செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை வெளியீடு
31 தொகுதி 12000 பக்கங்கள் கொண்ட பேரகரமுதலி


1

10838

2769

3111

538

3554

677

1093

620

189

1004

402

2
க்
1

8212
கா
2579
கி
564
கீ
222
கு
4598
கூ
780
கெ
615
கே
391
கை
1101
கொ
2417
கோ
1754
கௌ
110
ங்
1

2
ஙா
2
ஙி
1
ஙீ
1
ஙு
1
ஙூ
1
ஙெ
1
ஙே
1
ஙை
1
ஙொ
5
ஙோ
1
ஙௌ
1
ச்
1

5235
சா
1186
சி
2424
சீ
439
சு
1261
சூ
420
செ
1529
சே
470
சை
23
சொ
409
சோ
365
சௌ
1
ஞ்
1

15
ஞா
44
ஞி
3
ஞீ ஞு ஞூ ஞெ
34
ஞே
5
ஞை
2
ஞொ
3
ஞோ
2
ஞௌ
1
ட்
1

1
டா
1
டி
1
டீ
1
டு
1
டூ
1
டெ
2
டே
1
டை
1
டொ
1
டோ
1
டௌ
ண்
1

1
ணா
1
ணி
1
ணீ ணு
1
ணூ
1
ணெ
2
ணே
1
ணை
1
ணொ
1
ணோ
1
ணௌ
த்
3113
தா
1530
தி
2203
தீ
393
து
1238
தூ
411
தெ
694
தே
856
தை
39
தொ
878
தோ
459
தௌ
ந்
1

2789
நா
204
நி
1860
நீ
1161
நு
14
நூ
18
நெ
892
நே
318
நை
89
நொ
210
நோ
159
நௌ
2
ப்
1

4560
பா
1824
பி
492
பீ
25
பு
2224
பூ
1133
பெ
1064
பே
483
பை
127
பொ
1218
போ
478
பௌ
2
ம்
4760
மா
1422
மி
535
மீ
268
மு
3016
மூ
949
மெ
396
மே
751
மை
152
மொ
284
மோ
242
மௌ
ய்
1

119
யா
426
யி
1
யீ
1
யு
46
யூ
20
யெ
9
யே
1
யை
1
யொ
1
யோ
98
யௌ
1
ர்
87
ரா
107
ரி
11
ரீ
7
ரு
24
ரூ
20
ரெ
6
ரே
16
ரை
10
ரொ
8
ரோ
23
ரௌ
ல்
117
லா
44
லி
8
லீ
5
லு
8
லூ
3
லெ
13
லே
21
லை லொ
20
லோ
63
லௌ
3
வ்
1

3800
வா
1329
வி
1638
வீ
515
வு
1
வூ
1
வெ
2164
வே
834
வை
229
வொ
1
வோ
3
வௌ
ழ்
1

1
ழா
1
ழி
1
ழீ
1
ழு
6
ழூ
1
ழெ
1
ழே ழை ழொ ழோ
1
ழௌ
ள்
1

2
ளா
1
ளி
1
ளீ
1
ளு
1
ளூ
1
ளெ
2
ளே
1
ளை
1
ளொ
1
ளோ
1
ளௌ
ற்
1

1
றா
1
றி
1
றீ
1
று
1
றூ
1
றெ
2
றே
1
றை
1
றொ
1
றோ
1
றௌ
ன்
1

1
னா
1
னி
1
னீ
1
னு
1
னூ
1
னெ
2
னே
1
னை னொ
1
னோ
1
னௌ
தலைசொல் பொருள்

ஊ1ū,    ஆறாமுயிரெழுத்து;உயிர் முயற்சிய

பிறக்கும் எழுத்துகளுள் வாயைத் திறத்தலோ இதழ் குவிவாற் பிறக்கும் ஒரு நெட்டுயிர்:

 sixth letter and vowel of the Tamil alphabet, the close back tense;

 rounded vowel in Tamil

     [உ → ஊ]

 ஊ2ū, இடை. (part)

   1. முன்மைச்சுட்டு; Iron demonstrative. 2, இடைமைச்சுட்டு;

 intermedia demonstrative.

     [ஊ -சுட்டெழுத்தாகமட்டுமன்றிச் கட்டுச்சொல்லாகவு

வழங்கியது.

     “நெட்டெழுத்தேழே. ஒரெழுத்தொருமொபூ (தொல்.எழுத்43);.);

 ஊ3ū,    க.பெ. (pron) நீ என்னும் முன்னினை ஒருமைப்பெயர்; you, second pers, sing.

     [ஊன்-ஊ (மறைந்துபோன தமிழ்ச்சொல்);.]

முது பண்டைக்காலத்தில் ஆன் ஈன் ஊன் என்பன மூவி ஒருமைச் கட்டுப்பெயர்களாக இருந்தன. ஆன் → நா என்றும், ஊன் → நூன் → நீன் → நீ என்றும் திரிந்தன

ஊன் பார்க்க;see un

 ஊ4ū, பெ. (n.)

கைக்கிளையென்னும் இசையினை எழுத்து (திவா);,

 symbol representing the third no of the gamut, usu, ga.

     [உ → ஊ (இருமாத்திரை நெட்டுயிர்); சரிகமயததி என்னும் ஏ சுரங்களின் மூன்றாம் எழுத்து

     ‘க’ வுக்கு நிகரான பண்டை இசையெழுத்துக் குறியீடு.

 ஊ5ū, பெ. (n.)

   1. தசை (தொல் எழுத்,269);; fles meat

   2. நலமின்மை; liness (சேரநா);.

   ம. ஊ கோத ஊ (எயிர்);;   கூ ஊஞ்ச;   குவி. ஊயு;பிர சூ.

     [ஊன் → ஊ.]

 ஊ6ū, பெ. (n.)

ஊண், உணவு (நாநார்த்த.);. too (செ.அக.);. ஊண் → ஊ (கடைக்குறை); = உணவு.]

 ஊ7ū, இடை (part) இறந்தகால வினையெச்ச ஈறு ending of past vol. pple. செய்யூ, காணூஉ.

     [உ → ஊ இறந்தகால வினையெச்சாறாகிய உகரம் நெடிலாக செய் → செய்யு → செய்யூ எனத் தொடர் இறந்தகால குறித்தது. தகர எழுத்துப்பேறு பெறும்போது செய் → செய் எனத் திரிந்து இறந்த காலம்.மட்டும் கட்டும்.]

 ஊū,    இடை (part) நோவு குறித்த ஒலிக்குறிட் இடைச்சொல்; expression of pain of shiverin ஊ வலிக்கிறது;

     ‘ஊ’ வென்று நடுங்குகிறான் (இ.வ.);.

     [ஊ – ஒலிக்குறிப்பு.]

ஊகடகம்

 ஊகடகம்ūgaḍagam, பெ. (n.)

   ஒரு வகை மீன்; a kind of fish.

ஊகடன்

 ஊகடன்ūkaḍaṉ, பெ. (n.)

   முருங்கை (மூ.அ.);; horse radish tree.

ஊகண்டகம்

 ஊகண்டகம்ūgaṇṭagam, பெ. (n.)

   கடலை; Bengal gram.

ஊகதன்

ஊகதன்ūkadaṉ, பெ. (n.)

   முருங்கை; drumstick,

     [ஊகு1 + ஊகதன்.]

ஊகத்தாதனம்

ஊகத்தாதனம்ūkattātaṉam, பெ. (n.)

   ஒக விருக்கை வகை (யோகாசன வகை); (தத்துவப். 107, உரை);;     (šaiva.); a yōgicposture.

ஊகனம்

ஊகனம்ūkaṉam, பெ. (n.)

   1. காரணங் காட்டுகை; reasoning.

   2. ஊகம்; inference, deduction.

   3, துணிபு; conclusion (செ.அக.);.

     [ஊகம் → ஊகனம் (கொ.வ.);.]

ஊகனி

 ஊகனிūkaṉi, பெ. (n.)

   துடைப்பம் (வின்.);; broom (செ.அக.);.

     [ஊகை → ஊகணி.]

ஊகம்

ஊகம்1ūkam, பெ. (n.)

   1 ஊகம்புல்; broomstickgrass

     “ஊகம் வேய்ந்த உயர்நிலை வரைப்பின்ஞ (பெரும் பாண்.122);.

   2. கருங்குரங்கு; black monkey.

     “பைங்க ணுகம் பாம்பு பிடித்தன்ன” (சிறுபாண்.221);.

   3. பெண் குரங்கு; female monkey.

க. ஊக.

     [

   1. ஊகு → ஊகம். 2 உலுமம் → உலுகம் → ஊகம். உலுமம் = கரியமயிர்.]

 ஊகம்2ūkam, பெ. (n.)

   1 உய்த்துணர்தல்; interence conjecture, guess,

     “ஊகமனுபவம் வசனமூன்றுக்கும்”

   2. கருத்து (சூடா);; thought, consideration, deliberation

   3. உத்தி; skill, discernment

     “ஊக முளதேற் சிறுவருரையுங் கொள்க” (ஞானவா முமுட்27);.

   4. அறிவு; knowledge.

     [உல → ஊல் → ஊரு → ஊகம்.]

 ஊகம்3ūkam, பெ. (n.)

   படை வகுப்பு; military array, squadron

     ‘ஊகவான் படையுலப்ப” (கந்தபு

சூரனகர்புரி.1).

     [உகு → ஊகு → ஊகம்.]

 ஊகம்4ūkam, பெ. (n.)

புலி. (அக.நி.);: tiger.

     [உகு → ஊகு → ஊகம் உகுத்தல் = அழித்தல், கொல்லுதல். ஊகம் = கொல்லும் தன்மை வாய்ந்த புலி.]

ஊகாக்கியம்

 ஊகாக்கியம்ūkākkiyam, பெ. (n.)

   கலவைக் கீரை; different varieties of greens mixed together for use in food.

ஊகாஞ்சிதம்

ஊகாஞ்சிதம்ūkāñjidam, பெ. (n.)

   தற்குறிப் பேற்றயணி வகை (தொன். வி. 346);; a figure of speech.

     [Skt. oha+ancita → த. ஊகாஞ்சிதம்.]

ஊகாமுள்

 ஊகாமுள்ūkāmuḷ, பெ. (n.)

   ஊகம் புல்லின் முள்; spring them of broomstick-grass

     [ஊகம் + முள்]

 ஊகாமுள்ūkāmuḷ, பெ. (n.)

   ஊகம்புல்லின் முள்; spiny thorn of broomstick grass (செ.அக.);.

க. ஊகு.

     [ஊகை → ஊகா + முள்.]

ஊகாரம்

ஊகாரம்ūkāram, பெ. (n.)

   உயிர்நெட்டெழுத்து ஊ; the long vowel u”

ஊகாரம் நவவொடு நவிலா” (தொல்.2-42);

     [ஊ + காரம் – காரம் எழுத்துச் சாரியை]

ஊகி

ஊகி1ūkittal,    4.செ.குன்றாவி (v.t.)

   1. முன்னதாகக் கருதுதல்; to conjecture, guess, infer

   2. கலந்தாய்தல்; to consider deliberate. (செ.அக.

   3. இட்டுக்கட்டுதல் (ஆ,அக);; to imagine.

     [உல் (கூர்மை); → ஊல் → ஊ → ஊகு → ஊகி (க.வி.41);.]

 ஊகி2ūki, பெ. (n.)

   நுண்ணறிவுடையோன்-ள்; intelligent discerning person. (செ.அக.);.

     [ஊகம் → ஊகி]

ஊகிமொழி

 ஊகிமொழிūkimoḻi, பெ. (n.)

   செய்கை (சைகை); காட்டிப் பெசும்பொழி (Pond.);; language by signs (செ.அக.);.

     [ஊகி + மொழி]

ஊகு

ஊகு1ūkudal, .

   7. செ.கு.வி (v.i.);

   1. அசைதல்; to move

   2. ஊசலாடுதல்; to swing

   3. நீளுதல்; to lengthen.

க. ஊகு.

     [ஊ → ஊகு.]

 ஊகு2ūku, பெ. (n.)

   1. கூர்மை; sharpness.

   2. நுண்ணறிவு; intellect

     [உ → உல் (கூர்மை); → ஊல் → ஊகு.]

ஊகுமுள்

ஊகுமுள்ūkumuḷ, பெ. (n.)

   1. சுனண; prickles or sharp points as on certain leaves.

   2. துடைப்பம்முள்; thorn of broom-stick grass (சா.அக);

     [உ → உல் (கூர்மை); → ஊல் → ஊகு + முள்.]

ஊகூ

ஊகூūā, பெ. (n.)

   1. கந்தருவர் எனப்படும் யாழோருள் ஒருவன்; Huhu, a Gandharva, associated with Haha ஆகாவு மூகூவும்.

   2. சிந்துவெளி முத்திரையில் காணப்படும் இயற்பெயர்; proper_name in the Indus Sea No.2803

     [ஊஊ → ஊகூ.]

ஆஆ. (ஆகா); எனவும் ஊஊ (ஊகூ); எனவும் பெயரிட்டுக் கொள்வது தொன்முது கால மரபு சிந்துவெளி முத்திரைகளிலும் ஆஆ. ஊஊ என்னும் இயற்பெயர்கள் காணப்படுகின்றன.

ஊகை

ஊகை1ūkai, பெ. (n.)

   கல்வி; earning, erudition wisdom, (செ.அக.);.

     [உலகு2 → ஊகை.]

 ஊகை2ūkai, பெ. (n.)

ஊகம்1 பார்க்க;see ugam1

ஊக்கப்பாடு

ஊக்கப்பாடுūkkappāṭu, பெ. (n.)

   ஊக்கங்கொள்கை; Zeal, fervour.

     “குன்றா நன்றியு மூக்கப்பாடும்” (திருவிளைநகரப்.57);, (செ.அக.);.

     [ஊக்கம் + பாடு.]

ஊக்கம்

ஊக்கம்ūkkam, பெ. (n.)

   1. மனக்கிளர்ச்சி (குறள்,382);; impulse, ardour, zeal.

   2. முயற்சி; exertion, effort

     “ஊக்க வேர்பூட்டி” (சீவக.962);.

   3. வலிமை; strength, power force.

     “ஊக்கமுடையா னொடுக்கம்” (குறள். 486);.

   4. வினைமேற் கொண்ட எண்ணம்; firm persuasion, conviction.

     “இடஞ் சிறிதென்னு மூக்கந்துரப்ப” (புறநா.8.3);.

   5. உயர்ச்சி (சூடா.);; height, elevation, hugeness

   6. மிகுதி (பிங்.);; abundance,

   7. உண்மை (திவா.);; truth (செ.அக.);.

   8. உள்ளத்தின் மிகுதி (ஆ.அக.);:

 enthuslasm

   9. மனத்தாற்றல்; will power.

ம. ஊக்கம்: க. உர்க்கு உக்கு தெ. உக்கு

     [ஊக்கு → ஊக்கம்.]

ஊக்கறை

 ஊக்கறைūkkaṟai, பெ. (n.)

   ஒழுங்கான கொம்பு, நிறம், உறுப்புகள் இல்லாத தோற்றத்தில் அருவருக்கத் தக்க மாடுகள்; ugly cattle.

     [ஊக்கு-ஊக்கறை]

ஊக்கலர்

ஊக்கலர்ūkkalar, பெ. (n.)

முயற்சியுடையவர்: persons of energy, of spirit of pluck.

     “உயர்ந்த வுதவு யூக்கலர்த் தம்மின்” (மதுரைக்.743);. (செ.அக.);.

     [ஊக்கு → ஊக்கல் → ஊக்கலர்]

ஊக்கல்

ஊக்கல்ūkkal, பெ. (n.)

   1. முயலுகை; putting forth effort.

     “என்று நன்றுக்க லந்தண ருள்ளம்” (நான்மணி 86);.

   2. மிகுதி (சூடா.);; abundance (செ.அக.);

   3. எழுப்பல்; raising

   4. ஏறுதல்; climbing.

   5. தளர்த்தல்; relaxing

   6. அசைத்தல்; shaking, moving

   7. அதிகப்படுத்துதல்; enhancing boosting,

   8. உள்ளத்தை உந்து வித்தல் அல்லது ஒருவினையின் மேற்செலுத்தல் (சு,வி.41);:

 encouraging, inspiring;

     [ஊக்கு → ஊக்கல்.]

ஊக்கிறாக்குருவி

 ஊக்கிறாக்குருவிūkkiṟākkuruvi, பெ. (n.)

   ஒரு வகைக் குருவி; a kind of sparrow (சா.அக.);.

     [ஊக்கு → ஊக்கணம் + குருவி – ஊக்கணாங்குருவி → ஊக்கராங்குருவி → ஊக்கிறாக்குருவி (கொ.வ.); ஊக்குனா (நிலப்பனை); மரத்தில் வாழும் குருவியாகலாம்.]

ஊக்கு

ஊக்கு1ūkkudal,    5. செ.குன்றாவி (v.t.)

   .1 ஆட்டுதல்; to swing, shake,

     “ஐய சிறிதென்னை யூக்கி யெனக்கூற” (கலித்.37);, 2, நெகிழ்த்துதல்;

 to loosen as one’s hold.

     “கைகளை பூக்கப் பசந்தது…… நுதல்” (குறள்.1238);.

   3. தப்புதல்; to miss the mark

     “ஊக்கருங் கணையினர்” (மதுரைக்.647);.

   4. ஊக்கமூட்டுதல்; to encourage, motivate, prompt

அந்தக் காரியத்தில் அவனை ஊக்கினார்.

   5. முயலுதல்; lo make an effort act with energy.

     “நீனெறி பூக்கினா னுவவுறு மதியி னொண்மையான்” (சீவக.1409);.

   6. கற்பித்தல்; to teach, instruct

     “விஞ்சைகளிரண்டும்…..ஊக்கினன்” (கம்பராதாடகை18);.

   7. நினைத்தல்; to consider ruminae (v.i.);.

   8. அசைத்தல் (அ.ஆக.);; to move, stir up.

   ம. ஊக்குக: க. உய், ஒய்;   து. உச்சாலு;தெ., பட ஊகு.

     [ஊகு → ஊங்கு → ஊக்கு.]

 ஊக்கு2ūkkudal,    5 செ.குன்றாவி (v.t.)

   ஏறுதல் இவர்தல்; to ride.

   2. நோக்குதல்; to look at, to perceive. (செ.அக.);

   3. உள்ளத்தை முற்செலுத்துதல்; to impel.

     [ஊங்கு → ஊக்கு → ஊக்குதல் (சு.வி41);.]

ஆரிய மொழிகளிலும் முற்செலவும் ஊக்கலும் பற்றிய சொற் கள் சில ஊகாரச் கட்டடியாய்ப் பிறந்துள்ளன.

 O.Fr ussier, Fr huissier. Eusher, lo walk before, L. urgeo, E urge, to drive, to press Sans urja, U = ஊ, உ.

 ஊக்கு3ūkku, பெ. (n.)

   1. ஊக்கம்; zeal, spirit

     “ஊக்கொடு பரலென வுருமுப் பற்றுமால்” (கந்தபு திருப்பர.11); (செ.அக.);.

   2. எழுப்புதல்; arousa, awakening

   3. கற்பித்தல்: briefing.

   4. சிந்தித்தல்; thinking,

ம. ஊக்கு.

     [ஊங்கு → ஊக்கு. (சு.வி41);.]

 ஊக்குūkku, பெ. (n.)

   கொக்கி; clasp, used in clothing.

     [E. hook → த. ஊக்கு.]

ஊக்குநர்

ஊக்குநர்ūkkunar, பெ. (n.)

   முயல்பவர்; one who motivates, prompts.

     “உள்ளம் அழிய, ஊக்குநர் மிடல்தடிந்து (பதிற்.13-18);

     [ஊக்கு + நர்]

ஊக்குனா

ஊக்குனாūkkuṉā, பெ. (n.)

   நிலப்பனை (சித்.அக.);; moosly root (செ.அக.);.

     [ஒருகா. ஊக்கு1 + உணா.]

ஊக்கும்

 ஊக்கும்ūkkum, பெ. (n.)

   உத்தரவு; order (P.T.L.);.

     [U. hukkum → த. ஊக்கும்.]

ஊங்கணோர்

ஊங்கணோர்ūṅgaṇōr, பெ. (n.)

முன்னுள்ளோர்:

 those who lived in former times ancestors

     “தூங்கெயிலெறிந்த நின்னூங்க ணோர் நினையின்” (புறநா.39);, (செ.அக.);.

     [ஊங்கண் + ஊங்கனோர்.]

ஊங்கண்

ஊங்கண்ūṅgaṇ, வி.எ. (adv)

   1. உவ்விடத்து (தொல் எழுத்,114);; yonder, where you are

   2. முற்காலத்தில் in former time

     “ஊங்கணோங்கிய வுரவோன்றன்னை.” (மணி.21,181);.

     [ஊங்கு _ ஊங்கண். (வே.க.29);.]

ஊங்கனூர்

 ஊங்கனூர்ūṅgaṉūr, பெ. (n.)

   சேரநாட்டின் கடற்கரையூர்; ancient city on the seashore of Chera land.

     [ஊங்கண் + ஊர். (முன்னுள்ள ஊர்);. இவ்வூரில் சேரன் கடப்ப மரத்தை வெட்டினாள் எனக் கூறப்படுகிறது (அபி.சிந்.);.]

ஊங்காரப்பறவை

 ஊங்காரப்பறவைūṅgārappaṟavai, பெ. (n.)

   பறவை வகைகளுள் ஒன்று; a species of bird

     [ஊங்காரம் + பறவை ஊங்காரம் – ஒப்புதல் காட்டும் ஒலிக்குறிப்பு.]

ஊங்காரம்

 ஊங்காரம்ūṅkāram, பெ. (n.)

   பெரிதாக ஒசை எழுப்புதல்; to make loud noise.

     “உன் ஊங்காரம் என்னிடம் கெலிக்காது”

     [ஊ-ஊங்காரம்]

ஊங்கு

ஊங்கு1ūṅgu,    வி.எ. adv) . முன்னிலையிடம், உவ்விடம்; yonder, where you are

     “ஊறுகட மாவுறவூங்கெலாம்” (கம்பரா. வரைக்காட்.60);,

   2. முன்பு; in former times.

     “உணரா வூங்கே” (குறுந்:297);.

     [ஊ → ஊங்கு.]

 ஊங்கு2ūṅgu, பெ. (n.)

   1. மிகுதி (சூடா.);; superiority, greatness.

   2. மேம்பட்டது; that which is lofty

     “கல்வியினூங்கில்லை”. (நீதிநெறி.2);.

     [உங்கு → ஊங்கு. (வே.க.29);.]

 ஊங்கு3ūṅgudal,    5.செ.கு.வி. (v.i.)

   ஆடுதல்; to swing

     “பூங்க ணாய மூக்க வூங்காள்” (நற்.90);. (செ.அக.);

தெ. ஊகு

     [ஊ → ஊகு → ஊங்கு.]

ஊங்கொட்டு-தல்

ஊங்கொட்டு-தல்ūṅgoṭṭudal,    5.செ.கு.வி. (v.i.)

   பிறர் சொல்வதைத் தொடர்ந்து கேட்பதற்கும், சரி என்று ஒப்புவதற்கும் அடையாளமாக ‘ஊ’ என்று சொல்லுதல்; to respond by ejaculating

     ‘um’ as in listening to a story that is to say

     ‘yes’, agree without questioning (செ.அக.);.

   ம. க. ஊம்;தெ ஊ

     [உம் → ஊம் + கொட்டுதல்.]

ஊசகம்

ஊசகம்ūcagam, பெ. (n.)

   1. உப்பு; sat

   2. மிளகு; pepper

   3. விடியற்காலம்; day-break.

     [ஊசல் – புவர்தல், உலர்தல் ஊசு → ஊசகம்.[

ஊசணம்

ஊசணம்ūcaṇam, பெ. (n.)

   1. மிளகு: blackpepper.

   2. திப்பிலி; long-рөppөг. (சா.அக.);.

     [ஊக → ஊசனம் ஊசகம் பார்க்க;see usagam.]

ஊசநாற்றம்

 ஊசநாற்றம்ūcanāṟṟam, பெ. (n.)

   ஊசல் நாற்றம்; foul Smell. [ஊ

     [ஊ → ஊள் → ஊசு → ஊசல் + நாற்றம்.]

ஊசமன்

 ஊசமன்ūcamaṉ, பெ. (n.)

ஆவி, vapour (சா.அக.);.

     [உல் → உணல் → ஊக → ஊசமன்]

ஊசம்

ஊசம்ūcam, பெ. (n.)

உவர்மண் பூமி: salt-ground

   2. சவர்க்கார நிலம்; soil impregnated with soda or saline particles

   3. துளை; cleft ora hole. (சா.அக.);.

     [உவல் → ஊவல் → ஊசல் → ஊசம்.]

ஊசரக்கல்

 ஊசரக்கல்ūcarakkal, பெ. (n.)

   சக்கான் கல்; ime-stone. (சா.அக.);

     [ஊக → ஊசரம் + கல்]

ஊசரம்

ஊசரம்ūcaram, பெ. (n.)

   1. உவர்த்தரை; brackish, sterie land

   2. உவர்மண்; washerman’s or fuller’s earth (செ.அக.);

   3. பூவமுலை (ஆ.அக.);: Saline soil.

     [உவல் → உளவல் → வாயல் → ஊசல் → வாசலம் → வாசரம்.]

ஊசற்கறி

 ஊசற்கறிūcaṟkaṟi, பெ. (n.)

   பதனழிந்த கறி; old curry grown stale and nauseous, (சா.அக.);.

     [ஊசல் + கறி.]

ஊசற்சீர்

ஊசற்சீர்ūcaṟcīr, பெ. (n.)

ஊசல்வரி பார்க்க;see usal-vari

     “நாம் பாடுஞ் சேயுய ருசற்கீர்” (கலித்.131);. (செ.அக.);.

     [ஊசல் + சீர்]

ஊசற்பயற்றுக்காரி

 ஊசற்பயற்றுக்காரிūcaṟpayaṟṟukkāri, பெ. (n.)

   வறுமைமிக்க கிழவி; destitute old woman Lit, she that strives to make a living out of stale or spoiled preparation of pulse (செ.அக.);

     [ஊசல் + பயறு + காரி பயறுகளை வேக வைத்து விற்றுவாழும் பெண்.]

ஊசற்பருவம்

 ஊசற்பருவம்ūcaṟparuvam, பெ. (n.)

   பெண்பாற்பிள் ளைத் தமிழ்ப் பருவங்களுளொன்று; one of en paruvams which describes the stage of childhood in

 which a girl delights in being swung on a swing (செ.அக.);.

     [ஊசல் + பருவம்]

ஊசலாங்கொடி

 ஊசலாங்கொடிūcalāṅgoḍi, பெ. (n.)

   சகுண்டைக் கொடி; creeping plant (unidentified);.

     [ஊசல் + ஆம் + கொடி.]

ஊசலாடு-தல்

ஊசலாடு-தல்ūcalāṭudal,    5.செ.குவி (v.i.)

   1. ஊஞ்சலாடுதல்; to swing

     “பொன்னு சலாடாமோ” (திருவாச 16,1);.

   2. அசைதல்; to move to and fro,

     “ஊசலாடு பைங்கமுகு” (சீவக.68);.

   3. போக்குவரத்தாயிருத்தல் (வின்.);; lo frequent, come and go (செ.அக.);.

   4. உலவித் திரிதல் ((அ.ஆக.);; to wander, roam.

     [ஊசல் + ஆடு.]

ஊசலாட்டம்

ஊசலாட்டம்ūcalāṭṭam, பெ. (n.)

   1. ஊஞ்சலாடுகை; swinging

   2. போக்குவரத்து; going backward and forward (W.);.

     [ஊஞ்சல் → ஊசல் + ஆட்டம்.]

ஊசலாட்டு

 ஊசலாட்டுūcalāṭṭu, பெ. (n.)

ஊசலாட்டம் பார்க்க;see usalãoam

     [ஊஞ்சல் → ஊசல் + ஆட்டு.]

ஊசலி

 ஊசலிūcali, பெ. (n.)

ஊசலாங்கொடி பார்க்க;see usalangodi. (சா.அக.);.

     [ஊசல் → ஊசலி.]

ஊசல்

ஊசல்ūcal, பெ. (n.)

   1. அசைவு; moving to and to

     “பூங்குழை யூசற் பொறை சால் காதின்” (பொருந.30);.

   2. ஊஞ்சல்; swing

     “ஊசலுர்ந்தாட” (கலித்,37);.

   3. ஒருவகைச்சிற்றிலக்கியம்; swing-song, a poem in praise, composed of verses in agaval viruttam or kali-t-lālišai metre, purporting to be sung when moving a swing on which is seated the Idol or the person

   4. கலம்பக உறுப்புகளுளொன்று; member or component part of Kalambagam (இலக். வி. 812);.

   5. மனத்தடு மாற்றம்; trepidation, perturbation, fear

     “ஊசனீங்கினர்” (கம்பரா.நாகபா.130. (செ.அக.);.

   ம. ஊஞ்சல்;   து. உச்சலு: தெ உய்யல் க, உய்யாலெ, உய்யாவ; L- Oscillum, a swing. E Osciliale, lo swing.

     [உந்து → உந்தல் → உஞ்சல → _ஊஞ்சல் → ஊசல்.]

 ஊசல்2ūcal, பெ. (n.)

   1 பதனழிந்தது; that which is fetid, that which has become stake, rank

     “குணத்ரயத்தொடு தடுமாறு மூசலை’ (திருப்பு:532);.

   2. இவறுதல்; miserliness, stinginess, prob, fig from fetidness.

     [உல் → ஊல் → ஊள் → ஊளல் → ஊசல்.]

ஊசல் வரி

ஊசல் வரிūcalvari, பெ. (n.)

   ஊஞ்சற் பாட்டு (சிலப்.291-);; song to accompany swinging (செ.அக.);.

     [ஊஞ்சல் → ஊசல் + வரி]

ஊசா

 ஊசாūcā, பெ. (n.)

   மூக்குத்திக்கொடி. (வின்.);; blunt-leaved hogweed. (செ.அக.);

     [ஊச → ஊசா.]

ஊசாட்டம்

ஊசாட்டம்ūcāṭṭam, பெ. (n.)

ஒற்று அறிதல், நோட்டம் பார்த்தல்:

 to spy.

அவன் மெல்ல வந்து ஊசாட்டம் பார்க்கிறான்”

     [ஊசு-ஊசாட்டம்]

 ஊசாட்டம்ūcāṭṭam, பெ. (n.)

   1. ஊசலாட்டம் பார்க்க: see Jéalátam

   2 களவு; theft

   3. விரைவு; speed

     [|ஊசல் + ஆட்டம்.]

ஊசான்

 ஊசான்ūcāṉ, பெ. (n.)

   நெட்டையாக வளர்ந்து மெலிந்தவன்; tall slender person (சேரநா.);.

     [ஊசல் → ஊசலான் → ஊசான், ஊசல் = நீட்சி, மெலிவு.]

ஊசாம்பி

 ஊசாம்பிūcāmbi, பெ. (n.)

   பருமானானவன்; bulky stupid man (சேரநா.);.

     [ஊது → ஊதாம்பி →ஊசாம்பி.]

ஊசாலி

 ஊசாலிūcāli, பெ. (n.)

   ஊற்றால், மீன்பிடி கூடை; pointed basket fish trap. (செ.அக.);.

     [ஊக = கூர்மூக்கு. ஊக → ஊசாலி. கூம்புவடிவ மீள்கூடை.]

ஊசி

ஊசி1ūci, பெ. (n.)

   1. தையலூசி (பிங்.);; sewing needle

   2. எழுத்தாணி; iron style for writing on palmyra leaves

     “பொன்னோலை செம்பொனுசியா லெழுதி” (சீவக. 369);.

   3 துலாக்கோலின் முள்; needle of a balance magnetic needle.

   4. சூரியக் கடிகாரத்தின் முள் (வின்);; pointer of dial.

   5. நிரைக்கழு; spike put up to protect gates and walls.

     “பெரு ரூசியும்” (சிலப்.15. 213);.

   6. அடியொட்டி; instrument with spikes to perce the feet

     “உள்ளடி பூசிபாய” (சீவக.2768);.

   7. குண்டூசி; pin

   8. குயவர் மட்கலத்தை அறுக்குங் கருவி; potter’s instrument used for fashioning clay.

   9. கூர்மை; sharpness, poinledness.

     “குவிமுகி மூசிவெண் டோடு” (பதிற்றுப்.70.7);.

   10. சிறுமை; slenderness, thinness, lightness ஊசித்தொண்டை., (செ.அக.);.

   ம. ஊசி;   க. சூசி;பட. சூஞ்சி.

     [உளி → உசி → ஊசி (வே.க.87-88);.]

   ஊசி2 பெ. (n); வடக்கு; north

     “பாசிச் செல்லா தூசித்துன்னாது” (புறநா.229);. (செ.அக.);.

     [உடு + தி→ உடுதி → உடுசி (வடகோடி உடுமண்டலத்திசை);. உடுசி → ஊசி. இனி, உடு → உடுக்கு → உடக்கு → வடக்கு என்பதும் வடகோடி, உடுமண்டலத்திசை கட்டியது காண்க);

த. உடுசி → Skt udici.

ஊசி மல்லிகை

 ஊசி மல்லிகைūcimalligai, பெ. (n.)

   முல்லைக்கொடி வகை (L.);; eared Jasmine.

     [ஊசி + மல்லிகை]

ஊசி மீன்

 ஊசி மீன்ūcimīṉ, பெ. (n.)

ஊசிக்கழுத்தி பார்க்க;see Úss-k-kalutti.

     [ஊசி + மீன்.]

ஊசிக்கணவாய்

 ஊசிக்கணவாய்ūcikkaṇavāy, பெ. (n.)

மீன்வகை (வின்.);: a species of cuttle fish. (செ.அக.);.

ம. ஊசியுடத்தேடு.

     [ஊசி (சிறுமை); + கணவாய்.]

ஊசிக்கண்

 ஊசிக்கண்ūcikkaṇ, பெ. (n.)

   சிறுகண்; small eyes. ஊசிக் கண்ணிலே ஆகாசம் பார்த்ததுபோல் (இ.வ.); (செ.அக.);.

     [ஊசி = சிறியது. ஊசி + கண் வடபுலத்தில் சகரச் சேர்ப்பால் ஊசி → குசி எனத் திரிந்தது.]

ஊசிக்கப்பல்

 ஊசிக்கப்பல்ūcikkappal, பெ. (n.)

   புகையிலை வகை; indigenous variety of tobaccos (செ.அக.); .

     [ஊசி + கப்பல். கப்பல் = கப்பல் வழிவந்த சரக்கு.]

ஊசிக்களா

 ஊசிக்களாūcikkaḷā, பெ. (n.)

முள்ளுக்களாச் செடி (L);, fascicled-leaved spinous barberry (செ.அக.);.

     [ஊசி + களா.]

ஊசிக்கழுத்தி

 ஊசிக்கழுத்திūcikkaḻutti, பெ. (n.)

   கொக்கு மீன்; marine fish, long-nosed yellowish greens (செ.அக.);.

ம. ஊசிமீன்.

     [ஊசி + கழுத்தி]

ஊசிக்காது

ஊசிக்காதுūcikkātu, பெ. (n.)

   1. ஊசித்துளை; eye of a needle,

   2. நுனித் தறியுஞ் செவிப்புலன்; sharp ear, acuteness of hearing (செ.அக.);.

     [ஊசி + காது.]

ஊசிக்காந்தம்

 ஊசிக்காந்தம்ūcikkāntam, பெ. (n.)

   இரும்பை இழுக்குங் காந்தக்கல்; loadstone magnet.

     [ஊசி+காந்தம்]

ஊசிக்காய்

 ஊசிக்காய்ūcikkāy, பெ. (n.)

   தேங்காய் வகை; species of coconut (செ.அக.);

     [ஊசி + காய்.]

ஊசிக்கார்

 ஊசிக்கார்ūcikkār, பெ. (n.)

   மூன்று மாதத்திற்பயிராகும் நெல் வகை; a kind of paddy sown inMay and reaped in July. (செ.அக.);.

     [ஊசி + கார்]

ஊசிக்கால்

 ஊசிக்கால்ūcikkāl, பெ. (n.)

   நடுக்குத்துக்கால (வின்.);; king post (செ.அக.);.

     [ஊசி + கால்]

ஊசிக்குத்தல்

 ஊசிக்குத்தல்ūcikkuttal, பெ. (n.)

   உடம்பினுள் ஊசியின் வழியாக மருந்து புகட்டல்; throwing or introducing a liquid medicine within the body by a needle-injection.

     [ஊசி + குத்தல்.]

ஊசிக்குத்தாளை

 ஊசிக்குத்தாளைūcikkuttāḷai, பெ. (n.)

   நெல்வகை; a variety of paddy (செ.அக.);.

     [ஊசி + குத்தானை.]

ஊசிக்குறண்டி

 ஊசிக்குறண்டிūcikkuṟaṇṭi, பெ. (n.)

   முட்குறண்டி; thony shrub (சா.அக.);

     [ஊசிக +குறண்டி.]

ஊசிக்கூடு

 ஊசிக்கூடுūcikāṭu, பெ. (n.)

   ஊசி வைக்குங்கூடு; needle-case (செ.அக.);.

     [ஊசி + கூடு.]

ஊசிச்சம்பா

 ஊசிச்சம்பாūciccambā, பெ. (n.)

   சம்பா நெல்வகை; a variety of cambā paddy, yielding a siender kernel (செ.அக.);.

     [ஊசி + சம்பா.]

ஊசித்தகரை

 ஊசித்தகரைūcittagarai, பெ. (n.)

   அவரை வகை. (L);; shrubby bean (செ.அக.);.

     [ஊசி + தகரை.]

ஊசித்துறல்

 ஊசித்துறல்ūcittuṟal, பெ. (n.)

   சிறுமழை; ight drizzle (செ. அக.);.

     [ஊசி+ துறல்]

ஊசித்தொண்டை

 ஊசித்தொண்டைūcittoṇṭai, பெ. (n.)

   சிறு தொண்டை; slender, narrow throat

ஊசித் தொண்டையும் தாழி வயிறும் (இ.வ.);.

     [ஊசி + தொண்டை]

ஊசிநரம்பு

 ஊசிநரம்புūcinarambu, பெ. (n.)

   காதிலுள்ள ஊசியைப் போன்றவோர் நரம்பு, கேள்வி நரம்பு; auditory nerve-acusticus (சா.அக);.

     [ஊசி + நரம்பு]

ஊசிநீர்

ஊசிநீர்ūcinīr, பெ. (n.)

   1. மூத்திரம்; urine

     ‘தொடுத்திடுவாய் தங்கள்தங்கள் ஊசிநீரில் அடுத்திடு வாய் நடுநீர்ச்சூ டாறுமுன்னே” (சா.அக.);.

   2. மழை நீர்; rain water.

   3. வாய்நீர்; saliva (சா.அக.);.

   4. பிறப்பு உறுப்பு; genital organ உகநீர் (கொங்.வ.);.

     [ஊக + நீர் – ஊகநீர் – ஊசிநீர்.]

ஊசிப்பலகை

 ஊசிப்பலகைūcippalagai, பெ. (n.)

   வலை பின்னும் ஊசி; needle for making nets (செ.அக.);.

     [ஊசி + பலகை]

ஊசிப்பார்வை

 ஊசிப்பார்வை cippārvai, பெ. (n.)

   பார்வை; acuteness or clearness of vision-acuity. (செ.அக.);.

     [|ஊசி + பார்வை.]

ஊசிப்பாலை

 ஊசிப்பாலைūcippālai, பெ. (n.)

   கொடிவகை (ட);; needle-leaved swallow-wort (செ.அக.);.

     [ஊசி + பாலை.]

ஊசிப்புல்

 ஊசிப்புல்ūcippul, பெ. (n.)

ஊசியைப்போன்ற புல், needle-shaped grass, (சா.அக.);.

     [ஊசி + புல்]

ஊசிப்புழு

 ஊசிப்புழுūcippuḻu, பெ. (n.)

   புழு வகை; worm of the shape of a needle, brought out of the ground by a light drizzle on a sunny day. (செ.அக.);.

     [ஊசி + புழு]

ஊசிப்போதல்

 ஊசிப்போதல்ūcippōtal, பெ. (n.)

   ஊசல் நாற்றமடித்தல்; becoming putrified from being kept long, becoming stale and nauseous. (சா.அக);.

     [ஊசி + போதல்.]

ஊசிமிளகாய்

 ஊசிமிளகாய்ūcimiḷakāy, பெ. (n.)

   கொச்சி மிளகாய்; bird pepper, very fiery. (செ.அக.);.

     [ஊசி + மிளகாய்.]

ஊசிமிளிரை

 ஊசிமிளிரைūcimiḷirai, பெ. (n.)

   காசி யாளி; a species of oleander with yellow flowers (சா.அக.);.

     [ஊசி + மிளிரை.]

ஊசிமுனை

 ஊசிமுனைūcimuṉai, பெ. (n.)

   ஊசி நுனி; needle’s point

     [ஊசி + முனை.]

ஊசிமுனையளவு

 ஊசிமுனையளவுūcimuṉaiyaḷavu, பெ. (n.)

   மிகச் சிறிய அளவு; extremely small size or quantity. (சா.அக.);.

     [ஊசி + முனை + அளவு.]

ஊசிமுறி

ஊசிமுறிūcimuṟi, பெ. (n.)

   இடைக்காடரியற்றிய ஒரு நூல். (யாப்.வி.95.பக் 375);; poem by idai-k-kādar, not extant.

     [ஊசி + முறி]

ஊசிமுல்லை

 ஊசிமுல்லைūcimullai, பெ. (n.)

   ஊசிமல்லிகை (பிங்.);; eared jasmine (செ.அக.);.

     [ஊசி + முல்லை.]

ஊசியாவரை

 ஊசியாவரைūciyāvarai, பெ. (n.)

   வெள்ளை யாவரை; Ilaian senna. (சா.அக.);.

     [ஊசி + ஆவரை.]

ஊசியுப்பு

 ஊசியுப்புūciyuppu, பெ. (n.)

   வெடியுப்பு; nitre potassium nitrate. (சா.அக.);.

     [ஊசி + உப்பு.]

ஊசியேற்றல்

 ஊசியேற்றல்ūciyēṟṟal, பெ. (n.)

   ஊசியை உடம்பினுட்பாய்ச்சி மருந்தேற்றல்; injecting medicines into the system by means of a needle (சா.அக.);.

     [ஊசி + ஏற்றல்.]

ஊசியோடு-தல்

ஊசியோடு-தல்ūciyōṭudal,    5.செ.கு.வி. (v.i.)

   ஊசித் தையல் செல்லுதல்; to pass the neede through in sewing (செ.அக.);. [ஊசி + ஒடு.]

ஊசியோட்டல்

 ஊசியோட்டல்ūciyōṭṭal, பெ. (n.)

ஊசியேற்றல் பார்க்க: see usi-yerral. (சா.அக.);.

     [ஊசி + ஒட்டல்.]

ஊசிவண்ணம்

 ஊசிவண்ணம்ūcivaṇṇam, பெ. (n.)

   ஒருவகைப்புடவை; a kind of saree. (செ.அக.);.

     [ஊசி + வண்ணம்.]

ஊசிவாசி

ஊசிவாசிūcivāci, பெ. (n.)

தட்டார். தையற்காரர் ஆகியோரிடமிருந்து அரசு பெறும் வரி:

 tax collected from goldsmiths and tailors.

     ‘தட்டார் பெரால் ஊசிவாசி’ (செ.அக.); (S.l.l.vii. 820);.

     [ஊசி + வாசி. வாசி = வரி.]

ஊசிவாணம்

 ஊசிவாணம்ūcivāṇam, பெ. (n.)

ஊசிவண்ணம் பார்க்க;see US-vannam.

     [ஊசிவண்ணம் → ஊசிவாணம்.]

ஊசிவெடி

 ஊசிவெடிūciveḍi, பெ. (n.)

   சிறிய வெடிவகை; a kind of small-sized crackers. (செ.அக.);.

     [ஊகி + வெடி]

ஊசிவேர்

ஊசிவேர்ūcivēr, பெ. (n.)

   சிறுவேர்; tiny root, thin as a needle,

     “ஊசிவேரோடும் பக்க வேரோடும் மாய்த்து” (ஈடு,1,2,3,ஜீ);

     [ஊசி + வேர்]

ஊசு

ஊசு1ūcudal,    7.செ.கு.வி. (v.i.)

   1. அமுகுதல்; to decay, become fetid, rotten;

 to putresy, as a corpse

     “ஊசிடு மிடும்பை யாகிய உடம்பு” (திருப்பு);. 2 சுவை கெடுதல்;

 to become stale, sour, rank insipid, as food by keeping

     “மாசி லோதனம்….. ஊக மேலினியென் செய்வது” (திருவாலவா.6.4);.

ம., க. ஊக: து. ஊக.

     [உல் → ஊல் → ஊள் → ஊழ் → ஊய் → ஊக. ஊழ்த்தல் = முற்றுதல், முதிர்தல், பதனழிதல், அழுகுதல், கெடுதல், நாறுதல்.]

 ஊசு2ūcudal,    5. செ.குன்றாவி, (v.t) சீவுதல்; to shave, cut off in slices, pare off

     “கணிச்சி போல் கோடுசி” (கலித்.101-8);

     [உய் → ஊய் → ஊசு = செலுத்துதல், போக்குதல், நீக்குதல், சீவுதல்.]

 ஊசு3ūcu, பெ. (n.)

   குசு; emission of wind from the anus.

க. து., பட. ஊக.

     [ஊள் → ஊழ் → ஊய் → ஊசு = பதனழிந்த நாற்றம்]

ஊசெனல்

 ஊசெனல்ūceṉal, பெ. (n.)

   இளைப்பாறற் குறிப்பு; onom.expr of relief in sitting down to rest ஊசென்று உட்கார நேரங்கிடையாது (செ.அக.);.

     [ஊக + எனல் ஊசு – பெருக மூச்சுவிடும் இளைப்பாறல் ஒலிக் குறிப்புச்சொல். ஒடிக் களைத்த நாய் ஊகஊக என்று மூச்சு வாங்குகிறது (உ.வ.);.]

ஊச்சி

 ஊச்சிūcci, பெ. (n.)

நத்தை

 snail.

     [ஊ-ஊச்சி]

     [P]

ஊச்சில்

 ஊச்சில்ūccil, பெ. (n.)

   தசை நோய்; morbid state of a muscle, myalgia (செ.அக.);.

     [ஊன் → ஊச்சு → ஊச்சில்]

ஊச்சு

ஊச்சு1ūccudal,    5 செகுன்றாவி (v.i.)

   உறிஞ்சுதல்; to absorb

     “கள்ளத்தி னுச்சுஞ் சுரம்” (ஐந்.ஐம்.38);.

     [உறிஞ்சு → ஊஞ்சு → ஊக்க.]

 ஊச்சு2ūccu, பெ. (n.)

அச்சம் (அக.நி.);: fear

     [ஊசு → ஊச்சு.]

ஊஞ்சற்பாட்டு

 ஊஞ்சற்பாட்டுūñjaṟpāṭṭu, பெ. (n.)

   ஊஞ்சலாடும் போது பாடும் பாட்டு; song sung in swinging, as an idol, or as the bride and bridegroom seated on a swing at wedding (செ.அக.);.

ம. ஊஞ்சால் பாட்டு.

     [ஊஞ்சல் + பாட்டு.]

ஊஞ்சற்பாலம்

 ஊஞ்சற்பாலம்ūñjaṟpālam, பெ. (n.)

   சங்கிலியால் பிணைத்து ஊஞ்சல்போல் அமைத்துள்ள பாலம்; suspension-bridge (சேரநா.);.

ம. ஊஞ்சால் பாலம்.

     [ஊஞ்சல் + பாலம்.]

ஊஞ்சற்பிசின்

 ஊஞ்சற்பிசின்ūñsaṟpisiṉ, பெ. (n.)

   உசில மரத்தின்பிசின்; gum of the usilam tree. (சா.அக.);.

     [ஊஞ்சல் + பிசின்.]

ஊஞ்சல்

ஊஞ்சல்ūñjal, பெ. (n.)

   1. ஊசல் (திவா.);; swing

   2. ஊசற்பாட்டு; song to accompany swinging

திருமணத்தில் ஊஞ்சல் பாடுகிறார்கள் (இ.வ.);.

   ம. ஊஞ்சல், ஊஞ்சால்;   க. உய்யல், ஊய்யல், உய்யாலு, உய்யலு, உவாலெ, உவ்வாலெ;   து. உச்சால், உய்யால், உச்சாலு, உய்யாலு;   தெ. உய்யலி, உயலி, ஊஞ்சால், உய்யல. ஊக, உயால, உய்யால;   கொலா. ஊசெ;   நா. ஊசெ. பர். ஊசல்;கோண். ஊகாக.

     [ஊக்கு → ஊஞ்சு → ஊஞ்சல் ஊக்குதல் = முன்னே

தள்ளுதல்,

     “ஐயசிறிதென்னை ஊக்கி” (கலித்.3);.]

ஊஞ்சல் கட்டில்

 ஊஞ்சல் கட்டில்ūñjalkaṭṭil, பெ. (n.)

ஊஞ்சல்போல்

   ஆடும் வண்ணம் அமைந்த கட்டில்; swinging cot (சேரநா.);.

ம. ஊஞ்சால் கட்டில்,

     [ஊஞ்சல் + கட்டில்.]

ஊஞ்சில்

 ஊஞ்சில்ūñcil, பெ. (n.)

   உசில்; black sirissa.

     [ஊஞ்சு + இல்]

ஊடகங்கள்

 ஊடகங்கள்ūṭakaṅkaḷ, பெ. (n.)

அன்றாட நடவடிக்கைகளை வெளிப்படுத்த உதவும் சாதனம்; medium.

     [ஊடகம் + கள்]

ஊடகத்திரளி

 ஊடகத்திரளிūṭakattiraḷi, பெ. (n.)

   மீன் வகை (வின்);; a kind of fish

     [ஊடகம் + திரளி]

ஊடகம்

 ஊடகம்ūṭagam, பெ. (n.)

   கடல்மீன் வகை; marine fish silvery (செ.அக.);.

ம. ஊடவம்.

     [ஊடு → ஊ கம்.]

ஊடகம்

ஊடணம்

ஊடணம்ūṭaṇam, பெ. (n.)

   1. சுக்கு; dried ginger

   2. மிளகு; pepper.

   3. மிளகுக்கொடி; pepper creeper.

     [ஊடு + அணம்.]

ஊடணை

 ஊடணைūṭaṇai, பெ. (n.)

   திப்பிலி; long pepper (சா.அக.);.

     [ஊடு + அணை.]

ஊடன்

ஊடன்ūṭaṉ, பெ. (n.)

   மீன்வகை; fresh water fish. (செ.அக.);

     [ஊடு → ஊடன்.]

 ஊடன்ūṭaṉ, பெ. (n.)

   1. ஊடக மீன்; fish, silvery, Gerres filamentosus.

   2. கடல் மீன்வகை; marine fish, pristipoma furcatum (செ.அக.); [ஊடன் → ஊடான். ஊடன் பார்க்க;see udan]

ஊடம்

ஊடம்ūṭam, பெ. (n.)

   1. உவர் மண்; saline soil

   2. விடியற்காலம்; dawn.

     [ஊடு + அம்.]

ஊடரக்கல்

 ஊடரக்கல்ūṭarakkal, பெ. (n.)

   சுக்கான் கல்; lime-stone (சா.அக.);.

     [ஊடு → ஊடாம் + கல்]

ஊடரம்

 ஊடரம்ūṭaram, பெ. (n.)

   பூவழலை; saline soil (சா.அக.);.

     [ஊடு → ஊடாம் ஊடு = வெப்பம், வெதும்பல்.]

ஊடறு

ஊடறு1ūṭaṟuttal,    4.செ.குன்றாவி. (v.t.)

   1. ஊடுருவுதல்; to cut through, cleave, sunder, pierce, as an arrow, to force one’s way through.

   2. வழக்குத் தீர்த்த்ல்; to decide between parties, settle amicably, (W);.

     [ஊடு + அறு – ஊடறு-.]

 ஊடறு2ūṭaṟuttal,    4.செ.குன்றாவி. (v.t.)

   இடையில் அடைத்தல் (ஈடு.1.4,4);; to dam;

 to obstruct in the middle

     [ஊடு + அறு.]

ஊடலுவகை

ஊடலுவகைūṭaluvagai, பெ. (n.)

   புலவியின்பின் கூடலால் நிகழும் மகிழ்ச்சி; pleasure derived from reunion after sulking, from temporary variance and huff between husband and wife, (குறள். 133. அதி.);.

     [ஊடல் + உவகை.]

ஊடலொழித்தல்

 ஊடலொழித்தல்ūṭaloḻittal, தொ.பெ. (vbl.n.)

   பிணக்குத் தீர்த்தல்; husband removing the feigned dislike of a wife for the purpose of reunion (சா.அக.);.

     [ஊடல் + ஒழித்தல்.]

ஊடல்

ஊடல்1ūṭal, பெ. (n.)

   1. மருதத்திணையினுரிப் பொருள்களுள் ஒன்றாகிய புலவி; love quarrel, between husband and wife, arising from jealousy appropriate to the agricultural tracts, one of five ur-p-porul (நம்பியகப்.25); (செ.அக.);.

   2. பிணக்கு; disaccord.

   3. வெறுப்பு; dislike.

   4. கணவன் மனைவி இருவரிடைத் தோன்றும் உரையாடாத மென்சினம்; domestic disharmony between husband and wife.

     [ஊடு + ஊடல்.]

 ஊடல்2ūṭal, பெ. (n.)

   மர நிழல்; shade of a tree (செ.அக.);.

     [ஊழ் → ஊடு → ஊடல்.]

ஊடல்விரி

 ஊடல்விரிūṭalviri, பெ. (n.)

   வெள்ளணி யணிந்து விடுத்துழித் தலைவன் வாயில் வேண்டன் முதலா கப் பாங்கி தலைவனை அன்பிலை, கொடியையென்றிகழ்தல்; theme of agam classification of esoteric poem, in which the conversation leading to love quarrel between the hero and heroine groups is elaborately narrated

     [ஊடல் + விரி.]

ஊடாடு-தல்

ஊடாடு-தல்ūṭāṭudal,    5.செ.கு.வி. (v.i.)

   1. நடுவே திரிதல்; to move about go among.

     “ஊடாடு பனிவாடாய்” (தில்.திருவாய்.1.4.9);.

   2. பலகாற் பயிலுதல்; to frequent move about very often

     “தேன் கொண்டூடாடுங் கூந்தல்” (கம்பரா.மாரீசன்.79);.

   3. கலந்து பழகுதல்; to be familiar, to get into close intimacy

     “”சீதையென்னு மான்கொண்மூடாடும் வண்ணம்”” (கம்பரா.மாரீசன்.79);.

   4. கலத்தல்; to come in contact get in touch,

     “கையெழுத்தோ டூடாடாமறை” (குற்றா. தலதிரிகூட34);.

   5. பெரு முயற்சி செய்தல்; to make suppreme effort அவன் அதுநிறைவேற மிகவும் ஊடாடு கிறான். (இ.வ.); (செ.அக);.

   6. கல்வி பயிலுதல் (அ.ஆக.);; to gain knowledge.

ம. ஊடாடுக. க. ஓடாடு: தெ ஊடாடு.

     [ஊடு + ஆடு – ஊடாடு.]

ஊடாட்டம்

ஊடாட்டம்ūṭāṭṭam, பெ. (n.)

   1. பல்காற் பயிலுகை frequent communion, intercourse.

   2. பழக்கம்; intimacy.

ம. ஊடாட்டம்.

     [ஊடாடு → ஊடாட்டம்.]

ஊடாளன்

ஊடாளன்ūṭāḷaṉ, பெ. (n.)

   1. ஒற்றன்; Spy

   2. இருவர் அல்லது இருசாரார்க் கிடையில் கருத்து ஊடாட்டத் திற்கு உதவும் நடுவன்; mediator.

     [ஊடு + ஆளன்.]

ஊடு

ஊடு1ūṭudal,    5. செ.கு.வி. (v.i.)

   1. புலத்தல்; to feign displeasure, as a wife of her husband or vice versa in order to enhance his or her affection.

     “ஊடுதல், காமத்திற்கின்பம்” (குறள்.1330);.

   2. பிணங்குதல்; to be impatient, to show resentment,

     “செறுத்தோறுடைப்பினுஞ் செம்புனலோ டூடார்’ (நாலடி.222);. [உள் → உடு → ஊடு. வாய் திறந்து பேசாமல் உள்ளத்தின் உளைச்சல்களைக் குறிப்பால் புலப்படுத்துதல், நாளடைவில் சொல்லாடிப் புலப்படுத்தலும் ஊடுதலாயிற்று. ஊடுதல் – (உள்ளத்தின்); உளைச்சல்.]

 ஊடு2ūṭudal,    5.செ.கு.வி. (v.i.)

   உண்ணுதல்;   10 eat பன்றி வள்ளிக்கிழங்கை ஊட்டிவிட்டது. (இ.வ.);.

     [உள்→ உண் → ஊடு (உட்கொள்);.]

 ஊடு3ūṭu, பெ. (n.)

   1. நடு; middle, that which comes between

     “ஊடாடு பனிவாடாய்” (திவ்.திரு வாய்.1.4.9);.

   2. இடை; waist

   3. நெசவின் தார்நூல் (வின்.);; woof, thread woven across the warp (செ.அக.);.

   ம. ஊடு;க. உடு: கோத ஊட். து. ஊடு

     [உள் → உடு → ஊடு.]

 ஊடு4ūṭu, பெ. (n.)

   துளை, வழி; hole

     [உடு → ஊடு (வே.க.73);.]

 ஊடு5ūṭu,    குறுவையும் ஒட்டடையுங் கலந்து விதைத்துச் செய்யும் விளைச்சல் (GTD1931,); simultaneous cultivation of kuruvai and ottatai paddy in the same field

     [உடு → ஊடு (கலப்பு].

ஊடுசாகுபடி

ஊடுசாகுபடிūḍucākubaḍi, பெ. (n.)

   இருவகைத் தவசங்களைக் கலந்து பயிரிடுகை; cultivating by mixing two kinds of grain in a seed bed and planting the seedlings indiscriminately. (Gll 1,93);. (செ.அக.);.

     [ஊடு + சாகுபடி.]

ஊடுசெல்(லு)-தல்

ஊடுசெல்(லு)-தல்ūṭuselludal,    13.செ.கு.வி. (v.i.)

   1. நடுவிற்போதல்; to pass through, the centre.

     “உடைகப்பல் கப்பலாய்த் திரையாழி யூடுசெலுமோ” (தாயுசுகவா.11);.

   2. இடையே போதல்; lo enter

 in between

     [ஊடு + செல்.]

ஊடுடே

ஊடுடேūṭuṭē, வி.எ. (adv)

   1 இங்குமங்கும் ,இடையிடையே; off and on irregularly interspersed

   2. அப்போதைக்கப்போது; there and then,

   3 அடிகடி; frequently.

     [உடு → ஊடு + எ)

ஊடுதட்டி

 ஊடுதட்டிūṭudaṭṭi, பெ. (n.)

   இடைத்தரகன்;   இடையில் நின்று மாறுகொண்ட இருவரை ஏய்த்துச் செல்பவன்; go between intermediary cheating both the conflicting parties,,

     [ஊடு + தட்டி.]

ஊடுதட்டு

 ஊடுதட்டுūṭutaṭṭu, பெ. (n.)

கைகலப்பு:

 clash.

     [ஊடு+தட்டு]

 ஊடுதட்டுūṭudaṭṭu, பெ. (n.)

   இருவர் காரியத்தின் இடையிற் புகுந்து பெற்ற வருவாய்; snatching away something as gain, often illegally, as by interfering while two people are quarrelling amongst themselves.

     [ஊடு + தட்டு, தட்டு = தட்டிச்செல்லுதல், பறித்துச்செல்லுதல்.]

ஊடுதல்

 ஊடுதல்ūṭudal, பெ. (n.)

   கலவியிற் பிணங்குதல்; feigning displeasure in sexual affair as a wife does with her husband chiefly with a view to increase his affection. (சா.அக.);.

     [உள் → உடு → ஊடுதல்.]

ஊடுதாக்கு

ஊடுதாக்கு1ūṭudākkudal,    7.செ.கு.வி. (v.i.)

   பின்னிடாமல் எதிர்த்து நிற்றல்; to oppose with firmness, stand resolutely.

     [ஊடு + தாக்கு.]

 ஊடுதாக்கு2ūṭudākkudal,    5. செ.குன்றாவி, (v.t.)

   இரண்டு பொருள்களின் வலிமையை யொப்பிடுதல்; to compare two things with regard to their relative strength (செ.அக.);.

     [ஊடு + தாக்கு.]

ஊடுபயிர்

 ஊடுபயிர்ūṭupayir, பெ. (n.)

மிளகாய், கத்தரி, மற்றும் பிறகாய்கறிச் செடிகளின் வரப்பில்

ஊடுபயிராக வேறொரு பயிரை விளைவித்துப் பயன்பெறல், a side crop, or by crop.

மறுவ ஊடு சாகுபடி.

     [ஊடு+பயிர்]

ஊடுபற்று-தல்

ஊடுபற்று-தல்ūṭubaṟṟudal,    5. செ.கு.வி (v.i.)

   விளக்கு உள்ளே பற்றி யெரிதல் (வின்);; to burn whithin the hollow or bowl of an open lamp, as the wick when the oll is out (செ.அக.);.

     [ஊடு + பற்று.]

ஊடுபாட்டு

ஊடுபாட்டுūṭupāṭṭu, பெ. (n.)

   1. பழக்கம் அறிந்திருத்தல்; custom, habit familiarity.

   2. அறிவு; knowledge (சேரநா.);.

ம. ஊடுபாட்டு.

     [ஊடு + பாட்டு.]

ஊடுபோக்கு

ஊடுபோக்கு1ūṭupōkkudal,    5.செ.குன்றாவி, (v.t.)

   1. இடையே போகச் செய்தல்; to run through, cause to pass through.

   2. வழக்குத் தீர்த்தல்; to decide between parties, settle amicably (செ.அக.);

   3. ஊடுருவச் செய்தல்; to penetrate (ஆ.அக.);.

ம. ஊடு போக்கு.

     [ஊடு + போக்கு.]

 ஊடுபோக்கு2ūṭubōkkubayai, பெ. (n.)

   1. ஊடு செல்லுகை

 passing through, as a jungle, a crowd.

ஆளிகன் ஊடுபோக்கற நிமிர்த்து (திருக்கோ,151.உரை.);

   2. ஒரு பழைய வரி; ancientax

     “ஊடுபோக்கும்…… கோக்கொள்ளப் பெறாதே” (S.l.l.ii,509);.

     [ஊடு + போக்கு.]

ஊடுருவிப்பாய்-தல்

ஊடுருவிப்பாய்-தல்ūṭuruvippāytal,    2 செ.கு.வி. (v.i.)

நடுவினுள் வேகமாய் முழுவதையும்

   துளைத்துச் செல்லல்; passing through anything forcibly and rapidly inter-penetrating. (சா.அக.);.

     [ஊடு + உருவி + பாய்.]

ஊடுருவு-தல்

ஊடுருவு-தல்ūṭuruvudal,    5.செ.கு.வி. (v.i.)

.

   1. இடையுருவிச் செல்லுதல்; to penetrate, pierce, as weapons

     “”நெற்றிதொறு மோரொரு வடிக்கணை யூடுருவ”.. (பாரத இரண்டாம்போ-26);.

ம. ஊடுருவுக.

     [ஊடு + உருவு.]

ஊடுளைச்சல்

 ஊடுளைச்சல்ūṭuḷaiccal, பெ. (n.)

   மாதவிடாய்களுக்கடையெ காணும் வலி; pain occurring between the menstrual periods – midpain. (சா.அக.);.

     [ஊடு + உளைச்சல்.]

ஊடுவெளி

 ஊடுவெளிūṭuveḷi, பெ. (n.)

   இடைவெளி; space in between, gap.

     [ஊடு + வெளி.]

ஊடேவிழு-தல்

ஊடேவிழு-தல்ūṭēviḻudal,    2.செ.கு.வி. (v.i.)

   நடுவிற் புகுதல்; to come between, rush into the midst, interfere.

     [1ஊடு + ஏ +விழு,]

ஊடை

ஊடைūṭai, பெ. (n.)

   ஆடையின் குறுக்கிழை (வின்,);; woof (செ.அக.);.

   2. நூற்றார்; galand to fibres.

   3. உண்டை; ball of thread.

     [ஊடு_ஊடை.]

 ஊடைūṭai, பெ. (n.)

   தேட்கொடுக்கி; scorpior plant or scorpion sting (சா.அக.);

     [ஊடு → ஊடை + மா]

ஊடையம்

 ஊடையம்ūṭaiyam, பெ. (n.)

நீரரண் (வின்.);: dict round a fort or a camp. (செ.அக.);.

மறுவ, அகழி, அகழ்ப்பு: அகப்பா.

     [ஊடு → ஊடையம்.]

ஊட்டம்

ஊட்டம்ūṭṭam, பெ. (n.)

   1. உண்பிக்கை; feeding

   2. உணவு; food refrement.

     “ஊட்டமின்றித் துறந்தா லொக்குமே” (திவ்.நாச்.1.9);.

   3. செழிப்பு; fertility of land, fatness of a person, opp to வாட்டம். இந்த குழந்தை ஊட்டமாயிருக்கிறது (செ.அக.);.

   4. சோற்றுப் படையல்; giving a feast (சேரநா.);.

ம. ஊட்டம்.

     [ஊட்டு → ஊட்டம்]

ஊட்டல்

ஊட்டல்ūṭṭal, பெ. (n.)

   1. உண்பித்தல்; nursing by forcing food into the mouth as in children or patients

   2. பால் கொடுத்தல்; breast feeding

   3. பால் பருகுதல்; the act of sucking in milk.

   4. இன்பதுன்பங்களை உறுத்தல்;   5. பிழைப்பூட்டல்; restoring to life (சா.அக.);,

ம. ஊட்டல்: க. ஊடு. து. ஊட

     [ஊட்டு → ஊட்டல்.]

ஊட்டவிடு-தல்

ஊட்டவிடு-தல்ūḍḍaviḍudal,    1

   8. செ.குன்றாவி. (v.t);

   கன்றை அல்லது குட்டியைப் பால் குடிக்கவிடுதல்; lo lat the young of an animal suck (சா.அக.);.

     [ஊட்டு → ஊட்ட (வி.எ.); + விடு.]

ஊட்டாக்குழந்தை

ஊட்டாக்குழந்தைūṭṭākkuḻndai, பெ. (n.)

   1. நோய் வருத்தத்தால் பாலுண்ணாக் குழந்தை; child which does not suckle owing to suffering from disease or pain

   2. பால் மறந்த குழந்தை; child which has passed through the stage of suckling

   3. ஊட்டி வளர்க்காத குழந்தை; child not brought up by artificial feeding or by a wet nurse. (சா.அக.);.

     [ஊட்டாத – ஊட்ட + குழந்தை.]

ஊட்டி

ஊட்டி1ūṭṭittal,    5 செ.குன்றாவி (v.t) தாளியடித்தல்; to level a field with a harrow.

     [ஊட்டு → ஊட்டி (இருமடிப்பிறவினை); ஊட்டித்தல் = :பள்ளத்திற்கு மேட்டு மண்ணைத் தள்ளிச் சமனுறச் செய்தல்.]

 ஊட்டி2ūṭṭi, பெ. (n.)

   1. ஊட்டும் உணவு; food

     “வரபலம் புஜபலம் ஊட்டியாக வளர்த்த சரீரமானது” (ஈடு.2,6,6);.

   2. பறவை விலங்குகளினுனவு( திவா.);; food of birds and beasts.

   3 வளர்ப்பு விலங்குகளுக்குத் தீனியிட்டு வைக்கும் தொட்டி அல்லது கழுநீர் வைக்கும் தாழி; a vessel or big earthern pot meant for providing cattle-feed.

     [உண் → ஊண் → ஊட்டு → ஊட்டி.]

 ஊட்டி3ūṭṭi, பெ. (n.)

   1. குழந்தைகட்குப் பாலூட்டும் சங்கு feeding conch.

   2. சங்கு போன்ற குரல்வளை: Adam’s apple,

     “கழுத்தி னோடே ஊட்டியும் அரியாநின்றார்.” (பெரியபு:அரிவா.17);.

   3. மழை (அகநி.);; rain, lit that which feeds. (செ.அக.);.

   4. ஊட்டப்படும் பன்றி; pig.

ம. ஊட்டி.

     [ஊட்டு → ஊட்டி.]

 ஊட்டி4ūṭṭi, பெ. (n.)

   நீலகிரி மாவட்டத்தின் தலைநகரான உதகமண்டலம்; Ooty, the headquarters of Nilgiri district.

     [ஒற்றைக்கு + நின்றான் + மன்று – ஒத்தைக்கமந்து-உதகமண்டு – உதகமண்டலம் → E Ooty → த ஊட்டி.]

 ஊட்டி5ūṭṭi, பெ. (n.)

   1. ஊட்டப்பட்ட நிறம்; pan or colour.

   2. செவ்வண்ணத்தால் வரைந்த ஓவியம்; picture drawn with red-ochre.

     “ஊட்டியன்ன ஒண்டளிர்ச்செயலை” (குறந். 68-5).

ஊட்டிக்குற்றி
ஊட்டியார்

 ஊட்டியார்ūṭṭiyār, பெ. (n.)

தம் பாடலுள்

     ‘ஊட்டி’ என்ற சொல் அமைந்ததனால் பெயர்பெற்ற கடைச்

   சங்க காலத்துத் தமிழ்ப் புலவர்; poet of Sangam age who is named as such because the word útti’ appears in one of his poems

     [ஊட்டி + ஆர்.]

ஊட்டிரம்

 ஊட்டிரம்ūṭṭiram, பெ. (n.)

   தேட் கொடுக்கி (மூ.அக.);; Indian turnsole (செ.அக.);.

     [ஊட்டி → ஊட்டிரம்]

ஊட்டு

ஊட்டுūṭṭu, பெ. (n.)

   . குழந்தைக்கு உணவு செலுத்தல்; feeding child

   2. உணவு; food

   3. குழந்தை அல்லது நோயாளிக்குக் கொடுக்கும் கவளம்; morse of food given to a child or to a patient. (சா.அக.);.

   ம. ஊட்டு: க. ஊட்ட. ஊடெ;து. ஊட

     [உண் → ஊண்→ ஊட்டு.]

 ஊட்டு1ūṭṭudal, செ.குன்றாவி. (v.t.)

   உண்ணும்படி உணவைப் பிறர் வாயிலே யிடுதல்; to put small quantity of food into the mouth, as of a child, of a sick person, as of a token of affection.

     “பிடியூட்டிப் பின்னுண்ணுங் களிறெனவும்” (கலித்.11);.

   2. உண்ணச் செய்தல்; to coax and make one eat one’s food, as a mother, her child, to entertain, as a guest

     “ஊற்றுப் பெருக்கா லுலகூட்டும்” (நல்வ.9);.

   3. புகட்டுதல்; to instill, infuse. அறிவூட்டினான் (உ.வ.);.

   4. வண்ண மேற்றுதல்; to dye

     “அரக்கார்ந்த பஞ்சி கொண் டுட்டினும்” (நாலடி.396);.

   5. நுகரச்செய்தல்: to cause, to experience, as the fruits of one’s action.

     “உறற்பால வூட்டா கழியு மெனின்” (குறள்,378);,

   6. கன்று அல்லது குட்டி பால்குடித்தல்; to suck as a cat or a kid இரண்டாட்டில் ஊட்டின குட்டியானான்.

   7. விருந்திடல்; to give a feast. (செ.அக.);,

   ம. ஊட்டுக;   க. ஊடிக, ஊடு;கோத உண்க்ச்: தெ. ஊடு (கால்நடைக்கு நீர்கொடுத்தல்);: கொலா. உணிப், ஊர்ன், உர்ன் நா. ஊர்ன்,

     [ஊட்டுதல் = உட்கொளச்செய்தல், உண் (த.வி.); – ஊடு (பி.வி); – ஊட்டு செயப்.வி); ஒ.நோ. வாடு → வாட்டு, கூடு – கூட்டு. தொடு → தோண்டு.

 ஊட்டு2ūṭṭu, பெ. (n.)

   1. உண்பிக்கை; feeding

     “ஊட்டயர்வார்” (சீவக.926);.

   2. உணவு; food தரணி யெல்லா மூன்புக்க வேற்காளிக் கூட்டாம் காண்” (திருவாச.12.14);.

   3. ஊட்டுங் கவளம்; morse given to a child or a sick person (W); (செ.அக.);.

   க_து. ஊட;ம. ஊட்ட.

     [உண் → ஊண் → ஊடு → ஊட்டு.]

ஊட்டுகொடு-த்தல்

 ஊட்டுகொடு-த்தல்ūṭṭukoṭuttal, பெ. (n.)

   காவு கொடுத்தல்; to offer for slaughtering.

மறுவ காவு

     [உண்-ஊட்டு+கொடு]

ஊட்டுக்கன்று

 ஊட்டுக்கன்றுūṭṭukkaṉṟu, பெ. (n.)

   பால்குடிக்குங்கன்று; sucking calf.

     [ஊட்டு + கன்று.]

ஊட்டுக்குழந்தை

ஊட்டுக்குழந்தைūṭṭukkuḻndai, பெ. (n.)

   1 பாலுண்னும் குழந்தை; sucking child

   2 செவிலித்தாயால்

   ஊட்டப்பட்ட குழந்தை; child feeding at the breast of a wet nurse. (சா.அக.);.

     [ஊட்டு + குழந்தை.]

ஊட்டுநள்

ஊட்டுநள்ūṭṭunaḷ, பெ.(n.)

   உண்பிப்பவள்; woman who feeds.

பசி களைய ஓடுகைக் கொண்டு நின்று ஊட்டுநள் போல் (மணிமே. 18:115–6);

     [ஊட்டு + நள்]

ஊட்டுந்தாய்

 ஊட்டுந்தாய்ūṭṭundāy, பெ. (n.)

   ஐவகைத் தாயாருளெருத்தி (பிங்);; foster-mother, one of al-vagai-t-tãyar.

மறுவ. முலைத்தாய், வளர்ப்புத்தாய்.

     [ஊட்டு → ஊட்டும் + தாய்.]

ஊட்டுப்புரை

 ஊட்டுப்புரைūṭṭuppurai, பெ. (n.)

   கேரள நாட்டில் ஏழையர்க்கு உணவளிக்குஞ் சாலை; rest-house in the Kerala country in Sindia where the poor are given free feeding (செ.அக.);.

ம. ஊட்டுபுர.

     [ஊட்டு + புரை.]

ஊட்டுமற-த்தல்

ஊட்டுமற-த்தல்ūṭṭumaṟattal,    3 செ.குன்றாவி, (v.t.)

   கன்று பால் குடி மறத்தல்; to make the calf to forget milk.

     [ஊட்டு + மற-.]

ஊட்டுவான்

ஊட்டுவான்ūṭṭuvāṉ, பெ. (n.)

   சமையற்காரன்; one who prepares food, cook

     “அவர் பாலுட்டுவான்றனை விட்டார்” (பெரியபு:திருநாவுக்.55);.

     [ஊட்டு + ஆன் – ஊட்டுவான் (சமைத்து உணவளிப்பவன்);.]

ஊட்டெழுத்து

 ஊட்டெழுத்துūṭṭeḻuttu, பெ. (n.)

   எழுத்துகளை மின்னணுச் சிப்பத்தில் பதிவிக்கும் ஒளிப்படத் தட்டச்சு; electronic type-setter.

     [ஊட்டு + எழுத்து.]

எழுத்துக்களை ஒளிப்பதிவுச் சிப்பத்தில் ஊட்டுதலான் தோன்றிய படைப்புச்சொல்.

ஊணன்

ஊணன்2ūṇaṉ, பெ. (n.)

   மிகவுண்போன்; glutton ஊணன் கருமதிழந்தான் கருமமிழந்தான் (வின்); (செ.அக.);.

ம. ஊணன்.

     [ஊண் + அள்.]

ஊணம்

ஊணம்ūṇam, பெ. (n.)

   ஒரு நாடு; name of the country of the Huns

     “ஊன நாட்டோரூரின்” (ஞானவா காதிக.7);. ]

அவுண்_ஊண்_ஊனம் ஊனம்_அவுனர்வாழ்வகம்.)

   ஊணன் r பெ. (n); ஊண நாட்டான்; Hun, barbarian (செ.அக.);.

     [அவுனன் → ஊனன்.]

ஊணா

 ஊணாūṇā, பெ. (n.)

சடைச்சி மரம் (L);,

 common Indian linder (செ.அக.);.

     [ஊள் → ஊன் → ஊணா.]

ஊணாட்டம்

 ஊணாட்டம்ūṇāṭṭam, பெ. (n.)

   பல்லாங்குழியில் ஆடும் ஒர் ஆட்டம்; a kind of game (சேரநா.);.

     [ஊண் + ஆட்டம்]

ஊணானெறும்பு

 ஊணானெறும்புūṇāṉeṟumbu, பெ.(n.)

   உருவில் பெரிய ஆனால் கடிக்காத கருப்பு நிறமுள்ள எறும்பு; a kind of black which do not bite.

     [ஊாணான்+எறும்பு]

ஊணாளி

 ஊணாளிūṇāḷi, பெ. (n.)

   அதிகமாக உண்பவன்; glutton, great eater (சேரநா.);.

     [ஊண் + அளி.]

ஊணி

ஊணிūṇi, பெ. (n.)

உணவுகொள்பவன்: one who eats.

     “காளவிட மூண்” (திருப்பு.69);. (செ.அக.);.

   ம. ஊணி;க. உணி.

     [ஊண் → ஊணி.]

 ஊணிūṇi, பெ. (n.)

   பாவாற்றுதற்கு ஊன்றும் கவர்க் கால்; weaver’s stand for the threads of the woof.

     [ஊண் → ஊணி.]

ஊணிக்கம்பு

ஊணிக்கம்புūṇikkambu, பெ. (n.)

   1. மொட்டை வண்டியின் இரு பக்கத்திலும் ஊன்றப்பட்ட முளைக் கம்புகள் (நெல்லை);; stakes on the sides of an open country cart

   2. பாவாற்றுதற்கு ஊன்றும் கவர்க்கால்; weaver’s stand for the threads of the woof.

     [ஊன்றி + கம்பு – ஊன்றிக்கம்பு → ஊணிக்கம்பு.]

ஊணு-தல்

ஊணு-தல்ūṇudal,    13.செ.குன்றாவி. (v.i.)

   உணவு கொடுத்துப் பேணுதல்; to feed and nourish.

     “உழலை யாக்கையை பூணுமுணர்விலீர்” (தேவா. 588.6);

     [உண் → ஊன் + உ – ஊனு.]

     ‘உண்’ என்னும் தன்வினை ஊண் என நெடுமுதலாகிப் பிறவினையாகும் பெற்றியுடையதாயினும் முதனிலை திரிந்த தொழிற்பெயராகிய வண்’ என்பதனின்றும் வேறுபடுத்த

     ‘ஊணு என உகர ஈறுபெற்றுப் பிறவினை ஏவலாகி

     ‘ஊட்டு’ எனப்பொருள் தந்துநின்றது.

ஊணுழைப்பு

 ஊணுழைப்புūṇuḻaippu, பெ. (n.)

   உணவுக் காக உழைத்தல்; to toil for bread.

     [ஊண் + உழைப்பு]

ஊண்

ஊண்ūṇ, பெ. (n.)

   உண்கை; eating.

     “பாத்தூண் மரீஇயவனை” (குறள்.227);

   2. உணவு food

     “உடை _செல்வமூணொளிகல்வி” (குறள்.939);,

   3. ஆன்மாவின்

   இன்பதுன்பப் பட்டறிவு; experience of Joys and sorrows by the soul, as the inevitable fruits of karma

     “ஊனொழியா துன்னின்” (சிவப்பிர.19); (செ.அக.);.

   ம. ஊண், ஊனு;   க. ஊட உணிக கோத,, துட. ஊண்;து. உனக, ஒணக.

ஊண்சாலை

 ஊண்சாலைūṇcālai, பெ. (n.)

   ஊட்டுப்புரை; choultry where food is distributed gratis (செ.அக);.

     [உண் → ஊண் + சர்லை.]

ஊண்டழல்

ஊண்டழல்ūṇṭaḻl, பெ. (n.)

பசியழல் power of digesting food, it food-fire.

     “ஊண்டழல் வெறுக்கும் வண்ண மூட்டுவம்” (பிரபுலிங். ஆரோகண.40); (செ. அக.);

     [ஊன் + தழல்]

ஊண்பாக்கு

 ஊண்பாக்குūṇpākku, பெ. (n.)

   உண்டபின்தின்னும் பார்க்க; betel and nut taken after a meal, dist வெறும் பாக்கு (வீண் பாக்கு); ஊண்பாக்கொழிய வீண்பாக்காகாது. (பழ.);.

     [ஊன் + பாக்கு.]

ஊண்பித்தை

ஊண்பித்தைūṇpittai, பெ. (n.)

ஓர் பெண்பாற் புலவர்:

 a poetess

      [ஊண் + பித்தை. பித்தை = சிறுமி, பெண்.]

குறுந்தொகையில் 232ஆம் பாடலைப் பாடிய ஊண்பித்தை யார் உணவுபடைக்கும் பணிப்பெண்ணாக வாழ்ந்தவராக லாம். புல் → புத்து → பித்து என்னும் சொற்கள் இளமை, மென்மை, புதுமை, அழகு என்று பொருளால் விரிவன. துளுமொழியில்

     ‘புத்து’ இன்றும் பெண்பாற் பெயராக வழங்கு கிறது. புல் → பது → புதல் → புதல்வன் புல் → புதுபுத்து → புத்தன் (மகன்); த. புத்து → புத்தன் Skt. Putra. கன்னடத்தில் புத்து → புட்டு → புட்ட என்பன இளமையும் அழகும் குறித்து வழங்குவன. புல் → புள் → பின் → பிள்ளை என்பன இளமைப்பெயர்கள். புத்தை → பித்தை.

ஊதடைப்பான்

 ஊதடைப்பான்ūtaḍaippāṉ, பெ. (n.)

   மாட்டுநோய் வகை; disease, among cattle (மாட்டுவை.சிந்.பக். (செ.அக.);.

     [ஊது + அடைப்பான்.]

ஊதன்

 ஊதன்ūtaṉ, பெ. (n.)

ஆண்பாற் பெயர்:

 name of a person.

ஆதனுக்குக் கொடுத்தாலென்ன ஊதனுக்குக் கொடுத்தாலென்ன, (கொங்.வ.);

க. ஊதன்.

     [ஊ → ஊது → ஊதன் (பருத்த தோற்ற முள்ளவன்);.]

ஊதம்

ஊதம்ūtam, பெ. (n.)

   யானைக்கூட்டம்; herd o elephants

     “உலவை நீள்வனத் துதமே யொத்தது.’ (கம்பரா.வரைக்.7.); (செ.அக.);.

     [ஊ → ஊது → ஊதம் (பெருக்கம்);.]

ஊதற்காற்று

 ஊதற்காற்றுūtaṟkāṟṟu, பெ. (n.)

   பனிக்காலத்துக் குளிர்க்காற்று; cold biting wind of the dewy season. (செ.அக.);.

     [ஊதல் → காற்று. ஊதல் = பெருகுதல், மிகுதல், குளிரை மிகுவிக்கும் காற்று.

ஊதற்கொடி

 ஊதற்கொடிūtaṟkoḍi, பெ. (n.)

   கொடிவகை (ட);; dark-blue creeper (செ.அக.);.

     [ஊதல் + கொடி.]

ஊதல்

ஊதல்1ūtal, பெ. (n.)

   . குளிர்க்காற்று; cold wind ஊதலடிக்கிறது. (உ.வ.);.

   2. வீக்கம்: swelling

   3 ஆரவாரம் (வின்.);; great noise,

   4. ஊதைநோய்

 rheumatism

ஊதலினம் (தைலவதைல:130);.

   5. மிகுதி fullness.

     “இருமவீளை யென்றிவை யூதலாக்கை” (தேவா.996.8);.

   6. குழந்தைகள் ஊதுங் கருவி

 toy trumpet, small pipe.

ஒர் ஊதல் வாங்கிக்கொடு (உ.வ.);. (செ.அக);.

     [ஊது → ஊதன்.]

 ஊதல்2ūtal, பெ. (n.)

   கருநீலப் படர்கொடி; dark blue creeper.

     [ஊது → ஊதல்.]

ஊதல் போடுகை

ஊதல் போடுகைūtalpōṭugai, பெ. (n.)

   1 புகைபோட்டுப் பழக்கச் செய்கை; fumigation for ripening unripe fruits as plantains.

   2. பெருச்சாளி போன்றவை பொந்தினின்று வெளியேறப் புகை மூட்டுகை; fumigation, so as to expose the hole of rodents as bandicoots, to smoke, and so force them to run away (செ.அக.);.

     [ஊது → ஊதல் + போடுகை.]

ஊதா

ஊதாūtā, பெ. (n.)

   1. செம்மை கலந்த நீலநிறம்; purple, violet (செ.அக.);.

   2. செம்மை கலந்த கருநிறம் (ஆ.அக);:

 reddish black.

ம_ ஊதா.

     [ஊது → ஊதல் → ஊதா.]

ஊதல் என்னும் கொடியின் நிறம் ஊதா என வழங்கலாயிற்று ஊதற்கொடி பார்க்க;see udar-kodi.

ஊதா இறுங்கு

ஊதா இறுங்குūtāiṟuṅgu, பெ. (n.)

சோள வகை (விவசா.3);: a kind of maize.

     [உதைல் → உனதா + இறுங்கு.]

ஊதாக்கத்திரி

 ஊதாக்கத்திரிūtākkattiri, பெ. (n.)

   கத்திரி வகை; New York-purple brinjal. Solanum melongena Americana (செ. அக.);.

     [ஊதல் → ஊதா + கத்திரி.]

ஊதாங்குச்சி

 ஊதாங்குச்சிūtāṅgucci, பெ. (n.)

நெருப்பூதுங் குழாய்: blow-pipe Loc. (செ.அக.);

     [ஊது + ஆம் + குச்சி.]

ஊதாங்குழல்

 ஊதாங்குழல்ūtāṅguḻl, பெ. (n.)

ஊதாங்குச்சி பார்க்க;see Udari-kucci (செ.அக.);.

     [ஊது + ஆம் + குழல்.]

ஊதாசி

ஊதாசிūtāci, பெ. (n.)

ஊதாரி பார்க்க see udari.

.1 ھے تsr

ஊதாப்பூ

 ஊதாப்பூūtāppū, பெ. (n.)

மரவகை (L);, medium mernoranous lance to obovate accuminate or cuspidate leaved jungle geranium (செ.அக.);

     [ஊதா + பூ.]

ஊதாமுள்ளி

 ஊதாமுள்ளிūtāmuḷḷi, பெ. (n.)

   செம்முள்ளி (ட);; crested purple, nail dye

     [ஊதாய் → ஊதா + முள்ளி.]

ஊதாம்பி

 ஊதாம்பிūtāmbi, பெ. (n.)

   காற்றூதிச் சிறுவர் விளையாடும் காற்று முட்டை; balloon.

     [ஊது + ஆம் + பை – ஊதாம்பை → ஊதாம்பி]

ஊதாம்பை

ūtāmbai, பெ. (n.)

   ஊர்திச் சக்கரங்களில் வட்டையினுள் உள்ள காற்றுப்பை; lube in the tyre of a vehicle.

     [ஊது + ஆம் + பை]

     ‘ஆம்’ சொற்சாரியை படைத் இரா. மதிவாணன் 1988)

ஊதாய்

 ஊதாய்ūtāy, பெ. (n.)

   செம்மை கலந்த நீலநிற ஊமத்தம்பூ; purple blue datura.

     [ஊதல் → ஊதாய்.]

ஊதாரி

ஊதாரி1ūtāri, பெ. (n.)

   வீண்செலவுக்காரன்; spendthrift prodigal, squanderer.

     ” ஊதாரி’ (திருப்பு); (செ.அக.);

ம. ஊதாரி

     [ஊதுதல் = பறக்கச் செய்தல், வீணடித்தல். ஊது + ஆளி -ஊதாளி → ஊதாரி (துகளை ஊதித் துடைத்தாற்போல் செல்வத்தை வாரி இறைத்துக் கழிப்பவன்.]

ஊதாரிபடுதல் = கேடுறுதல்

     “உடலு தாரிபட் டொழிய” (திருப்பு:904);. ஊதாரி என்னுஞ் சொல், உதார என்னும் வடசொல்லினின்று திரிந்ததாகச் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகரமுதலி காட்டியிருப்பது உண்மைக்கு மாறானதும் முற்றும் பொருத்தமற்றதுமாம். உதார என்னும் வடசொல் ஈகைத் தன்மையைக் குறிப்பதாகும். ஊதாரி என்னும் தென் சொல்லே அழிப்பாளியைக் குறிப்பதாகும். அழிப்பாளி வீண் செலவ் செய்பவனேயன்றி அளிப்பாளியல்லன். (வேக98);.

 ஊதாரி2ūtāri, பெ. (n.)

   பயனிலி; worthess person,

     “ஊதாரியாய் நானழியா வண்ணம்” (பாடுது.63.பந்து);. [ஊது_ + ஆளி ஊதாளி → ஊதாரி. ஊதுதல் = பறக்கச் செய்தல், வீணடித்தல்.]

ஊதாரித்தனம்

ஊதாரித்தனம்ūtārittaṉam, பெ. (n.)

   1. அழிப்பு; wasting, destruction,

   2. வீண்செலவு; wasteful, immoderate spending (ஆ.அக.);

     [ஊதாரி – தனம்.]

ஊதாரிபடுதல்

ஊதாரிபடுதல்ūdāribaḍudal,    20. செ.கு.வி. (v.i.)

   கேடுறுதல்; to become damaged, spoiled, impaired, bighted

     ‘உடலுதாரி பட்டொழிய” (திருப்பு:904);.

     [ஊது + ஆர் + இ- ஊதாரி + படு, ஊது = பறக்கச்செய்தல், போகச் செய்தல், இழத்தல், அழிவுறல், கேடு. ஆர் = ஆர்தல். இகரம் = தொ.பொ.ஈறு,]

ஊதாவல்லி

ஊதாவல்லிūtāvalli, பெ. (n.)

   1. நீலச் செவ்வாம்பற் கொடி; purple Indian water lily.

   2. நீலவல்லி, so நீலப்பூக்களையுடைய ஓர் பூங்கொடி blue Indian water lily or Star flower lily. It is a perennial creeper with blue flowers, flowering all round the year, (சா.அக.);.

மறுவ ஊதற்கொடி ஊதல்.

     [ஊதாப் → ஊதா + வல்லி.]

ஊதாவுமத்தை

 ஊதாவுமத்தைūtāvumattai, பெ.(n.)

   ஊமத்தை வகை; purple datura.

     [ஊதா + ஊமத்தை]

ஊதிகை

 ஊதிகைūtigai, பெ. (n.)

முல்லைக்கொடி (மூ.அக.);: eared jasmine, jasimum auriculatum (செ.அக.);.

     [ஊது → ஊதிகை (பெருகிப் படரும் கொடி.]

ஊதின பொன்

 ஊதின பொன்ūtiṉaboṉ, பெ. (n.)

   புடமிட்ட பொன்; refined gold (சா.அக.);

     [ஊது + இன் + அ – ஊதின + பொன்

     ‘இன்’ சாரியை.

     ‘அ’ பெ.எ.ஈறு.]

ஊதின வெள்ளி

 ஊதின வெள்ளிūtiṉaveḷḷi, பெ. (n.)

   நெருப்பிலிட்டு கலப்பின்றி ஊதியெடுத்த சொக்க வெள்ளி; wrough silver, purified silver (சா.அக.);.

     [ஊது + இன் + (அ.ஆக.); – ஊதின + வெள்ளி.

     ‘இன் சாரியை

     ‘அ’ பெ.எ.ஈறு.]

ஊதினமரம்

 ஊதினமரம்ūtiṉamaram, பெ. (n.)

   வண்டு மரம்; tree pierced by beetle. (சா.அக.);.

ஊது + இன் + (அ.ஆக.); – ஊதின + மரம். இன் சாரியை.

     ‘ஆ’ பெ.எ.ஈறு.)

ஊதிப்பார்-த்தல்

ஊதிப்பார்-த்தல்ūtippārttal,    4.செ.குன்றாவி. (v.t.)

   1. புடமிட்டு நோக்குதல்; to test by blowing, as a goldsmith (செ.அக.);.

   2. மந்திரித்தல் (வின்);; to attempt a cure by enchantment consisting in part of blowing into the patient’s body.

     [ஊதி + பார்-.]

ஊதிப்போடு-தல்

ஊதிப்போடு-தல்ūdippōṭudal,    19.செ.குன்றாவி, (v.i.)

   எளித்ல் வெல்லுதல்; to overcome easily, overthrow without the least difficulty (செ.அக.);.

     [ஊதி + போடு, ஊது = வாயால் ஊதிப் பறக்கச் செய்தல், ஊதிப்போடுதல் = பகைவரைப் பறந்தோடச்செய்தல், வெல்லுதல்.]

ஊதியம்

ஊதியம்ūtiyam, பெ. (n.)

   மேல் வருவாய், ஆதாயம்; profit gain,

     “முதலிலார்க்கூதிய மில்லை” (குறள்.449);.

   2. பயன்; benefit advantage,

     “ஊதியங்கருதியவொருதிறத்தானும்” (தொல்,பொருள்.41);.

   3. கல்வி (திவா.);; learning, erudition (செ.அக.);.

     [ஊது → ஊதியம். ஊது = பெருக்கம், மிகுதி.]

ஊதியிரு-த்தல்

ஊதியிரு-த்தல்ūtiyiruttal,    3.செ.கு.வி. (v.i.)

   1. லீங்கியிருத்தல்; to be in a swollen condition

   2. பருத்திருத்தல்; to be stout or bloated (சா.அக.);

     [ஊதி + இரு.]

ஊதியொடுக்கம்

 ஊதியொடுக்கம்ūtiyoḍukkam, பெ. (n.)

   மூச்சு; breathing, respiration (சா.அக.);.

     [|ஊதி + ஒடுக்கம்]

ஊதிலி

 ஊதிலிūtili, பெ. (n.)

ஊதில் பார்க்க;see udil.

     [ஊதில் + இ. இகரம் ஒருமைகுறித்த ஈறு.]

ஊதில்

ஊதில்ūtil, பெ. (n.)

   1. பாம்பாட்டிகள் ஊதுங் குழல்; a kind of musical pipe, used by snake charmers.

   2. குழந்கைள் ஊதுங்கருவி;, toy pipe for children (Tinn);, (செ.அக.);.

     [ஊது → ஊதில்

     ‘இல்’ சொல்லாக்க ஈறு.]

ஊது

ஊது1ūdudal,    5.செ.குன்றாவி, (v.t.)

   1. குழல் முதல் யன ஊதல்; to blow, as a wind instrumen

     “ஊதுகின்ற குழலோசை’ (தில்.பெரியாழ்.3.6.1);.

   2. தீ எரிய ஊதல்; to blow, as a fire, to kindle: blaze.

   3. விளக்கு முதலியன அவிய ஊதுதல்: to blow out.as alamp

     “ஊழித்தீயவிய வூதுவான்” (கம்பராகும் us.311);.

   4. நோவு தீர ஊதுதல்; to blow, breathé upon, in order to allay pain.

   5 துளைத்தல்; to gnaw through and bore holes, as a beetle, to injure by drilling through as a moth வண்டுதின மரம்.

   6. பொன்னைபுடம் போடுதல்; to refine with fire, as gold ஊதின பொன்.

   7. நுகர்தல்; to seed on, as bees honey.

     ‘பாய்ந்துதிப்படர்தீர்ந்து” (கலித்.66);.

   8. சூடாற்ற ஊதல்; to blow over to cool a liquid

   9, துகள் நீக்க ஊதுதல்; to blow chat away

   10, ஊத்தாம்பை ஊதுதல்:

 to blowpipe.

   11 காய்களை மூட்டம்போட்டு ஊதிப் பழுக்க வைத்தல்; fumingation to ripen unripe fruit,

   12 நோயாளி உடம்பிற்குள் ஊதி மந்திரித்தல்; to blow on a patient’s body to cure by enchantment

   13. உடல் வீங்குதல்; swelling

     [உல் → ஊல் → ஊது.]

 ஊது2ūdudal,    7.செ.கு.வி. (v.i.)

   1. வண்டு முதலிய ஒலித்தல்; to hum, as bees or beetles, in getting out honey from flowers

     ” சேவடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ” (திருவாச.10.1);.

   2. வீங்குதல்; o swell, as the stomach after eating, to be inflated

     “ஊதியூதி வயிறுள்ளனவெல்லாம்.” (சூளா.சுயம்.15);.

   3. துருத்தி காற்றெழுப்புதல்; to blow with bellows with a blow-pipe.

     “ஊதுலைக் குருகி னுயிர்த்து” (மணி.2.43);. (செ.அக.);

   ம. ஊதுக;   க. ஊது. ஊதலு, ஊதிகெ;   கோத ஊத;   கொலா. ஊந்த் நா. ஊந்த். கட ஊந்த;   கோண். உக் காரை, உதானா;   கூய் ஊகுடி;பர். ஊத் குவி. ஊகலி,

     [உல் → ஊல் → ஊது.]

 ஊது3ūtu, பெ. (n.)

   ஊதுகுழல்; trumpet, esp. toy trumpet (செ.அக.);.

     [உல் → ஊல் → ஊது (மு.தொ.பெ.]

ஊதுகட்டி

 ஊதுகட்டிūtugaṭṭi, பெ. (n.)

   சொக்கவெள்ளி; silver of the purest kind. (செ.அக.);.

ம. ஊதுகட்டி

     [ஊது + கட்டி. ஊதுதல் = ஊதி உருக்குதல், உருக்கியுருக்கித் துய்மை செய்த சொக்கவெள்ளி.]

ஊதுகணை

 ஊதுகணைūtukaṇai, பெ.(n.)

கணை நோய் வகை,

 a wasting disease of childhood

     [ஊது + கணை]

ஊதுகரப்பான்

 ஊதுகரப்பான்ūtukarappāṉ, பெ.(n.)

   குழந்தைகளுக்கு வரும் கரப்பான்நோய் வகை (மூ.அ);; an eruptive disease of children, resulting from bad humours in the system and attended with swelling of the body.

     [ஊது + கரப்பான்]

ஊதுகலம்

 ஊதுகலம்ūdugalam, பெ. (n.)

   உரல்; vessel used ;

 for pounding grains for removing husk – mortar (சா.அக.);

     [ஊது + கலம்.]

ஊதுகாமாலை

ஊதுகாமாலைūtukāmālai, பெ. (n.)

   காமாலை நோய்வகை; jaundice with dropsy.

     “ஊதுகாமாலை சோகை” (திருப்பு.790); (செ.அக.);.

     [ஊது + காமாலை.]

ஊதுகுழல்

ஊதுகுழல்ūtuguḻl, பெ. (n.)

   ஊதும் இசைக்குழல்; musical pipe,

   2, நெருப்ழுதுங்குழாய்; blow pipe. (செ.அக.);.

     [ஊது + குழல்]

ஊதுகொம்பு

 ஊதுகொம்புūtugombu, பெ. (n.)

   கொம்பு இசைக் கருவி (திவா,);; horn, used as a trumpet

     [ஊது + கொம்பு.]

ஊதுகொம்பு

ஊதுபுரளி

ஊதுபுரளிūtupuraḷi, பெ.(n.)

   1 வயிறு ஊதிப் போகும் நோய் வகை; a disease.

   2. பொய்; lie.

ஊதுமாக்கூழ்

 ஊதுமாக்கூழ்ūtumākāḻ, பெ. (n.)

   ஒருவகையுணவு; a kind of pasty pudding (செ.அக.);.

     [ஊது + மாவு + கூழ்.]

ஊதுமாந்தம்

ஊதுமாந்தம்ūtumāntam, பெ.(n.)

   குழந்தைகளுக்கு மாந்தத்தால் வயிறு விம்மும் நோய் வகை; abdominal swelling brought

 on by indigestion, a disease of children.

     “ஊதுமாந்தம்விட் டோடுவ துண்மையே” (பாலவா.218); [ஊது+மாந்தம்]

ஊதுமுகம்

ஊதுமுகம்ūtumugam, பெ. (n.)

   1. மாழைகளை யுருக்கும் உலைவாயில்:

 forge meting furnace

   2. உருகி நிற்கும் நிலைமை; state of fusion.

   3. வீங்கிய மூகம்; swollen or bloated face.

   4. பருத்த முகம்;: bloated face (சா.அக.);

     [ஊது + முகம்.]

ஊதுளை

 ஊதுளைūtuḷai, பெ. (n.)

   நீர்நிலைகளின் ஒரங்களில் விளையுமோர் வகைப் பீண்டு; plant found growing generally at the margins of places where water remains stagnant (சா.அக.);.

     [இது → தம் (நீர்);, ஒதம் → ஒதுள் → ஒதுளை → ஊதுளை = நீர்க்கால் பகுதிகளில் வளரும் பூண்டு.]

ஊதுவத்தி

 ஊதுவத்திūtuvatti, பெ. (n.)

   நறுமணச் சரக்குத் தீற்றிய குச்சி; incense stick, Joss stick (செ.அக.);.

   ம., க., பட. ஊதுபத்தி; Skt varts ta wick)

     [ஊது + வத்தி ஊது = பெருகுதல், பரவுதல் வல்-கல் வல்லி → வன்னி = கற்களை உரசுவதால் உண்டான தீ வத்தி : தீப்பற்றக்கூடியது.]

ஊதுவத்திநோய்

 ஊதுவத்திநோய்ūtuvattinōy, பெ. (n.)

   நெற்பயிருக்கு உண்டாகும் நோய் வகை; disease of paddy crops (LOC);

     [ஊதுவத்தி – நோய்.]

ஊதுவழலை

 ஊதுவழலைūtuvaḻlai, பெ.(n.)

   ஒரு வகைப் பாம்பு; a kind of brown snake.

மறுவ. ஊது சரட்டை

     [P]

ஊதுவாரம்

ஊதுவாரம்ūtuvāram, பெ. (n.)

   1. வெள்ளி (மூ.அ.);; silver. 2 . வெள்ளிமீன்;

 Venus

   3. வெள்ளிக்கிழமை; Friday. In plain language, metable day of the week;

 the Tamil word velli connoting the metal silver as well as the Planet Venus, a periphrastic method of denoting silver. (செ.அக.);.

     [ஊது + வாரம், ஊது = ஊதி உருக்கிய வெள்ளி ஊதுவாரம் = உருக்கிய வெள்ளியைப்போல் ஒளிரும் வெள்ளி மீன், அம்மீன் பெயரிலமைந்த வெள்ளிக்கிழமை]

ஊதுவிரியன்

 ஊதுவிரியன்ūtuviriyaṉ, பெ. (n.)

   தீண்டுவதனால் உடம்பை வீங்கச் செய்யும் ஒருவகை விரியன் பாம்பு; a kind of viper, whose bite causes swelling of the whole body (செ.அக.);.

     [ஊது + விரியன்.]

ஊதுவெள்ளி

 ஊதுவெள்ளிūtuveḷḷi, பெ. (n.)

ஊதுகட்டி பார்க்க;see udu-katti)

     [ஊது + வெள்ளி.]

ஊதை

ஊதைūtai, பெ. (n.)

   1. காற்று (திவா.);: wind, gale

   2. வாடைக்காற்று; cold wind.

     “பனிப்புலர்பாடி…..

     “ஊதையூர் தர” (பரிபா.11,84);.

   3. வளி நோய்; rheumatism தலைவலி பன்னமைச்சலுதை” (தைலவ. தைல.7);.

     [ஊ → ஊது → ஊதை (வீசுவது);. ஊதை → வ. வாத, வடமொழியாளர் வா என்பதை மூலமாகக்கொள்வர். அது “ஊ” என்பதன் திரியே. (வ.மொ.வ.97.வே.க96);.]

ஊதைக்காற்று

 ஊதைக்காற்றுūtaikkāṟṟu, பெ. (n.)

ஊதற்காற்று பார்க்க;see Údar-kānu [ஊதை + காற்று.]

ஊத்தங்காய்

 ஊத்தங்காய்ūttaṅgāy, பெ. (n.)

   புதைத்துப் பழுக்க வைத்த காய்; green unripe fruit buried to ripen, as plantains. Loc. (செ.அக.);.

     [ஊழ்த்தல் = புதைத்தல், ஊழ்த்தம் → ஊத்தம் + காய்.]

ஊத்தட்டம்

 ஊத்தட்டம்ūttaṭṭam, பெ. (n.)

   மாழைகளை யுருக்க தழல்; fire for melting metal (செ.அக.);.

     [ஊவது → ஊத்து → ஊத்தட்டம்.]

ஊத்தப்பம்

 ஊத்தப்பம்ūttappam, பெ. (n.)

   பருத்த தோசை வகை; thick rice-flour cake. (செ.அக.);.

ம ஊத்தப்பம்.

     [ஊற்று → ஊத்து _அப்பம்.]

ஊத்தமுறை

 ஊத்தமுறைūttamuṟai, பெ. (n.)

ஊது திட்டம் பார்க்க;see Jou-titlam.

ஊத்தம்

ஊத்தம்ūttam, பெ.(n.)

   திமிர்; arrogance

     [ஊது-ஊத்தம்]

 ஊத்தம்ūttam, பெ. (n.)

   1. வீக்கம்; swelling, puffing up of the limbs or body. அவன் உட்ம்பு ஊத்தமாயிருக்கிறது. (இ.வ.);.

   2. காய்களைப் பழுக்கவைக்கும் புதைப்பு; burying of green unripe fruits to ripen (செ.அக.);.

     [ஊது → வனத்து → ஊத்தம்.]

ஊத்தல்

 ஊத்தல்ūttal, பெ. (n.)

   பித்தளை; brass (சா.அக.);.

     [ஊற்று → ஊற்றல் → ஊத்தல், காய்ச்சி உருக்கிவார்த்த கலப்பு மாழையாதலின் இப்பெயர் பெற்றது.]

ஊத்தாம்பானை

 ஊத்தாம்பானைūttāmbāṉai, பெ.(n.)

   வளைக்குள் புகையைச் செலுத்தி எலியைப் பிடிக்க ஏதுவாக வடிவமைக்கப்பட்ட பானை; a pot used to trap rat by inserting smoke inside its hole.

     [ஊத்தாம்+பானை]

ஊத்தாம்பிள்ளை

ஊத்தாம்பிள்ளைūttāmbiḷḷai, பெ. (n.)

   1. பேழை; container

   2. மூத்திரப்பை (இங்.வைத்.43);: bladder. (செ.அக.);.

     [உத்து → உத்தாம் → ஊத்தாம் + பிள்ளை.]

ஊத்து

ஊத்துūttu, பெ. (n.)

   1. ஊதுகை; blowing a musical instrument

ஓர் ஊத்து ஊதினான். (உ.வ.);.

   2. காகளத்தின் ஒலி; sound of a wind instrument

     “பெரிய திருநாளாய்ச் செல்லும்படி பண்ணினால் புறம்பு ஊத்தும் சுவடு மற்றுக் கிடக்கவும் வேணுமா?” (திவ்.திருநெடுந்.8.வியா.);.

   3. உடம்பு ஊதிப்பருத்தல் (சங்.அக.);:

 swelling of body.

   4. ஊதல்; whistle. (Tinn.);.

   ம, ஊத்த;   க. ஊது;து. ஊதுணி,

     [ஊது → ஊத்து.]

ஊத்தை

ஊத்தைūttai, பெ. (n.)

   1. அழுக்கு; dirt impurity, fifth excrement, that which is ceremonially unclean, as catamenia,

     “ஊத்தைக் குழியி லமுதம் பாய்வது போல்” (திவ்.பெரியாழ், 4,6.10); (செ.அக.);.

   2. ஊன், ஊனிர்; water oozing from flesh.

   3. மாதவிலக்கு நீர்; menstrual blood -catamenia.

   4. பல்லழுக்கு; foul matter which collects on the teeth ordinarily;

 a composed accumulation about the teeth in sickness-scordes.

   5. புலால்; meat

     “ஊத்தைச் சடலத்தை உப்பிருந்த பாண்டத்தை”

   6. நாற்றம்; stench.

ம. ஊதத.

     [ஊழ் → ஊழ்த்தை → ஊத்தை.]

ஊத்தைகழல்(லு);-தல் __. 1

   3. செ.கு.வி (v.i.);

   1. அமுக்கு வெளியேறுதல் (வின்.);; to come off as dirt from a vessel (செ.அக.);.

   2. ஊத்தை கழலுதல்; to remove foul matter

     [ஊழ்த்தை → ஊத்தை + கழல்.]

ஊத்தை குடியன்

 ஊத்தை குடியன்ūttaikuṭiyaṉ, பெ.(n.)

ஒரு பேய் (பிசாசம்); (யாழ். அக);; a goblin

     [ஊத்தை + குடியன்]

ஊத்தை நாறி

ஊத்தை நாறிūttaināṟi, பெ. (n.)

   1. பீநாறி (மு.அ.);: fetid tree.

   2. முடைநாற்றம் உடையவள்; dirty woman or a woman ceremonially unclean, said of a woman as a low term of abuse. (சா.அக.);.

     [ஊத்தை + நாறி.]

ஊத்தைச்சீலை

ஊத்தைச்சீலைūttaiccīlai, பெ. (n.)

   1. அழுக்குச்சீலை; dirty clothor clothes.

   2. விலக்குச்சீலை; sanitary towel or napkin.

     [ஊத்தை + சீலை.]

ஊத்தைப்பல்

ஊத்தைப்பல்ūttaippal, பெ. (n.)

   1. அழுக்குச் சேர்ந்த பல்; dirty tooth,

   2. ஊன் படிந்த பல்; tooth with the dark brown foul matter collected on it in low fevers – scordes.

   3. சீழ்வடியும்; tooth with a discharge of pus as in pyorrhoea. (சா.அக.);.

     [வனத்தை + பல்.]

ஊத்தைப்பல்லன்

 ஊத்தைப்பல்லன்ūttaippallaṉ, பெ. (n.)

   தூய்மையற்பற்களுடையவன்; one with unclean teeth. (செ.அக.);.

     [ஊத்தை + பல்லன்.]

ஊத்தைப்பாட்டம்

ஊத்தைப்பாட்டம்ūttaippāṭṭam, பெ. (n.)

வரி வகை tax ((செ.அக.); S.ll.V.330);, (செ.அக.);.

ம. ஊத்தப்பாட்டம்

     [ஊத்தை + பாட்டம்]

ஊத்தைப்பாண்டம்

ஊத்தைப்பாண்டம்ūttaippāṇṭam, பெ. (n.)

   1. ஊத்தையுடம்பு; body, full offith, called contemptuou sly by renunciative moralizers.

   2. நாற்றம் வீசும் உடம்பு

 body emitting a fetid smell (சா.அக.);.

     [ஊத்தை + பாண்டம்.]

ஊத்தைப்பிணம்

ஊத்தைப்பிணம்ūttaippiṇam, பெ. (n.)

   1. நாறி பிணம் (வின்);; putrid corpse, decomposed carcas (செ. அக.);.

   2. அமுக்குடம்பு; filthy body (சா.அக.);

     [ஊத்தை + பிணம்.]

ஊத்தையட்டு-தல்

ஊத்தையட்டு-தல்ūddaiyaṭṭudal,    5.செ.கு.வி. (v.i.)

   ஊனமுறுதல்; to sustain dishonour, suffer disgrac

     “கோழிப் போரில் ஊத்தையட்டாமல்” (S.II.ii 251); (செ.அக.);.

     [ஊத்தை + அட்டு.]

ஊத்தையெடு-த்தல்

ஊத்தையெடு-த்தல்ūttaiyeḍuttal,    4.செ.கு.வி. (v.i.)

   அமுக்ககற்றுதல் (யாழ்ப்.);; to remove tams from jewels, stain from silk or other cloth (செ.அக.);

     [ஊத்தை + எடு.]

ஊத்தைவாசல்

 ஊத்தைவாசல்ūttaivācal, பெ. (n.)

பெண் நோன vagina from its serving as a passage for the discharge of menses. (செ.அக.);.

     [ஊத்தை + வாசல்]

ஊந்து

 ஊந்துūndu, பெ. (n.)

   கச்சோலம் (வின்.);; cardamom husk.

ஊனகத்தண்டு

 ஊனகத்தண்டுūṉagattaṇṭu, பெ. (n.)

   கருவண்டு (வின்.);; black beetle (செ.அக.);.

     [ஊன் + அகத்து +வண்டு ஊனில் அல்லது புண்ணில் மொய்க்கும் வண்டு.]

ஊனகாரகன்

ஊனகாரகன்ūṉagāragaṉ, பெ. (n.)

   இழிதொழில் செய்விப்போன்; one who causes vile actions to be dore by others

     “ஊனமாயினகள் செய்யு மூனகாரகர்க ளேலும்” (திவ்.திருமாலை.41);, (செ.அக.);.

     [ஊனம் + காரகன்.]

ஊனக்கண்

ஊனக்கண்ūṉakkaṇ, பெ. (n.)

   கட்பொறி; physical eye, opplo ஞானக்கண்.

     “ஊனக்க னிரண்டு மூடி”

     [ஊன் + அ + கண்.]

 ஊனக்கண்ūṉakkaṇ, பெ. (n.)

   1. மெய்யறிவு; soul’s intellingence as being defective.

     “ஊனக்கண் பாசமுண ராப் பதியை” (சி.போ.9.1);, (செ.அக.);.

   2. பொட்டைக்கண்; defective eye.

     [உல்-உலம் = கெடுதல், எரிதல், அழிதல். உலம் → ஊலம் → ஊனம் ஊன் = தானாக அழுகும் இயல்புடையது. ஊனம் + கண்.]

ஊனக்கால்

ஊனக்கால்ūṉakkāl, பெ. (n.)

   1. குறைந்த கால்; short leg, short distorted limb.

   2. பிறவி நொண்டி; disabled leg, a deformity of the foot generally of a congenital origin – club-foot (சா.அக.);.

     [ஊனம் + கால்.]

ஊனஞ்சவ்வு

 ஊனஞ்சவ்வுūṉañjavvu, பெ. (n.)

   ஊன் வழியும் சவ்வு; membrane secreting scrum-serous mebrane (சா.அக.);.

     [ஊனம் + சவ்வு.]

ஊனன்

ஊனன்ūṉaṉ, பெ. (n.)

   1. உடற்குறைபாடுள்ளவன்; One who is defective in some member, one who has a physical imperfection (செ.அக.);.

   2. முடவன்; lame person.

   3. ஊனாங்கொடி; creeper-convol-vulus race mosus.

     [ஊனம் → ஊனன்.]

ஊனப்படு-தல்

ஊனப்படு-தல்ūṉappaḍudal,    18.செ.குன்றாவி. (v.t)

   1. குற்றப்படுதல்; to be hurt

   2. துன்பப் படுதல்; to be grieved (சேரநா.);.

ம, ஊனப்பெடுக.

     [ஊனம் + படு.]

ஊனமர்குறடு

ஊனமர்குறடுūṉamarkuṟaḍu, பெ. (n.)

   இறைச்சி கொத்தும் பட்டடை மரம் (சீவக.2281);; block of wood on which butchers mince meat (செ.அக.);

     [ஊள் + அமர் + குறடு.]

ஊனமா-தல்

ஊனமா-தல்ūṉamātal,    8.செ.குன்றாவி, (v.t.)

   1. நொண்டியாதல்; to be crippled.

   2. பழுதுறல்; to be maimed.

   3. அங்கம் பழுதாதல்; to be defective of any organ in the body. (சா.அக.);. [ஊனம் + ஆ + தல்.]

ஊனமாசிகம்

ஊனமாசிகம்ūṉamācigam, பெ. (n.)

   இறந்த முன்னோர்க்குச் செய்யும் படையல் (சிராத்த); வகை; sraddha offering to a deceased ancestor performed on the 27th and 45th days, and in the 6th month as well as at the end of the year after death.

     [Skt. una+masika → த. ஊனமாசிகம்.]

ஊனம்

ஊனம்ūṉam, பெ. (n.)

   1. & குறைவு; defect, deficiency, as of a member, flaw.

     “அந்நாளுறு சிலை தானூன முளது” (கம்பரா.பரசுரா.25);.

   2. குற்றம்: tault

     “ஊன மில் காலன்றன்னை” (ஞானவா.சுக்கிர32);.

   3. பழி: calumny, sander

     “கேள்வற் கூனமும் பரிவு மஞ்சி” (சீவக.1530);.

   4. தீமை; evil injury,

     “ஊனமாயினகள் செய்யும்” (திவ்.திருமாலை.41);.

   5. அழிவு; destruction

     “ஊனம்பி னுறவே வேண்டும்” (சி.சி.2:21);. (செ.அக.);.

ம. ஊன

     [ஊன் → ஊனம்.]

 ஊனம்2ūṉam, பெ. (n.)

ஊனமர்குறடு பார்க்க;see unamarkuradu.

     “ஊனத்தழித்த வானினக் கொழுங் குறை” (பதிற்றுப்.21); (செ.அக.);.

   2. ஊன்; flesh 3 கொழுப்பு;

 flat

   4. பிணம் (பிங்.);; corpse carcass

     [ஊன் → ஊனம். ஊள் வெட்டுதலால் மேற்புறம் சிதைவுற்ற அடிக்குறடு.]

 ஊனம்3ūṉam, பெ. (n.)

   ஆந்தை; owl (செ.அக.);.

     [ஊம் → ஊமம் → ஊனம்.]

 ஊனம்4ūṉam, பெ. (n.)

ஊனிர் பார்க்க;see unir

     [ஊள் → ஊனம்.]

ஊனவன்

ஊனவன்ūṉavaṉ, பெ. (n.)

   மனிதன்; man, he who s in the fesh

     “ஊனவருயிரி னோடும்” (தேவா.10505);. (செ. அக.);.

     [ஊன் + அவன்.]

ஊனவாளி

 ஊனவாளிūṉavāḷi, பெ. (n.)

   குறைபாடுள்ளவன்; maimed or lame person (சா.அக.);.

     [ஊனம் + ஆளி]

ஊனான்

ஊனான்ūṉāṉ, பெ. (n.)

   1. உன்னாயங் கொடி; elliptic leaved silver-weed.

   2. பெருமுசுட்டை;     (தைலவ. தைல.102);;

 many-flowered bind weed.

     [உள்னாயம் → ஊனாயம் → ஊனாள்.]

ஊனாம்பல்

 ஊனாம்பல்ūṉāmbal, பெ. (n.)

   ஆம்பல் வகை (மூ.அக.);; a kind of water lily. (செ.அக.);

     [ஊள்_ஆம்பல்.]

ஊனாயம்

 ஊனாயம்ūṉāyam, பெ. (n.)

   பிழை (சங்.அக.);; mistake, (செ.அக.);. [ஊனம் → ஊனாயம்.]

 ஊனாயம்ūṉāyam, பெ. (n.)

   விரகு (தந்திரம்); (வின்.);; trick (செ.அக.);

     [உன்னயம் → ஊளாயம்.]

 ஊனாயம்ūṉāyam, பெ. (n.)

   பிழை (யாழ்.அக.);; mistake.

ஊனி

ஊனிūṉi, பெ. (n.)

   மாந்த உடம்பினன்; one who has corporeal existence,

     “விரவ லாகா வூனிகளாயுள்ளார்.” (தேவா.982,10);. (செ.அக.);.

     [ஊன் + இ.]

ஊனீர்

ஊனீர்ūṉīr, பெ. (n.)

   1. தசையினின்று வடியும் நீர்; water oozing from flesh.

   2. குருதியின் மேல் வடியும் நீர்; serum, a thin watery transparent liquid separated from blood –serum.

     [ஊன் + நீர்]

ஊனுடம்பு

 ஊனுடம்புūṉuḍambu, பெ. (n.)

   தசையினாலான வுடம்பு; body composed of flesh.

     [ஊன் + உடம்பு.]

ஊனுருக்கி

 ஊனுருக்கிūṉurukki, பெ. (n.)

ஈளை நோய்: tuber. culosis, consumption, as a wasting diease (செ.அக.);.

     [ஊன் + உருக்கி]

ஊனேறி

 ஊனேறிūṉēṟi, பெ. (n.)

கருப்பம் (சங்.அக.); embryo. (செ.அக.);.

     [ஊன் + ஏறி.]

ஊனொட்டி

ஊனொட்டிūṉoṭṭi, பெ. (n.)

   1. உடும்பு; iguana

   2. உடும்பிறைச்சி (சா.அக.);; flesh bengalensis (செ.அக.);.

     [ஊன் + ஒட்டி, உடம்பு ஒட்டிக்கொள்வது.]

ஊன்

ஊன்1ūṉ, பெ. (n.)

சவ்வரிசி (L.);, sago fern palm (செ.அக.);.

     [உறை → ஊறை.]

 ஊன்ūṉ, பெ. (n.)

   1. தசை: flesh, muscle.

     “ஊனுடுத்தியொன்பது வாசல் வைத்து” (தேவா.29,1);.

   2. உண்ணும் இறைச்சி; meat, animal food.

     “ஊனமுதம்,

விருப்புற்று” (திருவாச.15.3);.

   3. உடல்; body

     “ஊனைக் குறித்த_வுயிரெல்லாம்” (குறள்.1013);. (செ.அக.);.

   ம. ஊன்;   க. ஊறு ஊக்ரு (எயிர்);;   கோத ஊ (எயிர்);;   துட. ஊர் தெ. ஊகுரு;குவி. ஊயு.

     [உல் → ஊல் → ஊன். உல் = பொருந்தியிருப்பது, பற்றியிருப் பது. உல் – ஊல் = எலும்பைப் பற்றியிருப்பது. ஊல் → ஊன். ஒ.நோ;

ஊன்றுதல் = பற்றுதல், நிலைகொள்ளுதல்.)

 ஊன்2ūṉ, பெ. (n.)

   புலால் வெட்டும் அடிக்கட்டை, அடிக் குறடு; block of wood on which butchers mince mеat.

     [ஊண் → ஊள் (ஆகுபெயர்); இது ஊனம் என்றும் வழங்கும்.]

 ஊன்3ūṉ, பெ. (n.)

   நீ(முன்னிலை யொருமைப் பெயர்);; you

     [ஊ → ஊன். ஊ – முன்மைக்சுட்டு, னகரமெய் ஒருமை குறித்த ஈறு.]

ஊன், ஊம் என்னும் முன்னிலைப் பெயர்கள், நூன். நூம் என்று நகர மெய்ம் முதல் பெற்று. பின்னர் நீன், நீம் எனத் திரிந்தன.

நூன், நூம் என்பன, வட திரவிடத்துள் ஒருவகையான சூரசேனிப் பிராகிருதத்தில் தூன், தூம் என்று திரிந்து இன்று அதன் வழிப்பட்ட இந்தியில் தூ. தும் என்று வழங்குகின்றன. தூ (நீ); என்னும் இந்தி வடிவமே இயல்பாகவும் குறுகியும் மேலையாரிய மொழிகளில் வழங்குகின்றன.

 OE, OS thu;

 OHG dū, ON thu, Goth thu, Ethou

ஊன்கணார்

ஊன்கணார்ūṉkaṇār, பெ. (n.)

   மானிடர்; men who have the physical eye only

     “கழனி யாக்கமு மூன்கணார்க் குரைப்பரிது” (சீவக.54);, (செ.அக.);.

     [ஊன் + கண் + ஆர். கண்ணார் → கணார்,]

ஊன்கண்

ஊன்கண்ūṉkaṇ,    பெ. (n.);   புறக்கண்; physical eye, oppaga-k-kan.

     “ஊன் கணினார் கட்டு உற்றதை உரைக்கும்”(மணிமே.21-128);

     [ஊன் + கண்]

ஊன்செய்கோட்டம்

ஊன்செய்கோட்டம்ūṉceyāṭṭam, பெ. (n.)

   உடல்; body as a structure formed of flesh,

     “ஊன்செய், கோட்டக்கு…… வள்ளுரமே சுமந்து…….. புறஞ்செய்கின்றார்”. (சீவக.1552);. (செ.அக.);.

     [ஊன் + செய் + கோட்டம்.]

ஊன்தள்ளல்

 ஊன்தள்ளல்ūṉtaḷḷal, பெ. (n.)

ஊன்றள்ளல் பார்க்க;see unrallal.

ஊன்றக்கட்டு-தல்

ஊன்றக்கட்டு-தல்ūṉṟakkaṭṭudal,    5.செ.குன்றாவி, (v.t.)

   1. வலிமைபடுத்துதல்; to edify, strengthen,

   2. புண்காயம்;   முதலியவற்றை உறுதியாய்க் கட்டுதல்; to bandage firmly as is done to wound, injury, fracture etc. (சா.அக.);.

ஊன்று → ஊன்ற + கட்டு.]

ஊன்றள்ளு-தல்

ஊன்றள்ளு-தல்ūṉṟaḷḷudal,    15.செ.கு.வி. (v.i.)

   1. ஊன் வளர்தல்; to be formed as proud flesh

   2. புலாலுண்டலை விலக்குதல் (வின்.);; to abstain from meat (செ.அக.);.

     [ஊன்+ தள்ளு-தல்.]

ஊன்றி

 ஊன்றிūṉṟi, பெ. (n.)

   பாம்பு வகை (அக.நி.);; a kind of snake. (செ.அக.);.

     [ஊன்று → ஊன்றி]

ஊன்றிக்கேள்(ட்)த(ட)ல்

ஊன்றிக்கேள்(ட்)த(ட)ல்ūṉṟikāḷḍtaḍal,    11. செகுன்றாவி (v.t.)

   1. அழுத்தி வினாவுதல்; to interrogate with attention, press for an answer.

   2. உற்றுக்கேட்டல்; to hear attentively. (செ.அக.);.

     [ஊன்று → ஊன்றி. + கொள்.]

ஊன்றிக்கொள்(ளு)-தல்

ஊன்றிக்கொள்(ளு)-தல்ūṉṟikkoḷḷudal,    7. செ.குன்றாவி (v.t.)

   நிலை பெறுதல்; to gain a firm footing, as in an office, to establish oneself somewhere (செ.அக.);.

     [ஊன்று → ஊன்றி + கொள்.]

ஊன்றிச்சொல்(லு)-தல்

ஊன்றிச்சொல்(லு)-தல்ūṉṟiccolludal,    8. செ.குன்றாவி (v.t.)

   1. தெளிவாய்ப் பேசுதல்; to speak distinctly, articulate

   2. உறுதியாய்ச் சொல்லுதல்; to speak emphatically, stress, assert

     [ஊன்று → ஊன்றி + சொல்.]

ஊன்றித்தாங்கு-தல்

ஊன்றித்தாங்கு-தல்ūṉṟiddāṅgudal,    5.செ.குன்றாவி, (v.t.)

   கோலை யூன்றித் தோணியைத் தள்ளுதல் (வின்.);; to press on the pole either in stopping or in pushing a boat (செ.அக.);.

     [ஊன்று → ஊன்றி + தாங்கு]

ஊன்றிநடத்தல்

ஊன்றிநடத்தல்ūṉṟinaḍattal,    3.செ.கு.வி. (v.i.)

   1. உறதியாய் நடத்தல்; to walk firmy so as to quicken one’s gait

   2. காலைப் பதிய வைத்து நடத்தல்; to walk cautiously, as on slippery ground, or as one regaining the use of his legs (செ.அக.);.

     [ஊன்று → ஊன்றி + நில்.]

ஊன்றிநில்(ற்)-த(ற)(ல்)

ஊன்றிநில்(ற்)-த(ற)(ல்)ūṉṟinilṟtaṟal,    14.செ.கு.வி. (v.i.)

   உறுதியாயிருத்தல்; to hold fast as by an opinion. be firm

காரியத்தில் ஊன்றி நிற்கிறான். (செ.அக.);.

     [ஊன்று → ஊன்றி + நில்]

ஊன்றிப்படி-த்தல்

ஊன்றிப்படி-த்தல்ūṉṟippaḍittal,    4.செ.குன்றாவி. (v.t.)

   1. கருத்தாய்ப் படித்தல்: to read attentively

   2. நிறுத்தி வாசித்தல் (வின்.);; to read with proper intonation or emphasis. (செ.அக.);.

     [ஊன்று → ஊன்றி + படி.]

ஊன்றிப்பாட்டம்

 ஊன்றிப்பாட்டம்ūṉṟippāṭṭam, பெ. (n.)

   ஓர் வரி வகை; old tax.

ம. ஊன்னிப்பாட்டம்.

     [ஊன்று → ஊன்றி + பாட்டம்.]

ஊன்றிப்பார்-த்தல்

ஊன்றிப்பார்-த்தல்ūṉṟippārttal, .

   4. செ.குன்றாவி. (v.t.);

   1. உற்று, நோக்குதல்; to look at steadfasty or intently

   2. ஆராய்ந்து பார்த்தல்; to consider carefully, fix the mind Intently upon

   3. அழுத்திப் பார்த்தல்; to feel, try, press, in order to test, as a fruit

     [ஊன்று → ஊன்றி + பார்]

ஊன்றிப்பெய்-தல்

ஊன்றிப்பெய்-தல்ūṉṟippeytal,    1.செ.கு.வி. (v.i.)

   விடாமல் ஓங்கிப் பெய்தல்; to pour incessantly, as rain

மழையூன்றிப் பெய்கின்றது. (செ.அக.);.

ஊன்று

ஊன்றுūṉṟu, பெ. (n.)

   சார்பு; prop.support.

     “தனியோங் கார மூன்றற…… மேலுற்று நின்றது” (ஞானவா.உத்தால கன்.41);. (செ. அக.);.

   ம. ஊன்னு: க. ஊடு, து. ஊரு ஊது;தெ. ஊக, ஊதமு [உவல் → உவன்று → ஊன்று.]

ஊன்று-தல்

ஊன்று-தல்ūṉṟudal,    5.செ.கு.வி. (v.i.)

   1. நிலைபெறுதல்; to be fixed, settled, gain a firm footing, become established, strike root

     “கற்பினிற்றிரிதலின்றியூன்றுக” (சீவக.604);.

   2. சென்று தங்குதல்; to slop in a place

     ‘புகை….. விகம்பினுன்றுஞ் சூளை” (புறநா.228.3);

     [உல்→ ஊல் + று – ஊன்று.]

 ஊன்று-தல்ūṉṟudal, . 5.செ.குன்றாவி (v.t.)

   1. அழுந்த வைத்தல்; to fix, place firmly, as a pole in fixing a boat

     ‘முன்னொரு கோலுன்றி” (தில்.பெரியதி. 1,3,2);.

   2. பள்ளத்தில் அல்லது குழியில் நடுதல்; to plant set firmly in the ground, as a post

     “காழூன்றிய கவிகிடுகின்” கவிகிடுகின் (பட்டினப்.167);.

   3. நிலைநிறுத்துதல்; to establish, as fame, position

     ‘புதைய்ம்பிற் பட்டுப்பா டுன்றுங் களிறு’ (குறள்:597);.

   4. துணையாகப் பற்றுதல்; to lean upon, recline or depend on, as a staff, a person

     “கைதருவார் தமையூன்றி” (பெரியபுதிருநாவு 61);.

   5. தாங்குதல்; lo support

     “துன்பந் துடைத் துன்றுந் துண்” (குறள்.615);,

   6. தீர்மானித்தல்; to determine, decide.

     “ஊன்றியில் விரண்டினுள்ளுமுறுதிநீ யுரைத்திடென்ன” (சீவக.1235);.

   7. அமூக்குதல்; to press down, bear down with pressure.

     “உடுப்புமுக முழுக்கொழு மூழ்க வூன்றி’ (பெரும்பாண்.200);.

   8. தள்ளுதல் (திவா.);; to push, propel,

   9. உறுத்துதல்; to hurt to cause smarting irritation

     “அல்லி யூன்றிடு மென்றஞ்சி யரவிந்தத் துறந்தாட்கு” (கம்பரா. நாடவி.42);.

   10. குத்துதல்; to drive in as a spear.

     “மருப்பதனாலுன்றிப் பிளந்திரு கூறுசெய்து” (கூர்மபு. அந்தசா.80);.

   ம. ஊன்னுக;   க. ஊறு. ஊர் கோத. ஊத் துட. ஊண்;   குட ஊர்: து. ஊரணி, ஊண்துனி, ஊடுனி, ஊடபுனி, ஊண்டுனி;   தெ. ஊட் ஊனு ஊஞ்ச;கூ. உக பர். உத். கட. உண்டுப்குர் ஊத்னா.

     [உவல் (உவன்று); → ஊன்று.]

ஊன்றுகட்டு

ஊன்றுகட்டுūṉṟugaṭṭu, பெ. (n.)

   ஊன்றும்படி கட்டிய விறகு கட்டு; bundle of firewood placed on end, when offered for sale:

     “விறகு வெட்டி யூன்றுகட்டாக் கட்டி” (திருவாலவா.54.24);, (செ.அக.);.

      [உவல் → உவன்று → ஊன்று + கட்டு.]

ஊன்றுகாரன்

 ஊன்றுகாரன்ūṉṟukāraṉ, பெ. (n.)

   படகோட்டி; one who propels a boat with a pole.

ம. ஊன்னுகாரன்.

     [ஊன்று + காரள். ஊன்று = ஊன்றும் துடுப்பு.]

ஊன்றுகால்

 ஊன்றுகால்ūṉṟukāl, பெ. (n.)

ஊன்றுகோல் பார்க்க;see Unrukol.

ம. ஊன்னுகால்.

ஊன்றுகால் செடி ப்பைக்

 ஊன்றுகால் செடி ப்பைக் பெ. (n)     கழுதைத் தும்பை; donkey toombay, Indian borage – Trichodesma Indicum alias Borago indica (சா.அக.)

     [ஊன்று + கால் + செடி.]

ஊன்றுகோல்

ஊன்றுகோல்ūṉṟuāl, பெ. (n.)

   பற்றுக்கோடு; staff, walking stick, support, whether for body or mind

     “ஊன்றுகோலெனக் காவதொன் றருளாய்” (தேவா. 1110.4);.

   ம. ஊன்னுகோல்;   க. ஊறுகோலு;   து. ஊறுகோலு;தெ. ஊதகோல.

     [உவல் → உவன்று → ஊன்று + கோல்.]

ஊன்றுவலை

 ஊன்றுவலைūṉṟuvalai, பெ. (n.)

   ஊன்று குச்சியுடன் சேர்த்துக் கட்டிய வலை; a kind of fishing net tied to stakes.

ம. ஊன்னிவல.

     [ஊன்று + வலை.]

ஊன்வலி

ஊன்வலிūṉvali, பெ. (n.)

உடம்பின் வலிமை (நீலகேசி,486,உரைமேற்கோள்);:

 bodily Vigour (செ.அக.);.

     [ஊன் + வலி]

ஊன்விலைஞர்

 ஊன்விலைஞர்ūṉvilaiñar, பெ. (n.)

   ஊன்விற்போர் (திவா.);; meat sellers. (செ.அக.);.

     [ஊன் + விலைஞர்.]

ஊபம்

ஊபம்ūpam, பெ. (n.)

   1. போரின் அணி; of battle array

   2 குறைத்தலையுடல்; headless trunk.

     [ஊப்பம் → ஊபம்.]

ஊபு

ஊபு1ūpudal,    7.செ.கு.வி. (v.i.)

   1. ஊதுதல்; to blow

   2. சூடேற்றுதல்; to heat.

     [உல் → உலுப்பு → ஊபு (கொ.வ.);.]

 ஊபு1ūpudal,    7.செ.கு.வி. (v.i.)

   1. வீச்சு; to blow

   2. கதிர் நுனி; tip of the corn

   3. வெப்பம்; to heat

     [உல் → உலுப்பு → ஊப்பு → ஊபு (கொ.வ.);.]

ஊப்பம்

ஊப்பம்1ūppam, பெ. (n.)

   1. உயர்ச்சி, எழுச்சி; height, elevation

   2. தலையற்ற நெடுந்தோற்றம்

 headless appearance.

     [ஊ → உப்பம் → ஊப்பம்,]

 ஊப்பம்ūppam, பெ. (n.)

   வெப்பம்; heal

     [உல் → உலுப்பம் → ஊப்பம்.]

ஊப்பு

ஊப்பு2ūppu, பெ. (n.)

ஊப்பம்2 பார்க்க;see uppam

ஊப்பு-தல்

ஊப்பு-தல்ūppudal,    5.செ.குன்றாவி (v.i.)

   உறிஞ்சுதல், உறுப்புதல், பருகுதல், உட்கொளல்; to suck

     [உறும்பு → உறுப்பு → ஊப்பு.]

ஊப்பை

 ஊப்பைūppai, பெ. (n.)

   பன்றியைப்போல் தின்னுகை; gluttony, as of a pig (Tinn); (செ.அக.);.

     [ஊ → ஊப்பு → ஊப்பை.]

ஊமச்சி

ஊமச்சிūmacci, பெ. (n.)

   1. மூங்கைப்பெண்; dumb woman, she who is dumb,

   2. ஒருவகை நந்தை; roman snail, Helix Pomatia

   3. மட்டி; common cockie, codium edule. (செ.அக.);.

     [ஊம் → ஊமத்தி → ஊமச்சி]

ஊமணாமூஞ்சி

ஊமணாமூஞ்சிūmaṇāmūñji, பெ. (n.)

   1. பொலிவற்ற geogastorolor-or; stupid, sullen, pouting person, one with anugly orforbiddingcountenance

   2. GLæsø plású sungalor; one who is unable to speak with ease (செ. அக.);

     [உம் → உம்மணம் + முஞ்சி. முகம் → மூஞ்சி (கொ.வ.);.]

ஊமணி

 ஊமணிūmaṇi, பெ. (n.)

   ஆட்டின் கழுத்தில் தொங்கும் இரட்டைத் தொங்குவால் தசைக்காம்பு; a kind of wattle or excrescense under the neck of goats and sheep.

மறுவ, அதர்

     [ஊன் → ஊ + மணி. ஊள் = தசை.]

ஊமணை

 ஊமணைūmaṇai, பெ. (n.)

   பேசுந்திறமற்றவன்; one unable to speak freely.

     [உம் → ஊம் + அனை. (சொல்லாக்க ஈறு);.]

ஊமணைச்சட்டி

 ஊமணைச்சட்டிūmaṇaiccaṭṭi, பெ. (n.)

   குளையில் நன்றாய் வேகாத சட்டி (யாழ்ப்);; half baked earthen pot, miss happen and easily broken. (செ.அக.);

     [உம் → ஊம் + அணை → ஊமணை + சட்டி_ஊமனைச்சட்டி = வேகும் செயலுறாதது.]

ஊமணைச்சி

 ஊமணைச்சிūmaṇaicci, பெ. (n.)

   அழகற்றவள் (யாழ்ப்.);; she who is ugy. (செ.அக.);.

     [ஊமணை → ஊமணைச்சி.]

ஊமணையன்

 ஊமணையன்ūmaṇaiyaṉ, பெ. (n.)

   அழகற்றவன் (யாழ்ப்.);; he who is ugly. (செ.அக.);.

     [ஊமனை + அன்.]

ஊமத்தங்கூகை

 ஊமத்தங்கூகைūmattaṅākai, பெ. (n.)

   கோட்டான் வகை; a species of a very large size owl (W);. (செ.அக.);.

     [ஊமத்தம் + கூகை]

ஊமத்தஞ்செடி

 ஊமத்தஞ்செடிūmattañjeḍi, பெ. (n.)

ஊமத்தை பார்க்க;see ümattai [ஊமத்தம் + செடி.]

ஊமத்தம்

 ஊமத்தம்ūmattam, பெ. (n.)

ஊமத்தை பார்க்க;see urmattai.

     [ஊமத்தை → ஊகத்தம்.]

ஊமத்தை

ஊமத்தைūmattai, பெ. (n.)

   1. செடி வகை (திவா.);; thorn-apple.

   2. வெஙளளுமத்தை (திவா);; while flowered thorn-apple

   3, கருவூமத்தை; purple stramony. செ.அக.).

ஊமத்தையின் வகைகள்:

   1. வெள்ளுமத்தை,

   2. கருவூமத்தை,

   3. அடுக்கூமத்தை,

   4. பேபூமத்தை

   5. மருளுமத்தை,

   6. பொன்னுமத்தை,

   7. நீல ஊமத்தை.

ம, ஊமத்தன்.

     [உன்மத்தம் → ஊமத்தை (முதா.196.);

ஊமத்தைக்கூடு

 ஊமத்தைக்கூடுūmattaikāṭu, பெ. (n.)

   கிளிஞ்சல்; bivalve shell (சா.அக);.

     [ஊமத்தை + கூடு.]

ஊமனை

ஊமனை2ūmaṉai, பெ. (n.)

   அழகற்றது; that which is defective, misshappen, clumsily made (செ.அக.);.

     [உம் → ஊம் + அணை – ஊமணை = பொலிவு

வெளிப்படாதது.]

ஊமனையுரல்

 ஊமனையுரல்ūmaṉaiyural, பெ. (n.)

   நடுப்பாகம் ஒழுங்காய்ச் செய்யப்படாத உரல் (வின்.);; mortar that is not well formed in its waist (செ.அக.);.

     [ஊமனை + உரல்.]

ஊமன்

ஊமன்ūmaṉ, பெ. (n.)

   1. ஊமையன்; dumb man.

     “ஊமன் கண்ட கனா” (திரிகடு.7);.

   2. கூகை; owl

   3. பெருங்கோட்டான்; a kind of big owl.

     “சிறுகூகை யுட்கவிழிக்க வூமன் வெருட்ட” (பதினொ.காரைக் மூத்த,2,3); (செ.அக.);.

   ம, ஊமன்;க. ஊமெ.

     [ஊம் → ஊமன்.]

ஊமன் குரங்கு

 ஊமன் குரங்குūmaṉkuraṅgu, பெ. (n.)

   ஓர் இனக்குரங்கு; a variety of monkey. (சேரநா.);.

     [ஊம் + அன் → ஊமன் + குரங்கு.]

ஊமற்கச்சி

 ஊமற்கச்சிūmaṟkacci, பெ. (n.)

   உலர்ந்த பனங்கொட்டையின் பாதி; half of a dried palmyra nut (W.); (செ.அக.);.

     [ஊமல் + கச்சி.]

ஊமற்கரி

 ஊமற்கரிūmaṟkari, பெ. (n.)

   பனங்கொட்டைக்கரி (யாழ்ப்,);; charcoal made of palmyra nuts, used by blacksmiths, (செ.அக.);.

     [ஊமல் + கரி.]

ஊமல்

 ஊமல்ūmal, பெ. (n.)

   கிழங்கு கழிந்த பனங்கொட்டை (யாழ்ப்.);; dried hollow shell of the palymyra seed after it has been put into the ground and has struck rool (செ.அக.);

     [உம் → ஊம் + அல் – ஊமல் = காய்ந்தது. உலர்ந்தது.]

ஊமாண்டி

ஊமாண்டிūmāṇṭi, பெ. (n.)

   1. பூச்சாண்டி; bugbear.

   2. பிள்ளை விளையாட்டுவகை; play among children, to frighten each other (W.); (செ.அக.);.

     [ஊம் + ஆண்டி.]

ஊமாண்டிகாட்டு-தல்

ஊமாண்டிகாட்டு-தல்ūmāṇṭikāṭṭudal, பெ. (n.)

   5. செ.கு.வி. (v.i.);

. பிள்ளைகளை அச்சமுறுத்துதல் (யாழ்ப்.);:

 to frighten children with a bugbear. (செ.அக.);.

     [ஊம் + ஆண்டி + காட்டு.]

ஊமிள்

 ஊமிள்ūmiḷ, பெ. (n.)

சிறு பூளை (மலை.);: common way side weed. (செ.அக.);.

     [ஊம் + இல் = ஊமில் → ஊமிள்.]

ஊமுட்டை

ஊமுட்டைūmuṭṭai, பெ. (n.)

   கெட்ட முட்டை; rotten egg

     [ஊழ் முட்டை → ஊமுட்டை (முதா.313);.]

ஊமெனல்

 ஊமெனல்ūmeṉal, பெ. (n.)

இசைவு, கவனங்களின்

   குறப்பு; onom expr: signifying assent, attentiveness. (செ. அக.);

     [உம் + எனல் – உம்மெளல் → ஊமெனல்]

ஊமை

ஊமை1ūmai, பெ. (n.)

   1. மூங்கைத்தன்மை; dumbness,

     “கூன் செவிடடூமை” (திருவிளை.எல்லாம்.10);.

   2. வாயிலி; dumb person

     ‘உன்மகடா னுமையோ” (திவ்.திருப்பா.9);.

   3. ஒலிக்குறைவு; dulness of sound, as in a coin that has no proper ring ஊமைப்பணம்.

   4. ஒரு இசைக்கருவி; ancient war drum

     “ஊமை சகடையோ டார்த்த வன்றே.’ (கம்பரா.பிரமாத்.5);.

   5. கீரி.(அக,நி.);, mongoose, (செ.அக);.

   6. வாய்பேசாமல் அமைதியாய் இருப்பவன்; one who is silent

   7. இளைய அம்மா; step-mother (சேரநா);.

ம. ஊம: க. பட.. ஊமெ.

 |ஊம்_ஊமை (க.வி.99);./

ஊமை ma. பெ. (n);

   1. சிப்பி conch (நாமதீப);.

   2. ஊமச்சி; romansnal. (நாமதீப.);.

   3. மெய்யெழுத்து; consonant

     “ஊமை வியஞ்சன மெய்” (பேரகத்.27); (செ.அக.);.

   4. கிளிஞ்சல்; bi-valve shell

   5. மூன்று மாதத்திய கருப்பிண்டம்; foetus three months old (சா.அக.);.

     [ஊமை = உள்ளீடற்றது. சிப்பி கிளிஞ்சல் உரு = கரு உரு – → உரும் → ஊம் → ஊமை = கருப்பிண்டம்.]

ஊமை விளையாட்டு

 ஊமை விளையாட்டுūmaiviḷaiyāṭṭu, பெ. (n.)

   பிள்ளை விளையாட்டு வகை; play among children in which they imitate a dumb person (செ.அக.);.

     [(ஊமை + விளையாட்டு.]

ஊமை வீக்கம்

 ஊமை வீக்கம்ūmaivīkkam, பெ. (n.)

   அடியினால் வெளிக்குக் காயந் தெரியாது உண்டாகும் வீக்கம்; contusion, swelling on account of a bruise (செ.அக.);.

ம. ஊமை வீக்கம்

     [ஊமை + விக்கம்.]

ஊமை வெயில்

 ஊமை வெயில்ūmaiveyil, பெ. (n.)

ஊமைக்கோட்டாடன வெயில் பார்க்க;see Uma-k-kótán veyil

ம. ஊமை வெயில்.

     [ஊமை + வெயில்.]

ஊமைக்கடுப்பு

 ஊமைக்கடுப்புūmaikkaḍuppu, பெ. (n.)

   ஊமை வலி; dull pain (சா.அக.);

     [ஊமை + கடுப்பு.]

ஊமைக்கட்டி

ஊமைக்கட்டிūmaikkaṭṭi, பெ. (n.)

   1. முகங்கொள்ளாத சிலந்திக்கட்டி; blind boil, boil that does not gather to a head,

   2. கூகைக்கட்டி (வின்.);; mumps (செ.அக.);.

ஊமைக்கணவாய்

 ஊமைக்கணவாய்ūmaikkaṇavāy, பெ. (n.)

   மீன்வகை (வின்.);; a species of cuttlefish. (செ.அக.);.

     [ஊமை + கணவாய்.]

ஊமைக்கணவாய்

ஊமைக்காடை

 ஊமைக்காடைūmaikkāṭai, பெ. (n.)

   ஒருவகைக் காடை; slow quail that does not rise at once – Coturnix textilis. (சா.அக.);.

     [ஊமை காடை.]

ஊமைக்காயம்

 ஊமைக்காயம்ūmaikkāyam, பெ. (n.)

   முரட்டடியால் வெளிக்குக் காயந்தெரியாது உண்டான உள்வீக்கம்; internal injury from blows that do not produce any visible wound on the skin (செ.அக.);.

     [ஊமை + காயம்.]

ஊமைக்காய்

ஊமைக்காய்ūmaikkāy, பெ. (n.)

   1. பருப்பற்ற காய்; fruit that does not have seed, as a withered palmyra fruit (Loc); (செ.அக.);.

   2. தசைப் பற்றில்லாத காய்; any fruit without pulp or kernel inside, c.f. tender coronut (சா.அக.);.

     [ஊமை + காய்.]

ஊமைக்காய்ச்சல்

 ஊமைக்காய்ச்சல்ūmaikkāyccal, பெ. (n.)

   வெளிக்காட்டாத காய்ச்சல்; latent or masked fever, dumb ague. (சா.அக.);.

     [ஊமை_காய்ச்சல்.]

ஊமைக்காரி

 ஊமைக்காரிūmaikkāri, பெ.(n.)

   மணி பிடிக்காத வெற்றுக் கதிர்; empty corn.

மறுவ. ஊமைக்கதிர்

     [ஊமை+காரி]

ஊமைக்கிளாத்தி

 ஊமைக்கிளாத்திūmaikkiḷātti, பெ. (n.)

   கடல்மீன் வகை; trigger-fish, buff in colours (செ.அக.);.

     [ஊமை + கிளாத்தி.]

ஊமைக்கிளாத்தி

ஊமைக்குறும்பு

 ஊமைக்குறும்புūmaikkuṟumpu, பெ.(n.)

   அமைதியான குறும்புத் தனம்; mischief.

ஊமைக்கூறன்

ஊமைக்கூறன்ūmaikāṟaṉ, பெ. (n.)

   ஊமையன் பேச்சு; inarticulate sounds uttered by a dumb person,

ஊமைக் கூறனாகக் கூப்பிடுவது (ஈடு.2.1.3);. (செ.அக.);.

     [ஊமை + கூறன்.]

ஊமைக்கோட்டான்

ஊமைக்கோட்டான்ūmaikāṭṭāṉ, பெ. (n.)

   1. கோட்டான்; large species of owl.

   2. பேசுத் தெரியாமல் விழிப்பவன்; one who merely stares or blinks and gives no answer, like an owl. (செ.அக.);.

     [ஊமை + கோட்டான்.]

ஊமைக்கோட்டான் வெயில்

 ஊமைக்கோட்டான் வெயில்ūmaikāṭṭāṉveyil, பெ. (n.)

   மேகமூட்டத்தில் உறைக்கும் வெயில்; clouded but scorching sunshine. (செ.அக.);.

     [ஊமை + கோட்டான் + வெயில்]

ஊமைச்சி

ஊமைச்சிūmaicci, பெ. (n.)

   1. ஊமைப்பெண்; dumb woman.

   2. கடல்மீன்வகை; trunk-fish, light brown, ostracion cornutus.

   3. நத்தை வகை (வின்);; cockle, cardium edule. (செ.அக.);.

     [ஊமை → ஊமைத்தி → ஊமச்சி]

ஊமைச்சொறி

 ஊமைச்சொறிūmaiccoṟi, பெ. (n.)

   சொறி வகை; skin marked by violent itching, prurigo. (செ.அக.);.

     [ஊமை + சொறி.]

ஊமைத்தசும்பு

ஊமைத்தசும்புūmaittasumbu, பெ. (n.)

   வாயில்லாத குடம்; earthen pot which is without a mouth, but Is porous to absorb water

ஊமைத் தசும்புள் நீர் நிறைந்தாற்போல ஆனந்த மயமான ஒளி மாணாக் கர்க்கு நிறைதலின் (திருமுரு:112, உரை);. (செ.அக.);.

     [ஊமை + தசும்பு]

ஊமைத்தனம்

ஊமைத்தனம்ūmaittaṉam, பெ. (n.)

   1. பேச முடியாமை; muteness;

 inability to speak, mutism

   2. ஊமையாயிருத்தல்; state of being dumb – dumbness.

   3. அமைதி காக்கும் தன்மை; observance of silence.

   4.உரையாடாமை; reservedness in speech-tacturnity

   5. உடம்பினுள் காயம் அடைவதால் பேசுந்தன்மையை இழத்தல்; loss of the power of speech due to a central lesion – Aphemia (சா.அக.);.

     [ஊமை + தனம்.]

ஊமைத்தேங்காய்

ஊமைத்தேங்காய்ūmaittēṅgāy, பெ. (n.)

   1. நீராடாத் தேங்காய்; coconut in which the milk does not sound when shaken,

   2. உள்ளே ஒன்றுமில்லாத தேங்காய்:

 coconut that is useless, having no kernel (செ.அக.);.

ம. ஊமைத்தேங்ங்.

     [ஊமை + தேங்காய்.]

ஊமைப்பூச்சி

 ஊமைப்பூச்சிūmaippūcci, பெ. (n.)

   அட்டை; leech (சா.அக.);.

     [ஊமை + பூச்சி]

ஊமைமணி

ஊமைமணிūmaimaṇi, பெ. (n.)

   நாக்கில்லாத மணி; longueless beil

     “ஊமைமணியாட்டுகினு மோசை ஒழிந்தாற்போல்” (ஒழிலி துறவு,9);.

     [ஊமை + மணி.]

ஊமைமரம்

 ஊமைமரம்ūmaimaram, பெ. (n.)

   மலை வேம்பு; hill-neem – Melia semperriren (சா.அக.);.

 |ஊமை_மரம்.)

ஊமையடி

 ஊமையடிūmaiyaḍi, பெ. (n.)

   குருதிக்காய முண்டாக்காத அடி; contused wound, bruise (Tinn);, (செ.அக.);.

ம. ஊமையடி.

     [ஊமை + அடி]

ஊமையன்

 ஊமையன்ūmaiyaṉ, பெ. (n.)

   மூங்கையன்; dumb speechless man(செ.அக.);.

     [ஊமை + அன் – ஊமையன்]

ஊமையறுவாள்

 ஊமையறுவாள்ūmaiyaṟuvāḷ, பெ. (n.)

முட்டை: egg (சா.அக.);

     [ஊமை + அறுவாள். கற்காலத்துக் கற்கோடரி போன்ற வடி வொப்புமை யுடையதாக முட்டையின் தோற்றம் காணப் படுதலின் ஒருசார் ஒப்புமை கருதி இட்ட பெயராகலாம்.]

ஊமையாமொழி

ஊமையாமொழிūmaiyāmoḻi, பெ. (n.)

   அசையா மந்திரம்;     (திருமந், 1611);;

 the ajapá mantra.

     [ஊமை + ஆ + மொழி.]

ஊமையெழுத்து

ஊமையெழுத்துūmaiyeḻuttu, பெ. (n.)

   1. மெய்யெ முத்து; consonant being mule

   2. ஓம் என்னும் உள்ளகமான மந்திர எழுத்து; the mystic syllable om.

     “மறை நான்கின் முதற்கிடந்த ஆமையெழுத்து” (குற்றா தல,திரிகூடமலை,34);. (செ.அக.);.

     [ஊமை + எழுத்து.]

ஊம்

ஊம்2ūm, பெ. (n.)

   1. ஊமை;     “ஊமுஞ் செவிடும்” (மணி.12.97); (செ.அக.);.

   2. செயற்பாடின்மை; inactiveness,

   3. பயனின்மை; uselessness.

   4. தீங்கு; evil

ம, ஊம க. ஊமெ.

     [உம் → ஊம்.”உம்” பேசாமலிருக்கும் குறிப்பிடைச்சொல்.]

ஊம்பு-தல்

ஊம்பு-தல் ūmbudal,    5.செ.குன்றாவி. (v.i.)

   சப்புதல்; to suck.

     “விழிகட்பேய் புண்ணளைந்துகையூம்பப்போர் மணலுர் வென்றதே” (Inscசெந்.பத்.6.11); (செ.அக.);.

ம. ஊம்பு.

     [உறும்பு → உறுப்பு → ஊப்பு → ஊம்பு]

ஊயல்

ஊயல்ūyal, பெ. (n.)

   ஊஞ்சல்; swing

தெ. உய்யால.

     [உந்தல் → உஞ்சல் → ஊஞ்சல் → ஊசல் → வயல் (க.வி.40);.]

ஊய்-தல்

ஊய்-தல்ūytal,    2.செ.கு.வி. (v.i.)

   பதனழிதல்; to become overripe, lo deterioate, lo decay (யாழ்.அக.);. (செ.அக.); .

     [உல் → ஊல் → ஊழ் → ஊய்.]

ஊய்ந்துபோ-தல்

ஊய்ந்துபோ-தல்ūyndupōtal,    6. செ.குன்றாவி. (v.t.)

பெருவாரி நோயாலிறத்தல்:

 to de in plague or pestilence. (சா.அக.);.

     [ஊய் → ஊய்ந்து + போ]

ஊரகமல்லி

 ஊரகமல்லிūragamalli, பெ. (n.)

   நாகமல்லி; snake jasmine

     [ஊரகம் + மல்லி]

ஊரகம்

ஊரகம்ūragam, பெ. (n.)

   1. ஊரின் நடு; centre of a village. a village_

   2. காஞ்சியிலுள்ள நூற்றெட்டுத் திருப்பதிகளுள் ஒன்று; one of the 108 sacred places situated in Kanchipuram.

   ம. ஊரகம்;க. ஊரிக [

     [ஊர் + அகம்.]

ஊரடங்கு-தல்

 ஊரடங்கு-தல்ūraṭaṅkutal, செ.கு.வி. (v.i.)

   ஊரார் துயிலுதல்; sleeping time of the people.

     [ஊர்+அடங்கு]

ஊரடங்குஉத்தரவு

 ஊரடங்குஉத்தரவுūraṭaṅkuuttaravu, பெ.(n.)

மக்கள் வெளியே நடமாடக்கூடாது என்று சட்டப்படியாகப் பிறப்பிக்கப்பட்ட ஆணை; curfew.

     [ஊரடங்கு உத்தரவு]

ஊரடி

ஊரடி1ūraḍi, பெ. (n.)

   1. ஊரவர் வரையறை செய்யும் அளவு; limit of villagers (கருநா.);.

   2. ஊரை யொட்டிய விடம்; place adjacent to a village.

க. ஊரடி

     [ஊர் + அடி.]

 ஊரடி2ūraḍi, பெ. (n.)

   ஊரின் அடியவன், அடிமை; village servant slave. (சேரநா.);.

ம. ஊரடி

     [ஊர் + அடி.]

ஊரடி வயல்

 ஊரடி வயல்ūraḍivayal, பெ. (n.)

   ஊரொடு சேர்ந்திருக்கும் வயல்; rice lands adjoining a village. (சேரநா.);.

ம. ஊரடி வயல்.

     [ஊர் + அடி – ஊரடி + வயல்,]

ஊரணம்

ஊரணம்ūraṇam, பெ. (n.)

   1. புருவத்தின் இடையேயுள்ள மயிர்ச்சுழி; a circle or spiral of hair between the eye-brows.

   2. சிலந்திப் பூச்சி; spider.

ஊரணாயு

ஊரணாயுūraṇāyu, பெ. (n.)

   1. சிலந்தி; spider.

   2. ஆடு; goat.

   3. கம்பளம்; woolen blanket.

     [Skt. urnaya → த. ஊரணாயு.]

ஊரதிசயங்காட்டி

 ஊரதிசயங்காட்டிūradisayaṅgāṭṭi, பெ. (n.)

   ஊரில் வியப்பாக உள்ளவற்றை யெல்லாம் அங்குப் புதிதாக வருபவர்க்குக் காட்டுபவன்; cicerone, guide. (செ.அக.);.

     [ஊர் + அதிசயம் + காட்டி.]

ஊரன்

ஊரன்ūraṉ, பெ. (n.)

   1. மருதநிலத் தலைவன்; chief of an agricultural tract

     “தண்டுறை யூரனை” (ஐங். குறு.88);.

   2. சுந்தரமூர்த்தி நாயனார் (தேவா.1242.10);:

 St. Sundara (செ.அக.);

   3. செல்வக் குடியினன்; man of wealthy family. [

     [ஊர் + அன் – ஊரன். மருதநிலத்து நகரங்களே ஊர்கள் எனச் சிறப்பாகக் குறிக்கப்படுதலின் கோட்டையும் மதிலும் ஊர் கொண்டதே (சூழ்ந்ததே); ஊராயிற்று எனவும் கருதலாம். ஊரன் கோட்டையூரினன்.]

ஊரப்பார்-த்தல்

 ஊரப்பார்-த்தல்ūrappārttal, பெ. (n.)

செ.குன்றாவி, (v.t.);

நஞ்சு

   போக்குதல்; to put in motion, to cause to move or pass away as poison, by a magician. (செ.அக.);.

     [ஊர் → ஊர + பார். ஊர்தல் = நகர்தல், நீங்குதல்.]

ஊரமை

ஊரமைūramai, பெ. (n.)

   சிற்றூர்ப் பொதுப் பணிகளை மேற்பார்த்தல்; administration of a village.

     “ஊராமை செய்யும் வாரியப் பெருமக்களோடு” (S.l.li,117); (செ.அக.);.

     [ஊர் + ஆண்மை – ஊராண்மை → ஊராமை → ஊரமை.]

ஊரம்

 ஊரம்ūram, பெ. (n.)

செடி வகை country-mallow, (சேரநா.);.

ம. ஊரம்: ஆத். ஊர (மரம்);.

     [ஊர் + அம் – ஊரம் (உயரமானது);.]

ஊரம்மை

 ஊரம்மைūrammai, பெ. (n.)

   ஊர்த்தெய்வம்; village goddess. (சேரநா.);. ம. ஊரம்ம: க. ஊருதேவம்ம

     [ஊர் + அம்மை, அம்மை = அம்மன்.]

ஊரயன்

 ஊரயன்ūrāṇmaiūrāṇmaiūrāmaiūramaiūrayaṉ, பெ. (n.)

   பொறாமை கொண்டவன்; envious person (சேரநா.);.

ம. ஊரயன்.

     [ஊர் → ஊரல் → ஊரலன் → ஊரயன்.]

   ஊரரிசி மலை நெல்லின் அரிசி; rice obtained from wild paddy. (சேரநா.);.

ம. ஊரரி.

     [வரை → வார் → ஊர் + அரிசி.]

ஊரர்

ஊரர்ūrar, பெ.(n.)

   ஊரில் வாழ்பவர்; in habitants of a village or town.

     “மலை இடையிட்ட நாட்டரும் அல்லர், மரந்தலை தோன்றாஊரரும் அல்லர்”(குறுந்:203:1-2);

     [ஊர்+அர்]

ஊரறுகு

ஊரறுகுūraṟugu, பெ. (n.)

அறுகு வகை (தஞ்சை,சரசு.iv.144);,

 a kind of grass. (செ.அக.);.

     [ஊர் + அறுகு.]

ஊரற்சொறி

 ஊரற்சொறிūraṟcoṟi, பெ. (n.)

   மிக்க தினவையுண்டாக்கும் ஒர் வகைச்சொறி; skin disease marked by small purple spots and intense itching.

     [ஊரல் + சொறி.]

ஊரற்பரி

ஊரற்பரிūraṟpari, பெ. (n.)

   1. சேம்பு; garden plant with vesculent seeds and roots

   2, நீர்ச்சேம்பு; another variety of ‘sémbu’.

     [ஊரன் + பரி.]

ஊரற்புண்

 ஊரற்புண்ūraṟpuṇ, பெ. (n.)

   ஆறாப்புண்; raw wound, unhealed wound (W);. (செ.அக.);.

     [ஊரல் + புண்.]

ஊரல்

ஊரல் பெ. (n)    1. ஊர்வது:

 Creeping thing (W.);

   2. கிளிஞ்சில் (பிங்.);; shell-ish

   3. குளுவைப் பறவை; water-bird

     “உள்ளு மூரலும்’ (சிலப்.10.17);.

   4. தினவு; itching sensation

   5. தேமல் வகை; eruptive patch on the skin.

   6. படர் தாமரை நோய்; ringworm, tinea tinea circinata

ம_ஊரல்,

     [ஊர் + அல் – ஊரல். அல் (தொ.பொறு);.

 ஊரல்2ūral, பெ. (n.)

   பசுமை; greemess, moistness, as of a vegetable

ம, ஊரல்.

     [ஊர் → ஊரல் = படரும் பகங்கொடி கொடியின் பகமை நிறம்.]

 ஊரல்3ūral, பெ. (n.)

   பிடித்து இழுத்தல்; drawing out or pulling out extraction. (சேரநா.);.

ம. ஊரல்.

     [ஊர் → ஊரல்.]

ஊரழிபூசல்

ஊரழிபூசல்ūravaiyaḷūravaiyaṉūraviyaṉkovaūraḻipūcal, பெ. (n.)

   ஊரைக் கொள்ளையிட்டழிக்கும் போர்; war in which the whole village is looted.

     “ஊரழிபூசல்போலே திருமேனியின்நிறமானது எல்லாவற்றையுங்கூடக் கொண்டு வந்து என்னெஞ்சைக் கொள்ளை கொண்டது” (தில் அமலனாதி.9.வியா,பக்.99);. (செ.அக.);.

     [ஊர் + அழி + பூசல்.]

ஊரவர்

ஊரவர்ūravar, பெ. (n.)

   ஊரார்; inhabitants of a village or town

     “ஊரவர் கெளவை யெருவாக” (குறள்.1147); (செ.அக.);.

ம. ஊராங்கள்

     [ஊர் + அவர்.]

ஊரவியன்

 ஊரவியன்ūraviyaṉ, பெ. (n.)

   வணிகன்; merchant ஊரவையன் பார்க்க;see Úravayan

ம. ஊரவ்யன்,

     [ஊர் + அவையள் – ஊரவையன் → ஊரவியன் (கொ.வ.);.]

ஊரா

ஊராūrā, பெ. (n.)

   ஊர்ப்பெற்றம்; Village cow

     “ஊராமிலைக்கக் குருட்டா மிலைக்கும்” (தில் இயற் திருவிருத்.94);, (செ.அக);. [ஊர் + ஆ]

ஊராங்கி

 ஊராங்கிūrāṅki, பெ.(n.)

ஊர்வலம் கலியான ஊர்வலம்,

 procession.

     [ஊர்-ஊராங்கி]

ஊராட்சி

ஊராட்சிūrāṭci, பெ. (n.)

   1. ஊராளுகை; administration of a village.

   2. ஒரு பழைய வரி; ancient tax.

     “நாடாட்சியும் ஊராட்சியும்…

     ” எவ்வகைப்பட்டதும்” (S.I.I.ii.509);.

ம, ஊராச்சி.

     [ஊர் + ஆட்சி.]

ஊராண்மை

ஊராண்மைūrāṇmai, பெ. (n.)

   1. ஊரையாளுந் தன்மை; commanding influence in a locality.

   2. ஈயும் தன்மை; generosity, benignity.

     “ஒன்றுற்றக்காலுராண்மை மற்றதன் எஃகு” (குறள்.773);.

   3. மிக்க செயல்; great wonderful performance.

   4. பகைமேற்செல்லுகை; military expedition (செ.அக.);.

ம. ஊராண்ம.

 |ஊர் ஆண்மை. ஆள்_(ஆளுமை); – ஆண்மை.]

ஊராண்மைக்காரன்

 ஊராண்மைக்காரன்ūrāṇmaikkāraṉ, பெ. (n.)

   கோயில் தக்கார்; trustee of a temple. (சேரநா.);.

ம. ஊராண்மைக்காரன்.

     [ஊர் + ஆண்மை + காரன் காரன்-உடைமை அல்லது உரிமை குறித்த சொல்லாக்க ஈறு.]

ஊராநற்றேர்

ஊராநற்றேர்ūrānaṟṟēr, பெ. (n.)

   வானூர்தி; aerial car, so called because it does not run on the ground.

     “ஊரா நற்றே ரோவியப்படுத்து” (மணி.6.39);. (செ.அக.);.

     [ஊர் + ஆ + நல் + தேர் – ஊராதற்றேர் ஊரா = நிலத்தில் ஒட்டிச் செல்லப்படாத ‘ஆ’ எ.ம.இ.நி.]

ஊரான்

 ஊரான்ūrāṉ, பெ. (n.)

   ஊர்க்காரன்; inhabitant of a village or town.

ம. ஊரான்.

     [ஊர் + அவன் – ஊரவன் → ஊரான்.]

ஊராமை

 ஊராமைūrāmai, பெ. (n.)

   மகளிர்க்குக் கருப்பையிலுண்டாகுங் கட்டி;   ஆமையைப் போல் ஊரும் கட்டி; tumour developing in the uterous and having a sensation of crawling like the tortoise.

மறுவ, கெண்டைக்கட்டி. வல்லைக்கட்டி

     [ஊர் + ஆமை.]

ஊரார்

ஊரார்ūrār, பெ. (n.)

   1. ஊரவர்; Inhabitants of a village or town

     “மறைபெற லுரார்க் கரி தன்றால்” (குறள்.1180);.

   2. பிறர்; others, strangers, those who are not one’s own people

     ‘ஊரார் பிள்ளைளை ஊட்டி வளர்த்தால் தன்பிள்ளை தானே வளரும். (பழ.);. (செ.அக.);.

ம. ஊரார்.

     [ஊர் + அவர் – ஊரவர் → ஊரார்.]

ஊரார்வீடு

 ஊரார்வீடுūrārvīṭu, பெ.(n.)

   அயலார் வீடு; house of others.

     [ஊர்+ஆர்+வீடு]

ஊராளன்

ஊராளன்ūrāḷaṉ, பெ. (n.)

   ஊராட்சி செய்யும் ஓர் அதிகாரி; official who superintends the village affairs [T.A.S.ivi.10);. (செ.அக.);.

     [ஊர் + ஆளன்.]

ஊராளி

ஊராளி1ūrāḷi, பெ. (n.)

   மதுரை, திருநெல்வேலியி லுள்ள உழவரின் ஒரு வகையினர்; name of a sect of agriculturists who inhabit Madurai and Tirunelvãli districts.

     [ஊர் + ஆளி – ஊராளி, ஊராளும்தலைவராயிருந்து உழவரா னவராயிருக்கலாம்.]

 ஊராளி2ūrāḷi, பெ. (n.)

   ஊர்த்தலைன்; headman of a village.

இவர் ஊராளிக்கவுண்டரின் மகன் (கொங்.வ.);.

ம. ஊரானன்.

     [ஊர் + ஆளி. ஆன் → ஆனி.]

 ஊராளி3ūrāḷi, பெ. (n.)

   வரிக்கூத்து வகை; a kind of vari-k-kuttu” dance.

     [ஊர் + ஆனி.]

ஊர் மக்களை விழாக் காலங்களில் மகிழ்விப்பதற்காக ஊராளி யால் நடத்தப்படும் வரிக்கூத்து.

ஊராள்

ஊராள்ūrāḷ, பெ. (n.)

   1. ஊரவன்; villager 2 கோயில் தக்கார்;

 temple trustee,

   3. புதியவன்; stranger.

   க. ஊராளு;ம. ஊராள்,

     [ஊர் + ஆள்.]

ஊரி

ஊரி1ūri, பெ. (n.)

   1. புல்லுருவி; species of Loranthus

     “உயர்மர முளைத்த ஆரிபோல’ (கல்லா.38);.

   2. சங்கு (அக.நி.); conch

   3. மேகம் (அக.நி.);; cloud

   4. இளமை; youth, juvenility (செ.அக.);

     [ஊர் → ஊரி.]

 ஊரி2ūri, பெ. (n.)

   நத்தை வகை; a kind o a small (Pond.);

   2. ஊர்ந்து செல்லும் உயிர் வகைகள்; reptile.

     [ஊர் → ஊரி.]

ஊரிடுவரிப்பாடு

ஊரிடுவரிப்பாடுūriḍuvarippāḍu, பெ. (n.)

   சிற்றுரார் விதித்துக் கொண்ட நிலவரி (S.I.I.iii.14);; land cess assessed by the village. (செ.அக.);.

     [ஊர் + இடு + வரி + பாடு.]

ஊரின்னிசை

ஊரின்னிசைūriṉṉisai, பெ. (n.)

   தலைவனுரை இன்னிசை வெண்பாக்களாற் சிறப்பிக்கும் சிற்றிலக்கிய வகை (இலக்.வி.825);; eulogistic poem describing the town of the hero in 50, 70, or 90 innišai-venbā verses (செ.அக.);.

     [ஊர் + இன்னிசை.]

ஊரிருக்கை

ஊரிருக்கைūrirukkai, பெ. (n.)

   ஊரைச்சார்ந்த இடம்; land adjoining a village

     ‘ஊர்ரும் ஊரிக்கையும்’ (S.l.l.(iii);-19);.

     [ஊர் + இருக்கை]

ஊரிலி கம்பலை

 ஊரிலி கம்பலைūriligambalai, பெ. (n.)

   ஊர்க்கலகம்; village quarrel, lumult, civil disorder. (W.);.

     [ஊர் → ஊரில் + கம்பலை. ஊரில் → ஊரிலி எனத்திரிந்தது கொச்சைத்திரிபு.]

ஊரிழவு

 ஊரிழவுūriḻvu, பெ.(n.)

ஊரில் உறவினர்

   அல்லாதார் வீட்டு இறப்பு நிகழ்வு; a death of non-relatives,

     [ஊர்+இழவு]

ஊரு

ஊரு1ūrudal,    7. செ.கு.வி. (v.i.)

   நிலைகொள்ளுதல்; lo Set firm க. து. ஊரு.

     [உல் → ஊல் → ஊர் → ஊரு. பார் → பாரு எனத்திரிந்தாற் போன்ற கொச்சை வழக்கு ஊல் → ஊன்று எனத்திரிவதே சொல் வளர்ச்சி மரபாயினும் மக்கள் பேச்சு வழக்கில் ஊரு’ எனத்திரிந்தது.]

 ஊரு2ūru, பெ. (n.)

   அச்சம்; fear (ஆ.அக.);.

     [உரு = அச்சம் உரு → ஊரு.]

 ஊருūru, பெ. (n.)

   தொடை; thigh.

     “அவளைத்தன் னூரு மிசை யேற்றி” (கந்தபு. அயிராணிசோ. 7);.

     [Skt. uru → த. ஊரு.]

வடமொழியில் மூடுதல், மறைத்தல், சூழ்தல் போன்ற பொருள்களுள்ள urna என்னும் வினைச் சொல்லிலிருந்து uru என்னும் சொல் உருவாகியுள்ளது (மா.வி.);. தமிழில் ஊரு என்னும் பெயர்ச்சொல் தொடை என்னும் பொருளில் மட்டும் வழக்கியுள்ளது. இதற்கு அடியான வினைச்சொல் தமிழில் வழக்கெய்தவில்லை.

ஊருகட்டி

 ஊருகட்டிūrugaṭṭi, பெ. (n.)

ஊர்மன்றம் கூடுவதற்கு மரத்தைச் சுற்றி யமைக்குந் திண்ணை (RT);

 raised platform round a tree in a village, where the villagers assemble. (செ.அக.);

     [ஊர் → ஊரு + கட்டி. ஊர்தல் = வளைதல், கற்றுதல் கட்டி – கட்டப்பட்டது, திண்ணை.]

ஊருகால்

ஊருகால்ūrukāl, பெ. (n.)

   1. நத்தை snail.

   2. சங்கு: conch (செ.அக.);.

ம. ஊருகால்.

     [ஊர் → ஊரு → ஊருகு → ஊருகல் → ஊருகால். ஊருகால் -வளைந்த வடிவுடையது.]

ஊருசன்

 ஊருசன்ūrusaṉ, பெ. (n.)

   வணிகன் (வைசியன்); (நிகண்டு);; vaisya, reputed to have been born from Brahma’s thigh.

     [Skt. uru-ja → த. ஊருசன்.]

ஊருடன்மூலி

 ஊருடன்மூலிūruṭaṉmūli, பெ.(n.)

   முருங்கை (சங்.அக.);; horse-radish tree.

     [ஊர் + உடல் + மூலி]

ஊருடை

 ஊருடைūruḍai, பெ. (n.)

உருடை பார்க்க;see urudal.

     [உருள் → உருடை → ஊருடை.]

ஊருடையான்

 ஊருடையான்ūruḍaiyāṉ, பெ. (n.)

   ஊர்க்கணக்கன்; village accountant who has the records of lands (வின்.); (செ. அக.);.

     [ஊர் + உடையான்.]

ஊருணி

ஊருணிūruṇi, பெ. (n.)

   ஊராருண்ணுநீர்நிலை; public drinking water tank in a village or town

     “ஊருணி நீர் நிறைந்தற்றே” (குறள்.215);. (செ.அக.);.

     [ஊர் + உணி. உண்ணி → உணி.]

ஊருத்தம்பம்

ஊருத்தம்பம்ūruttambam, பெ. (n.)

   தொடையில் உண்டாகும் ஒருவகை ஊதை (வாத); நோய்; paralysis of the thigh.

     “ஓங்கட லூருத்தமாட் சேபம்” (தைலவ. தைல.78);.

     [Skt. uru + tampam → த. ஊருத்தம்பம்.]

ஊருப்பிரகூடம்

ஊருப்பிரகூடம்ūruppiraāṭam, பெ. (n.)

   கலவியலின் வகை (ஆலிங்கன வகை); (கொக்கோ. 5, 45);; a mode of sexual embrace.

     [Skt. uru + prakuta → த. ஊருப்பிரகூடம்.]

ஊருப்பு

 ஊருப்புūruppu, பெ. (n.)

   சோற்றுப்பு; common salt (சா.அக.);.

     [உவர் + உப்பு → உவருப்பு → ஊருப்பு.]

ஊருவாரக்கொடி

 ஊருவாரக்கொடிūruvārakkoṭi, பெ.(n.)

வெள்ளரிசி (சித்.அக.);

 mottled melon

     [உருவாரம் + கொடி]

     [P]

 ஊருவாரக்கொடிūruvārakkoḍi, பெ. (n.)

வெள்ளரி, mottled melan, (சித்.அக.);. (செ.அக.);.

     [உருவாரம் + கொடி → உருவாரக்கொடி → ஊருவாக்கொடி.]

ஊருவாள்

 ஊருவாள்ūruvāḷ, பெ. (n.)

   ஒரு வகை வாள்; a kind of sword

ம. ஊருவாள்

     [ஒருகா உர + வாள் – உாவாள் → ஊரவாள் → ஊருவாள்]

ஊரெட்டு

ஊரெட்டுūreṭṭu, பெ.(n.)

   வரி வகை (தெ.இ.க.தொ.2.பக். 521);; a kind of tax

     [ஊர்+ (அட்டு); எட்டு]

 ஊரெட்டு orukāuravāḷvāḷūravāḷūruvāḷūreṭṭu, பெ. (n.)

   வரி வகை; a tax (S.l.l.ii.52); (செ. அக.);

     [ஊர் + அட்டு – ஊரட்டு → ஊரெட்டு. அட்டுதல் = கொடுத்தல்.)

ஊரெறி-தல்

ஊரெறி-தல்ūreṟidal,    2.செ.கு.வி (v.i.)

   ஊர்க் கொள்ளையிடுதல்; to sack a willage. (செ.அக.);.

     [ஊர்_எறி-தல்.]

ஊரெறிபறை

ஊரெறிபறைūreṟibaṟai, பெ. (n.)

   பாலை நிலத்துப் பறை; drum used to be beaten by people of the arid tracks in their plundering expeditions (இறை.1. பக். 18);

     [ஊர் + எறி + பறை.]

ஊரெழுச்சி

ஊரெழுச்சிūreḻucci, பெ. (n.)

   1. ஊர்திரண்டெமுகை; raising or gathering together of the citizens of a place, as for presenting complaints or making other representation to the authorities (J);.

   2. ஊர்க்கலகம்; riot, insurrection (W);. (செ.அக.);.

     [ஊர் + எழுச்சி.]

ஊரேறு

ஊரேறுūrēṟu, பெ. (n.)

   1. ஊர்ப்பன்றி; country pig. domesticated pig.

   2. ஊர்க்காளை, பொலிகாளை; bull (uncastrated);.

     [ஊர் + ஏறு]

ஊரை

 ஊரைūrai, பெ.(n.)

   மலைநெல் (நாமதீப);; mountain paddy.

மறுவ வரை. நெல் (ஊர்- ஊரை);

 ஊரைūrai, பெ. (n.)

   மலை நெல் (நாமதீப.);; mountain paddy. (செ.அக.);

     [தோரை → துரை → ஊரை.]

ஊரோசம்

 ஊரோசம்ūrōcam, பெ. (n.)

   பரந்த புகழ் (கீர்த்தி);; wide spread fame.

     ‘ஊரோசம் வீடு பட்டினி’.

     [Skt. oru+ojas → த. ஊரோசம்.]

ஊர்

ஊர்1ūrtal,    2.செ.கு.வி. (v.i.)

   1. அடர்தல்; to come to close quarters

     ” வெஞ்சம் மூர்ந்தமரு ழக்கி” (சிலப்.27.28.அரும்.);.

   2. நகர்தல்; lo move slowly, to creep as a infant to crawl, as a snake

     “நந்தூரும் புனனாட்டின்” (பாரத.கிருட்டின.11);.

   3. பரவுதல்;   10 spread, circulate, as blood, to extend over a surface, as spots on the skin.

     “இலக்கானென் மேனி பப்பூர்வது” (குறள்.1185);.

   4. வடிதல்; to flow, as juice from the sugarcane.

     “கரும்பூர்ந்த சாறுபோல்” (நாலடி.34);.

   5. கழலுதல்; to unloosen, to relaxed.

     “அவிர்தொடியிறையூர” (கலித்.100);.

   6. சுற்றி வருதல்; to go round.

     [உல் → ஊல் → ஊர்.]

 ஊர்2ūrtal, செ.குன்றாவி (v.t.)

   1. ஏறுதல்; to mount.

     “பாசடும்பு பரியவூர் பிழிபு….. வந்தன்று….. தேர்” (ஐங்குறு.101);.

   2. எறிநடத்துதல்; to ride, as a horse, to drive as a vehicle.

     “சிவிகை பொறுத்தானோ டூர்ந்தானிடை” (குறள்,37);,

   ம. ஊருக க. உரிசு, உச்சு;   துட. உச்த்;   தெ. ஊடு நா உயப்;   கொலா. உட்பேங், ஊர்பேங்;குரு. உர்னா.

     [உல் → உணல் → ஊர்.]

 ஊர்3ūrtal,    2.செகுன்றாவி. (v.t.)

   1. நிலைகொள்ளுதல், ஊன்றுதல்; to set firmy to plant

   2. உட்கொள் உறிஞ்சு: to suck

     “ஊர்த்துயிருன்னை யுண்ண” (சீவக.2286);, (செ.அக.);.

க. ஊர். து. ஊரு (நிலைகொள், ஊன்று);.

     [உல் = பொருந்துதல், தங்குதல். உல் → ஊல் → ஊர் → ஊ.

+ து. ஊன்று எனச் சொல்லாக்கம் பெறுதலை ஒப்புநோக்குக.

 ஊர்4ūr, பெ. (n.)

   1. ஊர்கை; going riding

     “ஊருடைத்

திண் புரவி யுலைத்தனள்” (சேதுபுதேவி.43);,

   2 வாழும் ஊர்; village, town, city (தொல்.பொருள்.37);

   3. இடம்: place,

     “ஒரூரிரண்ட ஃகமாயிற் றென்று” (சீவக.2087);.

   4. ஊரிலுள்ளார்; resident population

     “ஊரு மயலுஞ் சேரியோரும்” (இலக்.வி.563);

   5. திங்கள், பகலவனைச் குழும் பரிவேடம்; hald round the sun or moon

     “செங்கதிர் தங்குவதோரூருற்றது” (கம்பரா.சரபங்.9);. (செ.அக.);

   6. வட்டம்; circle

   ம. ஊரு கை உர்;   இரு ஊரு க. பட ஊரு ஊர்;   துட ஊர்;   கோத. ஊர்;   குட ஊரு ஊரி;   து. ஊரு;   தெ. ஊரு நா. ஊர்;   கொலா, ஊர், Heb ar. IR, Bab er. Assyrian uri Acadian uri; Pkt ur.

     [உ → உல் → ஊல் → ஊர். ஊர்தல் = தங்குதல், ஒரிடத்தில் நிலைகொள்ளல், குடியேறுதல்.]

     “ஊர்தியிற் கொண்டு போகப்படும் கூண்டு, குடில், அல்லது வீடு, வீட்டுத்தொகுதி ஊர் எனப்பட்டது (ஒ.நோ.); நகர்தல் – மெல்லச்செல்லல்” என்றும்

     “இன்றும் நாடோடிகள் (nomads); மாடு, குதிரை முதலியவற்றின்மேல் தங்கள் குடிலைக்கொண்டு போவதையும், சில இடங்களில் ஒரே விட்டிலிருந்து ஒற்றையூர் எனப்படுவதையும் காண்க.” (க.வி.41); என்றும் பாவாணர் கூறியிருப்பினும் தங்குதல் நிலைகொள்ளல் (உல் → ஊல் → ஊர் → ஊருதல்); என்னும் வேர்மூலமே பொருத்தமுடையதா கத் தோன்றுகின்றது. ஊர் என்னும் வினையடி ஆகுபெயராய் வண்டியை அல்லது ஊர்தியைக் குறிப்பதில்லை என்பதும் கவனிக்கத் தக்கது.

ஊர் மன்றம்

 ஊர் மன்றம்ūrmaṉṟam, பெ. (n.)

   ஊர்மன்று பார்க்க; see մr-ոanru:

     [ஊர் + மன்றம்]

ஊர் வாரியம்

 ஊர் வாரியம்ūrvāriyam, பெ. (n.)

   ஊர்மன்றம்; village committee

ம. ஊர்வ்வாரியர்.

     [ஊர் + வாரியம்.]

ஊர்காப்பாளர்

ஊர்காப்பாளர்ūrkāppāḷar, பெ.(n.)

   ஊர்க் காவலர்; village guard.

     “நூல் வழிப்பிழையா நுணங்கு தேர்ச்சி ஊர் காப்பாளர்” (மதுரைக் 646-7);

     [ஊர் + காப்பாளர் கா-காப்பு + ஆளர்]

ஊர்கொலை

ஊர்கொலைūrkolai, பெ. (n.)

பகைமேற்

     ‘செல்வோர் நிரை கொள்ளுமுன் நிரைகாவலரைக் கொல்லும் பிறத்துறை;

 literary theme depicting the slaughter of herdsmen by the enemy before capturing the cows

     “முற்றியலுர்கொலை” (தொல்பொருள்.58);.

     [ஊர் + கொலை]

ஊர்கொள்(ளு)-தல்

ஊர்கொள்(ளு)-தல்ūrkoḷḷudal,    16.செ.கு.வி. (v.i.)

   1 சுற்றுவட்டங் கொள்ளுதல் (திருக்கோ.262.உரை);:

 to have a halo as the sun or moon

   2. குறைவின்றி மண்டலமாக ஒளிபரத்தல் (திருக்கோ.262.உரை);; to Shine in its fullness, as the moon

     [ஊர் + கொள்.]

ஊர்கொள்ளை

ஊர்கொள்ளைūrkoḷḷai, பெ. (n.)

   1. ஊரில் நடக்குங் கொள்ளை; robbers in a town by a gang of robbers, dacoity.

   2. அதிகாரிக்கொள்ளை; extortion by the headman of a village. (W.);. (செ.அக.);.

   3. கொள்ளை நோய்; epidemic.

     [ஊர் + கொள்ளை.]

ஊர்கோலம்

 ஊர்கோலம்ūrālam, பெ. (n.)

   ஊர்வலம் வருகை; procession on festive occasions (செ.அக.);.

     [ஊர் + கோலம், கோலம் = அழகு, அழகிய காட்சி]

ஊர்கோள்

ஊர்கோள்ūrālamālamaḻkuaḻkiyakāṭciūrāḷ, பெ. (n.)

   ஒளிவட்டம்; halo round the sun or moon

     “கூட்டழற் கதிரையூர்கோள் வளைத்த வா’ (சீவக.11.36);. [ஊர் + கோள். கொள் → கோள்.]

ஊர்க்கட்டு

 ஊர்க்கட்டுūrkkaṭṭu, பெ.(n.)

   ஊர் ஒழுங்குமுறை; ஒற்றுமை; integrity.

     [ஊர்+கட்டு]

ஊர்க்கணக்கன்

 ஊர்க்கணக்கன்ūrkkaṇakkaṉ, பெ. (n.)

   ஊர்க்கணக்கு பதவி மேற்கொள்பவன் (கிராமக் கணக்கன்);; village accountant.

   ம. ஊர்க்கணக்கன்;க. ஊருக்கரண, தெ. ஊர்க்கரணம்.

     [ஊர் + கணக்கன்.]

ஊர்க்கணக்கு

 ஊர்க்கணக்குūrkkaṇakku, பெ. (n.)

   ஊர்க்கணக்கன் பதவி; post or appointment of a village-accountant.

ம. ஊர்கணக்கு

     [ஊர் + கணக்கு.]

ஊர்க்கதை

ஊர்க்கதைūrkkadai, பெ. (n.)

   1. ஊர்ப்பேச்ச; rumour, country talk

   2. வம்பு; gossip. (செ.அக.);

     [ஊர் + கதை.]

ஊர்க்கற்செம்மை

ஊர்க்கற்செம்மைūrkkaṟcemmai, பெ. (n.)

   புடமிட்ட நிலை; refinement as of gold (I.m.P.cg1027); (செ. அக.);.

     [உருக்கல் → ஊர்க்கல் (கொ.வ.); ஊர்க்கல் + செம்மை);

ஊர்க்கலகம்

ஊர்க்கலகம்ūrggalagam, பெ. (n.)

   1. ஊரிலுண்டாகுங் கலகம்; village quarrel

   2. நாட்டுக்குழப்பம்: insurrection (செ.அக.);.

     [ஊர் + கலகம்.]

ஊர்க்கலாபம்

 ஊர்க்கலாபம்ūrkkalāpam, பெ. (n.)

   மக்கட்குளுண்டாகுங் கலகம்; revolt civil disorder. (W.);.

     [ஊர் + கலாபம். கலகம் → கலாபம்.]

ஊர்க்கள்ளி

 ஊர்க்கள்ளிūrkkaḷḷi, பெ. (n.)

   ஒர்வகைக் கள்ளி அதாவது கொம்புக் கள்ளி; any spurge of the Eupborbia genus grown near a village or in a country. but it generally refers to the creeper kall -sarcostemma Intermedium.

     [ஊர் + கள்ளி. (வி.தொ.);.]

ஊர்க்கழஞ்சி

ஊர்க்கழஞ்சி2ūrkkaḻñji, பெ. (n.)

மக்கட்குளுண்டா குங் கலகம் (வின்.); insurrection (செ.அக.);.

     [ஊர் + கழஞ்சி, கலாம் → கலஞ்சி → கழஞ்சி (கொ.வ.);.]

 ஊர்க்கழஞ்சி2ūrkkaḻñji, பெ. (n.)

ஊர்க்கழஞ்சு பார்க்க;see ür-k-kala^ju (T.A.S.I,165);.

ஊர்க்கழஞ்சு

ஊர்க்கழஞ்சுūrkkaḻñju, பெ. (n.)

ஒரு பழைய வரி வகை: ancient tax (செ.அக.); (S.I.I.ii,425);.

ம. ஊர்கழஞ்சு.

     [ஊர் + கழஞ்சு.]

ஊர்க்காரம்

 ஊர்க்காரம்ūrkkāram, பெ. (n.)

   உவர்க்காரம்; fuller’s earth (சா.அக.);.

     [உவர் → ஊர் + காரம்.]

ஊர்க்காறுபாறு

 ஊர்க்காறுபாறுūrkkāṟupāṟu, பெ.(n.)

   ஊர் நேர்கேட்பு (விசாரணை);, உசாவல்; managment of the public affairs of a village or town.

     [ஊர்+காறுபாறு]

ஊர்க்காவல்

ஊர்க்காவல்ūrkkāval, பெ. (n.)

   ஊரைக் காப்பவன்;   தலையாரி (I.N.P.Tj76);; village watchman.

க. ஊர்க்காவலிக

     [ஊர் + காவல்.]

ஊர்க்குருவி

 ஊர்க்குருவிūrkkuruvi, பெ. (n.)

   அடைக்கலான் (திவா.);; house – sparrow, passer domesticus. (திவா.);.

   ம. ஊர்க் குருவி;   க. ஊரு குப்பி;   தெ. ஊருகுவ்வ;பட குப்பிசி,

     [ஊர்க் + குருவி.]

ஊர்க்குறவர்

 ஊர்க்குறவர்ūrkkuṟavar, பெ. (n.)

   திரியும் வழக்கத் தைவிட்டு ஓர் ஊரிலிருந்து வாழும் குறவர்; Section of the Kurava caste who have given up their nomadic life and have settled themselves in villages.

     [ஊர் + குறவர்.]

ஊர்க்கூடு-தல்

ஊர்க்கூடு-தல்ūrkāṭudal, பெ. (n.)

   5.செ.கு.வி. (v.i.);

   ஊரார் திரளுதல்; to throng in a body, as all the villagers for any common purpose.

ஊர் கூடிச் செக்கத் தள்ளுதல் போல (பழ);. (செ.அக.);.

     [ஊர் + கூடு]

ஊர்க்கூட்டம்

 ஊர்க்கூட்டம்ūrkāṭṭam, பெ. (n.)

   ஊரிலுள்ளோர் சுடுங்கூட்டம்; village crowd, gathering of people (செ.அக.);.

ம. ஊர்க்கூட்டம்.

     [ஊர் + கூட்டம்.]

ஊர்க்கூரம்

 ஊர்க்கூரம்ūrkāram, பெ. (n.)

   பாகற்காய்; bitter-fruit. Mimordica charantia (சா.அக.);

     [ஊர் + கூரம்.]

கூலம் = தவசம் கூழ் = தவசம், தவசத்தால் செய்த உணவு. தெலுங்கில் கூழ் – கூழம் – காய் – கூழங்காய் – கூரகாய் = காய்கறிகளைக் குறிக்கும். இங்கு கூரம். காய்கறி குறித்துப் பின்னர், காய் வகைக்குப் பொதுப்பெயராயிற்று.

ஊர்க்கோட்டம்

ஊர்க்கோட்டம்ūrkāṭṭam, பெ.(n.)

கயிலாயம்,

 place in Himalayas supposed to be the abode of Lord Sivan “உச்சிக்கிழான்

கோட்டம் ஊர்க்கோட்டம்வேற்கோட்டம்” (சில. 9:11);

     [ஊர் + கோட்டம் – கோடு → கோட்டம்]

ஊர்ச்சங்கிழங்கு

 ஊர்ச்சங்கிழங்குūrccaṅgiḻṅgu, பெ. (n.)

   நளி (கார்த்திகை);க் கிழங்கு; the root of November flower plant.

     [ஊர்ச்ச(ம்); + கிழங்கு. கீழ் → கீழ்ங்கு → கிழங்கு.]

ஊர்ச்சசம்

 ஊர்ச்சசம்ūrssasam, பெ. (n.)

   வலிமை (பலம்);; strength.

ஊர்ச்சம்

ஊர்ச்சம்ūrccam, பெ. (n.)

   1. நளி (கார்த்திகை); மாதம்; the Tamil month corresponding to November.

   2. உயிர்; life.

   3. மூச்சு; breath.

ஊர்ச்சிதப்படு-தல்

ஊர்ச்சிதப்படு-தல்ūrccidappaḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   நிலைப்படுதல் (ஸ்திரப்படுதல்);; to be confirmed, as in an appointment, to be ratified, as an arrangement.

     [ஊர்ச்சிதம் + படு-,]

     [Skt. urjita → த. ஊர்ச்சிதம் ‘படு’ து.வி.]

ஊர்ச்சிதம்

ஊர்ச்சிதம்ūrccidam, பெ. (n.)

   1. நம்பகத் தன்மை; confirmation, ratification.

   2. வலுக்கட்டாயம்; importunity, compulsion.

     ‘அவ்வளவு ஊர்ச்சிதமாய்க் கேட்கக்கூடாது’.

     [Skt. urjita → த. ஊர்ச்சிதம்.]

வடமொழியில் வலிமைப்படுத்துதல், எழுச்சியூட்டுதல், புத்துயிரூட்டுதல் எனப் பொருள்படும் urj என்னும் அடியிலிருந்து உருவான urjita என்னும் சொல்லிற்கு வலிமை, ஆற்றல், பேராண்மை போன்ற பொருள்கள் உள்ளன (மா.வி.);. தமிழில் இச்சொல் பெரும்பான்மை உறுதிப்படுத்துதல் என்னும் பொருளிலேயே வழக்கூன்றியுள்ளது.

ஊர்ச்சுற்று

 ஊர்ச்சுற்றுūrccuṟṟu, பெ.(n.)

நகச் சுற்று:

 whition.

ஊர்ச்சுற்றின் மேலே உரல் விழுந்ததுபோல். (பழ.);

மறுவ.உகிர்ச்சுற்று. நகச்சுற்று

     [உகிர்+சுற்று-உகிர்ச்சுற்று+ஊர்ச்சுற்று கொ.வ.]

ஊர்ச்சோறு

 ஊர்ச்சோறுūrccōṟu, பெ. (n.)

   ஊரார்க்குக் கொடுக்கும் விருந்து; feast given to the villagers.

ம. ஊருச்சோறு.

     [ஊர் + சோறு.]

ஊர்ணநாபி

 ஊர்ணநாபிūrṇanāpi, பெ. (n.)

   சிலந்திப் பூச்சி வகை; species of woolly spider.

     [Skt. urna-nabhi → த. ஊர்ணநாபி.]

ஊர்ணம்

ஊர்ணம்ūrṇam, பெ. (n.)

   1. ஆட்டு மயிர்; sheep’s hair.

   2. புருவ நடுச் சுழி; the spiral or curve between the eye-brows.

ஊர்தண்டம்

 ஊர்தண்டம்ūrtaṇṭam, பெ. (n.)

   ஊரின்மேல் சுமத்தும் தண்டம்; collection of community fine, fine imposed on a village. (சேரநா.);

ம, ஊர்த்தண்டம்.

     [ஊர் + தண்டம்.]

ஊர்தா(தரு)-தல்

ஊர்தா(தரு)-தல்ūrdādarudal,    2.செ.கு.வி. (v.i.)

.

   1. ஊர்தல்; to move slowly, crawl

   2. வீசுதல் (பரிபா.11,84);; to blow, as the wind

   3. மிகுதல்; to abound, to overpower,

     “ஒன்றிய வேட்கை பூர்தர” மாறன.560.உதா).

     [ஊர் + (தரு);தா.]

ஊர்தி

ஊர்திūrti, பெ. (n.)

   1. ஏறிச்செல்லும் விலங்கு, பறவை, வண்டி முதவியன; vehicle, conveyance in general.

   2. ஆருடம்; that which has risen, that which has ascended.

     “ஊர்தி குடையதய மூன்றில்” (சினேந்.158);, (செ.அக.);.

     [ஊர் → ஊர்தி. (வேக33);.]

ஊர்திறம்

 ஊர்திறம்ūrtiṟam, பெ.(n.)

   செம்மணி, கெம்பு வகை; inferior ruby which improves in lustre when placed overa thin coloured plate of gold

     [ஊர்+திறம்]

ஊர்த்தசைவம்

ஊர்த்தசைவம்ūrttasaivam, பெ. (n.)

   சிவனியம் (சைவம்); பதினாறனுள் ஒன்று (அபி.சிந்.);; saiva sect which emphasises the fact that Sivan is above all tattvas, one of 16 šaivam.

     [Skt. urdhva → த. ஊர்த்த.]

சிவ → சிவம் → சிவன் = சிவந்தன்.

     [சிவன் → Skt. siva → saiva → த. சைவம்.]

ஊர்த்தமுகி

 ஊர்த்தமுகிūrttamugi, பெ. (n.)

   பூடு வகை (நாமதீப.);; a plant.

ஊர்த்தம்

ஊர்த்தம்1ūrttam, து.வி. (adv.) ஊர்த்துவம் பார்க்க; see urttuvam.

     [Skt. urdhva → த. ஊர்த்தம்.]

 ஊர்த்தம்2ūrttam, பெ. (n.)

   மேடு (நாமதீப.);; upland, highland.

ஊர்த்தலைமை

 ஊர்த்தலைமைūrttalaimai, பெ. (n.)

   நாட்டாண்மை; office of village chief, position of the accredited headman of a caste or guild community (செ.அக.);.

     [ஊர் + தலைமை.]

ஊர்த்தலையாரி –

 ஊர்த்தலையாரி –ūrttalaiyāri, பெ. (n.)

ஊர்க் காவற்காரன். village watchman, (தாசில்.நா.);.

     [ஊர் + தலையாரி தலையாள் – தலையாளி_தலையாரி.]

ஊர்த்தலைவன்

 ஊர்த்தலைவன்ūrdalaiyāridalaiyāḷdalaiyāḷidalaiyāriūrddalaivaṉ, பெ. (n.)

   ஊரின் தலைவன்; headman of a village.

ம, ஊர்த்தலைவன்.

     [ஊர்_தலைவன்.]

ஊர்த்தவெள்ளை

ஊர்த்தவெள்ளைūrttaveḷḷai, பெ. (n.)

   ஒரு வகை மீன்; a kind of fish.

     “கெண்டைக்கார லூர்த்த வெள்ளை” (பறாளை. பள்ளு. 16);.

ஊர்த்துவககதம்

ஊர்த்துவககதம்ūrdduvagagadam, பெ. (n.)

   1. மேற் செல்லல்; rising upwards.

   2. மேன்முக நோக்கல்; upward tendency.

ஊர்த்துவகததோசம்

 ஊர்த்துவகததோசம்ūrdduvagadadōcam, பெ. (n.)

   ஒரு வகை எலும்புருக்கி நோய் (சய ரோகம்);; a morbid affection.

ஊர்த்துவகதி

 ஊர்த்துவகதிūrdduvagadi, பெ. (n.)

   மேனோக்கிச் செல்கை; ascent, as of heavenly bodies, of celestials.

     [Skt. urdhva + gadi → த. ஊர்த்துவகதி.]

ஊர்த்துவகந்தம்

 ஊர்த்துவகந்தம்ūrttuvagandam, பெ. (n.)

   தண்ணீர் விட்டான் கிழங்கு; climbing asparagus.

ஊர்த்துவகமனி

 ஊர்த்துவகமனிūrttuvagamaṉi, பெ. (n.)

   மேலெழுப்பி வான் வழியே செல்பவன்; one who ascends in the aerial regions.

ஊர்த்துவகலிகை

ஊர்த்துவகலிகைūrttuvagaligai, பெ. (n.)

   கூத்தின் உடலசைவுகளுலொன்று (சிலப். பக். 81);; a mode of gesticulation in dancing.

     [Skt. urdhva + kalikai → த. ஊர்த்துவகலிகை.]

ஊர்த்துவகாமினி

 ஊர்த்துவகாமினிūrttuvakāmiṉi, பெ. (n.)

   மேனோக்கிச் செல்லுங் குதிரை (வின்.);; horse which mounts to the skies.

     [Skt. urdhva + gamin → த. ஊர்த்துவகாமினி.]

ஊர்த்துவகாயம்

ஊர்த்துவகாயம்ūrttuvakāyam, பெ. (n.)

   1. உடம்பின் மேற்புறம்; the upper part of the body as opposed to அதோ காயம், the lower part.

   2. மேனோக்கிய முகம்; the face in or the lock towards the upward direction organs facing upwards.

   3. மனித உடம்பு; the human body.

ஊர்த்துவகேசம்

 ஊர்த்துவகேசம்ūrttuvaācam, பெ. (n.)

   மயிர்க் கூச்சிடல்; having the hair erect, horripilation.

ஊர்த்துவசிதம்

 ஊர்த்துவசிதம்ūrdduvasidam, பெ. (n.)

   பாகற்காய்; balsam pear.

ஊர்த்துவசீலம்

 ஊர்த்துவசீலம்ūrttuvacīlam, பெ. (n.)

   நெருப்பு; fire having a tendency to pass or spread upwards.

ஊர்த்துவசுவாசம்

ஊர்த்துவசுவாசம்ūrttuvasuvāsam, பெ. (n.)

   1. மேல் மூச்சு; short breathing, as of a dying person.

   2. இரைப்பு நோய்வகை; a kind of asthma attended with hard breathing.

     [Skt. urdhva + cuvasam → த. ஊர்த்துவசுவாசம்.]

ஊர்த்துவசூதம்

ஊர்த்துவசூதம்ūrttuvacūtam, பெ. (n.)

   1. குடல் நோய் (ரோகங்);கள்; diseases of the bowels as in iliac passion.

   2. வாய் நாற்றம் முதலிய குணங்களை யுண்டாக்கும் ஒரு வகை நோய்; a disease due to the Vital air a pa na passing upwards through the alimentary canal from various causes.

ஊர்த்துவதாண்டவம்

 ஊர்த்துவதாண்டவம்ūrttuvatāṇṭavam, பெ. (n.)

   மேலே ஒரு பாதத்தைத் தூக்கியாடும் நடனம்; dance with one leg poised upward, as Sivan’s.

     [ஊர்த்துவ(ம்); + தாண்டவம்.]

     [Skt. urdhva → த. ஊர்த்துவம்.]

தாண்டுதல் = குதித்தாடுதல், தாண்டு → தாண்டவம், கூத்துவகை.

ஊர்த்துவதேகம்

 ஊர்த்துவதேகம்ūrttuvatēkam, பெ. (n.)

   கொப்பூழு (நாபி);க்கு மேற்பட்டவுடற் பகுதி; that part of the body above the navel region the upper part of the body.

     [Skt. urdhva + deha → த. ஊர்த்துவதேகம்.]

ஊர்த்துவநயனம்

 ஊர்த்துவநயனம்ūrttuvanayaṉam, பெ. (n.)

   சரபப் பறவை; a fabulous bird.

ஊர்த்துவநிருத்தம்

ஊர்த்துவநிருத்தம்ūrttuvaniruttam, பெ. (n.)

   1. ஊர்த்துவதாண்டவம்; Sivan’s dance with one leg poised upward.

   2. ஒரு கால் மேனோக்கி நிற்க அதனை ஒரு கை கொண்டு கட்டி ஒரு காலினிற்கை (தத்துவப். 109. உரை);;     [ஊர்த்துவ(ம்); + நிருத்தம்.]

நளிதல் = ஒத்தல். நளி → நடி. நடித்தல் = ஒத்து நடத்தல், நாடகம் நிகழ்த்தல், கூத்தாடுதல், பாசாங்கு செய்தல். நடி → நடம் – நட்டம் (வட.வ.2.18);. நட்டம் → Skt. nrtta – த. நிருத்தம்.

     [Skt. urdhva → த. ஊர்த்துவம்.]

ஊர்த்துவபாகம்

 ஊர்த்துவபாகம்ūrttuvapākam, பெ. (n.)

   மேற்பாகம்; the upper part, the higher part.

     [ஊர்த்துவ(ம்); + பாகம்.]

     [Skt. urdhva → த. ஊர்த்துவம்.]

ஊர்த்துவபாதனம்

ஊர்த்துவபாதனம்ūrttuvapātaṉam, பெ. (n.)

   1. பதங்கித்தல்; sublimation.

   2. இதள் (இரசம்); மேலே எழும்படிச் செய்தல்; the act of causing mercury to rise up.

   3. இதள் (இரசம்); பதங்கம்; sublimation of mercury.

ஊர்த்துவபாதனயந்திரம்

 ஊர்த்துவபாதனயந்திரம்ūrttuvapātaṉayandiram, பெ. (n.)

   ஆவியாக்கப் பயன்படும் துணைக்கருவி; an apparatus or vessel used in the process of vaporizing and condensing Substances such as mercury etc.

ஊர்த்துவபாதம்

 ஊர்த்துவபாதம்ūrttuvapātam, பெ. (n.)

   மேனோக்கிய பாதத்தையுடைய எட்டுக்காற் பூச்சி; a spider with legs turned upwards.

     [ஊர்த்துவ(ம்); + பாதம்.]

     [Skt. urdhava → த. ஊர்த்துவம். பதி → பாதம்.]

ஊர்த்துவபித்தம்

 ஊர்த்துவபித்தம்ūrttuvabittam, பெ. (n.)

   மேனோக்கிய பித்தம்; bile tending to pass upwards.

     [ஊர்த்துவ(ம்); + பித்தம்.]

     [Skt. urdhava → த. ஊர்த்துவம். பித்து → பித்தம்.]

ஊர்த்துவபித்தரோகம்

 ஊர்த்துவபித்தரோகம்ūrttuvabittarōkam, பெ. (n.)

   ஒரு வகைப் பித்த நோய்; a disease caused by the bile taking an upwards course in the system.

     [ஊர்த்துவ(ம்); + பித்தம் + ரோகம்.]

     [Skt. urdhva → த. ஊர்த்துவம்.]

     [Skt. roha → த. ரோகம்.]

ஊர்த்துவபிரகனநாளம்

 ஊர்த்துவபிரகனநாளம்ūrttuvabiragaṉanāḷam, பெ. (n.)

   கார் குருதியை (ரத்தத்தை); மேனோக்கிக் கொண்டு போகும் ஒரு பெரிய நாளக் குழாய்; one of the two great venous trunks going upward.

     [ஊர்த்துவபிரகன + நாளம்.]

நுள் → நள் → நாள் → நாளம் = உட்டுளையுள்ள தண்டு.

ஊர்த்துவபுண்டரம்

 ஊர்த்துவபுண்டரம்ūrttuvabuṇṭaram, பெ. (n.)

   நெற்றியின் கீழிருந்து மேற் செல்லுமாறு இடுங் குறி; distinctive sect mark worn vertically esp. on the forehead.

     [Skt. urdhva + puntaram → த. ஊர்த்துவபுண்டரம்.]

ஊர்த்துவமந்தினம்

 ஊர்த்துவமந்தினம்ūrttuvamandiṉam, பெ. (n.)

   விந்து கீழ் நோக்காமை; keeping or restraining the semen from flowing out i.e. abstaining from sexual intercourse.

ஊர்த்துவமாயை

ஊர்த்துவமாயைūrttuvamāyai, பெ. (n.)

   துன்பமின்றி இன்பமே அளிப்பதும் சொல்லுலகத் (சுத்தப் பிரபஞ்சத்);திற்கு முதற்காரண மானதுமான மாயை (சுத்தமாயை);; pure maya, the material cause of cutta-p-pirapanjam yielding unmixed happiness, dist. fr. asutta-mâyaï.

     “ஒன்றுதானே ஊர்த்துவ மாயை.அதோமாயை என்றிரு வகைப்படு மென்பாரும்” (சி.போ. சிற். 2, 2, 3);.

     [ஊர்த்துவ + மாயை.]

     [Skt. urdhva → த. ஊர்த்துவம்.]

ஊர்த்துவமுகம்

ஊர்த்துவமுகம்ūrttuvamugam, பெ. (n.)

   மேனோக்கின முகம் (சைவச. பொது. 338, உரை);; upturned face, one of the five faces of Sivan.

     [ஊர்த்துவ(ம்); + முகம்.]

     [Skt. urdhva → த. ஊர்த்துவம். த. முகம் → Skt. mukha.]

ஊர்த்துவமுகராசி

ஊர்த்துவமுகராசிūrttuvamugarāci, பெ. (n.)

   மேனோக்கிய முகத்தையுடைய ஒரை (இராசி); (விதான குணா. 69, உரை);; those signs of the zodiac that are supposed to look upwards.

     [Skt. urdhva → த. ஊர்த்துவம். த. முகம் → Skt. mukha. Skt. rasi → த. ராசி.]

முகம் = முன்பக்கம், தலையின் முன்பக்கம். முகத்தின் முன் நீண்டுள்ள மூக்கு, நுனி, தொடக்கம், முன்பு முதன்மை.

ஊர்த்துவமுகவாதம்

 ஊர்த்துவமுகவாதம்ūrttuvamugavātam, பெ. (n.)

   முகத்தை அண்ணாந்த படியிருக்கச் செய்யும் ஒரு வகை ஊதை (வாத); நோய்; paralysis turning the face upwards.

     [ஊர்த்துவ(ம்); + முக(ம்); + வாதம்.]

     [Skt. urdhva → த. ஊர்த்துவம்.]

     [த. முகம் → Skt. mukha.]

     [Skt. vada → த. வாதம்.]

ஊர்த்துவமுகவிரத்தவொழுக்கு

 ஊர்த்துவமுகவிரத்தவொழுக்குūrttuvamugavirattavoḻuggu, பெ. (n.)

   நாளத்தின் வழியாக மேனோக்கிய முகமாக (குருதி); அரத்தம் வெளிவருதல்; escape of blood from a vein with an upward flow as opposed to அதோ முக விரத்தவொழுக்கு, that from an artery with a downward flow.

     [ஊர்த்துவ முக(ம்); + இரத்த + ஒழுக்கு.]

     [Skt. urdhva → த. ஊர்த்துவம்.]

     [Skt. rakta → த. இரத்தம்.]

ஊர்த்துவம்

ஊர்த்துவம்1ūrttuvam,    து.வி. (adv.) மேல்; upwards, aloft, above.

     [Skt. urdhva → த. ஊர்த்துவம்.]

 Vridh என்னும் அடியிலிருந்து ஊர்த்துவம் என்னும் சொல் உருவாகியிருக்கிறது. எழுதல், மேனோக்குதல், மேலாதல், நேராக நிற்றல் போன்ற பல பொருள்களுடன் இச்சொல் வழக்கில் உள்ளன. பெரும்பாலும் இச்சொல் கூட்டுச் சொற்களிலேயே இடம் பெறுகிறது (மா.வி.);. மேல் என்னும் பொருளுடன் வழக்கிலுள்ள இச்சொல் பல கூட்டுச் சொற்களிலும் தமிழில் இடம் பெற்றுள்ளது.

 ஊர்த்துவம்2ūrttuvam, பெ. (n.)

   1. மேலெழும்பல்; rising or tending upwards.

   2. மேலே வைக்கப்பட்டது; anything placed higher or above.

   3. நிமிர்ந்திருப்பது; that which is erect.

     [Skt. urdhva → த. ஊர்த்துவம்.]

ஊர்த்துவயந்திரம்

 ஊர்த்துவயந்திரம்ūrttuvayandiram, பெ. (n.)

   பதங்கத்திற்குப் பயன்படுத்தும் கருவி; an apparatus used in sublimations especially in that of mercury.

ஊர்த்துவரேதசு

 ஊர்த்துவரேதசுūrttuvarētasu, பெ. (n.)

   வித்தமிழ்தை (சுக்கிலம்); இழக்குறாமல் மேல்முகப்பாக்குபவன்; lit. one who keeps the semen so that it may not flow downwards, i.e. one who abstains from sexual intercourse.

     [Skt. urdhva + retas → த. ஊர்த்துவரேதசு.]

ஊர்த்துவலோகம்

 ஊர்த்துவலோகம்ūrttuvalōkam, பெ. (n.)

   மேலுலகம்; upper world, heaven.

     [ஊர்த்துவம் + லோகம்.]

     [Skt. urdhva → த. ஊர்த்துவம்.]

     [த. உலகம் → Skt. loka → த. லோகம்.]

ஊர்த்துவாங்கம்

ஊர்த்துவாங்கம்ūrttuvāṅgam, பெ. (n.)

   இடுப்பிற்கு மேலுள்ள உறுப்பு (தைலவ. தைல. 54, உரை);; part of the body above the waist.

     [Skt. urdhva + anga → த. ஊர்த்துவாங்கம்.]

ஊர்த்துவாமிச்சிரவாதம்

 ஊர்த்துவாமிச்சிரவாதம்ūrttuvāmicciravātam, பெ. (n.)

   தலைவலியுண்டாக்கு மோர் ஊதை (வாத); நோய்; ncuralgia affecting chiefly the head or the facial region.

ஊர்நத்தம்

ஊர்நத்தம்ūrnattam, பெ. (n.)

ஊரில் வீடுகள் கட்டுவதற்காக விடப்பட்டிருக்கும் இடம்:

 site sel apart for building purposes in a villages. (செ.அக.);.

   2. சிற்றூர்; hamlet or a village. (Insc.);. 3.குடியிருப்பு;

 group of homesteads in a village (Loc);.

     [ஊர் + நத்தம், நந்து → நந்தம் → நத்தம்]

ஊர்நாவு

 ஊர்நாவுūrnāvu, பெ. (n.)

   ஊரிலுள்ளோரது நா. மக்கள் பேச்சு; village-gossip (சேரநா.);

ம. ஊர்ண்ணாவு.

     [ஊர் + நாவு. நா → நாவு.]

ஊர்நேரிசை

ஊர்நேரிசைūrnērisai, பெ. (n.)

   தலைவனது ஊரை நேரிசை வெண்பாவாற் சிறப்பிக்கும் சிற்றிலக்கிய வகை (இலக்.வி.830, உரை.);; poem. containing 50 70, or 90 nérisal-venpä verses written in eulogy of the town or place of residence of the hero. [ஊர் + நேரிசை.]

ஊர்ப்பகை ம்

 ஊர்ப்பகை ம்ūrppagaim, பெ. (n.)

   ஊரிலுள்ளாரோடு கொள்ளும் எதிருணர்வு (விரோதம்);; enmity with the local residents of a place (செ.அக.);.

ம. ஊர்ப்பக.

     [ஊர் + பகை]

ஊர்ப்பட்டது

 ஊர்ப்பட்டதுūrppaṭṭadu, பெ. (n.)

   மிகுந்தது; great quantity, much (செ.அக.);.

     [ஊர் + பட்டது. படுதல் = தோன்றுதல், உண்டாதல்.]

ஊர்ப்பட்டி

ஊர்ப்பட்டிūrbbaḍḍi, பெ. (n.)

   1. ஊரில் சுற்றும் நாய்; stray dog 2 நாட்டு நாய்;

 native dog (சேரநா.);.

ம. ஊர்ப்பட்டி”

     [ஊர் + பட்டி பள் → படு → பட்டி கிடப்பது. ஓரிடத்திருப்பது.]

ஊர்ப்பழி – பெ. (n);

   ஊர்நிந்தை; public censure;

 displeasure of the people in a village (செ.அக.);.

ம. ஊர்ப்பழி.

 |ஊர்_பழி.

     [ஊர்ப்பள்ளி __ வேடர்களுக்கென்றே ஊரில்கட்டப்பட்ட கட்டடம்;

 exclusive building for the hunters of a parish. (சேரநா.);.

ம. ஊர்ப்பள்ளி.

     [ஊர் + பள்ளி.]

ஊர்ப்பன்றி

 ஊர்ப்பன்றிūrppaṉṟi, பெ. (n.)

   நாட்டுப்பன்றி; village pg

     “உழுத வுழுத்தஞ்செய் யூர்ப்பன்றி மேய (முத் தொள்);. (செ.அக.);.

ம. ஊர்ப்பன்னி.

     [ஊர் + பன்றி.]

ஊர்ப்பாக்கு

 ஊர்ப்பாக்குūrppākku, பெ. (n.)

   திருமணவழைப்புக் காக வைக்கும் வெற்றிலைப்பாக்கு; distribution of

 pan supan among the residents of a place as in an invitation to a wedding (Loc);. (செ.அக.);.

     [ஊர் + பாக்கு]

ஊர்ப்பாடு

 ஊர்ப்பாடுūrppāṭu, பெ. (n.)

   பிறருடைய செயல்; others’ affairs, matters which concern other folk. (செ.அக.);.

     [ஊர் + பாடு.]

ஊர்ப்பு

 ஊர்ப்புūrppu, பெ. (n.)

   உரிமை, பங்கு; share claim. right (சேரநா.);.

ம. ஊர்ப்பு.

     [ஊர் → ஊர்ப்பு (தாயஉரிமை);.]

ஊர்ப்புகைச்சல்

ஊர்ப்புகைச்சல்ūrppukaiccal, பெ.(n.)

   1. ஊரில் தீய நிமித்தமாகத் தோன்றும் புகை நிறம்(வின்);; appearence of smoke at a distance, regarded as an inauspicious omen.

   2.பொய்ப்புரளி (ஊர்வதந்தி);; rumour

     [ஊர் + புகைச்சல், புகை → புகைச்சல்]

ஊர்ப்புரட்டு

 ஊர்ப்புரட்டுūrppuraṭṭu, பெ. (n.)

   பெரும் பொய்; utter false-hood. (W);. (செ.அக.);

     [ஊர் + புரட்டு.]

ஊர்ப்புரளி

ஊர்ப்புரளிūrppuraḷi, பெ. (n.)

   1. ஊர்க்குழப்பம்; tumult insurrection, general commotion.

   2. ஊர்ப்புரட்டு பார்க்க;see rpural (செ.அக.);.

     [ஊர் + புரளி]

ஊர்ப்புல் –

 ஊர்ப்புல் – பெ. (n)     கோரை வகை; Creeping grass, Papyrus pargore (மூ.அக.) (செ.அக.).

     [ஊர் + புல்.]

ஊர்ப்புள்

 ஊர்ப்புள்ūrppuḷ, பெ. (n.)

   ஊர்க்குருவி (சூடா);; house sparrow, passer domesticus (செ.அக.);.

ம. ஊர்க்குருவி. க. ஊரு குப்பி.

     [ஊர் + புள்.]

ஊர்மணியம்

ஊர்மணியம்ūrmaṇiyam, பெ. (n.)

   1. சிற்றூர் மேற் பார்வை; superintendance of a village.

   2. சிற்றூரை மேற்பார்ப்பவன்; supervision of a village (செ.அக.);.

     [ஊர் + மணியம்.]

ஊர்மன்று

 ஊர்மன்றுūrmaṉṟu, பெ. (n.)

   ஊர்ப் பொதுவிடம்; place for public gathering in a village, usu situated under a tree. (செ.அக.);.

     [ஊர் + மன்று.]

ஊர்மானியம்

 ஊர்மானியம்ūrmāṉiyam, பெ. (n.)

   ஊர்ப் பொதுவூழியத்துக்காக விடப்பட்ட மானிய நிலம்; lands in M.Mf village exempted from taxes and set apart for enjoyment by those who perform common village duties (செ.அக.);.

     [ஊர் + மானியம். மானம் → மானியம் (பெருமதிப்பு கருதி அளிக்கப்படும் கொடை);.]

ஊர்மி

ஊர்மிūrmi, பெ. (n.)

   அலை (விசாரசந்344);; wave (செ.அக.);

     [ஊர் → ஊர்மி ஊர்ந்து மேல் வருவது.]

 ஊர்மிūrmi, பெ. (n.)

   1. வயிற்றின் மடிப்பு; the folds of the abdomen.

   2. இன்ப துன்பங்களின் அலைவு; the wave of pain or passion.

   3. உயிர் வாழ்க்கைக்கு ஏற்பட்ட ஆறுவகை நிலை மாற்றங்கள்; the six waves of existence.

ஊர்முகம்

ஊர்முகம்ūrmugam, பெ. (n.)

   படைகள் பொருமிடம்; battle-field, prob, because it was the open ground in front of a village.

     “ஊர்முகத் திறாஅலியரோ பெருமநின்றானை” (பதிற்றுப்.40.1);.

     [ஊர் + முகம்.]

ஊர்வசி

 ஊர்வசிūrvasi, பெ. (n.)

   தேவருலகத்து நாடகமகளிரி லொருத்தி; Urvasi, a nymph, celebrated for her superior skill, in dancing.

     [Skt. urvasi → த. ஊர்வசி.]

ஊர்வன

ஊர்வனūrvaṉa, பெ. (n.)

ஊரும் பூச்சிகள் repவtiles, Creeping things.

     “ஊர்வன நடப்பன பறப்பன” (தாயு.பரிபூ.2);. (செ.அக.);.

ம. ஊர்வ்வ.

     [ஊர் → ஊர்வன.]

ஊர்வரப்பன்

 ஊர்வரப்பன்ūrvarappaṉ, பெ. (n.)

   வெள்ளரி; cucumber (மூ.அ.);

     [ஊர் + வரம்பு வரம்பு → வரப்பு → வரப்பன். (வரப்பில் ஊர்ந்து படரும் கொடி);.]

ஊர்வரை

ஊர்வரைūrvarai, பெ. (n.)

யானை elephant.” பொன்னுர் வரைதனில்” (சிவக்.பிரபந்தகோட்டிச்சுர. 241); (செ.அக.);.

     [ஊர் + வரை வரை = மலை, ஊர்ந்து செல்லத்தக்க மலை போன்ற யானை.]

ஊர்வலம்

 ஊர்வலம்ūrvalam, பெ. (n.)

ஊர்கோலம்: procession on festive occasions around a town or village, keeping the village always to one’s right side (செ.அக.);.

     [ஊர் + வலம். ஊரை வலமாக வருதல்.]

ஊர்வாயில்

 ஊர்வாயில்ūrvāyil, பெ. (n.)

ஊரின் பெரிய வாயில், entrance of a village.

க. ஊரு புாகிலு.

     [ஊர் + வாயில்.]

ஊர்வாரி

ஊர்வாரிūrvāri, பெ. (n.)

   ஊர்க் கழிவுநீர்க்கால்; public drain of a town or village.

ஊர்வாரி நீரிலே உடம்பு தூய்மை பெறுதற்குக் குளித்துக் திளைத்ததனோடொக்கும்(பழ.98.உரை.);.

     [ஊர் + வாரி. வார் = நீர். வாரி = நீரோடும் கால்வாய்.]

ஊர்வாருகம்

 ஊர்வாருகம்ūrvārugam, பெ. (n.)

   வெள்ளரி (நாமதீப);; cucumber. (செ.அக.);.

     [ஊர் + வாருகம், வாருகம் கொடி. படரும் கொடி.]

ஊர்விருத்தம்

ஊர்விருத்தம் ūrviruttam,

பெ. (n.);

   தலைவனுரை மண்டிலச் (விருத்தச்); செய்யுள் பத்தினாற் சிறப்பிக்கும் சிற்றிலக்கிய வகை; eulogistic poem describing the town of the hero in ten viruttam verses (இலக்.வி.853);

     [ஊர் + விருத்தம்.]

ஊர்வெண்பா

ஊர்வெண்பாūrveṇpā, பெ. (n.)

தலைவனுரை வெண்பாப் பத்தினாற் சிறப்பிக்கும் சிற்றிலக்கிய வகை (வெண்பாப். செய்யு.22);:

 eulogistic poem describing the town of the hero, in the venbä verses

     [ஊர் + வெண்பா]

ஊறணி

ஊறணிūṟaṇi, பெ. (n.)

   1. ஊற்று (யாழ்.அக.);; spring

   2. கசிவு நிலத் (யாழ்.அக);; good, moist land where water oozes out

   3. சேற்றுநிலத் (சங்.அக.);; wet marshy

 land.

   4. வருவாய் (சங்.அக.);; income, source of income (செ.அக.);.

     [ஊறு + அணி – ஊறணி.]

ஊறற்பதம்

ஊறற்பதம்ūṟaṟpadam, பெ. (n.)

   1. பச்சைப் பதம்; anything softened with moisture or by soaking.

   2. முழுதும் ஊறிய பதம்; condition in which anything is completly soaked. (சா.அக.);.

     [ஊறல் + பதம்.]

ஊறற்பாக்கு

 ஊறற்பாக்குūṟaṟpākku, பெ. (n.)

   நீரில் ஊறிய பாக்கு; areca nut soaked to render it fit for use (செ.அக.);.

     [ஊறல் + பாக்கு.]

ஊறல்

ஊறல்1ūṟal, பெ. (n.)

   1. ஊறுகை; oozing, percolation, discharge

ஊற்ற கடுதாசி.

   2. நீருற்று; small spring spring water

     “சிற்றூறல் ஒண்னிரு மாகி விடும்” (வாக் குண்.12);.

   3. சாறு; juice, extracted by squeezing.

     “கரும்பினுறல் கண்டாய் கலந்தார்க்கவன்” (தேவா. 369.1);

   4. மருந்தின் சாரன்; tincture, infusion (வின்.);.

   5. மாழைக்கலப்பு (வின்.);; faint mixture of an inferior metal with a more precious one

   6. வருவாய், செல்வம்; income, acquisition, property.

   7. களிம்பு (வின்);; sight amount of verdigris.

   8. நீர்வற்றாப் பசுமை (வின்.);; greenness, moisture, as of a vegetable (செ.அக.);.

ம_ஊறல்.

     [ஊறு → ஊறல்.]

   ஊறல் பெ. (n); கிணறு; well (Pudu Insc.10.94);, (செ.அக.);.

     [ஊறு → ஊறல்.]

 ஊறல்3ūṟal, பெ. (n.)

சாராயம் காய்ச்சுதற்காகப் பானையிலிட்டு ஊற வைக்கும் பொருள்கள்.

 ingredients of arrack before distillation.

     [ஊறு → ஊறல்.]

ஊறல் தெறித்தல் அணிக

ஊறல் தெறித்தல் அணிக பெ. (n)    1. களிம்பற்றுப் போதல்; Cunasở, being deprived of rust or verdigris

   2. உடம்பின் தினவு அல்லது நமைச்சல் நீங்குதல்; to be cured of itching sensation (சா.அக.);.

     [ஊறு → ஊறல் + தெறித்தல்.]

ஊறல் மண்

 ஊறல் மண்ūṟalmaṇ, பெ. (n.)

   வண்டலாகப் படிந்த மண்; sedimentary soil (சேரநா.);.

ம. ஊறல் மண்ணு

     [ஊறு → ஊறல் + மண்.]

ஊறல்சாரல்

 ஊறல்சாரல்ūṟalcāral, பெ. (n.)

   ஒரு வயலின் வரப்பிலிருந்து உள்ளுறிப் பக்கத்து வயலில் கசிந்து வரும் ஊறல்நீர்; water oozing through embankment of fields.

ஊறல்பாறை

 ஊறல்பாறைūṟalpāṟai, பெ. (n.)

   படிவியற் படுகைப்பாறை; sedimentary rock (சேரநா.);.

ம. ஊறல்பாற

     [ஊறல் + பாறை.]

ஊறவை-த்தல்

 ஊறவை-த்தல்ūṟavaittal, செ.குன்றாவி, (v.t.)

   நீரிற் பதம் பெறச் செய்தல்; to steep, soak, pickle (செ.அக.);.

     [ஊறு → ஊற + வை.]

ஊறாப்பு

 ஊறாப்புūṟāppu, பெ. (n.)

   தினவு(இலக்);; itching Sensation.

     [உறு-ஊறு-ஊறாப்பு]

ஊறாமை

 ஊறாமைūṟāmai, பெ. (n.)

   கசியாமை; not oozing as blood from scres or ulcers, (சா.அக.);.

     [ஊறு +ஆ + மை.

     ‘ஆ’ (எம.இ.நி.);.]

ஊறி

 ஊறிūṟi, பெ. (n.)

   பெரிய உடம்பும் பெரிய வயிறும் உடையவன்; a big bellied fat

     [இனம்-எனம் (கொ.வ.);]

ஊறு

ஊறு1ūṟudal,    5.செ.கு.வி. (v.i.)

   1. நீருறுதல்: (குறள், 396);; to spring, flow, as water in a well, to issue

   2. கசிதல்; to ooze, percolate. (W);.

   3. ஊறுகாய்ப்தமாதல்; to soak, to be steeped, pickled.

   4. பால் முதலியன சுரத்தல்; to gather, as milk in the breast. as toddy in palm flowers.

   5. மை முதலியன ஊறுதல்; to run, to spread, as ink on flimsy paper, to keep, as moisture around a spring or in a river bank.

   6. காயத்தில் ஊன் வளர்தல் (வின்);; to form, as new flesh in asore, to heal.

   7. மெலிந்தவுடல் தேறுதல்; to increase, as flesh in a person wasted by disease, to improve by slow degrees.

   8. பெருகுதல்; to increase. அவனுக்குச் செல்வம் ஊறுகிறது.

   9. வாயூறுதல்; to water, as the mouth : கனிகாண்டொறு மூறுமேயெயினுறுமே.” (சூளா.கயம்.65);. (செ. அக.);.

   ம. ஊறுக;   க. து. ஊறு;தெ. ஊறு. |

     [உல் → உறு → ஊறு உறுதல் = மிகுதல், அதிகரித்தல்.]

 ஊறு2ūṟu, பெ. (n.)

   1. உறுகை; joining, approaching.

     “பருந்துறளப்ப” (பதிற்றுப்.51.32);.

   2. தொடு உணர்வு: sense of touch

     “சுவையொளி யூறோசை” (குறள்.27);.

   3. இடையூறு (திவா);; obstacle, hindrance. obstruction,

   4. துன்பம்; evil, blight

     “ஊறுசெய்நெஞ்சம்” (நாலடி.379);.

   5. கொலை; king, murder

     “ஊறுதான் செயக் கூடுறாது” (கந்தபு.சூரனமைச்-115);.

   6. அழிவு: ruin, destruction

     “இருவினைக் கூறு காண்கிலாது” (கம்பரா வாலிவதைப்.22);.

   7. உடம்பு; body.

     “அரவூறு சுலாய்.” (திவ்.திருவாய்.7.4.2);.

   8. புண்; scar wound, hurt, injury inflicted by violence.

     “ஊறறியா மெய்யாக்கை யாக்கை யொடு” (புறநா.167.6);.

   9. வல்லூறு: royal falcon

     “பறவையை யூறுகொண்டெழச் சிரற்றின பார்ப்பினில” (கம்பராகும்ப.268);, (செ.அக.);.

ம. ஊறு

     [உறு → ஊறு.]

ஊறுகறி

ஊறுகறிūṟugaṟi, பெ. (n.)

ஊறுகாய் (பெரும்பாண். 310, உரை.); பார்க்க;see Urugãy

     [ஊறு + கறி. கறி = காய்கறி.]

ஊறுகாய்

ஊறுகாய்ūṟukāy, பெ. (n.)

   உப்பிட்டு ஊறவைத்தகாய் (பதார்த்த.1378);; pickled vegetable or fruit (செ.அக.);.

   ம. ஊறுகாய்;   தெ. ஊருகாய;க. உப்பினகாயி,

     [ஊறு + காய்.]

ஊறுகோள்

ஊறுகோள்ūṟuāḷ, பெ. (n.)

   1. காயம்: injury, wound

   2. கொலை: murder (செ.அக.);.

     [உறு → ஊறு → கோள். ஊறு = துன்பம். கொள் → கோள் (நேர்ச்சி);.]

ஊறுதல்

   1. நீர்க்கசிவு; oozing of water as from a boil or a wound.

   2. தண்ணீரில் போட்டு வைத்தல்; to retain steeped in any fluid as is done to greens in pickless,

   3. புண்ணில் தசை வளர்தல்; formation of a new layer of flesh over a healing wound.

   4. மெலிந்த உடம்பில் அரத்தம் சேருதல்; increase of blood in a convalascent’s body.

   5. சதை பிடித்தல்; picking up or putting on flesh.

   7. பெருகுதல்; increasing.

     [உறு → ஊறு → ஊறுதல்.]

ஊறுநீர்

ஊறுநீர்ūṟunīr, பெ. (n.)

   1. புண்ணிலிருந்து கசியும் நீர்; thin serous fluid oozing from a sore or from a wound-Ichor.

   2. நிலத்தில் ஊறும் நீர்; water springing from earth. 3.உமிழ்நீர்;

 saliva.

     [உறு + நீர்.]

ஊறுபாடு

ஊறுபாடுūṟupāṭu, பெ. (n.)

   1. தாக்குதல்; beating, butting.

   2. ஆயுதங்களாற் காயமுண்டாக்குகை(பிங்.);; wounding of which there are four methods, viz. குத்தல், வெட்டல், எய்தல், எறிதல்.

   3. புண்படுதல்; having wound.

   4. புண்; wound, sore.

   5. துன்பம்; trouble, distress.

     “ஊறுபாடில்லை யுயிர்க்கு” குறள்.945),

   6. இடையூறு; obstacle, obstruction, hindrance.

     “மரலை, தாழகலத் துறு பாடற வந்தரத் தளிகவர்ந் துண்ப” (திருவிளை.தருமிக்.56);.

     [உறு → ஊறு + பாடு.]

ஊறுபுண்

 ஊறுபுண்ūṟubuṇ, பெ. (n.)

   ஆறிவரும் புண் (வின்.);; wound that is healing (செ.அக.);.

     [ஊறு + புண். ஊறுதல் = மேலிடல், நலமாதல்.]

ஊறெண்ணெய்

ஊறெண்ணெய்ūṟeṇīey, பெ. (n.)

   உச்சியிலுறு மெண்ணெய்; oil placed upon the head for purposes or health (திவ்.திருப்பா.17, வ்ய,பக்.164); (செ.அக.);.

     [ஊறு + எண்ணெய்.]

ஊற்காரம்

 ஊற்காரம்ūṟkāram, பெ. (n.)

   கக்கலெடுத்தல் (நாம தீப);; vomitting (செ.அக.);

     [ஊக்காளம் → ஊக்காரம் → ஊற்காரம் (கொ.வ.).]

ஊற்றக்காரன்

ஊற்றக்காரன்ūṟṟakkāraṉ, பெ. (n.)

   1 வலிமை பொருந்தியவன்; strong and arrogant man

   2. தந்திரக்காரன்; clever man.

   3. செல்வந்தன்;ம. ஊற்றக்கான்

     [ஊற்றம் + காரன்.]

ஊற்றங்கால்

 ஊற்றங்கால்ūṟṟaṅgāl, பெ. (n.)

   வயல் முதலியவைகளில் நீர் வடியுங்கால்; water channel in fields (ஆஅக.);

     [ஊற்று → ஊற்றம் + கால்]

ஊற்றங்கோல்

ஊற்றங்கோல்ūṟṟaṅāl, பெ. (n.)

   ஊன்றுகோல்; staff to lean on

     “ஒல்லையுயிர்க் கூற்றங்கோலாகி” (சிறு பஞ்:57);, (செ. அக.);

     [ஊன்று → ஊன்றம் + கோல் – ஊன்றம்கோல் _ ஊற்றங்கோல்)

ஊற்றன்

 ஊற்றன்ūṟṟaṉ, பெ. (n.)

   ); ஊற்றமுள்ளவன், வலிமையன்; mighty one (சேரநா.);

ம. ஊற்றன்

     [ஊற்றம் → ஊற்றன்.]

ஊற்றப்பம்

 ஊற்றப்பம்ūṟṟappam, பெ. (n.)

   ஒருவகை ஆப்பம்; a kind of cake

ம. ஊற்றப்பம்.

     [ஊற்று + அப்பம் மொத்தமாக அல்லது பருமனாக வார்த்த அப்பம்.]

ஊற்றம்

ஊற்றம்1ūṟṟam, பெ. (n.)

   1. பற்றுக்கோடு; walking stick, Crutch prop.

     “உண்முதற் பொருட்கெலா மூற்ற மாவன (கம்பரா.கிளை.74);.

   2. உறுதியாயிருக்கை; stability, immobility.

   3. வலிமை; strength, power,

     “ஊற்ற டையாய்’ (தில்.திருப்பா-21);.

   4. மனவெழுச்சி; ardour eageness

     “ஊற்றமொடு பறித்தார்” (சேதுபு திருநா.42);.

   5. மேம்பாடு; greatness, eminence

   6. பழக்கம்; training, practice.

     “படையூற்றமிலன்” (கம்பரா.கையடை12); (செ.அக);.

   ம. ஊற்றம்;   க. ஊத;   து. உத (கனம்);;தெ. ஊத. ஊதமு.

     [ஊன்று – ஊற்றம் (வேக91);.]

 ஊற்றம்2ūṟṟam, பெ. (n.)

   1. இடையூறு; hindrance

     “மெல்லடியா ரொடு மூற்ற மஞ்சா” (திருவிளை,திரு. ணப்.34);.

   2. கேடு; harm injury,

     “மேல் வருமூற். முணர் கில்லாய்” (கந்தபு:மார்க்.248);.

   3. தொடு உணர்வு; sensation of touch.

தழுவுலா ரூற்றகாணாள்” (திருடிவளை, திருமணப்.131);, (செ.அக);,

ஊற்றருகி

 ஊற்றருகிūṟṟarugi, பெ. (n.)

   நீர் (சங்.அக.);; wate (செ.அக.);.

     [ஊற்று _அருகி.]

ஊற்றறிவு

 ஊற்றறிவுūṟṟaṟivu, பெ. (n.)

தொடுவுணர்ச்சி, sense of touch (சா.அக.);.

     [ஊற்று + அறிவு. உற்றறிவு → ஊற்றறிவு.]

ஊற்றல்

ஊற்றல்ūṟṟal, பெ. (n.)

   1. ஊற்றுதல்; the act pouring.

   2. நீர் முதலிய ஊறி வருதல் (ஆ.அக.);

 welling up or oozing water etc. as from spring.

     [ஊற்று → ஊற்றல்.]

ஊற்றவாக்கு

 ஊற்றவாக்குūṟṟavākku, பெ. (n.)

   பெருமை சொல்லுதல், தற்புகழ்ச்சி; boasting, braggadocio.

ம. ஊற்றவாக்கு.

     [உறு → ஊற்று → ஊற்ற + வாக்கு. உறு_மிகுதி.]

ஊற்றாணி

ஊற்றாணிūṟṟāṇi, பெ. (n.)

கலப்பையுறுப்பி னொன்று nail which fastens the plough-beam to the plough-beam to the plough.

     “கலப்பை யூற்றாணி யுளதாயி னுலகுநிலை குலையாதே” (ஏரெழு,5);.

ஊட்டாணி பார்க்க;see uttani.

     [ஊட்டு + ஆணி – ஊட்டாணி → ஊற்றாணி (கொ.வ.);.]

கலப்பையில் கார் என்னும் இரும்புப்பட்டை செருகுதற்கு இடும் கொண்டி,வட்டாணி எனப்படும். இதனை ஊற்றாணி என ஆண்டிருப்பது கொச்சை வழக்கு.

ஊற்றாம்பெட்டி

ஊற்றாம்பெட்டிūṟṟāmbeṭṭi, பெ. (n.)

   1. ஊற்றுப் பெட்டி பார்க்க;see urru-pet

   2. சிறுநீர் ஊறும் பை; urinary bladder.

     [ஊற்று + ஆம் + பெட்டி.]

ஊற்றால்

ஊற்றால்ūṟṟāl, பெ. (n.)

   1. மீன்பறி; wicker basket for catching fish (W.);.

   2. கோழிகுஞ்சுகளையடைக்குங்; wicker basket for covering chickens (W.);.

   3. உருள். (உரோகிணி, (பிங்.);;   4th naksalra, whose shape resembles a fish basket net.

     [உறு → உற்று → உற்றால் → ஊற்றால்.]

ஊற்றால்கவி-த்தல்

ஊற்றால்கவி-த்தல்ūṟṟālkavittal,    4.செ.கு.வி. (v.i.)

   மீன் பிடிக்கப் பறியை மூடுதல்; to set a wicker basket for catching fish (W);. (செ.அக.);.

     [ஊற்று + ஆல் + கவி.]

ஊற்றின எண்ணெய்

ஊற்றின எண்ணெய்ūṟṟiṉaeṇīey, பெ. (n.)

   ஆமணக் கெண்ணெய்; castor-oil obtained by boiling the seeds, dist. fr. ஆட்டின் எண்ணெய், which is cold-drawn. (செ.அக.);.

கைபிழி எண்ணெய் பார்க்க;see kapilli enney

     [ஊற்று → ஊற்றின+ எண்ணெய்.]

ஊற்று-தல் __. 5.செ.குன்றாவி, (v.t);

   1. வார்த்தல்: to pour out, cause to flow, spill,

     “ஒழிவுறக் கடத்தினீ ரூற்றி” (சேதுபு.கந்தமா.87);.

   2. எண்ணெய் வடித்தல்; to extract, as oil from the castor seeds by boiling them. கொட்டை முத்தினின்று எண்ணெய் ஊற்றுவார்கள்.

   3. வெளியே விடுதல்; to pour out castawayas useless, empty or clean as a vessel of its contents,

     “கங்கை, புடை யூற்றுஞ் சடையான்” (கம்பரா.கையிடை12);. (செ.அக.);.

ம. ஊத்து.

     [ஊறு → ஊற்று → ஊற்று- தல் (வே.க.91);.]

ஊற்றிரு-த்தல்

ஊற்றிரு-த்தல்ūṟṟiruttal,    3.செ.கு.வி. (v.i.)

தொழும்பு

   கொண்டிருத்தல்; to be devoted.

     “இத்தலை ஊற்றிருக்க

வேணும்” (ஈடு);. (செ.அக.);.

     [ஊற்று + இரு.]

ஊற்றிறை-த்தல்

ஊற்றிறை-த்தல்ūṟṟiṟaittal,    4 செகுவி (v.i.)

   ஊற்றிலுள்ள யிரையிறைத்துத் தூய நீர் ஊறச் செய்தல்; to scoopand throw out the water of a spring in the bed of a river until it becomes pure. (செ.அக.);

     [ஊற்று + இறை.]

ஊற்று

ஊற்று2ūṟṟu, பெ. (n.)

   1, சுரக்கை; flowing, gushing forth, as blood from an artery, milk from the udder, pouring of rut from a must elephant.

     “ஊற்றிருந்த மும்மதத் தோடையானை” (சீவக.152);.

   2. நீரூற்று: spring fountain

     “வல்லூறுவரில் கிணற்றின்கண்” (நாலடி.263);.

   3. கசிவு; moisture oozing from the ground,

     “ஊற்றுடை நெடுவரை: (சீவக.278);. (செ. அக.);.

   நா. ஊற்;   கொண். ஊசா;   கூ உற்ப;   ம. ஊற்று;   தெ. ஊட;   கொலா, ஊர் (ஒழுகும் வீடு);;   து. ஊடி, உ. க. ஊடெ, ஒரதே. ஒரவு;துட. ஊற்.

     [ஊறு → ஊற்று.]

 ஊற்று3ūṟṟu, பெ. (n.)

   1. ஊன்றுகோல்; staff

   2. பற்றுக்கோடு; prop, support

     “உடம்புயிர்க் கூற்றாக” (கலித்.146);, (செ.அக.);.

     [ஊன்று → ஊற்று.]

ஊற்றுக்கண்

ஊற்றுக்கண்ūṟṟukkaṇ, பெ. (n.)

   ஊற்றுத்துறை; office of a spring (செ.அக.);.

     [ஊறு – ஊற்று + கண் கண் = இடம், துளை]

 ஊற்றுக்கண்ūṟṟukkaṇ, பெ. (n.)

   கண்களினின்று எப்போதும் நீர் வடிந்து கொண்டிருக்கும் மாட்டு நோய் வகை (பெரியமாட், 15);; disease in cattle, in which water flows from the eyes (செ.அக.);

     [ஊறு → ஊற்று +கண்.]

ஊற்றுக்களம்

ஊற்றுக்களம்ūṟṟukkaḷam, பெ. (n.)

   பலரும் வந்து சேர்தலையுடைய இடம்; common meeting place.

     “கதழ்விடைக் காரியை யூற்றுக் களத்தே யடங்கக் கொண்டு” (கலித்.103);. |

     [ஊன்று + களம் – ஊன்றுகளம் → ஊற்றுக்களம்.]

ஊற்றுக்கால்

 ஊற்றுக்கால்ūṟṟukkāl, பெ. (n.)

   ஊற்றினின்று பெருகி வருங்கால்; channel for irrigation issuiro from a spring [ᏟG. )

     [ஊறு → ஊற்று + கால்.]

ஊற்றுக்குழி

ஊற்றுக்குழிūṟṟukkuḻi, பெ. (n.)

   1. ஊற்றுள்ள பள்ளம்; spring pool (W);, (செ.அக.);.

   2. ஓரூர்; name of a village (ஆ.அக.);.

ம. ஊற்றுக்குழி

     [ஊறு → ஊற்று + குழி.]

ஊற்றுக்கோல்

ஊற்றுக்கோல்ūṟṟukāl, பெ. (n.)

   ஊன்றுகோல்; star

     “இழுக்கலுடையுழி யூற்றுக் கோலற்றே” (குறள்,415);. (செ.அக.);.

     [ஊன்று + கோல் – ஊன்றுகோல் → ஊற்றுக்கோல்.) ]

ஊற்றுண்(ணு)-தல்

ஊற்றுண்(ணு)-தல்ūṟṟuṇṇudal,    12.செ.கு.வி. (v.i.)

   1. நீர் ஒழுகி வடிதல்; to leak out (W.);. (செ. அக.);.

   2. சாதல்; ld die (அ.ஆக.);.

     [ஊற்று + உண்.]

ஊற்றுத்துலை

 ஊற்றுத்துலைūṟṟuttulai, பெ. (n.)

   நீர்நிலை; reservoir, spond.);. (செ.அக.);

     [|ஊறு → ஊற்று + துலை.]

ஊற்றுத்தோண்டு-தல்

ஊற்றுத்தோண்டு-தல்ūṟṟuddōṇṭudal,    5.செ.கு.வி. (v.i.)

   ஊற்றுண்டாகத் தோண்டுதல்; to scoop out the sand for a spring in the bed of a river, dig out a spring in the bottom of a well (செ.அக.);.

     [ஊற்று + தோண்டு.]

ஊற்றுநீர்

 ஊற்றுநீர்ūṟṟunīr, பெ. (n.)

   ஊறுநீர்; inflowing water

 from a spring

     “இறைப்பவர்க் கூற்றுநீர் போல மிகும்.”

     [ஊறு → ஊற்று + நீர்.]

ஊற்றுப்பட்டை

 ஊற்றுப்பட்டைūṟṟuppaṭṭai, பெ. (n.)

   ஊற்றுநீரிறைக்கும்பட்டை; scoop for throwing out water from artificial springs in river beds.

     [ஊறு → ஊற்று + பட்டை]

ஊற்றுப்பறி

 ஊற்றுப்பறிūṟṟuppaṟi, பெ. (n.)

   மடு முதலியவற்றில் மீன் பிடிக்குங் கருவி; wicker basket for catching fish in tanks and ponds (செ.அக.);

     [ஊற்று + பறி.]

ஊற்றுப்பூ

 ஊற்றுப்பூūṟṟuppū, பெ. (n.)

தேங்காய்ப் பிண்ணாக்கு (யாழ்ப்.);: residum of the kernel of the coconut after the oil has been expressed therefrom dist fr. of பிழிந்த பூ (செ.அக.);.

     [ஊறு → ஊற்று + பூ.]

ஊற்றுப்பெட்டி

 ஊற்றுப்பெட்டிūṟṟuppeṭṭi, பெ. (n.)

   எண்ணெயூற்றுங்கூடை; basket in which seeds, kernals, etc., are put for expressing oil, (J);, (செ.அக.);.

     [ஊற்று + பெட்டி.]

ஊற்றுப்பெயர்-தல்

ஊற்றுப்பெயர்-தல்ūṟṟuppeyartal,    2.செ.கு.வி. (v.i.)

   ஊற்றுண்டாதல்; to flow from a spring as water into a well (W.);. (செ.அக.);.

     [ஊற்று + பெயர்.]

ஊற்றுப்போடு-தல்

ஊற்றுப்போடு-தல்ūṟṟuppōṭudal,    20.செ.குவி (v.i.)

   ஆற்றில் ஊற்றுக் குழி தோண்டுதல்; to scoop out a hollow for fresh water in the bed of a river (செ.அக.);.

     [ஊற்று + போடு.]

ஊற்றுமரம்

ஊற்றுமரம்ūṟṟumaram, பெ. (n.)

   1. எண்ணெயூற்றும் மரம்: a kind of oil-press.

   2. செககுலக்கை; cylindrical shaft in an oil-press (செ.அக.);.

     [ஊற்று + மரம்.]

ஊற்றெடு-த்தல்

ஊற்றெடு-த்தல்ūṟṟeḍuttal,    4.செ.கு.வி. (v.i.)

   1. ஊற்றுத் தோன்றுதல்; to flow from a spring, as water into a well.

   2. ஊற்றுத்தோஙணடுதல்; to scoop out a spring (செ.அக.);.

     [ஊற்று + எடு-த்தல்.]

ஊற்றெண்ணெய்

 ஊற்றெண்ணெய்ūṟṟeṇīey, பெ. (n.)

   வடித்த எண்ணெய்; oil extracted by pressing or pounding the seeds (வின்.); (செ.அக.);.

     [ஊற்று + எண்ணெய்]

ஊற்றெழு-தல்

ஊற்றெழு-தல்ūṟṟeḻudal,    2.செ.கு.வி. (vi) ஊற்றுப்பெயர் பார்க்க: see tru-p-peya ஊற்றெழு மிருகவுள்’ (கல்லா.4.). (செ.அக.).

     [ஊற்று + எழு.]

ஊற்றை

ஊற்றைūṟṟai, பெ. (n.)

அழுக்கு fifth

     “ஊற்றைச் சடலத்தை யுண்டென் நிறுமாந்த”‘ (பட்டினத்துப். பக்.257);. (செ.அக.);. [ஊழ் → ஊழ்த்தை → ஊத்தை → ஊற்றை (கொ.வ.);.]

ஊலிகா

ஊலிகாūlikā, பெ. (n.)

   குதிரையின் அகவை (வயது); 20 என்றறியும் அடையாளமாக அதன் பற்களிலும் பற்சதைகளிலும் விழும் தொளை (அசுவசா. 6);; hollow in the gums and teeth of a horse, which indicates its age to be twenty.

ஊலுகம்

 ஊலுகம்ūlugam, பெ. (n.)

   கோட்டான் (வின்.);; rock horned-owl.

     [Skt. uluka → த. ஊலுகம்.]

வடமொழியில் val என்னும் வேரிலிருந்து ஆந்தையைக் குறிக்கும் uluka என்னும் சொல் பிறந்துள்ளது (மா.வி.);. தமிழில் உலுகம், ஊலுகம் என்னும் இரு வடிவங்கள் உள்ளன.

ஊல்

ஊல்1ūltal,    13.செ.கு.வி. (v.i.)

   1. பொருந்துதல், நிலைகொள்ளல்; to join, to set firm

   2. முதிர்தல்; lo ripen.

     [உல் → ஊல்.]

 ஊல்2ūltal,    13.செ.கு.வி. (v.i.)

   1. வேகுதல் 10 boil.

   2. கெடுதல், அழிதல்; to decay.

     [உல் → ஊல்.]

ஊளன்

ஊளன்ūḷaṉ, பெ. (n.)

   1. நரி (பிங்.); jackal, fox (செ.அக.);.

   2. விரகன் (தந்திரக்காரன்);; Cunning man, trickster (சேரநா.);.

   ம. ஊளன்;க. ஊள், ஊளு (ஊளையிடுதல்);, தெ. ஊல (ஊளையிடுதல்);.

     [ஊள் → ஊளை → ஊளன்]

ஊளல்

 ஊளல்ūḷal, பெ. (n.)

உள்ளான்மீன் பார்க்க;see ulla min.

ஊளா

 ஊளாūḷā, பெ. (n.)

   நெடுவாய் மீன்; carnívorous marine fish, dark leaden colour-Sphyraena acutipinnies (செ.அக.);

ம. ஊளாவு.

     [ஊள் → ஊளவு → ஊளா.]

ஊளான்

ஊளான்ūḷāṉ, பெ. (n.)

   1. கடல் மீன் வகை; sea-bream greyish silvery fish (செ.அக.);

   2. நரி; jackal. (ஆ.அக.);.

     [ஊள் → ஊளான்.]

ஊளி

ஊளி1ūḷi, பெ. (n.)

இரைச்சல் (ஈடு.7:4,4);. sound

   2. பசி; hunger

     “ஊளி யெழவுலக முண்ட வூணே” (தில்.திருவாய்.7.4.4 பன்னீ); (செ. அக.);.

   ம. ஊளி. க. ஊள், ஊளவெ;   கோத, ஒளாட்;தெ. ஊல. ஊன பிரா. வலிக் (ஊளையிடுதல்);.

     [உல் → உலி → ஒலி உல் → உலி → ஊலி → ஊளி.]

 ஊளி2ūḷi, பெ. (n.)

   ஊளா மீன்; camourous marine fish | (யாழ்.அக);.

     [ஊளா → ஊளி]

ஊளை

ஊளை1ūḷai, பெ. (n.)

   நாய், நரி முதலியவை இடும் கூக்கூரல்; howl of a dog or jackal, beat of a sheep when diseased cry of a person in anguish applied contempluously

     “ஊளைப் பெருநரி வல்விய வூளை.” (தணிகைப்பு.களவு617);.

   ம. ஒளி;   க ஊள்;தெ. ஊள

     [உல் → உால் → ஊள் → ஊளை.]

 ஊளை2ūḷai, பெ. (n.)

தீ நாற்றம் song pub: offensive smell ஊளைமோர் (செ.அக);.

     [ஊள் → ஊனை.]

 ஊளை3ūḷai, பெ. (n.)

   1 தொள்வு;   தொய்வு; weariness exhaustion

   2 உலைவு; wandering

   3. பதனழிவு; rottenness.

   4. பதனழிந்த மோர்; spoiled buttermilk.

   5. காதுச்சீழ்; purulent or mucopurulent of ear

     [உள் → ஊள் → ஊ (வேக.92);.]

ஊளைக்காது

 ஊளைக்காதுūḷaikkātu, பெ. (n.)

   சீழ்வடியுங்காது; purulent or mucopurulent discharge from the ear, Otorrhoea (செ.அக.);

     [|ஊளை + காது.]

ஊளைச்சதை

 ஊளைச்சதைūḷaiccadai, பெ. (n.)

ஊழற்சதை பார்க்க;see usar-Sadai

      [ஊனை + சதை தசை_சதை.]

ஊளைநண்டு

 ஊளைநண்டுūḷainaṇṭu, பெ. (n.)

மிக மென்மையான ஒடுகளைக் கொண்ட, உணவிற்காகாத வெள்ளை நிற நண்டுகள்; white crabs which are not edible.

மறுவ. பால் நண்டு

     [ஊழ்-ஊள்-ஊளை+நண்டு]

     [P]

ஊளைமூக்கன்

 ஊளைமூக்கன்ūḷaimūkkaṉ, பெ. (n.)

   சளி வடியும் மூக்கன்; snotty fellow

     [ஊளை + முக்கன்.]

ஊளைமூக்கு

 ஊளைமூக்குūḷaimūkku, பெ. (n.)

சளிபிடித்த மூக்கு:

 running nose (செ.அக.);.

     [ஊனை + மூக்கு]

ஊளையிடு-தல்

ஊளையிடு-தல்ūḷaiyiḍudal,    20 செ.கு.வி. (v.t.)

   நாய் நரி முதலியவை கூக்குரலிடுதல்; to how as jacka or dog

     “முதிர்நரிக ளுளையிடின்” (சூத. எக்கி பூ.46:20);. (செ. அக.);

   பட வலிக்கு;க ஊளிடு.

     [ஊளை + இடு.]

ஊழக்காதன்

 ஊழக்காதன்ūḻkkātaṉ, பெ.(n.)

   சீழ் வழியும் காதுகளை உடையவன்; one who has ear with pus.

     [ஊழை+காதன்]

ஊழனாற்றம்

 ஊழனாற்றம்ūḻṉāṟṟam, பெ. (n.)

   தீநாற்றம்; offensive odour

மோர் ஊழனாற்றமடிக்கிறது (செ.அக.);.

     [ஊழல் + நாற்றம்.]

ஊழனிலம்

 ஊழனிலம்ūḻṉilam, பெ. (n.)

   சேற்று நிலம்; miry. muddy land. (செ.அக.);.

ம. ஊழனிலம்.

     [ஊழல் + நிலம்.]

ஊழப்பாடி

 ஊழப்பாடிūḻppāṭi, பெ.(n.)

   குழப்பம்; turmoil.

     [உழப்பு+அடி]

ஊழறுதல்

ஊழறுதல்ūḻṟudal, பெ. (n.)

   1. ஊழ்வினைப்பயன் நீங்குதல்; liberation from karma.

   2. உடம்பினின்று அழிந்த நாற்றமுள்ள பொருள்கள் அகலல்;     [ஊழ் + அறுதல்.]

ஊழறுத்தல்

ஊழறுத்தல்ūḻṟuttal, பெ. (n.)

   1. வினைப்பயனை நீக்குதல்; renunciation of Karma

   2. உட்ம்பிலுள்ள மாசுகளை அகற்றல்; removing filth and obnoxious matter from the system.

   3. புண்புலால் சீழ் முதலியவைகளைப் புண்புரைகளினின்று வெளிப்படுத்தல்; removal of purulent and putrid matter from an ulcer, abscess. etc.

     [ஊழ் + அறுத்தல்.]

ஊழற்சதை

ஊழற்சதைūḻṟcadai, பெ. (n.)

   1. உடம்பு பருத்துத் தளர்வதனால் தொங்கும் தசை; flesh hanging loose owing to flabby nature.

   2. புண் புலால்; proud flesh

   3. நாற்றமுள்ள தசை; rotten fesh

   4. ஊழற்றசை பார்க்க;see ularrasai.

     [ஊழல் + சதை தசை – சதை (இலக்கணப்போலி);.]

ஊழலாற்றி

ஊழலாற்றிūḻlāṟṟi, பெ.(n.)

   மரவகை (தைலவ. தைல. 124);; a medicinal tree

     [ஊழல் + ஆற்றி]

ஊழலி

ஊழலி2ūḻlittal,    4.செ.குன்றாவி. (v.t.)

   அருவருத்தல்; to loathe, to be disgusted with (செ.அக.);.

     [ஊழ் → ஊழலி.]

ஊழலிப்பு

 ஊழலிப்புūḻlippu, பெ. (n.)

   பதனழிவு; the state of being rotton, putrefaction (சா.அக.);.

     [ஊழல் + ஊழலிப்பு.]

ஊழலுடம்பு

ஊழலுடம்புūḻluḍambu, பெ. (n.)

   1. நாற்ற வுடம்பு

 stinking body..

   2. அழுக்கு நிறைந்த வுடம்பு; body full of fifth..

   3. பருத்துத் தளர்ந்த உடம்பு; fat and slack body hanging loose for want of firmness, a body with sluggish muscles. (சா.அக.);.

     [ஊழ் → ஊழல் – உடம்பு.]

ஊழான்

ஊழான்ūḻāṉ, பெ. (n.)

   1. வெட்டுக்கிளி; grasshopper,

   2. மண்புமு: earthwom (சேரநா.);.

ம. ஊழான்

     [உழு → உழான் → ஊழான்]

ஊழி

ஊழிūḻi, பெ. (n.)

   1. கடற்கோளால் உலகம் முடியுங்காலம்;, time of universal deluge and destruction of all things, end of the world (சீவக. 1157);,

   2. உகம்; aeon

     “பண்டை பூழியிற் பார்மலி வுற்றதே” (சீவக.2581);.

   3. நெடுங்காலம்; very long time

     “ஊழிவாழ் கென்று’ (புவெ8,7);.

   4. வாழ்நாள்; life-time அன்ன வாக நின்னூழி (புறநா.135);.

   5. உலகம்; world

     ‘ஊழியேழான வொகுவா போற்றி” (தேவா.1160.8);

   6. முறை; fate

     “நல்லூழிச் செல்வம் போல்” (கலித் 130);,

   7. முறைமை; regular order

     “தீந்தேனூழி வாய்க்கொண்ட தொக்கும்பாடலும்” (சீவக.2974);

   8. கேடு, அழிவு: destruction (செ.அக.);

ம. ஊழி.

ஊழிக்காய்ச்சல்

 ஊழிக்காய்ச்சல்ūḻikkāyccal, பெ. (n.)

   ஊரையே பற்றி நிற்கும் தொற்றுக்காய்ச்சல்; epidemic fever, pestilence, an acute infectious epidemic fever or disease spreading throughout vast area (செ.அக.); [ஊழ் → ஊழி + காய்ச்சல்]

ஊழிக்காரம்

 ஊழிக்காரம்ūḻikkāram, பெ. (n.)

   இதளியம் (இரசம்);; mercury – Hydrargyrum (சா.அக.);

     [ஊழி + காரம்.]

ஊழிக்காற்று

ஊழிக்காற்றுūḻikkāṟṟu, பெ. (n.)

   1. உலக முடிவிலுண்டாகுங் காற்று; destructive wind that prevails at the end of the world.

   2, நச்சுக்காற்று; poisonous vapour that causes epidemic diseases and pestilence. (W.);. (செ.அக.);.

     [ஊழ் → ஊழி + காற்று.]

ஊழிக்காலம்

ஊழிக்காலம்ūḻikkālam, பெ. (n.)

   உலகத்தின் எல்லை;     (சீவக.274.உரை.);;

 end of the ages (செ.அக.);.

     [ஊழ் → ஊழி + காலம்]

ஊழிக்கால்

ஊழிக்கால்ūḻikkāl, பெ. (n.)

ஊழிக்காற்று பார்க்க;see uli-k-karru

     “ஊழிக்காலு மாற்றலா திரியல் போன” (கந்தபு:கடல்பாய்.3);. (செ.அக.);.

     [ஊழ் → ஊழி + கால்.]

ஊழித்தீ

ஊழித்தீūḻittī, பெ. (n.)

   1. வடவைத்தீ (பிங்.);; submarine fire

   2. கொடுந்தீ

 fire.

   3. காட்டுத்தீ; wild fire.

     [ஊழி + தீ.]

ஊழிநாயகன்

ஊழிநாயகன்ūḻināyakaṉ, பெ.(n.)

   ஊழிமுதல்வன் பார்க்க; see Oilli-mudalvan.

     “அழியா ஆழிநாயகன்” (கந்தபு: தெய்வ194);

     [ஊழி + நாயகன்]

ஊழிநாள்

 ஊழிநாள்ūḻināḷ, பெ. (n.)

   உலக முடிவு நாள்; period of termination of earthy life. (ஆ.அக);.

     [ஊழி + நாள்.]

ஊழிநோய் பாக, பெ. (n);

   தொற்றுநோய்; pestience, supposed to be induced by a malignant demon (W.);. (செ.அக.);.

     [ஊழ் → ஊழி + நோய்.]

ஊழிநீர்

 ஊழிநீர்ūḻinīr, பெ.(n.)

   உலக முடிவிலுண்டாகும் கடல் கோள் (வின்);; water which prevails at

 the last deluge which submerges the world.

     [ஊழி + நீர்]

ஊழிமுதல்வன்

ஊழிமுதல்வன்ūḻimudalvaṉ, பெ. (n.)

   கடவுள்; God. He who is eternal,

ஊழிமுதல்வன் உருவம் போல்” (தில்.திருப்பா4);, (செ.அக.);.

     [ஊழ் → ஊழி + முதல்வன்.]

ஊழியக்காரன்

ஊழியக்காரன்ūḻiyakkāraṉ, பெ. (n.)

   1 அடியான்; slave.

   2. வேலைக்காரன்; servant, a drudge.

     “கருவியாறாறு மிலனேவறலை கொண்ட வீறுழியக்காரர்” (திருப்போ.சந்.பிள்ளை.அம்புலி.6);. (செ.அக.);.

ம. ஊழியக்காரன்.

     [ஊழியம் + காரன்.]

ஊழியன்

ஊழியன்ūḻiyaṉ, பெ. (n.)

   ஊழியம் செய்பவன்; employee, worker,

   2. பணியாள், வேலைக்காரன்; servant.

ம. ஊழியன்.

     [ஊழ் → ஊழியம் → ஊழியன். ஊழ் = முற்றுதல், செய்தல்.]

ஊழியமறியல்

 ஊழியமறியல்ūḻiyamaṟiyal, பெ. (n.)

   கடுங்காவல்; rigorous imprisonment (J); (செ.அக.);.

     [ஊழியம் + மறி + அல்.]

ஊழியமானியம்

 ஊழியமானியம்ūḻiyamāṉiyam, பெ. (n.)

   பொதுமக்கள் சேவைக்காகக் கொடையாக விடப்பட்டநிலம் (R.T);; land granted rent-free for the performance of public service (செ.அக.);.

ம. ஊழியமானியம்.

     [ஊழியம் + மானியம்.]

ஊழியம்

ஊழியம்1ūḻiyam, பெ. (n.)

   1. தொண்டு; service due to a deity, a guru, or a superior by birth, natural obligation, obligation of a slave to his master. (திருப்பு:548);. 2.

     “சிறைப்பட்டோர் செய்யும் வேலை”

 duty of convict labour. (Qa.os.);.

   3. தொழில் business,

   4 அரசுப்பணி படைப்பணி:

 govt. or military service.

   ம. ஊழியம்;   க. ஊழிகெ;தெ. ஊடிகமு.

     [உழு → உழ → உழை → ஊழை → ஊழையம் → ஊழியம் (சு.வி. 47);.]

 ஊழியம்2பெ .(n.)     கூலி; wage, (R.t.) (செ.அக.)

     [உழு → உ → உழை → ஊதை → ஊழையம் → ஊழியம்.]

ஊழியான்

ஊழியான்ūḻiyāṉ, பெ. (n.)

   நெடுங்கால வாழ்க்கையுடையோன்; one who lives long life.

     “ஊழியா ரெளிதினிற் கரசுதந் துதவுவார்” (கம்பரா நட்புக் கோட்4);.

   2. அழிவுக் காலத்தும் அழியாமலிருக்குங்கடவுள் (தேவா. 270.5);; God, one who will survive final destruction of the world (செ.அக.);.

     [ஊழி –→ ஊழியான்]

ஊழிலை

ஊழிலைūḻilai, பெ. (n.)

   இலைச்சருகு; dead, dry leaves

     “கோடை துற்றக் கூடிய ஆழிலை” (ஞானா.28.12);. (செ.அக.);.

     [ஊழ் + இலை.]

ஊழில்

ஊழில்ūḻil, பெ. (n.)

   அருவருப்புறு சேறு (பிங்.);; filthy mire (செ.அக.);.

     [ஊழ் → ஊழில். (வே.க.92);.]

ஊழுறு-தல்

ஊழுறு-தல்ūḻuṟudal,    4.செ.குன்றாவி. (v.t.)

   குடைதல்; to scoop out

     “காழியர் மோதகத் துழுறு விளக்கமும்.” (சிலப்.6.137.அரும்.);. (செ.அக.);.

     [ஊழ் + உறுதல்]

ஊழுழிக்காலம்

ஊழுழிக்காலம்ūḻuḻikkālam, பெ. (n.)

   1. நெடுங்காலம்; duration without end, eternity.

   2 நீடூழிக் காலம்; longest period imaginable (சா.அக.);.

     [ஊழ் + ஊழி + காலம் = ஊமுழிக்காலம்]

ஊழை

 ஊழைūḻai, பெ. (n.)

   பித்தம் (பிங்.);; bile.

     [ஊழ் → ஊழை.]

ஊழைக்காய்ச்சல்

 ஊழைக்காய்ச்சல்ūḻaikkāyccal, பெ. (n.)

   பித்தக்காய்ச்சல்; fever arising from the deranged condition of the bile, billious fever. (சா.அக.);.

     [ஊழை + காய்ச்சல்.]

ஊழைக்குருத்து

 ஊழைக்குருத்துūḻaikkuruttu, பெ. (n.)

   துளசி ( பச்.மூ);; sacred basil (செ.அக.);.

     [உழை → ஊழை + குருத்து.]

ஊழ்

ஊழ்1ūḻtal,    2.செ.கு.வி. (v.i.)

   முதிர்தல்; to grow old

     “பெரும்பாம் பூழ்ந்து தோலுரிப்பன போல்” (சீவக.1560);. (செ.அக.);.

     [உல் → ஊல் → ஊழ்.]

 ஊழ்2ūḻttal,    2.செ.கு.வி. (v.i.)

   1. முதிர்தல்; to grow old, pass the prime of life

     “காந்த ளுழ்த்துச் சொரிலபோல்” (சீவக.1742);.

   2. உட்குலைதல், பதனழிதல்; as decay, as flesh, as fruits, to become putrid, to be spoiled, to rot, to fade.

     “அருவிதந்த பழம்… ஊழ்த்து” (மலைபடு.174.180);.

   3. நாறுதல் (பிங்.);; to stink..

   4. விரிதல், மலர்தல; to blossom

     ‘ (கலித்.26);. (செ.அக.);.

     [ஊள் → ஊழ். ஊழ்த்தல். (வேக92);.]

 ஊழ்3ūḻttal,    2.செகுன்றாவி (v.t.)

   1. நினைத்தல் (நாமதீப.);; to think,

   2. மூடுதல் (நாமதீப.);; lo cover

   3. சிந்துதல் (நாமதீப.);; to spil (செ.அக);.

     [உல் → ஊல் → ஊழ்.]

 ஊழ்4ūḻttal,    2.செ.கு.வி. (v.i.)

   உதிர்தல்; to fall off (நாநார்த்த.);

     [உன் → ஊல் → ஊழ்.]

 ஊழ்5ūḻ, பெ. (n.)

   1. பழமை; that which is pristine, of long dale

     “ஊழ்படு காதலானை” (சீவக.1452);.

   2. பழவினை; karma.

     “ஊழிற் பெருவலி யாவுள” (குறள். 380);.

   3. பழவினைப்பயன்; fruit of karma, fruit of deeds committed in a former birth or births.

   4. முறைமை; rule, established usage, longstanding custom

     “ஊழிற்றா கநின் செய்கை” (புறநா.29);.

   5. குணம்: disposition, temperament (திவா.);.

   6. முதிர்வு; maturity.

     “பயம்புக் கூழுற்றலமரும்” (மலைபடு.133);.

   7. முடிவு; end, completion, termination

     “ஊழின் மண்டிலாமாச் சூழுமிந்நுகர்ச்சி” (மணி.30.118);.

   8. மலர்ச்சி; blossoming.

     “முதிரிணரூழ் கொண்ட… வேங்கை” (கலித்.44-4);.

   9. திருக்குறளின் ஓர் அதிகாரம்; name of a chapter in Tirukkural (செ.அக.);.

     [உல் → ஊல் → ஊழி.]

 ஊழ்6ūḻ, பெ. (n.)

   1. வெம்மை; heat being angry

   2. பகைமை; hatred, enmity, rnalice (பிங்.);.

   3. வெயில்; sunshine.

   4. கதிரவன்; Sun

     “பொங்கூழொளி நிகர் வெங்கை புரேசர்” (வெங்கைக்கோ.90);.

     [உல் = குடு, வெயில், கொதிப்பு. உல் → உால் → ஊழ்.]

ஊழ்கனி

ஊழ்கனிūḻkaṉi, பெ.(n.)

பதனழிந்த பழம்,

 rotten or decayed fruit.

     “உடம்பொடு முகங்கள் ஒவ்வார் ஊழ்கனிமாந்திவாழ்வர்”(சீவ13-24);

     [ஊழ் + கனி]

ஊழ்கு-தல்

ஊழ்கு-தல்ūḻkudal,    5.செ.குன்றாவி. (v.t.)

   அடிமனம் ஒன்றித்தல், மனமொருங்கு குவிதல்; to mediate

     “புனிதன் பங்கய மூழ்கி” (கோயிற்பு:பாயி.17);. (செ.அக.);.

     [உல் → உள் → உழு → ஊழி.]

ஊழ்த்தசை

 ஊழ்த்தசைūḻttasai, பெ. (n.)

புலால்: flesh (பிங்.); (செ. அக.);

     [உன் →ஊள் → ஊழ் + தசை.]

ஊழ்த்தனோய்

 ஊழ்த்தனோய்ūḻttaṉōy, பெ. (n.)

ஆட்டின் ஈரல் நோய்: rot fatal distemper of sheep (கால்.வி.);.

     [உல் → ஊள் → ஊழ் → உத்தல் + நோய்.]

ஊழ்த்தல்

ஊழ்த்தல்1ūḻttal, பெ. (n.)

   இறைச்சி; flesh

   2. முடைநாற்றம்:

 slench (பிங்.);.

   3. நிரையம் (நரகம்);; hell (பிங்.); (செ.அக.);.

     [உல் → மான் → ஊழ் → ஊழ்த்தல்.]

 ஊழ்த்தல்2ūḻttal, பெ. (n.)

   முதிர் பருவம், விளை பருவம் (சூடா.);; opportunity, seasonable time (செ.அக.);.

     [உல் → ஊள் → ஊழி.]

ஊழ்த்துணை

 ஊழ்த்துணைūḻttuṇai, பெ. (n.)

   மனைவி; wife, as one’s destined helpmate (W);. (செ.அக.);

     [உல் → ஊள் → ஊழ் → துணை.]

ஊழ்பாடு

ஊழ்பாடுūḻpāṭu, பெ. (n.)

   முடிவுபடுகை; coming to an end

     “நின்மிதியின்றியூழ் பாடின்றி’ (மணி.30.37);, (செ. அக.);.

     [ஊழ் + பாடு படு → பாடு.]

ஊழ்முறை

 ஊழ்முறைūḻmuṟai, பெ. (n.)

வினைப்பயன் முறை: order of experiences resulting from Karma in previous births (செ.அக.);.

     [ஊழ் + முறை.]

ஊழ்மை

ஊழ்மைūḻmai, பெ. (n.)

   முறைமை; established rule regulation.

     “ஊழ்மையிற் கண்ணபிரான் கழல்

வாழ்த்துமின்” (தில்.திருவாய்,4,6.9);, (செ.அக.);

     [ஊழ் → ஊழ்மை.]

ஊழ்வலி

ஊழ்வலிūḻvali, பெ. (n.)

   1 முதிர்ந்த நோய், பழைய suo:

 long standing or chronic pain,

   2. முன்வின்ன வன்மை; inevitability of Karma or the result of actions in the previous birth (சா.அக.);

     [ஊழ் + வலி]

ஊழ்விதி

 ஊழ்விதிūḻviti, பெ.(n.)

   பழவினைப் பயன் (வின்);; inevitable result of deeds done in former births.

மறுவ.ஊழ்வினை

ஊழ்வினை

ஊழ்வினைūḻviṉai, பெ. (n.)

   1 பழவினை; deed done by a Soul in former birth, considered as the cause of the present life with all its fortunes

     “யாரே யூழ்வினை தீர்க்கிற்பார்’ (இரகு.தேனு.35);.

   2. உழுவலன்பு:

 attachment continued from birth to birth.

     “இஃதூழ்வினையாலுள்ளஞ்சுடு மாலென்ன” (சீவக. 1670);, (செ.அக.);.

     [ஊழ் + வினை.]