தியம் | காமப்பைத்தியம் kāmappaittiyam, பெ. (n.) காமப்பித்து பார்க்க; see {}. [காமம் + பைத்தியம்] |
காமப்போர் | காமப்போர் kāmappōr, பெ. (n.) புணர்ச்சி; sexual union. [காமம் + போர்] காமபாணம் 11 |
காமமயக்கம் | காமமயக்கம் kāmamayakkam, பெ. (n.) காமவெறி; delusion in love; infatuation (சா.அக.);. [காமம்+மயக்கம்] |
காமமரம் | காமமரம் kāmamaram, பெ. (n.) சவ்வரிசி தரும் மரவகை (மூ.அ.);; sago ferm palm. [காமம் + மரம்] |
காமமலடி | காமமலடி kāmamalaḍi, பெ. (n.) கனவினால் கருப்பம் சிதைவுற்றவள் (சைவச.பொது.241. உரை);. woman who has had an abortion because of a dream. [காமம் + மலடி] |
காமமீய்வோன் | காமமீய்வோன் kāmamīyvōṉ, பெ.(n.) கோழித் தலைக் கெந்தி; red sulphur found in irregular pieces of brick-dust colour (சா.அக.);. |
காமமுற்றவள் | காமமுற்றவள் kāmamuṟṟavaḷ, பெ.(n.) விருப்பம் கொண்டவள்; an amorous woman (சா.அக.);. [காமம்+உற்றவள்.] |
காமமுள்ளான் | காமமுள்ளான் kāmamuḷḷāṉ, பெ.(n.) காம விருப்பங்கொண்டவன்; an amorous man; a lascivious person (சா.அக.);. [காமம்+உள்ளான்.] |
காமமூடன் | காமமூடன் kāmamūṭaṉ, பெ.(n.) காமப்புரட்டன் பார்க்க; see kama-ppurattan (சா.அக.);. |
காமமோகம் | காமமோகம் kāmamōkam, பெ.(n.) காமத்தினால் உண்டாகும் மயக்கம் (பிரமை);; infatuation through lust (சா.அக.);. [காமம்+மோகம்] |
காமம் | காமம் kāmam, பெ. (n.) 1. விருப்பம்; desire. “காமம் வெகுளி மயக்கம்” (குறள் 360);. 2. உறுதிப் பொருள்களுள் ஒன்றான இன்பம்; happiness in love, one of three kinds of beneficence. “காமத்தின் மன்னும் வழிமுறையே நிற்றுநாம்” (திவ்இயற். பெரியதி.ம 10:37); 3. புணர்ச்சியின்பம்; sexual pleasure. “காமத்திற் செம்பாக மன்று”(குறள்,1092);. 4. காமநீர்; venereal secretion. “மெய் பொடித் திருங்காம மிக்கொழுக்கும்” (உபதேசகா, அயமு.கி. 25);. 5. விரும்பிய பொருள்; object of desire “தாம் வேண்டுங் காமமே காட்டுங்கடிது” (திவ். இயற்.2,92);. 6. பிறப்போரைக்கு (இலக்கினத்துக்கு); ஏழாவது இடம் (சங்.அக.);; the seventh house from the ascendant. 7. காம்மரம் (மூ.அ.); பார்க்க;see {}. [கமம் + நிறைவு, மகிழ்வு, விருப்பம் “கமம் நிறைந்தியலும்”(தொல்.); கமம் → காமம்] வடமொழியாளர் காம் என்னும் சொல்லுக்கு ‘கம்’ என்பதை வேராகக் காட்டுவர். ஆயின் வடமொழியில் ‘கம்’ இடைச்சொல்லாகவும், ஆம், நலம் என்னும் பொருள்களில் வழங்குவதாகவும் நான்காம் வேற்றுமை உருபாகவும் வழங்குகிறது. காமரம் |
காமம்மிக்க | காமம்மிக்க kāmammikka, பெண்; lustful woman. “கஞ்சமலராலனைய காமினி” (உத்தரரா. அசுவமே.65);. ம. க. காமினி Skt. {} [காமி2 + காமினி] |
காமரசம் | காமரசம் kāmaracam, பெ.(n.) 1. அகத்தியர் மருத்துவ நூலில் சொல்லியுள்ள ஒரு மருந்து, an aphrodisiac preparation described in Agastiyar”s treatise on medicine. 2. மாமரம், mango tree. 3. காம இன்பம்; sexual enjoyment (சா.அக.);. [காமம்+ரசம்] |
காமரசாகிகம் | காமரசாகிகம் kāmaracākikam, பெ.(n.) பேரீந்து; wild date fruit – Phoenix dactylifera (சா.அக.);, [காமம்+ரசாகிகம்.] |
காமரசி | காமரசி kāmarasi, பெ. (n.) நெருஞ்சி (மலை.); பார்க்க;see {}. [காமம் + அரசி] |
காமரசேபிகம் | காமரசேபிகம் kāmaracēpikam, பெ.(n.) நத்தைச் சூரி; button-weed – Spermacoci hispida (சா.அக.);. [காமம்+ரசேபிகம்.] |
காமரதிவினோதம் | காமரதிவினோதம் kāmarativiṉōtam, பெ.(n.) 1. சித்தினி இனப் பெண்; one of the 4 classes of women divided according to lust, Furoruterimus. 2. அழகி (லீலாவதி);; a femal affected with an insane sexual desire – Nymphomaniac. 3. மகளிர் கலவி விளையாட்டு; wanton sport of women (சா.அக.);. [காமன்+ரதி+வினோதம்] |
காமரம் | காமரம்1 kāmaram, பெ. (n.) 1. அடுப்பு (திவா.);; fire place for cooking. 2. அத்த நாள் (சூடா.);; the 13th star. [கமர் → கமரம் → காமரம்] காமரம்2 kāmaram, பெ. (n.) 1. இசை (பிங்.);; singing, music, melody. 2. சீகாமரம் என்னும் பண்; a musical mode. “தும்பி காமரஞ் செய்யும்” (சிறு. பாண்.77);. [கமரம் → காமரம்] காமரம்3 kāmaram, பெ. (n.) அகில் (மலை); பார்க்க; see agil. [கா3 + மரம்] காமரம்4 kāmaram, பெ. (n.) ஆல்1 (வின்); பார்க்க; See {}. காமரம்5 kāmaram, பெ. (n.) காவடித்தண்டு (யாழ்ப்.);; shoulder pole for carrying heavy timber. ம. காமரம் [காவு + மரம்] காமரம் காமரம்6 kāmaram, பெ. (n.) வண்டு (யாழ்.அக.);; beetle. [கா+அமர் + அம்+காவமரம்→காமரம் (பூஞ்சோலையில் அமரும் வண்டு);.] |
காமராவுள் | காமராவுள் kāmarāvuḷ, பெ.(n.) சிறப்பான உடைமைகளை வைக்கக்கூடிய உள்ளறை; inner room in a house where valuable things are kept. [காமரா + உள்.] [L.camera → த.காமரா.] |
காமரி | காமரி kāmari, பெ. (n.) புளிநறனை (மலை.); பார்க்க: see {}: [கமர் → கமளி → காமரி] |
காமரிசி | காமரிசி kāmarici, பெ.(n.) நெருஞ்சில்; caltrops- Tribulus terrestris (சா.அக.);. |
காமரீகம் | காமரீகம் kāmarīkam, பெ.(n.) புல்லுருவி, Indian mistletoe – Loranthus elasticus alias L. Pentandrus (சா.அக.);. [காமம்-காமரிகம்] |
காமரீசம் | காமரீசம் kāmarīcam, பெ. (n.) புல்லுருவி (மலை.); பார்க்க;see puluruvi [கமர் →கமரிசம் → காமரீசம்] |
காமரு | காமரு kāmaru, பெ. (n.) விருப்பம் பொருந்துகின்ற, விரும்பத்தக்க; likeable. [காம் + மரு (மருவு); – காமரு. (வ.மொ.வ.115);.] |
காமரூபம் | காமரூபம் kāmarūpam, பெ. (n.) 1. பண்டைய இந்தியாவின் 56 நாடுகளுள் ஒன்று, இன்றைய அசாம் பகுதி; an ancient country, now part of Assam. 2. விரும்பிய படி மேற்கொள்ளும் உருவம்; form assumed at pleasure. “காமரூபங் கொண்டெழுந்தளிப்பான் (திவ்.திருவாய். 10,1,10); [காமம் + உருவம் – காமவுருவம் → காமரூபம்] |
காமரூபி | காமரூபி kāmarūpi, பெ. (n.) 1. நினைத்த உருவங் கொள்பவன்; one able to assume any form at pleasure. 2. பச்சோந்தி பார்க்க;(திவா.);;see {}. [காமம் + உரூபி] |
காமர் | காமர் kāmar, பெ.(n.) காமுகர்; lascivious persons. “கருங்கடைக் கண்ணயில் காமர்நெஞ்சினை யுருங்குவ” (கம்பரா. நகரம்.46);(செ.அக.);. காமர்1 kāmar, பெ. (n.) 1. விருப்பம்; desire. “காமர் கடும்புனல்” (கலித்,39);. 2. அழகு; beauty. “காமர் வண்ண மார்பிற் றாருங் கொன்றை” (புறநா.1:1); [காமம் → காமர்] |
காமர்த்தகாவிரணம்போக்கி | காமர்த்தகாவிரணம்போக்கி kāmarttakāviraṇampōkki, பெ.(n.) காமரிகம் பார்க்க; see kâmarigam (சா.அக.);. |
காமற்கடந்தோன் | காமற்கடந்தோன் kāmaṟkaḍandōṉ, பெ. (n.) புத்தன் (மணிமே.5.102);, Buddha, as having conquered {} the Buddhistic God of evil. [காமம் → காமன் + கடந்தோன்.] |
காமற்காய்ந்தோன் | காமற்காய்ந்தோன் kāmaṟkāyndōṉ, பெ. (n.) 1. அருகன் (திவா.);; Arhat. 2. சிவன்; {}. [காமன் + காய்ந்தோன்] 2 காமனாள் |
காமலதை | காமலதை kāmalatai, பெ.(n.) 1 ஆண்குறி: penis. 2. காமவல்லி; love-creeper – lротаеaquатосlit (சா.அக.);. |
காமலம் | காமலம் kāmalam, பெ.(n.) 1. கழுதைப்பீ, எச்சம் (லத்தி);; ass’s dung. 2. கண்ணில் பீளை தள்ளும் ஒரு நோய்; an eye disease attended with purulent discharge. 3. பாலை நிலம்; desert. 4. இளவேனிற் காலம்; spring season. 5. காமம்; lust (சா.அக.);. |
காமலின் | காமலின் kāmaliṉ, பெ.(n.) காமாலையினால் தாக்கப்பட்டவன்; one suffering from jaundice (சா.அக.);. |
காமலீலை | காமலீலை kāmalīlai, பெ. (n.) காமவிளையாட்டு பார்க்க;see {}. காமவிளையாட்டு ம. காமலீல [காமம் + லீலை.] |
காமலை | காமலை kāmalai, பெ. (n.) காமாலை பார்க்க;see kamala “பந்தியங் காமலை குட்டங்கள்” (மருதூ.32); [காமாலை → காமலை] |
காமல்லிகை | காமல்லிகை gāmalligai, பெ. (n.) வனமல்லிகை (பதார்த்த. 478); பார்க்க;see {}-malligai. [கா+மல்லிகை.] |
காமவதி | காமவதி kāmavati, பெ.(n.) மரமஞ்சள்; tree turmeric – Coscinium fenestratum (சா.அக.);. [காமம் – காமவதி] |
காமவர்த்தனி | காமவர்த்தனி kāmavarttaṉi, பெ. (n.) பண்வகைகளுள் ஒன்று (சங்.சந்:47);; a primary raga. [காமம் + வர்த்தனி.] |
காமவலை | காமவலை kāmavalai, பெ.(n.) காமம் கொள்ளும்படிச் செய்யும் சூழ்ச்சி; a device by which one is entangled or ensnared in lust(சா.அக.);. [காமம்+வலை.] |
காமவலைவீசல் | காமவலைவீசல் kāmavalaivīcal, பெ.(n.) காமத்திற்கு உட்படுத்துகை அதாவது காம விருப்பத்தை உண்டாக்குகை; inducing of sexual passion by a woman through cunning devices; ensnaring a man to sexual delights of women (சா.அக.);. [காமம்+வலை+வீசல்] |
காமவல்லபம் | காமவல்லபம் kāmavallapam, பெ.(n.) மாமரம்: mango tree (சா.அக.);. [காமம்+வல்லபம்.] |
காமவல்லி | காமவல்லி kāmavalli, பெ. (n.) 1. கற்பகத்திற் படருங்கொடி; fabled creeper of gold that twines round the celestial kalpaga tree. “எரிமணிப் பளிக்கு மாடத் தெழுந்ததோர் காம வல்லி” (சிந்தா.காந்த.57);. 2. பெண்; woman. “இலங்கார் வலவடக் கொங்கை வெற்பாலிணை நீலவுண்கட் பொலங் காமவலவடக் கொங் காமவல்லி கடைந்த வப்போது” (வாண:54);. [காமம் + வல்லி] |
காமவளை | காமவளை kāmavaḷai, பெ.(n.) பெண்குறி: orifice of the vagina (சா.அக.);. [காமம்+வளை.] |
காமவாயில் | காமவாயில் kāmavāyil, பெ. (n.) இயற்கையன்பு; love as the gateway to conjugal happiness. “உருவு நிறுத்த காம வாயில்”(தொல், பொருள்.273);. [காமம் + வாயில்] |
காமவிகாரம் | காமவிகாரம் kāmavikāram, பெ.(n.) காமத்தினால் உண்டாகக் கூடிய வேறுபாடு; the physical and mental changes brought about by intense love. “வெம்மைக் காமவிகாரம் பெறுதியால்” (உபதேசகா.அயமுகி:72); (செ.அக.);. [Skt. káma + விகாரம்] |
காமவிகாரி | காமவிகாரி kāmavikāri, பெ.(n.) காமக் குறும்புடையோன்; a person with disordered sexual impulse – Erotopath (சா.அக.);. [காமம்+விகாரி] |
காமவிச்சை | காமவிச்சை kāmaviccai, பெ.(n.) காமவிருப்பம்; sexual desire; venereal oestrum (சா.அக.);. [காமம்+இச்சை] |
காமவிச்சையுள்ள | காமவிச்சையுள்ள kāmaviccaiyuḷḷa, பெ.(n.) காமத்தனமுள்ள, salacious, lecherous (சா.அக.);. [காமம்+இச்சையுள்ள] |
காமவிடாய் | காமவிடாய் kāmaviṭāy, பெ. (n.) கலவி விருப்பம்; thirst for sexual union. “ஆறேனோ வெய்தாமக் காம விடாய்” (நள.சுயம். 44); [காமம் + விடாய்] |
காமவின்னிசை | காமவின்னிசை kāmaviṉṉisai, பெ. (n.) செந்துறைப்பாட்டின்வகை (யாப்.வி.538);; a kind of sendurai verse. [காமம் + இன்னிசை] |
காமவிருத்தி | காமவிருத்தி kāmavirutti, பெ.(n.) காம மிகுதி; increase of sexual passion (சா.அக.);. [காமம்+விருத்தி] |
காமவிருந்தம் | காமவிருந்தம் kāmaviruntam, பெ.(n.) பாதிரிப்பூ; trumpet flower – Bignonia suaveolens (சா.அக.);. [காமம்+விருந்தம்] |
காமவிளையாட்டு | காமவிளையாட்டு kāmaviḷaiyāṭṭu, பெ. (n.) புணர்ச்சி வேட்கைக் கேளிக்கைச் செயல்கள்; love sports. காமவின்னிசை மறுவ. காமலீலை [காமம் + விளையாட்டு] |
காமவெறி | காமவெறி kāmaveṟi, பெ. (n.) காமப்பித்து பார்க்க: see {}. [காமம் + வெறி] |
காமவெறுப்பு | காமவெறுப்பு kāmaveṟuppu, பெ.(n.) காம விருப்பமின்மை; morbid dislike for sexual love – Erotophobia (சா.அக.);. [காமம்+வெறுப்பு] |
காமவேதம் | காமவேதம் kāmavētam, பெ. (n.) காமநூல் பார்க்க;see {}. “காமவேதத்தைக் கருங் கடைக் கண்களான் மொழிவார்” (பாரத.அருச்சுனன்தவ. 62);. [காமம் + வேதம்] |
காமவேள் | காமவேள் kāmavēḷ, பெ. (n.) காமன்;{}, the Indian cupid, “கருப்புவின் மலர்க்கனைக் காம வேளை” (திவ்.நாய்ச். 110); [காமம் + வேள்.] |
காமவேழம் | காமவேழம் kāmavēḻm, பெ. (n.) நாணல் (பிங்.); பார்க்க;see {}. [காமம் + வேழம்] |
காமாகமனம் | காமாகமனம் kāmākamaṉam, பெ.(n.) காமத்தின் வழியே நடக்காமல் அவ்விருப்பத்தை வேறு வழியாக மாற்றுகை; the process of deviating sexual motive powers from their sexual aims or objects to new aims other than sexualSublimation (சா.அக.);. [காமம்+ஆகமனம்] |
காமாக்கினி | காமாக்கினி kāmākkiṉi, பெ.(n.) காமமாகிய நெருப்பு; venereal principle manifesting itself in the form of sexual desire, one of three uyir-t-ti (சா.அக.);. [காம+skt. அக்கினி→காமக்கிணி→காமாக்கினி] |
காமாங்கம் | காமாங்கம் kāmāṅkam, பெ.(n.) மாமரம்; mango tree (சா.அக.);. [காம+அங்கம்] |
காமாச்சி | காமாச்சி kāmācci, பெ.(n.) காவட்டம்புல்; cit. ronella grass – Andropogon nardus. இது 3-6 அடி உயரம் இருக்கும். மணமுள்ளது; சிறிது கசப்புத் தன்மை கொண்ட “அறத்தைப் போதகஞ்செய் திருமையினு மின்பமருள்பவனே….. காமியகுரு” (தேவா.கு.16);, (செ.அக.);. [காமியம்+குரு.] |
காமாடு-தல் | காமாடு-தல் kāmāṭudal, 5 செ.குவி (v.i.) காமவின்பம் நுகர்தல்; to indulge in sexual pleasures. [காமம் + ஆடு] |
காமாட்சி | காமாட்சி kāmāṭci, பெ. (n.) காஞ்சியிலுள்ள அம்மன் (சிவரக. தேவிமேரு. 13);; Parvadi worshipped at Kanjipuram, as having love – inspiring eyes. Skt.{} [கமம் + காமம் (விருப்பம்); + அட்சி.(கண்); Skt. atssa→த.அட்சி.கண்.] |
காமாட்சி விளக்கு | காமாட்சி விளக்கு kāmāṭciviḷakku, பெ. (n.) திருமணம் முதலிய விழாக்களில் பயன்படுத்தும் பாவை விளக்கு [E.T.]; brass lamp in the form of a woman who holds with both her hands, a hollow vessel for oil and wick, used during marriage occasions. [காமாட்சி + விளக்கு] காமாட்சி விளக்கு காமாட்டி |
காமாட்சிக்கீரை | காமாட்சிக்கீரை kāmāṭcikārai, பெ. (n.) கீரைவகை; a kind of greens. [காமாட்சி + கீரை] |
காமாட்சிப்புல் | காமாட்சிப்புல் kāmāṭcippul, பெ. (n.) 1. புல்வகை (LP);, black khus-khus grass. 2. காவட்டம்புல் (வின்.);.; citronella grass. 3. சுன்னாறிப்புல் (M.M. 3. காமாட்சி விளக்கு 765);; roussa oil grass. 4. கருப்பூரப்புல் (M.M.);. lemon grass [காமாட்சி + புல்] |
காமாட்சிப்புல் தைலம் | காமாட்சிப்புல் தைலம் kāmāṭcippultailam, பெ. (n.) காவட்டம் புல்லை, மற்றக் கடைச் சரக்குகளோடு சேர்த்து அணியமாக்கும் மருந்து எண்ணெய்; a medicated oil extracted from the root of citronella mixed with other ingredients and used for colic and sprain (சா.அக.);. மறுவ.காவட்டம்புல் எண்ணெய். [காமாட்சி + புல் + தைலம்] காவட்டம் புல் எண்ணெய் பார்க்க;see {} |
காமாட்சியம்மாள் கை விளக்கு | காமாட்சியம்மாள் கை விளக்கு kāmāṭciyammāḷkaiviḷakku, பெ. (n.) வீட்டின் முன்சுவர்ப் பக்கத்தில் மாடப்புரையில் வைக்கும் விளக்கு (இ.வ.); hand-lamp put in a niche of the front wall of a house. [காமாட்சி + அம்மாள் + கை + விளக்கு] |
காமாட்டி | காமாட்டி kāmāṭṭi, பெ. (n.) 1. மண்வெட்டுவோன்; labourer, one who works with a hoe, digger of earth. 2. மூடன்; fool, idiot, dunce. “உன் பிள்ளை பரதன் காமாட்டி யானானே” (இராமநா.அயோத்.6);. ம. காமாட்டி, க.தெ., காமாடி; ம காமாட்டி;து.- காமாதெ. மரா. காமாட்கி Mar-{} [கம்மம் (உழவு); + ஆள் – கம்மாள் → கம்மாளி → கம்மாத்தன் → கம்மாத்தி → கம்மாட்டி காமாட்டி…] |
காமாதுரன் | காமாதுரன் kāmāturaṉ, பெ. (n.) காம ஆசை மிக்கவன்; libidinous person. காமி பார்க்க;see {}. Skt.{}. [காமன் + ஆதுரன். Sk.{}.→த.ஆதுரன்.] |
காமாந்தகன் | காமாந்தகன் gāmāndagaṉ, பெ. (n.) சிவன்; Siva, the destroyer of {}. ம. காமந்தகன், க. காமாந்தக. [காமன் + அந்தகன்] |
காமாப்பலகை | காமாப்பலகை gāmāppalagai, பெ. (n.) மரக்கலத்தின் சுற்றுப் பலகை (வின்.);; top board around the side of a boat. [ககம் → காமம் + பலகை – காமப்பலகை → காமாப்பலகை] |
காமாரி | காமாரி kāmāri, பெ. (n.) 1. சிவன் (பிங்.);; Siva, the enemy of {} 2. காளி; Durga. “காமாரி திருமுன்னர்ச் சாந்திகனைக் காட்டுறலும்’ (உபதேசகா. உருத்திராக்க. 162);. ம. க., காமாரி. Skt.{} [காமம் + மாரி] 114 கர்மிகம் |
காமாலை | காமாலை kāmālai, பெ. (n.) பித்தம் அதிகமாவதால் ஏற்படும் ஒருவகை நோய்; jaundice. “காமாலை சோகை சுரம்” (திருப்பு. 153);. ம. காமால, காமில தெ. காமிலாது. காமால, காமெலி: Skt{}:Mar: {} மறுவ. காமாலை, மஞ்சள் காமாலை. [கமம் → காமம் + ஆலை] |
காமி | காமி1 kāmittal, 4 செ. குன்றாவி. [v.t.] 1.விரும்புதல்; to desire. “தப்புதி யறத்தை யேழாய் தருமத்தைக் காமி யாதே” (கம்பரா. நிந்த 54);, 2. காமங் கொள்ளுதல்; to have sexual desire. ம. காமிக்குக [காமம் → காமி] காமி3 kāmi, பெ. (n.) காமம் மிக்கவன்; lustful person. ‘களிம, மானிகாமிகள்வன்” (நன். 38.); ம. க. காமி Skt. {} [காமம் → காமி] காமி4 kāmi, பெ. (n.) 1. உவர்மண்; fuller’s earth. 2. பொன்னிமிளை; gold-coloured antimony. [கம் →கம்மு →காமு →காமி] |
காமி2-த்தல்1 | காமி2-த்தல்121 kāmittal, காண்பித்தல், காட்டுதல்; to show, exhibit, display. [காண்பி → காமி ] |
காமிகம் | காமிகம் gāmigam, பெ. (n.) சிவனிய நூல்கள் இருபத்தெட்டுள் ஒன்று; anancient Saivascripture in Sanskrit, one of 28 Sivagamam. “காமிக மாதி யைந்து முற்பவித்து”(சைவக பொது,33); ம.காமிகம்;க. காமிகாகம் காமிண்டன் 115 Skt. {} [காமம் → காமிகம்] |
காமிண்டன் | காமிண்டன் kāmiṇṭaṉ, பெ. (n.) 1. காவலன்; king, captain. 2. தலைவன்; chief. [மிண்டு + வலிமை. மிண்டன் + வல்லோன். கா + மிண்டன் (த.மி.வ..300);] |
காமினம் | காமினம் kāmiṉam, பெ.(n.) புணர்ச்சி செய்கை; having sexual intercourse (சா.அக.);. |
காமினி | காமினி kāmiṉi, பெ. (n.) |
காமினிபோகம் | காமினிபோகம் kāmiṉipōkam, பெ.(n.) சித்தினி சாதிப் பெண்ணோடு புரியும் கலவி: sexual enjoyment with a voluptuous woman (சா.அக.);. [காமினி+போகம்] |
காமினிபோகரோகணி | காமினிபோகரோகணி kāmiṉipōkarōkaṇi, பெ.(n.) புல்லுருவி; mistletoe – Loranthuselasticus (சா.அக.);. [காமினி+போகம்+ரோகணி] |
காமியக்கல் | காமியக்கல் kāmiyakkal, பெ. (n.) கோமேதகம் (வின்.);; cinnamon stone. [காமியம் + கல்.] |
காமிருகம் | காமிருகம் kāmirukam, பெ.(n.) மான்மதம்: musk – Moschus moschiferus (சா.அக.);. [கா+மிருகம்] |
காமிலம் | காமிலம் kāmilam, பெ.(n.) ஒரு நோய்; an unknown disease (சா.அக);. |
காமில் | காமில் kāmil, பெ.(n.) 1. முழுமை; completeness, entirety. 2. ஊரிலிருந்து வரியாக வாங்கும் மொத்தத் தொகை; the total land revenue realised from a village. [Ar.{} → த.காமில்.] |
காமீனி | காமீனி kāmīṉi, பெ. (n.) பிறப்போரையிலிருந்து ஏழாமிடத்துள்ள கோள் (சா.அக.);; the planet in the seventh house from the ascendant. [காமி2 → காமீனி] |
காமுகக்கள்ளன் | காமுகக்கள்ளன் kāmukakkaḷḷaṉ, பெ.(n.) எருமை Buffalo (சா.அக.);. [காமுகம்+கள்ளன்.] |
காமுகக்காசம் | காமுகக்காசம் kāmukakkācam, பெ.(n.) அதிகப் புணர்ச்சியினால் உண்டாகும் கோழை (காசம்);; sexual asthma (சா.அக.);. [காமுகம்+காசம்] |
காமுகன் | காமுகன் kāmukaṉ, பெ.(n.) காமவெறி கொண்டவன்; lustful man. [காமம்-காமுகன்.] காமுகன்1 gāmugaṉ, பெ. (n.) 1. பல பெண்களோடு உடலுறவு கொள்ள மிகுந்த விருப்பம் உள்ளவன்; lustul person. “காமுகர்ப் படுவ மாதர் கண்களும்” (கம்பரா.நாட். 5);. 2. நாகரிகன் (பிங்.);; polite, polished {}. ம. காமுகன் க. காமுக து;காமுகெ Skt. {} [காமம் → காமுகன்] காமுகன்2 gāmugaṉ, பெ. (n.) 1. திருமால்; {}. 2. காமதேவன் பார்க்க ;see {}, Skt. {} [காமம் → காமுகன்] |
காமுகம் | காமுகம் kāmukam, பெ.(n.) 1. பூங்கொன்றை: cassia flower-Cassia fistula. 2. அசோக மரம்; asoka tree – Jonesia Asoka. 3. குறிஞ்சா; spring creeper – Gaerthera racemosa. 4, பெட்டையை விட்டுப் பிரியாத புறா, a male pigeon inseparable from its mate (சா.அக.);. [காமம் – காமுகம்] |
காமுகி | காமுகி kāmuki, பெ.(n.) காமமுடையவள்; a lustful woman (சா.அக.);. |
காமுண்டன் | காமுண்டன் kāmuṇṭaṉ, பெ. (n.) படைத்துறை மறவரின் பதவிப் பெயர்; designation of the chief of an army formation. [சாமன் → சாமந்தன் → சாமுண்டன் → காமுண்டன்.] காய்-தல் |
காமுனி | காமுனி kāmuṉi, பெ.(n.) கண்ணனுக்குப் பூணுால் அணிவித்தவன்; initiatory ceremony intended to God kanna (அபி.சிந்);. |
காமுருகி | காமுருகி1 gāmurugi, பெ. (n.) கொடியவள் (யாழ்.அக.);; wicked woman. [காமம் → உருகி] காமுருகி gāmurugi, பெ. (n.) ஓணான் (வின்.);;ɔlood – Sucker. [கா + முருகி] |
காமுறல் | காமுறல் kāmuṟal, பெ.(n.) மோகமடைகை; lustfulness (சா.அக.);. [காமம்+உறல்] |
காமுறு – தல் | காமுறு – தல் kāmuṟudal, 20 செ.குன்றாவி. (v.t.) 1. விரும்புதல் ; to desire, wish for. “இன்பமே காமுறுவ ரேழையார்” (நாலடி, 60);. 2. வேண்டிக் கொள்ளுதல்; to beseech, pray for. “கனைகதிர்க் கனலியைக் காமுற லியைவதோ”(கலித் 16);. [காமம் + உறு-] |
காமூச்சு | காமூச்சு kāmūccu, பெ. (n.) முக்கால் நாழிகை வழி (யாழ்.அக.);; distance which would take 18 minutes io walk. [கா+முக்கால், மூச்சு + நாழிகை கா +மூச்சு] ஒரு காதத் தொலைவில் பத்தில் ஒரு பகுதி நடப்பதற்கு ஆகும் காலம். |
காமூரி | காமூரி kāmūri, பெ.(n.) 1. காமவிருப்பம்; sexual desiillre. 2. சிற்றின்பம்; sexual pleasure (சா.அக.);. |
காமேதகம் | காமேதகம் kāmētakam, பெ.(n.) இந்திர கோபப்பூச்சி; a scarlet insect of velvetty appearance. [காமம்-காமேதகம்] இதற்குப் பட்டுப் பூச்சி என்றும் பெயர். இது ஆண்டில் முதல் மழை பெய்தவுடன் திறந்த வெளிகளில் காணப்படும் (சா.அக.);. |
காமோதகம் | காமோதகம் kāmōtakam, பெ.(n.) 1. காமநீர்; seminal discharge in a male. 2. காமக்களை பார்க்க; see kama-k-kalai (சா.அக.);. [காமம்-உதகம்] |
காமோத்தீபகம் | காமோத்தீபகம் kāmōttīpakam, பெ.(n.) காமத்தைத் தூண்டும் பொருள்கள் (பண்டங்கள்);; substances promoting sexual desire; any drug that aroses sexual instinct – Aphrodisiac (சா.அக.);. [காமம் – உத்தீபகம்.] |
காமோபாதை | காமோபாதை kāmōpātai, பெ.(n.) காமநோய்; lovesickness (சா.அக.);. [காமம் + Skt உபாதை] |
காம் | காம் kām, பெ.(n.) சிற்றூர் (வின்.);; village. [த.கம்மம் → U.{} → த.காம்.] |
காம்காரி | காம்காரி kāmkāri, பெ.(n.) அரசின் கட்டட வேலை (C.G.);; public works. [U.{}+{} → த.காம்காரி.] |
காம்பசி | காம்பசி kāmpaci, பெ.(n.) செந்நெருஞ்சில்; a red variety of oastrops – Tribulus terrestris (சா.அக.);. |
காம்பம் | காம்பம் kāmpam, பெ.(n.) காம்பசி பார்க்க: see kâmbass(சா.அக.);. |
காம்பரா | காம்பரா kāmbarā, பெ.(n.) 1. அறை; room, chamber. 2. இன்றியமையாத (முக்கியமான); பொருள்களை வைக்கும் அறை; room in which important articles are kept. [L.camera → த.காம்பரா.] |
காம்பலிகம் | காம்பலிகம் gāmbaligam, பெ.(n.) காடி, மோர், கஞ்சி, யவாக்கஞ்சி முதலியவைகளின் கலப்பு; a mixture of vinegar, sour milk, whey, gruel, barley water etc. (சா.அக.); |
காம்பவுண்டு | காம்பவுண்டு kāmbavuṇṭu, பெ.(n.) 1. ஒரு சுற்றுச் சுவரை உடைய கட்டடத் தொகுதி, வளாகம்; compound, building complex. 2. ஒரு வீடு அல்லது கட்டடத் தொகுதிக்கு வெளியில் உள்ள சுற்றுச் சுவர்; compound wall. [E.compound → த.காம்பவுண்டு.] |
காம்பாய்-தல் | காம்பாய்-தல் kāmpāytal, 1 செ.கு.வி.(v.i.) இலைக் காம்புகளைக் கிள்ளுதல் அல்லது நீக்குதல்; removing the foot stalk of leaves; separating the foot stalk from leaves (சா.அக.);. [காம்+ஆய்.] |
காம்பி | காம்பி kāmbi, பெ. (n.) நீரிறைக்குங்கருவி(திவா.);; an ancient water-lift. [காராம்பி → காம்பி] |
காம்பிரம் | காம்பிரம் kāmbiram, பெ. (n.) முருக்குமரம் (மலை.);; palas tree. [காள் → காம்பு → காம்பிரம்] |
காம்பிலி | காம்பிலி kāmbili, பெ. (n.) வடநாடுகளுள் ஒன்று: of an ancient kingdom in N. India. “காம்பிலிக் காவன்மன்னன்” (சீவக.611.); மறுவ. காம்பிலியம் [காப்பு → காப்பிலி → காம்பிலி (உழவர் ஊர்);] |
காம்பீரம் | காம்பீரம் kāmbīram, பெ.(n.) காம்பீரியம் பார்க்க;see {}. |
காம்பீரியம் | காம்பீரியம் kāmbīriyam, பெ.(n.) 1. கம்பீரம்; dignity, majestic bearing. 2. ஆழம்; profundity, depth. [Skt.{} → த.காம்பீரியம்.] |
காம்பு | காம்பு kāmpu, பெ.(n.) 1. முலைக்காம்பு; nipple. 2. மயிர்க்காம்பு; hair-follicle, 3. இவைக்காம்பு; foot stalk. காம்பு kāmbu, பெ. (n.) 1. இலை, பூ முதலியவற்றின் தாள் (சூடா.);; flower-stalk, peduncle, pedicel, leafstalk. 2. மலர்க்கொம்பு (சூடா.);; flowering branch. 3. கருவிகளின் கைப்பிடி; straight handle. காம்போதி; shaft, haft. “கரிய காம்பினையுடைய வேல்” (மலைபடு. 490,உரை.);. 4. மூங்கில்; bamboo. “காம் பேர்தோட்பேதைக்கு” (குறள் 1272.); 5. ஆடைக்கரை; coloured borders of a cloth. “காம்பு துகிலவை கீறி” (திவ்.பெரியாழ். 2.7:3); (திவா.);. 6. ஒருவகைப் பட்டாடை.; a kind of silk cloth. “பொற்கரிகை காம்பு சனவளை” (திவ்.பெரியாழ்.13.8);. 7. பூசணி (மலை.);; pumpkin. 8. அம்புச்சிறகு (நாமதீப.); ; the feather end of an arrow. தெ.காமு; க., து., காவு;ம.காம்பு [கம்பு → காம்பு] |
காம்பு-தல் | காம்பு-தல் kāmbudal, 5 செ.கு.வி.(v.i.) 1. அரிசிபயறு முதலிய உணவுப்பொருள்கள் நீண்ட நாளுக்குப்பின் சுவையற்றுப்போதல்; to become insipid, as food stuff. [குமுல் → கமல் → காமல் → காம்பு.] |
காம்புகி | காம்புகி kāmpuki, பெ.(n.) நாகப்பிரண்டை; a speicies of adamant creeper so called probably of its shape like the cobra சா.அக.). [காம்பு+அகி] |
காம்புக்கழலை | காம்புக்கழலை kāmpukkaḻlai, பெ.(n.) காம்பைப் போன்ற கட்டி; a long projecting tumour growing from a more or less marked pedicle or stem in the ear, nose, lower gut, female genital and sometimes in the throat-Polypus or polypoid tumour (சா.அக.);. [காம்பு+கழலை.] |
காம்புக்கிண்ணம் | காம்புக்கிண்ணம் kāmbukkiṇṇam, பெ. (n.) 1. கைப்பிடியுள்ள ஏனம்; small cup with a handle. 2. அகப்பை (யாழ்.அக.);; ladle, [காம்பு → கிண்ணம்] |
காம்புச்சத்தகம் | காம்புச்சத்தகம் gāmbuccattagam, பெ. (n.) ஓலைவாருஞ் சிறுகத்தி (யாழ்ப்);; iron handled curved knife, used in basket-making. [காம்பு + சத்தகம்] |
காம்புச்சல்லடை | காம்புச்சல்லடை kāmbuccallaḍai, பெ. (n.) சல்லடை வகை; colander. [காம்பு + சல்லடை] |
காம்புப்புகையிலை | காம்புப்புகையிலை gāmbuppugaiyilai, பெ. (n.) காம்புடன் கூடிய புகையிலை (வின்.);; tabacco leaf with a part of its stem. [காம்பு + புகை + இலை.] |
காம்புரி | காம்புரி kāmpuri, பெ. (n.) மூங்கில்; bamboo (சா.அக.);. [காம்பு+உரி] |
காம்போதி | காம்போதி kāmbōti, பெ. (n.) ஒரு பண் (திவா.);. a specific melody-type. காமக்கடப்பு [கமம் → காம் + பொதி + காம்பொதி → காம்போதி.] |
காம்போதியார் | காம்போதியார் kāmpōtiyār, பெ. (n.) கழகம் மருவிய புலவர்களில் ஒருவர்; the poetwho belonged to last Sarsgåage (அபி.சி.ந்.);. |
காம்வார் | காம்வார்1 kāmvār, வி.எ.(adv.) சிற்றூர் வாரியாக; village by village. [U.{} → த.காம்வார்.] காம்வார்2 kāmvār, பெ.(n.) சிற்றூர் வருவாய் வகைத்திட்டம் (P.T.L.);; village settlement. [H.{} → த.காம்வார்.] |
காயகப்பிரியா | காயகப்பிரியா gāyagappiriyā, பெ.(n.) மேளகர்தாக்களுளொன்று (சங்.சந்.47.);; a primary {}. [Skt.{} → த.காயகப்பிரியா.] |
காயகல்பம் | காயகல்பம் kāyakalpam, பெ.(n.) நீண்ட நாள் இளமையாக வாழ எண்ணி உட்கொள்ளும் மருந்து: elixir; more often in a semi solid form to keep oneself young (க்ரியா.);. [காயம்+கல்பம்] |
காயக்காரம் | காயக்காரம் kāyakkāram, பெ.(n.) 1. உடம்பைச் சுட்டுக் கொப்புளிக்கச் செய்யும் காரமருந்து; blistering agent. 2. சதையைச் கட்டுப் புண்ணாக்கும் ஒரு கார மருந்து a substance which burns or corrodes the skin such as lunar caustic. 3. காயமருந்து; any corrosive substance, as an acid (சா.அக.);. [காயம்+காரம்] |
காயக்குத்தகை | காயக்குத்தகை kāyakkuttakai, பெ.(n.) நிலையான குத்தகை ஏற்பாடு: permanent lease (செ.அக.);. [U.qãim → த.காயம்.] |
காயங்கரை | காயங்கரை kāyaṅkarai, பெ.(n.) ஓர் ஆறு. a river. [காயம்+கரை.] இதன் கரையில் பிரமதருமன் எனும் புத்த முனிவன் தவம் செய்து கொண்டிருந்தான். |
காயங்கள் கதிர்போலாக்கி | காயங்கள் கதிர்போலாக்கி kāyaṅkaḷkatirpōlākki, பெ.(n.) 1. புளிச்சிறு கீரை; sour-sorrel – Oxalis coniculata. 2. உடம்பை இளைக்கச் செய்யும் மருந்து; any medicine or agent reducing the corpulency or the bulk of the human body (சா.அக.);. [காயங்கள்+கதிர்+போலாக்கி] |
காயசலம் | காயசலம் kāyacalam, பெ.(n.) 1. சிறுநீர்; urine. 2. உடம்பினின்று கசியும் வியர்வை நீர்; perspired water (சா.அக.);. [காயம்+சலம்] |
காயசிகிச்சை | காயசிகிச்சை kāyacikiccai, பெ.(n.) 1. மருந்துகளை வைத்துச் செய்யும் unogloth; practice of physic by pure medicine. 2. உடம்பையடுத்த காய்ச்சல், நீரழிவு, ஈழை நோய் முதலியவைகளுக்கு மருந்து கொடுப்பது; treatment of bodily diseases such as fever, diabets, consumption, diarrhoea etc. with the aid of medicine. 3. உடம்பைப் பற்றி உண்டாகும் காற்று (வாதம்); பித்தம், ஈழை நோய்களையும், அவற்றிற்கு உண்டான மருத்துவ முறைகளையும் பற்றிக் கூறும் நூல்; a medical treatise bearing on all diseases caused by the three humours of the system and the treatment relating to each of them (சா.அக.);. [காயம் + Skt. சிகிச்சை] |
காயசிட்சை | காயசிட்சை kāyaciṭcai, பெ.(n.) காய சிகிச்சை பார்க்க; see kāya-sigiccai (சா.அக.);. [காயம்+Skt. சிட்சை] |
காயசித்திகனத்திலாக்கி | காயசித்திகனத்திலாக்கி kāyacittikaṉattilākki, பெ.(n.) 1. சதுகமரம்; an unknown tree said to be useful in rejuvenation. 2. உடம்பை ஒரு, நொடிப்பொழுதில் கெட்டிப்படுத்தும் மருந்து, any medicine or agent tending to rejuvenate the human system instantaneously (சா.அக.);. [காயம்+சித்தி+கணத்தில்+ஆக்கு.] |
காயசித்திச்சி | காயசித்திச்சி kāyacitticci, பெ.(n.) 1. சிறு கீரை; pig”s greens – Amaranthus campestris. 2. பொன்னாங்காணி; mari-gold vebesina- Illecebrum sessile. 3. பெரு மலர்க்கொன்றை a species of cassia with large flowers (unidentified); (சா.அக.);. [காயம்+சித்திச்சி] |
காயசித்திச்சுண்ணம் | காயசித்திச்சுண்ணம் kāyacitticcuṇṇam, பெ.(n.) கருப்பூரசிலாசத்து; crystallized or foliated gypsum used as a medicine (செ.அக.);. [காயம்+சுத்தி+கண்ணம்] |
காயசித்திநிறத்தி | காயசித்திநிறத்தி kāyacittiniṟatti, பெ.(n.) உடலை இளமையாக்கும் ஒரு மூலிகை (ஆத்திமல்லிகை);; a herb used in rojuvenation (சா.அக.);. [காயம்+சித்தி+நிறத்தி] |
காயசித்திமூலிகை | காயசித்திமூலிகை kāyacittimūlikai, பெ.(n.) உடம்பை வலிவடையச் செய்யும் பச்சிலை மருந்து; a rejuvenating herb (சா.அக.);. [காயம்+சித்தி+மூலிகை] |
காயசித்தியடை-தல் | காயசித்தியடை-தல் kāyacittiyaṭaital, செ.கு.வி.(v.i.) உடம்பை நிலைக்கச் செய்தல்; getting the body firmly established (சா.அக.);. [காயம்+சித்தி+அடை] |
காயசித்தியாக்கி | காயசித்தியாக்கி kāyacittiyākki, பெ.(n.) 1. சேங்கொட்டை; dhoby”s nut Semecarpus anacardium. 2. உடலை நீண்டகாலம் இளமையாக வைக்கும் மருந்து; any medicine or agent promoting longevity (சா.அக.);. [காயம்+சித்தி+ஆக்கி] |
காயசித்தியானோன் | காயசித்தியானோன் kāyacittiyāṉōṉ, பெ.(n.) 1. நீண்ட காலம் உடல் நீடித்திருக்கக் கூடியவன்; one who has attained the power of kaya-citti 2. வைப்புப் பாடாண வகை; a prepared arsenic (செ.அக.);. [காயம்+சித்தி+ஆனோன்.] |
காயசுட்கம் | காயசுட்கம் kāyacuṭkam, பெ.(n.) நிழலில் உலர்த்தல்; drying anything in the shade without exposing it to sunlight (சா.அக.);. [காயம்+கட்கம்.] |
காயச்சிப்பந்தி | காயச்சிப்பந்தி kāyaccippanti, பெ.(n.) நிலையான பதவியில் இருப்பவர்; permanent establishment; holder of permenant post(செ.அக);. [u.qaim→ <த.காயம்] |
காயச்சுரம் | காயச்சுரம் kāyaccuram, பெ.(n.) காயம், சூட்டுப்புண் (விரணம்); இவைகளினால் ஏற்படும் காய்ச்சல்; a fever which follows a wound or injury – Traumatic fever (சா.அக.);. [காயம்+சுரம்] |
காயதைக்கற்றுாணாக்கி | காயதைக்கற்றுாணாக்கி kāyataikkaṟṇākki, பெ.(n.) 1. காயத்தைக் கல்லாக்கி பார்க்க; seekāyattai-k-kaslakki 2. உடம்பைக் கல் துணைப் போல் கெட்டியாகச் செய்யும் மருந்து a medicine rendering the body as strong as a stone pillar (சா.அக.);. [காயத்தை+கல்+தூணாக்கி] |
காயத்தம் | காயத்தம் kāyattam, பெ. (n.) 1. கடுக்காய்; galnut. 2. நெல்லிக்காய்; Indian gooseberry – Emblica offioinalis. 3. துளசி; holy basil – Ocimum sanctum. 4. அசோகு; Asoka tree – Saraca indica. 5. தேட் கொடுக்கி; Indian turnsole or Indian heliotrope – Heliotroium indicum. 6. கடிச்சை; false kamela – Casearia tomentosa. 7. ஒரு பூடு; a plant-Tizyphus пареса. 8. கொடிய நோய்;а vігulent tуpe of poison. 9. கொடியரசு; wild peepul creeper – Ficus arnottiana. 10. ஏலம்; cardamons (சா.அக.);. [காய+Skt. அஸ்தம்] |
காயத்தழும்பு | காயத்தழும்பு kāyattaḻumpu, பெ.(n.) அடிபட்ட காயத்தினால் ஏற்பட்ட தழும்பு scar, cicatrix (சா.அக.);. [காயம்+தழும்பு] |
காயத்தைக்கல்லாக்கி | காயத்தைக்கல்லாக்கி kāyattaikkallākki, பெ.(n.) உடம்பைக் கல்லைப் போல் கெட்டியாக்கும் மருந்து; any medicine tending to strengthen the body making it as hard as a stone (சா.அக.);. [காயத்தை+கல்லாக்கி] |
காயத்தைச்செம்பாக்கி | காயத்தைச்செம்பாக்கி kāyattaiccempākki, பெ.(n.) காயத்தைப் பவளமாக்கி பார்க்க; see kayattaipPavaamäkki (சா.அக.);. [காயத்தை+செம்பு+ஆக்கி] |
காயத்தைப்பவளமாக்கி | காயத்தைப்பவளமாக்கி kāyattaippavaḷamākki, பெ.(n.) 1 செந்திராய்; a red Speicies of tiray. 2. உடம்பைச் செந்நிறமடையச் செய்யும் மருந்து; any medicine lending a red colour to the body (சா.அக.);. [காயத்தை+பவளமாக்கி] |
காயத்தைலம் | காயத்தைலம் kāyattailam, பெ.(n.) 1. கடுகு, ஓமம், வெந்தயம், உள்ளி, பெருந்ததும் முதலிய ஐந் கூட்டுப் பொருட்கள் (ஐங்காயத் தைலம்);; the five vegetablestimulants. 2.உடம்பிற்குப் பூசும் எண்ணெய்; any medicated oil used for anointing the body with. 3. பெருங்காயம் சேர்ந்த தைலம்; any oil prepared with asafoetida as the chief ingredient (சா.அக.);. [காயம் Skt. தைலம். திலம்→ அதைலம்.] |
காயத்தைவேதிச்சி | காயத்தைவேதிச்சி kāyattaivēticci, பெ.(n.) 1. கருப்பு நொச்சிச் செடி, willow leaved justicia, Justicia gendarussa alias J.vulgaris. 2. உடம்பைப் பொன்னிறமடையச் செய்யும் மருந்து; any medicine tending to develop a golden lustre inthe body (சா.அக.);. [காயத்தை+வேதிச்சி] |
காயநிலை | காயநிலை kāyanilai, பெ.(n.) 1. உடம்பின் நிலைமை; condition of the body, 2. காயத்தின் நிலைமை; state of the wound or injury (சா.அக.);. [காயம்+நிலை.] |
காயநோய் | காயநோய் kāyanōy, பெ.(n.) 1. உடம்பின் நோய்; bodily disease. 2. காயத்தினால் ஏற்பட்ட நோய்; any disease due to wound or injury-Traumatopathy(சா.அக.);. [காயம்+நோய்] |
காயந்தீர்வை | காயந்தீர்வை kāyantīrvai, பெ.(n.) அறுதியிட்டு குறிக்கப்பெற்ற நிலவரி; permanent assessment (செ.அக.);. [ப.gaim→ த. காயம்+தீர்வை] |
காயபலம் | காயபலம் kāyapalam, பெ.(n.) 1. ஒரு சிறிய மரம்; the name of a small tree found in the North West of Hindustan. இதன் மனமுள்ள பட்டையும், விதைகளும் மருந்திற்குப் பயன்படும். பழம் தின்பதற்கு உதவும். 2. உடம்பின் வலிமை; bodily strength (சா.அக.);. [காயம்+பலம்] |
காயபேதி | காயபேதி kāyapēti, பெ.(n.) 1. மூவிலைக் குருந்து; a species of kurundu (unidenified); conspicuous by its three leaves. 2. காயத்தைவேதிச்சி பார்க்க; see käyattai-védicci (சா.அக.);. [காயம்+Skt.பேதி] |
காயப்படல் | காயப்படல் kāyappaṭal, பெ.(n.) காயமடைதல்; being wounded (சா.அக.);. [காயம்+படல்.] |
காயப்படு-த்தல் | காயப்படு-த்தல் kāyappaṭuttal, செ.கு.வி. (v.i.) காயம் உண்டாக்கல்; causing or inflicting an injury or wound (சா.அக.);. [காயம்+படு-.] |
காயப்பூண்டு | காயப்பூண்டு kāyappūṇṭu, பெ.(n.) 1. அரிவாள்மணைப் பூடு; sickle leaf- Sida acuta. 2. காயத்திற்கு வைத்துக் கட்டும் பூண்டு; a plant bruised and applied to wounds as a curve (சா.அக.);. [காயம்+பூண்டு] |
காயமடை-தல் | காயமடை-தல் kāyamaṭaital, செ.கு.வி.(v.i.) 1. கத்தி முதலிய கருவிகளினால் உடம்பில் தழும்படைதல்; sustaining injury or wound in the body with a knife or other sharp weapons. 2. உடல் இளமையடைதல்; securing eternal youth; attaining success in rejuvenation (சா.அக.);. [காயம்+அடை-] |
காயமாகு-தல் | காயமாகு-தல் kāyamākutal, செ.கு.வி.(v.i.) பணி நிரந்தரமாதல்; of job become permament. உனக்கு வேலை காயமாயிற்றா? [காயம்+ஆகு-தல்.] |
காயமாயம் | காயமாயம் kāyamāyam, பெ.(n.) உடல் நிலையாமை; the vanishing away of the human body (சா.அக.);. [காயம்+மாயம்] |
காயமாறுங்காலம் | காயமாறுங்காலம் kāyamāṟuṅkālam, பெ.(n.) 1 இறப்பு கிட்டிய வேளை, the moments of death. 2. உடலில் ஏற்பட்ட காயம் குணமாககும் காலம்; the period of healing, as of a wound or an injury. 3. உடல் மாற்றமடையுங் காலம்; the period of visible change in the human body. 4. கிழத்தனமடையுங் காலம்; the period of attaining old age (சா.அக.);. [காயம்+ஆறும்+காலம்] |
காயமாற்றம் | காயமாற்றம் kāyamāṟṟam, பெ.(n.) 1. காயத்திற்குச் செய்யும் மருத்துவம்; treatment of a wound. 2.உடலின் மாற்றம்; change of body, as from old to young. 3. பருமையி(துலத்தி);னின்று நுண்மை (சூக்குமத்திற்);க்கு மாறுகை; changing or transformation of the human body from the physical into the astral state [காயம்+மாற்றம்] |
காயமாற்று-தல் | காயமாற்று-தல் kāyamāṟṟutal, செ.கு.வி. 1. காமமாற்று-தல் பார்க்க; see kamamarru- 2. உடல் இளமையாதல்; rejuvenating the body. 3. உருமாறல்; assuming a different body (சா.அக.);. [காயம்+ஆற்றல்] காயமாற்று-தல் kāyamāṟṟutal, செ.கு.வி. 1. உடம்பில் ஏற்பட்ட புண்களை ஆற்றுதல் curing or healing the external injuries, Vulneration. 2. உடம்பை ஏமாற்றதல்; transformation of the human body as from the physical into the subtle state (சா.அக.);. [காயம்+ஆற்று- காயம்+மாற்று-] |
காயமாற்றுமருந்து | காயமாற்றுமருந்து kāyamāṟṟumaruntu, பெ.(n.) 1. உடம்பில் பட்ட புண்களை ஆற்றும் மருந்து: a medicine or any plant, drug or preparation useful in the cure of wounds -Vulnerary (சா.அக.);. [காயம்+ஆற்றும்+மருந்து] |
காயமிருத்தி | காயமிருத்தி kāyamirutti, பெ.(n.) 1. சவர்க்காரம்; dhoby”s earth. 2. சர்க்கரை வேம்பு sweet neem. 3. உடலை நீண்ட காலம் நிலை நிறுத்தும் மருந்து; any medicine or agent promoting longevity (சா.அக.);. [காயம்+இருத்தி] |
காயமிறுகல் | காயமிறுகல் kāyamiṟukal, பெ.(n.) 1. உடம்பு இறுகுகை; body getting heardened. 2. உடம்பு கெட்டிப்படுகை; invigoration of the system (சா.அக.);. [காயம்+இறுகல்] |
காயமுண்டோன் | காயமுண்டோன் kāyamuṇṭōṉ, பெ.(n.) காயம்பட்டவன்; wounded person (சா.அக.);. [காயம்+உண்டோன்.] |
காயமுருக்கி | காயமுருக்கி kāyamurukki, பெ.(n.) 1. உடலை இளைக்கச் செய்யும் நோய்; a disease causing emaciation of the body as consumption. 2. உடம்பை இளைக்கச் செய்யும் மருந்து; any drug or medicine capable of reducing the bulk or causing emaciation of the human body (சா.அக.);. [காயம்+உருக்கி] |
காயமூலிகை | காயமூலிகை kāyamūlikai, பெ.(n.) காய கற்பமூலிகை பார்க்க; see keyakarpa. moligai (சா.அக.);. |
காயம்சமாபந்தி | காயம்சமாபந்தி kāyamcamāpanti, பெ.(n.) நிலையான நிலவரித் திட்டம்; permanent settlement (செ.அக.);. காயம்சமாபந்தி kāyamcamāpandi, பெ.(n.) நிலைத்த நிலவரித்திட்டம் (P.T.L.);; permanent settlement. த.வ.வரித்தணிக்கை. [Ar.{} + jema → த.காயம்சமா + பந்தி.] சிற்றூர்க் கணக்குகளைச் சரிபார்க்கவும், நிலத்தீர்வைக் குறித்த பிணக்குகளைத் தீர்க்கவும் மாவட்ட வருவாய் அலுவலர்களால் நடத்தப்படும் கூட்டம் – (ஜமாபந்தி); |
காயம்சோடி | காயம்சோடி kāyamcōṭi, பெ.(n.) கொடையாக வழங்கப்பட்ட தீர்வை அறுதியிடப்பட்ட நிலம்; land on a fixed quit-rent not subject to variation with reference to cultivation or produce (செ.அக.);. [Skt. Kåyam+ஜோடி த.சோ] |
காயம்படு-த்தல் | காயம்படு-த்தல் kāyampaṭuttal, செ.கு.வி. (v.i.) காயம் உண்டாக்கல்; inflicting wound (சா.அக.);. [காயம்+படு-] |
காயம்பண்ணல் | காயம்பண்ணல் kāyampaṇṇal, தொ.பெ. (vbl.n.) 1. பிள்ளைப்பேற்று மருந்து கூட்டல்: preparing medicine for lying in women. 2. புண் உண்டாக்கல்; causing wound (சா.அக.);. [காயம்+பண்ணல்.] |
காயம்பெளனாகவுல் | காயம்பெளனாகவுல் kāyampeḷaṉākavul, பெ.(n.) ஏற்பட்ட நிலத்தீர்வையில், முக்கால்வாசி நிலையாகச் செலுத்தும் குத்தகை உடன்படிக்கை; a cowle, according to the terms of which threequarters of the original assessment is permanently payable (செ.அக.);. [Arab. qaim + Hind. pauna → த.காயம்+பெளனா+கவுல்.] |
காயம்பேரீஜ் | காயம்பேரீஜ் kāyampērīj, பெ.(n.) காயந் தீர்வை பார்க்க; see kāyantirvai (செ.அக.);. [U. qāim-beriz-த.காயம்]. |
காயம்போடல் | காயம்போடல் kāyampōṭal, தொ.பெ. (vbl.n.) பிள்ளைப் பேற்றுக் காலத்தில் பெருங்காயம் சேர்த்து மருந்து செய்தல்; preparing medicine with asafoetida as a chief ingredient for the use of lying-in women (சா.அக.);. [காயம்+போடல்.] |
காயம்பௌனாகவுல் | காயம்பௌனாகவுல் kāyambauṉākavul, பெ.(n.) ஏற்பட்ட நிலத்தீர்வையில் முக்கால் பங்கு நிலையாகச் செலுத்தும் குத்தகை உடன்படிக்கை; a cowle, according to the terms of which three-quarters of the original assessment is permanently payable. [Ar.{}+H.pauna → த.காயம்பௌனா+கவுல்.] |
காயலா | காயலா kāyalā, பெ.(n.) காய்ச்சல்; fever (செ.அக.);, காயல் பார்க்க; see kayal. [காயல்→காயலா. ப.kahi→த. காயலா] |
காயல் | காயல் kāyal, பெ.(n.) காய்ச்சல்; fever [காய் – காயல் (வேதல், வெப்பம்);] |
காயல்மரம் | காயல்மரம் kāyalmaram, பெ.(n.) பணிச்சை மரம்; back-water tree – Diospyros embryopteris (சா.அக.);. [காயல்+மரம்] |
காயவள்ளி | காயவள்ளி kāyavaḷḷi, பெ.(n.) 1. சர்க்கரை வள்ளிக்கிழங்கு; sweet potato – Ipomaea batatas. 2. வெற்றிலை வள்ளிக் கிழங்கு betel yam – Dioscorea opositifolia. 3. சீரக வள்ளி; Malacca yam – Dioscorea bulbifera. 4.காட்டுக்காய் வள்ளி; granada yam – Dioscorea sativa (சா.அக.);. [காய+வள்ளி] |
காயவான் | காயவான் kāyavāṉ, பெ.(n.) 1. காயத்தை இறுத்தியவன் (துறவி);; one who rejuvenated the system. 2. காயம் அடைந்தவன்; a wounded man (சா.அக.);. [காயம்+அவன்] |
காயவியல் | காயவியல் kāyaviyal, பெ.(n.) 1 அவியல் காய், the baking of vegetable curry in steam. 2. காய்கறி சமையல்; the preparation of vegetable curry (சா.அக.);. [காய்+அவியல்.] |
காயவிலை | காயவிலை kāyavilai, பெ.(n.) 1. காயத்திற்கு வைத்துக் கட்டும் இலை; leaf applied to wounds as a curative. 2. காக்கட்டான் இலை; leaf of crow creeper – clitorea ternatea (சா.அக.);. [காய்+இலை.] |
காயாங்குலைச்செடி | காயாங்குலைச்செடி kāyāṅkulaicceṭi, பெ.(n.) காயா மரம் a barrentree(சா.அக.);. [காயாங்குலை+செடி] |
காயாசுவாதம் | காயாசுவாதம் kāyācuvātam, பெ.(n.) பிள்ளைப்பேற்றுக் காய்ச்சல்; puerperal fever (சா.அக);. [காயா+சுவாதம்] |
காயாதிகற்பமூலி | காயாதிகற்பமூலி kāyātikaṟpamūli, பெ. (n.) 1. சித்தர்கள் கற்ப நூலின்படி நெடுநாள் உடலை இளமையாக வைக்க வேண்டி சாப்பிடும் மூலிகைகள், drugs taken by siddhars for retaining the body for a long period and thus promoting longevity. 2. சித்தர்கள் நூற்படி கற்ப முறையில் கடுக்காயை ஆதியாகச் சொல்லி வரும் மூலிகைகள்; rejuvenating drugs commencing with galnut, as enumerated in the siddhars science (சா.அக.);. [காயாதி+கற்பமூலி] |
காயாதிகற்பம் | காயாதிகற்பம் kāyātikaṟpam, பெ.(n.) 1. அமுதம்: nectar. 2. உடலை நெடுநாள் இளமையாக வைத்திருக்க உட்கொள்ளுமோர் மருந்தெண்ணெய், a medicated oil used for rejuvenation (சா.அக.);. [காயாதி+கற்பம்] |
காயாப்பேரீஞ்சு | காயாப்பேரீஞ்சு kāyāppērīñcu, பெ. (n.) 1. காட்டு பேரீச்சை மரம்; barren date treePhoenix genus. 2. சீமையீச்சம்; English fern-palm – Cycus circinalis (சா.அக.);. [காயா+பேரிஞ்சு] |
காயாரோகணம் | காயாரோகணம் kāyārōkaṇam, பெ. (n.) காரோணம் பார்க்க; see karonam, (செ.அக.);. [skt, kaya-rohana→த. காயாரோகணம், காயாரோசனம்→காரோணம், காயம் ஆரோகணம் உடலில் ஏறியிருத்தல்.] |
காயிதம் | காயிதம் kāyidam, பெ.(n.) காகிதம் பார்க்க;see {}. |
காயிதா | காயிதா kāyitā, பெ.(n.) 1. முறை; order, rule. 2. வழக்கம்; custom, usage, practice. அங்கு அவனுக்கு ஒன்றும் கட்டுகாயிதா இல்லையோ (வழ.);. [U.{} → த.காயிதா.] |
காயில் | காயில் kāyil, பெ. (n.) 1. கடல் நீர் பெருகி நிற்கும் கழிகளுள்ள கரை காயல்; backwater. 2. ஒத நீர்க்கரை, seashore. 3. காயல் பட்டினம்; a village in Tirunelvelly District once a famous port the mouth of the Tamaraparani, where marco polo landed (கல்.அக.);. [காயல்→அகாயில்.] |
காயீ | காயீ kāyī, பெ.(n.) பாய்மரத்திற்குப் பற்றுக் கோடாகக் கட்டுப்படும் கயிறு (M.navi.84);; guy. [E.guy → த.காயீ.] |
காய் | காய்1 kāytal, 4செ.கு.வி (v.i.) 1. நீர் முதலியன வெப்பமுறுதல் ; to become hot. 2. சுடுதல்; to burn, to be warm, as body in temperature. சுரத்தால் உடல் காய்கிறது. 3. உலர்தல்; to wither, as vegetables by the sun; to parch, as the lips or mouth; to dry, as the ground. வெயிலிற் காய்ந்த பொருள். 4. மெலிதல் (வின்);; to be dried up, as he humours of the body, to become emaciated. 5. வயிறு பசியால் வருந்துதல்; starving due to nunger. ம. காயுக; க. காய்; தெ. காகு; து. காயுனி; குட. கோத். காய்; துட.கேகாய்; கொலா., நா. காங்க்; பர். காபிப்; கோண். காசனா; குரு. காய்னா; மா. க்வயெ;கூ. காந்த. Fin. kajo, Es. kajastada, Jap. kaga; Q. jaya. {} to be hot, to burn. The Tel. {} (also {});, Can. {}, to burn, and the Can. {}, heat, compared with the Tamil {};காய்-தல் show that the ultimate root is {} to which y or gu is added dialectically as a formative. The only Sans. word which seems to be related to this Drav. One is {}, to desire; and we should not, perhaps, have suspected this to be related, were it not for its connection with the Hebrew ham-ad, to desire, and the derivation of that word from {} (base {});, to be warm. Comp. with the Dravidian {}, the Greek kai-w ({}); (Attick {}); ({}); to burn, to be hot. The words seem identical. Liddell and Scott represent kaiw [kaić] to be connected with the Sanskrit such, to dry. How much more nearly it appears to be connected with the Dravidian {}. Besides, the Dravidian languages have another word which seems to have a real relation to sush a – viz., {}, to burn. To heat, or be hot, to burn, to boil. Comp. Finnish keite, keitta, to boil, to cook; Hungarian keszil. Comp, especially the Indo-European affinities of this word. [கனல் → கனய் → காய்] காய்3 kāyttal, செ.கு.வி (v.i.) மரம்செடி முதலியன காய்களைக் கொள்ளுதல்; to bear fruit ம. காய்க்குக.க. காய், தெ. காக, கான்க;து. காயுனி. [கள் → காள் → காழ் → காய். (முதா:24);.] காய்-த்தல் காய்4 kāyttal, 2செ.கு.வி (v.i.) நுகர்வு முதிர்தல்; to be of ripe experience. “உணரு மாண் பினாற், காய்த்தவர்” (கம்பரா. விபீடண. 95);. [கா → காய்] காய்5 kāy, பெ. (n.) 1. முதிர்ந்து பழுக்காத மரஞ் செடிகளின் பலன்; unripe fruit. “கனி யொழிய…. நற்கா யுதிர்தலு முண்டு” (நாலடி, 19.); 2. மூவசைச் சீரின் இறுதியிலுள்ள நேரசை; the last metrical division in a word of three syllables sounding like kay. “ஆம்கடை காயடையின்” (காரிகை உறுப்பு:7); 3. காய்ச்சீர் பார்க்க;see {}. 4. பழுக்காத புண்கட்டி; unripe boil. கட்டி இன்னும் காயாக இருக்கிறது. 5. முதிராது விழுங்கரு (உ.வ.);; aborted foetus. 6. சதுரங்கம் முதலிய விளையாட்டில் பயன்படும் காய்; chessman, die. 7. திருமண விழாவின்போது செய்யப்படும் பருப்புத் தேங்காய்ப் பணிகாரம் (இ.வ.);; a preparation in the form of a cone made of pulse mixed with treacle, one of the many important eatables exhibited in a marriage, ம., குட., கோத. காய்; க. காய், காய, காயி; தெ. காய; து., பட காயி; துட.கோய; கொலா. கைக்; நா. காய்க்; கோண். காயா, கைய; கூ. காவு; குவி. கைய்;குரு. கேன. [கா → காய்.] காய்6 kāy, பெ. (n.) 1. புண் ஆறிய வடு; cicatrice form a wound. அடிபட்டு உடம்பிற் காயுண்டாயிற்று. 2. உடம்பில் உண்டாகும் வெடிப்பு; callous humour, excrescence, Wart. Mhr.. {} [கா → காய்] காய்7 kāyttal, 4 செ.கு.வி. (v.i.) தழும்புண்டாதல்; to become callous, to form hard bunches, knots, warts excrescences on the body. காய்க்கட்டி; as from wounds, from walking, from using tools. கையெல்லாம் காய்த்துப்போயிற்று. [கா → காய்] |
காய்-தல் | காய்-தல் kāytal, செ.கு.வி.(v.i.) 1. புண்ணாதல்; healing as of a wound. 2. மெலிதல்; becomingemaciated. 3. காய்ச்சல் காய்தல்; raging with fever; being feverish. 4, உலர்தல்; drying. 5. பட்டினியாய்; starving. 6. சூடேறல்; getting heated. 7. பழுக்கக் காய்தல்; getting red-hot. 8, உடம்பு சுடுதல்; growing warm. as of body in temperature. 9. பசையறல்; as in udadukayda, parching as of lips or the mouth. 10.களைப்புறல்; getting exhausted. 11. அழித்தல்; killing. 12. வெட்டுதல்; cutting. 13. காய்ச்சலுறல்; getting feverish. 14. வாடல்; withering (சா.அக.);. காய்-தல்2 kāytal, 2.செ.குன்றாவி. (v.i.) 1. எரித்தல்; to burn, consume. “மதவேள் தன்னுடலாங் காய்ந்தார்” (தேவா 15:6);. 2. அழித்தல்; to kill, destroy. “கஞ்சனைக் காய்ந்தானை” (திவ். பெரியதி. 7.6.5);. 3. விலக்குதல்; to remove, do away with, lay aside, “கோப முதலிய குற்றங் காய்ந்தார்” (பெரியபு அப்பூதி.2);. 4. வெறுத்தல்; to be prejudice to dislike, hate. “காய்த லுவத்த லகற்றி யொருபொருட்க ணாய்தல்” (அறநெறி. 22);. ம. காயுக [கனல் → கனய் → காய்] |
காய்-த்தல் | காய்-த்தல் kāyttal, செ.கு.வி.(v.i.) 1. மரத்தில் காய்விடல்; bearing fruit. 2: முதிர்தல்; nmaturing as in kadir-Vidal as corn. 3. பரு அல்லது கழலை உண்டாதல்; appearance or formation of warts, tumours or other hard eruptions on the body as in cases of small-pox or syphilis (சா.அக.);. |
காய்கண்டிதம் | காய்கண்டிதம் kāykaṇṭidam, பெ. (n.) வேளைச் செடி; five leaved cloeme (சா.அக.);. [காய் + கண்டிதம்] |
காய்கறி | காய்கறி kāykaṟi, பெ. (n.) உணவுக்குரிய மரக்கறிகள்; unripe fruits, vegetables and the like used for preparing Curry. ம. காய்கறி, து. காயிகசிப்பு [காய் + கறி] |
காய்கொள்(ளு)-தல் | காய்கொள்(ளு)-தல் kāykoḷḷudal, செ.கு.வி.(v.i.) 1. காய்த்தல்; to bear fruit. 2. காயாதல்; to take the shape of a fruit [5m.3.13.]. து. காயிபோபுனி [காய்+கொள்] |
காய்க்கடுக்கண் | காய்க்கடுக்கண் kāykkaḍukkaṇ, பெ. (n.) அக்கமணி வைத்துக்கட்டிய கடுக்கன் (யாழ்ப்);; ear ring with rudraksa pendants, the water falling from which during baths is believed to have a purifying effect. [காய் + கடுக்கன்] |
காய்க்கட்டி | காய்க்கட்டி kāykkaṭṭi, பெ. (n.) பழுக்காத கட்டி; undeveloped abscess (சா.அக.); [கா → காய்] |
காய்க்கரு | காய்க்கரு kāykkaru, பெ. (n.) 1. முதிராத கரு; Child not fully developed. 2. சிதைந்த கரு; aborted child (சா.அக.);. [காய் → கரு] |
காய்க்கறியமிது | காய்க்கறியமிது kāykkaṟiyamidu, பெ. (n.) கடவுட்குப் படைக்குங் கறி; vegetable curry, as an offering to a deity. “அப்பக் காய்க் கறியமிதுக்கு மிளகு முக்காற் செவிடும்” (SII.I.26-13pg.127);. [காய் + கறி + அமுது] |
காய்க்கழலை | காய்க்கழலை kāykkaḻlai, பெ. (n.) கெட்டியானதும், பழுக்காததுமாகிய கழலைக்கட்டி; a hard fibrous tumour (சா.அக.);. [காய் → கழலை.] |
காய்க்கீரை | காய்க்கீரை kāykārai, பெ. (n.) முருங்கைக் கீரை; moringa leaf (சா.அக.);. [காய் + கீரை.] |
காய்க்குடல் | காய்க்குடல் kāykkuḍal, பெ. (n.) 1. புடைவளர்ச்சி கொண்ட குடல் ; appendages of the intestines. 2. நெஞ்சங்குலையோடு சேர்ந்த குடல்; entrails. 3. கெட்டிக் குடல்; a condition of the bowels in which evacuations are not freed easy. 4. காயினுள்ளிருக்கும் சக்கை; soft pithy substance inside certain fruits such as jack, pumpkin etc (சா.அக.);. [காய் + குடல்.] |
காய்க்குமரம் | காய்க்குமரம் kāykkumaram, பெ.(n.) காய் காய்க்கும் மரம்; tree bearing fruit as opposed to kāyā-maram (சா.அக.);. [காய்க்கும்+மரம்] |
காய்க்கும் பருவம் | காய்க்கும் பருவம் kāykkumbaruvam, பெ. (n.) 1. காய் தோன்றும் காலம்; fruit-bearing season. 2. பிள்ளைபெறும் பருவம் (வின்.);; age of child bearing. [காய்க்கும் + பருவம்] |
காய்க்குலை | காய்க்குலை1 kāykkulai, பெ. (n.) நெஞ்சங் குலையோடு கூடிய ஈரற்குலை; the heart including the lungs and the liver (சா.அக.);. [காய் + குலை.] காய்க்குலை2 kāykkulai, பெ. (n.) காய்களுள்ள கொத்து; bunch of unripe fruits. “காய்க்குலைத் தெங்கும்” (சிலப் 13:193);. [காய் + குலை] |
காய்க்குள்பாடாணங்கட்டி | காய்க்குள்பாடாணங்கட்டி kāykkuḷpāṭāṇaṅkaṭṭi, பெ.(n.) பேய்க்குமட்டி; bitter apple – Cucumis colocynthis (சா.அக.);. [காய்க்குள்+பாடாணம்+கட்டி] |
காய்க்கொட்டை | காய்க்கொட்டை kāykkoṭṭai, பெ.(n.) காய் நிலையிலேயே பறித்துக் காய வைக்கப்பட்ட கொட்டை; dried nut almost in a unriped stage. [காய்+கொட்டை] |
காய்ங்கனி | காய்ங்கனி kāyṅgaṉi, பெ. (n.) காயும் கனியும் (தொல். எழுத். 48. உரை.);; fruits ripe and unripe. ம. காய்கணி. [காய் + உம் + கனி] |
காய்சண்டிகை | காய்சண்டிகை kāycaṇṭikai, பெ.(n.) தேவர் உலகப் பெண்; a celestial woman. இவள் தன் கணவனுடன் பொதியமலையின் வளம் காணச் சென்றாள். அங்கு விருச்சிகர் என்னும் முனிவர் பொருட்டு பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பழுத்து அவர் பசியைப் பன்னிரண்டு ஆண்டு வரை போக்கவல்ல நாவற்கனியைக் காலால் சிதைத்துவிட்டாள். எனவே அம்முனிவர் கொடுத்த சாவிப்பால் (சாபம்); யானைத்தி என்னும் கொடிய பசி நோயால் வருந்திய இவள் மணிமேகலை தந்த உணவால் பசி நீங்கினாள். பின் தன் உலகம் செல்கையில் விந்தமலை காக்கும் விந்தாகடிகையால் இழுக்கப்பட்டு அவள் வயிற்றில் அடங்கினாள் (அபி.சிந்:);. |
காய்சரக்கு | காய்சரக்கு kāycarakku, பெ. (n.) 1. உலர்ந்த மருந்துச் சரக்கு; dried herbs or drugs. 2. ஊமத்தைத் தும்மப் பேரி காயாகவே இருக்கும் மருந்துச் சரக்கு; unripe medicinal fruit such as datura, bitter-app etc (சா. அக.);. [காய் + சுரக்கு] |
காய்சினவழுதி | காய்சினவழுதி kāyciṉavaḻudi, பெ. (n.) தலை சங்கத்தின் தொடக்கத்திலிருந்த பாண்டியன் [இசை 1, உரை); the first Pandyan of the first Tar Sangam. [காய் + சினம் + வழுதி. காய்சினம் = கடுஞ்சிற் வழுதி பாண்டியர்களின் குடிப்பெயர்] |
காய்ச்சகட்டி | காய்ச்சகட்டி kāyccakaṭṭi, பெ.(n.) 1. காசுக் கட்டி; Indian catechu. 2. காய்ச்சலால் வயிற்றுள் காணுங் ஈரற் கட்டி; enlargement of the spleen from fever, 3. காய்ச்சி எடுத்தக் கட்டி; lump of any substance derived from boiling (சா.அக.);. [காய்ச்சு+கட்டி] |
காய்ச்சற்கட்டி | காய்ச்சற்கட்டி kāyccaṟkaṭṭi, பெ. (n.) காய்ச்ச நோயால் வயிற்றில் உண்டாகுங்கட்டி; enlarge-me of the spleen, etc., ague-cake. [காய்ச்சல் + கட்டி] |
காய்ச்சற்காரன் | காய்ச்சற்காரன் kāyccaṟkāraṉ, பெ. (n.) 1. காய்ச்சல் நோய் உள்ளவன்; one who suffer from fever. 2. பணம் இல்லாதவன்; one who suffer from penury. 3. பொறாமையால் மனவெரி ச்சலுள்ளவன் (இ.வ.);; a jealous or rancoro person. [காய்ச்சல் + காரன்] |
காய்ச்சற்காரி | காய்ச்சற்காரி kāyccaṟkāri, பெ.(n.) காய்ச்சலால் தாக்குண்ட பெண்; a woman who is suffering from fever (சா.அக.);. [காய்ச்சல் – காய்ச்சற்காரி. காரி உடைமைப் பொருள் பெண்பாலிறு] |
காய்ச்சற்பட்டை | காய்ச்சற்பட்டை kāyccaṟpaṭṭai, பெ.(n.) 1. பூநாறிப்பட்டை; yellow-flowered resin seed – Pittosporum tetraspermum. 2.உலர்ந்த பட்டை, dried bark. 3. சுரப்பட்டை, chincona bark (சா.அக.);. [காய்ச்சல்+பட்டை] |
காய்ச்சற்பாடானம் | காய்ச்சற்பாடானம் kāyccaṟpāṭāṉam, பெ.(n.) பிறவி நஞ்சு (பாஷாண); வகைகளுள் ஒன்று; a mineral poison (செ.அக.);. [காய்ச்சல் + பாடாணம்] |
காய்ச்சற்பாடு | காய்ச்சற்பாடு kāyccaṟpāṭu, பெ. (n.) 1. நில கடலை பருப்பின் நன்றாகக் காய்ந்தநிலை; condition of beingfully dried, as ground-nutkernels rea for crushing, opp. to {}, நெல் காய்ச்சப் பாடானது (உ.வ.);. 2. நெல் முதலியவற்றை யுலர்த்துதலால் உண்டாகும் அளவுக் குறை; reduction in quantity, as of paddy, etc., when dried. 3. பொருளிழந்து ஏங்கிநிற்கும் நிறை; barrenness, impoverished state. [காய்ச்சல் + பாடு] |
காய்ச்சலடக்கி | காய்ச்சலடக்கி kāyccalaḍakki, பெ. (n.) காய்ச்ச நோயை போக்கும் மருந்து; febrifuge, antidote fever. [காய்ச்சல் + அடக்கி] |
காய்ச்சல் | காய்ச்சல் kāyccal, பெ.(n.) 1 பசி; hungeras in vayirru-k-kāyccal 2. வறட்சிக் காற்று; dry weather. 3.காய்ச்சுதல்; boiling; heating (சா.அக.);. [காய்.→அகாய்ச்சல்] காய்ச்சல் kāyccal, பெ. (n.) 1. உலர்ச்சி, heating drying. புதுநெல்லை இரண்டு காய்ச்சல் போட்டு குத்தவேண்டும் (உவ.);. 2. வெப்பம்; heat, warmi dryness. 3. காய்ச்சல் நோய்; fever, inflammatory state of the system. 4. மனவெரிச்சல்; hatresancourd. ம. காய்ச்சல் க. காகலு. [காய் + காய்ச்சல்] |
காய்ச்சல்வெள்ளம் | காய்ச்சல்வெள்ளம் kāyccalveḷḷam, பெ. (n.) புழுதிப்பருவத்தில் விதைத்தபின் வயலிற் பாய்ச்சம் பாசனநீர் (நாஞ்சில்);; water let into a field aft sowing in a dry condition. [காய்ச்சல் + வெள்ளம்] |
காய்ச்சாற்றல் | காய்ச்சாற்றல் kāyccāṟṟal, பெ.(n.) கொதிக்க வைத்துப் பிறகு ஆற்றுகை; to cool after boiling (சா.அக.);. [காய்+ஆற்றல்]. |
காய்ச்சாற்றியநீர் | காய்ச்சாற்றியநீர் kāyccāṟṟiyanīr, பெ.(n.) கொதிக்க வைத்துப் பிறகு ஆற வைத்த நீர்; water boiled and cooled (சா.அக.);. [காய்ச்சி+ஆற்றிய+நீர்] |
காய்ச்சி | காய்ச்சி kāycci, பெ. (n.) துவரை (இ.வ.); pigeon – pea, dhal. [காய் → காய்ச்சி] |
காய்ச்சிக்கிழங்கு | காய்ச்சிக்கிழங்கு kāyccikkiḻṅgu, பெ. (n.) காச்சிக்கிழங்கு (நாஞ்சில்); பார்க்க;see kaccik. {}. [காய் + காய்ச்சி + கிழங்கு] |
காய்ச்சிப்பதப்படுத்து-தல் | காய்ச்சிப்பதப்படுத்து-தல் kāyccippadappaḍuddudal, 5 செ.குன்றாவி. (v.t.) 1. மாழைகளை அடிப்பதற்கு இசையும்படி நைப்புண்டாக முன்ன தாகவே பதமாகக் காய்ச்சுதல்; the process of applying heat to a metal and then cooling it very slowly for purposes of removing its brittleness and increasing its ductility and malleability. 2. துவைச்சல்; the process of giving the requisite temper or degree of hardness of softness as to iron or steel (சா. அக.);. [காய்ச்சி + பதம் + படுத்து] |
காய்ச்சிரக்கு | காய்ச்சிரக்கு kāyccirakku, பெ. (n.) காட்டுக் காய்ச்சுரை; wild sour greens (சா.அக.); [காய் + சரக்கு- காய்ச்சரக்கு → காய்ச்சிரக்கு (கொ.வ);.] |
காய்ச்சிரங்கு | காய்ச்சிரங்கு kāycciraṅgu, பெ. (n.) பழுக்காத கட்டி; unripe boil or abscess (சா. அக.);. [காய் + சிரங்கு] காய்ச்சிரங்கு2 kāycciraṅgu, பெ. (n.) காசிலிக் கீரை (சு.வை.ர. 448] பார்க்க {} [காசிலி → காச்சிலி → காச்சிரங்கு (கொ.வ.);] |
காய்ச்சிறக்கல் | காய்ச்சிறக்கல் kāycciṟakkal, பெ.(n.) 1. வாலையில் இட்டு இறக்குகை; distilling. 2. நெருப்பில் கொதிக்க வைத்து வடிவட்டுகை; filtering after boiling (சா.அக.);. [காய்ச்சி+இறக்கல்.] |
காய்ச்சிவடி-த்தல் | காய்ச்சிவடி-த்தல் kāyccivaḍittal, செ.கு.வி. (v.i.) 1. வாலையிலிட்டிறக்கல்; distilling. 2. நெருப்பிற் கொதிக்க வைத்து வடிகட்டுதல்; filtering after boiling (சா. அக.);. [காய்ச்சி + வடி.] |
காய்ச்சீர் | காய்ச்சீர் kāyccīr, பெ. (n.) நேரீற்று மூவசைச்சீர் (யாப். வி.1); ; metrical foot of three {}, ending in {}. [காய் + சீர்] |
காய்ச்சு | காய்ச்சு1 kāyccudal, 5 செ. குன்றாவி (v.i.) 1. காயச் செய்தல்; to boil. கஞ்சி காய்ச்சினாள். 2. சமைத்தல்; to cook. 3. தீயாற் சூடாக்குதல்; to heat by fire. 4. உலர்த்துதல் (வின்.);; to dry, warm, as in the sun or by putting near the fire. 5. கடிதல்; to scold, reprove, take to task. 6. நையப்புடைத்தல்; to beat, belabour. முதலாளி அவளை நன்றாக்க் காய்ச்சிவிட்டார் (உ.வ.);. 7. சாயமிடுதல். (யாழ்);; to dye, tinge, as a cloth, ம. காயிக்குக: பட காக. Fin. {} Es. keeta, Mari, küam, Jap, gutaguta, Q. janchay. [காய் → காய்ச்சு-.] காய்ச்சு2 kāyccu, பெ. (n.) தீயிற்காய்ச்சுகை; heating, as metal or a stone, boiling, as a liquid. அதனைத் தீயில் இரண்டு காய்ச்சுக் காய்ச்சினான். ம. காச்சு Fin. kahi; Lap. gaske, Komi. kos, Jap. kaseru; Mordvin, koske. [காய் → காய்ச்சு] காய்ச்சு3 kāyccu, செ.குன்றாவி. (v.t.) உருக்குதல்; to melt. பொன்னை காய்ச்சிக் கம்பியாக்கினான் (உ.வ.);. ம. காயிக்குக; க.,து. காசு;தெ. கான்க. Fin. kesa; Mordvin, kiga, Mong, ges, geske, Karel. keza [காய் → காய்ச்சு] |
காய்ச்சு நீருப்பு | காய்ச்சு நீருப்பு kāyccunīruppu, பெ. (n.) கடல் நீரைக் காய்ச்சியெடுத்த உப்பு; common salt obtained by boiling sea-water (சா. அக.);. மறுவ. கடலுப்பு [காய்ச்சு + நீர் + உப்பு] இனவகை. கடலுப்பு, கவட்டுப்பு. கல்லுப்பு |
காய்ச்சுகுறி | காய்ச்சுகுறி gāyccuguṟi, பெ. (n.) கொதிவரும் சூட்டின் வரம்பு; the temperature at which boiling commences (சா. அக.);. [காய்ச்சு + குறி] |
காய்ச்சுகை | காய்ச்சுகை kāyccukai, பெ.(n.) 1. கடுகை; the operation of heating – Calefaction. 2. கொதிக்க வைக்கை; the process of vapouraisation by bubble formation (சா.அக.);. [காய்-காய்ச்சுகை] |
காய்ச்சுக்கட்டி | காய்ச்சுக்கட்டி kāyccukkaṭṭi, பெ. (n.) காசுக் கட்டி பார்க்க;see kasu-k-{} [காய்ச்சு + கட்டி] |
காய்ச்சுக்கல் | காய்ச்சுக்கல் kāyccukkal, பெ. (n.) போலி மாமணி (இரத்தினம்); (வின்.);; lit., dyed or tinged stone, counterfeit gem. [காய்ச்சு + கல்] |
காய்ச்சுக்குப்பி | காய்ச்சுக்குப்பி kāyccukkuppi, பெ. (n.) செய்நீர் (திராவகம்); காய்ச்சி இறக்கும் குப்பி (வின்.);; glass vessel used in sublimation, elembic, still. ம. காசகுப்பி [காய்ச்சு + குப்பி] |
காய்ச்சுசாரம் | காய்ச்சுசாரம் kāyccucāram, பெ. (n.) வளையலுப்பு; glass-gall (சா.அக.);. [காய் → காய்ச்சு + சாரம்] |
காய்ச்சுண்டி | காய்ச்சுண்டி kāyccuṇṭi, பெ. (n.) காசுக்கட்டி; black catechu (சா. அக.);. மறுவ. காய்ச்சுண்டை [காய்ச்சு + சுண்டி] |
காய்ச்சுண்டை | காய்ச்சுண்டை kāyccuṇṭai, பெ.(n.) காசுக்கட்டி பார்க்க; see kasu-k-kutti (செ.அக.);. |
காய்ச்சுநீர் | காய்ச்சுநீர் kāyccunīr, பெ. (n.) வெந்நீர்; hot water (சா.அக.);. [காய்ச்சு + நீர்] |
காய்ச்சுபால் | காய்ச்சுபால் kāyccupāl, பெ.(n.) கொதிக்க வைத்த பால்; boiled milk (சா.அக.);. [காய்ச்சு+பால்.] |
காய்ச்சுப்பால் | காய்ச்சுப்பால் kāyccuppāl, பெ.(n.) முப்பால்களுள் ஒன்றான, காய்ச்சிய பால் boiled milk, one of mu-p-pâl (செ.அக.);. [காய்ச்சு+பால்.] |
காய்ச்சுப்பு | காய்ச்சுப்பு kāyccuppu, பெ. (n.) 1. சவட்டுப்பு (மூ.இ.);; common salt, extracted from soils by filtration and evaporation or by boiling. 2. உவர்நீரைக் காய்ச்சியெடுக்கும் உப்பு(வின்.);; salt obtained from saltwater. [காய்ச்சு + உப்பு] |
காய்ச்சுமண் | காய்ச்சுமண் kāyccumaṇ, பெ. (n.) வளையல் செய்வதற்குரிய மணல் (G.TPD 175);; fine sand obtained by washing alkaline earth, for making glass-armlets. [காய்ச்சு +. மண்.] காய்ச்சுரை |
காய்ச்சுமுறை | காய்ச்சுமுறை kāyccumuṟai, பெ.(n.) காய்ச்சி வடிக்கும் முறை; the process of boiling down decoctions, medicated oils, syrups etc. [காய்ச்சும்+முறை] எண்ணெய் முதலியவைகளை எட்டிலொன்று. ஆறில் ஒன்று அல்லது நான்கில் ஒன்றாக தமிழ் நூல் முறையிற் சொல்லியபடி காய்ச்சும் முறை (சா.அக.);. |
காய்ச்சுரை | காய்ச்சுரை1 kāyccurai, பெ. (n.) புடமிட்ட பொ (தைலவ. தைல);; gold purified by fire. [காய்ச்சு+உரை.] காய்ச்சுரை2 kāyccurai, பெ. (n.) 1. புளிச்சைக்கீரை (மூ.அ.); பார்க்க;see pul-c-cal-k-kira 2. பேய் சுரை; bitter gourd. 3. காட்டுக் காய்ச்சுரை; w sour greens [(சா. அக.); [காய் + கரை] |
காய்ச்சுறுக்கு | காய்ச்சுறுக்கு kāyccuṟukku, பெ. (n.) புளிச்சைக் கீரை பார்க்க;see puf-ci-cal-k-{} [காய்ச்சுரை → காய்ச்சுறுக்கு (கொ.வ.);] |
காய்ச்சுலவனம் | காய்ச்சுலவனம் kāycculavaṉam, பெ. (n.) காய்ச்சுப்பு (வின்.); பார்க்க;see {}. [காய்ச்சு + உலவனம் த. உலவணம்→ Skt. Lavana.] |
காய்ச்சுவச்சிரம் | காய்ச்சுவச்சிரம் kāyccuvacciram, பெ.(n.) காய்ச்சித் தயாரித்த பிசின் (வச்சிரம்);; glue obtained by boiling from certain parts of animals Gelatine (சா.அக.);. [காய்ச்சு+வச்சிரம், வயிரம்→அவசிரம்→அவச்சிரம்] |
காய்ச்செண்ணெய் | காய்ச்செண்ணெய் kāycceṇīey, பெ. (n.) 1. மருந்து கலந்த எண்ணெய்; oil boiled with drugs. 2. ஊற்றிய விளக்கெண்ணெய்; hot-drawn castor-oil (சா. அக.); [காய்ச்சு + எண்ணெய்] |
காய்ஞ்சிப்போ-தல் | காய்ஞ்சிப்போ-தல் kāyñcippōtal, செ.கு.வி. (vi) உலால்; growing dry, getting dried (சா.அக.);. [காய்ஞ்சி+போ-] |
காய்ஞ்சொறி | காய்ஞ்சொறி kāyñcoṟi, பெ.(n.) செந்தொட்டி; scorpion leaf – Tragia involucrata (சா.அக.);. [காய்+சொறி] இது ஒரு முறுக்கேறிய கொடி. இதன் இலைகள் முசுமுகப்பாயிருக்கும். இதன் கனை உடம்பில் பட்டால் கடுக்கும். பூக்கள் சிறிது பச்சை நிறக்கொத்துகளாக இருக்கும். சிலவேளை ஒரே காம்பில் நிறைய உண்டு. மேல் பூ ஆண், அடிப்பூ பெண். ஆண்டுதோறும் பூக்கும். இதன் சிறுவேருக்கு எவ்வித மணமும், சுவையும் இராது. இதன் வேர் மேகத்திற்கு நல்லது. இதைக் காய்ச்சிக் குடிக்க மூத்திரக் கட்டை உடைத்து நீரைப் பிரிக்கும். இதன் சாற்றை ஆவின் பாலில் சர்க்கரை இட்டுக் கொள்ள காய்ச்சல், சொறி, சிறங்கு இலைகள் போம். இதன் காயை நசுக்கிக் கட்டிகளுக்கு வைத்துக் கட்ட பழுத்து உடையும் (சா.அக.);. |
காய்தா | காய்தா kāytā, பெ.(n.) 1. முறை (வின்.);; order, rule. 2. வழக்கம்; custom, usage, practice. 3. கட்டுப்படுத்துகை; checking. [U.{} → த.காய்தா.] |
காய்த்த | காய்த்த kāytta, இடை(part.) ஓர் உவமவாய்பாடு; particle of comparison. Glsulolosum of ostill: விளங்குமணி (தொல். பொருள். 291 உரை.);. [காய் → காய்த்த (முதிர்தல், நிறைதல்முழுமைய ஒப்புதல்);.] 120 காய்நீரூற்று |
காய்த்தனியம் | காய்த்தனியம் kāyttaṉiyam, பெ. (n.) முசுக் கட்டை; Indian mulberrry tree (சா. அக.);. மறுவ. கம்பளிகொண்டான் [காய் + தனியம்] |
காய்த்தானியம் | காய்த்தானியம் kāyttāṉiyam, பெ. (n.) 1. முதிரை (வின்.);; pulses, containing seeds in pods or legumes, dist, fr. {}. 2. முசுக்கட்டை (மூ.அ.);; Indian mulberry. [காய் + தானியம்] |
காய்த்து-தல் | காய்த்து-தல் kāyddudal, செ.குன்றாவி. (v.i.) 1. எரியச் செய்தல; to ignite, cause to burn, “காய்த்திய பொற்றொடி யேவ” (சிலம்பு 21:55);. 2. சினத்தல் (சிலம். 21:55 அரும்.);. 3. காய்ச்சு-1, 2,3;see {} [காய் → காய்த்து] |
காய்த்தும்பை | காய்த்தும்பை kāyttumbai, பெ. (n.) கறித்தும்பை (வின்.); பார்க்க;see kari-t-tumbai [காய் + தும்பை] |
காய்த்தொட்டி | காய்த்தொட்டி kāyttoṭṭi, பெ. (n.) ஆதொண்டை; thorny caper (சா.அக.); [காய் + தொட்டி] |
காய்நீரூற்று | காய்நீரூற்று kāynīrūṟṟu, பெ. (n.) வெந்நீரூற்று; hot water spring (சா.அக.);. மறுவ. காய்நீர்க்காயம் [காய் + நீர் + ஊற்று] காய்ந்த பதம் |
காய்நீர் | காய்நீர் kāynīr, பெ. (n.) வெந்நீர் (பதார்த்த 78);; warm-water. ம. காய்நீர் [காய் + நீர்] |
காய்நீர்க்கயம் | காய்நீர்க்கயம் kāynīrkkayam, பெ.(n.) வெந்நீர் ஊற்று; hot water spring (சா.அக.);. [காய் + நீர்+கயம்] காய்நீர்க்கயம் kāynīrkkayam, பெ. (n.) காய்நீரூற்று பார்க்க;see {} (சா.அக.);. [காய் + நீர் + கயம் (நீர்நிலை);.] |
காய்நீர்விரணம் | காய்நீர்விரணம் kāynīrviraṇam, பெ.(n.) வெந்நீரினால் ஏற்பட்ட் சூட்டுப்புண் (விரணம்);; a burn or injury caused by bot water or other hot liquid, Scald (சா.அக.);. [காய்+நீர்+Skt.விரணம்] |
காய்நெரிஞ்சில் | காய்நெரிஞ்சில் kāyneriñjil, பெ. (n.) நெருஞ்சில் வகையுள் ஒன்று; downy fuinjuifoil voine (சா.அக.);. [காய் + நெரிஞ்சில்] |
காய்ந்த பதம் | காய்ந்த பதம் kāyndabadam, பெ. (n.) உலர்ந்த பதம்; dried state (சா.அக.);. [காய்ந்த + பதம்] |
காய்ந்ததிராட்சை | காய்ந்ததிராட்சை kāyntatirāṭcai, பெ.(n.) 1. உலர்ந்த கொடி முந்திரி, dried grape. 2. பாகில் இட்ட கொடி முந்திரி; raisin (சா.அக.);. [காய்ந்த+திராட்சை] |
காய்ந்தபேரிந்து | காய்ந்தபேரிந்து kāyntapērintu, பெ.(n.) கச்சூரம்; dried date-fruit (சா.அக.);. [காய்ந்த+பேரிந்து] |
காய்ந்தமீன் | காய்ந்தமீன் kāyndamīṉ, பெ. (n.) கருவாடு; dried fish (சா.அக.);. [காய்ந்த + மீன்.] |
காய்ந்துபோ-தல் | காய்ந்துபோ-தல் kāyndupōtal, 8 செ.கு.வி.(v.i.) 2 உலர்தல்; growing dry (சா.அக.);. [காய்ந்து + போ] |
காய்ந்தெரியான் | காய்ந்தெரியான் kāynderiyāṉ, பெ. (n.) கருஞ்செம்பை; common Sesban (சா.அக);. [காய்ந்து + எரியான்] |
காய்பலம் | காய்பலம் kāypalam, பெ.(n.) 1. தான்றி; a tree, devil”s abode – Terminalia belerica. 2. தேக்கு; teak – Tectona grandis (சா.அக.);. [காய்+பலம்] |
காய்புட்டியெண்ணெய் | காய்புட்டியெண்ணெய் kāypuṭṭiyeṇīey, பெ.(n.) கையாப்புடை இலையினின்று செய்யும் எண்ணெய்; medicated and distilled oil extracted from leaves – Cajuputi oleum oil (சா.அக.);. [கையா+புடை+தைலம்.] இது மிகத் தெளிவாகவும், துலக்கமுள்ளதாகவும், பச்சை நிறமாகவும் உள்ளது. எளிதில் ஆவியாய்ப் போகக் கூடியது.கற்பூரத்தைப்போல்மணமாயிருக்கும். இதை மருந்தாக உள்ளுக்குக் கொடுக்கச்சுறுசுறுப்பை உண்டாக்கும். வியர்வையைப் பிறப்பிக்கும். பூசு மருந்தாகப் பயன்படுத்தத் தோல் சிவக்கும் காய்ச்சல், பாரிசவாயு, நரம்பிசிவு, வாதவலி குணமாகும். வாந்தி பேதிக்குச் சிறந்த மருந்தாகும். வயிற்றுவலி, வயிற்றிசிவு, சூதக சன்னி முதலியவை போம் (சா.அக.);. |
காய்ப்ப | காய்ப்ப kāyppa, ஒர் உவம உருபு (தொல்.பொருள். 286); a particle of comparison. [காய் + காய்ப்ப] |
காய்ப்படாமை | காய்ப்படாமை kāyppaṭāmai, பெ.(n.) காய்க்காமை; not yielding fruit; unproductiveness (சா.அக.);. [காய்+படாமை] |
காய்ப்பனை | காய்ப்பனை kāyppaṉai, பெ. (n.) சாறெடுக்காத பெண்பனை (G.Tn.D.307);; fruit-bearing palmyra which has not been tapped, one of five varieties of idarayittam-panai. [காய் + பனை] |
காய்ப்பரு | காய்ப்பரு kāypparu, பெ.(n.) 1. பழுக்காத கட்டி; unripe boil. 2. கடினப் பரு; anyhorny growth such as a wart, Keratosis. 3.காய்ப்பு; callosity (சா.அக.);. [காய் + பரு.] |
காய்ப்பறங்கி | காய்ப்பறங்கி kāyppaṟaṅgi, பெ. (n.) கோழி நோய்களிலொன்று (சங்.அக.);; a disease of fowls. [காய் + பறங்கி] |
காய்ப்பலா | காய்ப்பலா kāyppalā, பெ. (n.) கறிக்குதவும் பலா; edible jack as distinguished from other varieties of non-edible fruit (சா.அக.);. [காய் + பலா] காய்ப்பலா |
காய்ப்பழம் | காய்ப்பழம் kāyppaḻm, பெ. (n.) முற்றும் பழுக்காத ugih (இ.வ);; fruit not fully riped. [காய் + பழம்] 21 காய்ப்புக்காய்-த்தல் |
காய்ப்பாகல் | காய்ப்பாகல் kāyppākal, பெ. (n.) 1. பாகற்கொடி; spiked bitter cucumber. 2. ஒருவகைக் கசப்புப் பாகல்; a bitter variety of ({}); bitter-gourd (சா.அக.); [காய் + பாகல்] |
காய்ப்பாலை | காய்ப்பாலை kāyppālai, பெ. (n.) பாற்சோற்றிப் பாலை; Indian gutta-percha (சா.அக.);. [காய் + பாலை] |
காய்ப்பு | காய்ப்பு1 kāyppu, பெ. (n.) 1.வெறுப்பு (வின்.);; dislike, aversion, disgust. 2. மட்டமான இரும்பு (யாழ்ப்);; hard inferior iron. ம. காய்பு [காய் →காய்ப்பு] காய்ப்பு2 kāyppu, பெ. (n.) மரஞ்செடி முதலியன பலன் தருகை; produce of a tree, crop of fruit or grain. ம. காய்பு தெ. காபு [காய் → காய்ப்பு] காய்ப்பு3 kāyppu, பெ. (n.) 1. தோலின் தடிப்பு; callousness of skin. 2. தழும்பு (ஈடு. 4,2,5 ஜீ.);; scar, callous excrescence. [காய் → காய்ப்பு] |
காய்ப்புக்காய்-த்தல் | காய்ப்புக்காய்-த்தல் kāyppukkāyttal, 4 செ.கு.வி. (v.i.) உடம்பின் தோல் உரம் பெறுதல்; the hardening |
காய்விடு-தல் | காய்விடு-தல் kāyviṭutal, பெ.(n.) சிறுவர்கள் ஒருவரோடொருவர் பேசாத வகையில் நட்பை முறித்தல்; of children break friendship. மிட்டாய் தராவிட்டால் உனோடு காய்விட்டு விடுவேன் என்றான்(க்ரியா); [காய்+விடு-தல்.] |
காய்வெட்டி | காய்வெட்டி kāyveṭṭi, பெ.(n.) கழலை, பரு முதலிய சதை வளர்த்தியை அறுக்கப் பயன்படுத்தும் கத்தி, a knife or instrument for removing tumours, warts etc. (சா.அக.);. [காய்+வெட்டி.] |
காரகக்கொம்பு | காரகக்கொம்பு kārakakkompu, பெ. (n.) கருப்பு மாட்டுக் கொம்பு horn of a black ox(சா.அக.);. [காரகம்+கொம்பு] |
காரகத்தி | காரகத்தி kārakatti, பெ. (n.) கருப்பகத்தி, black sesbane (சா.அக.);. [கார்+அகத்தி] |
காரகபஞ்சகம் | காரகபஞ்சகம் gāragabañjagam, பெ.(n.) ஐவகைப் பொறிகளின் செயல் (சி.சி.1:5, சிவாக்);; the five organs of action. [Skt.{} + {} → த.காரகபஞ்சகம்.] |
காரகப்பட்டை | காரகப்பட்டை kārakappaṭṭai, பெ. (n.) 1. வெட்டைச் சூடு அல்லது வெப்பத்தினால் உடம்பின் மேற்காணும் படை நோய்; a disease like eczema found on the surface of theskininany partofthe body due to venereal causes. 2 வெள்ளைநோய்ப்படை : ring-wom. 3. உள்ளங்கை, உள்ளங்காலிற் காணும்படை, red spots on the palms and soles – Acrodynic erythema (சா.அக.);. [காரகம்+பட்டை] |
காரகம் | காரகம் kārakam, பெ. (n.) 1. முதலை; crocodile, 2. காரகப்படை பார்க்க; see kāraga-p-padaf (சா.அக.);. காரகம் gāragam, பெ.(n.) சிறைச்சாலை; jail, prison, dungeon. “காரகத் திவனையாக்கி” (உபதேசகா.சிவபுண்.338);. [Skt.{} → த.காரகம்.] |
காரக்குழம்பு | காரக்குழம்பு kārakkuḻmpu, பெ. (n.) உறைப்பான புளிக்குழம்பு; a kind of hot sauce with a tamarind base. [காரம்+குழம்பு] |
காரசகரம் | காரசகரம் kāracakaram, பெ. (n.) ஒரு வகை நஞ்சு மருந்துப் பூடு; an unknown poisonous medical plant (சா.அக.);. [காரம்+சகரம்.] காரசத்து karasattu, பெ.(n); 1. பூநீர் ஆற்றல் sodium. 2. சாம்பல் ஆற்றல்; potash. 3. ஒரு தாது; potassium (சா.அக.);. [காரம்+சத்து] |
காரசாரச்சரக்கு | காரசாரச்சரக்கு kāracāraccarakku, பெ. (n.) 1. உறைப்பான சரக்கு pungent drug. 2. உப்புச் சரக்கு; alkali and acid drugs (சா.அக.);. [காரம்+சாரம்+சரக்கு.] |
காரசாரநீர் | காரசாரநீர் kāracāranīr, பெ. (n.) பனிக் குடத்து நீர்; fluid of amniotic sac-Liquor ammi(சா.அக.);. [காரம்சாரம்+நீர்] |
காரசாரநீறு | காரசாரநீறு kāracāranīṟu, பெ. (n.) பூநீறு, fuller”s earth (சா.அக.);. [காரசாரம்+நீறு.] |
காரசாரப்பஞ்சபூதம் | காரசாரப்பஞ்சபூதம் kāracārappañcapūtam, பெ. (n.) ஐந்து வகைக் கூறான உப்புப் புளிவகைச் சரக்குகள்; the five kinds of salt and acid drugs divided according to the first principles of the five elements. [காரம்+சாரம்+பஞ்ச+பூதம்] காரப் பஞ்சபூதம் : 1. வெடியுப்பு: earth, nitre. 2. கல்லுப்பு; water, common salt, 3. வளையலுப்பு; fire, glass gall. 4. சீனம்; air, alum. 5. பூநீறு: sky, fuller”s earth (சா.அக.);, |
காரசாரமின்மை | காரசாரமின்மை kāracāramiṉmai, பெ. (n.) 1. சுவையில்லாமை; tastelessness insipid. 2. உப்பு, புளிப்பு, காரம் இல்லாமை, devoid of the taste of salt, acid and alkali. 3. உறைப்பில்லாமை; devoid of pungency (சா.அக.);. [காரம்+சாரம்+இன்மை] |
காரசாரவுப்பு | காரசாரவுப்பு kāracāravuppu, பெ. (n.) 1. கல்லுப்பு: sea-salt 2. காரம், சாரம், உப்பு மூன்றும் கூடிய பொருள்; any substance consisting of atleast all the three kinds, that is alkali, acid and salt. 3.காரம், புளி, உப்புச் சரக்கு வகைகள்; the three kinds of drugs that is alkali, acid, and salt. 4. இருப்பத்தைந்து சரக்குகளான உறைப்பான உப்பு வகைகள்; alkaline salts consisting of 25 drugs. [காரம்+சாரம்+உப்பு] உறைப்பான உப்பு வகையாவன : 1.அமுரி, urine salt. 2. இணங்கள்; nitre or salt-petre. 3. இந்துப்பு; rock-salt. 4. எவட்சாரம்; another variety of prepared salt. 5. ஏம்பச்சாரம்; an alchemical salt. 6. கடல் நுரை; sea froth, 7. கல்லுப்பு; sea-salt. 8. கற்பூரம்; medicinal camphor. 9. காகிச்சாரம்; benares salt. 10. காய்ச்சு லவணம்; purified nitre 11. கெந்தி லவணம்; sulphur salt. 12. கோதிலா லவணம்; pure salt. 13, சத்தி சாரம்; a prepared salt. 14. சவட்டுப்பு; salt from fuller”s eath. 15. சாரம் அல்லது நவாச்சாரம்: salammoniac. 16. சிந்துலவணம்; sindh salt. 17. சீரம்; alum. 18. சூடன்: ordinary camphor. 19. பிடாலவணம்; a variety of glass gall. 20. பூநீறு காரம்; soda. 21. பொன்னம்பர்; amber. 22. மீனம்பர்; ambergiris. 23. வழலை அல்லது சவர்க்காரம், fuller”s earth. 24. வளையலுப்பு; glass-gall. 25. வெண்காரம்; borax (சா.அக.);. |
காரசாராதி | காரசாராதி kāracārāti, பெ. (n.) 1. காரமும் சாரமும் உள்ள பொருள்; any substance containing the properties of both alkali and acid. 2.உறைப்புள்ள பொருள்; pungent substance. 3. கிரசாரம் முதலியவைகள்; acid, alkali etc. (சா.அக.);. [காரம்+ சாரம்-சாராதி] |
காரசீரம் | காரசீரம் kāracīram, பெ. (n.) கருஞ்சீரகம், black cumin – Nigellasativa (சா.அக.);. [காரம்+சிரம்] |
காரசுரம் | காரசுரம் kāracuram, பெ. (n.) காட்டு மல்லிகை; wild jasmine (சா.அக.);. |
காரச்சம் | காரச்சம் kāraccam, பெ. (n.) அம்மான் பச்சரிசிச் செடிவகை; an annual with erect or procumbent branches – Euphorbia hirta (சா.அக.);. [கார்+அச்சம்] |
காரச்சரக்கு | காரச்சரக்கு kāraccarakku, பெ. (n.) 1. சாம்பலுப்பு, பூநீறு முதலிய கடுங்கார உப்பு வகைகள்; caustic substances, such as, caustic potash, caustic soda, fuller”s earth etc. 2. கருங்கல் அழிவதால் அம்மண்ணின்று எடுக்கும் காரமான சரக்கு தென்னிந்தியாவில் இக்கார மண் அதிகம்; alkaline drug found in Southern India which is particulary rich in alkaline and earthly minerals, one source of which is decaying granites. 3. தமிழ் மருத்துவத்தில் சொல்லியுள்ள உறைப்பான சரக்குகள்; strong and pungent drugs enumerated in Tamil medicine. [காரம்+சரக்கு.] உப்பு வகைகள் :- 1. அண்டவெண்கரு albumen. 2. அப்பிரகம்; mica. 3. இரும்பு; iron. 4.கடல்நுரை; sea froth. 5. கல்லுப்பு; sea-salt. 6. காரீயம்; black lead and so on. 7. கிளிஞ்சிலோடு; bivalve-shell, 8. கெவுரி; yellow arsenic. 9, சங்கு; chank. 10.சூடன்; camphor. 11. சூதம்; mercury. 12. தங்கம்; gold. 13. தொட்டி; a kind of arsenic. 14. நாகம்; zinc. 15. பச்சைக் கருப்பூரம்; crude camphor. 16. மூத்திரம், urine. 17. விந்து semen. 18. வீரம், perchloride of mercury. 19. வெடியுப்பு; nitre. 20. வெண்ணெய், butter (சா.அக.);. |
காரச்சிவப்பு | காரச்சிவப்பு kāraccivappu, பெ. (n.) புண், புரை, பிளவை முதலியவைகளுக்குப் பயன்படுத்தும் ஒரு வகை சிகப்புக் கடுங்காரத் தண்ணீர்; a red strong and pungent lotion contemplated in Agastya”s work used in surgery for washing or cleaning sores, wounds, cancers, carbuncles etc., (சா.அக.);. [காரம்+சிவப்பு] |
காரச்சுண்ணம் | காரச்சுண்ணம் kāraccuṇṇam, பெ. (n.) 1. முப்புச் சுண்ணம்; an old name for universal solvent and for a medicine curative of all congestions – Alcahest. 2. உடன் சுட்ட சுண்ணாம்பு; unslaked lime. 3.காரமான சுண்ணம்; powerful alkaline compound (சா.அக.);. [காரம்+கண்ணம்.] |
காரச்சூடு | காரச்சூடு kāraccūṭu, பெ. (n.) காரத்தினால் தோலினைச் சுடல்; caustic application; burning or corroding the skin with a caustic substance. [காரம்+குடு] |
காரச்சேவு | காரச்சேவு kāraccēvu, பெ. (n.) காராச் சேவு பார்க்க; see kara-c-cevu |
காரச்சோடம் | காரச்சோடம் kāraccōṭam, பெ. (n.) காரச்சோடா உப்பு; caustic soda (சா.அக.);. [காரம்+சோடம்] |
காரச்சோடா | காரச்சோடா kāraccōṭā, பெ. (n.) காரச்சோடம் பார்க்க; see kara-c-codam (சா.அக.);. [காரம்+சோடா.] |
காரட்டு | காரட்டு1 kāraṭṭu, பெ.(n.) தங்கம், மணிகள் (இரத்தினம்); போன்றவற்றை நிறுக்கும் ஒரு நிறை; carat, standard weight for precious stones, 31/6gr.troy. [U/{} → E.carat → த.காரட்டு.] காரட்டு2 kāraṭṭu, பெ.(n.) மஞ்சள் முள்ளங்கி (சு.வை.ர.482);; carrot. [E.carrot → த.காராட்டு.] |
காரணகாரியம் | காரணகாரியம் kāraṇakāriyam, பெ. (n.) ஒரு செயலின் அடிப்படைக் காரணங்களும் அதன் விளைவுகளும்; cause and effect object and reason. இது ஏன் இப்படி நடந்தது என்பதற்கான காரண காரியங்களை அலசிப் பார்க்க வேண்டும். [காரணம்+காரியம்] |
காரணகேவலம் | காரணகேவலம் kāraṇaāvalam, பெ. (n.) காரணாவத்தை மூன்றனுள் ஆதன்கள் உலகம் அழியக்கூடிய காலம் வரை ஆனவ மலத்தாலே மறைப்பூண்டு கிடப்பது துன்ப நிலை (சிவப்.கட்.15);; the major condition of the soul in which it remains inert and united to Anavam, awaiting the period of creation, one of three kāraṇāvattai (சா.அக.);. [காரணம்+Skt. கேவலம்] |
காரணக்காரி | காரணக்காரி kāraṇakkāri, பெ. (n.) வட்டச்சாரணை; purslance leaved trianthema – Trianthema pentandra (சா.அக.);. [காரணம்+காரி] |
காரணசகலம் | காரணசகலம் kāraṇacakalam, பெ. (n.) மூன்று வகையான காரணாவத்தைகளுள், ஆதன் உடல் மூலமாக பிறப்பு இறப்புகளுக்கு உட்படும் துன்பநிலை (சிவப்.கட்.15);; the major condition of the soul in which it is invested with bodies and subjected to births and deaths, one of three kāraṇāvattai (செ.அக.);. [காரணம்+Skt.சகலம்] |
காரணசத்தி | காரணசத்தி kāraṇacatti, பெ. (n.) 1. வெடியுப்பு; saltpetre, Nitrate of Potash. 2. தமிழ் நூலின்படி வெடியுப்பு, சோற்றுப்பு, கல்லுப்பு, பூ நீர் இவைகளை அமுரியி (சிறுநீரி);ல் இட்டுக் காய்ச்சி எடுக்கும் ஒரு வகைச் செய்யுப்பு; a salt prepared by dissolving a mixture of saltpetre, common salt, rock salt and fuller’s earth in a sufficient quantity of urine and the boiling the solution till the water is completely evaporated (சா.அக.);. [காரணம்+சத்தி] |
காரணசரீரம் | காரணசரீரம் kāraṇacarīram, பெ.(n.) ஐந்து வகை வளராக்கமான (பரிணாமமான); தூல உடம்பிற்குக் காரணமாயுள்ள நுட்பமான உடம்பு; the subtlest and innermost rudiment of the body, causal frame (சா.அக.);. |
காரணசிவதத்துவம் | காரணசிவதத்துவம் kāraṇacivatattuvam, பெ.(n.) சிவ மெய்ம்மை (தத்துவங்);களுள் ஒன்று; one of the šiva-tattuvam (சி.சி1, 66, ஞானப்.); (செ.அக.);. [காரணம்+சிவம்+தத்துவம்] |
காரணசுத்தம் | காரணசுத்தம் kāraṇacuttam, பெ.(n.) காரணாவத்தை மூன்றனுள் மல நீக்கம் பெற்ற ஆதன் (ஆன்மா); கடவுளின் திருவடிகளில் ஒன்று சேரும் அவத்தை (சிவப்.கட்.15);; the major condition of the soul in which it becomes united to the feet of the Lord, freed (செ.அக.);. [காரணம்+Skt. சுத்தம்] |
காரணத்தின் காரணம் | காரணத்தின் காரணம் kāraṇattiṉkāraṇam, பெ.(n.) கரணியத்தின் மறு (பிரதி); கரணியம்; cause against cause – Causa causati (சா.அக.);. [காரணத்தின்+காரணம்] |
காரணநோய் | காரணநோய் kāraṇanōy, பெ.(n.) இன்ன வகையில் உண்டானது என்று அறிந்துகொள்ளக்கூடிய நோய்; disease in which the causes can be determined through diagnosis (சா.அக.);. [காரணம்+நோய்.] |
காரணமாயை | காரணமாயை kāraṇamāyai, பெ.(n.) உடல் கரணிய இன்ப நுகர்ச்சி போகங்களுக்கு முதற் கரணியமாயுள்ள மாயை (சி.சி.2, 50, நிரம்ப);; maya, as the primordial, original principle from which all manifestations of matter are evolved, and into which they are finally resolved (செ.அக.);. [காரணம்+Skt. மாயை] |
காரணமாலையணி | காரணமாலையணி kāraṇamālaiyaṇi, பெ. (n.) பின்பின்னாக வருவனவற்றிற்கு, முன்முன்னாக வருவனவற்றைக் காரணங் களாகவேனுங் காரியங்களாக வேனும் செல்லுதல்; figure of speech in which a chain of causes and corresponding effects occur. |
காரணம் | காரணம் kāraṇam, பெ.(n.) பிறிதொன்றற் காகாமல் எப்பொழுதும் (நியதமாய்); காரியத்திற்கு முன் நிற்பது; reason which stands as a cause for doing a thing. |
காரணிக்கம் | காரணிக்கம் kāraṇikkam, பெ..(n.) 1. வரலாறு; history. 2. செபமாலை; rosary (செ.அக.);. |
காரணியம் | காரணியம் kāraṇiyam, பெ.(n.) குதிரைச் செவி; horse-ear or spogel – Plantago ovata (சா.அக.);. |
காரதோசம் | காரதோசம் kāratōcam, பெ.(n.) கார மருந்துகளால் ஏற்பட்ட நஞ்சுக் குற்றம்; slow chemical poisoning (சா.அக.);. [காரம்+தோசம்] |
காரத்திராட்சரசம் | காரத்திராட்சரசம் kārattirāṭcaracam, பெ.(n.) கொடி முந்திரிச் சாற்றில் இருந்து செய்யும் காரமான பருகம்; an ardent drink prepared from vine or fruit juices, Brandy (சா.அக.);. [காரம்+Skt. திராட்சரசம்] |
காரத்துணி | காரத்துணி kārattuṇi, பெ. (n.) 1. புண்களுக்கு இடும் காரமான திரி; 2. corrosive plaster inserted into wounds. 2. கொப்புளத்தை எழுப்பும் சீலை; plaster producing a vesication – Blistering plaster. 3. கெட்ட ஊண், புண், புரை, பிளவை இவைகளுக்கிடும் அல்லது சலாகை கொண்டு செலுத்தும் கார மருந்துச் சீலை; a plaster or lint steeped with or soaked in pungent or acrimonious drugs and applied externally or inserted by a probe into an ulcer with proud flesh, into phaged enous ulcers, sores with sinuses carbuncle etc., Rubefacient plaster. 4. மிளகு, மிளகாய், கடுகு, சாதிக்காய், இலவங்கம் முதலிய காரமான பொருட்கள் சேர்ந்த காரச்சீலை; a plaster containing pungent substances such as pepper, capsicum or chilly, mustard, nutmeg, cloves etc., – Spice plaster (சா.அக.);. [காரம்+துணி] |
காரத்தூமை | காரத்தூமை kārattūmai, பெ.(n.) காரமான மாதவிடாய்; menstrual blood with alkaline properties (சா.அக.);. [காரம் + துமை] |
காரபத்திரகம் | காரபத்திரகம் kārapattirakam, பெ.(n.) காரபத்திரம் பார்க்க; see kārapattiram (சா.அக.);. [காரம் + பத்திரகம்] |
காரபூமி | காரபூமி kārapūmi, பெ.(n.) உவர்மண் நிலம்; soil of fuller’s earth (சா.அக.);. [காரம்+பூமி] |
காரபேதி | காரபேதி kārapēti, பெ.(n.) குழந்தை களுக்குக் கொடுக்கும் கார மருந்து; pungent drugs given to children (சா.அக.);. [காரம் + பேதி] |
காரப்பச்சை | காரப்பச்சை kārappaccai, பெ.(n.) 1. புண் புரைகளுக்குப் போடும் காரமான பசை; a caustic plaster used for wounds. 2. கம்மாளர்கள் பயன்படுத்தும் குன்றிமணிப் பசை; jeweller’s cement or solder prepared by goldsmiths out of crab’s eye seed and alum; (&m.98.);. [காரம்+பச்சை] |
காரப்பற்று | காரப்பற்று kārappaṟṟu, பெ.(n.) புண்ணுக்கு இடும் காரமான பற்று; an external application of pungent drugs for wounds (சா.அக.);. [காரம்+பற்று.] |
காரப்புகையிலை | காரப்புகையிலை kārappukaiyilai, பெ.(n.) சுருட்டிற்குப் பயன்படுத்தும் காரமான புகையிலை; tobacco with a strong and pungent smell used chiefly for smoking (சா.அக.);. [காரம் + புகையிலை.] |
காரப்புடல் | காரப்புடல் kārappuṭal, பெ.(n.) பேய்ப்புடல், devil’s snake gourd or bitter snakegourd – Trichosnthus cucumarika (சா.அக.);. [காரம்+புடல்.] [P] |
காரப்பூண்டு | காரப்பூண்டு kārappūṇṭu, பெ.(n.) காரப் பொருட்கள் அடங்கிய சாம்பலை எடுப் பதற்காக எரிக்கும் பூண்டு; plants from which ashes are obtained for extracting alkaline substances such as potash, soda etc. (சா.அக.);. [காரம்+பூண்டு] |
காரமசாலை | காரமசாலை kāramacālai, பெ.(n.) 1. காரமுள்ள பொடி; any pungent powder. 2. புகையிலைப் பொடி; tobacco smuff powder. 3. மூக்கிற்குள் இழுத்து நோயைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தும் மருந்துப் பொடி; a medicinal powder used for sniffing to alleviate pain in diseases such as smelling salt. 4. கார மருந்து சேர்ந்த பொடி; caustic powder. 5. குழம்பு கறிக்கூட்டுப்பொடி; powder of hot-stuffs used in kitchen, such as condiments, or pungent spices. 6.கச்சக் கருவாட்டுப் பொடி; small dried fish (சா.அக.);. [காரம்+மசாலை] |
காரமாத்திரை | காரமாத்திரை kāramāttirai, பெ,.(n.) 1. கட்டி, விக்கம் இவைகளுக்குப் பூசும் மருந்து; a caustic pill macerated and used as an external application. 2. குழந்தைகளுக்குக் கோழையைப் போக்குவதற்காகக் கொடுக்கும் மான் மணத்தி (கத்துரி); அல்லது ஆமணத்தி மாத்திரை; a strong pill containing musk or cow’s bezoar as chief ingredients, given, internally for children to bring out phlegm (சா.அக.);. [காரம்+மாத்திரை.] |
காரமான | காரமான kāramāṉa, பெ.எ. (adj.) 1. கார்ப்பான; brackish; caustic; corrosive. 2. உறைப்பான; racypiquant (சா.அக.);. [காரம்+ஆன.] |
காரமித்துரு | காரமித்துரு kāramitturu, பெ.(n.) கார மருந்துகளுக்கு உதவியாக இருக்கும் மருந்து; drugs friendly to alkaline drugs (சா.அக.);. [காரம்+Skt. மித்துரு] |
காரமுள்ள | காரமுள்ள kāramuḷḷa, பெ.எ. (adj.) காரத்தினால் சதையை அரிக்குந் தன்மையுள்ள; corrosive; alkaloidal (சா.அக.);. [காரம்+உள்ள.] |
காரம்பூ | காரம்பூ kārampū, பெ..(n.) பூநீறு; fuller’s earth (சா.அக.);. [காரம் + பூ] |
காரம்போடல் | காரம்போடல் kārampōṭal, தொ.பெ. (vbl.n.) 1. காரமான பொருட்களை இழைத்துப் புண்களுக்கு இடல்; application of caustic to the wound. 2. உணவுக் கறிக்குக் காரம் கூட்டல்; adding pungent stuffs to curry, 3. மாழைகளை உருக்கக் காரம் சேர்த்தல்; adding flux for melting purposes (சா.அக.);. [காரம்+போடல்.] |
காரரிசி | காரரிசி kārarici, பெ.(n.) மட்டையரிசி; a red course rice (சா.அக.);. [கார்+அரிசி] |
காரலவனம் | காரலவனம் kāralavaṉam, பெ.(n.) கார உப்பு; corrosive salt (சா.அக.);. [காரம்+லவணம்] |
காரல்லி | காரல்லி kāralli, பெ.(n.) கருப்பு அல்லி, memecylon – Carallia integerrima (சா.அக.);. [கார்+அல்லி] |
காரளன் | காரளன் kāraḷaṉ, பெ.(n.) சூரபத்மன் படைத் தலைவரில் ஒருவன்; a army chief in Surapatman’s army. இவன் காட்டெருமை உருக்கொண்ட விகாரனுடன் கூடி, தான் காட்டுப் பன்றி உருவம் கொண்டு விநாயகரிடம் வந்து இறந்தவன் (அபி.சிந்:);. |
காரளவம் | காரளவம் kāraḷavam, பெ.(n.) கறுப்புக் கடலை; black bengal gram (சா.அக.);. [கார்+அளவம்] |
காரளிகம் | காரளிகம் kāraḷikam, பெ.(n.) ஒரு முள்செடி, a thorny plant, yellow-berried night shade – Solanum jacquini alias S.Xanthocarpum (சா.அக.);. [கார்+அளிகம்] |
காரவன்னம் | காரவன்னம் kāravaṉṉam, பெ.(n) குழம்புச் சோறு; boiled rice mixed with sauce (சா.அக.);. [காரம்+அன்னம்] |
காரவர்க்கம் | காரவர்க்கம் kāravarkkam, பெ.(n.)1. கார வகை; alkalies. 2. காரமான பொருள்; pungent substances (சா.அக.);. [காரம்+வர்க்கம்] |
காரவலி | காரவலி kāravali, பெ.(n.) 1. மிதி பாகற்காய்; small spiked bitter cucumber – Momordica humilis. 2. பாகற்கொடி; small snake-gourd – Momordica charantia. 3. வெற்றிலைக் கொடி betel wine – Piper betle (சா.அக.);. [காரம்+வல்லி] |
காரவுப்பு | காரவுப்பு kāravuppu, பெ.(n.) 1. காரமுள்ள உப்பு: pungent salt 2. கடுங்கார உப்பு: corrosive salt 3. நாக்குக்கு உறைப்பான உப்பு, acrimonious or acrid salt (சா.அக.);. [காரம்+உப்பு] |
காரவுருண்டை | காரவுருண்டை kāravuruṇṭai, பெ.(n.) குழந்தைகளுக்கு உண்டாகும் நோய்களைத் தடுக்கவும், பசி உண்டாக்கவும், பொதுவாகத் தலைமுழுக்காட்டியவுடன் இழைத்துக் கொடுக்கும் ஒரு காரமான மாத்திரை, it is used in every household for treating children as a preventive or as a rule especially when they are given a bath, to prevent coled and promote hunger. [காரம்+உருண்டை] இது சீரகம், கருவேப்பிலை, உப்பு, மிளகு, ஓமம் இவைகளைச் சம அளவாக எடுத்து அரைத்துத் திரட்டிய உருண்டை (சா.அக.);. |
காரவெல்லம் | காரவெல்லம் kāravellam, பெ.(n.) 1. காரவலி பார்க்க; see kāravali 2. பலாமரம்; jackfruit tree – Atrocarpus hirstua. 3. காரஞ் சேர்ந்த வெல்லம்; jaggery mixed with some acrid substance (சா.அக.);. [காரம் + வெல்லம்] |
காரவெள்ளை | காரவெள்ளை kāraveḷḷai, பெ.(n.) 1. ஒரு வகைச் சுரை; a kind of gourd – Mimordica charantia. 2. காரச்கண்ணம் பார்க்க; see kara-с-силпат(சா.அக);. |
காரவேன் கல்வெட்டு | காரவேன் கல்வெட்டு kāravēṉkalveṭṭu, பெ.(n.) தமிழ் மூவேந்தர்கள் உடன்படிக் கையைக் குறிப்பிட்டுக் காட்டும் அத்திகும்பர் கல்வெட்டு; Hattikumba inscription which depicts an agreement among the three Tamilkings. [காரவேலன்+கல்வெட்டு] தமிழகத்தின் மீது வடநாட்டார் படையெடுப் புகள் நடந்தன. இந்தியாவுக்கு ஒருகாலத்தில் தமி ழகம் என்று பெயரிருந்தது._ஆரியர் புகுந்தபின் வட நாட்டுத் தமிழ் பிராகிருதம் என்னும் வட தமிழாயிற்று. அப்பொழுது விந்தியமலை வரை தமிழ் நாடாக இருந்தது. அதன்பின்னர் வடவேங்கடமாகத் தமிழக எல்லை கருங்கியது. வடநாட்டுப் படையெடுப்பாளர்களை ஒன்று சேர்ந்து எதிர்ப்பதற்காக மூவேந்தர்களும் 12 வேளிர் குறுநில மன்னரும் ஒருங்கிணைந்து கூட்டிணைவு உடன்படிக்கை செய்து கொண்டிருந்தனர். இந்த ஒப்பந்தம் நெடுங்காலம் நிலவியதைக்கலிங்க நாட்டு அத்திகும்பா (யானைக்குன்று); வில் காரவேலன் என்னும் மன்னன் பொறித்த கல்வெட்டு கூறுகிறது. கி.மு.இரண்டாம் நூற்றாண்டில் காரவேலனின் 11ஆம் ஆட்சியாண்டில் இந்த உடன்படிக்கை முறிந்து போயிற்று என அக்கல்வெட்டு கூறுகிறது. அந்த அத்திகும்பா கல்வெட்டு சனவரி 2004இல் வெளிவந்த DL பன்னாட்டுத் திரவிட மொழி யியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. காரவேலன் அவனுடைய 12ஆம் ஆட்சியாண்டில் பாண்டியனின் தலைநகரைக் கொள்ளையடித்துப் பொன்னும் பொருளும் எடுத்துச் சென்றான் என்னும் செய்தி நம்கடைக்கழக இலக்கியங்களில் கூறப்பட வில்லை. பாண்டிய நாட்டில் 150 ஆண்டுகள் கடைக் கழகக் காலத்தில் மன்னராட்சி இல்லாமல் போய்விட்டது என 1920இல் வெளிவந்த நற்குடி வேளாளர் வரலாறு என்னும் செய்யுள் நூல் கூறுகிறது. அந்த உடன்படிக்கை1300 ஆண்டுகள் நீடித்தது என்கின்றனர். காரவேலனின் அத்திகும்பா கல் வெட்டை 1928இல் படித்த ஆர்.டி.பாணர்சியும் செய சுவாலும் அத்துணை நீண்ட நெடுங்காலம் ஒரு உடன் படிக்கை நீடித்தது என்பதை எவரும் நம்பமுடியாது எனக் கருதினர். எனவே, ஏதோ ஒரு வகையில் படித்து அந்த உடன்படிக்கை பதின்மூன்றும் நூறும் சேர்ந்த 13 ஆண்டுகள் நிலவியதாக உரை விளக்கம் தந்தனர்._அதனையே கல்வெட்டாசிரி யர்கள் மேற் கோள்காட்டி வருகின்றனர். காரவேலன் கல்வெட்டின் ஒரு பகுதி: ஜனபத பாவனம்ச தெரச வச சதகம் பிமன்தி தமிாதக சங்காதம் என்னும் தொடரில் தமிர தக சங்காதம் பிமன்தி என்பது தமிழ் நாட்டுக் கூட்டணி உடைக்கப்பட்டது எனப் பொருள்படுகிறது. தமிரதக என்பதற்கு தமிர தேச எனவும் பாட வேறுபாடு உள்ளது. வடநாட்டு மக்களின் அமைதியான வாழ்வுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காக என்னும் பொருளில் ஜனபத பாவனம்ச என்னும் முதல்வரி எழுதப்பட்டுள்ளது. அடுத்த வரியில் தெரச என்பது 13ஐக் குறிக்கும். அடுத்துள்ள வச என்னும் சொல் பெருகிய எனப் பொருள்படும். சதகம் என்னும் சொல் நூறு கொண் டது என்றும் நூற்றாண்டு- (century); என்றும் இருபொருள் தரும். நூறு கொண்டது என்னும் பொருள் இங்குப் பொருந்தவில்லை. நூறு கொண் டது என்று ஒன்றை முடிவு கட்டிய பிறகு அதன்மீது பதின்மூன்றைச் சேர்க்க முடியாது. ஒரு சதகம் என்பதற்கு நூற்றாண்டு என்னும் பொருளே இங்குப் பொருத்தமாக அமைந்துள்ளது. 113 ஆண்டைக் குறிப்பதாக இருந்தால் தெரசசதம் என்று குறிப்பிட்டாலே போதுமானது. நூற்றாண்டு எனப்பொருள்படும் சதகம் என்னும் சொல்லை ஆளவேண்டியதில்லை. 13 நூற்றாண் டுகள் என்பதைக் குறிக்கவே தெரசவச சதகம் என்னும் தொடராட்சி பயன்படுத்தபபட்டது. இந்தக் கல்வெட்டுபிராகிருத மொழியில் எழுதப் பட்டுள்ளது. பிராகிருதம் வடதமிழ் எனப்பட்டது. இதில் வடமொழிக்குரிய எண்முறை பின்பற்றப்பட் டுள்ளதா அல்லது தமிழுக்குரிய எண்முறை பின்பற்றப் பட்டுள்ளதா என்பதைத் தெளிவாக்கிக் கொள்ள வேண்டும். தமிழ் எண்முறை எண்களை எழுத்தால் எழுதிக் காட்டுதல் எண் களால் எழுதிக் காட்டுதல் என்னும் முறையை உலக மொழிகள் அனைத்தும் பின்பற்றுகின்றன. தமிழில் எண்ணாக எழுதினாலும் எழுத்தில் எழுதிக் காட்டி னாலும் எண்களின் மதிப்பை இடமிருந்து வலமாகவே குறிப்பிடுவது வழக்கம். ஆயிரத்து மூன்று 1003 எனத் தமிழில் குறிப்பதைக் காண்க வடமொழி எண்முறை வடஇந்திய மொழிகளிலும் சமற்கிருதத்திலும் நூறுவரை எண்ணும் போது வல இடமாகவும் நூற் றுக்கு மேல் இட வலமாகவும் எண்ணின் இட மதிப்புகள் ஆளப்படுகின்றன. அ. சமற்கிருதம்_சதுர்தசி 14 (நான்கும் பத்தும்); பதினான்கு இந்தி -தோஹ் 13 (மூன்றும் பத்தும்);பதின்மூன்று ஆ. சமற்கிருதம் (இத்தீஸ் 31 (ஒன்றும் முப்பதும்); முப்பத்தொன்று துவி சகஸ்ர2000 (இரண்டு ஆயிரம்); ஈராயிரம் இந்தி – தோஹஜார் 2000 (இரண்டு ஆயிரம்); ஈராயிரம் இ.ஆங்கிலத்தில் 11 முதல் 20 வரை வல இடமாகவும், இருபதுக்கு மேல் இடவலமாகவும் (Twenty one); அமைந்துள்ளன. பொனீசியவணி கர்கள் தமிழ் எண்முறைகளை உலகம் முழுவதும் பரப்பியதன் விளைவு இது எனலாம். சமற்கிருதம் நூற்றுக்கு மேற்பட்ட அனைத்து எண்களையும் தமிழ் முறைப்படி ஆள்கிறது. ஆரியர் ஈரான் நாட்டு வழியாக வந்ததால் வலமிருந்து இடமாக நூறுவரை எண்களைக் குறிக்கும் வழக்கத்தை உடன் கொண்டு வந்து வட இந்திய மொழிகளில் புகுத்தினர். அவர்கள் இந்தி யாவில் வணிகத் தொழிலில் மேம்பட்ட திராவிடர் களோடு கொண்ட ஊடாட்டத்தால் தமிழிலுள்ளது போன்றே இடவலமாக எண்களைக் குறிப்பிடும் வழக் கத்தை மேற்கொண்டனர். இதனால் இன்றளவும் சமற்கிருதத்தில் எண்களைக் குறிப்பிடுவதில் குழப்பம் நிலவுகிறது. இதனைச் சமற்கிருத ஆங்கில அக ராதியில் மோனியர் வில்லியம்க கட்டிக் காட்டுகிறார். dwi satam [த்விசதம்] என்னும் சமற்கிருதச் சொல் 100+2102 என்றும் 100×2,200 என்றும் இரு வகையாக ஆளப்படுவதை அவர் எடுத்துக் காட்டி யுள்ளார். ஆனால் சப்தசதி என்பது 700ஐக் குறிக் கிறது. இது 107ஐ என் குறிக்கவில்லை? இதி லிருந்தே சமற்கிருதம் பேசப்படாத மொழி என்பது உறுதியாகிறது. இந்நிலையில் காரவேலனின் பிராகிருதக் கல்வெட்டில் எந்தமுறை பின்பற்றப்படடுள்ளது? நூறு ஆயிரம் போன்ற பெரிய எண்களோடு அவற்றினும் குறைந்த எண்களை எழுத்தால் எழுதிக் காட்டும் போது 1009 என்பதை ஒன்பது சேர்ந்த ஆயிரம் அதாவது “தொண்டு(9); தலையிட்ட_ஆயிரம்” எனக் குறிப்பிடுவது கடைக்கழகக் காலத்திலும் வழக்கமாக இருந்திருக்கிறது. கோடியைக் கோடியால் பெருக்குவ தாயின் அடுக்கிய கோடி என்பர். காரவேலன் கல்வெட்டில் பதின்மூன்று சேர்ந்த நூறு என்று சொல்லாமல் நூற்றாண்டு எனச் சொல் லப்பட்டுள்ளது. அதனால் 13 நூற்றாண்டுகள் (1300 ஆண்டுகள்); எனப் பொருள் கொள்ள இடந்தந் துள்ளது. இது வடதமிழாகிய பிராகிருதத்தில் பின் பற்றப்பட்ட தமிழ் மரபு எண்முறை. பிராகிருத எண்கள் வல இடமாக எழுதப்பட்ட எண் முறை என்று ஐராவதம் மகாதேவன் [ஆவணம்-சூலை 2004] குறிப்பிட்டிருக்கிறார். அழகன் குளம் பானையோட்டில் 408 என்பது [8+100×4:408] எனக் குறிக்கப்பட்டுள்ளது என் கிறார். இதை நான் 804 எனக் கருதுகிறேன். இது எழுத்தால் எப்படி எழுதப்பட்டது என்பதற்கு அவர் சான்று தரவில்லை._அவர் படித்த முறை [4×100]48. நான் படித்த முறை [8×100]+4 என்பதாகும். இந்த வலஇட முறைப்படி காரவேலன் கல்வெட்டைப் படித் துப் பார்த்தாலும் நூற்றாண்டு 13[100×13 300] என்றே பொருள்படுகிறது. சதகம் என்பது நூற்றாண்டு என்றே படிக்கமுடியும். இச்சொல் நூறு எனச் சமற்கிருதத்தில் பொருள் படாது. பிராகிருதத் திரும் இவ்வாறே உள்ளது. இதனை ஆர்.டி.பாணர்சி செயசுவால் போன்றவர்கள் பதின்மூன்றும் நூறும் 13+100-113 எனப் படித்தது எப்படிப் பொருந்தும். நூற்றாண்டு எனப்படும் சதகம் என்னும் சொல்லைக் காரவேலனின் கல்வெட்டு குறிப்பிடு வதால் மூவேந்தர் கூட்டணி ஆரியர்கள் கி.மு.15ஆம் நூற்றாண்டில் பஞ்சாபில் புகுந்தபோது உருவாகியி ருக்கிறது என அறியமுடிகிறது. இந்தக் காலவரம்பில் வடமேற்கு இந்தியாவில் ஆரியர் புகுந்தனர் என்றும் அவர்களை அடக்குவதற்கு வடநாட்டிலுள்ள தமிழ் வேந்தர்களுக்குத் தென்னாட்டுப் பாண்டியன் தக்க உதவியளித்து ஆணையிட்டான் என்றும் நன்குடி வேளாளர் வரலாறு [1920] எனும் நூல் குறிப்பிடு கிறது. இருக்கு வேதமும், ஆரியர் யமுனைக் கரை பகுதிக்கு வந்தபோது நார்மாறன், பல்பூதன் எனும் பாண்டியக் கிளை மரபினர் அமைதியாக வாழத் தொடங்கிய ஆரியர்க்குக்கொடையளித்தசெய்தியைக் குறிப்பிடுகிறது. கி.மு.9ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தொல்காப்பியரும், போந்தை வேம்பே ஆரென வரூஉம் மாபெரும் தானையர் என மூவேந்தர்களிடை நிலவிய ஒற்றுமையைக் குறிப் பாகப் புலப்படுத்திக் காட்டியிருக்கிறார். மூவேந்தர் கூட்டணி தொடங்கியதாகக் கருதப்படும் கி.மு.15ஆம் நூற்றாண்டளவில் இந்தியாவின் தலை நகரம் கொற்கையாக இருந்தது. இந்தியாவிலிருந்த 600 குறுநில மன்னர் கொற்கைப் பாண்டியனுக்குத் திறை செலுத்தினர் எனச் சாத்தன் குளம் இராகவன் கோநகர் கொற்கை எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார். கி.மு.1000 ஆண்டளவில் வடநாட்டிலிருந்த விராத்திய பிராமணப்பிரிவினர் (வேளாளப்பார்ப்பனர்-வேள்வி செய்யக்கூடாது எனத் தடைவிதிக்கப்பட்ட கலப்பினப் பார்ப்பனர்); சிலர் கொற்கை மாநகரில் காணப்பட்டனர் எனக் கூறப்படுகிறது. பாரத இராமாயணங்களில் மூவேந்தர் கூறப்படு கின்றனர். சிந்துவெளி முத்திரைகளிலும் பாண் டியன் பெயரும் சேரமன்னர் பெயர்களும் இடம்பெற் றுள்ளன. லோத்தல் துறைமுகத்தில் கிடைத்த சிந்து வெளி முத்திரையில் பாண்டியன் அண்டன் எனும் சொல் உள்ளது. கபிலர் 49 தலைமுறைகளாகத் துவாரகையை இருங்கோவேள் பாண்டியக் கிளை மரபினர் ஆட்சி புரிந்ததைப் புற நானூற்றில் குறிப்பிடுகிறார். கி.மு.7ஆம் நூற்றாண்டு வரை விந்தியத்துக்கு வடக்கில் கோசாம்பியைத் தலைநகராகக் கொண்டு உதயணன் என்னும் தமிழ் மன்னன் ஆட்சி புரிந் திருக்கிறான். கொற்கைப்பாண்டியனுக்கு அனைத்து மன்னரும் கட்டுப்பட்டு அவன் சொற்படி நடந் திருக்கின்றனர். காரவேலன் கல்வெட்டின்படி மூவேந்தர் உடன் படிக்கை நீடித்த காலம் 1300 (பதின்மூன்று நூற்றாண்டுகள், என்பதை வலியுறுத்தி Journal of South India Historical view(2003); uá.96-100); கட்டுரை வெளிவந்தது. கணையாழி (பிப்.2005); இதழில் அந்த 1300 ஆண்டுகள் எனும் தலைப்பில் ம. கந்தசாமி எழுதிய கட்டுரையிலும் இது வலியுறுத் தப்பட்டுள்ளது. இந்தக் காலத்தை கி.மு.1465-கி.மு. 165 என அவர் குறிப்பிட்டுள்ளார். மூவேந்தரும்12 குறுநிலமன்னரும் சேர்ந்த இக் கூட்டணியில் அந்துவன் என்னும் சேர இளவரசன் அந்த உடன்படிக்கையை மீறிக் கொங்கு நாட்டுக் கருவூரைக் கவர்ந்து கொண்டான் என்றும் அவனைத் தூண்டிவிட்டுக் கூட்டு உடன்படிக்கையை மீறச் செய்தவன் காரவேலனே என்றும் இவர் குறிப்பிட்டுள்ளார். மூவேந்தரின் ஒற்றுமையால் கலிங்க நாட்டு அமைதிக்குத் தீங்கு நேரும் என அஞ்சியே காரவேலன் தமிழர் ஒற்றுமையைக் குலைத்தான் எனக் கூறப்படுகிறது. காரவேலன் மதுரையைக் கொள்ளையடித்துச் சென்ற மறு ஆண்டில் கலிங்க நாட்டில் கொண்டாடப் பட்ட சமண தீர்த்தங்கரர்சிலை நாட்டும் விழாவுக்குப் பாண்டியனைச் சிறப்பு விருந்தாளியாக அழைத்திருக் கிறான். இதிலிருந்த பாண்டியர்களின் பங்காளிப் பூசலில் ஒரு பக்கம் சார்ந்து மற்றவனை அழிக்கக் காரவேலன் துணை புரிந்திருக்கிறான் எனத் தெரிகிறது. கி.மு.இரண்டாம் நூற்றாண்டில் (கி.மு.180கி.மு.165); மதுரையைக் கொள்ளையடிக்க வந்த கார வேலன் சோழநாட்டைக் கடந்து சென்றிருக்க வேண்டும். சோழரைத் தாக்கிய செய்தி எதுவும் அத்திகும்பா கல்வெட்டில் இல்லை. சோழநாட்டில் கி.மு.200 அளவில் சென்னியர் மரபு முடிவுற்றது. அதன்பின்னர் கி.மு.160 அளவில் கிள்ளி மரபு ஆட் சிக்கு வந்துள்ளது. இந்த இடைவெளிக் காலத்தில் காரவேலன் தென்னாடு நோக்கி வந்திருக்க வேண்டும். சேரநாட்டில் புறப்புண் நாணி வடக்கிருந்த பெருஞ்சேரலாதனுக்குப் பிறகு வலிமை வாய்ந்த சேர மன்னர் காணப்படவில்லை. பாண்டிய நாட்டில் கடலன் வழுதிக்குப் பின்னர் (கி.மு.200 – கி.மு.180); முடியரசு ஒடுங்கியது. அவனுக்குப் பின் வந்த மருங்கை வழுதி (கி.மு.180-கி.மு.166); என்பவனே பங்காளிப் பூசலில் துணைபுரிய கலிங்க நாட்டுக் காரவேலனை வரவழைத்த பாண்டியனாக இருத்தல் வேண்டும். கடைக் கழக மூவேந்தர்களின் ஆட்சிக் காலங்கள் கடைக்கழக நூல்களின் காலமும் கருத்தும் (2006); என்னும் நூலிலிருந்து மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. தமிழ் வேந்தர்கள் காலமெல்லாம் தமக்குள் போரிட்டுக்கொண்டிருந்தார்கள் என்னும் கருத்துக்கு எதிராக ஒற்றுமையாக இருந்தார்கள் என்பது வரலாற்றுச் சிறப்புடையதாகும். ஆரியப் படைகளை ஒன்று கூடி எதிர்க்க ஓரணியில் திரண்டனர் என்பதும் அந்த உடன்படிக்கை 1300 ஆண்டுகள் நீடித்தது என் பதும் நம்பக் கூடியது என்பதும் மேலும் சில சான்று களால் உறுதிப்படும். பாண்டியனை வடதிசை கங்கை இமயமும் கொண்டு தென்திசை யாண்ட தென்னவன் என்று சிலம்பு பாடுகிறது. இமயம்வரை தமிழர் வட எல்லை விரிந்திருந்தது என்பதை உறுதிப்படுத்துவதற்குத் தம் உரிமையை நிலை நாட்டவும் மூவேந்தரும் அடிக்கடி இமயத்தில் தம் இலக்கினை பொறிப்பதை வழக்கமாகக் கொண்டி ருந்தனர். பாண்டியன் இமயத்தில்கயல் மீன் இலக் கினை பொறித்தபோது ஏனைய சேர சோழர்க் குரிய வில்லும் புலியும் சேர்த்தே பொறித்திருக்கிறான். கயலெழுதிய இமய நெற்றியில் அயலெழுதிய புலியும் வில்லும் எனும் செய்யுள் வரிகளே இதற்குத் தக்க சான்றாகும். யானைக் கட்சேய் மாந்தரன் சேரல் இரும் பொறையின் முன்னோனுக்கு இந்தியாவிலிருந்த அனைத்து மன்னரும் அடிபணிந்து வழிமொழிந்து ஒழுகினர். தென்குமரி வடபெருங்கால் குணகுட கடலா எல்லை குன்றுமலை காடு நாடு ஒன்றுபட்டு வழிமொழிய கொடிது கடிந்து, கோல் திருத்தி படுவது உண்டு பகல் ஆற்றி இனிதுருண்ட சுடர்நேமி முழுதாண்டோர் வழிகாவல! (புறம் 17:1-8); எனக் குறுங்கோழியூர் கிழார் பாடியுள்ளார். பதிற்றுப்பத்தில் நின்னாட்சி இமயத்துக்கு அப் பாலும் பாவவேண்டும் எனப் புலவர் தன் விருப்பத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். பாண்டியன் முதுகுடுமிப் பெருவழுதி பல துறைமுகங்களைக் கொண்டிருந்ததால் இவனைப் பல்சாலை முதுகுடுமிப் பெருவழுதி என்றனர். இவன் இமயத்தை வட எல்லையாகக் கொண்டவன் என்பதை வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும் தெனஅது உருகெழு குமரியின் தெற்கும் எனக் காரிக்கிழார் பாடியுள்ளார். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், வடபுல இமயத்து வாங்குவில் பொறித்த எழுவுறழ் திணிதோள் இயல்தேர்க் குட்டுவன் எனப் பாராட்டப்பட்டான். தமிழ்வேந்தர்களின் இமயப் படையெடுப்பு என்னும் தலைப்பில் ஆய்வு மேற்கொண்ட மு. இராக வையங்கார், சிக்கிம்மாநிலத்திலிருந்து திபேத்துக்குச் செல்லும் வழியிலுள்ள கும்பிப்பள்ளத்தாக்கை ஒட்டிய சோழமலைத்தொடர், சோழன் கணவாய் (chola pass); என அழைக்கப்படும் பகுதிகளே கரிகாற் சோழனும் தமிழ் மன்னரும் கைப்பற்றி இமயத்தில் இலச்சினை பொறிக்கச் சென்ற வழி எனக் கூறியுள்ளார். சோழன் கணவாய் Reader’s Digestஉலகப்படத்தில் (பக்.77); காட்டப்பட்டுள்ளது. மேற்கண்ட சான்றுகள் ஆரியர் அலறத்தாக்கிய மூவேந்தர்களின் தொடர்ந்த வடநாட்டுப் படையெ டுப்புகளைப் புலப்படுத்துகின்றன. ஆரிய திராவிடர் போராட்டம் என்பது சிந்துவெளி நாகரிகம் முடிந்து இருநூற்றாண்டுகளுக்குப்பின்னர் கி.மு.1600 முதலே தொடங்கிவிட்டது. அதில் தென்னாட்டு மன்னர் கி.மு.1500 முதல் மிகுதியாகப் பங்கேற்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. தேவாகரப் போராட்டங்கள் எனப் புராணங்கள் இவற்றைக் குறிப்பிடுகின்றன. ஆதிச்சநல்லூர் பானை ஒட்டு எழுத்து கி.மு.1500 எனக் கணிக்கப்பட்டுள்ளது. இந்த வரலாற்றுப் பின்னணியைப் புரிந்து கொள்ள காளிதாசனின் குலமுன்னோனாகிய இரகு வடநாட்டிலிருந்த ஒரு பாண்டியனை அடக்கித் திறை செலுத்தச் செய்தான் எனக் கூறப்பட்டுள்ளது. எனவே 1300 ஆண்டு மூவேந்தர் உடன்படிக்கை என்பது நம்பத்தக்கதாகவே உள்ளது. கருவி நூல்கள் 1. IDL(Jul, 2004); திருவனந்தபுரம் 2. 2 Shashi Kant 1971; The Hathigumpa inscription of Kharavela and Bhabru. Edict of Asoka, New Delhi 3. Journal of South India, Historical view 2003. 4. ம. கந்தசாமி அந்த 1300 ஆண்டுகள், கணையாழி பிப்பிரவரி 2005 5. ஐ. மகாதேவன்_அழகன்குளம் பானை ஒட்டில் எண்கள்-ஆவணம், சூலை-2004 6 சாத்தன்குளம் அ. இராகவன்.1971 கோநகர் கொற்கை 7. ஆறுமுக நயினார் பிள்ளை.1920 நன்குடிவேளாளர் வரலாறு, மதுரை 8. காளிதாசன், இரகுவம்சம் 9. Banerji, R.D. 1930. History of Orissa. 10. இரா. மதிவாணண் (2006); கடைக்கழக நூல்களின் காலமும் கருத்தும் திலகம் பதிப்பகம் 17இரிகே.கே. பொன்னுரங்கம் சாலை, ஓம் சக்திநகர் வளசர வாக்கம் சென்னை-87 |
காராகாரம் | காராகாரம் kārākāram, பெ.(n.) காராகிரகம் பார்க்க;see{}. |
காராகிரகம் | காராகிரகம் gārāgiragam, பெ.(n.) சிறைச்சாலை; prison, dungeon. “காராகிரகங் கழிவுற்றபினும்” (தணிகைப்பு. பிரமன்.3);. [Skt.{} → த.காராகிரகம்.] |
காராக்கினி | காராக்கினி kārākkiṉi, பெ.(n.) நோய் அல்லது நஞ்சைக் கண்டித்தல்; removing poison or the disease (சா.அக.);. [கார்+அக்கினி] |
காராச்சேவு | காராச்சேவு kārāccēvu, பெ.(n.) கடலை மாவுடன் மிளகாய்ப் பொடி கலந்து பிசைந்து அச்சின் மூலம் சிறு குச்சியாகப் பிழிந்து எண்ணெய்யில் இட்டுச் செய்யும் தின் பண்டம்; a kind of snack made from a paste of chickpea flour mixed with chilli powder and fried in oil in the shape of small sticks. [காரம்+சேவு.] |
காராடம் | காராடம் kārāṭam, பெ.(n.) மருக்காரை, common emitic nut – Randia dumetorum (சா.அக.);. [கார்+ஆடம்] |
காராட்டுப்பால் | காராட்டுப்பால் kārāṭṭuppāl, பெ.(n.) வெள்ளாட்டுப் பால்; goat’s milk. இது நோய்களுக்கு உதவும் (சா.அக);. [காராட்டு+பால்.] |
காரானை | காரானை kārāṉai, பெ.(n.) 1. முகில்; cloud. 2. கறுத்த யானை; black elephant. 3. காட்டுப் பலா; wild duriam – Cullenia excelsa (சா.அக.);. [(கார்+ஆனை.] |
காரான் | காரான் kārāṉ, பெ.(n.) 1. எருமை; buffalo. 2. காராவு பார்க்க; see karavu(சா.அக.);. [கார்+ஆன்.] |
காராமணிக்கீரை | காராமணிக்கீரை kārāmaṇikārai, பெ.(n.) காராமணிச் செடியின் இலை; edible leaves of cow-gram plant (சா.அக.);. [காராமணி+கீரை.] காட்டு + ஆமணக்கு – காட்டாமணக்கு. காட்டாமணக்கு 9 காட்டாமணி-→ காடாமணி அகாறாமணி-அகாராமணி. |
காராமையோடு | காராமையோடு kārāmaiyōṭu, பெ.(n.) கருப்பு ஆமை ஓடு; black tortoise-shell (சா.அக.);. [கார்+ஆமை+ஒடு] |
காராம்பகம்பால் | காராம்பகம்பால் kārāmpakampāl, பெ.(n.) காராவின் பால்; the milk of the cow with black tongue and udder. [கார் + ஆ Skt, பசு + பால்.] இதனால் விழிப்பிணி, கயம் குணம் ஆகும் (சா.அக.);. |
காராம்பசு | காராம்பசு kārāmbasu, பெ.(n.) மடியும் காம்பும் கருநிறம் கொண்ட மாடு; cow of black coloured udder. மறுவ. காரா, காரான். காராவு. [கரு-கார்+ஆம்+பசு] காராவின் பால் சீரியது. மிதித்தபுல்லை மேயாததும் கழுத்து அலை நீரைத்தொடும் ஆழம் வரை இறங்கித் தூய நீர் பருகுவதும் இதன் இயல்பு. இதன் வயிற்றில் ஆன்மணத்தி (கோரோசனை); உருவாகும். |
காராயி | காராயி kārāyi, பெ.(n.) அடி ஈரல் அல்லது மண்ணிரல்; spleen (சா.அக.);. [கார்+ஆயி] |
காராவு | காராவு kārāvu, பெ.(n.) நாக்கு, மடி, முலைக் காம்பு இவைகள் கருத்த ஆ a sacred cow, the tongue, the under and nipple which are black (சா.அக.);. [கார்+ஆ-காரா-காராவு.] |
காராவெண்ணெய் | காராவெண்ணெய் kārāveṇīey, பெ.(n) ஆ வெண்ணெய்; butter from cow’s milk (சா.அக.);. [கார்+ஆ+வெண்ணெய்.] |
காரி | காரி kāri, பெ..(n.) உப்பங்கழி; back water. 2.காயல்; an arm of the Sea. 3.5%; beauty. ம. க.காரி, தெ. கய்யி. ரா. கார, காடி. [கார்-காரி (கருமை நிறம்); கடல் நீர்நிலை] |
காரிகடுமலை | காரிகடுமலை kārikaṭumalai, பெ..(n.) காரீயமலை பார்க்க; see kāriyamalai (சா.அக.);. [காரி+கடு+மலை.] |
காரிகமூலி | காரிகமூலி kārikamūli, பெ.(n.) 1. காட்டு முருங்கை; wild Indian horse radish – Moringa concanensis. 2. புனல் முருங்கை; oval-leaved Indigo – Indigofera trita. 3. ஆடாதோடை; a kind of planteaten only by goats – Justicia adhatoda. 4. சிறு மாவிலங்கை; forest small lingam tree – Crataeva religiosa. 5. பூனை முருங்கை; jungle moringa – Ormocarpum sennoides. 6. பவளப் பூலா; wild moringa or coral berry tree – Bryonia rhamnoides. 7. கசப்பு முருங்கை; bitter moringa. 8. காரிகத்தைப் போக்கும் epsolsons; any green herb curing eczema (சா.அக.);. [காரிகம்+மூலி] |
காரிகல் | காரிகல் kārikal, பெ.(n.) நத்தைச்சூரி; bristly button-weed – Spermacoce hispida (சா.அக.);. [காரி+கல்.] |
காரிகா | காரிகா kārikā, பெ.(n.) வறட்சுண்டி, ஆடு தின்னாப் பாளை; worm-killer, woody – Aristolochia bracteata (சா.அக.);. |
காரிகாலம் | காரிகாலம் kārikālam, பெ.(n.) பாகற்கொடி, small bitter-gourd – Momordica charantia (சா.அக.);. [காரி+காலம்] |
காரிக்கண்ணனார் | காரிக்கண்ணனார் kārikkaṇṇaṉār, பெ.(n.) கடைச்சங்கம் மருவிய புலவர்களில் ஒருவர்; the poet who belonged to the last ancient §afigam (சா.அக.);. காவிரிபூம்பட்டிணத்துக் காரிக்கண்ணனார் என்பவரும் இவரே. வணிகர் குலத்தவர். இவர் பாடிய பாடல்கள் நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு மற்றும் திருவள்ளுவர் மாலையில் இடம் பெற்றுள்ளன. |
காரிக்கம் | காரிக்கம் kārikkam, பெ.(n.) காரிக்கன் பார்க்க; see karikkaa(செ.அக.);. |
காரியசத்துரு | காரியசத்துரு kāriyacatturu, பெ.(n.) கருப்பு ஈயத்தின் பகைச் சரக்குகள்; emimical drugs of black lead. [காரியம்+Skt. சத்துரு.] காரீயத்தின் பகைச் சரக்குகள் 1. அண்டம்; fowl’s egg or human skull. 2. தகட்டுத்தாள்; mica. 3. அயக் காந்தம்; calcined oxide of magnetic iron, 4. இராசவர்த்தகம், lapis lazuli. 5. கல்லுப்பு; sea-salt. 6. கல்நார்; asbestos. 7. கெந்தி; sulphur. 8. கிளிஞ்சில்; bi-valve shell. 9. கெவுரி; yellow arsenic. 10. சாத்திர வேதி; a mineral dissolvent. 11. நண்டு; river-crab. 12. நத்தை; snail. 13. நற்சுண்ணம்; calcium carbonate, 14. நிமிளை; bismuth or antimony. 15. வெடியுப்பு; nitre (சா.அக.);. |
காரியமலை | காரியமலை kāriyamalai, பெ.(n.) காரீயம் வெட்டி எடுக்கும் மலை; mountain wherefrom black lead ore is dug out – Black lead mine (சா.அக.);. [கார்+ஈயம்+மலை.] |
காரியமித்துரு | காரியமித்துரு kāriyamitturu, பெ.(n.) காரீயத்திற்கு வேண்டிய நட்பான (அனுகூலமான); சரக்குகள்; friendly drugs to black lead. 1. கல் மதம்: blitumen. 2. இதளியம் (சூதம்);; mercury. 3. செம்பு; copper. 4.தவளை; frog. 5. நாகம்: zinc. 6. பூ நாகம்; earth-worm. 7. மயில் (மயூரச்); செம்பு, copper from peacock’s feather. 8. வங்கம்; lead. 9. வெள்ளி; silver (சா.அக.);. |
காரியாறு | காரியாறு kāriyāṟu, பெ.(n.) ஒரு ஆறு. a river. [காரி+ஆறு] நெடுங்கிள்ளி என்னும் சோழன் இறந்த இடம் (அபி.சிந்);. |
காரியாற்றுத்துஞ்சியநெடுங்கிள்ளி | காரியாற்றுத்துஞ்சியநெடுங்கிள்ளி kāriyāṟṟuttuñciyaneṭuṅkiḷḷi, பெ.(n.) சோழ பரம்பரையைச் சார்ந்தவன்; a king who belonged to Chölä dynasty. [காரி+ஆறு+துஞ்சிய+நெடுங்கிள்ளி] உறையூரில் இருந்த இவன் கோவூர்கிழாரால் பாடப்பெற்றவன். சோழன் நலங்கிள்ளிக்குப் பகைவன். இவனை நெடுங்கிள்ளி என்றும் கூறுவர் (அபி.சிந்:);. [காரி+ஆறு+துஞ்சிய+நெடும்+கிள்ளி] |
காரிரத்தம் | காரிரத்தம் kārirattam, பெ.(n.) 1. கருப்பு அரத்தம்; venous blood. 2. ஆடுதின்னாப் பாளை; worm killer, woody – Aristolochia bracteata(சா.அக.);. [காரி+ரத்தம்] |
காரிரத்னகவிராயர் | காரிரத்னகவிராயர் kāriratṉakavirāyar, பெ..(n.) ஒரு மாலியர்; the person who belonged to the vainava caste. இவர் திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார் திருநகரியை அடுத்த பேறையூரில் சற்றேறக் குறைய 300 ஆண்டுகளுக்கு முன்பிருந்தவர். மாறனலங்காரவுரை, பரிமேலழகர் நுண் பொருண்மாலை முதலியன இயற்றியவர் (அபி.சிந்);. |
காரிழைநாதம் | காரிழைநாதம் kāriḻainātam, பெ.(n.) கந்தகம், sulphur (செ.அக.);. [கார்+கழை+நாதம்] |
காரிவிகாரி | காரிவிகாரி kārivikāri, பெ.(n.) குதிரை; horse (சா.அக.);. [காரி+விகாரி] |
காரிவிதை | காரிவிதை kārivitai, பெ.(n) கண்டங்கத்திரி விதை; seeds of Indian prickly night shade (சா.அக.);. [காரி+விதை.] |
காரீஉ டம் | காரீஉ டம் kārīuṭam, பெ.(n.) எரு முட்டைக் குவியல்; heap of cow-dung cakes (சா.அக.);. [கார்+இடம்] |
காரீமை | காரீமை kārīmai, பெ. (n.) கொடிவேலி, Ceylon leadwort – Plumbago zeylanica (சா.அக.);. [கார் – காரீமை] |
காரீயச்செம்பி | காரீயச்செம்பி kārīyaccempi, பெ.(n.) செந்திராய், a red plant of Mollugo (chickweed); genus (சா.அக.);. [காரீயம்+செம்பி] |
காரீயச்செம்பு | காரீயச்செம்பு kārīyaccempu, பெ.(n.) காரீயத்தோடு மற்றச் சரக்குகளைச் சேர்த்து உருக்கி எடுக்கும் செம்பு pure copper extracted from black lead by melting it with other ingredients (சா.அக.);. [காரீயம்+செம்பு] |
காரீரம் | காரீரம் kārīram, பெ.(n.) குழலா தொண்டை, common caper-Capparis aphylla alias C. Sodada. [கார்-காரீரம்] இது ஒரு முட்செடி. இதன் பழத்தை உண்ணலாம். கொழுந்தைப் பொடி செய்து கொப்புளிக்கும் மருந்தாகப் பயன்படுத்தலாம். இப்பூடை பச்சையாகவே கொளுத்தினால் கொழுந்து விட்டு எரியும் (சா.அக.);. |
காருகச்சி | காருகச்சி kārukacci, பெ.(n.) கக்கரிக்காய்; field – cucumber – Cucumis melo (சா.அக.);. [கார்-கச்சி] [P] |
காருகத்தம் | காருகத்தம் gārugattam, பெ.(n.) இல்லற நிலை (சிலப். 9:28, உரை.);; the state of being a householder. [Skt.{} → த.காருகத்தம்.] |
காருகத்தியம் | காருகத்தியம் gārugattiyam, பெ.(n.) காருகத்தம் பார்க்க;see {}. “நீதி நிலைபெறு காருகத்தியமா மாச்சிரமம்” (குற்றா. தல. மந்தமா.34.); [Skt.{} → த.காருகத்தியம்.] |
காருகத்திரி | காருகத்திரி kārukattiri, பெ.(n.) தொண்டையில் விருவிருப்பை உண்டாக்கும் காரற் கத்திரி; a kind of brinjal the taste of which lends irritation to the throat; brinjal with an acrid taste (சா.அக.);. [காரு+கத்திரி] |
காருகத்தொழில் | காருகத்தொழில் kārukattoḻil, பெ.(n.) நெய்தற்தொழில் (சிலப்.5, 17, உரை);; spinning, weaving (செ.அக.);. [காருகம் + தொழில்.] |
காருகன் | காருகன்1 kārukaṉ, பெ.(n.) 1. நெசவுத் தொழில் செய்வோன்; weaver. “கட்டு நுண்வினைக் காருகரிருக்கையும்” (சிலம் 5:17);. 2. துணி வெளுப்பவன் (வண்ணான்);; washerman. 3. ஓவியன் (யாழ்.அக..);; painter (செ.அக.);. [காருகம்-காருகன்] காருகன்2 kārukaṉ, பெ.(n.) கொலை செய்பவன் (சூடா);; murderer(செ.அக.);. காருகன் gārugaṉ, பெ.(n.) கொலையாளன் (சூடா.);; murderer. [Skt.{} → த.காருகன்.] |
காருகபத்தியம் | காருகபத்தியம் gārugabattiyam, பெ.(n.) துவிசனுக்குரிய வேதாக்கினி மூன்றனுள் முதன்மையானது; the central sacrifical fire of a {}, one of three {}. “காருக பத்தியமாதி மூன்றழல்” (தணிகைப்பு, அகத்.490);. [Skt.{} → த.காருகபத்தியம்.] |
காருகம் | காருகம்2 kārukam, பெ.(n.) இல்லறம்; life of a householder. “காருக மடந்தை” (மணிமே.23, 105); (செ.அக);. காருகம்3 kārukam, பெ.(n.) குரோசாணி யோமம்; khorassan ajwaus-Hyoscyamus niger(சா.அக.);. காருகம் gārugam, பெ.(n.) இல்லறம்; life of a householder. “காருக மடந்தை” (மணிமே 23:105.); [Skt.{} → த.காருகம்.] |
காருகம்’ | அஅன்ன ஆவன்னா aaṉṉaāvaṉṉā, பெ. (n.) அரிவரி யென்னும் தமிழ் வண்ணமாலை (குறுங்கணக்கும் நெடுங்கணக்கும்);; Tamil Alphabet. எழுத்துகளைக் கல்லா மக்கள், சிறப்பாகச் சிறுவர் சிறுமியர், எளிதாக ஒலித்துக் கற்கும் பொருட்டு, பண்டைத் தொடக்கப்பள்ளி யாசிரியர் உயிரும் உயிர்மெய்யுமாகிய இருவகைக் குறிலுக்கும்’அன்ன’ச் சாரியையும், இருவகை நெடிலுக்கும் அன்னா’ச் சாரியையும் ஏற்படுத்தினர்; ‘அஆ’ என்னும் ஈரெழுத்தும் தமிழ் வண்ணமாலையின் முதலெழுத்துகளாதலின், அவை முதற்குறிப்பாகி, அம் முதற்குறிப்பே’அஅன்ன ஆவன்னா’ என்று வண்ணமாலைப் பெயராயிற்று. இது ‘alpha’, ‘beta’ என்னும் கிரேக்க இரு முதலெழுத்துகளும் சேர்ந்து”alphabetum’ என்று இலத்தீனிலும், ‘alphabet’ என்று ஆங்கிலத்திலும், வண்ணமாலைப் பெயராக வழங்குவது போன்றது; அ, இ, க, கி என்று ஒரு மாத்திரை யொலிக்குங்குறிலெழுத்துகளை விட்டொலிப்பது, சிறுபிள்ளைகட்குச் சற்று வருத்தமுற மூச்சு வாங்குவதால்,’அஅன்ன’ என்பது”ஆனா” என்றும் இஅன்ன என்பது’ஈனா’ என்றும், மாணாக்க நிலையிலும் பின்னும் ஒலிக்கப்பட்டுவந்தன. இவ்வொலிப்புமுறை குறில்களின் உண்மையான ஒலியளவை உடனே தெரிந்துகொள்ளத் தடையாயிருந்தமையின், இந்நூற்றாண்டுத் தொடக்கத்தில் அரசியற் கல்வித்துறையறிஞர், சாரியையின்றி ஒலிநூன் முறைப்படி அ, ஆ, இ, ஈ,… என்று ஒலித்துப் பயிலும் முறையைப் புகுத்திவிட்டனர். அதனால், இன்று ‘அஆ’ என்பது வண்ணமாலைப் பெயராக வழங்கி வருகின்றது. இது புணர்ச்சியில்’அவ்வா’ என்றாகும்; |
காருகரணை | காருகரணை kārukaraṇai, பெ.(n.) காரற் கருணை; caustic potato; itching yam – Amorphophallus campanullatus. [காரல் –காரு+கரணை] சாப்பிட்டால் தொண்டையில் விறுவிறுப்பை உண்டாக்கும் ஒரு வகைக் கரணைக் கிழங்கு. இதன் வேர் கொடிய காரமானது. சூடுண்டாக்க வெளிப்பூச்க மருந்தாகப் பயன்படும். இதைத் துண்டித்து, புளியிட்டு ஊறுகாய் போடலாம். பாகிலிட்டுச் சமைத்து நாட்பட வைத்துப் பயன்படுத்தலாம். இதன் நச்சுத் தன்மையைப் போக்க இரண்டு மூன்று முறை கூட வேக வைக்க வேண்டி வரும் (சா.அக.);. |
காருகவடி | காருகவடி kārukavaṭi, பெ.(n.) கோள்களின் (கிரக); நிலை; position of a planet, “காருகவடிப்பயின்று”(சிலப்.26:25); (செஅக);. [skt, graha →த. காருகம் காருகம்+அடி] காருகவடி gārugavaḍi, பெ.(n.) கோள் நிலை; position of a planet. “காருகவடிப் பயின்று” (சிலப்.26:25.);. [காருகம் + அடி.] [Skt.graha → த.காருகம்.] |
காருகவி | காருகவி kārukavi, பெ.(n.) விடத்தலை; ashy babool; sore-eye plant- Dichrostachys cinera (சா.அக.);. |
காருக்குளம்பு | காருக்குளம்பு kārukkuḷampu, பெ.(n.) கிராம்பு; clove(சா.அக.);. [கார்+குளம்பு] |
காருடகூடன் | காருடகூடன் kāruṭaāṭaṉ, பெ.(n.) ஒரு சிவகூட்டத் தலைவன்; one of the head of celestial host to Śiva (அபி.சிந்.);. |
காருடதந்திரம் | காருடதந்திரம் kāruṭatantiram, பெ.(n.) நஞ்சு நீக்கும் மந்திரங்கள் முதலியவற்றைக் கூறும் நூல்; a work dealing with the art of removing poison with charms, etc. (செ.அக.);. [Skt. Gāruga+tantra த.காருடதந்திரம்] காருடதந்திரம் kāruḍadandiram, பெ.(n.) விடம் தீர்க்கும் மந்திரங்கள் முதலியவற்றைக் கூறும் நூல்; a work dealing with the art of removing poison with charms, etc. [Skt.{}+{} → த.காருடதந்திரம்.] |
காருடன் | காருடன் kāruṭaṉ, பெ.(n.) ஏமாற்றுக்காரன்; jugglar. [காரடன்→ அகாருடன்] |
காருடபுராணம் | காருடபுராணம் kāruṭapurāṇam, பெ.(n.) ஒரு தொன்ம நூல்; a kind of mythology book (அபி.சிந்.);. |
காருடம் | காருடம்1 kāruṭam, பெ.(n) 1. கருட குமுகாயம், a flock of kites. “காருடங் கண்ட பாந்தட் கணமென” [கந்தபு. தாரகன்வ.54]. 2. கலைகள் அறுபத்து நான்கனுள் நஞ்சு நீக்கும் கலை; art of removing poison with charms, mantras, etc., invoking Garuda, one of arupattu-nāńgu kalai. 3. நூற்றியெட்டு அறிவுப் பகுதிகளுள் (உபநிடதங்களுள்);; name of an Upanisad. 4.பதினெண் தொன்மங்களுள் ஒன்றான கருட புராணம் (கந்தபு.பாயி.55);; a chief purana. 5. பச்சைக் கல்; green stone, igneous rock, composed chiefly of felspar and horn blend, “முத்தந் துப்புக் காருடம்” (திருவிளைமாணிக்48);(செஅக);. [கார்-காருடம்] காருடம்2 kāruṭam, பெ.(n.) 1. மருக்காரை; emetic-nut. 2. கொடிவகை; snake-gourd – Trichosanthes anguina (செ.அக.);. காருடம் kāruḍam, பெ.(n.) 1. கருட கூட்டம் (சமூகம்);; a flock of kites. “காருடங் கண்ட பாந்தட் கணமென” (கந்தபு. தாரகன்வ. 54);. 2. அறுபத்துநாலு கலையுள் நஞ்சைத் தீர்க்கும் கலை (வித்தை);; art of removing poison with charms, mantras, etc., invoking Garuda one of {}. 3. நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று; name of an Upanisad. 4. கருடபுராணம் (கந்தபு. பாயி.55.); பார்க்க;see {}. 5. பச்சைக்கல்; green stone, digneous rock, composed chiefly of felspar and hornblende. “முத்தந் துப்புக் காருடம்” (திருவிளை.மாணிக்.48);. [Skt.{} → த.காருடம்.] |
காருடயூகம் | காருடயூகம் kāruṭayūkam, பெ.(n.) கருடன் வடிவில் அமைக்கப்படும் ஒரு படைவகுப்பு, garuda-shaped array of an army. “விடுமனும் வகுத்தான் கருங்கா ருடயூகம்”(பாரதமூன்றாம்போ2);(செஅக);. [கலுழன்→அகருடன்→அகாருடன்+Skt.வியூகம்] காருடயூகம் kāruḍayūkam, பெ.(n.) கலுழன் உருவாக (கருடவுருவாக); அமைக்கும் ஒரு படைவகுப்பு; garuda-shaped array of an army. “வீடுமனும் வகுத்தான் கருங்கா ருடயூகம்” (பாரத.மூன்றாம் போ.2.);. [{} + {} → த.காருடயூகம்.] |
காருடவிச்சை | காருடவிச்சை1 kāruṭaviccai, பெ.(n.) நஞ்சு மருத்துவம்; art of counteracting poison by charms, incantations, etc. (செ.அக.);. [கலுழன்→கருடன்→காருடன்+விச்சை] [வித்தை-விச்சை] காருடவிச்சை2 kāruṭaviccai, பெ.(n.) ஏமாற்று விச்சை, ஏமாற்றுக்கலை; legerdemain, jugglery (செ.அக.);. [தெ.காரடமு→காரடம்+அகாருடம்+விச்சை] [வித்தை – விச்சை] |
காருடவிஞ்சை | காருடவிஞ்சை kāruṭaviñcai, பெ..(n.) காருடவிச்சை1 பார்க்க; see karuda-viccai. “காருடவிஞ்சை வித்தகர்” (பெரியபு. திருஞான.1062); (செஅக);. [கலுமுன்→கருடன்→காருடன்+விஞ்சை.] காருடவிஞ்சை kāruḍaviñjai, பெ.(n.) காருடவித்தை பார்க்க;see {}. “காருடவிஞ்சை வித்தகர்” (பெரியபு. திருஞான.1062);. [காருடவித்தை → காருடவிஞ்சை.] |
காருடவித்தை | காருடவித்தை kāruḍavittai, பெ.(n.) நஞ்சு மருத்துவம்; art of counteracting poison by charms, incantations, etc. [Skt.{}+{} → காருடவித்தை.] |
காருணிகன் | காருணிகன் gāruṇigaṉ, பெ.(n.) நல்ல குணம் கொண்டவன், அன்புள்ளவன்; kind, benevolent person. பரம காருணிகரான பெரியவாச்சான் பிள்ளை. [Skt. {} → த.காருணிகன்.] |
காருணியன் | காருணியன் kāruṇiyaṉ, பெ.(n.) காருணிகள் பார்க்க;see {}. [காருண்ய → காருணியன்.] |
காருணியம் | காருணியம் kāruṇiyam, பெ.(n.) இரக்கம், அருள், அன்பு; mercy, grace, compassion. “காருணியத்தால் வாவென வந்து” (திருப்போ.சந்.பிள்ளை.செங்கீரை 5.);. [காருண்யம் → த.காருணியம்.] |
காருண்ணியம் | காருண்ணியம் kāruṇṇiyam, பெ.(n.) காருணியம் பார்க்க;see {}. [Skt.{} → த.காருண்ணியம்.] |
காருண்யபிதிர்க்கள் | காருண்யபிதிர்க்கள் kāruṇyabidirkkaḷ, பெ.(n.) மாளய பக்கத்தில் (பக்ஷத்திற்); பூசிக்கப்படும் பெயரறியப் படாத தென்புலத்தார் தொகுதி; the manes whose names are not known and who are propitiated during the {} fortlight. [Skt.{}+{} → த.காருண்ய பிதிர்க்கள்.] |
காருண்யமேகம் | காருண்யமேகம் kāruṇyamēkam, பெ.(n.) முகிலைப் (மேகம்); போன்ற கைம்மாறு கருதாது உதவி செய்பவன் (வின்.);; one whose bounty flows without stint or expectation of recompense, as a cloud. [Skt.{}+{} → த.காருண்யமேகம்.] |
காருண்யம் | காருண்யம் kāruṇyam, பெ.(n.) காருணியம் பார்க்க;see {}. |
காருன்னி | காருன்னி kāruṉṉi, பெ.(n.) ஆடுதின்னாப் பாளை; worm killer; woody – Aristolochia bracteata (சா.அக.);. [P] |
காரும்பாதி | காரும்பாதி kārumpāti, பெ.(n.) கருவண்டு; black beetle (சா.அக.);. [கார் (கருநிறம்);→காரும்பாதி] |
காருராசி | காருராசி kārurāci, பெ.(n.) கொடிவகை (மலை.);; snake-gourd (செ.அக);. |
காருளநாங்கி | காருளநாங்கி kāruḷanāṅki, பெ.(n.) கொத்தான்; air-plant, air creeper Cassytha filliformis (சா.அக.);. [காருளம்+நாங்கி] |
காருவன் | காருவன் kāruvaṉ, பெ.(n.) காருவாகன் பார்க்க; see kāruvagan (செ.அக.);. காருவன் kāruvaṉ, பெ.(n.) காருவாகன் பார்க்க;see {}. |
காருவாகன் | காருவாகன் kāruvākaṉ, பெ.(n.) துணிகளைத் துவைப்போன் (வண்ணான்);; washer man. “சாணகம் உவர்கார முதலியவற்றால் காருவாகன். நின்மாக்கா நிற்பன்”(சிசி2 52 மறை); (செஅக.); [கார்+வாகன்.] காருவாகன் kāruvākaṉ, பெ.(n.) வண்ணான்; washerman. “சாணாகம் உவர் காரமுதலியவற்றால் காருவாகன்… நின் மலமாக்காநிற்பன்” (சி.சி.2:52, மறை.); [Skt.{}+{} → த.காருவாகன்.] [P] |
காரை வீடு | காரை வீடு kāraivīṭu, பெ.(n.) கண்ணாம்புச் சாந்தினைக் கொண்டு பூசப்பட்ட சுவர் கொண்ட வீடு; mortar plastered house, [காரை+வீடு] |
காரைக்கட்டி | காரைக்கட்டி kāraikkaṭṭi, பெ.(n.) 1. காய்ச்சுக் கட்டி அல்லது பற்காவிக்கட்டி, catechu or black catachu – Catechu nigrum of chemists. 2. ஒரு பல் நோய், a disease of the teeth – Calcareous deposit. [காரை+கட்டி] இதனால் ஊத்தைக் கட்டி பல்லின் மேல் இருக்கும் பளிங்கு விழுந்து அகலும் (சா.அக.);. |
காரைக்கட்டு | காரைக்கட்டு kāraikkaṭṭu, பெ.(n.) பல்லின் அடியில் ஊத்தை படர்கை, formation of hard crust or concretion in the teeth (சா.அக.);. [காரை+கட்டு] |
காரைக்கரிக்கான் | காரைக்கரிக்கான் kāraikkarikkāṉ, பெ.(n.) உளுந்து; black-gram – Phaseolus mungoglaber(சா.அக.);. [காரை+கரிக்கான்.] |
காரைத்தேகிகம் | காரைத்தேகிகம் kāraittēkikam, பெ.(n.) துத்தி; Indian marshmallow – Sida mauritiana(சா.அக.);. |
காரைப்பழம் | காரைப்பழம் kāraippaḻm, பெ.(n.) காரைச்செடியின் பழம்; honey thorn fruit [காரை+பழம்] |
காரைப்பொடி | காரைப்பொடி kāraippoṭi, பெ.(n.) காய்ந்த ஒரு சிறுமீன்; asmall bride-fish – Equuala genus (சா.அக.);. [காரை+பொடி] |
காரையெலும்பு | காரையெலும்பு kāraiyelumpu, பெ.(n.) கழுத்தின் கீழ் இரு பக்கமும் தோள் மூட்டுவரை அமைந்துள்ள எலும்பு; collar bone. [காரை+எலும்பு] |
காரைவேர் | காரைவேர் kāraivēr, பெ.(n.) 1. காரைச் செடியின் வேர்; root of karai plant. 2.பல்லினடி; the bottom or root of the teeth at the cemented portions (சா.அக.);. [காரை+வேர்] |
கார்-த்தல் | கார்-த்தல் kārttal, செ.கு.வி.(v.i.) உப்புக் கரித்தல்; to be saltish; having saline tase (சா.அக.);. [கரித்தல்-கார்த்தல்.] |
கார்கரனை | கார்கரனை kārkaraṉai, பெ. (n.) கருணைக்கிழங்கு (பதார்த்த:415);; elephantyam – Typhonium orixense (செ.அக.);. [காறுகருணை→அகாறாக்கருணை=சேனைக் கிழங்கு காறு>அகாரு>கார்) [P] |
கார்கருனை | கார்கருனை kārkaruṉai, பெ. (n.) காருகரணை பார்க்க; see kārukaranai (சா.அக.);. |
கார்காஞ்சிரம் | கார்காஞ்சிரம் kārkāñciram, பெ. (n.) கருப்பு எட்டிப் பூடு; bitter luffa-Peristrophe bicalyculata. [கார்+காஞ்சிரம்] இதன் அடித்தண்டு அறுகோண வடிவாகும். கிளைகள் உடையது; வெளிறிய சிவப்பு நிற பூக்களைக் கொண்டது. இதன் சமூலத்தை அரிசி களைந்த நீரில் இடித்துப் போட்டு காய்ச்சிய நீரைக் கொடுக்க பாம்புக்கடி குணமாகும் (சா.அக.);. |
கார்காத்தார் | கார்காத்தார் kārkāttār, பெ. (n.) கார் காத்தவேளாளர் பார்க்க; see karkatta vělalar(செ.அக.);. [கார்காத்தார் = மழையின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்] |
கார்கானா | கார்கானா kārkāṉā, பெ.(n.) தொழில் செய்யும் இடம்; workshop, factory, place of business. த.வ. தொழிற்கூடம், பணியகம், தொழிற்சாலை. [U.{} → த.கார்கானா.] |
கார்காலம் | கார்காலம் kārkālam, பெ. (n.) கார்ப்பருவம் பார்க்க; see kār-p-paruvam (செ.அக.);. [T.kârukâlamu→M.kârkkâlam → த.கார்காலம்] |
கார்குட்டி | கார்குட்டி kārkuṭṭi, பெ.(n.) சிறிய செம்மறிக்கடா, a small he-goat. [கார்+குட்டி] |
கார்குவளை | கார்குவளை kārkuvaḷai, பெ. (n.) மழை காலத்தில் பூக்கும் குவளைப் பூ water-lily flowering in rainy season (சா.அக.);. [கார்+குவளை] |
கார்கை | கார்கை kārkai, பெ. (n.) துவரை; red gram – Cajanus indicus (சா.அக.);. [கார்+கார்கை] |
கார்கோணி | கார்கோணி kārāṇi, பெ. (n.) சிறுசெடிவகை (பதார்த்த.263);; turnsole – Heliotropium indicum (செ.அக.);. [கார்+சகோணி] |
கார்கோள் | கார்கோள் kārāḷ, பெ.(n.) தலைமைப் பதவியில் இருப்பவன்; chief executive. [U.{} → த.கார்கோன்] |
கார்கோழி | கார்கோழி kārāḻi, பெ. (n.) 1 காட்டுக் கொள்; black horse -gram – Cassiaabsus. 2. சீரகவகை (பதார்த்த 1034);, black cumiNigella sativa(செ.அக.);. [கார்+கோழி] |
கார்க்கன் | கார்க்கன் kārkkaṉ, பெ. (n.) ஒரு முனிவன்; a saint, தொண்டை நாட்டில் திருக்காரகத்தில் திருமால் அருள் பெற்றவன் (அபிசிந்);. [கார்→கார்க்கன்] |
கார்க்கவன் | கார்க்கவன் kārkkavaṉ, பெ. (n.) ஒரு மாலிய வணிகன்; a vaishnavite merchant. [கார்→அகார்க்கவன்.] இவன் வயிணவன் என்றும் ஒருவருடன் கூடிப் பல வணிகரைக் கொன்று, ஒரு கோவிலில் ஏற்றிய விளக்கைக் காண வயிணவனுடன் முத்தி பெற்றான் (அபி.சிந்);. |
கார்க்கானாதார் | கார்க்கானாதார் kārkkāṉātār, பெ.(n.) பண்டசாலை அதிகாரி; proprietor of a favtory. [U.{} → த.கார்க்கானாதார்.] |
கார்க்கோன் | கார்க்கோன் kārkāṉ, பெ.(n.) வாட்டாட்சியரின் கீழுள்ள ஓர் அரசிறை அலுவலர் (P.T.L.);; a subordinate revenue officer under a Tahsildar. [Persn.{} → த.கார்க்கோன்.] |
கார்க்கோல் | கார்க்கோல் kārkāl, பெ. (n.) கார்போகவரிசி; hazel-leaved psorales – Psoraleacoriflora (சா.அக.);. [கார்+கோல்.] |
கார்க்கோளி | கார்க்கோளி kārkāḷi, பெ. (n.) 1. கருப்புகொள்; black horse gram – Cassia absus. 2. கருஞ்சீரகம்; nigellaseeds. 3. தேட்கொடுக்கி; Indian turnsole – Pandamus Odoratissimus alias Heliotropium indicum. 4. நிலப்பனை; ground palm – Curculigo drehioides. 5. முத்தக்காக; koray root – Cyperus rotundus(சா.அக.);. [கார்+கோளி] |
கார்த்தபசத்துவம் | கார்த்தபசத்துவம் kārttabasattuvam, பெ.(n.) பெண்களுக்குரிய பத்துக் குணங்களுள் ஒன்று (கொக்கோ. 4 : 28);; the natural disposition of women of the donkey-class, one of pattu-cattuvam. [Skt.{} + sat-tva → த.கார்த்தபசத்துவம்.] |
கார்த்தபம் | கார்த்தபம் kārttabam, பெ.(n.) கழுதை; ass. [Skt.gardabha → த.கார்த்தபம்.] |
கார்த்திகம் | கார்த்திகம் gārttigam, பெ.(n.) நிலவின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும் ஆண்டின் எட்டாவது மாதம்; eighth lunar month. [Skt.{} → த.கார்த்திகம்.] |
கார்பாரி | கார்பாரி kārpāri, பெ.(n.) கார்வாரி பார்க்க;see {}. [U.{} → த.கார்பாரி.] |
கார்பார் | கார்பார் kārpār, பெ.(n.) அதிகாரம்; rule, dominion. கார்பார் பண்ணுகிற வேங்கடராயர் காதிலேகேட்டிடவே (தேசிங்கு-கதை);. [U.{} → த.கார்பார்.] |
கார்ப்படிகன் | கார்ப்படிகன் gārppaḍigaṉ, பெ.(n.) தூயப் (புனிதப்); பயணன் (யாழ்.அக.);; pilgrim. [Skt.{} → த.கார்ப்படிகன்.] |
கார்ப்பவம் | கார்ப்பவம் kārppavam, பெ. (n.) உணவுக்குரிய ஒருவகைக் கிழங்கு கருணைக் கிழங்கு an esculent root knownas elephant-footyam or purple-stalked a dragon – Dracontium Polyphyllum alias Typhonium trilobatum (சா.அக.);. [கார்-கார்ப்பவம்] |
கார்ப்பான | கார்ப்பான kārppāṉa, பெ. (n.) 1உறைப்பான acid pungent. 2 உவர்ப்பான; saltish(சா.அக.);. [கார்ப்பு+ஆன.] |
கார்முகிற்பாடாணம் | கார்முகிற்பாடாணம் kārmukiṟpāṭāṇam, பெ. (n.) ஒரு வகை வைப்பு நஞ்சு: a prepared arsenic so called from its colour of the clouds (சா.அக.);. [கார்+முகில்+பாடாணம்] |
கார்முகில்வன்னம் | கார்முகில்வன்னம் kārmukilvaṉṉam, பெ. (n.) தீமுறுகல் நஞ்சு; a dark grey coloured arsenic (சாஅக);. [கார்+முகில்+வன்னம்] |
கார்மேகசாரம் | கார்மேகசாரம் kārmēkacāram, பெ. (n.) காசியுப்பு (யாழ்.அக.);; a mineral salt (செ.அக.);. [கார்-மேக+சாரம்] |
கார்வங்கம் | கார்வங்கம் kārvaṅkam, பெ. (n.) கருவங்கம், black-lead (சா.அக.);. [கார்+வங்கம்.] |
கார்வளங்கொண்டமண்டலம் | கார்வளங்கொண்டமண்டலம் kārvaḷaṅkoṇṭamaṇṭalam, பெ. (n.) பாண்டிநாட்டில் உள்ள மண்டலங்களுள் ஒன்று one of the part where in Pāngīya-nādu (அபி.சிந்.);. [கார்+வளம்+கொண்ட+மண்டலம்] |
கார்வாரி | கார்வாரி kārvāri, பெ.(n.) செயலாளன், செயல்காரன்; one who conducts the affairs or business of another, manager, agent, superintendent. [U.{} → த.கார்வாரி.] |
கார்வாரித்தம்பிரான் | கார்வாரித்தம்பிரான் kārvārittambirāṉ, பெ.(n.) சிவமடத்தின் உசாவல் (விசாரணைத்); தம்பிரான்; a sanyasi superintendent of a {} monastery. [கார்வாரி + தம்பிரான்.] [U.{} → த.கார்வாரி.] |
கார்வார் | கார்வார் kārvār, பெ.(n.) கார்பார் பார்க்க;see {} [U.{} → த.கார்வார்.] |
காறட்டுக்கிறங்கு | காறட்டுக்கிறங்கு kāṟaṭṭukkiṟaṅgu, பெ.(n.) காரட்டு2 பார்க்க;see {} (சா.அக.);. |
காறன்தைலம் | காறன்தைலம் kāṟaṉtailam, பெ.(n.) ஆளி விதை எண்ணெய்யும், சுண்ணாம்பு நீரும் சேர்ந்த எண்ணெய்; a liniment composed of linseed oil and lime-water – Carronoil(சா.அக.);. [காறல்+தைலம்] |
காறற்கருணை | காறற்கருணை kāṟaṟkaruṇai, பெ..(n.) கருணைக் கிழங்கு; elephant yam with a rancid taste – Typhonium orixense (சா.அக.);. [காறல்+கருணை.] |
காறற்குறட்டை | காறற்குறட்டை kāṟaṟkuṟaṭṭai, பெ..(n.) சவரிக்கொடி; bitter-ground, round snake gourd – Trichosanthes palmate, [காறல்+குறட்டை] இதன் இலைகள் அரும்புள்ளன. பூக்கள் பெரிது, வெண்மை நிறமும் நாற்றமும் உள்ளவை. சிகப்பாக உருண்டை வடிவில் அரத்தியின் (ஆப்பிள்); பருமனில் இருக்கும். உலர்ந்தது கிச்சிலிப்பழம் நிறமுடையது. இதனுள் சதைப்பற்று ஆடும் கொடி கசக்காது. இதன் வேருக்கு நஞ்சுத் தன்மை உண்டு. இது ஆ நோய்களுக்குப் பயனுள்ளது (சா.அக.);. |
காறாவெண்ணெய் | காறாவெண்ணெய் kāṟāveṇīey, பெ.(n.) கருமையான முலைக்காம்புடைய ஆவின் வெண்ணெய்; butter from the milk of black-nippled cow (சா.அக.);. [கார் + ஆ வெண்ணெய். காரான்-காறான் (கொ.வ.);] |
காறித்துப்பு-தல் | காறித்துப்பு-தல் kāṟittupputal, 5 செ.கு.வி. (v.i.) வெறுப்பை வெளிப்படுத்தும் வகையில் வாயில் உள்ள எச்சிலைத் துப்புதல்; spit out of rancour. அவனெல்லாம் ஒரு மனிதனா? என்று கூறிவிட்டுக் காறித்துப்பினார். [காறி+துப்பு-தல்.] |
காறுபாறாயிரு-த்தல் | காறுபாறாயிரு-த்தல் kāṟupāṟāyiruttal, 2செ.கு.வி. (v.i.) விழிப்பாயிருத்தல்; to keep a strict eye, as upon a person (செ.அக.);. [காறு+பாறா+இருத்தல்.] |
காறுபாறு | காறுபாறு kāṟupāṟu, பெ.(n.) கார்பார் பார்க்க;see {}. [U.{} → த.கார்பார் → காறுபாறு.] |
காறுபாறுபடி-த்தல் | காறுபாறுபடி-த்தல் kāṟupāṟupaṭittal, 4 செ.கு.வி. (v.i.) ஒரு செயலைச் செய்வதற் குரிய ஆளுமைப்பண்பைப் பழகுதல்; to learn how to manage business (செ.அக.);. [காறு-மாறு+படி-.] |
காற்கருணை | காற்கருணை kāṟkaruṇai, பெ.(n.) கருணைக் கிழங்கு; elephant yam – Typhonium orixense (சா.அக.);. [காரல்+கருணை.] |
காற்கவசமிடு-தல், | காற்கவசமிடு-தல், kāṟkavacamiṭutal, 5 செ.கு.வி.(v.i.) 1. காலுக்கு மேற்சோடு போடல்; wearing stockings as a protection against cold. 2. செருப்புப் போடுதல்; wearing shoes (ச.அக);. [கால்+கவசம் + இடு-தல்.] |
காற்கவசம் | காற்கவசம் kāṟkavacam, பெ.(n.) மிதியடி, செருப்பு (பதார்த்த:1457, தலைப்பு);; sandals (செ.அக.);. [கால்+கவசம்] |
காற்காய்ப்பு | காற்காய்ப்பு kāṟkāyppu, பெ.(n.) உள்ளங் கால் அல்லது பாதத்தின் வேறு இடங்களில் தோல் உராய்தலினால் ஏற்படும் காய்த் தடிப்பு; callousness of the skin of the sole or the skin of other part of the foot (சா.அக.);. [கால்+காய்ப்பு] |
காற்குளசு | காற்குளசு kāṟkuḷacu, பெ.(n.) 1. பாதத்தின் உள்ளே அசையும் எலும்புகளின் கூட்டம்; the inward juncture of the moveable bones in the feet. 2.கணைக்காற் பொருத்து; the in-step proper with its 7 bones – Tarsus (சா.அக.);. [கால்+குளசு] |
காற்குளசெலும்பு | காற்குளசெலும்பு kāṟkuḷacelumpu, பெ.(n.) பாதத்தின் உட்பக்கமுள்ள அசையும் எலும்புகள் அதாவது புறங்காலெலும்பு; bones of the in-step; the middle of the foot or part between the toes and the ankle – Meta tarsus (சா.அக.);. [கால்+குளசு+எலும்பு] |
காற்கோடகி | காற்கோடகி kāṟāṭaki, பெ.(n.) கக்கரிக்காய், cucumber (சா.அக.);, [காற் + கோடகி] |
காற்கோடல் | காற்கோடல் kāṟāṭal, பெ.(n.) படிகக்கல் அல்லது கடல் வண்ணக் கல்; beryl – Aquamarina. [கால்+கோடல்.] பச்சையாக இருக்கும் இக்கல் பாம்புக் கடியால் ஏற்பட்ட நஞ்சினைத் தீர்க்கும். இது வண்ணத்திலும், குணத்திலும், அமைப்பிலும் பைம்மணி (மரகதம்);யை ஒத்ததாய் இருந்தாலும் அதன் அளவிற்கு வண்ணமாய் இராது (சா.அக.);. |
காற்சப்பைநழுகு-தல் | காற்சப்பைநழுகு-தல் kāṟcappainaḻukutal, 5 செ.கு.வி.(v.i.) காற்சப்பை எலும்பு இடத்தை விட்டுப் பெயர்தல்; dislocation of the hipbone(சா.அக.);. [கால்+சப்பை+நழுகு-தல்] |
காற்சிகம் | காற்சிகம் kāṟcikam, பெ.(n.) நாயுருவி; Indian burr – Achyranthes aspera (சா.அக.);. |
காற்சிராய் | காற்சிராய் kāṟcirāy, பெ.(n.) காற்சட்டை, trousers. [கால்+சிராய்] |
காற்சிலந்தி | காற்சிலந்தி kāṟcilanti, பெ.(n.) காலில் வரும் சிலந்திப் புண்; ulceration of the leg (சா.அக.);. [கால்+சிலந்தி] |
காற்சீப்பு | காற்சீப்பு kāṟcīppu, பெ.(n.) இடுப்புச் சந்தெலும்பு hip bone (செ.அக.);. [கால்+சிப்பு] |
காற்பனிகம் | காற்பனிகம் gāṟpaṉigam, பெ.(n.) கற்பிக்கப்பட்டது; that which is invented, newly fashioned. “தியான பூசாதிநிமித்தம் காற்பனிக தேகம்” (சி.சி.1:47, ஞானப்.);. [Skt.{} → த.காற்பனிகம்.] |
காற்பாசம் | காற்பாசம் kāṟpācam, பெ.(n.) பருத்தி: Indian cotton plant (செ.அக.);. |
காற்புற்று | காற்புற்று kāṟpuṟṟu, பெ.(n.) பாதம் வீங்கிப் பிறகு வெடித்துப்புரையுண்டாக்கும் ஒரு புற்று நோய்; a peculiar swelling of the foot in which the tubercles beneath the skin burst and leave sinuses (சா.அக.);. [கால்+புற்று.] |
காற்றட்டி | காற்றட்டி kāṟṟaṭṭi, பெ.(n.) முட்டிக்கால் தட்டி: a knock-kneed person (சா.அக.);. [கால்+தட்டி] |
காற்றறிவிக்கும்கருவி | காற்றறிவிக்கும்கருவி kāṟṟaṟivikkumkaruvi, பெ. (n.) காற்று அடிக்கின்ற திசையை அறிவிக்கும் கருவி; an instrument. [காற்று+அறிவிக்கும்+கருவி] |
காற்றாட | காற்றாட kāṟṟāṭa, வி.அ. (adv.) காற்றுப்படும் படி; காற்றை நுகரும்படி; for an airing. கடற்கரைப் பக்கம் காற்றாடப் போய் வரமுடியவில்லை (உ.வ.);. மொட்டை மாடியில் காற்றாடப்படுத்துக் கிடந்தேன் (உ.வ.);. [காற்று+ஆட] |
காற்றாடப்போடு-தல் | காற்றாடப்போடு-தல் kāṟṟāṭappōṭutal, செ.கு.வி.(v.i.) நிழலில் உலர்த்தல்; drying in the shade by exposing to the breeze (சா.அக.);. [காற்று+ஆட+போடு-] |
காற்றாடமூலை | காற்றாடமூலை kāṟṟāṭamūlai, பெ.(n.) காற்று படாத ஒதுக்கிடம்; an ill-ventilated secluded place (சா.அக.);. [காற்று+ஆடா+மூலை.] |
காற்றாடி | காற்றாடி kāṟṟāṭi, பெ.(n.) 1. ஒரு சட்டத்தின் மீது துணி அல்லது காகிதம் ஒட்டப்பட்டு வால் போன்ற நீளமான பகுதி சேர்க்கப்பட்டு நூலின் மூலமாகக் காற்றில் பறக்க விடப்படும் ஒரு விளையாட்டுப் பொருள்; பட்டம்; kite. 2. நறுக்கிய இரு ஒலைத் துண்டுகளை ஒன்றன் மீது ஒன்றாக வைத்து அதன் நடுப்பகுதியில் முள் போன்றவற்றால் குத்தி ஒரு குச்சியுடன் இணைத்துக் காற்றில் சுழலவிடும் சிறுவர் விளையாட்டுப் பொருள், ! a kind of pinwheel. 3. மின் விசிறி; electric fan. [காற்று+ஆ.] |
காற்றாலை | காற்றாலை kāṟṟālai, பெ.(n.) காற்றின் இயக்கத்தைக் கொண்டு மின்சாரம் உருவாக்கம் செய்யவோ, இயந்திரங்கள் இயக்கவோ பயன்படும் அமைப்பு windmill. [P] |
காற்றிமிர் | காற்றிமிர் kāṟṟimir, பெ.(n) 1. காலின் திமிர்; numbness of the leg. 2. மரத்துப்போன காலடி; numbness of the feet (சா.அக.);. [கால்+திமிர்] |
காற்றிரு-த்தல் | காற்றிரு-த்தல் kāṟṟiruttal, 3 செ.கு.வி.(v.i.) காலின் எலும்பு நழுகலை அல்லது நரம்புப் பிசகைச் சரி செய்தல்; setting right the dislocated bone or the sprain (சா.அக.);. [கால்+திருத்து] |
காற்றுகறுப்பு | காற்றுகறுப்பு kāṟṟukaṟuppu, பெ.(n.) பேய், பிசாசு முதலியவை; evil spirits. ஏதோ காற்றுகறுப்பு அடித்து விட்டதாக வேப்பிலை அடித்து மந்திரித்தார்கள். [காற்று+கறுப்பு] |
காற்றுச்சிகிச்சை | காற்றுச்சிகிச்சை kāṟṟuccikiccai, பெ.(n.) காற்றைக் கொண்டு நோய்களைக் சரி செய்தல்; the therapeutic employment of air-Air-cure (சா.அக.);. [காற்று+சிகிச்சை] |
காற்றுச்சேட்டை | காற்றுச்சேட்டை kāṟṟuccēṭṭai, பெ.(n.) பேய் பிசாசுகளினால் ஏற்படும் தீங்கு, mischief of evil spirits (சா.அக.);. [காற்று+சேட்டை] |
காற்றுப்புகா | காற்றுப்புகா kāṟṟuppukā, பெ.எ.(adj.) காற்றுட் புகாத; impermeable to air; airtight(சா.அக.);. [காற்று+புகா] |
காற்றுப்புகாபுட்டி | காற்றுப்புகாபுட்டி kāṟṟuppukāpuṭṭi, பெ. (n.) காற்று நுழையாதபடி தடையிட்ட குப்பி; air-tight corked bottle (சா.அக.);. [காற்று+புகா+புட்டி] |
காற்றுப்புசி-த்தல் | காற்றுப்புசி-த்தல் kāṟṟuppucittal, 4 செ.கு.வி. (v.i.) காற்றை உணவாக உட்கொள்ளுதல்; living on air, eat to air. இதை ஒகி (யோகி);கள் செய்வார்கள் (சா.அக.);. [காற்று+புசி-] |
காற்றுள்ள | காற்றுள்ள kāṟṟuḷḷa, பெ.எ.(adj.) காற்றடங்கிய, air(சா.அக.);. [காற்று+உள்ள.] |
காற்றுவாக்கில் | காற்றுவாக்கில் kāṟṟuvākkil, வி.அ.(adv.) நேரடியாகக் கேள்விப்படாமல் பிறர் சொல்லி அறிதல்; செவிவழிச் செய்தியாக அறிதல்; by word of mouth hearsay, அவனுக்கு வேலை போய் விட்டது என்பதை காற்றுவாக்கில் கேள்விப்பட்டேன் (உ.வ.);. [காற்று+வாக்கில்.] |
காற்றுவாக்கு | காற்றுவாக்கு kāṟṟuvākku, பெ.(n.) 1. காற்றடிக்கும் திசை; direction of the wind. “காற்றுவாக்கிலே நின்று”(சீவக. 1568 உரை);. 2. காற்றுத் தோன்றும் பக்கம்; leeward, used when a Current Of offensive effluvia is conveyed by the wind, as from a passing fisherwoman. 3. அசட்டை; neglect of duty. 4. தற்செயல்; mere chance (செ.அக.);. [காற்று+வாக்கு.] |
காற்றுவாங்கி | காற்றுவாங்கி kāṟṟuvāṅki, பெ.(n.) காற்றை வெளிப்படுத்தும் இயந்திரம் a machine of pumping the air out-Air-pump (சா.அக.);. [காற்று+வாங்கி] |
கால சிக்குவம் | கால சிக்குவம் kālacikkuvam, பெ.(n.) கறுப்பு நாக்கு; black tongue (சா.அக.);. [கால்+சிக்குவம் கால்+கருநிறம்] |
கால பரிபாகம் | கால பரிபாகம் kālaparipākam, பெ.(n.) காலத்தின் முதிர்ச்சி நிலை; fulness of time (செ.அக.);. [காலம்+Skt. பரிபாகம்] |
காலகன் | காலகன் gālagaṉ, பெ.(n.) சிவகணத் தலைவரின் ஒருவன்; Kalaga who one of the head to {} celestial hosts (அபி.சிந்.);. |
காலகம் | காலகம் kālakam, பெ.(n.) மரவகை (மலை);; marking-nut tree – Semecarpus anacardium (சா.அக.);. |
காலகவி | காலகவி kālakavi, பெ.(n.) பிரகலாதனின் குமரன் விரோசநன் மகன்; son ofvirosana, [கால+கவி] விளாமரமாக இருந்து கண்ணன், பலராமனால் இறந்தவன் (அபி.சிந்);. |
காலகார்முகன் | காலகார்முகன் kālakārmukaṉ, பெ.(n.) அரக்கன் சுமாலியின் மகன்; son of a giant Šumali (அபி.சிந்);. [கால+கார்+முகன்.] |
காலகாலசோழன் | காலகாலசோழன் kālakālacōḻṉ, பெ.(n.) சுந்தரச்சோழன் மகன்; the son of Šundara-c-colan. [காலகால+சோழன்.] |
காலகாலன் | காலகாலன் kālakālaṉ, பெ.(n.) சிவன்; Siva, as one who subdued yama. “காலனைக் கம்பனெம்மானை”(தேவா.1048, 1); (செஅக);. [காலன் + காலன்.] |
காலகேது | காலகேது kālaātu, பெ.(n.) பாதாளத்தில் உள்ள அரக்கன்; giant who live in abyss hell. [காலன்+கேது.] |
காலக்கிரமநோய் | காலக்கிரமநோய் kālakkiramanōy, பெ. (n.) நாளடைவில் வரும் நோய்கள்; diseases occurring in course of time, age, etc. (சா.அக.);. [காலம்+கிரமம்+நோய்] |
காலங்காட்டிலும் | காலங்காட்டிலும் kālaṅkāṭṭilum, வி.எ. (adv.) விடியற்காலையில்; early in the morning (செ.அக.);. [காலம்+காட்டிலும்] |
காலங்கார்த்தல் | காலங்கார்த்தல் kālaṅkārttal, பெ.(n.) விடியற்பொழுது; the break of day as the first appearance of light in the morning (சா.அக.);. [காலம்+கார்த்தல் (புலர்தல்);] |
காலசங்கதி | காலசங்கதி kālacaṅkati, பெ.(n) நடப்புச் செய்தி; current news, events of the day (செ.அக.);. [காலம்+Skt. சங்கதி] |
காலசங்கை | காலசங்கை kālacaṅkai, பெ. (n.) 1. மதிப்பிடப்பட்ட (உத்தேச); கால அளவு: approximate time, as guessed. 2. காலக், கணக்கு; reckoning of time. 3. குறித்த கால அளவு கடந்து போதல் (காலாவதி);; specified period, time-limit (செ.அக.);. [காலம்+Skt. சங்கை] |
காலசர்ப்பி | காலசர்ப்பி kālasarppi, பெ.(n.) ஒரு தூய நீர்த்துறை (தீர்த்தம்);; sacred bath-ghat (அபி.சிந்.);. |
காலசாகம் | காலசாகம் kālacākam, பெ.(n.) 1. கறிவேப்பிலை; curry leaf – Murraya koenigii. 2. துளசி; holy basil (சா.அக.);. |
காலசாலி | காலசாலி kālacāli, பெ.(n.) கறுப்பரிசி; black rice (சா.அக.);. [கால்→ கால+ சாலி கால் கருப்பு] |
காலசிங்கி | காலசிங்கி kālaciṅki, பெ.(n.) தவளை நெய்யை மயிற்துத்தத்தில் தடவி அதனின்று இறக்கிய எண்ணெயுடன் கெந்தி, காரம், நாபி, சாரம் முதலிய சரக்குகளும் சேர்த்துக் குழம்பிய மருந்து; an ointment prepared by mixing sulphur, borax, aconite, sal ammoniac etc. with the medicated oil extracted by steeping blue vitriol in frog’s ghee (சா.அக.);. [கால+சிங்கி] |
காலசித்தன் | காலசித்தன் kālacittaṉ, பெ. (n.) சூர பதுமனின் அமைச்சன்; minister of Šūrapadman(அபி.சிந்.);. [கால+சித்தன்.] |
காலசூத்திரம் | காலசூத்திரம் kālacūttiram, பெ.(n.) ஒரு நரகம்; a hell. “காலகுத்திர நரகிடை வீழ்த்தினார்” (குற்றாதல.க.வுற்சன.68); (செ.அக.); |
காலசெயமதம் | காலசெயமதம் kālaceyamatam, பெ.(n.) தயிர்; curd(சா.அக.);. |
காலசேயம் | காலசேயம் kālacēyam, பெ.(n.) மோர் (பிங்.);; buttermilk (சா.அக.);. காலசேயம் kālacēyam, பெ.(n.) மோர் (பிங்.);; buttermilk. [Skt.{} → த.காலசேயம்.] |
காலசௌசிகன் | காலசௌசிகன் kālacaucikaṉ, பெ.(n.) காசியில் இருந்த ஒரு மறையோன்; the Brahmin who lived in kāši. இவன் விசுவாமித்திரனால் ஏவப்பட்டுச் சந்திரமதியை விலைக்கு வாங்கியவன். இவனுக்குக் காளகண்டன் என்ற பெயரும் உண்டு (அபி.சிந்);. |
காலஞானம் | காலஞானம் kālañāṉam, பெ.(n.) சிவபெருமான் மலைமகளுக்கு அருளிய தாகக் கதைகளில் கூறப்படும் மருத்துவ முறைகளடங்கிய ஒரு நூல்; a treatise on medicine, said to have been preached by Śiva to Malai-magal (சா.அக.);. [கால+ஞானம்] |
காலடிமண் | காலடிமண் kālaṭimaṇ, பெ.(n.) பாதத்தின் அடியினால் பதிந்த மண்; the mud impressed or trampled by human feet. [காலடி+மண்.] இது மந்திரவினைக்குப் பயன்படும் (சா.அக.);. |
காலதட்சணி | காலதட்சணி kāladaṭcaṇi, பெ.(n.) ஒரு வகைப் பாம்பு; a kind of snake (சா.அக.);. |
காலதத்துவம் | காலதத்துவம் kālatattuvam, பெ.(n.) தன் இன்பங்களை (போகம்); அளக்கும் காலம் என்னும் தூய உண்மை (சுத்தாசுத்த தத்துவம்); (சி.போ.பா.2, 2, பக்.144);; Categeory of time, which determines the duration of soul’s experiences, one of seven Šutta-Šutta-tattuvam (செ.அக.);. |
காலதருமம் | காலதருமம் kālatarumam, பெ.(n.) காலவியல்பு; spirit of the age (செ.அக.);. [காலம்+Skt. தருமம்] |
காலதானம் | காலதானம் kālatāṉam, பெ.(n.) இறப்பிலிருந்து மீளுமாறு (உய்யுமாறு); காலனுக்கு அன்புடன் செய்யும் கொடை (திவ்.நான்மு.52, வ்யா, அரும்.);; gifts to propitiate yama to avert death (சா.அக.);. [Skt. kala + dāga → த.காலதானம்] |
காலதிண்டுகம் | காலதிண்டுகம் kālatiṇṭukam, பெ.(n.) கருங்காலி; a black variety of ebony – Diospyros ebenum (சா.அக.);. [காலம்+திண்டுகம்] |
காலதேசவர்த்தமானம் | காலதேசவர்த்தமானம் kālatēcavarttamāṉam, பெ. (n.) கால இடங்களின் நிலைமை; time, place and circumstance, milieu, environment, surrounding circumstances (செ.அக.);. [காலம்+Skt. தேசம்+வர்த்தமானம்] |
காலதேவன் | காலதேவன் kālatēvaṉ, பெ.(n.) கூற்றுவன் (யமன்);; god of death. [காலம்+தேவன்.] |
காலத்துரத்தி | காலத்துரத்தி kālatturatti, பெ.(n.) ஆதொண்டை; thorny caper – Сарparis horrida alias C. Zeylanica (சா.அக.);. [காலம்+துரத்தி] |
காலனி | காலனி kālaṉi, பெ.(n.) ஒரு நகரத்தின் புதிய குடியிருப்புப் பகுதி; in a town cluster of houses forming a new settlement; colony. வங்கி அதிகாரிகள் காலனி; பஞ்சாலைத் தொழிலாளர் காலனி. [E. colony-As. த.காலனி.] |
காலனியாட்சி | காலனியாட்சி kālaṉiyāṭci, பெ.(n.) காலனியாதிக்கம் பார்க்க; see kalani-y-adikkam. [காலனி+ஆட்சி] |
காலனியாதிக்கம் | காலனியாதிக்கம் kālaṉiyātikkam, பெ. (n.) ஒரு நாட்டைத்தன் ஆளுமைக்கு உட்படுத்திய வல்லரசு நாடு நடத்துகிற ஆட்சி; colonial rule. அடக்குமுறை ஆட்சி பார்க்க; see adakkumuraiāțci [காலனி+ஆதிக்கம்] |
காலனுசாரம் | காலனுசாரம் kālaṉucāram, பெ.(n.) மஞ்சள் நிறமான சந்தனம்; yellowsandal(சா.அக.);. [கால்+அனு+சாரம்] |
காலபரிச்சேதம் | காலபரிச்சேதம் kālapariccētam, பெ.(n.) 1. காலத்தால் ஒரு பொருளை அளவிடுகை; determination or ascertainment of anything from time. “ஒரு காலத்துண் டின்றொருகாலத் தெனுங் காலபரிச்சேதம்” (வேதா.கு.36);. 2. கால வரையறை; time-limitation (செ.அக.);. [காலம்+ Skt. பரிச்சேதம்] |
காலபலம் | காலபலம் kālapalam, பெ.(n.) கருவுற்ற காலத்தையும், பிறந்த நேரத்தையும், பருவ காலத்தையும் முன்னிட்டு கோள்களின் நிலைப்படி ஒருவருக்கேற்படும் நன்மை தீமைகள்; one’s fortune, health or otherwise as determined according to the disposition of the planets during the time of conception, or at the time of one’s birth or at the approach of the different stages of life during one’s lifetime (சா.அக.);. [காலம்+பலம்.] |
காலபுட்பம் | காலபுட்பம் kālapuṭpam, பெ.(n.) நன்னாரி; Indian sarsaparilla – Hemidesmns indicus(சா.அக.);. [காலம்+Skt, புட்பம்] |
காலபேதவிரேசனம் | காலபேதவிரேசனம் kālapētavirēcaṉam, பெ. (n.) கோடை, மழை, பனி முதலிய காலங்களுக்குத் தக்கவாறு வயிற்றுப் போக்கிற்குக் கொடுக்கும் முறையான மருந்துகள்; purgatives prescribed upon due consideration to the weather conditions such as summer, rainy or dew season prevailing at the time (சா.அக.);. [காலம்+Skt. பேதவிரேசனம்] |
காலபேதி | காலபேதி kālapēti, பெ. (n.) 1.காலத்தை ஒட்டி உண்டாகும் வயிற்றுப்போக்கு; purgation or diarrhoea occuring to climatic condition. 2. உமட்டலும் வயிற்றுப்போக்கும்; Cholera (சா.அக.);. [காலம்+பேதி] |
காலபைரவரசம் | காலபைரவரசம் kālapairavaracam, பெ. (n.) யமனும் கண்டு அஞ்சும்படியான மருந்து; an all healing drug at the efficacy of which even yama, the god of death is overawed (சா.அக.);. [காலம்+Skt. பைரவரசம்] |
காலபோசனம் | காலபோசனம் kālapōcaṉam, பெ.(n.) அந்தந்த காலத்தில் தவறாமல் எடுத்துக் கொள்ளும் உணவு timely meal (செ.அக.);. [காலம் + Skt. போசனம்] |
காலப்பிரசவம் | காலப்பிரசவம் kālappiracavam, பெ. (n.) 1. காலமுறைப்படி உண்டாகும் பிள்ளைப்பேறு; child-birth taking place after full time pregnancy, as opposed to agala-ppirasavam. 2. துன்பமான பிள்ளைப்பேறு; protracted or tedious labour(சா.அக.);. [காலம்+Skt, பிரசவம்] |
காலப்பிரமம் | காலப்பிரமம் kālappiramam, பெ.(n.) காலமாகிய பரம்பொருள்; time, as the Supreme Being (செ.அக.);. [காலம்+ Skt, பிரமம்.] |
காலப்போக்கில் | காலப்போக்கில் kālappōkkil, வி.அ.(adv.) காலம் செல்லச் செல்ல; in the course of time. சில நகரங்கள் காலப்போக்கில் புதையுண்டன. இந்தக் கோயிலைப் பற்றிப்பல கட்டுக்கதைகள் காலப்போக்கில் வளர்ந்து விட்டன. [காலம்+போக்கில்.] |
காலமரணம் | காலமரணம் kālamaraṇam, பெ.(n.) 1. கால ஒழுங்கின்படி ஏற்படும் இயல்பான சாவு; natural death. 2. கொடிய சாவு cruel death (சா.அக.);. [காலம்+மரணம்] |
காலமாய்விடல் | காலமாய்விடல் kālamāyviṭal, பெ.(n.) சாவு; dying; reaching the end of one’s lifetime (சா.அக.);. [காலமாய்+விடல்.] |
காலமிருத்து | காலமிருத்து kālamiruttu, பெ.(n.) குறித்த (விதித்த); காலத்தில் இறக்கை; death atthe destined moment, dist, tr. akala-mirutu (செ.அக.);. [காலம்+இருத்து] |
காலமிழ்தண்ணீர் | காலமிழ்தண்ணீர் kālamiḻtaṇṇīr, பெ.(n.) 1. கணுக்கால் மறையும் அளவுள்ள தண்ணிர்; water sufficient to cover the ankle portions. 2. கணுக்கால் வரை உள்ள தண்ணீர்; water ankle-deep (சா.அக.);. மறுவ முழங்கால்தண்ணீர் [கால்+அமிழ்+தண்ணிர்] |
காலமீரம் | காலமீரம் kālamīram, பெ.(n.) பளிங்கு crys. tal glass (சா.அக.);. |
காலமுட்டி | காலமுட்டி kālamuṭṭi, பெ.(n.) ஒரு நோய்; an unknown disease (சா.அக.);. [கால+முட்டி] |
காலமுனி | காலமுனி kālamuṉi, பெ.(n.) ஒரு முனிவர்; a saint (அபி.சிந்.);. [காலம்+முனி] |
காலமுறை ஊதியம் | காலமுறை ஊதியம் kālamuṟaiūtiyam, பெ.(n.) ஏரண முறைச் சம்பளம், நிலைப்புச் சம்பளம், time scale of pay, permanant salary. மறுவ, ஏறுபடிச்சம்பளம். [காலம்+முறை+ஊதியம்] |
காலமே | காலமே kālamē, வி.எ.(adv.) விடியற் காலையில்; in the morning, early, bedtimes (செ.அக.);. [காலை→காலமே] |
காலமேகம் | காலமேகம் kālamēkam, பெ. (n.) காளமேகம்; black cloud appearing at the end of a yaga. “காலமேக மென்னவே யிடித்ததிர்ந்து” (திருவாலவா.36:19); (செ.அக.);. [கால்=கருப்பு. கால்+மேகம்] |
காலமேகாட்டியும் | காலமேகாட்டியும் kālamēkāṭṭiyum, வி.எ. (adv.) அதிகாலையில்; very early in the morning dawn. (செ.அக.);. [காலை→காலமே+காட்டியும் (கொ.வ);] |
காலமேசம் | காலமேசம் kālamēcam, பெ. (n.) சாயமூட்டும் வேர் (சாய வேர்);; madder of Bengal; chay root-Olden landia umbellata (சா.அக.);. [காலம்+மேசம் (மூலம் – மூசம் – மேசம்);] |
காலமேசி | காலமேசி kālamēci, பெ.(n.) ஒரு கொடி; an unknown creерег (சா.அக.);. [காலம்+மேசி] |
காலம்கடத்து-தல் | காலம்கடத்து-தல் kālamkaṭattutal, 5 செ.கு.வி. (v.i.) வேண்டுமென்றே சுணக்கம் (தாமதம்); செய்தல்; delay; protract. Jair தேர்வுக்குப் பணம் கட்டாமல் காலம் கடத்துகிறாய்? [காலம்+கடத்து-தல்.] |
காலம்காலமாக | காலம்காலமாக kālamkālamāka, வி.அ. (adv.) நீண்ட நெடுங்காலமாக; for ages, alons காலம் காலமாகக் காவிரி ஒடிக் கொண்டுதான் இருக்கிறது. [காலம்+காலம்+ஆக] |
காலம்செல்-தல் | காலம்செல்-தல் kālamceltal, 13 செ.கு.வி. (v.i.) இறப்பை மங்கல வழக்காகக் கூறும் முறை, euphemistically way of telling a death; pass away, அவர் எந்த ஆண்டு காலம் சென்றார்? [காலம்+செல்-தல்.] |
காலம்தள்ளு-தல் | காலம்தள்ளு-தல் kālamtaḷḷutal, 5 செ.கு.வி. (v.i.) ஏதேனும் ஒரு வசதிக் குறைவுடன் மகிழ்ச்சி இல்லாமல் வாழ்க்கை நடத்துதல்; lead a difficult life as a result of deprivation; get on. வட இந்தியாவில் இருக்கும்வரை ஈரட்டி (ரொட்டியைச்); சாப்பிட்டே காலம் தள்ள வேண்டியதாயிற்று. இனிமேலும் உன்னோடு காலம் தள்ள முடியாது. [காலம்+தள்ளு-தல்.] |
காலம்தாழ்த்து-தல் | காலம்தாழ்த்து-தல் kālamtāḻttutal, 5 செ.கு.வி. (v.i.) காலம்கடத்து-தல் பார்க்க; See kālam-kadattu [காலம்+தாழ்த்து-தல்.] |
காலம்நெருங்கல் | காலம்நெருங்கல் kālamneruṅkal, பெ.(n.) 1. சாவு ஏற்படுதல்; approach of death. 2. வாழ்நாள் முடிதல்; reaching the end of one’s life time (சா.அக.);. [காலம்+நெருங்கல்.] |
காலம்முடி-தல் | காலம்முடி-தல் kālammuṭital, 4 செ.கு.வி. – (vi) வாணாள் (ஆயுள்); முடிதல்; completion of one’s life-time (சா.அக.);. [காலம்+முடி-தல்.] |
காலயந்திரம் | காலயந்திரம் kālayantiram, பெ. (n.) 1. காலத்தைக் குறிக்கும் இயந்திரம்; a machine or other instrument for measuring or showing the progress of time; clock or watch, time-piece. 2. காலக்குறியறி இயந்திரம்; an apparatus for registering atmospheric phenomena – Meteorograph. 3. காலச்சக்கரம்; cycle of time (சா.அக.);. [காலம்+யந்திரம்] |
காலரா | காலரா kālarā, பெ.(n.) உமட்டல் மற்றும் வயிற்றுப் போக்கு; vomiting and diarrhoea (சா.அக.);. |
காலராத்திரி | காலராத்திரி kālarāttiri, பெ.(n.) 1. உலக (கற்ப); முடிவிலுள்ள நீண்ட இரவு; the long night that envelopes the whole world at its final destruction. 2. துன்பம் விளைக்கும் இரவு; night of distress, as seemingly long. 3. துர்க்கா சத்தியின் ஒரு வேறுபாடு (பேதம்);; one of the manifestations of Durga (செ.அக.);. [காலம்+இராத்திரி] |
காலலவனம் | காலலவனம் kālalavaṉam, பெ.(n.) கறுப்பு உப்பு; black facitions and purgation salt (சா.அக.);. [கால்+இலவணம்] |
காலலோகம் | காலலோகம் kālalōkam, பெ.(n.) 1. இரும்பு; iron. 2. கருப்பு மாழை; any black metal (சா.அக.);. [கால்+கருப்பு. கால்+Skt. உலோகம்] |
காலவன் | காலவன் kālavaṉ, பெ. (n) 1விசுவாமித்திரனின் சீடர்களில் ஒருவன்; student of Višuvāmitrā. 2. கேமதரிசியின் தந்தையின் அமைச்சன்; minister of Kematarisi’s father, 3. ஒரு முனிவர்; asaint. 4. ஒரு பார்ப்பனச் சிறுவன்; brahmin boy (அபி.சிந்);. |
காலவரை | காலவரை kālavarai, பெ.(n.) கால வரையறை பார்க்க; see kāsa-varaiyaraj (செ.அக.);. [காலம்+வரை.] |
காலவர்த்தமானம் | காலவர்த்தமானம் kālavarttamāṉam, பெ..(n.) நடப்புச் செய்தி; events of the time (செ.அக.);. [காலம்+Skt. வர்த்தமானம்] |
காலவாதிமதம் | காலவாதிமதம் kālavātimatam, பெ.(n.) ஒரு வகை மதம்; a kind of religion. [காலவாதி+சமதம்] உலகில் உள்ள எல்லா உயிர்களும் காலத்தில் இறந்து மீண்டும் பிறந்துவரச் செய்தலானும், இத்தனை அகவை சென்றதென்று வாழ்நாளைக் (ஆண்டுகளைக்); கூறுதலானும், காலத்திற்கு மூப்பு இளமை இல்லாமையானும், எல்லாம் தன்னால் அழியத் தான் அழியாதிருத்தலாலும் காலமே கடவுள் என்பர். இம்மதத்தவர் நோக்கில் முத்தி என்பது காலங்கடந்த கடவுளை அடைவது என்பதாகும் (அபி.சிந்:);. [காலம்+வாதி+மதம்] |
காலவேகன் | காலவேகன் kālavēkaṉ, பெ. (n.) சிவன் கூட்டத்தவரில் ஒருவன்; the person who one of the Siva’s celestial hosts (அபி.சிந்);. |
காலா | காலா kālā, பெ.(n.) தாயின் உடம்பிறந்தவள் (முகமதி.);; mother’s sister. [Ar.{} → த.காலா.] |
காலாகாலத்தில் | காலாகாலத்தில் kālākālattil, வி.எ.(adv.) 1. உரிய வேளையில்; at the proper time. “காலாகாலத்தில் உண்ண வேண்டும்” 2. சிற்சில வேளையில்; occasionally, not frequently. “அது காலாகாலத்தில் கிடைக்கும்”(செஅக);. [காலம்→காலா+காலத்தில்.] |
காலாக்கினிருத்திரன் | காலாக்கினிருத்திரன் kālākkiṉiruttiraṉ, பெ.(n.) அழிக்குந் தொழிலைச் செய்யும் சிவன்; Rudra, the god of destruction, one of the presiding deities in the lower regions (செ.அக.);. [காலன்+Skt. அக்கினி+உருத்திரன்.] |
காலாசயம் | காலாசயம் kālācayam, பெ.(n.) இரும்பு; iron (சா.அக.);. |
காலாசுரம் | காலாசுரம் kālācuram, பெ.(n.) 1. ஒரு கொடிய வெப்ப நோய்; blackfever, 2 நச்சுக் காய்ச்சல்; a chronic malarial fever – Kala azar (சா.அக.);. [கால+சுரம்] |
காலாசுவரம் | காலாசுவரம் kālācuvaram, பெ.(n.) கொடிய காய்ச்சல் வகை (M.L.);; black fever. [U.{}+hazar → த.காலாசுவரம்.] |
காலாஞ்சரம் | காலாஞ்சரம் kālāñcaram, பெ. (n.) தூய்மையான நீர்த்துறை (தீர்த்தம்);; sacred bathing ghat (அபி.சிந்);. மறுவ. படித்துறை |
காலாடி | காலாடி kālāṭi, பெ.(n.) போக்கிரி, அடங்காதவன்;гоgue. [கால்+ஆ= காலாடி-கண்டபடி திரிபவன்] |
காலாட்படை | காலாட்படை kālāṭpaṭai, பெ.(n.) தரைப்படை, infantry. [கால்+ஆள்+படை] |
காலாண்டு | காலாண்டு kālāṇṭu, பெ.(n.) மூன்று மாதங்களுக்கு ஒரு முறை; quarter quarterly. ஒவ்வொரு காலாண்டிலும் தேர்வு நடக்கும். [கால்+ஆண்டு] |
காலாதீதப்படல் | காலாதீதப்படல் kālātītappaṭal, தொ. பெ.(vbl.n.) காலமுறை தவறுதல்; time barred; barred by limitation of time; exceeding in time (சா.அக.);. [காலம்+அதீதம்+படல்.] |
காலாமீந்தர் | காலாமீந்தர் kālāmīntar, பெ.(n.) கரிக்கட்டை மரம்; black tree – Diospyros hirsuta (சா.அக.);. |
காலாயசம் | காலாயசம் kālāyasam, பெ.(n.) காலாசயம் பார்க்க;see {} (சா.அக.);. |
காலாயம் | காலாயம் kālāyam, பெ.(n.) நீர்; water (சா.அக.);. [கால்வாய் + அம்] |
காலாவதிகபத்திரம் | காலாவதிகபத்திரம் gālāvadigabaddiram, பெ.(n.) ஒன்றைச் செய்தற்குக் காலங் குறிப்பிட்டு எழுதிக் கொடுக்கும் ஆவணம் (சுக்கிரநீதி, 93);; document fixing a time-limit for the performance of an act. [Skt.{}+patra → த.காலாவதிகபத்திரம்.] |
காலிகவிப்புருதி | காலிகவிப்புருதி kālikavippuruti, பெ.(n.) நாள்பட்ட புண்கட்டி (இங்.வை.298);; chronic abscess (செ.அக.);. [காலம்→ காலிகம்+விப்புருதி.] காலிகவிப்புருதி gāligavippurudi, பெ.(n.) நாட்பட்ட புண் கட்டி; chronic abscess (இங்.வை.298);. த.வ. புற்றுக்கட்டி. [Skt.{}+vidradhi → த.காலிகவிப்புருதி.] |
காலிசெய்-தல் | காலிசெய்-தல் kāliceytal, 1 செ.கு.வி.(v.i.) 1. குடியிருக்கும் வீடு, அறை முதலியவற்றை விட்டு வெளியேறுகை; இருக்கும் இடத்தை அல்லது இருக்கையை விட்டு நீங்கிப்போதல்; vacate house, room, etc. clear off; clear out. வாடகை கொடுக்கவில்லை என்று வீட்டைக் காலி செய்யச் சொன்னார். பேசிக்கொண்டே நிற்காதே, இடத்தைக் காலி செய். 2. பானை, குவளை முதலியவற்றில் உள்ள பொருள்களை இல்லாமல் செய்தல், இல்லாமல் ஆக்குதல்; empty a container etc., of its contents. கலயத்தில் இருந்த கள் முழுவதையும் காலி செய்துவிட்டான். 3. ஒன்றைத் தீர்த்தல்; செலவழித்தல்; spend; finish. ஒரேநாளில் பணத்தையெல்லாம் காலி செய்துவிட்டான். [காலி+செய்-தல்.] |
காலிதம் | காலிதம் kālitam, பெ.(n.) படிகாரம்; alum (சா.அக.);. |
காலியா-தல் | காலியா-தல் kāliyātal, 6 செ.கு.வி.(v.i.) வீடு, பதவி முதலியன ஒருவரும் இன்றி ஒழிந்திருக்கை; to become vacant, as a situation, a house (செ.அக.);. [U. Khali→த. காலி] |
காலிறங்கு-தல் | காலிறங்கு-தல் kāliṟaṅkutal, 5 செ.கு.வி.(v.i.) 1. வாயு இறங்குதல்; descent of wind causing inflammation as in scrotum. 2. யானைக்கால் உண்டாதல்; development of elephantiasis of the leg. 3. காலில் இருந்து கெட்ட நீர் இறங்குதல்; accumulation of morbid fluid in the tissues of the leg; edema of the leg (சா.அக.);. [கால்+இறங்கு-தல்.] |
காலிறுதி | காலிறுதி kāliṟuti, பெ.(n.) விளையாட்டுப் போட்டியில் அரை இறுதி ஆட்டத்திற்குத் தகுதி பெற விளையாடும் ஆட்டம், quarter final. [கால்+இறுதி] |
காலிலிப்பிண்டம் | காலிலிப்பிண்டம் kālilippiṇṭam, பெ.(n.) கால் அல்லது பாதம் இல்லாமலும் உறுப்புகள் கேடானதுமான கருப்பிண்டம்; a monster foetus without the lower limbs or feet Apeduous fetus; Apus(சா.அக.);. [கால்+இலி+பிண்டம்] |
காலீயகம் | காலீயகம் kālīyakam, பெ.(n.) மரமஞ்சள்; tree turmeric – Coscinium fenestratum (சா.அக.);. |
காலுதறுவாதம் | காலுதறுவாதம் kālutaṟuvātam, பெ.(n.) காலூன்றுவாதம் பார்க்க; see kalooruvādam (சா.அக.);. [கால்+உதறு+வாதம்] |
காலுந் தலையும் அறி-தல் | காலுந் தலையும் அறி-தல் kālundalaiyumaṟidal, செ. குன்றாவி.(v.t.) அனைத்தையும் அறியும் பாங்கு; method of knowing everything. [காலும்+தலை+அறி] |
காலுறை | காலுறை kāluṟai, பெ.(n.) பாதத்திலிருந்து முழங்காலுக்குச் சற்றுக் கீழ்வரை இறுக்க மாக அணியப்படும், நூலால் பின்னப்பட்ட இரட்டை உறை; pair of socks; stockings. [கால்+உறை] |
காலூன்றல் | காலூன்றல் kālūṉṟal, தொ.பெ.(vbl.n.) காலைப் பதிய வைத்தல், setting one’s foot firmly on the ground (சா.அக.);. [கால்+ஊன்றல்.] |
காலூறல் | காலூறல் kālūṟal, பெ.(n.) 1. வெள்ளை நோயினால் உள்ளங் காலில் ஏற்படும் தினவு, itching of the sole from venereal causes. 2. பயணச் செலவை (பிரயாணம்); முன்னிட்டு உள்ளங் காலில் ஏற்படும் அரிப்பு: an itching causally felt in the sole as a sign of impending journey (சா.அக.);. [கால்+ஊறல்.] |
காலூறு-தல் | காலூறு-தல் kālūṟutal, செ.கு.வி. (v.i.) 1. பயணக் குறியாகக் காலில் தினவுண்டாதல்; to feel an itching sensation in feet, as foreboding an impending journey. 2. ஓடியாடப் பிள்ளைகள் விருப்பப்படல்; to be impatient, restless to walk, run or move about, as a child (செ.அக.);. மறுவ. கால்மரப்பு [கால் + ஊறு-தல்.] |
காலெரிச்சல் | காலெரிச்சல் kālericcal, பெ.(n.) காலெரிவு பார்க்க; see kalerivu, (சா.அக.);. [கால்+எரிச்சல்] |
காலெரிவு | காலெரிவு kālerivu, பெ.(n.) காய்ச்சலாலும் பித்த மிகுதியாலும் ஏற்படும் பாத எரிச்சல், burning sensation of the sole arising from biliousness or excessive secretion of bile or due to excessive fever (சா.அக.);. [கால்+எரிவு] |
காலெலும்பு | காலெலும்பு kālelumpu, பெ.(n.) தொடையில் இருந்து பாதம் வரை உள்ள பல எலும்புகள்; the bones in each of the limbs from the thigh to the foot. [கால்+எலும்பு] பல எலும்புகளாவன:- 1, சரவென்பு; the outer and lesser bone of the leg – Fibula. 2. தொடை எலும்பு; thigh-bone_Femur, 3. நளகம்; shin-bone-Tibia. 4. பாதஎலும்பு; bones of the feet. 5. முழந்தாட் சில்; knee-cap – Patella (சா.அக.);. |
காலேசுத்தி | காலேசுத்தி kālēcutti, பெ.(n.) தீட்டு, பிள்ளைப்பேற்றுத் தீட்டு, சாவுத் தீட்டு; a period of ceremonial impurity or pollution as at the birth of a child or death of a relation (சா.அக.);. த.வ. தீட்டு, துடக்கு. |
காலேசுரவாதி | காலேசுரவாதி kālēcuravāti, பெ.(n.) காலத்தையே கடவுளென எதிராடுபவன் (வாதிப்பவன்); (சி.சி.8:12, ஞானப்.);; one who maintains that time is the Supreme Being. [Skt.{}+{}+{} → த.காலேசுரவாதி.] |
காலேயநாளம் | காலேயநாளம் kālēyanāḷam, பெ.(n.) ஈரல் இருக்கும் நாடி; the vein in the liver – Hepaticvein(சா.அக.);. [காலேய+நாளம்] |
காலைக்கறி | காலைக்கறி kālaikkaṟi, பெ.(n.) காலையில் கொள்ளும் உணவுக் கறி வகைகள்; vegetables prescribed to be taken as diet in the mornings as distinguished from ira-k-kasi (சா.அக);. [காலை+கறி] |
காலைக்கலவி | காலைக்கலவி kālaikkalavi, பெ.(n.) காலை நேரத்தில் செய்யும் புணர்ச்சி, sexual intercourse indulged early in the morning (சா.அக.);. [காலை+கலவி] |
காலைக்குடியன் | காலைக்குடியன் kālaikkuṭiyaṉ, பெ.(n.) விடியற்காலையில் வெறும் வயிற்றில் கள், சாராயம் இவைகளைக் குடிப்பவன்; one who addicted to drink toddy, liquor etc. early in the morning in empty stomach (சா.அக.);. [காலை+குடியன்.] |
காலைக்கோட்டிவிகாரம் | காலைக்கோட்டிவிகாரம் kālaikāṭṭivikāram, பெ. (n.) நரம்புமண்டிலம் ஆறனுள் ஒன்று (ஆறாதாரத்தில் ஒன்று);, one of the six nerve-centres in the human body. இது அறிவிற்கு எட்டாத இடம். இது வயிற்றுக்கு மேலுள்ள நெஞ்சகத்தில் முக்கோண வடிவாய் 12 இதழ்களுடையனவாய்த் தோன்றும் (சா.அக.);. |
காலைப்பிடி-த்தல் | காலைப்பிடி-த்தல் kālaippiṭittal, 4 செ.கு.வி. (v.i.) உதவியை எப்படியும் பெற்றுவிட வேண்டும் என்ற நோக்கத்துடன் மனதை இளகச் செய்யும் அளவுக்குக் கெஞ்சுதல்; மிகவும் பணிந்து வேண்டுதல்; go down on one’s knees for favour; cringe. உதவி வேண்டுமானால் காலைப்பிடிக்கவும் தயாராக இருப்பான். [காலை+பி-த்தல்] |
காலைப்புசிப்பு | காலைப்புசிப்பு kālaippucippu, பெ.(n.) 1. காலை உணவு; morning food; break fast 2. காலையிற் கொள்ளும் பதவுணா: morning diet taken by patients (சா.அக.);. [காலை.+புசிப்பு] |
காலைப்போசனம் | காலைப்போசனம் kālaippōcaṉam, பெ. (n.) காலைப்புசிப்பு பார்க்க; see kalai-p-pusippu,/(சா.அக.);. [காலை+போசனம்] |
காலைமூத்திரம் | காலைமூத்திரம் kālaimūttiram, பெ.(n.) உணவினால் வேறுபடாமல், தூங்கி எழுந்த வுடன் வெளிப்படும் சிறுநீர்; urine passed after a night’s rest and so not influenced by food or drink – Urinasanguinis (சா.அக.);. [காலை+மூத்திரம்] |
காலைவாரு-தல் | காலைவாரு-தல் kālaivārutal, 5 செ.கு.வி. (v.i.) தனக்குச் சார்பா (சாதகமா);க இருக்கும் என்று நினைத்திருக்கையில் ஏமாற்றும் முறையில் அமைந்து விடுதல்; கை விடுதல்; let down; pull the rug from under one’s feet. பல இலக்கம் செலவில் தொடங்கிய தொழில் அவரைக் காலை வாரி விட்டது. [காலை+வாரு-தல்.] |
காலொட்டல் | காலொட்டல் kāloṭṭal, பெ.(n.) 1. பொய்க்கால்; false leg. 2. பொய்க்கால் சேர்த்தல்; attaching a false leg. 3.கால் சுடுதல்; burning of the feet (சா.அக.);. [கால்+ஒட்டல்.] |
காலோசிதம் | காலோசிதம் kālōcitam, பெ.(n.) காலத்திற்கு ஏற்றது; that which is suited to time as clothing, food etc. (சா.அக.);. [கால்+ஒசிதம்] |
காலோடுகழி-தல் | காலோடுகழி-தல் kālōṭukaḻital, 4 செ.கு.வி. (v.i.) அடக்க முடியாமல் காலில் படும்படி நின்றபடியே மலங்கழித்தல்; purging even before one has time to squat being urged wih troublesome pertina city (சா.அக.);. [காலோடு+கழி-தல்.] |
காலோட்டு-தல் | காலோட்டு-தல் kālōṭṭutal, 5 செ.கு.வி.(v.i.) மூச்சு வரும்படி செய்தல்; inducing artificial respiration (சா.அக.);. [கால்+ஒட்டு-தல்.] |
காலோட்டுவாதம் | காலோட்டுவாதம் kālōṭṭuvātam, பெ.(n.) மூச்சு தினரும்படி செய்யும் இழுப்பு நோய், rheumatism marked by difficulty of respiration (சா.அக.);. [கால்+ஒட்டு+ skt. வாதம்] |
காலோத்திரம் | காலோத்திரம் kālōttiram, பெ.(n.) உலோத்திர மரப் பட்டை; lodhra bark (சா.அக.);. |
கால் கட்டு போடு-தல் | கால் கட்டு போடு-தல் kālkaṭṭupōṭudal, செ.குன்றாவி.(v.t.) 1. திருமணம் செய்தல்: to arrange marriage: அவனுக்கு ஒரு கால் கட்டு போடவேண்டும். 2.காலில் கட்டுபோடுதல்: to tie a bandage on leg. [கால்+கட்டும்+போடு] |
கால் துரத்தி | கால் துரத்தி kālturatti, பெ. (n.) ஆதொண்டை; thorny caper – Саррагis horrida alias C. zeylanica (சா.அக.);. |
கால்கடுதாசி | கால்கடுதாசி kālkaṭutāci, பெ.(n.) திடீர் பதவி விலகல் கடிதம்; letter of resignation, especially one written huffly off sirs’ திட்டியதால் கால்கடுதாசியை நீட்டிவிடக் கூடாது. [கால்+கடுதாசி] |
கால்கடுப்பு | கால்கடுப்பு kālkaṭuppu, பெ.(n.) 1. கால்குடைச்சல்; boring pain in the leg. 2. காலின் அடிப்பாகம் கடுத்தல்; acute pain in the foot (சா.அக.);. [கால்+கடுப்பு] |
கால்கடுவன் | கால்கடுவன் kālkaṭuvaṉ, பெ.(n.) குழந்தைகட்கு முழங்காலின் கீழுள்ள கணைக்காலில் கருப்புப் புள்ளிகள் ஏற்பட்டு, குருக்களாகத் திரண்டு துன்புறுத்தும் படையைப் போன்ற ஒரு நோய்; a very rare disease of the shin in children, characterised by dark spots about the size of pin’s head evidently vascular, developed in the dilated vessels of the shin. [கால்+கடுவன்.] இந்நோய் பெண்களுக்கும் வரும் (சா.அக.);. |
கால்கட்டு | கால்கட்டு kālkaṭṭu, பெ.(n.) ஆணுக்குத் — திருமணம் மூலமாக ஏற்படுத்தும் கட்டுப்பாடு; fetters of marriage as a check on wayward sons. பையன் திருந்த வேண்டும் என்றால் அவனுக்குக் கால்கட்டு போட வேண்டும். [கால் + கட்டு] |
கால்கரப்பன் | கால்கரப்பன் kālkarappaṉ, பெ.(n.) முழங்காலுக்குக் கீழே காணும் கரப்பன்; an assemblage of papules surrounding each leg like a shin-guard (சா.அக.);. [கால்+கரப்பன்.] |
கால்கரமசதி | கால்கரமசதி kālkaramacati, பெ.(n.) கைகால்களில் உண்டாகும் களைப்பு; exhaustion of the limbs (சா.அக.);. [கால்+Skt. கரம்+அசதி] |
கால்குடைச்சல் | கால்குடைச்சல் kālkuṭaiccal, பெ.(n.) 1. காலில் ஏற்படும் குத்தல் வலி; boring pain in the leg. 2. ஊதை (வாதம்); வலி, rheumatic pain in the leg (சா.அக.);. [கால் + குடைச்சல்] |
கால்கைகுறண்டல் | கால்கைகுறண்டல் kālkaikuṟaṇṭal, பெ.(n.) கை கால் சுருட்டி இழுத்தல்; painful spasmodic contractions of the limbs; spasms of the leg and the arm-Cramps (சா.அக.);. [கால்+கை+குறண்டல்.] |
கால்கைபோட்டுக்கிட-த்தல் | கால்கைபோட்டுக்கிட-த்தல் kālkaipōṭṭukkiṭattal, 4 செ.கு.வி. (v.i) கால் கைநீட்டியபடி மல்லாந்து கிடத்தல்; stretching the body and limbs carelessly in a horizontal position; lying with the limbs stretched – Sprawl (சா.அக.);. [கால்+கை+போட்டு+கிட-] |
கால்கைமுடக்கு | கால்கைமுடக்கு kālkaimuṭakku, பெ.(n.) கால் கை எழாமற் செய்யும் ஒரு காலை நோய், a painful disease as rheumatism affecting the joints; atrophy of the limbs as from paralysis (சா.அக.);. [கால்+கை+முடக்கு.] |
கால்கையோச்சல் | கால்கையோச்சல் kālkaiyōccal, பெ.(n.) வலிமை இன்மையால் கால் கை சோர்வடைதல்; exhaustion of the limbs through bodily weakness (சா.அக.);. [கால்+கை+ஒய்ச்சல்-ஒச்சல்] |
கால்கைவிட்டுபோ-தல் | கால்கைவிட்டுபோ-தல் kālkaiviṭṭupōtal, 8 செ.கு.வி. (v.i.) கால் கை சோர்வடைதல்; exhaustion of the limbs (சா.அக.);. [கால்+கை+விட்டு+போ-தல்.] |
கால்கைவிழு-தல் | கால்கைவிழு-தல் kālkaiviḻutal, 2 செ.கு.வி. (n.) பக்க வலிப்பி (பாரிசவாயுவி);னால் கால் கை சோர்வடைதல்; loss of sensation of the limbs through paralysis (சா.அக.);. [கால்+கை+விழு-] |
கால்சட்டை | கால்சட்டை kālcaṭṭai, பெ.(n.) ஆண்கள் அணியக்கூடிய, இரு பகுதிகளாகப் பிரித்துத் தைத்த முழுங்கால் வரை உள்ள உடை close fitting knee length shorts, Bermudas. [கால்+சட்டை] |
கால்சீரகம் | கால்சீரகம் kālcīrakam, பெ.(n.) கருஞ்சீரகம்; black cumin – Nigella sativa (சா.அக.);. [கால்+சீரகம். கால்+கருப்பு) |
கால்தடுக்கல் | கால்தடுக்கல் kāltaṭukkal, தொ.பெ.(n.) கால் இடறுகை; tripping in walking or running, stumble. [கால்+தடுக்கல்.] |
கால்தட்டல் | கால்தட்டல் kāltaṭṭal, பெ.(n.) முட்டிக்கால் தட்டல்; the condition in which the knees come together while the ankles are far apart knock knee – Genu valgum (சா.அக.);. [கால்+தட்டல்.] |
கால்தாபரி | கால்தாபரி kāltāpari, பெ.(n.) தொடரிப்பூடு; small jujube tree – Scutia indica (சா.அக.);. [கால்+தாபரி] |
கால்தோற்றம் | கால்தோற்றம் kāltōṟṟam, பெ.(n.) பிள்ளைப் பேற்றின் போது குழந்தையின் கால் வெளிக் காணல்; version which causes the feet to present – Podalic version (சா.அக.);. [கால்+தோற்றம்] |
கால்நடுக்கம் | கால்நடுக்கம் kālnaṭukkam, பெ.(n.) கிழத் தன்மையாலும், வலிமை இன்மையாலும் காலிற் காணும் நடுக்கம்; trembling of the leg due to old age or weakness (சா.அக.);. [கால்+நடுக்கம்.] |
கால்நடுக்குவாதம் | கால்நடுக்குவாதம் kālnaṭukkuvātam, பெ.(n.) கால் கை எப்பொழுதும் உதறும்படிச் செய்து, நடக்க முடியாமல் தள்ளாடச் செய்யும் நரம்பைப் பற்றிய ஊதை (வாத); நோய்; a nervous disease marked by a continuous trembling of the limbs, rigidity of the muscles and difficulty in maintaining one’s balance while walking; shaking palsy – Paralysis agitans (சா.அக.);. [கால்+நடுக்கு+ Skt. வாதம்] |
கால்நடையாக | கால்நடையாக kālnaṭaiyāka, வி.அ. (adv.) கால்களால் நடந்து on foot. நாட்டுப்புற மக்கள் எவ்வளவு தொலைவானாலும் கால்நடையாகவே செல்வார்கள். [கால்+நடை+ஆக] |
கால்நிறு-த்தல் | கால்நிறு-த்தல் kālniṟuttal, 5 செ.கு.வி.(v.i.) காற்றுறை உண்டாக்கும் உணவு வகைகளை நிறுத்தி பதவுணா (பத்தியம்); உண்ணல்; observance and regulation of diet by avoiding flatulent substances (சா.அக.);. [கால்+நிறு-த்தல்.] |
கால்பாதசன்னிவாதம் | கால்பாதசன்னிவாதம் kālpātacaṉṉivātam, பெ.(n.) முழங்காலின் கீழ் நெருப்பைப் போல் சூடுண்டாகி, குத்தலும், வலியும் ஏற்பட்டு நடக்க முடியாமல் செய்யும் ஒரு இழுப்பு (வாத); நோய்; a kind of rheumatism affecting the lower limb with inflammation and acute pain and rendering the patient unable to walk (சா.அக.);. [கால்+பாதம்+ Skt. சன்னிவாதம்] |
கால்பானம் | கால்பானம் kālpāṉam, பெ.(n.) மருந்திற்குப் பயன்படுத்தும் பிசின்; resin or gum used in medicine – Galbanum (சா.அக.);. [கால்+பானம்] |
கால்பிடிப்பு | கால்பிடிப்பு kālpiṭippu, பெ.(n.) இழுப்பு நோயால் கால் இழுத்துப் பிடிக்கை; stiffening or contraction of the muscles of the leg due to rheumatism or other nervous affections (சா.அக.);. [கால்+பிடிப்பு] |
கால்பின்னல் | கால்பின்னல் kālpiṉṉal, பெ.(n.) 1. வலிமை இன்மையாலோ அச்சத்தாலோ கால் முறுக்கிக் கொள்ளல்; becoming cross legged through weakness, nervous debility or fear. 2. முட்டிக்கால் தட்டல்; to be knock-kneed (சா.அக.);. [கால்+பின்னல்.] |
கால்பிளவு | கால்பிளவு kālpiḷavu, பெ.(n.) குதிகால் வெடிப்பு; a crack or fissure in the heel (சா.அக.);. [கால்+பிளவு.] இது சில வேளை நடக்க முடியாமற் செய்யும் நோய் (சா.அக.);. |
கால்புள்ளி | கால்புள்ளி kālpuḷḷi, பெ.(n.) பொருள் புரியும்படி நிறுத்திப் படிக்க சொற்றொடரின் இடையில் அல்லது பல இலக்க எண்களில் ண்ணின் இடத்தை அறிய இடப்படும் குறி: . Comma. [கால்+புள்ளி] |
கால்பேனம் | கால்பேனம் kālpēṉam, பெ.(n.) கால்பானம் பார்க்க; see kalparam (சா.அக.);. |
கால்மண்டலம் | கால்மண்டலம் kālmaṇṭalam, பெ.(n.) நாற்பது அல்லது நாற்பத்தி எட்டு நாளின் கால் பாகம் அதாவது பத்து அல்லது பன்னிரண்டு நாள்; a period of 10 or 12 days (சா.அக.);. [கால்+மண்டலம்] |
கால்மாடுதலைமாடாக்கல் | கால்மாடுதலைமாடாக்கல் kālmāṭutalaimāṭākkal, தொ.பெ. (vbn.) 1. படுக்கையில் கால் பக்கத்தைத் தலைப்பக்கமாக மாற்றல்; taking an inverted position while lying on thebed. 2. பொருட்கள் ஒழுங்கற்ற நிலையில் இருக்கை; disordered, disarrange (சா.அக.);. [கால் + மாடு தலை+மாடு+ஆக்கல்.] |
கால்மாடுதலைமாடு | கால்மாடுதலைமாடு kālmāṭutalaimāṭu, பெ.(n.) plouply unsoph; upside downTopsy-turvy (சா.அக.);. [கால்+மாடு+தலைமாடு] |
கால்மாட்டுவைத்தியன் | கால்மாட்டுவைத்தியன் kālmāṭṭuvaittiyaṉ, பெ.(n.) போலி மருத்துவன்; a pretender to medical skill – Quack (சா.அக.);. [கால்மாட்டு+ Skt. வைத்தியன்.] |
கால்முடக்குவாதம் | கால்முடக்குவாதம் kālmuṭakkuvātam, பெ.(n.) காலை முடக்கி நொண்டியாக அல்லது படுத்தபடியாகக் கிடக்கச் செய்யும் ஓர் ஊதை நோய்; a kind of rheumatism causing stiffening of the joints or prostration of the limbs thereby rendering the patient unable to get up from his bed (சா.அக.);. [கால்+முடக்கு+ Skt. வாதம்] |
கால்முடங்குவாதம் | கால்முடங்குவாதம் kālmuṭaṅkuvātam, பெ.(n.) நரம்பை இழுத்து மேலே சுருட்டி வைப்பதனால் கால் குடைச்சல் கண்டு நடக்க முடியாமற் செய்யும் ஓர் ஊதை நோய்; a kind of nervous contraction of the legs with acute pain rendering the patient unable to walk (சா.அக.);. [கால்+முடங்கு+ Skt. வாதம்] |
கால்முடம் | கால்முடம் kālmuṭam, பெ.(n.) கால் நொண்டி, lameness – Talipes (சா.அக.);. [கால்+முடம்] |
கால்முறி-தல் | கால்முறி-தல் kālmuṟital, 4 செ.கு.வி.(vi) கால் முறிவு; fracture of the leg (சா.அக.);. [கால்+முறி-] |
கால்முளி | கால்முளி kālmuḷi, பெ.(n.) காற்பாடு; ankle (சா.அக.);. [கால்+முளி] |
கால்மூன்று | கால்மூன்று kālmūṉṟu, பெ. (n.) 1. காலை, பகல், மாலை எனும் முக்காலம்; past, present and future. 2. இறப்பு நிகழ்வு, எதிர்வு எனும் முப்பொழுது morning, noon and evening. 3. வெயில், மழை, பனிக் காலங்கள்; the three seasons of the year as summer, rainy and winter. (சா.அக.);. [காலம்+மூன்று.] |
கால்மேசு | கால்மேசு kālmēcu, பெ.(n.) காலில் அணியும் உறைவகை, socks or stockings (சா.அக.);. [கால்+மேக] |
கால்வலி | கால்வலி kālvali, பெ.(n.) காலில் உண்டாகும் வலி; pain in the leg (சா.அக.);. [கால்+வலி] |
கால்வாங்கு-தல் | கால்வாங்கு-தல் kālvāṅkutal, செ.கு.வி. (v.i.) 1. இறத்தல்; to die. 2. காற்று வாங்கல்; enjoy to the breeze (சா.அக.);. [கால்+வாங்கு-தல்] |
கால்வாய்க்குப்போ-தல் | கால்வாய்க்குப்போ-தல் kālvāykkuppōtal, 8 செ.கு.வி. (v.i.) மலங்கழித்தல்; easing, stool. ing(சா.அக.);. [கால்வாய்க்கு+போதல்.] |
கால்விக்கம் | கால்விக்கம் kālvikkam, பெ.(n.) பொதுவாகச் சூட்டினால் ஏற்படும் வீக்கம் swelling of the leg generally due to inflamation of wound or injury. [கால்+வீக்கம்] வேறுவகைக் கரணியங்களாலும் காலில் வீக்கம் ஏற்படும். அவை : 1. வெள்ளை நோய் நீரால் காலில் உண்டாகும் நீங்காத விக்கம். 2. இழுப்பு நோயால் காலிற் காணும் வீக்கம் 3. பாண்டு நோயினால் காலில் பித்தநீர் இறங்கிக் காணும் வீக்கம். 4. பெண்கள் கருவுற்ற காலத்தில் காணும் விக்கம். 5. பெண்களுக்கு மாதவிடாய் ஒயும் காலத்தில் காணும் வீக்கம். 6. பெண்களுக்கு மாதவிடாய் சரியாகக் காணாமல் தடைப்படுங் காலத்திற் காணும் வீக்கம். 7. சொறி, காப்பானால் காணும் வீக்கம். 8. நச்சுக் காய்ச்சலினால் வயிற்றில் காய்ச்சல் கட்டி ஏற்படுவதினால் காணும் வீக்கம். 9. வலிமையின்மை, சோகை, நச்சுக் காய்ச்சல் முதலிய கரணங்களை முன்னிட்டுக் காணும் வீக்கம் (சா.அக.);. |
கால்விருத்தி | கால்விருத்தி kālvirutti, பெ.(n.) பொரும்பிலி (ஒரு பயற்றஞ் செடி);; a cereal plant(சா.அக.);. |
கால்வெளி | கால்வெளி kālveḷi, பெ.(n.) அறிவு (ஞானம்);ப் பெருவெளி; universal zone of eternal enlightment. “மூலத்தில் தோன்றி முடிவில் இருநான்காகிக் கால்வெளியில் பன்னிரண் டாம் காண்’ (ஒளவைக்குறள்-41); [கால்+வெளி] |
காளகண்டகி | காளகண்டகி kāḷakaṇṭaki, பெ.(n.) நீலிப்பூடு; dog-bite shrub; dyers indigo – Indigofera tinctoria alias Lemarginate (சா.அக.);. [காளம்+கண்டகி] |
காளகண்டசுரம் | காளகண்டசுரம் kāḷakaṇṭacuram, பெ.(n.) 1. கழுத்தைக் கருமையாகச் செய்யும் ஒரு காய்ச்சல்; a fever marked by dark colouration of the neck. 2. மண்ணீரல் வீங்கியதால், வரும் காய்ச்சல்; fever marked by enlargement of the spleen (சா.அக.);. [காளம்+கண்டம்+சுரம்] |
காளகர்ணிமுத்திரை | காளகர்ணிமுத்திரை kāḷakarṇimuttirai, பெ.(n.) நாட்டிய முத்திரை வகை (சைவ.வி.19);; a hand-pose in worship (செ.அக.);. |
காளக்கடவுள் | காளக்கடவுள் kāḷakkaṭavuḷ, பெ.(n.) சிவன்; God of Śiva (சி.பெய.);. [காளம்+கடவுள்.] |
காளங்கன்று | காளங்கன்று kāḷaṅkaṉṟu, பெ.(n) காளைக் கன்று; bull-calf, very young steer (செ.அக.);. [காளை+கன்று.] |
காளசீகம் | காளசீகம் kāḷacīkam, பெ.(n.) மரவகை; strychnine tree-Strychnos nux-vomica (சா.அக.);. |
காளச்சீலை | காளச்சீலை kāḷaccīlai, பெ.(n.) விடரியம் (வைடூரியம்);; a variety of chalcedony, cat’s eye (சா.அக.);. [காளம்+சிலை.] |
காளன் | காளன்2 kāḷaṉ, பெ.(n.) 1. வீரபத்திரரின் பெயர்களுள் ஒன்று; one of the name to Virapatra. 2. சிவன் அணிந்திருந்த பாம்புகளில் ஒன்று; Siva’s snake which he were as a ornament. |
காளன்’ | அஅன்ன ஆவன்னா aaṉṉaāvaṉṉā, பெ. (n.) அரிவரி யென்னும் தமிழ் வண்ணமாலை (குறுங்கணக்கும் நெடுங்கணக்கும்);; Tamil Alphabet. எழுத்துகளைக் கல்லா மக்கள், சிறப்பாகச் சிறுவர் சிறுமியர், எளிதாக ஒலித்துக் கற்கும் பொருட்டு, பண்டைத் தொடக்கப்பள்ளி யாசிரியர் உயிரும் உயிர்மெய்யுமாகிய இருவகைக் குறிலுக்கும்’அன்ன’ச் சாரியையும், இருவகை நெடிலுக்கும் அன்னா’ச் சாரியையும் ஏற்படுத்தினர்; ‘அஆ’ என்னும் ஈரெழுத்தும் தமிழ் வண்ணமாலையின் முதலெழுத்துகளாதலின், அவை முதற்குறிப்பாகி, அம் முதற்குறிப்பே’அஅன்ன ஆவன்னா’ என்று வண்ணமாலைப் பெயராயிற்று. இது ‘alpha’, ‘beta’ என்னும் கிரேக்க இரு முதலெழுத்துகளும் சேர்ந்து”alphabetum’ என்று இலத்தீனிலும், ‘alphabet’ என்று ஆங்கிலத்திலும், வண்ணமாலைப் பெயராக வழங்குவது போன்றது; அ, இ, க, கி என்று ஒரு மாத்திரை யொலிக்குங்குறிலெழுத்துகளை விட்டொலிப்பது, சிறுபிள்ளைகட்குச் சற்று வருத்தமுற மூச்சு வாங்குவதால்,’அஅன்ன’ என்பது”ஆனா” என்றும் இஅன்ன என்பது’ஈனா’ என்றும், மாணாக்க நிலையிலும் பின்னும் ஒலிக்கப்பட்டுவந்தன. இவ்வொலிப்புமுறை குறில்களின் உண்மையான ஒலியளவை உடனே தெரிந்துகொள்ளத் தடையாயிருந்தமையின், இந்நூற்றாண்டுத் தொடக்கத்தில் அரசியற் கல்வித்துறையறிஞர், சாரியையின்றி ஒலிநூன் முறைப்படி அ, ஆ, இ, ஈ,… என்று ஒலித்துப் பயிலும் முறையைப் புகுத்திவிட்டனர். அதனால், இன்று ‘அஆ’ என்பது வண்ணமாலைப் பெயராக வழங்கி வருகின்றது. இது புணர்ச்சியில்’அவ்வா’ என்றாகும்; |
காளபதம் | காளபதம் kāḷapatam, பெ.(n) புறாவகை (திவா.);; blue rock-pigeon (செ.அக.);. [காளம்+பதம்] |
காளபிருட்டம் | காளபிருட்டம் kāḷapiruṭṭam, பெ.(n) கன்னன் (கர்னன்); வில்; bow of karman(அபி.சிந்);. |
காளமேகநாராயணசிந்துாரம் | காளமேகநாராயணசிந்துாரம் kāḷamēkanārāyaṇacinram, பெ.(n.) ஒருவகைச் செந்தூரம்; a dark reddish metallic oxide (சா.அக.);. [காளமேகம்+Skt. நாராயணசிந்துரம்] |
காளமேடிகை | காளமேடிகை kāḷamēṭikai, பெ.(n.) 1. மஞ்சிட்டை manjeet 2. கருஞ்சிவதை a kind of Indian jalap (செ.அக.);. |
காளவனம் | காளவனம்1 kāḷavaṉam, பெ.(n) சுடுகாடு (சூடா.);; burning-ground (செ.அக.);, [காளம்+வனம்] காளவனம்2 kāḷavaṉam, பெ.(n.) 1. உஞ்சை நகரின் புறத்தே உள்ள காடு; the forest in out of city. 2. உதயணன் மேல் மிக்க அன்புடைய இலாமயன் என்பவன் இருந்த காடு; a forest (அபி.சிந்);. |
காளவாசல் | காளவாசல் kāḷavācal, பெ.(n.) சுண்ணாம்புக் காளவாய்; lime kin (சா.அக.);. [காள+வாசல்] |
காளவுலை | காளவுலை kāḷavulai, பெ.(n.) மாழைகளை உருக்கும் உலைக்களம், சரவுலை; a fireplace where double bellows are used; a contrivance for a vehement fire for purposes of melting, Furnace (சா.அக.);. |
காளாகிகம் | காளாகிகம் kāḷākikam, பெ.(n.) திருவாத்தி, holy mountain ebony – Bauhima komentosa (சா.அக.);. |
காளாஞ்சகம் | காளாஞ்சகம் kāḷāñcakam, பெ.(n.) எண்பது வகை ஊதை (வாதம்); நோய்களுள் ஒன்று: one of the eighty kinds of rheumatism. [காளா+அஞ்சகம்] இந்நோய் கை கால் குடைச்சல் கண்டு நடக்க முடியாமல் காடு கட்டி முடமாக்கி, உடம்பு வெளுத்து மயக்கத்தை உண்டாக்கும் (சா.அக.);. |
காளாத்திரி | காளாத்திரி kāḷāttiri, பெ.(n.) பாம்பின் கீழ்வரிசை நச்சுப் பற்களில் ஒன்று; the second of the four fangs in the lower row of the teeth in a cobra (சா.அக.);. [காள+திரி] |
காளாமுகி | காளாமுகி kāḷāmuki, பெ.(n.) கொடுமையான அச்சத்தை ஊட்டும் முகம் a form of monster-face(சா.அக.);. [காளா+முகி] |
காளாம்பகி | காளாம்பகி kāḷāmpaki, பெ.(n.) பறவைப் பாம்பு (நாமதீப.);; a winged serpent (செ.அக.);. |
காளாராத்திரி | காளாராத்திரி kāḷārāttiri, பெ. (n.) காளாத்திரி பார்க்க; see kālāttiri |
காளிக்கல் | காளிக்கல் kāḷikkal, பெ.(n.) எல்லைக்கல்; boundary stone. “காணிக்கல்லின் கீழே இரண்டு செப்புத்தவலை அகப்பட்டது”(மதி.கள.1:177);. [காணி + கல்] |
காளிக்காரம் | காளிக்காரம் kāḷikkāram, பெ.(n.) ஒரு நச்சுக் காரம்; a poisonous caustic (சா.அக.);. [காளி+காரம்] |
காளிங்கமர்த்தனன் | காளிங்கமர்த்தனன் kāḷiṅkamarttaṉaṉ, பெ.(n.) காலிங்கனென்னும் பாம்பின் மீது பாதங்களை வைத்து ஆடித்துகைத்த கண்ணபிரான்; Krišna as dancing on the hood of the serpent Kaliyan (செ.அக.);. [காளிங்கன்+மர்த்தனன்.] |
காளிங்கர் | காளிங்கர் kāḷiṅkar, பெ.(n.) திருக்குறளுக்கு உரை எழுதிய ஆசிரியர்களில் ஒருவர்; Kälifigar commentary on Thiru-k-kural. |
காளிதேவர் | காளிதேவர் kāḷitēvar, பெ.(n.) வீர சிவனிய அடியவர்; devotee of Švā. [காளி+தேவர்] இவரிடம் சில மறையோர்கள் வந்து தாம் பிறப்பால் உயர்ந்தோர். மறை ஒத எமக்கே அதிகாரம் உண்டென்றனர். இதைக் கேட்ட இவர் தம்மிடம் இருந்த நாயை மறை ஒதுவிக்க மறையோர் வெட்கிச் சென்றனர் (அபி.சிந்:);. |
காளிந்தம் | காளிந்தம்1 kāḷintam, பெ.(n.) ஒரு நறுமணப் பண்டம் (திவா.);; cardamom (செ.அக.);. காளிந்தம்2 kāḷintam, பெ.(n.) பாம்பு (அகநி);; snake (செ.அக.);. |
காளிந்தாகிதம் | காளிந்தாகிதம் kāḷintākitam, பெ.(n.) தில்லை மரம்; tiger’s milk spurge – Excoecaria agallocha (சா.அக.);. |
காளிந்திமர்த்தனன் | காளிந்திமர்த்தனன் kāḷintimarttaṉaṉ, பெ.(n.) தனது கலப்பைக் கருவியால் யமுனையின் ஆணவத்தை அடக்கிய பலராமன்; Balarama, as having tormented the river Jumna by turning her course with his plough (செ.அக.);. [காளிந்தி+அமர்த்தனன்.] |
காளினி | காளினி kāḷiṉi, பெ.(n.) காளினியம் பார்க்க; see kasiniyam (செ.அக.);. |
காளினியம் | காளினியம் kāḷiṉiyam, பெ.(n.) கத்தரிச் செடிவகை (மலை.); (பதார்த்த.);; brinjal, egg-plant- Solanum melongena(செ.அக.);. |
காளிம்பன் | காளிம்பன் kāḷimpaṉ, பெ.(n.) தொண்டை நாட்டில் திருவேங்கடத்துக்கு அருகில் இருந்த ஒரு பெருந்தகை (பிரபு.);; a patron who lived near Tiru-véñgadam (அபி.சிந்);. |
காளியண்ணப்புலவர் | காளியண்ணப்புலவர் kāḷiyaṇṇappulavar, பெ. (n.) திருச்செங்கோடெனும் சிவதலத்திற்கு அருகில் உள்ள மண்டகப்பாளி என்னும் ஊரில் இருந்தவரும் திருப்பூந்துறை புராணம் பாடியவருமான புலவர்; a poet authorTiruppünduraipuranam (அபி.சிந்.);. [காளி + அண்ணன்+புலவர்] இவர் குலத்தால் கருணிகர். திருச்செங்கோட்டுச் சிற்றம்பலக் கவிராயரின் மாணவர். |
காளியாளன் | காளியாளன்1 kāḷiyāḷaṉ, பெ.(n.) 1. காணியாட்சியுள்ளவன்; proprietor of land. 2. உழவின் மேல் ஊக்கமுள்ள குடி (சிலப். 5:43,உரை);; hard working agriculturist, 3. அந்தணரில் ஒரு வகுப்பாளர் (GTj.D.78);. a sub-division of Smartha Brahmans. 4.வேளாளருள் ஒரு வகுப்பார் (G.T.D.81);; a sub-division of _. ப. காணியாளன்; க. காணியால. [காணி + ஆளன்.] காளியாளன்2 kāḷiyāḷaṉ, பெ.(n.) ஒருவகை மீன்; உள a kind of fish, “வயலி னுதிக்குங் காணி யாளனும்” (பறாளை. பள்ளு.16); [காணி + ஆளன்.] |
காளிரம் | காளிரம் kāḷiram, பெ.(n.) மணித்தக்காளி, fox-grape – Solanum nigrum (சா.அக.);. |
காளிராத்திரி | காளிராத்திரி kāḷirāttiri, பெ.(n.) காளா ராத்திரி பார்க்க; see kaliniyam (சா.அக.);. |
காழியன் | காழியன்1 kāḻiyaṉ, பெ.(n.) வண்ணான்; washerman, dhoby. “காழியர் கவ்வைப் பரப்பின் வெவ்வுவர்ப்பொழிய”(அகநா.89, 7); (செ.அக.); [காழ்-காழியன்.] காழியன்2 kāḻiyaṉ, பெ.(n.) 1. பிட்டு விற்கும் வாணிகன் (மணிமே.28, 32);; dealer in the rice preparation pittu. 2. உப்பு வாணிகன் (சூடா);; salt vendor. [காழ்-காழியன்.] |
காழுன்றுகடிகை | காழுன்றுகடிகை kāḻuṉṟukaṭikai, பெ.(n.) 1. குத்துக்கோல்; military machine fitted with spears. “கானப்படமுங் காமூன்று கடிகையும்” (சிலப்.14, 173);. 2. கூடாரம் (சிலப்.14, 173, அரும்.);; tent (செ.அக.);. [காழ்+ஊன்று+கடிகை] |
காழ் | காழ் kāḻ, பெ.(n.) பணம் என்பதின் எட்டில் ஒரு பங்கு மதிப்புடையபழங்காலக்காக, an ancient coin 1/8″value of panamotherwise known as cinnam. (கல்வெ..);. [காய்-காம்] |
காழ்கொள்ளு-தல் | காழ்கொள்ளு-தல் kāḻkoḷḷutal, 16 செ.கு.வி. (v.i.) 1. முதிர்ச்சி அடைதல்; maturing. 2. வயிரம் பாய்தல்; formation of core inside a tree (சா.அக.);. [காழ்+கொள்ளல்.] |
காவடியெடு-த்தல் | காவடியெடு-த்தல் kāvaṭiyeṭuttal, 4 செ.கு.வி. (v.i.) உயர் நிலையில் உள்ள ஒருவரைப் பார்ப்பதற்காகப் பலமுறை போக நேரிடுதல்; make repeated calls at someons’s place. அமைச்சரைப் பார்க்க எத்தனை முறை காவடியெடுக்க வேண்டி யிருக்கிறது. [காவடி+எடு-த்தல்.] |
காவந்து | காவந்து kāvandu, பெ.(n.) காபந்து (வின்.); பார்க்க;see {}. [U.{} → த.காவந்து.] |
காவனை | காவனை kāvaṉai, பெ.(n.) காட்டு மல்லிகை; wild jasmine – Jasminum angustifolium (சா.அக.);. |
காவன்முல்லைப்பூதனார் | காவன்முல்லைப்பூதனார் kāvaṉmullaippūtaṉār, பெ.(n) கழகக் காலப் புலவர்களில் ஒருவர்; the poet who belonged to the ancient safgam period. [காவல்+முல்லை+பூதன்+ஆர்] இவரது இயற்பெயர் பூதன். காவன்முல்லை, புறத்திணைக்குட்பட்ட ஒரு துறை. அத்துறையைப் பாடினமையால் காவன்முல்லைப் பூதனார் என்று அழைக்கப்பட்டார். |
காவற்கடவுள் | காவற்கடவுள் kāvaṟkaṭavuḷ, பெ.(n.) திருமால்; Višņu, as preserver of the world (செ.அக.);. [காவல்+கடவுள்.] |
காவற்கட்டு | காவற்கட்டு kāvaṟkaṭṭu, பெ.(n.) 1. காவல் செய்வதற்குரிய கட்டுப்பாடு; custom regulating village-watch. 2.காவலாளர்க்கு ஊதியமாகப் பணத்திற்குப் பதிலாகக் கதிரைக்கட்டாகக் கொடுக்கும் முற்றுட்டு (மானியம்);; bundle of paddy sheaves given to watchmen as dues (செ.அக.);. [காவல்+கட்டு] |
காவற்கட்டை | காவற்கட்டை kāvaṟkaṭṭai, பெ.(n.) 1. மகவு ஈன்ற பெண்டிர்க்குக் காவலாக எரிக்கப்படும் விறகுக் கட்டை; a log of wood kept burning to ward off the female demon korri from a woman in child birth. 2. காவலுக்காகக் குடிசையின் பக்கத்து வைத்து எரிக்கும் விறகு; clump of wood kept burning throughout the night near a patrol-hut (செ.அக.);. [காவல்+கட்டை] |
காவற்கணிகை | காவற்கணிகை kāvaṟkaṇikai, பெ.(n.) பழங்காலத்தில் இருந்த ஆடற்குலப் பெண் (களத்தாடுங் கூத்தி); (சிலப்.5:50);; a class of dancing-girls (செ.அக.);. [காவற்-கணிகை] |
காவற்கப்பல் | காவற்கப்பல் kāvaṟkappal, பெ.(n.) காவல் வேலை செய்யுங் கப்பல்; guard-ship, reconnoitering vessel (செ.அக.);. [காவல்+கப்பல்.] |
காவற்கலி | காவற்கலி kāvaṟkali, பெ.(n.) வாழை (மலை);; plantain (செ.அக.);. |
காவற்காடு | காவற்காடு kāvaṟkāṭu, பெ. (n.) 1. பழங்காலத்தில் கோட்டையைச் சுற்றிலும் பாதுகாப்பின் பொருட்டு வளர்க்கப்படும் காடு jungle or forest serving as defence. 2.அரசங்காத்தினரால் பாதுகாக்கப்படுங் காடு; reserved forest (செ.அக.);. [காவல்+காடு] |
காவற்குலிகம் | காவற்குலிகம் kāvaṟkulikam, பெ.(n.) 1. திப்பிலி; long-pepper- Piper longum. 2. நாவல்மரம், jaumoon tree – Eugenia jambolana (சா.அக..);. [காவல்+குலிகம்] |
காவற்கூடம் | காவற்கூடம் kāvaṟāṭam, பெ.(n.) சிறைச்சாலை; prison house (செ.அக.);. [காவல் + கூடம்] காவற்கூடம் kāvaṟāṭam, பெ.(n.) காத்து நிற்கும் அறை; watch house. [காவல்+கூடம்] |
காவற்கூடு | காவற்கூடு kāvaṟāṭu, பெ.(n.) காவலாளர் தங்கும் இடம் sentry box(செ.அக.);. [காவல்+கூடு] |
காவற்சாலை | காவற்சாலை kāvaṟcālai, பெ. (n.) காவற்கூடம் பார்க்க; see kavar-kudam. “வலிதிற் காவற் சாலையிலாக்கினார்கள்” (திருவாதபு:திருப்பெருந்19);(செஅக);. [காவல்+சாலை] |
காவற்சோலை | காவற்சோலை kāvaṟcōlai, பெ.(n.) அரசர் முதலியோர் விளையாடுவதற்குரிய பூஞ் சோலை (சிலப்.14:127, உரை);; royal park or grove, as guarded (செ.அக.);. [காவல் + சோலை.] |
காவற்படை | காவற்படை kāvaṟpaṭai, பெ. (n.) மெய் காவல்படை (யாழ்.அக.);; body-guard, [காவல்+படை] |
காவற்பிரிவு | காவற்பிரிவு kāvaṟpirivu, பெ.(n) தலைவன் நாடு காவற்பொருட்டுத் தலைவியைப் பிரியும் பிரிவு (திருக்கோ.312, தலைப்பு);; major theme which describes the husband’s parting from his wife to defend his country (செ.அக.);. [காவல்+பிரிவு] |
காவற்புரி | காவற்புரி kāvaṟpuri, பெ.(n.) 1. வயலில் பயிர்களுக்குக் காவலாக வைக்கோலால் செய்து வைக்கப்படும் பாவை; scare-crow made of twisted or plaited straw. 2. அறுவடைக்குப்பின், நெற்குவியலின் மேல் பேய், பூதம் போன்றவவை அணுகாமல் தடுக்க இடும் வைக்கோற் பழுதை straw rope thrown over a heap of grain in a field to protect it from demons (செ.அக.);. மறுவ சோளக்காட்டுப் பொம்மை [காவல்+புரி] |
காவற்பெண் | காவற்பெண் kāvaṟpeṇ, பெ.(n.) வளர்ப்புத் தாய் அல்லது செவிலி; nurse (சா.அக.);. [காவல்+பெண்] |
காவற்பெண்டு | காவற்பெண்டு kāvaṟpeṇṭu, பெ.(n.) 1. கடைக்கழகக்காலத் தலைவியைச் சிறுவயது முதல் வளர்க்கும் மாற்றாந்தாய் (செவிலித் தாய்); (சிலப்.29, காவற்பெண்டு சொல்.);, nurse 2. கழகக் காலத்தில் வாழ்ந்த பெண்பாற் புலவருள் ஒருவர் (புறநா.86);, an ancient poetess, author of a poem in purananüru (செ.அக);. [காவல் + பெண்டு] |
காவற்பேறு | காவற்பேறு kāvaṟpēṟu, பெ.(n.) ஊர்க் காவலுக்காகக் கொடுக்கும் வரி (M.E.R. 262 of 1925);; cess collected for paying the village-watchmen (செ.அக.);. [காவல்+பேறு.] |
காவற்றண்டனை | காவற்றண்டனை kāvaṟṟaṇṭaṉai, பெ.(n.) சிறையிலிடுந் தண்டனை; sentence of imprisonment (செ.அக.);. [காவல்+தண்டனை.] |
காவற்றலம் | காவற்றலம் kāvaṟṟalam, பெ.(n.) சிறைச்சாலை, prison, gaol (செ.அக.);. [காவல்+தலம்.] |
காவற்றெய்வதம் | காவற்றெய்வதம் kāvaṟṟeyvatam, பெ.(n.) காக்குந் தெய்வம்; tutelary deity. “காவற்றெய்வதங் கண்டுவந் தெய்தி” (மணிமே.25:159); (செ.அக);. [காவல்+தெய்வதம்] |
காவலர் | காவலர் kāvalar, பெ.(n.) 1. சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்தும் அரசுப் பணியாளர்; policeman. 2. காவலாளி; security guard. வனத்துறையில் காவலர் வேலைக்கு ஆள் எடுக்கிறார்கள். [காவல்→அகாவலர்] |
காவலில்வை-த்தல் | காவலில்வை-த்தல் kāvalilvaittal, 4 செ.கு.வி. keep under detention; keep in gool. குற்றம் சாட்டப்பட்டவரைப் பதினைந்துநாள் காவலில் வைக்க அறமன்றத் தலைவர் ஆணையிட்டார். [காவலில்+வை-த்தல்.] |
காவல்துறை | காவல்துறை kāvaltuṟai, பெ.(n.) சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதற்காக அரசு ஏற்படுத்தியுள்ள அமைப்பு: the police department [காவல் + துறை] |
காவல்தெய்வம் | காவல்தெய்வம் kāvalteyvam, பெ.(n.) எல்லைப்புறத்திலிருந்து ஊரைக் காத்துவரும் தெய்வம்; deity guarding the village. [காவல் + தெய்வம்] |
காவல்நிலையம் | காவல்நிலையம் kāvalnilaiyam, பெ.(n.) சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக ஒரு ஊரில் அல்லது நகரத்தின் பல பிரிவுகளில் இருக்கும் காவலர்கள் பணிபுரியும் அலுவலகம்; police station. [காவல்+நிலையம்] |
காவளை | காவளை kāvaḷai, பெ.(n.) 1பேய்த்தும்பை, Devil leuces-Leucaslinifolia. 2 தைவேளை; five leaved cleome-Cleomepentaphylla alias Galaga maxima. 3. பூண்டின் இறுதிப்பெயர்; plant’s second term. 4.காவளைச் சுக்கான்; see kavalai-c-cukkan, (சா.அக.);. [காவாளை-காவளை] [P] |
காவளைச்சுக்கான் | காவளைச்சுக்கான் kāvaḷaiccukkāṉ, பெ.(n.) கருஞ்சுக்கான்; black lime stone (சா.அக.);. [காவளை+சுக்கான்.] |
காவாங்கரை | காவாங்கரை kāvāṅkarai, பெ.(n.) வாய்க்காற்கரை; bank of a channel (செ.அக.);. [கால்+வாய் + கரை.] |
காவாடுபுல் | காவாடுபுல் kāvāṭupul, பெ.(n.) ஒரு வகைப்புல்; a kind of unknown grass (சா.அக.);. [கவடு – காவாடு+புல்] |
காவாய் | காவாய் kāvāy, பெ.(n.) ஒருவகைப்புல்; a kind of grass (செ.அக.);. [கவை-காவாய்] |
காவாலி | காவாலி kāvāli, பெ.(n.) மனம் போனபடி நடப்பவன்; vagabond. அவன் மெத்த காவாலியாய்த் திரிகிறான் (உ.வ.);. த.வ. தெம்மாடி. [U.{} → த.காவாலி.] |
காவாளி | காவாளி kāvāḷi, பெ.(n.) காவாளை (மலை.); பார்க்க; see kāvāsa (செ.அக.);. |
காவிகா | காவிகா kāvikā, பெ.(n.) கருப்புத்தினை, black millet ortalian millet – Panicum indicum (சா.அக.);. |
காவிடு-தல் | காவிடு-தல் kāviḍudal, செ.குன்றாவி. (v.t.) விலங்குகளைச் சிறு தெய்வங்களுக்குப் பலியிடுதல்; to kill the animals for demigods, for divine purpose. மறுவ ஊட்டு தருதல். [காவு [உணவு]+இடு] |
காவிடோல் | காவிடோல் kāviṭōl, பெ.(n.) காவிப் பருவான் பார்க்க; see kävi p-paruvām (செ.அக.);. |
காவிந்து | காவிந்து kāvindu, பெ.(n.) முதலாளி; master; employer. அதுகளைக் காவிந்தவர்கள் பார்வையிடுகிற இங்கிலீசு புத்தகத்திலும் எழுதுவித்தேன் (P.T.L.185.);. [Pers.khawand → த.காவிந்து.] |
காவிப்பருவான் | காவிப்பருவான் kāvipparuvāṉ, பெ.(n.) கப்பலின் தலைப் பாய்மரம்; topsail-yard (செ.அக.);. [காவி+பருவான்.] |
காவிப்பல் | காவிப்பல் kāvippal, பெ.(n.) 1. காவி நிறம் அடைந்த பற்கள்; red soiled teeth. 2. ஊத்தை படிந்த பல்; filthy teeth (சா.அக.);. [காவி+பல்.] |
காவிமாலை | காவிமாலை kāvimālai, பெ.(n.) கலவியை விரும்பிய தலைவன் தலைவிக்கு அனுப்பும் மாலை (யாழ்.அக.);; garland sent by a lover to his beloved, soliciting her favour (செ.அக.);. [காவி+மாலை.] |
காவியகுணம் | காவியகுணம் kāviyakuṇam, பெ.(n.) செய்யுட் குணம் (தண்டி);; merits of poetic composition. செய்யுட் குணங்களாவன: செறிவு, தெளிவு, சமநிலை, இன்பம், ஒழுகிசை, உதாரம், உய்த்தலில் பொருண்மை, காந்தம், வலி, சமாதி (செ.அக.);. |
காவியா | காவியா kāviyā, பெ.(n.) காவியாக்கட்டை பார்க்க; see kāvīyā-k-kattai(செ.அக.);. |
காவியாக்கட்டை | காவியாக்கட்டை kāviyākkaṭṭai, பெ.(n.) நங்கூரக் கட்டை; wooden beam of an anchor (செ.அக.);. [காவி→அகாவியா+கட்டை] [P] |
காவிரிக்கரைகண்டசோழன் | காவிரிக்கரைகண்டசோழன் kāvirikkaraikaṇṭacōḻṉ, பெ.(n.) காவிரி ஆற்றுக்குக் கரை கட்டிய சோழன்; a king who built the dam river käviri இம்மன்னன் தன் சிற்றரசர்களுக்குக் காவிரிக்கரையைப் பகுத்தளித்து கரை கட்டும்படி. பணித்தான். அதில் பிரதாபருத்திரன் என்னும் மூன்று கண்களை உடையவன் மட்டும் தன் பங்கைக் கட்டாது இருந்தான். அதைக் கண்ட சோழன் அவன் உருவத்தைப் படத்தில் கண்டு சிவனைப் போல் இவனுக்கும் மூன்று கண்களா என ஒரு கண்ணைக் குத்த, அவனின் கண் மறைந்தது. பிரதாபருத்திரனும் தன் பங்கைக் கட்டி முடித்தான் (அபி.சிந்);. [காவிரி-கரை+கண்ட+சோழன்] |
காவிரிப்பூம்பட்டணத்துச்சேந்தன்கண்ணனார் | காவிரிப்பூம்பட்டணத்துச்சேந்தன்கண்ணனார் kāvirippūmpaṭṭaṇattuccēntaṉkaṇṇaṉār, பெ.(n.) கடைக்கழகம் மருவிய புலவர்களில் ஒருவர்; one of the poet who belonged to the ancient Šangam period. இவரது ஊர் சோழ நாட்டுக் காவிரிப் பூம்பட்டினம். கண்ணன் பெயருடையார் வேறிருத்தலின் இவர் சேந்தன் கண்ணன் எனப்பட்டனர் போலும் (அபி.சிந்);. [காவிரி+பூம்பட்டினத்து+செம்மை+கண்ணனார்.] |
காவிரிப்பூம்பட்டினத்துக்கண்ணன் | காவிரிப்பூம்பட்டினத்துக்கண்ணன் kāvirippūmpaṭṭiṉattukkaṇṇaṉ, பெ.(n.) கடைக் கழகம் மருவிய புலவன்: the poet who belonged to last ancient Šañgam (அபி.சிந்);. [காவிரி+பூம்பட்டினத்து+கண்ணன்.] |
காவிரிப்பூம்பட்டினத்துக்கந்தாத்தனார் | காவிரிப்பூம்பட்டினத்துக்கந்தாத்தனார் kāvirippūmpaṭṭiṉattukkantāttaṉār, பெ.(n.) கடைக் கழகம் மருவிய புலவர்களில் ஒருவர்; one of the poet who belonged to the lastancient Šañgam (அபி.சிந்.);. |
காவிரிப்பூம்பட்டினத்துச்செங்கண்ணனார் | காவிரிப்பூம்பட்டினத்துச்செங்கண்ணனார் kāvirippūmpaṭṭiṉattucceṅkaṇṇaṉār, பெ.(n.) கழகக் காலப் புலவர்; the poet who belonged to the ancient Šargam period (அபி.சிந்.);. |
காவீகம் | காவீகம் kāvīkam, பெ.(n.) சேங்கொட்டை, dhoby’s nut – Semecarpus anacordium (சா.அக.);. |
காவீயகம் | காவீயகம் kāvīyakam, பெ.(n.) மரமஞ்சள்; tree-turmeric – Coscinium fenestratum (சா.அக.);. [காவி+அகம்] |
காவு | காவு kāvu, பெ.(n.) 1.ஒரு மந்திர மை; a black magic paint; colllyrium. 2.பீதரோகணி; Himalayan plant used for diseases of the eye (சா.அக.);. [கரு-கா-காவு] |
காவுகொடு-த்தல் | காவுகொடு-த்தல் kāvukoṭuttal, 4 செ.கு.வி. (v.i.) காளி முதலிய தெய்வங்களுக்கு உயிரைக் காணிக்கையாகக் கொடுத்தல்; offer animal, human sacrifice. காளிக்கு ஆடு வெட்டிக் காவு கொடுத்தார்கள். எத்தனையோ உயிர்கள் இந்தப் போராட் டத்தில் காவு கொடுக்கப்பட்டிருக்கும்! [காவு+கொடு-த்தல்.] |
காவுகொள்-தல் | காவுகொள்-தல் kāvukoḷtal, 4 செ.கு.வி. (v.i.) உயிரைக் காணிக்கையாக ஏற்றல்; accept or take animal, human sacrifice. குழந்தையின் உயிருக்காகத்தாயின் உயிரை தெய்வம் காவு கேட்பதா? [காவு + கொள்-தல்.] |
காவூமி | காவூமி kāvūmi, பெ.(n.) காவு பார்க்க see kāvu (சா.அக.);. [கா + ஊமி] |
காவெட்டு | காவெட்டு kāveṭṭu, பெ.(n.) பழுக்கத் தொடங்கியிருக்கும் காய்; the state before becoming fruit; unripe. surswypúupuh காவெட்டாகப் பார்த்து வாங்கி வா. (காய்சவாட்டு); மறுவ. செங்காய் |
காவேளை | காவேளை kāvēḷai, பெ.(n.) 1. தைவேளை, five-leaved cleome, cleome pentaphylla alias Galaga maxima. 2. பூண்டின் இறுதிப் பெயர்; plant’s second term (சா.அக.);. [கா+வேளை.] |