செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை வெளியீடு
31 தொகுதி 12000 பக்கங்கள் கொண்ட பேரகரமுதலி


1

10838

2769

3111

538

3554

677

1093

620

189

1004

402

2
க்
1

8212
கா
2579
கி
564
கீ
222
கு
4598
கூ
780
கெ
615
கே
391
கை
1101
கொ
2417
கோ
1754
கௌ
110
ங்
1

2
ஙா
2
ஙி
1
ஙீ
1
ஙு
1
ஙூ
1
ஙெ
1
ஙே
1
ஙை
1
ஙொ
5
ஙோ
1
ஙௌ
1
ச்
1

5235
சா
1186
சி
2424
சீ
439
சு
1261
சூ
420
செ
1529
சே
470
சை
23
சொ
409
சோ
365
சௌ
1
ஞ்
1

15
ஞா
44
ஞி
3
ஞீ ஞு ஞூ ஞெ
34
ஞே
5
ஞை
2
ஞொ
3
ஞோ
2
ஞௌ
1
ட்
1

1
டா
1
டி
1
டீ
1
டு
1
டூ
1
டெ
2
டே
1
டை
1
டொ
1
டோ
1
டௌ
ண்
1

1
ணா
1
ணி
1
ணீ ணு
1
ணூ
1
ணெ
2
ணே
1
ணை
1
ணொ
1
ணோ
1
ணௌ
த்
3113
தா
1530
தி
2203
தீ
393
து
1238
தூ
411
தெ
694
தே
856
தை
39
தொ
878
தோ
459
தௌ
ந்
1

2789
நா
204
நி
1860
நீ
1161
நு
14
நூ
18
நெ
892
நே
318
நை
89
நொ
210
நோ
159
நௌ
2
ப்
1

4560
பா
1824
பி
492
பீ
25
பு
2224
பூ
1133
பெ
1064
பே
483
பை
127
பொ
1218
போ
478
பௌ
2
ம்
4760
மா
1422
மி
535
மீ
268
மு
3016
மூ
949
மெ
396
மே
751
மை
152
மொ
284
மோ
242
மௌ
ய்
1

119
யா
426
யி
1
யீ
1
யு
46
யூ
20
யெ
9
யே
1
யை
1
யொ
1
யோ
98
யௌ
1
ர்
87
ரா
107
ரி
11
ரீ
7
ரு
24
ரூ
20
ரெ
6
ரே
16
ரை
10
ரொ
8
ரோ
23
ரௌ
ல்
117
லா
44
லி
8
லீ
5
லு
8
லூ
3
லெ
13
லே
21
லை லொ
20
லோ
63
லௌ
3
வ்
1

3800
வா
1329
வி
1638
வீ
515
வு
1
வூ
1
வெ
2164
வே
834
வை
229
வொ
1
வோ
3
வௌ
ழ்
1

1
ழா
1
ழி
1
ழீ
1
ழு
6
ழூ
1
ழெ
1
ழே ழை ழொ ழோ
1
ழௌ
ள்
1

2
ளா
1
ளி
1
ளீ
1
ளு
1
ளூ
1
ளெ
2
ளே
1
ளை
1
ளொ
1
ளோ
1
ளௌ
ற்
1

1
றா
1
றி
1
றீ
1
று
1
றூ
1
றெ
2
றே
1
றை
1
றொ
1
றோ
1
றௌ
ன்
1

1
னா
1
னி
1
னீ
1
னு
1
னூ
1
னெ
2
னே
1
னை னொ
1
னோ
1
னௌ
தலைசொல் பொருள்

எ1 e, பெ. (n.)

   தமிழ் வண்ணமாலையில் ஏழாம் உயிரெழுத்தா கிய இதழ் குவியா முன்னண்ண உயிர்க்குறில்; seventh letter and vowel of the Tamil alphabet, the half-close front lax unrounded vowel in Tamil

     [இ → எ.]

இகரக்கட்டு வேர்முதலானபோது வேரடித்திரிபுகளால் பெற்ற திரிபு வடிவமே எகரம். இகரவேர்முதற்பொருள்களை எகர வேர்முதலும் பெறும், ஆ, ஈ, ஊ எனும் நெடில் முக்கட்டுகளே அ, இ, உ எனும் குறில் முக்கட்டுகளானவாறு ஏகார ஓகார நெடில்கள் எகர ஒகரங்களாகக் குறுகவில்லை. எகர ஒகரங்கள் ஏகார ஓகாரங்களாக நீட்சியும் பெறவில்லை. இவற்றின் குறில்நெடில் தோற்றங்கள் ஒன்றற்கொன்று தொடர்பற்றவை. இவற்றின் விளக்கம் சொற்பிறப்பு நெறிமுறைகளில் காண்க அசையெழுத்துக்காலத் தொன்முது தமிழில் இரு உயிர்க்குறில் இணைந்து நெட்டுயிர் வடிவம் பெற்றதால் ஏகார ஓகாரங்கள் இஅ(ஏ); எனவும் உஅ(ஓ); எனவும் எழுதப்பட்டன. ஈரெழுத் துக்கு ஒருவடிவம் தந்து நெடிலாக்கியபின் எகர ஒகரக் குறிலெழுத்தை எழுதுவதற்குத் தனியெழுத்து படைக்காமல் ஏகார ஓகார நெட்டெழுத்தின் மேல் மெய்யெழுத்தைப்போல் புள்ளியிட்டுக் குறிலாக்கினர். இதனாற்றான் தொல்காப்பியர்

     “மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல்” எகர ஒகரத் தியற்கையு மற்றே (தொல் எழுத்.15.16);

என நூற்பா யாத்தார் என்க.

 எ2 e, பெ. (n.)

   ஏழென்னும் எண்ணின் குறி; symbol or the number 7 in Tamil Arithmetic. (செ.அக.);

 எ2 e, பெ. (n.)

     [தமிழ் எண்களில் ஏழுக்குரிய வரிவடிவம்.]

 எ3 e பெ. (n.)

   ஓர் அகவினா; interrog, base of the inter pron

     “எவன் கொல்யான்” (குறள்.1225);.

 interrog. prefix before a noun, meaning what, which எக்கொற்றன். (நன்.67.உரை..);. (செ.அக.);.

ம. க. து. தெ., பட எ.

     [ஆ → யா → எ → 1.]

 எ4 e, பெ. (n.)

   ஐம்பறவைகளுள் கோழியைக் குறிக்கும் எழுத்து, (பிங்.);; letter representing the cock, in paňja-palci.(astrol);.(செ.அக.);

     [சே → ஏ → எ.சே → உயிரினங்களுள் ஆண்பாற்குறித்த சொல். ஒ.நோ. சேய் = ஆண் குழந்தை.]

 எ1 e,    தமிழ் வண்ணமாலையில் எட்டாம் உயிரெழுத்து, முன்னண்ணக் குவியாச் செறிவு உயிர்நெடில்; eighth letter and vowel of the Tamil alphabet, the half-close front tense unrounded vowel in Tamil.

     [இ.அ – எ]

அஇ → ஐ ஆகவும். அஉ → ஒள ஆகவும் இருகுறில் கூட்டுயிரொலி உயிர்நெடில்களாக உயிர்பெற்றதைப்போன்று.

இ.அ → ஏ எனவும் உஅ → ஒ எனவும் கூட்டுயிர் நெடில்கள் தோன்றின. ஒ.நோ. இய = செல். இய → ஏ (ஏகு); = செல். உவ உவத்தல், மகிழ்வு உவ → ஒ (ஓசை); மகிழ்வு ஏ. ஒ என்னும் கூட்டுயிர்கள் இயல்பு வினையடிகளைத் தோற்று விப்பதில்லை. இயலுதல் ஏலுதல் என்றவாறு ‘ஏல்’ திரிபு ன வினையடியாதலன்றி இயல்பு வினையடியாகாதென்க. ஒரு சார் ஒலிக்குறிப்பு நெட்டெழுத்தாகி ஆக்கச்சொல்லாதலே மிகுதியாம்.

 எ3 e, பெ. (n.)

   1 எய்யுந்தொழில்; shooting, as an arrow

     “ஏமாண்ட நெடும்புரிசை” (பு.வெ.5.5);.

   2. துன்பம்; suffering affliction 3 அம்பு;

 arrow.

     “ஏழுத லாய வெல்லாப் படைக்கலத் தொழிலுமுற்றி” (சீவக.370);,

     [ஏய் → ஏ.]

எஃகம்

எஃகம் ekkam, பெ. (n.)

   1. கூர்மை; sharpress, poinedness

     “எஃகவேற் புங்கவன்” (கந்தபு. அவைய.12);.

   2. உருக்காய்தப் பொது. (சூடா.);; any weapon made of steel.

   3. வாள்; sword,

     “எஃகம் புலயுறை கழிப்” (பதிற்றுப். 19);.

   4. கைவேல்; lance

     “புலவு வாயெஃகம்” (பெரும்பாண்.119);.

   5. சக்கரம். (திவா.);; discus

   6. எறியீட்டி.(பிண்டிபாலம்);; javelin

   7. வேல். (சூலம்); (கம்பராமந்தரை.11);; trident (செ. அக.);.

ம. எக்கண்டம்.

     [எய் → எய்கு → எஃகு. + அம்;

எஃகம்.

     ‘அம்’ சொல்லாக்க ஈறு, எஃகம் = தாக்கும் படைக்கலம், கூரிய முனையுடைய கருவி.]

எஃகல்

எஃகல் eḵkal, பெ. (n.)

   1. நொய்தாக்கல்; pulverizing

   2. மேலே வாங்குதல்; drawing upwards

   3. எதிர் தாக்குதல்; opposing

   4. அவிழ்தல்; loosening

   5. ஏறுதல்; climbing.

     [எஃகு → எஃகல் = தாக்குதல், வலிமை அழித்தல்.]

எஃகா-தல்

எஃகா-தல் eḵkātal, பெ. (n.)

   6.செ.குன்றாவி (v.t.);

   உருக்காக மாறுதல்; to turn into steel acierate

     [எஃகு + ஆ.]

எஃகு

எஃகு1 eḵkudal, பெ. (n.)

   5. செ.குன்றாவி. (v.t.);

   1 பன்னுதல்; to pull with fingers, as cotton எஃகின பஞ்சு போல (பதிற்றுப்55.14.உரை);.

   2. ஆராய்தல்; to search or as the true meaning of a passage…to sift, scrutinize. வழுக் களைந்த எஃகிய இலக்கணங்களை (தொல் நூன் மரபு, 1. உரை,);.

   3. எட்டுதல்; to reach up, stretch one stretch one self in reaching for a thing. அவனை எஃகிப்பிடி. (உ.வ.);.

     [இழு → எழு → எழுகு → எஃகு.]

 எஃகு2 eḵkudal,    7.செ.கு.வி. (v.i.)

   1. நெகிழ்தல்; to be yielding, pliable-(w);.

   2. அவிழ்தல்; to become unfastened, unclasped, loosened.

   3. வளைவு நிமிர்தல்; to spring back, rebound, as a bent bow, வளைந்த வில் எஃகிற்று (உவ.);.

   4. தாழ்ந் தெழும்புதல்; to lift carry, as a well sweep. துலா அத்னைக் கொண்டெஃகிற்று.

   5. ஏறுதல் (திவா.);; to climb, mount get up

   6. உருகுதல்; to melt .

   7. வயிற்றுப்பக்கத்தை மேலெழும் பச் செய்தல்; lift up the abdomen

   8. பஞ்சை மேலெழும்பச் செய்தல்; to draw the cotton up.

   ம. எக்குக: க. எக்கு. எகரு துட. பிடெக்;   து. எக்கு எக்கல் யுனி, தெ. எக்கு எக்கின்க. எகரு எகயு: குவி. என்கலி;கூ, எகசி, என்கசி, Gael, lag feeble. As las, feeble, Goth lasivs, weak, Ice las, weakness E less cell-w lag loose, Gr. Lagares, stack;Llacus, loose, E lag, slack lak, loose.

     [எள்கு → எஃகு (வே.க.20);.]

 எஃகு3 eḵku, பெ. (n.)

   1. கூர்மை; edge, pointedness, keenness,

     “ஒன்றுற்றக்கா லுராண்மை மற்றத னெஃகு” (குறள்,773);,

   2. மதிநுட்பம்; acuteness of intellect mental acumen.

     “இகலில ரெஃகுடையார் தம்முட்குழீஇ” (நாலடி.137);.

   3. உருக்கு = (சூடா.);; steel.

   4. போர்க்கருவி, (பிங்,);:

 weapon in general

   5 வேல்; lance.

     “எஃகொடு வாண்மாறுழக்கி” (பரிபா.10.109);. (செ. அக.);.

     [என்கு → எஃகு.]

எஃகுகோல்

 எஃகுகோல் eḵkuāl, பெ. (n.)

   பஞ்சு கொட்டும் வில் (வின்.);; bow for ginning cotton. (செ.அக.);.

     [எஃகு + கோல்.]

எஃகுச் செவி

எஃகுச் செவி eḵkuccevi, பெ. (n.)

   நுட்பமான செவிப்புலன்; acute hearing, sharp ears.

எஃகுச் செவியும் நுண்ணுணர்வு முடையார் (திருமுருகு. 140, உரை.);. (செ.அக.);.

     [எ.கு + செவி.]

எஃகுபடு-தல்

எஃகுபடு-தல் eḵkubaḍudal,    20. செ.கு.வி. (v.i.)

   இளகின நிலையையடைதல்; to met;

 to soften.

உருகக் காய்ச்சி யெறிதற்கு எஃகுபட்டிருக்கும் உலையினையும் (சிலப்.15.210,உரை.);.

     [எ.கு + படு.]

எஃகுறு-தல்

எஃகுறு-தல் eḵkuṟudal,    4.செ.கு.வி. (v.i.)

   1. அறுக்கப்படு தல்; to be Sawn through.

     “எஃகுற்றிருவேறாகிய…. மாவினறுவடி” (அகநா.29);.

   2. பின்னப்படுதல்; to be pulled thinly with the fingers, as cotton.

எஃகுறு பஞ்சித் துய்ப்பட் டன்ன” (அகநா.217);.

     [எஃகு + உறுதல்.]

எஃகுவெட்டிரும்பு

 எஃகுவெட்டிரும்பு eḵkuveṭṭirumbu, பெ. (n.)

   ஒரு வகையான இரும்புளி (CEM);; cold chisel. (செ.அக.);.

     [எஃகு + வெட்டு + இரும்பு.]

எகடம்

 எகடம் egaḍam, பெ. (n.)

   தென்னை (சங்,அக.);; coco-palam.

எகத்தாரு

 எகத்தாரு ekattāru, பெ. (n.)

   ஏராளம், நினைத்ததை விட மிக அதிகம்; abundance.

     [எகம் + )தரல்)தாரு]

எகத்தாளம்

 எகத்தாளம் egattāḷam, பெ. (n.)

எகத்தாளி பார்க்க;see egattali.

க. எகதாள.

     [இகழ் → இகழ்த்தல் → இகழ்த்தாளம் → க. எகத்தாளம். → த. எகத்தாளம்.]

எகத்தாளி

 எகத்தாளி egattāḷi, பெ. (n.)

   எள்ளி நகையாடுதல்; mockery, jest, ridicule.

க. எகதாளி, எக்கதாளி, தெ. கெதாளி,

     [இகழ் → இகழ்தல் → இகழ்த்தல் → இகழ்த்தாளம் → இகழ்த்தாளி → எகத்தாளி.]

எகனை

எகனை egaṉai, பெ. (n.)

   1. எதுகை; rhyme in Tamil.

   2. பொருத்தம்; concord, harmony, agreement.

     [எதுகை → எகனை.]

எகனை மொகனை

 எகனை மொகனை egaṉaimogaṉai, பெ. (n.)

எதுகை.

   மோனை; hyme in Tamil.

     “எகனை மொகனையாப். பேசுகிறான்” (உ.வ.);.

     [எதுகை + மோனை – எதுகை மோனை – எதுகை ஒலிஇயைபு கருதி எகனை மொகனை எனத் திரிந்தது. (கொ.வ.);.]

எகரம்

 எகரம் egaram, பெ. (n.)

   ஏழாம் உயிர் எழுத்தாகிய ‘எ’; seventh short vowel of Tamil alphabet.

     [எ + கரம், ‘கரம்’ எழுத்துச் சாரியை.]

எகல்

எகல்1 egal, பெ. (n.)

உயரம் (யாழ்ப்.);

 height

     [ஏ – ஏகல்.]

எகினத்திலை

 எகினத்திலை egiṉattilai, பெ. (n.)

   புளியிலை; leaf of the tamarind tree. (சா.அக.);.

     [எகிள் + அத்து + இலை. எகின் = புளி, ‘அத்து’ சாரியை.]

எகினன்

எகினன் egiṉaṉ, பெ. (n.)

   நான்முகன்; Brahms who rides on a swan.

     “எகினனை யுதவிய கருமுகில்” (திருப்பு:609);. (செ.அக.);.

     [எகிள் + அள்.]

எகினம்

எகினம்1 egiṉam, பெ. (n.)

எகிள் பார்க்க;see egin.

     [உகிள் → உகிளம் → எகினம் (மூ.தா.58);.]

 எகினம்2 egiṉam, பெ. (n.)

   1. நாய்; dog. (திவா.);.

   2. நீர் நாய் (சூடா);; otter. (செ.அக.);.

     [எயின் → எகிள் → எகினம். எயின் = வேடன், வேட்டைதாய்.]

எகின்

எகின் egiṉ, பெ. (n.)

   1. அன்னம் (ஆ.அக.);; Swan.

     “மடலவிழ் மரைமாட் டெகினென” (சிவப்.பிரபந். சோணசைல.5);.

   2. கவரிமா (சூடா.);; yak.

   3. புளிமா (சூடா.);; Indian hog-palm.

   4. புளியமரம் (சூடா.);; tamarind.

   5. அழிஞ்சில் (மூ.அ);; sage-leaved alangium.

   6. செம்மரம் (மூ.அ.);; marking-mut tree. (செ.அக.);.

     [எழின் → எகின். உகிள் → எகின்.]

எகிரு-தல்

எகிரு-தல் egirudal,    3.செ.கு.வி. (v.i.)

   துள்ளுதல்; to cut capers to leap to bounce.

     “சிரகதா னெகிரி…. வீழ்ந்து” (கோவ.கதை.6);.

தெ. எகுரு க. எகரு.

     [எ → எக்கு + உறு – எக்குர → எகுறு → எகிரு (கொ.வ.);.]

எகிர்

 எகிர் egir, பெ. (n.)

   எயிறு; gums (கொ.வ.);.

   ம. எகிறு;தெ. இகறு. சிகுறு.

     [எயிறு → எகிர்.]

எகிர்க்கொழுப்பு

 எகிர்க்கொழுப்பு egirggoḻuppu, பெ. (n.)

   பல்லீற்றின் வீக்கம்; swelling of the gums. (செ.அக.);.

     [எயிறு → எகிர் (கொ.வ.); + கொழுப்பு.]

எகுத்து

 எகுத்து eguttu, பெ. (n.)

   வாயு; wind.

எகுன்று

 எகுன்று eguṉṟu, பெ. (n.)

   குன்றிச்செடி; crab’s eye.

எக்கச்சக்கம்

எக்கச்சக்கம் ekkaccakkam, பெ. (n.)

   1. தாறுமாறு; confusion, muddle, disorder,

எக்கச்சக்கமாய்ப் பேசுகிறார்.

   2. ஒழுங்கின்மை; unevenness, irregularity.

   3. இசகுபிசகு; fix, awkward, predicament.

எக்கச்சக்கமாய் அகப்பட்டுக் கொண்டான்.

   ம. எக்கச்சக்கம்;   க. எக்கசக்க;   து. எக்கச்சக்க;தெ. எகக சக்கெடு.

     [இழுக்கு → எக்கு + சக்கம் – எக்கச்சக்கம். சக்கம் – எதுகை குறித்த இணைமொழி.]

எக்கடமை

எக்கடமை ekkaḍamai, பெ. (n.)

   வரிவகை (புது. கல். 513);; tax.

     [ஏர் + கடமை – எக்கடமை.]

எக்கட்டான்

 எக்கட்டான் ekkaṭṭāṉ, பெ. (n.)

பிஞ்சு நிலக்கடலை, எள்ளுக்காய் போன்றவற்றின் மேல் அமர்ந்து அவற்றினுள்ளே இருக்கும் பாலை விரைவாக உறிஞ்சிச் சக்கையாக்கும் ஒரு வகைப் பூச்சி; an insect எள்ளுக்காயில் மருந்து போடப்பா:இல்லையானால் எக்கட்டான் உறிஞ்சிவிடும்.”

     [இக்கு-எக்கு-எக்கட்டான்]

எக்கண்ட வீக்கம்

 எக்கண்ட வீக்கம் ekkaṇṭavīkkam, பெ. (n.)

   உடம்பு முழுமையும் பரவிய வீக்கம்; swelling extending all over the body. (சா.அக..);

     [எக்கண்டம் + விக்கம்.]

எக்கண்டபரப்பு

 எக்கண்டபரப்பு ekkaṇṭabarabbu, பெ. (n.)

   ஒன்றாக இருக்கும் பெரும்நிலப்பரப்பு (வின்.);; sheet of one piece.

     [எக்கண்டம் + பரப்பு.]

     [Skt. eka → த. ஏகம். ஏகக்கண்டம் → எக்கண்டம்.]

கள் → கண்டு = துண்டு, கட்டி, நூற்பந்து, சக்கரைக்கட்டி. கண்டு → கண்டம் = துண்டு மாநிலப் பிரிவு. (பட); → பர → பரவு. பர → பரப்பு.

எக்கண்டம்

எக்கண்டம் ekkaṇṭam, பெ. (n.)

   கேலி, கிண்டல், ஏகடியம்; redicule.

க. சக்கந்த

     [எக்கு-எக்கண்டம்]

 எக்கண்டம் ekkaṇṭam, பெ. (n.)

   1. முழுக் கூறு; whole, not made up of parts or pieces, as a monolith.

உடல் எக்கண்டமாய் வீங்கி விட்டது (இ.வ.);.

   2. கண்ணோட்டமின்மை; unmindfulness, absence of courtesy, roughness, lack of consideration.

அவன் எக்கண்டம் பண்ணு கிறான். (இ.வ.);. (செ.அக.);.

     [ஒரு + கண்டம் – ஒருக்கண்டம் → ஒக்கண்டம் → எக்கண்டம் (முழுமையாள ஒரே தொகுதி.);]

எக்கண்டவலி

 எக்கண்டவலி ekkaṇṭavali, பெ. (n.)

   உடம்பு முழுமையும் ஏற்படும வலி; pain all over the body. (சா.அக.);.

     [எக்கண்டம் + வலி.]

எக்கமத்தளி

எக்கமத்தளி ekkamattaḷi, பெ. (n.)

   ஒரு வகை முழவு (திவ்.பெரியாழ்.3,4,1,வியா.);; a kind of drum. (செ. அக.);.

     [எக்கம் + மத்தளி.]

எக்கம்

எக்கம்1 ekkam, பெ. (n.)

   சுரையாழ் (ஏகதந்திரி); என்னும் இசைக் கருவி; one-stringed musical instrument.

     “தண்ணுமை எக்கம் மத்தளி தாழ்பீலி” (தில்.பெரியாழ். 3,4,1); (செ.அக.);.

     [ஒருக்கம் → ஒக்கம் → எக்கம்.]

 எக்கம்2 ekkam, பெ. (n.)

   1 தாளம் (திவ். திருப்பள்ளி. 9.வியா,பக்.41); cymbal.

   2. ஒருதலைப் பறை வகை (திவ்.பெரியாழ். 3,4.1, ஸ்வா.);; a kind of single-headed drum.

     [ஒருக்கம் → ஒக்கம் → எக்கம்.]

 எக்கம் ekkam, பெ. (n.)

   நரம்பொன்றுடைய தோலிசைக் கருவி; one-stringed musical instrument.

     “தண்ணுமை யெக்க மத்தளி தாழ்பீலி” (திவ். பெரியாழ். 3, 4, 1);.

த.வ. ஏகதந்திரி.

ஒருகா. Skt. eka → த. எக்கம்.

எக்கரணம்

 எக்கரணம் ekkaraṇam, பெ. (n.)

   எருத்தின் உரப்பொலி; bellowing of a bull when about to attack another.

     [எ → எக்கு → எக்கரணம். எ → ஒலிக்குறிப்பு.]

எக்கர்

எக்கர்1 ekkar, பெ. (n.)

   1. இடுமணல்; sandy place, sand heaped up, as by the waves.

     “எக்கர் மணலினும் பலரே.” (மலைபடு.556);.

   2. மணற்குன்று; sand hill.

     “மட்டறல் நல்யாற்று எக்கர் ஏறி” (புறநா.177);.

   3. நுண்மணல்; fine sand.

     [எக்கல் → எக்கர்.]

 எக்கர்2 ekkar, பெ. (n.)

   வேளாண்கருவிகள்; agricultural implements, apparatus for ploughing. (சேரநா.);.

ம. எக்கரு.

     [ஏர்க்கலம் → ஏக்கல் → எக்கர்.]

 எக்கர்3 ekkar, பெ. (n.)

   சொரிதல்; pouring.

   2. ஏறுதல்; climbing, ascending.

   3. குவிதல்; dumping, heaping.

     [எக்கல் → எக்கர்.]

 எக்கர்4 ekkar, பெ. (n.)

   இறுமாப்புடையவர்; proud,

 haughly persons;

     “எக்கராம மண்கையருக்கு” (தேவா. 859,11);, (செ.அக);.

     [எக்கல் → எக்கர்.]

 எக்கர்5 ekkar, பெ. (n.)

   அவையல் கிளவி (பிங்.);; vulgar expression or word not fit to be used in decent society. (செ.அக.);.

     [இடக்கர் → எக்கர் (கொ.வ.);.]

எக்கறு

எக்கறு1 viruppamoruddimulaikkiḍandavēkkaṟavālkambarāmāyācaṉaeṅguuṟueṅguṟuēkkuṟuekkuṟavuekkaṟavuekkaṟudal,    4.செ.கு.வி. (v.i.)

   1. இளைத்து இடைதல்; suffer from weariness, to languish

     “கடைக்கணேக்கற” (சீவக.1622);.

   2. ஆசையால் தாழ்தல்; to bow before superiors, as one seeking some favour at their hands

     “ஏக்கற்றுங் கற்றார்” (குறள்.395);

தெ. ஏகரு.

     [எங்கு + உறு – எங்குது → எக்குறு → ஏக்கது. “உறு” துணை வினை “அறு” எனத் திரிவது கூட்டு விளைகளில் இயல்பு.]

எக்கலாதேவி

எக்கலாதேவி ekkalātēvi, பெ. (n.)

   1. ஒரு சிறு தெய்வம்; minor goddess. (சரபேந்திர. குறவஞ்சி. 55.13);

   2. செவ்வாமணக்கு; red caster plant.

எக்கல்

எக்கல் ekkal, பெ. (n.)

   1 மணல்மேடு; sand hill

     “கடலெக் கலி னுண்மணலிற் பலர்” (திவ்.திருவாய்.4,1,4);.

   2. நெருக்கம் (பிங்.);; closeness, denseness (செ.அக.);.

   ம. எக்கல்;தெ. எக்கலி (ஆற்றால் கொண்டு செல்லும் மணல்);.

     [எ → எக்கு → எக்கல் = மேலெழும்புதல், உயர்தல், மேடாதல், உயரமாய்க் குவிந்த மணற்குன்று.]

 எக்கல் ekkal, பெ. (n.)

   1. வயிற்றை மேலுக்கிழுத்தல்

 drawing up of the stomach or of the belly; contracting the belly.

   2. மேலுக்கேறச் செய்தல்; causing to rise up.

   3. வற்றல்; contracting. (செ.அக.);.

     [எ → எக்கு → எக்கல்.]

எக்களி

எக்களி1 ekkaḷittal,    4. செ.கு.வி. (v.i.)

   பெருகமகிழ் தல்; to be overjoyed.

     “எக்களித்து வாழ்கின்றேன் யான்” (அருட்பா.சிவநேச.78);. (செ.அக.);.

   ம. எக்களிக்குக;   க. எக்கு (முன்னங்காலால் நிற்றல்);;   து. எக்கல்யுனி (உடம்பை நீட்டுதல்);;   தெ. எக்கு;   கூ. எகசி;குவி. என்கலி.

     [ஏ → எ → களித்தல். ஏ = உயர்வு, மிகுதி.]

 எக்களி2 ekkaḷittal,    4. செ.கு.வி. (v.i.)

   குமட்டுதல்; to nauseate. Retch.

   ம. எக்களிக்குக;   க. அக்களிகு;   தெ. அக்களின்சு;மால், அகெலெ.

     [ஒக்களி → எக்களி → எக்களி.]

எக்களிப்பு

எக்களிப்பு ekkaḷippu, பெ. (n.)

   செருக்கோடு கூடிய மிகு மகிழ்ச்சி; excessive joy tinged with conceit.

     “எக்களிப் பாயவன் பக்கற் குரங்கிற்கு மென்னோ டெதிர்க்க லாச்சே.” (இராமநா.உயுத்.31);.

   ம. எக்களிப்பு;   க. அக்களிக;தெ. வெக்கலமு (மிகுதி);.

     [எக்களி → எக்களிப்பு.]

எக்கழுத்தம்

 எக்கழுத்தம் ekkaḻuttam, பெ. (n.)

   இறுமாப்பு; pride;

 arrogance. (ஆ.அக.);.

     [ஏ + கழுத்து + அம் – ஏக்கழுத்தம் → எக்கழுத்தம் (நிமிர்ந்த தலை, இறுமாப்பு);.]

எக்கழுத்தல்

 எக்கழுத்தல் ekkaḻuttal, பெ. (n.)

   எக்கழுத்தம் பார்க்க;

எக்கா

 எக்கா ekkā, பெ. (n.)

 a single-horse carriage, in use in north India.

     [H. ekka → த. எக்கா.]

எக்காளம்

எக்காளம் ekkāḷam, பெ. (n.)

   கும்மாளம்; over enjoyment.

எக்காளம் போடாமல் சும்மா இருங்கப்பா”

     [எக்கு-எக்காளம்]

 எக்காளம்1 ekkāḷam, பெ. (n.)

   1. ஒர் இசைக்குழலாகிய ஊதுகருவி; trumpet, a kind of clarinet.

   2. தாளக்கருவி; a kind of cymbal.

   ம. எக்காளம்;   க. கெக்காளெ;தெ. கெக்காள.

     [ஏ + காளம் – எக்காளம் → எக்காளம். ஏ = உயர்வு, நீட்சி. எக்காளம் = நீண்டகாளம் என்னும் இசைக்குழல் 2. தாளம் = காய்ச்சி உருக்கிச் செய்த தாளம்.]

 எக்காளம்2 ekkāḷam, பெ. (n.)

   1. செருக்கு; pride.

   2. இகழ்ச்சி; mockery.

     [எக்களிப்பு → எக்காளம்.]

எக்காளை

எக்காளை ekkāḷai, பெ. (n.)

   வெண்கலக் கருவி (அபி.சிந்.);; a kind of cymbal. (செ.அக.);.

     [ஏ → எ + காளம் – எக்காளம் → எக்காளை. எக்காளம் 2 பார்க்க;see ekkalam – 2.]

எக்கி

எக்கி ekki, பெ. (n.)

   நீர் முதலியன பீச்சுங் கருவி; syringe, squit.

     “நீரெக்கி யாவையும்” (பரிபா.19,12);. (செ.அக.);.

     [எஃகு → எக்கு → எக்கி.]

எக்கிடு-தல்

எக்கிடு-தல் ekkiḍudal,    20.செ.கு.வி. (v.i.)

தாராளமாகக்

   கொடுத்தல்; to be profuse or liberal, as in giving alms or presents.

     [எ → எக்கு + இடு – எக்கிடு = மிகுத்துக் கொடுத்தல்.]

எக்கியம்

எக்கியம் ekkiyam, பெ. (n.)

   வேள்வி (திருவானைக். கோச்செங். 70);; sacrifice, ceremony in which oblations are offered.

     [Skt. yajna → த. எக்கியம்.]

இறை யன்பினால் (தேவப்பிரீதியாய்); விருப்பப் பேற்றின் பொருட்டுச் செய்யப்படும் ஓகம் (யாகம்);. இது அன்றாடு (நித்தியமாய்ச்); செய்யப்படுவதும் சிறப்பாய்ச் செய்யப்படுவதும் என இரு வகைப்படும். அவற்றுள், அன்றாடு (நித்தியமாய்ச்); செய்யப்படுவது தேவயஞ்ஞம், பிதுர்யஞ்ஞம், பூதயஞ்ஞம், பிரமயஞ்ஞம், மானுஷயஞ்ஞம் எனப்படும். சிறப்பாய்ச் செய்யப்படுவது ஒகம். தேவயஞ்ஞம் என்பது சூரியர், அக்கினி முதலிய தேவர்களைப் பூசிப்பது. பிதுர்யஞ்ஞம் என்பது தாய்தந்தையரை (பிதுர்க்களை);ப் பூசிப்பது பூதயஞ்ஞம் பூதங்களுக்குக் காவு (பலி); போடுதல். பிரமயஞ்ஞ மென்பது மறை (வேத); யோதுகை, மனித (மானுஷ); யக்ஞம் விருந்தினரை (அதிதிகனை);ப் பூசித்தல், (அபி.சிந்);.

எக்கியோபவீதம்

 எக்கியோபவீதம் ekkiyōpavītam, பெ. (n.)

   இருபிறப்பினர்கள் தம் தோளில் இட்டுக் கொள்ளும் நூல்; sacred thread worn over the shoulder by men of the twice-born castes.

த.வ. பூணூல், முப்புரிநூல்.

     [Skt. yajnopavita → த. எக்கியோபரீதம்.]

எக்கீன்

 எக்கீன் ekāṉ, பெ. (n.)

   நம்பிக்கை (Muham.);; faith.

     ‘மருந்தில் எக்கீன் வைத்துச் சாப்பிட வேண்டும்’.

     [Ar. yaggin → த. எக்கீன்.]

எக்கு

எக்கு1 ekkudal,    7.செ.கு.வி. (v.i.)

   1. குவிதல்; to be heaped up, as sand on the shore.

   2. மேலெழும்புதல்; to rise, go up.

     “எடுத்தவே யெக்கி” (பரிபா.16.45);.

     [ஏ → எ → எக்கு.]

 எக்கு2 ekkudal,    5.செ.குன்றாவி, (v.t.)

   1. தாக்கி யூடுருவுதல்; to force through, as one’s way in a Crowd.

     “கூட்டத்தை எக்கிக் கொண்டு வந்துவிட்டான்.

   2. உள்ளிழுத்தல்; to contract the abdominal muscles, as beggars do to show hunger, as persons while dressing round the waist, as a cow in refusing to give milk.

     “எக்கும் வயிறு” (திருக்காளத்.4,31,110);.

   3. மேலே செல்ல வீசுதல்; to squirt throw up, as water,

     “நீரெக்குவோரும்” (பரிபா.11.57);.

   5. எட்டுதல் (வின்);; to stand on tip-toe (செ.அக.);.

   ம. எக்குக;   க. எக்கு, எகரு;   துட. பிடெக்;   து. எக்கு, எக்கல்யுணி;   தெ. எக்கு, எக்கின்சு, எகுரு, எகயு, அக்கலின்க;   க. எகசி, என்கசி;குவி. என்கலி.

     [எ → எ → எக்க. எக்குதல் = மேலெழும்புதல், பீறிட்டெழுதல், உயர்தல்.]

எக்குத்தக்கு

 எக்குத்தக்கு ekkuttakku, பெ. (n.)

   எக்கச்சக்கம்; awkward predicament (Madr);. (செ.அக.);.

     [இழுக்கு → எக்கு + தக்கு.]

எக்குத்தப்பு

 எக்குத்தப்பு ekkuttappu, பெ. (n.)

எக்குத்தக்கு பார்க்க;see ekku-t-lakku. (கொங்.வ.);. (செ.அக.);.

     [இழுக்கு → எக்கு + தப்பு.]

எக்கெறி

எக்கெறி2 ekkeṟidal,    2.செ.கு.வி. (v.i.)

   அச்சமுறுதல்; to be frightened.

     “ஏக்கெறிந் துலகெங்கு மிரைத்திட” (இரகு ஆற்று.3);.

     [எங்கு → ஏக்கு + உறு – ஏக்குறு → ஏக்கர → எக்கெறு → ஏக்கெறி.]

எக்கே

எக்கே ekā, இடை (int.)

   வருத்தக் குறிப்பு; exclamation of sorrow,

     “எக்கே யிதுவென்” (திவ்.பெரியதி.10.8.8);. (செ.அக.);.

     [அக்கை → அக்கே → எக்கே (கொ.வ.); அம்மே, அன்னே என்றாற் போன்ற விளியிடைச்சொல்.]

எங்கணும்

எங்கணும் eṅgaṇum,    கு.வி.எ. (adv.) எங்கும்; everywhere.

     “உலக மெங்கனும் வியக்குறும்” (கம்பரா. தாடகை.26);. (செ.அக.);.

ம. எங்ஙானும்.

எங்கண்

எங்கண் eṅgaṇ,    கு.வி.எ. (adv.) எவ்விடம்; which place.

     “எங்கனேகுதி” (கந்தபு.பானுகோ.136);.

     [எங்கு → எங்கண்]

எங்களாழ்வான்

 எங்களாழ்வான் eṅgaḷāḻvāṉ, பெ. (n.)

   திருவெள்ளறைச் சோழியர் (அபி.சிந்.);; name of a sect of choilars belonging to Tiruvellarai.

     [எங்கள் + ஆழ்வான்.]

எங்கள்

எங்கள் eṅgaḷ, கு.வி.எ. (adj.)

   யாங்கள் (நாங்கள்); என்பதன் வேற்றுமையடி, யுருபை யேற்கும்போது அடையும் வடிவம்; oblique form of 1st pers.pl.occurs before case-endings.

     “எங்கள் பொருமானையிமையோர் தொழுதேத்தும்” (தேவா.410.7);. (செ.அக.);.

   ம. எங்கள்;   க. நாவு, ஆம், எம்;   துட. எம்;   கோத. எம்;   குட., பட. எங்க;   து. எங்குளெ;   தெ. ஏமு. மேமு;   கொலா. அம்;   நா. ஆம்;   கோண். அம்மட் அம்மாட்;   கு. ஆமு, ஆஞ்ஞ;   குரு. எம், ஏம்;மால். எம், ஏம்.

     [யாம் → எம் + கள் – எங்கள். இனி, யாம் + கள் – யாங்கள் → எங்கள் என்றுமாம்.]

எங்கித்தை

எங்கித்தை eṅgittai,    கு.வி.எ. (adv.) எவ்விடத்தில்; in whelewer place.

     “எங்கித்தைக் கன்மமெலாஞ் செய்தாலும்.” (சி.சி.10.5);. (செ.அக.);.

     [எங்குற்றை → எங்குத்தை → எங்கித்தை. (வே.க.104);.]

எங்கு

எங்கு eṅgu,    எவ்விடம்; where.

     “எங்குப்போ யுய்கேன்” (திவ்.பெருமாள்.5,5);.

   ம. எங்ஙு;   க. எத்த, எல்லி;   கோத. எய், எத்;   துட. எத், எல்;   குட., பட. எல்லி;   து. ஒளு, ஒள்ப;   தெ, எந்து, எக்கட, எட, ஏட, எசட, எகடு, எசொடு;   கொலா. எத்தின்;   நா. எத்தின்;   பர். எதொட் எத்தொல்;   க. எம்பெ;   குவி. இம்பிய;   கட, ஏட்;   குரு. எகேர். எகோ, ஒவோ, எகய்யா;   மால், இக், இகெனொ;பிரா, அராங், அராடேக்.

     [எ + கண் – எக்கண் → எங்கண்.]

எங்கும்

எங்கும் eṅgum,    கு.வி.எ. (adv.) எவ்விடத்தும்; everywhere, in all directions.

     “எங்கும் போய்க் கரைகாணாது” (திவ்.பெருமாள்.5.5);.

   ம. எங்ஙும், க. பட. எல்லியு;தெ. எக்கட.

     [எங்கு + உம்.]

எங்குற்றை

 எங்குற்றை eṅguṟṟai,    கு.வி.எ. (adv.) எவ்விடம்; which place.

     [எங்கு → எங்குற்றை.]

எங்கே

எங்கே eṅā, கு.வி.எ. (adv.)

   1. எங்கு பார்க்க;see ergu.

     “எங்கே காண்கே னீன்றுழா யம்மான்றன்னை” (திவ்.திருவாய்.8,5,11);. (செ. அக.);.

   2. எவ்விடம் (ஆ.அக.);; whither, where, to which place.

   ம. எங்ஙே;   க., பட. எல்லி;தெ. எக்கட.

     [எங்கு + எ. ‘ஏ’ பிரிநிலைப் பொருளில் வந்த இடைச்சொல்.]

எங்கை

எங்கை eṅgai, பெ. (n.)

   என் தங்கை; my younger sister. (திருக்கோ.373.உரை.);.(செ.அக.);.

     [என் + கை – எங்கை. கை = சிறுமை, இளமை, இளையபெண்.]

எங்கைச்சி

 எங்கைச்சி eṅgaicci, பெ. (n.)

எங்கை பார்க்க see engal. (செ.அக.);.

     [என் + கை + அச்சி -எங்கைச்சி.]

எங்ஙனே

எங்ஙனே eṅṅaṉē, கு.வி.எ. (adv.)

எங்ங்னம் பார்க்க;see ennanam.

     “எங்ஙனே நீர் முனிவது” (திருவாய் மொழி நூ.45);. (செ.அக.);.

ம. எங்ஙனே,

     [எங்கள் + ஏ.]

எங்ஙன்

எங்ஙன் eṅṅaṉ, கு.வி.எ. (adv.)

   1. எங்ங்னம் பார்க்க;see ennanam.

     “இவைகளும்மை யணையா தகல்வ தெங்ங்ன்” (சிவதருகவர்க்கநா.94);. (செ.அக.);.

   2. எங்கே; where (ஆ.அக.);.

     [எங்கண் → எங்கனம் → எங்கணம் → எங்ங்ணம் → எங்கள்.]

எங்ங்ணம்

எங்ங்ணம் eṅṅṇam, கு.வி.எ. (adv.)

   1. எவ்வாறு; how, in what manner.

     “எங்ங்ணம் மறந்து வாழ்கேன்” (திவ்.திருமாலை.23);.

   2. எவ்விடம்; where, to what place.

     “சிறுவர்க ளெங்ங்னம் போயினார்” (கந்தபு. தக் கன்மக.52);, (செ.அக.);.

   3. எத்தன்மை (ஆ.அக.);; what manner.

   ம. எங்ங்னெ;   க. எந்த;   பட, எத்தெ;   துட. எகிக;   கோத, என்ம், யேகெ;   குரு. யெத்தெ;   குட, யென்னனெ, என்னனெ;   து. யென்ச, எஞ்ச;   தெ. எட்லு;   கொலா, எனன்;   நா. எனன், பர். என்தி;   குவி. இனகி;   மால். இக்னா;பிரா. அமா.

     [எங்கண் → எங்கணம் → எங்ஙணம் → எங்கன்.]

எசப்பு

 எசப்பு esappu, பெ. (n.)

   பொருள் விற்பனையில் இருதரத்தாரையும் இசைவிக்கும் முயற்சி; தரவாளித் தொழில், தரவு; brokerage.

     [இசை → இசைப்பு → எசப்பு.]

எசப்புச் செலவு

 எசப்புச் செலவு esappusselavu, பெ. (n.)

   தரகு கொடுத்தற்குப் பிடிக்குஞ் செலவு; brokerage expe. nses in business (Loc.);.

     [இசைப்பு → எசப்பு + செலவு.]

எசமாட்டி

 எசமாட்டி esamāṭṭi, பெ. (n.)

   குடும்பத்தலைவி; mistress of a household.

     [எசமா(னன்); + ஆட்டி (பெ.பா.ஈறு.]

     [Skt. yajamana → த. எசமானன்.]

எசமானத்துவம்

 எசமானத்துவம் esamāṉattuvam, பெ. (n.)

   தலைமைத்தன்மை; superiority rank.

     [Skt. yajamana-tva → த. எசமானத்துவம்.]

எசமானன்

எசமானன் esamāṉaṉ, பெ. (n.)

   1. வேள்வித்தலைவன்; one who performs a sacrifice.

     “ஆன்மாயூப மெசமான் னளவேனும்” (மச்சபு. தடாகவிதி);.

   2. தலைவன், முதலாளி, குடும்பத்தலைவன் (கொ.வ.);; lord, master, employer, owner, proprietor, head of a family.

   3. கணவன் (கொ.வ.);; husband.

     [Skt. yajamana → த. எசமானன்.]

வடமொழியில் வணங்குதல், ஏத்துதல், படைத்தல், மூலம், மதிப்பளித்தல் போன்ற பொருள்களுள் yaj என்னும் மூலத்திலிருந்து வேள்வியாற்றுதல், வணங்குதல் போன்ற பொருள்களுள்ள yajamana என்னும் சொல் பிறந்துள்ளது. வேள்விக்குரிய பொருள்களைத் தருபவன், வேள்வி நடத்தும் தலைமைப் பூசகன், புரவலன், முதலாளி, குடும்பம் அல்லது குலத்தலைவன் போன்ற பொருள்களையும் இச்சொல் ஏற்றுள்ளது (மா.வி);. தமிழில் தலைவன், முதலாளி, கணவன் ஆகிய பொருள்களுடன் இச்சொல் பெருவழக்கெய்தியுள்ளது.

எசமானி

 எசமானி esamāṉi, பெ. (n.)

எசமாட்டி பார்க்க; see esamatti.

எசமானன் (ஆ.பா.); – எசமானி (பெ.பா.); ‘இ’ பெ.பா.ஈறு.

வேள்வித் தலைவன், தலைமைப் பூசகன், குடும்பம் அல்லது குலத்தலைவன் என்றாற்போன்று பொருள்படும் yajamana வடமொழியில் ஆண்பாற் சொல்லாகவே வருகிறது. தமிழில் பெண்பாற் சொல்லாய் ஆளப்படுகிறது.

எசமானிக்கை

 எசமானிக்கை esamāṉikkai, பெ. (n.)

   தலைமை (யாழ்.அக.);; leadership.

எசமான்

எசமான் esamāṉ, பெ. (n.)

எசமானன் பார்க்க; see esamanan.

     “மறையோராட்டிட வெசமானாடியே” (மச்சபு. விருக்கவு. 7);.

     [Skt. yajamana → த. எசமான்.]

எசர்

 எசர் esar, பெ. (n.)

   உலைநீர்; water in a pot set over the fire for boiling rice. (இ.வ.);.

   க. எசர்;   தெ. எசரு;பட. எசரு.

     [பெயல் → பெசர் → எசர். (கொ.வ.);.]

எசர்கட்டு-தல்

எசர்கட்டு-தல் esarkaṭṭudal,    5. செ.குன்றாவி, (v.t.)

   உலை நீர் வைத்தல் (இ.வ.);; to keep a pot of water over the fire for boiling rice.

     [எசர் + கட்டு. எசர் கட்டுதல் என்னும் திசைச்சொல்லாட்சி தமிழுக்குத் தேவையில்லாதது.]

எசலாட்டம்

 எசலாட்டம் esalāṭṭam, பெ. (n.)

இகலாட்டம் பார்க்க;see lgalattam.

     [இகலாட்டம் → எகலாட்டம் → எசலாட்டம்.]

எசலிப்பு

 எசலிப்பு ecalippu, பெ. (n.)

நண்பர்களுக்குள் போட்டி,

 competition among friends

     [எகல்-எகில்-எசலிப்பு]

எசு

எசு esu, பெ. (n.)

   ஆரிய வேதம் நான்கனு ளொன்றாகிய யசுர்வேதம்; yajur-veda.

இருக்கெசுச் சாமவேத நாண்மலர்கொண்டு (திவ். பெரியாழ். 5,1,6);.

     [Skt. yajur → த. எசு.]

எசுர்வேதம்

எசுர்வேதம் esurvētam, பெ. (n.)

எசு (சிவரக. காயத்திரி. 29); பார்க்க; see ešu

     [Skt. yajuveda → த. எசுர் வேதம்.]

எசெலி

 எசெலி eseli, பெ. (n.)

   முரணுகை; contradicting.

     [இகலி → எகலி → எசலி. (கொ.வ.);.]

எச்சன்

எச்சன் eccaṉ, பெ. (n.)

   1. வேள்வி செய்வோன்; one who performs a sacrifice.

     “தக்கனையு முனிந்தெச்சன் றலைகொண்டான்காண் (தேவா. 596, 9);.

   2. வேள்வியின் போது படைத்ததை ஏற்றுக் கொள்வதாகக் கருதப்படும் தேவதை (கந்தபு. யாகசங். 38);; the deity supposed to be present at a sacrifice and to accept the offerings given.

     [Skt. yajna → த. எச்சன்.]

எச்சப்பிறவி

 எச்சப்பிறவி eccappiṟavi, பெ. (n.)

ஊனமுற்றபிறவி,

 defect by birth

     [எச்சம் + பிறவி]

எச்சமிடு-தல்

எச்சமிடு-தல் eccamiḍudal,    20.செ.கு.வி. (v.i.)

   பறவைகள் மலங்கழித்தல்; to drop excrement, as birds. (செ.அக.);.

     [எஞ்சு → எச்சு → எச்சம் + இடு.]

எச்சம்

எச்சம்1 eccam, பெ. (n.)

   1. மிச்சம்; remander, remnant, residue.

     “வினை பகை யென்றிரண்டி னெச்சம்” (குறள் 674);,

   2. பிறங்கடை (சந்ததி);; posterity, offspring.

     “ஆக்கம்…. எச்சத்திற் கேமாப்புடைத்து” (குறள்.112);.

   3. மகன்; son

   4. எச்சில்; orts, remains of food, Spittle, whatever has come in contact with the mouth, as defiling.

   5. பறவை முதலியவற்றின் கழிவு; dung of birds, lizards, etc.

     “குரண்டமொன் றெச்ச நீங்குதலும்” (நல்.பாரத.கெளசி.10);.

   6. நறுமணப் பொருள் (சிலப்.14,108, உரை.);; aromatic substance.

   7. குறைவு (சூடா.);; deficiency, defect lack

   8. பிறப்பிலே வரும்

   குறை; deformity at birth of which eight types are mentioned, viz,

சிதடு, உறுப்பில் பிண்டம், கூன், குறள், ஊமை, செவிடு, மா, மருள்.

     “எண்பேரெச்சம்.” (புறநா.28);

   9. எச்சக்குறிப்பு; inference.

     “எச்சமென் பது வெள்ளவேதுவினான்…. மழை நிகழ்வுரைத்தல்”. (மணி.27.33);.

   10. (இலக்.); தொக்குநிற்பது; ellipsis.

     “பெயர்…. குறிப்புந் தந்த மெச்சங் கொள்ளும்” (நன். 360);.

   11. உருபுகளும் முற்றுகளும் முடியும் பெயரும் வினையும்; noun or verb that completes the sense of case-endings, participles and finite verbs,

     “எச்சப் வினை யெய்துமீற்றினும்” (நன்.357);.

   ம. எச்சம்;   க. எரும்பு (கழிச்சல்);;தெ. எருவு.

     [எஞ்சு → எச்சு → எச்சம்.]

 எச்சம்2 eccam, எச். (part)

   பெயரெச்ச வினையெச்சங் கள்; relative or verbal participle.

     “ஈரெச்சம்” (நன்.356);.

ம. எச்சம்.

     [எஞ்சு → எச்சு → எச்சம்.]

 எச்சம்3 eccam, பெ. (n.)

   செயல் (யாழ்.அக.);; work.

     [இய → இயத்தம் → எத்தம் → எச்சம். இய=செல், நட,இயத்தம் = நடப்பு, செயல்.]

 எச்சம் eccam, பெ. (n.)

   அலுவல் (யாழ்.அக.);; work.

     [Skt. yajna → த. எச்சம்.]

எச்சரி-த்தல்

எச்சரி-த்தல் eccarittal,    4.செ.குன்றாவி, (v.t.)

   1. முன்னறிவித்து எச்சரிக்கை செய்தல்; to caution, warn, forewarn. (செ.அக.);.

   2. அறிவுரை கூறுதல்; to instruct, admonish.

   3. விழிக்கப் பண்ணுதல் (ஆ.அக.);; to awaken.

   க. எச்சரிக;   து. எச்சரி;தெ. எச்சரின்க.

     [எழு + தரு + கை – எழுதருகை = விழித்திருத்தல், விழிப்பாயி ருத்தல். எழுதருகை – எழ்தருகை – எழ்சரிகை – எச்சரிக்கை → எச்சரி.]

எழுதரு என்னும் செந்தமிழ்ச் சொல் எழ்தரு என்னும் திசைச் சொல்லாகிப் பின்னர் எச்சரி எனத்திரவிடத் திரிபுற்றது. இத னைத் திரவிட மரூஉச்சொல் எனலாம்.

எச்சரிக்கை

எச்சரிக்கை eccarikkai, பெ. (n.)

   1. விழிப்புணர்வு; caution, circumspection, vigilance.

அவன் எச்சரிக்கை யுள்ளவன்.

   2. முன்னறிவிப்பு; prior notice, warning. பொது மக்களுக்கு எச்சரிக்கை கொடுத்தார்கள்.

   3. அரசர் போன்ற உயர்பேராளர் அவைக்கு வருதலைய றிவித்துத்தக்க மதிப்புரவு காட்டுமாறு அறிவுறுத்தும் சொல்; exclamatory word enjoining care, silence, uttered In advance on the approach of a king, or any exalted personage, attention, called for in an assembly or court.

     “மன்னவர்க ளெச்சரிக்கை பேச” (இராமநா.பா லகா.18);.

   4. எச்சரிக்கை என்னும் சொல்லில் முடியும் தெய்வப்பாடல்; hymn sung before an Idol, each of the verses of which ends in this word

   5. கருத்து; conception.

   6. ஒரு சிற்றிலக்கியம்; a class of literary genre.

   க. எழுதருவிகெ, எச்சரெ;தெ. எச்சரிக.

     [எழுதருதல் → க. எழுதருவிகை → எழ்தரிகெ → தெ. எச்சரி → த. எச்சரிக்கை. விழிப்பாயிருத்தல் என்று பொருள்படு எழுதருதல் என்னும் தமிழ்ச் சொல் கன்னட மொழிவழியாக தெலுங்கில் எச்சரிக்கை எனத் திரிந்து தமிழில் வழ கூன்றியது.]

எச்சரிப்பு

எச்சரிப்பு eccarippu, பெ. (n.)

   1. முன்னறிவிப்பு; caution forewarning. (செ.அக.);.

   2. ஓர் பாட்டு; a kind of song (ஆ.அக.);.

     [எச்சரி → எச்சரிப்பு.]

எச்சவாய்

 எச்சவாய் eccavāy, பெ. (n.)

   மலவாய் (வின்.);; anus.

ம. எச்சவாய்.

     [எச்சம் + வாய்.]

எச்சவினை

 எச்சவினை eccaviṉai, பெ. (n.)

   வினையெச்சம்; adverb.

     [எச்சம்+வினை]

எச்சவும்மை

 எச்சவும்மை eccavummai, பெ. (n.)

   விடுபட்டசெ தியை உய்த்துணர வைக்கும் ‘உம்’ என்னும் இடை சொல்; particle ‘um’ suggestive of something to be understood.

சாத்தனும் வந்தான்.

     [எச்சம் + உம்மை – எச்சவும்மை. எஞ்சிய பொருளுணர்த்து உம் என்னும் இடைச்சொல்.]

எச்சிஇளைச்சி

 எச்சிஇளைச்சி ecciiḷaicci, பெ. (n.)

மெலிவு:

 feeble,

     “ஆள் எச்சி இளைத்துப் போனான்].

 slimness.

     [எய்த்து:இளைத்து]

எச்சினி

 எச்சினி ecciṉi, பெ. (n.)

   ஏழாமாதம் (சங்.அக.);; the seventh month.

எச்சிற்கல்லை

 எச்சிற்கல்லை ecciṟkallai, பெ. (n.)

   உண்ட தையலி லைக்கலம்; plate of leaves sewn together from which food has been eaten.

     [எச்சில் + கல்லை.]

எச்சிற்குழி

 எச்சிற்குழி ecciṟkuḻi, பெ. (n.)

   எச்சிலிலையிடும் பள்ளம்; pit in the backyard of a house for throwing used leaf-plates.

   ம. எச்சில் குழி;   க. எஞ்சலுருணி;தெ. எங்கிலி குந்த.

     [எச்சில் + குழி.]

எச்சிற்படு

எச்சிற்படு1 ecciṟpaḍuttal,    18. செ.குன்றாவி (v.t.)

   1. எச்சிலாக்கு பார்க்க;see accil-akku-

   2. புண்படுத்தல்; to cause a sore, to injure

     “இரும்பெச்சிற் படுத்த மார்பர்” (சீவக.2353);.

   3. கன்னிமை கெடுதல்; to deprive a damsel of her virginity, either by force or with her consent (W.);.

     [எச்சில் + படு.]

 எச்சிற்படு2 ecciṟpaḍudal,    20. செ.கு.வி. (v.i.)

   உமிழ் நீர்பட்டுத் தூய்மை கெடுதல்; to become defiled, as food by contact with the mouth.

     [எச்சில் + படு.]

எச்சிலன்

 எச்சிலன் eccilaṉ, பெ. (n.)

   இவறன், ஈயாதவன் (யாழ்.அக.);; miser (ஆ.அக.);.

     [எச்சில் + அன்.]

எச்சிலாக்கு-தல்

எச்சிலாக்கு-தல் eccilākkudal,    5. செ.குன்றாவி. (v.t.)

   உண் ணும் போது எச்சில் படச் செய்தல்; to defile food or anything else either by bringing it into contact with the mouth or by touching it with the hand that has already come into contact with the mouth.

க. எஞ்சலிக.

     [எச்சில் + ஆக்கு.]

எச்சிலிடு-தல்

எச்சிலிடு-தல் ecciliḍudal,    20. செ.கு.வி. (v.i.)

   உண்டவி டத்தைச் சாணமிட்டு மெழுகுதல்; to clear the place where food has been eaten by smearing cowdung and water.

     [எச்சில் + இடு.]

எச்சிலிலை

 எச்சிலிலை eccililai, பெ. (n.)

   உணவு உண்ணப்பட்ட இலை; leaf-plate from which food has been eaten.

க. எஞ்சலெலெ.

     [எச்சில் + இலை.]

எச்சிலுரண்

 எச்சிலுரண் ecciluraṇ, பெ. (n.)

   உணடு மிஞ்சிய வுணவு; refuse or remains of food. (சா.அக.);.

     [எச்சில் + ஊன்.]

எச்சிலுறல்

 எச்சிலுறல் ecciluṟal, பெ. (n.)

   எச்சில் வாயிலூறுதல்; secretion of saliva. (செ.அக.);.

     [எச்சில் + ஊறல்.]

எச்சிலெடு-த்தல்

எச்சிலெடு-த்தல் eccileḍuttal,    4. செ.கு.வி. (v.i.)

   எச்சிலி லையை யகற்றுதல்; to remove the leaf-plate after one has eaten from it.

     [எச்சில் + எடு.]

எச்சில்

எச்சில் eccil, பெ. (n.)

   1. உமிழ்நீர்; salva, spittle.

   2 உமிழ்நீர்பட்டுத் தூய்மை அறுவது (அசுத்தமாவது);

 anything defiled by contact with the mouth.

   3. தூய்மை இல்லாதது (அசுத்தமானது);; anything defiled. அவனி மிருந்து என்வாய் எச்சிலாயிற்று.

   4. உண்டு கழித்த மிச்சில்; orts, refuse of food, leavings.

     “நாய் பிற ரெச்சிற் கிடையாது பார்த்திருக்கும்” (நாலடி.345);.

   5. உடற்கழவுகள் (ஆசாரக்.8);; excretions from the body, as faeces urine, semen.

   ம. எச்சில்;   க. எஞ்சல்;   கோத. எச்ல்;   துட. இசில்;   குட எச்சி;   து. எஞ்சல்;   தெ. என்கிலி, எங்கிலி;   கோண், எஞ்க எங்கூல்;குரு. எங்நீரை.

     [எஞ்சல் → எஞ்சில் → எக்சில்.]

எச்சில் கழி-த்தல்

எச்சில் கழி-த்தல் eccilkaḻittal,    4.செ.கு.வி. (v.i.)

   எச்சில் டத்தைத் தூய்மை செய்தல் (வின்.);; to clear the spot where one has taken food. (ஆ.அக.);.

     [எஞ்சல் → எஞ்சில் → எச்சில் → கழி.]

எச்சு

எச்சு1 eccu, பெ. (n.)

   குறை; delect.

     “எச்சுநாட்டங் கொடு” (இரகு குறைகூ.29);.

     [எஞ்சு → எச்சு.]

 எச்சு2 eccu, பெ. (n.)

 in

   1. மிகுதி; to excess, increase.

   2. (இசை); உயர்ந்த இசை; high pitch, (in music); opp to தக்கு. அவன் எச்சிலே பாடுகிறான்.

ம., க., தெ., பட. எச்சு.

     [எஞ்சு → எச்சு. எஞ்சு = மிகுதல்.]

 எச்சு3 eccudal,    5. செ.குன்றாவி. (v.t.)

   வணங்குதல்; to worship.

     “பெருமானை யெச்சுமடியார்கட் கில்லையி டர் தானே”. (தேவா.410,10);.

     [ஏத்து → எத்து → எக்சு.]

எச்சோறு

எச்சோறு eccōṟu, பெ. (n.)

எற்சோறு பார்க்க;see ercoru. (I.M.P.Sm.2);.

     [எற்சோறு → எச்சோறு.]

எஞ்சலி-த்தல்

எஞ்சலி-த்தல் eñjalittal,    4.செ.குன்றாவி (v.t.)

   எஞ்சல், குறைவு செய்தல்; to bring discredit upon to cause degradation, as of a person;

 to cause discomfiture

     “படைக்கடலா லமரேசனை யெஞ்சலித்திட” (ஞானவா. தாமவியாள.21);.

     [எஞ்சல் = எஞ்சலி.]

     [எஞ்சு + ஆ + மை – எஞ்சாமை. ‘ஆ’ எ.ம.இ.தி

     “மை” – பண்புப் பெயரீறு.]

எஞ்சல்

எஞ்சல்1 eñjal, பெ. (n.)

   1. குறை; defect blemish.

     “எஞ்சலி லமரர் குலமுதல்” (தில்.திருவாய்.3.6,9);.

   2. சுருங்குதல்; contracting, shrinking.

   3. அற்றொழிகை; extinction.

     “வழியெஞ்ச லெஞ்ஞான்று மில்” (குறள்.44);. (செ.அக.);.

   க. எஞ்சல்;   தெ. எங்கிலி;   கோண். யெங்குல்;மால். எங்கே.

     [இஞ்சு → எஞ்சு → எஞ்சல்.]

 எஞ்சல்2 eñjal, பெ. (n.)

   1. மிஞ்சுதல், அதிகரித்தல், மிகுதல்; exceeding, expanding

   2. மீதியாதல்; remaining. (சா.அக.);

     [எ → எச்சு → எஞ்க → எஞ்சல்.]

எஞ்சிநில்(ற்)-த(ற)ல்

எஞ்சிநில்(ற்)-த(ற)ல் eñjinilṟtaṟal,    14.செ.கு.வி. (v.i.)

   1. தொக்குநிற்றல்; to be elliptical, as a word

     “சொல்லென்னும் முதனிலை மாத்திரை தன்னுள்ளேயே எஞ்சிநிற்ற லல்லது” (தொல்சொல்.441.உரை.);.

   2. ஒழிந்து நிற்றல்; to remain, to be left உணர்த்துதற்கு இடமின்றி எஞ்சிநின்ற சொல்லிலக்கணங்களை. (தொல்,சொல். 397.உரை.);.

     [எஞ்சு → எஞ்சி + நில்.]

எஞ்சியசொல்லினெய்தக்கூறல்

எஞ்சியசொல்லினெய்தக்கூறல் eñsiyasolliṉeytakāṟal, பெ. (n.)

   சொன்னவற்றால் சொல்லாதனவற்றையும் உய்த்தறியுமாறு கூறுகையாகிய ஓர் உத்தி. (நன்.14);;     [எஞ்சிய + சொல்லின் + எய்த + கூறல்.]

எஞ்சு

எஞ்சு1 eñjudal,    15.செ.கு.வி. (v.i.)

   1. குறைதல்; to lack, diminish, to be deficient.

     “எஞ்சா வின்னருணுண்டுளி கொள்ள” (திருவாச.3.76);.

   2. கெடுதல்; to be spoiled, injured, marred.

     “வகையெழில் வனப்பெஞ்ச” (கலித்.17.13);.

   3. ஒழிதல் (குறள். 382);; to cease.

   4. (இலக.); தொக்குநிற்றல்; to be elliptical, as a word-to.

     “சொல்லளவல்ல தெஞ்சு தலின்றே” (தொல். சொல்.441);.

   5. செய்யாதொழிதல்; to refrain

     “இறுதி பயப்பினும் எஞ்சாது” (குறள்.690);.

     [இஞ்சு → எஞ்சு, இஞ்சுதல் = உறிஞ்சுதல், உள்ளிழுத்தல், குறைதல், கெடுதல்.]

 எஞ்சு2 eñjudal,    15.செ.கு.வி. (v.i.)

   1. மீதியாதல்; to remain, to be left behind, to survive.

     “எஞ்சினா ரிவ்வுலகத்தில்” (நாலடி.21);.

   2. கடத்தல்; to transgress, go beyond, overstep.

     “இரக்கு வாரே னெஞ்சிக் கூறேன்” (பதிற்றுப்.61,11);.

     [எ → எச்சு (உயர்தல், மிகுதல், மீதியாதல்);.]

 எஞ்சு3அப. 5.செ.குன்றாவி, (w.t)  தனக்குப்பின்

 eñsudalabaseguṉṟāvidaṉaggubbiṉ,

   5.செ.குன்றாவி. (v.i.);

   தனக்குப்பின் உரிமையாக வைத்தல்; to leave behind, as to one’s heir.

     “நின் பெருஞ் செல்வம் யார்க்கெஞ்சுவையே (புறநா.213);.

     [எஞ்சு2 – எஞ்சி3.]

எஞ்ஞம்

எஞ்ஞம் eññam, பெ. (n.)

எக்கியம் பார்க்க; see ekkiyam.

     ‘இருசு வெஞ்ஞவீதியினை” (மச்சபு. அநுக்கிர. 26);.

     [Skt. yajna → த. எஞ்சம்.]

எஞ்ஞவற்கியன்

எஞ்ஞவற்கியன் eññavaṟkiyaṉ, பெ. (n.)

   சமற்கிருத அறநூலாசிரியருளொருவர் (வேதாரணி. பிரமயாத்திரை.14);; Yajnavalkya, an ancient sage, the author of a code of laws in Sanskrit.

     [Skt. yajnavalkya → த. எஞ்ஞவற்கியன்.]

எஞ்ஞான்றும்

எஞ்ஞான்றும் eññāṉṟum, கு.வி.எ. (adv.)

எக்காலமும்

 always, ever.

     “வழியெஞ்ச லெஞ்ஞான்று மிக (குறள்.44);.

     [எ + ஞான்று + உம்.]

எஞ்தலார்

எஞ்தலார் eñtalār, பெ. (n.)

   புதியவர்; strangers.

     “எஞ்சலார் சொன்ன தெவன்வாழி தோழி” (சிலப்.18, 24);.

     [எஞ்சு + அல்-எஞ்சன்2 + ஆர். எஞ்சல் = மிகுதல், செருக்கு.]

எடகம்

எடகம்2 eḍagam, பெ. (n.)

   செம்மறியாட்டுக்கடா; ram.

     [மேழகம் → ஏழகம் → ஏடகம்.]

எடணை

எடணை eḍaṇai, பெ. (n.)

   ஆசை; ardent desire.

     “ஏடணையு மேவலெழுவாயு முதனூலும்” (சிவதரு. சிவஞானயோ.112);.

     [ஈடனை → ஏடணை (கொ.வ.);.]

எடல்

எடல் eḍal, பெ. (n.)

உள்ளீடு inner content.

   2. கருத்து (திவா.);; meaning, intention, thought.

     [எல் = எழுதல், தோன்றுதல். ஏல் → எள் → எளல் → ஏடல். எடல் = உள்ளே வளர்ந்து வடிவம் பெற்ற உள்ளீடு, வித்து, கருத்து.]

எடார்

 எடார் eṭār, பெ. (n.)

   பரந்தவெளி, வெளியிடம்; plain open field.

தெ. எடாரி.

     [இடை → இடார் → எடார்.]

எடார்வெளி

 எடார்வெளி eṭārveḷi, பெ. (n.)

   வெட்டவெளி; vacant forlorn land.

காடுவெட்டி அந்த இடமெல்லாம் எடார் வெளியாகிவிட்டது. (இ.வ.);.

     [எடார் + வெளி.]

எடு

எடு1 eḍuttal,    4. செ.குவி (v.i.)

   1. உயர்த்துதல்; to take up, raise.

     “பாண்டிலெடுத் பஃறாரை” (திருக்கோ.249);.

   2. தூக்கிப் பிடித்தல்; to hold up எடுக்கப்பட்ட குடைநிழலிலே (கலித்.9,உரை.);.

   3. மேற் கொள்ளுதல்; to undertake, take in hand.

அந்தச் செயலை எடுத்திருக்கிறேன்.

   4. திரட்டுதல்; to recruit.

     “சிலசேனையெடுத் தெழுதிக் கொள்கென்றான்” (திரு விளை.மெய்க்கா.5);.

   5. தெரிந்தெடுத்தல்; to select, choose.

     “எடுத்தணி கையே றிவைளை யார்ப்ப” (திருக்கோ.352);,

   6. விலைக்கு வாங்குதல்; to buy, as in a bazaar, to purchase, as in auction

   7. நீக்குதல்; to remove, take off வண்ணான் ஆடையிலழுக்கெடுப்பான்.

   8. வாயுட்கொள்ளுதல்; to take into the mouth, as fish the bait.

     “தூண்டிலெடுத்த வரால்” (திருக்கோ. 249);.

   9. எடுத்து வளத்தல்;   10. வாயிலெலெடுத்தவரா மிவர்” (திருக்கோ.249);.

   வாயிலெ டுத்தல்; to vomit.

சாப்பிட்ட தெல்லாம் எடுத்துவிட் டான்

   11. தனக்கென எடுத்துக் கொள்ளுதல்; to take to one’s self.

   ம. எடுக்குக;   க. எத்து, எர்பு;   தெ., பட, எத்து;   எரு. யெடுக;   கோத. எட்வ்;   துட. ஒட், குட. எடி, எடிப்;   து. எர்புளி;   கொலா. எத;   நா. எத்த;   பர். எதிப்;   கோண். அத்தானா;   குரு. யெத்த;பிரா. கேபிங்.

     [உல் → எல் → எள் → எடு. எடு = மேலெடு, தூக்கு வெளிப்படுத்து நீக்கு.]

மேலையாரிய மொழிகளில் பெருக வழங்குகின்ற educate, elate, etect, eructate, heave, heaven… முதலிய சொற்ளெல்லாம், எகர ஏகார அடியாய்ப்பிறந்த எழல் அல்லது எடுப்புப் பொருளை உணர்த்துவனவே.

   ஒ.நோ. கலரெடு – to erect a wall. எகரம் அல்லது எடுத்தல் என்னுஞ்சொல் எடுப்பாக (உயரமாக); வளர்த்தல், வெளியே எடுத்தல், வெளியே எடுத்து நடத்தல், வெளியே என்னுங்கருத் துகளை முறையே தழுவும். ஒ.நோ; L educo;

 E educate, to bring up, to draw out the mental powers of, as a child. L educo, E educe, lo draw out;

 L educo, duco(aphesis); lo lead;

 Le ех;

 Gr ec. Ex;

 E ex, out, out of.

 எடு2 eḍuttal,    4. செ.குன்றாவி (v.t.)

   1. சுமத்தல்; to bear, carry, hold.

     “நிலனெடுக் கல்லா வொண்பல் வெறுக்கை” (மதுரைக்.215);.

   2. நிறுத்துதல்; to weigh (in a balance);.

   3. உண்டாக்குதல்; to produce, cause.

     “கெளவை யெடுப்பவள்போல்” (கலித்.109);.

   4. கட்டுதல்;&six to build, raise up, as a wall.

     “உதிரநீராற் சுவரெடுத்து” (தேவா.838);.

   ம. எடுக்குக;   கூ. எத (குழந்தையை இடுப்பில் வைத்தல்);;குவி, எதலி, தெகலி (தோளில் வைத்துத்துக்குதல்);.

     [உல் → எல் → என் → எடு, எல் = சுமத்தல், நிறுத்துதல், உண்டாக்குதல்.]

 எடு3 eḍuttal,    4 செகுன்றாவி (v.t.)

   1. உரத்துச் சொல்லுதல்; to utter in a high pitch of voice.

     “எடுத்தல் படுத்த னலித லுழப்பின்” (நன்,88);.

   2. குரலெடுத்துப் பாடுதல்; to sing in a loud voice.

     “கொடிச்சிய ரெடுத்த வின்குறிஞ்சி” (கம்பரா.சித்திர.24);.

   3. மேம்படுத்து ரைத்தல்; to speak highly.

     “மழைதரு மிவளென….. நங்கையையெடுத்தலும்” (மணி.22,94);.

   4. எடுத்துக் காட்டுதல்; to adduce, as an argument.

உண்மையையெடுத்துச் சொன்னான்.

   5. குறிப்பிடுதல்; to bring in, introduce, as one’s name.

அவன் பெயரை யெடுத்தால பொங்கிக் கொண்டு வருகிறது.

     [உல் → எல் → எள் → எடு. உல் = உரத்துச்சொல்லுதல், பாடுதல் மேம்படுத்துரைத்தல்.]

 எடு4 eḍuttal,    20 செ.கு.வி. (v.i.)

   1. புடைபருத்தல்; to be inflated, as a monkey’s cheeks.

     “மந்தி கவுளெடுக்கச் சுவைத்து” (காசிக்.காசிப்.49);.

   2. மேல்நோக்கியிருத்தல்; to be high, as the forehead, to be prominent, as the nose or ear எடுத்த செவி (பெரும்பாண்.80, உரை.);.

   3. பொருந்துதல்; to be associated with

     “மல்லெடுத்த தோள்” (பாரத.பதினெட்.25);.

   4. மேலெ முந்துவருதல் (படையெடுத்தல்);; to invade ‘எடுத்து வந்து……. வீரபாண்டியனை முடித்தலை கொண்டு’ (S.1.1.iii.214);.

   5. தகுதியாதல்; to be fit proper.

     [உல் → எல் → என் → எடு, உல்=பருத்தல், மேல்நோக்கியிருத்தல், மேலெழுந்துவருதல்.]

எடுகூறு

எடுகூறு eḍuāṟu, பெ. (n.)

   பங்கு பிரித்தல் (சுக்கிர நீதி.12);; partition, a part to be set aside, a surplus (taken by any one beyond his actual share);. (சேரநா.);.

ம. எடுகூறு.

     [எடு + கூறு.]

எடுகூலி

 எடுகூலி eḍuāli, பெ. (n.)

   சுமைகூலி; porterage, hire for carrying a burden.

அவனுக்கு எடுகூலி கட்டாது.

     [எடு + கூலி.]

எடுக்கல்

எடுக்கல் eḍukkal, பெ. (n.)

   1. தூக்குகை; lifting.

     “எடுக்கல் செல்லா துழப்பவன் போல” (கலித்.38);.

   2. அளவிட்டறிகை; conceiving, comprehending.

     “ஞானங்களா லெடுக்க லெழாத வெந்தாய்” (தில்.திருவாய்,2,3,5);.

     [எடு → எடுக்கல்.]

எடுத்தகை

எடுத்தகை eḍuttagai, பெ. (n.)

   1. ஓங்கியகை; raised

 hand

   2. அதிகாரம்: power அவனுக்கு அவ்வளவு

எடுத்தகையா? (இ.வ.);.

க. எத்துகை, எத்து கெய்.

     [எடு → எடுத்த + கை.]

எடுத்தடிமடக்கு

எடுத்தடிமடக்கு eḍuttaḍimaḍakku, பெ. (n.)

   1. ஒருவர் சொன்னதைக் கொண்டே மறுக்கை; confuting a person by using his own arguments.

   2. முன்சென்று தடுக்கை; forestalling a person in word or action in order to thwart him.

   3. இடையிற் றடுத்துப் பேசுகை; interrupting one while he is speaking.

   4. அஞ்சவேண்டிய தற்கு அஞ்சாமை; rashress.

   5 விரைவு (யாழ்.அக.);

 suddenness.

     [எடு + எடுத்து + அடிமடக்கு.]

எடுத்தடிவை-த்தல்

எடுத்தடிவை-த்தல் eḍuttaḍivaittal,    4.செ.கு.வி. (v.i.)

   1. அடிபெயர்த்து நடத்தல்; to raise the foot and step forward, as a child or a feeble person.

   2. பாதத்தைத் தூக்கி வைத்தல்; raising and planting of the foot slowly as do debilitated or sick persons.

   3. தளர் நடையாய் நடத்தல்; taking a leisurely, light walk (சா.அக.);.

     [எடுத்து + அடி + வை.]

எடுத்தன்

 எடுத்தன் eḍuttaṉ, பெ. (n.)

   எருது, பொதிமாடு (யாழ்.அக.);; pack ox.

     [எடு → எடுத்தன். எடுத்தல் = சுமத்தல்.]

எடுத்தபடி

எடுத்தபடி eḍuttabaḍi, கு.வி.எ. (adv.)

   1. உடனே; immediately, at once, promptly.

எடுத்தபடி வா. (இ.வ.);.

   2. முன்னணியமின்றி; extemporaneously, without previous preparation.

ம. எடுத்தபடி.

     [எடுத்த + படி. படி = நிலை.]

எடுத்தமொழி

எடுத்தமொழி eḍuttamoḻi, பெ. (n.)

   1. எடுத்துக்காட்டு; illustration, example (Logic);.

     “ஏதுக்களாலு மெடுத்தமொழியாலும்” (தேவா.1118.5);.

   2. உயர்த்திய குரலில்

   பிறரை அடக்கிப் பேசும் பேச்சு; authoritative or dictative terms.

     [எடு + எடுத்த + மொழி.]

எடுத்தமொழியினெய்தவைத்தல்

 எடுத்தமொழியினெய்தவைத்தல் eḍuttamoḻiyiṉeytavaittal, பெ. (n.)

     [எடுத்த மொழியின் + எய்தவைத்தல்.]

எடுத்தலளவை

எடுத்தலளவை eḍuttalaḷavai, பெ. (n.)

   நிறை (நன்.290,விருத்,);; weight in a scale.

     [எடுத்தல் + அளவை.]

எடுத்தலளவையாகுபெயர்

எடுத்தலளவையாகுபெயர் eḍuttalaḷavaiyākubeyar, பெ. (n.)

   அளவையாகுபெயர் வகை (நன்.290.உரை.);; metonymy, in which weight is used for the article weighed, one of four kinds of alava-y-agu-peyar.

     [எடுத்தல் + அளவை + ஆகுபெயர்.]

எடுத்தலோசை

எடுத்தலோசை eḍuttalōcai, பெ. (n.)

   உயர்த்துக்கூறும் ஓசை; acute accent, sharp tone. முற்படக் கிளந்தவென எடுத்தலோசையாற் கூறவே (தொல்,பொருள்.1. உரை.);.

     [எடுத்தல் _ ஓசை.]

எடுத்தல்

எடுத்தல் eḍuttal, பெ. (n.)

   1.நிறுத்தலளவு; weight measurement by balance.

     “எண்ணலெடுத்தல்” (நன்.368);.

   2. எடுத்தலோசை; acute accent, sharp

 Tone.

     “எடுத்தல் படுத்த னலித லுழப்பின்” (நன்.88);.

   3. வெளியிலெடுத்தல்; to bring out.

     [எடு → எடுத்தல்.]

எடுத்தளவு

எடுத்தளவு eḍuttaḷavu, பெ. (n.)

   ஒரு பழையவரி (S.1.1.i.103);; ancient village cess.

     [எடு → எடுத்து + அளவு.]

எடுத்தாட்சி

 எடுத்தாட்சி eḍuttāḍci, பெ. (n.)

   பயன்படுத்தம், வழக்கு; usage.

     [எடு → எடுத்து + ஆட்சி – எடுத்தாட்சி (எடுத்தாளுதல், பயன்படுத்துதல்);.]

எடுத்தாள்(ளு)-தல்

எடுத்தாள்(ளு)-தல் eḍuddāḷḷudal,    10.செ.குன்றாவி (v.t.)

   1. வழங்குதல்; to use, as utensils;

தேநீர் அருந்தகண்ணாடி குவளையை எடுத்தாளுகிறார்.

   2. மேற்கோள் காட்டுதல்; to quote as an expression.

இவர் திருக்குறளை அடிக்கடி எடுத்தாளுகிறார்.

     [எடுத்து + ஆள்.]

எடுத்தியல்கிளவி

எடுத்தியல்கிளவி eḍuttiyalkiḷavi, பெ. (n.)

   மேற்கோள் காட்டுதல்; illustration.

     “எடுத்தியல் கிளவியோடேதுக் காட்டி” (பெருங்.உஞ்சை.35,143);.

     [எடுத்து + இயல் + கிளவி.]

எடுத்து

 எடுத்து eḍuttu, பெ. (n.)

   சுமை (யாழ்.அக.);; burden.

     [எடு → எடுத்து.]

எடுத்துக்கட்டல்

எடுத்துக்கட்டல் eḍuttukkaḍḍal, பெ. (n.)

   1. தாங்கிப் பேசுதல், சார்பாக நின்று கூறுதல்; support, buttress.

அவனுக்காக இவன் எடுத்துக்கட்டிப் பேசுகிறான் (உ.வ.);.

   2. உயர்த்திக் கட்டுதல்; to bind or tie up at a considerable height.

     [எடுத்து + கட்டல்.]

எடுத்துக்கட்டி

எடுத்துக்கட்டி1 eḍuttukkaḍḍi, பெ. (n.)

   1 கட்டடவகை (E);;எதிரிலிச்சோழன் திருவெடுத்துக்கட்டிலே தன் மிசெய்து (S.I.l.vi.492);.

   2. உயரமாகக் கட்டப்பட்ட இடம்; high or raised structure.

   3. ஆடையை வரிந்து கட்டுதல் (சேரநா);; to tighten the dress around the Waist.

ம. எடுத்துக்கெட்டி.

     [எடு → எடுத்து + கட்டி.]

 எடுத்துக்கட்டி2 eḍuttukkaḍḍi, பெ. (n.)

   1. சுவரின் தலை வரிக்கட்டு; coping, covering course of a wall.

   2. கைப்பிடிச் சுவர் (I.m.p.Pd.163);; parapet wall.

     [எடுத்து + கட்டி.]

எடுத்துக்கட்டி உழுதல்

 எடுத்துக்கட்டி உழுதல் eḍuddukkaḍḍiuḻudal, பெ. (n.)

   ஆழமில்லாமல் உழுவது; ploughing at surface level.

     [எடுத்து + கட்டி + உழுதல்.]

எடுத்துக்கட்டிப்பந்தல்

 எடுத்துக்கட்டிப்பந்தல் eḍuttukkaḍḍippandal, பெ. (n.)

   பந்தல் வகை; a kind of pandal.

     [எடுத்து + கட்டி + பந்தல்.]

எடுத்துக்கட்டு

எடுத்துக்கட்டு1 eḍuddukkaḍḍudal,    5.செ.கு.வி. (v.i.)

   1. உயரத்துக்கட்டுதல்; to raise to a higher level.

     “தளவரிசை மட்டத்துக்கு மேலேயும் எடுத்துக்கட்டி” (கோயிலொ.3);.

   2. இல்லாத செயலைத் தொடுத்தல் (j);; to fabricate, invent.

   3. தாலியை யறுத்துக் கட்டுதல்; to remarry, as a widow.

     [எடுத்து + கட்டு.]

 எடுத்துக்கட்டு2 eḍuttukkaḍḍu, பெ. (n.)

   1. கட்டுக்கதை (யாழ்ப்.);; fable.

   2. புதுப்ஹபனைவு (வின்.);; invention, coning as of a word.

   3. பின்னின மயிரைச் சுருட்டிக்கட்டும் கட்டு; coil of braided hair on the back or top of the head.

     [எடுத்து + கட்டு.]

எடுத்துக்காட்டல்

எடுத்துக்காட்டல் eḍuttukkāḍḍal, பெ. (n.)

   1. சான்று காட்டுகையாகிய ஓர் உத்தி (நன்.14);; citing examples

எடுத்துக்கோள்

எடுத்துக்கோள் eḍuttukāḷ,    1. சான்று; example.

     “எடுத்துக் கோளும் வாய்ந்தன்று” (ஞானா.51.15);.

   2. எடுத்துக்கோள்வரி பார்க்க;see eduttu-k-kolvari.

     “எடுத்துக்கோளை யிசைக்குங் காலை” (சிலப். 5.108.உரை.);.

     [எடுத்து + கோள்.]

எடுத்துக்கோள்வரி

எடுத்துக்கோள்வரி eḍuttukāḷvari, பெ. (n.)

   கையற வெய்தி வீழ்தலைக் கண்டு பிறர் எடுத்துக்கொள்ளும்படி நடிக்கும் நடம்; theatrical action of swooning in extreme anguish in order to be listed up by others.

     “அடுத்தடுத்தலர்முன் மயங்கிய மயக்க மெடுத்தவர் தீர்த்த வெடுத்துக் கோள்வரியும்” (சிலப்.8.108);.

     [எடுத்து + கோள் + வரி.]

எடுத்துச்செலவு

எடுத்துச்செலவு eḍuttuccelavu, பெ. (n.)

   படையெடுத்துச் செல்லுகை; leading forth an army with a view to invasion

     “மண்ணசை வேட்கையால் எடுத்துச் செலவு புரிந்த வேந்தன்மேல்” (தொல். பொருள்.புறத்.1.இளம்பூ.);.

     [எடுத்து + செலவு.]

எடுத்துச்சொல்(லு)-தல்

எடுத்துச்சொல்(லு)-தல் eḍudduccolludal,    8.செ.குன் நாவி. (v.i.)

   1. விளக்கமாகக் கூறுதல்; to explain cleary.

   2. சிறப்பித்துக் கூறுதல்; to extol, eulogize.

   3. அறிவுரை சொல்லுதல்; to advise.

ம. எடுத்து பரயுக.

     [எடுத்து + சொல்.]

எடுத்துத்தொடு-த்தல்

எடுத்துத்தொடு-த்தல் eḍuttuttoḍuttal,    17.செ.குன் தாவி. (v.t.)

   1. இல்லாததைக் கட்டிக்கூறுதல்; to tabricate, concoct.

   2. பொய் வழக்குப் பிணைத்தல்; to invent, as a cause of quarrel or litigation.

ம. எடுத்து நடத்துக.

எடுத்துநிலை

எடுத்துநிலை eḍuttunilai, பெ. (n.)

   போயினதை மீட்டும் நிலை நிறுத்துகை; rehabitation.

     “எடுத்து நிலையரிதென வேதுக் காட்டி” (பெருங்.மகத.19,89);.

     [எடுத்து + நிலை.]

எடுத்துப்பிடி-த்தல்

எடுத்துப்பிடி-த்தல் eḍuttuppiḍittal,    4. செ.குன்றாவி (v.t.)

   1. தூக்கிப்பிடித்தல்; lifting and holding aloft.

   2. குற்றத்தைப் பெரிதாக்கித் தூற்றுதல்; to hold up and expose to view, as little faults.

   3. திடப்படுத்துதல்; to encourage, strengthen, establish.

     [எடுத்து + பிடி.]

எடுத்துப்பேசு-தல்

எடுத்துப்பேசு-தல் eḍudduppēcudal,    5. செ.குன்றாவி. (v.t.)

   1. உரத்துப்பேசுதல்; taking loudy.

   2. மற்றவர் வழக்கினை வழக்கறிஞன் எடுத்துப்பேசுதல்; to speak as an advocate, pleading on behalf of a person.

   3. ஒரு செய்தியைக் குறித்துப் பேசுதல்; to treat of speak on a subject.

   4. புகழ்ந்து கூறுதல்; to praise, commonly one who is absent.

   5. பிறர் குற்றங்களைச சுட்டிக்காடடித் தூற்றுதல்; to make open rebuke pointing the mistakes or faults one by one.

ம. எடுத்துப்பரயுக.

     [எடுத்து + பேக.]

எடுத்துப்போடு

எடுத்துப்போடு1 eḍudduppōḍudal,    14. செ.குன்றாவி. (v.t.)

   1. நீக்கி விடுதல்; to deprive of office, turn out of situation, remove.

அவன் பெயரைப் பட்டியினின்று எடுத்துப்போடு. (உ.வ.);.

   2. திடுக்கிடச் செய்தல்; to state அந்தக் கடுஞ்செய்தி என்னை எடுத்துப் போட்டது.

     [எடுத்து + போடு.]

 எடுத்துப்போடு2 eḍudduppōḍudal,    20. செ.கு.வி. (v.i.)

   விலாப் புடைக்க மூச்சு வாங்குதல்; to alternate contraction and relaxation, as of intercoastal muscles in children affected with sparm.

குழந்தைக்கு விலா வெடுத்துப்போடுகிறது. (உ.வ.);. (சா.அக.);.

     [எடுத்து + போடு.]

எடுத்துமொழி-தல்

எடுத்துமொழி-தல் eḍuddumoḻidal,    2. செ.குன்றாவி. (v.i.)

   விளங்கச் சொல்லுதல்; to explain clearly.

     “இருந்தவற் கெல்லா மெடுத்து மொழிந்தான்” (சீவக.518);.

     [எடுத்து + மொழி.]

எடுத்துரை-த்தல்

எடுத்துரை-த்தல் eḍutturaittal,    4. செ.குன்றாவி, (v.t.)

எடுத்துமொழி-தல் பார்க்க;see eduttumoll.

     “விழும நிலை யெடுத்துரைப்பினும்” (தொல்பொருள்.39);.

     [எடுத்து + உரை.]

எடுத்துரைமலைவு

எடுத்துரைமலைவு eḍutturaimalaivu, பெ. (n.)

   செய்யுட் குற்றங்களுள் ஒன்று (யாப்.வி.525);; rhet, defect in poetry. (செ.அக.);.

     [எடுத்து + உரை + மலைவு.]

எடுத்துவளர்-த்தல்

எடுத்துவளர்-த்தல் eḍuttuvaḷarttal,    4. செ.குன்றாவி (v.t.)

   பிறர் குழந்தையை ஊட்டி வளர்த்தல்; to bring up, as a destitute child.

ம. எடுத்து வளர்த்துக.

எடுத்துவாலன்

 எடுத்துவாலன் eḍuttuvālaṉ, பெ. (n.)

   நீண்ட வாலுள்ள & குருவி; long tail bird.

எடுத்துவிடல்

எடுத்துவிடல் eḍuttuviḍal, பெ. (n.)

   1. வேரோடு களைதல்;   2. நோயைக் கொஞ்சமேனு மில்லாமல் குணப்படுத்தல்;     [எடுத்து + விடல்.]

எடுத்துவிடு-தல்

எடுத்துவிடு-தல் eḍudduviḍudal,    20. செ.கு.வி. (v.i.)

   1. படையெடுத்தல்; to lead a compaign, conduct on expedition.

     “காங்கேயன் தெற்கே யெடுத்துவிட்ட போது” (தில்.கண்ணிநுண்.3.வியா.);.

   2. படை நீங்குதல் (பு.வெ.6.30,உரை);; to withdraw.

     [எடுத்து + விடு.]

எடுத்தெறி-தல்

எடுத்தெறி-தல் eḍuddeṟidal,    2. செகுன்றாவி. (v.t.)

   1. பறை முழக்குதல்; to beat, as a drum.

   2. பொருட்படுத்தாமை; to disregard one’s advice or commands.

நான் சொன்னதை அவன் எடுத்தெறிந்துவிட்டான். (உ.வ.);.

ம. எடுத்தெறியுக.

     [எடுத்து + எறி.]

எடுத்தேத்து

எடுத்தேத்து eḍuttēttu, பெ. (n.)

   புகழ்ச்சி; praise, sulogy.

     “கையறியா மாக்க ளிழிப்பு மெடுத்தேத்தும்” (நாலடி.163);.

     [எடுத்து + ஏத்து.]

எடுத்தேறி

 எடுத்தேறி eḍuttēṟi, பெ. (n.)

   மிகுமுயற்சி; over effort.

மெனக்கெட்டு இதுக்கென்றே எடுத்தேறிப் போகனும் அங்கெ. (இ.வ.);.

     [எடுத்து + ஏறி.]

எடுத்தேறு

எடுத்தேறு eḍuttēṟu, பெ. (n.)

   எடுத்தெறிகை; beating as of a drum.

     “எடுத்தே றேய கடிப்புடை யதிரும்” (பதிற்றுப்.34);.

     [எடுத்து + ஏறு.]

எடுத்தேற்றம்

 எடுத்தேற்றம் eḍuttēṟṟam, பெ. (n.)

   குறிப்பின்மை (வின்.);; random chance.

     [எடுத்து + ஏற்றம்.]

எடுத்தேற்றி

எடுத்தேற்றி eḍuttēṟṟi, பெ. (n.)

   1. பொருட்படுத்தாமை; disregard,

அவன் என்னை எடுத்தேற்றியாய்ப் பேசினான். (இ.வ.);.

   2. இனக்கமின்மை (வின்.);; discrepancy, discord.

     [எடுத்து + ஏற்றி.]

எடுத்தோத்து

எடுத்தோத்து eḍuttōttu, பெ. (n.)

   1. எடுத்து ஒதுகை; exposition.

     “எடுத்தோத்துரையின்” (பெருங்.ம.கத. 15,11);.

   2. எடுத்துக்கூறும் நெறி; expositive statement.

     “இந்நூலுள் எடுத்தோத்தே இலேசேயென்று இவற்றான் முடியாது நின்றனவெல்லாம்” (இறை.59.உரை.);.

     [எடுத்து + ஒத்து.]

எடுபடு

எடுபடு1 eḍubaḍudal,    20. செ.கு.வி. (v.i.)

.

   1. நீக்கப்படுதல்; to be taken out be abolished.

   2. நிலைபெயர்தல் (வின்.);; to be detached, displaced, dislodged.

குடியெல்லாம் எடுபட்டுப் போயிற்று (இ.வ.);

   3. அதிர்தல்; to be stirred

அவள் பேச்சினால் அய லெல்லா மெடுபடுகின்றது (இ.வ.);.

   4. வழக்கில் தோற்றுப் போதல்; to be overcome in argument;

 refuted. உன்னால் நான் எடுபட்டுப் போவேனோ?

   5. விற்றழிதல்; to be spent, sold out.

வந்த சரக்கெல்லாம் எடுபட்டுவிட்டன.

   6. கைக்கொள்ளப்படுதல்; to be taker over.

வண்டியிலிருந்து சரக்கெல்லாம் எடுபட்டு விட்டன.

   7. மேம்படுதல்; to be exalted or elevated.

அவன் பணத்தினால் எடுபடுகிறான். (இ.வ.);.

   ம. எடுபெடுக;தெ. எடுபடு (பிரித்தல்);.

     [எடு + படு.]

 எடுபடு2 eḍubaḍudal,    20. செ.கு.வி (v.i.)

   1. திக்கற்றுப் போதல்; to become destitute.

   2. முறைதவறுதல்; to violate the rules of conduct. (செ.அக.);.

   ம. எடுபெடுக;தெ. எடபடு (to separate);.

     [எடு + படு.]

எடுபட்ட

 எடுபட்ட eḍubaḍḍa, பெ.எ. (adj.)

   அழிந்துபோன, தொலைந்த; lost, destroyed, removed.

எடுபட்ட சிறுக்கி (வசவு);. அந்தக் கூட்டம் எடுபட்டுப் போச்சி. (வட்.வழ.சொல்லக.);.

எடுபட்டவன்

 எடுபட்டவன் eḍubaḍḍavaṉ, பெ. (n.)

ஒழுக்கக் கேட்டால் கூட்டத்திலிருந்து விலக்கப்பட்டவன் (இ.வ.);:

 one who has been expelled from society for violation of its rules;

 outcaste.

     [எடு + பட்டவன்.]

எடுபாடு

எடுபாடு1 eḍupāḍu, பெ. (n.)

   1. குலைவு; degeneration.

   2. நிலையின்மை; instability.

     [எடு + பாடு.]

 எடுபாடு2 eḍupāḍu, பெ. (n.)

   1. புகழ்ச்சி, சீர்மை; renown, eminence, notoriety.

   2. நிமிர்வு; uprightness.

   3. பகட்டு; gaiety in dress, ostentation, as in a woman.

     [எழு → எடு → பாடு.]

எடுபிடி

எடுபிடி eḍubiḍi, பெ. (n.)

   1. முயற்சி. (சங்.அக.);; great activity.

   2. விருது; appendage.

   3. மதிப்பு; respect.

   4. துணைப் பணியாளா; attendants.

ம. எடுபிடீன்னு.

     [எடு + பிடி.]

எடுப்பானவன்

எடுப்பானவன் eḍuppāṉavaṉ, பெ. (n.)

   1. தோற்றப் பொலிவுள்ளவன்; conspicuous personality.

   2. இடம் பக்காரன் (வின்.);; one who lives above his rank or circumstances.

   3. செருக்கன்; haughty man.

     [எடுப்பு + ஆனவன்.]

எடுப்பார் பிடிப்பார்

 எடுப்பார் பிடிப்பார் eḍuppārpiḍippār, பெ. (n.)

   நோயாளிக்குத் துணையாளர்; persons attending or waiting upon a patient.

     ‘எடுப்பார் பிடிப்பாரிருந்தால் இளைப்புங் களைப்பு மெத்த வுண்டு’ (சா.அக.);.

     [எடுப்பார் + பிடிப்பார்.]

எடுப்பார்கைப்பிள்ளை

 எடுப்பார்கைப்பிள்ளை eḍuppārkaippiḷḷai, பெ. (n.)

   யாவர்க்கும் வசப்படக்கூடியவன்; simpleton;

 one who is easily guided by others, as an infant in arms.

     [எடுப்பார் + கை + பிள்ளை.]

எடுப்பு

எடுப்பு1 eḍuppu, பெ. (n.)

   இசைக்கிளை ஐந்தனு ளொன்று (பெரியபு.ஆனாய.26,உரை.);; one of five Isai-k-kilai.

ம. எடுப்பு.

     [எடு → எடுப்பு.]

 எடுப்பு2 eḍuppu, பெ. (n.)

   1. உயரம்; elevation வீடு எடுப்பாயிருக்கிறது (உ.வ.);.

   2. ஏற்றம்; superiority.

     “ஈடும் எடுப்புமி லீசன்” (திவ்.திருவாய்.1,6,3);.

   3. கண்டெடுக்கும் புதையல்; buried treasure.

     ‘இவன் எடுப்பெடுத்தான்’ (ஈடு.8.13);.

   4. வழிமுறை; device. plan, scheme.

அவன் நல்ல எடுப்பு எடுத்தான் (இ.வ.);.

   5. தொடங்கின செயல்; undertaking. எடுத்த எடுப்பு விடான். (இ.வ.);.

   6. இறுமாப்பு; Pride. எடுப்பாய்ப் பேசுகிறவன்.

   7. மேட்டிமை; high pretention, style of living above one’s rank or circumstances.

எடுப்பாவனவன் அவன் (உ.வ.);

   8. பழிப்பு; abusive language, censure.

   9. நால்வகையான தாளத் தொடக்கமுறை; time when the song is begun as compared with the time when talam begins of four kinds.

   10. விளைநிலப்பரப்பு; plot of cultivated land.

   11. தத்து; adoption.

ம. எடுப்பு.

கிழங்கெடுத்தல், முள்ளெடுத்தல் முதலிய வழக்குகள் வெளிப்படுத்தற் பொருளைக் குறித்தல் காண்க. Of., E., Gr. epl, Sans ap. L ob, on. ஆங்கிலத்தில் Elevate, erect, edity, educale, elicit போன்ற சொற்களும். E. ex, முதலிய முன்னொட்டுகளும், ஏகார முதனிலையைக் கொண்டு மேற்படுத்தல் எடுத்தல் வெளிப்ப டுத்தல் முதலிய பொருள்களை உணர்த்தல் காண்க. (க.வி.81);.

 எடுப்பு3 eḍuppudal,    5. செ.குன்றாவி (v.t.)

   1. துயிலெ முப்புதல்; awaka rouse from sleep.

     “ஊர்துயிலெடுப்பி” (சிலப்.4.79);.

   2. இசை யெழுப்புதல்; to raise, produce, as harmonious sounds from an instrument.

     “மகரவீணைத் தெள்விளி யெடுப்பி” (சீவக.608);.

   3. போக்குதல்; to dispel, drive away, banish.

     “அரவம் வந்தெடுப்புமே” (கலித்,70);.

     [எழுப்பு → எடுப்பு.]

எடுப்புச்சாப்பாடு

எடுப்புச்சாப்பாடு eḍuppuccāppāḍu, பெ. (n.)

   1. உணவ

   கத்திலிருந்து வீட்டிற்கு எடுத்துவரும் உணவு; meal taken from a hotel to the residence of a person (Mod);

   2. எடுப்புச் சோறு பார்க்க;see eduppu.c-corn.

     [எடுப்பு + சாப்பாடு.]

எடுப்புச்சாய்ப்பு

எடுப்புச்சாய்ப்பு eḍuppuccāyppu, பெ. (n.)

   1. ஒப்புரவான நடை; gentle and obliging behaviour consistent with one’s dignity.

   2. உயர்வு தாழ்வு; ups and downs.

     [எடுப்பு + சாய்ப்பு.]

எடுப்புச்சாய்வு

 எடுப்புச்சாய்வு eḍuppuccāyvu, பெ. (n.)

எடுப்புச் சாய்ப்பு பார்க்க;see eduppu-c-cayppu. (ஆ.அக.);.

     [எடுப்பு + சாய்வு.]

எடுப்புச்சீட்டு

எடுப்புச்சீட்டு eḍuppuccīḍḍu, பெ. (n.)

   1. குலுக்குச் சீட்டு; chit fund conducted on the lottery system. [Tinn.).

   2. ஏலச்சீட்டு; chit fund conducted on the auction system. (Madr.); (செ.அக.);.

     [எடுப்பு + சீட்டு.]

எடுப்புச்சோறு

 எடுப்புச்சோறு eḍuppuccōṟu, பெ. (n.)

விருந்திற்கு வரவியலாத உறவினருக்கு அனுப்பும் உணவு (Tinn.);,

 meal sent to a relative who is unable to attend a special dinner.

     [எடு → எடுப்பு + சோறு.]

எடுப்புண்(ணு)-தல்

எடுப்புண்(ணு)-தல் eḍuppuṇṇudal,    12. செ.கு.வி. (v.i.)

   எடுபடுதல்; to be taken up, absorbed, engrossed

     “அவன் வைலட்சண்யத்திலே யெடுப்புண்டு பின்பற்றித் திரிகிற இவளை” (திவ்.பெரியாழ். 3,7,5, வ்யா, பக்.713);.

     [எடுப்பு + உண்.]

எடுப்புத் தண்ணீர்

 எடுப்புத் தண்ணீர் eḍupputtaṇṇīr, பெ. (n.)

   நடவு செய்த பின் விடப்படும் முதல் தண்ணிர்; first watering after transplanting in the field.

     [எடுப்பு + தண்ணி.]

எடுப்புத்தேர்

 எடுப்புத்தேர் eḍupputtēr, பெ. (n.)

   சுமந்து செல்லப்படும் தேர் (வின்);; portable car for the conveyance of an idol on men’s shoulders.

     [எடுப்பு + தேர்.]

எடுப்புப் பிள்ளை

எடுப்புப் பிள்ளை eḍuppuppiḷḷai, பெ. (n.)

   1. கமுக்கமாக மாற்றி வைக்கப்பட்ட பிள்ளை; child substituted by trick in place of the geniune child.

   2. கண்டெடுத்த பிள்ளை; child found without a parent or anyone to take care for it, foundling.

   3. கைவிடப்பட்ட பிள்ளை; child left winout resources – destitute child.

   4 வாங்கி வளர்த்த பிள்ளை; child received in adoption and treated as one’s own child – adopted child. (சா.அக.);.

     [எடுப்பு + பிள்ளை.]

எடுப்புழவு

 எடுப்புழவு eḍuppuḻvu, பெ. (n.)

   மானாவாரியில் விதைப்பதற்கு முன்பு உழும் உழவு; preseasonal

 ploughing of the rainfed arable land.

     “எட்டு உழவு போட்டாலும் ஒரு எடுப்பொழவு போடுறதுக்குக் காணாது” (சொலவம்);.

     [எடுப்பு + உழவு.]

எடுப்பெடு-த்தல்

எடுப்பெடு-த்தல் eḍuppeḍuttal,    4. செ.கு.வி. (v.i.)

   1. ஒரு வழிவகை மேற்கொள்ளுதல்; to contrive a way, devise a plan.

   2. படையெடுத்துப் பொருதல்; to lead an army and fight.

     “எடுப்பெடுத்துய்ய வென்னா” (சீவக.450);.

   3. அரியதை முயலுதல் (யாழ்.);; to attempt the impossible.

   4. செருக்குக் கொள்ளுதல்; to put on airs.

     [எடுப்பு + எடு.]

எடுவு-தல்

எடுவு-தல் eḍuvudal,    5. செ.குன்றாவி. (v.t.)

   எடுத்தல்; to hold up

     “வரைகுடையெடுவிய நெடியவர்” (திவ்.பெரி யதி. 8,7,3);.

     [எடு + உ → எடுவு.]

எடை

எடை1 eḍai, பெ. (n.)

   1. துயிலெழுப்புதல்; rousing one from sleep.

     “துயிலெடைநிலை” (தொல்.பொருள்.91);.

   2. மிகுதல்; lengthening, increasing அளபெடை (இலக்.);.

     [ஏ → ஏல் → எல் → எள் → எடு → எடை.]

 எடை2 eḍai, பெ. (n.)

   1. நிறுக்கை. (வின்.);; weighing

   2. நிறையளவு; standard weight.

   3. 25 பலங்கொண்ட நிறுத்தலளவு; measure of weight = 25 palams.

   4. விறகின் நிறையளவு (c.g.);; weight for weighing firewood = 54 lbs.

   ம. எட;க., தெ. எத்து.

     [எடு → எடை.]

எடைகட்டு

எடைகட்டு1 eḍaigaḍḍudal,    5. செ.கு.வி. (v.i.)

   பாலில் நீர்சேர்த்தல்; to dilute milk with water.

இன்று பாலில் எவ்வளவு எடைகட்டப் போகிறீர். (மதுரை.வ.);.

மறுவ. எடைபோடுதல் (சென்னை.வ.);

     [எடை + கட்டு. எடை = அளவு.]

பாலின் அளவுக்குச் சமமாக நீர் கலக்கும் முறை எடை கட்டுதல் எனப்பட்டது. பாலின் அளவுக்கு இரண்டு எடை கட்டு, மூன்றெடை கட்டு என்பன முறையே. இருமடங்கு மும்மடங்கு எனப் பொருள்படும்.

 எடைகட்டு2 eḍaigaḍḍudal,    5. செ.குன்றாவி. (v.t.)

   1. நிறுத்தல்; to weigh.

   2. நிறுக்கும் பொருளின் அடிக்க லத்தினை நிறுத்துக் கொண்டு எடை போடுதல்; to allow for the weight of the receptacle while weighing the contents with the receptacle.

     [எடை + கட்டு.]

எடைக்கட்டு

 எடைக்கட்டு eḍaikkaḍḍu, பெ. (n.)

   நிறுக்கப்படும் பொருளுக்கு அதைத்தாங்கும் கலத்தின் கழிவு நிறை; allowance made for the weight of a receptacle before weighing its contents.

     [எடை + கட்டு.]

எடைக்கெடை

 எடைக்கெடை eḍaikkeḍai, பெ. (n.)

   நிறைக்கு நிறை. (வின்.);; like weight even weight.

     [எடை + கு + எடை.]

எடைபாகம்

எடைபாகம் eḍaipākam, பெ. (n.)

   1. நிறுத்தலின் முறை; the process of weighing.

   2. இராம தேவர்

   செய்தவோர் ஊத (வாத); நூல்; treatise on alchemy in Tamil compiled by Ramadeva, a Siddha. (சா.அக.);.

     [எடை + பாகம்.]

எடைபோடு-தல்

எடைபோடு-தல் eḍaipōḍudal,    20. செ.கு.வி. (v.i.)

   1. பொருள்களை எடையிடுதல்; to weigh as measure.

   2. பாலில் நீர் கலத்தல்; to dilute milk with water.

பாலில் எடைபோட்டாயா? (சென்னை.வ.);.

     [எடை + போடு.]

எடைவரி

 எடைவரி eḍaivari, பெ. (n.)

   எடைகல்லின்மேல் வாங்கப்படும் பழைய அரசிறை. (கல்வெட்டு.);; ancient tax on weights.

ம. எடவரி.

     [எடை + வரி.]

எடைவாய்

எடைவாய்1 eḍaivāy, பெ. (n.)

எடைவரி பார்க்க;see edaivari.

     [எடை + வாய்.]

 எடைவாய்2 eḍaivāy, பெ. (n.)

   எடையின் அளவுக்குறி; mark or number on measure of weights. (ஆ.அக.);.

     [எடை + வாய்.]

எட்கசி

எட்கசி eṭkasi, பெ. (n.)

எள்ளாற் செய்யப்பட்டதே

உணவு, எள்ளுருண்டை (சிலப்.12.37.உரை);. ca

 prepared with sesame seed.

     [எள் + கசி.]

எட்கசிவு

எட்கசிவு eṭkasivu, பெ. (n.)

எட்கசி பார்க்க. (சில

   5-68, உரை.);see etkasi.

     [எள் + கசிவு.]

எட்கடை

 எட்கடை eḍkaḍai, பெ. (n.)

   எட்கிடை பார்க்க; s

 et-kidai.

     [எள் + கிடை – எட்கிடை → எட்கடை.]

எட்கிடை

எட்கிடை eḍkiḍai, பெ. (n.)

   எள்ளளவு இடம்; spa occupied by a sesame seed.

     “எட்கிடை… மாத்திரை வெளிவிட் டிழைநூல்கற்றி” (கடம்ப.பு.இல்லாசங்கிர 476);.

     [எள் + கிடை. கிடை = கிடத்தற்குரிய இடம்.]

எட்கிடை, எள்ளிடை, எட்கவு, எள்ளளவு என்னும் சொற்க மிகக் குறுகிய அடிப்படை நீட்டலளவு குறித்தவை.

எட்கை

 எட்கை eṭkai, பெ. (n.)

   தென்னை (சங்.அக.);; coco-palm.

த.வ. ஏடகம்

எட்கோது

 எட்கோது eṭātu, பெ. (n.)

   எள்ளின் மேற்றோ (சங்.அக.);; sesame husk,

எட்சத்து

எட்சத்து eṭcattu, பெ. (n.)

   நல்லெண்ணெய் (தைல தைல.134);; oil extracted from sesame.

     [எள் + அத்து.]

எட்சம்

 எட்சம் eṭcam, பெ. (n.)

   ஈருள்ளி; onion.

எட்சிணி

 எட்சிணி eṭciṇi, பெ. (n.)

   இயக்கி, ஒரு வகை பெண் பேய்; kind of female demon.

     [Skt. yaksini → த. எட்சிணி, யட்சிணி.]

எட்சித்தோசம்

எட்சித்தோசம் eṭcittōcam, பெ. (n.)

   குழந்தைகட்கு வரும் ஒரு நோய் (பாலவா.62);; an etraciating disease of children.

     [எட்சி + தோசம்.]

     [Skt. dosam → த. தோசம்.]

இந்நோய் குழந்தைகளுக்குக் குருதியில் கொதிப்புக் கண்டு, கண்ணிற் பீளைகட்டி, உடல்வற்றி, கனல்மீறி, மயங்கிக் கிடக்கச் செய்யும். (சா.அக.);.

எட்சினி

எட்சினி eṭciṉi, பெ. (n.)

   1. ஒரு பெண் பேய் (பிசாசு);; a demoners or a female friend.

   2. ஒரு மாயக்கலை (சால வித்தை);; a magic performed with the aid of a female demon, attached to the service of Durga or Kali.

இது அழகி பெண் போல் தோன்றி, நர மனிதருடன் புணர்ச்சி செய்வதாகக் கருதப்படுகிறது.

எட்சோறு

 எட்சோறு eṭcōṟu, பெ. (n.)

   எள்ளிட்டு ஆக்கிய சோ (யாழ்.அக.);; boiled rice mixed with powdered sesam seeds.

ம. என்ச்சோறு.

     [எள் + சோறு.]

எட்ட

 எட்ட eṭṭa,    கு.வி.எ. (adv.) சேய்மையாக; far of furth

 away, out of the way. எட்டநில் (உ.வ.);

     [எ → எட்டு → எட்ட ஏ → எ (உயரம், நீட்சி, தொலைவு]

எட்டக்கட்டுத-தல்

எட்டக்கட்டுத-தல் eṭṭakkaṭṭudadal,    5.செ.கு.வி. (v.i.)

   நெருங்கி வாராதிருத்தல்; to keep away, hold of

மழை எட்டக் கட்டிவிட்டது (இ.வ.);.

     [எட்ட + கட்டு.]

எட்டக்கரம்

எட்டக்கரம் eṭṭakkaram, பெ. (n.)

   திருமால் வழிபா டிற்கான எட்டெழுத்தாலாகிய மந்திரம்; manta

 prayer of eight syllables in honour of Visnu.

     “அரங்க னெட்டக்கரமே” (அஷ்டப்.திருவரங்கத்தந்.27);.

   2. எட் டெழுத்து பார்க்க;see etteluttu.

     [எட்டு + அக்கரம்.]

எட்டடிச்சுவடன்

 எட்டடிச்சுவடன் eḍḍaḍiccuvaḍaṉ, பெ. (n.)

எட்டடி விரியன் பார்க்க;see ettadi-viriyan.

ம. எட்டடிச்சுவடன்.

     [எட்டு + அடி + கவடன்.]

எட்டடிப்பறவை

எட்டடிப்பறவை eḍḍaḍippaṟavai, பெ. (n.)

   சிம்புள்; fabled eight-footed bird.

     “எட்டடிப் பறவை மூக்கிடையுரிஞ்சிடும்” (சேதுபு.கந்த:58);.

     [எட்டு + அடி + பறவை – எட்டடிப்பறவை. தொள்முது காலத்தில் எட்டடி நீளமுள்ள கொடிய பறவை இருந்திருக்க லாம் எட்டடியை எட்டு கால்களாகப் பிற்காலத்தார் பிறழக் கருதி எண்காற்புள் எனப் புதுச்சொல் படைத்தது ஒவ்வாத கற்பனையாகும்.]

எட்டடிமான்

 எட்டடிமான் eḍḍaḍimāṉ, பெ. (n.)

எண்கால் வருடை

பார்க்க;see enkal-varudai.

ம. எட்டடிமான்.

     [எட்டு + அடி + மான்.]

எட்டடிவிரியன்

 எட்டடிவிரியன் eḍḍaḍiviriyaṉ, பெ. (n.)

   விரியன் பாம்பு வகை; a viper.

ம. எட்டடிவிரியன்.

     [எட்டு + அடி, விரியன், கடித்ததும் எட்டடி போதற்கு முன் ஆளைக் கொன்றுவிடும் நச்சுத் தன்மை வாய்ந்தது என்று கருதப்பட்டதால் பெற்றபெயர் என்பர். எட்டடி நீளம் குறித்த தாகலாம்.]

எட்டன்

எட்டன்1 eṭṭaṉ, பெ. (n.)

எட்டமன் பார்க்க;see ettaman

     “வேங்கடேசரெட்டன்” (தனிப்பா.1314,1);.

     [எட்டமன் → எட்டன்.]

 எட்டன்2 eṭṭaṉ, பெ. (n.)

   மூடன் (இ.வ.);; boor, fool.

   க. எட்ட;தெ. எட்டெ.

     [இழுதை → எழுதை → எட்டன்.]

     [எட்டன் + மட்டம்.]

எட்டன்மட்டம்

எட்டன்மட்டம் eṭṭaṉmaṭṭam, பெ. (n.)

   16. உரை.); time-measure in music.

     [எட்டன் + மட்டம்.]

எட்டமன்

எட்டமன் eṭṭamaṉ, பெ. (n.)

   திருநெல்வேலி மாவட்டம் எட்டையபுரத்து நிலக்கிழாரின் பட்டப்பெயர்; title of the Zamindars of Elaiyapuram in the Tinnevelly District.

     “குமார வெட்டமனைச் சேர” (தனிப்பா.1317:7);

     [எட்டயபுரம் → எட்டம் → எட்டமள்.]

எட்டம்

எட்டம்1 eṭṭam, பெ. (n.)

   1. உயரம், தொலைவு

 height, distance.

   2. நீளம்; length.

     “பின்பு கொண்டுவந்திணைக்க எட்டம் போராமையாலே” (ஈடு.4.1.5);.

   க. எத்தர; E height.

     [எண் → எட்டு + எட்டம்.]

 எட்டம்2 eṭṭam, பெ. (n.)

   அடைதற் கெளிதாந்தன்மை; accessibility.

     [அண் → அட்டு → எட்டு → எட்டம்.]

எட்டம்பற்று-தல்

எட்டம்பற்று-தல் eṭṭambaṟṟudal,    5.செ.குன்றாவி. (v.t.)

   கிடைத்தல் (யாழ்.அக.);; to be available. (செ.அக.);.

     [எட்டம் + பற்று.]

எட்டர்

 எட்டர் eṭṭar, பெ. (n.)

   அரசனுக்கு நாழிகைக் கணக்குக் கூறும் மங்கலப்பாடகர் (திவா.);; panegyrists in ancient royal households whose duty it was to tell the hours to the king.

     [எடு → ஏட்டர் → எட்டர்.]

எட்டவிடு-தல்

எட்டவிடு-தல் eḍḍaviḍudal,    18.செ.குன்றாவி. (v.t.)

   1. பிறரைக் கொண்டு செய்தி தெரிவித்தல்; to communicate, inform.

அவனுக்கு இந்தச் செய்தியை எட்டவிடு.

   2. பரப்புதல்; to spread over.

     “எட்டவிட்ட விடுமண லெக்கர் (தேவா,360,8);.

     [எட்ட + விடு.]

எட்டாக்கை

 எட்டாக்கை eṭṭākkai, பெ. (n.)

   தொலைவான இடம்; distant place, place out of reach.

அவன் எட்டாக்கையில் இருக்கிறான். (இ.வ.);.

     [எட்டு + ஆ + கை – எட்டாக்கை. ‘ஆ’ எ.ம.இ.தி.]

எட்டாமாறல்

 எட்டாமாறல் eṭṭāmāṟal, பெ. (n.)

எட்டாங்காய்ச்சல்

பார்க்க (சா.அக.);;see estan-kayccal.

எட்டாமிடம்

 எட்டாமிடம் eḍḍāmiḍam, பெ. (n.)

கோள்களின் எட்டாம்

   இடம்; eighth house of the zodiac (சேரநா);.

ம. எட்டாமிடம்.

     [எட்டு + ஆம் + இடம்.]

எட்டாமுட்டி

எட்டாமுட்டி eṭṭāmuṭṭi, பெ. (n.)

   அகலக் குறைவு (மதி.க. 1,76);; insufficient width.

இந்த வேட்டி, உயரமாக இருக்கும் அவருக்கு எட்டாமுட்டியாக இருக்கிறது. (உ.வ.);.

     [எட்டு + ஆ + முட்டி – எட்டாமுட்டி. ‘ஆ’ எ.ம.இ.நி முட்டு → முட்டி (குறைவானது);.]

எட்டாம்

 எட்டாம் eṭṭām, கு.பெ.எ. (adj.)

எட்டின், எட்டாவது

   எண்ணின்; the eighth.

ம. எட்டாம்.

     [எட்டு + ஆம்.]

எட்டி

எட்டி1 eṭṭi, பெ. (n.)

   நச்சுவித்துகளைக் கொண்டமரம்; strychnos nux-vomica, strychnine-tree. M.tr.

     “எட்டி பழுத்தென்ன ஈயாதார் வாழ்ந்தென்ன?” (பழ.);.

   ம. எட்டி;க. இட்டி, இட்டங்கி, இட்டெ, ஈடங்கி.

     [இள் → இட்டு → இட்டி → எட்டி.]

காஞ்சிரங்காயை எட்டிக்காய் எனப் பொருள் கொண்டு எட்டி யைக் காஞ்சிரமரம் எனப் பிறழப் பொருள் கொள்வது தவறு. இரண்டும் வெவ்வேறு மரங்கள்.

 எட்டி2 eṭṭi, பெ. (n.)

   எண்வகைப் பண்புகளால் சிறந்த வணிகனுக்கு அரசன் வழங்கும் மதிப்புரவு விருது; title of distinction conferred on persons of the merchant community encouraging their eight noble qualities.

     “எட்டி சாயல னிருந்தோன் றனது” (சிலப்.அடைக்கல.193);.

   ம. எட்டி;   பிரா. செட்டி;மரா., குச். சேட்.

நேர்மையும் வாய்மையும் வாய்ந்தவன்.]

நாட்டின் பொருளியல் வாழ்க்கைக்குக் குலைவு நேரா வண்ணம் நேர்மையாக வாணிகத் தொழில் நடைபெறுவதற்காகப் பண்டுதொட்டே தமிழ்வேந்தர் வணிகர்க்கு ‘எட்டி’ என்னும் பட்டம் தந்து, எட்டிப்பூ எனும் பொற்பூச்சூட்டி எட்டிப்புரவு என்னும் நிலக்கொடை யளித்துப் பாராட்டினர். இதனை வாகைத் திணையின் உட்பிரிவாக

     “எட்டு வகை நுதலிய அவையத்தானும்” என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். அரசனின் எண்பேராயத்தில் சிறந்த வணிகரும் இடம் பெற்றி ருந்தனர்.

     “அழுக்கா நிலாமை யவாவின்மை துய்மை ஒழுக்கம் குடிப்பிறப்பு வாய்மை இழுக்காத நற்புலமையோடு நடுவு நிலைமையே கற்புடைய எட்டுறுப்புக் காண்” (வீரசோ.பொரு.19,உரை.);

மேற்கண்ட எட்டுப்பண்புகளும் அரசனின் பேரவையில் இடம் பெறுவார்க்கு வேண்டிய (அவையமுல்லைத் துறைக்குரிய); நற்பண்புகளாம்.

 எட்டி3 eṭṭi, பெ. (n.)

   1 வணிகக் குலத்துப் பெண்கள் பெறும்பட்டம்; title taken by the wife, or daughter of a vaisya on whom the title of etti has been conferred.

     “எட்டி காவிதிப் பட்டந்தாங்கிய மயிலியன்மாதர்” (பெருங்.இலர்வா.3.144);.

   2. வணிகக்குலம் (திவா.);; vaisya caste.

   ம. எட்டி; Pkt setti.

     [எட்டு → எட்டி.]

எட்டிப்பட்டம் பெற்ற வணிகர் குலத்தாரும் மகளிரும் அப்பெ யராலேயே அழைக்கப்பட்டனர். இது வடபுல மொழிகளில் சேட் என்றும்,தென்னக மொழிகளில் செட்டி எனவும் திரிந்தது.

எட்டி மரம்

 எட்டி மரம் eṭṭimaram, பெ. (n.)

கைப்புத்தன்மையுள்ள

   மரம்; strychnine tree, nux-vomica.

க. இட்டி.

     [எட்டி + மரம்.]

எட்டிக் கசப்பு

 எட்டிக் கசப்பு eṭṭikkasappu, பெ. (n.)

   மிகக் கசப்பு; extreme bitterness. (சா.அக.);.

     [எட்டி + கசப்பு.]

எட்டிக்காய்

 எட்டிக்காய் eṭṭikkāy, பெ. (n.)

   எட்டி மரத்தின் காய். இது உருண்டையாகவும் மென்மையாகவும் சிறிய ஆப்பிள் பழமளவுள்ளதாயுமிருக்கும்; berry of the nux-womica tree. It is round smooth, and about the size of a small apple. (சா.அக.);.

     [எட்டி + காய்.]

எட்டிநோக்கு-தல்

எட்டிநோக்கு-தல் eṭṭinōkkudal, செ.கு.வி. (v.i.)

   1.

   அண்ணாந்து பார்த்தல்; to look up.

     “இஃதிட்டோ

ளார்கொலென் றெட்டி நோக்கினன்” (பெருங்.நரவான.8.82);.

   2. தாவிப்பார்த்தல்; to stretch oneself and see.

     [எட்டி + நோக்கு.]

எட்டிப்பழம்

 எட்டிப்பழம் eṭṭippaḻm, பெ. (n.)

   எட்டிமரத்தின் பழம்; etti fruit. (சா.அக.);.

     [எட்டி + பழம்.]

எட்டிப்புரவு

எட்டிப்புரவு eṭṭippuravu, பெ. (n.)

வாணிகத்தாற்

   சிறந்தோர்க்கு அரசன் கொடுத்த நிலம் (நன்.158,மயிலை.);; land presented by the king to erminent merchants.

     [எட்டி + புரவு.]

எட்டிப்பூ

எட்டிப்பூ eṭṭippū, பெ. (n.)

எட்டிப் பட்டம் பெற்ற

   வணிகர்க்கு அரசர் கொடுக்கும் பொற்பூ; golden flower gifted by a king to the distinguished member of the vaisya community on whom the title of etti has been conferred.

     “எட்டிப்பூப்பெற்று” (மணிமே.22-115);.

ம. எட்டிப்பூ.

     [எட்டி + பூ.]

எட்டில்பத்தில்

எட்டில்பத்தில் eṭṭilpattil, கு.வி.எ. (adv.)

   1. எட்டு அல்லது பத்து நாளில்; in eight or ten days.

   2 இடையிடையே (யாழ்.அக.);; now and then, occasionally.

     [எட்டில் + பத்தில்.]

எட்டு

எட்டு1 eṭṭudal,    5.செ.கு.வி. (v.i.)

   1. ஒன்றையடைய நெருங்குதல்; to reach up to.

     “பிறையை யெட்டினள் பிடித்து” (கம்பரா.சித்திர.22);.

   2. கிட்டுதல்; to come within reach, approach.

கைகக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை.

   3. அகப்படுதல்; to be attained, realised, gained.

     “முன்னம் பார் …. முடிவுதேடவு மெட்டா” (பாரத.அருச்சுனன்றீர்.18);.

   4. புலப்படுதல்; to be with mental grasp, within the powers of comprehension.

     “எண்ணுதற்கெட்டா வெழிலார் கழலிறைஞ்சி” (திரு வர்ச.122);.

   5. நீர் கழுத்துக்கு மேற்படாதிருத்தல் (யாழ்ப்.);; to be so shallow, as water, as not to submerge one.

   6. தாவிப் பாய்தல்; to spring, leap up or forward.

     “எட்டின வயவரியென” (இரகு.திக்குவி.89);.

   7. விலகுதல்; to go out of reach, move away from.

     “எட்டியன்ன மிரிந்துபறக்க” (அரிச்.பு:நாட்டு,51);.

   8. நீளம் போதியதாதல்; to be sufficient in length so as to reach, as a rope, the water in a well.

கிணற்றுக்கு இந்தக் கயிறு எட்டாது.

ம. எட்டு, க. எண்டு.

     [அண் → அட்டு → எட்டு.]

 எட்டு2 eṭṭu, பெ. (n.)

   1 எட்டு என்னும் எண்ணுப்பெயர், ஏழின்மேல் ஒன்று; number eight.

   2. ‘அ’ என்னும் எண்ணுக்குறியீட்டுக்குரிய தமிழ் எண்ணுப் பெயர்; name of the eigth numerical number ‘அ’ in Tamil.

மறுவ, எண், எள்.

   ம. எட்டு;   க. எண்ட்டு;   து. எண்ம;   தெ. எனிமிதி;   துட. ஒட்;   பட எட்டு;   யெட்டு;   குட. எட்டீ;   கொலா. எண்மதி, எனுந்தி, என்மிதி;   கோண், அட்மூர், அட்முல், என்மிதி;   பர்., கூ. அட்;   குரு., மால். ஆட்;   கோத. எட்;   குரும்., இரு. யெட்டு;   பிரா. கச்ட்;   மபு. அட்;   கைத். யெட்;   எடு, யெட்டு;செஞ். அட்.

 Nep (Thulungya);, yen. Atri (Nub); eddo;

 Tib (Tharu, kuswar); ath;

 Sinh alai, Nep (pakya); ath. Jap yats, yatsu, hachi L. oclo, Goth. Ahtan;

 Gk oko;

 G acht;

 OHG ahto, Dut acht;

 In hoch;

 Sp ocho;

 F huit;

 OF eahta, E eight;

 Circ. yid;

 It Port otto;

 Norw atte Port oito;

 Rum opt Swed atta;

 Dan otte;

 Esp. ok;

 Beng ashto;

 Skt asta, Pkt, pali atta, Punj Sind at;

 Milum Naga aachet Kash., Ass., Hind at Guj., Mar.. Ori. ati.

     [எள் → எண் + து – எட்டு. ‘து’ சொல்லாக்க ஈறு.]

தொன்முது காலத்தில் எள், நெல், விரல், சாண், முழம், கோல், காவதம், என்னும் நீட்டலளவைகளுக்குப் புலப்பாடான அடிப் படைச் சிற்றளவாக எள் கருதப்பட்டது. 8 கடுகு – 1 எள், 8 எள் – 1 நெல் என அளவைகள் கூறப்பட்டன. எள்ளளவு என்பதே எல்லாருக்கும் எளிதில் விளங்கும் வகையில் பார்த் தறியக் கூடிய மிகச்சிறிய நீட்டலளவையாக இருந்தது. எள் ளைக் குறித்த சொல்லே 8 என்னும் எண்ணைக் குறிக்கும் பெயராயிற்று.

இச்சொல் உலகமொழிகளில் ஊடாடிய போது க, ச, த, ந, ப என்றும் முன்னொட்டுகளைப்பெற்று ஐவகை அடிநிலைத்திரி புகளையும், ள, ர என்னும் இருவகை ஈறுகளாலுற்ற முடி நிலைத்திரிபுகளையும் பெற்றுள்ளது.

   எள் → எண் → கெண்;   முதல்வகை அடிநிலைத்திரிபுற்றவை. O Egy hmn; Tib. gzud, gye, gsed. Sikk kake, Buta gye, Fin kahdeksan, Siam (karen); ko, kho.

   எள் → எண் → செண்;   இரண்டாம் வகை அடிநிலைத்திரிபுற்றவை. Burrn shyet, shyét. Egy (cop); smn; Turk sekiz;

 Heb schrnorah, Basq zortsi.

   எள் → எண்ம் → தெண்ம்;   மூன்றாம் வகை அடிநிலைத்திரிபுற்றவை. Naga the thetha. Ara tsamariya, tarnan, Iraq tharnan, Anna, Viet tam. Afri (Berber); tam, Indon (Baoli); (ad); dasa. Malay dalapan, Indone delapan; shant tet.

   எள் → எண்ம் → நெண்ம்;   நான்காம் வகை அடிநிலைத்திரிபுற்றவை. Afri (Swahili); nane; Mongol nemen;

 Hung nyolc.

   எள் → எண்ம் → பெண்ம்;   ஐந்தாம் வகை அடிநிலைத்திரிபுற்றவை. China (Nank); pah; Thai paed, Laos pet Chine (Mand); baa, Tib (Gyami); pa;

 Nep (Murmi); pre.

எள் → ளெ → லெ. முதல்வகை முடிநிலைத்திரிபுற்றவை.

   எள் → னெ → லெ → ரெ: இரண்டாம் வகை முடிநிலைத்திரிபுற்றவை. Georg rua; Tib (Horpa);, Rhi-ce;

 Burm. rhach, riyat.

   எள் → எண் → எட்டு → டு → உ: மூன்றாம் வகை முடிநிலைத்திரிபுற்றவை. Poli, uusman; jawa woolu;

 Russ vosgian, vosem, Serto Osam, Czeеh osm.

கூட்டுச்சொல்லாக வழங்குவன:

எட்டு என்னும் எண்ணுப்பெயரை ஐந்தொடு மூன்று கூட்டியும் பத்திலிருந்து இரண்டைக் கழித்தும் கூட்டுச்சொல்லாகப் பழங் குடி மக்களுள் சிலர் வழங்கியுள்ளனர். அமெரிக்கப்பழங்குடிக ளுள் அகதெக்கு வகையினரும் நகுவாத்தி வகையினரும் ஐந்தும் மூன்றும் கூட்டி எட்டினை வழங்கினர்.

 Ameri (astec);: shew-w-ieye (5 + 3); (Nahumti);: chik-w-eyi (5 + 3);

பாகக்கு, காக்கேசிய பின்னிசு வகையினர் பத்திலிருந்து இரண் டைக் கழித்து எட்டினை வழங்கினர்.

 Basq Zor-tyi – (இரண்டு குறைந்த பத்து);.

 Cano Or-atsi – (இரண்டு குறைந்த பத்து);.

 Finn Kah-deksan – (இரண்டு குறைந்த பத்து);.

 எட்டு3 eṭṭu, பெ. (n.)

   இறந்தவர்களுக்கு எட்டாநாளிற் செய்யும் கருமம்; ceremony performed in honour of a deceased on the eighth day after his death.

     [எள் → (எண் + து); எண்டு → எட்டு. தொன்முது காலத்தில் எள் உணவாகக் கருதப்பட்டது. இறந்தார்க்கு எட்டாம்நாளில் எள்ளும் நீரும் படைப்பதும் தெளிப்பதும் ‘எட்டு’ எனப்பட் டது. எள் + து – எட்டு என்னும் சொல்லுக்கு எள்ளை உண் என்று பொருளிருப்பதை ஒப்பு நோக்குக.]

 எட்டு4 eṭṭu, பெ. (n.)

   உயரம்; height.

     [அண் → அட்டு → எட்டு.]

 எட்டு5 eṭṭu, பெ. (n.)

   அடிவைப்பு; step. இரண்டு எட்டில் அங்குப் போய் விடுவேன் (உ.வ.);.

     [எடு → எட்டு = காலின் எடுப்பு, அடிவைப்பு.]

எட்டுக்கண்விட்டெறி-தல்

எட்டுக்கண்விட்டெறி-தல் eṭṭukkaṇviṭṭeṟidal,    2.செ.கு.வி (v.i.)

   எங்குந் தன் அதிகாரஞ் செல்லுதல்; to exercise authority everywhere as of one had eight eyes;

 lo have very wide influence.

     [ எட்டு + கண் + விட்டு + எறி. எட்டுக்கண் = எண்திசைக்கண்.]

எட்டுக்காற்பூச்சி

 எட்டுக்காற்பூச்சி eṭṭukkāṟpūcci, பெ. (n.)

   சிலந்திப் பூச்சி; spider, so called because it has eight legs.

ம. எட்டுகாலன், எட்டுகாலி.

     [எட்டு + கால் + பூச்சி.]

எட்டுக்கொண்டார்

எட்டுக்கொண்டார் eṭṭukkoṇṭār, பெ. (n.)

எண் தோன்றலாகிய (அட்டமூர்த்தமுடைய); சிவபெரு மான். Siva, as having attamurtam.

     “எட்டுக் கொண்டார் தமை” (திருவுந்தி.24);.

     [எட்டு + கொண்டார்.]

எட்டுச்சார்

 எட்டுச்சார் eṭṭuccār, பெ. (n.)

   இரண்டு கட்டாயுள்ள சதுர வீடு (யாழ்ப்.);; two four-square houses connected together.

     [எட்டு + சார்.]

எட்டுச்செய்-தல்

எட்டுச்செய்-தல் eṭṭucceytal,    1.செ.கு.வி. (v.i.)

   சில வகுப்பாரிடையே ஒருவர் இறந்த எட்டாம் நாளில் செய்யும் சிறப்புச் சடங்கு; to perform special ceremonies on the eighth day after a person’s death, among certain castes.

     [எட்டு + செய்.]

எட்டுணை

 எட்டுணை eṭṭuṇai, பெ. (n.)

   எள்ளளவு; size of a single grain of sesame of the size or weight of a sesamum seed, very little.

ம. எள்ளளவு.

     [எள் + துணை.]

எட்டுத்திக்கு

 எட்டுத்திக்கு eṭṭuttikku, பெ. (n.)

   எண் திசை; eight directions, viz., the four cardinal points and the four between them.

ம. எட்டு திக்கு.

     [எட்டு + திக்கு. திலக → திக்கு.]

எட்டுத்தொகை

 எட்டுத்தொகை eṭṭuttogai, பெ. (n.)

   ஈராயிரம் ஆண்டு கட்கு முன்னர்த் தொகுக்கப்பட்ட நற்றிணை, குறுந் தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகிய எட்டுத் தொகுப்பு நூல்கள்; eight anthologies of the Sangam period.

     “இத்திறத்த வெட்டுத்தொகை” (தனிப்பா.);.

     [எட்டு + தொகை.]

எட்டெட்டு

எட்டெட்டு eṭṭeṭṭu, பெ. (n.)

   எட்டின் மடங்கு; eight multiplied by eight i.e. 64. (ஆ.அக.);.

மறுவ. எண்ணெண்.

   ம. எட்டெட்டு;க. எண்ட்டெண்ட்டு.

     [எட்டு + எட்டு – எட்டெட்டு.]

எட்பகவு

எட்பகவு eṭpagavu, பெ. (n.)

   1. எள்ளளவு என்னும் மிகச் சிறு நீட்டலளவு; very small linear measure.

   2. மிகச்சிறுமை; very little, tiny.

     “எட்பகவன்ன சிறுமைத்தே ஆயினும்” (குறள்.889);.

     [எள் + பகவு – எட்பகவு = எள்ளளவு.]

எட்பாகு

எட்பாகு eṭpāku, பெ. (n.)

   1. எள்ளுப்பாகு; sweet paste made of sesame seeds.

     [எள் + பாகு.]

எட்பூ

 எட்பூ eṭpū, பெ. (n.)

   எள் செடியின்பூ; flower of the plant sesamurn indicum.

ம. எள்ப்பூவு.

     [எள் + பூ.]

எணல்

 எணல் eṇal, பெ. (n.)

   நிழல்; shadow.

     [இள்-எள்-எண்-எனல்]

எண்

எண்1 eṇ, பெ. (n.)

   1. இலக்கம் (சூடா.);; number. digit

     “ஒன்று முதலெட்டிற மெண்ணுள்” (நன்.உயி ரீற்.36);.

   2. கணக்கு; mathematics.

     “எண்ணென்ப வேனை யெழுத்தென்ப” (குறள். 393);.

   3. கணியநூல் (சோதிடநூல்);; astronomy including astrology.

     “கற்பங்கை சந்தங்கா லெண்கண்” (மணி. 27-100);.

ம., க. எண்.

     [இல் (குத்துதல், பொத்துதல்); → இன் இழுத்தல், கோடிழுத்தல்); → எள் → எண் = மேலிருந்து கீழ்நோக்கி இழுக்கும் கோடு, கோடுகளின் எண்ணிக்கை, எண்ணிக்கைக் குரிய இலக்கம்.]

   கோடுகளை எண்ணுவதும், கூட்டுவதும், கழிப்பதும், வகுப்பதும், பெருக்குவதுமாகிய செய்கை நினைவுத்திறனைக் கூட்டி ஆராய்ந்து சிந்திக்கும் ஆற்றலை நல்குவதால், எண்ணிக்கை யைக் குறித்த ‘எண்’ என்னும் பெயர்ச்சொல் எண்ணிப்பார்த்தல் (சிந்தித்தல்); என்னும் ஏவல் வினையுமாயிற்று;கணக்கு. கணியதுல் ஆகியவற்றையும் குறித்தது.

தொன்முது காலத்தில் விரலால் கிடையாகவோ, நெடுக்காகவோ கோடு கிழிப்பதே எண்ணிக்கையைக் குறிப்பதாக இருந்தது. பிறகு புள்ளிகளிட்டும் எண்ணினர். மொழியின் எழுத்துகளையே எண்களைக் குறிக்கும் குறியீடுகளாகவும் பண்டையோர் ஆண்டுள்ளனர். எழுத்தைக் கற்பித்த ஆசிரி யரே எண்கனையும் (கணக்கு); கற்பித்ததால், அவரைக் கணக்கா யர் என்று அழைத்தனர். எண்களாகப் பயன்படுத்தப்பட்டிருந்த தமிழ் எழுத்துகளே இன்றைய 1 முதல் 10 வரையிலான இலக்கக் குறியீடுகளாகியுள்ளன.

க உ வ ச ரு சு எ அ கூ ய

   1 2 3 4 5 6 7 8 9 10

இவை, முற்றிலும் தமிழ் எழுத்துகளின் திரிபு என்பதும் வணிகர் வாயிலாக அரேபியாவில் அறிமுகமானதால், அராபிய எண்

கள் எனத்தவறாக வழங்கின என்பதும், அறியத்தக்கன. தமிழ்க் ககரம் 2000 ஆண்டுகளுக்கு முன்பு + என எழுதப்பட்டதால் அதில் பக்கக் கோடுகளிழந்து ஒன்றைக்குறிக்கு (1); குறியீடா யிற்று. இவ்வாறே ஏனையவற்றையும் பழந்தமிழ் எழுத்து வடிவங்களுடன் பொருத்திக் காண்க.

 எண்2 eṇ, பெ. (n.)

   1. கணக்கிடுகை (சீவக.2353, உரை.);; calculation, computation.

   2. எண்ணம்; thought imagination, intention.

     “எண்பிறக் கொழிய விறந்தோய் நின்னடி” (மணி.11,65);.

   3. சூழ்ச்சி (ஆலோசனை);; deliberation;

 counsel.

     “தொக்கிருந் தெண்ணினா தெண்ணினா னெண்ணப்படும்” (நான்மணி.77);.

   5. மனம்; mind.

     “கலைவலோ ரெண்கழன்று” (பாரத.நிவாத,125);.

   6. மதிப்பு; esleem.

     “வீரனை யெண்டெறக் கொணர்வாயென” (பாரத.அருச்.தவ.168);.

   7. வரையறை (தொல். எழுத். 308.உரை.);; limit

   8. ஏரணம் (தருக்கம்);; logic ஏரணங்காணென்பர் எண்ணர் (திருக்கோ.நூற்சிறப். உரை.);.

   9. மாற்று; fineness of gold or silver as tested by the touchstone.

     “எண்ணில்பொன்” (சீவக. 72.);.

   10. மந்திரம்; mantras.

     “பல்பச்சிலையா லெண்ணுண்டு சாத்த” (பட்டினத்.திருப்பா.பொது.5);.

   11. கலிப்பா உறுப்புகளுள் ஒன்றான அம்போதரங்கம் (தொல். பொருள். 452 உரை.);; one of the component parts of kali verse.

   ம. எண்;க. எணிதெ.

     [என்னு → எண். எண்ணு-தல் பார்க்க;]

 எண்3 eṇ, பெ. (n.)

   உணவு; food

     “எண்ணெனுணவுப் பெயர்” (தொல்,எழுத்,308);.

து. எண்மெ

     [எள் → எண்.]

பழங்காலத்தில் எள்ளும் நீருமே உணவாகக் கருதப்பட்டன. இறந்தார்க்கு எட்டாம் நாளில் எள்ளும் நீரும் படைப்பர். கடற்செலவின் போது பலநாள் கெடாத எள்ளுருண்டைகளையே உணவாக எடுத்துச் செல்வது மரபு

 எண்4 eṇ, பெ. (n.)

   எட்டு; eight.

   ம. எண்;   க. எண்ட்டு;து. எண்மொ.

     [எள் → எண். எள் பார்க்க;see eli.]

 எண்5 eṇ, பெ. (n.)

   1. வலிமை (அக.நி.);; strength.

   2. அறிவு; knowledge.

   3. உண்மை; truth.

     [ஏண் → எண்.]

 எண்6 eṇ, பெ. (n.)

   எளிமை; simplicity, ease.

     [இள் → எள் = எண். இள் = இழிவு, தாழ்வு.]

 எண்4 eṇ, பெ. (n.)

   . கருநிற மான்; black deer having prominent large eyes.

ஏணி, ஏணம், ஏணகம்.

   மறுவ, நவ்வி;   க., து. ஏடி; Skt Harin.

     [ஏ → ஏண்.]

எண் கோவை

 எண் கோவை eṇāvai, பெ. (n.)

   காஞ்சி யென்னும் அரையணி (சூடா.);; waist ornament.

     [எண் + கோவை.]

எண்கணப்பூடு

 எண்கணப்பூடு eṇkaṇappūṭu, பெ. (n.)

   வெங்காயப் பூடு (சா.அக.);; onion plant.

     [எண் + கனம் + பூடு. எண்களம் = எட்டடுக்கு.]

எண்கலையர்

எண்கலையர் eṇkalaiyar, பெ. (n.)

   கோயிலுக்குவிடப் பட்ட மாதர், தேவரடியார் (அக.நி.);; dancing gris attached to a temple, as knowing the 64 kalai. (செ.அக.);.

     [எண் + எண் – எண்ணெண் → எண் → கலை + ஆர். எண்ணெண் (8 x 8); = 64.]

எண்காற்பறவை

 எண்காற்பறவை eṇkāṟpaṟavai, பெ. (n.)

எண்காற்புள் பார்க்க;see en-karpul.

     [எட்டு + கால் + பறவை.]

எண்காற்புள்

 எண்காற்புள் eṇkāṟpuḷ, பெ. (n.)

   அரிமாவையும் கொல்லும் வலிமை சான்றதாகக் கருதப்பட்ட (சரபம் என்றழைக்கப்பட்ட); பறவை; fabulous bird capable of killing the lion.

     [எண் + கால் + புள்.]

இப்பறவைக்கு முற்காலத்தில் எட்டடிப்பறவை என்று பெயரிருந்தது. எட்டடி நீளமுள்ள பறவை யென்பதை அறியாமல் பிற்காலத்தில் அடியைப்பாதம் என்று பிறழவுணர்ந்து எண்காற் புள் எனப் புதுச்சொல்லைப் படைத்துக்கொண்டனர் போலும்.

எண்கு

எண்கு eṇku, பெ. (n.)

   கரடி; bear.

     “எண்குதன் பிணவோடிருந்தது போல” (மணி.16.88);.

தெ. எலுகு.

இல் → இன் → இண் → இண்கு → எண்கு. எண்கு = கரியது, கரடி.]

எண்குணத்தான்

எண்குணத்தான் eṇkuṇattāṉ, பெ. (n.)

   1. கடவுள்; God, who has eight attributes.

     “எண்குணத்தான் றாளை வணங்காத் தலை” (குறள்.9);.

   2. அருகன்; Arhat.

   3. சிவன்; Lord Siva. (செ.அக.);.

     [எண் (எட்டு); + குணத்தான்.]

எண்குணன்

எண்குணன் eṇkuṇaṉ, பெ. (n.)

   1. அருகன் (திவா.);; Arhat

   2. சிவன் (பிங்.); Siva.

     [எண் (எட்டு); + குணம்.]

எண்குணம்

 எண்குணம் eṇkuṇam, பெ. (n.)

   அருகனெண்குணம்; eight attributes of God.

     [எண் (எட்டு); + குணம்.]

எண்குற்றம்

 எண்குற்றம் eṇkuṟṟam, பெ. (n.)

   அறிவை மறைக்கும் ஆனால் அருகனை அணுகாத எண்வகைக் குறைகள்; eight impediments or karmas which obscure one’s knowledge and intuition as a cloud obscures the sun but from which an Arhat is free.

     [எண் (எட்டு); + குற்றம்.]

உண்மை மறைப்பு, மெய்யுணர்வு, மறைப்பு. இன்ப துன்ப நுகர்விப்பு, ஆன்மாவை மயக்குதல், வாணாள் வரையறுப்பு, வாழ்நிலை (கதி); வரையறுப்பு, மறுபிறப்புக்கு மூலம், இடை யூறு ஆகியவற்றுக்கு வித்தான செயற்பாடுகளை எண்வகைக் குற்றங்களாகச் (தரிசனாவரணியம், ஞானாவரணீயம், வேதநீ யம், மோகதீயம், ஆயு, நாமம், கோத்திரம், அந்தராயம்); சமணசமயத்தார் கூறுவர்.

எண்கோணம்

 எண்கோணம் eṇāṇam, பெ. (n.)

   எட்டுமூலைகளை யுடைய பரப்புருவம்; octagon.

ம. எண்கோணம்.

     [எண் (எட்டு); + கோணம்.]

எண்சாணுடம்பு

 எண்சாணுடம்பு eṇcāṇuḍambu, பெ. (n.)

   மாந்த உடல்; human body of eight span in height when measured by one’s own hand.

     [எண் (எட்டு); + சான் + உடம்பு.]

எண்சிறப்புள்ளோன்

 எண்சிறப்புள்ளோன் eṇciṟappuḷḷōṉ, பெ. (n.)

   அருகன் (சூடா.);; Arhat recipient of eight kinds of honour.

     [எண் (எட்டு); + சிறப்பு + உள்ளோள்.]

எண்சுவடி

 எண்சுவடி eṇcuvaḍi, பெ. (n.)

   பெருக்கல்வாய்பாட்டு நூல்; book of multiplicatibn tables.

ம. எண்சுவடி.

     [எண் + வடி.]

எண்செய்யுள்

 எண்செய்யுள் eṇceyyuḷ, பெ. (n.)

   எண்ணாற் பெயர் பெறும் நூல்; trealise named after number.

     [எண் + செய்யுள்.]

எண்டிக்கு

 எண்டிக்கு eṇṭikku, பெ. (n.)

எட்டுத்திக்கு பார்க்க;see ettu-l-likku.

     [என் + திக்கு.]

எண்டிசை

 எண்டிசை eṇṭisai, பெ. (n.)

எட்டுத்திக்கு பார்க்க;see ettu-l-likku.

ம. எண்டிச.

எண்டோளன்

 எண்டோளன் eṇṭōḷaṉ, பெ. (n.)

எட்டுத்தோள் கொண்ட சிவன் (பிங்.); Siva, who has eight shoulders.

     “எண்டோள் ஈசற்கு எழுபது மாடஞ்செய்தோன்” (திவ்ய-திருமங்கை.);.

     [என் + தோள் + அன்.]

எண்டோளி

 எண்டோளி eṇṭōḷi, பெ. (n.)

   கொற்றவை, காளி (திவா.);; kaļi, Durga.

     [எண் + தோள் + இ.]

எண்ணக்குறிப்பு

எண்ணக்குறிப்பு eṇṇakkuṟippu,    1. நோக்கம்; motive, object, intention, design.

   2. உள்ளாசை; internal desira aspiration. (செ.அக.);.

     [எண்ணம் + குறிப்பு.]

எண்ணங்குலை-தல்

எண்ணங்குலை-தல் eṇṇaṅgulaidal,    4. செ.கு.வி. (v.i.)

   1. மனம் கலங்குதல் (வின்.);; to be perplexed in mind.

   2. எண்ணம் வீணாதல்; to be disconcerted in a plan, thwarted in one’s expectation.

   3. மதிப்புக் கெடுதல் (வின்.);; to lose reputation.

     [எண்ணம் + குலை.]

எண்ணங்கொண்டிரு-த்தல்

எண்ணங்கொண்டிரு-த்தல் eṇṇaṅgoṇṭiruttal,    3. செ.கு.வி (v.i.)

   1. நோக்கங் கொண்டிருத்தல்; to intend, Purpose.

   2. நம்பி எதிர்பார்த்தல், (வின்.);; to entertain hope.

   3. மனத்தில் கனவு காணல்; to build castles in the air.

   4. கவலைப்படுதல் (வின்.);; to be anxious, deeply concerned.

   5. சிந்தித்தல் (வின்.);; to muse, ponder, ruminate.

     [எண்ணம் + கொண்டு + இரு.]

எண்ணப்படு-தல்

எண்ணப்படு-தல் eṇṇappaḍudal,    20. செ.கு.வி. (v.i.)

   1.

   கணிக்கப்படுதல்; to be counted, reckoned.

   2. மதிக்கப்படுதல்; to be asteemed, respected.

ம. எண்ணப்பெடுக.

     [எண் → எண்ண + படு.]

எண்ணம்

எண்ணம் eṇṇam, பெ. (n.)

   1. நினைப்பு; conception, thought, idea.

     “எண்ணந்தடுமாறி” (திருவாச.5,25);.

   2. கருத்து; intention, idea.

   3. நாடிய பொருள்; end, goal.

     “எண்ணியா ரெண்ண மிழப்பர்” (குறள். 494);.

   4. மதிப்புரவு; respect, reverence யாராயினும் அவனுக்கு எண்ணமில்லை (உ.வ.);.

   5. மதிப்பீடு; estimation.

   6. சூழ்ச்சி (பிங்.);; deliberation, counsel.

   7. கவலை; care, anxiety.

     “எண்ணமிக்கான்” (பெரியபு. தடுத்தாட்.54);.

   8. நம்பி எதிர்பார்க்கை (வின்.);; hope, expeciation.

   9. எண்ணிக்கை; number.

   10. கணக்கு; mathematics.

   ம. எண்ணம்;   க. எணிதெ, எண்ணிகெ;   துட., ஒண், ஒணம்;   குட. எண்ண்;   து. எண்ணிகெ. எணிகெ. எணெ, எங்கெ;   தெ. எனனு. எணிக;   பர். எச (எண்);. எசவாச்;குவி. எசிகீனை.

     [எண் → எண்ணம்.]

எண்ணர்

எண்ணர் eṇṇar, பெ. (n.)

   1. கணிதர்; mathematicians, astronomers.

   2. ஏரணர்; logicians.

     “ஏரணங் காணென்ப ரெண்ணர்’ (திருக்கோ. நூற்சிறப்பு. சங்.அக.);.

   3. அமைச்சர் (பிங்.);; king’s ministers, counselors.

     [எண் + அர்.]

எண்ணலங்காரம்

 எண்ணலங்காரம் eṇṇalaṅgāram, பெ. (n.)

   எண்கள் முறையே வரும் ஓர் அணி (சி.சி.விநாயக.காப்பு.);; figure of speech, use of terms of number in succession.

     [எண்ணல் + அலங்காரம்,]

எண்ணலர்

 எண்ணலர் eṇṇalar, பெ. (n.)

எண்ணார் பார்க்க;see ennar.

ம. எண்ணவர்.

     [எண் + அல் + அர்.]

எண்ணலளவு

 எண்ணலளவு eṇṇalaḷavu, பெ. (n.)

எண்ணலளவை பார்க்க;see ennal-alavai.

     [மண்ணல் + அளவு.]

எண்ணலளவை

எண்ணலளவை eṇṇalaḷavai, பெ. (n.)

   இலக்கத்தால் எண்ணுமளவு (நன்.290.உரை.);; computation, one of four alavai.

     “எண்ணல் எடுத்தல் முகத்தல் நீட்டல் எனும் நான்களவையும்” (நன். 368);.

     [எண்ணல் + அளவை.]

எண்ணல்

எண்ணல் eṇṇal, பெ. (n.)

   1. கருத்து (திவா.);; purpose, intention.

   2. கணக்கிடுகை (பிங்.);; counting.

   3. எண்ணலளவை; computation.

   4. கருத்தாய்வு; deliberation.

     “நீயே பேரெண்ணலையே” (புறநா.138,6);.

     [எண் + அல்.]

எண்ணவி

எண்ணவி eṇṇavi, பெ. (n.)

   நல்லெண்ணெய்; gingili oil.

     “எண்ணவியரை” (தைலவ.தைல.45);.

     [என் + அலி. எண் = எள். எண்ணவி = எள்ளை அவித்து எடுத்த தெய்மம்.]

எண்ணாட்டிங்கள்

எண்ணாட்டிங்கள் eṇṇāṭṭiṅgaḷ, பெ. (n.)

   எட்டாம் நாள் வளர்பிறைநிலவு; crescent moon eight days old.

     “எண்ணாட் டிங்க ளனைய கொடுங்கரை….. சிறு குளம்” (புறநா.118);.

     [எண் (எட்டு); + நாள் + திங்கள்.]

எண்ணாதவன்

எண்ணாதவன் eṇṇātavaṉ, பெ. (n.)

   1. ஆராய்ச்சி யில்லாதவன்; thoughtless man.

   2. எதையும் பொருட் படுத்தாதவன் (கொ.வ.);; one who shows no concern, who does not care. (செ.அக.);.

     [எண் + ஆ + த + அவன். (‘ஆ’ எ.ம.இ.தி); எண்ணாதவன் (வினையா.பெ.);]

எண்ணான்

 எண்ணான் eṇṇāṉ, பெ. (n.)

   உழுந்து; back gram.

     [இல் → இள் → எண் → எண்ணான். இள் = கருமை.]

எண்ணாப்பு

எண்ணாப்பு eṇṇāppu, பெ. (n.)

   இறுமாப்பு (நேமிநா. 59, உரை.);; arrogance, pride. (செ. அக.);.

     [எண் + ஆப்பு.]

எண்ணாமை

 எண்ணாமை eṇṇāmai, பெ. (n.)

   மதியாமை; disrespect.

     [எண் + ஆ + மை. ‘ஆ’ எ.ம.இ.நி.]

எண்ணாயிரத்தார்

 எண்ணாயிரத்தார் eṇṇāyirattār, பெ. (n.)

எண்ணாயிரவர் பார்க்க;see en-n-ayiravar.

     [எண் + ஆயிரத்தார்.]

எண்ணாயிரம்

எண்ணாயிரம் eṇṇāyiram, பெ. (n.)

   1. எட்டாயிரம்; eight thousand, 8000.

   2. ஊர்ப்பெயர்; place name.

ம. எண்ணாயிரம்.

     [எண் + ஆயிரம்.]

எண்ணாயிரவர்

எண்ணாயிரவர் eṇṇāyiravar, பெ. (n.)

   1. சமணரி லொரு தொகுதியார்; body of 8,000 jains, who disputed with Sambandhar.

     “எண்பெருங் குன்றத்தெண் ணாயிரவரு மேறினார்கள்” (பெரியபு. திருஞா. 855);.

     [எண் (எட்டு); + ஆயிரவர்.]

எண்ணார்

எண்ணார் eṇṇār, பெ. (n.)

   பகைவர்; foes enemies, those who are supercilious.

     “எண்ணா ரெயில்கண் மூன்றும்” (தேவா.45.2);.

     [எண் + ஆ + ஆர். ‘ஆ’ (எ.ம.இ.தி.);.);]

எண்ணாழி

 எண்ணாழி eṇṇāḻi, பெ. (n.)

   எட்டு நாழி; measure of eight nails.

ம. எண்ணாழி.

     [எண் + நாழி.]

எண்ணிக்கை

எண்ணிக்கை1 eṇṇikkai, பெ. (n.)

   1. கணக்கிடுகை; numbering.

     “இந்த எண்ணிக்கையாகிய கால்களால்” (சங்.அக.,திருநெல்.பு.சிவபுண்.11);.

   2. மதிப்பு; esteem, reverence.

   ம. எண்ணிக்க;   க., து. எண்ணிதெ;தெ. என்னிக.

     [எண் → எண்ணிக்கை. ‘கை’ பெயரீறு.]

 எண்ணிக்கை2 eṇṇikkai, பெ. (n.)

விழிப்புணர்வு, எச்சரிக்கை (யாழ்.அக.); caution

     [எண்ணுதல் = கருதுதல், ஆராய்தல், எண்ணு – எண்ணுகை → எண்ணிக்கை = விழிப்புணர்வு.]

எண்ணிடு-தல்

எண்ணிடு-தல் eṇṇiḍudal,    18. செ.குன்றாவி. (v.t.)

   1. கணக்கிடுதல்; count calculate.

   2. வரிசையில் எண் குறித்தல்; to allot a number in a series.

     [எண் + இடு.]

எண்ணிடைச்சொல்

எண்ணிடைச்சொல் eṇṇiḍaiccol, பெ. (n.)

   எண் ணுப்பொருளைக் காட்டும் இடைச்சொல் (நன்.429, விருத்.);; particle signifying addition or of enumeration.

     “பொய்படும் ஒன்றோ புனை பூணும்” (குறள்.836);. இதில்

     “ஒன்றோ” என்பது எண்ணிடைச்சொல்.

     [எண் + இடை + சொல்.]

எண்ணின் வகுப்பு

எண்ணின் வகுப்பு eṇṇiṉvaguppu, பெ. (n.)

   ஒன்று முதல் 36 இடங் கொண்ட எண்வரையுள்ள வாய்பாடு (வின்.);; numeration table, exlending from one to 36 digits.

     [எண் + இன் + வகுப்பு.]

எண்ணியற்பெயர்

எண்ணியற்பெயர் eṇṇiyaṟpeyar, பெ. (n.)

   எண்ணாகிய இயல்பு பற்றிவரும் உயர்தினைப் பெயர் (தொல்.சொல்.165);;மூவர், ஐவர், நூற்றுவர்.

     [எண் + இயல் + பெயர்.]

எண்ணியார்

எண்ணியார் eṇṇiyār, பெ. (n.)

நோக்கங்கொண்டவர் designing, scheming persons.

     “எண்ணியாரெண்ணமிழப்பர்” (குறள். 494);.

     [எண் → எண்ணி + அவர் – எண்ணியவர் → எண்ணியார்.]

எண்ணிறந்த

எண்ணிறந்த eṇṇiṟanda, கு.வி.எ. (adj.)

   எண்ணமுடியாத; innumerable.

     “எண்ணிறந்த வமணர்களும்” (தேவா.575,10);.

     [எண் + இறந்த.]

எண்ணிலார்

எண்ணிலார் eṇṇilār, பெ. (n.)

எண்ணார் பார்க்க;see ennar.

     “எண்ணிலா ரெயின் மூன்று மெரித்த” (தேவா. 221.4);.

     [எண் (எண்ணுதல்); + இல் + ஆர். ‘இல்’ – எ.ம.இ.நி.]

எண்ணிலி

எண்ணிலி eṇṇili, பெ. (n.)

   எண்ணிலடங்காதது; that which is beyond computation.

     “எண்ணிலி யாகிய சித்திகள் வந்து” (திருவாச. 49,5);.

     [எண் + இலி. இல் → இலி, எ.ம.கு.வி.க.பெ.]

எண்ணீர்

எண்ணீர் eṇṇīr, பெ. (n.)

   எள்ளும் நீரும்; water with sesame seeds, offered to the dead as libation.

     “எண்ணீரகலெனினுமிறந்தோர்கட னல்க” (கூர்மபு. உத். 21,15);.

ம. எண்ணிர்.

     [எள் + நீர். (உம்மைத்தொகை);.]

எண்ணு-தல்

எண்ணு-தல் eṇṇudal,    12. செகுன்றாவி (v.t.)

   1. நினைத்தல் (பிங்.);; to think, to ruminate.

   2. ஆராய்தல்; to consider, ponder on, weigh mentally,

     “எண்ணித் துணிக கருமம்” (குறள். 467);,

   3. தீர்மானித்தல் (பிங்.);; to resolve upon, decide, determine.

   4. மதித்தல்; to esteem. Respect.

     “வெயிலோன் மகற்கு முட னெண்ணத்தகுந் திறலினான்” (பாரத. பதினெட்.4);.

   5. உன்னித்தல்; to guess, conjecture, surmise.

   6. வழிபடல்; to meditate upon.

     “எண்ணி யஞ்செழுத்து மாறி” (சிவப்பிர. உண்மை. 47);,

   7. கணக்கிடுதல்; to count, reckon.

     “அன்ன கேள்வ ரனேகரை யெண்ணினான்” (உபதே சகா. அயமுகி. 59);.

   8. மதிப்பிடுதல்; to value.

     “எண்ணற்கரிய முடிவேந்தர்” (பாரத.இராச. 32);.

   9. துய்த்தல்; to enjoy.

     “எண்ணான் சிவனசத்தை” (சி.போ.5.2.1);.

   ம. எண்ணுக;   க. எண்ணு, எணிகெ துட, ஒண்;   குட. எண்ண்;   து. எண்ணுனி;   தெ. என்னு;   பர். எது சாத் குவி. எசிகீனை;   கூ. இன்பெ;   நா. யன்னேர்;குரு. ஆன்னா.

     [எண் = எண்ணுதல், நினைத்தல், ஆராய்தல், எள்ளுக்கு எண் என்று பெயர். ‘8’ எள் கொண்டது 1 நெல்” என்னும் நீட்டலளவைக்கு எள் (எண்); அடிப்படை அளவாக இருந்ததால் இதுவே கணக்கிடுதல், ஆராய்தல் பொருள்களில் வளர்ந்தது.]

எண்ணுப்பெயர்

எண்ணுப்பெயர் eṇṇuppeyar, பெ. (n.)

ஒன்றுமுதலாகிய மேல்வாயிலக்கங்களுக்கும் அரை, கால் போன்ற கீழ்வாயிலக்கங்களுக்கும் வழங்கிவரும் பெயர்.

 name for numerical and fractional digits.

     “எண்ணுப்பெயர்க் கிளவி உருபியல் நிலையும்” (தொல்,எழுத்.419);.

     [எண் + பெயர் – எண்ணுப்பெயர் (எண்களின் பெயர்);.]

ஒன்று முதல் பத்து வரையிலான இலக்கங்களுக்குப் பெயராக வரும் எண்ணுப்பெயர்களும் அவற்றின் ஒருபொருள் குறித்த பல சொற்களாகவரும் எண்ணுப்பெயர்களும் உலகமொழிகள் பெரும்பாலானவற்றில் ஒருசீராக ஊடாடியிருப்பதை அந்தந்த எண்ணுப்பெயர் விளக்கங்களில் காண்க.

எண்ணும்மை

 எண்ணும்மை eṇṇummai, பெ. (n.)

எண்ணுப் பொருளில் வரும்

     “உம்” என்னும் இடைச்சொல்;

 particle ‘um’ used in the sense of computation.

     [எண் + உம்மை.]

எண்ணும்மைத்தொகை

 எண்ணும்மைத்தொகை eṇṇummaittogai, பெ. (n.)

   எண்ணலும்மை தொக்கு வருதல்; elliptical compound in which the computation part ‘um’ is understood இராப்பகல் (ஆ.அக.);.

     [எண் + உம்மை + தொகை.]

எண்ணுறுத்தல்

 எண்ணுறுத்தல் eṇṇuṟuttal, பெ. (n.)

   உறுதிப்படுத்துகை (சங்.அக.);; confirming, establishing.

     [எண் + உறுத்தல்.]

எண்ணுவண்ணம்

எண்ணுவண்ணம் eṇṇuvaṇṇam, பெ. (n.)

   எண்ணி டைச்சொல் பயின்றுவரும் வண்ணக்குழிப்பு (சந்தம்);;     (Pros.); rhythm produced bythe frequent use of the enumerative particle. e.g. ‘உம்’

     “எண்ணுவண்ண மெண்ணுப்பயிலும்” (தொல்.பொருள்.540);.

     [எண்னு + வண்ணம்.]

எண்ணூறு

 எண்ணூறு eṇṇūṟu, பெ. (n.)

   எட்டு நூறுகள்; eight hundreds.

     “இம்மென்னும் முன்னே எழுநூறு மெண்ணுறும்” (தனிப்.);.

   ம. எண்ணுறு;   க. எண்ட்டுநூறு;   கூ. எட்நூறி;   து. பெண்மனுது;தெ. எனம நூறு. எனமன்னுறு.

     [எண் + நூறு.]

எண்ணூல்

எண்ணூல் eṇṇūl, பெ. (n.)

   கணக்கு நூல்; mathematics

     “பன்னுமெண்ணுன் முக்கந்தம் பலவு முறையி னோதினனால்” (காஞ்சிப்பு.சனற்கு.40);.

     [எண் + நூல்.]

எண்ணெட்டு

 எண்ணெட்டு eṇīeṭṭu, பெ. (n.)

   அறுபத்து நான்கு; eight eights, i.e., sixty four, dist fr.

     “evvettu”.

     [எண் + எட்டு.]

எண்ணெய்

எண்ணெய் eṇīey, பெ. (n.)

   1. நல்லெண்ணெய்; gingilli oil.

   2 எண்ணெய்ப்பொது, நெய்மம்; common name for oil.

   3. எண்ணெய் தரும் ஒரு மரவகை; Malabar wood-oil tree, having oil in the pores of the wood.

   1. tr. Dipterocar-pus indicus. (L);.

   ம. எண்ண;   தெ. கொலா. நூனெ;   கை, யன;   எரு. வன்ன;   கோத, எண், எண்ணெ;க., து., இரு., துட., பட., குட. எண்னெ.

நெய்ப்பொரு ளெல்லாவற்றுள்ளும் ஆவின் அல்லது எருமை பின் நெய் ஊட்டமான உணவிற்குரியதாய்த் தலைசிறந்ததாதலால், நெய்யென்னும் பொதுப் பெயரே சிறப்புப் பெயராயிற்று. முதன் முதலாக எள்ளின் நெய்யைக் குறித்த எண்ணெய் என்னுஞ்சொல். மிகப் பெருவழக்காய் வழங்கியதால் நாளடை வில் தன் சிறப்புப் பொருளை யிழந்து, நெய்யல்லாத நெய்மப் பொருள்களின் பொதுப் பெயராயிற்று. அதனால் தன் பழம் பொருளைக் குறித்தற்கு ‘நல்’ என்னும் அடைபெற்றது. இத னால், நெய்க்கு அடுத்துச் சிறந்தது நல்லெண்ணெய் என்பது பெறப்படும்.

     “வைத்தியனுக்குக் கொடுப்பதை வாணியனுக் குக் கொடு” என்பது பழமொழி. (செல்வி.74பிட்.);.

     “எண்ணெய் முந்துதோ திரிமுந்துதோ” என்றும் ஒரு பழ மொழி வழங்குகிறது. அகல்விளக்கு திரி முதலில் தீர்ந்து அவியுமோ! எண்ணெய் முதலில் வறண்டு அவியுமோ! என்று பார்த்தமட்டில் திட்டமாகச் சொல்லமுடியாத நிலையைச் சாக் காட்டு வாயிலில் தவிக்கும் படுகிழட்டுப் பருவமெய்திய மூதானத்துணைவர்க்குப் பொருத்தி உவமையாக்கிப் பேசுவது உலக வழக்கு.

எண்ணெய் முறித்தல்

 எண்ணெய் முறித்தல் eṇīeymuṟittal, பெ. (n.)

   பழுக்கக் காய்ச்சிய இருப்புக் கரண்டியி லிட்டாவது, இரும்பைப் பழுக்கக் காய்ச்சி எண்ணெயில் தோய்த்தாவது, எண்ணெயின் நீர்க்கலப்பு முதலிய குற்றங்களை நீக்கல்; removing the admixture of water or other bad qualities in oil, by pouring it into a well-heated large spoon or small vessel made of iron or by dipping into it a piece of red hot iron. (சா.அக.);.

     [எண்ணெய் + முறித்தல்.]

எண்ணெய் விளக்கு

 எண்ணெய் விளக்கு eṇīeyviḷakku, பெ. (n.)

   எண்ணெய்யில் எரியும் விளக்கு; oil-lamp.

ம. எண்ணவிளக்கு.

     [எண்ணெய் + விளக்கு.]

எண்ணெய்க்கசடு

 எண்ணெய்க்கசடு eṇīeykkasaḍu, பெ. (n.)

   எண்ணெய் மண்டி; dregs of oil.

     [எண்ணெய் + கசடு.]

எண்ணெய்க்காரன்

 எண்ணெய்க்காரன் eṇīeykkāraṉ, பெ. (n.)

   எண்ணெய் விற்பவன்; oil-monger.

   ம. எண்ணக்காரன்;க. எண்ணெகார.

     [எண்ணெய் + காரன்.]

எண்ணெய்க்குத்தி

 எண்ணெய்க்குத்தி eṇīeykkutti, பெ. (n.)

   சிறிய எண்ணெய்ச் சாடி; small oil jar. (இ.வ.);.

   ம. எண்ணக்குற்றி;   க. எண்ணெ கடிகெ;பட எண்ணெமான.

     [எண்ணெய் + குத்தி. குற்றி → குத்தி.]

எண்ணெய்ச்சாணை

 எண்ணெய்ச்சாணை eṇīeyccāṇai, பெ. (n.)

   எண்ணெய் பூசிய ஒருவகைச் சாணைக்கல்; stone prepared for sharpening knife etc. by oiling.

ம. எண்ணச்சான.

     [எண்ணெய் + சாணை.]

எண்ணெய்ச்சாயப்படம்

 எண்ணெய்ச்சாயப்படம் eṇīeyccāyappaḍam, பெ. (n.)

   எண்ணெய் வண்ணப்படம்; oil painting.

ம. எண்ணச் சாயப்படம்.

     [எண்ணெய் + சாயம் + படம்.]

எண்ணெய்ச்சாயம்

எண்ணெய்ச்சாயம் eṇīeyccāyam, பெ. (n.)

   1. எண்ணெயாற் செய்யப்பட்ட வண்ணம் (ராட்.);; oil paint.

   2. எண்ணெயிற்றோய்த்தேற்றுவண்ணம். (கொ.வ.);; colouring substance used in dying a cloth red after soaking it in oil.

ம. எண்ணச்சாயம்.

     [எண்ணெய் + சாயம். சாயம் = நிழல், நிறம்]

எண்ணெய்ச்சிக்கல்

எண்ணெய்ச்சிக்கல் eṇīeyccikkal, பெ. (n.)

   1. எண்ணெய் வயிற்றில் தங்குதலாலுண்டாகும் செரி

   யாமை (கொ.வ.);; indigestion caused by unassimilated oily food.

   2 எண்ணெய் மயிரினின்று நீங்காமையாலாகும் சிக்கல் (வின்);; greasy, clotted state of the hair.

   3. எண்ணெய் நாற்றம் (வின்.);; oil odour, as obnoxious.

   4. ஆடையிற்பற்றின எண்ணெயமுக்கு; oily, stained condition of cloth.

ம. எண்ணச்சிக்கல்.

     [எண்ணெய் + சிக்கல்.]

எண்ணெய்ச்சுண்டு

 எண்ணெய்ச்சுண்டு eṇīeyccuṇṭu, பெ. (n.)

   எண்ணெய்க் கசடு (வின்.);; dregs of oil.

     [எண்ணெய் + கண்டு.]

எண்ணெய்தேய்த்துக்கொள்(ளு)-தல்

எண்ணெய்தேய்த்துக்கொள்(ளு)-தல் eṇīeydēyddukkoḷḷudal,    12. செ.கு.வி. (v.i.)

   உடம்பு முழுவதும் எண்ணெய் தேய்த்துக் குளித்தல்; to smear one’s head as well as body and limbs with gingili oll immediately before a bath.

     [எண்ணெய் + தேய்த்து + கொள்.]

எண்ணெய்த்தண்டு

எண்ணெய்த்தண்டு eṇīeyttaṇṭu, பெ. (n.)

   எண்ணெய் பெய்துவைக்கும் குழாய்; bamboo tube in which oil is Kept.

     “முருகுலா மெண்ணெய்த்தண்டும்” (காஞ்சிப்பு:திருக்கண்.36);.

     [எண்ணெய் + தண்டு.]

எண்ணெய்த்தருவை

 எண்ணெய்த்தருவை eṇīeyttaruvai, பெ. (n.)

   ஒருவகைப் புல்; a kind of grass.

ம. எண்ணக்கடகல்.

     [எண்ணெய் + தருவை. தருவை = தருப்பைப்புல்.]

எண்ணெய்ப்பனையன்

 எண்ணெய்ப்பனையன் eṇīeyppaṉaiyaṉ, பெ. (n.)

   பனைவிரியன் பாம்பு (இ.வ.);; krait a small venomous Snake, oily in appearance, Bungarus carulens.

     [எண்ணெய் + பனையன்.]

எண்ணெய்ப்பற்று

 எண்ணெய்ப்பற்று eṇīeyppaṟṟu, பெ. (n.)

   எண்ணெய்ச்சிக்கு (இ.வ.);; adherence of oil or unctuous matter to hair or clothes;

 greasy substance in food.

     [எண்ணெய் + பற்று.]

எண்ணெய்ப்பிசுக்கு

 எண்ணெய்ப்பிசுக்கு eṇīeyppisukku, பெ. (n.)

   எண்ணெய்ப்பற்று; adherence of oil to hair or clothes.

     [எண்ணெய் + பிசுக்கு.]

எண்ணெய்ப்பிணக்கு

 எண்ணெய்ப்பிணக்கு eṇīeyppiṇakku, பெ. (n.)

   எண்ணெய் தேய்த்துக் குளித்ததனால் வரும் காய்ச்சல் (இ.வ.);; fever caused by oil-bath.

     [எண்ணெய் + பிணக்கு.]

எண்ணெய்ப்புல்லிடு-தல்

எண்ணெய்ப்புல்லிடு-தல் eṇīeyppulliḍudal,    18. செ.குன்றாவி, (v.t.)

   நெசவுபாவுக்கு எண்ணெயிடுதல் (யாழ்.அக.);; to apply oil to the warp, in weaving.

எண்ணெய்மணி

 எண்ணெய்மணி eṇīeymaṇi, பெ. (n.)

   கழுத்திலணியும் ஒரு வகை மணி (சங்.அக.);; kind of plain bead used in necklaces.

     [எண்ணெய் + மணி.]

எண்ணெய்மரம்

எண்ணெய்மரம் eṇīeymaram, பெ. (n.)

   1. மலையாளத்தில் வளருமோர் எண்ணெய்மரம் (சா.அக.);; tree usually growing in the western ranges of Kerala.

   2. வழுக்குமரம்; slippery post especiály for sport event on festival occasion.

     [எண்ணெய் + மரம்.]

எண்ணெய்மெழுகு

எண்ணெய்மெழுகு eṇīeymeḻugu, பெ. (n.)

   1. உறைந்த இலுப்பெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய்; vegetable wax, it is a term used for solidified coconut oil or iluppal oil.

   2. ஒரு வகைமெழுகு (M.M.);; solidified oil, vegetable wax.

ம. எண்ணக்கூடி.

     [எண்ணெய் + மெழுகு.]

எண்ணெய்வடி-த்தல்

எண்ணெய்வடி-த்தல் eṇīeyvaḍittal,    4. செ.குன்றாவி, (v.t.)

   1. எண்ணெயூற்றுதல்; to express oil by boiling oleagnous, seeds.

   2. எண்ணெயைத் தெளிவித்து இறுத்தல்; to filter oil from impurities.

     [எண்ணெய் + வடி.]

எண்ணெய்வழுக்கு

எண்ணெய்வழுக்கு eṇīeyvaḻukku, பெ. (n.)

   1. எண்ணெய்சிக்கு; oleaginousness, greasiness.

   2. எண்ணெய் பிசுக்கு; sleekiness, glossiness, oily brightness.

     [எண்ணெய் + வழுக்கு.]

எண்ணெழுத்து

எண்ணெழுத்து eṇīeḻuttu, பெ. (n.)

   1. எண்ணும் எழுத்தும்; number and alphabet.

   2. இலக்கம்; the written form of a letter used as digit.

     “எண்ணெழுத்து இகழேல்” (ஆத்திகுடி.);.

     [எண் + எழுத்து.]

எண்ணேகாரம்

எண்ணேகாரம் eṇṇēkāram, பெ. (n.)

ஏ4-3 பார்க்க;see e4-3.

     “எண்ணேகாரம் இடையிட்டுக் கொளினும்” (நன்.);.

     [எண் + ஏகாரம்.]

எண்ணைப்பந்தம்

எண்ணைப்பந்தம் eṇṇaippandam, பெ. (n.)

   1. எண்ணெயிட்டு எரிக்கும் தீப்பந்தம்; torch.

   2. வரி வகை; tax. (S.i.i.vii.69);. (செ.அக.);.

     [எண்ணெய் + பந்தம்.]

எண்ணோகாரம்

எண்ணோகாரம் eṇṇōkāram, பெ. (n.)

   எண்ணுப்பொ ருளில் வரும் ஓகாரவிடைச்சொல்; computative partcle ‘O’ எண்ணோகாரம். (நன்.இடை4.இராமநுக கவிரா யருரை);.

     [எண் + ஓகாரம்.]

எண்படு-தல்

எண்படு-தல் eṇpaḍudal,    20. செ.கு.வி. (v.i.)

   அகப்படுதல் (யாழ்.அக.);; to be obtainable, available. (செ.அக.);.

     [எண்5 + படு – எண்படு, எண் = எளிமை. எண்படல் = எளிதாய்க் கிடைத்தல்.]

எண்பதம்

எண்பதம்1 eṇpadam, பெ. (n.)

   எளியசெவ்வி; easy accessibility.

     “எண்பதத்தானோரா முறைசெய்யா மன்னவன்” (குறள்:548);.

     [எள் + பதம்.]

 எண்பதம்2 eṇpadam, பெ. (n.)

   எட்டுவகையான தவசம்; eight kinds of millet.

     [எண் + பதம். பதம் = பயிர், தவசம், உணவு. நெல், புல், வரகு, தினை, சாமை, இறுங்கு, கேழ்வரகு, துவரை என்பன எண்வகைக் கூலங்களாம்.]

எண்பது

எண்பது eṇpadu, பெ. (n.)

   80 என்னும் எண்; number 80.

     “எண்பது கோடி நினைந்து எண்ணுவன” (ஒளவை யார்.);.

   ம. என்பது;   க., பட, எம்பத்து;   துட. எட்டபொத்த;   கொலா. எம்பத்;   குட. எம்பதி;   து. யென்ப, எண்ப;தெ. எனுபதி, எனபதி, எனுபதி, எனபய், என்பதி.

     [எண் + (பத்து); பது.]

எண்பி-த்தல்

எண்பி-த்தல் eṇpittal,    4. செ.குன்றாவி. (v.t.)

   மெய்ப்பித்தல் (யாழ்ப்.);; to prove, show, substantiate.

   மறுவ. மூதலித்தல், மெய்ப்பித்தல், நிறுவுதல்;தெ. எனியின்க.

     [ஏ → ஏண் → எண் → எண்பி (பி.வி.); ஏ (எண்); = உயர்வு, எண் = எடுத்துநிறுத்துதல், எண்பி = நிலைநாட்டுதல்.]

எண்பெருந்துணைவர்

 எண்பெருந்துணைவர் eṇperunduṇaivar, பெ. (n.)

   அரசருக்குரிய எட்டுவகை ஆயத்தார் (திவா.);; the eight groups of attendants necessary for a monarch.

     [எண் + பெரும் + துணைவர்.]

அரசர்க்கு உசாத் துணையாக இருந்த கரணத்தியலர், கருகார், பொன்கற்றம், கடைகாப்பாளர், நகரமாந்தர் படைத்தலைவர், யானைமறவர், இவுளிமறவர் என்னும் எண்வகை ஆயத்தார் எண் பெருந்துணைவர் எனப்பட்டனர்.

எண்பெற்றி

எண்பெற்றி eṇpeṟṟi, பெ. (n.)

   எண் குணம் வாய்ந்தோன்; one possessing eight qualities – Siva

   2. எட்டுப்பிள்ளை பெற்றவள்; woman who has borne eight children – octipara. (சா.அக.);.

     [எண் (எட்டு); + பெற்றி.]

எண்பேராயம்

எண்பேராயம் eṇpērāyam, பெ. (n.)

எண்பெருந்துனைவர் பார்க்க: see enperunlunaivar.

     “ஐம்பபெருங் குழுவு மெண்பேராயமும்” (மணி.1.17);.

     [எண் (எட்டு); + பேராயம்.]

எண்மதி

எண்மதி eṇmadi, பெ. (n.)

எண்ணாட்டிங்கள் (பரிபா. 1, 1, 37); பார்க்க;see ennattingal.

     [எண் (எட்டு); + மதி. மதி = நிலவு.]

எண்மயம்

எண்மயம் eṇmayam, பெ. (n.)

எண்செருக்கு பார்க்க;see enserukku.

     “முடந் திரித்தெண் மயத்து நின்றார்” (திருநூற் 62);. (செ.அக.);.

     [எண் + மயம், மயன் → மயம்.]

எண்மர்

எண்மர்1 eṇmar, பெ. (n.)

   கணக்கியல் வல்லுநர் (யாழ்.அக.);; mathematicians. (செ.அக.]

     [எண்மர் + மர். எண் → எண்ணுதல். ஆராய்தல், கணக்கிடுதல், ‘நர்’;

     ‘மர்’ என்பன பலர்பாலிறுகள்.]

 எண்மர்2 eṇmar, பெ. (n.)

   எட்டுப்பேர்; eight persons.

     “மாதிரங் காக்கு மெண்மர்க்கும்” (கம்பரா.பிணிலீ.44);.

   ம. எண்மர்;   எண்வர்;   க. எண்பர்;   தெ. எனமண்டுகு;கொலா. என்மாதெர், என்மாடர்.

     [எண் (எட்டு); + மர்.]

எண்மானம்

 எண்மானம் eṇmāṉam, பெ. (n.)

   எண்ணை எழுத்தாலெழுதுகை.(Mod.);;     [என் + மானம்.]

எண்மை

எண்மை1 eṇmai, பெ. (n.)

   மதிப்புரவு, (யாழ்.அக);; honour. (செ.அக.);.

     [எண் = எண்ணப்படுதல், மதிக்கப்படுதல், எண் + மை – எண்மை. (மதிக்கற்பாடு);.]

 எண்மை2 eṇmai, பெ. (n.)

   1. எளிமை; easiness, as of acquisition.

     “எண்மைக்காலத்து” (தொல்,பொருள், 150);.

   2. தாழ்மை; lowness of rank or condition, position of inferiority.

     “எண்மையா ருலகினில்” (கம்பரா.சடாயுவுயிர்.5);.

     [என் → எண்மை (எளிமை);.]

எண்மையவன்

 எண்மையவன் eṇmaiyavaṉ, பெ. (n.)

   எளியவன்; poor person.

     [எண்மை + அவன்.]

எண்வகுப்பு

 எண்வகுப்பு eṇvaguppu, பெ. (n.)

   ஒன்று முதல் முப்பத்தாறு இடம் (தானம்); வரை வருவது; numerical classification. (ஆ.அக.);.

     [எண் + வகுப்பு.]

எண்வகைவிடை

எண்வகைவிடை eṇvagaiviḍai, பெ. (n.)

   சுட்டு விடை, மறைவிடை, நேர்விடை, ஏவல்விடை, வினாவிடை, உற்றதுரைத்தல்விடை, உறுவதுகூறல் விடை, இனமொழிவிடை என எட்டுவகையான விடை. (நன்.386);; eight forms of answering questions.

     [எண் (எட்டு); + வகை + விடை.]

எதனம்

 எதனம் edaṉam, பெ. (n.)

   மூச்சு விடுகை (யாழ்.அக.);; creathing.

ம. ஏதனம்.

     [எங்கு → ஏந்து → ஏந்தல் → ஏதல் → ஏதலம் → ஏதளம் கொ.வ.).]

எதன்

எதன் edaṉ, பெ. (n.)

மூலகாரணன், he who is the is first cause.

     “ஏதனை பேதமிலா விமையோர் தொழும் தேவனை” (தேவா.471.3);.

     [ஏந்து → ஏது → ஏதன்.]

எதரம்

 எதரம் etaram, பெ. (n.)

கொலைவெறி:

 roguish fury.

     [எதிர்-எதிரம்]

எதலிடு-தல்

எதலிடு-தல் edaliḍudal,    20.செ.கு.வி. (v.i.)

   1. பொறாமையோடு பேசுதல் (வின்.);; to speak with envy.

   2. எள்ளி உரையாடுதல்; mocking.

     [எள்ளல் → எளல் → எதல் + இடு.]

எதளா

 எதளா edaḷā, பெ. (n.)

   புளியமரம் (மலை.);; tamarind.

எதா

 எதா etā, வி.எ. (adv.)

   எப்படி; always used as a relative, and in Tamil generally in compounds, in which manner, as much as.

     [Skt. yatha → த. எதா.]

எதாகிலும்

 எதாகிலும் etākilum,    கு.வி.எ (adv.) ஏதாகிலும்; whatever may be, something or other.

     [எது + ஆகிலும் – ஏதாகிலும் → எதாகிலும்.]

 எதாகிலும் etākilum,    சு.பெ. (pron) ஏதேனும்; some-tning, whatever.

     [ஏது + ஆகிலும்.]

எதாசத்தி

எதாசத்தி etācatti,    வி.எ. (adv.) இயன்றவரை, கூடிய வரை; to the best of one’s ability, one’s mite.

     “பொருந்திய வெதாசத்தி யீந்தான்” (மச்சபு. தீர்த்தயாழ். 5);.

     [எதா + சத்தி.]

     [Skt. yatha → த. எதா.]

சத்து → சத்தி.

எதாச்சும்

 எதாச்சும் etāccum,    கு.வி.எ. (adv.) என்னமாவது, ஏதாவது; whatever may be.

     “ஏதாச்சும் இருக்குமா சாப்பிட?” (வட்.வழக், சொல்லக.);.

எதாப்பிரகாரம்

 எதாப்பிரகாரம் etāppirakāram, வி.எ. (adv.)

   வழக்கம் போல்; as usual.

     ‘எதாப்பிரகாரம் நடக்கட்டும்’.

     [Skt. eta-pirakāram → த. எதாப்பிரகாரம்.]

எதார்த்தம்

 எதார்த்தம் etārttam, பெ. (n.)

   உண்மை; truth.

     “எதார்த்தவாதி வெருசன விரோதி”.

     [Skt. yathartha → த. எதார்த்தம்.]

எதார்த்தவாதி

எதார்த்தவாதி etārttavāti, பெ. (n.)

   1. உண்மை விளம்பி; one who speaks truth.

   2. வெளிப்படையாக இயங்குபவன்; one who acts openly.

     [Skt. yatharthavadin → த. எதார்த்தவாதி.]

எதி

எதி1 edi, பெ. (n.)

   1. படைக்கலப் பொது; weapon

     “மருப்பினுதி யேதிகொளுத்தி” (இரகு.திக்கு.35);.

   2. வாள் (திவா.);; sword.

     [எய் → எய்தி → எதி (கொ.வ.);. எய்தி = எய்வது, கொல்லும் கருவி.]

 எதி2 edi, பெ. (n.)

   துண்டம் (பிங்.);; piece, fragment.

     [எய் → எய்தி → எதி = வெட்டியது, குத்தியது, துண்டாக்கியது.]

 எதி edi, பெ. (n.)

   துறவி; ascetic.

     “எதிகளேனும் வணங்குவர் தாயை (காசிக. சிவசன். அக். 13);.

     [Skt. yati → த. எதி.]

எதிடு

எதிடு ediḍu, பெ. (n.)

தோழி அறத்தோடு நிற்கையில், தலைவி தலைவனை மணத்தற்கு அவன் செய்த உதவிகளைக் காரணமாக இட்டுரைக்கை

     “ஏதீடுதலைப்பாடு” (தொல்.பொருள்.207);;

 literary theme in which the lady companion of a heroine explains that the reasons for the chose of her man by her mistress are to be found in the risks he had taken to save her in times of imminent danger, and other tokens of his regard for her.

     [ஏது + ஈடு. இடு → ஈடு. ஏது = காரணம்.]

எதிர

எதிர edira, இடை. (part)

   ஓர் உவமவுருபு (தண்டி.33);; adverbial particle of comparison.

     [எதிர் → எதிர.]

எதிரடையோலை

எதிரடையோலை ediraḍaiyōlai, பெ. (n.)

   அடையோலை எழுதித் தருபவருக்குக் கொடுக்கும் சான்றுச் சீட்டு; deed of authority given by the lessor to the lessee.

     ‘நிலக்கூலிக்கும் விதை முதலுக்கும் எதிரை யோலை காட்டினபடியாலும்’ (S.I.ivii.385);.

     [எதிர் + அடை + ஒலை.]

எதிரதுதழிஇயவெச்சவும்மை

 எதிரதுதழிஇயவெச்சவும்மை ediradudaḻiiyaveccavummai, பெ. (n.)

   எஞ்சிய செயலை விளக்கி யெதிர்காலத்தைத் தழுவி நிற்கு மும்மை; adverbial particle of anticipatory reference (ஆ.அக.);.

     [எதிர் + அது + தழுவிய (தழிஇய); + எச்ச + உம்மை.]

எதிரதுதழுவு-தல்

எதிரதுதழுவு-தல் ediradudaḻuvudal,    5. செ.குன்றாவி. (v.t.)

   வரக்கடவதனையுங் குறித்து நிற்றல்; to bear anticipatory reference.

எதிரது தlஇயவெச்சவும்மை” (நன்.);.

எதிரதுபோற்றல்

எதிரதுபோற்றல் ediradupōṟṟal, பெ. (n.)

முன்னில்லா தனவாயினும் தற்கால வழக்காயின் அவற்றைக்

கொள்ளும் ஓர் உத்தி (நன்.14); (Gram);,

 adoption of modern usage. One of 32 utti.

     [எதிர் + அது – எதிரது + போற்றல்.]

எதிரதுபோற்று-தல்

எதிரதுபோற்று-தல் ediradupōṟṟudal,    5. செ.குன்றாவி. (v.t.)

எதிரதுதழுவு பார்க்க;see ediradu-laluvu.

     [எதிர் + அது + போற்று.]

எதிரம்புகோ-த்தல்

எதிரம்புகோ-த்தல் edirambuāddal,    4. செ.கு.வி. (v.i.)

   எதிர்த்துநிற்றல் (குருபரம்.ஆறா.5);; lit to place the arrow against the bowstring, against a similar act of the opponent to stand in opposition;

 to cross swords.

     [எதிர் + அம்பு + கோத்தல்.]

எதிரல்

 எதிரல் ediral, பெ. (n.)

   எதிர்த்தல்; opposing. (ஆ.அக.);.

     [எதிர் + அல்.]

எதிரழற்சி

 எதிரழற்சி ediraḻṟci, பெ. (n.)

   எதிர்ப்புண்டாக்கும் மருந்து; irritant medicine.

     [எதிர் + அழற்சி.]

எதிரா லாக்

 எதிரா லாக் edirālāk, பெ. (n.)

   வரும் ஆண்டு; rext year.

     “எதிராக்குப் போவோம். அங்கே” (வட்வழக். சொல்லக);.

     [எதிர் + ஆண்டு – எதிராண்டு → எதிரா. (கொ.வ.);.]

எதிராசன்

எதிராசன் edirācaṉ, பெ. (n.)

   1. துறவிகளுள் சிறந்தவன்; king of ascetics.

   2. இராமானுசர்; an appellation of Ramanujacarya..

     “முனியெதிராசன் பேர்மொழி (அஷ்டப். நூற்றெட். காப்பு);.

     [எதி + ராசன்.]

     [Skt. yati → த. எதி.]

அரசன் → ராசன்.

எதிராப்பு

 எதிராப்பு edirāppu, பெ. (n.)

   கழலாதபடி வைக்கும் ஆப்பு; side wedge driven in to hold fast the main wedge.

     [எதிர் + ஆப்பு.]

எதிராமாண்டு

எதிராமாண்டு edirāmāṇṭu, பெ. (n.)

   எதிர்வரும் ஆண்டு (S.i.i.i.93);; next succeeding year.

     [எதிர் + ஆம் + ஆண்டு.]

எதிராளி

எதிராளி edirāḷi, பெ. (n.)

   1. பகைவன்; enemy, adversary.

     “துர்க்குணமில்லா தவர்க் கெதிராளியேது.” (குமரேச.80);.

   2. எதிர்வழக்காளி; defendant, accused.

   3. போட்டி போடுபவன்; competitor.

   ம. எதிராளி;   க. எதுராள்;   கோத. எத்ய்ர்;தெ. எதிரி.

     [எதி + (ஆள்); ஆளி.]

எதிராள்

 எதிராள் edirāḷ, பெ. (n.)

   எதிராளி (சேரநா.);; opponent, enemy.

ம. எதிராள்.

     [எதிர் + ஆள்.]

எதிரி

எதிரி ediri, பெ. (n.)

எதிராளி பார்க்க see edirali.

     “எதிரிசாபமுந்துணிந்துவிழவே” (பாரத.பத்தாம்.31);.

   க. எதுரி;   தெ. எதிரி;   ம. எதிரி;கோத. எத்ய்ர்.

எதிரிடல்

 எதிரிடல் ediriḍal, பெ. (n.)

எதிரிடு-தல் பார்க்க;see edindu.

     [எதிர் + இடல்.]

எதிரிடு-தல்

எதிரிடு-தல் ediriḍudal,    18. செ.குன்றாவி. (v.t.)

   1. எதிர்ப்படுதல்; to meet, encounter.

   2. எதிர்த்தல்; to oppose in battle.

   3. மாறுபடுதல்; to be opposed;

 to be alwarance.

     ‘அனந்தர கூடிணத்திலே எதிரிடா நிற்பார்கள் (ஈடு.1,3,10);.

   ம. எதிரிடுக;   க. எதுரிக, எதுரிடு;தெ. எதிரின்க.

     [எதிர் + இடு.]

எதிரிடை

எதிரிடை1 ediriḍai, பெ. (n.)

   1. எதிர்ச்செயல்; opposition, counter-action.

   2. போட்டி; rivalry, competition.

   3. சமமாயிருப்பது; that which is equal.

அவனுக்கு எதிரிடையில்லை. (இ.வ.);.

   ம. எதிரிட;க. எதுரு சீட்டு.

     [எதிர் + இடை.]

 எதிரிடை2 ediriḍai, பெ. (n.)

எதிரிடைச்சீட்டு பார்க்க, See ediridaiccittu.

     [எதிர் + இடை.]

எதிரிடைகட்டு-தல்

எதிரிடைகட்டு-தல் ediriḍaigaḍḍudal,    5. செ.குன்றாவி. (v.t.)

   1. போட்டி போடுதல்; to vie with, compete with.

   2. பகை கொள்ளுதல் (யாழ்ப்.);; to oppose, resist, antagonize.

     [எதிர் + இடை – எதிரிடை + கட்டு.]

எதிரிடைச்சீட்டு

 எதிரிடைச்சீட்டு ediriḍaiccīḍḍu, பெ. (n.)

எதிர்ச்சீட்டு பார்க்க;see edir-c-cittu.

     [எதிரிடை + சீட்டு.]

எதிரிடைமுறி

 எதிரிடைமுறி ediriḍaimuṟi, பெ. (n.)

எதிரிடைச்சீட்டு பார்க்க;see edingaiccittu.

     [எதிரிடை + முறி.]

எதிரிலி

 எதிரிலி edirili, பெ. (n.)

   எதிரில்லாதவன்; the univalied, usu, a title of kings.

எதிரிலி சோழவேந்தன். (insc.);

     [எதிர் + இலி.]

எதிருக்கெடு-த்தல்

எதிருக்கெடு-த்தல் edirukkeḍuddal,    4. செ.கு.வி. (v.i.)

எதிர்க்கெடு பார்க்க;see edir-k-keau.

     [எதிருக்கு + எடு.]

எதிருத்தரம்

 எதிருத்தரம் ediruddaram, பெ. (n.)

   மறுமொழி; rejoinder, counter Slalement.

     [எதிர் + உத்தரம்.]

எதிருரை-த்தல்

எதிருரை-த்தல் ediruraiddal,    4. செ.குன்றாவி, (v.t.)

   எதிர்த்துப் பேசுதல்; to

 oppose,

 contradict, speak against. _ 4.செ.கு.வி. (v.i.);

   பொருதற் குறுதியாய் எதிர்நிற்றல்; to take a firm, stand for making an attack.

     “சேனையுடன் மீண்டு மெதிரூன்றாமல்” (பாரத.பதினேழாம்.163);.

     [எதிர் + உரை.]

எதிரெடு-த்தல்

எதிரெடு-த்தல் edireḍuddal,    4. செ.குன்றாவி. (v.t.)

   1. வாயாலெடுத்தல்; to vomit

     “குமட்டி யெதிரே

யெடுக்கும்” (மீனாட்.பிள்ளை.காப்பு.6);.

   2. எதிர்க் கெடு-த்தல் பார்க்க;see edirkkedu.

     [எதிர் + எடு.]

எதிரேறு

எதிரேறு edirēṟu, பெ. (n.)

   வலிமை; strength, power.

     “எங்க ளெதிரேறழிய” (பெரியபு.திருநா.121);.

     [எதிர் + ஏறு.]

எதிரேற்றம்

எதிரேற்றம் edirēṟṟam, பெ. (n.)

   வெள்ளப் பெருக்குக்கு எதிரேறிச் செல்லுகை; against the current.

     “எதிரேற் றங் கொண்ட பாடல்” (சேதுபு.திருநா.5);.

     [எதிர் + ஏற்றம்.]

எதிரேற்றல்

எதிரேற்றல்1 edirēṟṟal, பெ. (n.)

   எதிர்கொள்ளுகை; advancing towards a party to welcome them.

     [எதிர் + ஏற்றல்.]

 எதிரேற்றல்2 edirēṟṟal, பெ. (n.)

   1. எதிர்த்து நிற்கை; attacking, opposing, resisting.

   2. பிறன்மேல் வருவதை முன்னின்று தானேற்கை; interposing and receiving on one’s own person, as the weapons discharged against another by a foe.

     [எதிர் + ஏற்றல்.]

எதிரேவல்

எதிரேவல் edirēval, பெ. (n.)

   1. ஏவலையெடுக்கச் செய்யுந் தொழில் (வின்.);; counteracting sorcery.

   2 ஒருவன் செய்த ஏவலின் பொருட்டு மாறாக அவன் மீது ஏவுகை; retallatory sorcery.

     [எதிர் + ஏவல்.]

எதிரொலி

எதிரொலி1 ediroliddal,    4.செ.கு.வி. (v.in.) மாறி

   யொலி செய்தல்; to echo, reverberate.

     “நீடுகுன்றெதிரொலிக்கவே” (பாரத.வேத்திர.10);.

     [எதிர் + ஒலி.]

 எதிரொலி2 ediroli, பெ. (n.)

   மாறியொலித்தல்; echo,

 reverberation of sound.

     “இவனுமப் பொழு தெதிரொலியென்” (பாரத.பதின்மூ.88);.

     [எதிர் + ஒலி.]

எதிர்

எதிர்1 edirdal, செ.கு.வி. (v.i.)

.

   1. தோன்றுதல்; to appear.

     “எதிர்நலப் பூங்கொடி” (சீவக. 2115.);

   2. நிகழ்தல்; to happen betal.

     “இனி யெதிரா சன்மங்கள்” (அஷ்டப்.நூற்றெட்.காப்பு.3);.

   3. முன்னாதல்; to precede.

     “பனியெதிர் பருவமும்” (தொல்.பொருள்.7);.

   4. மலர்தல் (திவா.);; to blossom.

   5. மாறுபடுதல்; to be opposed, be at variance.

     “செய்வினைக் கெதிர்ந்த தெல்வர் தேஎத்து” (புறநா. 6,11);

   6. எதிர்காலத்து வருதல்; to come to pass in future.

     “எதிர்வநல்ல வல்லவையடாது” (இரகு. குறைகூ.1);.

   7. தம்மிற் கூடுதல்; to join together.

     “போரெதிர்ந்தேற்றார்” (பரிபா.18,1);.

   8. அறம்செய்தல்; to be hospitable.

     “துறவோர்க் கெதிர்தலும்” (சிலப்.16,72);. –

   4. செ.குன்றாவி. (v.t.);

   1. எதிர்த்தல்; to oppose, confront

     “விண்ணுளோர் எதிர்ந்த போதும்” (பாரத.சூத.21);.

   2. பெறுதல்; to receive.

     “சென்றுபயனெதிர” (தொல்.பொருள்.91);.

   3. கொடுத்தல்; to give.

     “உலகெல்லா மெதிரும் பலியுண வாகவும்” (தேவா.1025,4);.

   4. சந்தித்தல்; to meet

     “தானினி தெதிர்ந்த தானத் தருகே” (பெருங்.மகத. 8, 38);.

   5. பொருந்துதல்; to rest on, hover over, as clouds.

     “காரெதிரிய கடற்றானை” (பு.வெ. 4,10);.

   6. ஏற்றுக்கொள்ளுதல்; to accept, submit to.

     “அடிய டைந் தேவ லெதிராது” (பு.வெ.6,32);.

   ம. எதிருக;   க. எதிரிக;தெ. எதிரின்க.

     [அது → அதுல் → அது → எதர் → எதிர்தல். அது → அதுக்குதல், அதக்குதல், அடக்குதல் என்பன தன்பாற் கைக் கொளல் பெறுதல், பொருளாதல் காண்க. அதுல்தல், அதர் தல் என்பன வழக்கிழந்தன. அதுர் → எதரி எனத் திரிந்தது.]

 எதிர்2 edirddal,    4. செ.குன்றாவி. (v.i.)

   1. இகலித் தாக்குதல்; to encounter, oppose, withstand, resist.

     “இத்திறமாகிய படையோ டெப்படி நாஞ்சிற் படை கொண் டெதிர்ப்ப தென்றான்” (பாரத.பதினெட்.15);.

   2. தடுத்தல்; to prevent, hinder.

   ம. எதிர்க்குக;   க. இதிர், இதரு, இதுரு, எதரு, எதிர், எதுர்;   கோத, எத்ய்ர்;   து. எதுரு;தெ. எதுரு.

     [உது → உ.துல் → இதுல் → எதுல் → எதிர் = எதிர் நேர்படல், எதிரிடல், மோதுதல், போரிடுதல்.]

 எதிர்3 edir, பெ. (n.)

   1. முன்னுள்ளது; that which is opposite, over against in front, before.

   2. கைம்மாறு; gratitude return.

     “சூலையினுக் கெதிர்செய்குறை யென் கொல்” (பெரியபு.திருநாவுக்.73);.

   3. வருங்காலம்; future tense.

     “எதிரது தழீஇய வெச்சவும்மை”.

   4. இலக்கு; target, alm.

     “மற்றெதிர் பெறாமையின் வெளி போகி” (இரகுதிக்குவி.169); – கு.வி.எ. (adv.); முன்;

 intront of

     “என்வில்வலிகண்டு போவென் றெதிர்வந் தான்” (திவ்.பெரியாழ்.3,9,2);.

   தெ., து. எதுரு;க. எதிர்.

     [உது → உதுல் → இதுல் → எதுல் → எதுர் → எதிர். உதுல் = முன்னுள்ளது.]

 எதிர்4 edir, பெ. (n.)

   1. முரண்; obstacle, that which is contrary, adverse, hostile.

     “எதிரெல்ல நின் வாய்ச் சொல்” (கலி.96);.

   2. போர் (பிங்.);; battle, war.

   3. எதிரிடையானது; rival.

     “காமக் கடற்கெதிர்த்து நிறை யாம் வரம்பினி நிற்பதன்றால்” (தஞ்சைவா.14);.

   4. ஒப்பு; simitude.

     “உமக்காரெதி ரெம்பெருமான்” (தேவா, 613,4);.

   தெ., து. எதுரு;க. எதிர், ம. எதிர்.

     [உது → உதுல் → இதுல் → எதுல் → எதுர் → எதிர்.]

எதிர்க்கடை

எதிர்க்கடை edirkkaḍai, பெ. (n.)

   1. எதிர்ப்பு (இ.வ.);; opposition.

   2. எதிர் பாகம்; opposite side. (சேரநா.); செ.அக.);.

ம. எதிர்கட.

     [எதிர் + கடை. ‘கடை’ பெயரீறு.]

எதிர்க்கட்சி

 எதிர்க்கட்சி edirkkaṭci, பெ. (n.)

   மாற்றுக்கட்சி; rival party, opposile side.

ம. எதிர்க்கச்சி

     [எதிர் + கட்சி.]

எதிர்க்கதவு

 எதிர்க்கதவு edirkkadavu, பெ. (n.)

   ஆடுகதவு (பாண்டி.);; folding door, double door. (செ.அக.);.

     [எதிர் + கதவு.]

எதிர்க்கரி

எதிர்க்கரி edirkkari, பெ. (n.)

   1. மாறான சான்று (வின்.);; counter evidence.

   2. எதிர் வழக்காளனின் சான்று (இ.வ.);; defence witness. (செ.அக.);.

     [எதிர் + கரி.]

எதிர்க்களி-த்தல்

எதிர்க்களி-த்தல் edirkkaḷiddal,    4.செ.கு.வி. (v.i.)

எதிர்க்கெடு பார்க்க;see edir-k-kedu.

     [எதிர் + களி-த்தல்.]

எதிர்க்காற்று

 எதிர்க்காற்று edirkkāṟṟu, பெ. (n.)

   நேரெதிர் அடிக்குங் காற்று; direct current of air moving through an inclosed space – draught. (செ.அக.);.

     [எதிர் + காற்று.]

எதிர்க்குறி

எதிர்க்குறி edirkkuṟi, பெ. (n.)

   1. மாறுபாடான குறி; contra-indication.

   2. தீக்குறி; counter-symptom, bad or unfavourable symptom. (சா.அக.);.

     [எதிர் + குறி.]

எதிர்க்கெடு-த்தல்

எதிர்க்கெடு-த்தல் edirkkeḍuddal,    4. செ.கு.வி. (v.i.)

   1. குமட்டுதல்; to nauseate, turn the stomach.

   2. உண்ட ஊண் திரும்பி மேல் வருதல்; to retch. (இ.வ.);.

     [எதிரக்கு → எதிர்க்கு + எடுத்தல்.]

எதிர்க்கை

எதிர்க்கை1 edirkkai, பெ. (n.)

   1. மேற்கூரையின் எதிர் மரம் (வின்.);; slanting timber forming a continuous line with the ridge and unting in an angle formed by the slanting hip, rafters on either end of a hipped or bungalow roof.

     [எதிர் + கை.]

 எதிர்க்கை2 edirkkai, பெ. (n.)

   எதிர்த்து நிற்கை; opposition.

     [எதிர் → எதிர்க்கை. கை (தொ.பெ.ஈறு.);]

எதிர்க்கொத்தளம்

 எதிர்க்கொத்தளம் edirkkoddaḷam, பெ. (n.)

   கொத்தளத்துக்கு முன்னுள்ள காப்புச் சுவர்; protecting wall in front of the rampart (pond.);.

     [எதிர் + கொத்தளம்.]

எதிர்சம்பாவனை

 எதிர்சம்பாவனை edircambāvaṉai, பெ. (n.)

எதிர்மொய் பார்க்க;see edir moy.

     [எதிர் + சம்பாவனை.]

எதிர்செய்குறை

 எதிர்செய்குறை edirceykuṟai, பெ. (n.)

   கைம்மாறு; recompense.

     [எதிர் + செய் + குறை.]

எதிர்செலவு

எதிர்செலவு edircelavu, பெ. (n.)

   வரவேற்க முன்னெ முந்து செல்கை; courteous advance to welcome anyone.

     “இருக்கை யெழலும் எதிர்செலவும்” (நாலடி.143);.

     [எதிர் + செயல.]

எதிர்சோழகம்

 எதிர்சோழகம் edircōḻkam, பெ. (n.)

   நேர் தெற்கிலிருந்து வீசும் காற்று (யாழ்ப்.);; wind that blows directly from the south.

     [எதிர் + சோழகம்.]

எதிர்ச்சி

 எதிர்ச்சி edircci, பெ. (n.)

   எதிர்க்கை; act of opposing.

     [எதிர் → எதிர்த்தல் → எதிர்ச்ச்.]

எதிர்ச்சீட்டு

 எதிர்ச்சீட்டு edirccīṭṭu, பெ. (n.)

   எதிரிடைமுறி; counter document containing the corresponding obligations of the executant of it.

க. எதிர்சீட்டு.

     [எதிர் + சீட்டு.]

எதிர்ச்சுவர்

 எதிர்ச்சுவர் edirccuvar, பெ. (n.)

   முன்பக்கச்சுவர்; face wall (C.E.M.);.

     [எதிர் + சுவர்.]

எதிர்ச்செட்டு

எதிர்ச்செட்டு edircceṭṭu, பெ. (n.)

   1. போட்டி வணிகம் (வின்.);; competition in trade.

   2. வாங்கி விற்கும் வணிகம் (யாழ்ப்.);; trading at second hand, buying and selling again directly at a small profit.

     [எதிர் + செட்டு.]

எதிர்ச்செறி-த்தல்

எதிர்ச்செறி-த்தல் edircceṟiddal,    2. செ.குன்றாவி, (v.t.)

   வெள்ளத்திற்கு எதிராக அணை போடுதல்; to dam up, as a flood.

     “பெருக்காற்றை எதிர்ச் செறிக்க மாட்டா தாப் போலே” (திவ். திருநெடுந்.21. வ்யா, பக்.160);.

     [எதிர் + செறி-த்தல்.]

எதிர்ச்சொல்

 எதிர்ச்சொல் etirccol, பெ. (n.)

   ஒரு சொல்லின் பொருளுக்கு நேரெதிரான பொருளுடைய சொல்; antonyml, opposite.”

     [எதிர்+ சொல்]

எதிர்த்தட்டு

எதிர்த்தட்டு edirddaṭṭu, பெ. (n.)

   1. எதிர்ப்பக்கத்துத் துலாத்தட்டு; opposite scale-pan in a balance.

     “எழுகின்ற ஞாயிறொத்தான் குலதீப னெதிர்த்தட்டிலே” (தமிழ்நா. 124.);

   2. எதிரிடை; that which is contrary, opposite.

     “தாரித்ரியமும் அதற்கு எதிர்த்தட்டான ஐஸ்வரியமும்.” (ஈடு,6,3,1);.

     [எதிர் + தட்டு.]

எதிர்த்தலை

எதிர்த்தலை edirddalai, பெ. (n.)

   எதிரிடை; opposite.

     “நட்பும் அதற்கு எதிர்த்தலையான பகையும்” (ஈடு.9,1,1);.

ம. எதிர்த்தலை. (an enemy);.

     [எதிர் + தலை.]

எதிர்த்தாக்கு

 எதிர்த்தாக்கு edirddākku, பெ. (n.)

   தற்காப்பின் பொருட்டுத்தாக்குகை; counter attack in self-defence. (Pond);

     [எதிர் + தாக்கு.]

எதிர்த்துத்தா-(தரு)-தல்

எதிர்த்துத்தா-(தரு)-தல் edirdduddādarudal,    15. செ.குன்றாவி. (v.t.)

   ஒத்துக்கொடுத்தல்; to compensate, make up for. தோற்றுப்படில் நாங்களெதிர்த்துத் தரக்கடவோம். (S.I.I.I.104);.

     [எதிர்த்து + தருதல்.]

எதிர்த்துப்பேசு-தல்

எதிர்த்துப்பேசு-தல் edirdduppēcudal,    5. செ.குன்றாவி, (v.t.)

   மாறு செல்லுதல் (Law.);; to

 dispute,

 controvert, object, to plead against –

   5. செ.கு.வி. (v.i.);

   அடங்காமற் பேசுதல்; to retort, speak disobediently.

     [எதிர்த்து + பேக.]

எதிர்நடை

எதிர்நடை1 edirnaḍai, பெ. (n.)

   மூலத்தின்படி; counter part of a document

இப்பிரதி எதிர்நடை பார்த்தெழுதி னது. (செ.அக.);.

     [எதிர் + நடை.]

 எதிர்நடை2 edirnaḍai, பெ. (n.)

   மாறுபட்ட ஒழுக்கம் (வின்.);; acting perversely, taking an opposite course.

     [எதிர் + தடை.]

எதிர்நடைக்கணக்கு

 எதிர்நடைக்கணக்கு edirnaḍaikkaṇakku, பெ. (n.)

   கூட்டாளிகளின் தனிக்கணக்கு (வின்.);; register or account kept separately by each partner in a joint concern

 in order that the account maintained by everyone of them may be examined by the other partners.

     [எதிர்நடை + கணக்கு.]

எதிர்நிரனிறை

எதிர்நிரனிறை edirniraṉiṟai, பெ. (n.)

   முறைமாறி வரும் நிரனிறை (நன்.414,உரை.);; reversed sequence, a syntactical arrangement of a series of predicates in

 an order which is the reverse of that in which their respective-nominatives stand.

     [எதிர் + நிரல் + நிரை.]

எதிர்நிலை

எதிர்நிலை edirnilai, பெ. (n.)

   இகலிநிற்கை (வின்.);; resistance, opposition.

     [எதிர் + நிலை. நிலை = நிற்றல்.]

 எதிர்நிலை2 edirnilai, பெ. (n.)

   கண்ணாடி (சங்.அக.);; mirror.

     [எதிர் + நிலை. நிலை = நிலைகொண்டது.]

எதிர்நில்

எதிர்நில்1 edirnildal,    14. செ.கு.வி. (v.i.)

   1. மாறுபட்டு நிற்றல் (வின்.);; to be perverse, contumacious.

   2. முன்னிற்றல்; to stand before.

     “காகமானவை. ஒரு கல்லின்முன் னெதிர் நிற்குமோ” (தாயு.எங்கு.6);.

     [எதிர் + நில்.]

 எதிர்நில்2 edirnildal,    14. செ.குன்றாவி. (v.t.)

   எதிர்த்து நிற்றல்; to resist, withstand, oppose.

     [உது → இது → எதுல் → எதுர் → எதிர் + நில்.]

எதிர்நீச்சல்

 எதிர்நீச்சல் etirnīccal, பெ. (n.)

   எதிர்த்து வாழ்தல்; to meet the challenges

     [எதிர்+நீச்சல்]

எதிர்நீச்சு

எதிர்நீச்சு edirnīccu, பெ. (n.)

   வெள்ளப்போக்கிற்கு எதிராக நீந்துகை; swimming against the current.

   2. செயற்கரிய. செய்கை; accomplishing a very difficult task.

     [எதிர் + நீச்சு.]

எதிர்நூல்

எதிர்நூல் edirnūl, பெ. (n.)

   தன்கருத்தை நிலைநாட்டிப் பிறர்கருத்தை மறுக்கும் நூல்(இறை.1,பக்.12);; refulatory work, one of four broad divisions of literary attempts;

 work containing fresh material and defending its own doctrines against those of others.

     [எதிர் + நூல்.]

எதிர்நோக்கு-தல்

எதிர்நோக்கு-தல் edirnōkkudal,    5. செ.குன்றாவி (v.t.)

   1. நேரே பார்த்தல்; to face.

   2. முன்பக்கம் பார்த்தல்; to look forward.

   3. எதிர்பார்த்தல்; to expect, envisage.

ம. எதிர் நோக்குக.

     [எதிர் + நோக்கு.]

எதிர்ந்தோர்

 எதிர்ந்தோர் edirndōr, பெ. (n.)

   பகைவர் (திவா.);; adversaries, opponents, combatants.

     [எதிர் → எதிர்ந்தோர்.]

எதிர்பார்-த்தல்

எதிர்பார்-த்தல் edirpārddal,    4.செ.குன்றாவி, (v.t.)

   1. ஒன்றை நோக்கியிருத்தல்; to expect, look forward to envisage.

   2. வரவு பார்த்திருத்தல்; to await, the arrival, as one expected

   3. பிறருதவி நோக்குதல்; to look up to others for help.

அவன் பிறர் கையை எதிர்பார்ப்பவன் (உ.வ.);.

   ம. எதிர்நோக்குக;க. எதுருநோடு.

     [எதிர் + பார்.]

எதிர்பார்ப்பு

 எதிர்பார்ப்பு etirpārppu, பெ. (n.)

   முன் கூட்டியே எண்ணிப்பார்ப்பது; hope, expectation.

     [எதிர் + பார்ப்பு]

எதிர்பொழுது

எதிர்பொழுது edirpoḻudu, பெ. (n.)

   1. இனிவருங்காலம்; hereafter, time to come, future.

   2. எதிர்காலம்; future tense.

     “ஐம்பாலெதிர்பொழுது” (நன்.144);.

     [எதிர் + பொழுது.]

எதிர்ப்படு

எதிர்ப்படு1 edirppaḍudal,    20. செ.குவி, (v.i.)

   முன் தோன்றுதல்; to appear.

     “ஈசனெதிர்ப்படு

மாயிடிலே”

   சந்தித்தல்; to meet, encounter.

     “எதிர்ப்பட்டாற் பின்னை விடுமோ விறல்மீன்” (பாரத.பதினேழாம்.143);.

   ம. எதர்பெடுக;   க. எதுருபீளு;   து. எதுரு;தெ. எதுருபடு.

     [எதிர் + படு.]

 எதிர்ப்படு2 edirppaḍudal,    18.செ.குன்றாவி. (v.t.)

   ஒப்பாதல்; to resemble.

     “பண்ணெதிர்ப்படுமொழிக்கு” (இரகு. இரகுவுற்.10);.

     [எதிர் + படு.]

எதிர்ப்பாடு

எதிர்ப்பாடு edirppāṭu, பெ. (n.)

   சந்திக்கை (ஐங்குறு. 275,உரை.);; meeting, encounter, juxtaposition.

     [எதிர் + (படு); பாடு.]

எதிர்ப்பாய்ச்சல்

எதிர்ப்பாய்ச்சல் edirppāyccal, பெ. (n.)

   1. எதிரான நீரோட்டம்; counter-current.

   2. எதிராகப் பாய்கை; leaping in contrary direction, reverse flow. (செ.அக.);.

     [எதிர் + பாய்ச்சல்.]

எதிர்ப்பாய்ஞ்சான்

 எதிர்ப்பாய்ஞ்சான் edirppāyñjāṉ, பெ. (n.)

   தண்ணீர் ஒட்டத்திற்கு எதிராகப் பாய்ந்தோடு மீன்; fishr ushing or swimming against the current of water. (சா.அக.);.

     [எதிர் + (பாய்ந்தான்); பாஞ்சான் (கொ.வ.);.]

எதிர்ப்பு

எதிர்ப்பு1 edirppu, பெ. (n.)

   குறி; omen portent augery, foreloken.

     [எதிர் → எதிர்ப்பு.]

 எதிர்ப்பு2 edirppu, பெ. (n.)

   1. அலைப்பு; resiance.

   2. இலக்கு; aim.

   3. எதிர்மொழி; contradiction.

   4. வருங்காலம்; future.

   5. தடுப்பு; obstruction. (ஆ.அக.);

   ம. எதிர்ப்பு;   க. எதுர், எதிர், எதுரு;   து. எதுரு;தெ. எதுரு.

     [எதிர் → எதிர்ப்பு.]

 எதிர்ப்பு3 edirppu, பெ. (n.)

   வாங்கிய அளவே திருப்பிக் கொடுப்பது; exact return of things borrowed.

     “மாறெ திர்ப்பை பெறாஅமையின்” (புறநா.333,11);.

     [எதிர் → எதிர்ப்பு.]

எதிர்ப்பெண்

 எதிர்ப்பெண் edirppeṇ, பெ. (n.)

   ஒரு வீட்டிற்குப்பெண் கொடுத்து அங்கிருந்து தம் வீட்டிற்குப் பெண் எடுப்பது (கருநா.);; exchange of brides between two families.

க. எதுருதுதெண்ணு.

     [எதிர் + பெண்.]

எதிர்மறுப்பு

 எதிர்மறுப்பு edirmaṟuppu, பெ. (n.)

   முன்னொடு பின்முரணக் கூறுகை (யாழ்.அக.);; contradictory statement.

ம. எதிர்மொழி.

     [எதிர் + மறுப்பு.]

எதிர்மறை

எதிர்மறை edirmaṟai, பெ. (n.)

   எதிர்மறுப்பு; negative.

     “எதிர்மறை மும்மையு மேற்கும்” (நன்.145);.

     [எதிர் + மறை.]

எதிர்மறைப்பெயரெச்சம்

 எதிர்மறைப்பெயரெச்சம் etirmaṟaippeyareccam, பெ. (n.)

   எதிர்மறைப்பொருள் தரும் எச்சச்சொல்; negative (adjective.);

     [எதிர்மறை+பெயர்+எச்சம்]

எதிர்மறையிடைநிலை

 எதிர்மறையிடைநிலை edirmaṟaiyiḍainilai, பெ. (n.)

   எதிர்மறைப் பொருளைக் காட்டும் அல், ஆ, இல், ஆகிய இடைநிலைகள்;     [எதிர்மறை + இடை + நிலை.]

எதிர்மறையிலக்கணை

 எதிர்மறையிலக்கணை edirmaṟaiyilakkaṇai, பெ. (n.)

   எதிர்மறைப் பொருளைக் குறிப்பால் உணர்த்துவது; irony, cynicism, parody, using language hinting a meaning contrary to the literal sense, abuse of terms.

     [எதிர்மறை + இலக்கனை.]

எதிர்மறையும்மை

 எதிர்மறையும்மை edirmaṟaiyummai, பெ. (n.)

   எதிர்மறைப் பொருள்தரும் ‘உம்’ இடைச்சொல்; negative part. ‘um’.

     [எதிர்மறை + உம்மை.]

எதிர்மறையெச்சம்

 எதிர்மறையெச்சம் edirmaṟaiyeccam, பெ. (n.)

   எதிர் மறுப்பைக் காட்டுமெச்சம்; adjective denoting negation. காணாத கண் (உ.வ.);.

     [எதிர்மறை + எச்சம்.]

எதிர்மறைவினை

 எதிர்மறைவினை edirmaṟaiviṉai, பெ. (n.)

   உடன்பாட்டுக் கெதிராக மறுத்து வரும் வினை; negative verb. (எ.கா.); வந்திலன், செல்லான் காணலன்.

     [எதிர்மறை + வினை.]

எதிர்மறைவினையெச்சம்

 எதிர்மறைவினையெச்சம் etirmaṟaiviṉaiyeccam, பெ. (n.)

   எதிர்மறைப் பொருள் தரும் எச்சவினை; negative adverb.

     [எதிர்மறை+வினை+எச்சம்]

எதிர்மீன்

 எதிர்மீன் edirmīṉ, பெ. (n.)

   நீர்ப்பாய்ச்சலை எதிர்த்துச் செல்லும் மீன்; fish that swims against the current.

     [எதிர் + மீன்.]

எதிர்முகம்

எதிர்முகம்1 edirmugam, பெ. (n.)

   1. நேரெதிர்; confronting position, as face to face.

   2. முன்னிலை (வின்.);; presence, confrontation.

     [எதிர் + முகம்.]

 எதிர்முகம்2 edirmugam, பெ. (n.)

   மாறுபாடு (வின்.);; opposition, polarity, reverse.

     [எதிர் + முகம்.]

எதிர்முகவேற்றுமை

எதிர்முகவேற்றுமை edirmugavēṟṟumai, பெ. (n.)

   விளி வேற்றுமை; vocative case

     “ஏழியன் முறையை தெதிர்முக வேற்றுமை” (தொல்,சொல்74,சேனா);.

     [எதிர் + முகம் + வேற்றுமை.]

எதிர்முறி

 எதிர்முறி edirmuṟi, பெ. (n.)

எதிர்ச்சிட்டு பார்க்க;see edirccittu.

     [எதிர் + முறி.]

எதிர்முழி

 எதிர்முழி edirmuḻi,    கு.வி.எ. (adv.) நேருக்குநேராய்;     [எதிர் + விழி. விழி → முழி (கொ.வ.).]

எதிர்மூச்சுப்போடுகை

 எதிர்மூச்சுப்போடுகை edirmūccuppōṭugai, பெ. (n.)

   எதிர்நின்று மூச்சு வாங்க நெற்குத்துகை; puffing, while husking. கூலியுங் கொடுத்து எதிர்மூச்சும் போட வேண் டுமா? (பழ.);.

     [எதிர் + மூச்சு + போடுகை.]

எதிர்மை

எதிர்மை edirmai, பெ. (n.)

   எதிர்காலத்தில் நிகழ்கை; happening in future.

     “அஃதெதிர்மை பொருளென”. (பெருங்,நரவாண.1,119);.

     [எதிர் → எதிர்மை.]

எதிர்மொய்

 எதிர்மொய் edirmoy, பெ. (n.)

   திருமணம் முதலிய காலங்களில் செய்யப்பட்ட சீர்க்கு மாற்றாகச் செய்யப்படும் அன்பளிப்பி; complimentary gift of courtesy to the brides party by those of the bridegroom or vice versa on marriage occasions in return for gifts received. (செ.அக.);.

     [எதிர் + மொய்.]

எதிர்மொழி

எதிர்மொழி edirmoḻi, பெ. (n.)

   1. மறுமொழி (பிங்.);; response, answer, reply.

   2. மறுப்புவரை; rejoinder, counterargument retaliation, rebuttal.

     “எதிர்மொழி யுண்டாமாகிற் சொல்லுவிரே” (பாரதகுது.243);.

   ம. எதிர்மொழி;க. எதுருமாது.

     [எதிர் + மொழி.]

எதிர்வட்டி

 எதிர்வட்டி edirvaṭṭi, பெ. (n.)

   செலுத்தும் மூலத் தொகைக் கேற்பக் கழிக்கும் வட்டி (C.G.);; counter interest, as on payments made before due date.

     [எதிர் + வட்டி.]

எதிர்வனன்

எதிர்வனன் edirvaṉaṉ, பெ. (n.)

   ஏற்றுக்கொள்பவன்; recipient.

     “இன்பம் பெருக வெதிர்வனன் விரும்பி” (பெருங்.வத்தவ.10.11);.

     [எதிர் + வ் + அன் + அள். வ் – எ.கா.இ.நி. ‘அன்’ சாரியை. அன் (ஆ.பா.ஈறு);.]

எதிர்வழிக்கெண்டைப்பச்சை

 எதிர்வழிக்கெண்டைப்பச்சை edirvaḻikkeṇṭaippaccai, பெ. (n.)

   இருமீன்கள் ஒன்றையொன்று பார்ப்பது போற் குத்தும் பச்சைக்குறி; tattoo mark like that of two carps facing each other.

     [எதிர் + வழி + கெண்டை + பச்சை.]

எதிர்வாதம்

எதிர்வாதம் edirvādam, பெ. (n.)

   1. எதிர்வழக்காளியின் பேச்சு; reply, argument for the defence.

   2. மாறுபடக் கூறுகை; objection எதைச் சொன்னாலும் எதிர்வாதம் பண்ணுகிறான். (உ.வ.);.

ம. எதிர்வாதம்.

     [எதிர் + வாதம், வாள் = பேசுதல். வாள் → வாளம் → வாதம் (கொ.வ.);]

எதிர்வாதி

எதிர்வாதி edirvādi, பெ. (n.)

   1. எதிர் வழக்காளி; defendant, respondent accused.

   2. தன்பக்கத்துக்கே எதிராக வாதிப்பவன் (நன்.384, மயிலை.);; he who pleads for the side opposite to one’s own.

   3. எதிர்க்கட்சி பேசுவோன்; opponent, one who attacks a thesis. Antagonist rival.

அறிவினால் வரும் வினா, எதிர்வாதியாலும் ஆசிரியனாலும் வரும். (நன்.384, மயிலை.);.

ம. எதிர்வாதி.

     [எதிர் + வாதி. வாள் = பேசுதல். வாள் → வாளம் → வாதம் (கொ.வ.); – வாதி.]

எதிர்வாய்

 எதிர்வாய் edirvāy, பெ. (n.)

   ஏரியின் உள்ளக முன்வாய்; foreshore of a lake.

     [எதிர் + வாய்.]

எதிர்வார்த்தை

எதிர்வார்த்தை edirvārddai, பெ. (n.)

   பகரம், விடை; reply relor.

சங்கத்தார்க்கு ஒருபோதும் எதிர்வார்த்தை சொல்லார்களே (தமிழறி.32);.

ம. எதிர்வா.

     [எதிர் + வார்த்தை. எதிர்மொழி பார்க்க;see edimoli.]

எதிர்வினை

எதிர்வினை edirviṉai, பெ. (n.)

   எதிர்காலத்துச் செயல்;: future events.

     “கணியெனைக் கூறிய எதிர்வினை யெல்லா மெஞ்சா தெய்தி” (பெருங்.உஞ்சைக்.36,211);. (செ.அக.);.

     [எதிர் + வினை.]

எதிர்வினை விலக்கு

 எதிர்வினை விலக்கு edirviṉaivilakku, பெ. (n.)

   அணிவகையுளொன்று;   அஃது எதிர்கால இடையூற்றைக் காட்டி மறுப்பது; figure of speech. (ஆ.அக.);.

     [எதிர் + வினை + விலக்கு.]

எதிர்விற்பனை

 எதிர்விற்பனை edirviṟpaṉai, பெ. (n.)

   போட்டி வாணிகம்; competition in trade (Pond);.

     [எதிர் + விற்பனை.]

எதிர்வு

எதிர்வு edirvu, பெ. (n.)

   1. எதிர்ப்படுகை; meeting. Confronting.

   2. எதிர்காலம் (தொல்.சொல்.202);; future tense.

   3. நிகழ்ச்சி (W,);; happening contingence.

     [எதிர் → எதிர்வு.]

எதிர்வெட்டு

 எதிர்வெட்டு edirveṭṭu, பெ. (n.)

   மறுதலை; opposition. contradiction, retaliation.

அவன் எப்போதும் எதிர்வெட்டாய்ப் பேசுகிறான், (இ.வ.);.

     [எதிர் + வெட்டு.]

எதிலன்

 எதிலன் edilaṉ, பெ. (n.)

   பிறன், வேற்றவன்; stranger, neutral, one who does not mingle in others’ affairs.

     [ஏது + இல் + அன் – எதிலன் (ஏதும் இல்லாதவன், உறவும் பகையும் அற்றவன்); ‘இல்’ – எ.ம.இ.தி.]

எதிளை

 எதிளை ediḷai, பெ. (n.)

புளியமரம் (சங்.அக.);

 tamarind tree.

     [எகின் → எகிள் → எதின் → எதிளை. (கொ.வ.);.]

எது

எது edu,    வினாபெ. (inter. Pron.) யாது; which thing.

   ம. எது;   க. ஆவது. எ.ஏ;   கோத. எத்;   துட. எத்;   குட. எதி;   து. ஒவு. வா;   தெ. எதி, ஏதி;   கொலா. எத்;   நா., பர். ஏத். ஏதி;   கட, ஏன;   கோண். ஏம்;   கூ, எசுத்;   குர். என்த்ர, எக்தா;   மால், இன்த்ரு;   பிரா, அரா, அராத்;பட, ஏது, யாவது.

     [உ → எல் → ஏன் → எல் → ஏப் → ஏய்து → எய்ந்து → எந்து. எந்து → எது. (முடிநிலைத் திரிபு);. ஒ.நோ. வேய் → வேய்ந்து → வேந்து எந்து → என் → என்ன (அடிநிலைத் திரிபு); ஏய் → ஏய்ந்து → ஏய்ந்து → வேய்த்து. வேத்து → வாத் → வாட் (what); என மேலை-யாரியத்தில் திரிந்ததாகல் வேண்டும்.]

 எது1 edu, பெ. (n.)

   1. விளக்கம்; illustration.

     “ஏதுக்கள் காட்டி முடித்தா ளிணையில்ல நல்லாள்” (நீலகேசி. 423);.

   2. தொடர்பு; connection relation.

     “புலிகொண்மார் நிறுத்த வலையுளோ ரேதில் குறுநரி பட்டற்றால்” (கலித்.65,25);.

   3. ஒரு கருமம் அல்லது முடிவு செய்யத் தூண்டுவது; stimulating one to actor decide.

 Skt. Helu.

     [ஏ → ஏது. (வே.க.54);.]

 எது2 edu, பெ. (n.)

   ஏவுகை, தூண்டுகை, காரணம்; inciting, urging, cause basis.

     “ஏது நிகழ்ச்ச் யெதிர்த்துளதாதலின்” (மணி.3.4);.

     [ஏ → ஏவு → எது (வ.மொ.வ.98);.]

எதுகுலகாம்போதி

 எதுகுலகாம்போதி edugulagāmbōdi, பெ. (n.)

   ஓர் இசைப்பண் (இராகம்);;

எதுகுலம்

எதுகுலம் edugulam, பெ. (n.)

   யதுகுல அரசர் கால்வழியினர் (யதுவமிசம்);; dynasty of king Yadu.

     “எது குலத்துதித்து” (காஞ்சிப்பு. வாணி. 15);.

     [எது + குலம்.]

     [Skt. yadu → த. எது.]

குல் → குலம் = கூட்டம், பெற்றோரும் பிள்ளைகளும் கூடிய குடும்பம், மரபுவழிக் குடும்பம், உயர்மரபு வழிக் குடும்பம்.

எதுகை

எதுகை edugai, பெ. (n.)

   1. எதுகைத்தொடை பார்க்க;see eudgai-t-todai

     “இரண்டாம் … எழுத்தொன்றி னெதுகை” (காரிகை.உறுப்.16);.

   2. பொருத்தம், (வின்.);; agreement, consonance,

ம. எதுக.

     [எதிர்கை → எதுகை. (த.வ.50);.]

எதுகைத்தொடை

எதுகைத்தொடை edugaiddoḍai, பெ. (n.)

   செய்யுளின் வரிகளில் இரண்டாமெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது. (இலக்.வி.723);;     [எதுகை + தொடை.]

எதுகைப்பா

 எதுகைப்பா edugaippā, பெ. (n.)

   தேரையர் செய்தவோர் தமிழ்நூல்; Tamil treatise on medicine compiled by Therayar, a great native physician. (சா.அக.);.

     [எதுகை + பா.]

எதுக்களி-த்தல்

எதுக்களி-த்தல் edukkaḷiddal,    4. செ.கு.வி. (v.i.)

   சாப்பிட்ட சோறு மீண்டும் சிறிது வாய்க்கு வருதல்; bringing back food from stomach to mouth. (வட்.வழக்.சொல்லக.);

     [எது → எதுக்குளி → எதுக்களி.]

எதுவடம்

 எதுவடம் eduvaḍam, பெ. (n.)

   எருதுகளை நுகத்தோடு பிணைக்கும் கயிறு, பூட்டாந்தும்பு.(Rd);; rope which fastens the yoke to the pole.

     [எதிர்வடம் → எதுவடம் (கொ.வ.);.]

எதேச்சாதிகாரம்

 எதேச்சாதிகாரம் etēccātikāram, பெ. (n.)

   விருப்பம் போல் அதிகாரஞ் செலுத்துகை; autocracy.

எதேச்சையாக

 எதேச்சையாக etēccaiyāka, வி.எ. (adv.)

   விருப்பத்தின் படி; agreeably to one is own sweet will and pleasure, without let or hindrance.

     [எதேச்சை + ஆக.]

     [Skt. yatha – iccaha → த. எதேச்சை.]

எதேட்டமாய்

எதேட்டமாய் etēṭṭamāy, பெ. (n.)

   1. விருப்பப்படி; as much as could be wished for, in abundance.

   2. மிகுதியாய்; abundantly.

     ‘அது எதேஷ்டமாய் கிடைக்கிறது’.

     [Skt. yatha-ista → த. எதேட்ட.]

எதோளி

எதோளி etōḷi, கு.வி.எ. (adv.)

எதோள் பார்க்க: see edol. (தொல்.எழுத்.159.உரை.);

எதோளிக்கொண்டான்.

     [எதா → எதோ → எதோள் → எதோளி. (வே.க.103);.]

எதோள்

எதோள் etōḷ,    கு.வி.எ. (adv.) எவ்விடம். (தொல், எழுத். 398. உரை.); where, எதோட்கொண்டான்.

     [எதா → எதோ → எதோள் (வே.க.103);.]

எத்தனம்

எத்தனம் ettaṉam, பெ. (n.)

   1. முயற்சி; effort, attempt, exertion.

   2. ஏற்பாடு; preparation, readiness.

   3. கருவி (வின்.);; implement instrument, utensil, tool.

     [ஏந்து → ஏந்தல் → ஏந்தனம் → ஏத்தனம் → எத்தனம். (கொ.வ.);.]

 எத்தனம் ettaṉam, பெ. (n.)

   1. கருவி; tool, instrument.

   2. ஏனம் (பாத்திரம்);; vessel, utensil.

ம. ஏத்தனம்.

எத்தனி-த்தல்

எத்தனி-த்தல் ettaṉittal,    4. செ.குன்றாவி (v.t.)

   முயலுதல்; to try, set about attempt.

     [எல் → ஏந்து = மேலெழும்பு, முயல், முன்னேறு. ஏந்து → ஏந்தல் → எத்தல் → எந்தன் → எத்தனி (கொ.வ.);.]

எத்தனை

எத்தனை ettaṉai, கு.பெ.எ. (adj.)

.

   1. எவ்வளவு; how many;

 how much, what measure, what degree.

     “எத்தனை காலமும்” (தில்.பெரியாழ்.5,3,8);.

   2. பல; many

     “எத்தனை பகலும் பழுதுபோயொழிந்தன” (திவ். பெரியதி.1,1,2);.

   ம. எத்தன, எத்ர;   இரு. யெத்தனி;   க. எனிது, எனித்து, எனிக, எகடு;   பட, ஏசக;   கோத. எந்தல், எந்திக்;   துட. எத், எத்க்;   குரு, யெசக;   குட. எச்செ. எச்சகி;   து. எது;   தெ. எந்த;   கொலா, எத்தெ;   நா. என்கெல், எத்தெக்;   பர். எங்கொட் கட். எங்கெர்;   கோண், பச்தோட்;   கூ. எசெ;   குவி, எசர;மால், இகொன்.

     [எ = வினாச்சொல், எத்துணை → எத்தனை.]

எத்தன்

எத்தன் ettaṉ, பெ. (n.)

   1. ஏமாற்றுவோன்; he who is a cheat, impostor.

   2. விரகுள்ளவன்; scheming wiyperson.trickster.

     “வினைப்பற்றறுக்கு மெத்தர்களோ பெறுவார்” (திருநூற்.4);.

     [இயை → ஏப் → ஏய்த்தல் → எத்தல் → எத்தன்.]

எத்தாப்பு

எத்தாப்பு ettāppu, பெ. (n.)

   மேலாடை (திவ், திருவிருத், 12, அப்பு, அரும்.);; vesture, garment, எத்தாப்பு, (நெல்லை.);.

     [ஏ → எத்து (மேல்); → எத்து + ஆப்பு – எத்தாப்பு = மேலிடுவது.]

எத்தி

 எத்தி etti, பெ. (n.)

   ஏமாற்றுபவள்; she who is a cheat.

     “இசையெழுப்பு மெத்திகள்.” (திருப்பு.);.

     [ஏய்த்தல் → எத்தல் → எத்தி.]

எத்தித்தடி

 எத்தித்தடி ettittaḍi, பெ. (n.)

   நீர் இறைக்கும் பாசன முள்ள நிலம்; well land.

     [ஏற்றம் → ஏத்தம் + தடி – எத்தத்தடி → எத்தித்தடி. தடி = நீர்கோத்த நிலம், நன்செய்.]

எத்து

எத்து1 eddudal,    5. செ.குன்றாவி, (v.t.)

   ஏய்த்தல், ஏமாற்றல்; to inveigle, lure, cheat, seduce, defraud.

     “நேசித்தாரையு மெத்தி வடிப்பவர்” (திருப்பு. 403);.

     [ஏய்த்தல் → எத்துதல்.]

எத்துக்கள்ளி

எத்துக்கள்ளி ettukkaḷḷi, பெ. (n.)

   ஏமாற்றுபவள்; woman who inveigles.

     “பேச்சிலெத்துக்கள்ளி” (தனிப்பா.11.16,35);.

     [எத்து + கள்ளி.]

எத்தும்

எத்தும் ettum,    கு.வி.எ. (adv.) எவ்வகையாலும்; by

 all means.

     “எத்துந் தமதுரை தேறி நின்றேனை” (தஞ்.சைவா.26);.

     [எனைத்தும் → எத்தும் (கொ.வ.);.]

எத்துவாதம்

எத்துவாதம் ettuvātam, பெ. (n.)

   1. ஏமாற்றுப் பேச்சு

 deceptive speech.

   2. எதிர்ப்பேச்சு (வின்.);; Contradiction.

   3. குதர்க்கப் பேச்சு; argument devoid of

 logic.

     [எத்து + வாதம்.]

எத்துவாளி

 எத்துவாளி ettuvāḷi, பெ. (n.)

   ஏமாற்றுபவன்; cheat. (Tinn.);.

     [எத்து + ஆள் + இ.]

எந்த

எந்த enda, குவினா எ. (Inter.adj.)

   எத்தகு, என்ன; which, what.

     “எந்த வெந்த வெஞ்சாயகம்…. கொடுத்தார்” (பாரத.பதினெட்,30);.

   ம., க., து. எ;தெ. ஏ.

     [எந்து → எந்த.]

எந்திரக்கிணறு

எந்திரக்கிணறு endirakkiṇaṟu, பெ. (n.)

   நீரையிறைக்கும் பொறியையுடைய கிணறு; well that is provided with a contrivance for lifting water.

     “எந்திரக்கிணறு மிடுங்கற் குன்றமும்” (மணி.19,112);.

     [இயந்திரம் → எந்திரம் + கிணறு.]

எந்திரநாழிகை

எந்திரநாழிகை endiranāḻigai, பெ. (n.)

   ஒருவகை நீர்வீசுங் கருவி; machine which throws out water in sprays.

     “எந்திர நாழிகை யென்றிவை பிறவும்.” (பெருங்.உஞ்சைக்41.18);.

     [இயந்திரம் → எந்திரம் + நாழிகை.]

எந்திரன்

 எந்திரன் endiraṉ, பெ. (n.)

தேர் (யாழ்.அக.); car.

     [இயந்திரம் → எந்திரன் (கொ.வ.);]

எந்திரப்பொருப்பு

எந்திரப்பொருப்பு endirapporuppu, பெ. (n.)

   பல்வகைப் பொறிகளமைந்த செய்குன்று; articial mound or hillock on which are mounted various kinds of machines.

     “”எண்ணரும் பல்பொறி யெந்திரப் பொருப்பும்” (பெருங்,நரவாண.9.28);.

     [இயந்திரம் → எந்திரம் + பொருப்பு.]

எந்திரம்

எந்திரம் endiram, பெ. (n.)

   1. எந்திரப் பொறி; machine.

   2. கரும்பு ஆலை; sugar-cane press.

     “கரும்பெறிந்து கண்ணுடைக்கு மெந்திரம்” (சீவக.1614);.

   3. செக்கு; oil-press.

     “எந்திரத்திற் கலந்ததிலம்” (ஞானவா.பு சுண்.77);.

   4. தேர்ச்சக்கரம்; chariot wheel.

     “எந்திரத் தேரர் சூழ்ந்தார்” (கம்பரா.அட்ச.10);.

   5. குயவன் சக்கரம்; potter’s wheel.

     “கட சக்கர ரெந்திரமெனச் சுழல்” (காஞ்சிப்பு.காப்பு);.

   6. மதிற்பொறி; engine or other machinery of war mounted over the battlements of a fort.

     “எந்திரப் படுபுழை” (புறநா.177.5);.

   7. தீக்கடைக்கோல் (வின்.);; sticks for producing fire by drilling.

   8. மந்திர சக்கரம்; mystical diagram, written on a palmyra leaf or drawn on metal and worn as (எந்திரம்); a charm of amulet.

அவளுக்கு எந்திரமெழுதிக் கட்டினார்கள். (உ.வ.);.

   ம. எந்திரம்;   க., து. யன்தர;தெ. யன்த்ரமு.

     [இய = இயங்குதல். இய → இயங்கு → இயந்தி → இயந்திரம் → எந்திரம். இயந்திரம் பார்க்க;see iyandiram.]

எந்திரயெண்ணெய்

எந்திரயெண்ணெய் endirayeṇīey, பெ. (n.)

   1. எள், வேர்க்கடலை போன்றவை களினின்று செக்கு முதலிய இயந்திரங்களைக் கொண்டெடுக்கும் நெய்மம் (தைலம்);; oil in general, extracted from the oil seeds Such as gingelly, ground nut etc. with the aid of oil presses, oil machines etc.

   2. இயந்திரங்களின் உதவியைக்கொண்டு மூலிகைச் சரக்கு மூலிகைச் சத்து முதலியவைகளினின்று வடிக்கும் மருந்தெண்ணெய்;     [இயந்திரம் → எந்திரம் + எண்ணெய்.]

எந்திரவாவி

எந்திரவாவி endiravāvi, பெ. (n.)

   இயந்திரத்தால் நீர் வரவும் போகவும் அமைக்கப்பட்ட நீர்நிலை; tank provided with machinery for filling and emptying water.

     “எந்திர வாவியி லிளைஞரு மகளிரும்… ஆடிய” (மணி.28.7);.

     [இயந்திரம் → எந்திரம் → வாவி.]

எந்திரவில்

எந்திரவில் endiravil, பெ. (.n)

தானே எய்யும் விற்பொறி (சிலப்.15,207,உரை.);’

 self-shooting bow. Crossbow.

     [இயந்திரம் → எந்திரம் + வில்.]

எந்திரவூசல்

 எந்திரவூசல் endiravūcal, பெ. (n.)

   பிறராட்டாத நிலையிலும் தானேயாடும் பொறியமைந்த ஊசல்; swing that swings automatically.

     [இயந்திரம் → எந்திரம் + ஊசல்.]

எந்திரவூர்தி

எந்திரவூர்தி endiravūrti, பெ. (n.)

   பொறியமைப்பால் தானே இயங்கும் இயங்கி; vehicle propelled by machinery.

     “எந்தரவூர்தி யியற்றுமி னென்றான்” (சீவக.234);.

     [இயந்திரம் → எந்திரம் + ஊர்தி.]

எந்திரவெழினி

எந்திரவெழினி endiraveḻiṉi, பெ. (n.)

   முறைப்படி எழவும் விழவுங்கூடிய திரை; Curtain worked by machinery

     “பூம்பட்டெந்திர வெழினி வீழ்த்தார்” (சீவக.740);.

     [இயந்திரம் + எந்திரம் + எழினி.]

எந்திரி

எந்திரி1 endirittal,    4. செ.கு.வி. (v.i.)

   மந்திரச்சக்கரம் வரைதல்; to draw a mystical diagram.

     “எந்திரித்தலிருக்கைதனில்” (கந்தபு:சிங்கமு.228);.

     [இயந்திரி → எந்திரி.]

 எந்திரி endiri, பெ. (n.)

   தோல் அல்லது மரப்பாவையை ஆட்டுவிப்போன்; one who pulls the wires that move the puppets in a puppet-play, wire-puller on அரங்கினுளாட்டுவிக்கு மெந்திரி யிழந்த பாவை யெனவும் (பிர போத.38.7);.

மறுவ, பொம்மலாட்டக்காரன், கில்லாடி.

     [இயந்திரம் → எந்திரம் → எந்திரி.]

எந்து

எந்து endu, கு.வி.எ. (adv.)

   1. எப்படி; how.

     “செய லெலாம் வழிமற்றெந்தோ” (தணிகைப்பு.பிரம.4);.

   2. என்ன; what

     “அதெந்துவே யென்றருளாயே” (திருவாச.29);.

ம., க., தெ. எந்து.

     [என்னது → எந்து (வே.க.105);.]

உகரச் கட்டடி திரவிடக் கிளை மொழிகளில் எது, ஏது, யாது, யாவது, எந்து, என்ன, எனப் பல் வகையாகத் திரிந்த பின் தமிழில் வழக்கொழிந்த எந்து என்னும் சொல், தமிழ்க்கிளை மொழி வழக்கில் என்னது → எந்து எனப் புதிதாகத் திரிந்த திரிபு எனப் பாவாணர் கருதினார்.

     ‘எந்து’ தமிழில் பெருகிய வழக்கன்று. உ -கட்டுச் சொல்லடி காலவெள்ளத்தில் எகரச்கட்டடியாக மாறி ‘எது’ என்னும் முடிநிலைத் திரியாகவும் என்ன என்னும் அடிநிலைத் திரிபாகவும் திரிந்தவகை எது என்னும் சொல்லின் கீழ் விளக்கப்பட்டுள்ளது.

எந்தை

எந்தை1 endai, பெ. (n.)

   1. என் தந்தை; my fether, our father, also used courteously in addressing an elder.

     “எந்தை தந்தை” (தில்.திருப்பல்.6);.

   2. என் தமையன்; my eider brother.

     “எந்தைக்குப் புகாவுய்த்துக் கொடுப்பதோ” (கலித்.108);.

   3. என் தலைவன்; my master, lord.

     “எந்தையொடு கிடந்தா ரெம் புன்றலைப்புதல்வர்” (புறநா.19,13);.

     [என் + அந்தை – என்னத்தை → எந்தை. ஒ.நோ.நும் + அந்தை → தும்மந்தை → நுந்தை. அத்தன் → அத்தை → அந்தை = அப்பன். தந்தை, தந்தையை அந்தை என விளிப்பது இடவழக்கு இது மதிப்புரவு ஆண்பாற் பெயரீராகப் பண்டுதொட்டே வழக்கூன்றியது. ஒ.நோ;

கண்ணன் + அத்தன் – கண்ணத்தன் → கண்ணச்சன் எனச் சேரநாட்டிலும், கண்ணத்தன் → கண்ணந்தை எனத் தமிழகத்திலும் வழங்கும்.]

எந்தைபெயரன்

எந்தைபெயரன் endaibeyaraṉ, பெ. (n.)

   என் தந்தை பெயர் பூண்ட என் மகன்; my son, who is named after my father, a term, used by a father to denote his son who usu, is named after the grandfather.

     “எந்தை பெயரனையாங் கொள்வேம்” (கலித்.81);.

     [எந்தை + பெயர் + அன்.]

என

என eṉa, இடை (part) 1, என்று1-2 பார்க்க;see ennu1-2 (தொல்,சொல்.250).

   2. ஒர் உவமவுருபு; a sign of comparison புலியெனப் பாய்ந்தான். (உ.வ.);.

ம.என.

     [என் → என.]

எனது

 எனது eṉadu, பெ. (n.)

   என்னுடையது; mine,

     [என் + அது – எனது. ‘அது’ ஆறன்உருபு.]

எனம்

 எனம் eṉam, பெ. (n.)

   வசதி; well to do.

     “நல்ல எனமான ஆளு”(இவ);

     [இன்- எனம்]

எனவ

எனவ eṉava, பெ. (n.)

   என்னுடையவை; mine, elliptical equivalent to ‘my’ with a substantive supplied from the context

     “எனவ கேண்மதி” (புறநா.35);.

     [என் + அவை – எனவை.]

எனவே __ இடை (coni.);

   1. அவ்வாறு சொன்னதால்; when it was so said: therefore.

   2. போல;   ஒன்றை ஒத்திருப்பது; just like.

ம. எனவெ, எனவே.

     [என + ஏ – எனவே, ‘ஏ’. தேற்றேகாரம்.]

எனா

எனா eṉā,    இடை (part) ஓரெண்ணிடைச்சொல் (நன்.428); connective of things enumerated as in நிலனெனா நீரெனா. (என்_என்றா_ானா.1

எனாது

 எனாது eṉātu, பெ. (n.)

எனது பார்க்க;see enadu.

     [என் + அது – எனது – எனாது. அது → ஆது என நெடு முதலாகியது செய்யுள் திரிபு.]

எனினும்

எனினும் eṉiṉum,    இடை (conj) 1 என்ற சொல்லினும்; even if (it is said so).

   2. ஆனாலும்; even if (it is so);;

 nevertheless

     “யாவரே யெனினும்” (கந்தபு:அரசு5);.

எனின்

எனின் eṉiṉ,    இடை (conj) 1 என்று சொல்லின்; if (it is said so. 2 என்கையால்;

 in consideration of

     “அவையவை முனிகுவமெனினே” (பொருந.107);.

     [என் + இல் – எனில் → எளின் இல் → இன் திரிபு).]

எனில்

 எனில் eṉil,    இடை (conj) என்று சொன்னால்; if it is said so

     [என் + இல் – எனில் ‘இல்’ இடப் பொருளில் வந்த பொருள் நிறைச் சொல்லீறு. எனில் = என்று கூறிய விடத்து.]

எனும்

எனும்1 eṉum,    குவி.எ. ed.) சிறிதும்; even a te

     “வழுவெனும் பாரேன்” (சிலப்.16,69);.

     [இன்னும் → என்னும் → எனும் இல் → இன் (சிறிது);.]

 எனும்2 eṉum,    குவி.எ. (adv) என்கின்ற; nown as said as

ம. எனும்

     [எள் → என்னும் → எனும்.]

எனை1 enai, , கு.வி.எ. (adv); என்ன, எந்த எத்தகைய, what why. [எள் → எளை.]

   எனை2 enai, கு.பெ.எ. (adj); எல்லாம்; all.

     “சுட்டுணர் வெனப்படுவ, தெனைப் பொருளுண்மைகாண்டல்” (மணி 27,62); – கு.வி.எ. (adv); எவ்வளவு: however much,

     “எனைப்பகை யுற்றாரும்” (குறள்.207);.

     [அல் → அனை → எனை.]

எனைத்து1 enaittu, கு.வி.எ. (adv); எனை2 பார்க்க;see enra’.

     “எனைத்துள கேட்பன துன்பம்” (கம்பரா. பள்ளி.60);.

     “எனைத்து நினைப்பினும் காயார்” (குறள்.); (வே.க.105);.

     [அல் → அனை → அனைத்து]

எனைத்து

எனைத்து2 eṉaittu, வி.பெ. (Interpron)

   எத்தன்மைத்து ((யாழ்.அக.);; of what kind?

     [என் → எளை → எனைத்து.]

எனைத்துணை

எனைத்துணை eṉaittuṇai,    வி.எ. (adv) எவ்வளவு; how much

     “எனைத்துணை” (குறள்,144);.

எனைத்தும்

எனைத்தும் eṉaittum, பெ. (n.)

   முழுதும்; all the whole,

     “சூர்கிளை யெனைத்தும் பொன்றும்” (கந்தபு:மேரு 78);.

     [அல் → எல் → என் → எனை → எனைத்து + உம்]

எனைப்பல

எனைப்பல eṉaippala,    கு.பெ.எ. (adj) எத்தனையோ பல; how many, very many.

எபைப்பல தீர்த்தங்பட்கும் (திருவிளை தீர்த்த.11);.

     [எல் → எள் → எளை + பல.]

எனையதும்

எனையதும் eṉaiyadum,    கு.வி.எ. (adv.) சிறிதும்; even a little

     “நினையாது கழிந்த வைக லெனைய துஉம் வாழலென்” (அகநா.29);.

     [இல் → எல் → என் → எனை + அது + உம்]

எனையல்

எனையல்1 eṉaiyal, வினாசு.பெ. (interpron).

   1. யாவன்; who?

   2. எப்படிப்பட்டவன்; what kind of a man

     “நீத்தோ ரென்னவர் தங்கட்கேனும்” (கந்தபு. கிரவுஞ்:4);.

     [எவள் → என்னவன்.]

எனையவன்

எனையவன் eṉaiyavaṉ,  எனையவன் eṉaiyavaṉ, சு.பெ.(pron)

சு.பெ. (pron); எனைவன் பார்க்க;see enaivan. எனையன்

 cubeeṉaivaṉbārkkaeṉaiyaṉ,

, சு.பெ. (pron); எனைவன் பார்க்க;see enaivan

     [எனையவள் → எனையன்]

   எனைவர் __ சு.பெ. (pron); யாவர்: எனைவராயினும் (பெருங். வத்தவ,3.22);; who ever, whatever;

 persons.

     [எனை + அவர்.]

என்

என்1 eṉ,    க.வினாஎ. (inter.adv) என்ன; Why wherefore? நீ வந்ததென்? – இடை (int) ஒரிகழ்ச்சிக் குறிப்பு (பிங்);

 exclamation expressive of contempt – இடை. (part); எது அல்லது எதையெனப் பொருள்படும் இடைச்சொல்;

 particle having the force of whatever, whichever.

     “என்னுடைய ரேனு மிலர்” (குறள்.430);.

ம. என்.

     [எவன் → என்.]

 என்2 eṉ, பெ. (n.)

   வெளிப்பட்ட தவசக் கதிர்; grown corn.

தெ. என்னு.

     [எல்-என் = வெளிப்படுதல், மேலுயர்தல். பொதிதோகையி லிருந்து பூட்டையாய் வெளிப்பட்ட தவசக் கதிர்)

 என்3 eṉ, பெ. (n.)

   1. தன்மை ஒருமையின் வேற்றுமையடி (நன்.331);; oblique form of the 1st per sing pron. நான் or யான், 2 ஓர் அசை (யாப்.74.உரை.); expl ending in nilal-mandila-āśiriyappa

   ம. என்;   க. என்;   என்று, யென். நன்;   கோத என்;   துட. என் குட என் து. என். என: தெ நா. நன்;   கொலா. அன்;   நா. அன் பர். அன்;   கட அனு;   கோண். நா. கூ. நா. குவி. நா. குரு. எங்க;மால். என்க. பிரா. கன்.

     [நான் → நன் → அன் → என்.]

என்(னு)-தல்

என்(னு)-தல் eṉṉudal,    14.செ.குன்றாவி, (v.t.)

   என்று சொல்லுதல்; to say, ute express,

     “என்னா மரபின வெனக்கூறுதலும்” (தொல்,சொல்.422);.

   க. அன்னு பட என்னு;தெ அனு.

     [அல் → எல் → என் → என்னு – நாக்கூட்டிக் குரலுயர்த்திப் பேசு அல்லுதல் = பின்னுதல், முடைதல், பொருத்திப் பேசுதல்.]

என்கை

என்கை eṉkai, பெ. (n.)

   என்று சொல்லுகை; saying that

     “அகிலமெல்லா மவனென்கை” (கந்தபு:மேடு.26);.

     [என் → என்னுதல் = பேசுதல், என்னு + கை = என்னுகை → என்கை.]

என்ன

என்ன1 eṉṉa, வி.பெ. (Interpron)

   1. யாது? What

   2. என்ன பயன்; tenseless verb signifying what avail.

     “என்ன போதித்தும் என்ன” (தாயு.தேசோ.7);.

   3. எத்தகைய; of what kind. (சு.வி.84);.

   ம. என்ன;   க. எந்தா, என்ன;   கோத என துட. இன்;   குட. என்னதெ. என்தெ;   து. எஞ்சி;   தெ. ஏகி, ஏலாகி;   கொலா, எண்டோவ்;   பர். எத்னி;பட ஏன.

     [எள்_என்ன.]

 என்ன2 eṉṉa,    இடை (part) ஒர் உவம உருபு; sign of comparison.

     “அடித்தேரல ரென்ன லஞ்சுவனின் னைய ரென்னின்” (திருக்கோ.216);.

     [அன்ன → என்ன.]

என்னணம்

என்னணம் eṉṉaṇam,    கு.வி.எ. (adv) எவ்வகையாக; how, in what manner.

     “என்னணஞ் சென்றனள்” (திருக்கோ.231);.

     [என்ன + வண்ணம் – என்ன வண்ணம் → என்னணம்.]

என்னது

 என்னது eṉṉadu,    சு.பெ. (pron) எது; what, நீ என்னது சொல்கிறாய். (செ. அக.).

ம. என்னது.

     [என் + அது = என்னது (எத்தகையது);.]

என்னதும்

என்னதும்1 eṉṉadum,    கு.வி.எ. (adv.) சிறிதும்; even a little

     “என்னது உம் கடிமரந் தடிதலோம்பு” (புறநா 57);.

     [என் → எனை → எனைத்து → எனைத்து + உம் – எனைத்தும் → என்னதும்.)

என்னன்

என்னன் eṉṉaṉ, பெ. (n.)

என்னவன்1 பார்க்க: sea ennavan.

     “என்ன னெவ்விடத்தன்” (இரகு.யாக.96);. (வே.க.104);,

     [எள்ளவன் → என்னன்.]

என்னர்

என்னர்1 eṉṉar,    பெ. (pron) யாவர்; who?

     “அருந்தொ டைச் சித்திர மதனை யென்னரே யளந்தறி பவர்.” (இரகுதிக்கு.196);.

     [என் → என்னர்.]

 என்னர்2 eṉṉar,    குவி.எ. (adv) சிறிதும்; even a little

     “என்னருங் கருதான்” (பெருங்,நரவான2,41);.

     [என் → (எளை); → எனையல் → என்னல் → என்னர் + உம்.]

என்னவன்

என்னவன்2 eṉṉavaṉ,    பெ. (n) எனக்குரியவன் எனக்குற்றவன்; one who is mine, my friend.

     “croal வன்ன கைப்பூண் மார்பகஞ் சேரக்கருது’ (மறைசை.94);.

     [யான் → என் + அவன்.)

 என்னவன் eṉṉavaṉ,  who, what person

தெ. எவர, எவரு.

     [எனை + அவன் – எனையவன் → எனைவன்.]

என்னாங்கு

என்னாங்கு eṉṉāṅgu,    கு.வி.எ. (adv) என்னிடத்து; to me, let, to my place.

     “என்னாங்கு வாரா தோம்பினை” (கலித்.23);.

     [என் + ஆங்கு – என்னாங்கு.]

   என்னுக்கு ennukku, வி.எ. (adv); எதற்கு; What for?

     “என்னுக் கின்னும் பெருக்கின்றதே” (திருக்கோ.121);.

     [ஏன் → என் → என்னு + கு.]

என்னுங்காட்டில்

 என்னுங்காட்டில் eṉṉuṅgāṭṭil,    இடை (conj) என்ப்தைக்காட்டிலும் (ஈடு,); more than saying that.

     [என் → என்னுதல் = சொல்லுதல், என்னும் + காட்டில் – என்னுங்காட்டில் (கொ.வ.); காண்கிலும் → காண்டிலும்காட்டிலும் → காட்டில்.]

என்னும்

என்னும்2 eṉṉum, பெ. (n.)

   என்று சொல்லப்படுவது; thus called, known as, such, that (சேரநா.);,

ம. என்னும்,

     [என் + உம் – என்னும் (குவினையா.பெ.);.]

 என்னும்2 eṉṉum, , கு.வி.எ. (adv)

   1. யாவும் (குறள்,430,உரை.);; all.

   2. சிறிதும்; even a little.

     “என்னு மிமையாள்” (சீவக.1658);.

     [இல் → இல்லும் → இன்னும் → என்னும் இல் = சிறிது எல் = எழுதல், உயர்தல், பெருகுதல், நிறைதல், எல்லாம்.]

என்னென்ன

 என்னென்ன eṉṉeṉṉa, கு.வி.எ. (adv.)

எதுயெது. எவையெவை:

 Whatever

உமக்கு என்னென்ன வேணும்?

தெ. ஏதைனா.

     [என்ன + என்ன.]

என்னே

என்னே eṉṉē, இடை (int) 1, என்ன what?

   2. ஓர் வியப்பு விரக்கக் குறிப்பு; what, an exclamation of pity, wonder or surprise.

     “என்னேயெனே கருணை விளையாட்டிருந்தவாறு’ (தாயு.எங்குநிறை.2);.

   ம. என்னே;   க. என்ட;தெ. எவிதி.

     [என் + ஏ – என்ளே ‘ஏ’ விளா, வியப்பிடைச்சொல்.

என்னை

என்னை1 eṉṉai, பெ. (n.)

   1 என் தந்தை; my father:

     “என்னைக்குக் கலத்தொடு செல்வதோ” (கலித்.108);.

   2. என் தலைவன்; my master, my lord

     “நிரையொடுவருஉ மென்னைக்கு” (புறநா.262);.

   3. என் தாய்; my mother

     “நின்னெஞ்ச மென்னை நெஞ்சாகப் பெறின்” (கலித்.107);.

     [என் + ஐ – என்னை. என் = என்னுடைய. ஐ = தலைவன், தந்தை, தாய்.)

   என்னை2 __. வி.பெ. (interpron); என்ன பார்க்க;see enna;   ம. என்னோ;   க. என்னம், நன்னன்னு;   கோத, என்னே;   து. எனன்;   தெ. தன்னு. நனு, நன்;   நா. ஆனான்;கூ நன்னு. [என்னே → என்னை. ‘ஐ’ சொல்லாக்க ஈறு.]

என்னோ

 என்னோ eṉṉō, இடை (int.)

என்னே பார்க்க;see еnne.

ம. என்னோ.

     [என்னே → என்னோ.]

என்னோரும்

என்னோரும் eṉṉōrum, பெ. (n.)

   எத்தன்மையோரும்; persons of whatever kind.

   2. எல்லோரும்; all persons

     “என்னோருமறிய வெடுத்துரைத்தன்று” (பு.வெ. 9.6.கொளு.);.

     [எள் → என்னர் (எத்தகையர்); → என்னோர் + உம்.]

என்ப

என்ப1 eṉpa, பெ. (n.)

   என்று சொல்வன; what are said to be, being said that

     “எண்ணென்ப வேனையெழுத் தென்ப” (குறள்,392);. [எள் + ப – என்ப. என்பர் என்பதன் கடைக்குறை. ‘அர்’.பலர் பாலிர, ‘ப’ பலர்பாலீறு என்பது பொருந்தாது.]

 என்ப2 eṉpa,    இடை (part) அசைச்சொல் (தொல், சொல். 298இ உரை,); expletive.

     [என் + ப – என்ப. இசைநிறைக்கும் சொல்லாகவந்து அசைச் சொல்லாயிற்று.]

என்பது

என்பது eṉpadu, இடை. (part.)

   1. நன்றுரைத்தற்கண்ணணும் இழித்தற்கண்ணும் வரும் அசைநிலை (தொல். Qamā);.280,சேனா.);; expletive word used to express either approval or disapproval of a statement.

   2. சார்ந்து நின்று சொல்லின் பொருளை யுணர்த்தும் பிரிவில் அசைநிலை(தொல்.சொல்.282,உரை.);; expletive word used as an adjunct and having more attributive force.

     [என் + ப் + அது – என்பது. தொடரில் பொருள் நிறைக்கும் சொல்லசையாக வந்து அசைநிலை யாயிற்று.)

என்பவன்

 என்பவன் eṉpavaṉ, பெ. (n.)

என்பான் பார்க்க;see enbản

     [என் + ப் + அவள் – என்பவன்.]

என்பான்

என்பான் eṉpāṉ, பெ. (n.)

   1 என்று சொல்பவன்; he who says

     “வள்ளுவ னென்பானோர் பேதை.” (வள்ளுவமா.8);.

   2. என்று சொல்லப்படுபவன்; he who is sald to be

     “இல்வாழ்வானென்பான்” (குறள்-41);.

     [எள் → ப் + அவன் = என்பவள் → என்பான்.]

என்பி

என்பி1 eṉpittal,    4.செ.குன்றாவி (v.t.)

   சொல்லச் செய்தல்; to make one speak or prove, as a statement அதை அவன் வாயினாலே என்பிப்பேன் (யாழ்ப்.);.

தெ. அனியின்க

     [என் → என்பி = சொல்லச்செய், வெளிப்படுத்து.]

என்பி2-த்தல் 4.செ.குன்றாவி. (v.t.);

   புகழ்பெறுதல்; to cause to be known to proclaim.

     “என் சொல்லால் யான்சொன்ன இன்கவி யென்பித்து” (தில்.திரு வாய்,7,9,2);.

     [என் → என்பி (சொல்லச் செய், புகழ்);.]

என்பியல்

 என்பியல் eṉpiyal, பெ. (n.)

   எலும்பின் இயல்புகளைப் பற்றிக்கூறும் நூல்; that branch of science which treats of the nature of bones and bony tissues – Osteology (சா.அக.);.

     [என்பு + இயல் – என்பியல்.]

என்பிலி

என்பிலி eṉpili, பெ. (n.)

   புழு (நாமதீப);; worm devoid of bones

     “என்பிலதனைவெயில் போலக் காயுமே” (குறள்,77);.

     [என்பு + இலி – என்பிலி. இல்லி → இலி (இல்லாதது);

என்பு

என்பு1 eṉpu, பெ. (n.)

   1. எலும்பு; bone

     “என்பு நைந்துருகி” (திருவாச. 4,80);.

   2. உடம்பு; body.

     “ஆரு யிர்க் கென்போ டியைந்த தொடர்பு” (குறள்,73);.

   ம. எலிம்பு. எலும்பு: க. எலும்பு;குட. எலிம்பி: தெ. எம்மு. எம்முக.

     [எல் + பு – என்பு ‘பு’ பண்புப் பெயரீறு.]

என்பு2 அம்பு பெ. n); புல் (அக.நி.);. grass,

 என்பு3 eṉpu, பெ. (n.)

   புலி; tiger (ஆஅக.);

என்மனார்

என்மனார் eṉmaṉār, பெ. (n.)

   என்று சொல்லுவார்; It is said so.

     “கந்தருவ வழக்கம் என்மனார் புலவர்” (இறைய-1);

என்ற

என்ற eṉṟa, இடை (part) ஓர் உவம வாய்பாடு adjectival expression signifying comparison, வாயென்ற, பவளம் (தொல்,பொருள்.286,உரை.).

     [என் – என்ற (பெ.எ); எனக் கூறப்பட்ட என்னும் சொல்லாட் ஒத்த தன்மைக்காகி உவம வாய்பாட்டு இடைச் சொல்ல. யிற்று.]

 என்ற2 eṉṟa, பெ. (n.)

   எந்த நாள்; what day, when, wha ttime:

     “இன்றுகொலன்றுகொலென்றுகொலென்னா து’ (நாலடி.36);.

   ம. என்னு;   க. பட எந்து;   கோத. எந்த்;   துட. எத்வின்;   குட. எக்க;   து. ஏனி;   தெ. எபுடு, எப்புடு, என்னடு;   பர். எதாட், எத்தெல்;   கட. எசென்ட;   கொண். எசன்;   கூ. எசெக;   குவி. எசெல்;குரு. எகாகெ.

     [எ- ஞான்று – எஞ்ஞான்று- என்று. ஞான்று = பொழுது)

என்றவன

என்றவன2 eṉṟavaṉa, பெ. (n.)

   என்று கூறியவன்; on who said so

     [என்ற + அவன் – என்றவன்.]

என்றவன்

என்றவன்1 eṉṟavaṉ, பெ. (n.)

   கதிரவன்; sun.

     “என்றவள் மதலையேவும்” (பாரத.பதினே.102);.

என்றா

என்றா eṉṟā, இடை (part)

ஓரெண்ணிடைச்சொல்

 numerical connective particle

     “உப்பிற் புகழிற் னென்றா” (தொல்,சொல்.73);.

      [என்று → என்றா (என்றாகின்ற);.]

என்றாலும்

என்றாலும் eṉṟālum, பெ. (n.)

 though, (it is said so);.

   2. ஆயினும்; though (is so);, notwithstanding

     “உடலு நடுங்காநின்றா ரென்றாலும்” (கம்பரா.தைல.71);.

   ம. என்னாகிலும்;என்னாலும்.

     [என்று + ஆல் + உம்.]

என்றால்

என்றால் eṉṟāl, இடை (conj.)

   1. என்று சொல்லின் if (it is); said so.

   2. ஆனால் (அப்படி);; f (it is); so.

   ம. என்னால்;   க. எந்தரெ;   தெ. ஐதெ;பட, எந்தலெ.

     [என்று + ஆல்.]

என்றி.சினோர்

என்றி.சினோர் eṉṟisiṉōr, பெ. (n.)

   1. என்று சொன்னவர்; it is said so.

   2. என்று சொல்வோர்; those wouk say so.

     [என்று +இசின் + ஒர் – என்றி.சினோர். ‘இசின்’ துணைவிகை யாகி இடவழக்கு வேறுபாடுகளால் இறப்பும் எதிர்வும் சுட் வருதலும் அசைநிலையாக வருதலும் உண்டு.]

     [என்று → என்றிய.]

என்று

என்று1 eṉṟu, கு.வி.எ. (adv)

   1. எதற்காக (ஈடு.7.9.2); what for

   2. எப்படி; in what way, how, by what means

     “என்றிய வென்னில்” (ஈடு.4.10.11);.

     [என்று → என்றிய]

 என்று1 eṉṟu,    , இடை (part) 1, என்று சொல்லி; relative part ending a quotation and connecting it with the following part of the sentence.

   2. alsoar, Quun குறிப்பு, இசை, பண்பு எண் என்ற பொருள் பற்ற வரும் இடைச்சொல் (தொல்.சொல்.261.உரை.நன் 424);; in special or elliptical constructions, in which it is used as a connective part (a); between verbs, a

     “நரைவருமென்றெண்ணி” (நாலடி.11);. (b); betweern noun and a pronoun, as in பாரியென் றொருவனுளன்

   3. ஒரு சொல்லசை; expletive,

கலியாணத் துக்கென்று பணம் வைத்திருக்கிறேன்.

   ம. என்னு;   க. இந்து;பர் என். எத்த.

     [என் → என்று.]

என்றுமின்மை

என்றுமின்மை eṉṟumiṉmai, பெ. (n.)

   ஒரு போதுமில்லா மையைத் தெரிவிக்கும் இன்மை (சி.சி.அளவை.1. மறைஞா);; negation of an impossible thing as in the hare has horns never existing

     [என்று + உம் + இன்மை.]

என்றும்

 என்றும் eṉṟum, பெ. (n.)

என்றைக்கும் பார்க்க;see erakkum

     “என்றுந்தான் இவ்வகையே இடர் செய்கின்றீர்” (அப்-தேவா);. ம. என்னுகம்;

க. எந்தும்.

     [எஞ்ஞான்றும் → என்றும்.]

என்றூழ்

என்றூழ் eṉṟūḻ, பெ. (n.)

   1. கதிரவன்; sun “என்றுழ்மா மலை மறையும்” (குறுந்-215);.

   2. வெயில்; sunshine.

     “என்றுழ் நின்ற குன்றுகெழு நன்னாட்டு” (சிலப்.14, 121);.

   3. கோடைக் காலம்; summer.

     “என்றுழ் வாடுவ றல்போல” (புறநா.75);.

   4. காற்று (அக.நி.);. wind.

     [என்றுழ் = ஒளி வெப்பம் மிகுந்த கதிரவன், பகல், வெயில், எல் + ஊழ் – எல்லூழ் → என்றூழ். எல் = ஒளி கதிரவள். ஊழ்த்தல் = மிகுதல், அதிகரித்தல், ற் எழுத்துப்பேறு.) ]

என்றைக்கு

என்றைக்கு ēṟueṉṟaiggu,    கு.வி.எ. (adv) எந்நாள்; what day when

     “அல்லலொழிவ தென்றைக்கு” (தாயு.பரா. 305);.

   க. யாவாக, ஆவாக;பட ஏகுவ,

     [என்று → எள்றை + கு.]

என்றைக்கும்

என்றைக்கும் eṉṟaikkum, கு.வி.எ. (adv)

   1. எக்காலத்தும்;   2. ஒரு நாளும்;   3. ஒரு பொழுதும்; even once, at any time.

   ம. என்னேக்கும்;   க. எந்திகூ;பட ஏகூ

     [என் → என்று → என்றை → கு + உம்]

எப்படி

எப்படி eppaḍi,    கு.வி.எ. (adv.) எவ்வாறு; how in what way or manner.

     “எப்படி யூரா மிலைக்கக் குருட்டா

மிலைக்கும்” (திவ்.இயற்.திருவிருத்.94);.

ம. எப்படி.

எப்புறம்

 எப்புறம் eppuṟam,    கு.வி.எ. (adv.) எந்தப்புறம்; which

 side. (சேரநா.);.

ம. எப்புறம்.

     [எ + புறம்.]

எப்பேர்ப்பட்ட

எப்பேர்ப்பட்ட eppērppaṭṭa, கு.பெ.எ. (adj)

எத்தகைய of whatsoever kind.

     “எல்வகையான மற்றும் எப்பேர்ப்பட்ட உபாதிகளும்” (S.1.1.i.104);.

ம. எப்பேர்ப்பெட்ட.

     [எ + (பெயர்); பேர் + பட்ட.]

எப்பொருட்குமிறையோன்

எப்பொருட்குமிறையோன் epporuṭkumiṟaiyōṉ, பெ. (n.)

   1. கொழுநன்; husband.

   2. தலைவன்; leader.

   3. மன்னன்; king.

   4. கடவுள்; God.

     [எ + பொருள் + கு + உம் + இறையோன்.]

எப்பொழுது

 எப்பொழுது eppoḻudu,    கு.வி.எ. (adv.) எக்காலம்; when, at what time.

   ம. எப்போழ், எப்போள், எப்பொழுது;   க. எந்து;   துட, எத்பொக்;   கோத, எல், குட, எக்க;   து. ஏபொ, ஏப;   தெ. எப்புடு, எபுடு;   கொலா, எப்புட், எபுட்;   நா. எகுட்;   பர். எதொட், எத்தெல்;   கட. எச்சேல், எசெல்;   கோண், புப்போட், புக்கெ;   கூ. எசெக;   கொண், எசன்;   குரு. எ.கா.கெ;   மால். இகொஸ்னோ;பட, ஏகுவ.

     [எ + பொழுது.]

எப்பொழுதும்

எப்பொழுதும் eppoḻudum,    கு.வி.எ. (adv.) எந்நேரமும்; always, at all times.

     “யானெப்பொழுது முண்ணு மருந்து” (திருக்கோ.300);.

   ம. எப்பொழும்;தெ. யெப்படிகின்னி.

     [எ + பொழுதும்.]

எப்போது

 எப்போது eppōtu, கு.வி.எ. (adv.) எப்பொழுது பார்க்க;see eppoludu.

     [எ + (பொழுது); போது.]

எப்போதும்

எப்போதும் eppōtum, குவி.எ. (adv.) எப்பொழுதும் பார்க்க;see eppoludum.

     “எப்போது மீதேசொல் லென்னெஞ்சே” (திவ். இயற்.பெரியதிருவ.87);.

ம. எப்போதும்.

     [எ + பொழுது + உம். பொழுது → போது.]

எப்போதைக்கும்

 எப்போதைக்கும் eppōtaikkum, கு.வி.எ. (adv.) எப்பொழுதும் பார்க்க;see eppoludum.

     [எ + (பொழுது); பொழுதைக்கும். பொழுது → போது.]

எப்போழ்து

 எப்போழ்து eppōḻtu, கு.வி.எ. (adv.) எப்பொழுது

பார்க்க;see eppoludu.

ம. எப்போள்.

     [எ + (பொழுது); போழ்து.]

எமகாதகன்

 எமகாதகன் emagātagaṉ, பெ. (n.)

   பெருந்திறல் படைத்தவன்; stalwart, astute man, scheming person, able even to kill yama.

     [எமன் + காதகள். காதுதல் = பொருதல், சினத்தல், காதுகள் → காதகன்.]

எமதருமன்

எமதருமன் emadarumaṉ, பெ. (n.)

   இயமன்; Yama, in his office as judge of souls.

     “எமதருமனும் பகடுமேய்க்கியாய்” (தாயு.சிற்க.10);

     [எமன் + தருமன். Skt. dham → த. தருமம்.]

எமன்

எமன்1 emaṉ, பெ. (n.)

   எம்மைச் சேர்ந்தவன் (நன்.275, மயிலை);; he who is one of us;

 he who is for us.

     [எம் + அவன் – எம்மவன் → எம்மன் → எமன்.]

 எமன்2 emaṉ, பெ. (n.)

   இறப்புக் கடவுள்; Yama, god of death.

ம. எமன்.

     [இய → இயமன் → ஏமன் → எமன். இய = செலுத்துதல், கடவுதல், இயமன் = ஊழின் வண்ணம் செலுத்துபவன். உயிர்களைப் பற்றிச் செல்பவன்.]

எமரன்

எமரன் emaraṉ, பெ. (n.)

எமன்1 பார்க்க;see emam1

     “எமர னாயி னிறைகொடுத் தகல்க” (பெருங்.உஞ் சைக்.37,201);.

     [இயமன் → எமன் + அரசன் – எமராசன் → எமரன்.]

எமராசன்

எமராசன் emarācaṉ, பெ. (n.)

எமன்2 பார்க்க;see eman.

     [எமன் + அரசன் – எமனரசன் → எமராசன்.]

எமர்

எமர் emar, பெ. (n.)

   எம்மவர், எமது சுற்றத்தார்; our relatives;

 our friends

     “எமரேழெழு பிறப்பும்” (திவ்.திருவாய்.2,7,1);.

     [எம் + அவர் – எம்மவர் → எமர்.]

எமி

எமி1 emi, பெ. (n.)

   தனிமை; solitude.

     “எமியேந்துணிந்த வேமஞ்சா லருவினை” (குறிஞ்சிப்.32);.

     [எம் → எமி = யான் மட்டும் தனித்திருக்கும் நிலை. என்→ எம் → எமி.]

 எமி2 emi, பெ. (n.)

   கூடியிருப்போன் (திவா.);; one in company with others.

     “எமியை யிருந்தர சாள்வது கண்டவென் கண்க ளினைந்தழியத் தமியை யிருந்தானை” (தணிகைப்பு.சீபரி.563);.

     [அம் → அமி → எமி = கூடியிருத்தல். அம்முதல் = கூடுதல்.]

எமுனை

எமுனை emuṉai, பெ. (n.)

   யமுனை யாறு; river Jamna.

     “சாலுமயத் தெமுனை” (தணிகைப்பு.அகத்.489);.

எமுறு

எமுறு1 emuṟudal,    13. செ.கு.வி. (v.i.)

   1. மகிழ்வுறுதல்; to be delighted.

     “ஏமுறு விளையாட்டிறுதிக்கண்ணும்” (தொல்.பொருள்.147);.

   2. தன்மை திரிதல்; to be changed in nature or disposition.

     “ஏமுறு விரண்டு முளவென மொழிப” (தொல்.பொருள்.109);.

   3. காப்படைதல்; to be protected, saved.

     “எஞ்சிய பொருள்களையேமுற நாடி” (திருமுருகு.97);.

   4. பொருத்தமுறுதல்; to be suited, be appropriate.

     “காமமும் பொருளு மேமுறத் தழுவி” (இலக்.வி.704);.

     [எம் + உறு.]

 எமுறு2 emuṟudal,    13.செ.கு.வி. (v.i.)

   1. வருத்தமுறுதல்; to suffer to be vexed.

     “ஏமுறுகிளவி” (தொல்.பொருள்.146);.

   2. பித்துறுதல்; to be mad, insane.

     “ஏமுற்றவரினு மேழை” (குறள்.873);.

   3. மயக்கமுறுதல்; to

 be perplexed, bewildered.

     “ஏமுறு ஞாலத் தன்னிற் றோன்றி” (திருமுருக.163);.

     [ஏம் + உறு.]

எம்

எம் em,    சு.பெ. (pron) ‘யாம்’ என்பதன் வேற்றுமையடி; the oblique of first pers. pl. pron.

     “yam”.

ம. எம்.

     [ஏம் → எம். (க.வி.88);.]

எம்பட்டு

 எம்பட்டு embaṭṭu, பெ. (n.)

   எவ்வளவு; how much. எம்புட்டு திமிர் உனக்கு (வட்.வழ.சொல்லக.);.

     [எ + மட்டு – எம்மட்டு – எம்புட்டு (கொ.வ.);. இக்கொச்சை வழக்கு விலக்கத்தக்கது.]

எம்பரும்

எம்பரும் embarum,    கு.வி.எ. (adv.) எவ்விடத்தும்; Everywhere.

     “வெம்பர லழுவத் தெம்பரு மின்மையின்” [பெருங்,நரவான2.13).

     [எம் → எம்பர் + உம்.]

எம்பர்

 எம்பர் embar, பெ. (n.)

   எவ்விடம்; which place, where.

     [எ → எம் → எம்பர். ஒ.நோ. இ. → இம்பர்.]

எம்பி

எம்பி embi, பெ. (n.)

   என் தம்பி; my younger brother

     “எம்பியை யீங்குப் பெற்றேன்” (சீவக.1760);.

     [என் + பின் – எம்பின் → எம்பி.]

எம்பின்

 எம்பின் embiṉ, பெ. (n.)

   தம்பி; my younger brother.

     [எம் + பின் – எம்பின் (எமக்குப்பின்னால் பிறந்தவன், தம்பி); இச்சொல்வழக்கிழந்தது. எம்பின் → எம்பி எனக் கடைக்குறைந்தது.]

எம்பிராட்டி

எம்பிராட்டி embirāṭṭi, பெ. (n.)

   எங்கள் தலைவி; our lady.

     “எம்பிராட்டி திருவடிமேற் பொன்னஞ்சிலம்பில்” (திருவாச.திருவெம்.16);.

ம. எம்பிராட்டி.

     [எம் + (பெருமாட்டி); பிராட்டி.]

எம்பிரான்

எம்பிரான் embirāṉ, பெ. (n.)

   1. ஆண்டவன்; God

     “எம்பிரானே யென்னை யாள்வாய்” (திவ்.பெரியதி. 10,3,2);.

   2. எங்கள் தலைவன்; our lord (செ.அக.);.

ம. எம்பிரான்.

     [எம் + (பெருமான்); பிரான்.]

எம்பு

எம்பு1 embudal,    7. செ.கு.வி. (v.i.)

   மேலெழுதல் அல்லது துள்ளுதல்; to rise, spring up.

ஓர் எம்பு எம்பினான் (கொ.வ.);.

     [எழும்பு → எம்பு (இடைக்குறை);.]

 எம்பு2 embu, பெ. (n.)

   1. எழும்புகை; rising.

   2. நிமிர்த்துதல்; straightening.

ம. எம்பேறு.

     [எ → எம்பு (க.வி.81);.]

 எம்பு2 embudal,    5.செ.கு.வி. (v.i.)

.

   1. வருந்துதல்; to suffer.

     “மத்திகை தாக்க வேம்பலுற்றனம்” (திருவிளைபரிநரி,12);.

   2. மனங்கலங்குதல்; to be confused in mind.

     [ஏ → ஏல் → ஏலல் = அசைதல், தொங்குதல், வருந்துதல், மனம்கலங்குதல். ஏல் → ஏம்பு.]

எம்புகம்

 எம்புகம் embugam, பெ. (n.)

நிலக்கடம்பு பார்க்க;see nila-k-kadambu.

     [எம்பு → எம்புகம்.]

எம்பெருமாட்டி

 எம்பெருமாட்டி emberumāṭṭi, பெ. (n.)

   எங்கள் தலைவி; myleader (female);.

     “எம்பெருமாட்டி யசோதாய் எழுந்திராய்” (திருப்பாவை.);.

     [எம் + பெருமாட்டி.]

எம்பெருமானார்

எம்பெருமானார் emberumāṉār, பெ. (n.)

   இராமாநுசர்; Ramanujecharya.

     “ஆளவந்தார்க் கன்பா மெம்பெரு மானார்க்கு” (அஷ்டப்.ஊசல்.18);.

     [எம் + பெருமாள் + ஆர்.]

எம்பெருமான்

எம்பெருமான் emberumāṉ, பெ. (n.)

   1. எம்பிரான் பார்க்க;see empiran.

     “எம்பெருமானேயெம்மை யொளித்தியோ” (சீவக.294);.

   2. என் தலைவன்; my master, my lord.

   3. கடவுள்; God.

ம. எம்பெருமான்.

     [எம் + பெருமான்.]

எம்பெருமான்வெட்டு

எம்பெருமான்வெட்டு emberumāṉveṭṭu, பெ. (n.)

   பழைய நாணயவகை (பணவிடு.134);; ancient coin.

     [எம்பெருமான் + வெட்டு.]

எம்போகி

 எம்போகி embōki, பெ. (n.)

   ஏதிலி, புகலிலி, பிறநாட்டான்; refugee, foreigner, destitute.

     “ஏழை எம்போகி இனிமே வாழ முடியாது” (வட்வழ.சொல்லக.);.

     [ஏமம் + போக்கி – ஏமம்போக்கி → ஏம்போகி → எம்போகி. ஏமம்போகி = பாதுகாப்பு இழந்தவன்.]

எம்மட்டு

எம்மட்டு emmaṭṭu, கு.வி.எ. (adv.)

   1. எவ்வளவு; how much.

   2. எம்மாத்திரம்; how far. (ஆ.அக.);.

     [எம் + மட்டு. மா = மாத்திரை. மா → மாத்து → மாட்டு – மட்டு = அளவு.]

எம்மனை

எம்மனை emmaṉai, பெ. (n.)

   எம் அன்னை, எம் தாய்; our mother.

     “தீம்பாலுட்டு மெம்மனை வாராள்” (பெருங்.உஞ்சைக்.33,169);.

     [எம் + அன்னை – எம்மள்ளை → எம்மனை.]

எம்மனோர்

எம்மனோர் emmaṉōr, பெ. (n.)

   1. எம்மை யொத்தவர்; those like ourselves, our party.

     “எம்மனோரிவட் பிறவலர்மாதோ” (புறநா.210);.

   2. நாங்கள்; we.

     “மம்மர் நெஞ்சத் தெம்மனோர்க் கொருதலை” (புறநா.53);.

     [எம் + அன்னோர். அன்னோர் → அனோர்.]

எம்மாதிரி

 எம்மாதிரி emmātiri, பெ. (n.)

   எதுபோல்; of which kind.

ம. எம்மாதிரி.

     [எம் + (மாத்திரி); மாதிரி. மாதிரி = அளவினது, அளவால் ஒத்திருப்பது.]

எம்மாத்திரம்

 எம்மாத்திரம் emmāttiram,    கு.வி.எ. (adv.) எவ்வளவு; how much.

     [எம் + மாத்திரம்.]

எம்மான்

எம்மான்1 emmāṉ, பெ. (n.)

   என் மகன்; my son.

     “எம்மானே தோன்றினா யென்னை யொளித்தியோ” (சீவக.1801);.

     [எம் + மகள் – எம்மகள் → எம்மான்.]

 எம்மான்2 emmāṉ, பெ. (n.)

   1. எம் இறைவன்; our lord.

     “எந்தையே யெம்மானே யென்றென் றேங்கி” (தாயு.ஆகார.6);.

   2. எம் தந்தை; our father.

     “எம்மா

னெம்மனை யென்றனக் கெட்டனைச் சார்வாகார்” (தேவா.322,3);.

ம. எம்மான்.

     [எம் + பெருமான் – எம்பெருமாள் → எம்பிரான் → எம்மாள் (தொகுத்தல் திரிபு);.]

எம்முன்

எம்முன் emmuṉ, பெ. (n.)

   என் தமையன்; my elder

 Brother.

     “எம்முன் யாண்டையான்” (கம்பரா. பள்ளி.89);.

     [என் + முன் – எம்முன்.]

எம்மை

எம்மை1 emmai, பெ. (n.)

   1. எப்பிறப்பு; which birth, in metempsychosis.

     “எம்மைக் கிதமாகவிஃ தெண்ணினை” (கம்பரா.சடாயுவுயிர்.99);.

   2. எவ்வுலகம்; what

 world.

     “எம்மை யுலகத்தும் யான்காணேன்” (நாலடி.132);.

     [எம் + ஐ. ஐ = வேற்றுமை உருபு.]

 எம்மை2 emmai, பெ. (n.)

   1. எந்தலைவன்; our lord, our master.

     “நிறையெம்மை” (அறநெறிச்,206);.

   2. எங்களை; us (ஆ.அக.); (செ.அக);.

     [எம் + ஐ + தலைவன்.]

எம்மையும்

எம்மையும் emmaiyum, பெ. (n.)

   1. எங்களையும்; including us

   2. எப் பிறப்பும்; all births.

     [எம் + ஐ + உம்.]

எம்மையோர்

எம்மையோர் emmaiyōr, பெ. (n.)

   எம்மவர்; our party. those connected with us.

     “எம்மையோ ரனைவரும்’ (கம்பரா.சடாயுவுயிர்.48);.

     [எம் + அவர் – எம்மவர் – எம்மவோர் – எம்மையோர் (ஈற்றுத் திரிபு);.]

எம்மோன்

எம்மோன் emmōṉ, பெ. (n.)

   எம்முடைய தலைவன்; our master.

     “எம்மோன்… … குறவர் பெருமகன்.” (புறநா.157);.

ம. எம்மோன்.

     [எம் + அவன் – எம்மவன் → எம்மோன்.]

எம்மோர்

 எம்மோர் emmōr, பெ. (n.)

   எம்முடையவர்; my fellows, our friends.

     [எம் + அவர் – எம்மவர் → எம்மோர்.]

எய

எய2 eya, பெ. (n.)

   முள்ளம்பன்றி; poroupine.

     “எய்ம்

முள்ளன்ன பரூஉமயிர்” (நற்.98);.

   ம., க. எய்;   து. எயி;தெ. ஏது.

     [எய் = முள், முள்ளுடைய பன்றி.)]

 எய3 eya, பெ. (n.)

   1. அம்பு; arrow.

     “இவளாகத் தெய்யே றுண்டவாறெவன்” (திருவிளை.பழியஞ்.24);.

   2. வேடன்; hunter.

   3. வேடர்குலம்; hunters community.

     [இல் → இய் → எய். எய் = முள், அம்பு, அம்பினையுடைய வேடன், வேடகுலம், இச்சொல் எய் → எயது → யது எனத்திரிந்து வடபுலத்து மன்னர் மரபைக் குறித்த சொல்லா யிற்று.]

எயம்

 எயம் eyam, பெ. (n.)

   ஏலம்; cardamom. (சா.அக.);.

     [ஏலம் → ஏயம் → எயம் (கொ.வ.);.]

எயினச் சேரி

எயினச் சேரி eyiṉaccēri, பெ. (n.)

எயின்சேரி பார்க்க (நன்.212.விருத்.);;see eyin-ceri.

எயினன்

எயினன் eyiṉaṉ, பெ. (n.)

   வேடன்; hunter, inhabitant of the desert tract.

     “கொடுவிலெயினர் குறும்பில்” (பெரும்பாண்.129);.

     [எய் + நன் – எய்நன் → எயினன் (வேக.53);.]

எயின்

எயின் eyiṉ, பெ. (n.)

   வேடர்குலம்; hunting tribe of the desert tract.

     “எயினிடு கடனிது” (சிலப்.12.பாடல்.18, அணிமுடி);.

     [எய் → எய்நன் → எயினன் → எயிள் = எயின் குடியினர். எயினர் → ஏனர் → எனாதியர் என ஆந்திரத்திலும், ஜெயின் என வடபுலத்திலும் குடிப்பெயர் திரிபுற்றனர் என்பர்.]

எயின்சேரி

எயின்சேரி eyiṉcēri, பெ. (n.)

   வேட்டுவர் ஊர்; village inhabited by the hunting tribes.

     “எயின்சேரியினுள்ள மாதர்” (கந்தபு.வள்ளி.28);.

     [யின் + சேரி.]

எயிறலை-த்தல்

எயிறலை-த்தல் eyiṟalaittal,    4. செ.கு.வி. (v.i.)

   சினத்தாற் பல்லைக் கடித்தல்; to gnash the teeth in anger.

     “ஆவனகூறி னெயிறலைப்பான்” (நீதிநெறி.3);.

     [எயிறு + அலை.]

எயிறு

எயிறு eyiṟu, பெ. (n.)

   1. பல்; tooth.

     “முல்லையலைக்கு மெயிற்றாய்” (நாலடி.287);.

   2. பல்லின் விளிம்பு (பிங்.);; the gums

   3. யானை, காட்டுப் பன்றிகளின் வாய்க்கோடு; tusk of the elephant or the wild hog.

     “கேழலா யிளையெனுந் திருவினை யேந்தி னானரோ. ஓரெயிற்றினுள்” (கம்பரா.கிளை.119);.

   ம. எயிறு, எகிறு;   பட, எமறு;தெ. இகறு, சிகுறு.

     [எய் = குத்துதல், பிளத்தல், கடித்தல், எய் → எயிறு.]

எயிறுதின்(னு)-தல்

எயிறுதின்(னு)-தல் eyiṟudiṉṉudal,    13. செ.கு.வி. (v.i.)

   வெகுளியால் பல்லைக் கடித்தல்; to gnash the leeth n anger.

     “எயிறுதின்று வைது” (பாரத,நிவாத.115);.

     [எயிறு + தின்.]

எயிற்றம்பு

எயிற்றம்பு eyiṟṟambu, பெ. (n.)

   அலகம்பு; arrow tipped with a spear-head.

     “எயிற்றம்பு மூழ்கிலின்” (சீவக.780);.

     [எயிறு + அம்பு.]

எயிற்றழற்சி

 எயிற்றழற்சி eyiṟṟaḻṟci, பெ. (n.)

   பல்லுக் கேற்படும் நோய்; inflammation of a tooth – Odontitis. (சா.அக.);.

     [எயிறு + அழற்சி.]

எயிற்றி

எயிற்றி eyiṟṟi, பெ. (n.)

   எயினக்குடிப் பெண்; woman of the Eyin caste.

     “கருங்க ணெயிற்றி” (புறநா.181);.

     [எயின் + தி – எயிற்றி.]

எயிற்றியர்

 எயிற்றியர் eyiṟṟiyar, பெ. (n.)

எயிற்றி பார்க்க;see eyirri.

எயிற்றுப்புண்

 எயிற்றுப்புண் eyiṟṟuppuṇ, பெ. (n.)

   பல்லீற்றி லுண்டாகும் புண்; sore of the gum as the result of an abscess or an ulcer – gum-boil. (சா.அக.);.

     [எயிறு + புண்.]

எயில்

எயில் eyil, பெ. (n.)

   1. மதில்; fortress, wall, fortification

     “திருந்தெயிற் குடபாற் சிறுபுழை போகி” (மணி 622);.

   2. ஊர், நகரம் (திவா.);; town city.

ம. எயில்.

     [எய் + இல். எய்யும் ஏப்புழைகள் உள்ள இருப்பிடம். எப் → எய்தல் இல் = இருப்பிடம்.]

எயில்காத்தல்

எயில்காத்தல் eyilkāttal, பெ. (n.)

   அகத்தோன் உள்ளி ருந்து கோட்டையைக் காத்து நிற்றலைக் கூறும் புறத்துறை (தொல்.பொருள்.67.உரை.);; theme which treats of the defence of a fortress by its owner (செ.அக.);.

     [எயில் + காத்தல்.]

எய்

எய்1 eytal,    1.செ.குன்றாவி, (v.t.)

   அம்பெய்தல்; to discharge arrows.

     “மின்னுங் கணையா லிவனெய்திட” (பாரத.சம்பவ.49);.

   ம. எய்யுக;   க. ஏய், எசெ, இக, எச்செ, எக;   கோத, எய், இய், இசிவ், இச், துட, எவ்;   து. எய்யுளி, ஈபுளி;   தெ, ஏயு, எகுக;   பர், எய், எய்க், கோண், எகனா;   குரு, இன்சனி;மால், இன்கெ.

     [இப் → எய் → எய-தல். (வே.க.52,53);.]

 எய்4 ey, பெ. (n.)

   வறுமை; poverty.

     “எய்யுரையான்” (ஏலா.33);.

     [எள் = எளிமை. வறுமை, எள் → எய்.]

 எய்5 eyttal, செ.கு.வி. (v.i.)

   காலூன்றி நிற்கும்படி நீர் ஆழமில்லாதிருத்தல்; to be within one’s depth.

     [எள் → எப். எள் = எளிமையாதல்.]

 எய்6 eyttal,    1.செ.கு.வி. (v.i.)

   1. இளைத்தல்; to grow weary by exertion;

 to fall on strength as in battle;

 to flag as from want of food.

     “எய்த்த மெய்யெ னெய்யேனாகி” (பொருந.68);.

   2. மெய் வருந்துதல்; to take pains, exeit onset.

     “எய்யாமை யெல்லாவறமுந் தரும்” (குறள்.296);

   3. குறைவுறுதல்; to be deficient.

     “எய்த்தெழு பிறையினை வளைவின் றாகநேர் வைத்துளதெ னின்” (இரகு.யாகப்.8);. – 1.செ.குன்றாவி, (v.t.);

   அறிதல்; to know, understand.

     “நொந்தவென் றெய்த்தடிச் சிலம்பிரங்கும்.” (சீவக.2688);.

   2. மெலிதல்; to grow weak and thin for want of food.

     [இள் → இளை → எய் → எய்த்தல். (வேக.21,53);.);]

எய்த

எய்த eyta, குவி.எ. (adv.)

   1. நன்குபொருந்த; carefuly, well,adequaley.

     “எனநினைத்தெய்த நோக்கி” (கம்பரா. உருக்கா.28);.

   2. நிரம்ப; very much, abundantly, protusey.

     “எய்த…. தம்மைப் புகழ்தல்” (பழ.65);.

     [இய் → இயை → இயைத → எய்த.]

எய்து-தல்

எய்து-தல் eydudal,    10.செ.கு.வி. (v.i.)

   1. அணுகுதல்; to approach.

     “நெடியோயெய்த வந்தனம்” (புறநா.10);.

   2. அடைதல்; to obtain, attain.

     “ஏமவைக லெய்தின்றாலுலகே” (குறுந்.கடவுள்.வாழ்த்து.);.

   3. சேர்தல்; to reach as a place.

     “தூநிறக் கங்கையாள் சூழலெய்தினான்”. (பாரத.குருகுல.34);.

   4. பணிதல்; reverse, surrender.

     “இளங்கொடியே யெய்தும்” (தஞ்சையா.386);.

   5. நீங்குதல்; to leave, depart.

     “எய்தலில்லாத்திருவின்” (தஞ்சைவா.386); – 10.செ.கு.வி. (v.i.);

   1. பொருந்துதல்; to be adapted, be suitable.

     “காலத்தோடெய்த வுணர்ந்து செயல்” (குறள்.516);.

   2. நிகழ்தல், தேர்தல்; to happen, occur.

     “எட்டி குமரனெய்திய துரைப்போன்” (மணி.4,64);.

   3. உண்டாதல்; to appear, become. crop up.

     “மாசெனக் கெய்தவும்” (கம்பரா.சிறப்.6);.

   4. போதியதாதல்; to be sufficient, adequate.

     “சுனைவாய்ச் சிறுநீரை யெய்தாதென் றெண்ணி” (ஐந்.ஐம்.38);.

   ம. எய்துக;   க. அய்து;   துட, இக்;   குட, எத்த;   து, எத்தாவுணி, எத்தாடுனி, தெ. எயிது, எது;   கொலா, எந்த்;   பர், ஏத், ஏய், எயிபிப்;   கோண், எனாவா;   கூ. எப;குவி, எகலி.

     [இய → எய் → எய்து → எய்துதல்.]

எய்ப்பன்றி

எய்ப்பன்றி eyppaṉṟi, பெ. (n.)

   முள்ளம்பன்றி; porcupine.

எய்ப்பன்றி முதுகுபோலும் (பெரும்பாண்.88, உரை.);.

   தெ. எதுபந்தி;   து. எலிபஞ்சி;   ம. எய்பன்னி;   க. எது கந்தி;   குட, எப்பந்தி;பட, இப்பந்தி.

     [இல் → இப் → எய் + பன்றி. எம் = முள்.]

எய்ப்பாடி

 எய்ப்பாடி eyppāṭi, பெ. (n.)

   வேடரூர்; hunter’s village.

     [எய் + பாடி.]

எய்ப்பினில் வைப்பு

எய்ப்பினில் வைப்பு eyppiṉilvaippu, பெ. (n.)

எய்ப்பில் வைப்பு பார்க்க;see eyppil-vaippu.

     “நல்லடியார் மனத் தெய்ப்பினில் வைப்பை” (தேவா.818.2);.

     [எய்ப்பு + இன் + இல் + வைப்பு.]

எய்ப்பில்வைப்பு

 எய்ப்பில்வைப்பு eyppilvaippu, பெ. (n.)

   தான் தளர்ந்தும் பிறரைத் தாங்குவது (யாழ்.அக.);; that which, though itself feeble, is a source of strength and support to other things.

     [எய்ப்பில் + வைப்பு.]

எய்ப்பு

எய்ப்பு eyppu, பெ. (n.)

   1. இளைப்பு; weariness, languor.

     “எய்ப்பானார்க் கின்புறு தேனளித்து” (தேவா.189,3);.

   2. வறுமைக்காலம்; time of adversity.

     “எய்ப்பினில் வைப்பென்பது” (பழ.358);.

   3. தளர்ச்சி; weakness.

     [எப் → எய்ப்பு.]

எய்ப்போத்து

எய்ப்போத்து eyppōttu, பெ. (n.)

   ஆண்முள்ளம்பன்றி; male porcupine.

     “கற்கந்தும் எய்ப்போத்தும்… அனை யார்” (இறை.2.உரை,பக்.27);.

     [எய் + போத்து.]

எய்ம்மான்

எய்ம்மான் eymmāṉ, பெ. (n.)

   எய்ப்பன்றி; porcupine

     “எயினர் தந்த வெய்ம்மா னெறிதசை” (புறநா.177,13);.

     [எய் + மான். மா = விலங்கு. ‘ன்’ சொல்லாக்க ஈறு.]

எய்யாமை

எய்யாமை eyyāmai, பெ. (n.)

   அறியாமை (தொல். சொல்.342);; ignorance.

     [இப் → எய் → எய்யாமை (வே.க.53);.]

எரங்காடு

எரங்காடு1 eraṅgāṭu, பெ. (n.)

   பாழ்நிலம் (இ.வ.);; barren land.

     [எல் → எரு → எரி = எரிநிறம், சிவப்பு, எரி + அம் + காடு – எரங்காடு எரி = செந்நிலப்பாங்கான மேட்டுக்கரம்பு.]

 எரங்காடு2 eraṅgāṭu, பெ. (n.)

   பருத்தி விளைதற்குரிய செழித்த புன்செய் நிலம்; fertile land of red loam soil, fertile black cotton soil.

     [எல் → எரு + அம் – எருவம் = செந்நிலம். எருவம் + காடு (வே.க.50);.]

எரசல்

 எரசல் eracal, பெ. (n.)

   தூவானம்; drisling.

     [இறைச்சல்-எரசல் (கொ.வ.);]

எரச்சோறு

எரச்சோறு eraccōṟu, பெ. (n.)

   தண்டச்சோறு; food given grati…

     “ஏச்சோறு பொங்கி யிட்டே.” (ஆதியூரவதானி3);.

     [எள்ளல் → எள் + சோறு – எச்சோறு -ஏச்சோறு.]

எரல்

 எரல் eral, பெ. (n.)

   கடற்சிப்பி; sea-shell (சா.அக.);.

     [ஈரல் → ஏரல் (பிளவுண்டது);.]

எரி

எரி1 eridal, செ.கு.வி (v.i.)

   1. தீமூளல், சொலித்தல்; to fame, ignite.

     “எரியுந் தீயோடு” (திவ்.திரு.வாய். 3,6,5);.

   2. ஒளிர்தல்; to glow shine.

     “எரியுஞ் செம்பொன் மணிமுடி” (சூளா.மந்தி.6);.

   3. எரிச்சலுண்டாதல்; to burn, as a sore, as fever, to smart;

 to suffer pain, to feel panos, as the stomach from hunger. கண்ணெரிகின்றது (உவ.);.

   4. பொறாமை கொள்ளுதல்; to be envious, jealous. அவனைப் பார்த்து இவன் வயிறு எரிகிறான் (உ.வ.);.

   5. மனம் வருந்துதல்; to experience a painful emotion. அதைப் பார்க்கும்போது மனம் எரிகிறது.

   6. சினம் கொள்ளுதல்; to be angry, indignant. எரிந்து விழாதே (உ.வ.);.

   7. முதிர்தல்; to become old,

     “எரிகின்ற மூப்பினாலும்” (கம்பரா. மருந்து. 17);.

   8. மிகுதல்; to go on increasing.

   ம. எரி;   க. உரி;   குட. எரி;   து. எரி;   தெ. ஏர்பு;   கோண். அர்சி, எரக (கரம்);;கூ, ஏர்ப.

     [உல் → அல் → எல் → எரி. உல் = வெப்பம், சூடு, நெருப்பு எரிதல் = தீ உண்டாதல், அழல் மண்டுதல்.]

 எரி2 erittal,    4. செ.குன்றாவி. (v.i.)

   1. தீயால் வெந்தழியச் செய்தல்; to burn, consume by fire, scorch.

     “புரமூன் றெரித்தவா” (திருவாச.13,5);.

   2. விளக்கு, பந்தம் முதலியன எரிதல்; to keep burning, as a lamp or torch.

     “வீட்டுக்கெரித்த விளக்கு” (தமிழ்நா.237);.

   3. மருந்து முதலியன புடமிடுதல்; to sublimate, calcine, as metals;

 to reduce to powder by fire for making medicine.

எரிமருந்து (இ.வ.);.

   4. அழற்றுதல்; to inflame, as a sore;

 to cause to burn, as poison.

அந்த மருந்து உடம்பை எரிக்கிறது.

   5. செரிக்கச் செய்தல்; to digest இந்த மருந்து உண்டதை யெல்லாம் எரிக்கும். (உ.வ.);.

   தெ. எரியின்சு;   ம. எரி;க. உரிசு.

     [எல் → எரி → எரித்தல்.]

 எரி3 eri, பெ. (n.)

   1. ஒளிர்வழி; glowing light, brightness.

     “எரிகொள் செந்நாயிறு”. (திவ்.இயற்.திருவிருத்.82);.

   2. நெருப்பு; fire.

     “எரியாற் சுடப்படினும்” (குறள்.896);.

   3. நெருப்புக்கடவுள்; agni.god of fire.

     “காவகமெரிக்கு நல்கிய…… சிலையினான்” (பாகவத.1,6,22);.

   4. அளறு (திவா.);; hell.

   5. மூன்றாம் நாண் மீன், ஆரல் (கார்த்திகை);; third naksatra.

     “எரிசடை யெழில்வேழம்” (பரிபா.11.2);.

   6. ஏழாவது நாண் மீன், கழை (புனர்பூசம்.); (பிங்.);; seventh naksatra.

   7. பதினெட்டாவது நாண் மீன், தழல் (கேட்டை.); (பிங்.);;   18th naksatra.

   8. கந்தகம்; sulphur,

 Brimstone.

     “பூதமெரியுல மிலவம்” (தைலவ.தைல. 135);.

   9. விடையோரை (பரிபா.11,2,உரை.);; taurus of the Zodiac.

ம., து. எரி.

     [எல் → எரி (செல்வி.77 திசம்.178);.]

 எரி4 eri, பெ. (n.)

   1. சிவப்புநிறம்; red colour.

   2.சிவப்பு நிறமுள்ள பொருள்; anything red in colour.

     [எல் → எரி.]

 எரி5 eri, பெ. (n.)

   1. வால்நாண்மீன் வகை (புறநா.395);; comet.

   2. கொடிவேலி (பச்.மூ.);; Ceylon leadwort

   3. தீக்கடைகோல்;     “சமிதையுடன் மேலெரிகொண்டு” (பெரியபு.சண்.27);;

 fire-drill.

ம. எரி.

     [எல் → எரி.]

எரிகடுப்பு

 எரிகடுப்பு erigaḍuppu, பெ. (n.)

   எரிச்சலை யுண்டாக்கு மோர் வகை வலி; pain marked by burning sensation;

 irritation.

     [எரி + கடுப்பு.]

எரிகண்

எரிகண் erigaṇ, பெ. (n.)

   1. நச்சுக்கண்; evil eye.

   2. எரிச்சலை யுண்டாக்கு மோர் வகைக் கண்ணோய்; eye disease accompanied by burning sensation.

   3. தீக்கண்; fiery eye. (of Siva); (சேரநா.);.

   ம. எரி கண்ணு;க. உரிகண்.

     [எரி + கன்.]

எரிகதிர்

எரிகதிர் erigadir, பெ. (n.)

   1. கதிரவன் (திவா.);. Sun

   2. செங்கதிர்; red rays of the Sun.

     [எரி + கதிர்.]

எரிகனல்

 எரிகனல் erigaṉal, பெ. (n.)

   தீக்கனல்; glowing coal, burning splinter, fire brana. (சேநைத.);.

   ம. எரிகனல்;க. உரிகெண்டெ.

     [எரி + கனல்.]

எரிகரும்பு

எரிகரும்பு erigarumbu, பெ. (n.)

   அடுப்புவிறகு; firewood,

     “எங்கள் மடத்துக் கெரிகரும்புகொள்வது” (தனிப்பா.1,76,149);.

     [எரி + கரும்பு.]

எரிகல்

எரிகல் erigal, பெ. (n.)

   1. கந்தகம்; brim stone.

   2. எரியுந் தன்மையுள்ள ஒருவகைக்கல்; stone with exordinary qualities.

     [எரி + கல்.]

எரிகள்

எரிகள் erigaḷ, பெ. (n.)

   1. எரிச்சல் உண்டாக்கும் கள், மிகவும் புளித்த கள்; fermented toddy.

ம. எரிகள்ளு.

     [எரி + கள்.]

எரிகுஞ்சி

எரிகுஞ்சி eriguñji, பெ. (n.)

   செம்மயிர் (வின்);; red hair, of the colour of red flame.

     [எரி4 + குஞ்சி]

எரிகுடலன்

 எரிகுடலன் eriguḍalaṉ, பெ. (n.)

   மிக்க பசியையுடையவன் (யாழ்ப்.);; he who is always craving for food.

     [எரி + குடல் + அள்.]

எரிகுடல்

 எரிகுடல் eriguḍal, பெ. (n.)

   மிகுபசி (யாழ்ப்.);; canine appetite, morbidly voracious appetite.

ம. எரிகுடல்.

     [எரி + குடல்.]

எரிகொள்ளி

எரிகொள்ளி erigoḷḷi, பெ. (n.)

கடைக்கொள்ளி,

 firebrand.

எரிகொள்ளி எரிந்துவிழவும் (புறநா.41, உரை.);. (செ. அக.);.

ம. எரிகொள்ளி.

எரிக்கொடி

எரிக்கொடி erikkoḍi, பெ. (n.)

நெருப்பின் கொழுந்து,

 fame of fire.

     “எரிக்கொடிக் கவைஇய செவ்வரை போல” (ஐங்குறு.353);.

     [எரி + கொடி.]

எரிசினக்கொற்றவை

 எரிசினக்கொற்றவை erisiṉakkoṟṟavai, பெ. (n.)

   கடுஞ்சீற்றமுடைய காளி; Durga, goddess of rage.

     [எரி + சினம் + கொற்றவை.]

எரிசினக் கொற்றவை என்னும் பெயரை வடமொழியாளர் ரெளத்ர துர்காதேவி என மொழி பெயர்த்துக் கொண்டனர்.

எரிசினம்

 எரிசினம் erisiṉam, பெ. (n.)

   கடுஞ்சீற்றம்; rage, fury.

     [எரி + சினம்.]

எரிசுடர்

எரிசுடர் erisuḍar, பெ. (n.)

   1. சொலிக்கும் நெருப்பு,

 fire which has burst out into flames – கு.வி.எ.(adv.);

மிக்கவொளி,

 immense illumination.

     “பருமணியெரி சுடர் பரப்பி” (கந்தபு:நகரழி.37);,

   3. விளக்கு; lamp.

     [எரி + கடர்.]

எரிசுரை

 எரிசுரை erisurai,    பெ. (n,) சூடான சாராயம்; ardent spirit (சா.அக).

     [எரி + சுரை.]

எரிச்சற்படு-தல்

எரிச்சற்படு-தல் ericcaṟpaḍudal,    20.செ.கு.வி. (v.i.)

   பொறாமைப்படுதல்; to be envious, jealous.

     [எரிச்சல் + படு.]

எரிச்சல்

எரிச்சல் ericcal, பெ. (n.)

   1. எரிக்கை; burning, heating

செத்தை எரிச்சலுக்குதவும் (உ.வ.);.

   2. அழற்சி; burning sensation,

கண்ணெரிச்சல்.

   3. உறைப்பு (வின்.);; acridity. pungency, as of some kind of fruits.

   4. சினம்; anger, fury.

அயோக்கியனைக் கண்டால் அவனுக்கு எரிச்சல் அதிகம்.

   5. பொறாமை; envy, jealousy.

     “மனத்தெரிச்சலாலே” (இராம.நா.அயோத்.5);.

   7. பெருங்காயம், asafetida.

   8. வேகை; boiling.

   9. வெறுப்பு; disgust.

   ம. எரிச்சல்;   குட. எரிவி;தெ. ஏர்பு.

     [எல் → எரி → எரிச்சல்.]

எரிதுவு-தல்

எரிதுவு-தல் eriduvudal,    5. செ.கு.வி. (v.i.)

   தீப்பற்றுதல்; to take fire.

     “ஒக்க முப்புர மோங்கெரி துவ” (தேவா. 485,5);. (செ.அக.);.

     [எரி + தூவு.]

எரிநகை

எரிநகை erinagai, பெ. (n.)

   வெட்சிமலர்; name of the ixore flower.

     “எரிநகை யிடையிடு பிழைத்த நறுந்தார்” (பரிபா.13,59);, (செ.அக.);.

எரிநாள்

 எரிநாள் erināḷ, பெ. (n.)

   ஆரல் நாண்மீன் (கார்த்திகை நட்சத்திரம்);. (பிங்.);; third naksatra (செ.அக.);.

     [எரி + நாள். நாள் = நாண்மீன்.]

எரிநீரம்

 எரிநீரம் erinīram, பெ. (n.)

   பட்ட இடத்தில் அல்லது பொருள்களை எரித்து விடும் தன்மையுள்ள நீர்மம்; acid which corrode or burn the parts of which they are applied.

     [எரி+நீரம்]

எரிநோய்

எரிநோய் erinōy, பெ. (n.)

   ஆட்டுநோய்வகை (M.cm.D. (1887);,249);; contagious disease of sheep. (செ.அக.);.

     [எரி – நோய்.]

எரிந்துவிழு-தல்

எரிந்துவிழு-தல் erinduviḻudal,    2. செ.கு.வி. (v.i.)

   1. சீற்றம் காட்டுதல்; to wax hot and burst into a temper.

   2. சினந்து பேசுதல்; to talk angrily, fall foul of. (செ. அக.);.

     [எரி → எரிந்து + விழு.]

எரிபிடாரி

எரிபிடாரி eribiṭāri, பெ. (n.)

   1. கடுஞ்சினமுடைய காளி தெய்வம், கொற்றவை; enraged, furious female goddess.

   2. எரிச்சலுடையவள்; peevish, fretful woman, spoken disparagingly.

     [எரி + பிடாரி. பிடாரி = கொல்பவள்.]

எரிபுளி

 எரிபுளி eribuḷi, பெ. (n.)

   கூட்டுக்கறிவகை (இ.வ.);; hot curry of which buttermilk is one of the incredients.

ம. எரிபுளி

     [எரி + புளி. உள் → புள் → புளி.]

எரிபுழுகு

 எரிபுழுகு eribuḻugu, பெ. (n.)

   நறுமணப் பொருள் (சவ்வாது.);; substance taken from the anal glands of the civet – cats. It is a perfume. (சா.அக.);.

     [எரி + புழுகு. இது இக்காலத்தில் புனுகு என வழங்கப்படுகிறது.]

எரிபொத்து-தல்

எரிபொத்து-தல் eriboddudal,    10. செ.கு.வி. (v.i.)

   அழல் மூட்டுதல்; to ignite, light a flame.

     “கனையெரி பொத்தி” (மணி.2,42);.

     [எரி + பொத்து. பொல் → பொள் → பொய் → பொய்த்து → பொத்து = அடித்தல், தேய்த்தல், கடைதல். எரிபொத்துதல் = தீ. கடைதல், எரிமூட்டுதல்.]

எரிபொறி

எரிபொறி eriboṟi, பெ. (n.)

   1. தீப்பொறி; spark of fire.

   2. மிகுந்த சூடு; scorching heat. (சேரநா.);.

ம. எரிபொரி.

     [எரி + பொறி.]

எரிபொழுது

 எரிபொழுது eriboḻudu, பெ. (n.)

   செவ்வாணப்பொழுது; rosy sunset (w.);

     [எரி + பொழுது. பொல் → பொழுது = ஒளியுள்ளது. இருள் விடிந்து புலரும் நேரம், ஒளி கானும் நேரம்.]

எரிப்பு

எரிப்பு erippu, பெ. (n.)

   1. எரிக்கை; burning.

   2. கார்ப்புச் சுவை; pungency.

   3. பொறாமை; envy, jeaiousy.

   4. நெஞ்செரிப்பு (w.);; burning sensation in the throat (செ.அக);.

     [எரி → எரிப்பு.]

எரிப்புமா

 எரிப்புமா erippumā, பெ. (n.)

   உறைப்புள்ள ஒரு வகை மாம்பழம் (இ.வ.);; a variety of mango that is pungent to the taste.

ம. எரிநாடன்.

     [எரி → எரிப்பு + மா.]

எரிப்புறம்

 எரிப்புறம் erippuṟam, பெ. (n.)

   நிரயம் (வின்.);; hell.

     [எரி + புறம்.]

எரிப்பூ

எரிப்பூ erippū, பெ. (n.)

   எரிபோலும் நிறமுள்ள பூ; flower that has the hue of fire.

     “எரிப்பூசம் பழனம்” (புறநா.249);.

எரிமணி

எரிமணி erimaṇi, பெ. (n.)

   ஒளிர்வுள்ள மணி; sparking jewel, bright gem. (கூர்மபு. அட்டமூ.2);.

     [எரி + மணி.]

எரிமருந்தன்

 எரிமருந்தன் erimarundaṉ, பெ. (n.)

   வெடிமருந்து செய்பவன்; manufacturer of gun powder. (Insc.);. (செ.அக.);.

     [எரி + மருந்தன்.]

எரிமருந்து

எரிமருந்து erimarundu, பெ. (n.)

   1. புடமிட் டெடுத்த மருந்து; calcined medicine.

   2. உறைப்பான மருந்து; medicine pungent or corrosive.

   3. அடுப்பி லிட்டு எரித்த எண்ணெய் முதலிய மருந்துகள்; medicaled ois and medicines prepared by heating on an oven.

   4. செய்நஞ்சு; poisons or poisonous compounds.

   5. உள்ளுக்குச் சாப்பிட அழற்சியையும் அல்லது வெளியிற் பூச எரிச்சலையும் உண்டாக்கும் மருந்து; medicine causing inflammation when taken internally or burning sensation when applied externally.

   6. வெடிமருந்து; gun powder. (சா.அக.);.

     [எரி + மருந்து.]

எரிமலர்

எரிமலர் erimalar, பெ. (n.)

   1. முருக்குமலர்; flower of the Indian Coral-tree.

     “எரிமலர்ப் பவளச் செவ்வாய்” (சீவக.662);.

   2. செந்தாமரை; red lotus.

     “‘செல்வ னெரிமலர்ச் சேவடியை” (சீவக.2741);.

ம. எரிமலர்.

     [எரி + மலர்.]

எரிமலை

 எரிமலை erimalai, பெ. (n.)

   கல்லும் மண்ணும் கலந்துருகிப் பொங்கித் தீப்பற்றி எரியும் மலை; mountain with a burning hole in which stones and mud are converted into a molten state called lava and thrown out – Volcano.

ம. எரிமலை.

     [எரி + மலை.]

எரியம்பு

 எரியம்பு eriyambu, பெ. (n.)

   தீயுமிழும் அம்பு; fiery

 arrow (சேரநா.);.

ம. எரியம்பு.

     [எரி + அம்பு – எரியம்பு. இதனை வடமொழியாளர் அக்கினியத்திரம் என்பர்.]

எரியல்

எரியல் eriyal, பெ. (n.)

   1. எரிவு; burning

   2. ஒளிர்கை; Shining.

   3. எரிந்தது (யாழ்ப்.);; that which is burnt, as charred food at the bottom of a vessel in cooking.

     [எரி → எரியல்.]

எரியாடி

எரியாடி eriyāṭi, பெ. (n.)

   1. அழலை யேந்தியாடுபவனாகிய சிவன்; Siva, who dances with faming fire in hand.

     “எரியாடி தென்றில்லை” (திருக்கோ.127);.

   2. வற்றல் மிளகு; pepper (சேரநா.);.

ம. எரியாடி.

     [எரி + ஆடி.]

எரியாணிவெயில்

 எரியாணிவெயில் eriyāṇiveyil, பெ. (n.)

   நெருப்புப் போல் மிகு சூடாக இருக்கும் வெயில்; burning or scorching sunshine. (சேரநா.);.

ம. எரியாணிவெயில்.

     [எரியாணி + வெயில், எரியாணி = நெருப்பிலிட்ட இரும்பு ஆணி.]

எரியிடு-தல்

எரியிடு-தல் eriyiḍudal,    20.செ.கு.வி. (v.i.)

   1. எரியவைத்தல்; to cause to burn.

   2. தீமூட்டுதல்; to set fire.

     [எரி + இடு.]

எரியீசல்

 எரியீசல் eriyīcal, பெ. (n.)

   ஒரு வகைச் சிறிய ஈ; a kind of small fly. (சேரநா.);.

ம. எளியீச்ச.

     [எரி + ஈசல்.]

எரியூட்டு-தல்

எரியூட்டு-தல் eriyūṭṭudal,    5. செ.குன்றாவி (v.t.)

   தீக் கொளுத்துதல்; to set fire to, இலங்கை யெரியூட்டு படலம் (கம்பரா.);.

ம, எரியிக்குக.

     [எரி + ஊட்டு-தல்.]

எரியெண்ணெய்

எரியெண்ணெய் eriyeṇīey, பெ. (n.)

   1. அடுப்பிலிட்டு எரித்துக் காய்ச்சி வடித்த மருந்தெண்ணெய்; medicated oil prepared by boiling oil on an oven.

   2. காய்ச்சிய எண்ணெய்; healed oil.

   3. எரிச்சலை யுண்டாக்குமோர் மருந்தெண்ணெய்; medicated oil causing irritation or burning sensation.

   4. கரண்டியிலிட்டுக் காய்ச்சிச் சோற்றிலே ஊற்றும் முக்கூட்டெண்ணெய்; mixture of ghee, castor oil and sesame oil.

 burnt in a lada and poured on food. (செ.அக.); (சா.அக.);.

ம. எரியெண்ண.

     [எரி + எண்ணெய்.]

எரியோன்

எரியோன் eriyōṉ, பெ. (n.)

   தீக்கடவுள்; Agni the god of fire.

     “ஒள்ளெரியோனு மொளித்தான்” [கம்பரா.இலங் கையெரி.64).

     [எரி → எரியன் → எரியோன்.]

எரியோம்பு-தல்

எரியோம்பு-தல் eriyōmbudal,    7. செ.கு.வி. (v.i.)

   தீவேள்வி செய்தல்; to make offerings in the consecraled fire.

     “கற்றாங்கெரியோம்பி” (தேவா.1.1);.

     [எரி + ஒம்பு.]

எரிவனம்

 எரிவனம் erivaṉam, பெ. (n.)

   சுடுகாடு; cremation ground. (திவா.);.

     [எரி + வனம்.]

எரிவிளக்குறு-த்தல்

எரிவிளக்குறு-த்தல் eriviḷakkuṟuttal,    4. செ.குன்றாவி, (v.t.)

   தலைவிளக் கெரித்துத் தண்டித்தல்; to punish a condemned culprit by compelling him to go around the town with a burning lamp over his head.

     “எரிவிளக்குறுக்கு நம்மை” (சீவக.1162);.

     [எரி + விளக்கு + உறு.]

எரிவிழி-த்தல்

எரிவிழி-த்தல் eriviḻittal,    4. செ.குன்றாவி (v.t.)

   சினந்து பார்த்தல்; to gare at fiercely with blazing eyes

     “தானவனை…… அரியுருவமாகி யெரிவிழித்து” (திவ். இயற்பெரியதிரும.100);.

     [எரி + விழி.]

எரிவு

எரிவு erivu, பெ. (n.)

   1. எரிகை; burning

   2. உடற் சுடுதல்; heat in the system, burning, as of the eyes, hands, feet, etc.

   3. பொறாமை; envy, jealousy.

     “எரிவினாற் சொன்னா ரேனும்” (தேவா.758,9);.

   4. சினம்; wrath.

     “இழந்தா னெரிவினா லீர்ந்து” (திவ்.பெரி.யாழ்.1,2,4);.

   5. அழற்சி; inflammation. (சா.அக.);.

   ம. எரிவு;   க. உரி;   குட, எரிவி, து. எரி;   தெ. எர்வு;   பர். எரிப்;   கோண். ஏரினானா;கூ. ஏர்ப

     [எரி → எரிவு.]

எரு

எரு eru, பெ. (n.)

   1. உரம்; animal or vegetable manure.

     “பிடித்தெருவும் வேண்டாது” (குறள்.1037);.

   2. எரு முட்டை பார்க்க;see erumuttai.

   3. மலம்; excrement.

     “எருவாய் கருவாய் தனிலே” (திருப்பு:174);.

   4. எருது; bull (சா.அக.);.

   5. சாணம்; dung, as of a cow.

   ம. எரு;   க. எருவு;தெ. எருவு.

     [இய → இயல் → எல் → எரு வெளிப்படுவது).]

எருகு-தல்

எருகு-தல் erugudal,    7. செ.கு.வி. (v.i.)

   மாடு கழிதல்; to have loose motions, used with reference to cattle.

மாடு எருகியிருக்கிறது. (இ.வ.);.

   ம. எருகுக;   க. எரும்பு, எரு;   தெ. எருகு;   கொலா. எர்ங்கு;   நா. எர்ங்கு;   குரு. எர்கானா;மால். எர்கெ. எர்க்த்ரெ.

     [எல் → எரு → எருகு.]

எருக்கங்கொழுக்கட்டை

 எருக்கங்கொழுக்கட்டை erukkaṅgoḻukkaṭṭai, பெ. (n.)

   பிசைந்த அரிசிமாவை மூன்று அங்குல நீளமாக அடைதட்டி, சருக்கரையும் திருகின தேங்காயும் வெந்த பருப்பும் கலந்து அல்லது பயற்றை மட்டும் அதனுள் வைத்து மடித்து அவித்த ஓர் வகைப் பலகாரம்; a pastry or tart backed in steam. The rice four is doughed into a paste, pressed flat and then expanded in lo a thin sheet about three inches Indiametre Baked dholl or other grains mixed with cocoanut and sugar is placed on it, covered and then steamed.

     [எருக்கள் + கொழுக்கட்டை.]

எருக்கங்கோல்

 எருக்கங்கோல் erukkaṅāl, பெ. (n.)

   மருந்து அல்லது மருந்துச் சரக்குகளை வறுப்பதற்காகப் பயன்படுத்தும் எருக்கஞ்செடியின் கொம்பு; a twig of the madar plant used for roasting mediciné or other drugs. (சா.அக.);.

     [எருக்கன் + கோல்.]

எருக்கட்டு

எருக்கட்டு1 erukkaṭṭudal,    5.செ.குன்றாவி, (v.t.)

   1. கிடைவைத்தல்; to fold sheep, herd cattle for manure, keep cattle penned in a field that they might manure it.

   2. சாணஞ்சேர்த்தல் (வின்.);; to collect dung.

     [எரு + கட்டு-தல்.]

 எருக்கட்டு2 erukkaṭṭu, பெ. (n.)

   1. உரத்திற்காகக் கிடைவைக்கை; folding of sheep and herding of cattle for manure.

   2. கிடைவைத்த கொல்லை; land thus manured.

   3. எருக்களம்; manure store, dung hill. (ஆஅக.); (செ. அக.);.

     [எரு + கட்டு.]

எருக்கம்

 எருக்கம் erukkam, பெ. (n.)

எருக்கு பார்க்க;see erukku. (சா.அக.);.

எருக்கம்பஞ்சு

 எருக்கம்பஞ்சு erukkambañju, பெ. (n.)

   எருக்கங்காய் முற்றி வெடிப்பதனால் அதனின் றெழும்பிப் பறக்கும் பஞ்சு; fine silky floss which surrounds the seeds of the madar plant. French cotton.

     [எருக்கம் + பஞ்க.]

எருக்கம்பால்

 எருக்கம்பால் erukkambāl, பெ. (n.)

   எருக்கின் பால்;   இது மருந்தாகப் பயன்படுகிறது; milk of magar plant.

     [எருக்கம் + பால்.]

எருக்கல்

எருக்கல் erukkal, தொ.பெ. (vbl.n.)

   1. கொல்லல்; killing.

   2. வெட்டல்; hewing or cutting. (சா.அக.);.

     [உல் → எல் → எருக்கு → எருக்கல்.]

எருக்களம்

 எருக்களம் erukkaḷam, பெ. (n.)

   எருவிடுமிடம்; site set apart for a dung hill. (செ.அக.);.

     [எரு + கனம்.]

எருக்கழித்துக்கொடு-த்தல்

எருக்கழித்துக்கொடு-த்தல் erukkaḻittukkoḍuttal,    4.செ.கு.வி. (v.i.)

   வைக்கோலில் சாணியிட்டுக்கொடுத்து மாட்டு விற்பனையை உறுதிப்படுத்துதல் (இ.வ.);; to confirm a contract for the sale of cattle, the vendor taking a small quantity of straw in hand, putting some cowdung on it and presenting it to the purchaser.

     [எரு + கழித்து + கொடு.]

எருக்கிலைமணி

 எருக்கிலைமணி erukkilaimaṇi, பெ. (n.)

   பரவமகளிர் அணியும் கழுத்தணி வகை; necklace worn by Parava women (செ.அக.);.

     [எருக்கு + இலை + மணி.]

எருக்கிலைமாலை

 எருக்கிலைமாலை erukkilaimālai, பெ. (n.)

எருக்கிலைமணி பார்க்க);;see erukkilaimani. (செ.அக.);.

எருக்கு

எருக்கு1 erukku, பெ. (n.)

   செடிவகை; yarcum, madar, m.sh.calotropis gigantean.

     “எருக்கின் முகிழ்நோக்கும்” (தணிகைப்பு.களவு.274);. (செல்வி.77.திச.178);.

   வ.அர்க்க;   ம. எரிக்கு;     [எரு → எருக்கு.]

 எருக்கு2 erukkudal,    5. செ.குன்றாவி (v.t.)

.

   1. கொல்லுதல்; kill (திவா.);.

   2. வருத்துதல்; to harass, trouble.

     “படிறெருக்கி” (கலித்..81);.

   3. வெட்டுதல்; to cut, hew.

     “பைம்புத லெருக்கி” (முல்லைப்.25);.

   4. தாக்குதல்; to beat.

     “வீதிதோ றெருக்கி…. முரசறைந்த காலை” (சீவக.609);,

   5. அடித்தல்; to strike as a bush.

     “பகுவாய் ஞமலியொடு பைம்புத லெருக்கி” (பெரும் பாண்.112);.

   6. அழித்தல்; to destroy.

     “நாடுகெட வெருக்கி” (பதிற்றுப்.33,7);.

   7. சுமத்துதல்; to lay a burden upon (வின்);.

   8. தாக்கி ஒலியெழச் செய்தல்; produce sound on a musical instrument of percussion.

     “இன்னிசை முரச மியமர மெருக்க” (பெருங்.நரலாண. 6,63);.

     [உல் → எல் → எரு → எருக்கு.]

 எருக்கு3 erukku, பெ. (n.)

   துன்பம்; harm.

     “தூதர்தம்மு யிர்க் கெருக்கிடை யெய்தினு மெண்ணற் பாலரோ” (புரூரவ.போர்புரி.6);

     [உல் → எல் → எரு → எருக்கு.]

எருக்கும்பி

 எருக்கும்பி erukkumbi, பெ. (n.)

   குப்பைமேடு; dung-hill, mixen. (சாஅக.);

     [எரு + கும்பி.]

எருக்குரல்

எருக்குரல் erukkural, பெ. (n.)

   தாக்குதலாலுண்டாகும் ஒலி; sound produced by beating, as a drum.

     “இன்கட் பம்பை யெருக்குர லுறீஇ” (பெருங்.மகத.26,36);.

     [உல் → எல் → எருக்கு + குரல்.]

எருக்கொடு-த்தல்

எருக்கொடு-த்தல் erukkoḍuttal,    4. செ.கு.வி. (v.i.)

. எருக் கழித்துக்கொடு பார்க்க;see erukkalittukkodu.(இ.வ.);

     [எரு + கொடு.]

எருச்சாட்டி

 எருச்சாட்டி eruccāṭṭi, பெ. (n.)

   எருவிட்ட நிலம்; land not manured during the present year, having been enriched previously (யாழ்.அக.);.

     [எரு + சாட்டி. சாடு → சாட்டு → சாட்டி (இடப்பட்டது);.]

எருச்சாம்பல்

 எருச்சாம்பல் eruccāmbal, பெ. (n.)

   எருமுட்டைச் சாம்பல்; ashes of cowdung fuel.

     [எரு + சாம்பல்.]

எருதடி-த்தல்

எருதடி-த்தல் erudaḍiddal,    4.செ.குன்றாவி (v.t.)

   1. உழுதல்; to plough.

   2. சூடடித்தல்; to thrash out grain by marking cattle tread over the stalks.

     [எருது + அடி.]

எருது

எருது1 erudu, பெ. (n.)

   1. காளைமாடு; bull ox, steer

     “நல்லெருது முயலும்” (பதிற்றுப்.27,13);.

   2. விடையோரை; Taurus, second sign of the zodiac (சங்.அக.);

   ம. எருது;   க., பட, எத்து;   கோத, எத்;   துட, எகத், குட, எத்தி;   து. எரு;   தெ. எத்து;   கொலா, எட்;   நா. கெட்;குரு. அட்டோ.

     [ஏர் (கலப்பை → ஏர்து → எருது.]

 எருது2 erudu, பெ. (n.)

   இறால்; prawn.

     [எரி → எரிது → எருது. எரி = செந்நிறம், எருது = செம்மீன், இறால்.]

எருதுகட்டி

 எருதுகட்டி erudugaṭṭi, பெ. (n.)

   ஏறுதழுவுதலில் (சல்லிக்கட்டில்); எருதை மடக்குவோன்; bull-fighting champion.

     [எருது + கட்டி. கட்டி + அடக்கி யாள்பவன்.]

எருதுகட்டு

 எருதுகட்டு erudugaṭṭu, பெ. (n.)

   ஏறுதழுவுதல் போட்டி; bull-fighting festival. (இ.வ.);.

     [எருது + கட்டி.]

எருதுப்பித்து

 எருதுப்பித்து eruduppiddu, பெ. (n.)

   எருதின் ஈரலிலுருவாகும் பித்தம்; bitter fluid secreted by the liver of the ox-ox-gall. (சா.அக.);.

     [எருது + பித்து.]

எருதுமறி-த்தல்

எருதுமறி-த்தல் erudumaṟiddal,    2. செகுன்றாவி. (v.t.)

   எருதுபொலிதல் (யாழ்ப்.);; to cover a cow, as a bull (யாழ்ப்.);.

     [எருது + மறி.]

எருதுரப்பல்

எருதுரப்பல் erudurappal, பெ. (n.)

   1. எருதை அதட்டியோட்டுதல்; driving cattles by making sound.

   2. எருதைப்போல் ஒலியிடல்; making sound like ox.

     [எருது + உரப்பன்.]

எருத்தடி

எருத்தடி eruttaḍi, பெ. (n.)

   ஈற்றயலடி;     “குட்ட மெருத்தடியுடைத்து மாகும்.” (தொல்,பொருள்.428);.

     [எருத்து + அடி. எரு → எருகுதல் = கழித்தல். நீங்குதல், போதல் எருகு → எருத்து = கழித்த, நீங்கிய. எருத்தடி =ஈறு நீங்கிய, இறுதியடி நீங்கிய ஈற்றயலடி.]

எருத்தன்

 எருத்தன் eruttaṉ, பெ. (n.)

   காளைபோல் வலியவன்; man who is as strong as a bull.

     “மலையைக் கையாலெருத்தனா யெடுத்தவாறே” (தேவா.);.

     [எருத்து → எருத்தன்.]

எருத்தம்

எருத்தம் eruttam, பெ. (n.)

   1. கழுத்து; neck.

     “எருத்த மீடங்கோட்டி” (சீவக.1658);.

   2. பிடர்; nape, back of the neck.

     “யானை பெருத்தம் பொலிய” (நாலடி.3);.

   3. தரவு (வீரசோ.யாப்.11,உரை.); பார்க்க;see taravu, member of kali verse.

   4. ஈற்றயல் (காரிகை.செய்.10, உரை.);; penultimate.

   ம. எருத்தம்;தெ. அற்று.

     [ஏ → ஏர் → எருத்து → எருத்தம். ஏர் = உயர்தல், எருத்து = உயர்ந்து நிற்கும் பகுதி, கழுத்து, பிடரி.]

எருத்து

எருத்து eruttu, பெ. (n.)

   கழுத்து; neck.

     “எருத்துவலிய… இரலை” (கலித்.5);.

   2. தரவு (தொல்.பொ.444. உரை.); பார்க்க;see taravu, member of kali verse.

   3. ஈற்றயல் (தொல்.பொருள்.428.);; penultimate.

     “எருத்தடி நைந்தும்”

   ம. எருத்தம்;தெ. அர்கு.

     [ஏ → ஏர் → எருத்து.]

எருத்துத்திமில்

 எருத்துத்திமில் eruttuttimil, பெ. (n.)

   மாட்டின் முசுப்பு, மேற்புறம், மாட்டின் முன்னங்கால்களுக்கு மேல் இருக்கும் உருண்டை வடிவான கொண்டை; hump of a bull.

எருத்துப்புரை

 எருத்துப்புரை eruttuppurai, பெ. (n.)

   மாட்டுக் கொட்டில். (Tinn);; ox-stall.

ம. எருத்தில்.

     [எருது + புரை.]

எருத்துப்பூட்டு

 எருத்துப்பூட்டு eruttuppūṭṭu, பெ. (n.)

   நல்லநாளில் முதலில் சர்பூட்டி உழுதல் (யாழ்ப்);; first polughing on an auspicious day.

     [எருது + பூட்டு.]

எருத்துமாடு

எருத்துமாடு eruttumāṭu, பெ. (n.)

   1. எருது; bull, ox

   2. பொதிமாடு; pack-bullock. (Loc);

     [எருது → எருத்து + மாடு.]

எருந்தி

எருந்தி erundi, பெ. (n.)

   இப்பி (மூ.அ.);; a kind of small shell.

   2. சங்கு; conch.

   3. ஒரு நறுமணச்செடி; fragrant plant. Pavonia.

     [இரி → இந்தி → எரிந்தி → எருத்தி.]

எருந்து

எருந்து1 erundu, பெ. (n.)

   உரல்; mortar. (செஅக.);.

     [இல் → எல் → எருந்து.]

 எருந்து2 erundu, பெ. (n.)

   கிளிஞ்சில்; bivalve shelt fish, as mussels, oysters.

     “முத்தம்….. எருந்தின் வயிற்ற கத்தடக்கி” (சிறுபாண்.58);.

ம. எருந்து.

     [இரி → இரிந்து → இது → எருந்து.]

எருப்புழு

 எருப்புழு eruppuḻu, பெ. (n.)

   சாணிப் புழு; muck-worm. (சா.அக.);

     [எரு + புழு]

எருப்போடு-தல்

எருப்போடு-தல் eruppōṭudal,    20.செ.கு.வி. (v.i.)

   1. உரமிடுதல்; to manure land.

   2. மாடு சாணமிடுதல்; to pass excrement.

     [எரு + போடு.]

எருமணம்

எருமணம்1 erumaṇam, பெ. (n.)

   செங்குவளை; red lndian water-lily, Nymphaea lotus rubra. (பிங்.);.

     [எருமனி + எருமணம்.]

 எருமணம்2 erumaṇam, பெ. (n.)

   சாணிநாற்றம்; smell of cow-dung. (சா.அக.);.

     [எரு + மணம்.]

எருமணி

 எருமணி erumaṇi, பெ. (n.)

   செங்குவளை; that which emits the smell of cow dung i.e, red Indian water lily. (கா.அக.);

     [எரு + மணி. மணி = மணப்பது, மனம் விவது.]

எருமன்றம்

எருமன்றம் erumaṉṟam, பெ. (n.)

   மாடுகள் கூடுமிடம்; open gathering place for cattle.

     “ஆயர்பாடியிலெரு மன்றத்து” (சிலப்.17.உரைப்பாட்டு);.

     [எரு + மன்றம்.]

எருமாடு

 எருமாடு erumāṭu, பெ. (n.)

   பிடரி, கழுத்தின் பின் பகுதி; back of the neck. (சேரநா.);

ம. எருமாடு.

     [எரு + மாடு. எரு = எருத்து (கழுத்து); மாடு = பக்கம்.]

எருமுட்டை

எருமுட்டை erumuṭṭai, பெ. (n.)

   வறட்டி; dried cow-dung-cake used as fuel.

     “எருமுட்டை பிட்கி னுதிர்ந்திடும்” (பட்டினத்திருப்பா.பொது.51);.

     [எரு + முட்டை. முட்டு → முட்டை = உருண்டையானது.]

எருமை

எருமை erumai, பெ. (n.)

   1. பாலதரும் விலங்கினங்க

   ளுள் ஒன்று; buffalo.

     “குவிமுலை படர்மருப் பெருமை” (சீவக.2102);.

   2. எருமை மறம் பார்க்க;see erumal maram theme of unyielding resistance.

     “ஒருவனொருவனை யுடைபடை புக்குக் கூழைதாங்கிய வெருமையும்” (தொல்.பொருள்.72);.

   3. எமன்; Yama, who rides on a buffao.

     “எருமையிருந்தோட்டி யெள்ளீயுங் காளை” (பரிபா.8,86);.

   ம. எரும;   தெ. எனுமு;   க., பட, எம்மெ;   து. எர்மெ; Skt. Heramba.

     [இர் → இரு → இருமை → எருமை. இரு = கருமை.]

எருமைக் கொற்றான்

 எருமைக் கொற்றான் erumaikkoṟṟāṉ, பெ. (n.)

   கொடிவகை; parasitic leafless plant, S.cl., cassytha filiformis.

ம. எருமவள்ளி.

     [எருமை + கொற்றான்.]

எருமைக்கடா

 எருமைக்கடா erumaikkaṭā, பெ. (n.)

   ஆணெருமை; he-buffalo.

     [எருமை + கடா.]

எருமைக்கற்றாழை

 எருமைக்கற்றாழை erumaikkaṟṟāḻai, பெ. (n.)

மலைக் கற்றாழை பார்க்க;see malai-k-karralai.

     [எருமை + கற்றாழை.]

எருமைக்காஞ்சொறி

 எருமைக்காஞ்சொறி erumaikkāñjoṟi, பெ. (n.)

பெருங்காஞ்சொறி பார்க்க;see perunkanjori climbing nettle-mercury. (மலை.);.

     [எருமை + காஞ்சொறி.]

எருமைக்காளை

 எருமைக்காளை erumaikkāḷai, பெ. (n.)

   நெல்வகை (A);; a kind of paddy.

     [எருமை + காளை.]

எருமைக்குழவி

எருமைக்குழவி erumaikkuḻvi, பெ. (n.)

   எருமைக்கன்று; calf of buffalo. (தொல்.பொருள்.575);.

     [எருமை + குழவி.]

எருமைக்கோரை

 எருமைக்கோரை erumaikārai, பெ. (n.)

   எருமை தின்னுமோர் வகைப் பெருங்கோரை; targe species of reed eaten by buffaloes – Saccherum spontaneum. (சா.அக.);.

     [எருமை + கோரை.]

எருமைச்சுறா

 எருமைச்சுறா erumaiccuṟā, பெ. (n.)

   பெரிய கருப்புச் சுறாமீன்; black shark – Carcharias menisorrah (சா.அக.);.

எருமைநாக்கு

 எருமைநாக்கு erumainākku, பெ. (n.)

   ஒருவகைப்புல்; a kind of grass.

     [எருமை+நாக்கு]

எருமைப்புல்

 எருமைப்புல் erumaippul, பெ. (n.)

   ஒருவகைப் புல்; a kind of grass growing in rice fields. (சேரநா.);.

ம. எருமப்புல்.

     [எருமை + புல்.]

எருமைப்பொன்

எருமைப்பொன் erumaippoṉ, பெ. (n.)

   வரிவகை (S.I.I.vi.155);; tax. (செ.அக.);.

     [எருமை + பொன்.]

எருமைப்போத்து

எருமைப்போத்து erumaippōttu, பெ. (n.)

எருமைக்கடா. he-buffalo. (தொல்.பொருள்.596);. (செ.அக.);.

     [எருமை + போத்து.]

எருமைமறம்

எருமைமறம் erumaimaṟam, பெ. (n.)

   மறவன் ஒருவன் தன் படை முதுகிடவும் பகைவர் படையைத் தான் ஒருவனே அஞ்சாது எதிர்த்து நிற்கும் புறத்துறை (பு.வெ.7,13);; theme of a hero’s taking a firm and bold stand in the battlefield against very heavy odds, like an unyielding buffalo, even after his army had retreated and fled.

     [எருமை + மறம் – எருமைமறம். அஞ்சாது தனித்து நின்று தாக்கும் எருமைபோன்ற நெஞ்சத் துணிவு எருமை மறம் எனப்பட்டது.]

எருமைமுல்லை

 எருமைமுல்லை erumaimullai, பெ. (n.)

   முல்லைக் கொடிவகை; white-bracted jasmine, m cl., jasminum rottlerianum. (செ.அக.);.

     [எருமை + முல்லை.]

எருமைமுல்லைத்தீவு

 எருமைமுல்லைத்தீவு erumaimullaittīvu, பெ. (n.)

   யாழ்ப்பாணத்தின் பழைய பெயர் (வின்.);; ancient name of Jaffna, from the flower erumal-mullai found there.

     [எருமை + முல்லை + தீவு.]

எருமைமுள்

 எருமைமுள் erumaimuḷ, பெ. (n.)

   வெள்ளை முள்வேல்; buffalo thorn. (சா.அக.);.

     [எருமை + முள்.]

எருமையின்றிசை

எருமையின்றிசை erumaiyiṉṟisai, பெ. (n.)

   தெற்குத் திசை; south, as being Yama’s quarter.

     “ஆகநனைந்தி டாவகை யெருமையின்றிசையினீள்வடிவுற்று.” (சேதுபு.சங்கதீ.10);.

     [எருமை + இன் + திசை. ‘இன்’ ஆறாம் வேற்றுமைச் சொல்லுருபு.]

எருமைவெளியனார்

 எருமைவெளியனார் erumaiveḷiyaṉār, பெ. (n.)

   குதிரைமறம் பாடிய கடைக்கழகப் புலவர்; poet of Sangam age.

     [எருமைவெளி + அன் – எருமைவெளியன். எருமைவெளி என்னும் ஊரினராகலாம். மந்தைவெளி என்றும் ஊர்ப்பெயர் உள்ளதை ஒப்பு நோக்குக.]

எருவடை-த்தல்

எருவடை-த்தல் eruvaḍaittal,    4.செ.கு.வி. (v.i.)

   எருவுக்காக ஆடுமாடுகளை அடையச் செய்தல்; to fold sheep, herd cattle for manure.

     [எரு + அடை.]

எருவட்டி

 எருவட்டி eruvaṭṭi, பெ. (n.)

எருவறட்டி பார்க்க;see eruvarattai.

எருவண்டு

 எருவண்டு eruvaṇṭu, பெ. (n.)

   வண்டுவகை; a kind of beetle (pond.);.

     [எரு + வண்டு.]

எருவறட்டி

 எருவறட்டி eruvaṟaṭṭi, பெ. (n.)

எருமுட்டை cake of cowdung, used as fuel. (வின்.);.

     [எரு + வறட்டி – எருவறட்டி. வறள் → வறட்டி.]

எருவாரம்

 எருவாரம் eruvāram, பெ. (n.)

   எருவுரமிட்டதற்குக் கொடுக்குந் தவசப்பங்கு; share of the produce assigned to those who provide manure for the land.

     [எரு + வாரம்.]

எருவு

 எருவு eruvu, பெ. (n.)

எரு பார்க்க;see eru.

   ம. எருவ;   தெ. எருவு;க. எரும்பு.

     [எரு → எருவு.]

எருவை

எருவை eruvai, பெ. (n.)

   1. தலை வெளுத்து உடல் சிவந்திருக்கும் பருந்து; a kind of kite, whose head is white and body brown.

     “விசும்பா டெருவை பசுந்தடி தடுப்ப” (புறநா.64,4);.

   2. கழுகு; eagle

     “எருவை குருதி பிணங்கவருந் தோற்றம்” (களவழி.20);.

   3. குருதி (திவா.);; blood

   4. பஞ்சாய்க் கோரை; species of cyperus.

     “எருவை செருவிளை மணிப்பூங் கருவிளை” (குறிஞ்சிப்.63);.

   5. கோரைக்கிழங்கு; straight sedge tuber.

     “மட்பனை யெருவை தொட்டி” (தைலவ.தைல.94);.

   6. பொருக்கச்சி; European bamboo reed. (குறிஞ்சிப்.68,உரை.);.

   7. செம்பு; copper.

     “எருவை யுருக்கினாலன்ன குருதி” (கம்பராகும்பக.248);.

ம. எருவ.

     [உல் → எல் → எரு → எருவை. எருவை = சிவந்திருப்பது.]

எறட்டு-தல்

எறட்டு-தல் eṟaṭṭudal,    5.செ.குன்றாவி, (v.t.)

   வீசியிறைத் தல்; to radiate, cast forth.

     “சந்திரனுடைய கிரணங்களா னவை நெருப்பை யெறட்டிச்சு”‘ (திவ்.பெரியதி. 8.5.3.வ்யா);.

     [இறை → இறட்டு → எறட்டு]

எறவன்

 எறவன் eṟavaṉ, பெ. (n.)

   ஒருவகைநெல்; a kind of paddy. (சேரநா.);.

ம. எறவன்.

     [எறவன் = எரங்காட்டில் விளையும் நெல்.]

எறி

எறி1 eṟidal,    2.செகுன்றாவி. (v.t.)

   வீசியெறிதல்; throw, cast, fling, discharge, huri,

     “கல்லெறிந் தன்ன” (நாலடி.66);.

   2. வெட்டுதல்; to hack, cut into pieces.

     “எறிந்து களம்படுத்த வேந்துவேள்’ (புறநா.19,12);.

   3. அறுத்தல்; to chop, as mutton,

     “எறிக திற்றி” (பதிற்றுப்.18.2);.

   4. முறித்தல்; to shiver into pieces, smash.

     “கதவெறியாச் சிவந்துராஅய்” (புறநா.4.10);.

   5. பறித் தல்; topick as owers

     “எறியார் பூங்கொன்றையினோ டும்” (தேவா.1895);,

   6. அழித்தல்; to destroy.

     “குறும்பெறிந்தன்று” (புவெ.18);, 7 அடித்தல்;

 to beat, as a drum,

     “சிறுவரை நின்றேயெறிய பறையினை’

     ” (நாலடி.,24);. 8, அறைதல்;

 to drive, as a nail.

     “பொன்னெறிந்த நலங்கிளர் பலகையொடு” (புறநா.15);.

   9. கொடுக்காற் கொட்டுதல்; to sting, as a scorpion

     “விடத்தே ளெறிந்தாலேபோல” (தில். நாய்ச்.3.6);.

   10. ஒதுக்கிவிடுதல்; to reject, brush aside, as advice

   11. உண்ணாமல் நீக்கிவிடுதல்; to leave uneaten, said of part of food ஏன் சோற்றை யெறிகிறாய்?

   12. ஒட்டுதல்; to drive off, scare away, as birds

 from corn.

     “கிளியைச் செப்பேந்திள முலையா ளெறிச் பர்ப்பதம்” (தேவா.1148.7);.

   13. வெல்லுதல்; to throw into the shade, outvie.

     “மின்னெறிசெஞ்சடைக் கூத்தப்பிரான் ரான் (திருக்கோ.49);.

   14. கொள்ளையிடுதல்; to rob. plunder, sack, pillage,

   15. பொழிதல்; to shower, rain.

     “நீர் கல்குறைபட வெறிந்து” (பரிபா.20,1);.

   16. செறித்தல்; to fasten as a ring on an elephant’s tusk.

     “யானைவான்மருப் பெறிந்த வெண்கடை” (புறநா. 39,2);.

   17. நுகர்வித்தல்; to cause to experience.

     “எச்சத்துளாயினு மஃதெறியாது விடாதேகாண்” (கலித்.149);,

   18. சீறுதல்; displease irritate, insult எறிசொல்லாகச் சொல்லுகிறான் (வின்.);.

   19. தெறித்தல்; to finger the string of a musical instrument as a Yal.

     “குறுநரம் பெறிவுற்றெழுவு… யாழ்” (கம்பரா.சித் திர.28);.

     [எறு → எறி.]

 எறி2 eṟidal,    4.செ.கு.வி. (v.i.)

   1. காற்று வீசுதல்; to blow, as the wind.

     “ஊதிய யெறிய லொசிபூங் கொடியொப்பார்” (கம்பரா.நகர்நீ.98);.

   2. அலையெறிதல்; to surge, as waves of the sea

     “எறியு நேமிகு ழுலகத்து” (கந்தபு:அவைபுகு:114);.

   3. இரையைப் பாய்ந்தெடுத்தல்; to pounce or dart upon, as a bird onis prey.

     “எறிபருந்துயவும்” (அகநா.81);.

   4. உதைத்தல்; to kick கழுதை எறிகிறது.

   ம. எறி;   க, இரி;   கோத எய்ரல்;   துட. ஈர்க்;   தெ. ஏடு;கட. எய்: கோண். ஏரிகதானா.

     [எறு → எறி.]

 எறி3 eṟidal,    2.செகுன்றாவி, (v.t.)

   1, இடித்துரைத்தல்; to rebuke,

     “தெல்வர்போலத் தீதறவெறிந்தும்” (சீவக. 1895);.

   2. தடவுதல்; to stroke, pat

     “தாய்தன் கையின்…. கையின். குறங்கின் எறிய … துஞ்சும்….. குழவி போல’ (சீவக.930);.

     [எல் → எறு → எறி.]

 எறி4 eṟi, பெ. (n.)

   1. வீச்சு; throw, fing ஓர் எறியில் விழச்செய்தான்,

   2. உதை; kick,

   3. அடிக்கை; blowing as the wind

     “சூறை மாருதத் தெறியது வளியின்” (திருவாச.3.11);.

   4. குறிப்பாகச் சொல்லுகை; hint allusion, insinuation, innuendo.

ஓர் எறி எறிந்து வைக்க வேண்டும். (யாழ்ப்.);.

ம. எறி.

     [எறு → எறி.]

 எறி5 eṟittal,    4.செ.கு.வி. (v.i.)

   1. ஒளி வீசுதல்; to shine, glitter.

     “காட்டுக்கெறித்த நிலா” (தமிழ்நா.237);.

   2. தைத்தல்; to nail, fasten with nails, pin.

     “மாண்டவெறித்த படைபோல்” (கலித்.94);.

   3. உறைத்தல்;   10 irritate, suffocate, as smoke; to affect

     “வாடுக… நின் கண்ணி. நாடுகடு கமழ்புகை யெறித்த லானே” (புறநா.6);.

   4. பரத்தல்: lo spread

     “உணர்வுசென் றெறித்தலானும்’ (சீவக.380);.

ம. எறிக்குக.

     [எல் → எறு → எறி. எல் = ஒளி, கதிரவன். இல்-எல்

   குத்துதல்;தைத்தல், செறித்தல்.]

எறிகண்

 எறிகண் eṟigaṇ, பெ. (n.)

   ஒரப்பார்லை; side-glance, flirting glance.

ம. எறிகண்ணு.

     [எறி + கண்.]

எறிகண்ணன்

எறிகண்ணன் eṟigaṇṇaṉ, பெ. (n.)

   1. சினப்பவன்; one who frowns, an angry man

   2. உற்ற நோக்குபவன்; one who ogles;

ம, எறிகண்னன்.

     [எறி + கண்ணன்.]

எறிகாலி

 எறிகாலி eṟikāli, பெ. (n.)

   உதைகால்மாடு, பால்கறக்கும் போது உதைக்கும் மாடு; cow that kicks

     [உதை + காலி – கால் + இ – காலி = காலுடையது.]

எறிகால்

 எறிகால் eṟikāl, பெ. (n.)

   மோதுங் காற்று; violent wind

     [எறு → எறி + கால்.]

எறிச்சலூர்மலாடனார்

 எறிச்சலூர்மலாடனார் eṟiccalūrmalāḍaṉār, பெ. (n.)

   கடைக்கழகக்காலப் புலவர்களு ளொருவர்; bard of Sangam age.

     [இறைச்சல் + ஊர் – இறைச்சலூர் → எறிச்சலூர் = மழைச்சாரல் மிகுந்த ஊர் மலை + நாடன் → ஆர். மலை நாடனார் மலாடனார். மலைநாடு → மலாடு (மரு.உ);.]

எறிபடு-தல்

எறிபடு-தல் eṟibaḍudal,    20.செ.கு.வி. (v.i) ஒதுக்கப்படுதல்; to be rejected, cast off. எறிபட்ட பொருள்.

     [எறி படு (து.வி.);.]

எறிபடை

எறிபடை eṟibaḍai, பெ. (n.)

   வீசும் கொலைக்கருவி, கைவிடுபடை; missile,

     “ஆன்றமை யெறிபடை யழுவத்து” (கம்பரா.கரன்வதை.52);.

     [எறி + படை. படை = படைக்கலம், கொலைக்கருவி.]

எறிபத்தநாயனார்

எறிபத்தநாயனார் eṟibattanāyaṉār, பெ. (n.)

அறுபத்து மூன்று நாயன்மாருள் ஒருவர் (பெரியபு);.

 canonized Salva Saint, one of 63.

     [எறி + பத்தன் + நாயனார்.]

எறிபாவாடை

எறிபாவாடை eṟipāvāṭai, பெ. (n.)

தெய்வங்களுக்கு முன்னும் பெரியோர் முன்னும் வீசும் பாவாடை விருது (கோயிவோ.88);:

 cloth waved before an idol or a great person, as an act of reverence.

     [எறி + பாவாடை.பா + ஆடை – பாவாடை = விரித்த ஆடை.]

எறிப்பு

எறிப்பு eṟippu, பெ. (n.)

   ஒளிர்வு; lustre, brightness, glitter

     “எறிப்பொழிந்தாங் கருக்கன் சுருக்கி” (திருக்கோ.218);.

   2. கடுவெயில் (வின்.);; hot sun.

ம. எறிப்பு

     [எல் → எரி → எறி → எறிப்பு.]

எறிமணி

 எறிமணி eṟimaṇi, பெ. (n.)

   கொட்டி ஒலியெழுப்பும் வட்டத்தகட்டு வெண்கல இசைக்கருவி(பிங்);; gong for striking the hours, also used intempesindaily worship

     [எறி + மணி.]

எறியாலம்

 எறியாலம் eṟiyālam, பெ. (n.)

எண்ணெய் எடுக்க உதவும் மீன் வகைகளுளொன்று

 a kind of fish from which oil is extracted. (சா.அக.);.

எறியீட்டி

 எறியீட்டி eṟiyīṭṭi, பெ. (n.)

   முனையில் கூர்மையான இரும்பாணியையுடைய நீளக்கம்பு; javelin lance.

மறுவ, குந்தம்

     [எறி + சட்டி – எறியீட்டி.]

எறியுப்பு

 எறியுப்பு eṟiyuppu, பெ. (n.)

கல்லுப்பு (மூ.அ.); rock-salt.

     [எறி+உப்பு -எறியுப்பு = வெட்டியெடுக்கும் உப்பு.]

எறிவல்லயம்

 எறிவல்லயம் eṟivallayam, பெ. (n.)

   சுற்றிவீசி எறியும் கற்காலக்கருவி, வளைதடி, (வின்);; boomarang, that is hurled opp to குத்துவல்லயம்.

     [எறிவல்லயம் என்பது பழந்தமிழர் பயன்படுத்திய ஆத்திரே லிய பூமராங் வளைதடி போன்றது. எறி + வல்லயம் – எறி. வல்லயம் வீசியெறிந்து கொல்லும் படைக்கலம் கைவிடுபடை எளப்படும். படைக் கலத்தைக் கையில் இறுகப் பற்றிய வாறே பகையைக் குத்திக் கொல்லும் படைக்கலம் குத்துவல்லயம் (கைவிடாப்படை); எனப்படும்.]

எறிவளையம்

 எறிவளையம் eṟivaḷaiyam, பெ. (n.)

   சக்கரப்படை (வின்.);; discus, used as a missile.

ம. எறிவளயம்.

     [எறி + வளையம்-எறிவளையம், வடமொழியாளர் இதனைச் சக்கராயுதம் என்பர்.]

எறிவாள்

எறிவாள் eṟivāḷ, பெ. (n.)

எறிந்து போரிட ஏந்தாக இருக்கும் கருவி:

 a kind of missile (சேரநா.);.

ம. எறிவாள்.

     [எறி + வாள்.]

எறிவாள்

எறும்பி அபmb. பெ. n எறும்பு, n எறும்பி யளையற் குறும்பல் சுனைய’ (குறுந்-12);.

ம. எறும்பு உறும்பு. க. இறுபு. எறுப.

எறும்

எறும் eṟum, பெ. (n.)

   1. வலிமை; strength, might

     “சிலைநவி லெறுழ்த்தோளோச்சி” (தொல்,சொல்.388, உரை.);.

   2. மரத்தண்டு.(தண்டாயுதம்); (பிங்);; club

   3. தூண்(அக.நி.);; pillar post

   4. செந்நிறப்பூவுடைய குறிஞ்சிநிலத்து மரவகை; hill tree with red flowers.

     “காலெறுழொள்வி” (ஐங்குறு.308);.

ம. எறுள்.

     [உறு → எறு → எறுழ். எறுழ் = வலிமை, திண்மை.]

எறும்பி

எறும்பி2 eṟumbi, பெ. (n.)

யானை (திவா.);. elephant

     [இறம்பு → எறும்பு → எறும்பி. இறும்பு = வலிமை.]

எறும்பு

எறும்பு eṟumbu, பெ. (n.)

நான்கு சிறகுகளை யுடைய புழு,பூச்சியினப் பிரிவில் ஓயாது உழைப்பில் இருக்கும் ஓர் சிற்றுயிரி: ant emmet

     “எறும்புமூசா விறும்பூது மரபின்… பலி” (பதிற்றுப்.30:38);.

   ம. எறும்பு;   க. இறும்பெ இருவெ: குட உருபீ;பட இறுப்பு

     [எல் → எறு தாக்குதல், கொட்டுதல், கடித்தல்) எறு → எறும்பு.]

எறும்பு விழுங்கி

 எறும்பு விழுங்கி eṟumbuviḻuṅgi, பெ. (n.)

எறும்பை விழுங்கும் ஒருயிரி: an eater (சா.அக.);

ம. எறும்பு தீனி,

     [எறும்பு + விழுங்கி,]

எறும்புப் புற்று

 எறும்புப் புற்று eṟumbuppuṟṟu, பெ. (n.)

   எறும்பினிருப்பிடம்; habitation of ants (சா.அக.);.

     [எறும்பு + புற்று.]

எறுழம்

எறுழம் eṟuḻm, பெ. (n.)

எறுழ் பார்க்க;see erul.

     “எரிபுரை யெறுழம்” (குறிஞ்சிப்,66);.

     [எறுழ் → எறுழம். எறுழம் = எறுழ் மரம்.]

எறுழி

எறுழி eṟuḻi, பெ. (n.)

   பன்றி; pig

     “காதெயிற் றெறுழிவேந் தன்” (திருவிளை.பன்றி முலை-26);.

     [உறு → எறு → எறுழ் → எறுழி (தாக்கிக் கொல்லும் இயல்பு டைய பன்றி);.]

எறுழ்வலி

எறுழ்வலி eṟuḻvali, பெ. (n.)

   . In 1 மிகுந்த வலிமை; great strength:

     “இரும்பினாற் பின்னியன்ன வெறுழ்வலி முழவுத் தோளார்” (சீவக.785);.

   2. மிக்க வலியுடை யோன்; mighly hero,

     “எறுழ்வலி யுரைத்த மாற்றம்” (சீவக.1723);.

     [உறு. → எறு → எறுழ் + வலி – எறுழ்வலி = எறுழ்மரத்தை போன்ற வலிமை.]

எறே

 எறே eṟē, இடை (part) இறே பார்க்க;see ire

     [இறே → எறே.]

எறைக்கான்

 எறைக்கான் eṟaikkāṉ, பெ. (n.)

   எலி வளையில் உள்ள கள்ள வழி; secret hole in rafter.

     [இறை-இறைக்கன்]

 எறைக்கான் eṟaikkāṉ, பெ. (n.)

   துன்பம் நேரும் பொழுது தப்பி ஓட ஏதுவாக இருக்கும் எலிவளையிலுள்ள கள்ளவழி; escape place in a rat-hole.

     [இறை-எறை கால்-எறைக்கால்_ எறைக்கான் (கொ.வ.);

இறை = தங்குதற்கான பொத்து.]

எற்று

எற்று2 eṟṟudal,    5.செ.குன்றாவி, (v.t.)

   எடுத்தல்; to lift

 take,

     “எற்றி வயவ ரெறிய துதல்பிளந்து” (களவழி.23);.

     [எறு → எற்று.]

 எற்று3 eṟṟudal,    10.செ.கு.வி. (v.i.)

   1. நீங்குதல்; to

 Cease.

     “இடைக்கொட்கி னெற்றா விழுமந்தரும்”

     (குறள்.663);.

   2. இரங்குதல்; to feel compassion

     “எற்றிய காதலினா லிசைத்தாள்.” (தஞ்சைவா.224);.

ம. எற்றுக.

     [இல் → எல் → எறு → எற்று.]

 எற்று4 eṟṟu, பெ. (n.)

உதைத்தல், அடித்தல், தள்ளுதல்

 kicking hitting, pushing, attacking.

பந்தைக் காலால் ஓர் ஏற்று எற்றினான். (உ.வ.);.

   ம.எற்று;   க. ஏடு, எட்டு;   கோத. எய்ரல்;   துட. எர்ய: து எட்டுனி;தெ. ஏடு.

     [எறு + எற்று.]

 எற்று5 eṟṟu,    வி.பெ. (Interpron) எத்தன்மைத்து; o what sort (is it)? tenseless finite verb of impers, sing int – இடை (part) வியப்பு, இரக்கக் குறிப்பு;

 exclamation of pity or wonder.

     [எல் + து – எற்று.]

எற்றுண்(ணு)-தல்

எற்றுண்(ணு)-தல் eṟṟuṇṇudal,    12.செ.கு.வி. (v.i.)

   ஏறியப்படுதல்; to be tossed about

இருவினையெனுந்திரையி னெற்றுண்டு. (தாயு.தேசோ.2);.

     [எல் + து -எற்று + உண்.]

எற்றுநூல்

எற்றுநூல் eṟṟunūl, பெ. (n.)

மரமறுக்கப் போடும் நூல் carpenter’s line for marking a board

     “உயிர்போழ்தர் கெற்றுநூல்போன் றிருந்தது.” (நைடத.சந்திரோ.33);.

ம. எற்று நூல்.

     [எற்று + நூல – எற்றுநூல் (தெறிக்கும்நூல்); எற்றுதல் = கா அல்லது மை தடவிய நூலைக் கோடு விழுவதற்காக மரத்தில் மேல் விசைத்துத் தெறித்தல்.]

எற்றுப்பணிக்கன்

 எற்றுப்பணிக்கன் eṟṟuppaṇikkaṉ, பெ. (n.)

சலவைத் தொழிலாளி washerman (சேரநா.);.

ம. எற்றுபணிக்கன்

     [எற்று + பணிக்கன் – எற்றுப்பணிக்கன் எற்று = அடித்தல் துவைத்தல், பணிக்கன் = பணியாளன்.)

எற்றே

எற்றே eṟṟē, இடை (int.)

எற்று3 பார்க்க;see erru

     “கற்றவெலாம் எற்றே இவர்க்கு நாமென்று” (நீதிநெறிவி.);.

     [என் + து- எற்று + ஏ-எற்றே. ஏகாரம் வினாவிடைச்சொல்.]

எற்றை

 எற்றை eṟṟai,    வி.பெ. (interpron.) என்று; when (யாழ்.அக.).

     [என்று + ஐ = என்றை → எற்றை.]

எற்றைக்கும்

எற்றைக்கும் eṟṟaikkum,    கு.வி.எ. (adv) எப்பொழுதும், என்றென்றைக்கும்; for all time, for ever

     “எற்றைக்கு மேழேழ் பிறவிக்கும்” (திவ்.திருப்பா.29);.

     [என்று → என்றைக்கு + உம் – என்றைக்கும் → எற்றைக்கும்.]

எற்றோ

எற்றோ eṟṟō, இடை (int) எற்று3 பார்க்க;see erru3

     “பெருநகையா பெற்றாளென்(று); எற்றோமற் றெற்றோ மற் றெற்று” (தனிப்பா.1,109,49);.

     [எற்று + ஒ – எற்றோ.]

எற்றோற்றம்

 எற்றோற்றம் eṟṟōṟṟam, பெ. (n.)

   எழுஞாயிறு; Sunrise (சா.அக.);.

     [எல் + தோற்றம் – எற்றோற்றம் எல் = ஞாயிறு, கதிரவன்.]

எல

எல ela, பெ. (n.)

அன்பொடு விளிக்குஞ்சொல்,

   கெழுதகைப் பொதுச் சொல்ர; word of endearment.

     [எல் + எல.]

     ‘எல’ என்பதையும் இதன் திரியான சில சொற்களையும் பற்றிக் கிற்றல் கன்னட அகரமுதலி பின்வருமாறு கூறகின்றது.

க. எல (ela); – உடன்படுதலைக் குறிக்கும் ஓர் இடைச்சொல்.

க. எலகெ (elage); – பெண்டிரை விளிக்கும் சொல்.

க. எலவோ – வலிமிக்க வியப்பிடைச் சொல்

க. எலா – நண்பரை அல்லது நெருங்கிப் பழகியவரை விளிக்குஞ்சொல்.

க. எலெ – எலே – எலா.

க. எலெகெ (lege); – பழகிய பெண்டிரை விளிக்குஞ்சொல்

க. எலோ, எலோ – எலா (செல்வி78.சூன்.497);.

எலே என்பது ஆணையும் எலா என்பது பெண்ணையு குறிக்க வழங்கிய கெழுதகைப் பொதுச்சொல்.

எலவோ

 எலவோ elavō, இடை (int.)

   மகிழ்ச்சி, துயரம், வியப் ஆகியவற்றைக் குறிக்கும் கெழுதகைப் பொது சொல்; word of endearment expressing happiness, grie and surprise.

     [எல்லா → எல → எலவோ.]

எல்லா, எலா, எலவோ என்னும் கெழுதகைப் பொது சொற்கள் தமிழில் தொன்முதுகால முதலே வழக்கூன்றியவை இருக்குவேத பாடலொன்றில் திராவிடர்களின் ஓலைச் சுவடி ளுக்குப் பகைவர் தீயிட்டபோது எலவோ எலவோ என அவர்கள் வருந்தி அழுததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எலா

எலா elā, இடை (int.)

   நண்பினரை விளிக்கும் ஒரு விளிப்பெயர்; here, you! used in addressing a person In a familiar and friendly manner. (தொல்.பொ. 220 உரை.);.

க. எலா.

     [எல்லா → எலா.]

எலி

எலி1 eli, பெ. (n.)

   1. தவசம், கொட்டை, வே முதலியவற்றைக் கடிக்கும் தன்மையுள்ள சிறிய உடலமைப்புள்ள விலங்கு; rat, mus ratus,

     “எலிப் பகை நாக முயிர்ப்பக் கெடும்” (குறள்,763);.

   2. பெருச் சாளி; bandicoot.

     “வாரணத்தை…..யெலியிழுத்துட் போகின்ற தென்.” (தனிப்பா.1,32,61);.

   ம. எலி;   க. எலி, இலி;   குட, எலி;   து. எலி, இலி;   தெ. எலுக, எலிக;   எரு. எணி;   கோத, எய்ச்;   துட. இல்ல;   கொலா, எல்க;   நா, எல்கு;   பர், எல்;   கட, சிலேல்;   கூ. ஒட்ரி;   குவி, ஒல்லலி;   பிரா, கல்;   கோண், அல்லிக, எல்லி;பட, இலி.

     [இல் → இலி → எலி. இல் = குத்துதல், குடைதல்.]

எலி மருந்து

 எலி மருந்து elimarundu, பெ. (n.)

   எலியைக் கொல்வதற்கிடு மருந்து; any medicine intended for killing rats.(சா.அக.);.

     [எலி + மருந்து.]

எலிக்காதிலை

 எலிக்காதிலை elikkātilai, பெ. (n.)

எலிக்காது பார்க்க;see elikkadu. (சா.அக.);.

     [எலி + காது + இலை.]

எலிக்காது

 எலிக்காது elikkātu, பெ. (n.)

   எலிச்செவி போன்று வளரும் கிளைகளையுடைய ஓர் பயிர் (M.N);; plant whose leaves resemble rats, ears-lpomaea reniformis.

     [எலி + காது.]

எலிச்செவி

 எலிச்செவி eliccevi, பெ. (n.)

எலிச்செவி போன்ற

   இலைகள் உள்ள ஒரு மருந்துச் செட; plant Evolvulus emarginatus or Salvinia Cucullala.

   ம. எலிச்செவி;   க. இலிகிவி;து. எலிகெம்பி, தெ. எலிச்செவி, எலுகசெவி.

     [எலி + செவி.]

எலிச்செவிக்கள்ளி

எலிச்செவிக்கள்ளி eliccevikkaḷḷi, பெ. (n.)

   கள்ளி வகை (தைலவ.தைல.125, உரை.);; a kind of sedge.

   ம. எலிச்செவியன்;   க. இலிகிவி;   து. எலிகெயி;தெ. எலிச் செவி.

     [எலி + செவி + கள்ளி.]

எலித்திசை

 எலித்திசை elittisai, பெ. (n.)

 North-west, opp. to punai-t-tisai. (செ.அக.);.

     [எலி + திசை.]

எலித்துன்

 எலித்துன் elittuṉ, பெ. (n.)

   எலிதோண்டிய பொந்து; hole made by rat. (செ.அக.);.

     [எலி + துன். துன்னுதல் = குடைதல், உழுதல், வளைதோண்டுதல், பொந்து செய்தல்.]

எலினன்

 எலினன் eliṉaṉ, பெ. (n.)

   கள்; toddy;

     [எலு = பிஞ்சு. எலுவின் வடிநீர் எலுவெனப்பட்டது. எலு → எலுனன் → எலிளன்.]

எலிப்பகை

எலிப்பகை elippagai, பெ. (n.)

   1. பூனை; cat

   2. எலியின் எதிர்ப்பாற்றல்; attacking capacity of the rat.

     “எலிப்பகை நாகம் உயிர்ப்பக்கெடும்” (குறள்.763);.

     [எலி + பகை.]

எலிப்பயறு

எலிப்பயறு elippayaṟu, பெ. (n.)

   1. ஒர்வகைக் காட்டுப் பயறு; a wild variety of pulse – Glycine trilobal

   2. வயற்காடுகளில் முளைக்கும் வயற் பயறு; pulse found grown in fields and hedges and known as rat-pulse or rat-gram-phasecous trilobus. (சா.அக.);.

     [எலி + பயறு.]

எலிப்பயல்

 எலிப்பயல் elippayal, பெ. (n.)

   சிறிய பையன்; ittle boy.

     [எலி + (பையல்); பயல்.]

எலிப்புற்று

 எலிப்புற்று elippuṟṟu, பெ. (n.)

   எலிவளை; rat hole.

     [எலி + புற்று.]

எலிப்புலி

எலிப்புலி elippuli, பெ. (n.)

   பூனை; cat.

     “ஈப்புலியோ டெலிப்புலியாய் வடிவங் கொண்டு” (தனிப்பா. 1,86,169);.

     [எலி + புலி.]

எலிப்பூழி

 எலிப்பூழி elippūḻi, பெ. (n.)

   எலிவளையினின்று வெளியே தள்ளும் மண்; sand thrown out by a rat from a rat-hole. (சேரநா.);.

ம. எலிப்பூழி.

எலிப்பொந்து

 எலிப்பொந்து elippondu, பெ. (n.)

   எலிவளை; rat-hole.

ம. எலிப்பளம்.

     [எலி + பொந்து.]

எலிப்பொறி

எலிப்பொறி elippoṟi, பெ. (n.)

   1. எலியைப் பிடிக்கும்

   எந்திரம்; rat-trap.

   2. எலிப்பிடுக்கன் பார்க்க;see

 Elippidukkan.

ம. எலிக்கணி, எலிப்பொறி.

     [எலி + பொறி.]

எலிமயிர்க்கம்பளம்

எலிமயிர்க்கம்பளம் elimayirkkambaḷam, பெ. (n.)

எலிமயிரினாற் செய்யப்பட்ட கம்பளி (சீவக.2686,உரை.);

 blanket made of rats’ fur.

     [எலி + மயிர் + கம்பளம்.]

எலிமுள்ளு

 எலிமுள்ளு elimuḷḷu, பெ. (n.)

   இராவணன் மீசைப்புல்; water-pink, a Seashore grass, spinifex Squarrosus.

எலியன்

 எலியன் eliyaṉ, பெ. (n.)

   பொடியன் (இ.வ.);; little

 Boy.

     [எலி + எலியன்.]

எலியளை

 எலியளை eliyaḷai, பெ. (n.)

   எலிவளை (வின்.);; rats hole.

ம. எலியள.

     [எலி + வளை – எலிவளை → எலியனை.]

எலியாமணக்கு

 எலியாமணக்கு eliyāmaṇakku, பெ. (n.)

   காட்டா மணக்கு; glauosus-leaved physic-nut.

ம. எலியாவணக்கு.

     [எலி + ஆமணக்கு.]

எலியிடுக்கி

 எலியிடுக்கி eliyiḍukki, பெ. (n.)

   எலிபிடிக்கும் பொறி; rat-trap.

     [எலி + இடுக்கி.]

எலியெலும்பன்

எலியெலும்பன் eliyelumbaṉ, பெ. (n.)

   வலிமையில்லாதவன்; weak man, he who is as weak as a rat.

     “இல்லெலி யெலும்பனான சம்சாரி” (ஈடு.4,9,8);.

     [எலி + எலும்பு + அன்.]

எலியோடி

 எலியோடி eliyōṭi, பெ. (n.)

   கூரையின் நடுமுகட்டிலே வைக்கும் உருட்டுமரம் (வின்.);; thin timber on the top of a ceiling ridge-pole.

ம. எலியோடி.

     [எலி + ஓடி.]

எலிவளை

 எலிவளை elivaḷai, பெ. (n.)

எலிப்பொந்து பார்க்க;see eli-p-pondu.

எலிவாலரம்

 எலிவாலரம் elivālaram, பெ. (n.)

   எலி வாலைப் போன்ற அரம்; Instrument, rat’s tail file. (சா.அக.);

     [எலி + வால் + அரம்.]

எலிவெடி

 எலிவெடி eliveḍi, பெ. (n.)

   வெடிவகை; a kind of rocket (சேரநா.);.

ம. எலிவெடி.

எலிவெள்ளை நஞ்சு

 எலிவெள்ளை நஞ்சு eliveḷḷainañju, பெ. (n.)

   எலிகள் புணருங் காலத்தில் சிதறும் விள்ளு மாந்தர் உடம் பில் படுவதால் ஏற்படும் நஞ்சு (விஷம்);; இதனால் புண், குளிர்காய்ச்சல், மயக்கம், போன்ற நோய்கள் உண்டாகும்; diseases due to the poisonous effects of the seminal fluid (split during the coition of rats); coming in contact with the humanbody and the symtoms are – ulcers, swelling, ague, swoon, fever etc. (சா.அக.);.

     [எலி + வெள்ளை + தஞ்க.]

எலு

எலு1 elu, பெ. (n.)

   கரடி (பிங்.);; bear.

தெ. எலுகு.

     [எல் + கருப்பு. எல் → எலு.]

 எலு2 elu, பெ. (n.)

   பிஞ்சு (பிங்.);; green fruit that as just being formed from the blossom.

     [இல் → இலு → எலு = பிஞ்சு.]

 எலு3 elu, பெ. (n.)

   தோழமை; friendship.

     [எல்லா → எலா = எலு.]

எலுமிச்சம்புல்

 எலுமிச்சம்புல் elumiccambul, பெ. (n.)

   ஒர்வகைப் புல்; lemon grass – Andropagon schoenanthus. (சா.அக.);.

     [எலுமிச்சம் + புல்.]

எலுமிச்சை

எலுமிச்சை elumiccai, பெ. (n.)

   1. ஒரு மரம்; sour lime, citrus medica acida.

   2. எலுமிச்சம்பழம்; fruit of the sour-lime-tree.

   3. தித்திப்பெலுமிச்சை; sweet lime.

   4. எலுமிச்சை வகை; Bergamotte orange, citrus aurantium beggamia.

   ம. எருமிச்சி நாரகம்;   பட, இலிமிசிகெ;   க. இ.லிமிஞ்சி;   கோத, இல்மிச்;துட, இன்மிச் Skt laknea.

     [எல் → எலு = பிஞ்சு, காய், எது → எலுமு → எலுமுத்தெ → எலுமித்தெ → எலுமிச்செ, எலுமித்தது → காய்த்தன்மையுடைது. ஏனைய பழங்களைப் போல் பழம் எனும் நொய்த்த தன்மையடையாமலும் மேற்றோல் வாடாமலும் இருப்பது.]

எலுமிச்சை வகைகள்:

   1. பெரிய எலுமிச்சை; large lime or giant emon – Chrus medica limon – Cilnus medica limonum (medico-limonum);.

   2. கொடியெலுமிச்சை; creeper lime-Citrus acida.

   3. மலையெலுமிச்சை; mountain lime Citrus rufucea.

   4. தித்திப்பு எலுமிச்சை; sweet lime-citrus media-lumia alias C limeta- Used the orange.

   5. காட்டெலுமிச்சை; Indian wild or bitter lime – Alalantia monophylla alias racemosa.

   6. பணிலா எலுமிச்சை; musk or manila lime, Triphasia trifoliala alias

 Limonia trijolaia.

   7. நாயெலுமிச்சை; dog wood apple – limonia acidissina.

   8. ஆனையெலுமிச்சை; tille from its size. Same as sour lime in No.1.

   9. கோடையெலுமிச்சை; Pondicherry lemon-Citra medica (typica);.

   10. எருமை யெலுமிச்; buffallo lime-same as No.

   12. 11. பிள்ளையார் எலுமிச்சை அதாவது பெரிய எலுமிச்சை; Ganapathi’s lime, same as No.1.

   12. சம்பீர வெலுமிச்சை இதுவே கிச்சிலி, loose jacke line – Citrus anranti vum nobilis. (jambhiri); (சா.அக.);.

எலுமிச்சை வெற்றிலை

 எலுமிச்சை வெற்றிலை elumiccaiveṟṟilai, பெ. (n.)

   கற்பூர வெற்றிலை; betel leaf with the fragrance of the lime fruit (சா.அக.);

     [எலுமிச்சை + வெற்றிலை.]

எலும்பன்

 எலும்பன் elumbaṉ, பெ. (n.)

   எலும்புபோன்று மெலிந்தவன்; one who is almost a skeleton, emaciated man.

ம. எலும்பன்.

     [எல் → எலு → எலும்பு + அன்.]

எலும்பி

எலும்பி1 elumbi, பெ. (n.)

   எலும்பு தோன்ற மெலிந்தவள்; emaciated woman.

     [எலும்பு + இ.]

எலும்பிலி

எலும்பிலி elumbili, பெ. (n.)

   1. புழுமுதலிய எலும்பில்லாத உயிரிகள்; worm, or any creature that has no bones.

   2. மரவகை (யாழ்.அக.);; tree.

     [எலும்பு + இலி. இல்லி → இலி.]

எலும்பு

எலும்பு elumbu, பெ. (n.)

உடம்பின் தோற்றம், உறுதிக்குக் காரணமான வன்மையான மரச்சட்டம்

   போன்ற பொருள்; bone.

     “நரம்போ டெலும்பணிந்து” (திருவாச.12,11);.

   ம. எலும்பு;   த. எலு, எலும்பு, எழுவு;   கோத, எல்ன்;   துட, எவின்;   குட, எலிம்பி;   து. எலு;   தெ. எம்மு, எம்கே, எழுக;பட, இலு.

     [எல் = வெண்மை, எல் → எலு → எலுமு → எலும்பு.]

மேலையாரிய மொழிகளிலும் ‘எல்’ எனுஞ்சொல்வெண்மைப் பொருளில் வழங்கி வருகிறது.

எல்பு – L albus, white. LL alba,

 E alb, white vestment reaching to feet worn by priests. CE, ME alte.

 E albala, while mata. Lalbata, whilaned Port albino, while Negro.

 E albile, white or soda fieldspar.

 E album, book of while sheets for insertion of autographs, photographs, etc.

 E albumen, white of egg 5 albuminuria, presence of albumen in the usine.

 E alburnum, recently formed while wood in exogamous, trees (செல்வி.77.திச.177);.

எலும்புக் கூடு

 எலும்புக் கூடு elumbukāṭu, பெ. (n.)

   உடம்பினில் தசை நீங்கிய எலும்பின் கோப்பு; the hard or bony | frame work of an animal separated from the flesh and fixed together in their natural position–skeleton. (சா.அக.);.

     [எலும்பு + கூடு.]

எலும்புக்கண்

 எலும்புக்கண் elumbukkaṇ, பெ. (n.)

   எலும்பின் கண்ணறைகள்; bone-cells. (சா.அக.);

     [எலும்பு + கண்.]

எலுவன்

 எலுவன் eluvaṉ, பெ. (n.)

எலுவல் பார்க்க;see eluval. (செ.அக.);

     [எலுவ → எலுவன்.]

எலுவர்

எலுவர் eluvar, பெ. (n.)

   தோழர்; men-friend

     “எலுவ! சிறாஅர் ஏமுறு நண்ப” (குறுந்-129);.

     [எலுவன் → எலுவ. எலு = பிஞ்சு, இளமை, எலுவ = இளையவளே.]

எலுவல்

எலுவல் eluval, பெ. (n.)

தோழன்

 man friend.

     “அரவெழுதிய கொடியமுடையவ ைெலுவலும்” (பாரத.பதினாறாம்.28); (செ.அக.);.

     [எலுவன் → எலுவல். எலு = பிஞ்சு, இளமை, எலுவல் = இளமையள்.]

எலுவி

எலுவி eluvi, பெ. (n.)

   தோழி. (தொல்,பொருள். 26,32. உரை);; lady companion.

     [எலுவன் → எலுவி. எலு = பிஞ்சு, இளமை, எலுவி = இளமையள்.]

எலுவை

எலுவை eluvai, பெ. (n.)

   தோழி; lady companion,

     “உனக்கெலுவை யாகுவதெ னெண்ணம்” (பாரதநாடு கரந்.33);. (செல்வி. சூன்.78,பக்.497);.

     [எலுவன் → எலுவை, எலு = பிஞ்சு, இளமை. எலுவை = இளமையுடையளாய், இளமைக்குணமான அன்பும் ஆர்வமும், நட்பும் வளர்க்கும் தன்மையள்.]

எலே

 எலே elē,    இடை (part). விளியிடைச்சொல்; vocative partice of endearment. எலே! இங்கே வாலே (நெல்லை).

     [எல்லா → எலே.]

எல்

எல்1 el, பெ. (n.)

   1. நெருப்பு; fire.

   2. கதிரவன்; sun.

     “எற்படக் கண்போன் மலர்ந்த” (திருமுரு.74);.

   3. ஒளி; lusture, splendour, light

     “எல்லே யிலக்கம்” (தொல்,சொல்.271);.

   4. வெயில் (பிங்.);; sunshire.

   5. பகல்; day time.

     “எல்லடிப் படுத்த கல்லாக் காட்சி” (புறநா.170);.

   6. நாள் (பிங்.);; day of 24 hours.

   7. பெருமை; vehemence, strength.

   ம. எல்;   தெ. எலமு;பர். தெந்கி. கோண், எததி, அததி, (லெயிலின் வெப்பம்);.

     [உல் → எல்.]

 எல்2 el, பெ. (n.)

   1. கதிரவன் மறைவு; sunset.

   2. இரவு; night

     “எல்லிற் கருங்கொண்மூ வாய்திறந்த மின்னுப்போல்”‘ (நாலடி.8); – இடை. (int.);

   இகழ்மொழி (பிங்);; ejaculation of contempt.

     [இல் → எல்.]

 எல்6 el, பெ. (n.)

ஏரல் பார்க்க;see eral.

எல்கை

 எல்கை elkai, பெ. (n.)

   எல்லை; border, limit எல்கை

     “எல்கைகைவிட்டுக் கடக்கப்போன தனாலே.” (கல்வெட்டு);.

ம. எல்க.

     [எல் → எல்லை = விளிம்பு, ஒரம், வரம்பு, வரப்பு. எல்லை கைவிட்டுச்சென்றாள் என்னும் வழக்கு மீதுர்த்த பகுதிகளில் எல்லைகை விட்டு → எல்கைவிட்டு எனத்திரிந்தது. அத்திரிபால் எல்லை + கை → எல்கை என மருவி வழங்கலாயிற்று.]

எல்ல

எல்ல ella, பெ. (n.)

எல்லா பார்க்க;see ella (தொல்,பொருள்.220.உரை.);. (செ. அக.);.

     [எல்லா → எல்ல.]

எல்லப்பநாவலர்

 எல்லப்பநாவலர் ellappanāvalar, பெ. (n.)

   அருணாசல புராணம் முதலிய நூல்களை யியற்றிய புலவர்; author of Arunacala-puranam and other works in Tamil (செ.அக.);.

     [எல்லப்பன் + நாவலர்.]

எல்லம்

 எல்லம் ellam, பெ. (n.)

   இஞ்சி; ginger. (மலை.);.

தெ. அல்லமு.

     [அல்லம் → எல்லம்.]

எல்லம்மன்

 எல்லம்மன் ellammaṉ, பெ. (n.)

   தீயவிளைவுகளின்போது மீனவர்களாலும் மற்றும் நச்சுப் பாம்பினால் கடிபடுபவராலும் வணங்கப்படும் ஒரு சிற்றுார்த் தெய்வம் (இ.வ.);; village goddess, invoked by fishermen when in danger and by anyone bitten by a poisonous serpent.

தெ. எல்லம்ம.

     [எல் → எல்லை. எல்லையம்மன் →எல்லம்மன்.]

எல்லம்மா

 எல்லம்மா ellammā, பெ. (n.)

எல்லம்மன் பார்க்க;see ellamman.

     [எல்லையம்மன் → எல்லம்மன் → எல்லம்மா.]

எல்லரி

எல்லரி ellari, பெ. (n.)

   பறைவகை; a kind of drum.

     “கடிகவர் பொலிக்கும் வல்வா யெல்லரி” (மலை

படு.10).

     [ஒல் → எல் → எல்லரி.]

எல்லவன்

எல்லவன் ellavaṉ, பெ. (n.)

   1. கதிரவன்; sun

     “எல்லவன் வீழுமுன்னம்” (பாரத.பதினெட்.119);.

   2. திங்கள்; moon (அகநி.);.

ம. எல்லவன்.

     [எல் → எல்லவன்.]

எல்லவரும்

எல்லவரும் ellavarum, பெ. (n.)

   எல்லாரும்; all persons

     “நாமெல்லவரும்” (கந்தபுதேவர்.புலம்புறு.19);.

   தெ. எல்லரு;க. எல்லரு. எல்லவரு.

     [எல்லை + அவர் – எல்லவர் + உம் + எல்லவரும். நாட் டெல்லை அல்லது ஊரெல்லைக்குட்பட்ட அனைவரும்.]

எல்லா

எல்லா ellā, பெ. (n.)

   1. ஒரு விளிப்பெயர்; here, you (தொல்.பொருள்.220.உரை.);.

   2. தோழி முன்னிலை பெயர் (சூடா. 2,42);

 word used in addressing a woman friend.

     “கடை மணியின் குரல் காண்பென் காண் எல்லா” (சிலப்.20,3);.

   ம., துட., பட, எல்லா;   க., குட., தெ. எல்ல;   கோத, எல், எலம்;   பிரா. குல்; Eng all.

     [இல் – இளமைக் கருத்துவேர். இல் → எல் → எல்லா → எல → எல்லா = தோழன், தோழி.]

ஆங்கில நண்பரைக்காணும்போது மகிழ்ச்சி விளியாக ஆளும் உறலோ (உறல்லோ); என்னுஞ்சொல். எல்லா என்னும் தென் சொல்லோடு தொடர்புடையதே.

 hallo, haloa, Int, n. and vi Int, calling attention or expr. surprise. informal greeting, (n and vi); the cry ‘hallo’ var of earlier Hollo halloo, int inciting dogs to the chase, calling attention or expressing surprise, (n); the cry ‘halloo’ (perh.); var. of Hollo;

 urge on (dogs etc.); with shouts shout (t and i); to attract attention.

 hallow, v.t. and i chase with shouts;

 incite with shouts;

 shout to incite dogs etc. (ME); halower prok. 1 OF halloer, hello, n, and v.i. hallo. Holla, int. calling attention of OF holla hollo int. calling attention;

     “hallo” (conn.w.); HOLLA. hallo, hollow, holla, holloa, v.i. and t shout (i and t); call o hounds (as prec); hullo, hulloa, int-used to call attention, express surprise or answer call esp. on telephone, of HALLO.

நூற்றுக்கணக்கான அடிப்படை ஆங்கிலச் சொற்கள், தென் சொல்லும் தென்சொற்றிரியுமாயிருப்பதால், எல்லா என்னும் இருபாற் பொது விளிச்சொல் ஆங்கிலத்தில் வழங்கி வருதல் பற்றி ஐயுறுதற்கு எள்ளளவும் இடமில்லை. (செல்வி.78, சூன் 500,501);.

எல்லாம்

எல்லாம் ellām, பெ. (n.)

   1. முழுதும் (திருக்கோ.351, உரை.); whole.

   2. அனைவர், அவை என்னும் பொருளிலும் வரும்; all, personal as well as impersonal. அவர்கள் எல்லாம் போனார்கள்;

அவை எல்லாம் போயின.

     “நல்லவை எல்லாம் தீயவாம்” (குறள். 375);

   ம. எல்லாம்;   க. எல்லா;   துட, யெலெ, யெல்லமதி;   கோத, எல்ம்;   பட, எல்லா;   குட, எல்ல;   து. எல்ல;தெ. எல்ல.

     [எல்லவும் → எல்லாம். எல்லை + அவை – எல்லையவை → எல்லவை + உம் – எல்லவையும் → எல்லாம். எல்லவை = எல்லைக்குட்பட்ட அனைத்தும்.]

எல்லாரும்

எல்லாரும் ellārum, பெ. (n.)

   யாவரும்; all persons

     “எல்லாரும் எல்லீரும் என்பவற்றும்மை” (நன். 246);

   ம. எல்லாரும், எல்லாவரும்;   க. எல்லரும்;   கோத, எலம்;   குட, எல்ல;தெ. எல்லரு.

     [எல்லவரும் → எல்லாரும்.]

எல்லார்

எல்லார் ellār, பெ. (n.)

   தேவர்; Devas of Hindu mythology

     “பணிவானத் தெல்லார் கண்ணும்” (சீவக.364); (வே.க.58);.

ம. எல்லார்.

     [எல் → எல்லார். எல்லவரும் பார்க்க.]

எல்லாவோ

எல்லாவோ ellāvō, பெ. (n.)

   தோழி; lady friend.

     “எல்லாவோ காதலற் காண்கிலேன்” (சிலப்.18,11-12);.

     [எல்லா → எல்லாவோ.]

எல்லி

எல்லி1 elli, பெ. (n.)

   1. கதிரவன் (பிங்.);; sun.

   2. பகல்; day time.

     “இரவோ டெல்லியு மேத்துவார்” (தேவா.344,8);.

     [உல் → எல் → எல்லி = அழலோன், கதிரவன்.]

 எல்லி2 elli, பெ. (n.)

   1. இரவு; right.

     “எல்லியிது காலையிது” (சீவக.1877);.

   2. இருள்; darkness.

     “நீரரை யெல்லி யியங்கன்மினே” (இறை.30.உதா.217);.

     [இல் → இல்லி → எல்லி = இருள். இல்லி = கருமை, இருள்.]

எல்லினான்

எல்லினான் elliṉāṉ, பெ. (n.)

எல்லோன் பார்க்க;see ellon.

     “புயங்க முண்டுமிழ்ந்த வெல்லினா னென” (கந்தபு.அக்கினி.223); (வேக.58);

     [எல்லி → எல்லினன் → எல்லினான்.]

எல்லிப்பகை

எல்லிப்பகை ellippagai, பெ. (n.)

   1. கதிரவன்; sun, enemy of night (சங்.அக.);.

   2. வெளிச்சம்; light as the enemy of darkness or the night.

     [இல்லி → எல்லி + பகை. இல்லி + இரவு.]

எல்லிமனை

எல்லிமனை ellimaṉai, பெ. (n.)

   தாமரை; lotus, fancied as the wife of the sun.

     “பிரம்பெல்லிமனை முக்கருணை.” (தைலவ.தைல.135);.

     [எல் → எல்லி (கதிரவன்); + மனை. மனை = மனைவி.]

எல்லியறிவன்

 எல்லியறிவன் elliyaṟivaṉ, பெ. (n.)

   கோழிச்சேவல்; cock-which knows the watches of the night. (செ.அக.);.

     [எல்லி + அறிவன். அறிவன் = அறிபவன்.]

எல்லிருள்

எல்லிருள் elliruḷ, பெ. (n.)

   இராவிருள்; darkness of night.

   2. விடியற்காலத்திருள்; darkness preceding the dawn.

     “எல்லிருள் விஞ்சையோதி” (சீவக.1747);.

மறுவ, நள்ளிருள், செறியிருள், குமரியிருள், பேரிருள்.

     [எல் + இருள்.]

எல்லீரும்

எல்லீரும் ellīrum, பெ. (n.)

   எல்லா நீங்களும்; you all

     “எல்லீரு மென்னும் பெயர்நிலைக் கிளவியும்” (தொல்.சொல்.166);

     “எல்லாரும் எல்லீரும்” (நன் 246);.

   ம. எல்லரும்;க. எல்லரும்.

     [எல்லா + நீரும் – எல்லாநீரும் → எல்லீரும்.]

எல்லு-தல்

எல்லு-தல் elludal,    13.செ.கு.வி (v.i.)

   ஒளிமங்குதல்; to become dim as the sun.

     “எல்லு மெல்லின்று ஞமலியு மிளைத்தன” (குறுந்.179);.

     [இல் → எல்.]

எல்லெண்

எல்லெண் elleṇ, பெ. (n.)

   பன்னிரண்டு; number 12, representing the number of Atittar.

     “காட்டசைசத்தி யெல்லெண்” (தைலவ.தைல.69);.

எல்லெனல்

 எல்லெனல் elleṉal, பெ. (n.)

   ஓர் ஒலிக்குறிப்பு (பிங்.);; onom expression.

     [எல் + எனல்.]

எல்லே

எல்லே ellē, இடை (int.)

   1. தோழியை விளிக்கும் முன்னிலைச் சொல்; here you, used in addressing a woman-friend.

     “எல்லே…..தோழி” (திவ்.திருவாய். 5,3,5);.

   2. ஓர் வியப்பு விரக்கச் சொல்; exclamation of wonder or pity.

     “ஏதிலே னரங்கற் கெல்லே” (திவ்.திருமாலை.26);. – கு.வி.எ. (adv.);

   1. வெளியாக; openly, cleary,

     “எல்லேமற் றெம்பெருமாற் கின்றிவளு மின்னாளோ” (சீவக.2957);.

   2. வெளியே (சீவக.653, உரை.);; outside.

     [எல் → எல்லே.]

எல்லேமும்

 எல்லேமும் ellēmum, பெ. (n.)

   எல்லா நாங்களும்; we all, all of us.

     [எல்லா + நாமும் – எல்லேமும்.]

எல்லேம்

 எல்லேம் ellēm, பெ. (n.)

எல்லேமும் பார்க்க;see ellemum.

எல்லேலெனல்

 எல்லேலெனல் ellēleṉal, பெ. (n.)

   எல்லெனல் பார்க்க;     [எல் + எல் + எனல்.]

எல்லேளெனல்

 எல்லேளெனல் ellēḷeṉal, பெ. (n.)

எல்லேலெனல் (திவா.); பார்க்க;see ellelenal.

எல்லை

எல்லை1 ellai, பெ. (n.)

   1. நடப்பட்ட எல்லைக்கல்; stone fixed up to show the boundary limits.

   2. வரம்பு; limit, border.

     “எல்லைக் கணின்றார்” (குறள்.306);.

   3. அளவை (திவா.);; measure, extent.

   4. முடிவு; end, goal, extremity, death. (கலித்.129.உரை.);.

   5. கூப்பிடு தொலைவு; distance within reach of voice. (திவா.);.

   6. தறுவாய்; specified time, period.

     “கூறிய வெல்லையில்” (கம்பரா.வீபீட. 97);.

   7. இடம்; place, spot, locality.

     “அதற்கடுத்த வெல்லை யாமீண்டு” (கந்தபு.ஏம கூட.30);.

   8. ஐந்தாம் வேற்றுமைப் பொருள்களுள் ஒன்று; ablative case.

     “எல்லையின்னு மதுவும் பெயர் கொளும்” (நன்.319);.

   ம. எல்ல;   க. எல்லே;   துட. எல்ய;   து. எல்ல;தெ. எல்ல, எல்லே.

     [இல் → எல் → எல்லை. இல் = குத்துதல், நடுதல்.]

 எல்லை2 ellai, பெ. (n.)

   1. கதிரவன் (திவா.);; sun

   2. பகல்; daytime.

     “எல்லையு மிரவுந்துயி றுறந்து” (கலித்.123);.

   3. நாள் (சூடா.);; day of 24 hours.

     [எல் → எல்லை.]

எல்லைகட-த்தல்

எல்லைகட-த்தல் ellaigaḍattal,    3. செ.கு.வி. (v.i.)

   1.

   வரம்பு மீறுதல்; to tresspass.

   2. நேர்மை தவறுதல், எல்லை மீறுதல்; to exceed limits, transgress.

   3. அளவிறத்தல்; to be beyond all measure.

     [எல்லை + கட.]

எல்லைகுறி-த்தல்

எல்லைகுறி-த்தல் ellaiguṟittal,    4.செ.கு.வி. (v.i.)

   வரம் பேற்படுத்துதல்; to mark limits, set boundaries.

     [எல்லை + குறி.]

எல்லைக்கட்டு

எல்லைக்கட்டு1 ellaikkaṭṭudal,    5. செ.குன்றாவி. (v.t.)

   1. கட்டுப்படுத்துதல்; to limit, restrain, circumscribe.

   2. வரையறுத்தல்; to determine, decide.

   3. வழக்குத் தீர்த்தல்; to settle matters of dispute.

     [எல்லை + கட்டு.]

 எல்லைக்கட்டு2 ellaikkaṭṭu, பெ. (n.)

   1. வரம்பு; boundary, demarcation.

   2. கட்டுப்பாடு; restraint, circumscription.

ம. எல்லத்தல.

     [எல்லை + கட்டு.]

 எல்லைக்கட்டு3 ellaikkaṭṭu, பெ. (n.)

   வரிகட்டுதல், இறைக்கட்டுதல் (யாழ்.அக.);; payment of taxes. (செ.அக.);.

     [எல்லை + கட்டு.]

எல்லைக்கறுப்பன்

 எல்லைக்கறுப்பன் ellaikkaṟuppaṉ, பெ. (n.)

   ஒரு ஊர்த் தேவதை; village deity, who guards the boundary of the village.

ம. எல்லக்கல்லுசாமி.

     [எல்லை + கருப்பள்.]

எல்லைக்கல்

எல்லைக்கல் ellaikkal, பெ. (n.)

   எல்லை யறிய நிறுத்துங் கல்; stone fixed up to show the boundary Imils.

     “எல்லைக்கல்லி னிறீஇ” (மீனாட்பிள்ளைத்.38);.

     [எல்லை + கல்.]

எல்லைக்கால்

 எல்லைக்கால் ellaikkāl, பெ. (n.)

   எல்லைக் கல் (யாழ்.அக.);; boundary stone.

     [எல்லை + கால். கால் = கம்பு, கல்.]

எல்லைக்காவல்

 எல்லைக்காவல் ellaikkāval, பெ. (n.)

   ஊரெல்லையிற் காக்கும் வயற்காவல் (வின்.);; watch-shed, to mark the division of one field from another.

     [எல்லை + காவல்.]

எல்லைக்குறிப்பு

எல்லைக்குறிப்பு ellaikkuṟippu, பெ. (n.)

   1. எல்லையடையாளம்; boundary-mark.

   2. வழியளவைக் காட்டும் குறி; málestone, mile-post.

     [எல்லை + குறிப்பு.]

எல்லைக்கெட்டநேரம்

 எல்லைக்கெட்டநேரம் ellaikkeṭṭanēram, பெ. (n.)

   ஒவ்வாத நேரம்; unsuitable time. (ஆ.அக.);.

     [எல்லை + கெட்ட + நேரம்.]

எல்லைக்கேடு

எல்லைக்கேடு ellaikāṭu, பெ. (n.)

   1. சமயமொவ் வாமை; unsuitableness in regard to time.

   2. இடமொவ்வாமை; unsuitableness, inconvenience in regard to place.

     [எல்லை + கேடு.]

எல்லைத்தரிசு

 எல்லைத்தரிசு ellaittarisu, பெ. (n.)

   ஊரோரங்களிலுள்ள கரம்பு நிலம் (C,G);; waste land, generally on the outskirts of a village.

     [எல்லை + தரிக.]

எல்லைத்தீ

 எல்லைத்தீ ellaittī, பெ. (n.)

   ஊழித்தீ; fire that destroys

 all things at the close of an age.

     [எல்லை + தீ.]

எல்லைப்படுத்து-தல்

எல்லைப்படுத்து-தல் ellaippaḍuddudal,    5.செ.குன்றாவி. (v.t.)

   1. எல்லை கட்டுதல்; to settle a boundary.

   2. முடிவுபடுத்துதல் (வின்.);; to settle matters, decide, finish, terminate.

     [எல்லை + படுத்து.]

எல்லைப்பத்திரம்

 எல்லைப்பத்திரம் ellaippattiram, பெ. (n.)

எல்லைவ முக்குத் தீர்த்தெழுதும் ஆவணம் (சங்.அக.); writen agreement setting forth the terms of settlement of a boundary dispute.

     [எல்லை + பத்திரம்.]

எல்லைப்பிடாரி

 எல்லைப்பிடாரி ellaippiṭāri, பெ. (n.)

   எல்லையம்மன்; female deity believed to preside over spots where roads meet (வின்.);.

     [எல்லை + பிடாரி.]

எல்லைப்பூசல்

 எல்லைப்பூசல் ellaippūcal, பெ. (n.)

   எல்லையைப் பற்றிய வழக்கு; boundary dispute (செ.அக.);.

     [எல்லை + பூசல்.]

எல்லைப்பொருள்

 எல்லைப்பொருள் ellaipporuḷ, பெ. (n.)

   ஒரு பொருளி னது திசையளவைக் குறிப்பதற்கு எல்லையாய் நிற்கும் பொருள் (ஆ.அக.);; object located to indicate extent and/or boundary.

     [எல்லை + பொருள்.]

எல்லைமானம்

எல்லைமானம் ellaimāṉam, பெ. (n.)

   1. எல்லை; boundary limit, circuit (யாழ்.அக.);.

   2. அளவு; measure, extent.

     [எல்லை + மானம். மாத்தல் = அளத்தல். மா → மால் → மாள் + அம்.]

எல்லைமால்

 எல்லைமால் ellaimāl, பெ. (n.)

   நான்கெல்லை (C.G);; four boundaries of a piece of land.

     [எல்லை + மால், மாத்தல் = அனத்தல், மா → மால் = அளவு.]

எல்லையம்மன்

 எல்லையம்மன் ellaiyammaṉ, பெ. (n.)

ஊரெல்லையில்

   இருக்கும் காவல் தெய்வம்; guardian deity at the boundary of a village.

     [எல்லை + அம்மன்.]

எல்லையோடல்

 எல்லையோடல் ellaiyōṭal, பெ. (n.)

   எல்லையைச் சுற்றிவரல்; running through the boundary. (ஆ.அக.);.

     [எல்லை + ஒடல்.]

எல்லையோடி

 எல்லையோடி ellaiyōṭi, பெ. (n.)

   ஊர்த் தெய்வத்தின் கோயிலின் முன்னே சில வழிபாட்டுமுறைகளைச் செய்து பிறகு எல்லையைக்காட்டி வழக்கைத் தீர்ப்போன். (இ.வ.);; boundary runner, a village officer, whose testimony incase of boundary disputes is accepted by the disputants, when he shows the boundary line by running round it after having been solemnly sworn to discharge his duty as almost a divine arbitrator by being required to go through certain awe-inspiring ceremonies before the shrine of the village deity (செ.அக.);.

     [எல்லை + ஒடி.]

எல்லையோடு-தல்

எல்லையோடு-தல் ellaiyōṭudal,    5.செ.கு.வி. (v.i.)

   எல்லையைச் சுற்றிவருதல் (வின்.););; to march around

 the bounds of a village or district, a religious ceremony

 performed by some of the Hindu sects.

     [எல்லை + ஒடு.]

எல்லைவிருத்தி

எல்லைவிருத்தி ellaivirutti, பெ. (n.)

ஊரெல்லையைக்

   காக்கும் காவற்பணி. (Rd.M.331);; office of protecting village boundaries, held hareditarily and carrying with it certain emoluments.

     [எல்லை + விருத்தி]

எல்லோ

எல்லோ ellō, இடை (int.)

   ஓர் வியப்பு, இரக்கச்சொல்; exclamation expressive of surprise or pity. (செல்வி. 78, சூன்.497);.

     [எல்லா → எல்லோ.]

எல்லோன்

எல்லோன்1 ellōṉ, பெ. (n.)

   கதிரவன் (பின்.);; Sun.

     [எல் → எல்லோன்.]

 எல்லோன்2 ellōṉ, பெ. (n.)

   பன்னிரண்டு எனும் எண்ணிக்கை; dozen.

மறுவ, எல்லெண்.

     [எல் → எல்லோன் (படைத். பாவாணர்);.]

பன்னிரு சூரியர் உண்டு எனும் கருத்தின்படி சூரியனைக் குறிக்கும் எல் என்னும் சொல்லிலிருந்து பன்னிரண்டு என்னும் எண்ணை (dozen);க்குறிக்க எல்லோன் என்னும் சொல்லைப் பாவாணர் படைத்திட்டுக்கொண்டார்.

எல்லோமும்

 எல்லோமும் ellōmum, பெ. (n.)

எல்லாமும் பார்க்க;see ellam-um.

     [எல்லாமும் → எல்லோமும்.]

எல்லோரும்

 எல்லோரும் ellōrum, பெ. (n.)

   அனைவரும்; all.

     [எல்லாரும் → எல்லோரும்.]

எல்வளி

எல்வளி elvaḷi, பெ. (n.)

   பெருங்காற்று; furious winds.

     “எல்வளியலைக்கும்” (அகநா.77);.

     [எல் + வளி.]

எல்வை

எல்வை elvai, பெ. (n.)

எல்லை பார்க்க;see ellai.

     “அல்வழி நடக்குமெல்வை” (உபதேசகா.சிவபுண் ணிய, 375);.

     [எல்கை → எல்வை.]

எளந்தமனக

 எளந்தமனக eḷantamaṉaka, பெ. (n.)

   இளகிய, இரக்கம் நிறைந்த மனம்; compassion pity.

     [இள-எளந்த+மனசு]

எளந்தரம்

 எளந்தரம் eḷantaram, பெ. (n.)

ஆண்குறி இருக்குமிடம்

 male organ.

எளந்தரத்திலே மிதித்துவிட்டான்”

     [இளம்+தரம்]

எளவாங்கி

 எளவாங்கி eḷavāṅki, பெ. (n.)

   தைக்கும் ஊசி; needle.

     [இலை – எள+வாங்கி]

எளிவந்தம்

எளிவந்தம் eḷivandam, பெ. (n.)

   1. எரிச்சல், buming sensation.

   2. எரிவு; blistering heat.

   3. எரிச்சலை யுண்டாக்குமோர் நோய்; any disease such as carbuncle, biliousness etc. accompanied by burning sensation.

   4. சினம்; anger, wrath, rage. (செ.அக.); (சா.அக.);.

     [எரிவருதல் → எரிவா → எரிவந்தம்.]

எள்

எள்2 eḷ, பெ. (n.)

   இகழ்ச்சி; reproach, censure condemation

     “எள்ளுறிய கருமம் நேர்ந்தா ளிவள்” (கம்பரா.நகர்நீ.109);.

   ம. எள்ளு;   க. எள், எள்ளு;   குட. எள்ளி;து. எண்மெ’ தெ. தெலிக நுவ்வுலு,

     [இன் → எள்.]

எள்கு

எள்கு1 eḷkudal,    5.செ.குன்றாவி. (v.t.)

   இகழ்தல்; to despise, sight

     “எள்கலின்றி… ஈசனைவழிபாடு செய் வாள்’ (தேவா.1049.10);.

   2. அஞ்சுதல்; to lear

     “எண்டிசையோரு மெள்க” (சீவக.1749);.

   3. ஏய்த்தல்;   10 deceive

     “ஓர் பாலகன்வந் தென்மகளை யெள்கி” (திவ்.பெரியாழ்.3.7.4);.

     [எள் → என்கு. எள்ளுதல்.)

 எள்கு2 eḷkudal,    7.செ.கு.வி. (v.i.)

   1. கூசுதல் to be bashful, to hesitate.

     “பழிவந்து மூடுமென்றெள்குதுமே” (திருக்கோ.92);

   2. வருந்துதல்; to be in difficulty

     “செங்களம் பற்றிநின் றெள்கு புன்மாலை” (திவ்.இயற். திருவிருத்,77);.

     [இல் → எல் → எள் → எள்கு.]

எள்நெய்

 எள்நெய் eḷney, பெ. (n.)

   எள்ளிலிருந்து வடித்தெடுக் கும் நல்லெண்ணெய்; gingili oil (சாஅக.);

   தெ. நூனெ;   ம. எள்ளெண்ண;க. எள்ளெண்ணெ.

     [எள் + நெய்.]

எள்ள

எள்ள eḷḷa, இடை (part)

ஓர் உவமவுருபு:

 adverbial word of comparison

     “எள்ளவிழைய…. பயனிலையுவமம்” (தொல்,பொருள்,289);. (வே.க.20);.

     [எள் → எள்ள.]

எள்ளற்பாடு

எள்ளற்பாடு eḷḷaṟpāṭu, பெ. (n.)

   இகழ்ச்சி; scorn, reproach.

     “எள்ளற்பா டுள்ளிட் டெல்லாம்” (சீவக. 2799);.

     [எள்ளல் + பாடு.]

எள்ளல்

எள்ளல் eḷḷal, பெ. (n.)

   இகழ்ச்சி, குறைவாய் மதிப்பிடல்; reproach, laughing to scorn,

     “எள்ளிலிளமை

பேதைமை மடனென்று….. நகைநான்கென்ப” (தொல் பொருள்.252);.

     [எள் → எள்ளு → எள்ளல்.]

எள்ளளவு

 எள்ளளவு eḷḷaḷavu, பெ. (n.)

சிறிது, எள்ளின் அளவு: of the size of weight of a sesamum seed, very little

மறுவ, எள்ளிடை எள்கிடை எட்பகவு: ம. எள்ளளவு: க. எள்ளத்டு

     [எள் + அளவு.]

எள்ளளவும்

எள்ளளவும் eḷḷaḷavum,    கு.வி.எ. (adv. சிறிதளவும்; not even a little, not even as much as a sesamum seed,

     “யாளெனுமகந்தைதா னெள்ளளவு மாறவிலை” (தாயு, ஆனந்த9);.

     [எள் + அளவு + உம்]

எள்ளிடை

 எள்ளிடை eḷḷiḍai, பெ. (n.)

   எள்விதையளவு; merest lrifle.

ம. எள்ளிட

     [எள் + இடை இடை = அளவு.]

எள்ளு

எள்ளு1 eḷḷudal,    6.செ.குன்றாவி. (v.t.)

   1. இகழ்தல்: lo ignore, disregard

     “உருவுகண் டெள்ளாமை வேண்டும்” (குறள்.667);.

   2. இகழ்ந்து நகைத்தல் (திவா.);; to ridicule, deride, laugh at

   3. ஒப்பபாதல்; to be equal, similar எழிலிவான மெள்ளினன் றரூஉம். (தொல்,பொருள்.289.உரை);.

ம. எள்ளுக

     [எள் → எள்ளு.]

 எள்ளு2 eḷḷudal,    6.செ.குன்றாவி, (v.t.)

   தள்ளுதல் (யாழ்.அக.);; to omit discard.

ம. எள்ளுக.

     [இள் → எள்- எள்ளு.]

எள்ளுண்டை

 எள்ளுண்டை eḷḷuṇṭai, பெ. (n.)

எள்ளுருண்டை பார்க்க;see ellurundai.

   ம. எள்ளுண்டை;க. எள்ளுண்டெ

     [எள்ளுருண்டை → எள்ளுண்டை)

எள்ளுநர்

எள்ளுநர் eḷḷunar, பெ. (n.)

   இகழ்பவர்; scomers revilers

     “எள்ளுநர்கள் சாய’ (சீவக.847);.

மெலாம் யாம்” (சைவச.பாயி.7);.

   9. நூல் தெறிதல்; to snap, as a carpenter’s line for making board.

     “எற்றுநூல்போன்று’ (நைடத.சந்திரோ.33);. 10 எழுப்புதல் (திவா.);;

 to raise.

ம. எற்றுக

     [எறு → (எறி); → எற்று.]

எள்ளுந்தண்ணீருமிறை-த்தல்

எள்ளுந்தண்ணீருமிறை-த்தல் eḷḷundaṇṇīrumiṟaittal,    4.செ.குன்றாவி. (v.t.)

   நீத்தார்கடனிறுத்தல்; lo offer water with sesame seeds on sacrificial grass to the spirits of the dead

ம, எள்ளுநீர்.

     [எள்ளும் + தண்ணீரும் + இறை.]

எழல்

எழல்1 eḻl, பெ. (n.)

   துயரம்1 (யாழ்.அக);; grief.

ம. எழல், அழல்.

     [அழல் → எழல்.]

 எழல்2 eḻl, பெ. (n.)

   1. கிளர்ச்ச்; enthusiasm, elation

     “அமரை வேட்டுவந் தெழலுறு மனத்தினர்” (கம்பரா. கரன்வ.43);.

   2. புறப்படுகை; starting, departing.

     “சோதனை புரிவாரிற் றுண்ணென வெழலுற்றான்” (கந்தபு.தவங்கா.1);.

   3. தோன்றுகை; originating, emanating.

     “அங்கதிலையை வந்தெழலும்” (கந்தபு. திருநகர.72);. (செ.அக.);.

   ம. எழல்;   க. ஏழிகெ, ஏழ்கெ;   து. எர். கெல். எழகெ;தெ. லேயுட.

     [எழு + அல் – எழல்.]

எழவாங்கு-தல்

எழவாங்கு-தல் eḻvāṅgudal,    7.செ.கு.வி. (v.i.)

   தொலை விற்போதல்; to go to a distance

     “முகங்காட்டாதே எழவாங்கி யிருக்கை” (ஈடு.4,7,2);.

     [எழ + வாங்கு.]

எழாநிலை

எழாநிலை eḻānilai, பெ. (n.)

   யானை கட்டுங் கூடம்; stable for elephant.

     “எழாநிலை புகாஅ வினங்கடிசீற் றத்து… ….களிறு” (பெருங்.உஞ்சைக்.38,91);

     [எழாத + நிலை – எழாநிலை.]

எழாயிரம்

எழாயிரம் eḻāyiram, பெ. (n.)

   7000 என்னும் எண் (தொல்.எழுத்.391,உரை.);; the number 7000.

     [ஏழு + ஆயிரம் – ஏழாயிரம் – எழாயிரம்.]

எழால்

எழால்1 eḻāl, பெ. (n.)

   1. வல்லூறென்னும் பறவை; a kind of bird.

     “குடுமி யெழாலொடு கொண்டு கிழக் கிழிய” (பதிற்றுப்.36,10);.

   2. யாழெழுமின்னிசை; musical notes of theyal.

     “ஏழாலையன்னசொ லேந்திழை மாதரார்” (கந்தபு.திருக்கல்.15);.

   3. யாழ்; stringed musical instrument known as yal.

பயனுடைய யெழாற் கோடியர் தலைவ” (பொருந.56);.

   4. மக்கள் மிடற் றிசை; human voice.

     “களம்படு மெழாலினோடு” (திருவிளை.தருமிக்கு. 76.);.

   5. மயில்:peecock (செ.அக);.

     [எழு → எழா → எழால். எழால் = உயரப் பறக்கும் பறவை. எழால் → எடாகை → டேகை என்பன கொச்சை வழக்கு. எழால் எடுத்த குரலோசை. எழால் = உயரம் மிகுந்து எடுப்பான தோற்றமுடைய யானை.]

எழால்’

 அஅன்ன ஆவன்னா aaṉṉaāvaṉṉā, பெ. (n.)

   அரிவரி யென்னும் தமிழ் வண்ணமாலை (குறுங்கணக்கும் நெடுங்கணக்கும்);;  Tamil Alphabet.

   எழுத்துகளைக் கல்லா மக்கள், சிறப்பாகச் சிறுவர் சிறுமியர், எளிதாக ஒலித்துக் கற்கும் பொருட்டு, பண்டைத் தொடக்கப்பள்ளி யாசிரியர் உயிரும் உயிர்மெய்யுமாகிய இருவகைக் குறிலுக்கும்’அன்ன’ச் சாரியையும், இருவகை நெடிலுக்கும் அன்னா’ச் சாரியையும் ஏற்படுத்தினர்;     ‘அஆ’ என்னும் ஈரெழுத்தும் தமிழ் வண்ணமாலையின் முதலெழுத்துகளாதலின், அவை முதற்குறிப்பாகி, அம் முதற்குறிப்பே’அஅன்ன ஆவன்னா’ என்று வண்ணமாலைப் பெயராயிற்று. இது ‘alpha’, ‘beta’ என்னும் கிரேக்க இரு முதலெழுத்துகளும் சேர்ந்து”alphabetum’ என்று இலத்தீனிலும், ‘alphabet’ என்று ஆங்கிலத்திலும், வண்ணமாலைப் பெயராக வழங்குவது போன்றது;

   அ, இ, க, கி என்று ஒரு மாத்திரை யொலிக்குங்குறிலெழுத்துகளை விட்டொலிப்பது, சிறுபிள்ளைகட்குச் சற்று வருத்தமுற மூச்சு வாங்குவதால்,’அஅன்ன’ என்பது”ஆனா” என்றும் இஅன்ன என்பது’ஈனா’ என்றும், மாணாக்க நிலையிலும் பின்னும் ஒலிக்கப்பட்டுவந்தன. இவ்வொலிப்புமுறை குறில்களின் உண்மையான ஒலியளவை உடனே தெரிந்துகொள்ளத் தடையாயிருந்தமையின், இந்நூற்றாண்டுத் தொடக்கத்தில் அரசியற் கல்வித்துறையறிஞர், சாரியையின்றி ஒலிநூன் முறைப்படி அ, ஆ, இ, ஈ,… என்று ஒலித்துப் பயிலும் முறையைப் புகுத்திவிட்டனர். அதனால், இன்று ‘அஆ’ என்பது வண்ணமாலைப் பெயராக வழங்கி வருகின்றது. இது புணர்ச்சியில்’அவ்வா’ என்றாகும்;

எழினி

எழினி1 eḻiṉi, பெ. (n.)

   உறை; cover case

     “வினை யொன்றிணை … எழினியை நீக்கி” (சீவக.716);.

     [இழு → எழு → எழினி.]

 எழினி2 eḻiṉi, பெ. (n.)

   கடைவள்ளல்கள் எழுவருள் ஒருவன் (புறநா.158);; chief noted for philanthrophy, one of seven philanthrophists,

ம. எழினி.

     [எழு → எழுனி → எழினி. எமு = உயர்ச்சி. எழினி = நெடியவன், உயர்ந்தவன், மேலோன்.]

எழிற்கை

எழிற்கை eḻiṟkai, பெ. (n.)

ஆடலின்போது அழகுபெறக்காட்டும் கைஇ

 graceful gesture of the hand in dancing.

     “பிண்டியும் பிணையலு மெழிற்கையுந்தொழிற் கையும்’ (சிலப்.3.18);

     [எழில் + கை – எழிற்கை பொலிவு தோன்றக் காட்டும் கை எழிற்கை எனப்பட்டது.]

எழிலறிதல்

 எழிலறிதல் eḻilaṟidal, தொ.பெ. (vbl.n.) குறிப்பறிதல்:

 having an inkling, knowing the hint (அ.ஆக.); .

     [எழில்+ அறிதல்.]

எழிலி

எழிலி eḻili, பெ. (n.)

மேகம்: cloud:

     “எழிலி தானல்கா தாகி விடின்” (குறள்.17);.

ம. எழிலி.

     [எழு → எழுலி → எழிலி. எழு = மேலெழும்புதல், எழிலி – உயர எழும்பிச்செல்லும் மேகம்.]

எழில்

எழில்1 eḻil, பெ. (n.)

   1. ஒளி; brightness, lustre

   2. வண்ணம் (வின்);; colour, colouring, paint 3, அழகு;

 beauty, comeliness, gracefulness.

     “எழுதெழிலம்பலம்” (பரிபா.1828);.

   4. தோற்றப்பொலிவு; imposingappearance.

     “நுண்மானுழைபுல மில்லா னெழினலம்’ (குறள்.407);.

     [எல் = ஒளி. எல் → எழ் + இல் – எழில் ‘இல்’ சொல்லாக்க ஈறு.]

 எழில்2 eḻil, பெ. (n.)

   இளமை (சூடா);; youth (சூடா.);.

   2. பருமை; bigness, bulkiness,

     “எழிற்கலை புலிப்பாற் பட்டென” (புறநா.23);.

   3. வலி (பிங்.);: strength

   4. திறமை; ability.

   5. உயர்ச்சி; height loftiness, elevation

     “பகட்டெழின் மார்பின் (புறநா.13);.

   6. குறிப்பு; int எழிலறியாதவன் (வின்.);.

   7. வெல்லும் சொல் (சாமுரிய மொழி);; witticism, epigram.

ம. எழில் க. து. எட்ட மால், ஏடு.

     [எல் → எழு → எழில்]

எழில்காட்டு-தல்

எழில்காட்டு-தல் eḻilkāṭṭudal,    5.செ.கு.வி. (v.i.)

   குறிப் புக் காட்டுதல் (வின்);; to give inkling to hint .

     [எழில் + காட்டு.]

எழில்சொல்லு-தல்

எழில்சொல்லு-தல் eḻilcolludal,    8.செ.குன்றாவி, (v.t)

குறிப்பிற் சொல்லுதல் (வின்.);

 to him by words, allude to, (செ.அக.);.

     [எழில் + சொல்லு.]

எழில்பிடி-த்தல்

எழில்பிடி-த்தல் eḻilpiḍittal,    4.செ.குன்றாவி. (v.t.)

நறுமணத்தால் கவரப்படுதல் (யாழ்.அக.); to be attracted by smell (யாழ்.அக.);. (செ.அக.);.

     [எழில் + பிடி]

எழு

எழு2 eḻu, பெ. (n.)

   1. தூண் (திவா.);; column, pillar

   2. கதவை உள்வாயிற்படியிலே தடுக்கும் மரம், (அஃது); கணையமரம்; cross-bar of wood set to a door

     “ஊடெழுப் போக்கி” (பெருங்.உஞ்சைக். (திவா,);:

   3. படைக்கலவகை (திவா.);: weapon

ம, எழு.

     [ஏழ் → எழு.]

 எழு3 eḻu, பெ. (n.)

   எஃகு; Steel (சாஅக.);

     [எழுக → எழு.]

எழு4

 elu,

கு.பெ.எ. (adj.);

   எழு; numeral. seven

     “எழுமை எழுபிறப்பும் உள்ளுவர்” (குறள்,107);

     [ஏழு → எழு, கூட்டுச் சொல்லின் முன்னுறுப்பாகும் நெடுமுதல் எண்ணுப்பெயர்கள் குறுமுதலாகும் என்னும் சொற்பிறப்பு நெறி முறைப்படி எழு → எமு எனக்குறுகியது.]

எழு-தல்

எழு-தல் eḻudal, , 2.செ.கு.வி. (v.i.)

   1. எழுந்திருத்தல்; to rise, as from a seat or bed.

   2. மேல் எழும்புதல்; to ascend, as a heavenly body, to rise by one’s own power, as a bird, to ascend, by buoyancy, as a balloon

   3. தோன்றுதல்; to appear, arise, originate,

     “அமிழ்தெழக்கடைமின்” (கம்பரா.அகலி:21);.

   4. புறப்படுதல்; to start, as from a dwelling

     “எம்பெரு முதல்ல நீ யெழுதியால்” (கந்தபு.சரவண.4);.

   5. தொழிலுறுதல்; to function

     “காலுமெழா'” (திவ்.பெரியாழ்.5.3.5);.

   6. மனங்கிளர்தல்; to be excited, roused

     “ஒள்வாட்டானை யுருத்தெழுந்தன்று” (புவெ3:2);.

   7. மிகுதல்; to increase, swell,

     “எழு மரவக் கடற்றானையான்” (பு.வெ.7.6);,

   8. வளர்தல்; to grow, increase in stature, as a tree, to rise, as a building;

 to stature, swell, as breasts.

     “எழுகிளை மகிழ்ந்து’ (சீவக.330);

   9. உயிர்பெற்றெ முதல்; to become resuscitated, return to life.

     “அந்நிலை யெழும்வகை யருள்செய் தானரோ” (கந்தபு:திரு விளை.78);.

   10. துயிலெழுதல்; to awake,

     “அரியின் இனமெழுந்தன” (கந்தபு.குமார,59);.

   11. பரவுதல்;   10 spread, as fame or rumour

     “நாமத் தன்மை நன்கனம் படியெழ” (பரிபா.15:25);.

   12. தொடங்குதல்; begin, commence:

     “இன்னாமை வேண்டி னிரவெழுக” (நான் மணி.17);

   ம. எழுக;   க. எழ், ஏழ், ஏழு;   கோத எட்வி;   துட. நட்;   குட ஏள்;   து. எர்குனி;   தெ. எக்குட லேச்சு;   கொலா, லெக;   நா. லேப்;   மால். இலெ;பட எல்லு,

     [எ → ஏழ் → ஏழு → எழு → எழுதல், (சு.வி.76);.]

எழுகடல்

எழுகடல் eḻugaḍal, பெ. (n.)

   ஏழுகடல் (கந்தபு:அண்ட கோச.20);; seven concentric seas of the terrestrial sphere,

உப்புக்கடல், கருப்பஞ் சாற்றுக்கடல், கட்கடல், நெய்க்கடல், தயிர்க்கடல், பாற்கடல், நன்னீர்க்கடல்.

எழுகளம்

எழுகளம்1 eḻugaḷam, பெ. (n.)

   ஆண்டு அறுவடை முடிவு; conclusion of the annual harvest (தஞ்,);.

     [எழு + களம் எழுதல் = புறப்படுதல், பயன்பாடுநிறைவுற்று வெளியேறுதல்.]

 எழுகளம்2 eḻugaḷam, பெ. (n.)

   போர்க்களம்; battle-field (ஈடு.);.

     [எழு = எழுதல், போருக்கு எழுதல் எழு + களம் – எழுகளம் (வினைத்தொகை);.]

எழுகு

 எழுகு eḻugu, பெ. (n.)

   எஃகு உருக்கு; steel (சா.அக.);.

     [எஃகு → எய்கு → எழுகு.]

எழுகுபொடி

 எழுகுபொடி eḻuguboḍi, பெ. (n.)

எஃகுப்பொடிபார்க்க;see ekkuppodi.

     [எஃகு → எழுகு + பொடி எஃகு → எய்கு → எழுகு எனத்திரிந் தது கொச்சைத் திரிபு.)

எழுகுவெட்டிரும்பு

 எழுகுவெட்டிரும்பு  eḻuguveṭṭirumbu, பெ. (n.)

எஃகு வெட்டிரும்பு பார்க்க;see ekkuwettirumbu.

     [எஃகு → எய்கு → எழுகு + வெட்டு = இரும்பு.]

எழுக்காம்பு

 எழுக்காம்பு eḻukkāmbu, பெ. (n.)

   உருக்குலக்கை; peste made of steel (சப.அக);.

     [எழு + எஃகு. எழு + காம்பு.]

எழுச்சி

எழுச்சி1 eḻucci, பெ. (n.)

   1.

     “எழுகை;

 rising, ascent, elevation.”தண்பிறையெழுச்சிகண்ட சலநிதியெனவே” (பாரத.சம்பவ.69);.

   2. புறப்பாடு; starting, as of an ido.in procession,

     “அரண்தெழுச்சிக்கு” (கோயிற்பு:திரு விழா.41);.

   3. பள்ளி யெழுச்சிப்பாட்டு: song sung at dawn to rouse from sleep.

     “படரிருட் கழிச் தெழுச்சி பாடுவார்கள்” (சேதுபு.முத்தீர்த்த:37);.

   4. தோற்றம்; origin birth, appearance.

     “மீண்டெழுச்சி வியனிலத் தில்லையால்” (சேதுபுசேதத52);.

   5. தொடக்கம்; beginning

     “இறுமுறை யெழுச்சியி னெய்துவதெல்லாம்” (சீவக.333);,

   6. காது நோய்வகை; inflammation of the ear, otitis, esp, Meatus, auditorius, externus.

   7. எழுச்சிக் கண்நோய் (வின்); பார்க்க;see elucci-k-kannoy

   8. முயற்சி; effort, activity.

   ம. எழிச்சி;க. எழிகெ, எழ்கெ. து. எர்கெ, எர்கெலு.

     [எழு → எழுச்சி.]

 எழுச்சி2 eḻucci, பெ. (n.)

தோற்றப்பொலிவு: physical charm. [எழு → எழுச்சி.]

எழுச்சிக்கண்நோய் eluci-k-kannoy. பெ. (n); கண் கூச்ச முண்டாக்கும் நோய். (இங்.வை.362); infammation of the eyes causing sensitiveness to light (செ.அக.);.

     [(எழுச்சி + கண் + நோய்.]

எழுச்சிகொட்டு-தல்

 clucci-kottu

   5.செ.கு.வி. (v.i.);

   புறப்பாட்டுக்குரிய இசைக் கருவிகளை முழக்குதல்; to sound the appropriate musical instruments to herald the starting, as of an idol or a king in procession.

     “வருகிறாரென்று எழுச்சி கொட்டா திருக்க” (தில்.திரு நெடுந்:21,வியா,பக்.182);.

     [எழுச்சி + கொட்டுதல்.]

எழுச்சிபாடுவான்

எழுச்சிபாடுவான் eḻuccipāṭuvāṉ, பெ. (n.)

   திருப்பள்ளி யெழுச்சி பாடுவேன்; one who sings at dawn to awaken aprince, or any great personage.

     “எழுச்சிபாடுவார்கள் பாடல்கேட்டு” (சேதுபு.முத்தீர்த்த.37);,

     [எழுச்சி + பாடு + ஆன்.]

எழுச்சிமுரசம்

 elucci-mபrasam.

பெ. (n);

   1 பள்ளியெ முச்சி முரசம்; drum beaten at dawn to awaken a king or commandant or to rouse a garrison

   2. பிறப்பாட்டு முரசம்; drum beaten just before the starting of the procession of an idol.

     [எழுச்சி + முரசம்]

எழுஞாயிறு

எழுஞாயிறு eḻuñāyiṟu, பெ. (n.)

   1. ஞாயிறு புறப்பாடு; rising sun,

   2. ஞாயிறு தோன்றும்போது உண்டாகி மறையும் வரையுமுள்ள தலைநோய் (சீவரட்);, headache which begins at sunrise and continues till sunset (செ.அக.);.

     [எழு + ஞாயிறு.]

எழுதகம்

எழுதகம் eḻudagam, பெ. (n.)

   1 சிற்பவேலை வகை; cornice work.

   2. தூணினடிக்கல்; ornamental stone base for a pillar (LOC);.

     [எழு → எழுதகம்.]

எழுதரு-தல்

எழுதரு-தல் eḻudarudal,    8.செ.கு.வி. (v.i.)

   எழும்புதல்; to rise, stand.

     [எமு + தரு.]

எழுதாக்கிளவி

 எழுதாக்கிளவி eḻutākkiḷavi, பெ. (n.)

   திருமறை; The Vedas, as unwritten and handed down orally,

     [எழுதாத + கிளவி-எழுதாக்கிளவி (எழுதாதசொல், எழுதாத மொழி.]

எழுதாமறை

 எழுதாமறை eḻutāmaṟai, பெ. (n.)

எழுதாக்கிளவி பார்க்க;see eludakkilavi.

     [எழுதாத + மறை]

எழுதிக்கொடு-த்தல்

எழுதிக்கொடு-த்தல் eḻudikkoḍuddal,    4. செ.குன்றாவி. (v.t.)

   எழுத்து மூலமாகத் துணை செய்தல் (ஆதரவு கொடுத்தல்);; to grant in writing, to write and deliver, as a voucher, an agreement a contract

திருக்கண்களுக்காயிற்று அநந்யார்கமாக எழுதிக்கொடுத்தது” (ஈடு.7.3,3);.

     [எழுதி + கொடு.]

எழுதிக்கொள்(ளு)-தல்

எழுதிக்கொள்(ளு)-தல் eḻudikkoḷḷudal,    7.செ.குன்றாவி. (v.t)

   1. பதிவு செய்தல்; to enrol

     “புதிதாக வின்னமுநீ சிலசேனை யெடுத்தெழுதிக் கொள்கென்றான்” (திரு விளை.மெய்க்கா.5);.

   2. அடிமையாக்குதல்; to make one a bond slave by registration.

     “இவ்வொப்பனையழகாலே எழுதிக்கொள்வது அனந்த வைநதேயாதி களை யாயிற்று” (ஈடு.2.3.9);.

   3. எழுத்து மூலமாக விண்ணப்பித்தல்; to make a written submission to, petition, a great person.

     [எழுதி + கொள்.]

எழுதிவை-த்தல்

எழுதிவை-த்தல் eḻudivaiddal,    4.செ.குன்றாவி, (v.t.)

   பதிவு (சாசனம்); செய்துவைத்தல்; to register;

 write and keep for a memorandum, write and leave behind for the use of others, as a will.

     [எழுதி + வை.]

எழுது-தல்

எழுது-தல் eḻududal,    5.செ.குன்றாவி, (v.t.)

   பூசுதல்; to gild.

     “செம்பொனா லெழுதி வேய்ந்த” (தேவா6.8);.

     [இழு → எமு → எழுது.]

எழுது1-தல் eludu. 10.செ.கு.வி. (

எழுது1-தல் eludu. 10.செ.கு.வி. (110 eḻududalceguvi, பெ. (v.i.)

அழுந்திப்

   பதிதல்; to become indented by pressure.

     “இருவர் நெற்றியு மெழுதின சிலகனை” (பாரத.பதின்மூன்.89);.

     [இழு → எழு → எழுது.]

எழுது3-தல்

 eludu-,

   5.செ.குன்றாவி, (v.t.);

   1. ஒவியம் வரைதல்; to paint, draw எழுதுங்காற் கோல்காணாக் கண்ணேபோல்’ (குறள்.1285);.

   2. பாவைமுதலியன செய்வித்தல்; to produce by art, to sculpture, as an image.

   3. எழுத்துவரைதல்; to write.

   4. இயற்றுதல்; to write as author, to compose.

அவன் ஒரு நூல் எழுதியுள்ளான்.

   5. நெறியேற்படுத்தல்; to foreordain.

 k

 presdestine as Brahmāby writing on the head

     “இட்டமுடனென்றலையிலின்னபடியென்றெழுதி விட்ட சிவனும்” (தனிப்பா.1.1.19,1);.

   ம. எழுதுக;கோத எள்தி குட. எளித்.

     [இழு → எழு → எழுது]

எழுதுகல்

 எழுதுகல் eḻudugal, பெ. (n.)

   பெயர்பொறித்த முத்திரைகள் செய்யப் பயன்பட்ட மாவுக்கல்; grey Soft stone now used for making domestic utensils – potstone, but originally used for making seals by carving or scratching the surface inscribing proper names In ancient days since Indus civilisation.

     [எழுதுகல் + எழுது கல்- எழுதுகல் எழுதுவதற்கு அல்லது முத்திரை பதிப்பதற்குப் பயன்பட்ட மாவுக்கல்.]

எழுதுகொடி

எழுதுகொடி eḻudugoḍi, பெ. (n.)

   முலைமேல் எழுதுந் Q&minuoso; outline of creeping plant drawn in sandal paste on a woman’s bosom, as an adornment (poa,

மேலே எழுதுகொடியாக எழுதி (சீவக.850.உரை.);.

     [எழுது + கொடி – எழுதுகொடி = ஒவியமாக வரைந்த கொடி.]

எழுதுகோல்

எழுதுகோல் eḻuduāl, பெ. (n.)

   1. ஓவியம் வரையும்

 Gameo (திவா.);;

 painter’s brush, pencil.

   2. எழுத்து வரையுங்கோல் (பிரபுலிங் துதி.16);; writing reed

ம, எழுத்து கோல்.

     [எழுது + கோல்.]

எழுதுநாணல்

எழுதுநாணல் eḻudunāṇal, பெ. (n.)

   சீவி மைதொட்டெழுதுவதற்குப் பயன்படுத்தப்படும் ஓர் வகை கொறுக்கை நாணல்; pen grass or pen reed which grows to 6-10 ft high and smooth and erect.

     [ எழுது + நாணல்]

எழுதுபடம்

 எழுதுபடம் eḻudubaḍam, பெ. (n.)

   திரையோவியம்; picture, painting on a canvas, paper or board (செ.அக.);.

     [எழுது + படம்]

எழுதுபொருள்

 எழுதுபொருள் eḻuduboruḷ, பெ. (n.)

   எழுதுவதற்குப் பயன்படும் பொருள்கள்; writing-materials, stationery.

     [எழுது + பொருள்.]

எழுதுவரிகோலம்

எழுதுவரிகோலம் eḻuduvariālam, பெ. (n.)

) எழுதுவ ரிக்கோலம் பார்க்க;see eluduvarikkam

     “எழுதுவரி கோல முழுமெய முறீஇ” (சிலப்5,226);

     [எழுது + வரி + கோலம்]

எழுதுவரிக்கோலம்

எழுதுவரிக்கோலம் eḻuduvarikālam, பெ. (n.)

மகளி ராகத்து எழுதுங் கோலம் (சிலப்.5.226.அரும்.);: ado. rnment of the breasts, as eludu-kodi.

     [எழுது + வரி + கோலம், எழுதுதல் = வரைதல், வண்ணம் பூசுதல் வரி = புலளவு, ஒப்பனை, வண்ணம் பூசி உடை அணிகல ஒப்பனை செய்த கோலம்.]

எழுதுவோன்

 எழுதுவோன் eḻuduvōṉ, பெ. (n.)

எழுத்துக்காரன் பார்க்க;see eluttukkāraṇ.

     [எழுது → எழுதுபவன் → எழுதுவோன்.]

எழுத்தச்சன்

 எழுத்தச்சன் eḻuttaccaṉ, பெ. (n.)

   மலையாள மொழி யின் எழுத்தை யுருவாக்கிய புலவர்; poet who designed the script for Malayalam language.

     [எழுத்து + அச்சன் – எழுத்தச்சன். அத்தன் → அச்சன்.]

எழுத்தச்சு

 எழுத்தச்சு eḻuttuaccaṉeḻuttaccaṉattaṉaccaṉeḻuttaccu, பெ. (n.)

   அச்சிட உதவும் எழுத்தமைந்த உரு (இராட்);; letter-type

எழுத்தடை-த்தல்

எழுத்தடை-த்தல் eḻuttaḍaittal,    4.செ.குன்றாவி, (v.t)

   மந்திரங்களின் எழுத்துகளை அவ்வவற்றிற்குரிய சக்கரங்களினறைக்குட் பொருந்த எழுதுதல்; to enclose the letters of a mantra or stanza within a diagram

     [எழுத்து + அடை]

எழுத்ததிகாரம்

 எழுத்ததிகாரம் eḻuddadikāram, பெ. (n.)

 orthography (செ.அக.);.

     [எழுத்து-அதிகாரம்.]

எழுத்தந்தாதி

 எழுத்தந்தாதி eḻuttandāti, பெ. (n.)

எழுத்தீறு தொடங்கி பார்க்க;see eluttru-todangi.

எழுத்தன்

 எழுத்தன் eḻuttaṉ, பெ. (n.)

   எழுதுபவன் எழுத்துக்காரன்; writer, scribe. (சேரநா.);.

ம. எழுத்தன்.

     [எழுத்து + அன் – எழுத்தன்.]

எழுத்தம்மை

 எழுத்தம்மை eḻuttammai, பெ. (n.)

   ஆசிரியைஇ எழுத்து கற்பிக்கும் பெண்; woman-eacher (சேரநா.);.

ம, எழுத்தம்ம

     [எழுத்து + அம்மை – எழுத்தம்மை.]

எழுத்தறிவு

 எழுத்தறிவு eḻuttaṟivu, பெ. (n.)

எழுதவும் படிக்கவும் பழகும் பயிற்சி (வின்);: art of reading and writing.

     [எழுத்து + அறிவு.]

எழுத்தலிசை

எழுத்தலிசை eḻuttalisai, பெ. (n.)

   எழுத்தோசையாகாத இருமல், தும்மல் முதலியலை; sounds not reducible to writing as a cough, sneeze, etc;

 Inarticulate sounds

     “எழுத்த லிசையினை (இலக்.வி.755);.

     [எழுத்து + அல் + இசை, எழுத்தலிசை “அல்” எ.ம.இ.நி.]

எழுத்தாணி

எழுத்தாணி eḻuttāṇi, பெ. (n.)

   1. ஒலையிலெழுதுதற்குரிய இருப்பாணி; stylus for writing on oaimyra leaf

     “அங்கூரெழுத்தாணி தன்கோடாக” (பாரததற்சிறப் புப்.1);.

   2. எழுத்தாணி போன்ற பூவுள்ள ஒருவகைப் பூண்டு (பதார்த்த 312);:

 style plant, having a style-like flower.

ம. எழுத்தாணி,

     [எழுத்து + ஆணி.]

எழுத்தாணிக்கள்ளன்

எழுத்தாணிக்கள்ளன் eḻuttāṇikkaḷḷaṉ, பெ. (n.)

   கள்ளக் கணக்கு எழுவோன்; one who fabricates accounts.

     “எழுத்தாணிக்கள்ளர்

 accounts

பிரட்டெல்லா முன்காரணமே’ (சரவண.பணவிடு.160);.

     [எழுத்தாணி + கள்ளன்.]

எழுத்தாணிக்குருவி

 எழுத்தாணிக்குருவி eḻuttāṇikkuruvi, பெ. (n.)

   மரங்கொத்திக் குருவி (இ.வ.);; wood-pecker.

     [எழுத்தாணி + குருவி,]

எழுத்தாணிக்குருவி

எழுத்தானந்தம்

எழுத்தானந்தம் eḻuttāṉandam, பெ. (n.)

   பாடப்படு வோன் பெயரைச் சார்த்தி எழுத்தளபெழப் பாடுப்வதாகிய செய்யுட் குற்றம் (யாப்.வி.96.பக்.518); (Pros);; use of alabedal in the name of a hero, believed to portend evil, a fault in versification.

     [எழுத்து + ஆனந்தம் (குற்றம்);.]

எழுத்தாளன்

எழுத்தாளன் eḻuttāḷaṉ, பெ. (n.)

   1. புலவன்: Scholar, savant மதுரை எழுத்தாளன் சேந்தம்பூதனார் (குறுந்-90, குறிப்பு);.

   2. எழுதுவோன் (வின்.);; writer clerk,

   3. தமிழில் இலக்கியப் படைப்புகளை இயற்றுபவன்; creative writer.

ம, எழுத்தாசானி,

     [எழுத்து + ஆளன் – எழுத்தாளன் (மொழித்திறம் கைவரப் பெற்றதால் எழுத்தாளும் உரம் பெற்றவன்);.]

எழுத்திடு-தல்

எழுத்திடு-தல் eḻuddiḍudal,    20.செ.கு.வி. (v.i) கைச்சாத்திடுதல்; to put one’s signature

     “எழுத்திட்டுத்தாருங்கோள்’ (ஈடு.5.10.4);.

     [எழுத்து + இயல்.]

எழுத்தின்கிழத்தி

 எழுத்தின்கிழத்தி eḻuttiṉkiḻtti, பெ. (n.)

   கலைமகள்: (பிங்.);; Sarasvati the goddess of letters.

எழுத்தியல்க்கணம்

 எழுத்தியல்க்கணம் eḻuttiyalkkaṇam, பெ. (n.)

   எழுத்தினகத் திலக்கணத்தைக் கூறும் பகுதி; section of orthography which treats about the sounds of speech, their classification etc.

     [எழுத்து + இயல்.]

எழுத்திலக்கணம்

எழுத்திலக்கணம் eḻuttilakkaṇam, பெ. (n.)

   எழுத்தின் இலணத்தைக் கூறும் பகுதி; section of the traditional grammar dealing with the alphabets.

     “எழுத்திலக்கணத்துச் சந்தியொடு” (தண்டி.114);.

     [எழுத்து+ இலக்கணம்]

எழுத்திலாவோசை

 எழுத்திலாவோசை eḻuttilāvōcai, பெ. (n.)

எழுத்தலிசை (திவா.); பார்க்க;see eluttalisai.

     [எழுத்து + இலா + ஓசை.]

எழுத்தீறுதொடங்கி

எழுத்தீறுதொடங்கி eḻuddīṟudoḍaṅgi, பெ. (n.)

   செய்களில் ஓரடியின் ஒரடியின் ஈற்றெழுத்து அடுத்த அடியின் மு. லெழுத்தாக வரத்தொடுப்பது (யாப்.வி.52);; concate nation in the letter at the end of a line of verse begin the next line,

     [எழுத்து + ஈறு + தொடங்கி. வடமொழியாளர் இதனை எழுத்தந்தாதி என்பர்.]

எழுத்து

எழுத்து1 eḻuttu, பெ. (n.)

   1. ‘ஒவியம்; painting, picture drawing

     “இன்னபல பல வெழுத்து நிலை மண்டபம் (பரிபா.1953);.

   2. ஒவிய வடிவில் எழுதப்பட் உருவெழுத்து; pictograph

   3. ஒருகோட்டு ஒவியமா எழுதிச் சுருக்கப்பட்ட அசையெழுத்து:

 sylabic typ of writing known as logo-syllabic and morpho-syllabic.

     [இழு → இழுது → எழுது → எழுத்து = எழுதுதல் ஒவிய வரைதல், எமுத்து பார்க்க;see eluttu2]

 எழுத்து3 eḻuttu, பெ. (n.)

   1 எழுதப்பட்ட குறிப்பு; writien statement உனக்குப் பணம் கொடுக்க முதலாளி எழுத்து வேண்டும்.

   2. தலையெழுத்து; fancied letters on the skul

     “எழுத்தை யழுத்து மெழுத் தறியாரே’ (திருமந்.2721);.

   3. எழுத்திலக்கணம் மொழியிலக்கணம்; grammar ‘”எண்ணென்ப வேனை எழுத்தென்ப” (குறள்.392);,

   4. கல்வி; letter, science, learning

     “எழுத;

தெனு மிமையாவுள்ளக்கண்டிறந்திட்டான்’ (இரகு.இர குவுற்.37);.

   5. கையெழுத்து; signature

     “சுந்தரமாற னென்றே மருவிய வெழுத்துமிட்டான்” (திருவா லவா.4.27);.

   6. ஆதாரச்சிட்டு; bond, writen engagement ஓர் எழுத்துமில்லாமல் பணங்கொடுத்தான் (உ.வ.);.

   7. பெயர்ப்பதிவு; entry, enrolment 9, மடல் (கடிதம்);;

 letter, written message (அபி,சிந்);,

   10. கையிலுள்ள கோடுகள், கைவரி (ரேகை);; lines in the palm of the hand

     “இலமென மலரா னெழுத்துடயங்கையின்” (பெருங்.வத்தவ.10-107);.

ம. எழுத்து: கோத. என்தி: குட. எளிதி.

     [எழுது → எழுத்து. எழுத்து = எழுதப்படுவது. எழுத்துக் கலையினால் வளர்ந்த கல்வி கல்விச் செல்வத்தை வழங்கும் மொழியின் கட்டமைப்புக்கான எழுத்திலக்கணம்.]

எழுத்து”

எழுத்து” eḻuttu, பெ. (n.)

   1. சொல்லின் அகவுறுப்பாகி. ஒலியனைக் கட்புலனாக வரைந்து காட்டும் வரிவடிவம்: letter, character representing phoneme or basic sound used in speech.

     “ergp#gd பிரிந்திசைத்தல் (தொல்,சொல்.201);.

   2. மொழியின் வண்ண மாலை குரிய குறுங்கணக்கு எனப்படும் முதலெழுத்துள் அல்லது நெடுங்கணக்கு எனப்படும் மொத்த எழுதுகளின் வரிவடிவத் தொகுப்பு; alphabet, alphabet, set of letter used in a language

     “எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி” (தொல் எழுத் பாயி.5);.

     [இமு → எழு → எழுது → எழுத்து. எழுது → ஒவியம் வரைதல் இமு – கோடிமுத்தல். எழுத்து படவெழுத்து அசையெழுத்து முதலெழுத்து போன்றன வரைதல்.]

எழுத்துகளை முத்திரைகளாகச் செய்து பதித்த காலத்தில் எழுது என்னும் சொல்லுக்கு அழுந்துதல், அழுத்துதல் பொருள்: தோன்றின. அழுந்துதல்

     “இருவர் நெற்றியு மெழுதிவு சிலகனை” (பாரத.1389); அழுத்துதல் –

     “தொழுது தாளி னைச் செய்யபஞ் செழுதினும் (பாரத சம்பவ.8);.

முந்து தமிழின் தொடக்கக் காலத்தில் படவெழுத்தும் (pictora Pic); அதனினின்றும் தலைக்கழகக்காலத்திய அசையெழுத்தும் (syllabic); அதனிலின்றும் இரண்டாம் தமிழ்க்கழக இறுதிக்கால தில் முப்பது முதலெழுத்துகளாகிய மூலத்தமிழ் அகரநிரற்குறி பீட்டு எழுத்துகளும் தோன்றியனவாகக் கொள்ளலாம்.

எழுத்துக்குள் உருவங்கள்:

உலகில் பேசப்படும் சற்றொப்ப 3000 மொழிகளுள்

   19. மொழிகளே வரிவடிவங்கள் கொண்டுள்ளன. வரிவடிவங்கள்அனைத்தும் படவெழுத்துகளிலிருந்து உருவானவை. தமிழின் படவெழுத்துகள் இருந்தன என்பதற்கும். அவையே கருத்தென

ழுத்தாகவும் அசையெழுத்தாகவும் இன்றைய வரியெழுத்தாக வும் வளர்ந்தன என்பதற்கும். இலக்கணச் சான்றுகளும் கல் வெட்டுச் சான்றுகளும் கிடைத்துள்ளன.

எழுத்துகளையும் உருவங்களையும் புடைப்புச் சிற்ப வடிவில் செதுக்கி (பள்ளமும் மேடுமாக); எழுதுவதற்குப் பயன்பட்ட மாவுக்கல்லுக்கு ‘எழுதுகல்’ என்றே பழங்காலத்தில் பெயரிருந் தது. சிந்துவெளி முத்திரைகள் பெரும்பாலும் மாவுக்கல்லால் செய்யப்பட்டவை.

தமிழ்.தொடக்ககாலத்தில் சீனம் எகுபது மொழிகளைப்போல் படவெழுத்துகளில் எழுதப்பட்டது என்பதற்கு எழுத்து என் னும் சொல்லே சான்றாகின்றது. எழுதுதல் பழங்காலத்தில் ஒவியம் வரைதலையே குறித்தது.

     ‘கடவுள் எழுதவோ கல்தாரானெனின் என்னும் சிலப்பதிகார வரியில் எழுதுதல்’ ஓவியம் வரைதலையே குறித்தது. ஒவியத் தீட்டிய மண்டபம் ‘எழுத்துநிலை மண்டபம்’ எனப்பட்டது. பாறை, கவர். துணி ஆகியவற்றின் மீது ஓவியம் வரைந்த கோலெழுத்துக் காலம் முந்தியது. உருவங்களைச் செதுக்கியும் கீறியும் வரைந்த கண்ணெழுத்துக் காலம் பிந்தியது. சிந்து வெளி நாகரிக அழிபாடுகளில் கண்ணெழுத்துகள் கிடைக்கின் றன. ஒவிய உருவெழுத்துகள் கிடைக்கவில்லை. பன்னிரண்டு உருவங்கள் மட்டும் படவெழுத்து முறையின் எச்சங்களாகச் சிந்துவெளி எழுத்துகளில் நிலைத்துள்ளன. இதிலிருந்து சிந்து வெளி நாகரிகக் காலத்துக்கு முன்பே தமிழில் படவெழுத்து முறை தோன்றி நிலவியது என அறியலாம்.

படங்களாக வரையப்பட்ட உருவ வடிவங்களே பிற்காலத்தில் எழுத்து வடிவங்களாக மாறியுள்ளன. இதன் வண்ணம், உல கில் எம் மொழி எழுத்தாயினும் ஒவ்வோர் எழுத்தும் ஓர் உருவத்தின் படத்தை உள்ளடக்கியிருக்கிறது. அந்த உருவம் கண்ணுக்குப் புலப்படும் நிலைத்தினை, இயங்குதினைப் பொருள்களில் ஒன்றாயிருக்கும்.செமித்திய மொழியில் எழுத் துகளின் பெயர்கள் உயிரிகள் அல்லது பொருள்களின் பெயர்க ளாகவே அமைந்திருப்பது இதனை மேலும் உறுதிப்படுத்துகி றது. அம்மொழியில் B என்னும் வடிவம் வீட்டைக் குறிக்கும். வீட்டின் வடிவமாக அமைந்திருக்கும் எழுத்தும், வீடு (Beth beta என்றே பெயரிடப்பட்டுள்ளது. கிரேக்கரும் செமித்தியரிட மிருந்து இதனைக் கடனாகப் பெற்றனர் இது மேலையாரிய மொழிகளில் பி B எனக் குறுகியது.’A என்னும் ஆங்கிலவெ முத்து மாட்டின் தலையையும் கொம்பையும் குறிப்பது ‘L’ என்னும் ஒலிப்புக்குரிய எகுபதிய எழுத்து முன்னாளில் ‘படுத்திருக்கும் அரிமா பல வடிவமாக எழுதப்பட்டதும். எகுபதிய மொழியில் இதற்கு லியோ என்று பெயர்

பழந்தமிழிலும் எகுபதிய மொழியிலும் வல்லுறு (Falcon); வடிவமே அகர ஒலிப்பினைக் குறிப்பதாக இருந்தது. எகுபதிய மொழியில் இதற்கு ‘ஆசோம்’. என்றுபெயர்.எகுபதியர் ‘நான்’ எனப்பொருள்படும் சொல்லுக்கு மாந்தரின் இருகால் வடிவத் தைக் குறியீடாகக் குறித்தனர். சிந்துவெளி எழுத்து முறையில் இருகால் வடிவம் நான் என்னும் பொருளிலிருந்து பிறகு ‘ந’ என்னும் ஓசைக்குரிய அசையெழுத்துக் குறியீடாகி விட்டது. பின்னாளில் அது ஐரோப்பிய மொழிகளில் I என்ற எழுத்தாக மாறிவிட்டது. எகுபதியர், பொனீசியர், கிரேக்கர் ஆகிய மூவரும் ‘D’ என்ற எழுத்தை விட்டின் கதவு வடிவமாக எழுதினர். தேனைக்குறிக்கும் Honey என்னும் சொல்லின் முன்னெழுத்தான ‘H’ முதலில் தேன் கூட்டின் வடிவமாகவும், பின்னர் ‘H’ என்றும் எழுதப்பட்டது.

     ‘M’ என்னும் எழுத்து தொடக்கக்காலத்தில்ஆந்தையின் தலைவ டிவாக எழுதப்பட்டது. செமித்தியர். நீரின் அலை வடிவில். ‘M’ எழுத்தையும் மீன் வடிவத்தில் ‘N’ எழுத்தையும் எழுதினர் ஏனெனில் அம்மொழியில் ‘மேம்’ தண்ணீரையும், ‘நூன்’ மீனையும் குறித்தன. செமித்திய மொழியில் ‘பே’ வாய் எனப்பொருள்பட்டதால் ‘P’ எழுத்து வடிவம் வாயின் படமாக வரையப்பட்டது. பொனீசியர், எகுபதியர், கிரேக்கர் ஆகிய மூவரும் ஊசியின் துளை வடிவில் ‘q’ என்னும் எழுத்தை எழுதினர் ப என்பது இலத்தீன் மொழியின் ‘V’ சோந்து ‘W’ ஆயிற்று. இது எகுபதிய மொழியில் பறவைக் குஞ்சின் வடிவமாக எழுதப்பட்டது.

ஐரோப்பிய மொழிகள் கிரேக்கச் சொற்களைக் கடன் வாங்கிய பொழுது கிரேக்கத்தின் வாயிலாகச் செமித்திய எகுபதிய படவெழுத்துக்களின் கருக்கமாகிய எழுத்தின் வரிவடிவங்கள் மேலையாரிய மொழிகளில் இடம்பெற்றன.

சீனர் இதுகாறும் படவெழுத்துகளைப் பின்பற்றுகின்றனர்

உலகப்பெருமொழிகளில் உள்ள அடிப்படைச் சொற்களின் எண்ணிக்கையை விட, சீன மொழியில் சொற்களின் எண் ணிக்கை குறைவாக இருந்தாலும் படவெழுத்துகளின் எண் ணிக்கை மிகுதியாக இருக்கிறது. 40,000 படவெழுத்துகளைக் கொண்ட சீன மொழி, சிந்துவெளித் தமிழைப்போல் அசையெ ழுத்து நிலையை யெய்தாததால், வரியெழுத்தாக வளர முடிய வில்லை. ஆயின், தமிழ் மொழி எழுத்து வடிவின் நான்கு நிலைகளையும் படிப்படியாக வளர்த்துக்கொண்டிருக்கிறது

தமிழின் உருவெழுத்து நிலை:

தமிழின் அனைத்து ஒலிப்புகளுக்கும் கூடாகவிருந்த உருவங் கள் சிந்துவெளி எழுத்துகளால் புலனாகின்றன. சிந்துவெளி எழுத்தில் 12 உருவெழுத்துகள் உருவங்களையே தெளிவாகக் காட்டுகின்றன. ஏனையவை அவற்றுக்குரிய உரு வடிவ மைப்பை உள்ளடக்கிய வரிவடிவங்களாக உள்ளன.

சிந்துவெளி எழுத்தில் அகரம் ஆணின் வடிவமாகவும், வல்லூறு என்னும் பறவை வடிவமாகவும் பிறகு வல்லுற்றின் இரு சிறகுகள் மட்டும் குறிப்பாகப் புலனாகும் வகையில் மேற் கோள் குறிபோன்றும் எழுதப்பட்டது. ‘ஆகார’ வடிவம் மாட்டின் தலையாகவும். ‘இ’ கரம் ஆந்தையின் வடிவமாகவும். ஈகாரம் வண்டு. ஈ. தேனி ஆகியவற்றின் வடிவமாகவும் ‘உகரம்’ காக்கையின் வடிவமாகவும், தளிரின் வடிவமாகவும், எழுதப்பட்டன என்று கருத இடந்தருகின்றது. ‘எகரம்’ கோழி யின் வடிவமாகவும், ஏணியின் வடிவமாகவும் ‘ஏகாரம்’ மான் அல்லது அம்பின் வடிவமாகவும் ‘ஐ’ கையின் வடிவமாகவும்

     “ஒகரம்” மயிலின் வடிவமாகவும் மயில் தோகையின் வடிவமா கவும்

     “ஓகாரம்” யாழின் வடிவமாகவும் எழுதப்பட்டிருக்கலாம். ஐந்து குறில் எழுத்துகளும் ஐம்பறவைகளைக் (பஞ்சபட்சி); குறிப்பது உருவ எழுத்துகளைக் குறிப்பனவாகக் கருத இடந்தருகிறது.

தொன்முது தமிழில் ‘க’ கரம் கலயத்தின் வடிவமாகவும் ‘சகரம் சேல் மீனின் வடிவமாகவும் ‘டகரம்’ சதுர அல்லது நீள்சதுரத் துணியின் வடிவமாகவும் ‘தகரம்’ மழைத்தாரையின் வடிவமாகவும் ண ன, ந, ஆகியன நாற்கால் விலங்கு. நான்கு கால்கள், நாய், நான் என்பவற்றின் குறியீடாகிய மாந்தனின் கால் அல்லது இருகோடுகள். தேன்கூடு போன்ற பலவடிவங்க ளாக இடந்தோறும் வேறுபடும் பாங்கினைக் கொண்டிருந்தன.

     ‘பகரம்’ கவித்து வைத்த மட்பாண்ட வடிவமாகவும் மகரம் மலை, மயில் ஆகியவற்றின் வடிவமாகவும் ‘யகரம்’ யா மரத்தின் வடிவமாகவும், ‘லகரம்’, ‘செல்’ (கறையான்); வடிவமாகவும் ‘ழகரம்’ தலைபருத்த புழுவின் வடிவமாகவும்

     “ளகரம்’காடியின் (உளியம்); வடிவமாகவும், தோலால் செய்த நீர்ப்பையின் வடிவமாகவும் ‘றகரம்’ ஆற்றின் வடிவமாகவும் எழுதப்பட்டன என்பதற்கு வரலாற்றுப்படிமுறைக்கு ஒத்த உருத்திரிபுகள் சான்றாகின்றன. மேற்கண்ட உருவங்களைச் சிந்துவெளி எழுத்துகளுடன் ஒப்பிட்டுக் காண்போர்க்கு இல் வுண்மை தெற்றெனப் புலப்படும்.

தமிழி (தமிழ்பிராமி); – தமிழ்ப் புலவர்களின் படைப்பு:

தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே தமிழ் எழுத்துகள் உயி ரும் உடம்புமாக முப்பது என்று வரையறை செய்யப்பட்டன இது யாரால் வரையறுக்கப்பட்டது. எக்காலத்தில் இது நிகழ்ந் தது. எங்கே முதன்முதல் செயற்பாடுற்றது என்னும் வினாக்க ளுக்கு விடைகாண்பது இன்றியமையாதது ஆகும்.

தொல்காப்பியர் தம் இலக்கண நூலை நூன்மரபு எனத் தொடங்கி மரபியலில் முடித்திருக்கிறார்.

     “என்மனார். என்ம னார் புலவர்” என்னும் கூற்றுகள் தொல்காப்பியத்தில் இடம் பெற்றுள்ளதால் தொல்காப்பியருக்கு வெகுகாலத்துக்கு முன்பே புலவர் பெருமக்கள் எழுத்துகளை உயிரெழுத்து மெய்யெழுத்து என வகைப்படுத்தியமை தெளிவாகிறது. தமிழ் எழுத்துகளைச் சீர்திருத்தி முப்பதாக்கியவர்கள் தமிழ்ப்புலவர் களே என்பதைத் தொல்காப்பியத்தால் உறுதிப்படுத்திக் கொள்ள முடிகிறது.

தொல்காப்பியர் காலத்திய தமிழ் எழுத்துக்கு இக்காலத்தார் தமிழி என்று பெயரிட்டுள்ளனர்.

இதனை வடபுலத்தார் பிராமி என்றனர்.

     ‘பிரம்மம் என்னும் சொல்லிலிருந்து ‘பிராமி’ என்னும் சொல் தோன்றியது. இதற்கு முதலாவது தலைமையானது, அடிப்ப டையானது. மூலமானது. சிறந்தது என்று பொருள்_பிரம முகூர்த்தம், பிரம குலம் (முதற்சாதி பார்ப்பனச்சாதி);, பிரமசரியம் (முதல் ஒழுகலாறு. பிரமசரியம். கிருகத்தம், வானப்பிரத்தம், சன்னியாசம் என்னும் நான்கு நிலைகளுள் முதல் ஆசிரமத்தைப் பின்பற்றுதல்); என்னும் சொற்களை நோக்குக.

பிராமி – முதலில் தோன்றிய எழுத்து என்பதே இதன் சரியான வேர்வழிப் பொருள் புலவர்களின் எழுத்து என்றிதனைக் கூறுவது வரலாற்றுப்பொருள். வரலாற்று ஆய்வாளரும் கல் வெட்டு வல்லுநருமான அறிஞர் பலர் Indian Paleography என்னும் நூலில் பிராமி என்பதற்குப் புலவர் எழுத்து என விளக்கம் தந்திருக்கின்றனர். இதிலிருந்து பிராமி எனப்படும் தமிழி எழுத்து தமிழ்க் கழகத்துப் புலவ்ர்களால் புதிதாகத் திருத்தியமைக்கப்பட்டது எனத் தெரிகிறது. சென்னைப் பல்க லைக்கழகத் தமிழகராதியில் பிராமி என்பதற்கு சமற்கிருதத் திற்கு அமைக்கப்பட்ட எழுத்து எனத் தரப்பட்டுள்ள விளக்கம் முற்றிலும் தவறானது. சமற்கிருதம் எழுதப்படாத மொழி, அதை முதன் முதலில் எழுதத் தொடங்கியபோது தமிழ் மொழியினமைப்பை முற்றிலும் நோக்கி உயிரெழுத்து மெய் யெழுத்து என வகைப்படுத்திக் கொண்டனர். மேலையாரிய மொழிகளில் இத்தகைய வகைப்பாடு இல்லை.

கி.மூ. மூன்றாம் நூற்றாண்டில் அசோகர் கல்வெட்டுகளில் காணப்பட்ட எழுத்துக்கு நாளடைவில், பிராமி எனப்பெயரிட்டனர். இது முற்றிலும் தமிழுக்குரிய எழுத்து வடிவம் என்று அவர்களுக்குத் தெரியாது. பிராமி எழுத்து தமிழ், பிராகிருதம், பாலி ஆகிய மூன்று மொழிகளை எழுதுவதற்கு அக்காலத்தில் பயன்பட்ட பொது எழுத்து எனினும் இது தமிழுக்கென்றே அமைந்த மூல வரிவடிவம். பிராமி எழுத்தில் அமைந்த கல்வெட்டுகள் அசோகர் காலத்துக்கும் முன்னதாகத் தமிழகத் தில் பொறிக்கப்பட்டுள்ளன.

பட்டிப்புரோலு அழகர்மலை, கொங்கர் புளியங்குளம் போன்ற இடங்களில் கி.மு. நான்காம், ஐந்தாம் நூற்றாண்டைச் சார்ந்த பிராமி கல்வெட்டுகள் கிடைத்துள்ளன இவற்றிற்குத் தமிழி எழுத்துகள் எனப்பெயரிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் கிடைத்துள்ள கல்வெட்டுகளில் மிகவும் பழமை யானவை தமிழ்நாட்டில் கிடைத்துள்ள பிராமி கல்வெட்டு களே. இந்தியா முழுமைக்கும் ஒரே எழுத்து வடிவமாகக் கையாளப்பட்டது, பிராமி ஒன்றே. அது தெற்கிலிருந்து வடக்குப் பகுதிகளுக்குப் பரவியுள்ளது என்று உறுதிப்படுகிறது. பாலி பிராகிருத மொழிகள் வேறு எழுத்து அமைத்துக் கொள்ளவில்லை. சமற்கிருத மொழியினரும் வேறு வழியின்றி இதனையே எழுத்து வடிவாகக்கொள்ள நேர்ந்தது. வருக்க எழுத்துக்களை மட்டும் புதிதாகச் சேர்த்துக் கொண்டனர்.

இந்தியா முழுவதும் ஒரே எழுத்து வடிவமாகத் திகழ்ந்த இந்த எழுத்துவடிவத்தை பிராமி என்று சொல்லாமல், தமிழ் எழுத்து என்று சொல்வதே முறையானது என்று தொல்பொ ருள் ஆய்வுத்துறையில் ஒய்வு பெற்ற அதிகாரியும் தொல்லெ ழுத்து ஆய்வில் வல்லுநருமான அறிஞர் சீனிவாசன் வெளிப்ப டத் தெரிவித்துள்ளார்

கி.மு. முதலிரு நூற்றாண்டுகளில் வாழ்ந்த சாதவாகன அரசர்க ளுள் வசிட்டி மகன் சதகன்னி வெளியிட்ட இருமொழி நாணயத்தில் ஒரு பக்கத்தில் தமிழிலும் மறுபக்கத்தில் பிராகி ருத மொழியிலும் அவன் பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறது ஆயினும் இருமொழிக்கும் பிராமி எழுத்து வடிவம் ஒன்றா கவே உள்ளது. மெளரிய மன்னர்களுக்கு முன்பு மகத நாடாண்டநந்தர் வெளியிட்ட காககளில் சிந்துவெளி எழுத்துக ளில் நந்தன் எனப்பெயர் பொறிக்கப்பட்டுள்ளது

யாழ்ப்பாணத்துக்கு அருகில் நடந்த அகழ்வாய்வில் பேராசிரி யர் இந்திரபாலர் கண்டெடுத்த முத்திரையொன்றில் ‘தீவு கோ’ என்னும் பெயர் மேலே சிந்துவெளி எழுத்திலும் கீழே பிராமி எழுத்திலும் பொறிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட மூன்று சான்று களிலிருந்து சிந்துவெளி எழுத்துக்குப் பிறகு பிராமி தோன்றி யது என்பதும் ஈழத்தில் இருவகை எழுத்தும் (பழைய சிந்துவெளி எழுத்தும் புதிய தமிழி (பிராமி); எழுத்தும்); ஒரே காலத்தில் புழக்கத்தில் இருந்தன என்பதும் வெளிப்படுகின் றன. சிந்துவெளி எழுத்திலிருந்து பிராமி எழுத்து வளர்ந்திருக் கிறது என்பதை அறிஞர் பலரும் ஒப்புக்கொள்கின்றனர்

பழைய சிந்துவெளி எழுத்து முறை உருவெழுத்திலிருந்து கருக்கப் பெற்ற அசையெழுத்து. இது பொதுமக்களே கண்ட றிந்த எழுத்து. இதனைத் திருத்தியமைக்கும் எண்ணம் கற்றவர் களிடையில்தான் தோன்றமுடியும். அதனையும் கல்வியில் சிறந்த புலவர் குழுவே செய்திருக்க முடியும் பாலி பிராகிருத மொழிகள் தோன்றுவதற்கு முன் எழுத்து வடிவிலிருந்த ஒரே

எழுத்தில் பின்பற்றப்படவில்லை. அவர்கள் மெய்க்கும் உயிர் மெய்க்கும் மெய்ம் மயக்கத்துக்கும் ஒரே எழுத்து வடிவத்தை (அசையெழுத்து);க் கொண்டிருந்தனர். அதிலிருந்து தமிழ்ப் புலவர்கள் தொல்காப்பியர் காலத்துக்கு முன்பு தமிழ் எழுத்தை உயிர், மெய், உயிர்மெய் எனப்பாகுபடுத்தியதை அறிய முடிகிறது.

தமிழில் முதலெழுத்துகளைச் சீரமைத்தவர்கள் தொல்காப்பியர் காலத்துக்குச் சற்று முந்தியவர்களாக இருந்திருந்தால் அவர்களுடைய பெயரைத் தொல்காப்பியர் குறித்திருப்பார். சிந்து வெளி எழுத்தின் இறுதிக்காலம் கி.மு.1750 எனக் கூறப்படுகிறது. தொல்காப்பியரின் காலம் கி.மு.700 பிராகிருத மொழி வளர்ச்சியடைந்த காலம் கி.மு.1000. தொல்காப்பியர் குறிப்பிடும் வடசொல் என்பது பிராகிருதச் சொல்லே. இதில் பிராகிருத வடிவமுற்றுத் தமிழில் புகுந்த சமற்கிருதச் சொல்லும் அடங்கும். எனவே கி.மு.1000க்கும் 1750க்கும் இடைப்பட்ட காலத்தில் சற்றொப்பக் கி.மு.1500 ஆண்டளவில் சிந்துவெளி அசையெழுத்திலிருந்து தமிழ் முதலெழுத்துகள் ‘தமிழி’ வடிவம் பெற்றன எனக் கருத முடிகிறது.

பிராமி எழுத்துக்குத் தமிழர்கள் முன்பே பெயர் வைத்திருந்தார் களா என்பது அனைவரும் தொடுக்கும் வினா. சிந்துவெளி நாகரிகக் காலத்திலேயே தமிழ் எழுத்துக்குக் கண்ணெழுத்து (சிலம்பு.2670); என்றும் கோலெழுத்து என்றும் பெயரிட்டிருந்தார்கள். எழுதப்படும் பரப்பில் கீறல் விழாமல் மையில் அல்லது வண்ணத்தில் தோய்த்து. தோல், துணி, ஆகியவற்றின் மீது எழுதுவது கோலெழுத்து. எழுதப்படும் பரப்பில் கீறல் அல்லது பள்ளம் விழுமாறு குழித்து எழுதுவது கண்ணெழுத்து. தமிழைத் தவிர அக்காலத்தில் உள்நாட்டில் வேறெழுத்து முறையின்மையின் இதற்குத் தமிழ் எழுத்து என்று பெயரிட நேரவில்லை. தமிழர்கள் பெயரிடாததால் பிறமொழியாளர் பிராமி எனப் பெயரிட்டு வழங்கினர். தமிழினத்தார்க்குத் தனித்த பெயரில்லாதபோது பிறர் நம்மைத் திராவிடர் என அழைத்தது போன்றது. இது. தமிழில் பிறமொழிச் சொல் புகுந்தால் நம் வரலாறே நமக்கு ஐயம் விளைவிக்கும் என்ப தற்கு இது நல்ல சான்றாகும்.

உலகமுழுவதும் முதுபண்டைக் காலத்தில் நிலவிய தொல் லெழுத்துகளைத் [epigraph] தொல்லெழுத்தியலார் ஆறுவ கையாகப் பிரித்து ஆய்கின்றனர்.

   1. படவெழுத்துமுறை: உருவப்படங்கள் அல்லது பொருள் களின்

தெளிவான வெளிப்பாடு

படவெழுத்துமுறை

   2. கருத்தெழுத்து முறை: பொருளைக் குறித்த உன்னிப்புகள் கருத்தியலுருக்கள் ஆகியவற்றைப்புலப்படுத்தல் – குறியீடு

கள் வாயிலாக

வியப்பு

பெரிய. பெரிய.. மலை

சிறிய… சிறிய ஆறு

கருத்தெழுத்து முறை

   3. ஒலிகொள்வடிவம்: ஒலியின் வரைகோட்டுக் குறியீடுகள், இவை மரபு வழிப்பட்ட கருத்துருக்களிலிருந்து பொருள்க ளுக்கு மாற்றாக வழங்கப்பட்ட ஒலிக்குறியீடுகள் இன் னொரு வகையில் கூறினால் ஓவிய ஒலியெழுத்துப் புதிர். (அ); மீன் – மீனவன்_அரசன், கொடியில் மீன் சின்னம் உடையவன்.

ஓவிய எழுத்துப் புதிர்: (ஆ); சிறப்பும் குறிப்புப் பொருளும் உடைய எழுத்தாக்கம்_ புதிய முறையில் விளக்குதல்.

ஓவிய எழுத்துப் புதிர்

   4. சொற்குறியீடுகள்: முழுச் சொற்களுக்குக் குறியீடுகள் அமைத்தல்

சொற்குறியீடுகள்

   5. அசைநிலைக் குறியீடுகள் சொல்லின் அசைகளோ கூறு களோ குறியீடுகளாகக் காட்டப்பெறல்.

அசைநிலைக் குறியீடுகள்.

   6 அகர நிரற் குறியீடுகள்: சொல்லாக்கத்திற்கு அடிப்படை யான மூல ஒலியன்களைத் தனித்தனியாக எழுதிக் காட்டும் வரிவடிவம் அல்லது அடிப்படை எழுத்துகள் (உயிரெழுத்துகள், மெய்யெழுத்துகள்);

அகர நிரற் குறியீடுகள்

பிராமி என்னும் தமிழி எழுத்து நேர்கோடுகளால் ஆகியது. இதனைச் சற்று வளைத்து எழுதிய வடிவமே வட்டெழுத்தா யிற்று. கி.மு. மூன்றாம் நூற்றாண்டளவில் சமணமுனிவர்களால் இந்தியாவில் பதினெட்டு மொழிகளுக்கும் பதினெட்டு வகை எழுத்துகள் உருப்பெற்றிருந்ததைச் சமவயங்க சுத்த என்னும் சமணநூல் குறிப்பிடுகிறது. கல்வெட்டுகளைத் தொடக்கக் காலத்தில் பிராகிருத சமற்கிருத மொழிகளில் வெளியிட்ட பல்லவர் காலத்திலும் அதற்கடுத்த விசயநகர மன்னர் காலத்தி லும் கிரந்த எழுத்து தோன்றியது. வடசொற்களைத் தமிழில் கலந்து எழுதும் ஒரே நோக்கத்திற்காகக் கிருத எழுத்துகள் புகுத்தப்பட்டன. இவை தமிழ்நாட்டில் தோன்றிய எழுத்துக்க ளில் ஆந்திர சாதவாகனவரை யடுத்து ஆட்சிக்கு வந்த இக்குவாகு மன்னர்கள் நாகார்ச்சுனா அமராவதி போன்ற இடங்களில் முதன்முதல் கிரந்த எழுத்தைப் பயன்படுத்தியிருக் கின்றனர். கிரந்த எழுத்து என்பதற்கு நூலில் எழுதப்பட்ட எழுத்து என்று பெயர். இதனைத் தமிழ் மக்கள் பயன்படுத்த வில்லை. யாப்பருங்கல உரையில் (இறுதி நூற்பா விளக்கத்தில்);,

     “உருவே உணர்வே ஒலியே தனிமையென இருவகை எழுத்தும் ஈரிரண் டாகும்”

என்ற உரையாசிரியர் மேற்கோள் காட்டியிருக்கிறார். உருவெழுத்து:

காணப்பட்ட உருவம் எல்லாம்

மாணக் காட்டும் வகைமை நாடி

வழுவில் ஓவியன் கைவினை போல

எழுதப் படுவது உருவெழுத் தாகும்.

உணர்வெழுத்து:

கொண்டவோர் குறியால் கொண்ட வதனை

உண்டென் றுணர்வது உணர்வெழுத்தாகும்.

ஒலியெழுத்து.

இசைப்படு புள்ளின் எழாஅல் போலச்

செவிப்புல னாவது ஒலியெழுத் தாகும்

தன்மையெழுத்து

முதற்காரணமும் துணைக்காரணமும்

துணைக்கா ரணத்தொடு தொடரிய வுணர்வும்

அவற்றொடு புணர்ந்த வகத்தெழு வளியின்

மிடற்றுப் பிறந்திசைப்பது தன்மையெழுத்தே நிகண்டாசிரியர்களின் காலத்தில் இந்நால்வகை எழுத்துகள் வடிவு பெயர் தன்மை, முடிவு எழுத்துகளாகவும் வகைப்படுத் தப்பட்டன. யாப்பருங்கல விருத்தியுரையில் பதினைந்துவகை எழுத்துகள் குறிப்பிடப்படுகின்றன

   1. ஆய எழுத்து அக,ச,ட,த,ப,ய வணிக முத்திரை எழுத்து. ஆயம் – வரிப்பணம்

   2. ஒரை எழுத்து;அ,ச,ல,வ,ர,ங,ய

   3. நாளெழுத்து நளி (கார்த்திகை); முதலிய நாண்மீன்

எழுத்துகள்.

   4. தன்மையெழுத்து: பிறப்பியல்பு (சாதி); குறித்தல்,

   5. நீட்டொலி எழுத்து (தாபம்);;வேதம் ஒதுங்கால் நீட்டிப்

படிக்கும் ஒலிக்குறியீடுகள்.

   6. உக்கிரவெழுத்து (உச்சாடனம்);;மந்திரக் குறியீடுகள்.

   7. முத்திறவெழுத்து சித்திரம் காருடம் முதலியன.

   8. நால்வகையெழுத்து பாதியல் முதலியன (யானைப்பா om

ஒலிப்புத் குறியீடு போல்வன)

   9 நாற்கதியெழுத்து: புத்தேளிர், மாந்தர், அகரர், நிரயர் (நரகர்);

ஆகியோர்க்குரிய குறியீடுகள்

   10 ஒளியெழுத்து: கனிமம் (தாது); முதலிய மாழை (உலோ கம்); எழுத்து. பச்சிலை பிழிந்துவிட்ட பின் எழுத்தின் வடிவங்கள் தெளிவாகப் புலப்படும்.

   11 குறிப்பெழுத்து1 (சங்கேதம்);;குறிப்பால் பொருள்த வன கலி முதலியனவும்.

   12. குறிப்பெழுத்து2:: குறிப்பால்பொருள்தரும் மாகடையம் முதலியனவும். 13 பதின்மூன்றெழுத்து: பார்ப்பன வழக்காகிய வடமொ ழிச் சிறப்பெழுத்துக் குறியீடுகள்

   14. கட்டுரையெழுத்து: அகரநிரல் எழுத்து. வண்ணமாலை எழுத்து

   15. வடிவெழுத்து வச்சிர: முதலியன

பெளத்தர்களும் கந்தருவ எழுத்து. நாகர் எழுத்து இயக்கர் எழுத்து கின்னரர் எழுத்து கருடர் எழுத்து என ஐவகை எழுத்துகளாகக்குறிப்பிடுகின்றனர். காலப்போக்கில் திரிந்தன வும் பண்டுதொட்டே காக்கப்பட்டவையுமான எழுத்துவகை மைகளை இவை காட்டுகின்றன எனலாம்.

எழுத்துக்ககப்படு-தல்

எழுத்துக்ககப்படு-தல் eḻudduggagappaḍudal,    20செ.கு.வி. (v.i) தீயூழின் பயனை நுகரநேர்தல்; to suffer one’s fate, as a widow, அவள் கொண்டாள். (உ.வ.).

     [எழுத்து + கு – எழுத்துக்கு + அகப்படு.]

எழுத்துக்காரன்

எழுத்துக்காரன் eḻuttukkāraṉ, பெ. (n.)

   1. நல்லெழுத்துடையோன்; chirographer, calligrapher.

   2. எழுத்தாளன்; writer, scribe, clerk, copyist, amanuensis,

   3. சித்திரமெழுதுவோன்; painter, limner.

ம. எழுத்துக்காரன்.

     [எழுத்து + காரன்.]

எழுத்துக்குத்து

 எழுத்துக்குத்து eḻuttukkuttu, பெ. (n.)

   எழுத்துமூலமானசான்றுப்போர்; written evidence, documentary proof (Tinn);.

ம. எழுத்து குத்து

     [எழுத்து + குத்து]

எழுத்துக்குற்றம்

எழுத்துக்குற்றம் eḻuttukkuṟṟam, பெ. (n.)

   1. எழுத்திலக்கணவமு; orthographical error. 2.நச்செழுத்துவரப்பாடுங் குற்றம் (யாழ்.அக.);: fault in versification due to the use of inauspicious letters. [எழுத்து + குற்றம்.]

எழுத்துக்கூட்டு-தல்

எழுத்துக்கூட்டு-தல் eḻuddukāṭṭudal, பெ. (n.)

   5. செ.குன்றாவி, (v.t.);

   எழுத்துகளைத் தனித்தனியே ஒலித்துச் சொல்லைக் கூறுதல்; to spell, as a word, to pronounce in order the individual orthographical units of a word and then pronounce the word as completed, dist fr reading the word-unit straight off.

     [எழுத்து + கூட்டு.]

எழுத்துசி

எழுத்துசி eḻuttusi, பெ. (n.)

எழுத்தாணி பார்க்க;see eluttani

     “மையெழுத் தூசியின். எழுத்திட்டாள்” (சீவக.1769);.

     [எழுத்து + ஊசி.]

எழுத்தெண்ணிப்படி-த்தல்

 eluttenni-p-padi.

   4. செ.குன்றாவி, (v.t.);

   ஒன்றும்விடாது கற்றல்; to study a book so carefully as to obtain a thorough grasp of its contents.

தொல்காப்பிய முதலிய நூல்களை எழுத் தெண்ணிப்படித்த சுவாமிநாத மூர்த்தியா (இலக்கொத். சரித்,பக்.4);.

     [எழுத்து + எண்ணி + படி.]

எழுத்துச்சாரியை

எழுத்துச்சாரியை eḻuttuccāriyai, பெ. (n.)

   1 எழுத்துகளைச் சொல்லுகையிற் சேர்க்கப்படுகின்ற சாரியைச் சொற்கள்;, (Gram); term used in designating a letter of the alphabet கரம், காரம், கான்.

   2. ஒரெழுத்தாயுள்ள சாரியை; single letter functioning as euphonic augment

     ‘கலனே துணி’ (நன் 252.மயிலை.);.

     [எழுத்து-சாரியை.]

எழுத்துச்சிற்றாடை

எழுத்துச்சிற்றாடை eḻuttucciṟṟāṭai, பெ. (n.)

   சித்திரந்தீட்டிய வேலைப்பாடமைந்த சிற்றாடை வகை (திவ்.பெரி யாழ்.1.3,8.வ்யா.பக்.64.அரும்,);; embroidered with pictures painted in it.

     [எழுத்து + சிற்றாடை.]

எழுத்துச்சீலை

 எழுத்துச்சீலை eḻuttuccīlai, பெ. (n.)

   சித்திரந்தீட்டிய சீலை (வின்);; chintz, colhe with pictures

     [எழுத்து + சீலை]

எழுத்துச்சுருக்கம்

 எழுத்துச்சுருக்கம் eḻuttuccurukkam, பெ. (n.)

   சொல்லினெழுத்துச் சுருங்குவதற்காக இடையிற் சிறுகோடிட்டு முதலிறுதி எழுத்துகளை யெமுதுகை (யாழ். அக.);; contraction of words or phrases by the use of hyphensor dots in place of the omitted letters in the middle as இ-ள், (இதன் பொருள்);, எ-று (என்றவாறு);. [எழுத்து + சுருக்கம்.]

எழுத்துப்படி-தல்

எழுத்துப்படி-தல் eḻudduppaḍidal,    4. செ.கு.வி. (v.i.)

   கையெழுத்து ஒரு நிலைப்படுதல்; to become settled as the hand-writing.

     [எழுத்து + படி.]

எழுத்துப்பள்ளி

 எழுத்துப்பள்ளி eḻuttuppaḷḷi, பெ. (n.)

எழுத்து கற்பிற் கும் பள்ளி: Mage-school (சேரநா.);.

ம. எழுத்து பள்ளி

     [எழுத்து + பள்ளி – எழுத்துப்பள்ளி.]

எழுத்துப்பானை

 எழுத்துப்பானை eḻuttuppāṉai, பெ. (n.)

   பொங்கற் பானையோடு மாப்பிள்ளை வீட்டுக்குப் பெண்வீட்டார் அனுப்புஞ் சித்திரமெமுதிய பானை (நாஞ்:);; painted pot usually sent by the bride’s people to her father-in-law’s house along with pongapánai,

     [எழுத்து + பானை – எழுத்துப் பானை, இதனைக் கோலப் பானை என்பர்.]

எழுத்துப்பிழை

 எழுத்துப்பிழை eḻuttuppiḻai, பெ. (n.)

   எழுத்துக் குற்றம்; error in lettering, spelling mistake.

     [எழுத்து + பிழை.]

எழுத்துப்புடைவை

 எழுத்துப்புடைவை eḻuttuppuḍaivai, பெ. (n.)

   சித்திர மெழுதிய சேரை (யாழ்,);; printed saree, designed with pictures.

     [எழுத்து + புடைவை.]

எழுத்துப்புள்

 எழுத்துப்புள் eḻuttuppuḷ, பெ. (n.)

உயிரெழுத்துக்குரிய

   வாகக் கணியத்தில் (சோதிடத்திற்.); கூறப்படும் பறவைகள்; birds representing vowels,

     [எழுத்து + புள்.]

எழுத்துப்பெட்டி

எழுத்துப்பெட்டி eḻuttuppeṭṭi, பெ. (n.)

   1 அஞ்சற்

   பெட்டி; letter box, post box.

   2 எழுதியவைகளை வைக்கும் பெட்டி; box for keeping letters, documents etc. in (சேரநா.);.

ம. எழுத்துபெட்டி

     [எழுத்து + பெட்டி.]

எழுத்துப்பேறு

 எழுத்துப்பேறு eḻuttuppēṟu, பெ. (n.)

சொற்புணர்ச்சியில்

   இடையில் தோன்றும் எழுத்து; augment occuring in the middle of a word

     [எழுத்து + பேறு – எழுத்துப்பேறு பெறு → பேறு.]

எழுத்துப்பொருத்தம்

எழுத்துப்பொருத்தம் eḻuttupporuttam, பெ. (n.)

   1. (செய்யுள்); ஒரு காப்பியத்தின் தொடக்கச் செய்யு ளின் முதன்மொழி ஒற்றெழுத்துட்பட மூன்றைந்து ஏழொன்பதென்னும் எழுத்துகளுள் ஏதேனும் ஒன் றைப் பெற்றுவருவதாகிய செய்யுண் முதன்மொழிப் பொருத்த வகை (வெண்பாப்.முதன்.4.தலைப்பு);: rule of propriety which enjoins that the word commencing a poem should consist of three, five, seven or nine letters including the mute consonants and not of four, six or eight, one of ten Ceyyun-mudan-moli-p-poruttam

   2. பிறந்த நாண்மீனுக் (நட்சத்திரம்); குரிய முதலெழுத் தில் தொடங்கப் பெயரிடுதல் (வின்.);: choosing such a name for a child, as begins with one of the letters ascribed in astrology to the naksatra under which the child was born.

     [எழுத்து + பொருத்தம்]

எழுத்துமறைவேளை

 எழுத்துமறைவேளை eḻuttumaṟaivēḷai, பெ. (n.)

   மாலைப்போது; dusk of the evening, which blurs written characters.

     [எழுத்து + மறை + வேளை.]

எழுத்துமாலை

 எழுத்துமாலை eḻuttumālai, பெ. (n.)

கா, காவி, காவிரி போன்று, ஒருபொருள் பயப்பதோர் சொற்கூறி அச் சொல்லோடு ஒரோரெழுத்தாகக் கூட்ட வேறு வேறு பொருள் பயக்கும் சித்திரப்பாடல்: verse composed with a play on words, a word by gradual addition of letters becoming different words with different meanings as in கம், நகம், கநகம், or கா. காவி, காவிரி.

     [எழுத்து + மாலை – எழுத்துமாலை. இதனை வடநூலார் எழுத்து வருத்தனம் என்பர்.]

எழுத்துவாங்கு-தல்

எழுத்துவாங்கு-தல் eḻudduvāṅgudal, பெ. (n.)

   7.செ.கு.வி. (v.i.);

   1.

   அடிமையாதற்கு அறிகுறியாக ஆண்டான்பெயரை மார்பிலே யெழுதிக் கொள்ளுதல்; to imprint one’s lord’s name on one’s breast, in token of becoming his save.

     “தேவசாதியானது எழுத்து வாங்கும்படியாக வாயிற்று. தோளுந் தோண்மாலையுமாய்……. கடைந் தபடி’ (ஈடு.1, 3,11);.

   2. கையெழுத்து வாங்குதல்; to take one’s signature or receipt.

     [எழுத்து + வாங்கு.]

எழுத்துவாசனை

 எழுத்துவாசனை eḻuttuvācaṉai, பெ. (n.)

எழுத்தறிவு பார்க்க;see eluttarivu.

     [எழுத்து + வாசனை.]

எழுத்துவிளக்கு

எழுத்துவிளக்கு eḻuttuviḷakku, பெ. (n.)

   தமிழ் மொழியிலுள்ள முப்பது எழுத்துகளைக் குறிக்கு முகத்தான் கோயிலிலேற்றப் பெறும் முப்பது விளக்கு; row of 30 lights set in temples, as representing the 30 letters

     [எழுத்து+விளக்கு]

எழுத்துவெட்டுதல்

 எழுத்துவெட்டுதல் eḻudduveṭṭudal, பெ. (n.)

   கல், ஏனம் (பாத்திரம்); முதலியவற்றில் எழுத்துச் செதுக்குகை (C.E.M);; engraving letters in stone, metal plates, domestic Utensils etc.

     [எழுத்து + வெட்டு.]

எழுத்துவேலை

எழுத்துவேலை eḻuttuvēlai, பெ. (n.)

   1. எழுதுதல், பெயர்த்தெழுதுதல், படியெடுத்தல் ஆகிய வேலை; writing, transcribing, copying as an employment

   2. சிலைச்சித்திரத் தொழில்: chntz-painting

     [எழுத்து + வேலை.]

எழுநகரம்

எழுநகரம் eḻunagaram, பெ. (n.)

   இந்தியாவிலுள்ள ஏழு திருநகர்கள்; seven sacred cities of India

     “புவிதன்னின் மேலவாய் வீடருள்கின்ற வெழு நகரத் துள்.” (கந்தபு:திருநகரப்.75);. (செ.அக.);. காசி, காஞ்சி, அயோத்தி, மதுரை, அவந்தி, துவாரகை, மாயை.

     [எழுதகரம் → எழுதகரம்.]

எழுநிலைமாடம்

எழுநிலைமாடம் eḻunilaimāṭam, பெ. (n.)

   ஏழடுக்கு lமாளிகை; palace seven stories high.

     “இன்னகிலாவி விம்மு மெழுநிலை மாடஞ்சேர்ந்தும்” (சீவக.2840);.

     “எழுநிலை மாடத்து இடைநிலத்திருந்து” (சிலப்பு கார்.213);.

ம. எழுநிலமாடம்.

     [ஏழுநிலை → எழுநிலை + மாடம்.]

எழுநூறு

 எழுநூறு eḻunūṟu, பெ. (n.)

   எழுநூறுகள்; seven hundreds (செ.அக.);

ம. எழுநூறு க. ஏழ்நூறு. ஏழுநூறு எள்நூறு குட. என்நுரி: தெ. ஏடு நூறு ஏடுநாடலு. ஏண்நூறு.

     [ஏழு+ நூறு – ஏழுநூறு _ எழுநூறு.]

எழுந்தருளியிரு-த்தல்

எழுந்தருளியிரு-த்தல் eḻundaruḷiyiruttal, பெ. (n.)

   3. செ.கு.வி. (vi); 1 குடியொண்டருளுதல்; so take one’s abode as God.

   2. வீற்றிருத்தல்; to be sealed, said to or of the great and exalted personages.

இங்கு எழுந்தருளியிருக்க.

     [எழு → எழுந்து + அருளி + இரு.]

எழுந்தருளுநாயகர்

 எழுந்தருளுநாயகர்ḻundaruḷunāyagar, பெ. (n.)

   விழாத் திருமேனி (வின்,);; festival Idol of a temple carried about in processions.

     [எழு → எழுந்து + அருளும் + நாயகர்.]

எழுந்தருளுந்திருமேனி

எழுந்தருளுந்திருமேனி eḻundaruḷundirumēṉi, பெ. (n.)

எழுந்தருளுநாயகர் பார்க்க;see elundarulunayagar

     ‘எழுந்தருளுந் திருமேனி திருவிழா எழுந்தருளப் புக்க வாறே. (S.I.I.ii,127);.

     [எழு → எழுத்து + அருளும் + திருமேனி.]

எழுந்தருள்(ளு)-தல்

எழுந்தருள்(ளு)-தல் eḻundaruḷḷudal, . 15.செ.கு.வி. (v.i.)

   1. வருதல்; to come arrive.

     “எங்குநின் றிவண்மற்றெழுந்தருளியது.” (பாரதநாடுகரந்:12);.

   2. புறப்படுதல்; to go orth, start

     “வினதைமுன் பயந்த யானமீதெழுந்தருளி வந்து” (பாரதகுருகுல30);.

   3. ஆவியுள்ளுறுத்தல். (வின்,);; to take abode, as a deity in an idol on consecration

ம. எழுததருளுக.

     [எழு → எழுந்து + அருள்.]

எழுந்தருள்படி

எழுந்தருள்படி eḻundaruḷpaḍi, பெ. (n.)

 In 1 கடவுள் புறப்பாடு (வின்,);;

 procession of idols.

   2. பெரியோர் வருகை (யாழ்ப்,);: arrival of the great.

ம. எழுந்தருளத்து

     [எழு → எழுந்து + அருள்.]

எழுந்திரு-த்தல்

எழுந்திரு-த்தல் eḻundiruttal,    3.செ.கு.வி. (v.i.)

   எழுதல்; to rise from one’s seat, to get up.

     “முனிவலெல்லாம் வந்தபோது மன்னவ னெழுந்திருந்து” (அரிச்.பு. விவா.37);,

எழுந்திருப்பு

எழுந்திருப்பு eḻundiruppu, பெ. (n.)

   எழுந்து நிற்கை; rising from seat getting up,

     “கால்வாய்த்தொழுவு சமயமெழுந்திருப்பு” (ஆசாரக்.63);.

      [எழுந்து + இருப்பு.]

எழுந்தேற்றம்

எழுந்தேற்றம் eḻundēṟṟam, பெ. (n.)

   1 இறுமாப்பு (வின்.);; pride, arrogance

   2. துணிவு; rashness, presumptuousness

   3. பலிபீடத்தில் நற்கருணை உயர்த்தப்படுடிக (RC);, exposition, as of the host and the chalice in mass 4, கடவுள் புறப்பாடு; procession, as of an idol in a Hindu temple, or the carrying of the Eucharist or an image by Roman Catholics. (செ.அக.);.

ம. எழுந்தேற்றம்

     [எழுந்து ஏற்றம்.]

எழுனி

எழுனி3 eḻuṉi, பெ. (n.)

   1. எழுகை; rising,

   2. இடுதிரை: curtain

     “பொருமுகப் பளிங்கி னெழினி வீழ்த்து” (மணிமே.5:3);.

 L elate, lofty, Eelale, lo raise, elation, pride.

     [எழு-எழுனி எழு = எழுச்சி (க.வி. 76);.]

எழுபது

எழுபது eḻubadu, பெ. (n.)

   எழுபத்துகளையுடைய எண்ணிக்கை; seventy as seven tens

     “எழுபது கோடியுறும் (குறள்.639);.

   ம, எழுபது;   க. எப்பத்து, ஏழ்பத்து கோத எள்பத்;   குட. எளுபதி;   து. எள்ப, ஏள்ப, எர்ப;   தெ. டெப்பதி, டெப்பை;பட எளவத்து. [எழு + பத்து – எழுபது.]

எழுபிறப்பு

எழுபிறப்பு eḻubiṟabbu, பெ. (n.)

   ஏழுவகையான பிறவி (பிங்.);; seven kinds of births, in metempsychosis,

தேவர். மக்கள், விலங்கு பறவை, ஊர்வன, நீர்வாழ் வன நிலைத்திணை (தாவரம்); என்பன எழுபிறப்புகளாகும்.

     “எழுமை எழுபிறப்பும் உள்ளுவர்” (குறள்.107);

     [ஏழு + பிறப்பு – எழுபிறப்பு → எழுபிறப்பு.]

எழுபோது

எழுபோது eḻupōtu, பெ. (n.)

   கதிரவன் தோன்றும் நேரம்; time of sun rise.

     “பட்டபோ தெழுபோ தறியாள்” (தில்.திருவாய்.2.4.9); (செ.அக.);.

     [எழு + போது. பொழுது → போது.]

எழுப்பம்

எழுப்பம் eḻuppam, பெ. (n.)

   1 எழுகை; rising getting up

   2. உயர்வு; growth, height elevation. (செ.அக.);.

     [எழு → எழுப்பம்.]

எழுப்பல்

 எழுப்பல் eḻuppal, பெ. (n.)

   எழுப்புதல்; rousing or awakening from sleep, the act of awakening (சா.அக.);

     [எழுப்பு → எழுப்பல்.]

எழுப்பு

எழுப்பு1 eḻuppudal,    5. செ.குன்றாலி (v.i.)

   எழும்பச் செய்தல்; to cause or help to rise, to erect as a building

   2. துயிலெழுப்புதல்; to awake, rouse

     “நாளை நானேயெழுப்புவ னென்றலும்”

   உயிர்பெற்றெழச் செய்தல்; to raise from the dead, resuscitate, restore of life.

     “மெய்க்குக னெழுப்புதலும்” (கந்தபு:திருவிளை.79);.

   4. ஊக்கமுண்டாக்குதல்; to excite, stimulate, inspire,

   5, கலகமுதலியன மூட்டுதல்; to instigate, to inflame, as the passions

   6. ஒசையெழுப்புதல்; to raise, as the voice in speaking or singing, to call forth, as melody;

 from an instrument

     “சங்குக ளெழுப்பிய நாதம்” (பாரத.பதி னெட்.24);.

     [எழு → எழுப்பு.]

 எழுப்பு2 eḻuppu, பெ. (n.)

   எழுப்புகை (வின்);; rousing, waking.

     [எழு → எழுப்பு.]

 எழுப்பு3 eḻuppu, பெ. (n.)

   மகிழ்ச்சி; zeal, enthusiasm (Pond);.

     [எழு → எழுப்பு.]

எழுமதம்

எழுமதம்1 eḻumadam, பெ. (n.)

   நூலாசிரியருக்குரிய எழுவகைக் கொள்கை. (நன்.11);; seven kinds of attitude of an author towards a certain subject அவையே, உடன்படல், மறுத்தல், பிறர்தம் மதமேற் கொண்டு

களைவு, தாஅனாட்டித்தனாதுநிறுப்பு. இருவர்மாறுகோ ளொருதலை துணிவு, பிறர்நூற்குற்றங்காட்டல், பிறிதொ டுபடா.அன்றன் மதங்கொளல் ஆகியன. (நன்னூல்); (செ.அக.);.

     [ஏழு + மதம் – ஏழு மதம் → எழுமதம்]

எழுமலை

எழுமலை eḻumalai, பெ. (n.)

   கதிரவன் காலையில் தோன்றும் மலை; Eastern Mountain from behind which the sun is supposed to rise

     “எழுதலை விழுமலை புடைமணியாக” (கல்லா,19); (செ.அக.);.

ம, எழிமல.

     [எழு + மலை.]

எழுமாழை

 எழுமாழை eḻumāḻai, பெ. (n.)

தங்கம், வெள்ளி, தாமிரம், இரும்பு, ஈயம், பித்தளை (தாமிரமும் துத்த நாகமும் சேர்ந்தது);, வெண்கலம் (தாமிரமும் தகரமும் சேர்ந்தது); போன்ற

     “ஏழு மாழைகள்” (உலோகங்கள்);:

 seven metals viz. the five ordinary metals such as gold. copper. Iron and lead, together with the two mixed metals viz. bronze or bell metal (a mixture of copper and tin); and tarah (a mixture of copper and zinc); (சா.அக.);

     [ஏழு + மாழை = ஏழுமாழை → எழுமாழை.]

எழுமீன்

எழுமீன் eḻumīṉ, பெ. (n.)

   முதன்மையான ஏழு விண்மீன்கள்; seven principal stars of ursa major, Charles Wain.

     “கைதொழு மரபி னெழுமீன்போல” (நற்.231);, (செ.அக.);.

ம. எழுமீன்.

     [ஏழு + மீன்-ஏழு மீள் → எழுமீன்.]

எழுமுடி

எழுமுடி eḻumuḍi, பெ. (n.)

   வெல்லப்பட்ட ஏழரசர் முடியாற் செய்த சேரன்மாலை; Cera’s necklace fashioned out of the crowns of seven conquered kings எழுமுடி கெழீஇய திருஞெம ரகலத்து” (பதிற் றுப்.14.11); (செ. அக.);.

ம. எழுமுடி.

     [ஏழு + முடி – எழுமுடி → எழுமுடி.]

எழுமுரசு

எழுமுரசு eḻumurasu, பெ. (n.)

   அரசனது செலவையறிவிக்கும் முரசு; drum beaten to announce the starting of a king on a journey.

     “எழுக வான்பயண மென்றங் கெழுமுர சியம்புவித்தார்” (கோயிற்பு இரணிய.116); (செ.அக.);.

ம, எழுபற.

     [எழு + முரசு.]

எழுமை

எழுமை1 eḻumai, பெ. (n.)

உயர்ச்சி (திவா.); height.

ம. எழும. க. ஏழிகெ, ஏழ்கெ ஏழ்விகெ:து. எர்கெ, எர்கெலு.

     [ஏ → எல் → எழு → எழும:]

 எழுமை2 eḻumai, பெ. (n.)

   1. ஏழுமுறை பிறக்கும் பிறப்பு; seven successive births

     “கல்வி யொருவற் கெழுமையு மேமாப்புடைத்து’ (குறள்,398);.

   2. எழுவ

   கையான பிறப்பு; seven kinds of births in transmigration

     “எழுமையுந் தான்புக் கழுந்துமளறு” (குறள்.835);.

ம. எழும.

     [ஏழு → எழு + மை.]

எழும்பல்

 எழும்பல் eḻumbal, பெ. (n.)

   நிலவளவை முதலியன பற்றிய கைக்குறிப்பேடு (யாழ்.அக.);; hand-book of land-register. (செ.அக.);.

      [எழு → எழும்பல்.]

எழும்பு-தல்

எழும்பு-தல் eḻumbudal,    7.செ.கு.வி. (v.i.)

எழு பார்க்க;see elu

   ம, எழும்புக;   க எழ்பு;   கோத எட்வ;   துட. ஒட்;   குட. ஏள். து. எர்களி;   தெலே, லேசு;கூடேஞ்ஜ: பிரா.தேதிங்க்

     [எழு → எழுப்பு. எழும்புதல்.]

எவஙண

எவஙண evaṅaṇa, சு.வி.எ. (adv.)

   1. எவ்விடம்; where.

     “எவண் படர்ந்தனளென” (காஞ்சிப்பு:கழுவாய்.91);.

   2. எப்படி; how. ஒன்றுபலபோல நின்றியல் பெவணெனின் (ஞானா.56,35);.

     [எவ் + அண் – எவண். அண் = இடம்.]

எவன்

எவன்1 evaṉ, வி.சு.பெ. (Inter.pron) யாவன். which man, suff. pers, masc. (வினாப்பெயர்.).

   ம. எவன்;   க. ஆவம், யாவனு. ஆ.வெ;   கோத. எவ்ன்;   துட. எந்த்;   குட. ஏவென்;   து. ஏரு. ஏரணெ;   தெ. எவடு, எவ்வடு;   கொலா. எம்;   கூ. அனென்க;   குவி, அம்பசி;   குரு. நே;   மால். நெரெ;   பிரா. தேர், தே;பட. எம.

     [எவன் → எவன் (ஒ.மொ.304);.]

 எவன்2 evaṉ,  what, used in both numbers. – கு.வி.எ. (adv.)

   1. எவ்வெண்ணம்; how? in what manner?

     “அருளோனாவதை யெவன்னோ” (ஞானா.46,6);.

   2. ஏன்; why – இடை. (part); வியப்பு இரக்கச்சொல் (சூடா.);;

 an exclamation of wonder or pity.

     “துப்பின் எவன் ஆவர்” (குறள்.1165);.

     [ஏவன் → எவன்.]

எவரும்

எவரும் evarum, பெ. (n.)

   யாரும்; everyone, anyone.

     “இன்னோ ரெவருஞ் சிவனேயென் றிரங்க லோடும்” (கந்தபு:திருக்கல்.49);.

     [எவர் + உம்.]

எவர்

எவர் evar,    வி.சு.பெ. (Inter.pron) யாவர்; who இங்கு வந்தார் எவர்? (உ.வ.).

ம. எவர்.

     [ஏவர் → எவர் (ஒ.மொ.304);.]

எவற்று

 எவற்று evaṟṟu,    வி.சு.பெ. (Inter.pron) எது (யாழ்.அக.); what, which.

ம. எவற்ற (எப்பொருள்);: E what.

     [எவள் + து – எவற்று.]

எவள்

எவள் evaḷ,    வி.சு.பெ. (inter.pron) யாவள்; what woman, which woman.

   ம. எவள்;   க. யாவளு, ஆவள்;   கோத. எவள்;   குட. எவ;   தெ. ஏதி;   கொலா. எத்;   கூ. அனரி, அனை;   குவி. அம்பயி, அம்பது;   குரு. எக்நா;   மால். இகிர், இகு;பட. எவ.

     [ஏவல் → எவள் (வ.மொ.304);.]

எவா அரிசி

 எவா அரிசி evāarisi, பெ. (n.)

   எவா தவசம் (பார்லி);; husked seed of barley called pearl barley – Hordeum decorticatum. (சா.அக.);.

     [ஐயவி → ஏவி → எவா + அழிசி. இது உருண்டையாயும், நடுவில் பிளப்புள்ளதாயுமிருக்கும்;

ஐயவி அரிசி பார்க்க;see aiyaviyars]

எவை

 எவை evai,    வி.சு.வி.பெ. (inter.pron) யாவை; which things.

   ம. எவ;   து. யாவ. தாவ;   கோத. எத்;   துட. ஏனாம்;   குட. ஏவு. எதி;   து. தாவ. தாதவ;   தெ. எதி. ஏவி;   கொலா. எத். எதவ்;   கொண். ஏல்;   கூ. அனை;   மால். இந்ர;பட. எவெ.

     [ஏ + அவை = ஏவை → எவை.]

எவ்

 எவ் ev,    வி.சு.பெ. (inter.pron) எவை; what, which things. எல்வேந்தன்? (உ.வ.).

   தெ. எவி;ம. எவ்.

     [எ → எவ், எ → வினாக்குறிப்பு.]

எவ்வண்ணம்

 எவ்வண்ணம் evvaṇṇam, பெ. (n.)

   எவ்வாறு, எப்படி; how, in which manner.

ம. எவ்வண்ணம்.

     [எவ் + வண்ணம்.]

எவ்வது

எவ்வது evvadu, கு.வி.எ. (adv.)

   1. எவ்விதம்; How? in what manner.

     “எவ்வ துறைவ துலகம்” (குறள்-426);.

   2. யாதொருவாறு; whatsoever (செ.அக.);.

     [எவ் + அது – எவ்வது.]

எவ்வநோய்

 எவ்வநோய் evvanōy, பெ. (n.)

   தீராத நோய்; incurable disease.

     [எவ்வம் + நோய்.]

எவ்வம்

எவ்வம்1 evvam, பெ. (n.)

   1. துன்பம்; affliction, distress

     “கூர்ந்தவெல்வம்விட” (புறநா.393);.

   2. ஒன்றானுந் தீராத நோய் (குறள். 1241,உரை.);; incurability, persistence, as of a disease (குறள்.1241, உரை.);.

   3. இளிவரவு; inferiority, degradation, wretchedness.

     “இலனென்னு மெல்வ முரையாமை யீதல்” (குறள்.223);.

   4. ஏய்த்தல்; deceitfulness. guile.

     “எவ்வ மாகவந் தெய்தி” (பெரியபு.திருநாவு.83);.

   5. வெறுப்பு; dislike, aversion.

     “எவ்வந் தீர்ந் திருந்தாள்” (சீவக.874); (செ.அக.);.

   6. குற்றம்; fault (ஆ.அக.);.

   7. நாட்பட்ட நோய்; chronic illness. (சா.அக.);.

     [அவ்வு → எவ்வு → எவ்வம்.]

 எவ்வம்2 evvam, பெ. (n.)

   மானம்; self-respect.

     “என்க னிடரினும் பெரிதா லெல்வம்” (பு.வெ.11,பெண் பாற்.7);.

     [ஏ → ஏவம் → எல்வம்.]

எவ்வரும்

எவ்வரும் evvarum,    வி.சு.பெ. (Inter.pron) யாரும்; anyone.

     “ஆங்கவையெவ்வரும்பெறுகிலர்” (கந்தபு.மா யையுப.14);.

     [எவரும் → எவ்வரும். வகரமெய் மிகைத் தோன்றல் திரிபு.]

எவ்வளவு

 எவ்வளவு evvaḷavu, கு.வி.எ. (adj.)

   எம்மட்டு; how much, how far, how long.

கிணறு எவ்வளவு ஆழம்? எவ்வளவு நாளாகும்? (உ.வ.);.

     [எவ் + அளவு – எவ்வளவு.]

எவ்வழி

எவ்வழி evvaḻi, வி.சு.பெ. (inter.pron)

   1. எந்த வழி; which way, wither.

   2. எப்படி; how.

     “எல்வழி நல்லவர் ஆடவர்” (புறநா.187);.

ம. எல்வழி.

     [எவ் + வழி.]

எவ்வாறு

 எவ்வாறு evvāṟu, கு.வி.எ. (adv.) எப்படி in what manner, how? விழா எவ்வாறு நிகழ்ந்தது? (உவ.).

     [எவ் + ஆறு – எவ்வாறு. ஆறு = வழி.]

எவ்வி

எவ்வி evvi, பெ. (n.)

   வேளிர் குறுநில மன்னர்களு ளொருவனான வேள் எவ்வி; one of the chieftains of Tamil Nadu known as Vel Evvi. (செ.அக.);.

     “எவ்வி தொல்குடிப் படிஇயர்” (புறநா.202.14);.

     [எவ்வுதல் = எய்தல், எவ்வி = அம்பு எய்தலில் வல்லவன்.]

எவ்விடம்

 எவ்விடம் evviḍam, பெ. (n.)

   எந்தவிடம்; which place, where. (ஆ.அக.);.

   ம. எவ்விடம்;   க. எல்லி;   தெ. எக்கட;   குரு. எக்கய்ய;மால், இ.கோ. இகடி, இக் பிரா. அராடேக்.

     [எவ் + இடம் – எவ்விடம்.]

எவ்வு

எவ்வு1 evvudal,    5. செ.குன்றாவி (v.t.)

   செலுத்துதல்; to discharge, as a missile or an arrow.

     [ஏவு → எவ்வு.]

 எவ்வு2 evvudal,    7.செ.கு.வி. (v.i.)

   எழும்புதல்; to rise, spring up.

     “தீக்கணை மேருவைக் கால்வளைத் தெவ்வினான்” (கம்பரா.ஊர்.தே.177);. [ஏவு – எவ்வு.]

 எவ்வு3 evvudal,    7.செ.கு.வி. (v.i.)

   துன்பமிழைத்தல்; to bother to tease.

     “எவ்வுஞ் சிலையுடை” (திவ்.பெரியாழ்.3,2,5);.

     [அவ்வு → எவ்வு.]

எவ்வெட்டு

எவ்வெட்டு evveṭṭu, பெ. (n.)

   தனித்தனி எட்டு; eight each.

ம. எல்வெட்டு.

     [எட்டு + எட்டு – எல்வெட்டு.]

எட்டெட்டு, எண்ணெண் என்று அடுக்கிவரின் எட்டின் பெருக் கலாகிய எட்டு எனப் பொருள் தந்து பெருக்கற்பலனாகிய 64ஐக் குறிக்கும். எட்டு எட்டாகப் பகிர்ந்தளிக்கும் பொருளில் எவ்வெட்டு என மருவிப் புணர்ந்து கூட்டுச் சொல்லாகும்.

எவ்வெலாம்

எவ்வெலாம் evvelām, பெ. (n.)

   உள்ளவெல்லாம்; whatever there be.

     “எல்வெலாலண்டத் துறைதரு மருத்தும்” (கந்தபு.சூரனர.11);.

     [எல்லாம் + எல்லாம் – எல்லெல்லாம் → எவ்வெல்லாம்.ஒ.நோ. எவ்வெட்டு.]

எவ்வெவர்

எவ்வெவர் evvevar, பெ. (n.)

   எவரெவர்; whosoever,

     “எவ்வெவர்க்கு மிறைவற்கு நல்கியே” (கந்தபு.திருவிளை.123);.

     [எவர் + எவர் – எவரெவர் → எவ்வெவர்.]

எவ்வெவை

 எவ்வெவை evvevai, பெ. (n.)

   எவையெவை; whatsoever things.

     [எவை + எவை – எவையெவை – எவ்வெவை.]

எவ்வேழு

எவ்வேழு evvēḻu, பெ. (n.)

   தனித்தனி ஏழு; seven each.

     [ஏழு + ஏழு – எவ்வேழு.]

ஏழேழு என்றடுக்கி வரின் அவற்றின் பெருக்கற்பலனாகிய 49ஐக் குறிக்கும். ஏழு ஏழாகப் பகிர்ந்தளிக்கும் பொருளில் எவ்வேழு-எவ்வேழ் என மருவிப் புணர்ந்து கூட்டுச்சொல்லாகும்.

எவ்வை

எவ்வை1 evvai, பெ. (n.)

   கவலை; care, anxiety

     “எல்வையில்லா வள்ளியம்மை கவ்வைமன தாகும்.” (வள்ளி.கதை.ms.); (செ.அக.);.

     [அவ்வு → எவ்வு → எவ்வை.]

 எவ்வை2 evvai, பெ. (n.)

   எம் தங்கை; our yourge sister.

     “எல்வைக் கெவன்பெரி தளிக்கு மென்ப” (ஐங்குறு.89); (செ.அக.);.

     [எம் + அவ்வை – எம்மல்வை → எவ்வை.]