செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை வெளியீடு
31 தொகுதி 12000 பக்கங்கள் கொண்ட பேரகரமுதலி


1

10838

2769

3111

538

3554

677

1093

620

189

1004

402

2
க்
1

8212
கா
2579
கி
564
கீ
222
கு
4598
கூ
780
கெ
615
கே
391
கை
1101
கொ
2417
கோ
1754
கௌ
110
ங்
1

2
ஙா
2
ஙி
1
ஙீ
1
ஙு
1
ஙூ
1
ஙெ
1
ஙே
1
ஙை
1
ஙொ
5
ஙோ
1
ஙௌ
1
ச்
1

5235
சா
1186
சி
2424
சீ
439
சு
1261
சூ
420
செ
1529
சே
470
சை
23
சொ
409
சோ
365
சௌ
1
ஞ்
1

15
ஞா
44
ஞி
3
ஞீ ஞு ஞூ ஞெ
34
ஞே
5
ஞை
2
ஞொ
3
ஞோ
2
ஞௌ
1
ட்
1

1
டா
1
டி
1
டீ
1
டு
1
டூ
1
டெ
2
டே
1
டை
1
டொ
1
டோ
1
டௌ
ண்
1

1
ணா
1
ணி
1
ணீ ணு
1
ணூ
1
ணெ
2
ணே
1
ணை
1
ணொ
1
ணோ
1
ணௌ
த்
3113
தா
1530
தி
2203
தீ
393
து
1238
தூ
411
தெ
694
தே
856
தை
39
தொ
878
தோ
459
தௌ
ந்
1

2789
நா
204
நி
1860
நீ
1161
நு
14
நூ
18
நெ
892
நே
318
நை
89
நொ
210
நோ
159
நௌ
2
ப்
1

4560
பா
1824
பி
492
பீ
25
பு
2224
பூ
1133
பெ
1064
பே
483
பை
127
பொ
1218
போ
478
பௌ
2
ம்
4760
மா
1422
மி
535
மீ
268
மு
3016
மூ
949
மெ
396
மே
751
மை
152
மொ
284
மோ
242
மௌ
ய்
1

119
யா
426
யி
1
யீ
1
யு
46
யூ
20
யெ
9
யே
1
யை
1
யொ
1
யோ
98
யௌ
1
ர்
87
ரா
107
ரி
11
ரீ
7
ரு
24
ரூ
20
ரெ
6
ரே
16
ரை
10
ரொ
8
ரோ
23
ரௌ
ல்
117
லா
44
லி
8
லீ
5
லு
8
லூ
3
லெ
13
லே
21
லை லொ
20
லோ
63
லௌ
3
வ்
1

3800
வா
1329
வி
1638
வீ
515
வு
1
வூ
1
வெ
2164
வே
834
வை
229
வொ
1
வோ
3
வௌ
ழ்
1

1
ழா
1
ழி
1
ழீ
1
ழு
6
ழூ
1
ழெ
1
ழே ழை ழொ ழோ
1
ழௌ
ள்
1

2
ளா
1
ளி
1
ளீ
1
ளு
1
ளூ
1
ளெ
2
ளே
1
ளை
1
ளொ
1
ளோ
1
ளௌ
ற்
1

1
றா
1
றி
1
றீ
1
று
1
றூ
1
றெ
2
றே
1
றை
1
றொ
1
றோ
1
றௌ
ன்
1

1
னா
1
னி
1
னீ
1
னு
1
னூ
1
னெ
2
னே
1
னை னொ
1
னோ
1
னௌ
தலைசொல் பொருள்

ஈ1ī, பெ. (n.)

   1. தமிழ் மொழியின் நெடுங்கணக்கில் வரும் நான்காம் நெட்டுயிர்; symbol of the close front tense unrounded vowel in the Tamil language, being the fourth letter among the vowels of the Tamil alphabet, lengthened form of 1.

   2. அவ்வொலியைக் குறிக்கும் வரிவடிவு; written character representing that sound.

   இவ்வெழுத்தின் நெடில் வடிவமாகிய வளைகொம்பு குறில் மெய்களுடன் இணைக்கப்படுகிறது; secondary form of the letter is (i);

     “இ, ஈ, எ, ஏ, ஐ என இசைக்கும் அப்பால் ஐந்தும் அவற்றோ ரன்ன, அவைதாம் அண்பல் முதல்நா விளிம்புறல் உடைய” (தொல். எழுத். 86);.

 ஈ2ī, பெ. (n.)

   அண்மைச் சுட்டெழுத்து; demons. letter or pronomical adj. pointing to what is near, this, these.

ம., க., தெ., து., பட. ஈ.

     [ஈ – இ என்பன அண்மை கட்டிய ஒலிக்குறிப்பு. ஐந்திரவிட மொழிகளுள் ஒன்றாகக் கருதப்படும் மராத்தியில் ஈகார அண்மைச் கட்டு இடப்பொருளில் புடை பெயர்ந்து ஏழன் உருபாயிற்று.]

     ‘ஈ’ என்னும் நெடிலே இயற்கை அண்மைச் கட்டு – அதன் குறுக்கமே ‘இ’ நெடில் வடிவமாகிய ‘ஈ’ தெலுங்கு. கன்னடம், மலையாளம் முதலிய திரவிடமொழிகளில் வழங்கி வரினும், தமிழுலக வழக்கில் வழக்கற்றுப்போயிற்று. மலையாளம் பழஞ்சேர நாட்டு மொழியாதலால் அதில் வழங்கும் நெடிற்சுட்டு வழக்கைச்சேர நாட்டுத்தமிழ் அல்லது பழந்தமிழ் என்றுங் கொள்ளலாம்.

ஈ3 _, இடை. (int.);

   1. வியப்புக் குறிப்பு; exclamation expressive of wonder. யாருக்குந் தெரியாதபடி யிராநின் றதீ! (ஈடு.1, 3, 9);.

   2. வலி துன்பம் முதலானவற்றைக் குறிக்கும் இடைச்சொல்; interjection of pain, sorrow, etc.

   3. இகழ்ச்சிக் குறிப்பு; derisive expression. ‘ஈ என்ன இது’ (உவ.);.

   4. பேதைத்தனமாகப் பல்லிளித்தல்; baring teeth in sign of unrestrained stupidity.

     ‘ஈ என்று இளிக்காதே’.

   5. தனக்கு மேலுள்ளோர் மனம் கவர்தல் வேண்டி அவர் விருப்பத்திற்கிணங்க வலிந்து சிரித்தல்; showing teeth as a sign of amusement or to show affirmation to superiors

ம., மரா. ஈ.

     [இ – ஈ ஒலிக் குறிப்புகள். ஈ என்னும் இகழ்ச்சிக் குறிப்பு சீ என்றும் மருவியது.]

 ஈ4ī, இடை. (part.)

   1. ஒரு முன்னிலையசை (நன்.440, உரை);; poetic expletive in the 2nd pers.

   2. ஒரு முன்னிலை வினையீறு வினைச்சொன்முன் வரும்; second person verb ending.

     “சென்றீ பெருமநிற் றகைக்கு நர் யாரோ” (அகநா.46);

     “முன்னிலை முன்னர் ஈயும் ஏயும் அந்நிலை மரபின் மெய்யூர்ந்து வருமே” (தொல்.

சொல்.451).

     [ஈ = ஒலிக்குறிப்பு, முன்னிலையசை, அசைமொழி.]

 ஈ5ī,    இடை. (int, part.) இசைவுக் குறிப்பு, இடைச் சொல்; particle indicative of affirmative sense. ‘ஈ’ என்று கேள் (கொங்கு.வ.).

     [உம் என்னும் ஒப்புதல் குறிப்பு இடைச்சொல், ஊம் – ஊ என்று ஈறு குறைந்ததுபோல ஈம் – ஈ எனத் திரிந்தது. உம் – இம் – ஈம் – ஈ. பல்லிளித்தல் வாய்திறத்தல் குறிப்பினதாகிய இகரஉயிர் நீட்டம் ‘ஈ’.]

 ஈ6ī, பெ. (n.)

   இனிப்பு முதலானவற்றில் மொய்க்கும் தன்மையுடைய சிறகுகள் உள்ள சிறு பூச்சி; house fly.

     “ஈச்சிற கன்னதோர் தோலறினும்” (நாலடி.41);.

   2. தேனீ; honey bee.

     “ஈயின்றி யிருந்த தீந்தேன்” (சீவக. 712);.

   3. வண்டு (திவா.); beetle.

   4. சிறகு (பிங்.);; wing.

   5. பூச்சி, உயிரி; insect.

   ம. ஈ;   க. ஈசல். ஈச்சல்;   கோத. ஈப்;   துட. ஈப்ய;   தெ. ஈக்;   மரா. ஈ;   கொலா. நீங்க். நீங்க;   நா. நீங்க;   கோண். கக்கி. பசீ;   கூ. புகி. புக்கு;   குர். தீனி;   மால். தெனி;   பிராகு. கீல். சீல்;பட. குன்னி (தேனீ);.

     [ஈள் – ஈண் – ஈண்டு – மொய்த்தல், நெருங்குதல். ஈன் – ஈ மொய்க்கும் உயிரினம்.]

 ஈ7ī, பெ. (n.)

   1. அழிவு; destruction.

     “ஈபாவஞ் செய்து” (திருவாய். 2.2.2.);.

   2. அம்பு; arrow.

     [ஈ → ஈல், பிளத்தல், அழித்தல்.]

 ஈ8ī, பெ. (n.)

   துத்தவிசையின் எழுத்து (திவா.;. symbol representing the second note of the gamut, usu. denoted by ‘ரி’.

     [ஏழிசை நெடில்களுள் ஒன்று. இதன் பழைய வடிவம் ஈ.]

 ஈ9ī, பெ. (n.)

   பாம்பு; Snake.

   2. அரைநாண்; waist cord.

   3. குகை; cave.

   4. தாமரை இதழ்; lotus leaves.

   5. திருமகள்; Laksmi, Goddess of wealth.

   6. கலைமகள்; Saraswati, Goddess of learning.

   7. மலைமகள்; Parvali, Goddess of valour.

     [ஈ வளைவு. சுற்று, வட்டம்.]

ஈ1-தல்

   1,

   2 செ.குன்றாவி. (v.t.);

   1. ஈனுதல்; to give birth to.

   2. கொடுத்தல்; lo give.

     “ஈதல் இசைபட வாழ்தல்” (குறள்.23);.

   3. பகிர்ந்து கொடுத்தல்; to distribute, apportion.

   4. இழிந்தோர்க்குக் கொடுத்தல்; to give to inferiors, give alms, bestow, grant.

     “ஈயென்கி ளவி இழிந்தோன் கூற்றே” (தொல். சொல். 445);.

   5. வீசுதல்; to give liberally, throw.

   தெ. ஈ. இக்க;   க. ஈ. ஈயு;   கோண். சீயானா. சீ;   நா. ச;   பர். சீ;குவி. சீவ.

     [ஈல் – ஈன் – ஈ. ஈதல் = வெளிவருதல், வெளித்தள்ளுதல், கொடுத்தல், வீசுதல்.]

 ஈ2ītal,    2 செ.குன்றாவி. (v.t.)

   1. வகுத்தல்; to divide (arith); (w);, ஈய (கணக்கதி.);.

   2. படிப்பித்தல்; to arrange instruction.

     “ஈதலியல்பே யியம்புங் காலை” (நன்.36);.

   3. படைத்தல்; to create.

     “எவ்வுயிர்களு மீந்தான்” (கம்பரா.அகலி.49);.

   4. பரவுதல்; to spread.

     [ஈல் – ஈர் – ஈ = பிரித்தல், பிளத்தல், வகுத்தல், அமைத்தல் பரவல்.]

 ஈ3ītal,    6 செ.கு.வி. (v.i.)

   நேர்தல் (பரிபா.9.17);; to agree, consen.t

     [ஈ – ஈதல் = தருதல், மனமிசைதல், ஒத்துப்போதல்.]

 ஈ4ī,    து.வி. (v.aux). துணை வினை; an auxiliary verb

     “தேறீயல் வேண்டும்” (கலித்.982);.

     [ஈ – பணிவொடு வேண்டிக்கோடற் குறிப்புவினை. நில்லி சென்றீ என்பனவற்றுள் துணைவினையாயிற்று.]

 ஈ2ī, பெ. (n.)

   1. இடுகை; applying, putting or.

     “ஈடமை பசும்பொற் சாந்தம்” (சீவக.1256);.

   2. பிறர்பால் ஒப்புவிக்கை (திருவாலவா.28.36);; delivering handing over.

   3. மாற்று; substitute. ‘அதற்கீடாகத் தந்தான்’

   4. மணமக்களின் அகவை, வளர்ச்சிப் பொருத்தம்; appropriateness, in respect of age and physical development as between a would-be bridegroom and bride.

அவளுக்கும் அவனுக்கும் ஈடு போதாது. ‘இது ஈடான சோடி’ (உவ.);.

   5. தகுதி; fitness, suitability.

     “ஆட்செய்யு மீடே” (திவ். திருவாய். 1,6,2);.

   6. ஒப்பு; equality, comparison.

     “ஈடு மெடுப்புமி லீசன்” (திவ்.திருவாய்.16.3);.

   7. அடைமானம்; pledge, security, mortgage.

   8. பருமன்; bulkiness bigness.

     “ஈடுசால் போரழித்து’ (சீவக.59);.

   9. சுவை; heaviness.

   10. எடை, கனம்; weight.

   11. வலிமை; power, might, force.

     “ஒருகரி யீடழித் துரித்தனை” (தேவா. 142, வரி. 13);.

   12. நிலைமை; condition, stage.

     “மலர்ந்த வீட்டினால்” (கம்பரா.இலங்கைகே4);.

   3. மன வருத்தம்; unhappiness pain of mind.

     “ஈடினா லிருந் தெண்ணி” (சீவக.1762);.

   14. உள்ளீடான பொருள்; content subject as of a letter.

     “முடங்கனிமிர்த்த வீடு நோக்கி” (கம்பரா.பள்ளி.6);.

   15. வழி; way, means.

     “அறியேன் சொல்லு மீடவர்க்கே” (திருக்கோ 111);

   16. மெய்ம்மறை (கவசம்);; molt.

     “உடம்புக்கீடிடாதே” (ஈடு. 7,5,3.);.

   17. குழை (சூடா.);; melting becoming soft.

   18. ஈடு முப்பத்தாறு

யிரம் (உபதேசரத்.); பார்க்க;see idu muppat-tárayiram. name of a commentary on the Tiruvâymoli, by Vadakku-t-tiru-widi-p-pillal. (செ.அக.);.

   ம. ஈடு;க. ஈடு.

     [இல் – குத்துதல், இருத்துதல், வைத்தல், பொருத்துதல். இல் – இள் – இடு – ஈடு.]

ஈக

ஈகīka,    து.வி. (v.aux) இக என்பதன் திரிபாய் வந்த ஒரு முன்னிலையசை; poetic expletive in second person.

     “என் போரியானை வந்தீக வீங்கு” (கலித்.86);.

ஈகம்

ஈகம்1īkam, பெ. (n.)

   சந்தனமரம் (மலை.);; sandal-wood tree.

     [ஈ – ஈகு – வீசுதல், பரவுதல், மணம் பரவுதல்.]

 ஈகம்2īkam, பெ. (n.)

   ஒப்புரவு (தியாகம்);; sacrificing.

     [ஈ → ஈகு → ஈகம். எதனையும் சுணங்காது கொடையளிக்கும் மனப்பாங்கு.]

ஈகரை

 ஈகரைīkarai, பெ. (n.)

   திருவாடானை வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Tiruvādānai Taluk. (இ.வ.);.

     [இடி+கரை]

ஈகி

ஈகிīki, பெ.(n.)

   1கொடையாளி; liberal donor.

   2.பிறர் பொருட்டு தன்னலம் துறப்போன்; one who sacrifices his self interest.

     [ஈ→ஈதல் ஈ-→ஈகை ஈகை→ஈகி]

ஈகியர்

 ஈகியர்īkiyar, பெ.(n.)

ஈகிபார்க்க; see igi.

     [ஈர்-பிளத்தல்,கிழித்தல் ஈர்+குச்சி-ஈக்குச்சி]

ஈகு-தல்

ஈகு-தல்īkudal,    2 செ.கு.வி. (v.i.)

   1. ஈ-தல் பார்க்க;see I-dal.

   2. சுட்டியாதல்; to solidify.

     “திரட்டுப்பாலும் ஈகின நெய்யும் கட்டித் தயிரும்” (திவ். பெரியாழ்.3:2.6, வியா. பக்.545);.

     [ஈல் – ஈள் – ஈ – ஈகு.]

ஈகை

ஈகை1īkai, பெ. (n.)

   கொடை; gift, grant.

     “வறியார்க்கொன் றீவதே யீகை” (குறள்.221);.

   2. பொன்; gold.

     “ஈகையங் கழற்கால்” (புறநா.99);.

   3. தொன்மக்கதையின்படி விரும்பியதை நல்குவதாகக் கருதப்பட்ட வானுலகக் கற்பக மரம் (அக.நி.);.

 Kalpaga tree of heaven (Cuvarkkam); which according to Hindu myth, bestows everything that one desires.

 cf. E yield;

 AS gildon, to pay;

 Goth gildun;

 Ger. gester Ice. Gjakda. see guild

     “E” guild (orig.); an association in a town where payment was made. (AS. gild, money gildan, to pay, it is the same word as gold and guild: chED.

     [ஈ – ஈகை (சு.வி.35); ஈ = கீழிடு, இடு, ஈல் – ஈகு – ஈகை.]

 ஈகை2īkai, பெ. (n.)

   1. இண்டு (பிங்.);; species of mimosa.

   2. புலி தொடக்கி (மலை); பார்க்க; se pull todakki.

     [ஈ – ஈங்கை – ஈகை.]

 ஈகை3īkai, பெ. (n.)

   காடை; quail.

     “ஈகைப்போர்” (கலித்.95.12);.

     [ஈ – ஈகு – ஈகை – வீசுதல், பரவுதல், பறத்தல், பறவை.]

 ஈகை4īkai, பெ. (n.)

   காற்று; wind.

   2. மேகம்; cloud.

   3. இல்லாமை (அக.நி.);; want.

     [ஈ – ஈகு – ஈகை. வீசுதல், பரவுதல், கொடையளித்தல், வாரிக்கொடுத்தலால் வறுமையுறல்.]

ஈகையன்

ஈகையன்īkaiyaṉ, பெ. (n.)

   கொடையாளன்; liber munificent person, philanthropist.

     “இனிய சொல்லிகை ஈகையன்” (கம்பரா.மந்தரை.18);.

     [ஈ – ஈகு – ஈகை – ஈகையன்.]

ஈகையாளன்

 ஈகையாளன்īkaiyāḷaṉ, பெ. (n.)

   ஈகையன் (பிங்.);;பார்க்க;see Igayan.

     [ஈ – ஈகு – ஈகை. ஈகை – ஆளன்.]

ஈக்கணம்

ஈக்கணம்īkkaṇam, பெ. (n.)

   1. தேனீத்தொகுதி, தேன்கூடு; bee-hive.

   2. தேனீக்களைப் போன்ற பார்வை நுட்பம்; keen eye-sight as of the bees.

     [ஈ – கணம் – ஈக்கணம். ஈ – தேனீ. கணம் – தொகுதி, கூட்டம்.]

ஈக்கணி-த்தல்

ஈக்கணி-த்தல்īkkaṇittal,    4 செ.கு.வி. (v.i.)

   நல்லதைத் தேர்தல்; to distinguish the best.

     [ஈ – கணி – ஈக்கணி – தேனீக்கள் தேனுள்ள இடத்தைத் தேர்ந்தறிதல் போல நல்லனவற்றை நாடியறிதல், அறிவுநுட்பப் பணியாற்றுதல்.]

ஈக்கணிகை

 ஈக்கணிகைīggaṇigai, பெ. (n.)

   நற்குறி கூறுபவள்; conjuring woman.

     [ஈக்கணம் – ஈக்கணி – ஈக்கணிகை ஈக்கணம் சிறப்பாகத் தேனீக்களின் கூட்டத்தைக் குறித்த சொல். தேன் உள்ள இடத்தைச் சரியாக நாடியறிதலின் ஈக்கணித்தல் நல்லது காணும் பார்வைத் திறமாயிற்று. நற்குறி கூறும் பெண்ணும் ஈக்கணிகை எனப்பட்டாள்.]

ஈக்காலாணி

ஈக்காலாணிīkkālāṇi, பெ. (n.)

   சிற்றாணி (SII ii.213);; rivet in an ornament, as small as a fly’s leg.

     [ஈ – கால் – ஆணி. ஈக்கால் – சிறுமை குறித்த சொல்.]

ஈக்கால்

 ஈக்கால்īkkāl, பெ. (n.)

   வயிரக் குற்றவகை (கொ.வ.);; flaw in a gem. esp. a diamond, so called from its resemblance to a fly’s leg. (செ.அக.);

ம. ஈக்கால்.

     [வயிரத்தில் எக்கால் போன்ற (ஈ-கால்); பட்டைக்கீறல் குற்றம் ஆகலாம்.]

ஈக்கி

 ஈக்கிīkki, பெ. (n.)

   தட்டையில் உரித்த அல்லது உரிந்த தோலின் பகுதி; a peeling. –

     [ஈக்கு-ஈக்கி]

ஈக்குச்சி

 ஈக்குச்சிīkkucci, பெ.(n.)

   துடைப்பங்குச்சி; ribofa palm leaf.

     [ஈர்-பிளத்தல்,கிழித்தல், ஈர்+குச்சி+ஈக்குச்சி]

ஈக்குடி

 ஈக்குடிīkkuḍi, பெ. (n.)

   சாவிக்கதிர் (இ.வ.);; chair left in the growing ears of paddy when insects have consumed the undeveloped grain.

     [ஈக்குடை – ஈக்குடி, ஈக்குடை – ஈ குடைந்ததால் உள்ளீடற்றுப் போன கதிர்.]

ஈக்கை

ஈக்கைīkkai, பெ. (n.)

   1. புலி தொடக்கி பார்க்க;   2. உப்பிலி (மலை.);; species of stinking swallow wort. (செ.அக.);.

ஈங்கண்

ஈங்கண்īṅgaṇ, பெ. (n.)

   இவ்விடம் (தொல். எழுத். 114, உரை);; this place.

     [ஈ – அண்மைச் சுட்டு. ஈ – கண் – ஈக்கண் – ஈங்கண்.]

ஈங்கன்

ஈங்கன்īṅgaṉ,    கு.வி.எ. (adv.) இவ்வாறு; thus.

     “ஈங்கனங் கனையிரு ளெல்லை நீந்தினான்” (சீவக. 1942);.

ஈங்கரம்

 ஈங்கரம்īṅgaram, பெ. (n.)

   குப்பைமேனி; dung-hi plant. (சா.அக.);.

     [இங்கு – இங்கரம் – ஈங்கரம்.]

ஈங்கிசை

ஈங்கிசைīṅgisai, பெ. (n.)

   1. கொலை (வின்.);; murder, killing.

   2. தொந்தரை; affliction.

     “ஈங்கிசையுற்ற வலக்கு ணமட்டைகள்” (திருப்பு.263);.

     [இமிசை – இங்கை – ஈங்கிசை (கொ.வ.);.]

ஈங்கு

ஈங்கு1īṅgu, கு.வி.எ. (adv.)

   1. இவ்விடம்; here.

     “ஈங்கு நம்ஆனுள் வருமேல்” (சிலப்.17, பாட்டு.2);.

   2. இப்படியே (சீவக.1593);; in this manner.

     [இங்கு – ஈங்கு.]

 ஈங்கு2īṅgu, பெ. (n.)

   1. ஈங்கை (வின்.);; species of a sensitive tree.

   2. புலி தொடக்கி (மலை.);.

     [இங்கு – ஈங்கு.]

 ஈங்கு3īṅgu, பெ. (n.)

   சந்தனம் (சங்.அக.);; sandal wood.

     [இங்கு – ஈங்கு.]

ஈங்கூகம்

 ஈங்கூகம்īṅākam, பெ. (n.)

   குக்கில்; false myrrh.

     [இங்கு + ஊகம்.]

ஈங்கூங்கு

 ஈங்கூங்குīṅāṅgu, பெ.எ. (adj.)

   இங்கும் அங்கும்; here and there.

     [ஈங்கு + ஊங்கு.]

ஈங்கை

ஈங்கைīṅgai, பெ. (n.)

   இண்டஞ்செடி; species of a sensitive-tree.

     “ஈங்கைப் பைம்புத லணியும்” (ஐங்குறு.456);.

   2. உப்பிலி (மூ.அ.); பார்க்க;see uppili.

ஈங்கைத்துவக்கு

 ஈங்கைத்துவக்குīṅgaittuvakku, பெ. (n.)

   ஒரு மரப்பட்டை (தைல.தைலவ.அரும்பத.);; the bark of a tree. (த.சொ.அக.);.

     [ஈங்கை +துவக்கு.]

ஈசத்துவம்

 ஈசத்துவம்īcattuvam, பெ. (n.)

   அட்டமாசித்திகளின் சிற்பம்; sculptures of eight achievements,

     [ஈச்சம்+காரனை]

ஈசனி

 ஈசனிīcaṉi, பெ. (n.)

   திருவாடானை வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Tiruvādānai Taluk. (இ.வ.);

     [ஒருகா, ஈயல்-ஈசனி]

ஈசலிறகு

 ஈசலிறகுīcaliṟagu, பெ. (n.)

   மெல்லியபொருள்; any substance as thin as a wing of a white ant.

     [ஈசல் – இறகு – ஈயலின் இறகுபோல் மெல்லியது.]

ஈசல்

ஈசல்1īcal, பெ. (n.)

ஈயல் பார்க்க;see Iyal winged white ant. (செ.அக.);.

     [ஈயல் + ஈக்களைப் போன்று மொய்க்கும் உயிரி வகை. ஈயல் → ஈசல்.]

     [P]

 ஈசல்2īcal, பெ. (n.)

   சீழ்க்கை; whistle.

     “ஈசல் கொட்டுகிறான்” (இ.வ.); (செ.அக.);.

     [இச் – ஈச் – ஈசல் = ஒலிக்குறிப்பு.]

ஈசானமுகம்

 ஈசானமுகம்īcāṉamukam, பெ. (n.)

   விசுவப் பிரம்மனின் சிற்பத்திலுள்ள முக வகை; face type of viswa Brahma in sculpture.

     [ஈசானம்+முகம்]

ஈசானம்

 ஈசானம்īcāṉam, பெ. (n.)

   சிவனின் சிற்ப வடிவில் உச்சி நோக்கிய முகம்; up ward face in sculpture.

     [ஈசன்-ஈசானியம்]

ஈசுக்கணுவெலும்பு

 ஈசுக்கணுவெலும்புīcukkaṇuvelumbu, பெ. (n.)

   முழங்காலின் எலும்பு; the joint connecting the two principal parts of leg, knee, knee-cap. (சா.அக.);.

     [ஈ – ஈசு (மெல்லிய); + கணு + எலும்பு.]

ஈசுதல்

 ஈசுதல்īcutal, செ.கு.வி. (v.i.)

   உரசிக்கொண்டுசெல்லுதல்; to go slightly dashing.

     [ஈசு+ஈசுதல்]

ஈசுரக் கோவை

 ஈசுரக் கோவைīcurakāvai, பெ. (n.)

   ஒருவகை மட்டையரிசி; a kind of brown rice.

     [ஈசல் – ஈசர – ஈகர – கோவை.]

ஈசுவக்கன்

 ஈசுவக்கன்īcuvakkaṉ, பெ. (n.)

   அணிகலன் களை வடிவமைக்கும் சிற்பியர்; sculptors who design ornament in sculpture.

     [இசைவுகன்-ஈசுவக்கன்]

      [P]

ஈசை

 ஈசைīcai, பெ. (n.)

   ஏர்க்கால் (வின்.);; pole or shaft of a plough.

     [இத்தை → ஈத்தை → ஈதை → ஈசை.]

ஈச்சங் கசங்கு

 ஈச்சங் கசங்குīssaṅgasaṅgu, பெ. (n.)

   ஈஞ்சினீர்க்கு; switch of the date-palm, used in making country baskets.

     [ஈத்து – ஈத்து – ஈச்சு – அம் – கசங்கு.]

ஈச்சங்கள்

 ஈச்சங்கள்īccaṅgaḷ, பெ. (n.)

   ஈச்சமரத்தினின்றிறக்குங்கள்; wild-date toddy (சா.அக.);.

     [ஈத்து – அம் – கள் – ஈத்தங்கள் – ஈத்தங்கள் – ஈச்சங்கள்.]

ஈச்சங்காடி

 ஈச்சங்காடிīccaṅgāṭi, பெ. (n.)

ஈச்சங்கள் பார்க்க;see scCari-kal.

     [ஈச்சம் + காடி.]

ஈச்சங்காரனை

 ஈச்சங்காரனைīccaṅkāraṉai, பெ. (n.)

   செங்கற்பட்டு வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Chengelput Taluk. (இ.வ.);

     [ஈச்சம்+காரணை]

ஈச்சங்குடை

 ஈச்சங்குடைīccaṅguḍai, பெ. (n.)

   ஈச்சம்புல் வேய்ந்த நிழற்குடை (மதுரை.);; umbrella made of date-palm leaves.

     [ஈச்சம் + குடை.]

ஈச்சமது

 ஈச்சமதுīccamadu, பெ. (n.)

   ஈச்சங்கள்; toddy from the date-palm.

     [ஈச்சம் + மது.]

ஈச்சம்பனை

 ஈச்சம்பனைīccambaṉai, பெ. (n.)

   காட்டீந்து; wild date-palm.

     [ஈந்தம் – ஈத்தம் – ஈச்சம் + பனை.]

ஈச்சம்பழம்

ஈச்சம்பழம்īccambaḻm, பெ.(n.)

காட்டிந்தின் பழம்

 date palm.

     “காய்த்த பலாவின் கனி யுண்ண மாட்டாமல்ஈச்சம்பழத்துக் கிடருற்ற வாறே (திருமந்: 244);

     [ஈச்சம்+பழம்]

ஈச்சம்பாய்

 ஈச்சம்பாய்īccambāy, பெ. (n.)

   ஈந்திலை யாலாகிய பாய்; mat made of the leaves of the date-palm.

     [ஈச்சம் + பாய்.]

ஈச்சவெல்லம்

 ஈச்சவெல்லம்īccavellam, பெ. (n.)

   ஈச்சம்பாளையில் வடியும் சாற்றினின்று காய்ச்சியெடுக்கும் வெல்லம்; jaggery prepared from the date-palm juice.

     [ஈச்சம் – வெல்லம்.]

ஈச்சாடி

ஈச்சாடிīccāṭi, பெ. (n.)

   1. அதிகமாகப் புழுங்கியபின் குற்றிய புழுங்கல் அரிசி; rice husked after over boiling.

   2. நன்கு உலருமுன் குற்றிய புழுங்கலரிசி; rice husked before it is dried adequately.

ம. ஈச்சாடி.

ஈச்சாட்டி

 ஈச்சாட்டிīccāṭṭi, பெ. (n.)

   இவறன், ஈயாதவன்; avaricious person, miser.

ம. ஈச்சாட்டி.

ஈச்சில்

 ஈச்சில்īccil, பெ. (n.)

இழிச்சில் பார்க்க;see ilicil.

ம. ஈச்சில்.

ஈச்சு

 ஈச்சுīccu, பெ. (n.)

ஈந்து பார்க்க;see indu.

     [ஈத்து – ஈத்து – ஈச்சு.]

ஈச்சுரமூலி

ஈச்சுரமூலிīccuramūli, பெ. (n.)

   பெருமருந்துக் கொடி (பதார்த்த. 256);; kndian birth wort.

     [ஈச்சுரம் + மூலி.]

ஈச்சுரம்

ஈச்சுரம்īccuram, பெ. (n.)

   தூய மெய்ம்மங்களுள் (சுத்த தத்துவங்களுள்); ஒன்று (சிவப்.கட்3);; one of the five sutta-tattuvam.

     [ஈ – ஈச்சுரம். ஈ – ஈதல். வாய்மொழிந்தருளல், ஆசான் வழி அருளப்பட்ட மெய்ம்மொழி.]

ஈச்சை

 ஈச்சைīccai, பெ. (n.)

   ஈந்து (கொ.வ.);; date-pam.

     [ஈந்தை – ஈத்தை – ஈச்சை.]

ஈச்சைக்கீரை

 ஈச்சைக்கீரைīccaikārai, பெ.(n.)

மென்மையான காரமும் நறுமணமும் கொண்ட உண்ணத்தக்க மருத்துவ குணங்கொண்ட புதினாக் கீரை:

 a kind of mint.

     [ஈயெச்ச→ ஈச்ச+கீரை]

இதை உணவில் கலந்து உண்கையில் ஈயெச்ச மிட்ட உணவாக இருந்தாலும் அதன் நச்சைப்போக்க வலலது.

   காணப்படுவதுமான சொல்; cognate word.

     [இனம்+சொல்]

ஈச்சைம்

 ஈச்சைம்īccaim, பெ.(n.)

   கழிவுப்பொருள்களிலும் தின்பண்டங்களிலும் மொய்க்கும் பறக்கும் பூச்சியான ஈ; house fly.

     [ஈ-ஈச்சை]

ஈச்சோப்பி

ஈச்சோப்பி1īccōppi, பெ. (n.)

   ஈயோட்டி (தேவா. 692.7);; whisk for flies, fly-flapper.

     [ஈ + ஒப்பி – ஈயோப்பி – ஈச்சோப்பி.]

 ஈச்சோப்பி2īccōppi, பெ. (n.)

   சிலந்தி (யாழ்.அக.);; Spider.

     [ஈ + ஒப்பு.. ஒப்பு – ஒப்பி.]

ஈஞ்சக்காடன்

 ஈஞ்சக்காடன்īñjakkāṭaṉ, பெ. (n.)

   மலைநெல் வகை; a variety of mountain paddy.

ம. ஈஞ்சக்காடன்.

     [ஈஞ்சல் + காடன்.]

ஈஞ்சல்

 ஈஞ்சல்īñjal, பெ. (n.)

   மீன்சிறகு; fin of a fish.

ம. ஈஞ்சல்.

     [ஈல் – பிளத்தல், குத்துதல். ஈல் → ஈஞ்சு → ஈஞ்சல்.]

ஈஞ்சு

ஈஞ்சுīñju, பெ. (n.)

   1. பேரீஞ்சு; date palm.

   2. காட்டீஞ்சு; wild date-palm.

   3. சிற்றீஞ்சு; dwarf wild date-palm.

     [ஈந்து – ஈத்து – ஈச்சு – ஈஞ்சு.]

ஈஞ்சை

ஈஞ்சைīñjai, பெ. (n.)

   1. கொலை; murder.

   2. இகழ்ச்சி (நிந்தை);; insult (வின்.);;

 disgrace, reproach.

   3. தீங்கு; evil, harm.

     [ஒருகா. இழிஞ்சு → ஈஞ்சு = தாழ்வுபடுத்து, அல்லற்படுத்து இழிஞ்சு → ஈஞ்சு → ஈஞ்சை.]

ஈடகம்

ஈடகம்īṭagam, பெ. (n.)

   1. மனத்தைக் கவர்வது; that which is charming, fascinating.

     “ஈடகமான நோக்கி” (தேவா.607.3); (செ.அக.);.

   2. புகழ்; fame.

     [ஈடு + அகம் = ஈடகம். இடு – ஈடு (செலுத்துதல்) + அகம் (மனம்).]

ஈடண முப்பொருள்

 ஈடண முப்பொருள்īṭaṇamupporuḷ, பெ. (n.)

   மூவகைப் பொருள்களின் விருப்பம்;   அவையாவன மக்கள், மனைவி, பொன்; the three possessions which men commonly desire, the first for children, the second for wife, and the third for gold or riches (w);.

     [ஈடணம் + முப்பொருள்.]

ஈடணத்திரயம்

 ஈடணத்திரயம்īḍaṇaddirayam, பெ. (n.)

ஈடணமுப் பொருள் பார்க்க;see Idana-mu-p-porul.

ஈடணம்

ஈடணம்īṭaṇam, பெ. (n.)

   1. விருப்பம்; desire.

   2. புகழ் (யாழ்.அக.);; fame.

     [இடு – ஈடு + அணம் – ஈடணம் + விருப்பம், புகழ்.]

ஈடணை

ஈடணைīṭaṇai, பெ. (n.)

   1. ஆசை; attachment wish desire. மனைவி மக்க ளர்த்தவீ டணைகள் மூன்று (கைவல்ய. தத்துவ. 13);.

   2. துன்பம்; distress. Affliction.

     “என்னை வேறாக்கி யிந்த வீடணையில் விட்டதுவும் முன்னை வினை தானோ” (பதசாகித்தியம்);. (செ.அக.);.

 Skt. Isaná.

     [ஈடு + ஈடுபாடு, விருப்பம். ஈடு + அணை. அணை = சொல்லாக்க ஈறு. இச்சொல்லை வடமொழி ‘ish’ என்பதன் திரிபாகக் கூறுவது பொருந்தாது. இடு இட்டம் என்பவை தூய தென்சொற்கள். இட்டம் வடமொழியில் ‘ista’ எனத் திரிந்துள்ளது. ista என்பது வடமொழிச் சொல்லாயின் மேலையாரிய மொழிகளிலும் இச்சொல் அடிப்படைச் சொல்லாக வழங்கியிருத்தல் வேண்டும். இட்டம் பார்க்க;see ittam.]

ஈடத்து

 ஈடத்துīṭattu,    வி.எ. (adv.) சிறிது (சங்.அக.); little.

     [இடு – இட்டு = சிறிது இட்டு – இட்டித்து – இடத்து – ஈடத்து.]

ஈடன்

ஈடன்īṭaṉ, பெ. (n.)

   1. வலியோன்; influential man.

   2. செல்வன்; wealthy man.

   3. பெருமையுடையோன்; great person. (ஆ.அக);.

     [ஈடு – அன்.]

ஈடம்

ஈடம்1īṭam, பெ. (n.)

   பிணை, பணயம்; bail, security.

ம. ஈடம்.

     [இடு – ஈடு – ஈடம்.]

 ஈடம்2īṭam, பெ. (n.)

   இடம்; place, location.

     “நஞ்சுண்ட இருள்கண்டத்த ரீடமாவது” (தேவா.திரு.13);.

     [இடம் – ஈடம் (உயிர் முதல் நீண்டது);.]

ஈடறல்

ஈடறல்īṭaṟal, பெ. (n.)

   வலி கெடுதல்; loss of power etc. ஈடழிவு பார்க்க;see idalivu.

     “இந்தவெம் பகழிக் கெல்லாம் ஈடறான் இவனென்றெண்ணி” (பாரத.நீரை மீட்சி 95); (த.சொ.அக.);.

     [ஈடு – அறல்.]

ஈடறவு

ஈடறவுīṭaṟavu, பெ. (n.)

   பெருமைக்கேடு (திவ். இயற் பெரியதிரும. 143);; loss of dignity, etc. (செ.அக.);.

ம. ஈடறவு.

     [ஈடு – அறவு.]

ஈடழி-தல்

ஈடழி-தல்īṭaḻidal,    2 செ.கு.வி. (v.i.)

   வலிமை, பெருமைகள் கெடுதல் (திவ். நாச்சி 8,3);; to suffer loss of power, of authority of dignity or of wealth, to become poor (செ.அக.);

     [ஈடு – அழி.]

ஈடழி-த்தல்

ஈடழி-த்தல்īṭaḻittal,    2 செ.குன்றாவி. (v.t.)

   வலிகெடுத்தல்; to quell one’s power.

     “இராவணனை யீடழித்து” (தேவா.350.8); (செ.அக.);.

     [இடு – ஈடு – அடித்தல், தாக்குதல் தாக்கியழித்தற்குரிய வலிமை. ஈடு + அழித்தல்.]

ஈடழிவு

ஈடழிவுīṭaḻivu, பெ. (n.)

   1. சீர்கேடு; disorder. derangement, irregularity .

   2. நிலைகுலைவு (வின்.);; misfortune. (ஆ.அக.);.

     [ஈடு – அழிவு.]

ஈடாக்கு-தல்

ஈடாக்கு-தல்īṭākkudal, .

   5

செ.குன்றாவி. (v.t.);

   வரிதண்டுதல், திரட்டுதல்; to collect tax, realise arrears.

ம. ஈடாக்குக.

     [ஈடு – ஆக்கு.]

ஈடாடு-தல்

ஈடாடு-தல்īṭāṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. போட்டி போடுதல் (வின்.);; to compete with another.

   2. நெகிழ்ந்தசைதல் (யாழ்ப்.);; to be shaky, loose as a tooth, a nail, the spoke of a wheel.

   3. தளர்தல்; to grow slack, become relaxed.

   4. நேர்நிற்றல்; to stand face to face.

   5. உழலல் (த.சொ.);; to get involved in a monotonous work.

     [ஈடு – ஒப்பு, சமம் ஈடு – ஆடு = ஈடாடு. ஈடாடு – சமவலிமையுள்ளவரோடு போட்டியிடுதல். ஆடுதல் – அசைத்தல், தளர்தல்.]

ஈடாட்டம்

ஈடாட்டம்īṭāṭṭam, பெ. (n.)

   1. போட்டி; competition.

   2. செல்வரிடம் உள்ளதுபோன்ற பணப்புழக்கம்; money dealing, free use or employment of money, as by rich merchants.

   3. நெகிழ்ச்சி; looseness as of a dislodged nail

   4. ஏழ்மை நிலை; poorness poverty. (செ.அக.);.

     [ஈடு – ஆட்டம்.]

ஈடாதண்டம்

ஈடாதண்டம்īṭātaṇṭam, பெ. (n.)

ஏர்க்கால் or shaft of a vehicle.

     “நகைபெரும் ஈடாதண்டம்” (மந்தபு சூரிய ரத.21);.

     [ஈடு – ஆகு – தண்டம்.]

ஈடி

ஈடிīṭi, பெ. (n.)

   1. மண்சுவர்; mud wall.

   2. மண் சுற்றுமதில்; mud compound, boundary wall.

ம. ஈடி

     [ஈடு → ஈடி. சம உயரத்துக்கு எழுப்பப்படும் சுவர்.]

ஈடிகை

 ஈடிகைīṭigai, பெ. (n.)

   எழுதுகோல் (யாழ்.அக.);; painters pencil, quill.

     [ஒருகா.: இழிகை – ஈழிகை – ஈடிகை.]

ஈடிடு-தல்

 ஈடிடு-தல்īḍiḍudal, செ.கு.வி. (v.i.)

   முழங்கையாலும் முன்கையாலும் மோதிப் போரிடும் முட்டிப் போர்; to fight with fists and elbows.

ம. ஈடிடுக.

     [ஈடு – இடு. ஈடு = ஒப்பு. ஒப்பான முறையில் போரிடுதல் இதற்கு முட்டாமுட்டி என்றும் பெயர்.]

ஈடிதம்

 ஈடிதம்īṭidam, பெ. (n.)

   முகமன் கூறுதல்; praising (ஆஅக.);.

     [ஈடு – புகழ். ஈடு – ஈடிதம் – போற்றுதல், பரவுதல், தொழுதல்.]

ஈடிருப்பு

 ஈடிருப்புīṭiruppu, பெ. (n.)

   அடகுவைத்தல்; mortgaging a pledge.

ம. ஈடிருப்பு.

     [ஈடு – இருப்பு.]

ஈடு

ஈடு1īṭu, பெ. (n.)

   தாக்குதல், அடித்தல்; blow, stroke.

     [இல் – இள் – இடு – ஈடு. இல் – குத்துதல்.]

 ஈடு3īṭu, பெ. (n.)

   1. ஏற்றபொருள்; fit or proper subject.

     “நின் சோதனைக்கு நான் ஈடா” (சர்வசமய. பக்.126);.

   2. முறை, தடவை; turn. இந்தத் தென்னை ஒரு ஈட்டுக்கு முப்பதுகாய் காய்க்கும் (உ.வ.);.

     [ஈடு – பொருந்துதல், பொருந்தும் நிலை, முறை, தடவை. இடு ஈடு.]

 ஈடு4īṭu, பெ. (n.)

   ஒரு அடைவு; set, collection.

     “அவன் ஒரு ஈடு இட்டலி தின்பான்”. (தஞ்சை.வ.);.

     [இடு – ஈடு. இடு – வைத்தல்.]

ஈடுகட்டு

ஈடுகட்டு1īṭugaṭṭudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   பிணை கொடுத்தல்; to give as security.

     [ஈடு – ஒப்பு, சமம். ஈடு – கட்டு.]

 ஈடுகட்டு2īṭugaṭṭudal,    15 செ.கு.வி. (v.i.)

   துணி முதலான பொருள்கள் பல நாள் பயன்படுத்தப்பட்டும் வன்மை கெடாது இருத்தல் (இ.வ.);; to be durable, as a piece of cloth for wear.

   2. இழப்பீடு செய்தல்; to make amends, to make good, to indemnify.

   3. பிணையாதல்; to be appropriate security.

   4. பேரன்பு கொள்ளுதல்; to feel ardent devotion.

     “ஈடு கட்டி வருவீரே லின்ப மிகப்பெறுவீர்” (அருட்பா.6.உறு திகூறல்,2,2);.

     [ஈடு = ஒப்பு, சமம். ஈடு – கட்டு. ஈடு – வலிமை. ஈடு – கட்டு.]

ஈடுகாய்

 ஈடுகாய்īṭukāy, பெ.(n.)

   கோயிலில் உடைக்கப் பெறும் சிதறு தேங்காய்; a coconut breaking in temples.

     [ஈடு+காய்]

ஈடுகொடு-த்தல்

ஈடுகொடு-த்தல்īḍugoḍuttal,    4 செ.கு.வி. (v.i.)

   1. இணையாதல் (வின்.);; to be equal.

   2. போட்டி போடுதல் (வின்.);; to compete.

   3. எதிர்ப்புக்குத் தளராது நிற்கை; to bear the brunt.

வீடு பலமாகவிருப்பதால் புசலுக்கு ஈடு கொடுக்கும். (இ.வ.);.

   4. பொந்திகை (திருப்தி); செய்தல்; to give satisfaction. (செ.அக.);.

     [ஈடு – ஒப்பு, வலிமை ஈடு – கொடு.]

ஈடுகொள்ளு-தல்

ஈடுகொள்ளு-தல்īṭugoḷḷudal,    13 செ.கு.வி. (v.i.)

   மனங்கனிதல்; to soften, to melt as the heart.

     “திருமுக மிறைஞ்சி யீடுகொண்டு” (திருவாலவா.55.20);. (செ.அக.);.

     [ஈடு – கொள்.]

ஈடுசெய்-தல்

ஈடுசெய்-தல்īṭuseytal,    1 செ.குன்றாவி. (v.t.)

   1. மாற்றாகச் செய்தல் (இ.வ.);; to compensate.

   2. சரிக்கட்டுதல்; to adjust balance. (செ.அக.);

     [ஈடு – செய்.]

ஈடுசெலுத்தல்

 ஈடுசெலுத்தல்īṭuseluttal, பெ. (n.)

ஈடு செய்-தல் பார்க்க;see iducey.

     [ஈடு – செலுத்தல்.]

ஈடுசோடு

ஈடுசோடுīṭucōṭu, பெ. (n.)

   இணை; pair, condition of being equal between two persons or things.

     “ஈடுசோ டற்ற சிற்சத்தியாம்” (மசுதான்.92);.

     [ஈடு – ஒப்பு, ஈடு – சுவடு. சுவடு – சோடு.]

ஈடுபடு-தல்

ஈடுபடு-தல்īḍubaḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   1. வலியழிதல்; to become weak feeble.

   2. அகப்படுதல்; to be ensnared, entangled.

     “விலங்க ரீடுபட்டதே” (பாரத.வாரணா.79);.

   3. மனங்கவிதல்; lo be absorbed, engrossed, involved.

     “பகவத் குணங்களில் ஈடுபட்டவர்கள்.

   4. துன்பப்படுதல்; to suffer.

     [ஈடு – வலிமை, விருப்பம், படுதல் = அழிதல், குவிதல், உண்டாதல். ஈடு – படு.]

ஈடுபாடு

ஈடுபாடுīṭupāṭu, பெ. (n.)

   1. துன்பம்; trouble, suffering.

     “ஈடுபாடித்தனையும் பட்டு” (அரிச்.பு.மயான. 34);.

   2. மனங்கவிகை; state of being absorbed, en-grossed, involvement.

   3. ஆதாயம் இழப்பு (இலாப நட்டம்);; profit and loss.

   4. ஈட்டுக்கமைந்திருத்தல் (த.சொ.அக.);; remaining as security.

   5. சார வைத்தல் (தாயு.ஆகாரபுவந.2.உரை);; making one dependent (செ.அக.);.

     [ஈடு – {படு) – பாடு.]

ஈடுமாடு

ஈடுமாடுīṭumāṭu, பெ. (n.)

   1. எல்லை, வரம்பு; limit.

   2. சுற்றுச்சுவர்; compound wall, boundary.

ம. ஈடுமாடு.

     [ஈடு – மாடு. ‘மாடு’ எதுகை மரபிணைமொழி.]

ஈடுமுட்டு

 ஈடுமுட்டுīṭumuṭṭu, பெ. (n.)

   தடை; resistance, obstruction.

ம. ஈடுமுட்டு.

     [ஈடு – முட்டு.]

ஈடுமுப்பத்தாறாயிரம்

ஈடுமுப்பத்தாறாயிரம்īṭumuppattāṟāyiram, பெ. (n.)

   திருவாய்மொழி விரிவுரைகளு ளொன்று (உபதேச ரத்.44);; exhaustive commentary on the Tiruvây-moll, written by Vadakku-t-liru-wili-p-pillai following the discourse of his guru Nam-Pillai, consisting of 36,000 granthas of 32 syllables each (செ.அக.);.

     [ஈடு – முப்பது – அத்து – ஆறு – ஆயிரம்.]

ஈடுமேடு

 ஈடுமேடுīṭumēṭu, பெ. (n.)

   மேடும் பள்ளமும், குண்டும் குழியும்; ups and down, undulations (செ.அக.);.

ம. ஈடுமேடு.

     [ஈடு – மேடு.]

ஈடேறு-தல்

ஈடேறு-தல்īṭēṟudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. முடிவுறுதல்; to be completed.

   2. உய்வடைதல்; to be liberated from a worldly life, saved from ruin, rescued from danger, difficulty or disease.

     “தொண்டர் குழா மீடேற” (குற்றா.தல. கடவுள். 13);.

   3. வாழ்வடைதல்; to become prosperous.

     “என்னை நீ யீடேற்றத் திருவுளத் தருள் செய்குக” (பாரத,நச்சு.5);.

   4. மனநிறைவடைதல்; to be pleased.

ம. ஈடேறுக.

     [ஈடு – விருப்பம். ஈடு – ஏறு.]

ஈடேற்றம்

ஈடேற்றம்īṭēṟṟam, பெ. (n.)

   1. உய்வு; deliverance.

   2. விடுதலை; liberation, emancipation.

   3. பாதுகாப்பு (வின்.);; protection.

   4. மீட்பு (த.சொ.அக.);; redemption.

   5. பேரின்ப வாழ்வு; bliss.

   ம. ஈடேற்றம்;   க. ஈடேரிக;தெ. ஈடேறு.

     [ஈடு – விருப்பம்’ ஏற்றம் – நிறைவுறுதல். ஈடு – ஏற்றம்.]

ஈடேற்றல்

 ஈடேற்றல்īṭēṟṟal,    தொ.பெ. (vbl.n) ஈடேறச் செய்தல்; act of redeeming, liberating. (த.சொ.அக.).

     [ஈடு – ஏற்றல்.]

ஈடேற்று-தல்

ஈடேற்று-தல்īṭēṟṟudal,    6 செ.குன்றாவி. (v.t.)

   உய்வித்தல்; to deliver, redeem, liberate, emancipate.

     [ஈடு – ஏற்று.]

ஈடை

ஈடைīṭai, பெ. (n.)

   1. ஈசை (வின்.); பார்க்க;see Isai.

   2. புகழ்ச்சி; fame, praise.

     [ஈடு – ஈடை.]

ஈட்டம்

ஈட்டம்1īṭṭam, பெ. (n.)

   பொருள் தேடுகை; acquiring, earning.

     “ஈட்டமிவறியிசைவேண்டா வாடவர்” (குறள். 1003);.

     [ஈண்டு – ஈட்டு – ஈட்டம்.]

 ஈட்டம்2īṭṭam, பெ. (n.)

   கூட்டம்; concourse, throng congregation, group, assembly, etc.

     “அடியா ரீட்டம்” (தேவ. 1100.11);.

   2. மிகுதி; store, treasure, abundance

     “புண்ணியத் தின்ப லீட்டம்” (சி.சி.2.41);.

   3. செய்தல்; doing.

ம. ஈட்டம்.

     [ஈள் – ஈண்டு – ஈட்டு – ஈட்டம்.]

 ஈட்டம்3īṭṭam, பெ. (n.)

   1. வலிமை; strength, force vigour.

     “ஈட்டமொ டொருகணை யேவி” (கந்தபு. தாரக. 146);.

   2. நோயின் நீட்சி; height or crisis of a disease (சா.அக.);.

     [ஈள் – நெருங்குதல், வலிமை செறிதல். ஈள் – ஈடு – ஈட்டம்.]

ஈட்டல்

 ஈட்டல்īṭṭal, பெ. (n.)

   வணிகர் எண் குணங்களுளொன்று (பிங்.);; amassing wealth, a desirable quality in merchants.

     [ஈண்டு – ஈட்டு – ஈட்டல்.]

ஈட்டி

ஈட்டி1īṭṭi, பெ. (n.)

   1. ஈட்டிமரம்; a kind of tree.

   2. தோதகத்தி (L);; black wood.

   ம. ஈட்டி;   க. இம்படி. இட்டி;   து. பீடி;தெ. இட்டிடி. இருகுடு. இருவுடு.

     [ஈட்டி = ஈட்டி செய்யப் பயன்பட்ட மரம். பதப்படுத்து முன் நீரிலிட்டால் அமிழும் தன்மையது. ஒரு கனஅடி மரக் 50-60 (பவுண்டு); கல்லெடையுள்ளது.]

 ஈட்டி2īṭṭi, பெ. (n.)

   குந்தம் (குத்தித் துளைக்கும் கருவி; lance, spear;

 pike.

   ம. க. ஈட்டி;தெ. ஈ.டெ.

     [இல் – குத்தல் கருத்துவேர்;

இல் – இள் – ஈட்டு (செலுத்து, குத்து); – ஈட்டி.]

ஈட்டிக்காரன்

ஈட்டிக்காரன்īṭṭikkāraṉ, பெ. (n.)

   1. வட்டிக்குப் பணம் கொடுத்துத் தண்டுபவன்; pathan, money iender.

   2. கொடுமைக்காரன்; usurer.

     [ஈட்டி – காரன்.]

ஈட்டித்தாங்கு

 ஈட்டித்தாங்குīṭṭittāṅgu, பெ. (n.)

   ஈட்டிப் பிடி (வின்.);; shaft of a spear, hit.

     [ஈட்டி – தாங்கு.]

ஈட்டிப் பிடங்கு

 ஈட்டிப் பிடங்குīḍḍippiḍaṅgu, பெ. (n.)

   ஈட்டியின் முனையுள்ள பகுதி (வின்.);; spear-head.

     [ஈட்டி + பிடங்கு.]

ஈட்டிமீன்

 ஈட்டிமீன்īṭṭimīṉ, பெ. (n.)

   மீன்வகை; a kind of fish.

ம. ஈட்டிமீன்.

ஈட்டியது

ஈட்டியதுīṭṭiyadu, வினையா.பெ. (vbl.n.)

   1. தேட்டம்; acquisition, accumulation (வின்.);.

   2. ஒருவன் இப்பிறப்பில் அல்லது முற்பிறப்பில் தேடிய வினை (சா.அக.);; total quantity of karmic actions which one has acquired in this life or in his supposed previous birth.

     [ஈண்டு – ஈட்டு – ஈட்டி – அது.]

ஈட்டியெறி-தல்

ஈட்டியெறி-தல்īṭṭiyeṟidal,    2 செ.குன்றாவி. (v.t.)

   ஈட்டியால் குத்துதல், கொல்லுதல்; to throw spear, to thrust through and kill with spear.

     [ஈட்டி – எறி.]

ஈட்டியெழுபது

ஈட்டியெழுபதுīṭṭiyeḻubadu, பெ. (n.)

   ஒட்டக்கூத்தராற் பாடப்பெற்ற ஒரு நூல்; poem in 70 verses composed by Otta-k-kūttar having for its theme the spearmanship of the Cenkuntar clan (சா.அக.);

     [ஈட்டி + எழுபது. குந்தம் எனப்படும் ஈட்டிப்படைக்கலன்களை ஆளும் திறன் பெற்ற செங்குந்தரைப் பாராட்டும் நோக்குடைய நூலாதலின் ஈட்டியெழுபது எனப் பெயர் பெற்றது.]

ஈட்டு

ஈட்டு1īṭṭudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. கூட்டுதல் (பிங்.);; to collect, amass, accumulate.

   2. தடித்தல், பருத்தல், கொழுத்தல்; to become fat.

   3. தேடுதல்; to earn, acquire, secure.

     “அறநோக்கா தீட்டிய வொண் பொருள்” (குறள்.1009); (செ.அக.);.

ம. ஈட்டுக.

     [ஈண்டு – ஈட்டு. ஈட்டுதல்.]

 ஈட்டு2īṭṭu, பெ. (n.)

   கூட்டம்; flock swam, flight.

     ‘ஈட்டறாப் புள்ளினம்” (சீவக.95);.

     [ஈண்டு – ஈட்டு.]

ஈட்டுக்கீடு

 ஈட்டுக்கீடுīṭṭukāṭu, பெ. (n.)

   சரிக்குச்சரி (வின்.);; measure for measure. (செ.அக.);.

     [ஈடு – ஈட்டு + கு + ஈடு.]

ஈட்டுமுறி

 ஈட்டுமுறிīṭṭumuṟi, பெ. (n.)

   அடைமான முறி; deed of hypothecation.

     [ஈட்டு + முறி.]

ஈட்டுலக்கை

 ஈட்டுலக்கைīṭṭulakkai, பெ.(n.)

   ஒரே நேரத்தில் இரண்டு உலக்கை கொண்டு இரண்டுபேர் மாற்றி மாற்றி குத்துதல்; pounding grains with two pestles by two persons.

     [ஈடு→ ஈட்டு+உலக்கை]

ஈணி

 ஈணிīṇi, பெ. (n.)

   பனை நார்; palm-fibre (வின்.); (த.சொ.அக.);.

     [ஈல் – ஈள் – ஈளி – ஈணி + பிரிக்கப்பட்ட நார்.]

ஈணு-தல்

ஈணு-தல்īṇudal,    16 செ.குன்றாவி. (v.t.)

   1, ஒடித்தல்; to break.

   2. முன்னும் பின்னுமாக வளைத்தல்; to be backward and forward, lo snap.

ம. ஈனுக.

ஈணை

ஈணைīṇai, பெ. (n.)

   1. அகணி; as a the fibrous part of the bark of a tree.

   2. பனை நார்; palm-fibre (த.சொ.அக.);

     [ஈல் – ஈள் – ஈணி – ஈணை – ஈணை.]

ஈண்டல்

 ஈண்டல்īṇṭal, தொ.பெ. (vbl.n) ஈண்டு-தல் பார்க்க;see indu.

     [ஈண்டு → -ஈண்டல், ‘அல்’ பெயரீறு.]

ஈண்டி

 ஈண்டிīṇṭi, பெ. (n.)

   மண்சுவர்; mud wall.

ம. ஈண்டி.

     [இண்டு – ஈண்டி.]

ஈண்டு

ஈண்டு1īṇṭu, கு.வி.எ. (adv.)

   1. இவ்விடத்தில் (திவா.);; here, in this place.

   2. இம்மையில்; in this world, in the present birth.

     “ஈண்டறம் பூண்டார்” (குறள்.23);.

   3. இவ்வாறு (சூடா);; in this way.

   4. இப்பொழுது; now.

     “ஈண்டேகிக் கொணர்வேன்” (கம்பரா.திருவவ.57); (செ.அக.);.

     [ஈ – ஈண்டு.]

 ஈண்டு2īṇṭudal,    15 செ.கு.வி. (v.i.)

   1. கூடுதல்; to gather, come together.

     “ஈண்டிய வடியவ ரோடும்” (திருவாச. 2,144);.

   2. செறிதல்; to be close together, to get to be a compact mass, as the atoms of matter/element.

     “இமிழ்கடல் வளைஇய லீண்டகன் கிடக்கை” (புறநா. 19);.

   3. மிகுதல்; to abound, to be numerous.

     “இயைந் தொருங் கீண்டி” (சிலப்.6.145);.

   4. விரைந்து செல்லுதல்; to speed, make haste.

     “இடுக்

கண்

களைதற் கீண்டெனப் போக்கி” (சிலப்.13.101); – 5 செ.குன்றாவி (v.t.);

   தோண்டுதல்; to gouge, extract, pluck out dig out.

     “மலர்க்கண்ணை யீண்ட…. ஆழி யீந்தார்” (தேவா.192.5);.

க. இடி.

     [இல் – குத்துதல், நெருக்குதல், செறியச் செய்தல், இல் – இள் → இண்டு → ஈண்டு.]

 ஈண்டு3īṇṭudal, .

   15

செ.கு.வி. (v.i.);

   1 வருதல்; to come.

   2. செல்லுதல்; to go.

சிந். ஈண்டு.

     [இல் – இள் – இண்டு – ஈண்டு.]

 ஈண்டு3īṇṭu, பெ. (n.)

   விரைவு திவா.); haste, speed, dispatch.

     [ஈண்டு = செறிவு, விரைவு.]

 ஈண்டு4īṇṭu, பெ. (n.)

   புலி தொடக்கி (மலை.);; tiger stopper. (செ.அக.);.

     [இண்டு – ஈண்டு.]

ஈண்டுநீர்

ஈண்டுநீர்īṇṭunīr, பெ. (n.)

   கடல்; sea literally a large collection of water.

     “ஈண்டுநீர் மிசைத் தோன்றி” (கலித்.100);.

     [ஈண்டு – நீர்;

ஈண்டுதல் = பெருகுதல், மிகுதல்.]

ஈண்டென

ஈண்டெனīṇṭeṉa,    கு.வி.எ. (adv.) விரைவாக; expeditiously, promptly, speedily.

     “நீயே ஈண்டெனத் தந்தருள வேண்டுமென்கிறார்”. (திவ். திருவாய்.2.9.2 ஆறா); (செ.அக.);.

     [ஈண்டு – செறிவு. விரைவு. ஈண்டு + என = ஈண்டென.]

ஈண்டை

ஈண்டைīṇṭai,    கு.வி.எ. (adv.) இங்கு; here, in this world.

     “ஈண்டை வலையகத்துச் செம்மாப்பார்” (நாலடி. 331);. (செ.அக.);.

     [இங்கு – ஈங்கு – ஈண்டு – ஈண்டை.]

ஈண்டையான்

ஈண்டையான்īṇṭaiyāṉ, பெ. (n.)

   இவ்விடத்தான்; man of this place, locality etc.

     “ஈண்டையாரல்லர்” (கம்பரா. தைல.75);.

     [ஈண்டு- ஈண்டை + ஆன்.]

ஈண்டையார்

 ஈண்டையார்īṇṭaiyār, பெ. (n.)

ஈண்டையான் பார்க்க;see Indayán.

     [ஈண்டை + ஆர்.]

ஈதா

ஈதாītā,    இடை. (int.) இந்தா; exclamation inviting attention, Lo, see here.

     “அறிந்திலே னீதா” (பரிபா. 8,60);. (செ.அக.);.

     [இது – இதா (இதோ); – இந்தா + இங்கு. இந்தா – ஈதா. ஈதா இங்கே பார்.]

ஈதி

ஈதிīti, பெ. (n.)

   1. நாட்டுக்குவருங் கேடு (குறள்,732, உரை);; disaster which may befall the land scourge in six forms, viz. storm, drought, rodent, locust proximity of royalty.

   2. துன்பம், தொல்லை, நச்சரவு; affliction.

     “ஈதி இடைஞ்சலிலே இடி விழுந்த கானலிலே” (நாட்டுப்பா.);.

ம. ஈதி.

     [இதை – ஈதை – ஈதி.]

ஈதிபாதை

ஈதிபாதைītipātai, பெ. (n.)

   1. ஈதி பார்க்க;see Idi pestilence.

   2. இக்கட்டான நிலை; perplexity, quandary, dilemma.

     [இதை – ஈதை – ஈதி – பாதை.]

ஈது

ஈதுītu,    சு.பெ. (demon. Pron.) இது; this.

     “ஈதேயென் றோழி” (திருவாச. 7,1); (செ.அக.);.

     [இது – ஈது.]

ஈதை

ஈதைītai, பெ. (n.)

   துன்பம்; calamity, affliction.

     “ஈதைகள் தீர்க்கும் நாமத் திராமனை” (கம்பரா.நாகபா. 275); (செ.அக.);.

     [இதை – ஈதை.]

ஈத்தா

 ஈத்தாīttā, பெ. (n.)

   எச்சில், உமிழ்நீர்; Saliva.

ம. ஈத்தா.

     [இழி – இழித்து – ஈத்து (கொ.வ.);.]

ஈத்து

ஈத்து1īttu, பெ. (n.)

   1. வண்டியச்சு; axle of a cart.

   2. ஏர்த்தடி; thill.

ம. ஈத்து.

     [உல் – உத்து – இத்து – ஈத்து.]

 ஈத்து2īttu, பெ. (n.)

   1. பயப்பு, பிள்ளைப்பேறு; delivery.

     “ஒரு ஈத்தில் மூன்று பிள்ளை பெற்றாள்” (இ.வ.);.

   2. விலங்கு குட்டிபோடுதல்; yeaning of animals.

     “இந்தக் கன்று எங்கள் மாட்டுக்கு நாலாம் ஈத்து” (உவ);.

   3. நிலைத்திணைகளின் கதிர் புடைவிடுதல்; sprouting of corn etc. from plants or crop.

     ‘அவரை மறு ஈத்து விட்டிருக்கிறது’ (இ.வ.);.

     [ஈன் – ஈத்து.]

ஈத்தை

 ஈத்தைīttai, பெ. (n.)

   முதிராத கதிர்; tender crop.

     “கதிர் ஈத்தையாப் போயிற்று”

     [ஈன்-ஈத்தை]

ஈந்து

ஈந்து1īndu, பெ. (n.)

   1. பேரீச்சைமரம்; date-palm.

     “ஈந்தின் முற்றிய பெரு நறவு” (கல்லா.24);.

   2. சிற்றீந்து; dwarf wild date-palm (வ.மொ.வ.90);.

   வ. ஹிந்தால;   ம. ஈத்த;தெ. ஈத்த.

     [ஈர் (நுண்மை); – ஈர்த்து – ஈத்து. கிளையில்லா மரங்கட்குள் மிகச் சிறிய ஒலையுள்ளது, அல்லது ஏறுவாரை அறுக்கும் அடியினது. ஈர் – நுண்மை. ‘”ஈரயிர் மருங்கின்” (சிலப்.6.146);.]

 ஈந்து2īndu, பெ. (n.)

   நஞ்சு (சங்.அக.);; poison.

     [ஈர் – ஈர்ந்து – ஈந்து. பிளக்கச் செய்வது;

சாகச் செய்வது.]

ஈனசாமந்தன்

ஈனசாமந்தன்īṉacāmandaṉ, பெ. (n.)

   சாமந்தர் வகையினர் (சுக்கிர.நீதி.26);; class of camantar.

     [ஈன + சாமந்தன்.]

ஈனதை

ஈனதைīṉadai, பெ. (n.)

   இழிவு;     “தரமற வீனதை யடைய” (ஞானவா.தாகு.23.);.

 low state, degraded condition.

     [ஈன் → ஈனம் → ஈனதை.]

ஈனன்

ஈனன்īṉaṉ, பெ. (n.)

ஈனவன் பார்க்க (திருவாத9, திருப்பெரு.133);;see inawan.

     [ஈனவன் → ஈனன்.]

ஈனம்

ஈனம்1īṉam, பெ. (n.)

   1. இழிவு; degradation. baseness, meaness.

     “ஈனமா யில்லிருந்து” (நாலடி. 198,);.

   2. குறைபாடு; deficiency, want (உரி.நி..);.

 Skt. hina.

     [இல் → இள் (இளி, இழி); → ஈளம் → ஈனம் – என்பன தாழ்த்தலும் இழித்தலுமாகிய நேர்ப்பொருள் தரும் தூய தமிழ்ச் சொற்களாம். இவற்றை வடசொல்லெனக் காட்டல் பொருந்தாது.]

 ஈனம்2īṉam, பெ. (n.)

   சரிவு (அக.நி.);; inclination, slope. (செ.அக.);.

     [இல் → இள் → ஈளம் → ஈனம்.]

 ஈனம்3īṉam, பெ. (n.)

   முயல் (அக.நி.);; hare.

     [இல் = மென்மை. இல் → ஈல் → ஈலம் → ஈனம்.]

ஈனல்

ஈனல்īṉal, பெ. (n.)

   1. கதிர் (வின்);.

   2. ஈனுதல்; bringingforth, as a cow brings forth a calf (சா.அக.);.

ஏனல் பார்க்க;see enal.

தெ. என்னு.

     [ஈன் → ஈனல்.]

ஈனவன்

ஈனவன்īṉavaṉ, பெ. (n.)

   இழிந்தோன் (திவ். இயற். நிரன்மு.6);; degraded person, low fellow.

     [ஈனம் → ஈனவன்.]

ஈனா

 ஈனாīṉā, பெ. (n.)

   ஈனாத பசுங்கன்று; uncalving cow-calf (சா.அக.);

     [ஈன் + ஆ (எ.ம.இ.நி.);.]

ஈனாக்கடாரி

 ஈனாக்கடாரிīṉākkaṭāri, பெ. (n.)

   கன்று போடாத ஆன் அல்லது எருமை; cow or buffalo that has not calved.

     [ஈன் + ஆ (எ.ம.இ.நி); + கடாரி.]

ஈனாக்குமரி

 ஈனாக்குமரிīṉākkumari, பெ. (n.)

   மகப்பெறாத இளம்பெண் (வின்.);; young woman who has not yet given birth to child.

     [ஈன் → ஆ (எ.ம.இ.நி.); + குமரி.]

ஈனாத்தாயர்

ஈனாத்தாயர்īṉāttāyar, பெ. (n.)

   செவிலித்தாய்; foster mother.

     “ஈனாத் தாயர் மடுப்பவும் உண்ணாள்” (அகநா.105.6);.

     [ஈன் – ஆ – தாயர். (ஆ.எ.ம.இ.நி);.]

ஈனாமலடி

ஈனாமலடிīṉāmalaḍi, பெ. (n.)

   1. பிள்ளை பெறாத மலடி; barren woman.

   2. மலட்டு ஆ; barren cow. (சா.அக.);.

     [ஈல் + ஆ + மலடி.]

ஈனாமலடு

 ஈனாமலடுīṉāmalaḍu, பெ. (n.)

ஈனாமாடு பார்க்க;see inä-mădu.

     [ஈன் + ஆ + மலடு.]

ஈனாமாடு

 ஈனாமாடுīṉāmāṭu, பெ. (n.)

   மலட்டு ஆன்; barren cow or buffalo. (செ.அக.);.

     [ஈன் + ஆ + மாடு.]

ஈனாமேகப்பூ

 ஈனாமேகப்பூīṉāmēkappū, பெ. (n.)

   செம்பரத்தம் பூ; shoe-flower. (சா.அக.);.

     [ஈன் + ஆ + மேகம் + பூ.]

ஈனாயம்

ஈனாயம்īṉāyam, பெ. (n.)

   1. இழிவு; ignominy, disgrace, dishonour.

   2. இழித்துரை; rebuke, abuse. (ஆ.அக.);.

     [ஈனம் + ஆயம்.]

ஈனாவரக்கி

 ஈனாவரக்கிīṉāvarakki, பெ. (n.)

   மகப்பெறாக் கொடியவள் (வின்.);; Cruel, merciless woman lit., Raksasa woman who has not born children. (செ.அக.);.

ம. ஈனாஞ்சக்கி.

     [ஈன் + ஆ + அரக்கி.]

ஈனாவாழை

 ஈனாவாழைīṉāvāḻai, பெ. (n.)

   பூ விடாத அல்லது குலைதள்ளாத வாழை மரம்; plantain tree which has not put forth flower. (சா.அக.);.

     [ஈன் → ஆ + வாழை.]

ஈனியற்படுக்கை

ஈனியற்படுக்கைīṉiyaṟpaḍukkai, பெ.(n.)

   மனைவி பிள்ளை பெற்றவுடன் கணவனும் அவளைப்போல் நோவுற்றதாக நடித்துப் படுத்துக் கொண்டு தனக்கு மகப்பேற்று மருத்துவம் பார்க்கச்சொல்வது; couvade.

     [ஈன்+இயல்+படுக்கை]

     “குறத்தி பிள்ளை பெற குறவன் காயத் தின்றானாம்” என்னும் பழமொழி ஈனியற் படுக்கை வினை குமரி நாட்டில் இருந்ததைக் குறிப்பாக உணர்த் துகின்றது.(த.வ.130);.

 finger of the leg.

     “கலியாணத்தில் மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் உருட்டு அணிவித் தார்கள் (கொங்.வ.);.

மறுவ. மிஞ்சு

     [(உருள்-உருட்டு]

ஆண்களுக்கு தட்டை வடிவிலும் பெண் களுக்கு முறுக்கிய வடிவிலும் உருட்டு அணிவிப்பது வழக்கம்.

ஈனில்

ஈனில்īṉil, பெ. (n.)

   பிள்ளைப்பேற்றிடம்; lying-inchamber.

     “பேடைச் செவ்வி நோக்கி யீனி லிழைக்க” (பதினோ.திருவாரூ.19);, (செ.அக.);.

     [ஈன் + இல்.]

ஈனு மணிமை

 ஈனு மணிமைīṉumaṇimai, பெ. (n.)

   பிள்ளை பெற்ற தீட்டு; ceremonial uncleanliness after deliver. (சா.அக.);.

     [ஈனும் + அணிமை.]

ஈனு-தல்

ஈனு-தல்īṉudal,    14 செ.குன்றாவி. (v.t).

   1. ஈன்பார்க்க;see In. 2. காய்த்தல்; to bear fruit.

   3. வயிற்றினின்று குழவியைக் கீழிடுதல், பிள்ளை பெறுதல் அல்லது குட்டி போடுதல்; to bring forth a young one.

 Eyean;

 AS eanian = to bring forth.

     [ஈ → ஈன் → ஈனு.]

ஈனை

ஈனைīṉai, பெ. (n.)

   1. இலை நரம்பு; vein of a leaf.

   2. சித்திரக் குறிப்பு; outline of a picture.

     [ஈன் → ஈனை. இல் – ஈல் – ஈன் = குத்துதல். புள்ளியிடுதல், வரை படம் எழுதுதல்.]

ஈனை வாங்கு-தல்

ஈனை வாங்கு-தல்īṉaivāṅgudal,    5 செ.கு.வி. (v.i.)

ஈனையெழுது பார்க்க;see ila-y-eludu.

     [ஈனை + வாங்குதல்.]

ஈனையெழுது-தல்

ஈனையெழுது-தல்īṉaiyeḻududal,    5 செ.கு.வி. (v.i.)

   சித்திரக் குறிப்பு வரைதல்; to delineate, make the first outline of a picture, design, or pattern (w.);.

     [ஈன் → ஈனை + எழுதுதல்.]

ஈனோர்

ஈனோர்īṉōr, பெ. (n.)

   இவ்வுலகத்தோர்; those who are of this world.

     “ஈனோர் வடிவிற் காண்டலில்லென” (சிலப்.பதிகம்.53);.

     [ஈ → அண்மைச் சுட்டு. ஈ → ஈன் + ஒர்.]

ஈன்

ஈன்1īṉ, பெ. (n.)

   1. இவ்விடம்; this place.

     “ஈன் வருகென்ன” (தணிகைப்பு.வீராட்ட89);.

   2. இவ்வுலகம்; this world.

     “ஈனு மும்பரும் பெறலருங் குரைத்தே” (ஐங்குறு.401);.

     [ஈ = அண்மைச் சுட்டு. ஈ → ஈன் + இவண். இங்கு.]

 ஈன்2īṉ, பெ. (n.)

   மர வகை; ainecwood loc

   2. ஆச்சா (சித்.அக.);; sal tree. [ஒருகா: ஊ – -ஊன் – ஈன் (உயரமானது);.]

ஈன்(னு)-தல்

ஈன்(னு)-தல்īṉṉudal,    14 செ.குன்றாவி. (v.t) கருவுயிர்த்தல் (நாலடி.400); to bear, bring forth, yean.

   2. உண்டாக்குதல்; to produce, yield, bring into being.

     “நயனீன்று நன்றி பயக்கும்” (குறள்.97);.

   ம. ஈனுக;க., தெ., கோத., துட., பட., பர். ஈன். பிரா. கீனிங்க்.

     [இல் – ஈல் – ஈன்.]

ஈன்னம்

 ஈன்னம்īṉṉam, பெ. (n.)

   வெள்ளி; silver. (சா.அக.);.

     [ஈ → ஈயம் → ஈயன்னம் → ஈன்னம்.]

ஈன்ற நோக்காடு

 ஈன்ற நோக்காடுīṉṟanōkkāṭu, பெ. (n.)

   பிள்ளை பிறந்ததால் உண்டாகும் வலி; pain which succeeds childbirth-after pains. This is due to the contraction of the uterus.

     [ஈன்ற + நோக்காடு. நோக்காடு → நோவு.]

ஈன்றணிமை

ஈன்றணிமைīṉṟaṇimai, பெ. (n.)

   1 புனிறு (திவா.); time immediately after calving, said of cow.

     “நாளீன் றணிய….. கன்று” (கூர்மபு.கன்னை.80);.

     [ஈன்று + அணிமை.]

ஈன்றணிமைப்பால்

 ஈன்றணிமைப்பால்īṉṟaṇimaippāl, பெ. (n.)

   மாடு கன்று போட்டவுடன் சுரக்கும் பால். இதைச் சீம் பால் என்றும் சொல்வதுண்டு; irst milk given by a cow after calving.

     [ஈன்று + அண்மை + பால்.]

ஈன்றணுமை

 ஈன்றணுமைīṉṟaṇumai, பெ. (n.)

   ஈன்றணிமை பார்க்க;     [ஈன்று + அணிமை. அணிமை → அனுமை. (கொ.வ.);.]

ஈன்றதாய்

ஈன்றதாய்īṉṟatāy, பெ. (n.)

   பெற்ற தாய். ஐவகைத் தாயரில் ஒருவர்; mother who brought forth, one of al-wagal-tiyar .

     “உயிர்த்த பொழுதே ஓடிற் றீன்ற தாய்” (பிரபுலிங்.பிரபுதே.63); (செ.அக.);.

     [ஈன் → ஈன்ற + தாய்.]

ஈன்றல்

ஈன்றல்īṉṟal, தொ.பெ. (vbl.n)

   1. பெறுதல்; bringing forth.

   2. உண்டாதல்; becoming.

   3. விளைதல்; yielding.

     “இன் சொல் இனிதீன்றல் காண்பான்” (குறள்.99);.

     [ஈன் → ஈன்றல்.]

ஈன்றான்

 ஈன்றான்īṉṟāṉ, பெ. (n.)

   தந்தை (பிங்.);; father (செ.அக.);.

     [ஈன் → ஈன்றவன் → ஈன்றான்.]

ஈன்றார்

 ஈன்றார்īṉṟār, பெ. (n.)

   தந்தை தாயர்; father and mother. (ஆ.ஆக.);.

     [ஈல் → ஈன் → ஈன்ற + (அவர்); ஆர்.]

ஈன்றாள்

ஈன்றாள்īṉṟāḷ, பெ. (n.)

   தாய்; mother.

     “ஈன்றாள் பசி காண்பானாயினும்” (குறள்.656);.

     [ஈள் → ஈன்றவன் → ஈன்றாள்.]

ஈன்றுளார்

ஈன்றுளார்īṉṟuḷār, பெ. (n.)

   தாய்தந்தையர்; parents. (ஆ.அக.);

     “ஆண்டையரோ எமை ஈற்றுளர்” (கந்தபு. சய.17);.

     [ஈன் → ஈன்று உளார்.]

ஈன்றோன்

 ஈன்றோன்īṉṟōṉ, பெ. (n.)

ஈன்றான் (சூடா.); பார்க்க;see Inran (செ.அக.);.

     [ஈன்றான் → ஈன்றோன். ஆன் → ஒன். ஈறு திரிபு.]

ஈப்பி

 ஈப்பிīppi, பெ. (n.)

   பேன்முட்டை (யாழ்.அக.);; nit.

ஈர்ப்பி பார்க்க;see irppi

     [ஈர்ப்பி – ஈப்பி.]

ஈப்பிணி

 ஈப்பிணிīppiṇi, பெ. (n.)

   கருமி, இவறன். ஈயாமாறி (யாழ்ப்.);; miser.

ஈப்பிலி பார்க்க;see ippili.

     [ஈ – ஈப்பு + இலி – ஈப்பிலி – ஈப்பினி – ஈப்பிணி. (கொ.வ.);.);

ஈப்பிலி

 ஈப்பிலிīppili, பெ. (n.)

   ஈயாதவன்; miser.

     [ஈ – ஈப்பு (ஈகை); + இலி.]

ஈப்புகு-தல்

ஈப்புகு-தல்īppugudal,    21 செ.கு.வி. (v.i.)

   காதில் ஈ நுழைதல்; entry of fly (into the ear);. (சா.அக.);.

     [ஈ – புகு.]

ஈப்புலி

ஈப்புலிīppuli, பெ. (n.)

   1. ஒருவகைச் சிறு சிலந்திப் பூச்சி; species of small spider which devours flies.

     “ஈப்புலியோ டெலிப்புலியாய் வடிவங் கொண்டு” (தனிப்பா.1,86.169);.

   2. நாய்ப்புலி விளையாட்டு; native game similar to the game of fox and geese. (செ.அக.);.

     [ஈ + புலி. ஈயைத்தின்னும் சிலந்திப்பூச்சி. ஈயைக் கொல்லும் புலியாக உருவகம் கொண்டது.]

     [P]

ஈமக்கடன்

ஈமக்கடன்īmakkaḍaṉ, பெ. (n.)

   இறந்தோர்க்குச் செய்யும் சடங்கு; funeral rites.

     “ஈமக்கடனிறுவிப் போதென்றேவி” (திருவிளை.பழியஞ்30);.

ஈம் பார்க்க;see Im.

     [ஈ – ஈம் – அம் – கடன்.]

ஈமக்காடு

 ஈமக்காடுīmakkāṭu, பெ. (n.)

   இறந்தவுடலை எரிக்குமிடம்;   புதைக்குமிடம்; place where dead bodies are

 cremated, burial ground.

ஈம் பார்க்க;see im.

     [ஈ – ஈம் – அம் + காடு.]

ஈமக்கொடி

 ஈமக்கொடிīmakkoḍi, பெ. (n.)

இண்டங்கொடி பார்க்க;see Indarikodi.

     [ஈம் + அ + கொடி.]

ஈமத்தாடி

 ஈமத்தாடிīmattāṭi, பெ. (n.)

   சுடலையில் ஆடும் சிவன் (திவா.);; Siva, dancing on the burning-ground. (செ.அக.);.

     [ஈமம் + அத்து + ஆடி.]

ஈமத்தாழி

ஈமத்தாழிīmattāḻi, பெ. (n.)

உடலை எரித்த சாம்பல், எலும்பு முதலியனவடங்கிய பானை,

 an earthen vessel containing the bones and ashes of the dead.

மறுவ: ஈமப்பானை

     [ஈமம்+பானை]

 ஈமத்தாழிīmattāḻi, பெ. (n.)

   முதுமக்கள்தாழி (புறநா. 256);; burial urn for the dead in ancient times (செ.அக.);.

ம. ஈமத்தாழி.

     [ஈமம் + தாழி.]

ஈமந்தன்

 ஈமந்தன்īmandaṉ, பெ. (n.)

   மேலுதடு; upper lip. (சா.அக.);.

     [உம் – இம் – ஈம் – ஈமந்தன்.]

ஈமன்

 ஈமன்īmaṉ, பெ. (n.)

   சிவன்; Lord Siva. (ஆ.அக.);.

     [ஈமம் – ஈமன்.]

ஈமப்பந்தர்

ஈமப்பந்தர்īmappandar, பெ. (n.)

   சுடுகாட்டுப் பந்தர்; pavilion in burning ground.

     “ஈமப்பந்தரும் யாங்கனும் பரந்து” (மணிமே.6.63);.

     [ஈமம் + பந்தர். பந்தல் – பந்தர்.]

ஈமப்பறவை

 ஈமப்பறவைīmappaṟavai, பெ. (n.)

   இடுகாட்டில் அல்லது சுடுகாட்டிலிருக்கும் காகம், கழுகு முதலியன; crow, vulture, etc. found in the burial or cremation ground;

   ; birds of prey living on dead bodies.

     [ஈமம் + பறவை.]

ஈமப்பார்ப்பான்

 ஈமப்பார்ப்பான்īmappārppāṉ, பெ. (n.)

   சவத்தை எரியூட்டும் சடங்கினை நடத்து விக்கும் பார்ப்பனன்; brahmin who conducts the funeral rights of the dead cremated.

     [ஈமம்+பார்ப்பான்]

ஈமப்புறங்காடு

ஈமப்புறங்காடுīmappuṟaṅgāṭu, பெ. (n.)

   சுடுகாடு; burial ground.

     “ஈமப் புறங்கா டீங்கி தனயல” (மணி மே.6-38);.

     [ஈமம் + புறம் + காடு. ஊர்ப்புறத்தே இருக்கும் காடாதலின் புறங்காடு எனப்பட்டது.]

ஈமம்

ஈமம்1īmam, பெ. (n.)

   1. சுடுகாடு; burning ground.

     “ஈமஞ்சேர் மாலைபோல” (சீவக..210);.

   2. பிணஞ்சுடுதற்கு அடுக்கும் விறகடுக்கு; funeral pyre.

     “ஈமவொள் ளழற் குறுகினுங் குறுகுக” (புறநா.231);.

ம. ஈமம்.

     [ஈ – ஈம் + அம். ஈம் பார்க்க;see im.]

 ஈமம்2īmam, பெ. (n.)

   பாதிரி (மலை.);; trumpet-flower.

     [ஈம் – ஈமம். இருளில் ஈமத்துத் தீயைப் போலச் சிவந்தொளிரும் பூக்களுடைய மரம்.]

ஈமவனம்

ஈமவனம்īmavaṉam, பெ. (n.)

   சுடுகாடு; buming-ground.

     “ஈமவனத் தெரியாட் டுகந்த வெம்பெரு மான்” (தேவா.84.7);.

     [ஈமம் + வனம்.]

ஈமவாரி

 ஈமவாரிīmavāri, பெ. (n.)

   வசம்பு (மலை.);; sweet-fag. (செ.அக.);.

     [ஈமம் + வாரி.]

ஈமவிதி

ஈமவிதிīmavidi, பெ. (n.)

   இறந்தோர்க்குச் செய்யுஞ் சடங்கு; funeral rites.

     “அரசை யீமவிதி செய்ய” (பாரத.சம்பவ.105); (செ.அக.);.

     [ஈமம் + விதி.]

ஈமவிறகு

 ஈமவிறகுīmaviṟagu, பெ. (n.)

   சிதை; funeral pile, руге (w.);. (ஆ.அக.);.

     [ஈமம் – விறகு.]

ஈமவிளக்கு

ஈமவிளக்குīmaviḷakku, பெ. (n.)

   பிணஞ்சுடும் விறகின் அழல்; funeral fire.

     “ஈமவிளக்கிற் பேஎய் மகளிரொடு” (புறநா.356-3);.

     [ஈமம் + விளக்கு.]

ஈமவொள்ளழல்

ஈமவொள்ளழல்īmavoḷḷaḻl, பெ. (n.)

   பிணஞ்சுடும் தீ; funeral fire.

     “கரிபுற விறகினீம வொள்ளழல்” (புறநா.231);.

     [ஈமம் + ஒள் + அழல்.]

ஈமு

 ஈமுīmu, பெ.(n.)

   கழுகின் ஒரு இனம்; a variety of egle.

ஈமுக்கடுமை

 ஈமுக்கடுமைīmukkaḍumai, பெ. (n.)

   ஈமக்கடுமை; heat of a burning place. (ஆ.அக.);.

     [உரும் – ஊம் – ஈம். ஈம் – ஈமு + கடுமை.]

ஈமோதல்

 ஈமோதல்īmōtal, பெ. (n.)

   சிலந்தி, புண் முதலியவற்றில் ஈமொய்த்து முட்டை வைத்தல்; depositing of eggs by the fly on exposed wound or ulcer.

     [ஈ + மோதல்.]

ஈம்

ஈம்īm, பெ. (n.)

   சுடுகாடு; place for the cremation of the dead, burning-ground.

     “ஈமுங் கம்மும்” (தொல். எழுத். 328);.

     [ஈ – ஈம். ஈ – இணைதல் (வருந்தல்);. துயரம் மிகுவிக்கும் இடம். குறிப்புக்கிளவி ஒ.நோ.: பே – பேம். தீ – தீம்.]

ஈய

 ஈயīya,    கு.வி.எ. (adv.); to divide.

     [ஈ – ஈய. ஈதல் = பிரித்தல், தருதல், வகுத்தல்.]

ஈயக்கந்தகம்

 ஈயக்கந்தகம்īyaggandagam, பெ. (n.)

   ஈயக் கலப்புள்ள கந்தகம்; sulphur mixed with lead ore. (சா.அக.);.

     [ஈயம் + கந்தகம்.]

ஈயக்கற்கண்டு

 ஈயக்கற்கண்டுīyakkaṟkaṇṭu, பெ. (n.)

   வங்கச் சுண்ணம் (M.M.);; sugar of lead, plumbi acetas. (செ.அக.);.

     [ஈயம் + கற்கண்டு.]

ஈயக்கல்

ஈயக்கல்īyakkal, பெ. (n.)

   1. கல்வங்கம்; lead-stone.

   2. கல்லீயம்; pewter (சா.அக.);.

     [ஈயம் + கல்.]

ஈயக்களங்கு

 ஈயக்களங்குīyakkaḷaṅgu, பெ. (n.)

   வங்கவெட்டை;     [ஈயம் + களங்கு.]

ஈயக்களிம்பு

 ஈயக்களிம்புīyakkaḷimbu, பெ. (n.)

   ஈயத்தைக் கொண்டு செய்யும் பசை; lead carbonate – Aerugc Plumbi.

     [ஈயம் + களிம்பு.]

ஈயக்காடி

 ஈயக்காடிīyakkāṭi, பெ. (n.)

   ஈயஞ்சேர்ந்த காடி; vinegar of lead. (சா.அக.);.

     [ஈயம் + காடி.]

ஈயக்காரிகை

 ஈயக்காரிகைīyaggārigai, பெ. (n.)

   சுளுக்கு மருந்து; a kind of herb used in sprain (சா.அக.);.

     [ஈயம் + காரிகை.]

ஈயக்கிட்டம்

ஈயக்கிட்டம்īyakkiṭṭam, பெ. (n.)

   1. ஈயமுருக்கியெடுத்த கிட்டம்; refuse of melted lead.

   2. ஈயத்துரு (வின்.);; lead rust (சா.அக.);.

     [ஈயம் + கிட்டம்.]

ஈயக்கேணி

 ஈயக்கேணிīyakāṇi, பெ. (n.)

   ஈயமெடுக்கும் சுரங்கம்; lead mine.

     [ஈயம் + கேணி.]

ஈயக்கொடி

 ஈயக்கொடிīyakkoḍi, பெ. (n.)

   இண்டங்கொடி; tiger-stopper. (சா.அக.);.

     [ஈயம் + கொடி.]

ஈயங்கட்டி

 ஈயங்கட்டிīyaṅgaṭṭi, பெ. (n.)

   இரும்பிலி இலை; leaves of irumbili plant. (சா.அக.);.

இரும்பிலி பார்க்க;see irumbili.

     [ஈயம் + கட்டி.]

ஈயங்கொல்லி

 ஈயங்கொல்லிīyaṅgolli, பெ. (n.)

   கரியபோளம்; black myrrh.

     [ஈயம் + கொல்லி.]

ஈயசோலி

 ஈயசோலிīyacōli, பெ. (n.)

   வேலிப்பருத்தி; hedge cotton – Damoa extensa.

     [ஈயம் + சோலி.]

ஈயச் சிமிழ்

 ஈயச் சிமிழ்īyaccimiḻ, பெ. (n.)

   மருந்தைப் பதனப்படுத்துவதற்காகப் பயன்படுத்தும் ஈயத்தாற் செய்த சிமிழ்; small round box made of lead for preserving medicines. (சா.அக.);.

     [ஈயம் + சிமிழ்.]

ஈயச்சத்துநீர்

 ஈயச்சத்துநீர்īyaccattunīr, பெ. (n.)

   நிலத்திற் புதைந்து கிடக்கும் ஈயத்தின் வழியாகச் சூடேறி. வெந்நீராக மாறுந் தண்ணீர்; natural fountain of hot water issuing from the soil containing lead tin. (சா.அக.);.

     [ஈயம் + சத்து + நீர்.]

ஈயச்சிவப்பு

ஈயச்சிவப்புīyaccivappu, பெ. (n.)

   1. சிவப்பு ஈயம்; red-lead.

   2. ஈயச் செவ்வச்சிரம்; lead tetroxide (Pb3O4);.

   3. ஈயச் செந்தூரம்; calcined red oxide of lead.

     [ஈயம் + சிவப்பு.]

ஈயச்சுண்ணம்

 ஈயச்சுண்ணம்īyaccuṇṇam, பெ. (n.)

   ஈயத்தினின்றெடுக்கும் மோர் மருந்து; preparation from lead, Carbonate of lead.

     [ஈயம் + சுண்ணம்.]

ஈயச்செடி

 ஈயச்செடிīyacceḍi, பெ. (n.)

   இண்டு (மூ.அ.);; tiger-stopper.

     [ஈயம் + செடி.]

ஈயச்செந்தூரம்

ஈயச்செந்தூரம்īyaccendūram, பெ. (n.)

   1. ஈயச்சிந்தூரம் பார்க்க;see iya-c-cindúram.

   2. ஈயச் சிவப்பு; red-lead. (சா.அக.);.

     [சிந்தூரம் = செந்தூரம். ஈயம் + செந்தூரம்.]

ஈயடிச்சான் காப்பி

 ஈயடிச்சான் காப்பிīyaḍiccāṉkāppi, பெ. (n.)

ஈயடிச்சான் படி பார்க்க;see ydich-padi.

     [ஈ + அடிச்சான் + காப்பி. E-copy → த. காப்பி. அடித்தான் – அடிச்சான்.]

ஈயடிச்சான் படி

 ஈயடிச்சான் படிīyaḍiccāṉpaḍi, பெ. (n.)

   மூலத்திலுள்ளவாறு எழுதும் படி; exact reproduction, copy, including mistakes and all, even extending to ridiculous length, as the fixing of a dead fly on the page of the copy similar to the one found on the original page.

     [ஈ + அடித்தான் + படி.]

ஈயத்தகடு

 ஈயத்தகடுīyattagaḍu, பெ. (n.)

   ஈயத்தை இலையைப்போல் மெல்லியதாகத் தட்டிய தகடு; ea or thin plate of lead foil. (சா.அக.);.

     [ஈயம் + தகடு.]

ஈயத்தண்டிலை

 ஈயத்தண்டிலைīyattaṇṭilai, பெ. (n.)

   இண்டிலை; leaf of the plant indu.

     [ஈயம் + தண்டு + இலை.]

ஈயத்தண்டு

 ஈயத்தண்டுīyattaṇṭu, பெ. (n.)

   இண்டு (மூ.அ.);; tiger-stopper.

     [ஈயம் + தண்டு.]

ஈயத்தின் குற்றம்போக்கி

 ஈயத்தின் குற்றம்போக்கிīyattiṉkuṟṟambōkki, பெ. (n.)

   பாற் சோற்றி; medicinal creeper – Euphorbia hypericifolia. It is so called by virtue of its characteristic of removing lead poisoning from the system. (சா.அக);.

     [ஈயம் + அத்து + இன் + குற்றம் + போக்கி.]

ஈயத்தை நாசமாக்கி

 ஈயத்தை நாசமாக்கிīyattainācamākki, பெ. (n.)

   கொடிக்கள்ளி; squat flowered creeping milk hedge-sarcos-temma brevistingma. It is so called from its destructive action on lead. (சா.அக.);

ஈயநஞ்சு

 ஈயநஞ்சுīyanañju, பெ. (n.)

   ஈயத்தினா லுடம்பிலேற்பட்ட நஞ்சு; lead poison – Plumbism.

     [ஈயம் + நஞ்சு.]

ஈயன்மூதா

 ஈயன்மூதாīyaṉmūtā, பெ. (n.)

ஈயன் மூதாய் (பிங்.); பார்க்க;see iyam mப்dச்y.

     [ஈயல் + மூதா. மூதாய் – மூதா.]

ஈயன்மூதாய்

ஈயன்மூதாய்īyaṉmūtāy, பெ. (n.)

   தம்பலப்பூச்சி. (இந்திரகோபம்); (கலித்.85. உரை);; cochineal insect Coccus cacti.

     [ஈயல் + மூதாய். ஈசலின் பாட்டி என்னும் நகைச்சுவைக் குறிப்பினால் ஈயன் மூதாய் எனப்பட்டது.]

ஈயபற்பம்

 ஈயபற்பம்īyabaṟbam, பெ. (n.)

ஈயப்பொடி பார்க்க;see sya-p-podi.

ஈயபற்பி

 ஈயபற்பிīyabaṟbi, பெ. (n.)

   ஈயத்தைப் பற்பமாக்கும் மூலிகை அதாவது வறட்சுண்டி; drug used for calcining lead, viz. – a species of sensitive plant-Mimosa tripuetra.

     [ஈயம் + பற்பி.]

ஈயப் பாளம்

 ஈயப் பாளம்īyappāḷam, பெ. (n.)

   ஈயமூலக்கனி; oblong mass of unforged lead, as when first extracted from the ore-pig lead. (சா.அக.);.

     [ஈயம் + பாளம்.]

ஈயப்பற்று

 ஈயப்பற்றுīyappaṟṟu, பெ. (n.)

   வங்கப்பற்று; solder used for metal. (சா.அக.);.

ம. ஈயப்பற்று.

     [ஈயம் + பற்று.]

ஈயப்பூச்சு

 ஈயப்பூச்சுīyappūccu, பெ. (n.)

   ஏனங்களுக்கு ஈயப்பூச்சிடுதல்; to coat vessals with lead lorication. (சா.அக.);.

ஈயப்பொடி

 ஈயப்பொடிīyappoḍi, பெ. (n.)

   ஈயத்தை முறைப்படி மூலிகைகளைக் கொண்டு தூய்மை செய்த வங்க பற்பம்; powdered lead. (சா.அக.);.

     [ஈயம் + பொடி.]

ஈயமஞ்சள்

 ஈயமஞ்சள்īyamañjaḷ, பெ. (n.)

   ஈயங்கலந்த ஒருவகை மஞ்சள்தூள்; lemon-yellow powder called chrome yellow, lead chromate. (சா.அக.);.

     [ஈய + மஞ்சள்.]

ஈயமணல்

ஈயமணல்īyamaṇal, பெ. (n.)

   1. ஈயப்பொடி; granular particles of lead.

   2. ஈயஞ் சேர்ந்துள்ள மண் முதலிய கசடு; lead mixed with earth or other matter, lead

 ore (செ.அக.);.

     [ஈயம் + மணல்.]

ஈயமரம்

 ஈயமரம்īyamaram, பெ. (n.)

   பாதிரிமரம்; tree with trumpet like flowers – Bignonia chelonocides.

     [ஈயம் + மரம்.]

ஈயமலை

 ஈயமலைīyamalai, பெ. (n.)

   ஈயமகப்படும் மலை; mountain yielding ore of lead.

     [ஈயம் + மலை.)]

ஈயமாக்கி

 ஈயமாக்கிīyamākki, பெ. (n.)

   காட்டாமணக்கு; physic nut plant – Jatropha glandulifera.

     [ஈயம் + ஆக்கி.]

ஈயமூலிகை

 ஈயமூலிகைīyamūligai, பெ. (n.)

   ஈயச்சத்து அடங்கிய மூலிகை; plants said to contain essence of lead.

     [ஈயம் + மூலிகை.]

ஈயம்

ஈயம்1īyam, பெ. (n.)

   1. வெள்ளீயம் (திவா.); பார்க்க;see ve/yam. white-lead.

   2. காரீயம்; black-lead.

   3. கல்லீயம்; a hard kind of lead.

 Skt sisa, Sinh Iya, MHG lot;

 OE lead;

 MLG lod.

     [ஈயம் + வெண்மை. வெண்ணிற மாழை. எல் = வெள்ளை. எல் – இல் – ஈள் – ஈயம். இள் – இய – ஈ – ஈயம். (வ.மொ.வ.90);.]

 ஈயம்2īyam, பெ. (n.)

   1. பாதிரி (மூ.அ.); பார்க்க;see pādri.

   2. மிருதார சிங்கி (மூ.அ.);; prepared arsenic.

     [ஈயம் = வெண்மை. வெண்ணிறப்பூ பூப்பதனால் பாதிரி ஈயம் எனப்பட்டது.]

ஈயம்பூசு-தல்

ஈயம்பூசு-தல்īyambūcudal,    5 செ.கு.வி. (v.i.)

   ஏனங்களுக்கு ஈயப்பூச்சிடுதல்; to coat utencils with lead. (செ.அக.);.

     [ஈயம் + பூசுதல்.]

ஈயலி

 ஈயலிīyali, பெ. (n.)

   தம்பலப்பூச்சி (வை.மு.);; cochineal insect, scarlet moth.

     [ஈயல் – ஈயலி.]

ஈயல்

ஈயல்īyal, பெ. (n.)

   1. சிறகு முளைத்த கறையான்; winged white ant, Terms bellicosus.

     “மஞ்ஞை ஈயற் கிவரும் வகை போல்” (சீவக.925);.

   2. தம்பலப்பூச்சி (இந்திரகோபப்பூச்சி); (சா.அக.);; lady fly – Mutella occidentalis.

   ம. ஈயல்;   க. ஈசல்;   தெ. ஈகள்ளு;   குரு. ஈம;மால். இமெ.

     [ஈ + அல் = ஈயல் (ஈபோன்றது);.]

ஈயவரி

 ஈயவரிīyavari, பெ. (n.)

பெருமருந்து பார்க்க;see parumarundu plant Aristolochia Indica (W);.

     [ஈயம் + வரி.]

ஈயவாகை

 ஈயவாகைīyavākai, பெ. (n.)

   வாகை மரத்தின் ஒருவகை வெண்வாகை; a variety of vägal tree.

ம. ஈயவாக.

     [ஈயம் + வாகை.]

ஈயவாரிகம்

 ஈயவாரிகம்īyavārigam, பெ. (n.)

   வெள்ளறுகு; white doob grass-Enicosterna littorale alias Adene ma hyssopifolium.

     [ஈயம் + வாரி + இகம்.]

ஈயவுப்பு

 ஈயவுப்புīyavuppu, பெ. (n.)

   ஈயக்காடியுப்பு; salt of lead.

     [ஈயம் + உப்பு.]

ஈயவெண்பற்பம்

ஈயவெண்பற்பம்īyaveṇpaṟpam, பெ. (n.)

   ஈய வெள்ளை; soft white powder, blackened by sulphureted hydrogen – carbonate of lead.

   2. வங்க பற்பம்; oxide of lead. It is a native preparation.

     [ஈயம் + வெண்மை + பற்பம்.]

ஈயவெள்ளை

 ஈயவெள்ளைīyaveḷḷai, பெ. (n.)

   பொடிவகை; lead sulphide.

ம. ஈயவெள்ள.

     [ஈயம் + வெள்ளை.]

ஈயவெள்ளைக் களிம்பு

 ஈயவெள்ளைக் களிம்புīyaveḷḷaikkaḷimbu, பெ. (n.)

   ஈயவெள்ளையினின்று செய்வித்த மேற்பூச்சு மருந்து; ointment of lead carbonate – Unguentum Plumbi

 carbonatis. (சா.அக);.

     [ஈயம் + வெள்ளை + களிம்பு.]

ஈயாப்பத்தன்

ஈயாப்பத்தன்īyāppattaṉ, பெ. (n.)

   இவறன் (கஞ்சன்); (மதி.களஞ்.1.88);; miser.

     [ஈ + ஆ + பத்தன். பற்றன் – பத்தன் ஆ.எ.ம.இ.நி.]

ஈயாப்பொத்தி

 ஈயாப்பொத்திīyāppotti, பெ. (n.)

   எதையும் எவருக்கும் ஈயாத இவறன்(கருமி);; miser,

     [சயான்+பொத்தி]

ஈயாம் கிழங்கு

 ஈயாம் கிழங்குīyāmkiḻṅgu, பெ. (n.)

   யாமிச்சங் கிழங்கு; yam tuber – Dioscorea sativa. (சா.அக.);.

     [ஈயாம் + கிழங்கு.]

ஈயிலை

 ஈயிலைīyilai, பெ. (n.)

இண்டு பார்க்க;see indu. (சா.அக.);.

     [ஈகை + இலை.]

ஈயுவன்

 ஈயுவன்īyuvaṉ, பெ. (n.)

   இராவணன் (அக.நி.);; Rāvanan.

     [ஈழவன் – ஈயவன் – ஈயுவன் (கொ.வ.);.]

ஈயெச்சத்தோல்

 ஈயெச்சத்தோல்īyeccattōl, பெ. (n.)

   பூச்சியரித்த தோல் (யாழ்ப்.);; fly-blown skin;

 worm-eaten sheath of the palmyra fruit (சா.அக.);.

     [ஈ + எச்சம் + தோல்.]

ஈயெச்சிற்கீரை

 ஈயெச்சிற்கீரைīyecciṟārai, பெ. (n.)

   புதினாக்கீரை (இ.வ.);; mint, mentha viridis (செ.அக.);.

     [ஈ + எச்சில் + கீரை.]

ஈயெனல்

 ஈயெனல்īyeṉal, பெ. (n.)

   பல்லைக்காட்டுங் குறிப்பு (வின்.);; expression signifying grinning.

     [ஈ + எனல். ஈ = இளித்தற்குறிப்புச் சொல்.]

ஈயோட்டி

ஈயோட்டிīyōṭṭi, பெ. (n.)

   ஈயை விலக்குங் கருவி (சூடா.11.39);; fly-whisk.

     [ஈ + ஒட்டி.]

ஈயோட்டு-தல்

ஈயோட்டு-தல்īyōṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   வேலை யொன்றுமின்றியிருத்தல் (கொ.வ.);; to drive away flies. fig to be without any employment or work.

     [ஈ + ஒட்டு.]

ஈயோப்பி

 ஈயோப்பிīyōppi, பெ. (n.)

ஈயோட்டி (சங்.அக.); பார்க்க;see yõlli.

     [ஈ + ஒப்பி.]

ஈர வெண்காயம்

 ஈர வெண்காயம்īraveṇkāyam, பெ. (n.)

ஈரவெங்காயம் பார்க்க;see Iravengayam.

     [ஈரம் + வெம் + காயம். வெம் + காயம் – வெங்காயம் – வெண்காயம் என்பது பிழையான வழக்கு.]

ஈரக்கற்பூரம்

 ஈரக்கற்பூரம்īrakkaṟpūram, பெ. (n.)

   பச்சைக் கருப்பூரம்; camphor, menthol. (சா.அக.);

     [ஈரம் + கருப்பூரம்.]

ஈரக்கல்

 ஈரக்கல்īrakkal, பெ. (n.)

   குருவிந்தக்கல் (வின்.);; corundum.

     [ஈரம் + கல்.]

ஈரக்குழி

 ஈரக்குழிīrakkuḻi, பெ. (n.)

   கருப்பை; womb. (சா.அக.);.

     [ஈரம் + குழி. குழி – கழி – கடும்பு. கடும்பு = வயிறு.]

ஈரக்கையாலேதடவு-தல்

ஈரக்கையாலேதடவு-தல்īrakkaiyālēdaḍavudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   அன்புகாட்டித் தேற்றுதல்; to console, to caress lovingly.

     “நாட்டை ஈரக்கையாலே தடவி கம்சன் காலத்திற்பட்ட நோவுதீரப் பாதுகாத்து” (திவ். இயற்.திருகுறுந்.1.வியா);.

     [ஈரம் + கை + ஆல் + தடவு.]

ஈரங்காயம்

 ஈரங்காயம்īraṅgāyam, பெ. (n.)

   வெண்காயம்; onion – Allium cepa. (சா.அக.);.

     [ஈரம் + காயம்.]

ஈரங்கார்த்தல்

 ஈரங்கார்த்தல்īraṅgārttal,    தொ.பெ. (vbl.n) கசிவாயிருத்தல்; being in a state between dry and wet, holding water in suspension or absorption. (சா.அக.).

     [ஈரம் + கார்தல்.]

ஈரங்கி

 ஈரங்கிīraṅgi, பெ.(n.)

   காதணி; ear ornament.

ஈரங்கை

 ஈரங்கைīraṅgai, பெ. (n.)

   கொடுங்கை (அக.நி.);; curved cornice or projection. Corbel.

ஈறங்கை பார்க்க;see Irangai.

     [ஈறு + அம் + கை. ஈறு – ஈர்.]

ஈரங்கொல்லி

ஈரங்கொல்லிīraṅgolli, பெ. (n.)

   வண்ணான். (பிங்.); (ஈடு. 7,6,10);; washer man.

ம. ஈரங்கொல்லி.

     [ஈரம் + கொல்லி. ஈரம் கொல்லுதல் – ஈரம் உலர்த்துதல்.]

ஈரங்கொல்லு-தல்

ஈரங்கொல்லு-தல்īraṅgolludal,    7 செ.குன்றாவி. (v.t.)

   ஈரமுலர்த்துதல்; to expel moisture from to dehydrate to allow to dry.

     “ஈரங்கொன்றவின் …. குஞ்சியை” (சீவக.2422);.

     [ஈரம் + கொல்லுதல். கொல்லுதல் = இல்லாமல் செய்தல், நீக்குதல்.]

ஈரங்கோலி

 ஈரங்கோலிīraṅāli, பெ. (n.)

ஈரங்கொல்லி பார்க்க;see iranko///.

     [ஈரம் + கொல்லி. கொல்லி – கோலி.]

ஈரங்கோலியர்

 ஈரங்கோலியர்īraṅāliyar, பெ. (n.)

ஈரங்கொல்லி பார்க்க;see irankoli. (த.சொ.அக.);.

     [ஈரம் + (கொல்லி); கோலி + ஆர்.]

ஈரஞ் சுவறுதல்

 ஈரஞ் சுவறுதல்īrañjuvaṟudal, பெ. (n.)

   ஈரங் காய்தல்; drying (சா.அக.);.

     [ஈரம் + சுவறுதல்.]

ஈரடி

ஈரடி1īraḍi, பெ. (n.)

   1. இரண்டடி; two lines.

     “ஈரடிவெண்பா” (யா.கா.செய்யு.3);

   2. ஐயம் (வின்);; uncertainty.

   3. கவர் (வின்.);; fork, that which is bifurcate (செ.அக.);.

ம. ஈரடி.

     [இரண்டு → ஈர் + அடி.]

 ஈரடி2īraḍi, பெ. (n.)

ஈராடி1 (இ.வ.); பார்க்க;see Irādi.

     [ஈராடி – ஈரடி.]

ஈரடிப்பயன்

ஈரடிப்பயன்īraḍippayaṉ, பெ. (n.)

   1. கவர் பொருள் (வின்.);; ambiguity in conversation, equivocation.

   2. ஏமாற்றுவேலை; double dealing, acting with duplicity so as to suit both parties.

   3. ஐயம் (வின்.);; uncertainty, dubiousness.

   4. மாறுபாடு (யாழ்ப்.);; diverseness disagreement, discrepancy, as of a report or an account differently related. (செ.அக.);.

     [இரண்டு – ஈர் + அடி + பயன்.]

ஈரடிமடக்கு

 ஈரடிமடக்குīraḍimaḍakku, பெ. (n.)

   அடிகளு ளிரண்டடி மடங்கி வருவது; repetition of a word/phrase in two successive lines in a stanza each time in a different sense.

     [இரண்டு → இரு → ஈர் + அடி + மடக்கு.]

ஈரடிமேல்வைப்பு

 ஈரடிமேல்வைப்புīraṭimēlvaippu, பெ. (n.)

   பாடலுக்குரிய ஈரடிகளுக்கு மேல் ஒன்று அல்லது ஈரடிகளை வைப்பது; adding additional lines to a poem.

     [ஈர்+அடி+மேல்+வைப்பு]

ஈரடிவருக்கம்

ஈரடிவருக்கம்īraḍivarukkam, பெ. (n.)

   1. செய்யுள் வகை; name given to a verse of two lines in which the first and middle letters of each are the same. (செ.அக.);.

     [இரண்டு → இரு → ஈர் + அடி + வருக்கம்.]

ஈரடிவெண்பா

 ஈரடிவெண்பாīraḍiveṇpā, பெ. (n.)

   குறள் வெண்பா பார்க்க;     [இரண்டு → இரு → ஈர் + அடி + வெண்பா.]

ஈரடுக்கொலி

 ஈரடுக்கொலிīraḍukkoli, பெ. (n.)

   இரட்டையாக அடுக்கி வரும் ஒலிக்குறிப்புச் சொல்; reiterated words imitative of sound, as நெறுநெறெனல்.

     [இரண்டு – இரு – ஈர் + அடுக்கு + ஒலி.]

ஈரட்டு விற்பனை

 ஈரட்டு விற்பனைīraṭṭuviṟpaṉai, பெ.(n.)

   விற்பனை (அ); திருப்புதல்; sales or return.

     [ஈர்-ஈரட்டு+விற்பனை]

ஈரணம்

ஈரணம்īraṇam, பெ. (n.)

   1. கள்ளி; plant of the Euphorbia genus.

   2. வயிறு வலித்து மலங் கழித்தல்; painful and laborious evacuation of the bowels.

   3. களர் நிலம், வெறுநிலம்; dry land.

     [ஈரம் + அணம்.]

ஈரணி

ஈரணிīraṇi, பெ. (n.)

   புனலாடும்போது மகளிர் அணிதற்குரியவை; garments put on by women while bathing.

     “விரும்பிய ஈரணி மெய்யீரந் தீர” (பரிபா.7.61);.

     [ஈரம் + அணி.]

ஈரணை

 ஈரணைīraṇai, பெ. (n.)

   இரண்டு இணை மாடு (யாழ்ப்.);; two pairs of oxen.

ஈரணை ஏர் கொண்டு உழுது (உ.வ.); (செ.அக.);.

     [இரண்டு – இரு – ஈர் + அணை.]

ஈரண்டஊதை

ஈரண்டஊதைīraṇṭaūtai, பெ. (n.)

   1. இரண்டு விரைப்பக்கமும் நீர் கோத்துக்கொண்டு உண்டாகும் ஓதம்; double hydrocele.

   2. இரண்டு பக்கமும் குடலிறக்கம்; scrotal hernia (சா.அக,.);.

     [இரண்டு – இரு – ஈர் + அண்டம் + ஊதை.]

ஈரண்டவாதம்

 ஈரண்டவாதம்īraṇṭavātam, பெ. (n.)

ஈரண்டஊதை பார்க்க;see irandaÚdai.

     [இரண்டு – இரு – ஈர் + அண்டம் + வாதம்.]

ஈரத்தட்டை

 ஈரத்தட்டைīrattaṭṭai, பெ. (n.)

   ஈரக்குழல் தட்டை; a kind of reed. (சா.அக.);.

     [ஈரம் + தட்டை..]

ஈரத்திரையம்

 ஈரத்திரையம்īrattiraiyam, பெ. (n.)

   குங்கிலியம்; resinous gum.

     [ஈரம் + திரையம்.]

ஈரநா

 ஈரநாīranā, பெ. (n.)

   புறங்கூறும் நாக்கு; slanderous tongue.

ஈரநாவுக் கெலும்பில்லை (வின்);.

     [ஈரம் + நா.]

ஈரநிலம்

 ஈரநிலம்īranilam, பெ. (n.)

   பாடலைப் பாடும் வகையினுள் ஒன்று; a method of singing.

     [ஈரம்+நிலம்]

ஈரந்துவட்டு-தல்

ஈரந்துவட்டு-தல்īranduvaṭṭudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   நீராடியபின் ஈரத்தைத் துடைத்தல்; to wipe the head and body after bathing.

     [ஈரம் + துவட்டு.]

ஈரப்பசுமை

 ஈரப்பசுமைīrappasumai, பெ. (n.)

   ஈரப்பற்று; moisture. (சா.அக.);.

     [ஈரம் + பகமை.]

ஈரப்பசை

ஈரப்பசைīrappasai, பெ. (n.)

   1. ஈரக்கசிவு; moisture, as in hands, wetness as in clothes.

   2. இரக்கம்; sympathy, mercy, kindness, as the moisture in one’s heart.

     ‘அவன் மனத்தில் ஈரப்பசையற்றவன்’ (உ.வ.); (செ.அக.);.

     [ஈரம் + பசை. பச்சை – பசை.]

ஈரப்பசையுள்ளவன்

ஈரப்பசையுள்ளவன்īrappasaiyuḷḷavaṉ, பெ. (n.)

   1. இரக்கமுள்ளவன்; benevolent man.

   2. செல்வமுடையவன்; prosperous man. (வின்.);

     [ஈரம் + பசை + உள்ளவன்.]

ஈரப்பச்சை

 ஈரப்பச்சைīrappaccai, பெ. (n.)

ஈரப்பசை பார்க்க;see Irappasai.

     [ஈரம் + பச்சை. பச்சை = செழிப்புநிலம்.]

ஈரப்பற்று

ஈரப்பற்றுīrappaṟṟu, பெ. (n.)

   1. ஈரக்கசிவு (வின்.);; moisture, dampness, fluid exuding or diffused.

   2. இரக்கம்; sympathy, as the moisture in one’s heart.

   3. செல்வம் (வின்.);; health, prosperity.

   4. நன்றி; benevolence (w);.

     [ஈரம் + பற்று.]

ஈரப்பலா

ஈரப்பலாīrappalā, பெ. (n.)

   1. ஆசினி (திவா.);; bread-fruit tree, the wood of which is used for musical instruments, the Aśin.

   2. மரவகை; monkey Jack.

மறுவ. ஆசினிப் பலா.

     [ஈரம் + பலா. கொட்டையற்றதாகவும், மணமற்றதாகவும் உள்ள சீமைப்பலா.

 bread out tree cultivated in Ceylon and west coast resembling common jack fruit perfectly scentless and seedless. It is gathered before getting ripe sliced and baked on cinders and eaten like bread (சா.அக.);.]

     [P]

ஈரப்பலாதிதம்

 ஈரப்பலாதிதம்īrappalādidam, பெ. (n.)

   குதிரை வாலி; a kind of grass.

     [ஈரம் + பலாதிதம்.]

ஈரப்பாடு

ஈரப்பாடுīrappāṭu, பெ. (n.)

   1. ஈரமாயிருக்கை (இ.வ..);; condition of being moist opp. to ularttarpādu.

   2. மனநெகிழ்ச்சி; tenderness of heart.

     “ஈரப்பாட்டை விளைத்து” (ஈடு.9.6.4); (செ.அக.);.

     [ஈரம் + பாடு. படு – பாடு.]

ஈரமானி

 ஈரமானிīramāṉi, பெ. (n.)

   காற்றின் ஈரத்தைக் காட்டுங்கருவி; instrument for measuring the moisture of the atmosphere, hydro-meter.

     [ஈரம் + மானி.]

ஈரமாப்பூ

 ஈரமாப்பூīramāppū, பெ. (n.)

   குங்குமப் பூ; English saffron;

 flower of crocus sativus, arnotto.

     [ஈரம் + மா + பூ.]

ஈரமாலை

ஈரமாலைīramālai, பெ. (n.)

   குளிர்ந்த மாலை; fresh garland, wreath.

     “ஈரமாலை இயலணியார்” (பரிபா.17.36);.

ஈரமுறிஞ்சல்

 ஈரமுறிஞ்சல்īramuṟiñjal, தொ.பெ. (vbl.n.) ஈரமுறிதல் பார்க்க;see Ira-musidal (சா.அக.).

     [ஈரம் + உறிஞ்சல்.]

ஈரமுறிஞ்சி

 ஈரமுறிஞ்சிīramuṟiñji, பெ. (n.)

   ஈரத்தைக் கவர்ந்து இளகித் தண்ணீராகுந் தன்மையுள்ளது; that which has a tendency to become a liquid by absorbing moisture from the atmosphere. (சா.அக.);.

     [ஈரம் + உறிஞ்சி.]

ஈரமுறிதல்

 ஈரமுறிதல்īramuṟidal,    தொ.பெ. (vbl.n.) காற்றினிலுள்ள ஈரத்தைக் கவர்ந்து இளகித் தண்ணீராகுந் தன்மை; characteristic of becoming liquified by absorbing water from the air-deliquescence. (சா.அக.).

     [ஈரம் + முறிதல்.]

ஈரமுலர்த்தல்

 ஈரமுலர்த்தல்īramularttal,    தொ.பொ. (vbl.n.) ஈரம் சிறிதேனுமில்லாதபடி; drying thoroughly – exsiccation. (சா.அக.).

     [ஈரம் + உலர்த்தல்.]

ஈரம்

ஈரம்īram, பெ. (n.)

   1. நீர்ப்பற்று (பாரத. திரெளபதி.97);; wetness, moisture, humidity, dampness.

   2. பசுமை; freshness, greenness.

   3. குளிர்ச்சி (சூடா.);; coolness, agreeableness, pleasantness.

   4. நயனுடைமை; love, affection, attachment.

     “எதிர்பெய்து மறுத்த வீரத்து மருங்கினும்” (தொல்.பொருள்.147);.

   5. அருள், பரிவு; grace, mercy, favour.

     “நாடனீரத்துள்” (கலித்.41);.

   6. அறிவு (அக.நி.);; knowledge, wisdom.

   7. குங்குமம் (மலை.);; anotto.

   8. கரும்பு (மலை.);; sugar-cane.

   9. அழகு; beauty.

   10. வெள்ளரி; cucumber (செ.அக.);.

   ம. ஈரம்;   க., பட. ஈர;   தெ. ஈமிரி;   கொலா. ஈர்;   நா. ஈர்;பிரா. நீர்.

     [நீரம் – ஈரம் (செல்வி. 77. நவம்.பக்.138);.]

 ஈரம்īram, பெ. (n.)

   1. பகுதி; part.

   2. குங்குமப்பூ (அக.நி.);; saffron powder.

     [நிறம் – நீரம் – ஈரம்.]

ஈரம்பனை

 ஈரம்பனைīrambaṉai, பெ. (n.)

   கூந்தற்பனை; jaggery-palm (L);;

ஈரற்பனை பார்க்க;see irar-panai.

     [ஈரல் = விரிதல். ஈரம் + பனை.]

ஈரம்போக்கல்

 ஈரம்போக்கல்īrambōkkal,    தொ.பெ. (vbl.n.) உலர்த்தல்; to dry-thoroughly – desiccation.

     [ஈரம் + போக்கல்.]

ஈரம்போக்கி

ஈரம்போக்கிīrambōkki, பெ. (n.)

   1. உலர்த்து மருந்து; drugs having drying properties – exsiccant.

   2. மின்னாற்றல்; electric current.

     [ஈரம் + போக்கி.]

ஈரரசு

ஈரரசுīrarasu, பெ. (n.)

   இருவர் ஆளுகை; government by two dyarchy.

     “ஈரரசு தவிர்த்தாலிறே சேசித்துவம் பூர்ணமாவது” (திவ். அமலனாதி.1.வியா.);.

     [இரண்டு – இரு – ஈர் + அரக.]

ஈரரத்தை

 ஈரரத்தைīrarattai, பெ. (n.)

   இரண்டு வகை யரத்தை – சிற்றரத்தை பேரரத்தை; two kinds of galangal viz. the smaller and the bigger.

     [இரண்டு – இரு – ஈர் + அரத்தை.]

ஈரறம்

 ஈரறம்īraṟam, பெ. (n.)

   இல்லறம் துறவறம் ஆகிய இருவகை அறம்; family life and ascetic life.

     [இரு → ஈர் + அறம்.]

ஈரறிவு

ஈரறிவுīraṟivu, பெ. (n.)

   1. இம்மை மறுமை; this birth and the supposed next.

   2. உற்றறிவு, சுவையறிவு; senses of touch & taste.

     “நந்தும் முரளும் ஈரறிவினவே” (தொல்.பொருள்.மரபி.29);.

     [இரு – ஈர் + அறிவு.]

ஈரறிவுயிர்

ஈரறிவுயிர்īraṟivuyir, பெ. (n.)

   1. ஊற்றறிவும் சுவையறிவுமுடைய சங்கு நத்தை முதலியன (நன். 446);; beings that have only two senses, viz. touch and taste like-shell-fish, snail etc.

     [இரு – ஈர் + அறிவு + உயிர்.]

ஈரற் பிசகு

ஈரற் பிசகு1īraṟpisagu, பெ. (n.)

   கல்லீரலிலுண்டாகுங் கோளாறு; hepatic disorder.

   2. பொதுவாக ஈரலிலுண்டாகுங் குற்றம்; disorder of the liver or the lungs or the spleen in general. (சா.அக.);.

     [ஈரல் + பிசகு.]

ஈரற்கட்டி

ஈரற்கட்டிīraṟkaṭṭi, பெ. (n.)

   1. கல்லீரலிலுண்டாகுங் கட்டி; abscess of the liver. (சா.அக.);.

   2. மண்ணீரலின் வீக்கம்; enlargement of spleen.

     [ஈரல் + கட்டி.]

ஈரற்கதிப்பு

 ஈரற்கதிப்புīraṟkadippu, பெ. (n.)

   நோயினால் கல்லீரல் பருத்தல்; enlargement of the liver.

     [ஈரல் + கதிப்பு.]

ஈரற்கருகு-தல்

ஈரற்கருகு-தல்īraṟgarugudal,    5 செ.கு.வி. (v.i.)

   மிகவும் அச்சப்படுதல் (யாழ்.அக.);; to be very much afraid.

ஈரற்கல்

 ஈரற்கல்īraṟkal, பெ. (n.)

   மந்தாரச்சிலை எனப்படும் கல் (யாழ்.அக.);; medicinal stone.

     [ஈரல் + கல்.]

ஈரற்கழலை

 ஈரற்கழலைīraṟkaḻlai, பெ. (n.)

   கல்லீரலிலுண்டாகுங் கழலைக் கட்டி; tumour of the liver-hepatoma. (சா.அக.);.

     [ஈரல் + கழலை.]

ஈரற்குலை

 ஈரற்குலைīraṟkulai, பெ. (n.)

   ஈரலின் கொத்து; lobes of the liver.

     [ஈரல் + குலை.]

ஈரற்குலை நடுக்கம்

 ஈரற்குலை நடுக்கம்īraṟkulainaḍukkam, பெ. (n.)

   அச்சத்தினால் ஈரற்குலைக்கேற்படும் அதிர்ச்சி; shock due to visceral tremor through fear. (சா.அக.);.

     [ஈரல் + குலை + நடுக்கம்.]

ஈரற்குலை பதை-த்தல்

ஈரற்குலை பதை-த்தல்īraṟkulaibadaiddal,    4 செ.கு.வி. (v.i.)

   மிகுவேதனைப்படுதல்; to become deeply grieved.

     [ஈரல் + குலை + பதை.]

ஈரற்குழி

 ஈரற்குழிīraṟkuḻi, பெ. (n.)

   ஈரலுக்கு நேராக வயிற்றுக்கு மேலிருக்கும் குழி; upper middle portion of the abdomen, over or in front of the stomach – epigastric region. It is also called the pit of the stomach. (சா.அக.);.

     [ஈரல் + குழி.]

ஈரற்கேடு

 ஈரற்கேடுīraṟāṭu, பெ. (n.)

   கல்லீரலுக்கேற்படும் அழிவு; atrophy and degeneration of the liver-cirrhosis. (சா.அக.);.

     [ஈரல் + கேடு.]

ஈரற்கொத்து

 ஈரற்கொத்துīraṟkottu, பெ. (n.)

ஈரற்குலை பார்க்க;see Irarkulai.

     [ஈரல் + கொத்து.]

ஈரற்கோளாறு

 ஈரற்கோளாறுīraṟāḷāṟu, பெ. (n.)

ஈரற்பிசகு பார்க்க;see irar pisagu.

     [ஈரல் + கோளாறு.]

ஈரற்பிச்சு

 ஈரற்பிச்சுīraṟpiccu, பெ. (n.)

ஈரற்பித்து பார்க்க;see Irarpittu. (சா.அக.);.

     [ஈரல் + பித்து → பிச்சு.]

ஈரற்பித்து

ஈரற்பித்துīraṟpittu, பெ. (n.)

   1. கல்லீரலில்உண்டாகும் பித்தம்; bile secreted in the liver.

   2. பித்தநீர் தங்கும் பை;   ; small membraneous sac which receives the bile from the liver gall-bladder. (சா.அக.);.

     [ஈரல் + பித்து.]

ஈரலி-த்தல்

ஈரலி-த்தல்īralittal,    4 செ.கு.வி. (v.i.)

.

   1. ஈரமாதல்; to become moist, damp (j);.

   2. பதனழிந்து நீர்கசிதல்; to perish and become moist.

     “பலாப்பழம் அறக்கனிந்து ஈரலித்தது” (உ.வ.);.

     [ஈரம் – ஈரலி. ஈரலித்தல். ஈரலித்ததை ‘ஈத்துப் போய்விட்டது நீத்துப்போய்விட்டது’ என்று கொச்சையாக வழங்குவர்.]

ஈரலித்த சோறு

 ஈரலித்த சோறுīralittacōṟu, பெ. (n.)

   தண்ணீர் அல்லது ஈரங் கசியுஞ் சோறு; cooked rice which has absorbed moisture (சா.அக.);.

மறுவ. தங்கல்சோறு. பழைய சோறு. பழக. பழஞ்சோறு.

     [ஈரம் → ஈரலித்தல் + சோறு.]

ஈரலிரத்தம்

ஈரலிரத்தம்īralirattam, பெ. (n.)

   1. நுரை யிலினின்று வரும் அரத்தவொழுக்கு; discharge of blood.

   2. ஈரலில் நிற்கு மிரத்தம்; blood contained in the lungs.

   3. கல்லீரலினின் றுண்டாகும் அரத்தப்போக்கு; hemorrhage of the liver – hepatorrhagia (சா.அக.);.

     [ஈரல் + இரத்தம்.]

ஈரலுறுத் தானம்

 ஈரலுறுத் தானம்īraluṟuttāṉam, பெ. (n.)

ஈரற்குழி பார்க்க;see Irakuli.

     [ஈரல் + உறு + தானம்.]

ஈரலுலர்த்தி

ஈரலுலர்த்திīralulartti, பெ. (n.)

   மாட்டுநோய் வகை (மாட்டுவை. சி.41);; disease of the spleen, in cattle (செ.அக.);.

     [ஈரல் + உலர்த்தி.]

ஈரலெரிச்சல்

ஈரலெரிச்சல்īralericcal, பெ. (n.)

   1. ஒருநோய்; inflammation of the liver.

   2. மாட்டுநோய்; inflammation of the liver in cattle. (சா.அக.);.

     [ஈரல் + எரிச்சல்.]

ஈரல்

ஈரல்1īral, பெ. (n.)

   1. ஈருள் (பிங்.);; internal organ in the body as the liver or spleen.

   2. குடல்; intestines.

   3. விரிதல்; splitting.

   ம. ஈரல்;   க. கீரி;   கோத. இருவ்;துட. இருப்.

     [ஈரல் = பிளத்தல், இரண்டாதல், இரண்டாகப் பிரிந்திருக்கும் உறுப்பு.]

 ஈரல்2īral, பெ. (n.)

   வருத்தல்; harassing, tormenting.

     “பாதகவர்க்கத்துக்கு ஈரலாம்படி” (ஈடு.9.9.ப்ர.);.

     [ஈரல் = பிளத்தல் போன்று நெஞ்சத்தை வருத்தும் துன்பம்.]

ஈரல் ஊதை

 ஈரல் ஊதைīralūtai, பெ.(n.)

   மண்ணிரலைப் பற்றிய ஊதை நோய்; a disease of the spleen.

     [ஈரன்+ஊதை]

ஈரல் நழுகல்

 ஈரல் நழுகல்īralnaḻugal, பெ. (n.)

   ஈரல் சரிதல்; dislocation of the liver-hepatoptosis. (சா.அக.);.

     [ஈரல் + நழுவல் – நழுகல்.]

ஈரல் நிறம்

 ஈரல் நிறம்īralniṟam, பெ. (n.)

   கருஞ்சிவப்பு நிறம்; dark red, purple, the colour of the liver.

     [ஈரல் + நிறம். நிழல் – நிறன் – நிறம்.]

ஈரல் படைச்சால்

 ஈரல் படைச்சால்īralpaḍaiccāl, பெ. (n.)

   ஈரலின் நாளம்; hepatic vein – vena portae. (சா.அக.);.

     [ஈரல் + படைச்சால். படைச்சால் – உழுபடைச்சால் போன்ற நாளம்.]

ஈரல் பதறல்

 ஈரல் பதறல்īralpadaṟal, பெ. (n.)

   அச்சப்படுதல்; frightened.

     ‘அவன் புலியைக் கண்டு ஈரல் பதறிப்போய் விட்டான்’ (இ.வ.);.

     [ஈரல் + பதறு.]

ஈரல் பனை

 ஈரல் பனைīralpaṉai, பெ. (n.)

   உலட்டிப்பனை;   ஆண்டப்பனை, ஆணைப்பனை; bastardd sagopalm, jaggery-palm.

ம. ஈறம்பன.

     [ஈரல் + பனை. ஈரல் = விரிதல்.]

ஈரல் வீக்கம்

 ஈரல் வீக்கம்īralvīkkam, பெ. (n.)

   கல்லீரலின் வீக்கம்; enlargement of the liver-hepatomegalia. (சா.அக.);.

     [ஈரல் + வீக்கம், வீங்கு – வீக்கம்.]

ஈரல்கட்டி

 ஈரல்கட்டிīralkaṭṭi, பெ. (n.)

ஈரற்கட்டி பார்க்க;see Iarkatti. (சா.அக.);.

     [ஈரல் + கட்டி.]

ஈரல்கருகல்

 ஈரல்கருகல்īralgarugal, பெ. (n.)

   அளவிடற்கரிய அச்சத்தாலேற்படும் கல்லீரல் நடுக்கம்; fear, supposed to affect the liver, showing extreme shiver.

     [ஈரல் + கருகல்.]

ஈரல்கருகு-தல்

ஈரல்கருகு-தல்īralgarugudal,    7 செ.கு.வி. (v.i.)

   துன்பம் மிகுதல்; to be tormented with such intense anguish as to scorch the liver.

     “ஈரல் கருகிப் போயிற்று” (வின்.); (சா.அக.);.

     [ஈரல் + கருகுதல்.]

ஈரல்கழலை

 ஈரல்கழலைīralkaḻlai, பெ. (n.)

ஈரற்கழலை பார்க்க;see Irar-kalalai. (சா.அக.);.

ஈரல்குடைச்சல்

 ஈரல்குடைச்சல்īralkuḍaiccal, பெ. (n.)

ஈரற் குடைச்சல் பார்க்க;see Irar kượaiccal. (சா.அக..);.

     [ஈரல் + குடைச்சல்.]

ஈரல்குழி

 ஈரல்குழிīralkuḻi, பெ. (n.)

ஈரற்குழி பார்க்க;see Irarkuli.

     [ஈரல் + குழி.]

ஈரல்தாங்கி

 ஈரல்தாங்கிīraltāṅgi, பெ. (n.)

   மார்புக்குள் வயிற்றிற்கும் நெஞ்சிற்கும் நடுவாகவுள்ளவோர் தசைப்பற்றுள்ள சவ்வு; muscular and membraneous partition that separates the abdomen from the thorax-diaphragm. (சா.அக.);.

     [ஈரல் + தாங்கி.]

ஈரவணி

ஈரவணிīravaṇi, பெ. (n.)

ஈரணி பார்க்க (பரிபா.11,86, உரை);;see Irani.

     [ஈரம் + அணி – ஈரவணி.]

ஈரவன்

ஈரவன்īravaṉ, பெ. (n.)

   1. குளிர் நிலா; moon, producing coolness (w.);.

   2. ஈரம் (ஆ.அக.);; moisture.

   3. ஈர்ங்கதிர்; coorays (ஆ.அக.);.

     [ஈரம் – ஈரவன்.]

ஈரவாலி

 ஈரவாலிīravāli, பெ. (n.)

   குதிரைவாலி யரிசி (சா.அக.);; a kind of millet.

     [ஈரம் + ஆலி. ஈரவாலி.]

ஈரவிதைப்பு

ஈரவிதைப்புīravidaippu, பெ. (n.)

   1. ஈர நிலத்தில் விதைக்கை; sowing on land when wet.

   2. ஈரநிலத்துண்டான பயிர்; crop produced from seed sown in moist land.

     [ஈரம் + விதைப்பு. நீர் – நீரம் – ஈரம். ஈரம் பார்க்க;see Iram.]

ஈரவுள்ளி

 ஈரவுள்ளிīravuḷḷi, பெ. (n.)

ஈருள்ளி பார்க்க (மலை);;see Irulli.

   ம. ஈரவுள்ளி;க. ஈருள்ளி.

     [ஈரம் + உள்ளி. உள்ளில் – உள்ளி. உள்ளில் = உள்ளே ஒன்றும் இல்லாதது.]

ஈரவூணிகம்

 ஈரவூணிகம்īravūṇigam, பெ. (n.)

   குத்து வல்லாரை; a species of Indian pennywort grown on mountains or on the top of hills.

     [ஈரம் + ஊணிகம்.]

ஈரவெங்காயம்

 ஈரவெங்காயம்īraveṅgāyam, பெ. (n.)

   வெங்காயம்; onion.

பட. ஈர பெங்குவெ.

     [ஈரம் + வெம் + காயம். வெள்ளை வெங்காயம் எனப்படும் வெள்ளைப் பூண்டினின்றும் வேறுபடுத்துவதற்காக ஈர வெங்காயம் என்னும் சொல்லாட்சி தோன்றியது.]

ஈரா

ஈராīrā, பெ. (n.)

   வெட்டுப்படாத; not cut.

     “இருங்கோள் ஈராப்பூட்கை” (புறநா.381:25);.

     [ஈர் + ஆ. (எ.ம.இ.நி.);.]

ஈராங்கொல்லி

 ஈராங்கொல்லிīrāṅgolli, பெ. (n.)

   சலவைத் தொழிலாளி; washerman. ஈரங்கொல்லி பார்க்க;see Irankolli.

ம. ஈராங்கொல்லி.

     [ஈரம் + கொல்லி – ஈரங்கொல்லி – ஈராங்கொல்லி (கொ.வ.);.]

ஈராசிடை வெண்பா

 ஈராசிடை வெண்பாīrāciḍaiveṇpā, பெ. (n.)

   ய், ர், ல், ழ் ஒற்று நான்கும் ஆசாய் வரும் வெண்பா; to insert ய், ர், ல், or ழ் in the rhyming foot in two lines of a stanza.

     [இரு → ஈர் + ஆக → இடை + வெண்பா.]

ஈராடி

ஈராடிīrāṭi, பெ. (n.)

   1. ஈரம் (யாழ்.அக.);; wetness, dampness.

   2. மழைக் குணம்; cloudiness.

     [ஈரம் + ஆடு – ஆடி. ஈரம் ஆடியது என்பது ஈரம்பட்டது எனப் பொருள்படும்.]

ஈராட்டி

ஈராட்டி1īrāṭṭi, பெ. (n.)

   1. இரண்டு மனைவிகள்; two wives.

   2. இரண்டு பெண்டாட்டிக்காரன்; man having two wives. (சா.அக.);.

     [இரு → ஈர் + ஆட்டி.]

 ஈராட்டி2īrāṭṭi, பெ. (n.)

   1. காற்று மாறியடிக்கை; changeable state of the wind and weather, previous to the change of monsoon, indicative of rain.

   2. காற்றின் அமைதி; calm, lull, failing of the wind between monsoons.

   3. நிலையின்மை; fickleness, hesitation, fluctuation of mind.

     ‘மனம் ஈராட்டிப்படுகின்றது’ (இ.வ.);.

     [இரு – ஈர் + ஆட்டி. ஆடு – ஆட்டு – ஆட்டி. இருபாலும் இழுக்கப்படல் ஆட்டப்படுதல்.]

ஈராட்டை

 ஈராட்டைīrāṭṭai, பெ. (n.)

   இரண்டு ஆண்டுகள்; two years.

     [இரு – ஈர் + ஆட்டை. ஆண்டு – ஆண்டை – ஆட்டை.]

ஈராட்டைப்பூடு

 ஈராட்டைப்பூடுīrāṭṭaippūṭu, பெ. (n.)

   இரண்டு ஆண்டு நிலைத்திருக்கும் பூடு அல்லது இரண்டு ஆண்டுக் கொருமுறை பூத்துக் காய்க்கும் பூடு; plant which lives only for two years or which produces its flower and fruit once in two years. (சா.அக.);.

     [இரு + ஆட்டை + பூடு. ஆண்டு – ஆண்டை – ஆட்டை. பூண்டு_- பூடு.]

ஈராண்டு மூலி

 ஈராண்டு மூலிīrāṇṭumūli, பெ. (n.)

   சித்தர்கள் பசியெடுக்காதிருக்கவேண்டி இரண்டு ஆண்டிற் கொருமுறை யுட்கொள்வதாகக் கருதப்பட்ட அரியதோர் மூலிகை; unknown drug said to be taken by Siddhars once in two years with a view to keeping off hunger (சா.அக.);.

     [இரண்டு – இரு – ஈர் + ஆண்டு + மூலி.]

ஈரான்

 ஈரான்īrāṉ, பெ. (n.)

   பாரசீகம்; Iran formerly known as Persia, (muham);.

ஈரி

ஈரி1īri, பெ. (n.)

   இளம் மகளிர் கழற்சிக் காய்களில் ஒன்றை எற்றியும் பலவற்றை அள்ளியும் ஆடும் விளையாட்டு; play of girls, usu. with molucca beans, in which first two and then more beans are taken up together from the ground while one bean is tossed in the air.

   2. ஐந்து அல்லது ஏழு கூழாங்கற்களைக் கொண்டு சிறுமியர் ஆடும் கொக்கான் விளையாட்டு; a game played by girls with five or seven pebbles.

     [இரண்டு – இரு – ஈர் → ஈரி.]

 ஈரி2īri, பெ. (n.)

   1. கந்தை; rags, torn clothes.

   2. பலாக்காய்த் தும்பு; fibres between the pulps in a jack fruit.

     [ஈர்தல் = பிளத்தல். ஈர் – ஈரி + பிளவுண்டது. பிய்ந்தது. சிதர்ந்த சிதார்.]

 ஈரி3īrittal,    4 செ.கு.வி. (v.i.)

   1. ஈரமாதல்; to become wet most, damp, cool.

     “சோறு ஈரித்துவிட்டது”.

   2. குளிர்தல்;, to be cool, as a breeze, to be benumbed, or stiffened, by coldness or disease.

     “ஈரித்த தென்றல்” (குமர.பிர.மதுரைக்.31);.

     [ஈரம் → ஈரி.]

 ஈரி4īri, பெ. (n.)

   மனக்கனிவுள்ளவன்; affectionate person.

     “என் கண்ணனுக்கென்றீரியா யிருப்பாள்”. (திவ்.திருவாய்.6.7.9);.

     [ஈரம் → ஈரி.]

ஈரிச்சல்

 ஈரிச்சல்īriccal, பெ. (n.)

ஈரி-த்தல் பார்க்க;see Iri (சா.அக.);.

     [ஈரித்தல் – ஈரிச்சல்.]

ஈரிடம்

ஈரிடம்īriḍam, பெ. (n.)

   இரண்டிடம் (தொல். சொல். 226);; two places.

     “முன்னிலை தன்மை ஆயிரிடத்தொடும்” (தொல்.சொல்.வினை.29);.

     [இரண்டு → இரு → ஈர் → இடம்.]

ஈரிணம்

 ஈரிணம்īriṇam, பெ. (n.)

   உழமண் நிலம்; sols of fuller’s earth.

     [ஒருகா. ஈரம் + நிலம் + ஈரநிலம் → ஈரிலம் → ஈரிணம்.]

ஈரிதழ்ச் சிப்பி

 ஈரிதழ்ச் சிப்பிīridaḻccippi, பெ.(n.)

   ஓராண்டு ஆணாகவும் ஓராண்டு பெண்ணாகவும் இருக்கும் கடல் வாழ் உயிரினம்; sea living things i.e. male becomes female for one

ஈரித்த சோறு

 ஈரித்த சோறுīrittacōṟu, பெ. (n.)

   சில்லிட்டு ஈரந்தங்கிய சோறு; watery boiled rice which has absorbed moisture through coldness.

ஈரலித்த சோறு (சா.அக.); பார்க்க;see Irahtta sõru.

     [ஈரம் → ஈரித்தல் → ஈரித்த + சோறு.]

ஈரித்துப் போ-தல்

ஈரித்துப் போ-தல்īrittuppōtal,    8 செ.கு.வி. (v.i.)

   1. குளிர் அல்லது நோயினால் தொடுவுணர்வற்றுப் போதல்; to be benumbed or deadened by coldness or disease.

   2. குளிர்ந்து போதல்; to get cold or moist. (சா.அக.);.

     [ஈரம் → ஈரித்தல் → ஈரித்து + போதல்.]

ஈரிப்பு

ஈரிப்புīrippu, பெ. (n.)

   1. ஈரம்; dampness, moisture.

   2. நட்பு (ஈடு. 9.2.4.3);; friendship.

     [ஈரம் – ஈரி – ஈரிப்பு.]

ஈரிய

ஈரியīriya, கு.பெ.எ. (adj.)

   1. ஈரமுள்ள; moisture, dampness.

   2. குளிர்மை; coldness.

     [ஈரம் – ஈரிப்பு – ஈரிம்பு..]

 ஈரியīriya, கு.பெ.எ. (adj.)

   1. ஈரமுள்ள; damp, wet.

   2. குளிர்ந்த (ஆஅக.);; cold.

     “ஈரிய நிறம்பூ வாளி” (திருவிளை.மாயப்.21);.

   3. அன்புடைய; kindly, loving, affectionate.

     “ஈரிய நெஞ்சம்”.

     [ஈரம் → ஈரி → ஈரிய.]

ஈரியம்

 ஈரியம்īriyam, பெ. (n.)

   உடம்பின் நான்குவகை நிலைகள். அவையாவன: நடத்தல், நிற்றல், இருத்தல், கிடத்தல்; four positions of the body viz., going, standing upright, sitting and lying down.

     [ஈரி → ஈரியம், ஈரித்தல் + பிளத்தல், இரண்டாக அல்லது நான்காகப் பிளவுபடுதல், நான்கு வகை.]

ஈரிறை

ஈரிறைīriṟai, பெ. (n.)

   1. ஈரரசு; diarchy.

   2. இரண்டு முறை பெறும் வரி; double duty or similar impost

     “நானும் பிறந்து அவர்களும் பிறக்க வேணுமோ? ஈரிறையுண்டோ?” (ஈடு.1,3,ப்ர.);.

     [இரண்டு → இரு → ஈர் + இறை.]

ஈரிலை

 ஈரிலைīrilai, பெ. (n.)

   ஞாயிறு (அக.நி.);; sun. (செ.அக.);.

     [ஒருகா. ஏர் + எல் – ஏரெல் – ஈரில் – ஈரிலை. ஏரெல் – எழுஞாயிறு.]

ஈரிலைத் தாமரை

 ஈரிலைத் தாமரைīrilaittāmarai, பெ. (n.)

   ஒருவகைப் பூடு; a kind of flowering (lotus); plant with leaves divided into two parts. It is opposed to ஓரிலைத் தாமரை.

     [இரண்டு → இரு → ஈர் + இலை + தாமரை.]

ஈரிலைப்பயிர்

 ஈரிலைப்பயிர்īrilaippayir, பெ. (n.)

   இரண்டிலையுள்ள இளம்பயிர்; young shoot when two blades appear [w.).

     [இரண்டு . இரு → ஈர் + இலை + பயிர்.]

ஈரிழை

 ஈரிழைīriḻai, பெ. (n.)

   ஆடையினிரட்டை நூல்; double thread used in weaving, as in muslin ‘ஈரிழைத் துண்டு’.

ம. ஈரிழ.

     [இரண்டு → இரு → ஈர் + இழை.]

ஈரீற்றா

 ஈரீற்றாīrīṟṟā, பெ. (n.)

   இரண்டாம் ஈற்று மாடு (ஆ.அக.);; the cow which yeaned for the second time.

ஈரு-தல்

ஈரு-தல்īrudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. ஈர்தல்; lo fascinate. (ஆ.அக.);.

   2. வருத்துதல்; to afflict.

     “காமநோய் ஈருகின்றது” (கந்தபு.மாயைப்.72);.

     [ஈர் → ஈரு. ஈருதல்.]

ஈருசு

 ஈருசுīrucu, பெ. (n.),

   மானம்; self respect.

     “கொஞ்சமாவது ஈருசு வேண்டாமா?” (இவ);

     [ஈர்-ஈருத்து-ஈருசு]

ஈருசுரி

 ஈருசுரிīrucuri, பெ. (n.)

 pregnant woman.

நீ ஈருசுரி, மெதுவாக நடக்க வேண்டும். (கொங்.வ.);

     [இரு-ஈர்+(உயிரி); உசிரி]

ஈருடல்

 ஈருடல்īruḍal, பெ. (n.)

   இருதன்மைத்தான வுடல்; body, which has two features. (ஆ.அக.); ஈருடல் ஓருயிர் (உ.வ.);.

     [இரண்டு → இரு → ஈர் + உடல்.]

ஈருயிராயிருத்தல்

 ஈருயிராயிருத்தல்īruyirāyiruttal, பெ. (n.)

   கருக் கொண்ட பெண்ணாயிருத்தல்; woman in a state of pregnancy. (சா.அக.);.

     [இரண்டு → இரு → ஈர் = உயிராய் + இருத்தல்.]

ஈருயிர்

 ஈருயிர்īruyir, பெ. (n.)

   சூல்; pregnancy as the body is consisting of two lives (சா.அக.);.

     [இரண்டு → இரு → ஈர் + உயிர்.]

ஈருயிர்க்காரி

 ஈருயிர்க்காரிīruyirkkāri, பெ. (n.)

   சூல்கொண்ட பெண்; pregnant woman, as holding two lives. (w.);

     [இரண்டு → இரு → ஈர் + உயிர் + காரி.]

ஈருயிர்ப்பிணவு

ஈருயிர்ப்பிணவுīruyirppiṇavu, பெ. (n.)

   சூற்கொண்ட பிணவு (அகநா.72);; pregnant female, either human or animal, having another life within her.

     [இரண்டு → இரு → ஈர் + உயிர் + பிணவு.]

ஈருருவி

 ஈருருவிīruruvi, பெ. (n.)

ஈர்வலி பார்க்க (யாழ்ப்.);;see irvali.

     [இரண்டு → இரு → ஈர் + உருவி.]

ஈருள்

ஈருள்īruḷ, பெ. (n.)

ஈரல் பார்க்க;see iral.

     “ஈருட்டடி மூடி” (சீவக.2791);. (அகநா.394.8);.

     [இரண்டு – இரு – ஈர் + உள்.]

ஈருள்ளி

 ஈருள்ளிīruḷḷi, பெ. (n.)

   வெங்காயம் (மூ.அ.);; onion allium cepa.

   ம., க. ஈருள்ளி;   தெ. நீருல்லி, நீருல்லெ;து. நீருள்ளி.

     [ஈரம் + உள்ளி. உள்ளே ஈரமுடையது.]

ஈருள்ளிக்கோரை

 ஈருள்ளிக்கோரைīruḷḷikārai, பெ. (n.)

   கோரை வகை; a sedge, culon terete, Cyperus articulatus. (செ.அக.);.

     [ஈரம் + உள்ளி + கோரை.]

ஈருவா

 ஈருவாīruvā, பெ. (n.)

   காருவா, வெள்ளுவாக்கள்; new moon and full moon.

     [இரண்டு → இரு → ஈர் + உவா.]

ஈருவாதி

 ஈருவாதிīruvāti, பெ. (n.)

   குப்பைக்கீரை; rubbish green (சா.அக.);.

     [ஒருகா. ஈரம் + வளர்த்தி + ஈரவளர்த்தி → ஈரவாதி → ஈருவாதி.]

ஈரெச்சம்

ஈரெச்சம்īreccam, பெ. (n.)

   1. பெயரெச்சம்; adjective.

   2. வினையெச்சம்; adverb.

     [இரண்டு → இரு → ஈர் + எச்சம்.]

ஈரெட்டு

 ஈரெட்டுīreṭṭu, பெ. (n.)

   உறுதியில்லாத, உறுதியின்மை; uncertainity.

     [இரு→இரட்டு-ஈரெட்டு (இருவகை);→ஈரெட்டு]

ஈரெண்வகைக்கூலம்

 ஈரெண்வகைக்கூலம்īreṇvagaigālam, பெ. (n.)

   நெல், புல், வரகு, தினை, சாமை, இறுங்கு, தோரை, இறகி (ராகி..);. எள், கொள், பயறு, உழுந்து, அவரை, கடலை, துவரை, மொச்சை என்பன; sixteen varieties of grain.

     [இரண்டு – இரு + ஈர் + எண் + வகை + கூலம்.]

ஈரென்புப் பொருத்த

 ஈரென்புப் பொருத்தīreṉpupporutta, பெ. (n.)

   நடுவே சதைப் பற்றின்றி இரண்டெலும்புங்கூடிய அசையா மூட்டு; an immovable joint with no intervening tissue between the bones – Synarthrosis. (சா.அக.);.

     [இரண்டு → இரு → ஈர் + என்பு + பொருத்து.]

ஈரெழுத்து ஒருமொழி

ஈரெழுத்து ஒருமொழிīreḻuttuorumoḻi, பெ. (n.)

   இரண்டெழுத்துகளாலாகிய சொல் (தொல். சொல். 45);; word made of two letters (பல, சில);.

     [இரண்டு – இரு – ஈர் + எழுத்து + ஒரு + மொழி.]

ஈரொட்டு

ஈரொட்டு1īroṭṭu, பெ. (n.)

   உறுதியின்மை; uncertainty, doubt. ‘நோயாளியின் காரியம் ஈரொட்டாயிருக்கிறது’ (உ.வ.);.

     [இரு → ஈர் + ஒட்டு = ஈரொட்டு + இருவகை.]

 ஈரொட்டு2īroṭṭu, பெ. (n.)

   உறுதியின் அடிப்படையிலமைந்த கொள் கொடை; conditional bargain.

     [இரு → ஈர் + ஒட்டு = ஈரொட்டு. ஒட்டு = ஆணை, சூளுரை. உறுதிமொழி. இரு → ஈர் = பெரிது. மிகுதி.]

ஈரொற்றுவாரம்

ஈரொற்றுவாரம்īroṟṟuvāram, பெ. (n.)

   இரண்டு மாத்திரை பெற்றுவருஞ் செய்யுள் (சிலப்.3,136, உரை);; musical composition sung with double beat.

     [இரண்டு → இரு → ஈர் + ஒற்று + வாரம்.]

ஈரோப்பி

 ஈரோப்பிīrōppi, பெ. (n.)

   உயரம், ஈடு, எடுப்பு மிகு தோற்றம் கொண்டவன்; a tall and sturdy person like European.

     [Europe-ஈரோப்பி ]

ஈர்

ஈர்1īrtal,    2 செ.குன்றாவி. (v.t.)

   அறுத்தல்; to saw.

     “உயிரீரும் வாளது” (குறள்.334); – 2 செ.கு.வி.

   இழுக்கப்படுதல்; to be drawn out.

     “ஈர்ந்து நிலந் தோயு மிரும்பிடித் தடக்கை” (சிறுபாண்.19);.

ம. ஈர்.

     [இல் – ஈல் – ஈர்.]

 ஈர்2īrttal,    2 செ.குன்றாவி. (v.t.)

   1. இமுத்தல்; lo draw along, pull, to attract as a magnet, to carry away, as does a currert.

     “சிறுதே ரீர்த்து” (மணிமே. 755);.

   2. உரித்தல்; to excoriate, as a tiger does, to flay.

     “புலியினீருரி யுடுக்குமோ” (கந்தபு. ததீசியுத்.3);.

   3. எழுதுதல்; to draw, paint write,

     “மென்றோட் பெய்கரும் பீர்க்கவும் வல்லன்” (கலித்.143.32); (செ.அக.);.

     [இல் → ஈல் → ஈர்.]

 ஈர்4īr, பெ. (n.)

   1. ஈரம்; moisture, wetness.

     “ஈர்நறுங் கமழ் கடாஅத்து”. (கலித்.21);.

   2. பசுமை; freshness, greenness.

     “இருவெதி ரீர்ங்கழை” (மலைபடு.207);.

   3. நெய்ப்பு; smoothness, oiliness.

     “ஈர்பெய்யுந் தளிரொடு” (கலித்.32);.

   4. இனிமை (திருக்கோ.28);; sweetness, pleasantness, agreeableness.

   5. கரும்பு (மலை); பார்க்க;see karumbu (செல்வி. 73, நவம்.138);.

   ம. ஈர்;   க. ஈர;   தெ. ஈமிரி;   கொல. ஈர்;   நா. ஈர்;பிரா. தீர்.

     [நீர் – ஈர்.]

 ஈர்5īr,    7 இடை. (part.)

   முன்னிலைப் பன்மை ஈறு (தொல். சொல். 226);;   2nd pers eending as in வந்தீர்.

   ம. ஈர்;   க. இரி, ஈரி;   குரு. அரி;   கோத. இரி, ஈரி;துட.

   இ. எ;   குட. இர;   து. அர்;   தெ., ரு. ரி;   கோண். ஈத்;   கூ.. எரு. ஆரு;   பிரா. ரி;பட. ரி.

     [நீர் – ஈர். நீர் – முன்னிலைப் பன்மை இடச் சொல்.]

 ஈர்6īr, பெ. (n.)

   கதுப்பு (அக.நி.);; cheek.

     [எயிறு – ஈறு – ஈர். எயில் போல் சுற்றுக் காப்பானது எயிறு.]

ஈர்கொல்லி

ஈர்கொல்லிīrkolli, பெ. (n.)

உப்பிலி (மூ.அ.); பார்க்க;see uppilli a species of stinking swallow-wort.

     [ஈர் + கொல்லி.]

 ஈர்கொல்லி2īrkolli, பெ. (n.)

ஈர்வலி பார்க்க;see irvali.

ம. ஈர்கொல்லி.

     [ஈர் + கொல்லி.]

ஈர்கொல்லிக்கொடி

 ஈர்கொல்லிக்கொடிīrkollikkoḍi, பெ. (n.)

   ஒரு செடி; a kind of climbing plant, pentatropis microphyla (வின்.);

     [ஈர்கொல்லி + கொடி.]

ஈர்கோலி

 ஈர்கோலிīrāli, பெ. (n.)

ஈர்வலி (வின்.); பார்க்க;see Irvali.

     [ஈர் + கொல்லி. கொல்லி – கோலி.]

ஈர்க்கம்பி

 ஈர்க்கம்பிīrkkambi, பெ. (n.)

ஈர்க்குக் கம்பி பார்க்க;see Ir-k-ku-k-kambi narrow stripes in the border of clothe.

     [ஈர் + கம்பி.]

ஈர்க்கிறால்

 ஈர்க்கிறால்īrkkiṟāl, பெ. (n.)

   இறால்மீன் வகை; Iobster-, Astaeus marinus.

     [ஈர்க்கு + இறால்.]

ஈர்க்கில்

ஈர்க்கில்īrkkil, பெ. (n.)

   1. அம்பினிறகு (சூடா.);; feather of an arrow.

   2. ஓலை நரம்பு (இ.வ.);; rib of a palm leaf.

ஈர்க்கு

ஈர்க்கு1īrkku, பெ. (n.)

   1. ஓலை நரம்பு; rib of a palm leaf.

     “ஈர்க்கிடை போகா” (திருவாச. 4,34);.

   2. அம்பினிறகு; feather of an arrow.

     “சிலைவா ளிடமீர்க்கு” (கம்பரந்21);.

     [ஈர் – ஈர்க்கு.]

 ஈர்க்கு2īrkku, பெ. (n.)

   இறகு; feather. மஞ்ஞை யீர்க்கு.

     [ஈர் – ஈர்க்கு.]

ஈர்க்கு மல்லிகை

 ஈர்க்கு மல்லிகைīrggumalligai, பெ. (n.)

   முல்லை வகை (மூ.அ.);; a kind of jasmine with slender petioles – eared-jasmine – jasminum – auriculatum.

     [ஈர்க்கு + மல்லிகை.]

ஈர்க்குக் கம்பி

 ஈர்க்குக் கம்பிīrkkukkambi, பெ. (n.)

   ஆடையின் சன்னக்கரை; narrow stripe in the border of a silk or cotton fabric.

     [ஈர்க்கு + கம்பி.]

ஈர்க்குக்கருக்குநீர்

 ஈர்க்குக்கருக்குநீர்īrkkukkarukkunīr, பெ. (n.)

   வேம்பீர்க்கு முதலான இலைகளைப் போட்டு நீர் விட்டுச் சுண்டக் காய்ச்சி யிறக்கும் நீர்;   இந்நீர் நோய்களுக்குப் பயன்படும்; medicinal decoction prepared from the ribs of the leaves, such as those of margosa etc. (சா.அக.);.

     [ஈர்க்கு + கருக்கு + நீர்.]

ஈர்க்குச்சம்பா

ஈர்க்குச்சம்பாīrkkuccambā, பெ. (n.)

   சம்பாநெல் வகை (பதார்த்த.801);; a variety of paddy with very slender stalk, sown between June and September and ripening in six months.

     [ஈர்க்கு + சம்பா.]

ஈர்க்குழாம்

ஈர்க்குழாம்īrkkuḻām, பெ. (n.)

   ஈரினது திரள்; swam of nits.

     “ஈர்க்குழாத்தோ டிறைகூர்ந்தபே எற்பகையென வொன்றென்கோ” (புறநா.136,4);.

     [ஈர் + குழாம்.]

ஈர்க்கோல்

 ஈர்க்கோல்īrkāl, பெ. (n.)

ஈர்வலி (இ.வ.); பார்க்க;see ir-vali.

     [ஈர் + கோல்.]

ஈர்ங்கட்டு

ஈர்ங்கட்டுīrṅgaṭṭu, பெ. (n.)

   குளிர் காலத்துக்குரிய உடை; clothing suitable for cold weather.

     “இளையரு மீர்ங்கட் டயர” (கார்நாற்.22);.

     [ஈரம் + கட்டு.]

ஈர்ங்கதிர்

ஈர்ங்கதிர்īrṅgadir, பெ. (n.)

ஈர்ங்கதிர்த் திங்கள் பார்க்க (வின்.);;see Ir-ri-kadir-t-tingal moon, emitting cool rays (அகநா.130.9); (செ.அக.);.

     [ஈரம் + கதிர்.]

ஈர்ங்கதிர்த்திங்கள்

 ஈர்ங்கதிர்த்திங்கள்īrṅgadirddiṅgaḷ, பெ. (n.)

   குளிர்ந்த ஒளிக்கற்றைகளைச் சொரியும் திங்கள்; cool-rayed moon (w.);.

     [ஈரம் + கதிர் + திங்கள்.]

ஈர்ங்கழை

ஈர்ங்கழைīrṅgaḻai, பெ. (n.)

   பசியகோல்; moist stem.

     “இருவெதிரீர்ங்கழை தத்தி” (மலைபடு.207);.

     [ஈரம் + கழை.]

ஈர்ங்கை

ஈர்ங்கைīrṅgai, பெ. (n.)

   உண்டு பூசிய கை; wet hand. Fig. hand that has been washed after taking one’s meal and therefore wet.

     “ஈர்ங்கை விதிரார் கயவர்” (குறள்.1077);.

     [ஈரம் + கை.]

ஈர்ந்தமிழ்

 ஈர்ந்தமிழ்īrndamiḻ, பெ. (n.)

   தண்டமிழ்; sweet, melodious Tamil.

     [ஈரம் + தமிழ்.]

ஈர்ந்தளிர்

ஈர்ந்தளிர்īrndaḷir, பெ. (n.)

   ஈரிய தளிர்; wet, tender leaves. ‘மாரி ஈர்ந்தளி ரன்ன மேனி’ (அகநா.337.2);.

     [ஈரம் + தளிர்.]

ஈர்ந்திரி

ஈர்ந்திரிīrndiri, பெ. (n.)

   நெய் தோய்ந்த திரி; wick immersed in oil.

     “இரும்புசெய் விளக்கி னீர்ந்திரிக் கொளீஇ” (நெடுநல் 42);.

     [ஈரம் + திரி.]

ஈர்ந்தை

ஈர்ந்தை1īrndai, பெ. (n.)

   1. தோயன் மாறனுடைய கோ நகரம்; royal city of the chieftain Toyanmaran.

   2. ஈரோடு நகரம்; The town ‘iródu’ (Erode);

   3. ஈர்ந்தையென்னும் ஊர்; village irndai.

     “ஈர்ந்தை யோனே பாண்பசிப் பகைஞன்” (புறநா.180.7);.

     [ஈர் – ஈர்த்தை. ஓ.நோ. உறை – உறைந்தை – உறந்தை.]

 ஈர்ந்தை2īrndai, பெ. (n.)

   பொடுகு; dandruff.

     [ஈர் + பேன்முட்டை. பொடுகு. ஈர் – ஈர்ந்தை.]

ஈர்பட்டு

 ஈர்பட்டுīrpaṭṭu, பெ. (n.)

ஈர்வெட்டு (யாழ்.அக.); பார்க்க;see Irvettu.

     [ஈர்வெட்டு – ஈர்பட்டு.]

ஈர்பாதம்

 ஈர்பாதம்īrpātam, பெ. (n.)

   ஒரு வகைப் பாம்பு; a kind of Snake.

ஈர்ப்பி

ஈர்ப்பிīrppi, பெ. (n.)

   1. ஈர் (வின்.);; nits, scurt dandruff in the hair.

     [ஈல் – (ஈன்); – ஈர் – ஈர்ப்பி.]

ஈர்ப்பு

ஈர்ப்புīrppu, பெ. (n.)

   1. இழுப்பு; pull, tug attraction.

     “ஈர்ப்புடைக் கராத் தன்ன வென்னை” (புறநா.104);.

   2. இசிவுநோய் (வின்.);; lock-jaw, tetanus, spasmodic contraction of the features or limbs.

   3. இறக்குந் தறுவாயி லுண்டாகும் வலியோடு கூடிய மதி மயக்கம்; acute terminal delirium.

     [இல் – ஈல் – ஈர் – ஈர்ப்பு.]

ஈர்மணி

ஈர்மணிīrmaṇi, பெ. (n.)

   சிவப்பு ஒளிவட்டத்தையுடைய அளறு (ஏலா.67);; hell, irattina-p-pirabai.

     [ஈர் + மணி.]

ஈர்மலர்

ஈர்மலர்īrmalar, பெ. (n.)

   மெல்லிய மலர்; delicate flower.

     ” இலையில் பிடவம் ஈர்மலர் அரும்ப” (நற்.242);.

ஈர்மை

ஈர்மைīrmai, பெ. (n.)

   1. நுண்மை; minuteness, subtlety.

   2. வருத்தம்; distress, pain, suffering.

     “என்னை யீர்மை செய்து” (திவ்.திருவாய்.9.6.3);.

   3. குளிர்ச்சி; coolness.

     [இல் – ஈல் – ஈர் – ஈர்மை.]

ஈர்ம்படை

ஈர்ம்படைīrmbaḍai, பெ. (n.)

   ஈரியபடை; weapon. tool with both the points sharpened.

     “ஈர்ம்படைக்கொங்கர் ஆபரந்தன்ன” (பதிற்றுப்.77.10); நீர் வேண்டிக் கூவல் முதலியன தோண்டுதற்குரிய குந்தாலி முதலிய படைகளை

     “ஈர்ம்படை” யென்றார். (பதிற்.77.10.உரை); கூந்தாலி என வழங்குவர் பரிமேலழகர் (குறள்.1251);. இருபுறமும் கூர்ந்த ஓராயுதம் (ஐங்.354.1);

ஈர்ம்புறம்

ஈர்ம்புறம்īrmbuṟam, பெ. (n.)

   நனைந்த இடம்; wet location.

     “துறைமேய் இப்பி ஈர்ம்புறத்து உறைக்கும்” (நற்.87.7);.

     [ஈரம் + புறம்.]

ஈர்வடம்

 ஈர்வடம்īrvaḍam, பெ. (n.)

   பனையீர்க்குக் கயிறு (யாழ்ப்.);; rope made of ribs of the palmyra leaf (w);.

     [ஈர் + வடம்.]

ஈர்வலி

 ஈர்வலிīrvali, பெ. (n.)

   ஈர்வாங்குங் கருவி; long narrow wooden comb for clearing the hair of nits.

ம. ஈர்வலி.

     [ஈர் + வலி. வலி – இழு.]

ஈர்வலித்தல்

 ஈர்வலித்தல்īrvalittal,    தொ.பெ. (vbl.n.) ஈர்வாரல் (வின்.); combing out nits.

     [ஈர் + வலித்தல்.]

ஈர்வளி

 ஈர்வளிīrvaḷi, பெ. (n.)

   ஓர் மரவகை;. a kind of tree.

ஈர்வாங்கி

 ஈர்வாங்கிīrvāṅgi, பெ. (n.)

ஈர்வலி பார்க்க;see irvali. (செ.அக.);.

     [ஈர் + வாங்கி.]

ஈர்வாணி

 ஈர்வாணிīrvāṇi, பெ. (n.)

ஈர்வடம் (யாழ்ப்.); பார்க்க;see irvadam.

     [ஈர் + வாணி. வலி – வாலி – வாளி – வாணி (இழுக்குங் கயிறு.]

ஈர்வாரி

 ஈர்வாரிīrvāri, பெ. (n.)

ஈர்வலி பார்க்க;see irvali.

     [ஈர் + வாரி. வாறு – வாறி – வாரி.]

ஈர்வாள்

ஈர்வாள்īrvāḷ, பெ. (n.)

   1. அரம்பம் (திவா.);; saw.

   2. அரிவாள் (அக.நி.);. sickle.

ம. ஈர்வாள்.

     [ஈர் + வாள்.]

ஈர்வெட்டு

 ஈர்வெட்டுīrveṭṭu, பெ. (n.)

   பனையீர்க்குக் கயிறு (யாழ்.அக.);; rope made of ribs of palmyra leaf.

     [ஈர் + வெட்டு.]

ஈறயில்

 ஈறயில்īṟayil, பெ. (n.)

   முரசு வெட்டி; gum lancet, a knife for incising the gums.

     [ஈறு + அயில்.]

ஈறற்பற்றை

 ஈறற்பற்றைīṟaṟpaṟṟai, பெ. (n.)

   நெருக்கமான தூறு; dense thicket (w.);.

     [இறு → இறல். ஈறல் + பற்றை. இறுக்கம் = நெருக்கம்.]

ஈறல்

ஈறல்īṟal, பெ. (n.)

   1. துயரம்; grief, as of a broken heart deep-seated sorrow.

என்னெஞ் சீறலை யாருக்குச் சொல்லி ஆற்றுவேன்” (யாழ்ப்.);.

   2. நெருக்கம்; closeness, thickness (w);.

     [இறு → இறல் → ஈறல். இறுக்குதல் + நெருக்குதல், நெருக்கும் துன்பம், நெருங்கப் பின்னும் பின்னல்.]

ஈறழற்சி

 ஈறழற்சிīṟaḻṟci, பெ. (n.)

   பல்லீற்றுக்கேற்படும் எரிச்சல்; inflammation of the gum-gingivitis (சா.அக.);.

     [ஈறு + அழற்சி.]

ஈறாந்தம்

 ஈறாந்தம்īṟāndam, பெ. (n.)

   ஆகமுடிவு; end, finiteness, utmost limit. [w.).

     [ஈறு + அந்தம்.]

ஈறாம் வரிசை

 ஈறாம் வரிசைīṟāmvarisai, பெ. (n.)

   கடைமுறை (திருவாலயா.);; regularity of occurring in the final position. (த.சொ.அக.);.

     [ஈறு + ஆம் + வரிசை.]

ஈறிலான்

ஈறிலான்īṟilāṉ, பெ. (n.)

   கடவுள்; God;

 He who has no end.

     “ஈறிலாரை யிவரணைந் தார்கொலோ” (கந்தபு.திருக்கல்.22);.

     [ஈறு + இல்லான். இல்லான் – இலான்.]

ஈறிலி

 ஈறிலிīṟili, பெ. (n.)

ஈறிலான் பார்க்க (அக.நி.);;see irilän.

     [ஈறு + இல்லி → இலி.]

ஈறு

ஈறு1īṟu, பெ. (n.)

   1. முடிவு (திவா.);; end, termination.

   2. இறப்பு; death.

     “புழுவுமீறெய்தின்” (காசிக. தேவ.அக.5);.

   3. எல்லை; limit, boundary.

     “கொன்ற மன்னரீறிலர்” (பாரத. நிரைமீ.49);.

ம. ஈறு.

     [இறு → ஈறு. இறுதல் = முடிதல்.]

 ஈறு2īṟu, பெ. (n.)

   எயிறு, பல் நிற்கும் தசை; gum of the teeth.

     [இறு → ஈறு. இறு = இறுக்கிப் பிடிக்கும் தசை.]

 ஈறு3īṟu, பெ. (n.)

   பயன் (அக.நி.);; result.

   2. உப்பளம்; salt-pan.

     [இறு → ஈறு. இறு = முடிவு. இறுதி;

வரப்புள்ள உப்பளம்.]

ஈறு கொப்புளம்

ஈறு கொப்புளம்īṟugoppuḷam, பெ. (n.)

   ஈறுகட்டி; a disease in which the roots of 2 or 3 teeth are marked by a violent swelling and pain-gumboil. (சா.அக.);.

     [ஈறு + கொப்புளம்.]

ஈறு கொழு-த்தல்

ஈறு கொழு-த்தல்īṟugoḻuttal,    4 செ.கு.வி. (v.i.)

   பல்லீறு வீங்குதல்; to become swollen as the gums of the teeth. (செ.அக.);.

     [ஈறு + கொழு-த்தல்.]

ஈறு சுரப்பு

 ஈறு சுரப்புīṟusurappu, பெ. (n.)

   ஈறு வீக்கம்; swelling of the gums through inflammation (சா.அக.);.

     [ஈறு + சுரப்பு.]

ஈறு தப்பின பேச்சு

 ஈறு தப்பின பேச்சுīṟudappiṉapēccu, பெ. (n.)

   தகாத சொல்; improper language.

     [ஈறு + தப்பின + பேச்சு. ஒருகா: பல்லை மீறிய பேச்சு.]

ஈறு வெடிப்பு

 ஈறு வெடிப்புīṟuveḍippu, பெ. (n.)

   குழந்தைகளுக்கு ஈறுசுரந்து வெடிப்புண்டாகிக் குருதி யொழுகு மோர் நோய்; an eruption, in the gum of infants, attended with fissure and bleeding. (சா.அக.);.

     [ஈறு + வெடிப்பு.]

ஈறுகடை

 ஈறுகடைīṟugaḍai, பெ. (n.)

   இறுதிமுடிவு (யாழ்.அக.);; final end.

     [இறு → ஈறு + கடை.. இறு → இறுதி.]

ஈறுகட்டல்

 ஈறுகட்டல்īṟugaṭṭal,    தொ.பெ. (vbl.n) ஈறு வீக்கம்; swelling of the gums. ஈறுகாப்பு பார்க்க;see irukāppu. (சா.அக.).

     [ஈறு + கட்டல.]

ஈறுகட்டி

 ஈறுகட்டிīṟugaṭṭi, பெ. (n.)

   இதளியம் (சங்.அக.);; calomel, bichloride of mercury.

     [ஈறு + கட்டி.]

ஈறுகரை-தல்

ஈறுகரை-தல்īṟugaraidal,    4 செ.கு.வி. (v.i.)

   பல்லீறு வீங்குதல்; to waste away as the gums of the teeth. (செ.அக.);.

     [ஈறு + கரை.]

ஈறுகழலை

 ஈறுகழலைīṟugaḻlai, பெ. (n.)

   பல்லீ றிலுண்டாகுங் கழலை; carcinoma of the gums-Ulocarcinoma. (சா.அக.);.

     [ஈறு + கழலை.]

ஈறுகொல்லி

 ஈறுகொல்லிīṟugolli, பெ. (n.)

ஈர்க்கொல்லி பார்க்க;see Ir-k-kolli. (சா.அக.);.

     [ஈறு + கொல்லி. ஈறு + ஈறில் உள்ள நோய்.]

ஈறுநாவழற்சி

 ஈறுநாவழற்சிīṟunāvaḻṟci, பெ. (n.)

   பல்லீறும் நாவும் புண்ணாதல்; inflammation of the gums and the tongue. (சா.அக.);.

     [ஈறு + நா + அழற்சி. நாக்கு → நா.]

ஈறுபுண்

 ஈறுபுண்īṟubuṇ, பெ. (n.)

   பற்களின் சந்தில் ஈறுகள் வெந்து நோயை யுண்டாக்குமோர் பல் வலி; superficial or deep-seated inflammation of the alveolar process Interstitial gingivitis. (சா.அக.);.

     [ஈறு + புண். ஈற்றுப்புண் → ஈறுபுண் (கொ.வ.);.]

ஈறுவலி

ஈறுவலிīṟuvali, பெ. (n.)

   1 பல் லீற்றுக்குண்டாகும் வலி; inflammation of the gum of the teeth.

   2. பல்லீறு நோய்; gingivitis (சா.அக.);.

     [ஈறு + வலி = ஈற்றுவலி → ஈறுவலி (கொ.வ.);.]

ஈற்றசை

ஈற்றசைīṟṟasai, பெ. (n.)

   அடியிறுதி. சொல்லிறுதிகளில் வரும் அசைச்சொல் (சீவக.334..228);; expletive at the end of a line or sentence in a verse or at the end of a word.

     [ஈறு → ஈற்று + அசை.]

ஈற்றடி

 ஈற்றடிīṟṟaḍi, பெ. (n.)

   செய்யுளின் இறுதியடி; line of a verse.

     [ஈறு → ஈற்று + அடி.]

ஈற்றம்

ஈற்றம்īṟṟam, பெ. (n.)

   1. ஈனுகை; giving birth bringing forth.

     “பேரறத் தாலீற்றம்” (சிறுபஞ்,74);;

   2. பெண் விலங்குகளின் பிறப்புறுப்பு; the generation organ of female animals. (சேரநா.);.

ம. ஈற்றம்.

     [ஈன் → ஈற்றம்.]

ஈற்றயல்

ஈற்றயல்īṟṟayal, பெ. (n.)

   இறுதிக்கடுத்தது; penultimate

     “ஈற்றய லாவோ வாகலும்” (நன்.353);.

     [ஈறு → ஈற்று + அயல்.]

ஈற்றரத்தம்

 ஈற்றரத்தம்īṟṟarattam, பெ. (n.)

   பல்லீறுகளில் ஏற்படும் குருதி ஒழுக்கு; oozing of the blood from the gums, ulorrhea.

     [ஈறு → ஈற்று + அரத்தம்.]

ஈற்றா

ஈற்றாīṟṟā, பெ. (n.)

   கன்றீன்ற பெற்றம் (சூடா.);; cow that has calved.

     “ஈற்றாவை வெகுளவிடுத்து” (திருவிளை.பழியஞ்37);.

ம. ஈற்ற.

     [ஈள் → ஈற்று + ஆ.]

ஈற்று

ஈற்றுīṟṟu, பெ. (n.)

   1. ஈனுகை; bringing forth, applied to animals.

     “மானீனு மீற்றினிடை” (பிரபோத11,88);.

   2. ஈனப்பட்டது; young one brought forth.

     “தலையீற்று”.

   3. மரக்கன்று; young

 plant

– பெ.எ. (adj.);

   கடைசி; last. ‘ஈற்றுப்பல்”.

   ம. ஈற்று;   க. ஈன்;தெ. ஈனு. ஈக.

     [ஈன் → ஈற்று.]

ஈற்றுக்கடன்

ஈற்றுக்கடன்īṟṟukkaḍaṉ, பெ. (n.)

   இறுதிக் கடன்; funeral rites, being the last duty to be performed to ore’s relative.

     “ஈற்றுக் கடன் பிறவுந்தாதைக்கு விதியா லாற்றி” (திருவிளை. தடாதகை.42);.

     [ஈறு → ஈற்று + கடன்.]

ஈற்றுத்தாய்

ஈற்றுத்தாய்īṟṟuttāy, பெ. (n.)

   பெற்றதாய் (திவ்.பெரியாழ்.3.94);; one’s own mother, dist. fr. mamu-l-täy.

     [ஈன் – ஈற்று + தாய்.]

ஈற்றுமிசை

ஈற்றுமிசைīṟṟumisai, பெ. (n.)

ஈற்றயல் பார்க்க;see irrayal. பாவு மென்னு மீற்றுமிசை உகரம் மெய்யொடுங் கெட்டுக் கால மயக்கமாய் நின்றது (திருக்கோ.164.உரை);.

     [ஈறு → ஈற்று + மிசை.]

ஈற்றுளை-தல்

ஈற்றுளை-தல்īṟṟuḷaidal,    2 செ.கு.வி. (v.i.)

   மகப்பேற்று வலி, பேறுகாலப் பையுள்; to travail to undergo pangs of child birth (த.சொ.அக.);.

     [ஈன் → ஈற்று + உளை.]

ஈற்றெழுத்து

 ஈற்றெழுத்துīṟṟeḻuttu, பெ. (n.)

   உயிர் பன்னிரண்டும். ஞ், ண், ந், ம், ய், ர், ல், வ், ழ், ள், ன் என்னும் மெய் எழுத்துக்களும்; twelve vowels and ஞ். ண், ந், ம், ய், ர், ல், வ், ழ், ள், ன் eleven consonants (த.சொ.அக.);.

     [ஈறு → ஈற்று + எழுத்து சொல்லுக்கு ஈறாகும் எழுத்து ஈற்றெழுத்து எனப்பட்டது.]

ஈற்றெழுத்துக் கவி

 ஈற்றெழுத்துக் கவிīṟṟeḻuttukkavi, பெ. (n.)

முதற் பாட்டின் ஈற்றில் வரும் சொல்லேனும் எழுத்தேனும்

   அடுத்த செய்யுளின் அல்லது அடியின் தொடக்க எழுத்தாகவோ சொல்லாகவோ வருவது; starting a new stanza with a letter or word from the end of the previous stanza in verse.

     [ஈறு – ஈற்று + எழுத்து + கவி.]

ஈற்றெழுத்துக் கவி சொல்லல்

 ஈற்றெழுத்துக் கவி சொல்லல்īṟṟeḻuttukkavisollal, பெ. (n.)

   ஒருவர் கூறிய பாட்டின் கடையெழுத்தை முதலாகக் கொண்டு பிறர் கவியை ஒப்பித்தல்; exhibition of one’s memory in which after one has recited a verse, another, must recite a verse beginning with the last letter of that very verse of the letter next to it.

     [ஈறு → ஈற்று + எழுத்து + கவி + சொல்லல்.]

ஈற்றேறு-தல்

ஈற்றேறு-தல்īṟṟēṟudal,    5 செ.கு.வி. (v.i.)

   பயிர்க்கரு முதிர்தல்; grain maturing on the stalk.

     “சாவி யீற்றேறும் போது” (ஏரெழு.47); (செ.அக.);.

     [ஈன் + ஈற்று + ஏறுதல்.]

ஈலி

ஈலிīli, பெ. (n.)

   கைவாள்; sword.

   2. சுரிகை; dagger

     [இல் (குத்துதல்); → ஈல் → ஈலி.]

ஈளமிளகு

 ஈளமிளகுīḷamiḷagu, பெ. (n.)

   கொச்சி மிளகு; cochi pepper. (சா.அக.);.

     [ஈழம் + மிளகு. ஈழம் → ஈளம். ஈழத்திலிருந்து கொணர்ந்து பயிராக்கிய மிளகு.]

ஈளம்

 ஈளம்īḷam, பெ. (n.)

   பாதிரி (சங்.அக.);; yellow flower fragrant trumpet flower-tree (செ.அக.);.

     [ஈளை – ஈளம்.]

ஈளை

ஈளைīḷai, பெ. (n.)

   1. கோழை; phlegm.

     “ஈளையேங்கி யிருமி” (திவ்.பெரியதி.1,3,6);.

   2. இழைப்பு; asthma.

     “ஈளையும் வெப்பும்” (திருமந்.263);.

   3. எலும்புருக்கி நோய்; consumption, tuberculosis.

   4. உமிழ்நீர்; saliva spittle (சேரநா.);.

   ம. ஈள;க. ஈளெ.

     [இளை → ஈளை.]

ஈளைக்காரன்

 ஈளைக்காரன்īḷaikkāraṉ, பெ. (n.)

   கோழை நோயாளி (ஆ.அக.);; patient afflicted with bronchitis.

     [ஈளை + காரன்.]

ஈளைக்கொல்லி

ஈளைக்கொல்லிīḷaikkolli, பெ. (n.)

   காசநோயைக் கொல்லும் மருந்து; any medicine capable of killing (curing); asthma.

   2. தாளகம்; orpiment (சா.அக.);.

     [ஈளை + கொல்லி.]

ஈளைத்தரை

ஈளைத்தரைīḷaittarai, பெ. (n.)

   ஈரத்தரை; moist ground

     “தெய்வத் தானமும்…. உமியும் பரலும் சேர்ந்த நிலம் களித்தரை, உவர்த்தரை, ஈளைத்தரை பொல்லாச் சாம்பல் தரை பொடித்தரை என்று சொல்லப்பட்டன ஒழிந்து” (சிலப்.3.96.உரை);.

     [ஈரம் → ஈலம் → ஈளம் + தரை.]

ஈளைபிடித்தான்

 ஈளைபிடித்தான்īḷaibiḍittāṉ, பெ. (n.)

ஈளைக்காரன் பார்க்க;see flaf-k-kâran.

     [ஈளை + பிடித்தான்.]

ஈளையிருமல்

 ஈளையிருமல்īḷaiyirumal, பெ. (n.)

   கோழையுடன் கூடிய விருமல்; a cough attendant on expectoration a wet cough. (சா.அக.);.

     [ஈளை + இருமல்.]

ஈழக்கருங்காசு

ஈழக்கருங்காசுīḻkkaruṅgācu, பெ. (n.)

   பழைய நாணய வகை; an old coin (M.E.R. 47 of 1925);.

     [ஈழம் + கரும் + காக.]

ஈழக்காசு

ஈழக்காசுīḻkkācu, பெ. (n.)

   நாணய வகை; coin of Srilanka (I.М.Р.Тj 38);

ஈழநாட்டு நாணயம்.

ம. ஈழக்காசு.

     [ஈழம் + காசு.]

ஈழக்குலச்சான்றார்

ஈழக்குலச்சான்றார்īḻkkulaccāṉṟār, பெ. (n.)

   சான்றார் பிரிவினர் (பெரியபு.ஏனாதி.2);; division of the cánár caste.

     [ஈழம் + குலம் + சான்றார். சான்றார் + போர்மறவர்.]

ஈழங்கனாக் காண்(ணு)-தல்

ஈழங்கனாக் காண்(ணு)-தல்īḻṅgaṉākkāṇṇudal,    12 செ.கு.வி. (v.i.)

   கண்ணாற் காணாததைக் கனவில் காணுதல் (திவ்.திருக்குறுந் 1.வியா);; to dream of things which had never before been in one’s experience referring to the dream experiences of those in ancient times who had not seen Ceylon.

     [ஈழம் + கனா + காணுதல் = ஈழத்துக்குப் பண்டைக் காலத்தின் சேரன் தீவு எனப்பெயரிருந்தது. அந்நாட்டுச் சேர இளவரசர்கள் எவரும் கண்டும் கேட்டு பிராத புதுமைப் பொருள்களைத் தம் கடற்பயணங்களால் கொணர்ந்து சேர்த்ததால் ஈழக்கனவு புதுமை காணலுக்கு ஆயிற்று.]

ஈழங்கிழங்கு

 ஈழங்கிழங்குīḻṅgiḻṅgu, பெ. (n.)

   பெருவள்ளி; wing-stalked yam.

ம. ஈழச்சேம்பு.

     [ஈழம் + கிழங்கு.]

ஈழச்சேரி

ஈழச்சேரிīḻccēri, பெ. (n.)

   கள்ளிறக்குபவர் வாழிடம்; locality inhabited by toddy-drawers (S.I.I.ii.44);.

     [ஈழவர் + சேரி – ஈழவச்சேரி → ஈழச்சேரி.]

ஈழஞ்சுற்றியோடல்

 ஈழஞ்சுற்றியோடல்īḻñjuṟṟiyōṭal, பெ. (n.)

   இலங்கையின் கிழக்கு வழியே செல்லுங் கப்பற் செலவு (பயணம்);; sailing round the eastern side of Ceylon.

     [ஈழம் + சுற்றி + ஒடல்.]

ஈழத்தலரி

 ஈழத்தலரிīḻttalari, பெ. (n.)

   அலரி வகை; pagoda tree.

ம. ஈழத்தலரி.

     [ஈழம் + அத்து + அலரி.]

ஈழத்தி

 ஈழத்திīḻtti, பெ. (n.)

   கல்லத்தி; hill banyan.

     [ஈழம் + அத்தி.]

ஈழத்திமரவாழை

ஈழத்திமரவாழைīḻttimaravāḻai, பெ. (n.)

   1. ஈழநாட்டின் மரவாழை; a kind of plantain in Srilanka.

   2. நாட்டுமா வாழை; indegenous plantain. (சா.அக.);.

ம. ஈழத்தி மரவாழ.

     [ஈழம் + அத்து + மரம் + வாழை. அத்து → அத்தி – சாரியைத்திரிபு.]

ஈழத்துணவு

 ஈழத்துணவுīḻttuṇavu, பெ. (n.)

   ஈழநாட்டு உணவுப் பொருள்கள்; food preparation from Srilanka.

     “ஈழத்து ணவும் காழகத் தாக்கமும்” (பட்டினப்.);.

     [ஈழம் + அத்து + உணவு.]

ஈழத்துத் தேங்காய்

 ஈழத்துத் தேங்காய்īḻttuttēṅgāy, பெ. (n.)

   இலங்கையில் விளையும் தேங்காய் (யாழ்ப்பாணத்துக்காய் என்றும் சொல்வதுண்டு);; cocoanut variety of Srilanka. (சா.அக.);.

     [ஈழம் + அத்து + தேங்காய்.]

ஈழத்துப்பூதன்றேவன்

ஈழத்துப்பூதன்றேவன்īḻttuppūtaṉṟēvaṉ, பெ. (n.)

   கடைக் கழகப் புலவருள் ஒருவர் (குறுந்.343);; a poet of Sangam Age.

     [ஈழம் + அத்து + பூதன் + தேவன். பூதன்றேவன் → பூதன்மகன் தேவன்.]

ஈழநாடு

ஈழநாடுīḻnāṭu, பெ. (n.)

   இலங்கை (தேவா.123.9.7);; Srilanka (Ceylon);.

ம. ஈழத்து நாடு.

     [ஈழம் + நாடு.]

ஈழப்புளி

 ஈழப்புளிīḻppuḷi, பெ. (n.)

   கொடுக்காய்ப் புளி; malabar gamboges.

     [ஈழம் + புளி.]

ஈழமண்டலம்

ஈழமண்டலம்īḻmaṇṭalam, பெ. (n.)

   இலங்கை; country of Srilanka (Ceylon);

     “ஈழமண்டல மளவு திறைகொண்ட” (தமிழ்நா.253);.

     [ஈழம் + மண்டலம்.]

ஈழம்

ஈழம்īḻm, பெ. (n.)

   1. இலங்கை (சிங்களம்); (திவா.);; Srilanka (Ceylon);.

   2. பொன் (இரகுநகர.68);; gold.

   3. கள் (சூடா.);; toddy, arrack.

   4. கள்ளி (மலை.);; spurge.

   ம. ஈழம்; pal Sihata.

ஈழம் + ஈழநாடு, ஈழத்தில் விளைந்த பொன் மாழை.

   1. இல் = குத்தல், தாழ்வு, பள்ளம், கிழக்கு. இல் → ஈல் → ஈளம் → ஈழம் + கிழக்கிலுள்ள

   2. கிழக்கினின்று வந்தபொன்.

   3. ஈள் → ஈளம் (ஈளை); + தொய்வு, மயக்கம் ஈளம் → ஈழம் + மயக்கமுண்டாக்கும் கள்.

   4. உட்சாறு(கள்); கொண்ட கள்ளிச்செடி.]

ஈழம்புஞ்சை

ஈழம்புஞ்சைīḻmbuñjai, பெ. (n.)

   வரிவகை; tax. (SIIVii, 122);.

     [ஈழம் + பூட்சி = ஈழப்பூட்சி → ஈழப்பூஞ்சி → ஈழப்புஞ்சை.]

ஈழம்பூட்சி

ஈழம்பூட்சிīḻmbūṭci, பெ. (n.)

   ஒரு பழைய வரி; ancient tax. (S.I.l.ii. 521.31);.

     [ஈழம் + பூட்சி. ஈழம் + கள். பூண் → பூட்சி (கடமையாக செலுத்தப்பட்டது. ஈழப்பூட்சிகள் வரி.]

ஈழற்கடிவரி

ஈழற்கடிவரிīḻṟkaḍivari, பெ. (n.)

   வரிவகை; tax (S.I.I.vii.24); (செ.அக.);.

     [ஈழன் + கு + அடிவரி. ஈழநாடு காத்தற்குரிய வரியாகலாம்.

ஈழவக்கத்தி

ஈழவக்கத்திīḻvakkatti, பெ. (n.)

   ஈழவர்க்குரிய கத்தி (தொல்.எழுத். 153, உரை);; knife used by ilavas.

     [ஈழவர் + கத்தி.]

ஈழவன்

ஈழவன்īḻvaṉ, பெ. (n.)

   மலையாள நாட்டிற் கள்ளிறக்கும் குடியினன்; class of people who emigrated from ceylon in the remote past and settled in Tirunelveli distric and Kerala, the caste of toddy-drawers. ‘தெங்கும் பனையும் இவர்கள் மனமின்றி ஈழவர் ஏறப் பெறாதா ராகவும்’ (S.I.I.ii.509);.

   ம. ஈழவன்;   க. ஈடிக;தெ. ஈடிக.

     [ஈழம் → ஈழவன்.]

ஈழவர்

 ஈழவர்īḻvar, பெ. (n.)

ஈழவன் பார்க்க;see ilavan.

     [ஈழம் → ஈழவர்.]

ஈழுவன்

 ஈழுவன்īḻuvaṉ, பெ. (n.)

ஈழவன் பார்க்க;see ilavan.

ஈழை

ஈழைīḻai, பெ. (n.)

   1. தொய்வு; slackening.

   2. இழைப்பு; emaciation.

   3. ஈளைநோய்; asthma.

   4. பித்தம்; bile.

   5. மஞ்சள் நிறம்; yellow colour.

     [ஈளை → ஈழை.]

ஈழைக்கொல்லி

 ஈழைக்கொல்லிīḻaikkolli, பெ. (n.)

   அரிதாரம் (சங்.அக.);; yellow dye, orpiment, (செ.அக.);.

     [ஈளை – ஈழை + கொல்லி.]

ஈவி-த்தல்

ஈவி-த்தல்īvittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   பங்கிடுதல்; to distribute, apportion.

     [ஈதல் = தருதல். பங்கிடுதல். ஈ → ஈவி → ஈவித்தல் (பி.வி.);.]

ஈவிரக்கம்

 ஈவிரக்கம்īvirakkam, பெ. (n.)

   மனக்கசிவு; compassion associated with liberality, sympathy, (colloq);.

     [ஈவு + இரக்கம்.]

ஈவிழுங்கி

ஈவிழுங்கிīviḻuṅgi, பெ. (n.)

   ஈயை விழுங்கும் பறவை; fly-catcher.

   2. ஈத்தின்னும் பல்லி; fly-catching lizard.

   3. ஈயுண்ணுஞ் செடி; fly-trap.

   4. எதையும் நம்பும் மூடன்; simpleton who believes in any and everything told.

     [ஈ + விழுங்கு. ஈ = ஈதல்.]

ஈவு

ஈவுīvu, பெ. (n.)

   1. கொடை; giving, bestowing.

     “ஈவுதனை மேற்கொண்ட” (கம்பரா.கார்முக.22);.

   2. நன்கொடைப் பொருள்; gift donation.

     “புத்தியுள்ள மனைவியோ, கர்த்தரருளும் ஈவு” (விவிலி:நீதி.19.14);.

   3.. பங்கிடுகை; distribution, sharing.

   4. ஒழிகை; disappearance, vanishing.

     “ஈவிலாத தீவினைகள்” (திவ். திருவாய்.4,7,3);.

   5. கணக்கிற் பிரித்துக் கண்டபேறு; quotient (math);.

   ம. ஈவு;   க. ஈ;தெ. ஈலி.

     [ஈ – ஈவு.]

ஈவுக்கணக்கு

ஈவுக்கணக்குīvukkaṇakku, பெ. (n.)

   1. வகுத்தல் கணக்கு; division (w.);.

   2. பிரிவு; part.

   3. கணக்கு; mathematics.

     [ஈவு + கணக்கு.]

ஈவுசோய்வு

ஈவுசோய்வுīvucōyvu, பெ. (n.)

   1. மனம் இளகிக் கொடுக்கும் கொடை (யாழ்.அக.);; gift out of sympathy.

   2. கொடையும் இளக்காரமும்; charity and debasement.

     [ஈவு + சோய்வு, சோர்வு → சோய்வு.]

ஈவுசோர்வு

 ஈவுசோர்வுīvucōrvu, பெ. (n.)

   சூழ்நிலை அமைவு; Seasonableness and unseasonableness with particular reference to the resources on hand.

ஈவு சோர்வு பார்த்துச் செய்ய வேண்டும் (இ.வ.);.

     [ஒருகா. ஈவு சோவு – ஈவுசோர்வு.]

ஈவுதரம்

ஈவுதரம்īvudaram, பெ. (n.)

   சராசரி வரித்தண்டல்; average collection (GTn D.288);.

     [ஈவு + தரம். ஈவு = கொடுத்தல். தரம் = அளவு.]

ஈவுமானியம்

 ஈவுமானியம்īvumāṉiyam, பெ. (n.)

   நில வரும்படிக்குத் தக்கபடி ஈவித்துக் கொடுக்கும் உரிமை; grand of a proportion or percentage on any branch of land revenue, which fluctuates with the improvement of deterioration of the produce. (RF.);.

     [ஈவு + மானியம்.]

ஈவோன்

ஈவோன்īvōṉ, பெ. (n.)

   1. கொடையாளி; donor benefactor.

   2. கற்பிப்போன் (தொல்.பாயி.உரை.); teacher.

ம. ஈவோன்.

     [ஈ → ஈவோன்.]