செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை வெளியீடு
31 தொகுதி 12000 பக்கங்கள் கொண்ட பேரகரமுதலி


1

10838

2769

3111

538

3554

677

1093

620

189

1004

402

2
க்
1

8212
கா
2579
கி
564
கீ
222
கு
4598
கூ
780
கெ
615
கே
391
கை
1101
கொ
2417
கோ
1754
கௌ
110
ங்
1

2
ஙா
2
ஙி
1
ஙீ
1
ஙு
1
ஙூ
1
ஙெ
1
ஙே
1
ஙை
1
ஙொ
5
ஙோ
1
ஙௌ
1
ச்
1

5235
சா
1186
சி
2424
சீ
439
சு
1261
சூ
420
செ
1529
சே
470
சை
23
சொ
409
சோ
365
சௌ
1
ஞ்
1

15
ஞா
44
ஞி
3
ஞீ ஞு ஞூ ஞெ
34
ஞே
5
ஞை
2
ஞொ
3
ஞோ
2
ஞௌ
1
ட்
1

1
டா
1
டி
1
டீ
1
டு
1
டூ
1
டெ
2
டே
1
டை
1
டொ
1
டோ
1
டௌ
ண்
1

1
ணா
1
ணி
1
ணீ ணு
1
ணூ
1
ணெ
2
ணே
1
ணை
1
ணொ
1
ணோ
1
ணௌ
த்
3113
தா
1530
தி
2203
தீ
393
து
1238
தூ
411
தெ
694
தே
856
தை
39
தொ
878
தோ
459
தௌ
ந்
1

2789
நா
204
நி
1860
நீ
1161
நு
14
நூ
18
நெ
892
நே
318
நை
89
நொ
210
நோ
159
நௌ
2
ப்
1

4560
பா
1824
பி
492
பீ
25
பு
2224
பூ
1133
பெ
1064
பே
483
பை
127
பொ
1218
போ
478
பௌ
2
ம்
4760
மா
1422
மி
535
மீ
268
மு
3016
மூ
949
மெ
396
மே
751
மை
152
மொ
284
மோ
242
மௌ
ய்
1

119
யா
426
யி
1
யீ
1
யு
46
யூ
20
யெ
9
யே
1
யை
1
யொ
1
யோ
98
யௌ
1
ர்
87
ரா
107
ரி
11
ரீ
7
ரு
24
ரூ
20
ரெ
6
ரே
16
ரை
10
ரொ
8
ரோ
23
ரௌ
ல்
117
லா
44
லி
8
லீ
5
லு
8
லூ
3
லெ
13
லே
21
லை லொ
20
லோ
63
லௌ
3
வ்
1

3800
வா
1329
வி
1638
வீ
515
வு
1
வூ
1
வெ
2164
வே
834
வை
229
வொ
1
வோ
3
வௌ
ழ்
1

1
ழா
1
ழி
1
ழீ
1
ழு
6
ழூ
1
ழெ
1
ழே ழை ழொ ழோ
1
ழௌ
ள்
1

2
ளா
1
ளி
1
ளீ
1
ளு
1
ளூ
1
ளெ
2
ளே
1
ளை
1
ளொ
1
ளோ
1
ளௌ
ற்
1

1
றா
1
றி
1
றீ
1
று
1
றூ
1
றெ
2
றே
1
றை
1
றொ
1
றோ
1
றௌ
ன்
1

1
னா
1
னி
1
னீ
1
னு
1
னூ
1
னெ
2
னே
1
னை னொ
1
னோ
1
னௌ
தலைசொல் பொருள்

ஏ2ē, பெ. (n.)

   1. உயர்ச்சி; height elevation

   2. மேனோக்குகை; looking upward

     “கார்நினைந் தேத் தரு மயிற்குழாம்” (சீவக.87);.

   3. அடுக்கு (தொல், சொல்.305.0 உரை);; pile, row, tier, series.

   4. பெருக்ககம்; increase, abundance,

     “ஏ” பெற்றாகும்” (தொல், சொல் 305.); 5, இறுமாப்பு;

 pride, self-conceit, arrogance

     “ஏக்கழுத்த நானால்” (பரிபா.7.55);, 6, உழையிசையின் எழுத்து (திவா.);: letter of the 4th note of the gamut usu,

 denoted by ம.

ம. க. ஏ. எத்தர L, E ex, Gr, ec, ex, exo, Fr, Sp. ex out [P. f.); up, out (Pt. f.); up. out.

     [உ → எ → ஏ.]

 ஏ4ē, இடை (part)

   1. பிரிநிலையேகாரம்; suffix naving the force of (a); disjunction, as அவருள் அவனெ சொன்னான்…. வினாவேகாரம்;

 copulative, as நிலமே நீரே தீயே (d); தேற்ற வேகாரம் emphasis as in அது மெய்யே (e); ஈற்றசை யேகாரம்;

 terminative expletive, as சென்னைப் பட்டணத்திலே (இ.வ.);.

   2. இசைநிறை யேகாரம்; poetic expletive for completing the metre, as

     “ஏயே இவவெளாருத்த பேடி”.

ம.,க. ஏ.

     [ ‘ஏ’ ஒலிக்குறிப்பு நெட்டெழுத்தாயினும் தொடராட்சியில் ஏ. குறித்த பொருளை வெளிப்படவுணர்த்தும் இடைச்சொல்லாகப் பொருட்பாட்டுப்புடைபெயர்வு பெறுதலான் ஏகாரம் பல்வேறு பொருளுணர்த்துவதாயிற்று. பொருளுணர்த்தாத ஏகாரம் இசைநிறை, அசைநிலைகளாகும்.]

ஏககண்டமாய்

ஏககண்டமாய்ēgagaṇṭamāy, கு.வி.எ. (adv.)

   ஒரே குரலாய்; all together, unanimously with one voice.

     “குழலொடு கண்டங்கொள” (மணிமே.19:83);.

     ‘ஏககண்டமாய் அதனை அவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்’ (பே.வ.);.

     [Skt. eka + த. கண்டம் + ஆய் → த. ஏககண்டமாய்.]

     [கண்டு → கண்டம் – தொண்டை, குரல்.]

ஏககுடும்பம்

 ஏககுடும்பம்ēgaguḍumbam, பெ. (n.)

   சொத்து பிரிக்கப்படாதக் கூட்டுக் குடும்பம்; undivided family.

     ‘அவர்கள் ஏக குடும்பமாக இருக்கிறார்கள்’ (பே.வ.);.

     [ஏக + குடும்பம்.]

     [Skt. eka + த. ஏக.]

குடி → (குழம்பு); குடும்பு → குடும்பம்.

ஏககுண்டலன்

 ஏககுண்டலன்ēgaguṇṭalaṉ, பெ. (n.)

   ஒற்றைக் குழையை யணிந்த பலராமன்; Balarama, who had ear-ring in one ear only.

     [ஏக + குண்டலன்.]

     [Skt. eka + த. ஏக.]

     [குள் → குண்டு. உருண்டை குண்டு → குண்டலம் = வட்டம், சுன்னம், வானவட்டம், ஆடவர் காது வளையம் வடமொழியில் குண்டு என்னும் வடிவமும் இல்லை. குள் என்னும் மூலமும் இல்லை.]

ஏககுரு

 ஏககுருēgaguru, பெ. (n.)

   உடன் கற்றோன்; fellow student, colleague (யாழ்.அக.);.

     [ஏக + குரு.]

     [Skt. aka + த. ஏக.]

ஏகசகடு

ஏகசகடுēgasagaḍu, பெ. (n.)

   1. மொத்தம்; aggregate, whole.

   2. சராசரி; average.

     [Skt. eka + U. sakat → த. ஏகசகடு.]

ஏகசக்கராதிபதி

 ஏகசக்கராதிபதிēkasakkarādibadi, பெ. (n.)

ஏகசக்கரவர்த்தி பார்க்க; see eka-cakkaravartti.

     [Skt. eka + cakra + adhi + pati → த. ஏகசக்கராதிபதி.]

ஏகசக்கராதிபத்தியம்

 ஏகசக்கராதிபத்தியம்ēkasakkarātibattiyam, பெ. (n.)

   தனியராட்சி; paramount sovereignty.

த.வ. பேரரசு.

     [Skt. eka + cakra + adhi + patya → த. ஏகசக்கராதிபத்தியம்.]

ஏகசக்ரவர்த்தி

 ஏகசக்ரவர்த்திēkasakravartti, பெ. (n.)

   தனியாளுமை செலுத்துவோன்; paramount sovereign, suzerain, emperor.

த.வ. பேரரசன்.

     [Skt. eka + cakra + vartin → த. ஏகசக்கரவர்த்தி.]

ஏகசமன்

 ஏகசமன்ēkasamaṉ, பெ. (n.)

   ஒரு நிகர் (வின்.);; uniformity, sameness.

     [ஏக + சமன்.]

     [Skt. eka + த. ஏக.]

     [உம் → அம் → சம் → சமம் → சமன்.]

ஏகசமானம்

 ஏகசமானம்ēkasamāṉam, பெ. (n.)

ஏகசமன் பார்க்க (வின்.);; see eka-saman.

     [ஏக + சமானம்.]

     [Skt. eka + த. ஏக.]

ஏகசரம்

 ஏகசரம்ēkasaram, பெ. (n.)

   காண்டாமிருகம்; rhinoceros (யாழ்.அக.);.

த.வ. கல்யானை.

     [Skt. ekacara → த. ஏகசரம்.]

ஏகசிந்தை

ஏகசிந்தைēkasindai, பெ. (n.)

   1. ஒத்த மனம்; unanimity.

     ‘இணையர் இருவரும் ஏக சிந்தை யுள்ளவர்கள்’.

   2. ஒரே நினைவு; singleness of purpose, undivided attention.

     “நாடொறுமேக சிந்தையனாய்” (திவ்.திருவாய். 5, 10, 11);.

த.வ. நினைவொருமை.

     [Skt eka + த. ஏக.]

     [சித்து → சிந்து → சிந்தை.]

ஏகசிருங்கி

 ஏகசிருங்கிēkasiruṅgi, பெ. (n.)

ஏகசரம் பார்க்க; see éka-saram (நாமதீப);.

     [Skt. eka + sriga → த. ஏகசிருங்கி.]

ஏகசுபாவம்

ஏகசுபாவம்ēkasupāvam, பெ. (n.)

   1. ஒரே மாந்தத் தன்மை; evenness of disposition in a person.

   2. பல மாந்தர்களின் ஒத்த தன்மை; similarity of nature in different person.

     [Skt. eka + sua-bhava → த. ஏகசுபாவம்.]

ஏகதந்தன்

 ஏகதந்தன்ēkadandaṉ, பெ. (n.)

   ஒற்றை மறுப்பை யுடையவரான பிள்ளையார்; pillaiyar, the one-tusked (பிங்.);.

த.வ. ஒற்றைமருப்பன்.

     [Skt. eka + danta → த. ஏகதந்தன்.]

ஏகதாரவிரதன்

ஏகதாரவிரதன்ēkadāraviradaṉ, பெ. (n.)

   ஒருத்தியையே மனைவியாகக் கொள்ளும் உறுதியுள்ளவன்; one who adheres to one wife, monogamist (ஈடு. 4, 2, 8);.

த.வ. ஒருதாலிநோன்பன்.

     [Skt. eka + dara + virata → த. ஏகதாரவிரதன்.]

ஏகதார்

 ஏகதார்ēkatār, பெ. (n.)

   ஓர் இழையையுடைய வாய்ச்சியம்; one stringed tamboura.

த.வ. சுரையாழ்.

     [U. ek-tara → த. ஏகதார்.]

ஏகதாளம்

ஏகதாளம்ēkatāḷam, பெ. (n.)

   ஒலி தாளத்தொன்று; variety of time-measure, one of catta-talam.

     “ஏகதாளத்துக் கிலருவொன்றாமே” (பரத. தாள. 24);.

     [Skt. eka + த. ஏக.]

     [தாள் → தாளம்.]

தாள் – காலைத் தட்டி எழுப்பப்படும் சீரொலி.

ஏகதிரீத்துவம்

 ஏகதிரீத்துவம்ēkadirīdduvam, பெ. (n.)

   ஒன்றில் மூன்று மெய்மங்கள் உள்ள நிலை; unity in trinity.

     [Skt. eka + tri-tva → த. ஏகதிரீத்துவம்.]

ஏகதேசப்படு-தல்

 ஏகதேசப்படு-தல்ēkadēcappaḍudal, செ.கு.வி. (v.i.)

   வேறுபடுதல்; to be incorrect, as an account.

     ‘கணக்கு ஏகதேசப் பட்டிருக்கிறது’ (W.);.

     [Skt. eka + tesam → த. ஏகதேசம் + படு-தல்.]

     [தேசம் → தேயம்.]

ஏகதேசம்

ஏகதேசம்ēkatēcam, பெ. (n.)

   1. ஒருபுடை; one side (திருக்கோ, 70, உரை);.

   2. சிறுபான்மை; small degree.

     “ஏகதேசம் தமிழாகவும் பிராயிகம் தற்சமம் தற்பவமாகவுங் கூறினாம்” (பி.வி.2, உரை);.

   3. அருமை; rareness, scarceness.

     ‘ஏகதேசமாக அங்கே அது கிடைக்கும்’ (W.);.

   4. வேறுபாடு; anomaly, different.

     ‘அதற்கு மிதற்கு மேகதேசம்’ (W.);.

   5. மாறுபாடு; blunder, mistake (W.);.

   6. சமமின்மை; unevenness.

இந்த நிலம் ஏகதேசமா யிருக்கிறது.

   7. நிந்தை; abuse.

     ‘அவன் என்னை ஏகதேசமாகப் பேசினான்’ (பே.வ.);.

   8. குறைந்தது; low in rank or character, that which is inferior.

     ‘பகவதானந்தத்தைப் பற்ற இது ஏகதேசமா யிருக்கையாலே’ (ஈடு. 4, 1, 10);.

த.வ. ஒருசார், ஒருபுடை.

     [Skt. eka + teas → த. ஏகதேசம்.]

     [திசை → தேசம்.]

ஏகதேசவறிவு

ஏகதேசவறிவுēkatēcavaṟivu, பெ. (n.)

   சிற்றுணர்வு; limited knowledge.

     “ஏகதேச வறிவைச் செய்தல் ஏகதேசப்படுந் தகுதியுடைய பொருட்கேயன்றி ஏனையதற் குரித்தன்று” (சி.சி.1, 41, சிவஞா);.

த.வ. சிற்றறிவு.

     [Skt. eka + tesam → த. ஏகதேசம் + அறிவு.]

ஏகதேசவுருவகம்

ஏகதேசவுருவகம்ēgatēcavuruvagam, பெ. (n.)

   ஒரு பொருளின் ஏகதேசத்தை உருவகப்படுத்தும் உருவக அணி; metaphor in which the comparison is partially expressed (குறள், 24, உரை.);.

     [Skt. eka+tesam → த. ஏகதேசம் + உருவகம்.]

ஏகதேசாகாரம்

ஏகதேசாகாரம்ēkatēcākāram, பெ. (n.)

   அளவுபட்ட உணவு; finite form of food.

     “உபாதி பற்றி ஏகதேசகாரம் உயினெனவும் அகண்ட காரமீச னெனவும்” (உபநிடதம். பக். 12);.

     [Skt. eka+teas+a+hara → த. ஏகதேச + ஆகாரம்.]

ஏகதேசி

ஏகதேசிēkatēci, பெ. (n.)

   ஒரிடத் திருப்புடையது; that which is to be found only within a limited area.

     ‘இவ்வைங் கோசங்களில் … ஏகதேசியாய்ப் போக்குவரவு செய்து நிற்கும்’ (சி.சி. 4, 23, சிவஞா.);.

     [Skt. ekatesi.]

ஏகதேவன்

ஏகதேவன்ēkatēvaṉ, பெ. (n.)

   1. இறைவன்; one supreme god (W.);.

   2. புத்தன்; buddha (திவா.);.

     [Skt. eka → த. ஏக + தேவன்.]

     [தேய் → தீ → தேவன்.]

ஏகத்தாய்

 ஏகத்தாய்ēkattāy,    கு.வி.எ. (adv.) ஒருமைப்பட்டு; jointly, unanimously.

     ‘இருவரும் ஏகஸ்தாய் எழுதிக் கொடுத்த உடன்படிக்கை’ (வின்.);.

த.வ. ஏகமனதாய்.

     [Skt. eka + stha → த. ஏகத்தாய்.]

ஏகத்துவம்

ஏகத்துவம்ēkattuvam, பெ. (n.)

   ஒன்றா யிருக்குந் தன்மை; oneness, unity, identity.

     “ஏகத்துவத்திலே சுழுத்தி யிதயமுற் றின்பமே பெறுவாய்” (ஞானவா. தாகு.101);.

     [Skt. eka – tva → த. ஏகத்துவம்.]

ஏகத்தொகை

 ஏகத்தொகைēgattogai, பெ. (n.)

   முழுத் தொகை; total amount (W.);.

     [Skt. eka → த. ஏக.]

     [தொகு → தொகை.]

ஏகநாதன்

 ஏகநாதன்ēkanātaṉ, பெ. (n.)

   தனித் தலைவன்; god, the one lord of the universe.

     [Skt. eka + natha → த. ஏகநாதன்.]

ஏகநாயகன்

ஏகநாயகன்ēganāyagaṉ, பெ. (n.)

ஏகநாதன் பார்க்க; see ekanatan.

     ‘ஏகநாயகனை மானதன் பிரவிருத்தியா லுதவும்’ (பிரபோத. 28, 2);.

     [Skt. eka → த. ஏக.]

     [நாயன் → நாயகன்.]

ஏகன்

ஏகன்ēkaṉ, பெ. (n.)

   1. ஒருவன்; one man.

   2. கடவுள்; god, as one.

     ‘ஏக னநேக னிறைவ னடிவாழ்க’ (திருவாச.1, 5);.

     [Skt. eka → த. ஏகன்.]

ஏகபத்தினிவிரதம்

 ஏகபத்தினிவிரதம்ēkabaddiṉiviradam, பெ. (n.)

   ஒரு மனையாள் நோன்பு; faithful adherence to one wife, monogamy.

     [Skt. eka + patni + vrata → த. ஏகபத்தினிவிரதம்.]

ஏகபத்திரிகை

 ஏகபத்திரிகைēgabattirigai, பெ. (n.)

வெண்டு (து); ளசி பார்க்க; see ventulasi (மலை);.

     [Skt. eka + patrika → த. ஏகபத்திரிகை.]

ஏகபந்தனம்

 ஏகபந்தனம்ēkabandaṉam, பெ. (n.)

   ஒன்றிப்பு; uniting, fastening (யாழ்.அக.);.

     [Skt. eka + bandhana → த. ஏகபந்தனம்.]

ஏகபாதனம்

ஏகபாதனம்ēkapātaṉam, பெ. (n.)

   ஒக இருக்கையாசன வகை; a yogic posture (தத்துவப். 108, உரை);.

     [Skt. eka + patina → த. ஏகபாதனம்.]

ஏகபாதம்

ஏகபாதம்ēkapātam, பெ. (n.)

   1. ஒரே யெழுத்துத் தொடரால் அமைந்து வரும் மிறைப்பாடல்; stanza of four lines all apparently alike but really made up of different meanings.

   2. ஒற்றைக்கால் விலங்கு; a one-legged sevage creature.

     ‘ஈற்றா மதமா வேகபாதம்’ (தொல்.பொ.249, உரை);.

   3. இருக்கை வகை யொன்பதனுள் ஒன்று; a pose, one of nine irukkai, q.v. (சிலப். 8, 25, உரை.);.

     [Skt. eka + த. பாதம்.]

     [பதி → பதம் → பாதம்.]

ஏகபாதர்

 ஏகபாதர்ēkapātar, பெ. (n.)

   ஒற்றைத் தாளர் ஆகிய சிவத் தோற்றம்; a manifestation of Siva with one foot.

     [Skt. eka + த. பாதர்.]

     [பதி → பாதம் → பாதர்.]

ஏகபாவனை

 ஏகபாவனைēkapāvaṉai, பெ. (n.)

   ஒருமையாக எண்ணுகை; conception of oneness, as of the universe.

     [Skt. eka + bavana → த. ஏகபாவனை.]

ஏகபாவம்

 ஏகபாவம்ēkapāvam, பெ. (n.)

   ஒத்த எண்ணம்; unanimity.

     [Skt. eka + bhava → த. ஏகபாவம்.]

ஏகபிங்கலன்

 ஏகபிங்கலன்ēkabiṅgalaṉ, பெ. (n.)

   பசப்படைந்த ஒற்றைக் கண்ணையுடைய குபேரன்; kubera, having a yellow taint in one eye (சூடா.);.

     [Skt. eka + pingala → த. ஏகபிங்கலன்.]

ஏகபிராணன்

 ஏகபிராணன்ēkabirāṇaṉ, பெ. (n.)

   ஒருயிர் போன்ற நட்பு; intimate friendship between persons, as if they were one (W.);.

     [Skt. eka + pirana → த. ஏகபிராணன்.]

ஏகபுத்திரன்

ஏகபுத்திரன்ēkabuttiraṉ, பெ. (n.)

   1. ஒரே மகன்; only son.

   2. ஒரு மகனுடையவன்; one who has an only son.

த.வ. ஒருமகன்.

     [Skt. eka + put-tra → த. ஏகபுத்திரன்.]

ஏகபோகம்

ஏகபோகம்1ēkapōkam, பெ. (n.)

   மொத்த நுகர்வு; sole enjoyment or possession.

த.வ. ஒருமைத் துய்ப்பு.

     [Skt. eka + bhoga → த. ஏகபோகம்.]

 ஏகபோகம்2ēkapōkam, பெ. (n.)

   ஒரு விளைவு பயிர் வைத்தல், ஆண்டுக்கு ஒருமுறை வளரும் பயிர்; single crop for a year.

     [Skt. eka + த. போகம்.]

     [பூகம் → போகம்.]

ஏகப்பசலி

 ஏகப்பசலிēkappasali, பெ. (n.)

   ஒரு விளைச்சல் நிலம்; land yielding one crop a year.

     [Skt. eka + U. fasli → த. ஏகபசலி.]

ஏகப்பட்ட

ஏகப்பட்டēkappaṭṭa, கு.வி.எ. (adj)

   1. மிகுதியான; plenty;

 numerous,

அவனிடம் ஏகப்பட்ட பணம் உள்ளது.

   2. இகப்பட்ட பார்க்க;see igappatta.

     [இகப்பட்ட → எகப்பட்ட இகத்தல் = மிகுதல், பெரிதாதல்.]

ஏகப்பிரளயம்

 ஏகப்பிரளயம்ēkappiraḷayam, பெ. (n.)

   பெருவெள்ளம்; huge flood.

     [Skt. eka + pralaya → த. ஏகபிரளயம்.]

ஏகப்பிழை

 ஏகப்பிழைēkappiḻai, பெ. (n.)

   முழுவதும் வழு; all error.

     [ஏகம் + பிழை.]

     [Skt. aka + த. ஏக..]

ஏகமாயிரு-த்தல்

ஏகமாயிரு-த்தல்ēkamāyiruttal, செ.கு.வி. (v.i.)

   1. ஒன்றாயிருத்தல்; to be united.

நானேகமாய் நின்னோடிருக்கு நாளெந்த நாள்’ (தாயு. எங்குநிறை. 6);.

   2. மிகுதியா யிருத்தல்; to be abundant.

     [Skt. eka + த. ஆயிரு-த்தல்.]

ஏகம்

ஏகம்1ēkam, பெ. (n.)

   1. ஒன்று; unit (திவா.);.

   2. ஒப்பற்றது; that which is unique.

     ‘ஏக மாநகர் வீதி நிரைத்தலே’ (சீவக. 2398);.

   3. தனிமை; solitariness, singleness (திவா.);.

   4. வீடு; final liberation (சூடா.);.

   5. மொத்தம்; total (W.);.

   6. வேறுபாடின்மை; identity, unity.

     ‘வாரிகணங்கட் கேகமெனல் போல’ (வேதா.சூ.127);.

   7. அக்குரோணி எட்டுகொண்ட சேனை; army consisting of eight akkuronis (பிங்.);.

   8. மிகுதி; abundance.

     “பொருள் ஏகமாய்க் குவிந்து கிடக்கிறது”.

     [Skt. eka → த. ஏகம்.]

 ஏகம்2ēkam, பெ. (n.)

   வெண்கலம்; bell-metal (யாழ்.அக.);.

ஏகம்பட்சாரம்

 ஏகம்பட்சாரம்ēkambaṭcāram, பெ. (n.)

   மாழை வகை; kind of metal (W.);.

ஏகம்பன்

ஏகம்பன்ēkambaṉ, பெ. (n.)

   காஞ்சிபுரத்தில் கோயில் கொண்ட சிவபிரான்; Siva worshipped in the shrine at conjeevaram.

     “ஏத்திநின்ற வேகம்பன்றன்னை” (தேவா. 1-39, 7);.

     [Skt. ekamara → த. ஏகம்பன்.]

ஏகம்பம்

ஏகம்பம்ēkambam, பெ. (n.)

   காஞ்சி சிவன் தலம்; name of a Siva shrine, in conjeevaram.

     “ஏகம்பத் துறையீசன்” (தேவா.1033, 6);.

     [Skt. ekamra → த. ஏகம்பம்.]

ஏகரா

 ஏகராēkarā, பெ. (n.)

ஏக்கர் பார்க்க; see ekkar.

     [Eng. Acre → த. ஏகரா.]

ஏகராசி

ஏகராசிēkarāci, பெ. (n.)

   காருவா (அமாவாசை);; new moon.

     ‘ஒளியோனை யேகராசியினி னெய்த வெதிர்க்கும் வேகராகு’ (கம்பரா.இராவணன்றோ.19);.

     [Skt. ekarasi → த. ஏகராசி.]

ஏகரூபன்

 ஏகரூபன்ēkarūpaṉ, பெ. (n.)

   இறைவன்; God (யாழ்.அக.);

த.வ. கடவுள், ஒருருவன்.

     [Skt. ēka + rupa → த. ஏகரூபன்.]

த. உருவம் → Skt. rupa.

ஏகலபுச்சன்

 ஏகலபுச்சன்ēkalabuccaṉ, பெ. (n.)

   கிறுக்கன்; crazy fellow.

ஏகல்

ஏகல்2ēkal, பெ. (n.)

   நடித்தல்; walking.

     [இய → எக → ஏகல்.]

 ஏகல்ēkal, பெ. (n.)

   உயரம்; height.

ஏகவசனம்

ஏகவசனம்ēkavasaṉam, பெ. (n.)

   1. ஒருமை; singular number.

     ‘வாருமென் றவர்களே கவசனமுஞ் சொல்வர்’ (திருவேங்.சத.78);.

   2. மதிப்புயர்வாகப் பயன்படுத்தும் பன்மைச் சொல்லான அவர் நீர் என்று பேசாது அவன் நீ என்று பேசும் மதிப்பு குறைவானச் சொல்; disrespectful term, sing, for hon. pl.

     ‘அவன் ஏக வசனமாய்ப் பேசினான்’ (பே.வ.);.

   3. சத்திய வசனம்; honesty, uprightness, truth, as singleness of statement (W.);.

     [Skt. eka + vasana → த. ஏகவசனம்.]

ஏகவடம்

ஏகவடம்ēkavaḍam, பெ. (n.)

ஏகாவலி பார்க்க; see ekavali.

     ‘பொங்கிள நாகமொ ரேகவடத்தோடு’ (தேவா. 350, 7);.

     [Skt. eka + த. ஏக.]

     [வட்டம் → வடம்.]

ஏகவட்டம்

ஏகவட்டம்ēkavaṭṭam, பெ. (n.)

ஏகவடம் பார்க்க; see eka-vadam.

     “இனமணிப்பூணு மேகவட்டமும்” (பெருங். இலாவண. 5, 139);.

     [Skt. eka + த. ஏக.]

     [வல் → வள் → வட்டு → வட்டம்.]

ஏகவல்லி

ஏகவல்லிēkavalli, பெ. (n.)

ஏகாவலி பார்க்க; see ekavali (பெருங்.உஞ்சைக்.46, 211);.

ஏகவாசம்

ஏகவாசம்ēkavācam, பெ. (n.)

   1. தனிமையாய் இருக்கை; solitary life as of a hermit.

   2. கூடியிருக்கை; dwelling together.

     [Skt. eka + vasa → த. ஏகவாசம்.]

ஏகவாணை

ஏகவாணைēkavāṇai, பெ. (n.)

   பொதுவற ஆளுகை; sole dominion.

     “ஏகவாணை வெண்குடை” (சீவக.141);.

     [Skt. eka + a-jna → த. ஏகவாணை.]

ஏகவாரம்

ஏகவாரம்1ēkavāram, பெ. (n.)

   ஒரு போது (ஒரே வேளை உணவு);; partial fasting, such as taking only one meal.

     ‘இன்று ஏகவாரந்தான் உணவு’.

     [Skt. eka + hara → த. ஏகவாரம்.]

 ஏகவாரம்2ēkavāram, பெ. (n.)

ஏகாவலி பார்க்க; see ekavali.

     ‘ஏகவார மிலங்கு கழுத்தினன்’ (பெருங்.நாவாண. 2, 26);.

     [Skt. eka + varam → த. ஏகவாரம்.]

ஏகவிடுகொடி

ஏகவிடுகொடிēgaviḍugoḍi, பெ. (n.)

ஏகாவலி பார்க்க; see ekavali.

     “ஏகவிடுகொடி யெழிற்றே ளெழுதி” (பெருங். உஞ்சைக். 34, 21);.

     [ஏக + விடு + கொடி.]

     [Skt. eka → த. ஏக.]

ஏகவீரன்

ஏகவீரன்ēkavīraṉ, பெ. (n.)

   தனிவீரன்; unique or incomparable warrior (திவ்.திருவிருத்.13, வ்யா);.

     [Skt. eka + த. ஏக.]

     [வீறு → வீரு → வீரன்.]

ஏகவீரியன்

 ஏகவீரியன்ēkavīriyaṉ, பெ. (n.)

   வீரபத்திரன்; vira-bhadra (பிங்.);.

     [Skt. eka + த. ஏக.]

     [வீறு → வீரியம் → வீரியன். ‘அன்’ – ஆண்பால் ஈறு.]

ஏகவெளி

 ஏகவெளிēkaveḷi, பெ. (n.)

   பெருவெளி; wide, open space.

     [Skt. eka + த. ஏக.]

ஏகவேணி

 ஏகவேணிēkavēṇi, பெ. (n.)

   ஒற்றைச் சடையுடைய மூதேவி; goddess of misfortune, wearing one lock (பிங்.);.

     [Skt. eka + veni → த. ஏகவேணி.]

ஏகாகம்

ஏகாகம்ēkākam, பெ. (n.)

   இறந்தவர்க்குப் பதினோராம் நாளிற் செய்யுங் செய்கை; ceremony for the deceased on the 11th day.

த.வ. பதினோராம் நடப்பு.

     [Skt. ekaha → த. ஏகாகம்.]

ஏகாகாரம்

ஏகாகாரம்ēkākāram, பெ. (n.)

   1. மாறாத உருவம்; unchanging form.

     ‘சூரியன் சந்திரனைப் போலன்றி ஏகாகாரமாய்த் தோன்றுகின்றான்’.

   2. ஒரு படி; uniform manner.

     ‘நேற்று முழுதும் மழை ஏகாகாரமாகப் பெய்தது’.

     [Skt. eka + kara → த. ஏகாகாரம்.]

ஏகாகி

 ஏகாகிēkāki, பெ. (n.)

   தனித்திருப்போன்; one who is alone, solitary man.

     [Skt. eka → த. ஏகாகி.]

ஏகாக்கிரசித்தம்

ஏகாக்கிரசித்தம்ēkākkirasittam, பெ. (n.)

   ஒன்றிலே ஊன்றிய மனம்; mind concentrated on one object.

     ‘ஏகாக்கிரசித்தமென்னும் விரதங்கெடாத திடவிரதம்’ (சிவப்பிரபந்.அபிஷேக.8);.

     [Skt. ekagra + citta → ஏகாக்கிரசித்தம்.]

ஏகாக்கிரதை

 ஏகாக்கிரதைēkākkiradai, பெ. (n.)

   ஒன்றிலே மனம் பதிந்திருக்கை; concentration of mind.

     [Skt. ekagrata → த. ஏகாக்கிரதை.]

ஏகாக்கிரம்

 ஏகாக்கிரம்ēkākkiram, பெ. (n.)

   வளமான சாப்பாடு; rich meal.

த.வ. நிறைவுணா.

     [Skt. eka + agra → த. ஏகாக்கிரம்.]

ஏகாங்கநமக்காரம்

 ஏகாங்கநமக்காரம்ēkāṅganamakkāram, பெ. (n.)

   தலை தாழ்த்திச் செய்யும் வணக்கம்; bowing the head in worship, as the act of a single member of the body (சங்.அக.);.

     [Skt. eka + anga + namaskara → த. ஏகாங்க நமஸ்காரம்.]

ஏகாங்கம்

ஏகாங்கம்ēkāṅgam, பெ. (n.)

   1. தனிமை; solitude (யாழ்.அக.);.

   2. சந்தனம்; sandal wood (பச்.மூ.);.

     [Skt. eka + anga → த. ஏகாங்கம்.]

ஏகாங்கரூபகம்

ஏகாங்கரூபகம்ēgāṅgarūpagam, பெ. (n.)

   உருவ வகை; a kind of metaphor (மாறனலங்.பக்.181);.

     [Skt. eka + anga + rupakam → த. ஏகாங்கரூபகம்.]

ஏகாங்கி

ஏகாங்கி1ēkāṅgi, பெ. (n.)

   திருமாலடியாருள் ஒரு வகையார்; a class of vaisnava devotees (குருபரம். ஆறா.172);.

     [Skt. ekagin → த. ஏகாங்கி.]

 ஏகாங்கி2ēkāṅgi, பெ. (n.)

   குடும்பமின்றித் தனித்து வசிப்பவன்-ள்; single person, one who has no family.

த.வ. தனியன்.

     [Skt. ekagin → த. ஏகாங்கி.]

ஏகாசம்

ஏகாசம்ēkācam, பெ. (n.)

   தளர்வு உடை; loose cloth Worn over the shoulders, scarf.

     “ஐந்தலைய மாசுணங்கொண்டம் பொற்றோண்மே லேகாசமா விட்டு” (தேவா. 257, 3);.

     [Skt. eka + amsu → த. ஏகாசம்.]

ஏகாடம்

ஏகாடம்ēkāṭam, பெ. (n.)

   ஏளனம்; scoffing, Jest.

     ‘என்னத்துக்கிந்த ஏகாடஞ் செய்கிறீர்’ (கனம். கிருஷ்ணையா, கீர்த்.6);.

ஏகாட்சரம்

 ஏகாட்சரம்ēkāṭcaram, பெ. (n.)

   நூற்றெட்டு மெய்ம்மறைகளுள் ஒன்று; name of a upanisad.

     [Skt. ekaksara → த. ஏகாட்சரம்.]

ஏகாட்சரி

ஏகாட்சரிēkāṭcari, பெ. (n.)

   1. ஒரெழுத்தாலாய மந்திரம்; monosyllabic mantra.

   2. உயிரோடும் தனித்தும் ஒரே மெய் வரும் இறைப்பாடல்; quatrain composed of the same consonant in combination with various vowels, as தித்தித்த தோதித் திதி (W);.

     [Skt. ekaksari → த. ஏகாட்சரி.]

ஏகாட்சி

ஏகாட்சிēkāṭci, பெ. (n.)

   1. ஒன்றைக் கண்ணன் – ணி; one eyed person.

   2. காகம்; crow, supposed to see only with one eye at a time.

     [Skt. ekaksa → த. ஏகாட்சி.]

ஏகாண்டம்

 ஏகாண்டம்ēkāṇṭam, பெ. (n.)

   முழுக்கூறு; that which is of one piece, not made of parts.

     ‘ஏகாண்டமான தூண்’.

     [Skt. eka + த. கண்டம்.]

     [ஏக + கண்டம் → ஏகாண்டம்.]

ஏகாதசம்

ஏகாதசம்ēkātasam, பெ. (n.)

   பதினோரா மிடம்; the 11th sign from one’s canmalakkinam.

     “ஏகாதசந்தன்னி லெக்கோளு நிகரென்ன” (பாரத. பதினேழாம்.228);.

     [Skt. ekadasan → த. ஏகாதசம்.]

ஏகாதசருத்திரர்

ஏகாதசருத்திரர்ēkātasaruttirar, பெ. (n.)

   பெருந்தேவன், சிவன், உருத்திரன், சங்கரன், விசயன், நீலலோகிதன், ஈசானன், வீமதேவன், சுபாலி, பவோற்பவன், செளமியன் (திவா.);, அரன் for சிவன் (பிங்.);; the 11 rudras, as class of gods viz.

     [Skt. ekadasa + rudras → த. ஏகாதச ருத்திரர்.]

ஏகாதசர்

ஏகாதசர்ēkātasar, பெ. (n.)

   1. ஏகாதச ருத்திரர் பார்க்க; see ekatasaruttirar.

     “எண்வசுக்க ளேகாதசர்கள்” (தேவா.1040, 5);.

   2. பதினோறாமிடத்துள்ள கோள்; kirakam in the 11th sign from one’s canmalakkinam (கம்பரா.திருவவ.110);.

     [Skt. ekadasa → த. ஏகாதசர்.]

ஏகாதசி

ஏகாதசிēkātasi, பெ. (n.)

   பதினோராம் நாள்; the 11th day of a bright or dark fort night.

த.வ. பதினோரமை.

     [Skt. ekadasi → த. ஏகாதசி.]

ஏகாதசிவிரதம்

 ஏகாதசிவிரதம்ēkādasiviradam, பெ. (n.)

   பதினோராம் நாளில் மேற்கொள்ளப்படும் உண்ணா நோன்பு; fast in honour of Visnu on the ekataci.

     [Skt. ekadasi + viratam → த. ஏகாதசிவிரதம்.]

ஏகாதிபதி

 ஏகாதிபதிēkādibadi, பெ. (n.)

   மாமன்னன்; paramount sovereign.

த.வ. தனியாண்மை அரசன்.

     [Skt. eka + adhi + pati → த. ஏகாதிபதி.]

ஏகாதிபத்தியம்

ஏகாதிபத்தியம்ēkātibattiyam, பெ. (n.)

   தனியராட்சி; paramount sovereignty, empire.

     ‘ஏகாதிபத்தியம் விடாமல்’ (இராமநா. பாலகா.2);.

     [Skt. eka + adhipatya → த. ஏகாதிபத்தியம்.]

ஏகாந்தசேவை

 ஏகாந்தசேவைēkāndacēvai, பெ. (n.)

   சில திருவிழாக்களில் இரவில் தனித்து நிகழும் இறைப்பணி; the appearance of the god in a temple in procession at midnight during some festivals.

த.வ. தனிச்சேவை.

     [Skt. ekanta + sava → த. ஏகாந்தசேவை.]

ஏகாந்தஞ்சமர்ப்பி-த்தல்

 ஏகாந்தஞ்சமர்ப்பி-த்தல்ēkāndañjamarppittal, செ.கு.வி. (v.i.)

   ஊர்திகளில் தெய்வ உருவங்களை வைத்துக் கச்சுச் சாத்துதல்; to fasten an idol to its vehicle for a procession.

     [Skt. eka + anta + samarpana → த. ஏகாந்தஞ் சமர்ப்பி-,]

ஏகாந்தநித்திரை

ஏகாந்தநித்திரைēkāndanittirai, பெ. (n.)

   1. அமைதியான தூக்கம்; sweet sleep.

   2. உலக தொடர்பு சிறிதுமில்லாத துறவுநிலை; entire abstraction of the ascetic, free from worldly cares (சங்.அக.);.

த.வ. தனித்தூக்கம்.

     [Skt. ekanta + nidra → த. ஏகாந்தநித்திரை.]

ஏகாந்தன்

ஏகாந்தன்ēkāndaṉ, பெ. (n.)

   சமய நோன்பினன்; devotee whose mind is fixed on god alone.

     “மாதேவர்க் கேகாந்த ரல்லராஇல்” (தேவா.1230, 10);.

ஏகாந்தம்

ஏகாந்தம்ēkāndam, பெ. (n.)

   1. தனிமை; loneliness, solitude.

     ‘ஏகாந்த மினிது’ (தனிப்பா.1, 112, 35);.

   2. ஒருவருமில்லாத இடம்; solitary place.

   3. கமுக்கம்; secret. ‘அவனுடன் உனக்கென்ன ஏகாந்தம்’.

   4. உறுதியான (குறள், 563, உரை);; certainty.

   5. நாடிய ஒரே பொருள் (அறநெறி.18);; sole end, one only end.

   6. தகுதியானது; that which is appropriate or fit.

     ‘பரஹிம்ஸைக்கு ஏகாந்தமான காலத்திலே’ (திவ்.அமலனாதி. 2, வ்யா);.

     [Skt. eka + anta → த. ஏகாந்தம்.]

ஏகாந்தவாதி

ஏகாந்தவாதிēkāndavāti, பெ. (n.)

   துறவு நெறியாளர்; non-Jain, as one who looks at things from only one point of view.

     ‘ஏகாந்த வாதிக ளெண்கெட்ட வாதம் போல்’ (அறநெறி.18);.

     [Skt. ekanta + vddin → த. ஏகாந்தவாதி.]

ஏகாந்தவாழ்வு

ஏகாந்தவாழ்வுēkāndavāḻvu, பெ. (n.)

   1. தனி வாழ்க்கை; single life.

   2. துறவியின் வாழ்க்கை; monastic life.

     [ஏகாந்தம் + வாழ்வு.]

     [Skt. ekanta + த. ஏகாந்தம்.]

ஏகாந்தி

ஏகாந்திēkāndi, பெ. (n.)

   1. ஏகாந்தன் பார்க்க; see ekantan.

   2. ஒரே வழி நோக்காளன்; one who looks at things from only one point of view ((தேசிகப்.பரமத.26);.

     [Skt. ekantam → ekanti → த. ஏகாந்தி.]

ஏகான்மவாதம்

ஏகான்மவாதம்ēkāṉmavātam, பெ. (n.)

   படைப்பு ஒன்றைத்தவிர வேறொன்றுமில்லை என அறுதியிடும் மதம் (சி.போ. அவைய. பக். 47);; monistic doctrine according to which there is only reality, Viz., the soul.

த.வ. ஒராதன்மதம்.

     [Skt. eka + atman + vadam → த. ஏகான்ம வாதம்.]

ஏகாம்பரநாதர்

 ஏகாம்பரநாதர்ēkāmbaranātar, பெ. (n.)

   காஞ்சிபுரத்தில் கோயில் கொண்டுள்ள சிவபிரான்; siva at conjeevaram.

த.வ. சிவன்.

     [Skt. ekamra + natha → த. ஏகாம்பரநாதர்.]

ஏகாம்பரன்

 ஏகாம்பரன்ēkāmbaraṉ, பெ. (n.)

ஏகம்பன் பார்க்க; see ekamban.

     [Skt. eka + amra → த. ஏகாம்பரன்.]

ஏகாம்பரம்

ஏகாம்பரம்ēkāmbaram, பெ. (n.)

   ஒரு மாமரத்தின் கீழ் சிவன் கோயிலைக் கொண்டுள்ள காஞ்சிபுரம்; a name for conjeevaram, a city famous for its Siva shrine under a mango tree.

     “தொல்லுலகு புகழ் காசியேகாம்பரம” (அறப்.சத.59);.

     [Skt. eka + amra → த. ஏகாம்பரம்.]

ஏகாம்பரர்

 ஏகாம்பரர்ēkāmbarar, பெ. (n.)

ஏகாம்பர நாதர் பார்க்க; see ékambaranathar.

     [Skt. ekamra → த. ஏகாம்பரர்.]

ஏகாயனர்

 ஏகாயனர்ēkāyaṉar, பெ. (n.)

   மாத்துவர்; Madhvas, from their doctrine that Visnu alone needs to be worshipped for salvation (ஈடு. மஹாப்ர.);.

     [Skt. eka + ayana → த. ஏகாயனர்.]

ஏகாயம்

ஏகாயம்ēkāyam, பெ. (n.)

ஏகாசம் பார்க்க; see ekasam.

     “தோலுடையாடை யேகாயமிட்டு” (தேவா.159, 4);.

ஏகாரம்

 ஏகாரம்ēkāram, பெ. (n.)

     ‘ஏ’ என்னும் நெட்டுயிரெ ‘முத்து;

 letter or sound ‘é’

ம.ஏகாரம்.

     [ஏ + காரம் – எகாரம் ‘காரம்’ எழுத்துச் சாரியை.]

ஏகாரவல்லி

ஏகாரவல்லிēkāravalli, பெ. (n.)

   1. பாகல் பார்க்க; see pagal (மலை.);.

   2. பழுபாகல் பார்க்க; see palupagal.

   3. பலா பார்க்க; see pala (மலை.);.

     [Skt. ekaravalli.]

ஏகார்க்களம்

ஏகார்க்களம்ēkārkkaḷam, பெ. (n.)

   தீயநாளறிதற்குரிய சக்கரம்; diagram drawn up to find out inauspicious days (விதான.பஞ்சாங்.28);.

     [Skt. eka + angala → த. ஏகார்க்களம்.]

ஏகார்ணவம்

ஏகார்ணவம்ēkārṇavam, பெ. (n.)

   ஊழிப் பெரு வெள்ளம்; cosmic deluge.

     “இப்படி ஏகார்ணவத்திலே தனியே சாய்ந்தருளுகிறவன் தான் ஆர் என்னில்” (ஈடு. 1, 5, 4, பக். 235);.

ஏகாலத்தி

 ஏகாலத்திēkālatti, பெ. (n.)

ஏகாலாத்தியம் பார்க்க; see ekalattiyam.

ஏகாலாத்தியம்

ஏகாலாத்தியம்ēkālāttiyam, பெ. (n.)

   பூசையில் சாமிக்குமுன் ஏற்றும் ஒற்றைச் சுடர் தீபம்; single light waved before an idol in worship (பரத. ஒழிபி.41, உரை);.

     [Skt. ekaratrika → த. ஏகாலாத்தியம்.]

ஏகாலி

 ஏகாலிēkāli, பெ. (n.)

சலவைத்தொழிலாளி:

 washerman.

      [ஈரங்கொல்லி → சங்காலி → ஏகாலி.]

   ஏகியன் பெ. (n); தோழன் (யாழ்.அக.);; friend.

     [இகுளன் → இகியன் → எகியன் (கொ.வ.);.]

ஏகாவலி

ஏகாவலிēkāvali, பெ. (n.)

   ஒற்றைச்சர மாலை; long gold or pearl necklace of a single string.

     “ஏகாவலியுந் சாத்தீரே” (கலிங்.500, புதுப்.);.

     [Skt. eka-vali → த. ஏகாவலி.]

ஏகாவல்லி

ஏகாவல்லிēkāvalli, பெ. (n.)

ஏகாவலி பார்க்க; see ekavalli (S.l.l.ii, 399);.

     [Skt. ekavali → த. ஏகாவல்லி.]

ஏகி

 ஏகிēki, பெ. (n.)

   கைம்பெண் (வின்.);; widow as one who leads a lonely life in this world.

     [Skt. eka → த. ஏகி.]

ஏகீபவி-த்தல்

ஏகீபவி-த்தல்ēāpavittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   ஒன்றுபடுதல்; to combine, coalesce.

     [Skt. ekibhava → த. ஏகிபலி-த்தல்.]

ஏகீபாவம்

ஏகீபாவம்ēāpāvam, பெ. (n.)

   ஒன்றுபடுகை (சி.சி.6, 1, ஞானப்.);;     [Skt. ekibhava → த. ஏகீபாவம்.]

ஏகீயன்

 ஏகீயன்ēāyaṉ, பெ. (n.)

   தோழன்; friend (யாழ்.அக.);

     [Skt. ekiya → த. ஏகீயன்.]

ஏகு-தல்

ஏகு-தல்ēkudal,    7.செ.கு.வி. (v.i.)

.

   1. போதல்; to go, pass.

     “தாய்த் தாய்க்கொண் டேகுமளித்தில் வுலகு” (நாலடி.15);.

   2. நடத்தல் (பிங்.);; to walk

   3. கழலுதல்; to become loose, lo slipoff

     “நல்வளையேக” (பு,வெ.11,பெண்பாற்.12);.

   ம. ஏகுக;தெ. ஏ.கு.

     [இய → எ → எகு.]

ஏகூன்

 ஏகூன்ēāṉ, பெ. (n.)

   முழுவதும்; whole.

     [Mahr. ekun-ek → த. ஏகூன்.]

ஏகை

ஏகைēkai, பெ. (n.)

   வயிரக் குற்றங்களு ளொன்று; streak, a fault in a diamond

     “ஏகையுநீங்கி” (சிலப்,14,181);.

     [இல் → ஈல் → ஈகு → எகு → எகை.]

ஏகோதகம்

 ஏகோதகம்ēātagam, பெ. (n.)

   சிற்றாறுகள் ஒன்று கலக்குமிடம் (வின்.);; confluence of waters, union of one stream with another.

     [Skt. eko+udaka → த. ஏகோதகம்.]

ஏகோத்தரவிருத்தி

 ஏகோத்தரவிருத்திēāttaravirutti, பெ. (n.)

   இறந்தவர்க்கு முதற் பத்துநாட் செய்யும் ஒரு சிராத்தம் ஈமக்கடன் (பிரா.);; obsequies distribution of doles of rice during the first ten days after death, the quantity given being increased each day by one unit of measure.

த.வ. நீத்தார்கடன்.

     [Skt. eka + ut-tara-vrddhi → த. ஏகோத்தர விருத்தி.]

ஏகோத்திட்டம்

ஏகோத்திட்டம்ēāttiṭṭam, பெ. (n.)

   இறந்தவர்க்குப் பதினோறாம் நாளிற் செய்யும் ஒரு நடப்பு; sraddha or funeral rite performed on the 11th day after death for the deceased exclusively, without including other ancestors.

த.வ. நீத்தார்நடப்பு.

     [Skt. eka-ud-dista.]

ஏகோபி-த்தல்

ஏகோபி-த்தல்ēāpittal,    11 செ.கு.வி. (v.i.)

   ஒன்றுபடுதல்; to be united.

     “ஏகோபித்து முளைத்துக் கொண்டார்” (இராமநா. உயுத்த. 88);.

     [Skt. ekibhava → த. ஏகோபி-த்தல்.]

ஏக்கன் போக்கன்

 ஏக்கன் போக்கன்ēkkaṉpōkkaṉ, பெ. (n.)

   ஒன்றுக்குமு தவாதவன் ((யாழ்ப்.);.; man of no consequence, worthless fellow

     [இயங்கு → இயக்குபோக்கு இணைமொழி) – ஈக்குபோக்கு → ஏக்குபோக்கு → ஏக்கன்போக்கன் → கண்டபடி திரிபவன். ஏக்கு → ஏக்கள். போக்கு → போக்கன்.]

ஏக்கர்

 ஏக்கர்ēkkar, பெ. (n.)

   நில அளவை வகைகளுள் ஒன்று; a kind of measurement.

த.வ. குறுக்கம்.

     [E. acre → த. ஏக்கர்.]

ஏக்கறவு

 ஏக்கறவுēkkaṟavu, பெ. (n.)

ஏக்கறு

ஏக்கறு2 ēggaṟudal,    4. செ.குன்றாவி. (v.t.)

   விரும்புதல்; to desire

     “மதியேக்கறுஉ மாசறு திருமுகத்து” (சிறு பாண்.157);. (ஏக்கறு1 –ஏக்கறு2.);

ஏக்கழுத்தம்

ஏக்கழுத்தம்ēkkaḻuttam, பெ. (n.)

   1. தலையெடுப்பு; supercillousness, strutting, lit, stretching the neck.

     “காதி ரண்டு மில்லாதா னேக்கழுத்தஞ் செய்தலும்” (சிறு பஞ்:5);.

   2. இறுமாப்பு; arrogance, pride

   3, வீற்றிருக்கை (சூடா.);; sitting majestically.

     [எ + கழுத்தம். எ = உயர்வு. கழுத்து + அம் -கமுத்தம் (கழுத்து நிற்கும் நிலை);.]

ஏக்கழுத்து

ஏக்கழுத்துēkkaḻuttu, பெ. (n.)

எக்கழுத்தம் பார்க்க;see -k-kalutam

     “மோட்டுடைப். போர்வையோ டேக்க ழுத்தம்.” (ஆசாரக்.92);

     [எ + கழுத்து. எ = உயர்வு, நிமிர்வு. எக்கழுத்து = நிமிர்ந்த கழுத்து இறுமாப்பு.]

ஏக்கிபோக்கி

 ஏக்கிபோக்கிēkkipōkki, பெ. (n.)

ஒன்றுக்குமுதவாதவள் (யாழ்ப்.);:

 woman of no consequence.

     [எக்கு → ஏக்கி, ஏக்கிபோக்கி (இணைமொழி);.]

ஏக்கு

 ஏக்குēkku, பெ. (n.)

   ஏக்கம்; desire, longing.

     [எங்கு → எக்கு.]

ஏக்கெறி

ஏக்கெறி1ēkkeṟidal,    2.செ.கு.வி. (v.i.)

   கவலைநீங்குதல்; to cast away care, get rid of anxiety

     [எங்கு → எக்கு + அறு – ஏக்கர → ஏக்கறி → எக்கெறி.]

ஏக்கை

 ஏக்கைēkkai, பெ. (n.)

   இகழ்ச்சி (சங்.அக.);; contempt, abuse.

     [எங்கு → ஏங்கை → ஏக்கை.]

ஏக்கோசம்

 ஏக்கோசம்ēkācam, பெ. (n.)

   சிற்றூர் நிலங்களை ஒருவர் பேரிற் பதிவு செய்கை; registry of the lands of a village in the name of a single ryot (P.T.L.);.

     [Hind. ak+kosa → த. ஏக்கோசம்.]

ஏங்கல்

ஏங்கல்ēṅgal, பெ. (n.)

   1. பேரொலி செய்தல்;   ஆரவாரிக்கை; shoul clamour.

     “ஈட்டிய சமபல வீர ரேங்கலால்” (இரகுதிக்குவி.251);.

   2. மயிற்குரல் (பிங்.);; screaming, as of a peacock

   3. யாழ் நரம்பினோசை (பிங்);; sound, as of the strings of a lute.

   4. அழுகை (பிங்.);; weeping

   5. குழந்தைகட்கு வருங்காசநோய்; asthma in children.

ம. ஏங்ங்ல்:

     [ஏங்கு → ஏங்கல்.]

ஏங்கல் தாங்கல்

 ஏங்கல் தாங்கல்ēṅkaltāṅkal, பெ. (n.)

   தக்க தருணம், இன்றியமையாத நேரம்; come in time.

     [ஏங்கல்+தாங்கல்]

ஏங்கிப்போ-தல்

ஏங்கிப்போ-தல்ēṅgippōtal,    8.செ.கு.வி. (v.i.)

   ஏக்கம் பிடித்தல்; to be in low spirits, to languish, used impers,

தாயைப் பிரிந்ததனால் குழந்தை ஏங்கிப் போயிற்று (உ.வ.);.

     [ஏங்கு → ஏங்கி + போ.]

ஏங்கு-தல்

ஏங்கு-தல்ēṅgudal,    7.செ.கு.வி. (v.i.)

   1. ஒலித்தல்; to sound, as a lute, to roar, to scream, as a peacock

   2. இளைத்தல்; to pine, languish

     “தாழ்ந்து தளர்ந் தேங்கி” (சீவக.2012);.

   3. மனம் வாடுதல்; to long for yearn arter,

     “மக்கட்கென்றேங்கி” (நாலடி.130);.

   4 அமுதல் (குடா.);:

 to weep cry wall, sob,

   5. அஞ்சுதல்; to be in fear, to be panic-stricken.

     “நேரலன் படையை நோக்கி யேங்கினர்” (கந்தபு:சூரபன்.வதை.50);.

   6. இரங்கல்; it is said of a devotee whose mind is always longing for God, as in…

     “ஏங்குதே நெஞ்ச மையோ’ (தாயுமான.);. (செ.அக.);.

   க. ஏங்கு;   பட ஏங்கு;   ம. ஏங்குக: கோத. ஏங்;   தெ. ஏக்கு, வெக்கு;   பர். நேஞ்ஞ கேண். நேககானா;   கூ நேஞ்ச;   குரு. நாக்னா;மால், நகரயெ.

     [ஏ → ஏங்கு → ஏங்கு-தல்.]

ஏங்குறல்

 ஏங்குறல்ēṅguṟal, பெ. (n.)

   கவலையடைதல்; state of being Sorrowful or thoughtful (சா.அக.);.

     [எங்கு + உறல்.]

ஏசறவு

ஏசறவு1ēcaṟavu, பெ. (n.)

   1 விருப்பம், அன்பு; desire, longing

     “தாமுற்ற வேசறவைத் தோழியர்முன் பேசுவார்” (பதினொ.ஆளு.திருவுலா.138);.

   2. போற்றி வழிபாடு; praise, adoration,

     “முனிசண்முகனை யேசறவு பேசிநின்று” (சிவதரு.பாயி.11);.

     [ஆசை + உறு – ஆசையுறு → ஆகறு → எசறு → எசறவு (கொ.வ.);.]

 ஏசறவு2ēcaṟavu, பெ. (n.)

   1. பழித்தல்; slander,

   2. இழிவுபடுத்துதல்; reproaching

   3. துன்பம்;துயரம்: compunction, penitence, regret.

     [ஏ → ஏத்து → ஏச்சு → எசு. எச + உறு – எகறு → எசறவு.]

ஏசறு

ஏசறு1ēcaṟudal,    4.செ.கு.வி. (v.i.)

   ஆசைப்படுதல்; to long for desire,

     “வரைத்தோள் கூடுதற் கேசற்ற கொம் பினை” (பதினொ.ஆளு.திருவந்:45);.

     [ஆசை + உறு – ஆசையுறு → ஆகறு → எசறு.

 ஏசறு2ēcaṟudal,    4.செ.குன்றாவி. (v.t)

   1. பழித்தல்; to blame, reproach

     “ஏசறு முரவர் கவ்வை” (திவ்.திரு வாய்.5.3.1);.

   2. வருத்த முறுதல்; to be troubled, to feel sorry.

     [எ- எத்து (பழிசுமத்து); – எச்சு –எசு + உறு எகர → எசறு.

ஏசல்

ஏசல்ēcal, பெ. (n.)

   1. இகழ்கை;   ; reproaching abusing

     “ஏசலொப்பன கோகிலப் பறவைகளிசைத்தல்” (கந்தபு. நாட்டு.44);.

   2. பழிமொழி (சூடா.);; slander.

   3. ஒருவரையொருவர் ஏசிக்கூறும் பாட்டு: poem or song in which each of two parties extols himself and depreciates the other.

     “சிந்து கலித்துறைகளேசல்” (திருப்பு:198);.

ம. ஏச்சல் (குற்றம் சுமத்துதல்);

     [ஏ → எத்து → எச்சு → எச்சல் → ஏசல் → ஏத்து = பிறர்மீது பழி சுமத்து.)

ஏசிக்காட்டு-தல்

ஏசிக்காட்டு-தல்ēcikkāṭṭudal,    5.செ.குன்றாவி, (v.t)

ஏச்சுக் காட்டு பார்க்க: see க்cukkal

ஏசு

ஏசு2ēcudal,    5. செ.குன்றாவி (v.t) செலுத்துதல்; to huri, dart,

     “கொல்லம் பேசி” (தேவா.380,6);.

     [எய் → ஏவு → ஏசு → ஏசு.]

 ஏசு3ēcu, பெ. (n.)

இயேசு பார்க்க;see iyesu.

ஏசுநாம மொன்றை நம்புவீர்” (கிறித்.);.

     [இயேசு →எக.]

 ஏசு4ēcu, பெ. (n.)

   குற்றம் (திவா.);; fault, bemish.

     [மாசு → ஆசு → ஏசு (கொ.வ.);]

ஏச்சம்

 ஏச்சம்ēccam, பெ. (n.)

   ஒருங்கிணைதல், கூடியிருத்தல், தொடர்பு, கூட்டு (சேரநா.);; connection tie.

ம, ஏச்சம்,

     [இயை-இயைத்து-இயைச்சு- எச்சு- எச்சம் (கொ.வ.);.]

ஏச்சு

ஏச்சுēccu, பெ. (n.)

   1. வசவு; abuse, insult, calling names.

   2. பழிப்பு; reproach

     “எமர்கள் குடிக்கோ ரேச் சுக்கொ லாயிடுங் கொலோ’ (திவ்.பெரியாழ்.3.82);.

   3. புறக்கணிப்பு: negligence

   4. புறங்கூறுதல்; backbiting.

ம. ஏச்சு, தெ. ஏகு

     [ஏ → ஏச்சு.]

ஏச்சுக்கட்டு-தல்

ஏச்சுக்கட்டு-தல்ēccukkaṭṭudal,    5.செ.குன்றாவி, (v.t.)

   சேர்த்துக் கட்டுதல் இணைத்துக்கட்டுதல்; tying together (சேரநா.);.

ம. ஏச்சுக்கெட்டு

     [இயை → இயைத்து → இயைச்சு → எச்சு + கட்டு.]

ஏச்சுக்கட்டை

 ஏச்சுக்கட்டை iyaiiyaittuiyaiccueccugaṭṭuēccuggaṭṭai, பெ. (n.)

   மாட்டுவண் டியை நிறுத்தப் பயன்படுத்தும் கட்டை; a kind of device serving as a brake of a bullock-cart (சேரநா.);.

ம. ஏக்கக்கட்டை

     [இயைத்து → இயைச்சு →எக்சு + கட்டை)

ஏச்சுக்காட்டு-தல்

ஏச்சுக்காட்டு-தல்ēccukkāṭṭudal,    5.செ.குன்றாவி, (v.t.)

   பழிப்பைச் சுட்டிக் காட்டிப் பேசுதல் (இ.வ.);; reproach pointing to one’s fault, twit [ஏ → எக்சு + காட்டு.]

ஏச்சுரை

ஏச்சுரைēccurai, பெ. (n.)

   பழிப்புரை; opprobrium calumny.

     “ஏதிலார்தாங்கூறுமேச்சுரையுங்கேட்டேங்கி” (சிலப்.29.அடித்தோழியரற்று);.

     [ஏ → ஏச்சு + உரை.]

ஏட

 ஏடēṭa,    இடை, (part) தோழனையும், தாழ்ந்தோனையும் விளக்குஞ்சொல்; exclamation addressed familiarly to a friend or an inferior.

     [எல → ஏழ → எட. எல்லா, எலா பார்க்க;see ella, ela.]

கலந்த அன்பின் வெளிப்பாடு புலப்படுத்தும் எல்லா எலா என்னும் கெழுதகைப் பொதுச் சொற்கள் உலகவழக்கில் ஏட. ஏடா, அடா, அடே எனத்திரிந்தன. தோழனை விளித்த இதே சொல் பணியாளரையும் விளிக்கப் பயன்பட்டதால் பழந் தமிழர் பணியாளரை இழிவாக நடத்தவில்லை என அறியலாம்.

ஏடகணி

ஏடகணிēṭagaṇi, பெ. (n.)

ஒலையூர்க்கு (தைலவ. பாயி.20);: rib of a palm leaf.

     [ஏடு + அகணி – எட்டகணி → ஏடகணி. எடு = பனையோலை, அகணி = நடுவிலிருக்கும் ஈர்க்கு.]

ஏடகப்பை

 ஏடகப்பைēṭagappai, பெ. (n.)

   எடு அல்லது வண்டலை வழிக்கப் பயன்படுத்து மகப்பை; lade used for removing the scum of liquids, skimmer. (சா.அக.);.

     [எடு + அகப்பை.]

ஏடகம்

ஏடகம்1ēṭagam, பெ. (n.)

   மதுரைக்கருகிலுள்ள திருவேடகம் என்னும் ஒரு சிவத்தலம்; Siva shrine near Madurai.

     [எடு + அகம்.]

சமணர்க்கும் சம்பந்தர்க்கும் இடையே நடந்த புனல்வாதத்தில் சம்பந்தர் விட்ட ஏடு வையை நீரில் எதிர்த்துச் சென்று அக்கரையை அடைந்த இடம் ஏடகம் எனப் பெயர் பெற்றது.

 ஏடகம்3ēṭagam, பெ. (n.)

   1. பூ; flower.

     “ஏடகக்குலஞ் சேருமைக் குழலொடு” (திருப்பு.730);.

   2. தெங்கு (திவா.);; coconut-palm.

   3. பனை (மலை.);; palmyra-palm.

     [எடு + அகம் – ஏடகம். ஏடு = இதழ்.]

 ஏடகம்4ēṭagam, பெ. (n.)

   ஒரு வகைத் துணி (சூடா.);; a kind of cloth.

     [ஆடை → ஆடகம் → ஏடகம்.]

 ஏடகம்5ēṭagam, பெ. (n.)

   பலகை (அக.நி.);; plank.

     [ஏடு + அகம்.]

ஏடன்

ஏடன்1ēṭaṉ, பெ. (n.)

   1. ஏழை; pooman.

   2. செவிடன் (யாழ்.அக.);; deaf man.

க. ஏட.

     [ஏழை → எழன் → ஏடன்.]

 ஏடன்2ēṭaṉ, பெ. (n.)

   தோழன் (யாழ்.அக);; companion, friend.

     [ஏல → என → ஏடன்.]

 ஏடன்3ēṭaṉ, பெ. (n.)

   தொழும்பன்; Slave

     “ஏடர்களை யெங்கு மாண்டுகொண்ட வியல்பறிவார்” (திருவா சக.43.4);.

ஏடலகம்

ஏடலகம்ēṭalagam, பெ. (n.)

   1. அதிமதுரம் (மூ.அ.);; liquorice-plant.

   2. குன்றி; crab’s-eye.

     [ஏடல் + அகம் – ஏடலகம்.]

ஏடலர்

 ஏடலர்ēṭalar, பெ. (n.)

   தாமரைப் பூ; lotus flower. (சேரநா.);.

ம.ஏடலர்.

     [எடு + அலர் – ஏடலர் = அகன்ற மலர்.]

ஏடாசி

 ஏடாசிēṭāci, பெ. (n.)

   வேடிக்கைப் பேச்சு; reduculing remarks.

     [ஏளனம்-ஏடம்]

ஏடு கட்டல்

 ஏடு கட்டல்ēṭugaṭṭal, பெ. (n.)

   எடுபடர்தல்; formation of a scum on the surface of any liquid. (சா.அக.);.

     [எடு + கட்டல்.]

ஏடுக முருங்கை

ஏடுக முருங்கைēṭugamuruṅgai, பெ. (n.)

   மலை முருங்கை; hill moringa – Hedysarum sennoides. (சா.அக.);.

     [எடுகம்2 + முருங்கை.]

ஏடுகம்

ஏடுகம்1ēṭugam, பெ. (n.)

   கல்லறை (யாழ்.அக.);; grave.

     [எடு → ஏடுகம். ஒருகா, பலகைக்கற்களால் அமைத்த புதைகுழி ஆகலாம்.]

 ஏடுகம்2ēṭugam, பெ. (n.)

   1. மலை; mountain.

   2. குன்று; hill.

     [ஏ → எண் → எடு → எடுகம்.]

ஏடுகோ-த்தல்

ஏடுகோ-த்தல்ēṭuāttal,    4.செ.கு.வி. (v.i.)

   பனை யோலைகளினாலமைந்த பொத்தக விதழ்களைக் கயிற்றிற் கோத்தல்; to string together the leaves of a palmyra leaf-book.

     [ஏடு + (கோர்); கோ.]

ஏடுகோளாளன்

ஏடுகோளாளன்ēṭuāḷāḷaṉ, பெ. (n.)

   கணக்கன்; accountant.

     “ஏடுகோளாள ரெனையரென்றெண்ணி” (பெருங்.உஞ்சைக்.37,153);.

     [ஏடு – (கொள்); கோள் + ஆளன்.]

ஏடுசேர்-த்தல்

ஏடுசேர்-த்தல்ēṭucērttal,    4.செ.கு.வி. (v.i.)

   பனையோ லைகளை ஏடுகளாகச் சீவிப் பொத்தகமாக்குதல்; make up a book of the strips of palmyra leaves.

     [ஏடு + சேர்.]

ஏடுதயிர்

 ஏடுதயிர்ēṭudayir, பெ. (n.)

   ஆடை நீக்காத தயிர்; curd from which cream hasnot been removed. (சா.அக);.

     [ஏடு + தயிர்.]

ஏடுதுக்கு-தல்

ஏடுதுக்கு-தல்ēṭudukkudal,    5.செ.கு.வி. (v.i.)

   ஆசிரியரிடம் ஏட்டை எடுத்துப் படித்தல்; to lake up and read a book of palmyra leaves, before one’s teacher.

     [எடு + தூக்கு.]

ஏடுபடர்தல்

 ஏடுபடர்தல்ēḍubaḍartal, பெ. (n.)

   ஆடையுண்டாதல்; formation of coating on the surface of some liquids. (சா.அக.);.

     [ஏடு + படர்.]

ஏடுபடு-தல்

ஏடுபடு-தல்ēḍubaḍudal,    20. செ.கு.வி. (v.i.)

   1. பாலில் ஆடையுண்டாதல்; to form as cream.

   2. பாசிபடிதல்; to Spread, as moss over the surface of water.

     [ஏடு + படு.]

ஏடுவாரு-தல்

ஏடுவாரு-தல்ēṭuvārudal,    7.செ.கு.வி. (v.i.)

   பொத்தக எடுகளாக்குதற்குப் பனையோலைகளைச் சீவுதல்; to pare palmyra leaves into uniform strips for being made up into a book.

     [எடு + (வார்); வாரு. வகிர் → வார் → வாருதல் = பிளத்தல்;

நறுக்குதல்.]

ஏடெழுதுதல்

ஏடெழுதுதல்ēṭeḻududal,    5.செ.குவி. (v.i.)

   1. எழுத்துக் கற்பிக்க முதலில் ஏடு எழுதித் தருதல்; to write out the alphabet for a child on an auspicious day with appropriate ceremonies.

   2. புதுப்பொத்தகமெழுதத் தொடங்குதல்; to write or begin lo copy a book for learning.

     [ஏடு + எழுது.]

ஏடை

 ஏடைēṭai, பெ. (n.)

   . ஆசை (சூடா.);; ardent desire, eager longing.

     [ஈடு → ஈடை → ஏடை.]

ஏட்சி

ஏட்சி1ēṭci, பெ. (n.)

   தோற்றம்;     “ஏட்சிதொட் டெண்ண” (சினேந்.காண்டப்.3);;

 rising of a heavenly body.

     [எழுச்சி → ஏட்சி (கொ.வ.);.]

 ஏட்சி2ēṭci, பெ. (n.)

   உறுதி; sability, firmness.

     “ஏட்சியின் விளக்கிடு மென்றணிச் சித்தே” (அருட்பா. vi, அருட்பெருஞ்சோதியக);.

     [எல் + சி – ஏற்சி → ஏட்சி (கொ.வ.);.]

ஏட்டன்

ஏட்டன்ēṭṭaṉ, பெ. (n.)

   மேலோன்; virtuous man.

     [ஏ → ஏட்டன். (முதா.77);.]

ஏட்டிக்குப்போட்டி

 ஏட்டிக்குப்போட்டிēṭṭikkuppōṭṭi, பெ. (n.)

   நேருக்குமாறான செயல் (கொ.வ.);; logomachic retort ortit for tat.

தெ. ஏடிகிபோடி.

     [எண் → எட்டு → ஏட்டி → கு + போட்டி – எட்டிக்குப்போட்டி, எண் = நேரானது. செவ்விது.]

ஏட்டிற்கல்வி

 ஏட்டிற்கல்விēṭṭiṟkalvi, பெ. (n.)

   ஆசிரியர் இல்லாக் கல்வி; learning not by teacher, self-education.

     [எடு + இல் – ஏடில் + கல்வி – ஏட்டிற்கல்வி (கொ.வ.); = நூலின் துணைமட்டும் கொண்டு அதில் உள்ளதைத் தனக்குப் புலப்பட்டவாறு விளங்கிக் கொள்ளும் படிப்பு. ‘இல்’ ஏழன் உருபு.]

ஏட்டு

 ஏட்டுēṭṭu, பெ. (n.)

   காவல் துறையின் தலைமைக் காவலர்; head constable.

     [E. head → த. ஏட்டு.]

ஏட்டுச்சுரைக்காய்

ஏட்டுச்சுரைக்காய்ēṭṭuccuraikkāy, பெ. (n.)

   1. பட்டறிவோடு கூடாத கல்வியறிவு; book-learning that is devoid of practical wisdom.

     “ஏட்டுச் சுமைக்காய் கறிக்கு உதவாது” (பழ.);.

   2. பட்டறிவு இன்றி நூலறிவுமட்டு முள்ளவ-ன்-ள்; person with such book learning. அவனொரு ஏட்டுச்சுரைக்காய். அவனால் எதுவும் செய்து காட்ட முடியாது. (உ.வ.);.

     [எடு + சுரை – காய் – ஏட்டுக்கரைக்காய் = ஏட்டில் வரையப் பட்ட கரைக்காய் ஒவியம். ஏட்டுச் கரைக்காய் – பிறிது பொருளுணர்த்திய குறிப்புத்தொடர்.]

ஏட்டுப்படிப்பு

 ஏட்டுப்படிப்புēḍḍuppaḍippu, பெ. (n.)

     (உலக); பட்டறிவு இல்லாத கல்வி;

 book-learning without practical knowledge.

     [எடு + படிப்பு – எட்டுப்படிப்பு = எட்டில் அல்லது நூலில் உள்ளவாறு படித்தறித்த கல்வி.]

ஏட்டுப்பொறி

ஏட்டுப்பொறிēṭṭuppoṟi, பெ. (n.)

   ஒலைச்சுவடியில் பதித்த முத்திரை; seal set on a letter written on

 Palmyra leaf.

     “ஏட்டுப் பொறி நீக்கி மெல்லென விரித்து” (பெருங்.வத்தவ.10,109);.

     [ஏடு + பொறி – எட்டுப்பொறி.]

ஏட்டுவினை

ஏட்டுவினைēṭṭuviṉai, பெ. (n.)

   ஒலையேட்டி லெழுதுந் தொழில்; occupation as writer on palmyra leaves.

     “ஏட்டு வினைக் கணக்கன்” (பெருங்.வத்தவ.10,95);.

     [ஏடு + விளை – ஏட்டுவினை.]

ஏட்டை

ஏட்டை1ēṭṭai, பெ. (n.)

   1. வறுமை; poverty, necessitous state or condition.

     “ஏட்டைப் பருவத்து மிற்பிறந்தார் செய்வன” (நாலடி.358);.

   2. தளர்வு; weakness.

   3. இளைப்பு; drooping, pining.

     “வெண்ணினத்த செந்த டிக்கேயேட்டைப்பட்டு” (சீவக.1552);.

     [இள் → இட்டை → ஏட்டை]

 ஏட்டை2ēṭṭai, பெ. (n.)

   1. இளமை; youthfulness.

   2. இளங்கதிர்; young ears of corn.

     [இன் → இட்டை → ஏட்டை.]

 ஏட்டை3ēṭṭai, பெ. (n.)

   விலங்கேற்றின் பெயர் (திவா.);; male of animals, as of the buffalo.

     [ஏறு → ஏற்றை → ஏட்டை (கொ.வ.);.]

 ஏட்டை4ēṭṭai, பெ. (n.)

   விருப்பம் (பிங்.);; Inense desire.

     [இள் → இட்டை → ஏட்டை (கொ.வ.);.]

ஏட்டைப்படல்

 ஏட்டைப்படல்ēḍḍaippaḍal, பெ. (n.)

   இளைத்தல்; reduce in growing thin.

     [ஏட்டை + படல்.]

ஏட்டைப்பருவம்

ஏட்டைப்பருவம்ēṭṭaipparuvam, பெ. (n.)

   இளம் பருவம்; period of youth;

 youthhood.

   2. தளர்ந்த பருவம்; helpless state.

     [ஏட்டை + பருவம்.]

ஏணகம்

ஏணகம்ēṇagam, பெ. (n.)

   ஒருவகை மருந்துச் சரக்கு; a drug (நாமதீப.395);.

ஏணம்

 ஏணம்ēṇam, பெ. (n.)

   மான்தோல்; deer skin (W.);.

     [Skt. ena → த. ஏணம்.]

ஏணி

ஏணிēṇi, பெ. (n.)

   குன்று; hill.

   2. மலை; mountain,

   3. செங்குத்தாக வளரும் மரம்; tall tree.

     [ஏண் → ஏணி.]

ஏணிக்காணம்

ஏணிக்காணம்ēṇikkāṇam, பெ. (n.)

   ஏணி வைத்து மரமேறும் ஈழவர்க்குரிய வரி (S.I.I.ii.67);; tax paid by toddy tappers.

ம. ஏணிக்கானம்.

     [ஏணி + காணம். காணம் = காணத்தின் (கொள்ளிள்); வடிவாகச் செய்யப்பட்ட பொற்காக.]

ஏணிநிலை

 ஏணிநிலைēṇinilai, பெ. (n.)

   பகைவர் மதில் மீது ஏணி சார்த்துதல்; placing ladder on the side of the rampart of the enemy, literary convention describing a heroic tradition.

     [ஏணி + நிலை.]

பகைவர் கோட்டையைக் கைப்பற்றியே தீருவோம் என்னும் மறவர் துணிவைக் காட்டும் புறத்துறை.

     “இட்டவீரக்கழலை உடைய கொடுவினையாளர் செறிந்து செறியாதார் மண்ணின் ஏவறைகளை யுடைய மதிலிலே ஏணியைச் சார்த்தியது.” (பு.வெ.);.

ஏணிப்படுகால்

ஏணிப்படுகால்ēṇippaḍukāl, பெ. (n.)

   மேகலை; woman’s jewelled girdle.

     “ஏணிப்படுகா லிறுகிறுகத் தாளிடீஇ” (பரிபா.10,11);.

     [ஏணி + படு + கால் – ஏணிப்படுகால் = ஏழு அல்லது எட்டு வடங்களாகத் தொங்கல் அமைத்த இடையணிகலன்.]

ஏணிப்பந்தம்

 ஏணிப்பந்தம்ēṇippandam, பெ. (n.)

   தோளிற் சுமக்கும் ஒருவகைத் தீவட்டி வரிசை; row of torches set in a beam and carried on men’s shoulders in night processions.

     [ஏணி + பந்தம்.]

ஏணிப்பழு

 ஏணிப்பழுēṇippaḻu, பெ. (n.)

   ஏணிப்படி (வின்.);; step or rung of a ladder.

     [ஏணி + பழு.பள் → = கிடக்கைப்படி.]

ஏணிமயக்கம்

ஏணிமயக்கம்ēṇimayakkam, பெ. (n.)

   கோட்டைக்கு உள்ளும் புறமுமுள்ளார் ஏணிமிசைநின்று போர்செய் தலைக் கூறும் புறத்துறை (தொல்,பொருள்.68,உரை);; theme of the fighting of opposing parties climbing on ladders placed against the opposite sides of the wall of a fort.

     [ஏணி + மயக்கம். மயக்கம் = கைகலத்தல், போர்.]

ஏணிமிசைமயக்கம்

ஏணிமிசைமயக்கம்ēṇimisaimayakkam, பெ. (n.)

ஏணிமயக்கம் பார்க்க (தொல்,பொருள்.68);;see enimeyakkam.

ஏணுக்குக்கோண்

 ஏணுக்குக்கோண்ēṇukkukāṇ, பெ. (n.)

   எதிரிடையான பேச்சு (யாழ்ப்.);; thwarting, gainsaying, logomaChic talk.

     [ஏண் → ஏனுக்கு + கோண்.]

ஏணை

ஏணை1ēṇai, பெ. (n.)

   தொங்கும் தொட்டில், புடவைத் தொட்டில்; cloth-cradle hung from a cross piece or branch;

 children’s hammock.

     “ஏணைநின் றெடுத்த கைப் பிள்ளை” (அருட்பா.vl பற்றறுத்தல்.2);.

மறுவ, துளி.

     [ஏல் → ஏள் → ஏன் → ஏணை. (வே.க.35);.]

 ஏணை2ēṇai, பெ. (n.)

   உறுதி நிலை; firmness, stability

     “ஏணை பெற்றிட வெனக்கருள் புரிந்த” (அருட்பா.vi. அபயநி.1);.

     [ஏ → ஏண் → ஏணை.]

 ஏணை3ēṇai, பெ. (n.)

   ஆடு (யாழ்.அக.);; goat or sheер.

     [எண்4 → ஏணை = மானைப் போன்றிருக்கும் வரையாடுகளுள் ஓரினம்.]

ஏணைக்குக் கோணை

 ஏணைக்குக் கோணைēṇaikkukāṇai, பெ. (n.)

   ஏட்டிக்குப் போட்டி; contradiction merely for the sake of contradicting, tit for tat.

     [ஏண் → ஏணை. கோண் → கோணை. ஏணை + கு + கோணை.]

ஏண்

ஏண்1ēṇ, பெ. (n.)

.

   1. உயர்ச்சி; exaltation greatness, excellence.

     “ஏணிலேனிருந்தேன்” (திவ்.பெரியதி. 1,6,1);.

   2. எல்லை (திவ்.திருவாய்.2,8,8,பன்ளீ);; Loundary, limit.

   3. பெருமை; praisworthiness worth.

   4. ஆணவப்பேச்சு; haughty words.

     “ஏண்பல பகர்ந் தனை” (கந்தபு.அவைபுகு:153);.

   5. செருக்கு; pride.

     [ஏ → எண்.]

 ஏண்2ēṇ, பெ. (n.)

.

   1. திண்ணம்; firmness, stability.

     “நெஞ்சத்தே ணிகந்து” (சீவக.770);.

   2. வலிமை; strength energy.

     “ஏணிலான் சேவகமும்” (சிறுபஞ்.12);.

     [ஏ → ஏண்.]

 ஏண்3ēṇ, பெ. (n.)

   . வளைவு; crookedness, bend.

     [இல் → இள் → ஈள் → ஏள் → எண்.]

ஏண்கோண்

 ஏண்கோண்ēṇāṇ, பெ. (n.)

   . ஒழுங்கின்மை; urevenness, crookedness, inconsistency. ஏண்கோணான பேச்சு (யாழ்ப்.);

     [ஏ → எண் = செங்குத்து, நெட்டு, உயரம். கோள் → கோண் = வளைவு, சரிவு. ஏன் + கோண் = எண்கோன், மேடும் பள்ளமுமாய் இருத்தல், ஒழுங்கின்மை.]

ஏண்டன்

 ஏண்டன்ēṇṭaṉ, பெ. (n.)

   . முட்டாள்; ruffian, brute. (சேரநா.);.

ம. ஏண்டன்.

     [ஏ → எண் → ஏண்டு → எண்டன் = செருக்கினால் அறிவிழந்த வன்.]

ஏண்டாப்பு

 ஏண்டாப்புēṇṭāppu, பெ. (n.)

   . இறுமாப்பு (யாழ்ப்.);; self-conceit, arrogance, pride.

     [ஏ → ஏண் → ஏனாப்பு (‘ஆப்பு’ – சொல்லாக்க ஈறு);. ஏண் = செருக்கு. ஏணாப்பு – ஏண்டாப்பு (இடைத்திரிபு);.]

ம. ஏணி.

     [ஏண் → ஏணி.]

ஏதண்டை

ஏதண்டைētaṇṭai, பெ. (n.)

   1. பலகைத்தூழக்கு; shelf suspended by cords, rack for books.

   2. நீர்த்துறையிற் கட்டிய பரண்; platform raised over a body of water, or at a ford for passengers waiting for a ferry

   3. கட்டடங்கட்ட உதவும் சாரம்; scaffoid.

     [ஏந்து → ஏந்தண்டை → ஏதண்டை.]

ஏதனம்

 ஏதனம்ētaṉam, பெ. (n.)

   மூச்சு விடுகை; breathing (யாழ்.அக.);.

     [Skt. etana → த. ஏதனம்.]

ஏதப்பாடு

ஏதப்பாடுētappāṭu, பெ. (n.)

   குற்றம் உண்டாகுகை; fault defect.

     “இளிவென்னு மேதப்பா டஞ்சுபவர்” (குறள்.464);.

     [ஏதம் + பாடு. படு → பாடு.]

ஏதம்

ஏதம்1ētam, பெ. (n.)

   1. துன்பம் (திவா.);; suffering, affliction, distress.

     “ஏதம் படுபாக்கிந்து” (குறள்.136);.

   2. குற்றம் (திவா.);

 fault, defect, blemish.

   3. கேடு; calamity ruin.

     “அரவும் உருமும் புலியும் யானையு மிவற்றது ஏதமுடைத்து” (இறை.18.உரை);.

ம. ஏதம்.

     [ஏறு → ஏறம் → எதம். ஏறு = குத்துதல், தாக்த்தல், துன்புறுத்துதல், துன்பம்.]

 ஏதம்2ētam, பெ. (n.)

   1. தீயோர் (வின்.);; a species of deer or antelope of black colour with beautiful eyes and short legs.

   2. ஆடு; sheep.

ம. ஏதம்.

     [ஏண் → ஏணம் → ஏதம் (கொ.வ.);.]

ஏதர்

 ஏதர்ētar, பெ. (n.)

   தீயோர் (வின்.);; blameworthy persons, evil-minded people.

     [ஏதம் → ஏதர்.]

ஏதலன்

ஏதலன்ētalaṉ, பெ. (n.)

   பகைவன்; foe, enemy. எதல னின்னுயிரை வல்வி” (திவ்.பெரியதி.1,7,4);.

ம. ஏதலன்.

     [எள்ளல் → எளல் → ஏதல் → ஏதலன் எள்ளும் = பகைவன்.]

ஏதல்

ஏதல்ētal, பெ. (n.)

   1. போகை; going.

   2. மரக்கலம்; vessel, ship.

     [இய → ஏ → எகு → ஏகுதல் → ஏதல். இய = செல். நட.]

ஏதாகுதல்

 ஏதாகுதல்ēdākudal,    சு.பெ. (pron) ஏதாவது (யாழ்ப்.); something, whatever, ever so little.

     [எது – ஆகுதல்.]

ஏதின்மை

ஏதின்மைētiṉmai, பெ. (n.)

   1. அயன்மை; strangeness, foreignness.

   2. பகைமை; enmity, hatred, alienation.

     “அறிவுடையா ரேதின்மை கோடி யுறும்” (குறள்.816);.

     [ஏது + இன்மை.]

ஏதிலான்

 ஏதிலான்ētilāṉ, பெ. (n.)

   வறியவன் (யாழ்.அக.);; poor man.

ம. ஏதிலான் (பகைவன்);.

     [ஏது + இல் + ஆன் – ஏதிலான் (ஒன்று மற்றவன்);. ‘இல்’ – எ.ம.இ.தி.]

ஏதிலார்

ஏதிலார்ētilār, பெ. (n.)

   1 பிறர் (அன்னியர்);; others, foreigners, strangers, those who go not mingle in others’ afairs.

     “ஏதிலார் பக்கமாகி” (கந்தபு.தவங்காண்.22);.

   2. பகைவர்; toes, eremies.

     “ஏதிலவேதிலார் நூல்” (குறள்.440);.

   3. பரத்தையர் prostitutes

     “ஏதிலார்ப் புணர்ந்தமை” (கலித்,78);.

   4. வறுமையாளர்; poormen.

     [எது + இல் + ஆர் – எதிலார் = எதுமற்றவர், எவ்வகை உறவும் இல்லாதவர். ‘இல்’ எ.ம.இ.தி.]

ஏதிலாளன்

ஏதிலாளன்ētilāḷaṉ, பெ. (n.)

   பிறன் (அன்னியன்);; stanger.

     “ஏதிலாளற்கிழந்தனெனெழிலே” (பு.வெ.11. பெண்பாற்.4);.

     [ஏது + (இல்லாளன்); இலாளன்.]

ஏதிலாள்

ஏதிலாள்ētilāḷ, பெ. (n.)

   பிற கெண்; strange, unfamiliar woman.

   2. மாற்றாள்; co-wife.

     “ஏதிலாள்வாய் நவையினிற் காத்தியென்ன” (திருவிளைவன்னியுங்.42);.

     [ஏது + இல் + ஆள்- ஏதிலாள் (ஏதும்இல்லாதவள். எவ்வகை நெருங்கிய உறவும் இல்லாதவள். ‘இல்’ – எம.இ.தி.]

ஏதில்

 ஏதில்ētil, பெ. (n.)

   அயல்; aien.

     [எது + இல் – ஏதில் (ஏதும் இல்லாதது, உறவு கொள்ளாதது ‘இல்’ – எ.ம.இ.நி.].

ஏது

ஏது3ētu,    1. ஏது; which, what உனக்கேது வேணும் (இ.வ.).

   2. ஏன்; why. அவன் உன்னையப்படிப் பேசவேண்டியதேது? (இ.வ.);.

   3. எங்கிருந்து, எப்படி; hence, how. அவனுக்குப் பணமேது? (உ.வ.);.

   ம. ஏது;   க. யா, ஆ. எ, ஏ, யாவ, தாவ;   கோத, ஏத்;   துட, ஏத்;   குட, ஏதி;   து. தா. தானெ, சானெ;   ஈதவு, வா, ஒவு;   தெ, ஏதி, எதி, ஏத்தி;   கொலா. ஏத், ஏத்வ்;   பர். ஏத்;   கூ. அனெ. ஏகனெ;   கொண். எம். நா. நா. நானெ;   குவி. ஏன;   குரு. எக்நா;   மால். இந்திர, இகிர். இகம்;பிரா. அரா, அராத்.

     [ஏ → ஏது. ஏ = வினாச்சொல்.

     “ஆ ஏ ஒ’அம் மூன்றும் வினா” (தொல்.எழுத்.32);. எது -கட்டடியாகப் பிறந்தவினாச்சொல். ஏது -காரணங்கருதிய வினாச் சொல்.]

 ஏது4ētu, பெ. (n.)

   எதம்; fault, defect.

     “ஏதிலாக் கற்பம்” (கந்தபு.அவை.15);.

     [எய் → எய்தி → எதி → ஏது.]

 ஏது5ētu, பெ. (n.)

   1. காரணம்; cause, origin, basis utimate cause.

     “ஏதுவி னுணர்த்தலும்” (தொல்.பொ ருள்.168);.

   2. துணைக்காரணம் (திவா.);; instrumental cause.

   3. முதற்காரணம் (வின்.);; primitive cause, or the material of which a thing is made.

   4. செல்வம்; wealth. அவன் ஏதுவுள்ளவன் (யாழ்ப்.);.

   5. கருதளவை (அனுமான); உறுப்புகளைந்தனுள் இரண்டாவது; middle term.

   6. காரண காரியங்களை ஒரு சேரக் கூறும் ஓர் அணி வகை (தண்டி.57);;   7. ஏதுநிகழ்ச்சி பார்க்க;see edu-nigalcci.

     “ஏது முதிர்ந்த திளங்கொடிக் காதலின்” (மணி.7.20);.

   8. பொருட்டு (நிமித்தம்);; foreboding, foreshadowing, omen, augury.

     [ஏந்து – ஏது.]

ஏதுஅணி

 ஏதுஅணிētuaṇi, பெ. (n.)

   யாதானும் ஒரு பொருட்டிற மிதனினிது நிகழ்ந்ததென்று காரணம் விதந்து சொல்லும் அணி (அபி.சிந்.);; figure of speech.

     [ஏது + அணி.]

ஏதுக்கருத்தன்

ஏதுக்கருத்தன்ētukkaruttaṉ, பெ. (n.)

   ஏவுதற்கருத்தன் (இறை.18, பக்.110);; indirect agent.

     [ஏது + கருத்தன்.]

ஏதுக்கருத்தா

ஏதுக்கருத்தாētukkaruttā, பெ. (n.)

ஏதுக்கருத்தன் பார்க்க (தொல்.சொல்.248.உரை);;see edukkaruttan.

ஏதுங்கெட்டவன்

 ஏதுங்கெட்டவன்ētuṅgeṭṭavaṉ, பெ. (n.)

   பயனற்றவன்; person of no worth whatever, a good for nothing fellow.

     [எதுவும் → ஏதும் + கெட்டவன்.]

ஏதுநிகழ்ச்சி

ஏதுநிகழ்ச்சிētunigaḻcci, பெ. (n.)

   கன்மங்களாகிய காரணங்கள் தத்தம் பயனைக் கொடுத்தற்குத் தோற்றுகை; events as the concomitant fruits of previous deeds.

     “ஏதுநிகழ்ச்சி யெதிர்த்துள தாதலின்” (மணி.3.4);.

ஏதுனம்

 ஏதுனம்ētuṉam, பெ. (n.)

   அரிதாரம்; yellow orpiment (யாழ்.அக.);.

ஏதுப்பண்ணு-தல்

ஏதுப்பண்ணு-தல்ēduppaṇṇudal,    15. செ.கு.வி. (v.i.)

   நாடியபொருள் கிடைத்தற்கு வகைசெய்தல் (உ.வ.);; to endeavour to attain an end, to take steps to achieve one’s aim.

     [ஏந்து → ஏது + பண்ணு.]

ஏதுப்பார்-த்தல்

ஏதுப்பார்-த்தல்ētuppārttal,    4.செ.கு.வி. (v.i.)

   நேரம் பார்த்தல் (வின்.);; to wait for a suitable opportunity.

     [எந்து → ஏது + பார்.]

ஏதுப்போலி

ஏதுப்போலிētuppōli, பெ. (n.)

   ஏதுவுக்குரிய இலக்க ணமின்றி ஏதுப்போலத் தோன்றுவது (மணி.29,141);; fallacy, fallacious middle term.

     [எந்து → ஏது + போலி.]

ஏதுமலைவு

ஏதுமலைவுētumalaivu, பெ. (n.)

   செய்யுட் குற்றங்களு ளொன்று (யாப்.வி.525);; defect in poetry.

     [ஏது + மலைவு.]

ஏதும்

ஏதும்ētum, பெ. (n.)

   1. சிறிதும்; even a little.

     “ஏதும் நீரிலா தழல்படு வெய்யகான்” (கந்தபு.சுரம்புகு.22.);

   2. எதுவும்; anything, everything without exception… கற்பகம் ஏதுந் தரும்.

   3. ஏதாவது; something.

   4. எதுவாகிலும், எல்லாம்; whichever, whatever, whatsoever, all, any.

ம. ஏதும்.

     [எது + உம் – எதுவும் → ஏதும்.]

ஏதுவின்முடித்தல்

ஏதுவின்முடித்தல்ētuviṉmuḍittal, பெ. (n.)

   முன் காரணம் விளங்கப் பெறாத தொன்றைப் பின் கார ணத்தால் முடிவு செய்வதாகிய உத்தி (நன்.14);;     [ஏது + இன் + முடித்தல்.]

ஏதேது

 ஏதேதுētētu, பெ. (n.)

   எதுவாயினும்; which all, whatsoever.

ம. ஏதேது.

     [ஏது + ஏது – ஏதேது.]

ஏதேனும்

 ஏதேனும்ētēṉum, பெ. (n.)

   ஏதாவது, குறைந்த வளவாவது; somewhat, a little of something. at least anything.

ம. ஏதேனும்.

     [ஏது + ஆயினும் → ஏதாயினும் → ஏதேனும்.]

ஏதை

ஏதைētai, பெ. (n.)

   1. வறிஞன் (யாழ்.அக.);; poor man.

   2. பேதை; innocent person;

 ignoramus.

     [ஏழை → ஏதை.]

ஏத்தகுடி

 ஏத்தகுடிēttakuṭi, பெ. (n.)

பெண் எடுத்த குடி,

 bride”s house.

     [ஏற்ற(ஏத்த);+குடி (கொ.வ.);]

ஏத்தன்

 ஏத்தன்ēttaṉ, பெ. (n.)

   நேந்திர வாழை; a kind of plantain. (சேரநா.);.

ம. ஏத்தன்.

     [ஏற்றம் → ஏற்றன் → ஏத்தன்.]

ஏத்தம்வாழை

 ஏத்தம்வாழைēttamvāḻai, பெ. (n.)

   நேந்திரம் வாழை; a kind of banana popular in Kerala.

     [ஏற்றம் → த்தம் + வாழை.]

ஏத்தாளன்

ஏத்தாளன்ēttāḷaṉ, பெ. (n.)

ஏத்தாளி (சிலப்.26,124, அரும்.); பார்க்க;see ettall.

     [ஏத்து + ஆளன்.]

ஏத்தாளி

 ஏத்தாளிēttāḷi, பெ. (n.)

   புகழ்ந்து பாடுபவன்; panegyrist bards, singers.

ம. ஏத்தாக்கள்.

     [ஏத்து + ஆள் + இ – எத்தாளி. ஏத்துதல் = புகழ்தல்.]

ஏத்தியலாளன்

ஏத்தியலாளன்ēttiyalāḷaṉ, பெ. (n.)

எத்தாளி பார்க்க (பெருங்,நரவான.6,87); see ettall.

     [எத்து + இயல் + ஆளன்.]

ஏத்திரி

 ஏத்திரிēttiri, பெ. (n.)

   சாதிபத்திரி; mace, a spice.

     [U. jawatri → த. ஏத்திரி.]

ஏத்து

ஏத்து2ēttu, பெ. (n.)

   ஏமாற்று; invesging, cheating, fraud seduction, deception.

     “எத்தோ நின்னன்புடைமை” (திரு.வாச.7,3);.

ஏத்து-தல்

ஏத்து-தல்ēddudal,    5.செ.குன்றாவி (v.t.)

   1. வாழ்த்துதல்; to bless,

     “பகைதவ நூறு வாயென… ஏத்தினாள்” (சீவக.324);.

   2. புகழ்கை; praising, extolling.

     “இழிப்பு மெடுத்தேத்தும்” (நாலடி.163);.

     [ஏ → ஏத்து.]

ஏத்துவாபாசம்

ஏத்துவாபாசம்ēttuvāpācam, பெ. (n.)

ஏதுப்போலி (பிரபோத.42, 5); பார்க்க; see ettu-p-poli.

     [Skt. hetu + vapacam → த. ஏத்துவாபாசம்.]

ஏந்தல்

ஏந்தல்1ēndal, பெ. (n.)

   1. மலை (அக.நி.);; hill.

   2. முதல் (அக.நி.);; that which is first.

   3. உதவி; assistance, helpfulness, அவனிருந்தது எவ்வளவோ ஏந்தலாயிருந்தது.

   4. எளிதிற் செய்துமுடிக்குந் தன்மை; ease in accomplishment.

அந்தக் காரியம் செய்வது எனக்கு ஏந்தலாயிருக்கிறது.

     [ஏ → ஏல் → ஏத்து → ஏந்தல்.]

 ஏந்தல்2ēndal, பெ. (n.)

   இளமை; youthfulness.

     [இளந்தை → ஏந்தை → ஏந்தல்.]

 ஏந்தல்3ēndal, பெ. (n.)

   1. கையேந்துகை; selcing out the hands, as a beggar.

   2. தாங்குகை; holding up, raising, supporting.

   3. தேக்கம் (திவ்.திருச்சந்.6,

ஏந்திசையகவல்

ஏந்திசையகவல்ēndisaiyagaval, பெ. (n.)

   நேரொன்றாசி ரியத் தளையாற் பிறக்கும் ஓசை (காரிகை.செய்.1. உரை);; rhythm found in agaval verse and produced by நேரசை following either of the மாச்சீர்.

     [ஏந்து + இசை + அகவல்.]

ஏந்திரம்

ஏந்திரம்1ēndiram, பெ. (n.)

   1. மாவரைக்குந் திரிகை (பிரபோத. 11,34);; hand-mill.

   2. கரும்பாலை; sugarcane press.

ம. ஏந்த்ரம்: Skt yantra.

     [இய → இயந்திரம் → ஏந்திரம்.]

 ஏந்திரம்2ēndiram, பெ. (n.)

   மாயக்கலை, கண்கட்டுக் கலை; magic.

     “ஏந்திர நூழில் செய்யா” (சீவக.2283);.

     [இய → இயந்திரம் → ஏந்திரம் (செலுத்துதல், ஏவுதல்);.]

 ஏந்திரம்3ēndiram, பெ. (n.)

   1. மதிலுறுப்பு (அக.நி.);.

 bastion of a fortified wall.

   2. தேர்; car, chariot.

     [ஏ → எண் + திரம் – ஏந்திரம். ‘திரம்’ – சொல்லாக்க ஈறு.]

ஏந்திரவச்சு

 ஏந்திரவச்சுēndiravaccu, பெ. (n.)

   திரிகையச்சு; axis or upright shaft about which the upper stone of a hand mill is turned.

     [இயந்திரம் → எந்திரம் + அச்சு – எந்திர அச்சு → ஏந்திரஅச்சு.]

ஏந்திலை

ஏந்திலைēndilai, பெ. (n.)

   வேல்; spear ence

     “ஏந்திலை சுமந்து” (பரிபா.17.2);.

     [ஏ → ஏந்து (உயரம்);. எந்து + இலை – ஏந்திலை (நெடிய இலை முகட்டுவேல்);.]

ஏந்திழை

ஏந்திழைēndiḻai, பெ. (n.)

   1. அழகிய அணிகலன்; beautiful ornament.

     “ஏந்திழையாட் டருகென்னும்” (பு.வெ.4,24);.

   2. பெண்; woman beautifully decked with jewels.

     “ஏந்திழை யிலளுக்கு” (திவ்.பெரியதி. 2,7,3);.

ம, ஏந்திழ.

     [எந்து = உயர்வு, சிறப்பு. ஏந்து + இழை – ஏந்திழை = சிறந்த அணிகலன் அணிந்தவள்.]

ஏந்து

ஏந்து1ēndudal,    5.செ.குன்றாவி, (v.t)

   1. உயரத்தூக்குதல்; to lift.

   2. உயரத்தூக்கிப் பிடித்தல்; to hold a thing after lifting it.

   3. கைநீட்டுதல்; to stretch out the hands.

நீ தர நான் ஏந்தி வாங்கினேன்.

   4. கையிலெடுத்தல்; to receive in the hands

நீரை ஏந்திப் பருகினான்.

   5. தாங்குதல்; to hold in the hands,

     “அங்குசபாச மேந்தி” (சூடா.);.

   7. சுமத்தல்; to support as a beam.

உத்திரத்தைத் தூண் ஏந்தி நிற்கிறது.

     [ஏ → ஏல் → ஏந்து.]

 ஏந்து2ēndudal,    10.செ.கு.வி. (v.i.)

   1. ஒங்குதல்; to rise high, to be elevated.

     “நிலனேந்திய விசும்பும்” (புறநா.2,2);.

   2. சிறத்தல்; to be eminent, excellent, exalted, of fine quality.

     “ஏந்தியகொள்கையார் சீறின்” (குறள்.899);.

   3. மிகுதல் (தொல்.பொருள்.543,உரை);; to be abundant.

ம. ஏந்துக.

     [ஏ → ஏண் → ஏந்து.]

 ஏந்து3ēndu, பெ. (n.)

   1. வாய்ப்பானது, வாகு (வசதி);; convenience.

   2. காரணம்; reason.

     [எ → ஏல் → ஏந்து.]

 ஏந்து4ēndu, பெ. (n.)

   முடம்; lameness.(சேரநா.);.

ம. ஏந்து.

     [எல் → ஏந்து (காலை ஏந்தி வைத்து நடத்தல்);.]

ஏந்துகால்

 ஏந்துகால்ēndukāl, பெ. (n.)

   முடக்கால்; lameress. (சேரநா.);.

ம. ஏந்துகால்.

     [ஏந்து + கான்.]

ஏந்துகுழந்தை

 ஏந்துகுழந்தைēnduguḻndai, பெ. (n.)

   கைக்குழந்தை; infant in arms.

     [எந்து + குழந்தை – ஏந்து குழந்தை (வினைத்தொகை);.]

ஏந்துகொம்பன்

ஏந்துகொம்பன்ēndugombaṉ, பெ. (n.)

   1. வளைந்த

   கொம்பையுடைய யானை; elephant with curved tusks.

   2. நிமிர்ந்து முன் வளைந்த கொம்புள்ள மாடு; ox with horns rising abruptly and projecting forward at the points.

     [ஏந்து + கொம்பு + அன்.]

ஏந்துகொம்பு

ஏந்துகொம்புēndugombu, பெ. (n.)

   1. யானைக் கொம்பு; tusk of an elephant curved upward.

   2. தாங்கு கொம்பு (வின்.);; curved pole of the palanquin, pole for carrying a load.

     [எந்து + கொம்பு.]

ஏந்துமாந்து

 ஏந்துமாந்துēndumāndu, பெ. (n.)

   உதவி; help, assistance. (சேரநா.);.

ம. ஏந்துமாந்து.

     [ஏந்து → எந்துமாந்து (எதுகை குறித்த இணைமொழி);.]

ஏந்தெழில்

ஏந்தெழில்ēndeḻil, பெ. (n.)

   மிக்க அழகு; surpassing beauty.

     “பூங்குழைக் கமைந்த வேந்தெழின் மழைக் கண்.” (நெடுநல்.38);.

     [ஏந்து + எழில். எந்து = உயர்ந்த. சிறந்த.]

ஏன

ஏனēṉa,    சு.பெ. (pron.) பிற; others, the rest.

     “முதலா வேன” (தொல்.எழுத்து.66);.

     [ஏ = உயர்தல், மிகுதல், எஞ்சுதல். ஏ → ஏல் → ஏல → ஏன = எஞ்சியவை.]

ஏனபானம்

 ஏனபானம்ēṉapāṉam, பெ. (n.)

   தட்டுமுட்டு; utensils, implements.

     [ஏனம் + பானம். ‘பானம்’ எதுகை குறித்த இணைமொழி.]

ஏனப்படம்

ஏனப்படம்ēṉappaḍam, பெ. (n.)

   பன்றிமுகக் கேட கம்; shield in the shape of a boar’s head

     “ஏனப்படமும் கிடுகின் படமும்” (சிலப்.14,172);.

     [ஏனம் + படம்.]

ஏனம்

ஏனம்1ēṉam, பெ. (n.)

   வாய்ப்பு; opportunity, convenie- nce, happiness (சேரநா.);

ம. ஏனம்.

     [ஏல் → ஏனம்.]

 ஏனம்2ēṉam, பெ. (n.)

   1. கள் குடிப்பதற்கு ஓலையா லான கலம், ஒலைக்குடலை (திவா.);; palm-leaf-ve- ssel for drinking toddy from.

   2. கலம்; utensil, vessel.

   3. கருவி (வின்.);; tool.

   4. அணிகலன் (இ.வ.);; jewel.

ம. ஏனம்.

     [எல் → ஏனம் (ஏற்பது);.]

 ஏனம்3ēṉam, பெ. (n.)

   1. பன்றி; pig, wild. Hog. (தொல்.பொருள்.623);.

   2. தினையரிசி; millet.

     [ஏனல் = கருமை. ஏனல் → ஏனம்.]

 ஏனம்4ēṉam, இடை. (part)

   ஆய்தவெழுத்தின் சாரியை (தொல்.எழுத்து.134, உரை.);; enumerative particle added to ஃ, as in அஃகேனம்.

     [அன் → ஆன் → ஆனம் → ஏனம் (சாரியை);.]

 ஏனம்5ēṉam, பெ. (n.)

   1. கரிசு (பாவம்);; sin, offence (சூடா.);.

   2. குற்றம் (யாழ்.அக.);; fault.

     [ஈனம் → ஏனம்.]

 ஏனம்ēṉam, பெ. (n.)

   குற்றம்; fault (யாழ்.அக.);.

     [Skt. enas → ஏனம்.]

ஏனல்

ஏனல்ēṉal, பெ. (n.)

   1. செந்தினை (திவா.);; red millet.

   2. கருந்தினை(சூடா.);; back-millet.

   3. தினைப் புனம் (பிங்.);; millet field.

   4. கதிர் (வின்.);; ear of corn.

     [இல் → எல் → ஏல் (கருமை);. ஏலல் → ஏனல் = கருந்தினை. கருந்தினைக்குரிய பெயர் தினைகளுக்குரிய பொதுப்பெயரா கிச் செந்தினையையும் தினைப்புனத்தையும் குறித்தது.]

ஏனவாயன்

 ஏனவாயன்ēṉavāyaṉ, பெ. (n.)

   பேதை (இ.வ.);; dolt, fool.

     [ஈனம் → ஏனம். ஈனம் + வாயன் – ஈனவாயன் → ஏனவாயன்.]

ஏனாதி

ஏனாதி1ēṉāti, பெ. (n.)

   ஓர் இளகியம் (இலேகியம்); (வின்.);; a kind of electuary.

     [ஏலாதி → ஏனாதி.]

 ஏனாதி2ēṉāti, பெ. (n.)

   1. விற்படைத்தலைவன்; general of archery wing.

   2. படைத்தலைவன் (பிங்.);; general.

   3. மறவன் (பிங்.);; soldier, warrior.

   4. அமைச் சர்; ancient title conferred by a king on his minister.

     “சோழிக வேனாதி தன்முக நோக்கி” (மணி.22,205);.

   ம. ஏனாதி;தெ. ஏனாதி.

     [ஏ = அம்பு. ஏனன் = வில்லாளி. ஏனன் + அதி = ஏனதி → ஏனாதி = விற்படைத்தலைவன்.]

 ஏனாதி3ēṉāti, பெ. (n.)

   1. முடி திருத்தாளன் (பிங்.);; barber.

   2. சாணாரில் ஒரு வகுப்பு; division among {}. (Tj.);.

தெ. ஏனாதி.

     [ஏனன் + அதி – எனதி → ஏனாதி. ஏனாதி = விற்படைத் தலைவன். ஏனாதி2 பார்க்க;see {}.

தோற்ற படைத் தலைவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டுப் பகை வர்க்கு மழித்தல் தொழில் செய்யும் பணிக்கும் பிற துணைப் பணிகளுக்கும் ஏவப்பட்டதால் தோன்றிய புதிய குலப்பெயர் களை இச்சொல் சுட்டுவதாயிற்று.

 ஏனாதி4ēṉāti, பெ. (n.)

   வடார்க்காடு, நெல்லூர் மாவட்டங்களில் வாழும் ஒரு பழைய வகுப்பினர் (ET.);; primitive tribe in North Arcot and Nellore Districts.

தெ. யேனாதி.

     [ஏ + அம்பு. ஏ → ஏனன் = வில்லாளி. ஏனாதி = வில்லாளி இனத்துத் தலைவன், விற்படைத் தலைவன்.]

ஏனாதி மோதிரம்

ஏனாதி மோதிரம்ēṉātimōtiram, பெ. (n.)

   ஏனாதிப் பட்டத்தார்க்கு அரசரளிக்கும் மோதிரம் (சீவக.2569, உரை);; ring being the insignia of the title of {}.

     [ஏனாதி + மோதிரம்.]

ஏனாதிதிருக்கிள்ளி

 ஏனாதிதிருக்கிள்ளிēṉādidirukkiḷḷi, பெ. (n.)

   கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனால் பாடப்பெற்றவன்;   கொடையும், வீரமும் கொண்ட சிற்றரசன். (அபி.சிந்.);; chieftain, beneficient and heroic, being sung by the poet {}.

     [ஏனாதி + திரு + கிள்ளி. ஏனாதி = விற்படைத்தலைவன். படைத் தலைவருள் ஒருவனாகவிருந்து சோழராட்சியில் சிற்றர சனாக மாறிய குறுநில மன்னனாகலாம்.]

ஏனாதிநாதநாயனார்

ஏனாதிநாதநாயனார்ēṉātinātanāyaṉār, பெ. (n.)

   அறுபத்து மூவர் நாயன்மாருள் ஒருவர். (பெரியபு.);; canonized {}, one of 63 (அபி.சிந்.);

     [ஏனாதி + நாதன் + நாயனார். ஏனாதி பார்க்க;see {}.]

ஏனும்

ஏனும்ēṉum,    இடை. (part.) என்றாலும்; an affix having the force of

     “even if”.

     “தாமரை முதல்வற்கேனும்” (கந்தபு.காமதகன.83);.

     [ஆல் → ஏல் → ஏலும் → ஏனும்.]

ஏனென்(னு)-தல்

ஏனென்(னு)-தல்ēṉeṉṉudal,    14.செ.குன்றாவி. (v.t.)

   இட ரில் உதவக் கேட்டறிதல்; to make kind enquiries in times of need with a view to offer help.

அவரை ஏனென்று கேட்க ஆளில்லை (உ.வ.);.

     [ஏன் + என்.]

ஏனென்றால்

 ஏனென்றால்ēṉeṉṟāl,    இடை. (conj.) எதற்காக என் றால்; because. நான் அப்படிச் சொல்வது ஏனென்றால். (உ.வ.).

     [ஏன் + என்றால்.]

ஏனை

ஏனை1ēṉai,    கு.வி.எ. (adi.) மற்றை (சூடா.); other, the rest.

     [ஏல் → ஏல → ஏன → ஏனை.]

 ஏனை2ēṉai, பெ. (n.)

   1. மலங்கு மீன், (திவா.);; eel, anguilla.

   2. ஓர் இசைவகை (திவா.);; musical note.

     [ஏல் → ஏனை.]

ஏனைக்குமோனை

 ஏனைக்குமோனைēṉaikkumōṉai, பெ. (n.)

ஏணைக் குக்கோணை பார்க்க;see {}.

ஏனையவர்

 ஏனையவர்ēṉaiyavar, பெ. (n.)

   மற்றையோர்; others.

     [ஏல் → ஏல → ஏன → ஏனை = அவர்.]

ஏனையுவமம்

ஏனையுவமம்ēṉaiyuvamam, பெ. (n.)

   வெளிப்படையு வமம் (தொல்.பொருள்.49);; explicit comparison, dist fr. உள்ளுறை யுவமம்.

     [ஏனை + உவமம்.]

ஏன்

ஏன்1ēṉ,    கு.வி.எ. (adv.) எதற்கு; why? what? wherefore? how?

     “அடுத்த வினையுளதாயி னிறையே னென்னில்” (சிவப்பிர.2,6);.

   ம. ஏன்;   க. ஏன்;   து. தானே;   தெ. ஏமி;பட. ஏக.

     [ஏ → ஏன். (வே.க.103);.]

 ஏன்2ēṉ, இடை. (part.)

   1. தன்மை யொருமைப் பெயர்வினைகளில் வரும் ஈறு; first pers, sing. suffix (a); of a verb, as in வந்தேன்;

   2. ஒழிதற் பொருளில் வரும் இடைச் சொல் (நன்.420, மயிலை.);; particle of exclusion, as in ஏனோன்.

   ம. ஏன்;   க. ஆன், என். நான், யான்;   கோத. ஆன்;   துட. ஒன்;   குட. நானி;   து. யான், நேன்;   தெ. ஏன், நேன்;   கொலா. ஆன்;   நா. ஆன்;   பர். ஆன்;   கட. ஆன்;   கோண். அனா;   கொன். நான்;   கூ. ஆன்;   குவி. நானு;   குரு. ஏன்;   மால். ஏன்;பிரா. ஈ.

     [நான் → ஆன் → ஏன்.]

 ஏன்3ēṉ, பெ. (n.)

   பன்றி; pig.

     “ஏனொருவ னாயெயிற் றில் தாங்கியதும்” (திவ்.இயற்.நான்.70);.

     [இல் → எல் → ஏல் → ஏன். இல் = கருமை. ஏன் = கருநிறப்பன்றி.]

ஏன்றுகொள்(ளு)

ஏன்றுகொள்(ளு)1ēṉṟugoḷḷudal,    7.செ.குன்றாவி. (v.t.)

   1. ஏற்றுக்கொள்ளுதல்; to receive, accept to entertain.

     “அடியேனையு மேன்றுகொணீ” (தேவா.323,6);.

   2. பிறனைத் தாங்குதல்; to defend, plead the cause of.

அவனுக்காக ஏன்றுகொண்டு வருகி றான்.

     [ஏல் → ஏன்று + கொள்.]

 ஏன்றுகொள்(ளு)2ēṉṟugoḷḷudal,    7.செ.குன்றாவி. (v.t.)

   எதிர்த்து நிற்றல்; to confront, oppose.

     “அபிமன்னு வையுங்கண்டு துரியோதனன் மகன்… ஏன்றுகொள்ள” (பாரதவெண்பா.795);.

     [ஏ → ஏல் → ஏன்று + கொள். ஏ = உயர்தல், எதிர்தல்.]

ஏன்றுகோள்

ஏன்றுகோள்ēṉṟuāḷ, பெ. (n.)

   ஆதரித்தல்; supporting, defending.

     “எனக்குறுப்பான ஏன்றுகோளையுடைய னாய்” (தில்.திருவாய்.2,7,6,பன்னீ.);.

     [ஏல் → ஏன்று + கோள். கொள் → கோள்.]

ஏப்பம்

ஏப்பம்ēppam, பெ. (n.)

   தேக்கெறிவு; eructation, belch.

     “நிணமுண் டேப்ப மிட்டு” (திருவிசை.கரு.பதி.10,6);.

ம. ஏம்பல்.

     [ஏ → ஏப்பம் (வே.க35);.]

ஏப்பம்பறி-தல்

ஏப்பம்பறி-தல்ēppambaṟidal,    4.செ.கு.வி. (v.i.)

   எப்பம் விடு பார்க்க; eppamvidu.

     [ஏ → ஏப்பம் + பறி.]

ஏப்பிரன்

 ஏப்பிரன்ēppiraṉ, பெ. (n.)

   இழுவண்டி முதலியவற்றில் உள்ள மூடுதுணி; apron, covering for legs, as in a rickshaw.

     [E. Apron → த. ஏப்பிரன்.]

ஏப்பைசாப்பை

 ஏப்பைசாப்பைēppaicāppai, பெ. (n.)

   பயனற்றது (உ.வ.);; that which is useless,

     [ஏ → ஏண் → ஏண்பு → ஏப்பு = (உயரம்);, சாய் → சாய்ப்பு → சாப்பு (சாய்வு, சரிவு);. ஏப்புசாப்பு = ஏற்றத்தாழ்வு, கோணல் மாணல், ஒழுங்கற்றது.]

ஏமகரம்

 ஏமகரம்ēmagaram, பெ. (n.)

   பொன்; gold (அக.நி.);.

     [Skt. hemaka → த. ஏமகரம்.]

ஏமகூடம்

ஏமகூடம்ēmaāṭam, பெ. (n.)

   1. எண்குல மலைகளுளொன்று (கந்தபு.அண்டகோ.34);; name of a mountain to the north of the Himalaya, one of asta-kula-parvatm.

   2. மேரு (திவா.);; Mt. Meru.

     [Skt. hema-kuta → த. ஏமகூடம்.]

ஏமங்கோலா

ஏமங்கோலாēmaṅālā, பெ. (n.)

   1. மயில்மீன்; peacock fish graj, Histophorus unmaculatus.

   2. ஒரு கடல் மீன்; fish, greyish, Histiphorus breviostris.

     [ஏ → ஏமம் + கோலா, ஏமம் = உயரம் நீளம்.]

ஏமதாரி

 ஏமதாரிēmatāri, பெ. (n.)

   பொன்னூமத்தை; parple stramony (பச்.மூ.);.

     [Skt. hema-dhustura → த. ஏமதாரி.]

ஏமநாகம்

 ஏமநாகம்ēmanākam, பெ. (n.)

   ஊமத்தை; thorn-apple (சித்.அக.);.

     [Skt. hema+naga → த. ஏமநாகம்.]

ஏமந்தருது

 ஏமந்தருதுēmandarudu, பெ. (n.)

   முன்பனிப் பருவம்; the months of markali and tai one of six rutu.

     [Skt. hemanta+rutu → த. ஏமந்தருது.]

ஏமன்

 ஏமன்ēmaṉ, பெ. (n.)

இயமன் (சங்.அக.); God of Death.

ம. எமன்.

     [இயமன் → ஏமன்.]

ஏமமணல்

 ஏமமணல்ēmamaṇal, பெ. (n.)

   பொன்மணல்(மூ.அ.);; alluvium.

     [ஏமம் + மணல்.]

ஏமம்

ஏமம்1ēmam, பெ. (n.)

   கலக்கம் (பிங்.);; perplexity.

   2. உன்மத்தம் (திவா.);; imbecility, madness, bewilderment/

     “ஏமுற்றவரினும் ஏழை” (குறள்.873);

     [ஏ → ஏம் → ஏம்பல் → ஏமல் → ஏமம் = கவலை, கலக்கம், வருத்தம்.]

 ஏமம்3ēmam, பெ. (n.)

   1. காப்பு, பாதுகாப்பு; safety.

     “ஏமப்பேரூர்” (தொல்.982);.

   2. இன்பம் (திவா.);; delight, enjoyment, gratification.

   3. களிப்பு (பிங்.);; jollity, mirth.

   4. காவல்; defence, protection, guard.

     “எல்லா வுயிர்க்கு மேம மாகிய” (புறநா.1.11);.

   5. பொருள் வைப்பு, நலக்குவை (சேமநிதி); (திவா.);; hoarded treasure, welfare fund.

     [ஏ + உயர்வு, உயர்த்தல், தூக்கல், காத்தல். எம் → ஏமம் (காவல்);.]

 ஏமம்4ēmam, பெ. (n.)

திருநீறு (பிங்.); sacred ashes.

     [ஈம் → ஏம் → ஏமம் (ஈமக்காட்டுச் சாம்பல்);.]

 ஏமம்5ēmam, பெ. (n.)

   இரவு; night.

     “புறங்காட்டி லேமந்தோறு மழலாடுமே” (தேவா.965.7);.

     [இரு → இருள் → இரும் → எம் → ஏமம் இருள், இரவு.]

 ஏமம்6ēmam, பெ. (n.)

   பொன்; gold;

     “ஏம மீத்த வியல்பினனாகி” (பெருங்.வத்தவ.1,28);.

     [எல் + ஒளி. எல் → எல் → எம் – ஏமம் = பொன்.]

 ஏமம்7ēmam, பெ. (n.)

   1. காவலையுடைய இடம்; guarded place.

     “எழின்மணி விளக்கி னேமம் போகி.” (பெருங்.உஞ்ஞைக்.34,2);.

   2. வலிமை; strength.

   3. மலை; mountain.

     [ஏ → ஏம் → ஏமம்.]

ஏமரு

ஏமரு1ēmarudal,    2.செ.கு.வி. (v.i.)

   1. காக்கப்படுதல்; to be protected, to be supported.

     “இடிப்பாரை யில்லாத வேமரா மன்னன்” (குறள்.448);.

   2. களிப்புறுதல்; to rejoice, to be elated.

     “ஏமரு புவனமூன்றும்” (கந்தபு. மேரு. 24);.

     [எம் + மருவு – மருவு – ஏமரு (கொ.வ.);.]

 ஏமரு2ēmarudal,    2. செ.கு.வி. (v.i) திகைத்தல் (யாழ்.அக.); to be bewildered or perplexed.

     [ஏம் → ஏமம் + அறு-தல் – ஏமறு-தல் → ஏமரு-தல் (கொ.வ.);.]

ஏமல்

 ஏமல்ēmal, பெ. (n.)

மனக்கலக்கம்.(இ.வ.); confusion of mind.

ம. எமல்.

     [ஏ → ஏம்பு → ஏம்பல் → ஏமல்.]

ஏமவெருமை

 ஏமவெருமைēmaverumai, பெ. (n.)

மன்னர் குடைகள்

   தம்மில் தலைமயங்கிய வாட்போரில் தானெறிந்தவேல்; theme of unyeilding resistance. ஒ.நோ. எருமை மறம்.

     [ஏமம் + எருமை.]

ஏமா

ஏமா1ēmātal,    18. செ.கு.வி (v.i.)

   1. அரணாதல், to be protected by guarded by,

     “ஏமாப்ப முன்னே யயற்பகை துண்டிவிடுத்து” (பழ.306);.

   2. ஆசைப்படுதல்; to desire.

     “அருந்தேமாந்த நெஞ்சம்” (புறநா.101);

   3. இன்புறுதல்; to be exhilarated, be overjoyed, be in an ecstasy, to experience the highest delight.

     “காமர் நெஞ்ச மேமாந் துவப்ப” (புறநா.198,8);.

   4. செருக்குறுதல்; to feel proud, to be highly elated.

     “இரங்கு நமக்கம்பலக் கூத்த னென்றென் றேமாந்திருப்பேனை” (திருவாக. 21,7);.

     [ஏமம் + ஆர் – ஏமமார் → ஏமார் → ஏமா. (பாதுகாவல் பொருந்துதல் மகிழ்தல் மகிழ்ச்சியில் திளைத்தல், செருக்கடை தல்); சமார்ப்ப, ஏமார்ந்த என்பவை ஏமாப்ப, ஏமாந்த என

இடைக்குறைந்து வழக்கூன்றின. ஏமா என்பது வழுவினை, எமமார் என்பதே செவ்விய வினை வழுவினைகளைக் குறைவினை (desective verb); என்பர்.);

 ஏமா2ēmāttal,    18. செ.கு.வி. (v.i.)

   கலக்கமுறுதல்; to be distressed.

     “புணர்ந்தோர் நெஞ்சேமாப்ப வின்றுயிறுறந்து” (மதுரைக்.575);.

     [ஏமம் + அறு – ஏமமறு → ஏமாறு → ஏமா. (பாதுகாப்பு அறுதல், துன்புறுதல், கலங்குதல்); ஏமா (குறைவினை – delective verbi.);]

 ஏமா3ēmāttal,    15. செ.குன்றாவி. (v.t.)

   உறுதிப்படுத்துதல்; to be certain.

     “கனவென மருண்ட வென்னெஞ் சேமாப்ப” (பொருந.98);.

     [ஏமம் + ஆர் – ஏமமார் → ஏமார் → ஏமா. (குறைவிளை); ஆர்த்தல் = சேர்த்தல். ஏமம் = இன்பம், நலம், உறுதி.]

ஏமாங்கி

 ஏமாங்கிēmāṅgi, பெ. (n.)

   நிலவுருண்டை; earth (நாமதீப.);.

த.வ. வையம்.

     [Skt. hemangi → த. ஏமாங்கி.]

ஏமாந்துபோ-தல்

ஏமாந்துபோ-தல்ēmāndupōtal,    8. செ.கு.வி. (v.i.)

   ஏமாறுதல்; to be disappointed. அவன் ஏமாந்து போனான். (உ.வ );.

ம. ஏமாறுக.

     [ஏமம் + அறுதல் = ஏமாறுதல். ஏமாறு → ஏமாறி → ஏமாந்து + போ.]

ஏமாப்பு

ஏமாப்புēmāppu, பெ. (n.)

   1. அரணாதல்; security safeguard

     “எழுமையு மேமாப்புடைத்து” (குறள்.126);.

   2. வலியாகை; support stay, strength.

     “எச்சத்திற்கே மாப்புடைத்து” (குறள்.112);.

   3. இறுமாப்பு; hauteur, pride.

     “ஏமாப் பிரலை விலங்கலை” (ஞானா.43,25);.

   4. கருத்து (திவா.);; object, intention, purpose.

     [ஏமம் + ஆப்பு – ஏமாப்பு.

     “ஆப்பு” சொல்லாக்க ஈறு.]

ஏமார்

ஏமார்1ēmārtal,    18. செ.கு.வி. (v.i.)

   மனங்கலங்குதல்; to be confused, bewildered.

     “ஏமார்ந் தனமெனச் சென்றுநா மறியின்” (நற்.49);.

     [ஏமம் + அறு-தல் – ஏமறு-தல் → ஏமாறு-தல் → ஏமார்-தல்.]

 ஏமார்2ēmārttal,    15. செ.குன்றாவி (v.t.)

   வலுப்படுத்துதல்; to strengthen, establish firmy, make secure.

     “சலத்தாற் பொருள்செய்தே மார்த்தல்” (குறள். 660);.

     [ஏமம் + ஆர்-த்தல் + ஏமார்-த்தல்.]

ஏமாறு

ஏமாறு1ēmāṟudal,    2. செ.கு.வி. (v.t.)

   அலமருதல் (யாழ்.அக);; to be confused, bewildered.

     [ஏமம் + அறு-தல் – ஏமமறு-தல் → ஏமறு-தல் → ஏமாறு-தல்.]

 ஏமாறு2ēmāṟudal,    2. செ.கு.வி. (v.i) எய்க்கப்படுதல்; to be gulled;

 to be inveigled, defrauded.

     “மோக வலை யூடே யேமாறி” (திருப்பு.622);.

     [ஏமம் + அறு – ஏமமறு → ஏமாறு.]

ஏமாற்றம்

ஏமாற்றம்ēmāṟṟam, பெ. (n.)

   1. ஏய்க்கப்படுதல்; state of being defrauded, disappointment.

   2. ஏய்ப்பு; deceit, fraud.

   3. மனக்கலக்கம்; confusion of mind, perplexity.

     “ஏமாற்ற மென்னைத் தவிர்த்தாய்” (திவ்.பெரியாழ். 2,7,8);.

   ம. ஏமாற்றம்;   கோத. ஏமன்;தெ. ஏமறு. ஏமாறு.

     [ஏமம் + அறு – எமமறு → ஏமாறு → ஏமாற்றம்.]

ஏமாற்று

ஏமாற்று1ēmāṟṟudal,    5. செ.குன்றாவி, (v.t.)

   எய்த்தல்; to hoodwink, disappoint deceive,

     “மகனுத்தியினாலவரை யேமாற்ற” (இராமநா.உயுத்த.57);.

ம. ஏமாற்றுக.

     [ஏமாறு → ஏமாற்று.]

 ஏமாற்று2ēmāṟṟudal,    5. செ.குன்றாவி. (v.t.)

   எமஞ் செய்தல்; to defend, protect.

     “மாற்றே மாற்றலிலையே” (பரிபா.4,53);.

     [ஏமம் + ஆற்று – ஏமாற்று.]

ஏமாளி

ஏமாளிēmāḷi, பெ. (n.)

   பேதை; simpleton, dunce, fool,

     “நெறியிலாத வேமாளி” (திருப்பு.530);.

ம. ஏமாலி.

     [ஏமம் + அறு – ஏமறு → ஏமாறு → ஏமாறி → ஏமாளி.]

ஏமினி

 ஏமினிēmiṉi, பெ. (n.)

   இடுதிரை.(அகநி.);; curlain.

     [எழினி → ஏமினி (கொ.வ.);.]

ஏமிலாந்தி

ஏமிலாந்திēmilāndi, பெ. (n.)

   1. திகைத்து நிற்பவன் (யாழ்ப்.);; one who is despondent, confounded, disappointed.

   2. மனமயக்கமுடையவன்; absent-minded, forgetful person.

     [எம் + இல் – ஏமில் + (ஆழ்ந்தி); ஆந்தி.]

ஏமிலாந்து-தல்

ஏமிலாந்து-தல்ēmilāndudal,    10.செ.கு.வி. (v.i.)

   1. திகைத்து நிற்றல்; to despair, stand aghast.

   2. மனந்தடுமாறுதல்; to stare about, not knowing what to do;

 to be in a fix;

 to be amazed.

     [எம் + இல் – எமில் + (ஆழ்ந்து); ஆந்து.]

ஏமிலாப்பு

 ஏமிலாப்புēmilāppu, பெ. (n.)

   மனத்தடுமாற்றம் (யாழ்.அக.);; confusion, bewilderment.

     [எமிலாந்து → எமிலாப்பு.]

ஏம்

ஏம்1ēm, பெ. (n.)

   1. இன்பம்; pleasure, delight.

     “ஏமுந வினிதி னோம்பி” (கம்பரா.வீபீட.114);.

   2. காப்பு; guard.

     “எஞ்சிய பொருள்களை ஏமுறநாடி” (திரு.முரு.97);.

     [ஏ → ஏம் (வ.மொ.வ.99);.]

 ஏம்2ēm, பெ. (n.)

   1. குழப்பம், மயக்கம்; perplexity, distraction.

     “வேனிலத்த மென்னா தேமுற்று” (அகநா.69);.

   2. துன்பம்; affliction, suffering.

     [எ3- எம்.]

ஏம்பலி-த்தல்

ஏம்பலி-த்தல்ēmbalittal,    4.செ.கு.வி. (v.i.)

   அவாக் கொள்ளுதல்; to feel intense ardour, to long ardently.

     “நின்றாள் சரணென் றேம்பலிப்பார்கட்கு” (தேவா. 1040,8);.

     [ஏ → ஏப்பு → ஏம்பல் → ஏம்பலி.]

ஏம்பல்

ஏம்பல்1ēmbal, பெ. (n.)

   1. ஆரவாரம (பிங்.);; bustle, uproar.

   2. களிப்பு; pleasure.

     “ஏம்பலோ டுறையு மாயன்” (காஞ்சிப்பு.சலந்தரீ.17);.

   3. வருத்தம்; pain, physical or mental

     “மத்திசைதாக்க வேம்பலுற்றனம்” (திருவிளை.பரிநரி.12);.

ம. ஏம்பல்.

     [எம் → ஏம்பு → ஏம்பல் (க.வி.77.);]

 ஏம்பல்2ēmbal, பெ. (n.)

   உட்கிடைச் சிறுகுடி; hamlet attached to a village. நிலமும் ஏம்பல்களும் (S.1.1. viii.209);.

     [ஏ → ஏம்பல். ஊரார்க்குத் துணையாகப் பாதுகாப்பு தரும் நோக்கில் அருகில் தோன்றிய குடியிருப்பு.]

 ஏம்பல்3ēmbal, பெ. (n.)

   ஏரிப்பாசனமாக அமைந்த நிலம்ń; land cultivated by irrigation from lake. ‘குடிகாடு அரநிருவி ஏம்பலில் கடமையும்’ ‘கல்லாத்தான் ஏரிக் கீழை ஏம்பலின் தென்கடைக்கேய் ஏறப்போகவும்’ (S.l.l.VIII.410);.

     [ஏ → ஏம்பு → ஏம்பல் = உயர்த்திக்கட்டிய மதகு அல்லது ஏரிக்கரை.]

ஏம்பு

ஏம்பு1ēmbudal,    5.செ.கு.வி. (v.i.)

   1. பெருகக்களிப்ப டைதல்; to reloice, to be overloyed.

     “‘மள்ள ரேம்பலோடார்க்கு மோதை” (கந்தபஆற்று.33);.

     [எழும்பு → ஏம்பு.]

ஏய

ஏய1ēya,    இடை. (part) ஒர் உவமவுருபு (தண்டி.33); adverbial word of comparison.

     [இயை → இயைய → எய.]

 ஏயēya, பெ.எ (adj.)

   பொருந்திய, ஏற்புடைய; appropriate, suitable.

     “ஏயதன்மை இருவருந்தேர்ந் தரோ” (கந்தபு.அகரேந்திரன்.மகேந்திரஞ்.47);.

     [இயைய → ஏய.]

ஏயம்

ஏயம்ēyam, பெ. (n.)

   தள்ளத்தக்கது; that which deserves to be abandoned.

     “இது ஏயம், இது உபாதேயம்…..என்று நிச்சயித்து” (சி.சி.258,சிவாக.);.

     [இய → ஏ = செல்லுதல், நீங்குதல், ஏ → ஏயம் = நீக்கத்தக்கது.]

ஏயர்

ஏயர்ēyar, பெ. (n.)

   வடபுலத்து ஆயர்குடியின் கிளைமரபினர்; descendants of Hehaya, one of Yadhava races.

     “ஏயர்க்கென்று நிலத்தொடு தொடர்ந்த குலப்பகை” (பெருங்.வத்தவ.8,44);.

     [ஆயர் → ஏயர் (கொ.வ.);.]

ஏயர்குலம்

 ஏயர்குலம்ēyarkulam, பெ. (n.)

   மிருகாவதியின் தந்தை குலம் (பெருங்.); (அபி.சிந்.);; paternal lineage of Mrugawathi of Perungathai.

     [ஆயர் → ஏயர் + குலம்.]

ஏயர்கோன்கலிக்காம நாயனார்

 ஏயர்கோன்கலிக்காம நாயனார்ēyarāṉkalikkāmanāyaṉār, பெ. (n.)

   அறுபத்து மூன்று நாயன்மாருள் ஒருவர் (பெரியபு.);; name of a canonized Salva Saint

     [ஆயர் → ஏயர் (வடதமிழ்);, ஏயர் + கோன் + கலி + காமன் + நாயனார்.]

ஏயான்

ஏயான்ēyāṉ, பெ. (n.)

ஒரு தொழிலைச் செய்யத்த காதவன்

     “மாவலியை யேயானிரப்ப” (திவ்.பெரியதி. 1,5,6);;

 he who is too exalted to do an act.

     [இயை + ஆ + அன் – இயையான் → ஏயான் (கொ.வ.);.]

ஏயில்

ஏயில்ēyil, பெ. (n.)

   இசை (ஈடு.4,6,2);; song, music.

     [ஏழில் → ஏயில் (கொ.வ.);.]

ஏயெனல்

ஏயெனல்ēyeṉal, பெ. (n.)

   ஒரு விரைவுக் குறிப்பு; onom, expr of rapidity as utering the sound

     “ஏயெனு மாத்திரத்து” (கம்பரா.பள்ளி.72);.

     [ஏய் + எனல்.]

ஏயே

 ஏயேēyē, இடை. (int.)

   இகழ்ச்சிக் குறிப்பு (திவா.);; exclamation expressive of ridicule.

     [ஏ + ஏ.]

ஏய்

ஏய்1ēytal,    4. செ.கு.வி. (v.i.)

   1. பொருந்துதல்; to be suited.

     “ஏய்ந்த பேழ்வாய்” (தில்.பெரியதி.1,7,3);.

   2. தருதல்; to be fit.

     “தில்லையூரனுக்கின் றேயாப்பழி” (திருக்கோ.374);.

     [இயை → எப்.]

 ஏய்2ēytal,    4. செ.குன்றாவி, (v.t)

   1. ஒத்தல்; to be similar to.

     “சேலேய் கண்ணியரும்” (திவ்.திரு வாய்.5,1,8);.

   2. எதிர்ப்படுதல்; to meet.

     “போயினசின் னான் புனத்து மறையினா லேயினா ரின்றியினிது” (ஐந்.ஐம்.11);.

     [இயை → எய்.]

 ஏய்3ēy,    இடை (part) மறுத்தற்கும் கூப்பிடுதற்கும் பயன்படுத்தும் இடைச்சொல்; interjection for negation and for calling attention.

     [ஏ → ஏய் (ஒலிக்குறிப்பு);.]

 ஏய்4ēyttal,    4.செ.குன்றாவி (v.t)

   1. பொருந்தச் சொல்லுதல்; to tell a seeming truth.

     “பொய்குறளை யேய்ப்பார்” (பழ.77);.

   2. ஒத்தல்; to resemble, to be like, be similar to.

     “அல்லிப் பாவை யாடுவனப் பேய்ப்ப” (புறநா.33,17);.

   3. வஞ்சித்தல்; to deceive cheat, defraud,

ம. ஏ.

     [இயை → எய் → ஏய்த்தல்.]

ஏய்ப்ப

ஏய்ப்பēyppa, இடை. (part.)

   ஒர் உவமவுருபு (தொல். பொருள்.290);; adverbial word ot comparison.

     [இயை → இயைப்ப → ஏய்ப்ப.]

ஏய்ப்பிலேவட்டன்

 ஏய்ப்பிலேவட்டன்ēyppilēvaṭṭaṉ, பெ. (n.)

   மதிகேடன் (யாழ்.அக.);; one who is easily duped;

 dupe, fool.

     [எய்ப்பு → ஏய்ப்பு + இல் + ஏ + வட்டன்.]

ஏய்ப்பு

 ஏய்ப்புēyppu, பெ. (n.)

   ஏமாற்று; deceit, fraud.

     [இயைப்பு → ஏய்ப்பு.]

ஏய்ப்புக்காட்டு-தல்

ஏய்ப்புக்காட்டு-தல்ēyppukkāṭṭudal,    5. செ.குன்றாவி. (v.t.)

   ஏமாற்றம் செய்தல்; to dupe, circumvent, deceive defraud.

     [ஏய்ப்பு + காட்டு.]

ஏய்வு

 ஏய்வுēyvu, பெ. (n.)

   உவமை (திவா.);; comparison, likeness, resemblance.

ம. ஏய்வு (இணைப்பு);.

     [இயைவு → எய்வு.]

ஏர

ஏரēra,    இடை (part.) ஒர் உவம உருப் (தொல். பொருள். 286, உரை.); adverbial word of comparison.

     [ஏல் → ஏல → ஏர.]

ஏரகம்

ஏரகம்ēragam, பெ. (n.)

   1. திருவேரகம்; Udip in S. Kanara, Sacred to Skanda, one of the six padaividu

     “ஏரகத் துறைதலுமுரியன்” (திருமுரு.189);.

   2. சுவாமி மலை (Mod);; Swamimalai in the Tanjavur Dist.

     [ஏர் + அகம் – ஏரகம். எர் = அழகு.]

ஏரங்கம்

 ஏரங்கம்ēraṅgam, பெ. (n.)

   மீன் வகை (சங்.அக.);; a kind of fish.

ம. ஏரங்கம்.

     [ஏர் → ஏரங்கம்.]

 ஏரங்கம்ēraṅgam, பெ. (n.)

   எரங்காடு பார்க்க;     [எரி → எர → ஏரங்காடு = செம்மண் பாங்கான நிலத்திலுள்ள காடு.]

ஏரசி

ஏரசி1ērasi, பெ. (n.)

   இகழ்ச்சி (அக.நி.);; contempt

ஏரசி2 பெ. (n); கிளி, parrot (அக.நி.);.

குரு. எடெர்.

     [விள் → எள் → ஏளி → ஏசி.]

ஏரசு’-தல்

 அஅன்ன ஆவன்னா aaṉṉaāvaṉṉā, பெ. (n.)

   அரிவரி யென்னும் தமிழ் வண்ணமாலை (குறுங்கணக்கும் நெடுங்கணக்கும்);;  Tamil Alphabet.

   எழுத்துகளைக் கல்லா மக்கள், சிறப்பாகச் சிறுவர் சிறுமியர், எளிதாக ஒலித்துக் கற்கும் பொருட்டு, பண்டைத் தொடக்கப்பள்ளி யாசிரியர் உயிரும் உயிர்மெய்யுமாகிய இருவகைக் குறிலுக்கும்’அன்ன’ச் சாரியையும், இருவகை நெடிலுக்கும் அன்னா’ச் சாரியையும் ஏற்படுத்தினர்;     ‘அஆ’ என்னும் ஈரெழுத்தும் தமிழ் வண்ணமாலையின் முதலெழுத்துகளாதலின், அவை முதற்குறிப்பாகி, அம் முதற்குறிப்பே’அஅன்ன ஆவன்னா’ என்று வண்ணமாலைப் பெயராயிற்று. இது ‘alpha’, ‘beta’ என்னும் கிரேக்க இரு முதலெழுத்துகளும் சேர்ந்து”alphabetum’ என்று இலத்தீனிலும், ‘alphabet’ என்று ஆங்கிலத்திலும், வண்ணமாலைப் பெயராக வழங்குவது போன்றது;

   அ, இ, க, கி என்று ஒரு மாத்திரை யொலிக்குங்குறிலெழுத்துகளை விட்டொலிப்பது, சிறுபிள்ளைகட்குச் சற்று வருத்தமுற மூச்சு வாங்குவதால்,’அஅன்ன’ என்பது”ஆனா” என்றும் இஅன்ன என்பது’ஈனா’ என்றும், மாணாக்க நிலையிலும் பின்னும் ஒலிக்கப்பட்டுவந்தன. இவ்வொலிப்புமுறை குறில்களின் உண்மையான ஒலியளவை உடனே தெரிந்துகொள்ளத் தடையாயிருந்தமையின், இந்நூற்றாண்டுத் தொடக்கத்தில் அரசியற் கல்வித்துறையறிஞர், சாரியையின்றி ஒலிநூன் முறைப்படி அ, ஆ, இ, ஈ,… என்று ஒலித்துப் பயிலும் முறையைப் புகுத்திவிட்டனர். அதனால், இன்று ‘அஆ’ என்பது வண்ணமாலைப் பெயராக வழங்கி வருகின்றது. இது புணர்ச்சியில்’அவ்வா’ என்றாகும்;

ஏரடம்

 ஏரடம்ēraḍam, பெ. (n.)

   இடி (சங்.அக.);; hunder.

     [ஏறு + இடி –ஏறிடி → ஏறிடம் → எறடம் → ஏரடம் (கொ.வ.);.]

ஏரடி-த்தல்

ஏரடி-த்தல்ēraḍittal,    4.செ.கு.வி. (v.i.)

   உழுதல்; to plough.

ம. ஏரடிக்குக.

     [ஏர் + அடி.]

ஏரணம்

ஏரணம்1ēraṇam, பெ. (n.)

   காரணங் காட்டி மெய்ப்பிக் கும் அறிவியல்; logic

     “ஏரணங் காணென்ப ரெண்ணர்” (திருக்கோ.நூற்சிறப்.);

     [ஏர் = தேர். பொருத்தம், செப்பம். ஏர் + அணம் – ஏரணம். ‘அணம்’ சொல்லாக்க ஈறு. ஏரணம் = தேரே பொருத்திக் காரணங்காட்டி உண்மைகளை உறுதிப்படுத்திச் சொல்லாடும் கலைத்திறன்.]

 ஏரணம்2ēraṇam, பெ. (n.)

   மறைந்துபோன சொற்போர் (தருக்கம்); கலைநூல்; an extinct treatise in. Tamil on logic.

     “ஏரணம் உருவம் ஓகம் இசைகணக்கு…. அன்ன நூல் யாவும் வாரி, வாரணம் கொண்ட தந்தோ வழி வழிப் பெயரும் மாள”.’ (தனிப்பா.);.

     [ஏர் – ஏரணம்.]

ஏரண்டன்

 ஏரண்டன்ēraṇṭaṉ, பெ. (n.)

   ஓர் இயற் பெயர்; name of a person. ஏரண்டமுனிவர்.

ஏரண்டப்புள்

ஏரண்டப்புள்ēraṇṭappuḷ, பெ. (n.)

ஏரண்டம்2 பார்க்க;see erandam.”

ஏரண்டம்

ஏரண்டம்1ēraṇṭam, பெ. (n.)

   1. ஆமணக்கு (பிங்.);; castor-plant

   2. ஆமணக்கிலிருந்து உண்டாகும் பொருள்கள் (தைலவ.தைல.(9&54);; products of the castor plant.

ம. ஏரண்டம்.

     [எரி + அண்டம் – எரியண்டம் – ஏரண்டம். (செவ்வாமணக்கு);.]

 ஏரண்டம்2ēraṇṭam, பெ. (n.)

   கண்ட பேரண்டப் பறவை; two-headed bird.

     “ஏரண்ட வென்றிப் புள்ளுக் கிரையாவாய்” (வேதாரணி.தேவல.12);.

ம. ஏரண்டம்.

     [ஈர் + உண்டு – ஈருண்டு → ஈரண்டி → ஏரண்டி → ஏரண்டம் (நகத்தால் குத்தி அலகால் பிளந்து கொன்றுண்ணும் பறவை);.]

ஏரண்டி

 ஏரண்டிēraṇṭi, பெ. (n.)

   திப்பிலி; long pepper (சங்.அக.);.

     [Skt. arandhi → த. ஏரண்டி.]

ஏரம்பம்

ஏரம்பம்1ērambam, பெ. (n.)

   1. யானை (நாமதீப.);; elephant.

   2. வேளாண்மை; agriculture.

     [ஏ → ஏர் → ஏரம்பம் (உயரமானது. உழவு);.]

 ஏரம்பம்2ērambam, பெ. (n.)

ஒரு கணித நூல் (குறள்.392.உரை); treatise on mathematics.

     [ஏர் → ஏரம்பம், கீழ்வாயிலக்கக் கணக்கிற்கு எதிரான மேல் வாயிலக்கக் கணக்கு வடிவக் கணக்கு வானநூல் கணக்கு போன்றவை பற்றிய நூலாகலாம்.)

 ஏரம்பம்ērambam, பெ. (n.)

   யானை; elephant (நாமதீப.);.

     [Skt. heramba → த. ஏரம்பம்.]

ஏரரத்தை

 ஏரரத்தைērarattai, பெ. (n.)

   பேரரத்தை; greater galangal. (சா.அக.);

     [ஏர் + அரத்தை.]

ஏரல்

 ஏரல்ēral, பெ. (n.)

   கிளிஞ்சில் (திவா.);; mussel or other bivalve animal;

 snail. ஏரல் எழுத்துப் போல்வ தோர் விழுக்காடு. (குறள்.பரி.உரை);.

ம. ஏரல்.

     [ஈர் → ஏர் → ஏரல்.]

ஏரா

ஏரா1ērā, பெ. (n.)

   கப்பலின் அடிப்பொருத்து மரம் (யாழ்ப்.);; keel of a ship,

ம. ஏரா.

     [ஆர் → ஏர் → ஏரா. ஆர் பொருத்துதல்.]

 ஏரா2ērā, பெ. (n.)

ஏராக்கள் பார்க்க (யாழ்ப்.);;see earakka.]

ஏராக்கள்

 ஏராக்கள்ērākkaḷ, பெ. (n.)

   பனை மரத்துப் பாளையிலிருந்து இறக்கும் இனிய பனஞ்சாறு; sweet sap extracted from the spathe of the palmyra tree. (சா.அக.);

     [எர் → ஏரா (கள்ளின் தன்மை நிரம்பாத); + கள்.]

ஏராங்கடேசி

 ஏராங்கடேசிērāṅkaṭēci, பெ. (n.)

   ஆகக் கடைசி; at last.

     [ஈறாம்-ஏராம்+கடைசி]

ஏராண்மை

 ஏராண்மைērāṇmai, பெ. (n.)

   உழவு (யாழ்ப்.);; ploughing, tillage, agriculture.

     [ஏர் + ஆண்மை.]

ஏராப்பலகை

 ஏராப்பலகைērāppalagai, பெ. (n.)

   கப்பலின் அடிமரம் (யாழ்ப்.);; keel of a ship.

     [ஆர் → ஏர் → ஏரா + பலகை.]

ஏராமரம்

 ஏராமரம்ērāmaram, பெ. (n.)

ஏராப்பலகை பார்க்க;see erappalagai.

ஏராளட்டவணை

 ஏராளட்டவணைērāḷaṭṭavaṇai, பெ. (n.)

   எரையும் உழவுசெய்வோரையுங் காட்டும் குறிப்பு (m.m.);; list of the ploughs and labourers in a village.

     [ஏர் + ஆள் + அட்டவணை.]

ஏராளம்

ஏராளம்ērāḷam, பெ. (n.)

   மிகுதி; abundance, plenitude

     “ஏராளமாக் கோலமெழுதிய தரைகளும்” (இராமநா. கந்3);.

   தெ. ஏராளமு, பேராளமு;க. தேராள. து. தேராள.

     [ஏர் + ஆளம் – ஏராளம். ஏரை ஆள்வதால், வேளாண்மை செய்வதால் உண்டாகும் மிகுவிளைச்சல். ஒன்றுக்கு நூறாக விளைதல்.]

ஏராளர்

ஏராளர்ērāḷar, பெ. (n.)

   1. உழவர்; husbandmen, agriculturists, cultivators. ploughmen.

   2. வீரர்; brave men, heroes. (சேரநா.);

ம. ஏராளன்.

     [ஏர் + ஆள் + அர்.]

ஏரி

ஏரிēri, பெ. (n.)

   இயற்கையாகப் பள்ளத்தில் தேங்கிய பெரிய நீர்நிலை; lake.

   2. செய்கரை நீர்நிலை; embanked lake.

   3. பாசனத்திற்குப் பயன்படும் நீர் நிலை; reservoir for irrigation.

   4. பக்கக்கரைகளைக்காப்பாகக் கொண்ட பெரிய நீர்நிலை; large tank a lake with banks.

     “ஏரியாம் வண்ணமியற்று மிதுவல்

லால்” (திவ்.இயற்.2,16);.

   5. எருத்துத்திமில்; hump of a bull. ஏரி நிமிர்ந்தா லிடையனையும் பாராது. (யாழ்ப்.);.

   6. கொமுத்துள்ள பிடர்; prominence on the nape of the neck, through corpulence.

அவனுக்கு ஏரி முற்றிப் போயிற்று (வின்.);.

   7. கழை (புனர்பூசம்);; star.

ம. க., குட., து. ஏரி.

     [ஏ → ஏர் → ஏரி (உயர்ந்த கூரையை உடையது);.]

ஏரின்வாணர்

 ஏரின்வாணர்ēriṉvāṇar, பெ. (n.)

ஏரின்வாழ்நர் பார்க்க (திவா.);;see erinvalnar.

ஏரின்வாழ்நர்

 ஏரின்வாழ்நர்ēriṉvāḻnar, பெ. (n.)

   உழவுத் தொழில் செய்து அதனால் வாழ்பவர் (திவா.);; agriculturists, as those who live by the plough.

     [ஏர் + இள் + வாழ்நர். ‘இன்’ ஐந்தள் உருபு.]

ஏரிப்பட்டி

ஏரிப்பட்டிērippaṭṭi,    பெ. (n) ஏரியைக்காக்கும் பணிக் காகக் கொடுக்கப்படும் மானியம் (S.I.I.I,225); endo. wment made for carrying out repairs to the tank.

     [ஏரி + பட்டி/]

ஏரிப்பாய்ச்சல்

 ஏரிப்பாய்ச்சல்ērippāyccal, பெ. (n.)

   ஏரிநீர்ப்பாசனம்; irrigation from a tank.

     [ஏரி + பாய்ச்சல்.]

ஏரிப்பாய்ச்சி

ஏரிப்பாய்ச்சிērippāycci, பெ. (n.)

   மீன்பிடி வரி, (M.NA.D.1,287);; fish rent.

     [ஏரி + பாய்ச்சி. பாய்ச்சி = மீன்.]

ஏரிமேரை

 ஏரிமேரைērimērai, பெ. (n.)

ஏரி, மதகு, கலிங்கல் இவைகளின் புதுப்பிக்கும் செலவிற்காக ஒதுக்கப்படும் விளைச்சலின் பகுதி (WG);,

 portion of the crop set apart to meet the expense of keeping the reservoir, watercourses etc. in good repair.

     [ஏரி + மேரை. மேலி → மேரி → மேரை (மேலாக அல்லது கூடுதலாகத் தரப்படும் வரி பங்கீடு);.]

ஏரிவாரியத்தார்

 ஏரிவாரியத்தார்ērivāriyattār, பெ. (n.)

   ஏரியை மேற்பார் வையிடும் குழுவினர் (insc.);; local committee of ancient times which functioned as a supervising body over tanks and irrigation.

     [ஏரி + வாரியம் + அத்து + ஆர். ‘அத்து’ – சாரியை.]

ஏரிவாரியம்

ஏரிவாரியம்ērivāriyam, பெ. (n.)

ஏரிவாரியத்தார். (.IM.P.NA. 17); பார்க்க;see erivariyattar.

ஏரிவாளை

 ஏரிவாளைērivāḷai, பெ. (n.)

வாளைமீன்வகை:

 fresh-water fish.

ஏருழவர்

ஏருழவர்ēruḻvar, பெ. (n.)

   ஏர்கொண்டுமுபவர்; plough tillers,”‘வில்லே ருழவர் பகை கொளினும்” (குறள்.872);.

     [ஏர் + உழவர்.]

ஏருழவு

ஏருழவுēruḻvu, பெ. (n.)

   1. வேளாண்மை; ploughing. tillage, agriculture

   2. ஒரு நாளில் இரண்டேரைக் கொண்டு உழக்கூடிய நிலம் (G.Sm.D.1,288);,

 extent of land that can be ploughed by two pairs of the plough.

     [ஏர் + உழவு.]

ஏரெழுபது

ஏரெழுபதுēreḻubadu, பெ. (n.)

   எரைப்புகழ்ந்து கம்பர் பாடிய ஒரு நூல்; poem by Kamban containing 70

 stanzas in praise of the plough.

     [ஏர் + எழுபது.]

ஏரோட்டு-தல்

ஏரோட்டு-தல்ērōṭṭudal,    5.செ.குன்றாவி. (v.t) உழுதல்; to plough.

     [ஏர் + ஒட்டு-தல்.]

ஏரோர்

ஏரோர்ērōr, பெ. (n.)

   உழுவோர்; ploughmen.

     “ஏரோர் களவழித் தேரோர் தோற்றிய” (தொல்.பொருள்.76);.

     [ஏர் + ஆர் – ஏரார் → ஏரோர்.]

ஏர்

ஏர்1ērtal,    2. செ.கு.வி. (v.i.)

   எழுதல்; to rise

     “பனிக்கடல் பருகி வலனேர்பு” (முல்லை.4);.

     [எல் → (எழு); → ஏர்.]

 ஏர்2ērtal,    2. செ.குன்றாவி, (v.t.)

   ஒத்தல்; to be like, similar.

     “முத்தேர் முறுவலார்” (இனி.நாற்.2);.

     [எல் → (எழு); → எல் → ஏர்.]

 ஏர்3ēr, பெ. (n.)

   1. கலப்பை; plough.

     “ஏரி னுழாஅ ருழவர்” (குறள்.14);.

   2. ஒரு கலப்பையும் ஓரிணைமாடும்; team of oxen and plough.

     “ஏருமிரண்டுளதாய்” (தமிழ்நா.60);.

   3. உழவுமாடு (சூடா);; yoke of Oxen.

   4. உழவு; ploughing, agriculture, as an occupation.

     “ஏரினு நன்றா லெருவிடுதல்” (குறள்.1038);.

   5. ஒரு நாளி லுழக்கூடிய நிலம்; as much land as can be ploughed in a day.

   ம. ஏர்;   க. எரு, ஆர்;   கோத, ஏர்;   துட, ஏர்;   தெ, ஏரு;   கொலா. சேர்;   பர். இரெர்;   கோண். சேர், கூ, சேரு;   குவி, கேரு;பிரா. அரே. E arable = that can be ploughed.

     [இல் → சல் → ஈர் → ஏர் (மண்ணைப் பிளப்பது. மண்கட்டிகளை உடைத்து இழுத்துச் செல்வது);.]

 ஏர்4ēr, பெ. (n.)

   1. எழுச்சி; development, growth.

     “ஏரு மெழிலு மென்றா” (தொல்.பொருள்.247);.

   2. தோற்றப் பொலிவு; handsome appearance, bearing.

     “சீய மன்னானிளமையும் வனப்பு மேரும்” (சீவக. 1721);.

   3. அழகு; beauty.

     “கடனறிவார் முன்னின் றிரப்புமோரே ருடைத்து” (குறள்.1053);.

   4. நன்மை; goodness

     “ஏரளவில்லா வளவினர்” (திருக்கோ.308);.

     [ஏ → ஏர்.]

 ஏர்5ēr, பெ. (n.)

   நற்சீரகம்; cummin seed – cuminum cyminum. (சா.அக.);.

     [ஈர் → ஏர். ஏ → ஏர். ஏர் = நீட்சி.]

ஏர்கட்டு-தல்

ஏர்கட்டு-தல்ērkaṭṭudal,    5. செ.கு.வி. (v.i.)

   நிலத்தில் உழவுமாட்டைப் பூட்டி உழத் தொடங்குதல்; to yoke the plough. நல்ல அந்தியேர் கட்டுகிற நேரம். (உ.வ.);.

     [ஏர் + கட்டு.]

ஏர்க்கட்டு

 ஏர்க்கட்டுērkkaṭṭu, பெ. (n.)

   எர்ப்பூட்டு; first ploughing.

     [ஏர் + கட்டு.]

ஏர்க்களம்

ஏர்க்களம்ērkkaḷam, பெ. (n.)

   நெற்களம்; threshing foor.

     “ஏர்க்களம் பாடும் பொருநரும் போர்க்களம் பாடும் பொருநரும்” (தொல்.பொருள்.91,உரை);.

     [ஏர் + களம்.]

ஏர்க்களவுருவகம்

ஏர்க்களவுருவகம்ērggaḷavuruvagam, பெ. (n.)

   போர்க்களத்தை ஏர்க்களமாக உருவகப்படுத்தும் புறத்துறை (புறநா.369);;     [ஏர் + களம் + உருவகம்.]

ஏர்க்காடி

ஏர்க்காடிērkkāṭi, பெ. (n.)

   ஏர்க்காணிக்கை, வரி வகை, (S.1.1 vi.155);; tax.

     [ஏர் + காணி, காணம் → காணி → காடி.]

ஏர்க்காணிக்கை

 ஏர்க்காணிக்கைērkkāṇikkai, பெ. (n.)

   ஏர்வரி (m.m.);; plough tax.

     [ஏர் + காணிக்கை.]

ஏர்க்கால

ஏர்க்காலērkkāla, பெ. (n.)

   1. கலப்பை, வண்டியிவற்றின் நுகங் கொளுவும் உறுப்பு; shaft, as of a plough or of a carriage;

 thill.

   2. ஆரக்கால்; spoke of a wheel.

ம. ஏர்க்கால்.

     [ஏர் + கால்.]

ஏர்க்குறிப்பு

 ஏர்க்குறிப்புērkkuṟippu, பெ. (n.)

   ஏர்விடுதலைக் குறிக்கும் அன்றாடக் கணக்கு (M.M.);; daily account of ploughs at work.

     [ஏர் + குறிப்பு.]

ஏர்க்குளி

 ஏர்க்குளிērkkuḷi, பெ. (n.)

   சீப்பு முதலியன செய்யவுத வும் மரவகை; white hard wood.

     [ஈர் + கொளி – ஈர்க்கொளி → ஈர்க்குளி → ஏர்க்குளி (கொ.வ.);.]

ஏர்ச்சீர்

ஏர்ச்சீர்ērccīr, பெ. (n.)

   1. உழவுத் தொழிலுக்குரிய கருவிகள்; implements or husbandry. ஏர்ச்சீரில்லாதவன்.

   2. வேளாண்மையால் வருஞ்செல்வம் (வின்.);: wealth produced by husbandry.

ம. எருசீரு.

     [ஏர் + சீர்.]

ஏர்த்தாயம்

 ஏர்த்தாயம்ērttāyam, பெ. (n.)

   பருவகாலத்து உழவு (வின்.);; ploughing in season.

     [ஏர் + தாயம்.]

ஏர்த்தொழிலர்

 ஏர்த்தொழிலர்ērttoḻilar, பெ. (n.)

   உழுதுண்போர் (திவா.);; agriculturists, husbandmen, tiller.

     [ஏர் + தொழில் + அர்.]

ஏர்த்தொழில்

 ஏர்த்தொழில்ērttoḻil, பெ. (n.)

   உழவுத் தொழில்; husbandry, calling of a tiller.

     [ஏர் + தொழில்.]

ஏர்நாழி

 ஏர்நாழிērnāḻi, பெ. (n.)

   கலப்பை யினோருறுப்பு (வின்.);; small circular piece of wood with a hole in the centre to receive the cord, vada-k-kayiru, by which polughmen can regulate the depth of a furrow.

     [ஏர் + நாழி.]

ஏர்பு

 ஏர்புērpu, பெ. (n.)

   எழுச்சி (பிங்.);; ascent, elevation rising of a heavenly body.

     [ஏர் → ஏர்பு.]

ஏர்பூட்டு-தல்

ஏர்பூட்டு-தல்ērpūṭṭudal,    5.செ.கு.வி. (v.i.)

   ) ஏரில் மாடு & கட்டுதல்; to yoke the oxen to the plough.

     “ஏர்பூட்டினல்லது” (ஏரெழு.17);.

     [ஏர் + பூட்டு. பூண் (த.வி); → பூட்டு (பி.வி.);]

ஏர்ப்ப

ஏர்ப்பērppa, இடை (part.)

   ஒர் உவமவுருபு (தொல்.பொருள்i.286. உரை);; adverbial word of comparison.

     [ஏல் → ஏர் → ஏர்ப்ப.]

ஏர்ப்பண்

 ஏர்ப்பண்ērppaṇ, பெ. (n.)

   பூட்டாங்கயிறு (வின்.);; ropes for attaching the oxen to the plough and the plough-beam to the yoke.

     [ஏர் + பூண் – ஏர்ப்பூண் → ஏர்ப்பண் (கொ.வ.);.]

ஏர்ப்பு

ஏர்ப்புērppu, பெ. (n.)

ஈர்ப்பு2 பார்க்க;see irppu2.

ஏர்ப்பூட்டு

 ஏர்ப்பூட்டுērppūṭṭu, பெ. (n.)

   முதலுழவு; ploughing for the first time in the season on an auspicious day, begun with appropriate ceremonies.

     [ஏர் + பூட்டு.]

ஏர்ப்பொன்

ஏர்ப்பொன்ērppoṉ, பெ. (n.)

   வரிவகை (S.1.1.vi.155);; taх.

     [ஏர் + பொன்.]

ஏர்மங்கலம்

ஏர்மங்கலம்ērmaṅgalam, பெ. (n.)

   பொன்னேர்பூட்டிப் பாடும் மங்கலப் பாட்டு; ancient song of benediction sung at the commencement of ploughing.

     “ஏரொடு நின்றோ ரேர்மங்கலமும்” (சிலப்.10,135);.

     [ஏர் + மங்கலம்.]

ஏர்வாரம்

ஏர்வாரம்ērvāram, பெ. (n.)

   1. எருக்காகக் கொடுக்கும் விளையுப் பங்கு (வின்.);; share of produce allowed for the team and agricultural implements used incultivating

 the land.

     [ஏர் + வாரம்.]

ஏற

ஏறēṟa, கு.வி.எ. (adv.)

   1. அதிகமாக; so as to exceed, more than அரைப்படிக்கு ஏறக்கொடு.

   2. உயர; on high, in the air, above.

     “அந்தரமாறா… ஏறப்பறக்கெனிற் பறந்திடும்” (சீவக.2156);.

   3. முழுவதும்; completely, entirely

     “என்னுடையிருளை யேறத்துரந்தும்” (திரு வாச.2,6);.

   4. முற்பட; in advance, forward.

     “மானிடத்து ஏறச்செல்லு நிலைமையை விரும்பும்” (சீவக.1932, உரை);.

     [ஏறு → ஏற.]

ஏறக்கட்டித்தூக்கு-தல்

ஏறக்கட்டித்தூக்கு-தல்ēṟakkaṭṭiddūkkudal,    5. செ.குன்றாவி. (v.t.)

   1. தொங்கும்படி உயரக் கட்டி வைத்தல்; to hang up.

   2. தண்டனைக்காகத் தொங்கக் கட்டுதல்; to hang up by the hands in order to flog.

     [ஏற + கட்டி + தூக்கு.]

ஏறக்கட்டு

ஏறக்கட்டு1ēṟakkaṭṭudal,    5.செ.குன்றாவி. (v.t.)

   வலுப்படுத்துதல் (யாழ்.அக.);; to strengthen by hands, etc.

     [ஏற + கட்டு.]

 ஏறக்கட்டு2ēṟakkaṭṭudal,    5.செ.குன்றாவி. (v.t.)

   1. உயரக்கட்டுதல்; to bulld up.

   2. விலையேறுதற்காகச் சரக்கை விற்காமல் வைத்தல்; to put off selling so that price may rise.

   3. மேகம் பெய்யாமற் சுரத்தல்; to withhold or keep back, as clouds their showers.

வானம் மழையேறக் கட்டிவிட்டது.

   4. இறைந்த பொருள்க ளைக் குவித்தல்; to collect together scattered articles, as grain into a heap.

   5. அடியோடு நிறுத்துதல்; to give up altogether, as a person his studies.

ம. ஏற வய்க்குக.

     [ஏற + கட்டு.]

ஏறக்குறைய

 ஏறக்குறையēṟakkuṟaiya, கு.வி.எ. (adv.)

   சற்றொப்ப (சுமார்.);; more or less, about.

ம. ஏறக்குறெ.

     [ஏற + குறைய.]

ஏறக்குறையப்பேசு-தல்

ஏறக்குறையப்பேசு-தல்ēṟakkuṟaiyappēcudal,    5.செ.குன்றாவி. (v.t.)

   இகழ்ந்து கூறுதல் (இ.வ.);; to vilify, abuse.

     [ஏற + குறைய + பேசு.]

ஏறங்கோட்பறை

 ஏறங்கோட்பறைēṟaṅāṭpaṟai, பெ. (n.)

ஏறுகோட் பறை பார்க்க;see {}.

     [ஏறு + கோள் + பறை – ஏறங்கோட்பறை. ‘அம்’ சொல்லினிமை கருதி வந்த அசைநிலைச் சாரியை.]

ஏறங்கோள்

ஏறங்கோள்ēṟaṅāḷ, பெ. (n.)

ஏறுகோட்பறை பார்க்க;see {}.

     “ஏறங்கோண் முழங்க” (சீவக.489);.

     [ஏறு + கோள் – ஏறங்கோள். ‘அம்’ அசை நிலைச் சாரியை.]

ஏறச்சங்கு

 ஏறச்சங்குēṟaccaṅgu, பெ. (n.)

   கோயிற்குக் கொடைய ளித்த பெரியோர், பல்லக்கு, சிவிகை முதலியவற்றில் ஏறும்போது மதிப்புரவு கருதி ஊதப்படும் சங்கு (இ.வ.);; conch that is blown in honour of a chief or a liberal donor of a temple as he mounts his vehicle.

     [ஏற + சங்கு.]

ஏறடவு

 ஏறடவுēṟaḍavu, பெ. (n.)

   வரவு செலவுக் கணக்கு; accounts entry. (சேரநா.);.

ம. ஏறடவு.

     [ஏறு + (அடைவு); அடவு.]

ஏறடு-தல்

ஏறடு-தல்ēṟaḍudal,    19.செ.குன்றாவி. (v.t.)

   1. மேல் வைத்தல்; to place over.

     “கொம்பினிடத்தே யேறட்ட தம்கையிடத்தே” (முல்லைப்.34, உரை);.

   2. மேற்கொள் ளுதல்; to take upon one’s self.

இவை சுண்ண மென்பதொரு பெயரை யேறட்டுக் கொண்டு (சீவக.876, உரை);.

     [ஏற + அடு.]

ஏறட்டுக்கொள்-தல்

ஏறட்டுக்கொள்-தல்ēṟaṭṭukkoḷtal,    7. செ.குன்றாவி. (v.t.)

   உரிமைப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுதல்; to assu- me a responsible post.

     ‘எப்பேற்பட்ட இறைகளும் நாங்களே ஏறட்டுக் கொண்டு இறுக்கக்கடவோம்’ (S.I.I. VII-40);.

     [ஏற + அட்டுக்கொள் = மேற்கொள்தல்.]

ஏறத்தாழ

 ஏறத்தாழēṟattāḻ, கு.வி.எ. (adv.) ஏறக்குறைய பார்க்க;see {}.

     [ஏற + தாழ.]

ஏறப்பற-த்தல்

ஏறப்பற-த்தல்ēṟappaṟattal,    3. செ.கு.வி. (v.i.)

   1. உயரப் பறத்தல்; to fly on high.

     “அந்தரமாறா… ஏறப்பறக்கெ னில்” (சீவக.2156);.

   2. ஏலாதவற்றைச் செய்ய முயலு தல்; to attempt the impossible

     [ஏற + பற.]

ஏறப்போ

ஏறப்போ1ēṟappōtal,    8.செ.குன்றாவி. (v.t.)

   குறித் துச் செல்லுதல்; to go towards, proceed in the direction of ஊரேறப்போக (சீவக.1875, உரை);.

     [ஏற +போ.]

 ஏறப்போ2ēṟappōtal,    8.செ.கு.வி. (v.i.)

   குறுக்கிட்டுச் செல்லுதல்; to Intersect

     ‘தேவரடியார் மத்தவாணச் சேரியேறப்போன தெருவுக்குக் கிழக்கும்’ (S.I.l. iii-i, -15);.

     [ஏற = மேலே, மீதாக. குறுக்காக. ஏற + போ.]

ஏறல்

 ஏறல்ēṟal, பெ. (n.)

   கிளிஞ்சில்; bivalve shell fish. (சா.அக.);.

     [இறல் → ஏறல் (பிளவுண்டது, கிளிஞ்சில்);.]

ஏறவாங்கு

ஏறவாங்கு1ēṟavāṅgudal,    7.செ.கு.வி. (v.i.)

   1. விலகியிருத்தல்; to be aloof.

     “சர்வேசுரன்… ஏறவாங்கி நிற்குமாகில்” (ஈடு.);.

   2. சுளுக்குதல் (வின்.);; to be drawn up, twisted, as the neck by cold.

     [ஏற = உயர, பிறழ. ஏற → வாங்கு.]

 ஏறவாங்கு2ēṟavāṅgudal,    5.செ.குன்றாவி. (v.t.)

   1. முழுதும் விலைக்குப் பெறுதல்; to purchase outright.

அவன் இந்தப் பண்டங்களை ஏறவாங்கிவிட்டான்.

   2. நயமாக வாங்குதல்; to buy cheaply.

     [ஏற + வாங்கு. ஏற = மிகுதி.]

ஏறவிடு-தல்

ஏறவிடு-தல்ēṟaviḍudal,    18. செ.குன்றாவி. (v.t.)

   1, ஏறும் படிச் செய்தல்; to make climb, to allow to ascend.

ஏறவிட்டேணியை வாங்கினதுபோல.

   2. மரக்கலத் தைக் கரைக்குத் தொலைவாக விடுதல் (வின்.); to keep off from the shore, as a vessel.

   3. காற்றுமுகமாய்க் கப்பலை விடுதல் (வின்.);; to sail along with the wind.

   4. கரை சேர மரக்கலத்தை விடுதல் (வின்.);; to turn towards the shore, as a vessel.

   5. மேற்போக

   விடுதல்; to allow to spread, to circulate, as poison.

நஞ்சு ஏறவிடக்கூடாது. (உ.வ.);.

     [ஏறு → ஏற + விடு.]

ஏறவிறங்கப்பார்-த்தல்

ஏறவிறங்கப்பார்-த்தல்ēṟaviṟaṅgappārttal,    4.செ.குன் றாவி. (v.t.)

   கீழும் மேலும் பார்த்தல்; to stare at, survey from head to foot.

அவன் என்னை ஏறவிறங்கப் பார்த் தான்.

     [ஏற + இறங்க + பார்.]

ஏறாங்கடை

ஏறாங்கடைēṟāṅgaḍai, பெ. (n.)

   ஒவ்வாச்செயல் (வின்.);; inconvenient engagement, unsuitable contrast.

ம. ஏறாங்கடை.

     [ஏறு7 + ஆம் + கடை – ஏறாங்கடை.]

ஏறாடி

 ஏறாடிēṟāṭi, பெ. (n.)

   காளைகளை மேய்ப்பவன்; cowherd (சேரநா.);.

ம. ஏறாடி.

     [ஏறு + (ஆனி); ஆடி, ஏறு = காளை.]

ஏறாட்டம்

 ஏறாட்டம்ēṟāṭṭam, பெ. (n.)

   போட்டி; competition.

க. ஏறாட்ட.

     [ஏறு + ஆட்டம். ஏறு = எதிர்ப்பு.]

ஏறாண்முல்லை

ஏறாண்முல்லைēṟāṇmullai, பெ. (n.)

   ஆண்மை மிகுந்த வீரக்குடியினொழுக்கத்தைப் புகழும் புறத் துறை (பு.வெ.8,22);;     [ஏறு + ஆண் + முல்லை.]

ஏறாந்தலை

 ஏறாந்தலைēṟāndalai, பெ. (n.)

   ஏரியின் நீர்ப்பிடி யிறுதி; outer catchment limits of the water of a tank.

     [ஏறு + ஆம் + தலை.]

ஏறான்

 ஏறான்ēṟāṉ, பெ. (n.)

   பள்ளிக்கூடத்துக்கு முதன்முதல் வருபவன்; first boy to be present at school.

     [ஏறு + ஆன். ஏறு = சிறப்பு, தலைமை.]

ஏறாப்பாடு

 ஏறாப்பாடுēṟāppāṭu, பெ. (n.)

   வீட்டின் முற்றத்தைச் சுற்றியுள்ள இடம்; place adjoining the yard of a house (சேரநா.);.

ம. ஏறப்பாடு.

     [இறை → இற → எற + பாடு – எறப்பாடு → ஏறாப்பாடு (கொ.வ.);. இறை = இறைப்பு, இறைவாணம்.]

ஏறாப்பு

 ஏறாப்புēṟāppu, பெ. (n.)

   மாராப்பு, ஏத்தாப்பு; apron, breast cloth of women (சேரநா.);.

ம. ஏறாப்பு.

     [ஏறு + ஆப்பு. ‘ஆப்பு’ – சொல்லாக்க ஈறு.]

ஏறாமேடு

ஏறாமேடுēṟāmēṭu, பெ. (n.)

   1. உயர்ந்த மேடு; high level which one cannot reach or to which water cannot rise.

   2. செய்யமுடியாத செயல்; enterprise beyond one’s power.

   3. ஏறாங்கடை பார்க்க (வின்);;see {}.

     [ஏறு + ஆ + மேடு. ‘ஆ’ – எ.ம.இ.நி.]

ஏறாளர்

 ஏறாளர்ēṟāḷar, பெ. (n.)

   படை வீரர் (திவா.);; warriors, soldiers.

ம. ஏறாள், ஏறாளர்.

     [ஏறு + ஆனர். ஏறு = அம்பு.]

ஏறாவழக்கு

ஏறாவழக்குēṟāvaḻkku, பெ. (n.)

   அடா வழக்கு; unreasonable dispute.

     “ஏறாவழக்குத் தொடுக்கின்றார்” (அருட்பா.1.இங்கித.13);.

     [ஏலா + வழக்கு – ஏலா வழக்கு → ஏறாவழக்கு.]

ஏறாவேணி

ஏறாவேணிēṟāvēṇi, பெ. (n.)

   கோக்காலி; horizontal beam set against the wall and used as as a shelf.

     “நிரம்பகல் பறியா வேறா வேணி” (பதிற்றுப்.43,33);.

     [ஏறு + ஆ + ஏணி.]

ஏறிடு

ஏறிடு1ēṟiḍudal,    18.செ.குன்றாவி. (v.t.)

   1. குற்றம் சாட்டுதல்; to cast upon, to superimpose, as blame.

   2. நாணேற்றுதல்; to bend, as a bow.

ஏறிட்ட வில் (சீவக.657, உரை);.

   3. தூக்குதல்; to lift up

     “கருமுகை மாலைபோலே எடுத்து ஏறிட்டுக் கொண்டு போனான்” (ஈடு.1, 3, 1);.

   4. உயர்த்துதல்; to raise.

     “தூசு நீக்கி யேறிட வார்த்தபோது” (கம்பரா.இந்திர.56);.

   5. புகப் பண்ணுதல்; to probe into, to cause to penetrate.

பருவிற் சலாகையை யேறிட்டான் (வின்.);.

ம. ஏறிடுக.

     [ஏறு + இடு – ஏறிடு.]

 ஏறிடு2ēṟiḍudal,    18.செ.குன்றாவி. (v.t.)

   கணக்கிலிடு தல்; to enter on the credit side of account.

     “வரும் மாடை நாட்டிலே ஏறிட்டுக் கொண்டு” (S.I.l.V,493);.

ம. ஏறிடுக.

     [ஏறு + இடு – ஏறிடு.]

ஏறிட்டுக்கொள்(ளு)-தல்

ஏறிட்டுக்கொள்(ளு)-தல்ēṟiṭṭukkoḷḷudal,    10.செ.குன் றாவி. (v.t.)

   ஏற்றிக்கொள்ளுதல்; to accept or assume responsibility

     “என்னுடை இரட்சை உனக்கே பரமாக ஏறிட்டுக் கொள்ளவேணும்” (இரகசிய.338);.

     [ஏறிடு → ஏறிட்டு + கொள்.]

ஏறிட்டுப்பார்

ஏறிட்டுப்பார்1ēṟiṭṭuppārttal,    4.செ.கு.வி. (v.i.)

   நிமிர்ந்து பார்த்தல்; to look up.

     [ஏற + இட்டு + பார்.]

 ஏறிட்டுப்பார்2ēṟiṭṭuppārttal,    4.செ.குன்றாவி. (v.t.)

   கவனித்தல்; to take notice of, care for.

அவர் என்னை ஏறிட்டுப் பார்க்கவில்லை.

     [ஏற + இட்டு + பார்.]

ஏறியருளப்பண்ணு-தல்

ஏறியருளப்பண்ணு-தல்ēṟiyaruḷappaṇṇudal,    12.செ.குன்றாவி. (v.t.)

   1. நூல் எழுதுதல்; to transcribe on a palm leaf as the sacred books.

     “பட்டோலை பிடித்து ஏறியருளப் பண்ணிக்கொண்டு வருகையில்” (குருப ரம்.172, ஆறா.);.

   2. படிமம் (விக்கிரகம்); அமைத்தல்; to cast, as an idol or image.

திருப்பள்ளிநாய்ச்சியார் முதலாகவுள்ள திருவுடம்புகளும் ஏறியருளப்பண்ணு வித்து (T.A.S.91);.

     [ஏறி + அருள + பண்ணு.]

ஏறு

ஏறு1ēṟudal,    5.செ.கு.வி. (v.i.)

   1. உயர்தல்; to go up, as the eyebrows, in anger.

     “ஏறியு மிழிந்து மூளும் புருவங்கண் முரிய” (சீவக.2507);.

   2. மேலேறுதல்; to rise, ascend, as the heavenly bodies, to mount, climb.

     “குன்றேறி யொளிப்பினும்” (நாலடி.90);.

   3. முற்றுப் பெறுதல்; to terminate, end.

     “ஆண்டெலா மின்றொ டேறுமோ” (கம்பரா.கிளை.114);.

   4. மிகுதல்; to abound in number, weight or measure, to increase in price, quality.

   5. பரவுதல்; to spread, to be diffused, as poison.

நஞ்சேறுகிறது.

   6. மருளுறல், தெய்வமேறப் பெறல்; tobecome possessed.

     “கடல் ஞாலத் தீசன்வந் தேறக்கொலோ” (தில்.திருவாய்.5,6,1);.

   7. வளர்தல்; to grow. பயிரேறிவிட்டது.

   8. உட்செல்லுதல்; to enter, to penetrate, to run into, as a thorn.

அவன் சொன்னது மனத்திலேறவில்லை.

   9. குடியேறுதல்; to settle, to be domiciled.

திருக்கோயிலைச் சூழ்ந்த இடத்திலும் சன்னதியிலும் ஏறின பல குடிக்கும் (S.l.l.1.93);.

   10. ஏற்றிவைக்கப்படுதல்; to be laden, as cargo.

மூட்டை கள் கப்பலில் ஏறின.

   ம. ஏறுக;   க. ஏறு;   கோத. ஏர்;   துட. ஓர்;   குட. ஏர் (தலைக்கு உயர்த்து);;   து. ஏருனி;   தெ. ரேகு;   கொலா. லேப்;   நா. லேப்;குவி. ரெனெய்.

     [ஏ → ஏல் → ஏறு.]

 ஏறு2ēṟudal,    5.செ.குன்றாவி. (v.t.)

   கடத்தல்; to cross, pass over.

     “அருளாற் காவிரியை யேறி’ (பெரியபு.திரு நாவு.303);.

     [ஏல் → ஏறு.]

 ஏறு3ēṟu, து.வி. (aux.v.)

   ஒரு துணை வினை; auxiliary verb as in நடந்தேறுதல்.

     [ஏல் → ஏறு (மேற்செலல். வினைமுடித்தல்);.]

 ஏறு4ēṟu, பெ. (n.)

   1. உயரம்; height

     “ஏறுடை வானந்தன்னுள்” (பெரியபு.கண்ணப்ப.6);.

   2. முதல் விண்மீன், இரலை (அச்சுவி.);;   1st naksatra.

     [ஏ → ஏல் → ஏறு, ஏ = உயர்ச்சி.]

 ஏறு5ēṟu, பெ. (n.)

   1. காளை (இடபம்);; bull.

     “ஊர்தி வால்வெள் ளேறே” (புறநா.13);.

   2. விலங்குகளின் ஆண்; males of certain animals as,

பன்றி, புல்வாய், உழை, கவரி, எருமை, மரை, பெற்றம் (தொல்.பொ ருள்.593,594);.

   3. துருவாடு (திவா.);; male of the sheep.

   4. சுறாவின் ஆண் (தொல்.பொருள்.595);; male

 snark.

   5. சங்கின் ஆண் (பிங்.);; male conch.

   6. ஆண் பனை; male palmyra.

   7. விடை ஒரை (இடப ராசி); (திவா.);; Tauras, a sign of the Zodiac.

     [ஏ → ஏறு.]

 ஏறு5ēṟu, பெ. (n.)

   1. எறிகை; throw

     “காயாத மரமீது கல்லேறு செல்லுமோ” (தாயு.சச்சி.8);.

   2. அடிக்கை; beating, as of a drum.

     “எடுத்தே றேய கடிப்புடை வியன்கண்” (பதிற்றுப்.41, 23);.

   3. வாள், தேள்களின் எறிகை; stroke, as of a sword, sting, as of a scorpion.

     “வாளேறு காணத் தேளேறு மாயுமா போலே” (ஈடு.3,9, பர);.

   4. பருந்தின் கவர்ச்சி; pouncing upon, as an eagle.

     “பருந்தி னேறுகுறித் தொரீஇ” (புறநா.43,5);.

   5. இடி; thunderboit.

     “அதிர்குர லேறொடு” (புறநா. 160,3);.

   6. அழிக்கை; destroying

     “அவ்வெயில் ஏறு பெற் றுதிர்வனபோல்” (கலித்..2);.

   7. எறிந்ததனாலான வடு; scar. இஃதோ ரேறு (தொல்.சொல்.119,உரை);.

     [இல் → எல் → ஏ → ஏறு = குத்துதல், தாக்குதல், அழித்தல், பகைத்தல்.]

 ஏறு7ēṟu, பெ. (n.)

   பகைமை; enmity.

     [ஏறு6 → ஏறு7 = ஏறு = எதிர்ப்பு.]

 ஏறு8ēṟu, பெ. (n.)

   மர வகை (அக.நி.);; a kind of tree.

     [ஏ → ஏறு.]

ஏறுகடை

 ஏறுகடைēṟugaḍai, பெ. (n.)

   கடைசி முடிவு (வின்.);; very end, extremity.

ஏறுகண்

ஏறுகண்ēṟugaṇ, பெ. (n.)

   1. பக்கப் பார்வை; glance.

   2. சரிந்து பார்க்கும் பார்வை; side glance, ogle. (சேரநா.);.

ம. ஏறுகண்ணு.

     [ஏறு + கண்.]

ஏறுகாலி

 ஏறுகாலிēṟukāli, பெ. (n.)

   சிறிய கலப்பை; a kind of plough smaller than the ordinary one (சேரநா.);.

ம. ஏறுகாலி.

     [ஏறு + காலி – ஏறுகாலி = ஆழமாக உழாமல் மேலோட்டமாக உழும் கலப்பை.]

ஏறுகோடல்

ஏறுகோடல்ēṟuāṭal, பெ. (n.)

   காளையைத் தழுவி அடக்குதல்; subduing the bull as a sport.

கைக்கிளை யுள் ஆசுரமாகிய ஏறுகோடல் (தொல்.பொருள்.53, உரை);.

     [ஏறு + கோடல். ஏறுகோள் பார்க்க;see {}.]

ஏறுகோட்பறை

ஏறுகோட்பறைēṟuāṭpaṟai, பெ. (n.)

   ஏறுதழுவுதற் குரிய முல்லைநிலப்பறை (இறை.1,பக்.18);; drum, used in {} (bull fight); tournaments in forest-pasture tracts.

     [ஏறு + கோள் + பறை. ஏறு = காளை.]

ஏறுகோள்

ஏறுகோள்ēṟuāḷ, பெ. (n.)

   ஆயர்குல வழக்கின்படி ஒரு பெண்ணை மணந்து கொள்வதற்காக அவள் வளர்த்த காளையைத் தழுவி அடக்குதல் (திருக்கோ. 136, உரை);; capture of the bull at large as a proof of bravery, by a man seeking in marriage the hand of a woman, a custom among herdsmen in ancient times.

     [ஏறு + கோள். ஏறு = காளை.]

முல்லைநிலக் குடியில் பெண் பிறந்தால் பெற்றோர் தம் தொழுவில் அன்று பிறந்த சேங்கன்றுகளைத் தம்மூட்டியாக விட்டு வளர்த்து அவ்வாறு வளர்ந்த ஒன்றைத் தழுவி அடக்கின வனுக்குப் பெண்ணைக் கொடுத்தல் மரபு. இது ஏறுகோள் எனப்படும்.

ஏறுக்குமாறு

 ஏறுக்குமாறுēṟukkumāṟu, பெ. (n.)

   தாறுமாறு; improper, unruly behaviour, perverseness. contrariety.

     [ஏறு + கு+ மாறு.]

ஏறுங்கூறுமாய்

 ஏறுங்கூறுமாய்ēṟuṅāṟumāy,    வி.எ. (adv.) தாறுமா றாய் (இ.வ.); improperly, indecently.

     [ஏறும் + கூறும் + ஆய். ஏறு = உயர்வு, செம்மை, கூற = பிளவு, பிரிவு.]

ஏறுசலாகை

 ஏறுசலாகைēṟusalākai, பெ. (n.)

   கைம்மரம் கோக்கும் சட்டம் (யாழ்ப்.);; large wooden peg passing through the ends of rafters in a building.

     [ஏறு + சலாகை. சாலாக்கு → சலாகு → சலாகை (நீண்டது);.]

ஏறுசாத்து

ஏறுசாத்துēṟucāttu, பெ. (n.)

   செட்டிமாருள் ஒருவகை யார், (S.i.i.vii,232);; a sect of chetty caste (lit.merchants dealing in export business);.

     [ஏறு + சாத்து – ஏறுசாத்து = பண்டைக் காலத்தில் ஏற்றுமதி வாணிகம் செய்து வந்த கடல் வாணிகப் பிரிவினர். இறக்குமதி வாணிகத்தில் ஈடுபட்டோர் இறங்கு சாத்து எனக் குறிக்கப்பட்ட னர். சார்த்து → சாத்து (குழுவாகச் சென்று வணிகம் செய்வோர்.]

ஏறுண்(ணு)-தல்

ஏறுண்(ணு)-தல்ēṟuṇṇudal,    12.செ.கு.வி. (v.i.)

   1. அறுக்கப் படுதல்; to be cut off. வாளுந் திகிரியு முதலியவற்றா லேறுண்ட தலை (தொல்.பொருள்.71,உரை);.

   2. அம்பு முதலியன தைத்தல்; to be pierced, transfixed

     “எய்யே றுண்டவாறு” (திருவிளை.பழியஞ்சி.24);.

   3. தள்ளப்ப டுதல்; to be thrown down.

     “பொறியினேறுண்டு…. வீழ்ந்தான்” (சீவக.2183);.

     [ஏறு + உண்.]

ஏறுதழுவு-தல்

ஏறுதழுவு-தல்ēṟudaḻuvudal,    9.செ.கு.வி. (v.i.)

   ஆய்க்கு லக் காளையர் மணமுடிக்கும்பொருட்டு எருதினைத் தழுவிப் பிடித்தல்; capture a bull at large as proof of bravery in {} contests, a custom among herdsmen in ancient times.

அந்நிலத்தியல்பு பற்றி ஏறுதழுவி (தொல்.பொருள்.53,உரை);.

     [ஏறு + தழுவு. ஏறு = காளை.]

ஏறுநாகம்

 ஏறுநாகம்ēṟunākam, பெ. (n.)

   மாட்டுச் சுழிவகை (பெரிய.மாட்.);; a kind of circular mark on the head or body of cattle.

     [ஏறு + நாகம்.]

ஏறுநீர்

ஏறுநீர்ēṟunīr, பெ. (n.)

   கடல் நீரின் ஏற்றம்; flow, food – tide.

     “கட்கடற்கு ஏறுநீர் இழி நீருளவோ என்னில்” (தக்கயாகப்.122,உரை);.

     [ஏறு + நீர்.]

ஏறுநெற்றி

 ஏறுநெற்றிēṟuneṟṟi, பெ. (n.)

   அகன்ற நெற்றி (இ.வ.);; broad forehead.

     [ஏறு + நெற்றி.]

ஏறுபடி

ஏறுபடி1ēṟubaḍi, பெ. (n.)

   1. அதிகப் படித்தரம். (வின்.);; extra batta to a servant, extra allowance for expenditure In the temple.

   2. தாழ்வாரம் (யாழ்.அக.);; sloping roof, verandah.

     [ஏறு + படி. ஏறு = மேன்மேலுயர்தல்.]

ஏறுபெட்டி

 ஏறுபெட்டிēṟubeṭṭi, பெ. (n.)

   மரமேறிகள் கருவிகள் வைப்பதற்காக அரையிற் கட்டிக்கொள்ளும் பெட்டி (யாழ்ப்.);; basket containing tools for tapping toddy which a toddy drawer carries about his waist while engaged in tree tapping.

     [ஏறு + பெட்டி.]

ஏறுபொழுது

 ஏறுபொழுதுēṟuboḻudu, பெ. (n.)

   முற்பகல்; forenoon. time of the sun’s advancing towards the meridian.

     [ஏறு + பொழுது.]

ஏறுமாடம்

ஏறுமாடம்ēṟumāṭam, பெ. (n.)

   1. மரத்தின் மீதமைந்த பரண் (இ.வ.);; loft.

   2. காட்டு விலங்குகளினின்று தப்பிக்க மரக்கிளையின்மீது அமைக்கப்பட்ட சிறு குடிசை; small cottage or hut constructed on the bifurcated branches of a tree as an asyium from wild animals. (in forests);.

ம. ஏறுமாடம்.

     [ஏறு + மாடம்.]

ஏறுமாநாட்டு நல்லியக்கோடன்

 ஏறுமாநாட்டு நல்லியக்கோடன்ēṟumānāṭṭunalliyakāṭaṉ, பெ. (n.)

   ஓவியர் குடியில் பிறந்த ஓய்மா நாட்டு நல்லியக்கோடனுக்குரிய ஒருபெயர்; surname of {}, Tamil chieftain of Sangam age.

     [ஏறு + மா + நாட்டு + நல்லியன் + கோடன். ஏறுமா = பொலிகாளை.]

ஏறுமாறு

ஏறுமாறுēṟumāṟu, பெ. (n.)

   1. முட்டுக்கட்டை; impediment to progress.

   2. உண்மை நெறியினின்று மாறுதல்; deviation from the path of truth or justice

   3. குழப்பம்; disorder.

   4. முரணியல்; contrary to nature.

   5. வயிற்றிலேற்படும் குழப்பம்; disordered condition of the stomach (சா.அக.);.

   6. தாறுமாறு; improper, unruly behavior.

     “ஏறுமாறாக விருப்பாளே யாமாயின்” (தனிப்பா.1, 95, 24);.

   7. இகலுகை; competing, rivaling.

     “ஏறுமாறேற்குமிக்குன்று” (பரிபா.18,6);. (செ.அக.);.

     [ஏறு + மாறு.]

ஏறுமிராசி

 ஏறுமிராசிēṟumirāci, பெ. (n.)

ஏறுமோரை பார்க்க;see {}.

     [ஏறும் + இராசி.]

ஏறுமுகஅக்கமணி

 ஏறுமுகஅக்கமணிēṟumugaaggamaṇi, பெ. (n.)

   உருத் திராக்க மணிகள் முறையே முகங்கள் அதிகம்பெறக் கோக்கப்படும் மாலை; garland of {} beads in which the number of faces of the beads is in a progressively ascending scale.

     [ஏறு + முகம் + அக்கமணி.]

ஏறுமுகக்கண்டிகை

 ஏறுமுகக்கண்டிகைēṟumugaggaṇṭigai, பெ. (n.)

ஏறுமுகஅக்கமணி பார்க்க;see {}.

     [ஏறு + முகம் + கண்டிகை.]

ஏறுமுகம்

ஏறுமுகம்1ēṟumugam, பெ. (n.)

   வளருநிலை; waxing state. state of increase

     “என்றுன்ப மனைத்தும்… ஏறுமு கங்கொண்ட தல்லால்” (அருட்பா.5,தனித்திருத்.12);. (செ. அக.);.

     [ஏறு + முகம்.]

 ஏறுமுகம்2ēṟumugam, பெ. (n.)

   1. சினமிகு முகம்; angry face.

   2. மேனோக்கிய முகம்; anything facing upwards (சா.அக.);.

     [ஏறு + முகம்.]

ஏறுமோரை

 ஏறுமோரைēṟumōrai, பெ. (n.)

   கதிரவன் வடதிசைச் செலவிற்கு இடமாய், சுறவம் முதல் ஆடவை (மகர முதல் மிதுனம்); வரையுள்ள ஆறு ஒரைகள் (இருக்கை); (வின்.);; six signs of the Zodiac through which the sun passes in its northern course, dist fr. இறங்கு மோரை.

     [ஏறும் + ஒரை.]

ஏறுழவன்

 ஏறுழவன்ēṟuḻvaṉ, பெ. (n.)

   படை வீரன் (வின்.);; warrior.

     [ஏறு + உழவன். ஏறு = அம்பு.]

ஏறுவட்டம்

ஏறுவட்டம்ēṟuvaṭṭam, பெ. (n.)

   1. விண்மீன் முதலி யன நாழிகையேறும் முறை; difference, less or more than 60 Indian hours in the passage of the moon through any of the naksatra;

 also the difference in the karanam and yokam as affected thereby.

   2. பங்கின் அளவுக்கு அதிகமான நிலம் முதலியவை; excess above, or deficiency in, equal shares in the division of the inheritance of lands, etc.

     [ஏறு + வட்டம்.]

ஏறுவாசி

ஏறுவாசி1ēṟuvāci, பெ. (n.)

   1. ஏற்றம்; increase, as of price. விலை ஏறுவாசியாயிருக்கிறது.

   2. உத்தரம் சுவரில் செல்லுதற்கு வேண்டிய அளவு (இ.வ.);; length of a groove in a wall into which is inserted the edge of a beam or rafter.

ம. ஏறுவாசி.

     [ஏறு + வாசி. வாய் → வாயி → வாசி.]

 ஏறுவாசி2ēṟuvāci, பெ. (n.)

   ஒரு வரியிலுள்ள செங்கல் இணைப்புகள் அதன் மேல்வரியிலுள்ள செங்கல் இணைப்புகளுடன் சேராதபடி கட்டும் கட்டிட வேலை (உ.வ.);; breaking of joints, in brickwork.

ம. ஏறுவாசி.

     [ஏறு + வாசி. வாய் → வாயி → வாசி.]

ஏறுவாணம்

 ஏறுவாணம்ēṟuvāṇam, பெ. (n.)

   வானம்; a kind of fire-work. (சேரநா.);.

ம. ஏறுவாணம்.

     [ஏறு + வாணம்.]

ஏறுவால்

 ஏறுவால்ēṟuvāl, பெ. (n.)

   நீண்ட வால்; long tail. பசு ஏறுவாலும் எருது கூழைவாலும் (வின்.);

     [ஏறு + வால்.]

 ஏறுவால்ēṟuvāl, பெ.(n.)

   குட்டையான வாலுடைய மாடு; short tailed cow.

     [ஏறு+வால்]

ஏறுவிடு-தல்

ஏறுவிடு-தல்ēṟuviḍudal,    20.செ.கு.வி. (v.i.)

   ஆயர் தம்மகளை மணம்புரியத் தக்கோர், தழுவிப் பிடிக்கும் பொருட்டு எருதுவிடுதல்; to set a bull at large to be captured, as a test of bravery, by a man who seeks the hand of a woman in marriage, a custom among herdsmen in ancient times.

     [ஏறு + விடு.]

ஏறுவிடுத்தல்

 ஏறுவிடுத்தல்ēṟuviḍuttal, பெ. (n.)

   முப்பத்திரண்டறங் களுட் பொலியெருதுகளை உதவும் அறச்செயல் (திவா.);; charitable act of furnishing covering bulls, one of {}.

     [ஏறு + விடு.]

ஏறுவெயில்

 ஏறுவெயில்ēṟuveyil, பெ. (n.)

   முற்பகல் வெயில்; increasing heat and sunshine, as the sun advances towards the meridian, dist fr. இறங்குவெயில்.

     [ஏறு + வெயில்.]

ஏறூர்ந்தோன்

 ஏறூர்ந்தோன்ēṟūrndōṉ, பெ. (n.)

   சிவன் (சூடா);;{} who rides on the bull.

     [ஏறு + ஊர்ந்தோன்.]

ஏறெடு-த்தல்

ஏறெடு-த்தல்ēṟeḍuttal,    4.செ.குன்றாவி. (v.t.)

   1. மேலெ டுத்தல்; to lift up, as the head, eyes. (செ.அக.);.

   2. தலை நிமிர்தல்; to be in an upright or a perpendicular posture.

   3. உயர்த்துதல்;   ; to highten (சா.அக.);.

     [ஏறு + எடு.]

ஏற்க

 ஏற்கēṟka, கு.வி.எ. (adv.) ஏற்கவே பார்க்க (யாழ்ப்.);see erkave.

     [ஏல் + க.]

ஏற்கநட-த்தல்

ஏற்கநட-த்தல்ēṟkanaḍattal,    3. செ.கு.வி. (v.i.)

   ஒழுங்காய் நடத்தல், (வின்.);; to behave properly.

     [ஏல் + க – ஏற்க + நட.]

ஏற்கவே

ஏற்கவேēṟkavē,    கு.வி.எ. (adv.) முன்னமே; before hand, early, in good time.

     “ஆபத்து வந்தபோது நம்மைத் தேடித் திரியவொண்ணாதென்று ஏற்கவே கடலிடங் கொண்டவனை” (ஈடு.3,6,2);.

     [ஏற்க + ஏ.]

ஏற்குமட்கலம்

ஏற்குமட்கலம்ēṟkumaṭkalam, பெ. (n.)

   1. கடிஞை; bowl.

   2. ஐயமேற்கும் கலம்; bowl for receiving aims.

     [ஏற்கும் + மண் + கலம்.]

ஏற்கெனவே

 ஏற்கெனவேēṟkeṉavē, கு.வி.எ. (adv.) ஏற்கவே பார்க்க;see erkave.

     [ஆ (முன்பு); → ஏ → ஏல் → ஏற்கு (முன்பு); → ஏற்கனவே → ஏற்கெனவே.]

ஏற்கை

ஏற்கைēṟkai, பெ. (n.)

   1. இணங்குகை; consent, agree to.

   2. வாங்குந் தன்மை; receiving capacity.

     [ஏல் → ஏற்கு → ஏற்கை.]

ஏற்ப

ஏற்பēṟpa,    இடை (part) ஒர் உவம உருபு (தண்டி.33); adverbial word of comparison. – கு.வி.எ. (adv.) தக்கபடி;

 in accordance with.

     [ஏல் = பொருந்துதல். ஏல் → ஏற்ப.]

ஏற்படு-தல்

ஏற்படு-தல்ēṟpaḍudal,    20. செ.கு.வி. (v.i.)

   1. உண்டாதல்; to come into existence, to become formed, to be produced or created.

அந்த ஊர் அவனால் ஏற்பட்டது.

   2. தலைப்படுதல் (யாழ்ப்.);; to be engaged in to enter upon, as a business.

   3. உடன்படுதல் (யாழ்ப்.);; to agree, consent, become a party-to a contract.

   ம. ஏர்ப்பெடுக;   க. ஏர்படு;   கோத, ஏர்பட்த;   து. ஏர்படு, ஏபுண;   தெ. ஏர்படு;   பர். ஏப் (அடைதல்);;   கோண். ஏதானா (எடுத்தல்);;கூ. ஏ.ண்ட (வாங்குதல்);.

     [எல் = பொருந்துதல், பொருத்தல், எழுப்புதல், உண்டாக்குதல். ஏல் + படு – ஏற்படு. படுதல் = செய்தல், ஏற்படு = உண்டாகச் செய், உளதாக்கு.]

ஏற்படுத்து-தல்

ஏற்படுத்து-தல்ēṟpaḍuddudal,    5. செ.குன்றாவி (v.t.)

   1. உண்டுபண் ணுதல்; to create, make, form, construct, establish.

அவன் அந்த ஊரை ஏற்படுத்தினவன்.

   2. இணங்கச்செய்தல் (யாழ்ப்);; to persuade, prevail upon, induce.

   3. நிறுவுதல்; to find, as guilty or not guilty.

அவனைக் குற்றவாளியென் றேற்படுத்தினார்கள் (பே.வ.);.

   4. அமர்த்துதல்; to ordain, appoint, assign, Institute, put in to office.

அவனை அச்செயலுக்குத் தலைவனாக ஏற்படுத்தினார்கள்.

   5. அணியப்படுத்துதல் (வின்.);; to prepare, arrange, get ready.

   ம. ஏர்ப்பெடுத்துக;   க. ஏர்படிக;தெ. ஏர்பரட்க.

     [ஏல் = எழுப்பு, உண்டாக்கு, ஏல் + படு – ஏற்படு – ஏற்படுத்து.]

ஏற்பாடு

ஏற்பாடு1ēṟpāṭu, பெ. (n.)

   1. ஒழுங்கு; arrangement, method, system, rule, established custom. அந்த ஏற்பாடு நன்றாயிருக்கிறது.

   2. அமர்த்தம்; appointment to an office.

அந்த வேலைக்கு அவனை ஏற்பாடு பண்ணினான்.

   3. உடனப்டிக்கை; engagement, covenant.

   4. கிறித்தவர் பழைய, புதிய விவிலிய நூலின் இருபகு திகளான பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடுகளில் ஒன்று; testament, as the old and new testament in the Bible. (Chr);.

   ம. ஏர்ப்பாடு;   க. ஏர்பாடு;   கோத. ஏர்பட்த்;   துட. ஏவர்;   து. ஏர்பாடு;தெ. ஏர்பாடு.

     [ஏற்படு → ஏற்பாடு.]

 ஏற்பாடு2ēṟpāṭu, பெ. (n.)

   பொருத்தம் (யாழ்.அக.);; fitness, appropriateness.

     [இயல் → ஏல் + பாடு – ஏற்பாடு. படு → பாடு.]

ஏற்பி-த்தல்

ஏற்பி-த்தல்ēṟpittal,    4. செ.குன்றாவி. (v.t.)

   ஒப்படைத்தல் (இ.வ.);; to entrust.

ம. ஏல்பிக்குக.

     [ஏல் → ஏற்பு → ஏற்பி.]

ஏற்பு

ஏற்புēṟpu, பெ. (n.)

   1. பொருத்தம்; appropriateness, fitness.

     “ஏற்புற வணிதலும்” (நம்பியகப்.125);.

   2. ஏற்றுக்கொள்கை, வரவேற்பு; acceptance, reception.

     [ஏல் → ஏற்பு.]

ஏற்புறவணிதல்

 ஏற்புறவணிதல்ēṟpuṟavaṇidal, பெ. (n.)

   மணமகளை அழகுசெய்தல்; decorating a bride.

     [ஏற்பு + உற + அணிதல்.]

ஏற்புழி

ஏற்புழிēṟpuḻi,    கு.வி.எ. (adv.) ஏற்குமிடத்து; at appropriate place.

     “அடைகளை ஏற்புழி யெங்கும் ஒட்டுக” (சிலப்.13,155,உரை);.

     [ஏற்பு + உழி.]

ஏற்புழிக்கோடல்

 ஏற்புழிக்கோடல்ēṟpuḻikāṭal, பெ. (n.)

     [ஏற்பு + உழி + கோடல், கொளல் → கோடல்.]

ஏற்போன்

 ஏற்போன்ēṟpōṉ, பெ. (n.)

   இரவலன் (சூடா.);; beggar, mendicant.

     [ஏல் → ஏற்பான் → ஏற்போன்.]

ஏற்றகுடி

 ஏற்றகுடிēṟṟakuṭi, பெ. (n.)

பெண் எடுத்த குடி,

 brides house.

     [ஏற்றா+குடி]

ஏற்றக்கால்

 ஏற்றக்கால்ēṟṟakkāl, பெ. (n.)

   துலாவைத் தாங்கும்கால்; frame for supporting a sweep or picottah for Irrigation.

   ம. ஏற்றக்கால்;க. ஏதகோலு.

     [ஏற்றம் + கால்.]

ஏற்றக்குறைச்சல்

ஏற்றக்குறைச்சல்ēṟṟakkuṟaiccal, பெ. (n.)

   1. உயர்வு தாழ்வு; superiority and inferiority, highness and lowness;

 greatness and smallness.

   2. ஒவ்வாமை (பே.வ.);; disparity, difference, disagreement.

ம. ஏற்றக்குறச்சில்.

     [ஏற்றம் + குறைச்சல். குறைத்தல் → குறைச்சல்.]

ஏற்றக்கோல்

 ஏற்றக்கோல்ēṟṟakāl, பெ. (n.)

   துலாமரத்தில் நீரிறைக்கும் கழி; pole attached to a well sweep or picottah and supporting the bucket for drawing water.

   க. ஏத கோலு;ம. ஏத்தக்கோல்.

     [ஏற்றம் + கோல்.]

ஏற்றச்சால்

 ஏற்றச்சால்ēṟṟaccāl, பெ. (n.)

துலாக்கால்: bucket used for irrigation by picottah.

     [ஏற்றம் + சால்.]

ஏற்றணை

ஏற்றணைēṟṟaṇai, பெ. (n.)

   அரியணை; throne, supported by legs carved with the figure of the lion.

     “ஏற்றணையி னீங்கி” (கந்தபு.இரண்.சூரப.யுத்-29);.

     [ஏறு + அணை. ஏறு = அரிமா ஏறு.]

ஏற்றபடி

ஏற்றபடிēṟṟabaḍi, வி.எ. (adv.)

   1. தக்கவாறு; as is

 fit, meet, becoming, proper.

   2. விரும்பியவாறு (வின்.);; as one likes, according to one’s own pleasure.

     [ஏல் → ஏற்ற + படி.]

ஏற்றப்பட்டரை

 ஏற்றப்பட்டரைēṟṟappaṭṭarai, பெ. (n.)

   ஏற்றமிட்டிறைக்குங் கிணற்றைச் சூழ்ந்த விளைநிலம் (இ.வ.);; cultivable land surrounding a well from which water can be drawn by a sweep or picottah for purposes of irrigation.

     [ஏற்றம் + பட்டரை. பட்டடை → பட்டரை.]

ஏற்றப்புவாரம்

 ஏற்றப்புவாரம்ēṟṟappuvāram, பெ. (n.)

   நீர்க்கூலி [W.G.); share of the produce, charge for watering lands.

     [ஏற்றம் + அப்பு + வாரம். அப்பு = நீர்.]

ஏற்றமடல்

 ஏற்றமடல்ēṟṟamaḍal, பெ. (n.)

   துலாமரந் தாங்குங்கோல் (வின்.);; fulcrum on which the well sweep or picottah is pivoted and which is attached to a pillar planted in the ground.

     [ஏற்ற + மடல்.]

ஏற்றமரம்

 ஏற்றமரம்ēṟṟamaram, பெ. (n.)

   துலாமரம்; long lever or yard pivoted on an upright post in an irrigating machine as the well sweep or picottah.

     [ஏற்றம் + மரம்.]

ஏற்றமொழி

 ஏற்றமொழிēṟṟamoḻi, பெ. (n.)

   புகழ்ச்சியுரை (திவா.);; praise, eulogy.

     [ஏற்ற + மொழி.]

ஏற்றம்

ஏற்றம்ēṟṟam, பெ. (n.)

   1. மேல் ஏறுகை; mounting, as on a ladder, a horse, ascending.

   2. மேடு; ascent, acclivity.

   3. உயர்கை, கொடியேற்றம்; hoisting, as a flag, raising up.

   4. நீர்ப்பெருக்கு; rising, as the flowing tide.

     “ஆணையாலேயேற்றந்தொடங்காக்கடலின்” (கம் பரா.நகர்நீ.141);.

   5. புகழ் (திவா.);; praise, eulogy.

   6. இடிமரம்; heavy wooden rammer set to a frame for pounding parched rice.

   7. அதிகப்படி; increase, increment.

     “மேல் ஏற்றம் ஒரு நாளைக்கு மூன்று மாவாக” (S.l.l.ii,129);.

   8. மிகுதி; excess.

     “ஏற்றம் நெல்லுக்குறுணி எழுநாழியும்”. (S.Il.ii.705);.

   9. மேன்மை; distinction, superiority, exaltation, pre-eminence.

     “பத்தர்கட் கேற்ற நல்கினீர்” (தேவா.599,6);.

   10. நினைவு; remembrance.

     “ஏற்ற நினைவுந் துணிவுமாகும்” (தொல்.சொல்.337);.

   11. துணிவு; courage. ஏற்ற மிலாட்டியென்னேமுற்றாள் (தொல்.சொல்.337.உரை);.

   12. ஏற்ற மரம்; well sweep, plcottah.

     “ஏற்றமிரண்டுள” (திருமந்:2873);.

   ம. ஏத்தம்;   க. ஏத. யாத;தெ. ஏதமு.

     [ஏறு → ஏற்று → ஏற்றம் (சு.வி. 78);.]

ஏற்றம்போடு-தல்

ஏற்றம்போடு-தல்ēṟṟambōṭudal,    20. செ.கு.வி. (v.i.)

   1. துலாமரம் அமைத்தல்; to set a well sweep or picottah.

   2. தோப்புக்கரணம போடுதல்; to punish or humble one’s self by taking hold of the right ear with the left hand and the left ear with the right hand and then raise and lower the body many times in quick succession.

     [ஏற்றம் + போடு.]

ஏற்றரவு

ஏற்றரவுēṟṟaravu, பெ. (n.)

   1. அண்மைக் காலம்; near future.

   2. முதல்; front, first in place or time.

   3. அதிகம், மிகுதி; much, very many, excessive.

ம. ஏற்றரவு.

     [ஏல் + தரவு – ஏற்றரவு.]

ஏற்றல்

ஏற்றல்1ēṟṟal, பெ. (n.)

   ஒப்புக்கொள்ளுதல்; agreeing

 Accepting.

     [ஏல் → ஏற்றல்.]

 ஏற்றல்2ēṟṟal, பெ. (n.)

   எதிர்க்கை; disputation, polemics

     “அறுவகைச் சமயமு மேற்றல்” (பெருங். உஞ்சைக்.36,243);.

     [ஏறு → ஏற்று → ஏற்றல். ஏறு = குத்துதல், தாக்குதல், எதிர்த்தல்.]

 ஏற்றல்3ēṟṟal, பெ. (n.)

   ஊசி ஏற்றல்; thrusting a needle into the body for introducing a liquid medicine, to inject (சா.அக.);.

     [ஏற்று → ஏற்றல்.]

ஏற்றவாறு

ஏற்றவாறுēṟṟavāṟu, கு.வி.எ. (adv.)

   1. ஏற்றபடி; suitably.

   2. முறைப்டிப; proportionately.

     [ஏற்ற + ஆறு – ஏற்றவாறு.]

ஏற்றான்

 ஏற்றான்ēṟṟāṉ, பெ. (n.)

   வகுப்புக்கு முதலில் வரும் மாணவன் (நெல்.);; first boy to be present at school, on a day.

     [ஏ → ஏற்று (உயரம், சிறப்பு); ஏற்று + அன் – ஏற்றள் → ஏற்றான்.]

ஏற்றார்

ஏற்றார்ēṟṟār, பெ. (n.)

   பகைவர்; toes, anemies.

     “ஏற்றார் மூதூரெழினகை யெரியின் வீழ்வித்து” (திருவாச. 3,158);.

ம. ஏற்றார்.

     [ஏற்றல் + ஆர் – ஏற்றலார் → ஏற்றார்.]

ஏற்றாற்போல

 ஏற்றாற்போலēṟṟāṟpōla,    கு.வி.எ. (adv.) ஏற்றபடி; appropriately, in accordance with.

     [ஏல் → ஏற்றல், ஏற்றால் + போல்.]

ஏற்றாளி

ஏற்றாளிēṟṟāḷi, பெ. (n.)

   எதிராளி; enemy, adversary. (சேரநா.);.

ம. ஏற்றாளி,

     [ஏற்றன்2 + ஆளி – ஏற்றவாளி → ஏற்றாளி.]

ஏற்றியல்

ஏற்றியல்ēṟṟiyal, பெ. (n.)

   விடை (இடப); ஒரை; Taurus, a sign of the Zodiac.

     “உருகெழு வெள்ளி வந்தேற்றியல் சேர” (பரிபா.11.4);.

     [ஏறு + இயல்.]

ஏற்றியிறக்கு-தல்

ஏற்றியிறக்கு-தல்ēṟṟiyiṟakkudal,    5. செ.குன்றாவி, (v.t) கண்ணேறு கழிக்குஞ் சடங்கு நிகழ்த்துதல்; to perform the ceremony of waving lights, etc., before a person to avert the evil eye.

     [ஏற்று + இறக்கு.]

ஏற்றிறக்கம்

ஏற்றிறக்கம்ēṟṟiṟakkam, பெ. (n.)

   1. மேடும் பள்ளமும்; up and down spot, hill and dale.

   2. ஏற்றலும் இறக்கலும்; increase and decrease, fluctuation in position or status.

   3. ஏற்றுமதியும் இறக்குமதியும்; export and import

   4. கடலில் அலை ஏற்றமும் இறக்கமும்; ebb and flow of tide. (சேரநா.);.

ம. ஏற்றிறக்கம்.

     [ஏற்று + இறக்கம்.]

ஏற்றிலக்கை

ஏற்றிலக்கைēṟṟilakkai, பெ. (n.)

   அதிகச்சம்பளம்; high salary.

     “ஏற்றிலக்கை பெற்றுண்கிற மிடுக்கையுடைய” (ஈடு.7.4.5);.

     [ஏறு + இலக்கை.]

ஏற்றிழிவு

ஏற்றிழிவுēṟṟiḻivu, பெ. (n.)

   1. பெருமை சிறுமை (தொல், பொருள், உரை);; greatness and smallness.

   2. மேடுபள்ளம் (இறை. 18, உரை);; hill and dale;

 mountain and valley;

 up and down, uneven surface.

ம. ஏற்றிறக்கம்.

     [ஏறு → ஏற்று + இழிவு.]

ஏற்றிவா-தல் (ஏற்றிவருதல்)

ஏற்றிவா-தல் (ஏற்றிவருதல்)ēṟṟivādalēṟṟivarudal,    15. செ.குன் றாவி. (v.t) கூடிவருதல்; to add.

     “‘தடிமூன்றினால் ஏற்றிவந்த நிலம்” (S.I.I.vi,11);.

     [ஏறு → ஏற்று → ஏற்றி + வா.]

ஏற்று

ஏற்று1ēṟṟudal,    5. செ.குன்றாவி (v.t.)

   1. தாக்குதல்; to lift up, raise, hoist உத்தரத்தை யேற்றனின்.

   2 மிகைப்படுத்துதல் விலையை ஏற்றுதல்; to increase, as price.

   3. சுமத்துதல்; to load as a cart or ship, to impose as a responsibility.

   4. ஏறச் செய்தல்; to run over, as a wheel over a person.

காலில் வண்டியை ஏற்றிவிட்டான்.

   5. அடுக்குதல் (திவா.);; to pile up, stow away, pack.

   6. மேம்படுத்துதல்; to eulogise, praise.

     “ஏற்றற் கண்ணும் நிறுத்தற் கண்ணும்” (தொல்.பொருள், 147);.

   7. குடியேற்றுதல்; to colonize, populate,

கொண்டு வந்து ஏற்றின தளிச்சேரிப்பெண்டுகளுக்கும் (S.I.I.ii.261);.

   8. நிலைநிறுத்தல்; to found, establish

     “நம் பெயரால் ஏற்றின வீரசோழன் திருமடை விளாகத்தில் (S.I.I.ii.47);.

   9. உட்செலுத்துதல்; to put in, cause to enter insert to drive in as a nail.

நகத்தில் ஊசியை ஏற்றினான்.

   10. மேற்செலுத்துதல்; to ascribe foist upon.

தன் குற்றத்தை அவன் மேலேற்றினான்.

   11. ஏற்றுமதி செய்தல்; to export.

   12. சுடர் கொளுவுதல்; to light, as a lamp.

     “விளக்கேற்றினேன்’ (திவ்.இயற். 2,1);.

   13. நினைத்தல்; to think, consider.

     “கான லஞ் சேர்ப்பன் கொடுமையேற்றி” (தொல்,சொல்,337);.

   14. துணிதல் (தொல்,சொல்,337);; to decide.

   15. படைத்தல்; to offer, as an oblation.

     “ஏற்றிக் கழித்த வெண்சோற்றையருந்தி” (காசிக.ஒங்காரவி.கி.11);.

   ம. ஏற்றுக;   து. ஏராவுனி;   தெ. ரெச்சு;   கொலா. எத்;   நா. எத்த்;   கூ. எத;குவி. எதலி.

     [ஏறு → ஏற்று.]

 ஏற்று2ēṟṟu, பெ. (n.)

   மரத்தினாற் செய்த மேடை (யாழ்.அக.);; wooden platform.

     [ஏ → ஏல் → ஏற்று (உயரமானது);.]

 ஏற்று3ēṟṟudal,    5. செ.குன்றாவி, (v.t) மெய்ப்பித்தல்; to establish by evidence, substantiate.

     “அடிமையென்ற வெல்வுரை யெம்முன் னேற்ற வேண்டும்” (பெரியபு. தடுத்தாட்.55);.

     [எல் → ஏற்று.]

ஏற்றுக்குறி

ஏற்றுக்குறிēṟṟukkuṟi, பெ. (n.)

   1. ஆண்குறி; penis.

   2. எருதின் இலச்சினை; symbol of an ox. (சா.அக.);.

     [ஏறு + குறி.]

ஏற்றுக்கொண்டுவா

ஏற்றுக்கொண்டுவாēṟṟukkoṇṭuvā,    18. செ.கு.வி. (v.i.)

   ஒருவனைத் தாங்க வருதல்; to come forward to support another.

அவனுக்கு ஏற்றுக்கொண்டு வந்தான். (உ.வ.);.

     [ஏல் → ஏற்று + கொண்டு + வா.]

ஏற்றுக்கொள்(ளு)-தல்

ஏற்றுக்கொள்(ளு)-தல்ēṟṟukkoḷḷudal,    10. செ.குன்றாவி (v.t.)

   1. ஒத்துக்கொள்ளுதல்;   இசைதல்; to receive, admit, accept, acknowledge.

   2. மேற்கொள்ளுதல்; to undertake, engage in, take charge of.

     [ஏல் → ஏற்று → கொள்.]

ஏற்றுதுறை

 ஏற்றுதுறைēṟṟuduṟai, பெ. (n.)

   சரக்கைக் கப்பலிலேற்றுந் துறைமுகம் (வின்.);; place of export or ambarkation.

     [ஏறு → ஏற்று + துறை.]

ஏற்றுத்தொழில்

ஏற்றுத்தொழில்ēṟṟuttoḻil, பெ. (n.)

யானை முதலிய வற்றில் ஏறிநடத்துந் தொழில் (சீவக.1758.உரை);

 art of riding on elephants, horses, etc.

     [ஏறு + தொழில்.]

ஏற்றுப்பனை

ஏற்றுப்பனைēṟṟuppaṉai, பெ. (n.)

ஏற்றைப்பனை பார்க்க;see errai-p-paral.

     “ஏற்றுப் பனையெல்லாம் நிறைந்த குலைகளாய்” (பெரியபு.திருஞான.980);.

     [ஏறு → (ஏற்றை); ஏற்று + பனை.]

ஏற்றுமண்

 ஏற்றுமண்ēṟṟumaṇ, பெ. (n.)

   பிற இடங்களினின்று கொண்டு வந்து போட்டமண்; deposited soil. (சேரநா.);.

ம. ஏற்றுமண்ணு.

     [ஏறு → ஏற்று + மண்.]

ஏற்றுமதி

ஏற்றுமதிēṟṟumadi, பெ. (n.)

   1. கப்பலிற் பண்டமேற்றுகை; export

   2. ஏற்றுமதிப் பண்டபம்; exported cargo.

   ம. ஏற்றுமதி;க., தெ., எகுமதி.

     [ஏற்று + மதி, ‘மதி’ அளவு குறித்த சொல் முதனிலைப்பொருள் குறித்த ஈறாயிற்று.]

ஏற்றுமதிச்சீட்டு

ஏற்றுமதிச்சீட்டுēṟṟumadiccīṭṭu, பெ. (n.)

   கப்பலிலுள்ள நாவாய்கனின் பெயர், பயணியர் தொகை, சரக்குகளின் விளக்கம் முதலிய குறிப்புகள் அடங்கியுள்ள சீட்டு (M,Navi.123);; manifest, cargo list and list of passengers.

     [ஏற்றுமதி + சீட்டு.]

ஏற்றுமுதல்

 ஏற்றுமுதல்ēṟṟumudal, பெ. (n.)

தோணிமுதலியவற்றி

   லேற்றப்படுஞ் சரக்கு (சங்.அக.);; cargo exported in boats, etc.

     [ஏற்று + முதல்.]

ஏற்றெழு-தல்

ஏற்றெழு-தல்ēṟṟeḻudal,    2.செ.கு.வி. (v.i.)

   1. மயக்குந்துயில்களினின்றும் எழுதல்; to rise after recovery of consciousness from a swoon, from sleep.

     “மெய்யறிந் தேற்றெழுவேனாயின்” (கலித்.37);.

   2. ஓங்கி யெழும்புதல்; to ascend, as a flame.

     “ஏற்றெழு வன்னிமே லினிது துஞ்சலாம்” (கந்தபுவிடைபெறு.31);.

   3. மேற் செல்லுதல்; to proceed against.

     [ஏல் → ஏற்று + எழுதல்.]

ஏற்றை

ஏற்றைēṟṟai, பெ. (n.)

   ஆற்றலோடு கூடிய ஆண்பால் விலங்கு (தொல்.பொருள்.604);; male of any animal remarkable for physical strength.

     [ஏறு → ஏற்றை.]

ஏற்றைப்பனை

ஏற்றைப்பனைēṟṟaippaṉai, பெ. (n.)

   ஆண் பனை; male palmyra

     “இடுகாட்டு ளேற்றைப்பனை” (நாலடி.96);.

     [ஏறு → ஏற்றை +பனை.]

ஏற்றோற்றம்

ஏற்றோற்றம்ēṟṟōṟṟam, பெ. (n.)

   காலை அல்லது உதய முதல் 10 நாழிகை வரை, பனைப்பொழுது; period from sun rise till 10 A.M. (சா.அக.);.

     [எல் + தோற்றம் – எற்றோற்றம் → ஏற்றோற்றம். எல் = கதிரவன்.]

ஏல

ஏலēla, கு.வி.எ. (adv.)

   1. முன்னமே; already, beforehand.

     “பிரளயம் வருமென் றேலக் கோலி” (ஈடு.2,8,7);.

   2. மிக; liberally, vastly.

     “கல்வியேலவமைந்த பெருமை பெற்றும்” (திருக்காளத்.4,3,8);.

 A.S. oer, E are, before, Gosh air, soon. E early, from oer.

     [எல் → எல (க,வி78);.]

ஏலக்கம்

 ஏலக்கம்ēlakkam, பெ. (n.)

   கடினவேலையின் பொழுது ஊக்குவிக்க எழுப்பும் ஒலி; cry to encourage one another in hard work (சேரநா.);.

ம. ஏலக்கம்

     [ஏல → ஏலக்கம். ஏல – கெழுதகைப் பொதுச்சொல்லாக வரும் விளி.]

ஏலக்காய்

 ஏலக்காய்ēlakkāy, பெ. (n.)

   ஏலச்செடியின்காய்; Cardamom.

   க. ஏலக்கி, ஏளக்கி, யாலக்கி;   து., குடி., ஏலக்கி;   தெ. ஏலகி. Guj. Elaci; Blang liayaja. Hn itayaci, Mar.elaci, elaci, Skt elilka.

     [ஏலம் + காப். ஏ → எல் → ஏலம் (உயர்ந்த மணம் வீசுவது);.]

ஏலக்கோலம்

 ஏலக்கோலம்ēlakālam, பெ. (n.)

   அணியம் (யாழ்.அக);; readiness, preparedness.

     [ஏல் + கோலம் – ஏலக்கோலம்.]

ஏலங்கேள்(ட்)-த(ட)ல்

ஏலங்கேள்(ட்)-த(ட)ல்ēlaṅāḷḍtaḍal,    12. செ.கு.வி. (v.i.)

   ஏலவிலையை ஏற்றி அல்லது குறைத்துக் கேட்டல்; to bid at an auction.

     [ஏலம் + கேள்.]

ஏலச்சீட்டு

 ஏலச்சீட்டுēlaccīṭṭu, பெ. (n.)

   எலங்கேட்டெடுக்குங் கூட்டுச் சீட்டு; periodical deposit of money, the net collections being auctioned away to the lowest bidder on each occasion.

     [ஏலம் + சீட்டு.]

ஏலன்

 ஏலன்ēlaṉ, பெ. (n.)

   தினையரிசி; millet.

     [இல் → எல் → ஏல் + அன் – ஏலன் = சிறியது. ‘அன்’ – ஒருமை குறித்த ஈறு.]

ஏலப்பாட்டு

 ஏலப்பாட்டுēlappāṭṭu, பெ. (n.)

   படகோட்டிகளின் பாட்டு (வின்.);; boatmen’s song in which the words elo, elelo occur again and again.

     [ஏல + பாட்டு – ஏலப்பாட்டு. ஏலேலோ என இசைத்தவாறு பாடும் பாட்டு.]

ஏலம்

ஏலம்1ēlam, பெ. (n.)

   1. செடிவகை; cardamom plant.

   2. ஒரு மணப் பொருள் (திவா.);; cardamom seeds.

   3. மயிர்ச்சாந்து; unguent for perfuming the hair of women.

     “ஏலவார்குழலிமார்” (திருவாச.29);.

   ம. ஏலம் க. ஏலக்கி, யாலக்கி, யாலகி, குட. ஏலக்கி;தெ. ஏலக்கி, ஏல Mar elaci, velaci, veladoda or ela, olay.

     [ஏ → ஏல் → ஏலம்.]

 ஏலம்2ēlam, பெ. (n.)

   போட்டியிற் பலர்முன் ஏற்றும் விலை; auction.

   ம., து., க. ஏலம்;   தெ. ஏலமு, பாலமு, வேலமு, Hin. Nilam; Mar, lilam port lelam.

ஏலரிசி

 ஏலரிசிēlarisi, பெ. (n.)

எலவரிசி பார்க்க;see ela-v-ansi.

     [ஏலம் + அரிசி.]

ஏலரிசிமணி

 ஏலரிசிமணிēlarisimaṇi, பெ. (n.)

   பரவ மகளிர் கழுத்தணிகளுளொன்று; a kind of necklace worn by parava women.

     [ஏலம் + அரிசி + மணி.]

ஏலவரிசி

ஏலவரிசிēlavarisi, பெ. (n.)

   ஏலக்காயின் உள்ளீடு (S.1.1.ii.121);; Cardamom Seed.

க. ஏலக்கி.

     [ஏல + அரிசி.]

ஏலவார்குழலியம்மை

 ஏலவார்குழலியம்மைēlavārkuḻliyammai, பெ. (n.)

   திருக்காஞ்சியிற் கோயில் கொண்ட அம்மையார்; deity in Kanchipuram temple.

     [ஏலம் + வார்குழலி + அம்மை.]

ஏலவே

ஏலவேēlavē,  v-e, கு.வி.எ. (adv.) ஏல1 பார்க்க;see ela1.

     [ஏல + ஏ – ஏலவே.]

ஏலா

ஏலாēlā, விளி (int.)

   1. தோழன் தோழியை முன்னிலைப் படுத்துஞ் சொல் (பரிபா.8,69.கந்தபு.அசமுகிப்.12);; exclamation of farmiliar address to a companion, whether man or woman.

   2. மனைவியை விளிக்கும் கெழுதகைப் பொதுச்சொல் (கரூர்.வ.);; word of endearment. ஏலா, இங்கே வா (இ.வ.);.

   க. எலா, லே;தெ. எலா.

     [எல்லா → எலா → ஏலா.]

கணவன் மனைவி ஆகிய இருவரும் ஒருவரையொருவர் ஏற்றத்தாழ்வின்றி அன்பும் மதிப்பும் ஒருபடித்தரமாகப் புலப்படும் வகையில் எலா என அழைப்பது முந்து தமிழ்ப் பண்பாடு. அஃது இன்றும் நாட்டுப்புறங்களில் ஒதுக்கப்பட்டுப் புறக்கணிக்கப்பட்ட மக்களிடை மறையாமல் நின்று நிலவுகி றது. மேனாட்டார் ஒருவரையொருவர் Halo என விளித்துக் கொள்வதை இதனொடு ஒப்பிடுக.

ஏலாதி

ஏலாதிēlāti, பெ. (n.)

 lit. cardamom and other ingredients’, name of an ancient didactic work by Kani-Metaviyar, containing 100 stanzas and mentioning six virtues in each stanza, one of Padin-en-kil-kanakku.

     [ஏலம் + ஆதி.]

ஏலாதிகடுகம்

 ஏலாதிகடுகம்ēlātigaḍugam, பெ. (n.)

   மருந்துவகை (யாழ்.அக.);; a medicine.

     [ஏலம் + ஆதி + கடுகம்.]

ஏலாப்பு

 ஏலாப்புēlāppu, பெ. (n.)

   துன்பம் (யாழ்.அக.);; distress.

   மறுவ. பொல்லாப்பு;ம. எலாப்பு.

     [இயலாப்பு → ஏலாப்பு.]

ஏலாப்புறம்

 ஏலாப்புறம்ēlāppuṟam, பெ. (n.)

   வயலைச்சுற்றியுள்ள இடம்; place adjoining and around paddy-fields. (சேரநா.);.

ம. எலாப்புறம்.

     [எல்லைப்புறம் → எலாப்புறம் (கொ.வ.);.]

ஏலாமுள்

 ஏலாமுள்ēlāmuḷ, பெ. (n.)

   வேலியமைக்கப் பயன்படுத்தும் ஒருவகை முட்செடி; a species of thorny plant. (சேரநா.);.

ம. ஏலாமுள்ளு,

     [வேல் → வேலா + முள் – வேலாமுள் → எலாமுள் (கொ.வ.);.]

ஏலாமை

ஏலாமைēlāmai, பெ. (n.)

   1. கூடாமை; inability, impossibility.

   2. பொருந்தாமை; unsuitableress, incongruity, inconsistency.

     “பூதமுதலாய தத்துவங்களெனவுரைத்தல் ஈண்டைக்கேலாமையறிக.” (சி.போ சிற்.1,1);.

     [இயலாமை → எலாமை.]

ஏலு

ஏலு1ēludal,    13. செ.கு.வி. (v.i.)

   1. நிகழ்தல்; to happen, occur.

   2. பொருந்துதல்; to join, mingle.

   3. செய்ய முடிதல்; to be possible. இது உன்னாற் செய்ய ஏலுமா.

ம. ஏலுக.

     [இயல் → எல் → எலு-தல்.]

ஏலே

ஏலேēlē, விளி (int.)

   1. சிறுவனையும் இழிந்தோனையும் விளிக்குஞ் சொல்; exclamation or familiar address lo Inferior and young. ஏலே! என்னலே அது? (நெல்லை.);.

   2. பழங்குடி மக்கள் ஒருவரையொருவர் அன்பொடு விளிக்கும் கெழுதகைப் பொதுச் சொல்; word of endearment among Harijans and other most Backward Communities.

     [ஏல் → ஏலா → ஏலே.]

ஏலேலசிங்கன்

 ஏலேலசிங்கன்ēlēlasiṅgaṉ, பெ. (n.)

   திருவள்ளுவ நாயனார் காலத்தில், அப்பெருமானிடம் பேரன்பு பூண்டு ஒழுகி தன் மகளை வள்ளுவருக்கு வாழ்க் கைத் துணையாகக் கொடுத்த ஒரு வேளாளப் பெரு மகனார்; a velala chief, a contemporary of Tiruvalluvar fascinated by Tiruvalluvar’s excellence and gave his daughter in marriage to him (Tiruvalluvar); as a token of respect.

     [ஏவேலன் + சிங்கள், ஏலேலன் என்பது படகோட்டிக்கும் கப்பல் உடைமையாளனுக்கும் பண்டு தொட்டு வழங்கிய பெயராகலாம்.]

ஏலேலம்

ஏலேலம்ēlēlam, விளி, (int.)

ஏலேலோ1 பார்க்க;see elelo1.

ஏலேலோ

ஏலேலோ1ēlēlō, விளி. (int.)

   படகு முதலியன தள்ளுவோர்பாடும் ஏலப்பாட்டில் வரும் ஒரு சொல்; onom, expression that occurs again and again in songs sung by boatmen or others while pulling crlifting together

     “மண்ணை நம்பி ஏலேலோ – மரமிருக்க – ஏலேலோ. மரத்தை நம்பி ஏலேலோ – கிளையிருக்க – ஏலேலோ.”

     [ஏலோ + ஏலோ – ஏலேலோ (ஒலிக் குறிப்பு);.]

 ஏலேலோ2ēlēlō, பெ. (n.)

   சோழமன்னனொருவனின் பெயர்; name of a Chola King. (செ.அக.);.

ஏல்

ஏல்1ēlṟtaṟal,    14.செ.கு.வி. (v.i.)

   1. தகுதல்; to be suitable convenient, just.

     “ஏலா விடரொருவ ருற்றக்கால்” (நாலடி.113);.

   2. மாறுபடுதல்; to change.

     “ஏலாதான் பார்ப்பான்” (நான்மணி.54);.

     [ஈல் → ஏல்.]

 ஏல்2ēlṟtaṟal,    14.செ.குவி (v.i.)

   1. துயிலெழுதல்; to awake from sleep.

     “நீ துஞ்சியேற்பினும்” (கலித்.12);.

   2. நிகழ்தல்; to happen, occur.

     “ஏற்றதையுணர் கிலமென்று” (பாரத.வாரணாவத.21);.

   3. மிகுதல்; to be excessive to abound ஏற்கக் கொடுத்தான்.

     [எல் → ஏல்.]

 ஏல்3ēlṟtaṟal,    9.செ.குன்றாவி (v.t.)

   1. எதிர் கொள்ளுதல் (சூடா.);; to receive, welcome.

   2. ஒப்புக் கொள்ளுதல்; to admit, accept, consent, concede, to embrace, adopt.

     “செய்வெனென்றேன்றபின்” (கம்பரா. கிளை.126);.

   3. மேற்கொள்ளுதல்; to undertake, enter upon, engage in, take charge of

     “என்றேனடிமை” (தில்.இயற்.4,95);.

   4. அன்புகூர்தல்; to love.

     “ஏற்ற துணைப் பிரிந்தார்” (திணைமாலை.106);.

   5. இரத்தல்; to stretch out the hands in supplication, to beg, as alms.

     [இல் → எல் → ஏல்.]

 ஏல்4ēlṟtaṟal,    9.செ.குன்றாவி, (v.t.)

   1. எதிர்த்தல்; to oppose in battle, to encounter, as a

 Foe.

     “ஏன்றடு விறற்களம் பாடி” (திருமுருகு.55);.

   2. சுமத்தல்; to bear, lift up. carry.

     “விறகேற்று விலைகூறியதை” (அருட்பா.1,நெஞ்சறி.255);.

   3. ஒத்தல் (தண்டி.33);; to be equal, similar,

   க. ஏர் (போரில்எதிர்த்தல்);;து. ஏர்சாவுண் (அடித்தல்);.

 ஏல்5ēl, பெ. (n.)

   1. பொருத்தம்; suitability, appropriateness finess.

     “மாலை யேலுடைத்தாக… அணிந்தும்” (திருவாச. 2,114);.

   2. உணர்ச்சி; revival, esp. of one in swoon or in depressing grief.

     “ஏல்பெற்று… கண்ணாள் புலம்பா வெழுந்திருப்ப” (சீவக.1810);.

ம. ஏல்.

     [உல் → இல் → எல் → ஏல்.]

 ஏல்7ēl,    இடை (part) எதிர்மறை யேவலொருமை ஈறு; neg. im. Sing, ending, as in ஈவது விலக்கேல்.

     [ஆ → ஆல் → எல்.]

 ஏல்8ēl,    வி.எ. (adv.) என்றால்; if, used as an ending in a conjunctional sense as in…. வந்தாயேல்.

     [ஆல் → எல்.]

 ஏல்9ēl, பெ. (n.)

   கிளிஞ்சில்; bivalve shell-fish. (சா.அக.);.

     [ஏரல் → எல்.]

ஏல்வை

ஏல்வை1ēlvai, பெ. (n.)

   காலம்; time, period, season occasion.

     “அரசாள்கின்ற வேல்வை” (உத்தரரா.சம்பு வன்.6);.

   2. நாள் (சூடா.);; day.

   3. நீர்நிலை (பிங்.);; tank;

 large expanse of water.

     [எல் (பொழுது); → ஏல் → ஏல்வை.]

 ஏல்வை2ēlvai, பெ. (n.)

   வரிவகை (S.1.1.v.96);; a tax.

     [எல்வை – நீர்நிலைக்காக வாங்கப்பட்ட வரியாகலாம்.]

ஏளனம்

 ஏளனம்ēḷaṉam, பெ. (n.)

   இகழ்ச்சி (சூடா.);; mockery. jeer.

     [எள் → ஏள் → ஏளனம். ‘அனம்’ – சொல்லாக்க ஈறு.]

ஏளா

 ஏளாēḷā, பெ. (n.)

   கணவன் மனைவியை அழைக்கும் சொல்; a word of endearment used by husband to address wife.

மறுவ ஏட்டி, அடியே, ஏய், ஏபிளா

     [யாழ்-ஏழ-ஏளl]

ஏழ (ஏழா)

 ஏழ (ஏழா)ēḻēḻā, விளி, (int.)

   பழங்குடியினர் தம் மனைவியை விளிக்குஞ்சொல் (நெல்லை);; exclamation used by tribals to address or call attention to their wives

     [ஏல → ஏழ ( → ஏழா);.]

ஏழகத்தார்

 ஏழகத்தார்ēḻkattār, பெ. (n.)

   படைவகுப்பாருள் ஒரு வகையார்; class of military men.

     [எழகம் = மெய்ம்மறை (கவசம்);. ஏழகம் + அத்து + ஆர் – ஏழகத்தார்.

     “அத்து” – சாரியை. ‘ஆர்’ – ப.பா.ஈறு.]

ஏழகநிலை

 ஏழகநிலைēḻkanilai, பெ. (n.)

   ஏழகத்தகரினைப்போல் எழுச்சி கொண்ட மறவர் பண்பு (அபி.சிந்);; literary theme, dealing with kings and chieftains.

     ‘உயரும் புகழையுடைய ஞாலத்தில் இளமையைப் பாராதே அரசன் பூமி காவல் பூண்டு நிற்பினும் ஏழக நிலையேயாம்’ (பு.வெ.பொதுவியல்);.

     [ஏழகம் + நிலை – ஏழகநிலை. ஏழகம் = ஆட்டுக்கிடா.]

ஏழகம்

ஏழகம்ēḻkam, பெ. (n.)

   1. செம்மறியாடு; ram or ewe.

   2. துருவாட்டேறு; ram of the species of sheep called Durvadu (துருவாடு);, fleecy sheep. (சா.அக.);.

     [மேழகம் → ஏழகம்.]

ஏழடுக்குமீன்

 ஏழடுக்குமீன்ēḻṭukkumīṉ, பெ. (n.)

   ஓரின மீன்; a kind of fish. (சேரநா.);.

ம. ஏழடுக்கு மீன்.

     [ஏழ் + அடுக்கு + மீன்.]

ஏழத்தனை

 ஏழத்தனைēḻttaṉai, பெ. (n.)

   ஏழுமடங்கு; seven times.

     [ஏழு + அத்தனை.]

ஏழமை

 ஏழமைēḻmai, பெ. (n.)

ஏழைமை பார்க்க;see elaimai.

ஏழரை

ஏழரைēḻrai, பெ. (n.)

   1. ஏழும் அரையும்; seven and half.

   2. ஏழரை நாழிகை உள்ள கால அளவு;   3 AM (at night); (சேரநா.);.

ம. ஏழர.

     [ஏழு + அரை.]

ஏழரைக்கோழி

ஏழரைக்கோழிēḻraikāḻi, பெ. (n.)

   ஏழரை வெளுப்பில் கூவும் கோழி (சேரநா.);; cock crowing at 3 A.M.

ம, ஏழரக்கோழி.

     [ஏழு + அரை + கோழி.]

ஏழரைச்செப்பு

 ஏழரைச்செப்புēḻraicceppu, பெ. (n.)

   பொற்காசு வைக்கப் பயன்படுத்தும் ஏழரை இடங்கழி கொள்ளளவுள்ள செப்புப் பெட்டி; coper vessel which will Contain Seven and a half measures (paras or itafigalis); for the safe-keeping of gold coins or the like. (சேரநா.);.

ம. ஏழரச்செப்பு.

     [ஏழு + அரை + செப்பு.]

ஏழரைச்சேவல்

ஏழரைச்சேவல்ēḻraiccēval, பெ. (n.)

   பின்னிரவு 3 மணிக்குக் கூவும் சேவல்; cock crowing at 3A.M.

மறுவ, ஏழரைக்கோழி

     [ஏழ+அரை+சேவல்]

யாமக்கோழி கூவுவதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். விடியலுக்கு முன்பு இரவு 3 மணிக்குக் கோழி கூவுதை மலையாள நாட்டில் ஏழரைக்கோழி கூவுகிறது என்பர். பழங்காலக் கணக்குப்படி இரண்டரை நாழிகை கொண்ட கால அளவு இக்காலத்தில் ஒரு மணிநேரத்தைக் குறிக்கும். ஏழரை நாழிகை மூன்று மணியைக் குறிப்பதால் இரவு பன்னிரண்டு மணிக்குப் பிறகு பின்னிரவு 3 மணியளவில் கூவும் கோழியை ஏழரைக் கோழி என்றனர். இதிலிருந்து வெள்ளைக்காரர்களுக்கு முன்பே ஒரு நாளை இரவு பன்னிரண்டு மணியிலிருந்து தொடங்கும் வழக்கம் தமிழ்நாட்டில் நிலவியது என்பதை உய்த்துணரால், கணியம் (நூாதகம்); கணிக்கும் சிலர் காலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை ஒரு நாள் என்று கணிப்பதும், முகமதியர் ஒரு நாள் மாலை 6 மணி முதல் மறுநாள் மாலை 6 மணி வரை ஒரு நாள் என்று கணிப்பதும் நாளடைவில் ஆங்காங்கு தோன்றிய வழக்கங்களாகும்.

சேவல் கூவுவதைக் கோழி கூவுகிறது எனும் மக்கள் வழக்கு மரபுவழுவமைதி.

ஏழரைநாட்டுச்சனி

 ஏழரைநாட்டுச்சனிēḻraināṭṭuccaṉi, பெ. (n.)

ஏழரையாண்டுக்காரி பார்க்க;see elarai-y-andu-k-kari.

     [ஏழு + அரை + ஆண்டு – ஏழரையாண்டு → ஏழரையாட்டு → ஏழரைநாட்டு + சனி. ஆண்டு → ஆட்டு.]

ஏழரையாண்டுக்காரி

ஏழரையாண்டுக்காரிēḻraiyāṇṭukkāri, பெ. (n.)

   நிலை வோரையிலிருந்து 12, 1, 2ஆம் இடங்களில் ஏழரையாண்டு வருத்தும் காரி (சனி);. (வின்.);;   ம. ஏழரஞ்சனி;க. ஏழரெயாடதசனி.

     [ஏழு + அரை + ஆண்டு + காரி.]

ஏழாங்காப்பு

 ஏழாங்காப்புēḻāṅgāppu, பெ. (n.)

   குழந்தை பிறந்த ஏழாம் நாளில் செம்பிலும் வெள்ளியிலுமான நாணி னால் புனைந்த ஒருவகைக் கால்கொலுசைக் காப்பாக அணிவிக்கும் நிகழ்ச்சி (இ.வ.);; bracelets or anklets of a particular pattern, of copper and silver wire twisted together, put on the ankles of a baby on the seventh day after birth, as an amulet.

     [ஏழு + ஆம் + காப்பு.]

ஏழாங்காய் விளையாட்டு

 ஏழாங்காய் விளையாட்டுēḻāṅgāyviḷaiyāṭṭu, பெ. (n.)

   பெண்கள் வீட்டிற்குள் விளையாடும் ஒருவகை விளையாட்டு (வின்.);; indoor game played by girls.

மதுவ, ஈரி.

ம. ஏழாமுத்தின் விளையாட்டு.

     [ஏழு + ஆம் + காப் + விளையாட்டு.]

ஏழாங்கால்

 ஏழாங்கால்ēḻāṅgāl, பெ. (n.)

   திருமணத்திற்கு ஏழுநா ளின் முன்பு நடும் பந்தற்கால் (வின்.);; auspicious first post, for erecting the marriage pavilion, planted seven days before the date of the wedding.

     [ஏழு + ஆம் + கால்.]

ஏழாம்பொருத்தம்

 ஏழாம்பொருத்தம்ēḻāmporuttam, பெ. (n.)

   ஒருவர் மற்றொருவரோடு ஒத்துப் போக முடியாத நிலை, இருவரிடையே காணப்படும் இணக்கமற்ற நிலை; incompatibility.

     [ஏழாம்+பொருத்தம்]

ஏழிசை

 ஏழிசைēḻisai, பெ. (n.)

   குரல், தத்தம், கைக்கிளை, உழை, இளி விளரி, தாரம் என்னும் ஏழு வகை நரம்பு இசையொலி (திவா.);; seven notes of the diatonic scale.

     [ஏழு → ஏழ் + இசை.]

ஏழிசையெழுத்துகள்

 ஏழிசையெழுத்துகள்ēḻisaiyeḻuttugaḷ, பெ. (n.)

   ஏழிசைகளின் குறியீடாக வழங்கும் ஏழு நெட்டுயிர் (திவா.);; seven long vowels of the alphabet significative of the seven notes of the diatonic scale,

ஆ. ஈ. ஊ, ஏ, ஐ, ஓ, ஔ – எனப்ன.

     [ஏழு → ஏழ் + இசை + எழுத்துகள்.]

ஏழிசைவாணர்

ஏழிசைவாணர்ēḻisaivāṇar, பெ. (n.)

   யாழோர் (கந்தருவர்);; Gandharvas, noted for their superb music.

     “ஏழிசை வாணருஞ் சித்தரும்” (சேதுபு.விதூம.4);.

     [ஏழு → ஏழ் + இசை + வாணர்.]

ஏழியன்

 ஏழியன்ēḻiyaṉ, பெ. (n.)

   நெற்கதிர்களைத் தாக்கும் சிறிய புழு; canker-worm, palmer-worm, letocorisa acuta, the ricesapper, an insect pest destructive to the growth of paddy.

ம. ஏழியன்.

     [அழியன் → ஏழியன்.]

ஏழிலைக்கிழங்கு

 ஏழிலைக்கிழங்குēḻilaikkiḻṅgu, பெ. (n.)

   மரவள்ளி; tapioca, whose leaves divide at the top into several forks.

   மறுவ. மரவள்ளி, குச்சி, கப்பல்கிழங்கு, ஆழ்வள்ளிக்கிழங்கு;ம. ஏழிலைக்கிழங்கு.

     [ஏழு + இலை + கிழங்கு.]

ஏழிலைப்பாலை

 ஏழிலைப்பாலைēḻilaippālai, பெ. (n.)

   ஏழிலைகளைக் கொண்டதும் நெடுந்தொலைவு மணம் பரப்பும் பூக்களைக் கொண்டதுமான மரம்; seven leaved milk plant. M.tr. Alslonia Scholarles.

ம. ஏழிலம்பால.

     [ஏழிலை + பாலை. முட்டுகள்தோறும் ஏழிலை கொண்டது.]

ஏழிலைம்பாலை

ஏழிலைம்பாலைēḻilaimbālai, பெ. (n.)

ஏழிலைப் பாலை பார்க்க;see el-ilai-p-palai

     “பூத்த வேழிலைம் பாலையைப் பொடிப்பொடியாகத் தேய்த்த” (கம்பரா. வரை.6);.

     [ஏழிலை + பாலை – ஏழிலைப்பாலை → ஏழிலைம்பாலை (மெலித்தன்திரிபு);.]

ஏழில்

ஏழில்1ēḻil, பெ. (n.)

   எழிலைப்பாலை (குறுந். 138, உரை.);; seven-leaved milk-plant.

     [ஏழ் + இலை – ஏழிலை → ஏழில்.]

 ஏழில்2ēḻil, பெ. (n.)

   இசை; music, as consisting of seven notes.

     “ஏழி லியம்ப வியம்பும் வெண்சங் கெங்கும்” (திருவாச.7,8);.

     [ஏ → ஏழ் → ஏழில் (எழும் இசை);.]

 ஏழில்3ēḻil, பெ. (n.)

   நன்னன் என்னும் தலைவனது மலை; name of a hill which belonged to Nannan. An ancient chief of the Tamil country.

     “நன்னனேழினெடு வரை” (அகநா.152);.

ம. ஏழில்.

     [ஏழு → ஏழில். (ஏழு குன்றங்களின் அடுக்கு);.]

ஏழு

ஏழுēḻu, பெ. (n.)

   1. ஏழு என்னும் எண்ணுப்பெயர், ஆறின் மேல் ஒன்று; number seven, one more than six.

   2. ‘எ’ என்னும் எண்ணுக்குறியீட்டுக்குரிய தமிழ் எண்ணுப்பெயர்; name of the seventh numerical symbol ‘எ’ in Tamil.

மறுவ. ஏழ் (எழு பெயரடி oblique);.

   ம. ஏழு;   க. ஏழு, ஏளு;   தெ, ஏடு, யேடு;   துத, எல்;   து. ஏள், ஏளு;   இரு. ஏலு;   கை, யல்;   எரு. யெகு;   கோத, யேயெ, ஏய்;   குரு, யெல்லு;   துட, ஏழ், ஒவ்;   குட, ஏளி;   பட, இய்யு;   கொலா, எட், ஏட், கோண், ஏறுங்க், ஏனு, ஏழுங்க்;   குவி, ஒத்கி;   கோல், இய;   சாந், ஏ, ஏர்;   குரி, ஏய்கு;   பிராகு, ஆப்த், Turk yedi, Sinh hathai, Hung het; Mag heb;

 Gk epla.]

ஏழ் = ஏழிலைப் பாலைமரம், ஏழிலைகளின் பெயரால் தோன்றிய ஏழிசைப்பண்கள், ஏழு நரம்புகள் கட்டிய யாழுக்கும் பெயராய் அமைந்திருத்தலான், ஏழு பிரிவுகளாக அமைந்த ஏழிலைப்பாலை மரத்தின் இலையமைப்பே ஏழு என்னும் எண்ணுப்பெயர் தோன்றக் காரணமாயிற்று.

ஏழு விண்மீன் கூட்டத்த்கு இப்பொழுது கன்னியோரை (கன்யாராசி); எனப்பெயரிருப்பினும் பண்டைக்காலத்தில் ஏழ் → ஏழை என்னும் சொல்லே பெண்ணைக்குறிக்கும் சொல்லாக வும் பயின்றதால், ஏழிலைப்பாலை மரத்தின் இலையமைப் பால் தோன்றிய எண்ணுப்பெயர் விண்மீன் கூட்டத்துக் கன்னி யோரைக்கும் பழம்பெயராயிற்று.

ஏழ் → சேழ் → சேத். அடிநிலைத்திரிபுற்றவை.

 Now. Sju;

 Pol. Oeidern;

 L. septern;

 G seiben, GK sept;

 Dut zoven;

 ki seacht, Sp. siele;

 Fin seit;

 Port sete, sett;

 Czech sedm;

 Esp sep;

 Russ syem, Rum sapte;

 OE seofen, E. seven Serto sedam, Goth sibeen, It seck, Swe bju, Dan syu;

 Basq zaspi, Slav sedrni;

 Serbo sedan, F sept.

 Heb schrvah, Ar saab, sab, sabal, Iraq Sebal. Georg shwidi, Yid sibben, Akkad siber, Egy sin, sph, Copt saht, Afri sewe, sel. Swahili seber, saba.

 Jap schi-chi;

 Anna chet;

 Sam chet;

 Laos tset;

 Indo-china chet. lsit.

 Skt sepia;

 Hind, Sind, Urd, Mara, Guj, Beng, Ori sat, Puni Kash sat, sath. Ass sai, hat;

 Nep. Sat;

 Pali satta;

 Pkt satta;

 Burm sari, saru.

ஏழு – டு – து – நு. முடிநிலைத்திரிபுற்றவை.

 Circ dley. Mongol lebet, dotoghan;

 Masay tujuk, Tib (sokpu); tolo, Tib dun;

 Nep. dyun, dun, nush, rhe, nis, nuchi, Naga. tani, thene, lanet;

 Siam tset, nwai, nwi.

ஏழு (ஐந்து + இரண்டு); கூட்டுச்சொல்லானவை.

உலக மொழிகளில் ஒன்று முதல் ஐந்துவரையிலான எண்ணுப் பெயர்களின் ஊடாட்டம் ஒரு சீரான போக்கை எய்தியுள்ளன ஐந்துக்கு மேற்பட்ட எண்ணுப் பெயர்கள் அமெரிக்கப் பழங் குடி மக்களிடையிலும் பருமியப் பழங்குடி மக்களிடையிலும் அறிமுகப்படுத்தப்படாததால் அவர்கள் ஐந்தையும் இரண்டை யும் கூட்டி ஏழு எனப்பொருள் கொண்டனர்.

 American-Aztec shek-ume (15 + 2);

 Khuan-nhach (5 + 2);

Кhun-nith (5 + 2);

ஏழுசிக்காந்தம்

 ஏழுசிக்காந்தம்ēḻusikkāndam, பெ. (n.)

ஒன்றிற்கீழ்

   ஒன்றாக எழுசிகளைப் பிடிக்கவல்ல ஒர்வகைக் காந்தம்; powerful magnet capable of attracting seven needles which hang one below the other. (சா.அக.);.

     [ஏழு → ஏழ் + ஊசி + காந்தம்.]

ஏழேழு

 ஏழேழுēḻēḻu, பெ. (n.)

   ஏழில் ஏழு மடங்கு; seven times seven, forty-nine.

ம. ஏழேழு.

     [ஏழு + ஏழு.]

ஏழை

ஏழைēḻai, பெ. (n.)

   1. அறிவிலான்; foolish, silly person, one of weak intellect.

   2. அறியாமை; ignorance, simplicity, harmlessness, mental weakness.

     “ஏழைத்தன்மை யோவில்லை தோழி” (கலித்.55,232);.

   3. பெண்; Woman.

     “எருதேறி பேழை யுடனே” (தேவா.1171,2);.

   4. வறியவன் (சூடா.);; indigent person, poor wretch, helpless fellow.

ம. ஏழ.

     [எள் → ஏள் → ஏழ் → ஏழை.]

ஏழைக்குறும்பு

 ஏழைக்குறும்புēḻaikkuṟumbu, பெ. (n.)

   பேதை போலக் காட்டிச் செய்யும் குறும்பு; mischief perperated under an exterior cloak of innocence.

     [ஏழை + குறும்பு.]

ஏழைத்தன்மை

ஏழைத்தன்மைēḻaittaṉmai, பெ. (n.)

   1. அறியாமையாகிய பண்பு; state of ignorance.

     “ஏழைத்தன்மையோ வில்லை தோழி” (கலித்..55,23);.

   2. வறுமை நிலை; state of poverty.

     [ஏழை + தன்மை.]

ஏழைமை

ஏழைமைēḻaimai, பெ. (n.)

   1. அறியாமை (தொல், பொருள். 274);; ignorance, simplicity, innocence.

   2. வறுமை; poverty.

     [எள் → ஏள் → ஏழை → ஏழைமை.]

ஏழைமைகாட்டு-தல்

ஏழைமைகாட்டு-தல்ēḻaimaikāṭṭudal,    5. செ.கு.வி. (v.i.)

   கோழையாதல் (வின்.);; to be timid, cowardy, effeminate.

     [ஏழை → ஏழைமை + காட்டு.]

ஏழையாளன்

ஏழையாளன்ēḻaiyāḷaṉ, பெ. (n.)

   வறியவன்; poor, miserable man.

     “பாம்பெனவுயிர்க்கு மேழையாளனை” (தமிழ்நா.168);.

ம. ஏழன்.

     [ஏழை + ஆளன்.]

ஏழொத்து

 ஏழொத்துēḻottu, பெ. (n.)

     [ஏழு + ஒத்து. ஒற்று → ஒத்து.]

ஏழ்

ஏழ்1ēḻ, பெ. (n.)

   எழிலைப் பாலைமரம் (ஏழில்மரம்);; seven leaved milk plant.

     [எ → ஏழ் = உயர்ந்தமரம், நெடியமரம்.]

 ஏழ்2ēḻ, பெ. (n.)

ஏழு பார்க்க (தொல்.எழுத்,388);;see elu.

ஏழ் பிறப்பு

 ஏழ் பிறப்புēḻpiṟappu, பெ. (n.)

ஏழு பிறப்பு பார்க்க;see elupirappu.

ஏழ்ச்சி

ஏழ்ச்சிēḻcci, பெ. (n.)

   தோற்றம்; appearance, advent, manifestation.

     “ஏழ்ச்சிக் கேடின்றி” (திவ். திருவாய்.324);.

ஏழ்புழை

ஏழ்புழைēḻpuḻai, பெ. (n.)

   வேய்ங்குழல் வகை; reed pipe that has seven holes.

     “ஏழ்புழையைம் புழை யாழிசை கேழ்த்தன்ன” (பரிபா.8.22);.

     [ஏழு → ஏழ் + புழை. புழை = துளை.]

ஏழ்மை

ஏழ்மைēḻmai, பெ. (n.)

   1. வறுமை; poverty.

   2. பொருள்வசதியின்மை

 want of means.

     [இல்-இம்-ஏழ்-ஏழ்மை]

இரண்டு ஒகாரங்கள் சேர்ந்து நெடில் ஒகாரம் ஆகும் என்பது சிந்துவெளி நாகரிகக் காலத்தமிழர் எழுத்து முறை குறி மகர மெய் குறித்தது.இவை ஒன்று சேர்ந்து ஓங்காரவடிவம் கொண்டது.

 ஏழ்மைēḻmai, பெ. (n.)

   ஏழு; seven,

     “ஏழ்மைப் பிறப்புக்குஞ் சேமம்.” (தில்.திருவாய்.4.69);.

     [ஏழு → ஏழ் + மை.]

ஏவங்கேள்

ஏவங்கேள்1ēvaṅāḷḍtaḍal,    12.செ.கு.வி. (v.i.)

   ஏவல் செய்தல்; to do as directed.

     [ஏவல் → ஏவம் + கேள்.]

 ஏவங்கேள்2ēvaṅāḷḍtaḍal,    12.செ.கு.வி. (v.i.)

   1. குற்றத்தைச் சுட்டிப் பேசிப் பழித்தல் (உ.வ.);; to taunt a person specifying his faults.

   2. இடைமறிதது வினவுதல்; to intermiddle when an injury is done.

அரசன் செய்ததற்கு ஏவங்கேட்பவரார்? (வின்.);.

     [எவ்வம் → ஏவம் + கேள்.]

ஏவஞ்ச

 ஏவஞ்சēvañja,    கு.வி.எ. (adv.) ஏறத்தாழ; so that, it being so. ஏவஞ்ச இந்தக்காரியம் முடியலாம். (Brah.).

     [ஏற + எஞ்ச – ஏறஞ்ச → எவஞ்ச.]

ஏவதும்

ஏவதும்ēvadum, சு.பெ. (pron.)

   1. ஒவ்வொன்றும்; everything.

     “செய்வினையேவது மெண்ணி லாதகடந் தொறும்” (கந்தபு.சுக்கிரனுப.36);.

   2. ஏதுவும்; whatsoever.

     [ஏ + அதுவும் – எவதுவும் → எவதும்.]

ஏவன்

 ஏவன்ēvaṉ, வி.பெ. (pron) யாவன் who?

   ம. எவன்;   க. யாவன், தாவன்;   து. எரு;   தெ. எவ்வண்டு;பட எம்.

     [எவன் → ஏவள்.]

ஏவம்

ஏவம்1ēvam, பெ. (n.)

   குற்றம்; fault, blemsn.

     “ஏலமிக்க

சிந்தையோடு” (தேவா.2306);.

     [எவ்வம் → ஏவம்.]

 ஏவம்2ēvam, பெ. (n.)

   இவ்விதம்; thus, exactly so.

ம. ஏவம்.

     [இவ்வம் → ஏவம் (கொ.வ.);.]

ஏவர்

 ஏவர்ēvar,    வி.சு.பெ. (interr.pron) எவர்; which persons, who.

ம. ஏவா.

     [எவ் + அர் – எவர் → ஏவர்.]

ஏவறவு

 ஏவறவுēvaṟavu, பெ. (n.)

   துன்பம், கவலை; sorrow. distress (சேரநா.);.

ம. வரவு

     [ஏசறவு → ஏவறவு (கொ.வ.);.]

ஏவறை

ஏவறை1ēvaṟai, பெ. (n.)

மறைந்து அம்பெய்தற்குரிய மதிலுறுப்பு (பு.வெ.6,5, உரை.);

 retreat constructed in the battlement of a fort from where bowmen might shoot arrows against the enemy unobserved.

     [ஏ + அறை – ஏவறை. ஏ = அம்பு.]

 ஏவறை2ēvaṟai, பெ. (n.)

   ஏப்பம் (யாழ்ப்.);; belching. Eructation.

     [ஏ + உறு – ஏவுறு → ஏவறை. ஏ = ஏப்பம்.]

ஏவற்சிலதி

ஏவற்சிலதிēvaṟciladi, பெ. (n.)

   குற்றேவல்புரியும் பெண்; maid servant of a household;

 kitchen-maid.

     “பூவிலை மடந்தைய ரேவற்சிலதியர்” (சிலப்.5.51);.

     [எவல் + சிலதி – எவற்கிலதி. சிலதி என்னும் சொல்லே ஏவற்பணியாலளக்குறிக்கும். ‘ஏவல்’ மிகையான முன்னடை. சிலதி = குற்றேவல் செய்யச் செலுத்தும் பெண். செல் → செலவு + ஆளி – செலவாளி → செலவாதி → செலதி → சிலதி. செலவாதி பார்க்க;see selavadi]

ஏவற்பணி

 ஏவற்பணிēvaṟpaṇi, பெ. (n.)

   ஏவியவேலை (வின்.);; Services commanded, often used as-a compliment in epistolary writings and in polite conversation.

     [ஏவல் + பணி – ஏவற்பணி.]

ஏவலன்

ஏவலன்ēvalaṉ, பெ. (n.)

   பணிவிடை செய்வோன்; attendant servant.

     “ஏவலர் தொழின்முறை யியற்ற” (கந்தபு.உரைபுனை.17);.

ம. ஏவலன்.

     [ஏவல் + அன் – ஏவலன்.]

ஏவலாள்

 ஏவலாள்ēvalāḷ, பெ. (n.)

ஏவலன் பார்க்க;see evalan.

     [எவல் + ஆள்.]

ஏவல்

ஏவல்1ēval, பெ. (n.)

   1. தூண்டுகை; Instigation,

 irclement

   2. ஒதுகை; recial.

     “ஏவலின் முதுமொழி” (பரிபா. 13,40);

   3. ஆணை (திவா.);; command, order,

 authority.

   4. பணிவிடை; service.

     “ஏவன் முற்றி”

   5. ஏவலாள்; servant, attendant.

     “முனிவர்க் கேவலாய்” (தாயு.தேசோ.1);.

   6. தீய ஆவியை ஏவிவிடுகை; inciting a devil against an

 enemy by witchcraft.

   7. ஏவல் வினைமுற்று (நன்.145);;   8. வறுமை (சூடா.);; poverty, want.

     [ஏவு → எவல்.]

 ஏவல்2ēval, பெ. (n.)

   பல்லிகொட்டுகை; propitious

 chirpings of a lizard.

     [ஏவு → ஏவல்.]

ஏவல்கேள்(ட்)-த(ட)ல்

ஏவல்கேள்(ட்)-த(ட)ல்ēvalāḷḍtaḍal,    12. செ.கு.வி. (v.i.)

   ஏவியபணி செய்தல்; to serve, obey orders, perform duties assigned;

 to wait upon, as an attendant.

ஏவல்கொள்ளு)-தல்

ஏவல்கொள்ளு)-தல்ēvalkoḷḷudal,    12. செ.கு.வி. (v.i.)

   வேலை வாங்குதல்; to get work done by others.

     [ஏவல் + கொள்.]

ஏவல்சிலதியார்

 ஏவல்சிலதியார்ēvalciladiyār, பெ. (n.)

   சமையலறை ஏவற்பெண்டிர், மடைப்பள்ளியாரடியார்; kitchen maids.

     [ஏவல் + சிலதி + ஆர். சிலதி = ஏவிய பணி செய்யும் சிற்றாள்.]

ஏவல்மேவல்

 ஏவல்மேவல்ēvalmēval, பெ. (n.)

   கட்டளை (வின்.);; commands.

     [ஏவல்மேவல் (எதுகை குறித்த இணைமொழி);.]

ஏவல்விடை

ஏவல்விடைēvalviḍai, பெ. (n.)

   வினாவுக்கு விடையாக ஒரு ஏவல் இடுவது; answering a question by an imperative retort, as when asked.

     “will you do this?” to say ‘Do it yourself’

     ‘சாத்தா, இது செய்வாயோ?’ என்ற வழி ‘நீ செய்!’ என்பது போன்ற விடை. (நன்.386, உரை);.

     [ஏவல் + விடை – ஏவல் விடை = ஏவலே விடையாக அமைவது.]

ஏவல்வினா

ஏவல்வினாēvalviṉā, பெ. (n.)

   ஏவும் நோக்கத்தோடு கேட்கும் வினா (நன்.385);; questioning with a view to give a command as “Had you your dinner?”

சாத்தா உண்டாயா?

     [ஏவல் + வினா – ஏவல் வினா. “நீ உண்டாயா?” என்னும் வினா. “போய் உண்” என்னும் எவற்குறிப்பை உள்ளடக்கிய ஏவல் வினாவாயிற்று.]

ஏவல்வினை

ஏவல்வினைēvalviṉai, பெ. (n.)

   1. முன்னின்றாரை ஏவும் வினை; verb in the imperative mood.

   2. மந்திரத்தொழில்; act of commanding a devil by witchcraft to do harm lo a person.

     [ஏவல் + வினை.]

ஏவள்

 ஏவள்ēvaḷ, பெ. (n.)

   எப்பெண்; which woman.

ம. ஏவள்.

     [எவ் + அள் – எவள் → ஏவள்.]

ஏவிளம்பி

ஏவிளம்பிēviḷambi, பெ. (n.)

   ஓர் ஆண்டு; the 31st year of the jupiter cycle of 60 years.

     [Skt. hema-lamba → த. ஏவிளம்பி.]

ஏவிவிடல்

 ஏவிவிடல்ēviviḍal, தொ.பெ (vbl.n.)

ஏவிவிடு பார்க்க;see evividu.

ஏவு

ஏவு1ēvudal,    8.செ.குன்றாவி, (v.t.)

   1. ஆணையிடுதல்; to command, order, direct.

   2. தூண்டிவிடுதல்; to incite, prompt, urge, instigate, to conjure and set on, as a demon.

   3. திருவருளால் தூண்டப்படுதல்; chr. to inspire. as God.

ஆவியானவர் பவுலை யேவினார் (கிறித்.);.

   4. செலுத்துதல் (பிங்.);; to discharge, as an arrow, to throw, as a dart.

   5. சொல்லுதல்; to speak, say.

     “ஏவா விருந்த வடிகள்” (சீவக.3036);.

   ம. ஏவுக;க. ஏ.க.

     [எய் → ஏ → ஏவு.]

 ஏவு2ēvu, பெ. (n.)

   உயரம்; height.

க. ஏ. Ger heben, AS hebban. E heave. Goth hefian. to lift. E heaven, O Ice hifinn. As heafon, the air, the abode of lhe Deity. Lit the

     “heaved” or “lified up”.

     [ஏ → ஏவு.]

 ஏவு3ēvu, பெ. (n.)

   அம்பு; arrow.

     “மாறிலேவு பூட்டி” (கந்தபு.காமதக.66);.

     [ஏய் → ஏ → ஏவு.]

 ஏவு4ēvu, பெ. (n.)

துன்பம், misery.

     [எவ்வம் → (எவ்வு); ஏவு.]

ஏவுகணை

 ஏவுகணைēvugaṇai, பெ. (n.)

   குறிதவறாமல் இலக் கைச் சென்று தாக்கும் படைக்கலம்; missile.

     [ஏவு + கனை.]

ஏவுகாரன்

 ஏவுகாரன்ēvukāraṉ, பெ. (n.)

   எய்பவன், வில்லாளி; archer (சேரநா.);.

ம. ஏவுகாரன்.

     [எவ + காரன்.]

ஏவுகை

 ஏவுகைēvugai, பெ. (n.)

   ஏவுதல்; inciting, driving.

ம. ஏவு.

     [ஏ → ஏவு → ஏவுகை.]

ஏவுண்ணு-தல்

ஏவுண்ணு-தல்ēvuṇṇudal,    12. செ.கு.வி. (v.i.)

   அம்புதைத்தல்; to be injured by an arrow.

     “பகழியினேவுண்டு” (இறை.6.64);.

     [எ + உண் – ஏவுண் → ஏவுண்ணு. ஏ = அம்பு.]

ஏவுதற்கருத்தன்

 ஏவுதற்கருத்தன்ēvudaṟkaruddaṉ, பெ. (n.)

அரசன் கோயில் கட்டினான் (உ.வ.);.

     [ஏவுதல் + கருத்தன் – ஏவுதற்கருத்தன்.]

ஏவுவான்

 ஏவுவான்ēvuvāṉ, பெ. (n.)

   கட்டளையிடுபவன் (பிங்.);; master, director.

     [ஏவு + ஆன் – ஏவுவான்.]

ஏவூர்தி

 ஏவூர்திēvūrti, பெ. (n.)

   விண்ணில் செலுத்தும் ஊர்தி; vehicle which is sent through sky.

     [ஏவு + ஊர்தி – ஏவூர்தி.]