தலைசொல் | பொருள் |
---|---|
ஓ | ஓ1ō, தமிழ் வண்னமாலையில் பதினொன்றாம் உயிரெழுத்தாகிய அரையங்காப்பு இதழ்குவியா பின் னண்ணச் செறிவு உயிர்நெடில்; 11th letter and vowel of the alphabet the half-close back tense unrounded vowel in Tamil. [உ.அ → ஒ.] அஇ → ஐ ஆகவும், அஉ → ஒள ஆகவும் இருகுறில் கூட்டுயிரொலி உயிர்நெடில்களாக உருப்பெற்றதைப்போன்று. இஅ → ஏ எனவும், உஅ → ஓ எனவும் கூட்டுயிர் நெடில்கள் தோன்றின. ஒ.நோ. இய = செல், இய → ஏ (ஏகு); = செல். உவ = உவத்தல், மகிழ்தல். உவ → ஒ (ஒகை); = மகிழ்வு. ஏ, ஓ என்னும் கூட்டுயிர்கள் இயல்பு வினையடிகளைத் தோற்றுவிப்பதில்லை. இயலுதல் → ஏலுதல் என்றவாறு ‘ஏல்’ திரிபு வினையடியாதலன்றி இயல்பு வினையடி ஆகா தென்க. ஒருசார் ஒலிக்குறிப்பு நெட்டெழுத்தாகி ஆக்கச்சொல்லாதலே மிகுதியாம். ஓ2ō, விளரியென்னும் இசையின் எழுத்து (திவா.); ஓ5ōtal, 6.செ.கு.வி. (v.i.) நீங்குதல், கடத்தல், விலகுதல்; to be removed, pass off, to keep away. [ஒருவு → ஒரு → ஓ.] ஓ6ōtal, 5.செ.குன்றாவி. (v.t.) தடுத்தல்; to abstract. [உல் → ஒல் → ஓ. உல் = குத்தல், தடுத்தல்.] ஓ7ōtal, 5.செ.குன்றாவி. (v.t.) விடுத்தல்; to leave, abandon. [ஒரு(வு); → ஓ.] ஓ8ō, பெ. (n.) தொலைவு; distance. [ஊ → ஓ.] ஓ9ō, பெ. (n.) ஒப்பு, பொருத்தம்; suitability , comparison, appropriateness, resemblance. [உ – → ஒ → ஓ (முதா.218);.] ஓ11ō, பெ. (n.) 1.முளை; sprout. 2. தோற்றம்; origin. 3. எழுதல்; rising. E orgin, fr origine. L origo, originis, orior, to rise. [உல் → ஒல் → ஒ]. ஓ12ō, இடை. (int.) 1. உயர்விழிவுகளின் சிறப்புக் குறிப்பு (நன்.423);; oh! expressing superiority or interiority. ஒஓ பெரியன், ஒஒ கொடியன். 2. கழிவிரக்கக் குறிப்பு; also! Ah! expressing bereavement. “ஒஒ தமக்கோ ருறுதி யுணராரோ” (நன்:423,விருத்.);. 3. மகிழ்ச்சிக் குறிப்பு; ha! expressing joy. “ஓ பெரிதுவர்ப் பக் கேட்டேன்” (சீவக.905);. 4. வியப்புக் குறிப்பு; oh! expressing wonder. “முகந் திங்களோ காணீர்” (சிலப்.7,பாடல்.11); 5. நினைவுக் குறிப்பு; o! Expres- sing recollection. ‘ஓ தெரிந்தது’. 6. அழைத்தற் குறிப்பு; halloa! calling attention. ‘ஓ கண்ணா! 7. உரத்த ஓசை யைக் குறிக்கும் எழுத்தொலி அல்லது ஒலிக்குறிப்பு; expression or prolonged {} sound ஓ வென வையகத் தோசையோ யுயர்ந்ததே” (சீவக.1843);. ம., க. ஓ;தெ. ஒரே. [ஊ → ஒ. (வே.க.112);.] ஓ13ō, இடை. (part.) 1. ஒழிபிசை, வினா, எதிர்மறை, தெரிநிலை, ஐயம் ஆகிய பொருள்களில் வரும் சொல்லீறு; ending of words signifying ellipsis of a counterpart, interrogation, negation, discrimination, disti- nctiveness, doubt. 2. அசைநிலை (நன்.423, விருத்.);; expletive. ம., க. ஒ. [ஓ – ஒலிக்குறிப்பு, தொடராட்சி பொருளைக் குறிப்பால் புலப்ப டுத்தியது.] ஓ14ōttal, 5.செ.குன்றாவி. (v.t.) புணர்தல்(அக.நி.);; lit, to be of one mind, transf, to copulate ம. ஒக்குக: க., குட. ஒள். [உ → உல் → ஒல் → ஒள் → ஓ.] |
ஓஒ | ஓஒōo, இடை. (int) வியப்புக்குறிப்பு (பிங்.); oh! O! expressing wonder. [ ஓ + ஓ .] |
ஓகணம் | ஓகணம்ōkaṇam, பெ. (n.) மூட்டைப்பூச்சி (யாழ்.அக.);; buց. [உகனை → ஒகணை → ஒகணம் → ஓகணம். உகணை → இகணை → திகணை எனத்திரிந்து திரவிட மொழிகளில் வழங்குகிறது. உகணை பார்க்க see {}.] |
ஓகம் | ஓகம்1ōkam, பெ. (n.) 1. வெள்ளம் (சூடா.);, flood. 2. பெருங்கூட்டம்; crowd, multitude. “ஒகவெஞ் சேனையும்” (கம்பரா.அதிகாய.2);. [உகு → ஒரு → ஓகம்.] |
ஓகாரம் | ஓகாரம்1ōkāram, பெ. (n.) மயில்; letter used as a symbol for the peacock among the panca-paksi. “ஓகார பரியின்மிசை வருவாயோ” (திருப்பு.142);. [ஓம் → ஓங்காரம் → ஓகாரம்.] தோகைவிரித்த மயிலின் வடிவு ஓகாரத்திற்கு ஒப்பான தென் றும், ஓங்காரப் பொருளான இறைவனின் ஊர்தியாதலின் அப்பெயர் பெற்றதென்றும் கூறுவது தொன்மம். தொன்முது காலத்தில் தமிழ்மொழி உருவெழுத்தாக (ஓவிய எழுத்தாக); எழுதப்பட்ட காலத்தில் மயிலின் வடிவமே ஒகார ஒலிப்பின் வரிவடிவமாக இருந்தது என்பதும் பின்னர் அசையெழுத்துக் காலத்தில் மயிலின் வடிவம் உருவெழுத்தினின்றும் கருங்கி ஒருகோட்டோவியம் போல் அசையெழுத்துக் சுருக்கமாக மாறியதென்பதும் (z-z); அஃது பிராமி எனப்படும் முந்துதமிழ் எழுத்திலும் நிலைத்தது என்பதும் அறியத்தக்கது. ஓகாரம்2ōkāram, பெ. (n.) ‘ஓம்’ என்னும் மந்திரவெழுத் தின் சுருக்கம்; letter {} representing {}. [ஓம் → ஓ → ஒகாரம். ‘காரம்’ – எழுத்துச்சாரியை.] |
ஓகாளம் | ஓகாளம்ōkāḷam, பெ. (n.) ஓக்காளம் பார்க்க;see {}. “சூளையர்க ளோகாளஞ் செய்யாமுன்” (பதினொ.சேத்.13);. [ஒக்காளம் → ஓகாளம்.] |
ஓகுலம் | ஓகுலம்ōkulam, பெ. (n.) அப்பம் (யாழ்.அக.);; sweet cake. [உகுள் → உகுளம் → ஒகுளம் → ஓகுலம்.] |
ஓகை | ஓகை1ōkai, பெ. (n.) ஆரவாரம்; loud noise, shouting. “பொருதோகை கரராசபர மேற விடுகாளை” (தக்கயா கப்.5);. [ஓதை → ஓகை.] ஓகை2ōkai, பெ. (n.) வருவது சொல்வது, விரிச்சி (அக.நி.);; prediction, prognostication. [ஒர்கை → ஓகை.] ஓகை3ōkai, பெ. (n.) மகிழ்ச்சி; delight, joy. “ஒகையோ டிருத்தி” (பாரத.குருகுல.93);. [உவகை → ஓகை.] |
ஓகோ | ஓகோōā, இடை. (int.) வியப்பு, மருட்கை, வெறுப்பு. இரக்கம், வருத்தம் ஆகிய உணர்வுகளைக் காட்டும் இடைச்சொல்; expressing wonder, surprise, concern. Pity, regret. “ஓகோ வுனைப்பிரிந்தார்” (தாயு.பராப ரக்.30);. [ஓ + ஓ – ஓகோ.] |
ஓகோதனி | ஓகோதனிōātaṉi, பெ. (n.) ஓகணம் பார்க்க;see {}. (யாழ்.அக.);. [ஓகணம் → ஓகதணம் → ஓகோதணம் → ஓகோதனி.] |
ஓக்கம் | ஓக்கம்ōkkam, பெ. (n.) 1. உயரம்; height. 2. எழுச்சி; elevation. “ஒக்கநீள் விசும்பு” (சீவக.866);. 3. பெருமை; increase, enlargement, bigness, largeness. “சுருங்கிற்றி ரண்டடி யோக்கமிரட்டி” (காரிகை.ஒழிபி.7);. [ஓங்கு → ஒக்கு → ஒக்கம் (சு.வி.61);.] |
ஓக்காளி-த்தல் | ஓக்காளி-த்தல்ōkkāḷittal, 4.செ.கு.வி. (v.i.) வாய்க்குமட் டல்; to heave; to nauseate; to retch from sickness. – 4.செ.குன்றாவி. (v.t.); கக்கல்; to vomit. “குழந்தை பாலையெல்லாம் ஒக்காளித்து விட்டது”. ம. ஒக்காளிக்குக. ஒக்கானிக்குக; க. ஒகரிசு, ஒகளிசு, ஒக்கரிசு, ஒகடிக; து. ஓங்கதெ;தெ. ஒகரின்க. [ஒக்களி → ஓக்காளி.] |
ஓக்காளிப்பு | ஓக்காளிப்புōkkāḷippu, பெ. (n.) குமட்டல்; retching. incipient sickness, squeamishness. காய்ச்சல் விட்டும் ஒக்காளிப்பு விடவில்லை. ம. ஓக்காளம்; க. ஒகரி, ஓகான; து. ஓங்கதெ;தெ. ஒகர, ஒகிலி. [ஓக்காளி → ஒக்காளப்பு.] |
ஓக்கியம் | ஓக்கியம்ōkkiyam, பெ. (n.) ஏற்றது; that which is fit, appropriate. “உடலாக்குந் தன்மைக் கோக்கிய சக்தி யுண்டாய்” (சி.சி.2,48);. [ஒல் → ஒக்கு → ஒக்கியம் → ஓக்கியம். இச்சொல் வடமொழி யில் யோக்கியம் எனத்திரிந்தது. வடநூலார் yogya – (from, ‘Yug’); – fit for the yoke எனப் பொருட்காரணம் கூறுதலின் உழுதலுக்கும் பொருத்துதலுக்கும் பொருத்தமின்றாதல் அறிக.] |
ஓக்கு-தல் | ஓக்கு-தல்ōkkudal, 5.செ.குன்றாவி. (v.t.) 1. உயர்த்துதல்; to raise, lift up. “ஓக்கிய வொள்வாள்’ (நாலடி.129);. 2. எழும்பச் செய்தல்; to cause to rise. “வேலினோக் கிய விளக்குநிலையும் (தொல்.பொருள்.90);. 3 வரைந்து வைத்தல்; to set apart. “நிணப்பலி யோக்கு வல்” (திருக்கோ.235);. 4. தருதல் (திருக்கோ.235, உரை.);; to give, bestow. 5. எறிதல்; to throw. “சந்தனத் தளிர் நன்மாலை யோக்கினார்” (சீவக.2661);. 6. ஆக்கு தல்; to make, produce. “ஓக்கினே வென்னையும்” (திவ்.இயற்.2,59);. 7. கொடுத்தல்; to give [ஓ → ஓங்கு → ஓக்கு.] |
ஓங்கன் | ஓங்கன்ōṅgaṉ, பெ. (n.) ஓமம்; bishop’s weed. (சா.அக.);. [ஓமம் → ஓமன் → ஓங்கன் (கொ.வ.);.] |
ஓங்கற்பிணி | ஓங்கற்பிணிōṅgaṟpiṇi, பெ. (n.) 1. ஆட்டிற்கு முள்ளந் தண்டில் காணுமோர் நோய்; disease of the sheep. 2. கடும்பிணி; disease which tends to increase day by day. 3. கக்கலோடு கூடிய நோய்; any disease accompanied by vomiting. 4. நாளுக்கு நாள் இளைக்கச் செய்யும் நோய்; any disease marked by progressive wasting of the body. (சா.அக.);. [ஓங்கல் + பிணி.] |
ஓங்கல் | ஓங்கல்1ōṅgal, பெ. (n.) 1. உயர்ச்சி (திவா.);; height, elevation. 2. எழுச்சி (பிங்.);; rising. 3. மலை; mountain. “ஓங்கலைத் தாங்க லூற்றான்” (தேவா.589,10);. 4. மேடு (பிங்);; mound, elevation. 5. மலையுச்சி; mou-ntain top. “யாங்கு வல்லுநையோ வோங்கல் வெற்ப” (ஐங்குறு.231);. 6. தலைவன் (பிங்);; chief, leader, superior, king. 7. வலியோன் (பிங்.);; strong man. 8 வழித்தோன்றல் (பிங்.);; descendant. 9. யானை (அக.நி.);; elephant. 10. மழைத்துளியால் உயிர்வாழும் சாலகப் (சாதகம்); பறவை; bird said to subsist on rain drops. “நீரிடும்பை புள்ளினு ளோங்க லறியும்” (நான்மணி.97);. 11. வாயாலெடுத்தல் (பிங்.);; re- tching, heaving, vomiting. ம. ஓங்கல். [ஓங்கு → ஓங்கல் (வே.க.34);.] ஓங்கல்2ōṅgal, பெ. (n.) மரம்; tree. “செருந்தியுஞ் செண்பக வோங்கலும்” (சிலப்.13,153);. 2. மூங்கில் (திவா.);; bamboo. 3. மரக்கலம் (அக.நி.);; boat, vessel. [ஓங்கு → ஓங்கல். உயர்தல் பொருள் (தொழிலாகு பெயர்);. மரத்தையும் மூங்கிலையும் மரத்தால் செய்த கப்பலையும் கட்டியது.] |
ஓங்காரம் | ஓங்காரம்ōṅkāram, பெ. (n.) சுவசுதிக் எனப்படும் வலச்சுற்றான மங்கலக் குறியீடு; auspicious symbol swastik. [ஒம்+காரம்-ஒங்காரம்] [P] ஓங்காரம்ōṅgāram, பெ. (n.) 1. நெட்டோசை; long sound. 2. மூலமந்திரம் (பிரணவம்);; om, the mystic syllable. “ஓங்காரத் துட்பொருளாய் நின்றான்” (தேவா.320,10);. 3. குழந்தையின் அழுகை; crying sound of the child. இந்தக் குழந்தைஎப்பொழுதும் ஓங்காரம் வைத்துக் கொண்டிருக்கிறது. (உ.வ.);. [ஓம் + காரம்.] ‘ஓம்’ ஒலிப்புக்குரிய இறைவன் அண்டபேரண்டங்களாக விரிந்த வானப்பெருவளி இயங்கும் ஓசையின் வடிவம் என வும், ஊழ்கத்தில் (தியானம்); மூழ்குவோர் மனத்தெழும் ஓசையின் வடிவம் எனவும் விளக்கம் கூறுவர். ஆகாரம் ஏகாரம் என எழுத்தின் சாரியையாக வரும் காரச்சாரியை, ஒ (ஒம்); மூலமந்திர எழுத்தெனக் கொண்டதால் இதற்கும் சாரியையாயிற்று. ‘ஓம்’ என்பதன் உட்பொருளைத் தமிழ்க் கடவுள் முருகன் விவரித்துரைத்ததாகத் தொன்மம் கூறும். ‘ஓம்’ வடமொழியில் பிரணவமந்திரம் எனப்படும். ஓம் வரிவடிவ எழுத்தளவான் இரண்டாயினும் ஓசை வடிவில் ஈற்று மகரம் மெலிந்தொலித்து ஒரே நெட்டோசை விளைத்தலால் ஓரெ ழுத்து மந்திரமாகவே கருதப்படுகிறது. எழுத்துகளுக்கு முதலான அகரமும் சொல்லின் வேர்களுக்கு மூலமான உகரமும் இணைந்து உலகப் பொருள்களின் தோற் றத்திற்குக் காரணமாகி உயர்தல் ஓங்குதல் எனும் பொருள்க ளுக்கு வித்தான (அ + உ); ஒகாரமாகி, உலகப் பொருள்களின் மறைவுக்கு ஒலிப்புக் குறியீடான மகரமெய்யுடன் சேர்ந்து ‘ஓம்’ வடிவம் பெற்றமையின் ‘ஓம்’ மூலமந்திரமாயிற்றென்றும் ஐந்தொழிலியக்கத் தொடர்ச்சி காட்டும் இனிய நெட்டோசை யாகி இறைவனின் கூத்தாடும் கோலத்தைக் குறித்தது என்றும் கூறுவர். |
ஓங்காரவுப்பு | ஓங்காரவுப்புōṅgāravuppu, பெ. (n.) 1. கல்லுப்பு; salt obtained from beds at the bottom of the sea. sea-salt. 2. நிலத்தில் தோண்டியெடுக்கும் பாறையுப்பு; earth, rock salt. (சா.அக.);. [ஒங்காரம் = வெண்மை. ஓங்காரம் + உப்பு. வாலறிவன் என அறிவும் வெண்மையாகக் கூறப்பட்டுள்ளது. ஓசையின் நிறம் வெண்மை என்பது சமணர்கொள்கை. வெண்மை நிறத்தில் அனைத்து நிறங்களும் அடக்கம். எரிநிறத்துச் சிவன் சாம்பல் பூசியவன்.] |
ஓங்காரி | ஓங்காரி1ōṅgārittal, 4.செ.குவி (v.i.) ஓங்காரத்தை ஒலித்தல்;(வின்.);; to recite the mystic syllable om. [ஓம் + கரி.] ஓங்காரி2ōṅgārittal, 4.செ.கு.வி. (v.i.) ஓக்காளி பார்க்க; (j.);;see {}. [ஓக்காளி → ஓக்காரி → ஓங்காரி (கொ.வ.);.] ஓங்காரிōṅgāri, பெ. (n.) ஒம் என்ற வலிமைப் பொருளானவள்; sakti, as the personification of the mystic syllable, om (திருமந்.1073);. [Skt. om-kara → த. ஓங்காரி.] |
ஓங்காளம் | ஓங்காளம்ōṅkāḷam, பெ. (n.) அருவருப்பு: dislike. அவன் நடந்து கொள்வதை நினைத்தால் ஓங்காளமாஇருக்கிறது. [ஒக்காளம்-ஒக்களிப்பு:ஓங்காளம்] ஓங்காளம்ōṅgāḷam, பெ. (n.) ஓக்காளம் பார்க்க (யாழ்ப்.);;see {}. |
ஓங்காளி-த்தல் | ஓங்காளி-த்தல்ōṅgāḷittal, 4.செ.கு.வி. (v.i.) ஓக்காளி (யாழ்ப்.); பார்க்க;see {}. |
ஓங்கிப்பார்-த்தல் | ஓங்கிப்பார்-த்தல்ōṅgippārttal, 4.செ.குன்றாவி. (v.t.) உன்னிப்பார்த்தல் (வின்.);; to rise on tiptoe and catch sight. [ஓங்கு → ஓங்கி + பார்.] |
ஓங்கியடி-த்தல் | ஓங்கியடி-த்தல்ōṅgiyaḍittal, 4.செ.குன்றாவி.(v.t.) 1. ஓச்சித்தாக்குதல்; to raise the hand or a weapon and strike with a heavy blow. 2. பிறன்சொல்வது ஓங்காமல் மறுத்து மொழிதல்; to argue or affirm stoutly, to brush aside the opponent’s arguments; to browbeat the opposite party. [ஓங்கி + அடி.] |
ஓங்கிற்சுறா | ஓங்கிற்சுறாōṅgiṟcuṟā, பெ. (n.) சுறாவகை (வின்.);; tunny-fish, which swims leaping. [ஓங்கில் + சுறா.] |
ஓங்கில் | ஓங்கில்ōṅgil, பெ. (n.) மீன்வகை; tunny fish, Dolphin. ஆழமறியும் ஓங்கில், மேளமறியும் அரவம். ம. ஓங்கிலாம (ஆமை வகை);. [ஒருகா. ஆழ் → ஆழ்ந்தி → ஆந்தி → ஆஞ்சில் → ஒஞ்சில் → ஓங்கில்.] |
ஓங்கிவீடு | ஓங்கிவீடுōṅgivīṭu, பெ. (n.) வாழ்ந்தவன் வீடு (இ.வ.);; house in which a man lived and prospered. [ஓங்கு → ஓங்கி + வீடு.] |
ஓங்கு-தல் | ஓங்கு-தல்ōṅgudal, 7.செ.கு.வி. (v.i.) 1. உயர்தல்; to grow, rise high, as a tree; to ascend, as a flame; to be lofty, as a building or a mountain. “ஓங்கிய வெண்கு டை” (இறை. 14,95);. 2. பரவுதல்; to spread, extend, expand. “அகில முற்றுமா யோங்கிய கால்களும்” (கந் தபு.திருவவதார.48);. 3. வளர்தல்; to grow, as a child. “செறிந்தொர் செம்மலா யோங்குபு” (கந்தபு.திருவவ தார.75);. 4. பெருமையுறுதல்; to be exalted, dignified “ஓங்கு மெப்பொருட்கு மேலா மோரெழுத்து” (கந்தபு. அயனைச் சிறைநீக்கு.42);. 5. பெருகுதல்; to increase in wealth, in renown, in learning; to flourish. “ஓங்கொ ளியா யோங்கி” (தாயு.பராபர.5);. 6. மேலேபறிதல்; to depart, as the spirit. “உயங்கினா லோங்கிற் றுயிர்” (பு.வெ.4,13);. 7. குமட்டுதல்; to heave, retch, vomit. – 5.செ.குன்றாவி. (v.t.); உயர்த்துதல்; to lift up, raise, as the arm or a weapon ora pestle. அடிக்கக் கையோங்கி னான். ம. ஓங்ஙு;கோத. ஓக. |
ஓசன் | ஓசன்ōcaṉ, பெ. (n.) 1. ஆசாரியன் (பிங்.);; preceptor, teacher. 2. தெய்வத்தை ஏத்துபவன்; priest. ம. ஓச்சன்;க. ஒச. தெ. ஓச்சு. [ஓ → ஓவன் → ஓயன் → ஓசன். ஓவர் = அரசனை உயர்த்திப் பாடும் ஏத்தாளர்.] |
ஓசம் | ஓசம்ōcam, பெ. (n.) 1. ஒளி; light, effulgence, luster. “ஓசவன் றிகிரி யோச்சி” (பாரத.இந்திரப்.39);. 2. புகழ் (யாழ்.அக.);; fame, honour, splendor. [ஒன் → ஒனி → ஒக → ஓக → ஓசம் (கொ.வ.);.] |
ஓசரம் | ஓசரம்ōcaram, கு.வி.எ. (adv.) பொருட்டு; for the sake of on account of. உனக்கோசரம் வந்தேன். (இ.வ.). தெ. கோசரமு; க. ஓசகர. [ஆக → ஆகல் → ஆதல் → ஆதரம் → ஆசரம் → ஓசரம் (கொ.வ.);.] |
ஓசரி | ஓசரிōcari, பெ. (n.) 1. கேடு; misfortune, fatality. 2. புதுமை; wonder. இதென்ன ஓசரி. [ ஓ – வியப்பிடைச்சொல். ஓ → ஓச்சல் → ஓச்சரி → ஓசரி. ஓசரி = துன்பம், அழிவு, கேடு. துன்பம் வரக்கண்டு கூறும் வியப்பிடைச்சொல் துன்பத்தைக் குறிக்கும் பெயராயிற்று.] |
ஓசழக்கு | ஓசழக்கு1ōcaḻkku, பெ. (n.) எளிமை; easiness, facility. “ஒருசிலாமாத்திரத்தை யெடுத்தாற்போலே ஓசழக்காகச் சொல்லுகிறான்” (தில்.திருநெடுந். 13.வ்யாக்);. [ஒடிசலாக்கு → ஒடிசலக்கு → ஓசழக்கு.] ஓசழக்கு2ōcaḻkku, பெ. (n.) அழகு; grace, comeliness. “ஒசழக்காக மயிரை விரித்து” (தில்.திருமாலை. 33.வ்யா.பக்.110);. [ஒயில் + அழகு – ஒயிலழகு → ஓசழகு → ஓசழக்கு.] |
ஓசு | ஓசுōcu, பெ. (n.) புகழ்; fame (யாழ்.அக.);. [Skt. ojas → த. ஓசை.] |
ஓசை | ஓசை1ōcai, பெ. (n.) 1. ஒலி (நாலடி.332);; sound. 2. மிடற்றொலி; vocal sound. 3. எழுத்தோசை; utterance, pronunciation. 4. செய்யுளோசை; rhythm of a verse. 5. புகழ்; fame, renown, reputation. “ஓசைகொண் மைந்தரோடுசாவி” (பாரத.வேத்.22);. 6. பாம்பு; snake, by a pun on aravam. “ஓசையல்லா தணிபுனையா வுரவோன்” (கூர்மபு.வயிரவ.19);. 7. கண்ணுக்குத் தெரியாதவரிடமிருந்து வரும் ஓசை; sound emanating from the invisible. “ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே” (அப்.தேவா.);. ம. ஓச;கோத. ஒச். [ஒல் → ஒதை → ஓசை. ஓசை = ஒலி. ஓசையைக் குறிக்கும் அரவம் என்னும் சொல்லுக்குரிய பாம்பு என்னும் வேற்றுப் பொருள் நகைச்சுவை குறித்த குழுஉக்குறியாக ஆளப்பட்டுள் ளது.] ஓசை2ōcai, பெ. (n.) வாழை (அக.நி.);; plantain. [மூசை (வாழை); → மோசை → ஓசை.] ஓசை3ōcai, பெ. (n.) 1. வெண்கலம்; bronze. 2. பிறவிநஞ்சு (மனோசிலை);; bisulphuret of arsenic or red arsenic (சா.அக.);. [உல் → ஒல் → ஒத்து → ஒச்சு → ஓசை. ஒல் = கலத்தல், மயக்கம்.] |
ஓசைப்பணம் | ஓசைப்பணம்ōcaippaṇam, பெ. (n.) பழைய நாணய வகை (பணவிடு. 142);; ancient coin. [ஓசை3 + பணம். ஓசை = கலப்பு மாழை (உலோகம்);.] |
ஓசையுடைமை | ஓசையுடைமைōcaiyuḍaimai, பெ. (n.) இன்னோசை யுடைமையாகிய ஒரு நூலழகு (நன்.13);; [ஓசை + உடைமை.] |
ஓசையுண்(ணு)-தல் | ஓசையுண்(ணு)-தல்ōcaiyuṇṇudal, 12.செ.கு.வி. (v.i.) செய்யுளோசை இசைதல் (யாப்.வி.47);; to have the proper rhythm, as a verse. [ஒசை + உண்.] |
ஓசையூட்டு-தல் | ஓசையூட்டு-தல்ōcaiyūṭṭudal, 5.செ.கு.வி. (v.i.) செய்யு ளோசையை வாய்பாட்டால் அளந்தறிதல் (யாப்.வி.57);; to examine the rhythm of a stanza by scanning the lines. [ஒசை + ஊட்டு.] |
ஓச்சன் | ஓச்சன்1ōccaṉ, பெ. (n.) காளிகோயிற்பூசகன்; priests in temples sacred to {} and other village goddesses. ம. ஓச்சன். [உவச்சன் → ஓச்சன்.] ஓச்சன்2ōccaṉ, பெ. (n.) துயரக்குறிப்பு (யாழ். அக.);; sign of sorrow. [ஓ → ஓச்சன். ஓ – துயரக்குறிப்பு இடைச்சொல்.] |
ஓச்சன்கத்தி | ஓச்சன்கத்திōccaṉkatti, பெ. (n.) பலியிடப் பயன்படுத் தும் வெட்டுவாள் (உ.வ.);; large bilihook for beheading animals in sacrifices. [ஓச்சு → ஓச்சன் + கத்தி.] |
ஓச்சம் | ஓச்சம்1ōccam, பெ. (n.) உயர்வு; eminence. “வெவ்வ ரோச்சம் பெருக” (பதிற்றுப்.41,20);. [ஓ → ஓச்சம்.] ஓச்சம்2ōccam, பெ. (n.) புகழ் (யாழ்ப்.);; celebrity, renown. ஊரோச்சம், வீடுபட்டினி. [ஓ → ஓச்சம்.] ஓச்சம்3ōccam, பெ. (n.) குறைபாடு, குறை, குற்றம்; defect, shortcoming, error. [ஒச்சம் → ஓச்சம்.] |
ஓச்சர் | ஓச்சர்ōccar, பெ. (n.) 1. கணக்காயர்; accountant. 2. பதினெண்குடி மக்களிலொருவர்; one of 18 categories of royal officials. (ஆ.அக.);. [உவச்சர் → ஓச்சர்.] |
ஓச்சல் | ஓச்சல்1ōccal, பெ. (n.) உயர்வு (பிங்.);; height, elevation. [ஓ → ஓச்சல்.] ஓச்சல்2ōccal, பெ. (n.) அசதி; tiredness. உடம்பு ஓச்சலாயிருக்கிறது. (இ.வ.);. [ஓய்வு → ஓய்ச்சல் → ஓச்சல்.] |
ஓச்சி | ஓச்சிōcci, பெ. (n.) விலங்குகளை விரட்டும் அல்லது துரத்தும் ஒலிக்குறிப்பு; onom. expression used to drive animals. அவள் நாயை ஓச்சி ஓச்சி என்று விரட்டினாள் (கொங்.வ.);. [ஓ → ஓச்சி.] |
ஓச்சினி | ஓச்சினிōcciṉi, பெ. (n.) ஒன்பதாம் மாதம்; ninth month, said of a pregnant woman. (சா.அக.);. [ஒன்பது → ஒன்பான் → ஒன்பானி → ஓச்சினி → ஓச்சினி.] |
ஓச்சு-தல் | ஓச்சு-தல்ōccudal, 5.செ.குன்றாவி. (v.t.) 1. எறிதல்; to cast, throw, discharge, as a weapon. “செழியன் செண்டெ டுத்துந்தியன் றோச்சலும்” (காஞ்சிப்பு.நகர.67); (சூடா.);. 2. உயர்த்துதல்; to raise in order to strike, as the arm, a weaon; to lift up in a threatening manner. “கடிதோச்சி மெல்ல வெறிக” (குறள்,562);. 3. ஓட்டு தல்; to drive away, chase. வண்டோச்சி மருங்கணைதல். 4. செலுத்துதல்; to cause to go; to ride; to govern; to wield; to sway, as a sceptre. “கோலோச்சு மாநில மன்னன்” (குறள்,544);. 5. பாய்ச்சுதல்; to insert, thrust into, stick in. “ஒரு புனிற்றா போற்று மவன்மேன் மருப்போச்ச” (பெரியபு.சண்டேச.17);. 6. தூண்டிவிடு தல் (வின்.);; to excite, spur on, incite. ம. ஓச்சுக. [ஓ → ஓச்சு.] |
ஓச்சை | ஓச்சைōccai, பெ. (n.) வறையல், வறுவல் (திவா.);; fried food. [உல் → உறு → உறுத்து → உத்து → உச்சு → ஓச்சு → ஓச்சை = வறுத்தது.] |
ஓடகம் | ஓடகம்ōṭagam, பெ. (n.) செங்கருங்காலி; cutch sundra. (சா.அக.);. |
ஓடக்காரன் | ஓடக்காரன்ōṭakkāraṉ, பெ. (n.) 1. ஓடமோட்டி; boatman, ferryman. 2. பாய்பின்னும் ஒரு இனத்தான் (G.Tup. D. 163);; mat-weaver (செ.அக.);. [ஓடம் + காரன்.] |
ஓடக்காளவாய் | ஓடக்காளவாய்ōṭakkāḷavāy, பெ. (n.) சுண்ணாம்புக் காளவாய் வகை; a kind of lime-kiln. [ஓடம் + காளவாய். ஓடம் = நீண்டது. பெரியது.] |
ஓடக்கோல் | ஓடக்கோல்ōṭakāl, பெ. (n.) படகுதள்ளுங் கழி (சிலப்.13.176,உரை.);; boatman’s pole, oar. [ஓடம் + கோல்.] |
ஓடதி | ஓடதி1ōṭadi, பெ. (n.) பூங்கொடி; flowering creeper. [அவ்வு → அவ்வுடம் → அவுடம் → அவுடதி → ஒடதி → ஓடதி (பற்றும் கொடி);.] ஓடதி2ōṭadi, பெ. (n.) 1. மருந்திற்குரிய பூடு முதலியவை; medicinal herb or drug. “ஓடதி நிரைத் தார்” (கம்பரா.அகலிகை.23);. 2. ஆண்டில் ஒருமுறை காய்த்துப்பட்டுப்போகுஞ் செடி (மூ.ஆ.);; annual plant. [ஒளடதம் → ஓடதம் → ஓடதி.] |
ஓடதிநாதன் | ஓடதிநாதன்ōṭadinādaṉ, பெ. (n.) மூலிகைகளின் இறைவனான திங்கள் (வேதாரணி, வன்னி.19);; moon, lord of herbs. [ஒளடதம் → ஓடதம் → ஓடதி + நாதன்.] |
ஓடதிபதி | ஓடதிபதிōṭadibadi, பெ. (n.) நிலவு; moon. (ஆ.அக.); [உடு → உடதி → ஒடுதி → ஓடதி + பதி. உடு = விண்மீன்.] |
ஓடன் | ஓடன்ōṭaṉ, பெ. (n.) ஆமை (வின்.);; tortoise from its having a shell. [ஓடு2 → ஓடன்.] |
ஓடப்பாட்டு | ஓடப்பாட்டுōṭappāṭṭu, பெ. (n.) படகுப்பாட்டு; boatsong. [ஒடம் + பாட்டு.] |
ஓடம் | ஓடம்1ōṭam, பெ. (n.) 1. தோணி (திவா.);; boat, ferry-boat.. 2. மிதவை (வின்.);; raft, float, vessel of any kind. 3. கொடுநுகம் (மகநாள்); (இராசவைத்);; tenth {}. 4. நெசவுநாடா (யாழ்.அக.);; weavers, shuttle. 5. ஓடப்பாட்டு; song in the boatman’s tune. ம. ஒட; க. ஒட; து. ஒட; தெ. ஒட; கோண். ஒட; பர். ஓட; பிரா. வேடி. Mar. {}. Oruva; Skt. {}. [ஓடு → ஓடம்.] ஓடம்2ōṭam, பெ (n.) சிறுமாரோடம், செங்கருங் காலி (மலை.);; red catechu. [மாரோடம் → ஓடம் (முன்னசை நீக்க மரூஉ);.] |
ஓடல் | ஓடல்1ōṭal, பெ. (n.) அல்லல் (அக.நி.);; affiction, distress. [ஓடு → ஓடல் = அலைச்சல், துன்பம்.] ஓடல்2ōṭal, பெ. (n.) ஆம் எனல்; expression of assent. [ஒட்டல் → ஓட்டல் → ஓடல் = பொருந்தும் என்னும் குறிப்பு.] ஓடல்3ōṭal, பெ. (n.) 1. குலைவு (பிங்.);; trepidation, perturbation. 2. அச்சத்தினாலோடுகை; running away from fear. 3. கெடுகை; being defeated, destroyed. ம. ஓடல். [ஓடு → ஓடல்.] ஓடல்4ōṭal, பெ. (n.) யானைவடம் எனப்படும் ஒருவகை மரம்; elephant rope tree. [ஓடு → ஓடல்.] |
ஓடவிடு-தல் | ஓடவிடு-தல்ōḍaviḍudal, 18.செ.குன்றாவி. (v.t.) புடமிடு தல்; to refine, as gold. ‘காய்ச்சி ஓடவிட்டுரைத்த பொன்’ (ஈடு.);. [ஓடு → ஓட + விடு.] |
ஓடவை-த்தல் | ஓடவை-த்தல்ōṭavaittal, 14.செ.குன்றாவி. (v.t.) 1. உறுதிசெய்தல்; lo draw out, make certain. ‘இப்புரு சார்த்தத்தை ஓடவைத்தார்’ (ஈடு.);. 2. ஓடவிடு பார்க்க;see {}. உருக்கி ஓடவைத்த நல்லபொன்னிலே, (கலித்.117,உரை.);. [ஓடு1 → ஓட + வை.] |
ஓடாச்சரக்கு | ஓடாச்சரக்குōṭāccarakku, பெ. (n.) நெருப்பிற்கு ஓடாத பொன், வெள்ளி முதலிய சரக்குகள்; gold silver etc. which cannot be volatilized or made to pass into vapour when heated. (சா.அக.); [ஓடு1 → ஓடா + சரக்கு.] |
ஓடாணி | ஓடாணிōṭāṇi, பெ. (n.) அணிகலன் முதலியவற்றில் மாட்டும் ஆணி (S.l.l.ii.18);; sliding pin in a metal case, jewel, etc. [ஓடு2 + ஆணி.] |
ஓடாமீன் | ஓடாமீன்ōṭāmīṉ, பெ. (n.) ஒருவகை மீன்; a kind of large fish. (சேரநா.);. ம. ஓடாமீன். [ஒடு → ஓடா + மீன்.] |
ஓடாவி | ஓடாவி1ōṭāvi, பெ. (n.) 1. ஓவியம் வரைபவன் (யாழ்.அக.); painter. 2. பானையின்மீது வரைபவன் அல்லது எழுதுபவன்; one who writes or draws figures on the earthen pot. [ஓடு + ஆள்வி – ஓடாள்வி → ஓடாவி. பானையின்மீது எழுதுபவன்.] ஓடாவி2ōṭāvi, பெ. (n.) 1. மரக்கலஞ்செய்வோன் (வின்.);; shipwright, boat builder. 2. தச்சன்; carpenter. [ஒட்டாள்வி → ஓட்டாள்வி – ஓடாவி.] |
ஓடி | ஓடி1ōṭi, பெ. (n.) ஒரு வகை நிலம் (செந்.13,172);; tract of land. [ஓடு2 → ஓடி.] ஓடி2ōṭi, பெ. (n.) 1. ஓடுபவன்; runner. 2. முன்னோடி; forerunner, harbinger. ம. ஓடி. [ஓடு → ஓடி.] |
ஓடித்திரி-தல் | ஓடித்திரி-தல்ōṭiddiridal, 2.செ.கு.வி. (v.i.) 1. அலைதல்; to run about. “ஓடித்திரியும் யோகிகளும்” (திவ்.திரு வாய்.8,8,9);. 2. பெருமுயற்சி செய்தல்; to leave no stone unturned, to realize an object. அக்காரியத்தை முடிக்க அவன் ஓடித்திரிகிறான். [ஓடு1 → ஒடி + திரி.] |
ஓடிப்போ-தல் | ஓடிப்போ-தல்ōṭippōtal, 8.செ.கு.வி. (v.i.) 1. ஓட்டமெ டுத்தல்; to run away, to take to one’s heels. 2. விட்டு நீங்குதல்; to vanish, cease. [ஓடு2 → ஓடி + போ.] |
ஓடிமை | ஓடிமைōṭimai, பெ. (n.) காட்டுநெல்; wild paddy. (ஆ.அக.);. [ஓடி3 → ஓடிமை.] |
ஓடியாடிப்பார்-த்தல் | ஓடியாடிப்பார்-த்தல்ōṭiyāṭippārttal, 4.செ.கு.வி. (v.i.) பெருமுயற்சி யெடுத்தல்; to exert oneself to the utmost. அவன் ஓர் வேலைக்காக ஓடியாடிப் பார்க்கிறான். [ஓடு2 → ஓடி + ஆடி + பார்.] |
ஓடியாடு-தல் | ஓடியாடு-தல்ōṭiyāṭudal, 5.செ.கு.வி. (v.i.) ஓட்டமும் ஆட்டமுமாயிருத்தல்; to run about vigourously, as a lad. “இளமையி லோடியாடு மியக்கத்தில்” (பிர போத.6,26);. [ஓடு2 → ஓடி + ஆடு.] |
ஓடியுறை-தல் | ஓடியுறை-தல்ōṭiyuṟaidal, 2.செ.கு.வி. (v.i.) படிப்படி யாய் இறுகுதல்; to congeal gradually. கசாயமெல்லாம் ஓடியுறைந்தது (வின்.);. [ஒடு2 → ஒடி + உறை.] |
ஓடிவிறை-த்தல் | ஓடிவிறை-த்தல்ōṭiviṟaittal, 4.செ.கு.வி. (v.i.) உடல்முழு தும் விறைத்தல் (வின்.);; to suffer stiffness throughout the body. [ஓடு2 → ஓடி + விறை.] |
ஓடிவெளி-த்தல் | ஓடிவெளி-த்தல்ōṭiveḷittal, 4.செ.கு.வி. (v.i.) 1. வெளி வாங்குதல்; to be dispelled, as clouds, to clear. மழை ஓடி வெளித்துப் போயிற்று. 2. நன்கு வெளிப்படுதல்; to be discovered, as fraud or theft. அவர் வஞ்சகமெல் லாம் ஓடி வெளித்துப் போயிற்று. [ஓடு2 → ஓடி + வெளி.] ஓடு1-தல் __, 5.செ.கு.வி. (v.i.); 1. ஒட்டமாய்ச் செல்லுதல்; to run, flee away, pass quickly. “கூற்றங் கொண் டோடும் பொழுது” (நாலடி.120);. 2. செல்லு தல்; to go, as a watch; to pass, as time; to sail. “திரைகட லோடியும் திரவியந்தேடு” (கொன்றைவே.);. 3. மனம்பற்றுதல்; to operate, follow, as the mind. அவனுக்குப் படிப்பில் ஓட்டமில்லை. 4. நீளுதல்; to extend, go far. வழி மிக வோடுகிறது. 5. வருந்துதல்; to suffer, to be distressed. “ஓடியதுணர்தலும்” (சிறு பாண்.214);. 6. நேரிடுதல்; to happen, occur. ‘இவளுக் கோடுகிற நோவும்’ (ஈடு.4,6,ப்ர.);. 7. பிறக்கிடுதல்; to turn back, retreat; to be defeated. “ஓடா வம்பலர்” (பெரும்பாண்.76);. 8. கழுலுதல்; to come off, as a ring, bangle. “ஓடுவளை திருத்தியும்” (முல்லைப்.82);. 9. பொருந்துதல்; to be endowed with. “கூர்மையோ டம்பு” (தேவா.533,3);. 10. குலைதல் (பிங்.);; to be dismantled. 11. எண்ணுஞ் செல்லுதல்; to pass, as in the mind. “திருவுள்ளத்தில் ஓடுகிறதறியாதே” (திவ்.இ யற்.திருவிருத்.99.வ்யா.);. 12. விரைதல்; to run away, to hasten. அவன் எதைச் செய்யத் தொடங்கினாலும் ஓடுகிறான். 13. பரத்தல்; to spread. “குழுமிளை யோடெரிவேய” (பு.வெ.6,30);. 14. மதிப்புக்குரியதா தல்; to be worth, as a jewel. அந்த நகை நூறு ரூபாவுக்கு மேல் ஓடவில்லை. 15. தீர்மானிக்கப்படுதல்; to be determined, resolved. ‘இதில் ஓடுகிறவிசயம் என்னென் னில்’ (ஈடு.2,9,ப்ர.);. ம. ஓடு; கை. ஓடெ; கொர. ஒட; எரு. ஓடு; இரு. வோடு; க., பட. ஓடு; கோத. ஓட், வொடெ; குரு. வோடு; துட. வீட்; குட. ஒட்; து. ஒடுனி; தெ. ஒடு; கோண். சோடினா;குவி. கோதவி. கோதை. [ஒல் → ஒல்லை (விரைவு);, ஒல் → ஓல் → ஓள் → ஓடு.] |
ஓடு | ஓடு2ōṭudal, 5.செ.கு.வி. (v.i.) 1. விலகல்; to disjoin. 2. நீர்முதலியவோடுதல்; to flow like water. 3. நீங்குதல்; to leave. 4. பிளத்தல்; split up. (ஆ.அக.);. [ஓ → ஓவுதல் = நீங்குல், விலகுதல். ஓ → ஓடு.] ஓடு3ōṭu, இடை. (part.) மூன்றனுருபு (நன்னூல்.297); with, together-with, sign of the instrumental case. ம. ஓடு; க. ஒட. ஒடனெ, ஒடம்; கோத. ஒட்; து. ஒடகு. ஒட; தெ. தோடு;பட. கோட. [ஒடு → ஓடு.] ஓடு4ōṭu, பெ. (n.) 1. ஆமைமுதலியவற்றினோடு; shell, as of a tortoise, of an egg. 2. பழம் முதலியவற்றின் தோடு; hard outer covering, as of a nut. “ஓட்டி னொட்டாப் புளிம்பழம்” (தணிகைப்பு.நந்தியு.149);. 3. மண்ணின் ஓடு, உடைந்த மட்பாண்டம்; piece of broken earthen ware; potsherd. “குடமுடைந்தா லவை யோடு” (திருமந்.158);. 4. மட்கலம்; earthen vessel. “புத்தோடு தண்ணீர்க்குத் தான்பயந் தாங்கு” (நாலடி.139);. 5. செங்கல; brick. ‘தளியெடுப்பதற்கு ஓடுசுடக்கொண்ட நிலம்’ (s.l.l.i.150);. 6. மண்டை யோடு; skull. “என்னோட்டெழுத்தோவிது” (பாரத வெண்.வாசுதேவன்றூ.16);. 7. இரப்போர் கலம்; mendi- cant’s bowl for receiving alms, as a potsherd. “நீசர் மனைதொறு மோட்டிரந்துழல்கை” (ஞானவா.மு முட்சு.15);. ம. ஓடு; க. ஒடு; கோத. ஓட்; துட. வீட்; து. ஒடு, ஒடிலு; தெ. ஒடுபில்லு;பட. ஓடு. [ஒட்டு → ஒடு → ஓடு.] ஓடு5ōṭu, பெ. (n.) கூரைவேயும் ஓடு; country tiles. 2. சீமையோடு அல்லது மங்களூர் ஓடு, தட்டை நெடுங்குறி யோடு; Mangalore tiles. [ஒட்டு → ஒடு → ஓடு.] |
ஓடுகாலன் | ஓடுகாலன்ōṭukālaṉ, பெ. (n.) நாடோடி; vagabond. [ஓடு1 + காலன்.] |
ஓடுகாலி | ஓடுகாலிōṭukāli, பெ. (n.) வீட்டில் தங்காதவன்; one who is running away from home every now and then. ‘ஓடுகாலி வீடு மறந்தான்’. [ஓடு1 + காலி.] |
ஓடுகால் | ஓடுகால்ōṭukāl, பெ. (n.) நீரோடுங் கால்வாய்; water channel. [ஓடு + கால். கால் = நீரோடும் கால்வாய்.] |
ஓடுதாவடி | ஓடுதாவடிōḍutāvaḍi, பெ. (n.) 1. பரபரப்பில் (அவசரங் களில்); நேருங்குழப்பம் (வின்.);; bustle and confusion in preparing, as for a journey. 2. ஓடித்திரிதல்; to roam about. (செ.அக.);. [ஓடு + தாவடி.] |
ஓடுதிருப்பு-தல் | ஓடுதிருப்பு-தல்ōṭudiruppudal, 5.செ.கு.வி. (v.i.) ஓடு மாற்றிப் புதுப்பித்தல்; to turn tiles. [ஓடு1 + திருப்பு.] |
ஓடுபடம் | ஓடுபடம்ōḍubaḍam, பெ. (n.) இடுதிரை (திவா.);; curtain. [ஓடு1 + படம்.] |
ஓடுபந்தல் | ஓடுபந்தல்ōṭubandal, பெ. (n.) நடைப்பந்தல் (யாழ்ப்.);; movable canopy supported on cords, etc. [ஒடு2 + பந்தல்.] |
ஓடுபரப்பு-தல் | ஓடுபரப்பு-தல்ōṭubarabbudal, 5.செ.கு.வி. (v.i.) ஓடு வேய்தல்; to tile, cover with tiles. [ஓடு1 + பரப்பு.] |
ஓடுமாற்று-தல் | ஓடுமாற்று-தல்ōṭumāṟṟudal, 5.செ.கு.வி. (v.i.) ஓடு திருப்பு பார்க்க;see {}. [ஓடு1 + மாற்று.] |
ஓடும்பிள்ளை | ஓடும்பிள்ளைōṭumbiḷḷai, பெ. (n.) 1. பழங்காலச் சிற்றூர்களில் செய்தி கொண்டு செல்பவன்; messe- nger of ảncient times. 2. கீரிப்பிள்ளை; mangoose. [ஓடு → ஓடும் + பிள்ளை.] |
ஓடுவழி | ஓடுவழிōṭuvaḻi, பெ. (n.) வானூர்தி தரையில் ஓடி இறங்கும் அல்லது ஏறும் வழி; runway. [ஓடு + விழி.] |
ஓடை | ஓடை1ōṭai, பெ. (n.) 1. நீரோடை (பதார்த்த.32);; large water course, channel for the conveyance of water, rivulet, dyke. 2. குளம்; tank, reservoir. “தோட்ட மில்லவ ளாத்தொழு வோடை” (திவ்.பெரியாழ்.5,1,5);. 3. அகழி (திவா.);; moat, ditch round a fortification. 4. மலைவழி (பிங்.);; mountain path. 5. சந்தனம் வைக் கும் மடல்; vessel for holding sandal, etc. “மணிசெ யோடை நீரின் வெண்சாந்துபூசி” (சீவக.1147);. ம. ஓட;தெ. ஒடிக. ஓடை2ōṭai, பெ. (n.) 1. நெற்றிப்பட்டம் (பிங்.);; metal plate or badge for the forehead, as an ornament. 2.யானையின் நெற்றிப்பட்டம்; frontlet for elephants. “யானை யோடைப் பொன்கொண்டு” (புறநா.126,1);. [ஊடு → ஊடை → ஓடை.] ஓடை3ōṭai, பெ. (n.) 1. குடைவேல் பார்க்க;see {}. 2. உலவைமரம் (சூடா.);; oval leaved wheel creeper. 3. கிலுகிலுப்பைபார்க்க (மலை.);;see {}. 4. ஒருமரம் (L);; longer internoded stout reed bamboo. [உடை → ஒடை → ஓடை.] ஓடை4ōṭai, பெ. (n.) இருவாய் சால், தொம்பை, தவசம் கொட்டி வைக்கும் குதிராகப் பயன்படும் தாழி; big vessel, silo for storing grain. [ஓடு → ஒடை (நீண்டது. பெரியது.] |
ஓடைக்கல் | ஓடைக்கல்ōṭaikkal, பெ. (n.) உறுதியில்லாத கருங் கல் வகை; a kind of brittle stone. அச்சுவர் ஓடைக்கற்க ளாற் கட்டப்பெற்று (எங்களூர்.125);. [ஓடு4 → ஓடை + கல்.] |
ஓட்டக்காரன் | ஓட்டக்காரன்ōṭṭakkāraṉ, பெ. (n.) 1. அஞ்சற்காரன்; runner, mail runner, relay-man. 2. விரைந்து ஓடுபவன்; one who runs fastly. ம. ஒட்டக்காரன். [ஒட்டம் + காரன்.] |
ஓட்டங்காட்டு-தல் | ஓட்டங்காட்டு-தல்ōṭṭaṅgāṭṭudal, 5.செ.கு.வி. (v.i.) 1. முன்னோடிக் காட்டுதல்; to lead the way, precede, Inducing others to follow. 2. ஓடுவதுபோல் நடித்தல்; to make a pretence of running. [ஓட்டம் + காட்டு.] |
ஓட்டசாட்டம் | ஓட்டசாட்டம்ōṭṭacāṭṭam, பெ. (n.) ஆரவாரம்; hurry and bustle. (நெல்லை.);. [ஓட்டம் + சாட்டம் – ஓட்டசாட்டம் = நடையும் குதியுமாயப பறந்துகட்டிக் கொண்டு செய்யும் பணி. ஓட்டசாட்டம் (எதுகை குறித்த இணைமொழி);.] |
ஓட்டச்சு | ஓட்டச்சுōṭṭaccu, பெ. (n.) பழையவரிவகை (S.I.l.V.96);; ancient tax. [ஒட்டு + அச்சு – ஓட்டச்சு = குயவர் செலுத்தியவரி.] |
ஓட்டடுக்குவீடு | ஓட்டடுக்குவீடுōḍḍaḍukkuvīḍu, பெ. (n.) ஓடு வேய்ந்த மனை; tile-roofed house. [ஓட்டு + அடுக்கு + வீடு.] |
ஓட்டடை | ஓட்டடைōḍḍaḍai, பெ. (n.) ஓட்டப்பம் (வின்.);; pancake. ம. ஒட்டட. [ஓட்டு + அடை] |
ஓட்டத்தி | ஓட்டத்திōṭṭatti, பெ. (n.) ஓட்டுத்துத்தி பார்க்க;see {}. [ஓட்டுத்துத்தி → ஓட்டத்தி.] |
ஓட்டன் | ஓட்டன்1ōṭṭaṉ, பெ. (n.) நடந்து செல்லுந்தூதன் (சிலப்.8,9,உரை.);; runner. ம. ஓட்டன்;க. ஒட்டகார. [ஓடு → ஓட்டன்.] ஓட்டன்2ōṭṭaṉ, பெ. (n.) பாட்டனுக்குப் பாட்டன் (பரவ.);; great-great-grandfather (parava.); “பாட்டன், பாட்டனுக்கு மேல்பூட்டன்; பூட்டனுக்குமேல் ஓட்டன், ஓட்டனுக்குமேல் உறவில்லை’ (பழ.);. [ஆ → ஓ (சேய்மைச்சுட்டு); ஓடு → ஓட்டன்.] |
ஓட்டப்பம் | ஓட்டப்பம்ōṭṭappam, பெ. (n.) அப்பவகை; pancake. “ஓட்டப்பம் வீட்டைச் சுடவும்” (தண்டலை.65);. ம. ஓட்டப்பம். [ஓடு → ஓட்டு + அப்பம்.] |
ஓட்டமறு-தல் | ஓட்டமறு-தல்ōṭṭamaṟudal, 4.செ.கு.வி. (v.i.) ஓட்டறு பார்க்க;see {}. [ஓட்டம் + அறு.] |
ஓட்டமெடு-த்தல் | ஓட்டமெடு-த்தல்ōḍḍameḍuttal, 4.செ.கு.வி. (v.i.) ஓட்டம் பிடி பார்க்க;see {}. “வாலி வெரீஇயின னோட்ட மெடுத்தான்” (காஞ்சிப்பு.மணி.18);. [ஓட்டம் + எடு.] |
ஓட்டம் | ஓட்டம்1ōṭṭam, பெ. (n.) 1. ஓடுகை (காஞ்சிப்பு. மணி.18);; running, speeding, galloping. 2. பரிவு, வேகம்; speed, swiftness. வாசிப்பதில் ஏன் இவ்வளவு ஓட்டம்? 3. நீரோடுகை; current, flowing. 4. மாணிக்கங் களின் (இரத்தினங்களின்); நீரோட்டம்; brilliance, as in a gem. 5. தோல்வி (பிங்.);; defeat, rout, retreat. 6. வருவாய்; income, means, resources. அவருக்கு முன் போற் செலவு செய்ய இப்போது ஓட்டமில்லை. 7. விலைமதிப்பு ஏறுகை; rising higher in price. ‘நூறுவரா கனுக்குமேல் இந்த நகைக்கு ஓட்டமில்லை’. 8. மனஞ் செல்லுகை; quickness of mind. அவனுக்குப் படிப்பில் ஓட்டமில்லை. ம. ஒட்டம்; க. ஓட, ஓடிகெ; கோத. ஓட்; து. ஒட;தெ. ஓட (அச்சம்);. ஓடமி, ஓடமு (தோல்வி);. [ஓடு → ஓட்டம்.] ஓட்டம்2ōṭṭam, பெ. (n.) 1. மேலுதடு (பிங்.);; upper lip. 2. உதடு (திவா.);; lip. [உதடு → ஓடு → ஓட்டு → ஓட்டம் (கொ.வ.);. இஃதோர் வடதமிழ்த் (பிராகிருதம்); திரிபு.] |
ஓட்டம்தரு-தல் | ஓட்டம்தரு-தல்ōṭṭamdarudal, 18.செ.கு.வி. (v.i.) ஓடிவரு தல்; to come running. “ஓட்டந்து தன்னெதிர் தோற்றும் புனிற்றா” (தொல்.பொருள்.58,உரை);. [ஓட்டம் + தரு – ஓட்டந்தரு).] இது. ஒட்டந்தரு → ஒட்டந்தா → ஒட்டந்து என இறந்தகால வினையெச்சமாகும். இதனை ஓட்டரு எனச் சென்னை அகர முதலி தலைப்புச் சொல்லாக்கியது புணர்மொழிவழு. |
ஓட்டம்பிடி-த்தல் | ஓட்டம்பிடி-த்தல்ōḍḍambiḍittal, 4.செ.கு.வி. (v.i.) தப்பி யோடுதல்; to flee, run away. [ஒட்டம்1 + பிடி.] |
ஓட்டறு-தல் | ஓட்டறு-தல்ōṭṭaṟudal, 4.செ.கு.வி. (v.i.) 1. உருக்கித் துப்புரவு செய்யாமல் இயற்கையிலே தூய்மை யுடை யதாதல்; to be naturally pure without refining process. ‘ஒட்டற்ற செம்பொன்போலே’ (ஈடு.1,10,9);. 2. உருக்கித் தூய்மை (சுத்தஞ்); செய்தல்; to purify by melting, as fine gold. [ஓட்டு + அறு – ஓட்டறு. ஓட்டு = துளை, புள்ளி, குற்றம்.] |
ஓட்டல் | ஓட்டல்ōṭṭal, பெ. (n.) 1. உட்செலுத்தல்; to insert. 2. திணித்தல்; to thrust into, as a lint is thrust into a sinus. (சா.அக.);. [ஓட்டு → ஓட்டல்.] ஓட்டல்ōṭṭal, பெ. (n.) உண்டிச்சாலை; Hotel. த.வ. உணவகம். [Eng. Hotel → த. ஓட்டல்.] |
ஓட்டவம் | ஓட்டவம்ōṭṭavam, பெ. (n.) பொறிக்காளான்; yellow mushroom. (சா.அக.);. [ஓட்டு → ஓட்டவம். ஓட்டு = துளை, புள்ளி, குற்றம்.] |
ஓட்டாங்கச்சி | ஓட்டாங்கச்சிōṭṭāṅgacci, பெ. (n.) சிரட்டை (இ.வ.);; coconut shell. [ஓடு – (தேங்காய் ஓடு); ஓடு → ஓட்டு + அம் + காய் + சில் – ஓட்டாங் காய்ச்சில் → ஓட்டாங்கச்சி.] |
ஓட்டாங்கட்டி | ஓட்டாங்கட்டிōṭṭāṅgaṭṭi, பெ. (n.) உடைத்த ஓட்டுத் துண்டு (ஆ.அக.);; broken piece of a tile. [ஓடு – (ஓட்டு); + ஆம் + கட்டி.] |
ஓட்டாங்கிளிஞ்சில் | ஓட்டாங்கிளிஞ்சில்ōṭṭāṅgiḷiñjil, பெ. (n.) உடைந்த சிப்பி (வின்.);; broken oyster-shell. [ஓடு – (ஓட்டு); + ஆம் + கிளிஞ்சில் – ஓட்டாங்கிளிஞ்சில் (ஓடுபோன்றிருப்பது);.] ஓட்டாங்கிளிஞ்சில்2ōṭṭāṅgiḷiñjil, பெ. (n.) மீன்வகை (யாழ்.அக.);; fish. [ஓட்டாம் + கிளிஞ்சில்.] |
ஓட்டாங்குச்சு | ஓட்டாங்குச்சுōṭṭāṅguccu, பெ. (n.) 1. உடைந்த மட்கல வோடு; broken piece of a pot. 2. தேங்கா யோடு; cocoanut shell. (சா.அக.);. [ஓடு + ஆம் + குழிசி – ஓட்டாங்குழிசி → ஓட்டாங்குச்சு. குழிசி → குச்சு = பானைபோன்று காணப்படும் தேங்காய்ஓடு.] |
ஓட்டாண்டி | ஓட்டாண்டிōṭṭāṇṭi, பெ. (n.) பிச்சைக்காரன்; beggar, carrying about a potsherd or bowl in hand. “தமிழ்நாவ லரை யோட்டாண்டி யாக்கி” (தனிப்பா.1,238,8);. [ஓடு → ஓட்டு + ஆண்டி – ஓட்டாண்டி (தெருவில் திருவோடு ஏந்தி இரப்பவன்);.] ஓட்டி1 __, பெ. (n.); பாட்டிக்குப்பாட்டி (பரவ.);;.great-great-great mother (parava.); [ஆ → ஓ (சேய்மைச்சுட்டு);. ஓ → உயர்வு, தொலைவு. ஓ → ஓட்டி, ஓட்டன் (ஆ.பா.); – ஓட்டி (பெ.பா.);.] |
ஓட்டி | ஓட்டி2ōṭṭi, பெ. (n.) ஓட்டும் ஆள் அல்லது பொருள்; one who drives, that which drives; instrument of driving. as படகோட்டி, ஆளோட்டி, பேயோட்டி, ஈயோட்டி. ம. ஓட்டி. [ஓட்டு + இ – ஓட்டி. இகரம் முதனிலை ஈறாகும் போது செய்பவனையும் தொழிலைக் குறித்த ஈறாகும் போது செயப் படு பொருளையும் சுட்டும்.] ஓட்டி3ōṭṭi, பெ. (n.) கோவைக்கனி; a kind of fruit. (ஆ.அக.);. ஓட்டி4ōṭṭi, பெ. (n.) ஓடு, கெட்டியானவெளி ஓடு; shell, hard outer shell. (சேரநா.);. ம. ஓட்டி. [ஓடு → ஓட்டி.] |
ஓட்டியம் | ஓட்டியம்ōṭṭiyam, பெ. (n.) குலைத்தபின் அழியும் வாழை; plantain tree which bears fruit but to perish [ஓட்டு + இயம். ஓட்டு = தோல்வி, மறைவு.] |
ஓட்டியெறும்பு | ஓட்டியெறும்புōṭṭiyeṟumbu, பெ. (n.) ஒருவகைக் கட்டெறும்பு; driver’s ant, common in Africa. (சா.அக.);. [ஓட்டு → ஓட்டி + எறும்பு.] |
ஓட்டிரம் | ஓட்டிரம்ōṭṭiram, பெ. (n.) ஒரிசா மாநிலம்; Orissa state. ஒட்டரம் பார்க்க;see {}. |
ஓட்டு | ஓட்டு1ōṭṭudal, 5.செ.குன்றாவி. (v.t.) . செலுத்துதல்; to cause to run, to drive, propel, to steer, as a vessel. “நும்மூர்த் தெருவதனி லோட்டுவேன்” (கந்தபு. வள்ளி.136);. 2. நீங்கச்செய்தல்; to drive away, put to flight chase, expel, disperse, as ignorance, as darkness. பேயை யோட்டிவிட்டான். 3. புகுத்துதல்; to pass in insert. “உரைத்தது செவியிற் காய்ந்த நாராச மோட்டிய தென” (அரிச்.பு.மீட்சி.30);. 4. அழித்தல்; to destroy. “அடுகள மார்ப்ப வமரோட்டி” (பு.வெ.9,5);. 5. செய்து முடித்தல்; to finish, complete. “உரவு நல்லணை யோட்டிய வூற்றமும்” (கம்பரா.ஒற்றுக்.40);. 6. காலந் தாழ்த்தல்; to delay. “ஒட்டியுங் கோறு மன்றே” (சீவக.1741);. 7. நூலால் இழையிடுதல்; to darn; to stitch a running stitch. ஓரிழையோட்டிக் கொடு. 8. கட்டடத்துப் பூசிய சாந்தை வழவழுப்பாகக் கொத் துக்கரண்டி முதலியவற்றால் தேய்த்தல் (இ.வ.);; to polish a plastered wall with a float. இந்தச் சுவரை நன்றாய் ஒட்ட வேண்டும் (இ.வ.);. ம. ஒட்டிக்குக. [ஊடு → ஓடு → ஓட்டு.] ஓட்டு2 __, பெ. (n.); 1. ஓடுகை; running. “முன்னோட் டுக்கொண்டு … போவாரே” (பழ.163);. 2. கப்பலோட் டம்; sailing of a vessel. “சென்னைக்கு எத்தனை நாளோட்டிற் போகலாம்?’ (வின்.);. 3. செயலாக்கம்; course of conduct. அந்த ஓட்டு இங்கே செல்லாது. 4. நூலிழை யோட்டுகை; seam of cloth. ஓரோட்டு ஒட்டிக்கொடு. [ஓடு → ஓட்டு.] ஓட்டு3ōṭṭu, பெ.(n.) 1. தோல்வி; failure, defeat. 2. தோற்றோடுதல்; fleeing. “ஒட்டன்றோ வன்கண வர்க்கு” (குறள்,775);. [ஓடு → ஒட்டு) புறமுதுகிட்டு ஓடுதல், பகைவரால் துரத்தப்படு தல், தோல்வி).] ஓட்டு4ōṭṭu, பெ. (n.) கடல் அலைக்கும் கரைக்கும் இடையே உள்ள நீரின் இழுப்பாற்றல்; current be- tween the waves and the shore. (சேரநா.);. ம. ஓட்டு. [ஓடு → ஓட்டு.] ஓட்டு5ōṭṭu, பெ. (n.) 1. துளை; hole. 2. புள்ளி; dot. 3. குற்றம்; defect. [உல் → ஒல் → ஓள் → ஓட்டு.] ஓட்டு6ōṭṭu, பெ.எ. (adj.) 1. ஓடுவேய்தல்; pertaining to tiles. ஒட்டுக்கூரை (உ.வ.);. 2. வெளி ஓடு உள்ளது; having or covered with a shell. ஓட்டுப்புளி (உ.வ.);. ம. ஓட்டு. [ஓடு → ஓட்டு.] ஓட்டு7 __, பெ. (n.); வெண்கலம்; bell – metal. [ஓடு – ஓட்டு (ஓட்டிலிட்டு உருக்கிவார்த்த வெண்கலம்);.] |
ஓட்டுகலம் | ஓட்டுகலம்ōṭṭugalam, பெ. (n.) வெண்கல ஏனம்; vessel of bell-metal. (சேரநா.);. ம. ஓட்டுகலம். [ஓட்டு + கலம்.] |
ஓட்டுக்கூரை | ஓட்டுக்கூரைōṭṭukārai, பெ. (n.) ஓடுவேய்ந்த முகடு (C.E.M.);; tiled roof. [ஓடு → ஓட்டு + கூரை.] |
ஓட்டுக்கொடு-த்தல் | ஓட்டுக்கொடு-த்தல்ōḍḍukkoḍuttal, 4.செ.கு.வி. (v.i.) ஓடிவிடுதல்; to run, disappear. “காலைவெய்யோற்கு முன் னோட்டுக் கொடுத்த கங்குற் குறும்பர்” (திவ். இயற்.திருவிருத்.93);. [ஓடு → ஓட்டு + கொடு.] |
ஓட்டுச்சாலர்வேலை | ஓட்டுச்சாலர்வேலைōṭṭuccālarvēlai, பெ. (n.) ஓட்டி னால் தேன்கூடு போன்றமைந்த வேலை (கட்டட.நா மக.17);; honey-comb tie-work. [ஓடு → ஓட்டு + சாலர் + வேலை – ஓட்டுச்சாலர் வேலை = ஓட்டினால் பலகணிபோல் செய்யப்பட்டது. ஓடு = கூரைவே யும் சுடுமண் ஓடு. சாளரம் → சாலர்.] |
ஓட்டுத்தடுக்கு | ஓட்டுத்தடுக்குōḍḍuttaḍukku, பெ. (n.) ஓட்டுக்கூரை; tiled roof. [ஓடு → ஓட்டு + தடுக்கு.] |
ஓட்டுத்துத்தி | ஓட்டுத்துத்திōṭṭuttutti, பெ. (n.) 1. துத்திச் செடி வகை; angleleaved Burr Mallow. 2. துத்திவகை (மலை.);; lobe-leaved Burr Mallow. [ஓட்டு + துத்தி.] |
ஓட்டுப்பணிக்காரன் | ஓட்டுப்பணிக்காரன்ōṭṭuppaṇikkāraṉ, பெ. (n.) கன் னான்; brazier. (சேரநா.);. ம. ஓட்டுபணிக்காரன். [ஓட்டு1 + பணி + காரன். ஓட்டு = ஓட்டிலிட்டு உருக்கி வார்க்கும் பணி.] |
ஓட்டுப்பந்து | ஓட்டுப்பந்துōṭṭuppandu, பெ. (n.) விளையாடுபவர் கள் வட்டமாக அமர்ந்து பந்தை ஒருவர் மாற்றி ஒருவர் பின்னாகத் தள்ளிக் கொடுத்து ஆடும் ஒரு வகை விளையாட்டு; game in which the players sit in a circle and a ball is dropped behind one after another, like the drop of the handkerchief. [ஓடு → ஓடடு + பந்து.] ஓட்டுமீன் __, பெ.(n.); மீன்வகை; crustacean; shell-fish. [ஓடு → ஓட்டு + மீன்.] |
ஓட்டுமுத்து | ஓட்டுமுத்துōṭṭumuttu, பெ. (n.) 1. சிப்பியில் ஒட்டிய முத்து (வின்.);; pearl of inferior quality, found adhering to the oyster. 2. உள்வயிரமற்ற முத்து; pearl without lustre. [ஓடு → ஓட்டு + முத்து.] |
ஓட்டுழக்கம் | ஓட்டுழக்கம்ōṭṭuḻkkam, பெ. (n.) ஒருவகை படகு; a kind of boat. ம. ஒட்டுழக்கம். [ஓட்டு + உழக்கம்.] |
ஓட்டுவளை | ஓட்டுவளைōṭṭuvaḷai, பெ. (n.) வெண்கலத்தால் ஆன கைவளையல்; bangle made of bell-metal. (சேரநா.); ம. ஓட்டுவள. [ஓட்டு1 + வளை.] |
ஓட்டுவீடு | ஓட்டுவீடுōṭṭuvīṭu, பெ. (n.) ஓடுவேய்ந்த வீடு; tiled house, dist fr. மச்சுவீடு or கூரைவீடு. [ஓடு → ஓட்டு + வீடு.] |
ஓட்டெடு-த்தல் | ஓட்டெடு-த்தல்ōḍḍeḍuttal, 4.செ.கு.வி. (v.i.) விரைந்தோ டுதல்; to run, flee. “ஒப்ப வனைவரு மோட்டெடுத்தா ரே” (திருமந்.154);. [ஓட்டு + எடு. ஓட்டு = ஓட்டம்.]. |
ஓட்டெழுத்து | ஓட்டெழுத்துōṭṭeḻuttu, பெ. (n.) தலையெழுத்து; sutures on the skull, regarded as Brahma’s writing of destiny. என்னோட்டெழுத்தோ (பாரதவெண்.வாசுதே வன்றூ.16);. [ஓடு → ஓட்டு + எழுத்து.] |
ஓட்டை | ஓட்டை1ōṭṭai, பெ. (n.) 1. துளை; hole. “அருவிசலம் பாயுமோட்டை” (திருப்பு.321);. 2. சிதைவு; crack in a vessel; flaw; leak; any cracked article, as a bell. இந்த ஏனம் ஓட்டையாய் விட்டது. 3. குற்றம்; defect. ம. ஓட்ட; க. ஓடெ, ஓட்டே; கோத. ஓட்; துட. விட்ய; குட. டைவை; து. ஓட்டெ;தெ. ஒடி. [உல் → ஒல் → ஒள் → ஓட்டை.] ஓட்டை2ōṭṭai, இடை. (part.) 1. ஒடுப்பொருளையு ணர்த்தவரும் மூன்றாம் வேற்றுமை உருபு; an ending of the instrumental case having the force of together with. “பர்வத பரமாணுவோட்டை வாசிபோரும்” (திவ். திருப்பா.அவ); 2. உடனொத்த; with, used as adj- meaning equal with as. அவனுக்கு இவனோட்டை வயது. [ஓடு → ஒட்டை → ஓட்டை.] |
ஓட்டை நெஞ்சு | ஓட்டை நெஞ்சுōṭṭaineñju, பெ. (n.) மறதியுள்ளமனம், அறைபோன மனம்; absent-mindedness, preoccupa- tion. “ஓட்டை நெஞ்சினராயுழல்வார்களும்” (சீவக. 642);. [ஓட்டை + நெஞ்சு.] |
ஓட்டைக்கை | ஓட்டைக்கைōṭṭaikkai, பெ. (n.) பொருள்தங்காத கை (உ.வ.);; lavish disposition, lit; a hand that retains nothing. ம. ஓட்டக்கை. [ஓட்டை + கை.] |
ஓட்டைக்கையன் | ஓட்டைக்கையன்ōṭṭaikkaiyaṉ, பெ. (n.) கையிலொன் றும் தங்காதவன்; கிடைத்ததை எல்லாம் செலவழிப் பவன்; spend thrift. ம. ஓட்டக்கையன். [ஓட்டை + கையன்.] |
ஓட்டைசாட்டை | ஓட்டைசாட்டைōṭṭaicāṭṭai, பெ. (n.) பயனற்றது (உ.வ.);; that which is useless. [ஓட்டை + சாட்டை – ஓட்டை சாட்டை (எதுகை குறித்த இணைமொழி);.] |
ஓட்டைச்செவி | ஓட்டைச்செவிōṭṭaiccevi, பெ. (n.) கேள்வி தங்காத செவி; ear that fails to retain what it hears. பாட்டு முரையும் பயிலாதனவிரண்டோட்டைச் செவியுமுள (தொல்.பொருள்.472,உரை.);. [ஓட்டை + செவி.] 27 |
ஓட்டைபோ-தல் | ஓட்டைபோ-தல்ōṭṭaipōtal, 8.செ.கு.வி. (v.i.) சிதைவுறு தல்; to become cracked, to go bad. “ஓட்டை போமறிவோடும்” (விநாயகபு.77,134);. [ஓட்டை + போ.] |
ஓட்டைப்பல் | ஓட்டைப்பல்ōṭṭaippal, பெ. (n.) 1. குறைந்துள்ள பல்; row of teeth in which one or more are lacking. 2. மூளிப்பல்; broken tooth. [ஓட்டை + பல்.] |
ஓட்டைமனம் | ஓட்டைமனம்ōṭṭaimaṉam, பெ. (n.) 1. ஒன்றுந் தங்காத மனம்; mind that has no retentive power. 2. இள நெஞ்சு; tender heart. “ஓட்டைமனவ னுரமிலி” (பரிபா.12,51);. [ஓட்டை + மனம்.] |
ஓட்டைமுத்து | ஓட்டைமுத்துōṭṭaimuttu, பெ. (n.) சிப்பியில் ஒட்டிய தாழ்ந்த முத்து; pearl of inferior quality found adhering to the oyster. (சா.அக.);. [ஓட்டு → ஓட்டை + முத்து.] |
ஓட்டைமூக்கு | ஓட்டைமூக்குōṭṭaimūkku, பெ. (n.) 1. சில்லி மூக்கு அதாவது அரத்தம் வடியும் மூக்கு; bleeding nose. 2. சளி ஒழுகும் மூக்கு; running nose. (சா.அக.);. [ஓட்டை + மூக்கு.] |
ஓட்டையுடைசல் | ஓட்டையுடைசல்ōḍḍaiyuḍaisal, பெ. (n.) சிதைந்த பாண்டங்கள் (உ.வ.);; cracked and broken utensils. [ஓட்டை + உடைசல்.] |
ஓட்டைவாயன் | ஓட்டைவாயன்ōṭṭaivāyaṉ, பெ. (n.) 1. கமுக்கங்களை (இரகசியங்களை); மறைக்கமாட்டாது வெளியிடுபவன்; one-who cannot keep secrets. (செ.அக.);. 2. உளறுவா யன்; one who talks indiscriminately. [ஓட்டை + வாயன்.] ஓட __, இடை. (part.); உவமையுருபு (தொல்.பொருள்.290);; particle of comparison. (செ.அக.);. [ஓடு → ஓட.] |
ஓணன் | ஓணன்ōṇaṉ, பெ. (n.) வாணன், வாணனின் படைத் தலைவன் (அபி.சிந்.);; commander of {} prince. [ஓ = உயர்வு, மேன்மை, பெருமை. ஓ → ஓண் → ஓணன்.] |
ஓணப்பிரான் | ஓணப்பிரான்ōṇappirāṉ, பெ. (n.) திருமால்; visnu, 22nd {} being sacred to Him. “ஓணப்பிரானு மொளிர்மாமல ருத்தமனும்” (தேவா.643,10);. [ஓணம் + பிரான்.] |
ஓணம் | ஓணம்1ōṇam, பெ. (n.) ஆறு (பிங்.);; river. “கங்கையாதி யோணநீராடல்” (சேதுபு.தோத்திர.48);. [ஊ → ஓ → ஓணம் = நெடுக ஒடிச் செல்லும் குறுகிய ஓடைநீர். ஒ.நோ. ஓதம் = மேலெழும்பும் சிறு திவலை.] ஓணம்2ōṇam, பெ. (n.) முக்கோல் (திருவோணம்); (திவா.);;ம. ஓணம். [உல் → ஒல் → ஓ = நீளுதல், நீண்டுயர்தல். ஓ → ஓண் → ஓணம் = நீண்டுயர்ந்த கொடிபோன்ற விண்மீன் கூட்டம்.] ஓணம்3ōṇam, பெ. (n.) நீராட்டு விழா; bathing festival in a river. [ஓணம் = நீரோடை, நீராடல். இது ஒளம் – ஓலி என வடபுல மொழிகளில் திரிந்தது.] |
ஓணவிழவு | ஓணவிழவுōṇaviḻvu, பெ. (n.) திருமாலின் திருநாள்; festival in honour of {}. “ஓணவிழவி லொலியதிர” [ஓணம்2 + விழவு.] |
ஓணான் | ஓணான்ōṇāṉ, பெ. (n.) 1. ஓந்தி; blood-sucker, a common agamoid lizard. 2. பச்சோந்தி; Chameleon. “ஓணான் விழுந்தாலுமுண்டு பரிகாரம்” (தமிழ்நா.241);. ம. ஓணான். [ஓ → ஒண் = நீளம், உயர்ச்சி, அடிக்கடி தலைதூக்குதல். ஓண் + ஆன் – ஓணான்.] |
ஓணி | ஓணி1ōṇi, பெ. (n.) வயலில் நீர் தேங்கவைக்க அல்லது வெளியேற்றப் பயன்படுத்தும் தோணி வடிவக் கருவி; boat-shaped wooden trough for bailing water to or from fields. (சேரநா.);. ம. ஓணி. [ஓண் → ஓணி. ஓண் = நீட்சி நீள்வடிவம்.] ஓணி2ōṇi, பெ. (n.) நடைபாதை; foot-path. ம. ஓணி; க., து. ஓணி (தெரு);; குட. ஓணி (வீட்டிற்குச் செல்லும்வழி);;தெ. ஒணி கட்டு (இருண்ட வழி);. [ஓண்2 → ஓணி.] ஓணி3ōṇi, பெ. (n.) 1. சிற்றோடை; brook. 2. சிற்றோடையை ஒட்டிச் செல்லும் ஒற்றைவழிப் பாதை; foot-path along a small stream. [ஒண்1 → ஓணி.] |
ஓண் | ஓண்1ōṇ, பெ. (n.) 1. ஒட்டம்; running. 2. நீட்சி; length. [ஓ → ஓண்.] ஓண்2ōṇ, பெ. (n.) உயர்வு, மேன்மை, பெருமை; elegance, excellence. [ஓ → ஓண் (ஒ.நோ. ஏ → ஏண்);.] ஓண்3ōṇ, பெ. (n.) உயர்ச்சி; height, elevation. [ஓ → ஓண்.] |
ஓதக்காலி | ஓதக்காலிōtakkāli, பெ. (n.) யானைக்காலையுடைய பெண்; woman with elephantiasis of the leg. (சா.அக.);. [ஓதம் + காலி.] |
ஓதக்கால் | ஓதக்கால்ōtakkāl, பெ. (n.) ஆனைக்கால்; elephantia- sis. [ஊதம் → ஓதம் + கால்.] |
ஓதனம் | ஓதனம்1ōtaṉam, பெ. (n.) 1. சோறு (திவா.);; boiled rice. 2. உணவு (பிங்.);; food. [ஓதம் → ஓதனம் = நீரளாவிய கஞ்சி வடிவிலான உணவு.] ஓதனம்2ōtaṉam, பெ. (n.) பெருமை (யாழ்.அக.);; greatness. [ஓதம் → ஓதனம்.] |
ஓதனை | ஓதனைōtaṉai, பெ. (n.) 1. காசுக்கட்டி; downy-foliaged cutch. 2. ஒரு மரத்தின் பெயர்; black akasia. [உதனை → ஓதளை.] |
ஓதன்மை | ஓதன்மைōtaṉmai, பெ. (n.) 1. ஓதுதல்; chanting. 2. பாடல்; chant, song. [ஓதல் + மை.] |
ஓதமேறு-தல் | ஓதமேறு-தல்ōdamēṟudal, 5.செ.கு.வி. (v.i.) ஈரமேறுதல்; to become damp. [ஓதம் + ஏறு.] |
ஓதம் | ஓதம்1ōtam, பெ. (n.) 1. கடல் அலை; wave, billow “கடலோதங் காலலைப்ப” (திவ்.இயற்.1,16);. 2. ஈரம் (பிங்.);; moisture; dampness, as of a floor. 3. தண்ணீர்; water. 4. வெள்ளம்; flood, inundation, deluge. “வழிசி தைய வூர்கின்ற வோதமே” (சிலப்.7,35,பாடல்);. 5. கடல்; sea. “ஓதமலி நஞ்சுண்ட வுடையானே” (திரு வாச.38,3);. ம. ஓதம், ஒதன்; க., து. ஒத்தெ. Nor. val; Rum. ud; Swed. vat; Dan. vad; L. unda; aoth, vato; Lit. wandy. Gr. {}, Os. water, Russ. Vada; OHG. wazzar; OE. water, F. cau ({});, Pol. voda; Hung. Viz; Fin. vesi. [ஒலம் → ஓதம் = கடலலை.] ஓதம் வடமொழியில் உதகம் ஆயிற்று;கடலும் உததி ஆயிற்று. வடமொழியாளர் செயற்கையாக ud – என்னும் வேரைக்காட்டி ஊறுதல், வெளிவருதல் என்னும் பொருளோடு தொடர்புபடுத் துவர். மேலையாரிய மொழிகளிலும் இனச்சொற்கள் இருப்ப தால் இஃது வடசொல்லே என வலிந்துரைப்பர். மேலையாரிய மொழிகளில் இனச்சொல் கொண்டிருப்பது மட்டும் பாவா னர் கொள்கைப்படி இதனை ஆரியமொழிக் குடும்பத்தைச் சார்ந்த சொல் என நிறுவுதற்குப் போதிய சான்றாகாது. கடன்கொண்ட சொல்வளம் உடன் கொண்ட சொல்வளம் (carried vocabulary); என்னும் வகைமையில் இவை உடன் கொண்ட சொல்வளத்தை அதாவது மூலத்தாய் மொழியிடமி ருந்து இயல்பாக நிலவழிப்பிரிந்த (geographical distribution); சொற்றொகுதியைச் சார்ந்தவையாதலின் மூலத்தாய் மொழி யின் சொற்பிறப்புச் சூழலே முற்றிலும் ஏற்புடைத்து. கடலிடை வாழ்ந்த தமிழர் நீரின் அலையைக் குறித்த சொல்லே ஒதமா யிற்று. வெப்ப நாடுகளிலிருந்தே மக்கள் பல்வேறு கால நிலைகளில் வடக்குநோக்கிக் குளிர் நாடுகளுக்குப் பரவியுள்ளனர் என்னும் மாந்தவியலார் கருத்தும் இக்கருத்தை அரண்செய்வதாகும். ஓதம்2ōtam, பெ. (n.) 1. ஒலி; noise, uproar. “ஓதநீர் வேலி” (பழ.398);. 2. கடலின் நீர் பொங்குகை; flood tide. [ஓ → ஓதம் = உயர்ந்துவரும் அலைநீர்.] ஓதம்3ōtam, பெ. (n.) வீக்கம்; swelling. [ஓ → ஓதம்.] ஓதம்4ōtam, பெ. (n.) ஓதனம் பார்க்க;see {}. ஓதம்5ōtam, பெ. (n.) பெருமை (அக.நி.);; greatness. [ஓ → ஓதம்.] ஓதம்ōtam, பெ. (n.) பெருமை; greatness. [Skt. ojas → த. ஓதம்.] |
ஓதற்பிரிவு | ஓதற்பிரிவுōtaṟpirivu, பெ. (n.) தலைவன் கல்விகற் றற்குத் தலைவியைப் பிரியும் பிரிவு (தொல்.பொ ருள்.25);; separation of a hero from his beloved, when he goes abroad for studies. [ஓதல் + பிரிவு.] |
ஓதலாந்தையார் | ஓதலாந்தையார்ōtalāndaiyār, பெ. (n.) எட்டுத் தொகை நூல்களுள் ஒன்றான ஐங்குறு நூற்றிற் பாலைப் பகுதியின் ஆசிரியர்; Sangam poet, author of {}. [ஓதல் + ஆந்தையார் – ஓதலாந்தையார் = ஓதாளர்தொழிலேற்ற ஆந்தையார். ஆதன் + அந்தை – ஆந்தை + ஆர்.] ஓதவனம் __, பெ (n.); கடல்; sea as a great flood. “அறையோதவனஞ்சூழ் புவி” (பாரத.அருச்சு னன்றீர்.2). [ஓதம் → ஓதவனம்.] |
ஓதல் | ஓதல்1ōtal, பெ. (n.) 1. உரத்துப்படித்தல்; reading loudly. 2. கல்விபயிலுதல் (தொல்.பொருள்.25);; lea- ming. 3. ஓசையூட்டிப் பலமுறை சொல்லுதல்; reci- ting. 4. சொல்லுதல்; telling. [ஓது → ஓதல்.] ஓதல்2ōtal, பெ. (n.) ஓதும் தொழில்; profession of reciting. ம. ஓதல்; க. ஒது; குட. ஒத்; துட. வீத்; குட. ஓத்;து. ஓதுனி (படி);. [ஓது → ஓதல்.] |
ஓதாளன் | ஓதாளன்ōtāḷaṉ, பெ. (n.) 1. கல்வி புகட்டும் ஆசிரியன்; teacher. 2. கேள்வியறிவு புகட்டும் ஆசிரி யன்; moral preacher (கொங்.வ.);. [ஓது + ஆளன்.] |
ஓதாளர் | ஓதாளர்ōtāḷar, பெ. (n.) ஆசிரியத் தொழில் கொண்ட வேளாள வகுப்பினர்;{} whose profession was teaching. உலகம் பாதி ஓதாளர் பாதி (பழ.); (கொங்.வ.);. [ஓது + ஆள் + அர் – ஓதாளர்.] குறிப்பாக வேளாளருள் கல்வி கல்லாதார் இல்லையென்பதும் சரிபாதித் தொகையினர். கற்பிக்கும் ஆசிரியராயிருந்தனர் என்பதும் தொன்று தொட்டு நிலவும் செய்தி. |
ஓதி | ஓதி1ōti, பெ. (n.) 1. அறிவு; knowledge, wisdom, spiritual perception. “எல்லா மோதியினுணர்ந்து கொண் டான்” (சீவக.951);. 2. கல்வி (திவா.);; learning, erudition. 3. நூல் படிப்பவ-ன்-ள்; learned person; one who recites the {} and {}. ம. ஓதி. [ஓது → ஓதி.] ஓதி2ōti, பெ. (n.) ஒந்தி பார்க்க;see {}. க. ஒதி. [ஓணான் → ஓந்தான் → ஓந்தி → ஓதி (மு.தா.302);.] ஓதி3ōti, பெ. (n.) மலை; mountain. [ஓ → ஓதி.] ஓதி4ōti, பெ. (n.) போர்; battle. [உ → உத்து → உத்தி → ஒத்தி → ஓதி.] ஓதி5ōti, பெ. (n.) 1. செறிவு (பிங்.);; closeness, thickness, crowd. 2. கூந்தல்; woman’s hair. “வாழைப்பூ வெனப் பொலிந்த வோதி” (சிறுபாண்.22);. 3. ஓதிமம் பார்க்க;see {}. “காந்தளங்கை யோதிகொங்கை” (வெங்கையு.272);. 4. நெருங்கித் தாக்குகை (வின்.);; close attack in battle. [ஓல் → ஒது → ஒதி → ஓதி.] ஓதி6ōti, பெ. (n.) ஓதுவித்தல்; making one recite, educate. [ஓது → ஓதுவி → ஓதி இது வடபுலமொழிகளில் போதி → போதித்தல் எனத்திரிந்தது.] ஓதி7ōti, பெ. (n.) ஓதிமம் (அன்னம்.);; swan. ம. ஓதி. [ஓ = வெள்ளை. ஓ → ஓதி.] |
ஓதிமன் | ஓதிமன்ōtimaṉ, பெ. (n.) நான்முகன்; Brahma, who rides on a swan. “ஓதிமனை யோர்சிர மறச்செய்தது” (பிரபோத.26,26);. [ஓதிமம் → ஓதிமன்.] |
ஓதிமம் | ஓதிமம்ōtimam, பெ. (n.) 1. அன்னம்; swan. “ஓதிம மொதுங்கக் கண்ட வுத்தமன்” (கம்பரா.சூர்ப்ப.5);. 2. மலை; hill, mountain. “மழைக்காக் கோட்டோதிம மெடுத்தார்” (அஷ்டப்.அழக.53);. ம. ஓதிமம் [1. ஓ – ஓதி – ஓதிமம். 2. ஒதி2 → ஓதி.] |
ஓதிமவிளக்கு | ஓதிமவிளக்குōtimaviḷakku, பெ. (n.) அன்னப்பறவை யுருவாகச் செய்யப் பெற்ற விளக்கு; swan-shaped pendent lamp. “யவன ரோதிமவிளக்கின்” (பெரும் பாண்.317);. [ஓதிமம் + விளக்கு.] |
ஓதியிடு-தல் | ஓதியிடு-தல்ōdiyiḍudal, 18.செ.குன்றாவி. (v.t.) திரு மண முதலியவற்றில் வாழ்த்துக்களுடன் வழங்கப்ப டும் அன்பளிப்பு; to present gifts on occasions like marriage with blessings. (brah.); [ஓதி + இடு.] |
ஓதியிறை-த்தல் | ஓதியிறை-த்தல்ōtiyiṟaittal, 4.செ.கு.வி. (v.i.) மந்திரநீர் தெளித்தல் (வின்.);; to sprinkle, as consecrated water. [ஓதி + இறை.] |
ஓதியுடை-த்தல் | ஓதியுடை-த்தல்ōtiyuḍaittal, 4.செ.குன்றாவி. (v.t.) மந்திரித்துத் தேங்கா யுடைத்தல் (வின்.);; to break coconuts with mantras. [ஓதி + உடை.] |
ஓது-தல் | ஓது-தல்ōdudal, 5.செ.குன்றாவி. (v.t.) 1. படித்தல்; to read, {} audibly in order to commit to memory. “ஓதி யுணர்ந்தும் பிறர்க்குரைத்தும்” (குறள்.834);. 2. சொல் லுதல்; to speak, say, declare. “ஓதரிய சுகர் போல” (தாயு.ஆகார.32);. 3. வேதமோதுதல்; to recite the {} with the appropriate intonation. 4. மந்திரம், வழிபாடு முதலியன செய்தல்; to utter mantras, repeat prayers. 5. கமுக்கமாகக் கூறுதல்; to persuade clande- stinely, to breathe out; to whisper, as communicating information. அவன் காதில் அடிக்கடி ஓதுகிறான். 6. பாடுதல்; to sing. “ஓதி … … … … களிச்சுரும் பரற்றும்” (சிறபாண்.22);. ம. ஓதுக; க., பட. ஓது; கோத. ஓத். துட. வீத்; குட. ஓத்; து. ஓதுனி;தெ. சதுவு. [ஊது → ஓது → ஓதல்.] |
ஓதும்பள்ளி | ஓதும்பள்ளிōtumbaḷḷi, பெ. (n.) பள்ளிக்கூடம் (திவா.);; school. [ஓது → ஓதும் + பள்ளி.] |
ஓதுவான் | ஓதுவான்ōtuvāṉ, பெ. (n.) 1. ஆசான்; teacher. 2. மாணாக்கன்; pupil. [ஓது + ஆன்.] |
ஓதுவார் | ஓதுவார்ōtuvār, பெ. (n.) திருக்கோயில்களிலும் மடங்களிலும் தேவாரமுதலிய அருட்பாக்களைப் பாடுஞ் சைவவேளாளர்;{} appointed to recite sacred Tami hymns in {} temples and monaste- ries. [ஓது → ஓதுவார்.] |
ஓதுவி-த்தல் | ஓதுவி-த்தல்ōtuvittal, 1. பி.வி. (c.v.) சிறந்தநூல் முதலியன கற்பித்தல்; to teach the standard book and subject to others. “ஓதுவித்த தக்கணையா” (திவ். பெரியாழ்,4,8,1);. 2. படிப்பித்தல்; to teach, instruct. ம. ஓதிக்குக; க. ஓதிக;து. ஒதாவுது. [ஓது → ஓதுவி.] |
ஓதை | ஓதை1ōtai, பெ. (n.) 1. பேரோசை (ஆரவாரம்); (திவா.);; sound, noise, clamour, din. 2. எழுத்தொலி (பிங்.);; sound of a letter. [ஓ → ஓசை → ஓதை (சு.வி.99);.] ஓதை2ōtai, பெ. (n.) காற்று; wind. “ஒதை … அலைத்தன தரையிற்றள்ளி” (கந்தபு.கடல்பாய்.8);. [ஊதை → ஓதை.] ஓதை2ōtai, பெ. (n.) 1. மதில் (திவா.);; surrounding wall, rampart. 2. மதிலின் ஆள்வாரி நிலம் (பிங்.);; paved passage along the walls within a fortification. 3. மலை (யாழ்.அக.);; mountain. [ஓ → ஓதை.] |
ஓதைவாரி | ஓதைவாரிōtaivāri, பெ. (n.) சிறகு (சங்.அக.);; wing. [ஊதை → ஓதை (காற்று); + வாரி.] |
ஓத்தி | ஓத்திōtti, பெ. (n) 1. பச்சோந்தி (பிங்.);; chameleon. 2. ஒந்தி (பிங்.);; blood sucker. [ஓந்தி → ஓத்தி.] |
ஓத்திரநெல் | ஓத்திரநெல்ōttiranel, பெ. (n.) ஒதுவிக்கும் அல்லது ஓதும் தொழிலைத் தொடர்ந்து செய்தற்காகத் தரப் படும் நெல்; paddy given annually for educational or religious teaching and learning. “ஒத்திரநெல்லின் ஒகந்தூர் ஈத்து” (பதிற்றுப்.70,பதி.);. [ஓது → ஓத்து → ஓத்திரம் + நெல்.] |
ஓத்திரம் | ஓத்திரம்ōttiram, பெ. (n.) 1. ஓத்து எனப்படும் மறைமொழிகளை அல்லது உயர்ந்த நூற்பகுதிகளை ஓதுதல்; chanting the sacred valuable scripture. “ஓத்திர நெல்லி னொகந்தூரீத்து” (பதிற்றுப்.70,பதி.);. 2. ஓது விப்பு; ஓதச்செய்தல்; enabling to recite, making one to recite. [ஓது → ஓத்து – ஓத்திரம் (மந்திரம் ஓதுதல்); (ஒ.நோ.); மோள் → மோத்து → மோத்திரம் → மூத்திரம்.] ஓத்திரம் என்பதற்கு ஓமத்திற்குரிய பொருள் என்று பதிற்றுப் பத்து (70); பதிகத்திற்கு உரையாசிரியர் உரை வரைந்திருப்பது தவறு. உரையாசிரியர் பழந்தமிழரின் மலரிட்டு ஒதும் ஒத்திரங் களை உய்த்துணர மாட்டாது வேட்டபொருள்களைத் தீயி லிட்டு ஓதும் வேதமந்திரங்களை மனத்துட்கொண்டு உரைத்தி ருப்பது தென்னாடுடைய சிவவழிபாட்டின் தொன்மையுணரா மையே ஆகும். |
ஓத்திரி | ஓத்திரிōttiri, பெ.(n.) ஓதுவிப்பவன்; one who makes others to recite. [ஓது → ஓத்து → ஓத்திரம் → ஓத்திரி. பிறர் பின்தொடர்ந்து இசைக்கத் தான் முன்னிசைத்து ஓதுபவன் ஒத்திரி. ஓதத்தக்க விழுப்பொருள் ஒத்து எனப்பட்டது.] இச்சொல் வடமொழியில் hotri எனத் திரிந்தது. hu என்னும் சொல்லே வேள்வியாசிரியனைக் குறித்ததென்றும் அதனின்றே hotri ன்னும் சொல் பிறந்ததென்றும் வடமொழியாளர் கூறுவர். வேள்வியாசிரியனைக் குறித்ததற்கான சொல் வரலாறும் வழக் காறும் வடமொழியில் இல்லை. ஓது, ஓத்து, ஓத்திரம் என்னும் தமிழ்ச் சொற்கள் தமிழில் பண்டு தொட்டு வழங்கி வருபவை. சொல்லாலும் பொருளாலும் இவற்றின் சொற்பிறப்பு வளர்ச்சி செப்பம் வாய்ந்துள்ளது. வடமொழி வேதங்களுக்கு விரிவுரை எழுதிய பல்லோரும், வடமொழி இலக்கிய இலக்கண வளத்தை மிகுவித்த தொல்லோரும் பெரும்பான்மை பழந்தமி ழகத்தைச் சார்ந்தோராதலின் ஏராளமான தமிழ்ச் சொற்களை வடமொழியிற் புகுத்தியதன் விளைவாக இத்தகு சொற்கள் வடமொழியில் நெடுங்காலம் பயில்வன வாயின. ஓதும் தொழிலேற்ற புலவர் ஓதலாந்தையார் எனப்பெயர் பெற்றமை யும் அறிக. ஆந்தை எனப் பெயர் கொண்டோர் தமிழரே பன்றி வேறு எவ்வினத்தாரும் அல்லர். ஓதுதற்கென்றே திரும ணமான பிறகும் தமிழ் இளைஞர்கள் மனைவியைப் பிரிந்து செல்வர் என்னும் பண்டைத்தமிழ் வழக்கம் ‘ஓதற்பிரிவு’ என அகவாழ்க்கையில் இடம் பெற்றிருத்தலும், அரசர் முதல் மலை முகட்டில் வாழும் குறமகள் இளவெயினி வரைப்பட்ட அனை வர்க்கும் ஓதும் வாய்ப்பு கிட்டியிருந்ததும் ஓதும் தொழிலின் பெருக்கத்தை விரித்துக்காட்டுவனவாகும். திருக்கோயில்களில் இறைவனைப் போற்றிப்பாடுவோர் ஒது வார் என்றே இன்றளவும் குறிப்பிடப்படுதல் காண்க. பெரிய கோயில் கல்வெட்டுகளில் பயின்றுள்ள ‘ஆரியம்பாடுவார்’ ‘தமிழ்பாடுவார்’ என்னும் சொல்லாட்சிகள் இறைவனை வழிப டும் மந்திரங்கள் தமிழில் தொன்று தொட்டு உள்ளன என்பதை யும் வடபுலத்திலிருந்து ஆரியம் பாடும் பூசகர்கள் மிகப் பிற்காலத்தில் வந்தவர் என்பதையும் புலப்படுத்தும். |
ஓத்து | ஓத்து1ōttu, பெ. (n.) 1. ஓதுகை; reciting, uttering, as a mantra. “அஞ்செழுத்து மோத்தொழிந்து” (தேவா. 586,4);. 2. வேதம்; the {}. “ஓத்துடை யந்தணர்க்கு” (மணி.13,25);. 3. இயல்; section or chapter of a book. “இனமொழி கிளந்த வோத்தினானும்” (தொல். பொருள்.480);. 4. நெறி, கொள்கை (குறள்.3,பரி.);; rule, principle. [ஓது → ஓத்து.] நாள்தோறும் ஓதத்தக்கது ஓத்து எனப்பட்டது. அது மந்திரமாக லாம், அறநூலாகலாம், இலக்கண இலக்கியம் ஆகலாம். தமிழக வேளாளருள் ஓதாளர் என்றே ஒரு பிரிவினர் தொன்று தொட்டு வாழ்ந்து வருதலை இன்றும் காணலாம். தமிழ் ஓத்துகள் பல்வகைப்பாங்கின என்பது இச்சொல் புலத்துறை பலவற்றினும் பொதுவாக ஆளப்படுதலால் அறியத்தகும். ஓத்து2ōttu, பெ. (n.) ஓரினமான மணிகளை வரிசையா கப் பதித்ததுபோல ஓரினமான பொருள்களை ஒரு வழிப்படச் சொல்வது (நன்.);; classification of objects according to categories. [ஒல் → ஒத்து → ஓத்து = ஒருபாங்காக ஒத்தியலும் பொருள்கள்.] |
ஓத்துமுறைவைப்பு | ஓத்துமுறைவைப்புōttumuṟaivaippu, பெ. (n.) இயல் முதலியவற்றை முறைப்படுத்தி யமைத்தலாகிய உத் திவகை (நன்.14);; [ஓத்து2 + முறை + வைப்பு.] |
ஓத்துரைப்போன் | ஓத்துரைப்போன்ōtturaippōṉ, பெ. (n.) 1. ஆசிரியன் (பிங்.);; teacher. 2. தமிழாசிரியன்; teacher of Tamil. [ஓத்து1 + உரைப்போன்.] |
ஓத்துரைப்போர் | ஓத்துரைப்போர்ōtturaippōr, பெ. (n.) 1. பொருத்தஞ் சொல்லுவோர் (ஆ.அக.);; soothsayer. 2. நூல்ஓது வோர்; those who recite scripture. [ஓத்து2 + உரைப்போர்.] |
ஓநாய் | ஓநாய்ōnāy, பெ. (n.) கோநாய் (பழ.292,உரை.);; Indian wolf. ம. ஓநாய். [ஓ → பெரியது. அஞ்சத்தக்கது. ஓ + நாய்.] |
ஓந்தான் | ஓந்தான்ōndāṉ, பெ. (n.) ஓணான்; blood sucker. [ஓணான் → ஓந்தான்.] |
ஓந்தி | ஓந்திōndi, பெ. (n.) ஓணான் (திவா.);; blood-sucker, a common agamoid lizard. ம. ஓந்து; க. ஒதி, கோகம்பெ; துட. ஒச்; குட. ஓந்தி; து. ஓந்தி; தெ. தொண்ட; மால். உதெ;பட. ஒசி. [ஓணான் → ஓந்து → ஓந்தி.] |
ஓனம் | ஓனம்ōṉam, இடை. (part.) எழுத்தின்சாரியை (தொல். எழுத்து.134, உரை.); euphonic particle added by chi-ldren after sounding the long letters. [ஏனம் → ஆனம் → ஒனம்.] |
ஓனாய் | ஓனாய்ōṉāy, பெ. (n.) ஓநாய் பார்க்க;see {}. |
ஓபாதி | ஓபாதிōpāti, பெ. (n.) பகுதி; portion. ‘நம்மோபாதியா லுள்ள ரட்சணம்’ (ஈடு.5.4,ப்ர.); இடை. (part.); உவமஉ ருபு; particle of comparison. “அவனைப்பெறுகையோ பாதி தேட்டமாம்படி” (ஈடு.5,4,ப்ர.);. க. ஒபாதி. [ஒருபகுதி → ஒபாதி.] |
ஓப்படியாள் | ஓப்படியாள்ōppaḍiyāḷ, பெ. (n.) ஒர்ப்படியாள் (வின்.); பார்க்க; seе {}. |
ஓப்படைச்சி | ஓப்படைச்சிōppaḍaicci, பெ. (n.) ஓர்ப்படியாள் பார்க்க (இ.வ.);;see {}. |
ஓப்பு-தல் | ஓப்பு-தல்ōppudal, 5.செ.குன்றாவி. (v.t.) 1. ஓட்டுதல்; to drive away; to cause to flee; to scare away, as birds. “கழனிப் படுபுள் ளோப்புநர்” (புறநா.29,13);. 2. உயரவெடுத்தல் to raise. “கொடிக ளோப்புவும்” (சூளா.அரசி.144);; (செ.அக.);. 3. நீக்குதல்; to remove. “குருவி ஒப்பியும் கிளி கடிந்தும்” (சிலப்பதிகாரம்);. ம. ஒப்புக. [ஓ → ஒப்பு.] |
ஓமகுண்டம் | ஓமகுண்டம்ōmaguṇṭam, பெ. (n.) வேள்விக்குழி (கந்தபு.அசுரர்யாக.42);; pit dug out in the ground for keeping sacrificial fire. [Skt. homa+kunda → த. ஓமகுண்டம்.] |
ஓமசாந்தி | ஓமசாந்திōmacāndi, பெ. (n.) தீ வளர்த்துச் அமைதிபண்ணுகை; propitiating by fire. [Skt. homa+santi → த. ஓமசாந்தி.] |
ஓமசாலை | ஓமசாலைōmacālai, பெ. (n.) வேள்விச் சாலை (சிலப்.10, 143, அரும்);; sacrificial hall. [ஒம + சாலை.] [Skt. homa → த. ஓம.] [சால் → சாலை.] |
ஓமத்திரவியம் | ஓமத்திரவியம்ōmattiraviyam, பெ. (n.) வேள்விச் செய்யும் பொருள்; requisites for a sacrifice, including fire wood. [Skt. homa+dravya → த. ஓமத்திரவியம்.] |
ஓமநீரம் | ஓமநீரம்ōmanīram, பெ. (n.) ஓமச்சாறு; essence of oman. (Bishop’s weed);. [ஓமம் + சாறு.] |
ஓமப்பொடி | ஓமப்பொடி1ōmappoḍi, பெ. (n.) 1. தின்னும் பலகாரவகை; omam confectionery, fashioned like vermicelli. 2. ஓம மருந்து (வின்.);; medicinal {} powder. ம. ஒமப்பொடி; க. ஓமப்புடி;தெ. ஓமப்புடி. [ஓமம் + பொடி.] |
ஓமம் | ஓமம்1ōmam, பெ. (n.) ஒர்வகைக் காரமான மருந்துச்செடி (மலை.);; Bishop’s weed, herbaceous plant. ம. ஓமம்; க. ஓம, ஒமு, ஓவு, வாம, வோம, கோம; து. ஒம;தெ. ஓமமு. [உம் → உமல் → உமறு = காரற்கவை. உம் → ஒம் → ஓம் → ஓமம் = காரற்சுவையுடையது.] ஓமம்2ōmam, பெ. (n.) வேள்வித்தீயில் நெய் முதலியன பெய்கை; offering an oblation to the gods by pouring ghee, etc. into the consecrated fire. “ஓமம் வேள்வி யுதவி தவஞ்செபம்” (சேதுபு.சேதுச.51);. [ஓம்பு → ஓமு → ஓமம். Skt. {}.] ஓமு = (ஒம்பு); நெய்யூற்றித் தீயை அணையாமல் காத்தல், தீவளர்த்தல், தீயைப்பேணுதல், தீயோம்புதல் என்றாயிற்று. |
ஓமற-த்தல் | ஓமற-த்தல்ōmaṟattal, 4.செ.கு.வி. (v.i.) ஒழிவறுதல்; to be unceasing, incessant. “ஓமறந்து … கண்ணும் படுகுவம்” (அகநா.11);. [ஒய்வு → ஓவு → ஓ + மற = ஒமற.] |
ஓமற்கோரை | ஓமற்கோரைōmaṟārai, பெ. (n.) கோரைவகை; a kind of sedge. [ஓமல் + கோரை.] |
ஓமலிப்பு | ஓமலிப்புōmalippu, பெ. (n.) ஊர்ப்பேச்சுப்பரவுகை; spreading, as a rumour. “ஐயையோ ஊரெங்கு மிதுவோ ஓமலிப்பு” (சர்வ.கீர்த்.186);. [ஓமல் → ஓமலிப்பு.] |
ஓமல் | ஓமல்1ōmal, பெ. (n.) 1. ஊர்ப்பேச்சு; rumour, bruit. “ஊருக்கு ஓமல், வீட்டுக்கு வயிற்றெரிச்சல்”. 2. புகழ்ச்சி; reputation. [ஓ = உயர்தல், மிகுதல், ஓ → ஓம் → ஓமல்.] ஓமல்2ōmal, பெ. (n.) 1. புகையெழுதல்; to rise as smoke. 2. பரவுதல்; spreading. [ஓ → ஓமு → ஓமல்.] |
ஓமான் | ஓமான்ōmāṉ, பெ. (n.) ஓந்தி பார்க்க (திவா.);;see {}. [ஒணான் → ஓமான் (கொ.வ.);.] |
ஓமாலிகை | ஓமாலிகைōmāligai, பெ. (n.) நறும் புனலுக்குப் பயன்படும் 32 வகை பொருட்கள் (அவை இலவங் கம், பச்சிலை, கச்சோலம், ஏலம், நாகணம், கோட்டம், நாகம், மதாவரிசி, தக்கோலம், நன்னாரி, வெண்கோட் டம், கத்தூரி, வேரி, இலாமிச்சம், கண்டில்வெண்ணெய், கடு, நெல்லி, தான்றி, துத்தம், வண்ணக்கச்சோலம், அரேணுகம், மாஞ்சி, சயிலேகம், புழுகு புன்னைநறுந் தாது, புலியுகிர். சரளம், தமாலம், வகுளம், பதுமுகம், நுண்ணேலம், கொடுவேரி முதலியன); (சிலப்.6,77, வரை.);; fragrant substances put in water used for drinking and bathing of which those are 32. [ஒமல்2 → ஓமலிகை → ஓமாலிகை = மணம் பரவும் இயல்பினது.] |
ஓமி-த்தல் | ஓமி-த்தல்ōmittal, 11 செ.கு.வி. (v.i.) வேள்வி செய்தல்; to perform the homa sacrifice. “யாவையும் வாரி யோமித்தான்” (உபதேசக. பண்டாக.65);. [Skt. homa → த. ஓமி-த்தல்.] |
ஓமிடி | ஓமிடி1ōmiḍidal, 4.செ.கு.வி. (v.i.) கேடுறுதல்; to be ruined, destroyed, to perish. ‘நீ ஓமிடிந்து போவாய்’ (வின்.);. ம. ஓமிடிச்சல். [ஓம் + இடி – ஒமிடி. பாதுகாப்புக்கேடு. ஓம் = பாதுகாப்பு. இடி = இடிதல், கெடுதல்.] ஓமிடி2ōmiḍi, இடை. (int.) ஓ, நாசம் (வின்.);; O! ruin. [ஓம்பு → ஓம் (பாதுகாப்பு); ஓம் + இடி = பாதுகாப்பு கெடுதல், அழிவு.] |
ஓமை | ஓமைōmai, பெ. (n.) 1. உகா (பிங்.);; uga tree. 2. மாமரம்; mango tree. “வெண்குன்றிப்பருப்போமைக் கொட்டை” (தைலவ.தைல.33);. ம. ஒம. [ஓ = உயர்ச்சி. ஓ → ஓமை.] |
ஓம் | ஓம்1ōm, பெ. (n.) பாதுகாத்தல், காப்பாற்றுதல்; protecting, guarding. [ஓ → ஒம்.] ஓம்2ōm, இடை. (part.) தன்மைப்பன்மையீறு(நன்.140);; ending of the first pers. pl. வந்தாம் → வந்தோம். [ஆம் → ஓம்.] ஓம்3ōm, பெ. (n.) மூலமந்திரம்; mysic syllable, preceding all the mantras of worship, writings, etc. “ஓமெனு மோரெழுத்து” (கம்பரா.இரணி.76);. [அ + உ – ஓ + ம் – ஒம்.] மங்கல அடையாளமாகக் கருதப்படும் ஓம் இலச்சினை (Swa- stika); உலகமுழுவதும் பரவியுள்ளது. சிந்துவெளி முத்திரைக ளில் பெருகக் காணப்படுகிறது. இது அந்தக் காலத்திய எழுத்துகளில் ஒன்றாக இருக்கலாம் என்னும் கருத்தினை திரு. கிருட்டிணா வேணுகோபால் என்பவர் (Mirror-Apr.1985); வெளியிட்டிருந்தார். இதனை உணராத பலர் மந்திரம், தாயத்து. தகட்டு ஏவலெழுத்து என்றெல்லாம் விரித்துரைக்க லாயினர். நான்கு கால் இலச்சினையென்று இங்கிலாந்திலும், தோர் கடவுளின் கையிலுள்ள படைக்கலம் என்று காண்டிநேவி யாவிலும், உயிரளிக்கும் நீர் வடிவம் என்று சப்பானிலும், பெருங்கடலையும் தொடக்கமும் முடிவுமில்லாத பெருக்கத்தை யும் குறித்தது என்று சீனத்திலும் மக்கள் நம்பினர். எல்லா நாடுகளிலும் இது நன்மையின் அடையாளமாகவே கருதப்பட் டது. எல்லாச் சமயங்களிலும் இது மங்கலச் சின்னமாகிவிட் டது. செருமானிய நாட்டில் இட்டலரும் இதனைப் பொறிக்கச் சொன்னதாகவும் இலச்சினை செய்தவர்கள் தவறுதலாக வல நோக்காமல் இடப்பக்கம் நோக்கிய சுழற்சியில் அமைத்துக்கெ பத்திகா வடிவமாக்கி விட்டதாகவும். இது தீமையின் அடையா ளம் என்று பிறகு தெரிந்ததாகவும் கூறுவர். கவசதிகாவின் உண்மையான ஒலிப்பு ‘ஓம்’ என்னும் தமிழ்ச் சொல்லே என்பது கண்டறியப்பட்டுள்ளது. ‘ஓம்’ என்னும் தமிழ்ச்சொல் (ஒம்பு); காப்பாற்று என்று பொருள்படுகிறது. சிந்துவெளியெழுத்தமைப்பின்படி ‘ஓ’ என்னும் நெடில் உயிரெ ழுத்தை ஒஒ என இரண்டு குறில் எழுத்துகளால் குறிப்பர். சிந்துவெளியெழுத்திலும் தமிழ் பிராமி எழுத்திலும் {} என் பதே ஒகரக்குறிலைக் குறிக்கும் எழுத்தாக இருந்தது. ஓகார நெடிலுக்கு இரண்டு ஒகரங்கள் {} அடுத்தடுத்து எழுதப்ப டும், கூட்டல் குறி + மகரத்தின் அடையாளம். ஆதலின் நடுவில் மகரமும் ஒகரம் ஒன்றையொன்று வெட்டுமாறு {} ஓம் என்னும் சொல் சிந்துவெளி மொழியில் எழுதப்பட்டுள் ளது. இதனைப் பானைத் தொழிலாளர் அணிகலத் தொழிலாளர். ஏனங்கள் செய்வோர் கலைப்பணியாளர்கள் ஆகிய அனைத் துப் பிரிவினரும் பயன்படுத்தியிருக்கின்றனர். ஓம் என்று இதனைப் படித்தது முற்றிலும் சரி என்பதற்குச் சான்றாக மொகஞ்சதாரோவில் கிடைத்த (M.482); மற்றொரு முத்திரை யும் சான்றாகிறது. இதில் ‘ஓமன்’ என்பவனின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. ‘ஓம்’ என்பதற்குரிய கவகதிகா இலச்சினையே அதிலும் சொல்லின் முதலசையாகவும். ‘அன்’ ஈற்றசையாகவும் காணப்படுகிறது. ஓம்4ōm, கு.வி.எ. (adv.) ஆம் என்னும் உடன்பாட்டை உணர்த்துஞ் சொல்; yes, the expression of affirmation or of consent. “ஒமோ மெனவோங்கியதோர் சொல்” (திருவாலவா.38,4);. [ஆம் → ஓம்.] |
ஓம்படை | ஓம்படைōmbaḍai, பெ. (n.) 1. பாதுகாப்பு; protection, safeguard. “ஓம்படையுளப்பட” (தொல்.பொருள்.91);. 2. பாதுகாக்குமிடம்; place of protection. “அறனோம்ப டையும்” (சிலப்.5,179.அரும்.);. 3. சமயக்கருத்துகள் கற்பிக்குமிடம் (சிலப்.5,179,உரை.);; place where reli- gious instruction is imparted. 4. தீர்வு; remedy. “ஓம்படை யொன்றுஞ் செப்பாள்” (சீவக.232);. 5. மறவாமை; keeping in mind, retaining in memory. தலைவற் கோம் படை சாற்றல் (தஞ்சைவா.139,உரை.);. [ஒம்பு + அடை.] |
ஓம்படைக்கிளவி | ஓம்படைக்கிளவிōmbaḍaikkiḷavi, பெ. (n.) 1. தலை வியைப் பாதுகாத்துக் கொள்ளெனத் தலைவற்குத் தோழிகூறுங் கூற்று (தொல்.பொருள்.114);; 2. பெரியோர் பாதுகாவலாகச் சொல் லுஞ் சொல்; sage advice given by wise men. [ஒம்படை + கிளவி.] |
ஓம்பு | ஓம்பு1ōmbudal, 5.செ.குன்றாவி. (v.t.) 1. பாதுகாத் தல்; to protect, guard, defend save. “குடிபுறங் காத்தோம்பி” (குறள்.549);. 2. பேணுதல்; to preserve, to keep in mind, to cherish, nourish. “ஈற்றியாமை தன்பார்ப்போம்பவும்” (பொருந்.186);. 3. தீதுவராமற் காத்தல்; to remove, separate, to keep off; to ward off as from evil. 4. பரிகரித்தல்; to dispel “எனைத்துங் குறுகுத லோம்பல்.” (குறள்.820);. 5. வளர்த்தல் (தேவா.1.1);; to maintain, support; to cause to increase; to bring up. “கற்றாங் கெரி யோம்பி” (தேவா.1,1);. [ஓ → ஓம் → ஓம்பு.] |
ஓயாமணி | ஓயாமணிōyāmaṇi, பெ. (n.) விடாதடிக்கு மணி (இ.வ.);; temple bell kept ringing continuously. [ஓய் + ஆ + மணி.] |
ஓயாமாரி | ஓயாமாரிōyāmāri, பெ. (n.) இடைவிடாமை (யாழ். அக.);; continuity. [ஓய் + ஆ + மாரி – ஓயாமாரி. ‘ஆ’ – எ.ம.இ.நி. மாரி = மழை, இடைவிடாத மழையைப் போன்ற இடைவிடாமை என்பது பொருள்.] |
ஓய் | ஓய்2ōy, இடை. (int.) ஒரு விளியுருபு (வீரசோ.வேற் றுமை.8);; hallo! an int. used in calling attention. ம. ஒய்;தெ., க., து. ஒயி. [ஓ → ஓய்.] ஓய்ச்சல் __. பெ. (n.); 1. ஓய்வு; ceasing, resting. 2. தளர்ச்சி; weariness, debility. கைகாலோய்ச்சல். [ஒய்1 → ஓய்ச்சல்.] |
ஓய்மானல்லியக்கோடன் | ஓய்மானல்லியக்கோடன்ōymāṉalliyakāṭaṉ, பெ. (n.) நன்னாகனால் பாடப்பெற்ற மாவிலங்கையை ஆண்ட சிற்றரசன்; Sangam noble. [ஒய்மான் + நல்லியன் + கோடன். ஒய்மான் பார்க்க;see {}.] |
ஓய்மானல்லியாதன் | ஓய்மானல்லியாதன்ōymāṉalliyātaṉ, பெ. (n.) புறத் திணை நன்னாகரால் பாடப்பெற்ற கொடையாளி; Sangam noble. [ஓய்மான் + நல்லி + ஆதன். ஓய்மான் பார்க்க;see {}.] |
ஓய்மானாடு | ஓய்மானாடுōymāṉāṭu, பெ. (n.) திண்டிவனத்தைச் சூழ்ந்த நாடு (S.l.I. Ill,201,12);; small tract of country in Tamil-agam situated about {}. [ஒய்மான் + நாடு.] |
ஓய்மான் | ஓய்மான்ōymāṉ, பெ. (n.) குடிப்பெயர்; name of a dynasty. [ஆய் → ஒய் + (மகன்); மான். ஆய்க்குடியின் பிரிவினை ஓய்க்குடியினராகலாம்.] |
ஓய்மான்வில்லியாதன் | ஓய்மான்வில்லியாதன்ōymāṉvilliyātaṉ, பெ. (n.) நன் னாகனால் பாடப்பெற்றவன் இலங்கை என்னும் ஊருக்குத் தலைவன்; Sangam noble. [ஒய்மான் + வில்லி + ஆதன்.] ஆய் → ஒய் + மான். மகன் → மான். ஓய்மானுக்குரிய நாடு ஓய்மா நாடு எனப்பட்டது. ஆநிரைகளைக் காக்கும் ஆய்க்குடி யின் வழிமரபினன் ஆகலாம். ஓய்மான் – குடிப்பெயர். வில்லி – தொழிற்பெயர், ஆதன் – இயற்பெயர். |
ஓய்வு | ஓய்வு1ōyvu, பெ. (n.) 1. ஒழிவு; cessation, ceasing, relinquishment, rest. 2. தளர்வு; weariness. 3. முடிவு; termination. ம. ஒய்வு. [உய் → ஒய் = செல்லுதல், போதல், முடிதல், களைத்தல், சோர்தல். ஒய் → ஓய் → ஓய்வு.] ஓய்வு2ōyvu, பெ. (n.) 1. ஓரினப்பொருளை வரிசைபட வைப்பது (ஆ.அக.);; serializing a class of objects. 2. நீட்சி; length. 3. எல்லை; border, limit. [ 1. ஓரியைவு → ஓய்வு (கொ.வ.);. 2. 3. ஓ → ஓய்வு. ஓ = நீட்சி.] |
ஓய்வுகரை | ஓய்வுகரைōyvugarai, பெ. (n.) அளவுமுடிவு (யாழ். அக.);; limit. [ஒய்வு2 + கரை.] |
ஓய்வுநாள் | ஓய்வுநாள்ōyvunāḷ, பெ. (n.) வேலை செய்யாது இளைப்பாறும் நாள். (chr.);; day of rest, Sabbath. [ஓய் → ஓய்வு + நாள்.] |
ஓய்வூதியம் | ஓய்வூதியம்ōyvūtiyam, பெ. (n.) அரசு பணியிலிருந்து ஓய்வு பெறுபவருக்கு ஒவ்வொரு மாதமும் அரசாங்கத்தால் வழங்கப் படுகின்ற ஊதியம் pension, [ஒய்வு+ஊதியம்] |
ஓய்வொழிச்சல் | ஓய்வொழிச்சல்ōyvoḻiccal, பெ. (n.) ஓய்ச்சலொழிவு பார்க்க;see {}. [ஓய்வு + ஒழிச்சல்.] |
ஓரகத்தாள் | ஓரகத்தாள்ōragattāḷ, பெ. (n.) ஓரகத்தி பார்க்க;see {}. [ஒரு → ஓர் + அகம் + அத்து + ஆள்.] |
ஓரகத்தி | ஓரகத்திōragatti, பெ. (n.) கணவனுடன் பிறந்தான் மனைவி; husband’s brother’s wife. (செ.அக.); க. ஓரகித்தி. [ஓர் + அகத்தி (அகம் + அத்தி);. அகம் = வீடு.] |
ஓரக்கட்டை | ஓரக்கட்டைōrakkaṭṭai, பெ. (n.) 1. அணைத்துத்தாங் குங் கட்டை; 2. தேரைத் திசைமாற்றுவதற்காகச் சக்கரத்தின் அடியிலிருக்கும் சாய்வுக்கட்டை; block of wood placed under the wheels of the temple chariot to direct its course. [ஓரம் + கட்டை.] |
ஓரக்கண்ணன் | ஓரக்கண்ணன்ōrakkaṇṇaṉ, பெ. (n.) 1. சாய்ந்த பார்வையுடையவன்; squint-eyed man. 2. ஒருதலைச் சார்பானவன்; partisan, one who is biassed. [ஓரம் + கண்ணன்.] |
ஓரக்காரன் | ஓரக்காரன்ōrakkāraṉ, பெ. (n.) ஓரக்கண்ணன், 2 பார்க்க;see {}, 2. [ஓரம் + காரன்.] |
ஓரங்கட்டு | ஓரங்கட்டுōraṅkaṭṭu, பெ. (n.) புறக்கணித்தல்; neglecting. [ஒரம்+கட்டு] |
ஓரங்கட்டு-தல் | ஓரங்கட்டு-தல்ōraṅgaṭṭudal, 5.செ.கு.வி. (v.i.) 1. ஓரமா கச் சேர்த்தல்; to gather to one side. 2. ஒரு ஓரமாகச் செல்லுதல்; to go along the edge. 3. வேண்டாதவரை ஒதுக்கிவைத்தல்; to avoid the unwanted. [ஓரம் + கட்டு-தல்.] |
ஓரங்கல் | ஓரங்கல்ōraṅgal, பெ. (n.) தெலுங்கு நாட்டு வாரங்கல் நகரம்; ancient capital of Andhra, now called Warangal, so called because it was surrounded by a single stone wall. “உருத்தரா நின்னுடைய வோரங்கல் நாட்டில்” (தமிழ்நா.89);. தெ. ஓரங்கல். [ஓர் + அம் + கல் – ஓரங்கல். ஓரங்கல் = ஒற்றைக்கல்.] |
ஓரசைச்சீர் | ஓரசைச்சீர்ōrasaissīr, பெ. (n.) அசைச்சீர் பார்க்க;see {}. [ஓர் + அசை + சீர்.] |
ஓரடி | ஓரடிōraḍi, பெ. (n.) ஒருபோகம்; single crop. [ஓர் + அடி.] |
ஓரடிக்கோரடி | ஓரடிக்கோரடிōraḍikāraḍi, கு.வி.எ. (adv.) அடிக்கடி; frequently. “அவனி யாளுகவென் றோரடிக்கோரடி புரிந்து” (பாரத.குரு.88);. [ஓர் + அடிக்கு + ஓர் + அடி.] |
ஓரடிப்பதம் | ஓரடிப்பதம்ōraḍippadam, பெ. (n.) ஓரடித்தரவு அமைந்த இசைப்பாட்டு; musical composition or taru consisting of pallavi, anu-pallavi and one caranam. [ஓர் + அடி + பதம்.] |
ஓரடிமடக்கு | ஓரடிமடக்குōraḍimaḍakku, பெ. (n.) நான்கடியுள்ளோர டியே மடங்கி வருவது; figure of speech (i.e.); pun appearing in one line of a stanza repeated four times. [ஓர் + அடி + மடக்கு.] |
ஓரடை | ஓரடைōraḍai, பெ. (n.) ஒரு சிற்றளவு (தொல். எழுத்து. 170,உரை.);; ancient small measure. [ஓர் + எடை = ஓரெடை → ஓரடை (கொ.வ.);.] |
ஓரட்டாங்கை | ஓரட்டாங்கைōraṭṭāṅgai, பெ. (n.) இடக்கை (இ.வ.);; left hand. [ஒருஉதல் → நீக்குதல், ஒருவு → ஒருட்டு → ஒருட்டாம் + கை. நற்செயல்களுக்குப் பயன்படுத்தாமல் விலக்கும் இடக்கை.] |
ஓரட்டும் | ஓரட்டும்ōraṭṭum, பெ. (n.) எல்லாம் (p.);; altogether. [ஓர் → ஓரட்டும் (வே.க.107);.] |
ஓரணை | ஓரணைōraṇai, பெ. (n.) 1. ஓர் இணை; pair. (S.l.l.ii.16);. 2. வரிசை, ஒழுங்கு; line, queue. க. ஓரண. [ஓர் + இணை – ஓரிணை → ஓரணை.] |
ஓரத்துப்பட்டை | ஓரத்துப்பட்டைōrattuppaṭṭai, பெ. (n.) தட்டோட்டுக் கரையில் ஓரத்திற்கட்டும் சுண்ணாம்புப்பட்டை (C.E.M.);; side rafter of plaster on tiled roof. [ஓரம் + அத்து + பட்டை.] |
ஓரன்மை | ஓரன்மைōraṉmai, பெ. (n.) ஒருதன்மையல்லாமை; dissimilarity. “பிறப்போரன்மை யறிந்தனம்” (நற்.328);. [ஒர் + அல் + மை.] |
ஓரம் | ஓரம்1ōram, பெ. (n.) 1. விளிம்பு; edge, border, margin, brim, brink. 2. ஒருதலைச்சார்பு; partiality in speaking, pleading. “மன்றோரஞ் சொன்னார் மனை” (நல் வழி.23);. 3. பெண்குறி (யாழ்ப்.);; pudenda muliebre. 4. ஒருபக்கம் பொருந்திய இடம், நெருங்கிய தன்மை; on one side-towards the edge. ம. ஓரமி; க., பட., ஓர; கோத. ஓர்ய; து. ஒர;தெ. ஒர. ஓரமு. L {}. [ஓர் → ஓரம் = ஒன்றின்பக்கம் (வே.க.107);.] ஓரம்2ōram, பெ. (n.) சலுகை (அக.நி.);; help, aid, support. |
ஓரம்பம் | ஓரம்பம்ōrambam, பெ. (n.) ஒரு கணிதநூல் (கணக்கதி.3);; mathematical work. [ஏரம்பம் → ஓரம்பம் (கொ.வ.);.] |
ஓரம்பேசல் | ஓரம்பேசல்ōrambēcal, பெ. (n.) ஒருபக்கஞ் சார்பாகப் பேசுதல்; biased statement. (ஆ.அக.);. |
ஓரம்போகியார் | ஓரம்போகியார்ōrambōkiyār, பெ. (n.) ஐங்குறுநூற்றில் மருதப்பகுதியைப் பாடிய புலவர்; Sangam poet, author of Marudam in {}. [ஓரம் + போகி + ஆர். ஓரம்போகி என்பது ஊர்ப்பெயராகலாம்.] |
ஓரம்வை-த்தல் | ஓரம்வை-த்தல்ōramvaittal, 4.செ.கு.வி. (v.i.) ஆறும் புண்ணைச் சுற்றிச் தசை வளர்தல்; to form proud flesh around a healing wound. (செ.அக.);. [ஓரம் + வை.] |
ஓரறிவுயிர் | ஓரறிவுயிர்ōraṟivuyir, பெ. (n.) தொடுவுணர்வு ஒன்றே யுடைய புல் மரமுதலியன (நன்.444,உரை.);; Iiving organisms having only one sense of perception, as plants, supposed to have only the sense of touch [ஒர் + அறிவு + உயிர்.] |
ஓரற்று | ஓரற்றுōraṟṟu, பெ. (n.) ஒரு தன்மையானது; thing of the same kind. “அதனோரற்றே” (தொல்.பொருள்.136);. [ஓர் + அற்று.] |
ஓரவஞ்சனை | ஓரவஞ்சனைōravañjaṉai, பெ. (n.) ஒருதலைச்சார் பாக ஏய்த்தல்; deceitful partiality. ஒரவாரம் பார்க்க;see {}. [ஓரம் + வஞ்சனை.] |
ஓரவாரம் | ஓரவாரம்ōravāram, பெ. (n.) ஒருபக்க சாய்வு; partiality. “வழக்கினிடை யோரவாரமு ரைத்தே” (அருட்பா.1. விண்ணப்பக்.309);. [ஓரம் + வாரம். வாரம் = சாய்வு.] |
ஓரா | ஓராōrā, பெ. (n.) 1. முள்ளுப்பலாச்சிமீன்; sea porcupine, light brown fish. 2. ஒருவகைக்கடல் மீன்; sea-fish, light brown. (செ.அக.); [உல் → ஒல் → ஓர் → ஓரா] |
ஓராங்கு | ஓராங்குōrāṅgu, வி.எ. (adv.) 1. ஒரு சேர; united jointly. “இளமையுங் காமமு மோராங்குப் பெற்றார்” (கலித்.18);. 2. ஒன்றுபோல; in the same manner, like wise. “நால்வேறு நனந்தலை யோராங்கு நந்த” (பதிற்றுப். 69,16);. 3. இடைவிடாமல்; unintermittently, ceaselessly. “ஒராங்குப் படிதலுடைய ரீண்டே” (ஞானா.41,19);. [ஓர் → ஓராங்கு (வே.க.107);.] |
ஓராட்டு-தல் | ஓராட்டு-தல்ōrāṭṭudal, 5.செ.குன்றாவி. (v.t.) 1. தாலாட்டு தல் (யாழ்ப்.);; to lull, lullaby. 2. ஓலாட்டு-தல் பார்க்க;see {}. [ஓலாட்டு → ஓராட்டு (கொ.வ.);.] |
ஓராட்டுப்பட்டோலை | ஓராட்டுப்பட்டோலைōrāṭṭuppaṭṭōlai, பெ. (n.) ஆண் டுக்கணக்குப்பட்டியல், சதுர்ப்பட்டோலை; [ஓர் + ஆட்டு + பட்டோலை. ஆண்டு → ஆட்டு.] |
ஓராண்காணி | ஓராண்காணிōrāṇkāṇi, பெ. (n.) ஒருவனுக்கே உரிய நிலம்; estate under a single owner. “ஓராண்காணியா யரசாள” (இராமநா.உயுத்த.74);. [ஓர் + ஆள் + காணி.] |
ஓராண்டு | ஓராண்டுōrāṇṭu, பெ. (n.) 1. ஓர் ஆண்டு; one year. 2. இறந்தார்க்கு ஓராண்டு முடிவில் செய்யும் நீர்க்க டன்; anniversary of death. (சேரநா.);. ம. ஓராண்டு. |
ஓராண்வழி | ஓராண்வழிōrāṇvaḻi, பெ. (n.) ஒரே தொடராய்வரும் மரபு வழி (பரம்பரை.);; unbroken lineage from indivi- dual to individual. ‘நம்மாசாரியர்கள் … ஓராண்வழி யாய்க் கொண்டு போந்த இத்தை’ (ஈடு.6,10,4);. [ஒர் + ஆண் + வழி.] |
ஓரானொரு | ஓரானொருōrāṉoru, பெ.எ. (adj.) ஏதாவது ஒரு; certain, someone. “ஒரானொருநாளில்” (குருபரம்.217, பன்னீ.);. [ஓர் → ஓராம் + ஒரு – ஒரானொரு (வே.க.107); ம் – ன் (திரிபு.); ஆகும் → ஆம் (உறுதிப் பொருள் தந்து சாரியையாயிற்று);.] |
ஓராம் | ஓராம்ōrām, பெ.எ. (adj.) முதலாம்; first. [ஓர் → ஓராம் (வே.க.107);.] |
ஓராயம் | ஓராயம்ōrāyam, பெ. (n.) 1. சேர்க்கை; combination, union. “ஓராயமே யுலகம் படைத்தது” (திருமந்.407);. 2. சாய்வு (வின்.);; obliqueness, slant. 3. தோணியின் சாய்ந்த ஓர்புறம் (வின்.);; the leeward or leaning side of a boat or other vessel. 4. இணைப்பு (வின்.);; the close joining of two boards. ம. ஓராயம். [ஒர் + ஆயம்.] |
ஓராயிரம் | ஓராயிரம்ōrāyiram, பெ. (n.) 1. ஓர் ஆயிரம்; one thousand. 2. பன்முறை அல்லது எண்ணிறந்த தடவை எனப் பொருள்படுவதோர் குறிப்பு மொழி; expression denoting many times or on numerous occasions. அவ னுக்கு நான் ஓராயிரம் சொன்னேன்; கேட்கவில்லை (உ.வ.);. ம. ஓராயிரம். [ஓர் + ஆயிரம்.] |
ஓராவொட்டி | ஓராவொட்டிōrāvoṭṭi, பெ. (n.) மீன்வகை (யாழ்.அக.);; a kind of fish. [ஓரா → ஓராவொட்டி.] |
ஓரி | ஓரி1ōri, பெ. (n.) 1. திருமணமாகாதவன்; celibate. 2. கணவனுடன் பிறந்தான் மனைவி; wife of the husband’s brother. “ஒரிமகன் றனக்கு மோர் சரடு போட வேண்டும்” (ஆதியூரவ.5);. ம. ஓரி (பங்கு);. [ 1. ஓர் → ஓரி (தனித்திருப்பவன்);. 2. ஓரகத்தி → ஓரி.] ஓரிōri, பெ. (n.) தேன்முதிரும்போது தோன்றும் நீலநிறம்; dark blue colour of the matured honey “அணிநிறவோரி பாய்தலின்” (புறநா.109,7);. [ஊரி → ஓரி.] ஓரி3ōri, பெ. (n.) 1. வலிமை பொருந்தியது; that which is strong. 2. விலங்குகளின் ஆண்; male of animals. 3. காளை; ox. 4. முதுநரி; old jackal. 5. ஆண் குரங்கு; male emur. 6. ஆண்களின் தலைமயிர்; man’s hair. 7. குதிரையின் பிடரிமயிர்; mane. “ஓரி நுடங்க” (பொருள்.164);. க. ஓரி. [உல் → ஒல் → ஓல் → ஓர் → ஓரி.] ஓரி4ōri, பெ. (n.) 1. தமிழகப் பெருவள்ளல்களில் ஒருவன்; Sangam philanthrophist. 2. ஓரியின் குதிரைக் குரியபெயர்; name of horse owned by the Tamil chieftain {}. 3. ஒப்பற்றவன்; man of excellence. [ஒரி3 → ஒரி4 சேரக்கிளை மரபினர்க்கும் நாகருள் ஒரு சாரார்க் கும் ‘ஒரி’ குடிப்பெயராக விளங்கியதால் இதனைக் குடிப்பெ யர் என்றே குறிப்பிடலாம்.] ஓரி5ōri, பெ. (n.) 1. உயரம்; height. 2. முதிர்வு; matured or ripened stage. து. ஒரிகெ. [உயர் → ஓர் → ஓரி.] ஓரி6ōri, பெ. (n.) நீரோடை, வாய்க்கால்களில் மேல் உயர்த்திக்கட்டிய பாலம்; bridge. [ஊ → ஓ → ஓரி.] |
ஓரிதலம் | ஓரிதலம்ōridalam, பெ. (n.) சவுட்டு மண்; fuller’s earth. (சா.அக.);. [உவர் → உவரி → ஓரி + தலம்.] |
ஓரிதழ்த்தாமரை | ஓரிதழ்த்தாமரைōridaḻddāmarai, பெ. (n.) ஒரு சிறு பூண்டு (பதார்த்த.318);; pasture weed. [ஒர் + இதழ் + தாமரை.] |
ஓரிபூ-த்தல் | ஓரிபூ-த்தல்ōripūttal, 4.செ.கு.வி. (v.i.) தேடுவாரற்று அல்லது கேட்பாரற்றுக் கிடத்தல் (யாழ்.அக.);; to lie unwanted or unsought for. [ஓரி + பூத்தல், முதிர்ந்து நிறம்மாறி உண்பாரற்றுத் தானாகச் சிதையும் தேனடை போல் தேடுவாரற்றுக் கிடக்கும் நல்ல பொருளும் ஒரிபூத்தது எனக் குறிப்பிடுவது மரபு.] |
ஓரியர் | ஓரியர்ōriyar, பெ. (n.) 1. குறிஞ்சிநிலத்தலைமக்களுள் சேரக்கிளைமரபினர்க்குரிய ‘ஓரி’ என்னும் குடிவழியி னர்; name of a clan among the Chera Dynasty. 2. பழந்தமிழ்க் கிளைமரபுகளுள் ஒன்றான நாகர்க்குரிய பெயர்; name of clan of the ancient Tamil known as {}. (.புறநா.175,உரை.);. [ஓரி + அர். ஓரி = குடிப்பெயர்.] |
ஓரியாடு-தல் | ஓரியாடு-தல்ōriyāṭudal, 5.செ.கு.வி. (v.i.) 1. பிறர் தொடாத வண்ணம் நெடுநேரம் வலிமைகாட்டி நீருள் மூழ்கி விளையாடும் நீச்சல் விளையாட்டு; game of swimming. இவன் ஓரியாடுவதில் கெட்டிக்காரன் (திருச்சி.);. 2. துணைக்கு எவரும் வராத நிலையில் ஒருவரே பெரும்பணியை நெடுநேரம் செய்தல்; to work all alone to finish a heavy task. அவள் ஒருத்தியே இவ்வளவு பெரிய கலியாணச் சமையல் வேலையில் ஓரியாடுகிறாள். யாராவது உதவி செய்யுங்கள். (உ.வ.);. [ஓரி = காளை. ஒரியாடுதல் = வலிமை வாய்ந்த காளை போல் ஒருவரே தனித்து நின்று திறமை காட்டுதல்.] |
ஓரியாட்டம் | ஓரியாட்டம்ōriyāṭṭam, பெ. (n.) ஓரியாடு-தல் பார்க்க;see {}. [ஓரியாடு → ஓரியாட்டம்.] |
ஓரிலைத்தாமரை | ஓரிலைத்தாமரைōrilaittāmarai, பெ. (n.) ஒரு சிறு பூண்டு (பதார்த்த.317);; small plant. [ஒர் + இலை + தாமரை.] |
ஓரிலைத்துத்தி | ஓரிலைத்துத்திōrilaittutti, பெ. (n.) துத்திச்செடிவகை (வின்.);; a species of Mallow. [ஒர் + இலை + துத்தி.] |
ஓரீற்றா | ஓரீற்றாōrīṟṟā, பெ. (n.) ஒருமுறையீன்ற மாடு; cow that has calved but once. [ஓர் + ஈற்று + ஆ.] |
ஓரும் | ஓரும்ōrum, இடை. (part.) 1. எல்லாம்; all, altogether. 2. ஒர் அசைச்சொல் (குறள்.40);; poetic expletive “செயற்பால தோரும் அறனே” (குறள்.40);. [ஓர் → ஒரும். ஒரும் என்னும் சொல் ஒன்றுபட்ட அனைத்தும் அல்லது எல்லாம் எனப்பொருள் தந்து, அதே பொருளில் சொல்லின் பின்னடையாகும் இடைச்சொல்லாயிற்று. செயற்பா லதோரும் என்பதற்குச் செயற்பாலதெல்லாம் என்று பொருள்.] |
ஓரேருழவர் | ஓரேருழவர்ōrēruḻvar, பெ. (n.) ஒரே ஏர்க்காரர்; a man of single of plough. [ஒர்+ஏர்+உழவன்] |
ஓரை | ஓரை2ōrai, பெ. (n.) 1. நாண்மீன்மண்டலம்; sign of the Zodiac. “ஒரையுநாளுந் துறந்த லொழுக்கம்” (தொல்.பொருள்.135);. 2. ஒரு முழுத்தம்; division of time commencing with the rising of zodiacal sign. “மங்கலப் பெருங்கணி வகுத்த வோரையான்” (சீவக.2411);. 3. நேரம்; time, occasion, period. “விடி வோரையி லெழுந்து” (குருபரம்.115.பன்னீ.);. 4. இரண்டரை நாழிகை கொண்ட காலம்; an hour of 60 minutes. 5. விண்மீன் கூட்டம்; constellation. [ஓர் → ஓரை = ஓரிடத்தில் சேர்ந்த திரள், கூட்டம். ஓர் → ஓரை. (மு.தா.170.ஒ.மொ.358);.] “மறைந்த ஒழுக்கத்து ஓரையும் நாளும் துறந்த ஒழுக்கம் கிழவேற்கில்லை” (தொல்.கள.44); ஓரை = கோள்நிலை, தீயகோள்நிலைக்கு ஆயிற்று. இலத்தீன் மொழியில் வழங்கிய பன்னிரு ஓரைப்பெயர்களும் தமிழ்ப் பெயர்களின் மொழிபெ யர்ப்பாகவே யிருக்கின்றன. i. Aries (ram); ii. Taurus (bull);, iii. Gemini (twins);, iv. Cancer (crab);, v. Leo (lion); vi. Vergo (virgin);, vii. Libra (balance); viii. Seorpin (scorpion);, ix. Sagittarius (archer or bow);. x. Capricorn (the goat – horned = shark);. xi. Aguarius (wafer – bearer = pitcher);. Xii. Pisces (fish);. ஓரை3ōrai, பெ. (n.) புளிச்சாறு, எள் கலந்த சோறு வகை எள்ளோரை; boiled rice, general term used to indicate rice that is mixed up with other edibles such as tamarind, sesamum, cocoanut, etc. தெ. ஒரெமு. [உறை → ஓரை.] ஓரை5ōrai, பெ. (n.) கூகை வகை (வின்.);; a kind of owl. [ஓரி → ஓரை =முதிர்ந்தது. பெரியது.] ஓரை6ōrai, பெ. (n.) அணிகலன் (அக.நி.);; ornament. [ஓலி → ஓரி → ஓரை.] |
ஓரைப்பாவை | ஓரைப்பாவைōraippāvai, பெ. (n.) மகளிர் விளை யாட்டுப் பாவை (கலித்.82.உரை.);; doll used by girls in their plays. [ஓரை + பாவை. ஓரை = மகளிர் கூடியாடும் விளையாட்டு.] |
ஓரையயர்-தல் | ஓரையயர்-தல்ōraiyayartal, 2.செ.கு.வி. (v.i.) ஒரைப்பா வையை வைத்து மகளிர் விளையாடுதல்; to play with dolls. “மடக்குறு மாக்களோடோரை யயரும்” (கலித்.82,9); [ஓரை + அயர்.] |
ஓரையாயம் | ஓரையாயம்ōraiyāyam, பெ. (n.) பொம்மைகளை வைத்து விளையாடும் பாவையாடல் மகளிர்குழு; a group of giris at play. [ஓரை + ஆயம்.] |
ஓரொட்டு | ஓரொட்டுōroṭṭu, கு.வி.எ. (adv.) 1. முழுதும்; altogether by the lump, wholesale. 2. சராசரியாக (வின்.);; on an average, in general. [ஓர் + ஒட்டு.] |
ஓரொன்று | ஓரொன்றுōroṉṟu, பெ. (n.) ஒவ்வொன்று (சிறு பஞ்.27);; each one, one of each; one at a time; one for each ம. ஓரொன்று, ஓரொன்னு. [ஓர் + ஒன்று.] |
ஓரொருதாளி | ஓரொருதாளிōrorutāḷi, பெ. (n.) நெருஞ்சி; small caltrope. (சா.அக.);. [ஒர் → ஒரு + தாளி.] |
ஓரொற்றுவாரம் | ஓரொற்றுவாரம்ōroṟṟuvāram, பெ. (n.) ஒரு மாத்திரை பெற்று வருஞ் செய்யுள் (சிலப்.3,136,உரை.);; musical composition sung to a single beat, a variety of {}. [ஓர் + ஒற்று + வாரம்.] |
ஓரோடத்துக்கந்தரத்தனார் | ஓரோடத்துக்கந்தரத்தனார்ōrōṭattukkandarattaṉār, பெ. (n.) கடைச் சங்க மருவிய புலவர்; Sangam poet. (அபி.சிந்.);. [உரகடம் → ஓரோடம் + அத்து + கந்தரத்தன் + ஆர்.] |
ஓர் | ஓர்1ōrtal, 2.செ.குன்றாவி. (v.t.) 1. ஆய்ந்தறிதல்; to consider attentively, examine, investigate. “ஓரும் வையத்தியற்கை” (சீவக.888);. 2. அறிதல்; to know. (செ.அக.);. [ஒல் → ஒர் → ஓர் → ஓர்-தல் (வே.க.1௦7);.] ஓர்2ōrttal, 2.செ.குன்றாவி. (v.t.) 1. ஆராய்தல்; to consider. 2. தெரிந்தெடுத்தல்; to select, choose. “ஆயிரத் தோர்த்த விப்பத்தே” (தில்.திருவாய்.1.2.1);. 3. நினைத்தல்; to think regard. “வேள்வியோர்க் கும்மே யொருமுகம்” (திருமுரு.96);. 4. கூர்ந்து கேட் டல்; listen attentively “புலிப்புகர்ப்போத்தோர்க்கும்” (புறநா.157.12);. ம. ஓர். [ஒர்-தல் → ஓர்-த்தல்.] ஓர்3 __, பெ.எ. (adj.); ஓர் அசைநிலை (சிலப்.2,37, உரை.);; ‘a’, ‘an’, the form used before substantives beginning with vowels. ஓர் அரசன் – இடை. part an expletive. (செ.அக.);. [ஒல் → ஒன்று → ஒரு → ஓர்.] |
ஓர்கட்புள் | ஓர்கட்புள்ōrkaṭpuḷ, பெ. (n.) காகம். crow. [ஒர் + கண் + புள்.] |
ஓர்குடிமணாளன் | ஓர்குடிமணாளன்ōrkuḍimaṇāḷaṉ, பெ. (n.) ஓர்குடி யிற்கொண்டோன் பார்க்க;see {}. |
ஓர்குடியிற்கொண்டோன் | ஓர்குடியிற்கொண்டோன்ōrkuḍiyiṟkoṇḍōṉ, பெ. (n.) ஓர்ப்படியான் (சகலன்); (பிங்.);; husband of the wife’s sister. [ஓர் + குடியில் + கொண்டோன்.] |
ஓர்கை | ஓர்கைōrkai, பெ. (n.) யானை; elephant. “ஓர்கை யுரியான்” (கடம்பர்.உலா.364);. [ஓர்கை = யானை. ஒருகை (தும்பிக்கை); உடைமையின் ஓர்கை எனப்பட்டது.] |
ஓர்க்கோலை | ஓர்க்கோலைōrkālai, பெ. (n.) கடல்படு பொருட்க ளுள் ஒன்று; amber, one of the five kinds of kadal padu-tiraviyam. (products of the sea); அம்பர் என்றும் அழைக்கப்படும். [ஒருகா. ஒர்க்கு + ஓலை.] |
ஓர்சு | ஓர்சுōrcu, பெ. (n.) பொதுப்பணி முதலியவை மேற்பார்க்கும் மேற்பார்வையாளன்; overseer. |
ஓர்ச்சி | ஓர்ச்சி1ōrcci, பெ. (n.) 1. ஆராய்ச்சி; investigation, research. 2. அறிவு; knowledge, wisdom. “ஓர்ச்சி யின்பு ருவாகி” (வேதாரணி.வரன்.25);. 3. உணர்ச்சி; co- nsciousness, feeling. “ஓய்ந்த வோர்ச் சிவந் தெழுதலும்” (விநாயகபு.75,443);. 4. சூழ்வுரை, அறிவுரை; consu- ltation, rumination (செ.அக.);. ம. ஓர்ச்சி (நினைவு);. [ஓர் → ஓர்ச்சி.] ஓர்ச்சி2ōrccittal, 4.செ.கு.வி. (v.i.) நினைவூட்டு தல்; to cause, to remember, remind. ம. ஓர்ப்பிக்குக. [ஓர் → ஓர்ச்சி.] |
ஓர்பு | ஓர்புōrpu, பெ. (n.) ஆராய்கை (சங்.அக.);; consideration, reflection, research. [ஓர் → ஓர்ப்பு → ஓர்பு.] |
ஓர்ப்படி | ஓர்ப்படிōrppaḍi, பெ. (n.) ஓர்ப்படியாள் பார்க்க;see {}. |
ஓர்ப்படியாள் | ஓர்ப்படியாள்ōrppaḍiyāḷ, பெ. (n.) கணவனுடன் பிறந்தான் மனைவி; wife of the husband’s brother. [ஓர் + படி + ஆள். படி = வாசல். ஒருவாசலுக்குள் மூத்தவ ளோடு வாழ்பவள்.] |
ஓர்ப்பிலந்தை | ஓர்ப்பிலந்தைōrppilandai, பெ. (n.) காட்டிலந்தை; wild jujube. (சா.அக.);. [ஓர்ப்பு + இலந்தை.] |
ஓர்ப்பு | ஓர்ப்பு1ōrppu, பெ. (n.) ஆய்ந்துணர்கை (இறை.2,29);; investigation, research, careful consideration, one of the four kinds of {}. 2. தெளிவு (திவா.);; clear under-standing. 3. பொறை (திவா.);; patience, forbeara- nce. ம. ஓர்ப்பு;தெ. ஓர்பு. [ஓர்2 → ஓர்ப்பு.] |
ஓர்மம் | ஓர்மம்ōrmam, பெ. (n.) 1. மனத்திண்மை (யாழ்ப்.);; fortitude, courage, bravery. 2. சிந்தனை; reflection. 3. ஓர்மை பார்க்க;see {}. [ஓர்மி → ஓர்மம் (வே.க.107);.] |
ஓர்மி-த்தல் | ஓர்மி-த்தல்ōrmittal, 4.செ.கு.வி. (v.i.) மனந்திடப்படுதல் (வின்.);; to be courageous, daring, brave, valiant, adventurous. ம. ஓர்மிக்குக (நினைவுபடுத்துதல்);. [ஓர் → ஓர்மி → ஓர்மி-த்தல் (வே.க.107);.] |
ஓர்மிப்பு | ஓர்மிப்புōrmippu, பெ. (n.) ஓர்மம் பார்க்க;see {}. (ஆ.அக.);. [ஓர்மி → ஓர்மிப்பு.] |
ஓர்மை | ஓர்மைōrmai, பெ. (n.) 1. ஒற்றுமை; unity. 2. துணிவு; fortitude, bravery, intrepidity. 3. ஆரவாரம் (ஆடம்பரம்);; pomp; parade, as of a festival. [ஓர் → ஓர்மை (வே.க.107);.] |
ஓர்லோசுகட்டை | ஓர்லோசுகட்டைōrlōcugaṭṭai, பெ. (n.) ஓர்லோட்கட்டை பார்க்க; see orlot-kattai. |
ஓர்வம் | ஓர்வம்1ōrvam, பெ. (n.) ஒருபாற் சார்கை; partiality. “ஓர்வமே செய்யுமுலோபமே” (ஏலா.61);. [ஓரம் → ஓர்வம்.] ஓர்வம்2ōrvam, பெ. (n.) சுவர் கட்டும்பொழுது இரண்டு கற்கள் சேரும் இடம்; joining ends of two bricks (inlaying); (சேரநா.);. ம. ஓர்வ்வ. [ஓர் → ஓர்வம்.] |
ஓர்விதைப்பூடு | ஓர்விதைப்பூடுōrvidaippūṭu, பெ. (n.) ஒரே விதையை யுடைய பூடு; plant having but a single seed-lobe. (சா.அக.);. [ஓர் + விதை + பூ.] |
ஓர்வு | ஓர்வுōrvu, பெ. (n.) ஓர்ப்பு பார்க்க;see {}. |
ஓலக்கஅரசர் | ஓலக்கஅரசர்ōlakkaarasar, பெ. (n.) 1. அரிச்சந்திரன்; Harischandra. 2. நளன்; Nala. 3. முசுகுந்தன்; Musugu- nda. 4. காத்தவீரியன்;{}. 5. சிபி; Sibi. 6. பரதன்; Bharta. 7. இராமன்; Rama. 8. இரகு; Ragu. 9. யயாதி; Yayadi. 10. பகீரதன்; Bageeratha. 11. மாந்தாதா; Mandatha. 12. அனங்கன்; Ananga. 13. அரியணையில் வீற்றிருக்கும் அரசன்; king on the throne. [ஓலக்கம் + அரசர். ஓலக்கம் பார்க்க;see {}.] |
ஓலக்கங்கொடு-த்தல் | ஓலக்கங்கொடு-த்தல்ōlakkaṅgoḍuttal, 4.செ.கு.வி. (v.i.) அத்தாணியிலிருந்து காட்சிகொடுத்தல்; to grant an audience, as a king. [ஓலக்கம் + கொடு.] |
ஓலக்கச்சூளை | ஓலக்கச்சூளைōlakkaccūḷai, பெ. (n.) அத்தாணியில் தொண்டு செய்யும் பணிப்பெண்டிர்; servants at the audience hall. “உந்திநின்றா ருன்ற னோலக்கச் சூளைகள்” (தேவா.1041,10);. க. ஓலகதசூளெ. [ஓலக்கம் + சூளை. ஓலக்கம் = அரசனின் திருவோலக்க மண்ட பம். சூளை = நெற்றியில் தலைவகிடு வழியாகச் சூளாமணி என்னும் முத்துப் பதித்த அணிகலன் சூடிய நாட்டியப்பெண். கூத்தர் குழுவைச் சார்ந்த விறலி.] |
ஓலக்கமண்டபம் | ஓலக்கமண்டபம்ōlakkamaṇṭabam, பெ. (n.) அத் தாணி மண்டபம்; place of assembly, durbar hall, hall. “எம்பெருமா னோலக்க மண்டபத்துள்” (தாயு.எந்நாட். அருளியல்பு.10);. [ஓலக்கம் = மண்டபம். ஓலக்கம் பார்க்க;see {}.] |
ஓலக்கம் | ஓலக்கம்ōlakkam, பெ. (n.) 1. அத்தாணிக்காட்சி; assembly of state, audience, royal presence, durbar. “நாளோலக்க மருள” (திவ்.திருப்பள்ளி.9);. 2. அவைக் கூடம்; assembly hall. “அந்த வோலக்கந் தன்னி லருந்தவ முனிவ ரெல்லாம் வந்தனர்” (அரிச்.பு.வி வாக.37);. க. ஒலக; து. ஒலக;தெ. ஓலகமு. [ஓலகம் → ஓலக்கம்.] ஓலகம் = நாதசுரம் என்னும் விரிவாய் வங்கியம். இது மங்கல இன்னியமாகக் கருதப்படுகிறது. ஓலகம் முழங்க அரசனை வரவேற்கும் அத்தாணி மண்டபம் ஓலக்க மண்டபம் எனப்பட் டது. இன்றும் தெலுங்கு கருநாடக மாநிலங்களில் நாதகரத்தை ஓலகம் என்றும் ஓலகம் இசைப்பவரை ஓலகத்தார் என்றும் அழைப்பதைக் காணலாம். |
ஓலன் | ஓலன்ōlaṉ, பெ. (n.) குழம்புக் கூட்டு வகை; a kind of vegetable-dish. (செ.அக.);. ம. ஒலன். [ஒல் → ஒல் → ஒலன் (ஒன்று கூட்டியது);.] |
ஓலமிடு-தல் | ஓலமிடு-தல்ōlamiḍudal, 20.செ.கு.வி. (v.i.) 1. காப்பு வேண்டுதல்; to call for succour, cry for protection, appeal. “சிவனேசிவனேயென் றோலமிடினும்” (திரு வாச.7,5);. 2. சத்தமிடுதல்; to make a noise. “ஓலமிட் டிரியல் போக” (ஞான.பாயி.6,24);. ம. ஓலமிடுக. [ஒலம் + இடு.] |
ஓலம்படு-தல் | ஓலம்படு-தல்ōlambaḍudal, 20.செ.கு.வி. (v.i.) பிறரிடம் உதவி கேட்டு அழுது நின்று இரத்தல்; to beg weeping. [ஓலம் + படு.] |
ஓலம்போழ் | ஓலம்போழ்ōlambōḻ, பெ. (n.) வகிர்ந்த ஓலை; split leaf of the palmyra prepared for writing. “ஓலம் போழிற் பொறித்து” (விநாயகபு.3,3);. [ஓலை → ஒலம் + போழ். போழ் = போழ்ந்தது, கிழிந்தது.] |
ஓலாடு-தல் | ஓலாடு-தல்ōlāṭudal, 5.செ.கு.வி. (v.i.) முன்பின்னாக அசைதல், தாலாட்டுதல்; to move back and forth, rocking the cradle. க. ஒலாடு. [ஒல் + ஆடு – ஓலாடு. ஒல் = அசைவு. ஒசை, (ஓலம்);, ஓலாலம் பார்க்க;see {}.] |
ஓலாட்டு-தல் | ஓலாட்டு-தல்ōlāṭṭudal, 5.செ.கு.வி. (v.i.) தாலாட்டுதல் (யாழ்ப்.);; to lull a child, sing a lullaby. [ஒல் → ஓலாட்டு.] |
ஓலாலம் | ஓலாலம்ōlālam, பெ. (n.) தாலாட்டு; lullaby. [ஒல் + ஆலம். ஓலம் = ஓசை. ஆலுதல் = சுற்றுதல், தொடர்தல். ஓலாலுதல் = ஓலாடுதல்.] ஆலம், ஆரம் – சொல்லாக்க ஈறுகள், ஓலமிடல், இடையறாது ஓசை யெழுப்புதல், குழந்தையைத் துங்கச்செய்ய தாய் எழுப் பும் தொடர்ந்த ஓலம் அல்லது ஓசை ஒலாலம் எனப்பட்டது. ஓலாலம் பிற இந்திய மொழிகளில் லாலி எனவும் மேலையா ரிய மொழிகளில் lull, ullaby எனவும் மருவிற்று. lull என்னும் ஆங்கிலச் சொல்லுக்குத் தொட்டிலாட்டுதல் (to rock the cradle); என்னும் பொருளிருத்தல் காண்க. |
ஓலிடல் | ஓலிடல்ōliḍal, பெ. (n.) ஊளையிடுதல்; to hawl. [ஒல் + இடல்.] |
ஓலிடு-தல் | ஓலிடு-தல்ōliḍudal, 20.செ.கு.வி. (v.i.) ஓசையிடுதல்; to make a noise. “பணைவித மோலிட” (பாரத.மணி மான்.20);. க. ஒலிக. |
ஓலு-தல் | ஓலு-தல்ōludal, 5.செ.கு.வி. (v.i.) முழங்குதல்; to make noise. “ந்த்தோலும் வாரியன்ன” (மான்விடு.102);. [ஒல் → ஓல் → ஓலு.] |
ஓலுறு | ஓலுறு2ōluṟudal, 2.செ.கு.வி. (v.i.) ஒலிபொருந்து தல்; to be filled with sound, to resound. “ஒலுறுபெருக் கின்” (இரகு.நகர.42);. [ஒல் → ஒல் + உறு.] |
ஓலை | ஓலை1ōlai, பெ. (n.) 1. பனை, தென்னை முதலியவற் றனோலை (தொல்.பொருள்.641);; palm, leaf. 2. ஓலைமுடங்கல்; letter or any writing on a palmyra leaf. palmyra leaf on which something in written. 3. காதிலணியும் ஓலைச்சுருள்; rolled palm-leaf used as an ear ornament. 4. காதணி; ornament worn in the lobe of the ear, as of gold often set with precious stones. “பொன்செ யோலை யொருகாது” (தேவா.1180,10);. 5. ஓலைக்குடை; umbrella made of palm-leaf. “உறை பனி கதிர்போற்று மோலையன்” (கந்தபு.தவங்.2);. ம. ஒல; க. ஒலெ; கோத. ஒல்; துட. ஒல்; குல. ஒலெ;து. ஒலெ. [ஒல் = ஓசையிடுதல், ஒலியெழுப்புதல், அசைதல் ஓலாடு = அசைந்தாடு, ஓலம் = ஓசை. ஒலை = அசைந்து ஒலி எழுப்புவது.] ஓலை2ōlai, பெ. (n.) பேய்முன்னை மரம்; charcoal- tree. [ஒல் → ஓல் → ஓலை.] |
ஓலை யெழுத்தன் | ஓலை யெழுத்தன்ōlaiyeḻuttaṉ, பெ. (n.) எழுத்தர்; scrivener, accountant (சேரநா.);. ம. ஒலயெழுத்தன். [ஓலை + எழுத்தன்.] |
ஓலைகிழி-த்தல் | ஓலைகிழி-த்தல்ōlaigiḻittal, 4.செ.குன்றாவி. (v.t.) இறக்கச் செய்தல்; to bring about the death. (சா.அக.);. [ஒலை + கிழி. ஓலை = ஓலையில் எழுதப்படும் கணக்கு.] |
ஓலைகூறு-தல் | ஓலைகூறு-தல்ōlaiāṟudal, 5.செ.கு.வி. (v.i.) திருமண வறிக்கை வெளியிடல்; to publish the banns, (chr.);, notice in church of intended marriage. [ஓலை + கூறு.] |
ஓலைக்கணக்கர் | ஓலைக்கணக்கர்ōlaikkaṇakkar, பெ. (n.) 1. பள்ளி யிற்படிப்போர்; learners at school. “ஓலைக்கணக்க ரொலியடங்கு புன்செக்கர்” (நாலடி.397);. 2. புலவர்; scholar. (ஆ.அக.);. [ஓலை + கணக்கர்.] |
ஓலைக்கணாட்டு | ஓலைக்கணாட்டுōlaikkaṇāṭṭu, பெ. (n.) ஓலைத்தளிர்; tender leaf of palm trees. [ஓலைக்கண் → ஓலைக்கணாட்டு. ‘ஆட்டு’ சொல்லாக்க ஈறு.] |
ஓலைக்கண் | ஓலைக்கண்ōlaikkaṇ, பெ. (n.) 1. ஓலைச்சட்டத்தில் விழுந்துள்ள பதிவு அல்லது கீறல் (வின்.);; scallop or indentation of the palmyra-leaf. 2. ஓலைத் தளிர்; tender leaf of palm trees. [ஓலை + கண்.] |
ஓலைக்கதவு | ஓலைக்கதவுōlaikkadavu, பெ. (n.) ஓலையாலாகிய படல்; palm leaf screen, used as a door. [ஓலை + கதவு.] |
ஓலைக்காந்தல் | ஓலைக்காந்தல்ōlaikkāndal, பெ. (n.) ஓலையின் நெருப்புப் பொறி (வின்.);; cinder of palm-leaf, as burning, floating flakes; dry pieces of palm leaf. [ஓலை + காந்தல்.] |
ஓலைக்காரன் | ஓலைக்காரன்ōlaikkāraṉ, பெ. (n.) செய்தியறிவிப் போன்; messanger. ம. ஒலகார;க. ஒலெகார. [ஓலை + காரன்.] |
ஓலைக்கால் நண்டு | ஓலைக்கால் நண்டுōlaikkālnaṇṭu, பெ. (n.) ஒரு வகைக் கடல் நண்டு; a kind of sea-crab. (சா.அக.);. [ஓலை + கால் + நண்டு.] |
ஓலைக்கிணாட்டு | ஓலைக்கிணாட்டுōlaikkiṇāṭṭu, பெ. (n.) ஓலைச் சிறு துண்டு (யாழ்ப்.);; chip or small piece of the palmyra leaf. [ஓலை + கிணாட்டு. கிள் → கிள்ளாட்டு → கிண்ணாட்டு → கிணாட்டு.] |
ஓலைக்கிளிஞ்சில் | ஓலைக்கிளிஞ்சில்ōlaikkiḷiñjil, பெ. (n.) கிளிஞ்சில் வகை (வின்.);; flat chank like a palm-leaf. [ஓலை + கிளிஞ்சில்.] |
ஓலைக்குடை | ஓலைக்குடைōlaikkuḍai, பெ. (n.) மழையைத் தாங்கும்படி ஓலையால் முடையப்பட்ட கூடு; palm- leaf hood used as an umbrella. “மறைப்புழி ஓலைபோல மறைக்குவன்” (குறள்.பரி.மேற்.);. ம ஓலக்குட. [ஓலை + குடை.] |
ஓலைக்கூடு | ஓலைக்கூடுōlaikāṭu, பெ. (n.) ஓலைக்குடை (யாழ்.அக.);; palm-leaf umbrella. ம. ஒலக்குட. [ஓலை + கூடு.] |
ஓலைக்கூலம் | ஓலைக்கூலம்ōlaikālam, பெ. (n.) எழுத்திடுவதற் குரியதாகப் பக்குவம் செய்யப் பெற்று விற்பனை செய்யும் பனையோலைக்குரிய வரி; tax for palm leaves prepared for writing. [ஓலை + கூலம். ஓலை = பனையோலை. கூலம் = தவசமாகக் கொடுக்கப்படும் வரி.] |
ஓலைக்கொடி | ஓலைக்கொடிōlaikkoḍi, பெ. (n.) பறக்கவிடும் ஓலைப்பட்டம் (யாழ்ப்.);; kite made of palmyra leaf. [ஒலை + கொடி.] |
ஓலைக்கொம்பு | ஓலைக்கொம்புōlaikkombu, பெ. (n.) மாட்டுக்கொம் பின் குற்றவகை (மாட்டு.வா.);; defect in the horns of cattle. [ஓலை + கொம்பு.] |
ஓலைக்கோள் | ஓலைக்கோள்ōlaikāḷ, பெ. (n.) மடல் போக்குவரத்து (P.T.L);; correspondence, communication by letters. [ஓலை + கோள்.] |
ஓலைச்சக்கரம் | ஓலைச்சக்கரம்ōlaiccakkaram, பெ. (n.) தாளிப்பனை; talipot. (சா.அக.); [ஓலை + சக்கரம்.] |
ஓலைச்சரம் | ஓலைச்சரம்ōlaiccaram, பெ. (n.) ஒர் அணிகலன்; ornament. [ஓலை + சரம்.] |
ஓலைச்சிறகு | ஓலைச்சிறகுōlaicciṟagu, பெ. (n.) பனையோலை யின் பாதி (வின்.);; the half of palmyraleaf. [ஓலை + சிறகு.] |
ஓலைச்சுருள் | ஓலைச்சுருள்ōlaiccuruḷ, பெ. (n.) ஓலைமடல் (கடிதம்); (வின்.);: letter written on a palmyra leaf, rolled up and enclosed in a centirikkam. ம. ஒலச்சுருள். [ஓலை + சுருள்.] |
ஓலைச்சுவடி | ஓலைச்சுவடிōlaiccuvaḍi, பெ. (n.) 1. பனையோலை யில் எழுதிக் கோத்துக் கட்டிய பொத்தகம்; manuscript on palmyra leaf. 2 மீன்வகை (மதி.க.11,39);; a kind of fish. [ஓலை + சுவடி. சுவடித்தல் = இணைத்தல், சேர்த்தல், கோத்துக் கட்டுதல்.] |
ஓலைதீட்டல் | ஓலைதீட்டல்ōlaitīṭṭal, பெ. (n.) திருமுகம் வரைதல் (ஆ.அக.);; to write a letter on palmyra leaf. [ஓலை + தீட்டல்.] |
ஓலைதீட்டு-தல் | ஓலைதீட்டு-தல்ōlaidīṭṭudal, 5.செ.கு.வி. (v.i.) ஒலையி லெழுதுதல் (வின்.);; to write on palm leaf. [ஓலை + தீட்டு, தீட்டுதல் = வரைதல், எழுதுதல். தொன்முது தமிழர் ஓவிய எழுத்தைக் கையாண்டதால், தீட்டுதல், வரைதல் எழுதுதல் என்பன ஒவியம் வரைதலைக் குறித்தன.] |
ஓலைதீட்டும்படை | ஓலைதீட்டும்படைōlaitīḍḍumbaḍai, பெ. (n.) எழுத் தாணி (திவா.);; style. [ஓலை + தீட்டும் + படை. படை = கருவி, எழுத்தாணி.] |
ஓலைத்தூக்கு | ஓலைத்தூக்குōlaittūkku, பெ. (n.) ஓலையில் எழுதப் பட்ட பாமடல்; note written on a palmyra leaf by a poet and addressed to a chief or a person of wealth, setting out his (poets); many attainments and praying to gifts. “மன்னுடை மன்றத் தோலைத் துக்கினும்” (நன்.53);. [ஓலை + தூக்கு.] |
ஓலைநாயகன் | ஓலைநாயகன்ōlaināyagaṉ, பெ. (n.) சோழருடைய தலைமைச் செயலாளன் (insc.);; Chief Secretary in the time of the {}. [ஒலை + நாயகன். நயன் → நாயன் → நாயகன்.] |
ஓலைநாயகம் | ஓலைநாயகம்ōlaināyagam, பெ. (n.) ஓலைநாயகன் பார்க்க;see {}. [ஓலை + (நாயகன்); நாயகம்.] ஒலைநாயகன் 422 |
ஓலைநெல் | ஓலைநெல்ōlainel, பெ. (n.) நெல்வகை (A.);; a kind of paddy. [ஓலை + நெல். அகன்ற நெல்வகை.] |
ஓலைபோக்கு-தல் | ஓலைபோக்கு-தல்ōlaipōkkudal, 7.செ.கு.வி. (v.i.) ஓலையிற் செய்தியெழுதி யனுப்புதல் (கம்பரா.கார் முக.66);; to send a message written on a palmyra leaf. [ஓலை + போக்கு.] |
ஓலைப்பாசுரம் | ஓலைப்பாசுரம்ōlaippācuram, பெ. (n.) ஒலைப்பாயி ரம் பார்க்க;see {}. “வருக” என்னு மளவும் ஓலைப் பாசுரம்” (சீவக.2147,உரை.);. [ஓலை + (பாயிரம்); பாசுரம்.] |
ஓலைப்பாம்பு | ஓலைப்பாம்புōlaippāmbu, பெ.(n.) ஒருவகைப் பாம்பு; a kind of snake. ம. ஓலப்பாம்பு, ஒலச்கருளன். [ஓலை + பாம்பு. வயிறகன்ற பாம்பு.] |
ஓலைப்பாயிரம் | ஓலைப்பாயிரம்ōlaippāyiram, பெ. (n.) மடலில் எழுதப்படும் செய்தி; communication written on palmyra leaf. ஓலைப்பாயிரமு முதலாயின வெல்லாங் கொச்சகமாதற்கு இழுக்கென்னையெனின்” (தொல். பொருள்.461,உரை.);. [ஓலை + பாயிரம். பயிர்தல் = அழைத்தல். பயிர் → பாயிரம்.] |
ஓலைப்பால் | ஓலைப்பால்ōlaippāl, பெ. (n.) பனங்கள்; palmyra toddy. (சா.அக.);. [ஒலை + பால்.] |
ஓலைப்பிரண்டை | ஓலைப்பிரண்டைōlaippiraṇṭai, பெ. (n.) ஒர்வகைத் தட்டைப் பிரண்டை; a kind of flat adamant creeper of the species of vitex quadranger laris. (சா.அக.);. [ஓலை + பிரண்டை.] |
ஓலைப்பிள்ளை | ஓலைப்பிள்ளைōlaippiḷḷai, பெ. (n.) ஓலையினாற் செய்த பொம்மை; doll made of {}, dist. fr. {}. (சீலைப்பிள்ளை.);. [ஓலை + பிள்ளை.] |
ஓலைப்புறம் | ஓலைப்புறம்ōlaippuṟam, பெ. (n.) கட்டளை; commend, order. “ஒலைப்புறத்துச் செல்லாத நாடு”. (குருபரம்.10.பன்னீ.);. [ஓலை + புறம். ஒலைப்புறம் = ஓலையின்புறத்தே எழுதப்பட்ட கட்டளை.] |
ஓலைப்பூ | ஓலைப்பூōlaippū, பெ. (n.) தாழம்பூ; screwpine flower. “ஓலைப்பூவொ டுவகைமுத்துச் சோர.” (திருப்பு.445);. [ஓலை + பூ.] |
ஓலைமுகப்பாசுரம் | ஓலைமுகப்பாசுரம்ōlaimugappācuram, பெ. (n.) மடலில் (கடிதம்); தொடக்கத்தெழுதும் வக்கணை (சிலப்.13,87, உரை.);; prefatory address in a letter on a palmyra leaf. [ஓலை + முகம் + பாசுரம். பாயிரம் → பாசுரம்.] |
ஓலைமுத்திரை | ஓலைமுத்திரைōlaimuttirai, பெ. (n.) ஓலைமுகப்பிலி டும் முத்திரை (வின்.);; stamp imprinted on a palmyra- leaf document. [ஓலை + முத்திரை.] |
ஓலைமுரி | ஓலைமுரிōlaimuri, பெ. (n.) ஓலையின் செப்ப மின்மை (வின்.);; unevenness of a palm-leaf. [ஓலை + முரி.] |
ஓலைமுறி | ஓலைமுறிōlaimuṟi, பெ. (n.) ஓலைச்சிட்டு; memora- ndum on a palmyra leaf; chit. [ஓலை + முறி. முறி = இளந்தளிர், இளமடல், இளம் பனை யோலை.] |
ஓலைமூங்கில் | ஓலைமூங்கில்ōlaimūṅgil, பெ. (n.) மூங்கில் வகை (யாழ்.அக.);; a kind of flat bamboo. [ஓலை + மூங்கில்.] |
ஓலையாள் | ஓலையாள்ōlaiyāḷ, பெ. (n.) செய்திகொண்டு செல்ப வன் (வின்.);; messenger who carries letters written on a palmyra leaf. [ஓலை + ஆள்.] |
ஓலையாவணம் | ஓலையாவணம்ōlaiyāvaṇam, பெ. (n.) ஒலையில் எழுதிய பதிவுச் செய்தி; palm leaf document. (S.l.l. 120);. [ஓலை + ஆவணம்.] |
ஓலையெழுது-தல் | ஓலையெழுது-தல்ōlaiyeḻududal, 5.செ.கு.வி. (v.i.) 1. ஏடெழுதுதல்; to inscribe on a palmyra leaf. 2 கடிதம் அனுப்புதல்; to send a letter. (செ.அக.);. [ஓலை + எழுது.] ஓலையெழுது-தல்ōlaiyeḻududal, 5.செ.கு.வி. (v.i.) சீர்வரிசையை உறுதிப்படுத்தி சீட்டு எழுதுதல் (யாழ்.அக.);; to write a deed of gift as sridhana. [ஓலை + எழுது.] |
ஓலையெழுத்து | ஓலையெழுத்துōlaiyeḻuttu, பெ. (n.) எழுத்தர்பணி; office of clerk (l.M.P.N.A. 676);. [ஓலை + எழுத்து] |
ஓலைவரையன் | ஓலைவரையன்ōlaivaraiyaṉ, பெ. (n.) புலி, கடுவாய்; tiger. (சேரநா.);. ம. ஒலவரயன். [ஓலை + வரையன். ஓலை = பட்டையானது. வரை = கோடு.] |
ஓலைவாங்கு-தல் | ஓலைவாங்கு-தல்ōlaivāṅgudal, 7.செ.கு.வி. (v.i.) இறப் புச் செய்தியை ஏற்றல் (வின்.);; to die; lit, to receive the summons of death. [ஒலை + வாங்கு.] |
ஓலைவாசி-த்தல் | ஓலைவாசி-த்தல்ōlaivācittal, 4.செ.கு.வி. (v.i.) திருமண அறிக்கை வைத்தல்; to publish the banns. (Chr.);. [ஒலை + வாசி. வாயித்தல் → வாசித்தல்.] |
ஓலைவாரி | ஓலைவாரிōlaivāri, பெ. (n.) ஓலைசீவுங் கத்தி; knife used for trimming palmyra leaves. [ஓலை + வாரி.] |
ஓலைவார்-தல் | ஓலைவார்-தல்ōlaivārtal, 2.செ.கு.வி. (v.i.) எழுதுவ தற்கு உதவுமாறு ஒலைசீவுதல்; to trim a palmyra leaf for writing up on. [ஓலை + வார். வார்தல் = மெல்லச்சீவுதல்.] |
ஓலைவாலன் | ஓலைவாலன்ōlaivālaṉ, பெ. (n.) மீன்வகை (பறாளை பள்ளு.16);; a kind of fish. [ஓலை + வால் + அன்.] |
ஓலைவாளை | ஓலைவாளைōlaivāḷai, பெ. (n.) 1. வாளைமீன் வகை; cutlas fish, silvery, Trichiurus savala “ஓலை வாளைக்க ருவா டுண்டக்கால்” (பதார்த்த.926);. 2. சாவாளை மீன்; cutlas-fish, greyish, Trichiurus hanmela. ம. ஒலமதச்யம். [ஓலை + வாளை.] |
ஓலைவீடு | ஓலைவீடுōlaivīṭu, பெ. (n.) பனையோலையால் வேய்ந்த வீடு; house thatched over with palmyra leaves. தென்னை ஓலையால் வேய்ந்த வீடுமாம். [ஒவை2 + வீடு.] |
ஓலைவெட்டுப்பனை | ஓலைவெட்டுப்பனைōlaiveṭṭuppaṉai, பெ. (n.) ஓலையைத் தவிர வேறு ஒரு பயனையுந் தராத பனைவகை (G.Tn. D.l.307);; palmyra which has served no other purpose but that of providing leaves, one of the five {}. [ஓலை + வெட்டு + பனை.] |
ஓலைவேலி | ஓலைவேலிōlaivēli, பெ. (n.) பனையோலையாற் பின்னப்பட்ட வேலி (வின்.);; hedge, plaited with palm leaves. [ஓலை + வேலி.] |
ஓலோலப்படு-தல் | ஓலோலப்படு-தல்ōlōlappaḍudal, 20.செ.கு.வி. (v.i.) கண்ட இடத்தில் உதவிகேட்டுக் கிடைக்காமல் பெரி தும் துன்பப்படுதல்; to be driven from pillar to post. [ஓலம் + ஒலம் – ஓலோலம் + படுதல். ஓலம்படுதல் = உதவிகேட்டு இரந்துநிற்றல். இச்சொல் இக்காலத்தில் வோல்ப டுதல் எனத் திரிந்து விட்டது.] |
ஓலோலமென்றலை-தல் | ஓலோலமென்றலை-தல்ōlōlameṉṟalaidal, 4.செ.கு.வி (v.i.) கண்ட இடத்தில் உதவிகேட்டு அலைதல்; to go from one resource to another seeking help. [ஒலம் = புகலிடம் தேடும் இரக்கச்சொல், ஓலம், ஒலம் → ஓலோலம். இச்சொல் இக்காலத்தில் ‘லோலோ என்றலைதல்’ எனத் திரிந்துவிட்டது.] |
ஓல் | ஓல்1ōl, பெ. (n.) 1. குத்துதல், அசைதல்; piercing. moving 2. ஒலி; sound. “ஓலுறு பெருக்கின்” (இரகு.ந கர.42);. 3. தாலாட்டு; lullaby. “ஓலுடனாட்டப் பாலுட னுண்டு” (இறை.2,27);. 4. ஓலம்; walling. (செ.அக.);. [ஒல் → ஓல்.] ஓல்2ōl, இடை. (part.) ஒரு விளியுருபு; vocative ending. “சாத்தாவோல்” (வீரசோ.வேற்றுமைப்.8,உரை.);. [ஓ → ஓல் (விளிக்குறிப்பு); இது இக்காலத்து ஒல் → ஓய் எனத்திரிந்தது.] ஓல்3ōl, 14.செ.குன்றாவி. (v.t.) 1. குத்துதல்; to pierce. 2. துளையிடுதல்; to make hole. 3. புணர்தல்; to have intercourse. [உல் → ஒல் → ஓல்.] |
ஓளி | ஓளி1ōḷi, பெ. (n.) 1 ஒழுங்கு; continuous line, row. “மாளிகையோளி” (கம்பரா.மிதி.22);. 2. யானைக்கூ டம் (பிங்.);; elephant stall. 3. மணமகளுக்குத்தரப்ப டும் சீர்வரிசை; matrimonial gift given to the bride. க. ஒளி. [ஒல் → ஓல் → ஓளி.] ஓளி2ōḷi, பெ. (n.) யானை நீருண்னுமிடம்; place where elephants drink water. “பரவையோளி வாளேறு படநடாவி” (தக்கயாகப்.108);. க. ஒளி. [ஓளி2 – ஓளி1] |
ஓள்-தல் | ஓள்-தல்ōḷtal, 15.செ.கு.வி. (v.i.) ஆணும் பெண்ணும் கூடுதல், கலவுதல், புணர்தல்; to copulate. க. ஒள், [ஒல் → ஓல் → ஓள்.] |
ஓவர் | ஓவர்ōvar, பெ.(n.) 1. சித்திரகாரர்; painters, sculptors. 2. ஏத்தாளர்; bards, eulogists employed by princes to proclaim their titles and sing their praises. “ஓவரும் பாட” (சீவக.1844);. 3. கம்மாளர் (சூடா.);; smiths. [ஒவம் → ஓவர்.] |
ஓவல் | ஓவல்ōval, பெ. (n.) வருந்தல்; suffering (சா.அக.);. [ஒ → ஒவு + அல் – ஒவல். ஒ – இரக்கம் குறித்த ஒலிக்குறிப்புச் சொல். ஓவல் = துயருறுதல்.] |
ஓவாப்பிணி | ஓவாப்பிணிōvāppiṇi, பெ. (n.) தீராத நோய்; Incurable disease. “உறுபசியும் ஓவாப்பிணியும் செறுபகையும்” (குறள். 734); (சா.அக.);. [ஓ + ஆ (எ.ம.இ.நி.); = பிணி.] |
ஓவாமை | ஓவாமைōvāmai, பெ. (n.) ஒழியாமை; unceasing effort (ஆ.அக.);. [ஒ + ஆ + மை. ‘ஆ’ (எ.ம.இ.நி.);.] |
ஓவாயன் | ஓவாயன்ōvāyaṉ, பெ. (n.) உதடுசிதைந்த வாயுள்ள வன்; harelipped man. “ஓவாயன் கண்ணறைய னானா லும்” (நெல்விடு.269);. ம. ஓவாயன். [ஒறு + வாயன் – ஒறுவாயன் → ஒவாயன்.] |
ஓவி | ஓவிōvi, பெ. (n.) சித்திரம்; picture, painting. “ஒலிநல் லார்” (திவ்.பெரியதி.2, 8, 7);. [ஓவம் → ஓவி.] |
ஓவியகாயம் | ஓவியகாயம்ōviyakāyam, பெ.(n.) புலி; tiger, lit, picturesque body. “ஆவி செகுத்தன ரோவிய காயத் தினை யம்மா” (வரத.பாகவத.காரிந்தி.28);. [ஓவியம் + காயம். காயம் = உடம்பு.] |
ஓவியநூல் | ஓவியநூல்ōviyanūl, பெ. (n.) சித்திரநூல் (மணி.2,31);; treatisé on painting. [ஓவியம் + நூல்.] |
ஓவியன் | ஓவியன்ōviyaṉ, பெ. (n.) 1. சித்திரமெழுதுவோன்; painter. “ஓவிய னுள்ளத் துள்ளியது வியப்போன்” (மணி.5,7);. 2. படிமம் செய்பவன் (வின்.);; sculptor who fashions images of idols. ம. ஒவியர். [ஓவியம் → ஓவியன்.] |
ஓவியப்பேச்சு | ஓவியப்பேச்சுōviyappēccu, பெ. (n.) இனிய பேச்சு; sweet speech. [ஓவியம் + பேச்சு.] |
ஓவியம் | ஓவியம்ōviyam, பெ.(n) 1 சித்திரம்; picture, portrait. “கண்கவ ரோவியங் கண்டு” (மணி. 3.131);. 2. சித்தி ரத்தொழில்; art of painting. “ஓவியத்துறை கைபோய வொருவனை” (நைடத.அன்னத்தைக்கண்.6);. 3. அழகு, ஓவியமான பேச்சு; beauty, fineness, elegance in speech. 4. படிமம்; statue, pupper. (W.);. ம. ஒவியம். [ஓ – ஒவியம். (முதா.218);.] |
ஓவு | ஓவு1ōvu, பெ. (n.) கதவு; door. (ஆ.அக.);. [ஓ – ஓவு. ஓவு = நீக்கு, திற.] ஓவு3ōvudal, 7.செ.கு.வி. (v.i.) 1. நீங்குதல்; to remove. separate. “மலங்க ளெல்லா மோவின போது” (சி.சி.4.37);. 2. முடிதல்; to cease, terminate, become extinct. “கூப்பீ டோவிற்று” (ஈடு.2,9,1);. 5. செ.குன் றாவி. (v.t.); நீக்குதல்; to shun, avoid, give up. “ஓ ஒதல் வேண்டும்” (குறள்.653);. ம. ஓவுக. [ஒருவு → ஓவு. இனி, ஓவு-தல் ஓ-தல் எனத் தனிநெடு முதலாகியும் வினையடியாகும்.] ஓவு4ōvu, பெ.(n.) ஒழிகை; separation, removal, cessation. “ஒவில்செல்வமும்” (கந்தபு.சுக்கிரனுப.46);. [ஒருவு → ஓவு.] ஓவு5ōvudal, 7.செ.கு.வி. (v.i.) 1. இசைதல்; to consent 2. வருந்தல்; to suffer. (ஆ.அக.);. [ஒவ்வு → ஓவு.] |
ஓவெனல் | ஓவெனல்1ōveṉal, பெ. (n.) ஒரொலிக்குறிப்பு; sounding {}. “ஓவென வையகத் தோசைபோ யுயர்ந்ததே” (சீவக.1843);. [ஓ + எனல்.] ஓவெனல்2ōveṉal, பெ. (n.) முழுஇருட்டாதற் குறிப்பு; signifying absolute darkness. இருள் ஓவென்றிருந்தது (இராட்.);. [ஓ + எனல். ‘ஓ’ – அச்சக்குறிப்பு. இங்கு இருட்டைக்குறித்தது.] |
ஓவென்றவெளி | ஓவென்றவெளிōveṉṟaveḷi, பெ. (n.) பரந்த இடம் (யாழ்ப்.);; broad, open space. [ஒ + என்ற + வெளி.] |