செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை வெளியீடு
31 தொகுதி 12000 பக்கங்கள் கொண்ட பேரகரமுதலி


1

10838

2769

3111

538

3554

677

1093

620

189

1004

402

2
க்
1

8212
கா
2579
கி
564
கீ
222
கு
4598
கூ
780
கெ
615
கே
391
கை
1101
கொ
2417
கோ
1754
கௌ
110
ங்
1

2
ஙா
2
ஙி
1
ஙீ
1
ஙு
1
ஙூ
1
ஙெ
1
ஙே
1
ஙை
1
ஙொ
5
ஙோ
1
ஙௌ
1
ச்
1

5235
சா
1186
சி
2424
சீ
439
சு
1261
சூ
420
செ
1529
சே
470
சை
23
சொ
409
சோ
365
சௌ
1
ஞ்
1

15
ஞா
44
ஞி
3
ஞீ ஞு ஞூ ஞெ
34
ஞே
5
ஞை
2
ஞொ
3
ஞோ
2
ஞௌ
1
ட்
1

1
டா
1
டி
1
டீ
1
டு
1
டூ
1
டெ
2
டே
1
டை
1
டொ
1
டோ
1
டௌ
ண்
1

1
ணா
1
ணி
1
ணீ ணு
1
ணூ
1
ணெ
2
ணே
1
ணை
1
ணொ
1
ணோ
1
ணௌ
த்
3113
தா
1530
தி
2203
தீ
393
து
1238
தூ
411
தெ
694
தே
856
தை
39
தொ
878
தோ
459
தௌ
ந்
1

2789
நா
204
நி
1860
நீ
1161
நு
14
நூ
18
நெ
892
நே
318
நை
89
நொ
210
நோ
159
நௌ
2
ப்
1

4560
பா
1824
பி
492
பீ
25
பு
2224
பூ
1133
பெ
1064
பே
483
பை
127
பொ
1218
போ
478
பௌ
2
ம்
4760
மா
1422
மி
535
மீ
268
மு
3016
மூ
949
மெ
396
மே
751
மை
152
மொ
284
மோ
242
மௌ
ய்
1

119
யா
426
யி
1
யீ
1
யு
46
யூ
20
யெ
9
யே
1
யை
1
யொ
1
யோ
98
யௌ
1
ர்
87
ரா
107
ரி
11
ரீ
7
ரு
24
ரூ
20
ரெ
6
ரே
16
ரை
10
ரொ
8
ரோ
23
ரௌ
ல்
117
லா
44
லி
8
லீ
5
லு
8
லூ
3
லெ
13
லே
21
லை லொ
20
லோ
63
லௌ
3
வ்
1

3800
வா
1329
வி
1638
வீ
515
வு
1
வூ
1
வெ
2164
வே
834
வை
229
வொ
1
வோ
3
வௌ
ழ்
1

1
ழா
1
ழி
1
ழீ
1
ழு
6
ழூ
1
ழெ
1
ழே ழை ழொ ழோ
1
ழௌ
ள்
1

2
ளா
1
ளி
1
ளீ
1
ளு
1
ளூ
1
ளெ
2
ளே
1
ளை
1
ளொ
1
ளோ
1
ளௌ
ற்
1

1
றா
1
றி
1
றீ
1
று
1
றூ
1
றெ
2
றே
1
றை
1
றொ
1
றோ
1
றௌ
ன்
1

1
னா
1
னி
1
னீ
1
னு
1
னூ
1
னெ
2
னே
1
னை னொ
1
னோ
1
னௌ
தலைசொல் பொருள்
உக

உக1 ugattal,    3. செ.கு.வி. (v.i.)

   1. உயர்தல்; to ascend, rise stately, soar upward.

     “மாவிசும் புகந்து” (மதுரைக். 334);.

   2. உயரப் பறத்தல் (பதிற். 779);; to fly high.

   ம. உக்குக;   க. உக்கு (உப்பு);;   து. உக்கு;   தெ. உக்கின்சு (குதித்தல்);; Goth hanhs;

 Ger hock;

 lce har;

 As heat E high. (உவ → உக → உக-த்தல். ஒ.நோ. சிவப்பு → சிகப்பு. ஆவா → ஆகா (இடைச்சொல்);.]

 உக2 ugattal,    3. செ.கு.வி. (v.i.)

   1. மகிழ்தல் (திவ். இயற். 2.8);; to enjoy, to be glad, pleased, satisfied

   2. விரும்புதல்; to like.

     “காக்கை யுகக்கும் பிணம்” (வாக்குண். 24);.

     [உவ → உக → உக-த்தல் = மகிழ்தல், உயர்தல், மேற்செலற் கருத்து மகிழ்தற் கருத்தில் விரியும்.]

உகட்டு-தல்

உகட்டு-தல் ugaṭṭudal,    20 செ.கு.வி. (v.i.)

   அருவருப்பாதல்; to nauseale,

     “உகட்டிப் போந்த செய்தி” (திவ் திருக்குறுந். 4. வியா. பக்.17);.

     [உகள் = வெளிவரல், உகள் + து = உகட்டு = புறந்தள்ளு, உருட்டு.)

உகந்துடைமை

 உகந்துடைமை uganduḍaimai, பெ. (n.)

   கணனுடைய சொத்தில் மனைவிக்குரிய பங்கு; right of a married woman to a share of her husband’s property. (Nan.);. (செ.அக.);.

     [உவ → உவந்து → உகந்து + உடைமை + விரும்பி எடுத்துக் கொள்ளத்தக்க உடைமை.]

உகப்பார்பொன்

உகப்பார்பொன் ugappārpoṉ, பெ. (n.)

   வரிவகை (S.I.I. iii. 110.);; tax. (செ.அக.);.

     [உவ → உவப்பார் → உகப்பார் + பொன்.]

உகப்பு

உகப்பு1 ugappu, பெ. (n.)

   உயர்ச்சி;     “உகப்பே உயர்வு” (தொல்.சொல். 306);;

 height, elevation. (செ.அக.);.

     [உ → உக → உகப்பு]

 உகப்பு2 ugappu, பெ. (n.)

   1. மகிழ்ச்சி; joy.

     “பூதலத்தோ ருகப்பெய்த” (திருவாச. 11.5);.

   2. விரும்பி வாழுமிடம்; happy resort, favourite resort

     ‘இராவணனை… யெய்தானுகப்பு” (திவ். இயற். நான்மு. 28);.

   3. விருப்பம்; wish, choice (செ.அக.);

     [உவ → உக → உகப்பு.]

உகமகள்

உகமகள் ugamagaḷ, பெ. (n.)

   நிலமகள் (ஆ.அக.);; goddess of the earth.

     “உகமகணுதற்கண்” (இராகு. திக்குவி. 208);.

     [உகம்3 + மகள்.]

உகமம்

 உகமம் ugamam, பெ. (n.)

பிறந்த இடம் birth place.

     [உகு → உகம் → அம்.]

உகமுடிவு

 உகமுடிவு ugamuḍivu, பெ. (n.)

   ஊழியிறுதி (திவா.);; end of the world

     [உகம் + முடிவு.]

உகம்

உகம்1 ugam, பெ. (n.)

   ஊழி; age of the world, long mundane period of years.

     “உகம் பல சென்றன” (கந்தபு. மேருப். 66);.

   ம. உகம்; O.E. geoc;

 E yoke, OHG, G joch;

 OS, Goth Juk;

 ON ok;

 L jugum;

 Skt yuga.

     [உகு → உகம், உகுதல் = கெடுதல், அழிதல், முடிதல் = உலகம் முடியும் காலம்.]

 உகம்2 ugam, பெ. (n.)

   1. நுகம். yoke

   2. இணை; pair.

     [உகு → உகம் = முடிவு, முனை, ஏர்க்காலின் முனைப்பகுதியில் பொருத்தப்படுவது.)

 உகம்3 ugam, பெ. (n.)

   நிலவுலகம்; earth world

ம. உகம்.

     [உலகம் → உகம்.]

 உகம்4 ugam, பெ. (n.)

   1. தோற்றம்;   தொடக்கம்; beginning.

   2. முதலாவது; first for most

   3. தலைப்பாட்டு (சிலப். 14. 156, உரை.);; leading song.

     [உகு → உகம் உகு = மேலெழும்புதல், உயர்தல், முதலாதல்.]

 உகம்5 ugam, பெ. (n.)

   1. நாள் (அக.நி.);; day

   2. நீட்சி; length (செ.அக.);.

     [உகு → உகம். உகுதல் = கழிதல். உகம் = கழியும் நாள், நீட்சி]

உகரக்கிளவி

 உகரக்கிளவி ukarakkiḷavi, பெ. (n.)

     “உ”எனும் எழுத்து;

 the vowel “u”

     [உகரம் + கிளவி]

உகரக்குறுக்கம்

 உகரக்குறுக்கம் ugaragguṟuggam, பெ. (n.)

   குற்றியலுகரம்; shortened ‘u’.

     [உகரம் + குறுக்கம், குற்றியலுகரம் பார்க்க;seek kurriyalugaram.]

உகரக்கேடு

 உகரக்கேடு ugaragāṭu, பெ. (n.)

   நிலை மொழியினிறுதியில் நின்ற உகரம் வருமொழி புணருமிடத்துக் கெடுதல்; elision of final ‘u’ of the first-word when joining with another word having a vowel for initial

     [உகரம் + கேடு. கெடு → கேடு.]

உகல்

உகல்1 ugaltal,    2 செ.கு.வி. (v.i.)

   1. உதிர்தல்;   கீழேவிழுதல்; to drop off;

 as leaves, fruits;

 to fall out, as hair, to be blasted, nipped, shaken with the wind, to drop down, as tears.

   2. சிந்துதல்; to be spilled, to fall.

   3. சொரிதல்; to pour out

   4. சுழலல்; to be disconnected.

   5. இறங்குதல்; to descend.

   6. குதித்தல்; to jump.

     [உக → உகம்.]

 உகல்2 ugalludal,    2 செ.கு.வி. (v.i.)

   1. குதித்தல்; to iump.

   2. தாவு; to blow.

     “உகலியாழ் கடலோங்கு பாருளீர்” (தேவா.75.1);.

     [உகு → உகல் → உகல்(லு);தல். (வே.க. 31);]

உகளம்

உகளம்1 ugaḷam, பெ. (n.)

   விருப்பம் (அக.நி.);; desire, delight.

 உகளம்2 ugaḷam, பெ. (n.)

   1. இணை; pair, brace, couple,

     “உகளமு முனரின்” (கோயிற்பு. பதஞ். 65);.

   2. இரண்டு; two.

உகளி

உகளி1 ugaḷittal,    4 செ.கு.வி. (v.i.)

   1. குதித்தல்; to leap.

     “பேய்பிண மிக்கன வென்றுகளித் தனவே” (பாரத. பதினாறாம். 51);.

   2. மகிழ்ச்சி மிகுதல்; to delight, exult

     “மேலைத் தொண்டு களித்து” (திவ். திருவாய். 10,8,7);.

   3. பாய்தல்; to jump.

     [உகுதல் = மேலெழும்புதல். உகு → உகள் → உகளு → உகளித்தல்.]

 உகளி2 ugaḷi, பெ. (n.)

   பிசின் (நாமதீப);; gum.

     [உகள் – உகளி மரப்பிசின் தானாகப் பொங்கி மேல் வருதலால் பெற்ற பெயர்.]

உகளு

உகளு1 ugaḷudal,    5. செ.கு.வி. (v.i.)

   1. தாவுதல்; to leap, bound, frisk.

     “இரலை… யுகள” (குறுந். 65);.

   2. ஒடித்திரிதல்; to run about

     “பன்மயிர்ப் பிணவொடு கேழ லுகள” (மதுரை. 74);.

   3. பாய்தல்; to leap over, bound

   4. கடத்தல்; to pass over (ஆ.அக.);.

   5. நழுவி விழுதல்; to slip down, fall off.

     “ஒளிமேகலை யுகளும்” (திருக்கோ. 350);.

   6. பிறழ்தல்; to turn upside down.

     “பொருகய லுகளிப் பாய” (சீவக. 1854);.

   7. வாயா லெடுத்தல்; to vomit.

 Mar ugal

     [உகு → உகுள் → உகள் → உகளு, உகுதல் = மேலெழும்புதல், ததும்புதல், பொங்கி எழுந்து சிதறுதல்.)

 உகளு2 ugaḷudal,    5. செ.கு.வி. (v.i.)

   1. உயர்தல்; to go up.

   2. பெருகுதல்;   மிகுதல்; to become excess, grow more.

க. உக்கலி.

     [உகு → உகுள் → உகள் – உகளு.]

உகள்-தல்

உகள்-தல் ugaḷtal,    5 செ.கு.வி. (v.i.)

உகளுதல் பார்க்க See ugalu.

உகவல்லி

உகவல்லி ugavalli, பெ. (n.)

நாகமல்லி ringworm-root.

     [உகம்3 + வல்லி.]

உகவு

 உகவு ugavu, பெ. (n.)

   நிலையழிவு; to be agitated, to wear off, to pass away. (செ.அக.);.

     [உகு → உகுவு → உகவு]

உகவை

உகவை1 ugavai, பெ. (n.)

   1. மகிழ்ச்சி; joy, happiness.

     “உகவையா னெஞ்ச முள்ளுருகி” (திவ். திருவாய். 6.2.9);.

   2. உவப்பு; cheer, inspiration.

     “முகவை யின்மையின் உகவை யின்றி” (புறம். 362-11);.

     [உவ → உக → உகவை.]

 உகவை2 ugavai, பெ. (n.)

   1. உதவி;   நன்மை; help, good, favour.

     “உள்குவார்கட்கு உகவைகள் பலவுஞ் செய்து” (தேவா. 1146);. உகவைப்பொன் பார்க்க (S.I.I. iii, 38);;see ugavai-p-pon (செ.அக.);.

     [உவ → உக → உகவை = உவத்தற்குரியது.]

உகவைப்பொன்

உகவைப்பொன் ugavaippoṉ, பெ. (n.)

   காசாயவகை (S.I.I. v.ii, 290);; a tax in money. (செ.அக.);.

     [உவ → உக → உகவை + பொன்.]

உகா

உகா ukā, பெ. (n.)

   1. ஓமைமரம் (பிங்.); tooth-brush tree.

   2. உவா மரம் (மலை.);; sand paper tree.

ம. உகமரம்,

     [உவா → உகா.]

     [P]

உகாக்காய்

 உகாக்காய் ukākkāy, பெ. (n.)

   உகா மரத்தின் காய்; ooga fruit (சா.அக.);.

     [உகா + காய்.]

உகாதி

உகாதி ukāti, பெ. (n.)

ஆண்டின் தொடக்கம்

 beginning of the year.

க., தெ. உகாதி

     [உகம்4 + ஆதி.]

உகாப்பட்டை

 உகாப்பட்டை ukāppaṭṭai, பெ. (n.)

   உகா மரத்தின் பட்டை; bark of the tree, uga (சா.அக.);.

     [உகா + பட்டை.]

உகாமை

உகாமை ukāmai, பெ. (n.)

   1. சிதறாமை; not spilled.

   2. வெளியிடாமை; not let out, not spoken.

     [உகு + ஆ + மை.]

உகாயவாகை

 உகாயவாகை ukāyavākai, பெ. (n.)

   ஒருவகை வான மரம்; a kind of sirissa tree. (சா.அக.);.

     [உகாய் + வாகை → உகாய வாகை.]

உகாய்

உகாய் ukāy, பெ. (n.)

   ஒருவகை மரம்; a kind of tree.

     “உலறுதலை உகாஅய்” (நற். 66);.

     [உவா → உகா → உகாய். உவப்பு = உயரம்.]

உகாய்க்குடிகிழார்

 உகாய்க்குடிகிழார் ugāygguḍigiḻār, பெ. (n.)

   கடைக்க கப் புலவர்களுள் ஒருவர்; poet of the Sangam perio

     [உகாய்க்குடி + கிழார், உகாய்க்குடி என்னும் ஊரினர். உகாய குடி என்பது உகாய் (ஒமை); மரத்தினால் பெற்ற பெயர்.]

உகாரம்

உகாரம் ukāram, பெ. (n.)

   1. உகரக்குறில் எழுத்து short vowel ‘u’

   2. இரக்கம் சுட்டிய இடைச்சொல் interjection denoting compassion.

   3. இளகும் உப் சுல்லுப்பு; black salt

     [உ + காரம்.]

உகாரவுப்பு

 உகாரவுப்பு ukāravuppu, பெ. (n.)

கல்லுப்பு (மு.அ. black salt, impure chloride of sodium.

     [உகாரம் + உப்பு.]

உகின்

 உகின் ugiṉ, பெ. (n.)

   எகின்;   புளிமா (மலை.);; ind hogplum.

     [எகின் → உகின்.]

உகிரம்

 உகிரம் ugiram, பெ. (n.)

   இலாமிச்சை; cuscus-grass

உகிர்

உகிர் ugir, பெ. (n.)

   நகம்; finger or toe nail, tak claw.

     “உகிர்த்தொடர் கழன்று’ (மணிமே. 20:59);.

   ம. உகிர்;   கை கோரு;   க. உகுரு;   கோத, ஊர், ஊர்க துட ஊர்;   குட. நா., து. உகுரு;   தெ. கோரு கொலா, கே. பர். கோரி;   கூ கோர குவி. கோரு;   கட. கேரெ;   குரு ஒரோ மால். ஓர்கு;   பிரா. கோர் (விரல்);;பட உகில்,

     [உகு → உகுல் → உகுர் → உகிர். உகுதல் = மேலெழும்புத முளைத்தல்.)

உகிர்ச்சுற்று

 உகிர்ச்சுற்று ugirccuṟṟu, பெ. (n.)

நகச்சுற்று whito

     “உகிர்ச்சுற்றில் உலக்கை விழுந்தாற்போல்” (பழ. (செ.அக.);.

     [உகிர் + சுற்று.]

உகிர்நிலைப்பசாசம்

உகிர்நிலைப்பசாசம் ugirnilaippacācam, பெ. (n.)

   பிண்டிக்கை முப்பத்து மூன்றனுள் ஒன்று. அது கட் விரலும் பெருவிரலும் உகிர்துனை கவ்வி நிற்ப (சிலப். 3.18. உரை);; variety of gesticulation in white the tip of the nail in the thumb is brought into clour with that of the fore-finger. (செ.அக.);.

     [உகிர் + நிலை + பசாசம், பசைதல் = விரும்புதல், ஒட்டு சேர்தல், பசை → பசையம் → பசாயம் → பசாசம்.]

உகிர்ப்புறவன்

உகிர்ப்புறவன் ugirppuṟavaṉ, பெ. (n.)

   நகத்தின் மே அணியும் அணிவகை (S.I.I. ii. 16);; jewel for na (செ.அக.);.

     [உகிர் + புறவன். புறம் → புறவன். புறம் = மேலே.]

உகிலாதி

 உகிலாதி ugilāti, பெ. (n.)

   புளி; tamarind. (சா.அக.);

     [எகிள் + ஆதி – எகிளாதி → எகிலாதி → உகிலாதி]

உகு

உகு2 ugudal,    21. செ.கு.வி. (v.i.)

   1. முளைத்தல்;   தோன்றுதல்; to sprout appear.

   2. சிறத்தல்; to be glorified.

     [உ → உகு → உகு-தல். உ = உயர்ச்சி.]

 உகு3 uguttal,    4. செகுன்றாவி (v.t.)

   1 சிதறச்செய்

   தல்; lo le fall, spill, scatter.

     “ஊஉனன்மையினுண்ணா துகுத்தென” (மலைபடு. 148);.

   2. உதிர்த்தல்; to cast, as leaves, to exuviate, as a bird its feathers.

     “பழன மஞ்ஞை யுகுத்த பீலி” (புறநா.13);.

   3. வெளியிடுதல்; to emit pour out

     “சீற்றமுகுத்த செந்தீ” (கம்பரா. இராவணன்றா. 27.);.

   4. சிந்துதல்; to shed, as tears.

     “நெடுங்கணீ ருகுத்து” (சிலப்.பதிக. 32);.

   5. சொரிதல்; to pour.

     “மென்பழ னுகுத்த தேனும்” (நைடத.நாட்டுப். 20);.

க. உகிக

     [உழு → உகு → உகு-த்தல், உகு = சிந்து (சிந்துதல்);, சிதறுதல், தெளித்தல், உகு → வ. உக்ஷ (வ.மொ.வ. 90);.]

உகு-தல்

உகு-தல் ugudal,    21. செ.கு.வி;   1. உதிர்தல்; lo

 shed or part with, as leaves from a tree, to shed, as feathers or hair, to become separated

     “போயுகு மிலைகள்” (சி. சி. 1,15);.

   2. சிதறுதல்; to be strewed, scattered

     “உன்கவுகாமை நன்கு” (ஆசாரக். 21.);.

   3. சிந்துதல்; to be spilled;

 to fail;

 to pour out.

     “அங்கணத்துளுக்க வமிழ்தற்றால்” (குறள் 720);.

   4. சுரத்தல்; to trickle gently as water from a spring, or gush forth, as milk from cow’s udder (J);.

   5. கெடுதல்; to wear off, pass away;

 to be lost.

     “இளமையுகா நின்ற மேனியும்” (திருநூற். 45);.

   6. சாதல்; to fall down, fig to die.

     “உக்கார் தலைபிடித்து” (தேவா. 641,4);.

   7. கரைந்து தேய்தல்; to melt pine, languish, wither.

     “உக்குவிடு மென்னுயிர்” (கலித். 138);.

   8. மறைதல்; to set as heavenly bodes,

     “உதயக் குன்றினின்றுகு குன்றில்” (கம்பரா. இராவணன்றா. 39.);.

   9. பறத்தல்; to fly about

     “ஊதவுகு தன்மையினொடொல்கியுற நின்றான்” (சீவக. 2014);.

   10. நிலைகுலைதல்; to be agiated.

     “நெஞ்சுக… கண்ணீர் மல்க” (தஞ்சைவா. 150);.

   11. உமிழ்தல்; to spit.

க., து. உகு. உகி.

     [உளு → உகு → உகு-தல் (வே.க.29);.]

உகுணம்

 உகுணம் uguṇam, பெ. (n.)

   மூட்டுப்பூச்சி; bed-bug.(W.);

     [உருள் → உகுள் → உகுணம்.]

உகுனை

உகுனை uguṉai, பெ. (n.)

   நெற்பயிருக்குரிய நோய் வகை (நீலகேசி. 366. உரை);; disease affecting paddy

     [உகு + நோய் – உகுநோய் → உகுனை.]

உகுருவி

 உகுருவி uguruvi, பெ. (n.)

   சூரைச்செடி; jackal jujuba.

     [உகு → உகுல் → உகுர் → உகுருவி]

உகுல்

உகுல் ugul, பெ. (n.)

   1. வீழ்ச்சி; tall, 2 கேடு;

 ruin

     [உகு → உகுல்.]

உகுள்

உகுள் uguḷ, பெ. (n.)

   1. சொரிதல்; pouring.

   2. உமிழ்தல்; spitting

   3. கொப்பளித்தல்; to wash the mouth inside

க. உகுள்

     [உகு → உகுல் → உகுள்.]

உகுழ்

 உகுழ் uguḻ, பெ. (n.)

உகுள் பார்க்க see ugul.

க உகும்.

     [உகுள் → உகுழ்.]

உகுவு

உகுவு uguvu, பெ. (n.)

   1. சிந்துகை; spilling.

     “சோர்ந்துகு வன்ன” (மதுரைக் 415);.

     [உகு → உகுவு.]

உகே

 உகே uā, பெ. (n.)

கொண்டாட்டங்களின் போது

வெற்றியாகட்டும் என்னும் பொருளில் எழுப்பப்படும்

   முழக்கம்; slogan raised on the occasion of festivals

 or function of grand celebration. மாதையனுக்கு உகே;

மாதேவனுக்கு உகே! (கொங்.வ.);

க. உ.கே.

     [உகை → உகே. உகை= செலுத்துதல், முன்வருதல், மேலோங்குதல், வெற்றி பெறல்.]

உகை

உகை1 ugaidal,    4 செ.குவி (v.i.)

   செல்லுதல்; to move, as a boat;

 to go, as a vehicle, to walk, as an animal

     “காமவுததியைக் கரைவிட வுகையு நாவா யானும்” (கல்லா, 19);. (செ.அக.);.

     [உகு → உகை → உகை-தல் = மேற்செல்லுதல் எழுதல்.]

 உகை2 ugaittal,    4 செகுன்றாவி. (v.t.)

   1. செலுத்துதல்; to drive as a carriage, to ride, as a horse, to row, as a boat, to discharge, as an arrow,

     “பெருந்தோணி பற்றி யுகைத்தலும்” (திருவாச. 30,4);,

   2 எழுப்புதல்; to stir up, as dust.

     “பலபுரவி நீறுகைப்ப” (மதுரைக்.184);.

   3. பதித்தல்; to set, as a gem

     “நீலமொன்றுகைக்கு நிறைந்த கணையாழி;

     (பணவிடு.97);.

   4 செ.கு.வி (v.i.);

   1. எழுதல்; to rise.

     “உகத்தின் முடிவினி லுகைத்த கனைகடல்” (கலிங், 342 புதுப் 11.44);.

   2. உயரவெழும்புதல்; to leap. Jump up.

     “கொடித்தடந் தேரினின் றுகைத்துமுன் குதியா” (பாரத நிரைமீ. 41);.

   க. உகு; GK ago, L ago

     [உ → கு → உகை → உகை-த்தல்.]

 உகை3 ugai, பெ. (n.)

   உகா; tooth-brush tree (செ.அக.);

     [உகா → உகை.]

 உகை4 ugai, பெ. (n.)

   பானை; pot

     [உகு → உகை கொட்டிவைக்கப் பயன்படுவது.]

உக்கடணம்

உக்கடணம் ukkaḍaṇam, பெ. (n.)

   1. உத்துக் கூவுதல்;   பேரோசை எழுப்புதல்; loud cal Clarion call

   2. சான்றோர் பலரறியக் கூறி ஒன்றைத் தொடங்கி வைத்தல்; inaugurating something the presence of the elite.

க. உக்கடனெ.

     [உகு → உக்கடம்1 → உக்கடனம். உக்கடனம் → வ. உத்காட்டன.]

உக்கடம்

உக்கடம்1 ukkaḍam, பெ. (n.)

   1. முதலாவது;   தொடக்கம்; first. Beging.

   2. வீட்டின் முன்னுள்ள தெருவாயில்;   அரண்மனையின முகப்பு;   மதில்;   வாயில்; gate, façade, entrance.

     [கடை → உக்கடம்]

     [உக்கிரம் + நாள்]

 உக்கடம்2 ukkaḍam, பெ. (n.)

   நீர்ச்சால் வடத்தில் தலைக்கண்ணி;   முடிகயிறு; rope used in well-irrigation

 உக்கடம்3 ukkaḍam, பெ. (n.)

   1. முன் பக்கத்தில் அமர்ந்து செலுத்தும் ஒடம்; steering boat

   2. ஊரின் எல்லையிலுள்ள காவலிடம்;   காவற்பரண்; watch-tower.

   க. உக்கட;து. உக்கடோ.

     [உக்கம் = பக்கம், கடைசி, இறுதி, முனை, பின்பக்கமுள்ள பிடரி ஒ.நோ. உக்கடைப்புனம் = ஊரின் எல்லையிலுள்ள நிலம். உக்கடைவாயில் (கடைசி எல்லை வாயில் (gale); → உக்கடை → உக்கடம்.]

 உக்கடம்4 ukkaḍam, பெ. (n.)

கோவைக்கு அருகிலுள்ள ஒர் ஊர்,

 village near Coimbatore.

     [உக்கடை → உக்கடம்.]

உக்கடை

 உக்கடை ukkaḍai, பெ. (n.)

   நீரிறைக்கும் ஏற்றம்; wicker basket for drawing water for irrigation

க. உக்கடியன்த்ர.

     [உகு → உக்கு → உக்கடை]

உக்கணி

 உக்கணி ukkaṇi, பெ. (n.)

கைத்தறியில் கயிறு இழுத்துக்

   கட்டுவதற்காக உள்ள ஒரு கருவி; accessory of the handloom. (சேரநா.);.

ம. உக்கணி.

     [உக்கம் → உக்கணி, உக்கம் = கயிறு.]

உக்கம்

உக்கம்1 ukkam, பெ. (n.)

   1. இடை; waist

     “உக்கஞ்சேர்த் திய தொருகை’ (திருமுரு. 108);.

   2. பொருந்திய பக்கம்; conjoined side (செ.அக.);.

   ம. உக்கம்;து. ஒக்க, ஒக்கம்.

     [உ → உக்கம். உ = நடுப்பகுதி]

 உக்கம்2 ukkam, பெ. (n.)

   1. பேரால வட்டம்;  large circular tan

     “உக்கமுந்தட்டொளியும் தந்து” (திவ். திருப்பா. 20);.

   2. சிற்றால வட்டம; small omamental fan.

     “உழைச்சென் மகளிருக்க மேற்றி” (பெருங். 1,34,213);.

   3. பொன் (சங்.அக);,

 gold,

     [உகு → உக்கம் உகுத்தல் = கொட்டுதல், சொரிதல், வீசுதல், பொலிதல்.)

 உக்கம்3 ukkam, பெ. (n.)

   கட்டித் தூக்கியெடுக்குங் கயிறு; rope or cord lached to anything as to a handle (செ.அக.);.

   ம. உக்கம்;   க. உக்க;   து. உக்கி, ஒக்கி;தெ. உக்கமு

     [உ → உக்கம் (உயரம்); = மேலிழுக்கும் அல்லது மேலுயர்த்தும் கயிறு.]

 உக்கம்4 ukkam, பெ. (n.)

   1 நெருப்பு குடா),

 fire.

   2. வெப்பம்

 heat.

தெ. உக்க

     [உல் → உள் → உக்கம்].

 உக்கம்5 ukkam, பெ. (n.)

   1. உயர்ச்சி

 height

   2. உயர்வு;   சிறப்பு; sublimity.

     [உ7 → உக்கம்.]

 உக்கம்6 ukkam, பெ. (n.)

   1. எருது (பிங்);; bull, ox. 2 ஆன்;

 cow.

     [ஆ = ஆக்கள். ஒ.நோ. ox. ஆக்கம் → அக்கம் → உக்கம்.]

 உக்கம்7 ukkam, பெ. (n.)

   1. தலை; head.

     “உக்கத்து மேலும் நடுவுயர்ந்து” (கலித். 94);.

   2. சேவற் கொண்டை; plume on the head of the cock

   3. கோழி; fowl.

ம. உக்கம்.

     [உ = மேல், உயர்வு. உ → உக்கம். (மேலிருப்பது.)]

 உக்கம்8 umēluyarvuuukkammēliruppaduukkam, பெ. (n.)

   கடுமை;   மிகுதி; severy excess.

     “உக்கதவர் தித்ததவர்” (மேருமந், 1097);

     [உ → உக்கு → உக்கம்.]

உக்கம்பருத்தி

 உக்கம்பருத்தி ukkambarutti, பெ. (n.)

   உப்பம் பருத்தி;   வனப்பருத்தி; Indian cotton-plant (செ.அக.);.

     [உக்கம் + பருத்தி]

உக்கரணம்

உக்கரணம் ukkaraṇam, பெ. (n.)

   1. வீட்டின் சரக்கறை; store-house for provisions.

   2. அரண்மனையின் களஞ்சியம்; granary in a palace.

   ம. உக்கராணம்;   க., து. உக்ராண;   தெ. உக்ராணமு;மரா. உக்ராணி.

     [உள் + கரணம் = உட்கரணம் – உக்கரணம்;

உள் = வீடு, அரண்மனை, அகம் → Skt griha → த. கிருகம் → கரணம்.]

உக்கரி

உக்கரி1 ukkarittal,    4. செகுன்றாவி (vt) வாயாலெடுத்தல்; to vomit (W.).

     [உ + கரி.]

உக்கரை

உக்கரை ukkarai, பெ. (n.)

   அக்கரை; opposite bank.

     “இக்கரை நின்றிவர்ந் துக்கரை கொளவே” (புறநா. 357.9);.

உக்கரைத்தட்டு

உக்கரைத்தட்டு ukkaraittaṭṭu, பெ. (n.)

   மண முழவின் வலந்தரையின் நடுப்பாகத்துக்கு மேலுள்ள பாகம் (கலைமகள் xii, 400);; part just above the middle of the Valantarai of a Mirutangam, (செ.அக.);.

     [உ + கரை + தட்டு.]

உக்கலரிசி

 உக்கலரிசி ukkalarisi, பெ. (n.)

   நொறுக்கலரிசி, நொய்யரிசி; crushed rice. (சா.அக.);.

     [உக்கல் + அரிசி]

உக்கலை

 உக்கலை ukkalai, பெ. (n.)

   மருங்கின் பக்கம் (பிங்.);; hip.

ம. உக்கல்

     [உக்கம் → உக்கலை.]

     [P]

உக்கல்

உக்கல்1 ukkal, பெ. (n.)

   1. பதனழிவு rollenness, putridity.

   2. உளுத்தது; that which is rotten or decayed

     [உகு → உக்கல்.]

உடன்பங்கு

 உக்கல்2 ukkal, பெ. (n.)

   1 பக்கம்; side (w);

   2. மருங்கு; hip.

   3. ஆலவட்டம்; circular fan made of fragrant roots or palm leaves, carried in procession before idols and great persons.

   4. ஏறு; bull.

   5. ஆன்; cow.

   6. கோழி; fowl.

   7. தீ; fire. (ஆ.அக.);.

   ம. உக்கல்;து. ஒக்க

உக்களம்

உக்களம் ukkaḷam, பெ. (n.)

   1. யாமக்காவல்; night watch.

   2. தலைக்காவல்; advance guard.

   3. பாளையஞ்சூழகழி; entrenchment around a camp. (செ.அக.);.

   ம, உக்களம்;   க. உக்கட தெ. உக்களமு;து. உக்கட

     [உள் + களம்.]

உக்களவர்

 உக்களவர் ukkaḷavar, பெ. (n.)

   இராக்காவலர்; night watchmen (கதி.அக.);.

     [உள் + களம் – உக்களம் + அவர்.)

உக்களி

உக்களி ukkaḷi, பெ. (n.)

   இனிய பணிகார வகை (இராசவைத். 125.);; sweet confection (செ.அக.);.

   ம. உக்காளி;தெ. உக்கர.

     [உக்கம் + களி.]

உக்களை

 உக்களை ukkaḷai, பெ. (n.)

   இடுப்பு; hip உக்கலை பார்க்க;see ukkala. (செ.அக.);.

     [உக்கலை → உக்களை. (கொ.வ.);]

உக்காக்கம்

 உக்காக்கம் ukkākkam, பெ. (n.)

அரைஞாண் waist cord (யாழ்.அக.);

     [உக்கம் + அக்கம் = உக்காக்கம். – உக்கம் = இடுப்பு. அக்கம் = கயிறு]

உக்காரம்

உக்காரம்1 ukkāram, பெ. (n.)

கக்கல் (பிங்.); Vomiting. (செ.அக.);

     [உகு → உக்கரம் → உக்காரம்.]

 உக்காரம்2 ukkāram, பெ. (n.)

   ஒலி எழுப்புகை; belowing as of a bull (W.); (செ.அக.);.

     [முக்காரம் → உக்காரம்.)

உக்காரை

 உக்காரை ukkārai, பெ. (n.)

   நீராவியில் வெந்த அஃ குல்லி என்னும் பிட்டு; steamed meal-cake.

ம. உக்காலி, உதிரு தெ. உக்கெர

     [உஃகுல்லி → உக்குல்லி → உக்கலி → உக்காலி → உக்காலை → உக்காரை ஒரு கலத்தின் வாயைத் துணியால் கட்டி அதன் மேல் அரிசி மாவையோ அல்லது பிற மாவையோ ஆவியில் வேகவைக்கும் ஒருவகைச் சிற்றுண்டி.]

உக்கி

உக்கி ukki, பெ. (n.)

   1. இருகாதையும் இருகையால் மாறிப்பிடித்துக் கொண்டு உட்கார்ந்தெழும் தோப்புக் கரணம்; form of salutation, specially before Ganesa, in which the worshipper is lowering and raising his body a certain number of times while folding his arms across his breast and holding his two ear lobes by alternate hands.

   2. தண்டனை வகை; form of punishment (செ.அக);.

     [உள்கி → உட்கி → உக்கி.]

உக்கிடர்

 உக்கிடர் ukkiḍar, பெ. (n.)

சிலந்திப்பூச்சி, spider (W.); (செ.அக.);.

உக்கிடு

 உக்கிடு ukkiḍu,    இடை (int) நாணத்தைக் காட்டும் குறிப்புச் சொல் (இ.வ.); word expressive of shyness. (செ.அக.).

     [உள்கு → உள்கிடு → உக்கிடு.]

உக்கிட்டு

 உக்கிட்டு ukkiṭṭu, பெ. (n.)

   உட்கட்டு; kind of necklace. (செ.அக.);

     [உள் + கட்டு – உக்கட்டு → உக்கிட்டு (கொ.வ.);.]

உக்கிப்போ-தல்

உக்கிப்போ-தல் ukkippōtal, செ.கு.வி (v.i.)

   1. உருகிப் போதல்; wasting away with grief or pain.

   2. இளைத்துப் போதல்; to pine away.

   3. அழுகல் to rot (சா.அக.);

     [உள் → உளு → உளுகு → உக்கு → உக்கி + போ.1]

உக்கிரநாள்

உக்கிரநாள் ukkiranāḷ, பெ. (n.)

   தாழி. (பரணி);, கொடு நுகம் (மகம்);, கணை (பூரம்);, முற்குளம் (பூராடம்);, முற்கொழுங்கால் (பூரட்டாதி); ஆகிய ஐந்து நாண்மீன்கள (சோதிட சிந். 36);; five naksatras Parani, Magam Puram, Puradam, Purattadi (செ.அக.);.

     [உக்கிரம் + நாள்.]

க. உண்ணி.

     [உண் → உண்டி]

உக்கிரன்

உக்கிரன் ukkiraṉ, பெ. (n.)

   சிவத்திரு மேனிகளுள் ஒன்று (காஞ்சிப்பு. சிவபுண்.15);; manifestation of Siva. (செ.அக.);. [உல் = தீ. உல் → உக்கு → உக்குல் → உக்குலன் → உக்குரன் → உக்கிரன். ஒ.நோ. அக்கு → அக்குரன்.]

உக்கிரப்பாண்டியன்

 உக்கிரப்பாண்டியன் ukkirappāṇṭiyaṉ, பெ. (n.)

   பாண்டிய மன்னர்களுளொருவன்; Pandyan monarch.

     [இவன் சோமசுந்தரபாண்டியன்மகள் கடல் சுவறவேல்விட்ட திருவிளையாடல் கண்டவனும் இவனேயாவான்.]

உக்கிரப்பெருவழுதி

உக்கிரப்பெருவழுதி ukkirapperuvaḻudi, பெ. (n.)

   கடைக் கழகத் திறுதிப் பாண்டியன் (இறை.1. உரை. பக்.11);. அகநானூற்றைத் தொகுப்பித்தோன்; Pandiya king who reigned during the period of the Third Tamil Sangam in Madurai and under whose patronage Agananuru was compiled.

உக்கிரமருந்து

உக்கிரமருந்து ukkiramarundu, பெ. (n.)

   1. காரமருந்து; pungent and stimulating medicine.

   2. இதளிய கந்தக பாடாணங்களைக் கொண்டு செய்யுமருந்து; powerful medicine prepared from mercury, Sulphur and arsenical compounds,

   3. வேதைக்குதவும் மருந்து; one used in alchemy for transmuting metals.

   4. கொப்புளத்தை எழுப்பு மருந்து; blislering agent.

   5. வெடிமருநது; gun powder. (செ.அக.);.

உக்கிரம்

உக்கிரம்1 ukkiram, பெ. (n.)

   1. கொடுமை; blaze, glow, fierceness.

     “உக்கிர வடவைக்கனல்” (திருவிளை. யானை யெய். 20);.

   2. ஊக்க மிகுதி; vehemence, ardour, intensity, fervency, impetuosity.

   3. சினம்; wrath, rage, tury

     “உக்கிரமாக வீமன் வந்தவுறுதி கண்டு” (பாரத. இரண்டாம். போ. 12);. (செ.அக.);.

     [உல் – தீ, அனல், எரிதல். உல் + கு = உக்கு → உக்குரம் → உக்கிரம் ஒ.நோ. கல் = எரிதல். கல் + கு = சுக்கு → சுக்கிரன், சுக்கி = விண்மீன்.]

 உக்கிரம்2 ukkiram, பெ. (n.)

   இலாமிச்சை (மலை.);; cuscus grass. (செ.அக.);.

 உக்கிரம்3 ukkiram, பெ. (n.)

   இசையுறுப்புகளுளென்று (சிலப்.3, 150 உரை);; limb of a musical piece, one of four Gita-v-uruppu.

உக்கிரவெயில்

 உக்கிரவெயில் ukkiraveyil, பெ. (n.)

   கடுமையான வெயில்; intense heat of the sun.

     [உக்கிரம் + வெயில்.]

உக்கிராணக்காரன்

 உக்கிராணக்காரன் ukkirāṇakkāraṉ, பெ. (n.)

   சரக்கறை மேற்பார்ப்போன்; steward incharge of provisions, store keeper.

   ம. உக்ராண்;   க. உக்ராண்க, உக்ராணதவ;   து. உக்ராண்;தெ. உக்ராணி, உக்கிராபுவாடு.

     [உள் + கரணம் உள் = வீடு, அரண்மனை, கரணம் = மேற்பார்ப்பவன், கணக்கன், காரன் பெயரீறு.]

உக்கிராணம்

 உக்கிராணம் ukkirāṇam, பெ. (n.)

   வீட்டுச் சரக்கறை; store house for provisions, granary (செ.அக.);.

   தெ. உக்ராண க., து. உக்ராண;ம. உக்ராணம். Mar ugrani.

     [உள் + கரணம் – உக்கரணம் → உக்கிராணம் (கொ.வ.); உக்கரணம் பார்க்க;see ukkaramam]

உக்கு

உக்கு1 ukkudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. மேலெழும்புதல்; to rise, go up

   2. பொங்குதல்; to spring.

க., து. உக்கு

     [உ → உகு → உக்கு]

 உக்கு2 ukkudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. மக்கிப்போதல்; to rot, decay, moulder. உக்கின மரம்.

   2. மெலிதல்; to pine away, waste away,

அவள் துக்கத்தால் உக்கிப் போகிறாள் (இ.வ.); (செ.அக);.

ம. உக்குக.

     [உள்கு → உட்கு → உக்கு உள்குதல் = உள்ளொடுங்குதல், உகுத்தல், உட்குதலாம். ஒ.நோ. வெள்கு → வெட்கு → வெட்குதல்.]

 உக்கு3 ukku, பெ. (n.)

   இலவங்கம் (சங்.அக);; clove.

     [உள்கு = உட்கருங்கு, உள்கு → உக்கு.]

உக்குறள்

உக்குறள் ukkuṟaḷ, பெ. (n.)

   குற்றியலுகரம்; shortened ‘ப’

     “உயிர்வரி னுக்குறள் மெய்விட் டோடும்” (நன். 164);. (செ.அக.);.

     [உ + குறள் – குறள் = குறுகியது. உக்குறள் = குறுகிய உகரம்.]

உக்குறுமை

 உக்குறுமை ukkuṟumai, பெ. (n.)

   உகரக் குறுக்கம்; shortened ‘u’ (ஆ.அக.);.

உக்குளான்

 உக்குளான் ukkuḷāṉ, பெ. (n.)

   சருகு தின்னும் முயல்; hare which is supposed to live on dried leaves (W.);. (செ.அக.);.

     [உகுதல் = சொரிதல், வீழ்தல், உகு → உக்கு = கீழே விழுந்த சருகு. உக்கு → உக்குளாள் = சருகு தின்னும் முயல்.]

உக்குவிடு-தல்

உக்குவிடு-தல் ukkuviḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   கரைந்து விடுதல்; to dissove.

     “உப்பியல் பாவையுறையுற்றது போல உக்குவிடு மென்னுயிர்” (கலி. 132.17);.

     [உள்கு = சுருங்குதல், கரைதல், உள்ளு → உக்கு + விடு.]

உக்கெலும்பு

 உக்கெலும்பு ukkelumbu, பெ. (n.)

   மார்பெலும்பு; breast bone, (சா.அக.);.

     [உ- முன்மைச் சுட்டு மார்பைக் குறித்தது, உ + எலும்பு – உக்கெலும்பு.]

உக்கை

 உக்கை ukkai, பெ. (n.)

   எருது; ox. (loc.);. (ஆ.அக.);.

     [உக்கு = உயர்வு, செருக்கு, செருக்குள்ள காளை, உக்கு → உக்கை.]

உங்கண்

உங்கண் uṅgaṇ, வி.எ. (adv.)

   உவ்விடம்; yonder, where the person spoken to is chiefly poetic.

     “தனயரைக் கண்டிரோ வுங்க ணென்ன” (சேதுபு. அக்கினி. 32);.

     [உ + கண் → உக்கண் → உங்கண்]

உங்கன்

 உங்கன் uṅkaṉ, பெ. (n.)

   ஆண்பாற்பெயர்; name of a male person.

ம. உங்கன், தெ. உங்கிம்ப்பு, (உங்குவழு-பரிசு, காணிக்கை);

     [உங்கு-பெருமிதம், எழுச்சி, உங்கு-உங்கன்]

உங்களி-த்தல்

உங்களி-த்தல் uṅgaḷittal,    4. செ.கு.வி. (v.i.)

   1. உம்மென் றொலித்தல்; to utter the exclamatory sound of ‘hum’ expressive of contempt or displeasure.

     “காமர் வில்லாளி யாகி யுங்களித்து” (திருக்காளத்.பு. 6, 39);.

   2. அதட்டுதல்; to rebuke authoritatively, hector, threaten.

   3. உரப்புதல்; to whoop, vociferate inarticulately as when driving cattle or in scaring away birds, beasts, or human beings.

   4. உங்காரஞ் செய்தல்; to utter ‘hum’ expressive of menace.

ம. உங்கு.

உங்காரணை

உங்காரணை uṅgāraṇai, பெ. (n.)

   1. அவுரி; indigo, Indigofera tinctoria. (சா.அக.);

     [உங்காரம் → உங்காரனை.]

உங்காரம்

உங்காரம் uṅgāram, பெ. (n.)

   1. அச்சுறுத்தும் ஒலி (தொனி);; exclamation ‘hum’ expressive of menace.

     “உங்காரத்தி னுரப்பு மோதையாள்” (கந்தபு.அக்கினி, 95);.

   2. வண்டின் ஒலி; buzzing sound, as that made by bees in flight

     “உங்கார மதுகரங்கள்” (பாரத.வசந்த. 3);.

     [உம் + காரம் – உங்காரம்.]

உங்கு

உங்கு uṅku, பெ. (n.)

   சங்கில் விட்டு ஊற்றப்படும் பால்; milk in conch.

     “உங்கு சாப்பிடுகண்ணா:உங்கு.”

     [இங்கா-உங்கா-உங்கு]

 உங்கு1 uṅgu,    வி. எ. (adv.) உவ்விடம் (கந்தபு. உமைவரு. 31); yonder, where the person spoken to is

     [உ → உங்கு (முன்மைச் சுட்டு);.]

 உங்கு2 uṅgu, பெ. (n.)

   முன்னிலையில்;   முன்பு; in the presence of, in front of.

     [ஊங்கு → உங்கு ஒ.நோ. ஊது → உது.]

உங்குணி

 உங்குணி uṅguṇi, பெ. (n.)

   பெருங் கிளிஞ்சில் எனப்படும் நீலநிறக் கடல்மீன்; bluish sea-fish.

     [உ → உங்குணி]

உங்கை

உங்கை uṅgai, இடை (part)

   1. உன் தங்கை; your sister younger than you.

     “மூக்குங்கையரியுண்டாள்” (கம்பரா. சூர்ப்பன. 125);.

   2. உன் தாய்; your mother.

     [உன் + கை = உங்கை கை = இளையள், மெல்லியன், பெண். ஐ = மென்மை, அழகு. ஐ → கை (மென்மையுடைவள்);.]

உங்ஙன்

உங்ஙன் uṅṅaṉ, வி.எ. (adv)

   1. உவ்வாறு in the way you do.

   2. உவ்விடம்; in the place where you are

     “என் தனயரைக் கண்டிரோ உங்ஙன் (சேதுபு அக்கினி-32);

     [ஊங்கு → ஊங்கண் → உங்கண் → உங்கள் → உங்ஙன் (மு.தா. 32.);]

 உங்ஙன் uṅṅaṉ, வி.எ. (adv.)

   1. அத்தன்மை; thus, so, in that way.

   2. இத்தன்மை; thus, so, in this way.

   3. உத்தன்மை; thus, so, this or that (intermediate); way.

     [ஊங்கண் → உங்கண் → உங்கள் → உங்கள்2.]

உசகம்

 உசகம் usagam, பெ. (n.)

   ஆமணக்கு (சங். அக.);; castor-plant. (செ.அக.);.

     [ஒருகா. உச்சகம் → உசகம் = உயரமாக வளரும் செடி.]

உசத்தி

உசத்தி usatti, பெ. (n.)

   1. உயர்த்தி;   உயரம்; height உயர்த்தி பார்க்க;see uyartti

     [உயர்த்தி → உசத்தி]

உசனன்

உசனன் usaṉaṉ, பெ. (n.)

   வெள்ளி;   சுக்கிரன் (கம்பரா. ஆறுசெல். 6);; venus (செ.அக.);.

     [ஒருகா. உசல் → உசன் → உசனன்.]

உசனார்

உசனார் usaṉār, பெ. (n.)

உசனன் பார்க்க (பாரத.குரு. 23);;see usanan (செ.அக.);.

உசரம்

உசரம் usaram, பெ. (n.)

   உயரம்; height, elevation ‘நாலுதோரை உசரத்து’ (S.I.I. ii, 134);.

     [உயர் → உயரம் → உசரம் (கொ.வ.);, உயரம் பார்க்க;see uyaram.]

உசரி

 உசரி usari, பெ. (n.)

முள்ளி a thorny shrub in common

     [ஒருகா உத்தரி → உச்சரி → உசரி அரிதல் = குத்துதல், புண்படுத்துதல்.]

உசற்காலம்

 உசற்காலம் usaṟkālam, பெ. (n.)

   விடியற்காலம் (யாழ். அக.);; dawn (செ.அக.);.

     [ஊசல் → உசல் + காலம், ஊசல் = மேலெழுதல், கிழக்கிற் கதிரொளி தலைகாட்டுதல்.)

உசல்

உசல் usal, பெ. (n.)

   1. விடியல்; dawn.

   2. ஒருவகை மரம்; a kind of tree.

     [ஊசல் = மேல்வருதல், ஒளி மேலெழும்புதல், ஊசல் → உசல். Skt usai]

உசவு

உசவு1 usavudal,    5 செ.குன்றாவி (v.t.)

   1. சிந்தித்தல்;   கலந்தாய்தல்; to consider, to think and decide to sculinize.

     “ஏவவென் றுசவியே” (பாரத. பதினேழாம். 221);.

   2. வேவுபார்த்தல்; to spy. to discern by careful observation.

     [உசாவு → உசவு.]

 உசவு2 usavudal,    5 செ.கு.வி. (v.i.)

   உசாவா நிற்கும்; to enquire, to ask question ‘தனிக் குருகுசவு’ (கலித். 121-15.); (சங்,இலக்.சொற்.);

     [உசாவு → உசவு..]

 உசவு3 usavu, பெ. (n.)

   எந்திரங்கட்கட்டும் களியுமெண் ணெயுஞ் சேர்ந்த கட்டு (சீவக.78 6, உரை.);; grease (ஆ.ஆக.);.

     [மசகு → முசகு → உசகு → உசவு.]

உசா

உசா1 ucā, பெ. (n.)

   1. ஆராய்ச்சி; enquiry, investigation, question.

     “சான்றோருசாப் போல” (தொல். பொருள். 285. உரை);.

   2. ஒற்றன் (திவா.);; spy.

     [உசாவு → உசா.]

 உசா2 ucā, பெ. (n.)

   மூக்குத்திச்செடி; pointed leaved hogweed. (L); (செ.அக.);.

     [உச்சம் → உசை → உசா.]

உசாக்காலம்

 உசாக்காலம் ucākkālam, பெ. (n.)

   கதிரவன் தோன்ற லுக்கு நான்கு கடிகை முற்பட்ட காலம்; dawn, time of day before day break

     [உசா + காலம்.]

உசாக்கேட்டல்

 உசாக்கேட்டல் ucākāṭṭal, தொ.பெ. (vbl.n.)

   கருத்துரை கேட்டல்; investigation, consultation. (ஆ.அக.);.

     [உசா + கேட்டல்.]

உசாக்கையர்

உசாக்கையர் ucākkaiyar, பெ. (n.)

   கருத்துரை வழங்கு வோர்; consultant, investigator.

     “உசாக்கைய ரொருங்கு போனார்” (இரகு. அயனெ.12);. (செ.அக.);

     [உசாவு → உசா + உசாக்கை + அர்.]

உசாதல்

 உசாதல் ucātal,    தொ பெ (vbl.n.) வினாவுதல்; questioning.

     [உசாவுதல் + உசாதல்.]

உசாத்துணை

உசாத்துணை ucāttuṇai, பெ. (n.)

   உற்ற துணைவன் (திருக்கோ. 400 வரை);; best adviser, reliable friend, faithful companion, congenial comrade. (செ.அக.);.

     [உசாவு → உசா → துணை.]

உசாவடி

உசாவடி ucāvaḍi, பெ. (n.)

   உட்பிரிவு; separation into smaller parts, subdivision (i.m.p.tj 894);. (செ.அக.);.

     [உசாவு + அடி.]

உசாவல்

உசாவல் ucāval, பெ. (n.)

   1. ஆராய்தல்; investigating.

   2. எண்ணல்; thinking, considering.

   3. வினாவல்; questioning.

     [உசாவு → உசாவல்.]

உசாவு-தல்

உசாவு-தல் ucāvudal,    5. செ.குன்றாவி. (v.t) 1. சிந்தித்தல்; to consider, to take counsel with oneself, deliberate.

     “அரசியலுசாவி” (பாரத. வாரணா. 128);.

   2. கேட்டறிதல்; to enquire or investigate.

     “உசாவுகோ வைய சிறிது” (கலித் 7-4);.

   3. செவியுறுதல் (ஆ.அக.);; to hear to listen, உரைத்தமையனைவரு முசாவி” (விநாய கபு. 75, 84);.

     [உல் = பொருந்துதல் கருத்து. உல் → உல → உலவு → உலாவு → உசாவு, பிறரோடு பொருந்துதல், கலத்தல், சென்றுவரல், பிறரோடு கலந்து கருமம் மேற்கொள்ளல், ஆராய்தல், பேசு தல், வினாதல். உலாவு → உசாவு, தி.நோ. அலை → அசை → அசைவு → அசா. உசாவு என்னும் வினை வடபுலத்திலும் வேரூன்றி வழக்குப் பெற்றதால் வடமொழியிலும் உசாவு – உவாசு எனத் திரிந்து பெருக வழங்கலாயிற்று.]

உசாவுந்துணை

உசாவுந்துணை ucāvunduṇai, பெ. (n.)

   துன்பம் தீரக் கேட்டறியும் துணை கேள்வித்துணை; counsel, adviser consultant.

     “..உளையான் உற்றது உசாவுந்துணை” (கலித். 136.25);. (சங்.இலக்.சொற்.);.

     [உசாவும் + துணை.]

உசிப்பி-த்தல்

உசிப்பி-த்தல் usippittal,    5. செகுன்றாவி, (v.t.)

   1. சேர்த்தல்; to unite, associate, to join with another.

     “உன்னிடத் தெங்களை யுசிப்பித்துக் கொள்வாய்” (திருக்காளத்.பு. காளன், 60);.

     [உய் → உய்ப்பி → உயிப்பி → உசிப்பி → உசிப்பி-த்தல், (கொ.வ.); உய்ப்பி-த்தல் பார்க்க see uyppl-,]

உசிர்

உசிர் usir, பெ. (n.)

   உயிர்; life animal or vegetable.

     “உசிர்க்கொலை பல நேர்ந்து” (தேவா. 918, 3);.

   க. உசிர்;   து., தெ. உகரு;பட உசரு.

     [உயிர் → உசிர் (கொ.வ.);. உயிர்பார்க்க see uyir.]

உசிலம்

 உசிலம் usilam, பெ. (n.)

உசில் பார்க்க (மலை.);;see usil. (செ.அக.);.

     [உசில் → உசிலம்.]

உசிலரைப்பு

 உசிலரைப்பு usilaraippu, பெ. (n.)

   அரைப்புப்பொடி; powder made of dried sirissa leaves.

     [உசில் + அரைப்பு.]

உசிலி

உசிலி1 usilittal,    4. செகுன்றாவி. (v.t.)

   கம்பாப்பொடி கலந்து தாளித்தல்; to prepare with condiments as curry.

     [உசில் → உசிலி → உசிலி-த்தல் = உசிலைசேர்த்துத்தாளித்தல்.]

 உசிலி2 usili, பெ. (n.)

   கடலை அல்லது தவசங்களை வேகவைத்துப்பொடிதாவினகறி (இ.வ.);; bolled pulse

   க. உசலி, உசளி, உசளெ. உகளெ;   தெ. உசல்; Mar. usal.

     [உசில் → உசிலி.]

உசிலை

 உசிலை usilai, பெ. (n.)

   அரைப்புப்பொடி சீக்கிரி; black sirissa (செ.அக.);.

     [உசில் → உசிலை.]

உசில்

உசில் usil, பெ. (n.)

   ஒரு மரம்; a tree உசிலங்கோடு. (தொல். எழுத். 405. உரை);.

     [உசல் → சில்.]

உசீரம்

உசீரம் ucīram, பெ. (n.)

   இலாமிச்சை வேர்; cuscuss. Root.

     “சந்தன முசீரங் கோட்டம்” (திருவாலவா.43.16);. (செ.அக.);.

     [உசில் → உசிலம் →→ உசிரம் → உசீரம்.]

உசு

உசு1 usuttal,    4 செ.கு.வி. (v.i.)

துளைத்தல் to bore, punch.

     [உளு → உசு]

 உசு2 usu, பெ. (n.)

   மரத்தைத் துளைக்கும் புழு; wood worm.

ம. உளும்பு

     [உல் → உள் → உளு → உசு.]

தொல்காப்பியர் காலத்தில் குறிலடுத்த உச்சகாரம் இரண்டே சொற்களில் ஆளப்பட்டது என்பதற்குச் சான்றாக உசு, முக என்னும் இரு சொற்களை உரையாசிரியர் மேற்கோள் காட்டி னர்.

     “உச்சகாரம் இருமொழிக் குரித்தே” (தொல். எழுத்.75);.

உசுக்கல்

 உசுக்கல் usukkal,    தொ. பெ. (vbl.n.) ஏவுதல்; driving, as of a dog to an object or person. (ஆ.அக.).

உசுப்பு

உசுப்பு1 usuppu, பெ. (n.)

   உடற்கழிவு; dung. Faeces. (Tinn); (செ.அக.);.

     [உல் → உலுப்பு → உசுப்பு.]

 உசுப்பு2 usuppudal,    5 செ.குன்றாவி, (v.t.)

   1. எழுப்புதல்; to rouse, wake up;

 to urge, as dogs.

   2. வெருட்டுதல்; to frighten, to drive away as birds.

     [உசும்பு → உகப்பு → உசுப்பு-தல், உசும்பு (த.வி.); → உசுப்பு (பி.வி.);.]

உசும்பு-தல்

உசும்பு-தல் usumbudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. அசைதல் to move, stir, to be in motion as wind-

   5. செ. குன்றாவி, (v.t.);

   . அதட்டுதல்; to rebuke, rant, hector.

     “மாக்கள திர்ப் பினுகம்ப” (பெருங். மகத 13,59);. (செ.அக.);.

     [உல் → உலு → உலும்பு → உசும்பு.]

உசுலாத்திமாடு

 உசுலாத்திமாடு usulāttimāṭu, பெ. (n.)

   அதிமாகப் பால் கொடுக்கும் மாடு; a kind of a big cow, giving plenty of milk as from Gujarat (செ.அக.);.

     [உகலாத்தி + மாடு. உசல் → உசுப்பு – அதிகப்படுத்து. உசுல் → உகலாத்தி = சுரப்பு மிகுந்த. அதிகமாகப் பால் தருகின்ற.]

உசுல்

உசுல் usul, பெ. (n.)

   1. துளைத்தல்; piercing

   2. தோண்டியெடுத்தல் பறித்தெடுத்தல்; digging out, pluckingout.

   3. விளைந்தவற்றில் அரசனுக்குரியபங்கா கப் பெறல் வரிப்பணம் தண்டுதல்; collecting tax.

     [உச → உசல்.]

உச்ச

உச்ச3 ucca, பெ. (n.)

   பித்தன்; mad man, mentally

 Retarded.

   ம, உச்சு;க. உச்சு.

     [உய்த்து → உத்து → உச்சு =அறிவிழந்தவன். நினைவு தப்பியவன்.]

உச்சகாரம்

 உச்சகாரம் uccakāram, பெ. (n.)

     “சு” எனும் எழுத்து;

 the letter “cu”

     [உ+ச-சு]

 உச்சகாரம் uccakāram, பெ. (n.)

   உகரமூர்ந்த சகர எழுத்து, ‘சு’; letter ‘cu’ being a vowel consonant of the combination ‘u’ and ‘c’ (பாண்டி.அக.);.

     [உ + சகாரம்.]

உச்சக்கோள்

 உச்சக்கோள் uccakāḷ, பெ. (n.)

   உச்ச நிலையடைந்த கோள்; planet occupying an exalted position or sign in the zodiac (astrol);. (ஆ.ஆக.);.

     [உச்சம் + கோள்.]

உச்சசந்தி

 உச்சசந்தி ussasandi, பெ. (n.)

   உச்சநிலைக் கோள்களின் சந்திப்பு; superior conjunction of planets. (Astrol); (C.G.);

     [உச்சம் → உச்ச + சந்தி.]

உச்சடம்

உச்சடம்1 uccaḍam, பெ. (n.)

   1. ஓர் புல்; a kind o cyprus.

   2. ஓர்வகை வெள்ளைப் பூண்டு; a kind of garlic.

   3. குன்றிமணி; Indian liquorice.

   4. சரளங்காய்; Indian plum (சா.அக.);.

     [ஒருகா. ஒள் + சடம் – ஒச்சடம் → உச்சடம்]

 உச்சடம்2 uccaḍam, பெ. (n.)

   1 சினம்; anger.

   2. விரைவு:

 Speed.

     [உச்சம் → உச்சடம்.]

உச்சடை

உச்சடை1 uccaḍai, பெ. (n.)

   1. நறுமணப்புல்; fragrant grass,

   2. ஒருவகைக் கிழங்கு; edible tuber, root edible.

   3. சிறுநெல்லிச் செடி; plant.

க. உச்சடெ

     [உச்சடம் → உச்சலட.]

 உச்சடை2 uccaḍai, பெ. (n.)

   1. ஆகுலம் (இடம் பாசாரம்);; foppishness, 2 வெள்ளுள்ளி;

 garlic,

   3. வட்டக்கோரை; a kind of grass.

   4. சீற்றம்; anger

   5. வழக்கம் habit

     [உச்சடம் → உச்சடை.]

உச்சட்டம்

உச்சட்டம் uccaṭṭam, பெ. (n.)

   1. நேர்மை, straightness,

   2. இலக்கு; mark (செ.அக.);.

     [உச்சம் → உச்சட்டம் அட்டம் = தன்மை கட்டிய பெயர் ஈறு.]

உச்சட்டை

உச்சட்டை uccaṭṭai, பெ. (n.)

   ஒல்லி; thinness, senderness (Loc.);.

   2. ஒஞ்சட்டை பார்க்க;see orijattal

     [ஒஞ்சட்டை → உஞ்சட்டை → உச்சட்டை.]

உச்சண்டம்

உச்சண்டம்1 uccaṇṭam, பெ. (n.)

   கடுமையான தீவிர மானது; lerocious, இது உச்சண்ட மாகாளி கோவில் (உ.வ.);.

க. உச்சண்ட

     [உச்சி → உச்சம் → உச்சண்டம்.]

உச்சதசை

 உச்சதசை ussadasai, பெ. (n.)

உச்சத்திசை பார்க்க see ucca-t-tisai.

     [உச்சம் + தசை]

உச்சதரு

 உச்சதரு uccadaru, பெ. (n.)

   தென்னை (பச்.மு.);; coconut tree.

     [உச்சம் → உச்ச + தரு. உச்சம் = உயரம். உச்சதரு = உயரமான மரம்]

உச்சத்தலம்

 உச்சத்தலம் uccattalam, பெ. (n.)

   உச்சி; pate, crown of head;

 top summit.

     ‘உச்சத் தலத்திடை நிற்ப தபாணன்’

     [உச்சம் + தலம்.]

உச்சத்தானம்

 உச்சத்தானம் uccattāṉam, பெ. (n.)

உச்சக்கோள் பார்க்க;see uccakkol.

     [உச்சம் + தானம்.]

உச்சத்தாவு

 உச்சத்தாவு uccattāvu, பெ. (n.)

   கோளின் (கிரகத்தின்); உயர்நிலை; exalted position of a planet.

     [உச்சம் + தாவு.]

உச்சத்திசை

 உச்சத்திசை ussattisai, பெ. (n.)

   நற்பேற்றுநிலை (நல்லாகூழ்நிலை);; prosperous period, the highest point of success;

 good fortune.

     [உச்சம் + திசை.]

உச்சநிலைநாள்

 உச்சநிலைநாள் uccanilaināḷ, பெ. (n.)

   மாழ்கு (மிருகசீரிடம்);, நெய்ம்மீன் (சித்திரை);, பறவை (அவிட்டம்); என்ற மூன்று நாண்மீன்கள்; three stars Mirugaciridam Cittirai. Avittam.

     [உச்சம் + நிலை + நாள்.]

உச்சநீதிமன்றம்

 உச்சநீதிமன்றம் uccanītimaṉṟam, பெ. (n.)

   நாடு முழுமைக்குமான தலைமை நீதிமன்றம்; supreme Court.

     [உச்சம்+நீதி+மன்றம்]

உச்சந்தமா-தல்

 உச்சந்தமா-தல் uccandamātal, பெ. (n.)

செ.கு.வி. (v.i.);

   தணிதல்; to be past the highest point, to be lessening, as rain, to become mitigated, as diseases(J.);.

     [உச்சம் + அந்தம் + ஆ-தல், அந்தம் சொல்லாக்க ஈறு.]

உச்சந்தம்

உச்சந்தம் uccandam, பெ. (n.)

   1. விலையுயர்வு; being at the highest price in the market

   2. தணிவு; decline, after the height or crisis is past.

   3. அதிகப்படுதல்; being increased. (ஆ.அக.);

     [உச்சம் → உச்சந்தம்.]

உச்சந்தலம்

 உச்சந்தலம் uccandalam, பெ. (n.)

உச்சந்தலை பார்க்க see uccantalai (சா.அக.);.

உச்சந்தலை

உச்சந்தலை uccandalai, பெ. (n.)

   1. தலையின் உச்சி (ஆசாரக்.6);; crown of head;

 pate.

   2. நடுத்தலை; the top of the head;

 the point on the surface of the skull at the junction of the coronal and saggital sutures-Bregma (சா.அக.);.

ம. உச்சதல்.

     [உச்சம் + தலை]

உச்சனிமாகாளி

உச்சனிமாகாளி uccaṉimākāḷi, பெ. (n.)

   1. உச்சயனி நகரத்திலுள்ள காளிதேவி; guardian goddess of the ancient city of Ujjain.

   2. ஒரு சிற்றூர்த் (கிராம); தேவதை; village goddess. (Tinn);. (செ.அக.);.

     [உச்சயினி → உச்சளி + மாகாளி.]

உச்சன்

உச்சன்1 uccaṉ, பெ. (n.)

   விளையாட்டில், குறிவைத் தெறியும் கல், விதை முதலியவற்றுள் ஒன்று; cowrie, arecanut or tamarind seed, used for pitching in games (J.);. (செ.அக.);.

     [ஒச்சு → உச்சு → உச்சன்.]

 உச்சன்2 uccaṉ, பெ. (n.)

   1. ஒரைச் சக்கரத்தில் தன் உச்சநிலையில் நிற்கும் கோள் (பஞ்.);; planet in its exalted sign of the zodiac.

   2. நெட்டையானவன்; tall man. (சா.அக.);.

ம. உச்சன்.

     [உ → உச்சன்.]

 உச்சன்3 uccaṉ, பெ. (n.)

   பித்தன்; madman.

   க. உச்சு;தெ. உச்சு.

     [உச்சு → உச்சன்.]

உச்சம்

உச்சம்1 uccam, பெ. (n.)

   1. உயரம் (திவா.);; height elevation, altitude.

   2. உச்சந்தலை; extreme top, overhead.

   3. தலைக்கு நேரான வான்முகடு; zenith, meridian, position overhead.

     “வெங்கதி ருச்சமாம் பொழுது” (காஞ்சிப்பு. பன்னிரு. 341);.

   4. சிறப்பு; excellence, superiority.

     “உச்ச மாணிக்கத்தாலே” (இராமநா. பாலகா 17);.

   5. வல்லிசை (திவா.);. treble.

   6. கோள் நிலையுளொன்று (விதான நட்பா, 21);; exated position of a planet one of five kiraga-nilai.

   7. அறுதியளவு; extreme limit,

தோணி உச்சவோட்டு ஓடிற்று.

   8. நுனி; edge.

   9. முனை; brink.

   10. நண்பகல்; noon, midday.

   11. உயர்வு; Supremacy.

   ம. உச்சம்;   க. உச்ச.; Sktucca

     [உ → உச்சி → உச்சம்]

 உச்சம்2 uccam, பெ. (n.)

   1. எண்வகைப் பாடற் பயன்களுள் ஒன்று. (சிலப்.16 உரை);; one of eight padar-payan;

 effect of music.

   2. புணர்ச்சி வகையுள் ஒன்று (கொக்கோ. 3,5);; mode of sexual union (செ.அக.);.

     [உச்சி → உச்சம்.]

உச்சம்போது

உச்சம்போது uccambōtu, பெ. (n.)

நடுப்பகல், lit time when the sun is in meridian, noon, midday.

     “உச்சம் போதே யூரூர் திரிய” (தேவா. 298,9.);.

     [உச்சம் + (பொழுது); போது.]

உச்சம்போழ்து

 உச்சம்போழ்து uccambōḻtu, பெ. (n.)

   உச்சம்போது பார்க்க;

உச்சயம்

உச்சயம் uccayam, பெ. (n.)

   1. குவியல்; heap.

   2. வாழைக்காய்; unripe plantain fruit

     [உச்சம் → உச்சயம்.]

உச்சயினி

உச்சயினி uccayiṉi, பெ. (n.)

   ஒரு நகரம் (காஞ்சிப்பு. தீர்த். 75);; ancient city of Ujjain, formerly the capital of king Vikramaditya.

உச்சரம்

 உச்சரம் uccaram, பெ. (n.)

உட்பருப்பு சிறியதாயும் வெளி ஓடு பெரிதாகவும் உள்ள தேங்காய்,

 coconut with a thick shell and thin kernal.

ம். உச்சரம்.

     [உ → உச்சு → உச்சரம்.]

உச்சராசி

உச்சராசி uccarāci, பெ. (n.)

   1. கோள் உச்சத்திலிருக்கப் பெற்ற ஓரை (இராசி);;   2. ஆகூழ் ஒரை (அதிட்ட ராசி); (CG);; tortunate natal Sign.

     [உச்சம் + ராசி. Skt rasi → த. ராசி. உச்சவோரை பார்க்க See ucca-Vorai]

உச்சரி-த்தல்

உச்சரி-த்தல் uccarittal,    4. செ.கு.வி. (v.i.)

   1. இதழ் முதலியவற்றின் தொழில்களால் எழுத்துகளைப் பிறப்பித்தல்;   பலுக்குதல்; to pronounce, enunciate, articulate with the organs of speech.

   2. ஓதுதல்; worship, pray.

     “அஞ்செழுத்தை விதிப்படி உச்சரிக்க” (சி.சி. 9, 1);.

உச்சரிப்பு

உச்சரிப்பு uccarippu, பெ. (n.)

   1. உச்சரிக்கை;   பலுக்கல்; pronunciation.

   2. எழுத்தினோசை (ஆ.அகs.);; sound of a letter.

க. உச்சார.

     [உத்து → உச்சு → உச்சரி → உச்சரிப்பு.]

உச்சல்

 உச்சல் uccal, பெ. (n.)

   கரிய மச்சம்; black mole. (சேரநா.);.

ம. உச்சல்.

     [உச்சு → உச்சல்.]

உச்சவம்

உச்சவம் uccavam, பெ. (n.)

   1. விழா (திவா.);. festival. festivity.

   2. செல்வம்; prosperty.

     “மாவுச்சவ மாபத்தும்” (ஞானவா. உபசா.12);.

   க. உச்சவ; Skt. Utsava

     [உத்தம் = மேலெழுதல், மனம் பொங்குதல், மகிழ்ச்சியுண்டா தல். உத்தம் → உத்தவம் → உச்சவம், உத்தவம் பார்க்க;see ustavam.]

உச்சவீடு

 உச்சவீடு uccavīṭu, பெ. (n.)

   உதயத்துக்கேழாமிடம்; exalted sign of a planet (சா.அக.);.

     [உச்சம் → வீடு.]

உச்சாடம்

 உச்சாடம் uccāṭam, பெ. (n.)

   கடுஞ்சினம் பொங்கும் மனநிலை; furious mentality.

அவன் உச்சாடமாக இருக்கிறான். பேச்சு கொடுக்காதே.(மீனவ);

     [உச்சி-உச்சாளம்-உச்சாடம்]

உச்சாணி

 உச்சாணி uccāṇi, பெ. (n.)

   எல்லாவற்றினும் உயரமானது; highest point, top, summit;

உச்சாணிக் கொம்பி லிருந்து விழுந்தான், உச்சாணிக்கிளை. (உ.வ.);

     [உச்சி → உச்சாணி.]

உச்சாயம்

உச்சாயம் uccāyam, பெ. (n.)

   1. உயர்வு stateliness, loftiness, dignity.

     “உச்சாயமாக முகமன்கள் உரை செய்து”‘ (நல். பாரத. ஆசிரமவாச. வனம்புகு. 163);

   2. மனவெழுச்சி;   ஆர்வம்;   ஊக்கம்; enthusiasm.

     [உ → உத்தம் → உத்தாயம் → உச்சாயம். உத்தாயம் பார்க்க See Uttayam.]

உச்சாரணை

உச்சாரணை uccāraṇai, பெ. (n.)

உச்சரிப்பு பார்க்க (வீரசோ. யாப். 35.); see uccarppu

க. உச்சரன, உச்சாரன.

     [உ → உந்து → உத்து → உத்தாரம் (குரலையுயர்த்தி உரத்துச் சொல்லுதல்); → உச்சாரம் → உச்சாரணம் → உச்சாரணை.]

உச்சாரம்

உச்சாரம்1 uccāram, பெ. (n.)

உச்சரிப்பு பார்க்க (சி.சி. 4.35 மறைஞா);;see uccarippu.

க. உச்சார,

     [உ → உந்து → உத்து (குரலை உயர்த்து); உத்தாரம் → உச்சாரம் (உரத்துச் சொல்லுதல்);.]

 உச்சாரம்2 uccāram, பெ. (n.)

   1. உயர்ச்சி (யாழ்.அக.);; height.

   2. மேன்மை;   வளர்ச்சி; development.

     [உ → உந்து → உத்து → உத்தம் (உயர்வு); → உத்தாரம் → உச்சாரம்.]

உச்சி

உச்சி1 ucci, பெ. (n.)

   1. முகடு;   உயர்வு; height, summit, meridian.

   2. தலை; head.

   3. நடுப்பகல் (பிங்.);; midday, high noon,

உச்சிப்பொழுது ஆகிவிட்டது (உ.வ.);.

   4. ஆண்மயிர்; hair of male.

   5. எல்லை; limit, border,

 boundary.

   6. குடுமி; tuft of hairs.

   7. தலைக்கு நேரிடம்; zenith.

   க., ம., தெ., உச்சி;து. உச்ச.

     [உ → உத்து → உச்சு → உச்சி.]

 உச்சி2 ucci, பெ. (n.)

   நாய் (பிங்.);; dog (Onom. Imit. of beckoning sound ‘cu’.);.

உச்சிகாய்-தல்

உச்சிகாய்-தல் uccikāytal,    2 செ.கு.வி. (v.i.)

   அறிவிழத்தல்; to lose sense.

     [உச்சி + காய்.]

உச்சிகாய்ந்தவன்

 உச்சிகாய்ந்தவன் uccikāyndavaṉ, பெ. (n.)

   அறிவிழந்தவன்; tool.

அவன் ஒரு உச்சி காய்ந்தவன்.

     [உச்சி + காய்ந்தவன்.]

உச்சிகுளிர்-தல்

உச்சிகுளிர்-தல் ucciguḷirtal,    2. செ.கு.வி. (v.i.)

   மகிழ்வடைதல்; lit cooling of the head, fig to feel happy, to be highly pleased, delighted.

     ‘அப்பா என்றால் உச்சி குளிருமோ’ (ஈடு. 4.3. ப்ர.ஜீ);. (செ.அக.);.

உச்சிக் கொண்டை

உச்சிக் கொண்டை uccikkoṇṭai, பெ. (n.)

   1. உச்சிமுடி; tuft or braid of hairs on the crown of one’s head.

   2 சேவல் முதலியவற்றின் தலைச்சூட்டு; cockscomb. crest as of a cock. (ஆ.அக.);.

     [உச்சி + கொண்டை.]

உச்சிக்கடன்

உச்சிக்கடன் uccikkaḍaṉ, பெ. (n.)

   நண்பகல் கடமை (கூர்மபு. நித்தியகண். 15);; midday worship or prayers

     [உச்சி + கடன்.]

உச்சிக்கரண்டி

 உச்சிக்கரண்டி uccikkaraṇṭi, பெ. (n.)

   குழந்தைகளுக்கு உச்சியில் எண்ணெய் விடுஞ் சிறுகரண்டி; small spoon that is used when pouring oil on the head of a baby.

     [உச்சி + கரண்டி. உச்சியில் எண்ணெய் தேய்த்தற்குரிய சிற்றளவுள்ள கரண்டி]

உச்சிக்கரண்டியளவு

 உச்சிக்கரண்டியளவு uccikkaraṇṭiyaḷavu, பெ. (n.)

   தேயிலைக் கரண்டியளவு; tea spoonful.

     [உச்சி + கரண்டி + அளவு.]

உச்சிக்கலயம்

உச்சிக்கலயம் uccikkalayam, பெ. (n.)

   1. அடுக்கின் மேலிருக்கும் மட்பானை; pot which is on top (ஆ.அக.);.

   2. சிறிய மட்பானை,

 small pot.

     [உச்சி + கலயம்]

உச்சிக்கவாஅன்

உச்சிக்கவாஅன் uccikkavāaṉ, பெ. (n.)

   குன்றத்துச்சியின் பக்கம்; side of a peak,

     “வறன் பொருந்து குன்றத்து

உச்சிக்கவாஅன்” (நற். 92-4);.

     [உச்சி + கவாஅன்.]

உச்சிக்காலம்

உச்சிக்காலம் uccikkālam, பெ. (n.)

   1. நண்பகல்; mid.

 day.

   2. கோயிலின் நண்பகல் (மத்தியான); பூசை; noon

 service in the temple.

     [உச்சி + காலம்.]

உச்சிக்கிழான்

உச்சிக்கிழான் uccikkiḻāṉ, பெ. (n.)

   கதிரவன்; sun,

 lit lord of the zenith.

     “உச்சிக்கிழான் கோட்டம்” (சிலப். 9.11);. (செ.அக.);.

     [உச்சி + கிழான்.]

உச்சிக்குடுமி

 உச்சிக்குடுமி uccikkuḍumi, பெ. (n.)

   ஆடவரின் தலையில் சுற்றிலும் மழித்து உச்சந்தலையில் மட்டும் மழிக்காமல் விடப்படும் மயிர்க் கற்றை; crest, hair-tuft on the centre of the head.

ம. உச்சிகுடும்.மி.

     [உச்சி + குடுமி. கொடி (மேற்பகுதி உயர்ந்திருப்பது); → கொடிமி → குடுமி.]

உச்சிக்குருடன்

 உச்சிக்குருடன் uccikkuruḍaṉ, பெ. (n.)

   குள்ளன்; dwarf.

ம. உச்சிக்குருடன்.

     [உச்சி + குருடன்.]

உச்சிக்குழி

 உச்சிக்குழி uccikkuḻi, பெ. (n.)

   துளை குழந்தையின் தலையுச்சிப் பள்ளம் (ஆ.அக.);; mbranous dent or depression in an infant’s head, fontanelle.

     [உச்சி + குழி]

உச்சிக்குழிகை

 உச்சிக்குழிகை uccigguḻigai, பெ. (n.)

உச்சி விழுகை பார்க்க;see ucci-vilugai (சா.அக.);.

     [உச்சி + குழிகை.]

உச்சிக்கொடி

 உச்சிக்கொடி uccikkoḍi, பெ. (n.)

   புல்லுருவி; parasitic plant. (சா.அக.);.

     [உச்சி + கொடி.]

உச்சிக்கொம்பன்

உச்சிக்கொம்பன் uccikkombaṉ, பெ. (n.)

   1. உச்சியில் நிமிர்ந்த கொம்புள்ள மாடு; bull or cow that has erect horns near together.

   2. கல்யானை (காண்டா விலங்கு);; rhinoceros, from its having one straight horn.

     [உச்சி + கொம்பன்

உச்சிக்கொம்பன் என்பதற்குக் கல்யானை (காண்டா மிருகம்); என மற்றொரு பொருளைப் பிற அகரமுதலிகள் கூறியிருப்பது பொருத்தமாக இல்லை. ஏனெனில் கல்யானைக்குக் கொம்பு மூக்கின் மேல் உள்ளது. உச்சி என்னும் சொல் தலை உச்சியையே சிறப்பாகக் குறிப்பது. சிந்துவெளி முத்திரையில் மாட்டு வகையைச் சார்ந்த உச்சிக் கொம்பன் (unicom); பொறிக் கப்பட்டுள்ளதை ஒப்புநோக்குக. சா. அகர முதலியில் நிமிர்ந்த கொம்புள்ள மாடு எனப்பொருள் கூறப்பட்டிருப்பது பொருத்த மாகத் தெரிகிறது.);

     [P]

உச்சிசந்தி

 உச்சிசந்தி ussisandi, பெ. (n.)

   உச்சிக்காலப் பூசை; noon service in the temple. (செ.அக.);.

     [உச்சி + சந்தி]

உச்சிச்சமயம்

 உச்சிச்சமயம் ucciccamayam, பெ. (n.)

   நண்பகல்; midday. (ஆ.அக.);.

     [உச்சி + சமயம்.]

உச்சிச்சுட்டி

 உச்சிச்சுட்டி ucciccuṭṭi, பெ. (n.)

   குழந்தைகளின் தலையணி வகை; ornament for the forehead of children. (செ.அக.);.

     [உச்சி + சுட்டி.]

உச்சிச்செடி

 உச்சிச்செடி uccicceḍi, பெ. (n.)

   புல்லுருவி; Indian mistletoe (செ.அக.);.

     [உச்சி + செடி.]

உச்சிச்செடில்

 உச்சிச்செடில் uccicceḍil, பெ. (n.)

   செடிலாட்டம்; hook – swinging. (செ.அக.);.

     [உச்சி + செடில்.]

உச்சிச்செலுந்தில்

 உச்சிச்செலுந்தில் uccicceluntil, பெ. (n.)

   ஒருவகை மரம்; a kind of tree.

     [உச்சல்+இலந்தை]

உச்சிட்டம்

உச்சிட்டம் ucciṭṭam, பெ. (n.)

   1. எச்சில் பண்டம் (பிங்.);; unconsumed food remaining after one had eaten, . regarded as being unclean and unfit to be eaten by another.

   2. மிச்சில்; that which is left, refuse.

     “உச்சிட்டம் மென் றுலகினை யுண்கிலார்” (கந்தபு. வீரபத்.41);.

     [எச்சில் → உச்சில் → உச்சிட்டம்.]

உச்சிதபண்டம்

 உச்சிதபண்டம் uccidabaṇṭam, பெ. (n.)

   தகுதியாகச் செய்த பண்டம்; delicious thing;

 preparation high pleasing to the taste. (சா.அக.);.

     [உத்து → உத்தித → உச்சித + பண்டம், உத்து = பொருந்து. உத்தித = பொருந்திய, ஏற்ற, தகுந்த.]

உச்சிதம்

உச்சிதம்1 uccidam, பெ. (n.)

   1. உயர்ச்சி; height.

   2. அழகு (சா.அக.);; beauty.

   3. அரியது (ஆ.அக.);; rare thing.

   4. கொடை; gift.

     [உத்து → உத்திதம் → உச்சிதம் = பொருத்தமானது, தக்கது. சிறந்தது. அரியது.]

 உச்சிதம்2 uccidam, பெ. (n.)

நெருஞ்சி பார்க்க;see neruroji (செ.அக.);.

     [உச்சி → உச்சிதம்.]

உச்சித்தம்

உச்சித்தம் uccittam, பெ. (n.)

   மகரக்கை (சிலப். 3.18, உரை);; variety of gesture with both hands.

     [ஒருகா. உத்து → உத்தித்தம் → உச்சித்தம்.]

உச்சித்திலகம்

உச்சித்திலகம் uccittilagam, பெ. (n.)

   செம்மலருள்ள ஒருவகைப் பூஞ்செடி; flowering shrub with red blosssoms.

     “உதிக்கின்ற செங்கதிருச்சித் திலகம்… என்ன விதிக்கின்ற மேனி” (அபிராமி.1);.

     [உச்சி + திலகம்.]

உச்சிப்படு-தல்

உச்சிப்படு-தல் uccippaḍudal,    20. செ.கு.வி. (v.i.)

   உச்சமாதல்; to ascend as of morning sun,

     “வெள்ளி உச்சிப்பட்டது. வியாழன் அஸ்தமித்தது” (திவ். திருப்பா. 13 வ்யா.);. (செ.அக.);.

     [உச்சி + படு.]

உச்சிப்பள்ளி

 உச்சிப்பள்ளி uccippaḷḷi, பெ. (n.)

   பதினான்காம் (சதுர்த்தசி); நாள்தோறும் பள்ளிக்கூடத்தில் விடப் பெறும் பகல் விடுமுறை; noonday dismissal of school on the day preceding the new moon or the full moon (செ.அக.);.

     [உச்சி + பள்ளி உச்சிநேரம் (நண்பகல்); வரை மட்டும் நடை பெறும் பள்ளி.]

உச்சிப்பின்னல்

 உச்சிப்பின்னல் uccippiṉṉal, பெ. (n.)

   உச்சிச்சடை; plait of the crown. (ஆ.அக.);.

     [உச்சி + பின்னல்.]

உச்சிப்பிறை

 உச்சிப்பிறை uccippiṟai, பெ. (n.)

பரவ மகளிரணியுந்

   தலையணிவகை; crescent shaped head ornament, a

 common ornament among women of the Parava Caste.

     [உச்சி + பிறை]

மணவிழாவின் போது பரதவ மகளிர் பிறை வடிவில் தலையணி ஒப்பனை செய்து கொள்வர். சிந்துவெளி முத்திரைகளில் காணப்படும் மகளிர் தலையணியை இது ஒத்துள்ளது.

உச்சிப்பிளவை

 உச்சிப்பிளவை uccippiḷavai, பெ. (n.)

   உச்சந்தலையி லூண்டாகும் புண் (மூ.அ.);; ulcerous scab or sore on the crown of the head. (செ.அக.);.

     [உச்சி + பிளவை]

உச்சிப்பூ

 உச்சிப்பூ uccippū, பெ. (n.)

   குழந்தைகளின் தலையணி வகை; ornament for a child’s forehead

ம. உச்சிப்பூவு

     [உச்சி + பூ.}

உச்சிப்பொழுது

 உச்சிப்பொழுது uccippoḻudu, பெ. (n.)

நடுப்பகல், noon, midday (செ.அக.);.

     [உச்சி + பொழுது.]

உச்சிமலை

உச்சிமலை uccimalai, பெ. (n.)

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஓர் ஊர்.

 name of the village in viluppuram.

     [உச்சி+மலை]

 உச்சிமலை uccimalai, பெ. (n.)

   1. மலையுச்சி; hill top.

   2. செங்குத்தான குன்று sleep hill (செ.அக.);.

     [உச்சி + மலை.] E

உச்சிமல்லிகை

உச்சிமல்லிகை uccimalligai, பெ. (n.)

ஊசி மல்லிகை பார்க்க5;see usimalligal.

ம. உச்சிமலரு

     [ஊசி → உச்சி + மல்லிகை.]

உச்சிமீன்

 உச்சிமீன் uccimīṉ, பெ. (n.)

   புள்ளிமீன்; spotted butter fish

து. உச்சிமீன்

     [உச்சி + மீன்.]

உச்சிமுகடு

 உச்சிமுகடு uccimugaḍu, பெ. (n.)

   கூரையின் இரு பக்கமும் சேருகின்ற மேலிடம்; ridge of roof. (செ.அக.);.

     [உச்சி + முகடு.]

உச்சிமுகரல்

 உச்சிமுகரல் uccimugaral, பெ. (n.)

   குழந்தையினுச்சியை அன்பு மேலீட்டினால் முகருதல்; smelling the crown of the head of a child through affection. (சா.அக.);.

     [உச்சி + முகரல்.]

உச்சிமூலம்

 உச்சிமூலம் uccimūlam, பெ. (n.)

உச்சிமேடு பார்க்க see uccimedu.

     “தானவனாகி நின்ற தவமது உச்சிமூலம்” (திருவள்ளு சற்பம்);.

     [உச்சி + மூலம்.]

உச்சிமேடு

 உச்சிமேடு uccimēṭu, பெ. (n.)

   தலையின் நடுவிடம்; central region of the head.

     [உச்சி + மேடு. முகடு → மேடு.]

உச்சிமோடு

 உச்சிமோடு uccimōṭu, பெ. (n.)

உச்சி முகடு பார்க்க See ucci-mugadu.

     [உச்சி → (முகடு); மோடு. முகடு → மோடு → மேடு]

உச்சிமோத்தல்

உச்சிமோத்தல் uccimōttal,    3 செ.குன்றாவி (v.t)

   உச்சந் தலையை மோந்து அன்பு பாராட்டுதல்; smell the crown of the head especially of a child, from affection

     “தனிப் புதல்வன்றனை. உச்சி மோந்து” (கோயிற்பு வியாக்கிர_2);.

     [உச்சி + (முகர்தல்); மோ-த்தல்.]

உச்சியணி

 உச்சியணி ucciyaṇi, பெ. (n.)

   தலைச் சீராவில் உள்ள அணித் தொங்கல்; pendant of a head-gear. (pond.);

     [உச்சி + அணி]

உச்சியாட்டம்

 உச்சியாட்டம் ucciyāṭṭam, பெ. (n.)

   விளையாட்டு வகை; a kind of four-a-side game

ம. உச்சிள்ளியாட்டம்

     [உச்சி + ஆட்டம்.]

உச்சியார்

உச்சியார் ucciyār, பெ. (n.)

   தேவர்; celestial beings.

     “உச்சியார்க் கிறைவனாயுலக மெலாங்காத் தளிக்கும்” (யாப்.வி. 86. பக். 315);.

     [உச்சி + ஆர்.]

உச்சியிடிக்கை

 உச்சியிடிக்கை ucciyiḍikkai, பெ. (n.)

   குழந்தையி னுச்சந்தலை தாய்மார்பிற் படுதலால் அவட்குண்டா கும் நோய்; disease of the nursing mother caused by her nipple being touched by the crown of her suckling baby’s head. (செ.அக.);.

     [உச்சி + இடிக்கை. இடி → இடிக்கை]

உச்சியெடு-த்தல்

உச்சியெடு-த்தல் ucciyeḍuttal,    4 செ.கு.வி. (v.i.)

   1. வகிர் எடுத்தல்; part the locks of hair in two with a cleavage line from the crown to the forehead (J.);,

   2. உச்சி முடியை மென்மையாகப்பற்றியிழுத்தல்; slow pull of few hairs in the crown to relieve ailment

     [உச்சி + எடுத்தல்.]

உச்சிமுடியை வகிர் எடுத்தலை உச்சியெடுத்தல் என்பது பொதுவழக்கு உள்நாக்கு அல்லது சிறு நாக்கு மேலெடுப்பதற்காக மிளகுப் பொடியை உள்நாக்கில் தடவித் தலையின் உச்சியிலுள்ள சில முடிகளை மென்மையாக ஓரிருமுறை பற்றியிழுப்பது நாட்டுப்புறங்களில் நிலவும் பழங்காலக் கைமருத்துவ முறைகளுள் ஒன்று.

உச்சியெண்ணெய்

 உச்சியெண்ணெய் ucciyeṇīey, பெ. (n.)

   குழந்தைகளின் உச்சந்தலையிலிடும் எண்ணெய்; oil smeared on the crown of the head especially of infants. (செ.அக.);, ம. உச்செண்ணெய்

     [உச்சி + எண்ணெய்.]

உச்சில்

 உச்சில் uccil, பெ. (n.)

   ஒரு வகைச் செடி; a kind of plant.

ம. உச்செலி, ஒச்செலி.

உச்சிவிடுதி

உச்சிவிடுதி ucciviḍudi, பெ. (n.)

   1. உச்சீவிடு பார்க்க;see ucci vidu.

   2. தொழிலாளிகள், பள்ளிச்சிறுவர்களின் நண்பகல் (மத்தியான); விடுவு; midday recess for labourers, or for children at school.

   3. நண்பகல் நேரத்தில் மழை விடுகை; cessation of rain at noon (செ.அக.);.

     [உச்சி + விடுதி. உச்சி = நண்பகல்.]

உச்சிவினை

உச்சிவினை ucciviṉai, பெ. (n.)

உச்சிக் கடன் பார்க்க see ucci-k-kadan (சேதுபு. துத்தம். 6);. (செ.அக.);.

     [உச்சி + வினை.]

உச்சிவிழுகை

 உச்சிவிழுகை ucciviḻugai, பெ. (n.)

   குழந்தைகளின் உயிர் ஏதத்திற்குரியதான உச்சிக் குழிகை; dangerous disease of infants, the most prominent symptom of which is an increased depression in the head of the infant (செ.அக.);.

     [உச்சி + விழுகை]

உச்சிவீடு

உச்சிவீடு uccivīṭu, பெ. (n.)

   1. உச்சிவேளையில் மழைவிட்டிருக்கை; cessation of rain at noon.

   2. இடைவிடுகை; stopping at intervals.

     ‘உச்சிவீடு விடாதே இத்தையே மனோரதியா நின்றது’ (ஈடு 9,3,7);.

     [உச்சி + வீடு. வீடு = விடுபடுதல், நிற்றல்]

உச்சிவுதயம்

 உச்சிவுதயம் uccivudayam, பெ. (n.)

குழந்தைப் பேற்றின் போது முதலாக உச்சிவெளிக் காணல் (In mid-wifery); the appearance of the upper part of the foetal head in labour vertex presentation. (சா.அக.);

     [உச்சி + உதயம்]

உச்சிவுருமம்

 உச்சிவுருமம் uccivurumam, பெ. (n.)

   நடுப்பகல்; midday.

     [உச்சி + உருமம். உருமம் = வெயில்.]

உச்சிவெறி

 உச்சிவெறி ucciveṟi, பெ. (n.)

உக்கிவிடு பார்க்க see ucci-vidu (செ.அக.);.

     [உச்சி + வெறி.]

உச்சிவெளி

 உச்சிவெளி ucciveḷi, பெ. (n.)

உச்சிவீடு பார்க்க see ucci-vidu [உச்சி + வெளி.]

உச்சிவேர்

 உச்சிவேர் uccivēr, பெ. (n.)

   மூலவேர்; lop-root.

     [உச்சி + வேர்]

உச்சு

உச்சு1 uccudal, செ.கு.வி. (v.i.)

   1. இலக்கிற் காய் முதலியன எறிதல்; to pitch at a mark, to play such a game of pitching with areca nuts, shells or coins.

   2. (வஞ்சகத்தால்); வெல்லுதல்; to conque in a game, come out successful in a controversy, win, secure an advantage by subtliety or artifice.

   3. பிறர் பொருளை ஏய்த்துக் கவர்தல்; to get possession of another’s property by fraud, stratagem, cunning, ordeceit

   4. பித்துப் பிடித்தல்; to go mad, to become demented. (செ.அக.);.

 உச்சு2 uccudal,    5 செ.குன்றாவி (v.t.)

   தேய்த்தல்; to rub.

க. உச்சு.

     [உல் → உத்து → உச்சு.]

உச்சுக்காட்டு-தல்

உச்சுக்காட்டு-தல் uccukkāṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   நாளையத் தூண்டிவிடுதல்; to urge or set a dog on a person or an object by repeating the sound ‘உச்சு, உச்சு’ while simultaneously pointing to the object of attack. நாயை உச்சுக்காட்டு. (கொங்.வ.);.

     [உச்சு + காட்டு-தல், உச்சு = நாயை ஏவும் ஒலிக் குறிப்புச் சொல். நாயை உச்சுக்காட்டுகிறான் அல்லது – உகக் காட்டு கிறான் என்பது நாட்டுப்புற வழக்கு.)

உச்சுக்கொட்டு-தல்

உச்சுக்கொட்டு-தல் uccukkoṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. இக்குக்கொட்டு பார்க்க;see ikku-k-kotsu

   2. வெறுப்புக்குறி காட்டுதல்; to manifest one’s dissatisfaction or disapproval by smacking the lips, so as to produce an interjectional sound like ‘pshaw’ expressive of contempt. (செ.அக.);.

     [உச்சு + கொட்டு-தல். உச்சு = வாயால் எழுப்பப்படும் இரக்கம் குறித்த ஒலிக் குறிப்புச் சொல்.]

உச்சுச்செனல்

 உச்சுச்செனல் uccucceṉal, இடை (part)

   நாயைக் கூப்பிடுதல்; calling a pet dog (ஆ.அக.);.

உச்சுவா

 உச்சுவா uccuvā, பெ. (n.)

விடுமுறை:

 holiday,

     “நாளைக்கு நமக்கு உச்சுவாவா?”

     [ஒருகா. உற்சவ+உவாl]

உச்சூடை

 உச்சூடை uccūṭai, பெ. (n.)

   கொடிக்கம்பத்தின் நுனி; pointed head of flag – pole.

     [உச்சி + குடை]

உச்சூனம்

 உச்சூனம் uccūṉam, பெ. (n.)

   கொழுப்பு; fat. (செ.அக.);.

     [உத்து → உச்சு = பொருந்துதல் ஊன் தசையோடு பொருந்தியிருப்பதால் உச்குளம் எனப்பட்டது. உச்சு + ஊனம், ஊன் → ஊனம்.]

உச்சூன்

 உச்சூன் uccūṉ, பெ. (n.)

உச்சூனம் பார்க்க;see uccunam

     [உச்சு + ஊன். ஊனொடு ஒட்டியிருப்பது கொழுப்பு.]

உச்செனல்

 உச்செனல் ucceṉal,    இடை (part) நாயை அழைத்தற் குறிப்பு; utterance of an imit word used in calling a dog. (செ.அக.).

     [உச்சு + எனல்]

உச்சேதம்

 உச்சேதம் uccētam, பெ. (n.)

உட்சிதைவு பார்க்க see utsidaivu.

     [உள் + சேதம்]

உச்சை

 உச்சை uccai, பெ. (n.)

   சிறுநீர்;   மூத்திரம்; urine.

   க. உச்செ;தெ. உச்ச

     [உய் → உய்த்து → உத்து → உத்தே → உச்செ (பெய்தது, சொரிந்தது); → உச்சை]

உச்சைனி

 உச்சைனி uccaiṉi, பெ. (n.)

உச்சயனி பார்க்க see uccayani

உஞற்று

உஞற்று1 uñaṟṟudal,    5. செகுன்றாவி (v.t.)

   1. முயலுதல்; to attempt vigorously, strive diligently.

     “தாழா துளுற்றுபவர்” (குறள். 620);.

   2. செய்தல்; to do, perform accomplish.

     “மறத்துறை.. எதிர்வன் கெழீஇ யுளுற்றல்” (ஞான. 17.48);.

   3. தூண்டுதல்; to urge, incite, spur to action.

     “உள்ளம் உஞற்றுகையினாலே” (கலித் 18, உரை);. (செ.அக.);.

     [உய் → உயல் → உயற்று → உஞற்று.]

 உஞற்று2 uñaṟṟu, பெ. (n.)

   1. பாடாற்றுதல் (பிங்.);; enthusiasm, striving, exertion.

   2. முயற்சி; application, efort.

     “தன்னுஞற் றொழிந்திடான்” (இரகு. தசரத. 13);.

   3. தூண்டுதல்; inciting.

   4. வழக்கம்; practice. (செ.அக.);.

     [உய் → உயல் → உயற்று → உஞற்று.]

உஞ்சட்டை

உஞ்சட்டை uñjaṭṭai, பெ. (n.)

உச்சட்டை பார்க்க;see uccattai

     [உச்சட்டை → உஞ்சட்டை (வே.க. 81);]

உஞ்சயினி

உஞ்சயினி uñjayiṉi, பெ. (n.)

உச்சயினி பார்க்க (யசோதர 2.1.);;see uccayini (செ.அக.);.

உஞ்சல்

உஞ்சல் uñjal, பெ. (n.)

   ஊஞ்சல்; swing,

     “உஞ்சனிகர் காதிற்கும்” (சிவப். பிரபந். வெங்கையு. 78);.

மறுவ, உய்யாலை, ஊஞ்சல்,

   க. உய்யல் தெ. உய்யாலை, உய்யேலே, ஊயலே ம. உழிஞ்ஞல், ஊஞ்சல்;து. உச்சால். உய்யால்,

     [உந்து → உஞ்சு → உஞ்சல்.]

உஞ்சவிருத்தி

உஞ்சவிருத்தி uñjavirutti, பெ. (n.)

   1. தவசங்களைப் பொறுக்கி நடத்தும் வாழ்க்கை (காஞ்சிப்பு. ஒழுக்கப். 36);; gleaning grains of rice, as a means of livelihood.

   2. அரிசிப் பிச்சை யெடுத்துச் செய்யும் வாழ்க்கை; living by gleaning handfuls of rice, as alms, from door to door. (செ.அக.);.

     [உய் → உய்ந்து → உஞ்ச + விருத்தி.]

உஞ்சி

 உஞ்சி uñji, பெ. (n.)

   நாயை ஏவிவிடும் குறிப்புச் சொல் (ஆ.அக.);; onom. expr. of setting dog against an object or person.

     [உச்சு → உஞ்சு → உஞ்சி]

உஞ்சில்

 உஞ்சில் uñjil, பெ. (n.)

உசில் பார்க்க. see usil. (செ.அக.);.]

உஞ்சு

 உஞ்சு uñju, இடை. (part)

   நாயை அழைக்கும் ஒலிக் குறிப்பு;Оnom. expr. used in calling dogs.

     [உஞ்சு – ஒலிக்குறிப்புச் சொல்.]

உஞ்சுக்காட்டு-தல்

உஞ்சுக்காட்டு-தல் uñjukkāṭṭudal,    5. செ.குன்றாவி (v.t.)

உச்சுக்காட்டு பார்க்க see uccu-k-kattu.

நாயை உஞ்சுக் காட்டுகிறான். (செ.அக.);.

     [உஞ்சு + காட்டு-தல்.]

உஞ்சேனை

உஞ்சேனை1 uñjēṉai, பெ. (n.)

உச்சயினி பார்க்க (தேவா. 1221, 8);;see uccayini.

உஞ்சேனை மாகாளம்

உஞ்சேனை மாகாளம் uñjēṉaimākāḷam, பெ. (n.)

உச்சயினியிலுள்ள சிவன் கோயில் (தேவா. 1221.8); Sva šhrine at Ujjain. (செ.அக.);.

     [உஞ்சை → உஞ்சேனை + மாகாளம்]

உஞ்சை

உஞ்சை uñjai, பெ. (n.)

   1. உசல்மரம்; tree known as usal.

   2. அவந்தநிகா; city of Avanthi.

     [உஞ்சை என்பது மரத்தின் பெயராலமைந்த ஊராகலாம்.]

உஞ்சை மாகாளம்

 உஞ்சை மாகாளம் uñcaimākāḷam, பெ. (n.)

   உச்சயினி நகரிலுள்ள சிவன் கோயில்; siva temple at ujjaini (M.P.);.

     [உஞ்சை(துரிஞ்சில்மரம்);+மாகாளம்-மாகாளனாகிய சிவன் கோயில்]

மாகாளம்-மாகாணம் எனத் திரிந்து கோயிலைக் குறிப்பது உண்டு.

உட்பாய்தல்

__,

பெ. (n.);

   உட்புகுதல்; influx.

     [உள்+பாய்தல். பாய்+தல்→அபாய்தல், “தல்” தொ.பெ.ஈறு]

உஞ்சையம்பதி

உஞ்சையம்பதி uñjaiyambadi, பெ. (n.)

   உஞ்சை நகர் (சிலப். 6.20);; city of Unjainagar.

     [உஞ்சை + அம் + பதி]

உஞ்ஞார்

 உஞ்ஞார் uññār, பெ. (n.)

   ஞாயிறு உதிக்கும் திசை;   கிழக்கு; east (சேரநா.);.

ம. உஞ்ஞாரு.

     [உ.தி + ஞாயிறு – உதிஞாயிறு → உஞ்ஞார் (மலை);.);]

உடக்கு

உடக்கு1 uḍakkudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. செலுத்துதல்; to dat or shoot as an arrow

     “வில்வாங்கி

யுடக்குஞ்

சரத்தால்” (மாறன. பா. 660);. 5 செ.கு.வி. (v.i.);

   2. நாணிற்செறிதல் (மாறன.பா. 374);; to be fitted to the string of the bow, as an arrow. (செ.அக.);. ‘

     [ஒடுக்கு → உடுக்கு → உடக்கு.]

 உடக்கு2 uḍakkudal,    5 செ.குன்றாவி, (v.t.)

   உள்ளீடின்றியிருத்தல்; to lack strength or solidity;

 to be tubular, to be hollow. (Tinn.); (செ.அக.);.

     [உனக்கு → உடக்கு.]

 உடக்கு3 uḍakku, பெ. (n.)

   1. உடல்; body.

     “உடக்கைத் தகர்த்தே யுயிரையமன் கொள்கையிலே” (பட்டினத்துப். பக். 260);.

   2. உளளீடின்மை; hollowness. (Tinn.); (செ.அக.);.

     [விடக்கு → உடக்கு.]

 உடக்கு4 uḍakku, பெ. (n.)

   திருகாணிச் சுரையினுட்சுற்று (வின்.);; thread of a screw. (செ.அக.);.

     [ஒடுக்கு → உடுக்கு → உடக்கு.]

வடக்கெடுத்துப்போ-தல்,

 udak-k-edustu-p-po-,

   15. செ.கு.வி. (v.i.);

   உடம்புமிக மெலிதல்; to grow lear

 and emaciated;

 to become skin and bone. (Loc.); (செ.அக.);.

     [உணக்கு → உடக்கு + எடுத்து + போ.]

உடங்கு

உடங்கு uḍaṅgu, பெ. (n.)

   பக்கம்; propinquity, side nearness,

     “எமதுடங்கிற் பலித்ததோ” (விநாயகபு. 622 19);. கு.வி.எ.

   1. ஒத்து; amicably, harmoniously

     “உடங்குயிர் வாழ்க வென்று” (மணிமே. 10.664);.

   2. ஒருபடியாக;   3. சேர; together, closely,

     “தடந்தோட் கொப்டவுடங்கணிந்து” (பெருங். மகத. 2, 231);.

   4. உடனே immediately

     “ஒலிகேட்டோ னுடங்கெழில் யானையங் குண்டென வுணர்தல்” (மணிமே 27, 32);.

     (உடன் → உடங்கு (வே.க.43);.]

உடங்கோடி

உடங்கோடி uḍaṅāḍi, பெ. (n.)

   இண்டு (பெரியமாட் 160);; tiger stopper. (செ.அக.);.

உடசம்

உடசம்1 uḍasam, பெ. (n.)

   இலைக்குடில்; hut made of leaves, hermit’s thatched hut

     “உடசமேற்படரு மாடன் மென்கொடி” (சேதுபு.நைமி.12);. (செ.அக.);.

     [உலவை → உலசம் → உடசம்.]

 உடசம்2 uḍasam, பெ. (n.)

   வெட்பாலை (தைலவ தைல 72);; ivory tree

     [உலவை → உலசம் → உடசம்.]

உடசிப்பி

 உடசிப்பி uḍasippi, பெ. (n.)

   சிப்பிமுத்து; oyster peal as distinguished from pearls got from other sources (சா.அக.);.

     [உடசம் + சிப்பி = உடசற்சிப்பி → உடற்சிப்பி → உடசிப்பி.]

உடணம்

உடணம் uḍaṇam, பெ. (n.)

   1. இஞ்சி; ginger 2 மிளகு pepper.

   3. சுக்கு; dried ginger.

   4. திப்பிலி மூலம்; roc of piper longum – Piper cubeba. (சா.அக.);.

     [உல் → உள் → உடு → உடனம்.]

உடண்மிடறு

 உடண்மிடறு uḍaṇmiḍaṟu, பெ. (n.)

   உட்கண்டம் (பிங்.);; inner throat, larynx (செ.அக.);.

     [உள் + மிடறு = உண்மிடறு.]

உடண்முகம்

உடண்முகம் uḍaṇmugam, பெ. (n.)

   மனத்தால் உட்புறம் நோக்கும் நோக்கம்; looking Inward

     “கான நீரிற்கண் டுண்முக மடைவார்” (மகராஜாதுறவு, 102.);. (செ.அக.);.

     [உள் + முகம் = உண்முகம்.]

உடந்தை

உடந்தை uḍandai, பெ. (n.)

   1. சேர்கை; unior

     “மனைவியா மனந்தையோடுடந்தையாய்” (மச்சட ஆதிசிருட்டி. 15);.

   2. துணை; alliance, suppor abelmen.

     “உடந்தையாய்த் திரிவாரும்” (இராமநா அயோத். 4);.

   3. உறவு; relationship எனக்கும் அவனுகும் உடந்தையில்லை. (உ.வ.);

   4. கூட்டாள். Companion.

   ம. உடந்த. க., து. ஒட;தெ. ஒட.

     [உடன் → உடந்தை. (வேக 43);.]

உடந்தைக்குற்றவாளி

 உடந்தைக்குற்றவாளி uḍandaikkuṟṟavāḷi, பெ. (n.)

   சேர்க்கைக் குற்றவாளி; a better of an offence, co-offender, accomplice (செ.அக.);.

உடந்தையாதல்

உடந்தையாதல் uḍandaiyātal, பெ. (n.)

   1. ஒருமித்தல்; coalese.

   2. ஒன்றுபட்டிருத்தல்; combine into one.

     [உடந்தை + ஆதல்.]

உடனா-தல்

உடனா-தல் uḍaṉātal, பெ. (n.)

.

   6

செ.கு.வி. (v.i.);

   கூடிநிற்றல் (சி.சி. 2,80);; to be in company with associate.

     [உடன்_(ஆகு); ஆ.]

உடனாளி

உடனாளி1 uḍaṉāḷi, பெ. (n.)

உடன் கூட்டாளி பார்க்க see udan-küß (செ.அக.);. [உடன்+ஆளி]

 உடனாளி2 uḍaṉāḷi, பெ.(n.)

சொத்துள்ளவன். weathy person.

க. ஒடெய தெ. ஒடயடு, ஒடயுடு, து. ஒடயெ. ஒடெயெ குட ஒடைவே. [உடைமை+ஆளி_உடைமையாளி→உடனாளி.]

உடனிகழ்ச்சியணி

உடனிகழ்ச்சியணி uḍaṉigaḻcciyaṇi, பெ. (n.)

   1 அஃதாவது கற்றோரை மகிழ்விக்கும் உடனிகழ்தலைச் சொல்லும் அணி; gure of speech இதனை வடநூலார் சகோத்தியலலங்கார மென்பர். தண்டியாசிரியர் புணர் நிலை என்பர்.

   2. புணர்நிலையணி பார்க்க (அணியி.21);;see punanilaiyani (அபி.சிந்.);. [உடன்+நிகழ்ச்சி+அணி]

உடனிகழ்தல்

உடனிகழ்தல் uḍaṉigaḻtal, பெ. (n.)

   ஒருங்கு நிகழ்தல் (நன். 297, விருத்.);; happen simultaneously. (செ.அக.);.

     [உடன்+நிகழ்தல்.]

உடனிகழ்வான்

 உடனிகழ்வான் uḍaṉigaḻvāṉ, பெ. (n.)

   துணைவன் (திவா.);; companion, comrade. (செ.அக.);.

     [உடன்+நிகழ்வான்.]

உடனிகழ்வு

உடனிகழ்வு uḍaṉigaḻvu, பெ. (n.)

உடனிகழ்ச்சிபார்க்க see udapgacc (நன். 297); [உடன்+நிகழ்வு.]

உடனிலை

உடனிலை uḍaṉilai, பெ. (n.)

   1. கூடி நிற்கை the state of being together,

உரோணியோ டுடனிலை புரிந்த மறுவுடை மண்டிலக் கடவுளை (பெருங். இலாவாண. 9.67);

   2. உடனிருந்த இருவரைப் பாடும் ஒரு புறத் துறை (புறநா. 58);;     [உடன்+நிலை.]

உடனிலை இரட்டுறமொழிதல்

உடனிலை இரட்டுறமொழிதல் uḍaṉilaiiraḍḍuṟamoḻidal, பெ. (n.)

ஒரு பாட்டு நேரேவரும் பொருளையன்றி வேறொரு பொருள் கொண்டு நிற்கும் அணி (திருக்கோ.1.உரை);

 figure of speech, paronomasia as a literary embellishment in a stanza conveying both the natural as well as a hidden meaning. (செ.அக.);, [உடனிலை+இரட்டுற+மொழிதல்.]

உடனிலைக்குதிரைச்சேவகர்

உடனிலைக்குதிரைச்சேவகர் uḍaṉilaiggudiraiccēvagar, பெ. (n.)

   பரியேறும் மெய்க்காவலர்(s.I.I.ii.274);; mounted body guards. (செ.அக.);.

     [உடனிலை _ குதிரை – சேவகர்.]

உடனிலைச்சிலேடை

 உடனிலைச்சிலேடை uḍaṉilaiccilēḍai, பெ.(n.)

உடனிலை இரட்டுறமொழிதல் பார்க்க see udarial. ira!!uramolidal

     [உடனிலை+சிலேடை.]

உடனிலைச்சொல்

 உடனிலைச்சொல் uḍaṉilaiccol, பெ. (n.)

ஒப்புமைக் கூட்டம் பார்க்க;see oppumarkkulam (செ.அக.);.

     [உடனிலை + சொல்.]

உடனிலைமயக்கம்

 உடனிலைமயக்கம் uḍaṉilaimayakkam, பெ. (n.)

உட னிலை மெய்ம்மயக்கம் பார்க்க;see பdarlal-mey. מחm-mayakka

     [உடன்+நிலை+மயக்கம்]

உடனிலைமெய்ம்மயக்கம்

உடனிலைமெய்ம்மயக்கம் uḍaṉilaimeymmayakkam, பெ. (n.)

   ர் என்னும் இரண்டு மொழிந்த 16 மெய்களுள் ஒவ்வொன்றும் தன்னுடன் தான் நின்று மயங்குகை (நன்.110, உரை);;     [உடன்+நிலை+மெய்ம்மயக்கம்.]

உடனுக்குடனே

 உடனுக்குடனே uḍaṉukkuḍaṉē, வி.எ. (adv)

அப்போ தைக்கப்போது then and there வந்த கடிதத்துக்கு உடனுக்குடனே மறுமொழி எழுது (உ.வ.);. ம. உடனுடன் க. ஒடனோடனே, ஒடனொடனெ, தெ. தோடதோடனெ

     [உடனுக்கு+உடனே]

உடனுறவு

 உடனுறவு uḍaṉuṟavu, பெ. (n.)

உடல் தொடர்பு

   புணர்ச்சி, sexual combination; the habitual coition or sexual intercourse of man and woman. (சா.அக.);.

     [உடல்+உறவு-உடலுறவு → உடலுறவு (கொ.வ.);.]

உடனுறை

உடனுறை uḍaṉuṟai, பெ. (n.)

   ஒரு நிலத்தில் உடனு றைகின்ற கருப்பொருளாற் பிறிதொரு பொருள் பயப்ப மறைத்துத் கூறும் இறைச்சி (தொல், பொருள் 242);; suggestive meaning conveyed indirectly by means of a specific reference to a distinctive feature of any tract of land. (செ.அக);.

     [உடன்+உறை.]

உடனுறைவு

உடனுறைவு uḍaṉuṟaivu, பெ. (n.)

   1. புணர்ச்சி (பெரியபு திருநீலகண்..5);. Cohabitation,

   2. கூடி வாழ்தல்; living together. (செ.அக.);,

     [உடன்+உறைவு.]

உடனுற்றவன்

 உடனுற்றவன் uḍaṉuṟṟavaṉ, பெ. (n.)

   ஒரே வகுப்பு வேலையாள்(ஆ.அக.);; servant of the same grade

உடனே

உடனே uḍaṉē, வி.எ. (adv)

   1. கூடிய அதே நேரத்தில், immediately 2, ஒருசேர; simultaneously,

     “உருவமுமா ருயிரு முடனே யுண்டான்’ (திவ். திருவாய். 9.6.5.);

   3. முழுக்க

 entirely,

     ‘உடனேகூட (சீவக. 1966);. (செ.அக.);.

ம. உடனே க. ஒடனே தெ. தொடனே குட ஒடனெ து. ஒட்டு.

     [உடன்+ஏ.]

உடனொடியில்

 உடனொடியில் uḍaṉoḍiyil, வி.எ. (adv)

உடனடி பார்க்க;see udanadi (Loc); (செ.அக.);.

     [உடன்_நொடியில்.]

உடனொத்தபங்காளி

 உடனொத்தபங்காளி uḍaṉottabaṅgāḷi, பெ. (n.)

சரிபக் குடையவன் (ஆ.அக.); co-partner.

     [உடன் + ஒத்த + பங்காளி.]

உடனொத்தவன்

 உடனொத்தவன் uḍaṉottavaṉ, பெ. (n.)

சமமானவன் equal fellow, compeer. (செ.அக.);.

     [உடன் + ஒத்தவன்.]

உடன் போக்கிடையீடு

 உடன் போக்கிடையீடு uḍaṉpōkkiḍaiyīḍu, பெ. (n.)

   இது நம்மனையில் வரைந்து கொள்ளது தன்னுரில் வரைந்தானென்று தலைவி சுற்றத்தார் வெறுப்படைத லால் தலைவியை உடன்கொண்டு போகும் போது தலைவி சுற்றத்தாரிடை ஈடுபட்டு மீண்டு வருதல்; intimate movement of the heroine with her own relations before going away with her lower since after elopement the heroine will have to marry the hero in his place against the wishes of her people.

     [உடன்போக்கு + இடையீடு].

இது, போக்கறிவுறுத்தல், வரவறிவுறுத்தல், நீக்கமிரக்கம், மீட்சி யென நால் வகையினையும், நீங்கும் கிழத்தி பாங்கியர் தமக்குத் தன் செலவுணர்த்தி விடுத்தல், தலைமகன் தன் செலவின்னாட் குணர்த்தி விடுத்தல். நற்றாய்க் கந்தனர் மொழி தல், தலைவற்குணர்த்தல், தலைமகளைத் தலைமகன் விடுத் தல், தமருடன் செல்பவள் அவள் புறநோக்கிக் கவன்றரற்றல் எனும் விரிவினையு முடைத்து. (அபி.சிந்);.

உடன்கட்டையேறு-தல்

உடன்கட்டையேறு-தல் uḍaṉkaḍḍaiyēṟudal,    5. செ.கு.வி. (v.i.)

   1. இறந்த கணவனுடன் ஒன்று கூடித் தீயில் உயிர்விடுதல்; to ascend, as a woman, the funeral pyre of her husband, to perform sustee.

   2. பிரியேனென்று நிற்றல்; to be inseparable

   மறுவ. தலையொடு முடிதல்;ஆஞ்சிக் காஞ்சி.

     [உடன்+ கட்டை + ஏறு-தல்.]

போர்க்களத்தில் கணவர் இறந்த பின் தாம் பகைவரால் சிறைப்பிடிக்கப்படலாகாது என நினைத்த மகளிர் பாதுகாப்பு நோக்கில் உடன்கட்டை யேறியும் தீப்பாய்ந்தும் உயிர் மாய்த துக் கொண்ட தொன்முது வழக்கம் தமிழகத்தில் தானாகவே மறைந்தது வடபுலத்தில் மூடநம்பிக்கையாக வளர்ந் திருந்தது.

உடன்குற்றவாளி

 உடன்குற்றவாளி uḍaṉkuṟṟavāḷi, பெ. (n.)

   உடனிருந்து குற்றஞ்செய்தவன்; co-offerder, accomplice, abettor. (செ.அக.);.

     [உடன் + குற்றவாளி. குற்றம் + ஆளி – குற்றவாளி.]

உடன்கூட்டாளி

உடன்கூட்டாளி uḍaṉāḍḍāḷi, பெ. (n.)

   1. கூட்டுப் பங்காளி; partner, participator, associate.

   2. உடனெத்தவன்; play fellow, companion, friend;

 equal in status, age or rank (செ.அக.);.

     [உடன் + கூட்டு + ஆளி – உடன் கூட்டாளி. ]

உடன்கேடன்

உடன்கேடன் uḍaṉāḍaṉ, பெ. (n.)

   உடனிருந்து துன்புறுபவன்; sharer with another of his grief and sorrow.

     “உடன்கேடனாய் நின்றுநோக்கும்” (ஈடு. 1.1.3);. (செ.அக.);.

     [உடன் + கேடன்.]

   உடன்கையில் கு.வி.எ. (adv.); உடனே; immediately, as soon as, (Loc);

     ‘உடன் கையிலே கூலி கிடைக்குமா?’ (இ.வ.); (செ.அக.);.

     [உடன் + கை + இல்]

உடன்கேடு

உடன்கேடு uḍaṉāḍu, பெ. (n.)

   உடனிருந்து துன்பத் தைப் பகிர்ந்து கொள்ளுதல்; be a companion in grief.

     “தம்மொடுடன் கேடான நெஞ்சமேயா யிருந்தது” (ஈடு, 10, 6. ப்ர.);. (செ.அக.);.

     [உடன் + கேடு.]

உடன்சுட்டத்ததிகாரி

உடன்சுட்டத்ததிகாரி uḍaṉcuḍḍaddadikāri, பெ. (n.)

சோழர் காலத்துச் சிற்றுார் அவைத்தலைவன் (S.l.l.iii.35);, head of the village assembly in the days of Chola administration. (செ.அக.);.

     [உடன் + கூட்டத்து +அதிகாரி.]

உடன்டி

 உடன்டி uḍaṉḍi, வி.எ. (adv)

உடனே immediately, (Tinn.);. (செ.அக.);.

ம_உடனடி.

     [உடன் + அடி.]

உடன்பங்காளி

 உடன்பங்காளி uṭaṉpaṅkāḷi, பெ. (n.)

   தந்தை வழிவந்த ஆண் உறவினர்; relative by father”s side,

     “நெருங்கியபங்காளி”

     [உடன்+பங்கு+ஆளி]

 உடன்பங்காளி uḍaṉpaṅgāḷi, பெ. (n.)

   கூட்டுக்காரன் (ஆ.அக);; co-partner.

     [உடன் + பங்காளி.]

உடன்பங்கு

 உடன்பங்கு uḍaṉpaṅgu, பெ. (n.)

   கூட்டுப் பங்கு; joint share, joint heirship. (W.);. (செ.அக.);.

     [உடன் + பங்கு.]

உடன்படல்

உடன்படல் uḍaṉpaḍal, பெ. (n.)

   1. இசைதல்; agreeing

   2. உடன்படிக்கை செய்தல்; entering into an agreement

   3. இசைதல், எழுவகை மதத்தினொன்று; one of the seven mathams

   4. சேரல்; joining. 5 பொருந்தல்;

 sticking

   6. ஒட்டல்; adhering

   7. நேர்தல்; happening.

     [உடன்படு + அல்.]

உடன்படிக்கை

உடன்படிக்கை uḍaṉpaḍikkai, பெ. (n.)

   1. ஒப்பந்தம்; agreement (செ.அக.);.

     [உடன், படி. படு – படி.]

 உடன்படிக்கை uḍaṉpaḍikkai, பெ. (n.)

   1. ஒப்பந்தம்; contract, agreement, covenant, treaty.

   2. உறுதிப்பாடு; promise, assurance அவனுக்கு அவன் உடன்படிக்கை சொல்லுகிறான். (R);.

   ம. உடம்படி;   க. ஒடம்படிகெ;தெ. ஒடம்படிக.

     [உடன்படு → உடன்படிக்கை.]

உடன்படிக்கைக் கணக்கு

 உடன்படிக்கைக் கணக்கு uḍaṉpaḍikkaikkaṇakku, பெ. (n.)

   பேலேடு; ledger. (C.G);. (செ.அக.);.

உடன்படு

உடன்படு1 uḍaṉpaḍudal, பெ. (n.)

.

   20

செ.கு.வி. (v.i.);

   இசைதல் (பிங்);; to agree, assent, consent, acquiesce, yield. (செ.அக,);.

க. ஒடம்படு, தெ. ஒடம்படு:

     [உடன் + படு.]

 உடன்படு2 uḍaṉpaḍuttal, பெ. (n.)

செ.குன்றாவி (v.t);.

உடன்படுத்து-தல் பார்க்க;see பdarpaduttu.

உடன்படுத்து-தல்

உடன்படுத்து-தல் uḍaṉpaḍuddudal, பெ. (n.)

-,

   17.

செ.குன்றாவி. (v.t.);

   ,இணைத்தல்; persuade into giving consent, make one yield or agree,

     “இசைந்துடன் படுத்தினான்” (பாரத குருகுல, 44);

க. ஒடம்படிக தெ. உடம்பருன்சு,

     [உடன் + படுத்து.]

உடன்பறிமுதல்

உடன்பறிமுதல் uḍaṉpaṟimudal, பெ. (n.)

   1 முறைமன்றக் கட்டளைப்படி பொருட் பறிமுதல் செய்கை; immediate seizure of property according to legal decree.

   2. தீர்ப்பளிக்கும் முன்னே சொத்தைக் கைப்பற்றுகை; attachment before judgement

     [உடன் + பறிமுதல்.]

உடன்பாடு

உடன்பாடு uḍaṉpāḍu, பெ. (n.)

   1. இசைகை (பிங்.);; consent accord, acquiescence.

   2. மனப்பொருத்தம்; concord, harmony, unanimity.

     “உடன்பாலைத மனைவி தொழிலின்ன” (இன்னா. 12);.

ம. உடம்பாடு, தெ. ஒடபாட்டு.

     [(உடம்பாடு → உடன்பாடு (வேக.43);.]

உடன்பாடுவான்

உடன்பாடுவான் uḍaṉpāḍuvāṉ, பெ. (n.)

   பக்கப் பாட்டுக்காரன் (S.I.I. vii, 65);; supporting chorus, accompanist;

     ‘வீணை வாசிப்பானுக்கும் உடன் பாடுவானுக்கும்

உடன்பாட்டுவினை

 உடன்பாட்டுவினை uḍaṉpāḍḍuviṉai, பெ. (n.)

   உடன் பாட்டைத் தெரிவிக்கும் வினை; affirmative web, opp to எதிர்மறைவினை. (செ.அக.);.

     [உடன்படு → உடன்பாடு → உடன்பாட்டு + வினை.]

உடன்பிறந்தான்

 உடன்பிறந்தான் uḍaṉpiṟandāṉ, பெ. (n.)

கூடப் பிறந்தவன், brother.

மறுவ, பிறவன்.

     [உடன் + பிறந்தான்.]

உடன்பிறந்தார்

உடன்பிறந்தார் uḍaṉpiṟandār, பெ. (n.)

   கூடப்பிறந்தவர்; children of the same parents, brothers or sisters or both.

     “உடன் பிறந்தார் சுற்றத்தார்” (வாக்குண். 20);.

மறுவ. பிறவர்,

     [உடன் + பிறந்தார்.]

உடன்பிறந்தாள்

 உடன்பிறந்தாள் uḍaṉpiṟandāḷ, பெ. (n.)

   கூடப் பிறந்தவள்; sister. (செ.அக.);

மறுவ, பிறவி.

     [உடன் + பிறந்தாள்.]

உடன்பிறப்பு

உடன்பிறப்பு uḍaṉpiṟappu, பெ. (n.)

   1. உடன்பிறந்த தன்மை; state of being born of the same parents.

     “இன்றொடுந் தவிர்ந்த தன்றே யுடன்பிறப்பு” (கம்பரா. கும்பக. 166);.

   2. கூடப்பிறந்தவர் (நல்வ. 24);; person or persons born of the same parents (செ.அக.);.

ம. உடப்பிறப்பு, உடப்பிறவி. க. ஒடகுட்டிக.

     [உடன் + பிறப்பு.]

உடன்புணர்ப்பு

உடன்புணர்ப்பு uḍaṉpuṇarppu, பெ. (n.)

   சமகூட்டு (மணிமே, 227.243); (அரும்.);; inseparable concomittance (Log.);.

     [உடன் + புணர்ப்பு.]

உடன்போக்கு

உடன்போக்கு uḍaṉpōkku, பெ. (n.)

   1. பெற்றோரறியாமல் தலைவி தலைவனுடன் செல்கை (நம்பியகப். 181);; an unmarried young woman going away with her lover to his own place without the knowledge of her parents.

   2. கூடப்போதல்; accompanying.

போக்கறி வுறுத்தல் முதலாகத் தேற்றலீறாகிய வெட்டும் உடன் போக்கினுள் அடங்கும்.

க. ஒடவோக.

     [உடன் +போக்கு.]

உடன்போக்குவிரி

 உடன்போக்குவிரி uḍaṉpōkkuviri, பெ. (n.)

   பாங்கி தலைவர்க் குடன்போக் குணர்த்தல் முதலாகத் தலை வன்றன் பதியடைந்தமை தலைவிக் குணர்த்த லீறாகிய பதினொட்டு; process of revelation by the heroine’s friend the news of elopement (ஆ.அக.);.

     [உடன் + போக்கு + விரி.]

உடன்மாணாக்கன்

 உடன்மாணாக்கன் uḍaṉmāṇākkaṉ, பெ. (n.)

   உடன்பயிலும் மாணாக்கன்; classmate, (செ.அக.);.

     [உடன் + மாணாக்கள்.]

உடன்றல்

 உடன்றல் uḍaṉṟal, பெ. (n.)

போர் war, (செ.அக.);.

     [உடல் → உடலு → உடன்றல்.]

உடன்வந்தி

உடன்வந்தி uḍaṉvandi, பெ. (n.)

   கூடவே வருவது; inseparable companion, as one’s shadow.

     ‘உடன் வந்தி யான வல்வினை’ (ஈடு, 5.8.5);. (செ.அக.);.

     [உடன் + வந்தி]

உடன்வயிறு

உடன்வயிறு uḍaṉvayiṟu, பெ. (n.)

உடன் வயிற்றோர் பார்க்க see udanvayirror.

     “பிறப்போரன்ன உடன்வயிற்றுள்ளும்” (புறநா. 183);. (செ.அக.);.

     [உடன் + வயிறு.]

உடன்வயிற்றோர்

உடன்வயிற்றோர் uḍaṉvayiṟṟōr, பெ. (n.)

   உடன் பிறந்தவர் (சிலப். 10,227);; those born of the same mother like brothers and sisters. (செ.அக.);.

க. ஒடகுட்டு.

     [உடன் + வயிற்றோர். வயிறு + வயிற்றோர்.]

உடன்வாரம்

உடன்வாரம் uḍaṉvāram, பெ. (n.)

மேல் வாரம் குடிவாரமாகப் பிரிக்கப் படாத நெல் (T.A.S.I.7.);. gross produce before it is divided between landlord and tenant (செ.அக.);.

   ம. உடன்பாரம்;க. ஒடவார.

     [உடன் + வாரம்.]

உடப்பிறந்தான்

 உடப்பிறந்தான் uḍappiṟandāṉ, பெ. (n.)

உடன்பிறந்தவன் brother

   ம. உடப்பிறன்னவன்;   க, ஒடவுட்டிதவனு;தெ தோடபுட்டின வாடு.

     [உடன் + பிறந்தான் → உடன் பிறந்தான் → உடப்பிறந்தான் (கொ.வ.);.]

உடப்பிறந்தாள்

 உடப்பிறந்தாள் uḍappiṟandāḷ, பெ. (n.)

உடன்பிறந்த

   வள்; sister. (செ.அக.);.

     [உடன் + பிறந்தாள் = உடன்பிறந்தாள் → உடப்பிறந்தாள் (கொ.வ.);.]

உடப்பிறப்பு

உடப்பிறப்பு uḍappiṟappu, பெ. (n.)

   1. உடன்பிறந்தவன்-ள்; one born of the same parents, brother or sister,

   2. தம்மக்கள்;   பிறவிகள்; brotherhood, fraternity. (செ.அக.);.

   ம. உடப்பிறப்பு, உடப்பிறவி;க. ஒடவுட்டித

     [உடன் + பிறப்பு = உடன்பிறப்பு → உடப்பிறப்பு (கொ.வ.);.]

உடப்பு

உடப்பு1 uḍappu, பெ. (n.)

துறட்டு முள்பார்க்க (மூ.அ.);;see turattumul (செ.அக.);.

     [ஒடு → ஒடம் → உடம் → உடப்பு.]

 உடப்பு2 uḍappu, பெ. (n.)

உடைப்பு பார்க்க;see udaippu.

     [உடைப்பு → உடப்பு.]

உடப்புகை

 உடப்புகை uḍappugai, பெ. (n.)

   பருத்தல்;   வீங்குதல்; enlarging, Swelling.

     [உப்பு → உப்புகை]

உடப்புக்குறவன்

 உடப்புக்குறவன் uḍappukkuṟavaṉ, பெ. (n.)

   உப்புவிற்குங் குறச்சாதியான்; member of a division of the Kurava caste, trafficking in salt. (செ.அக.);.

     [உப்பு + குறவன்.]

உடப்புக்குறுதி

 உடப்புக்குறுதி uḍappukkuṟudi, பெ. (n.)

   கொடுக்காய்ப்புளி; sweet babool.

     [உப்புக்கு + உறுதி]

உடப்புக்கூர்-த்தல்

உடப்புக்கூர்-த்தல் uḍappukārttal,    2 செ.கு.வி. (v.i.)

   உப்புக்கரித்தல் (வின்.);; to have a saline taste (செ.அக.);.

     [உப்பு + கூர்த்தல், கூர்த்தல் = மிகுதல்.]

உடப்புக்கொள்(ளு)-தல்

உடப்புக்கொள்(ளு)-தல் uḍappukkoḷḷudal,    13. செ.குன்றாவி (v.t.)

உப்புக்கட்டு பார்க்க;see uppu-k-kattu. (செ.அக.);.

     [உப்பு + கொள்ளு)-தல்.]

உடப்புக்கோடு

 உடப்புக்கோடு uḍappukāḍu, பெ. (n.)

   சதுரக் கோடு கிழித்து ஆடும் கிளித்தட்டு விளையாட்டு; a game consisting of running through a diagram of squares marked on the ground. (Loc.);. (செ.அக.);.

     [உப்பு + கோடு.]

உடப்புச்சரக்கு

 உடப்புச்சரக்கு uḍappuccarakku, பெ. (n.)

   உப்பிட்ட பணிகாரம்; salted, fried, savoury cakes. (செ.அக.);.

     [உப்பு + சரக்கு.]

உடப்புச்சாறு

உடப்புச்சாறு uḍappuccāṟu, பெ. (n.)

   1. கடல் நீர்; sea water. (vaisn.);.

   2. அமுதம்; nectar produced at the churning of the ocean.

     “உப்புச்சாறு கிளறுவது எப்போதோ என்று கிடக்கிற தேவசாதி” (ஈடு. 1,3இ11.);. (செ.அக.);.

     [உப்பு + சாறு.]

உடப்புச்சுமத்தல்

 உடப்புச்சுமத்தல் uḍappuccumattal, பெ. (n.)

   ஒருவகை விளையாட்டில் வென்றவனைத் தோற்றவன் முதுகிற். சுமக்கை; carrying the winner on one’s back, as a penalty of discomfiture in a game. (செ.அக.);.

     [உப்பு + சுமத்தல்.]

உடமுள்

 உடமுள் uḍamuḷ, பெ.(n.)

   வேல மரத்தின் மூள்; thorn of the Acacia tree (சா.அக.);.

     [ஒடு → உடு + முள் – உடமுள்]

உடமை

உடமை uḍamai, பெ.(n.)

   1. ஒருவனுக்கு உரியதான; ownership, proprietorship.

   2. உடனிருக்கும் பொருள்; belongings.

   3. செல்வம், பொருள்; wealth. property

   ம. உடம;   க. ஒடமெ. தெ. ஒடமி ஒடமை, து. ஒடவெ;   பட ஒடமெ;கோத ஒடய்ன் (பொருளுக்குரியவர்);

     [உடு → உடை → உடைமை → உடமை (வேக);.]

உடம்

 உடம் uḍam, பெ. (n.)

   வேலமரம்; babool tree. (சா.அக.);.

     [ஒடு → ஒடம் → உடம்.]

உடம்படல்

 உடம்படல் uḍambaḍal, பெ. (n.)

உடன்படு-தல் பார்க்க See udaspadu.

     [உடன் + படல் = உடன்படல் → உடம்படல்.]

உடம்படிக்கை

 உடம்படிக்கை uḍambaḍikkai, பெ. (n.)

உடன்படிக்கை பாக்க;see udanpadikkai.

   ம. உடம்படி;   க. ஒடம்படிகெ;   தெ. ஒடம்படிக;து. ஒடம்படிகெ.

     [உடன் + படிக்கை = உடன்படிக்கை → உடம்படிக்கை (கொ.வ.);.]

உடம்படு-தல்

உடம்படு-தல் uḍambaḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   ஒப்புதல்; to Consent agree to acquire,

   ம. உடம்பெடுக;க. ஒடம்படு.

     [உடன் + படு = உடன்படு → உடம்படு. உடன்படு பார்க்க See udanpadu.)

உடம்படுத்தநோய்

 உடம்படுத்தநோய் uḍambaḍuttanōy, பெ. (n.)

   முகக்குற்றக் கோளாறுகளினாலும் மனவருத்தங்களினாலும் இயல்பாகவே உடம்பிலேற்படும் நோய்; disease of an idiopathic type due to the morbid diathesia of the body arising from the action of any of the three

 fundamental bodily humours or from the dynamical energies of the mind. (சா.அக.);

     [உடம்பு + அடுத்த + நோய்.]

உடம்படுமெய்

உடம்படுமெய் uḍambaḍumey, பெ. (n.)

நிலை மொழி யீற்றிலும் வருமொழி முதலிலும் உள்ள இரண்டு உயிர்களைச் சேர்க்கும் மெய்யெழுத்து (அவை ‘ய், வ்’ என்பன. (நன். 162.); (gram); consonantal glide ‘y’ or ‘v’ which comes in combination of two vowels to prevent a hiatus.

உடம்படுவிலக்கு

 உடம்படுவிலக்கு uḍambaḍuvilakku, பெ. (n.)

   அணி வகையுளொன்று;   அஃது உடம்பட்டார் போலக் கூறி விலக்குவது; figure of speech (ஆ.ஆக.);.

     [உடன் + படு + விலக்கு.]

உடம்பறியாமற்போதல்

உடம்பறியாமற்போதல் uḍambaṟiyāmaṟpōtal, பெ. (n.)

   1. மயக்கமுறல்; swooning.

   2. உணர்ச்சியற்றுப்போதல்; becoming senseless, to be void of perception.

   3. மெய்மறத்தல்; becoming unconscious. (சா.அக.);

     [உடம்பு + அறியாமல் + போதல்.]

உடம்பறியாமை

உடம்பறியாமை uḍambaṟiyāmai, பெ. (n.)

தன்னை

   மறத்தல்; unconsciousness.

   2. சுழுத்தி நிலை;   3. மருள்;     [உடம்பு + அறியாமை]

உடம்பழிவு

 உடம்பழிவு uṭampaḻivu, பெ. (n.)

   உடல் நலிவு; i health.

     [உடம்பு+அழிவு]

உடம்பாடு

உடம்பாடு1 uḍambāḍu, பெ. (n.)

   இசைவு; agreement. consent_அது எனக்கும் உடம்பாடு (உவ.);.

   2. ஒற் றுமை union, concord.

     “உடம்பாடிலாதவர் வாழ்க்கை” (குறள். 890);.

   3. உடன்படிக்கை; agreement.

   ம. உடம்பாடு;தெ. ஒடம்பாடு

     [உடன் + (படு); → பாடு = உடன்பாடு → உடம்பாடு.]

உடம்பிடி

உடம்பிடி uḍambiḍi, பெ. (n.)

   வேல்; spear

     “உடம்பிடித் தடக்கை” (பெரும்பாண். 76);

     [உடன் + பிடி = உடன்பிடி → உடம்பிடி = கையில் எப்பொழுதும் உடன்பிடித்திருக்கும் வேல்.]

உடம்பின்கூறு

 உடம்பின்கூறு uḍambiṉāṟu, பெ. (n.)

உடற்கூறு பார்க்க see udarkuru (சா.அக.);.

     [உடம்பு + இன் + கூறு.]

உடம்பிலை

 உடம்பிலை uḍambilai, பெ. (n.)

நெடுநாரை பார்க்க See nedumarai

     [ஒருகா உடம்பின → உடம்பிலை.]

உடம்பு

உடம்பு uḍambu, பெ. (n.)

   1. உடல் (குறள் 338.);; body.2 மெய்யெழுத்து;

 consonant.

     “உயிருமுடம்புமா முப்பதும்” (நன். 59);.

   3. உயிருக் கிருப்பிடம் (ஆ.ஆக.);; receptacle for life.

   ம. உடம்பு;   க. ஒடம்பெ. ஒடம்பி;   து. உடலு. ஒடாலு;தெ. ஒடலு. ஒள்ளு

     [உழல் → உடல் → உடம்பு]

உடம்பு இறங்கு-தல்

 உடம்பு இறங்கு-தல் uṭampuiṟaṅkutal, செ.கு.வி. (v.t.)

   கருக்கலைதல்; abortion.

அவளுக்கு நான்காம் மாதத்திலேயே உடம்பு இறங்கி விட்டது. (இ.வ.);

     [உடம்பு+இறங்குதல்]

உடம்புகட்டுவிடல்

 உடம்புகட்டுவிடல் uḍambugaḍḍuviḍal, பெ. (n.)

உடம்பு தளர்தல்,

 infirmity through old age, to lose strèngth.

     [உடம்பு + கட்டுவிடல்.]

உடம்புகருத்தல்

 உடம்புகருத்தல் uḍambugaruttal, பெ. (n.)

காய்ச்சலால்

   கருத்தல்; dosha (defect); arising from fever, asphixiated condition.

     [உடம்பு + கருத்தல்.]

உடம்புகாந்தல்

 உடம்புகாந்தல் uḍambukāndal, பெ. (n.)

உடம்பு

   வெப்பங்கொள்ளல்; body becoming hot (சா.அக.);.

     [உடம்பு + காந்தல்.]

உடம்புக்கீடு

உடம்புக்கீடு uḍambukāḍu, பெ. (n.)

   மெய்ம்மறை (கவசம்);; armour, coat of mail.

சீலமே யுடம்புக்கீடு (சீவக. 307.4 உரை);.

     [உடம்பு + கு + ஈடு = உடம்புக்கீடு + உடம்புக்கு இட்டுக் (அணிந்து); கொள்வது.]

உடம்புதேற்று-தல்

உடம்புதேற்று-தல் uḍambudēṟṟudal,    5 செ.கு.வி. (v.i.)

   உடம்பை வலிமையாக்குதல்; to make one grow strong in body.

     [உடம்பு + தேற்று-தல் தேறு → தேற்று (பி.வி);.]

உடம்புநடுக்கம்

உடம்புநடுக்கம் uḍambunaḍukkam, பெ. (n.)

   1. நோய், அச்சம், சினம் முதலியவற்றால் உடம்பில் ஏற்படுமோர் வகை அசைவு; trembling arising from disease, fear, anger or excitement

   2. குளிரினால் உடம்பு உதறல்; shivering out of cold.

     [உடம்பு + நடுக்கம். நடுங்கு + நடுக்கம்.]

உடம்புபிடித்தல்

உடம்புபிடித்தல் uḍambubiḍittal,    4 செ.கு.வி. (v.i.)

   1. உடம்பிற் சதை உண்டாதல்; to pick up flesh.

   2 உடம்பைக் கையாற் பிடித்து அமுக்குதல்; the process of pressing the parts of a person’s body, shampooing, to massage, (சா.அக.);

     [உடம்பு + பிடித்தல்.]

உடம்புவேறுதல்

உடம்புவேறுதல் uḍambuvēṟudal,    5. செ.கு.வி. (v.i.)

   உடல் நலம் அடைதல்; to recover one’s health and strength as a convalescent

     [உடம்பு + தேறு]

உடம்பெடு-த்தல்

உடம்பெடு-த்தல் uḍambeḍuttal, செ.கு.வி. (vi)

   1.பிறத்தல்; to be born with a material body.

     “படிக்க வுடம்பெடுத்தேன்” (இராமநா. ஆரன். 25);.

   2.. செயலுடையனாதல்; to lift oneself up;

 to have the strength to move அடித்த அடியால் அவன் உடம்பெடுக்க முடிய வில்லை.

   3. உடம்பு தேறல்; recover from ailment ஆ.அக.).

     [உடம்பு + எடு-த்தல், எடுத்தல் = பிறத்தல், தோன்றுதல், செயற்படல், நலமுறல்]

உடம்பை

 உடம்பை uḍambai, பெ.(n.)

   கலங்கற்புனல் (பிங்.);; turbid water.

     [உழம்பு → உழம்பை → உடம்பை. உழம்புதல் = கலங்குதல்.]

உடம்பைத்தேற்றல்

உடம்பைத்தேற்றல் uḍambaittēṟṟal, பெ.(n.)

   1. நோயா லிளைத்த உடம்பை மருந்து கொடுத்துத் தேற்றுதல்; toning up the body with medicine.

   2. இளைத்த உடம்பிற்குத் குதகுந்தபடி ஊட்டங்கொடுத்தல்; strengthening the body by nourishment during convalescence.

   3. உடம்பை வலுவடையச்செயதல்; invigorating the system (சா.அக.);.

     [உடம்பு + ஐ + தேற்றல். தேறு → தேற்று → தேற்றல்.)

உடம்பொமுபுணர்த்தல்

உடம்பொமுபுணர்த்தல் uḍambomubuṇarttal, பெ.(n.)

   கூறும் இலக்கியத்திலேயே சொல்ல வேண்டிய தொன்றை உய்த்துணர வைக்கை (குறள், 27 உரை);; device in literary art in which an author seeks skilfully to suggest by implication certain ideas which, being quite germane to the subject he is dealing with, would in his opinion, help to make his presentation quite clear to the reader, but which he (the author); could not except as digression, proceed to elaborate in the regular course in his work.

     [உடம்பு_ + ஒடு +_புணர்த்தல்.]

உடர்

உடர் uḍar, பெ.(n.)

   உடம்பு; body.

     “உடரெலா முயிரிலா” (கம்பராகுக.70);. (ஆ.அக.);.

     [உடல் → உடர். ஒ.நோ. சாம்பல் → சாம்பர் பந்தல் → பந்தர்]

உடர்களி-த்தல்

உடர்களி-த்தல் uḍarkaḷittal,    4 செ.கு.வி. ([v.i.)

உடற்கரி பார்க்க;see udarkari.

     [உடல் + கரி – உடற்கரி → உடர்கரி.]

உடற்கடுப்பு

உடற்கடுப்பு uḍaṟkaḍuppu, பெ. (n.)

   1. உடம்பினி லேற்பட்ட யெரிவு; burning sensation in the body.

   2. உடல்வெதுப்பு; irration

   3. உடம்பின் குத்தல்,

 darting pain in the body as in rheumatism. (சா.அக);.

     [உடல் + கடுப்பு.]

உடற்கட்டிதம்

உடற்கட்டிதம் uḍaṟkaḍḍidam, பெ. (n.)

   இருக்கை வகை (சிலப். 8.25. உரை.);; a posture of sitting, one nine tiritaravilla-v-Irukkai.

உடற்கரி-த்தல்

உடற்கரி-த்தல் uḍaṟkarittal,    4 செ.கு.வி. (v.i)

   தோள் தட்டுதல் (சிலப். 6.49);; pat one’s own shoulder, as in challenging (செ.அக.);

     [உடல்+ கரி-த்தல், கருத்தல் = செய்தல், கருத்தல் → கரித்தல்.)

உடற்கருவி

 உடற்கருவி uḍaṟkaruvi, பெ. (n.)

   மெய்ம்மறை (வின்);; coat of mail, armour. (செ.அக.);.

     [உடல் + கருவி.]

உடற்கல்வி

 உடற்கல்வி uṭaṟkalvi, பெ. (n.)

   பலவகைப் பயிற்சி மூலம் அளிக்கும் உடல்வளத்திற்கான கல்வி; physical education.

     [உடல்+கல்வி]

உடற்கழிவு

 உடற்கழிவு uḍaṟkaḻivu, பெ. (n.)

   உடம்பினின்று கழியும் கழிவுகள் (மலம், சிறுநீர் முதலியன);; waste matter discharged from the body such as, urine, faeces, etc. (சா.அக.);.

     [உடல் + கழிவு.]

உடற்காப்பு

உடற்காப்பு uḍaṟkāppu, பெ. (n.)

உடற்கருவி பார்க்க;see udarkaruvi

     “இருப்புடற் காப்பினர்” (திருவிளை, நரிபரி. 29);. (செ.அக.);.

     [உடல் + காப்பு.]

உடற்காயம்

 உடற்காயம் uḍaṟkāyam, பெ. (n.)

   உடம்பி லேற்பட்ட காயம்; physical injury. (சா.அக.);

     [உடல் + காயம்.]

உடற்காவல்

உடற்காவல் uḍaṟkāval, பெ. (n.)

உடற்கருவி பார்க்க;see பdarkaruvi.

     “ஒன்றானு மறாவுரு வாவுடற் காவலோடும்” (கம்பரா. நாகபா. 15);. (செ.அக.);.

     [உடல் + காவல்.]

உடற்குறி

 உடற்குறி uṭaṟkuṟi, பெ. (n.)

   உடலுறுப்புகளால் காட்டும் அடையாளம்; bodily sign, mark.

     [உடல்+குறி]

உடற்குறை

 உடற்குறை uḍaṟkuṟai, பெ. (n.)

   தலையற்ற உடல்;   தலையரிந்த மரம்; headless body, trunk.

     [உடல் + குறை]

உடற்குற்றம்

உடற்குற்றம் uḍaṟkuṟṟam, பெ. (n.)

   மாந்தனின் உடம் புக்கு உளதாகும் பதினெண் குற்றங்கள்; eighteen moral and physical imperfections or defects attributed to the human body viz.,

   1. பசி; hunger.

   2 நீர்வேட்டல்; thirst

   3. அச்சம்; fear.

   4. வெகுளி; anger.

   5. உவகை; delight.

   6. வேண்டல் ஆசை; desire.

   7. நிணைப்பு; thought.

   8. உறக்கம், தூக்கம்; sleep

   9. நரை; grey hair.

   10. நோய்; disease.

   11 சாவு; death.

   12 பிறப்பு; birth.

   13. மதம்; self-conceit.

   14. இன்பம்; pleasure.

   15. வியப்பு; surprise.

   16. வியர்த்தல்; perspiration.

   17. துன்பம்; grief.

   18. கையறவு; inability, (சா.அக);.

     [உடல் + குற்றம்]

உடற்கூறு

 உடற்கூறு uḍaṟāṟu, பெ. (n.)

   உடல் அமைப்பு;   உடலின் கூறு; anatomy of the body. (செ.அக.);.

     [உடல் + கூறு.]

உடற்கூற்றிலக்கணம்

 உடற்கூற்றிலக்கணம் uḍaṟāṟṟilakkaṇam, பெ. (n.)

   உடம்பி னுறுப்புகளின் தொழில்களையும் அவைகளின் தன்மைகளையும் பற்றிக் கூறுமோர் நூல்; science of parts of the human body, its structure, frame, quality and also the functions of the several organs. (சா.அக.);.

     [உடல் + கூற்று + இலக்கணம்.]

உடற்கூற்றுவண்ணம்

 உடற்கூற்றுவண்ணம் uḍaṟāṟṟuvaṇṇam, பெ. (n.)

   பட்டினத்தடிகள் செய்த ஒரு நூல்; treatise by Pattinattadigal.

     [உடல் + கூற்று + வண்ணம்.]

உடற்சி

உடற்சி uḍaṟci, பெ. (n.)

   சினம்; irritation, resentment, anger,

     “உடற்சி செய்ய” (சீவக. 1078);. (செ.அக.);.

     [உடல் + உடற்சி.]

உடற்பயிற்சி

 உடற்பயிற்சி uṭaṟpayiṟci, பெ. (n.)

   உடம்பை வளமாகவும் வலிமையாகவும் வைத்துக் கொள்வதற்காக மேற்கொள்ளும் உடல் இயக்கும் செயல்கள்; physical exercise.

     [உடல்+பயிற்சி]

     [P]

உடற்பொருள்

 உடற்பொருள் uḍaṟporuḷ, பெ. (n.)

   உடலுக்குள் உண்டாகும் மான்மணத்தி (கஸ்துரி);, ஆன்மணத்தி (கோரோ சனை);, புனுகு, அம்பர் முதலிய பொருள்கள்; scented substances such as musk. bezoar, amber etc. found inside, the body of animals. (சா.அக.);.

     [உடல் + பொருள்.]

ம. உடன்கட்ட.

உடலக்கண்ணன்

உடலக்கண்ணன் uḍalakkaṇṇaṉ, பெ. (n.)

   உடல் முழுமையும் கண்கள் கொண்ட இந்திரன் (கல்லா.1);; Indra who has eyes all over his body. (செ.அக.);

     [உடல் + அ + கண்ணன், அகரம் ஆறனுருபு. உடலக்கண்ணன் = உடம்பெல்லாம் கண்ணுடையவன். கண் = துளை, துளை யடையாளம்.]

உடலதிர்ச்சி

 உடலதிர்ச்சி uḍaladircci, பெ. (n.)

   காயம் அல்லது மன வருத்தத்தினால் நரம்புக் குண்டாகு மதிர்ச்சி; sudden vital depression due to an injury or emotion, acting on the nervous system-shock (சா.அக);

     [உடல் + அதிர்ச்சி.]

உடலந்தம்

 உடலந்தம் uḍalandam, பெ. (n.)

உடம்பழிவு பார்க்க; See udambalovu

     [உடல் + அந்தம்.]

உடலனல்

 உடலனல் uḍalaṉal, பெ. (n.)

   உடம்பில் நிற்கும் சூடு; bodily temperature, animal heat (சா.அக);.

     [உடல் + அனல்]

உடலம்

உடலம் uḍalam, பெ. (n.)

   உடம்பு; body.

     “சலந்தரனுடலந்தடிந்த”. (தேவா. 584.7);. (செ.அக.);. ம. உடலம்.

     [உடல் → உடலம்.]

உடலற்பனை

 உடலற்பனை uḍalaṟpaṉai, பெ. (n.)

   திப்பிலிப்பனை; elephant’s palm (சா.அக.);,

     [உடலன் + பனை.]

உடலற்றநாள்

உடலற்றநாள் uḍalaṟṟanāḷ, பெ. (n.)

. (n.);

   மாழ்கு (மிருகசீரிடம்);. நெய்மீன் (சித்திரை);, பறவை (அவிட்டம்); ஆகிய நாள்கள் (சோதிட சிந்.40);; naksatras, mirukaciridam, chittirai, and avittam, their earlier halves belonging to certain signs of the Zodiac and the latter halves to the next signs (செ.அக);.

     [உடல் + அற்ற + நாள். இந்நாளில் மனை கோலக்கூடாது.]

உடலல்

 உடலல் uḍalal, தொ.பெ. (vbl.n) உடல்(லு)-தல் பார்க்க;see udal. (செ.அக.).

     [உடல் + அல்.]

உடலவருத்தனை

உடலவருத்தனை uḍalavaruttaṉai, பெ. (n.)

   மெய்யாற் செய்யும் நடனக்குறி (சிலப். 3.16. உரை);; gesticulation by means of movements of the body. (செ.அக);.

     [உடல் + வருத்தனை. த. வருத்தல். Skt variana.வருத்தனை அகரம், சாரியை.]

உடலாட்டம்

உடலாட்டம் uḍalāḍḍam, பெ. (n.)

   ); மாட்டுக் குற்றவகை (பெரியடாட்.20);; defect in cattle. (செ.அக);.

     [உடல் + ஆட்டம்]

உடலிரண்டுயிரொன்று

உடலிரண்டுயிரொன்று uḍaliraṇḍuyiroṉṟu, பெ. (n.)

   1. கிளிஞ்சல்; shell.

   2. நட்பு; friendship.

     [உடல் + இரண்டு + உயிர் + ஒன்று.]

உடலிருந்தவீடு

உடலிருந்தவீடு uḍalirundavīḍu, பெ. (n.)

   உடலொடு பேறு, உயிர்ப்பேறு (சீவன் முத்தி);. (ஞானவா. ஞான. விண். 36);; emancipation of the soul while it is still in the bondage of the flesh, opp to, உடலிறந்தவீடு. (செ.அக.);.

     [உடல் + இருந்த + வீடு.]

உடலிறந்தவீடு

உடலிறந்தவீடு uḍaliṟandavīḍu, பெ. (n.)

   உடல் விட்டபேறு (விதேகமுத்தி);. (ஞானவா. ஞானவிண். 36);; emancipation of the soul after death, opp. to உடலிருந்த வீடு. (செ.அக.);

     [உடல் + இறந்த + வீடு.]

உடலிலான்

 உடலிலான் uḍalilāṉ, பெ. (n.)

   சிவனின் கனலால் எரிக்கப்பட்டுச் சாம்பலாக்கியதால் உடலற்று இருக்கும் காமன்; one who has no body, referring to mythical Manmadan, the Indian Cupid, whose body was burnt to ashes by the fiery stare of Siva (W.); (செ.அக.);.

     [உடல் + (இல்லான்); இலான்.]

உடலுதல்

 உடலுதல் uḍaludal, பெ. (n.)

   உடம்பு பருத்தல் அல்லது வீங்கல்; of swelling of the body-edima (சா.அக.);

     [உடல் + ஊதல். ஊதல் = பருத்தல்.)

உடலுநர்

உடலுநர் uḍalunar, பெ.(n.)

பகைவர், Ioes

     “உடலுந ருட்க” (புறநா. 17,36);.

     [உடல் → உடலு → உடலுநர்.|

உடலும்பனை

 உடலும்பனை uḍalumbaṉai, பெ. (n.)

கூந்தற்பனை elephant’s palm (சா.அக);.

     [உடலும் + பனை – உடலும்பனை → உடலிம்பனை. (கொ.வ.);]

உடலுருக்கி

 உடலுருக்கி uḍalurukki, பெ. (n.)

   கணைக்குடு (பைஷஜ);; wasting disease of childhood. (செ.அக);.

     [உடல் + உருக்கி.]

உடலெடு-த்தல்

உடலெடு-த்தல் uḍaleḍuttal,    4 செ.கு.வி. (v.i.)

   1. உடம்பெடு;see udambedu,

     [உடல் + எடு_.]

உடலெழுத்து

 உடலெழுத்து uḍaleḻuttu, பெ. (n.)

   மெய்யெழுத்து; consonant (செ.அக.);. [உடல் + எழுத்து.]

உடல்

உடல்1 uḍal, பெ.(n.)

   1. உடம்பு (பிங்.);; body.

   2. மெய்யெழுத்து; consonant.

     “உடன் மேலுயிர் வந்து” (நன். 204);.

   3. பிறவி; birth,

     “தோலினுடையாலும் தீராதுடல்” (சைவச, பொது. 403);.

   4. கருவி; means, instrument.

     “பகவதனுசந்தானத்துக்குடலாமே” (ஈடு. 1.2.8);.

   5. பொன் (திவா.);; gold,

   6. பொருள்; money, the wherewithal.

     “விளக்கேற்றற் குடலில னாப” (பதினொ. திருத்தொண். 54);.

   7. ஆடையின் கரை யொழிந்த பகுதி; main body of a cloth, excluding the border spaces, உடல் அரசுக்கு (உ.வ.);.

   8. ஆடையினிழை; texture of a cloth as judged by the warp and woof.

   9. உயிருடனிருப்பது; alive.

   10. உடலிருக்கும் கூடு; skeletal frame.

   ம. உடல் க. ஒடல்;   தெ. ஒடலு. ஒன்று கோத ஒட்ள்வ;   துட . விடன்;   து. உடலு ;   உடாலு;கூ. ஒல்லு.

     [உழல் → உடல்.]

 உடல்2 uḍal, பெ. (n.)

   பெரிய முரசு; big drum (Loc.);

     [உதள் → உதல் → உடல், உதள் பார்க்க;see udai. ஒ.நோ. Hind. dhd.]

உடல் இயங்கியல்

 உடல் இயங்கியல் uṭaliyaṅkiyal, பெ. (n.)

   உயிர்ப்பொருள்களில் இயங்குமுறை அல்லது இயற்கையான செயற்பாடுகளைக் குறித்த அறிவியல்; physiology.

     [உடல்+இயங்கியல்]

உடல்(லு)-தல்

உடல்(லு)-தல் uḍalludal,    13. செ.கு.வி. (v.i.)

   1. சிற்றங் கொள்ளுதல்; to be enraged

     “உடன்று மேல் வந்த வம்ப மள்ளரை” (புறநா. 77.9);.

   2. மாறுபடுதல்; to quabble;

 to bicker, wrangle.

     ” உடலினேல்லேன்” (ஐங்குறு.66);.

   3. போர் புரிதல்(திவா.);; to fight, wage war,

   4. ஆசையால் வருந்துமல்; to pine for, yearn after.

     “உள்ளமுடன் றெழுகின்றதே” (சீவக. 2005);.

   5. ஒளிர் தல் (ஆ.அக);; to shine, glitter.

     [உள் → உடு → உடல் (வெப்பமடைதல்);- உடலு-தல்.]

உடல்கணத்தல்

 உடல்கணத்தல் uḍalkaṇattal, பெ.(n.)

   உடம்பு பருத்தல்; growing stout and heavy, (சா.அக);.

     [உடல் + (கனம்); கனத்தல்.]

உடல்கணப்பு

 உடல்கணப்பு uḍalkaṇappu, பெ.(n.)

உடம்பு காந்தல்:

 growing hot (சா.அக.);.

     [உடல் + கணப்பு. கனல் → களப்பு.]

உடல்தளிர்காணல்

 உடல்தளிர்காணல் uḍaltaḷirkāṇal, பெ.(n.)

   மெலிந்த உடம்க மறுபடியும் சதைபற்றல்; putting on flesh (சா.அக.);.

     [உடல் + தளிர் + காணல்.]

உடல்நூல்

 உடல்நூல் uṭalnūl, பெ. (n.)

   உயிரினங்கள் இயங்கும் முறை, இயற்கையான செயற்பாடு ஆகியன குறித்த அறிவியல் முறையான ஆய்வு; physiology.

மறுவ உடலிங்கியல்

     [உடல்+நூல்]

உடல்வளர்ச்சி

உடல்வளர்ச்சி uḍalvaḷarcci, பெ.(n.)

   1. உயிர் வாழ்வதற்கு வேண்டும் பொருள்கள்; necessaries of life

     “திண்ணெனவென் னுடல் விருத்தி தாரேயாகில்” (தேவா. 678, 9);.

   2. உடல் வளருகை; growing physically.

     [உடல் + வளர்ச்சி.]

உடல்வாசகம்

உடல்வாசகம் uḍalvācagam, பெ.(n.)

   1. முதலும் முடிவு மொழிந்த மடல் (எழுத்தாவணம்); பாகம் (வின்);; man body of any writing exclusive of the greeting and the signature, as in a letter (W.);.

     [உடல் + வாசகம், வாசி → வாசகம்.]

உடல்விடாவீடு

 உடல்விடாவீடு uḍalviḍāvīḍu, பெ.(n.)

உடலிருந்த வீடு பார்க்க;see udalirunda-vidu.

     [உடல் + விடா + வீடு.]

உடல்விடுவிடு

 உடல்விடுவிடு uḍalviḍuviḍu, பெ.(n.)

உடலிறந்த வீடு பார்க்க;see udaliranda-vidu.

உடல்வினை

உடல்வினை uḍalviṉai, பெ.(n.)

   முன்வினை; fruits of one’s previous karma that are experienced in the present lite

     “உடல்வினையோடும் ஆண்டுப் பிறந்தது” (சி.போ. பா. 8.1.1);, (செ.அக.);

     [உடல் + வினை. உடலோடு வந்த வினைப்பயன்.]

உடல்வெக்கை

 உடல்வெக்கை uṭalvekkaiya, பெ. (n.)

   மாட்டிற்கு வெயில் காலத்தில் வரும் நோய்; a disease of cow.

     [உடல்+வெகிர்]

உடல்வெதுப்பு

 உடல்வெதுப்பு uḍalveduppu, பெ.(n.)

   உடம்பை யடுத்த சூடு; bodily heat, animal heat. (சா.அக.);.

     [உடல் + வெதுப்பு, வெதும்பு → வெதுப்பு.]

உடல்வெள்ளை

 உடல்வெள்ளை uḍalveḷḷai, பெ.(n.)

   பக்கங்கள் மட்டும் சாயமூட்டிய வெள்ளையுடை (யாழ்ப்.);; cloth that is dyed only at the borders leaving the main body of the cloth white (செ.அக.);

     [உடல் + வெள்ளை. உடம்பு = புறத்தே வெளிப்படக் காணும்

உடல்வேதிச்சி

 உடல்வேதிச்சி uḍalvēticci, பெ. (n.)

கொடி வேலி பார்க்க;see kodiveli.

உடல்வேலை

 உடல்வேலை uḍalvēlai, பெ. (n.)

ஒவியம் வரைதல், வண்ணம் பூசுதல் ஆகியவற்றின் அடிப்படை வேலை,

 body of a work, chiefly applied to painting or any other art work (செ.அக.);.

     [உடல் + வேலை.]

உடவ்காஙயதல்

 உடவ்காஙயதல் uḍavkāṅayadal, பெ.(n.)

   காய்ச்சல்; suffering from fever, (சா.அக.);.

     [உடம்பு + காய்தல் (காய் = காய்தல், வெப்பமடைதல்);.]

உடா

 உடா uṭā, பெ. (n.)

   உடும்பு; iguana

     [உடு → உடுவு → உடா.]

உடு

உடு1 uḍuttal,    18 செ.குன்றாவி. (v.t.)

   1. சேர்தல் பொருந்துதல்; to join, stick,

   2. ஆடை முதலியன அணிதல்; to put on as clothes.

     ”பட்டுந்துகிலு முடுத்து” (நாலடி. 264);,

   3. சூழ்தல்; to surround, encircle

     “அருங்குறும் புடுத்த கானப் பேரெயில்” (புறநா.21;);

   3. சேர்த்ல்;   பொருந்தல்; to join, stick.

   ம. உடுக்குக;   க. ஒடு, உடி உடிகெ, உடுகெ;   தெ. உடுதுட. உட்ப்;   குட உடி, உடிபி;   து. உடுங்ரே;கோண்.. கட ஊட்.

     [உள் → உடு → உடு-த்தல்.]

 உடு2 uḍu, பெ. (n.)

   1. உடும்பு; iguana.

   2. உடைபேர கோட்டை மதிலைச் சுற்றியுள்ள அகழி; moat.

   க. உடு, உட;   தெ. ‘உடு’;   து. உடு, ஒடு, ஒட்டு;ம. உடும்பி கொலா. உடுகை.

     [உள் → உடு. உள் = பொருந்துதல். பற்றுதல், உடு = பற்றிக கொள்ளும் இயல்புடைய உடும்பு.]

 உடு3 uḍu, பெ, (n.)

   1. விண்மீன்; star.

   2. வெள்ளி Venus.

க. தெ. உடு.

     [உடு = விளங்குதல் (எரிதல்); கருத்துவேர் ஒளியுள்ள நா_ மீன். வெள்ளி உள் → உடு. (ஒ.நோ.); தொள் → தொடு பள் → படு.]

உடு4

–, பெ, (n.);

   1. இடுப்பு; wast

   2. ஆடு (பிங். goat. sheep.

     [உள் → உடு = ஒடுங்கிய மருங்குடையது.]

உடு5

–, பெ, (n.);

   1. நாணைக் கொள்ளுமிடம் (குறிஞ்சிப். 170);; point where the arrow is pressed against the bow-string

   2. அம்பு; arrow

     “உடுவென்று நஞ்சந் துய்த்து’ (இரகு மீட்சி. 50);.

   3. அம்பினிறகு; feather of an arrow.

     “உடுவமை பகழிவாங்க” (சீவக 2191);.

   4. அம்புத்தலை (பிங்.);; arrow-head.

   5. ஒடம் இயக்குங் கோல் (பிங்.);; oar, boatman’s pole (செ.அக.);.

     [உள் → உடு. உள் = பொருந்தல், உடு = பொருந்துவது.]

உடு6

–, பெ, (n.);

   1. பள்ளம்; deep pit.

   2. அகழி moat.

   3. நீர்நிலை; pool, tank.

     [உள் → உடு (பள்ளம்);.]

   9

 உடு7 uḍu, பெ. (n.)

உசிலைமரம் black slissa க. உடு. (உசிலைப்பூ);

மறுவ, சீக்கிரி மரம், உசிலை, ஊஞ்சமரம், துரிஞ்சில்மரம், அரஞ்சி, அரைப்புமரம், உறிஞ்சுமரம், உடுப்பை.

     [உள் → உடு. உள் → வெப்பம். உடு = வெப்பத்தால் கோடையில் இலையுதிர்க்கும் மரம்.]

 உடு8 uḍu, பெ. (n.)

   உடுத்துக்கொள்ளும் உடுப்பு; dress, robe.

     [உடு (வி.); → உடு (பெ.);.]

உடு என்னும் முதனிலைத் தொழிற்பெயர் உடுத்துக்கொள்ளும் ஆடைக்கு ஆயிற்று.

உடுகாட்டி

 உடுகாட்டி uḍukāḍḍi, பெ. (n.)

பொன்னாங்காணி பார்க்க. see ponnangāni (செ.அக.);.

     [உடு + காட்டி]

உடுக்கு

உடுக்கு1 uḍukku, பெ. (n.)

   இடையொடுங்கிய சிறு பறை; small drum tapering in the middle.

   தெ. உடுக;   ம. உடுக்க;   க. து. உடுகு;   குவி. டுறு; Pthudukku;

 Skt. hudukka.

     [(உடு → உடுக்கு. உடு = ஒடு ஒடு → ஒடுகு → ஒடுங்கு → ஒடுக்கு → ஒடுக்கம் (வ.மொ.வ.22);.]

 உடுக்கு2 uḍukku, பெ. (n.)

   1. வெப்பம்; heat 2 கொத்தில்;

 bolling. தெ. உடுக்கு.

     [உள் → உடு → உடுக்கு.]

உடுக்குச்சுருக்கம்

 உடுக்குச்சுருக்கம் uḍukkuccurukkam, பெ. (n.)

   உடம் பின் நடுவிலிருக்கும் உறுப்பினுடைய (அதாவது வயிறு அல்லது கருப்பையின்); சுருக்கம்; contraction of an organ (as the stomach or the uterus); at or near the middle of the body, hour-glass contraction. (சா.அக.);.

     [உடுக்கு + கருக்கம்.]

உடுக்கை

உடுக்கை1 uḍukkai, பெ. (n.)

   உடை;   ஆடை; raiment, clothing.

     “உடுக்கை யிழந்தவன் கைபோல” குறள். 788);. (செ.அக.);. க. உடுகெ, உடிகெ.

     [உடு – உடுக்கை. உள் → உடு – பொருந்துதல், இடுப்பிற்செரு கிக் கட்டுதல், உடுத்தல்.]

 உடுக்கை2 uḍukkai, பெ. (n.)

   இடைசருங்கு பறை; drum tapering in the middle. நிலையாய் உடுக்கை வாசிப்பான். (SII.ii.254);.

     [P]

உடுக்கை

   ம. உடுக்க;   க. உடுகு, தெ. உடுக;த. உடுகு → Sk hudukka

     [உடு → உடுக்கு → உடுக்கை. உடுக்கை = ஒடுங்கிய நடுப்பகு தியை உடையது.]

உடுக்கைக்கொடி

 உடுக்கைக்கொடி uḍukkaikkoḍi, பெ. (n.)

   வள்ளிக் கொடி; creeper of the sweet potato plant (சா.அக);.

     [உடுக்கை + கொடி. உள் → உடு = பொருந்தல், நடுவிருத்தல். நடுவு.]

உடுக்கைடசசுருக்கம்

 உடுக்கைடசசுருக்கம் uḍukkaiḍasasurukkam, பெ. (n.)

   நடுவிற் சுருங்கல்; tapering in the middle as in the small drum.

     [உடுக்கை + சுருக்கம் உள் → உடு = பொருந்தல். நடுவிருத்தல், நடுவு.]

உடுக்கைமரம்

 உடுக்கைமரம் uḍukkaimaram, பெ. (n.)

   கருங்காலி மரம்; black wood. (சா.அக.);.

     [உடுக்கை + மரம்.]

உடுக்கைரேகை

 உடுக்கைரேகை uḍukkairēkai, பெ. (n.)

உடுக்கை வரிகை பார்க்க.;see udukkal-varigal.

உடுக்கைவரிகை

உடுக்கைவரிகை uḍuggaivarigai, பெ. (n.)

   கை வரி (ரேகை); வகை (சிவக். பிரபந். சரபே.குற. பக். 344);;     [உடு → உடுக்கை + வரிகை.]

உடுக்கோன்

உடுக்கோன் uḍukāṉ, பெ. (n.)

   திங்கள்; moon, lord of the stars,

     ‘உடுக்கோனாலும்.. அகன்றிடாத் திமிரவீட்டம்” (பிரமோத் 2.40);. (செ.அக.);.

 Skt uduganadhipa

     [உடு + கோன்.]

உடுசி

 உடுசி uḍusi, பெ. (n.)

   உசிவை மரம்; black sirissa. (சா.அக.);.

     [உடு → உடுசி.]

உடுதல்

உடுதல் uḍudal, பெ.(n.)

   1 இல்லாத ஒன்றை இருப்பதுபோல் கூறுதல்; to fabricate what is not real ornature.

   2.அறைகூவல் விடுதல்; to challenge.

     [உடு-உடுதல்]

உடுத்து-தல்

 உடுத்து-தல் uḍuddudal, பெ. (n.)

   செ.குன்றாவி, (v.t); ஆடையணி வித்தல்; to dress on. (செ.அக);.

     [உடு_ → உடுத்து.]

உடுத்தை

 உடுத்தை uḍuttai, பெ.(n.)

   அணில்; squirral.

     [உடு-உடுத்தை]

உடுநீர்

 உடுநீர் uḍunīr, பெ. (n.)

   அகழிநீ; dich wate (சா.அக.);.

     [உடு + நீர். உடு = பள்ளம், அகழி.]

உடுபதம்

உடுபதம் uḍubadam, பெ. (n.)

   விண் ; firmament trol its being the path of the stars.

     “உடுபதத்திவில்லை” (பாரத. கிருட் . 60);,

உடு + பதம் உடு = விண்மீன். உடுபதம் = விண்மீன்க இருக்குமிடம்.]

உடுபதி

 உடுபதி uḍubadi, பெ. (n.)

   உடுக்கோன் பார்க்க;

உடுபம்

 உடுபம் uḍubam, பெ. (n.)

   தெப்பம்; raf, toal. (செ.அக.);.

     [உடு → உடுப்பம் → உடுபம் (கொ.வ.); = உட்குழிவானதோன அல்லது தெப்பம்.]

உடுபுடைவை

உடுபுடைவை uḍubuḍaivai, பெ. (n.)

   1. உடை garments (W);. 2, எளிய உடை; dress for daily wearing ம. உடுபுடவ.

     [உடு + புடவை.]

உடுப்பம்

 உடுப்பம் uḍuppam, பெ. (n.)

தெப்பம், ratt, foal.

     [உடு → உடுப்பம். உடு = பளளம்.]

உடுப்பாத்தி

 உடுப்பாத்தி uḍuppātti, பெ. (n.)

   சிறு கடல் மீன் வகை ; light-green, fresh water fish. (செ.அக.);.

     [உடு + பாத்தி.]

     [P]

உடுப்பாத்தி

உடுப்பு

உடுப்பு uḍuppu, பெ. (n.)

   1. ஆடை cloth unsew garment

     “மணிக்கோவை யுடுப்பொடு துயல்வர (மணிமே 3, 140);.

   2. அங்கி முதலியன.

 clothe clothing, westure, dress. (செ.அக.);

   ம. உடுப்பு. க. உடபு உடுபு;   துட உட்ப்வ குட உடிபி து. உடுச்ர;தெ.

     [உடு → உடுப்பு.]

உடுப்பை

 உடுப்பை uḍuppai, பெ. (n.)

   நிலப்பாலை; round-leave discous featherfoil (செ.அக.);

     [உடு → உடுப்பை]

உடுமடி

உடுமடி uḍumaḍi, பெ. (n.)

   ); ஆடை (அமரா. கதை. 84);; apparel (செ.அக.);.

     [உடு + மடி.. மடி = ஆடை]

உடுமலைப்பேட்டை

 உடுமலைப்பேட்டை uṭumalaippēṭṭai, பெ. (n.)

   திருப்பூர் மாவட்த்தில் உள்ள நகரம்; a town in Tiruppur district.

     [உடு+மலை+பேட்டை]

உடு-உடும்பு, உடும்பு மிகுதியாக இருந்த மலை உடுமலை,

உடுமீன்

__,

பெ. (n.);

   ஐங்கோண வடிவத்திலுள்ள கடல்மீன்வகை(நட்சத்திரமீன்);; starfish.

     [உடு(விண்மீன்);+மீன்]

     [P]

உடுமானம்

உடுமானம் uḍumāṉam, பெ. (n.)

   உடை (யாழ்.அக);; dress, clothing

   2. தகுதிக்குத் தகுந்த உடை; dress style according to etiquette (செ.அக.);.

மானம் – பெயறு. ஒ.தோ வருமானம்.]

உடுமாற்று

உடுமாற்று uḍumāṟṟu, பெ. (n.)

   1. உடை மாற்றுகை; change of dress,

உடுமாற்றுக்குச் சேலையுண்டா? (உ.வ.);

   2. நடைபாவாடை; clothes used for Spreading on the floor on certain special occasions.

     [உடு + மாற்று. உடு = உடுத்துக் கொள்ளும் உடை.]

உடும்பு

உடும்பு uḍumbu, பெ. (n.)

   மூன்று அடி நீளம் வை வளரும், இந்தியா முழுமையும் காணப்படும். பெரி பிளவுபட்ட நாக்குள்ள பல்லிவகை; genus of arg thick-tongued aboreal lizards found all over India, an growing to 3 ft in length, varamus bengalenis.

     “one முடும்பும் போல் ஏறினார் ஏணிபலர்”

   ம. உடும்பு;   க. உட, உடு;   குட உடும்பி;   து. உடு, ஒடு ஒட்ட;   தெ உடுமு;   கொல உடுக். உருக்;   நா. கீடுக்;பக். உ

     [உள்- உடு = சேர்த்தல், நெருக்கல். இறுகப்பிடித்தல், பற்றுதல். [உடு → உடும்பு]

     [P]

உடும்பு

உடும்புக்கல்

 உடும்புக்கல் uḍumbukkal, பெ. (n.)

   உடும்பினுடம் பிலிருக்குங்கல். இது மருந்திற்குப் பயன்படும்; stone or calculus found inside the body of a guana useful in medicines. (சா.அக.);.

     [உடும்பு + கல்]

உடும்புக்காலிவரகு

 உடும்புக்காலிவரகு uḍumbuggālivaragu, பெ. (n.)

   வரகுவகை; variety of millet which is sown in September and matures in three months. (செ.அக.);.

     [உடும்பு + காலி + வரகு.]

உடும்புநாக்கன்

 உடும்புநாக்கன் uḍumbunākkaṉ, பெ. (n.)

   பொய்யன், ஏமாற்றுக்காரன்; one who has a double tongue as the big lizard, deceitful man, (செ.அக.);.

     [உடும்பு + நாக்கன்.]

உடும்பின் நா பிளவுபட்டிருத்தலின் முன்னொன்றும் பின்னொன்றுமாகப் பேசும் இரட்டை நாக்கு படைத்தவன் என்னும் பொருளில் இச்சொல் வழக்கூன்றியது.

உடுவம்

 உடுவம் uḍuvam, பெ. (n.)

   அம்பின் ஈர்க்கு; shaft of anarrow

     “‘உடுவந்தோன்ற… எய்திடுதலோடும்” (சீவக.

     [உடு + அம்.]

உடுவலை

உடுவலை uḍuvalai, பெ. (n.)

   ஆழமில்லா ஆற்றுப்பகுதியின் குறுக்கே அல்லது படகின் அடிப்பகுதியில் கட்டப்படும் சற்றொப்ப நாற்பது இரட்டை முழ நீள முள்ள மீன் வலை வகை; fisherman’s net, about 40 yards in length, tied across a stream in its shallow part.

     [உடு + வலை.]

உடுவிலான்

 உடுவிலான் uḍuvilāṉ, பெ. (n.)

உடுக்கோன் பார்க்க (பிங்.);;see udukkõn (செ.அக.);.

     [உடு + இல் + ஆன்.]

உடுவேந்தன்

 உடுவேந்தன் uḍuvēndaṉ, பெ. (n.)

உடுக்கோன்பார்க்க (பிங்.); see uợukkõn (செ.அக.);.

     [உடு + வேந்தன்.]

உடுவை

உடுவை1 uḍuvai, பெ. (n.)

   1. அகழி; ditch surrounding a fort (W.);.

   2. நீர்நிலை; pool, reservoir of water

     [உள் → உடு → உடுவை. உடு = பள்ளம்.]

உடை

உடை1 uḍaidal,    3 செ.கு.வி. (v.i.)

   1. தகர்தல்; break as a pot;

 to burst into fragments,

     “என்னாரும் மண்ணின் குடதுடைந்தக் கால்” (வாக்குண். 18.);.

   2. பிளத்தல்; to Crack, split, to be cloven.

     “உடைகவட்டோமை.” (கல்லா 7.);.

   3. ஏரி ஆறு முதலியன கரையுடைதல்; to be breached, as a tank. வீராணத்தேரி உடைந்தது (உ.வ.);.

   4. புண்கட்டியுடைதல்; to burst open, as a boil.

   5. முறுக்கு அவிழ்தல்; to become untwisted, as a rope, கயிற்றின் முறுக்குடைந்தது. (உ.வ.);.

   6. மலர்தல்; to blossom as a flower.

     “கோடுடையிம்.. சேர்ப்பன்” (பு.வெ.12. பெண்.3.);.7. தோற்றோடுதல்;

 to be discomfited, routed, broken, as the ranks of an army,

     “வழுதி சேனையுடைந்ததே” (திருவிளை, சுந்த ரப். 18.);.

   8. மனங்குலைதல்; to be dispirited, dejected, as one’s heart with grief;

 to be in despair.

     “உடைபு. நெஞ்சுக” (கலித். 10.);

   9. எளிமைப்படுதல் (பிங்.);; to become poor, reduced in circumstances.

   10. வெளிப்படுதல்; to be divulged, to become publicly known

   11. சாதல்; to die..’உடைந்துழிக் காகம்போல்’ (நாலடி. 284.);.

   12. கெடுதல்; to be ruined (W,);.

   13. உலைதல்; to breakdown, as a witness incross-examination (Mod);. சாட்சியுடைந்து போயிற்று (உ.வ.);. (செ.அக.);

   ம. உடயுக;   க. ஒடி ஒடெ, உடி;   கோத ஒட்வ்;   துட வட்;   குட ஒடெ, ஒட;   து. உடெபுளி, உடெவினி;   தெ. ஒடபி;   கொலா நாட்;   நா. ஒட்வ;   பர். ஓட் கோண். வோடானா;கட_ஒா.

     [உள் → உளை → உடை → உடைதல்]

 உடை2 uḍaittal,    4. செகுன்றாவி (v.t.)

   1. தகர்த்தல்; to break into pieces, as a vessel a lamp, a clod, any

 solid or massive substance, teeth.

     “மகுட கோடிகளுடைத்தலின்” (பாரத காண்டவ. 27.);.

   2. குட்டுதல் (திவா.);; to cuff on another’s head with the knuckles

   3. loso; to split, as wood, to fracture, as the Skull.

     “கட்டையையுடைத்துக்கொடு’ (உ.வ.);.

   4. கரை உடைத்தல்; to burst, as the bank of a river.

     “செறுத்தோ றுடைப்பினுஞ் செம்புனலோ டுடார்” (நாலடி. 222);.

   5.புண்கட்டியுடைத்தல்; to open, as a boil.

   6.முறுக்கவிழ்த்தல்; untwist, untwine,

   7. தோற்கச் செய்தல்; to defeat rout, put to disorderly flight.

     ” படைக்குட்டம் பாய்மா வுடையா னுடைக்கிற்கும்” (நான்மணி.18.);.

   8. வெளிப்படுத்துதல்; to break, as news;

 to reveal. அவன் அந்த இரகசியத்தை உடைத்து விட்டான் (உ.வ.);,

   9 அழித்தல்; to damage, ruin, impoverish.

     “பெண்மையுடைக்கும் படை” (குறள் 1258.);.

   10. வருத்துதல்; to trouble, distress.

     “பொறாமை யுள்ளுடைக்கு மென்க” (இரகு.யாக 12.);. (செ.அக.);.

     [உள் → உளை → உடை → உடைதல் → உடைத்தல் (பி.வி.);].1

 உடை3 uḍai, பெ. (n.)

   1. இடுப்பு; was

   2 இடுப்பில் உடுத்தும் ஈடை (திவா);; clothes, garment, dress. (செ.அக.);.

   ம. உட;   க உடெ;   தெ உடுபு;   துட. உட்ப்;   குட உடிபம் து. உடுதல்ரெ;கோண். உகாதானா.

     [உடு4 → உடை.]

 உடை4 uḍai, பெ. (n.)

செல்வம் (பிங்.); wealth.

   ம ஒட;   க ஒடெ, ஒடமெ;   கோத ஒட்பயன் (முதலாளி);, ஒட்ரம் (வீட்டுப் பொருள்);;   குட ஒடவெ (முதலாளி);;   தெ. ஒடமி, ஒடமெ;து. ஒடவெ. (செ.அக.);.

     [உள் → உடு → உடை. உடைத்தாதல், உள் = இருத்தல், உடு = தள்பாலிருத்திக்கொள்ளுதல்.]

 உடை5 uḍai, பெ. (n.)

   1. குடைவேல்மரம் (திவா.);. umbrella-thorn babul

   2. நீருடைமரம்; buffalo-thorn cutch.

   3, வேலமரவகை:; pea-podded black babul. (செ.அக.);.

     [உடு → உடை = வட்டமாய் (சுற்றாய்);க் கிளை பரப்பிய மரம்.]

 உடை6 uḍai, பெ. (n.)

   1. விடியற்காலம்; dawn. (regarded as the spouse of the sun);,

     “உடைதன் காந்த” இரகுதிக்கு 85.).

   2. எருதின் விதை; testicles of ox. எருதுக்கு உடை அடித்து விட்டார்கள் (உ.வ.);. (செ.அக.);.

     [உள் → உடு → உடை. உள் = வெப்பம், உடு = வெப்பமுடை யது. ஒளியுடையது. வெளிப்படுவது உடை = வெளிப்படுத்து வது உடை = வெளிப்படுத்துவது. ஒளியை வெளிப்படுத்தும் பாங்குடைய விடியற்காலமும், விள்ளு (விந்து); வெளிப்படும் பாங்குடைய எருதின் விதையும் உடை எனப்பட்டன. இச் சொல் தொடக்கத்தில் உள் → உளை → உழை என வழங்கிப் பின் வடமொழியில் உஷை → உஷா எனத் திரிந்தது.);

 உடை7 uḍai, பெ. (n.)

   1. முள்; thon

   2. சாணம்; cowdung. (செ.அக.);.

     [உள் → உடு → உடை = உள் இருத்தல், உடு = இருக்கச் செய்தல், கீழே கிடத்தல்.)

 உடை8 uḍai, பெ. (n.)

   சேணம் (அக.நி.);; horse – saddle. (செ.அக.);.

     [உள் → உடு → உடை உள் = இருத்தல், உடு = இருத்துதல்,

 உடை9 uḍai, பெ. (n.)

   அணிகலன் (அக.நி.);; jewellery. (செ.அக.);.

     [உள் → உடு → உடை = உடைமை உள் = இருத்தல். உடு

– தன்பாலிருத்திக்கொள்ளுதல்.]

உடைகுலைப்படு-தல்

உடைகுலைப்படு-தல் uḍaigulaippaḍudal, பெ. (n.)

   20 செ.கு.வி. (v.i.);

   1. கரையழிதல் (ஈடு. 6.4.4.);; be breached, as a bank of river of the shore of a tank

   2. நிலையழிதல்; be deranged, discomfited. உடை குலைப்படுகிற மனஸ் (ஈடு 5.1.4.);. (செ.அக.);.

     [உடை + குலை + படு-தல். உடை = சுற்று. சுற்றியிருப்பது.]

உடைகுளம்

உடைகுளம் uḍaiguḷam, பெ. (n.)

   முற்குளம் (பூராடம். (திவா.);;   20th naksatra whose configuration looks as if it were a breached tank (செ.அக.);.

     [உடை + குளம். கரையுடைந்த குளம் போன்ற தோற்றமுடையது.]

உடைகொல்

 உடைகொல் uḍaigol, பெ. (n.)

குடைவேல மரம் umbrella – thorn, babul (செ.அக.);.

     [உடை + கொல் கொல் + கொலு, சீராய் அமைதல், சுற்றிலும் ஒரு சீராய்க் குடைபோல் கவிந்தமரம்)

உடைக்கல்

உடைக்கல் uḍaikkal, பெ. (n.)

   காவிக்கல் (தைலவ. தைல. 33.);; redochre, used in dyeing. (செ.அக.);.

     [உள் → உடு → உடை = உடைமை உள் = இருத்தல் உடு = தன்பாலிருத்திக்கொள்ளுதல்.]

     [உள் + உடு → உடை + கல், உடு = வெப்பமுடையது.

ஒளியுடையது. செந்நிறமுடையது.]

உடைசல்

 உடைசல் uḍaisal, பெ. (n.)

   உடைந்த பொருள்; cracked worthless articles, broken pieces. (செ,அக.);.

     [உடை → உடைசல்.]

உடைஞாண்

உடைஞாண் uḍaiñāṇ, பெ. (n.)

உடைநாண் பார்க்க see udainan.

     “உடுத்த பஞ்சிமேற்கிடந் துடைஞான் பதைத்திலங்க” (சீவக. 2240.);.

   ம. உடஞாண் க. ஒட்யானை, தெ. ஒட்யாணமு;து ஒட்யாண. (உடை + ஞாண். நாண் → ஞாண். ஊடு → உடு → உடை = இடுப்பு. இச்சொல் நாளடைவில் உடைஞாண் → ஒடிஞான – ஒடிஞானம் → ஒட்டியாணம் எனத் திரிந்துவிட்டது.]

உடைதாரம்

உடைதாரம் uḍaitāram, பெ. (n.)

   அரையிலணியு; cord or girdle used as an omament belt over the waist-cloth.

     “உடைதாரமு மொட்டியானமும்” (மீனாட். பிள்ளைத். ஊசற். 10.);. (செ.அக.);.

க. உடுதார, உடிதார, உடெதார.

     [ஊடு → உடு → உடை + தாரம் (கயிறு). உடை = இடுட்ட ]

உடைதோல்

உடைதோல்uḍḍauḍaitōl, பெ. (n.)

   தோற்பரிசை;     “முதற்கரிகை யுடைதோலும் வாங்கிக் கொண்டு” (பெரியபு:கண் 54.);. (செ.அக.);.

க. உடெதோல், உடெதொவல்.

     [உடை + தோல். உடை = சுற்று. சுற்றான.]

உடைத்தானவன்

 உடைத்தானவன் uḍaittāṉavaṉ, பெ. (n.)

உடையவன் proprietor, possessor, owner. (செ.அக.);.

     [உடைமைத்து → உடைத்து + ஆனவன்.]

உடைநாண்

உடைநாண் uḍaināṇ, பெ. (n.)

   இடுப்பில் அணிபா நாண் அல்லது அணிகலன்; cord of ornament wor round the waist – cloth to serve as a waist band and confine the cloth at the waist

     “உடைநானொடு கடிவட்னொடு” an (சீவக. 2263);, (செ.அக.);.

க. உடெநேண், உடெநூல்.

     [உடை_நாண் (கயிறு);.]

உடைந்தவாய்ச்சிலந்தி

 உடைந்தவாய்ச்சிலந்தி uḍaindavāyssilandi, பெ. (n.)

   பெரிய ஆழ்ந்த நீண்ட பிளப்புள்ள சிலந்தி; deep and – or less linear from the ulcer-Dissured ulcer. (சா.அக.);

     [உடை → உடைந்த + வாய் + சிலந்தி.]

உடைப்படை

உடைப்படை uḍaippaḍai, பெ. (n.)

   நிலைப்படை Siv, 492);; standing army. (செ.அக.);.

     [உடை + படை]

உடைப்பட்டை

உடைப்பட்டை uḍaippaḍḍai, பெ. (n.)

   உடைக்கு பேர கட்டுங் கச்சை; kind of sash.

     “அரைப்பட்டையுடை பட்டை யூடு கட்டி” (கூளப்ப. 43.);. (செ.அக.);.

     [உடை + பட்டை]

உடைப்பிற்போடு-தல்

உடைப்பிற்போடு-தல் uḍaippiṟpōḍudal, பெ. (n.)

   10. செ.குன்றாவி. (v.t.);

   அகலத் தள்ளுதல்; cast away as worthess as a thing thrown into a breach. அதை உடைப்பிற்போடு. (உ.வ.);.

     [உடைப்பு + இல் + போடு. உடைப்பு நீண்ட பள்ளம் நெடுங்குழி, கரையுடைத்தோடும் நீர்ப்பெருக்கு மீட்டெடுக வேண்டாத கழி பொருள்களை வீசி எறிதற்குரிய இட இக்கால் சாய்க்கடையையும் குறிக்கும்.]

உடைப்பு

உடைப்பு uḍaippu, பெ. (n.)

   1. உடைத்தல்; causing to break.

   2. உடைகை; breach, bursting of a tank உடைந்த அறுவாய் (S.I.l. ii, 393);;

 portion breac=echannel cut through a ridge in a field.

   ம. உடப்பு. க. ஒடபு;து. உடி.

     [உடை → உடைப்பு. தொ.பெ.]

உடைப்புக்கட்டு

 உடைப்புக்கட்டு uḍaippukkaḍḍu, பெ. (n.)

   அணை குளம் முதலியவற்றிலுள்ள உடைப்புகளைச் செட்டனிடுகை; of Glens;

 repair of a breach in an embankment (செ.அக.);.

     [உடைப்பு + கட்டு.]

உடைப்பெடு-த்தல்

 உடைப்பெடு-த்தல் uḍaippeḍuttal, செ.கு.வி. (v.i.)

   வெள்ளத்தாற் கரையழிதல்; to be breached, as a tank of உடைப்பெடுத்துவிட்டது (உ.வ.);. (செ.அக.);.

     [உடைப்பு + எ.டு.]

உடைப்பெயர்

 உடைப்பெயர் uṭaippeyar, பெ. (n.)

   உயர்திணைப் பெயர்களில் உடைமை கரணியம் பெற்று வைக்கப்பட்டுள்ள பெயர்; put up name, that name about any of his belonging.

குட்டுவன்-குட்டநாட்டுத் தலைவன்.

     [உடை+பெயர்]

உடைப்பொருள்

 உடைப்பொருள் uḍaipporuḷ, பெ. (n.)

   உடைமைப் பொருள் (சி.போ. அவையடக்கம், சிற்.);; property in one’s possession meaning a slave when referring to human beings, and other items of worldly goods when referring to animals and things (செ.அக.);.

     [உடை + பொருள்.]

உடைமணி

உடைமணி uḍaimaṇi, பெ. (n.)

   1. குழந்தைகளின் அரையணி; waist ornament with bells worn by a child.

     “உடைமணி கட்டிச் சிறுதே ருருட்டி” (திருக்கோ. 385);,

   2. மேகலை (சீவக. 2407);; jewelled gridle worn by women. (செ.அக.);.

     [உடை + மணி உடை = இடுப்பு.]

உடைமுள்

 உடைமுள் uḍaimuḷ, பெ. (n.)

   குடை வேலின் முள்; thorn of the babul (செ.அக.);.

     [உடை + (குடைவேலமரம்); + முள்.]

உடைமேற்புல்லுருவி

 உடைமேற்புல்லுருவி uḍaimēṟpulluruvi, பெ. (n.)

   உடைவேலின் மேல் வளரும் புல்லுருவி; parasic plant found grown on arrow-thorn tree. (சா.அக.);.

உடைமை

உடைமை1 uḍaimai, பெ. (n.)

   1. உடையனந்தன்மை; state of possessing, having, owning

     “அன்பீனு மார்வ முடைமை'” குறள், 74).

   2. உடைமைப் பொருள்; possession, property.

     “உடைமை யெல்லாமும்” (திரு வாச. 33.7);.

   3. செல்வம் wealth, riches.

     “உடைமை யாற் போத்தந்த நூமர்” (கலித். 58);.

   4. அணிகலன்கள் (ஆ.அக.);.; ornament (செ.அக.);.

   ம. உடம;   க. ஒடமெ. தெ. ஒடமி, ஒடமெ கோத ஒட்ய்ன்;   துட. விடம் (இடுகாட்டில் இடும் பொருள்கள்);;குட ஒடெவெ. து. ஒடெவெ.

     [உடு → உடை → உடைமை (வே.க 43);.]

 உடைமை2 uḍaimai, பெ. (n.)

   மேல்வாரம்;   வருவாய்; perquisite.

     “பணஉரடமை நெல்லுடைமை” (S.l.l.v. 331);, (செ.அக.);.

     [உடை → உடைமை.]

உடைய

உடைய uḍaiya,    இடை (part.) ஆறாம் வேற்றுமைச் சொல்லுருபு (நன். 300 சங்கர.); particle of the genitive case. (செ.அக.).

ம. உடய க. ஒடெய

     [உடை → உடைய (க..வி. 69);.]

உடையநம்பி

உடையநம்பி uḍaiyanambi, பெ. (n.)

   சுந்தரமூர்த்தி நாயனார்;, Sundaramurti Nayanar.

     “உடையநம்பி தனிவரும் மகிழ்ச்சி பொங்க” (பெரியபு ஏயர். 107);. (செ.அக.);.

     [உடை → உடைய + நம்பி]

உடையல்

உடையல் uḍaiyal, பெ. (n.)

   1. உடைதல்; breaking.

   2. உடைந்தது; that which is broken.

   3. கெடல்; losing.

     [உடை→ உடையல்.]

உடையல் விடு-தல்

 உடையல் விடு-தல் uḍaiyalviḍudal, செ.குன்றாவி. (v.t.)

   ஏளனஞ் செய்தல்; to mock, ridicule, banter, make fun of. (செ.அக.);.

     [உடை→ உடையல் → விடு.]

உடையளி

 உடையளி uḍaiyaḷi, பெ. (n.)

   கடவுள்; Lord of the universe, God. (செ.அக.);.

     [உடை +ஆளி]

உடையவன்

உடையவன் uḍaiyavaṉ, பெ. (n.)

   1. உரியவன்.

 owner, one who possesses.

   2. செல்வமுள்ளவன்; possessor of wealth.

     “உடையவர்களெனநாடி” (திருப்பு;249);.

   3. கடவுள்; God, as possessing the universe.

ம. உடயவன். உடயக்காரன், தெ. ஒடயடு.

     [உடை + அவன்.]

உடையவர்

உடையவர் uḍaiyavar, பெ. (n.)

   1. கருவறைத் தெய்வம்; Master, Lord.

     “உடையவர் கோயில்” (பெரியபு. திரு ஞான. 664);.

   2. ஆன்மார்த்த இலிங்கம்; Siva-linga used in private worship.

   3. இராமானுசர், (ஈடு. 10.7.1);; Ramanuja, the Guru of Sri Vaishnavas.

   4. செல்வர்; prosperous man, rich fellow. (செ.அக.);.

ம_டயர்.

     [உடை + அவர்]

உடையான்

உடையான்1 uḍaiyāṉ, பெ. (n.)

   1 இறைவன்; Master, Lord

     “உடையா னல்லாதானை உடையானென”. (சி.போ. அவையடக்கம். சிற்.);.

   2. சிறப்புப்பெயர் (பி.வி.31. உரை);;   3. உடையவடன; a possessor or an owner. (செ.அக.);.

ம. உடயோன் க. ஒடெய.

     [உடை +அவன் = உடையவன் → உடையான்.]

 உடையான்2 uḍaiyāṉ, பெ. (n.)

   உடுத்தவன்; one who is wearing dress. (ஆ.அக.);

     [உடை + ஆன்]

உடையார்

உடையார் uḍaiyār, பெ. (n.)

   1. கருவறைத் தெய்வம்; Lord, Master.

     “உடையார்… திருவிழாவில” (S.l.l.i. 306);

   2. சில குலப்பிரிவினரின் பட்டப் பெயர்; ttle of certain castes of cultivators.

   3. இலங்கையில் ஒரு சிற்றூர்ப் பணியாளன்; village official in North and East Ceylon.

   4. செல்வர்; the rich, as those who have world’s goods.

     “உடையார்மு னில்லார்போல்” (குறள், 395);.

     [உடை → உடையார்]

உடையார் சாலை

உடையார் சாலை uḍaiyārcālai, பெ. (n.)

   கோயிலில் உணவளிக்கும் இடம்; place where food is served In a temple.

     ‘சிவயோகிகள் பதின்மரும் உடையார் சாலையிலே உண்ணக்கடவர்’ (S.l.l.ii. 1.33);. (செ.அக.);.

     [உடை→ உடையார் + சாலை.]

உடையாள்

 உடையாள் uḍaiyāḷ, பெ. (n.)

உமாதேவி, Goddess Parvathi,

     [உடை + ஆள்.]

உடைவாரம்

 உடைவாரம் uḍaivāram, பெ. (n.)

   மேல்வாரங் குடி வாரமாகப் பிரிப்பதற்கு முன்னுள்ள மொத்த விளைவுத் தவசம்; gross produce from the land before it is divided between the landlord and the cultivators. (செ.அக.);

     [உடை+ வாரம்.]

உடைவாலக்கீரை

 உடைவாலக்கீரை uḍaivālakārai, பெ. (n.)

   தண்டங் கீரை; garden-green (சா.அக.);.

     [உடைவால் + அ + கீரை.]

உடைவாள்

 உடைவாள் uḍaivāḷ, பெ. (n.)

   உடையிற் செருகும் சுரிகை (திவா.);; short scimitar.

ம. உடவாள்.

     [உடை + வாள், உடை = இடுப்பு. இடுப்பிற் செருகும் வாள், உடையிற் செருகும் வாள் எனின் உடையின் எப்பகுதி எனத் தெளிவுபடாமை காண்க.]

உடைவு

உடைவு uḍaivu, பெ. (n.)

   1. தகர்கை; cracking;

 fracturing.

   2. உடைப்பு; breach

   3. தோற்றோடுகை; defeat. discomiture.

     “களிற்றை பொருதுடைவு கண்டானும்” (திவ். இயற் 1.18);,

   4. தளர்வு; debility, weakness. (W);.

   5. களவு (பழ. 194);; theft, stealing.

   6. கேடு (த.சொ.அக.);; reduction of circumstances from wealth to poverty (செ.அக.);.

   ம. உடவு;   க. ஒடி. உடி;   தெ. ஒடபி;   துட. விட்ய்;   குட. ஒடவெ;து. ஒட்கு.

     [உடை → உடைவு]

உடைவேல்

 உடைவேல் uḍaivēl, பெ. (n.)

   வேலமரவகை குடை வேல்; pea-podded black babul (செ.அக.);.

     [உடை + வேல், வேல் = வேலமரம்.]

உடோ

உடோ uṭō,    ,இடை. (int) அடா; exclamation, addressed familiarly to an inferior.

     “நேரே நின்றன்றோ உடோ பரிமாறுவது” (ஈடு. 4,8,2);.

     [எல → ஏழ → ஏட → அட → அடா → உடோ (கொ.வ.);]

உடோளக்கை

உடோளக்கை uṭōḷakkai, பெ. (n.)

   விரல்களை நெருக்கிக் கொண்டு தோளுக்கு நேராக இரு கைகளையும் நீட்டும் இணைக்கை வகை (பரத. பாவ.52);; of the shoulders, with fingers kept close to one another. (செ.அக.);

     [உ+ தோள் +அ + கை = உதோளக்கை → உடோளக்கை உ= முன்மை கட்டிய குறிப்பு, ஒ.நோ. உக்கடை = வீட்டின் அல்லது ஊரின் முன்வாசல் (gate);

உடோளாயம்

 உடோளாயம் uṭōḷāyam, பெ. (n.)

   கட்டித் தூக்குஞ் சிறு மூட்டை – (நாம தீப.);; small package or bundle. (செ.அக.);.

     [உ + தோள்_+ ஆயம் = உதோளாயம் → உடோளாயம்]

உட்கட்டி

உட்கட்டி uṭkaṭṭi, பெ. (n.)

   1. அகக்காழ்ப்பு உள்திடத் தன்மை; inner hardness or thickness.

   2. அடர்த்தி; density.

   3. உடபொருள்; inner substance. (சேரநா.);.

ம. உள்கட்டி

     [உள் + கட்டி.]

உட்கட்டு

உட்கட்டு uṭkaṭṭu, பெ. (n.)

   1. வீட்டின் உட்பகுதி, inside of a house, private apartments.

   2. பரதவச் சிறுமியர் குழந்தைப் பருவத்தில் அணியுஞ் சிறுதாலி; kind of necklace, worn especially by Parava girls.

   3. உள்ளுரம்; mental courage.

   4. உவளகம்; inner appartment.

   5. மாதர் கழுத்திலணியும் ஒரு மணிவடம்; a kind of necklace, worn by women. (செ.அக.);

     [உள் + கட்டு.]

உட்கணு

உட்கணு uṭkaṇu, பெ. (n.)

   1. மரத்தினுள் முளி;   2. எலும்பினுள்ளேயிருக்கு முளி; eminence on the inner side of a bone – inner tuberosity. (சா.அக.);.

     [உள் + கனு – உட்கனு. கண் → கனு,]

உட்கண்

உட்கண் uṭkaṇ, பெ. (n.)

   காட்சி; mind’s eye, insight. Wisdom.

     “நெஞ்சென்னும் உட்கண்ணேற்கானும் உணர்ந்து” (திவ். இயற். பெரியதிருவந்;

   28).

ம. உள்கண் க. ஒளகண்ணு.

உட்கண்டம்

உட்கண்டம் uṭkaṇṭam, பெ. (n.)

   1. கழுத்தினுட்பாகம்; inner part of the neck, throat

   2. உட்கழுத்து பார்க்க;see upkasutsu (சா.அக.);.

     [உள் + கண்டம் – உட்கண்டம். கண்டம் = கழுத்து. கமுத்து → Skt kandam.]

உட்கதவு

உட்கதவு uṭkadavu, பெ. (n.)

   திட்டிவாயில்; wicket-door கணையமரம் ஏறட்ட உட்கதவினையுடைய வாயிலி னையும் (பெரும் பாண். 127 உரை);, (செ.அக.);.

க. ஒளஅகுனி (உள்தாழ்ப்பாள்);

     [உள் + கதவு – உட்கதவு.]

உட்கதை

 உட்கதை uṭkadai, பெ. (n.)

   கதைக்குள் வரும் கிளைக் கதை; episode

க. ஒளகதெ.

உட்கந்தாயம்

 உட்கந்தாயம் uṭkandāyam, பெ. (n.)

நிலக்கிழார்க்குக்

   கட்டும் வரி (c.c.);; levy or assessment paid to private land-lords. (செ.அக.);.

     [உள் + கந்தாயம் – உட்கந்தாயம்.]

உட்கரு

உட்கரு uṭkaru, பெ. (n.)

   உள்ளே அடங்கி இருக்கும் பொருள்; things contained within;

 that which is inside,

 such as precious stones enclosed in the interior of an

 ankle உட்கருவை யுடைத்தாகிய…. சிலம்பின் (சிலப். 16, 118, உரை);. (செ.அக.);.

உட்கருத்து

உட்கருத்து uṭkaruttu, பெ. (n.)

   1. உள்மன நோக்கம்; innermost thought, real purpose, motive.

   2. ஆழ்ந்த கருத்து; the deeper sense of a passage, underlying theme.

     [உள் + கருத்து – உட்கருத்து.]

உட்கருவி

 உட்கருவி uṭkaruvi, பெ. (n.)

அகக்கருவி பார்க்க;see

 aga-k-karuvi (செ.அக.);.

க. ஒள அட்டை

     [உள் + கருவி.]

உட்கலகம்

 உட்கலகம் uṭgalagam, பெ. (n.)

   உட்பூசல்; intestine broil civil war. (செ.அக.);.

     [உள் + கலகம் = உட்கலகம்.]

உட்கல்

 உட்கல் uṭkal, பெ. (n.)

உட்கு-தல் பார்க்க;see utku.

     [உள் → உள்கு → உள்கல் → உட்கல்.]

உட்களவு

 உட்களவு uṭkaḷavu, பெ. (n.)

   உள்வஞ்சகம்;   மனத்தின் கபடத் தன்மை;கரவு, deceit, trick (ஆ. அக.);

ம. உளகளவு.

     [உள் + களவு = உட்களவு.]

உட்கள்ளன்

உட்கள்ளன் uṭkaḷḷaṉ, பெ. (n.)

   1. இடத்திற்குள் உள்ள கள்ளன்; thief within,

   2. பருவின் உள்ளில் ஏற்படும் ஆணி; core of an ulcer.

   ம. உள்கள்ளன்;.

     [உள் + கள்ளன்.]

உட்கள்ளம்

உட்கள்ளம் uṭkaḷḷam, பெ. (n.)

   1. உள் கரவு; deep – seated

 vice, dissimulation.

   2. புண்ணினுள் நஞ்சு; hidden tumour or matter in a boil (செ.அக.);.

ம. உள்களவு.

     [உள் + கள்ளம் = உட்கள்ளம்.]

உட்கள்ளி

 உட்கள்ளி uṭkaḷḷi, பெ. (n.)

   உட்பொருள் உள்ளிடத்து மந்தணம்; inner secret, hidden meaning. (நேரநர.);

ம. உள்கள்ளி

உட்கழுத்து

 உட்கழுத்து uṭkaḻuttu,    கழுத்தின் முன் பாகம்; front par of the neck.

     [உள் + கழுத்து = உட்கமுத்து.]

உட்கழுத்துச்சரடு

 உட்கழுத்துச்சரடு uḍkaḻuttuccaraḍu, பெ. (n.)

   கழுத் தோடு அணியப்படும் பதக்கஞ் சேர்ந்த பொற்சரடு வகை; close fitting golden necklace, with a pendant (செ.அக.);.

     [உள் + கமுத்து + சரடு.]

உட்காந்தல்

 உட்காந்தல் uṭkāndal, பெ. (n.)

   உள்வெப்பம்; Inner heat (ஆ.அக.);.

     [உள் + காந்தல் = உட்காந்தல். காந்துதல் → காந்தல்.]

உட்காய்ச்சல்

உட்காய்ச்சல் uṭkāyccal, பெ. (n.)

   1. உள்ளாக அடிக்கும் காய்ச்சல்; internal fever,

   2. உள்ளெரிச்சல்; envy, jealousy.

ம. உள்ப்பனி.

     [உள் + காய்ச்சல் = உட்காய்ச்சல்.]

உட்காய்வு

 உட்காய்வு uṭkāyvu, பெ. (n.)

பொறாமை envy, jealousy

     [உள் + காய்வு = உட்காய்வு.]

உட்காரம்

உட்காரம் uṭkāram, பெ. (n.)

   1. அச்சம்; fear

   2. நெஞ்சுறுதி; resolution, courage. (ஆ.அக.);.

     [உட்கு → உட்காரம்.]

உட்காரல்

உட்காரல் uṭkāral,    தொ.பெ. (vbl.n.) உட்கார்தல்; siting, taking seat.

     “உட்கார்ந்த பிராமணர்” (பிராச 174);.

     [உட்கார் → உட்காரல்.)

உட்காரவை-த்தல்

உட்காரவை-த்தல் uṭkāravaittal,    5. செ.குன்றாவி (v.t.)

   1.

   இருக்கையிலிருக்கச் செய்தல்; to seat, to make one sit by providing a seat

   2. அடக்குதல்; to floor, as an opponent fig to put to silence, as by a decisive argument. vanquish, overcome.

     [உட்கார் → உட்காரவை.]

உட்கார்

உட்கார்1 uṭkārtal,    2 செ.கு.வி. (v.i.)

   வீற்றிருத்தல்; to sit down, to occupy a seat.

     [உள் → உள்கு → உள்குறு → உள்குறு-தல் → உள்கார்-தல் → உட்கார்தல், மலையாளத்தில் இன்னும் இங்கே உட்கார் என்பதை ‘இவ்விடெ உள்ளு’ என்பர்.]

 உட்கார்2 uṭkār, பெ. (n.)

   பகைவர்; foes, those who oppose openly without fear,

     “உட்காரெதிரூன்றல் காஞ்சி.” (பு.வெ.);.

     [உள் → உட்கு = சினம், சினம் பொங்கும் பகைமை, உட்கு + ஆர் = உட்கார் = பகைவர்.]

உட்கார்த்து-தல்

உட்கார்த்து-தல் uṭkārddudal,    5. செ.குன்றாவி (v.t.)

   உட்கார வைத்தல்; to seat, make to sit

     [உட்கார் → உட்கார்த்து.]

உட்கால்

 உட்கால் uṭkāl, பெ. (n.)

   நீர் வரத்திலுள்ள கால்வாய் (ஆ.அக);; a channel.

     [உள் + கால். கால் = கால்வாய்.]

உட்கிடக்கை

 உட்கிடக்கை uḍkiḍakkai, பெ. (n.)

உட்கருத்து பார்க்க see utkaruttu (செ.அக.);.

     [உள் + கிடக்கை + உட்கிடக்கை. கிடக்கை = கிடந்துள்ள படிந்துள்ள எண்ணம். கருத்து உட்கிடக்கை உள்ளெண்ணம்.]

உட்கிடை

உட்கிடை uḍkiḍai, பெ. (n.)

   1. உட்கருத்து பார்க்க see utkaruttu

   2. ஊரகச் சிற்றூர்; subordinate hamlet in a village group.

     “சுரண்டையூர் முதலுட்கிடை” (குற்றா. குற. 89.3);.

     [உள் + கிடை = உட்கிடை கிடை = கிடக்கை]

உட்கு

உட்கு1 uṭkudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. அஞ்சுதல்; to be afraid, to stand in awe, to show signs of fear.

     “நண்ணாரு முட்குமென்பீடு” (குறள். 1088);.

   2. நாணுதல்; to be bashful, be shy,

     “சேரன் வருக… உட்காதே” (தமிழ்நா. ஒளவை);.

   3. நிலை கெடுதல்; to be nervous to collapse

   4. மடிதல்; to die, to be ruined (செ.அக.);.

     [உள்கு → உட்கு. உள்குதல் = அஞ்சுதல்.]

 உட்கு2 uṭkudal,    5 செ.குன்றாவி (v.t.)

   வெட்டுதல்; to Cut

 உட்கு3 uṭku, பெ. (n.)

   1. அச்சம்; fear, dread, terror

     “நாணுமுட்கு மடைதர” (குறிஞ்சிப் 184);.

   2. நாணம் (பிங்.);; shame, bashfulness, modesty

     [உள்கு → உட்கு.]

 உட்கு4 uṭku, பெ. (n.)

   1. மிடுக்கு; strength, might

     “உட்குடை யகரர்” (தில். திருவாய். 7,2,3);.

   2. மதிப்பு; dignity respect.

     “உட்கில் வழி வாழாவூக்கம்” (இனி. நாற்.27);.

     [உள்கு → உட்கு.]

உட்குடி

உட்குடி uḍkuḍi, பெ. (n.)

   1. உள்ளூரிலிருந்து பயிர் செய்து முழு வாரமும் பெறுதற்குரிய குடிகள்; resident ryots who farm lands in time for the major crops and are entitled to the full shares or rates, dist fr.

   2. புறக்குடி; a class of farmers in Salem District. (செ.அக.);.

ம. உள்குடியான்.

     [உள் + குடி. உள்ளுரில் வாழும் குடி மக்கள்.]

உட்குடிப்பாயகாரி

உட்குடிப்பாயகாரி uḍkuḍippāyakāri, பெ. (n.)

   உரிமை பெற்ற குடி (M.NA.D. 284);; tenant who has acquired an occupancy right in a village. (செ.அக.);.

     [உள் + குடி + (பாயகாரன்); பாயகாரி பயன்காரன் → பாய காரன் = உட்குடியாய் இருந்து பயன்பெறும் உரிமைக்கு உரியவன். பயன் → பாயம்.]

உட்குடைச்சல்

 உட்குடைச்சல் uḍkuḍaiccal, பெ. (n.)

   உடம்பினுள் உண்டாகும் நரம்பைப் பற்றியவோர் வலி; pain, affecting the nerves internally. (சா.அக.);.

     [உள் + குடைக்சல் = உட்குடைச்சல்.]

உட்குத்தகை

 உட்குத்தகை uṭguttagai, பெ. (n.)

   கீழ்க்குத்தகை; sublease (செ.அக.);.

ம. உள்குத்தகை.

     [உள் + குத்தகை = உட்குததகை.]

உட்குத்தல்

உட்குத்தல் uṭkuttal, பெ. (n.)

   1. கட்டி, பிளவை, சிலந்தி போன்றவற்றில் ஊசியால் குத்துவது போல் ஏற்படும் குத்தல் வலி; deep seated pricking pain in boil carbuncle, ulcer etc.

   2. உட்செலுத்துதல்;   உள்ளே குத்திச் செலுத்துதல்; piercing through a part or organ of the body for purposes of injection. (சா.அக.);.

     [உள் + குத்தல் = உட்குத்தல்.]

உட்குத்து

உட்குத்து uṭkuttu, பெ. (n.)

   1. உடம்பு காய்ந்து வியர்த்து, பல் கிட்டி, நா வறண்டு வாய் கீழ்நோக்கி, அன்னந் தண்ணி செல்லாது வருந்துமோர் குலையைப் பற்றிய நோய்; a kind of tetanus form heart disease, marked by perspiration, lock-jaw, dryness of the longue, passage of gas downwards, aversion to food and drink etc, a kind of tetanus.

   2. உடம்பினுள் ஊசியால் குத்தி மருந்தையுட் புகுத்துதல்; act of passing. a liquid medicine into a part of the body-injection

   3. உள்ளுறுப்புகளைத் தாக்கும்படி கொடுத்த குத்து; blow dealt so as to affect the internal organs.

     [உள் + குத்து = உட்குத்து.]

உட்குத்துப்புறவீச்சு

 உட்குத்துப்புறவீச்சு uṭkuttuppuṟavīccu, பெ. (n.)

   ஒரு இசிவுநோய் (வின்.);; hepatic complaint attended with convulsions. (செ.அக.);.

     [உள் + குத்து + புறம் + வீச்சு]

உட்குப்பாயம்

 உட்குப்பாயம் uṭkuppāyam, பெ. (n.)

   உள் உடுப்பு; Inner garment (சேரநா.);.

   ம. உள்குப்பாயம்;க. ஒளஉடுபு.

     [உள் + குப்பாயம்.]

உட்குறி

 உட்குறி uṭkuṟi, பெ. (n.)

   உள்ளிருந்து காட்டும் குறி; internal symptom. (சா.அக.);.

     [உள் + குறி = உட்குறி.]

உட்குறிப்பு

 உட்குறிப்பு uṭkuṟippu, பெ. (n.)

உட்கருத்து பார்க்க see utkaruttu (செ.அக.);.

     [உள் + குறிப்பு = உட்குறிப்பு.]

உட்குற்றம்

உட்குற்றம் uṭkuṟṟam, பெ. (n.)

   ஆசை, அவா, பகைமை, இவறன்மை, செருக்கு பொறாமை, முதலியன; innate or inborn human foible such as lust, anger etc.

     [உள் + குற்றம் = உட்குற்றம்.]

   உ1 ப. தமிழ்நெடுங்கணக்கில் இதழ்குவிவு ஐந்தாமுயிர்க் குற்றெழுத்து; fifth letter of the Tamil alphabet representing the close back short rounded (labial); vowel sound.

     [உ – முன்மைச் சுட்டெழுத்து.)

உ2 ப. தமிழ் எண்களில் இரண்டு என்னும் எண். symbol for the number 2 usually written without the loop.

     “அ

உ வறியா வறிவிலிடை மகனே’ (யாப்.வி. 37.);

     ” (செ.அக.);.

உ3 ப. இடை (part);

   1. (அ); தமிழில் மொழி முதலாகாத அயன்மொழி முன்னெழுத்துச் சொற்களுக்கு முன் Glsom Lnas oth clusióðsso; prothetic vowel added to Sanskrit and other foreign loan-words beginning with யு, யூ, யோ, ரு, ரூ, ரோ, லு, லு, லோ, as in உயுத்தம் for யுத்தம். உரோகிணி for ரோகிணி, உலோபி for லோபி. (ஆ); வடமொழி வேற்றுநிலை மெய்ம்மயக்கங் களின் தமிழ் மரபாக்கத்திற்காக மெய்யை உயிர்மெய்யா கப் பிரித்துக் காட்டும் மொழியிடைச் சாரியை;

 euphonic medial anaptyxis appearing in Sanskritic words in order to separate certain consonantal cluster sounds, as பதுமம் for பத்மம், சுவாமி for ஸ்வாமி, சுலோகம் for ஸ்லோகம், கருதி for ஸ்ருதி. (நன். 149, உரை);.

   2. மெய்யில் முடியும் எழுத்துடன் சேரும் சாரியை final euphonic anaptyxis developing from the consonantal ending of a word, as in பல்லு for பல், and also in combinations,

 as in அவனுக்கு for அவற்கு.

உ4 ப. இடை (part); 1. (அ); ஒர் அகச்சுட்டு base

 of the demons, pronoun expressing a person, place or

 thing occupying an intermediate position, neither far nor

 near, and meaning yonder or occupying a position near

 the person or persons spoken to as

     “செய்குன்று வை” (திருக்கோ. 223);. (ஆ); புறச்சுட்டு;

 demons, part before nouns, expressing intermediate position or position near the person or persons spoken to, as உக்கொற்றன் expressing a position, as behind or beyond.

     “ஊழையுமுகப பக்கங் காண்பர்” (குறள் 620);. 2. (அ); தொழிற்பெயர் ஈறுகளுளொன்று;

 an ending of vbl. nouns as in வரவு, (ஆ); பண்புப்பெயர் ஈறுகளுளொன்று;

 an ending of abstract nouns, as in மழவு. (இ); வினையெச்ச ஈறுகளுளொனறு ;

 ending of the past vbl. pple, as in செய்து;

செய்பு. 3 ஏவல் ஒருமை வினையிறு sing, imp.vbl

 ending. நில்லு, எண்ணு. (செ.அக.);

   க., ம., கோத. உ;   து. உந்து;   பர், ஊத், ஊர், கூ. ஒயர்க;   குவி, ஊ. குரு., குச்., மால். உதி;பிரா, ஒ. ஒத்.

     [உ1 → 24]

உகரச்சுட்டு தமிழ்நாட்டில் வழக்கற்றது. ஆயினும் யாழ்ப்பானத்தில் வழங்குவதாகத் தெரிகின்றது. இது குடியேற்றப் பாதுகாப்பு என்னும் நெறிமுறைப்பட்டது. (வே.க.29);.

உ5 ப.பெ. (n.);

   சிவசக்தி (திருமந். 1751);; energy of Siva (செ.அக.);.

     [உ_முன்செலற் கருத்து வேர் ஊக்கம், ஆற்றல்.]

உ6

ப.

பெ. (n.);

   ஐம்புள்ளுள் காகத்தைக் குறிக்கும் எழுத்து (பிங்.);; letter representing crow, in panchapatchi (செ.அக.);.

     [உ_பழங்கால உருவெழுத்தமைப்பில் உகரம் காகத்தைக் குறிக்கும் கோட்டுருவத்தில் வரையப்பட்டிருக்கலாம்.)

உ7

ப.

பெ. (n.);

   1. உயர்ச்சி height

   2. வியப்பு; surprise.

   3. நீர்நிலைகளின் கரை

 embankment

     [உ → உ7,]

உ8

ப.

பெ. (n.);

   1. நான்காம் வேற்றுமையீறு; an ending of dative case.

   2. இரண்டாம் வேற்றுமையீறு; an ending of accusative case.

ம, தெ. உ.

     [ம. அவன் + உ – அவனு (அவனுக்கு); தெ. நன்னு (என்னை); மறைந்து போன வழக்கு. மலையாளத்திலும் தெலுங்கிலும் எஞ்சியுள்ளது.]

உ9 ப. இடை (part);

   1 ஒலிக்குறிப்பு இடைச்செல்; onomatopoeic.

   2. வியப்பு, சினக்குறிப்பு உணத்தும்

   இடைச்சொல்; interjection of anger, etc.

ம., க., து., தெ. உ

உட்குளிர்

உட்குளிர் uṭkuḷir, பெ. (n.)

   1. உள்ளில் தோன்றும் குளிர்; internal cold.

   2. விடுப்பு; relief.

ம. உள்குளிர்.

உட்குழி

உட்குழி uṭkuḻi, பெ. (n.)

   1. நாவாய்க்குழி அல்லது யோனியின் உட்குழி; cavity behind the vaginal aperture;

 fossa navicularis

   2. இடுப்பெலும்பினுட்புறம்; inner part of ilium-Venter. (சா.அக.);.

     [உள் + குழி = உட்குழி.]

உட்கூதல்

 உட்கூதல் uṭātal, பெ. (n.)

   உடம்பினுள்ளாக உண்டாகும் குளிர்; Internal cold, shivering. chlliness (செ.அக.);.

     [உள் + கூதல் = உட்கூதல், கூதற் காற்றால் நடுங்குவது போன்று உட்குளிரால் நடுங்குதல்.]

உட்கூதிர்

 உட்கூதிர் uṭātir, பெ. (n.)

உட்கூதல் பார்க்க see utkudal.

     [உள் + கூதிர் = உட்கூதிர். கூதல் → கூதர் → கூதிர். கூதிர் = கூதல்காற்று. கூதல் காற்று வீசும் குளிர்காலம்.]

உட்கை

உட்கை uṭkai, பெ. (n.)

   1. உள்ளங்கை; palm (ot hand);.

   2. உள்ளாள்; one who is privy to, or in collusion with, another.

   3. உட்கைச்சுற்று பார்க்க;see utkaicurru.

   4. உட்பக்கம்; Innser side,

   5. உளவு; spying,

   6. உதவி (சேரநா.);; help assistance.

   7. அக்குள் (கருநா.);; ampit.

   ம. உளக்கை;க. ஒளகை, ஒளகெய்

     [உள் + கை = உட்கை.]

உட்கைச்சுற்று

 உட்கைச்சுற்று uṭkaiccuṟṟu, பெ. (n.)

   நாட்டியத்தில் இடக்கைப் புறமாகச் சுற்றுகை; turning to the left in dancing or winding, turning backwards or contrary to the sun. (செ.அக.);.

     [உள் + கை + சுற்று.]

உட்கொள்ளு

உட்கொள்ளு1 uṭkoḷḷudal,    10. செகுன்றாவி. (v.t.)

   1. தன்னகத்துக் கொள்ளுதல்; to take, inclose, as one’s own;

 to appropriate,

     “பாலையுட் கொண்டிடு செருக் கால்” (கந்தபு. ஆற்று. 14);.

   2. உட்கருதல்; to regard, look upon, consider

   3. உண்ணுதல்; to take in, as one’s food or drink to swallow.

     “யாவரு மணிந்துட்கொணடு” (கந்தபு. திருக்கல். 82);.

   4. உள்ளிழுத்தல்; to draw in or absorb, as the earth absorbs the rain water.

   ம. உள்கொள்ளுக;க. ஒளகொள்.

     [உள் + கொள் = உட்கொள்.]

உட்கொள்ளு)

உட்கொள்ளு)2 uṭkoḷḷudal,    10. செ.குன்றாவி (v.t)

   வரி முதலியன தண்டுதல்; to collect, as taxes, etc.

     ‘உட்கோளடங்க உட்கொண்டு’ (S.I.I. vi, 147);. (செ.அக.);.

     [உள் + கொள்.]

உட்கோடல்

 உட்கோடல் uṭāṭal, பெ. (n.)

உட்கொளல் பார்க்க See Uskokal

     [உள் + கோடல் கொளல் → கோடல்.]

உட்கோட்டை

உட்கோட்டை uṭāṭṭai, பெ. (n.)

   1. உள்ளான அரண்; clade (C.E.M.);

   2. கங்கை கொண்ட சோழபுரத்திற்கு அண்மையிலுள்ள ஓர் ஊர்; village near Gangai konda chola puram (செ.அக.);.

     [உள் + கோட்டை = உட்கோட்டை.]

உட்கோயில்

உட்கோயில் uṭāyil, பெ. (n.)

   கோயில் கருவறை; inner

 shrine, the sanctum sanctorum.

     “உட்கோயில் புறக்கோயிலுட்பட்” (S.I.I. v. 328);.

     [உள் + கோயில.]

உட்கோள்

உட்கோள்1 uṭāḷ, பெ. (n.)

   வரி; tax ces

     “உட்கோள டங்க உட்கொண்டு” (S.I.I. vi. 147);, (செ.அக.);

க. ஒளதெறகெ. (உள் நாட்டில் போடப்படும் வரி);

     [உள் + கோள் = உட்கோள்.]

 உட்கோள்2 uṭāḷ, பெ. (n.)

   உட்கருத்து; Inner meaning underlying theme.

   2. கருத்து; meaning, significance.

   3. கோட்பாடு; principle, concept.

   4. அணிவகையுள் ஒன்று; figure of speech (ஆ.அக.);.

     [உள் + கோள் = உட்கோள். கொள் → கோள்.]

உட்க்கரி

உட்க்கரி2 uṭkkarittal, பெ. (n.)

   4 செ.கு.வி. (v.i.);

   உக்காரமிடுதல்; hunkara, to bellow, as a bull. (W.);.

     [முக்காரமிடு → முக்கரி → உக்கரி.]

உட்சட்டை

 உட்சட்டை uṭcaṭṭai, பெ. (n.)

உள்ளுக்கிடும் அங்கி, vest, shirt, undergarment. (செ.அக.);,

   ம. உள்சட்ட;க. ஒளஉடுபு.

     [உள் + சட்டை = உட்சட்டை.]

உட்சண்டை

 உட்சண்டை uṭcaṇṭai, பெ. (n.)

உட்கலகம் Internal disturbance, family quarrel, civil war. (செ.அக);.

க. ஒளதோடி.

     [உள் + சண்டை = உட்சண்டை.]

உட்சமயம்

 உட்சமயம் uṭcamayam, பெ. (n.)

   இந்து சமயத்திலுள்ள அறுவகைப் பிரிவுகளு ளொன்று; one of the sub classes of six religious sects in Hinduism fold, viz.,

வைரவம், வாமம், காளாமுகம், மாவிரதம், பாசுபதம், சைவம் (பிங்.);. (செ.அக.);.

     [உள் + சமயம் = உட்சமயம்]

உட்சாடை

உட்சாடை uṭcāṭai, பெ. (n.)

   உட்கருத்து; inner sense.

   2. குழூஉக்குறி; conventional term, peculiar to a society or profession.

     [உள் + சாடை = உட்சாடை.)

உட்சாத்து

 உட்சாத்து uṭcāttu, பெ. (n.)

   அரைக்கச்சை; short inner garment worn round the waist, a kind of tunic.

     ” உழுவை தான் கொடுத்த உட்சாத்தும்;

     [உள் + சாத்து = உட்சாத்து.]

உட்சிதைவு

உட்சிதைவு uṭcidaivu, பெ. (n.)

   1. அழிவு (நீலகேசி. 657);; desolation,

   2. வெட்டல்; cutting.

     [உள் + சிதைவு]

உட்சீலை

உட்சீலை uṭcīlai, பெ. (n.)

   1. உள்ளே கட்டும் சீலை; under or inner garment

   2. உள்வைத்துத் தைக்கும் துணி; lining of a garment

   3. புண்ணிற்குள் ஏற்படும் புரை; sinus of an ulcer. (செ.அக.);.

     [உள் + சீலை = உட்சீலை.]

உட்சுரம்

 உட்சுரம் uṭcuram, பெ. (n.)

   உட்காய்ச்சல்; internal fever,

 low fever. (செ.அக.);.

ம. உள்ச்சூடு

     [உள் + கரம் = உட்சுரம்.]

உட்சூத்திரம்

உட்சூத்திரம் uṭcūttiram, பெ. (n.)

   1. எந்திரத்தின்

   மூலக்கருவி (வின்.);; main spring of a machinery. 2.

   உள்ளுளவு; clue to an affair.

   3. கணிதத்தில் குறுக்கு வழிழு;   4. எளிதான வழி; easy process.

   5. உட்குறிப்பு; deeper meaning of a passage.

   6. மூலகாரணம்; fundamental cause.

   7. மூலநூற்பா; original, head verse.

   8. நுட்பமானவகை (ஆ.அக.);; minute design. (செ.அக.);.

     [உள் + குத்திரம்.]

உட்செலுத்து-தல்

உட்செலுத்து-தல் uṭceluddudal,    13. செ.குன்றாவி (v.t.)

   1. உள்ளே செலுத்துதல்; to insert inject

   2. சூழ்ச்சி

   செய்து உள்ளே புகுவித்தல்; to administer, as a

 medicine or a poison, by sweet persuasion,

   3. கையூட் டுக்கொடுத்தல்; to send in a bribe secretly. (செ.அக.);.

     [உள் + செலுத்து = உட்செலுத்து.]

உட்செல்-தல்

உட்செல்-தல் uṭceltal,    13 செ.கு.வி. (v.i.)

உள்ளே

   செல்லுதல்; to enter, go in

க. ஒளகெகோகு, ஒளகெசேரு.

     [உள் + செல்.]

உட்செல்லல்

 உட்செல்லல் uṭcellal, பெ. (n.)

உட்செலுத்து-தல் பார்க்க;see Utseluttu-.

     [உள் + (செல்லுதல்); செல்லல்.]

உட்சேவகம்

உட்சேவகம் uṭcēvagam, பெ. (n.)

   வரிவகை (S.I.I. vi. 147.);; cess. (செ.அக.);.

     [உள் + சேவகம் = உட்சேவகம். செய் → செவை → செவகம் → சேவகம்.]

உட்டாகம்

 உட்டாகம் uṭṭākam, பெ. (n.)

உள்வறட்சி பார்க்க;see ulvaratci.

மறுவ. நீர்வேட்கை, வாயறுகை, விடாய், நாவறட்சி, தழப்பி.

     [உள் + தாகம்.]

உட்டாணி

 உட்டாணி uṭṭāṇi, பெ. (n.)

   கனத்த மணி; heavy, soid

 Gem

   ம. உட்டாணி; Mar. uthavana

     [ஒருகா. உருட்டாணி → உட்டாணி.]

உட்டாறா

உட்டாறா uṭṭāṟā, பெ. (n.)

   கப்பலில் சவாப் பாய்களை இறக்க வுதவுங் கயிறுகள் (M.Navi 87);; ropes used to tighten sails of a ship.

     [ஒருகா. உருட்டு → உட்டு + (ஆர்த்து ஆறா.]

உட்டி

உட்டி uṭṭi, பெ. (n.)

   1. விளையாட்டில் பயன்படுத்தும் வித்துகள் அல்லது காய்கள்; seeds used in games.

   2. கன்றுகளுக்கு வாயிலிடும் முச்சாணு அல்லது வலை; small basket or coir net for calves’ mouths to prevent eating soil etc.

க. உட்பு

     [உண்டை → உட்டை → உட்டி.]

உட்டினிடம்

உட்டினிடம் uḍḍiṉiḍam, பெ. (n.)

   1. தலைப்பாகை; turban,

   2. மூடி; lid (ஆ.ஆக.);.

     [உச்சி → உத்தி → உட்டி + இன் + இடம்.]

உட்டுறவு

 உட்டுறவு uṭṭuṟavu, பெ. (n.)

   உள்ளத்துறவு; mental

 renunciation of one’s desires and attachments. (செ.அக.);.

     [உள் + துறவு = உட்டுறவு. உள் = உள்ளம்.]

உட்டுறை

உட்டுறை uṭṭuṟai, பெ. (n.)

   1. கோயில் முதலியவற்றில் உட்காரியம் நடத்தும் பிரிவு; department of internal affairs as in a temple. (Loc.);. (செ.அக.);,

   2. உள்துறை; Home Dept.

     [உள் + துறை = உட்டுறை.]

உட்டுளை

 உட்டுளை uṭṭuḷai, பெ. (n.)

   உள்ளே உள்ள துளை; inner hole, bore or hallow space in a tube or pipe (செ.அக.);.

 |உள் + துளை = உட்டுளை.]

உட்டெளிவு

உட்டெளிவு uṭṭeḷivu, பெ. (n.)

   1. மனத்தெளிவு; clearness of mind, freedom from doubt

   2. வடித்தசாறு (வின்.);; clear liquid, poured off from the sediment

   3. உள்வயிரம் (வின்.);; strength and soundness, as intimber

   4. உட்பக்க வளவு (வின்.);; inner measurement

   5. பேரறிவு (ஆ.அக.); wisdom

   6. பழுது திருத்தி யெடுத்துக் கொண்டது. (ஆ.அக.);.

 that which has been selected after clarification

க. ஒளகறிவு.

     [உள் + தெளிவு = உட்டெளிவு. உள் = உள்ளம்.]

உட்டேட்டம்

உட்டேட்டம் uṭṭēṭṭam, பெ. (n.)

   1. மன நாட்டம்; secre

 object of pursuit;

 activating motive

   2. உட்சம்பாத்தியம்; property acquired and kept in secret (செ.அக.);

     [உள் + தேட்டம் = உட்டேட்டம். தேட்டம் = தேடியது. தேடித் திரட்டிய செல்வம்]

உட்டை

உட்டை1 uṭṭai, பெ. (n.)

   விளையாட்டுக்காய்; seeds used in Indian indoor games of children,

     “உட்டையென வைத்து விளையாடு பைங்கழற்காய்” (திருப்போ. சந். பிள்ளைத் அம்புலி. 6); (செ.அக.);.

     [உண்டை → உட்டை.]

 உட்டை2 uṭṭai, பெ. (n.)

   வ குவியல்; heap. ஒரே உட்டையா கப் போட்டுவைக்காதே. (கொங்.வ.);

     [ஒட்டு → உட்டு → உட்டை]

உட்டொடர்

உட்டொடர் uḍḍoḍar, பெ. (n.)

   பெருந்தொடர் மொழியின் பாகமான சிறுதொடர் (தொல். சொல். 42 சேனா);; simple sentence forming part of a compound sentence. (செ.அக.);.

     [உள் + தொடர் = உட்தொடர்]

உட்டொளை

உட்டொளை uṭṭoḷai, பெ. (n.)

   1 உள்ளான ஓட்டை, hollow space or bore in a pipe or tube.

   2. உட்டுளை பார்க்க;see uttulai (செ.அக.);.

     [உள் + துளை = உட்டுளை → உட்டொளை. (கொ.வ.);.]

உட்டொளைப்பொருள்

உட்டொளைப்பொருள் uṭṭoḷaipporuḷ, பெ. (n.)

   1. உட்டொளையுள்ள குழல் முதலியன

 anything tubular or holow.

   2 உட்டுளைப் பொருள் பார்க்க;see uttulai-p-porul (செ.அக.);

     [உள் + துளை + பொருள் = உட்டுனைப்பொருள் → உட்டொளைப் பொருள். துளை → தொனை.]

உட்டோல்

உட்டோல் uṭṭōl, பெ. (n.)

   மீத்தோலுக்கடியிலுள்ள தோ்ல; true skin below the epidermiscorium or dermis

   2. உட்சவ்வு; inner membrane. (சா.அக.);.

     [உள் + தோல் = உட்டோல்.]

உட்பகை

உட்பகை uṭpagai, பெ. (n.)

   1. நட்புப் பாராட்டிச் கெடுக்கும் பகைமை (விரோதம்); (குறள். 889);

 internal enmity, hatred or grudge, rancour at heart with out-ward profession of friendship.

   2. குடிகளின் பகைமை; civil hostility

   3. காமம் முதலிய அறுபகை (பிங்.);; internal enemy of man having reference to the six emotions which tend to corrupt and taint his soul:

     “பற்றற்ற ஒகப் பகையால் உட்பகையாறும் முற்றத் துறந்து” (பாரத சம்பவ. கீழ்.);. (செ.அக.);.

   ம. உள்பக;க. ஒளவகை.

     [உள் + பகை = உட்பகை]

உட்பட

உட்பட uḍpaḍa,    இடை (part.) உள்ளாக; together with inclusive of

     “நாடும் பொய்கையு முட்படவுரைத்தனன் (சீவக. 1216);. (செ.அக.);.

     [உள் + பட = உட்பட]

உட்படி

உட்படி uḍpaḍi, பெ. (n.)

   1. துலாக்கோலிலிடும் படிக்கல் எவ்வளவு குறைகின்றதென்பதை அறிதற்கு இடும். சிறு படிக்கல் முதலியன (வின்.);; that which is throws into a scale to make up the weight;

 a makeweight.

   2. நடப்புப் பயிராண்டு; current year for the assessmen of tax etc. (செ.அக.);.

     [உள் + படி = உட்படி]

உட்படு

உட்படு1 uḍpaḍudal,    20.செ.கு.வி. (v.i.)

   1. உள்ளாதல்

 to be within, included,

   2. கீழாதல்; to be under, as is

 age.

   3. அகப்படுதல் (பு.வெ. 8.34.);; to fall into, as

 a trap, to be caught

   4. உடன்படுதல்; to be take in concerned in;

 to become a party.

   5. சேர்தல்; to

 join.

     “ஆறுட்பட்டவை யிருகாலத்து”. (கந்தபு. அக்கினி 205);. (செ.அக.);.

   ம. உள்பெடுக;க. ஒளபடு

     [உள் + படு = உட்படு.]

 உட்படு2 uḍpaḍuttal,    18 செ.குன்றாவி, (v.t.)

   1. உள்ளாக்குதல்; to cause to be put in

   2. அகப்படுத்துதல்; to inclose, ensnare, envelop.

   3. உடன்படுத்துதல்; to persuade, bring round

   4. உட்செலுத்துதல்; to thrust in, as is done with a gauze through a wound or injury (சா.அக.);.

     [உள் + படு = உட்படு.]

உட்பத்தியம்

 உட்பத்தியம் uṭpattiyam, பெ. (n.)

   மருந்துண்ணுங்காலத் தில் புணர்ச்சி விலக்கும் பத்தியம் (வின்.);; abstinence from sexual indulgence as regimen to be observed while one is taking medicine. (செ.அக.);.

     [உள் + பத்தியம் = உட்பத்தியம். உள் = உள்முகமான, வெளிப் படச் சொல்லாமல் குறிப்பாய் உணரத்தக்க.]

உட்பந்தி

 உட்பந்தி uṭpandi, பெ. (n.)

   விருந்தில் தலைவரிசை; Inmost or first row of guests at a feast (செ.அக.);.

     [உள் + பந்தி = உட்பந்தி.]

உட்பலம்

உட்பலம் uṭpalam, பெ. (n.)

   1. அகவலிமை; reserve strength, as of one’s physique, property, friends, or fighting force.

   2_ஆண்மை,

 vitality

   3. துணைவர் வலிமை; supporter’s strength.

   4. செல்வ வலிமை; wealth strength

   5. படை வலிமை; military strength (செ.அக.);.

     [உள் + பலம் = உட்பலம். த. வலம் → Skt bala → த. பலம் உள்வலி பார்க்க;see ulvali.]

உட்பாய்ச்சல்

 உட்பாய்ச்சல் uṭpāyccal, பெ. (n.)

   உள்ளே மருந்தைப் புகட்டல்; lit. throwing in the act of passing a liquid or a medicine in liquid form into a part of the body such as the rectum or a blood vessel. (சா.அக.);.

     [உள்

+

பாய்ச்சல் = உட்பாய்ச்சல்.]. உட்பாயம் பறவோ பெ. (n.);

   கருவழிதல்; bortion

     [உள் + பாயம் பயத்தல் → பாயம் (பிரசவம்);.]

உட்பிடி

 உட்பிடி uḍpiḍi, பெ. (n.)

   கைவேல் (அக.நி.);; lance;

 Spear.

க. ஒலவிடு. (அகங்கையின் உட்பாகம்);.

     [உடன் + பிடி → உடம்பிடி → உட்பிடி.]

உட்பிரசவம்

 உட்பிரசவம் uṭpirasavam, பெ. (n.)

உட்பாயம் பார்க்க;see utpayam (சா.அக.);.

     [உள் + பிரசவம் = உட்பிரசவம். பயத்தல் → பாயம் → Skt prasava → த. பிரசவம்.]

உட்பிரிவு

 உட்பிரிவு uṭpirivu, பெ. (n.)

   ஒன்றின் பல வகைகளுள் ஒன்று;   உள்பகம்; subdivision (சேரநா.);.

ம. உள்பிரிவு.

     [உள் + பிரிவு.]

உட்புகவு

 உட்புகவு uṭpugavu, பெ. (n.)

   உள்ளே புகுகை; act of entering as into a room or a house. (செ.அக);.

     [உள் + புகவு. புகு → புகவு.]

உட்புகு-தல்

உட்புகு-தல் uṭpugudal,    21 செ.கு.வி. (v.i.)

   1. உள்ளே புகுதல் to get into enter.

     “உட்புகுந் தென்னுளமன்னி” (திருவாச. 31.3);.

   2. ஆழ்ந்து கவனித்தல்; to ener deeply into, get into the heart of.

அந்தச் செய்தியை உட்புகுந்து பார். (உ.வ.);. (செ.அக);.

   ம. உள்புகுக;க. ஒளவோகு. ஒளபுகு

     [உள் + புகு → உட்புகு → உட்புகு-தல்.]

உட்புண்

உட்புண் uṭpuṇ, பெ. (n.)

   1. உள்ளாகவிருக்கும் ஆறாப்புண்; internal or deep seated ulcer.

   2. உள்ளகத்திலேற்படும் புண்; inflammation of internal organs

   3. புரைப்புண்; scar with a sinus, (சா.அக.);.

ம. உள்புண்ணு

     [உள் + புண் = உட்புண்.]

உட்புரவு

உட்புரவு uṭpuravu, பெ. (n.)

   அரசினைச் சாராத அறப் புறம்; endowed and

     “நாட்டு நீங்கலாய் உட்புரவாய்த் தேவதானமாக” (S.l.l.ii. 509);. (செ.அக);.

     [உள் + புரவு = உட்புரவு.]

உட்புரை

உட்புரை uṭpurai, பெ. (n.)

   1. உட்டுளை; tubular cavity.

   2. உள்மடிப்பு; small inner folds of a garment

   3. மந்தணம்; secret part of a matter. (W.); (செ.அக.);.

     [உள் + புரை = உட்புரை.]

உட்புறக்குடி

 உட்புறக்குடி uḍpuṟakkuḍi, பெ. (n.)

   நிலவுரிமையில்லா விடினும், நீண்டகாலப் பயன்படுத்தத்தால் வாரஞ் செலுத்திக் கொண்டுவரும் வரை அந்நிலத்திற்கு உரிமையுள்ளவனான குடியானவன்; cultivator who has no title to a piece of land but who by the right of long enjoyment, cannot be dispossesed as long as he pays the stipulated rent (செ.அக.);.

     [உள் + புறம் + குடி.]

உட்புறம்

 உட்புறம் uṭpuṟam, பெ. (n.)

   உட்பக்கம்; Inner side of

 a thing. (செ.அக.);.

     [உள் + புறம் = உட்புறம்.]

உட்புறம்பாதல்

 உட்புறம்பாதல் uṭpuṟambātal, பெ. (n.)

   உட்பக்கம் வெளிப்பக்கமாதல்; assuming a perverse position or the turning inside out, etc. as in inversion of the womb. (சா.அக.);.

     [உள் + புறம்பு + ஆதல்.]

உட்புறம்பின்மை

உட்புறம்பின்மை uṭpuṟambiṉmai, பெ. (n.)

   இடையீடின்மை (நாநார்ந்த. 733);; continuity, non-interruption (செ.அக.);.

     [உள் + புறம்பு + இன்மை.)

உட்புறவு

 உட்புறவு uṭpuṟavu, பெ. (n.)

உட்புரவு பார்க்க see utpuravu (ஆ.அக.);.

     [உள் + புறவு = உட்புறவு (கொ.வ.);.]

உட்புறவுறுப்புகள்

 உட்புறவுறுப்புகள் uṭpuṟavuṟuppugaḷ, பெ. (n.)

   உடம்பி னுள்ளேயிருக்கும் நுரையீரல், தாமரைக்காய், கல்லிரல், இரைப்பை முதலியன; the internal organs of animals such as the lungs, the heart, the liver, the stomach and the other viscera. (சா.அக.);

     [உள் + புறம் + உறுப்புகள் = உட்புறவுறுப்புகள்.]

உட்புளகம்

உட்புளகம் uṭpuḷagam, பெ. (n.)

   1. மயிர்க் கூச்சிடல்; hair on ends through joy or rapture (சா.அக.);.

   2. மெய்சிலிர்த்/தல் பார்க்க see meycilir.

     [உள் + புளகம் = உட்புளகம்.]

உட்பூசை

உட்பூசை uṭpūcai, பெ. (n.)

   மனத்தகப் பூசை (சி.சி 2.28);; mental and spiritual worship. (செ.அக.);

     [உள் + பூசை = உட்பூசை பூசை = பூக்களைக் கொண்டு செய்வது பூ + செய் – பூசை.]

உட்பேதம்

உட்பேதம் uṭpētam, பெ. (n.)

   அகவேறுபாடு (சி.போ.பா.1);; internal or sectional difference, subdivision, opp to புறப்பேதம். (செ.அக.);.

     [உள் + தம் = உட்பேதம்.]

உட்பொய்

பpoy,

பெ. (n.);

உள்ளீடற்ற பொருள் hollow, unsubstantial thing, உட்பொய்யான காளாம்பி (சிறு பாண்.134, உரை);. (செ.அக.);.

     [உள் + பொய் = உட்பொப்.]

உட்பொருள்

உட்பொருள் uṭporuḷ, பெ. (n.)

   1. உண்மைக் கருத்து; real purport or significance

     “வேதத்தினுட்பொருள்” (திவ். கண்ணிநுண். 8);.

   2. மறைபொருள் secret or esoteric meaning.

   3. உட்பயன் (ஆ.அக.);; intrinsic benefit. (செ.அக.);.

ம. உள்பொருள்.

     [உள் + பொருள் = உட்பொருள்.]

உட்போடு-தல்

உட்போடு-தல் uṭpōṭudal,    19 செ.குன்றாவி (v.t.)

   1. வயமாக்குதல்; to entice, coax, wheedle.

அவளை உட்போட்டுக் கொண்டு காரியம் நடத்துகிறான்.

   2. காயச் செய்தல் (ஆ.அக.);; to cause to dry.

   3. வாட்டுதல் (ஆ.அக.);; to wither (செ.அக.);.

     [உள் + போடு = உட்போடு → உட்போடு-தல்.]

உட்வாரம்

 உட்வாரம் uṭvāram, பெ. (n.)

உடன்வாரம் பார்க்க;see udan-varam.

     [உடன்+ வாரம் = உடன்வாரம் → உடவாரம் (கொ.வ.);.]

உண

உண uṇa, பெ, (n.)

   உணவு (சிலப். 2,28, உரை.);; food. (செ.அக.);.

     [உள் → உண் → உணா → உண (கொ.வ.);.]

உணக்கம்

உணக்கம் uṇakkam, பெ, (n.)

   1. உலர்ந்த தன்மை; withering, drooping dejection (W.);.

   2. வாட்டம்; slackness, languidness, inactivity (செ.அக.);.

ம. உணக்கம். து. ஒணகெலு. க ஒணகிலு.

     [உணங்கு → உனக்கு → உணக்கம்]

உணக்கு

உணக்கு1 uṇakkudal,    5 செகுன்றாவி (v.t.)

   1. உலர்த்துதல்; to cause to dry, to dry in the sun

     “தொடிப் புழுதி கஃசா வுணக்கின்” (குறள். 1037.);

   2. கெடுத்தல்; to injure, run,

     “உனக்கினான். என் வாழ்க்கை” (விநாயகபு. 80,120.);.

   3. வருத்து; torment, give trouble. (செ.அக.);

   ம. உணக்குக, க ஒனத்த;   கோத ஒண்க்;   துட விண்க்;   குட ஒணக்;   து. உணங்கு;பட ஒனக்கு.

     [உணங்கு → உனக்கு (பி.வி); → உணக்குதல்.]

 உணக்கு2 uṇakku, பெ, (n.)

உணக்கம் பார்க்க see unkkam

     “உனக்கலாததோர் வித்து” (திருவாச.30.1.); (செ.அக.);

     [உணங்கு → உணக்கு.]

உணக்குப்பொருள்

 உணக்குப்பொருள் uṇakkupporuḷ, பெ, (n.)

காய்கறிகளின் வற்றல் (நாமதீப);

 dried vegetables (செ.அக.);.

     [உணக்கு + பொருள்.]

உணங்கல்

உணங்கல் uṇaṅgal, பெ, (n.)

   1. உலர்த்திய கூலம்; dred grain,

     “உணங்கல் கெடக்கழுதை யுதடாட்டங்கண் டென் பயன்” (திவ். திருவாய், 4,6.7.);.

   2. வற்றல்; dried food material.

     “வெள்ளென் புணங்கலும்” (மணிமே. 16,67);.

   3. உணவு, cooked food.

     “ஒடு கையேந்தி.. உணங்கல் கவர்வார்” (தேவா. 1030, 3.);.

   4. உலர்ந்த பூ (பிங்.);; withered flower 5, வற்றலிறைச்சி;

 dried meat.

   6. ஒசிதல்; suffer 7, துயருறல்;

 feel sorry (ஆ.அக.);.

   ம. உணங்ங்ல்;   க. பட ஒணகலு;து. ஒணகெலு.

     [உணங்கு → உணங்கல்]

உணங்கு-தல்

உணங்கு-தல் uṇaṅgudal, செ.கு.வி. (v.i.)

   1. உலர்தல்; to dry, as grain, vegetables or fish.

     “தினைவிளைத்தார் முற்றந் தினையுணங்கும்” (தமிழ்நா. 154.);.

   2. மெலிதல்; to become gaunt, as the body by fasting

     “ஊடலுணங்க விடுவாரோடு” (குறள். 1310.);,

   3. வாடுதல்; to be dejected in mind, to languish

     “வணங்கிய சிந்தையிர்” (கந்தபு;

மோன 21.).

   4. சுருங்குதல்; to shrink, shrivel

     “உணங்கரும் புகழ்” (காஞ்சிப்பு நாட்டுப்.1.);.

   5. செயலறுதல்; to pine away, droop, become listless.

     “உணங்கிடுங் கரண மென்னில்” (சி.சி. 4.7.);.

   ம. உணங்ங்க க. ஒனகு;   கோத. ஒண்க்;   துட விங்க். விண்க்;   குட ஒனங்க்;து. ஒணகட்டு (உலர்ந்தது);. [உண் → உணங்கு → உணங்கு-தல்.]

உணத்தல்

 உணத்தல் uṇattal, பெ, (n.)

உணத்துதல் பார்க்க;see unattu- (ஆ.அக.);.

உணத்து-தல்

உணத்து-தல் uṇaddudal,    5 செ.குன்றாவி (v.i.)

   1. காயவிடுதல்;  lo cause to dry.

நெல்லை யுணத்தினான்

   2. வற்றுவித்தல்; to emaciate as the body, to attenuate.

     “மெய்யுணத்தலும்” (தைலவ தைல:110);, (செ.அக.);.

     [உண → உணத்து → உணத்து-தல்.]

உணப்பாடு

 உணப்பாடு uṇappāṭu, பெ. (n.)

உண்ணப்படுகை

 edibility, state of being eaten or consumed. (செ.அக.);.

     [உண்ண + படு – உண்ணப்படு → உணப்பாடு படு → பாடு (முதி.தொ.பெ.]

உணராமை

உணராமை uṇarāmai, பெ. (n.)

   1 அறியாமை ignorance, lack of knowledge.

   2. உள்ளம் நெகிழாமை lack of feeling. unmindfulness.

   3. மயக்கம்; intoxication infatuation, bewilderment (செ.அக.);.

     [உணர் + ஆ (எ.ம.இ.); + மை]

உணரார்

உணரார் uṇarār, பெ. (n.)

அறிவை இயைத்துப்பாராதா the ignorant, the foolish, the uninformed folk

     “உணராடபுரமூன்றெரிய” (தேவா. 508.2.);. (செ.அக.);.

     [உணர் + ஆ + ஆர். ஆ (எ.ம.இ.); தொக்கது.]

உணர்

உணர்1 uṇartal,    2 செ.குன்றாவி (v.i.)

.

   1. அறிதல்; to be conscious of;

 to know, make out, understand.

     “முன்ன முகத்தினுணர்ந்து” (புறநா. 3.25.);.

   2. கருதுதல் (திவா.);; to think, reflect, consider, contemplate.

   3. ஆராய்தல்; to examine, test, oberve, scrutinize

     “உற்று நாறியுங் கண்டு முணர்ந்து” (சீவக. 885);

   4. நுகர்தல்; to experience, as a sensation.

     “ஐந்திளையு மொன்றொன் பார்த்துணர்வது” (சி.போ. 11.1.1.);.

   5. நினைத்தல்,

 to realize, conceive, imagine.

     “அண்டனை யான் மாவி லாய்ந்துணர” (சி.போ. 9.2.3);.

   6. உள்ளம் நெகிழ்தல்; to teel

   7 பகுத்தறிதல் (ஆ.அக.);; to rationalize.

   8. உணர்ந்தறிதல் (ஆ,அக.);; to known by sense or perception (செ.அக.);.

   ம. உணருக;க. ஒனர்.

     [உள் → உள்ளார் → உளர் → உணர் (உள்ளத்தால் அறிதல்);.]

 உணர்2 uṇartal,    2 செகுன்றாவி (v.i.)

   1. துயிலெழு தல்; to wake from sleep.

     “மன்னநீ யுணர்தி யென்னா” (கம்பரா. கும்ப44.);.

   2. அயர்வு நீங்குதல்; to get back to consciousness, recover from languor.

   3. பிரிதல் (பி.ங்.);; to separate

   4 ஊடல் நீங்குதல்; to become reconciled as a husband to his wife, to be reunited after a love quarrel

     “ஊடலுணர்தல்” (குறள். 1109.);. (செ.அக.);.

     [உள் → உளர் → உணர. உளர் = முன்னுறல், அசைதல் எழுதல், விலகல்.]

உணர்ச்சி

உணர்ச்சி uṇarcci, பெ. (n.)

   1. உணர்கை; consciousness, perception, understanding, knowledge, feeling.

   2. மனம்; mind.

     “சிறியாருணர்ச்சி யுளில்லை” (குறள். 976);. (செ.அக.);.

ம. உணர்ச்சி.

     [உணர் → உணர்ச்சி. உணர்த்தி பார்க்க;see unarthi.]

உணர்த்தி

உணர்த்தி1 uṇartti, பெ. (n.)

   1. உணர்தல்; feeling

   2. அறிதல்; knowing.

     [உணர் → உணர்த்தி.]

 உணர்த்தி2 uṇartti, பெ. (n.)

நினைவு recollection, remembrance.

     “மறந்தமையை ஸ்மரிப்பியுங்கோள்;

உணர்த்தியற்றாரையுணர்த்த வேணுமே” (ஈடு. 6.1.4…);.

     [உணர்த்து → உணர்த்தி]

 உணர்த்தி3 uṇartti, பெ. (n.)

   சுவை; taste

தேங்கூழ் உணர்த்தியாய் இருந்தது (இ.வ.); ஒனத்தியா தின்கி றியே (கொ.வ.);.

     [உணர் → உணர்த்தி உணர்த்தி என்னும் தென்சொல் வடபுல மொழிகளில் உணர்த்தி → ருத்தி → ருச்சி → ருசி எனத் திரிந்தது.]

உணர்த்தியறு-தல்

உணர்த்தியறு-தல் uṇarddiyaṟudal,    4 செ.கு.வி. (v.i.)

   மெய்ம்மறத்தல்; to swoon;

 to lose consciousness

     “ஸ்வதஸ்லர் வஜ்ளுமான வஸ்துவும் உணர்த்தியறும் படி யாய்த்துப் படுக்கை வாய்ப்பு” (ஈடு.10.2.8. வ்யா பக்.60.);. (செ.அக.);.

     [உணர் → உணர்த்தி→ அறு-தல்.]

உணர்த்து-தல்

உணர்த்து-தல் uṇarddudal,    15 செ.கு.வி (v.i.)

.

   1. அறிவித்தல்; to teach, instruct, cause to feel or understand, enlighten, convince,

     “உடல நைந்தொருத்தி யுருகுமென்றுணர்த்துமினே” (திவ். திருவாய். 6.1.4);.

   2. துயிலெ முப்புதல்; to wake from sleep.

     “ஏனல் காப்போருணர்த்திய கூஉம்” (புறநா. 28.);.

   3. ஊடல் தீர்த்தல்; to pacity, as the husband his wife.

     “உணர்த்தல் வேண்டியu கிழவோன்’ (தொல். பொருள். 150);.

   4. நினைப்பூட்டுதல்; to put in mind, remind, recall to mind.

     “உணர்ந்தலூட லுணர்ந்து” (திவ். திருவாய். 6.1,5);.

   5. பெரியோர் அறியுமாறு செய்தல்; to inform a superior, to submit. ம, உணர்த்து;

க. உன்னிக.

     [உணர் → உணர்த்து.]

உணர்ந்ததையுணர்-தல்

உணர்ந்ததையுணர்-தல் uṇarndadaiyuṇardal,    2 செ.குன்றாவி (v.i.)

   .ஓரளவை, அது முன் குறித்துவந் துற்ற காலத்து நெருப்பு மருந்தென்றறிந்தான் பின்பும் அது மருந்தெனவுள்ளங் கோடல்; to remember the previous remedy for something in a new tangle. (ஆ.அக.);.

     [உணர் → உணர்ந்தது → உணர்.]

உணர்ந்தறி-தல்

 உணர்ந்தறி-தல் uṇarntaṟital, செ.குன்றாவி. (v.t.)

   ஒன்றை முழுமையாகப் புரிந்து கொள்ளுதல்; to comprehend, to under strand completely.

     [உணர்ந்து+அறி-]

உணர்ந்தோர்

 உணர்ந்தோர் uṇarndōr, பெ. (n.)

   அறிவுடையோர்; wise. learned men.

     [உணர் → உணர்ந்தோர்.]

உணர்ப்பு

உணர்ப்பு uṇarppu, பெ. (n.)

   1. தெளிவிக்கப்படுகை; reganing clarity of mind.

     “உணர்ப்புவயின் வாரா ஊடலுற்றோயள்” (தொல் பொருள். 150);.

   2. கல்வி; education, (செ.அக.);.

   தெ நேர்ப்பு;ம. உணர்ப்பு

     [உணர் → உணர்ப்பு = மனத்தெளிவு எப்பொருளைப் பற்றியும் தெளிவான விளக்கம் தரும் எழுத்தறிவான கல்வியும் தெலுங் கில் நேர்ப்பு எனப்படுகிறது. உணர்ப்பு → தெ நேர்ப்பு.]

உணர்வு

உணர்வு uṇarvu, பெ. (n.)

   1. அறிவு (திவா.);; consciousness, sense-perception.

   2. தெளிவு (திவா.);; clear discernment.

   3. துயில் நீங்குகை; waking from sleep.

   4. ஊடல் தீர்கை (சூடா.);. reconciliation after a love quarrel

   5. ஒழிவு (பிங்.);; separation, cessation

   6. ஆதன்; soul.

     “ஒருவனையே நோக்குமுணர்வு” (திவ். இயற். 1.67);, (செ.அக.);.

ம_உணர்வு

     [உணர் → உணர்வு.]

உணர்வுக்கேடு

உணர்வுக்கேடு uṇarvukāṭu, பெ. (n.)

   அறிவு கேடு; loss of wisdom.

   2. கேடு; loss of perception.

     [உணர்வு + கேடு கெடு → கேடு;

உணர்வேழுத்து

உணர்வேழுத்து uṇarvēḻuttu, பெ. (n.)

குறியின லுணரப்படும் ஒருவகையெழுத்து (யாப். வி. 535);

 symbolic letter. (செ.அக.);

     [உணர்வு + எழுத்து.]

உணர்வோர்

 உணர்வோர் uṇarvōr, பெ. (n.)

உணர்ந்தோர் பார்க்க see unarndor

     [உணர்வு + (ஆர்); ஒர் → உணர்வோர்.]

உணவின்பிண்டம்

 உணவின்பிண்டம் uṇaviṉpiṇṭam, பெ. (n.)

உடம்பு body

     [உணவு + இன் + பிண்டம்.]

உணவு

உணவு uṇavu, பெ. (n.)

   1. உண்ணப்படுவன;   உட கொள்ளப்படுவன; food, sustenance, eatables,

     “உனவெனப் படுவது நிலத்தொடு நீரே” (புறநா. 18);. 2 சோறு (பிங்.);;

 boiled rice

   3. உணவுப்பொருள்

 food-stuts.

     “எண்வகை யுணவு” (தொல்.பொருள். 633);.

   4. மழை (அக.நி.);; rain (செ.அக.);

     [உள் → உண் → உண → உணவு. உண் + அ + உ – உணவு. அகரம் வினைத்தொகையைப் பெயரெச்சமாக்க வந்தது. உண் னும் தொழிலுறுதற்குகந்த உண்பொருளைக் குறிக்க வந்த முன்மைச் சுட்டாகிய உகரம் ஈறாயிற்று. உண்ணக்கூடியது எனப் பொருள் படுதலான், இதனை முதனிலை வினையா வணையும் பெயர் எனலாம்.]

உணா

உணா uṇā, பெ. (n.)

   1 உணவு; food, sustenance.

     “இந்நான் கல்லது உணவு மில்லை” (புறநா. 335);.

   2. சோறு (சூடா);; boiled rice.

ம. உணா (படையல்);

     [உண் → உணவு → உணா]

உணாப்பொருத்தம்

உணாப்பொருத்தம் uṇāpporuttam, பெ. (n.)

உண்டிப் பொருத்தம் பார்க்க (வெண்பாப் முதன். 7);;see undi-p-poruttam.

     [உண் + உணவு → உணா + பொருத்தம்]

உணி

உணி uṇi, பெ. (n.)

   1 நுகர்வது, நுகர்வர்; enjoyer

   2. நுகர்விப்பது என்னும் பொருள்பட நிற்கும் ஒருமைப் படர்க்கை இறுதி; third person singular or plural termination to denote getting someone enjoyed or experienced.

   3. ஒருயிரி; animate being.

     [உண் → உண்ணி → உணி.]

உணை

உணை1 uṇaidal,    2 செ.குவி (v.i.)

   1. உரைமெலிதல்; to emaciate, slacken.

   2. உள்ளநதல்; to be frayed to be wornout, as cloth.

     [உள் + நை _ உனை இக்கால் இச்சொல் உனைதல் →தொணைதல் – நொணத்தல் எனத் திரிந்தது.]

உண்

உண்1 uṇṇudal,    13 செ.குன்றாவி (v.t.)

.

   1. உண்ணுதல்; to eat or drink;

 to suck as a child;

 take food

   2. உணவைக் கடியாது உட்கொள்ளுதல் (திவ். திருவாய் 6. 7, 1);; to swallow without biting

   3. துய்த்தல்; to enjoy, experience.

     “மங்கைய ரிளநல மைந்த ருண்ண” (கம்பரா. உண்டா. 63);.

   4. உட்கொள்ளுதல்; to draw in, receive.

     “நதியுண்ட கடல்

     “(தாயு – மலைவளர். 1);.

   5. பொருந்துதல்; to be fitted lo.

     “உறியுண்ட கரகத்தோடு” (திருவிளை யானையெய். 38);,

   6. ஒத்தல்; to resemble.

     “சேலுண் கண்ணியர்’ (சீவக. 2383);.

   7. கவர்தல்; to seize, grasp.

     “அவுனனா ருயிரை யுண்ட கூற்றினை” (திவ். திருக்குறுந் 2.);.

   8. இசைவாதல்; to harmonise with to be aggreable to

     “ஒசை யூட்டிநு முண்ணாத வாறும்” (யாப். வி.பக்.97); து.வி. (aux.v.); செயப்பாட்டு வினைப்பொருள் உணர்த்துக் ஒரு ஈறு;

 used with wbl. bases and vbl. nouns to form the passive, as in கட்டுண்டான். கேடுண்டான். (செ.அக.);.

   ம, உண்ணுக க. உண்ணு;   தெ. ஊடு (குடித்தல்); கோத. உண் துட உண் (குடித்தல்);;   குட உண்ண;   து. உண்பினி. உணுயினி. கொலா, உண் (குடித்தல்);;   நா. உண்;   பர். உண். கூ. உண். கோண். உண்டினா;   குரு ஒணா;மால் ஒனெ:. பிரா. குனிங்.

     [உல் → உள் → உண்]

 உண்2 uṇ, பெ, (n.)

உணவு food

     “உண்விழைவார்க் கில்லை யுயிரோம்பல்” (அறநெறிச் 115.);.

     [உள் → உண்.]

 உண் uṇ, பெ, (n.)

   1. மென்மை; tendemess .

   2. சிறியது; tiny.

     [இல் → உல் → உள் → உண்.]

உண்கண்

உண்கண் uṇkaṇ, பெ, (n.)

   மையெழுதிய கண்; eye painted black on the lower lid.

     “இந்நோக்கு இவளுண் கண் உள்ளது” (குறள் 1091);, (செ.அக.);.

     [உண் + கண்]

உண்கலன்

 உண்கலன் uṇkalaṉ, பெ, (n.)

உண்கலம் பார்க்க;see un-kalam.

     [உண்_கலம் + உண்கலம் = உண்கலன் ஈற்றுத் திரிபு.]

உண்கலம்

 உண்கலம் uṇkalam, பெ, (n.)

   உண்ணும் ஏனம்; plate or dish to eat from, whether of metal, China glass or leaf.

     [உண் + காலம்]

   பொன், வெள்ளி. வெண்கலம் இவற்றால் செய்த கலங்கள்;வாழையிலை, பலா, முந்திரி தாமரை, மந்தாரை. காட்டு முருக்கு போன்ற இலைகளால் தைத்த தொன்னைகள் முதலி யன உண்கல வகைகளாகும்.

உண்கல்

 உண்கல் uṇkal, பெ, (n.)

   சுக்காங்கல் (சுக்கான்கல்); (R);; lime stone. (செ.அக.);.

உண்டறு

உண்டறு1 uṇṭaṟuttal,    4. செ.குன்றாவி, (v.tt)

   1. புசித்துச் செரிப்பித்துக் கொள்ளுதல் (ஈடு. 10.5.11);; eat and digest.

   2. துய்த்து முடித்தல்; experience to the fullest extent, enjoy the maximum benefit of

     “உண்டறுக் வொண்ணாத போக்யதாதி சயத்தை” (ஈடு, 10.3.2);.

   3. நன்றி மறத்தல்; to be ungraeful.

     “அல்லாத உபகாரங்களை உண்டறுக்கிலும்” (திவ்.திருநெடுந் 2. வ்யா.);. (செ.அக.);.

     [உண்டு + அறு.]

 உண்டறு2 uṇṭaṟuttal,    4. செ.குன்றாவி (v.t.)

   ஈடுசெய்து தீர்த்தல்; to exhaust.

     “இவ்வுக்தி மாத்ரமும் உண்டறுக்க மாட்டாது சரண்யன் கிருபை” (ரஹஸ்ய 340);. (செ.அக.);.

     [உண்டு + அறு.]

உண்டல்

உண்டல் uuṇṭal, பெ, (n.)

   1_உண்டாகுகை; coming into existence.

     “காட்டாத்திலங்கி வேறுண்டல் போல்” (சி.போ.பர. 12.3.2);.

   2. உட்கொள்ளல்; eating, swallowing (செ.அக.);.

     [உள் → உண் → உண்தல் → உண்டல்.]

உண்டழிவு

உண்டழிவு uṇṭaḻivu, பெ, (n.)

   உணவிடுதற்குரிய செலவு; feeding expenses. ‘திருவிழா உண்டழிவுக்கு மாக” (S.l.I iiii 298);. (செ.அக.);.

     [உண்டு → அழிவு. அழிவு = செலவு.]

உண்டா-தல்

உண்டா-தல் uṇṭātal,    6. செ.கு.வி. (v.t.)

   1. உளதாதல்; to come into existence, rise into being, to be formed.

     “ன்றுண்டாகவென” (சீவக. 1159);.

   2. விளைதல் (பிங்.);; to grow as vegetables;

 to thrive, flourish.

   3 செல்வச் செழிப்பாதல்; to become rich, wealthy, opulent, to prosper,

     “உண்டாய போழ்தில்.. தொண்டாயி ரவர் தொகுபவே” (நாலடி, 284);.

   4. நிலையாதல்; to be permanent lasting, durable.

     “செல்வதொன் றுண்டாக வைக்கற்பாற் றன்று” (நாலடி. 1);.

   5. கருவுண்டாதல்; to conceive. அந்த அம்மையார் உண்டாகியிருக் கிறார் (உ.வ.);.

     [உண்டு + ஆ (கு);.]

உண்டாக

உண்டாக uṇṭāka, வி.எ. (adv.)

   1. உரிய காலத்துக்கு முன்;   முன்பே; early, betimes;

 before it is too late.

     “வேண்டி னுண்டாகத் துறக்க” (குறள், 342);.

   2. மிகுதியாக; abundanty.

என்னிடம் அந்தப் பண்டம் உண்டாக விருக்கிறது. (உ.வ.);. (செ.அக.);.

     [உண்டு + ஆக.]

உண்டாக்கல்

உண்டாக்கல் uṇṭākkal, பெ, (n.)

   1. உண்டாக்குதல்; making, producing.

   2, உருவாக்கல்; creating, bringing into being.

   3. விளைவித்தல்; cultivating, rearing.

   4. உயர்த்துதல்;   உரிய இடத்துக்குக் கொண்டு வருதல்; enriching, raising, bringing up

     [உண்டு + ஆக்கல்.]

உண்டாக்கு-தல்

உண்டாக்கு-தல் uṇṭākkudal,    5 செ.குன்றாவி, (v.t.)

   1. ஒன்றை உண்டாக்குதல்; to make, produce,

     “மண்ணால் பிரதிமை யுண்டாக்கினான்” (உ.வ.);.

   2. படைத்தல்; to bring into being, create.

     “தீர்த்தமிங்குண்டாக்கெனைச் செப்பலோடும்” (திருவிளை. தீர்த்தவி. 8);.

   3. விளைவித்தல்; to raise, as crops or trees;

 to cultivate ‘நந்தனம். உண்டாக்கி” (திருவிளை. தருமிக். 4);.

   4. வளர்ச்சிக்குக் கொண்டு வருதல்; to enrich, raise to afluence.

அந்தப் பிரபு அவனை உண்டாக்கி வைத்தார். (உ.வ.);.

   5. சம்பாதித்தல்; to earn (சேரநா.);. (செ.அக.);.

ம. உண்டாக்கு.

     [உண்டு + ஆக்கு.]

உண்டாட்டம்

உண்டாட்டம் uṇṭāṭṭam, பெ. (n.)

   விளையாட்டு; festivity, joviality.

     “கொண்டலுண்டாட்டங் கொண்டான்” (கம்பரா. சூர்ப்ப. 51);, (செ.அக.);.

     [உண்டு + ஆட்டு + உண்டாட்டு → உண்டாட்டம்.]

உண்டாட்டு

உண்டாட்டு1 uṇṭāṭṭu, பெ. (n.)

   1. கள்ளுண்டு மகிழ்கை (பிரமோத். 22.13);; festivity, joviality, as of warriors celebrating the seizure of cows by indulging in drink

   2. கள்ளுண்டு மகிழ்தலைத் தெரிவிக்கும் புறத்துறை (தொல். பொருள். 58);;     [உண்டு + ஆட்டு.]

 உண்டாட்டு2 uṇṭāṭṭu, பெ. (n.)

   1. விளையாட்டு; play, game,

   2 மகளிர் விளையாட்டு வகை; ladies’game (செ.அக.);.

     [உண்டு + ஆட்டு, கள்ளுண்டு வேல் திரித்து விளையாடும் ஆடவர்க்கே உரிய உண்டாட்டு பொதுவாக விளையாட்டைக் குறித்தது.]

உண்டாயிரு-த்தல்

உண்டாயிரு-த்தல் uṇṭāyiruttal,    4. செ.கு.வி. (v.i.)

   1. கருக்கொண்டிருத்தல்; to be pregnant. அவள் உண்டா யிருக்கிறாள் (கொ.வ.);.

   2. உளதாயிருத்தல்; to come into existence, rise into being, be formed.

     [உண்டு + (ஆகி); ஆய் + இரு.]

உண்டி

உண்டி1 uṇṭi, பெ. (n.)

   1. உணவு food,

     “அறுசுவை யுண்டி” (நாலடி.1);.

   2. சோறு (சூடா);; boiled rice,

     “உண்டி முதற்றே உணவின் பிண்டம்” (புறநா.);.

   3. பறவை முதலியவற்றின் இரை (சூடா.);; food of birds and beasts in general.

   4. நுகர்ச்சி; experience.

     “உண்டி வினையின்றி” (சி.போ. 3.5 அதிகரணம். அவ.);.

 உண்டி2 uṇṭi, பெ. (n.)

உண்டிகை பார்க்க;see undigai

உண்டிகை

உண்டிகை uṇṭigai, பெ. (n.)

   1. கூட்டம்; huge gathering. large concourse of people,

     “சாரிகை மறுத்துக் தண்டா வுண்டிகை” (பரிபா. 6.36);.

   2. பணம் இட்டுவைக்கும் பெட்டி அல்லது குடுவை; box, pot with a line-shaped opening for saving money.

     [உள் → உண்டு → உண்டிகை உள் = இருத்தல், இருத்துதல், வைத்தல், இடுதல்.]

உண்டிசுருங்கல்

உண்டிசுருங்கல் uṇṭisuruṅgal, பெ. (n.)

   உணவு குறைவாகவுண்ணல்; eating less than the required quantity.

     “உண்டி சுருங்குதல் பெண்டிர்க் கழகு” (கொன்றை வேந்தன்-5);. (சா.அக.);

     [உண் → உண்டி + சுருங்கல்]

உண்டிப்பொருத்தம்

 உண்டிப்பொருத்தம் uṇṭipporuttam, பெ. (n.)

   செய்யுண் முதன் மொழிப் பொருத்த வகை (பிங்.);; rule of propriety which enjoins that the initial letter of a poem should be one of amula-v-eluttu, and not one of nacceluttu one of ten ceyyun-mutan-moli- p-poruttam (செ.அக.);.

     [உண் → உண்டி + பொருத்தம்.)

உண்டியச்சு

உண்டியச்சு uṇṭiyaccu, பெ. (n.)

கி.பி. 13ஆம்

நூற்றாண்டில் மலை நாட்டில் வழங்கிய நாணய

   வகை; coin current in the West Coast about the 13th AD (MER. 20 of 1916);. (செ.அக.);.

     [உண் → உண்டி + அச்சு]

உண்டு

உண்டு1 uṇṭu,    15 செ.கு.வி. (v.i.)

   உள்ளதன்மையை உணர்த்தும் ஐம்பால் மூவிடத்துக்கு முரிய ஒரு குறிப்பு விணைமுற்றுச் சொல் (நன்.339);; finite verb denoting existence, used in common to all genders and persons and both numbers – கு.வி.மு. (adv.); அற்பத்தைக் குறிக்குஞ் சொல்;

 expr. used to denote a diminutive sense in respect of guantity.or measure such as இத்தனை, அத்தனை. இத்தனையுண்டு கொடுத்தான்டா. (உ.வ.);.

   ம. உண்டு;   தெ உண்டு. க. உண்டு;   கோத ஒள் துட விள்ட்;   குட உன்று. து. உண்டு கொலா, அன், அன்டி;பிரா. அன்னிங்.

     [உள்_+ து – உண்டு.]

ஒன்றன்பாற் படர்க்கைக் குறிப்பு வினைமுற்றும் விளையா லனையும் பெயருமாகிய ‘உண்டு’ என்னும் சொல் இன்று பால்வழு வமைதியாக இருதினையைம்பால் மூவிட ஈரெண் கட்கும் பொதுவாக வழங்கி வருகின்றது. இன்றும், அதுவுண்டு மரமுண்டு என்பவற்றில் ஒன்றன்பாற் குறிப்புவினைமுற்றாக வும் உண்டு பண்ணு (உள்ளது பண்ணு);. உண்டாக்கு (உள்ள தாக்கு); என்பவற்றில் ஒன்றன்பாற் படர்க்கை வினையாலணையும் பெயராகவும், ஆளப்பெறுதல் காண்க (வே.க.42);, ‘உள்’ குறிப்பு விளையை இற்றை மொழியியலார் குறைவினை

 உண்டு2 uṇṭu, இடை (part)

   1. ஓர் உவமவுருபு; Suffix used as a sign of comparison.

     “குன்றுண் டோங்கு திரடோளவன்” (சீவக. 1159);.

   2. ஒரு துணைச்சொல்; expletive, தேவரைத் திருவடி தொழ நெடுந்துர முண்டு வந்திருக்கிறது. (ஈடு. 6.9.3. வ்யா. பக். 403);. (செ.அக.);.

     [உள் → உண் → உண்டு.]

 உண்டு3 uṇṭu, பெ. (n.)

   ஊன்றுகால் (யாழ். அக.);; support (செ.அக.);;

     [ஊன்று → உண்டு (கொ.வ.);.]

உண்டுபடர்க்கொடி

 உண்டுபடர்க்கொடி uṇḍubaḍarkkoḍi, பெ. (n.)

   வெள்ளிண்டங்கொடி; shining leaved soap pod. (சா.அக.);.

     [உண்டு + படர் + கொடி. உண்டு = வெண்மை உட்கொண்டு.]

உண்டுபடு-தல்

உண்டுபடு-தல் uṇḍubaḍarkoḍiuṇḍuveṇmaiuḍkoṇḍuuṇḍubaḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   1. உண்டாதல்; to арреаг. сопe lпto existence.

     “உண்டு படு விடங்கண்டத் தொடுக்கினான்காண்'” (தேவா. 1047, 8);.

   2. தோன்றுதல்; to be formed or produced by natural processes observable by the sense, to happen, occur (W.);.

   3. மேன்மேலும் உண்டாதல்; to grow, thrive, flourish.

   4. முளைத்தல் (ஆ.அக.);; to be sprouted.

   5. தோன்றுதல்; to be seen, appear. (செ.அக.);.

     [உண்டு + படு.]

உண்டுபடுத்து-தல்

உண்டுபடுத்து-தல் uṇḍubaḍuddudal,    5 செ.குன்றாவி, (v.t.)

   1. படைத்தல்;   உண்டாக்குதல்; to make, create,

   2. கட்டிவிடுதல்; to tabricate, concoct.. (செ.அக.);.

     [உண்டு + படுத்து.]

உண்டுபண்ணிவை-த்தல்

உண்டுபண்ணிவை-த்தல் uṇṭubaṇṇivaittal,    4 செ.குன்றாவி, (v.t.)

   நல்ல நிலையில் வைத்தல்; to put into the state or condition of being, to set up or establish the fortune or standing of, to elevate, as a person. (செ.அக.);.

     [உண்டு + பண்ணி + வை.]

உண்டுபண்ணு-தல்

உண்டுபண்ணு-தல் uṇṭubaṇṇudal,    12 செ.குன்றாவி. (v.t.)

   உண்டாக்குதல்; to make, create, give rise to.

     “துவிதமே அத்துவித ஞானத்தையுண்டு பணு ஞானம்” (தாயு. எங்கு 3);. (செ.அக.);.

     [உண்டு + பண்ணு.]

உண்டுருட்டி

 உண்டுருட்டி uṇṭuruṭṭi, பெ. (n.)

   முன்னோர் ஈட்டிய பொருள்களை யெல்லாம் தின்று அழிப்பவன் (ள்);; one who squanders and eats away all his ancestral property. (செ.அக.);.

     [உண்டு + உருட்டி.]

உண்டுறையணங்கு

உண்டுறையணங்கு uṇṭuṟaiyaṇaṅgu, பெ. (n.)

   நீருண்ணுந் துறையிலுள்ள தேவதை; malignant goddess presiding over springs or streams from which fountain or ghat people take their drinking water;

 naiad of Indian myth

     “உண்டுறை யணங்கிவ ளுறை நோயாயின்” (ஐங்குறு.28);. [உண் + துறை + அணங்கு.]

உண்டேன

 உண்டேன uṇṭēṉa, பெ. (n.)

 profusely, lavishly.

உண்டெனத் தரவேணும் (உ.வ.); (செ.அக.);.

     [உண்டு + என.]

உண்டை

உண்டை uṇṭai, பெ. (n.)

   1. திரண்ட வடிவுள்ளது; ball, globe, sphere, anything round or globular, commonly rather small. பொரியுண்டை.

   2. வில்லுண்டை; ball of stone or earth shot from a bow.

     “உடுத்திரள் பலகோளின்ன வுண்டையாக் கொண்டு” (கந்தபு. திருவிளை. 29);.

   3. கவளம்; food in the shape of a ball, mouthful.

     “உண்டைகொண் மதவேழம்” (கம்பரா. கடிமண.28);.

   4. ஒருவகைச் சருக்கரை (பிங்.);; a kind of sugar

   5. ஆயமாடுகருவி; dice. உண்டையுருட்டல் (குறள். 401. உரை);.

   6. குறுக்கிழை; woof, weft

     ‘மடிப் புடைவை வெந்தால் உண்டையும் பாவும் ஒத்துக்கிடக்கும்’ (ஸ்ரீவசன. 2.191);.

   7. படைவகுப்பு; a form of array of an army.

     “உண்டையுமழிதலுற்ற” (கந்தபு. தரும கோபன். 79.);.

   8. கூட்டம்; group collection.

கோவுண்டை கோட்டாற் றழிவித்த கோன் (பரிபா 6,36. உரை);,

   9. கஞ்சாவுண்டை; ball of ganja mixed with jiggery.

     “அவன் உண்டை போடுகிறவன” (செல்வி, 77 நவம், 122);.

   ம. உண்ட;   க. உண்டெ;   தெ. உண்ட;   கோத. உண்ட்;   துட. உட்ய்;   து. உண்டெ;கோண். உன்தா.

     [உருண்டை → உண்டை.]

 உண்டை2 uṇṭai, பெ. (n.)

   சிற்றுண்டி (யாழ்.அக.);; light refreshment. (செ.அக.);.

     [உருண்டை → உண்டை. சோற்றுருண்டையை முதலில் குறித் துக் கவள அளவிலான சிற்றுண்டிக்கு ஆகிவந்தது.]

உண்டைக்கட்டி

 உண்டைக்கட்டி uṇṭaikkaṭṭi, பெ. (n.)

   கோயிலில் பட்டையாகத் தரும் படையல் செய்த உணவு; balls of offering distributed in temples (செ.அக.);.

     [உருண்டை_உண்டை + கட்டி]

உண்டைக்கார்

 உண்டைக்கார் uṇṭaikkār, பெ. (n.)

   நான்கு மாதங் களிற் பயிராகும் நெல் வகை; a coarse paddy sown in August and maturing in four months. (செ.அக.);.

     [உருண்டை→ உண்டை + கார்]

உண்டைக்கெளுத்தி

 உண்டைக்கெளுத்தி uṇṭaikkeḷutti, பெ. (n.)

   சிறு கடல் மீன் வகை; bluish leaden salt-water cat fish. (செ.அக.);.

     [உருண்டை- உண்டை + கெளுத்தி.]

உண்டைச்சம்பா

 உண்டைச்சம்பா uṇṭaiccambā, பெ. (n.)

ஐந்து திங்களிற் பயிராகும் நெல்வகை

 a paddy maturing in five months. (செ.அக.);.

     [உருண்டை → உண்டை + சம்பா.]

உண்டைச்சாதம்

 உண்டைச்சாதம் uṇṭaiccātam, பெ. (n.)

உண்டைக் கட்டி பார்க்க வின்,);;see undai-k-kații (செ.அக.);.

     [உருண்டை → உண்டை + சாதம்.]

உண்டைச்சுரை

 உண்டைச்சுரை uṇṭaiccurai, பெ. (n.)

   கரைவகை (நாமதீப.);; a kind of calabash (செ.அக.);.

     [உருண்டை → உண்டை + சுரை.]

உண்டைநிலைமை

 உண்டைநிலைமை uṇṭainilaimai, பெ. (n.)

   உருண்டை வடிவமாயிருக்கும் நிலைமை; the state of being a globule, spheroidal state. (சா.அக.);.

     [உருண்டை → உண்டை + நிலைமை.]

உண்டைநூல்

உண்டைநூல் uṇṭainūl, பெ. (n.)

   1. நூலுண்டை; ball of thread;

   2. நெகவின் குறுக்கிழை; woof, west (செ.அக.);.

     [உருண்டை → உண்டை + நூல்.]

உண்டையம்

 உண்டையம் uṇṭaiyam, பெ. (n.)

   கடுக்காய்; gall-nut

     [உருண்டை → உண்டை → உண்டையம்.]

உண்டைவிடு-தல்

உண்டைவிடு-தல் uṇḍaiviḍudal,    18 செ.குன்றாவி, (v.t.)

   குத்துதல்; to strike with the first to cuff. (செ.அக.);.

     [உருண்டை → உண்டை + விடு.]

உண்டைவில்

உண்டைவில் uṇṭaivil, பெ. (n.)

   காய்ந்த களி மண்ணுருண்டையை வைத்துத் தெறிக்கும் சுண்டுவில்; bow from which dried balls of clay are shot.

     “கூனே சிதைய வுண்டைவில் நிறத்தில் தெறித்தாய்” (திவ் திருவாய், 1.5.5);. (செ.அக.);.

     [உருண்டை → உண்டை + வில்.]

உண்ணம்

உண்ணம்1 uṇṇam, பெ. (n.)

உடை5 பார்க்க (மலை; See Udai (செ.அக.);.

 உண்ணம்2 uṇṇam, பெ. (n.)

   1. வெப்பம்;  heat

   2. நெருப்பு; fire.

     “உண்னவண்ணத் தொளி நஞ்ச முண்டு” (தேவா. 510.6.);. (செ.அக.);.

     [உல் → உள் → உண் → உண்ணம் -Skt unna.]

உண்ணல்

உண்ணல் uṇṇal, பெ. (n.)

   1. துய்த்தல்; enjoying. experiencing.

   2. விழுங்கல்; swallowing (ஆ.அக.].

     [உள் → உண் → உண்ணல்.]

உண்ணா

 உண்ணா uṇṇā, பெ. (n.)

   அண்ணத்துள்ள சிறு நாக்கு (திவா.);; uvula (செ.அக.);.

     [உள் + நா – உண்ணா.]

உண்ணாக்கு

 உண்ணாக்கு uṇṇākku, பெ. (n.)

உண்ணா பார்க்க;see unna (செ.அக.);.

ம. உண்ணாக்கு

     [உள் + _நாக்கு = உண்ணாக்கு.]

உண்ணாச்சி

 உண்ணாச்சி uṇṇācci, கு.பெ.எ. (adi)

   மிகவும் சிறிய; very small, உண்ணாச்சி மாங்காய். (சேரநா.);.

ம. உண்ணாச்சி.

     [உள் → உண் →உண்ணி → உண்ணாச்சி.]

உண்ணாடகம்

 உண்ணாடகம் uṇṇāṭakam, பெ. (n.)

   நாடகத்துள்ளேயே நடக்கும் துணை நாடகம்; a plat within a play.

     [உள்+நாடகம்]

உண்ணாட்டம்

உண்ணாட்டம் uṇṇāṭṭam, பெ. (n.)

   1. ஆராய்ச்சி; searching, enquiry.

     “உண்ணாட்டங் கொள்ளப் படுதலால்” (நாலடி. 18.);.

   2. உட்கருத்து (வின்.);; real purpose, motive. (செ.அக.);.

     [உள் +_நாட்டம் – உண்ணாட்டம்.]

உண்ணாநோன்பி

உண்ணாநோன்பி uṇṇānōṉpi, பெ. (n.)

   குறித்த காலங் களிற் பட்டினி விட்டுண்ணுஞ் சமணமுனிவன்; Jaina ascetic who fasts on specified occasions,

     “உண்ணா நோன்பி தன்னொடுஞ் சூளுற்று” (மணிமே 3, 102);. (செ.அக.);.

     [உண்ணு + ஆ + நோன்பி. நோன்பு – நோன்பி ‘ஆ’ எதிர்மறை இடைச்சொல்.]

உண்ணாநோன்பு

 உண்ணாநோன்பு uṇṇānōṉpu, பெ. (n.)

   விரும்பிய செய்கையை முடிக்கப் பட்டினி கிடக்கை; hunger strike. (mod.);.

     [உண்ணா_நோன்பு]

உண்ணாமறிப்பு

உண்ணாமறிப்பு uṇṇāmaṟippu, பெ. (n.)

   கடன் கொடுத் தோர் கடன் வாங்கினவர்களை உணவு கொள்ள வொட்டாமல் தகையும் மறியல்; the creditor’s act of preventing his debtor from taking food till he is paid.

     “கடன்காரர் வந்திழுக்க வுண்ணா மறிப்பி லுடை வாரும்” (தெய்வச். விறலிவிடு. 366.);. (செ.அக.);.

     [உண்னு + ஆ – உண்ணா + மறிப்பு. ஆ (எ.ம.இ.நி.);.]

உண்ணாமுலை

உண்ணாமுலை uṇṇāmulai, பெ. (n.)

   திருவண்ணா மலையில் எழுந்தருளியிருக்கும் அம்பிகை; Parvathi, worshipped in the shrine at Tiruvannāmalai,

     “உண்ணா முலை உமையாளொடு முடனாகிய வொருவன்ஞ (தேவா. 1025.);

     [உண்ணு + ஆ + முலை, ஆ (எ.ம.இ.நி.);.]

உண்ணாமுலையப்பனார்

 உண்ணாமுலையப்பனார் uṇṇāmulaiellappanayiṉār, பெ. (n.)

   திருவண்ணாமலையில் வாழ்ந்த ஒரு புலவர்; name of a poet who lived at Tiruvannāmalai.

உண்ணாழிகை

உண்ணாழிகை uṇṇāḻigai, பெ. (n.)

   கோயில் கருவறை (கருப்பக் கிருகம்);; Innermost sanctuary of a temple.

     “உண்ணாழிகையாருமையாளோடு” (தேவா. 5923);. (செ.அக.);. ம. உண்ணாழிக.

     [உள் +_நாழிகை – உண்ணாழிகை. நாழிகை = இடைவெளி, இடம்.]

உண்ணாழிகை வாரியம்

 உண்ணாழிகை வாரியம் uṇṇāḻigaivāriyam, பெ. (n.)

கோயில் ஆளுவக் குழு

 managing committee of a temple. (செ.அக.);.

     [உள் + நாழிகை = உண்ணாழிகை + வாரியம்.]

உண்ணாழிகையார்

உண்ணாழிகையார் uṇṇāḻigaiyār, பெ. (n.)

   கோயில் கருவறையில் (கருப்பக் கிருகத்தில்); வாழுங்கடவுள்; God abiding in the sanctum sanctorum.

     “அந்தணர்கள் மாடக் கோயி லுண்ணாழிகையார்” (தேவா. 592.3.);. (செ.அக.);.

     [உள் + நாழிகை + ஆர்- உண்ணாழிகையார்.]

உண்ணாழிகையுடையார்

உண்ணாழிகையுடையார் uṇṇāḻigaiyuḍaiyār, பெ. (n.)

   கோயில் கருவறையில் திருப்பணி செய்வோர் (S.l.l.i 115.);; servants grafted for duty in the inner most sanctuary of a temple. (செ.அக.);.

     [உள் + நாழிகை = உண்ணாழிகை + உடையார்]

உண்ணாவரகு

உண்ணாவரகு uṇṇāvaragu, பெ. (n.)

வெள்வரகு coarse millet, unsuited for fodder,

     “உண்ணா வரகொடு கொள்வித்தின்று” (பு.வெ. 6.26 கொளு.);. (செ.அக.);

     [உண்ணு + ஆ – வரகு. ஆ எதிர்மறை இடைச்சொல்.]

உண்ணாவிரதம்

 உண்ணாவிரதம் uṇṇāviradam, பெ. (n.)

உண்ணா பார்க்க;see unnānóobu

     [உண்ணு + ஆ – உண்ணா + விரதம்.]

உண்ணி

உண்ணி1 uṇṇi, பெ. (n.)

   1. உண்பவன்; one who eats.

     “அப்ப னிரந்துண்ணி” (தனிப்பா. I, 35.66.);.

   2. உயிர் வகை ; acarus, tick on dogs, sheep and cattle.

     “புலிமுகத் துண்ணி பறித்துவிடல்” (பழ. 109.);. 3.

   பாலுண்ணி (வின்.);; wart (செ.அக.);.

ம. க. உண்ணி

     [உண் → உண்ணி]

 உண்ணி uṇṇi, பெ. (n.)

   1. குழந்தை; infant, baby. child. 2, மாட்டின் கன்று;

 calf of a cow.

   3. பிஞ்சு; tender fruit.

   4. சிறியது; that which is small.

ம. உண்ணி.

     [உண்1 (சிறுமை); → உண்ணி.]

 உண்ணி uṇṇi, பெ. (n.)

   குடிக்கும் நீர்; drinking water.

     “சிற்றுற லுண்ணிரு மாகி விடும்” (வாக்குண். 12);. (செ. அக.);.

     [உண்ணு + நீர் = உண்ணி.]

உண்ணிக்கொக்கு

 உண்ணிக்கொக்கு uṇṇikkokku, பெ. (n.)

   ஒருவகைப் பறவை; species of stork (செ.அக.);,

உண்ணிடம்

உண்ணிடம் uṇṇiḍam, பெ. (n.)

   1. தலைப்பாகை; turban 2 மணிமுடி;

 crown (செ.அக.);.

     [உள் + நீடு + அம் = உண்ணிடம் = உட்கூம்புவடிவாக அமைந்த தலைப்பாகை அல்லது மணிமுடி.]

உண்ணிமாங்காய்

 உண்ணிமாங்காய் uṇṇimāṅgāy, பெ. (n.)

   பிஞ்சு மாங்காள்; tender mango, (சேரநா.);.

ம. உண்ணிமாங்ங்.

     [உண்ணி + மாங்காய்.]

உண்ணியப்பம்

 உண்ணியப்பம் uṇṇiyappam, பெ. (n.)

   சிறிய உருண்டை வடிவான இனிப்புப் பணிகார வகை; small, round, sweet cake. (செ.அக.);.

ம. உண்ணியப்பம்

     [உண்ணி + அப்பம் = உண்ணியப்பம். உள் = உள்ளே. கீழே, தாழ இருத்தல், சிறிதாய். இருத்தல் உள் → உள்ளி → உண்ணி = சிறுவன், சிறியது. ஒ.நோ. ம. உண்ணி = சிறுவன்.]

உண்ணீரம்

 உண்ணீரம் uṇṇīram, பெ. (n.)

   உள்ளீரம்; interna moisture.

     [உள் + ஈரம் = உள்ளீரம் → உண்ணிரம்]

உண்ணீர்மை

உண்ணீர்மை uṇṇirmai, பெ. (n.)

   மனத் தூய்மை; purity of mind.

     “தருமமே சார்பாக உள்நீர்மை வீறும் உயர்ந்து” (ஒள.நல்:32);.

     [உள்+நீர்மை]

உண்ணுகை

உண்ணுகை uṇṇugai, பெ. (n.)

   1. துய்த்தல்; enjoying.

   2. உண்டல்; eating, swallowing (ஆ.அக.);.

     [உண் → உண்னு → உண்ணுகை]

உண்ணோக்கல்

 உண்ணோக்கல் uṇṇōkkal, பெ. (n.)

   எண்ணத்தை ஒருமுகப்படுத்தல்; meditation (செ.அக.);

     [உள் + நோக்குதல் = உண்ணோக்குதல் → உண்ணோக்கல்.]

உண்பலி

உண்பலி uṇpali, பெ. (n.)

   பிச்சை; alms of food.

     “உடைதலையி லுண்பலிதே ரம்பலவன்” (திருவாச 10.2.);. (செ.அக.);

     [உண் + பலி.]

புலால் தவிர்த்துத் தவமேற்கொண்ட துறவியர்க்குப் பழம் தருதல், வடபுல மொழிகளில் பலம் தருதல் பலி தருதலாயிற்று கடவுளுக்கு இடும் படையலும் பலியாயிற்று.

உண்மடை

உண்மடை uṇmaḍai, பெ. (n.)

   1. அடிமதகுத் திறப்பு; lower opening of a sluice in a water course,

   2. கோயிற்குள்ளிடும் படைப்பு; offerings of fruits, betel. cooked rice and pastries presented to village deities.

   3. உள்வாய்க்கால் (ஆ.அக.);. inside the temples, opp. to புறமடை (செ.அக.);.

     [உள்_மடை உண்மடை.]

உண்மட்டைநார்

 உண்மட்டைநார் uṇmaṭṭainār, பெ. (n.)

பனைமட்டையின் உட்பக்கத்து நார் (யாழ்ப்);.

 fibre of the inner side of the palmyra leaf stem (செ.அக.);

     [உள் + மட்டை + நார் = உண்மட்டைநார்.]

உண்மலம்

 உண்மலம் uṇmalam, பெ. (n.)

   மனமாக (பிங்.);; mental impurity.

ஆணவம், கன்மம், மாயை. (செ.அக.);. [உள் + மலம் = உண்மலம்.]

உண்மாசு

உண்மாசு uṇmācu, பெ. (n.)

உண்மலம் பார்க்க;see unmalam

     “உண்மாக கழுவுவது நீறு” (திருவிளை. விருத்தகு. 16);. (செ.அக.);.

     [உள் + மாக = உண்மாக.]

உண்முடிச்சு

 உண்முடிச்சு uṇmuḍiccu, பெ. (n.)

   உள்ளாகச் செய்யும் வஞ்சம்; a deep – seated knot said of a treacherous design to inveigle another (W.);.

     [உள் + முடிச்சு = உண்முடிச்சு.]

உண்மூக்கு

 உண்மூக்கு uṇmūkku, பெ. (n.)

   மூக்கின் உட்புறத்தின் மேற்பாகம் (யாழ்.அக.);; top of the nostril (செ.அக.);. [உள் + முக்கு = உண்முக்கு.]

உண்மூலம்

 உண்மூலம் uṇmūlam, பெ. (n.)

   உட்பக்கமாக உண்டா கும் மூலநோய்; internal ples (செ.அக.);

     [உள் + மூலம் = உண்மூலம்.]

உண்மை

உண்மை1 uṇmai, பெ. (n.)

   1. உள்ளது; existence, reality. opp to இன்மை.

     “உண்மையுமாய் இன்மையுமாய்” (திருவாச. 38.8.);.

   2. உளதாகை; state of being

     “கூற்றுண்மையான்” (நாலடி. 20.);

   3. உள்ளதன்மை; nature, intrinsic quality, essence.

   4. மெய்ம்மை (திவா.);; sincerity, honesty, probity, veracity, truth.

   5. ஊழ். (குறள். 38. அதி. அவ.);; destiny, inevitability of the issue of one”s actions.

   6. பொருள்களின் இயற்கைக் குணத் தைச் சுட்டிச் சொல்லுதல்;     (சி.சி. அளவை, 1.); (Log.);. statement regarding natural objects, that such an object has such an attribute as “fire burns” (செ.அக.);.

   ம. உண்ம க ஒள்பு;   தெ. உணிக;கோத ஒட்..

     [உள் → உண்மை.]

     “உள்ளதாயிருக்கும் தன்மை, உள்ளத்தொடு பொருந்தியது என்னும் பொருள் மொழிநூற்கு ஒல்லாது. வாய்மை = வாய்ப்பது. நிறைவேறுவது. மெய்ம்மை = உடம்புபோல் a extenunumang (substance, substantiality) e gramun, euruento, மெய்ம்மை என்னும் சொற்களின் முக்கரணத் தொடர்பு. தன்னேர்ச்சியான (accidental) போலியே. (வே.க. 42).

 உண்மை2 uṇmai, பெ. (n.)

   ஆதன் (ஆன்மா); (சி.சி.பர. ஆசீவக. 8.);; individual soul (செ.முக.);.

     [உள் + மை = உண்மை.]

உண்மைஏய்ப்பு

 உண்மைஏய்ப்பு uṇmaiēyppu, பெ. (n.)

   நம்பிக்கை ஏமாற்றம்;இரண்டகம் (துரோகம்);. flagrant breach of trust

     [உண்மை + ஏய்ப்பு.]

உண்மைத்தாழ்ச்சி

 உண்மைத்தாழ்ச்சி uṇmaittāḻcci, பெ. (n.)

   உண்மைக் குறைவு (சங்.அக);; lack of truthfulness. (செ.அக.);

     [உண்மை + தாழ்ச்சி.]

உண்மைநெறிவிளக்கம்

உண்மைநெறிவிளக்கம் uṇmaineṟiviḷakkam, பெ. (n.)

   உமாபதி சிவாச்சாரியாரியற்றிய சிவ நூல்; treatise on the Šava Šiddhanta Philosophy by Umapat-Švaccariyar one of 14 Meykanda – Cattiram. (செ.அக.);

     [உண்மை + நெறி + விளக்கம்.]

உண்மைப்படு-

உண்மைப்படு- uṇmaippaḍu,    20 செ.கு.வி. (v.i.)

   உறுதிப்படுதல்; to become evident to the mind to appear as certainty as the deity to His worshippers;

 to prove true, as religion (செ.அக.);.

     [உண்மை + படு.]

உண்மைப்படுத்து-தல்

உண்மைப்படுத்து-தல் uṇmaippaḍuddudal,    5 செ.குன்றாவி (v.t.)

   மெய்ப்பித்தல்; to prove or demonstrate to be true. (செ.அக.);.

     [உண்மை + படுத்து]

உண்மைப்பிடி

 uṇmaippiḍi, பெ. (n.)

   உறுதியான சமயப்பற்று (வின்.);; unfaltering adherence to religious

 truth, consistent and steady perseverance in religion (W.);. (செ.அக.);.

     [உண்மை + பிடி.]

உண்மைப்பொருள்

உண்மைப்பொருள் uṇmaipporuḷ, பெ. (n.)

   . கடவுள்; God, as the only Reality.

   2. சரியான பொருள்; true meaning

   3. மறுக்கலாகாத உண்மைச் செய்தி; unquestionable or axiomatic truth,

     “ஞானத் திராளாய் நின்ற பெருமான் நல்லடியார் மேல். ஊனத் திரளை நீக்குமதுவும் உண்மைப் பொருள்” (தேவா. 102 …);.

   4. உள்ள பொருள்; existing material

   5. உவமப் பொருள்; that which is compared, subject of comparison (செ.அக.);

     [உண்மை + பொருள்.]

உண்மையதிகாரம்

 உண்மையதிகாரம் uṇmaiyadikāram, பெ. (n.)

   . சிவஞா னபோத முதலிய நூல்களில் இறைவனுடைய வடி விலக்கணமெனப்படும் சிறப்பியல்பைக் கூறும் பகுதி; portion in Saivaite sacred works describing the characteristics of the Lord’s personality (ஆ.அக);.

     [உண்மை + அதிகாரம்.]

உண்மையறிவு

உண்மையறிவு uṇmaiyaṟivu, பெ. (n.)

   1 மெய்யறிவு; knowledge of the truth

   2. மெய்யான அறிவு; true knowledge.

   3.ஊழாலுளதாகிய அறிவு; knowledge acquired as a result of the inevitable consequence of past karma, as dist. from that acquired by learning.

     “உண்மையறிவே மிகும்” (குறள் 373);. (செ.அக.);.

     [உண்மை + அறிவு.]

உண்மையளவை

 உண்மையளவை uṇmaiyaḷavai, பெ. (n.)

   மெய்ம்மையினால் அளவைப்படுத்தல்; measure of truth

     [உண்மை + அளவை.]

உண்மையுத்தரம்

உண்மையுத்தரம் uṇmaiyuttaram, பெ. (n.)

வழக்காளி கூறும் உண்மை மொழிகளை எதிர்வழக்காளி யொப் புக் கொண்டு கூறும் விடை (கக்கிரநீதி 270);.

 answer;of the defendant admitting the truth of the plaint. (செ.அக.);.

     [உண்மை + உத்தரம்.]

உண்மைவழக்கு

உண்மைவழக்கு uṇmaivaḻkku, பெ, (n.)

உள்வழக்கு பார்க்க (மணிமே 30,194);;see ulvalakku (செ.அக.);.

     [உண்மை + வழக்கு.]

உண்மைவிளக்கம்

உண்மைவிளக்கம் uṇmaiviḷakkam, பெ, (n.)

   மனவாச கங் கடந்தாரியற்றிய சைவநூல்; text-book of the Saiva Siddhanta Philosophy by Mana-väcakan-Kadandār, one of 14 Meykafda Cättiram.. (செ.அக.);,

     [உண்மை + விளக்கம்.]

உதகக்கொட்டு

உதகக்கொட்டு udagaggoṭṭu, பெ. (n.)

   நீரிழிவு நோய்; diabetes

     “ஊணுகு தொழுனையி னுதகக் கொட்டின் வெப்பிற் சூலையின்” (ஞானா 19);, (செ. அக.);

     [உதகம் + கொட்டு.]

உதகஞ்செய்-தல்

உதகஞ்செய்-தல் udagañjeydal,    1 செ.கு.வி.(v.i.)

   பொருளை நீர் வார்த்துக் கொடையளித்தல்; to pour water into the hand of the recipient of a gift by the donor when it is handed to him, (செ.அக.);.

     [உதகம் + செய்.]

உதகநெறி

உதகநெறி udaganeṟi, பெ. (n.)

   கொடையளிக்க வேண்டியமுறை; prescribed form in which a gift is to be made,

     “உதக நெறி தப்பாவாறு முந்தவளித்து” (திருவா லவா.31.5);. (செ.அக.);.

     [உதகம + நெறி]

உதகமண்டலம்

உதகமண்டலம் udagamaṇṭalam, பெ. (n.)

   1. நீலமலை மாவட்டத் தலைநகரின் பெயர்; name of the Nilgiri District headquarters.

   2. மேகடண்டலம்; cloudy region referring to the Nilgris (சா.அக);.

பட. ஒத்தெகெ.

     [ஒற்றை + கல் + மன்று – ஒற்றைக்கல் மன்று → ஒத்தக்கல் மந்து → உதகமண்டலம்]

உதகம் = நீர் எனப் பொருள் கொண்டு. நீர் சூழ்ந்த பகுதி என்று மூலம் காட்டுவது பொருந்தாது. நீலமலைப் பழங்குடி மக்கள் இதனை ஒத்தக்கல் மந்து என்றே அழைப்பர் ஒற்றைக்கு நின்றான் மன்று எனக் காட்டி தனியொருத்தனாய் நின்று பொருது வென்றவனின் ஊர் எனவும் கூறுகின்றனர்

உதகமந்தம்

 உதகமந்தம் udagamandam, பெ. (n.)

   தண்ணிச் சோறு; mixture of water and meal stirred together. (சத.அக..);.

     [உதகம் + மத்தம் – உதகமத்தம் → உதகமந்தம். மத்துதல் = கடைதல் மத்து → மத்தம் → மந்தம்.)

உதகமுய்-த்தல்

உதகமுய்-த்தல் udagamuyddal,    4 செ.குன்றாவி (v.t.)

உதகளுசெய் பார்க்க see பdagaர்cey (செ. அக.);.

     [உதகம் → உய]

உதகமூலம்

உதகமூலம் udagamūlam, பெ. (n.)

   1. தண்ணி விட்டான் கிழங்கு பார்க்க. (தைலவ. தைல. 77);;see tanninvittan kilangu

   2. பச்சைவேர்; green root

     “சால விருட் சோதகமூலம்” (தைலவ. தைல. 85.);. (செ.அக.);.

     [உதகம் + மூலம்.]

உதகமேல்-தல்

உதகமேல்-தல் udagamēldal,    7. செகுன்றாவி (v.t.)

கொடை பெறுதல்:to receive gifts.

     “நான் உதகமேற்றது அளந்து கொள்ள வேண்டாவோ” (திவ். பெரியாழ். 1.8.8. வ்யா.பக் 173);. (செ.அக.);.

     [உதகம் + ஏல், ஏலுதல் = ஏற்றல், பெறுதல், வாங்கிக் கொள்ளு தல்.]

உதகம்

உதகம்1 udagam, பெ. (n.)

நீர் water.

     “வாசநல் லுதகம்” (கந்தபு. திருக்கல்.70);.

     [ஊறு → ஊற்று → ஊத்து → ஊத்தம் → உத்தம் → உத்தகம் → உதகம் ஒடும் இயல்பினால் நீல் = (நீள்); நீர் எனப் பெயர் பெற்றது போல, தோண்டிய இடங்களில் ஊறும் இயல்பினால் ஊற்று எனப் பெயர் பெற்றது. கொச்சைத் திரிபுற்று ஊத்து → உத்து → உதகம் என மருவியது. வழிப்போக்கர் மணலில் ஊற்றெடுத்து நீர் பருகுவதும், கால்நடைகளை நீர் பருகச் செய்வதும், தொன்று தொட்டு வரும் தலைமுறை வழக்கம். உலக மொழிகள் பலவற்றிலும் இச்சொல் வேரூன்றிவிட்டது. LE ued Skt ud, Av vada, Lt udra, GK udar, Alb. Uye, L undu, Gothic wato E water. மிகுமழையால் தரையில் ஊற்றுகள் காணப்படின் தரை முழுவதும் ஒதம் பரவிவிட்டது என்று தமிழக நாட்டுப்புற மக்கள் பேசுவதைக் காணலாம். ஊற்று → ஊத்து → ஒதம் எனத் தமிழிலும் உதகம் என வடபுல மொழிகளிலும் இந்தைரோப்பிய மொழிகளிலும் வழக்கூன்றி யது. தமிழில் பிறந்து உலக மொழிகளில் வேரூன்றிய தமிழ்ச் சொற்களுள் இதுவும் ஒன்றாகும்.]

 உதகம்2 udagam, பெ. (n.)

   நிலவுலகம் (உரி.நி.);; earth (செ.அக.);. [உதகம் = நீர், கடல், கடலுடுத்த நிலம்.]

 உதகம்3 udagam, பெ. (n.)

   காய்கறிகளிட்டுச் சமைத்த குழம்பில் காய்கறி தவிர்த்த நீராளப்பகுதி;   தெளிசாறு; thin porridge after separating vegetable pieces.

க. உதக

     [உதகம் = நீர், நீராளமான குழம்பு]

உதகம்பண்ணு-தல்

உதகம்பண்ணு-தல் udagambaṇṇudal,    12 செ.குன்றாவி (v.i.)

உதகஞ்செய் பார்க்க, (S.I.I. iii. 35.);;see udagañcey.

உதகரணம்

உதகரணம் udagaraṇam, பெ. (n.)

   உதைத்து அழுத்துகை; pressing by leg (after kicking);,

     “இலங்கைக் கோமானை… திருவிரலால் உதகரணம் செய்து” (தேவா. 286.10.);.

     [உதை + கரணம்_உதகரணம்.]

உதகவன்

 உதகவன் utakavaṉ, பெ. (n.)

நெருப்பு:

 fire.

     “அழல் உதாசனன் சங்கு தேயுதழல் வசு உதகவன்”.

     [ஊற்று→ஊத்து→ஊத்தகம்→உதகம்→உதகவன் நீரால் அழிக்கப்படுபவன்]

உதகு

 உதகு udagu, பெ. (n.)

   புன்கு. (மூ.அ.);; Indian beech.

     [உதவு →உதகு. கோடை நீழலும் புன்கின் எண்ணெயும் தரும் உதவி நோக்கி உதவி → உதகு (மரம்); எனப் பெயர் பெற்றதாகலாம். மிகவும் பரவலாக எள்ளின் நெய், ஆமணக்கு நெய் போன்றவை விளக்கெரிக்கப் பயன்படுத்தப்படுவதற்கு முன்பு புன்கின் விதையிலிருந்து எடுத்த எண்ணெய் விளக் கெரிக்கப் பயன்பட்டமையின் ஆக்கம் கருதி உதகு எனப்பட்ட தாகலாம்.]

உதக்கு

உதக்கு1 udakkuba, பெ. (n.)

   வடக்கு (திவா.);; north.

     [உ → உத்து = உயரம், மேடு, உத்து → உது → உதக்கு = மேடான வடக்குத் திசை உதக்கு = இடப்பக்கம். உதட் டாங்கை, ஒரட்டாங்கை என்னும் கொங்கு நாட்டு வழக்குகள் உதட்டு, உதக்கு என்னும் சொற்களுக்கு இடப்பக்கம் எனப் பொருளைத் தெளிவுபடுத்துகின்றன. மேற்கு மேடானதிசையா கத் தமிழக மக்களுக்குத் தென்பட்டமையின் அதனின்றும் வேறுபடுத்த காலையில் கதிரவனைக் கண்டு வழிபடு வோர்க்கு உதக்குத் திசை இடப்பக்கம் இருத்தலின் இடப்பக்கப் பொருளும் பெறலாயிற்று.]

உதக்கு → வதக்கு → வடக்கு எனத் தமிழிலும், உதக்கு → உடக்கு → உனக்கு → நாக்கு → நாத்து-நார்த்து → (North); என மேலையாரிய மொழிகளிலும், திரிபுற்றிருத்தலைக் காண லாம். ஆங்கிலச் சொற்பிறப்பு அகரமுதலி தொகுத்த கிளெயின் பெருமகனாரும், இதே கருத்தை North என்னும் சொல் விளக்கத்தில் வலியுறுத்தி இருக்கிறார். North இடப்பக்கம் எனப் பொருளாட்சி பெற்றிருத்தலை அலர் காட்டினார். ஆயின் அதற்கு மூலமான உதக்கு தமிழில் உள்ளது என்பதை அவர் அறியாராயினார். வட மொழியில் இடது பக்கம், வாமபாகம். உத்தரம் எனப் பெயர் பெற்றிருந்தாலும், அவை உதக்கு என்னும் சொல்லின் வேர் மூலத்திரிபுகளேயாகும்.

உதச்சீரகம்

 உதச்சீரகம் udaccīragam, பெ. (n.)

   பெருஞ்சிகம்; anise-seed. (சா.அக.);.

     [உ → உது = உயரம் பெரியது. உது + சீரகம் – உதச் சீரகம்.]

உதடன்

 உதடன் udaḍaṉ, பெ. (n.)

   தடித்த உதடடையுடையவன். (வின்.);; thick lipped person or the blubber- lipped.

     [உதடு → உதடன்]

உதடி

உதடி udaḍi, பெ. (n.)

   1. தடித்த உதட்டையுடையவள்; blubber-lipped woman.

   2. தடித்த உதடுகளை உமைய கடல் மீன்வகை; purplish mullet. Upenius macronema, having thick lips.

     [உதடு → உதடி.]

உதடு

உதடு udaḍu, பெ. (n.)

   1. வாயிதழ் (கலிங். 128. புது);; lip.

   2. பானை முதலியவற்றின் விளிம்பு; brim, margin (W.);. 3.வெட்டுவாய் (வின்.);;

 edge of a wound.

   4. அலகுலின் இருபக்கத்து உதடு; hairy fold of skin on either side of the slit of the vulva – labium majus. (சா.அக.);.

 Skt osta, ம. உதடு, க ஒதடு, ஒதுடு, ஒதரு;

   தெ. பெதவி;   கொலா. பெதவே, பெத்தேல்;பட துடி.

     [உதழ்தல் = மேலெடுத்தல், திறத்தல், வாய்திறத்தல். உதழ் → உதடு = திறக்கும் தன்மையது.]

 உதடு2 udaḍu, பெ. (n.)

   1. இடதுகை; left hand.

   2. இடதுபக்கம்; left side.

     [உதழ்தல் = மேலெடுத்தல், விலக்குதல், ஒதுக்குதல். உதழ் → உதடு = நற்பணிக்கு ஆகாது என விலக்கப்பட்ட இடது கை, இடது பக்கம்.]

உதட்டடி

உதட்டடி udaḍḍaḍi, பெ. (n.)

   1. அதிரடி; rebuking. 2 வாய்வெருட்டு;

 threatening.

     [உதடு + அடி – உதட்டடி]

உதட்டாங்கை

 உதட்டாங்கை udaṭṭāṅgai, பெ. (n.)

   . இடக்கை; left hand (செ.அக.);.

உதட்டுநோய்

 உதட்டுநோய் udaṭṭunōy, பெ. (n.)

   உதடடி லேற்படும் பதினாறுவகை நோயினுள் ஒன்று; one of the sixteen ailments which affects the lips. (சா.அக.);.

     [உதடு + நோய்.]

உதட்டுரோகம்

 உதட்டுரோகம் udaṭṭurōkam, பெ. (n.)

உதட்டு நோய் பார்க்க;see udatsu-noy.

உதட்டைப்பிதுக்கல்

 உதட்டைப்பிதுக்கல் udaṭṭaippidukkal, பெ. (n.)

   நிந்தனை அல்லது இல்லை என்பதைக் காட்டு மோர் குறி; gesture to show remorse or negation.

     [உதடு + ஐ + பிதுக்கல்.]

உதண்

உதண் udaṇ, பெ. (n.)

   ;   மொட்டம்பு; arrow – head of the sharp of a bud,

     “யானை யுதணாற் கடிந்தான்” (திணைமாலை. 2);.

     [உதள் → உதண்]

உததி

உததி udadi, பெ. (n.)

   1. கடல்; sea

     “ஒருததி காட்டுமால்” (இரகு நாட்டுப் 41.);.

   2. முகில் (ஆ.அக.);; cloud.

   3. நீர்க்குடம்; water jar.

     [உதகம் → உததி]

உதன்

 உதன் udaṉ, பெ. (n.)

   சிவன்; Siva (ஆ.அக.);.

     [உது → உதள் = மேலானவள், உயர்ந்தவன்.]

உதப்பி

உதப்பி udappi, பெ. (n.)

   1. செரியாத இரை; undigested food in the stomach of a beast

     “இலத்தி வாயாலோடிய துதப்பியோட” (திருவாலவா. 26.17);.

   2. ஈரல்; venticle of animals

   3. தெறிக்கும் எச்சில்; saliva drivelling from the mouth, slaver (J);. (செ.அக.);.

ம. உதப்பி.

     [உதப்பு → உதப்பி.]

உதப்பிவாயன்

 உதப்பிவாயன் udappivāyaṉ, பெ. (n.)

   எச்சில் தெறிக்கப் பேசுவோன்; one who emits salva while speaking a drooler (J.);. (செ.அக.);.

     [உதகம் → உதப்பி + வாயன்.]

உதப்பு

உதப்பு1 udappu, பெ. (n.)

   1. எதிர்ப்பு;   இடறுதல்; offence, opposition.

   2. அடித்தல்;   உதைத்தல்; kicking, striking. kick (சேரநா.);.

   ம. உதப்பு;க. ஒதெ கோத ஒத் (உதை = துன்புறுத்தல்);.

     [உதை → உதைப்பு → உதப்பு]

 உதப்பு2 udappudal,    5. செ.குன்றாவி. (v.t.)

   1. கடிந்து கூறுதல் (வின்.);; to scold, reprove.

   2. அச்சமூட்டுதல்;   இகழ்ந்து நீக்குதல் (வின்.);; to reject with an exclamation of disdain, to rebuff.

   3. குதப்புதல்; to move about it the mouth. mumble.

   4. வாயினின்று உண்ணும் பொருள் வெளிவரும்படி மிகுதியாய்ச்சுவைத்தல் (சொ.ஆ.க.);

 munching awkwardly (செ.அக.);.

     [குதப்பு → உதப்பு.]

உதம்

உதம்1 udam, பெ. (n.)

   உதகம் (சூடா);; water (செ.அக.);

     [உதகம் → உதம் இனி. ஒதம் → உதம் என்றுமாம்.]

 உதம்2 udam, பெ. (n.)

   1. அழைத்தல்; calling

   2. கேட்டல்; hearing.

     [உது → உதம்.]

உதம்பதல்

 உதம்பதல் udambadal, பெ. (n.)

அதட்டுதல் frightening.

     [உது → உதம்பல் = உரத்த குரலுடன் பேசும் பேச்சு. உது குரலின் உயர்ச்சி.]

உதம்பு-தல்

உதம்பு-தல் udambudal,    5 செ.குன்றாவி, (v.t.)

மறுத்தல் to deny, refuse

     [உது → உதம்பு = உரத்த குரலில் பேச, எதிர்த்துப்பேக.]

உதய மண்டிலம்

உதய மண்டிலம் utayamaṇṭilam, பெ. (n.)

   கதிரவன் உலகம் (சூரிய மண்டலம்);; regions of the sun.

     “”அற்றவன் தலை அறுமுறை எழுந்து எழுந்து அண்டத்து ஒற்ற வானகம் உதய மண்டிலம் என ஒளிர”” (புக்.32-8);.

     [உதயம்)+மண்டிலம்]

உதயகாலம்

உதயகாலம் udayagālam, பெ. (n.)

   1. ஞாயிறு, திங்கள் விண்மீன்கள் தோன்றுங் காலம்; rising time of any heavenly body.

   2. ஞாயிறு தோன்றுங்காலம்; time of sunrise, early morning (செ.அக.);.

     [உது → உதய + காலம். உது = மேலெழும்புதல், தோன்றுதல்.]

உதயகாலை

 உதயகாலை udayakālai, பெ. (n.)

உதயகாலம் பார்க்க (வின்.);;see udayakālam (செ.அக.);.

     [உதயம் + காலை.]

உதயகிரி

உதயகிரி1 udayagiri, பெ. (n.)

உதயப்பொருப்பு பார்க்க;see udaya-p-poruppu (செ.அக.);.

     [உதயம் + கிரி]

 உதயகிரி2 udayagiri, பெ. (n.)

   குறிஞ்சியாழ்த்திற வகை (பிங்.);; ancient secondary melody type of the Kuriñch tracts (செ.அக.);.

     [உதயம் + கிரி]

உதயகுமரன்

 உதயகுமரன் udayagumaraṉ, பெ. (n.)

   காவிரிப்பூம் பட்டினத் தரசனாகிய நெடுமுடிக் கிள்ளியின் புதல்வன்; son of the king Nedumudi-k-kill of Kåvirippumpatinam (அபி.சிந்);.

     [உதயம் + குமரன்.]

உதயஞாயிறு

உதயஞாயிறு utayañāyiṟu, பெ. (n.)

   இளங்கதிரவன்; morning sun.

     “உதய ஞாயிற்றுத் திசைமுகம்நோக்கி “(பெருங் 79– 130);.

     [உதய(ம்);+ஞாயிறு]

உதயணகுமாரகாவியம்

 உதயணகுமாரகாவியம் udayaṇagumāragāviyam, பெ. (n.)

   வத்தவநாட்டு அரசனாகிய உதயண குமாரனுடைய வரலாற்றைக் கூறும் ஒரு தமிழ் நூல்; Tamil epic which describes the history of Udayana kumâran;

 of Vatsava country.

     [உதயணன் + குமாரன் + காவியம். Sk kavya→ த. காவியம்.]

உதயணன்

 உதயணன் udayaṇaṉ, பெ. (n.)

   பெருங்கதையின்; Udayana, a celebrated King of vatsa and hero of the Peruń-kadai.

     [உது → உதயம் → உதயணன்.]

உதயணன்கதை

உதயணன்கதை udayaṇaṉkadai, பெ. (n.)

கொங்கு வேளிரால் இயற்றப்பட்ட பெருங்கதை

 Perun-kadai, an epic written by Kongu-vésir, Cir. 10th C. recounting the life and exploits of Udayanan.

     [உதயணன் + கதை.]

உதயன்

உதயன் udayaṉ, பெ. (n.)

   ஞாயிறு (பாரத இந்திர 5.);; sun. (செ.அக.);.

     [உது → உதி → உதியன் → உதயன்.]

உதயபர்வதம்

உதயபர்வதம் udayabarvadam, பெ. (n.)

உதயப் பொருப்பு பார்க்க see பdaya-pporuppu, (செ.அக.);

     [உதயம் + பர்வதம் பருப்பதம் → பர்வதம்.]

உதயம்

பdayam.

பெ. (n.);

   1. தோற்றம்; appearance, becoming visible.

     “உதயாத்தமனமறிவுக்குளவாகாவே” (பிரபோத, 32.18);.

   2. நாண்மீன், கோள்மீன் முதலி யன கீழ்த்திசை யடிவானத்துத் தோன்றுகை; rising of the Sun, planets and stars, appearance of heavenly body above the horizon.

   3. உதிக்குங்காலம்; time of rising of a heavenly body.

   4. பிறப்பு; birth, origin, appearance

   5. உதயப்பொருப்பு பார்க்க;see udaya-pporuppu

     “உதயத்தி னெற்றி சேர்ந்த வொண்சுடர்” (சீவக. 2153);.

   6. உதய ஒரை; constellation in which a planet is seen when on the horizon, ascendant.

   7. ஊதியம். (ஆ.அக.);; gain, earning. (செ.அக.);.

     [உது → உதயம்.]

உதயப்பருப்பதம்

உதயப்பருப்பதம் udayapparuppadam, பெ. (n.)

உத யப்பொருப்பு பார்க்க (தில் நாய்ச். 14,6.); see udaya. -р-роruppu.

     [உதயம் + பருப்பதம் பொற்றை → பொறை → பொருப்பு → பருப்பதம்.]

உதயப்பொருப்பு

உதயப்பொருப்பு udayapporuppu, பெ. (n.)

   ஞாயிறு உதிக்கும் மலை (சீவக. 2153, உரை.);; eastern mountain from behind which the sun is supposed to rise.

     [உதயம் + பொருப்பு.]

உதயராகம்

உதயராகம் udayarākam, பெ. (n.)

   1. காலைப்பண் (பரத இராக. 69, உரை);; melody-type appropriate to the time of sun rise.

   2. உதயப்பண் பார்க்க;see Udaya-p-pan

உதயராசி

உதயராசி utayarāci, பெ. (n.)

   வைகறை; early morning,

     “உதயராசியிற் புணர்ந்தாகம் புகும் நரசியைப் புகுவன்” (அ.வெ.2.329);

     [உதய(ம்);+ராசி]

 உதயராசி udayarāci, பெ. (n.)

உதயவோரை பார்க்க See Udaya-v-elu-dral

     [உதய + இலக்கினம்.]

உதயவெழுவோரை

 உதயவெழுவோரை udayaveḻuvōrai, பெ. (n.)

   ;   பிறக்கும் போது உதயமாயிள்ள எழுவோரை (இலக்கனம்);; sign rising at the moment of one’s birth.

     [உதயம் + எழும் + ஒரை.]

உதயவோரை

உதயவோரை udayavōrai, பெ. (n.)

   1 பிறக்கும்போது உதயமாயுள்ள ஒரை (இராசி);;     “ஓடை மாகளிறனாறுதயராசி” (கம்பரா. திருவவ. 110);.

   2. தற்காலத்து உதிக்கு மோரை (வின்.);; sign rising at present. (செ.அக.);.

     [உதயம் + ஒரை.]

உதயாதிபன்

உதயாதிபன் udayādibaṉ, பெ. (n.)

   1. ஞாயிறு; sun. ‘உதயாதிப னென நின்றார்தம் வெங்கையில்” (வெங் கைக்கோ. 15);.

   2. உதய ஒரையை ஆளும் கோள்; planet which is the lord of the rising sign, (செ.அக.);

     [உதயம் + அதிபன். அதியன் → அதிபன்.]

உதயாத்தமனம்

உதயாத்தமனம் udayāddamaṉam, பெ. (n.)

   1. ஞாயிறு எழுவது மறைவதுமாகிய காலை, மாலைகள்; sunrise and sunset.

   2 ஞாயிறு, திங்கள், விண்மீன்களின் தோற்றமறைவுகள்; rising and setting of the sun, moon, or other heavenly bodies. (செ.அக.);

     [உதயம் + அத்தமனம்.]

உதயாலை

 உதயாலை udayālai, பெ. (n.)

உதயகாலம் பார்க்க;see udayakálam.

     [உதயம்+ காலை – உதயகாலை → உதயாலை (கொ.வ.);.]

உதரக்கட்டு

 உதரக்கட்டு udarakkaṭṭu, பெ. (n.)

   அரைப்பட்டிகை; girdle or belt made of gold or silver and worn over the dress.

     [உதரம் + கட்டு.]

உதரக்கனல்

உதரக்கனல் udarakkaṉal, பெ. (n.)

   1. செரிமானத்துக்கு உதவும் வெப்பம்; body heat promoting proper digestion

   2. பசித்தீ; fire of hunger.

     [உதரம் + கனல்.]

உதரக்கொதி

 உதரக்கொதி udarakkodi, பெ. (n.)

   மிகுபசி (வின்.);; great hunger. (செ.அக.);.

     [உதரம் + கொதி, கொதி = கொதித்தல், பசிமிகுதல்.]

உதரத்தீ

 உதரத்தீ udaraddī, பெ. (n.)

உயிர்த் தியுள் ஒன்றான சாடா அழல் (சாடராக்கினி); (சூடா.);. fire of hunger lit, stomach-fire, one of Uyir-t-ti.

     [உதரம் + தீ.]

உதரத்துடிப்பு

 உதரத்துடிப்பு udaradduḍippu, பெ. (n.)

   மிகுபசி; great hunger (W.);. (செ.அக.);.

     [உதரம் + துடிப்பு.]

உதரபந்தனம்

உதரபந்தனம் udarabandaṉam, பெ. (n.)

உதரக்கட்டு பார்க்க;see udark-kaய

     “திருவயிற்றுதர பந்தனம்”

     [திவ். அமலனாதி. 4]

     [உதரம் + பந்தனம்.].

உதரம்

உதரம் udaram, பெ. (n.)

   1. வயிறு,

 stomach, belly,abdomen,

     ‘உதரங் குளிர்ந்து’ (பாரத துருவாச. 12);.

   2. கருப்பை (ஆ.அக.);; womb, uterus.

   ம. உதரம்; Skt udara, Mar udara;

 AL uerus, Lth vedaras.

உது என்னும் முச் சுட்டுகளில் உது இடைப்பட்டதைக் குறித்தல் காண்க. ஒ. நோ அது → அதை →அதைத்தல் = வீங்குதல், பருத்தல், அது → அதரம் பருத்த உதடு.]

உதறிநட- த்தல்

உதறிநட- த்தல் udaṟinaḍaddal, பெ. (n.)

   3. செ.கு.வி. (v.i.);

வெடுக்கு

   வெடுக்கென்று நடத்தல்; to walk with short, quick,

 jerky steps. (செ.அக.);

     [உதறு → உதறி + நட]

உதறிமுறிப்பான்

 உதறிமுறிப்பான் udaṟimuṟippāṉ, பெ. (n.)

   மருந்துச் செடி; medicinal plant that grows only in hot and dry places. (செ.அக.);.

உதறு

உதறு1 udaṟudal,    5. செ.குன்றாவி. (v.t.)

   1. அசைத்து எற்றுதல்; to shake off, throw off, shake out as a cloth

     “பாய லுதறிப் படுப்பது” (கம்பரா. கடல்தா. 4);. 2.விலக்குதல்;

 to renounce, as the world, friends, etc.

     “பேறனைத்து மனுவெனவே யுதறித்தள்ள” (தாயு. ஆகார.3);.

     [உதல் → உதறு.]

 உதறு2 udaṟudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. விரைந்து அசைத்தல்; to move to and fro, to shake.

   2. குளிர், அச்சம் முதலியவற்றாற் கை கால் நடுங்குதல்; to shake, as one’s hands, feet or body, through cold, fear or anger. (செ.அக.);.

   ம. உதறுக க. ஒதறு. ஒதரு;   தெ. உதரு, உதுரு உதிலு;   து. உதேவுனி;கட. உதர்ப் பட ஒதரு.

     [உதல் → உதறு.]

உதறுஇசிவு

 உதறுஇசிவு udaṟuisivu, பெ. (n.)

   இசிவுக் காய்ச்சல்; fever attended with trembling.

     [உதறு + இசிவு.]

உதறுகாலி

உதறுகாலி udaṟukāli, பெ. (n.)

   1. உதைகாற்பெற்றம் (வின்.);; cow that kicks or twitches away its leg and does not allow to be milked.

   2. காலை இழுத்து நடப்பள்; woman who shakes her feet in walking, such gait-being supposed to bring evil upon her household. உள்ளதையுங் கெடுத்தா ளுதறுகாலி வந்து. (உ.வ.);. (செ.அக.);.

     [உதறு + காலி.]

உதறுசன்னி

உதறுசன்னி udaṟusaṉṉi, பெ. (n.)

   1. கைகால்களில் நடுக்கங் கானுமோர் வகை இசிவுக்காய்ச்சல்; a kind of fever attended with shaking or trembling of the limbs like typhoid.

   2.. உடம்பில் நடுக்க முண்டாக்கும் இசிவு; delirium

   3. உதறு இசிவு பார்க்க;see udaru – isivu. (சா.அக.);.

     [உதறு + சன்னி]

உதறுசுரம்

உதறுசுரம் udaṟusuram, பெ. (n.)

   1. குளிர் காய்ச்சல்; intermittent fever accompanied by cold and shivering.

   2. நச்சுக்காயச்சல்; malarial fever, (சா.அக.);.

     [உதறு + சுரம்.]

உதறுவலி

 உதறுவலி udaṟuvali, பெ. (n.)

   நடுக்கு ஊதை; shaking palsy. (செ.அக.);.

     [உதற + வலி.]

உதறுவாதம்

 உதறுவாதம் udaṟuvādam, பெ. (n.)

உதறு வலி பார்க்க;see udaru-vali (செ.அக.);.

உதளிப்பனை

 உதளிப்பனை udaḷippaṉai, பெ. (n.)

); கூந்தற்பனை பார்க்க;see kúndapanai (செ.அக.);.

     [உது → உதள் → உதளி + பனை. உதள் = பருத்திருத்தல்.]

உதளை

 உதளை udaḷai, பெ. (n.)

   காட்டலரி வகை; jungle mango. (செ.அக.);.

ம. உதளம்.

     [உதள் → உதளை, பருத்த அல்லது அகன்ற இதழ்களைக்

கொண்ட அலரி வகை]

உதள்

உதள் udaḷ, பெ. (n.)

   1. ஆட்டுக்கடா; ram, he-goat

     “உதளு மப்பரும்” (தொல். பொருள், 602);.

   2. ஆடு (திவா.);; goat, sheep.

   3. மேழ ஓலை (திவா.);; aries of the zodiac

   4. மரவகை (தொல்.எழுத்.400. உரை);; tree. (செ.அக.);.

   ம. உதள்;க., பட கோது.

     [உது → உதள். ஆட்டினங்களில் ஆணினம், உயர்ந்து பருத்துக் காணப்படுதலின் உதள் எனப்பட்டது. உது = உயர்வு. பருமை.]

உதவடு-த்தல்

உதவடு-த்தல் udavaḍuddal,    4. செ.கு. வி. (v.i.)

   உதவி செய்தல்; to do a favour, bestow a benefit

     “ஏவல் வினை செய் திருந்தார்க் குதவடுத்தல்” (பழ 274);. (செ.அக.);.

     [உதவு + அடு – உதவடு.]

உதவரங்கெட்டது

 உதவரங்கெட்டது udavaraṅgeṭṭadu, பெ. (n.)

உதவறக் கெட்டது பார்க்க (யாழ்ப்); see udavara-k-ketadu (செ.அக.);.

     [உதவு + அற + கெட்டது = உதவறக்கெட்டது → உதவரக்கெட் டது → உதவரங்கெட்டது (கொ.வ.);]

உதவரங்கெட்டவன்

 உதவரங்கெட்டவன் udavaraṅgeṭṭavaṉ, பெ. (n.)

   முழுதுங் கெட்டவன்; person who is spoiled beyond hope of redemption (J.);. (செ.அக.);.

     [உதவு + அற + கெட்டவன் – உதவறக் கெட்டவன் → உதவரங்கெட்டவன் (கொ.வ. );.]

உதவல்

உதவல் udaval, பெ. (n.)

)

   1. கொடுக்கை (சூடா.);.

 giving.

   2. துணை செய்தல் (ஆ.அக.);

 helping. (செ.அக.);.

ம. உதவல்

     [உதவு → உதவல்.]

உதவறக்கெட்டது

பdawark-kadu

பெ. (n.);

முற்றுங்

   கெட்டது; that which is spoiled beyond redemption (J.);. (செ.அக.);.

     [உதவு + அற + கெட்டது → உதவறக்கெட்டது.]

உதவாக்கடை

 உதவாக்கடை udavākkaḍai, பெ. (n.)

   பயனற்றவன்; worthless fellow, low-down creature. (செ.அக.);.

உதவாக்கட்டை

 உதவாக்கட்டை udavākkaṭṭai, பெ. (n.)

   பயனற்றவன்; worthless fellow, person who is good – for – nothing as a rotten piece of wood. (செ.அக.);.

     [உதவாத + கட்டை → உதவாக்கட்டை.]

உதவாக்கரை

உதவாக்கரை utavākkarai, பெ. (n.)

   குளம் ஏரி ஆறு ஆகியவற்றின் உறுதியில்லாததும் இடிந்து அல்லது அரிக்கப்பட்டுக் கரைந்து போவதுமான மண்கரை; நீரின் உதைப்புதாக்கும் கரைக் கட்டுமானம் இல்லாத நீர்நிலை, கரைப்பகுதி; erosive banks of river, well, tank, reservoir etc.

   2.பயன்படாதவன்; useless fellow.

மறுவஇடிகரை,

     [உதவாத+கரை உதவாதகரை, (நீரின் பாதுகாப்புக்கு உதவாத கரை);]

 உதவாக்கரை udavākkarai, பெ. (n.)

   பயனற்றவன்; unhelpful person as useless as a crumbling bank (செ.அக.);.

     [உதவாத + கட்டை → உதவாக்கட்டை → உதவாக்கடை → உதவாக்கரை (கொ.வ.);.]

உதவாக்கழிகுறடு

உதவாக்கழிகுறடு udavāggaḻiguṟaḍu, பெ. (n.)

   பயனில்லாதவன்; worthless person,

     “காண்டுக்க முற்றனையோ போடாவுதவாக் கழி குறடே” (பஞ்ச.திருமுக. 1142);. (செ.அக.);.

     [உதவாத + கழி – குறடு → உதவாக்கழிகுறடு. கழி = மிகுதி;

   குறடு சம்மட்டி அடிவாங்கும் கிடை, இரும்புக்கட்டை;இழிவு சுமக்கும் இயல்பினள்.]

உதவாத்தேன்

 உதவாத்தேன் udavāddēṉ, பெ. (n.)

   கள்ளிச் செடியினருகிற்கட்டிய தேன், இது மருந்துக்கும் கண் நோய்க்கு முதவாது; honey from the honey comb found near Kalli, a plant of the Euphorbia genus. This kind of honey is prohibited in medicine.

     [உதவாத + தேன்.]

உதவாரக்கெட்டது

 உதவாரக்கெட்டது udavārakkeṭṭadu, பெ. (n.)

உதவறக்கெட்டது பார்க்க (யாழ்ப்.);;see udavara-k-kettadu (செ.அக.);.

     [உதவு + அற + கெட்டது. – உதவறக் கெட்டது → உதவரக்கெட் டது → உதவாரக்கெட்டது (கொ.வ.);.]

உதவாரங்கெட்டவன்

 உதவாரங்கெட்டவன் udavāraṅgeṭṭavaṉ, பெ. (n.)

உதவரக்கெட்டவன் பார்க்க.. (J.);;see udavara-k-kettava. (செ.அக.);.

     [உதவு + அற கெட்டவன் – உதவறக்கெட்டவன் → உதவரக் கெட்டவன் → உதவாரங்கெட்டவன். (கொ.வ.);]

உதவி

உதவி udavi, பெ. (n.)

   1. துணை; help, assistance, support.

     “செய்யாமற் செய்த உதவிக்க” (குறள், 101);.

   2. கொடை; gift, donation, contribution.

உயர்ந்தவர்க் குதவிய வுதவி” (கம்பரா. வேள்வி 35);.

   3. துணை (ஆ.அக.);; companionship. (செ.அக.);.

   ம. உதவி;   க. ஒதவு கோத ஒத்க், ஒத்கி;   துட விதொல்ய;   து. ஒதகுனி;பட ஒதவு.

     [உய் → உய்ந்து → உத்து → உது → உதவு உதவி.]

உதவிசெய்யானை

 உதவிசெய்யானை uyuynduudduuduudavuudaviudaviseyyāṉai, பெ. (n.)

யானைக் கூட்டத்துக்குத் தலைமையான யானை (பிங்.); chief in a herd of wild elephants. (செ.அக.);.

     [உதவி + செய் + யானை.)

உதவித்தொகை

 உதவித்தொகை utavittokai, பெ. (n.)

   ஒருவர் கல்வி கற்பதற்கு உதவும் வகையில் அளிக்கும் தொகை; scholarship.

     [உதவி+தொகை]

உதவிந்து

 உதவிந்து udavindu, பெ. (n.)

   நீர்த்துளி; drop of water. (சா.அக.);.

     [உதகம் + விந்து – உதகவிந்து → உதவிந்து.]

உதவு

உதவு1 udavudal,    5 செ.குன்றாவி, (v.t.)

   1. கொடுத்தல்; to give, contribute, bestow.

     “ஈக்காற்றுணையுமுதவாதார்” (நாலடி.218);.

   2. துணை செய்தல்; to help. aid, assist.

     “நம்மாட்டுதவிய நன்னர்க்கு” (பெருங்.வத்தவ. 3;11);.

   3. தடுத்து நிற்றல்; to withstand, as an invading army.

     “இடத்துதவும் நல்லாளுடைய தரண்”.

   4. சொல்லுதல்; to report, tell, inform.

     “அன்னையர்க்குதவல் வேண்டும்” (கல்லா.40);.

     [உய் → உய்த்து → உத்து → உது → உதவு.]

 உதவு2 udavudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. கூடியதாதல்; to be possible.

     “உதவியதேதும் பெரியோர்க் கூட்டி” (சைவச.பாயி.19);.

   2. பயன்படுதல்; to be of use இது மருந்துக்குதவும். (செ.அக.);.

ம. உதவுக, க. தெ. ஒதவு.

     [உத்து → உது → உதவு.]

 உதவு3 udavu, பெ. (n.)

   கூரை வேயுங் கழி; bamboo pole used in the frameworkfor thatched buildings. (செ.அக.);

     [உ → உத்து → உ.து→ உதவு.]

உதாத்தன்

உதாத்தன் utāttaṉ, பெ. (n.)

   1. பெரியோன்; great man.

   2. கொடையாளி; liberal donor. (செ.அக.);.

     [உது → உதாத்தம் → உதாத்தன்.]

உதாத்தம்

உதாத்தம் utāttam, பெ. (n.)

   1. செல்வத்தினுயர்ச்சியை யேனும், மனத்தின் பெருமையையேனும், மேம்படுத் திக் கூறுவதாகிய ஓர் அணிவகை (தண்டி-72);; figure of Speech which expresses either abundance of wealth, or the greatness of thought

   2. மறைகளைச் சொல்லும் ஒசை நான்கனுள் ஒன்றாகிய எடுத்தலோசை (திரு விளை, தடாதகை.8);; rising accent of one of the four Vědasvaram.

     [உது → உதாத்தம் = உயர்வு, முன்னேற்றம், செழிப்பு.]

உதாம்பரம்

 உதாம்பரம் utāmbaram, பெ. (n.)

   செம்பு; copper (செ.அக.);.

     [உது → உதும்பரம் → உதாம்பரம் (கொ.வ.);.]

உதி

உதி1 udi, பெ. (n.)

   1, ஒதிய மரம்; goom pain tree.

     “உதிமரக் கிளவி” (தொல். எழுத். 243);.

   2. மரவகை; falcate trumpet flower,

   3. உலைத்துருத்தி (பிங்.);; bellows of the furnace of the iron smith

   4. விச்சை; science, learning knowledge.

     “உதியொரேமிரண்டுந்தந்த முனிவ” (இரகு. அயனு.19);;

   5. உளுந்து; black

 gram 6. இழைக்கட்டு;

 any layer of the body with an aggregation of cells-tissue.

   7. கடலாத்தி; falcate trumpet flower. (சா.அக.);.

     [உது → உதி (பருத்தது);. உது = மேலெழும்புதல், கிளர்தல், விளங்குதல்.]

 உதி2 udiddal,    4. செ.கு.வி.(v.i.)

   பருத்தல்;   10 swell increase in size, ஆள் உதித்து விட்டான். (உ.வ.);.

     [உது → உதி. உது = மேலெழும்பு, பெரியதாகு.]

 உதி3 udiddal,    4 செ.கு.வி. (v.i.)

   1. எழுதல்;   உதயமதால்; to rise of appear as a heavenly body.

     “மீளவு முதித்தனன்” (பாரத இரண்டாம். 32);.

   2. தோன்றுதல்; to spring up, come into existence, arise, as primitive elements one out of another.

     “உதிப்பது, மீறு முண்டு” (சி. சி.1.2);.

   3. பிறத்தல்; to commence, as a new year, an age, to be born, as a great personage (W.);

     [உது → உதி. உது = மேலெழும்பு.]

உதிச்சியம்

 உதிச்சியம் udicciyam, பெ. (n.)

   வெட்டிவேர்; fragran root (சா.அக.);.

     [உதித்தியம் → உதிச்சியம்.]

உதிதன்

உதிதன்1 udidaṉ, பெ. (n.)

   தோன்றினவன்; one who is bom ”உதிதற்குரியாள் பணியால்” (சீவக. 23);.

     [உது → உதி → உதிதன்.]

 உதிதன்2 udidaṉ, பெ. (n.)

   பாண்டிய மன்னன் (இறை.2,31);; Pandya king (செ.அக.);.

     [உது → உதி → உதியன் → உதிதன்.]

உதிப்பு

உதிப்பு udippu, பெ. (n.)

.

   1. தோற்றம்; birth, appearance.

     “மரிப்பொடுதிப்பு” (பிரபுலிங் முத்தாயி. 23);.

   2. மெய்யறிவு; knowledge, wisdom

     “ஊற்றுச் செறித்துட னுதிப்பை யாக்கும்” (யசோதர. 1.65);.

   3. வீக்கம்; swelling. (சா.அக.);.

     [உது → உதி → உதிப்பு.]

உதியஞ்சேரல்

உதியஞ்சேரல் udiyañjēral, பெ. (n.)

   மாபாரதப் போரில் பாண்டவப் படைகளுக்குப் பெருஞ்சோறு அளித்தவ னாகக் கருதப்படும் பழைய சேரருள் ஒருவன் (பதிற்றுப். 20, பதிகம்);; king who is said to have fed the armies of the Pāndavás in the Mahābhārata War.

     [உது → உதி → உதியன் + சேரல்.]

உதியன்

உதியன் udiyaṉ, பெ. (n.)

   1. இயற்பெயர்; proper name.

   2. சேரன் (திவா.);; title of Cëra dynasty.

   3. அறிவாளி; learned man.

     [உது.→ உதி → உதியன். உதி = உயரம், மேன்மை.]

உதியமரம்

 உதியமரம் udiyamaram, பெ. (n.)

   ஒதியமரம்; goom

 pain tree. (சா.அக.);

     [உதி + மரம்]

உதியம்பால்

 உதியம்பால் udiyambāl, பெ. (n.)

   ஒதிய மரத்தின் பால்; essence of the odina tree. (சா.அக.);

     [உது → உதி + அம் + பால்.)

உதியம்பூர்

 உதியம்பூர் udiyambūr, பெ. (n.)

   ஒருர்; name of a

 village. (செ.அக.);.

     [உதியன் + புரம் = உதியன்புரம் → உதியம்பூர்.]

உதிர நரம்பு

 உதிர நரம்பு udiranarambu, பெ. (n.)

   அரத்த நாடி; blood-vessel..

     [உதிரம் + நரம்பு. உதிரம் பார்க்க;see udram]

உதிரக்கட்டு

உதிரக்கட்டு udirakkaṭṭu, பெ. (n.)

   1. அரத்தத்தை நிறுத்துகை; stoppage of hemorrhage.

   2. பூப்புப் படாமை; non occurrence or suppression-of the menses.

     [உதிரம் + கட்டு.]

உதிரக்கலப்பு

 உதிரக்கலப்பு udirakkalappu, பெ. (n.)

   அரத்தத் தொடர்புள்ள உறவு; blood relationship, consanguinity.

     [உதிரம் + கலப்பு.]

உதிரக்கல்

 உதிரக்கல் udirakkal, பெ. (n.)

   மாணிக்க வகை; blood stone, heliotrope.

     [உதிரம் + கல்.]

உதிரக்குடோரி

 உதிரக்குடோரி udirakkuṭōri, பெ. (n.)

கருடன் கிழங்கு (மூ.அ.); பார்க்க;see karudan klangu.

உது → உதுரம் – உதிரம் – குடோரி. (கிடாரி → கடாரி

– குடோரி)

உதிரம் = செந்நீர். செந்நிறம்

     [கிடாரி (குடோரி); இளமை, கன்னித்தன்மை.]

உதிரங்களை-தல்

உதிரங்களை-தல் udiraṅgaḷaidal,    2 செ.கு:- (v.i.)

   அரத்தம் வடித்தல். (குறள், 948, உரை);; to bleed, draw out blood.

     [உதிரம் + களைதல்]

உதிரசூலை

 உதிரசூலை udiracūlai, பெ. (n.)

   கருப்ப நோய் வகை; clots of blood formed in the uterus (W.);

     [உதிரம் + குலை. உதிரம் பார்க்க;see udram.]

உதிரச்சிக்கல்

 உதிரச்சிக்கல் udiraccikkal, பெ. (n.)

   மாதவிலக்கு பற்றிய நோய்; painful menstruation.

     [உதிரம் + சிக்கல். உதிரம் பார்க்க;see udram]

உதிரத்துடிப்பு

 உதிரத்துடிப்பு udiradduḍippu, பெ. (n.)

   நெருங்கிய உறவினர் படுந்துன்பங் கண்டு உண்டாகும் மன வருத்தம்; painful sensation felt on seeing a near relation in suffering (W.);

     [உதிரம் + துடிப்பு. உதிரம் பார்க்க;see udram.]

உதிரத்தெறிப்பு

 உதிரத்தெறிப்பு udiraddeṟippu, பெ. (n.)

   அரத்தந் தொடர்பான உறவு; blood relationship

     ‘நாராயணத்வ பரயுக்தமான உதிரத் தெறிப்பாலே’ (ஈடு.);

உதிரம் – தெறிப்பு, தெறிப்பு = பரவல், தொடர்ந்து வருதல்

உதிரம் பார்க்க see udram.)

உதிரப்பாடு

 உதிரப்பாடு udirappāṭu, பெ. (n.)

   மகளிர்க்கு நேரும் பெரும்பாடு என்னும் நோய், பெருங்குருதிப்போக்கு; excessive menstruation.

     [உதிரம் + பாடு படு- பாடு (படுவது பாடு); படுதல் விழுதல், ஒழுகுதல், கசிதல்.]

உதிரப்போக்கு

 உதிரப்போக்கு udirappōkku, பெ. (n.)

அரத்தம் வெளிப்போகை, bleeding.

     [உதிரம் + போக்கு உதிரம் பார்க்க;see udiram.]

உதிரமாகாளி

 உதிரமாகாளி udiramākāḷi, பெ. (n.)

   பெரிய வெளவால் வகை; Vampire.

     [உதிரம்_மாகாளி) உதிரம் = செந்நிறம். மாகாளி என்பது வடிவில் பெரியது. கொடுந்தன்மையது என்னும் பொருள்களைக் குறிப்பால் சுட்டியதாகலாம்.

உதிர

உதிரம்

உதிரம் udiram, பெ. (n.)

அரத்தம்

 blood,

     ‘உதிரம் உறவறியும்’ (சீவக. 1910, உரை.);.

உல் – எரிதல் கருத்து வேர். உல் → உல → உலு → உது (உரு); = எரிநிறம், சிவப்பு. உது → உதுர் → உதுரம் → உதிரம் = செந்நீர் குருதி, அரத்தம்.

அரத்தத்தைக் குறிப்பிடும் குருதி (குருநிறம் = செந்நிறம்); என்னும் சொல்லும் ‘குரு’ (சிவப்பு); வேரடியாகப் பிறந்தது என்பதை ஒப்பிடுக.

உதிரல் udiral

உதிரல் udiral udiral, பெ. (n.)

   உதிர்ந்த பூ; flowers that have tallen down.

     “வேங்கை விரிந்த விணருதிரலோடு’ (பரிபா.7.12.);. (செ.அக.);.

     [உதிர் → உதிரல்]

உதிரவேங்கை

 உதிரவேங்கை udiravēṅgai, பெ. (n.)

   வேங்கை மரவகை (மூ.அ.);; East-Indian Kino, as having reddish sap. (செ.அக.);.

உதிர்

உதிர்1 udir, பெ. (n.)

   நறுமணச்செடி; the fagrant of root plant (சா.அக.);.

     [உது → உதுர் → உதிர். உதுர் = மேலெழும்பல், நறுமணம்]

 உதிர்2 udirdal,    2 செ.கு.வி. (v.i.)

   கீழ்விமுதல்;   10 drop off, as leaves, fruits; to fall out, as hair;

 to be blasted, nipped, shaken with the wind;

 to drop down, as tears.

     “தீவளியா னற்கா யுதிர்தலு முண்டு” (நாலடி-19);.

   2. பிதிர்தல்; to crumble, fall to pieces, as cakes,

     “உதிருகின்ற சிற்றுண்டி கொண்டு” (கந்தபு. ஆற்றுப்.27);.

   3. சாதல்; to die, used in imprecations (W.);.

நீ சீக்கிரமுதிர்ந்துபோவாய். (வின்.);.

   4. குலைதல்; to be demolished.

     “உதிராமதிலு முளகொல்” (பு.வெ.6.4.);.

ம. உதிருக.க. உதிர் உதிரு. உதுர் துட வித் (இடை ஆடை நெகிழல்);. து. உதுருனி, உதருனி.

     [உது → உதுர் → உதிர்.]

 உதிர்3 udirddal,    2. செ.குன்றாவி. (v.i). 1. வீழ்த்துதல்; to cast leaves or fruits, as trees, to cause to drop or fall in numbers or succession to shake off, beat off, peel off, strip, to knock out as teeth;

 to shed, as tears.

     “குயில் குடைந் துதிர்த்த புதுப்பூஞ் செம்மல்” (சிறு பாண்.4);.

   2. பிதிர்த்தல்; to break in pieces,

பிட்டையுதிர்த்தான்.

   3. உதறுதல்; to shake out, as a cloth.

     “பலரிடை யாடை யுதிரார்” (ஆசாரக்.37);, (செ.அக.);.

   ம. உதிர்;க. உதிரிக.

     [உ→ உது → உதுர் → உதிர்]

உதிர்4 பெ. (n.);

   1. துகள்; crumb.

     “உடைந்தன வுதிராகி” (கந்தபு சதமக.13);.

   2. முத்தக் காசு; straight-sedge tuber. (W);.

     [உதுர் → உதிர்]

உதிர்காய்

உதிர்காய் udirkāy, பெ. (n.)

   1. சொரி காய் காற்றடித்து உதிர்ந்த காய் fallen fruit

   2. குலையினின்று பிரிந்த காய்; fruit shaken from a bunch.

     [உதிர் + காய்]

உதிர்காலம்

 உதிர்காலம் udirkālam, பெ. (n.)

   இலையுதிர் காலம்; season of the year during which leaves fall off from trees – Autumn (சா.அக.);.

     [உதுர் → உதிர் + காலம்]

உதிர்கோலகம்

 உதிர்கோலகம் udirālagam, பெ. (n.)

   சும்மாறு வெற்றிலை; a dark and thick species of betel – Piper betel (சா.அக.);.

     [உதுர் → உதிர் + கோலகம். (கருப்பு.);]

உதிர்க்கிடாரி

 உதிர்க்கிடாரி udirkkiṭāri, பெ. (n.)

கருடன் கிழங்கு Indian birth-wort (சா.அக.);.

     [உதிர் + கிடாரி. கடாரி → கிடாரி. கடாரி = கன்னித்தன்மை, இளமை.]

உதிர்க்குக்கிடாரி

 உதிர்க்குக்கிடாரி udirkkukkiṭāri, பெ. (n.)

உதிர்க் கிடாரி பார்க்க பdr-k-kidari]

உதிர்சம்பம்

 உதிர்சம்பம் udircambam, பெ. (n.)

பழுத்து உதிர்ந்த எலுமிச்சை, ripe lime fallen or dropped off the tree. (சா.அக.);.

     [உதுர் → உதிர் + சம்பம்.]

உதிர்சருகு

 உதிர்சருகு udircarugu, பெ. (n.)

   மரத்தினின்று காய்ந்து விழுந்த இலை; the dried leaves dropped off the tree. (சா.அக.);.

     [உதிர் – சருகு.]

உதிர்பன்னீர்

 உதிர்பன்னீர் udirpaṉṉīr, பெ. (n.)

   பன்னீர் மரம்; dew-flower,

     [உதிர் + பன்னீர்.]

உதிர்ப்பகம்

 உதிர்ப்பகம் udirppagam, பெ. (n.)

   சவுக்கு மரம்; casuarina equisetifolia. (சா.அக.);.

     [உதிர்ப்பு → உதிர்ப்பகம், கோடையில் அல்லது வறட்சியில் இலையுதிர்த்து நிற்கும் இயல்புடைய மரம்.]

உதிர்ப்பு

உதிர்ப்பு udirppu, பெ. (n.)

   1. உகுக்கை spitting

   2. உதிர்வு falling. (ஆ.அக.);.

     [உதிர்ப்பு → உதிர்ப்பு.]

உதிர்மணல்

உதிர்மணல் 1 udirmaṇal, பெ. (n.)

   சிற்றீரமுள்ள மணல்; loose damp sand (W.);.

   2. புதைமணல்; quick Sand.

     [உதிர் + மணல்.]

உதிர்வு

 உதிர்வு udirvu, பெ. (n.)

உதிர்கை falling.

     [உதிர் + உதிர்வு.]

உதிர்வேங்கை

 உதிர்வேங்கை udirvēṅgai, பெ. (n.)

உதிரவேங்கை

பார்க்க;see undinavāńgal (சா.அக.);.

     [உதிரம் + வேங்கை = உதிர்வேங்கை.]

உது

உது udu, சு.பெ. (demons, pron).

   1. சேய்மைக்கும் அண்மைக்கும் நடுவனதைக் குறிக்கும் ஒரு சுட்டுப் பெயர்; that which is between the near and the more remote,

     “உதுக்காண்” (யாப்.வி.94. பக். 356.);.

   2. முன்னிலையாளனிடம் உள்ள பொருள்; that which is near the person(s); spoken to. உது என்ன? (யாழ்ப்.);.

   3. முன்னால்; in front of (எனக்கு முன்);. (செ.அக.);.

   ம. உது. க. உது, தெ. உ. து. உன்த் பர். ஊத்;   கூ ஓவி;   குவி. ஊதி, ஊஅதி;   குரு. கீத்;பிரா. ஒத்.

     [உ → உந்து → உ.து.]

உதுகதி

 உதுகதி udugadi, பெ. (n.)

   வாயாலெடுத்தல்; vornitng.. (சா.அக.);.

     [உது + கதி. உது + மேலெழும்பல். கதி = நிலைமை.]

உதுக்கம்

உதுக்கம் udukkam, பெ. (n.)

   1. நீர்; water.

   2. சம்பாரம் கூட்டிய குழம்பு; curry juice.

க. உதுக.

     [இதம் = நீர் ஒதம் → உதம் → உதுகம் → உதுக்கம்.]

உதுக்கலம்

 உதுக்கலம் udukkalam, பெ. (n.)

   நடுவில் குழிந்த மரவுரல் அல்லது கல்லுரல்; mortar either of wood or stone.

 Skt உலுகல (உரல்);.

     [உது – நடுப்பகுதி, கலம் = குழிவான ஏனம், நடுப்பகுதியில் குழியுள்ள உரல், உதுக்கலம் எனப்பட்டது. இது உதுகலம் → உலுகல எனச் சமற்கிருதத்திலும், உலுகல → ரோ=ல எனத் தெலுங்கிலும் திரிந்தது. வடமொழி அகரமுதலியில், ulukala = a wooden mortar, name of a particular kind of cup for holding the soma shaped like a mortar. எனக் கூறப்பட்டிருத்தலால் மரவுரலையே முதலிற் குறித்த சொல்லாக இது வழங்கியது என அறியலாம்.)

உதும்பரக்குட்டம்

 உதும்பரக்குட்டம் udumbarakkuṭṭam, பெ. (n.)

   உடம்பு முழுவதும் செம்புள்ளிகளையுடைய ஒருவகைக் குட்டம். இது அரத்தத்தில் உதிக்கும் பூச்சிகளால் ஏற்படுவதாகச் சொல்லப்படும்; a species of leprosy with red spots all over the body. It is said to be caused by a kind of germ supposed to be generated in the blood. (சா.அக.);.

     [உதும்பரம் + குட்டம்.]

உதும்பரப்பரணி

உதும்பரப்பரணி udumbarapparaṇi, பெ. (n.)

   1 காட்டாமணக்கு; wild croton

   2. சிவப்புக் காட்டாம கணக்கு; red physic nut (சா.அக.);.

     [உதும்பரம் – பரணி.]

உதும்பரம்

உதும்பரம்1 udumbaram, பெ. (n.)

   1. செம்பு (பிங்.);; copper.

   2. அத்தி மரம் பிங்.); red-wooded fig tree.

   3. வாயிற்படி; threshold of a house (W.);.

ஒன்றிய கபாடஞ் சாரு முதும்பரங் கடந்து சென்றான்.

   4. செவ்வகத்தி (மூ.அ.);; red-flowered West-Indian pea-tree,

   5. எருக்கு (மூ.அ.);; madar, 6 நெற்களம் (ஆ.அக.);;

 threshing floor.

   7. சிவப்பு; redness.

   8. பேயத்தி; wild fig-ficus oppositifolia.

   9. அத்திப்பழம்; the fruit of ficus glomerats.

   10. சீமையத்தி அல்லது தேரத்தி; hebrew tenah or European fig tree. (சா.அக.);

 உதும்பரம்2 udumbaram, பெ. (n.)

   ;   செங்குட்ட நோய் (நாநார்த்த.);; red leptosy.

உதுகலம்

பப்ரவலா

பெ. (n.);

   உரல்; mortal. (ஆ.அக.);.

     [உது = தடுப்பகுதி. உது → உது + கலம் (நடுவில் கலம்போல் அழிந்தது.);.]

இச்சொல் வடமொழியில் உலுகல எனத் திரிந்தது. உதுக்கலம் பார்க்க;see Udu-k-kalam.]

 M

உதை

உதை1 udaidal,    4. செ.குன்றாவி (v.t.)

.

   1. காலால் எற்றுதல்; lo kick. அவன் என்னை உதைத்தான்.

   2. நன்றாக ஊன்றுதல்; to plant the foot firmly against a post or a wall.

     ‘முட்டுக்கட்டை சுவரை உதைத்துக் கொண்டிருக்கிறது. (இ.வ.);. (செ.அக.);

   3. தாக்கி மீளுதல்; to dash and retreat (ஆ.அக.);.

     [உது-உதை (முன்தள்ளுதல்.);]

 உதை2 udaiddal,    4.செ.குன்றாவி. (v.i.)

   1. காலாலெற்றுதல்; to kick.

     “கூற்றொன்றை யுதைத்தாய் போற்றி” (தேவா, 966, 1);.

   2. அவமதித்தல்; to spum, reject. as advice (W.);.

அவன் என் பேச்சை யுதைத்துத் தள்ளி விட்டான் (இ.வ.);.

   3. செலுத்துதல்; to discharge, as an arrow.

     “இச்சிலையுதைத்த கோற் கிலக்கம்” (கம்பரா. கார்முக.9.);.

   4. அடித்தல்; to beal, strike. அவனை நன்றாய் உதைத்தான். (உ.வ.);.

     [உது → உதை (முன்தள்ளுதல்);.]

 உதை3 udaiddall,    4 செ.கு.வி. (v.i.)

   1. நடுங்குதல்; to tremble with fear, shiver with cold used impers,

அதைக் கேட்டதும் அவனுக்கு உதைக்கிறது.

   2. மாறுபடுதல்; to be inconsistent.

அவன் சொன்னது முன்னுக்குப் பின் உதைக்கிறது.

   க. து., பட ஒதெ;ம. உத.

     [உது → தை = முன்தள்ளுதல், உதைத்தல்.]

 உதை4 udai, பெ. (n.)

   1. காலினெற்று; kick. ஓர் உதை உதைத்தான்.

   2. காலாலமுத்துகை; pressure of foot. as in pushing (W.);.

   3. உதைகால் பார்க்க;see udaikāl

   4. அடி; beating flogging.

   5. குதிப்பு; leap to recoil or rebound of a sun

   6. தாங்குதல்; support (சேரநா.);.

   ம. உத;   க._து., ப_ஒதெ;தெ. ஊத.

     [உ → உது → உதை.]

உதைகவர்

உதைகவர் udaigavar, பெ. (n.)

   1. குளிரால் நடுக்கங்கொள்ளல்; shivering with cold.

   2. அச்சத்தால் நடுக்கங் கொள்ளல்; trembling with fear.

   3. வலிப்பு அல்லது இழுப்பினால் கை கால் உதைத்துக் கொள்ளல்; violent and irregular motion of the limbs through fits. (சா.அக.);.

     [உதை → உதைத்து + கொள்ளல்.]

உதைகாற்பசு

 உதைகாற்பசு udaikāṟpasu, பெ. (n.)

உதைகால்பெற்றம் பார்க்க;see udai-käs-perram.

     [உதை + கால் + பக. பெற்றம் → பெத்த → பெச்சு → பெசு = பசு.]

உதைகாலி

உதைகாலி udaikāli, பெ. (n.)

   உதைக்குங் குணமுள்ள மாடு (அபி.சிந்.பக்.788);; cow with kicking leg (செ. அக.);.

     [உதை + காலி. கால் → காலி]

உதைகால்

உதைகால் udaikāl, பெ. (n.)

   1. தாங்கு முட்டுக்கால்; prop, set against a slanting wall or a falling tree.

   2. முட்டுக்கால்; physical deformity whereby the hindlegs of an animal-touch each other;

 knock-knee, as in the case of overloaded donkeys.

   3. உதைக்குங்கால்; kickin leg.

     “உதைகாற் பசு” (சூடா. 3.13);.

   4. உத்திரத் தின் மீதுள்ள குத்துக்காலின் ஆரக் கால்கள்; supports to king post (C.E.M);. (செ.அக.);.

     [உதை + கால்]

உதைகால்பெற்றம்

 உதைகால்பெற்றம் udaikālpeṟṟam, பெ. (n.)

   பால் கறக்கும் போது உதைக்கும் இயல்புள்ள கறவை மாடு; cow with kicking keg.

     [உதை + கால் + பெற்றம்]

உதைகொடு

உதைகொடு1 udaigoḍuddal,    4. செ.குன்றாவி (v.i.)

   உதைத்தல்; to give kicks.

     [உதை + கொடு.]

 உதைகொடு2 udaigoḍuddal, பெ. (n.)

   4. செ.கு.வி. (v.i.);

   1. முட்டுக்கொடுத்தல்; to set a prop, put a buttress as against wall or a tree.

   2. ஊஞ்சலை ஆட்டிக்கொள்ளுதல்; to push and give impulse to a swing. (J);. (செ.அக.);.

     [உதை + கொடு.]

உதைசுவர்

உதைசுவர் udaisuvar, பெ. (n.)

   1. முட்டுச்சுவர்; wall rest, buttress.

   2. அணை சுவர்; supporting wall.

     [உதை + சுவர்.]

     [P]

உதைபு

 உதைபு udaibu, பெ. (n.)

   -கதவு (பிங்.);; door (செ.அக.);.

     [உதைப்பு → உதைபு. (முன்தள்ளுவது.);]

உதைப்பளவு

உதைப்பளவு udaippaḷavu, பெ. (n.)

   கைத்தொடிப் பொழுது; moment.

     “கண்ணன் உதைப்பளவு போது போக்கின்றி” (திவ். இயற். நான்முக. 32);. (செ.அக.);.

     [உதை → உதைப்பு + அளவு.]

உதைப்பு

உதைப்பு utaippu, பெ. (n.)

   குறைதல்; dificiency

     “கணக்கில் ஆயிரம் ரூபாய் உதைப்பு ஏற்படுகிறது” (உ.வ.);

     [உதை-உதைப்பு]

 உதைப்பு udaippu, பெ. (n.)

   1. தாக்குகை; dashing against.

   2. அச்சம்; fright, alarm. (செ.அக.);.

     [உதை → உதைப்பு.]

உதைமானம்

உதைமானம் udaimāṉam, பெ. (n.)

   1. முட்டு; backing of an abutment, buttress of an arch;

 prop, support

   2. கருநாடகத் துப்பாக்கிக் கைப்பிடி; pistol grip of a Karnatic gun.

     [உதை → உதைமானம், மானம் = சொல்லாக்க ஈறு.]

உதையக்காப்பு

 உதையக்காப்பு udaiyakkāppu, பெ. (n.)

   நன்றாக அடிக்கை; sound thrashing. (செ.அக.);.

     [உதை + அ + காப்பு. (காய்ப்பு.);]

உதையப்பெருமாள்

 உதையப்பெருமாள் udaiyapperumāḷ, பெ. (n.)

   பட்டனி; starvation (செ.அக.);.

     [உதை → உதைய + பெருமாள். பெருமாளுக்குரிய நோன்பு.]

உதையம்

 உதையம் udaiyam, பெ. (n.)

   செருப்படை; a low spreading plant grown in the fields.

     [உதை → உதையம்]

உதையரலிக்கஞ்சி

 உதையரலிக்கஞ்சி udaiyaralikkañji, பெ. (n.)

   பச்சைக் கருப்பூரம்; crude camphor. (சா.அக.);.

     [உதை + அரலி + கஞ்சி.]

உதையவன்பால்

 உதையவன்பால் udaiyavaṉpāl, பெ. (n.)

   எருக்கன் பால்; the milky juice of madar or sun plant. (சா.அக.);.

     [உதையவள் + பால்.]

உதையுண்ணி

 உதையுண்ணி udaiyuṇṇi, பெ. (n.)

   காலால் உதைபடு பவர்; one who is repeatedly kicked. (சா.அக.);.

     [உதை + உண்ணி.]

உதோளி

உதோளி utōḷi, பெ. (n.)

   உவ்விடம் (தொல். எழுத். 159);; the place where the person addressed is or the intermediate place.

     [உ → உது → உதா → உதோ → உதோள் → உதோளி.]

உதோள்

உதோள் utōḷ, கு.வி.எ. (adv)

உதோளி பார்க்க;see udoli (தொல், எழுத். 398, உரை.);. (செ.அக.);.

     [உ → து → உதா → உதோ → உதோள்.]

உத்தண்டன்

உத்தண்டன் uttaṇṭaṉ, பெ. (n.)

   1. கொடியவன்; fierce, cruel person,

     “தண்டனை செய்யும் உத்தண்டனை” (தனிப்பா. 1.224.14);.

   2. இறுமாப்புள்ளவன்; haughty, conceited person, (செ.அக.);.

     [உத்து → உத்தண்டன்.]

உத்தண்டமணி

 உத்தண்டமணி uttaṇṭamaṇi, பெ, (n.)

   பொன் மணி களாலான மாதர் கழுத்தணி வகை (வின்.);; woman’s necklace make of gold beads (W.);. (செ.அக.);.

   தெ. உத்தண்டமு;க. உத்தண்ட.

     [உத்து → உத்தண்டம் + மணி.]

உத்தண்டமாலை

உத்தண்டமாலை uttaṇṭamālai, பெ, (n.)

   பொன் மணிகளாலான மாதர் கழுத்தணி வகை; woman’s necklace made of gold beads.

     “உத்தஙணட மாலையைக்

காதோலையைப் பொன் மோதிரத்தை வைத்தென் றாலுங் கடுகு வாங்கித்தா” (விறலி.விடு. 258);. (செ.அக.);

   க. உத்தண்ட. உத்தண்டாலெ;தெ. உத்தண்டமு. [உத்து → உத்தண்டம் + மாலை.]

உத்தண்டம்

உத்தண்டம் uttaṇṭam, பெ. (n.)

   1. கொடுமை fierceness, relentlessness, barbarity.

   2. இறுமாப்பு; Imperiousness, haughtiness.

அவன் உத்தண்டமாகப் பேசுகிறான். (உ.வ.);. (செ.அக.);

     [உத்து → உத்தண்டம்.]

உத்தண்டால்

 உத்தண்டால் uttaṇṭāl, பெ. (n.)

உத்தண்டமணி பார்க்க;see uttandamani. (செ.அக.);.

     [உத்து → உத்தண்டம் → உத்தண்டால்.]

உத்தமன்

உத்தமன் uttamaṉ, பெ. (n.)

சான்றோன் பார்க்க;see sanron.

     “உத்தம னித்த அடியார் மனமே நினைந்துருகி” (திருவாச. 5.3);. (செ.அக.);.

ம. உத்தமன்.

     [உத்து = உயர்வு. உத்து → உத்தம் → உத்தமன்.]

உத்தமம்

உத்தமம் uttamam, பெ. (n.)

   1. எவற்றுள்ளும் சிறந்தது; that which is pre-eminent.

     “உத்தம குணத்தார்க்கு” (தணிகைப்பு அகத் 159);.

   2. நன்மை (பிங்.);; excellence;

 nobility;

 goodness. (செ.அக.);.

   3. அரத்தை (சங்.அக.); galangal.

   ம. உத்தமம்;   க. உத்தம; Skt. Uttama.

     [உ → உத்து → உத்தம் → உத்தமம். உத்து = உயர்வு. உத்தமம் உயர்வானது.]

உத்தமவுறுப்பு

 உத்தமவுறுப்பு uttamavuṟuppu, பெ. (n.)

   தலை; head.

     [உத்தம(ம்);+உறுப்பு]

உத்தமாகாணி

உத்தமாகாணி uttamākāṇi, பெ. (n.)

   வேலிப்பருத்தி; hedge-twiner (W.);. (செ.அக.);

   ம, உத்தமாரணி; Skt utamarant

     [உத்தமன் + காணி]

உத்தமி

 uttami,

பெ. (n.);

   1. மிக உயர்ந்த பெண்; excellent woman.

     ” போதுமென்றுத்தமி யெழலும்” (தணிகைப்பு. வள்ளி. 63.);.

   2. கற்புடையவள்; chaste woman.

     [உத்து = உயர்வு. உத்து → உத்தம் → உத்தமி]

உத்தமாங்கம்

உத்தமாங்கம் uttamāṅkam, பெ. (n.)

உத்தமவுறுப்பு பார்க்க:

 see utama-vuruppu.

     “புத்தன் உத்தமாங்கம்உருண்டு வீழ்க எனப்பெறாஉரைமுன்விட்டார் ” (பெரியபு.2811);

     [உத்தம(ம்);+அங்கம்]

உத்தம்

உத்தம்1 uttam, பெ. (n.)

உத்தமபலம் பார்க்க (மு.அ.);;see uttamabalam (செ.அக.);

 உத்தம்2 uttam, பெ. (n.)

   கொட்டை முந்திரி; cashew nut. (ஆ.அக.);.

     [உத்து → உத்தம்.]

 உத்தம்3 uttam, பெ. (n.)

. பித்தேறுகை (அக.நி.);. becoming mad or maddened. (செ.அக.);.

     [உத்து → உத்தம்.]

 உத்தம்4 uttam, பெ. (n.)

   போர்க்களம்; battle-field.

     [உத்தம் → உத்தம்.]

உத்தம்பகம்

உத்தம்பகம் uttambagam,    பெ. (n.. வளர்ச்சி; augmenting, raising

     “அது பழைய அபிநிவேசத்திற்கு உத்தம்பகமாய்” (திவ் இயற். திருநெடுந். 1. வ்யா.);. (செ.அக.);.

     [உத்து → உத்தம் → உத்தம்பகம்.]

உத்தம்பரி

 உத்தம்பரி uttambari, பெ. (n.)

   கொத்துமலி பார்க்க (மூ.அ.);; coriander. (செ.அக.);.

     [உத்து → உத்தம் → உத்தம்பரி.]

உத்தம்பி-த்தல்

உத்தம்பி-த்தல் uttambittal,    4 செ.கு.வி. (v.i.)

   வளர்தல் (ரஹஸ்ய. 94);; to augment, develope. (செ.அக.);.

     [உ → உத்து → உத்தமம் → உத்தம்பி.]

உத்தர குரு

உத்தர குரு uttarakuru, பெ. (n.)

இன்பநுகர்ச்சி இடங்கள் (போக பூமி); ஆறனுள் ஒன்று

 one of the blissful regions where the fruits of good karma are enjoyed six in number.

     “ஆத்தரு திருவின் அருந்தவம் முடிந்தோர். உத்தர குருவின் ஒப்பத்தோன்றிய” (சிலப்.2:9:10);

     [உத்தர(ம்);+குரு]

உத்தர.

 உத்தர. uttara, பெ. (n.)

     (adj); மேலான;

பpper (சா.அக.);.

   ம., க. உத்தர; Skt. Utara.

     [உத்து = உயர்வு, உத்து → உத்தர.]

உத்தரகாண்டம்

 உத்தரகாண்டம் uttarakāṇṭam, பெ. (n.)

   இராமாயணத் & someomLib; seventh book of the Rāmāyana, so-called because it relates events after the coronation of Rāma;

 prob, also because it is a later work that has been appended to Vālmīki’s Rāmāyana (செ.அக,);.

 Skt. uftara kanda.

     [உத்தரம் + காண்டம்.]

உத்தரகாலம்

உத்தரகாலம் uttarakālam, பெ. (n.)

   1. எதிர்காலம்; future time.

   2. ஒரு வெள்ளுவா(பெளர்ணமி); வுக்கும்.அடுத்த வெள்ளுவாவுக்கும் இடைப்பட்ட காலம்; the time reckoned from full-moon to full-moon (சேரநா.);. (செ.அக.);

ம. உத்தரகாலம்.

     [உத்தரம் + காலம்.]

உத்தரகுருவம்

உத்தரகுருவம் uttarakuruvam, பெ. (n.)

அருந்தவம் கொடுக்கும்

     “சுருங்காச் செல்வத்து உத்தர குருவம் ஒத்த அம்மை” (பெருங். இலாவண.7.141); உத்தரகுருபார்க்க:

 see uttarakuru.

     “உத்தர குருவமொத்த கம்மை” (பெருங். இலாவண.7,141);

     [உத்தரம்+குருவம்]

உத்தரக்கணம்

 உத்தரக்கணம் uttarakkaṇam, பெ. (n.)

   அடுத்த நிமயம்; next moment (செ.அக,);.

உத்தரக்கற்கவி

உத்தரக்கற்கவி uttarakkaṟkavi, பெ. (n.)

   கதவு நிலைக்கு மேற் சித்திரம் வகுக்கப்பட்ட உத்திரம் (நெடுநல். 82, உரை.);; ornamented entablature of stone forming part of the intel in a building (செ.அக,);.

     [உத்தரம் +கல் +கவி]

உத்தரன்

 உத்தரன் uttaraṉ, பெ. (n.)

   தாங்கும் திறனுடையவன்; one who bears anything.

     [உத்து+உத்தரன்]

உத்தரப்பலகை

உத்தரப்பலகை uttarappalakai, பெ. (n.)

   தூணின் மீது வைக்கும் பலகை; the plank fixed on a pillar.

     “உத்தரம் பலகையோடு அரங்கின் பலகை வைத்த இடைநிலம்.” (சிலப்.3:103.4);

     [உத்தரம்+பலகை]

உத்தரமடங்கல்

 உத்தரமடங்கல் uttaramaḍaṅgal, பெ. (n.)

வடவைத்த (வடமுகாக்கினி); பார்க்க, see Vadava-t-ti submarint fire (செ.அக.);

     [உத்தரம் + மடங்கல்]

உத்தரமதுரை

உத்தரமதுரை uddaramadurai, பெ. (n.)

கண்ணன் தோன்றிய வடமதுரை (திருவள்ளுவமாலை 21.);

 Matura, the birth place of Krishna (செ,அக);.

     [உத்தரம் + மதுரை.]

உத்தரமத்திமபூமி uttara-mattima-bum,

உத்தரமத்திமபூமி uttara-mattima-bum, uttaramattimapūmi, பெ. (n.)

   1 வடகுளிர் வெப்பச் சமநிலம் (வின்.); north temperat zone.

   2. வட வெப்பநிலத் பார்க்க;see vada-veppanisam (செ.அக.);.

     [உத்தரம் + மத்திமம் + பூமி (வட நடுநிலம்]

உத்தரமந்திரி

உத்தரமந்திரி uttaramandiri, பெ. (n.)

   முதன்மை அமைச்சர்;  prime minister,

     ‘உத்தர மந்திரி பதமெய் தின (I.M.P.Mr. 366.);. (செ. அக.);.

     [உத்தரம் + மந்திரி]

உத்தரமீனோரை

உத்தரமீனோரை uttaramīṉōrai, பெ. (n.)

கோ. மண்டல விண்மீன்களுக்கு வடபாலுள்ள விண்மீன்

   தொகுதி (MNavi. 109);; constellations to the north of the Zodiac.

     [உத்தரம் + மீன் + ஒரை.]

உத்தரமீன்

உத்தரமீன் uttaramīṉ, பெ. (n.)

வடமீன் பார்க்க sel vadamin,

     ‘உத்தரமீனின் கொண்கன்” (சேதுபு துத்தம 6);, (செ.அக.);

     [உத்தரம் + மீன்.)

உத்தரமுனை

 உத்தரமுனை uttaramuṉai, பெ (n.)

   வடமுனை, (வடதுருவம்);; north pole.

     [உத்தரம் + முனை.]

உத்தரமும்மை

 உத்தரமும்மை uttaramummai, பெ (n.)

   மானேறு (உத்தரம்);, கடைக்குளம் (உத்தரம்);, கடைக்குளம் பிற்கொழுங் கால் (உத்தரட்டாதி); ஆகிய மூன்று விண்மீன்கள்; the three naksatras. Viz. Uttaram, Uttarãɖam, Uttarattadi,

     [உத்தரம் + மும்மை]

உத்தரம்

உத்தரம் uttaram, பெ. (n.)

   1. மறுமொழி; answer, reply, reionder.

     “வத்தவர் பெருமகனுத்தர நாடி” (பெருங். loss. 10, 55);.

   2.எதிராடல்; written statement filed by the defendant in a case.

   3. பின் நிகழ்வது; which follows;

 that which comes later.

   4. மேற்பட்டது; that which is superior.

     “அதுக்குத் தரமில்லடித” (உத்தரரா. திருவோலக் 4);.

   5. தலைக்கு மேலுள்ள முகட்டு விட்டம் (நெடுநல்;82, உரை);; beam, or cross-beam in a building.

   6. வடகதிர் வழி (விதான குணா. 74);; period of the sun’s progress towards the north.

   7 குமரிமலை முழுகியபின் உயர்ந்த வடக்குத்திசை (திவா.);; north.

   8. வடவனல் (பிங்.);; submarine fire 9, 12 ஆவழ விண்மீன், மானேறு;

   12th naksatra, part of Cinka-ráci and Kanni-raci containing Denebola or Leonis. (செ.அக.);.

   ம. உத்தரம்; Skt uttara.

     [உ + தரம் – உத்தரம். தட→ தடம் → தரம்.]

உ → உயர்வுக் கருத்து முன்மைச் சுட்டு தடம், தடவை என்பன முறை எனப் பொருள் படுதலான தடம்→ தரம் எனத் திரிந்த திரிபுச் சொல்லும் அதே பொருள் சுட்டியது. தட → தடம் – தரம் = வளைவு கற்றிச் சுற்றி வரும் முறைமை, ஒரு சீரான இயங்கு நிலைமை. அல்லது இருப்பு நிலைமை. தன்மை இயல்பு, ஒழுங்கு பெருமை, அருமை, தரம் = அகலம், அகன்ற பக்கம். பகுதி என்னும் பொருளிலும் இருவேறு பொருட்பாடுகளில் புடைவிரிந்து வழங்கும். இங்கு. உ + தரம் – உத்தரம் = உயர்ந்த பக்கம். உயரத்திலுள்ள நிலம், எனப் பொருள்பட்டது

     “utara”, northern because the northern part of India;

 is higher என்று Monier Williams அகரமுதலியும் கூறுதல் காண்க

     [உ = உயர்ந்த. தரம் = நிலைமை. உ + தரம் த்தரம்.] வடமொழியாளர் உத் + தர என்று பகுத்து, தர என்பதை உறழ்தர (comp degree); ஈறாகக் காட்டுவர். அங்ங்னங் காட்டினும். உத் என்பது உயர்வு குறித்த தமிழுகரச் சுட்டி னின்று தோன்றியதே. மேலும் உத்தர தேசம், உத்தரமடங்கல் உத்தர மதுரை முதலிய சொற்களில், உறழ்தரக் கருத்தின்மை யையும் நோக்குக.

     “உப்பாலுயர்ந்த உலகம். புகும்.” (நான் மணி 27);.

     “உப்பக்கம் நோக்கி யுடகேசி தோண்மணந்தான்” (திருவள்ளுவ மாலை. 21);. இதில் உப்பக்கம் என்பதற்கு (உயர்ந்த); வட திசை என்று பொருளுரைப்பதே சால சிறந்ததாம் (வ.மொ.வ-92 வேக 32.37);.

உத்தரவாணி

 உத்தரவாணி uttaravāṇi, பெ (n.)

   கண்டங்கத்தரி (வை.மூ);; a highly thorny plant with diffuse branches (செ. அக.);

     [ஒருகா உத்தரம் + ஆணி. மேற்பகுதியில் ஆணிபோன்ற முள் உள்ளது.]

உத்தரவு

உத்தரவு uttaravu, பெ (n.)

   1 கட்டளை; order, command 2 அனுமதி;

 grant leave, permission,

   3. தெய்வ ஒப்புதல்; divine permission such as that suggested in dreams or revealed by inspiration,

   4. விடை;மறுமொழி answer, reply.

   5. வேண்டுகோட்குப் பின் தரும் விடையோலை; reply.

ம., தெ. உத்தரவு.

     [உ + தரம் = உத்தரம் → உத்தரவு.]

உகரம் முன்மையும் உயர்ச்சியும் குறித்த சுட்டு உத்தரம் என்பது மேலோர் உயர்ந்தோர் பதவிநிலை சுட்டியது. மேலி டத்திலிருந்து விடப்படும் கட்டளை, உத்தரவு. கீழ்த்தரத்திலுள் ளவர்களின் வேண்டுகோளை ஏற்று ஆணையிடப்படும் விடை யோலையும் உத்தரவு மறுமொழி எனும் பொருளில் வழக் கூன்றியது

உத்தரவுகொடு-த்தல்

உத்தரவுகொடு-த்தல் uttaravugoḍuttal,    4 செ.கு.வி (v.i.)

   1. இசைவளித்தல்; to give permission

   2. கட்டளை கொடுத்தல்; to issue an order

   3. போகச் சொல்லுதல்; to send away, dismiss (செ.அக..);

     [உத்தரவு + கொடு.]

உத்தரவுச்சீட்டு

உத்தரவுச்சீட்டு uttaravuccīṭṭu, பெ (n.)

.

   1. கடவுச்சிட்டு:

 passport, permit.

   2. அதிகாரச் சான்றிதழ்; certificate of right, of authority. (செ.அக.);

உத்தரவேதி

உத்தரவேதி uttaravēti, பெ. (n.)

   வேள்வித் தீயுள்ள இடம்; altar of sacrifice fire.

     “உத்தர வேதியில் நின்ற ஒருவனை”(பெரியபு.1:9:6);.

     [உத்தர(ம்);+வேதி]

     [P]

உத்தராசங்கம்

உத்தராசங்கம் uttarācaṅgam, பெ (n.)

   மேலாடை; upper garment, cloth worn loosely over the shoulders.

     “உத்தராசங்கம் வைத்தார்”. (சீவக. 2457.);. (செ.அக.);.

     [உத்தரம் + ஆசங்கம். < Skt a-sarpal]

உத்தராயணம்

 உத்தராயணம் uttarāyaṇam, பெ. (n.)

   வடக்கு முகமாகச் செல்லும் சுறவம் (தை); முதல் ஆறுமாத காலம்; a period of six months from January.

     [உத்தர(ம்);+அயணம்]

உத்தரி

உத்தரி uttari, பெ. (n.)

குதிரை,

 horse:

     “வயங்கு கொய்யுளை யுத்தரிச்சலதியும்” (இரகு. திக்குவி.133);.

     [உத்து-உத்தரி]

உத்தரியம்

உத்தரியம் uttariyam, பெ. (n.)

   மேலாடை; cloth worn loosely over the shoulders, upper garment.

     “அறுவை யுத்தரியந் தனி விசும்பிலெறிந்தார்க்குந் தன்மையாலே” – (பெரியபு:திருஞான.95);.

     [உத்தரி→உத்தரியம்]

உத்தாமணி

 உத்தாமணி uttāmaṇi, பெ (n.)

   வேலிப் பருத்தி; hedge – twiner.

     [ஒருகா. உத்து + மணி.]

     [P]

உத்தி

உத்தி1 utti, பெ. (n.)

   1. அணிகலத்தொங்கல் (பிங்.);; pendantofan ornament.

   2. திருமகள் உருவம் பொறித்த தலையணி; head-ornament of women, with figure of Lakshmi, embossed upon it.

     “தெய்வபுத்தியோடு” (திரு.முரு. 23.);. (செ.அக.);.

     [உ → உத்து → உத்தி.]

 உத்தி2 utti, பெ. (n.)

   1. பாம்பின் படப்பொறி; spots on the hood of the cobra.

     “கேழ்கிளருத்தி யரவு” (நற். 129);.

   2. தேமல் (திவா.);; yellow or tawny spots on the skin, chiefly of women, considered as marks of beauty. (செ.அக.);.

     [உ → உத்து → உத்தி (மேல் தோன்றும் நிற அழகு.]

 உத்தி3 utti, பெ (n.)

   1. பேச்சு (பிங்);; words speech (செ.அக.);.

     [உ → உத்து. மேலெழுப்புதல், வெளியிடுதல், பேசுதல், உத்து → உத்தி.]

 உத்தி4 utti, பெ (n.)

   1. சேர்க்கை; union, mixture, combination

     “கந்த உத்தியினால்” (மணிமே. 28.15.);

   2. நூலுக்குச் சொல்லப்படும் 32 வகை உத்தி (Gram); literary devices employed by an author of a standard work who keeps in mind the rules of exegesis, 32 in

 number, viz., நுதலிப்புகுதல், ஒத்துமுறை வைப்பு, தொகுத்துச்சுட்டல், வகுத்துக் காட்டல், முடித்துக் காட்டல் முடிவிடங்கூறல், தானெடுத்து மொழிதல், பிறன் கோட்கூறல், சொற்பொருள் விரித்தல், தொடர்சொற் புணர்த்தல், இரட்டுற மொழிதல், ஏதுவின் முடித்தல், ஒப்பின் முடித்தல், மாட்டெறிந்தொழுகல், இறந்தது விலக்கல், எதிரது போற்றல், முன் மொழிந்து கோடல், பின்னது நிறுத்தல். விகற்பத்தின் முடித்தல், முடிந்தது முடித்தல், உரைத்துமென்றல், உரைத்தாமென்றல், ஒரு தலை துணிதல், எடுத்துக் காட்டல், எடுத்த மொழியின் எய்த வைத்தல், இன்னதல்ல திதுவென மொழிதல், எஞ்சிய சொல்லினெய்தக், கூறல், பிறநூன் முடிந்தது தானுடன் படுதல். தன் குறிவழக்கம் மிக வெடுத்துரைத் தல், சொல்லின் முடிவினப்பொருள் முடித்தல். ஒன்றின முடித்தல் தன்னின முடித்தல், உய்த்துணரவைப்பு. (நன். 14.);. (செ.அக.);

   4

ம. உத்து

     [உ → உத்து = சேர்த்துக்கட்டு, பொருத்து. மாடுகளைச்சேர்த்துக் கட்டும் கயிறு உத்தாணி எனப்படுதல் நோக்குக. புனர்ப்பு. பொருத்தம், பொருத்தமானதை அறியும் அகக்கரணம், நூற்கும் உரைக்கும் பொருந்தும் நெறிமுறை.

     “உத்தி” இதில் உத்’ என்னும் செயற்கையடியை வடமொழியார் யுத் (இ.வே.); என்று திரிப்பர் விளையாட்டில் இவ்விருவராய்ச் சேர்ந்து வரும் சேர்க்கையைக் குறிக்கும் உத்தி என்னும் சொல்லும் இதுவே. தெ.உத்தி கழித்தலை அல்லது தள்ளுதலைக் குறிக் கும் து என்னும் சொல்லும் உகர அடியானதே. உ → உந்து உந்துதல் = முன்தள்ளுதல், தள்ளுதல், உந்து → உத்து – உத்தி

     “பொன்னெல்லா முத்தியெறிந்து” (கவித்..64);. உ → (இ.வெ.);. (வ.மொ.வ.92.93);.]

 உத்தி5 utti, பெ. (n.)

   1. விளையாட்டில் எதிர்ப்பக்கத்தில்

   ஒருவனுக்கு நிகரான துணைவன்; player on the opposite side, corresponding to one on one’s own side in a game in which the players are divided into two parties.

   2. விளையாட்டிற் கன்னை (கட்சி); பிரித்தற்கு ஈரிருவராய்ச் சேர்தல் (வே.க.44);; to divide a team in doubles for play. என் உத்தி யார் ? (உ..வ.);.. (செ.அக.);.

தெ. உத்தி

     [உ → உத்து → உத்தி.]

 உத்தி6 utti, பெ. (n.)

   1. கடல் (அக.நி.);; sea

   2. நிகழ்நிலையாக அமைக்கப்பட்ட கண்ணிக் கால்; temporary irrigation channel. (Madr.); (செ.அக.);.

     [உ → உத்து → உத்தி. உத்து = மேலெழும்புதல். உத்தி மேலெழும்பும் அலைகளைக் கொண்ட கடல்.]

 உத்தி1 uttipārkka,

உத்திகை

 உத்திகை uttigai, பெ. (n.)

உத்திக்கட்டு-தல்

உத்திக்கட்டு-தல் uddikkaṭṭudal, பெ. (n.)

   5 செ.குன்றாவி, (v.t.);

   விளையாட்டிற் கன்னை (கட்சி); பிரித்தற்கு ஈரிரு வராய்ச் சேர்தல்; to divide a team in doubles for play (வே.க.44);.

     [உத்தி + கட்டு.]

உத்திசை

 உத்திசை utticaipa, பெ. (n.)

   அப்பக்கம்.(அப்புறமான இடம்);; the other side,

     “உத்திசை விஞ்சை மாதர் உறையுளை முறையின் உற்றான்”

     [உ+திசை]

உத்திட்டன்

உத்திட்டன் uttiṭṭaṉ, பெ. (n.)

   நோற்றுவினை களைவோன்; a man who practices religious austerities to discard

     “karma”.

     “மனை துறந்து மாதவர் தாள் அடைந்துநோற்று வினை யறுப்பான் உத்திட்டன்ஆம்” (அருங்.172);.

     [உத்து-உத்திட்டன்]

உத்திட்டம்

உத்திட்டம் uttiṭṭam, பெ. (n.)

   வண்ணக் குழிப்புகளின் (சந்தங்களின்); அறுவகைத் தெளிவுகளுள் ஒன்று; one of six clarity note of musical flow.

     “ஒப்பார் உறழ்ச்சியும் கேடும் உத்திட்டமும் ஒன்று இரண்டு என” (வீரசோ.133);.

     [உத்து+திட்டம்]

உத்திர ரோகம்

 உத்திர ரோகம் uttirarōkam, பெ.(n)

மாரடைப்பு(வின்…);

 angina pectoris breast pang being a disease in the anakatam or rudra-centre one of the dynamic nerve – plexuses in the body.

     [உருத்திரம்+ரோகம்]

உத்திரம்

உத்திரம் uttiram, பெ. (n.)

   1. உத்தரம்4 பார்க்க see utaram4

     ”உத்திர நூல்களெல்லாம்” (விநாயக.75.6);.

   2. உத்தரம்4 பார்க்க;see பtaram4

     “செழுந்து கிருத்திரம் பரப்பி” (பாரத இராச.6);. (செ.அக.);.

ம. உத்திரம்

உள் + திரம் → உத்திரம். உத்தரம் → உத்திரம்.]

உத்திராபதம்

உத்திராபதம் uttirāpatam, பெ. (n.)

வடநாடு:

 North India.

     “உத்தராபதத்தும் ஒப்புமை இல்லாப் பத்திராபதி” (பெருங். 38:289-9);.

     [உத்தர(ம்);+பதம்-உத்தராபதம்→உத்தரபதம்]

உத்து

உத்து1 uddudal, பெ. (n.)

   1. மஞ்சள்; turmeric

   2. மரமஞ்சள்; tree of turmeric (செ.அக.);.

     [உருத்தரம் → உத்தரம் → உத்திரம்.]

 உத்து1 uddudal,    5 செகுன்றாவி (v.t.)

   1. கழித்தல்; to discard, throw away.

     “பொன்னெல்லா முத்தியெறிந்து”

     (கலித்..64);.

   2. முன்தள்ளுதல்; to push (செ.அக.);

     [உந்து → உத்து → உத்து-தல்.]

 உத்து2 uttu, பெ. (n.)

   1. உயரம்; height, elevation

   2. உயர்வு, பெருமை; elegance, excellence.

   3. சிவந்தது, செம்பு; copper.

     [உ → உத்து]

உத்துங்கம்

உத்துங்கம் uttuṅgam, பெ. (n.)

   1. உயர்ச்சி; height eminence, grandeur, loftiness.

     “உஙததுங்க மிக்க வொருவன் றவிசேறி” (கந்தபு. சிங்க 475);.

   2. உயர்ந்தது; that which is superior.

     “உத்துங்க துங்க னுலா” (விக்கிரம. உலா.);. (செ.அக.);.

     [உ + துங்கம். உ + உயர்வு, துங்கம் = வெண்மை, அழகு, சிறப்பு.)

உத்தும்பரம்

 உத்தும்பரம் uttumbaram, பெ. (n.)

   செம்பு; copper, (சா.அக.);.

     [உது → உத்து → உத்தும்பரம்.]

உத்துரளித்தல்

உத்துரளித்தல் utturaḷittal,    செ.குன்றா.வி (v.t.) நீரில் குழைக்காமல் வரியின்றிப் பூசுதல்; to smear sacred ash etc, without mixing water,

     “திருநீற்றை உத்தூளித்து ஒளிமிளிரும் வெண்மையாலோ” (வாச.126);.

     [உத்தம்+தூரளி]

உந்த

உந்த unda,    கு.பெ.எ. (adi) உங்கேயுள்ள; which is near the person addressed or which is intermediate.

     “உந்தவேல்” (பாரத. பதினான். 213.);. (செ.அக.);.

     [உ → உந்து → உந்த.]

உந்தரம்

உந்தரம் undaram, பெ. (n.)

   1. வழி; way (W.);.

   2. எலி; rat (செ.அக.);.

     [உந்து → உந்தரம்.]

உந்தல்

உந்தல்1 undal, பெ. (n.)

   1. தள்ளு, உந்து; push.

   2. தள்ளியிருக்கின்ற பாகம்; the projecting part

   3. முளைத்து நிற்கின்ற நிலை; jutting out, projection. (சேரநா.);.

   ம. உந்தல்;கோத உந்து (தள்ளு); துட உந்து.

     [உந்து → உந்தல்.]

 உந்தல்2 undal, பெ. (n.)

   1. உயர்ச்சி; height

   2. யாழ் நரம்பு தடவுகை; thrumming to test the strings of the ya.

     “நரம்பு முழுதினையுந் தடவித் தள்ள லுந்தல்” (கூர்மபு. கண்ணன் மணம் 146);. (செ.அக.);

   3. ஏறுகை (ஆ.அக.); climbing.

     [உ → உந்து → உந்தல்.]

உந்தி

உந்தி1 undi, பெ. (n.)

   1. பேசும்போது வாய் வழிக் காற்றைத் தள்ளுவதாகக் கருதப்படும் கொப்பூழின் உட்பக்கம் கொப்பூழ் naval.

     “உந்தி மேல் நான்முக னைப் படைத்தான்” (திவ். பெரியதி, 5.4.1.);.

   2. வயிறு; belly, stomach.

     “உந்தியுறுபசிக்கு” (திருவாலவா. பதி.1.);.

   3. நீர்ச்சுழி (திவா.);; whirlpool.

   4. ஆறு; river.

     “அரும்புறவுந்தி மடந்தையர்” (இரகு திக்குவி. 267.);.

   5. யாற்றிடைக்குறை; small island in a river.”குணகடற்கிவர்தருங் குரூஉப்புன லுந்தி” (மதுரைக் 245);.

   5. நீர் (பிங்.);; water.

   7. கடல்; Sea.

     “உந்தியுலகத்தில்” (சி.சி. பர. உலோகா. 1);.

   8. தேரின் உருளை car wheel

     “உந்தி கனாலுடை யுந்திரதம்” (பாரத பதின் மூன். 12);.

   9. தேர்த்தட்டு (பிங்.);; middle lost of a car.

   10. மகளிர் விளையாட்டுவகை (பிங்.);; a game of Indian women somewhat akin to the English game of battle dore and shuttlecock.

   11. யாழ்ப்பத்தல் (தொல் சொல். 399, உரை);; body of a yal.

   12. நடு (அக.நி.);. middle space.

   13. உயர்ச்சி (அக:நி.);; height, eminence.

ம. உந்தி,

     [உ- உந்து → உந்தி]

 உந்தி2 undi, பெ. (n.)

   1. துணை; companion 2.

   பறப்பவை; birds (செ.அக.);.

     [உ → உந்து → உந்தி]

உந்திச்சுழி

உந்திச்சுழி undiccuḻi, பெ. (n.)

   1. கொப்பூழ்ச்சுழி:curve or involution of the naval

   2. நீர்ச்சுழி; whirlpool. (செ.அக.);.

     [உந்தி + சுழி]

உந்திடம்

உந்திடம் undiḍam, பெ. (n.)

   உவ்விடம்; yonder place. where the person addressed is

     “பொய்குன்ற வேதிய ரோதிடு” முந்திடம்” (திருக்கோ, 223.);. (செ.அக.);.

     [உ → உந்து → இடம்.]

உந்திநாளம்

உந்திநாளம் undināḷam, பெ. (n.)

   கொப்பூழ்க் கொடி; umbilical cord,

     “உந்தி நாளத்தை மெல்லவரிந்து” (திரு வானைக் கோச்செங், 78.);. (செ.அக.);.

     [உந்து → உந்தி → நாளம்.]

உந்திபற-த்தல்

உந்திபற-த்தல் undibaṟattal,    3 செ.கு.வி. (v.i.)

   குழாங் கூடிய மகளிர் உந்தி விளையாட்டாடுதல்; to play the game of unit, an ancient game, consisting prob. In jumping accompanied by singing.

     “உந்திபறந்தவொளியிழையார்கள்” (திவ். பெரியாழ். 3.9.11.);. (செ.அக.);.

     [உ → உந்து → உந்தி + பறத்தல்.]

உந்திபூத்தோன்

 உந்திபூத்தோன் undipūttōṉ, பெ. (n.)

   திருமால் (திவா.);; Visnu, with a lotus flower sprouting from His navel (செ.அக.);

     [உந்தி + பூத்தோன்.]

உந்தியிலுதித்தோன்

 உந்தியிலுதித்தோன் undiyiludiddōṉ, பெ. (n.)

உந்தியில்

வந்தோன் பார்க்க;see (திவா.); undiyil-vandon (செ.அக.);.

     [உந்தி + இல் + உதித்தோன்.]

உந்தியில்வந்தோன்

 உந்தியில்வந்தோன் undiyilvandōṉ, பெ. (n.)

   நான் முகன் (பிங்.);; Brahma who has sprung from Visnu’s navel lotus. (செ.அக.);,

     [உந்தி + இல் + வந்தோன்.]

உந்து

உந்து1 undudal,    5 செகுன்றாவி (v.t.)

   1. தள்ளுதல்; to push out, thrust forward.

     “உந்திடவெழுந்து மூழ்கி” (ஞானா. 16:17);.

   2. வீசியெறிதல்; to cast away

     “கரிகடேர்த்தொகை…. யள்ளியே யுந்தினன்” (கந்தபு. நகரழி. 23.);.

   3. அம்பு முதலியன விடுதல்; to shoot. as an arrow, as a spear.

     “சரங்கள் வீமனுந்த” (பாரத புட்ப. 104.);, 4, செலுத்துதல்;

 to drive as a chariot

     “தேரினைத் துரோன னுந்தினான்” (பாரத நிரைமீ. 86.);.

   5. அனுப்புதல்; to despatch, send,

     “வயிரவி தன்னை யாங்கே யுந்தினன்” (பிரபோத. 24.45);.

   6. வெளிப்படுத்தல்; to produce, cause to appear.

     “கடல்வண னுந்தியுந்திய நூற்றிதழ்த் தாமரை” (கம்பரா. கிளை. 121.);.

   7. யாழ்நரம்பு தெறித்தல்; to thrum, as a string of the

   8. மரமுதலியன கடை go to tum in a lathe, to rub, as two sticks together till they ignite.

     “உந்தவே காட்டாக்கிற்றோன்ற” (சி.போ. 9.3.2.);

   9. ஆயக்காய் முதலியன உருட்டுதல்; to loss, as dice, கவறுந்தினார். (வின்.);

     [உ → உந்து]

உந்து2-தல்

பாஸ்

   15 செ.கு.வி. (v.i.);

.

   1. எமும்புதல்; to rise, flow, as water, to swell, as the sea

     “உந்து நீர்க்கங்கை” (கூர்மபு. இராமனவ.39);.

   2. பெருகுதல்; to grow, enlarge, as wisdom.

     “உற்துசுடர் ஞானத்தை” (சேதுபு நாட்டு. 3);.

   3. செல்லுதல்; to go, move along.

     “வானுந்து மாமதி (திருக்கோ. 147.);.

   4. தகர்ந்தல்;ம

 crawl, trudge.

     “அன்பர்………..உந்தினர் மார்பினால்” (பெரியபு. திருநா. 358.);.

   5. நீங்குதல்; to cease.

     “உந்தாத வன்போடு” (பதினொ. திருத்தொண். 19);.

   6. பொருந்துதல்; to be united

     “தானந்தோறு முந்திடுங் கரணம்” (சி.சி. 4.34 சிவஞா.);.

   ம. உந்துக, கோத. உத்;   துட உத்;   பட. உந்து;   < unda, GK hunder; Goth lato, lith wandu;  E water;  OHG warar, உத்து → வ. உந்த் (இ.வே.);. (வ.மொ. 93.);.      [உ → உந்து.]  உந்து3 undu, பெ. (n.)    ஏலக்காய்த்தோல்; cardamom husk. (j);, (செ.அக.);. ம. உந்து.      [உ → உம் (மேலிருப்பது); → உந்து.]  உந்து4 undu,    இடை (part). பெயரச்சத்திறுதியாகிய 'உம்.மின் திரிபு; variant of the ending 'உம்' relpple.      "கூப்பெயர்க்குந்து" (தொல்.சொல். 294.);. (செ.அக.);.      [உம் → உந்து.]  உந்து5 undu, பெ. (n.)    ஆவை யழைக்கும் ஒலிக் குறிப்பு; onom term used in calling cows (j);. (செ.அக.);.      [உம் → ஒலிக்குறிப்பு. உம் → உந்து.]

உந்துரம்

 உந்துரம் unduram, பெ. (n.)

எலி mouse, (ஆ.அக.);.

     [உந்து → உந்துரம், உந்துரல் = குடைதல்.]

உந்துரு

உந்துரு unduru, பெ. (n.)

   1. பெருச்சாளி (பிங்.);; bandicoot.

   2. ஏலி; mouse. (அ.ஆக.);;

 mouse (செ.அக.);.

     [உந்து → உந்துரம் உந்துரல் = குடைதல்.]

உந்துவண்டி

 உந்துவண்டி unduvaṇṭi, பெ. (n.)

உந்திக் கொண்டு போவதுபோல் அமைந்த வண்டி (சேரநா.);. go-cart.

ம. உந்துவண்டி

     [உந்து + வண்டி]

உந்தூழ்

உந்தூழ் undūḻ, பெ. (n.)

   பெருமூங்கில்; large bamboo.

     “உரிதுநா றவிழ்தொத் துந்துழ் கூவிளம்” (குறிஞ்சிப், 65.);. (செ.அக.);.

     [உ → உந்து → உந்துல் → உந்தூழ். உந்துதல் = பருத்தல்.]

உந்தெழுச்சி

 உந்தெழுச்சி uridunāṟaviḻdoddunduḻāviḷamguṟiñjipceagauunduundulundūḻundudalparuddalundeḻucci, பெ. (n.)

கண்ணில் பருத்திக் காயைப்போல் கெட்ட தசை வளரும் கண்ணோய் வகையுளொன்று eye disease, (ஆ.அக.);.

     [உந்து + எழுச்சி]

உந்தை

உந்தை undai, பெ. (n.)

   உன் அப்பன்; your father.

     ”தூதர் வந்தன. ருந்தை சொல்லோடு” (கம்பரா. பள்ளி, 2.);.

     [உன் + தந்தை + உந்தை.]

உனகன்

உனகன் uṉagaṉ, பெ. (n.)

   இழிந்தவன்; low mean person.

     “உனகனா யரக்கனோடியெடுத்தலும்” (தேவா, 1198.1);.

     [உலகன் → உனகன்.]

உனண

உனண2 uṉaṇa, பெ. (n.)

   மெலிவு (யாழ்.அக.);; emaciation, weakening. [உள்_நை_உணை.]

உனத்தகு

 உனத்தகு uṉattagu, பெ. (n.)

   குறிஞ்சா; Indian ipecacuanha.

உனத்திதம்போக்கி

 உனத்திதம்போக்கி uṉaddidambōkki, பெ. (n.)

   கற்றுளசி; stone basil.

உனினம்

 உனினம் uṉiṉam, பெ. (n.)

   சிறு பூளை; wooly caper.

உனைவு

 உனைவு uṉaivu, பெ. (n.)

   உணைதல்; fraying.

     [உள் + றநவு – உனைவு.]

உன்

உன்1 uṉ,    4 செ.கு.வி. (v.i.)

   உண்ணு-தல் பார்க்க;Տee uրս-,

 உன்2 uṉ, பெ. (n.)

   நீ என்பதன் வேற்றுமையடி; obliqu form of the second pers pron,

     ‘thee’.

     [நுன் → உன்.]

 உன்3 uṉ, பெ. (n.)

   உயர்வு மேன்மை; greatness gloriousness.

     [உ → உல் → உன்]

 உன்4 uṉ, பெ. (n.)

   நெருக்கம்; closeness

     [உல் → உன்.]

உன்னததானம்

 உன்னததானம் uṉṉadadāṉam, பெ. (n.)

   உயர்விடம், மேலிடம்; elevated place, high position.

     [Skt. un-nata + stanam → த. உன்னததானம்.]

உன்னதம்

உன்னதம் uṉṉadam, பெ. (n.)

   1. உயர்ச்சி (திவா.);; height, elevation loftiness.

   2. மேன்மை; eminence.

     [Skt. un-nata → த. உன்னதம்.]

உன்னதை

 உன்னதை uṉṉadai, பெ. (n.)

   மும்முரம்; a periodical increase in the severity of any symptoms or of violence in a disease.

உன்னநிலை

உன்னநிலை uṉṉanilai, பெ. (n.)

   1. போர் தொடங்கு முன் உன்னமரத்தால் நிமித்தமறியும் புறத்துறை (தொல். பொருள். 60. உரை);;   2 உன்னம் பார்க்க;see unnam.

உன்னநிலையேயுணருங் காலை (சிலப். 3,18, உரை);. (செ.அக.);.

உன்னமாகதம்

 உன்னமாகதம் uṉṉamākadam, பெ. (n.)

   புல்லாமணக்கு; creeping amanak.

உன்னம்

உன்னம் uṉṉam, பெ..(n.)

படகு

 boat

     [P]

 உன்னம்6 uṉṉam, பெ. (n.)

   1. கருத்து (திவா.);; though object, intention.

   2. ஊழ்கம்; contemplation.

     “அகத்தியான் பள்ளியை யுன்னஞ் செய்த” (தேவா. 847.2);

   3. மனம் (திவா.);; mind.

   4. குறியாகக் கொள்ளும் ஒரு மரம் (தொல். பொருள். 60. உரை);.

 a small tree with golden flowers and small leaves which, in ancier times, was invoked for omens before warriors proceede to battle.

   5. கற்பனை; imagination.

   ம. உன்னம்: க. உன்னிசு (நினைத்தல்);;   கோத உன்ப, உனி (குறி.);;   துட உன்ய (நினைத்.);;தெ உங்கிக (பார், ஏற்று கொள்.);: குவி. ஒன்பினை (நினை.); பிரா. கன்னிங் (பார்.);

     [உல் → உன் → உன்னு → உன்னம்]

 உன்னம்2 uṉṉam, பெ. (n.)

   1. ஓதிமப் பறவை வகை (திவா.);:

 kind of swan,

   2. தசை கிழிக்குங் கருவி (வின்.);; pincers for tearing off flesh.

   3. சிறுவிரலும் பெருவிரலும் தம்முட்சுட மற்றை மன்று விரல்களும் விட்டு நிதிரும் இணையா வினைக்கை (சிலப் 3.18);;     [உ → உல் → உன் → உன்னம்.]

உன்னயனம்

உன்னயனம் uṉṉayaṉam, பெ. (n.)

   1. நீர் வாங்கல்; drawing out a fluid.

   2. நீள நினைத்தல் (ஆலோசித்தல்);; thoughtful consideration.

   3. ஊழ்கம் (தியானம்);; that form of intelligent and exercised attention in which the mind is elevated and the emotions are aroused.

உன்னயம்

உன்னயம் uṉṉayam, பெ. (n.)

   1. குதிரையிலக்கண நூல்களு ளொன்று; a treatise on hippology.

     “உன்னய முதலாம் புரவிநூல்’ (பாரத நாடுக 21);. (செ.அக.);.

   2. உயர்த்துதல்; raising lifting up.

     [உன்னம் → உன்னயம்]

 உன்னயம் uṉṉayam, பெ. (n.)

   1. பரிநூற் கலை (அசுவசாத்திரம்);களுளொன்று; a treatise on the doctrine of diseases of horses.

   2. உயர்த்துகை; elevating.

உன்னயவங்கம்

 உன்னயவங்கம் uṉṉayavaṅgam, பெ. (n.)

   பீசைப்புல்; a kind of grass (unidentified);.

உன்னலர்

 உன்னலர் uṉṉalar, பெ. (n.)

   பகைவர்; enemies, lit, those

 who are unmindful (செ.அக.);.

     [உன் → உன்னு + அல் + அர்.

     “அல”‘ எம.இ.நி.]

உன்னலாகம்

 உன்னலாகம் uṉṉalākam, பெ. (n.)

   முன் றொடரிக்கு எதிரானதும் மாயக் கலையில் பயன்படுவதுமான பின் தொடரி; a plant (unknown); causing bewilderment.

உன்னல்

உன்னல் uṉṉal, பெ. (n.)

   1. கருதுகை (பிங்.);:

 thinking.

     “உன்னல் காலே ஊன்றல் அரையே முறுக்கல் முக்கால்

விடுத்தல் ஒன்றே” (உரை நூற்பா);.

   2. மனம் (பிங்.);; mind

ம, உன்னல்.

     [உன் → உன்னு → உன்னல்.]

உன்னாகங்கொடி

 உன்னாகங்கொடி uṉṉākaṅgoḍi, பெ. (n.)

   பெரு முசுட்டை; many-flowered bindweed. (L);. (செ.அக.);

     [உள் + நாகம் + கொடி]

உன்னாகன்கொடி

 உன்னாகன்கொடி uṉṉākaṉkoḍi, பெ. (n.)

   பெருமுசுட்டை; many flowered bind weed.

உன்னாகம்

 உன்னாகம் uṉṉākam, பெ. (n.)

   காடி; sour gruel made from the fermentation or rice.

உன்னாம்

உன்னாம் uṉṉām, பெ. (n.)

   1. (யுனானி); சீமையிலந்தைப் பழம்; foreign jujuba.

   2. அரத்தி (ஆப்பிள்);ப்பழம்; apple.

உன்னாயங்கொடி

உன்னாயங்கொடி uṉṉāyaṅgoḍi, பெ. (n.)

   1. கொடி வகை; elliptic-leaved silverweed.

   2. கொடிவகை; bristly heart-leaved silverweed. (செ.அக.);.

     [உன்னாகன் → உன்னாயன் + கொடி]

 உன்னாயங்கொடி uṉṉāyaṅgoḍi, பெ. (n.)

   ஒரு வகைக் கொடி; a kind of creeper.

த.வ. ஓணான் கொடி.

உன்னாயம்

உன்னாயம் uṉṉāyam, பெ. (n.)

உயர்வு height (ஆ.அக.);.

     [உன்3 நயம் – உன்னயம் → உன்னாயம்.

     ‘நயம்’ சொல்லாக்க ஈறு.]

 உன்னாயம் uṉṉāyam, பெ. (n.)

   1. சோனைப் புல்; guinea grass.

   2. உயர்த்துகை; elevating.

உன்னாலகம்

 உன்னாலகம் uṉṉālagam, பெ. (n.)

   பின் தொடரி; a plant causing bewilderment. It is opposed to முன் றொடரி. (செ.அக.);.

     [உள் + நாலகம்.]

உன்னாலயம்

 உன்னாலயம் uṉṉālayam, பெ. (n.)

   நெஞ்சாங்குலை (இருதயம்);; heart.

உன்னி

உன்னி1 uṉṉittal,    4 செ.கு.வி. (v.i.)

.

   1. எண்ணுதல்; to think, consider.

   2. உயர்தல்; to climb up.

ம. உன்னிக்குக: க. உன்னிசு, உன்னுக.

     [உன் → உன்னி → உன்னித்தல்.]

 உன்னி2 uṉṉi, பெ. (n.)

   ஊழ்குதற்குரிய (தியானித்தற் குரிய.); பொருள்; that which is fit to be meditated

 upon.

     “ஞால முன்னியைக் காண்டு நாங்கூரிலே” (திவ். பெரியதி. 10.1.3);.

     [உள் + இ]

 உன்னி3 uṉṉi, பெ. (n.)

)

   1. குதிரை:horse;     “உன்னிவாய்ப் பென் கறித்திட” (இரகு நகர 51.);.

   2. அழிஞ்சில் (மூ.அ.);; sage-leaved alangium

   3. செடிவகை: Indian lantana (செ.அக.);.

     [உல் → உன் → உன்னு = முன்னோக்கிச்செலுத்துதல், விரைதல், உன்னு → உன்னி]

 உன்னி uṉṉi, பெ. (n.)

   1. ஏறழிஞ்சில்; sage leaved alangium.

   2. உண்ணி எனும் ஒரு வகைக் கொடி; orange flowered lantana.

   3. நீள நினைக்கும் (தியானிக்கும்); பொருள்; object of contemplation.

   4. கருத்தொன்றிப் பார்க்கும் பொருள்;

உன்னிசன்னி

 உன்னிசன்னி uṉṉisaṉṉi, பெ. (n.)

   இடைவிடாது கண்ணூன்றிப் பார்த்தலினாலும் நினைத்தல் அல்லது எண்ணு (யோசித்); தலாலும் ஏற்படும் மயக்கம் அல்லது துன்பம்; fainting or temporary suspension of consciousness due to steadfast looking or by constant thinking.

உன்னிப்பு

உன்னிப்பு uṉṉippu, பெ. (n.)

   1. கவனிப்பு: intenness உன்னிப்பாய்க்கேட்கிறான் (உவ.);.

   2. அறிவுக்கூர்மை; acuteness of mind, discemment.

   3. ஊகிப்பு; guess.

   4. குறப்பு; unerring sign by which a place or person is known (W.);. இருட்டிலும் உன்னிப்பாக எடுத்துவிட்டான் (உ.வ.);,

   5. முயற்சி (வின்.);; exertion, effort

   6. உயரம்; height.

உன்னிப்பான மலை,

   7. கண்ணியம்; dignty,

உன்னிப்பான பேச்சு (வின்.);. (செ.அக.);.

     [உல் → உன்னு → உன்னிப்பு]

உன்னியன்

உன்னியன் uṉṉiyaṉ, பெ. (n.)

   உரிமையன், சொந்தக்காரன்; relative.

     [உன்னியம் → உன்னியன் (வேக 39);.]

உன்னியர்

 உன்னியர் uṉṉiyar, பெ. (n.)

   சுற்றத்தார்; relations (W.);. (செ.அக.);.

     [உல்→ உள் → உன்னியர்.]

இச்சொல் வன்னியர் எனத்திரிந்து உழவருள் ஒரு சாராரைக் குறித்தது. ஒ.நோ. ஒக்கல் → ஒக்கலியர்.]

உன்னு

உன்னு2 uṉṉudal,    12 செ.குன்றாவி (v.t.)

   கருதுதல்;   ஊழ்குதல் (தியானம்);; to think, consider

     “உன்னலே தியானம்” (கந்தபு. திருநகர. 81.);

ம. உன்னுக: க. உன்னிசு கோத உன்ய துட. உன்ய: தெ. உங்கிசு: குவி. ஒன்பினை, பிரா. கன்னிங்க்

     [உல் → உன் → உன்னு → உன்னு-தல்.]

 உன்னு3 uṉṉudal,    11. செ.கு.வி. (v.i.)

   1. எழும்புதல்; to rise.

குதிரை யுன்னிப் பாய்ந்தது (உவ.);.

   2. முன்னங் கால் விரலை யூன்றி நிமிர்தல்; to be on tiptoe

     [உல் → உன் → உன்னு.]

 உன்னு4 uṉṉudal,    1

   2. செ.குன்றாவி (v.t.);

   1, இழுத்தல்; to pull (W);.

   2. ஊஞ்சலுந்துதல்; to propel (L); (செ.அக.);

தெ. உங்கு.

     [உல் → உன் → உன்னு.]

 உன்னு5 uṉṉu, பெ. (n.)

   1. விரைந்தெழும்புகை; spring jump அவன் இரண்டு உன்னிலே வந்துவிடுவான் (இ.வ.);.

   2. இழுக்கை; effort tug, impulse stol இரண்டு உன்னிலே கயிற்றை இழுத்துப் போடும். (இ.வ.);. (செ.அக.);.

     [உல் → உன் → உன்னு.]

 உன்னு6 uṉṉu, பெ. (n.)

சடைச்சி பார்க்க: see sadaiccici (ட);, (செ.அக.);.

     [உல் → உன் → உன்னு.]

 உன்னு uṉṉu, பெ. (n.)

   1. சடைச்சி; common Indian linden.

   2. பலிசை; sweet falsah.

உன்னு-தல்

உன்னு-தல் uṉṉudal,    11 செ.கு.வி. (v.i.)

   . பேசவாய்;   கூட்டுதல்; to be on the point of speaking, as having words on the tongue.

பேசவுன்னுகிறான்.

     [உல் → உன் → உன்னு.]

உன்மச்சனம்

 உன்மச்சனம் uṉmaccaṉam, பெ. (n.)

   காய்ச்சல் உண்டாக்குமோர் பெண் பேய்; a female demon causing fever.

உன்மணி

உன்மணி uṉmaṇi, பெ. (n.)

   உயர்ந்த மணி; superior gen.

     [உல் → உன் + மணி.]

 உன்மணி uṉmaṇi, பெ. (n.)

   ஒகிகளுக்கு மட்டும் புலப்படும் உடம்பிலுள்ளவோர் ஒக இடம் (யோகத்தானம்);; a mystic centre of the body, perceived only by person of high spiritual development.

     “உன்மனிக்கு ளொளிர்பரஞ் சோதியாம்” (தாயு. பொன். 38);.

     [Skt. un-manas → த. உன்மனி.]

உன்மதகம்

உன்மதகம் uṉmadagam, பெ. (n.)

   1. உன்மத்தம் பார்க்க; see unmattam.

   2. செவிப்புறத்தில் வரும் நோய்; a disease of the outer ear.

உன்மதனம்

 உன்மதனம் uṉmadaṉam, பெ. (n.)

   காமவெறி கொள்ளல்; being inflamed with love.

உன்மதம்

உன்மதம் uṉmadam, பெ. (n.)

   1. கழிகாமம்; intense lust, lasciviousness.

     “முன்னமுன் மதத்தான்” (பாரத. குரு. 95);.

   2. அறிவு (புத்தி); மயக்கம்; stupor induced by drugs like ganjah.

   3. கோட்டி (பைத்தியம்);; lunacy.

   4. மயக்கம்; giddiness.

   5. வெறி; intoxication.

உன்மதீதம்

 உன்மதீதம் uṉmatītam, பெ. (n.)

   வெறி (ஆவேசங்); கொள்ளல்; being excited, being wrought up into an ecstatic state.

உன்மத்தகம்

உன்மத்தகம் uṉmattagam, பெ. (n.)

   1. ஊமத்தை; thorn apple.

     “உன்மத்தக மலர் சூடி” (தேவா. 1200, 6);.

   2. கோட்டி (பைத்தியம்);; insanity.

     [Skt. un-mattaka → த. உன்மத்தகம்.]

உன்மத்தகி

உன்மத்தகி uṉmattagi, பெ. (n.)

   1. குறிஞ்சா (மலை);.);; common delight of the woods.

   2. சிறுகுறிஞ்சா (மூ.அ.);; a medicinal climber.

உன்மத்தகோரம்

 உன்மத்தகோரம் uṉmattaāram, பெ. (n.)

   கல் வாழை; stone plantain.

உன்மத்ததொந்தம்

 உன்மத்ததொந்தம் uṉmaddadondam, பெ. (n.)

   கல் வாழை; stone plantain.

உன்மத்தநாகலை

 உன்மத்தநாகலை uṉmattanākalai, பெ. (n.)

   தலைக்கு (பிரம்மரந்திரத்திற்கு); மேல் படர்ந் (வியாபித்); திருக்கும் ஒருவகைக் கலை; a subtle emanation of light found extending over the fontanelle or the crown of the head, aura.

உன்மத்தன்

உன்மத்தன் uṉmattaṉ, பெ. (n.)

   1. வெறியன், பித்தன்; mad man, infatuated person.

     “மனவாசகங்கடந்தானெனைமத் தோன்மத்த னாக்கி” (திருவாச. 34, 3);.

   2. வெறியன்; infatuated or intoxicated person.

     [Skt. un-matta → த. உன்மத்தன்.]

உன்மத்தபிரலாபிதம்

 உன்மத்தபிரலாபிதம் uṉmaddabiralābidam, பெ. (n.)

   கோட்டியின் பிதற்றல்; the chatter of a mad man.

உன்மத்தம்

உன்மத்தம் uṉmattam, பெ. (n.)

   1. வெறி; madness, infatuation, frenzy.

     “உன் மத்த மேற் கொண் டுழிதருமே” (திருவாச. 5, 7);.

   2. மயக்கம் (பிங்.);; stupor, induced by drugs or mantras.

   3. காமன்கணைகளுள் உன்மத்த முண்டாக்குவது (ஆ.நி.);; the arrow of Kama whose dart makes one mad on account of love.

   4. காமனைங் கணைகளிலொன்றன் செயல் (பிங்.);; action of one of the five arrows of Kama.

   5. ஊமத்தை (திவா.);; datura or thorn apple.

     [Skt. un-matta → த. உன்மத்தம்.]

உன்மத்தரோகநாசினி

 உன்மத்தரோகநாசினி uṉmattarōkanāciṉi, பெ. (n.)

   மனக்கோளாற்றினையும், மனக்குழப்பத்தினையும் நீக்கும் தன்மை பொருந்திய நறுந்தக்காளி; an unknown plant probably of the physalis genus capable of curing mental disturbances and disorders.

உன்மத்தரோகம்

 உன்மத்தரோகம் uṉmattarōkam, பெ. (n.)

   வளி முதலா யெண்ணிய மூன்றும் (வாத பித்த சிலேட்டுமம்); தத்தம் வழியின்று தப்பி நடக்கும் போது உடலுக்குச் செல்லும் நரம்புகள் தாக்கப்பட்டு, மன வேறுபாட்டை (விசற்பத்தை); யுண்டுபண்ணுமோர் வகை மனநலக்கோளாறு (சித்தப் பிரமை);; a disease in which the deranged bodily humours transversing the upper part of the body, affect the up coursing nerves and produce thereby a distracted state of the mind, insanity.

உன்மத்தவாதம்

 உன்மத்தவாதம் uṉmattavātam, பெ. (n.)

   ஊதை (வாத);ச் சூலை அல்லது ஊதை (வாத);ப் பிடிப்பினால் ஏற்படும் கோட்டி (பைத்தியம்);; insanity due to gout or rheumatism, arthritic insanity.

உன்மத்தி

 உன்மத்தி uṉmatti, பெ. (n.)

   குறிஞ்சா; species of scammony swallow wort.

உன்மத்து

 உன்மத்து uṉmattu, பெ. (n.)

   ஊமத்தை; datura.

     [Skt. un-matta → த. உன்மத்து.]

உன்மத்துவம்

உன்மத்துவம் uṉmattuvam, பெ. (n.)

   1. மனநலக்கோளாறு (பைத்தியம்);; insanity.

   2. குடி மயக்கம் (போதை);; intoxication.

உன்மத்தை

 உன்மத்தை uṉmattai, பெ. (n.)

   ஊமத்தை (மலை.);; datura.

உன்மந்தம்

 உன்மந்தம் uṉmandam, பெ. (n.)

   செவ்விண்டுக் கொடி; a red variety of creeper of the species of mimosa.

உன்மனை

 உன்மனை uṉmaṉai, பெ. (n.)

   இறங்கு வகை (பிராசாத); வியல்பி னொன்று;

உன்மாதனம்

 உன்மாதனம் uṉmātaṉam, பெ. (n.)

   பித்து பிடிக்கச் செய்தல்; causing lunacy as in sorcery.

உன்மாதபித்தம்

 உன்மாதபித்தம் uṉmātabittam, பெ. (n.)

   பித்தம் மிகுதியினால் அறிவிழந்து, வெட்கம் விட்டுத் தூக்கமின்றிப் பித்தனைப் போன்ற குணங்களை யுண்டாக்குமோர் வகை நோய்; due to the excessive secretion of bile in the system any uneasiness or indisposition (malaise); marked by loss of Sense and shame, sleeplessness and expansive emotional state like that of a lunatic.

     [உன்மாதம் + பித்தம்.]

     [Skt. un-mada → த. உன்மாதம். பித்து → பித்தம்.]

உன்மாதம்

உன்மாதம்1 uṉmātam, பெ. (n.)

   1. வெறி; madness, mania, intoxication.

   2. மயக்கம்; giddiness.

   3. மனநலக்கோளாறு (சித்தப்பிரமை);; mentals torpor.

     [Skt. un-mada → த. உன்மாதம்.]

 உன்மாதம்2 uṉmātam, பெ. (n.)

உன்மத்தரோகம் பார்க்க; see unmatta-rogam.

உன்மாதரோகம்

 உன்மாதரோகம் uṉmātarōkam, பெ. (n.)

உன்மத்தரோகம் பார்க்க; see unmatta-rogam.

உன்மாதவானு

 உன்மாதவானு uṉmātavāṉu, பெ. (n.)

   மன நலக்கோளாறு (சித்தப்பிரமை); கொண்டவன்; one who is affected with insanity, lunatic.

உன்மானம்

உன்மானம் uṉmāṉam, பெ. (n.)

   அளவிடுகை, நிறுக்கை (பி.வி.23, உரை);; weighing, measuring.

     [Skt. un-mana → த. உன்மானம்.]

உன்மீலனல்

 உன்மீலனல் uṉmīlaṉal, பெ. (n.)

   கண் ணிமைத்தல்; winking.

உன்முகன்

 உன்முகன் uṉmugaṉ, பெ. (n.)

   கருத்தொன்றியிருப்பவன்; he that is intent on an object.

     “சூதிலே யுன்முகனா யிருக்கிறான் (வின்.);.

     [உன் + முகன்.]

     [Skt. un → த. உன். முகம் → முகன், ‘ன்’ ஆ.பா.ஈறு.]

உன்முகம்

உன்முகம் uṉmugam, பெ. (n.)

   1. முன் னோக்குகை; raising the face, looking up.

   2. உதவியாயிருக்கை; taking a favourable attitude.

     “சிவசத்தி அவ்வக் காரியங்களில் உன்முகமாதலாகிய சங்கற்பம்” (சி.போ.5 2, 1, சிற்.);.

   3. ஒன்றிற் கருத்தாயிருக்கை (வின்.);; intentness in a pursuit.

     [உன் + முகம்.]

     [Skt. un → த. உன்.]

உன்முகி

 உன்முகி uṉmugi, பெ. (n.)

உன்முகன் (வின்.); பார்க்க; see un-mugan.

     [உன் + முகி.]

     [Skt. un → த. உன். முகம் → முகி. ‘இ’ உடைமை குறித்ததோ ரீறு.]

உன்மேடம்

 உன்மேடம் uṉmēṭam, பெ. (n.)

   கண்ணிமை விரித்தல்; excessive separation of the eye lids, causing the eye to be open very wide.

உன்மேதை

 உன்மேதை uṉmētai, பெ. (n.)

   கொழுப்பு; fat.

உன்மை

 உன்மை uṉmai, பெ. (n.)

   தசை பிடுங்குங் குறடு; an instrument by which pieces of flesh or muscles are pulled out from the body.

உபசாரி

உபசாரி1 ubacāri, பெ. (n.)

உபசாரகன் (வின்.); பார்க்க; see ubasaragan.

     [Skt. upacarin → த. உபசாரி.]

 உபசாரி2 ubacāri, பெ. (n.)

   நோயாளிக்கு உதவி செய்பவள்; a trained nurse who takes care of the sick.

     [உபசாரம் → உபசாரி.]

     ‘இ’ பெ.பா.ஈறு.

உபசாரிகம்

உபசாரிகம் ubacārigam, பெ. (n.)

உபசார வழக்கு பார்க்க; see upasāra valakku.

     “ஆளினையே யருமாசென்பது போவுப சாரிகம்” (வேதா. சூ. 126);.

     [Skt. upacarika → த. உபசாரிகம்.]

உபசாரிகை

 உபசாரிகை ubacārigai, பெ. (n.)

   துணையாளி; a person who attends on a sick patient.

     [Skt. upacarika → உபசாரிகை.]

உபசி

 உபசி ubasi, பெ. (n.)

   கலவிக்காகப் பெண்ணிடம் சேருபவன்; he who lies by the side of or approaches a woman for the purpose of sexual intercourse.

     [Skt. upasi → த. உபசி.]

உபசிகுவை

 உபசிகுவை ubasiguvai, பெ. (n.)

   உண்ணாக்கு நீண்டு வீக்கத்தை உண்டாக்கி உண்ணமுடியாது, இருமல், அருவுதல் முதலிய குணங்களைக் காட்டுமோர் நோய்; a disease marked by cough and irritation of the throat and elongation of the uvula accompanied by swelling, in which the patient could not eat or drink without pain.

     [Skt. upa+jihva → உபசிகுவை.]

உபசிக்குவா

 உபசிக்குவா ubasikkuvā, பெ. (n.)

உபசிகுவை பார்க்க; see Ubasiguvai.

உபசிங்கி

 உபசிங்கி ubasiṅgi, பெ. (n.)

   நாவில் வரும் புண்; an ulcer on the tongue.

உபசிதரோகம்

உபசிதரோகம் ubasidarōkam, பெ. (n.)

   1. வெப்பச் சன்னி; an apoplectic stroke caused by exposure to excessive heat, natural or artificial heat stroke or heat apoplexy.

   2. வெயிலில் திரிவதா லுண்டாகும் இசிவு; a sudden attack of paralysis from injury to the brain-sunstroke.

     [Skt. upacita + roha → த. உபசிதரோகம்.]

உபசித்தி

 உபசித்தி ubasitti, பெ. (n.)

   வெள்ளை நாகணம்; white croton oil plant-croton tigillium.

உபசித்திரை

உபசித்திரை ubasittirai, பெ. (n.)

   1. ஆல்; banyan tree.

   2. எலி; rat.

உபசிரிட்டம்

 உபசிரிட்டம் ubasiriṭṭam, பெ. (n.)

   புணர்ச்சி; coition, sexual intercourse.

உபசீரிடம்

 உபசீரிடம் ubacīriḍam, பெ. (n.)

   தலையி லேற்படும் வளி மிகுதியி (கபாலவாயுவி);னால் சூலி (கருப்பிணி);களின் தலையில் வீக்கத்தையுண்டாக்கி அவ்வாறே வயிற்றி லிருக்கும் குழந்தைக்கும் உண்டாக்குமோர் நோய்; a disease characterised by swelling of the heads of both the child in the womb and the pregnant woman. It is said to arise from the deranged condition of vayu in the region of the head.

த.வ. தலைப்பருமல்.

உபசீவனம்

உபசீவனம் ubacīvaṉam, பெ. (n.)

   1. பிறரைச் சார்ந்த வாழ்க்கை; depending upon others, living, subject to others.

   2. வாழ்வி(சீவனத்தி);ற்குரிய பொருள்; means of livelihood, sustenance.

த.வ. ஒட்டுவாழ்வு.

     [Skt. up-jivana → த. உபசீவனம்.]

உபசீவி-த்தல்

உபசீவி-த்தல் ubacīvittal,    11 செ.குன்றாவி. (v.t.)

   உயிர்வாழப் பிறரை அல்லது பிறிதொன்றைச் சார்ந்திருத்தல்; to depend for one’s life upon a person or thing.

     “இந்த ஔஷத மொன்றையுயே உபஜூவிக்க வமையும்” (ரஹஸ்ய. 1225);.

த.வ. அண்டிவாழ்தல்.

     [Skt. upajiva → த. உபசீவி-,]

உபசுகரம்

உபசுகரம் ubasugaram, பெ. (n.)

   1. கறிமசாலை; condiment.

   2. நறுமணப்

   பொருள்; spices.

   3. சேரும் பொருள்; an ingredient.

உபசுருதி

உபசுருதி ubasurudi, பெ. (n.)

   இரவிற் கேட்கும் வானொலி (ஆகாயவாணி);; kind of supernatural voice heard at night and supposed to foretell the future.

     “போகேலென்ன வுபசுருதி சொல்லிவை யெலாம்.” (அறப். சத. 62);.

     [Skt. upa-sruti → த. உபசுருதி.]

உபசென்மம்

உபசென்மம் ubaseṉmam, பெ. (n.)

   ஒருவன் பிறந்த விண்மீனுக்குப் பத்தொன்பது முதல் இருபத்தேழு முடியவுள்ள விண்மீன்கள் (இலக். வி. பக். 796);; the third group of nine naksatras counted from one’s natal naksatra.

த.வ. ஈற்றொன்பான்.

     [Skt. upajanma → த. உபசென்மம்.]

உபசேசனம்

உபசேசனம் ubacēcaṉam, பெ. (n.)

   இன்றியமையாது வேண்டப்பெறும் உப்பிட்டு ஊற வைத்த ஊறுகறி முதலிய பக்க உணவு வகைகள் (உபகரணங்கள்);; relish, condiment.

     “யாவனொருவனுக்கு ம்ருத்யு உபஸேசன கோடியிலே நிற்கிறான்” (ஈடு. 1, 1 8, வ்யா. பக். 37);.

த.வ. தொடுகறி.

     [Skt. upa-sesana → த. உபசேசனம்.]

உபசேவை

 உபசேவை ubacēvai, பெ. (n.)

   புணர்தல்; having intercourse with.

உபஞ்சரோகம்

 உபஞ்சரோகம் ubañjarōkam, பெ. (n.)

   மேக நோயினாலேற்படும் புண் (விரணம்);; a venereal or syphilitic sore.

த.வ. மேகப்புள்.

உபதஞ்சக்கறை

 உபதஞ்சக்கறை ubadañjakkaṟai, பெ. (n.)

   மேகவொழுக்கினால் ஏற்படும் மாசு; a venereal or syphilitic taint.

     [உபதஞ்சம் + கறை.]

     [Skt. upa-dansa → த. உபதஞ்சம்.]

கரு → கறு → கறை = கருப்பு, மாசு.

உபதஞ்சம்

உபதஞ்சம் ubadañjam, பெ. (n.)

   1. பாலியல் நோய் (மேக கிரந்தி);; lues venereal.

   2. உண்ணும் போது தொட்டுக் கொள்ளும் ஊறுகாய் முதலியன; pickle etc. used as auxiliaries in eating food.

     [Skt. upa-dansa → த. உபதஞ்சம்.]

உபதஞ்சவீறு

 உபதஞ்சவீறு ubadañjavīṟu, பெ. (n.)

   பாலியல் (மேக); நோயின் வீறு; venereal or syphilitic virus.

     [உபதஞ்ச(ம்); + வீறு.]

     [Skt. upa-dansa → த. உபதஞ்சம்.]

உபதமிசம்

உபதமிசம் ubadamisam, பெ. (n.)

   1. பக்க உணவு (உணவின் உபகரணம்);; relish anything eaten with food to whet the appetite.

   2. பால் (மேகவிரண); நோய் (பைஷஜ.);; primary syphilis, chancre.

     [Skt. upa-dams → த. உபதமிசம்.]

உபதம்சம்

 உபதம்சம் ubadamcam, பெ. (n.)

உபதஞ்சம் பார்க்க; see Ubatanjam.

     [Skt upa-dansa → த. உபதம்சம்.]

உபதாகம்

 உபதாகம் ubatākam, பெ. (n.)

   பனை (மூ.அ.);; palmyra-palm.

உபதாது

 உபதாது ubatātu, பெ. (n.)

   பொன் முதலிய ஏழு மாழை (தாது);க்களைப் போலத் தோற்றமுடைய இழிந்த ஏழு மாழை (உலோகங்);கள் (சங்.அக.);; any one of seven minerals, inferior to tatu viz.

சுவர்ணமாட்சிகம், தாரமாட்சிகம், துத்தம், காஞ்சியம், ரீதி, சிந்தூரம், சிலாசத்து.

த.வ. தாழ்மாழை.

     [Skt upa-tatu → த. உபதாது.]

உபதானம்

உபதானம்1 ubatāṉam, பெ. (n.)

உபாதானகாரணம் பார்க்க; see ubatanakaranam.

     “அவையிதற்கே யுபதானமாகும்” (பாரத.இராச. 4);.

     [உப + தானம்.]

     [Skt. upa → த. உப.]

     [த. தானம் → Skt. dana.]

தரு → தா → தானம்.

 உபதானம்2 ubatāṉam, பெ. (n.)

   1. தலையணை (திவா.);; pillow, cushion.

   2. அடிக்கல் (அஸ்திவாரம்); (வின்.);; foundation.

     [Skt. upa-dhåna → த. உபதானம்.]

 உபதானம்3 ubatāṉam, பெ. (n.)

   நோன்பு (விரதம்); (நாநார்த்த.);; religious sensation.

     [Skt. upadhåna → த. உபதானம்.]

 உபதானம்4 ubatāṉam, பெ. (n.)

   நஞ்சு (விடம்);; poison.

உபதாபனநாடி

 உபதாபனநாடி ubatābaṉanāṭi, பெ. (n.)

   மூச்சுக் குழலின் நாடி (தமரக சாகை நாடி);; the bronchial artery.

     [உபதானம் + நாடி.]

     [Skt. upa-dhana → த. உபதானம்.]

நாள் → நாளி → நாழி → நாடி.

உபதாபனம்

 உபதாபனம் ubatābaṉam, பெ. (n.)

உபதாபம் பார்க்க; see uba-dabam.

உபதாபம்

 உபதாபம் ubatābam, பெ. (n.)

   அழற்சி, வெப்பவுணர்வு (நாநார்த்த.);; burning sensation.

     [Skt upatapa → த. உபதாபம்.]

உபதாளம்

உபதாளம் ubatāḷam, பெ. (n.)

   ஐந்து சிறுதாளங்கள் (பரத. தாள. 3);; secondary time-measures, five in number.

ஆதிதாளம், பார்வதிலோசனம், குடுக்கம், சிங்கநந்தம், திரிமாத்திரை.

த.வ. சிறுதாளம்.

     [உப + தாளம்.]

     [Skt. upa → த. உப.]

தாள் → தாளம்.

உபதி

உபதி1 ubadi, பெ. (n.)

   1. சக்கரத்தின் ஆரம் (வின்.);; the part of a wheel between the nave and the circumference.

   2. அச்சம் (வின்.);; fear.

   3. வஞ்சனை (நாநார்த்த.);; deceit.

     [Skt. upadhi → த. உபதி.]

 உபதி2 ubadi, பெ. (n.)

   1. பயன்பாடுள்ளது, அதாவது கை; that which is useful i.e. the hand.

   2. புல்லூரி; a parasitical plant.

உபதிசை

 உபதிசை ubadisai, பெ. (n.)

   கோணத்திசை; intermediate point of the compass.

     [உப + திசை.]

     [Skt. upa → த. உப.]

திக்கு → திசை.

உபதிருட்டை

உபதிருட்டை ubadiruṭṭai, பெ. (n.)

   பூசகன் (புரோகிதன்); (சீவக. 2362 உரை);; priest, as the conductor of ceremonies.

     [Skt. upa-drasta → த. உபதிருட்டை.]

உபதேசகலை

உபதேசகலை ubatēcagalai, பெ. (n.)

   சமய மெய்ப்பொருள் கற்பிக்கும் (மததத்துவ போதனா); முறை (சி.சி.அளவை. 13, சிவாக்.);; art of communicating to a disciple the basic truths of religion.

     [உபதேச + கலை.]

     [Skt. upa-desa → த. உபதேசம்.]

கல் → கலை.

உபதேசகாண்டம்

 உபதேசகாண்டம் ubatēcakāṇṭam, பெ. (n.)

   வடமொழி கந்தபுராணத்தின் ஒரு பகுதியினின்று கோனேரியப்ப முதலியார் மொழிபெயர்த்துப் பாடிய தமிழ்நூல்; a Tamil poetic version by Koneriyappamudaliyar of the last kanga of the Sivasahasyakhanda of the Skandapurana.

     [உபதேச(ம்); + காண்டம்.]

     [Skt. upa-desa → த. உபதேசம்.]

   குள் → குண்டு → கண்டு = கட்டி;   நூற்றிரளை;கண்டு → கண்டம் = பெரிய துண்டு. கண்டம் → காண்டம் = பெரிய நூலின் ஒரு பகுதி, ஓரியல்.

உபதேசப்பஃறொடை

 உபதேசப்பஃறொடை ubatēcabbaḵṟoḍai, பெ. (n.)

   தட்சிணாமூர்த்தி தேசிகரியற்றிய ஒரு பண்டார சாத்திரம்; a saiva – siddhanda treatise by Tatcinamurtti-tesiga, one of pantaracattiram.

     [உபதேசம் + பஃறொடை. பல் + தொடை – பஃறொடை.]

     [Skt. upa-desa → த. உபதேசம்.]

உபதேசம்

உபதேசம் ubatēcam, பெ. (n.)

   1. நல்லுரை, அறிவுரை (ஞானபோதனை); (சி.போ.3, 6, சிற். பக். 76);; spiritual instruction, teaching of doctrine.

   2. மந்திர அறிவுரை (மந்திரோப தேசம்); (விதான. நல்வினை.15);; initiation into the mysteries of religion, by communication of the mantras.

த.வ. அறிவுரை.

     [Skt. upa-desa → த. உபதேசம்.]

உபதேசரத்தினமாலை

உபதேசரத்தினமாலை ubatēcarattiṉamālai, பெ. (n.)

   மணவாளமா முனிகளியற்றிய ஒரு மாலியச் சடங்கு (வைணவ சம்பிரதாய); நூல்; a poetical treatise in Tamil by manavalama-munga 15th C explaining the vaisnava traditions and describing the lives and teachings of the long lineage of Vaisn acaryas.

     [உபதேசம் + ரத்தின + மாலை.]

     [Skt. upa-desa → த. உபதேசம்.]

     [Skt. ratna → த. ரத்தினம்.]

மால் → மாலை,

உபதேசவெண்பா

 உபதேசவெண்பா ubatēcaveṇbā, பெ. (n.)

   அம்பலவாண தேசிகரியற்றிய ஒரு சிவக்கொண்முடிபு நூல் (பண்டார சாத்திரம்);; a šaiva šiddhända treatise by ambalavana-desigar, one of pandara-satiram.

     [உபதேச(ம்); + வெண்பா.]

     [Skt. upadesa → த. உபதேசம்.]

உபதேசி

உபதேசி1 ubatēcittal,    11 செ.குன்றாவி. (v.t.)

   1. கற்பித்தல் (போதித்தல்);; to teach spiritual truths, give religious instruction.

   2. மந்திரத் தொடர்பில் அறிவு கொளுத்தல்; to initiate into the mysteries of ceremonies religion by communicating appropriate mantras.

     “உபதேசித்த சித்தியை” (திருவிளை. அட்டமா. 29);.

   3. மந்தண (இரகசிய);மாக இணங்கக் கூறுதல்; to influence in private, give secret advice.

     “அவள் அவனுக்கு உபதேசித்துவிட்டாள்”.

     [Skt. upadasa → த. உபதேசம் → உபதேசி.]

 உபதேசி2 ubatēci, பெ. (n.)

   1. கற்பிப்போன், அறிவுரைஞன் (போதிப்போன்);; preceptor, teacher.

   2. அறிவுரை (உபதேசிக்கப்); பெறுபவன் (சி.போ. 7, 3, சிற்);; recipient of spiritual instruction.

     [Skt. upadésin → த. உபதேசி.]

உபதேசிகை

 உபதேசிகை ubatēcigai, பெ. (n.)

   பெரு முன்னை; large-leaved fire brand teak.

உபதேசியார்

 உபதேசியார் ubatēciyār, பெ. (n.)

   துணை அறிவுரையாளர், உபபோதகர் (கிறித்.);; catechist.

     [Skt. upa-desika → த. உபதேசியார்.]

     ‘ஆர்’ உயர்வுப் பன்மை ஈறு.

உபதேந்திரியம்

 உபதேந்திரியம் ubatēndiriyam, பெ. (n.)

   ஆண்குறி அல்லது பெண்குறி; the genitals whether of a male or a female.

உபதை

உபதை1 ubadai, பெ. (n.)

   அமைச்சர் முதலியோரைத் தேர்ந்தெடுத்து அமர்த்துவதற்கு அரசர் செய்யுந் தேர்வு (குறள், 501, உரை);; test of the character and honesty of a minister or any officer of state in four ways viz.

அறவுபதை பொருளுபதை, இன்பவுபதை, அச்சவுபதை.

     [Skt. upa-dhā → த. உபதை.]

 உபதை2 ubadai, பெ. (n.)

   காணிக்கை (நாநார்த்த.);; offering.

     [Skt. upadhå → த. உபதை.]

உபத்தநிக்கிரகம்

 உபத்தநிக்கிரகம் ubattaniggiragam, பெ. (n.)

   பாலியல் விருப்பத்தை விலக்கல்; rest – saint of sexual passion or desire.

உபத்தபத்திரம்

 உபத்தபத்திரம் ubattabattiram, பெ. (n.)

   அத்திமரம்; Indian fig-tree.

உபத்தபாதம்

 உபத்தபாதம் ubattabātam, பெ. (n.)

   ஆண்குறிக்குப் போகும் அரத்தக் குழாய்; a particular blood-vessel leading to the generative organ of a male.

த.வ. ஆணநாளி.

உபத்தம்

உபத்தம் ubattam, பெ. (n.)

   1. பிறப்புறுப்பு (சன்மேந்திரம்); (மச்சபு. பிரமமு.11);; generative organ.

   2. பெண்குறி (பிங்.);; pudendum muliebre.

   3. இடுப்பு; the haunch or the hip.

த.வ. அல்குல்.

     [Skt. upa-stha → த. உபத்தம்.]

உபத்தானம்

உபத்தானம் ubattāṉam, பெ. (n.)

   அந்திநேர வழிபாட்டு (சந்தியாவந்தன); முடிவிற் செய்யும் மந்திரப் புகழ் (துதி);; hymns recited at the close of santiya-vandanam.

     “காயத்திரி செவியா வுபத்தானத்தின் றொழில் முடிக்க” (கூர்மபு.நித்தியகன். 6);.

த.வ. அந்திப்போற்றி.

     [Skt. upa-sthana → த. உபத்தானம்.]

உபத்தாயம்

உபத்தாயம் ubattāyam, பெ. (n.)

   1. பொய், பொய்ப்பழி (அபத்தம்);; mistake.

   2. துன்பம்; misery.

   3. வழிவகை; means.

உபத்திதி

உபத்திதி ubaddidi, பெ. (n.)

   1. அறிவு (ஞானம்);; wisdom.

   2. அருகு, அண்மை (சமீபம்);; proximity.

     [Skt. upasthit → த. உபத்திதி.]

உபத்திரம்

 உபத்திரம் ubattiram, பெ. (n.)

   துன்பம் (யாழ்.அக.);; misery.

உபத்திரவசுரம்

 உபத்திரவசுரம் ubattiravasuram, பெ. (n.)

   புண் (விரணம்);, காயம், வலி முதலியவற்றினா லுண்டாகுமோர்வகைக் காய்ச்சல்; a kind of fever arising Wounds, injury and pain – traumatic fever.

த.வ. வலிக்காய்ச்சல்.

     [உபத்திரவம் + சுரம்.]

     [Skt. upa-drava → த. உபத்திரம்.]

சுள் → கர → சுரம்.

உபத்திரவம்

உபத்திரவம் ubattiravam, பெ. (n.)

   1. இடுக்கண்; tyranny, oppression, violence.

     “அரசன் குடிகளை உபத்திரவம் செய்தான்”.

   2. இன்னல், துன்பம்; calamity as famine, affliction, tribulation suffering of mind or body.

     ‘பசியுபத்திரவம், மனோபத்திரவம்’.

   3. நோயின் மூலமாய் ஏற்படும் துன்பங்கள்; the side issues of a disease.

   4. ஒரு நோய் மூலமாக மற்றும் சில நோய்கள் உண்டாதல்; a disease or diseases concurring with another disease, the concurrence of two or more diseases in the same patient complication.

   5. சீழ்ப்புண் (ரணம்);, புண் முதலியவற்றால் படும் கொடுந்துன்பம்; the supervening and distressing symptoms found in cases of wound, ulcer etc. any grieves accident, misfortune calamity, mischief, national distress.

   6. திடீரென உண்டாகும் நிகழ்வு; that which attacks or occurs suddenly.

   7. தொல்லை, தொந்தரவு; worry.

     “பட்டுப்புடவை வேணுமென்று மனைவி உபத்திரவஞ் செய்கிறாள்”.

த.வ. தொந்தரவு.

     [Skt. upa-drava → த. உபத்திரவம்.]

உபநகரோகம்

 உபநகரோகம் ubanagarōgam, பெ. (n.)

   உகிரிடையி (நகச்சந்தி);ல் கட்டியுண்டாகிக் குத்தல், வீக்கம் முதலிய குணங்களைக் காட்டுமோர் புண் (விரண); நோய்; a malignant disease of the nail bed characterised by swelling, shooting pain etc. – whitlow.

     [Skt. upa-nakha + roha → த. உபநகரோகம்.]

உபநட்சத்திரம்

 உபநட்சத்திரம் ubanaṭcattiram, பெ. (n.)

   விண்மீன்கள் (அப்பிரதான நட்சத்திரம்); (சங்.அக.);; secondary star, minor constellation.

     [Skt. upa-naksatra → த. உப நட்சத்திரம்.]

உபநதி

 உபநதி ubanadi, பெ. (n.)

   பேராற்றில் வந்து விழும் ஆறு, சிற்றாறு; tributary stream, affluent.

த.வ. கிளையாறு.

     [Skt. upa-nadi → த. உபநதி.]

உபநயனம்

உபநயனம்1 ubanayaṉam, பெ. (n.)

   1. பூணூல் அணிவிக்கு (தரிக்கு);ஞ் சடங்கு (திருவானைக். கோச். செங். 14);; initiatory ceremony intended to qualify the boys of the three twice-born castes among the Brahmins for commencement of the study of the Védas, accompanied by the investiture With the sacred thread, one of cotavacamskaram.

   2. மூக்குக் கண்ணாடி; spectacles, lit. supplementary eyes or help to vision.

த.வ. பூணூல் பூணல்.

     [Skt. upa-nayana → த. உபநயனம்.]

 உபநயனம்2 ubanayaṉam, பெ. (n.)

   கண்ணில் மருந்திட்டுக் கட்டுகை; bandage to the eyes after applying medicine.

உபநயம்

உபநயம் ubanayam, பெ. (n.)

   அனுமான வுறுப்புகள் ஐந்தனுள் நான்காவது (மணிமே. 29, 62);; statement bringing the invariable concomitant middle term into relation with the minor, the fourth member of an Indian syllogism.

     [Skt. upa-naya → த. உபநயம்.]

உபநயி-த்தல்

உபநயி-த்தல் ubanayittal,    11 செ.கு.வி. (v.i.)

   பூணூற்சடங்கு செய்தல் (விதான மைந்தர். 25);; to perform the ceremony of investing the sacred thread.

     [Skt upanaya → த. உபநயம் → உபநயி-,]

உபநளகம்

 உபநளகம் ubanaḷagam, பெ. (n.)

   முன் கால் சிற்றெலும்பு; the outer and smaller of the two bones of the leg-fibula.

உபநாகக்கட்டு

 உபநாகக்கட்டு ubanākakkaṭṭu, பெ. (n.)

   புண்ணுக்கு மருந்து வைத்துக் கட்டல்; application of poultice to a wound.

     [உபநாக(ம்); + கட்டு.]

     [Skt. upa-näha → த. உபநாகம்.]

கள் → கட்டு.

உபநாகனம்

உபநாகனம் ubanākaṉam, பெ. (n.)

   1. புண்ணுக்குக் கட்டும் மருந்து; poultice or external application to a wound, swelling etc.

   2. மருந்திலைகளை வதக்கி வைத்துக் கட்டுதல்; application of medicinal leaves coated with oil and exposed to fire.

   3. களிகிண்டிக் கட்டுதல்; the act of putting a plaster or poultice upon.

   4. எண்ணெய் (தைலம்); பூசுதல்; anointing medicated oil.

   5. இடித்துக் கட்டும் மருந்து; a bandage of pounded leaves or other medicine applied to a wound.

     [Skt. upa-nahana → த. உபநாகனம்.]

உபநாகம்

உபநாகம்1 ubanākam, பெ. (n.)

   1. யாழின் பீருடை (நாநார்த்த.);; peg to which the strings of a yal are attached.

   2. புண் கட்டிகளில் வைத்துக் கட்டும் மா முதலியன (வின்.);; poultice.

     [Skt. upa-naha → த. உபநாகம்.]

 உபநாகம்2 ubanākam, பெ. (n.)

   1. தாமரையின் அடித்தண்டு; the stalk of the lotus.

   2. கபத்தினால் வெள் விழிச்சந்தில் தாமரைக் கொடியின் அடித் தண்டைப் போல் கட்டியை யெழுப்பி, வீக்கத்தையும், வலியையு முண்டாக்குமோர் வகைக் கண்ணோய்; a painful cyst of considerable size (that of a bit of lotus stalk); occurring at the function of the pupil with the iris attended with swelling, itching sensation, pain etc. inflammation of the ciliary gland-stye.

உபநாயகன்

 உபநாயகன் ubanāyagaṉ, பெ. (n.)

   கள்ளக்காதலன்; paramour, illicit partner of a married woman.

     [Skt. upanayak → த. உபநாயகன்.]

உபநாயம்

உபநாயம்1 ubanāyam, பெ. (n.)

உபநாகம்1 பார்க்க; see ubanagam1.

 உபநாயம்2 ubanāyam, பெ. (n.)

உபநாகம்2 பார்க்க; see ubanägam2.

உபநிகழ்தம்

 உபநிகழ்தம் ubanigaḻtam, பெ. (n.)

   ஓங்காரம்; the mystic name of the deity prefacing and concluding all the prayers of the daily worshipper.

உபநிடகிறமணம்

 உபநிடகிறமணம் ubaniḍagiṟamaṇam, பெ. (n.)

   வெளிக்கிளம்பல், வெளியே அடி எடுத்து வைத்தல்; the act of going or stepping out.

     [Skt. upa-nis-krámana → த. உபநிட கிறமணம்.]

உபநிடதம்

உபநிடதம்1 ubaniḍadam, பெ. (n.)

   1. மறையின் (வேதத்தின்); ஒதி (ஞான); காண்டம் (பிங்.);; upanisad, philosophical writing forming part of the vedas.

   2. மறை (வேதம்);; veda.

     “உபநிடத மொரு நான்கும்” (கலிங். கடவுள். 5);.

     [Skt. upa-nisad → த. உபநிடதம்.]

 உபநிடதம்2 ubaniḍadam, பெ. (n.)

   1. அறம் (தருமம்); (நாநார்த்த);; virtue.

   2. கமுக்கம் (இரகசியம்);; secret.

     [Skt. upa-nisad → த. உபநிடதம்.]

உபநிட்கிராமணம்

உபநிட்கிராமணம் ubaniṭkirāmaṇam, பெ. (n.)

   பிறந்த நான்கா மாதத்தில் பிள்ளையை முதன்முதல் வெளிக்கொணருஞ் சடங்கு (திருவானைக். கோச்செங். 39);; ceremony of taking a child out for the first time in the fourth month after its birth.

     [Skt. upa-nis-kråmana → த. உபநிட் கிராமணம்.]

உபநிதி

 உபநிதி ubanidi, பெ. (n.)

   தக்கவனிடத்தில் முத்திரையிட்டு அடைக்கலமாக வைக்கும் பொருள்;     [Skt. upa-ni-dhi → த. உபநிதி.]

உபநிபாதம்

 உபநிபாதம் ubanibātam, பெ. (n.)

   திடீரென ஏற்படும் நோய்; a sudden and unexpected attack of a disease.

உபநியசி-த்தல்

உபநியசி-த்தல் ubaniyasittal,    11 செ.கு.வி (v.i.)

   விரிவுரையாற்றுதல்; to deliver lectures, to elaborate.

     “தம்முடைய மதத்தை உபநியசித்து நின்றார் கீழ்” (ஈடு. 1, 1, 9, வ்யா. பக். 62);.

     [Skt. upa-nyasa → த. உபநியாச → உபநியாசி-,]

உபநியாசம்

 உபநியாசம் ubaniyācam, பெ. (n.)

   பரப்புரை, பேருரை (பிரசங்கம்);; address, speech, lecture.

த.வ. பேருரை.

     [Skt. upa-nyasa → த. உபநியாசம்.]

உபநேத்திரம்

 உபநேத்திரம் ubanēttiram, பெ. (n.)

உபநயனம் பார்க்க; see ubanayanam.

உபந்நியாசம்

 உபந்நியாசம் ubanniyācam, பெ. (n.)

   சொற்பொழிவு; discourse.

     [Skt. upa-nyåsa → த. உபந்நியாசம்.]

 Upa-nyasa என்னும் சொல்லிற்கு வடமொழியில் கீழேவைத்தல், பக்கத்தில் வைத்தல், முன்னுக்குக் கொண்டு வருதல், பேசுதல், குறிப்பிடுதல், உரை தூண்டுரை. குறிப்பு மேற்கோள் போன்ற பொருள்கள் உள்ளன. (மா.வி.);. தமிழில் இச்சொற்கு சொற்பொழிவு குறிப்பாக பேருரை என்னும் பொருள் மட்டும் உண்டு.

உபனோரஞ்சகன்

 உபனோரஞ்சகன் ubaṉōrañjagaṉ, பெ. (n.)

   எலுமிச்சை; lime-citrus medicalima.

உபபட்சம்

உபபட்சம் ubabaṭcam, பெ. (n.)

   1. அக்குள்; arm-pit.

   2. அக்குள் மயிர்; hair in the armpit.

உபபதி

 உபபதி ubabadi, பெ. (n.)

   கள்ளக்காதலன் (சோரநாயகன்);; illicit partner of a married woman, paramour.

     [Skt. upa-pati → த. உபபதி.]

உபபத்தி

உபபத்தி ubabatti, பெ. (n.)

   1. நயம், நயன்மை (நியாயம்);; reason, justification (Brah.);.

     “அப்படிச் சொல்வதற்கு உபபத்தி என்ன?”.

   2. சொத்து; property, wealth (Brah.);.

     “அவன் உபபத்தியுள்ளவன்”.

   3. சொல்லும் செய்தியை உறுதிபடுத்தும் பொருட்டுக் காட்டும் உத்தி; argument advanced for the establishment of proposition, proof.

     “சச்சிதானந்த முப பத்தியகமுஞ் சீவனுமாய்” (பிரபோத. 22, 17);.

     [Skt. upa-patti → த. உபபத்தி.]

உபபத்திரம்

 உபபத்திரம் ubabattiram, பெ. (n.)

   இலைக்காம்பருகேயுள்ள சிறிய இலை; a small leaf like appendage at the base of the pedicle, a stipule.

த.வ. தளிர்.

     [Skt. upa-pattra → த. உபபத்திரம்.]

உபபரிசனை

உபபரிசனை ubabarisaṉai, பெ. (n.)

   1. புணர்ச்சி; coition.

   2. உண்டாயிருத்தல்; impregnation.

உபபலம்

 உபபலம் ubabalam, பெ. (n.)

   துணை வலி; auxiliary, allied army, (Brah.);.

     [Skt. upa-bala → த. உபபலம்.]

உபபாதகம்

உபபாதகம் ubabātagam, பெ. (n.)

   சிறுகுற்றம் (பாதகம்); (சிவதரு. பாவ. 34);; sin less heinous than panjama-padagam.

     [Skt. upa-pataka →த. உபபாதகம்.]

உபபுராணம்

உபபுராணம் ubaburāṇam, பெ. (n.)

   தொன்ம (மகாபுராண);ங்கட்கு அடுத்து மதிக்கப்பெறுஞ் சிறுதொன்மங்கள் (புராணங்கள்);;ளecondary or minor puranas which are 18 in number.

சனற்குமாரம், நாரசிங்கம், நந்தி, துருவாசம், சிவதருமம், நாரதீயம், காபிலம், மானவம், ஒளசனம், வரசிட்டலைங்கம், வாருணம், காளிகம், சாம்பேசம், அங்கிரம், செளரம், பராசரம், மாரீசம், பார்க்கவம் (கூர்மபு. இந்திரத். 10);.

த.வ. துணைத்தொன்மம்.

     [Skt. upapurana → த. உபபுராணம்.]

உபபேறு

 உபபேறு ubabēṟu, பெ. (n.)

   துணைப்பயன் (உபபலன்);; something obtained in addition to the principal material, as in a process of manufacturing, a secondary product obtained during the manufacture of a primary product – by product.

     [உப + பேறு.]

     [Skt. ира → த. உப.]

பெறு → பேறு.

உபப்பிரமா

 உபப்பிரமா ubabbiramā, பெ. (n.)

   மக்கள் தலைவர் பதின்மருள் (தசப் பிரசாபதியுள்); ஒருவர்; any one of tasa-p-pirasapadi.

     [Skt. upa-brahmä → த. உபப்பிரமா.]

உபப்பிரும்மணம்

 உபப்பிரும்மணம் ubabbirummaṇam, பெ. (n.)

   மறை (வேத);ப்பொருளை விளக்கும் மறவனப்பு (இதிகாசம்);, தொன்மம் (புராணம்); போன்றன; itihasas, puranas, etc. which dilate on the meaning of the Vedas.

     [Skt. upa-brmhana → த. உபப்பிரும்மணம்.]

உபப்பிலவம்

உபப்பிலவம் ubabbilavam, பெ. (n.)

   கருங்கோள் (இராகு);; rahu, the ascending node.

   2. கெடுகுறி (உற்பாதம்);; evil portent.

     [Skt. upa-plava → த. உபப்பிலவம்.]

உபமன்னியு

உபமன்னியு ubamaṉṉiyu, பெ. (n.)

   ஒரு சிவனிய (சைவ); முனிவர்; a Saivite rsi, the reputed author of the upamanyu-bhakta-vilasa, a Skt. work relating the stories of the 63 Saiva saints.

     [Skt. upamanyu → த. உபமன்னியு.]

உபமருந்து

 உபமருந்து ubamarundu, பெ. (n.)

   துணையாகக் கொள்ளும் மருந்து; an ingredient in a prescription to help the main ingredient-adjuvant.

     [உப + மருந்து.]

     [Skt. upa → த. உப.]

மரு → மருந்து.

உபமலம்

உபமலம் ubamalam, பெ. (n.)

   1. உள்ளிருக்கும் மாசு; internal impurities or filth such as phelgm, sweat etc.

   2. மனமாசு (பிங்.);; mental impurity, inward depravity.

     [உப + மலம்.]

     [Skt. upa → த. உப.]

மல் → மலம் = அழுக்கு, பவ்வீ.

உபமானம்

உபமானம் ubamāṉam, பெ. (n.)

   1. உவமை; standard of comparison, recognition of likeness, resemblance.

   2. ஓர் ஒப்புமை (பிரமாணம்); (அணியி.1);;     [த. உவமானம் → Skt. upa-mana → த. உபமானம்.]

உபமானரகிதம்

 உபமானரகிதம் ubamāṉaragidam, பெ. (n.)

   உவமையற்றது; that which is matchless, incomparable.

     [Skt. upamåna-rahita → த. உபமானரகிதம்.]

உபமிதி

உபமிதி ubamidi, பெ. (n.)

   ஒப்புமை வகையால் (பிரமாணத்தினால்); வரும் அறிவு (தர்க்கபா. 30);; knowledge of things derived from апаlogy.

     [Skt. upa-miti → த. உபமிதி.]

உபமேயம்

உபமேயம் ubamēyam, பெ. (n.)

   உவமிக்கப்பட்ட பொருள் (அணியி. 1);; that which is compared, subject of comparison.

     [த. உவமேயம் → Skt. upameya → த. உபமேயம்.]

உபமேயோபமாலங்காரம்

உபமேயோபமாலங்காரம் ubamēyōbamālaṅgāram, பெ. (n.)

   உவமானம் (உபமான); உவமேயம் (உபமேயம்); ஒன்றற்கு ஒன்று பொருள் உவமேய உவமானங்களாக வரும் அணி (அணியி. 3.);; a figure of speech in which the upa-manam, and upa-meyam are compared to each other, reciprocal comparison, as of the moon to a beautiful face.

உபமை

 உபமை ubamai, பெ. (n.)

   ஒப்புமை; comparison, similarity.

     [த. உவமை → Skt. upa-má → த. உபமை.]

உபம்

உபம் ubam, பெ. (n.)

   இரண்டு; two.

     “முன்னான்கி னவிலந்த மொருகழஞ்சா மற்றையும்” (தைலவ. தைல. 109);.

     [Skt. ubha → த. உபம்.]

உபயகர்ப்போட்டம்

 உபயகர்ப்போட்டம் ubayagarbbōṭṭam, பெ. (n.)

   சிலை (மார்கழி); மாதத்துக் கடைசி நாளிற் சூற்கொண்டு மழை பெய்யாது நிற்கும் மேகம்; double conception of rain by the clouds, supposed to take place if clouds appear without rain on the last day of the month of markali.

த.வ. காரோட்டம்.

     [உபய + கர்ப்ப + ஓட்டம்.]

     [Skt. ubhaya → த. உபய.]

     [த. குரு → கரு → கருப்பம் → Skt. garbha.]

ஒடு → ஒட்டு → ஓட்டம்.

உபயகவி

உபயகவி ubayagavi, பெ. (n.)

   இருவேறு மொழிகளில் பா வியற்றும் பாவலன்; poet who has attainments enabling him to compose verses with equal facility in two languages, as for example, in Sanskrit and Tamil.

     “உபயகவிப் புலவன்” (திவா. 1. கட்டுரை.);.

த.வ. இருமொழிப் பாவலன்.

     [Skt. ubhayakavi → த. உபயகவி.]

உபயகுலம்

உபயகுலம் ubayagulam, பெ. (n.)

   தாய் தந்தை வழி மரபுகள்; the two ancestral lines, paternal and maternal.

     “உபயகுல தீபதுங்க” (திருப்பு. 128);.

த.வ. ஈன்றோர்வழி.

     [உபய(ம்); + குலம்.]

     [Skt. ubha → த. உபய.]

குல் → குலம்.

உபயகுலோத்தமன்

உபயகுலோத்தமன் ubayagulōttamaṉ, பெ. (n.)

   தாய்வழி, தந்தை வழிகளால் உயர்ந்தவன்; one of noble extraction on this paternal as well as maternal sides.

     “உபயகுலோத்தமன பயன்” (கலிங். கடவுள். 2);.

த.வ. ஈன்றோர் வழி மேலான்.

     [உபய(ம்); + குலம் + உத்தமன்.]

     [Skt. ubhaya → த. உபயம்.]

உத்து = உயர்வு. உத்து → உத்தம் → உத்தமன்.

உபயகோமுகி

உபயகோமுகி1 ubayaāmugi, பெ. (n.)

   ஈனும் போது கன்றின்முகம் வெளியே உதயமாகியுள்ள மாசு; cow in the act of calving, as having two faces, or heads towards both ways, considered as a fit object of gift for the acquirement of merit.

     “உபய கோமுகியை யீந்தோர்” (காகிக. தேவர்க. பி. 22);.

     [உபய + கோ + முகி.]

     [Skt. ubhaya → த. உபய.]

முகம் → முகி.

 உபயகோமுகி2 ubayaāmugi, பெ. (n.)

   இரு பக்கம் பார்வையுள்ள உயிரி; two faced living beings or looking both ways as do worms.

த.வ. இருநோக்கி.

உபயசம்மதம்

 உபயசம்மதம் ubayasammadam, பெ. (n.)

   இரு திறத்தார் இசைவு (அனுமதி);; acceptance by both parties in a dispute.

த.வ. இருசார் இசைவு.

     [Skt. ubhaya-sammada → த. உபயசம்மதம்.]

உபயதன்மவிகலம்

உபயதன்மவிகலம் ubayadaṉmavigalam, பெ. (n.)

   திட்டாந்தத்தில் துணியப்படும் பொருள் (சாத்திய); துணைக்காரணம் (சாதன); மிரண்டும் குறைந்த ஏதுப்போலி வகை (மணிமே. 29, 359);;த.வ. இருசார் ஏதுப்போலி.

     [kt. ubhaya + tanma – vikalam → த. உபயதன்மவிகலம்.]

உபயத்திரர்

 உபயத்திரர் ubayattirar, பெ. (n.)

   இருதிறத்தாரும்; both parties.

த.வ. இருசாரார்.

     [Skt. ubhayatra → த. உபயத்திரர்.]

உபயநாகமலர்

 உபயநாகமலர் ubayanākamalar, பெ. (n.)

   இருவகை நாகப்பூ (சிறு நாகப்பூ, பெரு நாகப்பூ);; the two kinds cassiabuds, mesua ferrea.

     [உபய(ம்); + நாகமலர்.]

     [Skt. ubhaya → த. உபய(ம்);.]

உபயநொச்சி

 உபயநொச்சி ubayanocci, பெ. (n.)

   இருவகை நொச்சி (வெண்ணொச்சி, கரு நொச்சி);; the two kinds of vitex-vitex negundo and Vitex trifolia.

த.வ. இருநொச்சி.

     [உபய(ம்); + நொச்சி.]

     [Skt. ubhaya → த. உபய(ம்);.]

உபயந்திரம்

 உபயந்திரம் ubayandiram, பெ. (n.)

   அறுவை மருத்துவஞ் செய்வதற்கான சிறிய அல்லது துணைக் கருவிகள்; minor surgical accessories.

த.வ. அறுவைப்பணிமுட்டு.

உபயபாகம்

 உபயபாகம் ubayabākam, பெ. (n.)

   கக்கல் கழிச்சல் (வாந்திபேதி); உண்டாக்கும் மருந்து; a medicine that acts in two ways as an emetic and as a purgative.

     [உபய(ம்); + பாகம்.]

     [Skt. ubhaya → த. உபயம்.]

பகு → பாகு → பாகம்.

உபயமாதம்

 உபயமாதம் ubayamātam, பெ. (n.)

   இரு ஒரை (உபயராசி); மாதங்கள் (வின்.);; the four months in which the sun is in the common signs, viz.

ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி,

 corresponding to June-July, September-October, December-January and March-April.

த.வ, ஈரோரை மாதம்.

     [உபய + மாதம்.]

     [Skt. ubhaya → த. உபய(ம்);.]

மதி → மாதம்.

உபயமார்க்கம்

உபயமார்க்கம் ubayamārkkam, பெ. (n.)

   வரிவகை; a tax (S.I.I.IV. 99);.

உபயமுகம்

உபயமுகம் ubayamugam, பெ. (n.)

   1. மேல்முகம், கீழ்முகம் முதலிய விருபுறம்; the two directions, namely upward and downward.

   2. தாயின் முகமும் அதற்கு நேர்மாறாக இருக்கும் சூலியின் வயிற்றில் இருக்கும் கருவின் முகமும்; the two-faced said of a pregnant woman because of the embryo which has its face turned in the opposite direction to that of the mother.

   3. இரு பக்கமும் திரும்பக்கூடிய முகம்; having a face that can be turned either way.

த.வ. இருமுகம்.

     [உபய(ம்); + முகம்.]

     [Skt. ubhaya → த. உபய(ம்);.]

     [த. முகம் → Skt. mukha.]

உபயமுகரத்தபித்தம்

 உபயமுகரத்தபித்தம் ubayamugarattabittam, பெ. (n.)

   ஒரே காலத்தில் உடம்பின் ஏழு துளைகளின் வழியாகவும், மேலுங் கீழுமாக குருதியை வெளிப்படுத்துமோர் வகை நோய்; hemorrhage or escape of blood through all the seven opening of the body viz. the eyes, the nose, the ears, the mouth, the anus and the genitals in directions both upwards and downwards.

த.வ. குருதிப்பீச்சு.

     [உபய + முகம் + ரத்த + பித்தம்.]

     [Skt. ubhaya → த. உபயம்.]

     [Skt. rakta → த. ரத்தம்.]

பித்து → பித்தம் → Skt. pitta.

உபயம்

உபயம்1 ubayam, பெ. (n.)

   1. இரண்டு (திவா.);; two.

   2. கோயில் முதலியவற்றிற்குக் கொடுக்கும் அறக்கொடை (தருமம்);; gift to a temple or a monastery (S.l.l. iii, 209);.

த.வ. திருப்பணிக்கொடை.

     [Skt. ubhaya → த. உபயம்.]

 உபயம்2 ubayam, பெ. (n.)

   பழைய வரி (சுவர்ணாதாய); வகை; an ancient tax, payable in cash.

உபயராசி

உபயராசி ubayarāci, பெ. (n.)

   1. இயக்கம், நிலை (சரம், ஸ்திரம்); என்னும் இருவகைக்கும் ஏற்ற ஒரை (இராசி); (விதான. மரபி. 5, உரை);;   மிதுனம், கன்னி, தனுசு, மீனம்;  as distinguished from the moveable and fixed signs.

   2. உடைவாரம்; heap of grain comprising mel-varam, i.e. share of the government or landlord, and ki-varam, i.e., the share of the cultivator.

     “மேல்வாரங் குடிவாரமாகப் பிரிப்பதற்கு முன்னுள்ள மொத்த விளைவுத் தவசம்”.

த.வ. ஈரோரை.

     [Skt. ubhaya + rasi → த. உபயராசி.]

உபயர்

உபயர் ubayar, பெ. (n.)

   இருவர்; two persons.

     “புதல்வரு முபய ரானார்” (வேதாரணியபு. கோலாகல. 37);.

     [Skt. uphaya → த. உபயர்.] ‘ர்’ ப.பா.ஈறு.

உபயவசை

உபயவசை ubayavasai, பெ. (n.)

   1. சீரகம்; cumin seed.

   2. கருஞ்சீரகம்; black cumin – nigella Sativa.

உபயவாதிகள்

உபயவாதிகள் ubayavātigaḷ, பெ. (n.)

   1. வழக்கின் வழக்காளி எதிர் வழக்காளி (வாதி பிரதிவாதிகள்);; plaintiff and defendant.

   2. வழக்குத் தொடுக்கும் வழக்காளி எதிர்வழக்காளியென்னு மிரு திறத்தார்; opponents in a controversy, upholders of opposite sides in a debate.

     “ஈதுபயவாதிகள் சம்மதம்” (தாயு. எங்கு. 3);.

த.வ. வம்பாளி வழக்காளி.

     [உபயவாதி + கள்.]

     [Skt. ubhavavādi → த. உபயவாதி.] ‘கள்’ பன்மை ஈறு.

உபயவிட்டகம்

 உபயவிட்டகம் ubayaviṭṭagam, பெ. (n.)

   பெண்களுக்குக் கருப்பக் காலத்தில் மாதவிடாய்த் தவறுதலில்லாமல் இயல்பாக திங்கடொறும் வெளிப்படுவதனால் இளைத்து வயிற்றுக்குள் உலாவிக் கொண்டிருக்கும் பிண்டம் (சுப்தி);; the emaciated foetus found moving in the womb, and this emaciation is due to the Continuance of the menstrual discharge inspite of pregnancy.

த.வ. வற்றல்கரு.

     [உபய + விட்டகம்.]

     [Skt. ubhaya → த. உபயம்.]

உபயவிபூதி

உபயவிபூதி ubayavibūti, பெ. (n.)

   பேரருளும் இவ்வுலகவின்பமும் (லீலாவிபூதி நித்தியவிபூதிகள்); (ஈடு.6,1,8);; eternal bliss and worldly happiness.

த.வ. இருதுய்ப்பு.

     [உபய + வி + பூதி.]

     [Skt. ubhaya → த. உபயம்.]

புழுதி → பூதி.

உபயவியஞ்சனன்

 உபயவியஞ்சனன் ubayaviyañjaṉaṉ, பெ. (n.)

   இரண்டு குறிகளையும் உடைய பேடு (அலி);; one with the marks of both the sexes – hermaphrodite.

     [Skt. ubhaya-vyanjana → த. உபயவியஞ்சனம் → உபயவியஞ்சனன்.] ‘ன்’ ஆ.பா.ஈறு.

உபயவேதாந்தம்

 உபயவேதாந்தம் ubayavētāndam, பெ. (n.)

   வடமொழி தென்மொழி மறை (வேதங்);களின் முடிவு; philosophy of both the Sanskrit and the Tamil scriptures. (Vaisn);.

த.வ. இருமொழி மறைமுடிபு.

     [Skt. ubhayavédanda → த. உபயவேதாந்தம்.]

உபயவேதாந்தாசாரியர்

 உபயவேதாந்தாசாரியர் ubayavētāndācāriyar, பெ. (n.)

   வடமொழி தென்மொழி மறைகளில் (உபயவேதாந்தங்களிலுந்); தேர்ந்த மாலியருக்கு வழங்கும் ஒரு பட்டப் பெயர்; a distinguishing title of reverence of such a Vaisn. sage or learned man, as master of ubaya- vēdānadam.

     [Skt. ubhaya-vedanda-acari → த. உபயவேதாந்தாசியர்.]

உபயவேர்

 உபயவேர் ubayavēr, பெ. (n.)

   இருவகை வேர் – வெட்டிவேர், விலாமிச்சை வேர்; the two kinds of aromatic roots – khus khus.

     [உபய + வேர்.]

     [Skt. ubhaya → த. உபயம்.]

உபயவோசை

 உபயவோசை ubayavōcai, பெ. (n.)

   ஈரடுக்கொலி (திவா.);; imitative, reiterated sound, as படபட, கடகட.

த.வ. இரட்டைக் கிளவி.

     [உபய(ம்); + ஓசை.]

     [Skt. ubhaya → த. உபயம்.]

உபயாங்கம்

உபயாங்கம் ubayāṅgam, பெ. (n.)

   பாட்டுக்கும் நாட்டியத்திற்கும் வாசிக்கும் வாச்சியம் (வாத்தியம்); (சிலப். 3, 14, உரை);; musical instrument adapted to dancing as well as singing.

த.வ. இருபால் இன்னியம்.

     [Skt. ubhaya + anga → த. உபயாங்கம்.]

உபயாசித்தம்

உபயாசித்தம் ubayācittam, பெ. (n.)

   ஏதுப்போலி வகை (மணிமே. 29, 193);; fault of appealing to a middle term that is not accepted by either party to a controversy.

     [உபய(ம்); + சித்தம்.]

     [Skt. ubhaya → த. உபயம்.]

செ → செத்து → சித்து → சித்தம் → Skt. citta.

உபயாத்தம்

 உபயாத்தம் ubayāttam, பெ. (n.)

   இரு பொருள் (வின்.);; two meaning.

     [Skt. ubhaya-artha → த. உபயாத்தம்.]

உபயானுகம்

உபயானுகம் ubayāṉugam, பெ. (n.)

உபயாங்கம் (சிலப். 3, 14, அரும்.); பார்க்க; see upayangam.

     [Skt. ubhaya-anu-ga → த. உபயானுகம்.]

உபயானுசம்மதம்

 உபயானுசம்மதம் ubayāṉusammadam, பெ. (n.)

   இரு திறத்தாரும் ஒப்புக் கொள்கை; consent of both parties to an agreement.

     “உபயானு சம்மதமாய் நிச்சயித்த தொகை”.

த.வ. இருதிற ஏற்பு.

     [Skt. upaya + anusammada → த. உபயானுசம்மதம்.]

உபயார்த்தம்

 உபயார்த்தம் ubayārttam, பெ. (n.)

உபயாத்தம் பார்க்க; see ubayatam.

     [Skt. ubhaya-artha → த. உபயார்த்தம்.]

உபயாவியாவிருத்தி

உபயாவியாவிருத்தி ubayāviyāvirutti, பெ. (n.)

   துணைக்கரணம் (சாதனம்);, துணியப்படும் பொருள் (சாத்தியம்); இரண்டும் மீளாதிருக்கும் ஒப்பின்மை (வைதன்மிய); திட்டாந்தப் போலி (மணிமே. 29, 441);;     [Skt. upaya-viyavirutti → த. உபயாவியா விருத்தி.]

உபயுக்தா

 உபயுக்தா ubayuktā, பெ. (n.)

   முதியார் கூந்தல், அம்மையார் கூந்தல்; Sita’s thread.

உபயோகப்படு-தல்

உபயோகப்படு-தல் ubayōkabbaḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   பயன்படுதல்; to be serviceable, turned to account.

     [உபயோகம் + படு-.]

     [Skt. upa-yoga → த. உபயோகம் ‘படு’ து.வி.).

உபயோகம்

உபயோகம்1 ubayōkam, பெ. (n.)

   1. உதவி; use, fitness, suitableness.

   2. உதவிப் பொருள்; thing useful for given purpose.

     “தாங்கி யுபயோகந் தன்னை” (சைவச. பொது. 259);.

த.வ. பயன்பாடு, பயன்.

     [Skt. upa-yõga → த. உபயோகம்.]

 உபயோகம்2 ubayōkam, பெ. (n.)

   கோள்வீட்டிலும் (இலக்கினத்திலும்); 2, 3, 4 ஆம் இடங்களிலும் ஏழுகோள் (கிரகங்);களும் நிற்பதாகிய ஒரு நிலை (யோகம்);;     “உதயாதி நாலினுமேழு கோளுமுறவுபயோ கமாம்” (வீமே. உள். 312);.

     [Skt. yupa-yoga → த. உபயோகம்.]

 உபயோகம்3 ubayōkam, பெ. (n.)

   மருந்து கூட்டல்; compounding medicines.

உபயோகாந்தராயம்

உபயோகாந்தராயம் ubayōkāndarāyam, பெ. (n.)

   பயன்பாட்டி (அனுபவித்த);ற்குரிய பொருள்களை விலக்குவதாகிய கருமம் (சீவக. 3081, உரை);;த.வ. விழைவுநீக்கம்.

     [Skt. upa-bhoga + taråyam → த. உபயோகாந்தராயம்.]

உபயோகி

உபயோகி1 ubayōki, பெ. (n.)

   உதவுபவன்; useful, helpful person.

     [Skt. upa-yógin → த. உபயோகி.]

 உபயோகி2 ubayōkittal,    11 செ.கு.வி. (v.i.)

   பயன்படுத்துதல்; to use, apply or employ, as words.

     [Skt. upayoga → த. உபயோகி-,] ‘இ’ வினையாக்க ஈறு.

உபயோக்கியம்

உபயோக்கியம் ubayōkkiyam, பெ. (n.)

   பலவகை அரசிறையை ஈட்டுவதிலுங் காப்பாற்றுவதிலுஞ் செலவு செய்யப்படும் பொருள் (சுக்கிரநீதி, 98);; money expended in the collection of revenue from several Sources and in its safeguarding.

     [Skt. upa-bhógya → த. உபபோக்கியம்.]

உபரசகுணம்

 உபரசகுணம் ubarasaguṇam, பெ. (n.)

   தமிழ் மருத்துவத்தில் சொல்லியுள்ள துணைச் சரக்குகளின் குணம்; qualities of the natural bodies or products enumerated in Tamil medical science.

     [உபரச + குணம்.]

     [Skt. uparasa → த. உபரச.]

உபரசக்குற்றம்போக்கி

 உபரசக்குற்றம்போக்கி ubarasakkuṟṟambōkki, பெ. (n.)

   நறுந்தக்காளி; an unknown drug capable of removing the defects in the several natural bodies or substances called uparasams.[

     [Skt. uparasa → த. உபரச.]

உபரசச்சத்து

உபரசச்சத்து ubarasassattu, பெ. (n.)

   தமிழ் மருத்துவ நூலிற் கண்ட 120 துணைப் பொருளினின்றும் ஊதை (வாத); நூலின் வழியின் படி எடுக்கும் சத்து; the quintessence extracted from any of the one hundred and twenty kinds of natural substances by an alchemical process.

     [உபரசம் + சத்து.]

     [Skt. upa-rasa → த. உபரச.]

சள் → (சண்); → சத்து.

உபரசச்சத்துரு

 உபரசச்சத்துரு ubarasassatturu, பெ. (n.)

   சிங்கி செய்நஞ்சு (பாடாணம்);; a kind of poison consisting, chiefly of lead and nitre.

     [Skt. uparasasatru → த. உபரசச்சத்துரு.]

உபரசச்சத்துவாதி

 உபரசச்சத்துவாதி ubarasassattuvāti, பெ. (n.)

   கற்பூர சிலாசத்து; a beautiful crystallised foliated gypsum.

உபரசத்தைத்தயிலமாக்கி

 உபரசத்தைத்தயிலமாக்கி ubarasattaittayilamākki, பெ. (n.)

   சின்னாருகை; a plant (not known); capable of reducing or converting uparasas into oils.

உபரசநிகண்டு

 உபரசநிகண்டு ubarasanigaṇṭu, பெ. (n.)

   போகரால் செய்யப்பட்ட ஒரு மருத்துவ நூல்; a poetic vocabulary of Tamil chemistry complied by “Bogar’ a great siddha.

உபரசன்

 உபரசன் ubarasaṉ, பெ. (n.)

   தம்பி (யாழ்.அக.);; younger brother.

த.வ. இளவல்.

     [Skt. upara-ja → த. உபரசன்.]

உபரசம்

உபரசம் ubarasam, பெ. (n.)

   1. துணை மாழை (உபதாது);; secondary mineral, as red chalk, bitumen, etc.

     “தாரார் மணியுபரசல் களையும்” (தைலவ. பாயி. 31);.

   2. கல்லுப்பு (மூ.அ.);; rock-salt.

   3. சேர்க்கை இதளியம் (ரசம்);; mercury in a combined state as opposed to nascent or natural state, underneath the sea.

   4. களிம்பு கலந்த மாழைப் பொருள் (உலோகம்);; metalic ores, such as iron rust, iron sulphate, copper sulphate etc.

   5. கடல் நுரை; sea-froth.

   6. இயற்கைச் சரக்கு; natural substance.

   7. இழிந்த சுவையுள்ளது; that which is inferior in taste.

   8. அடுத்த மணம்; secondary flavour.

     [Skt. upa-rasa → த. உபரசம்.]

உபரசிதம்

 உபரசிதம் ubarasidam, பெ. (n.)

உபராசிதம் பார்க்க; see ubarasidam.

உபரஞ்சகம்

உபரஞ்சகம் ubarañjagam, பெ. (n.)

   வேறுபடுத்தும் தன்மை (அவச்சேதகம்); நான்கனு ளொன்று (விசாரசந். 320);;     [Skt. upa-ran-jaka → த. உபரஞ்சகம்.]

உபரஞ்சப்பஞ்சபூதம்

 உபரஞ்சப்பஞ்சபூதம் ubarañjabbañjabūtam, பெ. (n.)

   போகர் நிகண்டிற் கூறியுள்ள துணைச் சரக்குகளின் ஐந்து வகை வேறுபாடுகள்; the five classes into which the secondary or auxiliary minerals called uparasas are divided according to the five elements opposed to பாடாணப் பஞ்ச பூதம் which refers to the five classes of poisons bearing reference to the five elements.

உபரஞ்சிப்பி-த்தல்

உபரஞ்சிப்பி-த்தல் ubarañjibbittal,    11 செ.கு.வி. (v.i.)

   மகிழ்வுறச் செய்தல்; to cause to rejoice.

     “பிறரை உபரஞ்சிப்பிக்குங் குணம்” (சி.சி. 2, 23, ஞானப்.);.

     [Skt. upa-ranj → த. உபரஞ்சி.] ‘பி’ பி.வி. ஈறு.

உபரதம்

 உபரதம் ubaradam, பெ. (n.)

   வெடியுப்பு (மூ.அ.);; salt-petre.

உபரதாமிரத்தட்டை

 உபரதாமிரத்தட்டை ubaratāmirattaṭṭai, பெ. (n.)

உபரதாமிரம் பார்க்க; see ubara-tamiram.

உபரதாமிரம்

 உபரதாமிரம் ubaratāmiram, பெ. (n.)

   நாரை மரம்; a kind of tree (un-identified);.

உபரதி

உபரதி1 ubaradi, பெ. (n.)

   1. செயலொழிகை; cessation from action.

     “நித்திரை யென்றது இந்திரியங்களுடைய உபரதியே” (சி.சி.3, 4, சிவாக்.);.

   2. பற்றொழிகை (விசாரசந். 345);; renunciation of worldly attachments, one of carnati-catka-campattu.

   3. பேரின்பம்; the spiritual enjoyment rejecting sensual pleasure.

     [Skt. upa-rati → த. உபரதி.]

 உபரதி2 ubaradi, பெ. (n.)

   இறுதி; conclusion, end.

     “உபரதியில் மண்டலம் போன் முன்னிறுத்தி” (விறலி விடு. 559);.

     [Skt. uparati → த. உபரதி.]

உபரமணம்

 உபரமணம் ubaramaṇam, பெ. (n.)

   உலகப் பற்றை விடல்; abstaining from worldly actions or desires.

உபராகம்

உபராகம்1 ubarākam, பெ. (n.)

   கோள்மறைப்பு (கிரகணம்);; eclipse of the sun or of the moon.

     “ஒது பானுவெண் மதிபுபராகத்தில்” (சேதுபு. சேதுபல. 21);.

த.வ. கோள்மறை.

     [Skt. upa-råga → த. உபராகம்.]

 உபராகம்2 ubarākam, பெ. (n.)

   1. கருங்கோள் (இராகு.); (நாநார்த்த.);; rahu, the ascending mode.

   2. வசைமொழி (நிந்தை);; abuse.

     [Skt. uparaga → த. உபராகம்.]

உபராசன்

 உபராசன் ubarācaṉ, பெ. (n.)

   இளவரசன் (யாழ்.அக.);; prince.

     [உப + ராசன்.]

     [Skt. upa → த. உப.]

     ‘ன்’ ஆ.பா.ஈறு.

அரசன் + ராசன்.

உபராசிதம்

 உபராசிதம் ubarācidam, பெ. (n.)

   சிற்றகத்தி, ஒரு செடிவகை (மூ.அ.);; a kind of plant, common sesban.

உபராமயம்

 உபராமயம் ubarāmayam, பெ. (n.)

   வெண்டை; rose-mallow.

உபரால்

 உபரால் ubarāl, பெ. (n.)

   உதவி; help, aid, assistance (P.T.L.);.

உபரி

உபரி1 ubari, வி.எ. (adv.)

   1. மேல்; on, upon, above.

     “உபரி யெழுகின்ற சீயம்” (பாரத. பதின்மூ. 39);.

   2. மிகுதியாய்; more.

த.வ. மிகை.

     [உப்பரி = மிகை, மிகுதி, மேற்படல். உப்பரி → உபரி → Skt. upari.]

 உபரி2 ubari, பெ. (n.)

   1. உடலுறவின் ஒருவகை (உபரிசுரதம்);; a mode of sexual intercourse.

     “மிக்கா முபரி செயக் கார்க் கொண்டை பின் சரிய” (விறலி விடு. 523);.

   2. மிகுதி; excess as in பித்த உபரி,

 biliousness.

     [Skt. upari → த. உபரி.]

உபரிசம்

 உபரிசம் ubarisam, பெ. (n.)

   மேலாக முளைத்தல்; growing upwards or out protuberant.

உபரிசரம்

 உபரிசரம் ubarisaram, பெ. (n.)

   வான (ஆகாய);த்தில் உலாவல்; moving or walking in the air.

உபரிசரர்

உபரிசரர் ubarisarar, பெ. (n.)

   வான்வெளியில் செல்பவர்கள்; sojourners in the air, those who move above in the air.

     “உபரிசரரென வுர னோடு புகுதர” (பாரத. பதினாறு. 30);.

த.வ. வான் உலவர்.

     [Skt. uparicara → த. உபரிசரர் ‘ர்’ ப.பா.ஈறு.]

உபரிசுரதம்

உபரிசுரதம் ubarisuradam, பெ. (n.)

   சிறப்புப் புணர்ச்சி (கொக்கோ. 6, 47);; coilus muliere super, virum decumbonte.

     [Skt. upari-su-rata → த. உபரிசுரதம்.]

உபரிதகம்

 உபரிதகம் ubaridagam, பெ. (n.)

   கொக்கோக நூலில் சொல்லியுள்ள அறுபத்து நான்கு கலைகளில் ஒன்றான அழகிய இணைவு (சிருங்கார் பந்தம்);; a kind of coitus described in the erotic science kokkogam.

உபரிதம்

உபரிதம் ubaridam, பெ. (n.)

உபரிசுரதம் பார்க்க; see uparisuradam.

     “இசலியிசலி யுபரித லீலையுற்று” (திருப்பு. 497);.

     [Skt. uparitaka → த. உபரிதம்.]

உபரிபாகம்

உபரிபாகம் ubaribākam, பெ. (n.)

   மறைமுடிபு; vedanta, the crown of the Vedas.

     “உபரிபாகப் பொருள்” (பதினொ. திருநாவுக். 1);.

     [உபரி + பாகம்.]

     [Skt. upari → த. உபரி.]

பகு → பகுப்பு. பகு → பாகு = பகுதி, பக்கம், பக்கமாயிருந்து பேணுபவன் (பாகன்);. பகு → பாகு → பாகம்.

உபரியாவி

 உபரியாவி ubariyāvi, பெ. (n.)

   ஒரு வகை செடிவகை (கோஷ்டம்); (வை.மூ.);; costus plant.

உபறியாவி

 உபறியாவி ubaṟiyāvi, பெ. (n.)

   கோட்டம் (மூ.அ.);; Arabian costume.

உபற்பவம்

 உபற்பவம் ubaṟbavam, பெ. (n.)

   பாம்புக் கொல்லி; the herb of repentance.

உபலக்கணம்

உபலக்கணம் ubalakkaṇam, பெ. (n.)

   1. ஒரு மொழி ஒழிந்த தன்னினத்தையுங்குறிப்பது (சி.போ. 5, 1, சிற்);; implying something that has not been made explicit by expressing another thing associated or connected with it.

   2. குறிக்கோளைப் பக்கவுதவியாகக் கொண்டு உணர்த்தும் இலக்கணம் (லட்சணம்);; secondary or unessential mark which helps the recognition of a thing, as the branch of a tree is pointed out to enable one to see through it a constellation or the crescent moon.

த.வ. குறிப்புமொழி.

     [உப + இலக்கணம்.]

     [Skt. upa → த. உப.]

     [த. இலக்கணம் → Skt. laksana.]

உபலட்சணம்

 உபலட்சணம் ubalaṭcaṇam, பெ. (n.)

உபலக்கணம் பார்க்க; see ubalakkanam.

     [உப + லட்சணம்.]

     [Skt. upa → த. உப.]

     [த. இலக்கணம் → → த. லட்சணம்.]

உபலநாடிக்கல்

 உபலநாடிக்கல் ubalanāṭikkal, பெ. (n.)

   காதிற்குள்ளாக நரம்புகள் படருமிடத்து இருக்குமோர் கல்; a kind of calculus found near the auditory nerves inside the ear-aural calculus.

     [உபல + நாடிக்கல்.]

 upala என்னும் சொற்கு வடமொழியில் கல், பாறை போன்ற பொருள்களுண்டு. நாடிக்கல் என்னும் சொல்லிற்கு உபல அடையாக வருவது மீமிசை.

உபலம்

உபலம் ubalam, பெ. (n.)

   1. கல் (சூடா.);; stone, rock.

   2. சிறுகல் (பிங்.);; small stone.

   3. பளிங்கு; crystal.

     “பலநிறங் கவரு முபலமாய்” (தாயு. சிற்சுகோ. 2);.

   4. உடம்பிலுண்டாகுங் கல்;   5. எருமுட்டை; cow-dung cake.

     [Skt. upa-la → த. உபலம்.]

உபலம்பம்

உபலம்பம் ubalambam, பெ. (n.)

   தோற்றுகை; perception, recognition.

     “அவன்றனக்கு ஈஸ்வரனையொழிய ப்ருதக்ஸ் திதியாதல் உபலம்பமாதல் இல்லாமையாலே” (ஈடு. 1, 1, 6);.

     [Skt. upa-lambha → த. உபலம்பம்.]

உபலாலனை

 உபலாலனை ubalālaṉai, பெ. (n.)

   கொண்டாடுகை; fondling, caressing.

     [Skt. upa-lalana → த. உபலாலனை.]

உபலாளனம்

உபலாளனம் ubalāḷaṉam, பெ. (n.)

   1. உபலாலனை பார்க்க; see uba-lalanai.

     “உத்ஸ்வங்களையும் உபலாளனங்களையும் ஶ்ரீ பாஞ்சராத்ரப்ரகாரமாக வ்யவஸ்தை பண்ணி” (கோயிலெ. 54);.

   2. தூய்மை, செய்கை (திவா.);; cleansing, purifying.

     [Skt. upa-lalanam → த. உபலாளனம்.]

உபலிபம்

 உபலிபம் ubalibam, பெ. (n.)

   சாணத்தால் மெழுகுகை; besmearing with cow dung.

உபலேபனம்

உபலேபனம் ubalēbaṉam, பெ. (n.)

   1. சாணத்தால் மெழுகுகை (வின்.);; smearing with cow dung.

   2. ஆ நீரால் மெழுகுகை; smearing with cow’s urine.

   3. ஆ நீரால் தூய்மை செய்தல்; a ceremony of cleaning with cow’s urine.

     [Skt. upa + lebana → த. உபலேபனம்.]

உபலேபம்

உபலேபம் ubalēbam, பெ. (n.)

   1. உபலேபனம் பார்க்க; see ubalebanam.

   2 கோழைக் கட்டு; formation phlegm.

   3. மந்தம்; dullness.

உபலை

உபலை ubalai, பெ. (n.)

   1. சருக்கரை (நாநார்த்த.);; sugar.

   2. சுக்கான் பாறை; limestone.

     [Skt. upala → த. உபலை.]

உபலோகத்திறம்

 உபலோகத்திறம் ubalōkattiṟam, பெ. (n.)

   வெள்ளி; silver.

உபலோகம்

 உபலோகம் ubalōkam, பெ. (n.)

   மாழையை (உலோகத்தை); அடுத்த பொருள்; secondary mineral.

     [Skt. upa-loha → த. உபலோகம்.]

உபலோத்திரம்

 உபலோத்திரம் ubalōttiram, பெ. (n.)

   விளாம் பிசின் (மூ.அ.);; gum of wood apple tree.

     [Skt upa-lodhra → த. உபலோத்திரம்.]

உபவசி

உபவசி1 ubavasittal,    11 செ.கு.வி. (v.i.)

   உண்ணாதிருத்தல்; to fast.

     “ஆயிரமாண்டுபவசித்து” (உத்தரரா. இராவணன் பிற. 26);.

த.வ. நோன்பு.

     [Skt. upa-vas → த. உபவசி-,]

 உபவசி2 ubavasi, பெ. (n.)

உபவாசி பார்க்க; see uba-vasi

     “அன்றைக் குபவசியாய்” (சைவச. பொது. 303);.

     [Skt. upa-vasin → த. உபவசி.]

உபவனம்

உபவனம்1 ubavaṉam, பெ. (n.)

   சோலை, பூஞ்சோலை; grove, flower-garden.

     “அந்த மன்ன னோர் நாளிலுபவனத் தொருவனாய்” (ஞானவா. உற்பத்தி. 31);.

     [Skt. upa-vana → த. உபவனம்.]

 உபவனம்2 ubavaṉam, பெ. (n.)

   1. காஞ்சொறி (மூ.அ.);; climbing nettle.

   2. கடுக்காய்; myrobalan.

உபவம்

 உபவம் ubavam, பெ. (n.)

   சீந்தில் (மூ.அ.);; gulancha.

உபவராகப்பிரண்டை

 உபவராகப்பிரண்டை ubavarākabbiraṇṭai, பெ. (n.)

   கரணைப் பிரண்டை; coarse toothed heart-vine.

     [உபவராகம் + பிரண்டை.]

புரு + புரள் → புரண்டை → பிரண்டை.

உபவரி

 உபவரி ubavari, பெ. (n.)

உபவம் பார்க்க; see upavam.

உபவல்லிகம்

 உபவல்லிகம் ubavalligam, பெ. (n.)

   ஒருவகைப் பூடு; a plant (unidentified);.

     [Skt. upa-vanam → த. உபவல்லிகம்.]

உபவாசகம்

 உபவாசகம் ubavācagam, பெ. (n.)

   பேய்த் தும்மட்டி; bitter apple, Cucumis colocynthis.

உபவாசக்காலம்

உபவாசக்காலம் ubavācakkālam, பெ. (n.)

   1. உண்ணா நோன்புக் காலம்; time for religious fasts.

   2. தவமிருக்கும் காலம்; lent (Chr.);.

     [உபவா(ம்); + காலம்.]

     [Skt. upa-vasa → த. உபவாசம்.]

கால் → காலம்.

உபவாசம்

உபவாசம் ubavācam, பெ. (n.)

   1. உண்ணா நோன்பு (விரதம்);; fast, fasting.

     “இதன் புனலாடிய யுபவாச முளுற்றியக் கால்” (சேதுபு. பலதீ. 19);.

   2. சிற்றின்பம் தொடர்பானவற்றையும், மணம், அழகுபடுத்துதல், ஆடல்பாடல், இசை, தாம்பூலம் முதலியவற்றையும் தவிர்த்து நோன்பு இருத்தல்; a religious mortification by abstinence from indulgence in all sexual gratification such as perfumes, flowers, unguents, ornaments, betel, music, dancing etc.

     [Skt. upavasa → த. உபவாசம்.]

வடமொழியில் இச்சொல் upa-vas என்றுள்ளது. இச்சொல்லுக்குப் பொறுத்திருத்தல், ஒன்றுடன் தங்கி இருத்தல், நுகர்பொருளை விலக்கியிருத்தல், உணவு உட்கொள்ளாமலிருத்தல் என்ற வகையில் பொருள் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது (மா.வி.);. இவற்றுள் உண்ணா நோன்புப் பொருளே தமிழ் மொழியில் பெரும்பான்மை ஆளப்பட்டுள்ளது.

உபவாசி

உபவாசி1 ubavācittal,    11 செ.கு.வி. (v.t.)

   உண்ணாநோன்பு மேற்கொள்ளல், பட்டினியா யிருத்தல்; to fast, especially from religious motives.

     “ஓங்குந் திரிதி கையுபவாசித்தே” (மச்சபு. அனந்ததிரி. 28);.

வடமொழியில் upa-vasati என்று வினை வடிவம் இருக்கிறது (மா.வி.);.

தமிழில் உபவாசம் என்னும் பெயர்வடிவத்திலிருந்தே உபவாசி என்னும் வினைவடிவம் உருவாகியிருக்கிறது.

 உபவாசி2 ubavāci, பெ. (n.)

   உண்ணா நோன்பிருப்பவன்; one who observes a fast.

     “மதத்தவுடலதனா லற்ற வுபவாசி பொளித்துண்டானென்றுணர்தல்” (உபநி.16);.

த.வ. உண்ணாநோட்பர்.

     [Skt. upa-vasin → த. உபவாசி.]

உபவாயு

உபவாயு ubavāyu, பெ. (n.)

   உடலிலுள்ளனவும் சிறந்தெடுத்துக் கூறவியலாததுமான விக்கன் (நாகன்);, இமையன் (சுர்மன்);, எரியன் (கிருகரன்);, ஆவிரியன் (தேவ தத்தன்);, உச்சியன் (தனஞ்சயன்); என்ற ஐந்து வளி (ஊதை); (விசாரசந். 330);; the five subsidiary breaths, vikkan, imaiyan eriyan, aviriyan and ucciyan.

த.வ. ஐவளி.

     [Skt. upa + vayu → த. உபவாயு.]

விக்கல், ஏப்பம், இமைகொட்டல், இருமல், தும்மல், வீங்கல் ஆகிய செயற்பூாடுகளுக்கு எதுவாயிருக்கும் பத்து வளி (தசவாயு);களுக்குத் துணையாயிருப்பவை உபவாயு என சா.அக. குறிப்பிடுகிறது.

உபவாளிதம்

 உபவாளிதம் ubavāḷidam, பெ. (n.)

   ஒருவகைச் செடி; Indian lead wort.

உபவிடம்

உபவிடம் ubaviḍam, பெ. (n.)

   1. ஒரு மருந்துச் செடி (அதிவிடயம்);; a kind of herb (adi-vidayam);.

   2 ஒன்பது வகை நிலைத்திணை நஞ்சு (தாவரவிடம்);; the nine kinds of vegetable poisons.

   1. எருக்கம்பால்,

   2. கள்ளிப்பால்,

   3. சிவனார் கிழங்கு,

   4. அலரி,

   5. குன்றி,

   6. அபினி,

   7. ஊமத்தை,

   8. எட்டி,

   9. நாபி ஆகியன ஒன்பது நிலைத்திணை நஞ்சுகளாம்.

உபவிடை

 உபவிடை ubaviḍai, பெ. (n.)

உபவிடம் பார்க்க; see uba-vidam.

உபவிட்டக்கருப்பம்

 உபவிட்டக்கருப்பம் ubaviṭṭakkarubbam, பெ. (n.)

   மூவகைச் சூல்களுள் நன்றாகக் கருதப்படும் கருப்பையில் குறை கண்டு குருதி (அரத்தம்); கசிந்து அதனால் கரு மெலிந்து துடித்துக் கொண்டிருக்குமோர் நிலைமை; one of the three conditions of pregnancy marked by the oozing of blood or slight hemorrhage and emaciated and quivering condition of the womb.

     [உபவிட்டம் + கருப்பம்.]

     [Skt. upa-vitta → த. உபவிட்டம்.]

த. குரு → கரு → கருப்பம் → Skt. garbha.

உபவிட்டரம்

உபவிட்டரம் ubaviṭṭaram, பெ. (n.)

   தங்குபிண்டம் (சீவரட். 206);; embryo shrunken in size owing to menstrual discharges during the period of gestation.

     [Skt. upa+ vistara → த. உபவிட்டரம்.]

உபவிருங்கணம்

 உபவிருங்கணம் ubaviruṅgaṇam, பெ. (n.)

உபப்பிரும்மணம் (பெரியபு. திருமலைச். (சூசனம்); பார்க்க; see ubappi-rummanam.

     [Skt. upa-bmhana → த. உபவிருங்கணம்.]

உபவீதம்

உபவீதம் ubavītam, பெ. (n.)

   1. பூணூல் (பிங்.);; sacred thread worn by men of the twice born castes.

   2. இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கமாய்ப் பூணூல் அணிதல்; wearing the sacred thread in the usual manner over the left shoulder and under the right arm opp. to பிராசீனாவிதம்.

     [Skt. upa-vita → த. உபவீதம்.]

உபவீதி

உபவீதி ubavīti, பெ. (n.)

   1. உபவீதம்2 பார்க்க; see ubavidam,

 opp. to பிராசீனாவீதி.

     [Skt. upa-vitin → த. உபவீதி.]

உபவுப்பு

 உபவுப்பு ubavubbu, பெ. (n.)

   பிண்டவுப்பு செயநீர்; a peculiar liquid extracted from the salt derived from the foetus.

     [உப + உப்பு.]

     [Skt. upa → த. உப.]

உபவேசனம்

 உபவேசனம் ubavēcaṉam, பெ. (n.)

   மலங் கழித்தல்; passing of stools, evacuation of the bowels.

உபவேட்டனம்

உபவேட்டனம் ubavēṭṭaṉam, பெ. (n.)

   கூத்திடுங்காலுண்டாம் உறுப்பசைவு முறைகளுளொன்று (சுத்தா; சிலப். பக். 81);; a mode of gesticulation.

     [Skt. upa-vestana → த. உபவேட்டனம்.]

உபவேட்டிதம்

உபவேட்டிதம் ubavēṭṭidam, பெ. (n.)

   நடன முத்திரை (அபிநய); வகை (சீவக. 1257, உரை);; a gesture by the fingers in dancing.

     [Skt. upa-vestita → த. உபவேட்டிதம்.]

உபவேதம்

உபவேதம் ubavētam, பெ. (n.)

   நான் மறை (வேதங்);களையடுத்து மதிக்கப்பெறும் ஆயிர்வேதம், தனுர்வேதம், காந்தர்வவேதம், அர்த்த வேதம் ஆகிய நான் மறைகள் (வேதங்கள்); (திருக்காத். பு. 29, 38);; secondary vedas, class of writings subordinate to the vedas, of which four are enumerated.

     [உப + வேதம்.]

     [Skt. upa → த. உப.]

விழி → வித் → வேத் → வேதம்.

உபா

உபா upā, பெ. (n.)

   தன்மாத்திரை; subtle, elements.

     “உபாக்கடெரிவுரைப்பின்” (நீலகேசி. 486, உரை);.

உபாகமம்

உபாகமம் upākamam, பெ. (n.)

   1. மூல தோன்றிய (மூலாகம);ங்களின் வழித்தோன்றிய சைவத் தோன்றிய (ஆகம);ங்கள் (சைவச. பொது. 336, உரை);; secondary agamas said to be 207 in number.

   2. பழைய ஏற்பாட்டில் ஐந்தாவது புத்தகம் (கிறித்.);; the Tamil name for the book of Deuteronomy.

த.வ. துணைத் தோன்றியம்.

     [Skt. upagama → த. உபாகமம்.]

உபாகர்மம்

 உபாகர்மம் upākarmam, பெ. (n.)

   வேதங்களை ஒதத் தொடங்குமுன் ஆண்டிற்கொருமுறை புதியதாகப் பூணூல் போட்டுக் கொள்ளும் சடங்கு, (சிராவணச் சடங்கு); (பிராக்.);; ceremony performed once a year before commencing to recite the veda when the sacred thread is put on a new.

     [Skt. upå-karman → த. உபாகர்மம்.]

உபாகிதம்

 உபாகிதம் upākidam, பெ. (n.)

   எரிகொள்ளி (நாநார்த்த.);; fire brand.

     [Skt. upahita → த. உபாகிதம்.]

உபாகிதை

 உபாகிதை upākidai, பெ. (n.)

உபாகிதம் பார்க்க; see ubảgidam.

     [Skt. upáhita → த. உபாகிதை.]

உபாக்கியானம்

 உபாக்கியானம் upākkiyāṉam, பெ. (n.)

   கிளைக்கதை; episode, short story introduced into a long one.

     “நளோபாக்கியானம்”.

     [Skt. upå-khyana → த. உபாக்கியானம்.]

உபாங்கதாளம்

உபாங்கதாளம் upāṅgatāḷam, பெ. (n.)

   தாளவகை (பரத. தாள. 4, உரை);;     [உபாங்கம் + தாளம்.]

     [Skt. upanga → த. உபாங்க.]

தாள் = கால், அடி, தாள் → தாளம் = ஆடுபவர் காலால் தட்டும் காலக்கணிப்பு.

உபாங்கம்

உபாங்கம் upāṅgam, பெ. (n.)

   1. சார்புறுப்பு; minor limb or member.

   2. மறைமுடிவு (வேதாங்கங்);களுக்கு உறுப்பா (அங்கமா); யுள்ள நூல்கள் (சாத்திரங்கள்); (சி.சி. 8, 14, மறைஞா.);; a class of writings, supplementary to the Vedan-gas, of which four are enumerated.

   3. தோற் கருவி வகை (சிலப். 3, 27, உரை);; kind of drum.

   4. இசைக்கருவி பக்கவாச்சியம்; subsidiary musical instrument.

     “தார்கிண்டு வண்டுபாங்கங்கூட” (இரகு. நாட்டுப். 54);.

   5. உபாங்கதாளம் பார்க்க; see ubangatalam.

     “அங்க முபாங்க மாகிடுநேர் பங்கமுடன்” (பரத. தாள. 4);.

     [Skt. upånga → த. உபாங்கம்.]

உபாங்கராகம்

 உபாங்கராகம் upāṅgarākam, பெ. (n.)

   அராகவகை; a melody-type.

     [உபாங்கம் + ராகம்.]

     [Skt. upanga → த. உபாங்கம்.]

     [த. அராகம் → Skt. raga → த. ராகம்.]

உபாசகன்

உபாசகன் upācagaṉ, பெ. (n.)

   1. வழிபடு (உபாசனை); வோன்; worshipper, devotee.

     “விழைவா லுபாசக ராகி” (விநாயகபு. 83, 107);.

   2. புத்த மதத்தைச் சார்ந்தவ (பெளத்த);ரில் இல்லறத்தோன்; buddhist layman, opp. to பிக்ஷீ.

     “சீல வுபாசகர் செங்கைநறு நீரும்” (மணிமே. 28, 12);.

     [Skt. upåsaka → த. உபாசகன்.]

உபாசகை

உபாசகை upācagai, பெ. (n.)

   புத்த சமயத்தவரில் இல்லறத்தவள் (மணிமே. 28, 12. அரும்.);; Buddhist woman of the laity.

உபாசங்கம்

 உபாசங்கம் upācaṅgam, பெ. (n.)

   அம்புக்கூடு; quiver.

     [Skt. upasanga → த. உபாசங்கம்.]

உபாசனம்

 உபாசனம் upācaṉam, பெ. (n.)

உபாசனை பார்க்க; see upasanai.

     [Skt. upåsana → த. உபாசனம்.]

உபாசனை

உபாசனை upācaṉai, பெ. (n.)

   வழிபாடு; worship.

     “இரு வேறாகு முபாசனை” (விநாயகபு. 83, 67);.

     [Skt. upasana → த. உபாசனை.]

 Upasana என்னும் வடசொல் உட்காருதல் அல்லது அருகில்இருத்தல், தொண்டு செய்தல், காத்திருத்தல், தொண்டு, உதவி செய்தல், மதித்தல், புகழ்தல், வணங்குதல் என்னும் வகையில் பொருள் வளர்ச்சி கொண்டுள்ளது. இவற்றுள் ‘வழிபாடு’ என்னும் இறுதிப் பொருளை மட்டும் தமிழ் ஏற்றுக் கொண்டுள்ளது.

உபாசயம்

 உபாசயம் upācayam, பெ. (n.)

   உறக்கம்; sleep.

உபாசி

 உபாசி upāci, பெ. (n.)

   தெய்வந் தொழுதலான் அவனருள் (அனுக்கிரகம்); பெற்றவன்; one who has obtained the grace of a particular deity by worshipping it.

     [Skt. upås → த. உபாசி.] ‘இ’ உடைடை குறித்த ஈறு.

உபாசி-த்தல்

உபாசி-த்தல் upācittal,    11 செ.குன்றாவி. (v.t.)

   வழிபடுதல்; to worship.

     “நயந்துபா சித்த வாறும்” (விநாயகபு. பதி. 3);.

     [Skt. upâs → த. உபாசி-,]

உபாஞ்சு

உபாஞ்சு upāñju, பெ. (n.)

   1. உபாம்சு (சைவச. பொது. 152. உரை); பார்க்க; see ubamsu.

   2. தனிமை (ஏகாந்தம்);; loneliness, solitude.

     [Skt. upamsu → த. உபாஞ்சு.]

உபாதானகாரணம்

 உபாதானகாரணம் upātāṉakāraṇam, பெ. (n.)

   முதற்காரணம்; material cause, as clay for a pot.

     [உபாதானம் + காரணம்.]

     [Skt. upá-dána → த. உபாதான.]

உபாதானபூதம்

 உபாதானபூதம் upātāṉapūtam, பெ. (n.)

   கலப்பான பூதம்; that which is composed of two or more elements or ingredients – compound.

     [உபா + தான(ம்); + பூதம்.]

     [Skt. upa → த. உபா.]

உபாதானம்

உபாதானம் upātāṉam, பெ. (n.)

   1. உபாதான காரணம் பார்க்க; see upatana-Karanam.

   2. அரிசிப்பிச்சை; dole of uncooked rice.

     [உபா + தானம்.]

     [Skt. upa → த. உபா.]

தர் – (தர்); → தரு → தா. தரு → தருகிறாள், தருவான், தருகை, தரவு.

தா → தானம்.

     [த. தானம் → Skt. dana.]

உபாதாயவுரு

உபாதாயவுரு upātāyavuru, பெ. (n.)

   வலி, இரதம், வன்னம், கந்தம் என்று நால்வகைப்பட்ட உருவ வகை (மணிமே. 30, 190, கீழ்க்குறிப்பு);;     [உபதாய + உரு.]

     [Skt. upadaya → த. உபாதாய.]

உபாதி

உபாதி1 upāti, பெ. (n.)

   1. கடமை; dues.

     “எப்பேர்ப்பட்ட உபாதிகளும் இழித்து விட்ட அளவுக்கு” (தெ.க.வெ.தொ.2, 118);.

   2. விளைவில் பரவி காரணத்தில் பரவாமல் இருப்பது (சாத்தியத்திலே வியாபித்துச் சாதனத்தில் வியாபகமில்லாதது); (தர்க்கபா. 18);; special cause of a general effect.

   3. மாயையாலுண்டாகுந் தோற்றம்; appearance, phantom.

     [Skt. upa-dhi → த. உபாதி.]

 உபாதி2 upāti, பெ. (n.)

   1. தொல்லை (வேதனை);; torment, agony, pang.

     “உச்சியிற் சாலவுபாதி பசிதாகமாகும்” (பட்டினத். திருப்பா. திருத்தில்லை.);

   2. நோய்; disease, ailment.

     “பேருணவு உபாதியை யுண்டாக்கும்”

   3. இடையூறு; hindrance, obstruction.

     “உம்பரால் உருமுபாதி காப்பன்” (மச்சபு. பிருகுவி. 49);.

   4. ஆதனு (ஆன்மாவு);க்கு ஏற்படும் துயரம்; in vedanta philosophy a condition of the body, which is specially applied to certain forms, considered disguises of the spirit.

த.வ. துன்பம்.

     [Skt. badha → த. உபாதி.]

 உபாதி3 upātittal,    11 செ.கு.வி. (v.i.)

   தொந்தரை செய்தல்; to cause distress, to afflict, torment, torture.

     [Skt. bådhå → த. உபாதி.]

 உபாதி4 upāti, பெ. (n.)

வேறுபடுத்தும் தன்மை (அவச்சேதகம்); நான்கனுளொன்று (விசாரசந். 320);: (Log.);

 one of four ava-c-cedagasm.

     [Skt. upadhi → த. உபாதி.]

உபாதேயம்

 உபாதேயம் upātēyam, பெ. (n.)

   ஏற்றுக் கொள்ளத்தக்கது; that which is worthy of acceptance or adoption.

     “குருவசனம் எப்போதும் உபாதேயமானது”.

     [Skt. upa-deya → த. உபாதேயம்.]

உபாதை

உபாதை upātai, பெ. (n.)

உபாதி2 பார்க்க; see ubadi2.

     [Skt. badha → த. உபாதை.]

உபாத்தி

 உபாத்தி upātti, பெ. (n.)

   ஆசிரியர் (உபாத்தியாயன்.); (பிங்.);; teacher.

     [Skt. upadhya → த. உபாத்தி.]

உபாத்தியாயனி

 உபாத்தியாயனி upāttiyāyaṉi, பெ. (n.)

   ஆசிரியை; lady teacher, school mistress.

     [Skt. upå-dhyayani → த. உபாத்தியாயனி.]

உபாத்தியாயன்

உபாத்தியாயன் upāttiyāyaṉ, பெ. (n.)

   1. ஆசிரியர்; teacher, school master.

   2. மதகுரு; religious preceptor.

     “அவனுபாத்தியாயன்” (பிரபோத.11, 5);.

த.வ. ஆசான்.

     [Skt. upadhyaya → த. உபாத்தியாயன்.]

     ‘அன்’ ஆ.பா.ஈறு.

உபாத்தியாயம்

 உபாத்தியாயம் upāttiyāyam, பெ. (n.)

   பூசாரியம் (புரோகிதம்);; profession of conducting religious ceremonies (Brah.);.

     [Skt. upadhyayam → த. உபாத்தியாயம்.]

உபாத்தியாயி

 உபாத்தியாயி upāttiyāyi, பெ. (n.)

உபாத்தியாயனி பார்க்க; see uba-ttiyayani.

     [Skt. upa-dhyayani → த. உபாத்தியாயி.]

உபாத்து

 உபாத்து upāttu, பெ. (n.)

   சாவு (முகம);; death.

த. வ. சாக்காடு.

     [Arab. wafat → த. உபாத்து.]

உபாந்தியம்

உபாந்தியம் upāndiyam, பெ. (n.)

   1. கடைக்கண் (வின்.);; corner of the eye.

   2. ஈற்றயல் (வின்.);; the last but one, the penultimate.

   3. அண்மை (சமீபம்); (பிராம);; proximity, vicinity.

     [Skt. upantya → த. உபாந்தியம்.]

உபானம்

உபானம்1 upāṉam, பெ. (n.)

   மிதியடி; a kind of shoes, wooden sandals.

     “உபானபதத்தொடு நடக்கும்” (சிவதரு. சுவர்க்கம். 142);.

த.வ. பாதுகை.

     [Skt. upa-nah → த. உபானம்.]

 உபானம்2 upāṉam, பெ. (n.)

   கோபுரத்தின் அடிச்சித்திரவரை; first moulding above the plinth in the structure of towers, etc.

 forming the base above the lowest of a series of rows or layers intended to produce an ornamental effect, pedestal (T.A.S., 180);.

     [Skt. upåna → த. உபானம்.]

உபானவரி

உபானவரி upāṉavari, பெ. (n.)

உபானம்2 பார்க்க; see ubanam.

     [உபானம் + வரி.]

     [Skt. upana → த. உபானம்.]

உபாம்சு

உபாம்சு upāmcu, பெ. (n.)

   மந்திரத்தை நா வசைவின்றி செவியுணருமாறு நெட்டுருச் செய்கை; recitation of a mantra in a hushed low voice so as to be heard by the reciter alone.

     “சிவமந்திரத்தை வாசகமாகத் தான் உபாம்சுவாகத்தான் மானசமாகத்தான்…. ஜபிப்பது” (சி.சி. 8, 23, சிவாக்.);.

     [Skt. upåmsu → த. உபாம்சு.]

உபாயக்காரன்

 உபாயக்காரன் upāyakkāraṉ, பெ. (n.)

   சூழ்ச்சியாளன் (தந்திரி);; artful person, schemes, contriver.

     [உபாயம் + காரன்.]

     [Skt. upaya → த. உபாய(ம்);.]

உபாயசொரூபம்

உபாயசொரூபம் upāyasorūpam, பெ. (n.)

   வீடுபேறு (மோட்சம்); பெறும் வழியின் தன்மை (அஷ்டாதச. பக். 25);; nature of the path to final bliss, which is of five kinds, viz.

கருமம், ஞானம், பத்தி, பிரபத்தி, ஆசாரியாபிமானம்.

 one of artha-panjagam.

     [Skt. upäya + švarüpa → த. உபாயசொரூபம்.]

உபாயதந்திரம்

 உபாயதந்திரம் upāyadandiram, பெ. (n.)

   ஏமாற்று (வஞ்சகம்); (Pond.);; deceit.

     [Skt. upáya + tantra → த. உபாயதந்திரம்.]

உபாயநிசம்

 உபாயநிசம் upāyanisam, பெ. (n.)

   வளியினை உள்வாங்குகை, உள்ளிழுக்கை; inhalation of vital air.

த.வ. பூரகம்.

உபாயநிட்டை

உபாயநிட்டை upāyaniṭṭai, பெ. (n.)

   எளிதிற் வீடுபேறு அடையும் வழியிலூன்றி நிற்கை; fixing on an easy method of attaining spiritual tranquility.

     “மேலோர் உபாய நிட்டை யுணர்த்துகின்றார்” (சி.சி. 9, 8, மறைஞா. அவ.);.

     [Skt. upaya + nistai → த. உபாயநிட்டை.]

உபாயநிட்டைவெண்பா

 உபாயநிட்டைவெண்பா upāyaniṭṭaiveṇpā, பெ. (n.)

   பண்டார சாத்திரங்களுள் அம்பலவாணரியற்றிய நூல்; a saiva siddhanda treatise by ambalavana-desigar, one of pandara-cattiram.

     [உபாயநிட்டை + வெண்பா.]

     [Skt. upayanittai → த. உபாயநிட்டை.]

வெள் → வெண் + பா – வெண்பா.

உபாயனபத்திரம்

உபாயனபத்திரம் ubāyaṉabattiram, பெ. (n.)

   கையுறையாகக் கொடுக்கும் பொருளைப் பற்றிய ஆவணம் (பத்திரம்); (சுக்கிரநீதி. 93);; document specifying present.

     [Skt. upayana + pattiram → த. உபாயனபத்திரம்.]

உபாயனம்

உபாயனம் upāyaṉam, பெ. (n.)

   காணிக்கை; present to a superior.

     “மன்னனுக்கிய லுபாயன மென்று கொடுத்தனர்” (யசோதர. 3, 5);.

     [Skt. upayana → த. உபாயனம்.]

உபாயபாரமிதை

உபாயபாரமிதை upāyapāramidai, பெ. (n.)

   பத்துச் சிறப்புக் குணங்களுள் (தசபாரமிதையுள்); ஒன்றான அறம் (உபாயம்); (மணிமே. 26, 45, குறிப்பு. பக். 297);;

உபாயம்

உபாயம்1 upāyam, பெ. (n.)

   1. சூழ்ச்சி; that by which a person realizes his aim, means, stratagem, artifice.

     “யாஅரு பாயத்தின் வாழாதார்” (நாலடி. 119);.

   2. அரசர்க்குரிய நான்கு வழிவகைகள் (உபாயங்கள்); (பிங்.);; means of overcoming an enemy, one of cadurvidobayam.

   3. நான்கு; four.

     “அம்பு பாயமாம்படி யட்டி” (தைலவ. தைல. 94, 12);.

   4. சிறிதளவு (சொற்பம்);; smallness.

     ‘உபாயமாய்க் கொடுத்தான்’.

     [Skt. Upäya → த. உபாயம்.]

 upaya என்னும் சொல்லிற்கு வடமொழியில் அருகில் வருதல், அடைதல், வந்துசேர்தல், நோக்கத்தை அடையும் வழி, வழிவகை, வழி போன்ற பல பொருள்களுள்ளன. இவற்றுள் வழிவகை, சூழ்ச்சி போன்ற ஒரு சில பொருள்களே தமிழில் உள்ளன.

 உபாயம்2 upāyam, பெ. (n.)

   வழிவகை (சாதனம்);; means.

     “காசு ஒடுக்க உபாயமில்லாமையாலும்” (தெ.க.தொ. 5. பக். 370);.

 Skt. upaya → த. உபாயம்.]

உபாயி

 உபாயி upāyi, பெ. (n.)

   சூழ்ச்சியாளன் (தந்திரமுள்ளவன்);; artful person.

     [Skt. upåya → த. உபாயி.]

உபாலம்பனம்

 உபாலம்பனம் upālambaṉam, பெ. (n.)

   இடித்துரைத்தல் (நிந்திக்கை);; reproach, reproof.

     “சந்திரோபாலம்பனம்” (நைடத.);.

     [Skt. upå-lambhana → த. உபாலம்னம்.]

உபுக்கு-தல்

உபுக்கு-தல் ubukkudal,    5 செ.கு.வி. (v.i.)

   பெருகுதல் (வின்.);; to swell, overflow.

   தெ. உபுகு;உரு. உபக்.

உபேட்சாபாவனை

உபேட்சாபாவனை upēṭcāpāvaṉai, பெ. (n.)

   சார்பு பற்றாது ஒப்பு நோக்குந் தன்மை (மணிமே. 30, 253, அரும்);; impartiality.

     [Skt. upeksa + pavanai → த. உபேட்சாபாவனை.]

உபேட்சி-த்தல்

உபேட்சி-த்தல் upēṭcittal,    11 செ.குன்றாவி. (v.t.)

   புறகணித்தல்; to neglect, disregard, overlook, ignore.

     “பரமபதத்தை உபேட்சித்துவந்து” (குருபரம். 69, பன்னீ.);

     [Skt. upeks → த. உபேட்சி-,]

உபேட்சை

உபேட்சை upēṭcai, பெ. (n.)

   1. புறக்கணிப்பு; disregard, neglect, indifference.

     “மேதகு மறைவிரோத மேவுநூலுபேட்சை” (சூத. சருவவேதாந்.);.

   2. உடல் நலமின்மை (அசௌக்கியம்);; indisposition.

     [Skt. upeksa → த. உபேட்சை.]

உபேட்சையானம்

உபேட்சையானம் upēṭcaiyāṉam, பெ. (n.)

   தோல்வியடைந்த அரசன் பகைவனைப் புறக்கணித்துத் திரும்புகை (சுக்கிரநீதி, 337);; the return march of a defeated king unmindful of his defeat.

     [Skt. upeksa + yana → த. உபேட்சையானம்.]

உபேந்திரன்

உபேந்திரன் upēndiraṉ, பெ. (n.)

   இந்திரனின் தம்பியாகிய திருமால்; Visnu, who, at one time, incarnated as a younger brother of Indra.

     “முச்சசகமளந்த வுபேந்திரன்” (தணிகைப்பு. விடை. 18);.

     [உப + இந்திரன்.]

     [Skt. upa → த. உப.]

வேந்தன் → இந்திரன்.

முல்லை நிலத் தெய்வமாகிய திருமாலை இந்திரன் தம்பியாக்கியதும் குறிஞ்சி நிலத் தெய்வமாகிய முருகனைப் பிள்ளையாரின் தம்பியாக்கியதும் தமிழ்ப் பண்பாட்டில் ஆரியப்பண்பாட்டின் வீச்சுகளாகக் கருதப்படுகின்றன.

உபேந்திராசிரியர்

 உபேந்திராசிரியர் upēndirāciriyar, பெ. (n.)

   சினேந்திரமாலை யியற்றியவர்; the author of the sinendira-malai.

     [உப + இந்திரன் + ஆசிரியர்.]

     [Skt. upa → த. உப.]

வேந்தன் → இந்திரன்.

உபோதகம்

 உபோதகம் upōtagam, பெ. (n.)

உடுபோதம் (யாழ்.அக.); பார்க்க; see udupõdam.

     [உடுபோதம் + உபோதகம்.]

உபோதம்

 உபோதம் upōtam, பெ. (n.)

   பேய்ப்பசளை (மலை.);; a wild species of purslane.

     [Skt. upodaka → த. உபோதம்.]

உபோற்காதம்

உபோற்காதம் upōṟkātam, பெ. (n.)

   பாயிரம் (தொல். பாயி. விருத். பக். 16);; introduction, preface.

     [Skt. upodghata → த. உபோற்காதம்.]

உப்பகாரம்

 உப்பகாரம் uppakāram, பெ. (n.)

   உகரம் சேர்ந்த பகரம், “பு” எனும் எழுத்து; to letter “pu”

     [உ+பகாரம் -(ப்+உ-பு]

உப்பக்கம்

உப்பக்கம் uppakkam, பெ. (n.)

   1. உந்தப்பக்கம்; yonder, where the person addressed is, or that (intermedia);

 side.

     “உப்பக்க நோக்கி” (வள்ளுவமா. 21.);.

   2. முதுகு back

     “ஊழையு முப்பக்கங்காண்பர்” (குறள், 620);

   பின்பக்கம்; back or hind side. (செ.அக.);

மறுவ உப்பால். வெரிந்:

     [உ + பக்கம்.]

உப்பங்கழி

உப்பங்கழி uppaṅgaḻi, பெ. (n.)

   1. காயல்; backwater.

   2. உப்பளம் (வின்.); salt-pan. (W.);. (செ.அக.);.

     [உப்பு + அம் + கழி]

உப்பங்காற்று

 உப்பங்காற்று uppaṅgāṟṟu, பெ. (n.)

கடற் காற்று see breeze (செ.அக.);

     [உப்பு + அம் + காற்று.]

உப்பங்கோரை

உப்பங்கோரை uppaṅārai, பெ. (n.)

   உவர் நிலத்தில் முளைப்பதான கைப்புக் கோரை (M.N.A.D II,170);; a bitter sedge that grows only by the side of salt marshes.

     [உப்பு + அம் + கோரை.]

     [P]

உப்பங்கோரை

உப்பசம்

உப்பசம் uppasam, பெ. (n.)

   1. ஈளைநோய்

 asthma.

   2. வீக்கம்; or swelling, as of the abdomen

வயிறு உப்பசமாயிருக்கிறது (உ.வ.);. (செ.அக.);

தெ. உப்பசமு.

     [உப்பு → உப்பம் (தொ.பெ.);. உ → உப்பு (விங்குதல்); _ உப்பசம்.);

உப்பட்டம்

உப்பட்டம் uppaṭṭam, பெ. (n.)

   1. உப்புக்குட்டி மரம்; while mangrove

   2. சிறுவர் விளையாட்டு வகை; children’s game.

ம. உர்ப்பம்.

     [உப்பு + ஆட்டம் – உப்பாட்டம் → உப்பட்டம் உப்புப் பொதியைச் சுமப்பது போன்ற ஆட்டம்]

உப்பட்டி

 உப்பட்டி uppaṭṭi, பெ. (n.)

அரிக்கட்டு (யாழ்ப்.);. sheaf.

     [உ → உப்பு → உப்பட்டி ஒன்றின் மேல் ஒன்றாக வைத்து உயர்த்திக் கட்டும் கட்டு.]

உப்பட்டு

உப்பட்டு uppaṭṭu, பெ. (n.)

   1. போளிப்பணிகாரம் cake made of wheat flour enclosing it boiled with dhal and Sugar or jaggery. (அ.ஆக.);.

     [உள் → உப்பட்டு (உட்பகுதியில் அதாவது நடுவில் இனிப்பு வைத்துச் சுடப்பட்ட பணிகாரம்.);]

உப்பந்தரவை

 உப்பந்தரவை uppandaravai, பெ. (n.)

   உவர் நிலம்; saline soll. (செ.அக.);

     [உப்பு + அம் + தரவை, தரவை = தரிகநிலம்.]

உப்பனாறு

உப்பனாறு uppaṉāṟu, பெ. (n.)

   கடலிலிருந்து எதிர்த்துப் பெருகிய உவர்நீருள்ள ஆறு (அசுவசா. 147);; back-water, regarded as a river of salt water. (செ.அக.);.

     [உப்பு → உப்பன் + ஆறு.]

உப்பமை-த்தல்

உப்பமை-த்தல் uppamaittal,    4 செ.குன்றாவி, (v.t.)

   உப்பு விளைத்தல்; to produce salt (செ.அக.);.

     [உப்பு + அமை.]

உப்பமைப்போர்

 உப்பமைப்போர் uppamaippōr, பெ. (n.)

   உமணர் (திவா.);; salt manufacturers, dwellers in maritime tracts (செ.அக.);.

     [மறுவ, உப்பளவர், கழியர்;

உப்புச் செய்வோர், உப்பாரவர், அளவர்.]

உப்பம்பருத்தி

உப்பம்பருத்தி uppambarutti, பெ. (n.)

   பருத்தி வகை; Indian cotton plant. M.sh. Gossypium herbaceum (G.sm.D.l.i 226);. (செ.அக.);.

     [உ → உப்பம் + பருத்தி]

உப்பரம்

 உப்பரம் upparam, பெ. (n.)

   வயிற்றுப் பொருமல்; flatulent distension of the abdomen, tympanites (செ.அக.);.

தெ. உப்பரமு

     [உப்பு → உப்பரம்]

உப்பரவர்

உப்பரவர் upparavar, பெ. (n.)

   1. குளமுதலிய அகழுந் தெலுங்கள்; a Telugu caste who are usually tank and well diggers, and road-workers, and who ordinarily bear the title mestin

   2. குறவருள் ஒரு வகுப்பார்; a branch of Kuravās who deal in karu-weppilafand style themselves Chetties. (செ.அக.);

தெ. உப்பர.

     [உ → உப்பரம் → உப்பரவர்]

உப்பரி

உப்பரி uppari, பெ. (n.)

   1. மிகை மிகுதி; excess

   2. மேற்படல்;   உயர்தல்; heightening

     [உப்பு → உப்பரி]

உப்பரிகாண்(ணு)-தல்

உப்பரிகாண்(ணு)-தல் upparikāṇṇudal,    12 செ.கு.வி (v.t.)

   அளவு மிகுந்து காணுதல்; to swell, increase in quantity, as old raw rice in boiling (செ.அக.);.

   க.. பட உப்பரிசு;தெ. உப்பரின்சு

     [உ→ உப்பு → உப்பரி + காண்(ணு);-தல், உப்பரி = மேற்படுதல், மிகுதல், உப்பரி – உபரி எனத் திரிந்தது.]

உப்பரிகை

உப்பரிகை1 upparigai, பெ. (n.)

   மேல்மாடம்; uppe storey

     “ஆடகப்புரிசை யுப்பரிகை” (மச்சபு. நைமிசா. 2.);.

   ம. உப்பரிக்க க. உப்பரிகெ;தெ. உப்பரிக

     [உ → உப்பரி → உப்பரிகை. உப்பரி = மேற்படுதல், மேற்கட்டடம்.)

உப்பர்

 உப்பர் uppar, பெ. (n.)

உப்பமைப்போர் பார்க்க;see uppamaippor (செ.அக.);

     [உப்பு → உப்பர்.]

உப்பறுகு

 உப்பறுகு uppaṟugu, பெ. (n.)

   உவர் நிலத்துள்ள); ஒருவகை யறுகு (சங்.அக.);; species of Bermuda-grass growing in maritime tracts (செ.அக.);.

     [உப்பு + அறுகு.]

உப்பல்

 உப்பல் uppal, பெ. (n.)

பொறாமை, அழுக்காறு:

 envy.

அவன் உப்பல் எடுத்தவன். (த.வ.);

     [உப்பு(தல்);-(மனம்வெதும்பி பெருமூச்சு விடுதல்);- உப்பல்]

 உப்பல் uppal, பெ. (n.)

   ஊதிப் பருத்தல்; distension, flatulence,

க., தெ. து., பட. உப்பு.

     [உ → உப்பு (உப்புதல்); → உப்பல்.]

உப்பளநீலம்

உப்பளநீலம் uppaḷanīlam, பெ. (n.)

   ஒருவகை நீலமணி; variety of sapphire (S.l.I.ii. 204,63);. (செ.அக.);.

     [உப்பு → உப்பளம் → நீலம்]

உப்பளம்

உப்பளம் uppaḷam, பெ. (n.)

   1. உப்புவிளை நிலம் (பிங்.);; salt-pans, 2 கழிநிலம் (பிங்.);;

 saline soil. (செ.அக.);

   ம. உப்பளம்;   க. உப்பள;   குட உப்பாலெ;தெ. உப்பளமு.

     [உப்பு + அளம், அளம் = செறிவு, உப்புச் செறிந்த நிலம்.]

உப்பளறு

 உப்பளறு uppaḷaṟu, பெ. (n.)

   களிமண்ணும் உப்புமண syri ssolis semiflsvih (m.m);; soil containing clay and sand impregnated with alkaline matters, generally found along the coasts (செ.அக.);

உப்பளவன்

 உப்பளவன் uppaḷavaṉ, பெ. (n.)

உப்பு விளைப்போன் salt-maker.

   ம. உப்பளவன்;க. உப்பார.

     [உப்பு_அள(ம்);_அன்.]

உப்பளவர்

 உப்பளவர் uppaḷavar, பெ. (n.)

   நெய்தல் நில மக்கள்; dwellers in martime tracts (அ.ஆக.);

     [உப்பு + அளம் + அர்]

உப்பானி

 உப்பானி uppāṉi, பெ. (n.)

உப்புச் சுமத்தல் பார்க்க;see uppu.c-cபாatal

அவன் உப்பானி துக்குகிறான் (செ.அக.);

ம. உப்புத்துக்குதல், உப்புமுட்டை

     [உப்பு → உப்பானி]

உப்பாயம்

உப்பாயம் uppāyam, பெ. (n.)

   உப்புவரி; salt tax (S.l.l.ii, 115.);. (செ.அக.);.

     [உப்பு + ஆயம்.]

உப்பாரக்காரன்

 உப்பாரக்காரன் uppārakkāraṉ, பெ. (n.)

சுண்ணாம்பு பூசும் வேலைக்காரன் (சங்.அக.); one who plasters a wall, who rubs mortar. (செ.அக.);.

     [உப்பு → உப்பாரம் + காரன். உப்பு + அனம் – உப்பளம் → உப்பாளம் – உப்பாரம். உப்புவிளைப்போர் கடற்கிளிஞ்சில், கண்ணாம்பும் விற்றதால், காலப்போக்கில் சொல் இப்பொருள் பெற்றது.]

உப்பாறு

 உப்பாறு uppāṟu, பெ. (n.)

   காட்டாறு; country stream, usu, dry except in the rainy season. (Tinn.);. (செ.அக..);

     [உப்பு + ஆறு, உருப்புதல் → உப்புதல் = உலர்தல், விரைந்தோடி

வறண்டு போதல்.]

உப்பால்

உப்பால் uppāl, பெ. (n.)

   1. உந்தப் பக்கம்; the side near person addressed, intermediate side.

   2. மேலிடம்; upper of further region.

     “உப்பாலுயர்ந்த உலகம் புகும்” (நான்மணி. 27.);.

   3. முதுகு back

     [உ + பால்.]

உப்பி

 உப்பி uppi, பெ. (n.)

   செவ்வகத்தி; scarlet, flowered Cessabame.

     [உருப்பு → உப்பு → உப்பி. உருப்பு = எரிதல், சிவப்பு.]

உப்பிசம்

 உப்பிசம் uppisam, பெ. (n.)

உப்பசம் பார்க்க see Uppašam.

     [உப்பு → உப்பசம் → உப்பிசம் (கொ.வ.);.]

உப்பிஞ்சி

உப்பிஞ்சி uppiñji, பெ. (n.)

   இஞ்சிவகை; a kind of ginger (S.l.l.ii 299);. (செ.அக.);.

     [உப்பு + இஞ்சி]

உப்பிடு-தல்

உப்பிடு-தல் uppiḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   உப்பிட்ட உணவளித்தல்; to turnish food seasoned with salt

உப்பிட்டவரை உள்ளளவும் நினை. (செ.அக.);.

     [உப்பு + இடு.]

உப்பிட்டது

உப்பிட்டது uppiṭṭadu, பெ. (n.)

   1. ஊறுகாய்; pickles

   2. உப்பிட்டுப் பாதுகாத்த பண்டம்; that whichis salted and preserveds (செ.அக.);.

     [உப்பு + இட்டது – உப்பிட்டது.]

உப்பிட்டவர்

 உப்பிட்டவர் uppiṭṭavar, பெ. (n.)

   உணவளித்தவர்; one who offered food, help [உப்பு + இட்டவர்.]

உப்பிதம்

 உப்பிதம் uppidam, பெ. (n.)

   கூத்தின் வகை (பிங்.);; a kind of dance.

     [உப்பு → உப்பிதம்.]

உப்பிற்குஉறுதி

 உப்பிற்குஉறுதி uppiṟkuuṟudi, பெ. (n.)

   கட்டுக்கொடி; a creeper, smilax pseudochina.

     [உப்பிற்கு + உறுதி. மருத்துவப்பயன் கருதியது.]

உப்பிலாங்கொடி

 உப்பிலாங்கொடி uppilāṅgoḍi, பெ. (n.)

   இண்டங்கொடி; a species of stinking swallow-wort. (செ.அக.);.

     [உப்பிலாம் + கொடி.]

     [P]

உப்பிலாங்கொடி

உப்பிலி

உப்பிலி1 uppili, பெ. (n.)

   உப்பில்லாதது; that which is without salt

     “உப்பிலிப்புழுக்கல்” (சீவக. 2984.);. (செ.அக.);.

ம. உப்பில, உப்பிலி

     [உப்பு + இலி]

 உப்பிலி uppili, பெ. (n.)

   1. புலிதொடக்கி (மலை.);; tiger-stopper, 2.இரண்டு;

 species of sensitive tree (W.);.

   3. ஈர்கொல்லிக் கொடி (மலை);; a species of stinking swallow-wort.

     [உப்பு + இலி.]

 உப்பிலி3 uppili, பெ. (n.)

   ஒருர்; name of a village.

     [ஒப்பிலி → உப்பிலி. ஒப்பிலி பார்க்க;see appilli]

உப்பிலிகம்

 உப்பிலிகம் uppiligam, பெ. (n.)

   கருப்புச் சோளம்; back millet.

     [உருப்பு (வேதல்); → உப்பு → உப்புலிகம் எரிந்து கருத்துப் போனாற் போல் கருநிறம் பெற்றதால் கறுப்புச் சோளம் உப்பிலிகம் எனப்பட்டது.]

உப்பிலிடு

 உப்பிலிடு uppiliḍu, பெ. (n.)

   உப்பிட்ட பொருள்; pickles, that are sailed. (செ.அக.);

     [உப்பு + இல் + இடு.]

உப்பிலிப்பானை

பppl-p-pra.

பெ. (n.);

   உப்பின்றி உண்ணும் கைம்மை நோன்பு; observance in which widows in mourning abstain from salted food. (Tinn.); (செ.அக.);.

     [உப்பு + இலி_+ பானை. பாரனை → பானை.]

உப்பிலியன்

 உப்பிலியன் uppiliyaṉ, பெ. (n.)

   உப்பமைக்கும் பணியாளன்; member of a caste of salt-workers. (செ.அக.);.

க. உப்பலிக.

     [உப்பளன் → உப்பிலியன் (கொ.வ.);.]

உப்பிலியப்பன்

 உப்பிலியப்பன் uppiliyappaṉ, பெ. (n.)

ஒப்பிலியப்பன் பார்க்க;see oppliyappan (அ.ஆக.);.

     [நூற்றெட்டுத் திருப்பதிகளுளொன்றாகிய திருவிண்ணகரிற் கோயில் கொண்ட திருமால், ஒப்பிலியப்பன் என்பது, ஒப்பில் லாதவனாகிய திருமாலைக் குறித்தது. ஒப்பு + இலி = ஒப்பிலி → உப்பிலி (கொ.வ.);, உப்பிலி + அப்பன் கன்னடநாட்டில் இச்சொல் ஒபிலி, ஒபிலியப்பன் எனத் திரிந்துள்ளது. தெலுங் கில் ஒபிளிகான், ஒபிளிகாடு எனத் திரிந்துள்ளது.]

உப்பில்லாப்பேச்சு

 உப்பில்லாப்பேச்சு uppillāppēccu, பெ. (n.)

   பயனற்ற உரையாடல்; insipid discourse.

     [உப்பு + இல்லா + பேச்சு.]

உப்பீண்டுவரி

 உப்பீண்டுவரி uppīṇṭuvari, பெ. (n.)

   உப்பு நிறைந்த கடல்; sea, as full of salt (அ.ஆக.);

     [உப்பு + ஈண்டு + உவரி]

உப்பு

உப்பு1 uppu, பெ. (n.)

   1. கடல் நீரை ஆவியாக்கி உணக்கிய படிக வடிவ உவர்ப்புடைய வெண் சிறுகல் (குறள், 1302.);; salt alkali.

   2. கறியுப்பு, வெடியுப்பு, இந்துப்பு, ஒட்டுப்பு, அமரியுப்பு; each of five kinds of salt said to be used by alchemists.

   3. உவர்ப்பு (பிங்.);; saltness.

   4. உவர்க்கடல்; sea of salt water.

     “உப்பினிற்கயல் பொறித்துள பதாகையார்” (இரகு திக்குவி.125);.

   5. இனிமை; sweetness, deliciousness.

     “கூடலிற்றோன்றிய வுப்பு” (குறள் 1328.);.

   6. மகளிர் விளையாட்டு en soas (திவா.);; a game of women.

   ம. க., தெ. து.. பட, கொர., இரு குரும், குட. உப்பு;   கை. உபு;   கோ., து. உப்;   கொலா. சுப. நா. சுப்;   கோண். ஓவர்;   பர். சுப;கட. கப, சுப்பு. குரு. பெக், மா. பெக் பிரா. பே.

     [உ → உப்பு. உப்புதல் = உயர்தல், மேலெழும்பித்தோன்றுதல், படுதல்.]

உப்பு வயலில் கடல் நீர் ஆவியான பின் மேல் திரண்ட படிகத் துகளின் திரட்சி நோக்கி உப்பு எனப் பெயர் பெற்றது.

 உப்பு2 uppu, பெ. (n.)

   1 அன்பு; love 2, எல்லை (அ.ஆக.);;

 demarcation;

 border.

     [உ-உப்பு. உணவில் உப்பு சேர்த்தபின் சுவை மிகுதலின் இனி மைப் பொருள் பெறுவதாயிற்று. இனிமைப் பொருள் அன்புப் பொருளிலும், குறிப்பிட்ட அளவுக்கேற்ப உப்பின் சுவை வரையறை பெறுதலின் எல்லைப் பொருளிலும் விரிந்தது.]

 உப்பு3 uppudal,    15 செ.கு.வி. (v.i) .

   1. பருத்தல் (வேதா. சூ, 67, உரை);; to become big, as a seed;

 to bloat, puff up, as the abdomen by wind, from indigestion.

   2. பொங்குதல்; to raise, as leaven. (செ.அக.);.

   ம. உப்புக;   க. உப்பு;   தெ. உப்பரின்சு, உப்பு;கோத, துட உப். து. உப்புவி.

     [உ → உப்பு → உப்புதல், உப்புதல் = உயர்தல், பருத்தல், வீங்குதல்.]

உப்புக்கசனை

 உப்புக்கசனை uppukkasaṉai, பெ. (n.)

உப்பூறணி பார்க்க. (வின்.); see பppiram (செ.அக.);.

     [உப்பு + கசனை. கசி → கசனை.]

உப்புக்கடலை

 உப்புக்கடலை uppukkaḍalai, பெ. (n.)

   உப்பும் மஞ்சட் பொடியும் தூவி வறுத்த கடலை (இ.வ.);; parched bengal-gram seasoned with salt and turmeric powder. (செ.அக.);.

     [உப்பு + கடலை.]

உப்புக்கடல்

உப்புக்கடல் uppukkaḍal, பெ. (n.)

   1. உப்பு மிகுதியான கடல் (பிங்.);; ring-shaped sea of salt water.

   2. சாக்கடல்; the Salt Sea, the old name for the Dead Sea (விவிலி. ஆதி. 14:3);. (செ.அக.);

ம. உப்புகடல்.

     [உப்பு + கடல்.]

உப்புக்கட்டி

உப்புக்கட்டி uppukkaṭṭi, பெ. (n.)

   1. உப்புக்கல்; grain of salt.

   2. சிறுகட்டுக் கொடி (மலை);; kind of milky medicinal creeper, useful as a remedy for dysentery. (செ.அக.);.

     [உப்பு + கட்டி.]

உப்புக்கட்டு

உப்புக்கட்டு1 uppukkaṭṭudal,    12 செகுன்றாவி, (v.t.)

   குழந்தையை முதுகில் தூக்கி விளையாடுதல்; to carry a child on one’s back and cry out merrily, ‘salt for sale’ in a game

     [உப்பு கட்டுதல், உப்பு முட்டையை முதுகிற் சுமந்தவாறு பண்டமாற்று வாணிகம் செய்த பழங்காலச்சூழலில் தோன்றிய சொல்லாட்சியாதலின் குழந்தையை முதுகில் சுமந்து விளையா டும் விளையாட்டைக் குறித்தது.]

 உப்புக்கட்டு2 uppukkaṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   சடுகுடு விளையாட்டிற்கு மணல் குவித்தல்; to make a sand goal in the game of

     “Palinjadgudu”.

     [உப்பு + கட்டு-தல். உப்புதல் உயர்தல், உப்புக் கட்டுதல், மணலை உயரக் கட்டுதல்.]

உப்புக்கண்டம்

 உப்புக்கண்டம் uppukkaṇṭam, பெ. (n.)

   உப்பூட்டிக் காயவைத்த இறைச்சித்துண்டு அல்லது மீன்; piece of salted meat, or salt fish. (செ.அக.);

     [உப்பு + கண்டம்.]

உப்புக்கந்தம்

 உப்புக்கந்தம் uppukkandam, பெ. (n.)

உப்புக் கோடு பார்க்க;see uppu-k-kodu (செ.அக.); [உப்பு + கந்தம்]

உப்புக்கரி-த்தல்

உப்புக்கரி-த்தல் uppukkarittal, ,

   4

செ.கு.வி. (v.i.);

.

   1. உவர்ப்பு மிகுதல்; to have an intensely saline taste.

   2. உப்புலர்த்தர்; to dry salt (செ.அக.);

     [உப்பு + கரித்தல்.]

உப்புக்கரிநீர்முள்ளி

 உப்புக்கரிநீர்முள்ளி uppukkarinīrmuḷḷi, பெ. (n.)

   கழுதை முள்ளி (L.);; holly-leaved bears-breech. (செ.அக.);.

     [உப்பு + கரி + நீர்முள்ளி]

உப்புக்கறி

 உப்புக்கறி uppukkaṟi, பெ. (n.)

   உப்பிட்டு உணக்கிய கிழங்கு அல்லது பழத்துண்டுகளின் வறுவல்; curry of fruits or tubers salted and fried. (சேரநா.);.

     [உப்பு + கறி, கறி = மிளகு, மிளகிட்டுச் செய்தது.]

உப்புக்கலிகெளுத்தி

 உப்புக்கலிகெளுத்தி uppukkalikeḷutti, பெ. (n.)

   உப்பில் ஊற வைத்த மீன் வகைகள்; aricus faloarius.

     [உப்பு+கல்+கெளுத்தி]

உப்புக்கல்

உப்புக்கல் uppukkal, பெ. (n.)

   1. உப்புத்துண்டு; lump or pinch of salt. கறிக்கு ஓர் உப்புக்கல் வேண்டும்.

   2. ஒரு வகைக் கடற்கல்; fine-grained grit stone formed by the induration of the upper surface of the sea bed. (Loc.);. (செ.அக.);.

     [உப்பு + கல்.]

உப்புக்கழி

 உப்புக்கழி uppukkaḻi, பெ. (n.)

உப்பங்கழி பார்க்க;see uppangali (செ.அக.);. [

     [உப்பு + கழி]

உப்புக்காகிதம்

 உப்புக்காகிதம் uppukkākidam, பெ. (n.)

   மரங்களை மெருகிடுவதற்கு உதவும் ஒருவகைத் தாள்; sand paper, உப்புத்தாள் பார்க்க;see upputtai (செ.அக.);.

     [உப்பு + காகிதம்.]

உப்புக்காசு

உப்புக்காசு uppukkācu, பெ. (n.)

   பழைய வரிவகை (S.l.l. vii. 41);; ancient tax. (செ.அக.);.

     [உப்பு + காசு.]

உப்புக்கீரை

 உப்புக்கீரை uppukārai, பெ. (n.)

   கீரைவகை; common Indian saltwort. (செ.அக.);.

     [உப்பு + கீரை. உவர்ப்புள்ள கீரை.]

உப்புக்குஞ்சம்

 உப்புக்குஞ்சம் uppukkuñjam, பெ. (n.)

   கருஞ்சீர்கம்; black cumin.

     [உப்பு + குஞ்சம்.]

உப்புக்குட்டி

உப்புக்குட்டி1 uppukkuṭṭi, பெ. (n.)

   1. கடற்கரையிலுள்ள ஒருவடிக மரம்; white mangrove. (m,m.);.

   2. உப்பு மரவை; wooden vessel with a lid, for keeping salt (செ.அக.);.

ம. உப்புகுத்தி.

     [உப்பு + குட்டி. குற்றி → குட்டி (சிறியது);.]

 உப்புக்குட்டி2 uppukkuṭṭi, பெ. (n.)

   1 சிறுவர் விளையாட்டுகளுள் ஒன்று; game of children,

   2. உப்புக்கட் பார்க்க;see uppu-k-kattu.

     [(உப்புக்கட்டி → உப்புக்குட்டி]

உப்புக்குத்தி

உப்புக்குத்தி uppukkutti, பெ. (n.)

   ஒரு வகைமீன்; a kind of fish.

 உப்புக்குத்தி2 uppukkutti, பெ. (n.)

   பறவை வகை; a kind of bird. (W.);. (செ.அக.);.

     [உப்பு + குத்தி.]

     [P]

உப்புக்குத்தி

உப்புசம்

உப்புசம் uppusam, பெ. (n.)

   1. வீக்கம்; swelling. உப்பசம் பார்க்க;see uppasam

     [உப்பு → உப்புதல் → உப்புசம்]

உப்புச்சீடை

 உப்புச்சீடை uppuccīṭai, பெ. (n.)

   உப்புச் சுவையுள்ள சீடைப்பணிகாரம்; small balls of pastry fried and salted. (செ.அக.);.

     [உப்பு + சீடை]

உப்புச்சுன்னம்

 உப்புச்சுன்னம் uppuccuṉṉam, பெ. (n.)

   மருந்து வகை (தமிழரசு.);; a kind of medicinal drug. (செ.அக.);.

     [உப்பு + சுன்னம்.]

உப்புச்சோளம்

உப்புச்சோளம் uppuccōḷam, பெ. (n.)

   சோள வகை (விவசா. 3.);; a kind of maize. (செ.அக.);.

     [உப்பு + சோளம்.]

உப்புடாலி

 உப்புடாலி uppuṭāli, பெ. (n.)

   கடல் கொழிஞ்சிச் செடி a medicinal plant, species of citrus – ruella ringin;     [உப்பு + உடலி → உப்புடலி → உப்புடாலி]

உப்புத்தண்ணீர்

உப்புத்தண்ணீர் upputtaṇṇīr, பெ. (n.)

   1. உப்புநீ கடல் நீர் போல் உப்புள்ள நீர்; salt brackish wate opp to- நல்ல தண்ணீர்.

   2. உப்பு இட்டுக் கலக்கிய நீ water in which salt is dissolved. (செ.அக.);.

ம. உப்புநீர்

     [உப்பு + நீர்.]

உப்புத்தரவை

 உப்புத்தரவை upputtaravai, பெ. (n.)

உவர் நில saline soil. (W);. (செ.அக.);.

க. உப்புநெல.

     [உப்பு + தரவை.]

உப்புத்தரை

 உப்புத்தரை upputtarai, பெ. (n.)

உப்புத்தரயை பார்க்க;see upputtarawal (செ.அக.);.

     [உப்பு + தரை. தரவை → தரை]

உப்புத்தள்ளல்

 உப்புத்தள்ளல் upputtaḷḷal, பெ. (n.)

   பத்தியத்தில் உப் நீக்கல்; the removal of the salt from diet. de cleridin

     [உப்பு + தள்ளல்.]

உப்புத்தாள்

 உப்புத்தாள் upputtāḷ, பெ. (n.)

சொர சொரப்பா ஆக்கிய தாள்

 sand paper (loc. (செ.அக.);

     [உப்பு + தாள்.]

உப்புத்திரி

 உப்புத்திரி upputtiri, பெ. (n.)

   மலங்கழிக்க ஏற்றுந்தி; twist dipped in a preparation of salt, to serv as a rectal injection for a child. (W,);. (செ.அக.);

     [உப்பு + திரி.]

உப்புத்துக்கு-தல்

உப்புத்துக்கு-தல் uppuddukkudal, பெ. (n.)

   5 செ.குன்றாவி. (v.t.);

உப்புக்கட்டு1 பார்க்க see பppu-k-kattu. (செ.அக.);.

     [உப்பு + துக்கு-தல்.]

உப்புநீக்கி

 உப்புநீக்கி uppunīkki, பெ. (n.)

காட்டு மருக்கொழுந்து

 a species of mad’s love

     [உப்பு+ நீக்கி]

உப்புநீர்

 உப்புநீர் uppunīr, பெ. (n.)

உப்புத்தண்ணி பார்க்க;see սppu-t-tanոir

     [உப்பு + நீர்.]

உப்புப்படு-தல்

உப்புப்படு-தல் uppuppaḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   ;   உப்புவிளைதல்; to form as salt by natural process (W.);.

   2. உப்புத்தன்மையடைதல்; to become salin (செ.அக.);.

     [உப்பு + படு-தல்.]

உப்புப்பண்டம்

 உப்புப்பண்டம் uppuppaṇṭam, பெ. (n.)

   உப்புச் சுவையுள்ள உணவுப்பண்டம்; sated food. (செ.அக.);.

     [உப்பு + பண்டம்.]

உப்புப்பயிர்

 உப்புப்பயிர் uppuppayir, பெ. (n.)

   உப்பளங்களின் பாத்திகளிலே கடல் நீரைப் பாய்ச்சுவதால் விளைந்த உப்பு; crop of salt. (செ.அக.);

     [உப்பு + பயிர்]

உப்புப்பற்று-தல்

உப்புப்பற்று-தல் uppuppaṟṟudal,    15 செ.கு.வி. (v.i.)

   உவர்பிடித்தல்; to become saline, as land. (செ.அக.);.

     [உப்பு + பற்று-தல்.]

உப்புப்பாத்தி

உப்புப்பாத்தி uppuppātti, பெ. (n.)

   உப்பு விளைதற்கிட மானபாத்தி; beds in salt-pans.

உப்புப் பாத்தியிலெ வெள்ளிய உப்பு விற்கும் அளவர் (மதுரைக். 117, உரை..);. (செ.அக.);.

ம. உப்புப்பாத்தி. க. உப்புகட்டே

     [உப்பு + பாத்தி]

உப்புப்பார்-த்தல்

உப்புப்பார்-த்தல் uppuppārttal,    11 செ.குன்றாவி, (v.t.)

   சுவைபார்த்தல்; to try seasoning, as of curry by the taste. (செ.அக.);.

     [உப்பு + பார்த்தல்.]

உப்புப்பால்

 உப்புப்பால் uppuppāl, பெ. (n.)

   ஈன்றணிமையுள்ள தாயின்பால்; colostrum, the first milk secreted in the breasts after childbirth (செ.அக.);.

     [உப்பு + பால்.]

உப்புப்புல்

 உப்புப்புல் uppuppul, பெ. (n.)

   உவர்நிலத்துண்டாகும் புல்; grass growing on saline soils. (W.);. (செ.அக.);.

     [உப்பு + புல்].

உப்புப்பூ-த்தல்

உப்புப்பூ-த்தல் uppuppūttal,    4 செ.கு.வி. (v.i.)

   1. உப்புண்டாதல்; to form, as salt or a laminal

   2. உப்புப்படிதல்; to form, a coating salt on any surface.

   3. உடலிலுப்புப், படர்தல்; to form, as concretion on the skin, from perspiration (W.);.

   4. உப்பங்காற்றாலிற்றுப்போதல்; to crumble, as masonry because of weathering by a salt atmosphere,

     [உப்பு +_பூ-த்தல்.]

உப்புப்பொரி-தல்

உப்புப்பொரி-தல் uppupporidal,    4 செ.கு.வி. (v.i.)

உப்புப்பூ-த்தல் பார்க்க;see uppu-p-pப் (செ.அக.);.

     [உப்பு + பொரிதல்.]

உப்புமணி

உப்புமணி uppumaṇi, பெ. (n.)

   1. உப்புமண் பார்க்க;see uppu-man (ஆ.அக.);.

   2. சித்தர்கள் பயன்படுத்திய

   தாகக் கருதப்படும் கல்லுப்பு மணி; a string of beads as hard of Ivory made of salt consolidated by a peculiar crocess known to siddhar’s,

     [உப்பு + மணி.]

உப்புமண்

உப்புமண் uppumaṇ, பெ. (n.)

   1. உவர்நிலம்; Saline soll, salt earth.

   2. உடம்பில் உப்புஙப பூத்தல்; formation of concretion on the skin, from perspiration. (செ.அக.);.

க. உப்புமண்ணு

     [உப்பு + மண்]

உப்புமந்தம்

 உப்புமந்தம் uppumāndam, பெ. (n.)

   குழந்தைகளுக்கு வயிறு உப்புசத்தாலுண்டாகும் நோய்; puting of the abdomen, a disease of children. (செ.அக.);.

     [உப்பு + மாந்தம். மந்தம் → மாந்தம்]

உப்புமா

உப்புமா uppumā, பெ. (n.)

   1. ஒருவகைச் சிற்றுண்டி; salted confection of flour or meal.

   2. உடம்பற் பூக்கும் உப்பு (பதார்த்த 634. உரை.);; beriberi, producing a sallow colour all over the body. (செ.அக.);.

ம. உப்புமா.

     [உப்பு + மா மாவு – மா.]

உப்புமாறு

உப்புமாறு2 uppumāṟudal,    5 செ.கு.வி. (v.i.)

   உப்பு விற்றல்; to sell salt

     “உயிருண்டாகில் உப்பு மாறியுண் ணலாம்” (அஷ்டாதச பிரபந்த பக். 71);

     [உப்பு + மாறு-தல்.]

உப்புமாறு-தல்

உப்புமாறு-தல் uppumāṟudal,    5 செ.குன்றாவி, (v.i.)

   ஏமாற்றுதல்; to cheal. (செ.அக.);.

     [உப்பு + மாறு. பண்டமாற்று வணிகரும் உப்புவிற்கும் உமண ரும் உப்பின் கொள்ளளவுக்குச் சமமாக நெல், பயறு போன்ற தவசங்களைப் பெறுவது நாளடைவில் ஏமாற்றுவதாகக் கருதப் பட்டதால் இச்சொல் இப்பொருளுக்குரியதாயிற்று.]

உப்புமிளகி

உப்புமிளகி uppumiḷagi, பெ. (n.)

   ஐந்து மாதத்தில் விளையும் நெல்வகை (விவசா. 1);; a kind of paddy maturing in five months. (செ.அக.);

     [உப்பு + மிளகி. மிளகு → மிளகி.]

உப்புமூலிகை

 உப்புமூலிகை uppumūligai, பெ. (n.)

   உப்புச் சத்துள்ள மூலிகைகள்; the herbaseous plants containing the essence of salt

எருக்கு, துத்தி, குப்பைமேனி, வாழை, முருங்கை, ஊமத்தை நாயுருவி, தென்னோலை, அறுகு, பிரண்டை, எள், பூவரசு.

     [உப்பு + மூலிகை]

உப்புமெழுகு

 உப்புமெழுகு uppumeḻugu, பெ. (n.)

   உப்பினால் செய்த மெழுகு; medicinal wax-like preparation of salve obtained by special process from the common salt

     [உப்பு + மெழுகு.]

உப்புரிசை

 உப்புரிசை uppurisai, பெ. (n.)

   உப்பரிகை (ஆ.அக.);; upper storey.

     [உப்பு → உப்புரிகை → உப்புரிசை]

உப்புறை-த்தல்

உப்புறை-த்தல் uppuṟaittal,    4 செ.கு.வி. (v.i.)

   1. உப்புச் சுவை காணுதல்; to be well flavoured with salt

   2. உப்புக் கரித்தல்; to be over-flavoured with salt. (செ.அக.);.

     [உப்பு + உறை-த்தல்.]

உப்புல்

 உப்புல் uppul, பெ. (n.)

   செங்கள்ளி; red species of rate – spurge.]

     [உருப்பு (சிவப்பு); → உப்பு → உப்புல்]

உப்புவாடி

 உப்புவாடி uppuvāṭi, பெ. (n.)

   உப்புக் கொட்டும் மேடை; platform on which salt is heaped up (mm);. (செ.அக.);.

ம. உப்புசாப்ப (உப்பு வைக்கும் அறை.);.

     [உப்பு + வாடி வழங்குதல் = புழங்குதல் வழங்கு → தெ.வாடு (பயன்கொள் புழங்கு);, தெ. வாடு → த வாடு → வாடி ஒ.நோ. மரவாடி]

உப்புவாணிகன்

உப்புவாணிகன் uppuvāṇigaṉ, பெ. (n.)

   1. உப்பு விற்கும் குடியினன் (சூடா);; member of a caste of salt vendors.

   2. உப்பளவர் பார்க்க;see uppalavar

     [உப்பு + வாணிகன்.]

உப்புவாயு

 உப்புவாயு uppuvāyu, பெ. (n.)

உப்பங்காற்று பார்க்க;see uppankårru.

     [உப்பு + வாயு.]

உப்பூரிகுடிகிழார்

 உப்பூரிகுடிகிழார் uppūriguḍigiḻār, பெ. (n.)

   உருத்திரசன் உருத்திரசன்மர் தந்தை; father of Uruttirasanmar. (அ.ஆக.);,

     [உப்பூர் + குடி – உப்பூரிகுடி + கிழார்]

உப்பூறணி

உப்பூறணி uppūṟaṇi, பெ. (n.)

   1. உப்புச் செறிவு; being impregnated with salt as saline soil.

   2. உவர்நிலம் (அ.ஆக.);; saline soil (செ.அக.);.

     [உப்பு + ஊறு + அணி.]

உப்பெடுத்தல்

 உப்பெடுத்தல் uppeḍuttal, பெ. (n.)

   நாட்டுக் கோட்டைச் செட்டியார்களில் மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட் டிற்கு உப்பும், ஒன்பான் வகைத் தவசமும், திருமண உடன்படிக்கை யெழுத ஒலையும் எடுத்துச் செல்லும் சடங்கு; ceremony among Náttukkösta chemis in which the bridegroom’s party carries to the bride’s house a basket containing salt and nine kinds of grain together with a palmyra scroll for writing the marriage contract on (செ.அக.);.

     [உப்பு + எடுத்தல்.]

உப்பேறி

உப்பேறி uppēṟi, பெ. (n.)

   1. உப்புடன் உசிலை இட்டுப் பொரித்த கிழங்கு அல்லது பழ உணங்கல் கறி,

 curry of chopped fruit or tubers well seasoned with salt, pepper and other condiments and then fried in ghee or oil.

   2. உப்புக்கறி பார்க்க;see uppu-k-ka (செ.அக.);.

ம. உப்பேறி

     [உப்பு + கறி – உப்புக்கறி → உப்பேறி = உப்புச்சுவையூட்டுவ தால் பெற்ற பெயர். இது சேர நாட்டுப் பண்டம். வறுத்துப் பேரி, வெள்ளுப் பேரி சேன உப்பேரி, சீனியுப்பேரி, சக்கயுப் பேரி, சருக்கரையுப்பேரி எனப் பல வகைப்படும்.]

உப்பை

உப்பை uppai, பெ. (n.)

   1. ஓரியற்பெயர்; a proper name.

   2. திருவள்ளுவர் உடன் பிறவிகளுள் ஒருத்தி; name of one of the reputed sisters of Tiruvalluvar, the author of the Kural

     “வயலூற்றுக் காட்டிலுப்பை” (தனிப்பா.);. (செ.அக.);.

     [உப்பு → உப்பை (உயர்ந்தவள். சிறந்தவள்.);]

உமட்டியர்

உமட்டியர்1 umaṭṭiyar, பெ. (n.)

   உமணக் குலத்துப் பெண் மக்கள்; women of the Uman caste.

     “உமட்டியரீன்ற…

     “புதல்வரொடு” (சிறுபாண். 60);, (செ.அக.);. [உம்மளம் → உம்மளன் → உம்மணன் → உமணன்- உமணத்தி –உமட்டி +அர்.]

 உமட்டியர்2 umaṭṭiyar, பெ. (n.)

   துளைச்சியர் (அக.நி.);; fisher-women (செ.அக.);.

     [உமணத்தி → உமட்டி + அர். உப்பு விளைப்பவரே மீனவராக வும் இருந்தமையை இச்சொல் காட்டுகிறது.]

உமணத்தி

 உமணத்தி umaṇatti, பெ. (n.)

   உமணப் பெண். (வின்.);; woman of the caste of salt makers. (செ.அக.); .

     [(உமண் + அத்தி]

உமணத்தியர்

 உமணத்தியர் umaṇattiyar, பெ. (n.)

   உப்பு விற்றிடும் மகளிர் (அ.ஆக.);; women of the salt sellers caste.

     [உமண் + அத்தி + அர்.]

உமணன்

உமணன் umaṇaṉ, பெ. (n.)

   1. உப்பமைக்கும் குலத்தினன் (திவா.);; member of the ancient caste of sal makers.

   2. உப்புவாணிகன்; dealer in salt

     “பல்லெருத்துமணர் பதிபோகு நெடுநெறி’ (பெரும்பாண். 65); (செ.அக.);.

     [உம்மளம் → உம்மணம் → உம்மணன் → உமணன்]

உமணர்

 உமணர் umaṇar, பெ. (n.)

   உமணன் பார்க்க;     [உமண் + அர்.]

உமண்

உமண் umaṇ, பெ. (n.)

   1. உப்பமைப்போர் குலம் (நன். 210. மயிலை.);; the caste of salt-makers.

   2. உப்புமண்; saline soil.

   3. உப்பு; salt (செ.அக.);.

     [உமணன் → உமண். ஓ.நோ. பாணன் – பாண்.]

உமண்சாத்து

உமண்சாத்து umaṇcāttu, பெ. (n.)

   உப்பு:வணிகர் கூட்டம்; group of salt sellers.

     “உமண்சாத்து இறந்த ஒழிகல் அடுப்பின்” (அக.119-8);

     [உமண்+சாத்து]

சார்த்து – சாத்து சேர்ந்து செல்லும் வணிகக் கூட்டம்

உமண்பகடு

உமண்பகடு umaṇpagaḍu, பெ. (n.)

   உப்பு வாணிகரது மூட்டை சுமந்து செல்லும் எருது (தொல்பொருள். 18. உரை);; pack-ox carrying salt (செ.அக.); .

     [உமண் + பகடு.]

உமதகி

 உமதகி umadagi, பெ. (n.)

   சணல் (மலை.);; sun hemp.

உமது

உமது umadu, பெ. (n.)

   உம்முடைய; that whic belongs to you, yours.

   2. உம்மை; yourself.

     [உம் + அது – உமது.]

உமரி

உமரி umari, பெ. (n.)

   1. ஒரு பூண்டு (மலை.);; marsh-samphire.

   2. பவளப்பூண்டு; species of glasswort

   3. நத்தை; snal. (வின்.);. (செ.அக.);.

ம. உமரி

     [(உம் + உமரி]

உமரிக்காசு

 உமரிக்காசு umarikkācu, பெ. (n.)

   பலகறை; cowry used as money. (செ.அக.);.

     [உமரி + காக]

உமரிக்கீரை

 உமரிக்கீரை umarikārai, பெ. (n.)

   கோழிப் பசளை; sea-blite,

     [உமரி + கீரை.]

உமரிச்சாரக்கட்டி

 உமரிச்சாரக்கட்டி umariccārakkaṭṭi, பெ. (n.)

   உமரியுப்பின் கட்டி; a lump of salt wort, soda. (சா.அக.);.

     [உமரி + சாரம் + கட்டி.]

உமரிச்சாரம்

 உமரிச்சாரம் umariccāram, பெ. (n.)

   உமரிப் பூண்டினின்று எடுக்கும் சத்து; saltwort soda obtained from

 the plant Umari (சா.அக.].

     [உமரி + சாரம். சாறு → சாறம் → சாரம்.]

உமரிச்சாறு

 உமரிச்சாறு umariccāṟu, பெ. (n.)

   உமரியிலையின் சாறு; juice of the leaves of the saltwort plant. (சா.அக.);.

     [உமரி + சாறு]

உமரித்தாமிரம்

 உமரித்தாமிரம் umarittāmiram, பெ. (n.)

   கருஞ் சிற்றகத்தி; paso a black variety of sasbane. (சா.அக.);.

     [உமரி + தாமிரம்]

உமரிப்பூடு

 உமரிப்பூடு umarippūṭu, பெ. (n.)

உமரி பார்க்க;see umari (சா.அக.);.

     [உமரி + பூடு. பூண்டு → பூடு.]

உமரியுப்பு

உமரியுப்பு umariyuppu, பெ. (n.)

   1. உமரிச் செடியைக் கொளுத்திய சாம்பல்; ash obtained from burning the plant (marsh-samphire);. It is an alkali or saltwort soda and is used as a mordant in medicine.

   2. அமுரியுப்பு; uric salt (சா.அக.);

     [உமரி + உப்பு]

உமர்

உமர்1 umar, பெ. (n.)

   உம்மவர்; your friends and relations.

     “உமர் கூறுநிதி கொணர்ந்து” (திருக்கோ. 268);. (செ.அக.);.

     [உம் + அவர் + உம்மவர் → உமர்]

 உமர்2 umar, பெ. (n.)

   1. குதிர்i; clay receptacle for grain (Loc.);.

   2. இக்ழ்ச்சிச் சொல்; a term of contempt (Tinn.);. (செ.அக.);.

     [உ → உம் → உமர் = உயரமாய் இருப்பது, உயர்த்துவது போன்று பழித்தல்.]

உமறுப்புலவர்

உமறுப்புலவர் umaṟuppulavar, பெ. (n.)

   சீறாப்புராண, பாடிய முகம்மதியப் புலவர்; Muhammadan Tamil poe patronized by a mussalman patron of learning Crdakkäd author of the Cirã-p-purănam, 17th C. (செ.அக.);.

     [உமறு + புலவர்.]

உமற்கடம்

 உமற்கடம் umaṟkaḍam, பெ. (n.)

தருப்பை (மலை.); darbha grass. (செ.அக.);.

     [உமல் + கடம்.]

 உமற்கடம் umaṟkaḍam, பெ. (n.)

   திரு (தருப்பை);ப்புல்; the kusa grass, the sacrificial grass.

உமலகம்

 உமலகம் umalagam, பெ. (n.)

   அரிதாரம்; orpiment (W.); (செ.அக.);.

     [உமல் → உமலகம்.]

உமலிச்சாரம்

 உமலிச்சாரம் umaliccāram, பெ. (n.)

   உமரிச்சார, பார்க்க;see umar;-c-caram (சா.அக);

     [உமலி → சாரம்.]

உமலிட்சாரம்

உமலிட்சாரம் umaliṭcāram, பெ. (n.)

   1. குடல் சீராக்கத்திற்குக் கொடுக்கப்படும் உமரியுப்பு; a vegetable salt given in cases of bowel complaints such as hernia etc.

   2. உமரிப் பூண்டினின்று எடுக்கும் சத்து; salt sort soda obtained from the plant ‘umari’.

த.வ. உமரிஉப்பு.

உமலோத்திரம்

 உமலோத்திரம் umalōttiram, பெ. (n.)

உபலோத்திரம் பார்க்க; see ubalottiram.

உமல்

உமல் umal, பெ. (n.)

   1. ஒலைப்பை; long bag of palmyra leaves or of rushes. (J.);.

   2. ஒலைக் கூடை;மீன் பிடிக்கப் பயன்படுத்தும் பனையோலைக் கூடை

 basket made of palmyra-leaf. (செ.அக.);.

ம. உமல்.

     [உமல்- உமல்.]

உமா

உமா umā, பெ. (n.)

   குன்றி (மூ.அ.);; crabs – eye (செ.அக.);.

     [உம்மி → உமா.]

 உமா1 umā, பெ. (n.)

   குன்றிமணி; crab’s eye, gold-smith’s grain.

 உமா2 umā, பெ. (n.)

   சிவை; paravathi.

உமாகடம்

 உமாகடம் umākaḍam, பெ. (n.)

   சணற்கொத்து; Sun-hem bundle. (அ.ஆக.);,

தெ. உமி

     [உமகடம் → உமாகடம், உமி போன்று உட்சாறற்று வெளிறியது.]

உமாகட்கம்

 உமாகட்கம் umākaṭkam, பெ. (n.)

உமற்கடம் பார்க்க; see umarkadam.

உமாக்கலைக்கியானம்

 உமாக்கலைக்கியானம் umākkalaikkiyāṉam, பெ. (n.)

   மலைமகளா (பார்வதியா);ற் கூறப்பட்டதாகச் சொல்லப்படுமோர் வடமொழி நூல்; arts and sciences said to have been revealed by Parvathi, wife of god Sivan.

உமாக்குருவி

 உமாக்குருவி umākkuruvi, பெ. (n.)

   வான் வலப் (ஆகாய); பறவை; a bird of paradise paradisea.

     [உமா + குருவி.]

குள் → குரு → குருவி = சிறு பறவை.

உமாதகி

உமாதகி umātagi, பெ. (n.)

   1. உமதகி பார்க்க; see umatagi.

   2. ஒரு வகை (இரசதாளி);க் கரும்பு; a species of sugar-cane.

உமாதகியம்

 உமாதகியம் umātagiyam, பெ. (n.)

உமா பார்க்க; see uma.

உமாதகியரிசி

 உமாதகியரிசி umātagiyarisi, பெ. (n.)

   கருங்குருவையரிசி; rice of a black variety of paddy. (சா.அக.);.

     [ஒருகா. உமி – அதக்கு + அரிசி]

 உமாதகியரிசி umātagiyarisi, பெ. (n.)

   கருங்குருவை யரிசி; the rice of a black variety of paddy.

உமாதசி

 உமாதசி umātasi, பெ. (n.)

உமதகி பார்க்க; see umataցi.

உமாதாதகி

 உமாதாதகி umātātagi, பெ. (n.)

   மஞ்சள் செவ்வந்தி; an yellow variety of chamomile.

உமாதி

 உமாதி umāti, பெ. (n.)

   அறிவில்லா-ன்-ள்;பn-wis person. (அ.ஆக.);.

     [உள்-மத்தம் → உண்மத்தம் → உமத்தம் → உமாதம் → உமாதி உள் – உள்ளம். மத்தம் = சுழற்சி.]

உமாதேவி

 உமாதேவி umātēvi, பெ. (n.)

   அறிவும் அருளுமாகிய சிவசக்தி; Goddess Pârvati.

     [உமை → உமா + தேவி]

உமாபட்சி

 உமாபட்சி umāpaṭci, பெ. (n.)

   பறவை வகை (வின்.);; species of paradise-bird.

உமாபதி

 உமாபதி umāpadi, பெ. (n.)

   சிவன் (திவா.);; Sivan whose consort is Uma.

     [Skt. umapati → த. உமாபதி.]

உமாபதிசிவாசாரியார்

உமாபதிசிவாசாரியார் umāpadisivāsāriyār, பெ. (n.)

   வழிமுறை (சந்தான); குரவருள் ஒருவர்; a Swa acarys author of the Siva-p-pirakāsam and seven other treatise of the 15 Sidhānta-Sáttiram besides Several other work like Köyispuránam, 13th c., one of four Santāna-kuravar

     [உமை → உமா + பதி-சிவ + ஆசாரியர்]

 உமாபதிசிவாசாரியார் umāpadisivāsāriyār, பெ. (n.)

   சந்தான குரவருள் ஒருவர்; a šaiva acarya, author of the Siva-p-piragasam and seven other treatises of the 14 sittanda-sattirambesides several other works like koyirpuranam, 13th C. one of four sandanakuravar (q.v.);.

     [உமாபதி + சிவா + ஆச்சாரியார்.]

     [Skt. umapati → த. உமாபதி.]

உமாமகேசன்

 உமாமகேசன் umāmaācaṉ, பெ. (n.)

உமாமகேசுவரன் பார்க்க; see uma-magesuvaran.

     [Skt. uma + makesan → த. உமாமகேசன்.]

உமாமகேசுவரன்

 உமாமகேசுவரன் umāmaācuvaraṉ, பெ. (n.)

   சிவன்; Sivan, the great lord whose consort is Uma.

     [Skt. umåmahesvara → த. உமாமகேசுவரன்.]

     ‘ன்’ ஆ.பா.ஈறு.

உமாமகேச்சுரம்

உமாமகேச்சுரம் umāmaāccuram, பெ. (n.)

ஒரு நோன்பு religious observance in honour of umāmakecuvaram உமா மகேச்சுரமென்றொரு தவவிரதம்” (பிரமோத் உமாம.17);. (செ.அக.);.

உமி

பா.

பெ. (n.);

   நெல்லின் மேல்தொலி; husk;

 chaff.

     “நெல்லுக் குமியுண்டு” (நாலடி. 221);.

   குட. ம. உமி க. உம்பி;   து. உமி, உம்மி;தெ. உமக்க, உமுக, மக குரு. உம்கு.

     [உம் → உமி. உம் = மேலிடுதல், மூடுதல், கவித்தல்.]

உமி2-த்தல்

பா,

   2 செ.கு.வி. (v.i.);

   1. பதராதல்;   10 become chaff.

   2. சாலமறுதல்; to become insipid, spoiled (W.);.

சோறு உமித்துப் போயிற்று. (செ.அக.);.

     [உம்- உமி- உமித்தல்.]

 உமாமகேச்சுரம் umāmaāccuram, பெ. (n.)

   ஒரு நோன்பு; a religious observance in honour of uma-mahesvaran.

     “உமாமகேச் சுரமென் றொரு அவவிரதம்” (பிரமோத். உமாம.17);.

     [Skt. uma-mahesvaran → த. உமாமகேசுவரன் → உமாமகேச்சுரம்.]

உமி

உமி3 umittal,    2 செ.கு.வி. (v.i.)

   1. கொப்புளங் கொள்ளுதல; to blister, become sore.

     “உள்ளடி யுமித் துமித் தழன்ற” (சூளா. அரசி. 93);.

   2. பதன் அழிதல்; to decay, deteriorate, to lose soundness, as timber.

வீட்டு மரங்கள் உக்கியுமித்துப் போயின. (செ.அக.);.

     [உம் → உம்மு → உமி. உமித்தல்.]

 உமி4 umidal,    4. செகுன்றாவி (v.i.)

   1. கொப்புளித்தல்; to garge.

     “நீராடும்போது. நீந்தா ருமியார்” (ஆசாரக் 15);.

   2. இதழ் (உதடு); கூட்டித் துப்புதல் (தனிப்பா, 1, 25.45);; to spit

   ம. உமிக்குக;   க. உகி, உகழ்;உகுழ், து. உபி (உமிழ் நீர்);.

   உகிபுனி;தெ. உமியு.

     [உம் → உமி → உமிழ் (இதழ் மூடுதல், இதழ் முடித்துப்புதல்.]

உமி5-தல்

பm-

   4 செ.குன்றாவி, (v.i.);

   உறிஞ்சுதல்; to

 suck, sp. முலையுமிந்து குடிக்க. (யாழ்ப்.);.

     [உம் → உம்மி → உமி.]

உமிக்கரப்பான்

 உமிக்கரப்பான் umikkarappāṉ, பெ. (n.)

   குழந்தை கட்கு வரும் கரப்பான் வகை (வின்);; a kind of small eruption over the head and body, esp. in children. (செ.அக.);.

     [உமி + கரப்பான்.]

உமிக்கரி

உமிக்கரி umikkari, பெ. (n.)

   1. உமி எரித்ததனாலாகிய கரி; burnt rice-husk (used as tooth powder);.

ம. உமிக்கரி.

     [உமி + கரி]

உமிக்காடி

 உமிக்காடி umikkāṭi, பெ. (n.)

   உமிக்கருக்கு; gruel made of barley, sour rice gruel or barley-gruel.

ம. உமிக்காடி

     [உமி + காடி.]

உமிக்காந்தல்

 உமிக்காந்தல் umikkāndal, பெ. (n.)

   உமியிலுண்டாகும் தழல்; fire of rice husks, fire smouldering in a heap ot rice husk

     “உண்ட வயிற்றிலுமிக்காந்த லிட்டதே”

ம. உமித்தீ.

     [உமி + காந்தல்.]

உமிக்கூர்

 உமிக்கூர் umikār, பெ. (n.)

   உமிமூக்கு; point of the rice-husk. (செ.அக.);.

     [உமி + கூர்]

உமிசம்

உமிசம் umisam, பெ. (n.)

   1.உம்மிசம்; groove in the frame work of a jewel in which stones are to be set

   2. கணு; notch (செ.அக.);.

     [உமி → உமிசம்]

உமிச்சட்டி

 உமிச்சட்டி umiccaṭṭi, பெ. (n.)

   கணப்புச்சட்டி; vessel containing rice-husks in which fire is kept alive. (செ.அக.);.

     [உமி + சட்டி]

உமிச்சாம்பல்

 உமிச்சாம்பல் umiccāmbal, பெ. (n.)

   உமி எரிந்துண்டாகும் சாம்பல்; ashes obtained from the burning of rice-husks (loc);. (செ.அக.);.

     [உமி + சாம்பல்.]

உமிச்சிரங்கு

உமிச்சிரங்கு umicciraṅgu, பெ. (n.)

   உமியைப் போன்ற பருக்கள் அல்லது சிறு சிரங்குகள்;   நமைச்சிரங்கு (யாழ்ப்.);; a superficial, troublesome kind of itch, Prurigo (1); (செ.அக.);.

     [உமி + சிரங்கு.]

உமித்தவிடு

 உமித்தவிடு umittaviḍu, பெ. (n.)

   உமி கலந்த தவிடு; bran mixed with fine or broken husks for feed, coarse bran. (செ.அக.);.

     [உமி + தவிடு.]

உமிநகம்

 உமிநகம் uminagam, பெ. (n.)

   மெல்லிய நகம்; finger and toe nails that are verythin like husk (W);. (செ.அக.);.

     [உமி + நகம்.]

உமிநீர்

 உமிநீர் uminīr, பெ. (n.)

   வாயூறு நீர்; Sple, salva.

   ம. உமிநீரு க. உகுள் நீரு;து. உம்பி, தெ. உம்மி

     [உமிழ் + நீர் – உமிழ்நீர் → உமிநீர்]

உமிப்புடம்

 உமிப்புடம் umippuḍam, பெ. (n.)

   குழி நிறைய உமியிட்டு எரிக்கும் புடம் (சங் அக.);; calcination by heating medicinal drugs over a pitful of burning paddy-husk (செ.அக.);.

     [உமி + புடம்]

உமிமூக்கு

 உமிமூக்கு umimūkku, பெ. (n.)

உமிக்கூர் பார்க்க see um-k-kür (செ.அக.);

     [உமி_முக்கு.]

உமியம்

உமியம் umiyam, பெ. (n.)

   1. கனிமநஞ்சு விளையும் நிலம்; paddy field,

   2 செய்நஞ்சு (பாடாணம்); விளையும் நிலம்; soil or mine from which mineral poison Is dug out.

     [உமி + அம்.]

உமியல்

 உமியல் umiyal, பெ. (n.)

   வசம்பு (மலை);; sweet-flag. (செ.அக.);.

ம. உமியல்.

     [(உம் → உமியல்.]

உமியல்தாரி

 உமியல்தாரி umiyaltāri, பெ. (n.)

   கருநெய்தல்; blue lotus – monochoria – vaginalis.

உமியுண்ணி

 உமியுண்ணி umiyuṇṇi, பெ. (n.)

   தவிட்டுண்ணி; small tick (செ.அக.);.

     [உமி → உண்ண]

உமிரி

 உமிரி umiri, பெ. (n.)

   உமரி பார்க்க;     [உமரி → உமிரி.]

உமிர்

 உமிர் umir, பெ. (n.)

   உடல் மயிர்; the hair of the body.

     [உமரி → உமிரி.]

உமிலிசாரம்

உமிலிசாரம் umilicāram, பெ. (n.)

   கறிக்கூட்டு (பதார்த்த. 1113.);; vegetable salt.

உமிழ்

உமிழ்2 umiḻ, பெ. (n.)

உமிழ்நீர் பார்க்க;see umil-nir.

உமிழ்-தல்

உமிழ்-தல் umiḻtal,    2. செகுன்றாவி. (v.i.)

   1. துப்புதல்; to spit

   2. கொப்பளித்தல் (திவா,);; to gargle,

   3. வாயாலெடுத்தல்; to vomit, reject from an overcharged stomach

   4. வெளிப்படுத்துதல்; to emit as rays of light to discharge, as arrows, to send forth, as sparks, to yield, as fragrance, to reveal as news,

     ” உள்ளத்தாலுமிழ” வேண்டா’ (சீவக 2149);.

   5. தெவிட்டுதல் (திவா.);; to be satiated.

   6. சொரிதல்; to pour.

   ம. உமிழ்க க. உகி, உகுழ்;   உகழ், து. உம்பியுனி, உகிபுயு. தெ. உமியு;   கோண். உகியன், உச்சான் கொலா, நா. உச் பர். உச், உச்ச;பட. உகி.

     [உ → உம் → உமி → உமிழ்.]

உமிழ்நீர்

 உமிழ்நீர் umiḻnīr, பெ. (n.)

   வாயூறு நீர்; spittle, salva (செ.அக.);.

ம, உமிழ்நீர்

     [உமி → உமிழ் + நீர்]

உமிழ்நீர்ப்பெருக்கி

 உமிழ்நீர்ப்பெருக்கி umiḻnīrpperukki, பெ. (n.)

   கொடு வேலி; Ceylon leadwort

     [உமிழ் + நீர் + பெருக்கி]

உமிழ்வு

உமிழ்வு umiḻvu, பெ. (n.)

   1. துப்புகை; spitting.

     “உமிழ்வோடிருபுலனுஞ் சோரார்” (ஆசாரக். 33.);.

   2. உமிழப்படுவது; anything ejected from the mouth as spittle, vomit (செ.அக.);.

     [உமிழ் → உமிழ்வு.]

உமிவு

உமிவு umivu, பெ. (n.)

   துப்புகை; sping

     “உமிவும்…. புணரார் பெரியா ரகத்து” (ஆசாரக். 71);, (செ.அக.);.

     [உமிழ் → உமிழ்வு → உமிவு.]

உமேசன்

 உமேசன் umēcaṉ, பெ. (n.)

   சிவன்; Sivan, Uma’s lord.

     [Skt. umesa → த. உமேசன்.]

உமேதுபண்ணு-தல்

உமேதுபண்ணு-தல் umēdubaṇṇudal,    15 செ.கு.வி. (v.i.)

   சம்பளமின்றி வேலை பழகுதல்; to serve as an unpaid probationer in expectation of permanent employment.

     [உமேது + பண்ணு-,]

     [Skt. ummed → த. உமேது.]

உமேதுவார்

உமேதுவார் umētuvār, பெ. (n.)

   1. சம்பளமின்றி வேலை பழகுநர்; unpaid probationer who works in expectation of being provided with a permanent employment.

   2. பதவியை விரும்புவன் (இசுலாம்);; a candidate for an office or position (Muham.);.

     [U. ummed + war → த. உமேதுவார்.]

உமேதுவார்ப்பட்டாளம்

 உமேதுவார்ப்பட்டாளம் umētuvārppaṭṭāḷam, பெ. (n.)

   தன் விருப்பார்வப் படை; volunteer corps.

     [U. ummed + war → த. உமேதுவார்;

 E. battalion → த. பட்டாளம்.]

உமை

உமை1 umai, பெ. (n.)

   1. மஞ்சள் (நாநார்த்த.);; turmeric.

   2. புகழ். (நாநார்த்த.);; fame,

   3. ஒளி (நாநார்த்த.);; brilliance.

   4. நெல்வகை (நாநார்த்த.);; a kind of paddy.

   5. சணல்; sunhemp, (pond.);.

     [அம் → உம் → உமை.]

 உமை2 umaittal,    2 செ.கு.வி. (vi)

தினவு தின்னு தல்:to itch,

     “உமைத்துழிச் சொறியப் பெற்றாம்” (சீவக. 2617.);.

 உமை3 umai, பெ. (n.)

   மலைமகள்; Pārvathi, consort of Siva.

     “ஒளி நீறணிந்து வுமையோடும் வெள்ளை விடைமேல்”. (தேவா. 11713);. (செ.அக.);.

     [அம்மை → உம்மை → உமை.]

உமைகரநதி

 உமைகரநதி umaigaranadi, பெ. (n.)

   மலைமகளின் கையிலிருந்து வருவதாகிய கங்கை (பிங்.);; Ganges supposed to flow from the hand of Pârvati (செ.அக.);.

     [உமை+ கரம் + நதி → உமைகத நதி.]

உமைமகன்

உமைமகன் umaimagaṉ, பெ. (n.)

   1. யானை முகன்; Vināyakā. 2. முருகன்;

 Murugan.

   3. வீரபத்திரன்; Virabhadra son of Pārvathi. (செ.அக.);.

     [உமை + மகன்.]

உமைய

 உமைய umai பெ. (n.)

   அம்மா; mother.

     [அம்மா→அமா→உமை]

உமையவட்பெற்றோன்

 உமையவட்பெற்றோன் umaiyavaṭpeṟṟōṉ, பெ. (n.)

   இமவான் (பிங்);; Himalaya, father of Pârvathi, (செ.அக.);.

     [உமையவள் + பெற்றோன்.]

உமையவள்

உமையவள் umaiyavaḷ, பெ. (n.)

   பார்வதி; Pārvati.

     “கொடியி னொல்கிய நுசுப்புடை யுமையவள்” (கந்தபு. தவங்காண்.8);. (செ.அக.);.

     [உமை + அவள்.]

உமையாளீசன்

 உமையாளீசன் umaiyāḷīcaṉ, பெ. (n.)

   சவர்க்காரம்; earth impregnated with carbonate of soda, fuller’s earth.

உமையாள்

உமையாள் umaiyāḷ, பெ. (n.)

உமையவள் பார்க்க;see பmaiyaval

     “உமையாள் கணவா” (திருவாச. 33.1);. (செ.அக.);.

     [உமை + (அவள்); ஆள்.]

 உமையாள்2 umaiyāḷ, பெ. (n.)

   1 சவுக்காரம்; soap.

   2. மயிலிறகு; feather of pea-cock,

உய்1

-தல்

பy, 2 செ.கு.வி. (v.i.);

   1. பிழைத்தல்;   வாழ்தல்; to live, to subsist, have being

     “உண்ணா வறுங்கடும் புய்தல் வேண்டி” (புறநா.181);.

   2. ஈடேறுதல்; to be saved, redeemed.

     “தினைத்தனைப் பொதும் மறந்துய்வனோ” (தேவா. 5.1);.

   3. நீங்குதல்; to be relieved, as from trouble.

     “தாவலுய்யுமோ” (பதிற்றுப். 4.1.17);.

   4. துன்பத்தினின்று தப்புதல்; to eacape as from danger

     “சார்புடைய ராயினு முய்யார்” (குறள், 900);

   5. உண்டாக்குதல்; to make, prepare

   6. வலிதல்; to get strong, 7 ஆற்றுதல்;

 to engage.

   8. முற்செல்லுதல் செலுத்தல்; to lead

ம, உய்யுக.

     [உ – உய்_உய்-தல்.]

உய்2-த்தல் பy, 4 செ.குன்றாவி (v.t);

   1. உய்யச் செய்தல்; to ensure salvation.

     “உய்த்த வியோமரூபர்” (சதாசிவ. 29);. 2.நீக்குதல்;

 to drive away, dispel as darkness.

     “பல்விளக் கிருளின் றுன்னற வுய்க்கும்” திருக்கோ.175);. (செ.அக.);.

     [உ → உய் → உய்-த்தல்.]

உய்3-த்தல்

பy,

   4 செ.குன்றாவி. (v.t.);

   1. செலுத்துதல்; to direct, guide,

     “நன்றின் பாலுய்ப்ப தறிவு” (குறள், 422);.

   2. படைக்கலம் விடுதல்; to discharge, let fly, as an arrow,

     “அம்புய்க்கும் போர்” (கம்பரா. மாரீச 186);.

   3. அனுப்புதல்; to send, despatch. ”பட்டிமை யோலை யுய்ப்பான்

     “(திருவிளை. மெய்க்கா, 13);.

   4. நடத்துதல்; to conduct, lead, direct

     “உய்த்திடு மிச்சை செய்தி” (சி.சி.1, 62 நிரம்ப.);

   5. கொண்டு போதல்; to carry,

     “வேட்டுவருய்த்தன ரோவென’ (சீவக. 425);.

   6. நுகர்தல்;   பட்டறிதல்; to enloy, experience.

     “காதல காத லறியாமை யுய்க்கிற்பின்” (குறள், 440);.

   7. கொடுத்தல்; to give

     “மீளியாளர்க்கு மிகவுய்த் தன்று” (பு.வெ. 3.9. கொளு.);.

   8. அறிவித்தல்; to make known, tell, reveal.

     “அவ்வழி யரசற் குய்த்தார்க்கு’ (சீவக. 1407);.

   9 ஆணை செலுத்துதல்; to rule.

     “ஞால முழுது முய்த்திடு மகவு” பாரத சம்பவ. 10).

   10. குறிப்பித்தல்; to mention,

   11. ஊர்தியில் செல்லுதல்; to fly as vehicle.

   12. அமிழ்த்தல்; to press, sink.

   13. ஈடேறன் செய்தல்; to realise.

     “உய்யத்த வியோமரூபர்” (சதா சிவ. 29);. மதியைச் செலுத்தி ஆராய்தல். உய்த்தறிதல். உய்த்துணர்தல், உய்த்தலில் பொருண்மை என்னும் தொடர்களை நோக்குக.

ம. க. உய்.

     [உ → உய் → உய்-த்தல்.]

உம்

உம்1 um, இடை (part) (அ)

   1. எண்ணும்மை; connective particle implying simple connection as in சேரனும் பாண்டியனும்,

   2. எதிர்மறையும்மை; negation, as in மறப்பினு மோத்துக் கொளலாகும்.

   3. சிறப்பு