செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை வெளியீடு
31 தொகுதி 12000 பக்கங்கள் கொண்ட பேரகரமுதலி


1

10838

2769

3111

538

3554

677

1093

620

189

1004

402

2
க்
1

8212
கா
2579
கி
564
கீ
222
கு
4598
கூ
780
கெ
615
கே
391
கை
1101
கொ
2417
கோ
1754
கௌ
110
ங்
1

2
ஙா
2
ஙி
1
ஙீ
1
ஙு
1
ஙூ
1
ஙெ
1
ஙே
1
ஙை
1
ஙொ
5
ஙோ
1
ஙௌ
1
ச்
1

5235
சா
1186
சி
2424
சீ
439
சு
1261
சூ
420
செ
1529
சே
470
சை
23
சொ
409
சோ
365
சௌ
1
ஞ்
1

15
ஞா
44
ஞி
3
ஞீ ஞு ஞூ ஞெ
34
ஞே
5
ஞை
2
ஞொ
3
ஞோ
2
ஞௌ
1
ட்
1

1
டா
1
டி
1
டீ
1
டு
1
டூ
1
டெ
2
டே
1
டை
1
டொ
1
டோ
1
டௌ
ண்
1

1
ணா
1
ணி
1
ணீ ணு
1
ணூ
1
ணெ
2
ணே
1
ணை
1
ணொ
1
ணோ
1
ணௌ
த்
3113
தா
1530
தி
2203
தீ
393
து
1238
தூ
411
தெ
694
தே
856
தை
39
தொ
878
தோ
459
தௌ
ந்
1

2789
நா
204
நி
1860
நீ
1161
நு
14
நூ
18
நெ
892
நே
318
நை
89
நொ
210
நோ
159
நௌ
2
ப்
1

4560
பா
1824
பி
492
பீ
25
பு
2224
பூ
1133
பெ
1064
பே
483
பை
127
பொ
1218
போ
478
பௌ
2
ம்
4760
மா
1422
மி
535
மீ
268
மு
3016
மூ
949
மெ
396
மே
751
மை
152
மொ
284
மோ
242
மௌ
ய்
1

119
யா
426
யி
1
யீ
1
யு
46
யூ
20
யெ
9
யே
1
யை
1
யொ
1
யோ
98
யௌ
1
ர்
87
ரா
107
ரி
11
ரீ
7
ரு
24
ரூ
20
ரெ
6
ரே
16
ரை
10
ரொ
8
ரோ
23
ரௌ
ல்
117
லா
44
லி
8
லீ
5
லு
8
லூ
3
லெ
13
லே
21
லை லொ
20
லோ
63
லௌ
3
வ்
1

3800
வா
1329
வி
1638
வீ
515
வு
1
வூ
1
வெ
2164
வே
834
வை
229
வொ
1
வோ
3
வௌ
ழ்
1

1
ழா
1
ழி
1
ழீ
1
ழு
6
ழூ
1
ழெ
1
ழே ழை ழொ ழோ
1
ழௌ
ள்
1

2
ளா
1
ளி
1
ளீ
1
ளு
1
ளூ
1
ளெ
2
ளே
1
ளை
1
ளொ
1
ளோ
1
ளௌ
ற்
1

1
றா
1
றி
1
றீ
1
று
1
றூ
1
றெ
2
றே
1
றை
1
றொ
1
றோ
1
றௌ
ன்
1

1
னா
1
னி
1
னீ
1
னு
1
னூ
1
னெ
2
னே
1
னை னொ
1
னோ
1
னௌ
தலைசொல் பொருள்

ஒ o,    தமிழ் வண்ணமாலையில் பத்தாம் உயிரெழுத்தா கிய அரை அங்காப்பு இதழ்குவியாப் பின்னண்ணத் தாழ் உயிர்க்குறில்; tenth letter and vowel of the Tami alphabet, the half-close back lax unrounded vowel in TamiI.

     [உ → ஒ.]

உகரச்சுட்டு ‘வேர்முதலானபோது வேரடித்திரிபுகளால் பெற்ற திரிபு வடிவமே ஒகரம். உகரவேர்முதற்பொருள்களை ஒகர வேர் முதல்களும் பெறும். ஆ, ஈ, ஊ எனும் நெடுஞ்சுட்டுகளே அஇஉ எனும் குறுஞ்கட்டுகளானவாறுபோல ஏகார ஓகார நெடில்கள் எகர ஒகரங்களாகக் குறுகவில்லை. எகர ஒகரங்கள் ஏகார ஓகாரங்களாக நீட்சியும் பெறவில்லை. இவற்றின் குறில் நெடில் தோற்றங்கள் ஒன்றற்கொன்று தொடர்பற்றவை.

அசையெழுத்துக்காலத் தொன்முது தமிழில் இருஉயிர்க்குறில் இணைந்து நெட்டுயிர் வடிவம் பெற்றதால் ஏகார ஓகாரங்கள் இ.அ – (ஏ); எனவும் உஅ- (ஓ); எனவும் எழுதப்பட்டன. ஈரெ ழுத்துக்கு ஒருவடிவம் தந்து நெடிலாக்கியபின் எகரஒகரக் குறிலெழுத்தை எழுதுவதற்குத் தனியெழுத்தைப் படைக்காமல் ஏகார ஓகார நெட்டெழுத்தின் மேல் மெய்யெழுத்தைப்போல் புள்ளி வைத்துக்குறிலாக்கினர். இதனாற்றான் தொல்காப்பியர்

     “மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல்” (தொல். எழுத்து.15);

     “எகர ஒகரத் தியற்கையு மற்றே” (தொல்.எழுத்து.16); என நூற்பா யாத்தார் என்க.

 ஒ1 ottal,    4.செ.குன்றாவி. (v.t.)

   1. போலுதல்; to resemble.

     “உறுப்பொத்தல் மக்களொப்பன்றால்” (குறள்.993);.

   2. சமமாதல்; to be equal.

ஒத்தாருமிக்கா ருமில்லாதவர் (உ.வ.);.

     [உல் → ஒல் + தல் – ஒத்தல்.]

 ஒ2 ottal,    4.செ.கு.வி. (v.i.)

   1. தகுதியாதல்;   10 be suited; to be consistent with, to be appropriate.

     “ஒப்பநாடி யத்தக வொறுத்தி” (புறநா.10,4);.

   2. இசைதல்; to be acceptable.

அவனுக்கு ஒத்த செய்தி.

   3. ஒழுக்கமுடைய ராதல்; to be of good character;

 to be well behaved.

     “ஒப்பார் மற்றெனைவர்” (சீவக.1543);.

   4. ஒற்றுமைப் படுதல்; to be harmonious, be in happy concord.

     ‘எத்தால் வாழலாம்; ஒத்தால் வாழலாம்.

   5. இல்லாத தொன்று இருந்தாற் போலுதல்; to appear as if it were.

     “கமலபாதம் வந்தென் கண்ணினுள்ளன வொக் கின்றதே” (திவ்.அமலனாதி.1);. (செ.அக.);.

   ம. ஒக்குக;   க. ஒர்பு, ஒப்பு;   கோத. ஒப்;   துட. உப்;   குட. ஒ;   து. ஒப்பியுனி;   தெ. ஒப்பு;குரு, ஒக்க்னா.

     [உல் → ஒல் + தல் – ஒத்தல். ஒல் → ஒத்து → ஒத்தல்.]

 ஒ3 ottal,    4.செ.கு.வி. (v.i.)

   விலகல்; to get aside.

     [உல் → ஒல் + தல் – ஒத்தல். ஒ.நோ. பொல் + தல் – பொத்தல், பொத்துதல்.]

 ஒ3 odal,    6.செ.கு.வி. (v.i.)

   6.செ.கு.வி. (v.i.);

   1. முளைத்தல்; to sprout.

   2. தோன்றுதல்; to originate.

   3. எழுதல்; to rise.

     [உ → ஊ → ஓ.]

 ஒ4 odal,    6.செ.கு.வி. (v.i.)

   1. உயர்தல், ஒங்குதல்; to become high, rise, go up.

   2 தொலைவு ஆதல்; to become distant.

     [உ → ஊ → ஓ.]

 ஒ10 o, பெ. (n.)

   1. சென்று தங்குகை; going and staying.

     “ஒவற விமைக்கும் … ஒளி” (திருமுரு.3);.

   2. மதகுநீர் தாங்கும் பலகை (தொல்.எழுத்.180.உரை.);; shutter or other means to stop the flow of water.

     [உய் → ஒய் → ஓ]

ஒஃகல்

 ஒஃகல் oḵkal, பெ. (n.)

   ஒதுங்கல் (ஆ.அக.);; keeping away from.

     [ஒல்கு → ஒஃகு → ஒஃகல்.]

ஒஃகு-தல்

ஒஃகு-தல் oḵkudal,    7.செ.கு.வி. (v.i.)

   1. பின்வாங்குதல்; to retreat, fall back.

     “ஏற்ற தெவ்வருக்கொஃகினன்” (கம்பரா.பள்ளிபடை.106);.

   2. குறைதல் (ஆ.அக.);; to diminish. (செ.அக.);.

     [ஒல் → ஒல்கு → ஒஃகு.]

ஒகணம்

 ஒகணம் ogaṇam, பெ. (n.)

   மூட்டுப் பூச்சி; bug (யாழ்.அக.);.

     [Skt. okana → த. ஓகணம்.]

ஒகணி

ஒகணி ogaṇi, பெ. (n.)

   1. பேன்; louse.

   2. மூட்டைப் பூச்சி; bug. (சா.அக.);.

     [உகணி → உகணை → ஒகணை → ஒகணி → ஓகணி, உகணி பார்க்க;see {}.]

ஒகம்

ஒகம்2 ogam, பெ. (n.)

   1. அடைக்கலம்; refuge.

   2. அறிவுரை; counsel.

   3. திரட்சி; condensation.

   4. வீடு; house (ஆ.அக.);.

ஓகம்3

__,

பெ. (n.);

   அடைக்கலங் குருவி; sparrow. (சா.அக.);.

     [புகம் → பொகம் → போகம் → ஓகம். புகலாங்குருவி பார்க்க;see {}.]

ஒகரம்

ஒகரம் ogaram, பெ. (n.)

   1. ‘ஒ’ என்னும் உயிரெழுத்து; vowel ‘ஒ’ of Tamil alphabet.

   2. ஓங்காரப்பறவை என்னும் மயில் (சூடா.);; name of the peacock from the similarity of form ‘ஒ’.

     [ஒ + கரம் – ஒகரம். ‘கரம்’ – எழுத்துச்சாரியை.]

தொன்முது காலத்தில் தமிழ் உருவெழுத்தாக எழுதப்பட்ட போது ஒகரம் மயிலின் வடிவமாக எழுதப்பட்டது. ஒலியல் என்னும் தோகை வடிவமாகவும் வரையப்பட்டது. அதுவே அசையெழுத்துக்காலத்தில் {} எனவும் {} எனவும் எழுதப்பட்டு மயிலையும் தோகையையும் குறித்தி ஒகர வரிவடி வாயின.

ஒகவனம்

 ஒகவனம் ogavaṉam, பெ. (n.)

ஒசீவனம் (யாழ்ப்.); பார்க்க; see osivanam.

     [Skt. upa-jivana → த. ஓசுவனம்.]

ஒக்க

ஒக்க okka, கு.வி.எ. (adv.)

   1. ஒருசேர; together;

 along with in company with.

     “ஒக்கத்தொழுகிற்றி ராகிற் கலியுக மொன்று மில்லையே” (தில் திருவாய் 5.2.10);.

   2. மிகு தியாக; plentifully, bountifully, numerously. ஒக்கக் கிடக்கிறது.

   3. சமமாக; equally.

     “பக்கமும் பிடருமொக் கமுட்டிகள் படப்பட” (பாரத.வேத்திரகீய.56);.

   4. ஒத்தி ருத்தல்; to be similar to.

     “கொக்கொக்க கூம்பும் பருவத்து” (குறள்.490);. (செ.அக.);.

   ம, ஒக்க;   குட. ஒக்க. ஒக்கசெ;   தெ. ஒகட;பிரா. ஒக.

     [ஒல் → ஒருங்கு → ஒருக்கு → ஒக்கு → ஒக்க.]

ஒக்கடி

ஒக்கடி1 okkaḍittal,    4.செ.கு.வி. (v.i.)

   தாளங்கொட் டுதல் (சீவக.156, உரை.);; to keep time either with hands or with cymbals.

     [ஒருங்கு → ஒருக்கு → ஒக்கு + அடி.]

 ஒக்கடி2 okkaḍittal,    4.செ.குன்றாவி. (v.t.)

   செப்பனி டுதல்; to repair, renovate.

     “திருவாபரணங்கள் ஒடிந்தது ஒக்கடிக்கிறதும்” (கோயிலொ.93);. (செ.அக.);.

     [ஒருங்கு → ஒருக்கு. ஒருக்கு + அடி – ஒருக்கடி → ஒக்கடி.]

ஒக்கட்டு

 ஒக்கட்டு okkaṭṭu, பெ. (n.)

   மாதர் கழுத்திலணியும் பாசிமணிக் கோவை; small string of beads, worn round the neck by women. (செ.அக.);.

     [உள் + கட்டு – உட்கட்டு → ஒக்கட்டு.]

ஒக்கநோக்கு-தல்

ஒக்கநோக்கு-தல் okkanōkkudal,    5.செ.குன்றாவி. (v.t.)

   சமமாகப் பார்த்தல்; to look at dispassionately, to treat impatially/

     “ஒக்க நோக்கினரல்லவ ரதனிலை யுணரார்” (கம்பரா.இரணிய.44);. (செ.அக.);.

     [ஒல் → ஒக்க + நோக்கு.]

ஒக்கப் பண்ணு-தல்

ஒக்கப் பண்ணு-தல் okkappaṇṇudal,    12.செ.குன்றாவி. (v.t.)

   செப்பனிடுதல்; to repair, renew. (செ.அக.);.;

ஒருங்கு → ஒருக்கு → ஒருக்க → ஒக்க + பண்ணு.]

ஒக்கப்பாடு-தல்

ஒக்கப்பாடு-தல் okkappāṭudal,    5.செ.கு.வி. (v.i.)

   பிறன் கூற்றுக்கு ஒத்துக் கூறுதல்; lit, to sing in unison, to cross the t’s and dot i’s of another with a view to please him;

 to say ditto. (செ.அக.);.

     [ஒல் → ஒக்க + பாடு.]

ஒக்கம்

ஒக்கம்1 okkam, பெ. (n.)

ஒமம் பார்க்க (மலை.);;see {}. (செ.அக.);

 ஒக்கம்2 okkam, பெ. (n.)

   1. ஊர் (பிங்.);; village.

   2. அற்பம் (அரு.நி.);; trifle.

   3. கரை (யாழ்.அக.);; shore, bank. (செ.அக.);.

     [ஒக்கல் → ஒக்கம் (ஊர்.); ஒல்கு → ஒல்கம் → ஒக்கம் (சிறுமை);. ஒரம் → ஒக்கம் → ஒக்கம் (கரை);.]

 ஒக்கம்3 okkam, பெ, (n.)

   1. அகலம்; breadth.

   2. பொலிவு; grandeur. (செ.அக.);.

     [ஒக்கம் → ஒக்கம் (அகலம்);.]

 ஒக்கம்4 okkam, பெ. (n.)

   இடை, இடுப்பு; the waist, hip, loins. (சேரநா.);.

ம. ஒக்கம்.

     [உக்கு → ஒக்கம்.]

ஒக்கரை

 ஒக்கரை okkarai, பெ. (n.)

   விலா (நாமதீப.);; side of the body. (செ.அக.);.

     [ஒக்கலை → ஒக்கரை.]

ஒக்கலி

ஒக்கலி1 okkalittal,    4.செ.கு.வி. (v.i.)

   1. ஆவலங் கொட்டுதல்; to shout in joy, hulla-baloo, as a mark of triumph.

     “பேய்கள் கூடி யொன்றினை யொன்றடித்து ஒக்கலித்து” (பதினொ.திருவாலங்காட்டு மூத்த.1.11);.

   2. உறவினரோடு கலந்து பேசுதல்; to converse freely, hold friendly communion with one’s relations. (W.);.

     [ஒக்கல் → ஒக்கலி.]

 ஒக்கலி2 okkalittal,    4.செ.கு.வி.

   1. இனத்தாரு டன் உறவாடுதல்; to encourage one’s class or community maintain them, give them medical aid, etc.

   2. ஒத்துப்போதல்; to become reconciled. (செ.அக.);.

   3. ஒப்பாதல்; to become equal.

     [ஒக்கல் → ஒக்கலி. (வே.க.111); (மு.தா.215);.]

ஒக்கலிடு-தல்

ஒக்கலிடு-தல் okkaliḍudal,    20.செ.கு.வி. (v.i.)

ஒக்கலி1 பார்க்க;see {}. (செ.அக.);.

     [ஒக்கல் → ஒக்கலிடு. (சு.வி.66);.]

ஒக்கலும்மக்களும்

 ஒக்கலும்மக்களும் okkalummakkaḷum, பெ. (n.)

   உறவினர்கள் அனைவரும்; all relatives.

     [ஒக்கல்+உம்+மக்கள்+உம்]

ஒக்கலை

ஒக்கலை okkalai,    பெ. (n) இடுப்பு; hip;

 side of the body.

     “ஒக்கலை வேண்டியழல்” (பழ.290);. (செ.அக.);.

     [ஒல்கு → ஒக்கு → ஒக்கல் → ஒக்கலை. ஒல்கு = சுருங்கு, ஒடுங்கு, ஒக்கலை = ஒடுங்கிய இடுப்பு.]

ஒக்கல்

ஒக்கல்1 okkal, பெ. (n.)

   1. சுற்றாத்தார்; relations, kinsfolk.

     “தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தான்” (குறள்,43);.

   2. குடும்பம்; family.

   3. குடியிருப்பு; settlement (செ.அக.);.

     [ஒல் = ஒத்தல், பொருந்துதல், கூடுதல், ஒல் → ஒல்க → ஒல்கல் → ஒக்கல்.]

 ஒக்கல்2 okkal, பெ. (n.)

   காளைகளைக்கொண்டு பிணையடித்துத் தவசமணிகளைப் பிரிக்கச் செய்தல்; driving oxen to trample upon sheaves of corn for threshing. (சேரநா.);.

   ம. ஒக்கல்;க. ஒக்கலதன (வேளாண்மை);.

     [உல் → உக்கு → ஒக்கு → ஒக்கல்.]

 ஒக்கல்3 okkal, பெ. (n.)

ஒக்கலை பார்க்க;see {}. (செ.அக.);.

ம. ஒக்கு.

     [ஒல் → ஒல்கு → ஒல்கல் → ஒக்கல்.]

ஒக்கல் போற்றல்

 ஒக்கல் போற்றல் okkalpōṟṟal, பெ. (n.)

   சுற்றத்தாரைப் போற்றுவதாகிய வேளாண்மாந்தரியல்பு (திவா.);; su-pporting or maintaining one’s relations, one of the qualities of the {}. (செ.அக.);.

     [ஒக்கல் + போற்றல்.]

ஒக்களித்தல்

ஒக்களித்தல் okkaḷittal, பெ. (n.)

   கக்கலுக்கு முந்திய வாயசைவு; inclination to vomit.

     [ ஒ → ஒக்களி. (மு.தா.6);.]

ஒக்காளம்

ஒக்காளம் okkāḷam, பெ. (n.)

   கக்கலுக்கு முந்திய வாயசைவு; retching, heaving, involuntary effort of the stomach in nausea. ‘உள்ளியை மோந்தால் எனக்கு ஒக்காளம் வரும்’. (உ.வ.);.

   ம. ஒக்கானம்;   க. ஒகரி, ஓகாள, ஒகரிகெ. ஒகரிகக, ஒகடிகெ;   து. ஓங்ககெ;தெ. ஒகர, ஓகிலி, ஒகரிதை, ஓகிலிதை.

     [ஒக்களி → ஒக்காளம் (த.வ.53);.]

ஒக்கிடு

ஒக்கிடு1 okkiḍudal,    18.செ.குன்றாவி. (v.t.)

   செப்பனி டுதல்; to repair. (செ.அக.);.

     [ஒக்கு + இடு.]

 ஒக்கிடு2 okkiḍudal,    18.செ.குன்றாவி. (v.t.)

   ஒழித்தல்; to ruin, to do away with. (செ.அக.);.

     [ஒக்கு + இடு.]

ஒக்கிலியன்

ஒக்கிலியன் okkiliyaṉ, பெ. (n.)

   தமிழ் நாட்டிற் குடியே றிய ஒரு மரபினர். கன்னட நாட்டார்; member of a caste of cultivators from the Kannada province who have settled in the districts of Madurai and Coimbatore. (செ.அக.);.

   ம, ஒக்கிலியன்;   க. ஒக்கலிக;   குட. ஒக்க (கூட்டுக் குடும்பம்);;து. ஒக்கெலு.

     [ஒக்கு2 → ஒக்கல் → ஒக்கலியன் → ஒக்கிலியன். (உழவன்.);.]

ஒக்கு

ஒக்கு1 okkudal,    5. செ.குன்றாவி. (v.t.)

   1. கொப்புளித் தல்; to gargle.

   2. பிற்பட விடுதல்; to leave behind. (செ.அக.);.

ம. ஒக்குக.

     [உல் → ஒல் → ஒக்கு = பொங்குதல், மேற்படுதல், வழிதல்.]

 ஒக்கு2 okkudal,    5.செ.குன்றாவி. (v.t.)

   1. உமுதல்; to till the land.

   2. குத்துதல், கழித்தல்; to pierce, dig.

க., து. உக்கு, ஒக்கு.

     [உல் → ஒல் → ஒக்கு = உட்செலுத்துதல், நிலத்தை எரால் உழுதல்.]

 ஒக்கு3 okkudal,    5.செ.குன்றாவி. (v.t.)

   அதரி திரிக் தல்;   ஏர்க்களத்தில் பிணையடித்துக் கதிரினின்று தவசம் பிரித்தல்; to drive oxen to trample upon sheaves of corn for threshing.

கம்பு ஒக்கினான் (இ.வ.);.

     [உகு → உக்கு → ஒக்கு = உருக்கச்செய்தல், உதிரச்செய்தல்.]

 ஒக்கு4 okkudal,    5.செ.குன்றாவி. (v.t.)

   1. சமப்படுத்து தல்; to equalize.

   2. செப்பனிடுதல்; to set right, repair.

   3. மூட்டுதல், தைத்தல்; to sew together two pieces of any material. (வின்.);.

     [உல் → ஒல் → ஒக்கு. உல் = பொருத்துதல்.]

ஒக்கூர்மாசாத்தனார்

 ஒக்கூர்மாசாத்தனார் okārmācāttaṉār, பெ. (n.)

   கடைக் கழகக்காலத் தமிழ்ப் புலவர்; poet of {} age.

     [ஒக்கூர் + மா + சாத்தன் + ஆர். ஒக்கூர் = உழவரூர், மாசாத்தன் = தரைவழி வாணிகக்குழுவின் தலைவன். ‘ஆர்’ உயர்வுப்பன்மையீறு.]

ஒக்கூர்மாசாத்தியார்

 ஒக்கூர்மாசாத்தியார் okārmācāttiyār, பெ. (n.)

   கடைக் கழகக் காலத் தமிழ்ப்புலவர்; poetess of sangam age.

     [ஒக்கூர் + மா + சாத்தி + ஆர். ஒக்கூர் = உழவரூர். மாசாத்தி தரைவழிவாணிகக் குழுத்தலைவனாகிய மாசாத்தனின் மனைவி. ‘ஆர்’ – உயர்வுப் பன்மையீறு.]

ஒக்கை

 ஒக்கை okkai, பெ. (n.)

   பாண்டிநாட்டிலுள்ள ஒக்கூரெ னுமொரு நகரம்; an other name for Okkur of Pandiya kingdom.

     [ஒக்கல் → ஒக்கை.]

ஒசி

ஒசி3 osidal,    2.செ.கு.வி. (v.i.)

   1. முறிதல் (பிங்.);; to break, become broken, as a stick.

   2. நுடங்குதல்; to bend under a weight, as the tender branch of a tree or the waist of a woman.

     “மாந்துண ரொசிய வேறி” (சூளா.இரத.44);.

   3. சாய்தல்; to lean, incline.

     “வாயருகு வந்தொசிந்து மறிய” (சீவக.595);.

   4. நாணுதல்; to be coy, bashful.

     “கண்ணரக்கி நோக்கா தொசிந்து” (சீவக. 2541);.

   5. வருந்துதல்; to suffer.

     “உருகு நுண்ணிடை

யொசியப் புல்லினாள்” (சீவக.989);.

   6. ஒய்தல் (திவா.);; to become tired or weary. (செ.அக.);.

     [ஒடி → ஒசி. (த.வ.72);.]

ஒசிந்தநோக்கு

ஒசிந்தநோக்கு osindanōkku, பெ. (n.)

   ஒதுங்கிப் பார்க்கும் பார்வை; side-glance.

     “உரையினர் பாட்டின ரொசிந்த நோக்கினர்” (சிலப்.1,55);. (செ.அக.);.

     [ஒசி → ஒசிந்த + நோக்கு.]

ஒசிப்பு

__,

பெ. (n.);

   1. முறிக்கை; act of breaking.

   2. எலும்பு முறிதல்; breaking of a bone, fracture. (சா.அக.);.

     [ஒசி → ஒசிப்பு.]

ஒசியல்

ஒசியல் osiyal, பெ. (n.)

   கிளை முறிக்கப்பட்ட மரம்; tree, a branch of which has been broken.

     “நிலம்படாஅ நாருடை யொசியலற்றே” (குறுந்.112); (செ.அக.);.

     [ஒசி + அல்.]

ஒசிவு

ஒசிவு osivu, பெ. (n.)

   1. அசைவு; waving.

   2. முறிவு; breaking. (ஆ.அக.);.

     [ஒசி + உ.]

ஒசீவனம்

 ஒசீவனம் ocīvaṉam, பெ. (n.)

   வாழ்வுத் தொகை (யாழ்ப்.);; support, livelihood alimony.

     [Skt. upa-jivana → த. ஒசீவனம்.]

ஒச்சட்டை

ஒச்சட்டை occaṭṭai, பெ. (n.)

ஒஞ்சட்டை பார்க்க (செ.அக.);;see {}.

     [உச்சட்டை → ஒச்சட்டை (வே.க.81);.]

ஒச்சந்தம்

ஒச்சந்தம் occandam, பெ. (n.)

உச்சந்தம் பார்க்க;see uccandam (செ.அக.);.

     [உச்சந்தம் → ஒச்சந்தம் (வே.க.65);.]

ஒச்சம்

ஒச்சம் occam, பெ. (n.)

   1. குறைபாடு; defect.

   2. மாட்டுச் சந்தைச் சொல்லாட்சி; a term used in cattle market.

     [உத்து-ஒத்து-ஒச்சம் உழவர் தரகர்வழக்கு மதுரை]

 ஒச்சம் occam, பெ. (n.)

   ஓசை, ஒலி; sound.

மணியோச்சம் கேட்கிறது:

     [ஓசை-ஒச்சம் (கொ.வ.);]

 ஒச்சம்1 occam, பெ. (n.)

   நாணம் (வின்.);; bashfulness;

 shyness. (செ.அக.);;

   ம. ஒச்சம்;   க. ஒச்சய;தெ. ஒச்செமு.

     [உஞ்சு → ஒஞ்சு → ஒச்சு → ஒச்சம்.]

 ஒச்சம்2 occam, பெ. (n.)

   குற்றம், குறைவு; delect, deficiency.

அவனுடைய வடிவத்தில் ஓர் ஒச்சமும் சொல்ல முடியாது. (செ.அக.);.

தெ. ஒச்செமு.

     [எச்சம் → ஒச்சம்.]

 ஒச்சம்3 occam, பெ. (n.)

   கவனித்தல் (யாழ்.அக.);; listening with attention. (செ.அக.);.

     [உல் → உத்து → ஒத்து → ஒசக → ஒக்சம்]

ஒச்சாயி

 ஒச்சாயி occāyi, பெ. (n.)

   முக்குலத்தோரால் வழிபடப்படும் பெண் தெய்வம்; female deity worshipped by certain sections of Mukkulattor.

     [உத்தம்-உச்சம்-ஒச்சம்+ஆயி (உயர்ந்த தெய்வம்);] முக்குலத்தோரிடையே ஒச்சனன், ஒச்சாண்டி ஒச்சித்தேவர் எனும் இயற்பெயர்கள் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

ஒச்சி

ஒச்சி1 occi, பெ. (n.)

ஒஞ்சி பார்க்க;see {}. (செ.அக.);.

 ஒச்சி2 occittal,    4.செ.கு.வி. (v.i.)

ஒஞ்சி பார்க்க (வின்.);;see {}. (செ.அக.);.

ஒச்சினி

 ஒச்சினி occiṉi, பெ. (n.)

   கருவின் ஒன்பதாம் மாதம் (சங்.அக.);; ninth month, as of pregnancy. (செ.அக.);.

     [ஒன்பது → ஒச்சு → ஒச்சினி.]

ஒச்சியஞ் சொல்(லு)-தல்

ஒச்சியஞ் சொல்(லு)-தல் occiyañjolludal,    13.செ.கு.வி. (v.i.)

   காமஇச்சையாய்ப் பேசுதல் (வின்.);; to speak libidinously. (செ.அக.);.

     [ஒச்சியம் + சொல்.]

ஒச்சியம்

ஒச்சியம் occiyam, பெ. (n.)

   1. கூச்சம்; bashfulness;

 shyness.

   2. இனியமொழி; amorous speech, tender, loving words.

   3. பழிப்பு; contempt. (செ.அக.);.

     [ஒச்சு → ஒச்சியம்.]

ஒச்சை

ஒச்சை1 occai, பெ. (n.)

   உற்றுக் கேட்கை; listening attentively, as to a distant sound.

     [உத்து → ஒத்து → ஒச்சு → ஒக்சை.]

 ஒச்சை2 occai, பெ. (n.)

   காந்தற்சோறு; charred food. (செ. அக.);.

     [உல் → உத்து → உச்சு → உச்சை → ஒச்சை.]

ஒச்சைக்கொடுத்துக்கேள்(ட்)-த(ட)ல்

ஒச்சைக்கொடுத்துக்கேள்(ட்)-த(ட)ல் occaikkoḍuttukāḷḍtaḍal,    11.செ.குன்றாவி. (v.t.)

   உற்றுக்கேட்டல்; to listen attentively. ஒச்சைகொடுத்துக் கேட்காதே (வின்.); (செ. அக.);.

/ஒச்சை_கொடுத்து கேள்.); 95ż# ošatti Qu. (n); e-urioj: greatness, excellence, superiority.

ம. ஒசத்தி.

     [உயர்த்தி → ஒசத்தி. (கொ.வ.); உயர்த்தி பார்க்க;see {}.

ஒசி1-த்தல்

__,

   2.செ.குன்றாவி. (v.t.);

   கொடுத்தல் (அக.நி.);; to give. (செ.அக.);.

ஒசி2-த்தல்

__,

   2.செ.குன்றாவி. (v.t.);

   1. முறித்தல்; to break, as a stick.

     “யானைபோர்க்கோ டொசித் தனவும்” (தில்.இயற்.1.27);.

   2. அசைத்தல்; to move, shake, wave. (வின்.); (செ.அக.);.

     [ஒடி → ஒசி.]

ஒஞ்சட்டை

ஒஞ்சட்டை oñjaṭṭai, பெ. (n.)

   ஒல்லி; being tall and lean. (செ.அக.);

     [உஞ்சட்டை → ஒஞ்சட்டை (வே.க.81);.]

ஒஞ்சட்டையன்

 ஒஞ்சட்டையன் oñjaṭṭaiyaṉ, பெ. (n.)

   ஒல்லியானவன்; tall, lean man (செ.அக.);

     [ஒஞ்சட்டை + அன்.]

ஒஞ்சரி

ஒஞ்சரி1 oñjarittal,    4.செ.குன்றாவி. (v.t.)

   கதவைச் சிறிது சாத்துதல்; to close the door slightly.

     “மதனசுந்தரி கதவை யொஞ்சரி”.. (செ.அக.);.

     [ஒஞ்சு → ஒஞ்சலி → ஒஞ்சரி.]

 ஒஞ்சரி2 oñjarittal,    4.செ.கு.வி. (v.i.)

   ஒருபக்கஞ் சார்தல் (வின்.);; to go sideways. (செ.அக.);.

 ஒஞ்சரி3 oñjarittal,    4.செ.கு.வி. (v.i.)

   ஒரு பக்கமாய்ச் சாய்தல்; to lie on one side.

     “இடது கைப்புறமாய் ஒஞ்சரித்துச் சயனிக்க வேண்டும்” (ஜீவப் பிரம்மைக்ய. பக்.634); (செ.அக.);.

     [ஒஞ்சு → ஒஞ்சலி → ஒஞ்சரி.]

ஒஞ்சரி தீர்ப்பு

 ஒஞ்சரி தீர்ப்பு oñjaritīrppu, பெ. (n.)

   ஒரு சார்பான தீர்ப்பு; partial;

 one-sided decision. (W.);. (செ.அக.);.

ஒஞ்சரி வழக்கு

 ஒஞ்சரி வழக்கு oñjarivaḻkku, பெ. (n.)

ஒஞ்சரி தீர்ப்பு பார்க்க;see {}. (செ.அக.);.

     [ஒஞ்சரி + வழக்கு.]

ஒஞ்சான்

ஒஞ்சான் oñjāṉ, பெ. (n.)

   மீன்வகை; a kind of fish.

     “கோளை யாள லொஞ்சான்” (குருகூர்ப்.7); (செ.அக.);.

ஒஞ்சி

ஒஞ்சி1 oñjittal,    4.செ.கு.வி. (v.i.)

   நாணுதல்; to feel abashed, to be shy.

ஒஞ்சித்துச் சாப்பிடாமல் விட்டு விட்டான் (வின்.); (செ.அக.);.

     [ஒஞ்சு (த.வி.); → ஒஞ்சி (பி.வி.); (வே.க.83);.]

 ஒஞ்சி2 oñjittal,    4.செ.கு.வி. (v.i.)

   மனத்தை யடக்கு தல் (யாழ்.அக.);; to control one’s mind.

     [ஒஞ்சு (த.வி.); → ஒஞ்சி (பி.வி.);.]

 ஒஞ்சி3 oñji, பெ. (n.)

   முலை; woman’s breast. (nurs.); (செ.அக.);.

     [மொஞ்சி → ஒஞ்சி.]

ஒஞ்சியழற்சி

 ஒஞ்சியழற்சி oñjiyaḻṟci, பெ. (n.)

   முலைக்காம் பழற்சி; inflammation of the nipple-thelalsia. (செ.அக.);.

     [மொஞ்சி → ஒஞ்சி + அழற்சி. முலை → மொஞ்சி → ஒஞ்சி (கொ.வ.);.]

ஒஞ்சிவலி

 ஒஞ்சிவலி oñjivali, பெ. (n.)

   முலைக்காம்பில் குத்தல்; pain in the region of the nipple –thelitis. (சா.அக.);.

     [ஒஞ்சி + வலி.]

ஒஞ்சு

ஒஞ்சு1 oñjudal,    5.செ.கு.வி. (v.i.)

   குறுகுதல், சுருங்கு தல்; to shorten, shrink.

     [உல் → ஒல் → ஒங்கு → ஒஞ்சு.]

 ஒஞ்சு2 oñjudal,    5.செ.கு.வி. (v.i.)

   அடங்குதல்; to subdue.

     [உல் → ஒல் → ஒங்கு → ஒஞ்சு.]

ஒட்ட

__,

கு.வி.எ. (adv.);

   1. அடியோடே; completely, to the very end.

வாலை யொட்ட அறுத்துவிட்டான்.

   2. நெருங்க; near to, intimately.

   3. இறுக; closely, tightly.

     ‘ஒட்டக்கட்டு’.

   4. போல(தொல்.பொருள்.290);; similar to, as. (செ.அக.);.

     [ஒடு → ஒட்டு +அ.]

ஒடதீசம்

 ஒடதீசம் oḍatīcam, பெ. (n.)

   கருப்பூரம்; campher (சவ்.அக.);.

     [Skt. osadhi-ja → த. ஒடதீசம்.]

ஒடி

ஒடி1 oḍidal,    4.செ.கு.வி. (v.i.)

   1. முறிதல்; break, as a stick, a branch, a rib;

 to break off, snap;

     “விலா வொடிந்து” (பாரத.வேத்திரகீய.61);.

   2. கெடுதல்; to be broken in strength, ruined.

     “ஒடியாப் பருவத்து” (கலித்.93,25);.

   3. இடையறுதல்; to cease for a time, break off discontinue, suspend.

     “ஒடியா முறையின் மடிவிலையாகி” (புறநா.29); (செ.அக.);.

   ம. ஒடியுக;   க. ஒடி. உடி;   கோத. ஒட்வ்;   துட. வட்;   குட. ஒடெ;   து. ஒடியுனி, ஒடெயுனி;   தெ. ஒடியு;   கொலா. ஒட்;   நா. நாட், நாக்;   கட. ஒட்;   கூ, ஒச, ஒக்ப்;   பர். ஒட்;கோண். வோடானா..

     [ஒடு → ஒடி.]

 ஒடி2 oḍittal,    4. செ.குன்றாவி. (v.t.)

   1. முறித்தல்; to break, short off;

 to snap, as a branch, a stick, to cause to fracture, as a limb of the body.

     “தோள்களைத் தமது கைகளாலொடித்தன ராமென” (கந்தபு. திக்குவிசய.110);.

   2. அழித்தல்; to destroy, devastate

     “காள கூடமொடிக்கு முலகங்களை” (தேவா.614,10); (செ.அக.);.

     [ஒடு → ஒடி.]

 ஒடி3 oḍittal,    4.செ.கு.வி. (v.i.)

   ஒளிசெய்தல்; to sparkle, shine.

     “ஒடிக்கச் சுடர்கால் குருமணி” (வாயுசங். மகளிருற்.3); (செ.அக.);.

     [ஒள் → ஒளி → ஒடி.]

 ஒடி4 oḍi, பெ. (n.)

   1. கவண் (யாழ்.அக.);; brick-bat..

   2. வலை; net

   3. மரத்துண்டு; log of a tree.

   4. காட்டுப்புதல்; bush. (ஆ.அக..);.

     [ஒடு → ஒடி.]

 ஒடி3 oḍi, பெ. (n.)

   மலைநெல் (யாழ்.அக.);; wild paddy.

     [ஒட்டு → ஓட்டு → ஓட்டி → ஓடி. ஒட்டு = மலைமுகடு. ஓடி = மலைமுகட்டில் விளையும் நெல்.]

ஒடிகை

 ஒடிகை oḍigai, பெ. (n.)

   காட்டு நெல்; wild paddy (யாழ்.அக.);.

     [Skt. odika → த. ஒடிகை.]

ஒடிசல்

ஒடிசல்1 oḍisal, பெ. (n.)

   முறிந்தது; broken piece. (செ.அக.);.

   ம. ஒடிச்சில்;   க. ஒடகு, ஒடக;   துட. விட்ய;   கோத. ஒட்;   குட. ஒடவெ;   து. ஒடக;தெ. ஒடு.

     [ஒடி + அல் – ஒடியல் → ஒடிசல்.]

 ஒடிசல்2 oḍisal, பெ. (n.)

   ஒல்லியாயிருப்பவ-ன்-ள்; thin or slender person. (செ.அக.);.

     [ஒடி + அல் – ஒடியல் → ஒடிசல்.]

ஒடிசிறகு

 ஒடிசிறகு oḍisiṟagu, பெ. (n.)

   ஒரு சிறிய பறவை; a kind of bird. (சேரநா.);.

ம. ஒடிசிறகு.

     [ஒடி + சிறகு.]

ஒடிசில்

 ஒடிசில் oḍisil, பெ. (n.)

   கவண் (பிங்.);; brick-bat. (செ.அக.);.

தெ. வடிசெல: ம. ஒடிசில்.

     [ஒடி + சில் – ஒடிசில்.]

ஒடிபு

ஒடிபு oḍibu, பெ. (n.)

   இடைமுறிகை; breaking off in the middle;

 leaving unfinished.

     “ஒடிபொன்று துறை

யன்றி முடிபொன்று துறையில்லை” (சேதுபு.பாலோ.10); (செ.அக.);.

     [ஒடி → ஒடிபு.]

ஒடியன்

 ஒடியன் oḍiyaṉ, பெ. (n.)

   ஆமை; tortoise. (சா.அக.);.

     [ஒட்டியன் → ஒடியன்.]

ஒடியற்கிழங்கு

 ஒடியற்கிழங்கு oḍiyaṟkiḻṅgu, பெ. (n.)

   பனங்கிழங்கு; palmyra root. (சா.அக.);.

     [ஒடியல் + கிழங்கு.]

ஒடியற்படவு

 ஒடியற்படவு oḍiyaṟpaḍavu, பெ. (n.)

   பக்கம் அல்லது விளிம்பு முறிந்த தோணி (வின்.);; boat broken on the gunwale or edge. (செ.அக.);.

     [ஒடியல் + (படகு); படவு.]

ஒடியல்

ஒடியல் oḍiyal, பெ. (n.)

   1. முறிகை (வின்.);; breaking, facturing.

   2. பனங்கிழங்கின் காய்ந்த பிளவு (யாழ்ப்.);; split tender palmyra roots dried and used as food. (செ.அக.);.

     [ஒடி → ஒடியல்.]

ஒடியல்மா

 ஒடியல்மா oḍiyalmā, பெ. (n.)

   பனங்கிழங்கின் மாவு (யாழ்ப்.);; flour made of the palmyra root.

     [ஒடியல் + (மாவு); மா.]

ஒடியல்வால்

 ஒடியல்வால் oḍiyalvāl, பெ. (n.)

   காய்ந்த பனங்கிழங் கின் நுனி (வின்.);; end of a dried palmyra root.

ஒடியல் வா லொடிக்க (வின்.); (செ. அக.);.

     [ஒடியல் + வால்.]

ஒடியிடை

 ஒடியிடை oḍiyiḍai, பெ. (n.)

   ஒடுங்கிய இடுப்பு; narrow waist. (சா.அக.);.

     [ஒடி + இடை.]

ஒடியெறி-தல்

ஒடியெறி-தல் oḍiyeṟidal,    2. செ.குன்றாவி. (v.t.)

   1. காட்டுப் புதர்களை வெட்டி யெறிதல்; to cut down a forest thicket while hunting.

     “நெறியினை யொடியெறி கிற் பவரொத்து” (கலிங்.411,புது.);.

   2. மரக்கொம்பைப் பாதி குறைத்தல்; to snap or break, as a short branch that it might hang down within easy reach of the flock.

     “ஒடி யெறிந்தவர்வயின்” (கலித்.68);.

   3. குற்றுயிராக்கு தல்; to beat within an inch of a person’s life.

     “கண்ணழகாலேயாயிற்று இவரை ஒடியெறிந்தது” (ஈடு.3,4,2); (செ.அக.);.

     [ஒடி + எறி.]

ஒடிவான்

ஒடிவான் oḍivāṉ, பெ. (n.)

   அற்பன்; wretch.

     “இந்த ஒடிவான்களுக் கெல்லாம் நான் பயப்படுவேனா” (பிர தாப.விலா.104); (செ.அக.);.

     [ஒடி + ஆன்.]

ஒடிவு

ஒடிவு oḍivu, பெ. (n.)

   1. முறிகை; breaking, fracturing.

   2. கெடுகை; decaying, becoming damaged.

     “ஓடிவி லியமாதி சம்பத்தி யுள்ளோனாகி” (சூத.ஞானயோ.வானப் பிரத்த.3);.

   3. குறைவு; decreasing, diminution.

     “ஒடிவில் பொற்கிழி நல்கி” (திருவிளை.இரசவா.10);.

   4. அழித் தல் (சங்காரம்.);; periodical annihilation, destruction of the universe.

     “முதல் கெடலொடிவிடை” (திவ். திருவாய்.1,33);.

   5. தவிர்வு; cessatior.

     “ஒடி விலை வெறாயிரம்” (சீவக.76); (செ.அக.);.

   ம. ஒடிவு;   க. ஒடக, ஒடெ;   கோத. ஒட்;   துட, விட்ய;   குட. ஒடெவெ;   து. ஒடகு;தெ. ஒடபி.

     [ஒடி → ஒடிவு.]

ஒடு

ஒடு1 oḍu, பெ. (n.)

   1. நிலப்பாலை; round-leaved discous featherfoil.

     “ஒடுமரக் கிளவி” (தொல்.எழுத்.. 262);.

   2. முதுபுண் (சீவக.2881,உரை.);; festering sore, spreading abscess.

   3. ஒடுக்கட்டி பார்க்க;see {}. (செ.அக.);. [ஒது → ஒடு.]

 ஒடு2 oḍu, இடை. (part)

   1. மூன்றாம் வேற்றுமை யுருபு (தொல்.சொல்.74);;   2. எண்ணுப் பொருளில் வரும் இடைச்சொல்(நன்.428);; connecti- ve particle. (செ.அக..);.

   ம. ஒடு;   து. ட. ட;   தெ. தோடு;   க. ஒடம்;   பட. ஓட;பிரா. துட். அட்.

     [ஒல் → ஒள் → ஒடு.]

 ஒடு3 oḍu, பெ. (n.)

   வளைவு, நெளிவு; bend, bruise

     [உடு → ஒடு (மு.தா.266.சு.வி.69);.]

ஒடுகு

ஒடுகு oḍugu, பெ. (ո.) ஒடு1 பார்க்க;see odu1 (செ.அக.).

ஒடுக்க மதிப்புரவு

 ஒடுக்க மதிப்புரவு oḍukkamadippuravu, பெ. (n.)

   விழா முடிவில் கோயில் அதிகாரிக்குச் செய்யும் மதிப்புரவு; honours rendered at the close of a festival to the trustees of a temple. (Loc.); (செ.அக.);.

ஒடுக்க வணக்கம்

 ஒடுக்க வணக்கம் oḍukkavaṇakkam, பெ. (n.)

   அடங்கி வழிபடுகை (வின்.);; deferential behaviour, reverential submission. (செ.அக.);.

     [ஒடுக்கம் + வணக்கம்.]

ஒடுக்கட்டி

 ஒடுக்கட்டி oḍukkaḍḍi, பெ. (n.)

   அக்குட்புண்; boil in the armpit. (colloq.); (செ.அக.);.

   ம. ஒடிக்குரு;   க. ஒடிசெ;   து. ஒடி;தெ. ஒடிசெகட்ட. வடிசெகட்ட.

     [ஒடு + கட்டி.]

ஒடுக்கத்தம்பிரான்

 ஒடுக்கத்தம்பிரான் oḍukkattambirāṉ, பெ. (n.)

   சிவனி யத் திருமடத்தின் அகப்பணி பார்க்குந் தம்பிரான்; ascetic who functions as a private secretary to the head of a {} mutt. (Loc.); (செ.அக.);.

     [ஒடுக்கம் + தம்பிரான்.]

ஒடுக்கநாடி

 ஒடுக்கநாடி oḍukkanāḍi, பெ. (n.)

   தாக்குண்ட நாடி; oppressed pulse. (சா.அக.);.

     [ஒடுக்கம் + நாடி.]

ஒடுக்கம்

ஒடுக்கம்1 oḍukkam, பெ. (n.)

   1. குறுக்கம்; narrowness;

 closeness.

   2. அடக்கம்; self-restraint, self-control, se-if-mastery.

     “ஒடுக்கமு மற்றுள குணமும்” (ஞானவா.சி கித்.225);.

   3. சுருங்கை; reduction, contraction.

     “போந் திடை யொடுக்க முறலால்” (தாயு.சித்தர்கண.9);.

   4. பதுக்கம்; biding one’s time.

     “ஊக்க முடையானொடுக் கம்” (குறள்.486);.

   5. தனிமையான இடம்; place of seclusion;

 retired sport.

   6. மறைவிடம்; place of concea- Iment.

     “கண்மாறாடவ ரொடுக்க மொற்றி” (மதுரைக். 642);.

   7. மெய்யறிவு நிலைக்காக (ஞானகிருத்தியங்க ளுக்காக); ஒடுங்கியிருக்கை; retreat, retirement for spiritual exercises.

   8. ஒன்றிலடங்குகை; involution, as of the elements one into another, absorption, dissolution, disappearance, as of salt in water.

     “உமையோ விறைவர் பாகத் தொடுக்கம்” (தனிப்பா.i,112,56);.

   9. சிறிது சிறிதாகக் குறைந்தொடுங்குகை; gradual sinking, reduciton step by step, as of circumstances, of the powers of the body.

   10. முடிவு; end, close, termination.

     “ஒடுக்கங் கூறார்… முழுதுணர்ந்தோரே” (சிலப்.1,18);.

   11. மந்தணம் (இரகசியம்);; secret (செ.அக.);.

ம. ஒடுக்கம்.

     [ஒடு → ஒடுக்கு + அம்.]

 ஒடுக்கம்2 oḍukkam, பெ. (n.)

   1. புழுக்கம்; sultriness.

   2. இடைஞ்சல் (யாழ்.அக.);; trouble, distress. (செ. அக.);.

     [உடு → ஒடு → ஒடுக்கம்.]

 ஒடுக்கம்3 oḍukkam, பெ. (n.)

   வழிபாடு (யாழ்.அக.);; worship. (செ.அக.);.

     [ஒடு → ஒடுக்கம்.]

ஒடுக்கான்

 ஒடுக்கான் oḍukkāṉ, பெ.(.n )

   ஓணான்; common lizard.

மறுவ ஓடக்கான், ஓனான்

     [ஒடு-ஒடுக்கான்]

ஒடுக்கிக்கட்டு-தல்

ஒடுக்கிக்கட்டு-தல் oḍukkikkaḍḍudal,    5.செ.குன்றாவி. (v.t.)

   1. நெருக்கிக் கட்டுதல்; to wrap closely;

 to bind tightly. to tuck up and fasten behind, as the skirts.

   2. ஓலைப் பெட்டி முதலியவற்றின் விளிம்புகட்டுதல் (வின்.);; to bind the hem, as of a palmyra-leaf basket or fan.

   3. சிறுகக் கட்டுதல்; to build within a small extent of space. (செ.அக.);.

     [ஒடுக்கி + கட்டு.]

ஒடுக்கிடம்

ஒடுக்கிடம் oḍukkiḍam, பெ. (n.)

   1. மறைவிடம்; secret place.

   2. மூலை; comer.

   3. நெருக்கமானவிடம்; narrow place. (செ.அக.);.

     [ஒடுக்கு + இடம்.]

ஒடுக்கு

ஒடுக்கு1 oḍukkudal,    5.செ.குன்றாவி. (v.t.)

   1. அடக்கு தல்; to subjugate;

 to bring down, as another’s pride;

 to keep down, suppress, subdue.

பகைவரை ஒடுக்கி விட்டான்.

   2. வருத்துதல்; to cause distress, as cold or dew.

குளிர் மிகவும் ஒடுக்குகிறது.

   3. ஒன்றச் (லயிக் கச்); செய்தல்; to dissolve, as the elements, to cause, to merge one in another, to cause to destroy as the world, at the close of an age.

   4. செலவு முதலியன குறைத்தல்; to reduce or retrench, as expenses.

   5. உடம்பு சிறுகுதல்; to grow thin or lean, as the body.

   6. சுருக்குதல்; to thrust within a shorter compass;

 to epitomize.

     “ஒடுக்கி யொடுக்கிச் சொன்னாலும் ராமன் கீர்த்தி” (இராமநா.கிஷ்கிந்.3);.

   7. கருவூலத்தில் சேர்த் தல்; to remit or lay up, as in to a treasury, to deposit or garner, as in a storehouse.

     “தம் பண்டாரத்தி லடைவுற வொடுக்கி” (பெரியபு.குங்கிலிய.13);.

   8. கீழ்ப்படுத்து தல்; to restrain, subdue.

     “அடிக்குடில் ஒருத்தரும் வழாமை யொடுக்கினன்” (திருவாச.3,161);.

   9. திருடு தல்; to rob.

     “நாணும் நிறையுமான ஒடுக்கு மாட்டைப் பாரித்துக் கொண்டு (ஈடு.5,3.9); (செ.அக.);.

   ம. ஒடுக்குக;   க. உரிகிடு;தெ. ஒடுக்கின்க.

     [ஒடுங்கு → ஒடுக்கு.]

 ஒடுக்கு2 oḍukkudal,    5.செ.குன்றாவி. (v.t.)

   முடிவுபெ றச்செய்தல்; to close down, to terminate. (செ.அக.);.

     [ஒடு → ஒடுக்கு.]

 ஒடுக்கு3 oḍukku, பெ. (n.)

   1. அடக்கம்; contraction, compression.

   2. இடுக்குமூலை (வின்.);; corner, narrow strip of space.

   3. ஒடுக்கமாயிருப்பது; that which is narrow, of little breadth.

ஒடுக்குப் பாதை.

   4. கலங்களின் அடுக்கு; dent or depression in a metal utensil.

குடம் ஒடுக்கு விழுந்து போயிற்று.

   5. தொடைச்சந்து; groin. (செ.அக.);.

     [ஒடு → ஒடுக்கு (வே.க.84);.]

 ஒடுக்கு4 oḍukku, பெ. (n.)

   1. உணவு (புது.கல்.);; food.

   2. பணஞ்செலுத்துகை; payment ({}.); (செ.அக.);.

     [ஒடு → ஒடுக்கு.]

ஒடுக்குச்சீட்டு

 ஒடுக்குச்சீட்டு oḍukkuccīḍḍu, பெ. (n.)

   செலுத்திய வர்க்குக் கொடுக்கும் பற்றுச்சிட்டு (வின்.);; receipt given by the recipient acknowledging the money paid. (செ.அக.);.

     [ஒடுக்கு + சீட்டு.]

ஒடுக்குத்துண்டு

 ஒடுக்குத்துண்டு oḍukkuttuṇḍu, பெ. (n.)

ஒடுக்குச் சீட்டு பார்க்க;see {}. (செ.அக.);.

ஒடுக்குப்படி

 ஒடுக்குப்படி oḍukkuppaḍi, பெ. (n.)

   ஒரு பழையவரி; ancient tax. (Insc.); (செ.அக.);.

     [ஒடுக்கு + படி.]

ஒடுக்குமருந்து

 ஒடுக்குமருந்து oḍukkumarundu, பெ. (n.)

   பருத்த உடம்பை யொடுக்கிப் பழைய நிலைக்குக் கொண்டு வருவதற்குக் கொள்ளும் மருந்து; medicine which reduces the body and brings it to the normal size. (சா.அக.);.

     [ஒடுக்கு + மருந்து.]

ஒடுக்குமாடு

ஒடுக்குமாடு oḍukkumāḍu, பெ. (n.)

   கொள்ளைப் பொருள்; plundered property, booty,

     “ஒடுக்கு மாட் டைப் பாரித்துக் கொண்டு” (ஈடு.5,3,9); (செ.அக.);.

     [ஒடுக்கு + மாடு. மாடு = செல்வம்.]

ஒடுக்குமுறை

 ஒடுக்குமுறை oṭukkumuṟai, பெ. (n.)

   கண்டித்தொடுக்குகை; repressive measure.

     [ஒடுக்கு+முறை]

ஒடுக்குவாகை

ஒடுக்குவாகை oḍukkuvākai, பெ. (n.)

   1. வெண் வாகை; small leaved white sirissa – albizzia procera (alata);.

   2. பன்றிவாகை; bastard rose wood. (சா.அக.);.

     [ஒடுக்கு + வாகை.]

ஒடுக்குவாய்

ஒடுக்குவாய் oḍukkuvāy, பெ. (n.)

   1. கோணல்வாய் (வின்.);; wry mouth;

 crooked mouth.

   2. சிறுகிய வாய்; small mouth, as of a vessel. (செ.அக.);.

     [ஒடுக்கு + வாய்.]

ஒடுக்கெடு-த்தல்

ஒடுக்கெடு-த்தல் oḍukkeḍuttal,    4.செ.குன்றாவி. (v.t.)

   நெளிவேடுத்தல்; to remove a dent, smooth out the dented surface of a metal utensil. (செ.அக.);.

     [ஒடுக்கு + எடு.]

ஒடுங்க

ஒடுங்க oḍuṅga,    இடை. (part) உவமஉருபு (தொல்.பொ ருள்.290); adverbial word of comparison.

     [ஒடு → ஒடுங்க. ஒடு = ஒட்டுதல், பொருந்துதல்.]

ஒடுங்கல்

ஒடுங்கல்1 oḍuṅgal, பெ. (n.)

   கட்டுப்பாடு, தடை; obstacle, impediment. (செ.அக.);.

     [ஒடு → ஒடுங்கு + அல்.]

 ஒடுங்கல்2 oḍuṅgal, பெ. (n.)

   1. கீழ்ப்படிதல்; obeying.

   2. சுருங்கல்; shrinking.

   3. பதுங்கல்; hiding.

     [ஒடு → ஒடுங்கு + அல்.]

ஒடுங்கி

ஒடுங்கி oḍuṅgi, பெ. (n.)

   தன் உறுப்புகளை உள்ளொடுக்கும் இயல்புள்ள ஆமை; lit. that which contracts, tortoise.

     “ஒடுங்கி யோடு” (பாலவா.306); (செ. அக.);.

     [ஒடு → ஒடுங்கி (வே.க.84);.]

ஒடுங்கியோடு

 ஒடுங்கியோடு oḍuṅgiyōḍu, பெ. (n.)

   ஆமையோடு; tortoise shell. (சா.அக.);.

     [ஒடுங்கி + ஒடு.]

ஒடுங்கு-தல்

ஒடுங்கு-தல் oḍuṅgudal,    7.செ.கு.வி. (v.i.)

   1. அடங்குதல்; to be restrained, as the senses or the desires;

 to calm down;

 to become tranquil.

     “என்னிதயமு மொடுங்க வில்லை” (தாயு.ஆனந்தமா.9);

   2. குறைதல்; to become reduced;

 to grow less;

     “ஊனொடுங்க வீணொ டுங்கும்”.

   3. சுருங்குதல்; to shrink, shrivel.

   4. ஒதுங்குதல்; to respectfully slide on to one side, as when meeting a superior, to move to a side.

     “மேலை யோன் புடைதனி லொடுங்கியே” (கந்தபு.தாரகன் வதை.164);.

   5. மறைந்திருத்தல்; to be concealed;

 hidden.

     “தொழுத கையுள்ளும் படையொடுங்கும்” (குறள். 828);.

   6. கீழ்ப்படிதல்; to be subservient.

அவன் அவனிடத்து ஒடுங்கியிருக்கின்றான்.

   7. சோம்புதல்; to be lazy, inactive.

     “ஒடுங்கா வுள்ளத் தோம்பா வீகை” (புறநா.8,4);.

   8. குவிதல்; to close, as the petals of the lotus flower.

     “தாமரையின் றடம்போதொடுங்க” (திவ்.இயற்.திருவிருத்.76);.

   9. அமைதல்; to cease, as noise, bustle, to be quiet, silent.

ஊர் ஒடுங்கிவிட்டது.

   10. சோர்தல்; to be weary, exhausted, to sink. உடல் ஒடுங்கி விட்டது.

   11. ஒன்றுதல்; to become dissolved. involved one within another, as the elements, worlds, till all is absorbed in the great infinite. காரியங்கள் காரணத்தில் ஒடுங்கும்.

   12. ஒளி மங்குதல் (வின்.);; to grow dim, as light. (சா.அக.);.

   ம. ஒடுங்ஙுக;   க. உடுகு, உடகு;   கோத. ஒட்க்;   துட. வீட்க்;   து. ஒடுங்கெடு;   தெ. உடுகு;   கொலா, ஊட்ப்;   கூ. யும்ப்;   குரு. ஒடெக்னா;மால். ஒட்கெ.

     [ஒடு → ஒடுங்கு.]

ஒடுங்குமேனி

 ஒடுங்குமேனி oḍuṅgumēṉi, பெ. (n.)

   இளைக்கு முடம்பு; emaciated body. (சா.அக.);.

     [ஒடுங்கு + மேனி.]

ஒடுதடங்கல்

 ஒடுதடங்கல் oḍudaḍaṅgal, பெ. (n.)

   நெளிவு (வின்.);; crook, bend, flexure. (செ.அக.);.

     [ஒடு + தடங்கல்.]

ஒடுதலாம்

 ஒடுதலாம் oḍudalām, பெ. (n.)

   புதினா; mint –menthage- nus. (சா.அக.);.

     [ஒடு → ஒடுதல் → ஒடுதலை → ஒடுதலாம்.]

ஒடுத்தங்கு-தல்

ஒடுத்தங்கு-தல் oḍuddaṅgudal,    7.செ.கு.வி. (v.i.)

   புண் ணிற் சீழ்த்தங்குதல் (வின்.);; to remain unremoved, as pus in a boil. (செ.அக.);.

     [ஒடு + தங்கு.]

ஒடுநில்-தல்

ஒடுநில்-தல் oḍuniltal,    14.செ.குன்றாவி. (v.t.)

   பருவிற் சீழ்த் தங்கல்; to remain unremoved, as pus in a pimple.

     [ஒடு + நில்.]

ஒடுப்பை

ஒடுப்பை oḍuppai, பெ. (n.)

ஒடு1 பார்க்க;see odu1. (செ. அக.);.

ஒடுளகம்

 ஒடுளகம் oḍuḷagam, பெ. (n.)

   குடைவேல்; umbrella thorn, babool. (சா.அக.);.

     [ஒடுளம் + அகம்.]

ஒடுவடக்கி

ஒடுவடக்கி oḍuvaḍakki, பெ. (n.)

   1. குப்பைமேனி; Indian acalypha.

   2. திராய் (மலை.);; a profusely bra- nching prostrate herb.

   3. பெருந்தும்பை (சித்.அக.);; large species of white dead nettle. (செ.அக.);.

     [ஒடு + அடக்கி.]

ஒடுவன்

ஒடுவன் oḍuvaṉ, பெ. (n.)

ஒடு1 பார்க்க;see odu1 (செ.அக.);.

ஒடுவு

 ஒடுவு oḍuvu, பெ. (n.)

   புண் புரை; sinus in a sore. (சா.அக.);.

     [ஒடு → ஒடுவு.]

ஒடுவெண்ணெய்

 ஒடுவெண்ணெய் oḍuveṇīey, பெ. (n.)

   புண்ணுக் கிடும் ஒருவகையெண்ணெய் (வின்.);; oil applied to cure a boil or eruption. (செ.அக.);.

     [ஒடு + எண்ணெய்.]

ஒடுவை

ஒடுவை oḍuvai, பெ. (n.)

ஒடு1 பார்க்க;see {}.

     “தான்றியு மொடுவையும் … ஒடுங்கி” (மணிமே.6,80);. (செ.அக.);.

     [ஒடு → ஒடுவை.]

ஒடுவைப்புண்

 ஒடுவைப்புண் oḍuvaippuṇ, பெ. (n.)

   மேல்வாயைப் பற்றி வரும் புண்; ulcer or a wound in the {}. (சா.அக.);.

     [ஒடுவை + புண்.]

ஒடை

ஒடை oḍai, பெ. (n.)

உடை5 பார்க்க;see udai.5 (செ.அக.);.

ஒடைச்சி

ஒடைச்சி oḍaicci, பெ. (n.)

ஒடு1- 1(ட); பார்க்க;see odu1 -1. (செ.அக.);.

ஒட்டகக்கோழி

 ஒட்டகக்கோழி oṭṭagagāḻi, பெ. (n.)

   நெருப்புக்கோழி; ostrich. (சேரநா.);.

ம. ஒட்டகக்கோழி.

     [ஒட்டகம் + கோழி.]

ஒட்டகப் பறவை

 ஒட்டகப் பறவை oṭṭagappaṟavai, பெ. (n.)

   கழுத்து நீண்ட பறவை. அதாவது கொக்கு, நெருப்புக்கோழி முதலியன; birds with long necks like crane, ostrich etc. (சா.அக.);.

     [ஒட்டகம் + பறவை.]

ஒட்டகப் பாரை

 ஒட்டகப் பாரை oṭṭagappārai, பெ. (n.)

   ஒட்டாம்பாரை மீன்; horse mackerel. (செ.அக.);.

     [ஒட்டகம் + பாரை.]

ஒட்டகம்

ஒட்டகம் oṭṭagam, பெ. (n.)

   பாலைவனப் பயணத்திற்கு தவும் நீண்டநாள் உண்ணாதிருக்கும் ஒரு விலங்கு (தொல்.பொருள்.573);; camel, camelus dromedaries. (செ.அக.);.

   ம. ஒட்டகா;   கொர. வண்டி;   கை. வாண்டி;   க. ஒண்டெ;   துட. வொட்டி;   பட. வொட்ட;   து. வொண்ட;   தெ. ஒண்டெ;   கோண். ஊட்டு;   கொண். லோட்டி;   கூ. ஓடெ;   குரு. உண்ட;   மால். உடே. Pkt. ottaga; Pali. ஒட்ட். Skt {}.

     [ஒட்டு → ஒட்டகம். ஒட்டு = பட்டினி, ஒட்டகம் = பட்டினி கிடக்கவல்ல விலங்கு.]

ஒட்டகை

ஒட்டகை oṭṭagai, பெ. (n.)

ஒட்டகம் பார்க்க (திருநெல். பு.விட்டுணு.25);;see {}. (செ.அக.);.

     [ஒட்டு → ஒட்டகம் → ஒட்டகை.]

ஒட்டக்காய்

ஒட்டக்காய் oṭṭakkāy, பெ. (n.)

   1. ஆணின்விதை; testicle.

   2. குதிரை ஒட்டக்காய், குதிரைப்பிடுக்கன் என்னும் மரம்; a tree.

க. உட்டகாய், வெட்டகாய்.

     [உட்டை → ஒட்டை + காய் – ஒட்டைக்காய் → ஒட்டக்காய். உருண்டை → உண்டை → உட்டை.]

ஒட்டக்கூத்தர்

ஒட்டக்கூத்தர் oṭṭakāttar, பெ. (n.)

   பிற்காலச் சோழ ரவையில் விளங்கிய ஒரு பெரும்புலவர்; a great poet in the {} court, who flourished about the 12th c.

     [ஒட்டு + கூத்தர் – ஒட்டுக் கூத்தர் → ஒட்டக்கூத்தர். ஒட்டு ஆணை, சூள், பந்தயம். பலர்முன் ஒட்டேற்று (சூளுரைத்துப்); பாடிவெல்லும் கூத்தன். புலவர், அரசரால் பெரிது மதிக்கப்பட்ட தால் உயர்வுப் பன்மையீறு ‘அர்’ சேர்ந்து கூத்தன் கூத்தர் ஆயிற்று. இவரியற்றியன, ஈட்டியெழுபது, மூவருலா, தக்கயா கப்பரணி, இராமாயண உத்தரகாண்டம், பிறர் பாதிமுடித்த செய்யுளை, ஒட்டப்பாடி முடிக்கும் திறமையால், ஒட்டக்கூத்தர் எனப்பட்டார் என்பது பொருந்துவதன்று. ஒட்டப்பாடும் திறன் பலர்க்கும் கைவந்த கலை, குளுரைத்துப் பாடி முடிப்பதே அரிய திறன்.]

ஒட்டங்காய்ப்புல்

 ஒட்டங்காய்ப்புல் oṭṭaṅgāyppul, பெ. (n.)

   ஆடையி லொட்டும் ஒருவகைப் புல்; a kind of grass with prickly seeds which stick to the clothes (J.);. (செ.அக.);.

     [ஒட்டும் + காய் + புல்.]

ஒட்டங்கி

 ஒட்டங்கி oṭṭaṅgi, பெ. (n.)

   உலையாணிக்கோல்(C.E.M.);; tool of metal-workers;

 beak-iron.

     [ஒட்டு → ஒட்டங்கி. ஒட்டுதல் = தொடுதல்.]

ஒட்டச்சி

 ஒட்டச்சி oṭṭacci, பெ. (n.)

   ஒட்டர் குடிப்பெண்; woman of the ottan caste. (செ.அக.);.

     [ஒட்டரம் + அத்தி – ஒட்டரத்தி → ஒட்டத்தி → ஒட்டச்சி. ஒட்டரம் = ஒரிசா.]

ஒட்டடஞ்சாகுபடி

ஒட்டடஞ்சாகுபடி oḍḍaḍañjākubaḍi, பெ. (n.)

   ஒட்டடை நெற்பயிர் உண்டாக்கற்குரிய வேளாண் முறை (G.Tj.D. 1.95);; method of cultivation in which the {} paddy is raised.

     [ஒட்டன் + சாகுபடி. ஒட்டன் = ஒட்டடைநெல். ஆகுவழி → ஆகுவடி → சாகுவடி → சாகுபடி.]

ஒட்டடை

ஒட்டடை1 oḍḍaḍai, பெ. (n.)

   1. நூலாம்படை; spider’s web and dust;

 cob-web.

   2. சம்பாநெல் வகை; a variety of {} paddy cultivated in the Thanjavur district and maturing in eight months. (செ.அக.);.

   3. மெல்லிய சுட்டப்பம்; a thin rice cake. (சா.அக.);.

     [ஒட்டு + அடை. ஒட்டு = மெல்லியது.]

 ஒட்டடை2 oḍḍaḍai, பெ. (n.)

   பொலிதூற்றி அளப்பதற்கு ஏந்தான நிலை; condition of being ready for measure- ment, as of harvested paddy. (Madu.); (செ.அக.);.

     [ஒட்டு + அடை – ஒட்டடை. ஒட்டு = பொட்டு, பதர். ஒட்டடை = ஒட்டும் பதரும் சேர்ந்தது.]

ஒட்டணி

ஒட்டணி oṭṭaṇi, பெ. (n.)

   உவமையால் பொருளைப் பெறவைக்கும் அணி (தண்டி.51);;     [ஒட்டு + அணி – ஒட்டணி, பிறிதுமொழிதல் அணி என்றும் சொல்லப்படும்.]

ஒட்டத்தி

 ஒட்டத்தி oṭṭatti, பெ. (n.)

ஒட்டுத்துத்தி பார்க்க (மலை.);;see {}. (செ.அக.);.

ஒட்டன்

ஒட்டன்1 oṭṭaṉ, பெ. (n.)

   ஒட்டர (ஒரிசா); நாட்டிலிருந்து வந்த பணியாளன் அல்லது தொழிலாளி; a worker or a labourer originally belongs to Orissa state. (செ.அக.);

   ம. ஒட்டன்;   தெ. ஒட்டெ வாடு;க. ஒட்ட.

     [ஒட்டரம் → ஒட்டான் → ஒட்டன்.]

 ஒட்டன்2 oṭṭaṉ, பெ. (n.)

   நெல்வகை; variety of paddy cultivated in the Thanjavur district and maturing in six and a half months. (செ.அக.);.

     [ஒட்டு → ஒட்டன்.]

ஒட்டப்பம்

 ஒட்டப்பம் oṭṭappam, பெ. (n.)

   தோசை; pan-cake. (செ.அக.);.

     [ஒட்டு + அப்பம் – ஒட்டப்பம் – ஒட்டப்பம்.]

ஒட்டப்பிடி-த்தல்

ஒட்டப்பிடி-த்தல் oḍḍappiḍittal,    4.செ.குன்றாவி. (v.t.)

   1. இழுத்துப்பிடித்தல்; to hold fast or tight, as the reins of a horse.

   2. இழுத்துப் பிடித்தல்; to stretch hard as in measuring cloth. (W.);.

   3. வலுக்கட்டாயம் செய்தல், தொல்லை செய்தல்; to apply pressure to, to compel. (Loc.); (செ.அக.);.

     [ஒட்டு → ஒட்ட + பிடி.]

ஒட்டப்போடு-தல்

ஒட்டப்போடு-தல் oṭṭappōṭudal,    19.செ.குன்றாவி. (v.t.)

   1. தன்னைத் தானே பட்டினி போடுதல்; to starve one’s self.

   2. பட்டினி கிடக்கச் செய்தல்; to make a patient fast to cure his disease;

 to put a person, on short commons for disciplinary purposes. (W.);. (செ.அக.);.

     [ஒட்டு → ஒட்ட + போடு.]

ஒட்டமொட்டு-தல்

ஒட்டமொட்டு-தல் oṭṭamoṭṭudal,    5.செ.குன்றாவி. (v.t.)

   பந்தயம் போடுதல்; to wager. (செ.அக.);.

     [ஒட்டம் + ஒட்டு.]

ஒட்டம்

ஒட்டம்1 oṭṭam, பெ. (n.)

   1. பந்தயம்; wager, stake;

     “ஒட்டம் யாவுநீ கொடுக்க” (பாரத.சூது.172);.

   2. வெட்டளவு காட்ட வைக்குந் திடர்; conical mass of earth left out by pit or tank diggers to show the depth excavated (W.);. (செ.அக.);.

     [ஒட்டு + அம் – ஒட்டம்.]

 ஒட்டம்2 oṭṭam, பெ. (n.)

ஒட்டரம் பார்க்க;see {}. (செ. அக.(.

 ஒட்டம்3 oṭṭam, பெ. (n.)

   ஒப்பந்தம் (புது.);; agreement. (செ.அக.);.

     [ஒட்டு → ஒட்டம் (வே.க.110);.]

 ஒட்டம்4 oṭṭam, பெ. (n.)

   ஓடு (யாழ்.அக.);; potsherd .செ.அக.);.

     [ஒல் → ஒள் → ஒடு → ஒட்டம். ஒடு = ஒடியத்தக்கது.]

ஒட்டரம்

 ஒட்டரம் oṭṭaram, பெ. (n.)

   இன்றைய ஒரிசா மாநிலத் தின் பழைய தமிழ்ப்பெயர்; ancient Tamil name for Orissa (செ.அக.);.

     [ஒட்டு → ஒட்டரம். ஒட்டு = சிறுகுன்று. ஒட்டரம் = குன்றுகள் நிறைந்த பகுதி. இனி, ஒட்டு (கல்லணை); கட்டும் பணியில் வல்ல ஒட்டர் வாழும் பகுதி என்னும் பொருளில் ஒட்டரம் எனப் பெயர் பெற்றிருக்கலாம்.]

ஒட்டர்

ஒட்டர்1 oṭṭar, பெ. (n.)

   ஒட்டர நாட்டவர் (பாரத. முதற்போ. 35);; people of the Orissa country. (செ.அக.);.

   ம. ஒட்டர்;   க. ஒட்ட;தெ. ஒட்டெவாடு.

     [ஒட்டரம் (ஒரிசா); → ஒட்டர்.]

 ஒட்டர்2 oṭṭar, பெ. (n.)

   நீரோடை, ஆறு முதலியவற் றின் குறுக்கே கல்லணை கட்டும் பணியாளர்; skiled labourers in constructing dam.

     [ஒட்டு + அர் – ஒட்டர். ஒட்டு = அணை, கற்களால் கட்டும் நீர்த்தடுப்பு.]

 ஒட்டர்3 oṭṭar, பெ. (n.)

   பகைவர்; foes.

     [ஒட்டார் → ஒட்டர்.]

ஒட்டறை

ஒட்டறை oṭṭaṟai, பெ. (n.)

   1. ஒட்டடை. பார்க்க;see {}. 1.

     “அற்பவகி நஞ்சிவைகள். ஒட்டறை யாற் போம்” (பதார்த்த.1142);. (செ.அக.);.

     [ஒட்டடை → ஒட்டறை (கொ.வ.);.]

ஒட்டற்காது

ஒட்டற்காது oṭṭaṟkātu, பெ. (n.)

   1. குறுகிய காது; short ears. (W.);.

   2. ஒட்டவைத்த காது; stretched ear-lobe shortened by surgical operation. (செ.அக.);.

     [ஒட்டல் + காது.]

ஒட்டற்பலா

 ஒட்டற்பலா oṭṭaṟpalā, பெ. (n.)

   ஒட்டப் பிலவு; devils nettle. (சா.அக.);.

     [ஒட்டல் + பலா.]

ஒட்டற்ற பொன்

ஒட்டற்ற பொன் oṭṭaṟṟaboṉ, பெ. (n.)

   1. கலப்பில்லாத பொன்; unalloyed or refined gold.

   2. மாற்றுயர்ந்த பொன்; pure gold.

     [ஒட்டற்ற + பொன். ஒட்டு = கலப்பு.]

ஒட்டலன்

ஒட்டலன்1 oṭṭalaṉ, பெ. (n.)

   1. பகைவன்; lit, one who will not unite, foe, enemy.

     “ஒட்டலன்றொ டவுற்ற தண்டத்தின்” (கந்தபு.சிங்கமு.416); (செ.அக.);.

   2. மெலிந்தவன்; lean man. (ஆ.அக.);.

ம. ஒட்டலன்.

     [ஒட்டு + அல் + அன் – ஒட்டலன். ‘அல்’ – எ.ம.இ.நி.]

ஒட்டலரி

 ஒட்டலரி oṭṭalari, பெ. (n.)

   கல்லலரி; wild – oleander. (சா.அக.);.

     [ஒட்டு + அலரி.]

ஒட்டல்

ஒட்டல் oṭṭal, பெ. (n.)

   1. சேர்க்கை; adhesion, contact;

 attachment, conjunction.

   2. உள்ளொடுங்குகை; shri- nking, contracting.

     “ஒட்டற்கவுள்” (கோயிற்பு.நடரா.30);.

   3. உடன்பாடு (திவா.);; consent;

 assent. (செ.அக.);.

   ம. ஒட்டல்;   க. ஒட்டெ;   கோத. ஒட்;   து. ஒட்டு;   தெ. ஒட்டு;பர். ஒட்ப் (வெள்ளையடித்தல்);.

     [ஒட்டு + அல்.]

ஒட்டவிடு-தல்

ஒட்டவிடு-தல் oḍḍaviḍudal,    18.செ.குன்றாவி. (v.t.)

   1. சேரவிடுதல்; to let one join, permit access.

   2. பொரவிடுதல்; to set up one against another, to bait, as in a cock-fight (W.);. (செ.அக.);.

     [ஒட்ட + விடு.]

ஒட்டாக்கொற்றி

ஒட்டாக்கொற்றி oṭṭākkoṟṟi, பெ. (n.)

   1. கன்றை யணுக விடாத கறவைமாடு; cow that repels its calf.

   2. அன்பில்லாத பெண்; woman unkind to her child or to her husband. (செ.அக.);

     [ஒட்டாத → ஒட்டா + கொற்றி – ஒட்டாக்கொற்றி, கொற்றி = மாடு.]

ஒட்டாங்கிளிஞ்சில்

ஒட்டாங்கிளிஞ்சில் oṭṭāṅgiḷiñjil, பெ. (n.)

   1. உடைந்த சிப்பி; broken oyster shell.

   2. ஒருவகை மீன்; a kind of shell fish.

     [ஒடு → ஒட்டாம் → ஒட்டாம் + கிளிஞ்சில்.]

ஒட்டாங்குச்சு

ஒட்டாங்குச்சு oṭṭāṅguccu, பெ. (n.)

   1. ஒட்டாங் காய்ச்சில் பார்க்க;see {}.

   2. மண்கல ஓடு; broken piece of a pot.

ஒட்டாங்கொடி

 ஒட்டாங்கொடி oḍḍāṅgoḍi, பெ. (n.)

ஒடாங்கொடி பார்க்க;see {}. (செ.அக.);

ஒட்டாநோய்

 ஒட்டாநோய் oṭṭānōy, பெ. (n.)

   தொற்றாநோய்கள்; disease which do no infect persons. (சா.அக.);

     [ஒட்டாத + நோய்.]

ஒட்டாம் பாரை

 ஒட்டாம் பாரை oṭṭāmbārai, பெ. (n.)

   கடல்மீன் வகை; horse mackerel of olive colour. (செ.அக.);.

     [ஒட்டாம் + பாரை.]

ஒட்டாரக் காரன்

 ஒட்டாரக் காரன் oṭṭārakkāraṉ, பெ. (n.)

   பிடிவாதமுள் ளவன்; obstinate fellow;

 contumacious man. (செ.அக.);.

     [ஒட்டாரம் + காரன்.]

ஒட்டாரங்கட்டு-தல்

ஒட்டாரங்கட்டு-தல் oṭṭāraṅgaṭṭudal,    5.செ.கு.வி. (v.i.)

   பிடிவாதம் பண்ணுதல்; to be obstinate, to be perverse, head-strong.

     “ஒட்டாரங் கட்டி நம் பல்லக்குக் கொம்பை யொடித்தெறிந்த” (தனிப்பா.1,223.13); (செ.அக.);.

     [ஒட்டாரம் + கட்டு.]

ஒட்டாரம்

 ஒட்டாரம் oṭṭāram, பெ. (n.)

   முற்கூறியதையொட்டியே இறுதிவரை மாறாது நிற்றல் (பிடிவாதம்);; constanton principles, obstinacy, stubbornness, perversity. (Loc.);. (செ.அக.);.

   ம. ஒட்டாரம்;தெ. ஒட்டாரமு.

     [ஒட்டு → ஒட்டாரம்.]

ஒட்டார்

ஒட்டார் oṭṭār, பெ. (n.)

   பகைவர்; foes, those who will not unite.

     “ஒட்டார் சொலொல்லை யுணரப்படும்” (குறள்,826);.

     “ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின்” (குறள்,967);. (செ.அக.);.

ம. ஒட்டார்.

     [ஒண்டு → ஒட்டு → ஒட்டார். (வே.க.110);.]

ஒட்டாவுருவம்

 ஒட்டாவுருவம் oṭṭāvuruvam, பெ. (n.)

   கற்படிமம் (யாழ்.அக.);; stone image, dist. fr. otturuvam. (செ.அக.);

     [ஒட்டாத + உருவம்.]

ஒட்டி

ஒட்டி1 oṭṭi, பெ. (n.)

   ஒரின மீன் (ஒட்டு மீன்);; a kind of fish.

ம. ஒட்டி.

 ஒட்டி2 oṭṭi, பெ. (n.)

   ஒருவகை அப்பம்; a kind of cake.

குட., ம. ஒட்டி.

     [ஒட்டு → ஒட்டி = ஒட்டில் திட்டியவாறு வேகும் அப்பம். இது எலாட்டி → ரொட்டி எனத் திரிந்த வடபுலத்திரிபு கடுங் கொச்சை வழக்கு.]

ஒட்டி3

__,

பெ. (n.);

   1. ஒட்டி நிற்கும் பொருள்; that which adheres to, coheres with.

     “ஒட்டி யவனுளமாகில் லான்” (சி.போ.2.1,1);.

   2. ஒட்டொட்டி பார்க்க;see {}.

   3. ஒரு கடல் மீன்; a marine fish. (J.);. (செ.அக.);.

ம. ஒட்டி.

     [ஒட்டு → ஒட்டி.]

ஒட்டி கக்குவான்

 ஒட்டி கக்குவான் oṭṭigagguvāṉ, பெ. (n.)

   ஒருவகைப் புல் (யாழ்.அக.);; grass. (செ.அக.);.

ஒட்டிக்கிரட்டி

 ஒட்டிக்கிரட்டி oṭṭikkiraṭṭi, பெ. (n.)

   ஒன்றுக்கு இரண்டு பங்கு; twice as much. (colloq.); (செ.அக.);.

     [ஒன்று → ஒற்றை → ஒட்டை → ஒட்டி + கு + இரட்டி.]

ஒட்டிக்கொடு-த்தல்

ஒட்டிக்கொடு-த்தல் oḍḍikkoḍuttal,    4.செ.குன்றாவி. (v.t.)

   உறுதி பண்ணித் தருதல்; to give an assurance, to solemnly promise, guarantee.

     “ஐங்கழஞ்சுபொன் மன்ற ஒட்டிக் கொடுத்தோம்” (S.l.l.iii.99); (செ.அக.);.

     [ஒட்டு → ஒட்டி + கொடு.]

ஒட்டிக்கொள்ளல்

ஒட்டிக்கொள்ளல் oṭṭikkoḷḷal, பெ. (n.)

   1. நோய் பற்றுதல். இது நோயாளியினின்று நேராகவும் அல் லது பிறிதொரு வழியாகவும் வந்துசேரும்; infection of disease by contact with a patient directly or transmitted through water, food or other means of conveyance Indirectly.

   2. ஒன்றோடொன்று மிகுதியாகப் பொருந் தல்; any abnormal joining of parts to each other _ adhesion. (சா.அக.);.

     “ஒட்டாரை ஒட்டிக்கொளல்” (குறள்.679);.

     [ஒட்டி + கொள்ளல்.]

ஒட்டிடு-தல்

ஒட்டிடு-தல் oḍḍiḍudal,    20.செ.கு.வி. (v.i.)

   1. பந்தயம் போடுதல்; to lay a wager.

   2. ஆணையிடுதல்; to take an oath. (செ.அக.);.

     [ஒட்டு + இடு.]

ஒட்டிதற் கடமை

ஒட்டிதற் கடமை oḍḍidaṟkaḍamai, பெ. (n.)

   குடியான வன் கொடுக்குங் கடமைகளுளொன்று (T.A.S.iii.32);; customary due payable by the cultivator. (செ.அக.);.

     [ஒட்டி + தன் + கடமை. ஒட்டி = உறுதி. கடமை = வரி. தான் செலுத்த வேண்டிய கட்டாயமான வரி.]

ஒட்டினர்

 ஒட்டினர் oṭṭiṉar, பெ. (n.)

   நண்பர் முதலியோர் (வின்.);; those who are attached together, friends, relations, adherents. (செ.அக);.

     [ஒட்டு → ஒட்டினர்.]

ஒட்டின்மரம்

 ஒட்டின்மரம் oṭṭiṉmaram, பெ. (n.)

   ஒர் பூமரம். இதில் பூக்கள் பெரிதாயும் வெண்மையாயும், நறுமணமுள் ளதாயும் மூன்று பூக்களுடைய கொத்துக்கள் அமைந் ததாயு மிருக்கும். பிறிதொரு மரத்தை ஒட்டுவதனால் முளைத்த மரம்; tree propagated by graiting. (சா.அக.);.

     [ஒட்டு + இன் + மரம்.]

ஒட்டிப் பயறு

 ஒட்டிப் பயறு oṭṭippayaṟu, பெ. (n.)

   எலிப்பயறு (சா.அக.);; a kind of pulse, leguminous plant.

     [ஒட்டி + பயறு.]

ஒட்டிப்போ-தல்

ஒட்டிப்போ-தல் oṭṭippōtal,    8.செ.கு.வி. (v.i.)

   1. கூடப் போதல் (வின்.);; to go along with.

   2. வற்றுதல்; to become lean;

 to get emaciated, to shrink.

     ‘கன்னம் ஒட்டிப் போயிருக்கிறது’ (செ.அக.);.

     [ஒட்டி + போ- தல்.]

ஒட்டியன்

ஒட்டியன் oṭṭiyaṉ, பெ. (n.)

   1. ஒட்டர நாட்டவன் (பாரத.இராசசூய.134);; native of Orissa.

   2. ஒட்டரநாட் டரசன்; king of Orissa.

     “ஒட்டியன் போற் பெண்” (தமிழ்நா.223);, (செ.அக.);.

ம. ஒட்டியன்

ஒட்டியம்

ஒட்டியம் oṭṭiyam, பெ. (n.)

   1. ஒரு நாடு; Orissa.

   2. ஒட்டர மொழி; Oriya, the language of Orissa.

   3. ஒருவகை மந்திர வித்தை; kind of witchcraft.

   4. மந்திர வித்தை யுணர்த்தும் நூல்; treatise on witchcraft (W.);. (செ.அக.);.

   ம. ஒட்டியம்;   க. ஒட்டி;தெ. ஒட்டெ.

     [ஒட்டு → ஒட்டியம்.]

 ஒட்டியம் oṭṭiyam, பெ. (n.)

   பாடல் முழுதும் இதழ் குவிந்தும் கூடியும் இயலும் எழுத்துக்களேயுள்ள மிறைக்கவி (மாறன. 275);; kind of fanciful verse, which contains only labials or other sounds produced by rounded lips.

த.வ. இதழ் குவிபா.

     [Skt. osthya → த. ஒட்டியம்.]

ஒட்டியர்

 ஒட்டியர் oṭṭiyar, பெ. (n.)

ஒட்டியன் பார்க்க;see {}.

ஒட்டியாக்கு-தல்

ஒட்டியாக்கு-தல் oṭṭiyākkudal,    5. செ.குன்றாவி. (v.t.)

   இணையாக்குதல்; to equalize, to make equal.

     [ஒட்டு → ஒட்டி + ஆக்கு – தல்.]

ஒட்டியாணம்

ஒட்டியாணம் oṭṭiyāṇam, பெ. (n.)

   1. ஒகப்பட்டை (திருமந்.818);; girdle worn by yogis while in a sitting posture, so as to bind the waist and the doubled-up legs together.

   2. மாதர் இடையில் அணியும் அணியு ளொன்று; gold or silver girdle or belt, an ornament worn by women round the waist

     “உடை தாரமு மொட்டி யாணமும்” (மீனாட்.பிள்ளைத்.ஊசல்.10); (செ.அக.);.

   ம. ஒட்டியாண், ஒட்டிஞாண்;   க. ஒட்ட்யாண;   து. ஒட்யாண்;   தெ. ஒட்டாணமு;ஒட்யாண்டு.

     [உடு → ஒடு + நாண் – ஒட்டுநாண் (அரைஞாண்கயிறு); → ஒட்டியாண் + அம் – ஒட்டியாணம். உடைநாண் பார்க்க;see {}.]

உடு = இடுப்பு, தெலுங்கிலும் கன்னடத்திலும் உடு → ஒடி எனத்திரியும். ஒடி = இடுப்பு. ஒடி → ஒட்டி → ஒட்டியாணம் எனத் திரிந்தது. இதன் பழந்தமிழ்ப் பெயர் உடு + நாண் – உடைநாண். அரை ஞாணைக் குறித்தசொல் மகளிர் இடையி லணியும் அணிகலனைத் தெலுங்கில் குறித்தது. ஒகநிலையிலம ரும் முனிவர், இடுப்பொடு மடித்த பாதங்களைச் சேர்த்துக்கட் டும் துணி அல்லது நூற்கயிறு உடைநாண் (ஒட்டியாணம்); எனப்பட்டது. பிற்காலத்தில் இது பூணூல் என்னும் பெயர் பெற்றது என்பது திருமந்திரம் 818ஆம் பாடலால் தெரியவருகி றது.

ஒட்டியாதேவி

 ஒட்டியாதேவி oṭṭiyātēvi, பெ. (n.)

ஒட்டியக் காளி பார்க்க (வின்.);;see {}. (செ.அக.);.

ஒட்டியான்

 ஒட்டியான் oṭṭiyāṉ, பெ. (n.)

   கையாள்; attendant.

     “ஒட்டியானும் இல்லை புட்டிக் கடுப்பால் உளைந்தேன்” (வள்ளி.கதை.Ms.);.

     [ஒட்டு → ஒட்டியான்.]

ஒட்டியுப்பு

 ஒட்டியுப்பு oṭṭiyuppu, பெ. (n.)

   வெடியுப்பு (மு.அ.);; saltpetre. (செ.அக.);.

     [ஒட்டி + உப்பு.]

ஒட்டிரட்டி

ஒட்டிரட்டி oṭṭiraṭṭi, பெ. (n.)

   ஒற்றைக் கிரட்டை; double, twice as much.

     “இலங்கைப் போர்க் கொட்டிரட்டி கலிங்கப் போர்” (கலிங்.218,புது.); (செ.அக.);.

     [ஒன்று → ஒற்று + இரட்டி = ஒற்றிரட்டி → ஒட்டிரட்டி (கொ.வ.);.]

ஒட்டு

ஒட்டு1 oṭṭudal,    5.செ.குன்றாவி. (v.t.)

   1, ஒட்டவைத் தல்; to stick, as with paste or gum, to glue on இந்தத் தாளைப் புத்தகத்திலே ஒட்டு (உ.வ.);.

   2. தடுத்தல்;   அணைகட்டுதல்; to obstruct to construct a dam

   3. சார்தல்; to be take one’s self to as for support for protection, to be near to

     “திருவடியை யொட்டாத பாவித் தொழும்பரை” (திருவாச.10,7);.

   4. பந்தயம் வைத்தல்; to wager, sake,

     “மாதுதன்னை யொட்டி” (பாரத.சூது.182);.

   5. துணிதல்; to resolve, make up one’s mind;

 decide.

     “காண்பதே கருமமாக வொட்டி” (சீவக.2143);.

   6. தாக்குதல்; to assail, attack, invade.

     “மாந்தருறை நிலத்தோ டொட்ட லரிது” (குறள்.499);.

   7. படைத்தல் (உரி.நி);; to create, make.

   8. கூட்டுதல்; to enhance, raise, as the sale price of an article.

விலையைச் சிறிதொட்டி வைத்தான்.

   9. கிட்டுதல்; to advance towards, come into close quarters with.

     “ஒட்டித் தன் கையைப் பற்றி யீர்த்ததும்” (திருவிளை.அங் கம்.23);.

   10. இசைதல் (சம்மதித்தல்);; to acquesce, brook tolerate;

     “ஒட்டேரைசோடொழிப்பேன் மதுரையை” (சிலப்.21,37);.

   11. அறுதியிடுதல்; to undertake, bind oneself to do a thing.

     “யாதுமொழியாமலொட்டி … முயல்கின்றார்” (சீவக.591);.

   12. நட்பாக்குதல்; to make friends with.

     “ஒட்டாரை யொட்டிக் கொளல்” (குறள்.679);.

க., ம., து. ஒட்டு.

     [அண் → அண்டு → ஒண்டு → ஒட்டு.]

 ஒட்டு2 oṭṭudal,    5.செ.கு.வி. (v.i.)

   1. ஒட்டிக் கொள்ளு தல்; to dry to become parched up, as the tongue;

     “ப்ரஜை தாய் முலையையகலில் நாக்கு ஒட்டுமாபோ லே” (ஈடு.1,3,9);.

   2. வஞ்சினம் கூறல் (சபதம் செய்தல்);; to challenge, debate.

     “ஒட்டிய சமயத் துறுபொருள் வாதிகள்” (மணிமே.1,60);.

   3. உள்ளொடுங் குதல்; to shrink, contract.

ஒட்டிய வயிறு.

   4. பதுங்கி நிற்றல்; to play the eaves-dropper;

 to lurk;

 to lie in ambush.

   5. பொருந்துதல்; to be suitable, appropriate.

     “பருவத்தோ டொட்ட வொழுகல்” (குறள்.482); (செ.அக.);.

   ம. ஒட்டுக;   க. ஒட்டு;   கோத. ஒட்;   து. ஒட்டுனி;   தெ. ஒட்டு;பா. ஒட்ப்.

     [ஒல் → ஒள்+ து – ஒட்டு. அண் → அண்டு → ஒண்டு → ஒட்டு.]

 ஒட்டு3 oṭṭu, பெ. (n.)

   1. இணைக்கப்பட்டது; patch, piece struck or fastened on, whether of cloth, board or metal.

   2. அணை; dam. ஆற்றில் ஒட்டு கட்டியிருக்கி றார்கள் (இ.வ.);.

   3. பறவை பிடிக்குங் கருவி; bird-time.

     “ஒட்டில் பட்டகுருகு” (திருப்பு.1163);.

   4. நட்பு; union, friendship.

அவனுக்கும் இவனுக்கும் ஒட்டு அதிகம்.

   5. சார்பு; connection, attachment, love, affection.

     “ஒட்டறப் பொருட்பறிப்பவர்க்கு” (திருப்பு.615);.

   6. ஒப்பு; co- mparison, resemblance.

     “ஒட்டுரைத்தில் வுலகுன்னைப் புகழ்வெல்லாம்” (திவ்.திருவாய்.3,1,2);.

   7. படைவ குப்பு (திவா.);; division of an army, battle array.

   8. நற்சமயம் (வின்.);; favourable opportunity.

க., ம., து. ஒட்டு.

     [அண் → அண்டு → ஒண்டு → ஒட்டு.]

 ஒட்டு4 oṭṭu, பெ. (n.)

   1. பொட்டு, பதர்; husk.

   2. சிறுமை (அற்பம்); (சூடா.);; smallness, narrowness.

   3. ஒரம்; border, edge. அந்தக் குழந்தை ஒட்டிலே இருக்கி றது.

   3. கதிர்கொய்த தாள் (யாழ்ப்.);. stubble.

     [ஒட்டு = சேர்தல், ஒட்டியிருத்தல், மேலோடு, உமி, பதர்.]

 ஒட்டு5 oṭṭu, பெ. (n.)

   ஆணை; oath.

     “ஒட்டு வைத்தே னும் மேல்வாரீர்.” (அருட்பா,vi,வர்க்கமாலை.89);.

தெ. ஒட்டு.

     [ஒட்டு1 – ஒட்டு5.]

 ஒட்டு6 oṭṭu, பெ. (n.)

   இகலாட்டம் (வின்.);; rivalry, emulation.

     [ஒல் → ஒற்று → ஒட்டு.]

 ஒட்டு7 oṭṭu, பெ. (n.)

ஒட்டணி பார்க்க (குறள்.475, உரை.);;see {}.

 ஒட்டு8 oṭṭu, பெ. (n.)

   1. மரப்பட்டை; bark of a tree.

     “ஒட்டு விட்டுலறிய பராரை” (கல்லா.6,25);.

   2. தவசக் காய்கனிகளின் மேல் இருக்கும் தோல்; upper skin or rind of grains, vegetables etc.

   3. வேறுவகை மரக்கிளையுடன் ஒட்டவைத்துண்டாக்கிய செடி; graft. இந்தச்செடி ஒட்டு.

   4. புல்லுருவி(மலை.);; species of Ioranthus.

     [ஒட்டு1 – ஒட்டு.8]

 ஒட்டு9 oṭṭu, பெ. (n.)

   1. மொத்தம், கூடுதல்; total.

   2. விலை கூட்டுகை (வின்.);; raising the bid, as at an auction.

     [ஒட்டு1 → ஒட்டு.9]

 ஒட்டு1௦ oṭṭu, பெ. (n.)

   1. சிறிய குன்று; hill.

   2. செய்குன்று; artificial hill.

     [ஒட்டு1 → ஒட்டு1௦]

ஒட்டு நத்தை

 ஒட்டு நத்தை oṭṭunattai, பெ. (n.)

   காலிலொட்டிக் கொண்டு துன்பத்தை யுண்டாக்கும் ஒர்வகை நத்தை (சா.அக.);; a kind of snail which gives trouble by sticking on legs.

ஒட்டுக் கணவாய்

 ஒட்டுக் கணவாய் oṭṭukkaṇavāy, பெ. (n.)

   மீன்வகை; a species of cuttle fish, (செ.அக.);.

     [ஒட்டு + கணவாய்.]

ஒட்டுக் கண்ணாள்

ஒட்டுக் கண்ணாள் oṭṭukkaṇṇāḷ, பெ. (n.)

   1. பெரு வெண்டை; big variety of bendy or lady’s fingers.

   2. பீளைக்கண்ணி; sore-eyed woman. (சா.அக.);.

     [ஒட்டு + கண்ணாள்.]

ஒட்டுக் காந்தம்

ஒட்டுக் காந்தம் oṭṭukkāndam, பெ. (n.)

   1. இரும்பிற்குச் சத்துக் கொடுத்து மாற்றிய காந்தம்; any soft Iron converted into a magnet by induced magnatism – artificial magnet.

   2. பொதுவாகவே இரும்பைத் தன்னிடத்தே ஒட்டிக்கொள்ளச் செய்யும் காந்தம்; an ordinary magnet which naturally attracts Iron. (சா.அக.);.

     [ஒட்டு + காந்தம்.]

ஒட்டுக்கடுக்கன்

 ஒட்டுக்கடுக்கன் oḍḍukkaḍukkaṉ, பெ. (n.)

   சிறு கடுக் கண் வகை (வின்.);; small ear-ring sticking close to the ear. (செ.அக.);.

   தெ. ஒண்டு;க. து., ஒண்டி.

     [ஒட்டு + கடுக்கன்.]

ஒட்டுக்கண்

 ஒட்டுக்கண் oṭṭukkaṇ, பெ. (n.)

   இமையொட்டு நோயுள்ள கண் (வின்.);; eye disease with the lids adhering or sticking together on account of inflammation. (செ.அக.);.

     [ஒட்டு + கண்.]

ஒட்டுக்காயம்

 ஒட்டுக்காயம் oṭṭukkāyam, பெ. (n.)

   பட்டினி கிடக்கை; complete starvation (Tinn.); (சா.அக.);.

     [ஒட்டு + காயம்.]

ஒட்டுக்காய்ச்சல்

ஒட்டுக்காய்ச்சல் oṭṭukkāyccal, பெ. (n.)

   1. தொற்றுக் காய்ச்சல் (வின்.);; contagious fever.

   2. உடம்போ டொட்டிய காய்ச்சல்; chronic, lowfever. (செ.அக.);.

     [ஒட்டு + காய்ச்சல்.]

ஒட்டுக்கால்

ஒட்டுக்கால் oṭṭukkāl, பெ. (n.)

   1. ஒடிந்து அல்லது முறிந்து போய்ப் பிறகு ஒட்டிய அல்லது பொருந்திய கால்; a broken or fractured leg which was set right afterwards.

   2. பொய்க்கால்; false leg. (சா.அக.);.

     [ஒட்டு + கால்.]

ஒட்டுக்குஞ்சு

ஒட்டுக்குஞ்சு oṭṭukkuñju, பெ. (n.)

   1. சிறுகுஞ்சு (வின்.);; very young bird, nestling.

   2. பேன்குஞ்சு (யாழ்ப்.);; young louse. (செ.அக.);.

     [ஒட்டு +குஞ்சு.]

ஒட்டுக்குடி

 ஒட்டுக்குடி oḍḍukkuḍi, பெ. (n.)

   பிறரிடத்திற் கூடிவா ழுங் குடி (வின்.);; co-tenancy in a house. (செ.அக.);. [ஒட்டு + குடி.]

ஒட்டுக்குடுமி

 ஒட்டுக்குடுமி oḍḍukkuḍumi, பெ. (n.)

   உச்சிச் சிறு குடுமி; tiny tuft or lock of hair on the crown of the head. (செ.அக.);.

     [ஒட்டு + குடுமி.]

ஒட்டுக்குருத்து

 ஒட்டுக்குருத்து oṭṭukkuruttu, பெ. (n.)

   சந்துகளி லன்றி வேறு இடங்களிலு முண்டாகுங் குருத்துகள்;     [ஒட்டு + குருத்து.]

ஒட்டுக்கேள்(ட்)-த(ட)ல்

ஒட்டுக்கேள்(ட்)-த(ட)ல் oḍḍukāḷḍtaḍal,    11.செ.குன் றாவி. (v.t.)

. ஒற்றுக் கேள்-தல் பார்க்க;see {}. (செ.அக.);.

     [ஒட்டு + கேள்.]

ஒட்டுக்கை

 ஒட்டுக்கை oṭṭukkai, பெ. (n.)

   துண்டுக்கைமரம் (C.E.M.);; Jack rafter. (செ.அக.);.

     [ஒட்டு + கை.]

ஒட்டுக்கொடு-த்தல்

ஒட்டுக்கொடு-த்தல் oḍḍukkoḍuttal,    4.செ.கு.வி. (v.i.)

   1. அணுக இடங் கொடுத்தல்; to allow access to be accessible.

   2. கேட்டது கொடுத்தல்; to comply with, yield to, grant to a request. (செ.அக.);.

     [ஒட்டு + கொடு.]

ஒட்டுச்சம்பா

ஒட்டுச்சம்பா oṭṭuccambā, பெ. (n.)

   நெல்வகை (விவசா.1);; a kind of paddy. (செ.அக.);.

     [ஒட்டு + சம்பா.]

ஒட்டுச்சல்லடம்

 ஒட்டுச்சல்லடம் oḍḍuccallaḍam, பெ. (n.)

   குறுங்காற் சட்டை; short trousers, athletic drawers. (செ.அக.);.

     [ஒட்டு + சல்லடம்.]

ஒட்டுச்சுண்ணாம்பு

ஒட்டுச்சுண்ணாம்பு oṭṭuccuṇṇāmbu, பெ. (n.)

   நூற் றுக்கு 40 பங்கு களிமண் சேர்ந்த சுண்ணாம்பு (கட்டட.சா..);; hydralic cement.

     [ஒட்டு + சுண்ணாம்பு.]

ஒட்டுச்செடி

ஒட்டுச்செடி oḍḍucceḍi, பெ. (n.)

   1. ஒட்டொட்டி பார்க்க;see {}.

   2. ஒட்டுக்கட்டி உண்டாக்குஞ் செடி; graft plant. (செ.அக.);.

ம. ஒட்டுச்செடி.

     [ஒட்டு + செடி.]

ஒட்டுச்சேர்வை

 ஒட்டுச்சேர்வை oṭṭuccērvai, பெ. (n.)

   புண் அல்லது கட்டிகளில் ஒட்டிக்கொள்ளும்படி யிடும் சீலை மருந்து; adhesive plaster. (சா.அக.);.

     [ஒட்டு + சேர்வை.]

ஒட்டுஞாண்

ஒட்டுஞாண் oṭṭuñāṇ, பெ. (n.)

   1. ஒட்டியாணம்; girdle worn round the loins by women.

   2. அரைக்குப் புறத்தே தோன்றும் ஒரு வகைச் சொறி; cultaneous eruption on the loins. (சேரநா.);.

ம. ஒட்டு ஞாண்.

     [ஒட்டு + ஞாண்.]

ஒட்டுடந்தை

ஒட்டுடந்தை oḍḍuḍandai, பெ. (n.)

   1. சிறுதொடர்பு; slight participation, a little connection, as in an act.

   2. தொலைவுறவு; distant relationship.

     [ஒட்டு + உடந்தை.]

ஒட்டுத்தரவு

ஒட்டுத்தரவு oṭṭuttaravu, பெ. (n.)

   சுற்றாணை சுற்றுத்த ரவு (C.G.);; circular (செ.அக.);.

ம. ஒட்டுத்தரவு.

     [ஒட்டு + தரவு.]

ஒட்டுத் திண்ணை

__,

பெ. (n.);

   1. பெருந் திண்ணைக்குச் சார்பாகக் கீழ்ப்புறங் கட்டப்படும் சிறு திண்ணை; raised masonry projection along side the pial.

   2. வாசலுக்கும் பக்கத்துச் சுவருக்கும் இடையி லுள்ள மிகச் சிறிய தெருத்திண்ணை; narrow strip of raised projection or pial between the entrance door of a house and the side wall;

 narrow pial in an Indian dwelling house.

     “ஒட்டுத் திண்ணையிலே படுத்த கடைச் சிறியேன்” (அருட்பா.vi.அருள்விளக்க.45); (செ.அக.);.

     [ஒட்டு + திண்ணை.]

ஒட்டுத்துணி

 ஒட்டுத்துணி oṭṭuttuṇi, பெ. (n.)

   ஒட்டிவைத்துத் தைக்கப்படும் துணித் துண்டு; piece of cloth for patching. (செ.அக.);.

     [ஒட்டு + துணி.]

ஒட்டுத்துத்தி

ஒட்டுத்துத்தி oṭṭuttutti, பெ. (n.)

   1. செடிவகை; angle-leaved burr mallow.

   2. துத்திப் பூண்டு வகை (மலை.);; lobe-leaved burr mallow. (செ.அக.);.

     [ஒட்டு + துத்தி.]

ஒட்டுத்தையல்

 ஒட்டுத்தையல் oṭṭuttaiyal, பெ. (n.)

   ஒட்டுத்துணியிட் டுத் தைக்குந் தையல்; patching needle work. (செ.அக.);. [ஒட்டு + தையல்.]

ஒட்டுநர்

 ஒட்டுநர் oṭṭunar, பெ. (n.)

   பேருந்து மகிழுந்து முதலியவைகளை ஒட்டும் பணிபுரிபவர்; driver.

     [ஒட்டு-ஒட்டுநர்]

 ஒட்டுநர் oṭṭunar, பெ. (n.)

   நண்பர் (திவா.);; friends, adherents. (செ.அக.);.

ஒட்டுநோய்

 ஒட்டுநோய் oṭṭunōy, பெ. (n.)

   தொத்துநோய்; infectious or contagious disease.

     [ஒட்டு + நோய்.]

ஒட்டுப் பலகை

 ஒட்டுப் பலகை oṭṭuppalagai, பெ.(n.)

   மெலிதான மரப்பாளங்கள் பலவற்றை ஒட்டி உருவாக்கப் படும் பலகை; plywood.

     [ஒட்டு+பலகை]

ஒட்டுப் பிரிமொழி

ஒட்டுப் பிரிமொழி oṭṭuppirimoḻi, பெ. (n.)

   செய்யுட் குற்றங்களுளொன்று (யாப்.வி.525);;     [ஒட்டு + பிரி + மொழி.]

ஒட்டுப்படை

 ஒட்டுப்படை oṭṭuppaṭai, பெ. (n.)

   ஒட்டுச்சுவர்; supporting wall.

     [ஒட்டு+படை]

ஒட்டுப்பற்று

ஒட்டுப்பற்று oṭṭuppaṟṟu, பெ. (n.)

   1. அவாக்கட்டு (ஆசாபாசம்);; attachment, tie of affection, as to one’s family.

     ‘அவனுக்குக் குடும்பத்தில் ஒட்டுப் பற்றில்லை’ (செ.அக.);.

     [ஒட்டு + பற்று.]

ஒட்டுப்பழம்

 ஒட்டுப்பழம் oṭṭuppaḻm, பெ. (n.)

   ஒட்டுமரத்தின் பழம்; graft fruit, esp. the mango. (செ.அக.);.

     [ஒட்டு + பழம்.]

ஒட்டுப்பார்-த்தல்

ஒட்டுப்பார்-த்தல் oṭṭuppārttal,    4.செ.குன்றாவி. (v.t.)

   உளவு பார்த்தல்; to spy. (ஆ.அக.);.

     [ஒட்டு + பார்.]

ஒட்டுப்பிசின்

__,

பெ. (n.);

பறவைகளைப் பிடிப்பதற்கு வைக்கப்படும் பிசின் தடவிய கண்ணி.

 bird-lime. (இவ.); (செ.அக.);.

     [ஒட்டு + பிசின்.]

ஒட்டுப்புண்

ஒட்டுப்புண் oṭṭuppuṇ, பெ. (n.)

   1. தொட்டவுடன் ஒட்டுகின்ற புண்; sticky sore as ulcer.

   2. தொத்துப் புண்; infectious itch.

   3. தொற்றுச்சிலந்தி; contagious ulcer.

   4. ஏற்கனவேயுள்ள புண்ணினருகே தொந்தத்தி னாலேற்படும் பல புண்கள்; contiguous sores appea-ring near an original sore. (சா.அக.);.

     [ஒட்டு + புண்.]

ஒட்டுப்புதவம்

 ஒட்டுப்புதவம் oṭṭuppudavam, பெ. (n.)

   இரட்டைக் கதவு; double door.

     “ஒட்டுப் புதவமொன்றுண்டு”

     [ஒட்டு + புதவம்.]

ஒட்டுப்புல்

 ஒட்டுப்புல் oṭṭuppul, பெ. (n.)

   புல்வகை (வின்.);; sticking-grass (செ.அக.);.

     [ஒட்டு + புல்.]

ஒட்டுப்புழு

 ஒட்டுப்புழு oṭṭuppuḻu, பெ. (n.)

புறாமுட்டி பார்க்க;see {}, a widespread weed. (L);. (செ.அக.);.

     [ஒட்டு + புழு.]

ஒட்டுப்பொறுக்கி

 ஒட்டுப்பொறுக்கி oṭṭuppoṟukki, பெ. (n.)

   எச்சிற்பொ றுக்கி; beggar who lives on leavings of food

ஒட்டுப் பொறுக்கி நட்டுவக்காலி (நெல்லை.);. (செ.அக.);.

     [ஒட்டு + பொறுக்கி.]

ஒட்டுப்பொறுக்கு-தல்

ஒட்டுப்பொறுக்கு-தல் oṭṭuppoṟukkudal,    5.செ.குன் றாவி. (v.t.)

   சிதறியவற்றைச்சேர்த்தல்; to glean scatte- red remains, as of food;

 to scrape together. (செ.அக.);.

     [ஒட்டு + பொறுக்கு.]

ஒட்டுப்போடு-தல்

ஒட்டுப்போடு-தல் oṭṭuppōṭudal,    20.செ.கு.வி. (v.i.)

   1. துண்டு வைத்து இணைத்தல்; to stick on, as a piece;

 to sew on, as a patch.

   2. சமயம் பார்த்தல் (வின்.);; to lie in wait;

 to bide one’s time. (செ.அக.);.

     [ஒட்டு + போடு.]

ஒட்டுமயிர்

ஒட்டுமயிர் oṭṭumayir, பெ. (n.)

   குடுமியுடன் கூடாத மயிர்; hair clipped or new grown about the tuft on the head.

   2. வைத்துக் கட்டும் மயிர்; false hair. (செ.அக.);.

     [ஒட்டு + மயிர்.]

ஒட்டுமருந்து

ஒட்டுமருந்து oṭṭumarundu, பெ. (n.)

   1. ஒட்டவைக்கும் மருந்து; plastic materials used in medicine, plaster.

   2. துணித்த சதைப் பாளங்களையும், முறித்த வெலும் புகளையும் பொருந்திக் கொள்ளும்படி தமிழ் மருத்து வத்தில் பயன்படும் சதையொட்டி, எலும்பொட்டி முதலிய மூலிகைகள்;     [ஒட்டு + மருந்து.]

ஒட்டுமா

ஒட்டுமா oṭṭumā, பெ. (n.)

   1. ஒர்வகைத் தித்திப்பு மாங்காய்; graft mango.

   2. ஒட்டவைத்து முளைத்த

   இனக் கலப்பான மாமரம்; mango-tree propagated by grafting. (செ.அக.);.

ம. ஒட்டுமாவு.

     [ஒட்டு + மா.]

ஒட்டுமீன்

 ஒட்டுமீன் oṭṭumīṉ, பெ. (n.)

   ஒருவகை மீன்; sucker fish. (சேரநா.);.

ம. ஒட்டுமீன்.

     [ஒட்டு + மீன்.]

ஒட்டுமேகம்

 ஒட்டுமேகம் oṭṭumēkam, பெ. (n.)

தொற்றுவதனாலும் அல்லது வேறுவகைத் தொடர்பினாலு முண்டாகும்

   மேகத் தொடர்பான நோய்; a contagious syphilis or other venereal disease aquired by direct venereal contact.

     [ஒட்டு + மேகம்.]

ஒட்டுமொத்தம்

 ஒட்டுமொத்தம் oṭṭumottam, பெ. (n.)

   முழுமொத்தம்; grand total. (செ.அக.);.

     [ஒட்டு + மொத்தம்.]

ஒட்டுரிமை

ஒட்டுரிமை oṭṭurimai, பெ. (n.)

ஒட்டுடந்தை2 பார்க்க (வின்.);;see {}. (செ.அக.);.

     [ஒட்டு + உரிமை.]

ஒட்டுருவம்

 ஒட்டுருவம் oṭṭuruvam, பெ. (n.)

   மரப்பதுமை (யாழ்.அக.);; wooden image, dist. fr. {}. (செ.அக.);.

ஒட்டுரோகம்

 ஒட்டுரோகம் oṭṭurōkam, பெ. (n.)

ஒட்டுநோய் பார்க்க;see {}.

ஒட்டுறவு

 ஒட்டுறவு oṭṭuṟavu, பெ. (n.)

   நெருங்கிய தொடர்பு; close relationship. (செ.அக.);.

     [ஒட்டு + உறவு.]

ஒட்டுவட்டில்

ஒட்டுவட்டில் oṭṭuvaṭṭil, பெ. (n.)

   வழிபாட்டு வட்டில் (S.l.l.ii,3);; small vessel for holding water, etc., placed before the idol in worship (செ.அக.);.

     [ஒட்டு + வட்டில்.]

ஒட்டுவாரொட்டி

 ஒட்டுவாரொட்டி oṭṭuvāroṭṭi, பெ. (n.)

ஒட்டுநோய் பார்க்க;see {}. (செ.அக.);.

     [ஒட்டுவார் + ஒட்டி. ஒட்டுவார் = ஒட்டுபவர், தொடுபவர்.]

ஒட்டுவிடு-தல்

ஒட்டுவிடு-தல் oḍḍuviḍudal,    20.செ.கு.வி. (v.i.)

   1. பொருத்து நீங்குதல்; to become loose, disjoined as boards that had been glued together.

   2. பற்றுவிடுதல்; to cease to be a friend or kinsman;

 to become dissociated.

     [ஒட்டு + விடு-தல்.]

ஒட்டுவித்தை

 ஒட்டுவித்தை oṭṭuvittai, பெ. (n.)

   இடத்தைவிட்டுப் பெயராதிருக்கச் செய்யும் வித்தை; magic art of

 rendering persons incapacitated to move and making them transfixed to the ground. (செ.அக.);.

     [ஒட்டு + வித்தை.]

ஒட்டுவியாதி

 ஒட்டுவியாதி oṭṭuviyāti, பெ. (n.)

ஒட்டுநோய் பார்க்க;see {}. (செ.அக.);.

ஒட்டுவிரல்

 ஒட்டுவிரல் oṭṭuviral, பெ. (n.)

   கைவிரல்கள் ஒன்றோ டொன்று ஒட்டியிருத்தல்; fingers united by folds of skins or of membrances-webfingers. (சா.அக.);.

     [ஒட்டு + விரல்.]

ஒட்டுவேகம்

 ஒட்டுவேகம் oṭṭuvēkam, பெ. (n.)

   மூகைப் புல்; hare-grass. (சா.அக.);.

     [ஒட்டு + வேகம். ஊகம் → வேகம்.]

ஒட்டுவேர்

 ஒட்டுவேர் oṭṭuvēr, பெ. (n.)

   மரத்தண்டுகளிலுண்டா கும் வேர்; root that springs up from the stem of a tree to the surface of the earth. (சா.அக.);.

     [ஒட்டு + வேர்.]

ஒட்டுவேலை

ஒட்டுவேலை oṭṭuvēlai, பெ. (n.)

   1. இணைக்கும் வேலை (வின்.);; joining, sticking on, patching.

   2. போலிவேலை; deceptive, dishonest work.

   3. மச்சுப் பாவும் வேலை; terracing (செ.அக.);.

     [ஒட்டு + வேலை.]

ஒட்டுவை-த்தல்

ஒட்டுவை-த்தல் oṭṭuvaittal,    4.செ.கு.வி. (v.i.)

   1. பறவை களைப் பிடிக்க ஒட்டுப்பிசின் வைத்தல்; to set bird-lime in order to ensnare birds.

   2. ஆணையிடுதல்; to swear, take an oath.

   3. அகழ்தோண்டுதல் (R.);; to dig trenches or moats round a city. (செ.அக.);.

ம. ஒட்டுவய்க்குக.

     [ஒட்டு + வை.]

ஒட்டெறும்பு

 ஒட்டெறும்பு oṭṭeṟumbu, பெ. (n.)

   ஒருவகைக் கட்டெ றும்பு; stick ant. (சா.அக.);.

     [ஒட்டு + எறும்பு.]

ஒட்டை

ஒட்டை1 oṭṭai, பெ. (n.)

   1. ஒட்டைச்சாண் பார்க்க;see {}.

     “மன்னிய வொட்டை மாத்திரையாகி வயங்குவன்” (திருக்காளத்.பு.6,18);.

   2. ஒத்த அகவை அல்லது உயரம்; equal-age or height

   க., து., ஒத்தெ;ம. ஒட்டெ.

     [ஒட்டு → ஒட்டை.]

 ஒட்டை2 oṭṭai, பெ. (n.)

   ஒட்டகம்; camel.

     “இலகெயி றொட்டைக் களம்” (கோயிற்பு.நட.30); (செ.அக.);

க.ஒன்டெ. Hind. {}.

     [ஒட்டம் → ஒட்டை.]

 ஒட்டை3 oṭṭai, பெ. (n.)

   1. ஒத்தஅளவு; equal.

   2. விளையாட்டில் உதவுவோன்; helper in a game. (செ.அக.);.

தெ. உட்டி.

     [ஒட்டு + ஐ.]

ஒட்டைக்கழுத்து

 ஒட்டைக்கழுத்து oṭṭaikkaḻuttu, பெ. (n.)

   ஒட்டையைப் போல் நீண்ட கழுத்து; neck unusually long like the one of a camel. (சா.அக.);.

     [ஒட்டை + கழுத்து.]

ஒட்டைச்சாண்

 ஒட்டைச்சாண் oṭṭaiccāṇ, பெ. (n.)

   பெருவிரல் முனையிலிருந்து சுட்டுவிரல் முனைவரைக்கும் உள்ள நீளம்; short span between the tips of the thumb and fore finger extended. கட்டைவிரல் நுனியி னின்று சிறுவிரல் நுனிவரை உள்ள அளவு சாண் ஆகும். அதனின்று அளவில் சிறியது, கட்டைவிரல் நுனியி னின்று சுட்டுவிரல் நுனிவரையிலான அளவு ஒட்டைச் சாண் எனப்பட்டது.

     [ஒட்டை + சாண்.]

ஒட்டைத்திருக்கை

 ஒட்டைத்திருக்கை oṭṭaittirukkai, பெ. (n.)

   திருக்கை மீன் வகை (R.);; a kind of tirukkai fish. (செ.அக.);.

     [ஒட்டை + திருக்கை.]

ஒட்டொட்டி

 ஒட்டொட்டி oṭṭoṭṭi, பெ. (n.)

   ஒட்டங்காய்ப்புல்; a kind of grass with prickly seeds which stick to the clothes. (செ.அக.);.

     [ஒட்டு + ஒட்டி.]

ஒட்டோலக்கம்

ஒட்டோலக்கம் oṭṭōlakkam, பெ. (n.)

   1. பேரவை; great assembly.

   2. ஆரவாரம் (வின்.);; show, pomp, magnifice-nce. (செ.அக.);.

   தெ. ஒட்டோலக்கமு;க. ஒட்டோலக.

     [ஒல் → ஓலகம் → ஓலக்கம். ஒட்டு + ஒலக்கம் – ஒட்டோலக்கம். (வே.க.114); ஒலக்கம் பார்க்க;see {}.]

ஒட்டோலம்

ஒட்டோலம் oṭṭōlam, பெ. (n.)

   பெருந்தெள்ளுக்கொடி; giant-rattle. (செ.அக.);.

     [ஒட்டு + ஒலம்.]

ஒட்பம்1

__,

பெ. (n.);

   அறிவு; intelligence, prescience wisdom.

     “கல்லாதா னொட்பம் கழியநன் றாயினும்” (குறள்.404); (செ.அக.(

     [ஒள் + பு – ஒட்பு + அம் – ஒட்பம்.]

ஒட்பம்

ஒட்பம்2 oṭpam, பெ. (n.)

   1. அழகு; beauty.

   2. நன்மை; benefit.

   3. மேன்மை; excellence. (செ.அக.);.

     [ஒள் → ஒளி. ஒள் + பு – ஒட்பு + அம்.]

ஒணி

 ஒணி oṇi, பெ. (n.)

கால்நடைகள் செல்லும் சிறிய

 urong;a narrow path for the cattle.

     “மாடு ஒணியில்போகிறது”(கொங்வ);.

     [ஓரணி-திணி]

ஒண்டன்

 ஒண்டன் oṇṭaṉ, பெ. (n.)

   நரி(பிங்.);; jackal. (செ.அக.);.

     [ஒண்டு + அன்.]

ஒண்டி

ஒண்டி1 oṇṭi, பெ. (n.)

   1. தனிமையானது; that which is single. இந்த மாடு ஒண்டி.

   2. துணையில்லாதவன்; solitary, single person;

 one who is all alone, without any companion.

     “ஒண்டியாய்த் தேர்விட்டு” (இராமநா. யுத்த.29); (செ.அக.);.

   க. ஒண்டி;   து. ஒண்டி;   தெ. ஒண்டி. ஒண்டரி;   குரு. ஒண்டா;பட. ஒட்டி.

     [ஒன்று → ஒன்றி → ஒண்டி (கொ.வ.);.]

 ஒண்டி2 oṇṭi, பெ. (n.)

   ஊற்றாணி என்னும் கலப்பை யுறுப்பு (பிங்.);; spike that fastens the pole to the plough. (செ.அக.);.

     [ஊன்றி → ஒன்றி → ஒண்டி (கொ.வ.);.]

ஒண்டிக்காரன்

 ஒண்டிக்காரன் oṇṭikkāraṉ, பெ. (n.)

   தனிமையான வன்; single person, lonely, companionless man. (செ.அக.);.

   தெ. ஒண்டிகாடு;க. ஒண்டிகார.

     [ஒன்றி → ஒண்டி + காரன்.]

ஒண்டிக்குடி

 ஒண்டிக்குடி oṇḍikkuḍi, பெ. (n.)

ஒண்டுக்குடி பார்க்க;see {}. (செ.அக.);.

     [ஒண்டு → ஒண்டி + குடி.]

ஒண்டிப்புலி

ஒண்டிப்புலி oṇṭippuli, பெ. (n.)

   1. கைக்கோளப் பிச்சைக்காரன்; beggar of the {} caste.

   2. நோக்கனென்னும் மரபினன்; person of the {} caste. (செ.அக.);.

     [ஒண்டி + புலி.]

ஒண்டிமூலி

ஒண்டிமூலி oṇṭimūli, பெ. (n.)

   1. ஒரு பூண்டு; plant.

   2. தனியாக முளைக்கும் பூண்டு; solitary plant. (சா.அக.);.

     [ஒன்றி → ஒண்டி + மூலி.]

ஒண்டு-தல்

ஒண்டு-தல் oṇṭudal,    5.செ.கு.வி. (v.i.)

   1. மரம், சுவர் முதலியவற்றைச் சார்தல்; to lean or sit closely to a tree, wall etc.

   2. ஒளிந்து கொள்ளுதல், மறைந்து கொள்ளுதல்; to hide.

   ம. ஒண்டுக;   க. ஒண்டு;தெ. ஒண்டு.

     [அண் → ஒண் → ஒண்டு. (வே.க.110.மு.தா.214);.]

ஒண்டுக்குடி

 ஒண்டுக்குடி oṇḍukkuḍi, பெ. (n.)

   ஒட்டுக்குடித்தனம்; tenancy in a portion of a house. (செ.அக.);

     [ஒண்டு + குடி.]

ஒண்டுக்கேள்-தல்

ஒண்டுக்கேள்-தல் oṇṭukāḷtal,    12.செ.கு.வி. (v.i.)

   ஒற்றுக்கேட்டல்; to eavesdrop. (Loc.); (செ.அக.);.

     [ஒண்டு + கேள்.]

ஒண்டொடி

ஒண்டொடி oṇḍoḍi, பெ. (n.)

   பெண் (வீரசோ.வேற் றுமை.3);; lit, shining bracelet, fig., woman adorned with shining bracelets.

     “ஒண்டொடி கண்ணேயுள” (குறள்,1101);

     [ஒன் → ஒண் + தொடி. (அன்மொழித் தொகை.);.]

ஒண்ணடி மண்ணடியாய்

 ஒண்ணடி மண்ணடியாய் oṇṇaḍimaṇṇaḍiyāy, கு.வி.எ. (adv.) ஒன்றடி மன்றடியாய் பார்க்க;see {}. (செ. அக.).

ஒண்ணல்

 ஒண்ணல் oṇṇal, பெ. (n.)

ஒன்றல் பார்க்க;see {}. (செ.அக.);.

ஒண்ணார்

ஒண்ணார் oṇṇār, பெ. (n.)

   1. பொருந்தார்; rival, adversaries.

   2. பகைவர்; foes.

     [ஒள் → ஒண்னு → ஒண்ணார். (வே.க.109); ஒன்னார் எனவும் வழங்கும் (குறள்.264, காண்க);.]

ஒண்ணி

 ஒண்ணி oṇṇi, பெ. (n.)

   பொன்; gold. (சா.அக.);.

     [ஒள் → ஒள்ளி → ஒண்ணி. ஒள் = ஒளிர்தல்.]

ஒண்ணு-தல்

ஒண்ணு-தல் oṇṇudal,    15.செ.கு.வி. ( v.i.)

   1. இயலுதல்; to be possible, feasible.

     “ஒண்ணுமோ வவர்தஞ் செய லோதவே” (கந்தபு.பாயி.15);.

   2. தக்கதாதல்; to be fit, proper. அப்படிச் செய்ய ஒண்ணாது.

   3. பொருந்து தல்; to be united. (செ.அக.);.

     [ஒள் → ஒண்னு. (வே.க.109);.]

ஒண்ணுதலாள்

 ஒண்ணுதலாள் oṇṇudalāḷ, பெ. (n.)

ஒண்ணுதல் பார்க்க;see {}. (சேரநா.);.

ம. ஒண்ணுதலாள்.

     [ஒண்ணுதல் + ஆள்.]

ஒண்ணுதல்

ஒண்ணுதல் oṇṇudal, பெ. (n.)

   ஒள்ளிய நெற்றியள், பெண்; lit, bright forehead, fig. woman, having a beautful forehead.

     “உலகருள் காரணனொண்ணுதலோ டும்” (கந்தபு.தெய்வயானை.252);. (செ.அக.);.

ம. ஒன்னுதல்.

     [ஒள் + நுதல் – ஒண்ணுதல் (அன்.தொ.);.]

ஒண்மை

ஒண்மை oṇmai, பெ. (n.)

   1. விளக்கம்; brilliancy, splendour, brightness.

     “ஒப்பின் மாநக ரொண்மை” (சீவக.535);.

   2. இயற்கையழகு; natural grace, beauty.

     “ஒண்மையு நிறையுமோங்கிய வொளியும்” (பொருங். உஞ்சைக்.34,151);.

   3. நன்மை (பிங்.);; good, goodness, excellence.

   4. நல்லறிவு; knowledge, clearness of understanding, wisdom.

     “ஒண்மை யுடையம் யாம்” (குறள்.844);.

   5. மிகுதி (திவா.);; luxuriance, fullness, abundance.

   6. ஒழுங்கு (சூடா.);; order, regularity. (செ.அக.);.

ம. ஒண்மை.

     [உல் → உள் → ஒள் → ஒண்மை (செல்வி.77.திச.171);.]

ஒதளை

 ஒதளை odaḷai, பெ. (n.)

காசுக்கட்டி (m.m);, downy foliaged cutch. (செ.அக.);.

     [உதள் → ஒதள் → ஒதளை.]

ஒதி

ஒதி odi, பெ. (n.)

   ஒருவகை மரம்; Indian ash tree.

     “ஒதியம் பணைபோல் விழுவர்” (பதினொ.ஆளு டைய.மும்.6); (செ.அக.);.

     [உதி → ஒதி. உதிமரம் எனத் தொல்காப்பியர் வழங்குவர்.

     “ஒடுமரக் கிளவி உதிமர இயற்றே” (தொல்.எழுத்து.262);.]

ஒது

ஒது odu, பெ. (n.)

   பூனை (நன்.273, மயலை);; cat.

     [Skt. out → த. ஓது.]

ஒதுக்கம்

ஒதுக்கம்1 odukkam, பெ. (n.)

   1. தனிமை; retreat, privacy. seclusion, solitude.

   2. நடை; walk, gait.

     “ஊழடி யொதுக் கத் துறுநோய்” (சிலப்.10,92);.

   3. பதுங்குகை; crou- ching, stooping.

   4. பின்னிடுகை; retiring, receding, retreating, withdrawing (W.);.

   5. இருப்பிடம்; abode, habitation, dwelling place.

     “திணியிமிலேற்றினுக் கொதுக் கஞ் செல்வ நின்னிணைமலர்ச் சேவடி கொடுத்த” (சீவக.3100);.

   6. மறைவிடம் (சூடா.);; hiding place.

   7. மகளிர்பூப்பு; catamenia (W.);.

   8. தங்குமிடம், சாவடி; rest house.

   9. ஓர் அமங்கல இசை (திருவாலவா.57,14. அரும்.);; dirge. (செ.அக.);.

   ம. ஒதுக்கம்;   க. ஒதகு;தெ. ஒதகு.

     [ஒதுக்கு + அம்.]

 ஒதுக்கம்2 odukkam, பெ. (n.)

   1. தாழ்மை; humility.

   2. ஒழுக்கம்; conduct. (செ.அக.);.

     [ஒதுக்கு + அம்.]

 ஒதுக்கம்3 odukkam, பெ. (n.)

   சேர்ந்து கிடத்தல் (சங்.இலக்.சொற்.);; accumulation.

     [ஒதுக்கு + அம்.]

ஒதுக்கல்

ஒதுக்கல்1 odukkal, பெ. (n.)

   எழுச்சி (சூடா.);; rising, springing or sprouting forth.

ம. ஒதுக்கல்.

     [உது → ஒது → ஒதுக்கல்.]

 ஒதுக்கல்2 odukkal, பெ. (n.)

ஒரிக்கல் பார்க்க;see orikkal. (செ.அக.);.

ஒதுக்கிடம்

ஒதுக்கிடம் odukkiḍam, பெ. (n.)

   1. ஒதுங்குமிடம்; place of retirement.

     “தண்சார லொதுக்கிடந் தந்து” (தஞ்சைவா.11);.

   2. தங்கும் விடுதி; temporary abode. (Loc.);.

   3. அண்டி வாழுமிடம் (பிங்.);; shelter, refuge, inn. (செ.அக.);.

ம. ஒதுக்கிடம் (இடைவழி);.

     [ஒதுக்கு + இடம்.]

ஒதுக்கிப்போடு-தல்

ஒதுக்கிப்போடு-தல் odukkippōṭudal,    19.செ.குன்றாவி. (v.t.)

   1. தீர்த்து விடுதல்; to settle, close up. (W.);.

   2. இனத்தினின்று நீக்கி விடுதல்; to expel, as from caste.

   3. கேள்வியைத் (விசாரணையைத்); தள்ளி வைத்தல்; to adjourn, as a hearing.

   4. சொத்தை மறைத்துவிடுதல்; to conceal, as property. (Loc.); அவன் சொத்தையெல்லாம் ஒதுக்கிப் போட்டான். (செ.அக.);.

     [ஒதுக்கி + போடு.]

ஒதுக்கிரு-த்தல்

ஒதுக்கிரு-த்தல் odukkiruddal,    13.செ.கு.வி. (v.i.)

   பிறர் வீட்டிற் குடியிருத்தல் (குறள்.340,பரி.உரை.);; to be a tenant in another’s house. (செ.அக.);.

     [ஒதுக்கு + இரு.]

ஒதுக்கு

ஒதுக்கு1 odukkudal,    5.செ.குன்றாவி. (v.t.)

   1. ஒதுங் கச் செய்தல்; to put on one side, as the hair, to cause to get out of the way, as cattle, in the road;

 to wash ashore, as floating or other bodies;

 to push into a corner, to cast to one side, to a hedge, as dry leaves.

   2. பிணக்கை விலக்குதல்; to separate, as persons in a quarrel.

சண்டையிடாமல் இருவரையும் ஒதுக்கினார்கள்.

   3. அணைத்துக்காத்தல்; to sheller, as a bird its young;

 to brood. (Loc.);.

கோழிதன் குஞ்சுகளைச் செட்டைகளுக்குள் ஒதுக்குகிறது’.

   4. ஒரு புறமாய்ச் சேர்த்தல்; together on one side;

 to tuck up, as one’s clothes while crossing a river.

ணீ ஆடையை யொதுக்கிக் கொண்டு நீரிலிறங்கு.

   5. சொத்துக்களை மறைத்தல்; to place out of reach, remove by unfair means, secure for one’s self clandestinely.

சொத்துகளை யெல்லாம் வழக்குக்காக ஒதுக்கி விட்டான்.

   6. விலக்கு தல்; to separate;

 to put away;

 to expel, as from caste.

அவனைச் சாதியினின்று ஒதுக்கி யிருக்கிறார்கள்.

   7. தீர்த்தல்; to despatch, as a business (W.);.

வழக்கைத் தங்களுக்குள் ஒதுக்கிக் கொண்டார்கள்.

   8. கொல்லு தல்; to kill. ஆள்களை யொதுக்க (வின்.);.

   9. வறுமைக்குட் படுத்துதல்; to impoverish. (W.);. (செ.அக.);.

   ம. ஒதுக்குக;   க. உடுகிசு, உடகிசு;   தெ. உடிகின்சு. டுங்க;   கூ. டுப்ப;   குரு. ஒடொக்னா;மால். ஒட்கெ.

     [ஒதுங்கு → ஒதுக்கு.]

 ஒதுக்கு2 odukku, பெ. (n.)

   1. விலகியிருப்பது; that which is apart, separate.

   2. பிறர் வீட்டிற் குடியிருக்கை (குறள். 340, உரை.);; living as a tenant in another’s house.

   3. புகலிடம்; refuge, shelter.

     “எவ்வொதுக் கெய்துவா யே” (இரகு.கடிமண.50);.

   4. மறைப்பு; screen, hiding place.

   5. நடை; walking. Gait.

     “தகைமெல் லொதுக்கின் … விறலி” (புறநா.135,3);. (செ.அக.);.

     [ஒதுங்கு → ஒதுக்கு.]

ஒதுக்குக்கடல்

ஒதுக்குக்கடல் odukkukkaḍal, பெ. (n.)

   1. குடாக்க டல்; bay, gulf.

   2. இயற்கையிலமைந்த துறைமுகம்; natural harbour. (செ.அக.);.

     [ஒதுக்கு + கடல்.]

ஒதுக்குக்கல்

 ஒதுக்குக்கல் odukkukkal, பெ. (n.)

   படிக்கல்; step- stone. (சேரநா.);.

ம. ஒதுக்குகல்.

     [ஒதுக்கு + கல்.]

ஒதுக்குக்குடி

 ஒதுக்குக்குடி odukkukkuḍi, பெ. (n.)

ஒட்டுக்குடி பார்க்க (வின்.);;see {}. (செ.அக.);.

     [ஒதுக்கு + குடி.]

ஒதுக்குப் பச்சை

 ஒதுக்குப் பச்சை odukkuppaccai, பெ. (n.)

   புழுங்க லில் வேகாத நெல்; paddy that is not well boiled and is adhering to the sides of the vessel. Loc. (செ.அக.);.

     [ஒதுக்கு + பச்சை.]

ஒதுக்குப் படல்

 ஒதுக்குப் படல் odukkuppaḍal, பெ. (n.)

   காற்றைத் தடுக்குங் கிடைப்படல் (வின்.);; shed to screen cattle from the wind. (செ.அக.);.

     [ஒதுக்கு + படல்.]

ஒதுக்குப்பாடு

 ஒதுக்குப்பாடு odukkuppāṭu, பெ. (n.)

   மரவேலியுள்ள செய்கால் நிலம் (யாழ்ப்.);; cultivable land enclosed by tree. (செ.அக.);

     [ஒதுக்கு + பாடு.]

ஒதுக்குப்புறம்

ஒதுக்குப்புறம் odukkuppuṟam, பெ. (n.)

   1. ஒதுங்கும் புறவிடம்; side of a building or a hedge or a tree as affording shelter from wind and rain.

   2. தனித்த இடம்; solitary place. (செ.அக.);.

     [ஒதுக்கு + புறம்.]

ஒதுக்குப்பொதுக்குப்பண்ணு-தல்

ஒதுக்குப்பொதுக்குப்பண்ணு-தல் odukkuppodukkuppaṇṇudal,    12. செ.குன்றாவி. (v.t.)

   1. பண ஏமாற்றுச் செய்தல்; to embezzle.

   2. சொத்தை மறைத்து வைத்தல்; to conceal property by omitting to insert it in the list or schedule, as of a person sued for debt. (செ.அக.);.

     [ஒதுக்குப்பொதுக்கு + பண்ணு. ஒதுக்குப் பொதுக்கு – எதுகை குறித்த இணைமொழி.]

ஒதுக்குமுளை

 ஒதுக்குமுளை odukkumuḷai, பெ. (n.)

   தேய்ந்த வெள் ளிக்காசு; small silver coin worn off by use. (செ.அக.);.

     [ஒதுக்கு + முளை. தேய்ந்ததால் ஒதுக்கத்தக்க காசு.]

ஒதுக்குவயல்

 ஒதுக்குவயல் odukkuvayal, பெ. (n.)

   வயலிற் கால் நடைகளைக் கட்டுமிடம் (வின்.);; place set apart in a paddy field behind the lodging hut, for penning cattle.

     [ஒதுக்கு + வயல்.]

ஒதுங்கு-தல்

ஒதுங்கு-தல் oduṅgudal,    7.செ.கு.வி. (v.i.)

   1. விலகுதல்; to get out of the way, as to well.

   2. கரையிற் சார்தல்; to drift ashore.

   3. அடைக்கலம் புகுதல்; to seek refuge, take shelter.

     “நின்றளிக்கும் குடைநிழற்கீ ழதினொதுங்கி” (கம்பரா.கையடை.8);.

   4. ஒடுங்குதல் (பிங்.);; to step aside and bow as a mark of respect, before a superior.

   5. நடத்தல்; to tread, step, walk.

     “கோல்காலாகக் குறும்பல வொதுங்கி” (புறநா.159,3);.

   6. பின்னடை தல்; to lag behind.

     “செந்தளி ரொதுங்க மிளிர்சீறடி” (கந்தபு.தெய்வயானை.232);.

   7. தீர்தல்; to be finished, settled, adjusted, completed.

காரிய மொதுங்கிவிட்டது.

   8. வறுமைப்படுதல் (யாழ்ப்.);; to be impoverished;

 to be in want.

   9. இறத்தல் (யாழ்ப்.);; to die. ஆள் ஒதுங்கிப் போயிற்று (செ.அக.);.

   ம. ஒதுங்கு;   க. ஒதுகு. ஒதகு;   து. ஒதுங்க;தெ. ஒடுக.

     [ஒடுங்கு → ஒதுங்கு → ஒதுங்கு-தல் (வே.க.84);.]

ஒதுங்குபுறம்

 ஒதுங்குபுறம் oduṅgubuṟam, பெ. (n.)

   புறம்போக்கு; uncultivated land. (Loc.); (செ.அக.);.

ஒதுப்புறம்

 ஒதுப்புறம் oduppuṟam, பெ. (n.)

ஒதுக்குப்புறம் பார்க்க;see {}. (செ.அக.);.

ஒத்தடம்

ஒத்தடம் ottaḍam, ஒற்றடம் பார்க்க;see {}. (செ. அக.).

     [ஒற்று → ஒத்து → ஒத்தடம் (சு.வி.66);.]

ஒத்தது

ஒத்தது oddadu, பெ. (n.)

   1. தகுதியானது; that which is commensurate with, fit consistent.

     “ஒத்த தறிவா னுயிர் வாழ்வான்” (குறள்,214);.

   2. உலகத்தார் ஏற்றுக் கொண்டது; that which has the approval of the world. (செ.அக.);

   3. நிகரானது அல்லது துல்லியமானது; that which equal to or suitable.

   4. ஏற்றது அல்லது சரியானது; that which is proper.

ம. ஒத்தது.

     [ஒல் → ஒத்து + அது.]

ஒத்தன்

ஒத்தன் ottaṉ, பெ. (n.)

   1. ஒருவன்; someone.

     “எல்லாவிஃதொத்தன்” (கலித்.61);.

   2. ஒருத்தன் பார்க்க; sea {}. (செ.அக.);.

     [ஒருத்தன் → ஒத்தன். (கொ.வ.);.]

ஒத்தபடி

 ஒத்தபடி ottabaḍi,    கு.வி.எ. (adv.) ஏற்றவாறு; agreeably, suitably. (செ.அக.).

     [ஒல் → ஒத்த + படி.]

ஒத்தப்பேரன்

 ஒத்தப்பேரன் ottappēraṉ, பெ. (n.)

தணியாள்,

 lonely person.

     [ஒற்றை-பெயரன்]

ஒத்தப்பேரி

 ஒத்தப்பேரி ottappēri, பெ. (n.)

   தனியாளாக இருக்கும் பெண்; lonely woman.

     “ஒத்தப்பேரி நான் என்ன செய்வேன்” [ஒற்றை-ஒத்த+பேரி]

ஒத்தமலங்கொட்டு-தல்

ஒத்தமலங்கொட்டு-தல் oddamalaṅgoṭṭudal,    5.செ.கு.வி. (v.i.)

   இடக்குச் செய்தல்; to behave improperly, rudely, insolentiv. (செ.அக.);.

ஒத்தறு-த்தல்

ஒத்தறு-த்தல் ottaṟuttal,    4.செ.குன்றாவி. (v.t.)

   தாள வரையறை செய்தல் (பிங்.);; to measure time. (செ.அக.);.

     [ஒற்று → ஒத்து + அறு-த்தல்.]

ஒத்தல்

ஒத்தல்1 ottal, பெ. (n.)

   1. கேள்வியால் தெளிந்தவற்றில் மனம் ஊன்றிநிற்கை (பிங்.);; conduct or behaviour in strict conformity with one’s own convictions or settled persuasion, one of {}.

   2. நடு (திவா.);; middle, centre.

   3. பொருந்துதல்; uniting.

   4. போலுதல்; resembling.

     “வில்லினை ஒத்த புருவம்” (பாரதியார்); (செ.அக.);.

     [உ → ஒ → ஒத்தல். (மு.தா.168.த.ம.4);.]

ஒத்தவன்

 ஒத்தவன் ottavaṉ, பெ. (n.)

   சமமானவன்; one who is equal.

ம. ஒத்தவன்.

     [ஒல் → ஒத்து → ஒத்த + அவன்.]

ஒத்தாங்கு

ஒத்தாங்கு ottāṅgu, கு.வி.எ. (adv.) ஒத்தபடி பார்க்க;see {}.

     “ஒத்தாங் கொறுப்பது வேந்து” (குறள்,561);. (செ.அக.);.

ஒத்தாசை

 ஒத்தாசை ottācai, பெ. (n.)

   உதவி; aid, help, assistance. (colloq.); (செ.அக.);.

   ம. ஒத்தாச;   க ஒத்தாசெ;   கொ. ஒதாச்;துட. விதொஸ்.

     [உறு → உற்று → உற்றாயம் → ஒத்தாயம் → ஒத்தாசம் → ஒத்தாசை (கொ.வ.);.]

ஒத்தாப்பு

ஒத்தாப்பு ottāppu, பெ. (.n)

   1. மறைவு; slanting shed in a field or garden to screen from the sun or wind.

   2. குடில்; small building with a sloping roof on three out of its four sides. (செ.அக.);.

     [ஒல் → ஒது → ஒத்து → ஒத்தாப்பு. ‘ஆப்பு’ சொல்லாக்க ஈறு.]

ஒத்தாழிசை

ஒத்தாழிசை ottāḻisai, பெ. (n.)

   கலிப்பாவின் வகை (தொல்.பொருள்.442);; a kind of kali verse. (செ.அக.);. [ஒல் + தாழிசை – ஒத்தாழிசை.]

ஒத்தி

ஒத்தி1 otti, பெ. (n.)

   ஒரு பெண்; one woman.

     “இஃதொத்தி யென் செய்தாள் கொல்.” (கலித்.143); (செ.அக.);.

     [ஒருத்தி → ஒத்தி (கொ.வ.);.]

 ஒத்தி2 otti, பெ. (n.)

ஒற்றி2 பார்க்க;see {}. (செ.அக.);.

     [ஒற்றி → ஒத்தி.]

 ஒத்தி3 otti, பெ. (n.)

   1. பொருத்தம் பார்க்கும் பயிற்சி; experience of seeing proper occasion etc.

   2. நிலத்தை ஒருவரிடம் பொருத்தி வைக்கும் அடைமானம்; mo- rtgage. hypothecation.

   3. ஒத்து வாங்குதல்; pledging.

     [ஒத்து → ஒத்தி (க.வி.66,67);.]

ஒத்திகை

__,

பெ. (n.);

   1. ஒப்பு; resemblance, reciprocal adaptation.

அதற்கும் இதற்கும் ஒத்திகை யிருக் கிறது.

   2. நாடகத்தை முன் ஆடிப்பார்க்கை; rehearsal.

   3. சரிபார்க்கை; to verify the correctness.

எழுதினபிரதிகளை ஒத்திகை பார் 4 உதவி assistance (W.);. (செ. அக.);.

     [ஒத்து → ஒத்திகை. (வே.க.112);.]

ஒத்திகை பண்ணு-தல்

ஒத்திகை பண்ணு-தல் oddigaibaṇṇudal,    15.செ.கு.வி. (v.i.)

   மகிழச் செயல்; to amuse by amorous sports.

     “ஒருநாட் பகலிலெனை யொத்திகை பண்ணி” (தெய் வச்.விறலி.425); (செ.அக.);.

     [ஒத்திகை + பண்ணு.]

ஒத்திசை

 ஒத்திசை ottisai, பெ. (n.)

   இசையின் (இலயம்.); ஒன்றும் தன்மை; harmony in music, symphony, concert. (W.); rhythm. (செ.அக.);.

     [ஒத்து + இசை.]

ஒத்திடம்

 ஒத்திடம் ottiḍam, பெ. (n.)

ஒற்றடம் பார்க்க;see {}.

     “கொங்கையை யொத்திடங் கொடுத்து”

     [ஒற்றடம் → ஒத்தடம் → ஒத்திடம் (கொ.வ.);.]

ஒத்தின்சாலை

ஒத்தின்சாலை ottiṉcālai, பெ. (n.)

   நூல் கற்பிக்குமிடம்; place for teaching.

     “ஓத்தின் சாலையு மொருங்குட

னின்று” (சிலப்.22,28);.

     [ஓத்து + இன் + சாலை.]

ஒத்திப்போடு-தல்

ஒத்திப்போடு-தல் oddippōṭudal,    19.செ.குன்றாவி. (v.t.)

   தவணை தள்ளி வைத்தல்; to adjourn, as a hearing,

 postpone. (செ.அக.);.

     [ஒத்தி + போடு.]

ஒத்தியம்

 ஒத்தியம் ottiyam, பெ. (n.)

   நச்சு மூங்கில்; asiatic poison bulb. (சா.அக.);.

     [உல் → ஒல் → ஒத்தியம்.]

ஒத்திரு

ஒத்திரு1 ottiruttal,    3.செ.கு.வி. (v.i.)

   இசைந்திருத் தல்; to live in harmony, concord, friendship.

     “ஒத்த தறிவான் உயிர்வாழ்வான்” (குறள்.); (செ.அக.);.

     [ஒத்து + இரு-த்தல்.]

 ஒத்திரு2 ottiruttal,    3.செ.குன்றாவி. (v.t.)

   போன்றி ருத்தல்; to be similar to (செ.அக.);.

     [ஒத்து + இரு-த்தல்.]

ஒத்து

ஒத்து1 oddudal,    10.செ.கு.வி. (v.i.)

   1. தாளம் போடு தல்; to keep time with cymbals or with the hands.

     “குணலைக் கொத்தின பாணி” (கோயிற்.நட.30);.

   2. தாக்குதல்; to strike against each other, butt against, bunt.

     “புயசயில மொன்றோ டொன் றொத்தினார்” (பாரத.வேத்திர.14);.

   3. ஒற்றுதல்; to forment. பூவைக் கண்ணில் ஒத்திக் கொண்டான்.

   4. தள்ளுதல்; to push. (செ.அக.);.

   ம. ஒத்துக;   க. ஒத்து;   குட. ஒத்த;   து. ஒத்துனி;   தெ. ஒத்து;குரு ஒத்தனா.

     [உத்து → ஒத்து.]

 ஒத்து2 oddudal,    10.செ.கு.வி. (v.i.)

   விலகுதல், ஒத்தி நிற்றல்; to make room for, to take on to one side. (செ.அக.);.

க., தெ. ஒத்து.

     [ஒல் → ஒத்து.]

 ஒத்து3 ottu, பெ. (n.)

   1. தளாவொற்று; time in music for singing and dancing, keeping time for singing.

     “ஒத்தளந்து” (பரிபா.12,42);.

   2. நாதசுரத்துக்குச் சுருதி கூட்டும் ஓர் ஊது குழல்; a reed instrument conical in shape and enlarging downwards used for playing the drone note accompanying a {}.

     “ஒத்தையூ துநரை யேய்க்கும்” (திருவாலவா.49,18);.

   3. கையணி வகை; thin bangle. தெ. ஒத்துலு. (செ.அக.);.

ம. ஒத்து.

     [ஒற்று → ஒத்து (வே.க.108);.]

ஒத்துக்கொடு-த்தல்

ஒத்துக்கொடு-த்தல் ottukkoḍuttal,    4.செ.கு.வி. (v.i.)

   1. பொறுப்பேற்றல்; to be answerable, to guarantee. 2.

   ஒப்புவிக்கப்பட்ட கணக்குகளுக்கு வகை சொல்லுதல்; to render an account for matters entrusted, as

 to an accountant. (செ.அக.);.

     [ஒத்து + கொடு.]

ஒத்துக்கொள்(ளு

ஒத்துக்கொள்(ளு2 oddukkoḷḷudal,    2.செ.கு.வி. (v.i.)

   1. இணங்குதல்; to agree, concur.

அவர்கள் இருவரும் ஒத்துக்கொண்டு சாட்சி சொன்னார்கள்.

   2. ஏற்றதாதல்; to suit, to be adapted.

தண்ணீர் ஒத்துக் கொள்ள வில்லை. (செ.அக.);.

     [ஒத்து + கொள்.]

ஒத்துக்கொள்(ளு)

ஒத்துக்கொள்(ளு)1 oddukkoḷḷudal,    7.செ.குன்றாவி. (v.t.)

   1. ஏற்றுக் கொள்ளுதல் (சம்மதித்தல்);; to admit, concede.

   2. பிழையை ஒப்புக் கொள்ளுதல்; to ackno- wledge one’s mistake or confess one’s guilt.

தன் குற்றத்தை ஒத்துக்கொண்டான்.

   3. கணக்கிலேற்றுக் கொள்ளுதல்; to credit.

     [ஒத்து + கொள்.]

ஒத்துநட-த்தல்

ஒத்துநட-த்தல் ottunaḍattal,    3.செ.கு.வி. (v.i.)

   1. ஒரே வகையாய் நடத்தல்; to walk together at the same pace, to march, as soldiers.

   2. இசைந்தொழுகுதல்; to act agreeably to the wishes of another, live in harmony. (செ.அக.);.

     [ஒத்து + நட.]

ஒத்துப்பாடு-தல்

ஒத்துப்பாடு-தல் odduppāṭudal,    5.செ.கு.வி. (v.i.)

   1. இசையப்பாடுதல்; to sing in concert, in unison.

   2. பிறர் சொல்லுவன எல்லாவற்றையும் ஏற்று வழிமொ ழிதல் (ஆமோதித்தல்);; to assent to everything said by another, always say ditto to another’s words. (செ.அக.);.

     [ஒத்து + பாடு.]

ஒத்துப்பார்-த்தல்

ஒத்துப்பார்-த்தல் ottuppārttal,    4.செ.குன்றாவி. (v.t.)

   ஒப்பிட்டுப்பார்த்தல், சரிபார்த்தல்; to compare, collate, to verify the correctness எழுதியதை மூலப்படியோடு ஒத்துப் பார்க்கிறான். (செ.அக.);.

ம. ஒத்து நோக்குக.

     [ஒத்து + பார்.]

ஒத்துப்பிடி-த்தல்

ஒத்துப்பிடி-த்தல் ottuppiḍittal,    4.செ.கு.வி. (v.i.)

   1. குறிப்புச்செய்தியைக் காற்றுக்கருவி வாயிலாக ஊதி தொலைவிலுள்ளவனுக்குத் தெரிவித்தல்; to convey the hints by blowing pipes.

   2. ஒத்தூதுதல்; to sound the keynote with the ottu or drone. (W.);.

   3. ஒருவர் கூறியதையே மற்றவரும் முழுமையாக ஏற்றுப் பேச தல்; to be in total agreement with another. (செ.அக.);.

     [ஒத்து + பிடி..]

ஒத்துப்போடு-தல்

ஒத்துப்போடு-தல் odduppōṭudal,    20.செ.கு.வி. (v.i.)

   தாளம் போடுதல்; to keep the time with cymbals as an accompaniment to singing or dancing. (செ.அக.);.

     [ஒத்து + போடு.]

ஒத்துழை-த்தல்

ஒத்துழை-த்தல் ottuḻaittal,    4.செ.கு.வி. (v.i.)

   பலர்கூடி மனமொத்து வினைசெய்தல்; to co-operate;

 to work together. (செ.அக.);.

ம. ஒத்துழயக்குக.

     [ஒத்து + உழை.]

ஒத்துழைக்கை

 ஒத்துழைக்கை ottuḻaikkai, பெ. (n.)

   கூடிவினை செய்கை; co-operation. working in union. (செ.அக.);.

ம. ஒத்துழப்பு.

     [ஒத்து + உழைக்கை.]

ஒத்துழைப்பு

 ஒத்துழைப்பு ottuḻaippu, பெ. (n.)

ஒத்துழைக்கை பார்க்க;see {}. (செ.அக.);.

     [ஒத்து + உழைப்பு.]

ஒத்துழையாதார்

 ஒத்துழையாதார் ottuḻaiyātār, பெ. (n.)

   பிறகொள்கை யாரோடு இனங்கி நடவாதவர்; non-co-operators, dissenters. (செ.அக.);.

     [ஒத்து + உழையாதார்.]

ஒத்துழையாமை

 ஒத்துழையாமை ottuḻaiyāmai, பெ. (n.)

   பிறகொள்கை யோடு இணங்கி நடவாமை; non co-operation, di- ssent. (செ.அக.);.

     [ஒத்து + உழையாமை.]

ஒத்துவா(வரு)-தல்

ஒத்துவா(வரு)-தல் odduvāvarudal,    18.செ.கு.வி. (v.i.)

   இணங்கி வருதல்; to come to an agreement to become conformable. (செ.அக.);

ம. ஒத்துவரிக.

     [ஒத்து + வா.]

ஒத்துவாழ்-தல்

ஒத்துவாழ்-தல் ottuvāḻtal,    12.செ.கு.வி. (v.i.)

   மன மொத்து வாழ்தல்; to live in harmony as a family relations, fellow-servants. (செ.அக.);

     [ஒல் → ஒத்து + வாழ்.]

ஒத்தெழுத்திடு-தல்

ஒத்தெழுத்திடு-தல் oddeḻuddiḍudal,    18.செ.குன்றாவி. (v.t.)

   யாவரும் மனமொத்துக் கையெழுத்திடுதல்; to sign in token of agreement.

     ‘வினாப் போக்கி ஒத்தெழுத்திட் டுக் கொடுத்த பரிசாவது’ (S.I.l.Vii,412);. (செ.அக.);.

     [ஒத்து + எழுத்து + இடு-,]

ஒத்தை

 ஒத்தை ottai, பெ. (n.)

ஒற்றை பார்க்க (இ.வ.);;see {}. (செ.அக.);.

ஒத்தைநாடி

 ஒத்தைநாடி ottaināṭi, பெ. (n.)

ஒற்றைநாடி பார்க்க;see {}. (சா.அக.);.

     [ஒற்றை → ஒத்தை + நாடி.]

ஒத்தைப்பூண்டு

 ஒத்தைப்பூண்டு ottaippūṇṭu, பெ. (n.)

ஒற்றைப் பூண்டு பார்க்க;see {} (சா.அக.);.

ஒத்தையடிப்பாதை

 ஒத்தையடிப்பாதை ottaiyaḍippātai, பெ. (n.)

ஒற்றைய டிப்பாதை பார்க்க;see {}.

ஒன்

ஒன்1 oṉ, இடை. (part)

   ஒருசாரியை(தொல். எழுத்.180);; explelive. (செ.அக.);.

     [அன் → ஒன்.]

 ஒன்2 oṉ,    4.செ.கு.வி. (v.i.)

   1. பொருந்துதல்; to join.

   2. ஒன்றுதல்; to unite.

     [ஒல் → ஒன். (சு.வி.6);.]

ஒன்னப்பூ

ஒன்னப்பூ oṉṉappū, பெ. (n.)

   காதணியுளொன்று (வின்.);; an ear-ornament worn by women. (செ.அக.);.

     [உண்மை → ஒன்னம் + பூ – ஒன்னப்பூ.]

ஒன்னலன்

__,

பெ. (n.);

   பகைவன்; enemy, foe.

     “ஒன்னலர் மணிமுடி யுரிஞ்சு தாளினான்” (நைடத.நக ரப்.39); (செ.அக.);.

     [ஒன்று + அல + அன் – ஒன்றலன் → ஒன்னலன்.]

ஒன்னாதோர்

ஒன்னாதோர் oṉṉātōr, பெ. (n.)

   பகைவர்; foes, enemies.

     “இன்னாய் பெருமநின் னொன்னா தோர்க்கே” (புறநா.94.5); (செ.அக.);.

     [ஒன்று + ஆ + த + அவர் – ஒன்றாதவர் → ஒன்றாதார் → ஒன்னாதார் → ஒன்னாதோர்.]

ஒன்னான்

ஒன்னான் oṉṉāṉ, பெ. (n.)

   பள்ளிக்கூடத்திற்கு ஏறானை யடுத்துவரும் பையன்; the boy who comes second to school and next to the first boy called {}. (செ.அக.);.

     [ஒன் → ஒன்று + ஆன் – ஒன்றான் → ஒன்னான் = ஒன்றிவருப வன், ஒத்து வருபவன்.]

ஒன்னு1-தல்

__,

   12.செ.குன்றாவி. (v.t.);

   பொறுத் தல்; to endure.

     “ஒன்னா முனையோர்க் கொழிக வினித்துயில்” (பு.வெ.4,21); (செ.அக.);.

     [ஒல் → ஒன் → ஒன்னு.]

ஒன்னார்

ஒன்னார் oṉṉār, பெ. (n.)

ஒன்னாதோர் பார்க்க see {}.

     “தன்னொன்னார்” (நாலடி.129);

     “ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்” (குறள்.);. (செ.அக.);.

     [ஒன்னாதார் → ஒன்னார்]

ஒன்னு

ஒன்னு2 oṉṉudal,    15.செ.கு.வி. (v.i.)

   பொருந்துதல்; to agree, to be friendly,

     “ஒன்னாப் பூட்கைச் சென்னியர் பெருமான்” (பதிற்று.85-3);.

     [ஒல் → ஒன் → ஒன்னு.]

ஒன்பதினாயிரப்படி

ஒன்பதினாயிரப்படி oṉpadiṉāyirappaḍi, பெ. (n.)

   திருவாய் மொழிக்கு நஞ்சியர் செய்த விரிவுரை (வியாக்கியானம்);;   ஒன்பதினாயிரம் நூற்பாக்களைக் (கிரந்தங்களைக்); கொண்டது; name of a commentary by {} on the {}, consisting of 9000 granthas. (செ.அக.);.

     [ஒன்பது + இன் + ஆயிரம் + படி.]

ஒன்பது

ஒன்பது oṉpadu, பெ. (n.)

   1. ஒன்று குறைந்த பத்து, எட்டின்மேல் ஒன்று; the number nine, i.e. one from ten or one before ten. ஒன்பது (தொல்.);.

   2. ‘கூ’ என்னும் எண்ணுக்குறியீட்டுக்குரிய தமிழ் எண்ணுப்பெயர்; name of the ninth numerical symbol in Tamil.

   மறுவ. ஒன்பஃது. ஒன்பான். தொண்டு. தொண், தொவ்;   ம. ஒன்பது;   க. ஒம்பத்து;   தெ. தொம்மிதி;   து. ஓர்ம்ப;   பட. ஒம்பத்து;   கைக். வம்பெரு. வந்தி;   எரு. ஒப்து;   இரு. வெம்பது;   குட. ஒயிம்பது;   கோத. ஒன்பாத், ஒர்பாத்;   குற. ஒம்லுதி;   துட. வின் பொத். ஒன்பத். கோண். உண்மா, உண்ம. உண்மாக்;கட. தொம்மிதி.

     [ஒன்று + பத்து – ஒன்பத்து → ஒன்பது. ‘ஒன்று’ ஈறுகுறைந்தது கடைக்குறை. பத்து → பது எனத்திரிந்தது இடைக்குறை. ஒன்று குறைந்த பத்து என்பதே மரூஉ முடிபாகி ஒன்பது எனப் பேச்சுவழக்கில் ஈரசைச் சொல்லாகக் குறுகிற்று. இனி ஒன்பதுக் குமுன் பழந்தமிழில் வழங்கிய தொண்டு என்னும் ஒன்பதைக் குறித்த சொல்லும், பத்திலும் குறைவுற்றது என்னும் பொருளை வெளிப்படுத்தும் ‘தொள்’ (குறைபடுதல்); வினையினின்றே தோன்றியிருத்தலைத் ‘தொண்டு’ என்னும் சொல்லை நோக்கி அறியலாம்.]

ஒன்பது தொண்டு என்னும் எண்ணுப் பெயர்கள் அடிநிலைத்தி ரிபுற்றும் முடிநிலைத்திரிபுற்றும் உலக மொழிகளில் வழங்கி வருகின்றன.

   ஒன்பது கூட்டுச் சொல்லாகலான்;மூவசையும் மூவசைக்கு மேற்பட்டதுமான கூட்டுச்சொல் பேச்சுவழக்கில் ஒரசை அல் லது ஈரசைமரூஉச் சொல்லாகத்திரியும் என்னும் சொற்பிறப்புப் பொதுநெறியின் வண்ணம் திரவிடம் தவிர்ந்த மொழிகளில் அடிநிலைத்திரிபினும் முடிநிலைத்திரிபினையே மிகுதியாகப் பெற்றுள்ளது. இதன் விளக்கத்தைச் சொற்பிறப்பு விதிமுறை களில் காண்க.

ஒன்பஃது. ஒன்பது. ஒன்பான் என மூவேறு இடவழக்குகளின் விளைவாகப் பல்வேறு கிளைமொழிகளில் ஊடாடிப்பின் வரும் நிலைகளில் இச்சொல் முடிநிலைத்திரிபுற்றுள்ளது. அடி நிலைத்திரிபு அருகிக் காணப்படுகிறது.

ஒன்பது ஒ(உ);-ஓ ஆ: அடிநிலைத்திரிபுற்றவை.

 Milun Naga. {}, santali {};

 Georg. Utsgu.

   ஒன்பஃது – ஒஃது – கொது;முதல்வகை முடிநிலைத்திரிபுற் றவை.

 Chine. kiu, kau, chiu;

 Nep. [Gyamai], chyu;

 Sikk. Kyol;

 Thai kno. Siam kau. Kaut, Laos kau, kew;

 Anna kyin;

 Shan. kauf, Burm ko;

 Bali kutus;

 Buta gu, Tibd-gu, guh;

 Jap ku, ko, konotru;

 Mag. ki-lene;

 Mongol. Killien;

 Mag. Hung, Kilenc;

 Nep. (serpa); Guh;

     (Murmi); Кuһ.

ஒன்பது – பது – ப: இரண்டாம் வகை முடிநிலைத்திரிபுற்றவை.

 Nep (limbu);, phargbh;

 Circ. bughu;

 O.Egy. psj, pst;

 copt. psyt

ஒன்பது – பது – து – தொ: மூன்றாம் வகை முடிநிலைத்திரிபுற் றவை.

 Naga. thu, thaku, taku;

 Burm (kunaj); takau;

 Heb.tischah;

 Ani(swahili);. ti-sa;

 Ara. tissa-ha, tisà;

 Iraq. Tisa;

 Turk do-kuz.

ஒன்பது – பது – து – சு: நான்காம் வகை முடிநிலைத்திரிபுற்றவை.

 chine (Mand.); Chiu, jiu;

 Jawa. sanga, ngoho;

 Malay sambitan.

   தொண் (தொண்டு); – தெள;முதல்வகை அடிநிலைத்திரிபுற் றவை.

 Te. tommidi. Savara tinji, Tib dugu, dgu, czech devet;

 Turk dokuz. Russ. Dyeryat;

 pol dziewiec;

 Beng (Deoria chutia);. Dugu;

 Serbo denet.

தொள் (தொண்டு); – தெள – நெள: இரண்டாம் வகை அடிநிலைத்திரிபுற்றவை.

 L. navem;

 G neutv;

 OE nigon, E nine. GK ennea. lri naoi M. port nove;

 F. Neuf;

 Sp nuene, Rurn noua;

 Dut negen, Swed nio;

 Dan, Norw. ni, Esp. nau, yid nein, Goth nian;

 African nege.

 Brah. nul;

 Sind. nava, Sinh, nawa, narna;

 Skt navan, nava;

 Nep nou, rau;

 Koła nau;

 Pkt. Pali. Hind. Guj Mar ori. Beng. Punj. Kosh. Ass urd. Nav.

கூட்டுச்சொல்லாக வழங்குவன

ஒன்பது, தொள் (தொண்டு); என்னும் எண்ணுப்பெயர்களைப் பத்திலிருந்து ஒன்றைக்கழித்துக் கூட்டுச்சொல்லாகப் பழங்குடிமக் களுள் சிலர் வழங்கியபோது அவை மரூஉச் – சொல்லாகக் குறுகாத நிலையில் இருசொல்புணர்ந்த நிலைத்த கூட்டுச்சொல் நிலையிலேயே நிலைத்துவிட்டன. ஒன்று முதல் ஐந்து வரையி லான எண்ணுப்பெயர்களும் பத்தினைக் குறித்த எண்ணுப்பெய ரும் அவரவர் மொழிகளில் மிகவும் திரிபுற்ற பிறகு இந்தக் கூட்டுச்சொற்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவை பெருக வழங் கும் வணிக ஊடாட்டம் பெறாததால் மரூஉமுடிபு எய்தவில்லை யெனலாம்.

பின்னிசு, பாசுக்கு, மலையம், இந்தோனேசிய மொழிகளில் இந்நிலை காணப்படுகிறது

 Finn, yk – dekson (ஒன்று குறைந்த பத்து);

 Basq hed – etarsi (ஒன்று குறைந்த பத்து);

 Malay sem – bilan (ஒன்று குறைந்த பத்து);

 lndsne sem – bilan (ஒன்று குறைந்த பத்து);

அமெரிக்கப்பழங்குடியினருள் ஒரு பிரிவினராகிய அகதெக்கு மக்களும் நகுவாத்திமக்களும் ஒன்பதை ஐந்தும் நான்கும் என்னும் கூட்டுச்சொல்லால் குறித்தனர். கிரேக்கரின் முன்னோர் எட்டும் ஒன்றும் என்னும் கூட்டுச் சொல்லால் ஒன்பதைக் குறித்தனர்.

 Amer’s (aziec);, shek-nowe (ஐந்தும் நான்கும் 5 + 4);

 Greek. en – nea (எட்டும் ஒன்றும் 8 + 1);

கிரேக்கமொழியில் எட்டுக்குரிய ‘எண்’ என்னும் பழந்தமிழ்ச் சொல்லே வழக்கூன்றியிருப்பதும் அமெரிக்கப் பழங்குடிமக்க ளின் மொழிகளில் ஐந்தைக் குறித்த பழந்தமிழ்ச் சொல்லாகிய ‘கை’ என்பதன் திரிபாகிய செய் (செக்); வழக்கூன்றியிருப்பதும் கூர்ந்து நோக்கத்தக்கது.

ஒன்று முதல் பத்து வரையிலான தமிழ் எண்ணுப்பெயர்கள் உலக மொழிகளில் வியக்கத்தக்க வகையில் ஊடாட்டம் பெற்றிருப்பது ஞால முதன்மொழிக் கொள்கைக்கு அரண்சேர்ப்பதாயுள்ளது.

ஒன்பதொத்து

 ஒன்பதொத்து oṉpadoddu, பெ. (n.)

   ஒருவகைத்தாளம் (திவ்.திருவாய்.);; mode of beating time. (செ.அக.);. [

ஒன்பது + ஒத்து.]

ஒன்பான்

ஒன்பான் oṉpāṉ, பெ. (n.)

ஒன்பது பார்க்க;see {}.

     “ஒன்பான் முதனிலை முந்துகிளந் தற்றே” (தொல். எழுத்.463); (செ.அக.);.

     [ஒன்பது → ஒன்பதின் → ஒன்பான். பதின் → பான்.]

ஒன்ற

ஒன்ற oṉṟa, இடை. (part.)

   ஒர் உவமைச் சொல் (தொல்.பொருள்.286);; sign of comparison. (செ.அக.);

     [ஒல் → ஒன்று → ஒன்ற.]

ஒன்றடிமன்றடி

 ஒன்றடிமன்றடி oṉṟaḍimaṉṟaḍi, பெ. (n.)

   குழப்பம்; mixture of various things;

 topsy-turvydom;

 confusion;

 lack of order or system. (செ.அக.);.

     [ஒன்று + அடி – ஒன்றடி = ஒன்றாகக் குழப்புதல், ஒன்றடி மன்றடி – எதுகை குறித்த மரபு இணைமொழி.]

ஒன்றடிமன்றடியாய்

 ஒன்றடிமன்றடியாய் oṉṟaḍimaṉṟaḍiyāy,    கு.வி.எ. (adv.) ஒருசேர; in toto, completely. (செ.அக.).

     [ஒன்றடி + மன்றடி + ஆய்.]

ஒன்றனை யொன்றுபற்றுதல்

ஒன்றனை யொன்றுபற்றுதல் oṉṟaṉaiyoṉṟubaṟṟudal, பெ. (n.)

   ஒருவகைக் குற்றம் (தொல்.சூ.விருத். பக்.50);; fallacy of mutual dependence. (செ.அக.);.

     [ஒன்று + அன் +ஐ + ஒன்று + பற்றுதல்.]

ஒன்றன் கூட்டம்

ஒன்றன் கூட்டம் oṉṟaṉāṭṭam, பெ. (n.)

   ஒரேபொரு ளின் கூட்டம் (நன்.300);; collection of things of the same kind. (செ.அக.);.

     [ஒன்று + அன் + கூட்டம்.]

ஒன்றன்பால்

 ஒன்றன்பால் oṉṟaṉpāl, பெ. (n.)

   அஃறிணையொரு மைப்பால்; sign of the impersonal class. (செ.அக.);

     [ஒன்று + அன் + பால்.]

ஒன்றரைக்கண்ணன்

 ஒன்றரைக்கண்ணன் oṉṟaraikkaṇṇaṉ, பெ. (n.)

   ஒரு பக்கஞ் சரிந்த பார்வையன்; one who looks obliquely with half an eye shut;

 Iit man with an eye and a half;

 one who squints.

     “ஒன்றரைக்கண்ணன் கண்டீர்” (அப்பர்தேவா.);.

     [ஒன்று + ஆரை + கண்ணன் – ஒன்றாரைக் கண்ணன் – ஒன்றரைக் கண்ணன். ஆரை = ஆர்ந்த, சரிந்த.]

ஒன்றரைவாடம்

 ஒன்றரைவாடம் oṉṟaraivāṭam, பெ. (n.)

   ஒருநாள் விட்டு ஒருநாள்; alternative day.

     [ஒன்று+ஒறு+வாடம்]

ஒன்றறவாடம்

 ஒன்றறவாடம் oṉṟaṟavāṭam, பெ. (n.)

   ஒன்றுவிட் டொரு நாள்; altemate days. (செ.அக.);.

     [ஒன்று + அறு + வாடம்.]

ஒன்றறிசொல்

 ஒன்றறிசொல் oṉṟaṟisol, பெ. (n.)

   ஒன்றன்பாற்சொல்; sign, of the impersonal class. (செ.அக.);.

     [ஒன்று + அறி + சொல்.]

ஒன்றலர்

 ஒன்றலர் oṉṟalar, பெ. (n.)

   பகைவர் (பிங்.);; lit those who are not one with a person;

 foes, enemies. (செ.அக.);.

     [ஒன்று + அல் + அர். ‘அல்’ – எ.ம.இ.நி.]

ஒன்றா-தல்

ஒன்றா-தல் oṉṟātal,    6.செ.கு.வி. (v.i.)

   1. முதலதாதல், to be first.

     “ஒன்றா வுயர்கொடி யொன்றின்று” (பரிபா.4,41);.

   2. ஒன்றுபடுதல்; coalesce.

   3. ஒன்ற னுள் ஒன்று நிலைப்படல் (லயமாதல்);; to be amalga- mated.

   4. இணையின்றாதல்; to be without an equal.

     “ஒன்றாவுலகத்து” (குறள்.233); (செ.அக.);. [ஒன்று + ஆ(கு);.]

ஒன்றாக

ஒன்றாக oṉṟāka, வி.எ. (adv.)

   உறுதியாக (குறள்.233,உரை.);; certainly, surely, positively.

     “ஒன்றாக நல்லது கொல்லாமை” (குறள்.); (செ.அக.);.

     [ஒன்று + ஆக.]

ஒன்றாதவஞ்சித்தளை

ஒன்றாதவஞ்சித்தளை oṉṟātavañjittaḷai, பெ. (n.)

   நிரையீற்றுரிச் சீரின்முன் நேரசைவருந்தளை (இலக்.வி.718,உரை.);; combination of two metrical feet, the first of which is a {} and the next a foot beginning with {}. (செ.அக.);.

     [ஒன்று + ஆ + த + வஞ்சி + தளை.]

ஒன்றாமை

ஒன்றாமை oṉṟāmai, பெ. (n.)

   பகைமை; rivalry enmity.

     “ஒன்றாமை யொன்றியார் கட்படின்” (குறள்,886); (செ.அக.);.

     [ஒன்று + ஆ + மை. ‘ஒன்றாமை’ = பொருந்தாமை, சேராமை. ‘ஆ’ – எ.ம.இ.நி.]

ஒன்றார்

__,

பெ. (n.);

   பகைவர்; foes, opponents.

     “ஒன்றார் மும்மதி லெய்தவன்” (தேவா.1062,8); (செ.அக.);.

     [ஒன்று + ஆ + ஆர். – ஒன்றார். ‘ஆ’ – எ.ம.இ.நி.]

ஒன்றாலொன்றும்

 ஒன்றாலொன்றும் oṉṟāloṉṟum,    கு.வி.எ. (adv.) யாதொன்றினாலும்; by whatever means, at all, used with a negative.

     ‘ஒன்றாலொன்றுங் குறைவில்லை’ (வின்.); (செ.அக.);.

     [ஒன்றால் + ஒன்றும்.]

ஒன்றி

ஒன்றி1 oṉṟittal,    5. செ.கு.வி. (v.i.)

   பொருந்துதல்; to unite, combine.

     ‘ஒன்றித்து வாழவேண்டும்’ (வின்.); (செ.அக.);.

     [ஒன்று → ஒன்றி.]

 ஒன்றி2 oṉṟi, பெ. (n.)

   1. தனிமை; solitariness, singleness;

 loneliness.

   2. தனித்த ஆள்; one who is alone, solitary person. (செ.அக.);.

   க.ஒண்ட்டி;தெ.ஒண்டு.

     [ஒன்று → ஒன்றி.]

 ஒன்றி3 oṉṟi, பெ. (n.)

மாணி (பிரமசாரி);: celibate. (செ.அக.);.

     [ஒன்று → ஒன்றி.]

ஒன்றிக்கட்டை

 ஒன்றிக்கட்டை oṉṟikkaṭṭai, பெ. (n.)

   தனித்த ஆள்; single person, individual. (சா.அக.);.

     [ஒன்றி + கட்டை.]

ஒன்றிக்காரன்

 ஒன்றிக்காரன் oṉṟikkāraṉ, பெ. (n.)

   மனைவியில்லாத வன் (வின்.);; bachelor or widower. (செ.அக.);.

     [ஒன்றி + காரன் – ஒன்றிக்காரன்.]

ஒன்றிணை-தல்

 ஒன்றிணை-தல் oṉṟiṇaital, பெ. (n.)

   ஒன்றாகச்சேர்தல்; to get united.

     [ஒன்று+இணைத்தல்]

ஒன்றினமுடித்த றன்னினமுடித்தல்

ஒன்றினமுடித்த றன்னினமுடித்தல் oṉṟiṉamuḍittaṟaṉṉiṉamuḍittal, பெ. (n.)

   ஒருபொருளைக் கூறி முடிக்கையில் அதற்கினமான பொருளையும் அங் குத்தானே கூறி முடிக்கையாகிய உத்தி (நன்.14);; treating of some item of the subject matter of a treatise in such a way as to bring within its purview other items akin to it, one of 32 utti. (செ.அக.);

     [ஒன்றினம் + முடித்தல் + தன்னினம் + முடித்தல்.]

ஒன்றிப்பு

 ஒன்றிப்பு oṉṟippu, பெ. (n.)

   ஒருமிப்பு; union, harmony;

 concord, unity. (செ.அக.);.

     [ஒன்றி → ஒன்றிப்பு.]

ஒன்றியவஞ்சித்தளை

ஒன்றியவஞ்சித்தளை oṉṟiyavañjittaḷai, பெ. (n.)

   நிரையீற்றுரிச் சீரின்முன் நிரையசை வருந் தளை (இலக்.வி.718,உரை.);; combination of two metrical feet, the first of which is a {} and the next a foot beginning with {}. (செ.அக.);

     [ஒன்றிய + வஞ்சி + தளை.]

ஒன்றியார்

ஒன்றியார் oṉṟiyār, பெ. (n.)

   தன்னைச்சேர்ந்தவர்; friends;

 associates,

     “ஒன்றாமை யொன்றி யார்கட்படின்” (குறள்.886); (செ.அக.);.

     [ஒன்றி + அவர் – ஒன்றியவர் → ஒன்றியார்.]

ஒன்றியாள்

 ஒன்றியாள் oṉṟiyāḷ, பெ. (n.)

   ஒற்றையாள்; single person. (செ.அக.);.

     [ஒன்றி + ஆள்.]

ஒன்றிரண்டாய் அரைத்தல்

 ஒன்றிரண்டாய் அரைத்தல் oṉṟiraṇṭāyaraittal, பெ. (n.)

   பொடியாக்காமல் சிறிய துண்டுகளாகும்படி அரைத்தல்; grinding into several small rough granular pieces without making into a fine powder. (சா.அக.);.

     [ஒன்று + இரண்டு + ஆய் + அரைத்தல்.]

ஒன்றிரண்டு

 ஒன்றிரண்டு oṉṟiraṇṭu,    வி.எ. (adv.) மிகக்குறைவு; one or two, a few.

ம. ஒண்ணுரண்டு.

     [ஒன்று + இரண்டு – ஒன்றிரண்டு. எண்ணிக்கைக் குறைவு குறித்த குறிப்பு மொழி.]

ஒன்றிலொன்றின்மை

 ஒன்றிலொன்றின்மை oṉṟiloṉṟiṉmai, பெ. (n.)

   ஒன் றித்த பாங்கு இரண்டிலும் இன்மை (சி.சி.அளவை. மறைஞா.);; mutual negation of identity of two things. (செ.அக.);.

     [ஒன்றில் + ஒன்று + .இன்மை.]

ஒன்று

ஒன்று1 oṉṟudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. ஒன்றாய்ச் சேர்தல்; to unite;

 to coalesce;

 to grow together, as

 two trees;

 to become one.

   2. ஏற்றுக்கொள்ளுதல்; to agree.

   3. மனங்கலத்தில்; to be on intimate terms with.

     “நிரயங்கொள்பவரோ டொன்றாது” (புறநா.5,6);.

   4. ஒருமுகப்படுதல்; to set one’s mind solely on an aim or object.

     “நன்புல னொன்றி நாதவென் றரற்றி” (திருவாச. 4,82);.

   5. உவமையாதல்; to resemble to be similar.

வேயொன்றுதோ ளொருபால் (தொல்.பொ ருள்.286,உரை);. (செ.அக.);.

   ம. ஒன்னுக;   க., பட. ஓந்து;தெ. ஒனருஉ. ஒண்டு.

     [ஒல் → ஒன் → ஒன்று.]

 ஒன்று2 oṉṟu, பெ. (n.)

   ஒற்றைப்படை முதல் எண், இரண்டில் பாதி, மேல்வாயிலக்கத்தின் மிகச் சிறு முதல் எண்ணிக்கை; the first of the odd number and the lowest integer, half of two.

     “ஒன்றறிவதுவே உற்றறிவதுவே” (தொல்.பொருள்.மரபு.27);.

   2. ‘க’ என்னும் எண்ணுக் குறியீட்டுக்குரிய தமிழ் எண்ணுப் பெயர்; name of the numerical symbol ‘க’ in Tamil.

   ம. ஒன்னு;   க. ஒந்து;   தெ. ஒக, ஒக்க, ஒகட்டி, ஒண்டு;   து. ஒன்சி;   பட. ஓந்து;   கோத. ஒத்;   கொற. ஒண்ட்;   இரு. வொந்து;   கை. வனு. வண்ட;   எரு. ஒண்டு;   துட. வித்;   குட. ஒந்தி;   பர். ஒக்;   கோண். உந்தீ, ஒண்ட். உண்டீ;   கொலா, ஒக்கொத்;   குரு. ஒண்டா, ஒன்;   மால். ஒன்த். எண்ட், ஒண்ட்;பிரா. அசிட்.

     [உல் → ஒல் → ஒன்று. ஒல்லுதல் = ஒன்றுசேர்தல், ஒன்றாகத் திரளுதல், ஒரேகட்டில் அல்லது அமைப்பில் உருப்பெறுதல், ஒரேபொருளாகக் காணப்படுதல் என்னும் கருத்துப் பொரு ளில் ஒன்றைக் குறித்தது.]

ஒன்று என்னும் சொல் தமிழில் எண்ணுப் பெயரெச்சமாகும் போது ஓர், ஒரு, ஒற்றை,, ஒண்டி, ஒக்க, ஒக்கமை, ஒக்கி, ஒட்டை, ஒத்தெ, ஒல், ஒள் எனப்பல்வகை உலகவழக்குத்திரிபு கள் பெறும். இவற்றை அடிநிலைத்திரிபுகள் என்பர். பேச்சு வழக்கில் முடிநிலைத்திரிபு பெறுவது காலத்தால் பிற்பட்ட மொழிவளர் நிலைகளைக் சுட்டும். அதன்படி இச்சொல்வின் முதனிலை எழுத்தாகிய ஒகரம் மறைந்து அடுத்து எழுத்துக ளின் திரிபால் வளர்ந்த சொல்லாட்சிகள் முடிநிலைத்திரிபுகள் எனப்படும். இதன் மூலம் ஒன்று என்னும் மூலச்சொல் உலகமொழிகளில் அடிநிலைத்திரிபுகள் நிலவழிப்பரவல்க ளாக ஊடாடிய காலத்தையும் முடிநிலைத்திரிபுகளாக ஊடா டிய மொழிகளின் அல்லது மொழிபேசும் பகுதிகளின் வர லாற்று வழித்தடங்களையும் கண்டறியலாம்.

ஒன்று → ஒல் → ஒ – முதல்வகை அடிநிலைத்திரிபுற்றவை.

 O Egyp we;

 Chinese Mand. yi, I;

 Tib (ayami); i, iku;

 Manipuri. ania

ஒன்று – ஒள் – இரண்டாம் வகை அடிநிலைத்திரிபுற்றுவை

 L unus, F un;

 G ein;

 GK {};

 en;

 ON einn;

 Dut Cen;

 Kore han;

 It uno, Portu. Um: Sp uno;

 OE {}, E one;

 Goth ains;

 Afri ean, Siam neen, nung;

 Laos. nung, Rum un;

 Swed en;

 Dan {}, Esp. unu;

 Yid ein.

ஒன்று → ஒரு → ஓர் – மூன்றாம் வகை அடிநிலைத்திரிபுற் றவை.

 Afri – (Nubi); wer;

 lrag ferd;

 Georg erthi;

 Turk br.

ஒன்று → ஒற்றை → ஒத்தை – நான்காம் வகை அடிநிலைத்தி ரிபுற்றவை.

 Jap. hitotsu, hito, Nawnsang Naga vanthe;

 Uraon unta, Russ. adin, adyin, Poli yedna, yednoo;

 Serbo jedan;

 Indone satu, Jawa setu, Malay satu;

 Basq bot;

 Vietn mot;

 Copt vot;

 Burm al.

ஒன்று → ஒக்க, ஒக – ஐந்தாம்வகை அடிநிலைத்திரிபுற்றவை.

 Mag Hung egy;

 O Ar ughad, ahad. Ar vaahid, wahid;

 Iraq wrhid;

 Mangol okan, niken;

 voka.

ஒன்று – ஏக், எக, கே. கெத், சே. – ஆறாம்வகை அடிநிலைத்திரிபுற்றவை.

 Heb {}. Basg ika;

 Mag egy;

 Fin yaksi;

 O lri ahaon;

 Pkt {};

 Skt {} Hin. Urd. Mar Guj. Beng. Ass Punj. Ori {};

 Nep {}, Sinh {};

 Sik kat, chi;

 Buta chi;

 Sum ges;

 Cauc aka;

 Tib chik;

 Afri-bank ika;

 Moraco igat.

ஒன்று என்பதன் தொன்முது வடிவம் ‘ஒல்’ என்பதே. இது உலக மொழிகளில் மலைவாழ்மக்களிடை ஓரிரு மொழிகளில் மட்டும் எஞ்சியுள்ளது. வடகிழக்கு வங்காளத்தில் திமல் மொழியில் ‘எலங்’ என்றும், சையாம் இனமொழியான பொக் காரைன் மொழியில் ‘லுங்’ என்றும் பருமிய தெளங்மொழியில் ‘லெளங்’ என்றும், சையாம் வாவோக மொழிகளில் ‘நுங்’ என்றும், நேப்பாளக்கிளை மொழிகளான வயு. செளராசிய மொழிகளில் ககர முன்னொட்டு பெற்று ‘கொலு’, ‘கொலோ’ என்றும் வழங்குகிறது.

ஒன்றைக் குறித்த ‘ஒல்’ என்னும் தொன்முது வடிவம் லகரம் நீங்கி ‘ஒ’ என நின்றும் ஒ → உ → இ எனத்திரிந்தும் ஒன்றைக் குறித்த நிலைகளைப் பழைய எகுபது மொழியிலும் திபெத்தி யக் கிளை மொழியிலும் இனமொழிக்குடும்பக் கிளைமொழி கள் அனைத்திலும் காணமுடிகிறது. இதனை முதனிலை அடிநி லைத்திரிபுகள் எனலாம்.

ஒல் → ஒன் எனத்திரிந்து ஒன்றைக் குறித்த காலத்திற்குரிய சொல்லாட்சி நிலைகளைத் தமிழிலும் ஐரோப்பிய மொழிகளி லும் காணமுடிகிறது. இதனை இரண்டாம் அடிநிலைத்திரிபுகள் எனலாம். ஒல் → ஒன் எனத்திரிந்த பின் அதன் வழிநிலைத் திரிபுடன் துகர ஈறு சேர்ந்து ஒல் + து = ஒன்று என முடிநிலைத்திரிபும் பெற்ற நிலையே பழந்தமிழிலும் திரவிட மொழிகளிலும் தெளிவாகக் காணப்படுகிறது.

ஒல் → ஒரு → ஒர் எனத்திரிந்து ஒன்றைக்குறித்த காலத்திற்குரிய சொல்லாட்சி நிலைகளை ஆப்பிரிக்க ஈராக்கிய சார்க்கிய துருக்கிய மொழிகளில் காணமுடிகிறது. இதனை மூன்றாம் அடிநிலைத்திரிபுகள் எனலாம். ஒரு ஓர் என்பன ஒன்று என்று

   9

எண்ணுப்பெயரின் பெயரடியாக (oblique terms); தமிழில் வழங்கும். இந்தப் பெயரடிகளையே எண்ணுப்பெயராக ஏற் றுக்கொண்ட மொழிகள் மேற்றிசையில் வழக்கூன்றியவை.

இதைப் போன்றே ஒன்று → ஒற்றை, ஒத்தெ எனத்திரிந்து ஒன்றைக்குறித்த சொல்லாட்சிநிலைகளை சப்பானியத்திலும், தென்கிழக்காசிய மொழிகளிலும், சோவியத்து மொழிகளிலும், போலந்து செர்பியமொழிகளிலும் காணமுடிகிறது. இதனை நான்காம்வகை அடிநிலைத்திரிபுகள் எனலாம்.

ஒன்று → ஒக்க → ஒக எனத்திரிந்து ஒன்றைக் குறித்த சொல்லாட்சிகளை அரேபிய, அங்கேரிய, மங்கோலிய மொழி களில் காணமுடிகிறது. திரவிட மொழிகளில் தெலுங்கில் இச்சொல் இவ்வடிவத்தில் பெருக வழங்குகிறது. இதனை ஐந்தாம் வகை அடிநிலைத்திரிபுகள் எனலாம்.

ஒன்று → ஒக்க → ஏக் → கே → கெத் → சிக்சே எனத்திரிந்து ஒன்றைக் குறித்த சொல்லாட்சிகளை வடநாட்டு மொழிகளிலும் சமற்கிருதத்திலும் பூட்டான், சிக்கிம், மியான்மார் (பர்மா); திபேத்து, இத்தோனேசியா, மலாய், ஆப்பிரிக்க பண்டுமொழி களிலும் காணமுடிகிறது. இதனை ஆறாம் வகை அடிநிலைத்தி ரிபுகள் எனலாம்.

ஒல் + ஒது – ஒன்று எனத்திரியாமல் ஒதது எனவும் ப,ம,வ, முன்னெழுத்துப் பெற்றுப் பொத், மொத்து, வொத் எனவும் திரிந்து ஒன்றைக் குறித்த சொல்லாட்சிகளை பாசுக்கு, வியட் நாம், எகுபதிய சாப்திக்கு ஆகிய பல்வேறு திசைகளில் சிதறிய தனிநிலை மொழிகளில் காணமுடிகிறது. இதனை ஏழாம் வகை அடிநிலைத்திரிபுகள் எனலாம்.

உலகமொழிகளில் ஒன்று என்னும் எண்ணுப்பெயர் வழக்கூன் றிய இவ்வரலாறு அவ்விடம் மொழிகள் பிரிந்துசென்ற காலங் களை உணர்த்துவன எனக்கொள்ளலாம்.

 ஒன்று3 oṉṟu, பெ. (n.)

   1. ஒற்றுமை; union.

     “வேந்தர் வேந்த னிதயமு மொன்றாய் நின்ற வியற்கையை” (பாரத.சூதுபோர்.7);.

   2. மதிப்பிற்குரிய பொருள்; object of consequence.

     “ஒன்றே செய்தலும் வேண்டும், ஒன்றும் நன்றே செய்தலும். நன்றும் இன்றே செய்தலும் வேண்டும்.

   3. மதிப்புக்குரிய மாந்தன்; person worthy of regard.

     “ஒறுத்தாரை யொன்றாக வையாரே” (குறள்.155);.

   4. ஒப்பற்றது; that which in uncomparable.

ஒன்றேயாக நிறைந்த இறைவன் (வ.வ.);

   5. வீடுபேறு (திவா.);; attaining salvation.

   6. வாய்மை; truth.

     “ஒன்று ரைத்து” (கம்பரா.கிளை.24);.

     [ஒல் → ஒன் → ஒன்று.]

 ஒன்று4 oṉṟu, பெ. (n.)

   1. சிறுநீர் கழித்தலுக்கு ஆகுபெயராய் வழங்கும் சொல்; enphemism for urination.

ஒன்றுக்குப்போய்வா (உ.வ.);.

   2. விள்ளு (விந்து.);; semen.

     “இரண்டடக்கார் ஒன்று பலகாலமும் விட்டிடார்” (திருவேங்.சத.74);.

 ஒன்று5 oṉṟu, இடை. (conj.)

   அயற்படு பொருளைச் சுட்டும் இடைச்சொல்; or, else ஒன்று தீவினையை விடு;

ஒன்று அதன் பயனை நுகர் (உ.வ.);.

     [ஒல் → ஒன்று.]

ஒன்றுகட்டு-தல்

ஒன்றுகட்டு-தல் oṉṟugaṭṭudal,    5.செ.குன்றாவி. (v.t.)

   சரிப்படுத்துதல் (யாழ்.அக.);; to square up;

 to balance (செ.அக.);.

     [ஒன்று2 + கட்டு.]

ஒன்றுகுடி

ஒன்றுகுடி oṉṟuguḍi, பெ. (n.)

   ஒட்டுக்குடி (வின்.);; family or person living in another’s house or garden

     [ஒன்று2 + குடி.]

ஒன்றுகூடு-தல்

ஒன்றுகூடு-தல் oṉṟuāṭudal,    5.செ.கு.வி. (v.i.)

   1. ஒன்றாய்ச் சேர்தல்; to meet one another;

 to gather in an assembly;

 to assemblo together.

   2. ஒன்றுபடுதல்; to be united in harmony. (செ.அக.);.

     [ஒன்று2 + கூடு.]

ஒன்றுகூட்டு

ஒன்றுகூட்டு1 oṉṟuāṭṭudal,    5.செ.குன்றாவி. (v.t.)

   1. ஒன்றாய்ச் சேர்த்தல்; to gather together, collect.

   2. ஒருமனதாக்குதல்; to bring about an agreement.

     [ஒன்று2 + கூட்டு.]

 ஒன்றுகூட்டு2 oṉṟuāṭṭu, பெ. (n.)

   ஒருசேர்க்கை (வின்.);; concord;

 harmony, living on terms of friendship. (செ.அக.);.

     [ஒன்று2 + கூட்டு.]

 ஒன்றுகூட்டு3 oṉṟuāṭṭu, பெ. (n.)

   கொண்டுகூட்டு (யாழ்.அக.);; mode of construing a verse. (செ.அக.);.

     [ஒன்று1 + கூட்டு.]

ஒன்றுகை

 ஒன்றுகை oṉṟugai, பெ. (n.)

   இசைகை; fitting together. (செ.அக.);.

     [ஒன்று → ஒன்றுகை.]

ஒன்றுகொத்தையா-தல்

ஒன்றுகொத்தையா-தல் oṉṟugottaiyātal,    6.செ.கு.வி. (v.i.)

   அரைகுறையாதல்; to be defective, incomplete.

     ‘ஒன்றுகொத்தையாய்க் காரியஞ்செய்கிறான்’ (கொ.வ.); (செ.அக.);.

     [ஒன்று2 + கொத்தை + ஆ(கு);.]

ஒன்றுக்கிரு-த்தல்

ஒன்றுக்கிரு-த்தல் oṉṟukkiruttal,    2.செ.கு.வி. (v.i.)

   சிறுநீர் கழித்தல்; to urinate. (செ.அக.);.

     [ஒன்று2 + கு + இரு-த்தல்.]

ஒன்றுக்குப்போ-தல்

ஒன்றுக்குப்போ-தல் oṉṟukkuppōtal,    8.செ.கு.வி. (v.i.)

ஒன்றுக்கிரு பார்க்க;see {}.

     [ஒன்று2 + கு + போ.]

ஒன்றுக்குமற்றவன்

ஒன்றுக்குமற்றவன் oṉṟukkumaṟṟavaṉ, பெ. (n.)

   பய னற்றவன்; good-for-nothing fellow, useless person. (செ.அக.);.

     [ஒன்றுக்கும்2 + அற்றவன்.]

ஒன்றுக்கொன்று

ஒன்றுக்கொன்று oṉṟukkoṉṟu, பெ. (n.)

   1. ஒன்றோ டொன்று; mutuality, one with another.

ஒன்றுக்கொன்று தொடர்ச்சியாயிருக்கிறது (உ.வ.);.

   2. ஒன்றினொன்று; comparison of one thing with another.

ஒன்றுக்கொன்று மேல்.

   3. ஏட்டிக்குப்போட்டி பார்க்க;see {}.

நான் பேசினால் ஒன்றுக்கொன்று சொல்லுவேன் (உ.வ.);. (செ.அக.);.

     [ஒன்று2 + கு + ஒன்று.]

ஒன்றுநன்

ஒன்றுநன் oṉṟunaṉ, பெ. (n.)

   நண்பன் (பிங்.);; he who is at one with a person, friend. (செ.அக.);.

     [ஒன்று1 → ஒன்றுநன்.]

ஒன்றுபடு

ஒன்றுபடு1 oṉṟubaḍuttal,    20.செ.கு.வி. (v.i.)

   ஒப்புரவாக்கல்; to bring about friendship. (ஆ.அக.);.

     [ஒன்று2 + படுத்தல்.]

 ஒன்றுபடு2 oṉṟubaḍudal,    20.செ.கு.வி. (v.i.)

   1. ஒருதன்மையாதல்; to coalesce.

     “ஒன்றுபட்டு வழிமொ ழிய” (புறநா.17,4);.

   2. இணக்கமாதல்; to become reconciled;

 to make peace.

இருபாலாரும் ஒன்றுபட்டார் கள் (செ.அக.);.

     [ஒன்று2 + படு.]

ஒன்றுபாதி

ஒன்றுபாதி oṉṟupāti, பெ. (n.)

   1. பாதி (இ.வ.);; a moiety, a half.

   2. ஏறக்குறையப் பாதி (இ.வ.);; roughly half.

   3. நடுஇரவு; mid night.

   4. சிலபல; some. (செ.அக.);.

ம. ஒன்றுபகுதி.

     [ஒன்று2 + பாதி.]

ஒன்றுமண்டடி

 ஒன்றுமண்டடி oṉṟumaṇḍaḍi, பெ. (n.)

ஒன்றடிமன்றடி பார்க்க;see {}. (யாழ்ப்.); (செ.அக.);.

ஒன்றுமன்றடி

 ஒன்றுமன்றடி oṉṟumaṉṟaḍi, பெ. (n.)

ஒன்றடிமன்றடி (யாழ்ப்.); பார்க்க;see {}. (செ.அக.);.

ஒன்றுமற்றவன்

ஒன்றுமற்றவன் oṉṟumaṟṟavaṉ, பெ. (n.)

   1. ஏழை, வறியவன் (தரித்திரன்);; destitute, poorman. (செ.அக.);.

   2. பயனற்றவன்; good for nothing fellow, useless person. (ஆ.அக.);.

     [ஒன்றும் + அற்றவன்.]

ஒன்றுமொழி-தல்

ஒன்றுமொழி-தல் oṉṟumoḻidal,    2.செ.கு.வி. (v.i.)

   வஞ்சி னங்கூறுதல்; to declare with an oath.

     “இடியிசைமுரச மொடொன்று மொழிந்து” (பதிற்றுப்.66,4);. (செ.அக.);.

     [ஒன்று2 + மொழி-தல்.]

ஒன்றுமொழிகோசர்

 ஒன்றுமொழிகோசர் oṉṟumoḻiācar, பெ. (n.)

   சொன்ன சொல் தவறாத ஒற்றுமையுடைய கோசர்; Kosar, a community known for their integrity and truthfulness.

     [ஒன்று + மொழி + கோசர்.]

ஒன்றும்

 ஒன்றும் oṉṟum, பெ. (n.)

   சிறிதும்; anything, even onething. (used with negative predicates); ஒன்றும் செய்ய வில்லை (உ.வ.);.

ம. ஒன்னும்.

     [ஒன்று + உம்.]

ஒன்றுவிடாமல்

 ஒன்றுவிடாமல் oṉṟuviṭāmal,    வி.எ. (adv.) முழுமை யாக ஒன்றும் விடாமல்; not leaving out anything, everything included, entirely, fully.

ம. ஒன்னொழியாதெ.

     [ஒன்று + விடாமல்.]

ஒன்றுவிட்ட

 ஒன்றுவிட்ட oṉṟuviṭṭa, கு.பெ.எ. (adj.)

   உறவு முறை யில் ஒரு தலைமுறை விட்ட; one step removed, in relationship.

அவன் எனக்கு ஒன்று விட்ட அண்ணன் (உ.வ.); (செ.அக.);.

     [ஒன்று + விட்ட.]

ஒன்றொழிபொதுச்சொல்

ஒன்றொழிபொதுச்சொல் oṉṟoḻiboduccol, பெ. (n.)

   இருதினையாண்பெண்ணுள் ஒன்றினையொழிக் கும் பொதுச் சொல் (நன்.269);; term common to both genders, one of which is intended, the other being excluded by the context.

     [ஒன்று + ஒழி + பொதுச்சொல்.]

ஒன்றோ

ஒன்றோ oṉṟō, இடை. (part..)

   1. எண்ணிடைச்சொல்; not only, but also;

 connective between nouns and sometimes verbs.

     “பொய்படு மொன்றோ புனைபூணும்” (குறள்,836);.

   2. அயற்படு பொருள் தரும் இடைச் சொல்; either-or

     “ஏவலா னரச னொன்றோ விருபிறப் பாளன்” (சீவக.1682);.

     [ஒன்று + ஒ. ஒன்றோ, ஒகாரம் பிரிநிலை.]

ஒபு

 ஒபு obu, பெ. (n.)

   கதவு (பிங்.);; door.

     [ஓ = மதகுப்பலகை. ஓ → ஓவு → ஓபு.]

ஒப்ப

ஒப்ப oppa, இடை. (part.)

   உவம வாய்பாடுகளுள் ஒன்று (தொல்.பொருள்.291);; adverbial word of comparison.

     “கற்பிளவோடு ஒப்பர் கயவர்” (நல்வழி);.

     [ஒ → ஒல் → ஒப்ப.]

ஒப்பக்கதிர்

 ஒப்பக்கதிர் oppakkadir, பெ. (n.)

   அணிகலனை மெருகிடுங் கருவி (வின்.);; jeweller’s polishing instrument (செ.அக.);.

     [ஒப்பம் + கதிர்.]

ஒப்பங்கூறு

 ஒப்பங்கூறு oppaṅāṟu, பெ. (n.)

   பங்கு ஓலை (பத்திரம்.); (C.G.);; partition deed showing division of property. (செ.அக.);.

மறுவ. பங்கோலை, பங்காவணம். (பங்குபத்திரம், பாகபத்தி ரம்);.

     [ஒப்பம் + கூறு. ஒப்பம் = செப்பம், ஒழுங்கு.]

ஒப்பங்கூறுச்சீட்டு

 ஒப்பங்கூறுச்சீட்டு oppaṅāṟuccīṭṭu, பெ. (n.)

ஒப்பங் கூறு பார்க்க (C.G.);;see {}. (செ.அக.);.

     [ஒப்பம் + கூறு + சீட்டு.]

ஒப்பங்கொடு-த்தல்

ஒப்பங்கொடு-த்தல் oppaṅgoḍuttal,    4.செ.கு.வி. (v.i.)

   கட்டளை கொடுத்தல் (யாழ்ப்.);; to grant an order, issue a summons. (செ.அக.);.

     [ஒப்பம் + கொடு-த்தல்.]

ஒப்பசெப்பம்

 ஒப்பசெப்பம் oppaseppam, பெ. (n.)

   சமம் (வின்.);; levelness, as of ground. (செ.அக.);.

     [ஒப்பம் + செப்பம்.]

ஒப்பச்செய்-தல்

ஒப்பச்செய்-தல் oppa-c-cey-,    1.செ.குன்றாவி (v.t.)

   ஒத்துக் கொள்ளச் செய்தல்; to cause to agree. (ஆ.அக.);.

     [ஒப்ப + செய்-தல்.]

ஒப்படி

ஒப்படி1 oppaḍi, பெ. (n.)

   1. அறுவடை (உ.வ.);; harvest.

   2. ஒருவகைக் கூட்டுநிதி; a kind of common good fund raised by proportionate contribu- tions from all land owners. (செ.அக.);

தெ. ஒப்பிடி.

     [ஒப்பு → ஒப்படி (வே.க.112);.]

 ஒப்படி2 oppaḍi, பெ. (n.)

   தூய்மை;   துப்புரவு; cleanliness, neatness.

வீட்டை ஒப்படியாக வைத்துக் கொள் (இ.வ.);.

     [உவப்படி → ஒப்படி.]

 ஒப்படி3 oppaḍi, பெ. (n.)

   அணியமானது (m.m.);; that which is ready. (செ.அக.);

     [ஒப்பம் → ஒப்படி.]

ஒப்படிமிசுக்கு

 ஒப்படிமிசுக்கு oppaḍimisukku, பெ. (n.)

   நில விளைச்சற் கணக்கு (இ.வ.);; computation of the actual value of a crop. (செ.அக.);.

     [ஒப்படி + மிசுக்கு.]

ஒப்படியிருக்கை

ஒப்படியிருக்கை oppaḍiyirukkai, பெ. (n.)

   யாழ் மீட்டும் இருக்கை நிலை யொன்பதனுள் ஒன்று (சிலப்.8,25,உரை.);; a posture, one of nine irukkai. (செ.அக.);.

     [ஒப்படி + இருக்கை.]

ஒப்படை

ஒப்படை1 oppaḍaittal,    4.செ.குன்றாவி. (v.t.)

   1. ஒப்புவித்தல்; to entrust, consign, deliver, give over to the charge of another.

அவனிடத்தில் எல்லாப் பொறுப்பையும் ஒப்படைத்திருக்கிறான் (உ.வ.);.

   2. ஈடுகொடுத்தல்; to make amends give satisfaction, furnish a security, compensate, indemnify.

பணம் வாங்கத் தன் சொத்துக்களையெல்லாம் ஒப்படைத்தான். (உ.வ.);.

   3. பரிந்துரைசெய்தல் (வின்.);; to recommend. (செ.அக.);.

     [ஒப்பு + அடை-த்தல்.]

 ஒப்படை2 oppaḍai, பெ. (n.)

   1. ஒப்புக் கொடுக்கை; entrusting, surrender, commitment delivery, pledging. giving charge.

   2. ஒப்படைப்பு பார்க்க;see {}. (செ.அக.);.

     [ஒப்பு + அடை.]

ஒப்படைப்பு

 ஒப்படைப்பு oppaḍaippu, பெ. (n.)

   முறைமன்ற ஆணையை நிறைவேற்றுகை;     [ஒப்பு + (அடை); அடைப்பு.]

ஒப்பணி

ஒப்பணி1 oppaṇidal,    4.செ.குன்றாவி. (v.t.)

   ஒப்பனை செய்தல்; to decorate, embellish.

     “ஒப்பணிதலிற் சிவப்பாதல்” (திவ்.பெரியாழ்.3,6,8,வ்யா.பக்.690); (செ.அக.);.

     [ஒப்பு + அணி – ஒப்பணி.]

 ஒப்பணி2 oppaṇi, பெ. (n.)

   உவமையணி;     [ஒப்பு + அணி.]

ஒப்பந்தமானகாணி

 ஒப்பந்தமானகாணி oppandamāṉakāṇi, பெ. (n.)

   வரியொழுங்கு செய்யப்பட்ட நிலம் (வின்.);; land for which the tax or tithe has been commuted into a lump sum by agreement (செ.அக.);.

     [ஒப்பந்தம் + ஆன + காணி.]

ஒப்பந்தம்

ஒப்பந்தம்1 oppandam, பெ. (n.)

   1. உடன்படிக்கை; agreement, stipulation, contract.

   2. கட்டுப்பாடு; unani- mity;

 accord. ஊரெல்லாம் ஒப்பந்தமாயிருக்கிறது.

   3. நடு (வின்.);; middling quality, mediocrity.

   4. சமன்; smoo- thness, evenness, levelness.

ஒப்பந்தமான நிலம் (வின்.);. (செ.அக.);.

   ம. ஒப்பந்தம்;   க. ஒப்பந்த;   து. ஒப்பந்த;தெ. ஒப்பந்தமு.

     [ஒப்பு → ஒப்பந்தம். ‘அந்தம்’ – சொல்லாக்க ஈறு.]

 ஒப்பந்தம்2 oppandam,    கு.வி.எ. (adv.) ஒப்பாக; similarly, equally.

அவனுக்கு ஒப்பந்தம் நீ செய்ய வேண்டும். (இ.வ.); (செ.அக.);.

     [ஒப்பு + அந்தம் – ஒப்பந்தம். பெயர்ச்சொல் வினை யெச்சப் பொருள் தந்தது.]

ஒப்பந்தம்பண்ணு-தல்

ஒப்பந்தம்பண்ணு-தல் oppandambaṇṇudal,    15.செ.கு.வி. (v.i.)

   1. உடன்படிக்கை செய்தல்; to agree, to contract, covenant.

   2. ஈடாகக் கொடுத்தல் (வின்.);; to give as equivalent for.

   3. சமம்பண்ணுதல் (வின்.);; to level, smooth on. (செ.அக.);.

     [ஒப்பந்தம் + பண்ணு-.]

ஒப்பனை

ஒப்பனை oppaṉai, பெ. (n.)

   1. உவமை; simile, comparison.

   2. சான்று (சாட்சியம்);; proof, evidence.

   3. மேற்கோள். எடுத்துக்காட்டு (திருட்டாந்தம்);; instance, example, parallel.

   4. போலி (பாவனை.); (வின்.);; likeness, effigy.

   5. சமம்; levelness, evenness (W.);.

   6. அழகு; adornment, decoration, beautification.

     “வடிவை யொப்பனை செய்தவாறு” (பாரத இந்திர.26);. (செ.அக.);.

ம. ஒப்பன.

     [ஒ → ஒப்பு → ஒப்பனை. (வே.க.112);.]

ஒப்பனை காட்டு-தல்

ஒப்பனை காட்டு-தல் oppaṉaikāṭṭudal,    5.செ.கு.வி. (v.i.)

   1. ஒப்புக் காட்டுதல்; to exhibit a likeness, by drawing

 a picture or by making a bust.

   2. மேற்கோள் காட்டுதல் (வின்.);; to adduce an illustration or parallel. (செ.அக.);.

     [ஒப்பனை + காட்டு.]

ஒப்பன்

ஒப்பன் oppaṉ, பெ. (n.)

   மெருகிடப்பட்டது; that which has been burnished.

     “ஒப்பன் திருக்கைக் காறை… ஒப்பன் திருவடிக்காறை” (S.l.l.ii.7);. (செ.அக.);.

     [ஒப்பு → ஒப்பன் (வே.க.112); ஒப்பு = செப்பம், அழகு.]

ஒப்பமிடு

ஒப்பமிடு1 oppamiḍudal,    18.செ.குன்றாவி. (v.t.)

   1. சமமாக்குதல்; to smoothen, level, make even.

   2. மணி முதலியன துலக்குதல் (புறநா.147,7);; to polish, as a gem.

   3. ஒப்பனை செய்தல் (அலங்கரித்தல்);; to ornament.

பொன்னிலே நீலமணியை அழுத்திப்பேணி ஒப்பமிட்டாற் போன்ற (கலித்.117,உரை.); (செ.அக.);.

ம. ஒப்பமிடுக.

     [ஒப்பம் + இடு.]

 ஒப்பமிடு2 oppamiḍudal,    18.செ.குன்றாவி. (v.t.)

   1. கையொப்பமிடுதல்; to subscribe one’s name to.

   2. ஆணை ஓலை (அதிகார பத்திரங்); கொடுத்தல்; to grant a certificate of privileges or honours;

 to grant a diploma or sanad. (செ.அக.);.

     [ஒப்பம் + இடு.]

ஒப்பம்

ஒப்பம்1 oppam, பெ. (n.)

   1. ஒப்பு (வின்.);; parallel, comparison, resemblance.

   2. ஒருதன்மை; unchangeabi- lity, oneness,

     “ஒப்பமா யிரண்டற்றொன்றாய்” (கைவல்ய தத்துவவி.28);.

   3. சமம் (வின்.);; levelness.

   4. மெருகு (புறநா.147,7,உரை.);; gloss, polish.

   5. ஒப்பனை (கலித். 117,1, உரை.);; ornamentation, make-up. (செ. அக.);.

   ம. ஒப்பம்;   க. ஒப்ப;   கோத. ஒப்;   துட. உப்;   குட. ஒப்ப;   து. ஒப்பி;   தெ. ஒப்பு;   பர். ஒபிப்;குரு. ஒக்னா.

     [ஒப்பு → ஒப்பம்.]

 ஒப்பம்2 oppam, பெ. (n.)

   1. கையொப்பம்; signature

   2. கட்டளை (யாழ்ப்);; writ, summons, citation, order

   3. ஆணை ஓலை (அதிகார பத்திரம்); (யாழ்ப்);; written grant of privileges or honours;

 sanad. (செ.அக.);. [ஒப்பு → ஒப்பம்.]

ஒப்பரக்காரன்

 ஒப்பரக்காரன் opparakkāraṉ, பெ. (n.)

ஒப்புரவுக் காரன் பார்க்க;see {}. (செ.அக.);.

ஒப்பராவி

 ஒப்பராவி opparāvi, பெ. (n.)

   துலாக்கோல் செய்வோன் (வின்.);; one who makes balance. (செ.அக.);.

     [ஒப்பு + அராவி – ஒப்பராவி.]

ஒப்பராவு-தல்

ஒப்பராவு-தல் opparāvudal,    9.செ.கு.வி. (v.i.)

   துலை (தராசு); செய்தல் (வின்.);; to make a balance.

     [ஒப்பு + அராவு – ஒப்பராவு = ஒப்பாகத் துலைக்கோலை அராவிச் சமன்செய்தல்.]

ஒப்பளவை

ஒப்பளவை oppaḷavai, பெ. (n.)

உவமையளவை (உபமானப்பிரமாணம்.); (சி.சி.அளவை. 1); (Log.); ana-

 logy (செ.அக.);.

     [ஒப்பு + அளவை.]

ஒப்பா-தல்

ஒப்பா-தல் oppātal,    6.செ.கு.வி. (v.i.)

   1. உவமையாதல்; to be similar.

   2. நேராதல்; to equal. (செ.அக.);.

     [ஒப்பு + ஆ(கு);தல் – ஒப்பாதல்.]

ஒப்பாக்கு-தல்

ஒப்பாக்கு-தல் oppākkudal,    5.செ.குன்றாவி. (v.t.)

   இணை யாக்குதல், சமனாக்குதல்; to make equal, level. [ஒப்பு + ஆக்கு.]

ஒப்பாசாரக்காரன்

ஒப்பாசாரக்காரன் oppācārakkāraṉ, பெ. (n.)

   1. ஒப்புக்குப் பழக்கவழக்கங்களைக் கடைபிடிப்பவன்; one who conforms merely to external rites or usage.

   2. மாயக்காரன்; hypocrite, dissembler.

     [ஒப்பு + ஆசாரம் + காரன். Skt. {}]

ஒப்பாசாரம்

ஒப்பாசாரம் oppācāram, பெ. (n.)

   1. உடன்படிக்கை; agreement, covenant.

அவனுக்கும் உனக்கும் ஒப்பாசார மென்ன?

   2. ஒத்த ஒழுக்கம்; conformity, proper conduct.

   3. ஏய்ப்பு (வின்.);; hypocrisy.

   4. கண்டுங் காணாதது போலிருக்கை (யாழ்ப்);; winking at an act, connivance.

   5. புறவொழுக்கம்; formal, external conduct (செ.அக.);.

     [ஒப்பு +ஆசாரம் Skt. {}.]

ஒப்பாரி

ஒப்பாரி1 oppārittal,    4.செ.குன்றாவி. (v.t.)

   ஒத்தல்; to resemble, look like.

     “பொன்னை யொப்பாரித்து” (தேவா.1.200,10);. (செ.அக.);.

     [ஒப்பு + ஆரி – ஒப்பாரி. ஆரி = பொருந்து. ஆரித்தல் = பொருத்தல், செய்தல்.]

 ஒப்பாரி2 oppāri, பெ. (n.)

   1. ஒப்பு; equal.

     “அவரன்ன ஒப்பாரி” (குறள், 1071);.

   2. போலி; pretence, hoax, imposture.

     “நாளு மொப்பாரியாய்வந்த புத்துறவுக்கு நன்மை பலவே செய்குவார்” (அறப்.சத.30);. (செ.அக.);.

   க. ஒப்பாரி;தெ. ஒப்பாரி.

     [ஒ – ஒப்பு → ஒப்பாரி. (வே.க.112);.]

 ஒப்பாரி3 oppāri, பெ. (n.)

   அழுகைப்பாட்டு; lamentation by women making doleful reference to the personal appearance and good qualities of the deceased.

     “மகனே யென்றொப்பாரி சொன்னாள்” (இராமநா.யுத்த.81);. (செ.அக.);.

ம. ஒப்பாரி.

     [ஒப்பாரி = ஒப்புமையான பண்புகள்; உள்ளம் ஒத்த தன்மை, நெருங்கிய நல்லியல்புகளைச் சொல்லிப் புலம்புதல்.]

ஒப்பாரிக்காரன்

 ஒப்பாரிக்காரன் oppārikkāraṉ, பெ. (n.)

   இறந்தவ னுக்கு ஒப்பாயிருத்தல் பற்றி நெருங்கிய உறவின னாக மதிக்கப்படுபவன் (வின்.);; one regarded as a near relative because of his resemblance to a deceased member of the family.

     [ஒப்பாரி = ஒத்த இயல்பு. ஒப்புமை, ஒப்பாரி + காரன்.]

ஒப்பிதம்

ஒப்பிதம் oppidam, பெ. (n.)

   1. பொருத்தமாயிருக்கை; acceptability, propriety.

   2. சமம்; smoothness, levelness.

   3. நேர்மையாயிருக்கை; fairness, justice, equity. (செ. அக.);.

தெ. ஒப்பிதமு.

     [ஒப்பு → ஒப்பிதம். (வே.க.112);.]

ஒப்பின்முடித்தல்

ஒப்பின்முடித்தல் oppiṉmuḍittal, பெ. (n.)

   ஒன்றனதி லக்கணத்தை அதுபோன்ற வேறொன்றற்கும் முடிவு செய்தலாகிய உத்தி (நன்.14);;     [ஒப்பு + இன் + முடித்தல்.]

ஒப்பின்மை

ஒப்பின்மை oppiṉmai, பெ. (n.)

   1. நிகரின்மை; incomparableness, peerlessness, the quality of being unequalled or unparalleled.

   2. வேறுபாடு; dissimilarity, variation (செ.அக.);.

     [ஒப்பு + இன்மை.]

ஒப்பிலி

 ஒப்பிலி oppili, பெ. (n.)

   ஒப்பில்லாதவள்; who is incomparable.

     [ஒப்பு + இல்லி]

ஒப்பில்போலி

 ஒப்பில்போலி oppilpōli, பெ. (n.)

ஒப்புமைப் பொரு ளைக் காட்டாத, போல் என்னும் இடைச்சொல்

 the particle of comparison, {}, used as a mere expletive without indicating any compari-

 son as in அவன் இங்கு வந்தான் போலும் (உ.வ.); (செ.அக.);.

     [ஒப்பு + இல் + போலி.]

ஒப்பு

ஒப்பு1 oppudal,    5.செ.குன்றாவி. (v.t.)

   ஏற்றுக்கொள் ளுதல் (சம்மதித்தல்);; lo agree, accede to, assent, approve. (செ.அக.);.

   தெ., க. ஒப்பு;து. ஒப்பி.

     [ஒல் → ஒப்பு.]

 ஒப்பு2 oppu, பெ. (n.)

   1. போலுகை; likeness, similarity, resemblance.

     “உறுப்பொத்தன மக்களொப் பன்றால்” (குறள்.993);.

   2. அழகு; beauty, loveliness, grace.

     “ஒப்புடை யொருவனை யுருவழிய” (தேவா. 474, 7);.

   3. கவனம்; attention, alertness.

     “ஒப்பொடு கேட்பமென் றுள்ளம் பற்றியே” (திருவாலவா.42,13);.

   4. ஒரு தன்மை; uniformity, oneness, consonance.

   5. ஏற்புடையது; that which is fit, appropriate, proper.

     “தீர்த்த யாத்திரைக்குச் செல்கை யொப்பல” (திருக்கா ளத்.1,20);.

   6. உவமையளவை (சி.சி.அளவை.1);; analogy.

   7. உடன்பாடு; consent, approval.

   8. ஒப்பாரி2 பார்க்க;see {}. (செ. அக.);.

   ம. ஒப்பு;   க. ஒப்பு;   கோத. ஒப்;   துட. கொய்உபம் (கைஒப்பம்);;   குட. ஒப்பு;   குரு. ஒக்னா;   து. ஒம்பு;தெ. ஒப்பு.

     [ஒல் → ஒப்பு.]

 ஒப்பு3 oppu, பெ. (n.)

   கையெழுத்து; signature (tinn); (செ.அக.);.

ம. ஒப்பு.

     [ஒல் → ஒப்பு.]

 ஒப்பு4 oppu, பெ. (n.)

   ஒத்தடம் (இ.வ..);; fomentation. (செ.அக.);.

     [ஒல் → ஒப்பு.]

ஒப்புகுத்து-தல்

ஒப்புகுத்து-தல் oppuguddudal,    5.செ.குன்றாவி. (v.t.)

   கையொப்பம் இடுதல்; to sign, to affix one’s signature. (சேரநா.);

ம. ஒப்புகுத்துக.

     [ஒப்பு + குத்து. குத்துதல் = இடுதல்.]

ஒப்புக்கழு

ஒப்புக்கழு1 oppukkaḻudal,    1.செ.கு.வி. (v.i.)

   போலி யாக அழுதல்; to lament the death of a person for the sake of convention.

     [ஒப்பு + கு + அழு – ஒப்புக்கழு. ‘கு’ – நான்கன் உருபு.]

 ஒப்புக்கழு2 oppukkaḻudal,    1.செ.குன்றாவி. (v.t.)

   மனமொவ்வாமற் செய்தல்; to perform a task without

 putting one’s heart into it, to do a thing reluctantly. (செ.அக.);.

     [ஒப்பு + கு + அழு – ஒப்புக்கழு. ‘கு’ – நான்கன் உருபு.]

ஒப்புக்கொடு-த்தல்

ஒப்புக்கொடு-த்தல் oppukkoḍuttal,    4.செ.குன்றாவி. (v.t.)

   ஒப்புவித்தல்; to deliver, hand over, make over. (செ.அக.);. [ஒப்பு + கொடு.]

ஒப்புக்கொப்பாரம்

 ஒப்புக்கொப்பாரம் oppukkoppāram, பெ. (n.)

   விருந்தின ரைப் பேணுதல் (இ.வ.);; entertainment of guests, hospitality. (செ.அக.);.

     [ஒப்புக்கு + ஒப்பாரம் – ஒப்புக்கொப்பாரம். ஒப்புக்கு = விரும் பும் அளவுக்கு. ஒப்பாரம் = செம்மை, நிறைவு.]

ஒப்புக்கொள்(ளு)தல்

ஒப்புக்கொள்(ளு)தல் oppukkoḷḷudal,    7.செ.குன்றாவி. (v.t.)

   1. ஏற்றுக் கொள்ளுதல்; to take charge accept.

அந்த வேலையை ஒப்புக்கொண்டான்.

   2. மனத்துக்குப் பிடித்தல்; to be agreeable to,

அந்தக் கிழவிக்கு ஒன்றும் ஒப்புக்கொள்ள வில்லை (வின்);.

   3. ஒத்துக்கொள்ளு தல்; to admit, confess. (செ.அக.);.

தெ. ஒப்புகொனு.

     [ஒப்பு + கொள்.]

ஒப்புச்சரக்கு

 ஒப்புச்சரக்கு oppuccarakku, பெ. (n.)

   அகப்படாச்சரக் கிற்கு மாற்றாகத் தேர்ந்தெடுக்கும் அக்குணம் வாய்ந்த வேறொரு போலிச்சரக்கு; replacement of one drug or substance by another in place of a non-available drug-substitute. (சா.அக.);.

     [ஒப்பு + சரக்கு.]

ஒப்புதல்பற்றுச்சீட்டு

ஒப்புதல்பற்றுச்சீட்டு oppudalpaṟṟuccīṭṭu, பெ. (n.)

   1. சொத்தை முறைமன்ற ஏலத்தில் எடுத்தற்குப் பற்றுச்சீட்டு;   2. அனுப்பியதைப் பெற்றுக் கொண்டதற்குத் திரும்பிவரும் அஞ்சல் பற்றுச்சீட்டு (இ.வ.);; postal acknowledgement receipt. (செ.அக.);.

     [ஒப்புதல் + பற்று + சீட்டு.]

ஒப்புதல்ரசீது

 ஒப்புதல்ரசீது oppudalracīdu, பெ. (n.)

ஒப்புதல் பற்றுச் சீட்டு பார்க்க;see {}. (செ.அக.);.

ஒப்புநோக்குதல்

 ஒப்புநோக்குதல் oppunōkkutal, பெ. (n.)

   ஒன்றை மற்றொன்றோடு ஒப்புநோக்குதல் இணைத்துக் காணுதல்; comperision, contrast.

     [ஒப்பு+நோக்கு]

ஒப்புப்பொருவு

 ஒப்புப்பொருவு oppupporuvu, பெ. (n.)

உவமப்பொரு பார்க்க;see {}. (செ.அக.);.

ஒப்புமுத்து

ஒப்புமுத்து oppumuttu, பெ. (n.)

   நல்லுருவமைந்த முத்து (S.l.l.ii,143);; well shaped pearl;

 pearl of a round, symmetrical shape. (செ.அக.);.

     [ஒப்பு + முத்து.]

ஒப்புமுறி

 ஒப்புமுறி oppumuṟi, பெ. (n.)

   ஒப்புக்கொண்டதைக் குறிக்குஞ் சீட்டு; deed of consent. (Pudu.insc.); (செ.அக.);. ம. ஒப்புமுரி.

     [ஒப்பு + முறி.]

ஒப்புமை

ஒப்புமை oppumai, பெ. (n.)

   சமம்; likeness, resemblance, similarity.

     “ஒப்புமை தோன்றச் செப்புவதுவமை” (தண்டி.29);. (செ.அக.);.

     [ஒப்பு → ஒப்புமை. ‘மை’ – பண்புப்பெயரீறு.]

ஒப்புமைக்கூட்டம்

ஒப்புமைக்கூட்டம் oppumaikāṭṭam, பெ. (n.)

   புகழ்த லிலும் இகழ்தலிலும் ஒன்றை அதனினும் மிக்க வேறொன்றொடு உவமிக்கும் ஓரணி (தண்டி.78);;     (Rhet.); bringing together several objects which have an attribute in common among them for comparison, figure of speech in which an object is compared with several other objects to render the comparision effective and telling.

     [ஒப்புமை + கூட்டம்.]

ஒப்புமொழி

 ஒப்புமொழி oppumoḻi, பெ. (n.)

   உடன்படிக்கை (வின்.);; agreement, covenant. (செ.அக.);.

     [ஒப்பு + மொழி.]

ஒப்புரவறி-தல்

ஒப்புரவறி-தல் oppuravaṟidal,    2.செ.கு.வி. (v.i.)

   உலக நடைக்கேற்ற பாங்குகளைத் தெரிதல் (குறள்.அதி.22);; to know what is accepted by the world as proper, as in relation to gifts. (செ.அக.);.

     [ஒப்புரவு + அறி-தல்.]

ஒப்புரவா-தல்

ஒப்புரவா-தல் oppuravātal,    6.செ.கு.வி. (v.i.)

   அமைவுறு தல் (chr.);; to be reconciled. (செ.அக.);.

     [ஒப்புரவு + ஆ(கு);தல் – ஒப்புரவாதல்.]

ஒப்புரவாக்கு-தல்

ஒப்புரவாக்கு-தல் oppuravākkudal,    5.செ.குன்றாவி. (v.t.)

   அமைவு செய்தல் (விவிலி.2,கொரிந்.5,18);; to reco- ncile. (செ.அக.);.

     [ஒப்புரவு + ஆக்கு.]

ஒப்புரவாயிரு-த்தல்

ஒப்புரவாயிரு-த்தல் oppuravāyiruttal,    3.செ.கு.வி. (v.i.)

   நலமுடனிருத்தல் (வின்.);; to be fairly well in health or circumstances. (செ.அக.);.

     [ஒப்புரவு + ஆய் + இரு.]

ஒப்புரவு

ஒப்புரவு oppuravu, பெ. (n.)

   1. ஒற்றுமை; agreement, union.

   2. ஒத்துப்போகும் மெல்லியல்பு, சமன்; smoothness, levelness, evenness.

   3. உலகப் பொது ஒழுகலாறு; custom, usage, duties enjoined by long established custom, caste rules.

     “ஒப்புரவொழுகு” (ஆத்திசூ.);.

   4. உலகநன்மை; philanthropy.

     “ஓருயிர்க்கே யுடம்பளித்தா லொப்புரவிங் கென்னாகும்” (பெருந்தொ.188);, (செ.அக.);.

ஒப்பு + ஊர் – ஒப்பூர் → ஒப்புரவு. (சு.வி.67);.

ம. ஒப்புரவு.

     [ஒப்பு → ஒப்புரவு.]

ஒப்புரவுக்காரன்

ஒப்புரவுக்காரன் oppuravukkāraṉ, பெ. (n.)

   1. குல மகன்; clansman.

   2. பங்காளி (இ.வ..);; relative, he

 that has an equal share with others in inheritance;

 co-parcener. (செ.அக.);.

     [ஒப்புரவு + காரன்.]

ஒப்புவமை

 ஒப்புவமை oppuvamai, பெ. (n.)

   அணிவகையு ளொன்று; ornament. (செ.அக.);.

     [ஒப்பு + உவமை.]

ஒப்புவி-த்தல்

ஒப்புவி-த்தல் oppuvittal,    4.செ.குன்றாவி. (v.t.)

   1. ஏற்கும் படி சேர்த்தல்; to surrender, deliver, consign, hand over.

     “அன்னைபால் வினையேனை யொப்புவித்து” (தாயு.சச்சிதா.9);.

   2. மெய்ப்பித்தல்; to prove, demo- nstrate.

   3. எடுத்துக்காட்டுத் தருதல்; to illustrate.

   4. கடன்சாட்டுதல் (வின்.);; to transfer, as a debt. (செ.அக.);.

     [ஒப்பு → ஒப்புவி.]

ஒப்பூண்

ஒப்பூண் oppūṇ, பெ. (n.)

   பிறருடன் ஒத்த பட்டறிவு; sharing pleasure along with others;

 experiencing a thing in common with others instead of solely by oneself.

     “ஒப்பூண் உண்ணமாட்டாதே” (ஸ்ரீவசன.83); (செ.அக.);.

     [ஒப்பு + ஊண் – ஒப்பூண். (குறிப்புப் பொருளாக ஒத்த பட்டறிவைக் குறித்தது.]

ஒப்பேறாதது

 ஒப்பேறாதது oppēṟātatu, பெ. (n.)

   கைசேராதது, பிழைக்காதது; that not regainable.

     [ஒப்பு-ஏறாதது]

ஒப்பேறு-தல்

 ஒப்பேறு-தல் oppēṟudal, பெ. (n.)

   ஒன்றுமே இல்லை அல்லது மிகவும் தாழ்நிலை என்னும் நிலையில் இல்லாமல் தேறுதல்; to be salvaged, to be retrieved.

இவன் ஒப்பேறுவான் என்னும் நம்பிக்கை எனக்கு இல்லை.(உ.வ.);.

     [ஒப்பு+ஏறு-]

ஒப்பேற்று-தல்

ஒப்பேற்று-தல் oppēṟṟudal, செ.குன்றாவி.(v.t.)

இக்கட்டான ஒரு சூழ்நிலையில் தன்னிடம் இருப்பதை வைத்துக்கொண்டு சரிக்கட்டுதல்,

 to do with what is available in difficult circumstances.

     “குறைந்த வருவாயைக்பல்லவர் காலத்தில்தான் இன்றைய ஐ, ஒள எனும் தனி நெடில்கள் தோன்றின.

ஐந்திரனார் உருவாக்கிய கடைக்கழகக் காலத் தொடக்கத்தில் தனியெழுத்துகளாகிய தமிழ் (பிராமி); எழுத்துகள் சிந்துவெளி இடைக்கழகக் காலத்திய அசையெழுத்துகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால் சிந்து வெளி நாகரிகம் மறைவுற்ற உடனே அதாவது கடைக் கழகம் நிறுவப்பட்ட கி.மு.1850ஆம் ஆண்டிலேயே ஐந்திரம் தோன்றியிருக்க வேண்டும் எனக் கருத இடம் தருகிறது.

ஏனெனில், சிரீதத்துவ நிதி எனும் வைணவ நூலில் இந்தியாவில் தொன்முது காலத்தில் நிலவிய னவாகக் கூறப்பட்ட ஒன்பது இலக்கண நூல்களில் ஐந்திரத்தின் பெயர் முதலாவதாகவும், பிராகிருத இலக்கண நூலாகிய சாகடாயணத்தின் பெயர் இறுதியாகவும் இடம் பெற்றிருப்பதும் கி.மு.1850இல் ஐந்திர இலக்கணம் தோன்றியிருக்கலாம் எனக் கருதத் துணை புரிகிறது.

கொண்டு தான் ஒப்பேற்ற வேண்டியிருக் கிறது”.(இ.வ.);.

   2. தேறச்செய்தல்:

 tosalvage.

குறைந்த நீரைக் கொண்டு இப்பயிரை ஒப்பேற்ற வேண்டியிருக்கிறது.(உ.வ.);.

   3 நிறை வேற்றுதல்:

 tofulfill. (யாழ்ப்);

     [ஒப்பு+ஏற்று-]

ஒப்போன்

 ஒப்போன் oppōṉ, பெ. (n.)

   ஒத்தவன்; one who is equal to.

ம. ஒப்போன். [ஒப்பான் → ஒப்போன்.]

ஒப்போலை

ஒப்போலை oppōlai, பெ. (n.)

   உடன்படிக்கைச் சீட்டு; deed of agreement, contract.

     “ஒப்போலை எழுதிக் கொண்டு … பிரவிருத்தியுறும் மகாசனங்கள்” (சிவ சம.58);. (செ.அக.);.

ம. ஒப்போல.

     [ஒப்பு + ஓலை.]

ஒமலிப்பு

 ஒமலிப்பு omalippu, பெ. (n.)

   ஒவலை; hatred,

     [ஓமல்-ஒமலிப்பு]

ஒமாக்கினி

 ஒமாக்கினி omākkiṉi, பெ. (n.)

   வேள்வித் தீ; sacrificial fire.

     [Skt. homa+agni → த. ஓமாக்கினி.]

ஒமாங்குளி

 ஒமாங்குளி omāṅkuḷi, பெ. (n.)

   குரும்பையில் (குரும்பலில்); பழுத்த மிகச் சிறிய பனம்பழம்; a small palm fruit.

     [ஒமம்+குளி]

ஒமியம்

ஒமியம் omiyam, பெ. (n.)

   வேள்வி; sacrifice.

     “ஒமியஞ் செய்தங் குள்ளத் துணர்மினோ” (தேவா. 432, 8);.

     [Skt. homya → த. ஓமியம்.]

ஒமை

 ஒமை omai, பெ. (n.)

   மா (மலை.);; mango. (செ.அக.);.

     [மா → மாம் → ஆம் → ஒம் → ஒமை.]

ஒம்படு

ஒம்படு1 ombaḍudal,    18.செ.குன்றாவி. (v.t.)

   உடன்ப டுதல் (யாழ்ப்.);; to express assent, to consent.

     [உடம் + படு – ஒம்படு.]

 ஒம்படு2 ombaḍuttal,    4.செ.குன்றாவி. (v.t.)

   1. பாதுகாக்குமாறு சேர்த்தல்; to protect.

சிறைப்புறமாக வோம்படுத்தது (தொல்.பொருள்.114,உரை.);.

   2. ஒதுங் குதல்; to avoid.

     “படைத்தலைக் கொள்ளாமை யோம்ப டுத்த வுயர்வு” (பு.வெ.7,3,கொளு.);.

   3. உறுதிகூறு தல்; to confirm, to encourage.

     “பூம்பொழிற்புறங் காவலனை யோம்படுத்தற்கும்”

     [ஓ = தடுத்தல், காத்தல். ஓ → ஒம் = தடுத்துநில், காப்பாற்று. ஓம் + படு – ஒம்படு = பாதுகாப்பு செய்தல்.]

ஒம்பு

ஒம்பு2 ombudal,    5.செ.குன்றாவி. (v.t.)

   1. சீர்தூக்கு தல்; to consider, discriminate.

     “ஓம்பாவீகையும்” (பு.வெ.9,1);.

   2. மனத்தை யொருக்குதல்; to conce- ntrate the mind.

     “தெரிந்தோம்பித் தேரினு மஃதே துணை” (குறள்,132);.

   3. இவறுதல்; to clutch or grasp tightly, as a miser.

     “பெற்றேமென் றோம்புத றேற்றாதவர்” (குறள்.626);.

   ம. ஓமன;   து. ஓமன;தெ. ஓமு.

     [ஒ → ஒம் → ஓம்பு. ஓம்புதல்.]

 ஒம்பு3 ombudal,    5.செ.குன்றாவி. (v.t.)

   உண்டாக்கு தல் (யாழ்.அக.);; to create.

ஒம்மல்

 ஒம்மல் ommal, பெ. (n.)

   ஊர்ப்பேச்சு; rumour. (Loc.); (செ.அக.);.

     [ஓம் → ஒம்மல்.]

ஒம்மெனல்

ஒம்மெனல் ommeṉal, பெ. (n.)

   ஒலிக்குறிப்பு; onom. expr. of the sound of a ball that is tossed about

     “ஒம்மென்பந்தும்” (பதினொ.திருவிடை.மும்.1, வரி.39); (செ.அக.);.

     [ஒம் + எனல். ‘ஒம்’ = ஒலிக்குறிப்பு இடைச்சொல்]

ஒயாக்கண்ணு

 ஒயாக்கண்ணு oyākkaṇṇu, பெ. (n.)

மாறுகண், ஒன்றரைக் கண்,

 squinteye.

     [ஒய்-ஒயா+கண்ணு]

ஒயின்

 ஒயின் oyiṉ, பெ. (n.)

   நாட்பட்ட கொடிமுந்திரிச் சாறு; vine.

ஒயின்மரம்

 ஒயின்மரம் oyiṉmaram, பெ. (n.)

   தொழுமரம்; pillory, stacks.

ஒயின்மரத்திலே மாட்டினான் (வின்.);. (செ. அக.);.

     [உய் → ஒய் + இன் – ஒயின் + மரம் – ஒயின்மரம்.]

ஒயிற்கும்மி

ஒயிற்கும்மி oyiṟkummi, பெ. (n.)

   1. ஒயிலாட்டத்துப் பாடும் பாட்டு; song sung in oyil. முருகர் ஒயிற்கும்மி.

   2. ஒயில்2 பார்க்க;see {}. (செ.அக.);.

     [ஒயில் + கும்மி.]

ஒயிலாட்டம்

 ஒயிலாட்டம் oyilāṭṭam, பெ. (n.)

   கையில் வண்ணத்துணிகளை வைத்துக் கொண்டு கும்மி அடிப்பதுபோல் சுற்றிவந்து ஆடும் ஒரு நாட்டுப்புற நடனம்; a kind of folk dance by a

 group in a circle waving colourful handkerchief.

த.வ. ஒயில்கும்மி

     (ஒயில்+ஆட்டம்);

 ஒயிலாட்டம் oyilāṭṭam, பெ.(n.)

திருவிழாக்காலத்தில் கையிலுள்ள சிறு துணிகளை அசைத்துக்

     [P]

ஒயில்

ஒயில் oyil, பெ. (n.)

   1. ஒய்யாரம்; grace of form, posture or movement.

     “பிலுக்கிலே செயும் ஒயிலாலே” (திருப்பு.158);.

   2. ஒருவகைக் கூத்து (இ.வ.);; dancing of persons on festival occasions by moving round and round in a circle to the accompaniment of a song, bowing to the ground and waving little towels or handkerchiefs. (செ. அக.);.

   தெ. கொயலு, ஒய்யாரமு;க. ஒய்யார.

     [ஒய் + இல் – ஒயில் (வளைந்தாடும் ஆட்டம்);.]

ஒயில்வண்டி

ஒயில்வண்டி oyilvaṇṭi, பெ. (n.)

   மகிழ்வான பயணத் திற்கேற்ற வண்டி; carriage for a pleasant outing.

     “சரீர முறுநோய்போம் … ஒயில் வண்டி யேறுவார்க்கென் றோர்” (பதார்த்த.1455); (செ.அக.);.

தெ. கொயலு பண்டி.

     [ஒயில் + வண்டி.]

ஒய்

ஒய்1 oytal,    2.செகுன்றாவி. (v.t.)

   1. பெய்தல், ஊற்றுதல்; to pour.

   2. இடுதல்; to put, keep.

     [உள் → ஒள் → ஒய்.]

 ஒய்2 oytal,    2.செ.குன்றாவி. (v.t.)

   1. இழுத்தல்; to drag along, as flood.

     “கன்றுகா லொய்யுங் கடுஞ்சுழி நீத்தம்” (அகநா.68);.

   2. செலுத்துதல்; to launch, as a boat;

 to send forth.

     “ஒய்யுநீர்வழிக்கரும்பினும்” (பதிற்றுப்.87,4);.

   3. கொடுத்தல்; to give.

     “வளராப் பார்ப்பிற் கல்கிரை யொய்யும்” (நற்.356);.

   4. போக்கு தல்; to wipe out efface.

     “ஒய்யா வினைப்பய னுண்ணுங்காலை” (சிலப்.14,33);.

     [உய் → ஒய்.]

 ஒய்3 oytal,    2.செ.கு.வி. (v.i.)

   1. விட்டொதுங்குதல்; to be off, to go away from.

ஒய்யெனத் தெழித்தாங்கு (சிலப்.15,48,உரை.);.

   2. தப்புதல்; to escape, get into safety.

     “ஒடியொளித் தொய்யப்போவா னிலைகாண் மின்” (பரிபா.20,39); (செ.அக.);.

   3. வளைதல்; to bend.

     [உய் → ஒய் → ஒய்-தல். (வே.க.49);.]

 ஒய்4 oytal,    2.செ.குன்றாவி. (v.t.)

   அடித்தல், தாக்கு தல்; to strike, attack.

   க. ஒய்;பட. ஊய்.

     [உல் → ஒல் → ஒய்.]

 ஒய்5 oy, இடை. (int.)

யானையைப் பாகர் வையும் குறிப்பு மொழி (சிலப்.15,48,உரை.); hey! onom expr. used by mahouts to frighten an elephant. (செ.அக.);.

     [உய் → ஒய்.]

 ஒய்1 oytal,    2.செ.கு.வி. (v.i.)

   1. முடிவுறுதல்; to cease;

 to come to an end. மழை ஓய்ந்தது.

   2. மாறுதல்; to change.

     “செய்வினை யோயற்க” (பரிபா.10,128);.

   3. முன்நிலை சுருங்குதல் (தொல்.சொல்.330);; to diminish;

 to be reduced, to become small.

   4. தளர்தல்; to become tired, weary, weak, infirm, as a limb of the body.

கை ஓய்ந்து போயிற்று.

   5. அழிதல்; to expire, perish.

     “ஊனையானிருந் தோம்பு கின்றேன் கெடுவேனு யிரோ யாதே” (திருவாச.5,38);.

   6. இளைப்பாறுதல்; to rest. ஓய்ந்தவேளை (செ.அக.);.

ம. ஒயுக.

     [உய் → ஒய் → ஓய் = செல்லுதல், போதல், முடிதல்.]

ஒய்ச்சலொழிச்சலில்லாமை

 ஒய்ச்சலொழிச்சலில்லாமை oyccaloḻiccalillāmai, பெ. (n.)

   சிறிதும் ஒழிவில்லாமை (உ.வ.);; utter lack of rest or breathing time.

     [ஓய்ச்சல் + ஒழிச்சல் + இல்லாமை.]

ஒய்ச்சலொழிவு

 ஒய்ச்சலொழிவு oyccaloḻivu, பெ. (n.)

   இளைப்பாறுகை (உ.வ.);; rest, leisure.

     [ஓய்ச்சல் + ஒழிவு.]

ஒய்யல்

ஒய்யல் oyyal, பெ. (n.)

   1. செலுத்துகை (பிங்.);; forwarding.

   2. கொடுக்கை; giving. (செ.அக.);.

     [உய் → ஒய் → ஒய்யல்.]

ஒய்யாரக்காரன்

 ஒய்யாரக்காரன் oyyārakkāraṉ, பெ. (n.)

   ஆரவார (ஆடம்பர); முள்ளவன்; fop, dandy. (செ.அக.);.

   க. ஒய்யாரகார;தெ. ஒய்யார காடு.

     [ஒய் → ஒய்யாரம் + காரன்.]

ஒய்யாரக்கொண்டை

 ஒய்யாரக்கொண்டை oyyārakkoṇṭai, பெ. (n.)

   அழ காக (அலங்காரமாக); முடிக்கும் மயிர்முடி; tuft of hair gracefully tied up.

     “ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூ வாம். உள்ளேயிருக்குமாம் ஈரும் பேனும்” (செ.அக.);.

     [ஒய்யாரம் + கொண்டை.]

ஒய்யாரநடை

ஒய்யாரநடை oyyāranaḍai, பெ. (n.)

   1. அழகான நடை; graceful gait.

   2. பிலுக்கு நடை; affected giat. (செ.அக.); [ஒய்யாரம் + நடை.]

ஒய்யாரம்

ஒய்யாரம் oyyāram, பெ. (n.)

   1. மகிழ்வான நிலை; gracefulness of movement, elegant bearing.

     “ஒய்யார மாக நடந்து” (குற்றா.குற.16,3);.

   2. ஆரவாரம் (ஆடம் பரம்.); (வின்.);; affection, foppery. (செ.அக.);.

   ம. ஒய்யாரம்;   க. ஒய்யார;   து. ஒய்யார;தெ. ஒய்யாரமு Skt. {}.

     [ஒய் → ஒய்யாரம்.]

ஒய்யென

ஒய்யென1 oyyeṉa,    கு.வி.எ. (adv.) விரைவாக; quickly.

     “ஒய்யென வாங்கே யெடுத்தனன்” (கலித்.37);

     [ஒய் + என.]

 ஒய்யென2 oyyeṉa,    கு.வி.எ. (adv.) மெல்ல; slowly. (செ. அக.).

குரு. அயா.

     [ஒய் + என.]

ஒரட்டுக்கை

 ஒரட்டுக்கை oraṭṭukkai, பெ. (n.)

   இடக்கை (இ.வ.);; left hand.

     [உரட்டு → ஒரட்டு + கை.]

ஒரணேர்

ஒரணேர் oraṇēr, பெ. (n.)

   சற்றொப்ப 20 குறுக்கை (ஏக்கர்); நிலம் கொண்ட வேளாண் ஆளுவம்; a farm of an individual management.

     [ஒர்+ஆள்+ ஏர்]

ஒரணை

ஒரணை oraṇai, பெ. (n.)

   இரட்டை; pair.

     “திருக்கைக் காறை ஒரணை” (S.I.l.ii,226); (செ.அக.);.

     [ஒர் + இணை – ஓரிணை → ஒரணை.]

ஒராங்கு

ஒராங்கு orāṅgu, கு.வி.எ. (adv.) ஒராங்கு பார்க்க;see {}.

     “மாந்த ரொராங்குக் கைசுமந்தலறும் பூசல்” (பதிற்றுப்.31,2); (செ.அக.);.

ஒரானொரு

ஒரானொரு orāṉoru, கு.பெ.எ. (adj.)

   ஏதோ ஒன்று; a certain, some one at some point.

     “ஒரா னொருநாளில்” (குருபரம்.217.பன்னீ.); (செ.அக.);.

     [ஓர் → ஓரான் → ஓரானொரு.]

ஒரால்

ஒரால் orāl, பெ. (n.)

   நீங்குகை; withdrawing, receding.

     “வேந்தர் தாரழிந் தொராலின்” (பதிற்றுப்.23,17); (செ. அக.);.

     [ஒருவு → ஒருவல் → ஒரால்.]

ஒரி-த்தல்

ஒரி-த்தல் orittal,    4.செ.கு.வி. (v.i.)

   ஒற்றுமையாயிருத்தல் (யாழ்.அக.);; to be united, in harmony. (செ.அக.);. [ஒர் → ஒரி → ஒரி-த்தல். (வே.க.106);.]

ஒரிஆ

 ஒரிஆ oriā, பெ. (n.)

   அடங்காத காளை; unmanageable ox.

க. ஒரை ஆவு, ஓரி.

     [ஒரி + ஆ, ஆ = மாடு, காளை.]

ஒரிபிடி-த்தல்

ஒரிபிடி-த்தல் oribiḍittal,    4.செ.கு.வி. (v.i.)

   1. ஒட்டாரம் செய்தல், அடம்பிடித்தல்; to be obstinate.

   2. ஓயாமல் அழுதல்; to weep continuously.

   3. நச்சரித்தல்; to give trouble.

க. ஓரெ.

     [ஓரி = காளை. ஒரி + பிடி – ஒரிபிடி. அடங்காத காளைபோல் தொல்லை தருதல்.]

ஒரு

ஒரு1 oru, கு.பெ.எ. (adj.)

   ஒன்று என்பதன் பெய ரெச்சம்; a or an;

 one, unique;

 special. ஒரு மகன். (செ. அக.);.

   ம. ஒரு;   க. ஒர், ஓர்;   கோத, ஒர்;   துட. வீர்;   குட. ஒரி, ஓர்;   து. ஒர், ஒரு;   தெ. ஒகட்டி, ஒண்டு;   கோண். ஓர்;   கொன். ஒர்;   கூ. ரோ;   குவி. ரோ;   குரு. ஒர்;   மால். ஒர்;பிரா. அசி.

     [ஒன்று → ஓர் → ஒரு.]

 ஒரு2 oru, கு.பெ.எ. (adj.)

   ஒப்பற்ற, சிறந்த; excellent.

     [ஒன்று → ஓர் → ஒருவு → ஒரு (ஒன்றே தனித்துச் சிறப்படை தல்);.]

 ஒரு3 oru, பெ. (n.)

   செம்மறி (பிங்.);; sheep.

     [உரு → ஒரு = செம்மறி. (கொ.வ.);.]

 ஒரு1 oru, பெ. (n.)

   நொடி (அக.நி.);; instant, as the time measure of the snap of the finger.

     [ஒல் → ஒர் → ஓர் → ஓரு.]

 ஒரு2 oru, பெ. (n.)

   மணற்றிட்டு; heap of sand.

   2. நீர்க்கால்களில், நீர்நிலைகள், கால்வாய்கள் ஆகிய வற்றின் அடியில் படியும் வண்டல்; sediment.

     [ஊர் → ஓர் → ஒரு. ஓர் = உயரம்.]

ஒரு பூ

ஒரு பூ orupū, பெ. (n.)

   ஒருவிளைச்சல், ஒருபோகம் (S.I.I.ii.114);; single crop. (செ.அக.);

ம.ஒரு பூ.

ஒரு போக்கு

ஒரு போக்கு1 orupōkku, பெ. (n.)

   1. ஒருவகை; one kind.

   2. ஒரே முறை; the same manner.

   3. மாறான நடை; peculiar, singular conduct.

அவனுடைய செய்கை யெல்லாம் ஒருபோக்கு. (உ.வ.);. (செ.அக.);.

ம. ஒருப்போக்கு.

     [ஒரு1 + போக்கு – ஒருபோக்கு = ஒருவகை, முறை. ஒரு2 + போக்கு – ஒருபோக்கு = மாறான நடை.]

ஒருஆளம்பனை

ஒருஆளம்பனை oruāḷampaṉai, பெ. (n.)

   80 பனை மரங்கள் கொண்டது என்ற கணக் கீட்டுச் சொல்; a group of 80 trees.

     [ஒரு+ஆள்+அம்பனை]

ஒருஉத்தொடை

ஒருஉத்தொடை oruuttoḍai, பெ. (n.)

   அளவடியுள் நடுவிருசீர் களொழிய முதற்சீர்க்கண்ணும் நான்காஞ் சீர்க்கண்ணும் மோனை முதலாயின வரத்தொடுப் பது (இலக்.வி.723);; alliteration etc. in the first foot and the fourth of a line of verse. (செ.அக.);.

     [ஒரூஉ + தொடை.]

ஒருஉவியைபு

 ஒருஉவியைபு oruuviyaibu, பெ. (n.)

   ஈற்றுச்சீரினும் முதற் சீரினுமியைபு வருவது; rhyming at the last line of a verse. (எ-டு);

     “நிழலே இனியத னயலது கடலே” (ஆ.அக.);.

     [ஒரூஉ + இயைபு. ஒரூஉ = விலகுதல்.]

ஒருகட்பகுவாய்

 ஒருகட்பகுவாய் orugaṭpaguvāy, பெ. (n.)

   பறை வகை (பிங்.);; a kind of drum with one large face for beating. (செ.அக.);.

     [ஒரு + கண் + பகு + வாய்.]

ஒருகட்பறை

 ஒருகட்பறை orugaṭpaṟai, பெ. (n.)

ஒருகட்பகுவாய் பார்க்க (பிங்.);;see {}. (செ.அக.);.

     [ஒரு + கண் + பறை.]

ஒருகணக்கு

ஒருகணக்கு orugaṇaggu, பெ. (n.)

   1. ஒரே முறை; uniform manner.

ஒரு கணக்காய் நடந்து வருகிறது.

   2. நாட்டுக்கோட்டைச் செட்டிமார் செய்யும் மூன்று ஆண்டுத் தொலை நாட்டு வாணிகம் (இ.வ.);; a triennial trade carried on in a foreign country by an agent of a {}. (செ.அக.);.

     [ஒரு + கணக்கு.]

ஒருகணை

 ஒருகணை orugaṇai, பெ. (n.)

   ஒப்பற்ற அம்பு. (சங்.இலக்.சொற்.);; unique arrow.

     [ஒரு + கணை.]

ஒருகாலில்நில்(ற்)-த(ற)ல்

ஒருகாலில்நில்(ற்)-த(ற)ல் orukālilnilṟtaṟal,    14.செ.கு.வி. (v.i.)

   உறுதியாயிருத்தல்; to be firmly resolved;

 to be unflinching, a simile from an ascetic standing resolutely as one leg while doing penance.

அதை முடிக்க ஒரு காலில் நிற்கிறான். (செ.அக.);.

     [ஒரு + கால் + இல் + நில்.]

ஒருகாலும்

 ஒருகாலும் orukālum,    கு.வி.எ. (adv.) எந்தக் காலத்தி லும்; at any time whatsoever, used with a negative, never.

ஒருகாலும் நடவாது. (செ. அக.);.

     [ஒரு + கால் + உம்.]

ஒருகாலே

 ஒருகாலே orukālē, கு.வி.எ. (adv.)

   ஒரேமுறையில்; at once, at one stroke.

ஒருகாலேயெல்லாம் வாங்குக. (செ.அக.);.

     [ஒரு + கால் + ஏ.]

ஒருகால்

ஒருகால் orukāl, வி.எ. (adv.)

   1. ஒருமுறை (திருவா லவா.நூல்வர.3);; once.

   2. ஒருவேளை; perhaps.

ஒருகால் அது நடக்கலாம்.

   3. சிலவேளை; some times.

     “ஒரு காலுமையாளொர் பாகனுமாம்” (தேவா.405,1);

     “பொருளற்றார் பூப்பர் ஒருகால்” (குறள்.248);.

   ம. ஒரிக்கல்;   க. ஓர்ம்மெ, ஓம்மெ;   குட. ஒம்ம;   து. ஒம்மமெ, ஒர;பர். ஒபொட்.

     [ஒரு + கால். கால் = பொழுது, முறை.]

ஒருகிடை

ஒருகிடை orugiḍai, பெ. (n.)

   1. கிடந்தகிடை; being bedridden, state of being unable to move from bed.

   2. ஒருபக்கமாய்ச் சாய்ந்து படுக்கை; lying on one side.

ஒருகிடையாய்ப் படுத்துக் கிடக்கிறான். (செ.அக.);.

     [ஒரு + கிடை. ஒரு = ஒருபக்கம்.]

ஒருகுடி

 ஒருகுடி oruguḍi, பெ. (n.)

   பங்காளி (யாழ்.அக.);; agnate. (செ.அக.);.

     [ஒரு + குடி.]

ஒருகுறி

ஒருகுறி oruguṟi, கு.வி.எ. (adv.)

   ஒருமுறை; once.

     “ஒருகுறி கேட்போ னிருகாற் கேட்பின்” (நன்.42); (செ.அக.);.

     [ஒரு + குறி.]

ஒருகுழையவன்

ஒருகுழையவன் oruguḻaiyavaṉ, பெ. (n.)

   பலராமன்;{}, who wore a ring in only one of his ears.

     “ஒருகுழையவன் மார்பிலொண்டார்போ லொளிமிக” (கலித்.105,11); (செ.அக.);.

     [ஒரு + குழை + அவன்.]

ஒருகுழையொருவன்

ஒருகுழையொருவன் oruguḻaiyoruvaṉ, பெ. (n.)

ஒரு குழையவன் (பரி.1.5); பார்க்க;see {}.

     [ஒரு + குழை + ஒருவன்.]

ஒருகூட்டு

 ஒருகூட்டு oruāṭṭu, பெ. (n.)

   ஒருசேர்க்கை; close union, compact. (செ.அக.);.

     [ஒரு + கூட்டு.]

ஒருகை

ஒருகை1 orugai, பெ. (n.)

   1. கட்சியின் இணக்கம்; united party.

   2. ஒரு கட்சி; clique. (செ.அக.);.

     [ஒரு + கை – ஒருகை.]

 ஒருகை2 orugai, பெ. (n.)

   ஒரு ஆள்; one person.

ஆட்டத்திற்கு ஒரு கை குறைகிறது. (உ.வ.);.

     [ஒரு + கை – ஒருகை. ‘கை’ – சினையாகுபெயராய் ஆளைக் குறித்தது.]

ஒருகைபரிமாறு-தல்

ஒருகைபரிமாறு-தல் orugaibarimāṟudal,    5.செ.கு.வி. (v.i.)

   1. விருந்தினர் வரிசையில் ஒருபுறமாகப் பரிமாறு தல்; to serve food in one of two opposite rows at dinners.

   2. ஒருமுறை பரிமாறுதல் (வின்.);; to deal out one course at a feast. (செ.அக.);.

     [ஒரு + கை + பரிமாறு.]

ஒருகைபார்-த்தல்

ஒருகைபார்-த்தல் orugaipārttal,    4.செ.கு.வி. (v.i.)

   வெல் லமுயலுதல்; to make a determined effort to win.

     “உனக்காச்செனக் காச்சென்றொரு கை பாராமல்” (இரா மநா.யுத்த.2); (செ.அக.);.

     [ஒரு + கை + பார்.]

ஒருகையாயிரு-த்தல்

ஒருகையாயிரு-த்தல் orugaiyāyiruttal,    3.செ.கு.வி. (v.i.)

   எதிர்க்கட்சிக்குப் பகையாக ஒற்றுமையாயிருத் தல்; to join hands as against a common enemy. (செ.அக.);.

     [ஒரு + கை + ஆய் + இரு.]

ஒருகைவிளையாடு-தல்

 ஒருகைவிளையாடு-தல் orugaiviḷaiyāṭudal, செ.கு.வி. (v.i.)

   எல்லாருக்கும் ஒருமுறைவர ஆடுதல் (வின்.);; to play one round of a game.

     [ஒரு + கை + விளையாடு.]

ஒருகோலுடையார்

ஒருகோலுடையார் oruāluḍaiyār, பெ. (n.)

   ஒருகோ லுடைய துறவிகள் (ஏகதண்டி சந்நியாசிகள்.); (தொல். பொருள்.625, உரை.);; a class of Brahman ascetics holding a single staff in hand. (செ.அக.);.

     [ஒரு + கோல் + உடையார்.]

ஒருக்க

ஒருக்க orukka, கு.வி.எ. (adv.)

   1. எப்பொழுதும்; ever, always.

     “காமமொருக்க வொருதன்மை நிற்குமோ” (பரிபா.6,72);.

   2. ஒவ்வொன்றுக்கும்; or each. வாக்குமூலத்துக்கு ஒருக்க ஓர் அடி அவனுக்குக் கொடுத்தான் (இ.வ.);

   3. ஒருமுறை, ஒன்றுபோல்; once, like one. (செ.அக.);.

     [ஒருக்கு → ஒருக்க.]

ஒருக்கடி-த்தல்

ஒருக்கடி-த்தல் orukkaḍittal,    4.செ.கு.வி. (v.i.)

ஒருக்களி-த்தல் பார்க்க;see {}.

     “ஒருக்கடித்தென்ன வொண்ணாதே” (திவ்.அமலனாதி.7.வ்யா.பக்.86); (செ.அக.);.

     [ஒருக்களி → ஒருக்கடி.]

ஒருக்கடு-த்தல்

ஒருக்கடு-த்தல் orukkadu-,    4.செ.குன்றாவி. (v.t.)

   சம மாக நினைத்தல்; to make no distinction, to consider equally.

     “திருக்கடித் தானமு மென்னுடைச் சிந்தையும், ஒருக்கடுத்து” (திவ்.திருவாய்.8,6,2);. (செ.அக.);.

     [ஒருக்கு + அடு.]

ஒருக்கணி

ஒருக்கணி1 orukkaṇittal,    4.செ.கு.வி. (v.i.)

   ஒரு பக்கமாய்ச் சாய்தல்; to lie on one side.

     “ஒருக்க ணித்தோ மல்லாந்தோ கண் வளர்ந்தருளுகிறது” (திவ். திருமாலை,23,வ்யா.81);.

     [ஒருக்களி → ஒருக்கணி.]

 ஒருக்கணி2 orukkaṇittal,    4.செ.குன்றாவி. (v.t.)

   ஒருச்சரித்தல்; to shut partially, to set slantingly;

 to put sidewise;

 to leave ajar, as a door. கதவை ஒருக்கணி (யாழ்ப்.);. (செ.அக.);.

     [ஒருக்களி → ஒருக்கணி.]

ஒருக்கணிப்பு

 ஒருக்கணிப்பு orukkaṇippu, பெ. (n.)

   ஒரு பக்கமாய்ச் சாய்கை (யாழ்ப்.);; lying or leaning on one side. (J.);. (செ.அக.);.

     [ஒருக்களி → திருக்கணி → ஒருக்கணிப்பு.]

ஒருக்கம்

ஒருக்கம் orukkam, பெ. (n.)

   1. மனவொடுக்கம்; concentration of mind.

     “மனத்தை யொருக்கு மொருக்கத் தினுள்ளே” (பதினொ.திருவி.மும்.24);.

   2. ஒரு தன்மை; oneness, sameness.

     “ஒருக்கப் பெயரானு ரைக்கப்படும்” (காரிகை. ஒழிபி.6); (செ.அக.);.

ம. ஒருக்கம்.

     [ஒருக்கு → ஒருக்கம் (வே.க.106);.]

ஒருக்கல்

ஒருக்கல்1 orukkal, பெ. (n.)

   ஒர் அமங்கலப்பண் (ஓர் அபசுரம்.); (திருவாலவா.57,26);; dirge, defective note in music. (செ.அக.);.

     [உருக்கல் → ஒருக்கல்.]

 ஒருக்கல்2 orukkal, பெ. (n.)

   அணியமாதல்; preparation, getting ready. (சேரநா.);

ம. ஒருக்கல்.

     [ஒருக்கு → ஒருக்கல்.]

ஒருக்களி-த்தல்

ஒருக்களி-த்தல் orukkaḷittal,    4.செ.கு.வி. (v.i.)

   ஒரு பக்கம் சாய்தல்; to lie on one side, to lean on one side. (செ. அக.);.

     [ஒருக்கு + உளி – ஒருக்குளி → ஒருக்களி.]

ஒருக்கால்

ஒருக்கால் orukkāl, வி.எ. (adv.) ஒருகால் பார்க்க;see {}.

     “ஒருக்காலழிதோன்றியும்” (பாரத.பதின் மூன்.111); (செ. அக.);.

     [ஒருகால் + ஒருக்கால்.]

ஒருக்காளி

 ஒருக்காளி orukkāḷi, பெ. (n.)

   ஒரே கொட்டையுடைய பனம்பழம்; palmyra fruit having a single seed. (Tinn.); (செ.அக.);.

     [ஒரு + காழி – ஒருக்காழி → ஒருக்காளி. காழ் கொட்டை காழி – கொட்டையுடையது./

ஒருக்கு-தல்

ஒருக்கு-தல் orukkudal,    7.செ.கு.வி. (v.i.)

   1. ஒன்று சேர்த்தல்; to bring together, to gather.

ஒருக்கின பண்டங்களைக் கொண்டு போகின்றமை (சீவக.60, உரை.);.

   2. அடக்குதல்; to subdue, control.

     “மனத்தை யொருக்கு மொருக்கத்தினுள்ளே” (பதினொ.திருவிடை.மும்.24);.

   3. அழித்தல்; to kill, slay.

     “இன்றொருக்கினே னித்தனை வீரரை” (கம்பரா.பிரமா.195); (செ.அக.);.

ம. ஒருக்குக.

     [ஒரு → ஒருக்கு → ஒருக்கு-தல் (வே.க.106);.]

ஒருக்குத்து

 ஒருக்குத்து orukkuttu, பெ. (n.)

   ஒருபக்கத் தலைவலி, ஒற்றைத் தலைவலி; headache on one side, migraine.

ம. ஒரிச்செனி, ஒரிச்சென்னி.

     [ஒருக்கு + குத்து – ஒருக்குக்குத்து → ஒருக்குத்து.]

ஒருங்கணையாக

 ஒருங்கணையாக oruṅgaṇaiyāka, வி.எ. (adv.)

   ஒரே நேரத்தில், அதே நேரத்தில்; simultaneously.

     [ஒருங்கு + அணையாக.]

ஒருங்கவிடு-தல்

ஒருங்கவிடு-தல் oruṅgaviḍudal,    18.செ.குன்றாவி. (v.t.)

   பலவற்றை ஒன்றுசேர்த்தல்; to bring together, unite.

     “அவற்றை யொருங்கவிட்டு” (திவ்.திருநெடுந். 17.வ்யா.134); (செ. அக.);.

     [ஒருங்கு →. ஒருங்க + விடு.]

ஒருங்கிணை-த்தல்

ஒருங்கிணை-த்தல் oruṅkiṇaittal, குன்றாவி (v.t.)

   ஒன்றாக இணைத்தல் அல்லது சேர்த்தல்; linkup, integrate.

   2.ஒன்றின் கீழ்க் கொண்டு வருதல்; bring under, compile.

ஒருங்கியலணி

ஒருங்கியலணி oruṅgiyalaṇi, பெ. (n.)

   புணர்நிலை யணி. (வீரசோ.அல.13);;     [ஒருங்கு + இயல் + அணி.]

ஒருங்கு

ஒருங்கு1 oruṅgudal,    7.செ.கு.வி. (v.i.)

   1. ஒருபடியா தல்; to be concentrated;

 to have a singleness of aim of purpose.

     “நினதா ளொருங்கப் பிடித்து” (திவ்.திரு வாய்.5.8.8);.

   2. ஒன்றுகூடுதல்; to join together.

     “மருத்து மிரும்புனற்கிறை வருமாகிச் செவ்விதி னொருங்கி” (கந்தபு.சூரனரசிரு.11);.

   3. ஒடுங்குதல்; to sink, decline, to become reduced.

     “உரமொருங்கி

யது… வாலியது மார்பு’ (கம்பரா.யுத்த.மந்தி.90);.

   4. அழிதல்; to be ruined, to perish.

     “நமரெல்லோரு மொருங்கினர்” (பிரபோத.38,1);.

   க. ஒர்கூடு;ம. ஒருங்ஙு.

     [ஒல் → ஒருங்கு → ஒருங்குதல். ஒடுங்கு → ஒருங்கு = அழிதல்.]

 ஒருங்கு2 oruṅgu, கு.வி.எ. (adv.).

   1. முழுதும்; altogether.

     “தூணிப்பதக்கென் றொருங் கொப்பக் கொண்டானாம்” (நாலடி.387);.

   2. ஒரேகாலத்தில்; simultaneously.

     [ஒல் → ஒரு → ஒருங்கு.]

 ஒருங்கு3 oruṅgu, பெ. (n.)

   1. முழுமை (திவா.);; entirely, totality.

   2. அடக்கம் (பிங்.);; suppression, restraint. (செ.அக.);.

     [ஒல் → ஒரு → ஒருங்கு.]

 ஒருங்கு4 oruṅgu, பெ. (n.)

   அழிவு (யாழ்.அக.);; destruction, ruin. (செ.அக.);.

     [ஒடுங்கு → ஒருங்கு.]

ஒருங்கே

ஒருங்கே oruṅā, வி.எ. (adv.)

   1. முழுதும்; thoroughly, fully.

   2. ஒருசேர; to the fullest extent or measure.

     “நம்மே லொருங்கே பிறழ வைத்தார்” (திவ்.இயற்.திருவி ருத்.45); (செ.அக.);.

     [ஒருங்கு + ஏ.]

ஒருசந்தி

ஒருசந்தி orusandi, பெ. (n.)

   ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டும் உணவு கொள்ளும் நோன்பு; vow of taking only one meal in a day.

     “நாயறி யாதொருசந்தி” (தண்டலை.23); (செ.அக.);.

மறுவ. ஒருபொழுது.

     [ஒரு + சந்தி – ஒருசந்தி. சாந்தி → சந்தி = விழா, நோன்பு.]

ஒருசாயல்

 ஒருசாயல்_, பெ. (n.)

   உருவொப்பு; likeness, having the same features, resemblance.

இக்குழந்தை தந்தையோ டொருசாயலாக இருக்கிறது. (செ.அக.);.

     [ஒரு + சாயல் – ஒருசாயல் = ஒருமித்த வடிவமைப்பு.]

ஒருசாய்வு

ஒருசாய்வு orucāyvu, பெ. (n.)

   1. ஒருதலை, ஓரம் (பட்சபாதம்.);; leaning to one side, partiality – கு.வி.எ. (adv.);

   1. ஒருமிக்க (யாழ்ப்.);; altogether.

   2. இடைவிடா மல் (வின்.);; continuously. (செ.அக.);.

     [ஒரு + சாய்வு.]

ஒருசாராசிரியர்

 ஒருசாராசிரியர் orucārāciriyar, பெ. (n.)

   ஆசிரியருள் ஒரு கொள்கையினர்; authors or commentators belo- nging to one particular school of thought. (செ.அக.);.

     [ஒரு + சார் + ஆசிரியர்.]

ஒருசாரார்

ஒருசாரார் orucārār, பெ. (n.)

   ஒரு பக்கத்தவர்; persons on one side;

 those belonging to one party.

     “அஞ்சின ரார்த்தா ரொருசாரார்” (காரிகை.செய்.6,உரை.);.

   2. சிலர்; some. (செ.அக.);.

     [ஒரு + சாரார்.]

ஒருசார்

ஒருசார் orucār, பெ. (n.)

   1. ஒருபக்கம்; one side.

     “ஒருசா ரருவியார்ப்ப” (புறநா.115,1);.

   2. ஒரு (கட்சி); சார்பு; one party.

   3. ஒருதலை; partiality. (செ.அக.);.

     [ஒரு + சார்.]

ஒருசார்பு

 ஒருசார்பு orucārpu, பெ. (n.)

ஒருசார் பார்க்க;see {}. (செ.அக.);.

ஒருசாலுழு-தல்

ஒருசாலுழு-தல் orucāluḻudal,    1. செ.குன்றாவி. (v.t.)

   ஒருமுறை உழுதல்; to turn once with the plough. (செ. அக.);.

     [ஒரு + சால் + உழு.]

ஒருசாலைமாணாக்கர்

ஒருசாலைமாணாக்கர் orucālaimāṇākkar, பெ. (n.)

   ஒருபள்ளியிற் படித்த மாணாக்கர் (தொல்.பொ ருள்.666,உரை.பக்.653);; pupils of the same school, schoolmates. (செ.அக.);.

     [ஒரு + சாலை + மாணாக்கர்.]

ஒருசிம்புப்புகையிலை

 ஒருசிம்புப்புகையிலை orusimbuppugaiyilai, பெ. (n.)

   புகையிலை நறுக்கு (யாழ்ப்.);; small bit of tobacco. single leaf of tobacco (செ.அக.);.

     [ஒரு + சிம்பு + புகையிலை.]

ஒருசிறிது

ஒருசிறிது orusiṟidu, பெ. (n.)

   அற்பம்; a little.

     “உய்த்துணர்ந்திடு நீரரே யொருசிறிதுணர்வார்” (கந்த பு.சூரனமைச்.129); (செ.அக.);.

     [சிறு + து – சிறுது – சிறிது.]

ஒருசிறை

ஒருசிறை orusiṟai, பெ. (n.)

   1. ஒருபக்கம்; one side;

     “கோயி லொருசிறைத் தங்கி” (பொருந.90);.

   2. வேறி டம் (பிங்.);; separate place.

   3. ஒரு பகுதி; one part or portion.

     “இருவர் நூற்குமொருசிறை தொடங்கி” (நன்.8); (செ.அக.);.

     [ஒரு + சிறை.]

ஒருசிறைநிலை

ஒருசிறைநிலை orusiṟainilai,    பெ. (n) சொல்லப்பட்ட பொருள் ஒருவழிநிற்கப் பாடலமைந்துள்ள முறை (இறை.56,உரை.பக்கம்.194); style of verse whose composition follows the sequence of the events narrated. (செ.அக.).

     [ஒருசிறை + நிலை.]

ஒருசீரானவன்

 ஒருசீரானவன் orucīrāṉavaṉ, பெ. (n.)

   ஒரே தன்மை யாக இருப்பவன் (வின்.);; one who maintains a uniform character, he who has moderation of temper. (செ.அக.);.

     [ஒரு + சீர் + ஆனவன்.]

ஒருசுடர்

 ஒருசுடர் orusuḍar, பெ. (n.)

   கதிரவன்; sun.

     [ஒரு + சுடர். ஒரு = ஒப்பற்ற, தனித் தன்மை வாய்ந்த.]

ஒருசேர

 ஒருசேர orucēra, கு.வி.எ. (adv.)

   ஒருமிக்க; entirely, completely. (செ.அக.);.

     [ஒரு + சேர.]

ஒருசொன்னீர்மை

ஒருசொன்னீர்மை orusoṉṉīrmai, பெ. (n.)

   சொற்கள் இணைந்து ஒரு பொருளே தருந்தன்மை (புறநா.206, உரை.);; nature of the compound word which expressess a single idea. (செ.அக.);.

     [ஒரு + சொல் + நீர்மை.]

ஒருசொற்பல்பொருள்

 ஒருசொற்பல்பொருள் orusoṟpalporuḷ, பெ. (n.)

   ஒரு சொல்லுக்குரிய பல பெருள்கள் (பிங்.);; different meanings of the same word. (செ.அக.);.

     [ஒரு + சொல் + பல் + பொருள்.]

ஒருசொல்

ஒருசொல் orusol, பெ. (n.)

   1. உறுதிச்சொல்; word of assurance.

     “அவர் சொல்லிய சொல்லொரு சொல்லன் றோ” (கம்பரா.குகப்.15);.

   2. பலசொல்லாயிருந்தும் ஒரு சொன்னீர்மைப்பட்டது (சீவக.190,உரை.);; expression which while consisting of two or more words connotes but a single idea. (செ.அக.);.

     [ஒரு + சொல்.]

ஒருசொல்விழுக்காடு

ஒருசொல்விழுக்காடு orusolviḻukkāṭu, பெ. (n.)

   யாதொரு பொருளுமின்றித் தொடரியத்தில் வழங்கும் சொல் (சீவக.1886, உரை.);; superfluous, expletive word in a sentance. (செ.அக.);.

     [ஒரு + சொல் + விழுக்காடு. விழுக்காடு = விழுதல், வழங்குதல்.]

ஒருச்சரி

ஒருச்சரி1 oruccaridal,    4.செ.கு.வி. (v.i.)

   ஒரு பக்க மாய்ச் சாய்தல்; to lean or one side.

     [ஒரு + சரி.]

 ஒருச்சரி2 oruccarittal,    4.செ.குன்றாவி. (v.t.)

   ஒரு பக்கமாய்ச் சாய்த்தல்; to shut partially, as a door.

     “கதவை ஒருச்சரித்து” (ஈடு.10,8,3);.

     [ஒரு + சரி.]

ஒருச்சாய்-த்தல்

ஒருச்சாய்-த்தல் oruccāyttal,    4.செ.குன்றாவி. (v.t.)

   ஒருபக்கஞ் சாய்த்தல்; to tilt to one side, to shut partially, as a door. (செ.அக.);.

     [ஒரு + சாய்.]

ஒருச்சாய்வு

 ஒருச்சாய்வு oruccāyvu, பெ. (n.)

   ஒருபுறமாகச் சாய்கை; leaning on one side. (செ.அக.);.

     [ஒரு + சாய்வு.]

ஒருஞான்று

ஒருஞான்று oruñāṉṟu, பெ. (n.)

   ஒருநாள்; one day,

     “ஒரு ஞான்று வந்தானை” (கலி.37-14); (சங். இலக். சொற்.);.

     [ஒரு + ஞான்று.]

ஒருஞார்

ஒருஞார் oruñār, பெ. (n.)

   பண்டைக்காலத்து வழங்கிய ஓர் அளவுப் பெயர் (தொல்.எழுத்.170,உரை.);; ancient measure. (செ.அக.);.

     [ஒரு + ஞார்.]

ஒருதந்தை யீன்றமகள்

ஒருதந்தை யீன்றமகள் orudandaiyīṉṟamagaḷ, பெ. (n.)

   தந்தையின் மனைவியருள் ஒருத்திக்குப் பிறந்த மகள்; daughter of one of the wives of the father.

     “அந்துவற்கு ஒருதந்தை யீன்றமகள் பொறையின் பெருந்தேவி யீன்றமகன்” (பதிற்றுப்.7,பதிக.);.

     [ஒரு + தந்தை + ஈன்ற + மகள்.]

பதிற்றுப்பத்தில் செல்வக்கடுங்கோ வாழியாதனை அந்துவனுக் குப் பொறையன் பெருந்தேவியீன்ற மகன் எனக் குறிப்பிடும் போது, அவன் தாயை ‘ஒரு தந்தை யீன்ற மகள்’ என்று கபிலர் குறிப்பிடுகிறார். அந்துவனின் மாமனார் ஒரு தந்தை எனப்படு கிறார்.

இடையறாப் போர்களால் இளைஞர் எண்ணிலார் மடிதலின் மகளிர் எண்ணிக்கை மிகுந்த காலத்தில் ஒரு ஆண், பெண்கள் பலரை மணந்து கொள்ளும் வழக்கம் வளர்ந்தபோது, மனைவி யர் பலர்க்கும் பிறந்த குழந்தைகள் ஒரு தாய்ப்பிள்ளைகள் (உடன்வயிற்றுப் பிறந்தோர்); எனக் கூற முடியாத சூழல் உண்டானதால் ஒருதந்தை மக்கள் என வேறுபடுத்தி அழைக் கப்பட்டனர். இது ஐந்திணை மரபாகிய அன்புகெழு தமிழ் மரபுக்குரிய இல்லற வாழ்க்கைக்கு அப்பாற்பட்ட பெருந் திணை யொழுக்கம். இதனை வடநாட்டுமரபு என்பர். தயாத னுக்குப் பட்டத்தரசியர் மூவரின் வயிற்றுப் பிறந்த இராமன் முதலாயினோர் ஒரு தந்தை மக்கள். பாஞ்சாலி பாண்டவர்களா கிய கணவர் பலர்க்குப் பெற்ற பிள்ளைகள் ஒரு தாயீன்ற மக்கள், பல்கணவ மணம், பல் மனைவியர் மணம் பெருந்தி ணைக்குரிய ஒழுகலாறெனக் கடியப்பட்டவை.

பெண்களின் கற்புக்குத் தெய்வத்தன்மை யூட்டிப் பெருமைப்ப டுத்திய தமிழ்ப் பண்பாட்டில் பல்கணவர் மணம் உட்புகமுடிய வில்லை. ஆதலால் ஒரு தாயீன்ற மக்கள் என்னும் சொல்லாட்சி தோன்றவில்லை.

ஒருதனி

ஒருதனி orudaṉi, பெ. (n.)

   1. ஒப்பில்லாத தனி (சீவக.280,உரை.);; peeriessness, uniqueness

   2. தன் னந்தனி; quite alone, in absolute solitude.

     “ஒருதனி உழந்தவித்திருத்தகு மாமணி” (சிலம்பு); (செ.அக.);.

     [ஒரு + தனி.]

ஒருதனிநிலை

 ஒருதனிநிலை orudaṉinilai, பெ. (n.)

   போராரவாரம் மிகுந்த படுகளத்தில் வெள்ளம் தள்ளாதபடி கல்லாற் கட்டினகரையைப் போலப் பெரும் படையை ஒரே வீரன் தடுத்த துணிவுநிலையைப் புலப்படுத்தும் புறத்துறை; literary theme describing one of the strategies of warfare where a soldier opposing and challenging a big army all alone.

     [ஒருதனி + நிலை. ஒருதனி = யாருமற்ற தன்னந்தனிமை.]

தன்படையினர் புறமுதுகிட்டு ஓடுவது கண்டும் தானொரு வனே பகைவரை எதிர்த்துப் போரிடும் எருமை மறத்தினும் இது வேறானது.

ஒருதன்மை

ஒருதன்மை orudaṉmai, பெ. (n.)

   1. ஒரே முறை; being of one and the same kind.

   2. ஒப்பற்ற தன்மை; incomparableness.

   3. மாறாத்தன்மை; unchangeable- ness. (செ.அக.);.

     [ஒரு + தன்மை.]

ஒருதமர்க்கலயம்

 ஒருதமர்க்கலயம் orudamarkkalayam, பெ. (n.)

   அடி யில் ஒரே துளைறையிட்ட மண்குடுவை; small earthen pot with a whole at the bottom used in the manufacture of medicated oils. (சா.அக.);

     [ஒரு + தமர் + கலயம். திவுள் → திவுர் → திமுர்  தமர் = திருகியிடப்பட்ட துளை.]

ஒருதரம்

ஒருதரம் orudaram, பெ. (n.)

   1. ஒருதடவை; once.

   2. ஒரே முறை (யாழ்ப்.);; one and the same kind. (செ.அக.);.

ஒருதலை

ஒருதலை1 orudalai, பெ. (n.)

   ஒரு சார்பு; one sidedness.

     “ஒருதலையா னின்னாது காமம்” (குறள்.1196);.

     [ஒரு + தலை. தலை = பக்கம், பகுதி.]

 ஒருதலை2 orudalai, பெ.(n.)

   உறுதி; positiveness. certainty,

     “ஒருதலை யுரிமை வேண்டியும்” (தொல்.பொ ருள்.225); …

     “பாம்பாற் கோட்படுதல் ஒருதலை” (குறள்,890,பரி.உரைக்குறிப்பு); (செ.அக.);.

     [ஒரு + தலை. தலை = முடி, முடிவு.]

ஒருதலை நியாயம்

ஒருதலை நியாயம் orudalainiyāyam, பெ. (n.)

ஒரு தலை நயன் பார்க்க;see {}.

ஒருதலைப்படு-தல்

__,

   20.செ.கு.வி. (v.i.);

   ஒரு முடிவு பெறுதல்; to come to a conclusion.

     “எத்துணை யுரைப்பினு மொருதலைப்படாது” (இறை.1,7); (செ.அக.);.

     [ஒருதலை2 + படு.]

ஒருதலை வழக்கு

ஒருதலை வழக்கு orudalaivaḻkku, பெ. (n.)

   ஒருபக்க மான தீர்ப்பு; judgement showing partiality, one sided or biased description or statement, leaning to one side or party. (செ.அக.);.

     [ஒருதலை1 + வழக்கு.]

ஒருதலைக்காமம்

ஒருதலைக்காமம் orudalaikkāmam, பெ. (n.)

   ஒருபக் கமான காதல்; onesided love, unreciprocated love.

     “கைக்கிளை யுடையதொருதலைக் காமம்” (நம்பிய கப்.3); (செ.அக.);.

     [ஒருதலை + காமம்.]

ஒருதலைக்குழவி

 ஒருதலைக்குழவி orudalaikkuḻvi, பெ. (n.)

   ஒரு பக்கம் தலைபோல் உருண்டையாயும் மற்றொரு பக்கம் கூர்மையாயும் அமைந்த குழவி; stone pestle shaped like a cone having a bulb at one point and a hande at the top. (செ.அக.);.

     [ஒருதலை + குழவி. குழைவி → குழவி = குழையுமாறு அரைக்கப் பயன்படும் ஆட்டுகல்.]

ஒருதலைச்சாயல்

ஒருதலைச்சாயல் orudalaiccāyal, பெ. (n.)

   1. ஒருபு றம் கூருள்ள கத்தி; one edged knife.

   2. தலை ஒருபுறமாகச் சாய்ந்திருத்தல்; inclination of the head to one side. (சா.அக.);.

     [ஒருதலை + சாயல். சாள் → (சாண்); → சாய் → சாயல் = கூர்மை.]

ஒருதலைதுணிதல்

ஒருதலைதுணிதல் orudalaiduṇidal, பெ. (n.)

   மாறுபா டான இரண்டு கொள்கைகளில் ஒன்றை ஏற்றலா கிய உத்தி (நன்.14);;     [ஒரு + தலை2 + துணிதல்.]

ஒருதலைநயன்

ஒருதலைநயன் orudalainayaṉ, பெ. (n.)

ஒருதலை வழக்கு பார்க்க;see {}. (செ,அக.);.

     [ஒருதலை2 + நயன்.]

ஒருதலைப்பூண்டு

ஒருதலைப்பூண்டு orudalaippūṇṭu, பெ. (n.)

   ஒரு தலை வெள்ளைப் பூண்டு; garlic with one clove or bulb. (சா.அக);.

     [ஒருதலை1 + பூண்டு.]

ஒருதலையன்

 ஒருதலையன் orudalaiyaṉ, பெ. (n.)

   கொக்கு; stork. (சா.அக.);.

ஒருதலையுள்ளுதல்

ஒருதலையுள்ளுதல் orudalaiyuḷḷudal, பெ. (n.)

   உளப் பாங்கு (அவத்தை); பத்தனுள் ஒன்றாகிய இடைவிடா நினைவு (நம்பியகப்.36,உரை.);;     [ஒரு + தலை + உள்ளுதல்.]

ஒருதாரை

ஒருதாரை orutārai, பெ. (n.)

   1. ஒருமுறை (ரீதி);; one form, one method. அந்தநூல் ஒரு தாரையாய் நடந்து வருகிறது (இ.வ.);.

   2. ஒரு பக்கக் கூர்மை; sharp edge on one side. ‘ஒரு தாரைக் கத்தி’ (வின்);.

   3. இடையீடில் லாத நீரொழுக்கு (வின்.);; uninterrupted downpour of water. (Loc); (இ.வ.);. (செ.அக.);.

     [ஒரு + தாரை. தடம் → தரம் → தாரை.]

ஒருதாரைக்கத்தி

 ஒருதாரைக்கத்தி orutāraikkatti, பெ. (n.)

   ஒருபுறம் கூருள்ள கத்தி; a knife sharpened on one edge. (சா.அக.);. [ஒரு + தாரை + கத்தி.]

ஒருதிறன்

ஒருதிறன் orudiṟaṉ, பெ. (n.)

   ஒருபக்கம்; one side.

     “ஒய்பசிப் பிடியொடு ஒருதிறன் ஒடுங்க” (அக.91);. [ஒரு + (திறம்); திறன்.]

ஒருதிறம்

ஒருதிறம் orudiṟam, பெ. (n.)

   ஒருகூறு; a part.

     “ஓர்வுற் றொரு திற மொல்காத நேர்கோல்” (கலித்.42,14);. [ஒரு + திறம்.]

ஒருதிறம்பற்று-தல்

ஒருதிறம்பற்று-தல் orudiṟambaṟṟudal,    5.செ.கு.வி. (v.i.)

   ஒரு பக்கமாக இருத்தல்; to range oneself on oneside.

     “அறங்கூ றவையத் துரைநூல் கோடி யொருதிறம் பற்றினும்” (சிலப்.5,136); (செ.அக.);.

     [ஒரு + திறம் + பற்று.]

ஒருதுட்டெடை

ஒருதுட்டெடை oruduḍḍeḍai, பெ. (n.)

   நான்கு காசெடை; weight equal to 1/3 of an anna or 1/48 of a ruрее (சா.அக.);.

தெ. ஒகதுட்டு.

     [ஒரு + துட்டு + எடை = ஒருதுட்டெடை. ஒரு உருபாய்க்கு 192 விடுகாசுகள் (தம்பிடிகள்); இருந்த காலத்தில் 4 விடுகாசு கள் ஒரு துட்டு எனப்பட்டது.]

ஒருதுவலி

ஒருதுவலி oruduvali, பெ. (n.)

பண்டைக் காலத்து வழங்கிய ஓர் அளவுப் பெயர் (தொல்.எழுத்.170.

   உரை.);; ancient measure. (செ.அக.);.

     [ஒரு + துவலி.]

ஒருத்தன்

ஒருத்தன் oruttaṉ, பெ. (n.)

   1. ஒருவன்; a certain man.

     “வடமொழியிலே வல்லா னொருத்தன் வரவும்” (தாயு.சித்தர்.கண.10);.

   2. ஒப்பற்றவன்; unique being;

 incomparable one.

     “ஒருத்தனே யுன்னை யோல மிட்டலறி” (திருவாச.29,2); (செ.அக.);.

   ம. ஒருத்தன்;   பட. ஒப்பு;   க. {}. {};   து. ஒரி, ஒரியே;   குவி. ரூசி;   கூ. ரொஅன்சூ;   குருக். ஒர்த்;மால். ஒர்தெ.

     [ஒன்று → ஒள் → ஒரு → ஒருவு → ஒருவன் → ஒருத்தன் = பலரினும் மேம்பட்டு விலகித்தனித்து விளங்குபவன்.]

ஒருத்தலை

ஒருத்தலை oruttalai, பெ. (n.)

   ஒருபக்கம்; one side.

     “ஒருத்தலைப்பரத் தொருத்தலை பங்குவினூர்தி” (கம் பரா.அயோத்.மந்.66); (செ. அக.);.

     [ஒரு + தலை. தலை = பகுதி பக்கம்.]

ஒருத்தலைநோவு

ஒருத்தலைநோவு oruttalainōvu, பெ. (n.)

ஒற்றைத் தலைவலி பார்க்க;see {}.

     “ஒருத்தலை நோவா முடம்பு சுரத்தால் வருத்தமாம்” (பண விடு.248);. (செ.அக.);.

     [ஒரு + தலை + நோவு.]

ஒருத்தலையிடி

 ஒருத்தலையிடி oruttalaiyiḍi, பெ. (n.)

ஒற்றைத் தலைவலி பார்க்க;see {}. (செ. அக.);.

     [ஒரு + தலை + இடி. தலை = பக்கம், பகுதி.]

ஒருத்தலைவலி

 ஒருத்தலைவலி oruttalaivali, பெ. (n.)

ஒற்றைத் தலைவலி பார்க்க;see {}. (செ.அக.);.

ம. ஒரிச்செனி, ஒருச்சென்னி,

     [ஒரு + தலை + வலி. தலை = பக்கம், பகுதி.]

ஒருத்தல்

ஒருத்தல் oruttal, பெ. (n.)

   ஒருசார் விலங்கின் ஆண் பெயர்; male of certain animals, viz.,

புல்வாய், புலி, உழை. மரை, கவரி, கராம். யானை, பன்றி, எருமை. (தொல்.பொருள்.590,591,592); (செ.அக.);.

     [ஓர் → ஓரி → ஒரு-த்தல்.]

ஒருத்தளி-த்தல்

ஒருத்தளி-த்தல் oruttaḷittal,    4.செ.கு.வி. (v.i.)

   வயலிற் பயிர் முழுவதிலும் கதிர் பரிதல் (இ.வ.);; to shoot simultaneously, as ears of corn in a field. (Loc.); (செ. அக.);.

     [ஒரு + தளிர் – ஒருத்தளிர் → ஒருத்தளி.]

ஒருத்தி

ஒருத்தி orutti, பெ. (n.)

   ஒருபெண்; a woman.

     “ஒருத்திமகனாய்ப் பிறந்து” (திவ்.திருப்பா.25); (செ.அக.);. ம. ஒருத்தி;

   து. ஒர்தி;   தெ. ஒர்தி;   குரு. ஒரொத்;   மால. ஒர்தி;   குவி. ஏராந்த, எரொந்தி;க. ஒர்வெ. {}.

     [ஒரு → ஒருத்தி.]

ஒருத்து

ஒருத்து oruttu, பெ. (n.)

   மனவொருமைப்பாடு; conce- ntration of mind.

     “ஒன்று சொல்லி யொருத்தினி னிற்கி லாத வோரைவர்” (திவ்.திருவாய்.7,1,7); (செ.அக.);.

     [ஒரு → ஒருத்து (ஒருமிப்பு); (வே.க.106);.]

ஒருநாளும்

 ஒருநாளும் orunāḷum,    வி.எ. (adv.) எப்பொழுதும்; at any time (used in negative sense).

ம. ஒருநாளும்.

     [ஒரு + நாள் + உம்.]

ஒருநாளைக்கொருநாள்

 ஒருநாளைக்கொருநாள் orunāḷaikkorunāḷ,    வி.எ. (adv.) நாள் செல்லச் செல்ல; day by day. (செ.அக.).

     [ஒரு + நாள் + ஐ + கு + ஒரு + நாள்.]

ஒருநாள்

 ஒருநாள் orunāḷ, பெ. (n.)

   ஒருநாள்; one day, once.

     “ஒரு நாள் உணவை ஒழி என்றால் ஒழியாய்” (நல்

வழி).

ம. ஒருந்நாள்.

     [ஒரு + நாள்.]

ஒருநினைவு

ஒருநினைவு oruniṉaivu, பெ. (n.)

   1. வேறொன்றையும் கருதாது ஒன்றையே சிந்தித்தல்; condition in which the mind is occupied by one idea to the exclusion of others – hyperprosexia.

   2. ஒரே சிந்தை;     [ஒரு1 + நினைவு.]

ஒருநிறத்தோற்றம்

 ஒருநிறத்தோற்றம் oruniṟattōṟṟam, பெ. (n.)

   எல்லா நிறமும் கண்ணுக்கு ஒரே நிறமாகக் காணப் படல்; colour blindness in which different colours are seen as one.

     [ஒரு + நிறம் + தோற்றம்.]

ஒருநிலை

 ஒருநிலை orunilai, பெ. (n.)

   ஒன்றாகிய நிலை, (ஐக்கியம்);; unity, harmonious state. (சேரநா.);.

ம. ஒருநில.

ஒருநிலைப்பொய்கை

ஒருநிலைப்பொய்கை orunilai-p-poygai, பெ. (n.)

   வற்றாத பொய்கை (பரி.8.15);; never drying tank or

 hand. (சங்.இலக்.சொற்.);.

     [ஒரு + நிலை + பொய்கை.]

ஒருநெறிப்படு-தல்

ஒருநெறிப்படு-தல் oruneṟippaḍudal,    20.செ.கு.வி. (v.i.)

   ஒருவழிப்படுதல் (தொல்.பொருள்.510);; to stand

 together;

 to be placed together. (செ.அக.);.

     [ஒரு + நெறி + படு.]

ஒருநேரம்

ஒருநேரம் orunēram, பெ. (n.)

   1. காலமல்லாத காலம், அகாலம்; unseasonable time.

இவன் இரவு ஒரு நேரத்தில் என் வீட்டுக்கு வந்தான். (இ.வ.);.

   2. பாதிப்ப கல்; half-day.

இன்றைக்கு ஒரு நேரப்பள்ளி (உ.வ.); (செ.அக.);.

     [ஒரு + நேரம்.]

ஒருபக்கவாரம்

ஒருபக்கவாரம் orubakkavāram, பெ. (n.)

   ஒருசார்பாகச் செய்தல், ஒருதலையாகச் செய்தல் (யாழ்.அக.);; partiality. (செ.அக.);.

     [ஒருதலை1 + வாரம்.]

ஒருபடம்

 ஒருபடம் orubaḍam, பெ. (n.)

   இடுதிரை (திவா.);; curtain. (செ.அக.);.

     [ஒருவு + படம் – ஒருவுபடம் → ஒருபடம். ஒருவு = நீங்கு, விலகு. படம் = துணி.]

ஒருபடி

ஒருபடி1 orubaḍi, பெ. (n.)

   1. ஒருவகை; a kind.

   2. ஒரே முறை; the same manner.

     “ஒருபடிப்பட்டிருக்கு மவனை” (ஈடு.6,8,4);. – வி.எ. (adv.); ஒருவாறு;

 tolerably, in some degree, to some extent;

 with some difficulty. (செ.அக.);.

ம. ஒருபடி.

     [ஒரு + படி. படி = தன்மை, வகை.]

 ஒருபடி2 orubaḍi, பெ. (n.)

   தாராளம், மிகுதி; plenty, a large quantity, a good many or good deal. (சேரநா.);.

ம. ஒருபடி.

     [ஒரு2 + படி.]

ஒருபடித்தாய்

ஒருபடித்தாய்1 orubaḍittāy, கு.வி.எ. (adv.)

   1. ஒரே முறையாய்; in the same way.

     “உள்ளும் புறம்பு மொருபடித்தாய்” (அருட்பா,1,நெஞ்சறி.621);.

   2. இருக்கவேண்டிய நிலைக்குச் சிறிது மாறுதலாய்; passably, tolerably.

எனக்கு உடம்பு ஒரு படித்தாயிருக்கி றது. (செ.அக.);.

     [ஒரு + படித்து + ஆய்.]

 ஒருபடித்தாய்2 orubaḍittāy, குவி.எ. (adv.)

   முயற்சி யாய் (யாழ்.அக.);; with effort. (செ.அக.);.

     [ஒருபடித்து + ஆய். ஒருபடித்து = ஒருசீராய், தொடர்ச்சியாய்.]

ஒருபடிப்பட

ஒருபடிப்பட orubaḍibbaḍa,    கு.வி.எ. (adv.) இடைவி டாமல்; uninterruptedly.

     “ஏழுநாள் ஒருபடிப்பட மலை யைச் சுமந்து” (திவ்.பெரியாழ்.3,4,4.வ்யா,பக்.602); (செ.அக.);.

     [ஒரு + படி + பட.]

ஒருபது

ஒருபது orubadu, பெ. (n.)

   பத்து; ten.

     “தாய்தந்தைக் கொருபதாகு நாளுளதாம்” (கூர்மபு.உத்.22,5); (செ.அக.);.

ம.ஒருபது.

     [ஒரு + பத்து – ஒருபத்து → ஒருபது.]

ஒருபத்து

 ஒருபத்து orubattu, பெ. (n.)

   பத்து; ten. (சேரநா.);.

ம. ஒருபது.

     [ஒரு + பத்து.]

ஒருபாட்டம்

ஒருபாட்டம் orupāṭṭam, பெ. (n.)

   ஒருபாறல் மழை; heavy downpour of rain once at a stretch.

     “ஒரு பாட்டம் மழைவிழுந்தாற்போலே” (ஈடு,4,5,2); (செ.அக.);.

     [ஒரு1 + பாட்டம்.]

ஒருபான்

ஒருபான் orupāṉ, பெ. (n.)

ஒருபது (தொல். எழுத்.199, உரை.); பார்க்க;see orupadu. (செ.அக.);.

ம.ஒருபது.

     [ஒரு + பான். பத்து → பதின் → பான். ஒ.நோ. இருபதின் → இருபான்.]

ஒருபாவொருபஃது

ஒருபாவொருபஃது orubāvorubaḵtu, பெ. (n.)

   அகவல், வெண்பா, கலித்துறை என்பவற்றுள் ஏதே னும் ஒருபாவிற் பத்துப்பாடல்களால் அமைக்கப் பட்ட ஒரு சிற்றிலக்கியம்; minor literature in anyone of the 3 kinds of versification.

     “அகவல் வெண்பாக் கலித்துறை அதுகொண்டு ஒருபா ஒருபஃது உறின்அப் பெயராம்” (இலக்.வி.823);. (செ.அக.);.

     [ஒரு + பா + ஒரு + பஃது.]

ஒருபிடி

ஒருபிடி orubiḍi, பெ. (n.)

   1. கைப்பிடியளவு; a handful.

     “முடிவிலொரு பிடிசாம்பராய்’ (பட்டினத்.திருப்பா.தி ருத்தில்லை.7);.

   2. உறுதி; firm determination, unshakea- ble resolve.

   3. விடாப்பற்று; firm trust or dependence.

   4. விடாப்பிடி (பிடிவாதம்);; stubbornness, obstinacy. (செ.அக.);.

     [ஒரு1 + பிடி.]

ஒருபுடை

ஒருபுடை orubuḍai, கு.பெ.எ. (adj.)

   சற்றொப்ப; partial, imperfect, approximate.

ஒருபுடையுவமை – கு.வி.எ. (adv.);

   ஒருபக்கமாய்; to one side.

     “ஒரு புடை பாம்பு கொளினும்” (நாலடி.148); (செ.அக.);.

   மறுவ. ஒருமருங்கு, ஒருசார், ஒருபக்கம்;ம. ஒருபாடு.

     [ஒரு1 + புடை.]

ஒருபுடையுவமை

ஒருபுடையுவமை orubuḍaiyuvamai, பெ. (n.)

   முழுவ தும் ஒப்பாகாமல் சில தன்மைகளில் மாத்திரம் ஒத்தி ருக்கும் உவமை; simile in which comparison applies only partially and not fuly, dist. Fr. முற்றுவமை.

     “ஒருபுடை யுவமையாதலன்றி முற்றுவமையாதல் செல்லாமை யானும்” (சி.போ.சிற்.1,2,3); (செ.அக.);.

     [ஒரு1 + புடை + உவமை.]

ஒருபுடையொப்புமை

ஒருபுடையொப்புமை orubuḍaiyobbumai, பெ. (n.)

ஒருபுடையுவமை பார்க்க;see orupudaiyuvamai. (செ. அக.);.

     [ஒரு1 + புடை + ஒப்புமை.]

ஒருபொருட் பன்மொழி

ஒருபொருட் பன்மொழி oruboruṭbaṉmoḻi, பெ. (n.)

   1. ஒரு பொருளைத் தரும் பல சொற்கள்; different

 words connoting the same thing.

   2. மீமிசைச் சொல் (நன்.398);; tautology for greater effect and emphasis.

     [ஒரு + பொருள் + பன்மொழி.]

ஒருபொருட்கிளவி

ஒருபொருட்கிளவி oruboruṭkiḷavi, பெ. (n.)

   ஒரு பொருள் சுட்டும் பலசொல் (தொல்.சொல்.1,சேனா.);; Synonym. (செ.அக.);.

     [ஒரு + பொருள் + கிளவி.]

ஒருபொருண்மொழி

ஒருபொருண்மொழி oruboruṇmoḻi, பெ. (n.)

   செய் யுட் குற்றங்களுள் ஒன்று (யாப்.வி.525);; defect in poetry. (செ.அக.);.

     [ஒரு + பொருள் + மொழி.]

ஒருபொருள்

ஒருபொருள் oruboruḷ, பெ. (n.)

   கடவுள் (வின்.);; god, the one reality. (செ.அக.);.

     [ஒரு2 + பொருள்.]

ஒருபொழுது

ஒருபொழுது oruboḻudu, பெ. (n.)

   1. ஒருவேளை; a division of time.

     “ஒருபொழுதும் வாழ்வ தறியார்” (குறள்.);.

   2. ஒருவேளை மட்டும் உணவுகொள்ளும் தெய்வ வழிபாட்டு நோன்பு; vow of taking one meal in a day.

     [ஒரு1 + பொழுது. பொழுது = நேரம், வேளை.]

ஒருபோகம்

 ஒருபோகம் orupōkam, பெ. (n.)

   ஆண்டுக்கு ஒரு முறை விளைவு (R.T.);; single crop. (செ. அக.);.

ம. ஒருப்பூ.

     [ஒரு + போகம். பூ → பூகம் → போகம்.]

ஒருபோகி

ஒருபோகி orupōki, பெ. (n.)

   ஒரே நிகழ்வு; the ever constant entity, that which remains the same without variation, as time divested of all phenomena, like day, night, etc.

     “காலத்தையடைய ஒருபோகியாக்கி” (ஈடு.9,3,10); (செ.அக.);.

     [ஒரு1 + போகி. போக்கு → போகு → போகி.]

ஒருபோகு

ஒருபோகு orupōku, பெ. (n.)

   1. ஒருபடித்தான நிலம் (தொல்.பொருள்.460,உரை.);; land of uniform character, whether in regard to level or soil content.

   2. ஒத்தாழிசைக் கலி வகையுளொன்று (தொல்.பொருள்.451,உரை.);; a kind of verification. (செ.அக.);.

     [ஒரு1 + போகு.]

ஒருபோக்கன்

ஒருபோக்கன் orupōkkaṉ, பெ. (n.)

   வேறுபட்ட நடை யுள்ளவன்; man whose behaviour is of a singular or peculiar nature. (செ.அக.);.

     [ஒரு1 + போக்கு + அன்.]

ஒருபோக்காய்ப்போ-தல்

ஒருபோக்காய்ப்போ-தல் orupōkkāyppōtal,    6.செ.கு.வி. (v.i.)

   திரும்பி வாராது போதல்; to be gone

 once and for ever never to return, an expression used in anger or cursing. (செ.அக.);.

     [ஒரு + போக்கு + ஆய் + போ-தல்.]

ஒருபோது

ஒருபோது orupōtu, பெ. (n.)

ஒருபொழுது பார்க்க;see {}. (செ.அக.);.

     [ஒரு1 + (பொழுது); போது.]

ஒருப்படு-தல்

ஒருப்படு-தல் oruppaḍudal,    20.செ.கு.வி. (v.i.)

   1. ஒரு தன்மையாதல் (சி.சி.2,5,மறைஞா.);; to become one, unite, coalesce.

   2. ஒத்துக்கொள்ளுதல் (இறை.1, உரை.7);; to consent, agree.

   3. ஒருநினைவாதல் (வின்.);; to have the mind fixed on one object to be abstracted from outward objects. (W.);.

   4. துணிதல்; to venture, dare.

     “போக்கொருப்பட்டு நின்று” (தொல்.பொருள்.41, உரை.);.

   5. முயலுதல்; to attempt, try.

     “போகவேணு மென்றொருப்பட” (ஈடு.7,3,ப்ர.);.

   6. ஒன்றுகூடுதல்; to come together.

     “ஆட்பட்டீர் வந்தொருப்படுமின்” (திருவாச.45,1);.

   7. தோன்றுதல்; to appear.

     “ஒளியொ ளியுதயத் தொருப்படுகின்றது” (திருவாச.20,3); (செ.அக.);.

     [ஒரு + படு.]

ஒருப்படுத்து-தல்

ஒருப்படுத்து-தல் oruppaḍuddudal,    14.செ.குன்றாவி. (v.t.)

   1. ஒன்று கூட்டுதல்; to bring together, reconcile.

   2. வழிவிடுதல்; to bid adieu,

     “திருவணுக்கன் திருவாச லளவும் ஒருப்படுத்தி மீள” (ஈடு.7.3.ப்ர.);.

   3. முடிவு செய்தல்; to finish, settle.

     “ஒருப்படுத் தூர்க்கு மீள்வான்” (சீவக.505);.

   4. ஏற்றுக்கொள்ளச் செய்தல்; to bring to an agreement, cause to consent (இறை.6,65);. (செ.அக.);.

     [ஒரு + படுத்து.]

ஒருப்பாடு

ஒருப்பாடு1 oruppāṭu, பெ. (n.)

   1. முயற்சி; endeavour. Effort.

     “உங்களொருப்பாடு கண்டேனுக்கு” (ஈடு.6,1,8);.

   2. உடன்பாடு; consent.

     “சீரிதென்றொருப் பாடுற்றாள்” (கந்தபு.வள்ளி.163);.

   3. ஒருதன்மையாகை; unanimity,

 Concord.

     “உலகெலா மொருப்பா டொன்றி” (கந்தபு. மேரு.18);.

   4. ஒன்றி நிற்கை; fixing the mind on a

 single aim, concentration of mind.

     “தன்னுள மொருப்பா டெய்த நிமலனை யுன்னி” (கந்தபு.மேரு.32);.

   5. மனத் திண்மை; resoluteness, constant.

     “கலயனார்த மொருப்பாடு கண்டபோதே” (பெரியபு.குங்கிலிய.28);. (செ. அக.);.

     [ஒரு + பாடு. படு → பாடு. (மு.தி.தொ.பெ.);.]

 ஒருப்பாடு2 oruppāṭu, பெ. (n.)

   1. ஒருபக்கம், ஒருபாகத் தில்; on one side.

   2. தாராளம், அதிகம், மிகுதி; great quantity, excess, ample. (சேரநா.);.

ம. ஒருபாடு.

     [ஒரு + பாடு. பாடு = பக்கம், பகுதி. ஒரு1, ஒரு2 பார்க்க;see oru1, oru2.]

ஒருப்பார்வை

 ஒருப்பார்வை oruppārvai, பெ. (n.)

   உற்றுப்பார்த்தல், விடாது பார்க்கும் பார்வை (யாழ்.அக.);; intent gaze, attentive look. (செ.அக.);.

     [ஒரு + பார்வை.]

ஒருப்பிடி

 ஒருப்பிடி oruppiḍi, பெ. (n.)

   உறுதிப்பிடி; firm grasp.

     [ஒரு + பிடி.]

ஒருப்பு

ஒருப்பு oruppu, பெ. (n.)

ஒருவந்தம் பார்க்க;see oruvandam.

     “ஓதினார்க்குமுணர்வொருப்பாயதே” (நீல கேசி.212); (செ.அக.);.

     [ஒரு → ஒருப்பு.]

ஒருப்புறவன்

ஒருப்புறவன் oruppuṟavaṉ, பெ. (n.)

   முத்துவகை (S.I.I.ii.206);; a kind of pearl. (செ.அக.);.

     [ஒரு2 + புறவன்.]

ஒருமடைசெய்-தல்

ஒருமடைசெய்-தல் orumaḍaiseytal,    1. செ.குன்றாவி. (v.t.)

   ஒருமுகமாக்குதல்; lit, to bring many streams under one sluice, to conceive the various aspects of a thing together.

பகவத்குணங்களை ஒருமடைசெய்து பூஜிக்கை. (திவ்.திருப்பா,12,வ்யா.130); (செ.அக.);.

     [ஒரு1 + மடை + செய்.]

ஒருமட்டம்

ஒருமட்டம் orumaṭṭam, பெ. (n.)

ஒருமட்டு பார்க்க;see {}. (செ.அக.);.

     [ஒரு1 + (மட்டு); மட்டம்.]

ஒருமட்டு

ஒருமட்டு orumaṭṭu, பெ. (n.)

   ஒத்த அளவு; equality in size or measure – கு.வி.எ. (adv.); ஒருவாறு;

 in a way, to some extent. காரியம் ஒருமட்டு முடிந்தது. (செ.அக.);.

     [ஒரு1 + மட்டு.]

ஒருமனதாக

 ஒருமனதாக orumaṉatāka, வி.எ. (adv.)

   கருத்துவேற்றுமை இல்லாமல்; unamimously,

     [ஒரு+மனது+ஆக]

ஒருமனப்படு-தல்

ஒருமனப்படு-தல் orumaṉappaḍudal,    20.செ.கு.வி. (v.i.)

   1. ஒருமன மாதல்; to be unanimous.

   2. மனத்தை ஒன்றிலே செலுத்துதல்; to concentrate the mind intensely upon an object, to be deeply engaged in the

 pursuit of one idea. (செ.அக.);.

     [ஒரு + மனம் + படு.]

ஒருமனப்பாடு

ஒருமனப்பாடு orumaṉappāṭu, பெ. (n.)

   1. மன விணக்கம்; unanimity, concord.

   2. மனத்தை ஒன்றிற் செலுத்துகை; close or undivided application of mind to an object.

   3. மனவடக்கம்; mental restraint. (செ.அக.);.

     [ஒரு + மனம் + பாடு. படு → பாடு.]

ஒருமனம்

 ஒருமனம் orumaṉam, பெ. (n.)

   வேறொன்றும் நாடாத மனம்; mind without variation, unanimity, one mindedness. (சா.அக.);.

ம. ஒருமனம்.

     [ஒரு + மனம்.]

ஒருமா

ஒருமா orumā, பெ. (n.)

   இருபதில் ஒருகூறாகிய பின்னவெண் (ப.);; fraction 1/20. (செ.அக.);.

ம. ஒருமா(வு);.

     [ஒரு + மா.]

ஒருமாதிரி

ஒருமாதிரி orumātiri, பெ. (n.)

   ஒருவகை; a kind – கு.பெ.எ. (adj.);

   குணம்வேறுபட்ட; singular, peculiar.

அவன் ஒரு மாதிரி ஆள் (உ.வ.); (செ.அக.);.

     [ஒரு1 + மாதிரி. மாத்திரி → மாதிரி. மா = அளத்தல், மாத்திரி = அளவு, அளவு வேறுபாடு.]

ஒருமாரை

 ஒருமாரை orumārai, பெ. (n.)

ஒருமாவரை பார்க்க;see {}.

     [ஒரு + மா + அரை – ஒருமாவரை → ஒருமாரை (மரூஉ.);.]

ஒருமாவரை

ஒருமாவரை orumāvarai, பெ. (n.)

   ஒருமாவும் அரைமா வுஞ் சேர்ந்த 3/40 என்னும் கீழ்வாயிலக்கம் (தொல். எழுத்.171,உரை.);;{} and a half 1/20 + 1/40 – 3/40.

     [ஒரு + மா + அரை.]

ஒருமி-த்தல்

ஒருமி-த்தல் orumittal,    4.செ.கு.வி. (v.i.)

   ஒன்றுசேர்தல்; to be in unison, to unite.

     “காதலிருவர் கருத்தொருமித்து” (பெருந்தொ.221); (செ.அக.);.

   ம. ஒருமிக்குக;   க. ஒம்மு, ஒக்கு;   து. ஒம்மெபுனி, {}, ஒர்குனி;தெ. ஒம்மு, ஒருமு.

     [ஒருமு → ஒருமி.]

ஒருமிக்க

ஒருமிக்க orumikka,  கு.வி.எ. (adv.)/myfirstfont_13>
   ஒருசேர  together.

ஒருமிடறா-தல்

ஒருமிடறா-தல் orumiḍaṟātal,    6.செ.கு.வி. (v.i.)

   1. ஒரு குரலாதல்; to join in one voice.

     “இப்படியெல்லாரும் ஒருமிடறாயேத்தினாலும்” (ஈடு.4,3,10);.

   2. ஒரு சிந் தையாதல்; to be of one mind. ”நீயென்னோ டொருமிட றான பின்பு’ (ஈடு,1,10.4);.

     [ஒரு + மிடறு + ஆகு – ஒருமிடறாகு → ஒருமிடறாதல்.]

ஒருமிடறு

ஒருமிடறு orumiḍaṟu, பெ. (n.)

   ஒருவாய்க்குள் அடங் கும் படி பருகுமளவு; one draught-of liquid. இன்னும்

ஒருமிடறு குடி (யாழ்ப்.); (செ.அக.);.

     [ஒரு1 + மிடறு.]

ஒருமிப்பு

ஒருமிப்பு orumippu, பெ. (n.)

   1. ஒற்றுமைப்படுகை; union, harmony.

   2. மனத்தை ஒன்றிற் செலுத்துகை; close or undivided attention to an object .

     “அப்பாலேபோ யொருமிப்பா யிருக்கையில்” (குற்றா.குற.103,2); (செ.அக.);.

   ம. ஒருமிப்பு;   குட. ஒர்மெ;   து. ஒம்முத;தெ. ஒரிம, ஒரிமிக.

     [ஒருமு → ஒருமி → ஒருமிப்பு.]

ஒருமுகமாய்ப்பேசு-தல்

ஒருமுகமாய்ப்பேசு-தல் orumugamāyppēcudal,    5.செ.கு.வி. (v.i.)

   பலர் ஒரு மனத்தராய்ப் பேசுதல் (வின்.);; to speak with one voice. (செ.அக.);.

     [ஒரு + முகம் + ஆய் + பேசு.]

ஒருமுகம்

ஒருமுகம் orumugam, பெ. (n.)

   1. நேர்வழி; direct route, the same direction.

ஒருமுகமாய்ப்போ. (உ.வ.);

   2. ஒற்றுமை; union, harmony.

ஒருமுகமாய்ப் பேசினார் கள் (உ.வ.);.

   3. ஒருகட்சி; same party.

எல்லாரும் ஒருமுக மாயிருந்தார்கள். (வின்.); (செ.அக.);.

     [ஒரு1 + முகம்.]

ஒருமுகவெழினி

ஒருமுகவெழினி orumugaveḻiṉi, பெ. (n.)

   ஒருபக்க மாக இழுக்கப்படும் திரைச்சீலை (சிலப்.3,109);; stage screen drawn from one side. (செ.அக.);.

     [ஒரு + முகம் + எழினி.]

ஒருமுறைக் காய்ச்சல்

ஒருமுறைக் காய்ச்சல் orumuṟaikkāyccal, பெ. (n.)

   1. நாளொன்றில் ஒருமுறை வருங்காய்ச்சல்; attack of fever once in a day.

   2. ஒருதடவை காய்ந்து பின்பு நின்றுபோகுங் காய்ச்சல்; only one attack of fever which never appears afterwards.

   3. ஒரே தடவை காய வைத்தல்; drying only once.

   4. ஒரே தடவை அடுப்பு

   மேலேற்றிக் காய்ச்சுதல்; boiling only once or at a stretch, as in the preparation of decoction or medicated oils. (சா.அக.);.

     [ஒரு + முறை + காய்ச்சல்.]

ஒருமுற்றிரட்டை

ஒருமுற்றிரட்டை orumuṟṟiraṭṭai, பெ. (n.)

   ஒரடி முற்றெதுகையாய் வருவது (யாப்.வி.51);; verse in which all the feet in one line have the same edugal. (செ.அக.);.

     [ஒரு + முற்று + எதுகை.]

ஒருமூச்சாய்

 ஒருமூச்சாய் orumūccāy, கு.வி.எ. (adv.)

   ஒரே தொடர்ச் சியாய்; with sustained, continuous manner, at one stretch.

ஒருமூச்சாய் வேலை செய்தான் (செ.அக.);.

     [ஒரு + மூச்சு + ஆய்.]

ஒருமை

ஒருமை orumai, பெ. (n.)

   1. ஒற்றுமை (பிங்.);; oneness, union.

   2. தனிமை; singleness, loneliness.

     “என்னொரு மையுங் கண்டுவத்தி” (கம்பரா.கிளை.30);.

   3. ஒரே தன்மை; unchangeableness.

   4. ஒப்பற்ற தன்மை; peerlessness, uniqueness.

     “உண்மைபிறர்க் கறிவரிய வொருமையானும்” (சிவப்பிர.முதற்சூ.3.பக்.91);.

   5. ஒருமை எண் கூற்று; singular number.

     “ஒருமை எண்ணின் பொதுப்பிரி பாற்சொல், ஒருமைக்கல்லது எண்ணுமுறை நில்லாது.” (தொல்.சொல்.44);

   6. மன மொன்றுகை; concentration of mind.

     “ஒருமையா லுன்னையுள்கி” (தேவா.478,4);.

   7. இறையுணர்வு (பிங்.);; knowledge of God.

   8. கருத்துரை முடிவு; decision, determination.

     “கொடுத்து நம் முயிரென வொருமை கூறினான்” (கம்பரா.மூலபல.177);.

   9. துறக் கம் (மோட்சம்);; final emancipation.

     “எம்மொடா மொருமை யெய்துவான்” (தணிகைப்பு.நந்தியு.17);.

   10. மெய்ம்மை; truthfulness, veracity.

     “ஒருமையே மொழி யுநீரார்” (கம்பரா.அயோத்.மந்திர.9);.

   11. ஒருபிறப்பு; one birth in the round of births.

     “ஒருமைக்கட் டான்கற்ற கல்வி” (குறள்.398); (செ.அக.);.

   ம. ஒரும. க. ஒரகெ;   குட. ஒர்மெ;   து. ஒம்முத (சேர்ப்பு);. ஒக்கட (ஒருமை);;தெ. ஒரிம, ஒரிமிக. [ஒரு → ஒருமு → ஒருமை.]

ஒருமை பன்மை மயக்கம்

ஒருமை பன்மை மயக்கம் orumaibaṉmaimayakkam, பெ. (n.)

   சொற்றொடரில் (வாக்கியத்துள்); ஒருமை பன்மைகள் மயங்கி வழங்குகை (சீவக.2210,உரை.);; use of the singular for the plural, or vice versa, as sanctioned by usage. (செ.அக.);.

     [ஒருமை + பன்மை + மயக்கம்.]

ஒருமைப்படு-தல்

ஒருமைப்படு-தல் orumaippaḍudal,    20.செ.கு.வி. (v.i.)

   1. ஒற்றுமைப்படுதல்; to become united.

   2. மனம் ஒருமுகப்படுதல்; to become concentrated.

     “சாஸ்திரங் களிற் சொல்லுகிறவழியே நெஞ்சு ஒருமைப் பட்டு” (ஈடு.10,4,10);. (செ.அக.);.

     [ஒருமை + படு.]

ஒருமைப்பாடு

ஒருமைப்பாடு orumaippāṭu, பெ. (n.)

   1. ஒற்றுமைப்ப டுகை; being united.

   2. ஒருமித்திருக்கை; combining to become a whole.

நாட்டின் ஒருமைப்பாடு. (செ.அக.);.

     [ஒருமை + பாடு. படு → பாடு.]

ஒருமைமகளிர்

ஒருமைமகளிர் orumaimagaḷir, பெ. (n.)

   பிற ஆடவர் பாற் செல்லாத மனமுடைய மாதர் (குறள்.974. உரை.);; chaste, faithful women. (செ.அக.);.

     [ஒருமை + மகளிர்.]

ஒருமொழி

ஒருமொழி orumoḻi, பெ. (n.)

   1. ஆணை; royal command, the authoritative word of a king.

ஒருமொழி வைத்துல காண்ட சேரலாதற்கு (சிலப்.வாழ்த்துக். உரைப்பாட்டு.);.

   2. பல சொற்களாய்ப் பிரிக்க முடியாத சொல் (நன்.259);; simple word, dist. fr. (தொடர்மொழி. (செ.அக.);.

   3. ஒரு பொருளையே விளக்கி நிற்குஞ் சொல் (ஆ.அக.);; word which has single meaning.

     [ஒரு + மொழி.]

ஒரும்பு

 ஒரும்பு orumpu, பெ. (n.)

   வறட்சி, பற்றாக்குறை, புழுக்கம்; draught.

     “இந்த ஆண்டு ஒரும்பாகி விட்டதுமழையே கிடையாது. [உரும்பு-ஒரும்பு]

ஒருலாகை

 ஒருலாகை orulākai, பெ. (n.)

   ஒருவகை (வின்.);; a kind of, one sort.

தெ. லாகு.

     [ஒரு + அலகு – ஒரு அலகு → ஒருலாகு → ஒருலாகை (கொ.வ.);.]

ஒருவண்ணம்

ஒருவண்ணம் oruvaṇṇam, கு.வி.எ. (adv.)

   ஒருவாறு; in some manner, to a certain extent, in some degree.

     “ஒருவண்ணந் துயர்நீங்கி” (கம்பரா. கையடை.12); (செ.அக.);.

ம. ஒருவண்ணம்.

     [ஒரு + வண்ணம்.]

ஒருவந்தம்

ஒருவந்தம்1 oruvandam, பெ. (n.)

   1. ஒற்றுமை; similarity, agreement.

   2. உறுதி; certainty, indubitable- ness.

     “ஒருவந்த மொல்லைக் கெடும்” (குறள்.563);.

   3. நிலைபேறு; firm footing, stability.

     “ஊக்க மொருவந்தங் கைத்துடையார்” (குறள்.593);.

   4. தொடர்பு (வின்.);; connection, relation. (செ.அக.);.

     [ஒரு1 + அந்தம். அந்துதல் = சேர்தல். ஒருவந்தம் = ஒன்றுபடல், ஒற்றுமை.]

 ஒருவந்தம்2 oruvandam, பெ.எ. (adj.)

   1. ஒருசேர; all at a time.

   2. முடிவாக, உறுதியாக; cetainly, undou- btedly.

     “ஒருவந்தம் ஒல்லைக் கெடும்” (குறள்);.

     [ஒரு + அந்தம் – ஒருவந்தம் (பெயரே பெயரெச்சமாயிற்று);.]

 ஒருவந்தம்3 oruvandam, பெ. (n.)

   தனியிடம் (சூடா.);; lonely place, place of retirement.

     [ஒருவு + அந்தம். ஒருவுதல் = நீங்குதல், தனித்திருத்தல். ‘அந்தம்’ – பெயரீறு.]

ஒருவன்

ஒருவன் oruvaṉ, பெ. (n.)

   1. ஒருத்தன்; person of the male sex, man or demon.

     “குடிசெய்வ லென்று மொருவற்கு” (குறள்.1023);.

   2. ஒப்பற்றவன்; the incomparable one.

     “ஒருவன் வயமானடித் தேர்வான் போல” (கலித்.37); (செ.அக.);.

   ம. ஒருவன்;   க. ஒர்பு, ஒப்புனு. ஒர்வன், ஒம்பு;   பட. ஒப்பு;   குட. ஒப்பெ;   து. ஒரி;   தெ. ஒருடு, ஒகடு;   கோண். ஓர்ன்;   கூ. ரொன்அன்சு;   குவி. ரோஒசி, ருசி;   கொன். ஒரென்;   நா. ஒக்கொ;   கொலா, ஒக்கொன்;   பர். ஒகுர்;   கட. உகர்;மால். ஒர்னெ.

     [ஒரு1 + அன் – ஒருவன். ஒரு2 + அன் – ஒருவன்.]

ஒருவயிற்றோர்

ஒருவயிற்றோர் oruvayiṟṟōr, பெ. (n.)

   உடன்பிறப் பாளர் (சகோதரர்);; children of the same parents.

     “ஒரு வயிற்றோர் செய்கடனும்” (கந்தபு. சிங்கமு.471); (செ.அக.);.

     [ஒரு + வயிறு + ஓர்.]

ஒருவர்

ஒருவர் oruvar, பெ. (n.)

   உயர்சொற்கிளவி, ஒருவன் அல்லது ஒருத்தியைச் சிறப்பு கருதி உயர்வுப் பன் மையில் வழங்கும் பெயர் (நன்.289);; a person, male or female indicated in plural as an honorific term. (செ.அக.);

     [ஒரு1 + அர் – ஒருவர். ‘அர்’ – உயர்வுப் பன்மையீறு.]

முறைப்படி. ‘அர்’ – பலர் பாலுக்குரிய ஈறு.

     “ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவியும் ஒன்றனைக் கூறும் பன்மைக் கிளவியும் வழக்கினாகிய உயர்சொற் கிளவி இலக்கண மருங்கின் சொல் லாறல்ல” (தொல்.சொல்.27); என்று தொல்காப்பியர் கூறியி ருக்கிறார். ஒருவனைப் பலர் பாலாகக் கூறுவது பொருளில் வறுமொழியாய் இலக்கண வழுவுடையதாயினும், பலராலும் போற்றப்படும் புகழும் பெருமையும் பெற்றவனை நன்கு மதிக்கும் நாகரிகம் கருதிப் பலர் பாலுக்குரிய ‘அர்’ ஈறு சேர்க்கப்பட்டது. ஒன்று பலவாகவோ ஒருவனைப் பலராகவே மாற்றும் பொருட்பாங்கு ‘அர்’ ஈற்றுக்கு இன்மையின் இதனை உயர்வுப் பன்மையீறு எனப் புதிய இலக்கண வகையீடு தந்து வழங்கினர். ‘அ’ – என்னும் பலவின் பாலீறும் பன்மை யீறாதலின் அதனின்றும் வேறுபடுத்த ‘அர்’ உயர்வுப் பன்மை யீறு எனப்பட்டது. ஒருவர் என்பதிலுள்ள ‘அர்’ ஈறு, பலர்பா லீறு அன்று எனவும் ‘ஒருவன்’ என்பதிலுள்ள அன் – அர் எனத் திரியாது எனவும் அறிதல் வேண்டும்.

ஒருவழித்தணத்தல்

ஒருவழித்தணத்தல் oruvaḻittaṇattal, பெ. (n.)

   அலரடங்குதற் பொருட்டுத் தலைமகன் சிலநாள் வேற்றிடத்துச் சென்று உறையும் அகத்துறை (திருக்கோ.181.அவ.);; literary theme, in which the lover’s temporary absence from the place of his lady – love to avoid all tittle-tittle about him, is depicted. (செ.அக.); (அபி.சிந்);.

     [ஒரு + வழி + தணத்தல்.]

ஒருவழிப்படு-தல்

ஒருவழிப்படு-தல் oruvaḻippaḍudal,    20.செ.கு.வி. (v.i.)

   1. ஒருமுகப்படுதல்; to concentrate.

படிப்பில் மனம் ஒருவழிப்பட வேண்டும். (உ.வ.);.

   2. ஒன்று படுதல், ஒற்றுமையாதல்; to be united.

மாறுபட்டவரெல்லாம் இப்போது ஒருவழிப்பட்டுவிட்டார்கள். (உ.வ.);. (செ.அக.);.

     [ஒரு + வழி + படு.]

ஒருவழிப்பாதை

 ஒருவழிப்பாதை oruvaḻippātai, பெ. (n.)

வாகனங்கள் ஒரு திசையில் மட்டுமே போவதற்கு அனுமதிக்கப்பட்ட வழி:

 One-way

     [ஒருவழி+பாதை]

ஒருவழியுறுப்பு

ஒருவழியுறுப்பு oruvaḻiyuṟuppu, பெ. (n.)

   ஒருபகுதி (தொல்.சொல்.81);; portion of the whole (செ.அக.);.

     [ஒரு + வழி + உறுப்பு.]

ஒருவாக்காக

ஒருவாக்காக oruvākkāka, கு.வி.எ. (adv.)

   1. ஒரு வகையாக; in a pecullar way.

   2. ஒரேபடியாக; in the same manner.

     “ஒருவாக்காகப் படுத்துக்கொண்டிருக் கை” (ஈடு.6,8,4,ஜீ);.

   3. ஒரேமுறையில்; once for all.

ஒருவாக்காகத் தொலைந்துபோனான். (இ.வ.);.

   4. ஒரு சேர; all together, in toto,

யாவரும் ஒருவாக்காகப் போய்விட்டார்கள். (செ.அக.);.

     [ஒரு + வாக்கு + ஆக.]

ஒருவாக்கு

ஒருவாக்கு oruvākku, பெ. (n.)

   1. உறுதிமொழி; one word, truth, certainty, assurance.

   2. ஒன்றுசேர்ந்து கூறுஞ் சொல்; united voice. (செ.அக.);.

     [ஒரு1 + வாக்கு.]

ஒருவாமை

ஒருவாமை oruvāmai, பெ. (n.)

   1. பிறழாமை; uncha- ngeableness.

     “ஒருவாமை வைத்தற்கு ஒள்ளியான் ஒருபுலவனால் உரைக்கப்படுவது” (இறை.1.12);.

   2. நீங்காமை; stability, invariability, permanence. (செ.அக.);.

     [ஒருவு + ஆ + மை. ஒருவுதல் = நீங்குதல்;

     ‘ஆ’ – எ.ம.இ.நி.]

ஒருவாயுணவு

ஒருவாயுணவு oruvāyuṇavu, பெ. (n.)

   ஒரு கவளம்; one morsel of food. (சா.அக.);.

     [ஒரு1 + வாய் + உணவு.]

ஒருவாய்கொள்ளல்

 ஒருவாய்கொள்ளல் oruvāykoḷḷal, பெ. (n.)

   ஒரு தடவை வாய் கொள்ளுமளவு உட்கொள்ளல்; taking one mouthful. (சா.அக.);.

     [ஒரு + வாய் + கொள்ளல்.]

ஒருவாய்க்கோதை

ஒருவாய்க்கோதை oruvāykātai, பெ. (n.)

   ஒருகட் பறை; drum with one face in the shape of a {}.

     “மரக்காலன்ன வொருவாய்க் கோதை” (கல்லா.8,27); (செ.அக.);.

     [ஒரு + வாய் + கோதை.]

ஒருவாய்ப்படு-தல்

ஒருவாய்ப்படு-தல் oruvāyppaḍudal,    20.செ.கு.வி. (v.i.)

   ஒருகுரலாகப் பேசப்படுதல்; to be spoken of with one voice. (செ.அக.);

     [ஒரு1 + வாய் + படு.]

ஒருவாறு

ஒருவாறு oruvāṟu, கு.வி.எ. (adv.)

   1. ஒருவகையாக; in a way;

 somehow.

   2. ஓரளவாக; to a certain extent. in some degree.

   3. ஒருசேர; entirely, altogether.

     “ஒருவா றொளியீண்டி நின்றால்” (பழ.201); (செ.அக.);. [ஒரு1 + ஆறு – ஒருவாறு. ஆறு = வழி, வகை.]

ஒருவாற்றான்

ஒருவாற்றான் oruvāṟṟāṉ, கு.வி.எ. (adv.)

ஒருவாறு 1,2 பார்க்க;see {} 1,2 (செ.அக.);.

     [ஒரு + ஆறு + ஆன். ஆறு = வழி, வகை.]

ஒருவி

 ஒருவி oruvi, பெ. (n.)

   ஒருத்தி, ஒருபெண்; one woman.

ம. ஒருவி.

     [ஒருவன் → ஒருவி. (இ.வ.);.]

ஒருவிசை

ஒருவிசை oruvisai, பெ. (n.)

   ஒருமுறை; once, at one time. (ஆ.அக.);.

     [ஒரு1 + விசை. வீச்சு → வீசு → வீசை → விசை.]

ஒருவிதமா-தல்

ஒருவிதமா-தல் oruvidamādal,    6.செ.கு.வி. (v.i.)

   1. புதியவகையாதல்; to be peculiar.

   2. வேறுபடுதல்; to be of a different kind or attitude.

     “பாங்கி யொருவித மாக நடந்தாள்” (அருட்பா.vl,தலைவி வருந்தல்.12, பக்.545);.

   3. கவனியாமை, மாறுபாடாக இருத்தல்; to be Indifferent.

இப்போது அவர் என்னிடம் ஒருவிதமா யிருக்கிறார். (செ.அக.);.

     [ஒரு + விதம் + ஆதல்.]

ஒருவியாழவட்டம்

ஒருவியாழவட்டம் oruviyāḻvaṭṭam, பெ. (n.)

   வியாழன் ஞாயிற்றைச் சுற்றி வர ஆகும் 12 ஆண்டுக்காலம்; time taken by Jupiter to make one orbit around the Sun (ஆ.அக.);.

     [ஒரு1 + வியாழன் + வட்டம்.]

ஒருவு

ஒருவு1 oruvudal,    5.செ.குன்றாவி. (v.t.)

   1. நீங்குதல், விடுதல்; to abandon, renounce.

     “ஒருவுக வொப்பிலார் நட்பு” (குறள்.800);.

   2. கடத்தல்; to cross, pass over.

     “இருவினை வேலை யொருவினைநீ” (திருநூற்.67);.

   3. ஒழிதல்; to be expected.

     “வேந்தனி னொரீஇய வேனோர்” (தொல்.பொருள்.32);.

   4. தப்புதல்; to escape.

     “பருந்தினேறு குறித்தொரீஇ” (புறநா.43,5); (செ.அக.);.

     [உருவு → ஒருவு → ஒருவுதல்.]

 ஒருவு2 oruvudal, செ.கு.வி. (v.i.)

   ஒப்பாதல், ஒத்தல்; to resemble, equal. (பரிபா.3,32,பி-ம்.); (செ.அக.);.

     [ஒல் → ஒரு → ஒருவு.]

 ஒருவு3 oruvu, பெ. (n.)

   செம்மறியாடு; sheep. (செ.அக.);.

மறுவ. உரு, ஒரு, துரு.

     [உரு → ஒரு → ஒருவு. துரு = செம்மறியாடு.]

ஒருவேளை

ஒருவேளை oruvēḷai, கு.வி.எ. (adv.)

   1. ஒருமுறை; on one occasion, once.

   2. ஒருகால்; perhaps.

நான் ஒருவேளை அங்கே போகலாம். (செ.அக.);.

   ம. ஒருவேளை;   க. ஒருவேளெ;   தெ. ஒக்கவேட;பட. ஒந்துபேளெ.

     [ஒரு1 + வேளை.]

ஒருவை

ஒருவை oruvai, பெ. (n.)

   1. செம்மறியாடு; sheep.

   2. ஓர் பூடு; a kind of shrub or plant. (சா.அக.);.

     [உரு → உருவை → ஒருவை. உரு → துரு = செம்மறியாடு, செந்நிறமுள்ள பூண்டும் அப்பெயர் பெற்றிருக்கலாம்.]

ஒரூஉ

ஒரூஉ1 orūudal,    7.செ.கு.வி. (v.i.)

   1. நீங்குதல், விலகுதல்; to remove, separate.

   2. ஓடுதல்; to run flee.

     [ஒருவு → ஒரூஉ.]

 ஒரூஉ2 orūu, பெ. (n.)

   1. ஆற்றினின்றும் நீராடும் குளம் அல்லது ஊர்க்குளத்திற்கு நீர் கொணரும் கால்வாய்; channel through which water of a river runs through to the tank or swimming pool.

   2. விளைநி லங்களுக்குப் பாயும் ஆற்று வாய்க்கால்; water cha- nnel brought to village from tank or river to feed the fields.

   3. ஆற்று நீரால் நிரம்பும் குளம்; tank fed with river water.

   4. வடிகால், இட்டாலி; drain or gutter to drain out sewage water in a town.

   க. ஒரு, ஓரிமோரி;குச். ஓரியோ.

     [ஒருவு → ஒரரூஉ.]

 ஒரூஉ3 orūu, பெ. (n.)

   1. இடைவிட்டிருப்பது, விலகியிருப்பது; keeping apart.

   2. உருக்குலைவு, வடிவச் சிதைவு; deformation.

     [ஒருவு → ஒரூஉ.]

ஒரூஉத்தனார்

ஒரூஉத்தனார் orūuttaṉār, பெ. (n.)

   ஒரு தமிழ்ப்புலவர்; poet of Sangam age. (அபி.சிந்.);.

     [ஒரூஉ2 – ஒருஉத்தன் + ஆர் – ஒரூஉத்தனார். ஒரூஉ = ஆற்று நீர் பாயும் கால்வாய். ஒரூஉத்தன் = ஆற்றுநீர் பாயும் கால்வாயை மேற்பார்க்கும் பணியாளன், நீர்க்கட்டி. ஒரூஉத்த னார் = ஆற்றுக்கால்வாய்களை மேற்பார்க்கும் பணியிலிருந்த தமிழ்ப்புலவராகலாம். நாடெங்கும் வாழும் சிற்றூர் மக்களிடை இன்றும் நீருகட்டி என்னும் கால்வாய்ப் பணியாளர் உள்ளனர்.]

ஒரூஉவண்ணம்

ஒரூஉவண்ணம் orūuvaṇṇam, பெ. (n.)

   யாற்றொழுக் காகப் பொருள் கொண்டு செல்லும் சந்தம் (தொல். பொருள்.539);; rhythm of verse effected by composing the flow of a river. (செ.அக.);.

     [ஒரூஉ + வண்ணம். ஒரூஉ = ஓட்டம்.]

ஒரூஉவளபெடை

 ஒரூஉவளபெடை orūuvaḷabeḍai, பெ. (n.)

   முதற்சீர்க் கண்ணு நான்காஞ் சீர்க்கண்ணு மளபெடை பயிலு வது; prolongation of vowel in verse. (ஆ.அக.);.

     [ஒரூஉ + அளபெடை. ஒரூஉ = விலகுதல்.]

ஒரூஉவெதுகை

 ஒரூஉவெதுகை orūuvedugai, பெ. (n.)

   முதற்சீர்க்கண் ணும் நான்காஞ் சீர்க்கண்ணு மெதுகை வருதல்; appearance of ‘edukal’ in the first and fourth feet of a line in verse. (எ-டு);

     “மின்னவி ரொளிவடந் தாங்கி மன்னிய”

     [ஒரூஉ + எதுகை.]

ஒரே

ஒரே orē, கு.பெ.எ. (adj.)

   ஒன்றேயான; only, the one.

அவனுக்கு ஒரேமகன். (உ.வ.);.

   2. மற்றொரு தரத்தில் இல்லாதது; the same, not of a different kind. (சேரநா.);.

   ம. ஒரே;   க. ஒந்தே;தெ. ஒகே.

     [ஒரு + ஏ.]

ஒரை

ஒரை orai, பெ. (n.)

ஒரு தடவை

 once.

     “ஒரு ஒரை சொன்னால் போதும் புரிந்துகொள்வோம்”

     [ஒர்-ஒரை]

 ஒரை4 orai,    இடை. (part.) ஓர் இடைச்சொல் (பிங்.); connective particle.

     [ஒர் → ஓரை. ஓ.நோ. ஒரும்.]

ஒரோவழி

ஒரோவழி orōvaḻi, கு.வி.எ. (adv.)

   சிறுபான்மையாய்; sometimes in some places, smaller number or part.

     ‘யாதானும் ஒரோவழி ஒருசாரார் மாட்டு … நிகழும் ஒழுக்கத்தினை’ (தொல்.பொருள்.3,உரை.); (செ.அக.);.

     [ஒரு + ஒ + வழி.]

ஒரோவொன்று

ஒரோவொன்று orōvoṉṟu, பெ. (n.)

   ஒவ்வொன்று; one in each.

ஒரோவொன்றே அறமுந் துறக்கமும் பொரு ளும் பயத்தற் சிறப்பு நோக்கி (தொல்.பொருள்.25, உரை.); (செ.அக.);.

     [ஒரு + ஓ + ஒன்று.]

ஒரோவொரு

 ஒரோவொரு orōvoru, பெ. (n.)

   ஏதோவொரு; some- thing, somebody.

     [ஒரு + ஓ + ஒரு – ஒரோவொரு.]

ஒரோவொருவர்

ஒரோவொருவர் orōvoruvar, பெ. (n.)

   தனித்தனி ஒவ்வொருவர்; each person, individual.

     “ஒரோ வொரு வர்க் கொல்காதோ ரொன்று படும்” (சிறு.பஞ்.27); (செ.அக.);.

     [ஒரு + ஓ + ஒருவர்.]

ஒர்சல்

 ஒர்சல் orcal, பெ. (n.)

   கணக்குத் தீர்த்தல்; to settle in account.

     [ஒர்-ஒரிசல்-ஒர்சல்]

ஒர்மை

 ஒர்மை ormai, பெ. (n.)

நினைவு, நினைப்பு:

 memory.

ம. ஒர்ம.

     [ஒர்-ஒர்மை]

ஒர்லோட்கட்டை

 ஒர்லோட்கட்டை orlōṭkaṭṭai, பெ. (n.)

   பொழுதுகாட்டி (கெடியாரம்);; clock, timepiece.

     [Fr. horooge → Port. Relogio → த. ஒர்லோர்கட்டை.]

ஒறு

ஒறு1 oṟudal,    4.செ.குன்றாவி. (v.t.)

   குறைதல்; to be reduced, to diminish.

     [ஒல் (ஒல்கு); = குறைதல் (த.வி.); ஒல் → ஒறு (குறைத்தல்); பி.வி. குறைவு. பிறவினை பெயருமாகும்.]

 ஒறு2 oṟuttal,    4. செ.குன்றாவி. (v.t.)

   1. உறுப்புக் குறைத்துத் தண்டித்தல்; to punish, chastise by cutting the Iimbs.

     “ஒப்பநாடி யத்தகவொறுத்தி” (புறநா.10,4);.

   2. கடிதல்; to rebuke, reprove.

     “ஒறுப்ப வோவலை” (அகநா.342);.

   3. வெறுத்தல் (திவா.);; to dislike, to be disgusted with.

   4. இகழ்தல்; to deride, ridicule.

     “யாரே பிழைத்த தொறுக்கிற்பவர்” (குறள்,779);.

   5. அழித்தல்; to destroy.

     “ஒறுத்தானா மொன்னார் புரங்கண் மூன்றும்” (தேவா.407,11);.

   6. ஒடுக்குதல்; to suppress, as the desires, to restrain, as the senses;

 to mortify, as the body;

 to curb, as the appetite, to subdue, as the passions.

     “சற்றும் வாயொறுக்கிறா னில்லை’ (வின்.);.

   7. வருத்து தல்; to afflict, distress, cause pain to:

     “ஒறுத்தார்க்கு ஒரு நாளை இன்பம்” (குறள்.);.

     [ஒல் → (ஒல்கு); ஒடுங்குதல், ஒடுக்குதல், சுருக்குதல், குறைத் தல், அடித்தல், துன்புறுத்துதல். ஒல் → ஒறு = வருத்துதல். தண்டித்தல். ஒல் (த.வி.); → ஒறு (பி.வி.); ஒறுத்தல் உறுப்புக்குறைக்கும் தண்டனை.]

 ஒறு3 oṟuttal,    4.செ.கு.வி. (v.i.)

   குறைதல் (வின்.);; to become scarce, scanty, as crops, as rain;

 to fall.

   2. ஊனமாதல்; to be defective. ஒறுவாய். (செ.அக.);.

     [ஒல் → ஒறு.]

 ஒறு4 oṟuttal,    4. செ.குன்றாவி. (v.t.)

   இவறுதல்; to be stingy, miserly.

     “நூறுபொன்னு முத்தார மென்றே னொறுப்பேனோ” (தெய்வச்.விறலி.295); (செ.அக.);.

     [ஒல் → ஒறு.]

 ஒறு5 oṟu, பெ. (n.)

   குறைவு; deficiency, shortage.

     [ஒல் → ஒறு.]

ஒறுப்பு

ஒறுப்பு oṟuppu, பெ. (n.)

   1. தண்டனை; chastisement, punishment.

   2. கடிந்துபேசுகை; rebuke, reproof.

   3. வெறுப்பு (வின்.);; dislike, aversion, disgust.

   4. அடக் குகை; bridling the passions, self-mortification, self-de- nial.

   5. அருமை (வின்.);

 scarcity, dearness.

   6. குறைவு (வின்.);; privation, lack. (செ.அக.);.

   ம. ஒறுப்பு;தெ. ரோயு.

     [ஒறு2 → ஒறுப்பு.]

ஒறும்பு

ஒறும்பு oṟumbu, பெ. (n.)

   வயல்களுக்கு வேண்டுமளவு குளத்தில் பாசன நீரில்லாமை; scarcity of water in the irrigation tank. (செ.அக.);.

     [ஒல் → ஓறு1 → ஒறும்பு (குறைபடுதல்); ஒல் = சுருங்குதல், ஒறு = சுருக்கு, சுருக்கம்,, குறைவு.]

ஒறுவனை

ஒறுவனை oṟuvaṉai, பெ. (n.)

குறைவு (நாஞ்.);

 scarcity. (செ.அக.);.

ம. ஒறுவன (பஞ்சம்);.

     [ஒல் → ஒறு2 → ஒறுவு → ஒறுவனை. ஒறும்பு பார்க்க;see orumbu.]

ஒறுவாய்

ஒறுவாய் oṟuvāy, பெ. (n.)

   1. சிதைவடைந்த வாய்; mouth with congenital fissure of lips, sunken mouth.

     “பாதிநாக்கு முதடுகளிற் பாதியுந் தின்றொறுவாயேம்” (கலிங்.204);.

   2. ஒடிந்த விளிம்பு; broken edge of a pot.

     “ஒறுவாய்த்தலையிற் பலி” (தேவா.1125,6); (செ.அக.);.

     [ஒறு + வாய்.]

ஒறுவாய்போ-தல்

ஒறுவாய்போ-தல் oṟuvāypōtal,    8.செ.கு.வி. (v.i.)

   1. வாயொடிதல்; to be broken at the edge;

 to be chipped off.

ஒறுவாய் போன பானையிலே (பெரும்பாண்.99, உரை);.

   2. குறைவடைதல்; to be defective.

     ‘உம்மு டைய நாராயணத்தவமும் ஒருவாய்போய்’ (அஷ்டாத ச.பக்.158); (செ.அக.);.

     [ஒறு + வாய் + போ.]

ஒறுவாய்ப்பல்

 ஒறுவாய்ப்பல் oṟuvāyppal, பெ. (n.)

   சிதைவடைந்த பல்வரிசை; row of teeth with one of more gaps. (செ.அக.);

     [ஒறு + வாய்ப்பல்.]

ஒறுவாய்ப்பானை

ஒறுவாய்ப்பானை oṟuvāyppāṉai, பெ. (n.)

   விளிம்பு சிதைந்த பானை; pot chipped along its mouth. (செ.அக.);.

     [ஒறு1 + வாய் + பானை.]

ஒறுவினை

ஒறுவினை oṟuviṉai, பெ. (n.)

   1. தீராத் துன்பம்; unending trouble or difficulty.

   2. நாட்பட்ட நோய்; long

 continuous illness. (செ.அக.);.

     [ஒறு2 + வினை.]

ஒறுவு

ஒறுவு oṟuvu, பெ. (n.)

   வருத்தம் (சங்.அக.);; trouble;

 distress. (செ.அக.);.

ம. ஒறுவு.

     [ஒறு2 + ஒறுவு.]

ஒறுவுகலம்

ஒறுவுகலம் oṟuvugalam, பெ. (n.)

ஒருவாய்ப்பானை பார்க்க;see {}.

     “ஒறுவுகலங்காடி”

     [ஒறு2 → ஒறுவு + கலம்.]

ஒற்கம்

ஒற்கம்1 oṟkam, பெ. (n.)

   1. வறுமை(தொல்.சொல்.360);; poverty, indigence, destitution, want.

   2. தளர்ச்சி; feeble- ness, weakness.

     “ஒற்கத்தி னூற்றாந் துணை” (குறள்,414);.

   3. குறைவு; deficiency, dearth.

     “ஒற்க மில்வளன்” (கந்தபு.மேரு.70);.

   4. அடக்கம்; diffidence, modesty.

     “ஒற்கமின் றூத்தைவா யங்காத்தல்” (நீதி நெறி.23); (செ.அக.);.

     [ஒல் → ஒல்கு → ஒற்கு → ஒற்கம்.]

 ஒற்கம்2 oṟkam, பெ. (n.)

   1. பொறுமை (யாழ்.அக.);; patience.

   2. ஒடுக்கம்; restraint. (செ.அக.);.

     [ஒல் → ஒல்கு → ஒற்கு → ஒற்கம்.]

ஒற்கு-தல்

ஒற்கு-தல் oṟkudal,    7. செ.கு.வி. (v.i.)

   1. குறைதல்; to be deficient;

 to be wanting.

     “ஒற்காமரபிற் பொதியி லன்றியும்” (சிலப்.25,117);.

   2. தளர்தல்; to fall short, droop.

     “ஒற்காவுள்ளத் தொழியா னாதலின்” (மணிமே.15,18); (செ.அக.);.

     [ஒல் → ஒல்கு → ஒற்கு.]

ஒற்றடம்

 ஒற்றடம் oṟṟaḍam, பெ. (n.)

   வெப்பம்பட ஒற்றுகை (உ.வ.);; fomentation. (செ.அக.);.

   ம. ஒத்தல், ஒத்தணம்;   க. ஒத்தல. ஒத்தட. ஒத்தன;   குட. ஒத்த்;   து. ஒத்துனி;   தெ. ஒத்தடமு;பட. ஒத்தண.

     [ஒற்று + அடம். ‘அடம்’ – சொல்லாக்க ஈறு.]

ஒற்றடிச்செருப்பு

 ஒற்றடிச்செருப்பு oṟṟaḍicceruppu, பெ. (n.)

   ஒற்றைத் தோலட்டை யாலமைந்த செருப்பு (வின்.);; slippers, sandals. (செ.அக.);.

     [ஒற்றை + அடி – ஒற்றடி + செருப்பு.]

ஒற்றன்

ஒற்றன்1 oṟṟaṉ, பெ. (n.)

   உளவு பார்ப்பவன், வேவுகா ரன்; male spy.

     “ஒற்றனிவனென வுரைத்து” (மணிமே.26,27);.

     “மற்றுமோர் ஒற்றினால் ஒற்றிக் கொளல்” (குறள்.588);.

     [ஒற்று + அன்.]

 ஒற்றன்2 oṟṟaṉ, பெ. (n.)

   தூதன் (யாழ்.அக.);; messenger.

     [ஒற்று + அன்.]

ஒற்றறு-த்தல்

ஒற்றறு-த்தல் oṟṟaṟuttal,    4.செ.கு.வி. (v.i.)

   தாளத்தை அறுதியிடுதல் (திவா.);; to keep time with the hands or with cymbals in singing. (செ.அக.);.

     [ஒற்று + அறு.]

ஒற்றளபு

 ஒற்றளபு oṟṟaḷabu, பெ. (n.)

ஒற்றளபெடை பார்க்க;see {}. (செ.அக.);.

     [ஒற்று + அளபு.]

ஒற்றளபெடை

ஒற்றளபெடை oṟṟaḷabeḍai, பெ. (n.)

   ங், ஞ், ண், ந், ம், ன், வ், ய், ல், ள், ஃ ஆகிய பதினோரு எழுத்துகளும் தமக்குரிய மாத்திரையின் மிக்கு ஒலிக்கை (நன்.92);; lengthening the mutes ங், ஞ், ண், ந், ம், ன், வ், ய், ல், ள், ஃ after one or two short syllables for the sake of metre, as in கண்ண், இலங்ங்கு, the said consonant being doubled in writing, to indicate the prolongation, one of ten {}. (செ.அக.);.

     [ஒற்று + அளபெடை – ஒற்றளபெடை = இனிய பண்ணோசைக் காகச் செய்யுளில் இரட்டித்து அல்லது பன்முறை அடுக்கிவரும் மெய்யெழுத்து நெட்டோசை ஒற்று = மெய்யெழுத்து.]

ஒற்றாடல்

ஒற்றாடல் oṟṟāṭal, பெ. (n.)

   வேவுகாரரை விடுத்து வினை செய்கை (குறள்,59.அதி.);; employing and directing spies.

     [ஒற்று + ஆடல்.]

ஒற்றாள்

ஒற்றாள் oṟṟāḷ, பெ. (n.)

   வேவுகாரன்; spy.

     “ஒள்ளிய வொற்றாள் குணம்” (திரிகடு.85);.

ம. ஒற்றாள்.

     [ஒற்று + ஆள்.]

ஒற்றி

ஒற்றி1 oṟṟittal,    4. செ.கு.வி. (v.i.)

   1. ஒற்றுமைப்படு தல்; to be united with, to become one with

     “அவற்றினான் ஆன்மா ஒற்றித்துக் காணினல்லது” (சி.போ.சிற்.5,1);.

   2. ஒற்றையாயிருத்தல்; to be odd, as numbers.

     “ஒற்றித் தொத்தலும் இரட்டித் தொத்தலும்” (சிலப்.3,152,அரும்.);.

     [ஒற்று → ஒற்றி → ஒற்றி-த்தல்.]

 ஒற்றி2 oṟṟi, பெ. (n.)

   1. உடைமையை நுகரும் உரிமையுடன் கூடிய அடைமானம் (தொல்.சொல்.81, உரை.);; mortgage with possession, as of land, trees, cattle, etc.

   2. ஒற்றியூர்; place name. {}.

     “நானொற்றி யிருந்தே னென்றாரே” (அருட்பா.111.சல்லாபவி.5); (செ.அக.);.

   ம. ஒற்றி;   க. ஒத்தெ;   து. ஒத்து;தெ. ஒத்து.

     [ஒன்று → ஒற்று → ஒற்றி.]

ஒற்றிக்கரணம்

 ஒற்றிக்கரணம் oṟṟikkaraṇam, பெ. (n.)

ஒற்றிச் சீட்டு பார்க்க;see {}. (செ.அக.);.

ம. ஒற்றிக்கரணம்.

     [ஒற்றி + கரணம்.]

ஒற்றிக்கலம்

ஒற்றிக்கலம் oṟṟikkalam, பெ. (n.)

ஒற்றிச்சீட்டு பார்க்க;see {}.

நிலத்த தொற்றிக்கலம் (தொல்.சொல்.81, உரை);.

     [ஒற்றி + கலம்.]

ஒற்றிக்காணி

 ஒற்றிக்காணி oṟṟikkāṇi, பெ. (n.)

   அடைமான நிலம் (உ.வ.);; mortgaged land. (செ.அக.);.

     [ஒற்றி + காணி.]

ஒற்றிக்கொள்(ளு)-தல்

ஒற்றிக்கொள்(ளு)-தல் oṟṟikkoḷḷudal,    10.செ.குன்றாவி. (v.t.)

   1. உடலிற் படும்படி அழுத்துதல்; to press on one’s body, get anything applied or impressed on one’s person.

     “சக்கரப்பொறி யொற்றிக் கொண்டு” (திவ்.பெரி யாழ்.5,4,1);.

   2. வயப்படுத்திக் கொள்ளுதல் (வின்.);; to take possession of, annex (செ.அக.);.

     [ஒற்றி + கொள்.]

ஒற்றிச்சீட்டு

 ஒற்றிச்சீட்டு oṟṟiccīṭṭu, பெ. (n.)

   ஒற்றி ஆவணம்; usufructuary mortgage deed. (செ.அக.);.

ம. ஒற்றிச்சீட்டு.

     [ஒற்றி + சீட்டு.]

ஒற்றிடு-தல்

ஒற்றிடு-தல் oṟṟiḍudal,    20.செ.கு.வி. (v.i.)

   ஒற்றடமிடுதல் (வின்.);; to apply fomentation. (செ.அக.);.

     [ஒற்று + இடு.]

ஒற்றித்தவெண்

 ஒற்றித்தவெண் oṟṟittaveṇ, பெ. (n.)

   ஒற்றைப் பட்ட கணக்கு; odd number. (ஆ.அக.);.

     [ஒன்றித்த → ஒற்றித்த + எண்.]

ஒற்றிநறுக்கு

 ஒற்றிநறுக்கு oṟṟinaṟukku, பெ. (n.)

   பனையோலையில் எழுதிய அடைமான ஆவணம் (வின்.);; mortgage deed, lease deed, written out on a palmyra – leaf. (செ.அக.);.

     [ஒற்றி + நறுக்கு.]

ஒற்றிப்பிரசாதம்

ஒற்றிப்பிரசாதம் oṟṟippiracātam, பெ. (n.)

   கோயிற்தே வுணா (பிரசாத); வகை; boiled rice, etc., offered to a deity.

ஒற்றிப்பிரசாதம் குறுணியும் (S.l.l.i.85); (செ.அக.);.

     [ஒற்றி + பிரசாதம். பிரசாதம் = படையல்.]

ஒற்றிப்போ-தல்

ஒற்றிப்போ-தல் oṟṟippōtal,    8.செ.கு.வி. (v.i.)

   விலகிச் செல்லுதல்; to go away from (செ.அக.);.

க., தெ. ஒத்து.

     [ஒற்றி + போ.]

ஒற்றிப்போடு-தல்

ஒற்றிப்போடு-தல் oṟṟippōṭudal,    19.செ.குன்றாவி. (v.t.)

ஒத்திப்போடு பார்க்க;see {}. (செ.அக.);.

     [ஒதுக்கி → ஒத்தி → ஒற்றி + போடு.]

ஒற்றிமீட்டு-தல்

ஒற்றிமீட்டு-தல் oṟṟimīṭṭudal,    5.செ.குன்றாவி. (v.t.)

   அடகு வைத்ததை மீட்டல்; to cause to redeem a mortgage.

     [ஒற்றி + மீட்டு. மீள் (த.வி.); → மீட்டு (பி.வி.);.]

ஒற்றிமீள்(ட்)-த(ட)ல்

ஒற்றிமீள்(ட்)-த(ட)ல் oṟṟimīḷḍtaḍal,    16.செ.கு.வி. (v.i.)

   அடைமானந் திருப்புதல்; to redeem a mortgage. (செ.அக.);. [ஒற்றி + மீள்.]

ஒற்றியாட்சி

 ஒற்றியாட்சி oṟṟiyāṭci, பெ. (n.)

   அடைமான நிலப்ப யன் நுகர்தல்; enjoying the usufructs of mortgaged property. (செ.அக.);.

     [ஒற்றி + ஆட்சி.]

ஒற்றியிரு-த்தல்

ஒற்றியிரு-த்தல் oṟṟiyiruttal,    2.செ.கு.வி. (v.i.)

   விலகி யிருத்தல்; to keep at a distance.

     “ஒற்றியிருமென்று ரைத்தேன்” (அருட்பா.111,சல்லாபவி.5); (செ. அக.);.

     [ஒதுங்கு → ஒத்து → ஒற்று → ஒற்றி இரு.]

ஒற்றியூரன்

ஒற்றியூரன் oṟṟiyūraṉ, பெ. (n.)

   1. சிவன்;{}.

   2. வல்லாளை வென்ற ஒரு செங்குந்த வீரன்; legendary hero. (ஆ.அக.);.

     [ஒற்றி + ஊர் + அன்.]

ஒற்றியூர்

ஒற்றியூர் oṟṟiyūr, பெ. (n.)

   திருவொற்றியூர் (தேவா.1103,1);; ancient shrine of {}, a few miles to the north of Madras. (செ.அக.);

     [ஒற்றி + ஊர் – ஒற்றியூர். (வடசென்னையிலுள்ள, பாடல் பெற்ற, சிவன்கோயில் கொண்ட இவ்வூர், ஒற்றியாகப் பெற்ற ஊராகலாம்);.]

ஒற்றியெடு-த்தல்

ஒற்றியெடு-த்தல் oṟṟiyeḍuttal,    4.செ.குன்றாவி. (v.t.)

   1. ஒற்றி ஈரம் வாங்குதல்; to absorb moisture with a blotter.

 sponge, etc.

   2. ஒற்றிப் படியெடுத்தல்; to take an impression or copy from. (செ.அக.);.

     [ஒற்றி + எடு.]

ஒற்றிவை

ஒற்றிவை1 oṟṟivaittal,    4.செ.குன்றாவி. (v.t.)

   அடை மானம் வைத்தல்; to mortgage, as land, as trees

     “விற்றுக்கொ ளொற்றிவை யென்னினல்லால்” (திருவாச.6,18); (செ.அக.);.

க. ஒத்தெயிடு.

     [ஒற்றி + வை.]

 ஒற்றிவை2 oṟṟivaittal,    4.செ.குன்றாவி. (v.t.)

   1. தொலைவில் வைத்தல்; to place out of the way.

   2. தவணை தள்ளி வைத்தல்; to adjourn, as a hearing to postpone. (செ.அக.);

தெ. ஒத்து

     [ஒதுங்கு → ஒத்து → ஒற்று → ஒற்றி + வை.]

ஒற்று

ஒற்று1 oṟṟudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. ஒன்றிற்ப டும்படிச் சேர்த்தல்; to bring into contact;

 to press. hug close.

     “வீணை … மாத ரணி முலைத் தடத்தி னொற்றி” (சீவக.1746);.

   2. முத்திரையிடுதல்; to stamp, as a seal.

     “கொடுவரியொற்றி” (சிலப். 5,98);.

   3. உளவறிதல்; to spy out.

     “கண்மா றாடவ ரொடுக்க மொற்றி” (மதுரைக்.642);.

   4. தாளம் போடுதல்; to beat;

 as cymbals in keeping time.

     “காமரு தாளம் பெறுதற் கொற்றுவதுங் காட்டுவபோல்” (பெரியபு.திரு ஞான.46);.

   5. தீண்டுதல்; to touch.

     “கதவொற்றிப் புலம்பியா முலமர” (கலித்.8,2);.

   6. தழுவுதல்; to embrace.

     “சேஎச் செவிமுதற் கொண்டு பெயர்த் தொற் றும்” (கலித்.103,51);.

   7. மறைதல்; to hide.

   8. உய்த்துணர்தல்; to pry into.

     “உள்ளொற்றி யுள்ளூர் நகப்படுவர்” (குறள்.927);.

   9. கட்டுதல்; to tie, fasten.

     “வலைவலி தொற்றின்ர்க்கு” (கல்லா.66,6);.

   10. தீர்மா னித்தல்; to decide, to determine.

     “ஒன்று நினைந் தொற்றி” (அகநா.5,20); (செ.அக.);.

ம. ஒற்றுக.

     [ஒல் → ஒன்று → ஒற்று → ஒற்று-தல்.]

 ஒற்று2 oṟṟudal,    5.செ.குன்றாவி. (v.t.)

   1. அடித்தல்; to strike.

     “வேணுக்கோலின் மிடைந்தவ ரொற்றலின்” (சீவக.634);.

   2. அமுக்குதல்; to press down, to press upon.

     “வெங்கணைசெவிட்டி நோக்கி, யொற்றுபு திருத்தி” (சீவக.2191);.

   3. தாக்குதல்; to attack.

     “பழனத்த புள்ளொற்ற வொசிந் தொல்கி” (கலித்.77,5);

   4. எய் தல்; to shoot, as an arrow.

     “கொலோற்றக் குனிந்த வாறே” (சீவக.797);. [ஒல் → ஒற்று.]

 ஒற்று3 oṟṟudal,    5.செ.குன்றாவி. (v.t.)

   1. துடைத்தல்; to wipe away, as tears.

     “கொடியனாடன் கண்பொழி கலுழி யொற்றி” (சீவக.1397);.

   2. தள்ளுதல்; to push, as a door.

     “பாவையன்னா ளறிவுறா வகையி னொற்றி” (சீவக.1505);.

   3. வீழ்த்துதல்; to fell down.

     “புலிபார்த் தொற்றிய களிற்றிரை பிழைப்பின்” (புறநா.237,16);.

   4. வலித்தல்; to tug, to strain.

     ‘எருதுகயிற்றை யொற்றி யிழுக்கின்றது’ (வின்.);.

     [ஒல் → ஒற்று.]

 ஒற்று4 oṟṟudal,    5.செ.கு.வி. (v.i.)

   1. மெய்யெழுத்தாய் நிற்றல்; to appear, as a pure consonant.

     “யரழவென்று மூன்று மொற்ற” (தொல்.எழுத்.48);.

   2. தத்துதல்; to move by jerks to starts, as an animal when its forelegs are tied together.

மாடு ஒற்றி யொற்றிப்போகிறது (யாழ்ப்.);.

   3. காற்று வீசுதல்; to blow, as wind.

     “கடிகாவிற் காலொற்ற வொல்கி” (கலித்.92, 51);.

   4. ஒட்டிக்கொள்ளுதல்; to stick, to adhere.

     “தாளொற்றித் தப்பி வீழ்ந்தார்” (சீவக.2768);.

   5. ஒற்றடம் போடுதல்; to apply fomentation.

   6. நினைதல்; to think.

     “வந்தது வளர்த்து வருவ தொற்றி” (சிலப்.3,65);.

     [ஒல் → ஒற்று.]

 ஒற்று5 oṟṟudal,    5. செ.குன்றாவி. (v.t.)

   உடுத்தல் (யாழ்.அக.);; to clothe. (செ.அக.);.

     [ஒல் → ஒற்று.]

 ஒற்று6 oṟṟu, பெ. (n.)

   1. உடம்பு (அக.நி.);; body.

   2. ஒற்றன் (யாழ்.அக.); பார்க்க;see {}. (செ.அக.);.

     [ஒல் → ஒற்று.]

 ஒற்று7 oṟṟu, பெ. (n.)

   1. மெய்யெழுத்து (தொல். எழுத்.411);; consonant..

   2. வேவு; espionage, spying.

     “ஒற்றி னாகிய வேயே” (தொல்.பொருள்.58);.

   3. வேவுசெல்வோன்; spy, secret agent.

     “ஒற்று முரை சான்ற நூலும்” (குறள்.581);.

   4. ஒற்றடம்; fomentation. ‘”ஒற்றுக் கொடுத்தால் வீக்கம் நீங்கும்’.

   5. குழந்தை கையணிவகை; flat bracelet for a child. (தெ.ஒத்து);.

   6. ஒற்றுறுப்பு பார்க்க;see {}.

     “ஒற்றுறுப்பு மையில்” (சிலப்.13,108); (செ.அக.);.

     [ஒல் → ஒற்று.]

 ஒற்று8 oṟṟu, பெ. (n.)

   ஒற்றியிடும் பொட்டணி, மாவுத்துணிக் கட்டு (யாழ்.அக.);; poultice. (செ.அக.);.

     [ஒல் → ஒற்று.]

 ஒற்று9 oṟṟudal,    5 செ.கு.வி. (v.i.)

ஒத்து3 பார்க்க;see ottu3. (செ.அக.);.

ஒற்றுகை

ஒற்றுகை oṟṟugai, பெ. (n.)

   1. ஒற்றல் பார்க்க;see {}.

   2. மருந்து தேய்த்தல்; embrocation. (சா.அக.);.

     [ஒற்று → ஒற்றுகை.]

ஒற்றுக்கேள்(ட்)-த(ட)ல்

ஒற்றுக்கேள்(ட்)-த(ட)ல் oṟṟukāḷḍtaḍal,    12.செ.கு.வி. (v.i.)

   பிறர் பேச்சை மறைந்து நின்று கேட்டல்; to play the eavesdropper. (செ.அக.);.

     [ஒல் → ஒற்று + கேள்.]

ஒற்றுணர்ச்சி

 ஒற்றுணர்ச்சி oṟṟuṇarcci, பெ. (n.)

   ஒற்றுமையுணர்வு; common feeling;seeing eye to eye, agreeing in sentiment. (செ.அக.);.

     [ஒல் → ஒன்று → ஒற்று + உணர்ச்சி.]

ஒற்றுப்பெயர்த்தல்

ஒற்றுப்பெயர்த்தல் oṟṟuppeyarttal, பெ. (n.)

   ஒருமொ ழியுந் தொடர்மொழியுமாக நின்று வெவ்வேறு பொருள் தருவதாகப் பாடப்படும் மிறைக் கவி (தண்டி.95, உரை.);; verse composed in such a way as to admit of the words being interpreted by artful analysis to convey more than one meaning. (செ.அக.);.

     [ஒற்று + பெயர்த்தல்.]

ஒற்றுமை

ஒற்றுமை1 oṟṟumai, பெ. (n.)

   1. ஒன்றாயிருக்குந் தன்மை; union, agreement, concord;

 oneness.

     “ஒற் றுமை கொள்ளாதார் நட்பு” (நாலடி,237);.

   2. மனம் ஒருநிலைப்படுகை; application of the mind to one object, close attention concentration of thought.

     “ஒற் றுமை கொண்டு நோக்கு முள்ளத்து” (திருவாச.3,128);.

     “ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வு” (பாரதி யார்.);.

     [ஒல் → ஒன்று → ஒற்று → ஒற்றுமை.]

 ஒற்றுமை2 oṟṟumai, பெ. (n.)

   ஒற்றரின்தன்மை; qualities requisite in a spy.

     “ஒற்றுமையால் விண்ணாடர் பொருட் டிவண் மேவியுளான்” (கந்தபு.அக்கினிமு.வதை.7); (செ.அக.);.

     [ஒற்று = ஒற்றன். ஒற்று → ஒற்றுமை.]

 ஒற்றுமை3 oṟṟumai, பெ. (n.)

   1. உரிமை; right.

   2. குறிப்பு; indication.

   3. தகுதி; fitness.

   4. செல்வம்; wealth. (செ.அக.);.

     [ஒல் → ஒன்று → ஒற்று → ஒற்றுமை.]

ஒற்றுமைகோடல்

 ஒற்றுமைகோடல் oṟṟumaiāṭal, பெ. (n.)

   வேளாண் மாந்த ரியல் புகளு ளொன்று (திவா.);; living in peace with others, characteristic of the {}. (செ.அக.);.

     [ஒல் → ஒற்று → ஒற்றுமை + கோடல்.]

ஒற்றுமைநயம்

ஒற்றுமைநயம் oṟṟumainayam, பெ. (n.)

   1. ஒற்றுமைத் தன்மை; Intimate connection, opp. to. வேற்றுமைநயம்.

     “ஒற்றுமை நயத்தினொன் றெனத் தோன்றினும்” (நன்.451);.

   2. காரணகாரியங்கள் ஒன்றாயிருக்கை (மணி. 30,220);; identity of cause and effect. (செ.அக.);.

     [ஒற்றுமை + நயம்.]

ஒற்றுறுப்பு

ஒற்றுறுப்பு oṟṟuṟuppu, பெ. (n.)

   செங்கோட்டியாழில் நரம்பினும் பத்தரினும் தாக்குவதோர் கருவி (சிலப்.13,108,அரும்.);; piece in the {} adjoining the strings and the belly, prob. fret. (செ.அக.);.

     [ஒற்று + உறுப்பு.]

ஒற்றுவன்

ஒற்றுவன் oṟṟuvaṉ, பெ. (n.)

   ஒற்றன் பார்க்க;see {};     “ஐயன தொற்றுவன்” (கந்தபு.நகரழி.36); (செ.அக.);

ம. ஒற்றன்.

     [ஒற்று – → ஒற்றுபவன் → ஒற்றுவன்.]

ஒற்றுவி-த்தல்

ஒற்றுவி-த்தல் oṟṟuvittal,    1. பி.வி. (c.v.) ஒற்றுமூலமறி தல்; to keep oneself informed of events through spies

 or secret emissaries. ஒற்றி னானே … ஒற்றுவித்து (குறள்.585,உரை.); (செ.அக.);.

     [ஒற்று → ஒற்றுவி. (பி.வி.);.]

ஒற்றெழுத்து

 ஒற்றெழுத்து oṟṟeḻuttu, பெ. (n.)

   மெய்யெழுத்து (திவா.);; consonant. (செ.அக.);.

     [ஒற்று + எழுத்து.]

ஒற்றை

ஒற்றை oṟṟai, பெ. (n.)

   1. ஒன்று (நன்.185,விருத்.);; one, one of a pair.

   2. ஒற்றைப்பட்ட எண்; odd number.

     “மறையோ ரொற்றைப்பட வரித்தூட்ட வேண்டும்” (மச்சபு.சபிண்டீ.27);

     “இரட்டைப்பட எண்ணியதில் ஒற் றைப்பட்டதம்மே” (குற்றா.குறவஞ்சி.);.

   3. தனிமை; singleness, soleness, uniqueness. அவன் ஒற்றை யாயி ருக்கிறான்.

   4. ஒப்பின்மை; incomparableness.

     “ஒற் றைச் சேவகனே” (திருவாச.36, 10);.

   5. தனியேடு; loose leaf of a book. கீழே விழுந்த ஒற்றையை எடு.

   6. ஒரு துளைக்கருவி; a kind of musical instrument.

     “முன்னொற்றை யிருசங்க முடனூத” (பாரத.நிரை மீட்சி.5); (செ.அக.);.

   க. ஒத்தெ;து. ஒத்தெ.

     [ஒன்று → ஒன்றை → ஒற்றை.]

ஒற்றைக் கண்ணன்

ஒற்றைக் கண்ணன் oṟṟaikkaṇṇaṉ, பெ. (n.)

   1. ஒரு கண் தெரிந்தவன்; one-eyed person.

   2. வெள்ளி (சுக்கிரன்); (வின்.);;{}, the priest of the asuras having only one eye. (செ.அக.);.

     [ஒற்றை + கண்ணன்.]

ஒற்றைக்கண்

ஒற்றைக்கண் oṟṟaikkaṇ, பெ. (n.)

   1. ஒருகண்; one eye or a single eye.

   2. ஒருகண் பார்வை; strabismus. (சா.அக.);.

     [ஒற்று → ஒற்றை + கண்.]

ஒற்றைக்கை

ஒற்றைக்கை oṟṟaikkai, பெ. (n.)

   ஒருகையாற் காட்டற் குரிய முத்திரை (அபிநயம்); (பாரத.பாவ.19);; gesture with one hand. (செ.அக.);.

     [ஒற்றை + கை.]

ஒற்றைக்கொம்பன்

ஒற்றைக்கொம்பன் oṟṟaikkombaṉ, பெ. (n.)

   1. ஒற்றைக் கொம்புள்ள யானை; elephant with one tusk.

   2. பிள்ளையார்;{} ({}); who has only one tusk. (செ.அக.);.

     [ஒற்றை + கொம்பன். உச்சிக் கொம்பன் பார்க்க.]

ஒற்றைச்சார்

 ஒற்றைச்சார் oṟṟaiccār, பெ. (n.)

   இடையில் திறந்த இடமில்லாத வீடு (யாழ்ப்.);; house without an open space in the centre. (செ.அக.);

     [ஒற்றை + சார்.]

ஒற்றைத்தலைவலி

 ஒற்றைத்தலைவலி oṟṟaittalaivali, பெ. (n.)

   ஒற்றைத் தலைநோய்; headache on one side. (செ.அக.);.

     [ஒற்றை + தலை + வலி.]

ஒற்றைத்தாலி

 ஒற்றைத்தாலி oṟṟaittāli, பெ. (n.)

   தாலிமட்டுமான கழுத்தணி (வின்.);; marriage badge, without any other accompanying jewels, pendants, etc. (செ.அக.);

ம. ஒற்றத்தாலி.

     [ஒற்றை + தாலி.]

ஒற்றைத்தாழ்ப்பூட்டு

 ஒற்றைத்தாழ்ப்பூட்டு oṟṟaittāḻppūṭṭu, பெ. (n.)

   ஒற் றைத்தாழுள்ள பூட்டு (வின்.);; lock with a single bolt;

 single lock. (செ.அக.);.

     [ஒற்றை + தாழ் + பூட்டு.]

ஒற்றைத்துலா

 ஒற்றைத்துலா oṟṟaittulā, பெ. (n.)

   ஒற்றையேற்றம் (வின்.);; well-sweep made of one solid timber. (செ.அக.);. [ஒற்றை + துலா.]

ஒற்றைநாடி

ஒற்றைநாடி1 oṟṟaināṭi, பெ. (n.)

   ஒல்லியான உடம்பு; lean or spare body. ஒற்றை நாடி மனிதன் (செ.அக.);. [ஒற்றை + நாடி.]

 ஒற்றைநாடி2 oṟṟaināṭi, பெ. (n.)

   மாட்டுக்குற்றவகை (பெரிய.மாட்.17);; defect in cattle. (செ.அக.);.

     [ஒற்றை + நாடி.]

ஒற்றைநின்றாள்

ஒற்றைநின்றாள் oṟṟainiṉṟāḷ, பெ. (n.)

கைம்பெண் (விதவை.); widow.

     “ஒற்றை நின்றாடுணை யூறுபடுத்து” (நீலகேசி.332); (செ.அக.);.

     [ஒற்றை + நின்றாள்.]

ஒற்றைநூற்புடைவை

 ஒற்றைநூற்புடைவை oṟṟainūṟpuḍaivai, பெ. (n.)

   தனியிழையாற் செய்த சீலை (வின்.);; single-threaded cloth. (செ.அக.);.

     [ஒற்றை + நூல் + புடைவை.]

ஒற்றைநூல்வளைவு

 ஒற்றைநூல்வளைவு oṟṟainūlvaḷaivu, பெ. (n.)

   கட்டட வளைவு வகை; segmental arch. (செ.அக.);.

     [ஒற்றை + நூல் + வளைவு.]

ஒற்றைப்படவெண்ணு

ஒற்றைப்படவெண்ணு1 oṟṟaippaḍaveṇṇudal,    11.செ.கு.வி. (v.i.)

   ஒற்றை யெண்களை மாத்திரம் எண்ணுதல்; to enumerate only the odd number.

     [ஒற்றை + பட + எண்ணு.]

 ஒற்றைப்படவெண்ணு2 oṟṟaippaḍaveṇṇudal,    12.செ.குன்றாவி. (v.i.)

   பண்டங்களை ஒவ்வொன்றாக எண்ணுதல் (வின்.);; to count things one by one. (செ.அக.);.

     [ஒற்றை + பட + எண்ணு.]

ஒற்றைப்படை

 ஒற்றைப்படை oṟṟaippaḍai, பெ. (n.)

   ஒற்றையான எண் (உ.வ.);; odd number. (செ.அக.);.

     [ஒற்றை + படை. படு → படை.]

ஒற்றைப்பட்டுமணி

 ஒற்றைப்பட்டுமணி oṟṟaippaṭṭumaṇi, பெ. (n.)

   ஒற் றைவட மணி (வின்.);; necklace of single beads strung on silken string. (செ.அக.);.

     [ஒற்றை + பட்டு + மணி. பட்டு = மணிகோக்கும் பட்டு நூல்.]

ஒற்றைமுலைச்சி

 ஒற்றைமுலைச்சி oṟṟaimulaicci, பெ. (n.)

   கண்ணகி சிலப்பதிகாரத் தலைவி; single-breaste Kannagi. (சேரநா.);.

ம. ஒற்றமுலச்சி.

     [ஒற்றை + (முலைத்தி); முலைச்சி.]

ஒற்றையடிப்பாதை

 ஒற்றையடிப்பாதை oṟṟaiyaḍippātai, பெ. (n.)

   நடந்த காற்றடம்பட்டு அமைந்த வழி; foot-path. (செ.அக.);.

     [ஒற்றை + அடி + பாதை.]

ஒற்றையலகுசாகுபடி

 ஒற்றையலகுசாகுபடி oṟṟaiyalagucāgubaḍi, பெ. (n.)

   ஒற்றையாக நாற்றுகளை நட்டுப் பயிர்செய்கை; culti- vation by transplanting single seedlings. (செ.அக.);.

     [ஒற்றை + அலகு + சாகுபடி.].

ஒற்றையான்

ஒற்றையான் oṟṟaiyāṉ, பெ. (n.)

   1. கூட்டத்தினின்று பிரிந்து தனியாகத் திரியும் காட்டு யானை; rogue- elephant.

   2. ஆண் பன்றி, காட்டுப்பன்றி; wild boar.

   3. சுற்றத்தாரற்ற தனியாள்; sole member without a family. (சேரநா.);.

ம. ஒற்றயான்.

     [ஒற்றை + ஆன்.]

ஒற்றையாள்

 ஒற்றையாள் oṟṟaiyāḷ, பெ. (n.)

   சுற்றத்தாரெவருமில் லாத தனியாள்; single person, one having no relations. (செ.அக.);.

     [ஓற்றை + ஆள்.]

ஒற்றையிதழ்ப்பூ

 ஒற்றையிதழ்ப்பூ oṟṟaiyidaḻppū, பெ. (n.)

   ஒரிதழுள்ள மலர்; monopetalous flower. (செ.அக.);.

     [ஒற்றை + இதழ் + பூ.]

ஒற்றையிரட்டை பிடிக்கை

 ஒற்றையிரட்டை பிடிக்கை oṟṟaiyiraḍḍaibiḍikkai, பெ. (n.)

   ஒருவகை விளையாட்டு; playing at odd and even. (செ.அக.);.

     [ஒற்றை + இரட்டை + பிடிக்கை.]

ஒற்றைவலி

 ஒற்றைவலி oṟṟaivali, பெ. (n.)

   ஒரு பக்கத்து வலி; neuralgia on one side only-hemialgia (சா.அக.);.

     [ஒற்றை + வலி.]

ஒற்றைவலிப்பு

 ஒற்றைவலிப்பு oṟṟaivalippu, பெ. (n.)

   ஒரு பக்கத்து இழுப்பு; chorea or convulsion which affects only one side-hemichorea. (சா.அக.);.

     [ஒற்றை + வலிப்பு.]

ஒற்றைவலை

 ஒற்றைவலை oṟṟaivalai, பெ. (n.)

   ஒருவகைப் பெரிய வலை; a kind of fishing-net. (சேரநா.);.

ம. ஒற்றவல.

     [ஒற்றை + வலை.]

ஒற்றைவாய்க்கணக்கு

 ஒற்றைவாய்க்கணக்கு oṟṟaivāykkaṇakku, பெ. (n.)

   ஒரேவகையாய்த் தீரும் கணக்கு (வின்.);; calculation made by a single operation, as by once adding. subtractihg, multiplying, or dividing. (செ.அக.);.

     [ஒற்றை + வாய் + கணக்கு.]

ஒற்றைவாள்

 ஒற்றைவாள் oṟṟaivāḷ, பெ. (n.)

   ஒருவகை வாள்; a kind of sword. (சேரநா.);.

ம. ஒற்றவாள்.

     [ஒற்றை + வாள்.]

ஒற்றொழிபாட்டு

 ஒற்றொழிபாட்டு oṟṟoḻipāṭṭu, பெ. (n.)

   மெய்யெழுத் தில்லாப்பாட்டு (சூடா.);; verse, the words of which do not contain any pure consonants. (செ.அக.);.

     [ஒற்று + ஒழி + பாட்டு.]

ஒலக்கமொழி

ஒலக்கமொழி olakkamoḻi, பெ. (n.)

   கூட்டத்திற் சொல்லப்படும் ஆரவாரச்செய்தி (ஈடு.);; pompous speech in an assembly.

     [ஓலக்கம் + மொழி.]

ஓலக்கவார்த்தை

__,

பெ. (n.);

ஓலக்கமொழி பார்க்க;see {}.

     [ஓலக்கம் + வார்த்தை.]

ஓலம்1

__,

பெ. (n.);

   1. தொடர்ந்து எழுப்பப்படும் நெட்டோசை (பிங்.);; sound, noise, roar.

   2. அடைக்க லம் வேண்டுங் குறிப்பு மொழி; cry of amentation, appeal, exclamation entreating succor.

     “ஞானநாயகனே யோலம்” (கந்தபு.சூர.வதை.460);.

   3. கடல்; sea.

   ம. ஓலம்;   க. ஒலெ;   து. ஒரு;   தெ. ஒல;   குரு. ஒலொக்னா;மால். ஒல்கெ.

     [ஒல் → ஓலம் (வே.க.113);.]

ஒலமடைதல்

 ஒலமடைதல் olamaṭaital, செ.கு.வி. (v.i.)

   எதிர்பாராத துக்கம்; unexpected grief.

     [அவலம்-ஒலம்+அடைதல்]

ஒலி

ஒலி1 olidal,    4. செ.கு.வி. (v.i.)

   தழைத்தல்; to shoot forth;

 to be luxuriant;

 to prosper, thrive.

     “ஒலிந்த கூந்தல்” (பதிற்றுப்.31,24); (செ.அக.);.

     [உல் → ஒல் → ஒலி.]

 ஒலி2 olittal,    4.செ.குன்றாவி. (v.t.)

ஒலி1 பார்க்க;see oli1

     “கரும்பின் ஒலிக்குந்து” (புறநா.137,6);.

     [உல் → ஒல் → ஒலி.]

 ஒலி3 olittal,    4.செ.கு.வி. (v.i.)

   ஒசையெழுப்புதல்; to sound, as letter;

 to roar, as the ocean.

     “ஒலித்தக்கா வென்னாமுவரி” (குறள்,763);.

     [ஒல் → ஒலி.]

 ஒலி4 oli-,    4.செ.குன்றாவி. (v.t.)

   1. துப்புரவாக்கு தல்; to remove, as dirt, to clean.

     “உதிர்துக ளுக்க நின்னாடை யொலிப்ப” (கலித்.81,31); (செ.அக.);.

   ம. ஒலி;   க. உலி;   கோத. ஒச்;   குட. ஒலி;   து. உரி;   தெ. உலியு;   குரு. ஒலொக்னா (புலம்புதல்);;மால். ஒல்கெ (அழு.);.

     [ஒல் → ஒலி → ஒலித்தல். (வே.க.115);.]

ஒலி5 oli, பெ. (n.);

   1. ஓசை (திவா.);; sound, noise, roar, articulate sound.

   2. இடி (பிங்.);; thunder, thunder- bolt.

   3. காற்று (திவா.);; wind.

   4. சொல்; word, speech.

     “நின்னுருவமு மொலியு மாகாயத்துள” (பரிபா. 4,31);.

   5. பிறர்கேட்கச் செபிக்கை (சைவச.பொது. 151,உரை.);; loud or audible recitation of a mantra. (செ.அக.);.

     [உல் → ஒல் → ஒலி (வே.க.116);.]

ஒலிக்கல்

 ஒலிக்கல் olikkal, பெ. (n.)

   பல்; tooth as it helps in the pronunciation. (சா.அக.);.

     [ஒலி + கல்.]

ஒலிக்குறிப்பு

 ஒலிக்குறிப்பு olikkuṟippu, பெ. (n.)

   குறிப்பிட்ட ஓசையைக் குறிக்கும் சொல்; symbol of a sound, as கலகலெனல். (செ.அக.);.

     [ஒலி + குறிப்பு.]

ஒலிசை

ஒலிசை olisai, பெ. (n.)

   மணமகனுக்கு மணமகள் சுற்றத்தார் திருமணத்தின் நான்காநாளிற் கொடுக் கும் வரிசை (வின்.);; presents given by the near relations of the bride to the bridegroom on the fourth day of the marriage. (செ.அக.);.

     [ஒலி → ஒலிசை. (வே.க.116); ஒலி = செழிப்பு, தழைப்பு, மகிழ்ச்சி.]

ஒலிப்பு

ஒலிப்பு olippu, பெ. (n.)

   1. பெருமொழி; sonorousness, roar.

     “சொன்மறை யொலிப்புடைமுனி’ (இரகு.இரகு வுற்.30); (செ. அக.);.

   2. ஒழுகல், ஒழுக்கு, ஊற்று, சிறிய அருவி; leak, flowing, a flow, a small stream or fountain. (சேரநா.);.

     [ஒலி → ஒலிப்பு.]

ஒலிமுகம்

 ஒலிமுகம் olimugam, பெ. (n.)

ஒலிமுகவாயில் பார்க்க (செ.அக.);;see {}.

ஒலிமுகவாயில்

ஒலிமுகவாயில் olimugavāyil, பெ. (n.)

   நகரம் அல்லது கோயிலின் முன்புறவாயில் (விவிலி.2.இரா.7,17);; outer gate of a city, fort or temple, where the guard is stationed. (செ.அக.);.

     [ஒலி + முகம் + வாயில். ஒலி = ஆராய்ச்சிமணி. ஒலிமுகம் = தலைவாயில்.]

ஒலியன்

ஒலியன்1 oliyaṉ, பெ. (n.)

   ஆடை (கோயிலொ.88);; cloth. (செ.அக.);.

     [ஒலி → ஒலியன்.]

 ஒலியன்2 oliyaṉ, பெ. (n.)

   ஒருமொழியில் அமைந்த அடிப்படைத் தனி ஒலி; a unit of significant sound in a given language phoneme.

     [ஒலி + அன்.]

ஒலியறிகுழல்

 ஒலியறிகுழல் oliyaṟiguḻl, பெ. (n.)

   நெஞ்சத்துடிப்பறி யும் கருவி; instrument by which the cardiac sounds are heard – stethoscope. (சா.அக.);.

     [ஒலி + அறி + குழல்.]

ஒலியல்

ஒலியல்1 oliyal, பெ. (n.)

   1. தழைக்கை; luxuriance.

     “ஒலியற்கண்ணிப் புலிகடிமாஅல்” (புறநா.201,15);.

   2. தளிர் (புறநா.202,10,உரை.);; shoot, sprout.

   3. மாலை; garland of flowers.

     “மல்லிகை யொலியல் சூடினார்” (சீவக.2682);.

   4. வளைவு மாலை; chaplet of flowers.

     “கண்ணி யொலியன்மாலையொடு பொலியச் சூடி”

   5. ஈயோட்டுங் கருவி; fly whisk.

     “ஒலியலுங் கவரியும் புரள” (திருவிளை.நரிபரி.40); (செ.அக.);.

     [ஒலி + அல் – ஒலியல். ‘அல்’ – தொ.பெ.ஈறு.]

 ஒலியல்2 oliyal, பெ. (n.)

   1. தழை; foliage, leafage.

   2. தோல் (பிங்.);; skin, hide.

   3. ஆடை (பிங்..);; cloth, garment.

   ம. ஒலியல் (அரச உடை);;   தெ. ஒலியு;   து. ஒலிலு, ஒல்லி;க. ஒல்லி (சிறுசெடி);.

     [ஒல் → ஒலி → ஒலியல்.]

 ஒலியல்3 oliyal, பெ. (n.)

   1. தெரு (பிங்.);; street.

   2. ஆறு; river.

     “அவ்வொலியற் கொப்பாகுவதோ வுவராழியதே” (கந்தபு.காளிந்தி.6); (செ.அக.);.

     [ஒல் → ஒலி → ஒலியல்.]

 ஒலியல்4 oliyal, பெ. (n.)

   1. நோய் (அக.நி.);; illness.

   2. தீ (யாழ்.அக.);; fire. (செ.அக.);.

     [உல் → ஒல் → ஒலி → ஒலியல்.]

 ஒலியல்5 oliyal, பெ. (n.)

   கடப்பமாலை (பரி.19,97);; garland of kadappa flowers. (சங்.இலக்.சொற்.);.

     [ஒலி → ஒலியல்.]

ஒலியெழுத்து

ஒலியெழுத்து oliyeḻuttu, பெ. (n.)

   ஒலிவடிவான எழுத்து (நன்.256.மயிலை.);; articulate sound conside- red as a symbol of a certain state of consciousness, dist. Fr. வடிவெழுத்து. (செ.அக.);.

     [ஒலி + எழுத்து.]

ஒலியொலியென்றொலி-த்தல்

ஒலியொலியென்றொலி-த்தல் oliyoliyeṉṟolittal,    4.செ.கு.வி. (v.i.)

   மிக்கபயன் தருதல்; to yield abu- ndantly.

மரம் ஒலியொலியென் றொலிக்கிறது. (வின்.); (செ.அக.);.

     [ஒலி + ஒலி + என்று + ஒலித்தல்.]

ஒலிவல்ஈந்து

ஒலிவல்ஈந்து olivalīndu, பெ. (n.)

   தழைத்த ஈத்தமரம். (நற்.2);; a kind of tree. (சங்.இலக்.சொற்.);.

     [ஒலியல் + ஈந்து.]

ஒலிவிதை

 ஒலிவிதை olividai, பெ. (n.)

   ஈரமான நிலத்தில் விதைத்தல்; sowing in wet field. (சேரநா.);.

ம. ஒலிவித.

     [ஒலி + விதை. ஒலி = நன்கு முளைக்கத்தக்க செழிப்பான ஈர நிலம்.]

ஒலிவு

 ஒலிவு olivu, பெ. (n.)

   ஒருவகை மரம்; European olive.

     [Lat. oliva → த. ஒலிவு.]

ஒலு

 ஒலு olu, பெ. (n.)

   தொழுகைக்குமுன் கைகால் முதலியன கழுவுகை; ablution before prayer.

     [Ar. wazu → த. ஒலு.]

ஒலுகு

 ஒலுகு olugu, பெ. (n.)

   திண்டு (இ.வ.);; bolster, cushion for the back of a chair. (செ.அக.);.

     [ஒலி → ஒலு → ஒலுகு.]

ஒலுங்கு

 ஒலுங்கு oluṅgu, பெ. (n.)

   பெருங்கொசுகு; big mosquito. (செ.அக.);.

ம. ஒலுங்கு.

     [உலங்கு → ஒலங்கு → ஒலுங்கு.]

ஒலுறு

ஒலுறு1 oluṟuttal,    4.செ.கு.வி. (v.i.)

   1. இன்னோசை யுண்டாக்குதல்; to emit a pleasant sound.

     “மணியருவி

மருங்கோலுறுத்த” (இறை.2,42,உரை.);.

   2. தாலாட்டு தல்; to lull a child to sleep.

     ‘அஃது ஒலுறுத்தலாற் றுயில் கொள்ளும்’. (கலித்.42,உரை.);.

     [ஓல் + உறு.].

ஒலோவு-தல்

ஒலோவு-தல் olōvudal,    7.செ.கு.வி. (v.i.)

   குறைவாதல்; to be wanting, deficient, lacking.

     “கீறுமுடை கோவண மிலாமையி லொலோவிய தவத்தர்” (தேவா.413,10); (செ.அக.);.

     [ஒல் (ஒல்கு); → ஒலவு → ஒலாவு → ஒலோவு.]

ஒல்

ஒல்1 ol, பெ. (n.)

   1. முன்மை, முதன்மை; foremost.

   2. தொன்மை; antiquity.

     [உல் → ஒல்.]

 ஒல்2 ol, பெ. (n.)

   முடிவிடம் (திவா.);; limit, end. (செ. அக.);.

     [உல் → ஒல்.]

 ஒல்3 ol, பெ. (n.)

   தொல்லை, துன்பம்; trouble, affliction.

     [உல் → ஒல்.]

 ஒல்4 ol, இடை. (part.)

   1. ஒலிக்குறிப்பு இடைச்சொல்; expression of invitative sound.

   2. விரைவு சுட்டும் ஒலிக்குறிப்பு; onom. expressing speed.

     [ஒ → ஒல்.]

 ஒல்5 ol, பெ. (n.)

   பொருத்தம்; suitability, fitness.

     [உல் → ஒல்.]

 ஒல்6 ol, பெ. (n.)

   மெலிவு, தளர்ச்சி; thinness.

     [உல் → ஒல்.]

ஒல்7

__,

பெ. (n.);

   1. தழைவு, செழிப்பு; shooting forth, prosperity.

   2. பொலிவு; attractiveness.

   3. அழகு; beauty.

     [உல் → ஒல்.]

ஒல்கல்

 ஒல்கல் olkal, பெ. (n.)

ஒல்கு-தல் பார்க்க;see olgu-.

ஒல்கு

ஒல்கு1 olkudal,    7.செ.கு.வி. (v.i.)

   1. தளர்தல்; to grow weak, or faint;

 to pine, to be disheartened.

     “ஒல்க’ லுள்ள மொடு” (புறநா.135, 8);.

   2. மெலிதல்; to become reduced, thin, slender;

 to be emaciated.

     “ஒல்கு தேவியை” (கந்தபு.காமதகன.61);.

   3. குழைதல்; to become soft, mellow.

     “ஒல்குதீம்பண்டம்” (சீவக.62);.

   4. நுடங்குதல்; to tremble as from weakness or from being over-burdened, to bend with trembling.

     “ஒல்கு … நுண்மருங்குல்” (சிறுபாண்.135);.

   5. சுருங்குதல்; to shrink, to flinch.

     “ஒழுக்கத்தி னொல்காருரவோர்” (குறள்.136);.

   6. அசைதல்; to shake, move.

     “இயலின னொல்கினளாடு மடமகள்” (பதிற்றுப்.51,10);.

   7. ஒதுங் குதல்; to wave, move to a side.

     “பொன்னலங்கல் காலசைப்ப வொல்கி” (சீவக.595);.

   8. சாய்தல்; to incline.

     “நெடுந்தூ ணொல்கத் தீண்டி” (பட்டினப்.250);.

   9. நடத்தல்; to walk, tread.

     “நீலந்தழீஇத் தளர்பொல்கி” (கலித்.115,14);.

   10. வளைதல்; to become bent.

     “புள்ளொற்ற வொசிந் தொல்கி” (கலித்.77-5);.

   11. வறுமைப்படுதல்; to be impoverished.

     “ஒல்கிடத் துலப்பிலா வுணர்விலார்” (கலித்.25,20);.

   12. மேலேப டுதல்; to come in contact.

     “அசைவளி வந்தொல்க” (கலித்.126,12);.

   13. மனமடங்குதல்; to be self-contro- lled.

     “ஒல்காதார் வாய்விட் டுலம்புப” (நீதிநெறி.72);.

   14. கெடுதல்; to be injured, spoilt.

     “ஒல்கிய வெழில் வேழம்” (கலித்.8,4);.

   ம. ஒல்குக;தெ. ஒல்லாம் போவு.

     [ஒல் → ஒல்கு.]

 ஒல்கு2 olkudal,    5.செ.குன்றாவி. (v.t.)

   எதிர் கொள்ளு தல்; to receive meet.

     “ஒல்கி … மைந்தனைக் கொண்டு புக்கார்” (சீவக.472); (செ.அக.);.

     [உல் → ஒல்.]

ஒல்லட்டை

ஒல்லட்டை ollaṭṭai, பெ. (n.)

   ஒல்லியானவன் (யாழ்ப்.);; thin, slender person;

 one reduced by disease or age. (செ.அக.);.

     [உல் → ஒல் → ஒல்லட்டை. (வே.க.82);.]

ஒல்லல்

ஒல்லல் ollal, பெ. (n.)

   1 இயலுகை (திவா.);; being able, possible.

   2. ஊடல் தீர்க்கை (சூடா.);; reconciling after a love quarrel. (செ.அக.);

ம. ஒல்லல்.

     [ஒல் + அல்.]

ஒல்லாங்கு

ஒல்லாங்கு ollāṅgu,    கு.வி.எ. (adv.) பொருந்தும் வழி யால்; appropriately, in the proper way, befittingly.

     “ஒல்லாங்கியாமிரப்பவும்” (கலித்.3,11);. (செ.அக.);.

     [ஒல் + ஆங்கு.]

ஒல்லாடி

 ஒல்லாடி ollāṭi, பெ. (n.)

ஒல்லட்டை பார்க்க;see {} (யாழ்ப்.); (செ.அக.);.

ம. ஒல்லாடி.

     [ஒல் + ஆடி.]

ஒல்லாதவர்

ஒல்லாதவர் ollātavar, பெ. (n.)

   பகைவர்; enemies.

     “ஒல்லாத வரிற் பொருதே சில வும்பர் வீழ” (கந்தபு. திருவிளை.60); (செ.அக.);.

     [ஒல் + ஆ – ஒல்லாத + அவர். ‘ஆ’ – எ.ம.இ.நி.]

ஒல்லாமை

ஒல்லாமை1 ollāmai, பெ. (n.)

   1. இயலாமை; inability.

   2. இகழ்ச்சி (திவா.);; contempt.

   3. அவாவின்மை (திவா.);; lack of desire. (செ.அக.);.

     [ஒல் + ஆ + மை – ஒல்லாமை. ‘ஆ’ – எ.ம.இ.நி.]

 ஒல்லாமை2 ollāmai, பெ. (n.)

   1. பொருந்தாமை; unsuitability.

   2. வெறுப்பு; disgust, loathsomeness.

     [ஒல் + ஆ + மை – ஒல்லாமை. ‘ஆ’ – எ.ம.இ.நி.]

ஒல்லார்

ஒல்லார் ollār, பெ. (n.)

   பகைவர்; foes, enemies.

     “ஒல்லார் நாண” (தொல்.பொருள்.76); (செ.அக.);.

ம. ஒல்லார்.

     [ஒல் → ஒல்லார்.]

ஒல்லி

ஒல்லி1 olli, பெ. (n.)

   1. மெலிந்தவன்; thin person.

   2. மென்மை; thinness, slenderness.

   3. ஒல்லித்தேங் காய் (யாழ்ப்.); பார்க்க;see {}.

   4. துடைப்பம் (வின்.);; broom. (செ.அக.);.

ம. ஒல்லி.

     [ஒல் → ஒல்லி.]

 ஒல்லி2 olli, பெ. (n.)

   மேன்மை; excellence, eminence.

     [ஒல் → ஒல்லி.]

ஒல்லிக்காய்ச்சி

 ஒல்லிக்காய்ச்சி ollikkāycci, பெ. (n.)

உள்ளீடில்லாத காயுள்ள தென்னை (யாழ்ப்.);.

 coconut-palm that yields blighted fruit. (செ.அக.);.

     [ஒல்லி + காய்ச்சி.]

ஒல்லிட்டை

 ஒல்லிட்டை olliṭṭai, பெ. (n.)

   ஒல்லியானவன்; slender or thin person.

     [ஒல்லட்டை → ஒல்லிட்டை.]

ஒல்லித்தேங்காய்

 ஒல்லித்தேங்காய் ollittēṅgāy, பெ. (n.)

   உள்ளீடில்லாத தேங்காய்; blighted or empty coconut (ஆ.அக.);.

ம. ஒல்லித் தேங்ங.

     [ஒல்லி + தேங்காய்.]

ஒல்லிநாடி

 ஒல்லிநாடி ollināṭi, பெ. (n.)

   ஒற்றை நாடி; thin or slender habit of the body, lank.

     [ஒல்லி + நாடி.]

ஒல்லிமேய்-தல்

ஒல்லிமேய்-தல் ollimēytal,    2.செ.கு.வி. (v.i.)

   தேங்கா யில் உட்பசையறுதல்; to be empty, be blighted, as coconuts.

ஒல்லிமேய்ந்த தேங்காய் (யாழ்ப்.); (செ.அக.);.

     [ஒல்லி + மேய்.]

ஒல்லியன்

 ஒல்லியன் olliyaṉ, பெ. (n.)

   மெல்லியவன்; thin man. (செ.அக.);.

     [ஒல்லி + அன்.]

ஒல்லு

ஒல்லு1 olludal,    8.செ.குன்றாவி. (v.t.)

   1. இயலுதல்; to be able, possible, practicable.

     “ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே” (குறள்,673);.

   2. உடன்படுதல்; to agree,

     “பாசறை யல்லது நீயொல்லாயே” (புறநா.31,6);.

   3. தகுதல்; to be fit, suitable.

     “கங்குற்போதி லீங்கு வந்திடுவ தொல்லாது” (கந்தபு.வள்ளியம்.162);.

   4. பொருந்துதல்; to combine, unite, join.

     “கானத் தொல் லும் பேரழல்” (கந்தபு.ஆற்று.7);.

   5. நிகழ்தல் (வின்.);; to occur, happen, take place.

   6. ஒத்தல்; to resemble.

   7. நிறைவேற்றல்; to effectuate.

   8. பொறுத்தல்; to tolerate, endure.

     “ஒல்லுவ சொல்லாது” (பரிபா.12-65);. [உல் → ஒல்.]

 ஒல்லு2 olludal,    8.செ.குன்றாவி. (v.t.)

   1. குத்துதல்; to pierce.

   2. ஓலைப்பெட்டி முதலியன பொத்துதல் (வின்.);; to mend, as a net;

 to braid, as a basket. (செ.அக.);.

   ம. ஒல்லுக;   க. ஒல்;   கோத. லொந்;   துட. வலொத்;   து. ஒல்புனி;   தெ. வலக;கூ. ஒர்ப.

     [உல் → ஒல்.]

ஒல்லுநர்

 ஒல்லுநர் ollunar, பெ. (n.)

   நண்பர் (திவா.);; friends;

 associates (செ.அக.);.

     [ஒல் → ஒல்லுநர்.]

ஒல்லென

ஒல்லென olleṉa, கு.வி.எ. (adv.)

   1. விரைய; quickly.

     “வல்வினை … ஒல்லெனவொப்ப” (ஞானா.1,33);.

   2. வெளியாக (சீவக.737, உரை.);; publicly, openly. (செ.அக.);.

     [ஒல் + என. ஒல் – ஒலிக்குறிப்பு.]

ஒல்லெனல்

ஒல்லெனல் olleṉal, பெ. (n.)

   ஒலிக்குறிப்பு; onom. sounding by shepherds etc. in a certain way.

     “ஆயரொல் லென வொலிப்ப” (சீவக.438); (செ.அக.);.

     [ஒல் + எனல். ஒல் – ஒலிகுறிப்பு.]

ஒல்லே

ஒல்லே ollē, கு.வி.எ. (adv.)

   சுருக்காக, விரைவாக; quickly.

     “நங்கை யென்னொ டுரையாய் நனியொல்லே” (சீவக.898); (செ.அக.);.

     [ஒல் → ஒல்லே (வே.க.116);.]

ஒல்லை

ஒல்லை1 ollai, கு.வி.எ. (adv.)

   1. விரைவாக (சூடா.);; rapidly, quickly.

   2. காலத்தாழ்வின்றி, உடனே; promptly.

     “ஒல்லைக்கெடும்” (குறள்,563);.

   3. சுருக்காய் (திவா.);; in a little while. (செ.அக.);.

ம. ஒல்ல.

     [ஒல் → ஒல்லை.]

 ஒல்லை2 ollai, பெ. (n.)

   பழமை; antiquity, oldness.

     “ஒல்லை போற் கருங்காவியென” (இரகு. இரகு.3); (செ.அக.);.

     [உல் → ஒல் – ஒடுங்கற் கருத்துவேர், உள்ளொடுங்குதல் காலத்தால் தொன்மைப் படுதலையும் குறிக்கும். ஒல் → ஒல்லை. (பழங்காலம்); ஒ.நோ. ஒல் → தொல் → தொன்மை, தொல்லை.]

 ஒல்லை3 ollai, பெ. (n.)

   தொந்தரவு (அக.நி.);; trouble. (செ.அக.);.

     [ஒல் – உள்ளொடுங்கற் கருத்துவேர், உள்ளொடுங்கல், வறு மைப்படுதல், இலம்படுதல், துன்புறல், ஒல் → ஒல்லை (துன்பம்);.]

ஒல்லையூர்

 ஒல்லையூர் ollaiyūr, பெ. (n.)

   கடைக்கழக வள்ளலின் ஊர்; a town of Tamil Cheiftain of Sangam age.

     [ஒல்லை + ஊர் – ஒல்லையூர். ஒல்லை = பழமை, தொன்மை.]

ஒல்லையூர் கிழான்

 ஒல்லையூர் கிழான் ollaiyūrkiḻāṉ, பெ. (n.)

   தொடித் தலை விழுத்தண்டினராற் பாடப்பட்ட பெருஞ்சாத்த னின் தந்தை; Sangam personage.

     [ஒல்லையூர் + கிழான்.]

ஒல்லொல்லி

 ஒல்லொல்லி ollolli, பெ. (n.)

   மிக்க வொல்லி; extreme thinness. (செ.அக.);.

     [ஒல் + ஒல்லி.]

ஒல்வழி

ஒல்வழி olvaḻi, கு.வி.எ. (adv.)

   1. பொருந்தியவிடத்து; In a suitable place.

     “ஒல்வழி யொற்றிடை மிகுதல்” (தொல்.எழுத்.114);.

   2. பொருந்தியகாலத்தில்; at the suitable time. (செ.அக.);.

     [ஒல் + வழி.]

ஒள

ஒள1 oḷa,    தமிழ் வண்ணமாலையில் பன்னிரண்டாம் உயிரெழுத்தாகிய அரையங்காப்பு இதழ்குவியா பின் னண்ணச் செறிவுக் கூட்டுயிர் நெடில்;   12th letter and vowel of the Tamil alphabet, the half-close back tense unrounded compound vowel.

     [அ + உ = (அஉ); – ஒள.]

பழங்காலத் தமிழ் நெடுங்கணக்கில் இருகுறில் தனி நெடிலா யிற்று. அம்முறைப்படி அகரஉகரம் ஒளகாரமாயிற்று. ஒள பழங்காலத்தில் அஉ என்றே எழுதப்பட்டது. ஒளகாரத்திற்கு அடையாளக் குறியீடாக ஒகரத்தின் அருகில் எழுதப்படும் ளகர வரிவடிவம் பாதி உயரம் உடையதாகச் சிறிது படுத்தி (ஒள); எழுத வேண்டும் என்பது மரபு. சம உயர எழுத்துகளாக எழுதினால் ஒளவையாரை ஒ – ளவையார் (olavaiyar); எனப் பிற மொழியாளர் படிக்க நேரிடும்.

 ஒள2 oḷa, பெ. (n.)

   விரைந்தோடும் வளர்ப்பு விலங்கு களை ‘நில்’ என்னும் நிறுத்தற்குறிப்பு ஏவல் வினை; expression to halt the cattle and other running animals.

     [அவ் → அவு → அவி = கெடுதல். தவித்தல். அவு → ஒள.]

கட்டவிழ்ந்து ஓடும் மாட்டை ‘ஒள’ஒள’ என்று கூறி நிறுத்துவது கொங்கு நாட்டு வழக்கு.

 ஒள3 oḷa, பெ. (n.)

   தாரவிசையினெழுத்து (திவா.);;     [அஉ → ஒள இருமாத்திரை நெடில்.]

ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்பன ச, ரி, க, ம, ப, த, நி என்பனவற்றுக்கு நிகரான ஏழிசைப் பண்ணொலிகளாகக் (சுரம்); கருதப்பட்டன. ஈற்று ஒளகாரம் தாரத்தின் அடையாள எழுத்தாயிற்று.

 ஒள4 oḷa, பெ. (n.)

   பெண்; woman.

   தெ. அவ்வ;   க. அவ்வ, அவ்வெ;   து. அப்பெ;இந். ஒளரத்.

     [அம்மை → அவ்வை → ஒள. இச்சொல் வடபுலமொழிகளில் ஒளரத் எனத் திரிந்தது.]

மேலையாரிய மொழிகளில் வழங்கி வரும் முன்னொட்டு wo – ஒளகாரத்தின் திரிபாகும். woman என்பதைப் பெண்மகன் என்னும் தொல்காப்பியர் கால வழக்கொடு ஒப்பு நோக்குக.

 ஒள5 oḷa, பெ. (n.)

   1. அழைத்தல், வியப்பு, தடை இவற்றைக் காட்டுமோர் குறிப்புச் சொல்; indicative of summoning, excitation or halting. 2 கடித்தல்;

 biting. (ஆ.அக.);.

     [ஆ → ஆவ் → ஒள (அழைத்தல்);, ஓ → ஓவி → ஒள (வியப்பு);.]

ஒளகம்

ஒளகம் oḷagam, பெ. (n.)

   நிறுத்தம், இடைப்பாடு (சிலப்.14.156, உரை.);; repetition by a chorus of the leader’s song in a dancing peformance. (செ.அக.);.

     [ஒருகா. ஔ – இடை நிறுத்தற்குறிப்பு இடைச்சொல். ஒளகம் – நிறுத்தி மீண்டும் தொடங்குவது.]

ஒளகாரக்குறுக்கம்

ஒளகாரக்குறுக்கம் oḷakārakkuṟukkam, பெ. (n.)

   தன் மாத்திரை யிற்குறுகிய ஒளகாரம் (நன்.95);; shortened ‘au’ as in மௌவல், one of ten {}. (செ.அக.);.

     [ஒள + காரம் + குறுக்கம்.]

செய்யுளில் இடத்திற்கேற்பத் தன்னளவில் சுருங்காது பலுக்கப படும் ஒளகாரம். இரு மாத்திரை யளவினின்றும் 11/2 மாத்திரை யாகக் குறைந்தொலிக்கும்.

ஒளகி

__,

பெ. (n.);

   இடைப்பாட்டுக்கூத்தி; danseuse. (ஆ.அக.);.

     [ஒளகம் → ஒளகி.]

ஒளசனம்

ஒளசனம் oḷasaṉam, பெ. (n.)

   துணைத் தொன்மம் பதினெட்டுனுள் ஒன்று; a secondary purana, one of 18 upa-puranam.

     [Skt. ausanasa → த. ஓளசனம்.]

ஒளசரம்

 ஒளசரம் oḷasaram, பெ. (n.)

   இரும்புக்கல்; iron stone. (சா.அக.);.

     [ஒள + சரம். ஒள = தடுத்தல், தாங்குதல்.]

ஒளசித்தியம்

 ஒளசித்தியம் oḷasittiyam, பெ. (n.)

   தகுதி; fitness, suitableness.

     [Skt. aucitya → த. ஔசித்தியம்.]

ஒளடதமுறிப்பு

 ஒளடதமுறிப்பு oḷaḍadamuṟippu, பெ. (n.)

ஒளதமுறிப்பு பார்க்க;see {}.

ஒளடதம்

 ஒளடதம் oḷaḍadam, பெ. (n.)

ஒளதம்பார்க்க;see audam.

     [ஒள = நிறுத்துதல், நீங்குதல், ஒளதம் = நோய் நீக்கும் மருந்து. ஔதம் வடமொழியில் ஒளஷதம் எனத்திரிந்தது.]

ஒளடதவாதி

 ஒளடதவாதி oḷaḍadavādi, பெ. (n.)

   மூலிகையிலிருந்து உயிர் தேன்றியதென்று கூறுவோன் (யாழ்.அக.);; one who holds that life was created out of herbs. (செ.அக.);.

ஒளடதி

 ஒளடதி oḷaḍadi, பெ. (n.)

   செடி, பூண்டு, காய்கள்; plants, herbs and vegetables. (சா.அக.);.

ஒளடவப்பண்

 ஒளடவப்பண் oḷaḍavappaṇ, பெ. (n.)

   ஐந்து இசை (சுரம்); மட்டும் பயன்படுத்தும் பண் (இராகம்);; musical mode which moves up and down within fine notes of the scale;

 pentatonis. (செ.அக.);.

     [ஐ (ஐந்து); → ஐவம் → ஒளவம் → ஒளதம் → ஒளடம் → ஒளடவம் (ஐந்துவகை); + பண்.]

ஒளடவம்

ஒளடவம் oḷaḍavam, பெ. (n.)

ஒளடவராகம் (சிலப். 13,106,உரை.); பார்க்க;see {}. (செ.அக.);.

     [ஒள → ஒளடவம் = தாரத்தில் தொடங்கும் பெரும்பாலைப்பண் அல்லாத சிறுபாலைப் பண்களுள் ஒன்று.]

ஒளடவராகம்

 ஒளடவராகம் oḷaḍavarākam, பெ. (n.)

ஒளடவப்பண் பார்க்க;see {}.

ஒளடும்பரம்

 ஒளடும்பரம் oḷaḍumbaram, பெ. (n.)

அவுதும்பரம் பார்க்க, see avudumparam.

     [அவ்வு → அவு + தும்பரம் – அவுதும்பரம் → உதும்பரம் – ஒளடும்பரம். தும்பரம் = செந்நிறம். அவுதும்பரம் = செந்நிறம் பொருந்திய தாமிரம்.]

ஒளட்டு

ஒளட்டு1 oḷaṭṭu, பெ. (n.)

   ஒருவகை வாண வெடி; fire work bomb which, when fired into the air, bursts into glowing sparks.

     [U. aut → த. ஔட்டு.]

 ஒளட்டு2 oḷaṭṭu, பெ. (n.)

   சீட்டு விளையாட்டு வகை; a game at cards played by two persons, finished with saying out, when either has scored 108.

ஒளத முறிப்பு

 ஒளத முறிப்பு oḷadamuṟippu, பெ. (n.)

   மருந்து வேகங் களை முறித்தல்; neutralising the action of drugs. (சா.அக.);.

     [ஒளதம் + முறிப்பு.]

ஒளதகம்

ஒளதகம் audagam, பெ. (n.)

   1. நீராளமான உணவு (உதகம்);; liquid diet. 2 நீலமணி;

 blue diamond. (ஆ.அக.);.

     [

   1. உதகம் → ஒளதகம் = நீராளமான உணவு, கஞ்சி.

   2. நீரின் நிறமாகிய நீலமணிக்கல்.]

ஒளதக் கூறு

 ஒளதக் கூறு oḷadakāṟu, பெ. (n.)

   மூலிகை அல்லது மருந்துச் சரக்குகளின் தன்மை; nature of drugs or other medicines. (சா.அக.);.

ஒளதம்

ஒளதம் oḷadam, பெ. (n.)

மருந்து (சிலப்.14.170,அரும்.); medicine, medicament, drug, antidote.

     [அவ்வு – (அவி); → ஒளவுதல் = கெடுத்தல், நீக்குதல். ஒள = நிறுத்துதல், தடுத்தல், நீக்குதல், குணப்படுத்துதல் ஒள → ஒளதம் = நோய் நீக்கும் மருந்து. ஒளதம் வட மொழியில் ஒளஷதம் எனத்திரிந்தது.]

ஒளதா

 ஒளதா oḷatā, பெ. (n.)

   யானைமேல் அமைக்கும் இருக்கை (அம்பாரி);; Canopy.

     [U. haudah → த. ஒளதா.]

ஒளதாரியம்

 ஒளதாரியம் oḷatāriyam, பெ. (n.)

   தாராளக் குணம்; generosity, nobility, magnamity, liberality.

     [Skt. audarya → த. ஔதாரியம்.]

ஒளத்திரிதீட்சை

ஒளத்திரிதீட்சை oḷattiritīṭcai, பெ. (n.)

   சிவ தீக்கையேழனு ளொன்று (சைவச.ஆசாரி 62, உரை);;     [Skt. hautri + diksa → த. ஔத்திரிதீட்சை.]

ஒளபசாரிகம்

 ஒளபசாரிகம் oḷabacārigam, பெ. (n.)

   ஒன்றன் தன்மையை மற்றொன்றிலேற்றிக் கூறுவது; a kind of metonymy by which the attributes of one are spoken of as those of something or some one connected with it.

     [Skt. aupacarika → த. ஔபசாரிகம்.]

ஒளபனிதிகம்

ஒளபனிதிகம் oḷabaṉidigam, பெ. (n.)

   அடைக்கலப் பொருள்; deposit, entrusted for state safe keeping (சுக்கிரநீதி.96);.

     [Skt. aupanidhika → த. ஔபனிதிகம்.]

ஒளபாசனம்

 ஒளபாசனம் oḷapācaṉam, பெ. (n.)

   காலை மாலைகளில் திருமணமான பிராமணர்கள் எழுப்பும் வேள்விப் புகை; the worship of the consecrated fire both morning and evening, a duty enjoined on a married Brahman.

     [Skt. aupasana → த. ஔபாசனம்.]

ஒளரசன்

 ஒளரசன் oḷarasaṉ, பெ. (n.)

ஒளரசபுத்திரன் பார்க்க; see aurasa-puttiran.

     [Skt. aurasa → த. ஔரசன்.]

ஒளரசபுத்திரன்

 ஒளரசபுத்திரன் oḷarasabuttiraṉ, பெ. (n.)

   சொந்தப்பிள்ளை, தத்துப் பிள்ளைக்கு எதிரானது; own son, legitimate son.

     [Skt. aurasa + putrra → த. ஒளரசபுத்திரன்.]

ஒளரதன்

 ஒளரதன் oḷaradaṉ, பெ. (n.)

ஒளரசபுத்திரன் பார்க்க; see aurasaputtiran.

     [Skt. aurasa → ஒளரதன்.]

ஒளரிதம்

 ஒளரிதம் oḷaridam, பெ. (n.)

   ஓர் அறநூல் (திவா.);; code of laws by Harita.

     [Arab. hárita → த. ஔரிதம்.]

ஒளறி

 ஒளறி oḷaṟi, பெ. (n.)

   உலரிமீன்; greenish river-fish. (செ. அக.);.

     [உலரி → ஒளறி (கொ.வ.);.]

ஒளலாத்து

 ஒளலாத்து oḷalāttu, பெ. (n.)

   கால்வழி; issue, children.

ஔலாத்துகளை நல்வழியில் பயிற்ற வேண்டியது பெற்றோர்களின் கடமை.

     [Ar. aulad → ஒளலாத்து.]

ஒளலியா

 ஒளலியா oḷaliyā, பெ. (n.)

   பத்தர்கள்; saints (Muham);.

     [Ar. aulya → த. ஒளலியா.]

ஒளவி-த்தல்

ஒளவி-த்தல் oḷavittal,    4.செ.கு.வி. (v.i.)

அவ்வி-த்தல் பார்க்க;see avvi. (செ.அக.);.

     [அவ்வி-த்தல் → ஒளவி-த்தல்.]

ஒளவியம்

ஒளவியம் oḷaviyam, பெ. (n.)

   மனக்கோட்டம், பொ றாமை, ஏய்ப்பு; evil bent of mind, envy, depravity, deceit. (செ.அக.);.

     [அவ்வியம் → ஒளவியம் (த.வ.110);.]

ஒளவு-தல்

ஒளவு-தல் oḷavudal,    5.செ.கு.வி. (v.i.)

   1. வாயாற்பற்றுதல்; to grasp, seize, take hold of, with the mouth. கன்று புல்லை யெளவித் தின்கிறது.

   2. அமுந்தியெடுத்தல்: to graze; to rub off, as the skin, to burn, scald so as to excoriate. (செ.அக.);.

     [அவ்வு → வவ்வு → ஒளவு.]

ஒளவை

ஒளவை oḷavai, பெ. (n.)

   1. அவ்வை பார்க்க;see avvai. mother, matron, old woman.

   2. ஆரியாங்கனை; female ascetic, especially used of the Jaina sect.

     “கூந்தலை யெளவை மார்கடாம் பணிவிலர் பறித்தனர்” (சீவக.2637);.

   3. ஒளவையார் பார்க்க;see {}.

க., தெ. அவ்வ.

     [அம்மை → அவ்வை → ஒளவை (த.வ.110);.]

ஒளவை நோன்பு

 ஒளவை நோன்பு oḷavainōṉpu, பெ. (n.)

   செவ்வாய் நோன்பு; secret ceremony performed by some {} women twice a year on a Tuesday, at midnight, when no males, even babes in arms;

 are allowed to be present (செ. அக.);

     [ஒளவை + நோன்பு.]

ஒளவையார்

 ஒளவையார் oḷavaiyār, பெ. (n.)

   பழைய பெண்புலவரு ளொருவர் (புறநா.);; name of a famous poetess, author of many verses found in ancient classics and to whom are ascribed some later popular minor moral works also. (செ. அக.);.

     [ஒளவை + ஆர். ஆர் = உயர்வுப்பன்மையீறு. ஈண்டு மதிப்புரவு குறித்தது.]

ஒளவையோ

ஒளவையோ oḷavaiyō, இடை. (int.)

   அம்மையோ; aas! expressing pity.

     “ஒளவையே வென்று போக” (சீவக. 1271); (செ.அக.);.

     [ஒளவை + ஒ. ‘ஓ’ வியப்புக்குறிப்பு இடைச்சொல்.]

ஒளி

ஒளி1 oḷi, பெ. (n.)

   1. வெளிச்சம் (திவா.);; light, brightness, splendour, brilliancy, luster.

   2. கதிரவன் (பிங்.);; sun.

   3. நிலா (பிங்.);; moon.

   4. விண்மீன் (திவா.);; star.

   5. தழல்நாண்மீன் (கேட்டை);;   18th naksatra.

   6. தீ; fire.

   7. எரிக்குந் தன்மை; scorching.

     “வெஞ்சுடரொளியுநீ” (பரிபா.3,67);.

   8. மின்னல் (பிங்.);; lightning.

   9. வெயில் (பிங்.);; sunshine.

   10. விளக்கு; lamp, light.

     “உடையானாம் வேந்தர்க் கொளி” (குறள். 390);.

   11. கட்புலன்; sense of sight-, one of aim-pulam.

     “சுவையொளி” (குறள்.27);.

   12. கண்மணி (வின்.);; apple of the eye.

   13. பெருமை; conspicuous- sness, distinction. Excellence.

     “நீற்றி னொளிதழைப்ப” ( (பெரியபு.திருஞான.1019);.

   14. புகழ்; fame. celebrity, renown.

     “ஒளியு மாற்றலு மோம்பா வீகையும்” (பு.வெ.

   9,1).

   15. செயற்கையழகு; artificial beauty.

     “ஒண்மையு நிறையு மோங்கிய வொளியும்” (பெருங்.உஞ் சைக்.34,151);.

   16. அரசனது கடவுட்டன்மை; divinity of king-ship.

     “மன்னவன்றன் னொளி … வையகங்காக்கு மால்” (சீவக.248);.

   17. அறிவம் (ஞானம்);; illumination of mind;

 wisdom.

     “தனையறிந்தோர்க் கொளியுருவாய்” (ஞானவா.தாசூர.6);.

   18. சொன்மாலை (பிங்.);; eulogy in verse. (செ.அக.);.

   ம. ஒளி;   க. உள்கு, ஒளி, ஒள, ஒளபு: கோத. ஒள்ய (நல்லது);;   துட. விள்ய (நல்லது);;   குட. பொளி;   து. ஒலி, ஒளி;   தெ. ஒளியு (தோன்று);;பட. ஒள்ளிய (நல்ல);.

     [உல் → ஒள் → ஒளி.]

 ஒளி2 oḷidal,    4.செ.கு.வி. (v.i.)

   1. மறைதல்; to hide, steal away, flee into concealment.

     “ஒளியாவெண்ணெ யுண்டா னென்று” (திவ்.பெரியதி.6,7,4);.

   2. தவிர்தல்; to fail.

     “ஒளியாது செல்வா ரென்றாய்” (திணை மாலை.86); (செ.அக.);.

   ம. ஒளியுக;   க. உளி;   கோத. ஒய்ள்;   குட. ஒளி;   து. ஒள (மந்தணம்);;   தெ. ஒலமு (தங்கிடம்);;   குரு. ஒல்தாநன்னா;பட. உணி.

     [உள் → ஒள் → ஒளி. உள் → உள்கு = உட்சுருங்கு, உட்செல், மறைதல்.]

 ஒளி3 oḷittal,    4.செ.குன்றாவி. (v.t.)

   1. மறைத்தல்; to hide, conceal, keep out of sight.

     “கன்றொளித் தகலவைத்த கறவையின்” (சீவக.371);.

   2. மனத்தில டக்குதல்; to keep in mind, to disguise. ஒளிக்காமற் சொல் (உ.வ.);.

     [உள் → ஒள்1 → ஒளி.]

 ஒளி4 oḷittal,    4.செ.கு.வி. (v.i.)

   1. பதுங்குதல்; to lie, hide, conceal one’s self, lurk unseen

     “மதி … ஒளிக்குஞ் சடை மன்னவனே” (திருவாச.6,42); (செ.அக.);.

   ம. ஒளிக்குக;   க. உளி;   கோத. ஒய்ள்;   துட. விள்ய;   குட. ஒளி;   து, ஒள (மந்தனம்);;தெ. ஒளவு (மந்தனம்); பட. உணி.

     [உள் → ஒள் → ஒளி. ஒள்2 பார்க்க;see {}.]

ஒளி5

__,

பெ. (n.);

   1. மறைகை; hiding;

 withdrawing from view.

     “ஒளிகொள் காரண முன்னாதோரே” (ஞானா.29,13);.

   2. மறைவிடம் (பிங்.);; lurking place, covert.

   3. வேட்டைக்காரர் பதிவிருக்கு மறைப்பு; screen, a cover for a fowler.

   4. பார்வை விலங்கு; decoy animal. ஒளிவைத்துப் பிடித்தான். (வின்.); (செ.அக.);.

க. உளி.

     [உள் → ஒன் → ஒளி.]

 ஒளி6 oḷi, பெ. (n.)

   பாடற்பயன்களுள் ஒன்று (சிலப். 3,16,உரை.);; one of qualities of verse, one of {}. (செ.அக.);.

     [ஒள் → ஒளி.]

ஒளி மின்னல்

ஒளி மின்னல் oḷimiṉṉal, பெ. (n.)

   1. ஒளிர்வு; splendour.

   2. திகழ்வொளி; the lighting (as a weapon of Indira); (சேரநா.);.

ம. ஒளிமின்னல்.

     [ஒளி + மின்னல் – ஒளிமின்ன்ல்.]

ஒளிச்சாயல்

 ஒளிச்சாயல் oḷiccāyal, பெ. (n.)

   சாய்ந்து வீசும் ஒளி; the light which falls obliquely on a surface – oblique light (செ.அக.);.

     [ஒளி + சாயல். சாய்தல் → சாயல்.]

ஒளிச்சாயை

 ஒளிச்சாயை oḷiccāyai, பெ. (n.)

   உருவத்தின்போலி கையாலும் (பிரதிபிம்பத்தினாலும்); வளைவினாலும் ஏற்படும் ஒளிப்பரப்பு; light which has been scattered by reflection and refraction-diffused light. (சா.அக.);.

     [ஒளி + சாயை.]

ஒளித்துத்திரி-தல்

ஒளித்துத்திரி-தல் oḷidduddiridal,    2.செ.கு.வி. (v.i.)

   மறைந் துதிரிதல் (வின்.);; to go about incognito, wander in concealment. (செ.அக.);.

     [ஒளித்து + திரி.]

ஒளித்துவிளையாடு-தல்

ஒளித்துவிளையாடு-தல் oḷidduviḷaiyāṭudal,    5.செ.கு.வி. (v.i.)

   கண்பொத்தி விளையாடுதல்; to play hide. and seek. (செ.அக.);.

ம. ஒளிச்சு களிக்குக.

     [ஒளி → ஒளித்து + விளையாடு.]

ஒளிநாடு

ஒளிநாடு oḷināṭu, பெ. (n.)

   பழந்தமிழகத்தில் செந்த மிழ் நாட்டைச் சூழ்ந்த பன்னிரு நாடுகளுள் ஒன்று (தொல்.சொல்.400,உரை.);; one of the 12 {} lying on the outskirts of the {} in the ancient Tamil country. (செ.அக.);.

     [ஒளி6 + நாடு.]

ஒளிநூல்

ஒளிநூல் oḷinūl, பெ. (n.)

   கண்ணொளியையும் பார்வை யையும் பற்றிக் கூறும் நூல்; a science which treats of the nature and properties of light and vision – optics. (சா.அக.);.

     [ஒளி2 + நூல்.]

ஒளிப்பாட்டம்

ஒளிப்பாட்டம் oḷippāṭṭam, பெ. (n.)

   ஏமாற்று; fraud, deceit.

     “இவர்களது ஒளிப்பாட்டம் நம்மனோர் அனைவரும் அறிவர்” (மதி.க.1.112); (செ.அக.);.

     [ஒளி1 + ஒளிப்பு + ஆட்டம்.]

ஒளிப்பிடம்

ஒளிப்பிடம் oḷippiḍam, பெ. (n.)

   மறைவிடம் (பிங்.);; ambush;

 covert, hiding place. (செ.அக.);.

   ம. ஒளிப்பிடம்;   க. உளி;   தெ. ஒலமு;குரு. ஓலா.

     [ஒளி1 → ஒளிப்பு + இடம்.]

ஒளிப்பிழம்பு

 ஒளிப்பிழம்பு oḷippiḻmbu, பெ. (n.)

   தீச்சுடர்த்திரள்; flame. (ஆ.அக.);.

     [ஒளி + பிழம்பு.]

ஒளிப்பு

ஒளிப்பு1 oḷippu, பெ. (n.)

   1. பதுங்கி மறைகை; absconding, slinking or stealing away.

   2. மறைவு (வின்.);; covert. (செ.அக.);.

   ம. ஒளிப்பு;   க. உளி;   து. ஒள;தெ. ஒலமு.

     [ஒளி2 → ஒளிப்பு.]

 ஒளிப்பு2 oḷippu, பெ. (n.)

   1. ஒளிக்கை; hiding. concealing.

   2. மனத்துள் அடக்குகை; keeping secret. as one’s thoughts.

     ‘ஒளிப்பு மறைப்புப் பண்ணாமற் சொல்’ (வின்.); (செ.அக.);.

     [ஒளி3 → ஒளிப்பு.]

ஒளிப்புடம்

ஒளிப்புடம் oḷippuḍam, பெ. (n.)

   வெயிலில் இட்டுச் செய்த மருந்துப் பொடி (மூ.அ.);; calcination by exposure to the sun. (செ.அக.);.

     [ஒளி1 + புடம்.]

ஒளிப்பொலி

 ஒளிப்பொலி oḷippoli, பெ. (n.)

   களத்தில் நீட்டமாகத் தூற்றிய நெற்குவியல் (இ.வ.);; long heap of paddy on the threshing – floor. (செ.அக.);.

     [ஒருகா. ஒளி → ஒளி + பொலி. ஒளி = உயரம், நீளம்.]

ஒளிப்போர்

 ஒளிப்போர் oḷippōr, பெ. (n.)

   மறைந்து நின்று நடந்தும் போர்; guerilla warfare. (சேரநா.);.

ம. ஒளிப்போர்.

     [ஒளி + போர்.]

ஒளிமங்கு-தல்

ஒளிமங்கு-தல் oḷimaṅgudal,    9.செ.கு.வி. (v.i.)

   ஒளிகுறை தல்; to grow dim, as light, splendour, or lustre. (செ.அக.);.

     [ஒளி + மங்கு. மழுங்கு → மங்கு.]

ஒளிமங்கை

ஒளிமங்கை oḷimaṅgai, பெ. (n.)

   1. ஒளியுள்ளமங்கை; beautiful woman.

   2. வைப்பாட்டி; paramour (woman);, concubine. (சேரநா.);.

ம. ஒளிமங்க.

     [ஒளி + மங்கை.]

ஒளிமணல்

ஒளிமணல் oḷimaṇal, பெ. (n.)

   1. மாழை (உலோக); மணல்; sand mixed with iron.

   2. கருமணல்; black sand. (சா.அக.);.

     [ஒளி + மணல்.]

ஒளிமயக்கம்

 ஒளிமயக்கம் oḷimayakkam, பெ. (n.)

   வெளிச்சத்தைப் பார்க்க முடியாத ஒர்வகைக் கண்ணோய்; eye disease due to abnormal intolerance of light-photophobia. (சா.அக.);.

     [ஒளி + மயக்கம்.]

ஒளிமரம்

ஒளிமரம் oḷimaram, பெ. (n.)

   இருளில் ஒளிவிடும் மரம்; tree that is said to shine in the dark.

     “பொங் கொளிமரத்திற் சீர்சால் புள்ளினம் பொறையுயிர்த்து” (பிரபுலிங்.கோரக்கர்.19); (செ.அக.);.

ம. ஒளிமரம்.

     [ஒளி + மரம்.]

ஒளிமறைவு

ஒளிமறைவு oḷimaṟaivu, பெ. (n.)

   1. ஒளித்துத்திரிகை; wandering in disguise.

அவன் ஒளி மறைவாய்த்திரிகி றான் (உ.வ.);.

   2. கமுக்கம்; secrecy.

இவனிடம் ஒளிமறைவு இல்லை (உ.வ.);.

   ம. ஒளிமர;   க. உளி;தெ. ஓலமு.

     [ஒளி + மறைவு – ஒளிமறைவு (ஒருபொருட் பன்மொழி);.]

ஒளிமழுங்கு-தல்

ஒளிமழுங்கு-தல் oḷimaḻuṅgudal,    9.செ.கு.வி. (v.i.)

   ஒளி குறைதல்; to grow dim, as light, splendour, or lustre.

     [ஒளி + மழுங்கு.]

ஒளியம்பு

ஒளியம்பு oḷiyambu, பெ. (n.)

   1. மறைந்து நின்று எய்யும் அம்பு; arrow shot from ambush.

   2. வெளிப்படாமல் தாக்குதல்; covert attack. (சேரநா.);.

ம. ஒளியம்பு.

     [ஒளி2 + அம்பு.]

ஒளியர்

ஒளியர் oḷiyar, பெ. (n.)

   ஒளிநாட்டிற் சிறந்துவிளங்கிய வேளாளர்;{} who were the dominant people, in {}.

     “பல்லொளியர் பணி பொடுங்க” (பட்டினப்.274); (செ.அக.);.

     [ஒளி1 + அர் = ஒளியர்.]

ஒளியவன்

ஒளியவன் oḷiyavaṉ, பெ. (n.)

   கதிரவன்; sun, lit, the shining one.

     “உம்பர்நா டிறந்து வீழ்ந்த வொளியவன்” (கம்பரா.நாகபா 202); (செ.அக.);.

     [ஒளி2 + அவன்.]

ஒளியிரு-த்தல்

ஒளியிரு-த்தல் oḷiyiruttal,    2.செ.கு.வி. (v.i.)

   பதுங்கியி ருத்தல்; to lie in concealment, to lie in ambush, to lurk.

     “கிளிக்குலங்கள் … ஒளி யிருந் தனுதினம் பயிலும்” (காஞ்சிப்பு.திருநாட்டு.41); (செ. அக.);.

     [ஒளி2 + இரு.]

ஒளியிழை

ஒளியிழை oḷiyiḻai, பெ. (n.)

   1. அணிகலன்; jewels, ornament.

   2. அணிகலன் அணிந்த பெண்; lady since wearing jewels.

     [ஒளி + இழை + ஒளியிழை.]

ஒளியுணர் வேற்றுமை

 ஒளியுணர் வேற்றுமை oḷiyuṇarvēṟṟumai, பெ. (n.)

   இரண்டு கண்களின் ஒளியுணர்ச்சியைப் பற்றிய வேறுபாடு; the difference between the two eyes in their sensitiveness to light-light difference. (சா.அக.);.

     [ஒளி + உணர் + வேற்றுமை.]

ஒளியுருவியகல்

 ஒளியுருவியகல் oḷiyuruviyagal, பெ. (n.)

   வயிரக்கல் (வைடூரியம்); (வின்.);; cat’s – eye, a stone of value found in Ceylon (செ.அக.);.

     [ஒளி + உருவிய + கல்.]

ஒளியுள்ளுருவம்

 ஒளியுள்ளுருவம் oḷiyuḷḷuruvam, பெ. (n.)

   கண்ணாடியு ளுருவம்; image in mirror. (ஆ.அக.);.

     [ஒளி + உள் + உருவம்.]

ஒளியூடுருவல்

 ஒளியூடுருவல் oḷiyūṭuruval, பெ. (n.)

   வெளிச்சம் ஊடுருவிப் பாய்ந்து செல்லல்; light passing through an object, as through a glass – transmission of light. (சா.அக.);.

     [ஒளி + ஊடு + உருவல்.]

ஒளியோன்

 ஒளியோன் oḷiyōṉ, பெ. (n.)

ஒளியவன் (பிங்.); பார்க்க;see {}.

     [ஒளி + ஆன் – ஒளியான் → ஒளியோன்.]

ஒளிர்

ஒளிர்1 oḷirtal,    2. செ.கு.வி. (v.i.)

   ஒளிசெய்தல்; to shine, to emit light. to be resplendent.

     “உள்ளத்து ளொளிர்கின்ற வொளியே” (திருவாச.37.5); (செ. அக.);.

     [ஒளி → ஒளிர்.]

 ஒளிர்2 oḷirttal,    2 செ.குன்றாவி. (v.t.)

   ஒளிரச்செய் தல்; to shed light upon.

     “ஊனமின்மினியு நானீ தொளிர்ப்ப னென்று ரைத்தல் போலாம்” (விவேக. சூடா.பாயி.7); (செ.அக.);.

     [ஒளி1 + ஒளிர்.]

ஒளிர்முகம்

 ஒளிர்முகம் oḷirmugam, பெ. (n.)

   வயிரக்கல் (வின்.);; diamond. (செ.அக.);.

     [ஒளிர் + முகம் – ஒளிர்முகம் = ஒளி வீசும் பக்கங்களைக் கொண்டது.]

ஒளிர்வா(வரு)-தல்

ஒளிர்வா(வரு)-தல் oḷirvāvarudal,    18.செ.கு.வி. (v.i.)

ஒளிர் பார்க்க;see {}.

     “கண்ணொளிர் வரூஉங் கவின்சாபத்து” (புறநா.7,4);.

     [ஒளிர் + வா.]

ஒளிர்வு

 ஒளிர்வு oḷirvu, பெ. (n.)

   வெளிச்சம்; brightness, radiance.

     ‘அவருடைய முக வொளிர்வைப் பார்’ (வின்.); (செ. அக.);.

     [ஒளி → ஒளிர் → ஒளிர்வு.]

ஒளிறு

ஒளிறு1 oḷiṟudal,    2. செ.கு.வி. (v.i.)

   விளங்குதல்; to shine, glitter.

     “ஒளிறுவாண் மறவரும்” (மணிமே.1,68); (செ.அக.);.

     [ஒளி → ஒளிர் → ஒளிறு → ஒளிறு-தல். (வே.க.57,58);.]

 ஒளிறு2 oḷiṟu, பெ. (n.)

   பேரொளி, அதிக வெளிச்சம்; splendor, light.

     “ஒளிற்றுறு கலன் மார்பெய்தி” (கந்தபு. அசமுகிநகர்.24); (செ.அக.);.

     [ஒளி1 → ஒளிர் → ஒளிறு.]

ஒளிவடி-த்தல்

ஒளிவடி-த்தல் oḷivaḍittal,    4.செ.கு.வி. (v.i.)

   மின்னுதல் (இ.வ.);; to flash lightning. (செ.அக.);.

     [ஒளி → ஒளிவு → அடி-த்தல்.]

ஒளிவட்டம்

ஒளிவட்டம் oḷivaṭṭam, பெ. (n.)

   1. கண்ணாடி; mirror.

     “ஒளிவட்டத்துப் பாவையின்” (இரகு.குச.17);.

   2. ஆழிப்படை (சக்கராயுதம்); (பிங்.);; discus.

   3. தெய்வ உருவங்களின் தலையைச் சுற்றியுள்ள ஒளிவட்டம் (பிரபை.);; halo of light.

     “சுற்று மொளிவட்டஞ் சூழ்ந்து சோதி பரந்து” (திவ்.பெரியாழ்.1,4,3);.

   4. நிலவு; moon.

     “ஊர்களோடுடன் முளைத்த வொளிவட்டத்து” (யாப்.வி.83,288); (செ.அக.);.

     [ஒளி + வட்டம்.]

ஒளிவளவாய்

ஒளிவளவாய் oḷivaḷavāy, கு.வி.எ. (adv.)

   கமுக்கமாய் (இரகசியமாய்); (வின்.);; privily (செ.அக.);.

     [ஒளி2 → ஒளிவு + அளவாய்.]

ஒளிவிடம்

 ஒளிவிடம் oḷiviḍam, பெ. (n.)

   மறைவிடம்; a hiding place, ambush.

   ம. ஒளிவிடம்;   க. உளி;   கோத. ஒய்ன் (வேட்டைக்கான உயர்மரப்பரண்);;   தெ. ஒலமு;குரு. ஒலா.

     [ஒளி + இடம்.]

ஒளிவிடு-தல்

ஒளிவிடு-தல் oḷiviḍudal,    20.செ.கு.வி. (v.i.)

ஒளிர் (திவா.); பார்க்க;see {}. (செ.அக.);.

     [ஒளி + விடு.]

ஒளிவீசு-தல்

ஒளிவீசு-தல் oḷivīcudal,    5.செ.கு.வி. (v.i.)

ஒளிர் பார்க்க;see {}. (செ.அக.);.

ஒளிவீச்சு

 ஒளிவீச்சு oḷivīccu, பெ. (n.)

   ஒளி வீசுதல்; emitting rays of light. (சா.அக.);.

     [ஒளி + வீச்சு.]

ஒளிவு

ஒளிவு1 oḷivu, பெ. (n.)

   மறைவிடம் (வின்);; place of concealment. (செ.அக.);.

   ம. ஒளிவு;   க. உளி, ஒளவு, ஒளகு;   து. ஒள, ஒளவு. ஒளாவு;   தெ. ஒலமு. ஒளவு;குரு. ஒலா. [ஒளி2 → ஒளிவு.]

 ஒளிவு2 oḷivu, பெ. (n.)

ஒளிர்வு (வின்.); பார்க்க;see {}. (செ.அக.);.

ம. ஒளிவு.

     [ஒளி1 → ஒளிர் → ஒளிர்வு → ஒளிவு.]

ஒளிவை-த்தல்

ஒளிவை-த்தல் oḷivaittal,    4.செ.கு.வி. (v.i.)

   1. கண்ணி வைத்தல்; to set a snare for animals or birds.

   2. பார்வை விலங்கு வைத்தல்; to place a decoy (செ.அக.);.

     [ஒளி2 + வை.]

ஒளிவைத்துப் பார்

ஒளிவைத்துப் பார்1 oḷivaittuppārttal,    4.செ.கு.வி. (v.i.)

   கண்ணிவைத்துக் காத்திருத்தல் (வின்.);; to lie in wait for game after having set a snare. (செ.அக.);.

     [ஒளி2 + வைத்து + பார்.]

 ஒளிவைத்துப் பார்2 oḷivaittuppārttal,    4.செ. குன் றாவி. (v.t.)

   உற்றுப்பார்த்தல்; to stare at a person. (செ.அக.);.

     [ஒளி1 + வை.]

 ஒளிவைத்துப் பார்3 oḷivaittuppārttal,    4.செ.குன் றாவி. (v.t.)

   கைசெறித்துவைத்துக் கூர்ந்து பார்த்தல் (யாழ்.அக.);; to look intently, shading the eyes with the palm over the eyebrows. (செ.அக.);.

     [ஒளி1 + வைத்து + பார்.]

ஒள்

ஒள்1 oḷ, பெ. (n.)

   1. உட்செல்லுதல், நுழைதல்; penetrating, entering.

   2. மறைதல், ஒளிந்து கொள்ளு தல்; hiding, concealing. (சு.வி.68);.

     [உள் → ஒள்.]

 ஒள்2 oḷ, பெ. (n.)

   1. வெளிச்சம்; light.

   2. அழகு; beauty.

   3. வெண்மை; whiteness.

     [உல் → உள் → ஒள்.]

 ஒள்3 oḷ, பெ. (n.)

   1. கூர்மை; sharpness.

   2. அறிவு; knowledge, intelligence.

     [உல் → ஒல் → ஒள்.]

 ஒள்4 oḷ, பெ. (n.)

   1. செறிவு; density.

   2. மிகுதி, பெருக்கம்; excess, surplus.

 ஒள்5 oḷ, கு.பெ.எ. (adj.)

   1. நல்ல; nice, good.

   2. மேன்மை; nobility.

   3. மிகுதியான; vast, enormous.

     [ஒல் → ஒள்.]

ஒள்ராத்து

 ஒள்ராத்து oḷrāttu, பெ. (n.)

   நாள்தோறும் கூறும் வழிபாட்டுக்குரிய வழிபாட்டுச் சொல்; formulae of daily devotional exercises.

     “அவர்கள் காலை நேரங்களில் ஒளராத்து ஒதிக்கொண்டிருப்பார்கள்” (முகமது.);.

     [Ar. aurad → த. ஔராத்து.]

ஒள்ளிமை

ஒள்ளிமை oḷḷimai, பெ. (n.)

   அறிவின் ஒட்பம்; bright- Intelligence.

ஒருவனுக்கு ஒள்ளிமையாவது உலகத்தோடு பொருந்தினது. (குறள்.423,மணக்.); (செ.அக.);.

     [உள் → ஒள் → ஒள்ளி → ஒள்ளிமை.]

ஒள்ளிய

ஒள்ளிய oḷḷiya, பெ.எ. (adj.)

   1. ஒளியுள்ள; bright, lustrous.

   2. அறிவுமிக்க; intelligent, wise.

   3. நல்ல; good.

   4. அழகிய; beautiful.

     [ஒளி → ஒள்ளிய.]

ஒள்ளியன்

ஒள்ளியன் oḷḷiyaṉ, பெ. (n.)

   1. அறிவுடையோன்; wise, intelligent man,

     “ஒளியார்முன் னொள்ளியராதல்’

     (குறள்.714);.

   2. நல்லவன்; gentleman.

     “சீவகன்வீணை வென்றா னொள்ளிய னென்று” (சீவக.741);.

   க. ஒள்ளித;பட. ஒள்ளியம.

     [உள் → ஒள்5 → ஒள்ளி + அன்.]

ஒள்ளியர்

ஒள்ளியர் oḷḷiyar, பெ. (n.)

   மாசற்றவர்; good people. noble men.

     “ஒளியார்முன் ஒள்ளியராதல்” (குறள்.714); (ஆ.அக.);.

     [ஒள்5 → ஒள்ளி + அர்.]

ஒள்ளியோன்

ஒள்ளியோன் oḷḷiyōṉ, பெ. (n.)

   1. வெள்ளி (திவா.);; planet Venus so called because it is apparently the brightest of the stars (செ.அக.);.

   2. கதிரவன்; sun.

   3. அறிவுடையோன்; wise intelligent man. (ஆ.அக.);.

     [ஒள் → ஒள்ளி + (ஆன்); ஒன்.]

ஒள்ளொளி

ஒள்ளொளி oḷḷoḷi, பெ. (n.)

   மிக்கவொளி (வின்.);; brilliant light (செ.அக.);.

     [ஒள்4 + ஒளி.]

ஒள்வாளமலை

ஒள்வாளமலை oḷvāḷamalai, பெ. (.n)

   உரம் பொருந்திய தோளினையுடைய வாள் வீரர் ஆர்க்கும் வீரக்கழலி னையுடையானுடன் ஆடியது (பு.வெ.);; literary theme pertaining to heroic verse.

     [ஒள் + வாள் + அமலை – ஒள்வாளமலை. அமலை = ஆரவாரம், ஆடல்.]

ஒள்ளி

__,

பெ. (n.);

   1. செம்பொன்; red gold.

   2. வெள்ளி (சுக்கிரன்);; Sukra, Venus (செ.அக.);.

     [உள் → ஒள்2 → ஒள்ளி (ஒளிர்வது);.]

ஒழி

ஒழி1 oḻidal,    4 செ.கு.வி. (v.i.)

   1. தீர்தல்; to cease, desist, stop;

 to discontinue, to be finished, ended.

     “பொய்க்கோலஞ் செய்ய வொழியுமே” (நாலடி.43);.

   2. அழிதல்; to decline;

 to become extinct, annihilated

     “ஒழிந்திடு மணுரூபங்கள்” (சி.சி.1.11);.

   3. சாதல்; to die, perish.

     “ஈரைம்பதின்மரும் பொருது களத்தொழிய” (புறநா.2,15);.

   4. வெளிச்செல்லாது தங்குதல்; to remain.

     “அரசர் வாய்மொழி நம்பா லொழிகு வதாயின்” (சிலப்.26,11);.

   5. முடிவாதல் (தீர்மானமாதல்);; to be settled, decided.

     “தமக்கொழிமரபின் … நல்லறம்” (மணி.16,110);.

   6. தவிர்தல்; to be excepted.

   7. விட்டு நீங்குதல்; to leave off, forbear.

     “இற்பிறப்பு நாணு மிடையொழிய” (பு.வெ.7.27);.

   8. வேலைசெய்யாது இருத்தல்; to be at leisure. ஒழிந்த வேளையில் வா. (உ.வ.);.

   9. வெறுமையாதல்; to be empty, unoccupied.

   இந்த வீடு ஒழிந்திருக்கிறது. (உ.வ.); – ஓர் துணை வினை; auxiliary verb.

     “கெடுத்தொழிந்தனை யென் னையு முன்னையும்” (கம்பரா.இரணியன்.24); (செ.அக.);.

ம. ஒழி.

     [ஒல் = உள்ளொடுங்கல், மறைதல், அழிதல். ஒல் → ஒள் → ஒளி → ஒழி.]

 ஒழி2 oḻittal,    2.செ.குன்றாவி. (v.t.)

   1. முடித்தல்; to bring to an end, finish.

எல்லாவேலையையும் ஒழித்துக் கொண்டு வா.

   2. அழித்தல்; to ruin, destroy, kill.

   3. நீக்குதல்; to put away, cast off, expel, dismiss, exclude.

அவனை வீட்டைவிட்டு ஒழித்தேன்.

   4. தவிர்த்தல்; to except, avoid, omit.

அதை யொழித்து மற்றெல்லாம் சரி. (உ.வ.);.

   5. வெறுமையாக்கல்; to clear out, empty, vacate.

பெட்டியை ஒழித்தாயிற்றா? (உ.வ.);.

   6. ஒடுக்கு

   தல்; to contain.

   7. துறத்தல்; to renounce.

   8. குறைத்தல்; to reduce.

   9. போக்குதல்; to remove.

   ம. ஒழிக்குக;   க. உழிக. உழிபு;குட. ஒய்.

     [உல் → ஒல் → ஒள் → ஒளி → ஒழி.]

 ஒழி3 oḻi, பெ (n.)

   அரிக்கட்டு (யாழ்.அக.);; bundle of corn sheaves. (செ.அக.);.

     [அரி → அழி → ஒழி.]

ஒழிகடை

ஒழிகடை oḻigaḍai, பெ. (n.)

   1. பெரும்பான்மை முடிந்த நிலை (வின்.);; state of being almost exhausted

 as stores, almost ended, nearly over. (செ.அக.);.

   2. ஈறு; termination.

     [ஒல் → ஒல்லு → ஒலு → ஒழு → ஒழி + கடை.]

ஒழிச்சு-தல்

ஒழிச்சு-தல் oḻiccudal,    5. செ.குன்றாவி. (v.t.)

   1. போக்கு தல்; to put an end to, to banish, remove.

     “பல்பிறவியை யொழிச்சுவன்” (பதினொ.ஆளு.திருக்கலம்.35);.

   2. வெறுமையாக்கல் (இ.வ.);; to vacate.

   3. அழித்தல் (இ.வ.);; to destroy. (செ.அக.);.

     [ஒழி → ஒழித்து → ஒழிச்சு (கொ.வ.);.]

ஒழித்துக்காட்டணி

ஒழித்துக்காட்டணி oḻittukkāṭṭaṇi, பெ. (n.)

   ஒருபொ ருளை ஓரிடத்தில்லையென மறுத்து மற்றோரிடத் துண்டென்று பொருத்திக் காட்டும் அணி (அணியி. 53);;     [ஒழித்து + காட்டு + அணி.]

ஒழிந்தவேளை

 ஒழிந்தவேளை oḻindavēḷai, பெ. (n.)

   வேலையில்லாத காலம்; leisure time (செ.அக.);.

     [ஒழி → ஒழிந்த + வேளை.]

ஒழிந்தார்

ஒழிந்தார் oḻindār, பெ. (n.)

   மற்றவர்; others, the rest.

     “ஒழிந்தாரைப் போற்றி” (நாலடி.49); (செ.அக.);.

     [ஒழி → ஒழிந்தார்.]

ஒழிபியல்

 ஒழிபியல் oḻibiyal, பெ. (n.)

   நூலின்கண் முன்னியல்க ளிற் சொல்லா தொழிந்தவற்றைக் கூறுமியல் (நம்பி யகப்.);; residuary chapter of a work giving various Items of information not mentioned in the several preceding chapters. (செ.அக.);.

     [ஒழி → ஒழிபு + இயல்.]

ஒழிபு

ஒழிபு oḻibu, பெ. (n.)

   1. எச்சம்; remainder.

   2. ஒவ்வொன் றாகத்தள்ளி உரியதைத் தேரும் நெறி, தேர்நெறி; law of selection by elimination. (செ.அக.);

     [ஒழி → ஒழிபு.]

ஒழிப்பணி

ஒழிப்பணி oḻippaṇi, பெ. (n.)

   ஒன்றன் தன்மையை மறுத்து வேறொன்றன் தன்மையை ஏற்றிக்கூறும் அணி (தண்டி.73);; a figure of speech which denies to an object one of its own attributes and ascribes another which is foreign to it. (செ.அக.);.

     [ஒழிப்பு + அணி.]

ஒழிப்பு

 ஒழிப்பு oḻippu, பெ. (n.)

   விலக்கு; exclusion, dismissal, expulsion. (செ.அக.);.

     [ஒழி → ஒழிப்பு.]

ஒழிப்பு-தல்

ஒழிப்பு-தல் oḻippudal,    5.செ.குன்றாவி. (v.t.)

   ஒழித்தல்; to destroy, remove.

     “அவல மொழிப்பியவன் வயிற் றிசையா (பெருங்.இலாவாண.9.229); (செ.அக.);.

     [ஒழி → ஒழிப்பு.]

ஒழிய

ஒழிய oḻiya,    கு.வி.எ. (adv.) தவிர; except, save.

     “பாடியென் … … … எந்தை பெம்மானை யொழியவே” (திவ்.திருவாய்.3,9,2);. (செ.அக.);.

     [ஒழி → ஒழிய.]

ஒழியாவிளக்கம்

ஒழியாவிளக்கம் oḻiyāviḷakkam, பெ. (n.)

ஒழியாவி ளக்குபார்க்க;see {}.

     “மொழிபெயர் தேத்தோ ரொழியா விளக்கமும்” (சிலப்.6,143); (செ.அக.);.

ஒழியாவிளக்கு

ஒழியாவிளக்கு oḻiyāviḷakku, பெ. (n.)

   விடிவிளக்கு (சிலப்.6,143,உரை.);; lamp that burns throughout the night. (செ.அக.);.

     [ஒழியாத → ஒழியா + விளக்கு.]

ஒழியிசை

ஒழியிசை oḻiyisai, பெ. (n.)

   ஒழிந்த பொருள்தருஞ் சொற்களைத் தருவது (நன்.423);; that which suggests

 an implied meaning. (செ.அக.);.

     [ஒழி + இசை.]

ஒழியிசை யேகாரம்

 ஒழியிசை யேகாரம் oḻiyisaiyēkāram, பெ. (n.)

ஒழி பொருளைக் காட்டும் ‘ஏ’ காரம். {} which suggest an implied meaning.

     [ஒழியிசை + ஏகாரம்.]

ஒழியிசையெச்சம்

 ஒழியிசையெச்சம் oḻiyisaiyessam, பெ. (n.)

ஒழியிசை பார்க்க;see {}.

     [ஒழி + இசை + எச்சம்.]

ஒழியிசையெஞ்சணி

 ஒழியிசையெஞ்சணி oḻiyisaiyeñsaṇi, பெ. (n.)

ஒழி யிசை பார்க்க;see {}. (ஆ.அக.);.

     [ஒழி + இசை + எஞ்சு + அணி.]

ஒழிவி-த்தல்

ஒழிவி-த்தல் oḻivittal,    4.செ.குன்றாவி. (v.t.)

   அழிவித்தல்; to cause to destroy, annihilate.

   2. முடித்தல்; to cause to terminate.

     [ஒழி → ஒழிவி (பி.வி.);.]

ஒழிவிலொடுக்கம்

ஒழிவிலொடுக்கம் oḻiviloḍukkam, பெ. (n.)

   கண் னுடைய வள்ளலார் செய்த ஒரு சிவனிய நூல்; a {} treatise by {}, about 18th c. (செ.அக.);.

     [ஒழிவு + இல் + ஒடுக்கம் – ஒழிவிலொடுக்கம்.]

ஒழிவு

ஒழிவு1 oḻivu, பெ. (n.)

   1. ஒழிகை; ceasing, forsaking.

   2. முடிவு; end, termination.

     “ஒழிவில்காலமெல்லா

முடனாய்மன்னி” (திவ்.திருவாய்.3,3,1);.

   3. பேரழிவு; final dissolution of the world.

     “படைப்பி லொழிவில்” (வேதா.சூ.139);.

   4. குறைவு (வின்.);; want, detect, deficiency.

   5. தேர்நெறி; law of selection by elimination.

   6. மிச்சம்; residue. தீயின தொழிவு போலப் பின் வளர்ந்து கெடுக்கும். (குறள்.674.உரை.);.

   7. ஒய்வு; leisure எனக்கு ஒய்ச்சல் ஒழிவில்லாமல் வேலை யிருக்கி றது. (உ.வ.);.

   8. பற்றின்மை; non-attachment.

     “பிர விர்த்தி யொழிவோ டபயமச்சம்” (பிரயோத.27,81); (செ.அக.);.

     [ஒழி → ஒழிவு.]

ஒழுக

ஒழுக oḻuga,    கு.வி.எ. (adv.) மெதுவாக; slowly. ஒழுக வுயிரை வாங்காது (கலித்.58,உரை.) (செ.அக.).

     [ஒல் → ஒல்கு → ஒள்கு → ஒழ்கு → ஒழுகு → ஒழுக.]

ஒழுகலாறு

ஒழுகலாறு oḻugalāṟu, பெ. (n.)

   ஒழுக்க நெறி; the path of good conduct.

     “காமம் வெகுளி மயக்கமில்லாத ஒழுகலாற்றினை” (தொல்.பொருள்.75,உரை.); (செ.அக.);.

     [ஒழுகு → ஒழுகல் + ஆறு.]

ஒழுகல்

ஒழுகல்1 oḻugal, பெ. (n.)

   1. ஒழுக்கு; leaking, dripping, leak.

   2. நீர் பாய்கை; flowing.

   3. நீளம் (திவா.);; length.

   4. உயரம் (பிங்.);; height.

   5. திடுமென வெளிப்படல்; spurt.

   க. ஒழ்கு;ம. ஒழுகல்.

     [ஒழுகு + அல்.]

 ஒழுகல்2 oḻugal, பெ. (n.)

   நடக்கை; conduct, behavior.

     “அளவின்கணின் றொழுகலாற்றார்” (குறள். 286);.

   2. பரவுதல்; spreading.

   3. நேராகச்செல்லல்; walking or going straight.

   4. இடைப்பட்டதாதல்; being in middle.

     “உலகத்தோடு ஒட்ட ஒழுகல்” (குறள்,140);.

     [ஒழுகு + அல்.]

ஒழுகிசை

ஒழுகிசை oḻugisai, பெ. (n.)

   வெறுத்திசையில்லாமல் செவிக்கினிய மெல்லிசையுடைமையாகிய தன்மை (தண்டி.19);; kind of flowing rhythm, in which nothing discordant occurs. (செ.அக.);

     [ஒழுகு + இசை. ஒழுகிசை வண்ணம் பார்க்க;see {}.]

ஒழுகிசைச்செப்பல்

ஒழுகிசைச்செப்பல் oḻugisaisseppal, பெ. (n.)

   இயற் சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளையிரண்டும் விரவிவந்த வெண்பாவினோசை (காரிகை.செய்.1. உரை.);; rhythm noticeable in the species of {} verse in which ven-{} comes in along with {}. (செ.அக.);.

     [ஒழுகு + இசை + செப்பல்.]

ஒழுகிசையகவல்

ஒழுகிசையகவல் oḻugisaiyagaval, பெ. (n.)

   நேரொன் றாசிரியத் தளையும் நிரையொன்றாசிரியத்தளையும் விரவி வந்த அகவ லோசை (காரிகை.செய்.1,உரை);; rhythm noticeable in agaval verse when it contains bor {} and {}. (செ.அக.);.

     [ஒழுகு + இசை + அகவல்.]

ஒழுகிப்போ-தல்

ஒழுகிப்போ-தல் oḻugippōtal,    8.செ.கு.வி. (v.i.)

   : நீர்ப்பண்டஞ் சிந்தி விழுதல்; to spill.

   2. மனங்கரை துருகுதல்; to brood over sorrow of disappointment. Pine.

இவளென்ன ஒழுகிப் போகிறாளே. (இ.வ.); (செ. அக.);.

     [ஒழுகு → ஒழுகி + போ.]

ஒழுகு

ஒழுகு1 oḻugudal,    7.செ.கு.வி. (v.i.)

   1. நீர்பாய்தல்; to flow, as a stream.

     “ஒழுகு தீம்புனல்” (நைடத நாட்டு.6);.

   2. நீர்ப்பண்டம் சொட்டுதல்; to leak, drop. as water, to fall by drops, trickle down,

     “அசும்பொழுகிய பொய்க்கூரை” (திருவாச.26,7);.

   3. நடத்தல்; to go pass, walk.

   4. முறைப்படி நடத்தல்; to act according to laws as the subject of a state.

     “வையங்காவலர் வழிமொழிந் தொழுக” (புறநா.8,1);.

   5. நேர்மைப் படுதல்; to be arranged in regular order.

     “ஒழுகுகொம் மருங்குல்” (தொல்.சொல்.317,உரை.);.

   6. நெடுமையா தல்; to be long or tall.

மால்வரை யொழுகியவாழை (தொல்.சொல். 317,உரை.);.

   7. பரத்தல்; to spread out extend, to be diffused.

     “மின்னொழுகு சாயல்” (சீவக. 494);.

   8. வளர்தல்; to grow.

     “ஒழுகு பொற்கொடிமூக்கும்” (சீவக.165);.

   9. மிகுதல்; to increase, become intense.

     “மன்னற்கொழுகு மன்பு கொண்டு” (உபதேசகா.சிவத். துரோ.173);.

   10. அமிழ்தல்; to sink.

     “இட்டதொன் றொழுகா வண்ணம்” (கம்பரா.வருணனை.84);.

   11. இளகுதல்; to melt.

ஒழுகக் காய்ந்த இரும்ப (சிவப்பிர.4,1,பக்.385,உரை.); (செ.அக.);.

   க. ஒழ்கு. E walk; OE wealcal;

 OHG walckan, MDU MLG walker, ON. Walka.

     [உல் → ஒல் → ஒள் → ஒழ்கு → ஒழுகு.]

ஒழுகு2

__,

பெ. (n.);

   1. நிலத்தின் வரலாறு குறிக்குங் கணக்கு; land record containing particulars of the ownership, etc. of lands.

     “நாடுபிடித்தார்க்கு ஒழுகைக் காட்டி” (திவ்.திருமலை.3.வ்யா.);.

   2. கோயிலின் வர லாறு கூறுவது; register of a temple giving an account of its properties, and its history.

கோயிலொழுகு (செ. அக.);.

     [உள் → ஒள் → ஒழுகு. (வே.க.93);.]

 ஒழுகு3 oḻugu, பெ. (n.)

   1. வரிசை; row.

   2. வண்டி; cart, carriage.

     [ஒழுகை → ஒழுகு (வரிசையாகச் செல்லும் வண்டிகளின் ஒழுங்கு);.]

ஒழுகுஒழுகாய்

 ஒழுகுஒழுகாய் oḻukuoḻukāy, பெ. (n.)

   வரிசை வரிசையாய்; line or row one by one,

     [ஒழுகு+ஒழுகு+ஆய்]

ஒழுகுகொண்டை

 ஒழுகுகொண்டை oḻugugoṇṭai, பெ. (n.)

   ஒருவகை மயிர்முடி (வின்.);; coil of hair tied in a special way (செ. அக.);.

     [ஒழுகு + கொண்டை.]

ஒழுகுசங்கிலி

ஒழுகுசங்கிலி oḻugusaṅgili, பெ. (n.)

   தொடர்சங்கிலி; a kind of chain.

     “தன்னோடொக்க ஒழுகு சங்கிலியிலே கட்டுண்டுழலுகின்ற கேஷத்ரக்ஞர் காலிலே விழப்பண் ணியும்” (ரஹஸ்ய.194); (செ.அக.);.

     [ஒழுகு + சங்கிலி.]

ஒழுகுநீட்சி

ஒழுகுநீட்சி oḻugunīṭci, பெ. (n.)

   நேராக நீண்டிருக்கை; being stretched out.

     “ஒழுகுநீட்சி யாலே கொடியென்ன வுமாய்” (ஈடு.7,7,2); (செ.அக.);.

     [ஒழுகு + நீட்சி.]

ஒழுகுமாடம்

ஒழுகுமாடம் oḻugumāṭam, பெ. (n.)

   உடம்பு; the humanbody, as a house from which impurities flow out through nine excretory passages.

     “ஒழுகுமாடத்து ளொன்பது வாய்தலும்” (தேவா.338,7); (செ.அக.);.

     [ஒழுகு + மாடம் – ஒழுகுமாடம். உடம்பை ஒட்டை மாளிகை யாகச் சொன்ன உருவகம்.]

ஒழுகுவண்ணம்

ஒழுகுவண்ணம் oḻuguvaṇṇam, பெ. (n.)

   ஒழுகிய லோசையாற் செல்லுஞ் சந்தம் (தொல். பொருள்.538);; rhythm that flows evenly in a harmonious manner. (செ.அக.);.

     [ஒழுகு + வண்ணம்.]

ஒழுகை

ஒழுகை oḻugai, பெ. (n.)

   1. சகடவொழுங்கு; train of carts.

     “பெருங்கயிற் றொழுகை” (பெரும்பாண்.63);.

   2. வண்டி; cart.

     “உமணர் உப்பொ யொழுகை யெண் ணுப மாதோ” (புறநா.116); (செ.அக.);.

     [ஒழுகு → ஒழுகை.]

ஒழுக்க வணக்கம்

 ஒழுக்க வணக்கம் oḻukkavaṇakkam, பெ. (n.)

   நல்லொ ழுக்கம் (யாழ்.அக.);; good conduct. (செ.அக.);.

     [ஒழுக்கு → ஒழுக்க + வணக்கம்.]

ஒழுக்கம்

ஒழுக்கம் oḻukkam, பெ. (n.)

   1. நடை; conduct, behaviour, demeanour.

நல்லொழுக்கந் தீயொழுக்கங்கள் (உ.வ.);.

   2. நல்லியல்பு. நன்னடை; good conduct, morality, virtue, decorum,

     “ஒழுக்க முயிரினு மோம்பப் படும்” (குறள்.131);.

   3. வகித்த கடமைகளினின்று வழுவாது நடக்கை; keeping the rules. (குறள்.உரைப் பாயிரம்);.

   4. உலகத்தோடொட்ட ஒழுகுகை (சி.சி.2,23,சிவஞா.);; conduct in conformity with the world.

   5. செல்லுகை; going, passing.

   6. வழி (திவா);; way, method.

   7. உயர்ச்சி (சூடா.);; height, elevation.

   8. குலம் (பிங்.);; caste, tribe, family. (செ.அக.);.

     [ஒல்கு → ஒழுகு → ஒழுக்கு → ஒழுக்கம்.]

ஒழுக்கறை

 ஒழுக்கறை oḻukkaṟai, பெ. (n.)

   உருக்கு (நாமதீப.);; steel. (செ.அக.);.

     [ஒழுக்கு + அறை. ‘அறை’ – பெயரீறு. ஒழுக்கல் = உருக்கிவார்த் தல்.]

ஒழுக்கல்

ஒழுக்கல்1 oḻukkal, பெ. (n.)

   1. நீர்கசிதல், ஊறுதல்; leaking, oozing. மழையால் வீட்டில் ஒழுக்க லுண்டு.

   2. பொருந்துகை; applicability.

     “ஆயிருபண்பி னொழுக் கல்” (தொல்.எழுத்.112); (செ.அக.);.

     [ஒழுகு → ஒழுக்கு →ஒழுக்கம்.]

 ஒழுக்கல்2 oḻukkal, பெ. (n.)

   வரிசையாக வைக்கை; arranging in a row.

     “ஓங்கிய கல்லுய்த் தொழுக்கல்” (பு.வெ.10.11.கொளு.);.

   2. வார்க்கை; pouring, as into the mouth.

     “இறுமுயிர்க்கு மாயுண் மருந்தொழுக்க றீதன் றால்” (நீதிநெறி.49); (செ.அக.);.

     [ஒழுகு → ஒழுக்கு → ஒழுக்கல்.]

 ஒழுக்கல்3 oḻukkal, பெ. (n.)

   எழுச்சி (யாழ்.அக.);; rising, elevation. (செ.அக.);.

     [ஒழுக்கு → ஒழுக்கல்.]

ஒழுக்கவண்ணம்

 ஒழுக்கவண்ணம் oḻukkavaṇṇam, பெ. (n.)

ஒழுக்கவ ணக்கம் பார்க்க;see {}. (ஆ.அக.);.

ஒழுக்கவி

ஒழுக்கவி oḻukkavi, பெ. (n.)

   கோயிலில் நாடோறும் படைக்கும் சமைத்த உணவு (S.l.l.i,150);; usual daily offering of food in a temple. (செ.அக.);.

ம. ஒழுக்கவி.

     [ஒழுக்கு + அவி.]

ஒழுக்கு

ஒழுக்கு1 oḻukkudal,    5.செ.குன்றாவி. (v.t.)

   மிதந்து போக விடுதல்; to cause to float along or flow down.

பேராற்றிடை மிதவைப் பேழை யினிட்டு ஒழுக்கின இளங்குமரனும் (பாரத.வெண்.195,உரை.); (செ.அக.);.

   2. புடைத்தல்; to winnow.

   3. ஊற்றுதல்; to pour. (சேரநா.);.

     [ஒழுகு + ஒழுக்கு.]

 ஒழுக்கு2 oḻukkudal,    5.செ.குன்றாவி. (v.t.)

   1. வார்த் தல்; to cause to drop, drip.

     “ஒழுக்க வென்கணுக் கொருமருந்து” (தேவா.1110,1);.

   2. நடப்பித்தல்; to help to conduct.

     “ஆற்றினொழுக்கி” (குறள்,48);.

   3. நீள இழுத்தல்; to draw out, as gold thread.

     “அச்சிலுறுத்தி யன பொற்கயிறொழுக்கியன போலும்” (இரகு. தேனு.5); (செ.அக.);.

     [ஒழுகு → ஒழுக்கு.]

 ஒழுக்கு3 oḻukku, பெ. (n.)

   1. பொள்ளல் வழியாக நீர் சொட்டுகை; leaking, dripping, as from a hole or crack.

   2. நீரோட்டம்; flowing.

     “ஆற்றொழுக்கு” (நன்.19);.

   3. நடத்தை; conduct.

     “பொல்லா வொழுக் கும்” (திவ்.இயற்.திருவிருத்.1); (செ.அக.);.

   ம. ஒழுக்கு;   க ஒழகு;   து. உக்குனி;தெ. ஒலுக.

     [ஒழுகு → ஒழுக்கு.]

ஒழுக்குநீர்ப்பாட்டம்

 ஒழுக்குநீர்ப்பாட்டம் oḻukkunīrppāṭṭam, பெ. (n.)

   ஆற்றுக்காற் பாசனவரி (கல்வெ.);; tax on running water that is used for irrigation. opp to நிலைநீர்ப்பாட்டம். (செ.அக.);.

     [ஒழக்கு + நீர் + பாட்டம்.]

ஒழுக்குப்பீளை

ஒழுக்குப்பீளை oḻukkuppīḷai, பெ. (n.)

   பீளையைப் பெருக்கும் கண்ணோய் வகை (தைலவ.தைல.57);; blennorrhoea;

 acuta catarhal opthalmia. (செ.அக.);.

     [ஒழுக்கு + பீளை.]

ஒழுக்குமாற்று-தல்

ஒழுக்குமாற்று-தல் oḻukkumāṟṟudal,    5.செ.கு.வி. (v.i.)

   நீரொழுகும் ஒட்டையை அடைத்தல் (யாழ்ப்.);; to stop a leak. (செ.அக.);.

     [ஒழுக்கு + மாற்று.]

ஒழுக்குவிழு-தல்

ஒழுக்குவிழு-தல் oḻukkuviḻudal,    2.செ.கு.வி. (v.i.)

   1. பொள்ளல் வழியாக நீர்சொட்டுதல்; to drop, as water

 From a leak;

 to leak.

   2. நீர் ஒழுகும் படி பொள்ளலுண்டா தல்; to become leaky, as a roof. (செ.அக.);.

     [ஒழுக்கு + விழு.]

ஒழுக்கெறும்பு

ஒழுக்கெறும்பு oḻukkeṟumbu, பெ. (n.)

   ஒன்றன்பின் னொன்றாய்த் தொடர்ந்து செல்லும் எறும்பு; ant that moves in a train. (செ.அக.);.

     [ஒழுங்கு → ஒழுக்கு + எறும்பு. ஒழுங்கு = வரிசை.]

ஒழுக்கை

__,

பெ. (n.);

   சந்து; lane.

ஒழுக்கை கிழக்கினின்றும் மேற்குநோக்கிப் போகிற செவ்வை (S.I.I.V.138); (செ.அக.);.

     [ஒல் = ஒடுங்குதல். ஒல் → ஒழு → ஒழுக்கை.]

ஒழுங்கரம்

 ஒழுங்கரம் oḻuṅgaram, பெ. (n.)

   ஒருவகை அரம் (C.E.M.);; parallel file. (செ.அக.);.

     [ஒழுங்கு + அரம் – ஒழுங்கரம் = ஒருசீரான அகலமுள்ள அரம்.]

ஒழுங்கல்

 ஒழுங்கல் oḻuṅgal, பெ. (n.)

   ஒழுங்காயிருத்தல் (வின்.);; being right, correct, straight, orderly. (செ.அக.);.

     [ஒழுகு → ஒழுங்கு → ஒழுங்கல்.]

ஒழுங்கீனம்

 ஒழுங்கீனம் oḻuṅāṉam, பெ. (n.)

   சீர்கேடு; disorder, confusion. (செ.அக.);.

     [ஒழுங்கு + ஈனம்.]

ஒழுங்கு

ஒழுங்கு1 oḻuṅgudal,    5.செ.குன்றாவி. (v.t.)

   நேர்படுத் துதல்; to place in line, set in order.

     “ஒழுங்கி முன்னர்த் திருமுறை வகுத்த காலை” (திருவாலவா.38,19);.

     [ஒழுகு → ஒழுங்கு.]

 ஒழுங்கு2 oḻuṅgu, பெ. (n.)

   1. வரிசை; row, rank, line, series,

     “சகடவொழுங்கு” (சிறுபாண்.55,உரை..);.

   2. நேர்மை; order, regularity.

   3. முறை; rule of action, method, plan, model, system.

   4. நன்னடை; good conduct, propriety, decorum.

   5. முறை (விதி.);; regula- tion, law, precept. Canon.

   6. அளவு முதலியன காட்டும் நில விளத்தக் கணக்கு (C.G.);; register of the measure- ment and extent of fields and holdings.

   7. நிலத்தீர்வைக்

   கணக்கு (C.G.);; standard rate, for assessment of tax or for the price of grain. (செ.அக.);

   ம. ஒழுங்கு;க. ஒய்யனெ (மெதுவாக);. L Longus. E டong. Ger. land, A.S lang.

     [ஒழுக்கு → ஒழுங்கு (க.வி.65);.]

ஒழுங்கு வழக்கு

 ஒழுங்கு வழக்கு oḻuṅguvaḻkku, பெ. (n.)

   முதன்முறை தொடங்கும் வழக்கு; proceeding by way of original suit originated by a plaint as dist. Fr. one originated by a petition, regular suit. (செ.அக.);

     [ஒழுங்கு + வழக்கு.]

ஒழுங்குகட்டு-தல்

ஒழுங்குகட்டு-தல் oḻuṅgugaṭṭudal,    5.செ.கு.வி. (v.i.)

   நெறியேற்படுத்துதல் (வின்.);; to make a regulation, to frame a law. (செ.அக.);.

     [ஒழுங்கு + கட்டு.]

ஒழுங்குபடுத்து-தல்

ஒழுங்குபடுத்து-தல் oḻuṅgubaḍuddudal,    5.செ.குன்றாவி. (v.t.)

   நேராக்குதல்; to set in order, to arrange, to regulate. (செ. அக.);

     [ஒழுங்கு + படுத்து.]

ஒழுங்கை

ஒழுங்கை oḻuṅgai, பெ. (n.)

   1. இடுக்குவழி (யாழ்ப்.);; lane, alley.

   2. மண்டபநடைமுகப்பு; porch, portico.

     “ஆயிரக்கால் திருமண்டபத்தி னொழுங்கையில்” (கோயிலொ.1346); (செ.அக.);

   3. நீண்ட இடைகழி; long side walk.

     [ஒழுங்கு → ஒழுங்கை (வே.க.93);.]

ஒவணியம்

 ஒவணியம் ovaṇiyam, பெ. (n.)

   மருத்துவம் முதலான கவனிப்பு; complete care including medical treatment.

     [உவணி-ஒவணியம்]

ஒவம்

ஒவம்1 ovam, பெ. (n.)

   ஒவியம்; picture, portrait.

     “ஒவத் தன்ன வுருகெழு நெடுநகர்” (பதிற்றுப்.88,28);.

     [ஒவ்வு → ஒவ்வம் → ஒவம் → ஓவியம்.]

 ஒவம்2 ovam, பெ. (n.)

   உயரம் (யாழ்.அக.);; height.

ம.ஓரம்.

     [ஓ + அம் – ஓவம்.]

ஒவா(வரு)-தல்

ஒவா(வரு)-தல் ovāvarudal,    18.செ.கு.வி. (v.i.)

   ஒழிதல் (திருக்கோ.212, உரை.);; to cease.

     [ஓவு + வரு – ஓவரு → ஒவா. ஓ – தல் = நீங்குதல், ஒழிதல்.]

ஒவாமுயற்சி

 ஒவாமுயற்சி ovāmuyaṟci, பெ. (n.)

   இடைவிடாமல் முயலுகையாகிய வேளாண்மாந்தரியல்பு (திவா.);; perseverance, a characteristic of the {}.

     [ஒய்வு → ஒவு = ஆ + முயற்சி. ‘ஆ’ (எ.ம.இ.நி.);.]

ஒவாய்

ஒவாய் ovāy, பெ. (n.)

   1. பற்கள் போன வாய்; mouth lacking teeth.

   2. மூளியான கலத்தின் வாய்; vessel with broken brim. (சா.அக.);.

ம. ஒவாய்.

     [ஓறு + வாய் – ஓறுவாய் → ஒவாய்.]

ஒவாய்ப்பல்

 ஒவாய்ப்பல் ovāyppal, பெ. (n.)

ஒறுவாய்ப்பல் பார்க்க;see {}.

     [ஒறுவாய் → ஒவாய் + பல்.]

ஒவாய்ப்பானை

 ஒவாய்ப்பானை ovāyppāṉai, பெ. (n.)

ஒறுவாய்ப் பானை பார்க்க;see {}.

     [ஓறுவாய் → ஒவாய் + பானை.]

ஒவு

ஒவு2 ovu, பெ. (n.)

   சித்திரம்; painting, picture.

     “ஒவுறழ் நெடுஞ்சுவர்” (பதிற்றுப்.68.17);.

     [ஒவ்வு → ஒவு.]

ஒவ்வான்

ஒவ்வான் ovvāṉ, பெ. (n.)

   ஒப்பாகாதவன் (கலி.104);; peerless, uncomparable. (சங்.இலக்.சொற்.);.

     [ஒவ்வு + ஆ + ஆன். ‘ஆ’ – எ.ம.இ.தி. (புணர்ந்துகெட்டது);.]

ஒவ்வாப் பக்கம்

 ஒவ்வாப் பக்கம் ovvāppakkam, பெ. (n.)

   ஏரணத்தில் (தருக்கம்); பொருந்தாத பக்கம் (வின்.);; strained or forced comparison, incongruity. (செ.அக.);.

     [ஒவ்வு + ஆ + பக்கம்.]

ஒவ்வாமை

ஒவ்வாமை1 ovvāmai, பெ. (n.)

   1. ஒப்பாகாமை; unlikeness, inequality.

   2. இசையாமை; discord, disagreement (செ.அக.);.

   3. தகுதிக்குறைவு (ஈனம்);; being not equal to.

   4. உண்மையல்லாமை; not true or right, not agreeable.

ம. ஒவ்வாத்து.

     [ஒவ்வு + ஆ + மை.]

 ஒவ்வாமை2 ovvāmai, பெ. (n.)

   1. இசையாமை, பொருந்தாமை; unsuitablity.

   2. உடல் நலத்திற் கொவ் வாமை; allergy.

     [ஒவ்வு + ஆ + மை.]

ஒவ்வு-தல்

ஒவ்வு-தல் ovvudal,    5. செ.கு.வி. (v.i.)

   1. பொருந்துதல்; to be congruous, consistent

     “ஊகமனுபவம் வசனமுன் றுக்கு மொவ்வும்” (தாயு.எங்கு. 3);.

   2. ஒத்திருத்தல்; to be like, to be similar. (செ.அக.);.

   ம. ஒவ்வு;   க. ஒப்பு;   கோத. ஒப்;   குட. ஒ. து. ஒம்புனி;   தெ. ஒவ்வு. ஒப்பு;குரு. ஒக்கனா.

     [உல் → ஒல் → ஒவ் → ஒவ்வு.]

ஒவ்வுறு-தல்

ஒவ்வுறு-தல் ovvuṟudal,    4.செ.கு.வி. (v.i.)

   ஒப்பாதல்; to agree to be like, equal.

     “இதற்கொவ்வுறாதால்” (பாரத.); (செ.அக.);.

ம. ஒவ்வுக.

     [ஒவ்வு + உறு.]

ஒவ்வொன்று

ஒவ்வொன்று ovvoṉṟu, ப.பெ. (pron.)

   1. ஒன்று மேனி; one each.

   2. சில; one here and there.

அந்த எண்களில் ஒவ்வொன்று விடப்பட்டிருக்கும் (செ.அக.);.

     [ஒன்று + ஒன்று.]

ஒவ்வோக்குழி

ஒவ்வோக்குழி ovvōkkuḻi, பெ. (n.)

   நிலத்திலே விரலால் சிறுவர் எழுதும் அரிக்குழி; depression made in the earth by repeatedly tracing with the finger in the same groove the outline of the letter ஒ when children begin to learn the letters of the alphabet.

     “பகவத் விஷயத்தில் ஒல்வோக்குழியிடாதேயிருக்கிற உங்களுக்கு” (ஈடு,5,6,2); (செ.அக.);.

     [ஒ + ஓ + குழி – ஒவ்வோக்குழி. எழுதக் கற்பிக்கும் தொடக்கத் தில் ஓம் எழுதிய பின் தமிழ் நெடுங்கணக்கு கற்பிக்கும் வழக்கம் தழுவி ஒவ்வோக்குழி எனப்பட்டது.]

ஒவ்வோன்

ஒவ்வோன் ovvōṉ, பெ. (n.)

   ஒப்பில்லாதவன்; ore who has no equal.

     “யாருமொவ்வோன் … உணர்தலுற் றான்” (பாரத.பதினெட்.111); (செ.அக.);.

     [ஒவ்வு – ஆ + ஆன் – ஒவ்வான் → ஒவ்வோன். ‘ஆ’ – எ.ம.இ.நி. (புணர்ந்து கெட்டது);.]