தலைசொல் | பொருள் |
---|---|
ஐ | ஐ ai, [ அ + இ – அஇ → ஐ.] “ஐ” என்பதே ஒப்பமுடிந்த வரிவடிவம் எனினும் தொன்முது காலத்தில் தமிழ்மொழி உருவெழுத்தாகவும் அசையெழுத்தாக வும் எழுதப்பட்டுவந்ததால், “அஇ” என்னும் கூட்டுயிர் “அய்” என மாற்றுக் கூட்டுயிர் வடிவம் பெற்றது. இதனை (அஇ);. (அய்); என்னும் சிந்துவெளியில் கிடைத்த எழுத்துகளாலும் அறியலாம். “அகரத்திம்பர் யகரப் புள்ளியும் ஐயென் நெடுஞ் சினை மெய்பெறத் தோன்றும்” (தொல். எழுத்.56); எனத் தொல்காப்பியர் நூற்பா இயற்றினார். ஆதலால் இது இலக்கண வழக்கன்று என்பதும் உலகியல் வழக்கை ஒருபுடை தழுவிய தன் நோக்கம் பண்டையோர் ஏட்டுச்சுவடிகளில் உள்ள எழுத் துப்பாங்கு பின்னையோர்க்குப் புலப்படுத்தற்கே என்பதும் அறிதல் வேண்டும். அசையெழுத்துக்காலத்தில் தமிழில் நெட்டுயிர் அனைத்தும் இருஉயிர்க்குறில்களின் இணைப்பெழுத்துகளாக எழுதப்பட் டன. எ-டு: அஅ. → ஆ; இஇ → ஈ; உஉ → ஊ; எஎ → ஏ (அல்லது); இஅ → ஏ; அஇ → ஐ அல்லது அய் → ஐ; ஒஒ → ஒ அல்லது உஅ → ஒ;அஉ → ஒள அல்லது அவ் → ஒள. ஏகார ஐகார ஓகார ஒளகாரங்களை ஈரெழுத்துக் குறில்களாக எழுதாமல் ஓரெழுத்து நெடிலாக எழுதும் முறையை இலக்கண வல்லுநர் பகுத்தியபோது பண்டைய ஈரெழுத்து நெடில்களுக்கு இலக்கண அமைதி கூறுவதற்கா கவே தொல்காப்பியர் அகரஇகரம் ஐகாரம் ஆகும் என்றார். நெட்டுயிர்களை “ஈரள பிசைக்கும் நெட்டெழுத்தென்ப” எனக் குறிப்பிடுவதும் இருகுறில் இணைந்து நெட்டுயிர் வரிவடிவம் பெறும் என்னும் பண்டைய அசையெழுத்து நிலையைக் குறிப்பால் புலப்படுத்துவதாகும். எழுத்து2 பார்க்க;see {}. ஐ2 ai, இடை. (part) 1. (அ) வினைமுதற்பொருள் ஈறு; suff of nouns formed from verbs to express, that which does an action as in பறவை. (ஆ) செயப்படு பொருள் ஈறு, that which is acted upon, as in தொடை (மாலை). (இ) கருவிப்பொருள் ஈறு (நன்.140.உரை); the instrument, as in பார்வை. 2. தொழிற் பெயர் ஈறு; suff of verbal nouns, as in கொலை. 3. பண்புப்பெயர் ஈறு (நன்.140,உரை);; suff of abstract nouns, as in தொல்லை. 4. முன்னிலை யொருமை ஈறு (நன்.140, உரை);; ending of 2nd pers sing verb, as in சென்றனை. 5. ஒரு சாரியை, (நன்.185.உரை);; euphonic augment, as in பண்டைக்காலம். 6. முன்னிலைக் குறிப்பு வினை முற்று ஈறு; 2nd pers appellative verb ending. அல்லை. ம. ஐ. எ; க. அம். அன்னு, அன், அண்ண, ன்ன, ன, து, நு, ன; தெ. நுனி; கோண். துன்; கூ. ஐ; குரு, இன், பிஎ னெ, எ. Guj ne; Punj. நு, நும். Turk Mong. {}. [ஐ3 → ஐ2.] ஐ3 ai, பெ. (n.) “இரண்டாகுவதே ஐயெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி” (தொ.சொல்.71). ம. எ; க. அன்னு;தெ னி, இ. [இ → ஐ. இ – அண்மைக்கட்டு, கீழிறங்குதற் குறிப்புத் தி. வேர். அண்மைக்கட்டு நெருங்குதல், ஒத்தல், {} உடைமை, ஆக்கப்பொருள்களையும், இழிதற்குறிப்பு அழித் தல், நீத்தல் குறிப்புப்பொருள்களையும் வினைமுத்துக {} சேர்க்கும். தெரிநிலை வினையும் குறிப்பு வினையும் {} முதலுக்குச் செயப்படுபொருட்பாங்கைச் சேர்க்க. “ஐ” {} உதவுதலின் “எவ்வழிவரினும் வினையே விளைக்குறினை அவ்விரு முதலின் தோன்றும் அதுவே” (தொல்.சொல்.);. எனத் தொல்காப்பியர் விளக்கிக் கூறினார். வினைப்{} எழுவாய்க்கு ஏற்றும் பொருட்பாங்கை “ஐ” உருபு புலப்படுத்து கிறது என்பதே இதன் பொருள்.] ஐ4 ai, பெ. (n.) 1. வியப்பு; wonder, astonish{} ஐதே யம்ம யானே (தொல்.சொல்.385.உரை.);. 2. பெருமை; largeness. 3. உயர்வு; elevation. {}. [ஆ → ஆய் → அய் → ஐ.] ஐ5 ai, பெ. (n.) 1. மென்மை; slenderness {} ழிகுபெயல்” (சிறுபாண்.13);. 2. அழகு; beauty; நுண்மை; minuteness, subtieness. “அணுத்த{} தன்மையி லையோன்” (திருவாச.3,45);. 4. கூர்மை; sharpness. [அள் → அய் → ஐ.] ஐ6 ai, பெ. (n.) 1. தந்தை; father “தன்னை {} தாமரை” (சீகாளத்திபு.நான்முக.124);. 2. தலைவன்; lord, master. “என்னைமுன் நில்லன்மின்” (குறள்.); 3. கணவன்; husband. “எனக்கு மாகா தென்னகைத் முதவாது” (குறுந்:27);. 4. அரசன் (சூடா.);; {}, ஆசான் (அக.நி.);; guru, priest, teacher. 5. சிவன். {}. 7. கொற்றவை; goddess Durga. 8. முதல்வன் ஆண்டை; boss. “விடைதாரும் ஐயே” (நந்தன. ம. ஐ; க. ஐகன்;தெ. ஐவாரு. [ஆ → ஆய் → அய் → ஐ. ஆ = முதன்மை, தலைமை.] ஐ7 ai, பெ. (n.) 1. சளி, கோழை; phlegm “{} மிடறடைப் புண்டு” (தேவா.812-7);. 2. வெண்மை. white colour. ம. ஐ. [அள் → அய் → ஐ. (மு.தா.333);.] ஐ8 ai, pe. (n.) 1. கருமை; collyrium. 2. கடுகு; mustard. 3. கம்மாறு வெற்றிலை; dark green betal leaf. 4. தும்மை; bitter lucos. [இல் → இய் → அய் → ஐ. இல் = கருமை.] ஐ9 ai, பெ. (n.) சருக்கரை; sugar. (சா.அக.);. [இக்கு → ஐக்கு → ஐ.] ஐ1௦ __, பெ. (n.); பருந்து; kite. [ஐ4 → ஐ1௦ (உயரப்பறப்பது);.] ஐ11 __, பெ. (n.); ஐந்து; five. ம. ஐ. [கை → ஐ (த.வ.146);.] கையிலுள்ள ஐந்து விரல்கள் ஐந்து எண்ணும் எண்ணுப்பெயர் தோன்றக்காரணமாயின. நாட்டுப்புறங்களில் இன்றும் பழங் களை எண்ணும்போது ஐந்தைந்தாக எடுத்துப்போட்டு ஒரு கை (5); இருகை (10); என எண்ணுதலைக் காணலாம். |
ஐககண்டியம் | ஐககண்டியம் aigagaṇṭiyam, பெ. (n.) கருத்தொத்திருக்கை; consensus of opinion. “சிவாக மங்களெல்லாம் ஐககண்டியமாகச் சொல்வது” (சிவசம்.67);. [Skt. aikakanthya → த. ஐககண்டியம்.] |
ஐகமத்தியம் | ஐகமத்தியம் aigamattiyam, பெ. (n.) ஒற்றுமை; unanimity. “அவர்களும் ஐகமத்தியம் பண்ணிக் கொண்டு” (குருபரம். 226, பன்னீ);. [Skt. aikamatya → த. ஐகமத்தியம்.] |
ஐகான் | ஐகான் aikāṉ, பெ. (n.) ஐயென்னுமெழுத்து; the letter ஐ. “ஐகான் யவ்வழி” (நன்.124); (செ.அக.);. [ஐ + கான். கான் – சாரியை.] |
ஐகாரக்குறுக்கம் | ஐகாரக்குறுக்கம் aikārakkuṟukkam, பெ. (n.) சார்பெ ழுத்துகளுள் இரண்டு மாத்திரை அளவினும் குறைந்து ஒலிக்கும் ஐகாரம் (நக்.95,உரை);; letter ‘ஐ’ shortened which, except when it is treated as a distinct letter in the alphabet, never receives its full measure of two mattirai, one of ten {}. [ஐ + காரம் + குறுக்கம். காரம் – எழுத்துச்சரியை.] |
ஐகிகம் | ஐகிகம் aigigam, பெ. (n.) 1. இம்மைக்குரியது; that which pertains to this world. 2. இவ்வுலகம்; this world. “ஐகிகத்திலும் நபம்ஸகனாகிறதுக்கு ஏதுவான பாபமும்” (சி.சி.4, 40, சிவாக்.);. [Skt. aihika → த. ஜகிகம்.] |
ஐக்ககம் | ஐக்ககம் aiggagam, பெ. (n.) வீட்டினுள் முற்பகுதியில் அமைந்த பெரிய அறை; drawing room. (சேரநா.);. ம. ஐக்ககம். [ஐ → ஐக்கு + அகம் – ஐக்ககம். ஐ4 = உயர்வு. ஐக்கு = பெரிய.] |
ஐக்கணச்சூலை | ஐக்கணச்சூலை aikkaṇaccūlai, பெ. (n.) சளியால் குழந்தைகளுக்குக் காணும் ஓர்வகைக் கணச்சூலை; form of tabes in new born infants. (சா.அக.);. [ஐ + கனம் + சூலை.] |
ஐக்கவாதசைவம் | ஐக்கவாதசைவம் aikkavātasaivam, பெ. (n.) சிவணியத்தின் அகப்புறச் சமயத் தொன்று (சி.போ.பா.அவை.);; [Skt. aikya+vata+saiva → த. ஐக்கவாதசைவம்.] |
ஐக்கியநாடுகள்சபை | ஐக்கியநாடுகள்சபை aiggiyanāṭugaḷcabai, பெ. (n.) உலக ஒன்றிய நாடுகளின் பேரவை; united nations organization (UNO);. த.வ. உலகநாடுகள் ஒன்றியம். [Skt. aikya + த. நாடுகள் + சபை.] |
ஐக்கியநாணயசங்கம் | ஐக்கியநாணயசங்கம் aikkiyanāṇayasaṅgam, பெ. (n.) கூட்டுறவால் பணம் பெருக்குஞ் கூட்டுறவுக் குழு; co-operative credit society. த.வ. கூட்டுறவுக்குழு. [ஐக்கிய + நாணயம் + சங்கம்.] [Skt. aikya + nanaya → த. ஐக்கியநாணயம்.] |
ஐக்கியபாவம் | ஐக்கியபாவம் aikkiyapāvam, பெ. (n.) ஒற்றுமைத் தன்மை; unity. [Skt. aikya + bhava → த. ஐக்கியபாவம்.] |
ஐக்கியம் | ஐக்கியம் aikkiyam, பெ. (n.) 1. ஒன்றுந் தன்மை; oneness. “ஐக்கியமுன்னி வருந்தி நிற்பேன்” (தாயு.ஆகார.29);. 2. ஒற்றுமை; union, communion, fellowship. த.வ. ஒன்றிப்பு, ஒன்றியம். [Skt. aikya → த. ஐக்கியம்.] |
ஐக்குரம் | ஐக்குரம் aikkuram, பெ. (n.) கருப்பஞ்சாற்றாற் செய்யப் பட்ட கருந்தேன் (ஆ.அக.);; honey made of sugarca- ne-juice. [இக்கு = கரும்பு. இக்கு → ஐக்கு – → ஐக்குரம்.] |
ஐங்கணை | ஐங்கணை aiṅgaṇai, பெ. (n.) காதற்கடவுளின் அம்புகள்; arrows of {}, the god of sexual love tipped with five kinds of flower. “விரைமல ரைங்கணை” (மணி.5.5);. (செ.அக.); “ஐங்கணை அரியத்தக்க புண் ணெல்லாம் எனக்கேயாக்கி” (கம்ப.);. ம. ஐங்கண. அய்கண;க. அய்கண (ஐந்து அம்புகளை உடையவன்);. [ஐ + கணை – ஐங்கணை. தாமரை, மாம்பூ, அசோகு, முல்லை, நீலோற்பலம் என்பன ஐந்து மலர்கள்.] |
ஐங்கணைக்கிழவன் | ஐங்கணைக்கிழவன் aiṅgaṇaikkiḻvaṉ, பெ. (n.) காமன்;{}, the god of sexual love who uses {}. “ஐங்கணைக்கிழவன் காட்சியுண் மகிழ” (கல்லா.19,10);. (செ.அக.);. [ஐந்து + கணை + கிழவன்.] |
ஐங்கணையல்லல் | ஐங்கணையல்லல் aiṅgaṇaiyallal, பெ. (n.) காம நோய்; ஐங்கணையவத்தை; effect produced by {}. [ஐந்து + கணை + அல்லல்.] |
ஐங்கணைவில்லி | ஐங்கணைவில்லி aiṅgaṇaivilli, பெ. (n.) காமன்; ஐந்து வகை மலர்களை அம்பு முனையில் வைத்து எய்பவன்;{}, the god of sexual love, the archer who uses arrows tipped with five kinds of flowers. “ஐங்கணை வில்லித னாண்மை” (திவ்.பெரியதி 9,5,7);. (செ.அக.);. [ஐந்து + கணை + வில்லி.] |
ஐங்கதி | ஐங்கதி aiṅgadi, பெ. (n.) குதிரை நடை; five kinds of pace of the horse, “ஐங்கதி நடத்திக் காட்டி” (திரு விளை.மெய்க்கா.37);. (செ.அக.);. [ஐந்து + கதி. (கது = கதுவுதல்); கது – → கதி (நிலைமை);.] |
ஐங்கனி | ஐங்கனி aiṅgaṉi, பெ. (n.) ஐந்து வகைப் பழங்கள்; the five kinds of fruits. [ஐந்து + கனி.] |
ஐங்கரற்கிளையோன் | ஐங்கரற்கிளையோன் aiṅgaraṟkiḷaiyōṉ, பெ. (n.) 1. முருகன்; Lord Muruga. 2. வீரபத்திரன்; Veerabadra. [ஐந்து + கரன் + கு + இளையோன.] |
ஐங்காயக்கூறு | ஐங்காயக்கூறு aiṅgāyakāṟu, பெ. (n.) ஐந்துவகை உசிலைச் (சம்பாரச்); சரக்கு; five constituent parts in the mixture of drug. (சா.அக.);. [ஐந்து + காயம் + கூறு.] |
ஐங்காயம் | ஐங்காயம் aiṅgāyam, பெ. (n.) கடுகு, ஓமம், வெந்த யம், உள்ளி, பெருங்காயம் முதலிய ஐந்து உசிலைச் சரக்குகள்(தைலவ.தைல.135.வரி.111);. five vegetable stimulants, viz., mustard, bishop-weed, fenugreek, garlic, asafoetida [ஐந்து + காயம். காள் → காளம் → காயம் = கார்ப்புச் சுவையுடையது.] |
ஐங்குரவர் | ஐங்குரவர் aiṅguravar, பெ. (n.) மதித்துப் போற்றுதற் குரிய பெரியோர் ஐவர்; five elders entitled to respect viz., அரசன், ஆசிரியர், தாய், தந்தை, தமையன். “:ஐங்குர வராணை மறுத்தலும்” (திரிகடு.97);. (செ.அக.);. [ஐந்து + குரவர்.] |
ஐங்குறுநூறு | ஐங்குறுநூறு aiṅguṟunūṟu, பெ. (n.) எட்டுத்தொகையு ளொன்று, அகம் பற்றிய ஐந்நூறு அகவற் பாக்கள் ஐந்தினை வகுப்புக்கு ஏற்பப் புலத் துறை முற்றிய கூடலூர் கிழாரால் தொகுக்கப்பட்டது; the short five hundred, an ancient anthology of love-lyrics, containing 500 short agaval verses, one of {}, compiled by {}. [ஐந்து + குறு – ஐங்குறு + நூறு.] ஒவ்வொரு பகுதியும் முறையே ஓரம்போகியார். அம்மூவ னார், கபிலர், ஓதலாந்தையார், பேயனார் ஆகிய ஐவரால் இயற்றப்பட்டது. |
ஐங்கூந்தல் | ஐங்கூந்தல் aiṅāndal, பெ. (n.) ஐந்து வகையாக ஒப்பனை பெறும் கூந்தல்; women’s hair, as dressed in five modes. “நாறைங் கூந்தலு நரைவிரா வுற்றன” (மணி.22,130);. (செ. அக.);. [ஐந்து + கூந்தல்.] |
ஐங்கோலான் | ஐங்கோலான் aiṅālāṉ, பெ. (n.) ஐங்கணைக்கிழவன் பார்க்க;see {}. “ஐங்கோலா னடத்துங் கொடுங்கோலை” (பிரபோத.6,39);. (செ.அக.);. [ஐந்து + கோல் + ஆன். கோல் = அம்பு, கணை.] |
ஐசுகைசா-தல் | ஐசுகைசா-தல் aisugaisātal, 19.செ.கு.வி. (v.i.) மிகச் சிறிதாதல்; to be exceedingly small or minute. “ஐசுகைசான இருட்கொ ழுந்துகளை” (திவ்.இயற்.திரு விருத்.69,வ்யா.பக்.361);. (செ.அக.);. [ஐசு + கைக + ஆதல். ஐககைக – எதுகை குறித்து வந்த இணைமொழி. ஐ → ஐசு = சிறியது.] |
ஐசுவரியம் | ஐசுவரியம் aisuvariyam, பெ. (n.) 1. செல்வம்; wealth, riches, prosperity. 2. ஈச்சுவரத் தன்மை; the quality or nature of the Lord. [Skt. aisvarya → த. ஐகவரியம்.] |
ஐச்செலவு | ஐச்செலவு aiccelavu, பெ. (n.) கணவன் மனைவிக்குக் கொடுக்கும் படி; subsistance allowance (given to one’s wife); (சேரநா);. ம. ஐச்செலவு. [ஐ + செலவு – ஐஞ்செலவு → ஐச்செலவு, ஐஞ்செலவு பார்க்க;see {}. இது ஆகுபெயராய் உணவுச் செலவைக் குறித்தது.] ஐசு __, பெ. (n.); மல்லிகை; jasmine bud. (சா.அக.);. [ஐ = அழகு, மணம். ஐ → ஐயு → ஐசு.] |
ஐஞ் ஞூறு | ஐஞ் ஞூறு aiññūṟu, பெ. (n.) ஐந்நூறு பார்க்க;see {}. [ஐந்நூறு → ஐஞ்ஞூறு.] |
ஐஞ்சந்தி | ஐஞ்சந்தி aiñjandi, பெ. (n.) ஐந்து தெருக்கள் கூடுமிடம் (திருமுரு.225, உரை);; Junction of five streets. (சா.அக.);. [ஐந்து + சந்தி.] |
ஐஞ்சிறப்பு | ஐஞ்சிறப்பு aiñjiṟappu, பெ. (n.) ஐந்து மங்கலப் பூசை; ceremonies on the five auspicious occasions in the life of a {}. “ஐஞ்சிறப் பயருந் தேவர்” (மேரு மந்.1,8);. [ஐந்து + சிறப்பு – ஐஞ்சிறப்பு.] |
ஐஞ்செலவு | ஐஞ்செலவு aiñjelavu, பெ. (n.) குழம்பு, கூட்டு போன்றவை செய்வதற்காகச் சேர்க்கப்படும் உசி லைப் (மசாலா); பொருட்கள்; spices, condiments, curry-stuffs. [ஐந்து + செலவு – ஐஞ்செலவு.] ஐந்தறைப் பெட்டியில் (அஞ்சறைப் பெட்டியில்); உசிலைப் பொருள்களைச் சமையலறையில் வைத்திருக்கும் பழக்கம் இதனை வலியுறுத்தும். இக்காலத்தும் நாட்டுப்புறங்களில் இத னைச் சந்தைச் செலவு என்பர். |
ஐஞ்ஞை | ஐஞ்ஞை1 aiññai, பெ. (n.) அறிவுகேடன் (அக.நி);; ignorant, foolish person (சா.அக.);. [அழிஞன் → அஞ்ஞை → ஐஞ்ஞை.] ஐஞ்ஞை2 aiññai, பெ. (n.) அழகு; beauty. (சாஅக.);. [ஐ → ஐம்மை → ஐன்னை → ஐஞ்ஞை.] |
ஐணம் | ஐணம் aiṇam, பெ. (n.) மான் தோல் (Pond.);; deer-skin. (செ.அக.);. [ஐ = அழகு. ஐ → ஐணம்.] ஐணம் aiṇam, பெ. (n.) மான்தோல்; deer-skin. [Skt. aina → த. ஐணம்.] |
ஐதபயிர் | ஐதபயிர் aidabayir, பெ. (n.) அடர்த்தியற்ற பயிர் (வின்.);; thin crop of growing corn. (செ.அக.); [ஐ → ஐது = மெல்லிது, பரவலானது. ஐது + பயிர் = ஐது பயிர் → ஐதபயிர்.] |
ஐதரேயம் | ஐதரேயம் aidarēyam, பெ. (n.) நூற்றெட்டு மறை நூல்களிலொன்று; name of an upanisad. [Skt. aitareya → த. ஐதரேயம்.] |
ஐதி | ஐதி aidi, பெ. (n.) உலகுரையாகிய அளவை (யாழ்.அக.);; tradition, as an authority. (செ.அக.);. [ஐ → ஐது = உயர்வு, சிறப்பு, மேன்மை. ஐது → ஐதி.] ஐதி aidi, பெ. (n.) ஐதிகப்பிரமாணம் பார்க்க; seе aitika-piramanam. [Skt. aiti → த. ஐதி.] |
ஐதிகப்பிரமாணம் | ஐதிகப்பிரமாணம் aidigappiramāṇam, பெ. (n.) உலகுரையாகிய அளவை; evidence or authority from tradition. [Skt. aitihya + piramana → த. ஐதிகப்பிரமாணம்.] |
ஐதிகம் | ஐதிகம் aidigam, பெ. (n.) 1. உலகுரை; tradition. 2. ஐதிகப்பிரமாணம் பார்க்க; see aitika-p-piramanam. “அளவை மேலு மொழிபுண்மை யைதிகத்தோ டியல்பென நான்கு” (சி.சி. அளவை.);. [Skt. aitihya → த. ஐதிகம்.] |
ஐதிகவளவை | ஐதிகவளவை aidigavaḷavai, பெ. (n.) ஐதிகப்பிரமாணம் (மணி.27, 49); பார்க்க; see aitika-p-piramanam. |
ஐது | ஐது aidu, பெ. (n.) 1. அழகுள்ளது; that which is beautiful. “பெற்றியு மைதென” (மணி.10,2);. 2. அழகு; beauty (கூர்மபு.தக்கனைச் சாத்.3);. 3. நுண்ணியது; that which is minute, fine, subtle. “ஐதமர் நுசுப்பினாள்” (கலித். 52);. 4. மெல்லியது; that which is thin, light. slender, soft. “ஐதுவீ ழிகுபெயல்” (சிறுபாண்.13);. 5. வியப்புடையது; that which is wonderful. “ஐதே யம்ம்” (தொல். சொல்.385,உரை);. 6. இளகிய தன்மை; fuidity. “கண்ணம்… நான நீரி னைதுபட் டொழுகி” (சீவக. 117);. 7. செறிவின்மை; sparseness, standing near but not in contact. “ஐதது நெல், அடர்ந்தது சுற்றம்” (யாழ்ப்.);. (செ.அக.);. [ ஐ → ஐது (தமி.வ.279);.] |
ஐது அம்மை | ஐது அம்மை aiduammai, பெ. (n.) அடர்த்தியாக இல்லாது காணப்படும் அம்மை; form of small pox in which the pustules remain more or less distinct and separate. [ஐது + அம்மை.] |
ஐதுகன் | ஐதுகன் aidugaṉ, பெ. (n.) மறை (வேத); முறைகளை மறுத்துக் காரணமுறையான் வழக்காடுபவன்; one who is a {} and denies the authority of the {}. “ஆரண நூல்வழிச் செவ்வை யழித்திடு மைதுகர்க் கோர் வாரணமாய்” (ரஹஸ்ய.61);. (செ.அக.);. [ஏது → ஐது → ஐதுகன்.] ஐதுகன் aidugaṉ, பெ. (n.) மெய்மறை உரையை மறுத்து முறையீடு செய்வோன்; one who is a hetu-vadin and denies the authority of the Vedas. “சூரண நூல்வழிச் செவ்வை யழித்திடு மைதுகர்க்கோர் வாரணமாய்” (ரஹஸ்ய.61);. [Skt. haituka → த. ஐதுகன்.] |
ஐதுநொய்தாக | ஐதுநொய்தாக aidunoydāka, கு.வி.எ. (adv.) மிகக் குறைவாக; very little. “அனந்தன் பாலுங்கருடன்பாலு மைதுநொய்தாக வைத்து” (திவ்.பெரியாழ்.5,4,8);. (செ. அக.);. [ஐது + நொய்து + ஆக.] |
ஐந்தஃகல் | ஐந்தஃகல் aindaḵkal, பெ. (n.) ஐம்புலன்களை ஒடுக்கு தல்; curtailing the five senses and restricting their activities to a limit (சா.அக.);. [ஐந்து + அஃகல்.] |
ஐந்தடக்கு-தல் | ஐந்தடக்கு-தல் aindaḍakkudal, 7.செ.கு.வி. (v.i.) ஐம்பு லன்களையும் ஒடுக்குதல்; to control the five senses. “ஆமைபோலைந்தடக்க லாற்றின்” (குறள்.126);. (செ.அக.);. [ஐந்து + அடக்கு.] |
ஐந்தனுருபு | ஐந்தனுருபு aindaṉurubu, பெ. (n.) ஐந்தாம் வேற்றுமை யினுருபு; case ending of the ablative, viz., இல் or இன் denoting separation, similitude, limit or means. (சா.அக.);. [ஐந்து + அன் + உருபு.] |
ஐந்தமுதம் | ஐந்தமுதம் aindamudam, பெ. (n.) சருக்கரை, தயிர், தேன், நெய், பால் இவைகளைக் கலந்து செய்த அமுதம்; five nectars ie., the five sweet substances viz., sugar, curd, honey, ghee and milk. (சா.அக..);. [ஐந்து + அமுதம் = ஐந்தமுதம்.] |
ஐந்தரம் | ஐந்தரம்1 aindaram, பெ. (n.) பனை (யாழ்.அக.);;раlmуга (சா.அக.);. [ஐ – உயரம். ஐ → ஐந்து → ஐந்தரம்.] ஐந்தரம்2 aindaram, பெ. (n.) 1. அழகுள்ளது; that which is beautiful. 2. செறிவின்மை; sparseness. [ஐ → ஐந்து → ஐந்தரம்.] |
ஐந்தறிவுயிர் | ஐந்தறிவுயிர் aindaṟivuyir, பெ. (n.) ஐயறிவுயிர் (திவா.); பார்க்க;see {}. [ஐந்து + அறி + உயிர்.] |
ஐந்தல் | ஐந்தல் aindal, பெ. (n.) அருள், இரக்கம்; mercy, pity, sympathy. (சேரநா.);. ம. ஐந்தல். [ஐ → ஐந்தல். ஐ = மென்மை, இரக்கம்.] |
ஐந்தவம் | ஐந்தவம் aindavam, பெ. (n.) மாழ்கு விண்மீன்; the fifth naksatra, mirukaciritam (யாழ்.அக.);. [Skt. aindava → த. ஐந்தவம்.] |
ஐந்தவி-த்தல் | ஐந்தவி-த்தல் aindavittal, 4.செ.கு.வி. (v.i.) ஐந்தடக்கு பார்க்க;see aindadakku. “ஐந்தவித்தா னாற்றல்” (குறள்.25);. [ஐந்து + அவி.] |
ஐந்தாங்கல் | ஐந்தாங்கல் aindāṅgal, பெ. (n.) ஐந்து கற்களைக் கொண்டு விளையாடும் ஒரு வகை விளையாட்டு (இ.வ.);; forfeit game which consists in throwing five stones up into the air and catching them in various ways. [ஐந்து + ஆம் +கல்.] |
ஐந்தாங்கால் | ஐந்தாங்கால் aindāṅgāl, பெ. (n.) திருமணத்திற்கு ஐந்துநாள் முன்பு நடும் பந்தற்கால் (வின்.);; first auspicious post of the marriage pavilion planted on the fifth day before the date fixed for the marriage. [ஐந்து + ஆம் + கால்.] |
ஐந்தாசால் | ஐந்தாசால் aindācāl, பெ. (n.) அடுத்த ஆண்டு; ensuing year. [U. ainda + U. sal → த. ஐந்தாசால்.] |
ஐந்தாம்படை | ஐந்தாம்படை aintāmpaṭai, பெ. (n.) fifth column. [ஐந்தாம்+படை] |
ஐந்திணை | ஐந்திணை aindiṇai, பெ. (n.) 1. அன்புடைக்காமம் (நம்பியகப்.4, உரை.);; love between man and woman as manifested in five situations pertaining to the five tracts of land. 2 குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் ஐவகை நிலங்கள் (திவா.);. the five tracts of land “அன்பின் ஐந்திணைக் களவெனப்படு வது” (இறை.கள. நூற்பா.1);. [ஐந்து + திணை.] |
ஐந்திணைச்செய்யுள் | ஐந்திணைச்செய்யுள் aindiṇaicceyyuḷ, பெ. (n.) உரிப்பொருள் தோன்ற ஐந்திணையையுங் கூறும் சிற்றிலக்கியம் (இலக்.வி..849);; poem describing the ain-tinai, along with their characteristics. (சா.அக.);. [ஐந்து + திணை + செய்யுள்.] |
ஐந்திணைத் தெய்வம் | ஐந்திணைத் தெய்வம் aindiṇaitteyvam, பெ. (n.) ஐந்து நிலங்கட்குமுரிய தெய்வம்: முருகன், கொற் றவை, திருமால், வேந்தன், வருணன் என்பவர்; presiding deities of the five tracts of land viz. {}. [ஐந்து + திணை + தெய்வம்.] |
ஐந்திணையெழுபது | ஐந்திணையெழுபது aindiṇaiyeḻubadu, பெ. (n.) பதினெண்கீழ்க் கணக்கு நூல்களுள் மூவாதியார் செய்த நூல் எழுபது (14 x 5); பாடல்களைக் கொண்டது; ancient love poem of 50 stanzas by {}, one of {}. [ஐந்து + திணை + எழுபது.] |
ஐந்திணையைம்பது | ஐந்திணையைம்பது aindiṇaiyaimbadu, பெ. (n.) பதினெண்கீழ்க் கணக்குநூல்களுள் ஒன்று; மாறன் பொறையனார் இயற்றியது; 50 பாடல்களைக் கொண்டது; ancient love poem of 50 stanzas by {}, one of {}. [ஐந்து + திணை + ஐம்பது.] |
ஐந்திரம் | ஐந்திரம்1 aindiram, பெ. (n.) 1. தொல்காப்பியத்திற்கு முந்து நூலாக வழங்கி மறைந்த பண்டைத் தமிழிலக் கணம்; an ancient treatise on Tamil grammar, being the basic and source work for ancient extant Tamil grammar Tolkappiyam. “ஐந்திரம் நிறைந்த தொல்காப்பி யன் எனத் தன்பெயர் தோற்றி” (தொல்.எழுத்.பாயி.);. 2. இந்திய மொழிகளுக்கு இலக்கணம் வகுக்க எடுத்துக்காட்டாக விளங்கியதும் பாணினியின் வட மொழியிலக்கணத்துக்குக் காலத்தால் மிகவும் தொன் மையானதுமாகிய முந்து தமிழ் இந்தியப் பொது இலக்கணநூல்; a pan Indian proto-Tamil grammar, which set an example for later grammarians in different languages in ancient india, many centuries prior to {} Sanskrit grammar. க. ஐந்தரவியாகரண;தெ. ஐந்த்ரவியாகரணமு. pkt. Pali. aindra. Nep. Tib aindra. [ஐ = மேன்மை, உயர்வு. ஐ → ஐயன் → ஐந்தன் → ஐந்திரன் → ஐந்திரம். (ஒ.நோ.); புலம் → புலத்தன் → புலந்தன் → புலந்திரன்; மாந்தன் → மாந்தரன்.] ஐந்திரனால் இயற்றப்பட்ட தமிழிலக்கணம் ஐந்திரம் எனப்பட் டது. ஐந்தன் என்னும் பெயர் இன்றும் துளுமொழியில் ஐத்து. ஐத்தப்ப என வழங்குகிறது. ஐத்தக்க, ஐத்தம்ம, ஐத்தை எனும் பெண்பாற்பெயர்களும் ஒப்புநோக்கத்தக்கன. ‘ஐந்தரம்’ ஒருவ கைப் பனைமரத்தையும் குறிப்பதால் பனையன் என்னும் பொருளிலும் இப்பெயர் வந்திருக்கலாம். தொல்காப்பியர் ஐந்திர இலக்கணத்தை நிறைவாகக் கற்றவராதலால் முந்து நூல் மரபு நன்கு பேணிக்காக்கப்பட்டுள்ளது. தொன்முதுகாலத்தில் முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை, இசைநுணுக்கம் போன்ற இசையிலக்கண நூல்களும் அகத்தியர் இயற்றியதாகக் கூறப்படும் அகத்தியம் என்னும் இயற்றமிழிலக்கணமும் மறைந்துபோன நிலையில் வரலாற்றுக்கெட்டிய அளவில் ஐந்தி ரமே தொன்முது தமிழ் நூலாக இந்திய நாடு முழுவதிலும் அறியப்பட்டுள்ளது. ஆரியர் வருகைக்கு முன்பு இந்தியப் பெருநிலம் முழுவதும் தமிழே பேச்சு மொழியாகவும் எழுத்து மொழியாகவும் நிலவியதற்கான சான்றுகள் அறிஞர் பெருமக் கள் பலராலும் நிறுவப்பட்டுள்ளன. பிராகிருத மொழிகளிலும் பாலி மொழியிலும் எகர ஒகரக் குறில் எழுத்துக்கள் இருந்தன. கெளதம புத்தர்தம் இளமைக்காலத்தில் கற்ற மொழிகளில் தமிழும் ஒன்று என்பதை லலிதவிசுத்தாரம் என்னும் நூலால் அறிகிறோம். சாரிபுத்தர் தம் 16 ஆம் அகவையில் ஐந்திரவிலக் கணம் கற்றார் என்று புத்த சாதகக் கதைகள் கூறுகின்றன. ஐந்திர இலக்கணம் கற்ற பெருமக்கள் கி.மு ஆறாம் நூற் றாண்டு வரை இந்தியா முழுவதும் இருந்திருக்கிறார்கள் என்பதும் பாணினியின் காலத்தில் கங்கைச்சமவெளிப்பகுதி யில் ஐந்திரம் கற்பிக்கப்பட்டது என்பதும் தெரியவருகின்றன. பாணினி விந்தியமலைக்குத் தெற்கே எதனையும் குறிப்பிட வில்லை. கிழக்குத்திசையில் உச்சயினி முதல் பாடலிபுத்திரம் வரையிலுள்ள பகுதிகளில் ஐந்திர இலக்கணம் பிராகிருதம் பேசுவோராலும் பயிலப்படுதலால் அதனைக் கிழக்கிந்திய இலக்கணம் என்றும் அதனைப் பாணினி முழுமையாக ஏற்க வில்லை என்றும் கூறப்படுகிறது. பண்டைய இந்திய இலக்கணத்தன்மை பற்றி ஆய்வுக்கட்டுரை எழுதி பம்பாய்ப் பல்கலைக்கழகத்தில் (1915); பொற்பதக்கம் பெற்ற வடமொழி ஆராய்ச்சியாளர் கிருட்டிணபெல்வால்கரின் பின்வரும் கூற்று இக்கருத்தை அரண் செய்வதாகும். Aindram. Panini mentions this name excepi under the general appellation of “the easterners”, an often quoted passage from the fourth taranga of the Kathasarith Sagara informs us that the school which Panini supplanted was known as Aindra school … that technical terms used by the so called Aindra treatises are connected with one another and are, further, simpler and more primitive than those of Panini is quite evident; and on this ground his not unlikely that they representaschool of grammanians prior to Panini’s. – Sripad krishna Belwalkar (1915);, “Systmes of Sanskrit Grammar” University of Bombay (pp. 10-11);. வடமொழியிலக்கணத்தினின்றும் முற்றிலும் வேறுபட்ட ஐந்திர இலக்கணம் தமிழ் மொழிக்கே உரியது என்பதை ஆராய்ச்சி வல்லுநர் பருனலும் தெளிவுபடுத்தியுள்ளார். ஐந்திரத்தைப் பிராகிருத மொழியில் மொழியாக்கம் செய்தவர் முதல் சாகடாயணர். அது பின்னர் இந்திரன் என்பவரால் வடமொழியிலும் ஆக்கம் பெற்றது. இவை மட்டுமன்றி சந்திர கோமினின் பெளத்த இலக்கணமும், பாலி மொழியில் இயற் றப்பட்ட சக்சாயனமும், திரவிட சங்கம் நிறுவிய சமண சாகடாயணராகிய தேவநந்தி பூச்சியபாதர் இயற்றிய சைனேந் திர இலக்கணமும் சாதவாகன மன்னர் காலத்தில் சருவவரும னால் இயற்றப்பட்ட கலாபவியாகரணம் எனப்படும் காதந்திர இலக்கணமும், ஐந்திர இலக்கணத்தை அடியொற்றி வடபுல மொழிகளுக்கு இலக்கணம் வகுக்க உதவின. தென்னாட்டு ஐந்திர இலக்கணம் வடநாட்டிலும் கற்பிக்கப்பட்ட தைத் தாராநாதரும் யுவான்கவாங்கும் குறிப்பிட்டுள்ளனர். வான்மீகி இராமாயணத்தில் (இராமா. உத்தர.36,43); அனுமன் ஐந்திர இலக்கணம் கற்றவனாகக் கூறப்பட்டிருக்கிறான். கி.பி. 10ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட பழங்கன்னட இலக்கண நூலாகிய சப்தமணி தருப்பணம் ஐந்திரநெறியில் வந்த காதந் திர இலக்கணத்தை அடியொற்றி எழுதப்பட்டுள்ளது. பாணினியின் இலக்கணத்தைத் திருத்தியும் ஒழுங்குபடுத்தியும் வார்த்திக உரையெழுதிய காத்தியாயனர் ஐந்திர இலக்கணம் கற்ற தென்னாட்டவர் என்றும் இவர் நந்தர்களொடு தொடர்பு கொண்டிருந்தார் என்றும் கதாசரித் சாகரம் என்னும் நூல் குறிப்பிடுகிறது. மராட்டிய மாநிலத்து வடமொழிப் பேராசிரி யர் வகாங்கர் தென்னாட்டிலிருந்தே இலக்கண அறிவு இந்தியா முழுவதும் பரவியுள்ளது என்றும் வடமொழிக்கு வளஞ்சேர்த்த பதஞ்சலி, யாககர், சாகடாயனர் போன்றோர் தென்னாட்டவர் கள் என்றும் குறிப்பிடுகிறார். “இந்திரன் எட்டாம் வேற்றுமை என்றனன்” என்று உரையாசிரி யர்கள் மேற்கோள்காட்டியிருப்பதும் “கப்பத்து இந்திரன் விழு நூல்” என்று சிலப்பதிகாரத்தில் கூறப்படுவதும் சைனேந்திர இலக்கணத்தைச் சுட்டியதேயன்றிப் பண்டைத்தமிழ் ஐந்தி ரத்தை நேரடியாகச் சுட்டியதன்று. பண்டைத்தமிழ் ஐந்திரத்தை அடியொற்றித் திபேத்திய மொழிக்கு உயிரும் மெய்யுமாக முப்பது முதலெழுத்துகள் அமைக்கப்பட்டிருந்தன என அறிகி றோம். தொல்காப்பியர் காலத்தில் வடவேங்கடம் தென்குமரியாகத் தமிழ் வழங்கும் எல்லை கருங்கிவிட்டது. எனினும் ஐந்திர இலக்கணம் இந்தியப்பெருநிலம் முழுவதும் இலக்கண ஒளிக்க திர் வீசிப் புகழ்பெற்றிருந்தது என்பது நிறுவப்பட்டுள்ளது. தமிழிலக்கணத்தை விரித்துக்கூறும் அடிப்படை வகைமைகள் தொன்று தொட்டுத் தமிழில் காக்கப்பட்டுவருவது போலவே ஐந்திரத்தை அடியொற்றி எழுதப்பட்ட வடபுல இலக்கணநூல்க ளிலும் கையாளப்பட்டுள்ளது. தமிழிலக்கணம் சொற்களை, பெயர், வினை, இடை, உரி என நான்கு இயல்களாகப் பிரித்துக் கொள்வது போலவே ஐந்திர வழிவந்த காதந்திரம் போன்ற பிராகிருத இலக்கண நூல்க ளும் நாமம், ஆக்யாதம், நிபாதம், உபசர்கம் எனச் சொற்களை (பெயர், வினை, இடை, உரிச்சொற்களாக); வகைப்படுத்து கின்றன. வேற்றுமைகளை முதல்வேற்றுமை, இரண்டாம் வேற் றுமை என எண்ணிட்டு வரிசைப்படுத்திக்கூறுவது தமிழ்மரபு. இதனையே வடபுல மொழிகளின் இலக்கணநூல்கள் பின்பற் றின. பாணினியும் இந்த இலக்கணப்பாங்கையும் புணர்ச்சி இலக்கணத்தையும் ஐந்திரநெறியாரிட மிருந்து தெரிந்து கொண் டிருக்கிறார். ஐந்திர வழிவந்த தொல்காப்பியம் “எல்லாச்சொல் லும் பொருள்குறித்தனவே” என்று குறிப்பிடுகிறது. இதே கருத்தைக் கல்பசந்திர வியாகரணம் என்னும் காதந்திர இலக்க ணமும் சுட்டிக்காட்டி “பொருள்குறித்ததே சொல் என்று ஐந்திரம் கூறுகிறது”. (அருத்த பதம் இத்தி ஐந்தராணாம்); என்று தெளிவாக மூலநூலாகிய ஐந்திரத்தின் பெயரைக் குறிப்பிடுகி றது. இதிலிருந்து இந்திய மொழிகளில் இலக்கணம் எழுதும் பாங்கு தமிழிலிருந்தே பிராகிருதம் உள்ளிட்ட வடபுல மொழி களுக்குப் பரவியது என்பதும் அதன்பிறகே சமற்கிருதத்துக்குத் தமிழிலக்கணத்தை அடியொற்றி உயிரெழுத்து மெய்யெழுத்து வகைப்படுத்துதல் தோன்றியது என்பதும் தெரிகின்றன. எழுத்துகளை உயிரெழுத்து மெய்யெழுத்து என்று தனித்தனி யாக வகைப்படுத்துவதும், தோன்றல், திரிதல், கெடுதல் எனக் கூட்டுச்சொற்களின் இருசொற்களிடைப் புணர்ச்சி (சந்தி); இலக் கணம் கூறுவதும் மேலையாரிய மொழிகளில் காணப்படாததும் முற்றிலும் தேவைப்படாததுமான இலக்கண வகைமை, ஆயின் தமிழுக்கு அடிப்படையான இந்த இலக்கண அமைதிகள் சமற்கிருதத்துக்குத் தேவையில்லை என்பதறியாமல் பாணினி தமிழிலக்கணங்களின் கூறுகளையே தேவையின்றிச் சேர்த்துக் கொண்டிருப்பதால் தமிழிலக்கணத்தின் தொன்மையும் வட மொழியிலக்கணத்தின் பின்மையும் உணரப்படும். இலத்தீனில் ஐந்துவேற்றுமைகளும் கிரேக்கத்தில் ஆறுவேற்று மைகளும் இடம்பெற்றிருக்கும் நிலையில் சமற்கிருதத்தில் மட்டும் தமிழைப்போல் எட்டு வேற்றுமை இடம் பெற்றிருப்ப தும் இக்கருத்தை வலுப்படுத்துவதாகும். ஐந்திரம் முற்றிலும் தமிழிலக்கணம் என்பதை அறியாமல் இதனை வடமொழி இலக்கணங்களுள் ஒன்றாகச் சிலர் கருதி னர். பாணினி பழைய சமற்கிருத இலக்கண நூல்களுள் ஒன்றாக ஐந்திரத்தை எங்கும் குறிப்பிடவில்லை. மகாபாசியம் எழுதியவர்களும் குறிப்பிடவில்லை. பாணினியாத்ததைவிட ஐந்திரம் பன்மடங்கு பெரியது என்று மாபாரதத்தின் உரையாசி ரியரான தேவபோதர் குறிப்பிட்டிருக்கிறார். உலகமொழிகள் வேறெவற்றிலும் இல்லாத பொருளிலக்கணம் தமிழிலிருப்ப தால் ஐந்திரம் 25,600 நூற்பாக்களைக் கொண்டிருந்ததையும் சொல்லியிருக்கிறார். வடபுலமொழிகளில் ஐந்திர இலக்கணத்தை அடியொற்றி இலக் கணம் எழுதியவர்கள் அவ்வம் மொழிக்கு முதன்முதலாக வரிவடிவம் உண்டாக்கித் தந்து இலக்கணம் எழுதியவராவர். ஆதலின் தமிழிலக்கணத்தில் எழுத்திலக்கணம், சொல்லிலக்க ணப் பகுதிகளை மட்டும் வடபுல மொழிகளில் மொழியாக்கம் செய்தனர். வடபுலத்தில் புதிய மொழிகளின் அகப்பொருள் புறப்பொருள் தழுவிய இலக்கியங்கள் வெறும் நாட்டுப்பாடல் களாகவே நிலவியதால் பொருளிலக்கணம் வடபுலமொழிக ளுக்கு அக்காலத்தில் உடனடித் தேவையாக நிலவவில்லை. ஐந்திரத்தைத் தழுவிய தொல்காப்பியர் எழுத்ததிகாரம், சொல் லதிகாரம், பொருளதிகாரம் என முப்பிரிவாக இலக்கணம் வகுத்திருக்கும் நிலையில் அதே ஐந்திரத்தைத் தழுவிய வடபு லத்து இலக்கண நூல்கள் எழுத்துக்கும் சொல்லுக்கும் மட்டும் இலக்கணம் கூறிப் பொருளதிகாரத்தைப்பற்றி ஒன்றும் கூறா மல் விட்டுவிட்டதற்கு இதுவே காரணமாகும். மராட்டிய மாநிலத்து வடமொழிப் பேராசிரியர் வகாங்கர் இந்திய மொழிகள் பலவும் எழுதப்பட்டு வந்தநிலையில், புதிதாகச் சமற்கிருதத்தை உண்டாக்கி எழுதத்தொடங்கிய போது அதற்கெனத் தனித்த வரிவடிவத்தை உண்டாக்கிக் கொள்ளவில்லையென்றும். அந்தந்தப் பகுதிகளில் வழங்கிய உள்நாட்டு மொழிக்குரிய எழுத்துக்களை சமற்கிருதம் எழுதப் பயன்படுத்திக் கொண்டார்கள் என்றும் நீண்ட வரலாற்றில் இன்று வரை சமற்கிருதத்துக்கு என்று தனித்த எழுத்து வடிவம் தோன்றியதே இல்லையென்றும் கூறுகிறார். வடபுலத்தில் இலக்கண அறிவு வளர்வதற்கு வெகுகாலத்திற்கு முன்பே தமிழகத்தில் பல்வகை இலக்கணங்கள் முழுமையாக வளர்ச்சி பெற்றிருந்தன. இதனைப் பருனல் பெருமகனாரும் தெளிவாகச் சுட்டிக் காட்டியிருக்கிறார். “As I have shown elsewhere there are strong reasons for believing that the Tamil people had an independent system of writing in use before theirs was analysed by grammarians in the north. – Dr. Burnell, The Andira School of Sanskrit Grammar. (p.20);. ஐந்திரத்தைவிடத் தொல்காப்பியம் நூற்பாக்களின் எண்ணிக் கையளவில் பத்திலொருபகுதியாகக் குறைந்துள்ளது. தொல் காப்பியர் பொருளதிகாரத்தில் இலக்கிய வகைமைகளுக்குரிய உரிப்பொருளை மட்டும் விரித்துரைத்து ஏனைய முதற்பொ ருள் கருப்பொருள்களைப் பற்றிய பொருளிலக்கணங்களைக் கூறாமல் விட்டுவிட்டார். ஐந்திரம் இவற்றையும் உள்ளடக்கிப் பெரிய நூலாக இயற்றப்பட்டிருக்கலாம். பாண்டிய நாடு பன்னிரண்டாண்டுகளாகத் தொடர்ந்து மழை பெறாமல் வறங்கூர்ந்தபோது மக்கள் பலரும் பல திசைகளில் குடிபெயர்ந்தனர் என்றும், மீண்டும் நாடுமலிய மழை பெய்து நாடு நாடாயினபோது, அரசன் நாலாப்புறமும் ஆட்போக்கித் தமிழ்நூல்களைக் கொணர்க என ஆணையிட்டும், எழுத்திலக் கண சொல்லிலக்கண நூல்கள் மட்டும் கிடைத்தன வென்றும் எப்பாடு பட்டும் பொருளிலக்கண நூல்களில் ஒன்றேனும் கிடைக்கவில்லை யென்றும் இறையனார் களவியல் நூல் கூறுகிறது. ஐந்திரகாலத்திற்குப்பின் முதற்பொருள் கருப்பொ ருள் நூல்கள் தனித்தனியாக எழுதப்பட்டன என்பதும், இறைய னார் களவியல் நூல் எழுதப்பட்ட காலத்தில் தொல்காப்பியம் இருந்தாலும் அதிலுள்ள உரிப்பொருள் தழுவிய பொருளதிகா ரத்தைப் பொருள் நூலாக அரசன் முழுதும் ஒப்பவில்லையென் பதும் உய்த்துணரலாம். ஐந்திரம் என்னும் பெயரில் ஒரு சிற்பநூல் இருந்ததும், இசைநூலைத் தொல்காப்பியர் நரம்பின் மறை என்று குறிப்பிடுவதும், மொழிமரபுக்கு அப்பாற்பட்ட பொருள் மரபு நூல்களின் பெருக்கத்தைச் சுட்டுவனவாம். ஐந்திரம்2 aindiram, பெ. (n.) ஒரு கற்றச்சு மரத்தச்சு நூல், சிற்பநூல்; treatise an architecture in stone and wood carving (w.);. [ஐந்திரம்2 → ஐந்திரம்2] ஐந்திரநூல் இயற்றப்பட்ட காலத்திற்குப் பிறகு உரிப்பொருள் மட்டுமன்றி முதற்பொருள் கருப்பொருள் பற்றிய நூற்பிரிவுக ளின் கிளைநூலாக வளாநத கலைநூலாகலாம். ஐந்திரம் aindiram, பெ.(n.) மூன்றாம் தமிழ்க் கழகத் தொடக்கத்தில் ஐந்திரனாரால் இயற் றப்பட்ட தமிழ் இலக்கிய நூல்; ancient Tamil grammar prior to Tolkapiyar written by Aindiranar during 3rd Tamil Academic age. அகநானூறு புறநானூறு போன்ற கடைக்கழக இலக்கியங்கள் கிடைத்ததன் பயனாக 2000ஆண்டு களுக்கு முந்தைய தமிழைக் கண்டோம். தொல் காப்பிய இலக்கணம் கிடைத்ததன் பயனாக 3000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழைக் கண்டோம். சிந்துவெளி எழுத்துச் சான்றுகளை முழுமையாக நான் படித்தறிந்ததன் விளைவாக 5000 ஆண்டு களுக்கு முந்தைய தமிழ் கண்டறியப்பட்டுள்ளது. கி.மு.6000 கால அளவில் இரண்டாம் தமிழ்க் கழகம் நிறுவிய பாண்டியன் வெண்தேர்ச்செழியன் காலத்தில் பழைய உருவெழுத்திலிருந்து உருவாக்கப் பட்ட அசையெழுத்துகளே சிந்துவெளி நாகரிகக் காலத்து எழுத்துகளாயின. இக்காலத்தில் தோன்றிய பெருநாரை, பெருங்குருகு என்னும் தமிழிலக்கண நூல்கள் கிடைக்கவில்லை. இக்காலத்தில் தமிழில் உயிரெழுத்தும் மெய்யெழுத்தும் கலந்த அசை யெழுத்து உருவாகிவிட்டது. எனவே, சிந்துவெளி நாகரிகக்காலத்து எழுத்துகளை இடைக்கழகத் தமிழ் எழுத்து என்று சொல்ல வேண்டும். கடைக்கழகம் கி.மு.1850 அளவில் தோன்றி யதாக இறையனார் களவியல் கூறுகிறது. மூன்றாம் தமிழ்ச்சங்கம் எனும் கடைக்கழகம் நிறுவிய பாண்டியன் முட்டத்துத் திருமாறன் காலத்தில் கி.மு. 1850இல் ஐந்திரனார் இயற்றிய ஐந்திரம் அரங் கேறியது எனக் கொள்வதில் தவறில்லை. கற்றறிந்த புலவர் குழுவினரால் பிராமி எழுத்து கண்டுபிடிக்கப் பட்டிருக்க வேண்டும் எனப் பூலர் எனும் அறிஞர் கூறியிருக்கிறார். ஐந்திரனார் சிந்துவெளி எழுத்துகளின் எண் ளிைக்கையைக் குறைத்து 12 உயிரும் 18 மெய்யும் கொண்ட முப்பது அடிப்படை எழுத்துகளாக்கி முதலெழுத்து எனப்பெயரிட்டார். இதனைப் பிற் காலத்தில் வடமொழியாளர் பிராமி எழுத்து எனப் பெயர் மாற்றிக் கொண்டனர். பிராமி என்பதற்கு முதலில் இருந்த எழுத்து என்று பொருள். இந்த உண் மையை அறியாதோர் அசோகன் பிராமியிலிருந்து தமிழ் எழுத்து தோன்றியதாகத் தவறான கருத்தை வெளியிட்டு வருகின்றனர். ஐந்திரனார் வடிவமைத்த தமிழ் எழுத்தே பிராமி எனும் பெயரில் இந்திய மொழிகள் அனைத்திலும் பொது எழுத்தாயிற்று. வடதமிழ் என்னும் பிராகிருத மொழி ஐந்திரனார் வகுத்த 30 எழுத்துகளை மட்டும் பயன்படுத்தியது. சமற்கிருத எழுத்தொலிப்புகளைச் சேர்த்துக் கொள்ளவில்லை. ஆனால் பாலிமொழி சமற்கிருத மொழிக்கே உரிய 11 எழுத்துகளைச் சேர்த்துக்கொண்டு 41 எழுத்துகளாக்கிக் கொண்டது. பாணினி மேலும் 10 எழுத்துகளைச் சேர்த்து சமற்கிருதத்துக்கு 51 எழுத்துகளாக்கிக் கொண்ட காலத்திலும் பிராமி எனும் தமிழ் எழுத்து வடிவங்களே இந்திய மொழிகள் அனைத்துக்கும் பொது எழுத்து வடிவங்களாக இருந்தன. ஐந்திரனார் ஐந்திர இலக்கண நூலில் வகுத்த பிராமி என்னும் முதலெழுத்து கி.மு.1850 முதல் கி.பி.250 வரை புழக்கத்தில் இருந்தது. மூவேந்தர் ஆட்சி வீழ்ந்த பின் தமிழ் எழுத்துகளின் வரிவடி வங்கள் மாறிவிட்டன. புத்தர் தமிழ் கற்றவர் என்றும், ஐந்திரம் தமிழிலக்கண நூல் என்றும் சீனமொழி பெயர்ப்பு நூலாகிய இலலிதவிகத்தாரம் (புத்தரின் வாழ்க்கை வரலாறு); கூறுகிறது. வடஇந்தியாவில் பேசப்பட்ட தமிழ் கி.மு.1500 அளவில் பிராகிருதமாகத் திரிந்தது. இதனை வடதமிழ் என்றனர். இதே கால அளவில் வாழ்ந்தவ ராகிய சமணசமயத்தின் முதல் தீர்த்தங்கரர் தன் மகளிர் இருவருக்கும் பிராமி எழுத்து கற்பித்ததாகக் கூறப்படுகிறது. சிந்துவெளி எழுத்துக்கு அடுத்த தாகத் தோன்றிய பிராமி எழுத்து கி.மு.1500க்கு முற்பட்டது என்பது உறுதியாகிறது. சிந்துவெளி நாகரிகம் கி.மு.1900 அளவில் மறைந்தது. அதன் பிறகு பிராமி எழுத்து உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். சிந்துவெளி எழுத்துகளை 12 உயிரெழுத் துகளாகவும், 18 மெய்யெழுத்துகளாகவும் சுருக்கி முதலெழுத்து முப்பது என மூன்றாம் தமிழ்க் கழகப் புலவர்கள் வரையறுத்திருக்க வேண்டும் என்னும் கருத்து வலுப்பெற்று வருகிறது. தொல்காப்பியர் என்ப, என்மனார் எனக் குறிப் பிடுவதால் தமிழ் எழுத்துகளை முப்பதாக வரையறுத்த காலம் தொல்காப்பியருக்கு முந்தையது. மூன்றாம் தமிழ்க்கழகம் நிறுவிய பாண்டியன் முட்டத்து திருமாறன் வேண்டுகோளுக்கு ஏற்ப மூன்றாம் தமிழ்க் கழகத்தில் ஐந்திர இலக்கணத்தை ஐந்திரனார் அரங்கேற்றியிருக்க வேண்டும். இது நாளடைவில் வட இந்தியாவில் தோன்றிய பிராகிருதம், பாலி, திபேத்தியம் ஆகிய மொழிகளுக்கு மூல இலக்கணமாக விளங்கியது. பிராகிருத காதந்திரம் ஐந்திரம் தழுவிய நூல் எனக் கூறப்படுகிறது. பாலிமொழியின் இலக்கண நூலாகிய கச்சாயனமும் ஐந்திரம் தழுவியது எனக் குறிப்பிடப் பட்டுள்ளது. திபேத்திய மொழியின் இலக்கண நூலாகிய சன்-சு-பா. எனும் இலக்கணம் ஐந்திரம் தழுவியது. காலத்தால் மிகவும் பிற்பட்டதாகிய கேசிராசனின் பழங்கன்னட இலக்கண நூலாகிய சப்தமணி தருப்பனம் ஐந்திரத்தின் வழிவந்த பிராகிருத மொழியிலக்கணமாகிய காதாந்திர நூலைப் பின்பற்றியதாகக் கூறப்பட்டுள்ளது. திரு.இரா.கு.பாலசுப்பிரமணியம் மஞ்சரி (நவம்பர் 2008); மாத இதழில் ஐந்திரம் எனும் தலைப்பில் எழுதிய விரிவான கட்டுரையில் ஐந்திர இலக்கணத்தின் தாக்கம் தமிழ், கன்னடம், பாலி, பிராகிருதம், திபேத்தியம்மட்டுமன்றி சிங்களம், பர்மா, சயாம், கம்போடியா ஆகிய தென்கிழக்கிய நாடு களிலும் ஊடாடியுள்ளது எனக் குறிப்பிட்டிருக்கிறார். சமற்கிருதத்தில் ஐந்திரம் என்னும் இலக்கண நூல் இருந்ததே இல்லை. பாணினி தனக்கு முந்தைய இலக்கண நூல்களாகக் குறித்தவற்றுள் ஐந்திரம் என்னும் பெயர்கொண்ட சமற்கிருத நூல் எதுவும் இல்லை. கி.பி.1608ஆம் ஆண்டில் லாமாதாராநாதர், “ஐந்திர இலக்கணம் மிகவும் தொன்மையானது. அது தமிழ்நாட்டில் வழங்கியது. அது ஆரியரு டையது அன்று” எனக் குறிப்பிட்டுள்ளார். கலாப இலக்கணம் எழுதிய சப்தவருமனும் ஐந்திரம் தமிழி லக்கண நூல் எனக் கூறியுள்ளார். நாளந்தா பல் கலைக்கழகத்தில் பயின்ற சீனப் பயணியாகிய ஒளய்லி எனத்சோங் என்பவர் ஐந்திர இலக்கண நூலைத் தென்னாட்டவர் ஒருவர் 2000 நூற்பாக் களில் கருக்கியதாகவும் அதுவே வடநாட்டிலும் கற்பிக்கப்படுகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார். சொற்கள் அனைத்தும் இடுகுறிப்பெயர்கள் என்பது ஆரியக் கோட்பாடு. தமிழில் இடுகுறிப்பெயர் என்பதே இல்லை. எல்லாச் சொற்களும் காரணப் பெயர்களே என்பது கண்டுபிடித்த இடைக்கழகத் தமிழ் (தென்பிராமி); எழுத்தைப் பிராமி என்று சொல் லாமல் தமிழ் எழுத்து என்றே சொல்ல வேண்டும் என்று இந்தியத் தொல்லெழுத்து துணைத் தலைமை ஆய்வாளர் பி.ஆர்.சீனிவாசன் தெரிவித்துள்ளார்.ஒரு புதிய எழுத்து முறை உருவாவதற்கு உரியநெடுங்கால இலக்கியப்பின்னணி தமிழுக்கு மட்டும் அமைந்திருக் கிறது. வேறெந்த வடநாட்டுமொழிக்கும் இந்த நெடிய பின்னணி இல்லை. ஐந்திரனாரால் இயற்றப்பட்ட ஐந்திரம் எனும் இடைக்கழகத் தமிழிலக்கண நூல் தொல்காப்பியத் துக்கு 1000 ஆண்டுகள் முந்தையது என்பதைப் பின் வரும் காரணங்களாலும் கண்டறியலாம். ஐந்திரம் காலக்கணிப்பு: ஐந்திரம் என்பது தொல்காப்பியத்துக்கு முன்பு நிலவிய தமிழிலக்கண நூல். தொல்காப்பியர் அதனை நிறைவாகக் கற்றவர் என்பதால் “ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்” என அக்காலத்தில் பெரிதும் பாராட்டப்பட்டார். இந்தியா முழுவதிலும் தமிழ் ஒன்றே பேச்சு மொழியாகவும், இலக்கிய மொழியாகவும் வேரூன்றி யிருந்த காலத்தில் தோன்றிய ஐந்திரத் தமிழிலக்கணம் நாளடைவில் (வடதமிழ்); பிராகிருதமாகவும், கிழக் கிந்திய தமிழ் பாலிமொழியாகவும், இமய மலையடி வாரத்துத்துத் தமிழ் திபெத்திய மொழியாகவும், விந்திய மலைக்குத் தெற்கிலிருந்த தமிழ் பஞ்சதிர விடமாகவும் (ஐந்து தமிழினமொழிகள்); வட்டாரக் கிளைமொழிப் பிரிவுகளாக அரும்பத் தொடங்கிய காலம் வரை ஐந்திர இலக்கணத்தின் தாக்கம் இந்திய மொழிகளில் வேரோடியிருந்தது. ஐந்திரம் என்னும் தமிழ்ச் சொல்லுக்குப் பனை மரம் என்னும் பொருள் அக்காலத்தில் இருந்தது. ஐந்தரன் என்பதைப் பனையன் எனப்பொருள் கொண்டனர். இச்சொல்லை வலிந்தும் நலிந்தும் இந்திரன் என்னும் வடசொல்லோடும் அதனோடு தொடர்புற்ற விண்ணுலகப் பெருந்தலைவன் என்னும் பொருளில் சமண பெளத்த நூல்களும் எடுத்தாளத் தொடங்கின. விண்ணவர் விழுநூல் என அவர்களால் கூறப்பட்ட சமயநூல்கள் இலக்கண நூல்கள் அல்ல. ஐந்திரன்: ஐந்திரன் இயற்றிய தமிழிலக்கணம் ஐந்திரம் எனப்பட்டது. ஆரியரின் வரவுக்குப் பின்னரே அகத் தியரைத் தமிழிலக்கணம் செய்த தமிழ் முனிவராகக் கருதும் தொன்மக்கதை தோன்றியது. தொல்காப்பியரும் பாலிபிராகிருத இலக்கண வல்லுநரும் தமக்கு முதல்நூல் ஐந்திரம் என்றே குறிப் பிடுகின்றனர். அகத்தியர் பெயரை இந்தியத் தொன்மொழி களில் இலக்கணம் எழுதிய புலமையாளராகத் தமிழ் நாட்டிலன்றி வேறெவரும் குறிப்பிடவில்லை. ஆத லால் அகத்தியர் தமிழிலக்கணம் இயற்றினார் என்பதைப் புராணங்கள் என்னும் தொன்மக் கதை களில் மட்டும் காண முடிகிறது. அகத்தியரின் நூற்பாக்களாகக் காட்டப்படுவன வற்றின் மொழிநடை மிகமிகக் காலத்தால் பிற்பட்ட வனவாக இருத்தலால் அகத்தியர் வரலாறு கட்டுக் கதை என்பது உறுதிப்படுகிறது. ஐந்திரம் 25,000 நூற்பாக்களைக் கொண்ட பெரு நூலாக இருந்தது என்றும் அதனைக் கற்பது மிகவும் கடுமையானது என்றும் கூறப்படுகிறது. இராமாயணத்தில் அனுமன் ஐந்திரம் கற்றவன் என்று வால்மீகி குறிப்பிட்டுள்ளார். சாரிபுத்தரும் ஐந்திரம் கற்றவர். இதிலிருந்தே இதன் தொன்மை புலப் படுகிறது. தொல்காப்பியர் ஐந்திரத்தை முழுமையாகப் பின்பற்றியவர். “எல்லாச் சொல்லும் பொருள் குறித் தனவே” என்பதைத் தொல்காப்பியர், ஐந்திரனாரிட மிருந்து எடுத்தாண்டிருக்க வேண்டும். ஏனெனில், இக்கருத்து ஐந்திரத்தில் இருப்பதாக அதன்வழி வந்த பிராகிருத இலக்கண நூலாகிய காதந்திரம் கூறுகிறது. காதந்திரத்தில் “அர்த்த பதம் இதி ஐந்தரானாம்” (சொல் என்பது பொருள் உள்ளது – அதாவது பொருட்காரணம் கொண்டது- இவ்வாறு ஐந்திரம் கூறுகிறது);. மேற்கண்ட ஐந்திர நூற்பாவின் கருத்து தொல்காப்பியத்திலும் வடதமிழாகிய பிராகிருதத்திலும் இடம் பெற்றிருப்பது ஒன்றே ஐந்திரம் தமிழிலக்கணம் என்பதையும் அது இந்திய மொழிகள் அனைத் துக்கும் தாயாகவும் தலைமை கொண்டதாகவும் விளங்கியது என்பதையும் காட்டுகிறது. வடமொழி நூல்களான தைத்திரியம், சாந் தோக்கிய உபநிடதங்கள், பிராதி சாக்கியம் போன்ற வற்றிலும் ஐந்திரநூலின் பெயர் எடுத்தாளப்பட் டுள்ளது. பாணினியத்துக்கு முதன்மை கொடுத்த காலத்தில் ஐந்திரம் மறைந்தது எனக் கூறப்படுகிறது. எனவே, இடைக்கழகம் நிறுவப்பட்ட கி.மு.1850 ஆண்டே ஐந்திர இலக்கணம் அரங்கேறிய ஆண் டாகச் சொல்லலாம். ஐந்திரம் அரங்கேறிய ஆண்டு கி.மு.1850: தமிழில் ஐந்திர இலக்கணம் எழுதப்பட்ட காலம் கி.மு.19ஆம் நூற்றாண்டு என்பதற்கான சான்றுகள் பல கிடைத்துள்ளன. கி.மு.19ஆம் நூற்றாண்டில் சிந்துவெளி நாகரிகம் இயற்கைச் சீற்றங்களால் அழிந்தது. அதன் பின்னர் கொற்கைப் பாண்டிய னுக்கு அடங்கிய சிற்றரசர்களாகவே வடபுலத்துத் தமிழ் வேந்தர்கள் ஆட்சி புரிந்தனர் என்று நற்குடி வேளாளர் வரலாறு (1920); எனும் செய்யுள்நூல் கூறு கிறது. கபாடபுரம் கடல் கொண்ட பிறகு பாண்டியன் முட்டத்துத் திருமாறன் மனலூரில் கி.மு.1850ஆம் ஆண்டு மூன்றாம் தமிழ்க் கழகம் நிறுவினான் எனும் செய்தியை இறையனார் களவியல் வாயிலாக அறிய முடிகிறது. தமிழ்க்கழகம் கூடும் முதல் நாளில் சிறந்த நூல்கள் அரங்கேற்றப்படுவது வழக்கம். இந்த அடிப்படையில் ஐந்திரனாரின் ஐந்திரம் கி.மு.1850ஆம் ஆண்டு குமரியின் தெற்கே இருந்த மணலூரில் அரங் கேற்றப்பட்டது எனக் கருதலாம். இதற்குப் பின்புலச் சான்றாக குச்சா மாநி லத்துத் லோத்தலில் கிடைத்த சிந்துவெளி முத்திரை அமைந்துள்ளது. பிராமி எனப்படும் மூன்றாம் தமிழ்க் கழகத் தமிழ் எழுத்தைச் சிந்துவெளி எழுத்திலிருந்து மாற்றியமைத்தவர் ஐந்திரனார். ஐந்திரனார் குறிப்பிட்ட 12 உயிரெழுத்துகளும் 18 மெய்யெழுத்துகளும் சிந்துவெளித் தமிழ் முத்தி ரைகளிலும் காணப்படுகின்றன. லோத்தல் (L.88); முத்திரையில் உள்ள ஐந்து எழுத்துகளில் நான்கு சிந்துவெளி எழுத்துகளாகவும் ஒன்று மட்டும் ஐந்திர னார் உருவாக்கிய பிராமி எனும் கடைக்கழகத் தமிழ் எழுத்தாகவும் உள்ளது. இது சிந்துவெளி நாகரிகம் மறைந்த பின் புதிய எழுத்து உருவாகிய இரு வகைக் கலப்பு எழுத்து முத்திரையாக உள்ளது. இதே போன்று வேலூர் மாவட்டத்துச் சின்னப் பாலத்திலுள்ள பாறை ஓவியத்தில் காவு ஆத்தி என எழுதப்பட்டுள்ள எழுத்துகளில் ஐந்து எழுத்துகள் சிந்துவெளி எழுத்தாகவும் இறுதியில் உள்ள எழுத்து மட்டும் ஐந்திரனார் உருவாக்கிய தமிழ் (பிராமி); எழுத் தாகவும் உள்ளது. இத்தகைய கலப்பு எழுத்து முத்திரை ஒன்று கூட அரப்பா, மொகஞ்சதாரோ பகுதிகளில் கிடைக்க வில்லை. இதிலிருந்து சிந்துவெளி நாகரிகம் மறைந்த உடனே தமிழ் (பிராமி); எழுத்து கண்டுபிடிக் கப்பட்டது என்பது உறுதியாகிறது. தொ’ என்பதை பலுக்கும்(உச்சரிக்கும்);போது மெய்யெழுத்தை முன்னாகவும் உயிரெழுத்தைப் பின்னாகவும் உச்சரிக்க வேண்டும் என்பதை “மெய்யின் வழியது உயிர் தோன்று நிலையே” எனும் நூற்பாவில் தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார். எழுதும்போதும் மெய் முன்னாகவும் உயிர் பின்னாவும் தனித்தனியாக எழுதும் அசையெழுத்து இயல்பை இடைக்கழகக் காலத்தில் பெருநாரை இலக்கணம் புலப்படுத்தியது என்பதை லோத்தல் முத்திரையில் இடம்பெற்ற த்ஒ (-); தொ’ எழுத்து காட்டுகிறது. ஐந்திரனார் இவற்றை ஒரே எழுத்தாக மாற்றினார். த்இஎன எழுதப்படுவதைத் தி(.); என ஐந்திரனார் மாற்றியதைச் சின்னப்பாலம் பாறை ஓவிய எழுத்து காட்டுகிறது. ஆரியர் சிந்துவெளியில்புகுந்த காலத்தில் தமிழர் ஒலைச் சுவடிகள் வைத் திருந்ததை இருக்குவேதம் குறிப்பிடுகிறது. கி.மு.1800-1600 காலங்களில் படிப்படியாக ஈரானிய ஆரியர் சிந்துவெளியில் குடியேறத் தொடங் கினர். கி.மு.1600-1300 வரை அவர்கள் அங்குள்ள தமிழர்களோடு கலந்து அமைதியாக வாழ்ந்த நாக ரிகச் சான்றுகள் கிடைத்துள்ளன. இக்காலத்திய பானை ஒடுகளை ஆராய்ந்த தொல்பொருளாய்வு வல்லுநர்கள் இக்கருத்தை வெளியிட்டுள்ளனர். இவர்கள், அகரர் நல்லவர் எனவும் கரர் தீயவர் எனவும் குறிப்பிட்டுள்ளனர். இக்காலத்தில் தமிழ்மொழி முற்றிலும் மாறி விட்டது. கி.மு.1300-கி.மு.1100 கால அளவில் இருக்கு வேத கால ஆரியர் சிந்துவெளிப் பகுதியில் புகுந்தனர் என்பதால் ஐந்திரம் அரங்கேறிய ஆண்டு 1850 என வரையறுப்பதில் ஐயப்பாடு தோன்ற வாய்ப்பில்லை. இருக்குவேதஆரியர்காலத்தில் தமிழிலக்கணம் வட நாட்டில் தோன்றியிருக்க முடியாது. மேலும் சில சான்றுகள்: சிந்துவெளி நாகரிகக் காலத் தமிழ் எழுத்து களில், மெய்யெழுத்துக்குப் புள்ளியிடும் வழக்கம் இல்லை. அக்காலத்தில் இசைத்தமிழின் தேவைக்காக அசையெழுத்துகளைப் பெருநாரை இலக்கணம் வகுத்துத் தந்துள்ளது எனும் உண்மை சிந்துவெளி முத்திரை எழுத்துகளாலும் தமிழ்நாட்டுப்பாறை ஓவிய எழுத்துகளாலும் உறுதிப்பட்டுள்ளது. அசையெழுத்தில் நேரசை நிரையசைகள் உள்ளன. த்த என்பதும் நேரசை ‘த’ என்பதும் நேரசை, ஆதலால் இரண்டுக்கும் ஒரே எழுத்து வடிவம் கொள்வது அக்காலத்தில் தவறாகக் கருதப் படவில்லை. ஆனால் ஐந்திரனார் இந்தக் குழப் பத்தைத் தீர்ப்பதற்காக மெய்யெழுத்துக்குப் புள்ளி யிடும் வழக்கத்தைப் புதிதாகப் புகுத்தினார். இது விந்திய மலை வரை பரவியதற்கான சான்று சாத வாகன மன்னர்களின் தமிழ் பிராமி எழுத்திலும் கிடைத்துள்ளது. இதில் வசிட்டி எனும் மன்னன் பெயரில் (கி.மு.100);ட் புள்ளி பெற்றுள்ளது. “மெய்யிறெல்லாம் புள்ளியொடு நிலையல்’ எனத் தொல்காப்பியரும் ஐந்திரனார் வகுத்துத் தந்த புதிய இலக்கண நெறியை வழிமொழிந்துள்ளார். சிந்துவெளி அசையெழுத்தில் உயிர் நெட் டெழுத்து இரண்டு குறில் எழுத்துகளாக அஅ(ஆ);, இஇ(ஈ); என எழுதப்பட்டது. இந்த முறையையும் மாற்றி உயிர் நெடில்கள் ஒரே எழுத்தாக ஆஈ என எழுதும் முறையை ஐந்திரனார் உருவாக்கித் தந்தார். ஐகார ஒளகாரங்களுக்கு மட்டும் குறில் எழுத்து இல்லாததால் அவற்றின் குறில் வடிவத்தை நெடி லாக்க முடியவில்லை. அந்த இரண்டு எழுத்துகள் ஐந்திரனார்க்கு முந்தைய பெருநாரை இலக்கணப்படி அஇ(ஐ);, அ.உ(ஒள); என முன்பே எழுதப்பட்ட வடிவில் அப்படியே புதிய தமிழ் (பிராமி); வடிவத்திலும் ஏற்றுக் கொண்டார். இதனை ஏற்றுக்கொண்டு “அகர இகரம் ஐகாரமாகும்” எனவும், “அகர உகரம் ஒளகாரமாகும்” எனவும் குறிப்பிட்டார். பெருநாரை, ஐந்திரம், தொல்காப்பியம் ஆகிய மூன்றிலும் பல்லாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் பொது எழுத்திலக்கணம் இது என்பது கூர்ந்து நோக்குவோர்க்கு வியப்பும் பெருமிதமும் மேலிடச் செய்யும். இதனை விளங்கிக் கொள்ளாத நச்சினார்க் கினியர் போன்ற உரையாசிரியர்கள் இந்தத் தொல் காப்பிய நூற்பா ஐகார ஒளகாரத்தின் போலியைக் காட்டியது எனப் பிதற்றியுள்ளனர். |
ஐந்திரவிலக்கணம் | ஐந்திரவிலக்கணம் aindiravilakkaṇam, பெ. (n.) முந்து தமிழ் ஐந்திர இலக்கணத்தை அடிப்படையாகக் கொண்டு இந்திரவியாகரணம் என்னும் பெயரில் இயற்றப்பட்ட வடமொழி இலக்கணநூல். (சில்ப.11 – 99,உரை.);;{} grammar ascribed to Indra modelled after the ancient Tamil treatise [ஐந்திரம் + இலக்கணம்.] |
ஐந்திரி | ஐந்திரி aindiri, பெ. (n.) இந்திரனைத் திக்குக் குழந்தையாகக் கொண்ட கிழக்கு (சூடா.);; East, being Indra’s Quarter. [Skt. aindri → த. ஐந்திரி.] |
ஐந்து | ஐந்து1 aindu, பெ. (n.) 1. ஐந்து என்னும் எண்ணுப்பெ யர், நான்கின்மேல் ஒன்று; number five. 2. ‘ரு’ என்னும் எண்ணுக்குறியீட்டுக்குரிய தமிழ் எண்ணுப் பெயர்; name of the fifth numerical number ‘ரு’ in Tamil. மறுவ. கை, கைந்து, ஐந்து, அஞ்சு, பாதம், பாஞ்சு, பஞ்ச. ம. ஐந்து, அஞ்சு; க. ஐது; து. அய்ன்; குட. அஞ்சி; தெ. அயிது; கொலா. அய்த், அயித்; பட. அய்து; கைக். அஞ்; கட, அயிது; எரு, அஞ்சு; கோத. அஞ்செ; குரும். அய்து;இரு. அய்ந்து. Siam (karen);, yai, yea; Laos. ha; Mithan Naga aga; Chinese (cauton); ng; Mag. ot; Hung ot; Tib. ina; Malay dima; Anna n-an; viet n-an. [கை → கைந்து → ஐந்து. கையிலுள்ள ஐந்து விரல்களின் அடிப்படையில் தோன்றிய எண்ணுப்பெயர் தொடக்கத்தில் கை – கைந்து என வழங்கிப் பின்னர் ஐந்து எனத் திரிந்தது. பாதத்தின் ஐந்து விரல்களை எண்ணிய மக்கள் கூட்டத்தினர் அதிலிருந்து penta – panch என்னும் சொற்களைத் திரித்துக் கொண்டனர். எனினும் அவற்றின் மூலமாகிய பாதம் என்ப தும் தமிழ்ச் சொல்லாகவே இருப்பது அறியத்தக்கது.] கை (ஐந்து); முதல்வகை அடிநிலைத்திரிபுற்றவை. jap. Go; Amoy. Go; Tib (gyarung); kung; Tib (horpa); gme; Tib. Gna; Nep. gno, gna; Burm nga; Buta nga. கை → கைந்து → கைன்க் → சைன்க். இரண்டாம் வகை அடிநிலைத்திரிபுற்றவை. Georg. khouthi: Heb Chamischah; Ar. kh-arn-she. Chams; Iraq. kh-am-set; o ln coic; lri cuif; L quin-que; F cinf; Port cinco; Sp. cinco; It cinque; Rum. cinci; Esp. kvin; Thai har. கை → கைந்து → ஐந்து மூன்றாம் வகை அடிநிலைத்திரிபுற்றவை திரவிடமொழிகளில் பெருக வழங்குகின்றன. எனினும் இவற்றின் ஊடாட்டம் கிழக்காசிய மொழிகளிலும் அங்கேரி மொழியிலும் காணப்படு கிறது. இவை திரவிட இனச்சொற்பட்டியலில் முன்னர்த் தரப் பட்டுள்ளன. ஐந்து2 aindu, பெ. (n.) நைந்துபோதல்; being worn out, unfit for use. இந்தத் துணி ஐந்து ஐந்தாகக் கிடக்கிறது (இ.வ.);. [நை → நைந்து → ஐந்து. நைதல் = பழையதாகித்தானே கிழிதல், பயனற்றுப்போதல்.] |
ஐந்து – து முதல்வகை முடிநிலைத்திரிபுற்றவை. | ஐந்து – து முதல்வகை முடிநிலைத்திரிபுற்றவை. O.Egy, dyw; Copt. Tw; Mangol. Tunnya; Atri (swahili);, tano. |
ஐந்து – து – சு மூன்றாம் வகை முடிநிலைத்திரிபுற்றவை. | ஐந்து – து – சு மூன்றாம் வகை முடிநிலைத்திரிபுற்றவை. Afri. (somal) san; Gondi. seiung. Gayeti. Seiyung. பாதம் – பெண்தெ – பை (பாதத்திலுள்ள ஐந்து விரல்கள்); முதல் வகை அடிநிலை முடிநிலைத் திரிபுற்றவை. L pente; Poli pents; Serbo. pet; O. sla. Peti; Russ. Pyat; Basq. Bost, bortz; Czech. pet; Turk. bes; Gk. ponti; Nep-(Khaling); bhong. Nep (Tharu); pacher Naga. pangu, pungu, banga; Burm (Kumi); pan; Burm-{kami) pangna. Sinh. phai, pahai. பாதம் – பாஞ்சு – பஞ்ச – விசு இரண்டாம் வகை அடிநிலை முடிநிலைத் திரிபுற்றவை. SKt. Panj. (vedic.pansa);; Sind. Punj; Brah.panj; Kash. panch, pamb; Assa. Paach; Mar, Arj, Ori, Beng paanch. Nep. panch; Beng (Kocch);. Panch; Gond. Panchu; chentu panch; Lith. Penk; G funf; yid. finef; Swe, dan, Norw fem; OE fiv; E five; Goth. finf; Dut. visf; Fin-vishi, viden. ஐந்தின் தொடக்க நிலைச்சொற்களான கை – கைந்து என்பவை தமிழில் வழக்கிழந்தன. கைவிரல்களின் அடிப்படையில் தோன்றிய ஐந்தைக்குறிக்கும் எண்ணுப்பெயர்களே போதும் என்ற நிலையில் பாதத்தின் விரல்களைக்குறித்த மற்றொரு எண்ணுப்பெயர் ஐந்தைக் குறிக்கத் தோன்றியது ஏன் என்று வினாவுவாரும் உளர். இருபது வரை எண்ணுவதற்காக இரு கைகளிலும் இரு பாதங்களிலும் உள்ள விரல்களை எண்ணு வது மரபாக இருந்தது. ஆதலால் இந்தைரோப்பிய மொழியில் நாளடைவில் பாதத்தையும் ஐந்தைக் குறிக்கும் எண்ணுப்பெய ராக்கிக் கொண்டனர். பாதத்தின் அடியாகத் தோன்றிய எண் ணுப்பெயர் அடிநிலை முடிநிலை ஆகிய இருவகைத் திரிபுக ளும் ஒருசேரப் பெற்றிருப்பதால் இச்சொல்லை வழங்கிய மக்கள் பிறமொழியாளரொடு பெருக ஊடாடியிருக்கின்றனர் எனத்தெரிகிறது. கையின் அடியாகத் தோன்றிய எண்ணுப்பெயர் அடிநிலைத்தி ரிபுகளையும் பின்னர் முடிநிலைத்திரிபுகளையும் பெற்றிருப்ப தால் இச்சொல்லை வழங்கிய மக்கள் வாழையடி வாழையாக ஒரு குடும்பத்திலிருந்து பல்வேறு திசைகளில் சென்றவர்கள் எனத் தெரிகிறது. முடிநிலைத் திரிபுபெற்ற மொழிகள் ஆப்பி ரிக்கா, எகுபது, நட்டாசியம், கிழக்காசியா ஆகிய தொலைவி டங்களில் ஊடாட்டம் பெற்றிருப்பதால் ஐந்து என்னும் சொல் லும் அதற்கு மூலமான கை = கைந்து என்னும் சொற்களும் தோன்றிய காலம் ஞாலமுதன்மொழியின் தொடக்ககாலம் எனலாம். இவற்றைச் சிற்சில மொழிகள் தக்கவைத்துக்கொண் டிருப்பது உடன் கொண்ட சொல்வளமாகிய முன்னோர் சொற்காப்பைக் காட்டும் ஒரு சில தொன்முது சொற்களைத் தக்க வைத்துக்கொண்டிருப்பதால் விடுபட்ட சொல் வரலாற்றுத் தொடர்பைக் காண உதவுகிறது. |
ஐந்து – து – உ – வு. இரண்டாம் வகை முடிநிலைத்திரிபுற்றவை. | ஐந்து – து – உ – வு. இரண்டாம் வகை முடிநிலைத்திரிபுற்றவை. Chine (mand) wu; Korea. oo; Tib (Gyami);. wu. wuku; Fin. wusi. |
ஐந்துகில் போர்ப்போர் | ஐந்துகில் போர்ப்போர் aindugilpōrppōr, பெ. (n.) ஐந்து துணிகளைப் போர்த்துக் கொள்ளும் பெளத்தர்; Buddhists, as those who cover themselves with five clothes. “ஐந்துகில்போர்த்துழலு நீதர்” (தேவா.239,10);. (செ.அக.);. [ஐந்து + துகில் + போர்ப்போர்.] ஐந்து சுண்ணம் __, பெ. (n.); 1. கடல் நுரை, கிளிஞ்சல், குக்குடம், வலம்புரி, வெள்ளைக் கல் முதலியவைகளை நீற்றிய சுண்ணங்கள்; calcium carbonates obtained by calcining sea-froth, bi-valve shell, egg-shell, conch (turning to the right); and lime stone. 2. நண்டு, நத்தை, சங்கு, வெடியுப்பு, கடல்நுரை ஆகிய இவ்வைந்தையும் தாளித்த சுண்ணாம்பு; lime (chunam); obtained by burning the following five substa- nces viz., crab-shell, snail shell, conch, nitra and sea froth. [ஐந்து + சுண்ணம்.] |
ஐந்துணவு | ஐந்துணவு ainduṇavu, பெ. (n.) கடித்தல், நக்கல் பருகல், விழுங்கல், மெல்லல் முதலிய ஐந்து வகை யால் உண்ணுதற்குரிய உணவுப்பண்டம் (சூடா.);; five kinds of food differentiated according to the manner of taking them viz., biting, licking, drinking, swallowing and munching. (செ.அக.);. [ஐந்து + உணவு.]. |
ஐந்துண்டி | ஐந்துண்டி ainduṇṭi, பெ. (n.) ஐந்துணவு (திவா.12,71); பார்க்க;see {}. [ஐந்து + உண்டி.] |
ஐந்துபல்நங்கூரம் | ஐந்துபல்நங்கூரம் aindubalnaṅāram, பெ. (n.) நங்கூர வகை; graphnel anchor, having five flukes or prongs. (செ.அக.);. [ஐந்து + பல் + நங்கூரம். நாஞ்சில் கூர் → நாங்கூர் → நங்கூரம்.] |
ஐந்துபா | ஐந்துபா aindupā, பெ. (n.) வெண்பா, அகவல், கலி, வஞ்சி, மருட்பா யெனும் ஐ வகையான பாக்கள் (காரிகை);; five varieties of verse. (செ.அக.);. [ஐந்து + பா.] |
ஐந்தெழுத்து | ஐந்தெழுத்து aindeḻuttu, பெ. (n.) நமசிவாய எனும் ஐந்தெழுத்து; five sacred syllables of saivites – {}. [ஐந்து + எழுத்து.] |
ஐந்தை | ஐந்தை aindai, பெ.(n.) சிறுகடுகு; Indian mustard. “மறுமையை யைந்தை யனைத் தானுஞ்… சிந்தியார்” (நாலடி.329); (செ.அக.);. [ஐ = சிறியது. ஐ → ஐந்தை (சிறிய கடுகு);.] |
ஐந்தொகை | ஐந்தொகை1 aindogai, பெ. (n.) வேற்றுமைத்தொகை, வினைத்தொகை, பண்புத்தொகை, உவமைத் தொகை, உம்மைத்தொகை என்பன; five compounds in Tamil Grammar. “ஐந்தொகை மொழிமேல் பிறதொகல் அன்மொழி” (நன்னூல்-369);. [ஐந்து + தொகை.] ஐந்தொகை2 aindogai, பெ. (n.) விழுமுதல், வரவு, செலவு, இருப்பு, ஆதாயம் முதலிய ஐவகை விளக் கங் காட்டுங் கணக்கு (இ.வ.);; balance sheet, contain- ning five particulars. (செ.அக.); [ஐந்து + தொகை.] |
ஐந்தொழிலன் | ஐந்தொழிலன் aindoḻilaṉ, பெ. (n.) ஐந்து தொழிலையு டைய சிவன்;{} who performs five functions. (செ.அக.);. [ஐந்து + தொழிலன்.] |
ஐந்தொழில் | ஐந்தொழில் aindoḻil, பெ. (n.) ஐந்து தொழில்; five functions of God. “ஐந்தொழிற்கு மப்புறமாய்” (குமர.பிர.கந்தர்.5);. (செ.அக.);. [ஐந்து + தொழில் – ஐந்தொழில். படைத்தல், காத்தல், அழித் தல், மறைத்தல், அருளல் என்பன.] |
ஐந்நிலை | ஐந்நிலை ainnilai, பெ. (n.) உடம்பினுட்பட்ட ஆதன் பயன்துய்க்கும், நனவு, கனவு, உறக்கம் (கழுத்தி); பேருறக்கம் (துரியம்);, உயிர்ப்படக்கம் (துரியாதீதம்); என்ற ஐவகை நிலை (திருமந்.);; five conditions or states of the embodied soul. [ஐந்து + நிலை.] |
ஐந்நூறு | ஐந்நூறு ainnūṟu, பெ. (n.) ஐந்து நூறு; five hundred. (சா.அக.);. க. ஐநூறு. அய்நூறு, அயிநூறு; ம. அஞ்ஞாறு; கு.அஞ்ஞபாரி; து. அய்நூரு; தெ. ஏநூறு;பட. ஐநூறு. [ஐந்து + நூறு.] |
ஐனவர் | ஐனவர் aiṉavar, பெ. (n.) சேரநாட்டு மலை வாழ்நர்; hill tribe in Kerala. [ஐன் → ஐனவர்.] |
ஐனூண் | ஐனூண் aiṉūṇ, பெ. (n.) மாப்பிள்ளைக்குச் செய்யும் சிறப்பு விருந்து; special feast given to the bridegroom. (சேரநா.);. ம. ஐனூண். [ஐ → ஐன் + ஊண் – ஐனூண்.] |
ஐன் | ஐன் aiṉ, பெ. (n.) 1. அழகு; beauty. 2. நேர்த்தி; fineness. இது ஐனான துணி (கொங்.க.); 3. சிறப்பு, மேன்மை; excellence. ஐனான தேன் (இருள.);. [ஐ → ஐன். ஐ = அழகு.] |
ஐப்பசி | ஐப்பசி aippasi, பெ. (n.) 1. ஏழாவது மாதம் (உபதேசரத். 6);; the seventh Tamil month, October- November. 2. அசுவதி இரவை (சீவக.1770);; the first naksatra. த.வ. சிலைத் திங்கள். [Skt. asrayuj → த. ஐப்பசி.] |
ஐப்பசிக்குழப்பம் | ஐப்பசிக்குழப்பம் aippasikkuḻppam, பெ. (n.) ஐப்பசி மாதத்தில் தோன்றுகிற புயல் (யாழ்ப்.);; rough weather at the setting in of the north-east monsoon in October. த.வ. சிலைப்புயல். |
ஐப்பசிமுழுக்கு | ஐப்பசிமுழுக்கு aippasimuḻukku, பெ. (n.) துலை மாதத்தில் காவிரியில் போடும் குளியல் (இலவ.);; bathing in the Kaveri during the month of Aippaci. த.வ. சிலைமுழுக்கு. |
ஐமவதி | ஐமவதி aimavadi, பெ. (n.) பார்வதி (திருவானைக்கோச்செங்.81);; Parvati. [Skt. Haimavati → த. ஐமவதி.] |
ஐம்படைத்தாலி | ஐம்படைத்தாலி aimbaḍaittāli, பெ. (n.) கழுத்திலே பிள்ளைகளணியும் ஐந்து படைக்கலன் உருவமைந்த அணி; gold pendant worn by children in a necklace bearing in relief of five weapons of {}, as an amulet. “ஐம் படைத்தாலி… குறுநடைப் புதல்வர்க்கு” (மணி. 7,56);. (அபி.சிந்.);. [ஐந்து + படை + தாலி. சங்கு, சக்கரம், வில், வாள், மறத்தண்டு (கதை); என்பவற்றின் உருப்பொறித்த தாலி.] |
ஐம்படைப்பருவம் | ஐம்படைப்பருவம் aimbaḍaipparuvam, பெ. (n.) ஐம்படைத்தாலியையணிதற்குரிய குழந்தைப்பரு வம்; stage of childhood appropriate for wearing the aimbadai-t-{}. “ஐம்படைப் பருவத்து வெம்படை தாங்கி” (S.l.l.ii,310);. (செ.அக.);. [ஐந்து + படை – ஐம்படை + பருவம்.] |
ஐம்பது | ஐம்பது aimbadu, பெ. (n.) ஐந்து பத்துகள் கொண்ட எண்; fifty, numeral fifty. (செ.அக.);. ம. ஐம்பது, அம்பத்து; குட, அயிம்பதி; து. ஐவ; தெ. என்பதி, யாபய், யாபை; க. அய்வத்து, அயிவத்து, ஐவத்து; பட. ஐவத்து; துட. என்பொத்; இரு. அம்படு;கோத. எய்வத். அய்வத். [ஐந்து + பத்து.] |
ஐம்பருத்தி | ஐம்பருத்தி aimbarutti, பெ. (n.) ஐந்து வகைப் பருத்தி; five varities of cotton. [ஐந்து + பருத்தி – ஐம்பருத்தி.] ஐவகைப் பருத்திகள்: வெண்பருத்தி, செம்பருத்தி, உப்பம் பருத்தி, தாளிப்பருத்தி (கொடிப்பருத்தி);. இலாடன் பருத்தி, போலிப் பருத்திகளைந்து:- பூப்பருத்தி, வேளப்பருத்தி, எருக் கம்பருத்தி, பேய்ப்பருத்தி, காட்டுப்பருத்தி. |
ஐம்பான்முடி | ஐம்பான்முடி aimbāṉmuḍi, பெ. (n.) மகளிர் கூந்த லின், கொண்டை, குழல், பனிச்சை, முடி, சுருள் (திவா.); என்ற ஐவகை முடி; five modes of dressing woman’s hair. [ஐந்து + பால் + முடி – ஐம்பான்முடி.] கொண்டை, குழல், பனிச்சை, முடி, சுருள் என்பனவற்றுள் முடி. சுருள் என்னும் இரண்டை அளகம் துஞ்சை எனக் குறிப்பிடுவதுண்டு. கொண்டை = பக்கங்களில் முடிவது. குழல் = கருட்டி (முறுக்கி); முடிக்கப்படுவது. பனிச்சை = உச்சியில் கூராகக்கோபுரம் போல் முடிவது. அளகம் (முடி); = நெளிகூந் தல் ஒழுங்கு. துஞ்சை (கருள்);. = பின்னித்தொங்கவிட்ட பின்சடை. |
ஐம்பால் | ஐம்பால்1 aimbāl, பெ. (n.) ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் என்ற ஐந்து பால் பிரிவுகள் (தொல்.பொருள்.644);; the five parts in which nouns and finite verbs are divided. [ஐந்து + பால் – ஐம்பால்.] ஐம்பால்2 aimbāl, பெ. (n.) ஐந்து வகையாக முடிக்கப்ப டும் மகளிர் கூந்தல்; woman’s hair, from its being dressed in five modes. “வண்டினங்கள்… அம்பராவுங் கண்மடவாரைம்பாலணையும்” (தில்.பெரியதி.7,5,3);. (செ.அக.);. [ஐந்து + பால் – ஐம்பால். பால் = வகை. ஐம்பான்முடி பார்க்க;see {}. |
ஐம்புன்னை | ஐம்புன்னை aimbuṉṉai, பெ. (n.) ஐந்து வகைப் புன்னை மரங்கள்; five kinds of poon tree. [ஐந்து + புன்னை – ஐம்புன்னை.] அவை: 1. புன்னை அல்லது புன்னாகம், 2. கரபுன்னை; 3. காட்டுப்புன்னை; 4. சிறுபுன்னை, 5. மூவிலைப்புன்னை. |
ஐம்புலம் | ஐம்புலம் aimbulam, பெ. (n.) ஐந்து உறுப்புகளுக்கும் உரிய சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் ஐந்து உணர்ச்சிகள்; sensations of the five sensory organs. “ஐம்புலனுமொண்டொடி கண்ணே யுள” (குறள்.1101);. (செ.அக.);. [ஐந்து + புலம்.] |
ஐம்பூதம் | ஐம்பூதம் aimbūtam, பெ. (n.) இயற்கையின் ஐவகைப் பாகுபாடுகள் (மணி.27,89);; five elements. (செ.அக.);. [ஐந்து + பூதம்.] |
ஐம்பெருங்காப்பியம் | ஐம்பெருங்காப்பியம் aimberuṅgāppiyam, பெ. (n.) சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி என்னும் ஐம்பெரும் இலக்கியங்கள் (நன்.387, மயிலை);; the five great epics viz, {} (செ.அக.);. [ஐந்து + பெரும் + காப்பியம்.] |
ஐம்பெருங்குற்றம் | ஐம்பெருங்குற்றம் aimberuṅguṟṟam, பெ. (n.) கொலை, பொய், களவு, கள்ளுண்ணுதல், சூது என்ற ஐவகைத் தீச்செயல்கள்; the five heinous sins. (செ.அக.);. [ஐந்து + பெரும் + குற்றம்.] |
ஐம்பெருங்குழு | ஐம்பெருங்குழு aimberuṅguḻu, பெ. (n.) அரசர்க்கு இன்றியமையாதவரான அமைச்சர், அந்தணர், படைத்தலைவர், தூதர், ஒற்றர் என்னும் ஐவகை அரசியற்றலைவர்; five chief officers of a king. “ஐம்பெருங் குழுவு மெண்பே ராயமும்” (மணி.1,17);. (செ. அக.);. [ஐந்து + பெரும் + குழு.] |
ஐம்பொன் | ஐம்பொன் aimboṉ, பெ. (n.) பொன், வெள்ளி, செம்பு, இரும்பு, ஈயம் என்ற ஐவகை மாழைகள் (வின்.);; five chief metals, viz., gold, silver, copper, iron, aluminium. ம. ஐம்பொன்னு. [ஐந்து + பொன்.] |
ஐம்பொறி | ஐம்பொறி aimboṟi, பெ. (n.) மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்துறுப்புகள் (திவா.);. five organs of sense viz., body, mouth, eye, nose and ear. (செ.அக.);. [ஐந்து + பொறி.] |
ஐம்மீன் | ஐம்மீன் aimmīṉ, பெ. (n.) 1. கைம்மீன் (அத்தம்); (பிங்.);; 13th naksatra, so called because of its five principal stars. 2. உருள் (ரோகிணி);; fourth naksatra (செ.அக.);. [ஐந்து + மீன்.] |
ஐம்முகக்கணை | ஐம்முகக்கணை aimmugaggaṇai, பெ. (n.) ஐந்து முனைகளைக் கொண்ட ஒருவகை அம்பு (வின்.);; arrow with five points. [ஐந்து + முகம் + கணை.] |
ஐம்முகன் | ஐம்முகன் aimmugaṉ, பெ. (n.) ஐந்து முகங்களையு டைய சிவன்;{}, the five-faced. (செ.அக.);. ம. ஐம்முகன். [ஐந்து + முகன்.] |
ஐம்மை | ஐம்மை aimmai, பெ. (n.) 1. தகட்டு வடிவு (பிங்.);; thinness and flatness, as of a plate. 2. நெருக்கம் (வின்.);; closeness, crowdedness. (செ.அக.);. [ஐ → ஐம்மை.] |
ஐய | ஐய1 aiya, கு.பெ.எ. (adj.) வியக்கத்தக்க; wonderful “ஐயகோங்குறைத்தர” (கலித்.25);. [ஐ = பெருமை, வியப்பு. ஐ → ஐய.] ஐய2 aiya, கு.பெ.எ. (adj.) 1. நொய்ய; small, weak. “ஒரு தனக்குள்ள வைய படையையும்” (திருவா லவா.46,12);. 2. அழகிய; beautiful. [ஐ = நுண்மை, சிறுமை. ஐ → ஐய.] ஐய3 aiya, இடை. (int..) 1. வியப்புக்குறிப்பு; exclamation of wonder. “ஐய விண்ணதொ ரற்புத மாயையை” (திருவிளை.விடை.23);. 2. இரக்கக்குறிப்பு; exclama- tion of pity, concern “ஆதுல ரானீ ரந்தோ வையவென் றமுது” (திருவிளை.மாமனாக.23); (செ.அக.);. [ஐ → ஐய.] |
ஐயகோ | ஐயகோ aiyaā, இடை. (int.) இரக்கம், துயரம் ஆகிய வற்றை வுணர்த்துங் குறிப்பு; exclamation of pity, sorrow “ஐயகோ வென் றலம்வருவாள்” (வெங்கைக்கோ.246); (செ. அக.);. [ஐயன் → ஐயவோ → ஐயகோ.] |
ஐயக்கடிஞை | ஐயக்கடிஞை aiyakkaḍiñai, பெ. (n.) இரப்போர் கலம்; alms bowl. “ஐயக் கடிஞை கையினேந்தி” (மணி.13,109); (செ.அக.);. [ஐயம் + கடிஞை. குடிகை → கடிகை- → கடிஞை.] |
ஐயக்காட்சி | ஐயக்காட்சி aiyakkāṭci, பெ. (n.) 1. தோன்றினதொரு பொருளை அதுவோ இதுவோ என்று இரண்டுறக் கருதுகை(சி.சி.அளவை.3,மறைஞா.);; vision or perce- ption too dim to decide whether a thing is this or that 2. கண்மாயம்; illusion. (செ.அக.);. [ஐயம் + காட்சி – ஐயக்காட்சி.] |
ஐயங்கார் | ஐயங்கார் aiyaṅgār, பெ. (n.) 1. திருமாலிய ஆசான்; learned Vaisnava priest. 2. திருமாலிய வகுப்பாரின் பட்டப்பெயர் (T.A.S.i,145);; title of Sri {}. தெ. அய்யகாரு, ஐவாரு. [ஐயன் + கார் – ஐயங்கார். அவர் → வார் → தெ. வாரு → காரு. ஐயர், ஐயனார், ஐயன்மார் என்பன தமிழ்வடிவங்கள். ஐயங்கார் என்பது தெலுங்கு வாயிலாக இராமானுசர் காலத்திற் குப்பின் தமிழில் புகுந்த திசைச்சொல்.] |
ஐயங்கொள்(ளு)-தல் | ஐயங்கொள்(ளு)-தல் aiyaṅgoḷḷudal, 16.செ.கு.வி. (v.i.) நம்பிக்கை தளர்தல்; to have doubt, to lose faith. [ஐயம் + கொள்.] |
ஐயடிகள் | ஐயடிகள் aiyaḍigaḷ, பெ. (n.) 1. மதிக்கத்தக்க பெரி யோர்க்கு வழங்கும் மதிப்புரவு உயர்மொழி; honorific title of respectable religious persons. 2. சமணமுனிவர்; Jain Monk. [ஐயம் = இரந்து உண்ணுதல். ஐயம் + அடிகள் – ஐயடிகள். ஐயம் ஏற்று உண்ணும் சமண முனிவர்.] |
ஐயடிகள் காடவர் கோன்நாயனார் | ஐயடிகள் காடவர் கோன்நாயனார் aiyaḍigaḷgāḍavarāṉnāyaṉār, பெ. (n.) அறுபத்து மூன்று நாயன்மாருள் ஒருவர் (பெரியபு.);; பல்லவ குலத்து மன்னராக இருந்தவர்; canonized {} saint, one of 63. author of the {}, and a Pallava Prince. (செ.அக.);. [ஐயடிகள் + காடவர் கோன் + நாயனார். ஐயடிகள் = முனிவர், சமணமுனிவர்க்குரிய மதிப்புரவு உயர்மொழி. காடவர் = பல்லவர்க் குரியபெயர். இவர் பல்லவ அரசர் குடியைச் சார்ந்தவரும் சமண முனிவராக இருந்து பின்னர், சிவனடியா ராக மாறியவரும் ஆகிய நாயனார்.] |
ஐயனாரிதனார் | ஐயனாரிதனார் aiyaṉāridaṉār, பெ. (n.) புறப்பொருள் வெண்பாமாலையாசிரியர்; author of the {}. (செ.அக.);. [ஐயன் + ஆரிதன் + ஆர் – ஐயனாரிதனார். ஐயன் = சமணமுனி வர்க்கு வழங்கிய மதிப்புரவு உயர்மொழி. அருகதன் → ஆரிதன். ஆர் – உயர்வுப் பன்மையீறு.] |
ஐயன் | ஐயன்1 aiyaṉ, பெ. (n.) 1. முனிவன் (பிங்.);; sage. 2. ஆசான் (பிங்.);; priest, teacher, preceptor. 3. அண்ணன்; brother. “முன்னின்று மொய்யவிந்தார் என் ஐயர்” (பு.வெ.8,22);. 4. தந்தை (பிங்.);; father. உங்கள் ஐயன் எங்கே? (கொங்.வ.);. 5. உயர்ந்தோன் (கொ.வ.);; superior person, man of dignity, of respecta- bility. 6. தலைவன்; master. 7. அரசன்; king. 8. கடவுள்; god (செ.அக.);. ம. ஐயன்;{}, ayya, Skt. Årya. [ஐ → ஐயன் (தமி.வ.279);.] ஐயன் என்னும் சொல் ஐயா என்னும் விளிவடிவில் பாண்டி நாட்டு வெள்ளாளர், முதலியார் முதலிய பலகுலத்தாரும் தந்தையைக் குறிக்க ஆளும் சொல்லாகும். |
ஐயன்பாத்தி | ஐயன்பாத்தி aiyaṉpātti, பெ. (n.) ஐயனார் கோயில் மானியம் (புது.கல்.333);; lands granted to an {} temple (செ.அக.);. [ஐயன் + பாத்தி. பகுதி → பாத்தி.] |
ஐயன்பாழி | ஐயன்பாழி aiyaṉpāḻi, பெ. (n.) அய்யனார் கோயில்; shrine of {}. “ஐயன்பாழியி லானை” (ஈடு.1.1.5); (செ.அக.); [ஐ → ஐயன் + பாழி.] |
ஐயன்மார் | ஐயன்மார் aiyaṉmār, பெ. (n.) தமையன்மார் (கலி.107);; elder brothers. (சங்.இலக்.சொற்.);. [ஐ → ஐயன் + மார்.] |
ஐயபூழி | ஐயபூழி aiyapūḻi, பெ. (n.) பருமணல் (யாழ்.அக.);; grit, coarse sand (செ.அக.);. [ஐ → ஐய + பூழி. ஐ = பெரிய.] |
ஐயப்படு-தல் | ஐயப்படு-தல் aiyappaḍudal, 20.செ.கு.வி. (v.i.) ஐயங் கொள் பார்க்க;see {}. |
ஐயப்பாடு | ஐயப்பாடு aiyappāṭu, பெ. (n.) ஐயம்2 பார்க்க;see aiyam.2 “அறிந்தவை யையப்பா டில்லதே யொற்று” (குறள்.587);. (செ.அக.);. [ஐயம் + பாடு. படு → பாடு.] |
ஐயமறுத்தல் வினா | ஐயமறுத்தல் வினா aiyamaṟuttalviṉā, பெ. (n.) ஐயம் நீக்குதற்குக் கேட்கும் வினா (திவா.);; question with a view to clearing a doubt. (செ.அக.);. [ஐயம் + அறுத்தல் + வினா.] |
ஐயமுறல் | ஐயமுறல் aiyamuṟal, பெ. (n.) ஐயங்கொள்-தல் பார்க்க;see {}. [ஐயம் + உறல்.] |
ஐயம் | ஐயம்1 aiyam, பெ. (n.) 1. ஒரு பொருளை அதனின்று வேறுபட்ட பல பொருள்களாக உணர்தல் (தொல். பொருள்.260);; doubt, uncertainty, suspense, skepticism. 2. அகப்பொருட்டுறைகளுள் ஒன்று (இறை.2,உரை.32);; theme of doubt arising in one’s mind as to whether a damsel seen is human or some other lovable object (செ.அக.);. ம. ஐயம். [ஐ → ஐயம். ஐ = சிறுமை. ஐயம் = சிறுகுதல், ஒன்றைப் பற்றிய தெளிவு குறைவுபடுதல், நன்கு புலப்படாமை, தடுமாற்றம்.] ஐயம்2 aiyam, பெ. (n.) சிறுபொழுது (பிங்.);; short duration of time (செ.அக.);. [ஐ = சிறுமை, ஐயம் = சிறியது; சிறுபொழுது.] ஐயம்3 __, பெ. (n.); உய்த்தறிதல் (பொதி.நி.);; inference. (செ.அக.);. [ஐ = சிறுமை, ஐயம் = சிறியது, சிறிய பற்றுக்கோடு,நம்பிக்கைக் குரிய சிறு காரணம்.] ஐயம்4 aiyam, பெ. (n.) 1. இரப்புணவு (பிச்சை);; alms. “தாபதவேடத்தரையம் புகுவரால்” (திருவாச.17,9);. 2. இரப்போர்கலம்; beggar’s bowl. [ஐயன் – சமண சமயம் பரவியபோது சமணத்துறவிக்குரிய மதிப்புரவுச் சொல் (ஓ.நோ. ஐயன் + ஆரிதன்); ஐயன் → ஐயம் = சமணத்துறவிகளுக்கு இடும் உணவு. ஒ.நோ. ஐயன் + அடிகள் – ஐயடிகள் = ஐயமேற்றுண்ணும் அடிகள்.] ஐயம்5 aiyam, பெ. (n.) மோர் (யாழ்.அக.);; buttermilk. (செ.அக.);. [ஐ = மென்மை, இளக்கம், ஐ → ஐயம் = இளக்கமான அல்லது நீராளமான மோர்.] |
ஐயம்பிடாரி | ஐயம்பிடாரி aiyambiṭāri, பெ. (n.) சிற்றூர்த் தெய்வம் (இ.வ.);; female demon of the village. (செ.அக.);. [ஐயம் + பிடாரி = ஐயம்பிடாரி.] |
ஐயம்புகு-தல் | ஐயம்புகு-தல் aiyambugudal, 21.செ.கு.வி. (v.i.) இரந் துண்ணுதல்; to ask alms, beg. “ஐயம் புகுவரா லன்னே யென்னும்” (திருவாச.17,9);. [ஐயம் + புகு.] |
ஐயரவு | ஐயரவு aiyaravu, பெ. (n.) மனக்கூச்சம்;மனத்தில் தோன்றும் ஒருவித அருவருப்பு: a slid/at feeling/detachment. [ஐ+அரவு] |
ஐயர் | ஐயர் aiyar, பெ. (n.) 1. பெரியோர்; men worthy of respect “ஐயரே யம்பலவ ரருளாலிப் பொழுதணைந் தோம்” (பெரியபு.திருநாளை.30);. 2. முனிவர்; sages. 3. தேவர் (திவா.);; celestials. 4. பார்ப்பார். (திவா.);;{}. “பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே” (பாரதியார்);. 6. வீரசைவர் பட்டப்பெயர்; title of {}. விசாகப் பெருமாளையர். 7. கிறித்தவ விடை யூழியரின் (பாதிரிமார்); பட்டப்பெயர்; title of ordained ministers in the protestant churches. 8. மறவர்; warrior. 8. அரச மரபினர் (செ.அக.);; member of royal family. ம. ஐயன்; க. ஐகள்; தெ. ஐவாரு, ஐயவாரு. {} ayya; Skt. {}. [ஐயன் → ஐயர்.] |
ஐயறிவுயிர் | ஐயறிவுயிர் aiyaṟivuyir, பெ. (n.) ஐம்புலன்கள் வழியாய் அறிவடையுமுயிர் (நன்.449);; being that acquires knowledge through five senses, as a beast or a man of low intellect.. (செ.அக.); [ஐந்து + அறிவு – ஐயறிவு + உயிர்.] |
ஐயள் | ஐயள் aiyaḷ, பெ. (n.) வியக்கத்தக்கவள்; remarkable, wonderful woman. “ஐயள்” (ஐங்குறு.253);. [ஐ → ஐயள் (தமி.வ.280);.] |
ஐயவணி | ஐயவணி aiyavaṇi, பெ. (n.) உவமைப் பொருள்களின் ஒப்புமையினால் ஐயுறுவதுபோற் பேசும் அணி (அணியி.10);; figure of speech in which close resemblance between two objects leads to one of them being spoken of as if it were mistaken for the other. (செ.அக.);. [ஐயம் + அணி – ஐயவணி.] |
ஐயவி | ஐயவி aiyavi, பெ. (n.) 1. வெண்சிறு கடுகு; white mustard. “ஐயவி புகைப்பவும்” (புறநா.98,15);. 2. கடுகு (திவா.);; Indian mustard. 3. ஒரு நிறை (தொல்.எழுத். 164);; a weight. 4. கடுக்காய் (மலை.);; chebulic myrobalan. 5. கதவிற்குக் காவலாகப் புறவாயிலிலே தூக்கப்ப டும் துலாமரம்; upright bar for the gate of a fort. “பூணாவையவி தூக்கிய” (பதிற்றுப்.16);. 6. அம்புக ளின் கட்டு (பதிற்று.16, உரை);; bundle of arrows. (செ.அக.);. ம. ஐயவி. [ஐ = சிறுமை, ஐ → ஐயவி = சிறிய கடுகு, கடுகுபோல் கார்ப்புள்ள கடுக்காய். ஐ = உயர்வு. ஐயவி = துலாமரம். அம்புக் கூடு.] |
ஐயவிக்காய் | ஐயவிக்காய் aiyavikkāy, பெ. (n.) கடுக்காய் என்பதற் குக் குழூஉக் குறி; secret name for gall-nut. (சா.அக.);. [ஐயவி + காய்.] |
ஐயவித்துலாம் | ஐயவித்துலாம் aiyavittulām, பெ. (n.) தலைகளைப் பிடித்துத் திருகும்படி அமைந்திருக்கும் ஒரு மதிற் பொறி (சீவக.102.உரை);; mazine set on the walls of a fort to operate as twisting heads. (செ.அக.);. [ஐ → ஐயவி = உயரம். ஐயவி + துலாம் – ஐயவித்துலாம் = உயர்த்திக்கட்டிய துலாம்.] |
ஐயவினா | ஐயவினா aiyaviṉā, பெ. (n.) ஐயமறுத்தல் வினா (நன்.385,உரை); பார்க்க;see {}. (செ.அக.); [ஐயம் + வினா.] |
ஐயவுணர்வு | ஐயவுணர்வு aiyavuṇarvu, பெ. (n.) நிலையில்லா வறிவு (இறை.7.70);; uncertain knowledge, dist. fr. துணிவுணர்வு (செ.அக.);. [ஐயம் + உணர்வு.] |
ஐயவும்மை | ஐயவும்மை aiyavummai, பெ. (n.) உம்1 பார்க்க;see um1 (செ.அக.);. [ஐயம் + உம்மை.] |
ஐயவுவமை | ஐயவுவமை aiyavuvamai, பெ. (n.) அணிவகை (வின்.);; figure of speech. (செ.அக.);. [ஐயம் + உவமை.] |
ஐயா | ஐயா1 aiyā, பெ. (n.) 1. மதிப்புரவு குறித்த விளிப்பெயர்; sir. 2. தலைவன்; master. அந்த ஐயா என்ன சொன் னார்? (கொ.வ.); (செ.அக.);. [ஐயன் → ஐயா (விளி); விளிப்பெயரை எழுவாயாக ஆள்வது முற்றிலும் வழு.] |
ஐயாதிச்சிறுவெண்டேரையார் | ஐயாதிச்சிறுவெண்டேரையார் aiyāticciṟuveṇṭēraiyār, பெ. (n.) “இருங்கடலுடுத்த” எனப் பெருங்காஞ்சி பாடியவர்; poet, author of {}. (அபி.சிந்.);; [ஐயாதி + சிறு + வெண் + தேரையர். ஐயர் → ஐயார் → ஐயாரி → ஐயாதி. (கொ.வ.);. |
ஐயாறு | ஐயாறு aiyāṟu, பெ. (n.) திருவையாறு (தேவா.);;{}, a town in {} District with a {} shrine. [ஐந்து + ஆறு – ஐந்தாறு → ஐயாறு. ஐந்து ஆறு பாய்வதால் ஐயாறு என்று பெயர்பெற்றது.] |
ஐயாளம் | ஐயாளம் aiyāḷam, பெ. (n.) அரிமா; lion. (செ.அக.);. |
ஐயாவு | ஐயாவு aiyāvu, பெ. (n.) சிறு குழந்தைகளைச் செல்லமாக அழைக்கும் சொல்; a word of endearment while referring to children. [ஐயா-ஐயாவு] [ஒற்றை-ஒத்த+பெயரி-பேரி] |
ஐயிருவட்டம் | ஐயிருவட்டம் aiyiruvaṭṭam, பெ. (n.) கேடகம்; shield. “ஐயிருவட்டமொடு எஃகு” (திருமுருக.111);. (செ. அக.);. [ஐ + இரு + வட்டம்.] |
ஐயுணர்வு | ஐயுணர்வு aiyuṇarvu, பெ. (n.) ஐம்புலவறிவு; knowle- dge from the five senses. “ஐயுணர்வெய்தியக் கண்ணும்” (குறள்.354);. (செ.அக.);. [ஐந்து → ஐ + உணர்வு.] |
ஐயுறவு | ஐயுறவு aiyuṟavu, பெ. (n.) தெளிவின்மை; doubt, suspicion. “தெளிந்தான்கண் ஐயுறவும்” (குறள்.510);. (செ. அக.);. [ஐயம் + உறவு – ஐயுறவு. உறு → உறவு.] |
ஐயுறு-தல் | ஐயுறு-தல் aiyuṟudal, 17.செ.குன்றாவி. (v.t.) தெளிவுடெ றாமை; to doubt or suspect. “ஐயுற்றே ண்ணமுஞ் செயலும் வேறாய்” (பாரத.நிரைமீட்சி.128);. (செ.அக.);. [ஐயம் + உறு.] |
ஐயூர்முடவனார் | ஐயூர்முடவனார் aiyūrmuḍavaṉār, பெ. (n.) பாண், யன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதியை பாடிய புலவர்; ancient poet. [ஐயூர் + முடவன் + ஆர்.] |
ஐயூர்மூலங்கிழார் | ஐயூர்மூலங்கிழார் aiyūrmūlaṅgiḻār, பெ. (n.) கானப்பே ரெயில் கடந்த உக்கிரப்பெருவழுதியைப் “புலவ யிறந்த” என்று பாடிய புலவர்; Sangam poet.. [ஐயூர் + மூலம் + கிழார். ஐயூர் – இடம்பெயர். மூலங்கிழார் – பிறந்த நாண்மீன் காரணமாகப் பெற்ற பெயர்.] |
ஐயெனல் | ஐயெனல் aiyeṉal, பெ. (n.) 1. (அ); வியப்புக்குறிப்பு; uttering. “ஐ” ! expressive of wonder. “ஐயென்றா ளாயர் மகள்” (சிலப்.17,எடுத்துக்காட்டு);. (ஆ); வருத்தக் குறிப்பு; of distress or mental suffering. “ஐயெனமேவிப் பூ நிலமிசை யிருக்கும்” (சீவக.1025);. (இ); உடன்படற் குறிப்பு; of assent. “ஐயென மன்ன னேவ” (சீவக. 907);. 2. விரைவுக்குறிப்பு; onom expression of haste, hurry. “ஐயெனத்தோன்றுவர்” (சீவக.1225);. 3. அதட் டற்குறிப்பு (கொ.வ.);; exclamation expressive of rebuke intended to frighten elephant, horse, bull, etc. (செ.அக.);. [ஐ + எனல் – ஐயெனல். ‘ஐ’ – ஒலிக்குறிப்பு இடைச்சொல்.] |
ஐயே | ஐயே aiyē, பெ. (n.) 1. கிழ்மக்கள் தலைவனை விளிக்கும் ஒரு விளிப்பெயர்; a form of address used by low caste people towards their masters or persons of higher rank in the social scale. “ஐயே நானுங் கொன்றவ னல்லேன்” (திருவிளை.பழியஞ்சின.24);. 2. ஒரு வியப் புக்குறிப்பு; an exclamation of wonder. [ஐயன் → ஐயே (தமி.வ.280);.] |
ஐயை | ஐயை1 aiyai, பெ. (n.) 1. மலைமகள் (பிங்.);;{}. 2. கொற்றவை (பிங்.);;{}. 3. தவப்பெண் (சூடா.);; female ascetic. 4. ஆசிரியன் மனைவி; wife of one’s teacher. 5 தலைவி(திவா.);; mistress. 6. மகள் (பிங்.);; daughter. 7. தாய்; mother. (செ.அக.);. [ஐ → ஐயை.] ஐயை2 aiyai, பெ. (n.) 1. பெண்பால் இயற்பெயர்; fem proper name. 2. மாதரியின் மகள் (சிலப்.);; daughter of Madari. 3. தித்தனின் மகள் (அக. 6);; daughter of Tittan. [ஐ → ஐயை.] |
ஐயைந்து | ஐயைந்து aiyaindu, பெ. (n.) இருபத்தைந்து; five fives. “ஐயைந்து மறியாத மானிடரை வையம் சுமப்பது வம்பு” (திருப்பா.தனியன்);. [ஐந்து + ஐந்து – ஐயைந்து.] |
ஐயையோ | ஐயையோ aiyaiyō, இடை. (int.) ஐயோ இரக்கக்குறிப்பு; exclamation of pity, or grief (செ.அக.); தெ., க., ம., து. அய்யய்யோ. [ஐயோ + ஐயோ – ஐயையோ.] |
ஐயோ | ஐயோ aiyō, இடை. (int.) 1. வியப்புக்குறிப்பு (சூடா.);; exclamation of wonder. 2. இரக்கக்குறிப்பு (சீவக.2622, உரை);; exclamation of pity, concern. 3. வருந்தற் குறிப்பு; exclamation expressive of poignant grief “ஐயோ விதற்கோ வருந்தவமுன் செய்தாயே” (கந்தபு.அசுரேந்.7);. (செ. அக.);. தெ., க., ம., து. அய்யோ [ஐயன் → ஐயோ. (தமி.வ.280);.] |
ஐயோன் | ஐயோன் aiyōṉ, பெ. (n.) நுண்ணியன்; God, lit, a being of subtle essence. “அணுத்தருந் தன்மையி லையோன்” (திருவாச.3,45);. (செ.அக.);. [ஐ → ஐயோன்.] |
ஐராவணன் | ஐராவணன் airāvaṇaṉ, பெ. (n.) 1. இராவணனின் மாமன்; uncle of {} (சேரநா.);. 2. இந்திரன்; Indra |
ஐராவதம் | ஐராவதம் airāvadam, பெ. (n.) எட்டு திக்கு யானைகளுள் ஒன்றான இந்திரனின் யானை; Indra’s elephant said to be in the eastern quarter according to mythology, one of asta-tik-kajam. [Skt. airavata → த. ஐராவதம்.] |
ஐரி | ஐரி airi, பெ. (n.) வைக்கோல் தூறு, படப்பை; haystack. [வை + இரி – வையிரி → ஐயிரி → ஐரி.] |
ஐரை | ஐரை airai, பெ. (n.) அயிரை பார்க்க;see ayilal. |
ஐரோப்பியன் | ஐரோப்பியன் airōppiyaṉ, பெ. (n.) ஐரோப்பா கண்டத்தான்; European, white man. [Ger. Europa → Fr., Gk. Europe → த. ஐரோப்பியன்.] |
ஐலை | ஐலை ailai, பெ. (n.) அயிலை பார்க்க;see ayilal. |
ஐவகைத்தாயர் | ஐவகைத்தாயர் aivagaittāyar, பெ. (n.) ஈன்றதாய், ஊட்டுந்தாய், சீராட்டுந்தாய், கைத்தாய், செவிலித் தாய் முதலிய ஐவகைத்தாயர் (பிங்.);; five kinds of mothers. (செ.அக.);. [ஐந்து + வகை + தாயர்.] |
ஐவகைமன்றம் | ஐவகைமன்றம் aivagaimaṉṟam, பெ. (n.) வெள்ளிடை, இலஞ்சி, நெடுங்கல், பூதசதுக்கம், பாவை என்னும் பெயர்களில் காவிரிப்பூம்பட்டினத்திலிருந்த ஐந்து வகையான மன்றங்கள்; names of five city – squares in ancient {}. |
ஐவகைமலடு | ஐவகைமலடு aivagaimalaḍu, பெ. (n.) ஐந்து வகை மலட்டு நோய்கள்; ஆதி மலடு, காக மலடு, கதலி மலடு, கருப்பு மலடு, ஆண் மலடு (சா.அக.);; five kinds of barrenness. [ஐந்து + வகை – ஐவகை + மலடு. |
ஐவகைவினா | ஐவகைவினா aivagaiviṉā, பெ. (n.) அறியான் வினா, அறிவொப்புக் காண்டல் வினா, ஐய மறுத்தல் வினா, அவனறிவு தான்காண்டல் வினா, மெய்யவற்குக் காட்டல் வினா முதலிய ஐந்து வகை வினா (திவா. 12,73);; five kinds of questions. (செ.அக.);. [ஐந்து + வகை + வினா.] |
ஐவசு | ஐவசு aivasu, பெ. (n.) 1. ஈடு; substitute. 2. கைம்மாறு; recompense. 3. விளைவு; produce. [Arab. iwaz → த. ஐவசு.] |
ஐவணம் | ஐவணம் aivaṇam, பெ. (n.) ஐவண்ணம் (வின்.); பார்க்க;see {}. (செ.அக.);. [ஐவண்ணம் → ஐவனம்.] |
ஐவண்ணம் | ஐவண்ணம்1 aivaṇṇam, பெ. (n.) வயிரக்கல்வகை (யாழ்.அக.);; a kind of precious stone. (செ.அக.); [ஐந்து + வண்ணம் – ஐவண்ணம்.] ஐவண்ணம்2 aivaṇṇam, பெ. (n.) மருதோன்றி (திரு விளை.மாணிக்கம்.40);; henna (செ.அக.);. மறுவ, அழகுவண்ணம், அழவணம். [ஐ + வண்ணம் – ஐவண்ணம். ஐ = அழகு.] ஐவண்ணம்3 aivaṇṇam, பெ. (n.) பரவமகளிர் கால் விரல்களில் அணியும் நகமூடி, சலங்கைமுன்தாங்கி, மயிலடி, இடைக்காற்பீலி, நகரைமீன் என்னும் ஐவகை விரலாழிகள்; five toe – rings worn by parava women. (செ.அக.);. [ஐந்து + வண்ணம் – ஐவண்ணம்.] ஐவண்ணம்4 aivaṇṇam, பெ. (n.) கொடுக்கப்பெற்ற நெல்லை உரலில் குற்றிய பின்னர் அரிசி, நொய், நொறுக்கு (குறுணை); உமி, தவிடு என்று ஐவகை யாகப் பிரித்து வைத்தல்; classifying husked rice into five kinds. [ஐந்து → ஐ + வண்ணம். இங்கு வண்ணம் என்பது வகை.] |
ஐவனம் | ஐவனம் aivaṉam, பெ. (n.) மலைநெல்; mountain paddy, wild rice, Oryza mutica. “ஐவனம் வித்தி” (புறநா. 159,17); (செ.அக.);. ம. ஐவனம். |
ஐவர் | ஐவர் aivar, பெ. (n.) 1. பாண்டவர்கள்; five {}. “ஐவ ரென்றுல கேத்து மரசர்கள்” (கலித்.25);. 2. ஐந்து பேர்; five persons. (செ.அக.);. 3. ஐம்புலன்களை ஐவராகக் கூறும் குறிப்பு; personification of five sense organs as five persons. “ஐவரொடுங் கூடாமல்” (தாயு. பராபரக்.252);. ம. ஐவர். [ஐந்து → ஐ + அர் = ஐவர்.] |
ஐவர்களி | ஐவர்களி aivarkaḷi, பெ. (n.) கோலாட்டம்; a game of five in which they sing and dance in a ring, marking time with beats of short coloured sticks. (சேரநா.);. [ஐ → ஐவர் + களி.] |
ஐவர்ணம் | ஐவர்ணம் aivarṇam, பெ. (n.) ஐவண்ணம்2 பார்க்க;see {}. [ஐ + (வண்ணம்); வர்ணம்.] |
ஐவளம் | ஐவளம் aivaḷam, பெ. (n.) மிளகு, அகில், கோட்டம், தக்கோலம் (வால் மிளகு); குங்குமம் என்னும் மலை வளம் ஐந்து. அரக்கு, இறலி, செந்தேன், மயிற்பீலி, நாவி என்பாரும் உளர். (பரி.18,15); (சங்.இலக். சொற்.);; five products of mountain forest. [ஐந்து + வளம் – ஐவளம்.] |
ஐவாய்க்கள்ளி | ஐவாய்க்கள்ளி aivāykkaḷḷi, பெ. (n.) மான்செவிக் கள்ளி; spiral-leafy milk-hedge. (சா.அக.);. [ஐவாய் மான் → ஐவாய் + கள்ளி. ஐவாய்க்கள்ளி = ஐவாய் மானின் செவி போன்ற கள்ளி.] |
ஐவாய்மான் | ஐவாய்மான் aivāymāṉ, பெ. (n.) 1. அரிமா; lion. “கரிமருப்பு ஐவாய் மான்கை” (திருவிளை.மாணிக் கம்:54);. [ஐ + வாய் + மான் – ஐவாய் மான். ஐ = பெரிய. மா → மான் = விலங்கு.] |
ஐவாய்மிருகம் | ஐவாய்மிருகம் aivāymirugam, பெ. (n.) ஐவாய் விலங்கு பார்க்க;see {}. |
ஐவாய்விலங்கு | ஐவாய்விலங்கு aivāyvilaṅgu, பெ. (n.) கரடி; Indian black bear, melursus ursinus, so called from the prehensile power of his four feet and mouth. |
ஐவி | ஐவி aivi, பெ. (n.) 1. சிறு கடுகு; small mustard. 2. கடுக்காய்; gal-nut (சா.அக.); [ஐயவி → ஐவி.] |
ஐவிரலி | ஐவிரலி aivirali, பெ. (n.) 1. கொடி வகை (மூ.அ.);; creeper bearing a red fruit (செ.அக..);. 2. கடலாம ணக்கு; plant jatropha curcas. ம. ஐவிரலிக்கோவ. [ஐந்து + விரலி.] |
ஐவிரலிச் சங்கு | ஐவிரலிச் சங்கு aiviraliccaṅgu, பெ. (n.) ஐந்து முட் பாய்ந்த சங்கு; conch with five spikes. (சா.அக.);. [ஐந்து + விரலி + சங்கு.] |
ஐவிரல் | ஐவிரல் aiviral, பெ. (n.) 1. கைம்மீன் (அத்தம்);; 13th {}, resembling the five fingers, hastha (செ.அக.); 2. ஐந்து விரல் அளவு; five finger breadth. ம. ஐவிரல். [ஐந்து + விரல்.] |
ஐவிரை | ஐவிரை aivirai, பெ. (n.) ஐந்து வகை மணப்பொருள் கள்; five kinds of aromatic drugs viz. 1. கோட்டம்; a perfume. 2. துருக்கம்; the resin of olibenum tree. 3. தாரம்; fragrant wood of deodor tree. 4. அகில்; fragrant wood of agil tree. 5. சந்தனம்; sandal-wood (சா.அக.);. [ஐந்து + விரை – ஐவிரை. விரை = நறுமணம்.] |
ஐவேசி | ஐவேசி aivēci, பெ. (n.) ஐவேசு பார்க்க; see aivacu. [U. aiwaz → த. ஐவேசி.] |
ஐவேசு | ஐவேசு aivēcu, பெ. (n.) சொத்திருப்பு; property, wealth, stock, capital. [U. aiwaz → த. ஐவேசு.] |
ஐவேலி | ஐவேலி aivēli, பெ. (n.) 1. திருவாரூர்;{}. “ஐவேலியாந்திருவாரூர்” (திருவாரூர்க் கோவை);. 2 ஐந்து வேலி நிலம்; five veli land. [ஐந்து + வேலி – ஐவேலி.] திருவாரூரில் கோயில், குளம், நந்தவனம் ஆகிய ஒவ்வொன் றும் ஐந்துவேலி நிலப்பரப்புடையது. (ஒரு வேலி = 20 மா. நூறு குழி = 1 மா.); |