செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை வெளியீடு
31 தொகுதி 12000 பக்கங்கள் கொண்ட பேரகரமுதலி


1

10838

2769

3111

538

3554

677

1093

620

189

1004

402

2
க்
1

8212
கா
2579
கி
564
கீ
222
கு
4598
கூ
780
கெ
615
கே
391
கை
1101
கொ
2417
கோ
1754
கௌ
110
ங்
1

2
ஙா
2
ஙி
1
ஙீ
1
ஙு
1
ஙூ
1
ஙெ
1
ஙே
1
ஙை
1
ஙொ
5
ஙோ
1
ஙௌ
1
ச்
1

5235
சா
1186
சி
2424
சீ
439
சு
1261
சூ
420
செ
1529
சே
470
சை
23
சொ
409
சோ
365
சௌ
1
ஞ்
1

15
ஞா
44
ஞி
3
ஞீ ஞு ஞூ ஞெ
34
ஞே
5
ஞை
2
ஞொ
3
ஞோ
2
ஞௌ
1
ட்
1

1
டா
1
டி
1
டீ
1
டு
1
டூ
1
டெ
2
டே
1
டை
1
டொ
1
டோ
1
டௌ
ண்
1

1
ணா
1
ணி
1
ணீ ணு
1
ணூ
1
ணெ
2
ணே
1
ணை
1
ணொ
1
ணோ
1
ணௌ
த்
3113
தா
1530
தி
2203
தீ
393
து
1238
தூ
411
தெ
694
தே
856
தை
39
தொ
878
தோ
459
தௌ
ந்
1

2789
நா
204
நி
1860
நீ
1161
நு
14
நூ
18
நெ
892
நே
318
நை
89
நொ
210
நோ
159
நௌ
2
ப்
1

4560
பா
1824
பி
492
பீ
25
பு
2224
பூ
1133
பெ
1064
பே
483
பை
127
பொ
1218
போ
478
பௌ
2
ம்
4760
மா
1422
மி
535
மீ
268
மு
3016
மூ
949
மெ
396
மே
751
மை
152
மொ
284
மோ
242
மௌ
ய்
1

119
யா
426
யி
1
யீ
1
யு
46
யூ
20
யெ
9
யே
1
யை
1
யொ
1
யோ
98
யௌ
1
ர்
87
ரா
107
ரி
11
ரீ
7
ரு
24
ரூ
20
ரெ
6
ரே
16
ரை
10
ரொ
8
ரோ
23
ரௌ
ல்
117
லா
44
லி
8
லீ
5
லு
8
லூ
3
லெ
13
லே
21
லை லொ
20
லோ
63
லௌ
3
வ்
1

3800
வா
1329
வி
1638
வீ
515
வு
1
வூ
1
வெ
2164
வே
834
வை
229
வொ
1
வோ
3
வௌ
ழ்
1

1
ழா
1
ழி
1
ழீ
1
ழு
6
ழூ
1
ழெ
1
ழே ழை ழொ ழோ
1
ழௌ
ள்
1

2
ளா
1
ளி
1
ளீ
1
ளு
1
ளூ
1
ளெ
2
ளே
1
ளை
1
ளொ
1
ளோ
1
ளௌ
ற்
1

1
றா
1
றி
1
றீ
1
று
1
றூ
1
றெ
2
றே
1
றை
1
றொ
1
றோ
1
றௌ
ன்
1

1
னா
1
னி
1
னீ
1
னு
1
னூ
1
னெ
2
னே
1
னை னொ
1
னோ
1
னௌ
தலைசொல் பொருள்

இ1 i, பெ. (n.)

   பன்னிரு உயிரெழுத்துகளுள் மூன்றாம் உயிரெழுத்து; third letter and vowel of the Tamil alphabet, the close high front unrounded short vowel in Tamil.

இற்றை மொழியியலார் இதைப் பிறப்பிடம் நோக்கி முன் அண்ணக் குவியா உயிர்க்குறில் என்பர்.

ம., க., தெ., து., இ.

 இ2 i,    இடை. (part.) அண்மைச்சுட்டு; proximate demonstrative.

 i) அகச்சுட்டு;

 demonstrative base forming an integral part of a word denoting or pointing out a proximate person, place, or thing.

 ii) புறச்சுட்டு;

 demonstrative prefix.

     “இப்பால் உருட்டுவோன் எனவே” (சிலப்.1:6-68);.

 demonstrative prefix to a noun, expressing proximity of a person, place or thing actually pointed out by the hand.

 demonstrative prefix to a noun, its antecedent.

பிரா. தா.

 demonstrative prefix expressing world-wide eminence.

     “இப்படியன் இந்நிறத்தன் இவ்வண் ணத்தன்

இவனிறைவன் என்றெழுதிக் காட்டொணாதே” (அப்பர். 6-97-10);.

 demonstrative prefix expressing the power to recollect.

     “அ அவனும் இ இவனும் கூடியக்கால்”

 இ3 i,    இடை. (part.) பல்வகையீறுகள்; multifarious formations and suffixes.

 f) பெயரீறுகள்;

 noun endings.

 feminine suff.

ம., க., தெ., து. இ.

 abstract noun suff.

 verbal noun suff.

 neg. implicit verb based noun suff.

     “தாயுமிலி தந்தையிலி தான்தனியன் காணேடி” (திருவா. திருச்சா. 3);

 ii) வினையீறுகள்;

 verb endings.

 imperative sing verb ending.

 optative verb ending.

 past adverb ending.

 neg. appellative verb ending.

 இ4 i,    இடை. (part.) சாரியை; enunciative and connective particle.

 i) மெய்யெழுத்து ஒலித்துணைச் சாரியை;

 enunciative particle employed in Tamil grammar to designate certain consonants.

   ச்-இச்;இக்கன்னா. இச்சன்னா எனலுமாம்.

ஆங்கிலம் கிரேக்கம் இலத்தீனம் செருமானியம் உருசியம் போன்ற ஆரிய மொழிகளில் B, C, D, G. P. T ஆகிய மெய்யெழுத்துகளுக்கு இகரம் ஒலித்துணைச் சாரியையாகி ப், ச், ட், ச், ப், ட் என்னும் மெய்யெழுத்துகளைப் பலுக்க உதவுதல் காண்க. ஏனை ஆங்கில மெய்யெழுத்துகளுக்கு இகரம் எகரமாகி மெய்ம்முன் ஒலித்துணையாகும். (ஒநோ ட M); மெய்யெழுத்தை எம்மொழியினரும் உயிரெழுத்தின் துணையின்றிப் பலுக்கவியலாது என்னும் மூலத்தாய் மொழியியல்பு பற்றி இஃது இவண் குறிக்கப்பட்டது. மூலத்தாய் மொழியியல்புகளை ஞாலச்சேய் மொழிகள் காத்துவந்துள எனற்கு இஃதொரு சான்றாம்.

 iii) புணர்ச்சிச் சாரியை;

 connective particle.

   ஏவலொருமை வினையையும் செயவென்னும் வாய்பாட்டு வினையெச்ச ஈற்றையும் இன்னோசை பட இணைக்கும் புணர்ச்சிச் சாரியை; euphonic augment used in combination of verbal root and participle ending.

காணிய வருவோள் – காண் + இ + (ய்); ஶ்ர+ அ + காணிய.

தானாக ஒலியாத மெய்யெழுத்தைச் சார்ந்து தன்னோடியைத் தொலிப்பது மெய்யெழுத்துச் சாரியை.

காண வருவோள் என இகரச் சாரியையின்றிப் புணர்வதே இயல்பாயினும் இன்னோசையும் சந்த இயைபும் பற்றிக் காணிய வருவோள் எனப் புணர்ந்தது.

 இ5 i, இடை. (part.) குறிப்பொலி.

 expression or joy. தாழ்வுணர்ச்சியையும் குறிக்கும்;

 may also indicate inferiority.

 expression of approval.

 இ6 i,    இடை. (part.) (1) வியப்பிடைச்சொல்; expression of exclamation.

 an expression of contempt.

   இ7 __< இடை. (part.); பொருளின்றி இருவகை வழக்கிலும் இசை நிரப்ப வரும் ஓர் அசைச்சொல்; expletive used in dialectical and literary usage as enunciative particle.      [கேள் + இ + கேளி.] கேள் என்னும் ஏவலொருமைப் பொருள் வெளிப்படை வியங்கோள் ஈறு போன்ற தோற்றம் தரினும் இகரம் ஒலித் துணையான அசைச்சொல்லே. வெறுப்பும் கண்டிப்பும் குரலில் வெளிப்படின் அசைச்சொல்லாம். கனிவும் மதிப்புரவும் வெளிப்படின் வியங்கோள் ஈறாம்.  இ8 i,    இடை. (part.) காரணப் பெயரீறு; causative verbal noun suff.  இ9 i,    இடை. (part.) அடிவினைத் திரிபீறு; verb base alternate ending.  இ10 i,    இடை. (part.) மொழியிடைக் குற்றியலிகரம்; Shortened 'i' in word combination.      [நாகு + யாது. எனப்படுவது + யாதெனின்.]  இ11 i,    இடை. (part.) வடமொழிச்சொல் தமிழில் வழங்கும்போது வரும் மெய்ம்மயக்க ஒலித்துணை; enunciative particle used for Sanskrit loanwords in Tamil to avoid unusual germinations. வாக்கியம் < Skt. våkya.    2. மொழிமுதலாகாத ர, ல முதலிய எழுத்துகளில்    படும் ஒலித்துணை; an enunciative particle used before loan words with the non-initial letters such as r. and I. லங்கா → இலங்கை.  இ12 i,    இடை. (part.) குறிலில் இறும் வண்ணப்பாட்டுச் சீர்களின் வண்ணக் குழிப்பு வாய்பாட்டீறு; ending of rhythmic formulas of metrical feet ending in short vowel. திந்தி திந்தி தினை திந்தி. தங்கட்டி தங்கட்டி தங்கட்டி தங்கட்டி.  இ13 i,    இடை. (part.) ஐந்தனுள் ஆந்தையைக் குறிக்கும் எழுத்து (பிங்.); letter representing owl in five birds (pañca patc.) (Astrol).    2. நூறு என்னும் எண்ணின்குறி; a symbol of the number hundred.    3. காமனின் பெயர்களுள் ஒன்று; a name of the god of love.      [நூறு நிறைவைக்குறித்து அழகைக்குறித்தபோதுகாமனையும் வருவது கூவியுரைக்கும் அழகிய ஒட்பத்தால் ஆந்தையையும் குறித்திருக்கலாம். மயில், கிளி, கழுகு, ஆந்தை, காகம் என்பன ஐம்புட்கள்.]  இ15 i, இடை. (part.)    1. மொழியிடை உகரத்தின் திரிபான இகரம்; derivative form of a 'u' ending word    2. ஈகார ஐகார அளபெடைகளின் அடையாளக் குறி; a sign to designate extra long vowels I and ai.    3. பிறவினை இறந்தகால இடைநிலை எழுத்துபேறு; an augment in causative past verb time marker.    4. ஒன்றன்பால் உரிமையீறு; neut. sing possessive ending.    5. செயப்படுபொருள் தொழிற்பெயரிலு:verbal no. ending  இ16 i,    இடை. (part.) அரையென்னும் எண்ணின் குறி; symbol for the fraction 1/2, which symbol is now usual, written as ரு in Tamil arithmetics.      [ஒருகா. குற்றியலிகரம் அரை மாத்திரை பெறும் ஒப்பகம் நோக்கி 'இ' உயிர்க்குறில் வரிவடிவம் அரை என்னும் எண்ணின் குறியாக ஆளப்பட்டிருக்கலாம்.] இக்காலத்தில் இது ரு எனத் தமிழ்க் கணக்கு நூலில் ஆளப்படுகிறது.

இஃகலாட்டம்

இஃகலாட்டம் iḵkalāṭṭam, பெ. (n.)

   1. இழுபறிப்போர்; tug of war.

   2. பகைமை; enmity.

   க. எசலாட்ட;தெ. இக்கலாட்டமு.

     [இல் + கு = இஃகு → இஃகல் + ஆட்டம்.]

இஃகு

இஃகு1 iḵkudal,    21 செ.கு.வி. (v.i.)

   இழுத்தல்; pull, draw.

க., து. இக்கு.

     [இல் + கு = இஃ.கு.]

 இஃகு2 iḵku, பெ. (n.)

   எஃகு; steel.

     [இல் + கு = இஃகு (அழுந்தப்பற்றுதல், இறுகுதல்); நன்கு இறுகிய மாழை.]

இஃது

இஃது iḵtu,    சு.பெ. (pron.) இது, உயிர் முதல் சொற்களின் முன்னும் செய்யுளில் யகரமுதற் சொற்களின் முன்னும் வழங்கும் சுட்டுச் சொல்; this used before words with vowel initials and occasionally before words with ‘y’ initials in poetry. இஃதாவது இஃதாம்பல். இஃதியாதென்றான் (தொல். எழுத்.423 உரை).

     [இல் + து = இஃது. லகர மெய்யீற்றுத்திரிபு ஆய்தம்.]

இ + து = இஃது எனப் புணர்க்கப்படாமை காண்க. அ. இ. உ என்னும் சுட்டெழுத்துகளின் முந்து வடிவம் ஆ ஈ ஊ என நெடுஞ்சுட்டுகளாயினும், சுட்டுச்சொல் வடிவம் அல். இல், உல் என்பனவே. அவற்றைத் திரவிடமொழிகளுள் கன்னடம் மட்டும் தக்கவைத்துக்கொண்டிருக்கிறது. தமிழிலும் மெல் → மெது. பல் → பது என்றாற்போல், இல் → இது எனத் திரியுமாயினும் அசையழுத்தத்தால் லகரமெய் ஆய்தமாயிற்று.

இஃதொத்தன்

இஃதொத்தன் iḵtottaṉ, பெ. (n.)

   இவனொருத்தன்; this man.

     “ஏஎ இஃதொத்தன் நாணிலன்” (கலித்.62);.

     [இஃது + ஒருத்தன். ஒருத்தன் → ஒத்தன் (இடைக்குறை);.]

இஃதொத்தி

இஃதொத்தி iḵtotti, பெ. (n.)

   இவளொருத்தி; this woman.

     “அஞ்சா அழாஅ அரற்றா இஃதொத்தி என் செய்தாள் கொல்லென்பீர்” (கலித்.143);.

     [இஃது + ஒருத்தி. ஒருத்தி → ஒத்தி (இடைக்குறை);.]

இக

இக1 igattal, 18 செ.குன்றாவி. (v.t.)

   1. தாண்டுதல். (திவா.);; to leap over, jump over.

   2. கடத்தல், வரம்பிகந்தோடி (கம்பரா.நாட்.9);; to over flow, go beyond.

   3. வரம்புகடத்தல்; deviate from a rule or justice.”நெறியிகந்து … நீரலசெய்யும்” (காசிகா. சிவகன்மாவாயு.28);.

   4. போதல்; to depart, go away.

   5. நீங்குதல்;:to leave.”முனிவிகந் துயர்ந்த” (நன். சிறப்புப்பா.);

   6. நடத்தல்; to walk.

   7. புறப்படுதல்; to start.

   8. விட்டுவிடுதல்; to abandon.

   9. பிரிதல்.

     “இகந்துறைவ ரேதிலர்” (குறள்.1130);;

 to leave behind, go away from.

   10. பொறுத்தல். (பிங்.);; to bear, endure.

   ம. இகய்க்குக;மரா. இக் (செல்லுதல்);.

     [இய → இக. இய + செல், நட. இகத்தல் + செல்ல நேர்வதால் பிரிதல், நீங்குதல், தாண்டுதல் பொருள் சுட்டியது.]

 இக3 iga,    இடை. (part.) முன்னிலையசைச் சொல் (தொல். சொல். 276); poet expletive of the 2nd pers. of verbs.

     [இயக = வியங்கோள் ஈறு. இய → இக முன்னிலையசை மொழிகளாயின.]

இக-த்தல்

இக-த்தல்2 igattal, 18 செ.குன்றாவி. (v.t.)
   1. புடைத்தல்; to beat.

   2. காழ்த்தல்; to become hard, mature.

   3. நெருங்குதல்; to be close together, crowd.

   4. பழித்தல்; to abuse.

   5. மீறுதல்; to transgresse.

     [இகத்தல் = நீங்குதல், விரிதல், பகுத்தல், பரவுதல், பரவுதலால் ஒன்றளை நெருங்குதல், மோதுதல், மீறுதல் பொருள்களில் புடைபெயர்ந்துள்ளது.]

இகசுக்கு

 இகசுக்கு igasuggu, பெ. (n.)

   நீர்முள்ளி (மலை.);; white long-flowered nail dye (செ.அக.);.

     [இளக்கு → இக்கு. இக + சுக்கு.]

இகசேபம்

 இகசேபம் igacēpam, பெ. (n.)

   எழுமுள்; axil-spined mulberry – (சா.அக.);.

இகடி

 இகடி igaḍi, பெ. (n.)

   கத்தூரி மஞ்சள்; round zedoary (சா.அக.);.

     [இக்கு → இக்குளி → இகுளி → இகுடி → இகடி.]

இகணை

இகணை igaṇai, பெ. (n.)

   ஒரு மரம்; a kind of tree.”இலையணி யிகணையும்” (பெருங். இலாவாண.98);.

ம. இகண.

     [இக்கு → இக்குணி → இகுணி → இகணை.]

இகது

 இகது igadu, பெ. (n.)

   கரும்பு; sugar-cane (சா.அக.);.

     [ஒருகா. இக்கு → இகுது → இகது.]

இகத்தாளம்

 இகத்தாளம் igattāḷam, பெ. (n.)

   ஏளனம். (தெ.ஆ.வ.);; mockery.

     [இகத்தம் – இகத்தானம் – இகத்தாளம் = ஒருவனைப் பிரித்து வைத்துப் பேசுதல், எள்ளுதல்.]

இகந்துபடுதல்

இகந்துபடுதல் igandubaḍudal, தொ.பெ. (vbl.n)

   1. தவறுதல்; erring.

   2. முற்கூறிய விதியைக் கடத்தல்; transgressing.

   3. பிறழுதல்; slip.

     [இக → இகந்து (வி.எ.); + படுதல்.]

இகந்துழி

இகந்துழி iganduḻi, பெ. (n.)

   தொலைவான இடம் (பழ.175);; far-off place.

     [இக → இகந்து (வி.எ.); + உழி.]

இகனி

இகனி1 igaṉi, பெ. (n.)

   வெற்றிலை (மலை.);; betel. (செ.அக.);.

     [இகு → இகுல் → இருனி → இகனி (கொ.வ.); இகுல் = குழை. மெல்லிலை.]

 இகனி2 igaṉi, பெ. (n.)

   வெண்ணெய்; butter. (சா.அக.);.

     [இகளை → இகணை → இகனி.]

இகன்மகள்

இகன்மகள் igaṉmagaḷ, பெ. (n.)

   கொற்றவை; Durga.

     “இகன்மக ளையைகளிறு” (தக்க யாகப்170);;(செஅக);.

     [இகல் – இகன் – மகள். இகல் = மாறுபாடு, பகைமை பகைவரை அழிப்பவள் இகன்மகள்.]

இகன்றவர்

இகன்றவர் igaṉṟavar, பெ. (n.)

   பகைவர்; enemies

     “இகன்றவர்ச் செற்று” (பாரத.வாரணா113);. (செ.அக.);.

     [இகல் = பகைமை, இகல் → இகன்றவர்.]

இகபரம்

இகபரம் igabaram, பெ. (n.)

   இம்மை, மறுமை; this birth and the supposed next.

     “இகபரமு மெண்டிசையும்” (தேவா.48.3);.

   2. இவ்வுலகம் மற்றும் மேலுலகம்; this world and the supposed next, earth and heaven.

     [இகம் + பரம்.]

இகபோகம்

 இகபோகம் igapōgam, பெ. (n.)

   இவ்வுலகவின்பம்; earthly enjoyment, mundane pleasures.

த. போகம் →.Skt. bhôga.

     [இகம் + போகம். இகம் பார்க்க;

புகு – புகவு – புகா (உணவு);. புகவு – புஜ் – போகம் = நுகர்வது. புக்குதல் → முக்குதல் = உண்ணுதல்.]

இகப்பு

 இகப்பு igappu, பெ. (n.)

   பழித்தல்; insult.

     [இக → இகப்பு.]

இகமலர்

 இகமலர் igamalar, பெ. (n.)

   விரிமலர். (பிங்.);; full-blown flower.

     [இகத்தல் = நீங்குதல், விரிதல். இக + மலர் + விரிமலர்.]

இகம்

இகம்1 igam, பெ. (n.)

   இவ்வுலகம்; life in this world.”இகமொடு பரமும்” (கந்தபு.திருவிளை. 105);;

 this world. (செ.அக.);.

   க. இக;   த. இகம்; Skt. iha.

     [இ = அண்மைச்சுட்டு. இல் → இழ் → இகு – இகம் = இவ்வுலக வாழ்வு, இவ்வுலகம், இப்பிறப்பு. இகு = கீழ். இகம் = கீழிருப்பது. மேலுலகம் என்பதின் எதிர்.]

 இகம்2 igam, பெ. (n.)

   1. சந்தனம்; sandal – wood

   2. இண்டங்கொடி; a thorny creeper (சா.அக.);.

இகரக்குறுக்கம்

 இகரக்குறுக்கம் igaragguṟuggam, பெ. (n.)

   குற்றியலிகரம்; the shortened vowel, i. (த.சொ.அக.);.

     [இகரம் + குறுக்கம்.]

இகரம்

 இகரம் igaram, பெ. (n.)

     ‘இ’ என்னும் எழுத்து;

 the letter ‘i’.

ம. இகாரம்.

     [இ + கரம். கரம் = எழுத்துச்சாரியை.]

இகலடு கற்பு

இகலடு கற்பு igalaḍugaṟpu, பெ. (n.)

   போர் வெல்லும் பயிற்சி; special training for warfare.

     “..ஆஅய். எயினன் இகலடு கற்பின் மிஞலியொடு தாக்கி” (அகம். 196);.

     [இகல் + அடு + கற்பு. கற்பு = கல்வி.]

இகலன்

இகலன் igalaṉ, பெ. (n.)

   1. படைவீரன் (பிங்.);; warrior.

   2. நரி; jackal.

     “இகலன்வாய்த் துற்றிய தோற்றம்” (களவழி.28);.

   3. முதுநரி (பிங்.);; old jackal.

   4. பகைவன்; enemy (ஆ.அக.);.

     [இகல் → இகலன்.]

இகலாட்டம்

இகலாட்டம் igalāṭṭam, பெ. (n.)

   1. எதிராடல், வாய்ப்போர்; controversy, disputation, altercation.

     “=எந் நேரமும் இகலாட்டமாயிருக்கிறவன்”. (W.);.

   2. போட்டி; competition, rivalry.

   3. போராட்டம் (ஆ.அக.);; struggle.

   4. இழுபறிப்போர்; tug of war.

     [இகல் + ஆட்டம் – இகலாட்டம். இகல் + ஆடுதல் + இகல் செய்தல். இஃ கலாட்டம் பார்க்க;see ikkalatam.]

இகலாட்டி

இகலாட்டி igalāṭṭi, பெ. (n.)

   மாறுபாடுடையவள்; woman enemy.

     “இகலாட்டி நின்னை எவன் பிழைத்தேன் எல்லாயான்” (கலித்.108);. (சங்.இலக்.சொற்.);.

     [இகல் + ஆட்டி.]

இகலாட்டு

 இகலாட்டு igalāṭṭu, பெ. (n.)

   தடகளப்போட்டி; sports.

     [இகல் + ஆட்டு.]

இகலி

இகலி igali, பெ. (n.)

   பெருமருந்து (மலை.); பார்க்க; Indian birthwort (செ.அக.);.

   2. சில்லம் (சிலேட்டுமம்);; one of the three humours in the human system ie. Phlegm.

     [இகல் → இகலி.]

இகலியார்

இகலியார் igaliyār, பெ. (n.)

   பகைவர்; enemies.

     “இகலியார்புர மெய்தவன்” (தேவா. 75.1);.

     [இகல் → இகலியார்.]

இகலை

 இகலை igalai, பெ. (n.)

   வெள்ளை; while. (சா.அக.);.

     [இளக்கு → இக்கு + நீர்ப்பொருள். நீர்மம், கள். நீராளமான பொருள். ஒரளவுக்கு வெளிதாகத் தோன்றுதலின் வெண்மைப் பொருள் பெற்றிருக்கலாம்.]

இகலோகம்

 இகலோகம் igalōgam, பெ. (n.)

இவ்வுலகம் பார்க்க;see ivvulagam. Skt ihalõka.

     [இவ் → இவ → இக + உலகம் = இகவுலகம் → இகலோகம். வ → க. திரிபு. உலகம் → லோகம் என வடமொழியில் திரிந்தது.]

இகலோன்

 இகலோன் igalōṉ, பெ. (n.)

   பகைவன் (திவா.);; enemy.

ம. இகலோன்.

     [இகல் = பகைமை. இகல் + அன் = இகலன் → இகலான் → இகலோன்.]

இகல்

இகல்1 igalludal,    3 & 5 செ.குன்றாவி. (v.t.)

   மாறுபடுதல்; to disagree, hate, be inimical.

     “இன்ன காலையி னெல்லைமைந்த னிகன்று” (சேதுபு. சேதுவந்த.12);.

   2. போட்டி போடுதல்; to vie. Compete.

     “கோதை கண்ண மாலை யோடிகலித் தோற்றாள்” (சீவக.904);;

   3. ஒத்தல்; to be similar

     “குலிகமொ டிகலிய வங்கை” (நன்.268. மயிலை);.

ம. இகற்றுக.

     [இகு → இக → இகல், நீங்குதலால் தோன்றும் மாறுபாடு, எதிர்ப்பு, பகைமை.]

 இகல்2 igal, பெ. (n.)

   1. பகை (திருமுரு.5.132);; enmity, hatred, hostility.

   2. போர்; battle war.

     “இகன்மிக நலின்று.” (பரிபா.6.28. ம.இகல்);.

   3. வலிமை; puissance, strength, intrepidity.

     “இலைப்பொலிதா ரிகல் வேந்தன்” (பு.வெ.4.14. கொளு);. 4. சிக்கு;

 intricacy, obscurity, involvedness.

     “ஞான பாதப் பொருளி னிகலறுத்து” (சி.போ.பா.மங்கல.1);

   5. அளவு;   இகலிரி கடங்கண்டால் (ஞானா..50.5);; limit, bound.

   6. புலவி; amatorial strifes between husband and wife.

     “இகலினி கந்தாளை” (பரிபா.9.36);.

   ம. இகல்;   க. இக்கு;   தெ. இங்கட;   து. இங்கட. இச;குட. இச.

     [இகு → இக → இகல், இகல் = பகை வலிமையும் வரம்பும் துணைப்பொருள்கள்.]

 இகல்3 igal, பெ. (n.)

   பெருங்காப்பிய உறுப்புகளுளொன்று. (ஆ.அக.);; a part of an epic.

     [இகு → இக → இகல்.]

இகல்வு

இகல்வு igalvu, பெ. (n.)

   1. எதிரிடை; contrariety.

   2. இகலுதல்; opposing (ஆஅக);.

     [இகல் → இகல்வு.]

இகளி

இகளி1 igaḷi, பெ. (n.)

   1. இடி; thunder.

   2. இருள்; darkness.

     [இகு → இகுளி → இகளி. இகுதல் = தாழ்தல், பொத்தென்று வீழ்தல், இடிந்து பொழிதல், மேகம் திரண்டு இடிதலால் கவிழும் இருள்.]

 இகளி2 igaḷi, பெ. (n.)

   வெற்றிலை;:betel leaf (சா.அக.);.

     [இகுல் → இருள் → இகள் → இகளி.]

இகளை

 இகளை igaḷai, பெ. (n.)

   வெண்ணெய் (மூ.அ.);; butter.

     [இக → இகளை. இகத்தல்= பிரிந்து வருதல். கடையும்பொழுது தயிர்த்திரளிலிருந்து இகந்து வருதலால் வெண்ணெய் இகளை எனப்பட்டது.]

இகள்(ளு)-தல்

இகள்(ளு)-தல் igaḷḷudal,    2 செ.கு.வி. (v.i.)

   1. மாறுபடுதல்; to be in disparity or disagreement with one.

   2. எதிராடல்; wrangle.

     [இகல் → இகள்.]

இகழற்பாடு

இகழற்பாடு igaḻṟpāṭu, பெ. (n.)

   இகழப்படுகை (குறள்.192. உரை);; dishonour, disgrace, contemptibility, scorn. (செ.அக.);.

     [இகழ் → இகழல் + பாடு.]

இகழாவிகழ்ச்சி

 இகழாவிகழ்ச்சி igaḻāvigaḻcci, பெ. (n.)

   புகழ்வது போலப் பழித்துக் கூறும் அணி (W.);; irony, a figure of speech in which censure is conveyed by ironical praise. (செ.அக.);.

     [இகழாத → இகழா + இகழ்ச்சி.]

இகழி

இகழி igaḻi, பெ. (n.)

   1. கொன்றை; a flower tree.

   2. கடுக்காய்; Indian gallnut (சா.அக.);.

     [இகழ் → இகழி.]

இகழுநர்

இகழுநர் igaḻunar, பெ. (n.)

   1. பகைவர்; enemies.

     “இகழுந ரிசையொடு மாய” (புறநா.21. 12);;

   2. இகழ்கின்றவர். (ஆ.அக.);; vilifies.

     [இகழ் → இகழுநர் (வினையா.பெ.);.]

இகழ்

இகழ்1 igaḻtal,    4 செ.கு.வி. (v.i.)

   கவனிப்பின்மை; to be careless, negligent.

     “பிரியாரென விகழ்ந்தேன்” (திருக்கோ.340);.

 இகழ்2 igaḻtal,    4 செ.குன்றாவி. (v.t.)

   அவமதித்தல்; sight despise, opp. to புகழ்.

     “இளையர் இனமுறையர் என்றிகழார்” (குறள். 698);.

   2. மறத்தல்; to forget.”செய்யா திகழ்ந்தார்க் கெழுமையு மில்” (குறள்.538);.

ம. இகழுக.

     [இக → இகழ் + தாழ்தல், தாழ்த்தல், எள்ளுதல். இல் → இன் → இழ் → இகு. இளப்பம் என்பதும் நீங்குதல், விலகுதல், விலக்குதல்வினை பொருட்புடை பெயர்ந்து தாழ்வுபடுத்துதல், எள்ளுதல் பொருளாதல் காண்க.]

 இகழ்3 igaḻ, பெ. (n.)

   இகழ்ச்சி; contempt reproach.

     “இகழறு சீற்றத் துப்பின்” (காஞ்சிப்பு.கச்சி.21);.

     [இக → இகழ். இகழ்1-தல் பார்க்க;see igal1.]

இகழ்ச்சி

இகழ்ச்சி igaḻcci, பெ. (n.)

   1. தாழ்வு; undervaluing.

   2. இகழ்வு; detraction.

   3. இழிவு; dishonour.

   4. உவர்ப்பு: insult.

   5. ஒவ்வாமை; aversion.

   6. இகழ்தல்; despise.

   7. நகை; scorn.

   8. நிந்தை; contempt.

   9. தாழ்ச்சி; disparagement.

   10. ஈனம்; baseness.

   11. ஓரணி; a figure of Speech.

   12. பழி; scorn.

   13. குறைவு. deficiency.

   14. மறதி; forgetfulness.

   15. குற்றம்; fault.

   16. விழிப்பின்மை; remissness, negligence.

     “இகழ்ச்சி

யிற் கெட்டாரை” (குறள்.539);.

   17. வெறுப்பு; dislike, aversion.

     “நன்றுதீ திகழ்ச்சி வேட்கை நட்பிகல்” (திருவிளை.உக்கிரபா.5);.

     [இகு → இகழ் → இகழ்ச்சி.]

இகழ்ச்சி விலக்கு

 இகழ்ச்சி விலக்கு igaḻccivilaggu, பெ. (n.)

   ஏதுவை யிகழ்ந்து விலக்கும் அணிவகையுளொன்று; figure of speech (ஆ.அக.);.

     [இகழ்ச்சி + விலக்கு.]

இகழ்ச்சிக்குறிப்பு

 இகழ்ச்சிக்குறிப்பு igaḻccigguṟippu, பெ. (n.)

   இகழ்ச்சியைக் காட்டவருஞ் சொற்கள்; words denoting dishonour or despising.

     [இகழ்ச்சி + குறிப்பு.]

இல. எல. எவன். எற்று. என். என்னே, ஏயே. சீச்சீ. சை. ஏஏ. என்பனவுமாம்.

இகழ்ச்சியணி

இகழ்ச்சியணி igaḻcciyaṇi, பெ. (n.)

   ஒன்றன் குணங் குற்றங்கள் மற்றொன்றுக்கு உண்டாகாதிருப்பதைக் கூறம் அணி. (அணியி.70.);; figure of speech in which the excellence or defect of one thing does not affect another with which it is connected e-g., the grandeur of the ocean does not attach to a cup of sea-water, nor does the fault of the lotus which closes at the sight of the moon attach to the moon.

     [இகழ்ச்சி + அணி.]

இகழ்ச்சியில் புகழ்ச்சி

 இகழ்ச்சியில் புகழ்ச்சி igaḻcciyilpugaḻcci, பெ. (n.)

   அணிவகையுளொன்று. அது இகழ்ச்சியின்றிப் புகழ்தல்; figure of speech (ஆ.அக.);.

     [இகழ்ச்சி + இல் + புகழ்ச்சி. இல் (எ.ம.);.]

இகழ்ச்சியுட் புகழ்ச்சி

 இகழ்ச்சியுட் புகழ்ச்சி igaḻcciyuṭpugaḻcci, பெ. (n.)

   இகழ்ச்சியும் புகழ்ச்சியும் கலந்து கூறும் அணிவகையுளொன்று; figure of speech (ஆ.அக);.

     [இகழ்ச்சி + உள் + புகழ்ச்சி.]

இகழ்ந்துரை

இகழ்ந்துரை igaḻndurai, பெ. (n.)

   இகழ்ச்சிச் சொல் (குறள். 182, உரை);; expression of contempt, slander (செ.அக.);.

     [இகழ் → இகழ்ந்து (வி.எ.); + உரை.]

இகழ்பதம்

இகழ்பதம் igaḻpadam, பெ. (n.)

   நெகிழ்ந்திருக்கும் செவ்வி; delicate condition.

     “அருங்கடிக் காவல் இகழ்பதம் நோக்கி” (அகநா.162);.

     [இகழ் + பதம்.]

இகழ்மலர்

இகழ்மலர் igaḻmalar, பெ. (n.)

   பொலிவிழந்த மலர்; faded flower.

     “இகழ்மலர்க் கண்ணளாத் துறப்பயான்” (கலித்.135);.

     [இகழ் + மலர்.]

இகழ்வார்

இகழ்வார் igaḻvār, பெ. (n.)

   1. அவமதிப்பவர்; scorners, slanderers, vilifies

     “இகழ்வார்ப் பொறுத்த றலை” (குறள். 151);;

     [இகழ் → இகழ்வார் (வினையா.பெ.);.]

இகழ்வு

இகழ்வு igaḻvu, பெ. (n.)

   நிந்தை (திவ்.திருவாய். 3.4.1.);; contempt. Scorn, insult. (செ.அக.);.

     [இகழ் → இகழ்வு.]

இகா

இகா ikā, இடை. (part.)

   முன்னிலையசை (கலித்.105. உரை);; poet, expletive of the 2nd pers. of verb. (செ.அக.);.

     [(இ + கா – இகா. இகரம் ஏவல் கருதியும் வியங்கோள் கருதியும் இசை நிரப்பவும் வரும் முன்னிலையசை உண்கா, செல்கா என்றாற் போல் கெழுதகைப் பொதுச் சொல்லாக வரும் ‘கா’ அசைமொழி, பால் வேறுபாடு கருதாது முன்னிலையசையாக வருவது. இரண்டும் ஒருங்கிணைந்து பெருங்கிழமையுணர்த்தும் கெழுதகைப் பொதுச் சொல் (word a endearment); ஆயிற்று.]

தாழ்த்தப்பட்ட மக்கள் வழக்கில், ‘செல்லி இங்கே வாகா (வா);, நீ போகா கா (போடா டேய்); என ‘கா’ என்னும் முன்னிலையசை பெருக வழங்குகின்றது. வட கொங்கு வேளாளர் பேச்சிலும் இதன் பெரு வழக்கைக் காணலாம். கை என்னும் சிறுமை குறித்த சொல் பெண்மை விளியாகி கன்னடத்தில் ‘கே’ (ge); விளிச்சொல்லானவாறு ‘கா’ ஆண்மை அல்லது இருபால் வினிச்சொல்லாகப் பண்டு தொட்டே வழங்கி வருகின்றது.

இகு

இகு1 igudal, செ.கு.வி. (v.)

   1. கரைந்து விழுதல்; to be eroded.

     “கான்யாற் றிகுகரை” (குறுந்.264);;

   2. தாழ்ந்து விழுதல். to shower, to descend, as torrent.

     “மாரியி னிகுதரு…. கடுங்கணை” (மலைபடு 226);: (செ.அக.);.

   3. இறுதல் (ஆ.அக.);; to and

     [இல் – துளைத்தற் கருத்து வேர்ச்சொல். இல் → இள் → இழ் → இழு → இகு. கரைந்துவிழுதல், இடிதல், ஒடிதல், இறுதல்.]

 இகு2 igudal, து.வி. (Aux.v.)

   துணைவினை; auxiliary verb.

கண்டிகும். சென்றிகும்.

     [இகு1 – இகு2]

 இகு3 iguttal,    18 செ. குன்றாவி, (v.t)

   1. கொல்லுதல் (சூடா.);; to kill, destroy.

   2. வீழ்த்துதல் (திவா.);; to throw down, to fell, as a tree.

   3. தாழ்த்துதல்; to hand down loosely, as hair, lower.

     “கணங்கொ டோகையிற் கதுப்பிகுத் தசைஇ” (மலைபடு:44);.

   4. சொரிதல்; to pour forth, to shed, as tears.

     “இகுத்த கண்ணீர்” (புறநா.143, 13);.

   5. ஒடச்செய்தல் (சூடா);; to put to rout, as an army.

   6. அறைதல்; to beat, as a drum.

     “முரசுகடிப் பிகுப்பவும்” (புறநா.158.1);:

   7. இசைக் கருவிகளை இசைத்தல்; lo play, as on an instrument

     “நும்மருப் பிகுத்து” (மலைபடு.391);:

   8. அழைத்தல் (பிங்.);

 to call invite.

   9. கொடுத்தல் (திவா.);; to give bestow.

   10. விரித்தல்; spread out. to dishevel, as hair.

     “கணங்கொள் பேய்மகள் கதுப்பிகுத் தாட” (சிலப்.26.210);.

   11. மறித்தல் (நாநார்த்த.);:

 to stop, prevent to hinder.

   12. எறிதல் (நாநார்த்த);; to throw.

   13. துன்புறுத்தல் (நாநார்த்த);; to cause pain or affliction.

   14. துடைத்தல் (அக.நி.);; to wipe, to clean (செ.அக.);

   15. புடைத்தல் (ஆஅக.);; to winnow.

     [இல் → இள் → இழ் → இழு → இரு → துளைத்தல். குத்துதல். தாக்குதல், தடுத்தல்.]

 இகு4 iguttal,    21 செ.கு.வி. (v.i.)

.

   1. ஒலித்தல்; to produce a sound, as from a drum

     “மழை யெதிர்படுக முழவுக ணிகுப்ப” (மலைபடு.532);;

   2. தாண்டுதல் (நாநார்த்த);; to leap. Jump.

   3. பரத்தல், பரவுதல்; to spread.

     [உல் → இல்→ இள் → இகு.]

 இகு5 igu, பெ. (n.)

   வீழ்ச்சி; rapid descent

     “நீரிகு வன்ன நிமிர்பரி நெடுந்தேர்” (ஐங்குறு.465);;

     [இழி → இகி → இகு.]

இகுசி

இகுசி igusi, பெ. (n.)

   மூங்கில்; bamboo (சா.அக.);.

     [இகு1 → இகுசு → இகுசி = ஒடியும் தன்மையுடையது.]

இகுசு

 இகுசு igusu, பெ. (n.)

மூங்கில் (மலை);. spiny bamboo (செ.அக.);.

     [இகு → இகுசு.]

இகுடி

இகுடி iguḍi, பெ. (n.)

   காற்றொட்டி (மலை); பார்க்க; thorny caper. (செ.அக.);.

மறுவ ஆதண்டன், ஆதொண்டர் காத்தொட்டி.

     [இகு → இகுள்1 → இகுளி → இகுடி.]

இகுதரல்

 இகுதரல் igudaral, பெ. (n.)

   தாழ்ந்துவிடுதல்; get lowered, falling down.

     [இகு + தரல் = இகுதலாகிய செயற்பாடு தருதல் அல்லது எய்தப்படுதல்.]

இகுத்தல்

இகுத்தல் iguttal, பெ. (n.)

   1. குழைத்தல்; macerating.

   2. கொல்லல்; killing, destroying life.

   3. துடைத்தல்; wiping away.

   4. தாழ்த்தல்; lowering. (சா.அக.);.

இகு1 → இகுத்தல்.]

இகுத்துவி-த்தல்

இகுத்துவி-த்தல் iguttuvittal,    4 செ.கு.வி. (v.i.)

   மடையடைத்தல்; to close, as by sluice.

     “ஏரி கட்டி இகுத்துவித் தோமானோம்” (S.I.I.iii.9);;

     [இகுத்தல் → இகுத்துவிடு → இகுத்துவி = தாழ அடைத்துச் சேமித்தல்.]

இகுந்தகம்

இகுந்தகம் igundagam, பெ. (n.)

   ஐங்கணுக் கள்ளி; a kind of euphorbin genus, with five points (சா.அக);.

     [இகு3 → இகுந்து → இகுந்தகம். இகு = திரட்சி.]

இகுபறல்

இகுபறல் igubaṟal, பெ. (n.)

   அறுதியையுடையநீர்; tear.

     “என் கண்போல் இகுபறல் வாரும் பருவத்தும் வாரார்” (கலித்.33);.

     [இகுபு + அறல் = இகுபறல்.]

இகுப்பம்

இகுப்பம் iguppam, பெ. (n.)

   1. திரட்சி; boulder like the formation of a mountain side.

     “இருங்க லிருப்பத் திறுவரை சேராது” (மலைபடு:367);.

   2. தாழ்வு (பெருங்.இலாவண. 20.34);: low spirit

     [இகு → இருப்பம். தாழ்தலால் திரண்டு நிற்றல்.]

இகுப்பு

 இகுப்பு iguppu, பெ. (n.)

   வாசிப்பு; reading.

     [இகு→ இகுப்பு = உட்பொருள் காணுதல்.]

இகும்

இகும்1 igum,    18 செ.குன்றா.வி. (v.t.)

   செய்யுளில் ஆளப்படும் தன்மைப்பன்மை வினைமுற்று; pl. first person finite verb.

     “கண்டிகும் அல்லமோ கொண்க நின்கேளே”. (ஐங்குறு.121);.

     [இகு → இகும் (தன்.ப.வி.மு.);.]

இகு + தாழ்த்தல், இருத்தல் பொருள்படும் வினையடிச் சொல். கண்டிகும் கேட்டிகும் என்பவை கண்டிருக்கிறோம். கேட்டிருக்கிறோம் எனப் பொருள்படும் பண்டைத் தமிழ் வினைமுற்றுகள் ஒ.நோ. உண்கு → உண்கும்.

 இகும்2 igum,    இடை. (part) முன்னிலையசை; poet expletive of 2nd pers of verbs.

     “மெல்லம் புலம்ப கண்டிகும்” (தொல்.சொல்.276. உரை);, (செ.அக.);

     [இகும் = இக்காலத்திய

     “முடியும்” என்னும் வினைமுற்றுப் போன்று முடித்தோம் எனப் பொருள் காட்டும் பழைய வினைமுற்று. இதுவே நாளடைவில் முன்னிலை அசைமொழியாயிற்று. இகுதல் = தாழ்ந்துவிழுதல், எல்லாம் முடிதல், செயற்பாட்டு முடிவு காணுதல் கண்டு + இகும் = கண்டிகும் கண்டுமுடித்தாயிற்று.]

இகுரி

இகுரி iguri, பெ. (n.)

   1. மரக்கலம்; boat ship.

   2. வழக்கு; custom, usage. (செ.அக);.

     [ஒருகா.இகுளி → இகுரி. இகுளி உட்குடைவுள்ள மரக்கலம்.]

இகுர்-தல்

இகுர்-தல் igurtal,    21 செ.கு.வி. (v.i.)

   1. முளைத்தல்; to sprout, germinate.

   2. மொட்டு அரும்புதல்; to bud.

க., து. இகுர்.

இகுலாசு

 இகுலாசு igulācu, பெ. (n.)

   உண்மை அன்பு; sincerity, true, love, piety.

நாம் இகுலாசுடன் செய்யும் வணக்கங்களையே இறைவன் ஒத்துக்கொள்வான்(முகமதி);.

     [Ar. ikhlas → த. இகுலாசு.]

இகுல்

இகுல் igul, பெ. (n.)

   1 முளை; sprout

   2. அரும்பு; bud.

   3. குழை, மெல்லிலை, தளிர்; tender shoot

     [உகுல் → இகுல்.]

இகுளி

இகுளி iguḷi, பெ. (n.)

   1. இடி (பிங்.);; thunderbolt.

   2. கொன்றை (மலை.);; cassia (செ.அக.);.

   3. உட்குழிவுள்ள மரக்கலம்; portoon.

     [இகு → இகுள் → இகுளி.]

இகுளை

இகுளை iguḷai, பெ. (n.)

   1. தோழி (தொல்.சொல்.400. உரை);; woman’s confidante

   2. சுற்றம் (பிங்.);; kindred;

 relative.

   3. நட்பு (சூடா.);; friendship (செ.அக.);.

   4. கார்த்திகை நாள். (ஆ.அக.);.

     [இகு → இகுள் → இகுளை. இகுதல் – தாழ்தல், குள்ளமாதல், சிறிதாதல் இருளை – தன்னினும் இளைய தோழி.]

இகுளைத்தோழி

இகுளைத்தோழி iguḷaittōḻi, பெ. (n.)

   இகுளையாகிய தோழி; female attendent younger by age.

     “இகுளைத்தோழியிஃது என்னெனப் படுமோ” (நற்.332);.

     [இகு → இகுள் → இகுலன + தோழி. இகுளை → தாழ்வு, சிறுமை, தன்னினும் அகவையிற் குறைந்த தோழி.]

தென்னார்க்காடு மாவட்டத்தில் இச்சொல் இவளே எனத் திரிந்து வழங்குகிறது. என்ன இவளே, வா. இவளே, போ இவளே, சொல்லு இவளே என்பன போன்ற சொல்லாட்சிகளைக் கல்லா மக்களின் அன்றாட வழக்கில் இன்றும் காணலாம்.

இகுலை → இகுளே → இவுளே → இவளே. (கொ.வ.);.

இகுள்

இகுள்1 iguḷ, பெ. (n.)

   தோழி; women’s confidante”எனக்கிகுளா யென்னைப் பெற்றவளாய்” (திவ்.திருவாய்.6.3.9); (செ.அக.);.

     [இகு → இகுள் = தாழ்தல், குள்ளமாதல், வடிவத்தில் சிறுத்திருத்தல், இளையவன், இளையவள்.]

இகுளை பார்க்க;see igulai.

 இகுள்2 iguḷ, பெ. (n.)

   1. இடி; thunderbolt

     “இகு டனித்தனி கான்றன” (இரகு.ஆற்று.4);. (செ.அக.);.

   2. ஆரல் மீன்; greenish or sand-eel – Rhynchobdetta aculeata (சா.அக.);

     [இரு1 → இருள். இகுளி பார்க்க;see iguli.]

இகுவான்

 இகுவான் iguvāṉ, பெ. (n.)

   தமையன்; elder brother. (ஆ.அக.);.

     [ஒருகா. மிகுவான் → இகுவான்.]

இகுவை

 இகுவை iguvai, பெ. (n.)

   வழி (உரி.நி);; path (செ.அக.);.

     [இயவு வழி. இயவை → இயுவை → இகுவை.]

இகேசுவரம்

 இகேசுவரம் iācuvaram, பெ. (n.)

   சிவத்தலங்களாயி ரத்தெட்டனுளொன்று; one of the Siwa shrines.

     [உகே → இகே + ஈசுவரம்.]

இகை-தல்

இகை-தல் igaidal,    18 செ.குன்றாவி. (v.t.)

   1. கொடு; to give.

   2. நட; to proceed (ஆ.அக.);.

     [ஈ → ஈகு → ஈகை → இகை. ஈகை பார்க்க;

ஈன் → ஈ என வெளிப்படற் கருத்திலிருந்து வெளியிற் செல்லும் நடத்தற் பொருளும் பிறத்தல் காண்க.]

இக்கட்டு

இக்கட்டு1 ikkaṭṭu, பெ. (n.)

   1. இடுக்கண்; trouble, difficulty. இக் கட்டாம் வருவதெல்லாம் (தண்டலை.88);;

   2. நெருக்கடி; strained circumstances.

   3. இட நெருக்கம்; narrowness.

   4. தடை; hindrance, obstacle.

   5. ஏழ்மை; poverty.

   6. துன்பம்; affliction.

ம., க., தெ., து. இக்கட்டு.

     [இடுக்கண் – இடுக்கட்டு – இக்கட்டு.]

 இக்கட்டு2 ikkaṭṭu, பெ. (n.)

   உருண்டை, வெல்லக் கட்டி; jaggery, the coarse juice of sugar cane boiled and then allowed to cool. When it is hardened it is made into balls with the hand.

     [இக்கு + கரும்பு. இக்கு + கட்டி = இக்குக்கட்டி → இக்கட்டி → இக்கட்டு.]

இக்கணம்

இக்கணம் ikkaṇam, பெ. (n.)

   இப்போது, இந்த நிமயம். (பாரத. மணிமான். 74);; this moment, now.

ம. இக்கணம் த. கணம் → Skt. ksara.

     [இ + கணம். இ = அண்மைச்சுட்டு, கணம் = கணிக்கப்படும் பொழுது.]

இக்கன்

 இக்கன் ikkaṉ, பெ. (n.)

   காமன் (மன்மதன்);; Cupid. (ஆஅக.);.

     [இக்கு = கரும்பு. இக்கன் = கரும்பு விற்கொண்ட காமன். இக்கு → இக்கன்.]

இக்கரி

 இக்கரி ikkari, பெ. (n.)

   புகைக்கரி, ஒட்டடை; soot grime (சேரநா.);.

ம. இக்கரி.

     [இல்கரி – இக்கரி.]

இல்கரி பார்க்க;see ilkari.

இக்கரை

இக்கரை1 ikkarai, பெ. (n.)

   கடல் அல்லது ஆற்றின் ஒரு கரை; this side of the shore or bank (of a river, lagoon, etc.);

     “இக்கரையேறி” (திவ்.பெரியாழ். 5.3.7);.

     “அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை” (பழ.);.

   ம. இக்கர;க. இக்கரெ.

     [இ + கரை.]

 இக்கரை2 ikkarai, பெ. (n.)

   இந்துப்பு (ஆஅக.);; rock-salt, sodium chloride.

     [இளக்கு → இளக்கரை → இக்கரை. இளக்க இயல்பு அல்லது கரையும் இயல்புநோக்கி இனக்கரை என்னும் முந்துவடிவம் இக்கரை எனத் திரிந்திருக்கலாம்.]

இக்கவம்

 இக்கவம் ikkavam, பெ. (n.)

கரும்பு பார்க்க (மூ.அ.);;see karumbu.

     [இக்கு → இக்கவம்.]

இக்கா

இக்கா ikkā, பெ. (n.)

   1. கொட்டாவி; yawn.

   2. விக்கல்; hiccup.

     [எக்கு → இக்கு → இக்கா. இக்குதல் = விக்குதல் எனவும் திரியும்.]

இக்காசில்லம்

 இக்காசில்லம் ikkācillam, பெ. (n.)

   ஒருவகைக் கோழை நோய்; a kind of disease. [இக்கா + சில்லம்.]

இக்காபித்தம்

 இக்காபித்தம் ikkāpittam, பெ. (n.)

   பித்தநோய் வகையுளொன்று; a kind of disease. (ஆ.அக.);.

     [எக்கு → இக்கு → இக்கா + பித்தம்.]

இக்காமத்து

இக்காமத்து ikkāmattu, பெ. (n.)

   1. தங்கியிருக்கை; staying, dwelling.

ஓரூரில் இக்காமத்து செய்பவன் அவசியம் நோன்பு வைக்க வேண்டும் (முகமதி.);.

   2. நின்று கொண்டிருக்கை; standing.

தொழுகைக்கு இக்காமத்தாய்விட்டது (முகமதி);

த.வ. தங்கல், இருப்பு.

     [Ar. iqamat → த. இக்காமத்து.]

இக்காலம்

இக்காலம் ikkālam, பெ. (n.)

   1. இந்தக் காலம்; the present time.

   2. இப்பொழுது, இப்பொழுதைய நேரத்தில்; at this time, in this period.

ம. இக்காலம்.

     [இ + காலம் + இக்காலம்.]

இக்கிடைஞ்சல்

இக்கிடைஞ்சல் ikkiḍaiñjal, பெ. (n.)

   1. இடையூறு; obstacle, trouble.

   2. இடுக்கண்; affliction.

இடுக்கு → இக்கு + இடைஞ்சல்.]

இக்கியந்திரம்

 இக்கியந்திரம் ikkiyandiram, பெ. (n.)

   கரும்பாட்டும் ஆலை (ஆ.அக.);; crushing mill for sugar cane.

     [இக்கு + இயந்திரம்.]

இக்கிரி

 இக்கிரி ikkiri, பெ. (n.)

   முட்செடி வகை (வின்.);; a thorny shrub.

     [ஒருகா. இனுக்கு → இக்கு + இலி = இக்கிலி → இக்கிரி. இனுக்கு அல்லது பற்றி ஒடிக்க இயலாத அளவுக்கு முள்ளடர்ந்த செடி.]

இக்கு

இக்கு1 ikku,    இடை. (part.) தவறாகக்கொள்ளப்பட்ட ஒரு சாரியை. (தொல். எழுத்.126); false euphonic augment, affixed usu to names of months to denote the loc. as in ஆடிக்குக் கொண்டான் hence a misnomer.

     [‘அக்கு’ சாரியை பார்க்க அதன் விளக்கமே இதற்கும் ஒக்கும். இகரவீற்றுச் சொற்களுடன் குகர உருபு சேர்தலான் இடையில் பெற்ற ககர எழுத்துப்பேற்றுடன் இது ஒரு தனிச்சாரியை போல் பொய்த் தோற்றம் அளிக்கிறது.]

 இக்கு2 ikku, பெ. (n.)

   1. இடை; waist middle. இக்கு முடிச்சு (பே.வ.);.

   2. சீலையை இறுக்கிக் கட்டும் முடிச்சு; tucking in of a woman’s cloth

     “இக்கு வைக்கு மாடை வீழ”. (திருப்பு:375);.

   3. ஏதம் (சம்.அக.);; danger, trouble.

   4. தடை; obstruction (ஆ.அக.);.

ம., க., தெ. இக்கு.

     [இடுக்கு – இக்கு.]

 இக்கு3 ikku, பெ. (n.)

   முள்; thorn.

     [இல் – (குத்துதல்); + கு – இக்கு.]

 இக்கு4 ikku, பெ. (n.)

   1. கரும்பு; sugar-cane.”இக்கொடு தென்னங்காயும்” (கந்தபு.காவிரி.25);.

   2. மூங்கில்; bamboo.

   3. கள் (திவா.);; fermented liquor, toddy.

   4. கூட்டில் வைத்த தேன். (மாறன். 111, உதா. 212);; honey in the hive.

   5. வெண்கரும்பு; white Sugarcane.

இந். ஈக் (கரும்பு);.

     [இன் → இளக்கு → இக்கு. எளிதில் ஒடிக்கும் வகையில் இனக்கமானது. நீராளமானது.]

இக்குகந்தை

இக்குகந்தை iggugandai, பெ. (n.)

   1. நீர்முள்ளி; water thorn.

   2. நெருஞ்சி; cow thorn.

   3. நாணல்; wild sugar-cane. 4. (சா.அக.);.

     [இள் → இளக்கு → இக்கு + கந்தை;

கரந்தை – கந்தை. கரந்தை – தூவிபோல் பரந்த வேர்முனைகளைக் கொண்ட பூண்டு வகை.]

இக்குக்கொட்டு-தல்

இக்குக்கொட்டு-தல் ikkukkoṭṭudal,    15 செ.கு.வி. (v.i.)

   ஒலிக்குறிப்பினா லொன்றை அறிவித்தல். (தெ.ஆவ.);; beckon or draw attention by a cluck.

     [இக். இக் என்பன ஒலிக்குறிப்பு இடைச்சொற்கள். இக்கு + கொட்டுதல் = இக்குக்கொட்டுதல். கொட்டுதல் + ஒலித்தல். ஒ.நோ. லொச்சுக்கொட்டுதல்.]

இக்குமுடிச்சு

 இக்குமுடிச்சு ikkumuḍiccu, பெ. (n.)

   சீலையை இறுக்கிக் கட்டும் முடிச்சு (இ.வ.);; knot used for securely tucking in a cloth at the waist, especially in garments worn by women.

     [இடுக்கு + முடிக்க = இடுக்குமுடிச்சு → இக்குமுடிச்சு;

இடுக்குதல் = செறிவாகச் செருகுதல்.]

இக்குரார்

 இக்குரார் ikkurār, பெ. (n.)

   ஒத்துக் கொள்ளுகை; confession, admission.

நாம் செய்த குற்றங்களை இக்குரார் செய்து கொள்ளவேண்டும் (முகமதி.);.

த.வ. ஒப்பேற்பு.

     [Ar. Iqrar → த. இக்குரார்.]

இக்குறி

இக்குறி ikkuṟi, பெ. (n.)

   1. இச்செலவு; this journey.

   2. இம்முறை; this time. இக்குறிகேட்போன்.

   3. இவ்வடையாளம்; this mark or sign (ஆ.அக.);.

ம. இக்குரி.

     [இ + குறி.]

இக்குவாகு

இக்குவாகு1 ikkuvāku, பெ. (n.)

   அயோத்தியை ஆண்ட ஞாயிற்றுக்குல முதலரசன். (கலிங்.இராச. 11);; first king of the solar dynasty who ruled in Ayõdhyā.

இக்குவாகு → Skt. iksváku.

     [இறுக்கு + வாகு = இக்குவாகு. இறுக்கு = வலிமை. வாகு = தோள் பக்கத்திலுள்ளது பாக்கம் எனப்பட்டது போல வாக்கில் (மருங்கில்); அமைந்த தோள் வாகு எனப்பட்டது. இது வடமொழியில் பாகு எனத் திரிந்தது.]

 இக்குவாகு2 ikkuvāku, பெ. (n.)

   1. குருந்துருக்கம் பிசின். (நாநார்த்த);; konkany resin.

   2. பேய்ச்சுரை; wild melon, Cucam’s trigonus.

     [இளக்கு → இக்கு + ஆகு + இக்குவாகு.]

இக்குவிகாரம்

 இக்குவிகாரம் ikkuvikāram, பெ. (n.)

இக்குவிளை பார்க்க;see ikkuvilai.

இக்குவில்லி

 இக்குவில்லி ikkuvilli, பெ. (n.)

இக்குவில்லோன் பார்க்க;see ikkuvillón.

     [இக்கு + வில்லி. இக்கு = கரும்பு.]

இக்குவில்லோன்

 இக்குவில்லோன் ikkuvillōṉ, பெ. (n.)

   காமன்; cupid (ஆஅக.);.

     [இக்கு + வில்லோன் = கரும்பு வில்லைக்கொண்ட காமன்.]

இக்குவிளை

 இக்குவிளை ikkuviḷai, பெ. (n.)

   சருக்கரை; sugar.

     [இக்கு + விளை.]

இக்கூறு

 இக்கூறு ikāṟu, பெ. (n.)

இக்குறி பார்க்க;see ikkuri.

     [இ + கூறு.]

இக்கெனல்

இக்கெனல் ikkeṉal, பெ. (n.)

   விரைவுக்குறிப்பு; onom. expr. Of quickness.”இக்கென வினைய தீயோ னிறப்ப” (கந்தபு.வரவுகேள்வி.2);.

     [இக், இச், இம் என்பன ஒலிக்குறிப்புச் சொற்கள். ஒலிக்குறிப்பு இங்கு விரைவு குறித்தது. ஒ.நோ. ‘இம்மென்னும் முன்னே (காளமே.);.]

இக்கோ

 இக்கோ ikā,    இடை. (int.) வியப்பு, இரக்கம், துயரம் முதலியவற்றை உணர்த்தும் குறிப்பு (ஆஅக.); exclamation of wonder, pity, grief, etc.

     [அக்கோ → இக்கோ. அக்கோ = வியப்பிடைச்சொல்.]

இக்தியார்

 இக்தியார் iktiyār, பெ. (n.)

   விருப்பம்; will, option, discretion.

மாந்தன் உயிருட இனிருப்பதும் இறப்பதும் அவனுடைய இக்தியாரி வில்லை (முகமதி);

     [Ar. Ikhiiar → த. இக்தியார்.]

இங்கட்கு

இங்கட்கு iṅkaṭku, பெ. (n.)

   எங்களுக்கு; to us.

     “சிந்தையினாலிய விங்கட்கிது நன்றென” (Sll, xiv, p.44.);

     [எங்கள்+கு]

இங்கண்

இங்கண் iṅgaṇ, பி.எ. (adv.)

   இவ்விடம்; this place.

     “இங்கண் மாஞாலத்து” (திவ்.திருவாய்.9.2.8);;

     [இ + கண். கண் = இடம். இடப்பரப்பு.]

இங்கம்

இங்கம்1 iṅgam, பெ. (n.)

   1. குறிப்பு (நாநார்த்த);; implied idea.

   2. புலக்குறும்பு (நாநார்த்த);; mannerism.

   3. இயங்கு பொருள் (நாநார்த்த);: movable things.

   4. அறிவு (சேதுபு.); knowledge, intelligence (செ.அக.);.

   5. நோக்கம்; aim, goal.

     [இல் → இங்கு → இங்கம் = உட்புதைந்திருப்பது.]

 இங்கம்2 iṅgam, பெ. (n.)

   ஊர்ந்து திரியும் உயிரி; a species of reptiles.

     [இல் (துளைத்தற் கருத்து வேர்); → இன் → இய் → இயவு = செலவு, நடப்பு. இய் – இய்ங்கம் – இங்கம்.]

 இங்கம்3 iṅgam, பெ. (n.)

   பெருங்காயம்; asafetida.

     [இஞ்சு → இங்கு → இங்கம்.]

இங்கரி

 இங்கரி iṅgari, பெ. (n.)

   மான்மணத்தி (கத்தூரி); (ஆ.அக.);; musk.

     [இங்குதல் = பதிதல். இங்கு → இங்குனி → இங்குரி → இங்கரி.]

இங்கா

இங்கா iṅgā, பெ. (n.)

   பால்; milk, in child language

ம., க., தெ. இங்கா.

     [இங்கு – இங்கா (மு.தா.15);, இங்கு – குழந்தைகளின் ஒலிக் குறிப்புச்சொல் ஒலிக்குறிப்பே (குழந்தை அழலே); பாலைக் குறிக்கும் சொல்லாயிற்று. இஃதோர் குழவி மொழி.]

இங்கார்

 இங்கார் iṅgār, பெ. (n.)

   தடை, மறுப்புத் தெரிவிக்கை (முகமதி.);; objection, contradiction.

     [Ar. inkär → த. இங்கார்.]

இங்காலம்

இங்காலம் iṅgālam, பெ. (n.)

   கரி (விவ. ரசா. 10);; carbon (செ.அக.);.

தெ. இங்காலமு.

     [இங்குதல் – உட்கூறுதல் – உள்ளுறிஞ்சப்படுதல் – உட்சாரம் வெந்து கரியாதல்.]

இங்காலாமிலம்

இங்காலாமிலம் iṅgālāmilam, பெ. (n.)

   கரிவளி(விவ. ரசா. 6);; carbonic acid (செ.அக.);.

     [இங்காலம் + அமிலம்.]

இங்கிக்கடமான்

 இங்கிக்கடமான் iṅgikkaḍamāṉ, பெ. (n.)

எட்டு மெல்லிய கைகளையுடைய வோர் கடல்மீன். இது உடம்பிலிருக்குமோர் கருப்பு மையை வெளியிற்

     [P]

   கக்கித் தண்ணீரைக் கலக்கி அதன்மறைவில் தப்பியோடும் ஆற்றல் வாய்ந்தது; two gilled cephalopodus malluse with eight arms covered with suckers having the body enclosed in a sac, from which it secrets a black ink like fluid (sepial so as to darken the water and Conceal itself – cuttle fish.

     [இங்கு → இங்கி + இங்கிக் கடமான்.

இங்குள் = உட்கவறுதல், ஒளிதல்.

இங்கிக்கடமான் = ஒளிந்தோடும் மான் போன்ற மீன்.]

இங்கிசை

இங்கிசை iṅgisai, பெ. (n.)

   1. கொலை; murder.

   2. துன்புறுத்தல்; teasing, troubling (ஆ.அக.);.

     [இங்குதல் → இங்குவித்தல் → இங்கித்தல் → இங்கித்தே → இங்கிச்சை → இங்கிசை. இச்சொல்லே வடமொழியில் இம்சை எனத் திரிந்தது என்க. இங்குதல் பார்க்க.]

இங்கிட்டு

 இங்கிட்டு iṅgiṭṭu, பெ. (n.)

   இங்கு (சம்.அக.);; here (செ.அக.);.

ம. இங்ஙூடு.

     [ஈங்கன் + இடை – ஈங்கணிடை → ஈங்கணிட்டு → இங்கணிட்டு – இங்கிட்டு.]

இங்கித மாலை

 இங்கித மாலை iṅgidamālai, பெ. (n.)

   இராமலிங்க அடிகளார் அருளிச் செய்த திருவருட்பாவினுள் ஒரு பகுதி (ஆ.அக);; minor literary work by Ramalinga adigalar.

     [இங்கிதம் + மாலை.]

இங்கிதகவி

இங்கிதகவி iṅgidagavi, பெ. (n.)

   1. பாட்டுடைத் தலைவன் கருத்தை விளக்கும் பாடல் (வின்);; poem in which the poet brings out the inner thoughts of his patron.

   2. இனிமை தரும் பாடல்கள் பாடுவோன் (வின்.);; poet who expresses his thoughts in a very felicitous diction (செ.அக.);

     [இங்கிதம் + கவி = இங்கிதகவி. S. Kavi→த. கவி.]

இங்கிதக்களிப்பு

இங்கிதக்களிப்பு iṅgidakkaḷippu, பெ. (n.)

   காமக் குறிப்போடு கூடிய களிப்பு. (சீவக.145);; pleasure of indulging in amorous thoughts (செ,அக.);.

     [இங்கிதம் + களிப்பு. இங்கிதம் = புணர்ச்சி. இங்கிதம்2 பார்க்க.]

இங்கிதக்காரன்

இங்கிதக்காரன் iṅgidakkāraṉ, பெ. (n.)

   1. பிறன் குறிப்பறிந்து அதற்கிசைய நடப்பவன்; one who understands another’s ways and so accommodates himself to his views and moods (செ.அக.);.

   2. இன்சொற் சொல்வேன் (ஆ.அக.);; one who uses kind words.

     [இங்கிதம் = விருப்பம், அன்பு. இங்கிதம் + காரன் = இங்கிதக்காரன்.]

இங்கிதம்

இங்கிதம்1 iṅgidam, பெ. (n.)

   1. கருத்து (திவா.);: purpose, object.

   2. எண்ணம்; thought (ஆ.அக.);.

   3. குறிப்பு (சீவக.765);; hint sign, indication of seeing by gesture.

     “இங்கித நிலைமைநோக்கி”‘

   4. அடையாளம் (ஆ.அக.);: mark.

த. இங்கிதம் → Skt. ingita க., தெ. இங்குவா.

     [இல் துளைத்தற் கருத்துவேர். இல் → இல்கு → இக்கு → இங்கு –இங்குதல் = அழுத்துதல், மனத்தில் பதிதல் மனத்தில் பதிந்த கருத்து, கருத்தினால் உருவான எண்ணம், எண்ணத்தின் வெளிப்பாடான குறிப்பு. குறிப்பினைக் குறித்த அடையாளம்.]

 இங்கிதம்2 iṅgidam, பெ. (n.)

   1. விருப்பம்; desire.

   2. விரும்பத்தக்க இயல்புகள், நாகரிக நற்பண்புகள்:

 agreeable conduct cultural finesse.

   3. இனிமை (வின்.);:

  sweetness, agreeableress

   4. சூழலுக்கேற்பப் பழகு முறை (சமயோசித நடை);; harmonizing with the situation (செ.அக.);.

      ‘அவன் இங்கிதம் தெரிந்தவன்’ (உ.வ.);.

     [இங்குதல் = மனத்தில் அழுந்துதல், மனத்தில் பதிந்த நல்லியல்புகள். நயந்து மனக்கொள்ளத்தக்க பண்புகள்.]

 இங்கிதம்3 iṅgidam, பெ. (n.)

   1. புணர்ச்சி: sexual intercourse.

   2. போகை; going (செ.அக.);.

     [இங்குதல் = அழுந்துதல். அழுத்தத்தால் இடம்பெயர்தல்,

போதல், தெலுங்கு மொழியில் புணர்தல் பொருளில், இங் – தெங்கு எனத் திரிந்து வினையாய் வழங்குதல் காண்க.]

இங்கித்தை

இங்கித்தை iṅgittai, பெ. (n.)

   இவ்விடத்தில்; in this place.”இங்கித்தை வாழ்வும்” (திருமஞ்:2117);: (செ.அக.);.

     [ஈங்கண் + இடத்து – ஈங்கணிடத்து → இங்கணிடத்து → இங்கித்து –இங்கித்தை.]

இங்கிரி

இங்கிரி iṅgiri, பெ. (n.)

   1. மான்மணத்தி (கத்தூரி (வின்.);; musk.

   2. செடிவகை (L);; monkey-flower a genus of plants, mimulus (செ.அக.);.

மறுவ. இங்கரி.

     [இங்குதல் – பதிதல். இங்குனி – இங்குரி – இங்கிரி.]

இங்கிற்றி

இங்கிற்றி iṅgiṟṟi, பெ. (n.)

இங்குற்றி பார்க்க;see ingurri.

     “எல்லாந் துறந்துவிட்ட திங்கிற்றி” (பஞ்ச.தி முக.580);. (செ.அக.);.

     [இங்குற்றி → இங்கிற்றி.]

இங்கிலை

 இங்கிலை iṅgilai, பெ. (n.)

   பெருங்காய மரத்திகை; leaf of the asafetida tree.

     [இங்கு + இலை.]

இங்கு

இங்கு1 iṅgu, வி.எ. (adv.)

   இவ்விடம் (திவ்.திருவாய 8.3.1);; hither, here, in this place (செ.அக.);.

   ம. இங்வு: க., பட. இல்லி, ஈசெ: தெ. இக்கட. இசடு. இசொடு இச்சட இச்சடு. இட, ஈகட, ஈட. இன்து;   கோத. ஈக்;   துட ஈங்க்;   குட. இல்லி;   து. இன்சி;   கொலா. இன்னில்;   ந இன்னில்;   பர். இனி;   கு. கும்ப;   கோண். இக்கா;   குர். இச இதா;   மால். இனெ;பிரா. தாங்க்.

     [இ – அண்மைச் சுட்டு. இ + கண் = இக்கண் – இங்கண் – இங்கு.]

 இங்கு2 iṅgu,    5 செ.கு.வி. (v.i.)

   1. அழுந்துதல்; lo plant, go deep, sink.

     “வேனிறத்திங்க” (களவழி.41);.

   2. தங்குதல்; to abide, stay.

     “இங்கு சுவை யின்னமிர் மேந்த” (சீவக.2025);

   3. குத்துதல்; to stab.

   4. துன்புறுத்தல்; to tease.

   5 எரிதல்; to burn.

   6. கரிதாதல்; to become black (செ.அக.);.

க. இங்கு.

     [இல் – துளைத்தற் கருத்து வேர்ச்சொல். இல் + கு – இஃது – இக்கு – இங்கு + அழுந்துதல், தங்குதல், இஃகு + அழுந்த பற்றுதல், பற்றியிழுத்தல். ஒ.நோ;

இஃகலாட்டம் – (இழுபறி); இஃகலாட்டம் – எசலாட்டம் எனவும் திரியும்.]

 இங்கு3 iṅgu, பெ. (n.)

   பெருங்காயம்; asafetida.

     “தகம்புறை யிங்காங் ககம்பறத் துடைத்து” (ஞானா.4 14); (செ.அக.);.

   க., தெ. இங்குவ; Skt. hingu.

     [இங்குதல் – சுவறுதல், கண்டுதல். நீர்ப்புத்தன்மை இழந்து கட்டியாதல்.]

இங்குசக்கண்டன்

இங்குசக்கண்டன் iṅgusakkaṇṭaṉ, பெ. (n.)

   நீர்முள்ளி (வின்.);; white long-flowered nail-dye;

நெருஞ்சி (மூ.அ.);: small prostrate herb. (செ.அக.

   3. பெருங்கருப்பு (ஆ.அக.);; a kind of thick and tall Sugarcane.

     [ஒருகா. இங்கு – இங்குவ – இங்குய – இங்குச + கண்டன். இங்குதல் = நெருங்குதல் நெருங்கி அடர்ந்து வளரும் நிலைத்திணை வகை.]

இங்குசி

 இங்குசி iṅgusi, பெ. (n.)

இங்குசக்கண்டன் பார்க்க;see ingusakkandan (சா.அக.);.

இங்குணம்

 இங்குணம் iṅguṇam, பெ. (n.)

   பூதிமரம்;   இது காரீயத்தைச் செந்தூரம் பண்ண உதவும்; tree capable of reducing lead into a red oxide. (சா.அக.);.

     [இங்கு – இங்குணம்.]

இங்குத்தி

 இங்குத்தி iṅgutti, பெ. (n.)

இங்குற்றி பார்க்க;see ingurri. (செ.அக.);.

     [ஒருகா. இங்கு + (உறு + இ); – உற்றி – இங்குற்றி – இங்குத்தி. இங்கு எழுந்தருளியிருக்கும் தாங்கள் என்னும் மதிப்புரவுச் சொல். அவ்விடம், இவ்விடம் என்பனவும் இப்பொருட்டே.]

இங்குத்தை

இங்குத்தை iṅguttai, பெ. (n.)

   இவ்விடம்; here.

     “இங்குத்தை நின்றுந் துரப்பன்” (திவ். நாச். 5. 10); (செ.அக.);.

     [இங்கு – இங்குத்து – இங்குத்தை. இங்குத்து. இங்கிட்டு என்பன கொச்சை வழக்கு.]

இங்குபத்திரி

 இங்குபத்திரி iṅgubattiri, பெ. (n.)

இங்கிலை பார்க்க;see ingilai (சா.அக.);.

இங்குமங்கும்

 இங்குமங்கும் iṅgumaṅgum, வி.எ (adv.)

   அங்கிங்கு, அனைத்திடத்திலும்; here and there, every where

     [இங்கும் + அங்கும்.]

இங்குயில்

 இங்குயில் iṅguyil, பெ. (n.)

பெருங்காயம் (சா.அக.);: asafetida.

     [இங்கு – இங்குயில்..]

இங்குற்றி

இங்குற்றி iṅguṟṟi, பெ. (n.)

   திருமடத்தம்பிரான்மார் போலும் உயர்ந்தோரை நோக்கி வழங்கும் முன்னிலை உயர்வுச்சொல்; term of highest respect used In addressing religious dignitaries like heads of mutts 1 meaning their worthiness or their holiness.

அங்குற்றி பார்க்க;see angurri.

     [ஈங்கு + உற்றீர் = இங்குற்றீர் – இங்குற்றி. இங்கு எழுந்தருளியிருக்கும் தாங்கள் என உயர்வுப்பன்மைப் பொருள் தந்தது முன்னிலையாரை முன்னிலைப்படுத்திப் பேகவது மதிப்புக் குறைவு என்று கருதி இடஞ்கட்டிப் பேசுவது பழைய மரபு. ஆங்கிலத்தில் His Excellency என்பதை ஒப்பிடுக.]

இங்குலிகம்

இங்குலிகம் iṅguligam, பெ. (n.)

   சாதிலிங்கம்; vermilion red mercuric sulphide.

     “அகழு மிங்குலிக மஞ்சன வரைச் சொரிவன” (சீவக. 1898);. (செ.அக.);.

   2. சிவப்பு (நாநார்த்த.);; redness. (செ.அக.);.

   தெ.இங்குலிகம்; Skt. hingula.

     [இல் → இங்கு → இங்குள் – இங்குளிகம் → இங்குலிகம்.]

இங்குளி

இங்குளி iṅguḷi, பெ. (n.)

   பெருங்காயம்; asatoetida.

     “இங்குளி வாங்குங் கலம்போல” (சி.பொ. 10.2.3);. (செ.அக.);.

க., தெ. இங்குவ.

     [இங்கு → இங்குள் → இங்குளி.]

இங்கே

இங்கே iṅā, வி.எ (adv.)

   1. இங்கு (திவ். திருவாய். 8.10.3.);; here (செ.அக.);.

   2. இவ்விடத்தில்; on this side of the place.

ம. இங்கே.

     [இங்கண் → இங்கு + ஏ.]

இங்கை

இங்கை1 iṅgai, பெ. (n.)

இண்டங்கொடி (சா.அக.);’ plant.

     [இண்டு – இஞ்க – இங்கு – இங்கை.]

 இங்கை2 iṅgai, வி.எ. (adv.)

   இங்கு, இவ்வாறு; here, thus.

     [ஈங்கு – இங்கு – இங்கை. (மு.தா. 324);.]

இங்ஙனம்

இங்ஙனம் iṅṅaṉam, வி.எ (adv.)

   1. இங்கு; here in this place.

     “இங்ஙனம் வருதலென்னா” (தணிகைப்பு. வீராட். 102);.

   2. இவ்வாறு; thus, in this manner.

     “இன்னதுன் கருத்தே லிங்ஙனமாக” (தணிகைப்பு. சீபரி. 141);.

ம. இங்ஙனெ, இங்ஙினெ.

     [ஈங்கண் – இங்ஙன் – இங்ஙனம் (மு.தா. 324);.]

இங்ஙன்

இங்ஙன் iṅṅaṉ, வி.எ. (adv.)

   இவ்வாறு; thus.

     “இங்ஙனி யற்றிய மகத்தின்” (கந்தபு. யாகசங். 127);.

     [ஈங்கன் – இங்ஙன்.]

இசகல்

இசகல் isagal, பெ. (n.)

   நரம்பு இழுத்துக்கொள்ளல்; dislocation of muscles or joints.

     [இழுகு – இசகு – இசகல் (க.வி.31);.]

இசகுதப்பு

 இசகுதப்பு isagudappu, பெ. (n.)

எசகு பிசகு பார்க்க;see esagu-pisagu.

மறுவ. எக்கு தப்பு. இசகுபிசகு.

     [இசகு + தப்பு.]

இசகுபிசகு

இசகுபிசகு isagubisagu, பெ. (n.)

   1. முறைகேடு; irregularity, inconsistency.

இசகுபிசகாக நடக்கின்றான். (தெ.ஆ.);.

   2. குழப்பம் confusion.

   3. பிறழ்வு; dislocation (செ.அக.);.

     [இழுக்கு – இழுகு – இககு – இசகு ஒ.நோ. பிழை – பிழகு – பிசகு, இசகு – பிசகு – இசகுபிசகு + இழுக்கும் பிழையும் ஆகிய குறைபாடுகள். எசகு பிசகு என்பது கொச்சை வழக்கு. எசகு – எக்கு எனவும் எக்குதப்பு (எசகுதப்பு); எனவும் கொங்கு நாட்டில் வழங்குகிறது.]

இசக்கி

 இசக்கி isakki, பெ. (n.)

இசக்கியம்மன் பார்க்க;see isakkiyamman.

   ம. இசக்கு; Skt. yaksi.

     [இயக்கி – இசக்கி.]

இசக்கியம்மன்

 இசக்கியம்மன் isakkiyammaṉ, பெ. (n.)

   கொற்றவையின் பெயர்களுள் ஒன்று; name of a form of Durga worshipped in South India (செ.அக.);.

     [இயக்கி – இசக்கி + அம்மன்.]

இசக்குப்பிசக்கு

 இசக்குப்பிசக்கு isakkuppisakku, பெ. (n.)

இசகு பிசகு (தெ.ஆ.); பார்க்க;see isagu-pisagu.

     [இசகுபிசகு – இசக்குப்பிசக்கு.]

இசங்கு

இசங்கு1 isaṅgudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   போதல்; to go on, to lead to, as a way.

     “ஶ்ரீபிருந்தா வனத்துக்கு வழி இசங்கும்படி” (ஈடு.5.10.2);;

     [இயங்கு – இசங்கு – இசங்குதல்.]

 இசங்கு2 isaṅgu, பெ. (n.)

   சங்கஞ்செடி (பிங்.);; mistletoe-berry thorn (செ.அக.);.

ம. இசங்கு.

இசடு

 இசடு isaḍu, பெ. (n.)

   அசறு, பொருக்கு; scab, flake.

     [அசறு – அசடு – இசடு.]

இசதாசார்

 இசதாசார் isatāsār, பெ. (n.)

   மதிப்புரவின் அடையாளம்; mark of respect (P.T.L.);.

     [Ar. izzat-āthār → த. இசதாசார்.]

இசதாரு

 இசதாரு isatāru, பெ. (n.)

   கடப்ப மரம்; common Indian oak (சா.அக.);.

     [இய – இச + தாரு. இய – கடவுள். முருகன். இசதாரு – முருகனுக்குரிய மரம்.]

இசப்கோல்

 இசப்கோல் isapāl, பெ. (n.)

   செடிவகை (மூ.அ);; ispaghul, plantago İsphagula.

     [U. isapgol → இஸ்கோல் → த. இசப்கோல்.]

இசப்பு-தல்

இசப்பு-தல் isappudal,    5 செ.குன்றாவி (v.t.)

   ஏமாற்றுதல்; to deceive. (இ.வ.);. (

     [இயப்பு – இசப்பு. இயப்பு – இயைந்தாற்போல் காட்டி ஏமாற்றுதல்.]

இசம்

 இசம் isam, பெ. (n.)

   பெயர்; name, individual.

     [Ar. ism → த. இசம்.]

இசம்கர்ணம்

 இசம்கர்ணம் isamkarṇam, பெ. (n.)

   சிற்றுார்க் (கிராமக்); கணக்கன்; registered village or accountant.

த.வ. மணியக்காரன்.

     [Ar. Ism + Skt. karana → த. இசம்கர்ணம்.]

இசம்வார்

 இசம்வார் isamvār, பெ. (n.)

   வருவாய்த்துறைக் கணக்கேடு (நபர் சிட்டா);; revenue account of the holdings with assessment arrangement under the names of the several individuals.

     [Ar ismi + U. war → த. இசம்வார்.]

இசலாட்டம்

 இசலாட்டம் isalāṭṭam, பெ. (n.)

   இகலாட்டம் (வின்);; strife (செ.அக.);.

     [இகலாட்டம் – இசலாட்டம்.]

இசலானி

 இசலானி icalāṉi, பெ. (n.)

   அரக்கோணம் வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Аrokkönam Taluk.(இ.வ.);

     [இசல்+அணி]

இசலி

இசலி isali, பெ. (n.)

   1. பிணங்குபவள்; quarrelsome woman.

     “குசலிகளிசலிகள் முழுமோசம்” (திருப்பு.243); (செ.அக.);.

   2. சூளுரை (ஆ.அக.);; challenge, vow.

     [இகலி – இயலி – இசலி.]

இசலிப்புழுக்கு-தல்

இசலிப்புழுக்கு-தல் isalippuḻukkudal,    14 செ.கு.வி (v.i.)

   கலகப்படுதல் (இ.வ.);; to get entangled in a quarrel, start a quarrel (செ.அக.);.

     [இகலி – இசலி + புழுக்குதல். புழுக்குதல் = மனம் புழுங்கி பகை பாராட்டுதல்.]

இசலிமடை

 இசலிமடை icalimaṭai, பெ. (n.)

   அருப்புக் கோட்டை வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Aruppukkottai Taluk. (இ.வ.);

     [இகலி+இசலி+மடை]

இசவேல்

 இசவேல் isavēl, பெ. (n.)

உடைவேல்: tree having large thorns, arrow thorn tree (சா.அக.);.

     [இல் – இளி – இசி + வேல். இசி – குத்துதல், முள்.]

இசா

இசா icā, பெ. (n.)

   1. இரவின் முற்பாகம்; the first part of the night (Muham.);.

   2. இரவில் தொழுகை; the prayer of the night (Muham.);.

த.வ. முன்னிராத்தொழுகை.

     [Ar, isha → த. இசா.]

இசாசத்து

 இசாசத்து icācattu, பெ. (n.)

   இசைவு, (அனுமதி);; permission leave to depart.

நான் போவதற்கு முன்தங்களிடம் வந்து இசாசத்து பெற்றுக் கொள்கிறேன் (முகம்);.

     [Ar. ijaza → த. இசாசத்து.]

இசாபா

 இசாபா icāpā, பெ. (n.)

   வருவாய் மிகுதி; increase in revenue whether from improved cultivation or from enhancement of the rate of assessment (C.G.);.

     [U. zafa → த. இசாபா.]

இசாபு

 இசாபு icāpu, பெ. (n.)

   கணக்கு; account, bill of charges.

     [U. ihisab → த. இசாபு.]

இசாரா

இசாரா1 icārā, பெ. (n.)

   குத்தகை நிலம்; and leased or rented out.

     [U. ijárá → த. இசாரா.]

 இசாரா2 icārā, பெ. (n.)

   குறிப்புக்காட்டல் (சமிஞ்ஞை);; hint, suggestion.

     “இசாராவினால் தெரிந்து கொள்ளாதவன் என்ன சொன்னாலும் தெரிந்து கொள்ளமாட்டான்” (முகம்.);.

த.வ. குறிப்பு.

     [U. ishara → த. இசாரா.]

இசாராதார்

 இசாராதார் icārātār, பெ. (n.)

   குத்தகைக்கு வாங்குவோன்; lessee, contractor, renter (W.G.);.

     [U. ijara-dar → த. இசாராதார்.]

இசார்நாமா

 இசார்நாமா icārnāmā, பெ. (n.)

   குத்தகை ஆவணம்; deed of lease.

     [U. isar-nama → த. இசார்நாமா.]

இசி

இசி1 isittal,    4 செ.கு.வி. (v.i.)

.

   1. நரம்பிழுத்தல் (கொ.வ.);; to contract, as the muscles in spasms.

   2. நோவுண்டாதல் (கொ.வ.);; to ache, as the muscles from over exertion.

     [இழு – இக – இசி (கொ.வ.);.]

 இசி2 isittal,    4 செ.குன்றாவி. (v.t..)

   1. இழுத்தல்; to pull, draw drag.

     “முட்களிற் கட்டியிசித்திட” (திருப்பு. 310);.

   2. முறித்தல் (திவா.);; to break off.

   3. உரித்தல் (வின்.);; to strip off, as bark (செ.அக.);.

   4. ஒடித்தல் (ஆ.அக.);; to snap.

   5. இணுங்கல், நகத்தால் களைந்தெடுத்தல்; to nip.

     [இழு- இசு – இசி.]

 இசி3 isittal,    4 செ.கு.வி (v.i.)

   சிரித்தல் (சது.);; to laugh (செ.அக.);.

 H. hangsna

     [இளி – இசி.]

 இசி4 isi, பெ. (n.)

   உரிக்கை (வின்);; stripping as bark, leaves, or fibre.

   2. ஒடிக்கை (வின்.);; breaking of as a branch.

   3. நகத்தால் களைந்தெடுத்தல் (ஆ.அக.);; nipping.

     [இழு – இசு – இசி.]

இசிகடுகு

 இசிகடுகு isigaḍugu, பெ. (n.)

   செங்கடுகு; brown mustard. (சா.அக.);.

     [எல்- எலில் – எழில் (செந்நிறம்);. எழில்கடுகு – எழிகடுகு – எசிகடுகு – இசிகடுகு. இந்தி உள்ளிட்ட வடபுல மொழிகளில் எழில் – லால் எனத் திரிந்து செந்நிறம் குறித்தல் காண்க.]

இசிகப்படை

இசிகப்படை isigappaḍai, பெ. (n.)

   ஒருவகை யம்பு; a kind of arrow.

     “இசிகப்படை யெய்தான்” (கம்பரா. நிகும்.130); (செ.அக.);.

     [இல் – இள் (பிளவு); – இளி – இசி – இசிகம் + படை.]

இசித்தல்

இசித்தல் isittal, பெ. (n.)

   1. இணுங்குதல்; pulling off, as bark, leaves, fibre etc.

   2. சிரித்தல்; laughing.

   3. நரம்பிழுத்தல்; straining of the muscles.

   4. நோவுண்டாதல்; aching. (சா.அக.);

     [இழுத்தல் – இசித்தல்.]

இசின்

இசின் isiṉ, இடை. (part)

   1. இறந்தகால இடைநிலை (நன். 145, விருத்.);; tense part of verbs, showing the past, as in என்றிசினோர்.

   2. அசைநிலை; a poetic expletive.

     “காதலன்மா நீ மற்றிசினே”. (தொல்.சொல். 298, உரை);. (செ.அக.);.

     [ஈ- ஈய் – ஈயின் – ஈசின் இசின் (ஈ – தற்பொருள்); தோற்றத்தால், ‘வரின்’, ‘உணின்’ என்றாற் போன்று செயின் என்னும் வாய்பாட்டு வினையெச்சமாகக் காணப்படினும், ஈயினன். ஈயினள். ஈயினர் என்பவற்றின் பொது வினைமுற்று மரூஉ வடிவமே என்க. இவை இடைநிலையுமாகும். (தொல். சொல். 1 உரை பாவாணர் அடிக்குறிப்பு); போங்காணும். இருங்காணும் முதலிய கூட்டு வினைகளில்துணை வினையாக வருபவை காலப்போக்கில் வெறும் அசைநிலைகளாதலும் உண்டு அஃதொப்ப இசின் என்னும் துணைவினை இறந்த காலப் பொருளிலும் அசைநிலைப் பொருளிலும் வழக்கூன்றியது. தொல்காப்பியரும் நன்னூலாரும் இதனை வெறும் ‘சின்’ என்னும் இடைச் சொல்லாகக் கருதினர். ‘சின்’ பார்க்க See ‘sin’.]

இசிப்பு

இசிப்பு1 isippu, பெ. (n.)

   1. இழுக்கை (வின்);; pull strain.

   2. நரம்பு வலிப்பு (வின்.);; spasm, convulsion, contraction of the muscles (செ.அக.);.

   3. வயிற்றுவலி; stomach pain.

     [இழுப்பு – இசிப்பு.]

 இசிப்பு2 isippu, பெ. (n.)

   சிரிப்பு (வின்);; laughter.

     [இளி – இளிப்பு – இசிப்பு.]

இசியிழை

 இசியிழை isiyiḻai, பெ. (n.)

   நெகிழத்தக்க நார்; elastic fibre (சா.அக.);.

     [இழி இசி – இழை].

இசிவு

இசிவு isivu, பெ. (n.)

   1. நரம்பிழுப்பு (கொ.வ.);; spasm convulsions.

   2. மகப்பேற்றுத்துன்பம் (கொ.வ.);; labour pains (செ.அக.);

   3. வயிற்றுவலி (ஆ.அக.);; stomach pain.

   4. உரிவு; peeling.

   5. இழுப்பு; a sudden attack of fits (சா.அக.);.

     [இழுப்பு → இசிப்பு → இசிவு.]

இசீகம்

இசீகம் icīkam, பெ. (n.)

   1. ஒருவகைக் கரும்பு; a kind of sugar-cane.

   2. மூசையிலிட்டு உருக்கும் மாழைகள் உருகினவாவென்று சோதிக்கும் இரும்புக் காம்பு; a small stick or iron rod used for trying whether the gold or other metal in a crucible is melted or not. iron rod used in fusion of metals.

     [இளகம் – இளிகம் – இசிகம் – இசீகம் (கொ.வ.);.]

இசீகாத்திரம்

இசீகாத்திரம் icīkāttiram, பெ. (n.)

   ஏவுகணை வகை (கம்பரா.நிகும்.132, உரை.);; a kind of missile.

     [Skt. islikåstra → த. இசீகாத்திரம்.]

இசுகார்

இசுகார் isukār, பெ. (n.)

   கப்பலில் லவுரானுக்குக் குறுக்கே ஏணிப் படிபோல இடப்பட்டிருக்குஞ் சிறு குறுக்குக் கயிறுகள்; ratives (M.Navi,85);.

த.வ. படிக்கயிறு.

     [Skt. isukar → த. இசுகார்.]

இசுகால்

 இசுகால் isukāl, பெ. (n.)

   தடை; hindrance.

     [U. ishkal → த. இசுகால்.]

இசுசா

 இசுசா isusā, பெ. (n.)

   பங்கு; part, portion, lot, share (W.G.);.

இசுசாகால்

 இசுசாகால் isusākāl, பெ. (n.)

பொது வாய்க்கால் (W.G.);.

 water channel jointly enjoyed by two or more parties.

     [இசுசா + கால்.]

     [U. hissa → த. இசுசா.]

இசுதவா

இசுதவா isudavā, பெ. (n.)

   1. படிப்படியாக உயர்த்தப்படும் நிலவரி (W.G.);.

 land tax or rent levied at progressively increasing rates until it reaches the full sum imposable on land brought under cultivation, or on villager let out to farm.

   2. நிலவரியைப் படிப்படியாக உயர்த்துகை; the practice of so taxing lands.

த.வ. ஏறுவரி.

     [U. istiwa → த. இகதவா.]

இசுதிக்பார்

 இசுதிக்பார் isudikpār, பெ. (n.)

   கரிசுகளை (பாவங்களை); மன்னிக்குமாறு கடவுளிடம் வேண்டிக் கொள்ளுகை; begging forgiveness of god.

மனிதன் அடிக்கடி இசுதிக்பார் செய்து கொண்டிருக்க வேண்டும் (முகம்.);.

த.வ. மன்னிப்பு வேண்டுகை.

     [Ar. istigfar → த. இசுதிக்பார்.]

இசுதிக்பால்

 இசுதிக்பால் isudikpāl, பெ. (n.)

   எதிர் கொண்டழைக்கை; ceremonies reception of a person of distinction consisting in the villagers coming out of the village limits in procession to meet the hounoured guest (W.G.);.

த.வ. எதிரேற்பு.

     [U. istiqbal → த. இசுதிக்பால்.]

இசுதிபா

 இசுதிபா isudipā, பெ. (n.)

   விடுதலையாவணம்; deed of relinquishment (R.T.);.

     [Ar. isutifa → த. இசுதிபா.]

இசுதிமிரார்

இசுதிமிரார் isudimirār, பெ. (n.)

   1. தீர்வை வரையறை; permanent settlement of revenue (RF);.

   2. தீர்வை வரையறுக்கப்பட்ட நிலம்; land permanently settled (R.F.);.

     [U. istimrar → த. இகதிமிரார்.]

இசுதியார்

 இசுதியார் isudiyār, பெ. (n.)

   விளம்பரம்; proclamation, notice, advertisement.

     [U. ishtēhār → த. இசுதியார்.]

இசுதியார் நாமா

 இசுதியார் நாமா isudiyārnāmā, பெ. (n.)

   விளம்பரச் சுவரொட்டி, விளம்பர அட்டை; advertisement, placard poster.

     [U. Íshtéhär-námá → த. இசுதியார்நாமா.]

இசுதீங்கு

இசுதீங்கு isutīṅgu, பெ. (n.)

   கப்பற்பாயை ஏற்றவும் இறக்கவும் உதவும் கயிறுகள்; brails (M.Navi.86);.

த.வ. ஏண்வடம்.

     [Skt. istinki → த. இசுதீங்கு.]

இசுமு

 இசுமு isumu, பெ. (n.)

   பெயர்; name

     [U. isum → த. இசுமு.]

இசுமுதார்

 இசுமுதார் isumutār, பெ. (n.)

   மரபுவழியாக சிற்றூரில் வேலை செய்பவன்; hereditary holder of a village office.

த.வ. குடிமகன், குடிப்பிள்ளை.

     [U. isum-dar → த. இசுமுதார்.]

இசுமுவாரி

 இசுமுவாரி isumuvāri, பெ. (n.)

   பெயர் வரிசை (நபர்சிட்டா);; revenue account of the holdings and their assessments arranged under the names of the several individuals.

த.வ. பெயரேடு.

     [U. isum-wari → த. இசுமுவாரி.]

இசும்

 இசும் isum, பெ. (n.)

   பெயர்; name (Muham.);.

     [Ar. Isum → த. இசும்.]

இசும்பு

இசும்பு isumbu, பெ. (n.)

   1. வழுக்கு; precipice.

     “இகம்பினிற் சிந்தைக்கு மேறற்கரிது” (திருக்கோ. 149);.

   2. ஏற்ற விறக்கங்கள் மிகுந்த கடுவழி (திருக்கோ. 149, உரை);; rugged and broken pathway that is full of ascents and descents (செ.அக.);.

   3. நீர்க்கசிவு; percolation of water.

   4. எட்கசிவு; sesamum seeds ground into a pulp. (செ.அக.);

     [இழி – இழிம்பு – இசிம்பு- இகம்பு.]

இசுராபு

 இசுராபு isurāpu, பெ. (n.)

   தேவைக்கதிகமாக செலவு செய்கை; extravagance, waste (Muham.);.

த.வ. வீணடிப்பு.

     [Ar. Israf → த. இசுராபு.]

இசுலாம்

இசுலாம் isulām, பெ. (n.)

   1. அமைதி; peace.

   2. முகம்மதிய சமயம்; religion of Islam; the muhammadan religion (Muham.);.

     [Ar. islam → த. இசலாம்.]

இசுலாம்மார்க்கம்

 இசுலாம்மார்க்கம் isulāmmārkkam, பெ. (n.)

   முகம்மதிய மதம்; religion of Islam.

     [A r. islam + Skt. mārkka → த. இசலாம் மார்க்கம்.]

இசுவல்

 இசுவல் ikaval, பெ. (n.)

   இடையூறுதொல்லை; hinderange.

     “இசுவல் இல்லாமல் இருக்க வேண்டும்” மறுவ இடுக்காட்டம்.

     [இழுவல்+இசுவல்]

இசூக்கு

 இசூக்கு icūkku, பெ. (n.)

   அன்பு; love, affection.

     “அவன் அல்லாவின் இஷிக்கினால் மயக்கம் கொண்டிருக்கிறான்” (முகமதி.);.

     [Ar. ishq → த. இசூக்கு.]

இசூராக்கு

 இசூராக்கு icūrākku, பெ. (n.)

   ஞாயிற்றின் தோற்றம்; rising of the sun, day-break (Muham.);.

த.வ. எழுஞாயிறு.

     [Ar. ishraq → த. இசூராக்கு.]

இசை

இசை1 isaidal,    4 செ.கு.வி. (v.i.)

   1. பொருந்துதல்; to fit in as one plank with another in joining.

   2. ஒத்துச்சேர்தல்; to harmonise, to conform, as time-measure and melody.

தாளம் அராகத்திற்கு இசைந்துள்ளது.

   3. உடன்படுதல்; to consent, acquiesce, agree.

     “விண்பெறினு மிசையார் கொலைபொய்” (திருநூற்.83);.

   4. கிடைத்தல்; to acquire or get possession of

     “ஈண்டு கனக மிசையப் பெறா அது” (திருவாச.2.39);.

   5. இயலுதல்; to be possible, to be with in one’s power.

     “இசையாவொரு பொருளில்லென்றல்” (நாலடி.111); (செ.அக.);.

ம. இசயுக.

     [இயை – இசை.]

 இசை2 isaittal,    3 செ.குன்றாவி (v.t.)

   1. உண்டு பண்ணுதல்; to bring about

     “இறுதியை யிசைத்த கந்தனை” (விநாயகபு.75.578);.

   2. கட்டுதல் (திவா.);; to bind, tie, fasten.

   3. ஒத்தல்; resemble.

     “கூற்றிசைக்கு மென” (பாரத.இராச52);.

   4. மிகக் கொடுத்தல் (பிங்..);; to give lavishly. (செ.அக.);.

     [இயை – இசை.]

 இசை3 isai, பெ. (n.)

   1. இசைவு (வின்.);; Union, agreement, harmony.

   2. பொன் (அக.நி.);; gold.

   3. ஊதியம்; gain, profit.

     “இசைபெறுவா னெண்ணி யிழந்தாள் முதலும்” (சிவப்பிர. வெங்கையுலா.328);. (செ.அக.);.

     [இயை – இசை.]

 இசை4 isai, பெ. (n.)

   வண்மை (அக.நி.);; bounty liberality (செ.அக.);.

     [இசை – புகழ் புகழ்தரத்தக்க கொடைத்தன்மை.]

 இசை5 isai, பெ. (n.)

   திசை (அக.நி.);; cardinal points direction (செ.அக.);.

     [திசை – இசை.]

 இசை6 isai, பெ. (n.)

   பண்; music.

     [இயைத்தல் – பொருத்துதல், அடித்தல், முழக்குதல், ஒலித்தல் இயை -இசை – இசைத்தல் – ஒலித்தல். பேசுதல், புகழ்தல் பாடுதல்.]

இசை(3); மந்தரம், மத்திமம், தாரம், இசை(7); குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம். இவற்றுள் மிடற்றால் குரல், நாவால் துத்தம், அண்ணத்தாற் கைக்கிளை, தலையால் உழை, நெற்றியால் இளி. நெஞ்சால் விளரி, மூக்கால் தாரம். (இவற்றிற்கு ஓசையுவமை); முறையே மயில், இடபம், ஆடு, கொக்கு, குயில், குதிரை, யானை (கவையுவமை); பால். தேன். கிழான், நெய், ஏலம், வாழை, மாதுளங்கனி (மணவுவமை);, மெளவல், முல்லை, கடம்பு, வஞ்சி, நெய்தல், பொன்னா விரை. புன்னை (எழுத்துகள்); ஆஅ, ஈஇ, ஊஉ, ஏஎ, ஐஇ, ஒஓ, ஒளஉ (மாத்திரைகள்); குரல்

   4. துத்தம் 4, கைக்கிளை 2. உழை 3, இளி 4 விளரி 3, தாரம் 2. இவற்றுள் ஏழுபாலை பிறக்கும் பாலையைக் காண்க. (அபி.சிந்);

 இசை7 isai, பெ. (n.)

   1. ஓசை; sound, noise.

     “விண்ணதி ரிமிழிசை கடுப்ப” (மலைபடு:2);.

   2. சொல்; word from its being a combination of the sounds of letters which, together, convey a meaning”இசைதிரிந் திசைப்பினும்” (தொல். பொருள். 195);.

   3. புகழ்; praise, fame, renown, opp. to வசை.”ஈட்ட மிவறி யிசை வேண்டா வாடவர்”. (குறள்,1003);.

   4. இசைப்பாட்டு; song, music.”வாய்த்தில விசையென வாயுலர்ந்தனள்” (திருவாலவா 5725);.

   5. நரம்பிற் பிறக்கும் ஓசை; instrumental music.”இன்னிசை வீணையி லிசைந்தோன் காண்க.” (திரு. வாச. 3,35);.

   6. இனிமை; sweetness, agreeableness.

   7. ஏற்ற இறக்கம்; modulation of the voice in recitation pitch of three degrees high, low and middle.

ஏந்திசை, தூங்கிசை, ஒழுகிசை.

   8. சீர் (யாப்.வி.22); (pros.); fool.

   9. சுரம் (பெருங்.வத்தவ.5.6);; the gamut containing the seven notes viz.

குரல், துத்தம், கைக்கிளை, உழை. இளி, விளரி, தாரம் (செ.அக.);.

   ம. இச;க., கூ. எ. Skt. yasas.

     [இயை – இசை.]

 இசை8 isaittal,    4 செ.கு.வி (v.i.)

   1. ஒலித்தல் (தொல்.பொருள்.195);; lo sound.

   2. யாழ் முதலியன ஒலித்தல்; lo sound as a musical instrument

     “பறையெழுந் திசைப்ப” (கலித்.104.29); 3 செ.குன்றாவி (v.t.);

   1. சொல்லுதல்; to disclose express

     “மார்பனிற்றென விசைத்த லோடும்.” (சீவக.203);.

   2. அறிவித்தல்; to indicate, signify.

     “காலை யிசைக்கும் பொழுதொடு புலம்புகொள்” (பதிற்றுப்.81.5);.

   3. பாடுதல்; to sing

     “கோகிலப் பறவைகளிசைத்தல்” (கந்தபு. நாட்டு 44);.

   4. இசைக்கருவி இசைத்தல்; to play, as on a flute”யாழிசைக்குப்புக்கு” (தொல்.சொல்.310.உரை);.

     [இயை – இசை இயை – பொருத்து. அடி முழக்கு ஒலியெமுப்பு, இசைத்தல் ஒலித்தல் பேசுதல் பாடுதல், பண்ணுக்கேற்ற இசைக்கருவிகளில் ஓசை எழுப்புதல்.]

இசை கடன்

இசை கடன் isaigaḍaṉ, பெ. (n.)

   நேர்த்திக் கடன்; vow made to a deity

     “கோயிலுக்குப்போய் இசைகடன் முடித்து” (எங்களூர். 41);. (செ.அக.);.

     [இசை + கடன்.]

இசைகாரர்

இசைகாரர் isaikārar, பெ. (n.)

   1. பாடுவோர்; singers.

     “இசைகாரர் பத்தர்பரவு மாயிரத்தின்” (திவ். திருவாய். 1.5.11);.

   2. பாணர் (திவா.);; lute-players, the itinerant bards of ancient times (செ.அக.);.

     [இசை + காரர் – இசைக்காரர் – இசைகாரர் (கொ.வ.);.]

இசைகுடிமானம்

இசைகுடிமானம் isaiguḍimāṉam, பெ. (n.)

   திருமணத்தில் எழுதப்படும் சான்று ஆவணம் (C. and T. Vol.v.p.267);; written document executed by the

 bridegroom’s father and attested by witnesses in marriages among Nātsukõtjai Chettiyārs.

     [இசை + குடிமானம். இசைவு – இசை குடிமானம் – குடித்தனம், இல்லறம் இல்லறம் ஏற்கும் மணமக்களுக்கான ஒப்பந்தம்.]

இசைகேடு

இசைகேடு1 isaiāṭu, பெ. (n.)

   1. புகழின்மை; loss of fame, disrepute

   2. இசைத் தவறு (ஸ்வரத்வறு);;   3. சீர்கெட்ட நிலை;, reduced circumstances, disreputable condition (செ.அக.);.

     [இசை – புகழ். இசை + கேடு.]

 இசைகேடு2 isaiāṭu, பெ. (n.)

   1. மதிகேடு; awkward predicament

     ‘இசைகேடாகக் காரியம் நடந்துவிட்டது’

   2. தவறான நிலை; wrong position.

     ‘இசைகேடாகப் படுத்துக் கொண்டேன். சுளுக்கேறிவிட்டது.

   3. ஒழுங்கின்மை; disorder, irregularity.

   4. பொருத்தமின்மை; disagreement, Incompatibility.

   5. கெடுதி (Pudu. Insc 609);, damage, irregularity (செ.அக.);.

     [இசை + கேடு, கெடு – கேடு.]

இசைகொள்ளல்

 இசைகொள்ளல் isaigoḷḷal, பெ. (n.)

   புகழ்பெறல் (ஆ.அக.);; gain reputation, become famous.

     [இசைவு + கொள்ளல்.]

இசைகோள்

 இசைகோள் isaiāḷ, பெ. (n.)

   தாளம் (ஆஅக.);; rhythm.

     [இசை + கோள். இசைக்குக் கொள்ளப்படுவது. கொள் – கோள்.]

இசைக் கருவி

 இசைக் கருவி isaikkaruvi, பெ. (n.)

   இசையை உண்டாக்கும் கருவி; musical instrument (செ.அக.);.

     [இசை + கருவி. அவை தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக்கருவி, மிடற்றுக்கருவி, கஞ்சக்கருவி என்பன.]

இசைக்கரணம்

இசைக்கரணம் isaikkaraṇam, பெ. (n.)

   இசைக் கருவியிற் காட்டுந் தொழில் (சிலப். 7. கட்.15);; different methods of handling the string of musical Instruments

 so as to produce various tones. (செ.அக);.

     [இசை + கரணம். கருத்தல் = செய்தல், கரணம் = செய்கை அவை பண்ணல், பரிவட்டணை, ஆராய்தல், தைவரல், செலவு, விளையாட்டு, குறும்போக்கு முதலியன.]

இசைக்கழல்

 இசைக்கழல் isaikkaḻl, பெ. (n.)

   வீரக் கழல்; ornament.

     [இசை + கழல் இசை – புகழ். கழல் – வீரக்கழல் தேர் நூறு. குதிரை ஆயிரம், யானை நூறு, காலாள் பதினாயிரம், போரில் மடியவென்ற வெற்றிபெற்ற வேந்தர் இடக்காலிலணியும் வீரவெண்டயம்.]

இசைக்காரன்

இசைக்காரன் isaikkāraṉ, பெ. (n.)

   பாடுவோன் (சிலப். 3.64. உரை; one who sings. (செ.அக.);.

     [இசை + காரன்.]

இசைக்கிளை

இசைக்கிளை isaikkiḷai, பெ. (n.)

   ஆயத்தம், எடுப்பு முடுக்கு (உற்கிரகம்);, அலைவு (சஞ்சாரம்);. இடாயம் என்ற ஐவகை இசை (பெரியபு. ஆனாய. 26.உரை);;     [இசை + கிளை.]

இசைக்குதல்

 இசைக்குதல் isaikkudal, பெ. (n.)

   சொல்லுதல் (ஆ.அக.);; uttering, speaking.

     [இசை – இசைக்குதல்.]

இசைக்குரற்குருவி

 இசைக்குரற்குருவி isaikkuraṟkuruvi, பெ. (n.)

   குயில்; koel, the Indian cuckoo. (செ.அக.);.

     [இசை + குரல் + குருவி.]

இசைக்குழல்

 இசைக்குழல் isaikkuḻl, பெ. (n.)

   குழற்கருவி (பிங்.);; flute, pipe made of bamboo or of some metal tube. (செ.அக.);.

     [இசை + குழல்.]

இசைச்சிதடி

இசைச்சிதடி isaissidaḍi, பெ. (n.)

   ஓசையையுடைய சிள்வீடு (பதிற்று. 58:13);; beetle which makes shrill sound.

     [இசை + சிதடி.]

இசைச்சுவை

இசைச்சுவை isaissuvai, பெ. (n.)

   1. பாடுவதற்காகக் குரலிசையைப் பக்குவப்படுத்தும் தின்பண்டங்கள் எனக் கருதப்படுபவை: தேன், பால், நெய், ஏலம், வாழைப்பழம், மாதுளங்கனி முதலியன; eatables serving to modulate the sound of the voice for singing. such as honey, milk, ghee, cardamom, plantain pomegranate etc. (popular belief);.

   2. இசையின்பம்; enjoyment of music, appreciation of music.

     [இசை + சுவை.]

இசைஞானியார்

 இசைஞானியார் isaiñāṉiyār, பெ. (n.)

   சடையனாரின் மனைவி. சுந்தரமூர்த்தி நாயனாரைப் பெற்றவர். (பெரியபுராணம்);; wife of Cadaiyapār and mother of the great Sava saint Sundaramoorthi.

     [இசை + ஞானி + ஆர்.]

இசைத்தமிழ்

 இசைத்தமிழ் isaittamiḻ, பெ. (n.)

   முத்தமிழுள் ஒன்று (பிங்.);; Tamil poetry composed to suit the several melody – types and time-measures that division of Tami literature which consists of verses set to music as dist fr, poetry or drama, one of Mu-t-tamil.

     [இசை + தமிழ். முத்தமிழ்ப் பாகுபாட்டுள் இசைத் தமிழ் பண்ணமைக்கப்பட்ட பாடல் இலக்கியத்தைக் குறித்தது.]

இசைநாள்

இசைநாள் isaināḷ, பெ. (n.)

   1. முற்கொழுங்கால் (பூரட்டாதி); (சங்.அக);; the 25th naksatra (star);.

   2. பிற்கொழுங்கால் (உத்தரட்டாதி); (சங்.அக.);. (சோதிட);; the 26th naksatra (star); (செ.அக.);.

     [இசை + நாள்.]

இசைநிறை

இசைநிறை isainiṟai, இடை. (part)

செய்யுளில் இசை நிறைத்தற்கு வருஞ்சொல் (நன்.395);

     [இசை + நிறை. இசையை நிறைப்பது.]

இசைநிறைசொல்

 இசைநிறைசொல் isainiṟaisol, பெ. (n.)

   இசைநிறை பொருளைத் தரும்சொல், (ஆ.அக.);; word appearing as a poet expletive.

     [இசை + நிறை + சொல்.]

இசைநிறையசைச்சொல்

 இசைநிறையசைச்சொல் isainiṟaiyasaissol, பெ. (n.)

   இசையை நிறைத்தற்பொருட்டு வருமசைச் சொல். (ஆ.அக.);; word used as poet expletive.

     [இசை + நிறை + அசை + சொல்.]

இசைநிறையேகாரம்

 இசைநிறையேகாரம் isainiṟaiyēkāram, பெ. (n.)

   ஈற்றசையேகாரம் (ஆ.அக.);; vowel ‘ஏ’ appearing at the end of a verse as poet expletive.

     [இசை + நிறை + ஏகாரம்.]

இசைநுணுக்கம்

இசைநுணுக்கம் isainuṇukkam, பெ. (n.)

   ஓர் இசை நூல் (இறை 1, உரை);; work on music ascribed to Sigart a member of the Middle Tamil Sangam (செ.அக.);.

     [இசை + நுணுக்கம்.]

இது சாரகுமாரன் இசை அறிதற்பொருட்டுச் சிகண்டியாராற் செய்யப்பட்ட இசைநூல். அகத்தியர் காலத்திருந்தது இடைச் சங்க மருவியதென்றுங் கூறுவர். (அபி.சிந்);.

இசைநூபுரம்

 இசைநூபுரம் isainūpuram, பெ. (n.)

   வீரனணியுங் கழல் (சங்-அக.);; single anklet worn on his right ankle by the mighty warrior who, among other deeds of valout has also slain an elephant.

     [இசை + புகழ் இசை + நூபுரம்.]

இசைநூல்

இசைநூல் isainūl, பெ. (n.)

   இசையைப்பற்றிக் கூறும் நூல் (சிலப். 360, அரும்.);; treatise on music (செ.அக.);.

     [இசை + நூல்.]

இசைந்தவேளை

 இசைந்தவேளை isaindavēḷai, பெ. (n.)

   ஏற்புடைய நேரம் (ஆ.அக.);; appropriate time, suitable occasion.

     [இயைந்த → இசைந்த + வேளை.]

இசைபேதம்

 இசைபேதம் isaipētam, பெ. (n.)

இசைகேடு பார்க்க;see isaikedu (செ.அக.);.

     [இசை + பேதம்.]

இசைப்பா

இசைப்பா isaippā, பெ. (n.)

   இசையோடு சேர்ந்த பாக்களிலொருவகை (சிலப்.6.35.உரை);; one of two classes of musical composition, the other class being known as இசையளவுபா (செ.அக.);.

     [இசை + பா.]

இசைப்பாடு

 இசைப்பாடு isaippāṭu, பெ. (n.)

   புகழ் மிகுதி (பிங்.);; rise of fame. (செ.அக.);.

     [இசை + பாடு.]

இசைப்பாட்டு

இசைப்பாட்டு isaippāṭṭu, பெ. (n.)

   இலக்கியப் பாட்டு (சிலப்.பதி.60. உரை);; song, musical composition (செ.அக.);.

     [இசை + பாட்டு.]

இசைப்பாணர்

இசைப்பாணர் isaippāṇar, பெ. (n.)

   பாணருள் ஒரு வகையார் (தொல். பொருள்.91 உரை);; division of the ancient Panar caste, famous for their singing, minstrels (செ.அக.);.

     [இசை + பாணர்.]

இசைப்பு

இசைப்பு1 isaippu, பெ. (n.)

   சொல் (திவா.);; word

   2. யாழ் முதலியன இசைத்தல் (தொல்.சொல்.310);;: playing on a musical instrument.

     [இசை → இசைப்பு.]

 இசைப்பு2 isaippu, பெ. (n.)

   இசைவு (பிங்.);; combination, suitability (செ.அக.);.

     [இயை + இயைப்பு + இசைப்பு.]

 இசைப்பு3 isaippu, பெ. (n.)

   1. பொருத்துகை; joining so as to fit in

   2. பொருத்து; joint (செ.அக.);.

     [இசை + இசைப்பு.]

இசைப்புள்

இசைப்புள் isaippuḷ, பெ. (n.)

   1. அன்றிற் பறவை; a species of bird.

   2. குயில்; koel. (ஆ.அக.);.

     [இசை + புள்.]

இசைப்பெட்டி

 இசைப்பெட்டி isaippeṭṭi, பெ.(n.)

   காற்றை உட்செலுத்தி மேற்புறக் கட்டைகளை விரலால் அழுத்தி இசைக்கும்பெட்டி வடிவிலுள்ள இசைக்கருவி (ஆர்மோனியம்);; harmonium.

மறுவட்பாட்டுப் பெட்டி.

     [இசை(ஒலி, ஒசை);+பெட்டி]

இசைப்பெருந்தானம்

 இசைப்பெருந்தானம் isaipperundāṉam, பெ. (n.)

   இசை பிறக்குமிடம். அவை: நெஞ்சு, மிடறு, நாக்கு, மூக்கு, அண்ணாக்கு இதழ். பல், தலை (ஆ.அக.);; organic points where musical sound originates.

     [இசை + பெரும் + தானம்.]

இசைப்பொறி

இசைப்பொறி isaippoṟi, பெ. (n.)

செவி, ear the sense of hearing

     “வேறிசைப்பொறி விழியலா துற்றி லான்” (சேதுபு.காசிபத்,30);. (செ.அக.);.

     [இசை – ஒலி, ஓசை இசை + பொறி.]

இசைமகள்

 இசைமகள் isaimagaḷ, பெ. (n.)

   கலைமகள் (பிங்.);; Saraswati, being the goddess of articulate sounds (செ.அக);.

இசைமடந்தை

 இசைமடந்தை isaimaḍandai, பெ. (n.)

இசைமகள் (சூடா.); பார்க்க;see isaimagal (செ.அக.);.

     [இசை + மடந்தை.]

இசைமணி

இசைமணி isaimaṇi, பெ. (n.)

   பதினாயிரம் பேரை வென்ற வேந்தர் வலக்காலிலணியும் பொன்னாற் செய்த வீர கண்டை (சங.அக.);; tinkling gold anklet worn on his right ankle by a king who has slain 10,000 men, in battle. (செ.அக.);.

     [இசை + புகழ். இசை + மணி.]

     [P]

இசைமணி.

 இசைமணி. icaimaṇi, பெ. (n.)

   தாளத்திற்குப் பயன்படும் சிறு சதங்கைகள்; small silver bells for steps in dance.

     [இசை+மணி]

     [P]

இசைமரபு

இசைமரபு isaimarabu, பெ. (n.)

   ஓர் இசைநூல் (சீவக. 658. உரை);; an ancient work on music (செ.அக.);.

     [இசை + மரபு.]

இசைமறை

இசைமறை isaimaṟai, பெ. (n.)

   சாமவேதம் (திவ்.திருவாய். 8,9,9);; Sāmavāda, as the věda of musical chants (செ.அக.);.

     [இசை + பண். இசை + மறை.]

இசைமாத்திரை

 இசைமாத்திரை isaimāttirai, பெ. (n.)

   இசைக்குரிய மாத்திரைகள்; musical measure of time.

     [இசை + மாத்திரை.]

அவை குரலிற்கு நான்கும். துத்தத்திற்கு நான்கும். கைக்கிளைக்கு மூன்றும் உழைக்கு இரண்டும், இளிக்கு நான்கும். விளரிக்கு ஒன்றும், தாரத்திற்கு இரண்டுமாம் (ஆஅக.);

இசைமுட்டி

 இசைமுட்டி isaimuṭṭi, பெ. (n.)

   செருந்தி (மலை.);; panicled gold an-blossomed pear-tree (செ.அக);.

     [இசை + முட்டி.]

இசைமை

இசைமை icaimai, பெ. (n.)

தொழில் முறைபாணி,

 professional method.

     [இசை+மை]

 இசைமை isaimai, பெ. (n.)

   1. புகழ்; honour, esteem the desire for abstention, at all costs, from blameworthy actions.

     “கல்வி தறுக ணிசைமைகொடை” (தொல்.பொருள்.257);.

   2. ஒலி (பரிபா.13:14);; sound (செ.அக.);.

     [இசை → இசைமை.]

இசையறிபறவை

 இசையறிபறவை isaiyaṟibaṟavai, பெ. (n.)

   அசுணம் (கேகயம்); (பிங்.);; reputed bird that can discern notes of music (செ.அக.);.

     [இசை + அறி + பறவை.]

இசையறு-த்தல்

இசையறு-த்தல் isaiyaṟuttal,    4 செ.கு.வி. (v.i.)

   ஒசை வேறுபடப் பிரித்தல்; to distinguish by intonation

இசையறுத்து உச்சரித்துக் காண்க. (நன்.91 சங்கர.); (செ.அக.);.

     [இசை + அறு.]

இசையளவுகண்டான்

இசையளவுகண்டான் isaiyaḷavugaṇṭāṉ, பெ. (n.)

   பாண்டியன் அரி இருக்கை (IMP.M.200);; name of the throne of the Pändya kings (செ.அக.);.

     [இசை + அளவு + கண்டான்.]

இசையளவுபா

இசையளவுபா isaiyaḷavupā, பெ. (n.)

   இசையோடு சேர்ந்த பாக்களுளொருவகை (சிலப்.6.35.உரை.);; one of two classes of musical compositions the other class being known as (இசைப்பா); Isaippa.

     [இசை + அளவு + பா.]

இசையாசிரியன்

இசையாசிரியன் isaiyāsiriyaṉ, பெ. (n.)

   இசைப்புலவன் (சீவக.672, உரை);; teacher of music expert musician (செ.அக);.

     [இசை + ஆசிரியன.]

இசையானந்தம்

இசையானந்தம் isaiyāṉandam, பெ. (n.)

   அவலமுற்றிருந்தோர்க்குரிய இசைகள் தலைவன் பாட்டிற்கு இசையாகி வரப்புணர்க்கும் நூற்குற்றம் (யாப்.வி.பக். 524);; fault of poetic composition in which the melody types of the dirge or the elegy appropriate to the emotion of sorrow are introduced into an eulogistic poem in praise of a hero.

     [இசை + ஆனந்தம்.]

இசையாயிரம்

இசையாயிரம் isaiyāyiram, பெ. (n.)

   செயங்கொண்டார் செட்டிமார்கள் மேல் ஆயிரம் பாடல்களாற் பாடிய நூல் (தமிழ்நா.பக்42);; panegyric not now extant, consisting 1000 verses sung in praise of the chetti community by Jeyankondār (செ.அக.);.

     [இசை + ஆயிரம்.]

இசையின்செல்வி

இசையின்செல்வி isaiyiṉselvi, பெ. (n.)

   புகழ்மகள்; the goddess of same

     “இசையின்செல்வி எண்டிசை வளர்ப்ப” (S.I.I.iv.284); (செ.அக.);.

     [இசை + இன் = செல்வி.]

இசையியம்

இசையியம் isaiyiyam, பெ. (n.)

   ஒலிக்குமுழவு, (அகநா.25);; musical drum.

இசையிலக்கணம்

 இசையிலக்கணம் isaiyilakkaṇam, பெ. (n.)

   இசைக்குரிய இலக்கணம். அவை: ஆடல், பாடல், ஆதியிசை, முத்தமிழ், பண், பாணி தூக்கு முடம், தேசிகம் என்பன. (ஆ.அக.);; elements of musical grammar.

     [இசை + இலக்கணம்.]

இசையுரிச்சொல்

 இசையுரிச்சொல் isaiyurissol, பெ. (n.)

   ஒசையா லறியப்படும் குணச்சொல் (ஆ.அக.);; word in musical

 Usage.

     [இசை + உரி + சொல்.]

இசையுள்ளான்

 இசையுள்ளான் isaiyuḷḷāṉ, பெ. (n.)

   சிறந்தவன், புகழ்மிக்கோன்; gentleman, one who is famous (ஆ.அக.);.

     [இசை + (உள்ளவன்); + உள்ளான்.]

இசையெச்சம்

இசையெச்சம் isaiyessam, பெ. (n.)

   சொற்றொடரில் சொற்கள் எஞ்சிய பொருளுணர்த்தி வருவது (தொல். சொல். 440. சேனா.);; omission from a sentence, of words needed to complete the sense, ellipsis for the sake of brevity or elegance.

     [இசை + எச்சம்.]

     “அளித்தஞ்ச வென்றவர் நீப்பிற் றெளித்தசொற் றேறியார்க் குண்டோ தவறு” (குறள்.1154); நீத்தார்க்கே தவறு என எஞ்சிய இசைப்பொரு ளுணர்த்தலான் இசை யெச்சமாயிற்று. (தொல். சொல்.440.சேனா);.

இசையெஞ்சணி

 இசையெஞ்சணி isaiyeñsaṇi, பெ. (n.)

   இசையெச்சம் (ஆ.அக.);; figure of speech.

     [இசை + எஞ்க + அணி.]

இசையெடு-த்தல்

இசையெடு-த்தல் isaiyeḍuttal,    4 செ.கு.வி. (v.i.)

   1. பாடுதல்; to sing a tune, sing the praise of

     “என்னையா ளுடைய நாயகிக் கிசையெடுப்பவள்.” (கம்பரா.அக லிகை.6);.

   2. அராகம் தொடங்குதல்; start a song.

   3. இசை பாடுதல்; to execute a musical concert (ஆ.அக.);.

     [இசை + எடு.]

இசையெழுத்து

 இசையெழுத்து isaiyeḻuttu, பெ. (n.)

இசைக்குரிய எழுத்துகள். அவை: ஆ, ஈ, ஊ, ஏ, ஓ, ஐ, ஒள: letters signifying pitch duration of a musical sound.

     [இசை + எழுத்து. பண்டைக்காலத்தில் ஆ, ஈ, ஊ, ஏ, ஓ, ஐ ஒள என்னும் ஏழு எழுத்துகளே ச, ரி, க, ம, ப, த, நி க்குப் பகரமாக இருந்தன.]

இசையோசை

 இசையோசை isaiyōsai, பெ. (n.)

   இசைக்குரிய ஓசைகள். அவை: வண்டு, கிளி, குதிரை, யானை, குயில், பெற்றம், ஆடு என்பன (ஆ.அக.);; the sound of music.

     [இசை + ஓசை. குதிரைக்கு மாற்றாகக் குருகு இருத்தல் வேண்டும்.]

இசையோன்

இசையோன் isaiyōṉ, பெ. (n.)

   இசைக்காரன் (சிலப்.3,64);; one who sings to the accompaniment of instrumental music. (செ.அக.);.

     [இசை + (ஆன்); ஒன்.]

இசையோர்

இசையோர் isaiyōr, பெ. (n.)

   கந்தருவர்; Gandharvas

     “இசையோர் தேய வியக்கம்” (பெருங்.மகத.14.267); (செ.அக.);.

     [இசை + (ஆர்); ஒர்.]

இசையோலை

இசையோலை isaiyōlai, பெ. (n.)

   ஒப்பந்த ஒலை (IMPNA727);; deed of consent or acceptance (செ.அக.);.

     [இசை + இசைவு. இசை + ஒலை.]

இசைவந்தோன்

 இசைவந்தோன் isaivandōṉ, பெ. (n.)

   புகழ் பெற்றவன்; well known person, gentleman.

க. எசவன்த.

     [இசை + வந்தோன்.]

இசைவலான்

 இசைவலான் isaivalāṉ, பெ. (n.)

   இசை பாடுவதில் மிக்கான் (ஆ.அக.);; musician, maestro, musicologist.

     [இசை (வல்லான்); – வலான்.]

இசைவல்லோர்

இசைவல்லோர் isaivallōr, பெ. (n.)

   1. கந்தருவர்; Gandaruva.

   2. இசைப்பாடகர்; musician.

   3. இசைப்புலவர் (ஆ.அக.);; teacher of music.

     [இசை + வல்லோர்.]

இசைவளை

இசைவளை isaivaḷai, பெ. (n.)

   குதிரை நூறு போர்க்களத்திற் பொருதுவென்ற மறவர் காற்பெரு விரலில் அணியும் வளை (ஆ.அக.);; anklet worn by a hero who had defeated a cavery consisting of more than 100 horses.

இசைவாணர்

இசைவாணர் isaivāṇar, பெ. (n.)

   1. பாடகர்; career musicians.

     “தெள்ளுதமிழ் வான ரிசை வாணர் சூழ” (திருவாலவா.57.22);. (செ.அக.);.

   2. இசைவல்லோர் (ஆ.அக.);; expert musicians.

     [இசை + வாணர்- வாழ்நர் – வாணர்.]

இசைவிரும்பி

 இசைவிரும்பி isaivirumbi, பெ. (n.)

   அசுணம் (ஆ.அக);; music loving bird.

     [இசை + விரும்பி.]

இசைவிளக்கு கவிகை

இசைவிளக்கு கவிகை isaiviḷaggugavigai, பெ. (n.)

   புகழ் விளங்கிய இடக்கவிந்த கை; famous hand which tilts to give presents

     “”…. வுமணர் கீழ்மரத் தியாத்த சேமவச் சன்ன இசைவிளங்கு கவிகை நெடி யோய்” (புறம்.102); (சங்.இலக்.சொற்.);.

     [இசை + விளங்கு + கவி + கை.]

இசைவு

இசைவு isaivu, பெ. (n.)

   1. பொருந்துகை; suitability fitting in one with another.

     “இன்னவைபிறவு மிசைவில வெல்லாம்” (பெருங்.மகத.15.9);.

   2. தகுதி; fitness.

   3. உடன்பாடு): agreement consent, approval.

     “மறை யோரி சைவினால் …. அளிப்பாராகி” (பெரியபு.சண்டேசுர.24);.

   4. ஏற்றது; appropriateness கைக்கிசைவான குறுந்தடி (செ.அக.);.

   5. இணக்கம்; agreement (ஆ,அக);.

   6. பொருத்து (ஆ.அக.);; joining so as to fit in coordination.

     [இசை → இசைவு.]

இசைவுகேடு

இசைவுகேடு isaivuāṭu, பெ. (n.)

   1. பொருத்தமின்மை (வின்.);; difference, conflict disagreement.

   2. செயல் தவறு; failure, as of a project or undertaking.

     ‘இசைவு கேடாய்ப்போன காரியம்’ (கொ.வ.); (செ.அக.);.

     [இசைவு + கேடு.]

இசைவுக்குலைவு

 இசைவுக்குலைவு isaivukkulaivu, பெ. (n.)

   இசைவு கேடு (தஞ்சை.);; mal-adjustment (செ.அக.);.

     [இசைவு + குலைவ.]

இசைவுதீட்டு

இசைவுதீட்டு isaivutīṭṭu, பெ. (n.)

   உடன்படிக்கை ஆவணம் (S.I.I.v.371);; deed of agreement (செ.அக.);.

     [இசைவு + தீட்டு.]

இசைவுபிசகு

இசைவுபிசகு isaivubisagu, பெ. (n.)

   1. இணக்கமின்மை; incongruity.

   2. இசகு பிசகு (ஆ.அக.);; error, irregularity.

     [இசைவு + பிசகு.]

இசைவுபிறழ்வு

இசைவுபிறழ்வு isaivubiṟaḻvu, பெ. (n.)

   1. ஒழுங்கின்மை; disorder.

   2. இசைவு கேடு; disagreement (செ.அக.);.

     [இசைவு + பிறழ்வு.]

இசைவேளாளர்

 இசைவேளாளர் icaivēḷāḷar, பெ. (n.)

   கோயில் மேளக்குழுவில் தவில் வாசிக்கும் இசைக்கலைஞர்; drummers in temple.

     [இசை+வேளாளர்]

இச்சகம்

இச்சகம் iccagam, பெ. (n.)

   1. முகமன்; flattery, sycophancy.

     “வரத்திலே கண்ணும் வாக்கி லிச்சகமும்” (பிரபோத. 11:16);.

   2. பெறக்கருதிய தொகை (சங்.அக.);; money desired or result sought. (செ.அக.);.

     [இசை → இச்சு → இச்சகம்.]

இச்சத்து

 இச்சத்து iccattu, பெ. (n.)

   மதிப்புரவு (கெளரவம்);; honour.

     “மனிதன் இச்சத்தோடு காலங்கழிக்க வேண்டும்”.

த.வ. பெருந்தகவு.

     [Ar. izZat → த. இச்சத்து.]

இச்சத்துப் பெருக்கம்

இச்சத்துப் பெருக்கம் iccattupperukkam, பெ. (n.)

   ஆசை வெள்ளம்; profuse love, excessive desire (பரி. 7.37);.

     [இச்சை + அத்து + பெருக்கம்.]

இச்சம்

இச்சம் iccam, பெ. (n.)

   இச்சை; wish.

     “புணர்த்திய விச்சத்துப் பெருக்கத்திற் றுனைந்து” (பரிபா. 7. 37);. (செ.அக.);.

     [இசை – இச்சை – இச்சம்.]

இச்சலாத்தி

 இச்சலாத்தி iccalātti, பெ. (n.)

   துன்பம் (இ.வ.);; annoyance, trouble (செ.அக.);

     [அச்சலத்தி → இச்சலத்தி → இச்சலாத்தி.]

இச்சாவான்

 இச்சாவான் iccāvāṉ, பெ. (n.)

   இச்சையுடையோன் (ஆ.அக.);; one who is desimus. devoted person.

     [இச்சை + அவன் – இச்சையான – இச்சாவான் (கொ.வ.);.]

இச்சி

இச்சி icci, பெ. (n.)

   1. கல்லிச்சி (L);; oval – leaved fig.

   2. மர வகை (L.);; jointed ovate – leaved fig, I.tr., Ficus tsiela. (செ.அக.);.

     [இத்தி – இச்சி.]

இச்சி-த்தல்

இச்சி-த்தல் iccittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   விரும்புதல்; to desire, wish, crave for, covet.

     “இச்சித்த இன்பம் நுகராமல் இளைத்த மெய்யாள்” (பாரத. திரெளபதி. 75);. (செ.அக.);.

     [இள் → இழை → இயை → இசை (விருப்பம்);

     [இள் → இள் + து – இத்து → இச்சு → இச்சி → இச்சித்தல்.]

இச்சிச் செனல்

இச்சிச் செனல் iccicceṉal, இடை. (part)

   புள் முதலியவற்றை வெருட்டும் ஒலிக்குறிப்பு; onom expr. for scaring away birds, etc.,

     “காக்கை தனை யெய்யக் கோலில்லாமல் இச்சிச்சிச்சென்றானே” (பெருந்தொ. 1424); (செ.அக);.

   2. சலிப்பைக்காட்டும் ஒலிக்குறிப்பு (இச்சுக்கொட்டுதல்);; onom expr. indicating low spirits.

     [இச்சு – ஓர் ஒலிக்குறிப்புச் சொல். இச்சு + இச்சு + எனல்.]

இச்சியால்

 இச்சியால் icciyāl, பெ. (n.)

   இத்தி (மூ.அ.);; joined ovate – leaved fig (செ.அக.);.

     [இத்தி – இச்சி + ஆல்.]

இச்சியை

இச்சியை icciyai, பெ. (n.)

   1. கொடை; gift, offering.

   2. வேள்வி; sacrifice.

   3. பூசனை; worship. (செ.அக.);.

     [இள் + து – இத்து – இச்சு = விருப்பம்.

இச்சு – இச்சியை = விரும்பிக் கொடுப்பது.]

இச்சிலாத்தி

 இச்சிலாத்தி iccilātti, பெ. (n.)

   மன எரிச்சல், அமைதி கொள்ள முடியாமை; irritational mood.

மறுவ:அச்சலாத்தி.

     [அச்சலாத்தி-இச்சலாத்தி]

இச்சில்

இச்சில் iccil, பெ. (n.)

இச்சியால் (மச்சபு. அத்திரி 4); பார்க்க;see icciyal (செ.அக.);.

     [இத்தி → இத்தில் → இச்சில்.]

இச்சுக்கொட்டு-தல்

இச்சுக்கொட்டு-தல் iccukkoṭṭudal,    12 செ.கு.வி. (v.i.)

   1. புள் ஒலித்தல்; to utter sounds, as birds.

   2. ஒலிக்குறிப்பினால் மறுமொழி கூறுதல்; to reply or draw attention by ‘cu’. (செ.அக.);.

     [இச்சு + கொட்டுதல். இச்சு – ஒலிக்குறிப்பு. இது லொச்சு கொட்டுதல் எனத் திரிந்தது (கொ.வ.);.]

இச்சை

இச்சை1 iccai, பெ. (n.)

   1. விருப்பம் (திருவாச. 41. 9);; wish, desire, inclination.

   2. பத்தியோடு புரியுத் தொண்டு; devoted service.

     “ஆட்கொண்டாய்க் கென் னினியான்செயு மிச்சைகளே” (தேவா. 672.6);.

   3. வினா (சங்.அக.);;   4. இடித்தல்; pounding.

   5. உறுதிச்சொல்; assurance.

   6. பாலுணர்வில் நாட்டம்; sexual desire. (ஆ.அக.);.

     [இல் – இள் – இட்டம். இள் – இத்து – இச்சு + இச்சை. ஒ.நோ. நள் – நத்து – நச்சு – நசை. இள் – இத்து – இச்சு – இசை (புகழ், விருப்பம்);. வடதமிழில் வழக்கூன்றித் தென்தமிழில் பண்டே வழக்கழிந்ததால் வடமொழிச்சொல் போல் தோற்றம் தருகின்றது. அலை – அசை ஆனாற்போல

இலை – இசையாகாமையின் இச்சை – இசை எனத் திரிந்ததே ஒப்பத்தக்கது என்க.]

த. இச்சை → Skt. iccha.

 இச்சை2 iccai, பெ. (n.)

   1. அறியாமை; ignorace spiritual ignorance.

   2. பொய்கூறுகை; lying, uttering falsehood. (செ.அக.);.

     [இல் – இன்மை. இல் – இய் – இச்சை = உள்ளீடின்மை, அறியாமை, பொய்மை ஒ.நோ. பொய் – பொய்ச்சை – பொச்சை – பொச்சி (உட்டுளையுள்ள மலவாய்);. பொச்சி கொங்குநாட்டு வழக்கு.]

இச்சையடக்கம்

இச்சையடக்கம் iccaiyaḍakkam, பெ. (n.)

   ஆசையை அடக்கிக் கொள்ளுகை (விவிலி.கலா.6.23);; control of desires, self-restraint (செ.அக.);.

     [இச்சை + அடக்கம்.]

இஞ்சக்கம்

 இஞ்சக்கம் iñjakkam, பெ. (n.)

   கையூட்டு (தஞ்சை.);; bribe, wrongful gratification (செ.அக.);.

     [ஒருகா. இஞ்சுதல் – உறிஞ்சுதல், பறித்தல் அக்கம் – காசு. இஞ்க + அக்கம். தவறான வழியில் பெறப்படும் பணம்.]

இஞ்சம்

 இஞ்சம் iñjam, பெ. (n.)

   வெண்காந்தள் (மலை);; white malabar glory lily

     [எல் – இல் – இஞ்சு – இஞ்சம்.]

இஞ்சி

இஞ்சி1 iñji, பெ. (n.)

   கரிப்புள்ள இஞ்சிப்பூண்டு; ginger plant M.sh. Zingiber officinale.

     “இஞ்சிவீ விராய பைந்தார் பூட்டி” (பதிற்றுப்.42.10);.

     “மஞ்சளும் இஞ்சியும் மயங்களில் வலயத்து” (சிலப்.10.74);.

   2. இஞ்சிக் கிழங்கு; ginger-tube

     “இஞ்சி தின்ற குரங்கு போல பஞ்சரித்தல் (தொந்தரவு செய்தல்);.”

     [P]

மறுவ. செய்யாப்பாவை. இஞ்சிவேர். இஞ்சிப்பாவை, இஞ்சிக்கிழங்கு.

   ம. இஞ்சி;   குட. இஞ்சி;கோத இஞ்சி, பிரா, பாலி, சிங்கி, பர். சிங்கிவேர.

 Skt Srngavera;

 ME gingivere;

 Off gengibre, LL gingiber: GK Zingiberis: Eginger: Malay, injivér.

     [இஞ்சு – இஞ்சி.]

     ‘ஈ’ அண்மையைச் சுட்டுமாறு உதட்டைப் பின்னுக்கு இழுத்தொலிக்கும் உயிரொலி. ஈ – ஈல் – ஈர் – ஈர்த்தல் = இழுத்தல். ஈர்தல் – இழுத்தறுத்தல், பல்லாற் கடித்திழுத்து உரித்தல், இழுத்தல் = அறுத்தல்.

   ஈல் – இல் – இள் – இழு. ஒ.நோ;கொள்கொம்பு – கொழு கொம்பு. கொள்நன் – கொழுநன் இழுத்தல் = பின்னிழுத்தல், உள்ளிழுத்தல், உறிஞ்சுதல், இள் – (இய்); – (இய்ஞ்சு); – இஞ்சு.

   இஞ்சுதல் = நீரை உள்ளிழுத்தல், நிலத்தில் நீர் கவறுதல். இஞ்சு – இஞ்சி = நீரை உள்ளிழுத்துத் திரண்டிருக்கும் கிழங்கு வகை;அஃதுள்ள பூண்டு. இஞ்சி காய்ந்து நீர் வற்றினாற் கக்கு. சுக்கு = நீர் வறண்டிருப்பது சுள்ளுதல் (சுள்ளெனல் = காய்தல்); நீர்வற்றுதல். சுள் – சுள்கு – சுட்கு – சுக்கு. ஒ.நோ. வெள் – வெள்கு – வெட்கு – வெக்கம். கொள்- கொட்கு – கொக்கு = வளைந்த கழுத்துள்ள பறவை.

இஞ்சி பித்தத்தைப் போக்கும் எனப்படுவதால் மருந்துகளிலும் கறிவகைகளிலும் பெரும்பாலும் கூட்டுச்சரக்காகச் சேர்க்கப்படுகிறது.

 இஞ்சி2 iñji, பெ. (n.)

   கொத்தான் (மூ.அ.);; parasitic leafless plant (செ.அக.);.

     [இஞ்சுதல் = சுவறுதல். இஞ்சு – இஞ்சி.]

 இஞ்சி3 iñji, பெ. (n.)

   செம்புருக்கி வார்த்துத் திண்மையாகச் செய்யப்பட்ட மதில்; ramparts of a fort.

     “கொடுங்க ணிஞ்சி” (பதிற்றுப்.16.1.); (செ.அக.);.

     [உல் – ஒல், ஒல்லுதல் = பொருந்துதல். உல் – உர் – உறு. உறுதல் பொருந்துதல், செறிதல், வலியுறுதல். உறு – உறுதி = திண்மை. வலிமை. உர் – உரம் = வலிமை, உறு – உற. உறத்தல் = செறிதல், இறுகுதல்.

     “விறப்பும் உறப்பும் வெறுப்பும் செறிவே” (தொல்.சொல்.345);. உறந்த இஞ்சி இறுகிய மதில். உல் உள் – அள் – செறிவு );திவா.);. வன்மை.(சூடா.); அள்ளல் = நெருக்கம். அள்ளாகுதல் = செறிதல். அள்ளிருள் = செறிந்த இருட்டு. அள்ளுதல் = செறிதல் (சீவக.614); உள் –இள் – (இய்); – (இய்ஞ்சு); – இஞ்சு (ஒ.நோ;

குள் – (குய்); (குய்ஞ்சு); – குஞ்சு புள் பிள் – பிய் – {பிய்ஞ்சு); – பிஞ்சு. கொள் – கொய். பொள் – பொய். இஞ்சுதல் – செறிதல், இறுகுதல், திணிதல், இஞ்சு – இஞ்சி = திணிந்த மதில் வகை.]

பெரும்பாலும் செம்பு புனைந்தியற்றியதாகவும் சிறுபான்மை அரைத்த சாந்திட்டமைத்ததாகவும் பகைவரால் எளிதில் தாக்க முடியாதவாறு திண்ணிதாகக் கட்டப்பட்ட மதில் ஏனை வகை மதில்களிலும் மிக இறுகியிருத்தல் பற்றி இஞ்சி எனப்பட்டது

இஞ்சி இளகியம்

 இஞ்சி இளகியம் iñjiiḷagiyam, பெ.(n.)

   இஞ்சி சேர்த்த இளகியவகை; electuary with ginger as its chief ingredient.

     [இஞ்சி+இளகியம்]

இஞ்சி நீர்

 இஞ்சி நீர் iñjinīr, பெ. (n.)

   இஞ்சிச் சாறு; juice of green ginger. (சா.அக.);.

     [இஞ்சி + நீர்.]

இஞ்சி மாங்காய்

 இஞ்சி மாங்காய் iñjimāṅgāy, பெ. (n.)

இஞ்சி வகை (Madr);, mango.ginger. (செ.அக.);.

ம. இஞ்சி மாங்காய்.

     [இஞ்சி. + மாங்காங்.]

இஞ்சி விறைப்பு

இஞ்சி விறைப்பு iñjiviṟaippu, பெ. (n.)

   1. இஞ்சியை அறுத்துத் தேனிலிட்டுப் பாகம் செய்த ஒரு பாகு; ginger crushed and preserved in honey.

   2. இஞ்சியை வெல்லத்திலிட்டுச் சமைத்த ஒருவகைச் சுண்டாங்கி; boiled with jaggery or sugar and used in food to give it relish, a seasoning for food.

மறுவ. இஞ்சிவடிப்பு, இஞ்சிமுறைப்பா, இஞ்சித் தித்திப்பு.

     [இஞ்சி + விறைப்பு.]

இஞ்சிக்கருக்கு

 இஞ்சிக்கருக்கு iñjikkarukku, பெ. (n.)

   இஞ்சிச் சாற்றைக் கொதிக்க வைத்த குடிநீர்; boiled juice of ginger.

     [இஞ்சி + கருக்கு.]

இஞ்சிக்கிழங்கு

 இஞ்சிக்கிழங்கு iñjikkiḻṅgu, பெ. (n.)

   இஞ்சிவேர்; the tuber of the ginger plant (சா.அக.);.

     [இஞ்சி + கிழங்கு.]

இஞ்சிச் சாறு

 இஞ்சிச் சாறு iñjiccāṟu, பெ. (n.)

   இஞ்சியிலிருந்து எடுக்கும் சாறு; ginger juice.

     [இஞ்சி + சாறு.]

இஞ்சிச்சத்து

 இஞ்சிச்சத்து iñjiccattu, பெ. (n.)

   இஞ்சிக்கிழங்கின் சாரம். இதைச் சாராயத்திலூறவைத்துப் பிறகு அதனின்று சாறு எடுப்பதுண்டு; essence of ginger. This is generally made by steeping it in alchohol (சா.அக.);.

இஞ்சிச்சுண்ணம்

 இஞ்சிச்சுண்ணம் iñjiccuṇṇam, பெ. (n.)

   இஞ்சிச் சாற்றினடியில் நிற்கும் சுண்ணாம்பு; the white chalk – like deposit found of the juice of ginger (சா.அக..);.

     [இஞ்சி + சுண்ணம்.]

இஞ்சித் தீஞ்சாறு

 இஞ்சித் தீஞ்சாறு iñjittīñjāṟu, பெ. (n.)

   இஞ்சிச் சாறும் சருக்கரையுங் கலந்து காய்ச்சி வடித்த ஒருவகைப் பாகு; syrup of ginger (சா.அக.);.

     [இஞ்சி + தீம் + சாறு.]

இஞ்சித்தித்திப்பு

 இஞ்சித்தித்திப்பு iñjittittippu, பெ. (n.)

இஞ்சி விறைப்பு பார்க்க;see inji virai-p-pu.

     [இஞ்சி + தித்திப்பு.]

இஞ்சித்துவையல்

 இஞ்சித்துவையல் iñjittuvaiyal, பெ. (n.)

   இஞ்சியைப் பிற கறிப்பொருள்களோடு சேர்த்தரைத்த ஒரு வகை சுண்டாங்கி; ginger made into a paste by treating it with other condiments for use as a side dish for food. (சா.அக);.

ம. இஞ்சிப்பச்சடி (இஞ்சி. தயிர் போன்றவற்றால் செய்யப்படும் பச்சடி,);

     [இஞ்சி + துவையல்.]

இஞ்சித்தேறு

 இஞ்சித்தேறு iñjittēṟu, பெ. (n.)

   இஞ்சித்துண்டு (யாழ்ப்.);; small piece of green ginger (செ.அக.);.

     [இஞ்சி + தேறு. தெறிதல் – கடித்தல், நறுக்குதல், தெறு – தேறு. (நறுக்கிய துண்டு);.]

இஞ்சினீயர்

 இஞ்சினீயர் iñjiṉīyar, பெ. (n.)

   பொறியாளர்; engineer.

     [E. engineer → த. இஞ்சினீயர்.]

இஞ்சின்

 இஞ்சின் iñjiṉ, பெ. (n.)

   இயந்திரம், பொறி; engine; any complex and powerful machine.

     [E. engine → த. இஞ்சின்.]

இஞ்சிப்பாகு

 இஞ்சிப்பாகு iñjippāku, பெ. (n.)

   இஞ்சிக்கூழ்வகை (வின்.);; a kind of ginger electuary. (செ.அக.);.

     [இஞ்சி + பாகு.]

இஞ்சிப்பாவை

இஞ்சிப்பாவை iñjippāvai, பெ. (n.)

   இஞ்சிக்கிழங்கு (மலைபடு.125, உரை);; ginger in the shape of a doll (செ.அக.);.

இஞ்சிப்புளிப்பு

 இஞ்சிப்புளிப்பு iñjippuḷippu, பெ. (n.)

   காடியிலூற வைத்த இஞ்சி; green ginger preserved in vinegar (சா.அக.);.

     [இஞ்சி + புளிப்பு.]

இஞ்சிமுறைப்பா

 இஞ்சிமுறைப்பா iñjimuṟaippā, பெ. (n.)

இஞ்சி விறைப்பு பார்க்க;see inji viraippu.

     [இஞ்சி + விறைப்பு – இஞ்சிவிறைப்பு → இஞ்சிவிறைப்பா → இஞ்சிமுறைப்பா. யவன (யூனானி); மருத்துவர்கள் இஞ்சி விறைப்பினை இஞ்சி முறைப்பா என வழங்குவது கடுங் கொச்சை வழக்காகும்.]

இஞ்சியடைக்காய்

 இஞ்சியடைக்காய் iñjiyaḍaikkāy, பெ. (n.)

   இஞ்சியை உப்பிலிட்ட ஊறுகாய்; ginger picked in salt.

     [இஞ்சி + அடை + காய்.]

இஞ்சியூறுகாய்

 இஞ்சியூறுகாய் iñjiyūṟukāy, பெ. (n.)

   இஞ்சியுடன் மசாலையுங் கூட்டி எண்ணெய்யிலிட்ட ஊறுகாய்; ginger pickled in gingelly oil (சா.அக);.

     [இஞ்சி + ஊறுகாய்.]

இஞ்சிவடிப்பு

 இஞ்சிவடிப்பு iñjivaḍippu, பெ. (n.)

இஞ்சிவிறைப்பு பார்க்க;see inji-viraippu.

இஞ்சிவேர்

இஞ்சிவேர் iñjivēr, பெ. (n.)

   இஞ்சிக்கிழங்கு, இஞ்சிப்பாவை; ginger root.

   ம., குட., கோத. இஞ்சி;பர். சிங்கிவேர.

 L. Zingiber. Gk Zingiberis, LL, gingiber: OE gingiber. E ginger. Skt Smgavera.

     [இஞ்சு – இஞ்சி + வேர். இஞ்சுதல் நீரை உள்ளிழுத்தல்.]

இஞ்சி என்பது தொன்றுதொட்டுத் தமிழ்நாட்டில் விளைந்து வரும் மருந்துக் கிழங்கு

     “செய்யாப்பாவை வளர்ந்து கவின் முற்றிக் காயங்கொண்டன. இஞ்சி” (மலைபடு.125-6);”இஞ் சிவிராய பைந்தார் பூட்டி” (பதிற்றுப்.42.10);.

     “மஞ்சளும் இஞ்சியும் மயங்களில் வலயத்து” (சிலப்.10.74);.

இஞ்சி, கிறித்துவிற்கு முற்பட்ட பண்டைக்காலத்திலேயே இங்கிருந்து மேனாடுகளுக்கு ஏற்றுமதியான பொருள்களுள் ஒன்றாம்.

     “மேலையாரியச் சொற்களெல்லாம் இஞ்சிவேர் என்னும் தமிழ் வடிவைப் பெரிதும் ஒத்திருக்கின்றன. அவற்றை வழங்குவோரும் அவற்றைத் தமிழ்ச்சொல்லின் திரியென ஒத்துக்கொள்வர். ஆயின் வடமொழியாளரோ இஞ்சிவேர் என்பதைச் சிருங்க வேர் எனத் திரித்து மான்கொம்பு போன்ற வடிவினது என்று வலிந்தும் நலிந்தும் பெருள் கூறி, அதை வடசொல்லாகக் காட்ட முயல்வர்

     ‘ச்ருங்க என்பது கொம்பு என்று மட்டும் பொருள்படும். இஞ்சிவேர் பொதுவாகக் கிளை கிளையாயிருப்பது பற்றி, அதை மான்கொம்பொடு ஒப்பிட்டு மான் என்னும் சொல்லையும் சேர்த்துக் கொண்டது பொருந்துவதன்று. வேர என்பதும் ‘உடம்பு’ என்று பொருள்படுவதேயன்றி வேர் என்னும் பொருள் கொண்டதன்று” (வ.மொ.வ.87); எனப் பாவாணர் தந்துள்ள விளக்கத்தைக் காண்க.

இஞ்சிவேர்ப் புல்

 இஞ்சிவேர்ப் புல் iñjivērppul, பெ. (n.)

   சுக்குநாறிப் புல் (KR.); பார்க்க; ginger-grass (செ.அக.);.

ம. இஞ்சிப்புல்லு.

     [இஞ்சி + வேர் + புல்.]

இஞ்சீல்

 இஞ்சீல் iñjīl, பெ. (n.)

   விவிலிய நூலில் உள்ள புதிய ஏற்பாடு; the Gospel; the New Testament.

     [Ս. Injil → த. இஞ்சீல்.]

இஞ்சு

இஞ்சு1 iñjudal,    15 செ.கு.வி. (v.i.)

   1. சுவறுதல் (இ.வ..);; to be absorbed, as water in the ground.

   2. சுண்டுதல் (இ.வ.);; to evaporate.

   3. இறுகுதல் (வின்.);; to be curdled, as milk, become congealed get thick, as ghee

   க. இங்கு;தெ. இங்கு. இருக, இவுரு, இமுரு, இனுகு, ஈகு, து. இங்கு.

     [இல் – (துளைத்தற் கருத்துவேர்); உட்புகுந்து துணைத்தலும் உள்ளீட்டை வெளியிலிமுத்துத் துளைத்தலும் ஆம். (இல் + து); – இல் + சு – இஞ்சு, இஞ்சுதல் = சுவறுதல், உள்ளீரம் அற்றுப்போதல்.]

 இஞ்சு2 iñjudal,    12 செ.குன்றாவி. (v.t.)

   1. குத்துதல்; to pierce, to stab.

   2. வருத்துதல், துன்புறுத்துதல்; to cause pain, inflict.

     [இல் – இய் – இஞ்சு. ஓ.நோ. துல் – துய் (துயில்); – துஞ்சு.]

இஞ்சுசாரை

 இஞ்சுசாரை iñjucārai, பெ. (n.)

வெல்லம் (இராட்); jiggery. (செ.அக.);.

     [இஞ்சு + (சருக்கரை); சாரை. சருக்கரை – சாரை எனத்திரிந்தது மருஉ. ஒ.நோ. பனை இஞ்சுசாரை → ம. பனஞ்சார சருக்கரை = வட்டவடிவமாக வார்க்கப்படுவது. வார்க்கப்பட்டு ஈரம் குறைந்து கட்டியாதலின் இஞ்சுசாரை எனப்பட்டது.]

இஞ்சுச் சாறு

 இஞ்சுச் சாறு iñjuccāṟu, பெ. (n.)

வெல்லம் jiggery. (சா.அக.);.

     [இஞ்சு + சாரை – இஞ்சிச்சாரை → இஞ்சிச்சாறு.]

இஞ்சை

இஞ்சை iñjai, பெ. (n.)

   1. துன்பம்; injury ham.

   2. கொலை; killing, slaying murder

     “இஞ்சைபொய், களவு” (உத்தரரா. அரக்கர்பிற.26);, (செ.அக.);.

     [இஞ்சு – இஞ்சை → Skt himsa.]

இடகன்

இடகன் iḍagaṉ, பெ. (n.)

   இடப்பக்கத்தவன்; one who is on the left side.

     “குடகர்க்கிடகர்” (பெருந்தொ.1005);. (செ.அக.);.

     [இட → இடகன்.]

இடகலை

 இடகலை iḍagalai, பெ. (n.)

   நிலவின் கலை; phase of the moon.

     [இட + கலை.]

இடக்கண்

இடக்கண் iḍakkaṇ, பெ. (n.)

   இடப்புறக் கண்; left eye.

   2. ஓரப்பார்வை; side glance.

க.எடகண்.

     [இடம் + கண்.]

இடக்கண்ணியன்

இடக்கண்ணியன் iḍakkaṇṇiyaṉ, பெ. (n.)

   அலர்ந்த கண்ணியன்; one wearing wreath on the head.

     “பகலிடக் கண்ணியன் பைதற் குழலன்” (கலி.101);. (சங்.இலக்.சொற்.);.

     [இடம் + கண்ணியன்.]

இடக்கன்

 இடக்கன் iḍakkaṉ, பெ. (n.)

   தாறுமாறு செய்பவன் (வின்.);; rude, disrespectful person.

க. இடக்கன் (பணிக்கு வராதோன். பயனற்றவன்);.

     [இடக்கு → இடக்கன்.]

இடக்கரடக்கல்

இடக்கரடக்கல் iḍakkaraḍakkal, பெ. (n.)

   தகுதிவழக்குகளிலொன்று (நன்.267);. நன்மக்களிடத்தே சொல்லத்தகாத இடக்கரான வார்த்தைகளை மறைத்துப் பிறவற்றால் சொல்வது; euphemism, use of indirect expression to avoid indecent language, one of three tagudi-valakku.

     [இடக்கர் + அடக்கல்.]

இடக்கரடக்கு

 இடக்கரடக்கு iḍakkaraḍakku, பெ. (n.)

இடக்கரடக்கல் பார்க்க;see idakkaradakkal.

     [இடக்கர் + அடக்கு.]

இடக்கரிசை

இடக்கரிசை iḍakkarisai, பெ. (n.)

   செய்யுட்குற்றத்தொன்று (யாப்.525);; defect in versification (செ.அக.);.

     [இடக்கர் + இசை.]

இடக்கர்

இடக்கர்1 iḍakkar, பெ. (n.)

   சொல்லத்தகாத சொல்; indecent words, terms denoting things or actions too obscene to be uttered in good society (செ.அக);.

     [இள் – இள – இட – இடக்கர்.]

 இடக்கர்2 iḍakkar, பெ. (n.)

   தாறுமாறு செய்பவர் (ஆ.அக.);; wrong doer rude person.

     [இடக்கு → இடக்கர்.]

 இடக்கர்3 iḍakkar, பெ. (n.)

   குடம் (பிங்.);; water pot (செ.அக.);.

     [இடு – இடம் (சிறிய பகுதி);. இட – இடக்கர். (குடம்);.]

 இடக்கர்4 iḍakkar, பெ. (n.)

   1. மீதூர்கை (நாநார்த்த.);; being close and crowded. (செ.அக.);.

   2. நெருக்கம் (ஆ.அக.);; compactness.

     [இள் → இடு = நெருங்குதல், நெருக்கம்.]

இடக்கல்

இடக்கல் iḍakkal, பெ. (n.)

   1. தோண்டல்; digging.

   2. கடைக்கால்; foundation (சேரநா.);.

ம. இடக்கல் (அடிக்கல்);.

     [இடக்கு → இடக்கல்.]

இடக்காரை யென்பு

 இடக்காரை யென்பு iḍakkāraiyeṉpu, பெ. (n.)

   இடது சவடி யெலும்பு; left collar-bone (சா.அக.);.

     [இட + காரை + என்பு.]

இடக்கியம்

இடக்கியம் iḍakkiyam, பெ. (n.)

வல்லூறு வடிவம் எழுதிய தேர்க்கொடி (வின்.);

 flag swallow-tail banner standard hoisted on a car.

தெ. டெக்கியமு. க. டெகெ.

     [இடக்கு2 → இடக்கியம்.]

ஏனைப்பறவைகளை எதிர்த்துத் தாக்கும் இயல்புள்ள வல்லூறு என்னும் பறவை வடிவம் எழுதியதேர்க் கொடி.

இடக்கு

இடக்கு1 iḍakkudal, செ.குவி. (v.i.)

   விழுதல்; to fall down fell

     “மேனின் றிடிக்குமேல்” (சினேந்444);.

     [இடக்குதல் = இடத்தல் இடத்தல் + பெயர்த்தல், இடம்பெயர்த்தல், விழுதல்.]

 இடக்கு iḍakku, பெ. (n.)

   1. இடக்கர்; vulgar language.

   2. ஏறுமாறு (கொ.வ.);; cavil, captious speech. 3.

   முரண்செயல்; rudeness, incivility, insubordination, pertinacity, obstinacy, as of a balky horse.

குதிரை இடக்குப்பண்ணுகிறது. (கொ.வ.);. (செ.அக.);.

   4. இழி சொல்; mean word (ஆ.அக.);.

க. எடகு.

     [இட → இடக்கு. இடத்தல் = தோண்டுதல், துருவுதல், துன்புறுத்தல்.]

 இடக்கு3 iḍakku, பெ. (n.)

   1. தடை; obstacle.

   2. வல்லூறு என்னும் பறவை; royal falcon.

     [இட → இடக்கு.]

பறவையைக் குறித்த ‘இடக்கு’ என்னும் சொல் பேச்சு வழக்கில் ‘டேகை’ எனத் திரிந்துள்ளது

இடக்குமடக்கு

இடக்குமடக்கு iḍakkumaḍakku, பெ. (n.)

   1. ஏறுமாறு; cavil, specious objection (செ.அக.);.

   2. அலைக்கழிவு; harassment.

     [இடக்கு + மடக்கு. முடக்கு → மடக்கு.]

இடக்குமுடக்கு

இடக்குமுடக்கு iḍakkumuḍakku, பெ. (n.)

   1. நெருக்கம்; straits, difficult circumstances.

   2. இடர்ப்பாடு; dilemma, predicament.

     [இடக்கு + முடக்கு.]

இடக்கை

இடக்கை1 iḍakkai, பெ. (n.)

   1. இடது கை; left hand.

   2. இடக்கையாற் கொட்டும் ஒரு தோற்கருவி (சிலப்.3,27, உரை);; small drum beaten by the left hand.

     [P]

க. எடகய்.

     [இள + இட + கை = இடக்கை வலக்கையை நோக்க இடதுகை வலிமை குறைந்ததாகக் கருதப்படும் மென்மை நோக்கி, இள + கை = இளக்கை → இடக்கை என வழக்கூன்றியது.]

 இடக்கை2 iḍakkai, பெ. (n.)

   1. ஆமந்திரிகை; musica;

 instrument.

   2. ஒரு நாடு; name of a territory.

     [இட – இடக்கை. இட + அகன்ற.]

 இடக்கை3 iḍakkai, பெ. (n.)

   பெருமுரசு வகை; large double drum (செ.அக.);.

     [இடம் – இடக்கை + வாயகன்ற தோற் கருவி.]

இடக்கைச்சி

 இடக்கைச்சி iḍakkaicci, பெ. (n.)

   ஒரு வகை நாடி; a kind of pulse. (சா.அக.);.

     [இடம் + கை + சி.]

இடக்கையன்

 இடக்கையன் iḍakkaiyaṉ, பெ. (n.)

   இடக் கையால் வேலை செய்பவன்; one who does work by left hand.

   ம. இடத்தன்;க. எடகய்ய.

     [இடம் + கையன்.]

இடக்கையான்

 இடக்கையான் iḍakkaiyāṉ, பெ. (n.)

   அஞ்சாவீரன் (கதி.அக.);; man with undaunted courage.

     [இடக்கு → இடக்கையான்.]

இடங்கசாலை

இடங்கசாலை iḍaṅgacālai, பெ. (n.)

   அக்கசாலை; mint.”வேங்கடாத்திரி தேவமகாராஜய்யனுக்குத் திருவையாறு இடங்க சாலை பாலிக்கையில்” (S.I.I.V. 224); (செ.அக.);.

     [ஒருகா. விடங்கசாலை – இடங்கசாலை. விடங்கன் – சிவன்;

தெய்வச்சிற்பம், தெய்வப்படிமங்கள் செய்யுமிடம்.]

இடங்கட்டுக்கொம்பு

இடங்கட்டுக்கொம்பு iḍaṅgaḍḍukkombu, பெ. (n.)

   மாட்டுக்குற்ற வகை (பெரியமாட்டு.161);; defect in cattle. (செ.அக.);.

     [இட(து); + கட்டுக்கொம்பு.]

இடங்கணம்

இடங்கணம்1 iḍaṅgaṇam, பெ. (n.)

   வெண்காரம் (நன். 273, மயிலை);; borax (செ.அக.);.

     [இள – இடம் + கணம். இடம் + வெண்மை.]

 இடங்கணம்2 iḍaṅgaṇam, பெ. (n.)

   56 நாடுகளுள் ஒன்று; country, one of 56 teyam.

     “கன்னட மிடங்கணம்”, (திருவேங்கட97); (செ.அக.);.

இடங்கன் – இடங்கணம்.]

இடங்கணி

இடங்கணி1 iḍaṅgaṇi, பெ. (n.)

   1. சங்கிலி (திவா.);; chain.

   2. இடங்கணிப்பொறி (சீவக.102, உரை); பார்க்க;see idankani-p-pon.

   3. ஆந்தை; owl (சா.அக.);.

     [இடம் + கணி. இடங்கணி = இடமகலப் பருத்தது.]

 இடங்கணி2 iḍaṅgaṇi, பெ. (n.)

   உளி (வின்.);; chisel. (செ.அக.);.

     [இடுதல் – பிடுதல், பிளத்தல், பிரித்தல். இடு – இட – இடங்குனி – இடங்கணி.]

இடங்கணிப்பொறி

 இடங்கணிப்பொறி iḍaṅgaṇippoṟi, பெ. (n.)

   கோட்டை மதிலில் வைக்கப்படும் இயந்திரங்களுளொன்று; chain instrument mounted on the ramparts of a fort for singing stones at the enemy. advancing to attack the fortification.

     [இடங்கணி + பொறி. இடங்குணி → இடங்கணி.]

இடங்கண்

இடங்கண் iḍaṅgaṇ, பெ. (n.)

   1. பறையின் அகன்ற கண் பகுதி (அக.87);; middle of the membrane of a drum.

   2. அகற்சி, பரப்பு; broad, big in area.

     [இடம் + கண்.]

இடங்கன்சாலை

 இடங்கன்சாலை iṭaṅkaṉcālai, பெ. (n.)

   திருச்செங்கோடு வட்டத்திலுள்ள சிற்றுர்; a village in Tiruchengode Taluk. (இ.வ.);

     [இடங்கன்+சாலை]

இடங்கப்பட்டை

 இடங்கப்பட்டை iḍaṅgappaḍḍai, பெ. (n.)

   இலவங்கப்பட்டை; Cinnamon (சா.அக.);.

     [இலவங்கம் – இலங்கம் – இடங்கம் + பட்டை. (கொ.வ.);.]

இடங்கம்

இடங்கம்1 iḍaṅgam, பெ. (n.)

   உளி (தணிகைப்பு:அகத் 69);; chisel, stone cutter’s chisel. (செ.அக.);.

     [இடுதல் = பிடுதல், பிளத்தல், இடு → இடங்கம்.]

 இடங்கம்2 iḍaṅgam, பெ. (n.)

   1. செம்மணி (இரத்தினம்); நிறுக்கப்பயன்படுவதும் 24 செம்மணி கொண்டதுமான நிறைகல் (சுக்கிரநீதி.189);; weight of 24 iratti for weighing precious stones.

   2. மண் தோண்டும் படை (நாநார்த்த.);; shovel.

   3. வாளினுறை (நாநார்த்த.);; scabbard.

   4. கணைக்கால் (நாநார்த்த.);; ankle.

   5. பொரிகாரம் (நாநார்த்த.);; borax.

   6. சினம் (நாநார்த்த.);; anger.

   7. செருக்கு (நாநார்த்த.);; pride arrogance.

   8. கற்சாணை (நாநார்த்த.);; whetstone.

   9. இலவங்கம், (சா.அக.);; cove.

     [இடங்கம் – பிளக்கும் அல்லது தோண்டுங் கருவி அவ்வடிவிலமைந்த நிறைகல், வெட்டு வாளின் உறை வெட்டுவது போன்று சினத்தின் வெளிப்பாடான செருக்கு.]

இடங்கரம்

 இடங்கரம் iḍaṅgaram, பெ. (n.)

   மகளிர்க்குண்டாகும் மாதவிடாய்த்தீட்டு; defilement from menses (செ.அக);.

     [இடு – இட – இடங்கரம் – பிரிந்து அல்லது விலகியிருத்தற்குக் காரணமான தீட்டுக் காலம்.]

இடங்கருங்குட்டம்

இடங்கருங்குட்டம் iḍaṅgaruṅguḍḍam, பெ. (n.)

   இடம் கரிதாகிய குழி; dark depth”இடங்கருங்குட்டத்துடன் றொக்கோடி” (புறம்.37);.

     [இடம் + கரும் + குட்டம்.]

இடங்கர்

இடங்கர்1 iḍaṅgar, பெ. (n.)

   1. இழிந்தோர் (சூடா.); debauchees, libertines, licentious men.

   2. முதலை வகை crocodile.

     “கொடுந்தாண் முதலையு மிடங்கருங் கராமும்” (குறிஞ்சிப்.257);. (செ.அக.);.

     [இடு – இட – இடங்கர். பிரிக்கும் குணம் கொண்ட கயவர். இழிகுணம் வாய்ந்தோர். வாயகன்ற முதலை.]

 இடங்கர்2 iḍaṅgar, பெ. (n.)

   1. நீர்ச்சால் (திவா.); large bucket.

   2. குடம் (திவா.);; pot (செ.அக.);.

     [இடம் – இடங்கர் = வாயகன்ற கலம்.]

 இடங்கர்3 iḍaṅgar, பெ. (n.)

   சிறுவழி (வின்.);; narrow path (செ.அக.);.

   க. இடுகுரு;தெ. டொங்க.

     [இடு + சிறு. இடு – இடங்கர்.]

இடங்கழி

இடங்கழி1 iḍaṅgaḻittal, செ.குன்றாவி. (v.t.)

   இடத்தினின்று நீக்கப்படுதல்; to be dismissed, to be expelled

     “தடங்கணார்க் கிடங்கழி காமனன்ன காளை” (சீவக.2038); (செ.அக.);.

     [இடம் + கழி.]

 இடங்கழி2 iḍaṅgaḻi, பெ. (n.)

   1. எல்லை கடக்கை; passing beyond bounds;

 overstepping the proper limit.

     “இடங்கழி காமமொ டடங்கா னாகி” (மணி.18.119);.

   2. காம மிகுதி; excess of lust.

     “இடங்கழிமான் மாலையெல்லை” (பு.வெ.12. பெண்பாற்.5);.

   3. மீதூர்கை; being pressed for want of space.

   4. மர வேனம்; wooden vessel for keeping salt or other things.

உப்பிடங்கழி. (கொ.வ.);.

   5. ஒருபடியளவு; measure of capacity = 8 ollocks. (செ.அக.);.

ம. இடங்ஙழி, இடங்ஙாழி.

     [இடம் + கழி. இடம் – இருப்பிடம், எல்லை.]

இடங்கழிநாயனார்

இடங்கழிநாயனார் iḍaṅgaḻināyaṉār, பெ. (n.)

   அறுபத்துமூன்று நாயன்மாருள் ஒருவர் (பெரியபு.);; chief of Könádu, who is canonized and included in the galaxy of 63 saiva saints (செ.அக.);.

     [இடங்கழி2 + நாயனார்.]

இடங்கழிமை

 இடங்கழிமை iḍaṅgaḻimai, பெ. (n.)

இடங்கழி பார்க்க;see idangali.

இடங்கழியர்

இடங்கழியர் iḍaṅgaḻiyar, பெ. (n.)

   1. கயவர் (சூடா.);; lewd persons.

   2. காமுகர் (செ.அக,);; profligates.

     [இடங்கழி + அர்.]

இடங்காரம்

இடங்காரம்1 iḍaṅgāram, பெ. (n.)

   1. மத்தளத்தின் இடப்பக்கம் (வின்.);; left hand side of a double drum the end of which is glued to produce the required tone.

   2. பகம்; fame, reputation (ஆ.அக.);.

ம. இடங்காரம்.

     [இடம் → இடங்காரம்.]

 இடங்காரம்2 iḍaṅgāram, பெ. (n.)

   வில்லின் நாணோசை (சங்.அக.);; twang of a bow-string (செ.அக.);.

     [ஒருகா. இழுங்காரம் – இடங்காரம்.]

இடங்கெட்டபாவி

இடங்கெட்டபாவி iḍaṅgeḍḍapāvi, பெ. (n.)

   1. சீரழிந்தவன் (வின்.);; utterly destitute, miserable wretch (செ.அக);.

   2. ஆதரவற்றவன்; destitute person.

     [இடம் + கெட்ட + பாவி.]

இடங்கெட்டபேச்சு

 இடங்கெட்டபேச்சு iḍaṅgeḍḍapēccu, பெ. (n.)

   ஒழுங்கற்ற சொல் (கொ.வ.);; words spoken without any regard to reason, season, place or person (ஆ.அக.);.

     [இடம் + கெட்ட + பேச்சு.]

இடங்கெட்டவன்

இடங்கெட்டவன் iḍaṅgeḍḍavaṉ, பெ. (n.)

   1. அலைபவன்; wanderer.

   2. கயவன்; dishonest man (செ.அக.);

     [இடம் + கெட்டவன்.]

இடங்கேடு

இடங்கேடு1 iḍaṅāḍu, பெ. (n.)

   1. ஏழ்மை (வின்);; poverty.

   2. தாறுமாறு; inconsistency, incoherence (செ.அக.);.

ம. இடங்கேடு.

     [இடம் + கேடு.]

 இடங்கேடு2 iḍaṅāḍu, பெ. (n.)

   1. நாடுகடத்துகை (இராட்.);; banishment

   2. எக்கச்சக்கம்; awkward predicament

     “இடங்கேடாய்ச் சென்று சிக்கிக்கொண்டாய் சிறுபிள்ளாய்” (தெய்வச் விறலிவிடு.373);. (செ.அக.);.

     [இடம் + கேடு.]

இடங்கை

இடங்கை iḍaṅgai, பெ. (n.)

   1. இடக்கை; left hand.”நெடுங் கோதண்ட மிடங்கையி லெடுத்து” (திருவிளை. யானை.30);.

   2. திரவிடர்களின் மதிப்புரவின் பொருட்டுத் தங்களுக்குள் பகைத்துப் பிரிவுபட்ட வகுப்பினருள் ஒரு பிரிவார்; left hand clan, one of the two clans into which some Dravidian Castes in the Cölä country had separated themselves by about the 11th cAD, such as the artisan against the agricultural – the fued arising chiefly from each claiming certain honours such as riding a horse on marriage occasions etc. (செ.அக.);.

   ம. இடங்கை;   க. எடகெய்;   தெ. எடம: கொலா. எடமகை;குவி. டெம்பா: பட. எடகை.

     [இடம் (இடது); + கை.]

இடங்கொடு-த்தல்

இடங்கொடு-த்தல் iḍaṅgoḍuttal,    4 செ.கு.வி. (v.i.)

   1. கண்டிப்பின்றி நடக்கவிடுதல்; to be indulgent or

 ax to show lenience.

சிறுபிள்ளைகட்கு இடங்கொடுத்தால் தலைமேலேறும்.

   2. பிடிகொடுத்தல்; to yield give in

     “என்னவு மிடங்கொடாம லெதிருற” (பாரத. நிரைமீட்சி.124);. (செ.அக.);

க. எடகொடு.

     [இடம் + கொடு.]

இடங்கொள்(ளு)-தல்

இடங்கொள்(ளு)-தல் iḍaṅgoḷḷudal,    16 செ.கு.வி. (v.i.)

   1. பரவுதல்; to spread from place to place.

     “இடங்கொள் சமயத்தை யெல்லாம்” (திவ். திருவாய் 5.2.4);;

   2. இடம் பற்றுதல்; to have sufficient room.

     “சாது மருண்டால் காடு இடங்கொள்ளாது” (பழ.);.

   3. அகலமாதல்; to

 be

 spacious, vast capacious

     “இடங்கொள் பூதலம்” (நைடத.நகரப்.16); – 7 செ.குன்றாவி (v.t.);

இருப்பிடமாகக் கொள்ளுதல்: take up one’s abode in to accept, as residence, to occupy, as one’s residence.

     “இறைவனே நீ யென்னுட லிடங்கொண்டாய்” (திருவாச. 22.5);. (செ.அக.);.

க. எடெகொள்.

     [இடம் + கொள்.]

இடங்கோலு-தல்

இடங்கோலு-தல் iḍaṅāludal,    16 செ.கு.வி. (v.i.)

   1. ஊன்ற இடஞ்செய்து கொள்ளுதல் (வின்.);; to gain a footing, establish oneself in a place.

   2. முன்னேற்பாடு செய்தல்; to take preparatory measures (செ.அக.);.

     [இடம் + கோலு.]

இடசாரி

 இடசாரி iḍacāri, பெ. (n.)

   இடப்பக்கமாக வரும் நடை; turning or wheeling to the left, as in dancing and in military tactics. (செ.அக.);.

க. எடசாரி (இடத்தினின்று வலத்திற்குச் சுற்றுவது);.

     [இட(து); + சாரி.]

இடச்சுக் குளம்பு

 இடச்சுக் குளம்பு iḍaccukkuḷambu, பெ. (n.)

   நீர் முள்ளி; water-thorn (சா.அக.);

     [இடத்து + குளம்பு.]

இடச்சுரிகை

 இடச்சுரிகை iḍaccurigai, பெ. (n.)

   உடைவாள்; sword or dagger suspended from the girdle.

ம. இடச்கரிக.

     [இடை → இட + கரிகை.]

இடச்சுற்று

இடச்சுற்று iḍaccuṟṟu, பெ. (n.)

   1. இடப்புறமாய்ச் செல்லும் வளைவு; curving to the left as a line on the palm of the hand.

   2. இடஞ்செல்லுகை; going from right to left (செ.அக.);.

     [இடம் (இடது); + சுற்று.]

இடஞ்சுழி

 இடஞ்சுழி iḍañjuḻi, பெ. (n.)

   உடம்பிலே இடப்பக்கம் நோக்கியிருக்குஞ் சுழி; curl that turns to the left as one of the points of a horse, curves that turn to the left, as on the thumb.

     [இடம் (இடது); + சுழி.]

இடது

 இடது iḍadu, கு.பெ.எ. (adj.)

   இடப்புறமான (கொ.வ.);; left (செ. அக.);.

   ம. இடது;   க. எட;   கோத. எட. துட. ஒட. குட. எடதெ;   து. எட. யட;   கொலா. எடம;   நா. டாவ;   பர். எம்ப்ரி;   கோண். டாவா;குவி. டெம்ப.

     [இடம் → இடது.]

இடது கன்னம்

இடது கன்னம் iḍadugaṉṉam, பெ. (n.)

   எழுவோரையின் (இலக்கினத்தின்); பதினோராமிடம். (சங்.அக.);; the 11th house from the ascendant (செ.அக.);.

     [இடம் → இடது + கன்னம்.]

இடது கை

 இடது கை iḍadugai, பெ. (n.)

இடக்கை பார்க்க;see idakkai.

     [இடம் – இடது + கை.]

இடது கைக்காரன்

 இடது கைக்காரன் iḍadugaiggāraṉ, பெ. (n.)

   இடக்கை வழக்கமுள்ளோன்; left handed man (செ.அக.);.

க. எடச.

     [இடது + கை + காரன்.]

இடதுகைப் படுக்கை

 இடதுகைப் படுக்கை iḍadugaippaḍuggai, பெ. (n.)

   இடதுகைப் பக்கமாக ஒருக்கணித் துறங்கல்; lying resting the body on the left side (சா.அக.);.

     [இடது + கை + படுக்கை.]

இடதுகைவெட்டு

இடதுகைவெட்டு iḍadugaiveḍḍu, பெ. (n.)

   நாணயக் குற்ற வகை (சரவண.பணவிடு.67);; blemish in coins (செ.அக.);.

     [இடது + கை + வெட்டு.]

இடதுசெவி

இடதுசெவி iḍadusevi, பெ. (n.)

   எழுவோரையின் (இலக்கினத்தின்); பதினோராமிடம் (சங்.அக.);;   11th house from the ascendant (செ.அக.);.

     [இடம் – இடது + செவி.]

இடதுநாளக்குழல்

 இடதுநாளக்குழல் iḍadunāḷakkuḻl, பெ. (n.)

   இடப் பக்கம் ஒடும் சாரி அரத்தக் குழாய்; left dated channel for venous blood – left sinus venosus (சா.அக.);.

     [இடது + நாளம் + குழல்.]

இடத்தகைவு

 இடத்தகைவு iḍattagaivu, பெ. (n.)

   எதிர்வழக்காளியைக் குறிப்பிட்ட இடம் விட்டுப்போகாமல் வழக்காளி அரசாணை சொல்லித் தடுக்கை (சங்.அக.);; prohibition by the complainant in the name of the King, a defendant’s leaving a prescribed location (செ.அக.);.

     [இடம் + தகைவு.]

இடத்தல்

இடத்தல் iḍattal,    3 செ.கு.வி. (v.i.)

   1. பிளவுபடுதல்; to be cracked, broken

     “களிறு வழங்கலி னிடந்தமன்” (கூர்மபு.40);.

   2. உரிதல்; to

 be

 stripped off. as the outer covering.

     ‘முத்துக்கள் தோல்தேய்ந்தனவும் தோலிடந்தனவும்’ (S.I.I.93,49); – செ.குன்றாவி. (v.t.);

   1. தோண்டுதல் (பெரியபு.கண்ணப்.183);; to dig. scoop out hollow ம. இட.

   2. பிளத்தல்; to force away through, as an elephant in battle;

 to root up, as a hog, to gore, as a bull.

     “பொன்பெயரோன் மார்பிடந்த” (திவ்.இயற்.1.23);.

   3. பெயர்த்தல்; to dislodge, as a stone, to throw up, as clods in a furrow.

     “எயிற்றுப் படையாலிடந்து” (புவெ.6.13);.

   4. குத்தியெடுத்தல், (திவ். இயற்.1.2);; to fork.

   5. உரித்தல் (திவா.);; to peel off (செ.அக.);.

     [இல் – துளைத்தற் கருத்துவேர். இல் → இள் → இள → இட. இடத்தல்.]

இடத்து

 இடத்து iḍattu, இடை. (part)

   இடத்தில் என்ற பொருளில் பெயரெச்சம் சுட்டு வினாவுடன் இணைந்துவரும் இடைச்சொல்; at the place, at the (எ-டு); அவ்விடத்து. எவ்விடத்து.

ம. இடத்து.

     [இடம் → இடத்து.]

இடத்து மாடு

 இடத்து மாடு iḍattumāḍu, பெ. (n.)

   நுகத்தின் இடப்பக்கத்து எருது; ox tied to the left side of the yoke. (செ.அக.);.

மறுவ. இடத்தை.

     [இடது + மாடு = இடத்துமாடு.]

இடத்துய்த்தகறல்

இடத்துய்த்தகறல் iḍattuyttagaṟal, பெ. (n.)

   தலை மகளை இடத்துய்த்த தோழி தலைமகன் எதிர்ப்படுவனென்று கருதித் தானீங்குதலைக் கூறும் அகத்துறை (களவியற்.73);; theme which describes the maid leaving the heroine alone to meet the hero, in the appointed place.

     [இடத்து + உய்த்து + அகறல்.]

இடத்துய்த்தல்

இடத்துய்த்தல் iḍattuyttal, பெ. (n.)

   தோழி தலைமகற்கு இடங்காட்டி மீண்டுந் தலைமகளுழைச் சென்று அவளைத் தலைமகனின்றவிடத்துச்செலவிடுக்கும் அகத்துறை (களவியற்.72);; theme in which the maid indicates to the hero, the appointed place of meeting and then leads the heroine to that place.

     [இடத்து + உய்த்தல்.]

இடத்துறை

 இடத்துறை iḍattuṟai, பெ. (n.)

   காசாகச் செலுத்தும் வரி; ancient tax in money.

     [ஒருகா. இடத்து + உறு – இடத்துறு → இடத்துறி → இடத்துறை பொற்காசு அச்சிடப்படும் அக்கசாலையில் காசாகவே பெறப்படும் வழக்கம் நோக்கிப் பெற்ற பெயராகலாம்.]

இடத்தை

 இடத்தை iḍattai, பெ. (n.)

இடத்து மாடு பார்க்க;see Idattu mädu.

     [இடது → இடத்தை.]

இடத்தையச்சொல்

 இடத்தையச்சொல் iḍattaiyaccol, பெ. (n.)

   இடத்தை ஐயப்படுத்துஞ் சொற்கள்;   அவை, யாங்கு, யாண்டு, யாங்ஙனம் முதலியன; interrogative words which denote place (ஆ.அக.);.

     [இடம் → இடத்து + ஐயம் + சொல்.]

இடநாகம்

 இடநாகம் iḍanākam, பெ. (n.)

   அடைகாக்கும் நல்ல பாம்பு (சங்.அக.);; incubating cobra. (செ.அக.);.

     [இடம் + நாகம்.]

இடநாள்

இடநாள் iḍanāḷ, பெ. (n.)

   உருள், கொடுநுகம், சுளகு, முக்கோல் (உரோகிணி, மகம், விசாகம், திருவோணம்); முதலாக மும்மூன்று விண்மீன்கள். (விதான. கால சக்.2);; technical term referring to the set of three naksatras beginning with each of the 4th, 10th, 16th or 22nd asterism for calculation (செ.அக.);.

     [இடம் + நாள்.]

இடநிலைப்பாலை

இடநிலைப்பாலை iḍanilaippālai, பெ. (n.)

   பண் வகை. (சிலப்.10 கட்டுரை.14);; class of ancient melody-types (செ.அக.);.

     [இடை + நிலை + பாலை.]

இடந்தலைப்படல்

 இடந்தலைப்படல் iḍandalaippaḍal, பெ. (n.)

   ஒன்று கூடுதல்; to join with, to meet.

     [இடம் + தலைப்படல்.]

இடந்தலைப்பாடு

இடந்தலைப்பாடு iḍandalaippāḍu, பெ. (n.)

   இயற்கைப் புணர்ச்சி நிகழ்ந்த இடத்தில் இரண்டாமுறை தலைவனுந் தலைவியுங் கூடுகை (தொல்.பொ.498, உரை.);; second meeting of the lowers in the same place where they first had intercourse.

     [இடம் + தலைப்பாடு.]

இடந்துடி-த்தல்

இடந்துடி-த்தல் iḍanduḍittal,    4 செ.கு.வி. (v.i.)

   இடக் கண் இடத்தோள் துடித்தல் (கம்பரா.காட்சி.35);;   10 have twitching on the left side, referring to the muscles of the eyes and the shoulder, considered to forebode good if in women and evil if in men, the reverse being predicted of the twitching on the right side.

     [இடம் + துடித்தல்.]

இடனறி-தல்

இடனறி-தல் iḍaṉaṟidal,    2 செ.கு.வி. (v.i.)

   அரசன் வினை செய்தற்குரிய இடத்தைத் தெரிகை (குறள் அதி.50);; knowing the most suitable strategic place for commencing hostilities against an enemy (செ.அக.);.

     [இடம் → இடன் + அறிதல்.]

இடனறிந்தொழுகு-தல்

இடனறிந்தொழுகு-தல் iḍaṉaṟindoḻugudal,    9 செ.கு.வி. (v.i.)

   1. வணிகரெண் குணங்களுளொன்று (பிங்..);; adopting the customes and usages of different countries, a desirable virtue in merchants trading with many countries.

   2. இருக்கும் இடம் நோக்கி அதற்கிசைய நடக்கை; adjusting one’s conduct to one’s environment (செ.அக.);.

     [இடம் → இடன் + அறிந்து + ஒழுகல்.]

இடனில் சிறுபுறம்

இடனில் சிறுபுறம் iḍaṉilciṟubuṟam, பெ. (n.)

   அகற்சி யில்லாத பிடரி; close set mane.”இடனில் சிறுபுறத்தி ழையொடு துயல் வர” (அகம்.142);.

     [இடம் = இடன் + இல் + சிறுபுறம்.]

இடன்

இடன் iḍaṉ, பெ. (n.)

   1. அகலம்; wide space.

     “இடனுடை வரைப்பு” (பொருந.65);.

   2. நல்ல காலம்; auspicious me good time.

     “திண்டேர் களையினோ விடனே” (கலித்.121);.

   3. செல்வம் (ஆ.அக.);; wealth.

   4. இடம் (ஆ.அக);; space.

   5. இடப்பக்கத்திலிருப்பவன் (ஆ.அக.);; one who is on left side.

     [இடம் → இடன்.]

இடபகிரி

இடபகிரி iḍabagiri, பெ. (n.)

   அழகர் மலை (அழகர்கல. 33);; Alagar malai near Madurai.

     [Skt. rsabha+giri → த. இடபம்.]

இடபக்கொடியோன்

 இடபக்கொடியோன் iḍabakkoḍiyōṉ, பெ. (n.)

   கொடியில் எருதைச் சின்னமாகக் கொண்ட சிவன்; Siva, who has the figure of a bull on his banner.

த.வ. ஏற்றுக்கொடியோன்.

     [இடபம் + கொடியோன்.]

     [Skt. rsabha → த. இடம்.]

இடபதரன்

இடபதரன் iḍabadaraṉ, பெ. (n.)

   உருத்திரர்களுள் ஒருவர் (சி.போ.பா. 2 : 3, பக். 212);; a Rudra.

     [Skt. Rsabhadhara → த. இடபதரன்.]

இடபதீபம்

இடபதீபம் iḍabatībam, பெ. (n.)

   கோயிலில் கடவுள் முன்பு காட்டப்படும் ஒப்பனை விளக்கு வகை (தமிழ்விடு. 233);; a kind of lamp waved before idols.

     [Skt. rsabha+dspa → ரிஷபதீபம் → த. இடபதிபம்.]

இடபன்

இடபன் iḍabaṉ, பெ. (n.)

   காமநூல் கூறும் மூன்று பிரிவு ஆடவருள் ஒரு பிரிவினன் (கல்லா. 7, மயிலே.);.);; man of bull-like nature; one of three adavar-sadi.

த.வ. ஏற்றன்.

     [Skt. rsabha → த. இடபன்.]

ஆடவர் இனம் : 1. சசன், 2. இடபன், 3. அச்சுவன்.

இடபம்

இடபம் iḍabam, பெ. (n.)

   1. ஏறு (திவா.);; bull.

   2. பொலியெருது (பிங்.);; bull kept for breeding.

   3. நந்தி (பிங்.);; Nandi, the chiefattendant of Siva, so called as he has a face resembling that of a bull.

   4. இரண்டாம் ஓரை (திவா.);; name of the second sign of the Zodiac Taurus.

   5. விடை மாதம் (வைகாசி); (வைகாசி. மணிமே. 15:23);; Tamil second month.

த.வ. காளை.

     [Skt. isabha → ரிஷபம் → த. இடபம்.]

இடபவாகனன்

 இடபவாகனன் iḍabavākaṉaṉ, பெ. (n.)

   எருதை ஊர்தியாகக் கொண்ட சிவன்; Siva, who rides on a bull.

த.வ. ஏறுர்ந்தோன்.

     [Skt. rsabha+váhanan → த. இடபவாகனன்).]

இடபவீதி

 இடபவீதி iḍabavīti, பெ. (n.)

   மீனம், மேழம், கன்னி, துலை என்னும் ஒரைகளடங்கிய கதிரவன் இயங்கும் நெறி; trisection of the Zodiac, embracing the four signs, Pisces, Aries, Virgo, and Libra.

த.வ. ஞாயிற்றுச்சாலை.

     [Skt. rsabha+vithi → த. இடவீதி.]

இடபாரூடர்

இடபாரூடர் iḍapārūḍar, பெ. (n.)

   சிவ வடிவங்களுள் ஒன்று; Siva, in one of His aspects, appearing as mounted on the sacred bull.

     “பிரமகபாலத்தர் மறைபேசு மிடபாரூடர்” (திருநெல். பு. அறம்வளர். 11);.

த.வ. ஏறுார்ந்த சிவன்.

     [Skt. rsabha + årügha → த. இடபாரூடர்.]

இடப்படி

 இடப்படி iḍappaḍi, பெ. (n.)

   ஒர் அடிவைப்பு; length of a step, pace (செ.அக.);.

     [இடம் + படி.]

இடப்பு

இடப்பு iḍappu, பெ. (n.)

   1. பிளப்பு; large clef gap.

   2. பெயர்த்த மண்கட்டி (வின்.);; clod of earth thrown out by digging or ploughing.

     [இட → இடப்பு. இடத்தல் – பிளத்தல், தோண்டுதல், பெயர்த்தல்.]

இடப்புக்கால்

 இடப்புக்கால் iḍappukkāl, பெ. (n.)

அகல வைத்த கால் (வின்.); legs spread apart (செ.அக.);.

     [இடத்தல் = பிளத்தல், விரித்தல் இட + இடப்பு + கால்.]

இடப்புறம்

 இடப்புறம் iḍappuṟam, பெ. (n.)

   இடது பக்கம்; left side (செ.அக.);.

க. எடகடெ

     [இடம் + புறம்.]

இடப்பெயர்

இடப்பெயர் iḍappeyar, பெ. (n.)

இடத்தைக் குறிக்கும் பெயர்ச்சொல் (நன். 132);

 noun denoting place (செ.அக.);.

     [இடம் + பெயர்.]

இடப்பொருள்

இடப்பொருள் iḍapporuḷ, பெ. (n.)

   ஏழாம் வேற்றுமைப்பொருள் (நன்.302);; sense of the locative (செ.அக.);.

     [இடம் + பொருள்.]

இடமன்

 இடமன் iḍamaṉ, பெ. (n.)

   இடப்புறம்; left side (இ.வ.);.

க. எடமக்குலு.

     [இடம் → இடமன்.]

இடமயக்கம்

இடமயக்கம் iḍamayakkam, பெ. (n.)

   1. ஒன்றற்குரிய உரிப்பொருளைப் பிறிதோரிடத்திற்குரியதாக கூறும் இடமலைவு (வின்.);; fault in poetry, which consists in the ascription of a wrong place of origin to natural products.

   2. ஓரிடத்திற்குரியதை மற்றோரிடத்ததாகக் கூறும் இலக்கண வழு (நன்.374 மயிலை);; defect which consists in the wrong use of persons.

     [இடம் + மயக்கம்.]

இடமற்றபிள்ளை

 இடமற்றபிள்ளை iḍamaṟṟabiḷḷai, பெ. (n.)

   நல்வினை (பாக்கியம்); அற்ற பிள்ளை (வின்.);; child without inheritance or fortune (செ.அக.);.

     [இடம் + அற்ற + பிள்ளை.]

இடமலைவமைதி

இடமலைவமைதி iḍamalaivamaidi, பெ. (n.)

   இட மலைவாகிய வழுவை அமைத்துக்கொள்ளுகை; poetical licence which allows ‘idamalaivu’ when it adds to the beauty.

     “மரகதச் சோதியுடன் மாணிக்கச் சோதி இருமருங்குஞ் சேர்ந்தரிவை பாகன் – உருவ மலைக்கு மகில்கமந்தாரத்து வான்கோ டலைத்து வரும்பொன்னி யாறு” – இதில் காவிரியுட் பிற மலைக்கும் பிற நாட்டிற்குமுரிய மரகதமும், மாணிக்கமும், சந்தனமும் அலைத்து வருகின்றது என்றமையான் இடமலை வமைதி யாயிற்று. (தண்டி.125. உரை);.

     [இடம் + மலைவு + அமைதி.]

இடமலைவு

இடமலைவு iḍamalaivu, பெ. (n.)

   ஓரிடத்துப் பொருளை மற்றோரிடத்துள்ளதாகச் சொல்லும் வழு; fault in poetry, which ascribes products to places where they are not found as pears to the mountain or gold to the sea

     “தொன்மலையின் மான்மதமும்” (தண்டி. 119.உரை);.

     [இடம் + மலைவு.]

இடமானம்

இடமானம்1 iḍamāṉam, பெ. (n.)

   1. அகலம்; spaciousness இடமான வீடு.

   2. மாளிகை; spacious place, magnificent house.

     [இடம் → இடமானம். மானம் = பெயரீறு. ஓ.நோ. தேய் – தேய்மானம்.]

 இடமானம்2 iḍamāṉam, பெ. (n.)

   பறைவகை. (திரு நெல்.பு.விட்டுனு.25);; double drum carried on the back of an animal (செ.அக.);.

தெ. டமாரமு. டமாய, டம்மாரமு.

     [இடம் + மானம் = இடமானம். ஒருகா. வாயகன்ற பறை.]

இடமிடு-தல்

இடமிடு-தல் iḍamiḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   பருத்தல்; to become large in size.

இந்தப்புண் இடமிட்டுக்கொண்டு வருகிறது (உவ.);.

     [இடம் + இடு.]

இடமிடைஞ்சல்

 இடமிடைஞ்சல் iḍamiḍaiñjal, பெ. (n.)

   நெருக்கடி (கொ.வ.);; lack of room, crowdedness for want of space. (செ.அக.);.

ம. இடகூடுக.

     [இடம் + இடைஞ்சல்.]

இடமுடங்கு

 இடமுடங்கு iḍamuḍaṅgu, பெ. (n.)

இடமிடைஞ்சல் பார்க்க;see idamidairījal.

     [இடம் + முடங்கு.]

இடமுறை

 இடமுறை iṭamuṟai, பெ. (n.)

   வட்டப் பாலையில் ஏழுபாலைகள் பிறக்கின்ற முறை; a feature in musical note.

     [இடம்+முறை]

இடமை

இடமை iḍamai, பெ. (n.)

   1. நிலம்; earth.

   2. இடப்பக்கம்; left side.

   3. இடையின எழுத்துகள்; Tamil letters called idaiyinam

     “ஆவி இடைமை இடம் மிடறாகும்” (நன்.);.

     [இடம் → இடமை;

இடைமை → இடமை.]

இடம்

இடம்1 iḍam, பெ. (n.)

   1. தாவு; place, room, site spot situation

   2. சூழல்; context இடத்தைப் பார்த்துப் பொருள் கொள்க.

   3. வீடு (திவா.);; house residence.

   4. காரணம்; ground reason அப்படிச் சொல்லுவதற்கு இடமுண்டா?

   5. வானம் (திவா);; sky, heaven.

   6. அகலம் (சூடா.);; breadth, width, expanse.

   7. இடப்பக்கம்; left side. பாதையில் இடம் செல்க (உவ.);.

   8. அளவு; measure, degree, limit.

     “உகலிடந் தான்சென்று” (திருக்கோ.42);.

   9. ஆடையின் அகலமுழம் (இ.வ.);; cubit in measuring the width of cloth.

   10. பொழுது; time.

     “அகலிரு விகம்பிற் பகலிடந் தரீஇயர்” (பதிற்றுப் 52.28);.

   11. ஏற்ற சமயம்; fitting time, opportunity.

     “நாடொறு மிடம்பெறாமல்” (திருவாலவா.35.8);.

   12. செல்வம்; wealth, affluence, prosperity.

     “இடமில்லாக் காலுமிரவொல்லாச் சால்பு” (குறள் 1064);.

   13. வலிமை (பிங்.);; ability power.

   14. மூவகையிடம் (நன்.259);; person, three in number, viz,

தன்மை முன்னிலை, படர்க்கை.

   15. படுக்கை (பிங்.);; bed.

   16. தொலைவு; distance. திருநாவாய் எத்தனை இடம் போகும்? (ஈடு,9.8.1); – இடை (part); ஏழனுருபு (நன்.302);;

 sign of the locative, as in

அவனிடம் (செ.அக.);.

   ம. இடம்: க. இடெ. எட;   தெ. எட. எடமு: கோத. எடம். துட. இடன்;குட. எடெ.

     [இல் → இள் → இடு → இடம் = இடைவெளி பக்கம்.]

   இடு → இடம். இடுதல் – வைத்தல். இடம் = ஒன்றை வைத்துக் கொள்ளுவதற்குரிய இருப்பிடம் இடு = ஒடுங்குதல், சிறுத்தல். ஓரிடத்தில் ஒரு பொருளை ஒடுக்கமாக ஒடுக்கிச் செப்பமாக நிலைபெறுத்துதல்;அங்ஙனம் வைத்தற்குரிய இடம். கக்கத்தில் இடுக்கிக் கொள்ளவும் குழந்தையை இடப்பக்கத்து இடுப்பில் இருத்திக்கொள்ளவும் உடம்பின் வலப் பகுதியை விட இடப் பகுதி இடமாகப் பயன்படுதலின் இடத்தோள் இடது இடுப்பு இவற்றுக்கு உரிய இடமாயின. தோள் கொடுத்துத் தூக்குதற்கு இடத்தோளே பயன்படுதல் காண்க. வலக்கை வலிமை (வலம்); யுடையதாதலின் வலம் – அப்பகுதி முழுவதும் வலப்பக்கம் ஆயிற்று.

இடம். வினையடியாக ஒரு பொருளை வைத்தற்குரிய இடத்தையும் பெயரடியாக இடைவெளி. பக்கம். அகலம் ஆகிய பொருள்களையும் குறித்தது.

 இடம்2 iḍam, இடை (part)

   உடன் ஒடு என்ற பொருளில் வரும் இடைச் சொல்; to with.

ம. இடம்.

     [இடு → இடம்.]

 இடம்3 iḍam, பெ. (n.)

   ஒரை (இராசி); (நாநார்த்த.);; sign of the Zodiac. (செ.அக.);.

     [இடு → இடம் = விண்மீன்கள் பல இருத்தற்கு இடமாக இருப்பது.]

இடம் பண்ணு-தல்

இடம் பண்ணு-தல் iḍambaṇṇudal,    15 செ.கு.வி. (v.i.)

   பூசை, உணவு முதலியவற்றிற்கென்று இடத்தைத் தூய்மை செய்தல், (கொ.வ.);; to purity a place by daubing it with cowdung solution, as for worship, or by water before spreading the leaf for meal.

க. எடெமாடு.

     [இடம் – இடைவெளி, அகலம் இடம் + பண்ணு.]

இடம் வருதல்

 இடம் வருதல் iḍamvarudal, பெ. (n.)

   வலத்தினின்று இடம் நோக்கிச் சுற்றுதல்; to go round in the anti-clockwise direction.

ம. இடத்து வய்க்குக.

     [இடம் + வருதல்.]

இடம்பகம்

இடம்பகம் iḍambagam, பெ. (n.)

   பேய்; devil.

     “இடம்பக மகளிலள்” (நீலகேசி.64);. (செ.அக.);.

     [இடம்பு → இடம்பகம்.]

இடம்படு-தல்

இடம்படு-தல் iḍambaḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   1. அகலித்தல்; to be broad, be spacious, to cover a vast extent.

     “இடம்பட விடெடேல்” (ஆத்திகுடி);.

   2. மிகுதியாதல்; to be intense, outreach.

     “இடம்பட மெய்ஞ்ஞானங் கற்பினும்” (நாலடி.116);.

   3. விரிதல்; to expand (செ.அக.);.

ம. இடம்பெடுக.

     [இடம் + படு. படுதல் = உண்டாதல். இடம் அகலம்.]

இடம்பன்

இடம்பன் iḍambaṉ, பெ. (n.)

   பகட்டுள்ளவன்; pompous showy fellow, coxcomb.

     “இடம்பனை யழைத்து” (பிரபோத.24.67);.

இடம்பன் → Skt. dambhaka.

     [இடம் → இடம்பம் → இடம்பன்.]

இடம்பம்

 இடம்பம் iḍambam, பெ. (n.)

   பகட்டு; pomposity, ostentation (செ.அக.);.

     [இடம் → இடம்பம் → Skt. damba இடம் – அகலம் இடம்பம் பெருமை. வீம்பு.]

இடம்பரம்

இடம்பரம் iḍambaram, பெ. (n.)

   1. இடப்பக்கம்; left side.

   2. வழிவகை; method, procedure (ஆ.அக.);.

     [இடம் → இடம்பரம்.]

இடம்பாடிகள்

 இடம்பாடிகள் iṭampāṭikaḷ, பெ. (n.)

   வில்லுப்பாட்டு பாடுவோரில் ஒரு பிரிவினர்; a sect of singers of bow song.

     [இடம்+பாடி]

இடம்பாடு

இடம்பாடு iḍambāḍu, பெ. (n.)

   1. அகலம் (வின்);; width

   2. செல்வம்; wealth

இடம்பாடுள்ளவன் அவன் (இராட்.);.

   3. பருமை; mass, bulkiness.

   4. விரிவு; expansion, extensiveness (ஆ.அக);.

ம. இடம்பாடு.

     [இடம் + படு = இடம்படு → இடம்பாடு.]

இடம்பார்-த்தல்

இடம்பார்-த்தல் iḍambārttal,    4 செ.கு.வி. (v.i.)

   1. இடந்தேடுதல்; to seek a place, secure an abode find a situation.

   2. சமயமறிதல்; to seek an opportunity. wait for suitable occasion (செ.அக.);.

க. எடெநோடு.

     [இடம் + பார்.]

இடம்பு

இடம்பு1 iḍambudal,    15 செ.கு.வி. (vi.)

   1. விலகுதல் (யாழ்ப்.);; to keep aloof, as persons who are not on good terms with each other. (செ.அக.);.

   2. அகலித்தல்; a widen.

   3. பெருமை பேசுதல்; to boast.

ம. இடம்பல் (பகைமை);.

     [இடம் → இடம்பு = விலகு. இடம்புதல் = விலகுதல், அகலித்தல், பெரிதாக்குதல்.]

 இடம்பு2 iḍambu, பெ. (n.)

   அகலம்; width.

     [இட → இடம்பு.]

இடம்புரி

இடம்புரி1 iḍamburi, பெ. (n.)

   1. இடப்புறம் சுழியுள்ள சங்கு (பிங்.);; common chank with spiral curving to the left.

   2. இடப்பக்கந் திரிந்த கயிறு; rope twisted to the left (செ.அக.);.

ம. இடிம்புரி (idampuri); க. எடெமுரி. எடெமுரிசங்கு.

     [இடம் + புரி. புரிதல் = வளைதல், இடம் = இடப்பக்கம்.]

 இடம்புரி2 iḍamburi, பெ. (n.)

   பூடுவகை (வின்.);; medicinal shrub (செ.அக.);.

இடம்புரிக்காய்

 இடம்புரிக்காய் iḍamburikkāy, பெ. (n.)

   திருகுகாய்; Indian screw tree. It is opposed to twisted horn (சா.அக.);.

     [இடம் + புரி + காய்.]

இடம்பூணி

இடம்பூணி iḍambūṇi, பெ. (n.)

   நுகத்தின் இடப் பக்கத்து மாடு; ox tied to the left side of the yoke.

     “இடம்பூணி யென்னாவின் கன்று அன்று” (நேமி. சொல்.5. உரை);. (செ.அக.);.

   2. நுகத்தின் இடப் பக்கம்; left side of a yoke (கருநா.);.

க. எடெகோலு.

     [இடம் + பூண் + இ.]

இடம்பெறவிரு-த்தல்

இடம்பெறவிரு-த்தல் iḍambeṟaviruttal,    3 செ.கு.வி (v.i.)

   ஓலக்கமிருத்தல்; to give audience in the court

     “இடம்பெறவிருந்த நல்லிமயத்துள்” (திவ்.பெரியதி 1,2,1); (செ.அக.);.

     [இடம் + பெற + இருத்தல் இடம் = அகலம், பெருமை உயர்வு.]

இடரெட்டு

இடரெட்டு iḍareḍḍu, பெ. (n.)

   நாட்டிற்கு வரக்கூடிய எண்வகைத்தீமை;   இடரெட்டாவன: விட்டில், கிளி, நால்வாய், வேற்றரசு, தன்னரசு, நட்டம், பெரும்புயல், காற்று (பு-வெ.9.17. உரை);; eight forms of affliction that may afflict a country like locust, parrot, elephant, foreign royal tyranny, native royal tyranny, loss. rain, strong wind (செ.அக.);.

     [இடர் + எட்டு.]

இடர்

இடர் iḍar, பெ. (n.)

   1. வருத்தம்; affliction, distress. trouble

     “எண்கணிடரினும் பெரிதாலெவ்வம்” (பு.வெ. 11.7);.

   2. வறுமை; poverty, pinch of poverty.

     “இன்றுபோ மெங்கட் கிடர்” (பு.வெ.832);

   3. ஏதம்; jeopardy.

   ம. இடர்;   க. இடரு;தெ. எடரு.

     [இல் → இள் → இடு = குத்துதல், துளைத்தல், பெயர்த்தல்.

இடு → இடல் → இடர் + துன்பம்.]

இடர்ப்படு-தல்

இடர்ப்படு-தல் iḍarppaḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   1. வருத்தமுறுதல்; to suffer affiction.

   2. நலிந்துகொள்ளுதல்; to labour hard, to put forth considerable effort as in comprehending the sense of a passage.

இடர்ப்பட்டுப் பொருள் கண்டார். (உ.வ.);.

க. எடர்பாடு.

     [இடு → இடல் → இடர் + படு.]

இடர்ப்பாடு

இடர்ப்பாடு iḍarppāḍu, பெ. (n.)

   துன்புறுகை; experiencing affliction or a reverse of fortune.

     “இடுக்க னிடர்ப்பா டுடைத்து” (குறள் 624);.

     [இடு → இடல் → இடர் + படு. இடர்ப்படு → இடர்ப்பாடு.]

இடர்ப்பில்லம்

 இடர்ப்பில்லம் iḍarppillam, பெ. (n.)

   கண்ணோய் வகை (சீவரட்.);; curable kind of blear-eye. (செ.அக.);.

     [இடர் + பில்லம்.]

இடறல்

இடறல் iḍaṟal, பெ. (n.)

   கால்தடுக்குகை; slumping.

   2. தடை; obstacle, impediment.

   3. பழிச்சொல் (ஆ.அக.);; scandal.”இடறலுண்டாக்கினான்” (இராட்.); (செ.அக.);.

   4. குறைகாணல்; fault finding. (ஆ.அக.);.

   5. பதறல்; faltering perturbation (சேரநா.);.

   ம. இடர்ச்ச;   க. எடரு, இடரு;து. எட்டுனி.

     [இடறுதல் = பெயர்தல், நிலை தடுமாறல், இடலல் – இடறல்.]

இடறி

 இடறி iḍaṟi, பெ. (n.)

   யானை; elephant (சாஅக.);.

     [இடறுதல் = பெயர்த்தல், பிளத்தல், உடைத்தல். இடறு → இடறி.]

இடறு

இடறு1 iḍaṟudal,    9 செ.கு.வி. (v.i.)

   1. கால்தடுக்குதல்; to stumble, strike one’s foot against.

இடறின காலிலேயே இடறுகிறது. (உ.வ.);.

   2. துன்பப்படுதல்; to be afflicted, troubled

     “ஈமினெமக்கொரு

துற்றென்றிடறுவர்”

   1. எற்றுதல் (பெரியபு.திருநாவுக். 110);; lo strike against, kick to kick off, as the elephant does the head of a criminal.

   3. மீறுதல்; to transgress

     “எண்டரு நெறிமுறை யிடறு கீசகன்” (பாரத.கீசகன்.33);.

   4. ஊறுபடுத்துதல்;   10 wound”ஊனிடறு வாளிகள்” (பாரத.மணிமான்.30);.

   5. தடுத்தல்; to obstruct hinder.

     “இடையிலேன் வீர்கா ளிடறேன்மினே” (தேவா.717.1);. (செ.அக);.

   6. கடத்தல் (ஆ.அக.);; to pass.

   ம. இடறு;   க. இடறு. எடறு;து. எட்டுனி.

     [இடலுதல் + பெயர்த்தல். இடலு → இடறு.]

 இடறு2 iḍaṟu, பெ. (n.)

   தடை (வின்.);; obstacle, barrier impediment hindrance. (செ.அக.);.

     [இடல் → இடறு.]

இடறுகட்டை

இடறுகட்டை iḍaṟugaḍḍai, பெ. (n.)

   1. தடையாயிருப்பது; block, hindrance, obstruction

     “தாய்மாராகிற இடறுகட்டைகளாலே” (திவ்.திருநெடுந்.21.வ்யா,பக்180);. (செ.அக.);.

     [இடது + கட்டை.]

இடலம்

இடலம் iḍalam, பெ. (n.)

   அகலம்; width, extent”இடலமாகிய ரத்தக் கடல்” (இராமநா.யுத்த.89);, ‘இது இடலமானது’ (தஞ்சை.);.

தெ. வெடல்ப்பு

     [இடு → இடல் + அம்.]

இடலித்தல்

 இடலித்தல் iḍalittal, பெ. (n.)

   அகலித்தல் (ஆ.அக.);; widening.

தெ. வெடலின்க்கட.

     [இடு → இடல் → இடலித்தல்.]

இடலிப்பு

 இடலிப்பு iḍalippu, பெ. (n.)

   அகலம்; breadth width.

தெ. வெடல்ப்பு.

     [இடல் → இடலிப்பு.]

இடலை

இடலை1 iḍalai, பெ. (n.)

   1. அகன்றது; that which is wide

   2. ஒரு மர வகை (L);; wild olive. (செ.அக.);.

ம. இடல

     [இடல் → இடலை. ஒருகா பருத்த மரமாகலாம்.]

 இடலை2 iḍalai, பெ. (n.)

   1. துக்கம்; worry.

   2. துன்பம்; distress.

     [இடு → இடல் → இடலை. இடல் → இடர்.]

இடலை இட்டலி

இடலை இட்டலி iḍalaiiḍḍali, பெ. (n.)

   அகன்ற ஒரே இட்டலி; a large boiled rice cake prepared on a special occasion (தஞ்சை.);.

     [இடலை1 + இட்டலி.]

இடல்

இடல் iḍal, பெ. (n.)

   1. எறிதல்; to throw.

   2. கொடுத்தல்; to give, bestow.

   3. இடுதல்; put drop.

ம. இடல்.

     [இடு → இடல்.]

இடவகம்

இடவகம் iḍavagam, பெ. (n.)

   1. மா, பனை ஆகிய மரங்களின் பிசின் (வின்.);; gum of the mango or the palmyra tree.

   2. இலவங்கம் (மலை.);; clove-tree. (செ.அக.);.

     [இல் → இள் → இடு குத்துதல், பிளத்தல், பெயர்த்தல், வெளிவரல், இடு → இடுவு – இடவு → இடவகம் = கசியும் பிசின்.]

இடவகை

இடவகை iḍavagai, பெ. (n.)

   1. வீடு (பிங்.);; house

   2. இடம் (ஆ.அக.);; place.

     [இடம் + வகை.]

இடவன்

இடவன்1 iḍavaṉ, பெ. (n.)

   மண்ணாங்கட்டி; lump of mud.”எந்தை யிடவனெழ வாங்கி யெடுத்த மலை”. (திவ்.பெரியாழ்.3.5.5);. (யாழ்ப்.);.

     [இடத்தல்= பெயர்த்தல், இட → இடவன் = பெயர்த்தெடுத்த மண்ணாங்கட்டி.]

 இடவன்2 iḍavaṉ, பெ. (n.)

   1. நுகத்தில் இடப்பக்கத்து மாடு; left ox in the yoke.

   2. கூட்டெருது (யாழ்ப்.);; fellow or male in a yoke of oxen.

   3. softflor(S: ox of the opponent.

க. எடகோலு.

     [இடம் + இடதுபக்கம். இடம் → இடவன் + இடப்பக்கத்துமாடு.]

 இடவன்3 iḍavaṉ, பெ. (n.)

   பிளக்கப்பட்ட பொருள் (வின்.);; anything split or cloven.

     [இடத்தல் + தோண்டுதல், பிளத்தல். இட → இடவன்.]

இடவயின்

இடவயின் iḍavayiṉ, இடை. (part)

   1. இடத்து; at in.

     “ஓல்லா ரிடவயின்” (தொல்.பொருள்.76);

   2. இடது பக்கம்; left side.

     [இடம் + வயின்.]

இடவழு

இடவழு iḍavaḻu, பெ. (n.)

   1. தன்மை முதலிய மூவகையிடங்களைப் பிறழக் கூறுகை (நன். 375);; fault in the usage of pronouns belonging to the three persons.

   2. ஐந்திணைக்குரியவற்றுள் ஒன்றற்குரியவற்றை மற்றொன்றிற்குக் கூறுவதுமாம் (ஆ.அக.);; fault in the mentioning of the five divisions of land.

     [இடம் + வழு.]

இடவாகுபெயர்

இடவாகுபெயர் iḍavākubeyar, பெ. (n.)

   இடப்பெயர் அவ்விடத்துள்ள பொருளுக்கு ஆகிவருவது (நன். 290. உரை);; that kind of metonymy where the name of the location is used for the name of the person or thing located there in.

     [இடம் + ஆகு + பெயர். எ-டு: கூறை உடுத்தாள். கூறை நாட்டில் நெய்யப்பட்ட புடவை கூறை எனப்பட்டது.]

இடவிய

இடவிய iḍaviya, கு.பெ.எ. (adj.)

   1. பரந்த; wide extensive, spacious

     “இடவிய வறை நின்று” (தணி கைப்பு.வீராட்.65);.

   2. விரைவுள்ள; quick swift.

     “இடவிய கதியின் வாசி” (திருவாலவா. 28.59);.

   3. சார்ந்த; adjoined, attached

     “இடவிய மனமே யின்பதுன்பங்களெய்துற” (ஞானவா.உற்பத்.33);. (செ.அக.);.

     [இடத்தல் + பிளத்தல், அகலித்தல் பரவுதல் விரைதல், சார்தல். இட → இடவிய.]

இடவியம்

 இடவியம் iḍaviyam, பெ. (n.)

   அகலம்; breath.

     [இடம் → இடவியம்.]

இடவை

 இடவை iḍavai, பெ. (n.)

   வழி (பிங்.);; way.

     [இடம் + இடைவெளி. இடம் → இட → இடவை + பாதை. வழி.]

இடா

இடா iṭā, பெ. (n.)

   1. இடார். இறைகூடை (சிலப்.10, 111. உரை);; palm-leaf bucket for irrigation.

   2. ஓரளவு (தொல். எழுத்.170. உரை);; a measure.

   3. படைக்கலன் வகை; a weapon.

   4. அகப்படுத்தும் பொறி; a trap.

     [இடம் = இடைவெளி. இடம் → இடார் → இடா. இடா = குறித்த கொள்ளளவு கொண்ட கூடை, முகத்தலளவு வாயகன்ற கருவி.]

இடாகினி

இடாகினி iṭākiṉi, பெ. (n.)

   1. சுடுகாட்டிற் பிணங்களைத் தின்னும் பேய்; female goblin seeding on corpses in the burning ground (செ.அக.);.

   2. காளியேவல் செய்பவள்; a female demon attending on Kai. (அபி.சிந்);.

க. டாகினி.

     [இடுகாடு → இடுகாடினி → இடாகினி. இடாகினி → Skt. dakini.]

இடாகு

 இடாகு iṭāku, பெ. (n.)

   புள்ளி (அக.நி.);; brand, spot dot.

தெ.டாகு. Skt daku.

     [ஒருகா. இலக்கு = புள்ளி, அடையாளம் புள்ளியிடுதல். இலக்கு → இளக்கு → இளாக்கு → இடாக்கு → இடாகு.]

இடாகுபோடு-தல்

இடாகுபோடு-தல் iṭākupōṭudal,    20 செ.கு.வி. (v.i.)

   கால்நடைகட்குச் சூடுபோடுதல்; to brand, as on cattle (செ.அக.);.

     [இலக்கு → இளக்கு → இளாக்கு → இடாக்கு → இடாகு + போடுதல்.]

இடாக்குத்தர்

 இடாக்குத்தர் iṭākkuttar, பெ. (n.)

   ஆங்கில முறையைப் பின்பற்றும் மருத்துவர் (யாழ்ப்);; doctor, physician.

த.வ. மருத்துவர்.

     [E. doctor → த. இடாக்குத்தர்.]

இடாசல்

 இடாசல் iṭācal, பெ. (n.)

இடாசு-தல் பார்க்க;see iḍāšu.

இடாசு-தல்

இடாசு-தல் iṭācudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1 நெருக்குதல் (வின்);; to press.

   2. மோதுதல் (வின்);; to strike, collide.

   3. மேற்படுதல் (வின்.);; to beat, as in a competition.

   4. அவமதித்தல் (வின்.);; to disregard slight, neglect.

 OE. dassche. E dash. Dan dske, Sw. daska.

     [இடுதல் + வைத்தல், நெருக்குதல்.]

இடாடிமம்

 இடாடிமம் iṭāṭimam, பெ. (n.)

   தாதுமாதுளை (மலை);; common pomegranate. (செ.அக.);.

   க. தாளிம்ப. தாளிம்பெ;தெ. தாளிம்ப. தாளிம்மு. தானிம்ம [தாதுமாதுளை → Skt. த. தாடிமம் – டாடிமம் – இடாடிமம் (கடுங்கொ.);.]

இடாப்பு

இடாப்பு1 iṭāppudal,    15 செ.கு.வி. (v.i.)

   காலை அகலவைத்தல் (வின்.);; to straddle in walking. (செ.அக.);.

     [இடப்புதல் → இடாப்புதல்.]

 இடாப்பு2 iṭāppu, பெ. (n.)

   1. அட்டவணை (வின்.);; catalogue, list register.

   2. பார்த்தெழுதும்படி; copybook.

   3. பெயர், முகவரி (ஆ.அக.);; name, address.

தெ. டாபு.

     [இடு → இடப்பு → இடாப்பு.]

இடாமிடம்

 இடாமிடம் iḍāmiḍam, பெ. (n.)

   ஒழுங்கற்ற பேச்சு (சங்.அக.);; improper or unbecoming language. (செ.அக.);.

     [இடம்பு → இடாம்பிகம் → இடாம்பிடம் → இடாமிடம் – (கொ.வ.);.]

இடாமுடாங்கு

 இடாமுடாங்கு iṭāmuṭāṅgu, பெ. (n.)

   ஒழுங்கின்மை (யாழ்.அக.);; irregularity, impropriety. (செ.அக.);.

     [இடாம்பு + முடங்கு – இடாமுடாங்கு – எதுகை குறித்த இணைமொழி.]

இடாம்பிகன்

இடாம்பிகன் iṭāmbigaṉ, பெ. (n.)

   இடம்பக்காரன்; pompous fellow, coxcomb.

     “இடாம்பிக ரோடும் புக்குநீ” (பிரபோத:24, 67);. (செ.அக.);.

     [இடம்பு → இடாம்பு → இடாம்பிகம் → இடாம்பிகன் → skt dambika.]

இடாம்பிகம்

 இடாம்பிகம் iṭāmbigam, பெ. (n.)

   இடம்பம்; pomposity, parade.

     [இடம்பு → இடாம்பு → இடாம்பிகம்.]

இடாயம்

இடாயம் iṭāyam, பெ. (n.)

   இசைத்துறை ஐந்தனுள் ஒன்று (பெரியபு.ஆனாய.26);; one of five classification of music. (செ.அக.);.

     [ஒருகா. இடம் → இடாயம் விரித்த அலுக்கு (கமகம்); கொண்ட இசைத்துறையாகலாம்.]

இடாயர்

இடாயர் iṭāyar, பெ. (n.)

   1. இறைகூடை; palm-leaf bucket.

   2. உலுத்தர்; miser.

   3. எலி முதலியன பிடிக்கும் பொறி; rat-trap.

     [இடா + அர் + இடாயர்.]

இடாரேற்று-தல்

இடாரேற்று-தல் iṭārēṟṟudal,    15 செ.கு.வி. (v.i.)

   எலிப்பொறியை ஆயத்தப்படுத்தி வைத்தல் (யாழ்ப்.);; to lay a trap as for squirrels and rats (செ.அக.);.

     [இடார் + ஏற்றுதல்.]

இடார்

இடார் iṭār, பெ. (n.)

   1. இறைகூடை (பிங்.);; palm-leaf bucket for irrigation.

   2. எலி முதலியன பிடிக்கும் பொறி; trap for squirrels or rats.

     “இடாரி லகப்பட்ட எலிபோல” (யாழ்ப்.);.

     [இடால் → இடார்.]

இடால்

இடால் iṭāl, பெ. (n.)

   1. கத்தி; sword.

     “கண்டகோடாரி யைப்போல் ஏந்து வெள்ளைப் பக்கறை யிடாலினான்” (விறலிவிடு.49);. (செ.அக.);.

   2. வாயகன்ற கூடை; wide mouthed basket.

     [இடு → இடல் → இடால். இடால் = வாயகன்றது.]

இடாவு

இடாவு iṭāvu, பெ. (n.)

   இடைகலை; breath inhaled through the left nostril

     “இடாவு பிங்கலையா னைய” (கம்பரா.மிதிலை.130);. (செ.அக.);.

இடைகலை பார்க்க;see idiakalal.

இடாவேணி

இடாவேணி iṭāvēṇi, பெ. (n.)

   அளவிடப்படாத பரப்பு; unlimited extent.

     “இடாவேணி யியலறைக் குருசில்” (பதிற்றுப். 24.14);.

     [இடம் = அகலம். இடா = அகல எல்லைக்கு உட்படாத, பரந்து சென்று அணுகமுடியாத. இடா + ஏணி. ஏணி = உயர்ச்சி.]

இடி

இடி1 iḍidal,    4 செ.கு.வி. (v.i.).

   1. தகர்தல் (கம்பரா.மகுடபங். 15);; to break, crumble, to be in ruins, as a wall;

 to fall to pieces.

   2. கரையழிதல்; to be washed away;

 to become eroded, as the bank of a river.

   3. முனை முறிதல்; to become bruised;

 to be broken, as the grain of rice.

அரிசி இடிந்து போயிற்று. (கொ.வ.);.

   4. வருந்துதல்; surfer. என்னோயுங் கொண்டதனை யெண்ணி யிடிவேனோ” (அருட்பா. ஆற்றா.5);,

   5. மலைத்தல்; to be stunned, staggered.

அவள் அந்த துக்க சமாசாரம் கேட்டு இடிந்து போனாள்.

   6. முறிதல் (பிங்..);; to break in two, part in two. (செ.அக.);.

தெ. க., ம. இடி.

     [இல் → இள் → இடு → இடி = குத்துதல், துளைப்படல். உடைபடுதல், துன்புறுதல்.]

 இடி2 iḍittal,    4 செ.கு.வி. (v.i.)

   1. முழங்குதல்; to sound loud;

 to make a noise, as a gun to roar. as a lion

     “அரிமானிடித்தன்ன” (கலித்.15);.

   2. இடி யொலிபடுதல்; to thunder.

     “இடித்து முழங்கியதோர் யோசனையோர் கேட்பர்” (நாலடி.100);.

   3. நோதல்; to throb, to beat, to ache, as the head.

தலையிடிக்கிறது..

   4. தாக்கிப்படுதல்; to come in contact with hit against

     ‘கதவு நிலை தலையில் இடிக்கும்’.

   5. மோதுதல்; to strike against, as a ship against the shore.

   கப்பல் கரையில் இடித்தது (வின்.);;   6. சினத்தல்; to

 be

 angry, furious.

     “கூற்றின் னிடிக்குங் கொலைவேலவன்” (சீவக.432); – 4 செ.குன்றாவி. (v.i.);

   1. தூளாக்குதல்; to pound in a mortar, to bray with a pestle, to reduce flour.

     “பொற்கண்ண மிடித்து நாமே” (திருவாச.9.1);.

   2. தகர்த்தல்; to beat so as to break, to batter to pieces, demolish, shatter.

     “வீட்டையிடித்துத் தள்ளினான்”.

   3. நசுக்குதல்; to press, to crush, as sugarcane.

     “கரும்பினை ….யிடித்துநீர் கொள்ளினும்” (நாலடி.156);.

   4.. தாக்குதல்; to push or thrust side-wise, as with the elbow.

     ‘குந்தத்தால் இடித்தான்’.

   5. முட்டுதல்; to attack

 with the horns, as a bull, to butt against the udder, as a sucking calf.

அந்த மாடு இடிக்கும்.

   6. கழறிச் சொல்லுதல்; to reprove sharply or admonish incisively.

     “இடிப்பாரையில்லாத வேமரா மன்னன்” (குறள்.448);.

   7. கொல்லுதல்; to kill slay.

     “இடிக்குங்கொ லிவனை யென்பார்” (சீவக. 1108);.

   8. தோண்டுதல்; to dig.

     “கணிச்சிகளிற் கயம்பட நன்கிடித்து” (சீவக.592);

   9. கெடுத்தல்; to destroy, annihilate.

     “விருப்பிடித்து” (இரகு.தேனுவ.71);.

   10. உதைத்தல்; to kick.

   11. துடித்தல்; to palpitate.

   12. இடியிடித்தல் (ஆ.அக.);; to thunder.

   ம. இடிக்குக: க. இடி, இடகு டிகா, டீகு;   துட. இட்;   து. எடபுனி. எடுபுனி, எட்புனி;   தெ. டீகொனு;கொலா. இட்

     [இல் → இள் → இடு → இடி = குத்தல், துளைத்தல், உடைத்தல், துன்புறுத்துதல்.]

 இடி3 iḍi, பெ. (n.)

   1. தாக்கு; stroke, blow, push.

     ‘உரலுக்கு ஒரு பக்கம் இடி, மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி.

   2. மா (பிங்.);; flour, esp. of rice or millet.

   3. சிற்றுண்டி (பிங்.);; light meal with four as its chief ingredient.

   4. சுண்ணம் (பிங்.);; powder, dust anything pulverized.

   5. இடியேறு (பிங்.);; thunder.

   6. பேரொலி (பிங்.);; roar, great noise.

   7. கழறுஞ்சொல்; rebuke, reproof.

     “இடிபுரிந் தெள்ளுஞ் சொற்கேட்பர்” (குறள். 607);,

   8. குத்துநோவு; ache, throbbing pain

மண்டையிடி (கொ.வ.); (செ.அக.);.

   ம. இடி;   கோத. இரி;துட. ஈரி.

     [இல் → இள் → இடு → இடி.]

 இடி4 iḍi, பெ. (n.)

   நெருப்பு, தீ; fire.

     “இடியிருந்தகட் பதினொரீசர்” (தக்கயாகப்.353);. (செ.அக.);.

     [இடு – இடி = வானம் இடித்தலால் தோன்றும் மின்னல், நெருப்பு.]

 இடி5 iḍi, பெ. (n.)

   உறுதிச்சொல் (அக.நி.);; word of admonition, (செ.அக.);.

     [இடு → இடி.]

 இடி6 iḍi, இடை (adj.)

   அனைத்து;   எல்லா; the whole. (கருநா.);.

குட. து. இடி.

இடு3 → இடி.]

 இடி7 iḍi, பெ. (n.)

   ஆட்டுக்கிடாய் (அக.நி.);; ram, he-goat (செ.அக.);.

     [ஏழகம் → ஏடகம். Skt → த. ஈடி → இடி (கொ.வ.);.]

இடி விலக்கி

 இடி விலக்கி iḍivilakki, பெ. (n.)

   காந்தம்; magnet load stone. (சா.அக.);.

இடிகரை

இடிகரை iḍigarai, பெ. (n.)

   ஆறு முதலியவற்றின் அழிந்த கரை; eroded bank, as of a river.

     “ஆக்கை யெனு மிடி கரையை” (தாயு.சின்மயா.2);. (செ.அக.);.

     [இடி → இடிதல், சரிதல். இடி + கரை.]

இடிகிணறு

 இடிகிணறு iḍigiṇaṟu, பெ. (n.)

   இடிந்துவிழு நிலையிலுள்ள கிணறு; dilapidated well (செ.அக.);.

     [இடி → இடிதல். இடி + கிணறு.]

இடிகுழல் இரும்புந்து

 இடிகுழல் இரும்புந்து iḍiguḻlirumbundu, பெ.(n.)

சக்கரங்களின் மேல் சுற்றி வரும் இரும்புப் பட்டை பொருத்தப்பட்டடதும் நீண்ட குழாயை உடையதுமான படைத்துறை வண்டி,

 tanks.

     [இது+குழல்-இரும்புந்து]

இடிகொம்பு

 இடிகொம்பு iḍigombu, பெ. (n.)

   கழியில் அடித்துள்ள அதிர்வேட்டுக் குழாய் (வின்.);; small mortars set into a pole, used in pyrotechny. (செ.அக.);.

     [இடிதல் = அதிர்தல், வெடித்தல், இடி + கொம்பு.]

இடிக்கடை

 இடிக்கடை iḍikkaḍai, பெ. (n.)

இடுக்கடி (இ.வ.); பார்க்க;see idukkadi.

     [இடுக்கடி → இடுக்கடை → இடிக்கடை.]

இடிக்கொடியன்

 இடிக்கொடியன் iḍikkoḍiyaṉ, பெ. (n.)

இடிக்கொடியோன் பார்க்க;see idikkodiyoo (ஆ.அக.);.

     [இடி + கொடியான். ஆன் – ஒன் – அன்.]

இடிக்கொடியோன்

 இடிக்கொடியோன் iḍikkoḍiyōṉ, பெ. (n.)

   இந்திரன்; Indra so called as he has the symbol of thunder bolt

 on his banner. (செ.அக.);.

     [இடி + கொடியோன்.]

இடிக்கொள்ளு

 இடிக்கொள்ளு iḍikkoḷḷu, பெ. (n.)

   காட்டுக்கொள்; black horse-gram (செ.அக.);.

     [இடி + கொள்ளு. இடி = மாவு.]

இடிசல்

இடிசல்1 iḍisal, பெ. (n.)

   நொறுங்கின தவசம் (கொ.வ.);; grain bruised in pounding (செ.அக.);.

     [இடிதல் = நொறுங்குதல். இடி → இடியல் → இடிசல்.]

 இடிசல்2 iḍisal, பெ. (n.)

   1. அழிவு; dilapidation ruin.

     ‘கோயில் இடிசலாய்க் கிடக்கிறது’ (இ.வ.);.

   2. நொய்யரிசி (கொ.வ.);; broken rice (செ.அக.);.

     [இடி → இடியல் → இடிசல்.]

இடிசாந்து

 இடிசாந்து iḍicāndu, பெ. (n.)

   இடித்துத் துவைத்த சுண்ணாம்பு (இ.வ.);; pounded mortar-lime. (செ.அக.);

     [இடித்தல் = குற்றுதல், மாவாக்குதல். இடி + சாந்து.]

இடிசாமம்

இடிசாமம்1 iḍicāmam, பெ. (n.)

   கெடு காலம் (வின்.);; evil hour (செ.அக.);.

     [இடி + சாமம். யாமம் = பொழுது, காலம். யாமம் → ஜாமம் → சாமம்.]

 இடிசாமம்2 iḍicāmam, பெ. (n.)

இகழ்ச்சி (நிந்தை); (வின்.); defamation, reproach. (செ.அக.);.

     [இடி + சாமம் சமம் + போர்க்களம், குழப்பம், கலவரம் சமம் → சாமம்.]

இடிசிலைச்சாறு

 இடிசிலைச்சாறு iḍisilaissāṟu, பெ. (n.)

   இலையையிடித்துப் பிழிந்த சாறு; extracted juice of the leaves (சா.அக.);.

     [இடித்த + இலை + சாறு = இடித்திலைச்சாறு → இடிசிலைச்சாறு (கொ.வ.);.]

இடிசுவர்

 இடிசுவர் iḍisuvar, பெ. (n.)

   இடிந்த சுவர்; ruined wall (செ.அக.);.

     [இடி + சுவர்.]

இடிசூலை

 இடிசூலை iḍicūlai, பெ. (n.)

   மண்டையிடி, மண்டைக்குத்தல்; a type of severe head-ache attended with digging pain (சா.அக.);.

     [இடி + சூலை, கல் – குத்துதல். கல் → சூலை = மண்டையிடி. இடிதல் = வருத்துதல்.]

இடிச்சக்கை

 இடிச்சக்கை iḍiccakkai, பெ. (n.)

   பலாப்பிஞ்சு (நாஞ்.);; tender jack fruit (செ.அக.);.

     [இட்டி → இடி = சிறியது. இடி + சக்கை.]

இடிச்சொல்

இடிச்சொல் iḍiccol, பெ. (n.)

   இடித்துரைக்கும் கடுஞ்சொல்; sharp reproof.

     “இடிச்சொற் பொறாஅ விலக்கண வினையர்” (பெருங்.உஞ்சைக்.38,345);. (செ.அக.);.

     [இடி + சொல்.]

இடிஞ்சில்

இடிஞ்சில் iḍiñjil, பெ. (n.)

   விளக்குத்தகழி; holow portion of a lamp, which is the receptacle for the oil.

     “உடலெனு மிடிஞ்சி றன்னில் நெய்யமர் திரியுமாகி” (தேவா.503.2);, (செ.அக.);.

ம. இடிஞில் (சிறு மண்விளக்கு);.

     [இடிதல் = வீழ்தல், தாழ்தல், உட்குழிதல். இடி → இடிஞ்சில் = உட்குழிந்த தகழி.]

இடிதலைநோய்

இடிதலைநோய் iḍidalainōy, பெ. (n.)

   நோய் வகை (கடம்ப.பு. இலீலா.149);; disease (செ.அக.);.

     [இடி + தலைநோய்.]

இடிதாங்கி

 இடிதாங்கி iḍitāṅgi, பெ. (n.)

கட்டடத்தின்மீது இடி

     [P]

   விழாதபடி காக்க வைக்குங் காந்தக்கம்பி; lightning conductor. (செ.அக.);.

     [இடி + தாங்கி.]

இடித்தடு

இடித்தடு iḍittaḍu, பெ. (n.)

   பிட்டு; loose confectionary made of flour.

     “நரைத்தலை முதியோ ளிடித்தடு கூலி கொண்டு” (கல்லா.46);. (செ.அக.);.

     [இடித்தடு = பிட்டு. இட்டளி. இடித்து + அடு = இடித்தடு.]

இடித்துரை

 இடித்துரை iḍitturai, பெ. (n.)

   கழறிக்கூறுஞ்சொல்; admonition, expostulation, criticism, at once kind and severe (செ.அக.);.

     [இடித்து + உரை.]

இடிபடு-தல்

இடிபடு-தல் iḍibaḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   1. தாக்கப்படுதல்; to be assaulted, elbowed.

   2. நொறுங்குதல்; to be comminuted, as rice.

இடிபட்ட அரிசி.

   3. வெடிபடுதல்; lo crackle, as fire.

இடிபடமுழங்கிச் செந்தீ. (சீவக.1084);.

   4. துன்பப்படுதல்; to be vexed or harried.

     ‘அவன் தரித்திரத்தால் இடிபடுகிறான்’ (கொ.வ.); (செ.அக.);.

     [இடி + படு.]

இடிப்பணி

 இடிப்பணி iḍippaṇi, பெ. (n.)

   குறிப்புரை, விளக்கவுரை (இலக்.அக.);; gloss, comment (செ.அக.);.

   க. டிப்பண, டிப்பணி;   தெ. டிப்பணமு;மரா. டிப்பன.

     [இடி + பணி. இடு → இடி = இட்டுரைக்கும் அல்லது விளக்கி எழுதும் உரை. இடு → ஈடு, ஈட்டுரை என்பவற்றை ஒப்புநோக்குக.]

த. இடிப்பணி → skt. tippani.

இடிப்பு

இடிப்பு iḍippu, பெ. (n.)

   1. இடி; thunder.

     “இடிப்பென வார்த்து” (கந்தபு. சிங்கமு.431);.

   2. ஒலி; noise, clangour.

     “சேவலங்கொடி யிடிப்பினால்” (கந்தபு.திருப்பரங்.20); (செ.அக.);.

     [இடி → இடிப்பு.]

இடிமயிர்

 இடிமயிர் iḍimayir, பெ. (n.)

   சவரி (இ.வ.);; false hair, usually obtained from the tail of the yak (செ.அக.);.

     [இடு + மயிர் – இடிமயிர். இடுமயிர் பார்க்க;see idumayir.]

இடிமரம்

இடிமரம் iḍimaram, பெ. (n.)

   1. உலக்கை (வின்.);; pestle.

   2. அவலிடிக்கும் ஏற்றவுலக்கை (இ.வ.);; heavy wooden hammer in a frame, worked by a pedal and used for pounding parched rice into flakes (செ.அக.);.

ம. இடிமரம்.

     [இடித்தல் + குற்றுதல். இடி + மரம்.]

இடிமருந்து

 இடிமருந்து iḍimarundu, பெ. (n.)

   பொடி மருந்து; medicinal preparation of drugs pounded together. (செ.அக.);.

     [இடி + மருந்து. இடித்தல் – பொடித்தல்.]

இடிமாந்தம்

 இடிமாந்தம் iḍimāndam, பெ. (n.)

   பொய்யான குற்றச்சாட்டு (இ.வ.);; false accusation. (செ.அக.);.

     [இடு → இடுமம் → இடுமந்தம் → இடிமந்தம் → இடிமாந்தம்.]

இடிமீன்

 இடிமீன் iḍimīṉ, பெ. (n.)

   மீன்வகை (பாண்டி);; fish (செ.அக.);.

     [இடி + மீன் = இடிமீன் – தாக்கும் மீன் வகையைச் சார்ந்ததாய் இருக்கலாம்.]

இடிமுழக்கம்

 இடிமுழக்கம் iḍimuḻkkam, பெ. (n.)

   இடியொலி; thunder clap (செ.அக.);.

ம. இடிமுழக்கம்.

     [இடி + முழக்கம்.]

இடிமேலிடி

இடிமேலிடி iḍimēliḍi, பெ. (n.)

   1. மாட்டுச்சுழிக்குற்றம் (பெரியமாட். 20);; defect in cattle (செ.அக.);.

   2. அடுத்தடுத்து வரும் இடர்; continuous misfortunes

     ‘அவனுக்கு இடிமேல் இடி விழுந்தது’ (உவ.);.

     [இடி + மேல் + இடி.]

இடிம்பன்

இடிம்பன் iḍimbaṉ, பெ. (n.)

   வீமனாற் கொல்லப்பட்ட ஓர் அரக்கன் (பாரத. வேத்திர.16);; name of a Raksasa who was slain by Bhima (செ.அக.);.

     [இடும்பன் → இடிம்பன்.]

இடிம்பம்

இடிம்பம் iḍimbam, பெ. (n.)

   1. கைக்குழந்தை; baby, small child.

   2. பெருந்துன்பம்; misery.

   3. மண்ணீரல்; spleen.

   4. பறவை (முட்டை);; egg of birds.

   5. ஆமணக்கு; castor plant (செ.அக.);. [இட்டி → இடி → இடிம்பம் = சிறியது. இடிம்பம் → skt. dimbha. சிறுமை.]

இடிம்பை

இடிம்பை iḍimbai, பெ. (n.)

   வீமன் மனைவியாகிய அரக்கி (பாரத. வேத்திர.9);; name of Hidimbās sister who married Bhima (செ.அக.);.

     [இடும்பை → இடிம்பை.]

இடியப்பம்

 இடியப்பம் iḍiyappam, பெ. (n.)

   சிற்றுண்டி வகை; steamed rice-cake pressed through perforated mould and resembling vermicelli (செ.அக.);.

ம. இடியப்பம்.

     [இடி + அப்பம். இடி – இடித்த மாவு.]

இடியப்பவுரல்

 இடியப்பவுரல் iḍiyappavural, பெ. (n.)

   இடியப்பம் பிழியும் ஏனம் (ஆ.அக.);; vessel used for making ldi-y-appam.

     [இடி + அப்பம் + உரல். உரல் = உருண்ட வடிவிலான குழி.]

இடியம்பு

 இடியம்பு iḍiyambu, பெ. (n.)

இடிகொம்பு (வின்); பார்க்க;see idikombu.

இடியல்

இடியல் iḍiyal, பெ. (n.)

   பிட்டு; loose confectionary made of four.

     “இடியலினுணவு” (குமர.பிர.காசி.4);. (செ.அக);.

     [இடி → இடியல். இடி + மாவு.]

இடியாப்பம்

 இடியாப்பம் iḍiyāppam, பெ. (n.)

இடியப்பம் (செ.அக.); பார்க்க;see Idiyappam.

ம. இடியப்பம்.

     [இடி + அப்பம் – இடியப்பம் → இடியாப்பம். அப்பு → அப்பம் நீரொடு பிசைந்த மாவினால் செய்த பண்ணிகாரம்.]

இடியிளகியம்

 இடியிளகியம் iḍiyiḷagiyam, பெ. (n.)

   கல்லுரலில் வெல்லத்தையும், மருந்துப் பொடியையும் கொஞ்சங் கொஞ்சமாகச் சேர்த்துப் பூணில்லா உலக்கையால் இடித்தும் பிறகு அம்மியில் வைத்துக் குழவியால் புரட்டிப் புரட்டி இடித்து முடித்த இளகியம் (இலேகிய மருந்து);; electuary prepared by pounding jaggery mixed with powdered drugs with a rice pounder without nozzle at the ends and then on a grinding stone till it is reduced to a soft and consistent paste, (சா.அக.);

     [இடி + இளகியம்.]

இடியுரல்

இடியுரல் iḍiyural, பெ. (n.)

   1. மருந்துச்சரக்குகளிடிக்குமோர் வகைக் கல்லுரல்; stone vessel with obconical ends connected by a constricted neck, used for pounding drugs.

   2. இடியப்ப வுரல்; mould made of iron or wood for making pastry.

     [இடி + உரல்.]

இடியேறு

 இடியேறு iḍiyēṟu, பெ. (n.)

   பேரிடி (திவா.);; thunder-bolt (செ.அக.);.

     [இடி + ஏறு.]

இடிலேகியம்

 இடிலேகியம் iḍilēkiyam, பெ. (n.)

இடியிளகியம் பார்க்க;see idi-y-ilagiyam.

இடிவளி

 இடிவளி iḍivaḷi, பெ. (n.)

   குத்தலோடு கூடிய வளி (வாயு);; acute rheumatic pain (சா.அக.);.

     [இடி + வளி.]

இடிவாங்கி

 இடிவாங்கி iḍivāṅgi, பெ. (n.)

   இடிவிழுங்கி; lightning conductor. (சா.அக.);.

     [இடி + வாங்கி.]

இடிவிலகி

 இடிவிலகி iṭivilaki, பெ. (n.)

   முதுகுளத்தூர் வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Mudukulattur Taluk. (இ.வ.);

     [இடி+விலகி]

இடிவிழு-தல்

இடிவிழு-தல் iḍiviḻudal,    2 செ.கு.வி. (v.i.)

   இடி தரையில் இறங்குதல்; lo strike, as lightning to fall with a crash, as a thunder bolt

     ‘அடி வயிற்றில் இடி விழுந்தாற்போல’ (பழ);.

     [இடி + விழு.]

இடிவு

இடிவு iḍivu, பெ. (n.)

   1. அழிவு; decay destruction.

     “இடிவில் பெருஞ்செல்வம்” (தேவா.707,6);.

   2. இடிந்து விழுகை (வின்.);; crumbling down, as of an undermined bank.

ம. இடிவு.

     [இடி + இடிவு.]

இடிவெட்டு

 இடிவெட்டு iḍiveḍḍu, பெ. (n.)

   இடிமுழக்கம்; thunder stroke, thunder (சேரநா.);.

     [இடி + வெட்டு.]

இடு

இடு1 iḍuttal, .

   20

செ.கு.வி. (v.i.);

   சிறுத்தல்; to be small (வே.சு.13);.

 இடு2 iḍudal,    18 செ.குன்றாவி (v.t.)

   1. குத்துதல்; to hit against thrust in.

     “இடுமருப்பியானை” (கலித். 24. 10);. 2. வெட்டுதல்;

 to cut off.

   3. போகடுதல்; to throw cast away.

     “ஈந்தான் சிலைநிலத்தி லிட்டான்” (கந்தபு. வள்ளி. 36);.

   4. வைத்தல்; to place deposit

 put in keep.

     “காயத்திடுவாய்” (திருவாச.33.8);.

   5. பரிமாறுதல்; to serve, distribute.

     ‘இடுகிறவள் தன்னவ ளானால் அடிப்பந்தியி லிருந்தா லென்ன, கடைப்பந்தியி லிருந்தாலென்ன?’ (உ.வ.);.

   6. கொடுத்தல்; to give, grant, bestow, as alms.

     “இட்டார் பெரியோர்” (நல்வ.2);.

   7. சொரிதல் (திவா.);; to pour, shower as rain.

   8. அணிவித்தல்; to put on as a bangle on one’s wrist.

     “புங்கவனிடுவளை” (திருவிளை.வளையல்.27);.

   9. உவமித்தல். (சீவக.2423.உரை);; to compare.

   10. குறியிடுதல்; to give, as a name to a new-born child, to assign.

     “இட்டதொரு பேரழைக்கவென்னென்றாங்கு” (சி.போ.2.1.1);.

   11. ஏற்றிச்சொல்லுதல்; lo charge, to incriminate by laying a false charge against.

     “படாத தொரு வார்த்தையிட்டன ரூரார்” (சிலப்.9.48);,

   12. சித்திரமெழுதுதல் (சீவக.2383);; to draw, as a figure.

   13. உண்டாக்குதல்; to yield, generate

     “கள்ளியிட்ட வகில்” (இரகு.நகர.52);.

   14. முட்டையிடுதல்; to lay as an egg.

   15. தின்பண்டம் முதலியன உருவாக்குதல்; to form or fashion, to mould, as cakes.

     ‘இன்றைக்கு எத்தனை அப்பளம் இட்டாய்’ (உ.வ.);. 16 தொடுத்து விடுதல்;

 to discharge, as arrows.

     “கணையிட்டு” (திருப்பு.4180);.

   17. கைவிடுதல்; to forsake, desert.”இளையவள நாகிட்டு” (சீவக.1226);.

   18. தொடங்குதல் (திவ். திருவாய்.2.10.பன்னீ.ப்ர);; to begin.

   19. செய்தல்; to do.

     “அரக்கனாங் காளமேக மிடுகின்ற வேள்வி.” (கம்பரா.நிகும்.99);.

   20. புதைத்தல்; lo bury. (சீவக. 1680, உரை);. – து.வி. (v.caus); ஒரு துணைவினை;

 auxiliary of verbs which become vbl.pple of the past-tense before it.

     ‘உரைத்திடுகின்றான்’ (செ.அக.);.

   ம., க., தெ., து. இடு;   கோத. இட்;   குட. ஈட்;   து. இடுபிணி;   நாய். இர்;   கட. இர்;   கொண். இட்;குவி. இட.

     [இல் → இன் → இடு = குத்துதல், பொத்துதல், பொருத்துதல், வைத்தல்.]

 இடு3 iḍu, பெ. (n.)

   1. குழி; pit.

   2. வட்டம்; circle.

   3. நிறைவு; fullness.

க. இடி (நிறைவு);.

     [இல் → இன் → இடு.]

இடுகடை

 இடுகடை iḍugaḍai, பெ. (n.)

   பிச்சையிடும் வீட்டு வாயில் (வின்.);; front of a house, where alms are given (செ.அக.);.

     [இடு + கடை. கடை = வாயில். வாயிலுள்ள வீடு.]

இடுகட்டி

 இடுகட்டி iṭukaṭṭi, பெ. (n.)

   குறவன் குறத்தியாட்டத்தில் பயன்படுத்தப்படும் ஓர் இசைக்கருவி; a musical instrument, used in kuravan kurattiyattam.

     [இடு+(கொட்டி); கட்டி]

இடுகறல்

 இடுகறல் iḍugaṟal, பெ. (n.)

   விறகு (நிகண்டு.);; fuel. (செ.அக.);.

     [இடுகு – சிறியது. இடுகு + அறல். அறல் = உலர்ந்தது. இடுகறல் = உலர்ந்த சுள்ளி.]

இடுகளி

இடுகளி iḍugaḷi, பெ. (n.)

   அதிமதுரத் தழை முதலியவற்றை யானைக்கு இடுதலால் அதற்கு உண்டாம் மதம்; must caused to an elephant by feeding it with the leaves of ‘atis’, etc

     “இடுகளியானை” (பெருங்.மகத.27.145); (செ.அக.);.

     [இடு + களி.]

இடுகாடு

இடுகாடு iḍukāḍu, பெ. (n.)

   பிணம் புதைக்குமிடம் (நாலடி.90);; burial ground, cemetery (செ.அக.);.

ம. இடுகாடு.

     [இடு + காடு. இடுதல் = புதைத்தல்.]

இடுகால்

 இடுகால் iḍukāl, பெ. (n.)

   பீர்க்கு (மலை.);; spongegourd. (செ.அக.);.

     [இடுகல் → இடுகால், இடுகல் – உள்ளொடுங்குதல்.]

இடுகு-தல்

இடுகு-தல் iḍugudal,    6 செ.கு.வி. (v.i.)

   1. ஒடுங்குதல்; to shrink

     “கண்களை யிடுகக் கோட்டி” (சீவக.2086);.

   2. சிறுகுதல்; to become shriveled or dwindled.

     “இடுகிடைத்தோகாய்” (கம்பரா.சித்திர.19);. (செ.அக);.

   3. சுருங்குதல் (ஆ.அக.);; to contract.

     [இடு → இடுகு.]

இடுகுபறை

 இடுகுபறை iṭukupaṟai, பெ. (n.)

   ஒரு வகையான பறை; a kind of drum.

     [இடுகு+பறை]

இடுகுறி

இடுகுறி1 iḍuguṟi, பெ. (n.)

   1. வைக்கப்படும் அடையாளம்; symbol.

   2. பெயர்; name given to a person by his parents.

     “இடுகுறி கோத்திர முதன்மற்றியாவுந் தோன்ற” (திருவாலவா.31.3);.

   3. இடுகுறிப்பெயர்; name without any reason behind it to be called so.

     [இடு + குறி.]

 இடுகுறி2 iḍuguṟi, பெ. (n.)

   முற்காலத்தில் நெல்லைச் சேமித்து வைக்கும் படியாக ஒருவரிடம் ஒப்புவிக்கும் ஆவணம் (Tm.Rev.N.iv. Glossary);; document by which paddy was entrusted to private individuals, to be stored up in their houses.

ம. இடுகுறி.

     [இடு + குறி.]

இடுகுறிச்சிறப்புப் பெயர்

 இடுகுறிச்சிறப்புப் பெயர் iḍuguṟicciṟappuppeyar, பெ. (n.)

   இடுகுறிக்கு மட்டுமே வருஞ் சிறப்புப்பெயர். (ஆ.அக.);; proper noun (grammar);

     [இடு + குறி + சிறப்பு + பெயர்.]

இடுகுறிப்பெயர்

இடுகுறிப்பெயர் iḍuguṟippeyar, பெ. (n.)

   காரணமின்றி வழங்கி வரும் பெயர் (நன்.62);; noun connoting the primeval sense in which it has been used, as dist. fr. Kārana-p-peyar.

     [இடு + குறி + பெயர். எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவாதலின் இடுகுறிப்பெயர் என்று எதுவும் இல்லை என்பது பாவாணர் கருத்து.]

இடுகுறிமரபு

இடுகுறிமரபு iḍuguṟimarabu, பெ. (n.)

   இடுகுறியாகத் தொன்று தொட்டு வரும் பெயர் (நன்-275. உரை.); (செ.அக);; noun used in the conventional sense which it continues to bear from the remote past.

     [இடு + குறி + மரபு. நன்னுலார் இடுகுறியாகக் கொள்ளும் பெயர்கள் ஒரு காலத்தில் காரணம் கருதியவை. ஆதலின் இடுகுறிப்பெயர் என்று ஒன்று இல்லை என்பதே பாவாணர் கருத்து. ஆதலின் இடுகுறி மரபு என்பதும் வறுஞ்சொல்லாதல் காண்க.]

இடுகுறியாக்கம்

இடுகுறியாக்கம் iḍuguṟiyāggam, பெ. (n.)

   இடுகுறியாக ஒருவன் கொடுத்த அல்லது ஆக்கிக்கொண்ட பெயர் (நன்.275,2, உரை.); (செ.அக.);; unconventional name which a person assumes of his own accord or is arbitrarily given by others, classified as a distinct class of proper names in Tamil grammar.

     [இடு + குறி + ஆக்கம்.]

இடுகை

இடுகை1 iḍugai, பெ. (n.)

   இடுங்கிய வழி; a narrow passage, lane.

ம. இடுவ.

     [இடு – இடுகை.]

 இடுகை2 iḍugai, பெ. (n.)

   கொடை (பிங்.);; gift (செ.அக.);.

     [இடு → இடுகை + இடுதல், வைத்தல், கொடுத்தல்.]

இடுக்கடி

 இடுக்கடி iḍukkaḍi, பெ. (n.)

துன்பம் (கொ.வ.);. distress (செ.அக.);.

     [இடு → இடுக்கு + அடி – இடுக்கடி. இடுக்கு + துன்பம். அடி = தாக்குறல்.]

இடுக்கணழியாமை

இடுக்கணழியாமை iḍukkaṇaḻiyāmai, பெ. (n.)

   துன்பக் காலத்து மனங்கலங்காமை. (குறள்.அதி.63);; imperturbability in distress, serenity of mind, courage in trouble. (செ.அக.);.

     [இடு → இடுக்கண் + அழியாமை.]

இடுக்கணி

 இடுக்கணி iḍukkaṇi, பெ. (n.)

   பொருள் வைக்கப்படும் மூலையான இடம்;   கைக்குள் அல்லது விரல்களுக்குள்ளான இடம்;   ஒரு பொருள் அல்லது ஒருவர் அகப்பட்டிருக்கும்படியான இடுக்கானவிடம். (செ.அக.);; corner, nook where a thing may be held, as under the arms or between the fingers or under the hams, a narrow niché where a person or thing may become confined, jammed in or wedged in.

     [இடுக்கு = சிறிய இடம், மூலைமுடுக்கு. இடுக்கு → இடுக்கணி.]

இடுக்கண்

இடுக்கண் iḍukkaṇ, பெ. (n.)

   1. மலர்ந்த நோக்க மின்றி மையனோக்கம் படவரும் இரக்கம் (தொல். பொ.260, உரை);; misery that is reflected by shrunken eyes.

   2. துன்பம் (சீவக.509);; distress, woe, affection. (செ.அக.);.

   3. இக்கட்டு (ஆ.அக.);; trouble, difficulty.

   4. வறுமை (ஆ.அக.);; poverty.

     “இடுக்கண் வருங்கால் நகுக.” (குறள்);.

     [இடு = குத்துதல், துன்புறுத்துதல் இடு → இடுக்கண். கண் தொழிற்பெயரீறு. பண்புப் பெயரீறு. ஒ.நோ. அலக்கண், உன்கண் இன்கண்.]

இடுக்கப்படு

இடுக்கப்படு1 iḍukkappaḍudal,    18 செ.குன்றாவி. (v.t.)

   1. ஒடுக்கப்படல்; to be suppressed.

   2. துன்பப்படல் (ஆ.அக.);; to be made to suffer.

     [இடுக்கம் + படு.]

 இடுக்கப்படு2 iḍukkappaḍuttal,    18 செ.குன்றாவி. (v.t.)

   1. துன்பப்படுத்தல்; to tomert.

   2. நெருக்கல் (ஆ.அக.);; to inflict pain.

     [இடுக்கம் + படு.]

இடுக்கம்

இடுக்கம் iḍukkam, பெ. (n.)

   1. ஒடுக்கம்; closeness, narrowness of space.

   2. துன்பம்; affliction, distress, trouble.

     “சொர்க்கத்த ரிடுக்கங்கெட” (திருப்பு.419);. (செ.அக.);.

   3. நெருக்கம் (ஆ.அக.);; crowdedness.

   4. வறுமை (ஆ.அக.);; poverty.

     [இடுக்கு → இடுக்கம்.]

இடுக்கல்

 இடுக்கல் iḍukkal, பெ. (n.)

   ஒடுங்கிய இடைவெளி; crevice, aperture (செ.அக.);.

     [இடுக்கு → இடுக்கல்.]

இடுக்காஞ்சட்டி

 இடுக்காஞ்சட்டி iḍukkāñjaḍḍi, பெ. (n.)

   விளக்குத் தகழி (நெல்லை.);; bowl of a lamp made of clay. (செ.அக.);.

     [இடுக்கு + ஆம் + சட்டி.]

இடுக்கி

இடுக்கி iḍukki, பெ. (n.)

   1. குறடு; pincers, tongs forceps, tweezers. Nippers.

   2. எலி முதலியவற்றை அகப்படுத்தும் பொறி; steel trap.

   3. உலுத்தன் (வின்.);; stingy person miser niggard, pinch-fist.

   4. நண்டு முதலியவற்றின் கவ்வுமுறுப்பு (இ.வ.);; prehensile chelae of a crab or a scorpion.

   ம. இடுக்கி;   க. இக்குழ. இக்கழ;   கோத. இக்கள்;து. ஈக்குளெ. இக்குளி.

     [இடுக்கு → இடுக்கி.]

     [P]

இடுக்கிச்சட்டம்

 இடுக்கிச்சட்டம் iḍukkiccaḍḍam, பெ. (n.)

   கம்பிச்சட்டம்; cleat. (செ.அக.);.

     [இடுக்கி + சட்டம்.]

இடுக்கிடை

 இடுக்கிடை iḍukkiḍai, பெ. (n.)

   நெருக்கம் (வின்);; closeness, narrowness (செ.அக.);.

     [இடுக்கு + இடை.]

இடுக்கு

இடுக்கு1 iḍukkudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. கவ்வுதல் (ஆ.அக.);; to take between the fingers or toes, to grasp or grip, as with pincers.

   2. அணைத்தல்; to take under one’s arm.

     “இடுக்குவார் கைப்பிள்ளை”. (தாயு.பன்மா.6);.

   3. நெருக்குதல்; to press or squeeze as between two boards.

     ‘இடுக்கு மரம்’ (வின்.);.

   ம. இடுக்கு;க. இடிகு.

     [இடு → இடுக்கு.]

 இடுக்கு2 iḍukku, பெ. (n.)

   1. சந்து, முடுக்கு; narrow lane.

   2. மூலை; nook, corner.

   3. இடுக்கிக்கொள்ளக்கூடிய இடம்; parting between fingers, crevices between the teeth, cleft in the split wood, the axilla, any place where a person or thing may get pressed or wedged in.

     “கவட்டுத் தொன்மரத் திடுக்கிற் கானுழைத்துக் கொண்டே” (தனிப்பா.);.

   4. கவ்வுமுறுப்பு (வின்.);; prehensile claws, as those of a scorpion or of a lobster.

   5. இடைஞ்சல், துன்பம்; difficulty, trouble, straits.

     “இடுக்கிவ ணியம்புவ தில்லை” (கம்பரா.யுத்.மந்தி. 27);.

   6. இவறன்மை; miserliness, niggardliness.

     “இடுக்குடை யுள்ளத்தான் பெற்ற பெருஞ்செல்வம்” (நாலடி.274);.

   ம. இடுக்கு;க. இடங்கு. இடுகு.

     [இடு → இடுக்கு.]

இடுக்கு வழி

 இடுக்கு வழி iḍukkuvaḻi, பெ. (n.)

   சந்து வழி; narrow way or lane (செ.அக.);.

   ம. இடுக்கு வழி;   க. இடுக்கு;   து. இட்டிமெ;தெ. இருக்கு.

     [இடுக்கு + வழி. இடுக்கு + சிறுசந்து.]

இடுக்கு வாசல்

 இடுக்கு வாசல் iḍukkuvācal, பெ. (n.)

   சிறு நுழைவாசல் (வின்.);; strait narrow gate (செ.அக.);.

     [இடுக்கு + வாசல். இடுக்கு – சிறுசந்து.]

இடுக்குடை

 இடுக்குடை iḍukkuḍai, பெ. (n.)

இடுக்கிடைபார்க்க;see idukkidai.

     [இடுக்கிடை → இடுக்குடை.]

இடுக்குதடி

 இடுக்குதடி iḍukkudaḍi, பெ. (n.)

   கள்ளுறும்படி பாளையை நெருக்கிப் பிடிக்க வைக்கும் இரட்டைத் தடி (வின்.);; double stick used to press things with such as that used by a toddy-drawer to press the flower or fruit-stem of the palmyra.

     [இடுக்கு + தடி. இடுக்குதல் = நெருக்குதல்.]

இடுக்குத்திருத்துழாய்

 இடுக்குத்திருத்துழாய் iḍukkuttiruttuḻāy, பெ. (n.)

   திருமால் கோயிலில் மதிப்புரவாகத் திருவடி நிலையினி டையில் வைத்துக் கொடுக்கும் துளசி (இ.வ.); (செ.அக.);; tulasi leaves kept between the sacred Sandals of the idol, which are, in a Vishnu shrine, enthroned on a pedestal, such leaves being specially given as ‘pirasatam’ to worshippers of great eminence.

     [இடு → இடுக்கு. இடுக்குதல் = வைத்தல், இடுதல், இடுக்கு + திரு + துழாய்.]

இடுக்குப்பனை

 இடுக்குப்பனை iḍukkuppaṉai, பெ. (n.)

   கள்ளுறும் பனை (யாழ்ப்.);; palmyra tree from which toddy Is drawn (செ.அக.);.

     [இடுக்கு + பனை.]

இடுக்குப்பாளை

 இடுக்குப்பாளை iḍukkuppāḷai, பெ. (n.)

   பதநீர் இறக்கும் பனை (வை.மூ.);; palmyra tree for drawing sweet toddy (செ.அக.);.

     [இடுக்கு + பாளை.]

இடுக்குப்பிள்ளை

 இடுக்குப்பிள்ளை iḍukkuppiḷḷai, பெ. (n.)

   கைக் குழந்தை; infant in arms, as carried on the hip. (செ.அக.);.

     [இடுக்கு + பிள்ளை.]

இடுக்குப்பொட்டணி

 இடுக்குப்பொட்டணி iḍukkuppoḍḍaṇi, பெ. (n.)

   அக்குளில் இடுக்கிச் செல்லத்தக்க ஏனம் அல்லது பை அக்குள்பாளம் (கக்கப்பாளம்); (யாழ்.அக.);; vessel or bag carried under the armpit (செ.அக.);.

     [இடுக்கு + பொட்டணி. பொத்தலி → பொத்தளி → பொட்டளி – பொட்டணி (கொ.வ.); பொத்தலி = பை.]

இடுக்குமரம்

இடுக்குமரம் iḍukkumaram, பெ. (n.)

   கடவை மரம் (வின்.);; narrow passage which leads to a field and is made of wooden posts. (செ.அக.);.

     [இடுக்கு + மரம்.]

 இடுக்குமரம்2 iḍukkumaram, பெ. (n.)

   செக்கு வகை (வின்.);; a kind of oil-press. (செ.அக.);.

     [இடுக்கு + மரம்.]

இடுக்குமுடுக்கு

இடுக்குமுடுக்கு iḍukkumuḍukku, பெ. (n.)

   1. மூலை முடுக்கு; cramped place, narrow corner, tight spot. (செ.அக.);.

   2. இடர்ப்பாடு; predicament.

     [இடுக்கு + முடுக்கு.]

இடுக்குவார்கைப்பிள்ளை

 இடுக்குவார்கைப்பிள்ளை iḍukkuvārkaippiḷḷai, பெ. (n.)

   எடுப்பார் கைப்பிள்ளை (இ.வ.);; one who is easily led by others, gullible fellow (செ.அக.);.

     [இடுக்கு + இடுக்குவார் (வினயா.பெ.);. இடுக்குவார் + கை + பிள்ளை.]

இடுக்கை

 இடுக்கை iṭukkai, பெ. (n.)

   உடுக்கையின் பண்டைய பெயர்; a name of “udukkai”

இடுங்கற்குன்றம்

இடுங்கற்குன்றம் iḍuṅgaṟkuṉṟam, பெ. (n.)

   செய் குன்று; artificial hill, an artificially made up mound resorted to for pleasure

     “எந்திரக் கிணறு மிடுங்கற் குன்றமும்” (மணி. 19, 102);. (செ.அக.);.

     [இடும் + கல் + குன்றம்.]

இடுங்கலம்

 இடுங்கலம் iḍuiḍugaiiḍudalvaiddalgoḍuddaliḍuṅgalam, பெ. (n.)

   கொள்கலம் (பிங்.);; vessel, receptacle (செ.அக.);.

     [இடும் + கலம்.]

இடுங்கு-தல்

இடுங்கு-தல் iḍuṅgudal,    15 செ.கு.வி. (v.i.)

   உள்ளொடுங்குதல்; to shrink, contract

     “கண்ணிடுங்கி” (திவ். பெரியதி.1,3,4);, (செ.அக.);.

   ம. இடுங்ஙுக;   க. இடுங்கு;து. இட்டிடெ.

     [இடு → இடுங்கு.]

இடுசிவப்பு

இடுசிவப்பு iḍusivappu, பெ. (n.)

   செயற்கைச் சிவப்பு (ஈடு, 7.7.9);; artificial red dye. (செ.அக.);.

     [இடு + சிவப்பு.]

இடுதங்கம்

இடுதங்கம் iḍudaṅgam, பெ. (n.)

   புடமிட்ட தங்கம் (வின்.);; refined gold, gold of the best quality. (செ.அக.);.

     [இடு1 + தங்கம். இடுதல் – செய்தல், வேலைப்பாடு.]

இடுதண்டம்

இடுதண்டம் iḍudaṇḍam, பெ. (n.)

   1. தண்டம்; penalty, fine.

   2. முறையற்ற தண்டம்; unjust penalty (செ.அக.);.

     [இடு + தண்டம்.]

இடுதிரை

 இடுதிரை iḍudirai, பெ. (n.)

   திரைச்சீலை (திவா);; Curtain.

     [இடு + திரை.]

இடுதேளிடு-தல்

இடுதேளிடு-தல் iḍudēḷiḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   பொய்க்காரணங்காட்டிக் கலங்கப்பண்ணுதல்; cause needless panic by false suggestion, as by sending one into a fright by throwing an imitation scorpion at him.

     “இட்டன ரூரா ரிடுதேளிட் டென்றன் மேல்”. (சிலப்.9, 48);.

     [இடு + தேள் + இடுதல். இடுதேள் = மற்றவர் மேல் இடுவதற்கான தேள், பொய்த்தேள், செயற்கைத்தேள், ஒ.நோ. இடுசிவப்பு.]

இடுபலம்

 இடுபலம் iḍubalam, பெ. (n.)

   பேய்ப்புடல் (வை.மு.);; wild snakegourd (செ.அக.);.

     [இடு + புடல் – இடுபுடல் – இடுபலம். (கொ.வ.);. இடுபுடல் + பொய்ப்புடல்.]

இடுப்பு

இடுப்பு iḍuppu, பெ. (n.)

   1. அரை; waist, sides, loins.

   2. ஒக்கலை; hip.

   3. மறைவுறுப்பு; euphemism for the private parts. (செ.அக);.

     [இடு → இடுப்பு. இடுதல் = வைத்தல். குழந்தை, குடம் போன்றவற்றை வைத்துக்கொள்ளுதற்கு அல்லது இடுதற்குரிய இடம் இடுப்பு.]

இடுப்பு வலி

இடுப்பு வலி iḍuppuvali, பெ. (n.)

   1. இடுப்புநோவு (வின்.);; pain in the loins;

 lumbago.

   2. பிள்ளைப்பேற்று வலி; labour pains. (செ.அக.);.

     [இடுப்பு + வலி.]

இடுப்புக்கட்டு-தல்

இடுப்புக்கட்டு-தல் iḍuppukkaḍḍudal,    15 செ.கு.வி. (v.i.)

   . சண்டை பிடிக்க முந்துதல்; to gird up one’s loins, as for a fight.

     “நீ சண்டைக்கு இடுப்புக்கட்டாதே” (பெண்மதி மாலை,பக்.9);. (செ.அக.);.

     [இடுப்பு + கட்டுதல். இடுப்பில் ஆடையை வரிந்து கட்டுதல்.]

இடுமம்

 இடுமம் iḍumam, பெ. (n.)

   குயவன் சக்கரத்தை நிலத்திற் பொருத்தற்கு இடும் மண்கட்டி (இ.வ.);. (செ.அக.);; clod of mud or earth on which the potter rests his wheel.

     [இடு → இடுமம்.]

இடுமருந்து

இடுமருந்து iḍumarundu, பெ. (n.)

   1. வசிய மருந்து; drugs administered secretly with food or drink in order to win over a person, philter potion stealthily administered.

     “இடுமருந்தோடு சோற்றை யேயிடும்” (திருப்பு.820);.

   2. கொல்லும் நோக்கத்துடன் இடும் கைமருந்து (நீர்நிறக்.18,உரை); (செ.அக.);; potion containing a poisonous drug or the venom of reptiles.

     [இடு + மருந்து.]

இடுமுடை

இடுமுடை iḍumuḍai, பெ. (n.)

   நிறைந்த தீநாற்றம்; stench, bad smell, stink.

     “இடுமுடை மருங்கில் தொடு மிடம் பெறாஅது” (நற்.329);.

     [இடு + முடை. இடு = குழித்தல், வட்டமாதல், நிறைதல்.]

இடுமுள்

இடுமுள் iḍumuḷ, பெ. (n.)

   வேலியாக இடும் முள் (சீவக.774,உரை); (செ.அக.);; thorns thrown over the entrance to a field or garden to prevent intruders.

     [இடு + முள்.]

இடும்பண்

இடும்பண்1 iḍumbaṇ, பெ. (n.)

   ஓர் அரக்கன்; a demon. Raksasa.

இடும்பன்

இடும்பன்2 iḍumbaṉ, பெ. (n.)

   செருக்குள்ளவன் (இராட்.);; haughty man, arrogant person (செ.அக.);.

     [இடம்பு → இடம்பன் → இடும்பன்.]

 இடும்பன்3 iḍumbaṉ, பெ. (n.)

   குமரக்கடவுள், கணத்தலைவன் (வின்.);; name of the leader of Skanda’s hosts (செ.அக.);.

 Skt hidimba.

     [இடும்பு → இடும்பன்.]

இடும்பர்

இடும்பர் iḍumbar, பெ. (n.)

   1. அரக்கர் (அக.நி.);; Raksasas (செ.அக.);.

   2. செருக்கர் (ஆ.அக.);; arrogant person.

   3. துயர் செய்வோர் (ஆ.அக.);; offender.

     [இடும்பு → இடும்பர்.]

இடும்பாகம்

 இடும்பாகம் iḍumbākam, பெ. (n.)

   கொத்தான் கொடி (சா.அக.);; leafless creeper, mose creeper.

     [இடு = இடுகுதல், சிறுத்தல், இடு → இடும்பு → இடும்பகம் -இடும்பாகம் = சிறுத்த மெல்லிய கொடி.]

இடும்பி

இடும்பி iḍumbi, பெ. (n.)

   1. இடும்பை செய்பவள்; demoness.

   2. இடும்பனின் தங்கை, வீமனின் மனைவி; name of Hidimba’s sister, Bhima’s wife

இடும்பி கொழுநன் (பிங்.);.

     [இடும்பு → இடும்பி.]

இடும்பில்

 இடும்பில் iḍumbil, பெ. (n.)

   ஒர் ஊர் (சிலப்பதிகாரம்);; name of a place.

     [இடும்பு → இடும்பில்.]

இடும்பு

இடும்பு1 iḍumbu, பெ. (n.)

   1. செருக்கு; haughtiness arrogance.

     “இடும்பால்… உரைத்தாய்” (செவ்வந்திப்பு. பிரமதேவன்.15);.

   2. கொடுஞ்செயல்; cruelty oppression tyranny.

     “சம்பளத்து… அவரவரிடும்பா லழிந்த வன்றோ” (குமரே.சத.47);.

   3. புலக்குறும்பு (சேட்டை);; mischief pranks. ஏழையிடும்பு (இராட்.);.

   4. வெறுப்பு (ஆ.அக.);; hatred.

   5. அவமதிப்பு (ஆ.அக.);; disgrace dishonour.

   6. துன்பம் (ஆ.அக.);; affliction.

     [இடு → இடும்பு.]

 இடும்பு2 iḍumbu, பெ. (n.)

   இடும்பாத வனம்; a forest.

     “மாறா வல்விலிடும்பிற் புறத்திறுத்து” (பதிற்று.பதிக.5:9);.

     [இடு → இடும்பு.]

 இடும்பு iḍumbu, பெ.(n.)

   எண்குணக்கேடு;எட்டு வகை தீய குணங்களுள் ஒன்று இறுமாப்பு:

 pride.

     [இடு-இடும்பு]

இடும்பை

இடும்பை iḍumbai, பெ. (n.)

   1. துன்பம்; suffering affliction, distress, calamity.

     “ஏமஞ்சாலா விடும்பை” (தொல். பொ.50);.

   2. தீமை; evil harm injury.

     “பூதம் இடும்பை செய்திடும்” (மணி.122);.

   3. நோய்; disease.

     “சுரப்பிடும்பை யில்லாரைக் காணின்” (குறள்.1056);.

   4. ஏழ்மை; poverty.

     “இடும்பையா லடர்ப்புண்டு” (திவ். பெரியதி.1.6.5);.

   5. அச்சம் (திவா.);; fear dread (செ.அக);.

   6. ஏதம்; danger. (ஆஅக.);.

   7. எலி; rat (சா.அக.);.

     [இடும்பு + இடும்பை.]

இடும்போகம்

 இடும்போகம் iḍumbōkam, பெ. (n.)

   சிவப்பவரை; red bean (சா.அக.);.

இடுலி

 இடுலி iḍuli,    பெண் ஆமை (வின்.); female turtle (செ.அக.).

 Skt. duli.

     [இடு – இடுலி. இடுதல் – குழித்தல், வட்டமாதல், வட்டமான ஆமை;

முட்டையிட மண்ணைப்பறிக்கும் பெண்ணாமை.]

இடுவந்தி

இடுவந்தி iḍuvandi, பெ. (n.)

   குற்றமில்லாதவர்மேற் குற்றத்தையேற்றுகை; accusation of an innocent person.

     ‘பொற்கொல்லன் நெஞ்சம் இடுவந்தி கூறுதலைப் புரிந்துநோக்க’. (சிலப்.16.120,உரை);, (செ.அக.);.

 Skt kimwadanti.

     [இடு + வந்தி. வன் + தி + வந்தி + கடுஞ்சொல். தீமொழி, இடுவந்தி செயற்கையாக அல்லது பொய்யாக இட்டுரைக்கும் கடுஞ்சொல்.]

இடுவல்

இடுவல்1 iḍuval, பெ. (n.)

   இடுக்கு; crevice, aperture (செ.அக.);.

     [இடு → இடுவல்.]

 இடுவல்2 iḍuval, பெ. (n.)

   வழி (நெல்லை);; way (செ.அக.);.

     [இடு – இடுவு – இடுவல். இடுவு சிறிய வழி.]

இடுவை

 இடுவை iḍuvai, பெ. (n.)

   சந்து (இ.வ.);; lane (செ.அக.);.

     [இடு → இடுவை.]

இடை

இடை iḍai, பெ. (n.)

   1. நடு (திவா.);; made n space, midst centre.

   2. நடுவண் காலம்;:middle in time.

     “இடைக் கொட்கின்” (குறள் 663);.

   3. அரை இடுப்பு; middle of the body, the waist

     “மின்னேர் நுடங்கிடை”

   4. நடுத்தர மக்கள்; middle class people.

     “இடையெலாமின்னாமை யஞ்கம்” (நாலடி. 297);,

   5. இடைக்குலம்; herdsman caste.

   6. இடை எழுத்து; medial consonants of the Tamil alphabet.

     “அல்வழி யுயிரிடைவரின்” (நன்.220);.

   7. இடைச் சொல் (நன்.239);; indeclinable particle, as one of the parts of speech.

   8. இடம்; place, space.

     “கருங்கல்லிடை தொறும்” (புறநா.5.1);.

   9. இடப்பக்கம்; left side.

     “எங்கள் பெம்மானி டையாளை” (அபிரா.84);.

   10. வழி; way.”நீரில்ல நீளிடைய” (புறநா.3);.

   11. தொடர்பு; connection.

     “உங்களோ டெங்களிடையில் லையே” (திவ்.திருவாய்.8.2.7);.

   12. தக்க நேரம், தகுந்த சூழல்; suitable time, opportunity, season.

     “உடையோர் போல விடையின்று குறுகி” (புறநா.54);.

   13. காரணம்; cause.”இடைதெரிவரியது” (சூளா. கலியாண.144);.

   14. நீட்டலளவையு ளொன்று (வின்.);; measure of length, breadth, thickness.

     [இடு → இடை.]

 இடை2 iḍai,    இடை. (part) ஏழனுருபு; sign of the loc

     “நிழலிடையுறங்குமேதி” (கம்பரா.நாட்டுப்.6); (செ.அக.);.

     [இடு → இடை.]

 இடை3 iḍaidal,    4 செ.கு.வி. (v.i.)

   1. சோர்தல் (சீவக. 446, உரை);; to grow weary, as with long waiting.

   2. மனந்தளர்தல்; to be damped in spirits.

     “இடைந்திடைந் துருகு மெளியனேன்” (தாயு.சிற்க.3);.

   3. பின் வாங்குதல்; to retreat, fall back

     “அசமுகி யிடைந்து போனாள்” (கந்தபு.மகாகாளர்.20);.

   4. விலகுதல்; to make room, get out of the way.

     ‘இடைந் தொதுங்குகை’ (ஈடு.5.4.6);.

   5. தாழ்தல்; to submit.

     ‘அவனுக்குச் சிறிது இடைந்துபோ’ (செ.அக);.

     [(இழு → இழை → இடை – இடைதல், இழைதல் = தளர்தல்.]

 இடை4 iḍai, பெ. (n.)

   1. தடுத்தல், இடையிடுதல்; check, stoppage, protest impediment

     “இடை கொண்டி யாமிரப்ப” (கலித்.37);.

   2. துன்பம் (திருக்கோ.368. உரை);; trouble. difficulty (செ.அக);.

     [இடு → இடை.]

 இடை5 iḍai, பெ. (n.)

   இடைவெளி; gap unfilled space.

     “இடையில் வண்புகழ்க் கொடைமை யானும்” (தொல்.பொ.76);.

   2. உலகம்; earth

     “இடையிற் படுகி லம்யாம்” (கம்பரா.அதிகாய.73);.

   3. வீடுபேற்றுலகம்; Svarga, heaven.

     [இடு → இடை.]

 இடை6 iḍai, பெ. (n.)

   பதின்நாடியுளொன்று (சிலப்.3.26, உரை);; principal tubular organ of the human body, one of tacanãd. (செ.அக.);.

     [இடு → இடம் → இடை.]

 இடை7 iḍai, பெ. (n.)

எடை பார்க்க;see edai.

     “இடை தான் குறைந்தது மச்சமுங் காட்டுவ தில்லை யென்றால்”

     [எடை → இடை (கொ.வ.);. இது வழுச் சொல்லாதலின் இரு வகை வழக்கிலும் தவிர்த்தல் வேண்டும்.]

 இடை8 iḍai, பெ. (n.)

   1. இடைப்பட்ட காலம், பொழுது (குறிஞ்சிப்.137, உரை);; time.

   2. நடுவுநிலை; equity.

     “இடைதெரிந்துணரும்….காட்சி” (பெரும் பாண்.445);.

   3. முன்னதற்கும் பின்னதற்குமுள்ள வேறுபாடு; difference.

     “வாசவதத் தையோ டிடைதெரி வின்மையின்” (பெருங்.வத்தவ.6.56);

     “இடைக்கண் முரிந்தார் பலர்” (குறள்.473); (செ.அக.);.

     [இடு → இடை (இடைவெளி);.]

 இடை9 iḍai, பெ. (n.)

   பின்வாங்கி ஓடுதல்; retreating.

     [இட = இடை (ஒ.மொ.371);.]

 இடை10 iḍai, பெ. (n.)

   1. ஆ; cow.

   2. மென்சொல்; softword (செ.அக.);.

ம. இட. Skt. då.

     [இன → இட → இடை. இளமையுடைய ஆவும், இளக்கமான மென்சொல்லும் இடை எனப்பட்டன.]

இடை தெரி-தல்

இடை தெரி-தல் iḍaideridal,    2 செ.குன்றாவி. (v.t.)

   ;   செவ்வியறிதல்; to judge the appropriate time, as when one wishes to speak in an assembly.

     “இடை தெரிந்து நன்குணர்ந்து சொல்லுக.” (குறள்,712);, (செ.அக.);.

     [இடை + தெரிதல், காலம் தெரிதல் போன்று தக்க இடம் தெரிதல்.]

இடை நீக்கம்

இடை நீக்கம் iḍainīkkam, பெ. (n.)

   1. சம்பளம் பெறும் பணியாளரை, அவரது பணியொழுங்கின் மைக்காகப் பணியிலிருந்து விலக்கிவைத்தல்; to debar from any privilage, office, emolument, etc., for a time.

   2. கட்சிக்கட்டுப்பாட்டை மீறும் தொண்டரைக் கட்சியிலிருந்து இடைக்காலமாக நீக்குகை; to put or hold in a state of suspense or suspension.

   3. குறுங்காலிகமாக நிறுத்திவைத்தல்; sums offsosué665;

 to stop for a time.

     [இடை + நீக்கம்.]

இடை வழக்கு

இடை வழக்கு iḍaivaḻkku, பெ. (n.)

   1. வழக்கின் நடுவே பிறராற் கொண்டுவரப்படும் வழக்கு (யாழ்ப்.);; suit of law instituted by a new claimant while the previous suit is under trial, interlocutary suit (செ.அக.);.

   2. கிளை வழக்கு (ஆ.அக.);; of shoot of a previous suit.

     [இடை + வழக்கு.]

இடைகலை

இடைகலை iḍaigalai, பெ. (n.)

   1. பத்து நாடியுள்ளொன்று; principal tubular coll like organ of the human body.

   2. இடது நாசியால் விடும் மூச்சு (செ.அக.);; breathing through the left nostril.

     [ஒருகா. இடது + கால் (காற்று); இடது – இடம் – இடை (திரிபு);. கால் – காலை – கலை (திரிபு);.]

இடைகழி

இடைகழி1 iḍaigaḻi, பெ. (n.)

   1. இடைக்கட்டு (திவ். இயற்.1,86);; intermediate passage way between the entrance door and the second, doorway in an Indian dwelling house (செ.அக.);.

   2. வாயில் (ஆ.அக.);; gate.

   3. இடைகழிநாடு; a region known as kai-kall-nādu.

     [இடை + கழி. கழி = கழிந்து (கடந்து); செல்லும் வாயில் இடையிலுள்ள நிலப்பகுதி.]

 இடைகழி2 iḍaigaḻi, பெ. (n.)

   திருக்கோவலூர் திருமால் கோயில்; Visnu shrine at Tiru-k-kövalur,

     “நீயுந் திருமகளு நின்றாயால் … கோவலிடை கழியே பற்றியினி” (திவ்.இயற்.முதல் திருவந்:86);, (செ.அக.);.

     [ஒருகா. இடைகழி நாட்டின் பெயரால் அமைந்த கோயிலாகலாம்.]

இடைகழிநாட்டு நல்லூர் நத்தத்தனார்

 இடைகழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் iḍaigaḻināḍḍunallūrnattattaṉār, பெ. (n.)

   கடைக்கழகப் புலவர்; Sangam poet.

     [இடைகழி + நாடு + நல்லூர் + நத்தத்தன் + ஆர்.]

இடைக்கச்சு

 இடைக்கச்சு iḍaikkaccu, பெ. (n.)

அரைக்கச்சை பார்க்க;see araik-kaccai.

     [இடை + கச்சு.]

இடைக்கச்சை

 இடைக்கச்சை iḍaikkaccai, பெ. (n.)

இடைக்கச்சு பார்க்க;see idai-kaccu, (செ.அக.);.

ம. இடக்கச்ச.

     [இடை + கச்சை. இடை – இடுப்பு.]

இடைக்கட்டு

இடைக்கட்டு1 iḍaikkaḍḍu, பெ. (n.)

   அரைக்கச்சு; girdle or belt.

   2. ஓர் அணி; front plate, an adornment of idols, so called from its being fastened in the middle.

   3. இடைசுழி; intermediate passage way between the entrance door and the second doorway in an Indian dwelling house.

   4. வீட்டின் நடுக்கட்டு; the middle compartment of an Indian dwelling house (செ.அக.);.

ம. இடக்கெட்டு.

     [இடை + கட்டு.]

 இடைக்கட்டு2 iḍaikkaḍḍu, பெ. (n.)

   சமன் செய்வதற்குரிய நிறை (இ.வ.);; balancing weight. (செ.அக.);.

     [இடை + கட்டு.]

இடைக்கணம்

 இடைக்கணம் iḍaikkaṇam, பெ. (n.)

   இடையின எழுத்துகள்;   ய,ர,ல,வ,ழ,ள; group of medial consonants in Tamil, as a classified group distinct from van-kanam and men-kanam (செ.அக.);.

     [இடை + கணம்.]

இடைக்கருவி

இடைக்கருவி iḍaikkaruvi, பெ. (n.)

   சல்லியென்னுந் தோற்கருவி (சிலப்.3.27 உரை);; ancient musical instrument of percussion, a kind of drum (செ.அக.);.

     [இடை + கருவி.]

     [P]

இடைக்கலம்

இடைக்கலம் iḍaikkalam, பெ. (n.)

   மட்பாண்டம்; earthern vessel for cooking

     ‘இல்லுள்வில்லேற்றி இடைக் கலத் தெய்து விடல்’ (பழ.24);.

 Skt. ida.

     [இடை + கலம் – வாயகன்ற மட்கலம்.]

இடைக்கழகம்

 இடைக்கழகம் iḍaikkaḻkam, பெ. (n.)

   கபாடபுரம் என்னும் கதவபுரத்தில் இருந்ததாகக் கூறப்படும் இரண்டாந் தமிழ்க் கழகம் (இறை.பாயி.);; middle sangam, said to have flourished for a long period at Kapādapuram, the second of the three ancient Tamil academies. (செ.அக.);.

 Skt. sangha.

     [இடை + கழகம்.]

இடைக்காடனார்

 இடைக்காடனார் iḍaikkāḍaṉār, பெ. (n.)

இடைக்காடர் (அகநா.); பார்க்க;see idai-k-kadar (செ.அக.);.

     [இடைக்காடன் + ஆர்.]

இடைக்காடர்

இடைக்காடர் iḍaikkāḍar, பெ. (n.)

   கடைக்கழகத்துச் சான்றோருள் ஒருவர் (திருவாலவா.20,1);; a Tamil Sangam poet of idai-k-kādu (செ.அக.);.

     [இடைக்காடு + அர். தொண்டை மண்டலத்தில் இடையன் திட்டிலிருந்த இடையர்.]

இடைக்கார்

 இடைக்கார் iḍaikkār, பெ. (n.)

   நெல்வகை (நாநார்த்த.);; a kind of paddy (செ.அக.);.

     [இடை + கார்.]

இடைக்காற்பீலி

 இடைக்காற்பீலி iḍaikkāṟpīli, பெ. (n.)

   பரதவ மகளிர் அணியும் கால்விரலணி வகை; a toe-ring worn on the toe next to the little toe usually by the women folk among the fishermen community (செ.அக.);.

     [இடை + கால் + பீலி.]

இடைக்காலம்

இடைக்காலம் iḍaikkālam, பெ. (n.)

   1. இடையிலுள்ள காலம்; interim period.

   2. குறைந்த முன்புள்ள காலம்; recent past.

   3. காலமல்லாக்காலம்; improper time.

   ம. இடைக்காலம்;க. எடகால.

     [இடை + காலம்.]

இடைக்கிடப்பு

இடைக்கிடப்பு iḍaikkiḍappu, பெ. (n.)

   இடைப்பிறவரல் (சீவக.2697, உரை);; word or words used as complement to the predicate or subject in a sentence (செ.அக.);.

     [இடை + கிடப்பு.]

இடைக்கிடை

இடைக்கிடை iḍaikkiḍai, கு.வி.எ. (adv.)

   1. ஊடேயூடே; at frequent intervals (செ.அக.);.

   2. ஒன்றுவிட்டொன்று; alternate (ஆ.அக.);.

     [இடைக்கு + இடை.]

இடைக்குன்றூர்கிழார்

 இடைக்குன்றூர்கிழார் iḍaikkuṉṟūrkiḻār, பெ. (n.)

   தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பாடிய புலவர் (புறநா);; Sangam poet of Idai-k-kunur.

     [இடைக்குன்றூர் + கிழார்.]

இடைக்குறை

இடைக்குறை iḍaikkuṟai, பெ. (n.)

   செய்யுள்திரிபுகளுள் ஒன்று (நன்.156, உரை);;     [இடை + குறை.]

இடைக்குலநாதன்

 இடைக்குலநாதன் iḍaikkulanātaṉ, பெ. (n.)

   கண்ணன் (இராட்.);; Krishna (செ.அக.);.

     [இடை + குலம் + நாதன்.]

இடைக்குலம்

 இடைக்குலம் iḍaikkulam, பெ. (n.)

   இடையரது குலம் (யாதவர்);; community of sheperds (ஆ.அக.);.

     [இடை + குலம்.]

இடைக்குழி

 இடைக்குழி iḍaikkuḻi, பெ. (n.)

   இடையெலும்பிரண் டுக்குமிடையிலுள்ள பள்ளம் (இங்.வை.);; pelvic cavity. (செ.அக.);.

க. எடெகுளி.

     [இடை + குழி.]

இடைக்கொள்ளை

இடைக்கொள்ளை iḍaikkoḷḷai, பெ. (n.)

   1. ஊடு தட்டு; plunder by a third party of a property in dispute between two.

   2. கொள்ளை நோயால் வரும் அழிவு (வின்.);; ravages of an epidemic disease (செ.அக.);.

     [இடை + கொள்ளை.]

இடைசுருங்கிப்பறை

 இடைசுருங்கிப்பறை iṭaicuruṅkippaṟai, பெ. (n.)

   திமிலையின் வேறொருபெயர்; an another name of Timilai.

     [இடை+சுருங்கி+பறை]

இடைசுருங்குபறை

 இடைசுருங்குபறை iḍaisuruṅgubaṟai, பெ. (n.)

   துடி (சூடா.);; small drum tapering in the middle like an hour-glass (செ.அக.);.

     [இடை + சுருங்கு + பறை.]

இடைசூரி

 இடைசூரி iḍaicūri, பெ. (n.)

   அறுப்பு, வளையம், அக்கமணி முதலியவற்றின் இடையிற்கோக்கும் மணி (யாழ்ப்.);; gold or silver beads interspersed in a rosary of rudrāksa, tulasi, etc. (செ.அக.);.

     [இடை + செறி = இடைச்செறி → இடைச்சூரி. இதனை இடைசூரி என்பது வழு.]

இடைச்சனி

 இடைச்சனி iḍaiccaṉi, பெ. (n.)

இடைக்காரி பார்க்க;see idai-k-kari (செ.அக.);.

     [இடை + சனி.]

இடைச்சன்

இடைச்சன் iḍaiccaṉ, பெ. (n.)

   1. இரண்டாம்பிள்ளை (கொ.வ.);; second child (செ.அக.);.

   2. நடு மகன்; middle child (ஆ.அக.);

   3. இரண்டாம் பேறு (ஆ.அக.);; second birth.

     [இடை – இடைச்சன்.]

இடைச்சரி

இடைச்சரி iḍaiccari, பெ. (n.)

   தோள்வளை (ஈடு.2.5,6);; armlet worn by men as an ornament, arm (செ.அக.);.

     [இடை + சரி. செறி → சரி.]

இடைச்சி

இடைச்சி iḍaicci, பெ. (n.)

   1. முல்லைநிலப் பெண் (பிங்.);; woman of the herdsmen caste inhabiting the forest pasture tracts.

   2. இடையுடையவள்; woman with special reference to her waist

     “ஓசை பெற்ற துடிக்கொளி டைச்சிகள்” (திருப்பு:254);, (செ.அக.);.

   ம. இடயத்தி;க. எடதி.

     [இடைத்தி → இடைச்சி.]

இடைச்சியார்

இடைச்சியார் iḍaicciyār, பெ. (n.)

   கலம்பகத்துள் ஒர் உறுப்பு (குமர.பிர.மதுரைக்.62);; stanza or stanzas forming part of the literary composition known as kalampakam and describing the Idaicci (செ.அக.);.

     [இடைத்தி – இடைச்சி + ஆர்.]

இடைச்சீலை

 இடைச்சீலை iḍaiccīlai, பெ. (n.)

   திரை (இராட்);; curtain (செ.அக.);.

     [இடை + சீலை.]

இடைச்சுரநாதர்

 இடைச்சுரநாதர் iḍaiccuranātar, பெ. (n.)

   திருவிடைச்சுரத்திற் கோயில் கொண்டிருக்கு மிறைவன் [ஆ.அக.); deity at Tiruvidaiccuram.

     [இடைச்சுரம் + நாதர்.]

இடைச்சுரிகை

 இடைச்சுரிகை iḍaiccurigai, பெ. (n.)

   உடைவாள் (சம்.அக.);; sword, dagger, as suspended from a girdle round the waist (செ.அக.);.

ம. இடச்சுரிக.

     [இடை + சுரிகை.]

     [P]

இடைச்சுருக்கம்

இடைச்சுருக்கம் iḍaiccurukkam, பெ. (n.)

   1. உடுக்கை போல் நடுவில் சுருங்கி ஒடுக்கமாயிருத்தல்; contraction of an organ [as the stomach or the uterus] a or near the middle of the body, hour-glass contraction

   2. இடுப்பின் ஒடுக்கம்; narrowness of the waist. (சா.அக.);.

     [இடை + சுருக்கம்.]

இடைச்சுவர்

இடைச்சுவர் iḍaiccuvar, பெ. (n.)

   இடையூறு; impediment obstacle as an intervening wall, barrier.

     “இதுக்கு இடைச்சுவ ருண்டாவதே” (திவ். திருமலை.வ்யா.19.பக்.69);, (செ.அக.);.

ம. இடக்சுவர்.

     [இடை + சுவர்.]

இடைச்சூரி

 இடைச்சூரி iḍaiccūri, பெ. (n.)

   அக்கமணி முதலியவற்றுக்கிடையில் கோக்கும் மணி (செ.அக.);; gold or silver beads interspersed in a rosary of rudraksh or tulasi etc.

     [இடை + சூரி. செறி – சூரி.]

இடைச்செருகல்

 இடைச்செருகல் iḍaiccerugal, பெ. (n.)

   ஒருவர் செய்யுளிற் பிறர் வாக்கைக் கலக்கை; interpolator (செ.அக.);.

     [இடை + செருகல்.]

இடைச்செறி

இடைச்செறி iṭaicceṟi, பெ. (n.)

   ஒருவகையான கையணி; a kind of hand ornament.

     [இடை+செறி]

     [P]

 இடைச்செறி iḍaicceṟi, பெ. (n.)

   1. குறங்குசெறி பார்க்க; ancient thigh ornament

     “இடைச்செறி குறங்கு கெளவி” (சீவக.2445);.

   2. துணை மோதிரம் (ஈடு.6.1,1);; second ring on a finger worn to keep another ring in place (செ.அக.);.

     [இடை + செறி.]

இடைச்சேரி

இடைச்சேரி iḍaiccēri, பெ. (n.)

   இடையரூர் (சீவக 422, உரை);; hamlet populated by herdsmen (செ.அக.);.

ம. இடச்சேரி.

     [இடை + சேரி.]

இடைச்சொல்

இடைச்சொல் iḍaiccol, பெ. (n.)

   பெயர் வினைகளைச் சார்ந்து வழங்குஞ் சொல் (நன்420);; particle which cannot be used by itself in any sense-but which, when occurring in combination with nouns and verbs, functions as infiectional or conjugational suffix;

 adverb. preposition, expletive, conjunction, interjection etc., one of the four parts of speech in Tamil grammar (செ.அக.);.

     [இடை + சொல்.]

இடைச்சோழகம்

 இடைச்சோழகம் iḍaiccōḻkam, பெ. (n.)

   தென்றல் வீசும் பருவத்தின் இடைக்காலம் (யாழ்ப்.);; middle period of the south-west monsoon (செ.அக.);.

     [இடை + சோழகம்.]

இடைஞ்சல்

இடைஞ்சல் iḍaiñjal, பெ. (n.)

   1. நெருக்கம்; narrowness, closeness இடைஞ்சல் வழி (கொ.வ.);.

   2. தடை (கொ.வ.); obstruction, hindrance.

   3. தொல்லை; trouble distress”அடியா ரிடைஞ்சல் களைவோனே” (திருப்பு:34); (செ.அக.);.

ம. இடச்சல்.

     [இடைதல் → இடைஞ்சல்.]

இடைதல்

இடைதல்1 iḍaidal, பெ. (n.)

   நிலம் (அக.நி.);; earth. (செ.அக.);.

     [இட → இடம். இடை. இடைதல்.]

 இடைதல்2 iḍaidal, தொ.பெ (v.n.)

   1. சேலை; clothing.

   2. வசங்கெடுதல் (ஆ.அக.);; losing consciousness.

     [இடைதல் = நெருக்குதல் நெருங்க இறுக்கி உடுக்கும் துணி. பின் வாங்குதல், நினைவுதப்புதல்.]

இடைதெரியா இருவர்

இடைதெரியா இருவர் iḍaideriyāiruvar, பெ. (n.)

   உருப்பசியும் திலோத்தமையும்; Urvasi and Thilottamai.

     “இடைதெரியாஏஎர் இருவருந் தத்தம்” (கலித்.109);. (சங். இலக்.சொற்.);.

     [இடை + தெரியாத + இருவர்.]

இடைத்தட்டு

இடைத்தட்டு iḍaittaḍḍu, பெ. (n.)

   1. இடைக் கொள்ளை; plunder by a third party of a property about which two parties are quarrelling (செ.அக.);.

   2. இடையிலே காரியம் பார்த்தல் (ஆ.அக.);; to work during intervals.

ம. இடத்தட்டு.

     [இடை + தட்டு.]

இடைத்தரகர்

 இடைத்தரகர் iṭaittarakar, பெ. (n.)

   பெரும்பாலும் வணிகவொப்பந்தம் போன்ற பெரும் பேரத்தை முடித்து வைப்பவர்; middle man,

     [இடை+தரகர்]

இடைத்தரம்

 இடைத்தரம் iḍaittaram, பெ. (n.)

   நடுத்தரம்; medium quality, intermediate grade, neither big nor small (செ.அக.);.

   ம. இடத்தரம்;   க. எடெதர;து. இடெதர.

     [இடை + தரம்.]

இடைத்தலைவலி

 இடைத்தலைவலி iḍaittalaivali, பெ. (n.)

   விட்டு விட்டு வரும் தலைநோய்; headache usually occurring at intervals – Intermittent headache (சா.அக.);.

     [இடை + தலைவலி.]

இடைத்திரிசொல்

 இடைத்திரிசொல் iḍaittirisol, பெ. (n.)

   இயற்சொற் போல்தம்பொருள் விளக்காது அரிதுணர் பொருளனவாய் நிற்கும் இடைச்சொல் (ஆ.அக.);; grammatic terminology signifying inexplicable word formation.

     [இடை + திரி + சொல்.]

இடைத்தீன்

 இடைத்தீன் iḍaittīṉ, பெ. (n.)

   இடைத்தின்றி, சிற்றுண்டி (பாண்டி.);; lunch, light refreshments. (செ.அக.);.

     [இடை + தீன். தின் = தீன். தீன் = தின்னப்படும் சிற்றுண்டி, தீனி தின்றி. திண்டி என்பவற்றை ஒப்புநோக்குக.]

இடைநரை

 இடைநரை iḍainarai, பெ. (n.)

   அங்கும் இங்கும் சிறிது நரைத்திருக்கை (வின்.);; hair or beard grown grey here and there. (செ.அக.);.

க. எடெநரெ.

     [இடை + நரை.]

இடைநாடி

 இடைநாடி iḍaināḍi, பெ. (n.)

   இடைகலை பார்க்க; principal tubular organ of the human body. (செ.அக.);.

     [இடை + நாடி.]

இடைநாழிகை

இடைநாழிகை iṭaināḻikai, பெ. (n.)

   சிற்பக் கலையில் அர்த்த மண்டபச் சுவரைக் குறிக்குஞ்சொல்; a name for the wall of ard hamandapa in architecture.

     [இடை+நாழிகை]

 இடைநாழிகை iḍaināḻigai, பெ. (n.)

   1. கோயிலில் உள் மண்டபத்துக்கும் வெளிமண்டபங்கட்கும் இடைப்பட்ட இடம்; middle corridor, a passage between the ardha-mandapa and the mahamandapa of a temple.

   2. இரண்டு கட்டடத்துக்கோ, அறைகட்கோ நடுவே உள்ள வழி; a corridor.

ம. இடநாழிக.

     [இடை + நாழிகை.]

இடைநிகரா-தல்

இடைநிகரா-தல் iḍainigarātal,    6 செ.கு.வி. (v.i.)

   நடுத்தரமான நிலையிலிருத்தல் (குறள்.635. உரை);; be neither affluent nor penurious.

     [இடை + நிகராதல்.]

இடைநிகழ்வு

 இடைநிகழ்வு iḍainigaḻvu, பெ. (n.)

   தற்செயல்; chance, accident. (செ.அக.);.

     [இடை + நிகழ்வு.]

இடைநிலை

இடைநிலை1 iḍainilai, பெ. (n.)

   1. நடுவில் நிற்கை; state of being in the middle,

   இடைநிலைத் தீவகம். 2. (இலக்.); பெயர்வினைகளின் பகுதிவிகுதிகளுக்கு இடையில் நிற்கும் ஒர் உறுப்பு (நன்.141);; medial particles coming between the root and the ending in a word (i); in verbs, to indicate tense, as த் in செய்தான் (ii); in personal nounsas an inserted euphonic connective particle, as ஞ் in அறிஞன்.

ம. இடநிலை.

     [இடை + நிலை.]

 இடைநிலை2 iḍainilai, பெ. (n.)

   1. (இலக்.); எச்ச முதலியன கொண்டு முடியுஞ் சொற்களினிடையில் ஏற்ற பிறசொல் வருகை;   2. இரண்டுக்குமிடை, இடைப்பட்டிருத்தல்; middle stage.

   3. இடைப்பட்டிருக்கும் நிலை, தடை; obstacle.

   4. நடுநிலையில் இருத்தல்; intermediary.

ம. இடநில.

     [இடை + நிலை.]

இடைநிலை மயக்கம்

 இடைநிலை மயக்கம் iḍainilaimayakkam, பெ. (n.)

இடைநிலை மெய்ம்மயக்கு பார்க்க;see idai-nilai-mеу-m-mауаkku.

இடைநிலை விளக்கு

 இடைநிலை விளக்கு iḍainilaiviḷakku, பெ. (n.)

   இடைநிலைத்தீவகம் பார்க்க;     [இடை + நிலை + விளக்கு.]

இடைநிலைத்தீவகம்

இடைநிலைத்தீவகம் iḍainilaittīvagam, பெ. (n.)

   தீவகவணிவகை (தண்டி.38);;     [இடை + நிலை + தீவகம்.]

இடைநிலைப்பாட்டு

இடைநிலைப்பாட்டு iḍainilaippāḍḍu, பெ. (n.)

   கலிப்பாவினோருறுப்பு (தாழிசை);;   444);; one of several parts of the verse appearing in the middle of the kali type. (செ.அக);.

     [இடை + நிலை + பாட்டு. கலிப்பாவினிடையில் வரும் உறுப்பு இடைநிலைப்பாட்டு எனப்பட்டது.]

இடைநிலைமயக்கு

 இடைநிலைமயக்கு iḍainilaimayakku, பெ. (n.)

இடைநிலைமெய்ம்மயக்கு பார்க்க;see iday-nilai-mey-m-mayakku.

இடைநிலைமெய்ம்மயக்கு

 இடைநிலைமெய்ம்மயக்கு iḍainilaimeymmayakku, பெ. (n.)

     [இடை + நிலை + மெய்ம்மயக்கு.]

இடைநிலையெழுத்து

 இடைநிலையெழுத்து iḍainilaiyeḻuttu, பெ. (n.)

இடைநிலை மெய்ம்மயக்கு பார்க்க;see idai-nilai-may-m-mayakku.

     [இடை + நிலை + எழுத்து.]

இடைநீரில்(நில்)-த(ற)ல்

இடைநீரில்(நில்)-த(ற)ல் iḍainīrilniltaṟal,    14 செ.கு.வி. (v.i.)

   நீந்துகையில் நிலைக் குத்தாய் நிற்றல்; to gain vertical posture while swimming.

     [இடை + நீரில் + நில்.]

இடைநேரம்

இடைநேரம் iḍainēram, பெ. (n.)

   1. சிற்றுண்டி கொள்ளுஞ் சமயம்; recess, tiffin time, interval (செ.அக.);.

   2. நடுப்பகல்; noon.

   3. இரண்டு காலப்பகுதிகளுக்கு இடைப்படும் நேரம்; interval between two periods of time.

   ம. இடநேரம்;க. எடெவகல்.

     [இடை + நேரம். செய்யும் பணிக்கிடையில் விடப்படும் ஒழிவு நேரம்.]

இடைபனுவலியர்

 இடைபனுவலியர் iṭaipaṉuvaliyar, பெ. (n.)

   வாய்மொழி இலக்கியத்தில், தாமே புதிய புதிய அடிகளைக் கோப்பவர்; introduction in a oral Song.

     [இடை+பனுவல்+இயர்]

இடைபாகம்

 இடைபாகம் iḍaipākam, பெ. (n.)

   இடுப்புப் பாகம்; umber region (சா.அக.);.

     [இடை + பாகம்.]

இடைபாடு

இடைபாடு iḍaipāḍu, பெ. (n.)

   1. அலுவல்; transaction.

   2. வணிகம் முதலிய தொடர்பாக இருவரிடை நிகழுஞ் செய்தி; business liaison (செ.அக.);.

ம. இடபாடு.

     [இடை + பாடு.]

இடைபெருத்தபறை

 இடைபெருத்தபறை iṭaiperuttapaṟai, பெ. (n.)

   பறை வகையினுள் ஒன்று; a kind of drum.

     [இடை+பருத்த+பறை]

இடைபேசி

 இடைபேசி iḍaipēci, பெ. (n.)

   ஒரே வளமனையில் உள்ளவர்களுடன் மட்டும் பேசும் வகையில் அமைந்த தொலைபேசி; intercom, telephone system within a building.

     [இடை + பேசி.]

இடைப்படி

இடைப்படி iḍaippaḍi, பெ. (n.)

   12 பலம் எடை கொண்ட ஒரு நிறை அளவு. (தைலவ.தைல.121. உரை);; measure of weight equal to 12 palams. (செ. அக.);.

     [இடை + படி.]

இடைப்படு வள்ளல்கள்

 இடைப்படு வள்ளல்கள் iḍaippaḍuvaḷḷalkaḷ, பெ. (n.)

   இடை வள்ளல்கள் பார்க்க; intermediate galaxy of liberal benefactors. (செ.அக.);.

     [இடை + படு + வள்ளல் + கள்.]

இடைப்படு-தல்

இடைப்படு-தல் iḍaippaḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   1. நடுவாதல்; to appear in the midst intervene.

   2. இடையில் இருத்தல் (வின்);; to happen in an interim. (செ.அக.);.

   3. வழியிற் சந்தித்தல் (ஆ.அக.);; to come across, encounter.

க. எடெவாய்.

     [இடை + படு.]

இடைப்படுதானம்

 இடைப்படுதானம் iḍaippaḍutāṉam, பெ. (n.)

   இடைப்பட்டோருக்குச் செய்யும் ஈகை; charity to the ordinary indigent folk being the medium grade of benevolence. (செ.அக.);.

     [இடை + படு + தானம்.]

இடைப்படை

இடைப்படை iḍaippaḍai, பெ. (n.)

   நடுவிலுள்ள படை; middle army.

     “இடைப்படையழுவத்து” (புறம்.295-5);.

     [இடை + படை.]

இடைப்பரு

 இடைப்பரு iḍaipparu, பெ. (n.)

   இடைமுள் பார்க்க;

இடைப்பழம்

 இடைப்பழம் iḍaippaḻm, பெ. (n.)

   காய்க்குலையில் இடையிடையே பழுத்திருப்பது (வின்);; ripe fruits interspersed in a bunch of unripe plantains. (செ.அக.);.

     [இடை + பழம்.]

இடைப்பழுப்பு

 இடைப்பழுப்பு iḍaippaḻuppu, பெ. (n.)

   பச்சையும் மஞ்சளுங்கலந்த இலை முக்காற் பழுப்பிலை; leaf partially green and partially ripe. (சா.அக.);.

     [இடை + பழுப்பு..]

இடைப்பாட்டம்

இடைப்பாட்டம் iḍaippāḍḍam, பெ. (n.)

   பழைய வரி வகை (S.I.I.ii.521.ft);; ancient tax on herdsmen (செ.அக.);.

ம. இடயர்வரி.

     [இடை + பாட்டம். இடை – இடையர். பாட்டம் – வரி. பாட்டம் பாட்டமாய் அல்லது காலமுறைப்படி பெறும் வரி.]

இடைப்பிறவரல்

 இடைப்பிறவரல் iḍaippiṟavaral, பெ. (n.)

     [இடை + பிற + வரல்.]

இடைப்புணரியைபு

 இடைப்புணரியைபு iḍaibbuṇariyaibu, பெ. (n.)

   நடுவிரு சீர்க்கண்ணுமியைபு வருவது. (ஆ.அக.);; rhyming in the middle foot of a verse.

     [இடை + புணர் + இயைபு.]

இடைப்புணரெதுகை

 இடைப்புணரெதுகை iḍaippuṇaredugai, பெ. (n.)

   நடுவிரு சீர்க்கண்ணும் எதுகை வருவது (ஆ.அக.);; similarity or agreement of the second and/or subsequent syllables of the first foot of a metrical line with the other lines in a verse is termed edugai. If the same agreement occurs in the middle foot of a metrical line it is termed idaip-punar edugai.

     [இடை + புணர் + எதுகை.]

இடைப்புணர்முரண்

 இடைப்புணர்முரண் iḍaippuṇarmuraṇ, பெ. (n.)

   நடுவிரு சீர்க்கண்ணும் முரண்வரத்தொடுப்பது. (ஆ.அக.);; antithesis of words or ideas in the middle of a metrical line in a verse.

     [இடை + புணர் + முரண்.]

இடைப்புலம்

இடைப்புலம் iḍaippulam, பெ. (n.)

   நடவிடம்; middle-land, intermediate and between the mountains and the low lands.

     “திண்பிணி முரச மிடைப்புலத்திரங்க” (புறநா.288);.

     [இடை + புலம்.]

இடைப்புழுதி

 இடைப்புழுதி iḍaippuḻudi, பெ. (n.)

   விதைப்பாட்டு நிலம், புழுதி நிலம் (வின்.);; land which is neither very moist nor very dry which is suitable for sowing. (செ.அக.);.

     [இடை + புழுதி.]

இடைப்பூட்சி

இடைப்பூட்சி iḍaippūḍci, பெ. (n.)

இடைப்பாட்டம் (S.I.I.ii, 521); பார்க்க;see idai-p-patttam. (செ.அக.);.

     [இடை + பூட்சி.]

இடைப்பூட்டு

இடைப்பூட்டு iḍaippūḍḍu, பெ. (n.)

   1. அரைக்கச்சு (வின்);; griddle belt (செ.அக.);.

   2. அரைப்பூட்டு. (ஆ.அக.);; knotted under griddle.

     [இடை + பூட்டு.]

இடைப்பேச்சு

 இடைப்பேச்சு iḍaippēccu, பெ. (n.)

   நடுநடுவே சொல்லும் சொல்; interject.

க. எடெவாது. எடெமாது.

     [இடை + பேச்சு.]

இடைப்போகம்

இடைப்போகம் iḍaippōkam, பெ. (n.)

   1. இடைக்காலத்து விளைவு; interim crop. (செ.அக.);.

   2. இடையில் புன்செய்ப்பயிர் விளைவு (ஆ.அக.);; dry crop between two spells of wet cultivation.

     [இடை + போகம்.]

இடைமகன்

இடைமகன் iḍaimagaṉ, பெ. (n.)

   இடையன்; cowherd or shepherd.

     “இடைமகன் கொன்ற வின்னா மரத்தி னேன்.” (சீவக.1914); (செ.அக.);.

     [இடை + மகன்.]

இடைமடக்கு

இடைமடக்கு iḍaimaḍakku, பெ. (n.)

   1. பேச்சினடுவே தடுக்கை (வின்.);; interrupting a conversation.

   2. மடக்கணி வகை (தண்டி.91);; play on words used in different senses. (செ.அக.);.

   3. இடக்குமடக்கான பேச்சு (ஆ.அக.);; controversial verbal engagement.

     [இடை + மடக்கு.]

இடைமடு-த்தல்

இடைமடு-த்தல் iḍaimaḍuttal,    18 செ.குன்றாவி. (v.t.)

   இடைச்செருகுதல்; to interpolate.

     “புன்சொலிற் றந் திடை மடுத்த கந்தி” (பரிபா.பாயி.); (செ.அக.);.

     [இடை + மடு.]

இடைமதில்

இடைமதில் iḍaimadil, பெ. (n.)

   இடையேயுள்ள மதில்; middle wall of a fortress.

     “பருந்துயிர்த்திடை மதில் சேக்கும்” (புறம். 343-6);. [இடை + மதில்.]

இடைமறி-த்தல்

 இடைமறி-த்தல் iḍaimaṟittal, செ.குன்றாவி (v.t.)

   குறுக்கிட்டுத் தடுத்தல், இடம் விட்டு இடம் செல்லும் ஒருவரை அல்லது ஒன்றை அல்லது ஒரு செய்தியை தடுத்து நிறுத்துதல்; to intercept.

     [இடை+மறி-]

இடைமறிப்பு

 இடைமறிப்பு iḍaimaṟippu, பெ.(n.)

   இடம் விட்டு இடம் செல்லும் ஒருவரை அல்லது ஒன்றை அல்லது தகவல் போன்றவற்றைத் தடுத்து நிறுத்துகை; interception.

கடத்தல்காரர் களுக்கிடையே நடந்த தொலைபேசி உரை யாடலைக் காவல்துறையினர் இடைமறிப்பு செய்து அவர்களைக் கைதுசெய்துவிட்டனர்.

     [இடை+மறிப்பு. மறி→மறிப்பு]

இடைமிடை-தல்

இடைமிடை-தல் iḍaimiḍaidal,    2 செ.குன்றாவி (v.t.)

   நடுவே கலத்தல்; intermingle.

     “பொய்யோ டிடைமி டைந்த சொல்” (நாலடி.80);. (செ.அக.);.

க. எடெயொட்டு.

     [இடை + மிடை.]

இடைமுள்

இடைமுள் iḍaimuḷ, பெ. (n.)

   1. புண்ணிலே தோன்றும் மறுமுள்; small new eruption about a healing ulcer.

   2. கரப்பான் வகை; a kind of eruption (செ.அக.);. மறுவ. இடைப்பரு;

க. எடெமுள் (இடைஞ்சல்);.

     [இடை + முள்.]

இடைமூளை

 இடைமூளை iḍaimūḷai, பெ. (n.)

   நடுவிலுள்ள மூளை; interbrain – thalamencephalon (சா.அக.);.

     [இடை + மூளை.]

இடைமேடு

 இடைமேடு iḍaimēḍu, பெ. (n.)

   இடையிடையே சிறிது மேடான பாகமுள்ள வயல் (வின்.);; field parts of which are slightly raised in level than the surrounding parts. (செ.அக.);.

க. எடெதெவரு. (நடுத்திட்டு);.

     [இடை + மேடு.]

இடைமை

இடைமை iḍaimai, பெ. (n.)

   இடையின வெழுத்துகள்;   ய,ர,ல,வ,ழ,ள முதலியன; medial consonants of the Tamil alphabet

     “ஆவியிடைமை யிடமிடறாகும்” (நன்.75);. (செ.அக.);.

     [இடை → இடைமை.]

இடைய நெடுங்கீரனார்

 இடைய நெடுங்கீரனார் iḍaiyaneḍuṅāraṉār, பெ. (n.)

   கடைக்கழக மருவிய புலவர். (அபி.சிந்);; poet of Sangam age.

     [இடையன் + நெடும் + கீரன் + ஆர்.]

இடையணி

இடையணி iḍaiyaṇi, பெ. (n.)

   இடையில் அணியும் அணிவகை;   1. அரைப்பட்டிகை.

   2. மேகலை,

   3. குறங்கு செறி; kind of an ornament (ஆ.அக.);.

     [இடை + அணி.]

இடையது

இடையது iḍaiyadu, வி.எ. (adv.)

   இடையிலுள்ளது; that which is in the middle.

     “வடமலைப் பெயர்குவை யாயி னிடையது” (புறம்.67.7.);.

     [இடை + அது.]

இடையன்

இடையன் iḍaiyaṉ, பெ. (n.)

   1. இடையர் பார்க்க;see Idaiyar.

   2. முல்லைநிலத்தவன்; herdsman.

     “மா சுண் உடுக்கை மடிவாயிடையன்” (புறம்:54-11);.

   ம. இடயன்;க. எடெய.

     [இடை + அன்.]

இடையன் சேந்தன் கொற்றனார்

 இடையன் சேந்தன் கொற்றனார் iḍaiyaṉcēndaṉkoṟṟaṉār, பெ. (n.)

   கடைக்கழக மருவிய புலவர்; one of the poets of sangam age.

     [இடையன் + சேந்தன் + கொற்றன் + ஆர்.]

இடையன்கால்வெள்ளி

 இடையன்கால்வெள்ளி iḍaiyaṉkālveḷḷi, பெ. (n.)

   தாழி (பரணி); (வின்.);; second naksatra (செ.அக.);.

     [இடையன் + கால் + வெள்ளி.]

இடையம்புளி

 இடையம்புளி iḍaiyambuḷi, பெ.(n.)

   இடையர் வைத்த குழம்பு; curry broth prepared by Cowherd.

     [இடையம்+புளி]

இடையர்

இடையர் iḍaiyar, பெ. (n.)

   குறிஞ்சி நிலத்துக்கும் மருதநிலத்துக்கும் இடைப்பட்ட காடும் காடு சார்ந்த நிலமாகிய முல்லை நிலத்தில் கால்நடைகளை மேய்த்து வாழும் இனத்தார். (திவ்.பெரியதி.11.8.6);; herdsmen of mullai or forest pasture lying midway between hilly tracks or kurinci and plains or marutam. (செ.அக.);.

     [இடை + அர்.]

நெய்தலும் பாலையும் தனிநிலங்களாக வகைப்படுத்தாமல், மலையும் காடும் வயலும் குறிஞ்சி முல்லை மருதம் ஆகிய முத்திணைகளாக மட்டும் வழங்கிய காலத்தில் முல்லை நிலம் இடைநிலமாகக் கருதப்பட்டிருக்கலாம். நெய்தல் மருதத்தை யொட்டிய கடற்புறமாதலின் மருதமாகவே கணிக்கப்பட்டுக் காலப்போக்கில் கடல்வளத்தையே வாழ்க்கைத் தொழிலாகக் கொண்ட மக்கள் தோன்றியபின் நெய்தல் திணை புதிதாகச் சேர்க்கப்பட்டிருக்கலாம்.

இடையர் வரி

 இடையர் வரி iḍaiyarvari, பெ. (n.)

இடைப்பாட்டம் பார்க்க;see idai-p-pâttam.

இடையறல்

 இடையறல் iḍaiyaṟal, பெ. (n.)

   நடுவே முடிந்து போதல் (ஆ.அக.);; cease or end in the middle.

     [இடை + அறல். அறு – அறல் + நீங்குதல்.]

இடையறவு

இடையறவு iḍaiyaṟavu, பெ. (n.)

   இடைவிடுகை; interval, break

     “இடையறவின் றிமைப்பளவும்” (சூளா. துற.221); (செ.அக.);.

தெ. எடபடு.

     [இடை + அறவு.]

இடையறாவன்பு

 இடையறாவன்பு iḍaiyaṟāvaṉpu, பெ. (n.)

   முடியாவன்பு (ஆ.அக.);; unbreakable love.

     “இடையறாப் பேரன்பும் மழைவாரும் இணைவிழியும்” (காஞ்சிப்பு);.

     [இடை + அறா + அன்பு.]

இடையறு

இடையறு1 iḍaiyaṟudal,    2 செ.கு.வி. (v.i.)

   தடைப்படுதல்; to be interrupted, to cease in the middle

     “இன்பமிடையறா தீண்டும்” (குறள்.369);. (செ.அக);.

     [இடை + அறு.]

 இடையறு2 iḍaiyaṟuttal,    18 செ.குன்றாவி. (v.t.)

   படை முதலியவற்றை ஊடறுத்துச்சென்று பிரித்தல்; to cut through or divide, as an army.

     “வருபுனற் கற்சிறை கடுப்பவிடையறுத்து” (மதுரைக்.725);;

     [இடை + அறு.]

இடையல்

இடையல்1 iḍaiyal, பெ. (n.)

   இடுப்புத்துகில் (திவா.);; garment, cloth worn round the waist. (செ.அக.);.

     [இடை + இடையல் (இடையில் உடுப்பது);.]

 இடையல்2 iḍaiyal, பெ. (n.)

   1. ஒதுங்கல்; withdrawing.

   2. தாழல்; lowering.

   3. பின்னிடல்; retreating.

     [இடு – இடை – இடையல் = தாழ்தல்.]

இடையவியல்

 இடையவியல் iḍaiyaviyal, பெ. (n.)

   சதை உராய்வதனாலேற்படும் ஒர்வகைப்படை; ecezema resulting from a chase of the skin-intertriga. (சா.அக.);.

     [இடை + அ + வியல். இடை – இடுப்பு. வியல் – பரவுதல்.]

இடையாகெதுகை

இடையாகெதுகை iḍaiyāgedugai, பெ. (n.)

   அடி தோறும் இரண்டாமெழுத் தொன்றே யொன்றிவரத் தொடுப்பது (காரிகை.ஒழிபி.6.உரை);; variety of Initial edugai where only the second letter in each line of the verse is the same, as

     “அகரமுதல வெழுத்தெல்லா மாதி, பகவன் முதற்றே யுலகு”. (குறள்.1); (செ.அக.);.

     [இடை + ஆகு + எதுகை.]

இடையாந்தரம்

இடையாந்தரம் iḍaiyāndaram, பெ. (n.)

   1. இடைப்பட்ட காலம் அல்லது இடம்; intermediate space or time.

     ‘அந்த வேலை இடையாந்தரத்திலே கெட்டுப்போ யிற்று’ (வின்.); (செ.அக.);.

   2. நடு (ஆ.அக.);; middle, centre.

     [இடை + அந்தரம் – இடையந்தரம் – இடையாந்தரம்.]

இடையாபரணம்

 இடையாபரணம் iḍaiyāparaṇam, பெ. (n.)

இடையணி பார்க்க;see idai-y-ani.

 Skt. abharana → த. ஆபரணம்.

     [இடை + ஆபரணம்.]

இடையாமம்

 இடையாமம் iḍaiyāmam, பெ. (n.)

   இடையிருள் யாமம் பார்க்க;     [இடை + யாமம்.]

இடையாமர்

 இடையாமர் iḍaiyāmar, பெ. (n.)

   இடையாயார் பார்க்க;     [இடை + (ஆயவர் → ஆயார்); ஆமர்.]

இடையாயார்

இடையாயார் iḍaiyāyār, பெ. (n.)

   நடுவர்; middle class, those belonging to the intermediate grade in any broad classification

     “இடையாயார் தெங்கினனையர்” (நாலடி.216); (செ.அக.);.

     [இடை + ஆயார். ஆகியவர் → ஆயவர் → ஆயார்.]

இடையாறு

இடையாறு iḍaiyāṟu, பெ. (n.)

   இடையாற்றுமங்கலம் என்னும் ஊர்; place name.”வெல்போர்ச் சோழனிடை யாற்றன்ன” (அகநா.141-23);.

     [இடை + ஆறு.]

இடையாள்

 இடையாள் iḍaiyāḷ, பெ. (n.)

   இருவர் அல்லது இரு குழுக்களிடை நின்று பணியை முடிப்பவன், தரகன்; Intermediary, contact man, broker.

ம. இடயாள்.

     [இடை + ஆள்.]

இடையிடு-தல்

இடையிடு-தல் iḍaiyiḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   1. இடையில் நிகழ்தல்; to intervene, happen or occur in the middle.

     “தலைமகள் காரணமாக இடையிடும் இடையீடில்லை” (இறை.33.உரை);.

   2. இடையில் ஒழிதல்; to

 be

 omitted in the middle – 18 செ.குன்றாவி. (v.t.);

   1. நடுவிலிடுதல்; to place between, interpose.

     “மறையொளி மணிச்சுவரிடையிட்டு” (சீவக.656);.

   2. மதித்தல்; to obstruct.

     “வாயிலை இடையிட்டுக் கொண்டு நிற்கும்படியாக (கலித்.10926. உரை);. (செ.அக.);.

   3. முன்னிருத்துதல், காரணமாக்குதல்; o make (something or some one); cause of.

   4. காலம் அல்லது தொலைவு முன்னிடுதல்; to pass time, to cover distance, etc. (சேரநா.);.

ம. இடயிடுக.

     [இடை + இடு.]

இடையிடை

இடையிடை iḍaiyiḍai, கு.வி.எ. (adv.)

   1. ஊடேயூடே; intermittently, at frequent intervals.

     “இடையிடை யடிக்கும்” (கல்லா.7); (செ.அக.);.

   2. நடுவே, கூடக் கூட; occasionally, alternately. (சேரநா.);.

   ம. இடயிடெ;   க. எடெயெடெ (திரும்பத்திரும்ப);;தெ. எடனெட.

     [இடை + இடை.]

இடையிட்டெதுகை

 இடையிட்டெதுகை iḍaiyiḍḍedugai, பெ. (n.)

   அடிகளொன்றை விட்டொன்றெதுகை யொன்றி வருவது (ஆ.அக.);; similarity or agreement of the second and/or subsequent letters of the first foot of alternate lines of a verse.

     [இடை + இட்டு + எதுகை.]

இடையினமோனை

இடையினமோனை iḍaiyiṉamōṉai, பெ. (n.)

   இடையினத்துள் யகரவகரங்கள் ஒன்றற்கொன்று மோனையாக வருவது (யா.கா. ஒழிபி.6, உரை);; variety of consonantal alliteration at the beginning of lines in which medial consonants ‘ya’ and ‘va’ are interchangeable. எ-டு: யாமெய்யாக் கண்டவற்று ளில்லை எனைத்தொன்றும் வாய்மையின் நல்ல பிற.

     [இடை + இன + மோனை.]

இடையினம்

இடையினம் iḍaiyiṉam, பெ. (n.)

   இடையெழுத்து; medial consonants of the Tamil alphabet

     “இடையினம் ய ர ல வ ழ, ள வென வாறே” (நன்.70);.

ம. இடயினம்.

     [இடை + இனம்.]

வன்மைக்கும் மென்மைக்கும் இடைநிகர்த்ததாதலாலும் வல்லெழுத்துத் தோன்றும் மார்புக்கும். மெல்லெழுத்துத் தோன்றும் மூக்குக்கும் இடையிலான கழுத்தில் பிறத்தலாலும் இடையினமாயிற்று. இற்றை மொழியியலார் வுல்லின எழுத்துகளை நிறுத்தம் (stop); என்றும் மெல்லின எழுத்துகளை மூக்கினம் (nasal); என்றும் கருதுகின்றனர். இடையினம் என்று மரபிலக்கணத்தாரால் கொள்ளப்பட்டவை அதிர்வொலி (trill, பக்கவொலி (lateral);, உரசுஒலி (fricative);, அரையுயிர் (semivowel);, எனப்பல பிரிவுகளுக்கு உட்படுத்தி விளக்கப்படுகின்றன.

இடையினவெதுகை

இடையினவெதுகை iḍaiyiṉavedugai, பெ. (n.)

   இடையினத்துள் வந்தவெழுத்தன்றி அவ்வினத்து வேறெழுத்து இரண்டாமெழுத்தாய் நிற்க வரும் எதுகை (யா.கா.ஒழிபி.6.உரை);. (செ.அக.);; interchangeability of any one of the medial consonants while determining the agreement of the second and/or subsequent letters of the first foot of successive lines in a metrical composition.

எ-டு:”எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்

பொய்யா விளக்கே விளக்கு”.

     [இடை + இன + எதுகை.]

இடையிருள்யாமம்

இடையிருள்யாமம் iḍaiyiruḷyāmam, பெ. (n.)

   இரவு 10 மணி முதல் 2 மணி வரைப்பட்ட நள்ளிருள் பொழுது (மணி. 20–82);; midnight from 22 to 2 hours.

     [இடை + இருள் + யாமம்.]

இடையில் காட்சி

இடையில் காட்சி iḍaiyilkāḍci, பெ. (n.)

   இடைவிடாத காட்சி தொடர்ந்த நட்பின் நெருக்கம்; unbroken link of friendship;

     “இடையில் காட்சி நின்னோ டுடனுறை வாக்குக வுயர்ந்த பாலே” (புறநா.236-11);.

     [இடை + இல் + காட்சி. இடைதல் = பின்வாங்குதல், தளர்தல். இல் = இல்லாத.]

இடையீடு

இடையீடு1 iḍaiyīḍu, பெ. (n.)

   1. இடையில் தோன்றுவது; that which occurs or happens in the middle.

   2. தடை; obstacle, impediment. ‘பகற்குறி யிடையீடு’ (நம்பியகப்.155);.

   3. மாறுபாடு; difference.

     “பெரு மறை யுடன்மெய்த் தொண்டர்க் கிடையீடு பெரிதாமன் றே” (பெரியபு.திருஞான592);.

   4. அமைவு; answer to a query.

     “ஏவிய கடாவுக் கிடையீடாவது” (ஞானா.67, 10);.

   5. இடையில் விடுகை; interruption.

     “விட்டுவிட் டறிவ தன்றி இடையீடின்றி அறியமாட்டாது” (சி.சி.2. 94. சிவஞா.);

   6. இடையிட்டுக்கொண்டது (ஆ.அக.);; that which had happened in the middle.

ம. இடயீடு.

     [இடை + இடு = இடையிடு → இடையீடு.]

 இடையீடு2 iḍaiyīḍu, பெ. (n.)

   அரசின் வுரிமையாயிருந்து பிறருக்கு மாற்றப்பட்ட நிலம்; and the ownership of which had been transferred from government to an individual.

     “இக்கச்சம் பிழைப்போர் யில்லங் களுடைய இடையீடு அகநாழியைச் செலவினோடொக் கும்” (TAS. iii, p.193); (செ.அக.);.

     [இடை + ஈடு.]

இடையீட்டெதுகை

இடையீட்டெதுகை iḍaiyīḍḍedugai, பெ. (n.)

   ஒவ்வோரடி இடையிட்டு வரும் எதுகை (யா.கா. ஒழிபி.6. உரை);; similarty or agreement of the second and/or subsequent letters of the first foot of alternate lines in a verse.

எ-டு:

     “தோடா ரெல்வளை நெகிழ நாளும்

நெய்த லுண்கண் பைதல கலுழ

வாடா வவ்வரி ததைஇப் பசலையும்

வைகல் தோறும் பைபயப் பெருகின”.

     [இடை + ஈட்டு + எதுகை.]

இடையுற்ற மலடி

 இடையுற்ற மலடி iḍaiyuṟṟamalaḍi, பெ. (n.)

   பெண்களுக்கு இடுப்பு பருத்து அதனாலுண்டாகுமோர் வகை மலட்டுத்தன்மை; abnormal growth of the hip in a woman causing barrenness. (சா.அக.);.

     [இடை + உற்ற + மலடி. இடை + இடுப்பு.. உறுதல் = மிகுதல், பருத்தல்.]

இடையுவா

இடையுவா iḍaiyuvā, பெ. (n.)

   முழு நிலவு;   வெள்ளுவா. (திவ்.நாச்.7,3);; full moon, as coming in the middle of the lunar month (செ.அக.);.

     [இடை + உவா.]

இடையூறு

இடையூறு iḍaiyūṟu, பெ. (n.)

   இடைஞ்சல், தடை (திருவிளை. விடையில.10);; impediment, obstruction, hindrance (செ.அக.);.

ம. இடையூறு.

     [இடை + ஊறு.]

இடையெடு-த்தல்

இடையெடு-த்தல் iḍaiyeḍuttal,    18 செ.குன்றாவி. (v.t.)

எடை எடுத்தல் பார்க்க;see edai-edu.

     [எடை + எடுத்தல், எடை – இடை (கொ.வ.); இஃது வழுஉச் சொல்லாதலின் ஆளாமல் விலக்குதல் வேண்டும்.]

இடையெண்

இடையெண் iḍaiyeṇ, பெ. (n.)

   முச்சீர் ஒரடியாய் வரும் அம்போதரங்க வகை (யா.கா.செய்.10.உரை);; verse of a class known as ambötarangam-consisting of trimetric lines (செ.அக.);.

     [இடை + எண்.]

இடையெழுஞ்சனி

 இடையெழுஞ்சனி iḍaiyeḻuñjaṉi, பெ. (n.)

   கணை (பூர); நாள் (பிங்.);; middle asterism of the fifth sign of the Zodiac wherein saturn is reputed to exert a malignant influence (செ.அக.);.

     [இடை + எழும் + சனி.]

இடையெழுத்து

 இடையெழுத்து iḍaiyeḻuttu, பெ. (n.)

   வல்லினத்துக்கும் மெல்லினத்துக்கும் இடைப்பட்ட இடையின எழுத்துகள்; six consonants of the Tamil alphabet viz ய், ர், ல், வ், ழ், ள். classified as medial consonants as dist. fr. valleluttu and melleluttu. (செ.அக.);.

     [இடை + எழுத்து.]

இடையொடிவு

இடையொடிவு iḍaiyoḍivu, பெ. (n.)

   கடைசி அழிவுக்குமுன் ஏற்படும் அழிவுகள் (ஈடு.1,3,3);; calamity before the final dissolution of the world (செ.அக.);

     [இடை + ஒடிவு. ஒடிவு – அழிவு, முடிவு.]

இடையொடு கடைமடக்கு

இடையொடு கடைமடக்கு iḍaiyoḍugaḍaimaḍaggu, பெ. (n.)

   அணிவகையுளொன்று. அஃது அடிகளினிடையுங்கடையும் மடங்கி வருவது; figure of speech based on metrical composition.

     [இடை + ஒடு + கடை + மடக்கு.]

     “வா மான மான மழைபோன்மத மானமான

நா மான மான கமுற்றாழக மானமான

தீ மான மான வர்புகாத்திற மானமான

கா மான மான கல்கரங்கனன் மானமான”

இதில்

     “மான மான” என்ற சொல் நான்கடிகளின் இடையிலும் ஈற்றிலும் மடங்கி வந்தது. (தண்டி.95.உரை);.

இடையொத்து

 இடையொத்து iḍaiyottu, பெ. (n.)

   தாள வகை (திவ். திருவாய்.);; variety of time-measure (செ.அக.);.

க. எடெயொத்து.

     [இடை + ஒத்து. ஒற்று – ஒத்து.]

இடையோர்

இடையோர் iḍaiyōr, பெ. (n.)

   இடையிற்செல்வோர்; those who are marching in the middle of a group.

     “இடையோர் பழத்தின் பைங்கனி மாந்த” (புறநா225.2);.

     [இடை → இடையோர்.]

இடைவட்டை

இடைவட்டை iḍaivaḍḍai, பெ. (n.)

   நடுவிலுள்ளது (S.I.I.viii..232);; that which is in the middle (செ.அக.);.

க. எடெகாண (நடு பாகம்);.

     [இடை + வட்டை.]

இடைவண்ணம்

இடைவண்ணம் iḍaivaṇṇam, பெ. (n.)

   இசை வகை (பெரியபு.ஆனாய..28);; variety of melody (செ.அக.);.

க. எடெயொத்து (மத்திய தாளம்);. Skt vama.

     [இடை + வண்ணம்.]

இடைவரி

 இடைவரி iḍaivari, பெ. (n.)

   எடைவரி பார்க்க;   எடைக்கற்களுக்கான வரி (Insc.);; tax on measures and weights (செ.அக.);.

     [எடை + வரி → எடைவரி → இடைவரி. எடை – இடை எனத் திரிந்த கொச்சை வழக்கு வழுஉச் சொல்லாதலின் விலக்கத் தக்கது.]

இடைவள்ளல்கள்

 இடைவள்ளல்கள் iḍaivaḷḷalkaḷ, பெ. (n.)

   முதலேழு வள்ளல்கள், கடையேழு வள்ளல்கள் போன்று இடை ஏழு வள்ளல்கள்; intermediate galaxy of an anthropists or benefactors celebrated in literature there been seven such patrons, viz.,

அக்குரன், சந்திமான், அத்திமான், சிசுபாலன், தந்த வக்கிரன், கன்னன், சந்தன், fr. முதல் வள்ளல்கள் and கடை வள்ளல்கள் (பிங்.); (செ.அக.);.

     [இடை + வள்ளல்கள்.]

இடைவழக்காளி

 இடைவழக்காளி iḍaivaḻkkāḷi, பெ. (n.)

   வழக்காளிக்கும் எதிர் வழக்காளிக்கும் (வாதி பிரதிவாதி); இடையில் தனி வழக்குக் கொண்டு வருவோன் (யாழ்ப்.);; third party intervening between the plaintiff and the defendant in a law suit (செ.அக.);.

     [இடை + வழக்கு + ஆளி.]

இடைவழி

இடைவழி iḍaivaḻi, பெ. (n.)

   வழியின் நடு. (திவ். பெரியாழ்.4,5,.5);; middle of the way, half-way to a destination (செ.அக.);.

   2. வலதோ இடதோ அன்றி நடுவழி; middle path.

க. எடெவட்டெ.

     [இடை + வழி.]

இடைவழித்தட்டில்

 இடைவழித்தட்டில் iḍaivaḻittaḍḍil, கு.வி.எ. (adv.)

   எதிர்பாராமல்; accidentally, unexpectedly, by chance.

அந்தப் பொருள் எனக்கு இடை வழித் தட்டில் கிடைத்தது. (இ.வ.); (செ.அக.);.

     [இடை + வழி + தட்டில்.]

இடைவாய்

 இடைவாய் iḍaivāy, பெ. (n.)

   கமுத்துக்கோலின் அளவுக்குறியிடம் (இராட்.);; degrees or marks upon streetyard. (செ.அக.);.

     [இடை + வாய்.]

இடைவாழை

 இடைவாழை iḍaivāḻai, பெ. (n.)

   ஒரு மலைச்செடி (இ.வ..);; common bracken (செ.அக.);.

     [இடை + வாழை.]

இடைவாவி

 இடைவாவி iḍaivāvi, பெ. (n.)

   வாவிகளில் ஒரு வகை (கருநா.);; a kind of tank. (செ.அக.);.

க. எடெபாவு.

     [இடை + வாவி.]

இடைவிடல்

 இடைவிடல் iḍaiviḍal, பெ. (n.)

   விட்டுவிட்டுத் தொடங்கல் (ஆ.அக.);; off and on, intermittent activity, irregular functioning.

     [இடை + விடல்.]

இடைவிடாமல்

இடைவிடாமல் iḍaiviḍāmal, கு.வி.எ. (adv.)

   1. எப்போதும்; always;

 incessantly, constantly.

   2. தொடர்ந்து; uninterruptedly, continually. (செ.அக.);.

     [இடை + விடாமல்.]

இடைவிடு-தல்

இடைவிடு-தல் iḍaiviḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   இடையில் ஒழிதல்; to intermit or cease now and then.

     “இடைவிடாமற் றுழாவி” (தைலவ.தைல.94);. (செ.அக.);.

க. எடெவிடு, எடெபிடு.

     [இடை + விடு.]

இடைவிரல்

 இடைவிரல் iḍaiviral, பெ. (n.)

   நடுவிலுள்ள விரல்; middle finger.

க. எடெவெரல்.

     [இடை + விரல்.]

இடைவிழுநாடி

இடைவிழுநாடி iḍaiviḻunāḍi, பெ. (n.)

   1. விட்டு விட்டு எழும்புவதும், அமிழுவதுமான நாடி நடை; pulsation sinking and rising at intervals – undulating pulse.

   2. நடுவில் விட்டுவிட்டு அடிக்கும் நாடி; pulse in which beats are skipped. (சா.அக.);.

     [இடை + விழு + நாடி.]

இடைவீடு

இடைவீடு iḍaivīḍu, பெ. (n.)

   நடுவில் விட்டு விடுகை (திவ். திருவாய்., 1.10.8);; leaving in an incomplete condition, breaking off or ceasing in the middle. (செ.அக.);.

     [இடை + வீடு.]

இடைவு

இடைவு iḍaivu, பெ. (n.)

   1. தோல்வி; defeat.

   2. நீக்கம்; interspace, gар.

   3. வெளி; open space (செ.அக.);.

     [இடை – இடைவு.]

இடைவெட்டிலே

 இடைவெட்டிலே iḍaiveḍḍilē, கு.வி.எ. (adv.)

   தற்செயலாய்; by chance, by accident.

     ‘அவனுக்கு இது இடைவெட்டிலே கிடைத்தது’ (செ.அக.);.

     [இடை + வெட்டு + இல் + ஏ.]

இடைவெட்டு

 இடைவெட்டு iḍaiveḍḍu, பெ. (n.)

   இடையிற்பெற்ற பொருள் (கொ.வ.);; something other than the object

 of pursuit;

 diversion from purpose or main issue (செ.அக.);.

     [இடை + வெட்டு.]

இடைவெட்டுப் பணம்

இடைவெட்டுப் பணம் iḍaiveḍḍuppaṇam, பெ. (n.)

   1. மாறுமுத்திரை விழுந்த பனம் (வின்.);; clipped or imperfectly stamped coin.

   2. வேறு வழியாகக் கிடைத்த ஊதியம் (யாழ்ப்.);; profit made indirectly. wrongful earning (செ.அக.);.

   3. பொறுக்கியெடுத்த பணம் (ஆ.அக.);; picked up money.

     [இடை + வெட்டு + பணம்.]

இடைவெட்டுப்பேச்சு

 இடைவெட்டுப்பேச்சு iḍaiveḍḍuppēccu, பெ. (n.)

   ஏளனப்பேச்சு (வின்.);; derision, ridicule, raillery, (செ.அக.);.

     [இடை + வெட்டு + பேச்சு.]

இடைவெளி

இடைவெளி iḍaiveḷi, பெ. (n.)

   1. வெளிப்பரப்பு; gap, intervening space.

   2. பிளப்பு; hole, as in a wall;

 cleft (செ.அக.);.

     [இடை + வெளி.]

இடோலி

 இடோலி iṭōli, பெ. (n.)

   ஒருவகைச் சிவிகை (வின்.);; litter. (செ.அக.);.

 H.doli.

     [இடல் – இடாலி – இடோலி. இடலுதல் – அகலமாதல், சற்று அகலமான பல்லக்கு இப்பெயர் பெற்றிருக்கலாம்.]

இடோல்

 இடோல் iṭōl, பெ. (n.)

   இடால் பார்க்க;see idal;     [இடு → இடல் → இடால் → இடோல் = வாயகன்ற பறை. இச்சொல் இடோல் – டோல் எனத்திரிந்து வடபுல மொழிகளில் வழங்குகின்றது.]

இட்சி

 இட்சி iṭci, பெ. (n.)

   கத்தூரி மஞ்சள் (மூ.அ.);; yellow zedoary.

     [Skt. iksi → த. இட்சி.]

இட்சுவாகு

 இட்சுவாகு iṭcuvāku, பெ. (n.)

   கதிரவக் குலத்தின் முதலரசன்; the first king of the solar dynasty.

     [Skt. iksväku → த. இட்சுவாகு.]

இட்ட வழக்கு

 இட்ட வழக்கு iṭṭavaḻkku, பெ. (n.)

   சொன்னது சட்டமாயிருக்கை; issuing an order or directive by sheer force of authority, dictatorial assertion

     ‘அவர்கள் இட்ட வழக்கா யிருக்குமிறே’ (ஈடு.அக.ஜீ.); (செ.அக.);.

     [இடு → இட்ட + வழக்கு.]

இட்டகவேலி

 இட்டகவேலி iṭṭakavēli, பெ. (n.)

   கல்குளம் வட்டத்திலுள்ள சிற்றுர்; a village in Kalkulam Taluk. (இ.வ.);

     [இட்டகம்+வேலி]

இட்டகாமியம்

 இட்டகாமியம் iṭṭakāmiyam, பெ. (n.)

   மனம் மிக விரும்பியது; object ordently desired.

த.வ. உவந்தது.

     [Skt. ista-gámya → த. இட்டகாமியம்).]

இட்டங்கட்டல்

 இட்டங்கட்டல் iṭṭaṅgaṭṭal, பெ. (n.)

இட்டங்கட்டுதல் பார்க்க (ஆ.அக.);;see ittan-kattu.

இட்டங்கட்டு-தல்

இட்டங்கட்டு-தல் iṭṭaṅgaṭṭudal,    15 செ.கு.வி. (v.i.)

   ஒரை (இராசி); நிலை வரைதல்; note on a diagram of the Zodiac indicating the position of the various planets at a particular time (செ.அக.);.

     [இட்டம் + கட்டுதல். ஒருகா. விட்டம் – இட்டம். விண் – விட்டம் = விண்ணில் கோள்நிலை, இனி, விடு – விட்டம் (பிரிவு); என்றுமாம்.]

இட்டசட்டம்

 இட்டசட்டம் iṭṭasaṭṭam, பெ. (n.)

   தன்னிச்சை (வின்.);; freedom from constraint free choice. (செ.அக.);

     [இடு – இட்ட – இட்ட + சட்டம்.]

இட்டசித்தி

 இட்டசித்தி iṭṭasitti, பெ. (n.)

விருப்பவெற்றி பார்க்க;see viruppa-vetri.

 இட்டசித்தி iṭṭasitti, பெ. (n.)

   விருப்பம் நிறைவேறுகை; attainment of one’s heart’s desire.

த.வ. விழைவுப்பேறு.

     [Skt. ista-siddhi → த. இட்டசித்தி.]

இட்டடுக்கி

 இட்டடுக்கி iḍḍaḍukki, பெ. (n.)

   காதணிவகை; old-fashioned ear-ornament, one of many ornaments worn through the ear-lobes (செஅக.);.

     [இட்டு + அடுக்கி.]

இட்டடை

 இட்டடை iḍḍaḍai, பெ. (n.)

   இட்டிடை (வின்.);; dial (செ.அக.);.

     [இட்டு + இடை – இட்டிடை. இட்டடை.]

இட்டடைச்சொல்

இட்டடைச்சொல் iḍḍaḍaiccol, பெ. (n.)

   தீச்சொல்; foul word.

     “இட்டடைச் சொல்லார் பொறுப்பார்” (பெருந்தொ.பக்.609);. (செ.அக.);.

     [இட்டிடை + சொல் → இட்டிடைச்சொல் → இட்டடைச்சொல்.]

இட்டதெய்வம்

 இட்டதெய்வம் iṭṭadeyvam, பெ. (n.)

   கடவுள் (குல தெய்வம்);; favourite deity, deity to whom one is devoted.

த.வ. உகப்புத் தெய்வம்.

     [இட்டம் + தெய்வம்.]

     [Skt. ista → த. இட்டம்.]

தேய் → தெய் → தெய்வம் → Skt. deiva.

இட்டதேவதை

 இட்டதேவதை iṭṭadēvadai, பெ. (n.)

இட்டதெய்வம்; see itta-deyvam.

த.வ. விழைவுத்தெய்வம்.

     [இட்டம் + தேவதை.]

     [Skt. ista → த. இட்டம்.]

இட்டன்

 இட்டன் iṭṭaṉ, பெ. (n.)

   வணங்கத்தக்க பெரியவன் (நாநார்த்த);; venerable person (செ.அக.);.

 இட்டன் iṭṭaṉ, பெ. (n.)

   நண்பன்; friend.

     [Skt. ista → த. இட்டன்.]

இட்டபோகம்

 இட்டபோகம் iṭṭapōkam, பெ. (n.)

   விரும்பியதை நுகர்கை; free licentious enjoyment of wished for pleasure.

த.வ. விழைவுத் துய்ப்பு.

     [Skt. ista-pēga → த. இட்டபோகம்.]

இட்டப்பிரசாதம்

இட்டப்பிரசாதம் iṭṭappiracātam, பெ. (n.)

   1. கைமாறு வேண்டாக் கொடை; gift of grace.

   2. கடவுட் கருணை; grace of god.

   3. தெய்வம் படையல்; boiled rice offered to the idols.

   4. தெய்வம் அப்பம்; encharist.

த.வ. விழைவுப்படையல்.

     [Skt. istam-prasatha → த. இட்டப்பிரசாதம்.]

இட்டம்

இட்டம் iṭṭam, பெ. (n.)

   1. கோள் நிலையால் விளையும் விளைவு;   2. ஞாலத்தின் முனைக்கும் (துருவத்திற்கும்); ஒரைக்கும் இடையேயுள்ள தொலைவு (வின்.);;
 இட்டம் iṭṭam, பெ. (n.)

   1. விருப்பம்; desire, will, wish, inclination of mind.

     “நம்பனை நாடொறு மிட்டத்தா லினிதாக நினைமினோ” (தேவா. 20,8.);.

   2. அன்பு; love, affection.

     “இட்டமான வியற்புக ரோனிடங் கிட்டினான்” (கந்தபு. சுக்கிரனுப. 15.);

   3. நட்பு; friendship.

த.வ. உகப்பு.

     [Skt. ista → த. இட்டம்.]

இட்டம்பண்ணு-தல்

இட்டம்பண்ணு-தல் iṭṭambaṇṇudal,    5 செ. குன்றாவி.(v.t.)

   அடிமைத் தனத்தை விலக்குதல் (வின்);; to emancipate.

     [இட்டம் + பண்ணு-தல்.]

     [Skt. ista → த. இட்டம்.]

இட்டறுதி

இட்டறுதி1 iṭṭaṟudi, பெ. (n.)

   உறுதிசெய்த எல்லை (வின்.);; limited time or space (செ.அக.);.

     [இடு → இட்டு + அறுதி. அறுதி – உறுதி, முடிவு, இட்டறுதி -உறுதியிடப்பட்டது – முடிவுசெய்யப்பட்டது.]

 இட்டறுதி2 iṭṭaṟudi, பெ. (n.)

   1. இக்கட்டான நேரம் (வின்.);; critical time.

   2. வறுமை (வின்.);; destitution, extreme want. (செ.அக.);.

     [இட்டு – நெருக்கம், நெருக்கடி. அறு – அறுதி – நல்வாய்ப்பும் செல்வமும் அற்றுப்போன துன்பநிலை.]

இட்டறை

 இட்டறை iṭṭaṟai, பெ. (n.)

   யானையை வீழ்த்துங் குழி (சம்.அக.);; invisible deep pit covered over with twigs etc. for catching elephants.

     [இட்டு – நெருக்கம், சிறுமை அறை சிறுமை இடம், பள்ளம்.]

இட்டலி

 இட்டலி iṭṭali, பெ. (n.)

இட்டளி பார்க்க;see ittiali.

     [இட்டளி → இட்டலி.]

இட்டலிங்கம்

இட்டலிங்கம் iṭṭaliṅgam, பெ. (n.)

   நாடோறும் வழிபாட்டுக்குரியதாக மாணாக்கனுக்குக் குருவினாற் கொடுக்கப்படும் சிவக்குறி (ஆன்மார்த்த லிங்கம்); (சைவச. பொது 464);; lingam which a guru hands over to a duly initiated disciple with instructions regarding the method of private worship.

த.வ. வழிபடு படிமம்.

     [Skt. ista + liga → த. இட்டலிங்கம்.]

இட்டளப்படு-தல்

இட்டளப்படு-தல் iḍḍaḷappaḍudal,    20 செ.கு.வி. (v.i)

   சிறிய இடத்தில் திரண்டு தேங்குதல்; to be brought together as fragments and concentrated within a small space.

     “செளந்தரிய சாகரம் இட்டளப் பட்டுச் சுழித்தாற் போலே.” (ஈடு.10.10.9);. (செ.அக.);.

     [இடு – இட்டு = சிறிது. அள் – அனம் = செறிதல், நெருங்குதல். இட்டு + அளம் – இட்டளம் + படுதல்.]

இட்டளம்

இட்டளம்1 iṭṭaḷam, பெ. (n.)

   1. நெருக்கம்; crowd throng, concourse, insufficient air-space.

     “பரமபதத்திலிட்டளமுந்தீர்ந்தது” (ஈடு.3.8.2);.

   2. துன்பம்; difficulty affliction, pain, sorrow

     “அடியே னிட்டளம் கெடவே” (தேவா.988.1.);.

   3. தளர்வு (பிங்.);; weakness, weariness.

   க. இட்டள;தெ. இட்டல.

     [இட்டு + அளம். அள் = அளம் = செறிவு. நெருக்கம். இட்டு – சிறிது. சிறியஇடம்.]

 இட்டளம்2 iṭṭaḷam, பெ. (n.)

   1. பொன் (பெரியபு.ஏயர் கோன்.133. உரை);; gold (செ.அக.);.

   2. துன்பம்; distress.

     “என்செய்த வாறடிகேள் அடியேன் இட்டளங் கெடவே..” (கந்தரர் தேவா.988-1);.

     [இட்டளம் = செறிவு, மிகுதி. மிகுதியாகக் காய்ச்சப்படும் பொன்.]

இட்டளர்

இட்டளர் iṭṭaḷar, பெ. (n.)

   மனக்கலக்கமுள்ளவர் (திருநூற்.61, உரை);; unsteady, wavering persons (செ.அக.);.

     [இட்டளம் – சிறிய இடத்தில் நெருக்கமுறுதல் மனக்கலக்கமடைதல்.]

இட்டளி

 இட்டளி iṭṭaḷi, பெ. (n.)

   அரிசிமாவும், உளுந்துமாவும் சேர்த்து ஆவியில் வேகவைக்கும் சிற்றுண்டி வகை; cake prepared by steaming semi-solid dough made of rice mixed with black gram.

ம. இட்டலி: க. இட்டலி: தெ. இட்டென.

     [இட்டம் – சிறிய இடத்தில் தேங்குதல். இட்டளப்படுதல், இட்டளித்தல் – தேங்கச் செய்தல். இட்டள் – இட்டளி.]

இட்டளிக்கொப்பரைl

 இட்டளிக்கொப்பரைl iṭṭaḷikkopparai, பெ. (n.)

   இட்டளி சமைக்கும் ஏனம்; brass vessel into which the itali-t-tattu is placed for making steamed rice-cakes. (செ.அக.);.

     [இட்டள் → இட்டளி + கொப்பரை.]

இட்டளிச்சட்டி

 இட்டளிச்சட்டி iṭṭaḷiccaṭṭi, பெ. (n.)

   இட்டளி வேகவைத்தற்குரியதோரேனம். (பாண்டி.வழ.);; the vessel in which ittali is prepared.

     [இட்டள் → இட்டளி + சட்டி.]

இட்டளித்தட்டு

 இட்டளித்தட்டு iṭṭaḷittaṭṭu, பெ. (n.)

   இட்டளிவார்க்கும் தட்டு; perforated metal plate, with depressions inserted into the Itali-k-kopparai, with the dough to steam and prepare rice-cakes.

     [இட்டளி + தட்டு.]

இட்டளித்தவலை

 இட்டளித்தவலை iṭṭaḷittavalai, பெ. (n.)

இட்டளிக் கொப்பரை பார்க்க;see italf-k-kooparal.

     [இட்டளி + தவலை.]

இட்டவிகாதம்

இட்டவிகாதம் iṭṭavikātam, பெ. (n.)

   விருப்பத்தைக் கெடுக்கை (சிவசம. பக். 54);; destruction of one’s cherished wish.

த.வ. விழைவுக்கேடு.

     [Skt. sta-whata → த. இட்டவிகாதம்.]

இட்டவை

 இட்டவை iṭṭavai, பெ. (n.)

   வழி (அக.நி.);; path (செ.அக.);.

     [இட்டு – சிறிய. இட்டு – இட்ட. இயவு – வே – வை. இயவு – பாதை இட்டு + இயவு – இட்டியவு – இட்டயவு – இட்டவை.]

இட்டாநிட்டம்

 இட்டாநிட்டம் iṭṭāniṭṭam, பெ. (n.)

   விருப்பு வெறுப்பானவை; those that are liked and those that are disliked.

த.வ. நச்சிநச்சாதவை.

     [Skt. ista-an-ista → த. இட்டாநிட்டம்.]

இட்டாபூர்த்தம்

இட்டாபூர்த்தம் iṭṭāpūrttam, பெ. (n.)

   வேள்வி முதலிய செயல்களும் குளம் வெட்டுகை முதலிய அறச்செயல்களும் (S.1.1.i, 3);; sacrifices and charitable deeds.

த.வ. விழைவறம்.

     [Skt. ista-pura → த. இட்டாபூர்த்தம்.]

இட்டி

இட்டி1 iṭṭi, பெ. (n.)

   ஈட்டி; sea lance.

     “இட்டிவேல் குந்தங் கூர்வாள்” (சீவக.2764);. (செ.அக.);.

   ம., க. இட்டி;. Skt. yasti..

     [ஈட்டி – இட்டி.]

 இட்டி2 iṭṭi, பெ. (n.)

   1. சுருக்கச் செய்யுள்; epigrammatic verse.

   2. கொடை; gift.

   3. பூசை; worship.

   4. இச்சை; desire, longing.

     [இடு – இட்டு – இட்டி.]

இட்டிகை

இட்டிகை1 iṭṭigai, பெ. (n.)

   செங்கல்; brick.,

     “கண்சொ ரீஇ யிட்டிகை தீற்றுபவர்”. (பழமொழி.108);. (செ.அக.);.

க. இட்டகெ. இட்டிகெ.

     [இட்டு – இட்டிகை (சிறிய வடிவிலான செங்கல்);.]

 இட்டிகை2 iṭṭigai, பெ. (n.)

   1. இடுக்கு வழி; narrow way.

   2. கூட்டுமெழுகு; mixture of wax, resin, etc. (செ.அக.);.

     [இட்டு = சிறிது. இட்டு – இட்டிகை.]

 இட்டிகை3 iṭṭigai, பெ. (n.)

   பலிபீடம்; alter for offering sacrifice.

     “நாட்பலி மறந்த நரைக்கண் இட்டிகை” (அகநா.287);. (சங்.இலக்.சொற்.);.

 இட்டிகை4 iṭṭigai, பெ. (n.)

   1. திண்மை. (குறள் 743 பரி.உரை);; firmness, stability

   2. அருமை; rarity.

     [இட்டு – இட்டி = செறிவு, திண்மை, அருமை.]

இட்டிகை வாய்ச்சி

இட்டிகை வாய்ச்சி iṭṭigaivāycci, பெ. (n.)

   செங்கற்களைச் செதுக்கும் கருவி (சீவக.2689.உரை);; chisel for cutting burned clay. (செ.அக.);.

     [P]

     [இட்டிகை + வாய்ச்சி. வாய்ச்சி – வாயகன்ற கருவி.]

இட்டிகைப்படை

இட்டிகைப்படை iṭṭikaippaṭai, பெ. (n.)

   செங்கல் கட்டடம்; house built by bricks.

     “இத்தேவர்க்கு முன்னிட்டிகைப் படையாலுள்ள ஸ்ரீரிகோயிலை” (Sll,xix, p.292);

     [இட்டிகை+(படு);படை);]

இட்டிடை

இட்டிடை1 iḍḍiḍai, பெ. (n.)

   சிறுகிய இடை; slender waist.

     “இட்டிடையின் மின்னிப்பொலிந்து” (திருவாச.7.16);. (செ.அக.);.

க. இட்டிடெ (நெருக்கம். சந்து);.

     [இட்டு + இடை.]

 இட்டிடை2 iḍḍiḍai, பெ. (n.)

   1. சிறுமை (சூடா.);; smallness, minuteness.

     “இட்டிடை யிடை தனக்கு” (கந்தபு.தெய்வயா.183);.

   2. இடையூறு; hindrance, impediment.

     “மிகுபிணி யிட்டிடைசெய” (திருப்பு. 1053);.

   3. கடைசற்கருவியின் ஒருறுப்பு (யாழ்ப்.);; vice in a turner’s lathe. (செ.அக.);.

     [இட்டு + இடை. இடை – முதனிலைப்பொருள் ஈறு.]

இட்டிடைஞ்சல்

இட்டிடைஞ்சல் iḍḍiḍaiñjal, பெ. (n.)

   1. துன்பம்; trouble affliction.

     ‘யாதோர் இட்டிடைஞ்சலும் வாராமற் காப்பாற் றினான்’ (யாழ்ப்.);.

   2. வறுமை; adversity, straits, great want.

இது இட்டிடைஞ்சல் வருங்காலத்திலுதவும் (யாழ்ப்.); (செ.அக.);.

   3. இட்டறுதி (வின்);; critical time.

     [இட்டு + இடைஞ்சல்.]

இட்டிது

இட்டிது iṭṭidu, பெ. (n.)

   1. சிறுது; scantiness. slenderness.

     “ஆகாறளவிட்டி தாயினும்” (குறள்.478);.

   2. அணுக்கம்; proximity nearness.

     “இட்டிதாக வந்துரை மினோ” (தேவா.1240.2);. (செ.அக.);.

     [இட்டு → இட்டிது.]

இட்டிமை

இட்டிமை iṭṭimai, பெ. (n.)

   1. சிறுமை (திவா.);; smallness.

   2. ஒடுக்கம் (திருக்கோ. 149, உரை);; narrowness. (செ.அக.);.

     [இட்டு → இட்டிமை.]

இட்டிய

இட்டிய iṭṭiya, கு.பெ.எ. (adj.)

   சிறிய (ஐங்குறு.219);; small (செ.அக.);.

     [இட்டு → இட்டிய.]

இட்டியம்

 இட்டியம் iṭṭiyam, பெ. (n.)

   பாகம் (ஆ.அக.);; part.

     [இட்டு → இட்டியம்.]

இட்டிறை

 இட்டிறை iṭṭiṟai, பெ. (n.)

   இறையிடுகை (கப்பம் கட்டுதல்);; paying tribute (திவ்.அக.);.

     [இட்டு + இறை.]

இட்டிவனம்

 இட்டிவனம் iṭṭivaṉam, பெ. (n.)

   ஒரு சடங்கு (ஆ.அக.);; ritual.

     [இடு → இட்டி → இட்டிவனம்.]

இட்டீடு

இட்டீடு iṭṭīṭu, பெ. (n.)

   வழக்கு; dispute.

     “என்னோட இட்டீடு கொண்டல்லது தரியா தானாய்” (ஈடு.8.2.6);.

     [இட்டு + ஈடு. இடு → ஈடு = அடித்தல், அடிதடி, கலவரம், இட்டீடு = சில்லறைக் கலகம்.]

இட்டீடுகொள்ளு-தல்

இட்டீடுகொள்ளு-தல் iṭṭīṭugoḷḷudal,    16 செ.கு.வி. (v.i.)

   சொல் கொடுத்துச் சொல் வாங்குதல்; provoke greater irritation and retort.

     “அவனுக்கு இட்டீடு கொள்ளுகைக்குப் பற்றாக இல்லாதபடி” (ஈடு.6.2.ப்ர);. (செ.அக.);.

     [இட்டு + ஈடு + கொள்ளு.]

இட்டீறு

இட்டீறு iṭṭīṟu, பெ. (n.)

   செருக்காற்செய்யும் செயல்; action proceeding from one’s haughtiness or arrogance.

     “இட்டீறிட்டு விளையாடி” (திவ். நாச்சி.14,1);. (செ.அக.);.

     [இட்டு – சிறுமை. இட்டு + ஊறு → இட்டூறு → இட்டீறு. சிறுமையுறும் செயல்கள்.]

இட்டூறு பார்க்க;see itturu.

இட்டு

இட்டு1 iṭṭu, கு.வி.எ. (adv.)

   1. தொடங்கி; beginning with.

     “முதலிட்டு ஐந்து பாட்டாலே” (திவ்.திருவாய்.2.10 பன்னீ.ப்ர);.

   2. காரணமாக (கொ.வ.);; for the sake of on account of, as in

   அதையிட்டு வந்தான் – இடை. (part.); ஓர் அசை (உரி.நி);; expletive, as in செய்திட்டு (செ.அக.);.

     [இடு → இட்டு.]

 இட்டு2 iṭṭu, பெ. (n.)

   சிறுமை; smallness.

     “இட்டுவாய்ச் சுனைய” (குறுந்.193);. (செ.அக.);.

க. இட்டு.

 இட்டு3 iṭṭu, பெ. (n.)

   1. விருப்பம்; desire.

   2. நுண்மை (ஆ.அக.);; minuteness.

     [இள் → இட்டு.]

இட்டு நீர்

 இட்டு நீர் iṭṭunīr, பெ. (n.)

   தாரைவார்க்கும் நீர் (இ.வ.);; water poured by the donor in the palms of the donee in making a gift. (செ.அக);.

     [இடுதல் = மேலிடுதல், தெளித்தல், இடு → இட்டு + நீர்.]

இட்டு வட்டி

 இட்டு வட்டி iṭṭuvaṭṭi, பெ. (n.)

   சோற்றுக்கரண்டி (நெல்லை.);; vessel for serving rice.

     [இடு → இட்டு. இடுதல் = பிடுதல், பிரிதல், இட்டுவட்டி – பிரித்தெடுக்கும் வட்டி.]

இட்டுக்கட்டு-தல்

இட்டுக்கட்டு-தல் iṭṭukkaṭṭudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. இல்லாததை ஏற்றிச் சொல்லுதல் (கொ.வ.);; to concoct.

   2. கற்பனை செய்தல் (ஆ.அக.);; to draw upon the imagination, as in writing poetry or drama.

     ‘அவன் கவி இட்டுக் கட்டுகிறான்’ (செ.அக.);

   3. செயலை முடிக்க முனைந்து நிற்றல்; to determine, to finish a deed.

     [இட்டு + கட்டு.]

இட்டுக்கொடு

இட்டுக்கொடு1 iḍḍukkoḍuttal,    4 செ.குன்றாவி. (v.t.)

   ஏற்றிக் கொடுத்தல் (ஆ.அக.);; to give over and above or extra.

     “ஒன்றிரண் டிட்டுக்கொடுத்த லியல்பு” (பு.வெ.1.17);. (செ.அக.);.

     [இடுதல் = வைத்தல். இடு → இட்டு + கொடு. இட்டுக்கொடுத்தல் = மேலொன்று வைத்துக்கொடுத்தல்.]

 இட்டுக்கொடு2 iḍḍukkoḍuttal,    4 செ.கு.வி. (v.i.)

   புலாலுணவு படைத்தல் (இராட்.);; to serve meal (செ.அக.);.

     [இடுதல் = பிடுதல், பிசைதல். இடு → இட்டு + கொடு.]

இட்டுக்கொண்டுபோ-தல்

இட்டுக்கொண்டுபோ-தல் iṭṭukkoṇṭupōtal,    10 செ.குன்றாவி. (v.t.)

   கூட்டிக்கொண்டு செல்லுதல் (கொ.வ.);; to take a person along with oneself (செ.அக.);.

     [இட்டு + கொண்டு + போ. இடுதல் = வைத்தல். இடு → இட்டு = உடனழைத்து, உடன்வைத்து.]

இட்டுக்கொண்டுவா-தல் (இட்டுக்கொண்டு வருதல்)

இட்டுக்கொண்டுவா-தல் (இட்டுக்கொண்டு வருதல்) iṭṭukkoṇṭuvādaliṭṭukkoṇṭuvarudal,    15 செ.குன்றாவி. (v.t.)

   உடனழைத்து வருதல்; to bring, to take along with

     “செட்டியாரையுமிட்டுக் கொண்டு வாருங்கள்” (பிரதாப.சந்:67);.

     [இட்டு + கொண்டு + வா.]

இட்டுநீட்டு-தல்

இட்டுநீட்டு-தல் iṭṭunīṭṭudal,    5 செ.குன்றாவி. (v.t.)

 to send through an emissary or messenger. (திவ்.81);.

     [இட்டு + நீட்டு.]

இட்டுப்பிரி-தல்

இட்டுப்பிரி-தல் iṭṭuppiridal,    4 செ.குன்றாவி. (v.t.)

   அணிமையிற்றலைவன் பிரிதல் (கலித்.121. உரை);; to be separated from one’s lady-love by only a short distance (செ.அக.);.

     [இட்டு – சிறுமை, சிறிதுகாலம். இட்டு + பிரி.]

இட்டுப்பிரிவு

இட்டுப்பிரிவு iṭṭuppirivu, பெ. (n.)

   மிக அண்மையிற்றலைவன் பிரியும் பிரிவு (ஆ.அக.);; separation b. a short distance, parting of a lower to go to a place not far off.

     “இட்டுப்பிரிலிரங்கினும்” (தொல்.பொருள்.111.); (செ.அக.);.

     [இட்டு + பிரிவு.]

இட்டுப்பிற-த்தல்

இட்டுப்பிற-த்தல் iṭṭuppiṟattal,    3 செ.கு.வி. (v.i.)

   ஒரு காரியத்திற்காகப் பிறத்தல் (ஆ.அக.);; to be born was mission.

     “கைங்கரிய ஸாம்ராஜ்யத்துக்கு இட்டுப்பிறந்து” (ஈடு.2.3.1); (செஅக.);.

     [இட்டு + பிறத்தல். இடுதல் – வைத்தல் ஒன்றின் மேலிட்டு (ஒரு காரணத்தை முன்வைத்து); பிறத்தல்.]

இட்டுப்புகுதல்

இட்டுப்புகுதல் iṭṭuppugudal, பெ. (n.)

   நாட்டியத்துக்குரிய கால்களுள் ஒன்று. (சிலப்.3.14,பக்.90.கீழ்க்குறிப்பு);; a kind of step in dance. (செ.அக.);.

     [இட்டு + புகுதல்.]

இட்டுமாறு-தல்

இட்டுமாறு-தல் iṭṭumāṟudal,    5 செ.கு.வி. (v.i.)

   பழைமை நீங்கிப் புது நிலைமை அடைதல்; old yielding place to new, revival, refreshment. (திவ்.அக.);.

     [இட்டு + மாறு.]

இட்டுரை-த்தல்

இட்டுரை-த்தல் iṭṭuraittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   சிறப்பித்துச் சொல்லுதல் (பு.வெ.4.11);; praise, axio, admire, value (செ.அக.);.

     [இடு – இட்டு = மேல் வைத்து. புகழ்ந்து. இட்டு + உரைத்தல்.]

இட்டுறுதி

இட்டுறுதி1 iṭṭuṟudi, பெ. (n.)

   கண்டிப்பு (வின்.);; firmness, severity, rigour.

     [இட்டு + உறுதி. இடுதல் = வைத்தல், நம்புதல் இட்டுறுதி = நம்பிக்கை உறுதி.]

 இட்டுறுதி2 iṭṭuṟudi, பெ. (n.)

   இடுக்கண் காலத்து உதவி (யாழ்.அக.);; help in times of distress.

     [இடு = வைத்தல், தருதல் உதவுதல் இடு → இட்டு + உறுதி.]

இட்டுவா(வரு)-தல்

இட்டுவா(வரு)-தல் iṭṭuvāvarudal,    15 செ.குன்றாவி (v.t.)

   1. அழைத்து வருதல் (கொ.வ.);; fetch as a person

   2. கொடுத்துவிட்டு வருதல் (ஆ.அக.);; give and come back.

     “இட்டுவாவென்றால் சுட்டுவந்தவன் இவ்வநுமா னன்றோ.” [இடு → இட்டு + வா.]

இட்டூறு

 இட்டூறு iṭṭūṟu, பெ. (n.)

   பழிகூறுதல், செய்ய வேண்டிய நலன்களைச் செய்யவில்லை என்பதற்காகக் கூறப்படும் குற்றச்சாட்டு; grievance.

     [இடு + ஊறு + இட்டூறு.]

இட்டேறி

இட்டேறி1 iṭṭēṟi, பெ. (n.)

   1. வயல்களினிடையே செல்லும் வரப்புப்பாதை (தெ.ஆ);; narrow raised foot path between two fields.

   2. வண்டிப்பாதை (கோவை);; cart-tract.

ம. இட்ஞ.

     [இடு – இட்டு = சிறுமை. ஏறு = ஏறி = ஏறிச்செல்லும் வரப்பு. ஒற்றையடிப் பாதை.]

இட்டேறு-தல்

இட்டேறு-தல் iṭṭēṟudal,    6 செ.கு.வி. (v.i.)

   1. கூடியதாதல்; to be achieved.

   2. போதியதாதல்; to be sufficient (செ.அக.);.

     [இட்டு = வைத்து ஏறுதல் = மிகுதல் இட்டேறுதல் – மிகுதியாக வைத்திருத்தல், வளமையால் சிறத்தல்.]

 இட்டேறு-தல் iṭṭēṟudal, செ.கு.வி. (v.i.)

   1. உற்ற நேரத்தில் வருதல்; to come in time,

   2. ஒரு வகையாக நிறைவேற்றுதல்; to give perfection to a work.

     [இட்டு+ஏறு-]

இட்டேற்றம்

இட்டேற்றம் iṭṭēṟṟam, பெ. (n.)

   1. பொய்யாகக் குற்றஞ்சாட்டுகை; false accusation இப்படி இட்டேற்றம் பேசுவதாகாது (கொ.வ.);.

   2. கொடுமை; tyranny cruelty injustice

ஏனிப்படி இட்டேற்றம் பண்ணுகிறாய்? (யாழ்ப்.);. (செ.அக.);.

   3. அல்நயன்; foul play.

   4. முழுப்பொய்; blatant lie (ஆ.அக.);.

     [இடுதல் – வைத்தல். இடு → இட்டு + ஏற்றம்.]

இட்டோடு

 இட்டோடு iṭṭōṭu, பெ. (n.)

   ஒன்றாமை; disunion discord. Separation.

இட்டோடு பண்ணுகிறது. (வின்.);.

     [இட்டு + ஒடு, இட்டு = பிரிவு.]

இட்டோட்டு

 இட்டோட்டு iṭṭōṭṭu, பெ. (n.)

   அலைக்கழிவு (யாழ்ப்.);; vexation, trouble. (செ.அக.);.

     [இட்டு + ஒட்டு. இட்டோட்டு + பிரித்து அலைத்தல், துன்புறுத்துதல்.]

இணகாலன்

 இணகாலன் iṇakālaṉ, பெ. (n.)

   நேர்வாளம்; croton seed, purging croton (சா.அக.);.

     [இளகல் – இளகலன் – இளகாலன் – இணகாலன்.]

இணகு

இணகு iṇagu, பெ. (n.)

   உவமை; simile.

     “இணகிறந் தகன்ற பாசம்” (ஞானா.45);, (செ.அக.);.

     [இல் – இள் – இள – இண – இணை – இணைகு – இணகு.]

இணக்கம்

இணக்கம் iṇakkam, பெ. (n.)

   1. இசைப்பு; fitting well together as two planks.

   2. பொருத்தம்; fitness, suitability.

   3. நட்பு; friendship, congeniality, compatibility.

     “நல்லிணக்க மல்ல தல்லற் படுத்தும்” (கொன்றைவே.);.

   4. இசைவு; agreement acquiescence.

   5. திருத்தம்; exactness.”இதனை யிணக்க மாய்ச்செய்” (யாழ்ப்.); (செ.அக.);.

ம. இணக்கம்.

     [இணக்கு – இணக்கம்.]

இணக்கு

இணக்கு1 iṇakkudal,    12 செ.குன்றாவி. (v.t.)

   இசைவித்தல் (திவ்.திருவாய்.6.2.8);; to cause to agree to unite, connect adjust fit persuade (செ.அக.);.

   ம. இணக்குக;தெ. எனியின்க. (ஒன்றாதல், இணைதல்);.

     [இணங்கு → இணக்கு.]

 இணக்கு2 iṇakku, பெ. (n.)

   1. இசைவு; union, harmony.

     “இணக்குறுமென் னேழைமைதான்” (தாயு.பராபர. 273);.

   2. ஒப்பு; comparison match

     “இணக்கிலாததோ ரின்பமே” (திருவாச.30,1);, (செ.அக.);.

   3. உடன்பாடு; agreement.

ம. இணக்கு.

     [இள் – இள – இளக்கு – இணக்கு.]

 இணக்கு3 iṇakku, பெ. (n.)

   1. சிறிது கொஞ்சம்; little quantity, twig.

   2. துண்டு; a piece, bit.

   ம. இணக்கு;   க. இண்டெ;தெ. இண்டை.

     [இள் – இள – இணக்கு.]

இணக்குப்பார்வை

இணக்குப்பார்வை iṇakkuppārvai, பெ. (n.)

   பார்வை விலங்கு; decoy.

     “இணக்குப் பார்வையிட்டு மிருகம் பிடிப்பாரைப்போலே ஸஜாதீயரைக் கொண்டே காரியங்கொள்வோ மென்று” (ஆசார்ய.அவ.பக்.2); (செ.அக.);.

க. இணிகு கண்டி (மறைவாக நின்று பார்ப்பதற்கு ஏற்ற சந்து);.

     [இணக்கு + பார்வை.]

இணக்கோலை

இணக்கோலை iṇakālai, பெ. (n.)

   1. உடன்படிக்கை முறி (வின்.);; deed of cession, of reconciliation or of agreement (செ.அக.);.

   2. பொருத்தோலை; memorandum of association. (சா.அக.);.

     [இணங்கு – இணக்கு + ஒலை.]

இணங்கனுப்பு

 இணங்கனுப்பு iṇaṅgaṉuppu, பெ. (n.)

   வெடியுப்பு; nitre or salt-petre. (சா.அக.);.

     [இணங்கள் + உப்பு.]

இணங்கன்

இணங்கன் iṇaṅgaṉ, பெ. (n.)

   1. நண்பன்; friend, man in agreement with another.

     “வணங்குவோ ரிணங்கன் வந்தான்” (திருவாலவா.28.27);.

   2. வெடியுப்பு (வின்.);; saltpetre (செ.அக.);.

ம. இணங்கன்.

     [இணங்கு – இணங்கன்.]

இணங்கர்

இணங்கர் iṇaṅgar, பெ. (n.)

   ஒப்பு; match, comparison.

     “கற்பிற் கிணங்க ரின்மையான்” (கம்பரா. மீட்சிப்.147);. (செ.அக.);.

     [இணைகு – இணங்கு – இணங்கர்.]

இணங்கற்பிஞ்சு

 இணங்கற்பிஞ்சு iṇaṅgaṟpiñju, பெ. (n.)

   இரண்டு; two. (செ.அக.);.

     [இணங்கல் + பிஞ்சு.]

இணங்கலர்

 இணங்கலர் iṇaṅgalar, பெ. (n.)

   பகைவர்; enemies, adversaries. (செ.அக.);.

     [இணங்கு + அல் + அர்.]

இணங்கல்

இணங்கல் iṇaṅgal, பெ. (n.)

   1. உடன்பாடு; consent assent.

   2. எட்டு; number 8 (செ.அக.);.

     [இணங்கு – இணங்கல்.]

இணங்கார்

 இணங்கார் iṇaṅgār, பெ. (n.)

இணங்கலர் பார்க்க;see inangalar. (செ.அக.);.

     [இணங்கலர் – இணங்கார்.]

இணங்கி

 இணங்கி iṇaṅgi, பெ. (n.)

   தோழி (பிங்.);; girl’s companion, lady’s maid. (செ.அக.);.

க. எணவளிகெ, ஏண்வளிகெ (பெண்கள் கூட்டம்);.

     [இணங்கு – இணங்கி.]

இணங்கு

இணங்கு1 iṇaṅgudal,    15 செ.கு.வி. (v.i.)

   . மனம் பொருந்துதல், ஒத்துக்கொள்ளல்; to consent comply with agree to

     “இச்சையாயின வேழையர்க்கே செய்தங் கிணங்கியே திரிவேனை” (திருவாச.41.9);. (செ.அக.);.

   ம. இணங்கு;   க. எணெ. எண;   தெ. எனுக. என்க;   குட. எணெ;. து. இனெ. இணை.

     [இள – இண – இணங்கு.]

 இணங்கு2 iṇaṅgudal,    15 செ.கு.வி. (v.i.)

   நட்புச் செய்தல்; to be friend.

     “இனிச் சிவபத்தர்களோ டிணங்குக” (சி.போ.12.2);, (செ.அக.);.

ம. இணங்கு (நட்பு);.

     [இண → இணங்கு.]

 இணங்கு3 iṇaṅgu, பெ. (n.)

   1. இணக்கம்; union friendship

     “உள்ளப் பெறா ரிணங்கை யொழிவேனோ” (திருப்பு:288);.

   2. ஒப்பு; match, fitmate.

     “இணங்காகு முனக்கவளே” (திருக்கோ.68);.

   3. பேய் (திவா);; devil (செ.அக.);.

ம. இணங்கு.

     [இண – இணங்கு.]

 இணங்கு4 iṇaṅgu, பெ. (n.)

   1. நண்பின-ன்-ள்; comrade,

     “அவனது துணை அவனது இணங்கு என்பன துணைக்கிழமை” (தொல்.சொல்.80. சேனா.); (செ.அக.);.

   2. உறவு (சேரநா.);; relationship, kinship.

ம. இணங்கு.

     [இண → இணங்கு.]

இணம்

இணம் iṇam, பெ. (n.)

   1.. கிச்சிலி மரம்; orange tree.

   2. தளிர்; sprout (சா.அக.);.

     [இள → இண → இணம்.]

இணரெரி

இணரெரி iṇareri, பெ. (n.)

   பல சுடருள்ள நெருப்பு; conflagration fire throwing ample flames

     “இணரெரி தோய்வன்ன இன்ன செயினும்” (குறள்.308);.

     [இணர் + எரி.]

இணரோங்கு-தல்

இணரோங்கு-தல் iṇarōṅgudal,    5 செ.கு.வி. (v.i.)

   குடிவழி உயர்தல்; to prosper from generation to generation.

     “இணரோங்கி வந்தாரை” (பழமொழி.72);. (செ.அக.);.

     [இணர் + ஒங்குதல், இணர் – கொத்து, கொத்தான உறவு, தலைமுறை.]

இணர்

இணர்1 iṇartal,    2 செ.கு.வி. (v.i.)

   நெருங்குதல்; to be dense, to intensify.

     “இணரிய ஞாட்பினுள்” (களவழி.34);. (செ.அக.);.

ம. இணர்.

     [இள் – இண் – இணர்.]

 இணர்2 iṇartal,    2 செ.கு.வி. (v.i.)

   பரவுதல்; to pervade, spread.

     “இணரு மவன்றன்னை யெண்ணல்” (திருமந்.3035);. (செ.அக.);.

ம. இணர்ச்ச.

     [இள் – இள – இளர் – இணர். ஒ.நோ. ஈண்டுதல்.]

 இணர்3 iṇar, பெ. (n.)

   பூங்கொத்து; cluster or flowers.

     “மெல்லிணர்க் கண்ணி” (புறநா.24.8);.

   2. பூ; blossom, full-blown flower.

     “தேங்கமழ் மருதிணர் கடுப்ப” (திருமுருகு,34);.

   3. பூவிதழ்; flower petal.

     “பல்லிணர்க் குரவம்” (குறிஞ்சிப்.69);.

   4. பூந்தாது (பிங்.);; pollen.

   5. ஒளிச்சுடர்; flame.”இணரெரி” (குறள்.308);.

   6. காய்குலை; bunch of fruit.

     “இணர்ப்பெண்ணை” (பட்டினப்.18);.

   7. ஒழுங்கு; order, arrangement, as of troops.

     “புகரிணர்சூழ் வட்டத்தவை” (பரிபா.15,61);.

   8. தொடர்ச்சி (பழமொழி.78);; continuance.

   9. கிச்சிலி (மலை); பார்க்க; orange.

   10. மாமரம் (மலை); பார்க்க; mango-tree. (செ.அக.);.

   11. மீன் முட்டை; spacon of fish.

ம. இணர்.

     [இள் – இளர் – இணர்.]

 இணர்4 iṇar, பெ. (n.)

   சூலை; stomach pain.

     [இள் – இளர் – இணர் = நெருக்குதல், வலித்தல்.]

இணர் ததை கடுக்கை

இணர் ததை கடுக்கை iṇardadaigaḍuggai, பெ. (n.)

   கொத்து நிறைந்த கொன்றை; bunch of a konrai.

     “இணர் ததை கடுக்கை ஈண்டிய தாதிற் குடவர் புழுக்கிய பொங்கவிழ்ப்புன்கம்.” (அகநா.393-15);.

     [இணர் + ததை + கடுக்கை.]

இணர்ததை தண்கா

இணர்ததை தண்கா iṇardadaidaṇkā, பெ. (n.)

   பூங்கொத்து நெருங்கின குளிர்ந்த பொழில்; flower, garden.

     “இணர்ததை தண்காலின் இயன்றநின்குறி வந் தாள்” (கலித்.69-15);.

     [இணர் + ததை + தண்கா.]

இணலாடு-தல்

இணலாடு-தல் iṇalāṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   புணர்தல்; to copulate as snakes do.

     “பாம்பு இணலாடுகிறது” (கொங்.வ.);.

     [இணல் + ஆடு.]

இணாட்டு

இணாட்டு iṇāṭṭu, பெ. (n.)

   1. மீன் செதிள் (யாழ்ப்.);; gill of fish.

   2. ஓலைத்துண்டு (யாழ்ப்.);; small bit of palm leaf. (செ.அக);.

   3. ஓலைத்தளிர் (ஆ.அக.);; tender palm leaf.

     [ஒருகா. இணர் + ஆட்டு – இணராட்டு – இணாட்டு (தொகுதியின் அடைவு);.]

இணாப்பு

இணாப்பு1 iṇāppudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   ஏய்த்தல் (யாழ்.);; to deceive, cheat defraud, beguile. (செ.அக.);.

க. எட்டிக.

     [இணைப்பு → இணாப்பு.]

 இணாப்பு2 iṇāppu, பெ. (n.)

   ஏய்ப்பு (யாழ்.);; deceit, cheating, fraud, guile. (செ.அக.);.

     [இணை → இணைப்பு → இணாப்பு. ஏய்த்தலாவது பொருந்தச் சொல்லி ஏமாற்றுதல், (வே.க.25);.]

இணி

இணி iṇi, பெ. (n.)

   1. எல்லை; boundary.

   2. தளை; fetter.

   3. ஏணி; ladder.

   4. அணி (ஆ.அக.);; ornament.

     [இள் → இளி → இணி.]

இணிக்கு-தல்

இணிக்கு-தல் iṇikkudal,    12 செ.குன்றாவி. (v.t.)

   1. மறைவாக நின்று பார்த்தல்; to peep furtively (கருநா.);.

   2. காட்டிக் கொடுத்தல்; to betray.

க. இணிக்கு, இணக்கு.

     [இள் – இனி – இணி – இணிக்கு.]

இணுக்கு

இணுக்கு1 iṇukkudal,    6, செ.குன்றாவி. (v.t.)

இணுங்கு பார்க்க;see inunkku.

     ‘இலைகளை இணுக்கிக் கொண்டு வந்தான்’ (செ.அக.);.

     [இல் – இள் – இண் – இணுக்கு.]

 இணுக்கு2 iṇukku, பெ. (n.)

   1. கைப்பிடியளவு; little quantity, as a handful of leaves from a plant.

   2. இலைக் கொத்து; stalk with leaves.

     “ஒரு கருவேப்பிலையினுக்குப் போதும்”.

   3. வளார்; twig, forming part of foliage.

   4. கிளை முதலியவைகளின் இடைச்சந்து (வின்.);; fork or joining of a twig, its branch. (செ.அக.);.

   ம. இணுக்கு;   க. இண்டெ;தெ. இண்டெ.

     [இணுகு – இணுங்கு – இணுக்கு. இல் – இள் – இணு – இணுக்கு.]

 இணுக்கு3 iṇukku, பெ. (n.)

   அழுக்கு கறை (அக.நி.);; dirt, stain. (செ.அக.);.

     [இழுக்கு – இணுக்கு.]

இணுங்கு-தல்

இணுங்கு-தல் iṇuṅgudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   பறித்தல் (சீவக.124,உரை);; pull off, as a leaf from a twig. pluck, as a flower from a tree. (செ.அக.);.

     [இணுக்கு – இணுங்கு.]

இணை

இணை iṇai, பெ. (n.)

   ஏழிசைத் தொகுதியில் இரண்டாமிசையையும், ஏழாமிசையையும் குறிக்குஞ்சொல்; a name of musical note.

     [இள்-இண்-இணை]

 இணை1 iṇaidal,    2 செ.கு.வி. (v.i.)

   1. சேர்தல்; to jion, unite,

     “இணைந்துடன் வருவ திணைக்கை” (சிலப்.3.18. உரை);.

   2. இசைதல்; to agree, acquiesce, to be suited.

   3. ஒத்தல் (தணிகைப்பு.நாட்டு.53);; to be like, to resemble. (செ.அக.);.

   4. கூடுதல்; to couple.

   ம. இணயுக;   க. எணெ. எண;   தெ. எனயின்க;   குட. எணெ;து. இனெ. இணெ.

     [இயை – இசை – இணை – இணைதல். இள் – இள – இண – இணை.]

 இணை2 iṇaittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   1. கட்டுதல்; to fasten together, entwine, as a garland.

     “இணைத்த கோதை” (திருமுருகு.200);. (செ.அக.);.

   2. சேர்த்தல்; to link, inter-connect, unite.

   3. உவமித்தல்; to compare. (ஆ.அக.);.

ம. இணய்க்குக.

     [இயை – இசை – இணை – இணைத்தல்.]

 இணை3 iṇai, பெ. (n.)

   1. இசைவு; union, conjunction.

   2. ஒப்பு; likeness, similitude, resemblance, analogy.

     “இணைகடி சீய மன்னான்” (சீவக.1721);.

   3. இரட்டை; two things of a kind, pair, couple, brace.

     “குறிலே நெடிலே குறிலிணை ஏனைக் குறில்நெடிலே” (யா.கா.உறுப்.5);.

   4. உதவி (சூடா.);; aid, help, support.

   5. பின்னல் (சூடா.);; woman’s locks.

   6. எல்லை; limit, boundary.

     “இணையிலின்ப முடையோய் நீ” (சீவக.1243);.

   7. இணைத்தொடை (யா.கா.உறுப்.19); பார்க்க;see inaittodai (செ.அக.);.

   8. கண்ணினை (ஆ.அக.);; eyes.

   9. தோழன் (ஆ.அக.);; friend, companion.

   ம. இண;   க. இண்டெ;தெ. இண்ட.

     [உள் – இள் – இழை – இணை. ஒ.நோ. தழல் – தணல் (முதா.19);.]

இணை அணை சேக்கை

இணை அணை சேக்கை iṇaiaṇaicēkkai, பெ. (n.)

   அனைந்த படுக்கை (நெடுநல்.133);; twin bed.

     [இணை + அணை + சேக்கை.]

இணை மடியூசி

 இணை மடியூசி iṇaimaḍiyūci, பெ. (n.)

   தாள்களை இணைக்கச் செய்யும் கம்பி; wire, or pin, to fasten the papers with stapler-pin.

     [இணை + மடி + ஊசி.]

இணை மடியூசிக்கருவி

 இணை மடியூசிக்கருவி iṇaimaḍiyūcikkaruvi, பெ. (n.)

   தாள்களை இணைக்கச் செய்யும் கம்பியை மடிக்க உதவும் கருவி; stapling-machine, a machine that stitches paper with wire.

     [இணை + மடி + ஊசி + கருவி.]

இணைஈர் ஒதி

இணைஈர் ஒதி iṇaiīrodi, பெ. (n.)

   கடையொத்த நெய்ப்பினையுடைய மயிர் (திருமுருகு.20);; tressed hair.

     [இணை + ஈர் + ஓதி. இரு – ஈர்.]

இணைக் கருப்பம்

 இணைக் கருப்பம் iṇaikkaruppam, பெ. (n.)

   இரட்டைப் பிள்ளை; two children born at the same birth, twins. (சா.அக);.

     [இணை கருப்பம்.]

இணைக்கயல்

இணைக்கயல் iṇaikkayal, பெ. (n.)

   1. எண்மங்கலங்களுளொன்று (திவா.);; brace of carp, in gold or silver, an auspicious object carried before kings or other great personages, one of atta-mangalam.

   2. மீன வரி (மச்சரேகை);; two lines on the palm of hand resembling a fish, and considered to augur prosperity.

     “மதிமருண்டா னிணைக்கயற் கையான்” (பாரத. கீசகன்.3); (செ.அக.);.

     [இணை + கயல்.]

இணைக்கல்லை

இணைக்கல்லை iṇaikkallai, பெ. (n.)

   இரண்டிலைகளால் தைக்கப்பட்ட கலம் (தொண்ணை); (பெரியபு.கண்ணப்ப.118); (செ.அக.);; cup shaped out of folded leaves.

     [இணை + கல்லை. இணை = இரண்டு.]

இணைக்குறளாசிரியப்பா

இணைக்குறளாசிரியப்பா iṇaikkuṟaḷāciriyappā, பெ. (n.)

   ஈற்றடியும் முதலடியும் அளவடியாக இடையடிகள் பல குறளடியானும் சிந்தடியானும் வரும் அகவல் (யா.கா.செய.8, உரை);; variety of agaval verse where two or more lines contain lesser number of feet than the standard four. (செ.அக.);.

     [இணை + குறள் + ஆசிரியம் + பா.]

இணைக்கை

இணைக்கை iṇaikkai, பெ. (n.)

   இரண்டு கைகளாற் புரியும் 15 வகை செய்கைக்குறிகள் (அபிநயம்); (சிலப். 3,18, உரை);; gesture involving the use of both the hands in one of 15 different attitudes, in dancing posture.

அஞ்சலி, புட்பாஞ்சலி, பதுமாஞ்சலி, கபோதம், கர்க்கடகம், கவத்திகம், கடகாவருத்தம், நிடதம், தோரம், உற்சங்கம், புட்பபுடம், மகரம், சயந்தம், அபயவத்தம், வருத்தமானம் and dist. fr. inaiyā-viņai-k-kai (செ.அக.);.

     [இணை + கை.]

இணைக்கொடைப்பொருள்

 இணைக்கொடைப்பொருள் iṇaikkoḍaipporuḷ, பெ. (n.)

   திருவிழா முதலிய நல்ல காலங்களில் மணமக்களுக்கு உற்றார் முதலியோர் கொடுக்கும் பொருள் (சங்.அக.);; gifts made to a married couple on auspicious and festive occasions by relatives and others. (செ.அக.);.

     [இணை + கொடை + பொருள்.]

இணைக்கோணம்

இணைக்கோணம் iṇaikāṇam, பெ. (n.)

   மூக்கிரட்டைச் செடி (இராசவைத்.40);; pointed-leaved hogweed. (செ.அக.);.

     [இணை + கோணம்.]

இணைதல்

இணைதல் iṇaidal, பெ. (n.)

   1. சேர்தல்; uniting.

   2. விலங்குகளின் புணர்ச்சி; having sexual connection said of animals. (சா.அக.);.

   க. எணெ (இரட்டை;சேர்தல்);.

     [இல் – இள் – இணை.]

இணைதாரை

 இணைதாரை iṇaitārai, பெ. (n.)

   விந்துவை விந்துக் குழியிலிருந்து வெளித்தள்ளும் நாடிக்குழல் தாரை; Canal conveying the semen to the urethra – ejaculatory duct. (சா.அக.);.

     [இணை + தாரை.]

இணைத்தொடை

இணைத்தொடை iṇaittoḍai, பெ. (n.)

   அளவடியுள் முதலிருசீர்க்கண்ணும் மோனை முதலாயின வரத்தொடுப்பது (இலக்.வி.723, உரை);; concatenation in which there is metrical assonance or alliteration as between the first two feet of a line of four feet (செ.அக.);.

     [இணை + தொடை.]

இணைபிரியாமை

 இணைபிரியாமை iṇaibiriyāmai, பெ. (n.)

   விட்டுப் பிரியாதிருக்கை; inseparability of pair, impartibility of affinity, fastness of friendship.

     [இணை + பிரியாமை.]

இணைப்படைத்தானை

இணைப்படைத்தானை iṇaippaḍaittāṉai, பெ. (n.)

   துணைப்படைச்சேனை; army with allies”இணைப்படைத் தானை யரசோடுறினும்” (கலித்.15-3);.

     [இணை + படை + தானை.]

இணைப்பறடு

 இணைப்பறடு iṇaippaṟaṭu, பெ. (n.)

சமமான நகங்களைக் கொண்டதாகக் கால்களை வைத்து கைகளைக் கொடிபோலத் தொங்குவிட்டு உடலை இயல்பாக வைத்தாடல்:

 a dance pose.

     [இணை+பறடு]

இணைப்பாம்பு

இணைப்பாம்பு iṇaippāmbu, பெ. (n.)

   1. சாரைப் பாம்பு; male-cobra.

   2. பிணையும் பாம்பு; snake Sexually uniting with another snake.

     [இணை + பாம்பு.]

இணைப்பிணையல்

இணைப்பிணையல் iṇaippiṇaiyal, பெ. (n.)

   இணை மாலை (பரிபா.2-53);; pair of garlands.

     [இணை + பிணையல்.]

இணைப்பிரியன்

 இணைப்பிரியன் iṇaippiriyaṉ, பெ. (n.)

   ஒரு வகைப் பாம்பு; a kind of snake. (சா.அக.);.

     [இணை + பிரியன்.]

இணைப்பிரியாமை

இணைப்பிரியாமை iṇaippiriyāmai, பெ. (n.)

   ஆணும் பெண்ணும் துணைபிரியாதிருத்தல்; indivisibility of couple.

     [இணை + பிரியாமை (வே.க.25);.]

இணைப்பு

இணைப்பு iṇaippu, பெ. (n.)

   1. இசைப்பு; union connection, coupling.

   2. ஒப்பு; equality, similarity.

     “இணைப்பரும் பெருமையீ சன் காண்க”. (திருவாச. 3.46);. (செ.அக.);.

க. எணவளிகெ.. ஏணவளிகெ.

     [இணை → இணைப்பு.]

இணைப்புறு பிணையல்

இணைப்புறு பிணையல் iṇaibbuṟubiṇaiyal, பெ. (n.)

   கட்டுதலுறுகின்ற மாலை (திருமுருகு.30);; twinned garlands.

     [இணைப்பு + உறு + பிணையல்.]

இணைமட்டப்பலகை

 இணைமட்டப்பலகை iṇaimaṭṭappalagai, பெ. (n.)

   இரட்டைக்கோடு காட்டுங் கருவி (CEM);; parallel ruler, indicator of parallelism. (செ.அக.);.

     [இணை + மட்டம் + பலகை.]

இணைமணிமாலை

இணைமணிமாலை iṇaimaṇimālai, பெ. (n.)

   சிற்றிலக்கிய வகை (இலக்.வி.818);;   அந்தாதியில் அமைந்திருக்கும் 100 பாடல்களைக் கொண்டது. பாடல்கள் இரண்டு இரண்டாக இருக்கும். பாடல்கள் வெண்பா, அகவல் அல்லது வெண்பா, கட்டளைக்கலித்துறையில் அமைந்திருக்கும்; literary work of 100 stanzas in andadi form, consisting of alternative pairs of either wenpa and akaval or venpa and kattalal-k-kalitturai (செ.அக.);.

     [இணை + மணி + மாலை.]

இணைமுகப்பறை

 இணைமுகப்பறை iṇaimukappaṟai, பெ. (n.)

   இரண்டு பக்கமும் ஒசையெழுப்பும் முழவுகளின் பொதுப் பெயர்; double side drum.

இணை+முகம்+பறை)

இணைமுரண்

இணைமுரண் iṇaimuraṇ, பெ. (n.)

   ஒரடியின் முதலிரு சீரும் முரண்பட இணைந்து வருந் தொடை (யா.கா.உறுப்.16.உரை);; anti-thesis in the first two feet of a line in a verse (செ.அக.);.

     [இணை + முரண்.]

இணைமுரண்தொடை

 இணைமுரண்தொடை iṇaimuraṇtoḍai, பெ. (n.)

இணை முரண் பார்க்க;see inaimuran. (ஆ.அக.);.

     [இணை + முரண் + தொடை.]

இணைமோனை

இணைமோனை iṇaimōṉai, பெ. (n.)

ஒரடியின் முதலிருசீரினும் மோனை இயைந்து வருந் தொடை (யா.கா.உறுப்.16, உரை);.

 alliteration in the first two feet of a line of verse (செ.அக.);.

     [இணை + மோனை.]

இணைமோனைத்தொடை

 இணைமோனைத்தொடை iṇaimōṉaittoḍai, பெ. (n.)

இணைமோனை பார்க்க;see inaimoonai. (ஆ.அக.);.

     [இணை + மோனை + தொடை.]

இணையசை

 இணையசை iṇaiyasai, பெ. (n.)

   நிரையசை (ஆ.அக.);;     [இணை + அசை.]

இணையடி

இணையடி1 iṇaiyaḍi, பெ. (n.)

   அணிவகைகளுளொன்று. அஃது இருசீரொன்றாய் வருதல் (ஆ.அக.);; metrical formulation of identical feet in adjacent lines as a figure of speech.

     [இணை + அடி.]

 இணையடி2 iṇaiyaḍittal,    4 செ.கு.வி. (v.i.)

   முட்டுக்கால் தட்டுதல் (இ.வ.);; knock-knee (செ.அக.);.

     [இணை + அடித்தல்.]

இணையடிகால்

இணையடிகால் iṇaiyaḍikāl, பெ. (n.)

   மாட்டுக் குற்றவகை (பெரியமாட்.18);; defect in cattle. (செ.அக.);.

     [இணை + அடி + கால்.]

இணையணை

இணையணை iṇaiyaṇai, பெ. (n.)

   பலவணை; mattresses spread one over another for comfort.

     “இணையணை மேம்படத் திருந்து துயில்” (சிலப்.4:67); (வே.க.25);.

     [இணை + அணை.]

இணையளபெடை

இணையளபெடை iṇaiyaḷabeḍai, பெ. (n.)

   முதலிரு சீரினும் அளபெடை வருந் தொடை (யா.கா. உறுப். 16, உரை);; variety of rhyme in which the first two feet of a line in a stanza have protracted vowel sounds. (செ.அக.);.

     [இணை + அளபெடை.]

இணையாமார்பன்

 இணையாமார்பன் iṇaiyāmārpaṉ, பெ. (n.)

   கம்பர் சோழ நாட்டை வெறுத்துப் பாண்டிய நாட்டிலிருந்த போது அவரை அழைத்துவரப் பாண்டியன் அவைக்குச் சென்றவர் (அபி.சிந்.);; messenger sent by Chola king to bring the great poet Kamban from the Pandiyan court.

     [இணையா + மார்பன்.]

இணையாளி

 இணையாளி iṇaiyāḷi, பெ. (n.)

   கூட்டுக்காரன்; companion (சேர.நா.);.

ம. இணயாளி.

     [இணை + ஆள் + இ.]

இணையாவினைக்கை

இணையாவினைக்கை iṇaiyāviṉaikkai, பெ. (n.)

ஒரே கையால் புரியும் 33 வகை சைகை (அபிநயம்); (சிலப்.3.

   18. உரை);; gesture with one hand, of which 33 varieties are mentioned in dancing treatise (செ.அக.);.

     [இணையா + வினைக்கை. அவையாவன: பதாகை, திரிபதாகை, கத்தரிகை தூபம், அராளம். இளம்பிறை, சுகதுண்டம், முட்டி, கடகம், சூசி, கமல கோசிகம், காங்கூலம், கபித்தம், விற்பிடி, குடங்கை அலாபத்திரம், பிரமரம், தாம்பிர குடம், பிசாசம், முகுளம், பிண்டி, தெரிதிலை, மெய்ந்திலை. உன்னம், மண்டலம், சதுரம், மான்றவை, சங்கு, வண்டு, இலதை, கபோதம், மகரமுகம், வலம்புரி.]

இணையியைபு

இணையியைபு iṇaiyiyaibu, பெ. (n.)

   ஒரடியின் ஈற்றுச் சீரிரண்டும் இணைந்து வருந் தொடை (யா.கா.உறுப்.16.உரை);. (செ.அக.);; rhyming of the last two feet.

     [இணை + இயைபு.]

இணையுதி

 இணையுதி iṇaiyudi, பெ. (n.)

   உடம்பினில் தசையிழைகளைப் பொருத்தும் பொருள்; tissue which binds together the various structures of the body-connective tissue. (சா.அக.);.

     [இணை + உதி. உத்து – உது – உதி. உத்துதல் = பொருத்துதல்.]

இணையுப்பு

 இணையுப்பு iṇaiyuppu, பெ. (n.)

   இரண்டு வகை உப்பு சேர்ந்த கரைசல்; solution composed of two salts. (சா.அக.);.

     [இணை + உப்பு.]

இணையெதுகை

இணையெதுகை iṇaiyedugai, பெ. (n.)

   ஒரடியின் முதலிரு சீரினும் எதுகையியைந்து வருந் தொடை (யா.கா.உறுப்.16, உரை.);; form of rhyme in which the first two feet of a line of verse rhyme with each other. (செ.அக.);.

     [இணை + எதுகை.]

இணையேருண்கண்

இணையேருண்கண் iṇaiyēruṇkaṇ, பெ. (n.)

   எழில் மிகு இருகண்கள் (ஐங்குறு.378);; beautiful eyes.

     [இணை + ஏர் + உண்கண்.]

இணைவன்

இணைவன் iṇaivaṉ, பெ. (n.)

   இணைந்திருப்பவன்; one who is closely related to or intimately associated with companion.

     “இணைவனா மெப்பொருட்கும்” (திவ். திருவாய்.2.8.1);, (செ.அக.);.

     [இணை → இணைவன்.]

இணைவிழைச்சு

இணைவிழைச்சு iṇaiviḻaiccu, பெ. (n.)

   புணர்ச்சி; sexual copulation.

     “இணைவிழைச்சு தீதென்ப” (இறை.1. உரை. பக்.9);. (செ.அக.);.

     [இணை + விழைச்சு.]

இணைவிழைச்சுத்தன்மை

 இணைவிழைச்சுத்தன்மை iṇaiviḻaiccuttaṉmai, பெ. (n.)

   நாட்டுபுறக் காதற் பாடல்களில் உள்ள ஒரு கூறு; a feature in folk dance.

     [இணைவிழைச்சு+தன்மை]

இணைவிழைச்சுப்பொருண்மை

 இணைவிழைச்சுப்பொருண்மை iṇaiviḻaiccupporuṇmai, பெ. (n.)

நாட்டுப்புறக் காதல் பாடல்களில் உள்ள ஒரு கூறு

 theme of love in folk dance.

     [இணை+விழைச்சு+பொருண்மை]

இணைவு

இணைவு iṇaivu, பெ. (n.)

   1. ஒன்றிப்பு; junction.

   2. கலப்பு; merger.

   3. சேர்மானம்; addition.

   4. புணர்ச்சி (ஆ.அக.);; copulation.

     [இணை – இணைவு.]

இண்டங்கொடி

 இண்டங்கொடி iṇḍaṅgoḍi, பெ. (n.)

   இண்டு; sensitive creeper – (சா.அக.);. [இண்டு + அம் + கொடி.]

இண்டங்கொழுந்து

 இண்டங்கொழுந்து iṇṭaṅgoḻundu, பெ. (n.)

   இண்டஞ் செடியின் கொழுந்திலை; tender leaf of Indu. a sensitive plant. (சா.அக.);.

     [இண்டு + அம் + கொழுந்து.]

இண்டஞ்செடி

 இண்டஞ்செடி iṇḍañjeḍi, பெ. (n.)

இண்டு பார்க்க;see indu. (சா.அக.);.

     [இண்டு + அம் + செடி.]

இண்டந்தண்டு

 இண்டந்தண்டு iṇṭandaṇṭu, பெ. (n.)

   இண்டஞ் செடியின் அடித்தண்டு; stalk of indu plant (சா.அக.);.

     [இண்டு + அம் + தண்டு.]

இண்டனம்

இண்டனம் iṇṭaṉam, பெ. (n.)

   1. விளையாட்டு; play, sport.

   2. புணர்ச்சி; sexual intercourse.

   3. ஊர்தி; vehicle (செ.அக.);.

 Skt hindana.

     [இண்டல் = நெருங்கல், விரைதல், இண்டல் + அம் – இண்டலம் → இண்டனம்.]

இண்டமுள்ளு

 இண்டமுள்ளு iṇṭamuḷḷu, பெ. (n.)

   இண்டஞ்செடியின் முள்; thorn of indu plant (சா.அக.);.

     [இண்டு + அம் + முள்ளு.]

இண்டம்

 இண்டம் iṇṭam, பெ. (n.)

   சவ்வரிசி; sago.

     [இண்டு + அம்.]

இண்டம்பொடி

 இண்டம்பொடி iṇḍamboḍi, பெ. (n.)

   சவ்வரிசி நொய் (MM);; sago grit (செ.அக.);.

     [இண்டு + அம் + பொடி.]

இண்டரி

 இண்டரி iṇṭari, பெ. (n.)

   ஓர் பணிகாரம்; a kind of confection (சா.அக.);.

     [இண்டு + அரி. இண்டு = மாவு. அரி = அரிசி.]

இண்டர்

இண்டர்1 iṇṭar, பெ. (n.)

.

   1. இடையர் (வின்.);; shepherds

   2. இழிந்தோர்; outcastes, men who are extremely degraded villains

     “இண்டக்குலத்தை” (திவ்.திருப்பல்.5); (செ.அக.);.

     [இண்டு + அர்.]

 இண்டர்2 iṇṭar, பெ. (n.)

   1. நண்பர்; friends.

   2. சுற்றம்; relatives (ஆ.அக.);.

     [இண்டு + அர்.]

இண்டல்

 இண்டல் iṇṭal, பெ. (n.)

   விரைதல்; to move quickly.

இண்டாவி

 இண்டாவி iṇṭāvi, பெ. (n.)

   திறன், ஆற்றல்; energy to do work.

     “அங்கே போய்ச் சேர்வதற்குள் நம்ம இண்டாவி அற்றுப் போய்விடும் போலுள்ளதே (இ.வ.);

     [ஈண்டு ஆவி]

இண்டிடுக்கு

 இண்டிடுக்கு iṇḍiḍukku, பெ. (n.)

   சந்துபொந்து; nook and corner. (செ.அக.);.

     [இண்டு + இடுக்கு.]

இண்டிமாமா

 இண்டிமாமா iṇṭimāmā, பெ. (n.)

   கூட்டிக்கொடுப்பவன்; panderer, pimp, uncle to every one in the house. (செ.அக.);.

தெ. இண்டி மாமா.

     [இல் = வீடு. இல் – தெ. இண்டி (வீட்டுக்குரிய); + மாமா.]

இண்டிறுக்கெனல்

இண்டிறுக்கெனல் iṇṭiṟukkeṉal, பெ. (n.)

   குறட்டை விடுங் குறிப்பு; onom. expr. of snoring.

     “இண்டிறுக்கென்னும் கொரக்கை விடுதலால்” (நீலகேசி,375.உரை.); (செ.அக.);.

     [இண்டு + இறுக்கு + எனல்.]

இண்டு

இண்டு1 iṇṭudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   இடித்தல்; to pound.

     [உள் – இள் – இண்டு.]

 இண்டு2 iṇṭu, பெ. (n.)

   1. மிகச்சிறிய இடைவெளி அல்லது துளை; cleft nook, minute cavity.

     “இண்டும் இடுக்கும்” (உ.வ.);. (மு.தா.91);.

   2. மாவு; flour.

 இண்டு3 iṇṭu, பெ. (n.)

   1. கொடி வகை; eight-pinnate soap-pod

     “இண்டு படர்ந்த இடுகாடு” (பதினோ.மூத் 10);;

   2. தொட்டாற்சுருங்கி; sensitive plant, mimosa

   3. செடி வகை (L);; species of sensitive tree.

   4. புலி தொடக்கி (மலை.);; tiger-stopper (செ.அக.);;

   5. மட்டிச் சிங்கை; prickly brasiletto climber (சா.அக.);;

     [இள் → இண்டு (திரட்சி, தொகுதி);;]

இண்டை

இண்டை iṇṭai, பெ. (n.)

சிவனின் சிற்பத்தில் காணப்பெறும் மாலை வகை (5:74);

 a flower decoration in sculpture of siva.

     [இண்டு-இண்டை]

 இண்டை1 iṇṭai, பெ. (n.)

   தாமரை (திவா.);; lotus.

   2. மாலை வகை; circlet of flowers, variety of garland

     “இண்டைச் சடைமுடியா யென்றேனானே” (தேவா. 297.5);. (செ.அக.);.

   ம. இண்ட;   க. இண்டெ;தெ. இண்டெ.

     [இண்டு → இண்டை.]

 இண்டை2 iṇṭai, பெ. (n.)

   1. இண்டு (பிங்.);; eight-pinnate soap-pod.

   2. முல்லை (L);; trichotomous – flowering smooth jasmine.

   3. புலி தொடக்கி (மலை.);; tiger-stopper.

   4. இண்டு2 பார்க்க; species of sensitive tree.

   5. ஆதொண்டை (ட);; thorny caper. (செ.அக.);.

இண்டைகட்டு-தல்

இண்டைகட்டு-தல் iṇṭaigaṭṭudal,    12 செ.குன்றாவி. (v.t.)

   பூ மாலை தொடுத்தல் (கருநா.);; to twine garland.

க. இண்டெகட்டு.

இண்டைச்சுருக்கு

இண்டைச்சுருக்கு iṇṭaiccurukku, பெ. (n.)

   மாலை வகை (பெரியபு. முருக.9);; chaplet of flowers. (செ.அக.);.

     [இண்டை + சுருக்கு.]

இதக்கை

இதக்கை idakkai, பெ. (n.)

   பனங்காயின் தலையிலுள்ள தோடு (அகநா.365);; integument on the op of a palmyra ftruit. (செ.அக.);.

     [உது – இது – இதன் – இதக்கை. உது = மேல். இதக்கை = மேலிருப்பது.]

இதசத்துரு

 இதசத்துரு idasadduru, பெ. (n.)

   வெளிநட்புக் காட்டும் பகைவன்; enemy in the guise of a friend.

த.வ. உட்பகைவன்.

     [Skt. hita +šatru → த. இதசத்துரு.]

இதஞ்சொல்(லு)-தல்

இதஞ்சொல்(லு)-தல் idañjolludal,    13 செ.கு.வி. (v.i.)

   1. பந்தி கூறுதல்; to give salutary advice or wholesome counsel. (செ.அக.);.

   2. ஆறுதல் மொழிதல்; to console.

     [இதம் + சொல்லுதல்.]

இதடக்கு

 இதடக்கு idaḍakku, பெ. (n.)

   அணியுறுப்பு வகை; part in jewels. (செ.அக.);.

     [இதழ் + அடக்கு.]

இதடி

இதடி1 idaḍi, பெ. (n.)

   பெண்ணெருமை; she-buffalo.

     “இதடி கரையும்” (திணைமாலை.83); (செ.அக.);.

     [இகுளை – இதளை – இதளி – இதடி.]

விரவுப்பெயர்கள் மக்களுக்கும் வளர்ப்பு விலங்குகளுக்கும் பொதுவாய் வருதலின் பெண்ணைக் குறித்த இகுளை வடிவு திரிந்து பெண்ணெருமையைக் குறித்தது.

 இதடி2 idaḍi, பெ. (n.)

   நீர் (பிங்.);; water. (செ.அக);.

     [இல் – இது – இதள் – இதடி = மண்ணைக் குடைந்து செல்லும் நீர்.]

இதணம்

இதணம் idaṇam, பெ. (n.)

இதண் (குறிஞ்சிப்.41); பார்க்க;see idan (செ.அக.);.

     [உது – இது – இதண் (உயரம்); இதண் + அம் – இதணம்.]

இதண்

இதண் idaṇ, பெ. (n.)

   காவற்பரண் (திணைமாலை.2);; high shed put up temporarily with a platform from which to watch a field. (செ.அக.);.

   2. பரண்; loft (ஆ.அக.);.

     [உது – இது – இதண் = உயரமானது.]

இதமல்லிதம்

 இதமல்லிதம் idamallidam, பெ. (n.)

   நன்மை தீமை; good and evil.

     [இதம் + அல் + இதம்.]

இதமாகச் செய்-தல்

இதமாகச் செய்-தல் idamākacceydal,    1 செ.கு.வி. (v.i.)

   உடம்பிற்கொத்துக் கொள்ளும்படிச் செய்தல்; make or render anything suitable or agreeable to the constitution. (சா.அக.);.

     [இதம் + ஆக + செய்.]

இதமி-த்தல்

இதமி-த்தல் idamiddal,    4 செ.கு.வி. (v.i.)

   1. பற்றுச்செய்தல்; to be attached.

     “இதமித்தல் பாசத்திலின்றி” (சி.போ.10,2,5); (செ.அக.);.

   2. ஒன்றித்தல் (ஆ.அக.);; unite.

 Skt. hita.

     [இதைத்தல் = இணைத்தல், கெட்டிப்படுத்துதல், ஒன்றிணைத்தல். இதை – இதம் – இதமித்தல்.]

இதமிப்பு

 இதமிப்பு idamippu, பெ. (n.)

   ஒன்றிப்பு (ஆ.அக.);; union.

     [இதம் – இதமிப்பு.]

இதமியம்

இதமியம் idamiyam, பெ. (n.)

   1. இதப்படுதல்; gratification.

   2. இனிமை; pleasure.

     [இதம் + இயம்.]

இதம்

இதம்1 idam, பெ. (n.)

   1. இன்பமானது; consensus comfort agreeability.

     “இதந்தரு மடந்தை” (திருவாத.பு. கடவுள்வா.1);.

   2. நன்மை; sage counsel, wholesome words.

     “நேச ரிதங் கூற நிலவலயந் தாங்குநளன்” (நள.காப்பு);. (செ.அக.);. ம. இதம்;

தெ. இதமு.

     [இல் – இது – இதம். இல் – இளமை, மென்மை, இனிமை. இதம் → skt hida.]

 இதம்2 idam, பெ. (n.)

   அறிவு (நாநார்த்த.);; knowledge, wisdom. (செ.அக.);.

     [இல் – இதம். இல் – இளமை, மென்மை தெளிவு, அறிவு இதம் → Skt hida.]

 இதம்3 idam, பெ. (n.)

   இதயம்; heart.

     “இதஞ்சலிப் பெய்தநின் றேங்கின ரேங்கவும்” (திருவாச.2.139); (செ.அக.);.

க. எதெ.

     [இல் – இத்து – இது – இதம். (ஒ.நோ. மது – மதம்); இல் = குத்தல், துளைத்தல். இதம் = உட்டுளையுள்ளது. உட்குழிவானது. ஒ.நோ. இல்லிக்குடம் = ஒட்டைக்குடம். குல் – குத்து – குதம். குல் – குந்து (புட்டம் தரையில் ஊன்ற உட்கார்); இதம் → Skt hridaya ஓ.நோ. மெது → Skt midu.]

இதம்பண்ணல்

 இதம்பண்ணல் idambaṇṇal,    தொ.பெ. (vbl.n.) இன்பஞ்செய்யல்; give pleasure, gratify.

     [இதன் + பண்னு + அல்.]

இதம்பாடல்

 இதம்பாடல் itampāṭal, பெ. (n.)

   முதுகுளத்தூர் வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Mudukalattur Taluk. (இ.வ.);

     [இதை-இதம் + பாடல்]

இதய மாற்றொட்டு

 இதய மாற்றொட்டு idayamāṟṟoṭṭu, பெ. (n.)

   மாற்றிதய அறுமை மருத்துவம்; heart transplantation.

     [இதயம் + மாற்று + ஒட்டு.]

இதயம்

இதயம் idayam, பெ. (n.)

   1. இதயப் பை; heart.

     “கருதுவாரிதயத்து” (தேவா.619.1);.

   2. மார்பு; chest.

     “இதயமென்மயி ரணிந்திடில்” (காசிக.மகளிர்.23);.

   3. மனம்; mind. (செ.அக.);.

   மறுவ. கருள். இதம், மாங்காய், தாமரைக்காய், குண்டிக்காய்;   க. எதெ. எழ்தெ. எர்தெ;   தெ. எத;   து. எதெ;பர். எத்ரம். எத்ரொம். Skt hridaya.

     [இல் – இத்து – இது – இதம் → வ. ஹிர்தய – த. இதயம்.]

இதயம் இருக்கும் இடமாகிய மேற்புறத்து மார்பும் மனமும் வழிநிலைப்பொருள்களாகும். இது வடசொற்றிரிபாகும். இதம்3 பார்க்க;see idam3.

இதயாரி நோய்

 இதயாரி நோய் idayārinōy, பெ. (n.)

   இதயத்தின் நாளச்சுவரில் ஏற்படும் வலி; valvular disease of the heart. (சா.அக.);.

     [இதயம் + ஆர் + இ + நோய்.]

இதரக்கூடு மருந்து

 இதரக்கூடு மருந்து idarakāṭumarundu, பெ. (n.)

   இதளியம் சேர்ந்த மருந்து; any medicine containing mercury as the chief ingredient – mercurial compound (சா.அக.);.

     [இதள் – இதளம் – இதரம் + கூடு + மருந்து.]

இதரன்

இதரன்1 idaraṉ, பெ. (n.)

   1. எளியவன். பாமரன் (நாநார்த்த.);; ignorant person, simpleton.

   2. கீழ்மகன்

 mean person. (செ.அக.);.

     [இது → இதரன். இது – கீழ் நோக்கிய சுட்டு. தாழ்வு = தாழ்ந்த இடம்;

   தாழ்ந்தோர் எனப் பொருள் தந்து ஆகுபெயராயிற்று. ஒ.நோ. உது → உதரம். உடம்பின் நடுவிலுள்ள வயிற்றைக் குறித்தது. அது → ஆதரம். அதுத்தல் = பருத்தல்;சற்றே பருத்த இதழைக் குறித்தது.]

 இதரன்2 idaraṉ, பெ. (n.)

   1. அற்பன்; a low man.

   2. பிறன், அன்னியன்; alien, other man, man of another group.”இதரர்க்கு மாதர்க் காகா” (விருத்தாசல.சிவபூ. 34;

சங்.அக.)

     [இல் = பிளத்தல், இரண்டாக்கல்;

இல் → இது → இதலுதல். இதரல் = பிரித்தல். ஒ.நோ.மெல். – மெது. இதல் → இதலன் → இதரன். இதரர் என்னும் சொல்லை வடமொழி தமிழினின்று கடன் பெற்றுள்ளது. இதரர் → Skt itara.]

இதரமதம்

 இதரமதம் idaramadam, பெ. (n.)

   புறச்சமயம்; alien religion (ஆ.அக.);.

     [இதரம் + மதம்.]

இதரமருந்து

 இதரமருந்து idaramarundu, பெ. (n.)

   இதளியத்திலிருந்து செய்த மருந்து; any preparation of mercury. (சா.அக.);.

     [இதளமருந்து → இதரமருந்து.]

இதரம்

இதரம்1 idaram, பெ. (n.)

   வேறு; another the other.

   2. பகை; hostility, enmity.

     “இதரங் கடந்தா னுதிட்டிரன்” (பாரத.துருவாச.12);. (செ.அக.);.

 Skt itara.

     [இது = பின்னுள்ளது. இது – இதுர் – இதிர் – இதிரம் – இதரம்.]

 இதரம்2 idaram, பெ. (n.)

   கீழ்மை (நாநார்த்த.);; baseness. (செ.அக.);.

 Skt itara.

     [இது = பின்னுள்ளது. கீழுள்ளது. கீழ்மை. இது – இதுர் – இதிர் – இதிரம்.]

இதரயிட்டம்பனை

இதரயிட்டம்பனை idarayiṭṭambaṉai, பெ. (n.)

பிற பனை பார்க்க;see pira panai

   வருவாய்த் துறையில் வருவாய்க்காகப் பிரித்து வைத்துள்ள பருவப்பனை, காய்ப்பனை, காட்டுப்பனை, ஒலைவெட்டுப்பனை, வடலி என்னும் ஐந்துவகைப் பனைகள். (நெல்லை.);; other items of palmyra trees, classification, for revenue purposes, of palmyras (TN.D.G.i. 307); (செ.அக.);.

 Skt hara.

     [இதரம் + அயிட்டம் (Eitem); + பனை.]

இதரர்

இதரர் idarar, பெ. (n.)

   1. வேற்றவர்; strangers, foreigners.

   2. கீழ்மக்கள்; inferiors, persons of no worth or character (W);.

     [இது – இதுர் – இதுரர் – இதரர்.]

இதரல்

 இதரல் idaral, பெ. (n.)

   பிரித்தல்; dividing.

இதரேதராச்சிரயம்

இதரேதராச்சிரயம் idarēdarāccirayam, பெ. (n.)

   ஒன்றை யொன்று பற்றுதலென்னுங் குற்றம் (தொல். விருத். முதற். பக். 50.);; arguing in a circle with reference to two things, fallacy of mutual dependence.

த.வ. இருபால் கவர்வு.

     [Skt. itaretara+a-sraya → த. இதரேதராச்சிரயம்.]

இதர்-தல்

இதர்-தல் idardal,    6 செ.குன்றாவி. (v.t.)

   பிரித்தல்; to divide.

     [இதல் → இதர்.]

இதலதம்

 இதலதம் idaladam, பெ. (n.)

   காரியம் (சா.அக.);; back lead.

     [இது → இதுலம் → இதுலதம் → இதலதம். இது → இதுலம் = தாழ்வானது. தரத்தில் குறைந்தது.]

இதலை

 இதலை idalai, பெ. (n.)

   கொப்பூழ் (திவா.);; navel umbilicus (செ.அக.);.

     [இல் → இது → இதல் → இதலை = தாயிடமிருந்து குழந்தை

கொப்பூழ்க்கொடி அறுப்பதன் மூலம் பிரிக்கப்படுதல் பிரிக்கப்படுதற்கான கொப்பூழ்.]

இதல்

இதல் idal, பெ. (n.)

   காட்டுக்கோழியைப்போல உருவுடையதும் கவுதாரியின் அளவுடையதுமான ஒரு பறவை; the red spur fowl.

     “புதன்மிசைத் தளவி னிதன்முட் செந்நனை” (அகநா.23.3);.

     [P]

மறுவ, சருகுக்கோழி, வரகுக்கோழி, மணிக்கண், முள்ளன் கோழி, கண்டால் கோழி.

     [இல் → இது → இதல். இல் = முள், காலின்புறத்தே முள்ளுடைமையின் பெற்றபெயர். இது கவுதாரியின் வேறுபட்டது. பல வண்ணங்கள் கொண்ட இதன் மற்றொருவகை, கல்கோழி எனப்பட்டது.]

இதல்-தல்

இதல்-தல் idaldal,    8 செ.குன்றாவி. (v.t.)

   பிரித்தல்; divide.

     [இல் – இது – இதல், தாயிடமிருந்து குழந்தையைப் பிரிக்கும் தொப்பூழ்க் கொடி இதலை எனப்படுதலை நோக்குக.]

இதளிய விளக்கு

 இதளிய விளக்கு idaḷiyaviḷakku, பெ. (n.)

   அதிகஒளி வழங்கும் வகையில் இதளிய ஆவி (பாதரசம்); கொண்டமைக்கப்பட்ட மின் விளக்குவகை; mercury lamp.

     [இதளியம் + விளக்கு.]

இதளியம்

 இதளியம் idaḷiyam, பெ.(n.)

பாதரசம்

 mercury.

     [இதள்-இதளியம்]

இதளை

 இதளை idaḷai, பெ. (n.)

   கொப்பூழ் (சங்.அக.);; navel, umbilicus.

     [இதலை → இதளை.]

இதளைக்காற்பூடு

 இதளைக்காற்பூடு idaḷaikkāṟpūṭu, பெ. (n.)

   ஒரு பூடு (சா.அக.);; plant.

     [இதளை + கால் + பூடு.]

இதள்

இதள் idaḷ, பெ. (n.)

   1. இதளியம் (பாதரசம்);; mercury. (மூ.அக);.

   2. சிறுதூறு (ஆ.அக.);; low jungle, thicket bushes (w.);.

     [இல் → இது → இதல் → இதள் = இளமை, அழகு பளபளப்பு.]

இதழகலந்தாதி

இதழகலந்தாதி idaḻkalandādi, பெ. (n.)

   உதடு ஒட்டாமல் பாடப்படும் அந்தாதி; a kind of andadi verse without labio-dentals or labials (Pros.);.

 Skt. anta-adi.

     [இதழ்1 + அகல் + அந்தாதி.]

இதழலர்-தல்

இதழலர்-தல் idaḻlardal,    2 செ.கு.வி. (v.i.)

   பேச வாய் திறத்தல்; to open the lips.

     “இதழலர்ந்துநின் றோர் மொழி யென்னுடன் மொழிவீர்” (குலோத்.கோ.14);.

     [இதழ்1 + அலர்.]

இதழவிழ்தல்

இதழவிழ்தல் idaḻviḻdal,    தொ.பெ. (vbl.n.) பூத்தல்; to unfold petals (i.e) blossoming. (சா.அக.).

     [இதழ்1 + அவிழ்தல்.]

இதழி

இதழி idaḻi, பெ. (n.)

   கொன்றை (திவா.);; cassia fistula. (செ.அக.);.

க. எசளெ.

     [இதழ்1 → இதழி.]

இதழ்

இதழ்1 idaḻ, பெ. (n.)

   1. பூவின் தோடு; petal, leaf of the corolla.

     “புல்லிதழ் பூவிற்கு முண்டு” (நாலடி. 221);.

   2. உதடு; lip.”மீகீழிதழுறப் பம்மப் பிறக்கும்” (நன்.81);.

   3. கண்ணிமை; eyelid.

     “நீரெறி மலரிற் சாஅயிதழ் சோரா” (குறிஞ்சிப்.247);.

   4. பனையேடு (திவா.);; palmyra leaf, palm leaf.

   5. மாலை; garland.”சோர்ந்தவி ழிதழின்” (பரிபா.17,27);.

   5. பாளை (அக.நி.);; coconut flower being the spadix of the coconut palm.

   7. சாதிபத்திரி (மூ.அ.);; mace.

   8. கதவின் இலை (வின்.);; thin slat in a venetian blind.

   9. பொத்தகத்தின் தாள்; leaf of a book. ‘இதழ் கிழிக்காத புதுப்புத்தகம்’ (செ.அக.);.

   ம. இதழ்;   க. எசள்;து. எசள், எகளு.

     [உதடு → (உதழ்); → இதழ்;

   உதடு போன்ற பூவிதழ்;இல் → இளமை, குறுமை, நன்மை, மென்மை. இல் → இது → இதழ் = மெல்லிய பூவின் பகுதி.]

 இதழ்2 idaḻ, பெ. (n.)

   ஓரிதழ்த் தாமரை (வை.மூ.);; pasture weed.

இதழ் பார்க்க;see idal.

 இதழ்3 idaḻ, பெ. (n.)

   காலவரம்புக்குட்பட்டு வெளியிடப்படும் பருவ இதழ், தாளிகை (பத்திரிகை);; periodical.

     [பூவின் இதழ் போன்று புத்தம் புதியதாய்ப்பொலியும் பொத்தக வடிவிலான ஏடுகள், கிழமையிதழ். மாத இதழ் எனப் பல் வகைப் பருவ இதழ்கள் இப்பொதுப் பெயர் பெற்றன.]

 இதழ்4 idaḻ, பெ. (n.)

உதழ் பார்க்க;see udal.

     [பூவின் இதழை ஒருமருங்கு ஒத்திருத்தலின் உதழ், இதழ் எனப்பெயர் பெற்றது.]

இதழ் குவி

இதழ் குவி1 idaḻkuvidal,    4 செ.கு.வி. (v.i.)

   1. மலர் கூம்புதல்; to close, as the petals of a flower.

   2. இமை கூடுதல்; to droop one’s eyelids.

   3. மேலுதடுங் கீழுதடுங் குவித்து நிற்றல் (நன்.78);; to join the lips

 conically, as in pronouncing the rounded vowels to உ, ஊ, ஒ, ஓ, ஒள. (செ.அக.);.

இதழ் குவி-த்தல்

இதழ் குவி-த்தல் idaḻkuviddal,    4 செ.குன்றாவி. (v.t.)

   1. உதட்டைக் குவித்தல்; shrinking of the lips conically making a small orifice with the lips.

   2. கண்மூடுதல்; closing the eye-lids (சா.அக.);.

     [இதழ்1 + குவித்தல்.]

இதழ் விரிவு

இதழ் விரிவு idaḻvirivu, பெ. (n.)

   பூவினிதழ் விரிந்து, மலர்தல்; process of bud opening petals into flower – florescence.

     [இதழ்1 + விரிவு.]

இதழ் விள்ளல்

இதழ் விள்ளல் idaḻviḷḷal, பெ. (n.)

   1. பேசல்; speaking.

   2. மலரல்; blossom.

   3. வாய்திறத்தல்; opening mouth as on speaking.

     [இதழ்1 + விள்ளல்.]

இதழ்க்குச்சி

 இதழ்க்குச்சி idaḻkkucci, பெ. (n.)

   வாயுதட்டுச் சாயமிடும் அழகுக் குச்சி; lip-stick.

இதழ்முனை

 இதழ்முனை itaḻmuṉai, பெ. (n.)

   சிற்பச் சிறப்பையுணர்த்த இசைத்தூண்களின் உச்சியில் அமைக்கப்பெறும் முனை; top decordation in pillars of temple.

     [இதழ்+முனை]

இதவிய

இதவிய idaviya, கு.பெ.எ. (adj.)

   1. நன்மையான; pleasant, agreeable, good.

     “இதலிய புல்லு மிட்டேம்” (திருவாலவா.29.6.);.

   2. பொருத்தமுள்ள; suitable.

ம. இதவிய.

     [இல் → இளமை = குறுமை, நன்மை. இல் → இது → இதம் → இதவிய.]

இதவு

இதவு idavu, பெ. (n.)

   1. இதம்; pleasant agreeable manners.

     “இதவார் குலசேகரன்” (அழகர்கலம்.காப்பு.3);.

   2. முகமன்; praise, flattery. (செ.அக.);.

ம. இதவு.

     [இல் – இது – இத – இதவு. ஒ.நோ. மெல் → மெது.]

இதா

இதா itā, இடை. (int.)

   1. அண்மைச் சுட்டு (வின்.);; demonstrative which refers to a person, place or thing near opposed to சேய்மைச் சுட்டு.

   2. இதோ (வின்.);;see here Lo!.

     “மற்றிதா தோன்றுகின்ற” (சீவக.123.2);

   3. உடன், சிறிது நேரத்தில், இப்பொழுதுதான்; just now, immediately.

   ம. இதா;   க. இதா, இதோ;   தெ. இதிகோ, இதெ. இகோ;   து. இத்தெ. இந்தா;   பட. இதா;   கோத. இலா. Gk. Itha; Goth ith, Z idha.

     [ஈது → இது → இதா (சு.வி.16);.]

இதாகிதம்

இதாகிதம் idākidam, பெ. (n.)

   1. நன்மை தீமை; good and evil

     “இதாகிதம் பகையுறவு விட்டு” (சேதுபு. விதும. 32);.

   2. விருப்பு வெறுப்பு; like and dislike இதமல்லிதம் பார்க்க;see idamallidam.

     [இல் → இன் → இனிமை. இல் → இது. இதமல்லிதம் → இதாமிதம் → இதாவிதம் → இதாகிதம். ஒ.நோ. தமல் → தமது. இது என்னும் சொல் கல்லாத மக்கள் பேச்சு வழக்கில் இன்பம் எனப் பொருள்படும்.

     “குடிப்பது அவனுக்கு இதுவாயிருந்தது” என்று உரையாடுதலைக் காணலாம்.]

இதாசனி

இதாசனி itācaṉi, பெ. (n.)

 person who sits at ease, cross-legged.

     “இதாசனியா யிருந்தேன்” (திருமந். பாயி. 56);.

த.வ. உகப்பு இருக்கை.

     [Skt. hitå+åsama → த. இதாசனி.]

இதார்த்தம்

 இதார்த்தம் itārttam, பெ. (n.)

   எதார்த்தம் (ஆ.அக.);; conformable to the truth or true meaning, agreeing with fact, true, real, genuine, right, suitable, truthful etc.

 Skt. yathartha.

     [இதம் + ஆர்த்தம். இதம் = இனிமை, நன்மை. ஆர்த்தம் = பொருந்தியது.]

இதி

இதி1 idi, பெ. (n.)

   1. ஈதி பார்க்க;see idi.

     “ஈதி இடைஞ்சலிலே இடிவிழுந்த கானலிலே” (நாட்டுப்புறப் பாடல்);.

   2. இறுதி (அக.நி.);; end.

ம. இதி. இறுதி. Skt idi.

     [வடமொழியில் இது → இதி எனத்திரிந்து வழங்கும். இதுதான் என்னும் உறுதிப்பொருள் தரும் iti என்னும் வடசொல் இதே என்பதன் திரிபாகும்.]

 இதி2 idi, பெ. (n.)

   பேய் (அக.நி.);; devil, ghost (செ.அக.);.

ம. இதி.

     [இருளி → இருள்தி → இத்தி → இதி.]

இதிகாசம்

இதிகாசம் idikācam, பெ. (n.)

   1. இராமாயணம், மகாபாரதம் போன்ற தொல் மறவனப்பு; ancient epic, as the Ramayana or the Mahabharata.

   2. எடுத்துக்காட்டு; example, lustration.

   3. உலகுரையாகிய அளவை (ஐதிகப் பிரமாணம்);; tradition, which the Pauranikas recognize as a proof.

த.வ. தொன்மம்.

     [Skt. itihåsa → த. இதிகாசம்.]

இதிபாரா

 இதிபாரா idipārā, பெ. (n.)

   நம்பிக்கை (C.G.);; confidence.

     [U. etibār → த. இதிபாரா.]

இதிரக்கிழங்கு

 இதிரக்கிழங்கு idirakkiḻṅgu, பெ. (n.)

   காட்டுக் கருணைக் கிழங்கு (சா.அக.);; wild yam tuber.

     [இதை → இதிரம் + கிழங்கு;

இதை + மேட்டுநிலம், காடு.]

இது

இது1 idu,    சு.பெ. (demons. pron.) அஃறிணை ஒருமைச்சுட்டு; this,

 the

 thing close to the speaker, used impersonally – கு.பெ.எ. (adj.);

   இந்த; this before neut sing nouns. இது யாரும் அறிந்ததே. (செ.அக.);.

   ம. இது. ஈ;   க. இது;   தெ. இதி;   கோத. இத்;   துட. இந்த்;   குட. இதி;   து. இந்து;   கொல. இத்;   நா. இத்;   பர். இத்;கூ.

   இவி;   குவி. ஈதி;   குரு. ஈத்;   மா. இத்;   பிரா. தா.தாத்; Skt idam L is;

 Goth hita;

ஆத். இன்ன.

     [ஈ → ஈது → இது.]

 இது2 idu, பெ. (n.)

   இன்பம், மகிழ்ச்சி; joy, happiness.

     “குடிப்பது அவனுக்கு ஒரு இதுவாயிருக்கிறது” (உ.வ.);. (செ.அக.);.

     [இல் → இது. இல் = இளமை, மென்மை, இனிமை. ஒ.நோ. மெல் → மெது.]

 இது3 idu, பெ. (n.)

   1. இழிவானது, தாழ்வானது; base, low, mean.

   2. பின்னுள்ளது; the next.

     [இ → இது. பின்மைச் சுட்டு, தாழ்வுப் பொருள் தரும்.]

இது பாம்பைப் போல் நீளமாகவும், பழுப்பு நிறமாகவும் உள்ளது. உணவுக்குப் பயன்படுவது (சா.அக.). குட்டிவிளாதிதம்

 இது பாம்பைப் போல் நீளமாகவும், பழுப்பு நிறமாகவும் உள்ளது. உணவுக்குப் பயன்படுவது (சா.அக.). குட்டிவிளாதிதம்  itupāmpaippōlnīḷamākavumpaḻuppuniṟamākavumuḷḷatuuṇavukkuppayaṉpaṭuvatucāakakuṭṭiviḷātitam, பெ.(n.)

சருகு மஞ்சள், dried turmeric (சா.அக.);.

இதை

இதை1 idai, பெ. (n.)

   1. கலப்பை; plough.

   2. மேட்டு நிலம்; field for dry cultivation.

     “தத்தை தித்தித்த தோதிதை” (காஞ்சிப்பு. சுரகரீசப்.11);.

   3. தினை; italian millet.

     “பன்மணி யரித்திதை விளைப்பன குறிஞ்சி” (பெரியபு.திருக்குறிப்பு.7);.

 As hoeth, ME heth, E healh;

 Goth haithi;

 L, G, D, Fris heide. heithr, Dan hede;

 Sw hed;

 W hoed.

     [இல் = துளைத்தற் கருத்து வேர்ச்சொல். இல் → இது → இதை = வன்னிலம் உழும் கலப்பை. கொத்திக் கிளறி அல்லது உழுது பயிர் செய்ய வேண்டிய மேட்டுநிலம், மேட்டுநிலத்துப் பயிர், தினை, காராமணி.]

 இதை2 idai, பெ. (n.)

   கப்பற்பாய்; sail of a ship.

     “நெடுங் கொடி மிசை யிதையெடுத்து” (மதுரைக்.79);.

     [உது → இது → இதை (உயரம், உயரத்திலிருப்பது கப்பற்பாய்);.]

இதைப்புனம்

இதைப்புனம் idaippuṉam, பெ. (n.)

   புதுக்கொல்லை (திவா.);; newly cultivated field of dry crops such as millet, dist fr.

முதைப் புனம் (செ.அக.);. [இதை1 + புனம்.]

இதோ

இதோ itō,    இடை. (int.) அண்மைச் சுட்டு;   இங்கே வியப்பின் பொருட்டு முன்னிற்போரின் கவனத்தை ஈர்ப்பது; lo, behold an exclamation calling a person’s attention to something to be taken notice of

     “இதோ வந்து நின்றதென் மன்னுயிரே (திருக்கோ.39);.

   க. இதோ. இதுகோ;   தெ. இதிகோ;   ம. இதா. இதிகோ;   து. இதிகோ;   கோண். இத்ரா, இப்புடெ;பிரா. ஈரா. இதிகோ pkt. ido, Skt itah E. Lo.

     [இது + இதோ. இதா → இதோ (சு.வி.16);.]

இதோபதேசம்

இதோபதேசம் itōpatēcam, பெ. (n.)

   1. நல்ல கருத்துகளைக் கற்பிக்கை (நற்போதனை);; friendly advice, salutary instruction.

   2. யாழ்ப்பாணத்து நாகநாத பண்டிதர் சமற்கிருதத்திலிருந்து தமிழில் மொழி பெயர்த்த ஒரு நூல்; a Tamil translation, by Någanatha Panatar of Jaffna of a Skt. work containing a popular collection of fables intermixed With didactic Sentences and moral precepts, Supposed to have been narrated by a Brahman named Visnuasaman to some young princes, and chiefly founded on the paija-fantra

த.வ நல்லோதல்.

     [Skt. hita + upa-désa → த. இதோபதேசம்.]

இதோளி

இதோளி itōḷi, கு.வி.எ. (adv.)

இதோள் (தொல்.பொருள்.392,உரை.); பார்க்க;see ido. (செ.அக.);.

     [இது + உள் – இதுள் – இதோள் → இதோளி.]

இதோள்

இதோள் itōḷ, கு.வி.எ. (adv.)

   இவ்விடம் (தொல்.எழுத் 398, உரை.);; here.

 As hider;

 E. hither;

 Goth hidre, 1 hethra.

     [இது + உள் – இதுள் → இதோள்.]

இத்தத்து

 இத்தத்து ittattu, பெ. (n.)

இத்தா பார்க்க; See itta.

     [Ar. iddat → த. இத்தத்து.]

இத்தனை

இத்தனை ittaṉai, கு.வி.எ. (adj.)

.

   1. இவ்வளவு; so much, this much.

     “இத்தனை காலமும் போய்க்கிறிப் பட்டேன்” (திவ்.பெரியாழ்.53.8);.

   2. சில; few.

     “இத்தனை நாளிலுயர்த்துகையே” (திருநூற்.85); (செ.அக.);.

   ம. இத்தின. இத்தினி;   க. இனிது. இனித்து. இந்துடு, ஈக;   து. ஈது;பட. ஈசக.

     [இத்துனை – இத்தனை.]

இத்தம்

 இத்தம் ittam, பெ. (n.)

   புளி (சங்.அக.);; tamarind (செ.அக.);.

     [இந்தம் – இத்தம்.]

இத்தா

 இத்தா ittā, பெ. (n.)

   வெளியில் வராமை; period of seclusion incumbent on a Muhammadan Woman in Consequence of the dissolution of her marriage either by divorce or by the death of her husband.

கணவன் இறந்தால் மனைவி நான்கு மாதம் பத்துநாள் இத்தாவிருக்க வேண்டும் (முகமதி.);.

த.வ. இற்செறிப்பு.

     [Ar. İddat → த. இத்தா.]

இத்தால்

இத்தால் ittāl, கு.வி.எ. (adv.)

   இதனால்; hereby, by this means

     “தான் வந்து தொடரு மித்தால்” (தாயு. ஆகார.15);. (செ.அக.);.

   க. இத்தலு (இவ்வகையில்);; Skt ittham (thus, in this manner);.

     [இது + ஆல் – இத்தால்.]

இத்தி

இத்தி1 itti, பெ. (n.)

   . கல்லால் (திருவாச4.162);; white fig.

   2. கல்லிச்சி (L);; stone-fig.

   3. கல்லித்தி (L);; tailed oval-leaved fig. (செ.அக.);.

   ம. இத்தி;குட. இத்தி.

     [இல் – இத்தி. வன்னிலத்திலும் கல்லிலும் வேரூன்றி வளரும் மரம். இல் = குத்துதல், துளைத்தல்.]

 இத்தி2 itti, பெ. (n.)

   பூனை (அக.நி);; cat (செ.அக.);.

   2. வெண்மை; whiteness.

ம. இத்தி.

     [இல் – இது – இத்து – இத்தி. இல் = மென்மை, இளமை, பிள்ளை.]

இத்திகாத்தான

 இத்திகாத்தான ittikāttāṉa, பெ.அ .(adj.)

   ஒன்றுபட்ட (ஏகோபித்த);; unamimous.

இவ்விடயத்தில் ஆலிம்களுக்குள் இத்திகாத்தான எண்ணம் இருக்கிறது (முகமதி);.

த.வ. ஒன்றித்த.

     [Ar. ittihad → த. இத்திகாத்தான.]

இத்திகாத்து

 இத்திகாத்து ittikāttu, பெ. (n.)

   நம்பிக்கை; faith, belief.

நன்மை செய்தவனுக்கு மறுமையில் நற்பலன் உண்டென்று முகமதியர் இத்திகாத்து கொள்ள வேண்டும் (முகமதி);.

     [Ar. ittiquad → த. இத்திகாத்து.]

இத்திகாபு

 இத்திகாபு ittikāpu, பெ. (n.)

   தனித்திருந்து ஊழ்கம் செய்கை (தியானித்தல்); (முகமதி);; meditation in retirement, silent devotion.

     [Ar. ittikảr → த. இத்திகாத்தான.]

இத்திநடையம்

 இத்திநடையம் ittinaḍaiyam, பெ. (n.)

   நத்தை (வின்.);; snail. (செ.அக.);.

     [இல் – இது – இத்து – இத்தி = மென்மை. நடையம் = மெதுவாக நடத்தல்.]

இத்திபார்

 இத்திபார் ittipār, பெ. (n.)

   மதிப்பு, நம்பிக்கை; credence, confidence.

உம்முடைய சொல்லில் எனக்கு இத்திபாரில்லை (முகமதி.);.

     [Ar. itibar → த. இத்திபார்.]

இத்தியால்

 இத்தியால் ittiyāl, பெ. (n.)

   கல்லால்; white fig. (சா.அக.);.

     [இத்தி + ஆல். இத்தி = வெண்மை.]

இத்திராசு

 இத்திராசு ittirācu, பெ. (n.)

   மறுத்துச்சொல்லுகை, தடை; dispute, objection.

நான் சொல்வதற்கெல்லாம் இத்திராக செய்யாதே. (முகமதி.);.

     [Ar. Itiraz → த. இத்திராக.]

இத்திரிப்பெட்டி

 இத்திரிப்பெட்டி ittirippeṭṭi, பெ. (n.)

   சலவைப் பெட்டி; iron box.

     [இத்திரி + பெட்டி.]

     [U. istri → த. இத்திரி.]

இத்திலா

 இத்திலா ittilā, பெ. (n.)

   செய்தி; information, advice, notification.

     [U, ittilla → த. இத்திலா.]

இத்திலாக்கு

 இத்திலாக்கு ittilākku, பெ. (n.)

   குறியீட்டு மொழியாக (பரிபாஷையாக); வழக்கிலுள்ளது; technical language, conventional meaning.

உலகமாக்களுடைய இத்திலாக்கில் அவ்வார்த்தைக்கு வேறு அர்த்தம் ஏற்படும் (முகம்.);.

த.வ. இடவழக்கு.

     [Ar. istilaq → த. இத்திலாக்கு.]

இத்து

இத்து1 ittu, பெ. (n.)

   ஒருவகைப்புல் (காமாட்சிப்புல்); (மலை);; citronella. (செ.அக.);.

   2. காவட்டம்புல் (ஆ.அக.);; a kind of grass.

     [இல் – இது – இத்து.]

 இத்து2 ittu, பெ. (n.)

   அண்மைச்சுட்டு; indicative of nearness or proximity.

     [இல் – இஃது – இத்து (மு.தா.323);.]

இத்துணை

இத்துணை ittuṇai, கு.வி.எ. (adv.)

   இவ்வளவு; this much, so much.

     “நங்களுக் கித்துணை யலக்கண்வந் தெய்திற்று” (கந்தபு.சூரனமை.98);. (செ.அக.);.

   தெ. இன்னி. இனி;   ம. இதர;   க. இனிது. இனித்து. ஈக. துட. இந்க்;   குட. இச்செ;   கொலா. இத்தெ;   நா. இத்தெக்;   பர். இத்னி;   கோண். இச்சோர்;   கூ. இசெ;   குவி. இசெக;   குர். இயுந்தா, இயுரா;   மால், இனொந்த;   பிரா. தாக;பட. ஈசக.

     [இ + துணை.]

இத்துவரம்

 இத்துவரம் ittuvaram, பெ. (n.)

   எருது (சங். அக.);; bull,

     [Skt. idvara → த. இத்துவரம்.]

இத்தை

இத்தை1 ittai, இடை. (part)

   முன்னிலையசைச் சொல்; poet expletive to indicate imperative of verbs.

     “நீயொன்று பாடித்தை” (நன்.440 உரை);. (செ.அக.);.

     [ஈ – ஈத்தை – இத்தை.]

 இத்தை2 ittai, பெ. (n.)

   இதனை (கொ.வ.);; this, in the accusative case (செ.அக.);.

     [இது + ஐ – இத்தை.]

இத்யாதி

இத்யாதி ityāti, பெ. (n.)

   என்ற இவை முதலானவை; இன்னும் பல; et cetera, and the rest.

     “மோகினியென்றும் மகானென்றும் இத்யாதி நாமங்களுண்டு” (சி.சி. 1 : 57. சிவாக்.);.

     [Skt. iti+ad → த. இத்யாதி.]

இந்த

இந்த inda, கு.பெ.எ. (adj.)

   ;   இந்த; this, demonstrative adjective and pronoun to indicate person or thing close at hand.

     ‘இந்த நாடு’ (நன்,267.உரை);.

   ம. இந்த;   க. இந்த;   தெ. இந்த;குட. இந்தெ. இன்னதெ.

     [இ → இந்த.]

இந்தண்டை

 இந்தண்டை indaṇṭai, கு.வி.எ. (adv.)

   இப்பக்கம் (கொ.வ.);; this side (செ.அக.);.

     [இது → இந்த + அண்டை.]

இந்தனம்

இந்தனம்1 indaṉam, பெ. (n.)

   1. விறகு; fuel, wood”இந்தனத்திற்றீ” (வேதா.கு:154); (செ.அக);.

   2. காடு (ஆ.அக);; Jungle, forest.

   3. மேல்; high above (ஆ.அக.);.

இந்தனம் → Skt indhana.

     [இருந்தை → இந்தை → இந்தனம்.]

 இந்தனம்2 indaṉam, பெ. (n.)

. இந்தளம்1 (நாநார்த்த.); பார்க்க;see Indalam1

   2. புகை (அக.நி.);; smoke (செ.அக.);.

     [இந்தளம் → இந்தனம்.]

இந்தப்படிக்கு

 இந்தப்படிக்கு indappaḍikku, கு.வி.எ. (adv.)

இப்படிக்கு பார்க்க;see ippadikku. term used in writing documents, and meaning in confirmation of which

     ‘இந்தப் படிக்கு என் மனோராசியில் எழுதிக் கொடுத்த அடைமானப் பத்திரம்’ (செ.அக.);.

     [இந்த + படி + கு.]

இந்தம்

 இந்தம் indam, பெ. (n.)

   புளி (மூ.அ.);; tamarind.

தெ. சிந்த.

     [இன் → இந்து → இந்தம். புளியம்பழம் அறப்பழுத்த நிலையில் புளிப்புச் சுவையுடன் சிறிது இனிப்பும் தருதலின் இன்தீம்புளி எனக்குறிப்பிடப்படும் வடபுலத்தில் சகர முதல் சேர்ந்து தெலுங்கில் சின்தபண்டு (புளியம்பழம்); ஆயிற்று. ஒ.நோ. முன் → முந்து → முந்தம்.]

இந்தம்வரம்

 இந்தம்வரம் indamvaram, பெ. (n.)

   நீலோற்பலம் (சங்.அக.);; blue Indian water-lily. (செ.அக.);.

 Skt indambara, ம. இந்தீவரம்.

     [இந்தம் + வரம்;

இந்தம் + இனிப்பு, சிறப்பு.]

இந்தளங்குறிஞ்சி

 இந்தளங்குறிஞ்சி indaḷaṅguṟiñji, பெ. (n.)

   ஒரு பண் (திவ்.திருவாய்);;ம. இந்தளம்.

     [இந்தம் → இந்தளம் + இனிமை. இந்தளம் + குறிஞ்சி.]

இந்தளம்

இந்தளம் intaḷam, பெ. (n.)

   பகற்பொழுதுக்குரிய பண்வகை; music for daytime.

     [ஒருகா இன்+தாளம்]

 இந்தளம்1 indaḷam, பெ. (n.)

   தூபமுட்டி (சீவக.558, உரை);; Incensory, censer.

இந்தளம் → Skt indhana.

     [இன் → இந்து → இந்தளம்.]

 இந்தளம்2 indaḷam, பெ. (n.)

   மருதயாழ்த்திற வகை (பிங்.);;இந்தளம் → Skt hindða.

     [இன் → இந்து → இந்தளம்.]

 இந்தளம்3 indaḷam, பெ. (n.)

   இந்தனம், கும்மட்டிச் சட்டி; chasing dish, used for warming

     “இந்தளத்திலே தாமரை பூக்கையிலே” (திவ்.திருக்குறுந்.5.வ்யா); (செ.அக.);.

     [இருந்தை + அடுப்புக்கரி. இருந்தை → இந்தை → இந்தனம் → இந்தளம்.]

இந்தா

இந்தா indā, இடை. (int.)

   1. இதோ (சீவக.1232,உரை);; exclamation calling a person’s attention to something near Lol behold.

   2. இங்கே வா என்னுங் குறிப்பு மொழி; come here.

   3. இதை வாங்கிக்கொள் என்னுங் குறிப்புமொழி; an interjection used in the sense of Here! take this!

     “இந்தா விஃதோ ரிளங்குழவியென்றெ டுத்து…தேவிகையிலீந்தனனே” (கந்தபு.வள்ளி.35); (செ.அக);.

து. இத்தெ. இந்தா.

     [இது → இதா → இந்தா.]

இந்தாளி

 இந்தாளி indāḷi, பெ. (n.)

   தாளிப்பனை; South Indian talipot palm (செ.அக.);.

     [இது → இந்தாளி.]

இந்தி

இந்தி1 indi, பெ. (n.)

   பூனை (வின்);; cat (செ.அக.);.

ம. இத்தி.

     [இத்தி → இந்தி;

இள் → இத்தி = இளையது, சிறியது.]

 இந்தி2 indi, பெ. (n.)

   இந்தி மொழி (mod.);; Hind language (செ.அக.);.

இந்து பார்க்க;see indu.

     [இந்து → இந்தி. வடபுலத்துப் பிற சமயத்தாரை நோக்க இந்துக்களின் மொழியாகக் கருதப்பட்டு இந்தி எனப்பட்டது.]

இந்திகை

 இந்திகை indigai, பெ. (n.)

   மிகு ஆற்றலுள் ஒன்று (சதாசிவரு.);; one of the five energies of aparanātam (செ.அக.);.

     [இந்துகை → இந்திகை.]

இந்திடம்

இந்திடம் indiḍam, பெ. (n.)

   இவ்விடம்; this place.”வேதியரோதிடமுந்திடமிந்திடமே” (திருக்கோ.223);.

     [இங்கு → இந்து + இடம்.]

இந்தியன்

 இந்தியன் indiyaṉ, பெ. (n.)

   இந்திய நாட்டான்; Indian (ஆ.அக.);.

     [இந்து → இந்தியன்.]

இந்தியம்

 இந்தியம் indiyam, பெ. (n.)

   ஐம்பொறி (ஆ.அக.);; five sense organs.

     [இள் → இந்து → இந்தியம். இந்தியம் + மென்மையும் ஒண்மையும் வாய்ந்த புலன்கள்.]

இந்தியா

 இந்தியா indiyā, பெ. (n.)

   இந்தியநாடு; India Bharat.

     [சிந்து → இந்து → இந்தியா.]

இந்திர காந்தச் சேலை

இந்திர காந்தச் சேலை indirakāndaccēlai, பெ. (n.)

   புடைவை வகை (பஞ்ச.திருமுக.1161);; a kind of saree. (செ.அக.);.

     [இந்திரம் + காந்தம் + சேலை.]

இந்திர சிற்பம்

 இந்திர சிற்பம் indirasiṟpam, பெ. (n.)

   சிற்ப நூலினொன்று (ஆ.அக.);; work on sculpture.

     [இந்திரம் + சிற்பம்.]

இந்திர திருவன்

இந்திர திருவன் indiradiruvaṉ, பெ. (n.)

   இந்திரனைப் போற் செல்வமுடையவன்; person of great affluence having the wealth of Indra.

     “இந்திர திருவன் சென்றினி தேறலும்” (மணி.19.116);.

இந்திர நீலம்

இந்திர நீலம் indiranīlam, பெ. (n.)

   நீலமணி; sapphire.

     “இந்திரநீல மொத் திருண்ட குஞ்சியும்” (கம்பரா. மிதிலைக்.56);, (செ.அக.);.

 Skt. Indra – nila.

     [இந்திரம் + நீலம். இந்திரம் + அழகு, உயர்வு சிறப்புப் பொருள் குறித்த இச்சொல் தலைமைப் பொருள் முன்னொட்டாயிற்று. இந்திர நீலம் + சிறந்த நீலம்.]

இந்திர வண்ணப்பட்டு

இந்திர வண்ணப்பட்டு indiravaṇṇappaṭṭu, பெ. (n.)

   பட்டுப்புடவை வகை; kind of silk saree.

     “இழையாயிரம் விலைப் பொன் இந்திரவர்ணப் பட்டாடை” (கோவ.க.17);.

     [இந்திரம்2 + வண்ணம் + பட்டு.]

இந்திர வருணி

 இந்திர வருணி indiravaruṇi, பெ. (n.)

   பேய்க்கொம்மட்டி; wild bitter gourd.

     [இந்திரம் + வருணி. வண்ணம் → வருணம் → வருணி.]

இந்திரகணம்

இந்திரகணம் indiragaṇam, பெ. (n.)

   செய்யுட்கணத் தொன்று (இலக்.வி..800.உரை);; foot of three nér (—);. as தேமாங்காய், considered as auspicious at the commencement of a poem. (செ.அக.);.

     [இந்திரம் + கணம்.]

இந்திரகாளியம்

இந்திரகாளியம் intirakāḷiyam, பெ. (n.)

   இசைநூல்களில் ஒன்று; a treatise of music. (1:16);.

     [இந்திரகாளியன்-இந்திரகாளியம்]

 இந்திரகாளியம் indirakāḷiyam, பெ. (n.)

   ஓர் இசைத் தமிழ் நுல் (சிலப்.உரைப்பாயி);; name of an ancient Tamil treatise dealing with isai-t-tamil written by Yāmalēndirar (செ.அக);.

     [இந்திரம்1 + காளியம்.]

இந்திரகோபம்

இந்திரகோபம் indiraāpam, பெ. (n.)

   தம்பலப்பூச்சி; cochineal insect, coccus cacti,

     “இந்திர கோபங் கௌவி யிறகுளர்கின்ற மஞ்ஞை” (சீவக.1819); (செ.அக.);.

     [இந்திரம்2 + கோபம்.]

இந்திரசாபம்

இந்திரசாபம் indiracāpam, பெ. (n.)

   வானவில்; rainbow, poetically described as the bow of Indra.

     “தாலந் தனில் வந்ததொரிந்திர சாப மென்ன” (அரிச்சந்.நாட்டு.10);.”தனியா திந்திர சாபமுண்டாகலின் (மணி.24-65);, (செ.அக.);.

     [ஐந்திரம் → இந்திரம் + சாபம்;

சாய்பம் → சாபம் = சாய்ந்தது அல்லது வளைந்தது.]

இந்திரசாலம்

இந்திரசாலம் indiracālam, பெ. (n.)

   1. புலன்களால் அறியப்படாத மாயவித்தை; magical tricks, sleight of hand, phantasmagoria, optical illusions

     “இந்திர சாலங் காட்டிய வியல்பும்” (திருவாச.2,43);.

   2. வஞ்சகச் சொல்; specious doctrines, such as those of heretics.

     “உழல்வார் சொன்ன விந்திரசால மொழிந்து” (தேவா. 691.10);.

   3. சூரபதுமன் தேர் (கந்தபு.வரம்பெறு.21);.

 name of the chariot of Sūrapadma.

   4. அறுபத்து நான்கு கலைகளுள் ஒன்று; one of the sixty four arts and Science. (செ.அக.);.

     [இந்திரம் + சாலம். சலம் – சாலம்.]

இந்திரசாலி

இந்திரசாலி indiracāli, பெ. (n.)

   1. இந்திரவித்தை எனப்படும் மாயவித்தை செய்பவன்; magician.

   2. அழிஞ்சில் (மலை.);; sage-leaved alangium, having fruits which are said to have the magic power to drop from and return to the tree on dark nights. (செ.அக.);.

     [இந்திரம்2 + சாலி.]

இந்திரசித்து

இந்திரசித்து indirasittu, பெ. (n.)

   இராவணனுடைய மூத்த மகன் (கம்பரா.பாசப்.38);; Mēghanāda, Ravana’s eldest son who vanquished Indra

     [இந்திரன் + சித்து. Skt. Jl → த. சித்து. இந்திரசித்து = இந்திரனை வென்றவன்.]

இந்திரசிறப்பு

இந்திரசிறப்பு indirasiṟappu, பெ. (n.)

   பகல் விருந்து படைப்பதற்குமுன், இந்திரன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு முன்னூட்டாக இடப்படும் தளிகை அல்லது சிறுபடையல்; religious ceremony performed before the midday meal, consisting in the offering of small portions of cooked food to Indra and other gods.”இந்திர சிறப்புச் செய்வோன் முன்னர்” (மணி.11,88);.

     [இந்திரம்1 + சிறப்பு;

இந்திரம் = உயர்வு, மேன்மை.]

இந்திரதந்திரம்

இந்திரதந்திரம் indiradandiram, பெ. (n.)

இந்திர சாலம் (திருப்பு. 229); பார்க்க;see indirasālam.

     [இந்திரம்2 + தந்திரம்.]

இந்திரதனு

இந்திரதனு indiradaṉu, பெ. (n.)

   வானவில்; rainbow the bow of Indra.

     “இந்திர தனுவென விலங்கக ழுடுத்து” (மணி.28.22);.

 Skt dhanu → த. தனு. வானவில் பார்க்க;see vanavil.

     [இந்திரன் + தனு.]

இந்திரதரு

இந்திரதரு indiradaru, பெ. (n.)

   மருது (சித்.அக);; Arjuna. (செ.அக);.

     [இந்திரம்1 + தரு.]

இந்திரதிசை

 இந்திரதிசை indiradisai, பெ. (n.)

   கிழக்கு (திவா.);; cardinal direction of the east of which the guardian deity Is Indra.

     [இந்திரன் + திசை.]

இந்திரனாள்

இந்திரனாள் indiraṉāḷ, பெ. (n.)

   தழல் (கேட்டை); (திவா.);;   18th naksatra, an asterism sacred to Indra-Indra’s day.

இந்திரனுர்

இந்திரனுர் indiraṉur, பெ. (n.)

   பொன்னாங்காணி (தைலவ.தைல.66);; plant growing in damp places. (செ.அக.);.

     [ஒருகா. இந்திரம் + ஊரி. இந்திரமூரி → இந்திரனுரி – இந்திரனூர். இந்திரனூர் + அழகு ஊரப்பெறுவது. பொன்னாங்காணிக் கீரை உண்பார்க்கு மேனி பொன்னாகும் என்னும் நம்பிக்கை இருந்தது.]

இந்திரன்

இந்திரன் indiraṉ, பெ. (n.)

   1. தலைவன்; chief.

   2. அரசன்; king.

     “இந்திரராகிப் பார்மேல்” (கந்தபு.நூற் பயன்);.

   3. வேத கால ஆரியர்க்குத் தலைவனாகவும் வழிபடு தெய்வமாகவும் விளங்கியவன்; Indra who was the chief and the god of the Vedic Aryans.

     “இந்திரனே சாலுங்கரி” (குறள்.25);.

     [வேந்தன் → இந்தன் → இந்தர் → இந்திரன்.]

வேதகால ஆரியர்களுக்கு முற்பட்ட மேலையாரியத்தில் ‘இந்தர்’ எனக்குறிப்பிடப்பட்ட_ஆரியத்தலைவன் பெயர் வேத காலத்தில் இந்திரன் எனத்திரிந்தது.

     “மாயோன் மேய காடுறை உலகமும்

சேயோன் மேய மைவரை உலகமும்

வேந்தன் மேய தீம்புனல் உலகமும்

வருணன் மேய பெருமணல் உலகமும்

முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்

சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே” (தொல்.பொருள்.5);

என்னும் தொல்காப்பிய நூற்பா உரையில் இளம்பூரணர் வேந்தன் என்னும் சொல்லுக்கு இந்திரன் எனப்பொருள் வரைந்திருப்பது ஏற்புடைத்தன்று. இந்திரனைத் தேவர் தலைவனாக வல்லது தமிழக நிலத்தெய்வங்களுள் ஒருவனாகக்கடைக்கழக இலக்கியங்கள் யாண்டும் குறிப்பிடவில்லை. வேந்தன் என்னும் சொல் அரசன் என்று மட்டும் பொருள் தரும் செந்தமிழ்ச் சொல். இது மேலையாரியத்தில் தலைவன் என்னும் பொருளில் இந்தர் என்னும் வடிவில் கடன் சொல்லாகப் புகுந்தது

 The origin of the round proto Indian seals discovered in Sumer என்னும் கட்டுரையில் திரவிடவியல் ஆராய்ச்சிவல்லுநராகிய அருளாளர் ஈராக அடிகளார் இந்திரன் வரலாற்றை விரித்துரைத்திருக்கிறார்.

மொசபதோமியா பகுதியிலும் பாரசீகப் பகுதியிலும் பரவிய ஆரியர் குடியேற்ற காலத்தில் அவர்களுக்கிடையில் நேர்ந்த பூசல்களால் ஒரு பிரிவுக்குத் தலைவனாக இருந்த இந்திரன் யதுகுலத்தையும் துருவாசகுலத்தையும் சார்ந்த சிலரை உடனழைத்துக்கொண்டு கடல்கடந்து செல்லத் திட்டமிட்டான். மொசபதோமியாவில் தங்கியிருந்த பணிகள் (paris); என்னும் கடல் வாணிகர் துணைபெற்று கப்பலில் ஏறி இன்றைய கத்தியவார் (சூரிய ராட்டிரம் – செளராட்டிரம்); தீவமுனைக்கு வந்து இந்திரன் குடியேறினான். இந்திரனின் முதற் கடற்பயணம் இருக்கு வேதத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலையாரியர்களால் கத்தியவார் உள்ளிட்ட மேற்கிந்தியப் பகுதி கதிரவன் தோன்றும் நாடு (கிழக்கு); என்று அழைக்கப்பட்டது. ஆரியர்களை மீண்டும் அழைத்து வருதற்காகக் கப்பலில் ஏறி மொசபதோமியாவுக்குச் சென்ற இந்திரன் ஆரியர்களுக்கிடையில் நிகழ்ந்த போரில் இறந்து விட்டான். அவன் நினைவைப் போற்றும் வகையில் யது துருவாக மரபினர் இந்திரனுக்குச் சோமநாதன் (சோம மதுவுக்குரிய கடவுள்); என்று பெயரிட்டு சோமநாதபுரம் கோயில் எழுப்பினர். அதுவே இந்தியாவில் ஆரியர் வருகையால் ஏற்பட்ட முதல் இந்திரன் கோயில். நாளடையில் அது சிவன் கோயிலாகக் கருதப்படினும் நந்தியின் வடிவத்துக்கு மாற்றாக இந்திரனின் யானை ஊர்தியே அக்கோயிலில் கல்லில் வடிக்கப்பட்டிருக்கிறது என்று ஈராக அடிகளார் கூறுகிறார். செண்டு அவெத்தாநூலில் கொடிய அரக்கருள் ஒருவனாக இந்திரன் சித்தரிக்கப்படுகிறான் என்று இங்கிலாந்து நாட்டு சமற்கிருதப் பேராசிரியர் ஆர்தர்.ஏ மார்க்டொனால் (1899);. A history of Sanskrit Literature (P-72); என்னும் நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்திரனை மக்கள் வழிபடாததும் இந்திரன் சினந்து மழை பொழியச் செய்ததும் கண்ணன் கோவர்தன மலையைக் குடையாகப் பிடித்ததுமாகிய தொன்மக்கதைகளும் ஆரிய இந்திரர்களுக்கும் திரவிடமன்னர்களுக்கும் நிகழ்ந்த பகைமைப் போராட்டங்களைக் காட்டுகின்றன. இருசாராரும் பகைமை நீங்கி நட்பாக வாழ்ந்த காலத்தில் அரசர்களுள் நூறு வேள்வி செய்தவன் இந்திரனாகலாம் என்னும் கொள்கை உருவாயிற்று இந்தியாவுக்குக் கிழக்கே அசாம் மலைத்தொடர், காழகம் (Burma);, கடாரம் (மலேயா); போன்ற பகுதிகளில் வென்றும் குடியேறியும் மேலாண்மை பெற்ற ஆரியக்குடிவழியினர் இந்தியாவில் நூறு வேள்வி செய்து இந்திர பதவி பெற்றவர்களுக்கு நாடாளும் பெற்றி தந்தனர். தென்கிழக்கு ஆசியப்பகுதிகள் இந்திர உலகம் என்று அழைக்கப்பட்டன. இந்திரனுக்குரிய யானையின் பெயராகிய ஐராவதம் காழகத்திலுள்ள ஐராவதி ஆற்றுக்கும் இடப்பட்டது. இந்திரனின் செல்வாக்கு நன்கு பரவிய பிறகு தோன்றிய சமண பவுத்த மதத்தினரும் இந்திரனை விண்ணவர் கோமானாக ஏற்றுக் கொண்டனர். வடகிழக்குப் பருவக்காற்றால் இந்தியாவில் மழைமிகுதலின் கிழக்குத் திசைக்குரிய இந்திரனே மழைத் தெய்வமாகக் கருதப்பட்டான் ஆதலின் தமிழில் மருதநிலத் தெய்வமாகக் கருதப்பட்ட வேந்தனுக்கும். மழைத்தெய்வமாகிய ஆரிய இந்திரனுக்கும் வேர்ச்சொல்வழித் தொடர்பன்றி வரலாற்றுத்தொடர்பு எதுவும் இல்லை. வேள்வி செய்தும் இந்திரனுக்கு விழவெடுத்தும் மழைபெய்விக்கலாம் என்பது ஆரியமரபு. மன்னன் அறநெறி பிழையாது செங்கோலாட்சி புரிந்தால் மழை வளஞ்சிறக்கும் என்பதும், கொடுங்கோலாட்சி புரிந்தால் மழை பெய்யாது என்பதும் தமிழ்மரபு.

     “முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி

ஒல்லாது வானம் பெயல்” (குறள். 559);

என்னும் திருவள்ளுவர் கருத்தும் ஒப்புநோக்கத்தக்கது. தமிழ் வேந்தனும் ஆரிய இந்திரனும் மழைக்குக் காரணமானவர்கள் எனக் கூறப்படினும் தமிழ் மரபின் பாங்கு உலகியல் செம்மைக்கு ஊற்றுக் கண்ணாவதைத் தெற்றென உணரலாம்.

இந்திரன்றிசை

இந்திரன்றிசை indiraṉṟisai, பெ. (n.)

   கிழக்கு (திவா.);; cardinal direction of the east of which the guardian deity is indra.

     “அருணனிந்திரன் றிசை யணுகினன்” (திருவாச.20.:2);.

     [இந்திரன் + திசை.]

இந்திரபதம்

இந்திரபதம் indirabadam, பெ. (n.)

   1. துறக்கம் (வின்);; svarga, Indra’s heaven.

   2. இந்திரபதவி பார்க்க;see indra padavi. (செ.அக.);.

     [இந்திரம்2 + பதம். இந்திரம் = தலைமைப் பொருள் குறித்த முன்னொட்டு;

பதம் = நிலை, பதவி இந்திரபதம் = தலை சிறந்த பதவி நிலையாகிய துறக்க வாழ்வையும், தேவருலக வாழ்வையும் குறித்தது. இந்திர பதவி நிலையில்லாதது. ஆதலின் நிலைத்த துறக்கம் இந்திரன் பதம் எனப் பெயர் பெற்றிருக்க வாய்ப்பில்லை. சிறப்பு. உயர்வு. தலைமை எனப் பொருள்படும் இந்திரம் என்னும் சொல்லே இக்கூட்டுச் சொல்லின் நிலைமொழியாதல் வேண்டும்.]

இந்திரபதவி

 இந்திரபதவி indirabadavi, பெ. (n.)

   இந்திரனாயிருக்கும் நிலை; office of Indra.”இந்திரன் முதலிய இறையவர் பதங்களும்” (பரிமே.உரைப்);.

     [இந்திரன் + பதவி.]

இந்திரபுரி

இந்திரபுரி indiraburi, பெ. (n.)

   இந்திரனின் தலைநகரான அமராவதி (பாரத.இந்திரப்.24);; Amarawati, Indra’s capital (செ.அக.);.

 Skt indra pura.

     [இந்திரன் + புரி.]

இந்திரப் பிரத்தம்

இந்திரப் பிரத்தம் indirappirattam, பெ. (n.)

   புது தில்லிக் கருகில் யமுனை நதிக் கரையில் அமைந்திருந்த பாண்டவர் தலைநகரம் (பாரத.இந்திரப்.14);; Indra-prastha, a city on the banks of the Jumna and the ancient capital of the empire of the Pāndavas, situated near the site of the modern Delhi (செ.அக.);.

     [இந்திரம்1 + பிரத்தம். இந்திரம் = சிறப்பு, உயர்வு. புரம் + தானம் = புரத்தானம் → பிரத்தானம் → பிரத்தம் எனத் திரிந்தது. Skt. prashanam → த. பட்டணம் எனத் திரிந்தது.]

இந்திரமடி

 இந்திரமடி intiramaṭi, பெ. (n.)

   திருவாடானை வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Tiruvādānai Taluk.

     [இந்திரம்+மடி(வயல்);]

இந்திரம்

இந்திரம் intiram, பெ. (n.)

   தாள முழக்கில் நேரும் தவறான இடைவெளி; a fallacy in time measure.

     [இல் (துளை, பிசகு, விடுபாடு); +து-இந்து-இந்திரம்]

 இந்திரம்1 indiram, பெ. (n.)

   1. வேந்தியல்பு; regal attitude.

   2. உயர்வு, தலைமை; superiority, leadership.

     [வேந்து → வேந்திரம் → விந்திரம் → இந்திரம். வேத்தியல், பொதுவியல் என நாடகம் இருவகைத்து;

உயர்ந்த இலக்கிய, கலைப் பாங்குடையது வேத்தியல். வடமொழியாளர் வேந்தன் என்ற சொல்லை இந்திரன் எனத்திரித்து ஒலித்தமையின் உயர்வுப் பொருள் தந்த வேந்திரமும், இந்திரமாயிற்று.]

 இந்திரம்2 indiram, பெ. (n.)

   அழகானது; that which is beautiful.

     “அச்சுதற் காமெனு மிந்திரத் திருமாமுடி” (கந்தபு.பட்டாபி.6); (செ.அக.);.

     [ஐந்திரம் → இந்திரம். ஐ = அழகு, உயர்வு, மேன்மை, சிறப்பு. ஐ → ஐந்து → ஐந்திரம். ஒ.நோ. மன் → மந்தரன் → மாந்தரன். ஐந்திரம் – இந்திரம் → Sk Indra.]

 இந்திரம்3 indiram, பெ. (n.)

   ஐந்திரம் என்னும் பழைய இலக்கண நூல்; ancient Tamil grammar.

     “இந்திரத்தை இனிதாக ஈந்தார் போலும்” (தேவா.72.18);.

     [ஐந்திரம் → இந்திரம்.]

இந்திரர்

இந்திரர் indirar, பெ. (n.)

   தேவர்; Dēvas as those living in Indra’s world.

     “இந்திரர் அமிழ்தம் இயைவ தாயினும்” (புறநா.182);, (செ.அக.);.

     [இந்திரம் → இந்திரர்.]

இந்திரவல்லி

இந்திரவல்லி indiravalli, பெ. (n.)

   1. பிரண்டை (தைலவ.);; square-staked vine.

   2. முடக்கொற்றான் (தைலவ.தைல.93);; balloon vine.

   3. கொற்றான் (MM);; parasitic leafless plant (செ.அக.);.

     [இந்திரம்1 + வல்லி.]

இந்திரவாசம்

 இந்திரவாசம் indiravācam, பெ. (n.)

   நெய்தல் மலர் (மலை.);; white Indian, water-lily. (செ.அக.);.

     [ஐந்திரம் → இந்திரம் + வாசம். ஐந்திரம் = அழகு, சிறப்பு.]

இந்திரவாழை

இந்திரவாழை indiravāḻai, பெ. (n.)

   கானல் வாழை; wild plantain.

     [இந்திரம்2 + வாழை,]

இந்திரவிகாரம்

இந்திரவிகாரம் indiravikāram, பெ. (n.)

   காவிரிப்பூம் பட்டினத்திலிருந்த ஒரு பவுத்தப்பள்ளி (மணி.26.55);; name of a Buddhist monastery in Käviri-p-pu-m pattinam, reputed to have been established by Indra (செ.அக.);.

     [இந்திரம்1 + விகாரம்.]

இந்திரவில்

 இந்திரவில் indiravil, பெ. (n.)

   வானவில் (திவா.);; rainbow, the bow of Indra (செ.அக.);.

     [ஐந்திரம் → இந்திரம் + வில். ஐந்திரம் = அழகு, சிறப்பு.]

இந்திரவிழவு

இந்திரவிழவு indiraviḻvu, பெ. (n.)

   மேழ(சித்திரைத் திங்களில் காவிரிப்பூம் பட்டினத்தில் இந்திரனைக் குறித்துச் செய்யும் ஒரு விழா (சிலப்.பதி.67);; ancient annual festival in honour of Indra held in the month of Cittirai by the Côja kings in their capital city of Käviri-p-pú-m-pattiram (செ.அக.);.

     [இந்திரன் + விழவு.]

இந்திரவிழா

 இந்திரவிழா indiraviḻā, பெ. (n.)

இந்திரவிழவு பார்க்க;see indravilavu (அபி.சிந்.);.

     [இந்திரன் + விழா.]

இந்திரவிழாப்பாடல்கள்

 இந்திரவிழாப்பாடல்கள் intiraviḻāppāṭalkaḷ, பெ. (n.)

   கொங்கு நாட்டில் பாடப்பெறும் உழத்தியரின் பள்ளுப்பாடல்களின் இன்னொரு வடிவம்; an another form of palluppädalin “koňguNāợū”.

     [இந்திரவிழா+பாடல்கள்]

இந்திராக்கம்

இந்திராக்கம் indirākkam, பெ. (n.)

   குதிரைச் செவியினடியிற் காணப்படுஞ் சுழிவகை (சுக்கிரநீதி, 314.);; a curl or mark found below the ears of horses.

     [Skt. indråksa → த. இந்திராக்கம்.]

இந்திராணி

 இந்திராணி indirāṇi, பெ. (n.)

இந்திரை பார்க்க;see Indira. (செ.அக.);.

     [இந்திரை → இந்திராணி.]

இந்திரி

இந்திரி indiri, பெ. (n.)

   1. ஒரு முள்மரம்; sensitive prickly tree.

   2. காந்தம்; magnet or load-stone. (சா.அக.);.

     [இந்திரம் → இந்திரி.]

 இந்திரி indiri, பெ. (n.)

   கிழக்கு; the eastern cardinal direction, as Indra’s quarter.

     “இந்திரி முதற்றிசை யெட்டுங் கேட்டன'” (கம்பரா. வாலிவதை. 9.);.

     [Skt. aindri → த. இந்திரி.]

இந்திரிபேதி

 இந்திரிபேதி indiripēti, பெ. (n.)

   தோல் (பிரமேக); நோயால் உடம்பினுள் தங்கி நிற்கும் நஞ்சை வெளிப்படுத்தும் முகத்தான், ஆயுள் வேத முறைப்படி செய்யும் மருத்துவம்; a method of purgation adopted in ayurveda, by which the septic poison stagnated in the body through venereal causes, is eliminated from the system (சா.அக.);.

த.வ, நஞ்சுநீக்கு மருத்துவம்.

இந்திரிய ஆத்துமன்

 இந்திரிய ஆத்துமன் indiriyaāttumaṉ, பெ. (n.)

   ஆதனில் (ஆன்மா); ஒன்றிய இந்திரியப் புலன்; identitical or one with the sou: senses merged in the soul (சா.அக.);.

த.வ. உயிர்ப்புலன்.

     [Skt. Indriya-ätman → த. இந்திரிய ஆத்துமன்.]

இந்திரிய ஆர்த்தம்

 இந்திரிய ஆர்த்தம் indiriyaārttam, பெ. (n.)

   புலன்களின் செயல்பற்றியது; an object of the sense, as smell, sound etc. (சா.அக.);.

     [Skt. Indriya-årttam → த. இந்திரிய ஆர்த்தம்.]

இந்திரியக்கட்டு

இந்திரியக்கட்டு indiriyakkaṭṭu, பெ. (n.)

   1. புலன்கள் அதன் வழி செல்லாது தடுக்கை; restraining the senses from indulgence.

   2 பெண்ணுடன் சிற்றின்பத்தில் இருக்கும்போது விந்து வெளிப்படாமல் இருக்க மருந்தினால் கட்டுகை; suppression of semen during intercourse (சா.அக.);.

த.வ. புலடனக்கம்.

     [இந்திரியம் + கட்டு.]

     [Skt. indriya → த. இந்திரியம்.]

இந்திரியக்கனவு

 இந்திரியக்கனவு indiriyakkaṉavu, பெ. (n.)

   கருநீர் (இந்திரியம்); வெளிப்படும் முன் தூக்கத்திலுண்டாகுங் கனவு; wet dream (சா. அக.);.

த.வ, உறவுக்கனவு.

     [Skt. Indriya → இந்திரியம்.]

இந்திரியக்கமலக்குழல்

 இந்திரியக்கமலக்குழல் indiriyakkamalakkuḻl, பெ. (n.)

   கருநீர் (சுக்கிலம்); தங்குமிடத்திற்குச் செல்லுமொரு குழல்; the tube connecting the seminal sac – vas deferens (சா.அக.);.

     [இந்திரியம் + கமலம் + குழல்.]

     [Skt. indriya → த. இந்திரியம்.]

இந்திரியக்கமலம்

 இந்திரியக்கமலம் indiriyakkamalam, பெ. (n.)

   கருநீர் (சுக்கிலம்); தங்கும் பை; seminal sac – vesiculae seminales.

த.வ. கருநீர்ப்பை.

     [இந்திரியம் + கமலம்.]

     [Skt. indriya-kamala → த. இந்திரியக்கமலம்.]

இந்திரியக்கரணம்

 இந்திரியக்கரணம் indiriyakkaraṇam, பெ. (n.)

   உறுப்புகளின் அமைப்பு; organic structure; suitable disposition of the parts in the body for the performance of vital functions (சா.அக.);.

த.வ. பொறிப்பாங்கு.

     [இந்திரியம் + கரணம்.]

     [Skt. indriya → த. இந்திரியம்.]

இந்திரியக்கலனம்

 இந்திரியக்கலனம் indiriyakkalaṉam, பெ. (n.)

   இந்திரியக் கலிதம் பார்க்க; see indiriya-k-kasidam.

     [இந்திரியஸ்கலனம் → இந்திரியக்கலனம்.]

இந்திரியக்கலிதம்

 இந்திரியக்கலிதம் indiriyakkalidam, பெ. (n.)

   கருநீர் (சுக்கிலம்); வெளிப்படுகை; emission of semen.

த.வ. கருநீர்கழிவு.

     [Skt. indriyaskalita → த. இந்திரியக்கலிதம்.]

கருநீர் (இந்திரியம்); இரண்டு முறையில் வெளிப்படும். ஒன்று உடலுறவின் போது தெரிந்தும், கனவின்கண் தெரியாமலும் வெளிப்படும்.

இந்திரியக்காட்சி

இந்திரியக்காட்சி1 indiriyakkāṭci, பெ. (n.)

   தூங்கும்பொழுது கருநீர் (சுக்கிலம்); வெளிப்படும் முன் பெண்ணைப் புணரவாவது அணைக்கவாவது காணும் தோற்றம்; an unreal fancy just before emission during which the sleeping man experiences if he is enjoying with or embracing a woman-Emissional visions (சா.அக.);.

த.வ. இணைவிழைச்சுக்கனவு.

     [இந்திரியம் + காட்சி.]

     [Skt. Indruiya → த. இந்திரியம்.]

 இந்திரியக்காட்சி2 indiriyakkāṭci, பெ. (n.)

   ஆதன் பொறிபூதங்களுடன் கூடி வேறுபாடின்றி (நிருவிகற்பமாய்); அறியும் அறிவு (சி.சி. அளவை. 6.);; sense-perception.

த.வ. புலக்காட்சி.

     [இந்திரியம் + காட்சி.]

     [Skt. Indriya → த. இந்திரியம்.]

இந்திரியக்காதம்

 இந்திரியக்காதம் indiriyakkātam, பெ. (n.)

   பொறிகளின் (புலனின்); வலுவின்மை; weakness of the organs of sense (சா.அக.);.

     [Skt. indriya-ghåta → த. இந்திரியக்காதம்.]

இந்திரியக்கிராமம்

 இந்திரியக்கிராமம் indiriyakkirāmam, பெ. (n.)

   மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகள்; the five sense organs mey, vāy, kaņ, mūkku, ševi (சா.அக.);.

த.வ. ஐம்பொறி.

     [Skt. indriya-gråma → த. இந்திரியக் கிராமம்.]

இந்திரியக்குழல்

இந்திரியக்குழல் indiriyakkuḻl, பெ. (n.)

   1. இந்திரியக்கமலக்குழல் பார்க்க; see indiya-k-kamaa-k-kula.

   2. உறுப்புகளின் குழாய்; organic vessels of the body (சா.அக.);.

     [இந்திரியம் + குழல்.]

     [Skt. indriya → த. இந்திரியம்.]

இந்திரியக்கோசம்

 இந்திரியக்கோசம் indiriyakācam, பெ. (n.)

இந்திரியக்கமலம் பார்க்க; see indiriya-k- kamalam.

     [Skt. indriya-kosa → த. இந்திரியக்கோசம்.]

இந்திரியக்கோசரம்

இந்திரியக்கோசரம் indiriyakācaram, பெ. (n.)

   1. புலனால் அறியப்படுவது; that which is perceived by the sense.

   2. புலன்களுக்குச் செய்தியாதல்; capability of being perceptible by the sense (சா.அக.);.

த.வ. புலப்பாடு.

     [Skt. indriya-kösaram → த. இந்திரியக் கோசரம்.]

இந்திரியசக்தி

இந்திரியசக்தி indiriyasakti, பெ. (n.)

   1. புலனின் ஆற்றல்; the power of the sense and the sensory organs.

   2. கருநீரின் (விந்துவின்); ஆற்றல்; virile power.

த.வ. புலனாற்றல்.

     [Skt. Indirya-sakti → த. இந்திரியசக்தி.]

இந்திரியசங்கம்

 இந்திரியசங்கம் indiriyasaṅgam, பெ. (n.)

   பற்றற்ற தன்மை; indifference to pleasure or pain; non-attachment to sensual objects-Stoicism.

     [Skt. indriya-sangha → த.இந்திரியசங்கம்.]

இந்திரியசிராவம்

 இந்திரியசிராவம் indiriyasirāvam, பெ. (n.)

   வெள்ளை நோயினால் ஏற்படும் கருநீர் (சுக்கிலம்);; a venereal disease attended with constant oozing or abnormal discharge of semen (சா.அக.);.

     [Skt. indriya-sråvya → த. இந்திரியசிராவம்.]

இந்திரியஞானம்

 இந்திரியஞானம் indiriyañāṉam, பெ. (n.)

   உணர்ச்சியின் கருவி; the faculty of perception (சா.அக.);.

     [Skt. indriya-ñāna → த. இந்திரியஞானம்.]

இந்திரியத்தாருட்டியம்

 இந்திரியத்தாருட்டியம் indiriyattāruṭṭiyam, பெ. (n.)

   கருநீரின் (சுக்கிலத்தின்); வலிமை; the thickness of the semen (சா.அக.);.

இந்திரியத்துவம்

 இந்திரியத்துவம் indiriyattuvam, பெ. (n.)

   உணர்ச்சியின் உறுப்பாயிருக்கும் நிலைமை; the condition of being an organ of sense (சா.அக.);.

இந்திரியநரம்பு

 இந்திரியநரம்பு indiriyanarambu, பெ. (n.)

   நாடி (தாது); நரம்பு; spermatic cord (சா.அக.);.

     [இந்திரியம் + நரம்பு.]

     [Skt. indriya → த. இந்திரியம்.]

இந்திரியநிக்கிரகம்

 இந்திரியநிக்கிரகம் indiriyaniggiragam, பெ. (n.)

   பொறியடக்கம்; spiritual inhibition of the organs of sense.

     [Skt. indiriya-nigraha → த. இந்திரியநிக்கிரம்.]

இந்திரியபலம்

 இந்திரியபலம் indiriyabalam, பெ. (n.)

இந்திரியத்தாருட்டியம் பார்க்க;see indiriya-t-tarutyam.

     [இந்திரியம் + பலம்.]

     [Skt. indriyam → த. இந்திரியம்.]

இந்திரியபுத்தி

இந்திரியபுத்தி indiriyabutti, பெ. (n.)

   1. ஐம்புலன் உணர்ச்சி; perception by the five sense.

   2. புலன் நுகர்ச்சி; the exercise of any sense.

   3. உறுப்புகளின் உணர்ச்சி; the faculty of any organ.

     [இந்திரியம் + புத்தி.]

     [Skt. Indriyam → த. இந்திரியம்.]

இந்திரியபோகம்

 இந்திரியபோகம் indiriyapōkam, பெ. (n.)

   புணர்ச்சியால் உண்டாகும் மகிழ்ச்சி; sexual happiness (சா.அக.);.

த.வ. புணர்ச்சி மகிழ்தல்.

     [Skt. Indrya-põka → த. இந்திரியபோகம்.]

இந்திரியப்பசை

 இந்திரியப்பசை indiriyappasai, பெ. (n.)

   கருநீரில் (இந்திரியத்தில்); உள்ள பிசின் போன்ற பொருள்; an albuminoid substance derived from the semen – spermatin.

     [இந்திரியம் + பசை.]

     [Skt. indriyam → த. இந்திரியம்.]

இந்திரியப்பிரசங்கம்

 இந்திரியப்பிரசங்கம் indiriyappirasaṅgam, பெ. (n.)

   சிற்றின்ப நுகர்ச்சி; sensuality (சா.அக.);.

     [Skt. Indriya-pra-šangam → த. இந்திரியப் பிரசங்கம்.]

இந்திரியப்பெருக்கு

 இந்திரியப்பெருக்கு indiriyapperukku, பெ. (n.)

   கருநீர் மிகுதியாக சுரக்கை (சுக்கில விருத்தி);; abundant secretion of semen.

     [இந்திரியம் + பெருக்கு.]

     [Skt. indriyam → த. இந்திரியம்.]

இந்திரியப்போக்கு

 இந்திரியப்போக்கு indiriyappōkku, பெ. (n.)

   கருநீர் (சுக்கிலம்); மிகுதியாக வெளிப்படுகை; frequent involuntary discharge of semen with out copulation- Spermatorrhoea.

     [இந்திரியம் + போக்கு.]

     [Skt. indriyam → த. இந்திரியம்.]

இந்திரியமடக்கல்

இந்திரியமடக்கல் indiriyamaḍakkal, தொ.பெ.(vbl. n.)

   1. ஜம்புலன்களையும் அடக்குகை; restraining the five senses.

   2. புணர்ச்சியின் போது கருநீரை வெளிவிடாதபடி தடுக்கை; suppression of semen during coition (சா.அக.);.

த.வ. புலனடக்கம்.

     [இந்திரியம் + அடக்கல்.]

     [Skt. indriyam → த. இந்திரியம்.]

இந்திரியமறுப்பு

 இந்திரியமறுப்பு indiriyamaṟuppu, பெ. (n.)

   கருநீர் (இந்திரியம்); தடை; obstruction to the discharge of semen – Sper – matempharxis (சா.அக.);.

இந்திரியமிறுகல்

 இந்திரியமிறுகல் indiriyamiṟugal, தொ.பெ. (vbl.n.)

   கருநீர் (சுக்கிலம்); கட்டுகை; thickening of the seminal fluid (சா.அக.);.

     [இந்திரியம் + இறுகல்.]

     [Skt. indiriyam → த. இந்திரியம்.]

இந்திரியமுடைதல்

 இந்திரியமுடைதல் indiriyamuḍaidal, தொ.பெ.(vbl.n)

இந்திரியம் நீற்றல் பார்க்க; see indiriyam-nitral (சா.அக.);.

     [இந்திரியம் + உடைதல்.]

     [Skt. indriyam → த. இந்திரியம்.]

இந்திரியம்

இந்திரியம் indiriyam, பெ. (n.)

   1. பொறி; organ or power of sense.

   2. கருநீர் (சுக்கிலம்);; semen.

   3. மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐம்பொறிகள் (பிங்.);; the five organs of perception; the five sense of the body (சா.அக.);.

     [Skt. indriya → த. இந்திரியம்.]

மெய்மை நூற் (தத்துவ நூல்); கருத்துப் படி புலன் (இந்திரியம்); என்பது மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்தோடு மனம், கல்வி (வித்தை); என்பதையும் சேர்த்து எழுவகை என்று கருதப்படும். மேலும் புலன் (இந்திரியம்); என்பது பொதுவாக அறிவுக்கருவிகள் (ஞானேந்திரியம்); செயற்கருவிகள் (கருமேந்திரியம்);உட்புலக்கருவிகள் (அந்தரேந்திரியம்); என மூவகையாகவும் கொள்ளப்படும். (சா. அக.);.

இந்திரியம்நீற்றல்

 இந்திரியம்நீற்றல் indiriyamnīṟṟal, பெ. (n.)

   கருநீர் (சுக்கிலம்); தண்ணிரைப் போலாகை; liquidity of semen; destruction of solution of spermatoza – spermatolysis.

த.வ. நீர்த்தகருநீர்.

     [இந்திரியம் + நீற்றல்.]

     [Skt.lindriyam → த. இந்திரியம்.]

இந்திரை

 இந்திரை indirai, பெ. (n.)

   இந்திரன் மனைவி; wife of Indira.

ம. இந்திரை.

     [இந்திரன் (ஆ.பா); – இந்திரை (பெ.பா.);.]

இந்திவா

இந்திவா indivā, பெ. (n.)

   1. செங்குவளை; sweet smelling red water-lily.

   2. நீர்க்குளிரி; water archer. (சா.அக.);.

     [இந்தீவரம் → இந்திவா. இந்தீவரம் கருங்குவளையைக் குறித்தாலும் குவளை என்னும் பொதுமையான் செங்குவளையையும் குறித்ததாகலாம்.]

இந்து

இந்து1 indu, பெ. (n.)

   1. நிலவு; moon.

     “அருக்க னெச்சன் இந்து அனல்” (திருவாச.13.4);.

   2. கருப்பூர மரம் (மூ.அ.);; camphor cinnamon.

   3. மாழ்கு (மிருக சீரிடம்); (விதான. குணா.1.);; fifth naksatra.

   4. சிந்து நதி (வின்.);; river Indus.

   5. இந்து மதத்தவன் (ஆ.அக.);; Hindu, as one who professes Hinduism (செ.அக.);.

இந்து → Skt indu.

     [நீர் → நீத்தம். நீர் → நீர்ந்து → ஈர்ந்து → ஈந்து → இந்து (தண்ணீர், குளிர்ச்சி;

   குளிர்ந்த நிலவு. இந்து → சிந்து (தண்ணீர்);;ஒ.நோ. நீர் → நீரம் → ஈரம். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சிந்து வெளி நாகரிகத்தின் எச்சமாகச் சிதைந்த பாகத, வடதமிழ் (பலவகைப் பிராகிருத மொழிகள்); வழக்குகளான இச்சொற்கள் வடபுலத்துக் கொச்சை வழக்குகளாகத் தென்புலத்தில் வழக்கூன்றின.]

 இந்து2 indu, பெ. (n.)

   இந்துப்பு; rock-salt (செ.அக.);.

 Skt sindhuja.

     [இன் → இந்து. ஒ.நோ. முன் → முந்து. இந்து + இனிமை அல்லது சுவை கூட்டுவது. உணவுக்குச் சுவை சேர்த்தலின் உப்பு இனிமைப் பொருள் பெற்றது. இந்து (உப்பு); விளைந்த இடம் இந்து – சிந்து எனப்பட்டது.]

 இந்து3 indu, பெ. (n.)

   கரடி (அக.நி.);; Indian black bear. (செ.அக.);.

     [ஒருகா. இருள் → இருந்து → இந்து.]

 இந்து4 indu, பெ. (n.)

   கரி (அக.நி.);; charcoal.

இருந்தை பார்க்க;see irundai.

     [இருந்தை → இருந்து → இந்து.]

இந்துக்கடுக்காய்

இந்துக்கடுக்காய் indukkaḍukkāy, பெ. (n.)

   நாட்டுக் கடுக்காய்; Indian gall-nut. as opposed to

   காபுலிக் கடுக்காய்; foreign gall-nut exported from Kabul.

   2. முதிர்ந்த கடுக்காய்; ripe gall nut as opposed to பிஞ்சிக் கடுக்காய்;

 tender or immature gall-nut (சா.அக.);.

     [இந்து + கடுக்காய். இந்து = இந்திய நாட்டு. இந்து = குளிர்ச்சி, இளமை.]

இந்துப்பு

இந்துப்பு induppu, பெ. (n.)

   மருந்துப்பு வகை (பதார்த்த. 1096.);; rock salt or sodium chloride used in medicine, so called because it was brought from Sindh. (சா.அக.);.

 Skf sindhu.

     [இந்து + உப்பு.]

இந்துரம்

இந்துரம் induram, பெ. (n.)

   1. எலி; rat.

   2. கப்பற் கடுக்காய்; large variety of gall-nut (சா.அக.);.

இந்துரம் → Skt indira.

     [ஒருகா. இண்டுரம் (குடையும் எலி); → இந்துரம்.]

இந்துரு

 இந்துரு induru, பெ. (n.)

   பெருச்சாளி; bandicoot. (சா.அக.);.

 Skt indúra.

     [ஒருகா. இண்டுரம் → இண்டுரு → இந்துரு. இண்டு = பெரியது. இந்துரு → skt indura.]

இந்துளம்

 இந்துளம் induḷam, பெ. (n.)

   நெல்லி (வை.மூ.);; emblic myrobalan. (செ.அக.);.

     [இந்து → இந்துள் → இந்துளம்.]

இந்துளி

 இந்துளி induḷi, பெ. (n.)

   பெருங்காயம்; asafetida. (செ.அக.);.

     [இந்துள் → இந்துளி. இந்து + நீர். இந்துளி + உள் ஈரம் கொண்டது.]

இந்துள்

 இந்துள் induḷ, பெ. (n.)

இந்துளி பார்க்க;see induli.

     [இந்து + உள். இந்து – நீர்.]

இந்தோ

இந்தோ indō,    இடை. (int.) அண்மைச் சுட்டு; to behold.

க. இதோ.

     [இந்தா → இந்தோ. (மு.தா..323);.]

இனக்கட்டு

இனக்கட்டு iṉakkaṭṭu, பெ. (n.)

   1. உறவின் நெருக்கம்; bond of union between relatives.

   2. முறைமை (வின்.);; due respect among the several branches of a family. (செ.அக.);.

     [இனம் + கட்டு.]

இனக்கனேரி

 இனக்கனேரி iṉakkaṉēri, பெ. (n.)

ஊர்ப்பெயர்

 name of a village

     [இணக்கன்-இனக்கன்+ஏரி]

இனக்கலவரம்

 இனக்கலவரம் iṉakkalavaram, பெ.(n.)

   இனம் அல்லது குழு அடிப்படையில் தோன்றும்பெருங் கலகம்; riot based on caste or class disputes.

     [இனம்+கலவரம்]

இனங்கண்டு சேர்த்தல்

 இனங்கண்டு சேர்த்தல் iṉaṅgaṇṭucērttal,    தொ.பெ. (vbl.n.) உறவான சரக்கைக் கலத்தல்; adding allied drugs in alchemy, finding which drug is suitable lo add. (சா.அக.).

     [இனம் + கண்டு + சேர்த்தல்.]

இனங்காப்பார்

இனங்காப்பார் iṉaṅgāppār, பெ. (n.)

   கோவலர்; cowherds who protect cattle. (கலித்.143,37); (செ.அக.);.

     [இனம் + காப்பார். இனம் = கால்நடையினம்.]

இனசாரிச்சரக்கு

இனசாரிச்சரக்கு iṉacāriccarakku, பெ. (n.)

   1. ஓரினத்தைச் சேர்ந்த சரக்கு; drug falling under one group or class.

   2. இனம்பிரித்த சரக்கு; sorted drug. (சாஅக.);.

     [இனம் + சாரி + சரக்கு.]

இனச்சிதைவு

 இனச்சிதைவு iṉaccidaivu, பெ.(n.)

   ஒரு குழுவினரின் சீர்குலைவு; disintegration among a clan or community.

     [இனம்+சிதைவு]

இனச்சொல்

 இனச்சொல் iṉaccol, பெ.(n.)

ஒரே மூலத்தினின்று தோன்றியதும் இனமொழிகளில்

இனத்தான்

இனத்தான் iṉattāṉ, பெ. (n.)

   1. உறவினன் (செ.அக.);; relative.

   2. ஓரினத்தவன். தன் இனத்தைச் சார்ந்தவன்; person belonging to one’s own community or caste.

ம. இனத்தான்.

     [இனம் + அத்து + ஆன்.]

இனனா

இனனா2 iṉaṉā, பெ. (n.)

   1. துன்பம்; affliction.

   2. இகழ்ச்சி; insult.

     [இன் → இன்னா.]

இனன்

இனன்1 iṉaṉ, பெ. (n.)

   உறவினன்;     “இன்னா தினனில்” (குறள்.1158);.

   2. ஒப்பானவன் (திவ்.திருவாய்.1,1.2);; equal.

   3. ஆசிரியர் (யாழ்.அக.); teacher. (செ.அக.);.

ம. இனக்கார்.

     [இனம் + அன்.]

 இனன்2 iṉaṉ, பெ. (n.)

   சூரியன் (பிங்.);; sun. (செ.அக.);.

     [உல் – இல் – இன் – இனன்.]

இனமாற்றல்

 இனமாற்றல் iṉamāṟṟal, பெ. (n.)

   ஓரினக்கணக்கைப் பிறிதோரினக் கணக்காய் மாற்றுகை; reduction from one denomination to another. (செ.அக.);.

     [இனம் + மாற்றல்.]

இனமுறை

 இனமுறை iṉamuṟai, பெ. (n.)

   ஒத்த இனம் (C.G.);; relationship of the same caste. (செ.அக.);.

     [இளம் + முறை.]

இனமொழி

இனமொழி iṉamoḻi, பெ. (n.)

   எண்வகை விடைகளு ளொன்று (நன்.386);;நேரடியாக விடையளிக்காமல்,

     “பயருளவோ வணிகீர்?” என்றார்க்கு”உழுந்து அல்ல தில்லை” எனக் கூறுவது;

 indirect answer related to the subject of the question, as, for example, when questioned”Have you green gram to sell,” to answer”We have nothing but black gram” one of eight kinds of vidai. (செ.அக.);.

     [இனம் + மொழி.]

 இனமொழி iṉamoḻi, பெ.(n.)

   ஒரே குடும்பத்தைச் சார்ந்த மொழி; cognate language.

     [இனம்(ம்);+மொழி]

இனமோனை

இனமோனை iṉamōṉai, பெ. (n.)

   இனவெழுத்தால் வரும் வல்லின மெல்லின இடையின மோனைகள் (யா.கா.ஒழி.6);; consonantal alliteration in which any letter of the group are repeated instead of the usual, the same letter, of the three kinds, viz., வல்லின மோனை, மெல்லின மோனை, இடையின மோனை (செ.அக.);.

     [இனம் + மோனை.]

இனம்

இனம்1 iṉam, பெ. (n.)

   1. வகை வகுப்பு (நன்.91);; class, group, division, kind, species, sort.

   2. குலம்; race, tribe.

     “விண்ணோர்க ளொருபடை தானும் நங்க ளினத்தை யுயிருண்ணாது” (கந்தபு.அக்கினிமு.203);.

   3. சுற்றம் (அக.நி.);; comrades, associates, neighbours.

   4. துணையாகச் சேரும் கூட்டம்; brotherhood, fellowship, society, company.

     “இனத்தானா மின்னா னெனப் படுஞ் சொல்” (குறள்-453);.

   5. நிரை; pack herd

     “கழுதைப் புல்லினம் பூட்டி” (புறநா.15);.

   8. ஒரு தொகுதியுட் சேர்த்து வழங்குதற்குரியது (நன்.358);; associated items.

   7. அமைச்சர்; ministers in council.

     “இனத்தாற்றி யெண்ணாத வேந்தன்” (குறள்.568);.

   8. ஒப்பு; equality, comparison.

     “இனமேதுமிலானை” (திவ்.திருவாய்.9,3,5);. 9 ஆள்;

 individual

     ‘பணத்தை நல்ல இனத்திற் கொடுத்திருக்கிறேன்’ (இ.வ.); (செ.அக.);.

   ம. இனம்;க. என.

     [இல் = வீடு. இல் – (இலம்); – இனம் = வீட்டைச் சார்ந்தவர் உறவினர், உறவு.]

 இனம்2 iṉam, பெ. (n.)

   தொடர்புடைய, உவமை; relatedness, simile, comparison.

     “இன்னுணர் முழுநலம்” (திவ்.திருவாய்.111.2); (செ.அக.);.

இனம்பிரி-தல்

இனம்பிரி-தல் iṉambiridal,    4 செ.கு.வி. (v.i.)

   துணைக் கூட்டத்தினின்று விலகுதல்; to be separated from the class or company. (செ.அக.);.

     [இனம் + பிரிதல்.]

இனவண்டு

இனவண்டு iṉavaṇṭu, பெ. (n.)

   இனமான வண்டுகள்; same class of bees;

     “யாழோர்த்தன்ன இன்குரல் இனவண்டு” (நற்.176);.

     [இனம் + வண்டு.]

இனவன்

 இனவன் iṉavaṉ, பெ. (n.)

   தன் இனத்தான்; man of same group.

இவன் எங்கள் இனவன் (இ.வ.);

     [இனம்+அவன்]

 இனவன் iṉavaṉ, பெ. (n.)

   தன் இனத்தான்; man of same group.

     [இனம்+அவன்]

இனவரி

இனவரி iṉavari, பெ. (n.)

   பழைய காசாய வரிவகை (S.I.I.I.89);; ancient tax in cash. (செ.அக.);.

ம. இனவரி.

     [இனம் + வரி. ஆனினங்களுக்கு இடப்பட்ட வரியாகலாம்.]

இனவரிக்காசு

இனவரிக்காசு iṉavarikkācu, பெ. (n.)

   பழையதொரு வரி (I.M.P.cg. 1068);; ancient village rate. (செ.அக.);.

ம. இனவரி.

     [இனம் + வரி + காசு.]

இனவழி

இனவழி iṉavaḻi, பெ. (n.)

   1. குடிவழி; descent from the same line or ancestry.

   2. தலைமுறை (பரம்பரை); (வின்.);; descent from the same breed, as of cattle. (செ.அக.);.

     [இனம் + வழி.]

இனவழிக்கணக்கு

 இனவழிக்கணக்கு iṉavaḻikkaṇakku, பெ. (n.)

   பேரேடு; ledger. (செ.அக.);.

     [இனம் + வழி + கணக்கு.]

இனவாரி

 இனவாரி iṉavāri, கு.வி.எ. (adv.)

   இனம் இனமாய்; distributively, according to items of different classes (செ.அக.);.

     [இனம் + வாரி. வரை – வரி – வாரி = வரம்புக்குட்பட்டது இஃது உருதுச்சொல்லன்று.]

இனவாளை

இனவாளை iṉavāḷai, பெ. (n.)

   வாளையின மீன்; a kind of fish. ‘பூக்கதூஉ மினவாளை’ (புறநா.18); (சங்.இலக்.சொற்.);.

     [இனம் + வாளை.]

இனவெதுகை

இனவெதுகை iṉavedugai, பெ. (n.)

   இனவெழுத்தால் வரும் வல்லின மெல்லின இடையினவெதுகை (யா.கா.ஒழிபு.6);; rhyme in which the rhyming letters of the lines in a stanza are not the same but are of the same class;

 this being of three kinds viz. வல்லினம், மெல்லினம், இடையினம் (செ.அக.);.

     [இனம் + எதுகை.]

இனவெழுத்து

 இனவெழுத்து iṉaveḻuttu, பெ. (n.)

   ஓரினவெழுத்து; letter of a main class as those related to each other.

     [இனம் + எழுத்து.]

இனவெழுத்துப்பாட்டு

இனவெழுத்துப்பாட்டு iṉaveḻuttuppāṭṭu, பெ. (n.)

   வல்லினம் முதலிய மூவினங்களுள் ஓரினத் தெழுந்துகளே வரப்பாடுஞ் சித்திரப் பாடல்வகை (கலி வகை (யாப்.வி.503);; a kind of citira-kavi (செ.அக.);.

     [இனம் + எழுத்து + பாட்டு.]

இனாப்பி-த்தல்

இனாப்பி-த்தல் iṉāppittal,    4 செ.கு.வி. (v.i.)

   துன்பமுண்டாக்குதல்; cause affliction, torment.

     “இனாப்பிச் செற்றிடு கூட்டில்” (திருப்பு.90);.

இனி

இனி1 iṉi, கு.வி.எ. (adv.)

   1. இப்பொழுது; now, immediately.

     “கேளினி” (மலைபடு.94);”இனிமேல்” (திவ்.இயற்.495);;

 hereafter, henceforth.

     “இனிஅன்ன நின்னொடு சூழ்வார்” (குறள்.1294);.

   3. இப்பால்; from here onwards, used of place.

     “இனி நம் எல்லை வந்துவிட்டது” (செ.அக.);.

   ம. இனி;   க. இன்னெ. இன்னு. இன்ன;   கோத. இனி;   குட. இக்க. இக்கனிஞ்சி;   து. குத்தெ. குத்தெனெ;   தெ. இக. இங்க இந்த. இத்தட;   நா. இன்டி;   கோண். இன்கா. இத்ரா;   பிரா. தாசா;ஆத். இன்ய.

     [இல் → இன் → இனி.]

 இனி2 iṉittal, செ.கு.வி. (v.i.)

.

   1. தித்தித்தல்; to be sweet to the taste.

     “இனித்தமுடைய எடுத்த, பொற்பாதம்” (அப்பர் தேவாரம்);.

   2. இன்பமாதல்; to be pleasant attractive, fascinating. இனிக்கப் பேசினான் (செ.அக.);.

   ம. இனிக்குக;   க. இன். இனி, இம்பு;   து. இனி, இம்பு;தெ. இம்பு, இன்க.

     [இல் → இனிமை, மென்மை. இல் → இன் → இனி. இனித்தல்.]

இனிச்ச பண்டம்

 இனிச்ச பண்டம் iṉiccabaṇṭam, பெ. (n.)

   தித்திப்புப் பொருள் (J);; sweet eatable, confectionery. (செ.அக.);.

     [இனி → இனித்த → இனிச்ச + பண்டம்.]

இனிதின் இனிது

இனிதின் இனிது iṉidiṉiṉidu, பெ. (n.)

   இனியவற்றினு மினிது; sweeter than most sweets.

     “இனிதினினிது தலைப்படுதும்” (நற்.134); (சங்.இலக்.சொற்.);.

     [இனிதின் + இனிது.]

இனிது

இனிது iṉidu, பெ. (n.)

   1. இன்பந்தருவது; that which is sweet, pleasing, agreeable.

இனிதுறு கிளவியும் (தொல்.பொருள்.303);.

     “அமிழ்தினும் ஆற்ற இனிதே” (குறள்.54);.

   2. நன்மையானது; that which is good – கு.வி.எ. (adv.);

   நன்றாக; sweetly favourably.

     “புலியூர்ப புக்கினி தருளினன்” (திருவாச.2.145); (செ.அக.);.

   ம. இனிது;   க. இனிது;தெ., து. இம்பு.

     [இல் → இன் → இனி + து – இனித்து – இனிது.]

இனிப்பி-த்தல்

இனிப்பி-த்தல் iṉippittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   தித்திப்பாகச் செய்தல்; to sweeten. (சா.அக.);.

இனிப்பிலந்தை

 இனிப்பிலந்தை iṉippilandai, பெ. (n.)

   தித்திப்பிலந்தை; sweet Indian apple. (சா.அக.);.

     [இனிப்பு + இலந்தை.]

இனிப்பு

இனிப்பு iṉippu, பெ. (n.)

   1. தித்திப்பு; sweetness.

     “இனிப்பை நல்கு முக்கனி” (வைராக்.சத.45);.

   2. மகிழ்ச்சி; pleasure, delight

     “இனிப்போடு நகையாடவே” (குமர.பிர.மதுரைக்.39); (செ.அக.);.

   ம. இனிப்பு;   க. இனி, ஈன். இம்பு. இம்மு;   து. இனி, இம்பு;தெ. இம்பு, இம்மு.

     [இல் → இன் → இனி → இனிப்பு.]

இனிப்பு நவ்வல்

 இனிப்பு நவ்வல் iṉippunavval, பெ. (n.)

   தித்திப்பு நாவற்பழம்; sweet rose apple. (சா.அக.);.

     [இனிப்பு + நாவல். நாவல் – நவ்வல்.]

இனிப்பு நாரத்தை

இனிப்பு நாரத்தை iṉippunārattai, பெ. (n.)

   சருக்கரை நாரத்தை; sweet lemon – circus medica lumia.

   2. கொடி நாரத்தை; litron. (சா.அக.);.

     [இனிப்பு + நாரத்தை.]

இனிப்பு மாதுளை

 இனிப்பு மாதுளை iṉippumātuḷai, பெ. (n.)

   தித்திப்பு மாதுளை; sweet pomegranate as opposed to புளி மாதுளை (சா.அக.);.

     [இனிப்பு + மாதுளை.]

இனிப்புக் குழம்பு

 இனிப்புக் குழம்பு iṉippukkuḻmbu, பெ. (n.)

   சருக்கரையிட்ட பழக்குழம்பு; a conserve of fruits boiled with sugar and water, Jam (சா.அக.);.

     [இனிப்பு + குழம்பு.]

இனிப்புக்காட்டு-தல்

இனிப்புக்காட்டு-தல் iṉippukkāṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. ஆசைகாட்டுதல்; to give a gratifying foretaste.

   2. இனிப்பாதல் (வின்.);; to be sweet delicious. (செ.அக.);.

     [இனிப்பு + காட்டு.]

இனிப்புத்தட்டு-தல்

இனிப்புத்தட்டு-தல் iṉippuddaṭṭudal,    5 செ.கு.வி (v.i.)

   1. ஆசையுண்டாதல்; to get relish for a thing.

   2. சுவையுண்டாதல்; to be sweet to the taste (செ.அக.);.

     [இனிப்பு + தட்டுதல்.]

இனிப்புப் பிசி

 இனிப்புப் பிசி iṉippuppisi, பெ. (n.)

   தித்திப்பான ஒருவகைப் பழம்; fruit.

     [இனிப்பு + பிசி.]

இனிமேல்

இனிமேல் iṉimēl, கு.வி.எ. (adv.)

   1. இதற்குப்பிற்பாடு (பு.வெ.8,33, உரை);; hereafter, at some future time.

   2. இதுமுதல்; henceforth, from now onwards. (செ.அக.);.

     [இன் → இனி + மேல்.]

இனிமை

இனிமை1 iṉimai, பெ. (n.)

   1. தித்திப்பு (பிங்.);; sweetness.

   2. இன்பம்; pleasure, delight.

     ‘இனிமைகூர்ந்து’ (திருவாலவா.1.18); (செ.அக.);.

ம. இனிமை.

     [இன் → இனி → இனிமை.]

 இனிமை2 iṉimai, பெ. (n.)

   1. மேன்மை; greatness.

   2. அமிழ்து; ambrosia, nector.

   3. நிதளியம்; mercury.

   4. சோறு; rice.

     [இன் → இனிமை.]

இனிய

இனிய iṉiya, கு.பெ.எ. (adj.)

   1. இனிப்பான, மனத்துக்கு ஏற்றதான, அழகான; sweet, pleasant, agreeable:

     “இனிய உளவாக இன்னாத கூறல்” (குறள்.100);.

   2. நல்ல, சிறந்த; good noble.

     [இன் → இனி → இனிய.]

இனிய உள்ளம்

இனிய உள்ளம் iṉiyauḷḷam, பெ. (n.)

   நல்ல நெஞ்சம்; mind.

     “இனிய உள்ளம் இன்னா வாக”, (அகநா.98); (பாண்டிச்.அக.);.

     [இன் → இனிய + உள்ளம்.]

இனிய சந்தம்

 இனிய சந்தம் iṉiyasandam, பெ. (n.)

   நறுமணம்; perfume, scent fragrant smell (சா.அக);.

     [இன் → இனிய + சந்தம்.]

இனிய பிரிவு

இனிய பிரிவு iṉiyabirivu, பெ. (n.)

   வைப்பாட்டி வீடு; concubine’s house.

     “சம்பிருதி யெல்லா மினிய பிரிவுக் களந்தாரென்றும்” (சரவண.பணவிடு.182); (செ.அக.);.

     [இன் → இனிய + பிரிவு.]

இனியர்

இனியர் iṉiyar, பெ. (n.)

   இனிமை தருபவர்; agreeable, loving person

     “நச்சுவார்க் கினியர் போலும்” (தேவா.439,1);.

   2. மகளிர்; young ladies.

     “இளையரு மினியரும்” (பரிபா.6.27); (செ.அக.);.

     [இன் → இனி + அர்.]

இனியவன்

இனியவன் iṉiyavaṉ, பெ. (n.)

   1. பிறரை மகிழ்விப்பவன்; benign person

   2. இனிமையுடையவன்; one with lovable qualities (ஆ.அக.);.

     [இன் → இனி → இனிய + வன்.]

இனியவை

இனியவை iṉiyavai, பெ. (n.)

   இனிய தன்மையுடையவை (நான்மணி.78,1);; desirable things.

     [இன் → இனி → இனியவை.]

இனியவை நாற்பது

இனியவை நாற்பது iṉiyavaināṟpadu, பெ. (n.)

   பதினெண்கீழ்க் கணக்கு நூல்களுளொன்று பூதஞ் சேந்தனார் பாடியது;   40 பாடல்கள் கொண்டது; ancient didactic work by púdafi-céndanár, consisting of 40 stanzas one of Patinen-kil-k-kanakku, q.v. (செ.அக.);.

     [இன் → இனி → இனியவை + நாற்பது.]

இனியும்

 இனியும் iṉiyum, பெ. (n.)

   இனிமேலும், மீண்டும்; even after this, again.

ம. இனியும்.

     [இனி + உம்.]

இனுக்கா வலை

 இனுக்கா வலை iṉukkāvalai, பெ. (n.)

   கடலில் வேலிபோற் கட்டி மீன்பிடிக்க உதவும் வலை; a kind of net, used in fishing at sea. (செ.அக.);.

     [இல் → இன் → இனுக்கு → இனுக்கா(த); வலை.]

இனை

இனை1 iṉai, கு.பெ.எ. (adj.)

   இன்ன; of this degree used in respect of size or quantity =இனைத்துணைத்து” (குறள்.87); (செ.அக.);.

     [இல் → இன் → இனை.]

 இனை2 iṉaidal,    2 செ.கு.வி. (v.i.)

   1. வருந்துதல்; to be thrown into an agony of grief.

     “இனைந்திரங்கிப் பள்ளி படுத்தார்களே” (சீவக.292);.

   2. இரங்குதல் (திவா.);; to lament cry.

   3. அஞ்சுதல்; to be afraid.

     “என்னை வருவ தெனக் கென்றினையா” (பரிபா.7.68); (செ.அக.);.

     [இல் → இனை → இணைதல்.]

 இனை3 iṉaittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   1. வருத்துதல் (ஐங்குறு.237);; to torment, worry.

   2. கெடுத்தல்; to destroy, consume, ravage.

     “வெவ்வெரி யினைப்ப” (புறநா.23); (செ.அக.);.

     [இள் → இளை → இனை. இணைத்தல்.]

இனை நோக்கு

இனை நோக்கு iṉainōkku, பெ. (n.)

   வருந்தும் நோக்கு; worried look

     “இனை நோக்குண் கண்நீர் நில்லாவே” (கலித்,7-12);.

     [இனை + நோக்கு.]

இனைநலம்

இனைநலம் iṉainalam, பெ. (n.)

   இவ்வாறான நலம்; goodness of this sort similar welfare.

     “இனைநல் முடைய கானஞ் சென்றோர்” (கலித்.11-19);.

     [இனை + நலம்.]

இனைபவள்

இனைபவள் iṉaibavaḷ, பெ. (n.)

   வருந்துபவள்; people who are worried

     “புலம்புகொண் டினைபவள்” (கலித்.10-11);.

இனைபுகு நெஞ்சம்

இனைபுகு நெஞ்சம் iṉaibuguneñjam, பெ. (n.)

   வருந்திக் கெடுகின்ற நெஞ்சம்; tormented mind.

     “இனைபுகு நெஞ்சத்தால்” (கலித்.35-1); (பாண்டிச்.அக.);.

     [இனை + புகு + நெஞ்சம்.]

இனைய

இனைய iṉaiya, கு.பெ.எ. (adj.)

   1. இத்தன்மைய; of this nature.

   2. இதுபோல்வன; of this appearance (ஆ.அக.);.

     [இல் → இன் → இனைய.]

இனையர்

இனையர் iṉaiyar, பெ. (n.)

   1. இத்தன்மையர்; this nature.

   2. இவர்கள்; these people.

     “இனையர் இவர் எமக்கு” (குறள்.790); (ஆ.அக.);. [இல் → இன் → இனை + அர்.]

இனையள்

 இனையள் iṉaiyaḷ, பெ. (n.)

   இத்தன்மையள்; female person of a particular kind. (ஆ.அக.);.

     [இன் → இணை + .அள்.]

இனைவி-த்தல்

இனைவி-த்தல் iṉaivittal, பி.வி. (v.t.)

   வருந்துவித்தன்; to torment.

     “தன்நெஞ் சொருவற் கினைவித்தல்” (கலித்.147-46); (பாண்டிச்.அக);.

     [இனை → இனைவி.]

இனைவு

இனைவு iṉaivu, பெ. (n.)

   1. வருத்தம்; harrowing sorrow, anguish, great pain of mind (பாரத.கீசக.40);;

   2. இரக்கம் (சூடா.);; crying in distress (செ.அக.);.

     [இல் → இலை → இனை → இனைவு.]

இன்

இன்1 iṉ, பெ. (n.)

   இனிமை; sweetness, pleasantness.

     “இன்வள ரிளம்பிறை” (சீவக.1008); (செ.அக.);.

ம. இன்.

     [இல் + மென்மை, நொய்மை, இனிமை. இல் – இன்.]

இன்2 கு.பெ.எ. (adj.);

   இனிய; sweet pleasant, agreeable.

     “இன்சொ லிணிதீன்றல் காண்பான்” (குறள். 99);.

     [இல் – இன்.]

 இன்3 iṉ, இடை. (part)

   1. ஐந்தனுருபு (நன்.299);; an abl. Ending.

   2. ஏழனுருபு (திருக்கோ.19,உரை);; a loc ending.

   3. இறந்தகால இடைநிலை; a sign of the past tense.

உறங்கினான்.

   4. சாரியை; an euphonic augment.

     “வைப்பிற்கோர் வித்து” (குறள்.24); (செ.அக.);.

   ம., க. இன்;தெ. னி.

     [இல் – இடப்பொருள். இல் – இன்.]

இன்கடுங்கள்

இன்கடுங்கள் iṉkaḍuṅgaḷ, பெ. (n.)

   உண்டற்கினிமையும் மயக்கமுந்தரும் கடுமையுமுடைய கள்; toddy.

     “இன்கடுங் கள்ளின் அஃதை” (அகநா.76);.

     [இல் – இன் + கடுங்கள்.]

இன்கண்

இன்கண்1 iṉkaṇ, பெ. (n.)

   இன்பம்; delight, pleasure.

     “இன்கணுடைத்தவர் பார்வல்” (குறள்.1152);.

   2. கண்ணோட்டம்; kindness, special favour.

     “இன்கணுடைய னவன்” (கலித்.37,22); (செ.அக.);.

     [இல் – இன் + கண்.]

 இன்கண்2 iṉkaṇ, பெ. (n.)

   ஒன்பது வகை மெய்ப்பாட்டுள் ஒன்று (நவரசத்திலொன்று);; one of nine manifestations of emotions according to literary theory.

     [இன் + கண்.]

 இன்கண்3 iṉkaṇ, பெ. (n.)

   இனிய முழவின் கண் பகுதி; eye of a drum head.

     “மண்கணை முழவின் இன்கண் இமிழ்வில்” (பரிபா.22-36); (சங்.இலக்.சொற்.);.

     [இன் + கண்.]

இன்கண்ணி

 இன்கண்ணி iṉkaṇṇi, பெ. (n.)

   இனிய மாலை; pleasant evening.

     [இல் → இன் + கண்ணி.]

இன்கலியாணர்

இன்கலியாணர் iṉkaliyāṇar, பெ. (n.)

   இனிய செருக்கினை யுடைத்தாகிய புதுவருவாய் (மதுரைக்.330);; thriving income or new prosperity. (சங்.இலக்.சொற்.);.

     [இல் → இன் + கலி + யாணர்.]

இன்கல்

இன்கல் iṉkal, பெ. (n.)

   இனிய மலை; gratifying hill or mountain.

     “இன்கல் யாணர்தம் உறைவின் ஊர்க்கே” (நற்.344.);.

இன்களி

இன்களி iṉkaḷi, பெ. (n.)

   இனிய செருக்கு; haughtiness.

     “இன்களி மகிழ்நகை” (புறநா.71); (சங்.இலக்.சொற்.);

     [இன் + களி.]

இன்களி நறவு

இன்களி நறவு iṉkaḷinaṟavu, பெ. (n.)

   இனிய களிப்பைத்தரும் கள்; toddy.

     “இன்களி நறவி னியறேர் நன்னன்” (அகநா.173);.

     [இன் + களி + நறவு.]

இன்கழை

இன்கழை iṉkaḻai, பெ. (n.)

   அழகிய மூங்கில்; bamboo.

     “இன்கழை யமல்சிலம்பின்” (அகநா.177-6); (சங்.இலக்.சொற்.);.

     [இன் + கழை.]

இன்காலை

இன்காலை iṉkālai, பெ. (n.)

   1. இனிய காலம்; morning.

     “புதலொளி சிறந்த காண்பின் காலை” (அகநா. 139-8);.

   2. இனிய காலைப் பொழுது; morning.

     “வாந்தளி பொழிந்த காண்பின் காலை” (நற். 264-2); (சங்.இலக்.சொற்.);.

     [இன் + காலை.]

இன்குரல் எழிலி

இன்குரல் எழிலி iṉkuraleḻili, பெ. (n.)

   இனிய முழக்கம் செய்கின்ற முகில்கள்; clouds, as gives good sound.

     “இன்குரல் எழிலி” (நற்.247-3); (சங்.இலக்.சொற்.);.

     [இன் + குரல் + எழிலி.]

இன்குளகு

இன்குளகு iṉguḷagu, பெ. (n.)

   இனியதழை (முல்லை 33);; agreeable foliage. (சங்.இலக்.சொற்.);.

     [இன் + குளகு.]

இன்கூழ்

 இன்கூழ் iṉāḻ, பெ.(n.)

   இனிப்பு வகைகளுளொன்று (அல்வா);; a kind sweet.

     [இன்+கூழ்]

இன்சாயலன்

இன்சாயலன் iṉcāyalaṉ, பெ. (n.)

   மென்மையினிய நெஞ்சினன்; soft at heart.

     “பெரும்பெயர்ச் சாத்தன் ஈண்டோவின் சாயலன்” (புறநா.178-6);.

     [இன் + சாயலன்.]

இன்சாயல்

இன்சாயல் iṉcāyal, பெ. (n.)

   இனிய மென்மை; elegant appearance.

     “அறலென விரிந்த உறலின் சாயல்” (அகநா.191-15); (சங்.இலக்.சொற்.);.

     [இன் + சாயல்.]

இன்சிறு பிண்டம்

இன்சிறு பிண்டம் iṉciṟubiṇṭam, பெ. (n.)

   இனிய சிறு பிண்டம் (இகழ்ச்சிக் குறிப்பு);; sweet little thing.

     “இன்சிறு பிண்டம் யாங்குண்டனன் கொல்” (புறநா. 234-4);.

     [இன் + சிறு + பிண்டம்.]

இன்சீர்

இன்சீர் iṉcīr, பெ. (n.)

   இனிய ஓசை; sweet

     “படுதிரை யின்சீர்ப் பாணி தூங்கும்” (புறநா.209-5);.

     [இன் + சீர்.]

இன்சீர்ப்பாணி

இன்சீர்ப்பாணி iṉcīrppāṇi, பெ. (n.)

   இனிய சீராகிய தாளம்; pleasant rhythm.

     “படுதிரை யின்சீர்ப் பாணி” (புறநா.209-5);.

     [இன் + சீர் + பாணி.]

இன்சுவை மூரல்

இன்சுவை மூரல் iṉcuvaimūral, பெ. (n.)

   இனிய சுவையுடைச் சோறு (பெருபாண்.196);; good taste food.

     [இன் + சுவை + முரல்.]

இன்சொல்

இன்சொல் iṉcol, பெ. (n.)

   இனிமையான சொல்; pleasant speech, kind word courteous language, compliment opp. to வன்சொல்.”இன்சொ லினிதீன்றல்” (குறள்.99); (செ.அக.);.

     [இல் → இன் + சொல்.]

இன்சொல்லுவமை

 இன்சொல்லுவமை iṉcolluvamai, பெ. (n.)

   அணிவகையுளொன்று. இது பொருளில் உவமைக்கொரு விகுதி தோன்றக்கூறி இன்ன மிகுதியுடைத் தெனினு மொப்பதன்றிச் சிறந்ததன் றென்பது (ஆ.அக.);; figure of speech.

     [இன் + சொல் + உவமை.]

இன்தீங் கிளவி

இன்தீங் கிளவி iṉtīṅgiḷavi, பெ. (n.)

   மிக இனிய மொழி; sweet language.

     “இன்தீங் கிளவியாய்” (கலித். 24-3);.

     [இன் + தீம் + கிளவி.]

இன்துகிர்

இன்துகிர் iṉtugir, பெ. (n.)

   இனிய பவளப் பலகை; coral decoration.

     “காண்பு இன் துகிர்மேல்” (கலித்.86); (சங்.இலக்.சொற்.);.

     [இல் → இன் + துகிர்.]

இன்தொடைச் சீறியாழ்

இன்தொடைச் சீறியாழ் iṉtoḍaiccīṟiyāḻ, பெ. (n.)

இனிய நரம்பினையுடைய சிறிய யாழ் (மதுரை.559); stringed musical instrument. (சங்.இலக்.சொற்.);.

     [இன்தொடை + சீறியாழ்.]

இன்ன

இன்ன iṉṉa, , கு.பெ.எ. (adj.)

   1. இத்தன்மையான; such.

   2. உவமவுருபு (நன்.367);; like, a sign of comparison – பெ. (pron.); இப்படிப்பட்டவை;

 such thing.

     “இன்னவாகிய பலவளனுண்டு” (கந்தபு.தவங்கண்); (செ.அக.);.

   ம. இன்ன;   க. இந்து;   தெ. இட்லு;   கோத. இன. இன்னே. துட. இனொவ்;   குட. இன்னதெ. இந்தெ;   து. இன்து;   குஆ. என்னெ;பட. இத்தெ.

     [இல் → இன் → இன்ன. இல் – இது எனப் பொருள். அண்மைக்சுட்டு, கன்னடத்தில் இல்லி – இங்கேயென ஆளபடுதல் நோக்குக.]

இன்னணம்

இன்னணம் iṉṉaṇam, கு.வி.எ. (adv.)

   இவ்வாறு; thus: in such state.

     “ஈங்கிவ ளின்னண மாக” (மணி.8.1); (செ.அக.);.

     [இல் → இன் → இன்ன + அணம். இல் – இது. இன்ன – இந்த. வண்ணம் – வணம் – அணம்.]

இன்னதல்லதிதுவென மொழிதல்

இன்னதல்லதிதுவென மொழிதல் iṉṉadalladiduveṉamoḻidal, பெ. (n.)

   32 வகை உத்திகளிலொன்று (நன்.14);; making a definite statement about a thing where there is any room for doubt, that is only this and not the other, one of 32 utti. (செ.அக.);.

     [இன்னது + அல்லது + இது + என + மொழிதல்.]

இன்னது

இன்னது iṉṉadu, சு.பெ. (pron.)

   1. இத்தன்மையுடையது; such as this.

     “வளவயல் வைகலு மின்ன தென்ப” (சீவக.64);.

   2. இது; this thing, what follows.

     “இன்னது கேண்மென” (கந்தபு.அசுரர்யாக.1);

     “இன்னது இன்னுழி இன்னணம் இயலும்” (நன்னூல்);.

ம. இன்னது.

     [இன்ன + அது.]

இன்னன்

 இன்னன் iṉṉaṉ, பெ. (n.)

இன்னன் பார்க்க;see innan. (செ.அக.);.

     [இல் → இன் → இன்ன + ஆள் = இன்னாள் – இன்னன்.]

இன்னமும்

இன்னமும் iṉṉamum, கு.வி.எ. (adv.)

   இன்னும் (கம்பரா.திருவடி.59);; yet (செ.அக.);.

ம. இன்னியும்.

     [இல் – இன் – இன்னும். இல் – இது. இன்ன = இதன். இன்னும் – இதனினும், மேலும்.]

இன்னம்

 இன்னம் iṉṉam, கு.வி.எ. (adv.)

இன்னும் பார்க்க;see innum. (செ.அக.);.

     [இன்னும் → இன்னம்.]

இன்னயம்

 இன்னயம் iṉṉayam, பெ. (n.)

   முகமனுரை (உரி.நி.);; word of courtesy, of welcome (செ.அக.);.

     [இல் → இன் (மென்மை, இனிமை); இன் + நயம்.]

இன்னர்

இன்னர் iṉṉar, பெ. (n.)

   விளைகேடு; potent, foreboding.”இன்ன லின்னரொடு” (பரிபா.419); (செ.அக.);.

     [இல் → இல்லு → இன்னு → இன்னல் → இன்னர். இல்லுதல் = துளைத்தல், குத்துதல், துன்புறுத்துதல்.]

இன்னலம்

 இன்னலம் iṉṉalam, பெ. (n.)

   நன்னலம்; welfare good prosperity. (ஆ.அக..);.

     [இல் → இன் + நலம் + இன்னலம்.]

இன்னல்

இன்னல் iṉṉal, பெ. (n.)

   துன்பம்; unpleasantness, trouble, pain, affliction.

     “இன்னல் செயிராவணன்” (கம்பரா.மந்தரை.39); (செ.அக.);.

     [இல் – இல்லு – இன்னு – இன்னல். இல்லுதல் = குத்துதல், துளைத்தல், துன்புறுத்துதல்.]

இன்னவர்

 இன்னவர் iṉṉavar, பெ. (n.)

   இத்தகையவர்; the person indicated. (ஆ.அக.);.

ம. இன்னவன்.

     [இன் → இன்னவர்.]

இன்னவை

இன்னவை iṉṉavai, பெ. (n.)

   கொடியவை; woe, outrage.

     “ஈரத்துள் இன்னவை தோன்றின்.” (கலித்.41-30); (பாண்டிச்.அக.);.

     [இல் → இன் → இன்னவை.]

இன்னா

இன்னா1 iṉṉā, பெ. (n.)

   1. தீங்குதருபவை (குறள்.32, அதி);; those that cause misery.

   2. துயரம் (திவா.);; misery, distress. (செ.அக.);.

     [இல் → இல்லு → இன்னு → இன்னல் – இன்னா.]

 இன்னா3 iṉṉā,    இடை. (n) இதோ; behold here. (Tinn.).

   ம. இன்னா;   க. இகொ. இதிகோ;   தெ. இதிகொ, இகோ. இதோ;   து. இந்தா;பட. இதா.

     [இல் → இன் → இன்னா (மு.தா.324);.]

இன்னா முகம்

 இன்னா முகம் iṉṉāmugam, பெ. (n.)

   மகிழ்ச்சியில்லா முகம் (ஆ.அக.);; sorrowful face.

     [இல் – இன் – ஆ + முகம்.]

இன்னா ரினையார்

இன்னா ரினையார் iṉṉāriṉaiyār, பெ. (n.)

   இத்தன்மையுடையவர்; what sort of persons, such and such persons.

     “இன்னா ரினையாரென் றெண்ணுவாரில்லை காண்” (திவ்.நாச்சி.75); (செ.அக.);.

     [இல் → இன் + ஆர் + இணையார்.]

இன்னாங்கு

இன்னாங்கு iṉṉāṅgu, பெ. (n.)

   1. தீமை; evil, hurt, injury.

     “இன்னாங்கு செய்வார்” (நாலடி.355);.

   2. துன்பம்; pain, remorse, suffering

     “இன்னாங் கெழுந்திருப்பார்” (நாலடி.11);.

   3. கடுஞ்சொல்; aspersion, insult, harsh, cruel words.

     “ஒருவன் இன்னாங் குரைத்தான்” (தொல்.சொல்.246.உரை); (செ.அக.);.

ம. இன்னாங்கம்.

     [இல் → இன் + (ஆ); ஆங்கு.]

இன்னாங்கோசை

 இன்னாங்கோசை iṉṉāṅācai, பெ. (n.)

   கடுமையான ஓசை (திவா.);; discord, harsh sound, cacophony. (செ.அக.);.

     [இன் → இன்னா → இன்னாங்கு + ஓசை.]

இன்னாச்சொல்

 இன்னாச்சொல் iṉṉāccol, பெ. (n.)

   இழிசொல்; insult. (ஆ.அக.);.

     [இல் + இன் + ஆ + சொல்.]

இன்னாத

 இன்னாத iṉṉāta, பெ. (n.)

   துன்பஞ்செய்வன; that which are evil or atrocious.

     [இன் + ஆ + த் + அ. (கு.வி.(அ);.பெ);.]

இன்னாதா-தல்

இன்னாதா-தல் iṉṉātātal,    6 செ.கு.வி. (v.i.)

   துன்புறுதல்; to suffer pain, to be miserable.

     “அவள்… இன்னாதாகிறாள்” (ஈடு.1.4.7); (செ.அக.);.

     [இல் → இன் + ஆ + து + ஆதல்.]

இன்னாதார்

இன்னாதார் iṉṉātār, பெ. (n.)

   1. பகைவர்; adversaries, enemies. (ஆ.அக.);.

   2. தீயோர்; the wicked.

     [இல் → இன் + ஆ + த + ஆர்.]

இன்னாது

இன்னாது iṉṉātu, பெ. (n.)

   1. தீது; evil.

     “பிறப்பின்ன தென்றுணரும்” (நாலடி.173);.

   2. துன்பு (ஈடு);; pain. (செ.அக.);.

     [இல் → இன் + ஆ + து.]

இன்னாநாற்பது

இன்னாநாற்பது iṉṉānāṟpadu, பெ. (n.)

   பதினென் கீழ்க்கணக்கு நூல்களுளொன்று;   கபிலர் எழுதிய, 40 பாடல்கள் கொண்டது. ஒவ்வொரு பாடலும் இன்னாத கருத்துகள் நான்கினைக் கூறுவது; ancient didactic work by Kabilar consisting of 40 stanzas each of which are mentioned certain outstanding cause of pain and suffering in general, one of patinen-kilkanakku (செ.அக.);.

     [இல் → இன் + ஆ + நாற்பது.]

இன்னான்

இன்னான்1 iṉṉāṉ, பெ. (n.)

   1. இத்தன்மையான்; person of such a character.

     “இனத்தானா மின்னா னெனப்படுஞ் சொல்” (குறள்.453);.

   2. இன்னார்; so and so, such a person.

     “இன்னாரோலை இன்னார் காண்க” (சீவக.1041.201); (செ.அக.);.

ம. இன்னான்.

     [இல் → இன் + ஆன்.]

 இன்னான்2 iṉṉāṉ, பெ. (n.)

   துன்பஞ்செய்வோன்; tantalizer, tormentor, persecutor.

     “புணர்வினின்னான்” (ஐங்குறு.150); (செ.அக.);.

     [இல் → இன் + ஆ + ஆன்.]

இன்னாப்பு

இன்னாப்பு iṉṉāppu, பெ. (n.)

   துன்பம்; sorrow.”இன்னாப்பாலே சொல்லுகிறார்” (ஈடு.5.4.3); (செ.அக.);.

     [இல் → இன் + ஆ + (ப்); + பு.]

இன்னாமை

இன்னாமை iṉṉāmai, பெ. (n.)

   துன்பம்; pain distress, misfortune.

     “இன்னாமை யின்பமென கொளின்” (குறள்.630); (செ.அக.);.

     [இல் – இன் + ஆ + மை.]

இன்னாரினியார்

இன்னாரினியார் iṉṉāriṉiyār, பெ. (n.)

   1. பகைவரு நண்பரும்; foes and friends, ‘துறவிகட்கு இன்ன ரினியா ரென்பதில்லை’ (உ.வ.);.

   2. இன்னாரினைய பார்க்க;see innär-inaiyār. (செ.அக.);.

     [இல் → இன் + ஆ + ஆர் + இனியார்.]

இன்னார்

இன்னார் iṉṉār, பெ. (n.)

   பகைவர்; enemies, person not agreeable, unfriendly people.

     “இனியார்போன் றினாராய்” (நாலடி.378); (செ.அக.);

ம. இன்னார்.

     [இல் – இன் + ஆ + ஆர்.]

இன்னாலை

 இன்னாலை iṉṉālai, பெ. (n.)

இலைக்கள்ளி (மலை.); five tubered spurse (செ.அக.);.

     [இல் → இன் + ஆலை. ஆலை – பாலுடையது (இல் → இ + உட்புறம்);.]

இன்னாள்

இன்னாள்1 iṉṉāḷ, பெ. (n.)

   இன்ன ஆள்; such and such a person, so and so.

ம. இன்னாள்.

     [இன்ன + ஆள்.]

 இன்னாள்2 iṉṉāḷ, கு.வி.எ. (adv.)

   1. இந்நாள் பார்க்க;see innal.

   2. இன்றைய நாள், நடக்கும் நாள்;   இன்று; the day, on the day of occurrence, today.

ம. இன்னாள்.

     [இன் + நாள் – இந்நாள். இதனை இன்னாள் என்பது தவறு.]

இன்னாவிச்சை

இன்னாவிச்சை iṉṉāviccai, பெ. (n.)

   செய்யுள் குற்றம் இருபத்தேழனுளொன்று (யாப்.வி.525);; or of the defects in the composition of verses. (செ.அக.);

     [இல் → இன் + ஆ + (வித்தை); விச்சை.]

இன்னிக்கிலை

 இன்னிக்கிலை iṉṉikkilai, பெ. (n.)

   கம்மாறு வெற்றிலை; black betel. (சா.அக.);.

     [இல் → இன் → இன்னிக்கு + இலை. இல் = கருமை.]

இன்னிசை

இன்னிசை iṉṉisai, பெ. (n.)

   1. இன்பந்தரும் இசை; melody, harmony.

   2. பண்வகை (திவா.);; melody type.

   3. இன்னிசை வெண்பா (காரிகை.செய்யு.4); பார்க்க;see innišai venbā (செ.அக.);.

ம. இந்நிச.

     [இல் → இன் + இசை.]

இன்னிசை வெண்பா

இன்னிசை வெண்பா iṉṉisaiveṇpā, பெ. (n.)

   நான்கடியாய்த் தனிச்சீரின்றிவரும் வெண்பா (காரிகை.செய்.4,உரை);; venpä of four lines in whic the second line has four feet instead of three feet plu the tan-c-cir (செ.அக.);.

     [இல் → இன் + இசை + வெண்பா.]

இன்னிசை வெள்ளை

 இன்னிசை வெள்ளை iṉṉisaiveḷḷai, பெ. (n.)

இன்னிசைவெண்பா (பிங்.); பார்க்க;see innisai venba. (செ.அக.);.

     [இல் → இன் + இசை + வெள்ளை.]

இன்னிசைகாரர்

 இன்னிசைகாரர் iṉṉisaikārar, பெ. (n.)

   பாணர் (திவா.);; ancient caste of bards. (செ.அக.);.

     [இல் → இன் + இசை + காரர்.]

இன்னிசைக் கலிப்பா

 இன்னிசைக் கலிப்பா iṉṉisaikkalippā, பெ. (n.)

   கலிப்பாவு ளொன்று; class of kalip-pa (ஆ.அக.);.

     [இல் → இன் + இசை + கலிப்பா.]

இன்னிசைச் சிந்தியல்

 இன்னிசைச் சிந்தியல் iṉṉisaissindiyal, பெ. (n.)

   வெண்பா வகையு ளொன்று; class of venba.

இன்னிசை வெண்பாபோனடந்து மூன்றடியாக முடிவது.

     [இன்னிசை + சிந்தியல்.]

இன்னிசைமாலை

இன்னிசைமாலை iṉṉisaimālai, பெ. (n.)

   அகப்பொருள் பற்றிய பெருநூல் (களவழி.24);; treatise on akapporul (செ.அக.);.

     [இல் → இன் + இசை + மாலை.]

இன்னினி

இன்னினி iṉṉiṉi, கு.வி.எ (adv.)

   இப்பொழுதே; now ever now, without a moments delay.

     “இன்னினியே செய்க வறவினை” (நாலடி.29); (செ.அக.);.

     [இல் → இன் + இனி.]

இன்னியம்

இன்னியம் iṉṉiyam, பெ. (n.)

   இசைக்கருவிகள் (பெருங்.வத்தவ.2.30);; musical instruments (செ.அக.);.

     [இல் → இன் + இயம்.]

இன்னியர்

 இன்னியர் iṉṉiyar, பெ. (n.)

   பாணர் (அகி.நி);; bards singers. (செ.அக.);.

     [இல் → இன் + இயர்.]

இன்னிலை

இன்னிலை iṉṉilai, பெ. (n.)

   இல்வாழ்க்கை (குறள்.45 பரி.உரை);; life of a householder, homelife. (செ.அக.);.

     [இன் + நிலை. இதனை இல் + நிலை – இல்வாழ்க்கை பற்றி கூறுவதெனக் கொள்ளவியலாது. முப்பாலுடன் காட்டுவானப் பிரத்தம் ஒவ்வாதென்க.]

இன்னீர்

இன்னீர் iṉṉīr, பெ. (n.)

இத்தன்மையீர் (you); of this nature or character

     “இன்னீராகலி னினியவு முளவோ” (புறநா.58-18);.

     [இல் – இன் + நீர்.]

இன்னும

இன்னும iṉṉuma, கு.வி.எ. (adv.)

   இவ்வளவு காலஞ் சென்றும்; still yet. இன்னுந் தெரியவில்லை. 2 மறுபடியும்;

 again. இன்னும் வரும்.

   3. மேலும்; still more more than this. இன்னும் வேண்டும்.

   4. அன்றியும்; also, more than that, in addition to, in a conjunctive sense.

     “இன்னு மிழத்துங் கவின்” (குறள்.1250); (செ.அக.);.

   ம. இன்னும்;   க. இன்னும், இன்னு;   குட. இஞ்ஞ;து. நந பட. இன்னு.

     [இல் → இன் + உம். இல் + இது. இன்னும் + இதன்மேலும்.]

இன்னுமின்னும்

இன்னுமின்னும் iṉṉumiṉṉum, கு.வி.எ. (adv.)

   மேல் மேலும்; more and more.

     “இன்னுமின்னுமெங் காம மிதுவே” (பரிபா.13.64); (செ.அக.);.

     [இன்னும் + இன்னும்.]

இன்னுழி

இன்னுழி iṉṉuḻi, கு.வி.எ. (adv.)

   இன்னவிடத்து; in such a place.

     “இன்னுழியாகாது” (தொல்.பொருள்.186. உரை); (செ.அக.);.

     [இல் → இன் + உழி.]

இன்னூகம்

 இன்னூகம் iṉṉūkam, பெ. (n.)

   கப்பற்கடுக்காய்; large variety of foreign gall nut. (சா.அக.);.

     [இல் → இன் + ஊகம்.]

இன்னே

இன்னே iṉṉē, கு.வி.எ. (adv.)

   1. இப்பொழுதே; now itself, at this moment.

     “உற்றதின்னே யிடையூ றெனக்கு” (சீவக.226);.

   2. இவ்விடத்தே; here, in this place. =இன்னே வாருங்கள்” (திருக்கோ.55);.

   3. இவ்விதமாக; thus, in this manner.

     “விதியார் செய்கை யின்னேயோ” (கந்தபு.மார்க்கண்.103); (செ.அக.);.

இன்னோசை

 இன்னோசை iṉṉōcai, பெ. (n.)

   இனிய ஓசை; melodious sound.

     [இல் → இன் + ஓசை.]

இன்ப உத்தி

 இன்ப உத்தி iṉpautti, பெ. (n.)

   அறம், பொருள். இன்பம், அச்சம் என்ற நான்கு உத்திகளுள் ஒன்று; crucial lest of the continence of a minister or other officer of state conducted sub rosa, by a king, which consists in his (the king’s] sending an old maid long in the service of the harem, to tempt the officer concerned, with a story that one of the queen is desperately in love with him (the officer);, and that not only great pleasure but also splendid destiny await him if he would meet the queen’s wishes, one of four utti.

     [இன்பம் + உத்தி.]

இன்ப துன்பம்

இன்ப துன்பம் iṉpaduṉpam, பெ. (n.)

   நலமும் கேடும்; joy and sorrow, pleasure and pain.

     “சென்றாங்கு இன்ப துன்பங்கள்” (திவ்.திருவாய்.8.8.6);.

     [இன்பம் + துன்பம்.]

இன்பக்கொடி

இன்பக்கொடி iṉpakkoḍi, பெ. (n.)

   காமவல்லிக்கொடி; twining creeper found in svarga.

     “நந்தையுமின்பக் கொடியொத்தாள்” (சீவக.365); (செ.அக.);.

     [இல் – இன் – இன்பம் + கொடி.]

இன்பன்

இன்பன் iṉpaṉ, பெ. (n.)

   கணவன்; husband, as being dear to the wife.

     “பதுமத்தலர்மகடனக்குமின்பன்” (திவ்.பெரியதி.2.3.5);.

     [இன்பு + இன்பன்.]

இன்பம்

இன்பம்1 iṉpam, பெ. (n.)

   1. அகமகிழ்ச்சி (திவா.);; delight, joy, happiness.

   2. இனிமை (மதுரை.16);; sweetness, pleasantness.

   3. இன்பம் (காமம்);; sensual enjoyment, sexual love.

     “அறம் பொருளின்பம்” (குறள். 501);.

   4. திருமணம்; marriage.

     “கொம்பனையாளை

யும்…. குன்றனையானையும்…. இன்பமியற்றினார்” (சீவக.1980);.

   5. சொல்லினும் பொருளினுஞ் சுவை படுவதாகிய கணம் (தண்டி.18);; sweetness of subject matter and of style and diction, a merit of poetic composition. (செ.அக.);.

ம. இன்பம்.

     [இல் → இன் → இன்பு → இன்பம்.]

 இன்பம்2 iṉpam, பெ. (n.)

   1. நூற்பயனான்கிலொன்று; one of four benefits of learning.

   2. பெரியோ ரியல்பினொன்று; one of the characteristics of noblemen.

     [இல் → இன் → இன்பு → இன்பம்.]

இன்பவணி

 இன்பவணி iṉpavaṇi, பெ. (n.)

   முயற்சியின்றி விரும்பப்பட்ட செயல் கைகூடுதலும் விரும்பப்பட்ட பொருளினும் நிறைவாய்க் கைகூடுதலும், கைகூடுதற் பொருட்டுச் செய்யும் முயற்சி மற்றும் வழிவகைகளால் திறன் வெளிப்படுதலுமாம் (அபி.சிந்);; figure of speech depicting fulfillment of desire.

     [இன்பம் + அணி.]

இன்பவுபதை

 இன்பவுபதை iṉbavubadai, பெ. (n.)

இன்பஉத்தி பார்க்க;see inbautti.

இன்பாயல்

இன்பாயல் iṉpāyal, பெ. (n.)

   இனிய படுக்கை; comfortable bed.

     “புரையோ ருண்கட்டுயிலின் பாயல்.” (பதிற்றுப்.16:18);.

     [இன் + பாயல்.]

இன்பி-த்தல்

இன்பி-த்தல் iṉpittal,    11 செ.குன்றாவி. (v.t.)

   இன்ப மூட்டுதல்; to cause to be happy.

     “என்னையுருக்கி யின்பித்தவடி” (பாடு.திருவருட்); (செ.அக.);.

     [இன்பு → இன்பி.]

இன்பு

இன்பு iṉpu, பெ. (n.)

இன்பம் பார்க்க;see inbam.

     “வளநக ரும்ப ரின்பொடு புரியவர்” (தேவா.553.8);.

க. தெ. இன்பு.

     [இன் → இன்பு.]

இன்புறல்

 இன்புறல் iṉpuṟal, பெ. (n.)

   மகிழ்ச்சி பொருந்தல் (ஆ,அக.);; enjoyment.

     [இன்பு + உறல்.]

இன்புறவு

இன்புறவு iṉpuṟavu, பெ. (n.)

   மகிழ்கை; gratification, pleasure (திருக்கோ.219,அவ.); (செ.அக.);.

     [இன்பு + உறவு.]

இன்புறாவேர்

 இன்புறாவேர் iṉpuṟāvēr, பெ. (n.)

சாயவேர் பார்க்க;see Śāyavār. (சா.அக.);.

     [இன்பு → உறா + வேர்.]

இன்புளி

இன்புளி iṉpuḷi, பெ. (n.)

   நற்புளிப்பு; sour. (மலை.179);;

     [இன் + புளி.]

இன்புளி வெஞ்சோறு

இன்புளி வெஞ்சோறு iṉpuḷiveñjōṟu, பெ. (n.)

   இனிய புளிங்கறி யிடப்பட்ட வெவ்விய சோறு; tamarind rice.

     “ஈயல் பெய்தட்ட இன்புளி வெஞ்சோறு” (அகநா.394); (சங்.இலக்.சொற்.);.

     [இன்புளி + வெஞ்சோறு.]

இன்புளிப்பு

இன்புளிப்பு iṉpuḷippu, பெ. (n.)

   1. தித்திப்பும் புளிப்பும் கலந்த சுவை; mixture of the sweet and the sour.

   2. காடியுந் தேனுங்கலந்த குழம்பு; mixture or medicated syrup of vinegar and honey, used as an expectorant or demulcent-Oxymel. (சா.அக.);.

     [இன் + புளிப்பு.]

இன்பை

 இன்பை iṉpai, பெ. (n.)

   துளசி; basil – ocimum sanctum. (சா.அக.);.

     [இன்பு → இன்பை.]

இன்மணியாரம்

இன்மணியாரம் iṉmaṇiyāram, பெ. (n.)

   இறந்துபட்டதோ ரிசைநூல் (யாப்.வி.540);; an ancient musical treatise. (செ.அக);.

     [இன் + மணி + ஆரம்.]

இன்மிதவை

 இன்மிதவை iṉmidavai, பெ.(n.)

   இனிப்புபணியார வகை (இ.வ.);; a kind of confectionary.

     [இன்+மிதவை]

இன்மை

இன்மை iṉmai, பெ. (n.)

   1. இல்லாமை (திவ்.திருவாய்.3,4);; total negation of existence, dist. fr. அன்மை and opp. உண்மை.

   2. வறுமை; poverty, destitution, adversity.

     “இன்மைதீர்த்தல் வன்மை யானே” (புறநா.3);.

   3. இன்மைவகை (வேதா.சூ.35);; absolute negation, of four kinds. viz.

முன்னின்மை, பின்னின்மை, ஒன்றினி லொன்றின்மை, என்றுமின்மை (செ.அக.);.

     [இல் + இன் → இன்மை.]

இன்மை நவிற்சி யணி

 இன்மை நவிற்சி யணி iṉmainaviṟciyaṇi, பெ. (n.)

   அணிவகையு ளொன்று. இது யாதேனு மொன் றின்மையால் உவமியத்துக்கு உயர்வேனுந் தாழ்வேனுந் தோன்றச் சொல்லுதல்; figure of speech. (ஆ.அக.);.

     [இன்மை + நவிற்சி + அணி.]

இன்மை வழக்கு

இன்மை வழக்கு iṉmaivaḻkku, பெ. (n.)

இல்வழக்கு (மணி.30,194); பார்க்க;see ilvalakku. (செ.அக.);.

     [இன்மை + வழக்கு.]

இன்றி

இன்றி iṉṟi, கு.வி.எ. (adv.)

   இல்லாமல்; without.

     “தனக்கொரு பயனின்றி யிருக்க” (கலித்.96.30,உரை); (செ.அக.);.

ம. இன்னி.

     [இல் – இன்றி.]

இன்றிய

இன்றிய iṉṟiya, கு.பெ.எ. (adj.)

   இல்லாத; that which is not, a word used as a negative affix.

     “தரித்தரலின்றிய விவற்றை” (பெருங்.மகத.14.24); (செ.அக.);.

     [இல் – இன்றி – இன்றிய.]

இன்றியமையாமை

இன்றியமையாமை iṉṟiyamaiyāmai, பெ. (n.)

   தானில்லாமல் முடியாமை; indispensableness, necessity, sinequa non.

     “இன்றியமையாச் சிறப்பின வாயினும்” (குறள்.961);.

     [இன்றி + அமையாமை.]

இன்று

இன்று1 iṉṟu, பெ. (n.)

கு.வி.எ. (adv.);

   இந்நாள்; this day to-day.

     “இன்று நம் ஆனுள் வருமேல் அவன் வாயில்” (சிலப்.17-20); (செ.அக.);.

   ம. இன்னு: க., பட. இந்து. தெ. இந்து. நேடு;   கோத. இந்த்ய துட. ஈத்;   கு. இந்து;   குட. இந்தி;   து. இனி, இன்னெ கொலா. இந்கெட். நெடீ;   நா. இந்தர்;   பர். இனெ;   கூ. நேன்க குவி. நின்க;   . கோண். றேண்ட்;   குரு. இன்னா;மால். இனெ. அகினோ.

     [இஞ்ஞான்று → இஞன்று → இன்று.]

 இன்று2 iṉṟu, இடை. (part)

ஓர் அசைச்சொல் (திவா.); expletive (செ.அக.);.

     [இன்று = இற்று. முடிந்தது எனப் பொருள்படுவதோர் இறந்த காலக் குறிப்பு வினைமுற்று. பழங்கால உலகவழக்கிலும் செய்யுள் வழக்கிலும் அசைநிலையாயிற்று.]

 இன்று3 iṉṟu, கு.வி.எ. (adv.)

   இன்றி; without.

     “உப்பின்று புற்கை யுண்கமா கொற்கை யோனே” (நன்.172.மயிலை);.

     [இல் – இன்று இல்லை எனப் பொருள்படுவதோர் குறிப்பு வினைமுற்று இல்லாமல் எனப் பொருள் படுவதோர் குறிப்பு வினையெச்சம் ஆயிற்று.]

 இன்று4 iṉṟu,    கு.வி.மு. (imp.v.) இல்லை; no.

     “பருவத்து பாழ்படுத லின்று” (குறள்.83);.

     [இல் + து – இல்து – இன்று.]

இன்றேல்

இன்றேல் iṉṟēl, வி.எ. (adv.)

   இல்லாவிடில்; if not or else.

     “அஃதின்றேல் மன்னாவாம் மன்னர்க் கொள்” (குறள்.556);. [இன்று → இன்றேல்.]

இன்றைக்கு

 இன்றைக்கு iṉṟaikku, கு.வி.எ. (adv.)

   இன்று; today.

     “இன்றைக்கு இருப்பாரை நாளை இருப்பர் என;

எண்ணவோ திடமில்லை” (தாயுமானவர்); (செ.அக.);.

     [இஞ்ஞான்று → இன்று + ஐ + கு.]

இப்படி

இப்படி1 ippaḍi, , கு.வி.எ. (adv.)

.

   1. இவ்விதம் (ஆ.அக.);; in this manner, thus, so.

   2. இவ்வாறு; likewise (செ.அக.);.

   ம. இப்படி;   க. இன்து;   தெ. இப்பாடு;   பிரா. தகன், தான்;பட. இத்தெ.

     [இ + படி + இப்படி;

படி + வகை. இ + அண்மைச் சுட்டு.]

 இப்படி2 ippaḍi, பெ. (n.)

   தண்டத்தீர்வை (R.T.);; penal assessment (செ.அக.);.

தெ. இப்புதி.

     [ஒருகா. இழப்பு + படி = இழப்படி → இப்படி.]

இப்படிக்கு

 இப்படிக்கு ippaḍikku, கு.வி.எ. (adv.)

   . இங்ஙனம் (ஆ.அக.);; thus: in these terms a term used in the subscription in a letter or document over the writer’s signature, meaning, I remain thus ‘இப்படிக்கு உங்கள் அன்புள்ள கண்ணன்’ (உ.வ.); (செ.அக.);.

     [இ + படி = இப்படி + கு. படி = வகை, தன்மை.]

இப்படிக்கொத்த

 இப்படிக்கொத்த ippaḍikkotta, கு.பெ.எ. (adj.)

   . இத்தன்மையான; such as this (செ.அக.);.

     [இப்படி + கு + ஒத்த.]

இப்பந்தி

 இப்பந்தி ippandi, பெ. (n.)

இருபந்தி பார்க்க;see irupandi.

   தெ. இப்பந்தி;க. இப்பந்தி.

     [இரு + பகுதி. பகுதி → தெ. பந்தி. பந்தி = வரிசை வகை. இரு + தெ. பந்தி → இப்பந்தி = இருவகைப்பட்டது, கலப்பானது.]

இப்பந்தி யாடு

 இப்பந்தி யாடு ippandiyāṭu, பெ. (n.)

இருபந்தியாடு பார்க்க;see irupandiyādu (சா.அக.);.

     [இரு + பந்தி + ஆடு. பகுதி → தெ. பந்தி.]

இப்பம்

 இப்பம் ippam, கு.வி.எ. (adv.)

   இப்பொழுது (கொ.வ.);; now, at the present moment. (செ.அக.);.

   ம. இப்பம்;   க., பட. ஈக;   தெ. இப்புடு;து. இத்லெ.

     [இப்பொழுதும் → இப்பவும் → இப்பம் (கொ.வ.);.]

இப்பரி

 இப்பரி ippari, பெ. (n.)

   இந்த வகை; this kind,

     “உலகுக்குச் சந்திரனும் உள்ளளவும் அஞ்சு வண்ணம் ஸந்ததி பிர்ருதி ஸ்ரீ இப்பரி அறிவென.”

     [இ+பரிசு]

இப்பர்

இப்பர் ippar, பெ. (n.)

   1. வணிக இனத்தார் (சீவக.1756);; one of the three subcastes among the vaiśyas.

   2. கோவணிகர் (கோவைசியர்); (பிங்.);; sect among the waisyas whose chief vocation is to tend cows and live on dairy produce;

 dairymen vaiśya.

   3. வேளாளர் (ஆ.அக.);; agriculturist.

     [இடைப்பர் → இப்பர்.]

இப்பவும்

இப்பவும் ippavum, கு.வி.எ. (adv.)

   1. இப்பொழுதும் (கொ.வ..);; even now.

   2. இப்பொழுது; term meaning just now, generally used as a prefatory word in epistolary writing. (செ.அக.);.

ம. இப்போழும்.

     [இப்பொழுதும் → இப்பவும்.]

இப்பாடு

இப்பாடு ippāṭu, கு.வி.எ. (adv.)

   இவ்விடம்; to this place, hither.

     “இப்பாடே வந்தியம்பு” (திருவாச.19,6);.

     [இ + பாடு, படு → பாடு, படுதல் + வைத்தல், தங்குதல். பாடு = வைத்தற்குரிய இடம்.]

இப்பால்

இப்பால் ippāl, கு.வி.எ. (adv.)

   1. இவ்விடம் (ஆ.அக.);; on this side, herein.

     “இப்பா லலைத்தது காமன் சேனை” (சீவக.490);.

   2. பின்பு; hereafter, after this event.

     “இப்பாற் பார்செலச் செல்லச் சிந்தி” (சீவக.469);.

   3. இனிமேல் (ஆ.அக.);; hereafter.

ம. இப்பால்.

     [இ + பால். பால் = பகுப்பு. பிரிவு, பகுதி, பகுக்கப்பட்ட இடம்.]

இப்பி

இப்பி ippi, பெ. (n.)

   1. சங்கு; conch – shell.

   2. கிளிஞ்சில்; bivalvular shell-fish.

     “விரிகதிர் இப்பியை வெள்ளி யென்றுணர்தல்” (மணி.27-64);.

   3. சிப்பி; oyster.

   4. முத்துச் சிப்பி; pearl oyster-shell. (சா.அக.);.

   ம. இப்பி;   க. சிப்பி;   தெ. சிப்ப;து. சிப்பி.

 Pkt. Sippi.

     [இல் → இள் → இளுப்பி → இப்பி = துளையுள்ளது சங்கு.]

இப்பியை

இப்பியை ippiyai, பெ. (n.)

   1. வெள்ளைக் குங்கிலியம் (நாநார்த்த.);; konkani resin.

   2. பெண்யானை;   பிடி; female elephant. (செ.அக.);.

இப்பியை → Skt ibhya.

     [இப்பி = சங்கு. இப்பி → இப்பியை = சங்கு போன்று வெண்மையானது. இப்பி = ஒருபுடை ஒப்புமை கருதிய பெண்பார் சொல்லாட்சி.]

இப்பிவெள்ளி

இப்பிவெள்ளி ippiveḷḷi, பெ. (n.)

   கிளிஞ்சிலை வெள்ளியென் றெண்ணும் மயக்க வுணர்ச்சி (சித். சிகா.23,5);; mistaking a brilliant shell for silver. (செ.அக.);.

     [இப்பி = கிளிஞ்சில், சங்கு இப்பி + வெள்ளி கிளிஞ்சில்கள் சோழிகள் ஆகியவை பண்டமாற்றுக் காலத்தில் சில்லறை நாணயங்களாகக் கருதப்பட்டதும் ஒப்புநோக்கத்தக்கது.]

இப்புறம்

இப்புறம் ippuṟam, பெ. (n.)

   இவ்விடம்; this place this side.”இப்புறப்பரப் பெங்கணும்” (இரகு. யாக. 44);.

ம. இப்புறம்.

     [இ + புறம். புறம் + புறத்தேயுள்ள இடம், பகுதி.]

இப்பேர்ப்பட்ட

 இப்பேர்ப்பட்ட ippērppaṭṭa, கு.பெ.எ. (adj.)

   இத்தன்மையதான; such as, of this kind. (செ.அக.);.

ம. இப்பேர்ப்பட்ட.

     [இ + பேர் + பட்ட + இப்பேர்ப்பட்ட பெயர் → பேர். இத்தகைய பெயர் தாங்கிய என்பது இதன் சொல் வழிப்பொருள் இத்தன்மையுடைய என்பது சொல்லாட்சிப்பொருள்.]

இப்பை

 இப்பை ippai, பெ. (n.)

   இருப்பை (L);; South India mahua. (செ.அக.);.

   தெ. இப்ப;க. இப்பெ.

     [இலுப்பை → இருப்பை → இப்பை.]

இப்பொழுது

 இப்பொழுது ippoḻudu, கு.வி.எ. (adv.)

   இந்நேரம் (ஆ.அக.);; now.

     “இப்பொழுது எம்மனோரால் இயம்பு தற்கெளிதோ?” (கம்பர்);.

   ம. இப்பொழுது;   க. ஈஹொத்து, ஈபொத்து;   தெ. இப்புடு. இபுடு;   பர். இபொட;   நா. இகட்;   குர். ஈம்பிரி;பட ஈக.

     [இ + பொழுது.]

இப்பொழுதே

 இப்பொழுதே ippoḻutē, கு.வி.எ. (adv.)

   இந்நேரத்திலேயே; at this very moment now itself.

ம. இப்போழே.

     [இ + பொழுது + ஏ.]

இப்போ

 இப்போ ippō, கு.வி.எ. (adv.)

இப்பம் பார்க்க;see Ippam. (செ.அக.);.

ம. இப்போ.

     [இ + பொழுது = இப்பொழுது → இப்போது → இப்போ (கொ.வ.);.]

இப்போது

இப்போது ippōtu, குவி.எ. (adv.)

   இப்பொழுது (திவ். இயற். பெரியதிருவ.87);; now, at this time. (செ.அக.);.

ம. இப்போது.

     [இப்பொழுது → இப்போது.]

இப்போதே

 இப்போதே ippōtē, குவி.எ. (adv.)

   இப்பொழுதே; this very moment (செ.அக.);. ‘அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன்.’

ம. இப்போழே.

     [இ + பொழுது + ஏ = இப்பொழுதே → இப்போதே.]

இமம்

இமம்1 imam, பெ. (n.)

   பணி; frost, snow.”இமஞ்சூழ மலையும்” (திவ்.இயற். 3.98); இமயம் பார்க்க;see Imayam (செ.அக);.

இமம் → Skt hima.

     [இமயம் → இமம்.]

 இமம்2 imam, பெ. (n.)

   1. சந்தனம் (நாநார்த்த.);; sandal wood.

   2. குளுமை (சீதளம்);; coldness, chillness.

 Skt hima.

     [இமம்1 → இமம், பனியைக் குறித்த சொல் குளிர்ச்சியையும் குளிர்ந்த சந்தனத்தையும் குறித்தது.]

இமயம்

இமயம் imayam, பெ. (n.)

   1. ஒரு குலமலை (பதிற்றுப்.43,7);; Himalayan range, one of the asta-kulaparvadam.

   2. பாற்கடலில் அமுதம் கடைவதற்கு பயன்பட்ட மந்தரமலை (சீவக.963);; Mt.Mandam which was used as the churning staff for churning the sea of milk.

   3. மேரு (கலித்.38);; Mt. Meru.

   4. பொன்; gold.”இமயம்புனை மன்றில்” (குமர.பிர.சிதம்பர.செய்.23);. (செ.அக.);.

     [உம் → இம் → இமை → இமையம் → இமயம். உம் + உயர்வு கருத்து வினையடி. உயர்ந்த மலையைக் குறித்த இச்சொல் பனிபடர்ந்த மீமிசை ஓங்கலின் முகட்டையும் குறித்தலால் குளிர்ச்சிமிக்க பனிப்பொருளையும் அப்பனியின் மீது கதிரவனின்

பொன்னொளி பட்டுப் பொன் என்னும் பொருளையும் குறித்தது. வடமொழியில்

     “ஹிம” என்னுஞ்சொல் பனியைக் குறிப்பினும் அது தமிழ்ச்சொல்லின்திரிபேயாகும். சப்பானிய மொழியில் ‘இம’ மலையைக் குறிக்கிறது. மேலையாரிய மொழியில்

     “ஹிம” என்னுஞ்சொல் பனிப்பொருளிலும் மலைப்பொருளிலும் ஆளப்படவில்லை என்பது அறியத்தக்கது

     “வடாஅது பனிபடுநெடுவரை” எனப் பண்டைத்தமிழில் ஆளப்பட்டிருத்தல் காண்க.]

இமயவரம்பன்

இமயவரம்பன் imayavarambaṉ, பெ. (n.)

   பனி (இமய); மலையை வரம்பாகக் கொண்டு ஆண்ட சேரமன்னன் (பதிற்றுப்.20.பதிகம்);; name of a distinguished Chéra king implying that his conquests and jurisdiction extended upto the Himalayas. (செ.அக.);.

     [இமயம் + வரம்பன்.]

இமயவல்லி

 இமயவல்லி imayavalli, பெ. (n.)

   இமவான் மகளான மலைமகள் (பார்வதி); (திவா);; Parvati, daughter of Himavat (செ.அக.);.

     [இமயம் + வல்லி.]

இமயவில்லி

இமயவில்லி imayavilli, பெ. (n.)

   மேருமலையை வில்லாகக் கொண்ட சிவன் (சீகாழித்.சேட.27);; Siva who took up Mt. Méru as His bow in a war with asuras (செ.அக.);.

     [இமயம் + வில்லி.]

இமிசை

இமிசை imisai, பெ. (n.)

   தீங்கு; violence, annoyance torment injury, harm.

     “பொய்யிலாரி மிசை செய்யார்” (நல்.பாரத.ஆசார.30); (செ.அக.);.

     [இன்னாத்தல் – இன்னல்விளைத்தல். இன்னா – இன்மி – இன்மித்தல் – இமிசித்தல் (கொ.வ.); → Skt himsa.]

இமிர்

இமிர்1 imirtal,    2 செ.கு.வி. (v.i.)

   1. ஒலித்தல்; to sound.hum.”கரும்பிமிர்ந் திம்மென” (கலித்.119.8);.

   2. ஊதுதல்; to blow.

     “கைவைத் திமிர்பு குழல்” (பரிபா. 19,41);.

ம. இமிருக.

     [இம் → இமிர். இம் = ஒலிக்குறிப்பு.]

 இமிர்2 imirtal,    2 செ.கு.வி. (v.i.)

   1. உலர்தல்; to dry up.

   2. ஆறுதல், வற்றுதல்; to evaporate as in boiling to disappear, as a boil.

   3. களை குன்றுதல் (கருநா.);; to waste away.

   4. அவிதல், கெடுதல்; to get spoiled ‘அவனுக்குக் கண் இமிர்ந்து விட்டதா?’ (கொங்.வ.);.

க. இமரு. இமிரு. இமுரு. தெ. இவுரு இமுரு.

     [உம் → உமிர் → இமிர். உம் + வெப்பம்;

வெப்பத்தால் உலர்தல் குறைதல்.]

இமிலெருது

இமிலெருது imilerudu, பெ. (n.)

   1. திமிலுடைய எருது (hump + bull);; humped Indian ox.

   2. பெருமாள் மாடு; temple bull. (சா.அக.);.

     [இமில் + எருது.]

     [P]

இமிலை

இமிலை imilai, பெ. (n.)

   ஒர் இசைக்கருவி; a kind of music instrument.

     [இம்-(இமிழ்);இமிலை]

 இமிலை imilai, பெ. (n.)

   ஒருவகைப் பறை; a kind of drum.

     “தவில்கணம் பறைகாள மோடிமிலை” (திருப்பு.220); (செ.அக.);.

     [இமில் → இமிலை.]

     [P]

இமில்

இமில் imil, பெ. (n.)

   எருத்துத் திமில்; hump or the withers of an Indian bull, hump of the Zebu.

     “எழிலேற் றிமிலின் னேற்ப முடித்தான்” (சீவக.2437); (செ.அக.);.

ம. இ.மி.

     [உம் → இம் → இமில். உம் = கூடுதல், திரளுதல், பெருத்தல், உயர்தல்.]

இமிழி

 இமிழி imiḻi, பெ. (n.)

   இசை (அக.நி.);; melody. (செ.அக.);.

     [இமிழ்தல் + ஒலித்தல், இசைத்தல், இமிழ் → இமிழி.]

இமிழ்

இமிழ்1 imiḻtal,    2 செ.கு.வி. (v.i.)

   1. ஒலித்தல்; to sound.

     “புள்ளின. மிமிழும் புகழ் சால் விளைவயல்” (புறநா.15.4.);.

   2. யாழொலித்தல் (பிங்.);; to buzz lo make a low continued sound, as the strings of a yāl.

   3. தழைத்தல்; to sprout, shoot forth

     “மருதிமிழ்ந் தோங்கிய நளியிரும் பரப்பின்” (பதிற்றுப்.23);.

   4. மிகுதல்; to abound.

     “உண்மகி ழுவகை யூக்க மிமிழ” (பெருங்.நரவாண 7.3);.

     [இம் – இமிழ். இம் = ஒலிக்குறிப்பு. இமிழ் + இன்னோசை, மகிழ்ச்சி, தழைத்தல்.]

 இமிழ்2 imiḻtal, செ.குன்றாவி. (v.t.)

   1. கட்டுப்படுத்தல்; to bind, as by an order to restrain.

     “ஆணையினா

லிமிழ்ந்திடப்பட்டு” (விநாயகபு. 17:14);.

   2. சிமிட்டுதல்; to wink.

     [அம் → இம் → இமிழ். அம்முதல் = அணைத்தல், கட்டுதல்.]

 இமிழ்3 imiḻttal, செ.கு.வி. (v.i.)

   ஒலித்தல் (பிங்.);; to Sound, hum.

     [இமிழ்1 பார்க்க;see imil1.]

 இமிழ்4 imiḻttal,    3 செ.குன்றாவி. (v.t.)

   கட்டுதல்; to fasten or tie.

     “இரண்டுட னிமிழ்க் கொளீஇ” (சீவக. 1835);.

     [இமிழ்2 பார்க்க;see imil2.]

 இமிழ்5 imiḻ, பெ. (n.)

   1. ஒலி; sound, hum roar.

     “தெரியிமிழ் கொண்டநும் மியம்போ லின்னிசை” (மலைபடு.296);.

   2. பிணைப்பு; tie, bond, as of love or devotion.

     “இமிழ்கொளு மன்பு” (திருவானைக்.வரங் கொள்:20);.

   3. கயிறு; cord.

     “சொல்லிமிழிற் பூட்டி” (சீவக.1091); (செ.அக.);.

     [இமிழ்1 → இமிழ் (பெ.); இமிழ்1 பார்க்க;see imil1.]

 இமிழ்6 imiḻ, பெ. (n.)

   1. இனிமை (அக.நி.);; sweetness, pleasantness, charm.

   2. இசை; melody. (செ.அக.);.

   க. இம்பு;   தெ. இலிமி;து. இம்பு.

     [அம் → அமிழ் → இமிழ்.]

இமை

இமை1 imaittal,    4 செ.கு.வி. (v.i.)

   தூங்குதல்; to sleep.

     “பூணாக நோக்கி யிமையான்” (கலித்.60); (செ.அக.);

     [அமைத்தல் + பொருத்துதல், கூடுதல். அமை → இமை இமைத்தல் கண்மூடுதல், தூங்குதல்.]

 இமை2 imaittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   இமை கொட்டுதல்; lo wink.

     “அழித்திமைப்பின்”

   775); – 4 செ.கு.வி. (v.i.);

   1. ஒளிவிடுதல் (திவா.);; to glitter, twinkle, shine.

   2. சுருங்குதல்; to diminish shrink.

     “இமையா வருங்கடன்” (கல்லா.7);.

   ம. இமய்க்குக: க. சிமிடு. சிவடு. சிவிடு;தெ. சிமிடு.

     [அமை → இமை. இமைத்தல்.]

 இமை3 imai, பெ. (n.)

   1. கண்ணிமை; eye lid.

   2. கண்ணிமைக்கை; winking of the eye.

     “கண்ணிமை நொடியென” (தொல். எழுத்.7);

   3. கண்ணிமைப் பொழுது; time spent in winking

     “எண்ணத் தானாமோ லிமை” (திவ்.இயற்.1.31);.

   4. கண்ணிமை மயிர், கண்பீலி (சேரநா.);; eye lash.

   ம. இம;   க. இமெ. எமெ;து. இமெ. சிமெ, சிம்மெ.

     [அமை → இமை.]

 இமை4 imai, பெ. (n.)

   1. கரடி (அக.நி.);; bear.

   2. மயில் (அக.நி.);; pea-cock (செ.அக.);.

     [ஒருகா. இருமை → இமை. இருமை = கருமை.]

இமை திறந்த கண்

இமை திறந்த கண் imaidiṟandagaṇ, பெ. (n.)

   1. விழித்த கண்; wide-open eyes.

   2. இமை மயிர் உதிர்ந்த கண்; eye lids deprived of lashes.

   3. முண்டக்கண்;   அளவிற்கு மேல் விலகிக் காணுங் கண்; blepharodiastasis. (சா.அக.);.

     [இமை + திறந்த + கண்.]

இமை பொருந்து-தல்

இமை பொருந்து-தல் imaiborundudal,    15 செ.கு.வி. (v.i.)

   உறங்குதல் (திவ்.நாச்.5,4);; sleep, close ones eyelids. (செ.அக.);.

     [இமை + பொருந்துதல். பொருந்துதல் = சேர்தல், மூடுதல்.]

இமைகொட்டு-தல்

இமைகொட்டு-தல் imaigoṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   கண்ணிதழ் சேர்தல்; to wink twinkle. (செ.அக.);.

   ம. இமவெட்டுக;க. எமெயிக்கு.

     [இமை + கொட்டுதல். கொட்டுதல் = அடித்தல், ஒன்றோடொன்று இணைந்து பொருந்துதல்.]

இமைக்கட்டி

 இமைக்கட்டி imaikkaṭṭi, பெ. (n.)

   இமையி லுண்டாகுமோர் கட்டி; adenoma of the eye-lid (சா.அக.);.

     [இமை + கட்டி.]

இமைக்கண்

 இமைக்கண் imaikkaṇ, பெ. (n.)

   சிமிட்டுக்கண்; constantly winking eye, continuous blinking – Blepharism (சா.அக);.

     [இமை + கண்.]

இமைக்குரு

 இமைக்குரு imaikkuru, பெ. (n.)

   இமையிலுண்டாகும் சிறு கட்டி; sty. (சா.அக.);.

     [இமை + குரு.]

இமைக்குலைவு

 இமைக்குலைவு imaikkulaivu, பெ. (n.)

   கண்ணிமையிலேற்படும் நிலையழிவு; sagging of the skin of the eye-lid, due to atrophy of the tissues – Blepharochalasis. (சா.அக.);.

     [இமை + குலைவு.]

இமைக்கேடு

 இமைக்கேடு imaikāṭu, பெ. (n.)

   வளியினால் இமைகளுக்கேற்படும் உணர்ச்சியழிவு; paralysis of the muscles of both eye-lids. (சா.அக.);.

     [இமை + கேடு.]

இமைச்சந்தி

 இமைச்சந்தி imaiccandi, பெ. (n.)

   கண்ணிமையினுட்பக்கமுள்ள யிடைவெளி;   இது வெள்விழிக்கும் இமைக்கும் நடுவேயுள்ளது; intervening crevice between the eyelids and the white of the eye. (சா.அக.);.

     [இமை + சந்தி.]

இமைதிறத்தல்

 இமைதிறத்தல் imaidiṟaddal, பெ. (n.)

   மயிர் உதிர்ந்து இமை வெளித்தோன்றல்; eye lids losing hairs and opening out (சா.அக.);.

     [இமை + திறத்தல்.]

இமைநீர்

 இமைநீர் imainīr, பெ. (n.)

   கண்ணீர்; tear, drops of water secreted from the eyes (சா.அக.);.

     [இமை + நீர்.]

இமைநீர்ப்பாய்ச்சல்

 இமைநீர்ப்பாய்ச்சல் imainīrppāyccal, பெ. (n.)

   தலையிலுள்ள நீர் இமை நரம்பின் வழியாகக் கண்ணிமையில் இறங்கி வீக்கமுண்டாக்கும் கண்ணோய்; disease of the eye-lids marked by swelling supposed to be due to the draining of fluid from the head. (சா.அக.);.

     [இமை + நீர் + பாய்ச்சல்.]

இமைபிற-த்தல்

இமைபிற-த்தல் imaibiṟattal,    3 செ.கு.வி. (v.i.)

   இமைத்தல்; to wink, as the eyes.

     “உம்பரிமை பிறப்ப” (பரிபா.17.31);.

     [இமை + பிற. பிறத்தல் = தோன்றுதல், செய்தல். இமைபிறத்த லாவது இமைக்குந் தொழில் வெளிப்படுதல்.]

இமைப்பளவு

இமைப்பளவு imaippaḷavu, பெ. (n.)

   இமைக்கின்ற நேரம்;   சிறிது நேரம்;   கண்ணிமைப்போது; time taken in winking;

 a moment.”இமைப்பளவுந் துன்ப மொன்றில்லாத” (சூளா.துற.221);.

ம. இமப்பளவு.

     [இமைப்பு + அளவு. அளவு = நேரம்.]

இமைப்பு

இமைப்பு imaippu, பெ. (n.)

   1. இமைப்பளவு பார்க்க;see imaippalavu.

     “இழைபக விமைப்பின் எய்திட்டு” (சீவக.1680);

   2. விளக்கம்; brilliance.

     “மின்னுறழிமைப் பிற் சென்னிப் பொற்ப” (திருமுரு.85);, (செ.அக.);.

     [இமை → இமைப்பு.]

இமைப்பொழுது

இமைப்பொழுது imaippoḻudu, பெ. (n.)

   கண்ணிமைக்கும் நேரம்; brief moment of time, as the twinkling of the eye.

     “இமைப்பொழுதும் என்னெஞ்சில் நீங்கா தான் தாள் வாழ்க” (திருவாச.1.2); (செ.அக.);.

     [இமை + பொழுது.]

இமையவர்

இமையவர் imaiyavar, பெ. (n.)

   தேவர் (திவ். பெரியாழ்.474);; celestials who have characteristic eye lids which do not bat (செ.அக.);.

ம. இமயவர். இமயோர்.

     [இமையாதவர் → இமையார் → இமையவர் (கொ.வ.);.]

இமையாடு-தல்

இமையாடு-தல் imaiyāṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   கண்கொட்டுதல்; wink as the eyes. (செ.அக.);.

     [இமை + ஆடுதல். ஆடுதலாவது செயற்பாடுறுதல்.]

இமையார்

இமையார் imaiyār, பெ. (n.)

   தேவர்; gods. who never wink their eyes

     “இமையாரின் வாழினும் பாடிலரே” (குறள்.906); (செ.அக.);.

ம. இமயவர். இமயோர்.

     [இமையாதவர் → இமையார்.]

இமையொட்டி

 இமையொட்டி imaiyoṭṭi, பெ. (n.)

   இயற்கையாகவே இமைகள் ஒன்றோடொன்று ஒட்டிக் கொண்டு வளருதல்; growing together or adhesion of the eye-lids – Blepharosynechia (சா.அக.);.

     [இமை + ஒட்டி.]

இமையொட்டிக் கொள்ளல்

 இமையொட்டிக் கொள்ளல் imaiyoṭṭikkoḷḷal, பெ. (n.)

   கண்ணின் பீளை அதிகரிப்பதால் இமை மூடிக் கொள்ளுதல்; eye-lids adhering together from excessive purulence. (சா.அக.);.

     [இமை + ஒட்டி + கொள்ளல்.]

இமையோரம்

 இமையோரம் imaiyōram, பெ. (n.)

   மயிர் முளைத்திருக்கும் கண்ணிமையின் நுனி; edge or the margin of the eye-lids – Tarsus (சா.அக.);.

     [இமை + ஒரம்.]

இமையோர்

இமையோர் imaiyōr, பெ. (n.)

இமையவர் (தொல். பொருள். 248); பார்க்க;see imaiyavar. (செ.அக.);.

     [இமை → இமையோர்.]

இம்பரர்

இம்பரர் imbarar, பெ. (n.)

   இவ்வுலகத்தவர்; beings of this world.

     “இம்பர ரேக்குறு மினிய புத்தமுது” (திருவாட்போக்கிப். இந்திரன் சாப.6.); (செ.அக.);.

     [இ → இம்பர் → இம்பரர்.]

இம்பர்

இம்பர் imbar, பெ. (n.)

   1. இவ்வுலகம்; this material world.

     “உம்பரு மிம்பரு முய்ய” (திருவாச.9.17);. – கு.வி.எ. (adv.);

.

   2. இவ்விடத்து; here, in this place.”இம்பரிவ்வுலக மொப்பாய்க்கு” (சீவக.1737);.

   3. பின்; next, after.

     “நெட்டெழுத்திம்பர்” (தொல்.எழுத்.41);. (செ.அக.);.

     [இம் → இம்பு → இம்பர். (முதா.323); இ → இம்பர்.]

இம்பல்

 இம்பல் imbal, பெ. (n.)

   பலகைச் சுருக்கத்தால் தோன்றும் இடைவெளி (இ.வ.);; silt caused by the shrinking of wood, as in a door.

     [இம்பு → இம்பல்.]

இம்பி

 இம்பி imbi, பெ. (n.)

   கருந்தினை (மூ.அ.); பார்க்க; black Italian millet (செ.அக.);.

     [இரும்பி → இம்பி.]

இம்பிகம்

 இம்பிகம் imbigam, பெ. (n.)

   மிளகு; black pepper. (சா.அக.);.

     [மிரியல் → இரியல் → இம்பு → இம்பிகம்.]

இம்பிடி

 இம்பிடி imbiḍi, பெ.எ. (adj.)

   சிறிய குறைந்த, கொஞ்சம்; small, little (சேரநா.);.

     [இம் + பிடி.]

இம்பில்

இம்பில் imbil, பெ. (n.)

   பண்டைக்காலத்து விளையாட்டு வகை (பாடுது.109);; ancient game with music. (செ.அக.);.

     [இம் → இம்பு → இம்பில்.]

இம்புசி

 இம்புசி imbusi, பெ. (n.)

   கடலழிஞ்சில்; a kind of alangium tree.

     [இம் → இம்பு → இம்புலி.]

இம்புராவேர்

 இம்புராவேர் imburāvēr, பெ. (n.)

   சாயவேர் (இ.வ.);; root used for dying scarlet (செ.அக.);.

     [இம்பு → இம்புரி → இம்புரா + வேர்.]

இம்பூறற் சக்களத்தி

 இம்பூறற் சக்களத்தி imbūṟaṟcakkaḷatti, பெ. (n.)

   சாயவேர் போன்ற ஒருவகைப் பூண்டு (M.M);; foot which resembles imbural. (செ.அக.);.

     [இம்பூரி → இம்பூரல் → இம்பூறல் + சக்களத்தி.]

இம்பூறல்

 இம்பூறல் imbūṟal, பெ. (n.)

   சாயவேர் (வின்); பார்க்க; root, used for dying scarlet (செ.அக.);.

     [இம்புரி → இம்பூரல் → இம்பூறல்.]

     [P]

இம்மடி

 இம்மடி immaḍi, பெ. (n.)

   யானை; elephant (சா.அக.);.

     [இரு + மடி = இம்மடி.]

இம்மட்டும்

 இம்மட்டும் immaṭṭum, கு.வி.எ. (adv.)

   இது வரையும்; thus far, until now. (செ.அக.);.

ம. இம்மட்டு (இவ்வாறு);.

     [இ → மட்டும்.]

இம்மாகுளம்

 இம்மாகுளம் immākuḷam, பெ. (n.)

   திருப்பத்தூர் வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Tiruppattur Taluk.

     [ஒருகா.இம்மான்+குளம்]

இம்மி

இம்மி1 immi, பெ. (n.)

   மத்தங்காய்ப் புல்லரிசி; grain of red little millet

     “இம்மியன நுண்பொருள்களீட்டி” (சீவக.495);.

   2. அணு (வின்.);; atom minute particle.

   3. ஒரு சிற்றெண் (சீவக.495, உரை);; smallest fraction = the 1,075. 200-th part of a unit.

   4. ஒரு சிறு நிறை (சீவக.3027);; small weight.

ம. இம்மி.

     [இல் → இம் → இம்மி (த.வ.145);.]

 இம்மி2 immi, பெ. (n.)

   1. பொய்மை (அக.நி.);.

   2. புலன்; sense. (செ.அக.);.

     [இ → இம் → இம்மி.]

இம்மிக்கணக்கு

 இம்மிக்கணக்கு immikkaṇakku, பெ. (n.)

   கீழ்யிலக்கக் கணக்கு; general term to indicate to computation of very small fractions. (செ.அக.);.

     [இம்மி + கணக்கு.]

இம்மிணி

இம்மிணி immiṇi, பெ. (n.)

   1. மிகச்சிறிய;   மிக குறைவு; a little, very little quantity. (சேரநா.);.

   2. மிகுதி; much.

     [இம் → இம்மி → இம்மிணி.]

இம்மெனல்

இம்மெனல் immeṉal, பெ. (n.)

   1. விரைவுக்குறிப்பு; onom. expr. of hurry, celerity, haste.

     “ஏறுடை முதல்வன மைந்த னிம்மென வங்கட் சென்றான்” (கந்தபு.சூரபதி மன்வதை.245);.

   2. ஒர் ஒலிக்குறிப்பு; onom. expr. humming, rustling, pattering

     “இம்மெனப் பெய் வெழிலி முழங்குந் திசையெல்லாம்” (நாலடி.392); (செ.அக.);.

     [இம் + எனல்.]

இம்மென்கீரனார்

 இம்மென்கீரனார் immeṉāraṉār, பெ. (n.)

   கடைக்கப் புலவர்; a Sangam poet.

இம்மை

இம்மை immai, பெ. (n.)

   இப்பிறப்பு; present birth present state, this life dist fr. மறுமை,

     “இம்மைக்கு மேழேழ் பிறவிக்கும் பற்றாவான்” (திவ்.நாச்.6.8);

     “இம்மைச் செய்தது மறுமைக் காமெனும்” (புறநா. 134-1); (செ.அக.);.

     [இம் → இம்மை. (க.வி.17);.]

இய-த்தல்

இய-த்தல் iyattal,    3 செ.குன்றாவி. (v.t.)

   கடத்தல்; to pass beyond, excel, transcend.

     “உணர்ந்துரு வியந்தவிந் நிலைமை” (திவ்.திருவாய். 1.3.6); (செ.அக.);.

உ-உய்-இய்-இய. இயத்தல் = செல்லுதல், கடத்தல் இய என்னும் வினைச்சொல் யா → யாத்திரை. இந்தி, ஜா → ஜாத்திரை, என இந்தியிலும், பிற மொழிகளிலும், ஏ → ஏகு, எனப் பிற்காலத் தமிழிலும் மருவியது.]

இயக்க சத்துவம்

இயக்க சத்துவம் iyakkasattuvam, பெ. (n.)

பத்து மெய்ப்பாடுகளுள் (சத்துவங்களுள்); இயக்கசாதிப் பெண்ணின் சத்துவம் (கொக்கோ.4); (செ.அக.);.

 natural disposition of a woman classed under the yaksa type.

     [இயக்கர் + சத்துவம்.]

இயக்க நரம்பு

 இயக்க நரம்பு iyakkanarambu, பெ. (n.)

   அசைவுறும் நரம்பு; nerve whose function is motion, vasomolor nerves (சா.அக.);.

     [இயக்கம் + நரம்பு.]

இயக்கன்

இயக்கன்1 iyakkaṉ, பெ. (n.)

   1. இயக்ககணத்தான் (கம்பரா.தாடகை.26);; yaksa.

   2. குபேரன் (திவா.);; Kuběra, king of the yaksas (செ.அக.);.

     [இயம் → இயக்கன்.]

 இயக்கன்2 iyakkaṉ, பெ. (n.)

   தலைமையாக நின்று நடத்துபவன் (கலித்.95.உரை);; leader.

     [இய → இயக்கு → இயக்கன். இயக்குதல், முன்னின்று நடத்துதல்.]

இயக்கமாதர்

 இயக்கமாதர் iyakkamātar, பெ. (n.)

   தேவ கன்னியர்; celestial damsels. (ஆ.அக.);.

     [இயக்கர் + மாதர்.]

இயக்கம்

இயக்கம்1 iyakkam, பெ. (n.)

   1. நடமாட்டம்.

     “நாணகத் தில்லார் இயக்கம்” (குறள். 1020);;

 motion moving, about as showing signs of life, activity.

   2. அசைவுக் குறிப்பு; expression as of the eyes”கண்ணிணையியக்கம்” (மணி.25-8);.

   3. வழி; way-path.

     “ஏறிநீ ரடைகரை யியக்கந் தன்னில் (சிலப்.10.90);.

   4. இசைப்பாட்டு வகை, குழலிசைத்தல்; musical composition of four different kinds, viz.,

முதனடை, வாரம், கூடை, திரள்.

   5. இசை, நடப்பு; pitch of three kinds. viz, powerful, weak and mean

மெலிவு, சமன், வலிவு என்னும் மூவகையியக்கம்,

     “மூவகையியக்கமு முறையு ளிக் கழிப்பி” (சிலப்.842);.

   6. நன்மை, மேன்மை, பெருமை (திவா.);; greatness, goodness, excellence

   7. ஒளி; shine, splendour.

   8. வாழ்வு; livelihood.

   9. மரபு, பழக்கம்; custom, manner.

   ம. இயக்கம்;   க. எசக;   தெ. எசகமு (மகிழ்வு);;து. எத்து. எச்சு.

     [இய → இயக்கம்.]

     ‘இய்’ என்னும் தமிழ் வினை ஆரிய மொழிகளில் ‘இ’ என்று குறுகி வழங்குகிறது. GK imen, 1 imus, iter, slav idu =

 go, ili – to go Goth iddja = 1 went இ(இ.வே;

   அ.வே); = செல்;   இத் = செல்கை. இத்த = போய், இத்தம் = வழி (ச.பி.); இயங்கு = இக் (ikh); = இயங்கு, செல்;இயங்கு – இங்க் (inkh); = இயங்கு, செல், இயங்கு – இங் (இ.வே.ing); – இயங்கு. செல், ஏ(இ.வே.); – ஏகு, நெருங்கு, அடை, ஏத்த = சென்று. அடைந்து (இ.வே.); ஏ → யா.(இ.வே.); = செல், யாத்த = போய்(இ.வே.); யாத்ரி(இ.வே.); = செலவு வழிப்போக்கு.

இ(இய்);ஏ(ஏகு); என்னும் இருவினைகளையும். வேதமொழியில் செல்லுதல் சென்றடைதல், அடைதல், பெறுதல் என்னும் பொருள்களில் ஆண்டிருக்கின்றனர். இப்பொருள்களில் அவை ‘எய்து’ என்னும் வினையை ஒத்திருக்கின்றன. எய்துதல் = சென்றடைதல், அடைதல், பெறுதல். இய் – எய் – எய்து. செல்லுதல் என்னும் பொருளில் வேத மொழியில் வழங்கும் ‘கம்’ (gam); என்னுஞ் சொல், தியூத்தானியத்திலுள்ள gamo (E.go); என்னும் சொல்லைப் பெரிதும் ஒத்திருத்தல் காண்க.

செலவு என்று பொருள்படும் கம (gama);, கமன (gamana); முதலிய சொற்களில் ‘கம்’ என்பது முதனிலையாயிருப்பினும், கத (போய்);. கதி(போக்கு); முதலிய சொற்களில் ‘க’ (ga); என்பதே முதனிலையாயிருப்பது கவனிக்கத்தக்கது. மேலும் ‘gan’ என்பது ‘gam’ என்று திரிதலும் இயல்பே. (வ.மொ.வ 16.17);.

 இயக்கம்2 iyakkam, பெ. (n.)

   வடதிசை (வின்.);; north quarter, which is the abode of the yaksas. (செ.அக.);.

     [இய → இயக்கம்.]

 இயக்கம்3 iyakkam, பெ. (n.)

   1. கிளர்ச்சி; movement agitation.

   2. செயல், அமைப்பு, விளம்பரம்; activity, enterprise.

   3. கூட்டுறவு இயக்கம்; co-operative movement (செ.அக.);.

ம. இயக்கம்.

     [இயங்கு → இயக்கம்.]

இயக்கர்

இயக்கர் iyakkar, பெ. (n.)

பதினெண்கணத்துளொரு கணத்தார் (கம்பரா.தாடகை.26);

 yaksas a class of celestials, one of padinen – kanam (செ.அக.);.

ம. இயக்கன்.

இயக்கர் கோமான்

 இயக்கர் கோமான் iyakkarāmāṉ, பெ. (n.)

   குபேரன் (சூடா.);; kubéra, king of the yaksas (செ.அக.);.

 Skt. Yaksa,

     [இயக்கர் + கோமான். கோமகள் → கோமான் + அரசன்.]

இயக்கர் வேந்தன்

 இயக்கர் வேந்தன் iyakkarvēndaṉ, பெ. (n.)

இயக்கர் கோமான் (பிங்.);;see iyakkar-koman. (செ.அக.);.

     [இயக்கர் + வேந்தன்.]

இயக்கல்

 இயக்கல் iyakkal, பெ. (n.)

   மின்னல்; lightning (ஆ.அக.);.

     [இயங்கு → இயக்கு → இயக்கல்.]

இயக்கி

இயக்கி iyakki, பெ. (n.)

   1. இயக்கப்பெண் (சீவக.1219);; female yaksa.

   2. அறத்தெய்வம் (பிங்.);; goddess of virtue. (செ.அக.);.

இயக்கி → Skt yaksi.

     [இயக்கு → இயக்கி, இயக்கி → Skt. yaksi.]

இயக்கி காசு

 இயக்கி காசு iyakkikācu, பெ. (n.)

   இயக்கியின் உருவம் பொறித்த ஒரு பழைய நாணயம் (சேரநா.);; old coin bearing the figure of a yaksi.

     [இயக்கி + காசு.]

இயக்கினி

 இயக்கினி iyakkiṉi, பெ. (n.)

   கண்டங்கத்திரி (மலை.); பார்க்க; prickly plant.

     [இயக்கு → இயக்கி → இயக்கினி. இனி – பெண்பாலீறு. ஒ.நோ. நல்லி → நல்லினி.]

இயக்கு

இயக்கு iyakku, பெ. (n.)

     “மண்டிலம்” என்பதைக் (குறிக்கும் வேறு பெயர்;

 an another name of mandilam.

     [இய-இயக்கு]

 இயக்கு1 iyakkudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. செலுத்துதல்; to drive, cause to go.

     “தோணியியக்குவான்” (நாலடி.136);.

   2. தொழிற்படுத்துதல்; to activate and influence the movements of, as God prompts, all living beings.

   3. பழக்குதல்; to train or break in, as a bull or a horse.

     ‘காளையை இயக்குகிறது’ (வின்.);

   4. ஒலிப்பித்தல்; to cause, to sound.

     “கோடுவாய் வைத்துக் கொடுமணி யியக்கி” (திருமுருகு.246);.

   5. நடத்துதல்; to conduct

     “இயக்கக் கடவனாகவும்” (S.I.I.I.79); (செ.அக.);.

ம. இயக்குக.

     [இய → இயங்கு → இயக்கு.]

 இயக்கு2 iyakku, பெ. (n.)

   போக்கு; motion, as of a stream, flowing, going, marching,

     “நீரியக்கென்ன நிரை செல னெடுந்தேர்” (மலைபடு.571); (செ.அக.);.

     [இயங்கு → இயக்கு.]

இயக்குநர்

 இயக்குநர் iyakkunar, பெ. (n.)

   இயக்குபவர், தலைவர்; director, leader.

     [இயக்கு → இயக்குநர்.]

இயங்கன்

 இயங்கன் iyaṅkaṉ, பெ. (n.)

   அனைத்து வகை ஆட்டத்திற்கும் அடிப்படை நிலையாக அமைவது; common base for all games.

     [இயங்கு-இயங்கன்]

இயங்கல்

இயங்கல் iyaṅgal, பெ. (n.)

   1. நடத்தல்; walking.

   2. உயிர்த்தல்; breathing, respiring (சா.அக.);.

     [இயங்கு → இயங்கல்.]

இயங்கியற்பொருள்

இயங்கியற்பொருள் iyaṅgiyaṟporuḷ, பெ. (n.)

   நகரும், இடம் பெயரும் பொருள் (நன்.259.விருத்);; living, animate and mobile beings (செ.அக.);.

     [இயங்கு + இயற்பொருள். இயங்குகின்ற அல்லது அசைகின்ற உயிர்த்திரள்கள்.]

இயங்கியோர்

இயங்கியோர் iyaṅgiyōr,    வி.அ.பெ. (vpl.n.) சென்றோர்; onward mover.

     “பெருவரை அத்தம் இயங்கியோ ரே” (அகநா.359);.

     [இயங்கு + ஆர் = இயங்கியார் → இயங்கியோர். ஆர் → ஓர் (திரிபு.);.]

இயங்கு

இயங்கு1 iyaṅgudal,    15 செ.கு.வி. (v.i.)

   1. அசைதல்; to move. Stir.

   2. போதல் (திவா.);; to go, travel, proceed.

   3. உலாவுதல் (பிங்..);; to walk about. Promenade. (செ.அக.);.

ம. இயங்ஙக.

     [இய → இயங்கு.]

 இயங்கு2 iyaṅgudal,    15 செ.கு.வி. (v.i.)

   ஒளி செய்தல் (நாநார்த்த.);; to shine, glitter. (செ.அக.);.

     [ஒருகா. வயங்கு → வியங்கு → இயங்கு.]

 இயங்கு3 iyaṅgu, பெ. (n.)

   செல்லுகை; movement act of going

     “இயங்கிடையறுத்த கங்குல்” (சீவக.1360); (செ.அக.);.

     [இய → இயங்கு.]

இயங்குதி

இயங்குதி iyaṅgudi,    செ.கு.வி.மு. (v.i.fin) செல்கின்றாய் (அகாந.12.3); you go, move (2nd person, sing finite verb).

     [இயங்கு + தி.]

இயங்குதிசை

 இயங்குதிசை iyaṅgudisai, பெ. (n.)

   மூச்சுக்காற்று இயங்கும் மூக்குத்துளை (வின்.);; nostril through which the breathing passes. (செ.அக.);.

     [இயங்கு + திசை.]

இயங்குதிணை

இயங்குதிணை iyaṅgudiṇai, பெ. (n.)

   அசையும் பொருள் (நன்.299.விருத்.);; class of things that move. opp. to நிலைத் திணை. (செ.அக.);.

     [இய → இயங்கு + திணை.]

இயங்குபடையரவம்

இயங்குபடையரவம் iyaṅgubaḍaiyaravam, பெ. (n.)

   பகையரணை முற்றுதற்கெழுந்த படையின் செல வால் உண்டாம் ஆரவாரத்தைக் கூறும் புறத்துறை (தொல்.பொருள்.63);; literary theme describing the uproar caused by the march of a besieging army. (செ.அக.);.

     [இயங்கு + படை + அரவம்.]

இயங்கெயில்

இயங்கெயில் iyaṅgeyil, பெ. (n.)

   முப்புரம்; legendary three forts.

     “இயங்கெயி லெய்யப் பிறந்த எரிபோல” (கலித்.150-2);.

     [இயங்கு + எயில்.]

இயங்கொலி

இயங்கொலி iyaṅgoli, பெ. (n.)

   பரவுகின்ற ஒலி; vibrating sound.

     “இயங்கொலி நெடுந்திண்தேர் கடவுமதி விரைந்தே” (கலித்.135-20);.

     [இயங்கு + ஒலி.]

இயத்து

இயத்து iyattu, பெ. (n.)

   இயற்று2 (யாழ்ப்.); பார்க்க; implement, utensil (செ.அக.);.

     [இயற்று → இயத்து (கொ.வ.);.]

இயந்தா

இயந்தா iyandā, பெ. (n.)

   1. யானைப்பாகன்; mahout.

   2. தேரோட்டி; to driver of chariots, etc. (செ.அக.);.

     [இய = செல், நட, நடத்து. இய → இயந்தன் → இயந்தா.]

இயந்திரமயில்

 இயந்திரமயில் iyandiramayil, பெ. (n.)

   மயிற்பொறி (வின்.);; legendar