செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை வெளியீடு
31 தொகுதி 12000 பக்கங்கள் கொண்ட பேரகரமுதலி


1

10838

2769

3111

538

3554

677

1093

620

189

1004

402

2
க்
1

8212
கா
2579
கி
564
கீ
222
கு
4598
கூ
780
கெ
615
கே
391
கை
1101
கொ
2417
கோ
1754
கௌ
110
ங்
1

2
ஙா
2
ஙி
1
ஙீ
1
ஙு
1
ஙூ
1
ஙெ
1
ஙே
1
ஙை
1
ஙொ
5
ஙோ
1
ஙௌ
1
ச்
1

5235
சா
1186
சி
2424
சீ
439
சு
1261
சூ
420
செ
1529
சே
470
சை
23
சொ
409
சோ
365
சௌ
1
ஞ்
1

15
ஞா
44
ஞி
3
ஞீ ஞு ஞூ ஞெ
34
ஞே
5
ஞை
2
ஞொ
3
ஞோ
2
ஞௌ
1
ட்
1

1
டா
1
டி
1
டீ
1
டு
1
டூ
1
டெ
2
டே
1
டை
1
டொ
1
டோ
1
டௌ
ண்
1

1
ணா
1
ணி
1
ணீ ணு
1
ணூ
1
ணெ
2
ணே
1
ணை
1
ணொ
1
ணோ
1
ணௌ
த்
3113
தா
1530
தி
2203
தீ
393
து
1238
தூ
411
தெ
694
தே
856
தை
39
தொ
878
தோ
459
தௌ
ந்
1

2789
நா
204
நி
1860
நீ
1161
நு
14
நூ
18
நெ
892
நே
318
நை
89
நொ
210
நோ
159
நௌ
2
ப்
1

4560
பா
1824
பி
492
பீ
25
பு
2224
பூ
1133
பெ
1064
பே
483
பை
127
பொ
1218
போ
478
பௌ
2
ம்
4760
மா
1422
மி
535
மீ
268
மு
3016
மூ
949
மெ
396
மே
751
மை
152
மொ
284
மோ
242
மௌ
ய்
1

119
யா
426
யி
1
யீ
1
யு
46
யூ
20
யெ
9
யே
1
யை
1
யொ
1
யோ
98
யௌ
1
ர்
87
ரா
107
ரி
11
ரீ
7
ரு
24
ரூ
20
ரெ
6
ரே
16
ரை
10
ரொ
8
ரோ
23
ரௌ
ல்
117
லா
44
லி
8
லீ
5
லு
8
லூ
3
லெ
13
லே
21
லை லொ
20
லோ
63
லௌ
3
வ்
1

3800
வா
1329
வி
1638
வீ
515
வு
1
வூ
1
வெ
2164
வே
834
வை
229
வொ
1
வோ
3
வௌ
ழ்
1

1
ழா
1
ழி
1
ழீ
1
ழு
6
ழூ
1
ழெ
1
ழே ழை ழொ ழோ
1
ழௌ
ள்
1

2
ளா
1
ளி
1
ளீ
1
ளு
1
ளூ
1
ளெ
2
ளே
1
ளை
1
ளொ
1
ளோ
1
ளௌ
ற்
1

1
றா
1
றி
1
றீ
1
று
1
றூ
1
றெ
2
றே
1
றை
1
றொ
1
றோ
1
றௌ
ன்
1

1
னா
1
னி
1
னீ
1
னு
1
னூ
1
னெ
2
னே
1
னை னொ
1
னோ
1
னௌ
தலைசொல் பொருள்

ஆ1ā,    1. அகரத்தின் நெடில், தமிழ்நெடுங் கணக்கின் இரண்டாம் உயிரெழுத்து ; second letter of the Tamil alphabet, long vowel, lengthened form of ‘a’.

   2. அவ்வொலியைக் குறிக்கும் வரிவடிவு ; written character representing that sound.

இற்றை மொழியியலார் இதைப் பிறப்பிடம் நோக்கி நடுவக்குவியாத் தாழ்நெடில் (central, unrounded low long vowel, என்பர்.

     “அஆ ஆயிரண் டங்காந் தியலும்” (தொல். எழுத்து. பிறப்.3);

இந்நெட்டுயிரின் அடையாளமாகிய கால் ‘ ‘ வரிவடிவு குறில் உயிர்மெய்களுடன் இணைக்கப்படுகிறது.

 ஆ2ā, கு.பெ.எ. (adj)

   சேய்மைச் சுட்டு ; demons. letter or pronominal adj. pointing to what is remote, that, those.

     “ஆயிடை வருதல் இகார ரகாரம்” (தொல். எழுத்து, 463);

     “வடவேங்கடம்தென்குமரி ஆயிடை” (தொல் பாயி);

ம., க., தெ., து., பட., கச. ஆ

குறிப்பு :- ‘ஆ’ என்னும் நெடிலே இயற்கைச் சேய்மைச்சுட்டு. அதன் குறுக்கமே ‘அ’.

நெடில் வடிவம் இன்று தெலுங்கு. கன்னடம், மலையாளம் முதலிய திரவிட மொழிகளில் வழங்கிவரினும், தமிழுலக வழக்கில் வழக்கற்றுப் போயிற்று.

     “உடன்பிறந்தார் சுற்றத்தார்” என்னும் மூதுரைப் பாட்டில்,

     “அம்மருந்து’ என்பது

     “ஆமருந்து” என்றிருத்தல் வேண்டும்.

மலையாளம் பழஞ்சேர நாட்டு மொழியாதலால், அதில் வழங்கும் நெடிற்சுட்டு வழக்கைச் சேரநாட்டுத் தமிழ் என்றுங் கொள்ளலாம்.

கண்டறிசுட்டு, பண்டறிசுட்டு, உலகறிசுட்டு, உய்த்துணர் சுட்டு என்னும் நால்வகைச் சேய்மைச் சுட்டுகளுள், முதல் இரண்டாகவே நெடுஞ்சுட்டு இன்று வழங்கும்.

அகரச்சுட்டு பார்க்க ;see agara-c-cuttu,

 ஆ3ā,    இடை. (part) விளியீறு ; vocative ending.

அண்ணா, ஐயா.

     ‘அன்’ ஈற்றுப்பெயர் ஈறுகெட்டு அயல் நீண்டும் நீளாதும் அண்மை விளியாம். எ-டு : ஐய, ஐயா, அண்ண, அண்ணா.

ம., து. ஆ

ஈற்றயல் நீள்வதே இக்காலப் பெருவழக்கு. சேய்மை விளியாயின், அளபெடுத்தல் இன்றியமையாதது.

எ-டு : அண்ணா.அ. ஐயாஅ.அ.

அகர ஈறு கெடாது நீண்டு விளியாவது தெலுங்கியல்பு.

எ-டு : பிட்ட (bidda); – பிட்டா (biddä);

பிட்டலு என்னும் பன்மைப் பெயர், பிட்டலாரா என்று விளியேற்கும்.

   இங்ஙனம் தெலுங்கில் ஆகாரம் வருமிடத்துத் தமிழில் ஏகாரம் வரும், அல்ல ஈற்றயல் நீளும். எ-டு : மகள் – மகளே : மக்கள் – மக்காள், மக்களே ;   பிள்ளை – பிள்ளாய், பிள்ளையே ;பிள்ளைகள் – பிள்ளைகாள், பிள்ளைகளே.

 ஆ4ā, பெ. (n.)

   ஏழிசையுள் முதலான குரலின் பழைய குறி ; old symbol representing the first note of the gamut.

     “ஆ ஈ, ஊ ஏ ஐ ஒ ஒள எனும்

இவ்வேழெழுத்தும் ஏழிசைக் குரிய”. (திவா.);

 ஆ5ā, இடை (int.)

பல்வகைக் குறிப்பு :

   1. இரக்கக் குறிப்பு ; Ah! exclamation expressing pity, regret

     “ஆவம்மா வம்மா வென்னம்மா வகன்றனையே” (சீவக. 1804);.

   2. துயரக்குறிப்பு ; exclamation expressing grief. ஆ! ஆற்றேன் (உ.வ.);

   3. வியப்புக் குறிப்பு ; Ah! exclamation expressing wonder, admiration.

     “ஆகற்றவா கடவானிச் சுனைப்புனமே” (திருக்கோ.60);.

   4. இகழ்ச்சிக் குறிப்பு ; exclamation expressive of contempt. ஆ! மிக நன்றாயிருக்கிறது. (உ.வ..);

   5. நோவுக் குறிப்பு ; exclamation expressing unbearable pain. ஆ!வலிக்கிறது. (உ.வ.);

   6. புழுக்கக் குறிப்பு ; interjection expressing sultriness. ஆ! வெந்தேன். (உ.வ.);

   7. நினைவுக் குறிப்பு ; exclamation expressing recollection. ஆ! மறந்தேன் (உ.வ); ஆ! அந்த நாள் ஒரு பொன் நாள்! (உ.வ.); ;

ஆ அந்நாள் இனி வருமோ? (உ.வ.);

ம., க., தெ., து., பட., கச. ஆ

 E. ha, hah.

 ஆ7ā, இடை. (part.)

   ஈற்று வினாவிடைச் சொல் ; inter term. அவன் வந்தானா? (உ.வ.);.

தெ., க., து., பட. ஆ

 ஆ7ā, இடை. (part.)

பல்வேறு எதிர்மறையிடை நிலை :

   1. எதிர்மறை வினைப்பெயரிடை நிலை ; sign of neg vbl. n செய்யாமை.

   2. எதிர்மறைப் பெயரெச்ச இடைநிலை ; a sign of neg, rel, part. செய்யாத வேலை.

   3. எதிர்மறை வினையெச்ச இடைநிலை ; sign of neg, vbl. part. செய்யாது போனான், செய்யாமைப் போனான், செய்யாமே போனான், செய்யாமற் போனான்.

ம., க., தெ., ஆ

     [அரு → அருமை → ஆமை அரு = அரிது (ம. அருது);. அரியது. முடியாது. கூடாது, தகாது. இக் குறிப்பு வினைமுற்று. முற்றெச்சமாகி வினையெச்சமாகவும் அகரவீறு சேர்ந்து பெயரெச்சமாகவும் வழங்கும். கூடாமைக் கருத்தில் வினை செய்யாமைக் கருத்துத் தோன்றும்

     ‘ஆ’ என்னும் எதிர்மறையிடைநிலை வந்த வகை

உடன்பாட்டுவடிவில் ஆற்றலை (potency); அல்லது இயல்பை (possibility); யுணர்த்தும் துணைவினைகள், எதிர்மறைவடிவிற் பெரும்பாலும் விலக்கை (prohibition); அல்லது மறுப்பை (refusal); உணர்த்துகின்றன.

எ-டு :

உடன்பாட்டுவினை எதிர்மறைவினை

நீ இதைச் செய்யக்கூடும். நீ இதைச் செய்யக்கூடாது

யாரும் அங்குப் போகப்படும். யாரும் அங்குப் போகப்படாது.

நான் வரமுடியும். நான் வரமுடியாது.

அவன் எழுத மாட்டுவான். அவன் எழுத மாட்டான்.

அருமை என்னும் பண்புப்பெயர், முறையே சிற்றளவு, மதிப்புயர்வு, விரும்பற்பாடுமிகை, கிடையாமை, இயலாமை ஆகிய பொருள்களையுணர்த்தும். அதன் அடிப்பிறந்த அரிது என்னும் குறிப்பு வினைமுற்று, உடன்பாட்டு வடிவிலிருப்பினும், இயலாமையை யுணர்த்தும்போது எதிர்மறைப் பொருள் கொண்டு, எதிர்மறை வினை போலாவதால், மேற்குறித்த ‘கூடாது’, ‘படாது’ என்னும் துணைவினைகள் போன்றே விலக்கு வினையாகி விடுகின்றன.

எ-டு :

நீ மழையத்துப் போகரிது. நீ மழையிற் போகக்கூடாது.

நீ வெயிலத்துப் போகரிது. நீ வெயிலிற் போகக்கூடாது.

     ‘அரிது’ என்பது கொச்சை வழக்கில் ‘அருது’ என்று திரியும். ஆதலால், ‘போகரிது’ என்னும் பண்டைச் சேரநாட்டு வழக்கு இன்று மலையாளத்தில் ‘போகருது’ என்று வழங்குகின்றது.

     “பனியென வரூஉம் கால வேற்றுமைக்(கு);

அத்தும் இன்னும் சாரியை யாகும்” (தொல் எழுத்து. 241);

     “வளியென வரூஉம் பூதக் கிளவியும்

அவ்வியல் நிலையல் செவ்வி தென்ப”. (தொல் எழுத்து 242);

     “மழையென் கிளவி வளியியல் நிலையும்” (தொல் எழுத்து. 287);

     “வெயிலென் கிளவி மழையியல் நிலையும்” (தொல் எழுத்து. 377);

இவை சேரநாட்டுத் தமிழுக்கு மட்டுமன்றி, முந்நாட்டுத் தமிழுக்கும் பொதுவாகச் சொல்லப்பட்டவை. ஆதலால், பனியத்துக் கொண்டான். வளியத்துக் கொண்டான், மழையத்துக் கொண்டான். வெயிலத்துக் கொண்டான் என்று நச்சினார்க்கினியர் எடுத்துக்காட்டிய அத்துச் சாரியை வழக்கு இன்று இறந்துபட்டதென்றே கொள்க

அருமை என்னும் சொல் மையீறு பெற்ற பண்புப் பெயராதலால், அரு என்னும் முதனிலையே இயல்பான சொல்லாகும். அரிது என்பது அதனின்று திரிந்த (படர்க்கை); ஒன்றன்பாற் பெயர் அல்லது குறிப்பு வினைமுற்றே. அதன் மூவிட ஐம்பால் வடிவங்களும் வருமாறு :-

தன்மை – ஒருமை : அரியேன்

பன்மை : அரியேம், அரியோம்

முன்னிலை – ஒருமை : அரியை, அரியாய்

பன்மை : அரியீம், அரியீர்

படர்க்கை – ஆண்பால் : அரியன், அரியான்

பெண்பால் : அரியள், அரியாள்

பலர்பால் : அரியர், அரியார்

ஒன்றன்பால் : அரியது, அரிது

பலவின்பால் : அரியன, அரியவை, அரிய

ஒ.நோ : பண்புப் பெயர் : பெருமை

முதனிலை : பெரு

தன்மை – ஒருமை : பெரியேன்

பன்மை : பெரியேம், பெரியோம்

முன்னிலை – ஒருமை : பெரியை, பெரியாய்

பன்மை : பெரியீம், பெரியீர்

படர்க்கை – ஆண்பால் : பெரியன், பெரியான்

பெண்பால் : பெரியள், பெரியாள்

பலர்பால் : பெரியர், பெரியார்

ஒன்றன்பால் : பெரியது, பெரிது

பலவின்பால் : பெரியன, பெரியவை, பெரிய

நன்னூலார், மையீறு பெற்ற பண்புப்பெயரைப் பகாச்சொல்லாகவும் இயற்சொல்லாகவும் கொண்டு,

     ‘ஈறுபோதல்’ என்பதை ஒரு பண்புப்பெயர்த் திரிபாகக் கூறியது தவறாகும்.

ஒ.நோ : ‘white’ என்ற முதனிலையும் ‘ness’ என்ற ஈறும் சேர்ந்தே ‘whiteness’ என்னும் ஆங்கிலப் பண்புப் பெயர் தோன்றும்

     “whiteness” என்ற இயல்பான சொல்லே, ‘ness’ என்னும் ஈறு நீங்கி ‘white’ என்றானது என்று, ஆங்கிலர் எவரும் கொள்ளார். சொல்லார். இங்ஙனமே அருமை பெருமை என்னும் பண்புப் பெயர்களும் என அறிக.

அரு என்னும் முதனிலையினின்று திரிந்த மூவிட ஐம்பாற் குறிப்பு வினைமுற்றுகள், தெரிநிலை வினைகளோடு கூடித் துணைவினைகளாகும்போது பின்வருமாறு அமையும்.

தன்மை – ஒருமை : செய்யரியேன்

பன்மை : செய்யரியேம், செய்யரியோம்

முன்னிலை – ஒருமை : செய்யரியை, செய்யரியாய்

பன்மை : செய்யரியீம், செய்யரியீர்

படர்க்கை – ஆண்பால் : செய்யரியன், செய்யரியான் பெண்பால் : செய்யரியள், செய்யளியாள்

பலர்பால் : செய்யரியர், செய்யரியார்

ஒன்றன்பால் : செய்யரியது. செய்யரிது

பலவின்பால் : செய்யரியன, செய்யரியவை,

செய்யரிய.

இவ்வெதிர்மறை வினைகளினின்றே இற்றை வடிவுகள் பின்வருமாறு திரிந்துள்ளனவாகத் தெரிகின்றது.

   செய்யரியேன் – செய்யேன், செய்யரியேம் – செய்யேம், செய்யரியோம் -செய்யோம், செய்யரியாய் – செய்யாய், செய்யரியீர் – செய்யிர், செய்யரியான் – செய்யான், செய்யரியாள் -செய்யாள், செய்யரியார் – செய்யார், செய்யரிது – செய்யாது, செய்யரிய – செய்யா. இவற்றுள் ஈற்றிரண்டும் திரிதல் ;ஏனைய தொகுத்தல். ஆயினும் படர்க்கை வினைகட்கெல்லாம் ‘ஆ’ பொதுவாயிருத்தலால், அதனையே எதிர்மறையிடை நிலையாகவும் எதிர்மறைப் பலவின்பால் வினை முற்றீறாகவுங் கொண்டனர் போலும்

கால்டுவெலார், எதிர்மறை வினைச்சொற்களிற் காலங்காட்டும் இடைநிலையின்மையால், அது வினை நிகழாமையைக் குறித்து, எதிர்மறை வினைச் சொல் வடிவிற்குத் தோதாயிற்றென்று கருதினார். அது ஒரு வகையிற் பொருத்தமாகத் தோன்றினும், செய்திலன், செய்ததில்லை என இன்மை குறித்துத் துணைவினைகளொடு கூடிக் காலங்காட்டும் எதிர்மறை வினைச் சொற்களும் உண்மையாலும், செய்யவில்லை என்னும் வாய்பாட்டு வினைமுற்றும் செய்யாத

என்னும் பெயரெச்சமும், செய்யாது என்னும் வினையெச்சமுமே முக்காலத்திற்கும் பொதுவாயிருத்தலாலும், செய்யான், செய்யாள் முதலிய ஐம்பால் வினைமுற்றும் பொதுவாக எதிர்காலத்திற்கே யுரியனவாதலாலும், அவர் கூற்று உண்மையானதென்று கொள்ளற்கிடமில்லையென்க

சிறிது, பெரிது முதலிய ஒன்றன்பாற் குறிப்பு வினைமுற்றுகள் ஈரெண் மூவிட ஐம்பாற்கும் பொதுவான முற்றெச்சங்களாய்ப் பயன்படுத்தப்படுவது போன்று, செய்யாது என்னும் எதிர்மறை வினையெச்சமும் ஈரெண் மூவிட ஐம்பால் பொதுவாகப் பயன்படுத்தப்படும்.

எ-டு : செய்யாது வந்தேன், வந்தேம், வந்தாய், வந்தீர், வந்தான், வந்தாள், வந்தார் வந்தது. வந்தன.

     ‘செய்து’ என்னும் உடன்பாட்டு வினையெச்சம் அகரவீறுபெற்றுச் செய்த என்னும் பெயரெச்சமானாற் போன்று, செய்யாது என்னும் எதிர்மறை வினையெச்சமும் அகரவீறு பெற்றுச் செய்யாத என்ற பெயரெச்சமாகும் ;

பின்னர் ஈறு கெடின், ‘செய்யா’ என்று நிற்கும்.

நீ செய்யரிது என்னும் எழுவாய்த் தொடர் செய்யரிது நீ என்று வினைமுற்றுத் தொடராய் மாறுவது போன்றதே செய்யாதீ (செய்யாதே); என்னும் எதிர்மறை யேவலும்,

முன்னிலைப் பெயர்கள், ஏவல் அல்லது முன்னிலை வினைமுற்றீறாகும்போது பின்வருமாறு திரியும்.

ஒருமை : ஊன் → நூன் → நீன் → நீ → ஈ → இ. ஈ → ஏ → ஐ.

பன்மை : ஊம் → நூம் → நீம் ஈம்.

நீ + இர் = நீயிர் (நீவீர்); → நீர் → ஈர். ஊம் → உம்.

எ-டு :

செய்யாது + ஈ = செய்யாதீ → செய்யாதி,

செய்யாதீ → செய்யாதே → செய்யாதை

செய்யாது + ஈம் = செய்யாதீம்.

செய்யாது + ஈர் = செய்யாதீர் → செய்யாதிர்

பன்மையேவலிலும் உயர்வுப்பன்மை யேவலிலும் பல ஈறுகள் கலந்தும் வரும்.

எ-டு : ஏ + -உம் செய்யாதேயும் (ஒத்தோரையேவும் உயர்வுப் பன்மை); ஏ + உம் + கள். பன்மையும்,

செய்யாதேயுங்கள் உயர்ந்தோரை

ஈர் + கள். செய்யாதீர்கள். ஏவும் உயர்வுப் பன்மையும்,

அருமையென்னும் பண்புப்பெயரும் அரிது என்னும் குறிப்பு வினைமுற்றும் இன்மையும் இயலாமையும் உணர்த்துவதனாலும், மாட்டேன், மாட்டாய், மாட்டான் என்னும் எதிர்மறை வினைகள் போன்றே, செய்யேன், செய்யாய், செய்யான் என்னும் எதிர்மறை வினைகளும் இயலாமையையும் விருப்பின்மையையும் உணர்த்துவதனாலும், பகு-பா என இருகுறில் ஒரு நெடிலாக மருவியதுபோல் அரு – ஆ எனத் திரிவதும் இயல்பேயாதலாலும்,

     “எல்லாச் சொல்லும் பொருள்குறித்தனவே” யென்று (தொல்.சொல்.பெய.1); கூறுவதாலும், ‘அரு’ எனினுஞ் சொல்லினின்றே ‘ஆ’ என்னும் எதிர்மறையிடைநிலை தோன்றியுள்ளதாகத் தெரிகின்றது.

 ஆ6ā, இடை. (part.)

   ஒருவகைப்புணர்ச்சிச் சாரியை ; combinational particle occurring in certain reduplication of words. போட்டா போட்டி, வேனா வேனல் (கடும் வேனில்); (உ.வ.);.

 ஆ9ā, இடை. (part.)

பல்வேறு ஈறுகள் :

   1. பலவின் பால் எதிர்மறை வினைமுற்றீறு ; imper, 3rd per. pl. neg.verb-ending.

     “அரவுஞ் சூரும் இரைதேர் முதலையும் உருமுஞ் சார்ந்தவர்க் குறுகண் செய்யா” (சிலப். 13:7-8);.

   2. ஓரிறந்தகால வினையெச்ச (செய்யா என்னும் வாய்பாடு); ஈறு ; past parti, ending.

     “புயன் முகந்து பெய்யாக் கொடுக்கும் பிறர்க்கு” (நன்னெறி, 4);.

   3. ஒரு வினையாகு பெயரீறு ; parti. noun ending. உணா, கனா, நிலா.

   4. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்ச ஈறு ; ending of mutilated neg. rel. parti உண்ணாநோன்பு.

   5. ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்ச ஈறு ; ending of mutilated neg, wbl. parti. சொல்லாப்போனான்.

   6. பெயர்ச்சொல்லின் திரிபீறு ; derivative noun ending. புறா, பலா.

ம., க., தெ., ஆ.

உண்ணாத, சொல்லாத என்ற எச்சங்கள் ஈறுகெட்டு உண்ணா, சொல்லா என்று குறுகியிருப்பதால், அக்குறுக்கங்கள் ‘ஈறு கெட்ட’ என்னும் அடைபெற்றன. ஈறுகெடா நிலையிலுள்ள ஈற்றை இயற்கையீறு என்றும், ஈறுகெட்ட நிலையிலுள்ள ஈற்றைச் செயற்கையீறு என்றும் கொள்க.

 ஆ10ā, இடை. (conj.)

   ஆவது . ஆவது என்னும் தெரிப்புப் பொருளிற் பெயர் தொறுஞ் சேர்ந்து வரும் இடைச்சொல் ; either … or ….

     “தேவரா … அசுரரா வந்து கேட்டிலர்.” (திருவிளை. இந்திரன் பழி. 26);

இப் பொருளில் வரும் ‘ஆ’ வினாவெழுத்தாயிருக்கலாம். ‘தேவரோ அகரரோ’ என்பதும் இப் பொருள்படுதல் காண்க.

 ஆ11ā, பெ. (n.)

பல்வேறு பொருட்பெயர் :

   1. பெற்றம் (மாடு);, எருமை, மரை (மான் வகை); ஆகியவற்றின் பெண் ; female of the ox, the buffalo and the sambar (Indian elk);.

     “பெற்றமும் எருமையும் மரையும் ஆவே.” (தொல். பொருள். மரபு. 61);.

   2. விலங்கின் பெண் பொது ; genetic name for the females of beasts. (சா.அக.);

   3. காளை ; bull.

     “ஆவார் கொடியாய்” (திருவிளை. நரிபரி. 19);.

   4. ஆதன் (ஆன்மா); ; soul.

     “ஆதிருக்கச் சிவம்” (கம்பரந் 39);.

   5. விடை (வைகாசி); ; second month of the Tamil calender year (May – June);

   ம., க. ஆ ;   தெ. ஆவு ;   கோத. ஆவ் ;குரு. ஆ. மா. ஒயு

     [மா → மான் → ஆன், மா → ஆ. மான் → மாடு. குறிஞ்சிநில மாந்தன், பாலுணவின் பொருட்டு முதன்முதலாக வீட்டிற்கட்டி வைத்துப் பழக்கிய விலங்கு மாடே. மா என்று கத்துவது மா. மா, மான் என்பன விலங்கின் பொதுப் பெயரானபின், கறவையையுங் காளையையுங் குறிக்க மாடு என்னும் சொல் தோன்றிற்று. மாட்டின் பெண்பாலைக் குறிக்க ஆன், ஆ என்னும் சொற்கள் தோன்றின. பெற்றமும் எருமையும் மரையும் நெருங்கின விலங்கினங்களாதலால், முதற்கண் அம்மூன்றன் பெண்பாற்கும் வரையறுக்கப்பட்டிருந்த ஆ என்னும் பெயர், பிற்காலத்தில் விலங்கின் பெண்பாற் பொதுப் பெயராயிற்று.

     “ஆவார் கொடியாய்” என்றும்,

     “ஆன்முகத்த னடற்கண நாயகன்” (கந்தபு.பானுகோ. 95); என்றும், ஆ, ஆன் என்பவை ஆண்பாற் பெயராகவும் ஆளப்பட்டதை மரபுவழுவமைதியென்றே கொள்ளல் வேண்டும்.

ஆ என்பது மாட்டின் ஆண்பாற் பெயராகவும் ஆளப்பட்டபின், விடை (இடப); ஒரைக்குரிய மாதமும் ஆ வெனப்பட்டது.

உயிர்கள் எல்லாம் பாசத்தினாற் கட்டப்படுவது பற்றிப்பசுவென்னும் வடநூல் வழக்கு நோக்கி, ஆதனும் (ஆன்மாவும்); ஆ வெனப்பட்டது. இனி ஆவீனைத் தாயாகக் கருதும் பெற்றி நோக்கி அவ்வை → ஆவு → ஆ → ஆன் எனத் திரிந்திருக்கலாம். தெலுங்கில் ‘ஆவு’ என்பதே நிலைத்திருத்தல் நோக்கத்தக்கது.]

 ஆ12ā, பெ. (n.)

   நசை (இச்சை); ; desire, eagerness (சா.அக.);.

     [அவா → ஆ.ஒ.நோ : அவாவு → ஆவு (உ.வ.); ஆவி சேர்த்துக் கட்டுதல் (நெ.வ.); என்னும் வழக்கு நோக்குக.]

 ஆ13ā, பெ. (n.)

   ஆச்சா ; ebony, Diospyros ebenaster (சா.அக.); ;

 hard, heavy durable wood most highly prized when black., from various tropical trees of the genus Diospyros, as D.Ebenum of Southern India and Ceylon used for cabinet work, ornamental objects etc. (Random Dictionary.);

     [இது ஆச்சா என்பதன் குறுக்கம். இது ஆவொடு தொடர்புடையதாயுமிருக்கலாம்.]

 ஆ14ā, பெ. (n.)

   வகை ; way. manner,

     “சிவமான வாபாடி” (திருவாச. 11:4);.

     [ஆறு (வழி, வகை); → ஆ (கடைக்குறை);]

 ஆ15ā, பெ. (n.)

   ஆகுகை ; becoming.

     “இலயித்தவாறுளதா வேண்டும்.” (சி.போ. 1:2);,

     [ஆ (ஆகை); – முதனிலைத் தொழிற்பெயர்.]

 ஆ16ā, பெ. (n.)

   சோறு ; food. rice. ஆ வாங்கிக்கொள் (குழந்தை மொழி.);

 ஆ17ā, பெ. (n.)

   மாமரம் ; mango, tree.

 Hind. am.

     [மா → ஆ.]

 ஆ1ātal,    6 செ.கு.வி. (v.i.)

   1. உண்டாதல் ; to come into existence. அந்த அம்மையார் ஆகியிருக்கிறார். (நெல்லை.);.

   2. நிகழ்தல் ; to happen, occur.

   3. இணக்கமாதல் ; to be agreedable, congenial, on friendly terms. தென்கலையார்க்கும் வடகலையார்க்கும் ஆகாது.

   4. ஒப்பாதல் ; to be like, equal, to resemble.

     “எனக்காவா ராரொருவர்” (திவ். இயற். 1:89);.

   5. அமைதல் ; to be. இதற்கிது பொருளாகும்.

   6. உறவு முறையாதல் ; to be related to, as a blood or marital relation. இந்தத் திருமணத்தால் அவர் உனக்கு என்ன ஆவார் ?

   7. சமைதல் ; to be cooked, as food. சோறு ஆகிறது.

   8. வளர்தல் ; to grow, as a child or crop. அவன் இப்போது ஆளாகிவிட்டான் ;

கரிசற்காட்டிற் கம்பு நன்றாய்ப் பயிராகும்.

   9. ஆக்கம் பெருகுதல் ; to prosper, flourish. ஆகிற குடி அரைக்காசால் ஆகும். (பழ.);

   10. ஒன்று இன்னொன்றாக மாறுதல் ; to become changed into another. ‘நீர்

ஆவியாகும், ஆவி நீராகும், முக்காலும் காகம் முழுகிக் குளித்தாலும் கொக்காகுமா?’ (பழ.); அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாம் (பழ.);.

   11. ஒன்றிற்கு இன்னொன்றை மாற்றுதல் ; to be exchanged. உழவர் தாம் விளைத்த நெல்லில் தம் உணவிற்கு வேண்டிய அளவு எடுத்துக் கொண்டபின் மிச்சமெல்லாம் காசாகும்.

   12. மதிப்புயர்தல் ; to become more valuable. சென்ற இரண்டாம் உலகப் போரில் இரும்பெல்லாம் பொன்னாயிற்று. (உ.வ.);.

   13. செலவாதல் ; to be spent ஒரு வீடு கட்ட எவ்வளவாகும்? நான் இங்கு வந்து மும்மாதம் ஆகிறது (உ.வ.);.

   14. பயன்படுதல் ; to be useful. பலாக்கட்டை வீணைக்காகும் அவன் ஒன்றிற்கும் ஆகான். (உ.வ.);

   15. முடிதல் ; to be done, finished, completed, exhausted. கருமம் ஆகிறவரை கழுதையையுங் காலைப் பிடிக்க வேண்டும் (பழ.);.

   ம., க., தெ., பட. ஆ : குவி. ஆயலி ;கூ. ஆவ.

     [ஆகு → ஆ. ‘ஆகு’ பார்க்க.]

 ஆ2āttal,    4 செ.குன்றாவி. (v.t.)

   1. கட்டுதல் ; to bind

     “ஆத்திருந்தாளை” (சீவக.1882);

   2. அமைத்தல் ; so;

 to cause, to bring about.

     “அடுஞ்சமர மாத்து” (பாரத வெண்.);

     [யா → ஆ. ஒ.நோ : யாக்கை → ஆக்கை.]

ஆஅ

 ஆஅāa, இடை. (int.)

   வியப்பு, இரக்கம், துயரம் ஆகியவற்றின் குறிப்பு ; exclamation expressive of surprise, pity and grief.

     [ஆ → ஆஅ]

ஆஅய்

ஆஅய்āay, பெ. (n.)

ஆய்7 பார்க்க ;see ay7.

     “கழல் தொடி ஆஅய் மழைதவழ் பொதியில்” (புறநா. 128.);

     [ஆய் – ஆஅய்]

ஆஅல்

ஆஅல்āal, பெ. (n.)

   ஆரல் (கார்த்திகை விண்மீன்); (மலைபடு. 100); ; third star in the list of 27 stars.

     [ஆரல் → ஆஅல்]

ஆஆ

 ஆஆāā, இடை. (part.)

ஆவா பார்க்க ;see ava

     [ஆ + ஆ (ஒலிக்குறிப்பு); an onomatopoeic expression.]

ஆஎனல்

 ஆஎனல்āeṉal, இடை. (part.)

ஆவெனல் பார்க்க ;see āvenal.

     [ஆ + எனல்]

ஆக

ஆகāka,    வியங். மு. (opt.v.) வியங்கோள்வினை; v. in the optative mood. தமிழ் வாழ்வதாக, அவன் இங்கு வருவானாக. — நி.கா.வி.எ. (int) ‘ஆகு’ என்னும் வினையின் நிகழ்கால எச்சம்;

 to become. இன்னும் சோறாகவில்லை, கம்பு பயிராக ஆறுமாதஞ் செல்லும் (உ.வ.); – வி.எ. (adv);

   1. அவ்வாறாக; in that fashion or manner.

     “ஆகராகவனை யவ்வழிக் கண்டான்” (கம்பரா. இராவணன்றா. 19);.

   2. மொத்தமாய்; on the whole. amounting to. ஆகத்தொகை ஆயிரத்தைந்நூறு. (உ.வ.);.

   3. முழுதும்; wholly, completely. ஆகமோசம். (இ.வ.);. இ. இடை (conj.); ‘அல்லது … அல்லது’ என்னும் வாய்பாட்டில் தெரிப்புப் பொருள் பற்றிவரும் இடைச்சொல்;

 either … or ‘தெய்வத்

தானாக மக்களானாகத் தனக்கு வந்த துன்பங்களை’ (குறள், 442, பரிமே. உரை); —-

இடை. (part.);

   1. பொருட்டுப் பொருளில் 4ஆம் வேற்றுமையுருபுடன் வருந்துணைச்சொல்; for the sake of for purpose of.

   2. பிறன்மொழிக் கூற்றை அல்லது அறிக்கைக் கூற்றைக் குறிக்கும் இடைச்சொல்; part. indicating indirector ported speech. அவன் நாளை இங்கு வருவதாகச் சொன்னான்.

   3. அமையம் உணர்த்தும் இடைச்சொல்; part. dicating the context or circumstance in which an act takes face.

     “காரெதிர் கானம் பாடினேமாக” (புறநா. 144); – அசை மலை (part.); ஓர் அசைச்சொல்;

 an expletive. ‘அநாதி காலம் பாஸனை பண்ணிப்போந்தவற்றை இப்போதாக விடப்போமோ’ (டு, 12:2 உரை);.

ம. ஆக

     [1. .ஆகு → ஆக (ஆகு+அ);. ‘அ’ வியங்கோள்வினை .முற்று.

   2. ஆகு → ஆக (ஆகு + அ );. ‘அ’ முக்கால வினையெச்ச ஈறு. ‘ஆக’ என்னும் வினையெச்சமே பல்வேறு இடைச்சொல்லாகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இப்போதாக என்பது இப்போது மட்டும் ஒன்று பொருள் படின் அசைச் சொல்லாகாது.]

ஆகக்கடைசி

 ஆகக்கடைசிākakkaḍaisi, பெ. (n.)

   இறுதியில்; at-last;

 at length.

     [ஆக + கடைசி]

ஆகக்கூடி

ஆகக்கூடிākakāṭi, இ.இடை. (adv. Conj.)

   1. மொத்தத்தில்; on the whole. In the total, so that;

ஆகக்கூடி, ஆயிரம் உருபாவிற்கு அடுத்துவிடும்.

   2. ஆகவே; that being the case, therefore. ஆகக்கூடி, நீ அங்குப் போயும் பயனில்லை.

     [ஆகு → ஆக. ‘அ’ முக்.வி.எ.ஈறு. கூடு → கூடி ‘இ’ இ.கா.வி.எ.ஈறு. ‘ஆகக்கூடி’ என்பது கூட்டுச்சொல்.]

ஆகக்கொள்ள

 ஆகக்கொள்ளākakkoḷḷa,    இ.இடை (adv. conj.) ஆகையால்; because. நாளை அவன் வருவானாகக் கொள்ள (W.).

     [ஆகு → ஆக. ‘அ’ முக்.வி.எ.ஈறு. கொள் → கொள்ள. முக். வி.எ. ஈறு. ‘ஆகக்கொள்ள’ என்பது கூட்டுச்சொல்.]

ஆகச்செய்தே

 ஆகச்செய்தேākacceytē, இ.இடை. (adv .conj)

   ஆகவே (ஈடு);; that being the case.

     [ஆகு → ஆக. ‘அ’ முக்.வி.எ.ஈறு. செய் → செய்து இ.கா.வி.எ.); + ஏ (தேற்றப் பொருளிடைச் சொல்);. ஈகார இடைச் சொல் இங்குத் தன் பொருளை இழந்துள்ளது.]

ஆகச்சே

ஆகச்சே1ākaccē,    இ.இடை. (adv. conj) ‘ஆகச் செய்தே’ என்பதன் குறுக்கு வழக்குச் சொல்; corrupted form of ‘agaccyde’

     [ஆகச்செய்தே – ஆகச்சே (கொ.வ.);]

 ஆகச்சே2ākaccē,    வி.எ. (adv.) ‘ஆகையிலே’ என்பதன் கொச்சை வடிவம்; while becoming, being prepared, being cooked. சோறு ஆகச்சே ஊர் அடங்கிவிட்டது. இக்கொச்சை வடிவம் கொள்ளத்தக்கதன்று.

     [ஆகையிலே → ஆகச்சிலே → ஆகச்சே வரச்சே, போகச்சே என இவ்வடிவம் பிற வினைகளுடன் சேர்ந்து வழங்குதல் உண்டு.]

ஆகச்மிகம்

 ஆகச்மிகம்āgacmigam, பெ. (n.)

   எதிர்பாராமல் தோன்றுவது; accidental, unforeseen, unexpected.

     [Skt. äkas-mika → த. ஆகச்மிகம்.]

ஆகடியக்காரன்

 ஆகடியக்காரன்ākaḍiyakkāraṉ, பெ. (n.)

   எள்ளி நகையாடுபவன்; jester

     [ஆகடியம் + காரன்.]

ஆகடியம்

ஆகடியம்ākaḍiyam, பெ. (n.)

   1. நகையாட்டு (பரிகாசம்);; mockery, ridicule, banter. ஆகடியம் பண்ணாதே. (உ.வ.);

   2. பொல்லாங்கு; mischief. cruelty.

     “அஞ்சு பூதமுண்டாகடியக் காரரிவர்” (திருப்பு. 156);.

   க. ஆகட;தெ. ஆகடமு

     [அகடு = பொல்லாங்கு;

 wickedness. தெ..க.அகடு. அகடு → அகடியம் → ஆகடியம்.]

 ஆகடியம்ākaḍiyam, பெ. (n.)

   1. பகடி; mockery, ridicule, banter.

     “ஆகடியம் பண்ணாதே”

   2. பொல்லாங்கு; mischief, cruelty.

     “அஞ்சுபூதமுண்டாகடிய காரரிவர்” (திருப்பு. 156);.

தெ. ஆகடமூ; க. ஆகட.

     [Skt. đgadamu → த. ஆகடியம்.]

ஆகட்டு

ஆகட்டுākaṭṭu, ஏ.வி. (imp.v.)

   1. ஆகவிடு;   2. சரி அப்படியாகுக; all right, let it be, so be it.

ம. ஆகட்டெ

     [ஒட்டுதல் = இசைதல். ஒட்டு → அட்டு (துணைவினை);. (ஆக+ஒட்டு); ஆகவொட்டு → ஆகட்டு (ஏவலொருமை);]

ஆகட்டும்

ஆகட்டும்ākaṭṭum, ஏ.வி. (imp.v)

   1. ஆகவிடும்;   2. சரி, அப்படியாகுக; all right, let it be, so be it. (ஆகட்டும் போகட்டும் அவரைக்காய் காய்க்கட்டும், தம்பி பிறக்கட்டும் தம்பட்டங்காய் காய்க்கட்டும், அவனுக்குக் கலியாணம் ஆகட்டும், உன்னைக் கூப்பிடுகிறேனா பார்’, ‘ஆகட்டும் என்பவன்தான் அவதிப்பட வேண்டும்’ (பழ.);.

     [ஆக+ஒட்டும் → ஆகவொட்டும் → ஆகட்டும். ‘ஆகட்டு’ என்பது நீ என்னும் முன்னிலையொருமையெழுவாயின் பயனிலை;

     ‘ஆகட்டும்’ என்பது நீம் அல்லது நீர் என்னும் முன்னிலைப் பன்மையெழுவாயின் பயனிலை. ‘உம்’ ஏவற்பன்மையீறு.]

ஆகட்டு என்னும் ஏவலின் ஒருமையெண்ணும், ஆகட்டும் என்னும் ஏவலின் பன்மையெண்ணும், இற்றை வழக்கில் மறைந்து போயின. அதனால், ஒருமையேவல் பெரும்பாலும் வழக்கற்றதொடு, பன்மையேவலே ஒருமையேவலாகவும் வழங்கி வருகின்றது.

அட்டு (ஒட்டு); என்னும் துணைவினையை ‘let it be’ என்னும் ஆங்கிலத் தொடரியத்திலுள்ள ‘let’ என்னும் ஏவல்வினையுடன் ஒப்பு நோக்குக.

ஆகட்டை

 ஆகட்டைākaṭṭai, பெ.(n.)

   ஒருவகை குறுங்கண் பறவை; a bird with small eyes.

     [ஆகு-ஆகட்டை]

ஆகண்டலன்

 ஆகண்டலன்ākaṇṭalaṉ, பெ. (n.)

   இந்திரன் (பிங்.);; Indran, the clipper of the wings of mountains.

த.வ. தேவர்கோன்.

     [Skt. a-khamdala → த. ஆகண்டலன்.]

ஆகதம்

 ஆகதம்ākadam, பெ. (n.)

   அலுக்கம் (தமகம்); பத்தனுளொன்று; succession of staccato notes in ascent, One often kamakam.

     [Skt. āhata → த. ஆகதம்.]

ஆகதர்

ஆகதர்ākadar, பெ. (n.)

   அருக சமயத்தோர்; Jains.

     “ஆகதர்க் கெளியே னலேன்” (தேவா. 258.2);.

     [அருகர் → அருகதர் → ஆகதர்]

 ஆகதர்ākadar, பெ. (n.)

   சமணர்; jains.

     “ஆகதர்க்கெளி யேனலேன்” (தேவா. 858,2);.

     [Skt. ärhata → த. ஆகதர்.]

ஆகத்தையுருக்கி

ஆகத்தையுருக்கிākattaiyurukki, பெ. (n.)

   1.எலும்பையுருக்கி, எலும்பை நீராக மாற்ற வல்லதாகக் கருதப்படும் மருந்து; medicine supposed to change the bone into a liquid. (சா.அக.);.

   2. உடலையுருக்கும் எலும்புருக்கி நோய்; disease, such as consumption, which emaciates the body.

     [ஆகம் = உடம்பு ‘ஆகத்தை’ 2 ஆம் வேற்றுமை. ‘அத்து’ சாரியை;

     ‘ஐ’ 2 ஆம் வே. உ. உருக்கு → உருக்கி. ‘இ’ வினைமுதலீறு.]

ஆகந்துகம்

ஆகந்துகம்āgandugam, பெ. (n.)

   இடையில் வந்தேறியது; that which has come accidentally, incidentally, uninvited.

     “ஆகந்துக மன்றிக்கே” (ஈடு. 1,1,1,1);.

     [Skt. ä-gantuka → த. ஆகந்துகம்.]

ஆகன்மாறு

ஆகன்மாறுākaṉmāṟu, இ.இடை. (adv.conj.)

   ஆகையால்; since, because, considering that

     “பிறர்க்கென வாழ்திநீ யாகன் மாறே” (பதிற்றுப். 3.8:16);.

     “அன்னன் ஆகன் மாறே யிந்நிலம்

இலம்படு காலை யாயினும்

புலம்பல்போ யின்று பூத்தவென் கடும்பே” (புறநா. 380);.

     [ஆகு → ஆகல் (தொ பெ.);. ‘மாறு’ ஏது அல்லது காரணப்பொருளில் வரும் இடைச்சொல்.]

     “அணையை யாகன் மாறே

தாயில் தூவாக் குழவி போல

ஒவாது கூவுநின் னுடற்றியோர் நாடே” (புறநா. 4);

என்பதன் உரையில், ‘மாறென்பது ஏதுப்பொருள் படுவதோர் இடைச்சொல்’ என்று பழையவுரையாளர் கூறியிருத்தல் காண்க..

ஆகப்பாடு

 ஆகப்பாடுākappāṭu, பெ. (n.)

   மொத்தம்; amount, sum total;

உருபா (ரூபாய்); ஆகப்பாடென்ன? (நெல்லை.);.

     [ஆகு → ஆக (முக்.வி.எ.);. படு (துணைவினை); → பாடு (தொ.பெ.);. படுதல் = தோன்றுதல், உண்டாதல், கூடுதல், மிகுதல், பெரிதாதல்.]

ஆகமசாத்திரம்

 ஆகமசாத்திரம்ākamacāttiram, பெ. (n.)

   சிவனிய, மாலிய, சமணத் தந்திரங்கள்; a class of sacred works in sanskrit, Saiva, Vaisrava, Jaina.

த.வ. தோன்றியம்.

     [Skt. a-gama+sastlram → த. ஆகமசாத்திரம்.]

ஆகமனம்

 ஆகமனம்ākamaṉam, பெ. (n.)

   வருகை; coming, arrival.

     [Skt. ågamana → த. ஆகமனம்.]

ஆகமமலைவு

ஆகமமலைவுākamamalaivu, பெ. (n.)

   மறைநூற்கு மாறாக வருவது (தண்டி. 121);; anything contrary to scriptures.

     [ஆகம + மலைவு.]

     [Skt. a-gama → த. ஆகமம்.]

ஆகமம்

ஆகமம்ākamam, பெ. (n.)

   1. மறைநூல்கள் (பிங்.);; sastras, Scriptures, one of six Apiramaâ(nam.);

   2. முதல்வன் வாக்கு; scriptures believed to be revealed by God and peculiar to Saivism, Vaisnavism, Saktismor Jainism.

   3. தோன்றல் நிலையில் வருமெழுத்து (வீரசோ. சந்தி. 13);;     [Skt. agama → த. ஆகமம்.]

ஆகமவளவை

 ஆகமவளவைākamavaḷavai, பெ. (n.)

   அறிவிற்கு அடிப்படையாக விளங்கும் மூன்று நூல்கள்; scriptures. one of three sources of knowledge.

     [ஆகம + அளவை.]

     [Skt. a-gama → த. ஆகம.]

ஆகம்

ஆகம்1ākam, பெ. (n.)

   1. உடல்; body.

     “ஆகம் வள்ளுகிராற் பிளந்தான்” (திவ். திருவாய். 9:3:7);.

   2. மார்பு; breast.

     “முலையாகம் பிரியாமை” (கலித்..2);.

   3. மனம்; mind, heart

     “ஆகத்தெழு கனல் கண்வழியுக” (கம்பரா. கரன்வ. 97);.

   4. உள்மனம்; inner self.

   5. ஒளி, ஒளிக்கற்றை; lustre, brilliance, splendour. (சேரநா.);.

ம. ஆகம்

     [ஆகு → ஆகம் (ஆகுபெ.);.]

 ஆகம்2ākam, பெ. (n.)

   1. சுரை; bottle gourd (சா.அக);.

   2. குப்பைமேனி; plant commonly growing on rubbish and used as an antidote topoisonous bites, Acalyapha indica.

ம. ஆகம்

     [சாகம் – ஆகம்]

 ஆகம்3ākam, பெ. (n.)

   செவ்வை; correctness, fitness. அவன் ஆகமாய்ச் செய்வான் (நெ.வ.);.

     [ஆக்கம் என்பதன் இடைக்குறை.]

ஆகம்பிதசிரம்

 ஆகம்பிதசிரம்ākambidasiram, பெ. (n.)

   தலையால் காட்டுகை; gesture of the head to express a greeting.

     [Skt. å-kampita+ciram → த. ஆகம்பிதசிரம்.]

ஆகம்பிதமுகம்

ஆகம்பிதமுகம்āgambidamugam, பெ. (n.)

   இசைவிற்கு அறிகுறியாக மேல்கீழாகத் தலையாட்டுகை; nod of approbation, one of 14 muka-v-apinayaт.

     [Skt á-kampita+mugam → த. ஆகம்பிதமுகம்.]

ஆகரம்

ஆகரம்1ākaram, பெ. (n.)

   1. மணிகளின் சுரங்கம்; mine of precious stones.

     “ஆகரங்களிற் படுவனவும்” (குறள், 736, உரை);.

   2. உறைவிடம் (திவா.);; source, seat abode, store house.

 ஆகரம்2ākaram, பெ. (n.)

   கூட்டம்; crowd.

     [Skt. äkara → த. ஆகரம்.]

ஆகரி

ஆகரி1ākari, பெ. (n.)

   1. திப்பிலி (சங்.அக.);; long pepper, piper longum.

   2. சிறு கட்டுக்கொடி (சித்.அக.);; a kind of medicinal creeper, Smilax pseudo china.

   3. கனிமப்பொருள்; mineral, metallic ore (சா.அக.);.

     [ஆகரி = திப்பிலி. ஒநோ: ஆகசி.]

 ஆகரி2ākari, பெ. (n.)

   சிறப்பாக நள்ளிரவிற் பாடற்குரிய அவலப் பண்; special sorrowful melody-type, suitable for singing at midnight. ‘மருதத்திற்குப் புறம் ஆகரி’ (சிலப். 14:166, உரை);.

     “யாமத் துரிமை யாகரி பாடலே” (தொன். விள. 173);.

 ஆகரி2ākari, பெ. (n.)

   ஒரு பண் (சிலப். 14,166, உரை);; a special melody-type, Specially suitable for singing at midnight.

     [Skt. ähiri → த. ஆகரி.]

ஆகரி-த்தல்

ஆகரி-த்தல்ākarittal,    4 செ.கு.வி.(v.i.)

   தருவித்தல்; to send for, secure, get.

     “ஐவகை வண்ணமுமாகரித் தூட்டி” (பெருங். உஞ்சைக். 38, 149);.

     [Skt. åhr-, → த. ஆகரி-த்தல்.]

ஆகரிநஞ்சு

 ஆகரிநஞ்சுākarinañju, பெ. (n.)

   கனிம நஞ்சு; mineral poison (சா.அக.);.

ஆகருடனம்

ஆகருடனம்ākaruḍaṉam, பெ. (n.)

   1. ஆகர்சனம் பார்க்க; see agarsanam

     “அகரமாதிமூன் றாகிய வாகருடனமே” (திருவிளை. எல்லம். 17);.

   2. அழைக்கை (பிங்);; calling, invitation, summons.

     [Skt. ä-karsaa → த. ஆகருடணம்.]

ஆகர்சகம்

 ஆகர்சகம்āgarcagam, பெ. (n.)

   கவர்வது; that which is attractive.

     “மனசுக்கு ஆகர்ஷகமாயிருக்கிற சோலை”.

     [Skt. a-kasaka → த. ஆகர்சகம்.]

ஆகர்சணசக்தி

 ஆகர்சணசக்திākarsaṇasakti, பெ. (n.)

   கவருந்திறம்; power of drawing to oneself, force of gravitation.

த.வ. ஈர்ப்பாற்றல்.

 Skt. a-karsana → த. ஆகர்சணசத்தி.]

ஆகர்சணம்

ஆகர்சணம்ākarcaṇam, பெ. (n.)

   1. இழுக்கை; pulling, drawing near, attracting.

   2. எண் கருமத்தொன்று; magic art of summoning an absent person into one’s presence, one of asta-karumam.

     [Skt. å-karsana → த. ஆகர்சணம்.]

ஆகர்சி-த்தல்

ஆகர்சி-த்தல்ākarcittal,    4 செ.கு.வி.(v.i.)

   1. கவருதல், ஈர்த்தல்; to draw towards oneself, attract, fascinate.

   2. ஆவியை வரவழைத்தல்; to invoke or adjure a demon summon a spirit. (W.);.

     [Skt. akarsa → த. ஆர்கசி-த்தல்.]

ஆகலாகல்

ஆகலாகல்ākalākal, இடை. (part.)

   ஓசை வேறுபாட்டால் குறிப்பாக உடன்படாமைப் பொருளிலும், ஐயுறவுப் பொருளிலும் தனித்து வழங்காது இரட்டித்தே வரும் பிரிவிலசை நிலைகளுள் ஒன்று; expression invariably consisting of the pair of words either repudiating or doubting a statement.

     “ஆக ஆகல் என்பதென்னும்

ஆவயின் மூன்றும் பிரிவி லசைநிலை” (தொல். சொல். இடை. 32);.

     ‘ஒருவன் யானின்னேன் என்றானும், நீயின்னை யென்றானும், அவனின்னன் என்றானும் கூறியவழிக்கேட்டான் ஆக ஆக ஆகல் ஆகல் என்னும்;

இவை உடன்படாமைக் கண்ணும் ஆதரமில்வழியும் வரும்’ (தொல். சொல். 280, சேனா உரை);.

     [ஆகு → ஆகல் (தொ.பெ.);. ‘அல்’ தொ.பெ.ஈறு. அசை நிலையாகும் போது ‘ஆகல்’ இடைச் சொல்லாம்.]

     ‘ஆகலாகல்’ அடுக்குத்தொடர்

   ஆகல் ஆகல் என்பது வழக்காற்று வகையில் ஆம் ஆம், சரிசரி என்னும் உடன்பாட்டுச் சொல்லிணைகளை ஒக்கும்;ஆயின், ஓசை வேறுபாட்டால், உடன்படாமையையும் வெறுப்பையும் குறிப்பாக வுணர்த்தும்,

ஆகல் ஆகல் விரைந்தொலிப்பின் உடன்பாடாம். ஆட்டிசைத்து அழுத்தம் தந்து ஒலிப்பின் எதிர்மறையாம்.

ஆகலியம்

 ஆகலியம்ākaliyam, பெ. (n.)

   கோயில்களில் அமையும் மண்டப அமைப்புகளுள் ஒருவகை (மயமதம்);; a kind of pavilion in a temple.

     [ஒருகா. அகலியம் – ஆகலியம்]

ஆகளமாய்

ஆகளமாய்ākaḷamāy, கு.வி.எ. (adv.)

   இடைவிடாது; without interruption.

     “அல்லும் எல்லும் அகலாது ஆகளமாயமர்ந்து நின்று” (பெரிய புராணசா.20);.

     [ஒருகா. களம் = இடம். அகளம் = இடமின்மை, இடையீடின்மை. அகளம் → ஆகளம்.]

ஆகளரசம்

 ஆகளரசம்ākaḷarasam, பெ. (n.)

   இதளியம்; mercury.

ஆகளவாய்

 ஆகளவாய்ākaḷavāy, கு.வி.எ. (adv.)

   இருக்கும் அளவுக்கு (இராட்.););; as much as is (R);.

     [ஆகு + அளவு + ஆய் (கு.வி.எ.ஈறு.);]

ஆகவனீயம்

ஆகவனீயம்ākavaṉīyam, பெ. (n.)

   வேள்வித்தீ வகை (திருமுரு. 181, உரை);; one of three sacred fires connected with srauta ritual in which oblations are generally offered:

     [Skt. a-hava-niya → த. ஆகவனியம்.]

ஆகவம்

ஆகவம்ākavam, பெ. (n.)

   போர்; battle, war.

     “ஆகவந் தன்னின் முந்த மனுகுலத் தரசன் பட்டான்” (பாரத. பதின்மூன். 97);.

     [அகவுதல்=போருக்கழைத்தல். அகவு → ஆகவம் = அறைகூவிச் செய்யும் போர், போர். அகவு – ஆகவம் → வ. ஆஹவ.)]

 ஆகவம்ākavam, பெ. (n.)

   போர் (பாரத. பதின்மூன். 97);; war, battle,

     [Skt. a-hava → த. ஆகவம்.]

ஆகவழமி

 ஆகவழமிākavaḻmi, பெ. (n.)

   போர்க்களம் (பிங்);; battle-field.

     [Skt. á-hava+bumi → த. அகவபூமி.]

ஆகவாக

 ஆகவாகākavāka, இடை. (part.)

ஆகலாகல் பார்க்க;see agalagal.

     ‘ஆகலாகல்’ என்பதற்குக் கூறிய விளக்கக் குறிப்புகளை இதற்குங் கொள்க.

     [ஆகு → ஆக (முக்.வி.எ.);. ‘ஆ’ முக்.வி.எ.ஈறு. அசை நிலையாய் வரும்போது இவ்வினையெச்சம் இடைச் சொல்லாகும். ‘ஆகவாக’ அடுக்குத்தொடர்.]

குறிப்பு:- இயல்பான ஒசையில் உடன்பாடு குறிக்குஞ் சொற்களெல்லாம், ஓசை வேறுபட்டே உடன்படாமையுணர்த்தும்.

ஆகவியன்

 ஆகவியன்ākaviyaṉ, பெ. (n.)

   போர்வீரன் (நிகண்டு);; warrior.

     [Skt. ähavya → த. ஆகவியன்.]

ஆகவும்

ஆகவும்ākavum, வியங்.வி. (v.in.the opt.m.)

   ஆகுக; may it be ‘இத்தன்மம் முட்டில் …… மன்றப் பெறுவதாகவும்’. (S.I.I. iii. 95);

     [ஆகு → ஆக (முக்.வி.எ.); → ஆகவும். ‘உம்’ ஒருவகை வியங்.வி.ஈறு.]

     ‘உம்’ என்பது மடல் போக்குவரத்தில், சிறப்பாக வணிகரிடை, ஒரு வியங்கோள் வினையீறாக வழங்குவது பெரும்பான்மை, எ-டு: நாளைக் காலை 10 மணிக்கு இங்கு வரவும். இக்கடிதம் கண்டவுடன் பட்டியலிற் கண்டபடி பத்தாயிரம் உருபா இதைக் கொண்டு வரும் ஆள்வயங்கொடுத்தனுப்பவும். இத்தகைய ஆட்சி முற்றும் உலகவழக்கேயன்றி, இலக்கணத்தொடு பொருந்துவதன்று. ஆதலால், இதை விட்டுவிட்டு வருக, அனுப்புக என்னும் ‘செய்க’ வாய்பாட்டு வியங்கோள் வினைகளை ஆள்வதே தக்கதாம்.

ஆகவே

ஆகவேākavē, இ.இடை. (conj.)

   ஆதலால்; wherefore, therefore, consequently. ஆகவே, நீங்களிருவரும் நட்பமைதியாய்ப் (சமாதானமாய்ப்); போவதே நல்லது. ஆகவே, இதை உடனே நீக்காவிட்டாற் பெருந்துன்பமாக வந்துமுடியும்.

   2. முழுவதும், அனைத்தும்; entirely, completly altogether, wholly.

ம. ஆகவே

     [ஆகு → ஆக (முக்.வி.எ.); → ஆகவே. ‘ஏ’ தேற்றப் பொருளிடைச் சொல்;

இங்குத் தன் பொருளை இழந்துள்ளது.]

ஆகா

ஆகா1ākā, இடை. (int.)

   1. வியப்புக் குறிப்பு; exclamation expressive of wonder. ஆகா! என்ன அழகு இந்த மயில் நடம்!

   2. கழிவிரக்கக் குறிப்பு; expressive of remorse or repentance for a wrong committed. ஆகா! என்ன மடத்தனம் செய்துவிட்டேன்!

   3. உடன்பாட்டுக் குறிப்பு; expressive of assent. ஆகா! அப்படியே செய்வேன்.

     [ஆ+ஆ = ஆவா → ஆகா.]

 ஆகா2ākā, எ.ம.பெ.எ. (neg. rel. parti.)

   1. ஆகுக என்பதன் எதிர்மறைவடிவம்; negative form of ‘aguga’

   2. நட்பல்லாத, பகையான; unfriendly, inimical.

   3. மருத்துவ வுணவிற்கு மாறான; unsuitable for diet. ஆகாவுணவு.

   4. உதவாத, பயனற்ற; unhelping. Useless

.

   5. நில்லா; unstably ‘பரியினுமாகாவாம் பாலல்ல’ (குறள். 376.);

   6. முடியாத; impossible.

     “உள்ளழிக் கலாகா அரண்’ (குறள், 421.);

ம. ஆகா

     [ஆகு → ஆகாது → ஆகாத → ஆகா (ஈறுகெட்ட எ.ம.பெ.எ.);]

 ஆகாākā, பெ. (n.)

   ஒரு கந்தருவன் (நைடத. அன்னத்தைத்தூ. 66);; a Gandharva associated with Hoho.

     [Skt. haha → த. ஆகா.]

ஆகாக்கடுக்காய்

 ஆகாக்கடுக்காய்ākākkaḍukkāy, பெ. (n.)

   மருந்திற் சேர்க்க உதவாத கடுக்காய்கள். அவையாவன: இரட்டைக் காயுடையது, உடைந்தது, நீரில் வெந்தது, சுக்கான்கல் நிலத்திற் கிடந்தது, சேற்றில் விழுந்தது, நெருப்பிற் சுட்டது, முரடாயிருப்பது முதலியன; gall-nut considered unfit for use in medicines, i.e., rejected gall-nuts. They are double seeded galls, broken ones, boiled galls, those found on the limestone soil or fallen in the mire, the scorched and the hard ones, and so on. (சா.அக.);.

     [ஆகு → ஆகாத → ஆகா + கடு + காய். கடு = கடுக்காய்]

ஆகாக்கலம்

 ஆகாக்கலம்ākākkalam, பெ. (n.)

   குடிநீர், எண்ணெய் முதலிய மருந்தினங்களைக் காய்ச்சுதற்கோ அவற்றை வைத்துப் புழங்குவதற்கோ பயன்படாத தொண்மாழையால் (நவலோகத்தால்); செய்த கலம்; metallic vessels unfit to be used in the preparation of medicines such as lotions, ointments etc. or for keeping them in.

ஆகாக்களங்கு

ஆகாக்களங்குākākkaḷaṅgu, பெ. (n.)

 poison prepared from lead;

 Litharge-Plumbi oxidum, one of the 32 kinds of prepared arsenics. (சா.அக.);.

     [ஆகாத → ஆகா + களங்கு.]

ஆகாசகங்கை

ஆகாசகங்கைāgācagaṅgai, பெ. (n.)

   1. மந்தாகினி; the celestial ganges.

   2. வான்வெளி (பால்வீதி); மண்டலம்; the milky way.

     [ஆகாசம் + கங்கை.]

     [Skt. ä-käša → த. ஆகாசம்.]

ஆகாசகமனம்

 ஆகாசகமனம்āgācagamaṉam, பெ. (n.)

   அறுபத்து நாலு கலைகளுளொன்றான வான் வழிச் செலவு; flying through the air, an art believed to be acquired by magic and yoga.

     [ஆகாசம் + மனம்.]

     [Skt. a-kasa → த. ஆகாசகம்.]

ஆகாசகருடன்

 ஆகாசகருடன்āgācagaruḍaṉ, பெ. (n.)

   கொல்லங்கோவை (மலை.); எனும் செடி; a climbing shrub.

ஆகாசகாமி

ஆகாசகாமிākācakāmi, பெ. (n.)

   1. பறந்து செல்லும் ஆற்றலுடையோன்; one who is able to fly through the air, an angel.

   2. பறக்குங் குதிரை (வின்.);; fabled horse, having the power of flying through the air.

 Skt. a-käša+gamin → த. ஆகாசகாமி.]

ஆகாசகாமினி

ஆகாசகாமினிākācakāmiṉi, பெ. (n.)

   வானத்திற் செல்லுதற்குதவும் ஒரு மந்திரம் (சீவக. 1713, உரை);; incantation that gives one the power of flying through the air,

     [Skt. å-kåsat+gåmini → த. ஆகாசகாமினி.]

ஆகாசக்கத்தரி

 ஆகாசக்கத்தரிākācakkattari, பெ. (n.)

   வெண்டை (யாழ்);; ladys finger,

 Skt. a-kasa+த. கத்தரி → த. ஆகாசுக்கத்தரி.]

ஆகாசக்கப்பல்

 ஆகாசக்கப்பல்ākācakkappal, பெ. (n.)

   வானத்தில் செல்லும் விண்ணூர்தி; airship, balloon.

     [ஆகாசம் + கப்பல்.]

     [Skt. å-kasa → த. ஆகாசம்.]

ஆகாசக்கல்

 ஆகாசக்கல்ākācakkal, பெ. (n.)

   வானத்தில் பறக்கும் அணு(வின்);; aeorolite in regard to which the belief is that it so dazzles the eye that it does not recover from the affection till the next day.

     [ஆகாசம் + கல்.]

     [Skt. ākāša → த. ஆகாசம்.]

ஆகாசக்கோட்டை

 ஆகாசக்கோட்டைākācakāṭṭai, பெ. (n.)

   கற்பனை அல்லது நடைமுறைக்கு ஏற்பில்லாத திட்டம் அல்லது எதிர்பார்ப்பு; castein the air.

     [ஆகாசம் + கோட்டை.]

     [Skt. ākaša → த. ஆகாசம்.]

ஆகாசசபை

 ஆகாசசபைākāsasabai, பெ(n.)

   காஞ்சிபுரத்து ஆடலரசனின் ஆடரங்கு (நடராச சபை); (அபி.சிந்);; dancing hall of Nataraja at Kancipuram, a vast, open space.

     [ஆகாச(ம்); + சபை.]

     [Skt. a-kåsa → த. ஆகாசகம்.]

அவை → சவை → சபை → Skt. saba.

ஆகாசதீபம்

 ஆகாசதீபம்ākācatīpam, பெ. (n.)

   உயர்ந்த கம்பத்தில் வைக்கப்படும் விளக்கு; lantern on a pole, beacon light, light-house.

     [ஆகாசம் + தீபம்.]

     [Skt. å-kåsa → த. ஆகாசம்.]

தீ → தீவம் → தீபம்.

ஆகாசத்தாமரை

ஆகாசத்தாமரைākācattāmarai, பெ. (n.)

   1. பூடு வகை; a weed

   2. கொட்டைப் பாசி (மூ. அ);; seed moss.

   3. இல்பொருள்; that which is absolutely non-existent as an aerial lotus.

த.வ. ஆகாயத்தாமரை.

     [ஆகாச(ம்); + தாமரை.]

     [Skt. å-kåsa → த. ஆகாசம்.]

ஆகாசத்திற்பற-த்தல்

ஆகாசத்திற்பற-த்தல்ākācattiṟpaṟattal,    3 செ.கு.வி.(v.i.)

   1. செருக்காய் (நானுணர்வு); ஒழுகுதல்; to be on one’s high horse, to give oneself airs, to be arrogant (colloq.);.

   2. முடியாததை முயலுதல்; to attempt to accomplish the impossible (colloq.);.

த.வ. ஆகாயத்திற் பற-.

     [ஆகாச(ம்); + அத்து + இல்+பற-.]

ஆகாசபஞ்சாங்கம்

 ஆகாசபஞ்சாங்கம்ākācabañjāṅgam, பெ. (n.)

   பெரும்பொய்; stupendous lie, as an almanac written in the air.

     [Skt. a-kaša+panjaga → த. ஆகாசப் பஞ்சாங்கம்.]

ஆகாசபட்சி

 ஆகாசபட்சிākācabaṭci, பெ. (n.)

   சாதகபட்சி (வின்.);; the shepherd koel.

     [ஆகாசம் + பட்சி.]

     [Skt. a-kaca+patchi → த. ஆகாசபட்சி.]

ஆகாசபலம்

ஆகாசபலம்ākācabalam, பெ. (n.)

   எரி விண்மீன், விண் வீழ் கொள்ளி; meteor shooting star.

     “ஆகாசபலம் வீழ்வது போல்” (ஞானவா. சனக. 7);.

     [ஆகாசம் + பலம்.]

     [Skt. å-kåca+phala → த. ஆகாசபலம்.]

வலம் → Skt. phala.

ஆகாசப்பந்தல்

 ஆகாசப்பந்தல்ākācappandal, பெ. (n.)

ஆகாயப்பந்தல் பார்க்க; see agaya-p-pandal.

     [ஆகாசம் + பந்தல்.]

     [Skt. ä-kaša → த. ஆகாசம்.]

ஆகாசமண்டலம்

 ஆகாசமண்டலம்ākācamaṇṭalam, பெ. (n.)

ஆகாயமண்டிலம் பார்க்க; see agaya-mandhilam.

     [ஆகாசம் + மண்டலம்.]

     [Skt. ä-käša → த. ஆகாசம்.]

மண்டு → மண்டலம்.

ஆகாசம்

ஆகாசம்ākācam, பெ. (n.)

   1. ஐம்பூதத்தொன்று:

 ether pervading all space, one of five elements.

   2. வெள; open Space.

   3. வானம்; sky, the visible heavens.

   4. காற்று மண்டிலம்; air, atmosphere (mod.);.

த.வ. வானம்

     [Skt. A-käša → த. ஆகாசம்.]

ஆகாசராமன்

 ஆகாசராமன்ākācarāmaṉ, பெ. (n.)

   பெயரிலான்; nameless person, a nobody,

     [Skt. å-kasa+raman → த. ஆகாசராமன்.]

ஆகாசலிங்கம்

 ஆகாசலிங்கம்ākācaliṅgam, பெ. (n.)

   தில்லையி (சிதம்பரத்தி);ல் உள்ள ஐவகை (பஞ்ச); லிங்கத்துளென்று; the likam in the shrine at chidambaram, which is considered to be formless like the ether, indicating the attributes of God as all pervading.

     [Skt. a-kaša+ligam → த. ஆகாசலிங்கம்.]

ஆகாசவாசியர்

 ஆகாசவாசியர்ākācavāciyar, பெ. (n.)

   சிறு தெய்வங்கள்; a class of demi-gods.

     [Skt. å-kåsa+vasin → த. ஆகாசவாசியர்.]

ஆகாசவாணம்

 ஆகாசவாணம்ākācavāṇam, பெ. (n.)

   வானிற் செல்லும் சீறுவாணம்; sky rocket.

     [ஆகாசம் + வானம்.]

     [Skt. a-kasa → த. ஆகாசம்).]

வானம் → வாணம்.

ஆகாசவாணி

ஆகாசவாணிākācavāṇi, பெ. (n.)

   1. விண்குரல்; voice from heaven, incorporeal voice.

   2. வானொலி; radio.

     [Skt. akasa-våni → த. ஆகாசவாணி.]

ஆகாத

ஆகாதākāta, எ.ம.பெ.எ. (neg. rel. parti.)

   1, கெட்ட; naughty, bad. கெட்ட பிள்ளை.

     “ஆகாத நாளையில் பிள்ளை பிறந்தால் அண்டை வீட்டுக்காரனை என்ன செய்யும்” (பழ.);

   2. ஒன்றுக்கும் உதவாத; useless.

     “ஆகாத காரியத்துக்குப் போகாதே” (பழ.);

   3. முடியாத, இயலாத; impossible, impracticable, unattainable.

   4. ஏற்புடையதாகாத; unfit, unsuitable.

   5. வலுவில்லாத; weak, delicate.

ம. ஆகாத.

     [ஆகு → ஆகரிது → ஆகாது → ஆகாத (எதிர்மறைப் பெயரெச்சம். ‘ஆ’ பெ.எ. ஈறு);]

ஆகாத கடுக்காய்

 ஆகாத கடுக்காய்āgātagaḍuggāy, பெ. (n.)

   ஆகாக்கடுக்காய் பார்க்க; aga-k-kadukkay.

ஆகாதது

ஆகாததுākādadu, பெ. (n.)

   1. முடியாதது; that which is impossible.

   2. ஏற்புடைத்தாகாதது; that which is prohibited, unfit or improper.

ஆகாதவன்

ஆகாதவன்ākātavaṉ, பெ. (n.)

   1. பகைவன்; one who is not friendly, enemy.

     “ஆகாதவன் குடியை அடுத்துக் கெடுக்க வேண்டும்” (பழ.);.

   2. பயனற்றவன்; useless person. அவன் காற்காசுக்கும் ஆகாதவன் (உ.வ.);

   3. தீயோன் (கிறித்.);; wicked man (Chr.);

பட. ஆகாதம.

     [ஆகு – ஆகாத + அவன்.]

ஆகாதே

ஆகாதேākātē, எ.ம.வி. (neg.v.)

   1. (அது); கூடாதே; it should not be indeed;

 it should not be done indeed.

   2. (அது); கேடானதே; it is harmful or dangerous. indeed

   3. (அது); பயனற்றதே; it is useless indeed

   4. (அது); நிகழாதே; it would not happen indeed எ.ம.வி.எ. (neg. v. parti.);

   1. நிகழாமலே; without happening indeed. அது ஆகாதே போய்விட்டது.

   2. உதவாமலே; without being fruitful or helpful. அது ஆகாதே போய்விட்டது.

   -இடை. (int.); அன்றோ? அல்லவா?; is it not so, shall it not be.

     “அவன் கழல்கண்டு களிப்பன வாகாதே” (திருவாச.49:1);.

     [ஆகு → ஆகரிது → ஆகாது + ஏ(தேற்றேகாரம்);.]

ஆகாத்தியம்

 ஆகாத்தியம்ākāttiyam, பெ. (n.)

   பாசாங்கு; pretence, simulating agony.

     “ஆகாத்தியக் காரனுக்குப் பிரமகத்திக்காரன் சாட்சி”.

தெ. ஆகாதியமு; க. ஆகாதிய

ஆகாப்பழம்

 ஆகாப்பழம்ākāppaḻm, பெ. (n.)

   வேப்பம் பழம்; margosa fruit, as unfit for human consumption.

     [ஆகு + அரு – ஆகரு → ஆகா. பழு → பழம்.]

ஆகாப்பெற்றம் (ஆகாப்பசு)

ஆகாப்பெற்றம் (ஆகாப்பசு)ākāppeṟṟamākāppasu, பெ. (n.)

   குடிப்பதற்குத் தகாத பாலையுடைய ஆ; cow yielding milk unfit for consumption.

ஆகாப் பெற்றத்தின் ஐவகைகள் :

   1. அரணைநோய்ப் பெற்றம்; cow suffering from disease.

   2. தாராநோய்ப் பெற்றம்); cow suffering from

     “Tara” disease.

   3. வெண்புள்ளிப் பெற்றம்; white spotted or white patched cow.

   4. மலந்தின்னிப் பெற்றம்; flth-eating cow.

   5. இடுகாட்டெலும்புண்ணிப்பெற்றம்; cow taken to bones found in the grave yard (சா.அக.);.

ஆகாப்போன்

ஆகாப்போன்ākāppōṉ, பெ. (n.)

   ஆயன், ஆநிரைகளைக் காப்பவன்; cowherd.

     “ஆகாத் தோம்பி ஆப்பயன் அளிக்கும்

கோவலர் வாழ்க்கையோர் கொடும்பா டில்லை” (சிலப். அடைக். 120);

     [ஆ + காப்போன்.]

ஆகாமி

 ஆகாமிākāmi, பெ. (n.)

   எண்போகத் தொன்றாகிய பிற்காலத்துத் துய்க்கும் உரிமை; propective right and privilage which possession of an estate may bring in its wake one of asapokan.

     [Skt. å-gåmin → த. ஆகாமி.]

ஆகாமியம்

ஆகாமியம்ākāmiyam, பெ. (n.)

   இப்பிறப்பிலே செய்யும் நல்வினை தீவினை; karma, which is yet to come, action good and bad of the present life which are expected to bring their rewards in future births, one of three karumam.

     “மேல்வரு மாகாமியமு நாடாமல்” (திருக்காளத். பு. 12, 28);.

     [Skt. a-gámya → த. ஆகாமியம்.]

ஆகாயகங்கை

ஆகாயகங்கைāgāyagaṅgai, பெ. (n.)

   மந்தாகினி (மணி. பதி. 17);; the celestial Ganges.

     [ஆகாயம் + கங்கை.]

     [Skt. å-kåsa → த. ஆகாயம்.]

ஆகாயகனம்

ஆகாயகனம்āgāyagaṉam, பெ. (n.)

   இரண்டு நிறையசையும் ஒரு நேரசையும் சேர்ந்த கருவிளங்காய் போன்றதொரு செய்யுட்கணத்தொன்று (இலக். வி. 800, உரை);; metrical foot of two nirai and one nêras considered inapt and so boding evil, when used at the Commencement of a poem.

ஆகாயகமனம்

 ஆகாயகமனம்āgāyagamaṉam, பெ. (n.)

   அறுபத்து நாலு கலையுள் காற்று வெளியில் நடந்து செல்லும் கலை (வின்);; art of walking in the air, one of arupattu-nalu-kalai.

ஆகாயக்கக்கரி

ஆகாயக்கக்கரிākāyakkakkari, பெ. (n.)

   முள்வெள்ளரி வகை (பாதர்த்த.705);; variety of kakri-melon.

     [ஆகாய(ம்); + கக்கரி.]

     [Skt. a-kaša → த. ஆகாயம்.]

ஆகாயசூலை

ஆகாயசூலைākāyacūlai, பெ. (n.)

   குதிரை நோய்வகை (அசுவ. 50);; a disease of horses.

ஆகாயச்சொல்

ஆகாயச்சொல்ākāyaccol, பெ. (n.)

   இல்லாதானொருவனை முன்னிலைப்படுத்தித் தானே கூறும் பேச்சு (சிலப். 3, 13, உரை);; literally, a speech in the air, used in dramas as a stage direction when a character on the stage puts questions to some one who is not actually present and listens also to an imaginary speech, supposed to be a reply from the person so addressed.

     [ஆகாயம் + சொல்.]

     [Skt. å-kåsa → த. ஆகாயம்.]

ஆகாயப்பந்தல்

 ஆகாயப்பந்தல்ākāyappandal, பெ. (n.)

   மனக்கோட்டை; castle in the air.

த.வ. வான்பந்தல்.

     [ஆகாயம் + பந்தல்.]

     [Skt. å-kåsa → த. ஆகாயம்.]

ஆகாயப்பிரவேசம்

 ஆகாயப்பிரவேசம்ākāyappiravēcam, பெ. (n.)

   அறுபத்து நான்கு கலைகளுள் காற்று வெளியில் புகுந்து மறையும் ஒரு கலை (வின்.);; art of entering into the air and becoming invisible, disappearing into air, one of arupattuлalu-ќаlai.

     [Skt. a-kasa-p-piravécam → த. ஆகாயப்பிரவேசம்.]

ஆகாயமண்டிலம்

ஆகாயமண்டிலம்ākāyamaṇṭilam, பெ. (n.)

   1. வானவட்டம்; the celestial sphere.

   2. நாட்டிய வகையுளொன்று (திருவிளை. கான்மாற். 9);; a mode of dancing.

     [ஆகாயம் + மண்டிலம்.]

     [Skt. å-kåsa → த. ஆகாயம்.]

ஆகாயமாஞ்சி

 ஆகாயமாஞ்சிākāyamāñji, பெ. (n.)

   சிறு சடாமாஞ்சி (மலை);.);; spikenard.

ஆகாயம்

 ஆகாயம்ākāyam, பெ. (n.)

   வான்வெளி, வானம்; sky.

த.வ. விண்.

ஆகாயவாசிகள்

ஆகாயவாசிகள்āgāyavācigaḷ, பெ. (n.)

   பதினெண்கணத்துளொரு சாரார் (திருமுருகு. 168, உரை);; a class of demigods, sky-dwellers, one of patter-kasam.

     [Skt. ஆகாசம் → ஆகாயம் + வாசிகள்.]

ஆகாரசமிதை

ஆகாரசமிதைākārasamidai, பெ. (n.)

   வேள்வி குண்டலத்தில் தென்கிழக்கிலும் வடகிழக்கிலும் வைக்கப்படும் அரச மரத்துக் குச்சிகள் (சீவக. 2464, உரை);; two pipal twigs dipped in ghee and placedone at the northeast and the other at the South-east Corner of the grhya-sacred fire.

     [Skt. a-ghåra+samldh → த. ஆகாரசமிதை.]

ஆகாரம்

ஆகாரம்ākāram, பெ. (n.)

   ஆ என்னும் நெடில்; first long vowel of the Tamil alphabet.

     [ஆ + காரம்.]

 ஆகாரம்1ākāram, பெ. (n.)

   1. உருவம்; shape, form, figure, outline, structure.

     “ஆகாரமழகெறிப்ப” (பாரத. வசங்ககா. 19);.

   2. உடம்பு; body.

     “திருவாகாரங் குலுங்க” (திவ். பெரியதி. 4, 4, 8);.

     [Skt. ä-kara → த. ஆகாரம்.]

 ஆகாரம்2ākāram, பெ. (n.)

   நெய் (பிங்.);; clarified butter, ghee.

     [Skt. á-ghảra → த. ஆகாரம்.]

 ஆகாரம்3ākāram, பெ. (n.)

   உணவு (பிங்.);; food.

     [Skt. a-hara → த. ஆகாரம்.]

ஆகாறு

ஆகாறுākāṟu, பெ. (n.)

   வரும்வழி, வருவாய்; means of income.

     “ஆகா றளவிட்டி தாயினும்” (குறள். 478);.

ஆகிடந்து

ஆகிடந்துākiḍandu, இடை. (part.)

     ‘இனி, உரையிற் கோடலால் உண்ணாகிடந்தான், உண்ணாவிருந்தான் என ஆகிடந்து, ஆவிருந்து என்பனவும் ——— நிகழ்காலங்காட்டுமெனவுங்கொள்க’ (நன்.143, இராமா. உரை);.

     [செய்யாக் (செய்து); கிடந்தான் என்னும் வினையெச்சத் தொடர்ச்சொல்லையே பிற்காலத்தார் ஒரு சொல்லாகக் கொண்டு, ‘ஆ’ என்னும் நிலைச் சொல்லீற்றையும் ‘கிடந்து’ என்னும் வருஞ்சொல் முதலையும் ஒன்றாயிணைத்து ஒரு நிகழ்கால விடைநிலையாகக் கூறிவிட்டனர் போலும்! ‘ஆநின்று’. ‘ஆவிருந்து’ பார்க்க;see svirundu);

ஆகிய

ஆகியākiya, இ.கா.பெ.எ. (p.rel.part)

   உண்டான, செய்யப்பட்ட; made of. எ-டு: மண்ணால் ஆகிய குடம். – இடை.. (part.); இருபெயரொட்டுப் பண்புத்தொகையுருபு;

 particle connecting two nouns in apposition. எ-டு : பாண்டியனாகிய வேந்தன், காவிரியாகிய ஆறு.

   2. வியங்கோள் வினைமுற்று; optative fin. verb.

     [ஆகு (வி.மு.); ‘இ’ (இ.கா.வி.எ.உருபு); ‘அ’ (பெ.எ.உருபு);. அ3 பார்க்க. see a3.]

ஆகிரந்தம்

 ஆகிரந்தம்ākirandam, பெ. (n.)

   புன்கு (மலை);; Indian beech.

ஆகிரி

ஆகிரிākiri, பெ. (n.)

ஆகரி பார்க்க;see āgari.

     [ஆவரி – ஆகரி – ஆகிரி → வ. ஆஹிரி. (பரத இராக. 75); ஆகரி என்பதே திருந்திய அல்லது மூல வடிவமாயின், அது தமிழிசை நூலின் முன்மையையும். ஆரிய இசைநூலின் பின்மையையும் காட்டும் ஆவரி = சுற்றுதல் புலம்புதல், பெரிதும் வருந்துதல். ஆகரி = நள்ளிரவுப் பண்.]

ஆகிரிநாட்டை

ஆகிரிநாட்டைākirināṭṭai, பெ. (n.)

   பண்வகை (பரத. ராக. 102);; a melody-type.

     [ஆகிரி + நாட்டை.]

ஆகிருதி

ஆகிருதிākirudi, பெ. (n.)

   1. உருவம்; form, shape.

   2. அடிதோறும் ஒற்று நீங்கிய 22 உயிரெழுத்துக் கொண்ட நான்கடியையுடைய தாய் வருஞ் சந்தம் (வீரசோ. யாப், 33, உரை);; meter of four lines with 22 vowel sounds each.

     [Skt. å-ksti → த. ஆகிருதி.]

ஆகிவா (வரு)-தல்

ஆகிவா (வரு)-தல்ākivāvarudal,    18 செ.கு.வி. (v.i.)

   நன்றாகக் கூடி வருதல். (நெல்லை.);; have auspicious progress (Tn.);;

 to come to fruition in the desired way.

ஆகு பார்க்க;see agu

ஆகு

ஆகு1āku, பெ. (n.)

   1. நண்டு; crab.

   2. பன்றி; pig. domestic hog.

   3. குடம்; pot.

     [அள் → ஆள் → ஆர் → ஆரு = செறிதல்.].

 ஆகுāku, பெ. (n.)

   1. எலி (பிங்.);; rat.

   2. பெருச்சாளி (திவா.);; bandicoot.

     [Tib. gyāk → த. ஆகு.]

ஆகு-தல்

ஆகு-தல்ākudal,    7 செ.கு.வி. (v.i.)

   1. உண்டாதல்; to become, come to have. உடம்பெல்லாம் புண்ணாகி விட்டது.

   2. அமைதல்; to be. கம்பலை என்னுஞ் சொல்லிற்கு அழுகையரவம் என்பதுபொருளாகும்.

   3. நிகழ்தல்; to happen, occur. உங்கள் மகனுக்குத் திருமணம் எப்போது ஆகும்? ‘இன்றைக்கு ஆகிறதுநாளைக்கு ஆகட்டும்’ (உ.வ.);.

   4. வளர்தல்; to grow. நெல் பயிராகிவிட்டது, பையன் ஆளாகி விட்டான்.

   5. ஆக்கமுறுதல்; to prosper, flourish. ‘ஆகிறதும் பெண்ணாலே அழிகிறதும் பெண்ணாலே’.

   6. ஒன்று இன்னொன்றாதல்; transformation of one thing in to another. இவ்விருபதாம் நூற்றாண்டிற் காடெல்லாம் நாடாகிவிட்டது.

   7. மாறுதல்; to become, get changed. கரும்பு காசாக வேண்டும்.

   8. சமைதல்; to be cooked. சோறு ஆகிறது.

   9. ஒப்பாதல்; to be equal ‘உயரவுயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா’? ‘கடிவாளமும் சேணமும் இட்டாலும் கழுதை குதிரையாகுமா?’ (பழ.);.

   10. இழிதல்; to diminish in value, depreciate. ‘புலிக்குப் பிறந்தது பூனையாகுமா’? (பழ.);.

   11. உயர்தல்; to appreciate, rise in value, இரண்டாம் உலகப் போரில் இரும்பெல்லாம் பொன்னாகி விட்டது. (உ.வ.);.

   12. இணக்கமாதல்; to be intimate, close. அன்பில்லாவிடத்து அண்ணனுக்கும் தம்பிக்கும் ஆகுமா?

   13. உதவுதல்; to be of use. அவன் ஒன்றுக்கும் ஆகாதவன். (உ.வ.);.

   14. அடுத்தல், தகுதல்; to befit someone, something. அமைச்சனா யிருந்து கொண்டு இப்படிச் செய்வது உனக்கு ஆகுமா? (உ.வ.);

   15. முதிர்தல்; to ripen. காய் பழமாகி விட்டது. (உ.வ.);.

   16. செய்ய முடிதல்; to be possible. ‘உலக முழுதுங் கட்டியாண்டாலும் ஊழிற்குத் தப்ப எவராலாகும்?’ (உ.வ.);.

   17. வினை முடிதல்;   18. செய்ய விலக்குண்டிருத்தல்; to be excepted. ‘தாயைப் பழித்தாலும் தண்ணிரைப்

பழித்தலாகுமா’? ‘தண்ணிரைப் பழித்தாலுந் தமிழைப் பழித்தலாகாது’. (பழ.);.

   19. செலவாதல்; to be expended, to cost. ஒரு வீடு கட்ட எவ்வளவு ஆகும்?

   ம., க. ஆகு;   தெ. ஆகு, ஆவு;   குட. ஆக், ஆவு து. ஆகு;   ஆபி கோத. ஆக்;   துட. ஒங்;   கூ. .ஆவ;   குவி. ஆய்யலி, ஆனை;   நா. அண்டு;   கொலா. அன்;பிரா. ஆன், அன்னிங்.

   ஒ.நோ: L. augere, to increase. இதில் auge என்பதே வினைமுதனிலை;     ‘re’ என்பது நிகழ்கால வினையெச்ச (Infinitive); ஈறு.

 E. augment v.t. and i, make or become greater, increase.

 ME.f.F. augmenter f. LL. augmentare, increase f. L. augmentum.

 E. augmentation n. enlargement, growth, increase.

 E. augmentative n. having the property of increasing:

     [Gram. of affix or derived word); increasing in force the idea of the original word (f. F. augmentaliformed. L. augmentativus.]

ஆ, ஆகு என்னும் இரு முதனிலை வடிவுகளுள் எது முந்தியது என்பது பற்றி, இலக்கண ஆசிரியர்க்கு ஆராய்ச்சி பிறந்து இதுவரை ஒரு முடிவிற்கும் வராதிருக்கின்றது. ஆ, ஆகு என்பன போன்றனவே போ, போகு என்பனவும்.

     “நச்சினார்க்கினியர் நன்னூலார் முதலாயினார் இயற்கை முதனிலை ஆ, போ என்றே இருக்குமென்றார். திருவள்ளுவர், பரிமேலழகர் முதலாயினார் இயற்கை முதனிலை ஆகு, போகு என்றேயிருக்குமென்றார்.” என்பது சுவாமிநாத தேசிகரின் இலக்கணக் கொத்து உரைக் குறிப்பு (86, உரை);.

போ என்பதன் ஈறுமிகையே போகு என்பது. புகு → போ → போகு → போது. இங்ஙனமே ஆ என்பதன் ஈறுமிகையாகவே ஆகு என்பதும் இருத்தல் வேண்டும். இது அவற்றின் புடைபெயர்ச்சியால் வலியுறுத்தப்படும்.

ஆ, ஆகு என்னும் வினைமுதனிலைகளின் புடைபெயர்ச்சி

முதனிலை முக்கால முக்காலப் முக்கால

வினையெச்சம் பெயரெச்சம் வினைமுற்று

   1. ஆ (ஆயி);–ஆய் ஆயிய-ஆயின ஆயியான்-

ஆய-ஆன ஆயினான்

ஆகிற ஆனான்

ஆயின் (ஆவும்);- ஆகின்றான்-

ஆம் ஆகிறான்,

ஆவான்

   2. ஆகு ஆகி ஆகிய ஆகியான்-

ஆகினான்

ஆக ஆகுகின்ற- ஆகுகின்றான்-

ஆகுகிற ஆகுகிறான்

ஆகின் ஆகும்-ஆம் ஆகுவான்

குறிப்பு:-

   1. ‘ஆவ’ என்பதே ‘ஆ’ என்னும் முதனிலையினின்று திரிந்த இயற்கையான நி.கா.வி.எ. வடிவம். அதுபின் வ-க போலியால் ‘ஆக’ என்று திரிந்தது. ஒ.நோ: சா → சாவ → சாக.

     “சாவ என்னும் செயவென் எச்சத்து” (தொல். எழுத்து. உயிர். 210);.

   2. ‘சாக’ என்னும் நி.கா.வி.எ. போலி வடிவினின்றே ‘சாகு’ என்னும் ஏவலொருமை தோன்றியிருத்தல் போல், ‘ஆக’ என்னும் நி.கா.வி.எ. போலிவடிவினின்றே ‘ஆகு’ என்னும் ஏவலொருமையும் தோன்றியிருக்கலாம்.

   3. ‘ஆகு’ என்னும் முதனிலையினின்று திரிந்த வினைமுற்று வடிவங்கள், சற்றுச் செயற்கையாகவும் செய்யுட்கே ஏற்றும் இருத்தலால், ‘ஆ’ என்னும் முதனிலையே இயற்கையானதாயிருத்தல் வேண்டும்.

     [அகைதல் = தளிர்த்தல், செழித்தல். ஆதல் என்னும் சொல்விற்கு உண்டாதல், வளர்ச்சியடைதல் என்பனவே அடிப்படைப் பொருள்கள் அகு → அகை. ஒநோ: முகு → முகை. அகு என்னும் குறிவினைச் சொல் ‘அ’ என மருவுவது இயல்பே. ஒ.நோ;

பகு-பா. ஆதலால், அகு → ஆ → ஆகு எனத் திரிந்திருத்தல் வேண்டும்.

அகு → அகை என்னும் திரிவை, நுகு → நுகும்பு, புகு → (புகில்); → பொகில் → போகில், முகு → முகம், முகிழ் என்னுந் திரிவுகளும் வலியுறுத்தும்.]

ஆகுஞ்சனம்

ஆகுஞ்சனம்ākuñjaṉam, பெ. (n.)

   சுருக்குகை (பிரபோத. 44, 23);; contraction.

த.வ. சுருக்கம்.

     [Skt. a-kuńcana → த. ஆகுஞ்சனம்.]

ஆகுபாடாணம்

 ஆகுபாடாணம்ākupāṭāṇam, பெ. (n.)

   வெண் நஞ்சு; a mineral poison.

ஆகுபெயர்

ஆகுபெயர்ākubeyar, பெ. (n.)

ஆகுபெயர் பல வகைப்படும். அவையாவன:-

எண் பெயர் எடுத்துக்காட்டு

   1. பொருளாகுபெயர் அல்லது தாமரை முகம்

முதலாகு பெயர்

   2. இடவாகு பெயர் ஊர்

அடங்கிற்று,

தமிழ்நாடு வென்றது.

எண் பெயர் எடுத்துக்காட்டு

   3. காலவாகு பெயர் கோடை விளைந்தது.

   4. சினையாகு பெயர் தலைக்கு ஒரு பணம் கிடைத்தது.

   5. பண்பாகு பெயர்

அல்லது குணவாகு

பெயர் நீலம் சூட்டினாள்

   6. தொழிலாகு பெயர் சுண்டல் தின்றான்.

   7. அளவையாகு பெய

எண்ணலளவையாகு

பெயர் நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி.

எடுத்தலளவையாகு பெயர் ஒரு எடை நிறு.

முகத்தலளவையாகு பெயர் உண்பது நாழி,

நீட்டலளவையாகு பெயர் உடுப்பது நான்கு முழம்

   8. சொல்லாகு பெயர் அடியார்க்கு நல்லாருரை சிறந்தது.

   9. இடவனாகு பெயர் கழல் பணிந்தான்

   10. கருவியாகு பெயர் இதன் விலை மூன்று வெள்ளி.

   11. கருமவாகு பெயர் வெண்கல வட்டில்

   12. வினைமுதலாகு பெயர் திருவள்ளுவரைத் திரும்பத் திரும்பக்

கற்க வேண்டும்.

   13. உவமையாகு பெயர் மூத்தது மோழை, இளையது காளை.

   14. பண்பியாகு பெயர் சாம்பல் வாழை,

கயற்கொடி.

முதலாகு பெயர் என்பது சினையாகு பெயர்க்கும், இடவாகுபெயர் என்பது இடவனாகு பெயர்க்கும், பண்பாகுபெயர் என்பது பண்பியாகு பெயர்க்கும், கருவியாகு பெயர் என்பது கருமவாகு பெயர்க்கும் நேர் எதிராகும்.

இடவனாகு பெயரைத் தானியாகு பெயர் என்றும், கருமவாகு பெயரைக் காரியவாகுபெயர் என்றும், வினைமுதலாகு பெயரைக் கருத்தாவாகுபெயர் என்றும் வடசொல்லாற் குறிப்பர்.

பண்பியாகுபெயர் என்பது, ஒரு பண்பையுடைய பொருளின் பெயர் அப்பண்பிற்கு ஆகிவருவது.

சில ஆகுபெயர்கள், என்றும் அடையும் அடைகொளியுமாக இரு சொல்லாகவேயிருக்கும். அவை அடையடுத்த ஆகுபெயர்

எனப்படும். எ-டு: வெற்றிலை நட்டான், மருக்கொழுந்து குடினாள். இவற்றைத் தொல்காப்பியர் இருபெயரொட்டாகுபெயர் என்பர்.

சில ஆகுபெயர்கள், ஒரு முறை மட்டுமன்றிப் பன்முறையும் தொடர்ந்து வெவ்வேறு பொருளுக்காகியிருக்கும். அவை, ஆகிவந்த முறைத் தொகையின்படி, இருமடியாகு பெயர், மும்மடியாகுபெயர், நான்மடியாகு பெயர் எனப் பெயர் பெறும்.

எ-டு: புதிதாய் வந்தவர்க்கு விரும்பியளிக்கப்படும் சிறப்புணவாகிய விருந்தின் பெயர், முதற்கண் விருந்தினர்க்கும் பின்னர்ப் புதுமைக்கும் ஆகி வந்தது இருமடியாகு பெயர். கார் என்னும் கருமைப்பெயர், முகிலுக்கும் மழைக்கும் மழைக்காலப் பயிருக்கும் ஆகிவரின் மும்மடியாகுபெயர். தோகை என்பது, தொங்கும் பெரும்பயிர்த் தாளுக்கும், மயிற்றோகைக்கும் மயிலுக்கும் பெண்ணுக்கும் ஆகிவரின் நான்மடியாகு பெயர்.

தொல்காப்பியர் ஆகுபெயர் வகைகளைப் பற்றி வேற்றுமை மயங்கியலில்,

     “முதலிற் கூறும் சினையறி கிளவியும்

சினையிற் கூறும் முதலறி கிளவியும்

பிறந்தவழிக் கூறலும் பண்புகொள் பெயரும்

இயன்றது மொழிதலும் இருபெயரொட்டும்

வினைமுத லுரைக்குங் கிளவியொடு தொகைஇ

அனைமர பினவே ஆகுபெயர்க் கிளவி” (தொல். சொல். 110);

     “அவைதாம்,

தத்தம் பொருள்வயின் தம்மொடு சிவணலும்

ஒப்பில் வழியான் பிறிதுபொருள் சுட்டலும்

அப்பண் பினவே நுவலுங் காலை” (தொல். சொல். 111);

     “வேற்றுமை மருங்கிற் போற்றல் வேண்டும்”. (தொல். சொல். 112);

     “அளவும் நிறையும் அவற்றொடு கொள்வழி

உளவென மொழிப உணர்ந்திசினோரே” (தொல். சொல். 113);

     “கிளந்த அல்ல வேறுபிற தோன்றினும்

கிளந்தவற் றியலான் உணர்ந்தனர் கொளலே.” (தொல். சொல். 114);

என்று கூறினார். அவற்றுள், தற்கிழமையாக வருவதைத் தம்மொடு சிவணல் என்றும், பிறிதின் கிழமையாக வருவதைப் பிறிதுபொருள் கட்டல் என்றும், பிரித்துக் கூறினார். அவற்றைச் சிவஞானமுனிவர், முறையே, விடாத வாகுபெயர், விட்ட வாகுபெயர் என்றார். தெங்கு தின்றான், குழிப்பாடி நேரிது என்பன அவற்றிற்கு எடுத்துக்காட்டாம். குழிப்பாடி என்பது அப்பெயர் கொண்டவூரில் நெய்யப்பட்ட ஆடை. விட்டவாகு பெயர் விடாதவாகு பெயர் என்னும் பாகுபாட்டைத் தழுவியே, பிற்கால மேலையணி நூலார் metonymy, synecdoche என்று அணிப்பெயர் இட்டிருப்பது கவனிக்கத் தக்கது.

தொல்காப்பியர் கூறியவற்றையே,

     “பொருள்முத லாறோடளவைசொல் தானி

கருவி காரியங் கருத்த னாதியுள்

ஒன்றன் பெயரான் அதற்கியை பிறிதைத்

தொன்முறையுரைப்பனவாகு பெயரே.” (290);

என்று நன்னூலார் தொகுத்துஞ் சுருக்கியும் கூறினார்.

     [ஆ → ஆகு + பெயர் = ஆகுபெயர் (வினைத் தொகை);.]

ஆகும்கலம்

ஆகும்கலம்ākumkalam, பெ. (n.)

   1. குடிநீர், மருந்தெண்ணெய், நெய் முதலியவற்றைக் காய்ச்சுவதற்காகப் பயன்படுத்தும் மட்பாண்டம்; earthen vessel used for preparing lotions, medicated oils, ghee etc.

   2. காந்தக்கிண்ணி; bowl made of magnet. (சா.அக.);.

     [ஆகு → ஆகும் (முக்.பெ.எ.);.]

ஆகுருவி

 ஆகுருவிākuruvi, பெ. (n.)

ஆய்குருவி பார்க்க;see ālkuruvi.

ஆகுலம்

ஆகுலம்ākulam, பெ. (n.)

   1. மனக்கலக்கம்; confusion, agitation, flurry.

     “சிந்தாகுலமுற்று” (திருக்கோ. 12);.

   2. ஆரவாரம் (குறள். 34);; pomp, idle sound.

   3. மனவருத்தம்; grief, sorrow, distraction of mind.

     “ஆகுலப் புணரியுளழுந்தி னோரையும்” (கந்தபு. குமாரபுரி. 48);.

     [Skt. å-kula → த. ஆகுலம்.]

ஆகுலி

ஆகுலிākuli, பெ. (n.)

   1. சிற்றரத்தை (தைலவ தைல. 119);; bazaar drug called smaller or lesser galangal.

   2. ஆவிரைப் பொது; senna shrub in general. (சா.அக.);.

ம. ஆகுலி

ஆகுலி-த்தல்

ஆகுலி-த்தல்ākulittal,    4 செ.கு.வி.(v.i.)

   துன்புறுதல் (கம்பரா. பிரமாத். 193);; to be distressed of mind, suffer grief.

ஆகுளி

ஆகுளிākuḷi, பெ. (n.)

   ஒருவகைச் சிறுபறை; a kind of small drum.

     “நுண்ணீ ராகுளி யிரட்ட” (மதுரைக். 606);.

ம. ஆகுளி

ஆகுளி என்பது ஒருகால் குடுகுடுப்பையாயிருக்கலாம்.

ஆகுவாகனன்

 ஆகுவாகனன்ākuvākaṉaṉ, பெ. (n.)

பிள்ளையார் (விநாயகன்); (திவா.);.

 Vinayagan.

வடமொழியில் ‘ஆகு’ என்னும் சொல் எலியைக் குறிக்கும் சொல். எலியை வாகனமாய் கொண்டவன் பிள்ளையார் என்ற பொருளில் வந்துள்ளது.

ஆகூழ்

ஆகூழ்āāḻ, பெ. (n.)

   ஆக்கத்திற்குக் காரணமான நல்வினைப் பயன் அல்லது தெய்வ ஏற்பாடு; destiny or providence that causes prosperity.

     “ஆகூழாற் றோன்று மசைவின்மை” (குறள், 371);.

     [ஆகு + ஊழ் = ஆகூழ் (வி.தொ.);.]

ஆகைச்சுட்டி

ஆகைச்சுட்டிākaiccuṭṭi,    இ.இடை. (conj.) ஆகையால் (ஈடு, 7:10:8); therefore.

ஆகு → ஆகை (தொ.பெ);. ‘ஐ’ தொ.பொறு. இனி, ஆ+கை-ஆகை என்றுமாம். ‘கை’ தொ.பொறு. சுட்டு → சுட்டி (இ.கா.வி.எ.);. ‘இ’ இ.கா.வி.எ.ஈறு.

ஆகைச்சுட்டி என்னுந் தொடர்ச்சொல் ஆகையால் என்று பொருள் கொண்டு ஒருசொற்றன்மைப்பட்டு இடைச் சொல்லாயிற்று.

ஆகையர்

 ஆகையர்ākaiyar, பெ. (n.)

   முடிவு; end, close.

     [U. ākhir → Skt. äkayar → த. ஆகையர்.]

ஆகையால்

ஆகையால்ākaiyāl, இ.இடை. (conj.)

   ஆதலால்; therefore. இங்கே புகையெழுகிறது;

ஆகையால்

நெருப்பிருத்தல் வேண்டும்.

     “ஆகையா லகிலமெல்லா மவனென்கை தெரிந்த தன்றே” (கந்தபு, மேரு. 26);.

   ம. ஆகயால்;   க. ஆதுதரிந்த;பட. அதெந்த

     [ஆகை + ஆல். ‘ஆல்’ ஏதுப்பொருள்படும் 3ஆம் வேற்றுமையுருபு ‘ஆகை’ என்பதற்கு, முந்தின சொல்லின்கீழ் உரைத்த குறிப்பை இங்கும் கொள்க.]

ஆகையினால்

 ஆகையினால்ākaiyiṉāl, இ.இடை. (conj.)

ஆகையால் பார்க்க;see agaiyal

ம. ஆகயினால்

ஆகோசனம்

ஆகோசனம்āācaṉam, பெ. (n.)

   கோவுரசனம்; bezoar.

     “ஆகின்ற கற்பூர மாகோசனம்” (திருமந்: 1368);.

கோ = ஆ (பசு);. உரசு + அனம் = உரசனம். உரசு + அனை = உரசனை. மாத்திரையும் மருந்துக்கட்டியும் உரசி நோயாளிக்குக் கொடுக்கப்படுவதனால் ஆவயிற்றிலிருந்து எடுக்கப்படும் மஞ்சள் மருந்துக்கட்டி கோவுரசனம் அல்லது கோவுரசனை எனப்பட்டது.

கோவுரசனம் → கோரோசனம். கோவுரசனை → கோரோசனை. கோரோசனம் → கோராசனம். இதில் கோ என்னும் சொற்பொருள் மறைந்துவிட்டதனால், மீண்டும்.ஆஎன்னும் அதே பொருட்சொல் முன்சேர்த்து ஆகோசனம் என்று சொல்லப்பட்டது. அரைஞாண் என்பதில் ஞாண் என்னும் சொற்பொருள் மறைந்தபின், கயிறு என்னும் அதன் மறுபெயர் சேர்த்து அரைஞாண் கயிறு என்று வழங்குவதை நோக்குக.

     ‘கோ’ தென்சொல்லே என்பதைக் கோ என்னும் சொல்லின் கீழ்க் காண்க.

ருச் (ruc); என்னும் வேரினின்று திரிந்து விளங்குவது (பிரகாசிப்பது); என்று பொருள்படும் ரோசன (rocana); என்னும் வடசொல்லை உரசனம் (உரசனை); என்னும் தென்சொல்லிற்கு மூலமாகக் காட்டுவது பொருந்தாது.

ஆகோள்

ஆகோள்āāḷ, பெ. .(n.)

     “அகத்திணை மருங்கின் அரில்தபவுணர்ந்தோர்

புறத்திணை யிலக்கணம் திறப்படக் கிளப்பின்

வெட்சி தானே குறிஞ்சியது புறனே

உட்குவரத் தோன்றும் ஈரேழ் துறைத்தே” (தொல். பொருள். 59);

     “வேந்துவிடுமுனைஞர் வேற்றுப்புலக் களவின்

ஆதந்தோம்பல் மேவற்றாகும்.” (தொல். பொருள். 60);

     “வென்றார்த்து விறன் மறவர்

கன்றோடும் ஆதழீஇயன்று” (புறப்.வெட்சி 8);

     [அகம் என்னும் காதலல்லாத புறப்பொருளாகிய அரசியற் போர்வினைபற்றிய ஏழு திணைகளுள் முதலதான ஆநிரை கவர்தலும் மீட்டலுமாகிய இருபகுதிப்பட்டவெட்சியின் முற்பகுதியைச்சேர்ந்த 14 துறைகளுள் ஏழாவது ஆகோள் என்பது. ஆ=பசு. கோள் = கொள்கை, கவர்கை. ‘ஆ’ தென்சொல்;

     ‘பசு’ வடசொல். கொள் → கோள் (மு.தி.தொ.பெ.);. இங்குக் கூறிய போர்ச் செய்தி பண்டைத் தமிழ்வேந்தர் வழக்கு.]

ஆக்கக் கிளவி

ஆக்கக் கிளவிākkakkiḷavi, பெ. (n.)

     “ஆக்கக் கிளவி காரண முதற்றே” (தொல். சொல். 21.);

     “ஆக்கக் கிளவி காரண மின்றியும்

போக்கின் றென்ப வழக்கினுள்ளே”. (தொல். சொல். 22);

     [ஆனது அல்லது ஆவது ஆக்கம். கிளவி = சொல். கிளத்தல் = சொல்லுதல்.]

ஆக்கங் கூறு-தல்

ஆக்கங் கூறு-தல்ākkaṅāṟudal,    5 செ.கு.வி. (v.i.)

   வாழ்த்துக்கூறுதல் ; to bless, invoke, a blessing.

     “மன்னவற் காக்கங் கூறி” (திருவிளை மாயப். 26);.

     [ஆக்கம் + கூறு. ஆ → ஆகு → ஆக்கு → ஆக்கம்]

ஆக்கங் கெடு-தல்

ஆக்கங் கெடு-தல்ākkaṅgeḍudal,    17 செ.குன்றாவி. (v.t.)

    நற்பேறு இழத்தல் ; to become impoverished, to lose prosperity. அவன் ஆக்கங் கெட்டவன் (நெல்லை, முகவை);.

     [ஆக்கம் + கெடு]

ஆக்கஞ்செப்பல்

ஆக்கஞ்செப்பல்ākkañjeppal, பெ. (n.)

 one among the nine states or conditions of mind (Avattai); that mark the emotional behaviour of the Herc and the Heroine during pre-marital love;

 expressing to others poignancy of one’s love.

     “வேட்கை யொருதலையுள்ளுதல் மெலிதல்

ஆக்கஞ் செப்பல் நாணுவரையிறத்தல்

நோக்குவவெல்லாம் அவையே போறல்

மறத்தல் மயக்கம் சாக்கா டென்றச்

சிறப்புடை மரபினவை களவென மொழிப”

என்னும் தொல்காப்பிய நூற்பா (தொல். பொருள். கள. 9); அவ்வொன்பது நிலைகளையுங் கூறும். நம்பியகப் பொருள்,

     “காட்சி முதலாச் சாக்கா டீறாக்

காட்டிய பத்துங் கைவரும் எனினே

மெய்யுறு புணர்ச்சியெய்துதற் குரித்தே” (36.);

என்று, காட்சியுஞ் சேர்த்து அந்நிலைகளைப் பத்தாகக் கூறும்.

     ‘ஆக்கஞ் செப்பல்’ என்னும் நிலையை, இளம்பூரணர், நச்சினார்க்கினியர், நாற்கவிராய நம்பி ஆகிய மூவரும் வெவ்வேறு வகையிற் கூறியுள்ளனர்.

     ‘உறங்காமையும் உறுவ ஓதலும் முதலாயின கூறுதல்’, என்பது இளம்பூரணம்.

     ‘யாதானும் ஓர் இடையூறு கேட்டவழி அதனை ஆக்கமாக நெஞ்சிற்குக் கூறிக் கோடல்’, என்பது நச்சினார்க்கினியம்.

     ‘தன்னெஞ்சின்கண் வருத்த மிகுகின்ற படியைப் பிறர்க்குரைத்தல்’, என்பது நாற்கவிராய நம்பியம்.

     [ஆக்கம் + செப்பல். ஆ → ஆகு → ஆக்கு → ஆக்கம் (தொ.பெ.); செப்பு → செப்பல். (தொ.பெ.);.]

ஆக்கணாங் கெளிறு

 ஆக்கணாங் கெளிறுākkaṇāṅgeḷiṟu, பெ. (n.)

   ஒருவகைக் கெளிற்று மீன் ; brown estuary fish. Plotosus canins.

     [ஒருகா ஆக்கணை + ஆம்.(சாரி.); + கெளிறு.]

ஆக்கண்

 ஆக்கண்ākkaṇ, பெ. (n.)

அங்கண் பார்க்க ;see angan

ஆக்கதம்

 ஆக்கதம்ākkadam, பெ. (n.)

   முதலை ; crocodile, alligator (சா.அக.);.

     [ஆக்கு → ஆக்கணம் (வலிமை); → ஆக்கதம்.]

ஆக்கநிலை

 ஆக்கநிலைākkanilai, பெ. (n.)

   சூழலாலும் பழக்கத்தாலும் நிலைப்படும் நிலை ; state or con. dition brought into being by environment and custom.

     [ஆக்கம் + நிலை]

ஆக்கன்

 ஆக்கன்ākkaṉ, பெ. (n.)

   செயற்கையானது (சம். அக.); ; that which is artificial.

     [ஆகு → ஆக்கு → ஆக்கன். ‘அன்’ ஒருமையீறு.]

ஆக்கப் பெயர்

ஆக்கப் பெயர்ākkappeyar, பெ. (n.)

தொன்று தொட்டு மரபாக வழங்கிவரும் முறைமைக்கு மாறாக, ஒரு பொருட்கு ஒரு பெயரைப் புதிதாக ஆக்கிக் கொள்வது ஆக்கப்பெயர். அது இடுகுறியாக்கப் பெயர், காரணவாக்கப் பெயர் என இருவகைப்படும்.

 name of designation coined newly and arbitrarily by an author. எ-டு: முட்டை (முருகன்);.

 term which, though connoting many is restricted in application to only one or a few of them. எ-டு: நன்னூல் (பவணந்தி);, தாமரைக் கண்ணன் (திருமால்);, கரி (அடுப்புக் கரி, யானை);,

     “இடுகுறி காரண மரபோ டாக்கம்

ஏற்பவும் பொதுவுமாவன பெயரே” (நன். 275);.

     [ஆக்கம் + பெயர். ஆகு →ஆக்கு → ஆக்கம் பெய் → பெயர். ஆகு → ஆ.]

எல்லாச் சொற்களும் காரணக் குறியினவே என்பதே தமிழ்நூலார் கொள்கை

     “எல்லாச்சொல்லும் பொருள்குறித் தனவே” என்பது தொல்காப்பியம். (தொல். சொல். பெய.1);

பிறந்தபோது திண்ணமாயிருந்ததனால் திண்னன் அல்லது திண்ணப்பன் என்றும், வெள்ளையாயிருந்ததனால் வெள்ளையன் என்றும், பிறவியல்பு பற்றி யிடப்படும் பெயர்கள் மட்டுமன்றிப் பிறபெயர்களும், பாட்டன் பெயர் என்றோ, முன்னோன் பெயர் என்றோ, தெய்வத்தை நினைப்பித்துப்பத்திச் சுவையூட்டும் தெய்வப்பெயர் என்றோ, நன்றியறிவு காட்டும் வகையில் குடும்பத்திற்கு நன்மை செய்தவர் பெயர் என்றோ, ஒரு குறிப்பிட்ட பேரறிஞன் அல்லது பெருமகன் போற் பிற்காலத்தில் விளங்க வேண்டுமென்றோ, இன்னோசைப் பெயர் என்றோ, ஏதேனும் ஒரு காரணம்பற்றியே இடப்படுவதால், மக்கட் சிறப்புப் பெயர்களும் காரணப்பெயர்களேயாம்.

நாட்டுப்புற மக்கள் சிலரின் வேடிக்கையான இயற் பெயர்களை நோக்கும் போது, முட்டையென்னும் பெயரும் ஒரு காரணப் பெயராயிருக்கலாமென்று கருத இடமுண்டாகின்றது.

வேத மொழியும் சமற்கிருதமுமான வடமொழி திரிபிற்றிரிபான பின்னை மொழியாதலின், அதன் சொற்கள் பலவற்றிற்கு வேர்ப்பொருளறியவியலாமைபற்றி, வடமொழியிலக்கண நூலார் இடுகுறிப்பெயர், காரணப் பெயர் எனப் பெயர்களை இருவகையாகக் கூறிவிட்டனர். பண்டை நாளிற் சொல்லாராய்ச்சியும் மொழியாராய்ச்சியுமின்மையால், பவணந்திமுனிவரும் அவரைப் பின்பற்றிக் கூறிவிட்டார். மரபானதும் புதிதாக இடப்படுவதும் ஆகப் பெயர்கள் இருதிறப்படுவதால், அப்பாகுபாட்டையும் சேர்த்து, இடுகுறி மரபுப்பெயர், இடுகுறியாக்கப்பெயர், காரண மரபுப்பெயர், காரணவாக்கப் பெயர் என நால்வகையாக வகுத்தார் நன்னூலார்,

இன்னும் இதன் விளக்கத்தை இடுகுறிப் பெயர் என்னுஞ் சொல்லின் கீழ்க் காண்க

ஆக்கப் பெருக்கம்

ஆக்கப் பெருக்கம்ākkapperukkam, பெ. (n.)

   வருமான மிகுதி ; increase in income. மேலுமுண்டான ஆக்கப் பெருக்கம். (S.I.I. v. 330);.

     [ஆகு → ஆக்கு → ஆக்கம். பெரு → பெருகு → பெருக்கு → பெருக்கம்]

ஆக்கப்பாடு

ஆக்கப்பாடுākkappāṭu, பெ. (n.)

   நல்லாக்கம், திருப்பேறு ; great advantage, divine grace.

     “அண்ணலவற் கருள்புரிந்த வாக்கப்பா டருள் செய்தார்” (பெரியபு. திருஞான, 77);.

     [ஆக்கப்படு → ஆக்கப்பாடு (முத.தி.தொ.பெ.);. இனி, ஆக்கம் + பாடு என்றுமாம். பாடு = பெருமை.].

ஆக்கப்புரை

 ஆக்கப்புரைākkappurai, பெ. (n.)

ஆக்குப்புரை பார்க்க ;see ākkuppurai.

     [ஆக்கம் + புரை]

ஆக்கப்பொறு-த்தல்

ஆக்கப்பொறு-த்தல்ākkappoṟuttal,    4. செ.குன்றாவி. (v.t)

   1. உணவு சமைக்கும்வரை காத்திருத்தல் ; to wait till food is cooked. ஆக்கப் பொறுத்தது ஆறப் பொறுக்கக் கூடாதா? (உ.வ.);.

   2. வினைமுடியக் காத்திருத்தல் ; waiting until the work is over.

     [ஆக்கு + அ + பொறு]

ஆக்கமகள்

ஆக்கமகள்āggamagaḷ, பெ. (n.)

   திருமகள் ; goddess of wealth.

     “ஆக்கமகள் கொண்டாட” (கடம்பர் உலா, 192:3);.

ஆக்கம்

ஆக்கம்ākkam, பெ. (n.)

   1.ஆக்கமுணர்த்துஞ்சொல், ஆக்கக் கிளவி (தொல். சொல். கிளவி 22); ; word indicating change from one state or quality to another.

   2. படைப்பு ; creation,

     “ஆக்க மவ்வவர் கன்ம மெலாங் கழித்திடல்” (சி.சி.1:37);.

     “ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுப்பானா’, ‘ஆக்க மாட்டாத பெண்ணுக்கு அடுப்புச்சட்டி பத்தாம்’, ‘ஆக்கமாட்டாத அழுகல் நாரிக்குத் தேடமாட்டாத திருட்டுக் கணவன் வாய்த்தானாம்’ (பழ.);

   3. அமைத்துக் கொள்ளுகை ; arrangement, preparation, asincleansingfice: ‘வழுக்களைந்து சொற்களை ஆக்கிக் கொண்டமையான், இவ்வோத்துக் கிளவியாக்க மாயிற்று’ (தொல். சொல். கிளவி. 1 சேனா. உரை.);.

   4. வளர்ச்சி, பெருக்கம் ; increase, development,

     “தம்மாலா மாக்க மிலரென்று” (நாலடி. 301);.

   5. ஊதியம் (இலாபம்); ; gain, profit.

     “ஆக்கங் கருதி முதலிழக்குஞ் செய்வினை” (குறள், 463);.

   6. ஈட்டம், தொகுப்பு ; accumulation.

     “அருளொடு மன்பொடும் வாராப் பொருளாக்கம்” (குறள், 755);.

   7. செல்வம் ; wealth, fortune, prosperity.

     “மனநல மன்னுயிர்க் காக்கம்” (குறள், 457);.

   8. பெருவாழ்வு ; life of prosperity, flourishing state…;

     “அவளால் வந்த ஆக்கம் இவ்வாழ்க்கையெல்லாம்” (சிவஞானசித். 1:69);.

   9. பொன் ; gold. (பிங்.);

   10. கைகூடுகை ; achievement, accomplishing. ‘விரும்பிய பொருளின் ஆக்கத்து அழகுணர்த்தற்குச் செறியும் இருண்ட மாலையிடத்து நற்சொற் கேட்டது’ (பு.வெ. 1:4, உரை);.

   11. மங்களவியல் (உ.வ.); ; auspiciousness.

   12. வாழ்த்து ; benediction.

     “மன்னவற் காக்கங் கூறி” (திருவிளை மாயப், 26);.

   13. கொடிப்படை, (திவா); ; van of an army carrying the banner.

ம., ஆக்கம் : க. ஆகெ, ஆக்கு.

     [ஆகு → ஆக்கு → ஆக்கம் (தொழிற்பெயரும் தொழிலாகுபெயரும்);]

 ஆக்கம்1ākkam, பெ. (n.)

   ஊதியம் (இலாபம்); (யாழ்ப்.);; profit (J.);, benefit.

     [ஆர் → ஆர்க்கம். ஆர்தல் = நுகர்தல், பயன் பெறுதல், பயனாக விளைந்த ஊதியம்.]

ஆக்கர்

ஆக்கர்ākkar, பெ. (n.)

   படைக்கப்பட்ட தேவர் ; installed deities. ‘இவ்வருகிலாக்கரான இந்திராதிகள்’ (ஈடு, 5:2:3);.

     [ஆகு → ஆக்கு → ஆக்கர். ‘அர்’ ப. பா. ஈறு.]

 ஆக்கர்1ākkar, பெ. (n.)

   உலாவிக் கொண்டே துணி முதலியவற்றை வணிகம் செய்வோன்; pedlar, hawker.

     [E. Hawker → த. ஆக்கர்.]

 ஆக்கர்2ākkar, பெ. (n.)

   துரப்பணம்; centerbit, tool for boring holes.

     [E, Auger → த. ஆக்கர்.]

ஆக்கறுவாள்

ஆக்கறுவாள்ākkaṟuvāḷ, பெ. (n.)

   1. கொடிக்காலில் வெற்றிலைக் காம்பை நறுக்க உதவும் கத்தி ; bl. Hook for cutting the stem of the betel leaf.

   2. தழைகளை வெட்ட உதவும் கையறுவாள் ; bill-hook for hacking garden – knife, pruning hook (சா.அக.);

     [ஆக்கு + அறுவாள் த. அடகு → தெ. ஆக்கு.]

மனையிற்பதிக்கப்பட்டுக்காய்கறியரியும்வாள்போன்றதே அரிவாள் என்றும், அது பதிக்கப்பட்ட மணையே அரிவாள்மணையென்றும் பெயர் பெறும். ஏனை யறுக்கும் அல்லது வெட்டும் வாள்களெல்லாம் அறுவாள் என்றே பெயர்பெறும். இப்பெயர்வேறுபாடு அரிதலுக்கும் அறுத்தலுக்கும்

இடைப்பட்ட வினைவேறுபாட்டைப் பொறுத்தது. ‘அறுவாள்’ என்னும் சொல்லைப் பார்க்க

அகரமுதலிகளில் அறுவாளை அரிவாள் என்று குறித்திருப்பது தவறாகும்.

   ம. ஆக்கத்தி ;தெ. கத்தி ஆகுராய்

ஆக்கல்

ஆக்கல்ākkal, தொ.பெ. (vbl. n)

   1. படைத்தல் ; creating. ஆக்கல், காத்தல், அழித்தல் என இறைவன் தொழில் மூன்று.

   2. சமைத்தல் ; cooking. ‘ஆக்க வேண்டா அரைக்க வேண்டா பெண்ணே, என் அருகிலிருந்தால் போதுமடி கண்ணே’, ‘ஆக்கிக் குழைப்பேன் அல்லது அரிசியாய் இறக்குவேன்’ (பழ.);.

     [ஆகு → ஆக்கு → ஆக்கல். ‘அல் தொ.பெ.ஈறு.]

ஆக்களவு

 ஆக்களவுākkaḷavu, பெ. (n.)

   ஆவைக் களவு செய்தல் ; stealing of cows.

     [ஆ + களவு]

ஆக்கவினைக்குறிப்பு

ஆக்கவினைக்குறிப்புākkaviṉaikkuṟippu, பெ. (n.)

   ஆக்கத்தால் வரும் வினைக் குறிப்புச்சொல் ; verb denoting change from one state or quality to another.

     “ஆக்கவினைக் குறிப்பு ஆக்கமின் றியலா” (நன்.347);.

   சாத்தன் நல்லன் ;   நல்லன் என்பது வினைக்குறிப்பு. ‘சாத்தன் நல்லன் ஆயினான்’ ;ஆயினான் என்பது ஆக்கச் சொல்.

     [ஆக்கம் + வினை + குறிப்பு]

ஆக்கவும்மை

ஆக்கவும்மைākkavummai, பெ. (n.)

   ஆக்கப் பொருளில் வரும் ‘உம்’ என்னும் இடைச்சொல் ; particle ‘um’ indicating change from one state or quality to another.

இவ்விடைச்சொல் இப்பொருளில் எங்கேனும் வந்ததாகத் தெரியவில்லை.

     “எச்சம் சிறப்பே ஐயம் எதிர்மறை

முற்றே எண்ணே தெரிநிலை ஆக்கமென்

றப்பால் எட்டே உம்மைச் சொல்லே”

என்று தொல்காப்பியர் நூற்பா (தொல். சொல். இடை.7); யாத்து விட்டதனால், பவணந்தியாரும் அவரைப்பின்பற்றி,

     “எதிர்மறை சிறப்பையம் எச்சமுற்றளவை

தெரிநிலை ஆக்கமோ டும்மை யெட்டே”

என்று (நன்.இடை6); இயற்றிவிட்டார்.

இளம்பூரணர், தம் உரையில், தொல்காப்பிய நூற்பா ஆக்கவும்மைக்கு எங்ஙனமும் எடுத்துக்காட்டுத் தரல் வேண்டுமென்பதையே கருதி, ‘நெடியனும் வலியனும் என்பது ஆயினான் என்னும் ஆக்கத்துக்கண் வந்தது ஆக்கவும்மை’ என்று வரைந்தார். அவருக்குப் பின்வந்த சேனாவரையர் ஆக்கவும்மைக்கு எடுத்துக்காட்டின்மை கண்டு,

     ‘ஆக்கவும்மை வந்தவழிக் கண்டுகொள்க. உரையாசிரியர் நெடியனும் வலியனுமாயினான் என்பழி உம்மை ஆக்கங் குறித்து நிற்றலின் ஆக்கவும்மையென்றார்.

     “செப்பே வழீஇ யினும் வரைநிலையின்றே’ (தொல். சொல்.14); என்னுமும்மை, வழுவை இலக்கணமாக்கிக் கோடல் குறித்து நின்றமையின், ஆக்கவும்மை யென்பாரு முளர்’ என்று திறம்படவுரைத்தார்.

நச்சினார்க்கினியர்,

     ‘நெடியனும் வலியனுமாயினான் என்பது ஆக்கம்.

     “செப்பே வழீஇயினும் வரைநிலை யின்றே” என்பது இலக்கணமாக்கிக் கோடல் குறித்தமையின் ஆக்கமுமாம்’ என்றும்,

கல்லாடனார்,

     ‘இனி ஆக்கம் நெடியனும் வலியனுமாயினான் என்பது. இஃது எண்ணன்றோவெனின், ஒரு பொருடன்னையே சொல்லுதலின் அன்றாயிற்றுப்போலும்’ என்றும் உரைத்தனர்.

தெய்வச்சிலையாரோவெனின்,

ஆக்கம் உம்மையடுத்த சொற்பொருண்மேல் ஆகும் நிலைமையைக் குறித்து வரும் வாழும் வாழ்வு, உண்ணுமுண் எனத் தொழிலினது ஆக்கங்குறித்து நின்றவாறு கண்டு கொள்க. இது பெயரெச்ச வினைச்சொல்லன்றோ எனின் ஆம். அதன்கண்ணும் இடைச்சொல் என்க. அதனானே யன்றே

     “உம்முந் தாகு மிடனுமா ருண்டே” என்னும் இலக்கணத்தால்,

     “நெல்லரியு மிருந்தொழுவர்” என்னும் பாட்டினுள்,

     “செஞ் ஞாயிற்று வெயின்முனையிற் றெண்கடற் றிரைமிசைப் பாயும்” எனற்பாலது

     “பாயுந்து” என வந்தது. இவ்விலக்கணம் வினையியலுள் ஒதாமையால் பெயரெச்ச உம் இடைச்சொல் என்று கொள்ளப்படும். பாயும் புனல் என்பது பாய்புனல் எனத் தொக்குழி, வேற்றுமைப் பொருள்உருபு, பெயர் நிற்பத் தொக்கவாறு போல, வினைநிற்ப உருபு தொகுதலானும், செய்யும் என்பது வினையும் உருபுமாகிய இரு நிலைமைத்து என்றுகொள்க. செய்யும் என்னும் முற்றுச்சொல்லின்கண் உம் எவ்வாறு வந்ததெனின், அது மற்றொரு பொருளைக்குறித்து நில்லாமையின் ஈண்டு இடமின்றென்க. முற்றிநிற்றலின் முற்றும்மை யெனினும் இழுக்காது. ஆக்கவும்மை என்பதற்கு நெடியனும் வலியனும் ஆயினான் என உதாரணங் காட்டுப வாலெனின், அ.து எண்ணும்மை என்க.

     “தனிவரின் எச்சவும்மையாம்’ என வேறொரு வகையாக வுரைத்தார்.

இனி, நன்னூலுரையாசிரியருள்,

நெடியனு மாயினான் எ-து ‘ஆக்கம்’ என்றார் மயிலைநாதர். ‘நெடியனும் ஆயினான், பாலும் ஆயிற்று என்புழி அவனே வலியனும் ஆயினான், அதுவே மருந்தும் ஆயிற்று

எனப் பொருள்படின் ஆக்கவும்மை’ என்றார் விருத்தியென்னும் விரிவுரையாளர்.

     ‘நெடியனும் வலியனு மாயினானவன், பாலும் மருந்து

மதுவாயிற்று என்பன ஆக்கம்.

     ‘இதனை நெடியனுமாயினான், பாலுமாயிற்று எனக்கூறி, அவனே வலியனுமாயினான், அதுவே மருந்துமாயிற்று எனப் பொருள்படின், ஆக்கவும்மை யென்பாருமுளர்’ என்றார் இராமானுசக் கவிராயர்.

     ‘பாலுமாயிற்று, இங்கே அதுவே மருந்துமாயிற்று என்னும் பொருளைத் தருதலால் ஆக்கம்’ என்றார்.ஆறுமுக நாவலர்.

     ‘ஆகவே, பாலும் ஆயிற்று என்றால், இதில் அதுவே மருந்தும் ஆயிற்று என்னும் பொருளைத் தருமிடத்து ஆக்கம்’ என்றார் சடகோபராமானுசாச்சாரியாரும்,

இரு நூற்கும் உரை வரைந்த இவரெல்லாருள்ளும், உண்மையொட்டியுரைத்தவர் சேனாவரையர் ஒருவரே.

     ‘கோவிற்பட்டி நகருமாயிற்று, இதில் கோவிற்பட்டி இப்பொழுது நகரமாயிற்று என்று ஆக்கப் பொருள் தருதலால் ஆக்கம்’. (இயற்றமிழ் இலக்கணம் பக்.75); என்று பாவாணர் எடுத்துக் காட்டியுள்ளமை கொள்ளத்தக்கது.

ஆக்காட்டு-தல்

ஆக்காட்டு-தல்ākkāṭṭudal,    5 செ.கு.வி. (v.i)

   குழந்தை தன் தாய்க்கு ஆவென்று தன் வாயை விரிவாகத் திறந்து காட்டுதல் (கு.வ.); ; to open the mouth wide as in pronouncing the back vowel ‘a’, as a child in response to its mother’s command. (Nurs.);

     [ஆ + காட்டு. காண் (த.வி.); → காட்டு (பி.வி);.]

ஆக்காம்பாறை

 ஆக்காம்பாறைākkāmbāṟai, பெ. (n.)

   பாறைமீன் வகைகளுள் ஒன்று. (செங்கை மீன.); ; a kind of fish.

     [ஆக்கம் – ஆக்காம் + பாறை]

ஆக்கிக்கொள்-தல்

ஆக்கிக்கொள்-தல்ākkikkoḷtal,    7 செ.குன்றாவி. (v.t)

   முடித்துக்கொள்ளுதல் ; to see a work (usu. auxiliary or incidental to the main work); done of accomplished

     “வினையால் வினையாக்கிக் கோடல்” (குறள். 678);.

     [ஆக்கி + கொள்.]

ஆக்கிணைப்பத்திரம்

 ஆக்கிணைப்பத்திரம்ākkiṇaippattiram, பெ. (n.)

   அரசனது எழுத்து மூலமான கட்டளை; king’s writ, royal edict.

     [Skt. a-jna+patra → த. ஆக்கினைப்பத்திரம்.]

ஆக்கினாசக்கரம்

 ஆக்கினாசக்கரம்ākkiṉācakkaram, பெ. (n.)

   சக்கரம் போல் எங்கும் சுழலும் அரசாணை; king’s authority, revolving as a discus and ready to strike evil-doers.

     [Skt. åjnå → த. ஆக்கினா.]

ஆக்கினாசத்தி

ஆக்கினாசத்திākkiṉācatti, பெ. (n.)

   அரசனாணையின் வன்மை; regal power to enforce a command.

     “தனதாக்கினா சத்தியுங் கோடாமற் செங்கோல் நடத்தா நிற்பன்”(சி.சி.2,31 மறைஞா.);.

த.வ. ஆனையாற்றல்.

     [Skt. ajna+saki → த. ஆக்கினாசத்தி.]

த. சத்தி → Skt. சக்தி

ஆக்கினாபங்கம்

 ஆக்கினாபங்கம்ākkiṉāpaṅgam, பெ. (n.)

   ஆனைமீறுகை; insubordination.

 Skt. ajna+bhanga → த. ஆக்கினாபங்கம்.]

ஆக்கினேயச்நானம்

ஆக்கினேயச்நானம்ākkiṉēyacnāṉam, பெ. (n.)

   தூய்மைக்காக திருநீற்றைப் பூசிக்கொள்ளல் (சித். சிகா. விபூதி.12, உரை);; purification by smearing one’s body with sacred ashes.

     [Skt. ågneya+snånam → த. ஆக்கினேயச் நானம்.]

ஆக்கினேயபுராணம்

 ஆக்கினேயபுராணம்ākkiṉēyaburāṇam, பெ. (n.)

   பதினெண் தொன்மத்தி(புராணத்); லொன்று; a chief puranam, one of patinen-puranam.

     [Skt. āgnēya+purānam → த. ஆக்கினேய புராணம்.]

ஆக்கினேயம்

ஆக்கினேயம்1ākkiṉēyam, பெ. (n.)

   1. தீக்கடவுளுக்குரியது; that which belongs to Fire-God.

   2. தென் கீழ்த்திசை; the South East quarter of which Fire God is guardian.

   3. சிவாகமத்துளொன்று; an ancient Saiva scripture in Sanskrit, one of 28 sivägamam.

     [Skt. agneya → த. ஆக்கினேயம்.]

 ஆக்கினேயம்2ākkiṉēyam, பெ. (n.)

   திருநீறு; sacred ashes.

     [Skt. ägnéya → த. ஆக்கினேயம்.]

ஆக்கினேயாச்திரம்

 ஆக்கினேயாச்திரம்ākkiṉēyāctiram, பெ. (n.)

   தீயைத் தேவியாகக் கொண்ட அம்பு; missile presided over by fire.

     [Skt. agneyå+sæsta → த. ஆக்கினே யாத்திரம்.]

ஆக்கினை

ஆக்கினைākkiṉai, பெ. (n.)

   1. கட்டளை; order, command, mandate.

   2. தண்டனை; punishment, penalty.

     ” தலைக்குமிஞ்சின ஆக்கினையில்லை”

   3. கட்டைவிரல்; thumb.

     [Skt. å-jnå → த. ஆக்கினை.]

ஆக்கிப்போடல்

 ஆக்கிப்போடல்ākkippōṭal, பெ. (n.)

   மகப்பேற்றுக்காக மகளை அழைக்கும்போது தாய்விட்டார் அளிக்கும் விருந்து ; feast offered to a pregnant woman by her parents inviting her to their house for delivery.

     [ஆக்கி + போடல்]

ஆக்கியரிவாள்

 ஆக்கியரிவாள்ākkiyarivāḷ, பெ. (n.)

   கொடிக்காலில் வெற்றிலைக் காம்பை நறுக்க உதவும் சிறப்பு வகையான கத்தி (இ.வ.); ; special kind of knife for cutting the stem of the betel leaf (Loc.);.

ம. ஆக்கத்தி

     [ஒருகா. ‘ஆக்கறுவாள்’ என்பதன் மறுவடிவாயிருக்கலாம். அங்ஙனமாயின், ‘ஆக்கியறுவாள்’ என்றேயிருத்தல் வேண்டும். இலையைக் குறிக்கும் ஆக்கு என்னும் தெலுங்குச்சொல் ஆக்கியென்று திரிந்திருக்கலாம். ‘ஆக்கறுவாள்’ என்னுஞ் சொல்லின் கீழ்ச் சிறப்புக் குறிப்பைப் பார்க்க.]

ஆக்கியோன்

ஆக்கியோன்ākkiyōṉ, பெ. (n.)

   1. படைத்தோன், கடவுள் ; God, as the maker, creator.

   2. நூல்

   செய்தவன், நூலாசிரியன்; author of a book.

     “ஆக்கியோன் பெயரே…………. பாயிரத் தியல்பே” (நன். பொதுப்பாயி. 48);.

     [ஆகு → ஆக்கு → ஆக்கியான் → ஆக்கியோன் (வினையா. பெ.);]

ஆக்கிரகம்

ஆக்கிரகம்āggiragam, பெ. (n.)

   1. விடாப்பிடி; persistence. obstinacy, determination.

   2. கடுங்கோபம் (திவ். பெரியாழ். 3, 5, வியா. பிர);; great anger, violent, temper, wrath.

     [Skt. agraha → த. ஆக்கிரகம்.]

ஆக்கிரமணம்

 ஆக்கிரமணம்ākkiramaṇam, பெ. (n.)

   வலிந்து கவர்கை; seizing, taking by force.

     [Skt. a-kar-mana → த. ஆக்கிரமணம்.]

ஆக்கிரமி-த்தல்

ஆக்கிரமி-த்தல்ākkiramittal,    4 செ.குன்றாவி. (V.t.)

   வலிந்து கவர்தல்; to seize by violence, take or occupy by force.

     [Skt. a-kram- → த. ஆக்கிரமி-த்தல்.]

ஆக்கிரமிப்பு

 ஆக்கிரமிப்புākkiramippu, பெ. (n.)

   வன்கவர்ப்பு; occupy by force.

     [Skt. a-kram → த. ஆக்கிரமிப்பு.]

ஆக்கிராணம்

ஆக்கிராணம்ākkirāṇam, பெ. (n.)

   1. முகர்கை; act of Smelling.

   2. மூக்கு (சூடா.);; nose.

   3. மூக்கிலிடும் மருந்துப் பொடி; a medicinal Snuff intended to dispel humours from the head.

     [Skt. ághrana → த. ஆக்கிராணம்.]

ஆக்கிராணி-த்தல்

ஆக்கிராணி-த்தல்ākkirāṇittal,    4 செ. குன்றாவி.(v.t.)

   முகர்தல்; to smell, snuff up.

     [Skt. a-ghrani → த. ஆக்கிராணித்தல்.]

ஆக்கிராந்தம்

ஆக்கிராந்தம்ākkirāndam, பெ. (n.)

   கைக்கொள்ளப்பட்டது; that which is seized, taken possession of.

     “அஞ்ஞானாக் கிராந்தமாயிருக்கிற” (சி.சி.2,9); (சிவாக்.);.

த.வ. கையகப்பேறு

     [Skt. ä-kranta → த. ஆக்கிராந்தம்.]

ஆக்கு

ஆக்கு1ākkudal, செ.குன்றாவி. (v.t)

   1. செய்தல்; to make, effect.

     “எரிப்பச்சுட் டெவ்வநோயாக்கும்” (நாலடி. 124);.

   2. படைத்தல், தோற்றுவித்தல்; to cause to be create.

     “அனைத்துலகு மாக்குவாய் காப்பாயழிப்பாய்” (திருவாச.1:42);

   3. அமைத்துக் கொள்ளுதல்; to arrange, make preparations.

     “நொய்யும் நுறுங்குங் களைந்து அரிசியமைத்தாரை அரிசியாக்கினா ரென்ப” (தொல். சொல். 1. சேனா. உரை);.

   4. சமைத்தல்; to cook.

     “அஞ்சும் மூன்றும் உண்டானால் அறியாப் பெண்ணுங் கறியாக்கும்”.

     “ஆக்கி அரைத்துப் போட்டவள் கெட்டவள், வழி கூட்டி அனுப்பினவள் நல்லவள்”,

     “ஆக்குகிறவள் சலித்தால் அடுப்புப் பாழ், குத்துகிறவள் சலித்தால் குந்தாணி பாழ்” (பழ.);.

     “ஆக்கப் பொறுத்த நமக்கு” (இராமநா. அயோத் 13);.

   5. நிலைமையுயர்த்துதல்; to elevate, bring prosperity to.

     “ஒன்னார்த்தெறலு முவந்தாரை யாக்கலும்” (குறள், 264);.

   6. வளர்த்தல்; to rear, to bring up. பிள்ளையை ஆளாக்க வேண்டும். (உ.வ.);

   7. பெருக்கிச் சொல்லுதல்; to exaggerate. ஒன்றை ஒன்பதாக்குவான், துரும்பைத் தூணாக்கலாமா? (உ.வ.);.

   8. பெருக்குதல்; to increase, multiply. தந்தை தந்த பத்தாயிரத்தைப் பத்திலக்கமாக்கினான். (உ.வ.);.

   9. மாற்றுதல்; to change, convert

     “முல்லையை மருதமாக்கி” (கம்பரா. ஆற்.17);.

   10. பெறுதல்; to receive.

   11. உண்டாக்குதல்; to bring into being.

     “முயற்சி திருவினையாக்கும்”. (குறள் 616.);

   ம. ஆக்குக;   க. ஆகிசு;தெ. காவின்சு.

     [ஆகு (த.வி.); → ஆக்கு (பி.வி.);]

 ஆக்கு2ākku, பெ. (n.)

   நூறுபிடி நெல் நாற்று; one hundred sheaves of paddy – seedlings (சேரநா.);

     [ஆள்+கு – ஆள்க்கு → ஆக்கு (ஒராள் ஒருநாளில் நடும் அளவு);.]

 ஆக்கு3ākku, பெ. (n.)

   படைப்பு; creation.

     “ஆக்கு மழிவு மையனீ யென்பனான்” (தேவா. 914:7);.

     [ஆகு → ஆக்கு (முத.தொ.பெ.);.]

 ஆக்கு4ākku, பெ. (n.)

   கிளிஞ்சில் வகையுள் ஒன்று. (நெ.மீ.);; a kind of mussel or shell.

ஆக்குத்தாய்

 ஆக்குத்தாய்ākkuttāy, கு.வி.எ. (adv.)

   அன்முறையாய் (அநீதியாய்);; unjustly. ஆக்குத்தாய்ப்பிடித்துக் கொண்டார்கள். (வில்லி.);.

     [ஒருகா. ஆக்குத்து + ‘ஆய்’ கு.வி.எ.ஈறு.]

இருளர் என்னும் வில்லியர் கொடுந்தமிழ மரபினரேயாதலின், ‘ஆக்குத்து’ என்னும் பெயர்ச்சொல் ஒரு தென் சொல்லின் திரிபாயேயிருத்தல் வேண்டும்.

ஆக்குநர்

 ஆக்குநர்ākkunar, பெ.(n.)

   திரைப்படம்,நாடகம், போன்றவற்றை உருவாக்குவதில் ஆளுவ (நிருவாக);ப்பொறுப்புடன் பொருட்செலவையும் ஏற்பவர்(தயாரிப்பாளர்);; producer (of a film or layer);.

     [ஆக்கு→ஆக்குநர்]

ஆக்குப்புரை

ஆக்குப்புரைākkuppurai, பெ. (n.)

   மங்கல அமங்கலக் கொண்டாட்ட நாள்களில், அற்றைப் பொழுதிற்கு அமைத்துக் கொள்ளும் சமையற் கூடம் அல்லது மறைப்புப் பந்தலறை; covered place for cooking temporarily put up for special occasions both auspicious and inauspicious.

   2. சமையற்கூடம், அட்டிலறை; kitchen.

     [ஆகு → ஆக்கு + புரை. புரை = துளை, அறை.]

ஆக்கும்

ஆக்கும்ākkum, இடை. ((part.)

   1. போலும்; presumably, probably, it is likely that. பெண் பார்க்க வந்தானாக்கும் (உ.வ.);.

   2. ஒருவனது திறமையை அல்லது முதன்மையை, அறிந்தவன் அறியாதவனுக்கு வியப்புற எடுத்துக் கூறுவதைக் குறிப்பிக்கும் இடைச்சொல்s; particle emphasising the unknown might or importance of a person, relating in a tone of awe and wonder. அவனை யாரென்று நினைத்தாய்? தலைமை மந்திரியாரை ஆட்டி வைக்கும் அணுக்கச் செயலாளராக்கும். அவன் யார் தெரியுமா? ஆச்சாபுரக் காட்டில் ஐம்பத்திரு வேங்கையைக் கொன்றவனாக்கும். (உ.வ);.

     [ஆகு → ஆகும் → ஆக்கும்.]

ஆக்குருவி

 ஆக்குருவிākkuruvi, பெ. (n.)

ஆய்க்குருவி பார்க்க: see āy–k-kuruvi

ஆக்குரோசம்

 ஆக்குரோசம்ākkurōcam, பெ. (n.)

   கடுஞ்சினம்; great rage.

த.வ. வெஞ்சினம்.

     [Skt. à-króša → த. ஆக்குரோசம்.]

ஆக்குவயம்

 ஆக்குவயம்ākkuvayam, பெ. (n.)

   பெயர் (பிங்);; name.

     [Skt. a-hvaya → த. ஆக்குவயம்.]

ஆக்கெளுத்தி

ஆக்கெளுத்திākkeḷutti, பெ. (n.)

   1. ஆக்கணாங்கெளிறு பார்க்க;see akkanān Keliru

   2. கடற் கெளிற்று மீன்வகை; a marine fish, plotosus arab.

     [

   1. ஆக்கணாங்கெளுத்தி → ஆக்கெளுத்தி.

   2. ஆ + கெளுத்தி.கெள் → கெளிறு → கெளிற்றி-கெளுத்தி. கெளிறு பார்க்க;see kelifu]

ஆக்கை

ஆக்கை1ākkai, பெ. (n.)

   1. கூரை வேய்விற்கு உதவும் நார், கற்றாழை நார், நார்த்துணிக்கை; strips of fibre, used in thatching.

     “நரம்பாக்கை யார்த்து” (தேவா. 631:3);.

   2. உடம்பு; body.

     “ஆக்கை யுள்ளுறை யாவி” (சீவக. 1362);.

ம.ஆக்க

     [யாத்தல் = கட்டுதல், யா → யாக்கை → ஆக்கை =

   1. கட்டும் நார்.

   2. எழுவகைத் தாதுக்களாற் கட்டப்பட்ட உடம்பு. ‘யாக்கை’ பார்க்க.]

ஆக்கொத்துமம்

 ஆக்கொத்துமம்ākkottumam, பெ. (n.)

   சரக்கொன்றை (மலை.);; Indian laburnum.

     [ஒருகா. ஆரக்கொத்துமம். ஆரம் = மாலைபோல் தொங்கும் பூச்சரம். ஆரம் + கொத்து + மரம் = ஆரக்கொத்துமரம் → ஆரக்கொத்துமம் → ஆக்கொத்துமம். வ. ஆரக்வத (aragwadha);. வடசொற்கு மூலமின்மை கவனிக்கத்தக்கது.]

ஆக்கொல்லி

 ஆக்கொல்லிākkolli, பெ. (n.)

   தில்லைமரம் (மலை.);; blinding tree.

ம.ஆக்கொல்லி

     [ஒருகா. ஆ + கொல்லி. கொல் → கொல்லி. ‘இ’ வினைமுதலீறு]

ஆக்கோது

 ஆக்கோதுākātu, பெ. (n.)

   கொன்றைமரம்; cassia tree (சா.அக.);.

ஆங்க

ஆங்கāṅga, இடை. (part.)

   1. அவ்வாறு, அதுபோல என்று பொருள்பட்டு வினைச்சொல்லோடு கூடி வரும் உவமவுருபு; sign of comparison generally used with verbs.

     “கயநா டியானையின் முகன மாந்தாங்கு” (தொல். பொருள். உவம. 11. உரை);.

   2. அவ்வாறு என்னும் பொருளையிழந்து பெரும்பாலும் அசைநிலையாய் நிற்கும் உரையசைச் சொல்; sign of comparison which has lost much of its signification and is almost an expletive. ‘ஆங்கக் குயிலுமயிலுங்காட்டி’ (தொல். சொல். 272, உரை.);.

     “அன்ன ஆங்க மான இறப்ப

என்ன உறழத் தகைய நோக்கொடு

கண்ணியவெட்டும் வினைப்பாலுவமம்” (தொல். பொருள். 283);

     “ஆங்கவுரையசை” (தொல். சொல். இடை. 29);

     [ஆ (சேய்மைச் சுட்டு); → ஆங்கு + அ (ஈறு.); ஆங்க (உவமவுருபு);.]

ஆங்கண்

ஆங்கண்āṅgaṇ, கு.வி.எ. (adv.)

   அவ்விடத்து; in that place.

     “கடுந்தேர் குழித்த ஞெள்ள லாங்கண்” (புறநா. 15);.

     [ஆ.சே.சு) → ஆங்கு + அண் = ஆங்கண். ‘அண்’ ஒர் இடப்பொருளீறு. ஒ.நோ: அவண், இவண் உவண், எவண்.]

இனி நச்சினார்க்கினியர் தம் தொல்காப்பிய வுரையில்,

     “வல்லெழுத்து முதலிய வேற்றுமையுருபிற்

கொல்வழியொற்றிடை மிகுதல் வேண்டும்”

என்னும் புணரியல் நூற்பாவின் (12); கீழ்,

     ‘தங்கண், நங்கண், நுங்கண், எங்கண் என மெல்லொற்று மிக்கது. இவற்றிற்கு நிலைமொழி மகரக்கேடு உருபியலிற்கூறுப, ஆங்கண் ஈங்கண் ஊங்கண் என்பன சுட்டெழுத்து நீண்டு நின்றன. இவற்றிற்கு ஒற்றுக்கேடு கூறுதற்கு ஒற்றின்று.’ என்றும்,

     “நும்மெனிறுதியியற்கையாகும்” (தொல். எழுத்து. 188); என்னும் உருபியல் நூற்பாவின்கீழ், நும்மை, நும்மொடு, நுமக்கு நும்மின், நுமது, நுங்கண் என வரும் என்றும்

     “நூங்கணென்பதற்கு, மேலைச்சூத்திரத்து ‘மெய்’ என்றதனான் மகரவொற்றுக் கெடுத்து, ‘வல்லெழுத்து முதலிய’ என்பதனான் மெல்லொற்றுக் கொடுக்க என்றும்,

     “தாம்நா மென்னு மகர விறுதியும்

யாமெனிறுதியுமதனோ ரன்ன

ஆஎ ஆகும் யாமெனிறுதி

ஆவயின் யகரமெய் கெடுதல் வேண்டும்

ஏனையிரண்டு நெடுமுதல் குறுகும்” (தொல். எழுத்து. 189);.

என்னும் உருபியல் நூற்பாவின்கீழ்,

மெய்யென்றதனாற் பிறவயின் மெய்யுங் கெடுக்க, தங்கண் நங்கண் எங்கண் என எழனுருபின்கண் மகரங் கெடுத்து, ‘வல்லெழுத்து முதலிய’ (எழுத்.114); என்பதனான், மெல்லெழுத்துக் கொடுக்க என்றும், உரைத்தார். அவர் கருத்துப்படி,

தம் + கண் → த + கண் → தங்கண், ஆ + கண் = ஆங்கண் என்று புணர்ந்திருக்க வேண்டும். அங்ஙனம் புணர்தல் இயற்கைக்கு மாறாயிருத்தலை நோக்குக.

ஆங்கு + அனம் = ஆங்கனம் → அங்கனம் → அங்ஙனம் → அங்ஙன் என்னும் தொடர்புணர்ச்சித் திரிபையும் நோக்குக.

இனி, இயற்கையாக நீண்டிருந்த சுட்டே பின்னர்க்குறுகிற் றென்பது இக்கால மொழியாராய்ச்சியாளர்க்கே புலனாம்.

ஆங்கனம்

ஆங்கனம்āṅgaṉam, கு.வி.எ. (adv.)

   அவ்வாறு, அவ்வகை, அதுபோல்; in that manner, like that, thus so.

     “ஆங்கனம் ஆகிய ஆதிரை கையால்” (மணிமே. 16:128);.

     [ஆ(சே.சு.); → ஆங்கு → ஆங்கனம் ‘அனம்’ ஒர் ஈறு.]

ஆங்கு → ஆங்கனம் → அங்கனம் → அங்ஙனம் → அங்ஙன், ஈங்கு → ஈங்கனம் → இங்கனம் → இங்ஙனம் → இங்ஙன், யாங்கு → யாங்கனம் → யாங்ஙனம் → யாங்ஙன், எங்கு → எங்கனம் → எங்ஙனம் → எங்ஙன் என்று திரிந்திருப்பதால், திரிபு வடிவங்களினின்று ஙனம் அல்லது ஙன் என்னும் இறுதிப் பகுதிகளைச் செயற்கையாகப் பிரித்து, இயற்கை வடிவான தனிச் சொற்களாகக் காட்டுவது பொருந்தாது. அவ்வாறு, அவ்வகை, அப்படி என்னும் கூட்டுச் சொற்களை அந்த ஆறு, அந்தவகை, அந்தப்படி என்று சொற்பிரித்துச் சுட்டு விரித்துப் பொருள் கூறுவதுபோல், அங்ஙனம் என்பதை அந்தஙனம் என்று பிரித்தும் சுட்டு விரித்தும் பொருள் கூற இயலாமை காண்க. ஆகவே,

     “சுட்டியா எகர வினாவழி அவ்வை

ஒட்டி ஙவ்வும் முதலா கும்மே.”

என்னும் நன்னூல் நூற்பாவை (எழுத். 106); இலக்கணமாகக் கொண்டு, ஆங்கனம் என்பதை ஆ + கனம் என்றோ, அங்ஙனம் என்பதை அ + ஙனம் என்றோ, அங்ஙன் என்பதை அ + ஙன் என்றோ பிரிப்பது தவறென அறிக.

ஆங்காங்கு

 ஆங்காங்குāṅgāṅgu,    கு.வி.எ. (adv.) அவ்வவ்விடத்தில்; there and there severally. என் வழிப்போக்கில்

நண்பரை யெல்லாம் ஆங்காங்குக் கண்டு அளவளாவினேன். (உ.வ.);.

     [ஆ(சே.சு.); → ஆங்கு. ஆங்கு + ஆங்கு = ஆங்காங்கு (அடுக்குத் தொடர்);.]

ஆங்காரம்

ஆங்காரம்āṅgāram, பெ. (n.)

அகங்காரம் பார்க்க;see agangaram

 ஆங்காரம்āṅgāram, பெ. (n.)

   பற்று; kindness, love, affection.

     “தேனாங் காரப்பொழில்”(திவ். திருவாய். 10, 7, 11);.

     [Skt. aham-kåra → த. ஆங்காரம்.]

ஆங்காரி

ஆங்காரி1āṅgārittal,    4 செ.கு.வி.(v.i.)

அகங்களி-பார்க்க; see agangari-.

     “ஆதலா லாங்காரித்தே யறிஞரை யிகழா நின்றான்” (திருவாலவா. 18, 1);.

 ஆங்காரி2āṅgāri, பெ. (n.)

   அகங்கார முள்ளவன்; proud, haughtly-persons.

     [Skt. aham-kårin → த. ஆங்காரி.]

ஆங்காலம்

ஆங்காலம்āṅgālam, பெ. (n.)

   வறுமையும் நோயும் நீங்கி எடுத்த வினையெல்லாம் கைகூடிச் செல்வம் பெருகும் நற்காலம்;   போங்காலம் என்பதற்கு எதிர்; time when fortune favours and all things prove successful, time of prosperty, opp. to põngālam.

     “ஆங்காலம் ஆகும், போங்காலம் போகும்” (பழ.);.

     “ஆங்காலமாகுமவர்க்கு” (நல்வழி, 4);.

     [ஆ (முதனிலை); → ஆவும் (ஆகும்); → ஆம் (மரூஉ); + காலம் ‘உம்’ எ.கா.வி.ஈறு. காலம் பார்க்க;see kilam.]

ஆங்கிரச

 ஆங்கிரசāṅgirasa, பெ. (n.)

   வியாழன் சுழற்சியில் அறுபது ஆண்டில் ஒன்று; a name of the sixth year of the jupiter cycle.

     [Skt. angrasa → த. ஆச்சரியம்.]

ஆங்கிரசன்

 ஆங்கிரசன்āṅgirasaṉ, பெ. (n.)

   ஒரு முனிவன்; angiras, a sage.

     [Skt. angiras → த. ஆங்கிரசன்.]

ஆங்கிரசம்

ஆங்கிரசம்āṅgirasam, பெ. (n.)

   அறநூல் பதினெட்டிலொன்று; a text-book of Hindu law in Sanskrit, ascribed to angiras, one of 18 taruma-nul.

     [Skt. ångirasa → த. ஆங்கிரசம்.]

ஆங்கிரன்

 ஆங்கிரன்āṅgiraṉ, பெ. (n.)

   ஒரு முனிவன் (உரி.நி.);; a sage.

     [Skt angiras → த. ஆங்கிரன்.]

ஆங்கு

ஆங்கு1āṅgu, கு.வி.எ. (demons, adv.)

   1. அவ்விடம்; there.

     “ஆங்குறு குமரப் புத்தேள்” (கந்தபு. அயனைச் சிறைநீ. 42);.

   2. அப்போது, அக்காலத்தில்; then, at that time or during that period.

     “ஆங்கெழுசமங் கடந்த எழுவுறழ் திணிதோள் எழுவர்” (சிறுபாண்.111-2);.

   3. அப்படி; so, in that manner.

     “ஆங்கினி தொழுகுமதி பெரும” (புறநா. 24);… இடை. (part.);

   1. ஓர் உவமவுருபு; sign of comparison.

     “கொண்மூமாகவிசும்பின் நடுவுநின் றாங்கு” (புறநா.35);.

   2. ஓர் ஏழாம் வேற்றுமையுருபு; aloc. ending.

     “நின்னாங்கு வருவதுபோலும்” (மணிமே. 11:47);.

   3. ஓர் அசைநிலை; expletive in poetry. ‘ஆங்கென்பது அசைநிலை’

     “ஊடலின் உண்டாங்கோர் துன்பம்” (குறள், 1307, பரிமே.உரை);.

   ம. ஆங்கு;க., பட. அல்லி.

     [ஆங்கண் → ஆங்கு.]

 ஆங்கு2āṅgudal,    7 செ.கு.வி. (v.i.)

   போதியதாதல்; to suffice, to be sufficient. குழந்தைக்குப் பால் ஆங்கவில்லை. (சென்னை வ);.

ம. ஆங்ஙித்தூங்ஙுக

     [ஒருகா. ஆன் → ஆன்கு → ஆங்கு → ஆனுதல் போதியதாதல்.]

ஆங்ஙனம்

ஆங்ஙனம்āṅṅaṉam, கு.வி.எ. (adv.)

   அவ்வாறு, அதுபோல்; in that manner, in the same way.

   ம. அங்ஙனெ;   க. அகங்கெ;   மா. அந்தெகெ. பிரா. எங்கி;   தெ. அட்டெ;   து. அஞ்சனெ;   கோண். ஆகணெ;   பட. அத்தெ;   துட. அகிச;குட. அன்னனெ.

     [ஆங்கு → ஆங்கனம் → ஆங்ஙனம் ஆங்கனம் பார்க்க;see āṁganam.]

     “ஆங்கனம் விரிப்பின் அளவிறந்தனவே

பாங்குற வுணர்ந்தோர் பன்னுங் காலை”. (தொல். செய். 50);.

என்னும் நூற்பாவின் எதுகையை நோக்குக. ‘ஆங்கனம் விரிப்பின்’ என்பதே சரியான பாடம்.

ஆசங்கி-த்தல்

ஆசங்கி-த்தல்ācaṅgittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   1. ஐயப்படுதல்; to suspect, doubt.

   2. மறுத்துரைத்தல் (சி.போ. சிற். 2,2);; to object to, state a possible objection to.

     [Skt. å-sank-, → த. ஆசங்கி-த்தல்.]

ஆசங்கை

ஆசங்கைācaṅgai, பெ. (n.)

   1. ஐயம்; doubt, suspicion.

     “மழையென்றாசங்கை கொண்ட கொடை” (கம்பரா. நாகபாச. 263);.

   2. மறுப்பு; abjection.

     [Skt. å-sånka → த. ஆசங்கை.]

ஆசடை

 ஆசடைācaḍai, பெ. (n.)

   நீளவாட்டத்தில் அமைக்கும் வீட்டின் முகட்டு உத்தரம் (இ.வ.);; beam placed lengthwise in a roof.

     [ஆசு + அடை..]

ஆசத்தி

 ஆசத்திācatti, பெ. (n.)

   பற்று; attachment, desire.

     [Skt. ä-sakt → த. ஆசத்தி.]

ஆசந்தி

ஆசந்தி1ācandi, பெ. (n.)

   பிணங்கொண்டு போகும் பாடை; bier.

     “ஆசந்தி மேல்வைத்தமைய வழுது” (திருமந் 150);.

 ஆசந்தி2ācandi, பெ. (n.)

   பெரிய வெள்ளிக்கிழமையன்று சிலுவையில் அமைந்த இயேசுநாதர் உருவத்தை ஊர்வலஞ் செய்விக்கை; procession of the image of Christ on the cross on Good Friday.

     [Skt. a-sandf → த. ஆசந்தி.]

ஆசந்திபார்க்கம்

 ஆசந்திபார்க்கம்ācandipārkkam, வி.அ. (adv.)

   நிலவும் கதிரவனுமுள்ளவரை; as long as the Sun and moon endure, in perpetuity, a term used in deeds.

     [Skt. a+candra +arka → த. ஆசந்திரார்க்கம்.]

ஆசந்திரதாரம்

ஆசந்திரதாரம்ācandiratāram, வி.அ. (adv.)

   நிலவும் உடுக்களும் உள்ளவரை; as long as the moon and stars endure, in perpetuity, a term used in deeds.

     “இப்பரிசு ஆசந்திரதாரம் ஊட்டுவதாக” (தெ.க.தொகுதி 3. பக். 3);.

     [Skt. a+candra+tara → த. ஆசந்திரதாரம்.]

ஆசனகிருமி

 ஆசனகிருமிācaṉagirumi, பெ. (n.)

   மலப்புழுவகை; thread warm.

     [Skt. asana+kirmi → த. ஆசனகிருமி.]

ஆசனகுளிகை

 ஆசனகுளிகைācaṉaguḷigai, பெ. (n.)

   ஆசனவழியாய்ச் செலுத்தும் மாத்திரை; suppository.

     [ஆசனம் + குளிகை.]

     [Skt. ä-sana → த. ஆசனம்.]

ஆசனந்திருத்து-தல்

ஆசனந்திருத்து-தல்ācaṉandiruddudal,    4 செ.குன்றாவி.(v.t.)

   பெரியோர்க்கு இருக்கையமைத்தல்; to provide seats esp. for elders.

     [ஆசனம் + திருத்து-தல்.]

     [Skt. å-sana → த. ஆசனம்.]

ஆசனபவுத்திரம்

 ஆசனபவுத்திரம்ācaṉabavuttiram, பெ. (n.)

   எருவாயில் உண்டாகும் கட்டி; fslula in ano.

ஆசனம்

ஆசனம்ācaṉam, பெ. (n.)

   1. உட்காருமிடம் (இருக்கை.);; seat, anything to sit on, raised seat.

   2. ஒகத்தில் இருக்கை நிலை (சீவக.656, உரை);; yogic posture of which nine are considered to be important.

   3. உரியகாலம் வரும்வரை பகை மேற்செல்லாதிருக்கை; hating encamping, biding one’s time, awaiting a suitable opportunity to attack.

     “ஆசன முந்திய காலமங் குணர்ந்திருத்தல்” (இரகு. திக்கு. 21);.

   4. மலவாயில்; anus, rectum.

     “ஆசன முபத்தங் கைகால்” (மச்சபு. பிரம.11);

     [Skt. åsana → த. ஆசனம்.]

ஒன்பது வகை ஆசனவகைகள் : கவத்திகாசனம், கோமுகாசனம், பதுமாசனம், வீராசனம், கேசரியாசனம், பத்திராசனம், முத்தாசனம், மயூராசனம், சுகாசனம்.

ஆசனவாய்

 ஆசனவாய்ācaṉavāy, பெ. (n.)

   மலவாய்; anus.

     [ஆவனம் + வாய்.]

 Skt. å-sana → த. ஆசனம்.]

ஆசனவெடிப்பு

 ஆசனவெடிப்புācaṉaveḍippu, பெ. (n.)

   நோய்வகை; anal-fissure, crack-like sore or ulcer.

     [ஆசனம் + வெடிப்பு.]

     [Skt. å-sana → த. ஆசனம்.]

ஆசனி

ஆசனி1ācaṉi, பெ. (n.)

   பலா வகை; a kind of jack tree.

     [ஆசினி பார்க்க;see aaini]

 ஆசனி2ācaṉi, பெ. (n.)

   பெருங்காயம்; asafetida (சங். அக.);.

ஆசன்னம்

 ஆசன்னம்ācaṉṉam, பெ. (n.)

   அண்மையது; that which is near or draws near in time, place or number.

     [Skt. å-sanna → த. ஆசன்னம்.]

ஆசமனம்

ஆசமனம்ācamaṉam, பெ. (n.)

   வலக்குடங்கையால் மந்திரபூர்வமாக நீரை மும்முறை யுட்கொள்ளுகை (கூர்மபு நித்திய, 11);; sipping while uttering certain mantras a little water three times from the palm of the right-hand.

     [Skt. å-camana → த. ஆசமனம்.]

ஆசமனீயம்

 ஆசமனீயம்ācamaṉīyam, பெ. (n.)

   ஆசமனநீர்; water used for acamanam.

     [Skt. å-camaniya → த. ஆசமனீயம்.]

ஆசமி-த்தல்

ஆசமி-த்தல்ācamittal,    4 செ.குன்றாவி,(v.t.)

   வலக்குடங்கையால் மந்திரமோதி நீரை மும்முறையுட் கொள்ளுதல்; to sip while uttering certain mantras a little water three times from the palm of the right hand.

     “அணிநீர் கரந்தொட்டா சமித்தான்” (சேதுபு. சேதுவந். 26);.

     [Skt. å-cam-, → த. ஆசமி-.]

ஆசம்

 ஆசம்ācam, பெ. (n.)

   சிரிப்பு (பிங்.);; laughter, mirth.

     [Skt. håsa → த. ஆசம்.]

ஆசயம்

ஆசயம்ācayam, பெ. (n.)

   1. உறைவிடம்; resting place, abode, retreat.

   2. உடலின் உட்பை; vessel of the body.

     “பஞ்சாசயம்”.

   3.கருத்து; intention meaning.

     “இது கவியின் ஆசயம்” .

     [Skt. a-šaya → த. ஆசயம்.]

ஆசரணம்

 ஆசரணம்ācaraṇam, பெ. (n.)

   நடைமுறை கூர்ந்து நோக்குகை; abservance, usage, practice.

     [Skt. å-carana → த. ஆசரணம்.]

ஆசரணை

ஆசரணைācaraṇai, பெ. (n.)

   ஆசரணம் (வேதா. சூ.8); பார்க்க; see asaranam.

ஆசரி

ஆசரி1ācarittal,    4 செ.கு.வி.(v.i.)

   1. கடைபிடித்தல்; to practice, follow habitually.

     “ஆசரித்த ஆசாரம்” (உபதேசரத். 67);.

   2. கைக் கொள்ளுதல்; to observe, keep holy, solemnise, practise as a rite.

     “ஆசரிக்குங் கண்டியும்” (சைவச. ஆசா. 45);.

     [Skt. a-car-, → த. ஆசரி-.]

 ஆசரி2ācarittal,    4 செ.கு.வி.(v.i.)

   வழிபடுதல்; to worship.

     “தானா சரித்துவரு தெய்வமிது” (குமரே. சத. 60);.

     [Skt. å-sraya → த. ஆசாரி.]

ஆசரிப்புக்கூடாரம்

 ஆசரிப்புக்கூடாரம்ācarippukāṭāram, பெ. (n.)

   யூதர் வழிபட்ட நடமாடும் ஆலயம்; tabernacle, a movable sanctuary. (chr.);.

ஆசர்

 ஆசர்ācar, வி.அ. (adv.)

   வருகைப் பதிவேட்டில் வருநிலை; presence in attendance.

 U. hazir. Skt. ஆசார்.

ஆசர்படுத்து-தல்

ஆசர்படுத்து-தல்ācarpaḍuddudal,    5 செ.கு.வி.(v.i.)

   குற்றம் சாட்டப்பட்ட வரை அறமன்றத்திற்குக் கொண்டு வருதல்; produce the accused before a court of law.

     [ஆசர் + படுத்து-தல்.]

     [U. hazir → த. ஆசர்.]

ஆசர்ப்பட்டி

 ஆசர்ப்பட்டிācarppaṭṭi, பெ. (n.)

   வருகைப்பதிவேடு; attendance register.

     [ஆசர் + பட்டி.]

     [U. hảzir → த. ஆசார்.]

ஆசற

ஆசறācaṟa, கு.வி.எ. (adv.)

   1.குற்றமில்லாது; faultlessly.

   2. குறையில்லாது, நிறைவாக, முழுதும்; entirely, fully.

     “சொல்லப்புகுந்தபொருளை ஆசறக்கூறாது” (தொல். பொருள். 664. உரை);.

     [ஆசு = குற்றம், குறை. அறு → அற (நி.கா.வி.எ.); நீங்க.]

ஆசறு-தல்

ஆசறு-தல்ācaṟudal,    20 செ.கு.வி. (v.i.)

   1. குற்றம் நீங்குதல்; to be free from blame, or blemish.

     “ஆசறு நல்லநல்ல அவை நல்ல” (தேவா 221:1);.

   2. முடிதல்; to end, terminate, to be finished.

     “ஊழிசென்றாசறுங் காலத் தந்நிலையதாக” (கம்பரா. சரபங்.30);.

     [ஆசு = குற்றம், குறை. அறுதல் = நீங்குதல்.]

ஆசறுதி

ஆசறுதிācaṟudi, பெ. (n.)

கடைசி: end. extremity, termination. ‘கொற்ற மங்கலத்துக்கு எலலை யாசறுதியி னட்ட திருவாழிக்கல்’ (S.i.i.i. 87);.

     [ஆசறுதல் = முடிதல். ஆசறு → ஆசறுதி (தொ.பெ.); ‘தி’ தொ.பெ.ஈ.]

ஆசறுதிப் பல்

 ஆசறுதிப் பல்ācaṟudippal, பெ. (n.)

   கடைவாய்ப்பல்; wisdom tooth, the last in growing.

ஆசறுதி, பல் பார்க்க;see aearudi.pal.

ஆசற்றார்

 ஆசற்றார்ācaṟṟār, பெ. (n.)

   குற்றமற்றார்; one who is free from fault.

     [ஆசு + அற்றார்.]

ஆசலை

 ஆசலைācalai, பெ. (n.)

   ஆடாதோடை (இராசவைத்);; Malabar-nut. (செ.அக.); – small shrub, winter-cherry – Adhatoda vasica alias A, pubescens.

க. ஆசலு

ஆசல்

 ஆசல்ācal, பெ. (n.)

   மதிப்பு (இ.வ.);; value (Loc.); (செ.அக.);

ம. ஆகுதி.

ஆசவக்கடமை

 ஆசவக்கடமைācavakkaḍamai, பெ. (n.)

   கள்ளின்மீது விதிக்கப்பட்ட வரிவகை; tax collected on toddy.

     [ஆசவம் + கடமை.]

ஆசவம்

ஆசவம்ācavam, பெ. (n.)

   1. கள்; toddy (பிங்.);

   2. விரைவு; quickness.

 ஆசவம்ācavam, பெ. (n.)

   கள் (பிங்.);; spirituous liquor which is distilled from molasses, toddy.

     [Skt. å-sava → த. ஆசவம்.]

ஆசவுசம்

ஆசவுசம்āsavusam, பெ. (n.)

   தீட்டு (சைவச. பொது. 252);; pollution caused either by the birth or death of a relative.

     [Skt. ä-šauca → த. ஆசவுசம்.]

ஆசாடபூதி

 ஆசாடபூதிācāṭapūti, பெ. (n.)

   வெளித் தோற்றத்துக்குப் பொருத்தம் இல்லாத முரணான செயலைச் செய்பவன்; one who does things which are not appropriate to his appearance hypocrite.

த.வ. போலித்துறவி, தோற்றப்போலி.

     [ஆசாட + பூதி.]

     [Skt. asadha → த. ஆசாட். புழுதி → பூதி.]

ஆசாடம்

ஆசாடம்ācāṭam, பெ. (n.)

   1. பொதிய மலை; Pothigay hills near Kutsalam in Thirunalvelly District; Malaya Mountain.

   2. கடக (ஆடி); மாதம்; Tamil month corresponding to July.

   3. முருக்கு மரம்; Indian coral tree – Erythrina Indica (சா.அக.);.

     [Skt. äsadha → த. ஆசாடம்.]

ஆசாடி

ஆசாடிācāṭi, பெ. (n.)

   குய்யாட்டக புவனத்து ளொன்று (சி.போ.பா. 2:3, பக். 213);; a spiritual world, one of kuyyāttakapuvanam.

     [Skt. äsadhi → த. ஆசாடி.]

ஆசாடிவேர்

 ஆசாடிவேர்ācāṭivēr, பெ. (n.)

   கலியாண முருக்கன்வேர்; the root of the Indian coral tree (சா.அக.);.

     [ஆசாடி + வேர்.]

ஆசாடு-தல்

ஆசாடு-தல்ācāṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   அழுதல்; to weep.

     [அசைதல் = வருந்துதல், அழுதல். அசை + ஆடு = ஆசாடு.]

ஆசாட்டம்

ஆசாட்டம்1ācāṭṭam, பெ. (n.)

   தெளிவற்ற தோற்றம்; indistinct appearance (W.);.

     [ஆசு + ஆட்டம். ஆடு → ஆட்டம் (தொ.பெ.); ‘அம்’ தொ.பெ.ஈறு.]

 ஆசாட்டம்2ācāṭṭam, பெ. (n.)

   அழுகை; crying (சா.க.);

     [ஆசாடு → ஆசாட்டம் (தொ.பெ.); ‘அம்’ தொ.பெ.ஈறு.]

ஆசாதிகரம்

 ஆசாதிகரம்ācātigaram, பெ. (n.)

   காசாங்கம்; the plant kasa as a -whole (சா.அக.);.

ஆசாநங்கை

 ஆசாநங்கைācānaṅgai, பெ. (n.)

   ஆதளை (காட்டா மணக்கு);;   ; adul oil-plant, Jatropha glandulifera (சா.அக.);.

     [ஆதளை → ஆதாள் → ஆசாள் + நங்கை.]

ஆசானங்கை

 ஆசானங்கைācāṉaṅgai, பெ. (n.)

   காட்டாமணக்கு (சித்.அக.);; common physic nut.

ஆசானவனுயிர்

 ஆசானவனுயிர்ācāṉavaṉuyir, பெ. (n.)

முயல்; hare (சா.அக.);.

ஆசானுபாகு

 ஆசானுபாகுācāṉupāku, பெ. (n.)

ஆசானுவாகு பார்க்க; see asanu-vagu. (சா.அக.);.

ஆசானுவாகு

 ஆசானுவாகுācāṉuvāku, பெ. (n.)

   முழங்காலளவு நீண்ட கையுடைய பெருந்தோற்றமுள்ளோன்; one whose arms reach his knees, indicating majesty of stature.

த.வ.செந்தோற்றன், தாள்தோய்தடக்கையன்.

     [Skt. a-janu+bahu → த. ஆசானுவாகு.]

ஆசான்

ஆசான்ācāṉ, பெ. (n.)

   1. ஆசிரியன்; teacher.

     “ஆசானுரைத்த தமைவரக் கொளினும்” (நன். பொதுப்பா. 44);.

   2. குரு, குரவன், சமயவாசிரியன்; religious preceptor, spiritual guide.

   3. பூசாரி; priest.

     “அறக்களத் தந்தண ராசான் பெருங்கணி” (சிலப். 28:222);.

   4. மூத்தோன் (தி.வா.);; senior, elderly man.

   5. முருகன் (பிங்);; Lord Murugan.

   6. வியாழன் (பிங்.);: Jupiter, considered to be the preceptor of gods.

   7. அருகன் (சூடா);; Arhat.

   8. (இசை); பாலையாழ்த்திற வகை (பிங்..);;   9. (இசை); காந்தாரம், சிகண்டி,

   தசாக்கரி, சுத்த காந்தாரம் என்னும் நால்வகைப் பண்ணியல்; four kinds of secondary melody types, viz., kāndāram, škandi, tasakkari, sutta kandaram. ‘ஆசான்சாதி நால்வகையாவன;

ஆசானுக்கு அகச்சாதி காந்தாரம், புறச்சாதி சிகண்டி, அருகுசாதி தசாக்கரி, பெருகுசாதி சுத்த காந்தாரமெனக் கொள்க’. (சிலப். 13:112, அடியார். உரை);.

ம. ஆசான்.

     [ஆசிரியன் → ஆசான்.]

ஆசான் நுகர்வு

 ஆசான் நுகர்வுācāṉnugarvu, பெ.(n.)

 endowment enjoyed by spiritual teacher.

     [ஆசான்+நுகர்வு]

ஆசான்றிறம்

ஆசான்றிறம்ācāṉṟiṟam, பெ. (n.)

   1.(இசை); குரற்குரிய திறம்;     “குரற்குரியதிற மாசான் றிறமே” (பிங்.6:322);.

   2. பாலையாழ்த்திறம்; group of secondary melody type of the Palai class.

     [ஆசான் + திறம்]

ஆசாபங்கம்

 ஆசாபங்கம்ācāpaṅgam, பெ. (n.)

   விரும்பியது பெறாமை; disappointment.

     [Skt. aša+bhanga → த. ஆசாபங்கம்.]

த. ஆசை → asa.

ஆசு = பற்று. ஆசு → ஆசை = மனப்பற்று.

ஆசாபந்தம்

ஆசாபந்தம்ācāpandam, பெ. (n.)

   1. நம்பிக்கை; confidence.

   2. சிலந்திவலை; cobweb.

     [Skt. åså+bandha → த. ஆசாபந்தம்.]

ஆசாபாசம்

 ஆசாபாசம்ācāpācam, பெ. (n.)

   உலகப் பொருள்களின் மீதும் உறவுகளின் மீதும் வைக்கும் ஆசை உலகப்பற்று; noose of desire attachment.

ஆசாபாசங்களிலிருந்து விடுபட்டவர்களே துறவிகளாக முடியும்.

த.வ. பரிவுப்பற்று.

     [Skt. asa + pasam → த. ஆசாபாசம்.]

த. ஆசை → Skt. äša. த. பாசம் → Skt. pasa.

ஆசாபைசாசம்

ஆசாபைசாசம்ācāpaicācam, பெ. (n.)

   ஆசையாகிய பேய்; devilish desire.

     “உம்மை ஆசாபைசாசங் குமைக்குங்கிடீர்” (பாடுது. 30:7);.

த.வ. ஆசைப்பேய்.

     [Skt. åså+passaca → த. ஆசாபைசாசம்.]

ஆசாமி

ஆசாமிācāmi, பெ. (n.)

   1. அறிமுகம் இல்லாத ஆள்; தனியொருவன்; individual, a person.

ஊரிலிருந்து ஆசாமி ஒருவர் வந்துள்ளார். மதிப்புரவு இல்லாமல் நடந்துகொள்ளும் அந்த ஆசாமி யார்.

   2. செயலாளர், முகவர்; commission agent.

த.வ. ஆள்.

     [U. āsāmi → த. ஆசாமி.]

ஆசாமிக்களவு

 ஆசாமிக்களவுācāmikkaḷavu, பெ. (n.)

   ஆளைத்திருடுகை; ஆளைக்கடத்துகை; kidnapping.

த.வ. ஆள்திருட்டு.

     [ஆசாமி + களவு, U. asami → த. ஆசாமி.]

ஆசாமிசோரி

 ஆசாமிசோரிācāmicōri, பெ. (n.)

ஆசாமிக் களவு (C.G.); பார்க்க; see asami-k-kalavu.

     [ஆசாமி + சோரி.]

     [Skt. córa → த. சோரி.]

ஆசாமிமாறாட்டம்

 ஆசாமிமாறாட்டம்ācāmimāṟāṭṭam, பெ. (n.)

   ஆள்மாறாட்டம் (C. G.);; false personation.

     [ஆசாமி + மாறாட்டம்.]

     [U. ảsami+ த. மாறாட்டம்.]

ஆசாமிவாரி

 ஆசாமிவாரிācāmivāri, கு.வி.எ. (adv.)

   இனவாரி (இனம்இனமாய்);; individually.

     [ஆசாமி + வாரி. U. asami + war. இனவாரி = இனவாரியாக என்னும் பொருளில் வருஞ்சொல். வகுப்புவாரி).]

ஆசாமிவாரிஇசாப்

 ஆசாமிவாரிஇசாப்ācāmivāriicāp, பெ. (n.)

   அடங்கற்கணக்கு (P.T.L.);; revenue account showing the name, etc., of individual taxpayer.

     [U. āsāmivar + U. hisāb → த. ஆசாமிவாரி இசாப்.]

ஆசாமிவாரிச்சிட்டா

 ஆசாமிவாரிச்சிட்டாācāmivāricciṭṭā, பெ. (n.)

   இனவாரிக்கணக்கு; account showing under the name of each individual the assessment he has to pay.

     [U.āsāmi+vāri-c-citltā → த. ஆசாமிவாரிச் சிட்டா.]

ஆசாமிவார்

 ஆசாமிவார்ācāmivār, கு.வி.எ. (adv.)

   ஒவ்வொருவராக; individually, personally, according to name applied to a revenue settlement with each individual cultivator (R.F.);.

த.வ. ஆள்வாரி.

     [U. asami → த. ஆசாமி+வார். வார் = வரிசை.]

ஆசாமிவார்க்கணக்கு

 ஆசாமிவார்க்கணக்குācāmivārkkaṇakku, பெ. (n.)

   பெயரேடு; personal ledger.

த.வ. ஆளேட்டுக்கணக்கு.

     [U. asami → த. ஆசாமி + வார் + கணக்கு பெயர் வரிசையாக எழுதப்பட்ட ஏடு.]

ஆசாம்பரன்

ஆசாம்பரன்ācāmbaraṉ, பெ. (n.)

   சிவன்; sivan, the space-clad that is naked.

     “அமகர வாசாம்பர” (திருப்பு. 436);.

     [Skt. asa + ambara → த. ஆசாம்பரன்.]

ஆசாரகாண்டம்

 ஆசாரகாண்டம்ācārakāṇṭam, பெ. (n.)

   வைத்திய நாத குருவனார் (தீட்சிதர்); எழுதிய அற நூலின் ஒரு பகுதி; a treatise on religious duties, one of the books written by Vaidyanātha Diksitar,

     [ஆசாரம் + காண்டம்.]

     [Skt. å-cåra + த. காண்டம்.]

கண்டம் → காண்டம்.

ஆசாரக் கோவை

ஆசாரக் கோவைācārakāvai, பெ. (n.)

   பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று;   100 பாடல்களைக்கொண்டது;   பெருவாயின் முள்ளியார் எழுதியது; classic work treating of religious, social and moral conduct in 100 stanzas by Peruvayin-musliyar, one of padines-Kil-k-kanakku.

ஆசாரக்கணக்கு

 ஆசாரக்கணக்குācārakkaṇakku, பெ. (n.)

   கோயிலில் நடைபெறும் சடங்குகள் போன்ற வற்றைக் குறித்து வைக்கும் பொத்தகம் (நாஞ்.);; record of temple rites and ceremonies.

த.வ. கோயில் நடப்புக்கணக்கு.

     [ஆசாரம் + கணக்கு.]

ஆசாரக்கள்ளன்

 ஆசாரக்கள்ளன்ācārakkaḷḷaṉ, பெ. (n.)

   ஒழுக்கமுள்ளவன் போல் நடிக்கும் திருடன்; thief who pretends sancity sanctimonious person, one who makes a pretence of holiness.

அழுகள்ளன், தொழுகள்ளன், ஆசாரக்கள்ளன்.

த.வ. படிமானக்கள்ளன்.

     [ஆசாரம் + கள்ளன்.]

     [Skt. a-cara → த. ஆசாரம்.]

கள் → கள்ளன், ‘ன்’ஆ.பா.ஈறு.

ஆசாரக்கள்ளி

 ஆசாரக்கள்ளிācārakkaḷḷi, பெ. (n.)

   கற்புடையவள் (பதிவிரதை); போல் நடிப்பவள்; woman who pretends to be chaste.

த.வ. படிமானக்கள்ளி.

     [ஆசாரம் + கள்ளி. Skt. a – cāra → த. ஆசாரம். ஆசாரம் = நூலில் கூறிய (சாத்திர); முறைப்படி ஒழுகுதல், நன்னடத்தை. கள்ளி = கள்ளத்தன்மை மிக்கவள், வேலைசெய்யாது உழப்புபவள்.]

ஆசாரங்கூட்டு-தல்

ஆசாரங்கூட்டு-தல்ācāraṅāṭṭudal,    5 செ. குன்றாவி.(v.t.)

   தூய்மையாகச் செய்தல்; to purify ceremonially.

     [Skt. ä-cära + த. கூட்டு-தல்.]

ஆசாரச்சாவடி

 ஆசாரச்சாவடிācāraccāvaḍi, பெ. (n.)

   ஒலக்க மண்டபம் (வின்.);; durbar hall.

     [Skt. å-cåra + Mar charady.]

ஆசாரஞ்செய்-தல்

ஆசாரஞ்செய்-தல்ācārañjeytal,    1 செ.கு.வி.(v.i.)

   ஒழுக்கத்தைப் பேணுதல் (ஆதரித்தல்); (குறள், 1075, உரை);.);; to perform one’s duty sincerely, to perform duty for duty’s sake.

த.வ. படிமானம் செய்தல்.

     [Skt. å-cåra → த. ஆசாரம்.]

     [ஆசாரம் + செய்-தல்.]

ஆசாரபரன்

ஆசாரபரன்ācārabaraṉ, பெ. (n.)

   ஒழுக்கத்தில் ஊக்கமுள்ளவன்; one who is punctilious about the duties of his caste and order.

     “ஆசாரபரனா யிருந்து மென்ன” (அறப். சத. 37.);.

த.வ. நல்லொழுக்கன், படிமானக்காரன்.

     [Skt. å-cåra+paran → த. ஆசாரபோசன்.]

ஆசாரபோசன்

 ஆசாரபோசன்ācārapōcaṉ, பெ. (n.)

   ஆடம்பரத் தோற்றமுள்ளவன்; person of a very imposing appearance.

த.வ. ஆகுலத்தான்.

     [Skt. a-cara+bhõja → த. ஆசாரபோசன்.]

ஆசாரப்பிழை

 ஆசாரப்பிழைācārappiḻai, பெ. (n.)

   ஒழுக்கத்தவறு, கெட்டகுணம்; dereliction of duty, bad conduct.

த.வ. படிமானக்குற்றம்.

     [ஆசாரம் + பிழை.]

     [Skt. å-cåra → த. ஆசாரம்.]

ஆசாரம்

ஆசாரம்1ācāram, பெ. (n.)

   1. நூல்முறைப்படி ஒழுகுகை; conducting oneself according to the dictates of the sastras.

     “ஒழுக்கமன்பரு ளாசாரம்” (சி.சி. 2 : 23.);.

   2. நன்நடத்தை; proper conduct, good behaviour.

     “அச்சமே கீழ்கள தாசாரம்” (குறள். 1075);.

     ‘அவர் தன் குல ஆசாரப்படி நடப்பவர்.’

   3. பொது ஒழுக்கத்துக்கான அல்லது சமய குல ஒழுக்கத்துக்கான நெறிமுறைகள், வழக்கம்; custom, practice, usage.

   4. தூய்மை; cleanliness.

   5. ஆடை; cloth.

த.வ. நன்னடத்தை, படிமானம்.

     [Skt. a-cara → த. ஆசாரம்.]

 ஆசாரம்2ācāram, பெ. (n.)

   பெருமழை; heavy downpour of rain.

     [Skt. å-såra → த. ஆசாரம்.]

 ஆசாரம்3ācāram, பெ. (n.)

   காட்சி (அக.நி.);; sight.

     [Skt. åcåra → த. ஆசாரம.]

 ஆசாரம்4ācāram, பெ. (n.)

   1. எங்கும் நிறைந்திருக்கும் அல்லது பரவியிருக்கும் தன்மை (வியாபகம்);; pervasive ness.

   2. படை;агmy.

     [Skt. asara → த. ஆசாரம்.]

ஆசாரம்பண்ணு-தல்

ஆசாரம்பண்ணு-தல்ācārambaṇṇudal,    5 செ.கு.வி.(v.i.)

   விருந்தோம்பல்; to treat courteously.

     “நீங்கள் அவனைக் கண்டு ஆசாரம் பண்ணுதல் செய்வீராகில்” (பாரதவெண். 159 உரை.);.

     [ஆசாரம் + பண்ணு-தல்.]
Skt asara → த ஆசாரம்

ஆசாரலிங்கம்

ஆசாரலிங்கம்ācāraliṅgam,    பெ. (n.);   சிவக்குறி (சிவலிங்கம்);   வகைகளுள் ஒன்று. (சித். சிகா. 201); one of Siva-ligam,

     [Skt. ஆசாரம் + த. இலிங்கம்.]

ஆசாரவினை

 ஆசாரவினைācāraviṉai, பெ. (n.)

   ஆசார வீனன் என்பதன் பெண்பால்; fem. of åsåra-v-inan.

     [Skt. å-cåra-vina → த. ஆசாரவீனை.]

ஆசாரவீனன்

ஆசாரவீனன்ācāravīṉaṉ, பெ. (n.)

   தனக்குரிய ஒழுக்கத்தைக் கைவிட்டவன்; one who habitually breaks religious injunctions.

த.வ. ஒழுக்கக்கேடன்.

     [Skt. a-cāra-hina → த. ஆசாரவீனன்2.]

ஆசாரவீனி

ஆசாரவீனிācāravīṉi, பெ. (n.)

ஆசாரவினை (திருப்பு. 488); பார்க்க; see asara-vinai.

     [Skt. ä-cara-v-ini → த. ஆசாரவீனி.]

     [வீனன் → வீனி.]

ஆசாரவுபசாரம்

ஆசாரவுபசாரம்ācāravubacāram, பெ. (n.)

   மிக்க மதிப்பரவு; sincere and hearty courtesy extended to a guest.

     “ஆசார யாசனந்தனிலெழுந் தருளுமென்று” (திருவேங். சத். 84.);.

த.வ. ஒப்புரவு

     [Skt..ã-cara+upa-cāra → த. ஆசாரவுபசாரம்.]

ஆசாரி

 ஆசாரிācāri, பெ. (n.)

   பொற்றொழில், தச்சுத் தொழில் முதலியன செய்யும் கம்மாள இனத்தார்; title of respect applied to head masons and carpenters, an architect.

     [ஆசிரியன் → ஆசாரி]

 ஆசாரிācāri, பெ. (n.)

   மாத்துவ மாலிய (வைணவ); பார்ப்பனரின் பட்டப் பெயர்; a title adopted by Mādhva and Šri vaishnava Bráhmans.

 T., k., Tu. ãcảri.

     [Skt. a – carya → த. ஆசாரி.]

ஆசாரியசம்பாவனை

 ஆசாரியசம்பாவனைāsāriyasambāvaṉai, பெ. (n.)

   நல்ல நேரங்களில் ஆசாரியருக்குக் கொடுக்கும் காணிக்கை; ofering of money to the spiritual head of a sect on auspicious occasions like marriage.

த.வ. குரவர் காணிக்கை, திருவாசிரிய உவந்தளிப்பு.

     [Skt..a-cārya+sambhāvanä → த. ஆசாரிய சம்பாவனை.]

ஆசாரியன்

ஆசாரியன்ācāriyaṉ, பெ. (n.)

   1. சமய ஆசிரியர் (மதகுரு);; spiritual teacher duly anointed and authorized to initiate others into the esoteric doctrines of religion.

   2. சமயத் (மதத்); தலைவன்; head of a religious sect.

   3.ஆசிரியன்; teacher, preceptor.

த.வ. சமயக்குரவர்.

     [Skt. å-cårya → த. ஆசாரியன்.]

ஆசாரியன்திருவடியடை-தல்

ஆசாரியன்திருவடியடை-தல்ācāriyaṉdiruvaḍiyaḍaidal,    4 செ.கு.வி.(v.i.)

   இறந்து நற்பேறடைதல் (நற்கதி அடைதல்); (மாலியவழக்கு);; reaching the guru’s feet, an euphemism for dying.

த.வ. திருவடிப்பேறு.

     [ஆசாரியன் + திருவடியடை-தல்.]

     [Skt. å-cårya → த. ஆசாரியன்.]

ஆசாரியபக்தி

 ஆசாரியபக்திācāriyabakti, பெ. (n.)

   ஆசானிடமுள்ள பற்று; devotion to ateacher, garu.

த.வ. ஆசான்பற்றி.

     [Skt. ā-cāya+bhakti → த. ஆசாரியபக்தி.]

ஆசாரியபும்சதுவம்

 ஆசாரியபும்சதுவம்ācāriyabumcaduvam, பெ. (n.)

   ஆசாரிய ஆண்கள் கொள்ளும் செருக்கு (கருவம்);; sacerdotal hauteur of a religious preceptor.

த.வ. ஆசான்பெருமிதம்.

     [Skt. å-cåya pumstva → ஆசாரியபும் ஸ்துவம் → த. ஆசாரியபும்சதுவம்.]

ஆசாரியபுருசன்

 ஆசாரியபுருசன்āsāriyaburusaṉ, பெ. (n.)

   ஐந்து வகையான சடங்குகளைச் செய்வதற்குரிய மாலிய மறை அறிவன்; guru among sri vaisnavas who is qualified to perform the panja-sanskaras.

த.வ.மாலியத்திருவாசிரியன், மாலியக் குரவன்.

     [Skt. a-caya + purusa → த. ஆசாரியபுருசன்.]

     [புருஷன் + புருசன்.]

ஆசாரியபுருவம்

 ஆசாரியபுருவம்ācāriyaburuvam, பெ. (n.)

   கோயில் குருக்களுக்கு அளிக்கப்படும் மானியம்; grant of land to a priest for temple service.

த.வ. பூசகர்கொடை.

     [Skt. å-cårya+purusa → த. ஆசாரியபுருவம்.]

ஆசாரியபோகம்

ஆசாரியபோகம்ācāriyapōkam, பெ. (n.)

   ஆசாரியன் நுகரும் பங்குரிமை (உரிமைத் துய்ப்பு); (தெ.இ.க.தொ.ii:107);; endowment enjoyed by an acariya.

த.வ. ஆசான் நுகர்வு.

     [Skt. à-cärya-bhogag → த. ஆசாரியபோகம்.]

ஆசாரோபசாரம்

 ஆசாரோபசாரம்ācārōpacāram, பெ. (n.)

   விருந்தினரிடம் காட்டும் மதிப்புரவு; sincere and hearty Courtesy to a guest.

த.வ. விருந்துபேனல்.

     [Skt.ă-cāra+upa-cāra → த. ஆசாரோபசாரம்.]

ஆசார்யகிருதம்

 ஆசார்யகிருதம்ācāryagirudam, பெ. (n.)

   அழகிய மணவாளர் எழுதிய ஒரு மாலிய (வைணவ சமய நூல்; a treatise on the vaisnavasiddhanta written by Alakiyaталаvala-nayinar.

     [Skt. å-cåya+hrdaya → ஆசார்ய ஹருதயம் → த. ஆசார்யகிருதயம்.]

ஆசார்யாபிசேகம்

 ஆசார்யாபிசேகம்ācāryāpicēkam, பெ. (n.)

   ஆசிரியர்க்குச் செய்யப்படும் சிறப்புச் சடங்கு; consecration of a guru or priest.

     [Skt. å-cårya + abiseka → த. ஆசார்யாபி சேகம்.]

ஆசாலுகம்

ஆசாலுகம்ācālugam, பெ. (n.)

   ஒகவகைகளுள் ஆசானுகம் ஒன்று (தத்துவப். 109, உரை);; a yogic posture.

     [Skt. å-jånuka → த. ஆசாலுகம்.]

ஆசி-த்தல்

ஆசி-த்தல்ācittal, செ.குன்றாவி (v.t.)

   விரும்புதல்; to desire, wish earnestly, long for.

     “ஆசித்தார் மனதிற் புகுமுத்தம்” (திருப்பு. 403);.

     [ஆசு = பற்று, விருப்பம். ஆசு → ஆசி → ஆசை.]

வடமொழியில் ஆசா என்னும் பெயரேயன்றி, ஆசி என்னும் வினையில்லை. இரு மொழியிலும் சகரம் ஒலியொத்திருப்பது கவனிக்கத்தக்தது.

   வடமொழியாளர் ஆசா என்னும் பெயர்ச்சொல்லிற்குக் காட்டும் மூலம் ஆசம்ஸ் என்பதே. இதில் ‘ஆ’ முன்னொட்டு;சம்ஸ் to hope for, expect, to wish, to attain, desire, to suspect, fear, RV.

இங்ஙனம் ஒரே சொல்லை. இரண்டாகப் பகுத்துப் பொருந்தாப் புகலலாகப் பொருள் கூறுவது, ஆசை என்னுஞ் சொல் தென்சொல் என்பதை வலியுறுத்தும்.

ஆசிகம்

ஆசிகம்1ācigam, பெ. (n.)

   முகம்; face.

     [Skt. åsya → ஆசிகம்.]

 ஆசிகம்2ācigam, பெ. (n.)

   ஆட்டுப் புழுக்கை; the excretes of the sheep (சா.அக.);.

ஆசிகரோகம்

 ஆசிகரோகம்ācigarōgam, பெ. (n.)

   கண்ணின் கருவிழியில் ஆட்டுப்புழுக்கையைப் போல் கொப்புளங் கண்டு பிதுங்கி அதைச் சுற்றிலும் சிறுசிறு குருக்கள் நிறைந்து, அதிக வலியையும், செந்நீரொழுக்கையும் உண்டாக்கும் கண் நோய்; an eye disease attended with protrudsion of the cornea about the shape of the sheep’s excrete (சா.அக.);.

த.வ. கருவிழிக்கொப்புளம்.

     [ஆசிகம் + ரோகம்.]

ஆசிக்கல்

ஆசிக்கல்ācikkal, பெ. (n.)

   1. காந்தக்கல்; loadstone.

   2. காகச்சிலை. (வின்); இது உபரசச் சரக்குகளில் ஒன்று; black variety of loadstone;

 this is one of the 112 kinds of natural substances described in Tamil medicine (சா.அக.);.

உபரசச் சரக்கு = துணைக் கனிமம் (secondary rnineral);

ஆசிடு-தல்

ஆசிடு-தல்āciḍudal,    12 செ.கு.வி. (v.i.)

   1. பொன் நகைகளிற் பற்றாசு வைத்தல்; to cement particles

 of gold.

   2. நேரிசை வெண்பா முதற்குறளின் இறுதிச் சீர்க்கும் தனிச்சொற்கும் இடையே விட்டிசைப்பின், ஒரசையேனும் ஈரசையேனும் சேர்த்துக் கொள்ளல் (காரிகை. செய். 2. உரை);; to affix, for preventing hiatus one or two metrical syllables to the third foot of the second line in nerišai venba.

   3. செய்யுள் எதுகையில் ய், ர், ல், ழ் மெய்கள் நான்கிலொன்றை ஆசாக இடுதல்; to insert ய், ர். ல், or ழ் in the rhyming foot in one or two lines of a stanza.

     “யரலழ வாசும்” (இலக். வி. 748);.

     [ஆசு = பற்று, இடையொட்டு. ஆசு + இடு (து.வி.); = ஆசிடு.]

ஆசிடை

ஆசிடைāciḍai, பெ. (n.)

   1. கூட்டம்; crowd, assemblage.

   2. ஆடை; cloth.

     [ஆசிடுதல் = இடையிடுதல், ஒட்டுதல், சேர்த்தல், கூட்டுதல் ஆசிடு → ஆசிடை = கூட்டம், இழை சேர்த்து நெய்யும் ஆடை.]

ஆசிடை நேரிசை வெண்பா

 ஆசிடை நேரிசை வெண்பாāsiḍainērisaiveṇpā, பெ. (n.)

ஆசிடை வெண்பா

 ஆசிடை வெண்பாāciḍaiveṇpā, பெ. (n.)

     [ஆசு + இடை+ வெள் + பா.]

     “ஆர்த்தவறிவினராயாண்டிளைஞராயினும்

காத்தோம்பித் தம்மை யடக்குப – மூத்தொறூஉம்

தீத்தொழிலே கன்றித் திரிதந் தெருவைபோற்

போத்தறார் புல்லறிவினார்.”

இது ஒராசிடையிட்ட நேரிசை வெண்பா.

     “தாமரையின்றாதாடித் தண்டுவலைச் சேறளைந்து

தாமரையி னாற்றமே தானாறும் – தாமரைபோற்

கண்ணான் முகத்தான் கரதலத்தான் சேவடியென்

கண்ணார்வஞ் செய்த கருத்து.”

இது ஈராசிடையிட்ட நேரிசை வெண்பா.

ஆசிடையெதுகை

 ஆசிடையெதுகைāciḍaiyedugai, பெ. (n.)

ஆசெது கை பார்க்க;see āšedugai

ஆசிதகுருக்கன்

ஆசிதகுருக்கன்ācidaguruggaṉ, பெ. (n.)

   32 வகைச் செய்நஞ்சுள் ஒன்றான காக நஞ்சு; one of the 32 kinds of prepared arsenic.

ஆசிதம்

ஆசிதம்ācidam, பெ. (n.)

   1. ஒரு வண்டிச் சுமை; a cart-load, as a measure of weight.

   2. இருநூறு துலாங் கொண்ட சுமை (பாரம்);; weight of 200 tulam.

     [Skt. asita → த. ஆசிதம்.]

ஆசித்திரி

 ஆசித்திரிācittiri, பெ. (n.)

   மிகுந்த உணவு உண்பவன்; glutton (சா.அக.);

ஆசினி

ஆசினிāciṉi, பெ. (n.)

   1. ஈரப்பலா; bread-fruit tree, Artocarpus incisa.

     “ஆசினி கவினிய பலவினார் வுற்று” (புறநா. 158.22);.

   2. மரவயிரம் (சூடா);; hard and solid heart of a tree.

   3. மரவுரி (சூடா.);; sack tree, Antiaris toxicaria alias A. saccidora whose inner bark is used by hill tribes and hermits for clothing (சா.அக.);.

   4. காயம் (ஆகாயம்); (பிங்.);; sky.

   5. சிறப்பு (அக.நி.);; uniqueness, speciality, excellence.

ம. ஆஞ்ஞிலி

     [ஒருகா. ஆசிலி (ஆசு + இலி); → ஆசினி = குற்றமற்றது, சிறப்பானது.]

ஆசியக்காரன்

 ஆசியக்காரன்āciyakkāraṉ, பெ. (n.)

   சிரிப்பூட்டும் நகைச்சுவைப் பேச்சுக்காரன் (விகடஞ் செய்வோன்);; buffoon.

     [Skt. håsya → த. ஆசியம் + காரன் – ஆசியக்காரன்.]

ஆசியக்குவாதம்

 ஆசியக்குவாதம்āciyakkuvātam, பெ. (n.)

   உடற்சூட்டால் வாயில் புண் உண்டாகி, மார்பில் வலியையும் உண்டாக்கும் ஒருவகை நோய்; an ulceration of the mouth due to excessive heat arising from the deranged Vayu. It also cause pain in the chest (சா.அக.);.

த.வ. மார்வலி.

ஆசியசீரகம்

 ஆசியசீரகம்āciyacīragam, பெ. (n.)

   கருஞ்சீரகம்; black cumin (சா.அக.);.

ஆசியதகரான்னம்

 ஆசியதகரான்னம்āciyadagarāṉṉam, பெ. (n.)

   நஞ்சு கலந்த சோறு; food mixed with poison (சா.அக.);.

த.வ. நஞ்சுணவு.

ஆசியநாடகம்

 ஆசியநாடகம்āciyanāṭagam, பெ. (n.)

   நகைச்சுவை மிக்க நாடகம்; farce.

     [ஆசியம் + நாடகம்.]

     [Skt. håsya → த. ஆசியம்.]

ஆசியபத்திரம்

 ஆசியபத்திரம்āciyabattiram, பெ. (n.)

   தாமரை (பச்.மூ.);; lotus.

ஆசியபாகபித்தம்

 ஆசியபாகபித்தம்āciyabākabittam, பெ. (n.)

   பித்தம் தலைக்கேறி வாயில் புண் உண்டாகி, பசியின்மை, ஏப்பம், காய்ச்சல், கொட்டாவி, விக்கல் ஆகிய குணங்களைக் காட்டும் ஒருவகைப்பித்த நோய்; a disease due to the aggravated bill in the system (சா.அக.);.

த.வ. தலைப்பித்தம்.

     [ஆசியம் + பாகம் + பித்தம்.]

     [Skt. åsya → த. ஆசியம்.]

ஆசியபாகம்

 ஆசியபாகம்āciyapākam, பெ. (n.)

   முகத்தின் உறுப்புகள்; facial organs (சா.அக.);.

     [ஆசியம் + பாகம்

     [Skt. åsya → த. ஆசியம்.]

ஆசியபாகவாதம்

 ஆசியபாகவாதம்āciyapākavātam, பெ. (n.)

   முக உறுப்புகளைத் தாக்கும் ஒருவகை ஊதை நோய்; a nervous disease affecting the facial organs (சா.அக.);.

     [ஆசியம் + பாகம் + வாதம்.]

     [Skt. åsya → த. ஆசியம்.]

ஆசியம்

ஆசியம்1āciyam, பெ. (n.)

   1. வாய்; mouth.

   2. முகம்; Face.

   3. கண்களின் நடுவிலிருக்கும் இடம்; a mystic spot between the eyebrows.

     [Skt. åsya → த. ஆசியம்.]

 ஆசியம்2āciyam, பெ. (n.)

   1. சிரிப்பு; laughter.

   2. கிண்டல்; jest, ridicule,

   3. ஒன்பான் சுவைகளுளொன்று; sentiment of humour, one of nava-rasam.

   4. கருஞ்சீரகம்; black cumin.

த.வ. நகைப்பு.

     [Skt. håsyd → த. ஆசியம்.]

ஆசியலோமன்

 ஆசியலோமன்āciyalōmaṉ, பெ. (n.)

   முக மயிர் அல்லது தாடி மயிர்; the hair of the face such as, the mustaches of the beard, (சா.அக.);.

ஆசியவாங்கலம்

 ஆசியவாங்கலம்āciyavāṅgalam, பெ. (n.)

   கலப்பை முகம்; plough like face (சா.அக.);.

ஆசியவாதம்

 ஆசியவாதம்āciyavātam, பெ. (n.)

   முகவூதை, முகத்தின் உறுப்புகளைச் சிதைக்கும் (பின்னப்படுத்தும்); ஒர் ஊதை நோய்; a disease affecting the facial organs.

ஆசியாசவம்

ஆசியாசவம்āciyācavam, பெ. (n.)

   1. எச்சில்; matter ejected from the mouth.

   2. உமிழ் நீர்; the fluid secreted by the salivary glands which serves to moisten the tongue and the mouth-Saliva (சா.அக.);.

ஆசியாசுகம்

 ஆசியாசுகம்āciyācugam, பெ. (n.)

   சுவையில்லாதது; disagreeableness to the mouth or to the taste (சா.அக.);.

ஆசியாட்சேபவாதம்

 ஆசியாட்சேபவாதம்āciyāṭcēpavātam, பெ. (n.)

   முகவுறுப்புகளைப் பொறுத்து வலி உண்டாக்கும் ஒரு ஊதை நோய்; a disease affecting the nerves of the facial organs (சா,அக.);.

த.வ. முகநரம்புநோய்.

ஆசியோதனம்

ஆசியோதனம்āciyōtaṉam, பெ. (n.)

   1. கண்ணோய்க்கு விடும் மருந்து; eye drops.

   2. உடலின் ஒன்பது துளைகள் வழியே செலுத்தும் எண்ணெய்; medicated oil caused to be absorbed through, the nine openings of the body (சா.அக.);.

த.வ. கண் மருந்து.

ஆசியோபலேபம்

 ஆசியோபலேபம்āciyōpalēpam, பெ. (n.)

   சளியால் வாயில் ஏற்படும் தடை; obstruction in the mouth due to phlegm (சா.அக.);.

த.வ. நீர்க்கோள் அடைப்பு.

ஆசிரமம்

ஆசிரமம்āciramam, பெ. (n.)

   1. துறவிகள் வாழுமிடம்; sage’s house.

     ‘இந்த ஆசிரமம் துறவிகளுக்காவே கட்டப்பட்டது’.

     “அறவோர் வைகுமாசிரமத்து” (சேதுபு. 2வது சக்கர. 1);

   2. முனிவர் அல்லது இறை நெறியில் ஈடுபட்டோர் வாழுமிடம்; the abode of an ascetic or anyone who is engaged in spiritual activities.

     ‘அரவிந்தர் ஆசிரமம் புதுச்சேரிக்கருகில் உள்ளது.

   3. களைகண் (ஆதரவு); அற்றோர் போன்றவர்களுக்குப் பாதுகாப்புத் தரும் முறையில் அமைக்கப்படும் இடம், விடுதி; home for the destitutes, disabled etc.

ஏதிலியர்க்காகக் கட்டப்பட்ட ஆசிரமம் இது.

   4. வாழ்வின் நால்நிலைகள்; four stages of life.

த.வ. திருவாசிரிய இருக்கை, புகலிடம்.

     [Skt. a-šrama → த. ஆசிரமம்.]

ஆசிரமி

ஆசிரமிācirami, பெ. (n.)

   1. வாழ்வின் நான்கு நிலைகளைக் கடைபிடிப்பவன்; one who is in any one of the four stages of life a word tacked on to compounds.

   2. முனிவன்; sage.

     [Skt. å-sramin → த. ஆசிரமி.]

ஆசிரம்

 ஆசிரம்āciram, பெ. (n.)

   நெருப்பு (சா.அக.);; fire.

ஆசிரயணம்

ஆசிரயணம்ācirayaṇam, பெ. (n.)

   சார்ந்து நிற்கை (திவ். திருவாய் 6.1 : 6, பன்னீ.);; seeking refuge with or depending on another,

     [Skt. å-srayana → த. ஆசிரயணம்.]

ஆசிரயம்

ஆசிரயம்ācirayam, பெ. (n.)

   அடுத்திருக்கை; dependence, seeking protection with another.

     “இச்சைமற் றாசிரயங் குற்றோன்” (ஞானா. 61:19.);.

     [Skt. a-sraya → த. ஆசிரயம்.]

ஆசிரவம்

ஆசிரவம்1āciravam, பெ. (n.)

   ஒன்பான் கறிவகைகளுள் ஒன்று (சீவக. 2814, உரை.);; the way karma is acquired by the human soul, one of nava-patarttam.

     [Skt. å-srava → த. ஆசிரவம்.]

 ஆசிரவம்2āciravam, பெ. (n.)

   1. அரிசி கொதிக்கும் போது உண்டாகும் நுரை; the foams in boiling rice.

   2. புலனின் புறப்பற்று; the action of the senses which impels the Soul towards external objects.

   3. துன்பம்; Pain.

   4. ஏழுவகை மெய்ம்மைகளுள் ஒன்று; one of the seven tattuvams.

   5. புறப் பற்றினால் வந்து சேரும் செருக்கு; the influence or action of the body, mind and speech in impelling the soul to generate karma (சா.அக.);.

     [ஆசிரவம் → ஆசிரவர்.]

ஆசிரிதம்

 ஆசிரிதம்āciridam, பெ. (n.)

   சார்ந்திருக்கை; dependence, depending upon another.

     [Skt. a-srita → த.ஆசிரிதம்.]

ஆசிரிய நிகண்டு

ஆசிரிய நிகண்டுāciriyanigaṇṭu, பெ. (n.)

   17ஆம் நூற்றாண்டில் தொண்டைநாட்டு ஊற்றங்காலிலிருந்த ஆண்டிப் புலவரால் ஆசிரிய மண்டில யாப்பில் தொகுக்கப்பட்ட உரிச்சொற்றொகுதி; thesaurus composed in asiriya mangilam (viruttam); by Angip Pulavar of Urrangăl in Tongai Nadu in the 17th century.

     [ஆசிரியம் + நிகண்டு < Skt. nikantu.]

ஆசிரிய மண்டிலம்

 ஆசிரிய மண்டிலம்āciriyamaṇṭilam, பெ. (n.)

மண்டிலம் = வட்டம், முழுமை, நிறைவு, ஒரியன்மை. மண்டலித்தல் = பாவின் அல்லது பாவினத்தின் பலவடியும் அளவொத்து வருதல், நிலைமண்டில வாசிரியப்பா, அடிமறி

மண்டில வாசிரியப்பா என்னும் பாப் பெயர்களை நோக்குக. மண்டலி → மண்டலம் → மண்டிலம்.

தாழிசை, துறை, மண்டிலம் என்னும் மூன்றும் தமிழுக்கே சிறப்பாகவுரிய பாவினங்களே. அவற்றின் பெயரும் தூய தென்சொல்லே. பிற்காலத்தில், தமிழ்ப் பகைவரான வடமொழியாளர், விருத்தம் என்னும் ஒத்த பொருள் வடசொல்லைப் புகுத்தித் தென்சொல்லை வழக்கு வீழ்த்தினர். அவ் வடசொல்லும் தென்சொல் திரியே.

வள் → வட்டு . வட்டம் → வ. வ்ருத்த ஒ.நோ: நடி → நடம் → நட்டம்.

அகவன்மண்டிலம் பார்க்க;see āgavammandilam.

ஆசிரிய மாலை

ஆசிரிய மாலைāciriyamālai, பெ. (n.)

   ஓர் இசைத் தமிழ்நூல் (சிலப். 8:25, அரும்);; treatise on music.

     [ஆசிரியம் + மாலை]

ஆசிரிய வசனம்

ஆசிரிய வசனம்āsiriyavasaṉam, பெ. (n.)

   ஒரு நூலாசிரியன் அல்லது உரையாசிரியன், தன் கொள்கைக்கு அல்லது கூற்றிற்கு வலிமையாக, முன்னோர் அல்லது. பிறர் நூலினின்று எடுத்துக் கூறும் மேற்கோள்; authoritative text quoted by an author from other’s work or works.

     “பாடங் கருத்தே ….ஆசிரிய வசனமென் றீரே ழுரையே”. (நன். 21);.

     [ஆசிரியன் + வசனம் Skt vacana] ஆசிரியவுரை பார்க்க;see asiriyavural

ஆசிரிய வியற்சீர்

ஆசிரிய வியற்சீர்āciriyaviyaṟcīr, பெ. (n.)

   அகவற் பாவிற்குரிய ஈரசைச்சீர் நான்கு; the four disyllabic metrical feet generally used in agaval verse.

     “இயலசை மயக்கம் இயற்சீர்” (தொல். பொருள். செய்.12);.

     [ஆசிரியம் + இயல் + சீர்.]

ஆசிரிய வியற்சீர் நான்கு:

அசையமைப்பு சீர்வாய்பாடு

நேர்நேர் தேமா

நிரைநேர் புளிமா

நேர்நிரை கூவிளம்

நிரைநிரை கருவிளம்

இவற்றை ஆசிரிய வுரிச்சீர் என்று கூறுவது தவறாகும்.

ஆசிரிய விருத்தம்

 ஆசிரிய விருத்தம்āciriyaviruttam, பெ. (n.)

ஆசிரிய மண்டிலம் பார்க்க, see āširiya mandilam.

ஆசிரிய வுரிச்சீர்

ஆசிரிய வுரிச்சீர்āciriyavuriccīr, பெ. (n.)

 two ‘uri’ syllables and used generally in agaval verse in ancient times.

     [ஆசிரியம் + உரி + சீர்]

ஆசிரிய வுரிச்சீர் நான்காவன:-

அசையமைப்பு சீர் வாய்பாடு

நேர்பு நேர்பு – போகு காடு

நிரைபு நேர்பு – வழங்கு காடு

நேர்பு நிரைபு – போகு கடறு

நிரைபு நிரைபு – வழங்கு கடறு,

     “இயலசை மயக்கம் இயற்சீ ரேனை

யுரியசை மயக்கம் ஆசிரிய வுரிச்சீர்”. (தொல். பொருள். செய். 13);

தொல்காப்பியர் காலத்திலும் அதற்கு முன்பும், செய்யுளசைகள் நேர், நிரை, நேர்பு நிரைபு என நால்வகைப்பட்டிருந்தன. அவற்றுள் முன்னவையிரண்டும் இயலசையென்றும், பின்னவையிரண்டும் உரியசையென்றும் பெயர் பெற்றிருந்தன. இக் காலத்தார் உரியசைப் பாகுபாட்டை நீக்கி, நேர்பசையை நேர்நேர் (தேமா); என்றும் நிரைபசையை நிரைநேர் (புளிமா); என்றும் பகுத்து ஈரசைச் சீராக்கிவிட்டனர். அதனால், உரிச்சீர் என்பது இக் காலத்தில் வெண்பாவிற்குரிய காய்ச்சீரும் வஞ்சிப்பாவிற்குரிய கனிச்சீருமாகிய மூவசைச் சீர்க்கே உரியதாயிற்று. ஆகவே, ஆசிரியப்பாவிற்குச் சிறப்பாக (பெரும்பான்மையாக);வுரிய இயலசை மயக்க இயற்சீரை ஆசிரியவுரிச்சீர் என்பது, இக் காலத்திற்கு எட்டுணையும் ஏலாதாம். எனவே,

     “ஈரசை கூடிய சீரியற் சீரஃ

தீரிரண்டாமவை யகவற் கிசைதலும்

மூவசை கூடிய சீருரிச் சீரது

நாலிரண் டாகி நடைபெறும் அவற்றுள்

நேரிறு நான்கும் வெள்ளை யல்லன

பாவினுள் வஞ்சியின் பாற்பட்டிடுதலும்

நாலசை யானும் ஒரசை யானும்

சீர்பெற நடப்பது பொதுச்சீர் ஆங்க(து);

எண்ணிரண் டிரண்டா யியறலு நெறியே”. (716);

என்று நூற்பா யாத்த பின்னும்,

     ‘இரண்டு அசையான் வருஞ்சீர் இயற்சீரெனப்படும். அது நேர்நேராயும் நிரைநேராயும் நிரைநிரையாயும் நேர்நிரையாயும் தம்மிற்கூடி நான்காம். அங்ஙனம் ஆகிய நான்கு சீரும் ஆசிரியவுரிச்சீராதலும்’ என்றும். ‘

     ‘ஈரசைச்சீர் எல்லாச் செய்யுளுள்ளும் பயின்று இனிது நடத்தலின் இயற்சீரென்றும், மூவசைச்சீர் எல்லாச் செய்யுளுள்ளும் வருமெனினும் வெண்பாவிற்கும் வஞ்சிப்பாவிற்கும் உரிமை பூண்டு நிற்றலின் உரிச்சீரென்றும், ஏனைய பொதுவாய் நிற்றலின் பொதுச்சீரென்றும் ஆயின’ என்றும்,

     ‘வழக்கின்கண் ஆசிரியவுரிச்சீர்க்கு உதாரணம்: தேமா புளிமா கருவிளம் கூவிளம் என்றும், ….. செய்யுட்கண் ஆசிரியவுரிச்சீர்க்கு உதாரணம்:

     “குன்றக் குறவன் காதன் மடமகள்

வரையர மகளிர் புரையுஞ் சாயலள்

ஐய ளரும்பிய முலையள்

செய்ய வாயினள் மார்பினள் சுணங்கே”

என்றும், இலக்கண விளக்கவுரையில் உரைத்திருப்பது, மாறு கொளக்கூறல், மயங்கவைத்தல் என்னும் இருவகைக் குற்றத்திற் கிடமாதல் கண்டுகொள்க.

ஆசிரிய வுரை

 ஆசிரிய வுரைāciriyavurai, பெ. (n.)

   பதினான்கு வகை வுரைகளுள் ஒன்று; one among the fourteen divisions of a commentaries. (ஆசிரிய வுரையை ஆசிரிய வசனம் என்பார் நன்னூலார்);

ஆசிரியச் சீர்

ஆசிரியச் சீர்āciriyaccīr, பெ. (n.)

     [ஆசிரியம் + சீர்]

ஆசிரியம் என்பது அகவல் என்பதன் மறுபெயர்.

     “அகவலென்பதாசிரியம்மே” (தொல். செய். 80);

ஆசிரிய வியற்சீர், ஆசிரிய வுரிச்சீர் என்பன பார்க்க.

ஆசிரியச் சுரிதகம்

 ஆசிரியச் சுரிதகம்āciriyaccuridagam, பெ. (n.)

 agaval form of verse which is the last member of some Kalivenbås.

     [ஆசிரியம், சுரிதகம் பார்க்க;see asiriyam, šuridagam.]

ஆசிரியத் தாழிசை

ஆசிரியத் தாழிசைāsiriyattāḻisai, பெ. (n.)

     “தருக்கியல் தாழிசை மூன்றடி யொப்பன…. சீரகவல்” (காரிகை. 14);.

   1

     “கன்று குணிலாக் கனியுகுத்த மாயவன்

இன்றுநம் ஆனுள் வருமே லவன்வாயிற்

கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழீ”

   2

     “பாம்பு கயிறாக் கடல்கடைந்த மாயவன்

ஈங்குநம் ஆனுள் வருமே லவன்வாயில்

ஆம்பலந்தீங்குழல் கேளாமோ தோழீ”

   3

     “கொல்லையஞ் சாரற் குருந்தொசித்த மாயவன்

எல்லிநம் ஆனுள் வருமே லவன்வாயில்

முல்லையந்தீங்குழல் கேளாமோ தோழீ” (சிலப்.17:19-21);

     [ஆசிரியம், தாழிசை பார்க்க;see āširiyam, tālišai]

ஆசிரியத்தாழிசை ஒரோவிடத்து ஒரே தாழிசையாய் அருகியும் வரும். அது அத்துணைச் சிறப்பினதன்று.

ஆசிரியத்தளை

ஆசிரியத்தளைāciriyattaḷai, பெ. (n.)

ஆசிரியம், தளை பார்க்க;see āširiyam, talai.

நேர்முன் நேர்வருவது நேரொன்றாசிரியத்தளையென்றும், நிரைமுன் நிரை வருவது நிரை யொன்றாசிரியத்தளை யென்றும் பெயர் பெறும். தேமா, புளிமா, கூவிளம், கருவிளம் என்னும் சீர்வாய்பாடுபற்றி, நேர்முன்நேர் என்பதை மாமுன் நேர் என்றும், நிரைமுன் நிரை என்பதை விளமுன் நிரையென்றும் கூறுவது உரையாசிரியர் மரபு

     “உள்ளார் கொல்லோ தோழி முள்ளுடை

இலவ மேறிய கலவ மஞ்ஞை”

என்னும் ஐங்குறுநூற்றுத் தனிப்பாடலடிகளுள், இருவகை ஆசிரியத்தளையும் வந்துள்ளமை காண்க

     “சீரியை மருங்கினோரசையொப்பின்

ஆசிரியத் தளையென் றறியல் வேண்டும்.” (தொல். பொருள். செய். 55);

     “அகலிரு விசும்பிற் பாயிருள் பருகி” என்னும் பெரும்பாணாற்றுப்படை யடியுள் (1);, இருதளையும் வந்துள்ளன.

ஆசிரியத்துறை

ஆசிரியத்துறைāciriyattuṟai, பெ. (n.)

     “நான்கடியாய் எருத்தடி நைந்துமிடை மடக்காயு மிடையிடையே சுருக்கடி யாயுந் துறையாம் குறைவில்தொல் சீரகவல்” (காரிகை. 14);

     [அகவற்றுறை பார்க்க;see āgavarrurai.]

நான்கடியாய் இடையிடை சுருங்குதலுடன் இடைமடக்காய் வந்த ஆசிரியத்துறைக்கு

     “இரங்கு குயின்முழவா இன்னிசையாழ் தேனா

அரங்கு மணிபொழிலா ஆடும்போலும் இளவேனில்

அரங்கு மணிபொழிலா ஆடுமாயின்

மரங்கொல் மணந்தகன்றார் நெஞ்சமென் செய்ததிள வேனில்”

ஆசிரியன்

ஆசிரியன்āciriyaṉ, பெ. (n.)

   1. நூலாசிரியன்; author of literary work.

   2. நுவலாசிரியன்; teacher.

   3. உரையாசிரியன்; commentator, annotator.

   4. தொகுப்பாசிரியன்; compiler, கலித்தொகையின் தொகுப்பாசிரியர் நல்லந்துவனார்.

   5. பதிப்பாசிரியன்; editor.

   6. குரு, குரவன்; spiritual teacher, priest.

ஆசிரியர் சொன்னதை அப்படியே நம்பவேண்டுமா?

ஆசிரியர் பேச்சு அரசனையும் வெல்லும் (பழ.);.

     [ஆசு = குற்றம். இரிதல் = ஒடுதல், நீங்குதல், விலகுதல் ஆக இரிதல் = குற்றம் நீங்குதல். ஆசு + இரியன் (ஆசிரியன்); = குற்றம் நீங்கியவன் அல்லது நீக்குபவன். ஆசிரியன் மாணவரினின்று நீக்கும் குற்றம் மொழிக் குற்றம் ஒழுக்கக் குற்றம் என இரு திறப்படும்.]

வடமொழியாளர் ஆசிரியன் என்னும் தென்சொல்லை ஆசாரிய (acarya); என்னும் வடசொல்லினின்று திரிப்பர். அது சொல்லமைதி, காலமலைவு என்னும் இரண்டாற் கடியப்படும்.

à (ஆ); a prefix to verbs, especially of motion, and their derivatives.

 a-car, (vi., v.t.); come near to, approach, to lead hither (as a path);;

 to address, apply;

 to proceed, manage, behave one’s self;

 use, apply;

 examine (a witness);;

 to have intercourse with;

 to act, undertake, do, exercise, practise, perform;

 to throw into the fire.

 a-cara, n. conduct, manner of action, behaviour, good behaviour, good conduct;

 custom, practice, usage, traditional of immemorial usage (as the foundation of law);;

 established rule of conduct, ordinance, institute, precept;

 rule or line;

 agreeing with what is taught by the teacher,

 Acarya, n, knowing or teaching the scara or rules, spiritual guide or teacher (especially one who invests the student with the sacred thread, and instructs him in the Vedas in the law of sacrifice and religious mysteries;

 a N. of Drona (the teacher of the Pāndavās);

இங்ஙனம், ‘ஆ’ என்னும் பொருளற்ற முன்னொட்டையும், செல்லுதல் அல்லது நடத்தல் என்னும் வினையைக் குறிக்கும் ‘சர்’ என்னும் முதனிலையையும் அடிப்படையாகக் கொண்டது ஆசார்ய (acarya); என்னும் சமற்கிருதச் சொல்,

     ‘சர்’ என்னும் இயக்க வினைச்சொல் சரி என்னும் தென்சொல்லின் திரிபே. சர்எனல் = நீண்டுவிரைந்தொழுகுதல். சர் → சர → சரசரவெனல் = விரைந்து செல்லுதற் குறிப்பு. சர → சரி → சரிதல் = விரைந்து செல்லுதல்;

செல்லுதல், நடத்தல். நடக்கை அல்லது நடத்தை என்னும் சொல் ஒழுக்கத்தைக் குறிப்பது போன்றே, சர (cara); அல்லது சார (cara); என்னும் வடசொல்லும் ஒழுக்கத்தைக் குறிக்கின்றது.

ஆசார்ய (acaya); என்னுஞ்சொல் பிராமணரையே சிறப்பாகக் குறித்தலும், ஆசிரியன் என்னும் சொல் குலச் சார்பின்றிக் கற்பிக்கும் அறிஞர்க்கெல்லாம் பொதுவாயிருத்தலும், ஊன்றிக் கவனிக்கத் தக்கதாகும்.

     “வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும்

கீழ்ப்பா லொருவன் கற்பின்

மேற்பா லொருவனு மவன்கட் படுமே” (புறநா. 183);

என்று ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனும்,

     “தோணி யியக்குவான் றொல்லை வருணத்துக்

காணிற் கடைப்பட்டா னென்றிகழார் – காணாய்

அவன் றுணையா வாறுபோ யற்றேநூல் கற்ற

மகன் றுணையா நல்ல கொளல்” (நாலடி. 136);

என்று ஒரு பழம்புலவரும்,

     “எக்குடிப் பிறப்பினும் யாவரே யாயினும்

அக்குடியிற் கற்றோரை மேல்வரு கென்பர்”

என்று அதிவீரராம பாண்டியனும் கூறியிருத்தல் காண்க.

ஆரியர் இந்தியாவிற்குட் புகுந்த காலம் கி.மு. 2000-1500. வேதகாலம் கி.மு. 1550-1000. பாரதகாலம் தோரா. கி.மு. 1000. அதுவே துரோணாசாரியார் காலமும்,

தொல்காப்பியர் காலம் கி.மு. 7ஆம் அல்லது 6ஆம் நூற்றாண்டு. அவர்தம் இலக்கண நூலில் முன்னூலாசிரியரைப் பல்வேறு திறம்பற்றிய பெயராற் குறிப்பதுடன், ஆசிரியன் என்னும் சொல்லையும் ஆள்கிறார்.

     “அளவும் நிறையும் எண்ணும் வருவழி

நெடுமுதல் குறுகலும் உகரம் வருதலும்

கடிநிலை யின்றே ஆசிரி யர்க்கே” (தொல். எழுத்து. புள்ளி. 94);.

தொல்காப்பியம்,

     “செந்தமிழியற்கை சிவணிய நிலத்தொடு

முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப்

புலந்தொகுத்த”

சார்பிற் சார்பு நூலாதலின், அதன் முன்னூல்களெல்லாம் இடைக்கழக நூல்களாகவேயிருந்திருத்தல் வேண்டும். இடைக் கழகக் காலம் தோரா. கி.மு. 4000-2500.

     “ஆசிரியம் வஞ்சிவெண்பாக் கலியென நாலியற் றென்ப பாவகை விரியே” (தொல். பொருள். செய். 104);

என்னும் நூற்பாவில் அகவலை ஆசிரியம் என்றும் முன்னுலாரை

     “என்ப” என்று பலர்பாற் சொல்லாலும் குறித்திருத்தலால், ஆரியர் இந்திய வருகைக்கு முன்பே ஆசிரியன் என்னுஞ்சொல் குமரி நாட்டில் வழங்கி வந்தமையும் முன்னூலின் பன்மையும் புலனாகும். ஆதலால், ஆசிரியன் என்னும் தென்சொல்லிற்கும் ஆசார்ய (aciya); என்னும் வடசொல்லிற்கும் எள்ளளவும் தொடர்பில்லையென அறிக.

இனி, தலைக்கழகக் காலத்திலும், அகவற்பாவும், அதற்கு ஆசிரியம் என்னும் பெயரும், அதனால் ஆசிரியன் என்னுஞ் சொல்லும், வழங்கியேயிருத்தல் வேண்டும்.

ஆசிரியரெல்லாம் புலவரேனும், புலவரெல்லாம். ஏதேனும் ஆசிரியத் தொழில் செய்தாலன்றி ஆசிரியராகார். ஆதலால்,

     “என்மனார் புலவர்” என்னும் தொடரும் அது போன்ற பிறவும் தொல்காப்பியத்திற் பயின்று வரினும், ஆசிரியன் என்னும் சொல்லிற்குப் புலவர் என்னும் பொருள் இங்குக் கூறப்பட வில்லை.

நுவலாசிரியரைப் போதகாசிரியரென்று வடசொற் கலந்த இருபிறப்பியாற் குறிப்பர். இக்காலத்தார். அது தவறாம்.

ஆசிரியப்பா

 ஆசிரியப்பாāciriyappā, பெ. (n.)

     [ஆசிரியம் + பா. ஆசிரியமாகிய பா (இருபெயரொட்டு);.]

ஆசிரியப்பாவினம்

 ஆசிரியப்பாவினம்āciriyappāviṉam, பெ. (n.)

ஆசிரியம், பா, இனம் பார்க்க see āšíriyam, pā, iņam

ஆசிரியம்

ஆசிரியம்āciriyam, பெ. (n.)

   1. ஆசிரியத் தொழில்; teaching profession.

   2. அகவற்பா; agaval verse type.

     “அகவல் என்ப தாசிரி யம்மே.” (தொல், பொருள். செய். 80);

     [ஆசிரியன்-ஆசிரியம் முதற்காலத்தில் ஆசிரியன் இயற்றிய அல்லது கற்பித்த இலக்கண நூல்களெல்லாம் நூற்பா) அகவல் யாப்பில் இயற்றப்பட்டிருந்ததனால், அகவல் ஆசிரியம் எனப் பெயர் பெற்றது. ஆசிரியன் கையாளும்) பா என்பது அதன் பொருள். ஆசிரியன் பார்க்க. see asiriyan.]

     ‘ஆசிரியர் அறிவித்தல் போலப் பொருள்களை அறிவித்து நிற்றலால் ஆசிரியப்பா எனப்பட்டது’ என்பது யாழ்ப்பாணச் சுன்னாகம் குமாரசுவாமிப் புலவர் யாப்பருங்கலக் காரிகைப் புத்துரை.

மூவடிச் சிறுமையும் ஆயிரவடிப் பெருமையும் கொண்ட பொதுவகை அகவலினின்று வேறுபட்டு, ஒரடியும் அரையடியும் கொண்டு ஆசிரியப்பா அமைவதால், அது நூற்பாவகவல் என்று வேறுபடுத்திக் கூறப்பட்டது.

     “நூற்பா வகவல் நுணங்க நாடின்

சூத்திரங் குறித்த யாப்பிற் றாகி

அடிவரையின்றி விழுமிதினடக்கும்” (திவா.);.

ஆசிருத்தம்

 ஆசிருத்தம்āciruttam, பெ. (n.)

   புன்குமரம்; a tree Indian beech-Dalbergia arborea (சா.அக.);

ஆசிர்வதி-த்தல்

ஆசிர்வதி-த்தல்ācirvadiddal,    4 செ.கு.வி.(v.i.)

   வாழ்வில் சீரும் சிறப்பும் நன்மையும் பெறுமாறு வாழ்த்துதல்; wish one happiness, prosperity, etc. bless.

     [Skt. åsinvad → த. ஆசிர்வதி-த்தல்.]

ஆசிர்வாதம்

 ஆசிர்வாதம்ācirvātam, பெ. (n.)

   சீரும், சிறப்பும் பெறுமாறு கூறும் நல்வாழ்த்து; blessing; good wishes; the invoking of happiness.

அமைச்சர்கள் மணமக்களுக்கு ஆசிர்வாதம் வழங்கினர்.

த.வ. நல்வாழ்த்து.

     [Skt. åsir-våda → த. ஆசிர்வாதம்.]

ஆசிர்விடம்

 ஆசிர்விடம்ācirviḍam, பெ. (n.)

   நச்சுப் பாம்பு; venomous snake (சா.அக.);.

ஆசிலேடம்

 ஆசிலேடம்ācilēṭam, பெ. (n.)

   தழுவுகை; embrace (சா.அக.);.

ஆசிலேடித்தல்

 ஆசிலேடித்தல்ācilēṭittal, தொ. பெ. (vbl. N.)

   தழுவுகை; embrace(சா.அக.);.

ஆசில்

 ஆசில்ācil, பெ. (n.)

   வாழ்த்து (நாமதீப.);; blessing.

     [Skt. åsih → த. ஆசில்.]

 ஆசில்ācil, பெ. (n.)

   மதிப்பு; valuation, estimate.

     [U. hãsli → த. ஆசீல்.]

ஆசிவிடம்

 ஆசிவிடம்āciviḍam, பெ. (n.)

   நன்மை செய்யாத வேளைகளுள் (அசுப யோகம்); ஒன்று; an inauspicious yokam.

     [Skt. aš-visa → த. ஆசிவிடம்.]

ஆசீயம்

 ஆசீயம்ācīyam, பெ. (n.)

   கருஞ்சீரகம் (மு.அ.);; black cumin (செ.அக..);;

 black cumin or country fennel, Nigella sativa.

ஆசீர்வசனம்

ஆசீர்வசனம்āsīrvasaṉam, பெ. (n.)

   வாழ்த்துரை (வீரசோ. அலங். 33.);; word of blessing, benediction.

     [Skt. åsir-vacana → த. ஆசீர்வசனம்.]

ஆசீர்வதி-த்தல்

ஆசீர்வதி-த்தல்ācīrvadiddal,    4 செ.கு.வி. (v.i.)

   வாழ்த்துதல்; to bless, pronounce benediction upon.

த.வ. வாழ்த்தல்.

     [Skt. a-sirvad → த. ஆசிர்வதி-த்தல்.]

ஆசீர்வாதம்

 ஆசீர்வாதம்ācīrvātam, பெ. (n.)

   வாழ்த்து; blessing, benediction.

     [Skt. a – sir-vada → த. ஆசிர்வாதம்.]

ஆசீவகன்

ஆசீவகன்ācīvagaṉ, பெ. (n.)

   1. சமணரில் ஒரு பிரிவினன் (மணிமே. 27 : 108);; member of a Jaina sect founded by Gosala.

   2. சமண முனிவன்; Jaina ascetic.

     [Skt. ä-javaka → த. ஆசீவகன்.]

ஆசீவகப்பள்ளி

ஆசீவகப்பள்ளிācīvagappaḷḷi, பெ. (n.)

   சமண முனிவர்களின் உறைவிடம் (நன். 158, மயிலை.);; monastery of the ascetics of the Ajiv-aka sect.

     [ஆசீவகன் + பள்ளி).]

     [Skt. ā-jivaka → த. ஆசீவகன்.]

ஆசு

ஆசுācu, பெ. (n.)

   1. ஒட்டு, பற்று; adherence, joint, grasp.

   2. பற்றாசு; soldering powder.

   3. நேரிசை வெண்பாவின் இரண்டாம் அடி மூன்றாஞ் சீரின் இறுதியிற் சேர்க்கப்படும் ஒரசை அல்லது ஈரசை (யா.கா.செய்.3);; one or two metrical syllables affixed to the third foot of the second line of Nderišal verbs.

   4. செய்யுளின் எதுகையிடையில் வரும் ய், ர், ல், ழ் என்னும் ஒற்றுகள் (யா. கா. ஒழி. 6);; consonants y, r, l, 1 intervening between the first and second syllables of a rhyming foot in one of two lines of a stanza.

   5. பற்றுக்கோடு; support, prop.

     “ஆசா கெந்தை யாண்டுளன் கொல்லோ” (புறநா. 235);.

   6. வாட்பிடி; hit of sword.

     “குற்றுடை வாள் ஆசுங் கண்டமும்” (S.I.I. ii, 185);.

   7. கவசம் (திவா.); armour, coat of mail.

   8. கைக்கவசம் (அக.நி.);; steel gloves.

   9. நூலிழைக்குங் கருவிகளுள் ஒன்று (வின்);; small tube through which yarn is conducted from the spindle of a spinning wheel to a machine.

   10. அச்சு (இ.வ.);; mould (Loc.);.

   11. இலக்கு (வின்.);; mark, butt.

   12. அற்பம் (திவா.);; trifle, anything small or mean.

   13. நுட்பம்; minuteness, fineness, acuteness.

     “தேசிக மென்றிவை யாசி னுணர்ந்து” (சிலப். 3:47);.

   14. குற்றம்; fault.

     “அரியகற் றாசற்றார் கண்ணும்” (குறள். 503);.

   15. ஐயம்; doubt

     “அமலனை யாசற வுணர்ந்த வமலர்” (ஞானா. 66:17);.

   16. ஆணவமலம் (சிவப்பிர. உண்மை. 42);; matter which is eternally encasing the soul and lasting till its final liberation, one of the three impurities of the soul.

   17. துன்பம்; trouble, distress, affliction.

     “ஆசுக வயந்தீர் பெய்த வறிமதி” (ஞானா 24:4);.

   18. ஒருவகைச் செயற்கை நஞ்சு (சீதாங்க பாடாணம்);; a kind of native arsenic (சா.அக);.

   19. அல்லிமொக்கு; lilly bud (சா.அக.);.

   20. முகம்; face (சா.அக.);

   21. இடைக் கார்நெல்வகை (நாநார்த்த);; a kind of paddy.

ஆசு (நெல்வகை); – Skt.asu.

   ம.அசு;   க.அசி;   அச;   தெ.அசி;   குரு.ஆசா;பிரா.உழகுன்.

     [அண்ணுதல் = பொருந்துதல், ஒட்டுதல், பற்றுதல். அண் → அடு → அசு → ஆசு. ட-ச, போலி. ஒ.தோ: ஒடி – ஒசி].

 L vide – vise.

பற்று வைக்கும் பொடி நுண்ணிதாயிருப்பதால், பற்றுக் கருத்தினின்று நுட்பக் கருத்தும் அற்பக் கருத்தும் தோன்றின. ஒ.நோ: ஒட்டு=அற்பம். (சூடா);.

மரவேலையில் ஓட்டையைப் பற்று (மக்கு); வைத்து அடைத்திருப்பது ஒரு குற்றமாக இருத்தலால், பற்றுக் கருத்தினின்று குற்றக் கருத்துத் தோன்றிற்று. குற்றத்தால் துன்பம் நேரும், நஞ்சு துன்பந் தருவது.

மொக்கு இயல்பாகக் கூரிதாயிருப்பது. மொக்குப் போன்றது முகம், இனி மொக்கு இலை போன்ற முகவேலைப்பாடுகளில் மரத்தில் அல்லது கல்லில் ஒட்ட உள்நுழைத்துச் சேர்க்கப்படுதலின் பற்றும் பொருளில் வழங்கியதுமாம்.

ஆசுகன்

ஆசுகன்1ācugaṉ, பெ. (n.)

   ஞாயிறு (நாநார்த்த);; sun.

     [Skt. åsu-ga → த. ஆசுகன்.]

 ஆசுகன்2ācugaṉ, பெ. (n.)

   வளி(வாயு); (பாரத. புட்ப. 67.);; vayu, as one who moves swiftly.

 Skt. åsu-ga → த. ஆசுகன்.]

ஆசுகம்

ஆசுகம்ācugam, பெ. (n.)

   1. காற்று (சூடா.);; wind, being that which moves swiftly.

   2. அம்பு; arrow.

     “ஜந்திற னாகிய வாசுக வில்வேள்” (கந்தபு. காமதக.);

   3. பறவைப் பொது; birds in general.

     [Skt. åsu-ga → த. ஆசுகம்.]

ஆசுகவி

ஆசுகவிācugavi, பெ. (n.)

   1. எந்த முன்னேற்பாடு மின்றிக் கொடுத்த பொருளில் உடனடியாகச் செய்யுள் இயற்றும் வல்லமைபடைத்த புலவன்; one who composes verses extempore.

   2. கொடுத்த பொருளில் அடுத்த பொழுதிற் பாடும் பாட்டு (வெண்பாப். செய். 2, உரை);; verse composed extempore and satisfying certain given conditions, one of nar-kavi.

த.வ. ஊற்றுப்பலா, ஊற்றுப்பாவலன்.

     [Skt. asu+kavi → த. ஆசுகவி.]

ஆசுகா

 ஆசுகாācukā, பெ. (n.)

   ஒருவகைச் சருக்கரை; sugar from aska in the Ganjam district.

     [Skt. aska → த. அசுகா.]

ஆசுகா என்பது சருக்கரை செய்யும் ஊர்.

ஆசுகி

 ஆசுகிācugi, பெ. (n.)

   பறவைப் பொது; bird in Common (சா.அக.);.

     [Skt. åsu-ga → த. ஆசுகி.]

ஆசுக்காயம்

 ஆசுக்காயம்ācukkāyam, பெ. (n.)

   பேய் வெங்காயம்; wild onion, Urninea indica or Scilla indica (சா. அக.);.

     [ஆசு=குற்றம். காய் → காயம் = காரமுள்ளது.]

 ஆசுக்காயம்ācukkāyam, பெ. (n.)

   பேய் வெங்காயம்; wild Onion (சா.அக.);.

ஆசுசம்

 ஆசுசம்āsusam, பெ. (n.)

   மாதவிடாய்; menstruation (சா.அக.);.

ஆசுசுக்கணி

ஆசுசுக்கணிāsusukkaṇi, பெ. (n.)

   நெருப்பு (பாரத. காண். 55.);; fire, because it shines.

     [Skt. å-susuk-sani → த. அசுகக்கணி.]

ஆசுணம்

ஆசுணம்ācuṇam, பெ. (n.)

   1 அரசு (மு.அ.);; pipal, Ficus religiosa.

   2. அசோகு (மு.அ.);; asoka tree, Saraca indica (சா.அக.);.

     [ஒருகா. பாசுணம் – ஆசுணம். பாசுதல் – விரியத் தழைத்தல்.]

ஆசுதாபனம்

ஆசுதாபனம்ācutāpaṉam, பெ. (n.)

   1. வலிமை உண்டாக்கும் மருந்து; a strengthening remedy – Restarative.

   2. எண்ணெய் அல்லது நெய் முதலிய கழிச்சலை உண்டாக்கும் பொருட்கள்; an enema of oil or ghee etc.

   3. மலவாய் வழியாய்ச் செலுத்துகை; the act of introducing through the rectum (சா.அக.);.

ஆசுதி

 ஆசுதிācudi, பெ. (n.)

   காய்ச்சி வடிக்கப்பட்டது; distilled – Distila (சா.அக.);.

த.வ. வடிநெய்.

ஆசுதித்தநீர்

ஆசுதித்தநீர்ācudiddanīr, பெ. (n.)

   1. காய்ச்சி வடிகட்டிய நீர்; water boiled and filtered.

   2. வாலையிலிறக்கிய நீர்; water obtained by evaporation and condensation – Distilled water.

த.வ. வடிநீர்.

ஆசுபதம்

ஆசுபதம்ācubadam, பெ. (n.)

   1. இடம்; place.

   2. பிடிபாடு; support, hold.

   3. கரணியம் (காரணம்);; cause.

கலகத்திற்கு ஆசுபதமென்ன?

     [Skt. å-s-pada → ஆஸ்பதம் → த. ஆசுபதம்.]

ஆசுபத்திரம்

 ஆசுபத்திரம்ācubattiram, பெ. (n.)

   அகச் சூலி; toon tree – Cedrela toona.

ஆசுபத்திரி

 ஆசுபத்திரிācubattiri, பெ. (n.)

   மருத்துவமனை; hospital.

த.வ. மருந்தகம்.

     [E.. Hospital → ஆஸ்பத்திரி → த. ஆசுபத்திரி.]

ஆசுபோடம்

ஆசுபோடம்ācupōṭam, பெ. (n.)

   1. புற் பூண்டுகளைக் குறிக்கும் பெயர்; a generic name for several plants.

   2. நடுக்கம்; shivering, trembling (சா.அக.);.

ஆசுமணை

 ஆசுமணைācumaṇai, பெ. (n.)

   நெசவுக் கருவிகளுள் ஒன்று; board used in making thread into skeins.

     [ஆசு = நூலிழைக்கும் கருவி. மணை = பலகை.]

ஆசுரங்கமூலி

 ஆசுரங்கமூலிācuraṅgamūli, பெ. (n.)

   பிரமியிலை; diabetes plant are important medical herb – Gratiola Monieri (சா.அக.);.

ஆசுரம்

ஆசுரம்ācuram, பெ. (n.)

   இஞ்சி (மு.அ.);; ginger.

     [ஒருகா. அசுரம் → ஆசுரம். அசுரம் பார்க்க. see ašuram.]

 ஆசுரம்1ācuram, பெ. (n.)

   1. இஞ்சி; ginger.

   2. வெள்ளை வெங்காயம்; white onion.

   3. கத்தியாலறுக்கை; to open with a knife as is done to a boil, absceSS etc.

   4. மெய்யறிவு; philosophical wisdom; spiritualism.

   5. காயங்களைக் குணப்படுத்தும் மருந்துவகை; a division of Surgery.

   6. கருவிகளால் வெட்டிச் செய்யும் மருத்துவ முறை; curing by cutting with an instrument.

   7. சூடுபோடுகை; applying Cautery (சா.அக.);.

     [Skt. asura → த. ஆசுரம்.]

 ஆசுரம்2ācuram, பெ. (n.)

   1. அரக்கர் தொடர்பானது; that which belongs or relates to Asuras.

     “ஆசுரப் பெரும்படைக்கலம்’ (கம்பரா. இராவணன் வதை. 97.);

   2. தலைமகளுக்குப் பொன்பூட்டிச் சுற்றத்தார்க்கு வேண்டுவன கொடுத்துக் கொள்ளும் மணம் (நம்பியகப். 117, உரை);; a form of marriage in which the bridegroom obtains the bride by bedecking her with jewels and by paying what is known as bride’s price to her father and paternal kinsmen.

   3. ஒரு பெண் பேய்; a female demon.

     [Skt. äsura → த. ஆசுரம்.]

இது தமிழர்க்குரிய மணமுறையன்று.

 ஆசுரம்3ācuram, பெ. (n.)

   நாளிகம் முதலிய கருவிகளாற் செய்யப்படும் போர் (சுக்கிர நீதி, 332);; war waged with guns, etc.

     [Skt. åsura → த. ஆசுரம்.]

நாளிகம்: கோட்டை மதிற்கவரில் அமைக்கப்படும் எறிபடைவகை (சுக்கிர நீதி, 328);.

ஆரியர் அல்லாதாரின் போர்முறை.

ஆசுரவைத்தியம்

 ஆசுரவைத்தியம்ācuravaittiyam, பெ. (n.)

   அறுவை மருத்துவம்; the operative branch of medical practice. -Surgery, as one of the methods of healing (சா.அக.);.

த.வ. பண்டுவம்.

     [Skt. åsura+vaidhya → த. ஆசுரவைதியம்.]

ஆரியம் அல்லாத திரவிடரின் மருத்துவம்.

ஆசுராப்பண்டிகை

 ஆசுராப்பண்டிகைācurāppaṇṭigai, பெ. (n.)

   மொகரம் பண்டிகை; Muharram, a Muhammadan festival.

     [ஆசுராம் + பண்டிகை.]

     [U. ảshūr → ஆசுராம்.]

ஆசுரி

ஆசுரி1ācuri, பெ. (n.)

   அரக்கர் குலப்பெண்; an Asura female.

     “ஆசுரியின் சின்னங்களாவ” (விநாயகபு. 83:76);.

     [Skt. asuri → த. ஆசுரி.]

 ஆசுரி2ācuri, பெ. (n.)

   அறுவை மருத்துவத்தில் தேர்ந்தவர்; surgeon (சா.அக.);.

த.வ. பண்டுவர், தமிழ் மருத்துவர்.

ஆசுவம்

 ஆசுவம்ācuvam, பெ. (n.)

   சமணரில் ஒரு பிரிவினராகிய ஆசீவகளின் உணவு; food of the Ajivakas.

ஆசுவிமக்கள் ஆசுவமுண்ணும் பேரால் (E.C.);

     [Skt. å-jivaka → த. ஆசுவம்.]

ஆசுவயுசி

 ஆசுவயுசிāsuvayusi, பெ. (n.)

   ஒரு வகை வேள்வி (திவா.);; sacrifice in the household fire on the full moon of asvina.

     [Skt. åsvayuja → த. ஆசுவயுசி.]

ஆசுவலாயனம்

 ஆசுவலாயனம்ācuvalāyaṉam, பெ. (n.)

   மதச்சடங்குகள் பற்றிய ஒரு நூல்; a collection of ritualistic, aphorisms, by Āšvalayana dealing with domestic and vedic rites.

     [Skt. åsvalayana → த. ஆசுவலாயனம்.]

ஆசுவாசம்

ஆசுவாசம்ācuvācam, பெ. (n.)

   1. பரபரப்பு, கவலை போன்றவை நீங்கிய பின் கிடைக்கும் ஆறுதல்; relief; consolation.

அவள் ஆசுவாசத்துடன் உட்கார்ந்துகொண்டு பேசத் தொடங்கினாள்.

   2. இளைப்பாறுகை; taking breath, resting.

த.வ. தணிவு.

     [Skt. a-svasa → த. ஆசுவாசம்.]

ஆசுவிகன்

ஆசுவிகன்ācuvigaṉ, பெ. (n.)

ஆசீவகன் பார்க்க (S.I.l. i., 108.);; see asivagan.

     [Skt. a-jivaka → த. ஆசீவகன்.]

ஆசுவினம்

 ஆசுவினம்ācuviṉam, பெ. (n.)

   நிலவுமாதத்துள் ஏழாவது; seventh lunar month roughly corresponding to Aippaci.

     [Skt. asvina → த. ஆசுவினம்.]

ஆசுவீசம்

 ஆசுவீசம்ācuvīcam, பெ. (n.)

ஆசுவினம் பார்க்க; see àsuvinam.

     [Skt. åsvayuja → த. ஆசுவீசம்.]

ஆசுவை-த்தல்

ஆசுவை-த்தல்ācuvaittal,    4 செகுன்றாவி. (v.t) கட்டடம் கட்டத் தொடங்கும் பொழுது பெருங்கொத்தன் தலைக்கல் வைத்தல்; to lay first brick by the senior mason for building.

ஆசூ

ஆசூācū, பெ. (n.)

   1. நிரய உலகில் (நரக உலகம்); கொடுக்கப்படும் தண்டனை; torments of hell.

   2. அமஞ்சி வேலை; working without wages.

     [Skt. ájū → த. ஆசூ.]

ஆசூசம்

ஆசூசம்ācūcam, பெ. (n.)

   தீட்டு; defilement, caused by the birth of a child or by the death of a relative.

     “ஆசூசமில்லை யருநியமத்தருக்கு” (திருமந். 2552.);.

த.வ. தீட்டு, தொடக்கு.

     [Skt. åsauca → த. ஆசூசம்.]

ஆசூரம்

 ஆசூரம்ācūram, பெ. (n.)

வெள்வெண்காயம் (மு.அ.); garlic.

     [ஒருகா. ஆசுரம் → ஆசூரம் = மிகக் காரமானது.]

அசுரம் அல்லது ஆஸுரி என்னும் சொற்களை மூலமாகக் காட்டுவது பொருந்தாது.

ஆசெதுகை

ஆசெதுகைācedugai, பெ. (n.)

   ய், ல், ழ் ஆகிய மெய்யெழுத்துகளுள் ஒன்று செய்யுளின் அடியெதுகையிடையே ஆசாக வருவது; poetic licence permit. ting interpolation of one of the consonants y, r, I and I between the first and second syllables of the rhyming foot in one or two lines of a stanza.

இனி, ஆசாகெதுகை ய, ர, ல, ழ என்னும் ஒற்று நான்கும் ஆசாய் வரும் எனக் கொள்க.

என்னை:-

     “யரலழ வென்னு மீரிரண் டொற்றும்

வரன்முறை பிறழாது வந்திடை யுயிர்ப்பினஃ

தாசிடை யெதுகையென் றறைதல் வேண்டும்.” காக்கை பாடினியார்

கலித்துறை

     “காய்மாண்டதெங்கின் பழம்விழக் கமுகினெற்றிப்

பூமாண்ட தீந்தேன் றொடைகீறி வருக்கை போழ்ந்து

தேமாங் கனிசிதறி வாழைப்பழங்கள் சிந்தும்

ஏமாங் கதமென் றிசையாற் றிசை போயதுண்டே” (சீவக. 31);

இது யகர ஒற்றிடை வந்த ஆசெதுகை (யா. கா. ஒழி. 6. உரை.);

இது போன்றே ஏனையவும்.

     [ஆசு + எதுகை ஆசு = பொற்கொல்லன் நகையிடை வைக்கும் பற்றொட்டுப்போல், செய்யுளின் அடியெதுகையிடை அமையும் இடையினமெய் எதுகை பார்க்க;see edugail.

ஆசெறூண்

ஆசெறூண்āceṟūṇ, பெ. (n.)

   ஆதீண்டுகுற்றி; rubbing post for cows.

     “ஆய்த்தியர் நலக்காசெறூண னான்” (சீவக. 419);.

     [ஆ+செல்+தூண். = ஆசெறூண். செல்லுதல் = சென்றுராய்தல்.]

ஆசேகம்

ஆசேகம்ācēkam, பெ. (n.)

   நனைக்கை; moistening, pouring water upon.

     “ஆசேகவொண்புனல்” (கந்தபு. வில்வலன் வாதாவிவ. 12.);.

     [Skt. a-seka → த. ஆசேகம்.]

ஆசேதம்

ஆசேதம்ācētam, பெ. (n.)

   அரசனாணையை மேற்கொண்டு தடைசெய்கை, (சுக்கிர நீதி, 262);; stopping or obstructing in the king’s share.

த.வ. அரசுத்தடை

     [Skt. asedha → த. ஆசேதம்.]

ஆசை

ஆசைācai, பெ. (n.)

   1. வேண்டும் பொருண்மேற் செல்லும் விருப்பம்; wish directed towards securing a desired object ‘ஆசையுட்பட்டு’ (குறள், 266. உரை);.

   2. விருப்பம்; desire.

   3. பொருளாசை; avarice, cupidity.

   4. காம வேட்கை; carnality;

   5. அன்பு; affection;

     “அரும் பெறற் குமரர்மே லாசை” (கூர்மபு. இந்திரத்.42);.

   6. நம்பாசை, பேற்றின்மேல் நம்பிக்கை; hope, expectation.

   7. பொன்; gold (சூடா.);.

   8. பொன்னூமத்தை (பச்.மு.);; a kind of datura.

   ம. தெ. ஆச;   க., து., பட. ஆசெ;   கொலா. ஆசெ. ஆசா; Mar., Pali., Nep., Sinh. asa;

   பர். ஆச்;   துட. ஆசி; Pers. ārzu.

     [ஆசு = பற்று. ஆசு – ஆசை = மனப்பற்று, விருப்பம், வேட்கை, விரும்பப்படும் பொருள். ஆசை → Skt. asa]

ஆசைகாட்டி மோசஞ் செய்தல்

ஆசைகாட்டி மோசஞ் செய்தல்ācaikāṭṭimōcañjeytal,    1. செ.குன்றாவி. (v.t.)

    விருப்பமானதைச் சொல்லி வயப்படுத்திக் கெடுத்தல்; allure and destroy, to make false promise and ruin, to attract and play treachery. ‘ஆசை காட்டி மோசஞ் செய்கிறதா?’ (பழ.);

     [ஆசை + காட்டி + மோசம் + செய்.]

ஆசைகாட்டுதல்

ஆசைகாட்டுதல்ācaikāṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. தன் வயப்படுத்துதற்குக் கவர்ச்சியானதைச் சொல்லுதல் அல்லது செய்தல்; present a bait or attraction, to excite desire, to allure in order to subjugate or

 Captivate.

   2. (காம.); காமவேட்கை யுண்டாக்குதல்; to excite a craving, said of a woman (சா.அக);.

     [ஆசை + காட்டு.]

ஆசைக்கிழத்தி

ஆசைக்கிழத்திācaikkiḻtti, பெ. (n.)

   வைப்பாட்டி; concubine.

     “நிருபனுக்கங் காசைக் கிழத்தியாம்” (திருக்காளத். பு. 30:42);

     [ஆசு → ஆசை. கிழவன் (ஆ.பா.); – கிழத்தி (பெ.பா.); ஒநோ: காமக்கிழத்தி.]

ஆசைக்குரியான்

 ஆசைக்குரியான்ācaikkuriyāṉ, பெ. (n.)

   மருகு என்னும் நறுமண இலைப்பூண்டு; aromaticleafplant,Origanum marjoranum. (சா.அக.);.

     [ஆசைக்கு + உரியான்.]

ஆசைநாயகன்

 ஆசைநாயகன்ācaināyagaṉ, பெ. (n.)

   கள்ளக்கணவன் (சோரபுருஷன்); (உ.வ);; paramour. (colloq..);

     [ஆசு → ஆசை நாயகன் பார்க்க.. see nayagan]

ஆசைநாயகி

ஆசைநாயகிācaināyagi, பெ. (n.)

   1. காதல் மனைவி; lady-love.

   2. காமக்கிழத்தி, கூத்தி; concubine.

     [ஆசு → ஆசை நாயகன் (ஆ.பா.); – நாயகி (பெ.பா.]

ஆசைபிடி-த்தல்

ஆசைபிடி-த்தல்ācaibiḍittal,    4 செ.கு.வி. (v.i.)

    விருப்பம் மிகுதல், வேட்கையுண்டாதல் (உ.வ.);; to be possessed by desire, to be swayed by passion (colloq.);.

     [ஆசு – ஆசை + பிடி]

ஆசைபூட்டு-தல்

ஆசைபூட்டு-தல்ācaipūṭṭudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   ஆசையிற் சிக்கச் செய்தல்; to engross the affection of, captivate (W);.

க. ஆசெவடிசு

     [ஆசு → ஆசை. பூண் (த.வி.); → பூட்டு (பி.வி.);]

ஆசைப்படு-தல்

ஆசைப்படு-தல்ācaippaḍudal,    20 செ.கு.வி. (v.i.)

    ஆசை கொள்ளுதல்; to

 set

 one’s heart upon 18 செ.குன்றாவி. (v.t.);

    விரும்புதல்; to desire.

   க. ஆசெவடு, ஆசெபடு;   து. ஆசெபுனி;பட. ஆசெபடு.

     [ஆசு → ஆசை.படுதல் = உண்டாதல், கொள்ளுதல்.]

ஆசைப்பாடு

ஆசைப்பாடுācaippāṭu, பெ. (n.)

   விருப்பம், வேட்கை; longing or desire.

     “ஆசைப்பாட்டி லரனைப் புகழுதல்” (உபதேச. சிவபுண். 22);.

     [ஆசு → ஆசை. படு (வி.மு.த.); → பாடு (தொ.பெ.);]

ஆசைப்பேச்சு

ஆசைப்பேச்சுācaippēccu, பெ. (n.)

   1. முகமன்; flattery.

   2. வயப்படுத்தும் பேச்சு; persuasive speech.

   3. காமவேட்கைப் பேச்சு; libidinous talk.

க. ஆசெமாது, ஆசெவாது

     [ஆசு → ஆசை. பேசு(வி.மு.த.); → பேச்சு(தொ.பெ.);]

ஆசைமருந்து

 ஆசைமருந்துācaimarundu, பெ. (n.)

   பெண்ணைத் தன்வயப்படுத்தும் மருந்துக்கூட்டு (வசியமருந்து);; love potion, phiiter (W.);.

     [ஆக → ஆசை. மருந்து பார்க்க;see marundu]

ஆசைமொழி

 ஆசைமொழிācaimoḻi, பெ. (n.)

   நம்பிக்கையுண்டாகச் சொல்லும் சொல்; persuasive or tempting speech, words of hope of encouragement.

     [ஆசு (பற்று); → ஆசை. ஆசை + மொழி.]

ஆசையறு-தல்

ஆசையறு-தல்ācaiyaṟudal,    18 செ.குன்றாவி. (v.t.)

   விருப்பம் முற்றாக நீங்குதல்; to extinguish desire or passion.

     “ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்

ஈசனோடாயினும் ஆசை அறுமின்கள்” (திருமந்.2570);

     [ஆசை + அறு. அறுதல் (த.வி.);]

ஆசையறு-த்தல்

ஆசையறு-த்தல்ācaiyaṟuttal,    4 செ.குன்றாவி. (v.t.)

   விருப்பம் நீக்குதல்; to cause to extinguish desire or passion.

     [ஆசை + அறு. அறுத்தல் (பி.வி.);]

ஆசைவப்பனை

 ஆசைவப்பனைācaivappaṉai, பெ. (n.)

   பனங்கள்; palmyra toddy (சா.அக.);.

ஆசைவை-த்தல்

ஆசைவை-த்தல்ācaivaittal,    4 செ.கு.வி. (v.i.)

   ஒன்றன் மேல் அல்லது ஒருவரிடம் விருப்பம் கொள்ளுதல்; to desire, to long for, place affection on an object.

   க.ஆசெ கொள்ளு;   ;பட. ஆசெபீ

     [ஆசை + வை]

ஆசோதை

ஆசோதைācōtai, பெ. (n.)

   1. ஓய்வு; rest or repose.

   2. இளைப்பாறுகை; taking rest (சா,அக.);

த.வ. ஒழிவு.

ஆசௌசம்

ஆசௌசம்āsausam, பெ. (n.)

   தீட்டு (கூர்மபு. அனுக்கிர 25.);; pollution.

     [Skt. åsauca → த. ஆசௌசம்.]

ஆச்சனை

 ஆச்சனைāccaṉai, தொ.பெ. (vbl.n.)

   தொகை முழுவதுஞ் செலவழிக்கை (தஞ்சை.);; spending the whole amount. (Tj.);

     [ஆயிற்று → ஆச்சு. எனல் → எனை. ‘ஆச்சு’ → ‘எனல்’, பார்க்க;see āccu, enal.]

     “ஆச்சென்றா லைந்நூறு மாகாதா” என்று அதிமதுரப் பாவரையர் பாட்டில் வந்திருப்பினும், ஆச்சு என்பது கொச்சைச் சொல்லே.

ஆச்சரியம்

 ஆச்சரியம்āccariyam, பெ. (n.)

   வியப்பு; surprise, wonder.

     [Skt. å-s-carya → த. ஆச்சரியம்.]

ஆச்சல்

 ஆச்சல்āccal, தொ.பெ. (vbl.n.)

   பாய்தல்; sudden violent rush, spring, gust, impulse.

ம. ஆச்சுக

     [ஆய்தல் – குத்துதல், குத்துதற்போல் பாய்தல் ஒருகா. ஆய் → ஆய்ச்சல் → ஆச்சல், ஆய்ச்சல் பாய்ச்சல் என்பது ஒருமரபிணைச் சொல்.]

ஆச்சா

ஆச்சாāccā, பெ. (n.)

   1. சாலமரம்; sal, I.tr., shorea robusta. ‘ஆமணக்கு விதைத்தால் ஆச்சா முளைக்குமா?’ (பழ.);, ‘ஆமணக்கு நட்டு ஆச்சா ஆக்கலாமா?’ (சீவக. 2613, நச்.உரை);. (செ.அக);.

   2. ஒருமரம்; ebony tree, Ceylon ebony, diospyros ebenaster.

   3. காட்டுடுகு மரம். இதன் இலையின் இருபக்கமும் மெதுவாயும், இலைகள் மாறி மாறியும் பூக்கள் சிறியவையாயும்-உள்ளே மஞ்சள் நிற

   முடனும், பட்டை ஆழம் பாய்ந்த வரிகள் கூடியும் இருக்கும். அடிமரத்திற் குத்த, ஒருவகை எண்ணெய்ப் பசை வெளிவரும். இது சாம்பிராணியைப் போலிருந்தாலும் அதற்கு ஈடாகாது. இதற்கு மடையன் சாம்பிராணி என்று பெயர்; forest tree, known as false frankincense-Hardwickia binata. The leaves alternate, very smooth on both sides and flowers small and yellowish within. From notches made in the heart of the trunk, an Oleo—resin called false frankincense is obtained. It is balsamic in its properties resembling copaiba balsam, for which it is an efficient substitute.

 NOTE:- The other species are—Bauhinia racemosa and Diospyros melanoxylon. (சா.அக.);.

   மறுவ. சாலமரம்;க. ஆசு, ஆச, ஆர்செ

     [ஆ → ஆச்சா.]

இம்மரம் ஒலகம் (நாதசுரம்); செய்யப்பயன்படும். சரிகமபதநி என்னும் ஏழு சுரங்களின் பழந்தமிழ் வடிவம் ஆ ஈ ஊ எ ஐ ஒ ஒள ஆதலின் முதற்சுரத்தின் பெயர் இம்மரத்திற்கு அமைந்திருக்கலாம்.

ஆச்சாசிணி

 ஆச்சாசிணிāccāciṇi, பெ. (n.)

ஆச்சா பார்க்க. see āccā (சா.அக.);.

ஆச்சாடு

 ஆச்சாடுāccāṭu, பெ. (n.)

   சிற்றீரம்; moisture.

ஆச்சாட்டு விதைப்பு

 ஆச்சாட்டு விதைப்புāccāṭṭuvidaippu, பெ. (n.)

   சிற்றீரமுள்ள நிலத்து விதைப்பு (வின்.);; sowing on land whose humidity is poor. ஆச்சாட்டுப் பயிர் பார்க்க;see accattu-p—payir

     [விதை → விதைப்பு (தொ.பெ.); ‘பு’, ஈறு.]

ஆச்சாட்டுப்பயிர்

 ஆச்சாட்டுப்பயிர்āccāṭṭuppayir, பெ. (n.)

   சிற்றீரமுள்ள நிலத்தில் விளைவிக்கும் பயிர் (வின்.);; crop grown on land that is but slightly humid.

     [ஒருகா. அரைத்தீச்சற்காடு + பயிர் → அரைத்தீச்சற் காட்டுப் பயிர் → ஆச்சாட்டுப் பயிர். தீச்சல் = காய்தல், கருகுதல். ‘ஆச்சாடு’ மரூஉ.]

ஆச்சாதனபலம்

ஆச்சாதனபலம்āccātaṉabalam, பெ. (n.)

   பருத்திக்கொட்டை (தைலவ. தைல..33);; coton seed.

     [ஆச்சாதன(ம்); + பலம்.]

     [Skt. a-chadana → த. ஆச்சாதனம்.]

த. பலம் → Skt. phala.

ஆச்சாதனம்

ஆச்சாதனம்āccātaṉam, பெ. (n.)

   1. ஆடை; cloth, clothes, mantle.

   2. மறைப்பு (சி.சி.2,86, சிவாக்);; covering, concealing, hiding.

த.வ. மூடுகை.

     [Skt. a-cha-dana → த. ஆச்சாதனம்.]

ஆச்சான்

 ஆச்சான்āccāṉ, பெ. (n.)

   ஆதனிய (ஆன்மீக); முன்னோடி; spiritual preceptor.

     “நாலூராச்சான்”.

     [Skt. a-carya → த. ஆச்சான்.]

ஆச்சாள்

ஆச்சாள்āccāḷ, பெ. (n.)

   தாய்; mother.

     “எங்களுடை யாச்சாளுக் கூறுகா யாகாமல்” (தனிப்பா: 42:83);.

     [ஆத்தை → ஆத்தா → ஆத்தாள் → ஆச்சாள்.]

விளிவடிவு எழுவாயானதும் பெண்பாலீறு கொண்டதும் தகரம்சகரமாகத்திரிந்ததும் ஆக, மும்மடிவழுவுள்ளது இச்சொல்.

ஆச்சி

ஆச்சிācci, பெ. (n.)

   1. தாய்; mother. (ஈடு, 4:3: பிர);.

   2. பாட்டி (இ.வ.);; grandmother (Loc.);.

   3. மூத்த

   அக்கை (இ.வ.);; eldest sister (Loc.);.

   4. கண்ணியமுள்ள பெண்டிரைக் குறிக்குஞ் சொல்; term of respect used in addressing respectable women. ‘ஆச்சி ஆச்சி மெத்தப் படித்துப் பேசாதே’ (பழ.);.

   ம.ஆச்சி;   கொலா. ஆசி; Sinh. ãchchi (grandmother);

     [அத்தன் (தந்தை); → அச்சன் → அச்சி (தாய்); → ஆச்சி. இனி, ஐ = அப்பன். ஐ → ஆய் = அம்மை. ஆய் → ஆய்ச்சி → ஆச்சி என்றும் ஆம்.]

ஆச்சிபூச்சி

 ஆச்சிபூச்சிāccipūcci, பெ. (n.)

   சிறுவர் விளையாட்டு வகை (வின்.);; play among children.

     ‘ஆச்சிபூச்சி’ என்று ஒலித்தவாறு சிறுவர் விளையாடும் சடுகுடு விளையாட்டு.

மறுவ. சடுகுடு, கபடி, பலீஞ்சடுகுடு,

     [ஆச்சி + பூச்சி.]

ஆச்சியச்தாலி

ஆச்சியச்தாலிācciyactāli, பெ. (n.)

   வேள்விக்குரிய நெய் ஏனம் (சீவக. 2463, உரை);; vessel in which clarrified butter is kept during oblations,

     [Skt. ajya+sthali → த. ஆச்சியத்தாலி.]

ஆச்சியம்

ஆச்சியம்1ācciyam, பெ. (n.)

   நெய் (கைவல்ய. தத்துவ. 66);; ghee, clarified butter.

     [Skt. å-jya → த. ஆச்சியம்.]

 ஆச்சியம்2ācciyam, பெ. (n.)

   பகடிக்குரியது; that which is fit to be ridiculed Or derided.

     “ஆச்சியப் பேய்களோடு”(தேவா. 1094, 10);.

த.வ. எள்ளல்.

     [Skt. håsya → த. ஆச்சியம்.]

ஆச்சியாடு

 ஆச்சியாடுācciyāṭu, பெ. (n.)

   ஏழையிடையன் பிற ஆயர் மந்தைகளினின்று இரந்து பெறும் ஆடு; sheep acquired by a poor shepherd by begging from other shepherds owning flocks.

     [ஒருகா. ஆயர் ஈத்த அல்லது அளித்த ஆடு.]

யாசக ஆடு என்று மூலங்காட்டுவது பொருத்தமாய்த் தோன்றவில்லை.

ஆச்சிரமதருமம்

 ஆச்சிரமதருமம்ācciramadarumam, பெ. (n.)

   அந்தந்த குலத்தோர் செய்ய வேண்டிய கடமை; duties pertaining to the four stages of life esp. among the twice born.

     [Skt. å-srama+dharma → த. ஆச்சிரம தருமம்.]

ஆச்சிரமம்

ஆச்சிரமம்ācciramam, பெ. (n.)

   1. முனிவர்கள் உறைவிடம் (சேதுபு. நைமிசா.15);; hermitage, abode of an ascetic.

   2. வாழ்க்கை நிலை (பிரமசரியம், கிருகஸ்தம், வானப்பிரஸ்தம், சன்னியாசம்);; order or stage in life, esp. of the twice-born, of which four are mentioned.

     “ஆச்சிரம நான்கவை யியம்புவாம்”(திருக்காளத்பு 295);

த.வ. திருவாசிரிய இருக்கை.

     [Skt. å-srama → த. ஆச்சிரமம்.]

ஆச்சிரமி

 ஆச்சிரமிāccirami, பெ. (n.)

   நால்வகை ஒழுக்கநெறிகளுள் ஒன்றிலிருப்பவன்; one who is in any one of the four stages of life or accirasra.

     [Skt. a-šramin → த. ஆச்சிரமி.]

ஆச்சிரயம்

ஆச்சிரயம்āccirayam, பெ. (n.)

   1. புகலிடம்; asylum, place of refuge.

   2. பகை வெல்லுதற்குப் வலுவுள்ளானொரு வனையடைகை (இரகு. திக்கு. 22);; seeking by a king the help of a mighter king to conquer an enemy, one of aracar-asu-kugam.

     [Skt. å-sraya → த. ஆச்சிரயம்.]

ஆச்சிரயாசித்தம்

ஆச்சிரயாசித்தம்āccirayācittam, பெ. (n.)

   குறைந்த அளவில் இல்லாத ஏதுவைக்கூறும் ஏதுப்போலி (மணிமே. 29, 194);; fallacy consisting in the minor term being nonexistent.

     [Skt. a-šraya+a-siddha → த. ஆச்சிரயாசித்தம்.]

ஆச்சிராமம்

ஆச்சிராமம்āccirāmam, பெ. (n.)

ஆசிரமம் பார்க்க; see acramam.

     “வதரியாச் சிராமம்” (திவ். பெரியதி. 1, 4, 1.);.

     [Skt. å-srama → த. ஆச்சிராமம்.]

ஆச்சிலை

 ஆச்சிலைāccilai, பெ. (n.)

   கோமேதகம் என்னும் ஒளிக்கல் (சங்.அக);; cinnamon stone.

   ம. ஆயி;   க. ஆயித்து, ஆய்த்து;தெ. ஆயிந்தி

     [ஆ + சிலை. ‘ஆ’ பார்க்க. சிலை = கல்]

 ஆச்சிலைāccilai, பெ. (n.)

   திருமணி (கோமேதகம்); (சங்,அக.);; cinnamon stone.

ஆச்சு

ஆச்சுāccu,    5 செ.கு.வி.முற்று (v.i.fin) முடிந்தது; finished, done.

   ம. ஆயி;   க. ஆயித்து, ஆய்த்து;   தெ. ஆயிந்து;பட. ஆத்து.

     [ஆ → ஆயியது → ஆயினது → ஆயிற்று → ஆச்சு.]

தாயுமான அடிகளின் சுகவாரிப் பதிகம் 9ஆம் மண்டிலத்தில் (விருத்தத்தில்); வரும்

     “போதிப்பதாச்சு” என்னுந் தொடருக்குப் ‘போதிப்பதாயிற்று’ என்றே உரையாசிரியர் பொருள் கூறுவதால், அத்தொடரிலுள்ள ‘ஆச்சு’ என்னுஞ் சொல் உரையசையென்று கொள்ள இடமில்லை.

     ‘ஆச்சு’ என்பது கொச்சைச் சொல்லேனும், முனிவர் பாடல்களிலும் புலவர் தனிப்பாடல்களிலும் வருவதால், வழுவமைதியாகவே கொள்ளப்படும். ஆயின் அதைப்பிறர் ஆளல் ஆகாது.

ஆச்சுவரி

 ஆச்சுவரிāccuvari, பெ. (n.)

   அரசு, அரசமரம் (மு.அ.);; pipal tree, Ficus religlosa.

ஆஞா

 ஆஞாāñā, பெ. (n.)

   தந்தை (இ.வ.);; father (Loc.);. Mar., Nep. ājā (grand father);

     [ஐயா → அயா → அஞா → ஆஞா]

ஆஞான்

 ஆஞான்āñāṉ, பெ. (n.)

   தந்தை (இ.வ.);; father Loc.);.

மறுவ. ஆஞ்ன்.

     [ஐயன் → அயன் → அஞன் → அஞான் → ஆஞான்.]

ஆஞி

 ஆஞிāñi, பெ. (n.)

   தந்தை (இ.வ.);; father (Loc.);.

     [ஐயன் → அயன் → அஞன் → ஆஞான் → ஆஞி. ஆஞா → விளி. ஆஞி -விளி. இகரவீற்று விளிச்சொல் கொச்சைத்திரிபு]

ஆஞ்சனேயன்

ஆஞ்சனேயன்āñjaṉēyaṉ, பெ. (n.)

   அனுமான் (நல். பாரத. இராமன் படையெழு. 111);; Hanumãn.

     [Skt. ānjanéya → த. ஆஞ்சனேயன்.]

ஆஞ்சரிணம்

 ஆஞ்சரிணம்āñjariṇam, பெ. (n.)

   காட்டுத் துளசி; wild basil, wild marjoram, Olimum ascendens alias O.cristatum (சா.அக.);.

ஆஞ்சான்

ஆஞ்சான்1āñjāṉ, பெ. (n.)

   1. கப்பற்கயிறு; halyard or rope for hoisting a sail.

   2. பொருள்களை உயரத்தூக்க உதவும் கயிறு; rope for lifting weights with a pulley or otherwise, hawser.

   3. சிறிய தனிக்கொம்பு; the lone, slender stem of a tree.

     [ஒருகா. அணைந்தான் → அணஞ்சான் → ஆஞ்சான்.]

 ஆஞ்சான்2āñjāṉ, பெ. (n.)

   தண்டனைக்குரிய கோதண்டம் (நாஞ்.);; rope or swing formerly in use in village schools for punishing pupils (Nän.);.

     [ஆஞ்சல் → ஆஞ்சால் → ஆஞ்சான்]

 ஆஞ்சான்3āñjāṉ, பெ. (n.)

   இளமரத்தண்டு; the stalk of a young tree or plant (சா.அக.);.

ஆஞ்சான் கயிறு

ஆஞ்சான் கயிறுāñjāṉkayiṟu, பெ. (n.)

கப்பற் பாய்களை அல்லது கொடிகளை ஏற்றவும்

   இறக்கவும் உதவுங் கயிறு (M. Nawi. 86.);; rope for lifting and lowering sails in ships.

ஆஞ்சான்பற்றி

 ஆஞ்சான்பற்றிāñjāṉpaṟṟi, பெ. (n.)

   தோணியில் ஆஞ்சான் கயிறு கட்டப்படும் மரம்; a beam across the stern of a boat to which the halyard is tied.

ஆஞ்சாலி

ஆஞ்சாலிāñjāli, பெ. (n.)

ஆஞ்சான்2 பார்க்க;see anjan2

     [ஆஞ்சால் – ஆஞ்சாலி.]

ஆஞ்சி

ஆஞ்சி1āñji, பெ. (n.)

   1. அச்சம்; fear,

     “பேர்த்த மனைவியாஞ்சியானும்” (தொல். பொருள். 79);

   2. அலைவு (பிங்.);; motion, vibration.

   3. சோம்பல் (சூடா.);; idleness, laziness.

   4. கூத்து; dancing. (செ.அக.);.

   5. அதிர்ச்சி (சா.அக.);; shock.

   6. விளையாடல்; playing. (க.தமி.அக.);.

   ம., க.அஞ்சு;   தெ.அஞ்சிக;   து.,பட.அஞ்சிகெ;   கோத. அன்ஞ்;   துட.ஒச், கூ. அச;குவி.அச்சாலி.

     [அல் → அஞ்சு → ஆஞ்சு → ஆஞ்சி.]

 ஆஞ்சி2āñji, பெ. (n.)

   ஏலக்காய்ச் செடி (சூடா);; cardamom plant. cf. aindri.

     [அடஞ்சி – ஆஞ்சி, அடையாகக் காய்ப்பது.]

ஆஞ்சிக்காஞ்சி

ஆஞ்சிக்காஞ்சிāñjikkāñji, பெ. (n.)

   1. போர்க் களத்தில் இறந்த கணவனது வேல் வடுவைக் கண்டு மனைவி அஞ்சிய புறத்துறை (தொல். பொருள். 79;   2. போர்க்களத்திலிறந்த கணவனுடன் தீயில் மூழ்கும் மனைவியின் பெருமை கூறும் புறத்துறை (பு.வெ. 4, 22);; theme describing the greatness of the warrior’s wife who ends her earthly existence either by ascending the funeral pyre with her deceased lord or by killing herself with the same deadly arrow that has caused her lord his mortal wound.

     [அஞ்சு → ஆஞ்சு → ஆஞ்சி. ஆஞ்சி + காஞ்சி – ஆஞ்சிக்காஞ்சி. கணவனுக்குற்ற தீங்கு கண்டஞ்சி அத்துயரில் பங்கேற்கும் புறத்துறை.

காஞ்சி = நிலையாமை. இனி ஆஞ்சி = கட்டுண்ணல் எனக்கொண்டு நிலையாமை எண்ணத்தால் கட்டுண்ணல் என்றுமாம்]

ஆஞ்சித்தாழை

 ஆஞ்சித்தாழைāñjittāḻai, பெ. (n.)

   மஞ்சள்நிறமுள்ள தாழைவகை (சித்.அக.);; a kind of yellow aloes.

ஆஞ்சிரணம்

 ஆஞ்சிரணம்āñjiraṇam, பெ. (n.)

   காட்டுத்துளசி (சித்.அக.);; wild basil. ஆஞ்சரிணம் பார்க்க;

ānjarinam

ஆஞ்சிறிகம்

 ஆஞ்சிறிகம்āñjiṟigam, பெ. (n.)

   சங்கஞ்செடி (சித்.அக.);; mistletoe-berry thorn. ஆஞ்சில் பார்க்க;see anjil.

ஆஞ்சில்

ஆஞ்சில்āñjil, பெ. (n.)

   1. ஒருவகைப் பூடு; species of Azima.

   2. சங்கஞ்செடி; a shrub – Monotia barleriodies alias M.tetracantha.

ஆஞ்சுதல்

ஆஞ்சுதல்āñjudal,    5 செ.குன்றாவி. (v.t.)

,

   இழுத்தல்; to pull, tighter.

   2. இழுத்துக்கட்டுதல்; to tighten and tie with a rope.

ஆஞ்செலகை

 ஆஞ்செலகைāñjelagai, பெ. (n.)

ஆஞ்செல்கை பார்க்க;see anjelgai.

ஆஞ்செல்கை

ஆஞ்செல்கைāñjelkai, பெ. (n.)

   1. தெப்பம்; raft. (செ.அக.);

   2. கப்பல்; ship. (க.தமி.அக.);

ஆஞ்ஞான்

 ஆஞ்ஞான்āññāṉ, பெ. (n.)

ஆஞ்சான், பார்க்க see anjan.

ஆஞ்ஞாபனம்

 ஆஞ்ஞாபனம்āññāpaṉam, பெ. (n.)

   கட்டளையிடுகை; commanding, ordering.

     [Skt. a-jñapana → த. ஆஞ்ஞாபனம்.]

ஆஞ்ஞை

ஆஞ்ஞைāññai, பெ. (n.)

   1. கட்டளை; order;

 command, direction.

   2. (ஒகம்); ஆறாதாரங்களுள் ஒன்று; cakra in the body, described as two petalled lotus situated between the two eyebrows, one of ārātaram.

   ம. ஆச்ஞ;   க. ஆச்ஞா;   தெ. ஆச்ஞ;து. ஆச்ஞெ. Nep, Skt. ägnä.

     [ஆணை → ஆஞை → ஆஞ்ஞை.]

ஆடக இறைவன்

 ஆடக இறைவன்āṭagaiṟaivaṉ, பெ. (n.)

   பொன்னம் பலத்து ஆடும் இறைவன்; Lord Śiva dancing in Chidambaram.

     [ஆடகம்+இறைவன்.]

ஆடகக் கருப்பன்

ஆடகக் கருப்பன்āṭagaggaruppaṉ, பெ. (n.)

   நான்முகன்; Brahma.

     “ஆடகக் கருப்பனை நிகர்வது” (சேதுபு. கந்த. 6);.

     [ஆடகம்+கருப்பன்.]

ஆடகக்குடோரி

 ஆடகக்குடோரிāṭagagguṭōri, பெ. (n.)

   மயிலாடுங் குருந்து; a plant (unidentified); (சா. அக.);.

ஆடகக்கோயில்

 ஆடகக்கோயில்āṭagagāyil, பெ. (n.)

   பொன்னாலான கோயில், பொன் வேய்ந்த கோயில்; temple with golden roof.

     [ஆடகம் + கோயில்.]

ஆடகச்சயிலம்

 ஆடகச்சயிலம்āṭagaccayilam, பெ. (n.)

ஆடகமலை பார்க்க;see agaga-malai

ஆடகம் = ஆடகப்பொன். Skt, sala → த. சயிலம் (மலை.);

     [ஆடகம்+சயிலம்=ஆடகச்சயிலம்.]

மேருமலை பொன்னாலானது என்னும் தொன்ம (புராண); நம்பிக்கையின் அடிப்படையில் ஆடகச்சயிலம் எனப்பட்டது. மேருமலையைச் சார்ந்த காகமும் பொன்னாகும் என்பது பண்டு தொட்டு வழங்கி வரும் சொலவடை.

ஆடகண்டம்

 ஆடகண்டம்āṭagaṇṭam, பெ. (n.)

   பெருங்காயம்; asafoetida – Ferula asafoetida (சா.அக.);.

ஆடகன்

ஆடகன்āṭagaṉ, பெ. (n.)

   இரணியகசிபு (பாரத. வேத்திர. 15);; Hiranya Kašpu, a king.

     [ஆடகம் = பொன். ஆடகன் = பொன் நிறமானவன்.]

ஆடகமருத்தம்

 ஆடகமருத்தம்āṭagamaruttam, பெ. (n.)

   பொன்; gold.

     [ஆடகம் = பொன். ஒருகா. ஆடகம் + அருத்தம் = ஆடகமருத்தம். Skt. aria → த. அருத்தம்.]

ஆடகமலை

ஆடகமலைāṭagamalai, பெ. (n.)

   மேருமலை (கல்லா. 72:1);; mount meru as golden

     [ஆடகம் = ஆடகப் பொன். ஆடகம் + மலை.]

ஆடகமாடம்

ஆடகமாடம்āṭagamāṭam, பெ. (n.)

   1. பொன் மாளிகை; mansion of gold.

   2. திருமால் கோட்டம்; shrine of Thirumāl.

     “ஆடக மாடத்தறிதுயிலமர்ந்தோன்” (சிலப். 26.62);.

   3. சேரநாட்டிலுள்ள

   இரவிபுரம்; Ravipuramin Kerala.

   4. திருவனந்தபுரம்; Thiruvananthapuram

ம. ஆடகமாடம்.

     [ஆடகம்+மாடம்-ஆடகமாடம்.ஆடகம்=பொன்,ஆடகமாடம்=பொன்மாளிகை, பொன் வேய்ந்த கோயில், அக்கோயிலுள்ள ஊர்.]

ஆடகம்

ஆடகம்1āṭagam, பெ. (n.)

   1. மாழை (உலோக);க் கட்டி (பிங்.);; ore.

   2. பொன்; gold.

     “ஆடக மாட நெருங்குங்கடல்” (தேவா. 538,1);.

   3. நால்வகைப் பொன்களுள் ஒன்றாகக் கருதப்படும் கிளிச்சிறை;கிளிச்சிறகு போன்ற வெளிர் பசுமை கலந்ததும் 500 மாற்றுள்ளதுமான உயர்ந்த வகைப் பொன்

 one of the four kinds of superior

 concentrated gold with a greenish tint resembling the colour of the wings of parrot. It is said to be of a very high purity and standard of gold with 500 (matru); (10 matru – 24 carats); (S.D.);.

   4. செம்பு; copper.

   5. துவரை; pigeon pea or red gram.

   6. சிறுகாஞ்சொறி; hemp-leaved tragia (S.D.);

   7. சிறு நாகப்பூ (தைலவ. தைல. 23);; iron wood of Ceylon.

   8. குதம்பைச் செடி; a plant. (சங்.அக.);.

ம. ஆடகம்.

     [ஆடகம்=பொலிவு மிக்கது, அழகம் → ஆழகம் → ஆடகம்.]

 ஆடகம்2āṭagam, பெ. (n.)

   கூத்தாடுமிடம்; theatre for performing dance.

     [ஆடு + அகம் = ஆடகம்.]

 ஆடகம்3āṭagam, பெ. (n.)

   1. எட்டுச்சேர் அல்லது 64 பலம் எடை; weight equivalant to 8 seers or 64 palams,

   2. நான்கு படி கொண்ட அளவு; big measure equivalent to 4 measures (ordinary); (S.D.);.

   3. நான்கு நாழி (நாமதீப.);; measure of 4 nals.

   4. ஐந்து பிரத்தம் கொண்ட நிறை; a weight of five pirattam.

   ம. ஆடகம்;   க. ஆடக;தெ. ஆடகமு. Skt. adhaka.

     [ஆடகம் = பொன், பொன்னை நிறுக்கும் எடை, அளவு.]

ஆடகாமாமூலம்

 ஆடகாமாமூலம்āṭakāmāmūlam, பெ. (n.)

   சிறிய முள்ளங்கி; wild country radish. [ஆடகம்+மாமூலம்.ஆடகம்=ஆழகியது,சிறியது.]

ஆடகாவிகம்

 ஆடகாவிகம்āṭagāvigam, பெ. (n.)

   மரவுரி; bark tree – Antarias toxicaria (சா.அக.);.

ஆடகி

ஆடகிāṭagi, பெ. (n.)

   1. துவரைச் செடி; red-gram plant.

   2. காக்கைப் பொன் (நாநார்த்த.);; mica.

   ம.,க.ஆடகி; Mar. ataki (a shrub);

     [ஒருகா. ஆடகம் → ஆடகி. ஆடகம்=பொன். ஆடகி பொன் போன்ற நிறமுள்ள துவரை, துவரை காய்க்கும் செடி.]

ஆடகூடம்

 ஆடகூடம்āṭaāṭam, பெ. (n.)

   செம்பு மலை; a mythological mountain containing copper ore.

     [ஆடகம் = பொன், பொன் போன்ற நிறமுள்ள செம்பு. ஆடகம் + கூடம் = ஆட கூடம். கூடம் = மலை.]

ஆடகேசன்

 ஆடகேசன்āṭaācaṉ, பெ. (n.)

ஆடகேசுரர் பார்க்க;see ādagēšurar.

ஆடகேசுவரம்

ஆடகேசுவரம்āṭaācuvaram, பெ. (n.)

   1. ஆயிரத்தெட்டு சிவத்தலங்களுள் ஒன்று; one of the 1008 Siva shrines.

   2. ஆடகேசனின் உலகம் (அருணா. பு.திருமலை. 46);; the nether world, as the dominion of Hātakesa.

     [ஆடக + ஈசுவரம் – ஆடகேசுவரம். ஈசுவரம் = ஈசன் கோயில்.]

ஆடகை

ஆடகைāṭagai, பெ. (n.)

ஆடகி1 பார்க்க;see adagi1

ஆடங்கம்

ஆடங்கம்āṭaṅgam, பெ. (n.)

   1. காலக்கழிவு (தாமதம்);; delay.

     “இன்னுமென்ன ஆடங்கமா” (சர்வசமய.44);.

   2. துன்பம்; distress.

     “ஆடங்கஞ் சற்று மணுகாமல்” (பஞ்ச. திருமுக. 777);.

     [ஆடு + அங்கம் – ஆடங்கம். த. ஆடங்கம் → Skt. āganka.]

ஆடசை

 ஆடசைāṭasai, பெ. (n.)

   துவரை; pigeon pea, redgram.

ம. ஆடகம்.

     [ஒருகா. ஆடகை → ஆடசை.]

ஆடலி பார்க்க;see adagi.

ஆடனூல்

ஆடனூல்āṭaṉūl, பெ. (n).

   நாட்டிய நூல்; natya sastra, treatise on the principles of dancing.

     “ஆடனூல் வரம்புகண் டவராகி” (திருவிளை. கான்மாறி.7);.

     [ஆடல்+நூல் – ஆடனுால் = ஆடலைப்பற்றிக் கூறும் நூல்.]

ஆடபிராக்கு

 ஆடபிராக்குāṭabirākku, பெ. (n.)

   வெள்ளை நோய்க்காகப் பயன்படுமோர் கடைச் சரக்கு; a bazaar drug used in gonorrhoea and other venereal complaints (சா.அக.);.

ஆடமணக்கு

 ஆடமணக்குāṭamaṇakku, பெ. (n.)

   ஆமணக்கு (சித்.அக.);; castor plant.

     [அவிழ்-அவுடம்-ஆடம்+மணக்கு-ஆடமணக்கு. அவிழ்=வித்து, கொட்டை. மணி-மணக்கு]

ஆடமரம்

 ஆடமரம்āṭamaram, பெ. (n.)

   நாட்டு வாதுமை மாம்; country almond tree. (சேரநா.);

ம. ஆடமரம்.

     [அவிழ்-அவிழம்-ஆவிடம்-ஆடம்+மரம்.அவிழ்=கொட்டை]

ஆடம்

ஆடம்1āṭam, பெ. (n.)

   ஆமணக்கு (மலை.);; castor-plant.

ஆடமணக்கு பார்க்க;see adamanakku.

     [ஆடமணக்கு-ஆடம்.]

 ஆடம்2āṭam, பெ. (n.)

   1. ஒரு முகத்தலளவு (இ.வ.);; liquid measure, esp. for oil, about 24 measures (Loc.); (செ.அக.);

   2. இருபது (ஆமணக்குக்); கொத்துக் கொண்ட ஓரளவு (கதி.அக.);; a measure which contains 20 bunches of castor seeds.

     [ஆடம்1 → ஆடம்2]

ஆடம்பரம்

ஆடம்பரம்1āṭambaram, பெ. (n.)

   1. பல்லிய முழக்கம்; din of musical instruments.

   2. யானையின் பிளிற்றொலி; elephant’s trumpeting.

   3. பகட்டார வாரம்; pomp, show, ostentation.

     “ஆடம்பரங் கொண்டடிசி லுண்பான்” (திருமந். 1655);.

   4. ஒட்டோலக்கம்; pomp, parade (W);.

   5. போர்ப்பறை; battle drum.

   6. வேடிக்கை; fun.

   ம.ஆடம்பா,ஆடம்பரி;   க. ஆடம்பர;தெ. ஆடம்பரமு. Mar ādambara.

     [ஆடு + அம்பரம் – ஆடம்பரம் அம்பலம் – அம்பரம்]

 ஆடம்பரம்2āṭambaram, பெ. (n.)

   மருளேறிய நிலை; state of being possessed by a spirit.

     [ஆடு + அம்பரம் → ஆடம்பரம்.]

 ஆடம்பரம்3āṭambaram, பெ. (n.)

   1. கண்மடல்; eyelid.

   2. சீற்றம் (கோபம்);; anger. [ஆடு + அம்பரம் → ஆடம்பரம்]

 ஆடம்பரம்4āṭambaram, பெ. (n.)

   1. மகிழ்ச்சி; enjoyment.

   2. பெருமை; pride.

   3. இறுமாப்பு; arrogance.

   4. இன்பம்; bliss.

ம., க., து. ஆடம்பர.

     [ஆடு + அம்பரம். அம்பரம் = விழாமுழக்கம், மகிழ்ச்சி]

ஆடரங்கம்

 ஆடரங்கம்āṭaraṅgam, பெ. (n.)

ஆட்டக்கச்சேரி பார்க்க;see atta-k-kaccēri.

     [ஆடு + அரங்கம்.]

ஆடரங்கு

ஆடரங்குāṭaraṅgu, பெ. (n.)

   1. நாடகம், நடனம், கூத்து முத்லிய நிகழ்ச்சிகள் நடத்துதற்கேற்ற மன்றம்; auditorium.

     “அறையும் ஆடரங்கும்” (கம்பரா.);

   2. பலர் கண்டு மகிழும் ஏந்துள்ள விளையாட்டிடம்; stadium.

     [ஆடு+அரங்கு.]

ஆடரவக்கொடியோன்

 ஆடரவக்கொடியோன்āḍaravakkoḍiyōṉ, பெ. (n.)

   ஆடும் பாம்புக் கொடியுடைய மன்னன், துரியோதனன்; king Duryodhana.

ம. ஆடரவக்கொடி

     [ஆடு+அரவம்+கொடியோன்.]

ஆடரி

 ஆடரிāṭari, பெ. (n.)

   முருகக் கடவுள் (கதி.அக.);; Lord Muruga.

     [ஆடு (வெற்றி); + அரி (செல்வன்);.]

ஆடருப்பான்கொட்டை

 ஆடருப்பான்கொட்டைāṭaruppāṉkoṭṭai, பெ. (n.)

   ஏறழிஞ்சில்; sage leaved alangium (SD);.

ஆடற்கூத்தியர்

ஆடற்கூத்தியர்āṭaṟāttiyar, பெ. (n.)

   அகக் கூத்தாடுங் கணிகையர்; dancing girls who exhibit the erotic emotions of the human mind by means of

 gestures while dancing.

     “காவற் கணிகைய ராடற் கூத்தியர்” (சிலப். 5.50);.

     [ஆடல்+கூத்தியர்=ஆடற்கூத்தியர். கூத்தியர்=நடனமாடும் மகளிர்.]

ஆடற்கூறுபாடு

 ஆடற்கூறுபாடுāṭaṟāṟupāṭu, பெ. (n.)

   கூத்தின் பாகுபாடு. இது தாண்டவம், நாட்டியம், நட்டுவம் (நிருத்தம்); என மூவகைப்படும் (கதி அக.);; sub- divisions in dancing.

     [ஆடல்+கூறுபாடு – ஆடற்கூறுபாடு கூறுபடுத்தல் = வகைப்படுத்துதல் கூறுபடு – கூறுபாடு (தொ.பெ.);]

ஆடற்பேதம்

 ஆடற்பேதம்āṭaṟpētam, பெ. (n.)

   கூத்தினது வேற்றுமை (கதி.அக.);; varieties in dancing.

     [ஆடல்+பேதம். ஆடல் வேற்றுமை பார்க்க;see āgalvārtumai.]

ஆடற்றரு

 ஆடற்றருāṭaṟṟaru, பெ. (n.)

   நகைச்சுவைக் கூத்துப் பாட்டுவகை; dancing song, used in comedies.

     [ஆடல்+தரு – ஆடற்றரு. த. தரவு = தரு → Skt. taru.]

   தரு பார்க்க; ses taru.

ஆடலாடல்

ஆடலாடல்āṭalāṭal, பெ. (n.)

   விளையாடல்; playing.

     “ஆடலாடல் உறுதியேல்” (பெரியாழ். 15:2);.

     [ஆடல்+ஆடல்.]

ஆடலார்

 ஆடலார்āṭalār, பெ. (n.)

   நாட்டியமகளிர்; female dancers.

     [ஆடல்+ஆர்.]

ஆடலிடம்

ஆடலிடம்āḍaliḍam, பெ. (n.)

   1. அரங்கம் (திவா.);; stage, theatre.

   2. விளையாட்டுக் களம்; playground.

     [ஆடல்+இடம்-ஆடலிடம்.]

ஆடலை

ஆடலைāṭalai, பெ. (n.)

   1. பூவாத மரம்; tree which does not yield flowers.

   2. அரசமரம்; pipal or peepul tree.

   3. பூவிளா; a plant.

   4. அத்தி; fig tree (S.D.);. [ஆண்டு=வித்தின் முளை, பூ. ஆண்டு-ஆடு+அல்+ஐ.]

ஆடல்

ஆடல்1āṭal, பெ. (n.)

   1. அசைதல்; moving, shaking, quivering.

     “ஆடற் பூங்கொடி ஊடி உரைத்தது” (திருக்கோ.393,கொளு.);

   2. சொல்லுதல்; speaking, saying.

     “யார்க்கும் நன்னய மாடல் செயும்” (கந்தபு. உற்பத். தகரேறு. 24);.

   3. நீராடல் (பிங்.);; bathing.

   4. செய்தல் (பிங்.);; doing, performing.

   5. விளையாட்டு; game, sport.

     “கந்துக மம்மனை யாடலும்” (பாரத. சம்பவ. 27);.

   6. கூத்து; dance.

     “பாடலா ராடலார்” (தேவா. 225.2);.

   7. நட்புரை (கதி. அக.);; friendly talk.

   8. இழித்துரைத்தல், பழித்துரைத்தல்; talking III of.

     “அச்சம் ஆடலும்” (நன்.31);.

   9. ஏய்த்தல், ஏமாற்றுதல்; cheating, defrauding

   ம. ஆடல்;   க., பட. ஆட;   தெ., து. ஆட;கொ. ஆடு, ஆடா.

     [ஆடு → ஆடல். ஆடுதல் = அசைதல்.]

 ஆடல்2āṭal, பெ. (n,)

   1. .ஆளுகை; rule reign.

     “பூமியை யாடற் கொத்த பண்பினன்” (சீவக. 1339);.

   2. புணர்தல் (குடா);; cotion.

   க. ஆடளித;து.. ஆடளிதெ.

     [ஆளல்→ஆடல்.]

 ஆடல்3āṭal, பெ. (n.)

   1. கொல்லுதல் (கதி.அக.);; killing.

   2. துன்பம்; distress, trouble.

     “அத்தனை ஆடல் கொடுக்கைக்கு” (ஈடு. 9.9.பிர.);

   3. போர் (திவா.);

 war, battle.

   4. வெற்றி (பிங்..);; victory.

   5. வீரம் (கதி.அக..);; chivalry, heroism.

   ம. ஆடல்;க. ஆடுளிகதன.

     [அடு → அடல் → ஆடல். அடுதல் = கொல்லுதல், துன்பப்படுத்துதல் தாக்குதல். ஆடல் = அடும் திறன், வீரம், வெற்றி.]

ஆடல் கொடு-த்தல்

ஆடல் கொடு-த்தல்āḍalkoḍuttal,    4. செ.கு.வி (v.i.)

   1. இடங்கொடுத்தல்; to yield, to be lenient.

     “இவ்வாற்றாமைக்கெல்லாம் ஆடல் கொடுத்த ஆழ்வார்” (ஈடு. 85,11);.

   2. துன்பம் நுகர்தல் (ஈடு.9,9,பிர.);; to experience hardship

ம. ஆடல்ப்பெடுக

     [ஆடல்+கொடு.]

ஆடல் பாடல்

ஆடல் பாடல்āṭalpāṭal, பெ. (n.)

   1. ஆட்டமும் பாட்டும்; game and song.

   2. நாட்டியமும் பாட்டும்; dance and song.

   க., து.,பட.ஆடபாட;கூ. ஆட்பாடலு.

     [ஆடல்பாடல்=ஆடுதல்பாடுதல்.]

ஆடல் வேற்றுமை

 ஆடல் வேற்றுமைāṭalvēṟṟumai, பெ. (n.)

   நின்றாடல் வீழ்ந்தாடல் என்று இருவகைப்பட்ட கூத்து வேற்றுமை; dancing as in standing position and in lying position.

     [ஆடல்+வேற்றுமை.]

ஆடவன்

ஆடவன்āṭavaṉ, பெ. (n.)

   1. ஆண்மகன்; man.

     “ஆடவர் பெண்மையையவாவுந் தோளினாய்” (கம்பரா, தாடகை 94.);.

   2. இளைஞன்; youth. (திருக்கோ. 219);.

   3. ஆண்களுக்குரிய ஆறுபருங்களுள் 32 முதல் 48 அகவை வரையிலான நான்காம் பருவத்தினன்; man between 32 and 48 years of age.

     [ஆள் → ஆளவன் → ஆடவன் = தான் மேற்கொண்ட செயலைத் திறம்பட ஆளும் வன்மை வாய்ந்தவன்.]

ஆடவமுதுமை

ஆடவமுதுமைāṭavamudumai, பெ. (n.)

   48லிருந்து 60 அகவை வரையுள்ள ஆடவர் பருவம்; stage of male between 48 to 60 years of age.

     [ஆடவன் + முதுமை.]

ஆடவர்

ஆடவர்āṭavar, பெ. (n.)

   1. ஆண்மக்கள்; males in general

     “ஈட்டம் இவறி இசை வேண்டா ஆடவர்’ (குறள். 1003.);

   2. இளையோர்; youngsters, youth.

   3. இடைப் பருவத்து ஆண்மக்கள். (32 அகவை முதல் 48 வரை);; males from 32 to 48 years of age. (or); milddle aged male (6.D.);.

     [ஆள் → ஆளவன் → ஆடவன் = ஆளுந் திறமையுள்ளவன். ‘ஆர்’ ப.பா. ஈறு.]

ஆடவர் பருவம்

 ஆடவர் பருவம்āṭavarparuvam, பெ. (n.)

   குழந்தை, காளை, குமரன், ஆடவன், மூத்தோன், மூதாளன் என ஆண்களின் வளர்ச்சியில் கூறப்படும் பருவ நிலைகள் (வின்.);; six stages in the growth of a male.

     [ஆள் → ஆடவர் + பருவம்.]

ஆடவர்வகுப்பு

ஆடவர்வகுப்புāṭavarvaguppu, பெ. (n.)

   இன்பசாரம் என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளவாறு சசன், இடபன், அச்சுவன் என மூன்று பிரிவாகக் கூறப்படும் ஆடவர்வகுப்பு (கல்லா.7.மயிலேறும்);; adult human males who, according to the Inbasaram, a treatise on erotics, are divided into three classes. (செ.அக.);

   2. கொக்கோக முறைப்படி சொல்லப்பட்ட நான்கு வகை ஆடவர் பகுப்பு; human male adult divided according to lust etc., into four classes as laid down in the erotic science of Kokköga Muni. (S.D.);.

     [ஆடவர் + வகுப்பு.]

ஆடவல பெருமான்

ஆடவல பெருமான்āṭavalaberumāṉ, பெ. (n.)

   சிவபெருமான்;Śiva as an expert dancer.

     “ஆரூர் ஆடவல பெருமானைப் பணிவார்” (பெரிய புராண சா. 58);.

     [ஆடல்+வல்ல+பெருமான்-ஆடவலபெருமான். உல்ல→வல(தொகுத்தல் திரிபு);. பெருமான் = சிவன்]

ஆடவல்லான்

ஆடவல்லான்āṭavallāṉ, பெ. (n.)

   1. கூத்தப்பெருமான்; Nataraja S.I.I. ii. 125).

   2. முதலாம் இராசராசன் காலந்தொட்டு மரக்கால், நிறைகல், தூலாக் கோல்களுக்கு வழங்கி வந்த பழைய பெயர்; standard weight, balance and measure in vogue during the days of the Chola king Rajaraja I, kept for safe custody with the Thanjavur temple authorities (S.I.l. ii. 400, 403, 408);.

     [ஆடவல்லான் = கூத்தாடும் சிவன், சிவன் பெயரிலமைந்த அளவுக்கருவிகள்.]

இராசராச சோழன் தஞ்சாவூரில் குன்ற மன்னதோர் கோயில் எடுப்பித்துத் தன் சிவப்பத்திமையை வெளிப்படுத்திப் பகழ்பெற்றதாலும், சிவன் பெயர் எங்கும் பரவவேண்டும் என்னும் வேட்கையின் விளைவாகவும் அளவுக் கருவிகளுக்கும் ஆடவல்லான் என்று சிவனின் பெயரிடப்பட்டது.

ஆடவள்

 ஆடவள்āṭavaḷ, பெ. (n.)

   பெண். ஆடவன் என்பதன் பெண்பால் (பிங்.);; woman, female.

   க. ஆடங்கி;தெ. ஆடதி.

     [ஆளவள்→ஆடவள்=இல்லறப்பணிகளை ஆளுந்திறத்தவள்.]

ஆடவை

ஆடவை1āṭavai, பெ. (n.)

   1. பருவப் பெண்; young woman.

   2. இரட்டை ஒரை (மிதுனராசி);; Gemini, a sign of the Zodiac.

   3. ஆனிமாதத்தின் தமிழ்ப்பெயர்; Tamil name of the month of Ani.

தெ. ஆடதி.

     [ஆள் = ஆளப்படும் பெண். தெ. ஆளு (மனைவி) ஆளவை – ஆடவை.]

 ஆடவை2āḷāḷappaḍumbeṇteāḷumaṉaiviāḷavaiāḍavaiāḍavai, பெ. (n.)

   ஆடல் அவை, நடன அரங்கம்; dancing hall, stage.

க. ஆடும்பொல (திடல்);.

     [ஆடு + அவை – ஆடவை.]

ஆடவைக்கருந்தலை

 ஆடவைக்கருந்தலைāṭavaikkarundalai, பெ. (n.)

   கோடை அறுவடைக்கால இறுதியைக் காட்டும் ஆனி என்னும் ஆடவை மாத இறுதி; close of the

 month of Ani, which marks the end of the harvest season.

     [ஆடவை + கருந்தலை.]

ஆடவைத்தூக்கம்

 ஆடவைத்தூக்கம்āṭavaittūkkam, பெ. (n.)

   ஆடவை (ஆனி); மாதத்தில் கடலில் காணப்படும் அமைதி (யாழ்ப்);; calm prevailing on the sea in the month of Ani.

     [ஆடவை+தூக்கம். தூக்கம் = செயற்பாடற்ற அமைதியானதோற்றம்.]

ஆடா

ஆடாāṭā, பெ. (n.)

   1. நெருப்புக்கு ஓடாத, நெருப்பால் பெரிதும் தாக்குறாத; not volatile or that which does not fume of otherwise disappear on application of heat or fire (S.D.);.

   2. கால்களிற் கட்டியைப் போலுண்டாகும் குதிரை நோய் (அகவ. 102);; disease affecting horses, in the formation of tumours in the logo.

     [ஒருகா. அடு → அடா → ஆடா. அடுதல்=சுடுதல், வேதல். குதிரையின் காலில் உண்டாகுங் கட்டி. பிறகட்டிகளைப் போல் பழுத்து உடையாததாயும் இருக்கலாம்.]

ஆடாகங்கநிதானம்

 ஆடாகங்கநிதானம்āṭākaṅganitāṉam, பெ. (n.)

   ஒரு சிறந்த வடமொழி மருத்துவ நூல்; a celebrated Ayurvedic Science (சா.அக.);.

ஆடாசம்

 ஆடாசம்āṭācam, பெ. (n.)

   ஒருவகை நஞ்சு (கெந்தி);; a kind of arsenic (S.D.);.

ஆடாச்சரக்கு

 ஆடாச்சரக்குāṭāccarakku, பெ. (n.)

   சூடேற்றுவதால் ஆவியாகிவிடாத மருந்துச் சரக்கு; drugs which do not pass off of disappear, as gas when heated (S.D.);.

     [ஆடா பார்க்க;see ada]

ஆடாதிருக்கை

 ஆடாதிருக்கைāṭātirukkai, பெ. (n.)

   ஒருவகைத் திருக்கைமீன்; a kind of shark. ஆடுவாலன் திருக்கை பார்க்க;see aduvalan-tirukkai.

ஆடாதோடை

ஆடாதோடைāṭātōṭai, பெ. (n.)

   ஆடுதொடு மூலி என்னும் மருந்துச்செடி; medicinal shrub. ஆடுதொடு மூலி பார்க்க;see ādutodumūli

   ம. ஆடலோட;   க. ஆடுசோகெ, ஆட்சோகெ;   தெ. அட்டிசாமு;   து. ஆடலோடு, யேட்முட்டந்திதப்பூ; Sk.alarusa, Pktatalusa, H. adusa, Mar. adulasa, Gul. araguso, sini. āgātõdā.

     [ஆடு+தொடு → ஆடுதொடை → ஆடுதோடை → ஆடாதோடை. தொடு → தொடை (தொடுவது, தொடப்படுவது, தின்பது);. ஒ.நோ: கொடு → கொடை (கொடுப்பது, கொடுக்கப்படுவது, கொடுக்கப்படும் பொருள்);. ஆடுதொடை → ஆடாதோடை (பேச்சு வழக்கிலுள்ள திரிபு);. ஆடாதோடை = ஆடு விரும்பித் தின்னும் தழைகளுள்ள செடி. இதற்கு ஆடுதொடுமூலி என்ற பெயருண்மை காண்க.]

இதற்கு மருத்துவத்தாய் (வைத்திய மாதா); என்று வடமொழியாளர்கள் பெயரிட்டு வழங்குகின்றனர். ஆடுகள் விரும்பித்தின்னும் இச்செடி 8 முதல் 10 அடிவரை வளரும். இது குறுகலாயும், முனையிற் கூம்பியும், அடித்தண்டிற் கிளைகள் கிளைத்துமிருக்கும். இதன் பூக்கள் மஞ்சளும் நீலமும் கலந்த நிறத்தொடு வெண்புள்ளிகள் படர்ந்துமிருக்கும். இப்பூண்டின் ஒவ்வொரு பகுதியும் மருத்துவத்திற்குதவும். இது சிறிது கசப்பானது. நறுமணமுள்ளது. இதன் காய்கள், இழுப்பும், வலியும் அகற்றும் குணமுள்ளவை. இலைகள், பூக்கள், வேர், பட்டை ஆகியவற்றைப் பொடித்தும் கருக்கிட்டும் பயன்படுத்தப்படும். இலைகள் ஈளை, வலி, இழுப்பு போக்கும். இருமல், காய்ச்சல், சளி, மார்ச்சளி, ஈளை முதலிய நுரையீரல் நோய்களைக் குணப்படுத்தும்.

இதன் இலையுடன் தூதுவளையையும் கண்டங் கத்தரியையும் சேர்த்துக்கருக்கிட்டுக் (கஷாயம்); கொடுத்தால் வயிற்றிலுள்ள பூச்சிகள் நீங்கும்.

இதனால் அனைத்து நோய் நுண்ணுயிரிகளும் சாகும். மற்றக் கடைச் சரக்குகளுடன் சேர்த்து இளகியமாக்கிக் (லேகியம்); கிளறி உண்ண, ஈளை, மூக்கில் குருதிவடிதல், பல்லில் குருதி வடிதல் ஆகியவை நிற்கும். ஈளை ஊதைக் காய்ச்சல் (கபவாதசுரம்);, வயிற்றுப்போக்கு (அதிசாரபேதி);, தண்கழிச்சல் (சீதபேதி); முதலியவற்றிலும் குருதி விழுவதைக் குணப்படுத்த இவ்விலைச்சாறு மிகவும் உதவும்.

இதன் இலைச்சாற்றுடன் தேனும் இஞ்சிச்சாறும் சேர்த்து மார்ச்சளி, இருமல், ஈளை ஆகியவற்றுக்கு மருந்தாகக் கொடுக்கப்படும். இதன் வேர் மூலத்தை கெண்டையேறுதல் முதலிய நரம்பு வலிகளுக்கும், மார்ச்சளிக்கும், குழந்தைகள் அள்ளுமாந்தத்திற்கும் கருக்கிட்டுக் கொடுக்கலாம்.

இதன் பூ கண்ணோய்க்கு மேலே வைத்துக் கட்டவுதவும், இதன் வேர் ஈளையை (கபம்); அறுக்கும். இதனுடன் மற்றக் கடைச் சரக்குகளைச் சேர்த்து நெய்மமாக (தைலம்); வடித்து, மார்பு நோய்களுக்கும், இருமலால் ஏற்படும் நெஞ்சுவலிக்கும் பூச்சு மருந்தாகப் பயன்படுத்தலாம்.

யூனானி மற்றும் ஆயுர்வேத மருத்துவர்களும் இதன் பொடி இளகியம், நெய் ஆகியவற்றை மருந்தாகப் பயன்படுத்துவர்.

 Malabarwintercherry or Malabar nutshrub-Adhatoda

 vesica alias A. pubescens. In Sanskrit, it is termed Vaidya Matha’ which means physicians mother i.e. physicians private remedy. It is a medicinal shrub 8 to 10 ft. in height with leaves narrow, and lanceolate;

 the stem is many branched, flowers with petals, whitish spotted, sulphur coloured at the throat and dark-purpled at the limb. It is so called from its being eaten only by goats. It is commonly found in gardens, hedges, fields, plains and other waste lands in Malabar and other places in S.India, Nepal, Bengal etc.All the parts of this plant are bitterish, slightly aromatic and especially the fruit is supposed to be antispasmodic.

 The leaves, flowers, root and bark are all used medicinally, mostly in the form of powder, infusion of the root, and decoction of or extract, from the leaves.

 The leaf is an expectorant, antispasmodic and antiperiodic. It is used incough, asthma, ague, eatarrh, chronic bronchitis, phthysis and other pulmonary affections.

 it is given in conjunction with the leaves of Solanum trilobatum (gTġoxmen); and Solanum jacquini (#sor o); by our native physicians internally in decoction as an anthelmintic for killing intestinal worms. It also kills other bacterial germs in water. An infusion of this plant is similarly found useful by Dr. Watt as an antiseptic to destroy germs in drinking water. By mixing the leaves with other bazaar drugs, an electuary is prepared and given for consumption, epistaxis, bleeding from the teeth etc.

 The juice of the leaves is much valued in cases of pneumonia, diarrhoea and dysentery, especially in hemoptysis and in the bleeding in dysentery. The fresh juice of the leavesmixed withhoney.orgingerjuice is an excellentcough mixture useful in bronchitis, asthma and consumption. The dried leaves are made in to cigarettes and smoked with much benefit in asthma.

 Adecoction of the whole plantismuchused incramps and intercostal convulsions in children,

 Thefreshflowers arebound overtheeyesinopthalmia, The root is an expectorant and is used as a substitute for senega. The oil prepared from this plant along with other drugsforms an external application in affection of the chest and especially in phthysis.

 Unanidoctors use this as powder and as an electuary and Ayurvedic doctors prepare also Ghrita and Tailams out of this for curing diseases (S.D.);.

ஆடி

ஆடி1āṭi, பெ. (n.)

   1. கண்ணாடி; mirror.

     “பொன்னினாடியிற் பொருந்துபு நிற்போர்” (மணிமே. 19:90);.

   2. உவர்மண்ணோடு மணல் சேர்த்துருக்கிச் செய்யும் பளிங்கு; transparent quartz made of sand mixed with fuller’s earth-crystal glass (S.D.);.

     “விதிமா ணாடியின் வட்டங் குயின்று” (மணிமே. 8:47);.

     “அடுத்தது காட்டும் பளிங்கு போல்);” (குறள். 206);.

   ம., க. ஆடி; Sinh. adassa.

     [ஆடு + இ – ஆடி. தன்னையடுத்தோர் அல்லது பொருளின் உருவநிழலாடுதலால் கண்ணாடியும் பளிங்கும் ஆடி என்று பெயர் பெற்றன.]

 ஆடி2āṭi, பெ. (n.)

   1. காற்று (கதி.அக.);; wind.

   2. நாரை; crane.

     [ஆடு + இ – ஆடி. ஒருகா. காற்று மோதி ஆடச் செய்யும் இயல்பால் ஆடி எனப் பெயர் பெற்றிருக்கலாம்.]

 ஆடி3āṭi, பெ. (n.)

   நண்டு; crab. ஏடி பார்க்க;see edi.

     [நண்டு → நெண்டு → ஞேடு → ஞேடி → ஏ.டி → ஆடி. ‘ஞெண்டு’ தெலுங்கில் ‘என்ட்றா’ என்றும், துளுவில் ‘ஏடி’ என்றும், தமிழ் கன்னட மலையாள மொழிகளில் ஆடி என்றும், சமற்கிருதத்தில் ‘ஆஷாட’ என்றும் உருபு திரிந்தது.]

 ஆடி4āṭi, பெ. (n.)

   1. நான்காம் மாதமாகிய கடகம்; the fourth Tamil month, (July + August.);.

   2. இருபத்தோராம் நாண்மீன் (நட்சத்திரம்);, கடைக்குளம் (உத்திராடம்); (திவா.);;   21st star in asterism.

   3.

   பகலில் 12 நாழிகைக்குமேல் இரண்டு நாழிகை கொண்ட முழுத்தம் (முகூர்த்தம்); (விதா. குணா.73);; suspicious time of 48 minutes, from 4h-48m. to 5h-36m. after sunrise.

   ம.,க.ஆடி;து.ஆடி

     [Skt. asada < த.கடகம்(ஆடி);.] கடகம் பார்க்க;see kadagam.  ஆடி5āṭi, பெ. (n.)    படியாணி; a kind of nail. (செ.அக.);  ஆடி6āṭi, பெ. (n.)    ஓரரக்கனின் பெயர்; name of a demon.  ஆடி7āṭi, பெ. (n.)    கூத்தாடுபவன்; dancer.      "மணிப்கையரவினாடி" (பாரத. அருச்சுனன்றவ. 113);. ம.,க.ஆடி

ஆடிக் குறுவை

ஆடிக் குறுவைāṭikkuṟuvai, பெ. (n.)

   நெல்வகை; a kind of short term paddy. (Pudu. Ins. 191);.

     [ஆடி + குறுவை. குறுகிய காலத்தில் அறுவடை செய்யும் நெல்லுக்குக் குறுவை எனப்பெயர். அந்நெல் கடக மாதமாகிய ஆடிமாதத்தில் அறுவடை செய்தலால் ஆடிக்குறுவை எனப்பெயர் பெற்றது.]

ஆடிக்கழைத்தல்

ஆடிக்கழைத்தல்āṭikkaḻaittal, பெ. (n.)

   1. கடக (ஆடி); மாதம் பிறந்ததும் மாப்பிள்ளையைப் பெண் வீட்டுக்கு அழைத்தல்; inviting newlywed man to a feast at the bride’s house on the 1st of Adi.

   2. புதிதாக மணஞ்செய்து கொடுத்த பெண்ணை கடக (ஆடி); மாதம் முழுவதும் தாய் வீட்டில் தங்கியிருப்பதற்காக அழைத்தல்; taking away or separating the bride from her husband, and putting her under the care of parents during the month of Agi of their first year of marriage. This separation is indispensable to prevent conception in that month and delivery in the coming April which is believed to bring ruin upon the family (W.);.

     [ஆடிக்கு + அழைத்தல்.]

ஆடிக்காருவா

ஆடிக்காருவாāṭikkāruvā, பெ. (n.)

   1. கடகக் காருவா பார்க்க;see kagaka-k-kāruvâ.

   2. கடக (ஆடி); மாதத்துக் காருவா (அமாவாசை); நாள் ஒரு நன்னாள்; new moon of Adi, auspicious day.

     [ஆடி + காருவா]

ஆடிக்காற்று

 ஆடிக்காற்றுāṭikkāṟṟu, பெ. (n.)

   கடக (ஆடி); மாதத்தில் கடுமையாக வீசும் தென்மேற்குப் பருவக் காற்று; high monsoon winds blowing from southwest, such as those characteristic of Adi.

     “ஆடிக்காற்றில் அம்மியே பறக்கும் போது இலவம் பஞ்சு எம்மாத்திரம்?” (பழ.);.

     [ஆடி + காற்று]

ஆடிக்கால்

 ஆடிக்கால்āṭikkāl, பெ. (n.)

   வெற்றிலைக்கொடி படர்வதற்கு முன்னேற்பாடாகக் கடக (ஆடி); மாதம் வயலில் நடும் அகத்தி (இ.வ.);; West Indian pea-tree, planted in the month of Agi, in fields to serve as a support for betel creepers.

     [ஆடி + கால்.]

ஆடிக்குறி

 ஆடிக்குறிāṭikkuṟi, பெ. (n.)

   கடக (ஆடி); மாதத்து வளர்பிறையின் ஐந்தாம் பிறை (பஞ்சமி);, ஞாயிறுவரின் மழை குறைவு, திங்கள்வரின் பெரு வெள்ளம், செவ்வாய்வரின் சண்டை (போர்);, அறிவன் (புதன்); வரின் பெருங்காற்று, வியாழன்வரின் நல்ல விளையுள், வெள்ளிவரின் பெரு மழை, காரி (சனி); வரின் விளை வில்லை யென்று மக்களிடை நிலவும் நம்பிக்கை (அபி.சிந்.);; fifth day of the moon during the month of Adi (July – August); which according to the belief of common people, will bring low rain if it falls on Sunday, flood on Monday, war on Tuesday heavy wind on Wednesday, good harvest on Thursday, heavy rain on Friday and no harvest on Saturday.

     [ஆடி + குறி. குறி=அடையாளம்.]

ஆடிக்கூடு

 ஆடிக்கூடுāṭikāṭu, பெ.(n.)

 chimney.

     [ஆடி+கூடு]

ஆடிக்கோடை

 ஆடிக்கோடைāṭikāṭai, பெ. (n.)

   கடக (ஆடி); மாதத்தில் அறுவடையாகும். நெல். (இ.வ.);; extra rice-crop, harvested during the month of Adi.

     [ஆடி + கோடை.]

ஆடிச்சி

 ஆடிச்சிāṭicci, பெ. (n.)

   கழைக்கூத்தாடிப் பெண் (புதுவை);; woman who is an acrobat.

     [ஆடிச்சி = ஆடுபவள். சி – பெ.பா.ஈறு.]

ஆடிடம்

ஆடிடம்āḍiḍam, பெ. (n.)

   1. விளையாடுமிடம்; playground

     “மன்னி யாடிடஞ் சேர்வர்கொல்” (திருக்கோ. 37.);.

   2. கூத்தாடுமிடம்; dancing stage.

     [ஆடு + இடம்]

ஆடித்திகைந்தான்

 ஆடித்திகைந்தான்āṭittigaindāṉ, பெ. (n.)

   சிற்றா முட்டி; plant.

ஆடித்திங்கள்

ஆடித்திங்கள்āṭittiṅgaḷ, பெ. (n.)

   கடகத் திங்கள்; Tamil month Kadagam. (Adi);

     “ஆடித் திங்கள் பேரிருள் பக்கத்து” (சிலப். 23. 133);.

     [ஆடி + திங்கள்.]

ஆடிப்பட்டம்

 ஆடிப்பட்டம்āṭippaṭṭam, பெ. (n.)

   கடக (ஆடி); மாதத்துப் பயிரிடும் பருவம்; cultivation season in the month of Adi.

     “ஆடிப்பட்டம் தேடி விதை.” (பழ);.

க. ஆடிகத்தெ.

     [ஆடி + பட்டம்.]

ஆடிப்பண்டிகை

 ஆடிப்பண்டிகைāṭippaṇṭigai, பெ. (n.)

   கடக (ஆடி); மாதப்பிறப்புக் கொண்டாட்டம்; first day of Adi, a day of feasting, mutual visits, when the sun is supposed to enter on its southern course (W.);,

     [ஆடி + பண்டிகை.]

ஆடிப்பால்

 ஆடிப்பால்āṭippāl, பெ. (n.)

   கடக (ஆடி); மாதப் பிறப்பன்று செய்யும் விருந்தில் இடம் பெறும் தேங்காய்ப்பாலுணவு (இ.வ.);; dish made of the milk of the coconut kernel and it is also the piece-de-resistance on the occasion of the first day of Adi.

     [ஆடி + பால்.]

ஆடிப்பாவை

ஆடிப்பாவைāṭippāvai, பெ. (n.)

   ஆடியில் (கண்ணாடியில்); தோன்றும் உரு; image in a mirror.

     “ஆடிப்பாவை போல” (குறுந். 8.);.

     [ஆடி + பாவை.]

ஆடிப்பூச்சு

 ஆடிப்பூச்சுāṭippūccu, பெ. (n.)

   கானல்; mirage.

     [ஆடி + பூச்சு. பூச்சு = தோற்றம்.]

ஆடிப்பூரம்

 ஆடிப்பூரம்āṭippūram, பெ. (n.)

   கடக (ஆடி); மாதத்துக் கணை (பூர); நாண்மீனன்று நடைபெறும் அம்மன் திருவிழா; festival celebrated in honour of the goddess in temples on the Puram day in Adi.

     [ஆடி + பூரம்]

ஆடிப்பெருக்கு

ஆடிப்பெருக்குāṭipperukku, பெ. (n.)

   கடக (ஆடி); மாதம் பதினெட்டாம் நாளன்று காவிரியில் வெள்ளம் பெருகுவதைக் கொண்டாடும் விழா; festival held on the 18th day of Agi when the river Kaviri is supposed to be in spate.

     [ஆடி + பெருக்கு. பெருக்கு = வெள்ளப்பெருக்கு.]

ஆடிப்போ-தல்

ஆடிப்போ-தல்āṭippōtal,    8 செ.கு.வி. (v.i.)

    கட்டுக் குலைந்து போதல், ஆட்டங்காணுதல்; to become shaky.

     [ஆடி + போ – ஆடிப்போ (கூட்டுவினை);.]

ஆடியகூத்தன்

 ஆடியகூத்தன்āṭiyaāttaṉ, பெ. (n.)

   தில்லை மரம் (சித்.அக.);; blinding tree.

ஆடியமாவாசை

 ஆடியமாவாசைāṭiyamāvācai, பெ.(n.)

கடகக் காருவா பார்க்க;see kadaka-k-karuva.

     [ஆடி + அமாவாசை.]

ஆடியமாவாசையைத் தமிழில் கடகக்காருவா என்பர்.

ஆடியறவெட்டை

 ஆடியறவெட்டைāṭiyaṟaveṭṭai, பெ. (n.)

   கடக (ஆடி); மாதத்திலுண்டாகும் பொருள் முடை (இ.வ..);; time of high prices or scarcity, usu, associated with the month of Adi (Loc.);.

     [ஆடி + அற + வெட்டை. அற = முற்றிலும்;

வெட்டு → வெட்டை = இல்லாமற்போதல், பொருள் தட்டுப்பாடு. உழவர்களிடம் பொருள்முடையும் பணமுடையும் ஏற்படுங்காலம் என்னும் கருத்தில் ஆடியறவெட்டை என்னும் தொடராட்சி தோன்றியிருக்கலாம்.]

ஆடியற்பெயர்

ஆடியற்பெயர்āṭiyaṟpeyar, பெ. (n.)

   இளந்துணை மகார் தம் விளையாட்டு வகையான் தாமே அப்போதைக்குப் பட்டிபுத்திரர், கங்கை மாத்திரர் என்றாற் போலப் படைத்திட்டுக் கொண்ட பெயர்; assumed name as pseudonym chosen by players to suit the particular game.

     “கூடிவரு வழக்கின் ஆடியற் பெயரே” (தொல்.சொல்.165);.

     [ஆடு + இயல் + பெயர்.]

ஆடியல்

ஆடியல்āṭiyal, பெ. (n.)

   அசையுந் தன்மை; shaking

     “ஆடியல் பெருநாவாய்” (மதுரைக்.83);.

     [ஆடு + இயல்.]

ஆடியோடுஞ்சரக்கு

 ஆடியோடுஞ்சரக்குāṭiyōṭuñjarakku, பெ. (n.)

   முதலில் நெருப்பிற் கருகிப் பின் நில்லாமல் மறைந்து பதங்கிக்கும் சரக்கு; mineral which first melts in a crucible and is ther sublimated gradually as mercury, sulphur, etc., do.

     [ஆடி + ஒடும் + சரக்கு.]

ஆடிவாலான்

 ஆடிவாலான்āṭivālāṉ, பெ. (n.)

   நெல்வகை; a kind of paddy (P.T.L.);.

ஆடிவில்லை

 ஆடிவில்லைāṭivillai, பெ. (n.)

   உருப் பெருக்கிக் காட்டுங் கண்ணாடி; lens.

     [ஆடி + வில்லை.]

ஆடிவெள்ளி

ஆடிவெள்ளிāṭiveḷḷi, பெ. (n.)

   கடக (ஆடி); மாதம் மூன்றாம் வெள்ளியன்று வாழ்வரசியர் (சுமங்கலிகள்); நோற்கும் நோன்பு; religious ceremony observed by married women on the 3rd Friday of the month of Adi, with a view to praying the Amman goddess to bestow longevity and for the welfare of their husbands and families.

     [ஆடி + வெள்ளி.]

ஆடு

ஆடு1āṭudal,    5. செ.கு.வி. (v.i.)

   1. அசைதல்; to move, to wave, to swing, to shake, to vibrate. ஆடு கழை.

   2. கூத்தாடுதல் (பிங்.);; to dance, to gesticulate, to play.

     “அம்பலத்தாடுவான்” (பெரியபு. கடவுள் வா);.

   3. விளையாடுதல்; to play.

     “அகன்மலையாடி” (மணிமே. 10:55);.

   4. நீராடுதல்; to bathe, to play in water.

     “பூக்கமழ் பொய்கை யாடச் சென்றோன்” (மணிமே. 17:32);.

   5. பொருதல்; to right.

     “மற்றவனோ டாடி…மாய்ந்ததனை” (கந்தபு. யுத்த சிங்கமு.460);.

   6. அலைதல், திரிதல்; to go, to proceed, to wander about, to pass to and fro.

     “ஆடித் திரிந்து நான் கற்றதும் கேட்டதும்” (தாயு. சச்சிதா.5);.

   7. முயலுதல்; to practise, to persevere, to make continued exertion.

     “இளையானே ஆடுமகன்” (பழமொ. 150);.

   8. பிறத்தல்; to be born

     “மாசை மாக்கடன் மன்னவ னாடலின்” (சீவக.911);.

   9. உலாவுதல்; to wander.

     “இளமழை யாடும்” (கலித்.41);.

   10 சுற்றிவருதல்; to rotate. பம்பரம் ஆடுகிறது.

   11 சண்டையில் திரிதல்; to move as it in a fight.

     “வருந்தி ஆடினாள் பாடினாள்” (தனிப்பா. தி.1.பக்.103);.

   12. அளவுக்கு மீறி அதிகாரஞ் செய்தல்; to exercise powers transgressing the limits ஒரேயடியாய் ஆடாதே (உ.வ.);.

   13. மனந்தளர்தல், மனங்குழம்புதல்; to vacillate to be confused. ஆடிய உள்ளம்.

   14. வலி தளர்தல்; to become weak. பல் ஆடிப் போயிற்று (உ.வ.);

   15. ஒலித்தல்; to throb. வண்டாடும் பூம்பொழில்

   16. துடித்தல்; to quiver.

     “வாட் கண்ணிடனாட” (பு.வெ. 12);.

   17. குலுங்குதல்; to shudder, to tremble. கையில் வளையாடுகிறது.

   18. தடுமாறுதல் (புதுவை);; to be disconcerted (Pond);.

   19. பொறி (எந்திரம்); முதலியவற்றில் அரைத்தல்; to be crushed in a mill.

     “ஆடுகைக்குப் பக்குவமான கரும்புபோல

இனிதாயிருக்கிற மொழியையும்” (திவ்.பெரியாழ். 2.9.5,வியா,பக். 464);.

   20 விழுதல்; to fall.

     “இவளிடையை யாசைப் பட்டாயிற்று கோட்டிடை யாடிற்று” (திவ்.பெரியதி. 1.2.3, அரும். பக். 65);.

   21. புணர்தல் (நாமதீப.);; to cohabit.

   22. செருக்குதல்; to be proud or conceited. -5, செ.குன்றாவி. (v.t.);

.

   23. சொல்லுதல்; to tell.

     “அவர் சொல்லியவாறே யாடினார்” (திருவிளை, விறகு,61);.

   24. செய்தல்; to do, perform, to fight,

     “அமராடுதல்” (பிரபோத. 27,21);.

   25. நுகர்தல்; to enjoy (சிலப்.பதிக.15);.

   26. பூசுதல்; torub, to smear as with sandal paste. சந்தனம் ஆடிய மேனி.

   27 அளைதல், துழாவுதல்; to mix to stir. வண்டு தேனாடியது. ம.வி. (idio-u);

   28. அசைந்தாடுதல், மென்மெல அசைதல்; to sway. தென்றலில் பூங்கொடி அசைந்தாடுகிறது.

   29. ஆலையாடுதல், ஆலையிலிட்டு அரைத்தல்; to crush in a machine இன்றுதான் கரும்பு ஆலையாடி முடிந்தது.

   30. இணலாடுதல்-புணர்தல்; to copulate, as snake do. பாம்பு இனலாடுகிறது.

   31. ஈயாடுதல்-ஈமொய்த்தல்; to swarm about. இனிப்புள்ள இடத்தில் ஈயாடும்.

   32. ஈயாடாமை-பொலிவின்மை; to show no emotion. அவன் முகத்தில் ஈயாடவில்லை.

   33. உண்டாடுதல் – விருந்துண்டு மகிழ்தல்; to revel. உண்டாடும் செல்வரா நாம்?

   34. உரையாடுதல் – கலந்து பேசுதல்; to converse. அவரொடு நாங்கள் உரையாடினோம்.

   35. உறவாடுதல் நட்புக் கொள்ளுதல்; to become friendly. பகையாளி குடியை உறவாடிக் கெடு.

   36. ஊடாடுதல்-இடைப்புகுதல்; to intervene ஐயம் ஊடாடாத நட்பு.

   37. எண்ணெயாடுதல் – செக்கிலிட்டு அரைத்தல்; to press oil seeds. ஒரு மூட்டை எள்ளை, எண்ணெயாடினர்.

   38. எடுத்தாடுதல் – சொல்லிக் காட்டுதல்; to mention and dwell on – as one’s own good actions. பெரிய உதவி செய்துவிட்டவள்போல் அவள் என்னை எடுத்தாடி விட்டாள் (உ.வ.);.

   39. எதிராடுதல் – எதிர்த்துப் பேசுதல்; to oppose. என்னோடு எதிராட உனக்கென்ன துணிச்சல்?

   40. ஒப்புக்கு ஆடுதல் – பற்றுள்ளவன் போல் நடித்தல்; to behave as it interested. அவன் ஒப்புக்கு ஆடுகிறான் நம்பாதே.

   41. ஒளிந்தாடுதல் – நம்பிக்கையூட்டி ஏமாற்றுதல்; to deceive by giving hope. இந்த ஒளிந்தாட்டமெல்லாம் என்னிடம் செல்லாது.

   42. (அ);. ஒடியாடுதல் – விரைந்து செயற்படல்; to act vigorously. அவரால் முன்னைப் போல ஒடியாட

   முடியாது. (ஆ);. ஒடியாடுதல் – அலைந்து வேலை செய்தல்; to run hither and thither, work hard. இளமைக் காலத்தில் ஒடியாடிச் சம்பாதித்தார்.

   43. (அ);. ஒரியாடுதல் – தன்னை எவரும் தொடமுடியாதபடி நீருள் மூழ்கியும் நீந்தியும் நெடுநேரம் விளையாடுதல்; to play in water by diving and swimming so as to make it impossible for others to catch him. ஒரியாடுதலில் அவன் வல்லவன். (ஆ); ஓரியாடுதல் – துணைக்கு எவருமின்றித் தானே வருந்திப் பணியாற்றுதல்;

 to work all alone without help. அவளொருத்தியே ஒரியாடுகிறாள்;

யாராவது துணைக்குப் போகக் கூடாதா?

   44. கடலாடுதல் – விழாவின் போது கடலில் நீராடுதல்; to bathe or swim in the seal. இந்திர விழாவின் போது மக்கள் கடலாடுவர்.

   45. கண்டவனோடாடுதல் – கண்டவர்களோடு பழகுதல்; to move with worthless people. கண்டவனோடாடிச் செல்வமெல்லாம் தொலைத்துவிட்டான்.

   46. கண்ணாமூச்சியாடுதல் – ஒளித்து வைத்துப் பேசுதல்; play hide and seek. என் புத்தகம் எங்கே சொல், என்னோடு கண்ணாமூச்சியாட வேண்டாம்.

   47. (அ); கயிறாடுதல் – கயிற்றின் மேல் நடக்கும் கழைக்கூத்தாடுதல்; to perform on stretched rope. ‘ஆரியர் கயிறாடு பறையின்’ (குறுந்:7);. (ஆ); கயிறாடுதல் – கயிற்றின் இருமுனைகளையும் இரு கைகளில் பிடித்தவாறு மேல் கீழாக வீசிச் சுழற்றிச் சிறுமியர் குதித்தாடும் விளையாட்டு;

 to play with skipping ropes. அவள் நன்றாகக் கயிறாடுகிறாள்.

   48. களித்தாடுதல் – பெருமகிழ்ச்சியடைதல்; to rejoice. பிறந்த நாளன்று மாமா பரிசுப் பொருள்களோடு வரக்கண்டு குழந்தைகள் களித்தாடினர்.

   49. கழையாடுதல் – கழைக்கூத்தாடுதல்; to dance on a pole. அவன் கழையாடலில் வல்லவன்.

   50 காலாடுதல் – செல்வமுடையராதல்; to become rich.

     “காலாடு – போழ்தில் கழி கிளைஞர் வானத்து மேலாடு மீனின் பலராவர்” (நாலடி..113);

   51. (அ);. காற்றாடுதல் – காற்று வீசுதல்; to blow. இன்று கொஞ்சமும் காற்றாடவில்லை. (ஆ); காற்றாடுதல் – உலர்தல்;

 to dry in the wind. ஈரத்துணியைக் காற்றாடப் போடு.

   52 குடித்தாடுதல்;   மது வருந்திச் செல்வம் அழித்தல்; to squander wealth through drinking. அவன் சொத்தெல்லாம் குடித்தாடி விட்டான்.

   53. குறையாடுதல் – விலை குறைக்குமாறு கெஞ்சிக் கேட்டல்; to ask repeatedly to lower

 the price. நாளெல்லாம் குறையாடினாலும் விலை குறையாது.

   54. கூத்தாடுதல் – மகிழ்ச்சியிற்றிளைத்தல்; to revel in happiness. முதல் வகுப்பில் தேறியதற்காக ஒரேயடியாகக் கூத்தாடுகிறான்.

   55. கெஞ்சிக் கூத்தாடுதல் – விடாமல் குறையிரந்து கேட்டல்; to beg, to request repeatedly. நீ என்ன தான் கெஞ்சிக் கூத்தாடினாலும் அவன் தரப் போவதில்லை.

   56. கையாடுதல் – பணம் மோசடி செய்தல்; to swindle money. அவன் ஒரு பெருந்தொகையைக் கையாடி விட்டான்.

   57 (அ); கொண்டாடுதல் – புகழ்தல்; to praise. கொடுப்பவனை எல்லாரும் கொண்டாடுகின்றனர், (ஆ);. கொண்டாடுதல் – விழாச் செய்தல்;

 to celebrate a festival. நாங்கள் பிறந்தநாள் கொண்டாடினோம்.

   58. கோலாடுதல்-அடித்தல்; to beat with a stick. கோலாடினால் குரங்காடும்.

   59. சதையாடுதல் – அன்பு (பாச); உணர்வு வெளிப்படுதல்; to express feeling of affection, attachment. தன்னை மதிக்காத மகனென்றாலும் அவன் நோய்வாய்ப்பட்டதறிந்து தந்தை கதறுகிறார்;

தானாடாவிட்டாலும் தன் சதையாடுகிறது.

   60 (அ);. சாமியாடுதல், மருளேறியாடுதல்; to speak and act as if possessed by a spirit. அவன் நேற்றுச் சாமியாடினான். (ஆ);. சாமியாடுதல்-அலைக்கப்படுதல்;

 to undergo suffering frequently. எனக்கு ஒன்றுந் தெரியாதென்று ஏய்க்கப் பார்க்கிறான்;

அவனைச் சாமியாட வைக்கிறேனா இல்லையா பார்.

   61. சீறாடுதல் – பிணங்கிக் கொள்ளுதல்; to get angry and quarrel. அவன் சீறாடிக் கொண்டு தாய்வீட்டுக்குப் போய்விட்டாள்.

   62. சும்மா ஆடுதல், காரணமின்றிப் பேசுதல் அல்லது செயற்படுதல்; to speak or act without reason. கண்டவன் பேச்செல்லாம் கேட்டு இப்படிச் சும்மா ஆடாதே.

   63. சூறையாடுதல் – கொள்ளையடித்தல்; to rob, to plunder. திருடர் புகுந்து அவன் கடையைச் சூறையாடி விட்டனர்.

   64. சொல்லாடுதல் – பேச்சுக் கொடுத்தல்; to converse.. அவனோடு சொல்லாடிப்பார்

   65. சோற்றுக்கு ஆடுதல் – சோற்றுக்காகச் சொன்னபடி செய்தல்; to do anything just to eke out a living. அவன் சோற்றுக்கு ஆடுகிறவன்.

   66. சோற்றுக்குத் திண்டாடுதல் – வறுமையில் வாடுதல்; to starve and suffer from poverty. அவன் சோற்றுக்குத் திண்டாடுகிறான்.

   67. தலை கால் தெரியாமல் ஆடுதல் – செருக்குடன் நடத்தல்; to

 with remarkable skill. அந்த வேலையை அவனிடம் கொடுங்கள்;

புகுந்து விளையாடிவிடுவான்.

   94. பூத்தாடுதல் – அழகால் பொலிதல்; to shine with beauty. தாமரை பூத்தாடுகிறது.

   95. பேயாடுதல் – தனக்குத் தானே வருந்துமாறு செய்தல்; to make one feel sorry for his own faults. எனக்கொன்றும் தெரியாதென்று நினைத்திருக்கிறான். நான் அனைத்தையும் வெளிப்படுத்தினால் அவன் பேயாடுகிறானா இல்லையா என்று பார்.

   96. பொடியாடுதல் – புழுதி படிதல்; to be covered with dust.

     “பொன்னுறு நறுமேனி பொடியாடிக் கிடப்பதோ” (சிலப்.19,40);.

   97. (அ);. போராடுதல் – தொடர்ந்து சண்டையிடுதல், இடைவிடாமல் முயலுதல்; to struggle continuously to work hard restlessly to achieve the objective. எத்தனை காலம்தான் போராடுவது? போராடாமல் நலம் விளையுமா? (ஆ); போராடுதல் – மல்லுக்கு நிற்றல். தொடர்ந்து வம்புச் சண்டைக்கு நிற்றல்;

 to argue unnecessarily. உன்னோடு போராட என்னால் முடியாது.

   98. மஞ்சாடுதல் – வெண் மேகம் தவழ்தல்; white cloud seen above the hills or mountain. மலைமேல் மஞ்சாடுகிறது.

   99. மல்லாடுதல் – விடாப்பிடிச் சண்டையிடுதல்; to quarrel wantonly. அவளோடு மல்லாட யாரால் முடியும்?

   100. மாலாடுதல் – கயிற்றைப் பிடித்துத் தொங்கியவாறு ஊசலாடுதல்; to swing by gripping the rope with one hand. வேடன் மலைத் தேனழிக்க மாலாடுகிறான். (ஆ);. மாலாடுதல் – வட்டக் காட்சியில் விளையாட்டு வீரர் கயிற்றூசல் கம்புகளை மாறிப் பற்றிப் பாய்ந்தாடுதல்;

 to perform on aerial trapeze. கோமாளிகூட வட்டக் காட்சியில் வேடிக்கையாக மாலாடிக் கீழே விழுகிறான்.

   101. மன்றாடுதல் – கெஞ்சிக் கேட்டுக் கொள்ளுதல்; to make a humble request. தன்னை மன்னிக்குமாறு மன்றாடினான்.

   102. மாறாடுதல் – மாறான கருத்தைக் கூறுதல்; to speak opposing a doctrine. அவன் சார்பாக இருப்பான் என்று நினைத்தோம். ஆனால் அவனே மாறாடுகிறான்.

   103. மூச்சாடுதல் – உயிரிருத்தல்; to breathe gently to show presence of life;

அவன் இறக்கவில்லை, இன்னும் மூச்சாடுகிறது.

   104. வழக்காடுதல் – வழக்குத் தொடுத்தல்; to file a case. உன் மீது வழக்காடப் போகிறேன்.

   105. வளையாடுதல் – மங்கலமாதல்; to become auspicious. வளையாடுங்கையால் உணவுண்ன வேண்டும்.

   106 வளைந்தாடுதல்-

   இசைந்து செல்லுதல், ஒத்துப் போதல்; to consent, acquise. உன் விருப்பத்துக்கு என்னால் வளைந்தாட முடியாது.

   107. வாயாடுதல் -தொடர்ந்து பேசித் தீர்த்தல்; to go on speaking to one’s own satisfaction. என்னதானிருந்தாலும் இப்படி வாயாடக் கூடாது.

   108. வாலாடுதல் – பலரிருப்பவும் வேண்டு மென்றே தான் முந்திச் செய்தல்; to carry out a work not wanted by. தலையாடுமுன்னே வாலாடுகிறது பார்த்தாயா?

   109. வீம்புக்கு ஆடுதல் – தன் இயலாமையை வெளிக்காட்டிக் கொள்ளாமல் செயற்படுதல்; to do a work concealing one’s inability. அந்தப் பயல் வீம்புக்கு ஆடுகிறான்;

அந்த வேலை அவனால் முடியாது.

   110. வேடங்கட்டியாடுதல் – திறமையாகப் பொய்த்து நடித்தல்; to act with talent. நீ என்னதான் வேடங்கட்டியாடினாலும் இங்கு ஒன்றும் நடக்காது.

   111 வேண்டுமென்றே ஆடுதல் – வம்புக்கிழுத்தல்; to indulge in a quarrel wantonly. நான் சும்மாயிருந்தாலும் அவன் வேண்டுமென்றே ஆடுகிறான்.

   112. விலையாடுதல் – விலை பேசுதல் (நெல்லை.);; to bargain

   113 களையாடுதல் – பிஞ்சு பிடித்தல்; forming of young fruit. பலாமரம் களையாடியிருக்கிறது (நெல்லை.);.

   114. நாடாடுதல் -பலவிடங்களில் திரிதல்; to wander. அவன் ஒரு நாடாடி (உ.வ.);.

   115. உடனாடுதல் – இணை பிரியாது தோழமை கொள்ளுதல்; to become close friend, அவன் இவனுக்கு உடனாடி (உ.வ.);.

   ம., க., தெ., பட. ஆடு;   கோத., து. ஆடுவி;   குட., கொலா. ஆட். துட. ஒடு;நா. ஆர்.

     [ஆல் → ஆள் → ஆளு → ஆடு (ஒநோ: நீள் → நீளு → நீடு); ஆல் = சுற்றுதல், சுழலுதல். ஆல் → ஆள் = செயற்படல், செய்தல், அசைதல். ஆள் → ஆளு → ஆடு = செய், அசை, நடுங்கு, வினையாற்று, விளையாடு.]

அள் = முதனிலைத் தொழிற்பெயர். ஆள் → ஆளு = மேற்பார் – ஆட்சி செய். ஆளு → அடு = செயற்படுத்து, வினைக்கொள் எனப் பிறவினையாயும், செய், இயங்கு எனத் தன் வினையாயும் வழங்கும். ‘ஆளு’ தன் வினையாயும் ‘ஆடு’ பிறவினையாயும் பண்டு வழங்கினும், ‘ஆடு’ பிறவினைப் பொருளிழந்து தன்வினைப் பொருளில் வழக்கூன்றியதாகல் வேண்டும். ‘கொள்’ தன்வினைப் பொருளிலும் ‘கொடு’ பிறவினைப் பொருளிலும் தத்தம் பொருளிழவாமல் இன்றும் வழங்குதலை ஒப்பு நோக்குக.

 ஆடு2āṭu, பெ. (n.)

   1. கால்நடைகளுள் சிறியதும், அசைபோடுவதும், பிளவுபட்ட குளம்புடையதும் சிறிய கொம்புடையதும், வளர்ப்பு விலங்குகளுள் ஒன்றானதும், பாலூட்டி இனத்தைச் சார்ந்தது

 behave with pride.

திடீரென்று பணக்காரனாகி விட்டதால் அவன் தலை கால் தெரியாமல் ஆடுகிறான்.

   68 தலைமேல் வைத்துக் கொண்டாடுதல் – அளவுக்கு மீறிப் போற்றுதல்; to praise excessively.

தொடக்கத்தில் அவரே என் தலைவர் என்று தலைமேல் வைத்துக் கொண்டாடினான்.

   69. தலை மேல் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுதல் – கட்டுக்கடங்காத பற்றால் அடிமையாதல்; to shower love in excess and become a slave to it.

திருமணமான புதிதில் அவளைத் தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டு ஆடினான்.

   70 தலையாடுதல் – தலைநடுங்குதல்; shake of head because of old age. அந்த மூதாட்டிக்குத் தலையாடுகிறது.

   71. தலைவிரித்தாடுதல் – மிக்குப் பரவி மேலோங்கி நிற்றல்; to dominate by wide spreading. எங்கும் வறுமை தலைவிரித்தாடுகிறது.

   72. திக்குமுக்காடுதல் – திணறுதல்; to be choked strangled. என்ன செய்வதென்றறியாமல் திக்குமுக்காடினான்.

   73. திண்டாடுதல் – எய்தப்பெறாது வருந்துதல்; to lament over not acquiring. செலவுக்குக் காசு இல்லாமால் திண்டாடினான்.

   74. திருமுழக்காடுதல் – தெய்வத் திருமேனியை முழுக்காட்டுதல்; to ceremoniously immerse an idol in water.

இறைவன் திருமுழுக்காடுங் காட்சி அடியார்க்கு இன்பந்தரும்.

   75. நகையாடுதல் – எள்ளி நகைத்தல்; to laugh derisively.

அவன் கோலத்தைக் கண்டு அனைவரும் நகையாடினர்.

   76. (அ);. நடமாடுதல் – அங்குமிங்கும் நடத்தல்; to walk about.

   அவர் நோய்வாய்ப்பட்டதிலிருந்து சரியாக நடமாடுவதில்லை. (ஆ);. நடம் ஆடுதல் – நடனம் ஆடுதல்; to dance. இறைவன் நடம் ஆடும் கோயில் தில்லையம்பலம்.

   77. (அ);. நாடகமாடுதல் – நடித்தல்; to act as in a play. நன்றாக நாடகமாடுகிறாள் இவள். (ஆ);. நாடகமாடுதல் – நடித்து ஏமாற்றுதல்;

 to cheat by acting cleverly. இப்படி நாடகமாடியே என் செல்வமெல்லாம் கரைத்து விட்டார்கள்.

   78. நாவாடுதல் – பேச்சுக்குப் பேச்சு எதிர்த்துப் பேசுதல்; to retallate.

இப்படி நாவாடினால் எந்த மாமியார் தான் பொறுத்துக் கொள்வாள்?

   79. நிழலாடுதல் – குறிப்பாகத் தோன்றுதல்; to appeal like a shadow.

வெற்றி பெறுவேன் என்பதற்கான அறிகுறிகள் நிழலாடுகின்றன.

   80. நின்றாடுதல் – நிலை பெயராமல் சுழலுதல்; to rotate firmly, fixed to a spot.

பம்பரம் நின்றாடுகிறது.

   81. (அ);.

   நீராடுதல் – நீர் நிலையிலிறங்கிக் குளித்தல்; to bathe in stagnant or running water.

   அவர் ஆற்றில் நீராடினார், (ஆ);. நீராடுதல் – வாலாமை நீங்கக் குளித்தல்; to bathe after menstruation or child birth.

   மகவீன்ற அவள் இன்று நீராடினாள். (இ);. நீராடுதல் – முழுக்க வியர்த்தல்; to perspire, to sweat.

வெயிலில் இரைக்க இரைக்க ஓடி வந்ததால் அவர் உடம்பு நீராடிப் போயிற்று.

   82. நீறாடுதல் – இடித்துப் பொடிபடச் செய்தல்; a pulverize

     “இருநிலக் கரம்பைப் படுநீ றாடி” (பெரும்பாண்.93);.

   83 (அ);. நெளிந்தாடுதல் – ஒசிந்தாடுதல்; to dance twisting the waist. பாம்பைப் போல் அழகாக நெளிந்தாடுகிறாள்.

   84 (அ);. பகடையாடுதல் – சூதாடுதல்; to gamble. தருமன் பகடையாடி நாடிழந்தான். (ஆ); பகடையாடுதல் – எளிதில் பணம் திரட்டுதல்;

 to earn by easy means. இதென்ன பகடையாடிக் கிடைத்த சொத்தா?

   85. (அ); படமாடுதல் – உருவப்படம் அல்லது உருவச்சிலை இருத்தல்; presence of idol or photo.

     “படமாடுங்கோயில் பரமற் கொன்றீயில்” (திருமந்);. (ஆ);. படம் ஆடுதல் -திரையிடப்படுதல்;

 to screen a film. அந்தக்கொட்டகையில் என்ன படம் ஆடுகிறது?

   86. படமெடுத்தாடுதல் – சீறிப் பேசுதல்; to speak with fury. அவன் ஏன் இப்படிப் படமெடுத்தாடுகிறான்?

   87. பணம் ஆடுதல் – செல்வம் மிக்கிருத்தல்; to have plenty of money. அவனிடம் பணம் ஆடுகிறது.

   88. பணம் கட்டி ஆடுதல் – பணத்தைப் பந்தயமாக வைத்து ஆடுதல்; to lay money as bet. சீட்டாடுவோர் பணம் கட்டி ஆடுவது தவறு.

   89. பணம் விளையாடுதல் – பணம் செலவழித்து நினைத்ததை முடித்தல்; to achieve things desired by bribing. அவன் வென்றதன் காரணம் பணம் விளையாடியதுதான்.

   90. பந்தாடுதல் – செம்மையாக உதைத்தல்; to give a severe kick. அந்தத் திருடன் கிடைத்திருந்தால் எல்லோரும் அவனைப் பந்தாடிவிட்டிருப்பார்கள்.

   91. பம்பரமாடுதல் – ஓய்வின்றி அலைந்து வேலை செய்தல்; to work hard without taking rest. ஒரே நேரத்தில் அத்தனை வேலை கொடுத்தால் என்ன செய்வது? என்னால் பம்பரமாட முடியாது.

   92. பாய்ந்தாடுதல் – அஞ்சத்தக்க விரைவுடன் விளையாடுதல்; to play with such speed as to frighten the opponents. சடுகுடு விளையாட்டில் அவன் பாய்ந்தாடினால் எதிரணி தோற்பது உறுதி.

   93. புகுந்து விளையாடுதல் – திறங்காட்டி ஆடுதல்; to play

   மாகிய நாற்கால் விலங்கு வெள்ளாடு;   செம்மறியாடு முதலியன ஆட்டின் வகை; genus of which the sheep and goat are species.

   2. மேழவோரை (மேடராசி);; aries, a sign of the zodiac

     “திண்ணிலை மருப்பி னாடுதலை யாக” (நெடுநல் 106);.

   ம. ஆடு;   க. ஆடு, ஆண்டு;   தெ. ஆடு, யேட. து. எடு;   குட. ஆடி;   கை., இரு., எரு. ஆடு;   பட., கோத., குரும். ஆடு;   கோண். யேடி;   துட. ஒடு;   கூ. ஒட;   குரு. ஏடா;   மா. ‘ஏட;பிரா. கேட்.

 As. gaat;

 Dutch. geit;

 G geiss;

 L-headus(kid);. கோதம், in the oblique cases the

     “ஆட்-” but in the nominative

     “ஆழ்” = goal.

     “யாழ்/ஏழ்”. துதம் has

     “ஒட்” – for

     “யாட்” or –

     “ஆட்” just as தமிழ் has often

     “ஓம்” for

     “ஆம்”

   கன்னடம்: ஆடு. குடகு;ஆடி. துளு: ஏடு. தெலுங்கு:

     “ஏடிக”;

     “ஏட” = ram. கோண்டு (Gondu);;

     “ஓட்” = goat. Brahui has

     “heet”,

     “கேட்”.

 Sanskrit obtains several loan words from this Dravidian source:

     “ஏட-, ஏடக-, ஏடீ” = a kind of sheep, B.E.Drav, E.D.No. 4229. But what is phenomenal and astounding is to find that Latin too has taken this as a loan-word not for the goat, but for its progeny, the young kid, according to Cassel. But A.Waldethinks that Cicero employs the word

     “haedus” for the full-grown goat (Cicero, acc. to Walde, page 632);;

 and

     “aedus” occurs according to an early Latin inscription. The rustic pronunciation has

     “ecdus”, very near oil-just mentioned. The Sabine dialect has

     “feedus”, according to Varro, I. 1.5 & 97, Compare Ernout EI, dial. Latin. 154-155. ht is clear that Tam.

     “y=-, Brahui

     “h”, Latin

     “h”-, Sabine

     “r”-and Sinh.h-are all in the nature of prothetic glides, inorganic initial sounds that developed later on and that of was the fundamental form of this root. We can cite, from Walde, several other Latin words from this ancient Dravidian source:

 Cicero.

 Cicero,

 a small kid, Cassell’s Dict.

     “porcillia”

 It is possible that where Latin employs

     “h” like Bratand Sinhala, Germanic tongues employed

     “g”. Walde pcs. tuiates an I.E. (=Indo-European);

     “gh” prothetic glice namely ghaidos = goat, compare Cothic

     “gaits”;

 Old High German

     “geiz”, Old Norse

     “geit”, Anglo-Saxon

     “gaat whence English”goat”forasmallgoat, Latinhas”haediinus Gothic

     “gaitein”;

 O.H.G.

     “geizzin”;

 As

     “gaeten”,

     [ஆள்-வினைசெய், செயற்படு, மேற்பார் ஆள்-ஆளு-ஆடு. விரைந்து செயற்படுத்து, விரைந்து செயற்படு (ஒ.நோ: நீள்-நீளு-நீடு);.

ஆடு – விளையாடு,

ஆடு – ஆட்டுக்குட்டி.

ஆடு வெட்டுதலை நாட்டுப்புறங்களில் குட்டி வெட்டுதல். என்பர். இளமறி ‘ஆடு’ என அழைக்கப்பட்டது. இப்பொருட்டே இலத்தீன மொழியில் ஆட்டுக்குட்டி haedus எனப்படுதலை ஒப்புநோக்குக. ஆடுகள் தலையசைத்து மேயும் இயல்பை ‘ஆடுதலைத்துரு’ என நற்றினை குறிப்பிடுகிறது.

ஆட்டினைக் குறிக்கும் மறி, குறி, துரு ஆடு என்பன அனைத்தும் இளமையும் இளமையாடலும் சுட்டிய காரணப் பெயராயமைந்துள்ளன. முறி – இளந்தளிர் முறி → மறி. குறு = சிறுமை. குறி = சிறியது. இளையது.

ஆடு – துள்ளியும் மறித்துக் குதித்தும் ஆடும் விலங்கு. விலங்கின் குட்டிகளில் ஆட்டுக்குட்டிபோல் துள்ளிக் குதித்தும் மறித்துக் குதித்தும் விளையாடும் விலங்கு பிறிதின்மையின் ஆடுகளுக்கு மட்டும் ஆடு என்று பெயர் வழங்கலாயிற்று.]

ஆடு – முதனிலைத் தொழிற் பெயர் ஆகுபெயராய் ஆட்டைக் குறித்தது. ஆட்டினங்களுக்குப் பொதுப் பெயராயமைந்தது.

ஆடு-ஆட்டின் வடிவிலமைந்த மேழ(Mesha); ஒரை.

ஆட்டின் வகைகள்:

   1. வெள்ளாடு – The ordinary goat — capra hircus.

   2. செம்மறியாடு – an ordinary sheep browner in colour than the goat.

 It corressponds to ovis arics.

   3. குறும்பாடு – a short wooly sheep with crumpled horns

   4. பள்ளையாடு – an under sized goat.

   5. மலையாடு – mountain goat – Tetraceros quadricornis.

   6. கொடி யாடு – a species of long-legged goat

   7. காட்டாடு – forest goat – cervulus muntjac.

   8. ஏழகம் – செம்மறிக்கடா, துருவாடு.

ஆடு உணவுப் பொருளுக்காகவும், கம்பளிக்காவும் வளர்க்கப்படுவது. இதன் புலால், பால் ஆகியவை மருந்துக்குப் பயன்படும். வெள்ளாட்டின் பால் மருத்துவப்பயனுடையது.

 A sheep or a goat species-vis, a family of caprinae. It is classified into different kinds and amongst them the goat is considered the best on account of its usefulness in medicines. It’s meat, milk, urine, and faeces are all very useful as they have curative powers.

     “. . . . . . . வெள்ளாடு தன்வளி தீரா தயல்வளி தீர்த்து விடல்” என்னும் அடிகளை ஒப்பிடுக;

 ஆடு3āṭu, பெ. (n.)

   1. கொல்லுதல்; killing,

     “ஆடுகொள் வென்றி” (புறநா.67);.

   2 வெற்றி; victory, success.

     “ஆடுகொள் நேமியான்” (கலித்.105,70);.

ம.ஆடுக (அடித்தல்);.

     [அடு – ஆடு = கொல்லுதல், போர்க்களத்தில் கொல்லுதலால் பெற்ற வெற்றி]

 ஆடு4āṭu, பெ. (n.)

   1. வடித்திறக்குதல்; distillation,

     “அறாஅநிலைச்சாடி யாடுறு தேறல்” (பு.வெ.1,2);.

   2. சமத்தல்; cooking.

     “ஆடுநனி மறந்த கோடுயர் அடுப்பின்” (புறநா.164);.

     [அள் → அடு → ஆடு. அடுதல் = சமைத்தல், கொல்லுதல். (கருவியால், நீரால், நெருப்பால் கொல்லுதல் அல்லது தன்மைமாற்றம் செய்தல்);].

 ஆடு5āṭu, பெ. .(n.)

   கூத்து, நடனம்; dance.

   ம. ஆடுக;க. ஆடு,

     [ஆடு – ஆடுதல்]

 ஆடு6āṭu, பெ. (n.)

   கூர்மை (செ.அக.);; sharpness.

     [அள் = செறிவு, கூர்மை. அள் → அடு → ஆடு.]

ஆடுஉ

ஆடுஉāṭuu, பெ. (n.)

   ஆண்மகன்; man, human male. (தொல். சொல். 2);.

   க., பட., ஆளு;ம. ஆள்.

     [ஆள்(ஆள்); → ஆளு → ஆடு → ஆடூஉ.]

தொல்பழங்காலத்தில் சொல்லினிமைக்காக மெய்யீற்றுச் சொற்களொடு உகரம் சேர்ப்பது பேச்சு வழக்கில் இயல்பாயிருந்தது. இடவழக்காயினும் பெருக வழங்கிய இடவழக்காதலின் இதனை ஒப்பமுடிந்த உலக வழக்காகத் தொல்காப்பியரும் ஏற்றார். உயிரீற்றில் முடியும் வினை முற்றுகளும் வினையெச்சங்களும் ஒப்புமையாக்கம் கருதிப் பெயரீற்றிலும், ஆட்சி பெறலாயின. வினையெச்ச வாய்பாடுகளில் ‘செய்யூ’ என்னும் வாய்பாடு தொல்காப்பியத்தில் குறிக்கப்பெறுகிறது. இதனையொத்து அவள் கண்டு என்னும் வினை முற்றைக் ‘கண்டூஉ’ எனவும், ஆள்(ஆண்); என்னும் பெயர்ச்சொல்லை ஆளு → ஆடு → ஆடூஉ எனவும் அளபெடையாய் நீட்டியொலிப்பதும் இனிமை கருதிய இடவழக்காகும். கிரேக்க மொழியில் மொழியிடையிலும் இத்தகு உயிர் நீட்டங்கள் உளவென்பர். தமிழில் உயிரளபெடையாட்சி மிக்கிருந்ததற்கு ஆடூஉ மகடூஉ போன்ற சொல்லாட்சிகள் தக்க சான்றாகின்றன. வினைமுற்று, உயிரீற்று அளபெடையாகத் தொன்முது காலத்திலிருந்திருக்கலாம் என்பதற்குச் சான்றாக கல்லாத தெலுங்கு மக்களின் பேச்சு வழக்கில் உகர ஈற்று ஏவல் வினைகள் அளபெடையாக ஓரொருகால் நீண்டொலிப்பது இன்றும் கேட்கமுடிகிறது.

ஆடுகண்வலை

 ஆடுகண்வலைāṭugaṇvalai, பெ. (n.)

நீரோட்டத்தின் போக்கிற்கேற்ப கடலிலிறக்கப்படும் மீன்பிடி

   வலை;   சுருங்கி விரிந்து மீனைத் தன்னகப்படுத்தும்; a kind of fishing net which when put into sea by bulging and contracting proceses according to water currents catches fish,

     [ஆடு+கண்+வலை.]

ஆடுகளம்

ஆடுகளம்āṭugaḷam, பெ. (n.)

   வெளியாடுமிடம்; stage for dancing of a priest possessed by divine power (skanda);

     “ஆடுகளம் சிலம்பப்பாடி” (திரு. ஆற். 245);.

     [ஆடு+களம்.]

ஆடுகால்

 ஆடுகால்āṭukāl, பெ. (n.)

   துலா நிற்கும் மரம்; stand of a picottah (loc.);.

க. ஆடுந்தொலே.

     [ஆடு + கால்.]

ஆடுகொடி

 ஆடுகொடிāḍugoḍi, பெ. (n.)

   படர்நிலை எய்திய வளர் கொடி; tendril.

     [ஆடு+கொடி]

ஆடுகொப்பு

 ஆடுகொப்புāṭugoppu, பெ. (n.)

   மகளிர்காதணிவகை (நெல்லை);; a kind of gold ear-ring, worn by women (Tn.);

ஆடுகொம்பு

 ஆடுகொம்புāṭugombu, பெ. (n.)

   கட்டுக்கொம்பு (செ.அக.);; movable horn fixed in the skin.

     [ஆடு+கொம்பு. ஆடுதல்=அசைதல்.]

ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்

ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்āṭuāṭpāṭṭuccēralātaṉ, பெ. (n.)

   ஒரு சேர அரசன்; Cēra king

     [ஆடு4′ = வெற்றி

     “ஆடாடென்ப ஒரு சாராரே” (புறம்); கோட்படல் – கைக் கொள்ளப்படுதல். மேற்கொள்ளும் செயற்பாடுகள் அனைத்திலும் வெற்றிபெறும் இயல்பினன். ஆதலின் ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் எனப்பட்டான்].

ஆடுசதை

 ஆடுசதைāṭusadai, பெ. (n.)

ஆடுதசை பார்க்க;see ādutasai.

     [ஆடு+தசை. தடி→தசை→சதை.]

ஆடுண்ணாவாலம்

ஆடுண்ணாவாலம்āṭuṇṇāvālam, பெ. (n.)

   ஆடு தீண்டாப்பாளை பார்க்க;   5;see āgutingā-p-pālai.

ஆடுண்ணாவேளை

 ஆடுண்ணாவேளைāṭuṇṇāvēḷai, பெ. (n.)

ஆடு தீண்டாப்பாளை பார்க்க;see ādutindā-p-palāi.

ஆடுதசை

 ஆடுதசைāṭudasai, பெ. (n.)

   கெண்டைக்கால் தசை; calf of the leg, as contractile.

     [ஆடு + தசை. தடி → தசை.]

ஆடுதலி

 ஆடுதலிāṭudali, பெ. (n.)

   அதிகாரியுடன் இருக்கும் உதவியாள்; orderly.

ஆடுதின்னாப்பாளை

 ஆடுதின்னாப்பாளைāṭudiṉṉāppāḷai, பெ. (n.)

ஆடு தீண்டாப்பாளை பார்க்க;see āgutingā-p-pālai.

ஆடுதின்னாளை

ஆடுதின்னாளைāṭudiṉṉāḷai, பெ. (n.)

ஆடு தீண்டாப்பாளை பார்க்க;see ägufindä-p-pälai.

     “வேளை முத்திரு சுக்குடன் ஆடு தின்னாளை வேலிப் பருத்தி மிளகு” (தேரை 1000);

ஆடுதீண்டாப்பாலை

 ஆடுதீண்டாப்பாலைāṭutīṇṭāppālai, பெ. (n.)

ஆடு தீண்டாப்பாளை பார்க்க;see agutingā-p-palai.

ஆடுதீண்டாப்பாளை

 ஆடுதீண்டாப்பாளைāṭutīṇṭāppāḷai, பெ. (n.)

ஒரு மருந்துச் செடி, பொதுவாக வேலிகளில் முளைத்திருக்கும், ஆண்டு தோறும் பூக்கும், குண்டிக்காய் வடிவமுள்ளது. இலைமாறி மாறியிருக்கும். ஓரங்கள் வளைந்திருக்கும். பூக்கள் தனித்தும், மங்கலான நீலநிறமுள்ளனவாகவுமிருக்கும். இச்செடி ஆண்டு முழுதும் காய்க்குமியல்புடையது. இது கசப்பானது, நஞ்சைப் போக்கவல்லது, சோழநாடு, திருவாங்கூர், தென்னாட்டுச் செம்மண் நிலங்கள், யமுனை யாற்றங்கரை ஆகியவிடங்களில் இதனைக் காணலாம்.

இதன் இலைச் சாற்றைத் தண்ணிரில் கலந்து பாம்புக்கடிக்கும், வயிற்றுவலிக்கும், விளக்கெண்ணெயிற் கலந்து சிரங்குகளுக்கும், கொடுப்பதுண்டு. இதன்வேரின் தூள் குளிர்காய்ச்சலைப் போக்கும். இதன் இலையையரைத்துக் குழந்தைகளின் வயிற்றிற் பற்றுப் போட மலங்கழியும். இதன் இலைக்கருக்கு (கஷாயம்); பூச்சி புழுக்களைக் கொல்லும், மாதவிலக்குச் சிக்கலைப் போக்கும். மகவீனுதலை விரைவுறுத்தும்,

   இதன் இலை மிகவும் கசப்பானதால் ஆடு தொடாது. அதனால் இதற்கு ஆடுதீண்டாப்பாளை என்று பெயர் வந்தது. இலையையரைத்து அழிபுண்ணுக்குப் போடப் பூச்சிகள் கொல்லப்படும்; a medicinal plant;

 worm killer, ulcer plant, black-blood plant.

 The plant is commonly found growing in hedges;

 roots perennial;

 leaves alternate and kidney-shaped;

 curled at the argin;

 flowers solitary, dark and purple;

 bearing fruit nearly

 the year. This is found grown in abundance on the Dromandal, in Travancore, in the Deccanandon the banks the Jumna. The plant is bitterandis used as antidotes to pisons.

 It is very common on red soils. The juice of the leaves mixed with water is given for snake-bites as an tidote and also for colic mixed with castor – oil, it is escribed for colic in horses and is also applied to hes. The powdered foot is useful in ague. A paste the leaves is applied as a poultice for children’s cosreness.

 The plant is an insecticide, anthelmintic, emenogogue, febrifuge and parturifacient. Lt is so called from;

 leaves being so bitter that even goats do not touch them. he leaves are applied to foul and neglected ulcers to kill e worms in them. It is well known by its Hindustani name iramar’ and from its anthelmintic properties (S.D.);.

மறுவ. ஆடுதின்னாப்பாலை, ஆடுதின்னாலை, ஆடுதொடாமூலி.

   ம. ஆடுதின்னாப்பால;   க. ஆடுமுட்டத கிட;   து. ஆடலோட், ஆடரோ செ; skt. agarusa.

     [ஆடு+தீண்டா+பாளை. தீண்டா (ஈ.கெ.எ.பெ.எ.);. ஆடுதின்னாத அளவுக்குகசக்கும் இயல்புபற்றி ஆடுதீண்டாப்பாளை என்று பெயர் பெற்றது. ஆடுதொடா மூலியென்றும் இதற்கு வேறு பெயர் வழங்குதல் காண்க.]

ஆடுதுடை

 ஆடுதுடைāḍuduḍai, பெ. (n.)

ஆடுதொடை பார்க்க;see agutogai.

ஆடுதுறை

ஆடுதுறைāṭuduṟai, பெ. (n.)

   1 நீராடுதுறை; bathing ghat

     “ஆடுதுறையில் அடுபுலியும்” (மூவருலா.);

   2. தஞ்சை மாவட்டத்திலுள்ள ஒருர்;   இவ்வூர் பழங் காலத்தில் குரங்காடுதுறை எனப் பெயர் பெற்றிருந்தது; town in Thanjavur District.

     [ஆடு + துறை.]

ஆடுதுறை மாசாத்தனார்

 ஆடுதுறை மாசாத்தனார்āṭuduṟaimācāddaṉār, பெ. (n.)

   சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் பாடிய புலவர்; poet who wrote poems in praise of the Chola king Kulamurrattu-t-tuniya killi vajavan of Sangam age.

     [ஆடுதுறை + மாசாத்தன் + ஆர். ஆடுதுறை = அவர் வாழ்ந்த ஊர்ப்பெயர். மாசாத்தன் இயற்பெயர். ‘ஆர்’ உயர்வுப் பன்மை ஈறு.]

ஆடுதொடாமூலி

 ஆடுதொடாமூலிāṭudoṭāmūli, பெ. (n.)

ஆடுதீண்டாப்பாளை பார்க்க;see ãdutnda-p-palai

     [ஆடு + தொடா + மூலி. ஆடுதின்னாத அளவுக்குக் கசப்புடைய மூலிகைச் செடி.]

ஆடுதொடை

ஆடுதொடைāḍudoḍai, பெ. (n.)

   1. அசைகின்ற தொடைத்தசைப்பகுதி (செ.அக.);; fleshy flabby part of the thigh, as contractile, lower portion of the thigh. தொடையின் முன் பகுதி.

மறுவ. தொங்குதொடை, தொங்குதசை.

     [ஆடு + தொடை.]

ஆடுநர்

ஆடுநர்āṭunar, பெ. (n.)

   கூத்தர்; actor, dancer.

     “ஆடுநர்க்கு ஈத்த பேரன்பினனே” (புறநா.221:2);.

     [ஆடு+நர்]

ஆடுநீர்

 ஆடுநீர்āṭunīr, பெ. (n.)

   குளித்தற்குரிய நீர்; water for bathing.

ம. ஆடுநீர்.

     [ஆடு + நீர்]

ஆடுபசி

ஆடுபசிāṭubasi, பெ. (n.)

   வருத்தும் பசி; afflictive hunger.

     “ஆடுபசி உழந்த நின் இரும்பேரொக்கல்” (பொருந் 61);.

     [ஆடு + பசி.]

ஆடுபந்தர்

 ஆடுபந்தர்āṭubandar, பெ. (n.)

   நடைப்பந்தல் (கதி. அக.);; pandal erected through out the entire route of a procession.

     [ஆடு + பந்தர்]

ஆடுபந்து

 ஆடுபந்துāṭubandu, பெ. (n.)

   ஆடுவதற்கான பந்து; ball for playing.

     [ஆடு + பந்து]

ஆடுபறை

 ஆடுபறைāṭubaṟai, பெ. (n.)

   அசைகின்ற பறை; swinging drum.

     [ஆடு + பறை.]

ஆடுபுலி

 ஆடுபுலிāṭubuli, பெ. (n.)

   ஆடு புலியாட்டம்;   கட்டத்தில் ஆடு புலிகளாகக் காய்களை வைத்து ஆடும் விளையாட்டு; game played with pieces representing sheep and tiger.

     [ஆடு + புலி.]

ஆடுபெயர்ச்சி

 ஆடுபெயர்ச்சிāṭubeyarcci, பெ. (n.)

   ஆட்டுக்கிடையில் ஆடுகளைப் பெயர்த்து வேறிடத்துச் சேர்த்தல்; replacing sheep from its fold to an other place.

மறுவ. பேர்வையடித்தல்.

ஆடுமகன்

ஆடுமகன்āṭumagaṉ, பெ. (n.)

   கூத்தன்; male dancer (பழ.186.4);

     [ஆடு + மகன்]

ஆடுமகள்

 ஆடுமகள்āṭumagaḷ, பெ. (n.)

   விறலி, உள்ளக்குறிப்புப் புறத்து வெளிப்பட ஆடுபவள்; female dancer who exhibits the various emotions and sentiments in her dance.

     [ஆடு + மகள்]

ஆடுமருந்து

 ஆடுமருந்துāṭumarundu, பெ. (n.)

   தான்றி மரம்; tree terminalia bellerica

ம. ஆடுமருந்து

ஆடுமலி உவகை

ஆடுமலி உவகைāṭumaliuvagai, பெ. (n.)

   வெற்றிவுவகை; joy on account of victory.

     “ஆடுமலி யுவகையொடு வருவல்” (புறநா.165);.

     [ஆடு + மலி + உவகை.]

ஆடுமாடு

 ஆடுமாடுāṭumāṭu, பெ. (n.)

   ஆடுமாடு முதலிய கால்நடைகள்; flock sand herds, sheep and cattle.

ம. ஆடுமாடு.

     [ஆடு + மாடு. ஆடுமாடு = தொகுதிப்பொருளில் வந்த உம்மைத் தொகை.]

ஆடுமாலை

ஆடுமாலை1āṭumālai, பெ. (n.)

   களித்துக் குலவும் குமரிப்பெண் (யாழ்ப்);; gay, lively and jovial girl. (J);

     [ஆடு + மாலை. வாலை → மாலை. வாலை = இளங்குமரிப்பெண். ஆடு = ஆடல், இயல்பு, களிப்பூட்டும் ஆட்டவியல்பு.]

 ஆடுமாலை2āṭumālai, பெ. (n.)

   ஓரிடத்து நிலைத்திராதவன் (கதி.அக.);; wanderer, vagabond.

     [ஆடு + மாலை. மாலை = தன்மை, இயல்பு. ஆடு – ஆடுதல், திரிதல்.]

ஆடுமுப்பு

 ஆடுமுப்புāṭumuppu, பெ. (n.)

   கட்டுப்பு (சா அக.);; concentrated salt.

     [ஆடும் + உப்பு. அடு → ஆடு (காய்ச்சுதல்);. காய்ச்சிக் கட்டியாக்கிய உப்பு.]

ஆடும்பாத்திரம்

 ஆடும்பாத்திரம்āṭumbāttiram, பெ. (n.)

   நாட்டியப் பெண் (நாஞ்.);; dancing woman (Nan);.

ஆடுறுகுழிசி

ஆடுறுகுழிசிāṭuṟuguḻisi, பெ. (n.)

   சமைக்கப் பயன்படும் பானை; cooking pot.

     “ஆடுறுகுழிசி பாடின்று தூக்கி” (புறநா. 371);.

     [ஆடு + உறு + குழிசி.]

ஆடுவழி

ஆடுவழிāṭuvaḻi, பெ. (n.)

   விளையாடுமிடம்; play ground.

     “ஆடுவழி ஆடுவழி யகலேன் மன்னே” (அகநா49);.

     [ஆடு + (உழி); வழி.]

ஆடுவாலன் திருக்கை

 ஆடுவாலன் திருக்கைāṭuvālaṉtirukkai, பெ. (n.)

ஆட்டுவாலன் திருக்கை பார்க்க;see attu-valan-tirukkai.

     [ஆடு + வாலன் + திருக்கை.]

ஆடுவாள் கண்டள்

 ஆடுவாள் கண்டள்āṭuvāḷkaṇṭaḷ, பெ. (n.)

ஆடி திகைத்தாள் பார்க்க;see adl-tigaindan.

ஆடூஉக்குணம்

 ஆடூஉக்குணம்āṭūukkuṇam, பெ. (n.)

   ஆண்களுக்குரியவனாகக் கூறப்படும் அறிவு, நிறை, ஓர்ப்பு, கடைப்பிடி யென்னும் நான்கு குணங்கள் (பிங்.);; masculine qualities, four in number, viz, knowledge, integrity, careful consideration and firm determination.

     [ஆடூஉ = ஆண்மகன். குணம் = பண்பு, இயல்பு மகளிர்க்குரிய நல்லியல்புகளாக, அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு என நான்கியல்பு கூறப்பட்டது. நாற்பண்பும் நிறையாவிடத்து நற்குடிமக்களாகார் என்பது கருத்து. இக்காலத்து ஆடூ.உக்குணம் மகளிர்க்கும் பொருந்துமாகாலான் விதந்து கூறற் பாலதன்று.]

ஆடூஉத்திணைப்பெயர்

ஆடூஉத்திணைப்பெயர்āṭūuttiṇaippeyar, பெ. (n.)

திணை நிலைப் பெயர்களுள் ஆண்மக்கள் பெயர். names of human male.

     “ஆயர் வேட்டுவர் ஆடூஉத்திணைப் பெயர்” (தொல். பொருள். 21);.

     [ஆடூஉ + திணை + பெயர்.]

ஆடூஉமுன்னிலை

 ஆடூஉமுன்னிலைāṭūumuṉṉilai, பெ. (n.)

ஆடூஉ பார்க்க;see aduu.

ஆடூஉவறிசொல்

ஆடூஉவறிசொல்āṭūuvaṟisol, பெ. (n.)

   ஆண்பாற் கிளவி, ஆண்பால் என்று அறிதற்குக் காரணமான ஈற்றையுடைய சொல்; word ending, with the masc.term.

     “னஃகா னொற்றே யாடூஉ வறிசொல்” (தொல் சொல்.5);.

     [ஆடூஉ + அறி + சொல். ஆடூஉ = ஆண்மகன், ஆண்பால்.]

ஆடூர்ந்தோன்

ஆடூர்ந்தோன்āṭūrndōṉ, பெ. (n.)

   1. முருகன்;டord Muruga, a Tamil God.

   2. அழற்கடவுள்; the god of fire.

     [ஆடு + ஊர்ந்தோன். முருகனுக்கும் அழற் கடவுளுக்கும் ஆடு ஊர்தியாகக் கூறப்படும் தொன்மக் (புராண); கதையினடிப்படையில் இப்பெயர் அவ்விருவர்க்கும் அமைவதாயிற்று.]

ஆடெழும்பு நேரம்

ஆடெழும்பு நேரம்āṭeḻumbunēram, பெ. (n.)

   காலைப் பத்துநாழிகை (இ.வ.);; about 10 A.M. as the time for leading flocks out to pasture (Loc.);.

     [ஆடு + எழும்பு + நேரம் மேய்ச்சலுக்காக முற்பகலில் ஆடுகளைப்பட்டியிலிருந்து எழுப்பி ஒட்டிச் செல்லும் நேரம்.]

ஆடை

ஆடை1āṭai, பெ. (n.)

   உடை (நற்: 33.6);; clothing, garment.

   2. பால் காய்ச்சும் போது மேற்படரும் ஏடு; cream or film on the surface of any liquid, such as milk etc, thick concentration on the surface of liquids.

     “ஆடைதனை யொதுக்கிடும்” (அழகர் கலம்.87);.

   3. கண்படலம்; a spot of thin film on the eye.

   4. பனங்கிழங்கின் உட்தோல்; inner skin of edible palmyra root.

   5. பன்னாடை; fibrous cloth like web about the bottom of the leaf stalk of a palmyra of coconut tree.

   6. பூவின் புற விதழ்; petal

   ம. ஆட;பட. ஆடெ.

   க.அரிவெ; Sinh. ana (cloths-line]

     [ஆடு + ஐ – ஆடை. காற்றுக்கு ஆடும் இயல்புபற்றி ஆடையெனப் பெயர் பெற்றது. ஒ.நோ: ஒடு → ஒடை.

ஆடைபோல் மேற்படிந்திருக்கும் பாலேடு, மெல்லிய தோல், ஆகியவை உவமை கருதி ஆடையெனப் பெற்றன. ‘ஐ’ உடைமை குறித்த பெயரீறு.]

 ஆடை2āṭai, பெ. (n.)

   நாவிற் படருமா; fur on the tongue persons suffering from fever, the coating seen on the tongue during various diseases. (சா.அக,);.

     [ஆடை = ஆடைபோல் வெண்மையாக நாவின் மேற் படிந்துள்ள கழிவுமாப்பொருள்;

வெண்மை. உவமை கருதிப் பெற்ற பெயர்.]

 ஆடை3āṭai, பெ. (n.)

   நெய்ம்மீன் (சித்திரை நாண்மீன்); (சூடா.);;   14th lunar asterism.

     [ஆடை2 → ஆடை

   3. வெண்மை நிறம் நாண் மீனுக்காயிற்று.]

 ஆடை4āṭai, பெ. (n.)

   மழைக்காலம்; rainy season.

     “ஆடையும் கோடையும் விளையும்” (பழ.);

     [அடை → ஆடை. ஒநோ. அடை = அடைமழை.]

 ஆடை5āṭai, பெ. (n.)

   ஆட்டம், கூத்து; dance.

     “ஆடையிலே எனைமணந்த மணவாளா” (அருட்யா);.

     [ஆட்டம் → ஆடை.]

ஆடை வீசுதல்

ஆடை வீசுதல்āṭaivīcudal, பெ. (n.)

   மகிழ்ச்சியின் அறிகுறியாக ஆடையை மேலே வீசல்; to wave a garment or a cloth as a sign of joy.

     “ஆர்த்தா ரணியாடை வீசினர்” (அரிச்.பு. சூழ்வி.82);.

     [ஆடை + வீசுதல். வீசுதல் = அசைத்தல். ஒநோ: கவரிவீசுதல்.]

ஆடைக்காதி

ஆடைக்காதிāṭaikkāti, பெ. (n.)

   1. கோங்கிலவு (சித்.அக.);; false tragacanth. (செ.அக.);.

   2 மலைப்பருத்தி; a kind of silk-cotton tree, a species of gossypium – Cochlospermum gossypium. It is so called from its usefulness for clothing. (சா.அக.);. (

     [ஒருகா. ஆடை + காய்த்தி. காய்த்தி → காதி. காய்த்தி = ஆடைக்குதவும் பருத்திக்காய்களையுடையது]

ஆடைக்குறி

 ஆடைக்குறிāṭaikkuṟi, பெ. (n.)

   சலவைத் தொழிலாளர் இடுந் துணிக்குறி; mark or a cloth in laundry.

     [ஆடை + குறி. குறி = அடையாளம்]

ஆடைச்சட்டி

 ஆடைச்சட்டிāṭaiccaṭṭi, பெ. (n.)

புளிகரைத்திட உதவுஞ் சிறிய சட்டி. (தஞ்சை மீனவ.); small pot for mixing tamarind.

     [ஆடை + சட்டி.]

ஆடைத்தயிர்

 ஆடைத்தயிர்āṭaittayir, பெ. (n.)

   மேலேடு எடுக்காத தயிர்; curd with cream. [ஆடை + தயிர். ஆடைபோல் மேற்படிந்திருக்கும் இயல்பு பற்றிப் பாலாடையும் தயிராடையும் ஆடை எனப் பெயர் பெற்றன.]

ஆடைநூல்

 ஆடைநூல்āṭainūl, பெ. (n.)

   மறைந்து போன தமிழ்நூல்; an extinct Tamil treatise on textile.

     [ஆடை + நூல்.]

ஆடைபடர்தல்

 ஆடைபடர்தல்āḍaibaḍartal, பெ. (n.)

   ஏடுண்டாதல்; forming of a coat or film, as in milk or in fermented liquor. (சா.அக);.

     [ஆடை + படர்தல். ஆடை = ஆடைபோன்று மெல்லிய ஏடு.]

ஆடைமண்

 ஆடைமண்āṭaimaṇ, பெ. (n.)

   உவர்மண்; fuller’s earth.

     [ஆடை + மண். ஆடைகளை வெளுப்பதற்காகச் சலவைத் தொழிலாளர் பயன்படுத்தும் உவர்மண்.]

ஆடைமேல்

 ஆடைமேல்āṭaimēl, பெ. (n.)

   கழுத்து (இ.வ.);; neck Loc);.

     [ஆடைமேல் = ஆடைக்கு மேலிருக்கும் கழுத்துப் பகுதி.]

ஆடையணிகலன்

 ஆடையணிகலன்āṭaiyaṇigalaṉ, பெ. (n.)

   உயர்ந்த அழகிய ஆடை அணிவகைகள்; clothes and jewels.

     [ஆடை + அணிகலன்.]

ஆடையவலன்

 ஆடையவலன்āṭaiyavalaṉ, பெ. (n.)

   பேராமுட்டி, ஒரு நறுமணச் செடி; fragrant sticky mallow. (சா.அக.);

     [ஆடை + அவலன் = ஆடையவலன். ஒருகா. ஆடைக்கு நறுமணமூட்டப் பயன்பட்ட நறுமணப் பொருள் தரும் செடி என்னும் காரணம் பற்றியதாகலாம்.]

ஆடையாபரணம்

 ஆடையாபரணம்āṭaiyāparaṇam, பெ. (n.)

ஆடையணிகலன் பார்க்க;see agai-y-anigalan.

     [ஆடை + ஆபரணம்.]

ஆடையும் கோடையும்

 ஆடையும் கோடையும்āṭaiyumāṭaiyum, பெ. (n.)

   காரும் கோடையும்; rainy and summer seasons.

     “ஆடையும் கோடையும் விளையும்” (உ.வ.);.

     [ஆடை = மழைக்காலம். .ஆடையும் + கோடையும்.]

சென்னைப் பல்கலைக் கழக அகரமுதலியில் இதனைக் கோடை எனக் குறித்திருப்பது பொருத்தமாகத் தோன்றவில்லை. இசகு பிசகு என்னும் சொல்லும் இவ்வாறே redupl. of பிசகு எனக் குறிக்கப்பட்டுள்ளது. இத்தகு இணைமொழிகள் முன் மொழியின் எதுகை நோக்கிய இணை அல்லது மோனை நோக்கிய இணையாக அமைவல்லது பின்மொழியின் இணையாக அமைவதில்லை. ‘சாடிக்கும் மூடிக்கும்’, ‘கன்று கயந்தலை’, ‘அரிசிதவசி’, ‘பாத்திரம் கீத்திரம்’ என்பவற்றை ஒப்புநோக்குக.

முன்மொழி பொருட்சிறப்புடையதாக அமைந்திருக்க, பின்மொழி பொருளுள்ளதாகவோ எதுகை மோனைக்காகச் செயற்கையாக இணைந்த வறுமொழியாகவோ சேர்ந்திருக்கும்.

இதன்படி ‘ஆடைக்குங்கோடைக்கும்’ என்னும்தொடரில் ‘ஆடை’ அடைமழைபெய்யும் காலத்தைக் குறித்த சொல்லாக வேண்டும்.

ஆடையெடுத்த தயிர்

 ஆடையெடுத்த தயிர்āḍaiyeḍuddadayir, பெ. (n.)

   ஏடு நீக்கிய தயிர். இதனால் வயிற்றுப்போக்கும் மேகமும் குணமாகும்; curdled milk free from cream.

     [ஆடை + எடுத்த + தயிர்.]

ஆடையெடுத்த பால்

 ஆடையெடுத்த பால்āḍaiyeḍuttapāl, பெ. (n.)

   குழந்தைகள், நோயாளிகள், வலி குன்றியோர் முதலியவர்களுக்கு எளிதில் செரிக்கும் வண்ணம் கொடுக்கப்படும் ஏடு நீக்கிய பால்; creamless milk given to children, patients, invalids etc. for promoting easy digestion – Skimmed milk (சா.அக.);.

     [ஆடை + எடுத்த + பால்.]

ஆடையொட்டி

ஆடையொட்டி1āṭaiyoṭṭi, பெ. (n.)

   1. ஒட்டுப்புல், பசுமையும் மாநிறமும் கலந்த தெளிநிறமுள்ள பூக்களையுடைய பூண்டு. இது அகன்று படரும்; plant found generally on the plains, sand-binder, round-leaved pupalia. It is an extensively spreading procumbent plant of a light brownish, green colour, branches several feet long. It is so called from its bristles clinging with tenacity to the clothes of passengers.

   2. பேய்ப்புல்; an amaranth

   3. ஒரு பூண்டு. இதன் பூ சிறிதாயும் மஞ்சளாயுமிருக்கும்; plant called paroquet buff;

 West Indian burweed. It produces small yellow flowers. (சா.அக.);.

ம. ஆடயொட்டி

     [ஆடை + ஒட்டி. ஆடையில் ஒட்டிக்கொள்ளும் இயல்பினது.]

 ஆடையொட்டி2āṭaiyoṭṭi, பெ. (n.)

   சீலைப்பேன்; lice in clothes.

மறுவ. வெள்ளைப்பேன்.

     [ஆடை + ஒட்டி. ஆடையில் ஒட்டிக்கொண்டு ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவும் பேன்.]

ஆடையொட்டி நீர்

 ஆடையொட்டி நீர்āṭaiyoṭṭinīr, பெ. (n.)

   விள்ளு (விந்து);; semen, from its sticking to the clothes on discharge. (சா.அக.);.

     [ஆடை + ஒட்டி + நீர். ஆடையிற்பட்டு நனைந்து ஒட்டிக்கொள்ளும் இயல்பினது.]

ஆடைவணிகன்

 ஆடைவணிகன்āṭaivaṇigaṉ, பெ. (n.)

   ஆடை விற்பனை செய்பவன்; dealer in clothe

ம. ஆடைவாணியன் (ஆடைவிற்பவன்);.

ஆடோபம்

ஆடோபம்1āṭōpam, பெ. (n.)

   1. செருக்கு திமிர்; pride, self-conceit.

   2. வீக்கம்; puffing, swelling.

     [Skt. ätópa → த. ஆடோபம்.]

 ஆடோபம்2āṭōpam, பெ. (n.)

   காற்று கொள்ளல்; being affected with gas or morbid air in the system (சா.அக.);.

ஆட்கடியன்

ஆட்கடியன்āḍkaḍiyaṉ, பெ. (n.)

   1. பாம்புவகை (குற்றால.தல.கண்டகசே.32);; a kind of snake (Tn);

   2. முதலை (இ.வ.);; crocodile (Loc.);.

     [ஆள் + கடியன். கடியன் = கடிக்கக் கூடியது, விழுங்கக்கூடியது.]

ஆட்காசு

 ஆட்காசுāṭkācu, பெ. (n.)

   ஆள் வடிவம் பொறித்த பழங்காலக் காசு; ancient coin, on which is stamped the figure of a man.

ம. ஆளக்காசு.

     [ஆள் + காசு]

ஆட்காட்டி

ஆட்காட்டிāṭkāṭṭi, பெ. (n.)

   1. சுட்டுவிரல்; fore finger as it points index finger.

   2. ஆட்காட்டிப் பறவை’ a birdknownas atkatti-k-kuruvi.

   3. வழிப்போக்கருக்கு வழிகாட்டும் அடையாளப் பலகை; sign post.

   4. ஆளை அடையாளம் காட்டுபவன்; one who identifies the correct person.

     “ஆட்காட்டி தெரியாமல் திருடப் போகிறவன் கெட்டிக்காரனோ, அவன் அறியாமல் அவன் காலடி பிடித்துப் போகிறவன் கெட்டிக் காரனோ?” (பழ.);

     [ஆள் + காட்டி]

ஆட்காட்டிக்குருவி

ஆட்காட்டிக்குருவிāṭkāṭṭikkuruvi, பெ. (n.)

   ஆள்காட்டிப் பறவை; red wattled lapwing Sandpiper. pewt. Sacrigrammus Indicusalias Lobivanellasgoerosis alias Charadrius atrogularis. It is so called from its screeching on the approach of a man at night.

     “ஆட்காட்டிப் பட்சி கடல் மேகம் போயொளிக்கும்” (பதார்த்த 892);.

மறுவ. ஆக்காட்டிக்குருவி, ஆட்காட்டிப்பட்சி. ஆள்காட்டுகின்றவள். ம. ஆள்காட்டி.

     [ஆள் + காட்டி – ஆட்காட்டி. இராக்காலத்தில் மாந்தர் வருகையைக் கூச்சலிட்டுக் காட்டிக் கொடுக்கும் இயல்புடைமையின் இப்பறவை ஆள்காட்டிக்குருவி எனப்பெயர் பெற்றது.]

ஆட்காட்டிப்பட்சி

 ஆட்காட்டிப்பட்சிāṭkāṭṭippaṭci, பெ. (n.)

   ஆட்காட்டிக் குருவி; bird. ஆட்காட்டிக்குருவி பார்க்க;see atkattik-kuruvi.

     [ஆள் + காட்டி + பட்சி. Skt. paksi. த. பட்சி.]

ஆட்கால்

 ஆட்கால்āṭkāl, பெ. (n.)

   சதுரங்கக் கட்டத்துள் காலாட்காயால் வெட்டக்கூடிய அறை; square where a piece is liable to be captured by a pawn. (chess);.

     [ஆள் + கால். ஆள் = காலாட்காய். கால் = உற்றவிடம்.]

ஆட்கூலி

 ஆட்கூலிāṭāli, பெ. (n.)

   ஒரு வேலையாளுக்குரிய கூலி; hire of a workman, wages of a labourer.

     [ஆள் + கூலி.]

ஆட்கொண்டான்

ஆட்கொண்டான்āṭkoṇṭāṉ, பெ. (n.)

   வில்லிபுத்தூராழ்வாரைப் புரந்து பாரதம் பாடுவித்த திருவக்க பாகையில் வாழ்ந்த சிற்றரசன் (பாரத, பதினாறாம். 90);; a chief who ruled in Vakka-pagaiand under whose patronage villiputhur—alvar composed the Tamil Bharatam, 14th c. வரபதி யாட்கொண்டான் பார்க்க;see Varapadi Atkondan.

     [ஆள் + கொண்டான்]

ஆட்கொல்லி

ஆட்கொல்லி1āṭkolli, பெ. (n.)

   1. கொலைஞன்; murderer, man-slayer.

   2. பணம், பொன், செல்வம்; money, gold, wealth as slaying men.

     “ஆட்கொல்லியென்பரிதை யாய்ந்திலையே” (அருட்பா, நெஞ்சறி.412);.

   3. கொலைகாரி; woman who murders.

ம. ஆள்கொல்லி.

     [ஆள் + கொல்லி.]

 ஆட்கொல்லி2āṭkolli, பெ. (n.)

   தில்லைமரம் (சித்.அக.);; blinding tree (செ.அக.);.

ஆட்கொல்லி விதை

 ஆட்கொல்லி விதைāṭkollividai, பெ. (n.)

தில்லை மரத்தின் விதை;seed of the tiger’s milk spurge tree. (சா. அக.);.

     [ஆள் + கொல்லி + விதை]

ஆட்கொள்(ளு)-தல்

ஆட்கொள்(ளு)-தல்āṭkoḷḷudal,    7 செ.குன்றாவி. (v.t.)

   1. ஆளாக ஏற்றுக்கொள்ளுதல்; take into one’s fold, admit into one’s good graces, as God does a faithful devotee.

     “என்னையுமாட்கொண்டருளி” (திருவாச. 10.4);.

   2. உருக்கொள்ளுதல்; to get the form of a man (கதி.தமி. அக.);.

     [ஆள் + கொள்ளுதல் – ஆட்கொள்ளுதல். ஆள் = வேலைக்காரன், அடிமை.]

ஆட்சி

ஆட்சிāṭci, பெ. (n.)

   1. ஆளுகை; rule, reign.

     “விண்ணு நின்னாட்சி யாக்கி” (கம்பரா. சூர்ப்ப.55);.

   2. உரிமை (பிங்.);; ownership, proprietorship, lordship.

   3. ஆன்றோர் வழக்கு; use, usage.

 esp. classical usage. இந்தச்சொல்ஆட்சியில் இல்லை (உ.வ.);.

   4. நுகர்வு, அனுபவம்; possession, enjoyment

     “ஆட்சியி லாவணத்தில்” (பெரியபு தடுத்தாட். 56);.

   5. மக்கள் அணையலாகாதெனக் கட்டளையிடப்பட்ட இடம் (திருக்கோ. 282. உரை);; sphere of one’s authority wherein an outsider may not intrude.

   6. (வான); கோள்நிலைகளுளொன்று;   7. அதிகாரம்; dominion, power.

   8. தலைமுறையாக வந்த உரிமை; inheritance, heritage.

   9. கிழமை, நாள் (நாமதீப.);; day of the week.

   10. அரசு; government. ஆட்சிமாறிவிட்டது. (உ.வ.);

   க. ஆளுவிகெ;   ஆள்கெ, ஆடளித;து. ஆடளிதெ Sinh. āņợuwa.

     [ஆள் + சி – ஆட்சி.]

ஆட்சிக்கொடை

 ஆட்சிக்கொடைāḍcikkoḍai, பெ. (n.)

   நாட்டாட்சி நல்குதல். உண்டி, பொன், ஊர்தி, விலங்கு, சின்னம், பெயர், நிலம், மகன், ஆட்சி என்னும் ஒன்பான் கொடைகளுள் ஒன்று; gift of reign of a country, one among the nine gifts namely food, gold, mode of conveyance, animal, insignia, name, land, son and the reign of the country.

ஆட்சித்தானம்

 ஆட்சித்தானம்āṭcittāṉam, பெ. (n.)

ஆட்சிவீடு பார்க்க;see aticividu.

ஆட்சிப்படு-தல்

ஆட்சிப்படு-தல்āḍcippaḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   1. நெடுநாளாய் ஒருவரின் ஆளுகையிலிருந்து உரிமையாதல்; to become one’s own by long possession.

   2. தற்கிழமையாதல் (கதி. அக.);; to be one’s possession.

     [ஆட்சி + படு]

ஆட்சிமொழி

 ஆட்சிமொழிāṭcimoḻi, பெ. (n.)

   அரசு பயன்படுத்தும் மொழி; official language.

ஆட்சியர்

 ஆட்சியர்āṭciyar, பெ. (n.)

   ஆளும் அதிகாரி; government official.

ஆட்சிராசி

 ஆட்சிராசிāṭcirāci, பெ. (n.)

     [ஆட்சி + ராசி. Skt. rasi, → த.ராசி.]

ஆட்சிவீடு

 ஆட்சிவீடுāṭcivīṭu, பெ. (n.)

ஆட்சுமை

 ஆட்சுமைāṭcumai, பெ. (n.)

   ஓராள் தூக்கும் சுமை; man’s load, coolie load.

     [ஆள் + சுமை ஆட்சுமை. சுமப்பது சுமை.]

ஆட்செய்-தல்

ஆட்செய்-தல்āṭceytal,    1 செ.கு.வி. (v.t.)

   1. தொண்டு செய்தல்; to serve, to pay homage to.

     “ஆட்செய் தாழிப்பிரானைச் சேர்ந்தவன்” (திவ். திருவாய். 4,10,11);.

   2. ஆளைப்போன்ற வடிவம் சமைத்தல்; to make an image of man.

ஆட்சேபகம்

ஆட்சேபகம்āṭcēpagam, பெ. (n.)

   1. இசிவு; spasm.

   2.வலிப்பு; convulsive contortion of the limbs.

   3. உதைத்துக் கொள்கை; a violent involuntary action of the muscle as in convulsion or fits.

த.வ. நடுக்கம்.

     [Skt. å-ksépav → த. ஆட்சேபகம்.]

ஆட்சேபகவாதம்

 ஆட்சேபகவாதம்āṭcēpagavātam, பெ. (n.)

   பிட்டம், தோள், கை முதலியவிடங்களில் நின்று நரம்புகளில் பரவி, உடம்பில் வலிப்பையும், நடுக்கத்தையும் உண்டாக்கும் ஒரு நோய்; a disease enraged vayu while country swiftly through the nerves in the hips, shoulders, arms etc develops fits tremor, vanishing or loss of consciousness etc.

த.வ. நடுக்கநோய்.

     [ஆட்சேபகம் + வாதம்.]

ஆட்சேபசமாதானம்

 ஆட்சேபசமாதானம்āṭsēpasamātāṉam, பெ. (n.)

   தடைவிடை; objection and its rejoinder.

     [Skt. å-ksépa + sam-a-dhåna → த. ஆட்சேபசமாதானம.]

ஆட்சேபணை

 ஆட்சேபணைāṭcēpaṇai, பெ. (n.)

   ஒன்றை ஏற்பதற்கு அல்லது ஒன்றைச் செய்வதற்கு ஒருவர் எழுப்பும் தடை மறுப்பு; objection.

த.வ. தடை

     [Skt. a-ksépana → த. ஆட்சேபணை.]

ஆட்சேபம்

ஆட்சேபம்āṭcēpam, பெ. (n.)

   1. மறுப்பு, தடை; objection.

நீங்கள் இங்கு தங்குவதற்கு எந்த ஆட்சேபமும் இல்லை.

     “பாற்கவன்றனைக் குமாரி யாட்சேபம் பகர்ந்த வாறும்” (மச்சபு அனுக்கிர. 9.);

   2. எதிர்ப்பு, கண்டனம்; Protest.

சுற்றுச்சூழல் அமைப்பு ஆட்சேபக் குரல் எழுப்பியது.

   3. குற்றம்; fault, flaw.

த.வ. மறுப்பு.

     [Skt. a-ksepa → ஆக்ஷேபம் → த. ஆட்சேபம்.]

ஆட்சேபாலங்காரம்

 ஆட்சேபாலங்காரம்āṭcēpālaṅgāram, பெ. (n.)

   ஒருவகை அணியிலக்கணம்; figure of speech in which a statement is withdrawn as if correcting oneself on second thought.

     [Skt. a-ksepa + alam-kära → த. ஆட்சேபாலங்காரம்.]

ஆட்சேபி-த்தல்

ஆட்சேபி-த்தல்āṭcēpittal,    4 செ.குன்றாவி.(v.t.)

   1. தடை செய்தல், தடை நிகழ்த்துதல்; to object, to challenge.

   2. ஒரு கூற்றை எதிர்த்தல் அல்லது மறுப்புக்கூறுதல்; protest against object.

     ‘தலைவரின் பேச்சை யாரும் ஆட்சேபிக்க வில்லை’

     [Skt ā-ksēpa → த. ஆட்சேபி-த்தல்.]

ஆட்டகம்

ஆட்டகம்āṭṭagam, பெ. (n.)

   1. நீராடுமிடம் (திரு மஞ்சனசாலை);; bathroom.

     “ஆட்டகத்திலானைந் துகந்தார் போலும்” (தேவா.720,4);

தெ. ஆடடிக்கிய.

     [ஆடு + அகம் – ஆட்டகம் ஆடுதல் = நீராடுதல். அகம்=மனை, வீடு, வீட்டின் பகுதி.]

ஆட்டக்கச்சேரி

ஆட்டக்கச்சேரிāṭṭakkaccēri, பெ. (n.)

   1. சதிர்; nautch.

   2. ஆட்டம் நடைபெறும் இடம்; place of performance.

     [ஆட்டம் + கச்சேரி = ஆட்டக்கச்சேரி] கச்சேரி பார்க்க;see kaccēri.

ஆட்டக்கதை

ஆட்டக்கதைāṭṭakkadai, பெ. (n.)

   1. மலையாளத்தில் ‘கதகளி’ என்னும் பெயரில் நடைபெற்றுவரும் ஒரு பழைய ஆட்டவகை; a peculiar kind of classical dance-drama in Malayalam, known as Kathakali.

   2. தெருக்கூத்து அல்லது நாடகக்கதை; story of a drama of street drama.

ம. ஆட்டக்கத (கதகளி);.

ஆட்டக்கன்னி

 ஆட்டக்கன்னிāṭṭakkaṉṉi, பெ. (n.)

   ஆண்டுதோறும் கன்றீனும் ஆ (பசு); (சேர.நா);; a cow delivering a calf every year (Kera.);.

ம. ஆட்டக் கன்னி

     [ஆண்டு – ஆட்டை + கன்னி – ஆட்டைக்கன்னி. கன்னி = கன்றீனுவது. கன்னுவது கன்னி;

     ‘இ’ எழுவாய் குறித்த ஈறு]

ஆட்டக்கல்லிக்காய்

 ஆட்டக்கல்லிக்காய்āṭṭakkallikkāy, பெ. (n.)

   ஈரி தழ்ச்சிப்பி (சேர. நா.);; a kind of large oyster (Kera);.

     [ஆட்டம் + கல்லி + காய்]

ஆட்டக்களம்

ஆட்டக்களம்āṭṭakkaḷam, பெ. (n.)

   1. நாட்டியம் அல்லது நாடகம் நடைபெறும் இடம்; stage for dance or drama.

   2 விளையாடுமிடம்; play-ground.

   3. மலையாளத்தில் நடைபெறும் ஒணத்தள்ளு என்னும் விளையாட்டு. fencing-matches or sham

 combats held in connection with ‘Onam’ festival in former days

   ம. ஆட்டக்களம்;தெ. ஆடபாக

ஆட்டக்கவடன்

 ஆட்டக்கவடன்āḍḍakkavaḍaṉ, பெ. (n.)

   திறமையாக நடித்து ஏமாற்றுபவன்; one who cheats acting very cleverly. அவன் ஆட்டக்கவடன், அவனை நம்பாதே (உ.வ.);.

க. ஆட்டகபட.

     [ஆட்டம் + கவடன் = ஆட்டக்கவடன். கவடு = கவைத்த அல்லது பிரிவுற்ற, இருவேறு இயல்பு கவடன் = உள்ளொன்று வைத்துப் புறத்தொன்று பேசுபவன். கவடன் – Skt. kapata.]

ஆட்டக்காய்

ஆட்டக்காய்āṭṭakkāy, பெ. (n.)

   1. சதுரக்கட்டம், தாயக்கட்டம் போன்ற விளையாட்டுகளில் பயன்படுத்தப்படும் காய்; piece used in games like chess.

   2. ஆட்டக்காயைப் போல் பிறர் ஏவியபடி செயற்படும் கையாள்; one who is a fool in the hands of a manipulator, pawn.

க. ஆட்டகாயி.

     [ஆட்டம் + காய்]

ஆட்டக்காரன்

ஆட்டக்காரன்āṭṭakkāraṉ, பெ. (n.)

   1. விளையாட்டுக்காரன்; player.

   2. வேடிக்கை செய்பவன்; funny fellow

   3. தெருக் கூத்தில் நடிப்பவன்; actor in the street play.

   ம. ஆட்டக்காரன் க.ஆட்டக, ஆட்டகார ஆட்டங்குளி;   தெ. ஆடகாடு;   து. ஆடதாயெ;கொலா. ஆட்டகார்

     [ஆட்டம் + காரன் = ஆட்டக்காரன்]

ஆட்டக்காரி

ஆட்டக்காரிāṭṭakkāri, பெ. (n.)

   1. ஆட்டம் ஆடுபவள்; woman player.

   2. நடிப்பவள்; actress.

   க. ஆட்டகாரி;தெ. ஆட்டகார்த்தி.

     [ஆட்டம் + காரி]

ஆட்டக்கூட்டம்

ஆட்டக்கூட்டம்āṭṭakāṭṭam, பெ. (n.)

   1. நாட்டியமாடுவோர் குழு; band of dancers, dance party.

   2. நாடகக் குழு; team of dramatists.

   3. விளையாட்டுக் குழு; team of players.

க. ஆட்டகூட்ட.

     [ஆட்டம் + கூட்டம்.]

ஆட்டக்கை

 ஆட்டக்கைāṭṭakkai, பெ. (n.)

   மலையாளத்துக் கதகளியாட்டத்தில் இடம் பெறும் ஒரு கை முத்திரை; a hand-pose in Kathakali play (in Kerala.);

ம. ஆட்டக்கை

     [ஆட்டம் + கை.]

ஆட்டக்கொட்டில்

ஆட்டக்கொட்டில்āṭṭakkoṭṭil, பெ. (n.)

   1. நாடக அரங்கம்; theatre

   2. மலையாளத்தில் கதகளியாட்டம் நடைபெறும் அரங்கம்; hall for the performance of Kathakali or dance.

     [ஆட்டம் + கொட்டில்.]

ஆட்டங் காணு-தல்

ஆட்டங் காணு-தல்āṭṭaṅgāṇudal,    12 செ.கு.வி. (v.i.)

   1. அசைவுறுதல்; to be shaky. பல் ஆட்டங் கண்டு விட்டது. (உ.வ.);

   2. தீங்கு நேர்தல், ஊறு நேர்தல்; to become harmful, decay. பதவி ஆட்டங் கண்டு விடும் (உ.வ);

   3. விளையாட்டு அல்லது நாடகம் காணுதல்; to see a match or drama. 3ஆம் ஆட்டங் கண்டேன். (உ.வ.);

     [ஆட்டம் + காணுதல் = ஆட்டங்காணுதல். ஆட்டம் = அசைவு, நிலைகேடு. அசைந்து ஒடியாடும் விளையாட்டு, ஒசிந்தாடும் ஆடல் தழுவிய நாடகம்.]

ஆட்டங்கட்டு

ஆட்டங்கட்டு1āṭṭaṅgaṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. நடித்து ஏமாற்றுதல்; to cheat by clever means,

   2. நாடகத்தில் வேடம் புனைதல்; to enact a part in a drama. அவன் சிவனாக ஆட்டங்கட்டுகிறான். (உ.வ.);.

க. ஆட்ட கட்டு

     [ஆட்டம் + கட்டு.]

ஆட்டங்காட்டு

ஆட்டங்காட்டு2āṭṭaṅgāṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. அலையச்செய்தல்; to make one wander here and there என்னை ஏன் இப்படி ஆட்டங்காட்டுகிறாய்? (உ.வ.);

   2. மிகவும் வருந்தச்செய்தல்; to annoy some one. அவனை அளவுக்கு மீறி ஆட்டங்காட்டி விட்டான் (உ.வ.);

   3. ஏய்த்தல், ஏமாற்றுதல்; to cheat. எனக்குப் பணம் தராமல் ஆட்டங்காட்டாதே (உ.வ.);.

   4. காலம் நீட்டித்தல்; to delay. இன்று நாளையென்று ஆட்டங்காட்டுகிறான் (உ.வ.);.

     [ஆட்டம் = அசைவு, வருத்தம், ஒத்திருத்தலைக் காட்டுதல் (ஏய்த்தல்);. ஆட்டம் + காட்டுதல்;

காட்டுதல் = விளையச்செய்தல், உண்டாக்கல். ஆட்டம்1, ஆட்டம்2 பார்க்க;see āttam1, ātam2]

ஆட்டங்காய்

ஆட்டங்காய்1āṭṭaṅgāy, பெ. (n.)

   உருண்டைவடிவும் கசப்புமுள்ள காட்டு வெள்ளரிக்காய்; fruit of cur. cumas colocynth.

ம. ஆட்டங்காய்.

ஆண்டங்காய் பார்க்க;see āndańkāy.

     [ஆட்டம் + காய்]

ஆட்டங்கால்

 ஆட்டங்கால்āṭṭaṅgāl, பெ. (n.)

   வெள்ளைப்பூண்டு; garlic-Allium sativum,

ஆட்டங்குளி

 ஆட்டங்குளிāṭṭaṅguḷi, பெ. (n.)

ஆட்டங்கொளி பார்க்க;see attangoli.

     [ஆட்டம் + குளி]

ஆட்டங்கொளி

 ஆட்டங்கொளிāṭṭaṅgoḷi, பெ. (n.)

   எப்பொழுதும் விளையாடிக் கொண்டிருக்கும் இயல்புள்ளவன்; boy or man of playful nature.

க. ஆட்டங்குளி, ஆட்டகுளி.

     [ஆட்டம் + கொளி]

ஆட்டங்கொளித்தனம்

 ஆட்டங்கொளித்தனம்āṭṭaṅgoḷittaṉam, பெ. (n.)

   எப்பொழுதும் விளையாட்டிலேயே பொழுது போக்கும் இயல்பு; playful nature.

க. ஆட்டகுளிதன

     [ஆட்டம் + கொளி + தனம்]

ஆட்டங்கொள்-தல்

ஆட்டங்கொள்-தல்āṭṭaṅgoḷtal,    7 செ.குன்றாவி. (v.t.)

   1. அசைவுறல்; move, shake

   2. நிலைத் தன்மையிழத்தல்; to lose stability.

க. ஆட்டங்கொள்.

     [ஆட்டம் + கொள்]

ஆட்டதாளம்

 ஆட்டதாளம்āṭṭatāḷam, பெ. (n.)

   தெருக்கூத்தில் அல்லது நாட்டியம் நாடகம் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் தாளம்; a species of rhythm

   க. ஆட்டதாள;தெ. ஆடவெலதி

     [ஆட்டம் + தாளம்]

ஆட்டத்துவெளி

ஆட்டத்துவெளிāṭṭattuveḷi, பெ. (n.)

   குதிரைகளை ஒடவிடுகின்ற பரந்த வெளி, வையாளி விடுகிற வெளி (ஈடு. 7,3,5);; race course, a plain where horses are galloped.

     [ஆட்டம் + அத்து + வெளி. ஆட்டம் = ஆடவிடுதல், ஒடவிடுதல். அத்து – சாரியை. வெளி = திறந்த இடம்.]

ஆட்டனத்தி

 ஆட்டனத்திāṭṭaṉatti, பெ. (n.)

   சேர இளவரசன்; Chera prince.

ஆட்டபாட்டம்

ஆட்டபாட்டம்āṭṭapāṭṭam, பெ. (n.)

   1. ஆடல் பாடல் (தமிழறி. 57);. dancing and singing.

   2. ஆர்ப்பாட்டம்; foppishness. அவன் ஆட்டபாட்டமெல்லாம் அடங்கி விட்டது. (உ.வ.);.

   3. பொழுது போக்கு; pastime.

க. ஆட்டபாட

     [ஆட்டம் + பாட்டு + அம்]

ஆட்டப்பாட்டு

 ஆட்டப்பாட்டுāṭṭappāṭṭu, பெ. (n.)

   ஆட்டத்திற்குரிய பாட்டு; poem composed for a dance or drama.

ம. ஆட்டப்பாட்டு.

     [ஆட்டம் + பாட்டு = ஆட்டப்பாட்டு.]

ஆட்டப்பெட்டி

 ஆட்டப்பெட்டிāṭṭappeṭṭi, பெ. (n.)

   தெருக்கூத்து நடத்துவோர் தம் பொருள்களை வைத்துக் கொள்ளும் பெட்டி; big box for keeping the dress and other accessories of street drama (terukkuthu); actors.

ம. ஆட்டப்பெட்டி

     [ஆட்டம் + பெட்டி]

ஆட்டமடங்கு-தல்

ஆட்டமடங்கு-தல்āḍḍamaḍaṅgudal,    21 செ.கு.வி. (v.i.)

   திமிர் அடங்குதல், செருக்கடங்குதல்; to get pride and arrogance become subdued.

     “ஆட்டமும் கூத்தும் அடங்கிற்று அத்தோடே” (பழ.);.

ஆட்டமடித்தல்

ஆட்டமடித்தல்1āḍḍamaḍittal,    4. செ.கு.வி. (v.i.)

   1. கொட்டமடித்தல், ஆரவாரம் செய்தல்; to shout, make a noise, to show pomposity.

   2. விளையாட்டில் வெல்லுதல்; to win a game.

 ஆட்டமடித்தல்2āḍḍamaḍittal, பெ. (n.)

   கிட்டிப்புள் விளையாட்டு (வின்.);; out-door game played by boys, in which the ‘pus.’ or a stout little stick is hit off to a great distance by the kitti or longer stick.

     [ஆட்டம் + அடித்தல் – ஆட்டமடித்தல். அடித்து விளையாடும் ஆட்டம். அடித்தலாட்டம் = ஆட்டமடித்தல் என முன்பின்னாக மாறியமைந்த சொற் புணர்ப்பு.]

ஆட்டமாடு

ஆட்டமாடு1āṭṭamāṭudal,    5. செ.கு.வி. (v.i.)

   1. விளையாட்டாகப் பேசுதல்; to make fun.

   2. விளையாடுதல்; to play.

   3 ஏமாற்றுதல்; to cheat.

     [ஆட்டம் = விளையாட்டு, விளையாட்டான செயல்கள். ஆட்டம் + ஆடுதல் – ஆட்டமாடுதல்.]

 ஆட்டமாடு2āṭṭamāṭudal,    5. செ.குன்றாவி. (v.t.)

   1. ஒரு விளையாட்டை ஆடுதல்; to play a particular game.

   2. ஒரு நாடகம் ஆடுதல்; to enact a drama.

   க. ஆட்டவாடு;பட ஆட்ட ஆடு

ஆட்டமாட்டு-தல்

ஆட்டமாட்டு-தல்āṭṭamāṭṭudal,    5.செ.கு.வி. (v.i.)

   1. ஆடுமாறு செய்தல்; to make one dance.

   2. சொன்னபடி செய்வித்தல்; to make one act as directed.

க. ஆட்டமாடிசு.

ஆட்டமாய்

ஆட்டமாய்āṭṭamāy,    இடை (part.) போல; as, like. குதிரையாட்டமாய் ஓடினான் (உ.வ.).

     [ஆட்டம் + ஆய். ஆட்டம் = போல;

ஆய் கு.வி.எ. ஈறு. ஆட்டம்2 பார்க்க;see āttam2.]

ஆட்டமுரி

 ஆட்டமுரிāṭṭamuri, பெ. (n.)

   வெள்ளாட்டு மூத்திரம்; goat’s urine.

     [ஆட்டு + அமுரி.]

ஆட்டமெடு-த்தல்

ஆட்டமெடு-த்தல்āḍḍameḍuttal,    4. செ. கு. வி. (v.i.)

   1. நடுங்குதல்; to shiver. குளிரால் உடம்பெல்லாம் ஆட்டமெடுத்துவிட்டது. (உ.வ.);.

   2. விளையாட்டில் வெல்லுதல்; to win a game. இரண்டாட்டமும் அவர்களே எடுத்துவிட்டார்கள் (உ.வ.);.

   3. வழி தேடுதல், வழிவகை மேற்கொளல்; to take a step, adopt a measure. (செ.அக.);.

     [ஆட்டம் + எடு = ஆட்டமெடு.]

ஆட்டம்

ஆட்டம்1āṭṭam, பெ. (n.)

   1. அசைவு; motion, vibration, rocking, swinging, rolling, pitching, as of a ship.

   2. விளையாட்டு; play, sport, game.

     “தவப்பகடியாட்டங் காண்” (ஒழிவி. யோக.4);.

   3. விளையாட்டில் தொடங்குமுறை; one’s turn in a game.

   4. கூத்தாட்டு; dance. அங்கே ஆட்டமும் பாட்டமுமாயிருக்கிறது (உ.வ.);.

   5. அதிகாரம்; influence, power. ஊர் முழுவதும் அந்த அதிகாரியின் ஆட்டமாயிருக்கிறது (உ.வ.);.

   6. அங்குமிங்கும் திரிதல்; moving about, going here and there.

     “அஞ்சன மேனியை யாட்டங் காணேன்” (திவ். திருவாய்.10,3,3);.

   7. பேய் கொண்டாற்போல் குதித்தல்; behaving like the one possessed. அங்கே போகவேண்டுமென்று என்ன ஆட்டம் ஆடினாள் (உ.வ.);.

   8. நடுக்கம்; shaking. முதியவருக்குத் தலையாட்டங் கண்டுவிட்டது. (உ.வ.);

   9. நடிப்பு; action. அந்த ஆட்டமெல்லாம் இங்கே செல்லாது (உ.வ.);.

   10. நாடகம்; drama. ஆட்டம் பார்க்கப் போனார்கள். (உ.வ.);.

   11. தெருக்கூத்து street drama. அந்த ஊரில் இன்று இரவு ஆட்டம் நடக்கிறது. (உ.வ.);.

   12. நாட்டியம்; dance. அந்தப் பெண்ணின் ஆட்டம் நன்றாக இருந்தது.

     “ஆட்டமும் பாட்டும் அரை நாழிகை, அவளைச் சிங்காரிக்க ஆறு நாழிகை” (பழ);.

   13. விளையாட்டு போல் ஏமாற்றல்; cheating as it in a play of hide and seek. ஐந்து நாளாய்ப் பணம் தருகிறேன் என்று ஆட்டங்காட்டுகிறான்.

   14. போட்டி விளையாட்டு; game. இரண்டு ஆட்டம் எடுத்து விட்டான் (உ.வ.);.

   15. அசைத்தல்; causing to move. அவன் விரலாட்ட முடியாது, அவன் வாலாட்ட முடியாது (உ.வ.);.

   16. ஏமாற்றுதல், ஏய்த்தல்; fraud:

     “ஆர்க்குத் தெரியுமவளாட்டமெலாம்” (தெய்வச்.விறலிவிடு.423);.

   17. முயற்சி; energy, vigour(w);. (கதி.தமி.அக);.

   18. அலைவு (கதி.தமி.அக.);; shaking, waving, trouble, distress.

   19. கவறாட்டம், சூதாட்டம்; gambling.

   20. ஆற்றல், வலிமை; power. அவன் ஆட்டம் அடங்கி விட்டது. (உ.வ.);.

   21. அதிர்ச்சி; vibration, shock (சா.அக.);.

   22. தலையாட்டம்; vacillation of the head through old age;

 rolling of the head through restlessness or other diseases.

   23. திரைப்படக்காட்சி; film show

   ம. ஆட்டம்;   க. ஆட. ஆடு;   தெ. ஆட;   பட., கச.ஆட;   கூ. ஆட;   கொலா. ஆட்;   நா. ஆர்;   குட. ஆட்;   துட. ஒட்;கோத. ஆழ்.

     [ஆடு → ஆட்டம். ஆடுதல் → அசைதல். ஆடு + அம் = ஆட்டம். அம் = சொல்லாக்க ஈறு.]

 ஆட்டம்2āṭṭam, இடை. (ind.)

   1. தன்மை; likeness (சுதி.அக.);.

   2. போன்றிருத்தல், போல (ஓர் உவம உருபு);; shape, in limitation (W.);. முகம் குரங்காட்டம் இருக்கிறது (உ.வ.);.

     [அண் → அட்டு = நெருங்கியிருத்தல், ஒத்திருத்தல், ஒத்திருத்தல் தன்மை அட்டு → ஆட்டு → ஆட்டம் = போன்றிருத்தல்.]

 ஆட்டம்3āṭṭam,    இடை. (part.) ஒரு சொல்லாக்க ஈறு; formative of vbl. n as in போராட்டம், மல்லாட்டம், மாறாட்டம், etc.

தெ. ஆட, அட, அடமு.

     [ஆடு + அம் = ஆட்டம். ஆடுதல் = செய்தல். ஆட்டம் = செயற்பாங்கு, செயல்தன்மை. போர் + ஆட்டம் போராட்டம், மல் + ஆட்டம் – மல்லாட்டம் என முதனிலைப் பொருள் குறித்த தொழிற்பெயரீறாகவும் பண்புப் பெயரீறாகவும் ‘ஆட்டம்’ வழங்கிவருகிறது.]

ஆட்டம் போடு-தல்

ஆட்டம் போடு-தல்āṭṭambōṭudal,    16 செ.கு.வி. (v.i.)

   1. கொட்டமடித்தல்; to display pleasure by way of shouting and behaving indecently. என்னமாய் ஆட்டம் போடுகிறார்கள். (உ.வ.);

   2. கொடுஞ் செயல் புரிதல்; to display arrogance. ‘ஆட்டம் போட்டு

அடங்கி விட்டான். (உ.வ.);.

   3. தெருக்கூத்து நடத்துதல்; to conduct a street drama ‘பழையனூரில் நாளைக்கு ஆட்டம் போடுகிறார்கள்’ (உ.வ.);.

   4. சிறுவர்கள் விளையாடி ஆரவாரம் செய்தல்; children making a noise while playing. அப்பா! இந்தப் பிள்ளைகள் என்னமாய் ஆட்டம் போடுகிறார்கள் (உ.வ.);

ஆட்டம்1 பார்க்க. see ānam1

     [ஆட்டம் + போடு]

ஆட்டலாங்கொடி

 ஆட்டலாங்கொடிāḍḍalāṅgoḍi, பெ. (n.)

   சோமலதைக் கொடி; soma plant (unidentified); (சா.அக.);.

மறுவ. ஆட்டாங்கொடி

ஆட்டலை-த்தல்

ஆட்டலை-த்தல்āṭṭalaittal,    18 செ.குன்றாவி. (v.t.)

   பகைவரைப் பின் தொடர்ந்து சென்று பற்றி அலைத்தல், துன்புறுத்தல்; to pursue the enemy, catch and totment him.

க. ஆட்டலெ

     [அட்டு + அலைத்தல் – அட்டலைத்தல் → ஆட்டலைத்தல். அட்டலைத்தல் பார்க்க;see tialaittal..]

ஆட்டல்

ஆட்டல்āṭṭal, பெ. (n.)

   1. அசைத்தல்; moving.

   2. அரைத்தல்; grinding. மாவாட்டல் முடிந்து விட்டது (உ.வ.);.

   3. கூத்தாட்டுதல்; making one dance.

   4. நீராட்டுதல்; making one bath.

     [ஆடு(த.வி.); → ஆட்டு(பி.வி.);.ஆட்டு+அல்=ஆட்டல். அல்(தொ.பெ.ஈறு);.] ஆட்டு-தல் பார்க்க;see atu_.

ஆட்டவிளக்கு

 ஆட்டவிளக்குāṭṭaviḷakku, பெ. (n.)

   தெருக்கூத்தில் அல்லது இராக்கால விளையாட்டுகளில் முன்னால் வைக்கப்படும் விளக்கு; big bronze of earthern lamp placed at the edge of the stage in street plays or nocturnal games.

ம. ஆட்ட விளக்கு

     [ஆட்டம் + விளக்கு]

ஆட்டவை-த்தல்

ஆட்டவை-த்தல்āṭṭavaittal,    4 செ.கு.வி. (v.i.)

   பின்னாலிருந்து தூண்டிவிட்டுச் செயற்படுத்துதல்; to make one act according to the will of another who forces from behind.

   2. படாதபாடு படுத்துவித்தல்; to make one

 undergo untoward sufferings. அவனை ஆட்டவைக்கிறேனா இல்லையா பார் (உ.வ);.

ஆடு (த.வி); → ஆட்டு (பி.வி); ஆட்ட (வி.எ.);.

ஆட்டாங்கள்ளிi

 ஆட்டாங்கள்ளிiāṭṭāṅgaḷḷi, பெ. (n.)

   திருகுகள்ளிச்செடி (மலை.);; twisted square spurge- Eupherbia tootbs alias E. tiruculli. (சா.அக.);.

     [ஆடு = அசைவு, வளைவு ஆட்டாங்கள்ளி = வளைந்து திருகிய கள்ளி.]

ஆட்டாங்கொடி

 ஆட்டாங்கொடிāḍḍāṅgoḍi, பெ. (n.)

   சோமலதைக் கொடி; soma plant. ஆட்டலாங்கொடி பார்க்க;see ātsalāňkogi.

ஆட்டாங்கொறுக்கு

 ஆட்டாங்கொறுக்குāṭṭāṅgoṟukku, பெ. (n.)

   மலைத் துவரை (சித்.அக.);; hilldhal-cytisuscajan (சா.அக.);.

ஆட்டாங்கோரை

 ஆட்டாங்கோரைāṭṭāṅārai, பெ. (n.)

சிறுகோரைப்புல் a small variety of Körai grass, a sedge – Cyperus (genus); (சா.அக.);.

ஆட்டாண்டு

ஆட்டாண்டுāṭṭāṇṭu, பெ. (n.)

   ஒவ்வோராண்டு; every year. ‘ஆட்டாண்டு தோறும் அளக்கக் கடவ நெல்லு’ (S.I.I.ii.170);.

     [ஆண்டு + ஆண்டு = ஆண்டாண்டு → ஆட்டாண்டு (வலித்தல்திரிபு);. ஆண்டாண்டு பார்க்க;see ingapu.]

ஆட்டாம் புழுக்கை

 ஆட்டாம் புழுக்கைāṭṭāmbuḻukkai, பெ. (n.)

   ஆட்டின் சாணம்; sheep’s ordure or dung.

     [ஆடு + ஆம் ஆட்டாம் (ஆட்டினுடைய); புழுக்கை (துண்டுபட்ட சாணம்);. புள் = பிளத்தல், துண்டுபடல். புள் → புளு → புழு. புழு + கை – புழுக்கை. ‘கை’ சி.பொ.மு.]

ஆட்டாம்பிழுக்கை

 ஆட்டாம்பிழுக்கைāṭṭāmbiḻukkai, பெ. (n.)

   ஆட்டின் சாணம்; sheep’s ordure or dung.

     [ஆடு + ஆம் = ஆட்டாம் + பிழுக்கை. ஆட்டாம் புழுக்கை பார்க்க;see ātām-pulukkai.]

ஆட்டாயன்

 ஆட்டாயன்āṭṭāyaṉ, பெ. (n.)

   ஆடு மேய்ப்பவன்; shepherd.

ஆட்டாலை

ஆட்டாலைāṭṭālai, பெ. (n.)

   1. எண்ணெய் ஆட்டும் ஆலை, செக்கு, oil press.

   2. ஆடுகளுக்காகப் போடப்படும் கொட்டகை; sheep-fold. (குமரி);.

ம. ஆட்டால.

ஆட்டாளி

ஆட்டாளி1āṭṭāḷi, பெ. (n.)

   ஆட்டத்தில் வல்லவன்; one who is good at a play.

க. ஆட்டாளி.

 ஆட்டாளி2āṭṭāḷi, பெ. (n.)

   ஆள்பவன், ஒரு பணியைச் செவ்வனே மேற்பார்ப்பவன், (நிருவாகி);; person having ability to accomplish or to shoulder are responsibility. உங்கள் காரியங்களுக்கெல்லாம் நான் ஆட்டாளியா? (உ.வ.);

   க. ஆடளிதகார;   தெ. ஆடவண்ணு;து. ஆடளி தெதூபிநாயெ.

     [ஆடு (த.வி.); → ஆட்டு (பி.வி.);. ஆட்டுதல் = செய்வித்தல், மேற்பார்த்தல். ஆட்டு + ஆள் + இ = ஆட்டாளி. ஒ. நோ. பாடு → பாட்டு + ஆள் + இ = பாட்டாளி. ‘இ’ தன்மை குறித்த உடைமை அல்லது உடையவன் ஈறு.]

ஆட்டாள்

ஆட்டாள்1āṭṭāḷ, பெ. (n.)

   ஆடுமேய்ப்பவன்;   ஆட்டிடையன்; man employed to attend to the sheep in the pasture, shepherd. ஆட்டாளுக்கு ஒரு மோட்டாள், அந்த மோட்டாளுக்கு ஒரு சீட்டாள் (உ.வ.);.

ம. ஆட்டாள்

     [ஆடு + ஆள் – ஆட்டாள். ஆட்டைக் காத்து மேய்த்துவரும் ஆள்.]

 ஆட்டாள்2āṭṭāḷ, பெ. (n.)

   ஆற்றலுள்ளவன், திறமையுள்ளவன்; an able man, expert.

   ம. ஆட்டாளு;க. ஆடாளு.

ஆட்டி

ஆட்டி1āṭṭi, பெ. (n.)

   1. பெண் (திவா.);; woman, lady. மணவாட்டி (உ.வ.);

   2. மனைவி; wite.

     “ஆட்டியு மகவுந் தானு மதற்குடம் பட்டு” (சேதுபு வேதா. 39);. பெண்டாட்டி (உ.வ.);.

   3. தலைவி (பிங்.);; lady, woman of rank. திருவாட்டி (உ.வ.);.

   க.ஆடங்க;தெ.ஆலு(மனைவி);,ஆட்டடி, ஆட்டி(பெண்); து. ஆடெ.

 ஆட்டி2āṭṭi, பெ. (n.)

   1. ஆட்டுபவன், ஆடச்செய்பவன்; one who makes the cobra or the monkey dance, used only in compounds as பாம்பாட்டி, குரங்காட்டி (உ.வ.);.

ம. ஆட்டி.

 ஆட்டி3āṭṭi,    இடை. (part.) பெண்பாலீறு; fem.suff.of nouns. மூதாட்டி, அடியாட்டி (உ.வ.). கம்பாட்டி (வீரசோ. தத்தித 5).

 ஆட்டி4āṭṭi,    வி.எ. (adv.) அரைத்து; ground, past tense of ஆட்டு

     [ஆட்டு + இ + ஆட்டி. ‘இ’ இறந்தகாலங் காட்டும் வி.எ.ஈறு.]

ஆட்டிடைச்சி

 ஆட்டிடைச்சிāḍḍiḍaicci, பெ. (n.)

   ஆய்ச்சி; shephered woman

ஆட்டிடையன்

 ஆட்டிடையன்āḍḍiḍaiyaṉ, பெ. (n.)

   ஆடுமேய்க்கும் இடையன்; shepherd.

     [ஆடு + இடையன் = ஆட்டிடையன்.]

ம.ஆட்டிடயன்

ஆட்டினி

 ஆட்டினிāṭṭiṉi, பெ. (n.)

   காட்டுப் பூவரசு (சித்.அக.);; false fern tree.

     [அத்து → அட்டு → அட்டினி → ஆட்டினி]

ஆட்டியவஞ்சம்

 ஆட்டியவஞ்சம்āṭṭiyavañjam, பெ. (n.)

   புளி; tamarind Tamarindus indica. (சா.அக.);.

     [ஒருகா. ஆண்டு → ஆட்டை → ஆட்டிய → வஞ்சம். வெஞ்சனம் → வஞ்சனம் (உண்பொருள்);. ஆண்டுக்கொருமுறை கிடைக்கும் உண்பொருள்.]

ஆட்டியவாதம்

 ஆட்டியவாதம்āṭṭiyavātam, பெ. (n.)

   ஒருவகை ஊதை (வாத); நோய் (கதி.அக);; a kind of disease.

     [ஆட்டியவூதை பார்க்க;see ātsiyavūdai.]

ஆட்டியவூதை

 ஆட்டியவூதைāṭṭiyavūtai, பெ. (n.)

   உடலுழைப்பில்லாமலே உயர்ந்த உணவு வகைகளை உண்டுறங்குவதனால் ஏற்படுவதும், உடம்பில் திமிர், கனம், வலி, இளைப்பு, வீக்கம், மலச்சிக்கல், கால் வலி முதலிய கணங்களையுண்டாக்குவதுமாகிய ஓர் ஊதை (வாத); நோய் (சா.அக.);; rheumatismgenerally due to the deranged (Vayu and kapham); gas and phlem arising from consuming rich food and lack of sufficient exercise.

     [ஆட்டு → ஆட்டிய (வருத்துகிற); + ஊதை.]

ஆட்டிறைச்சி

 ஆட்டிறைச்சிāṭṭiṟaicci, பெ. (n.)

   ஆட்டின்புலால்; mutton.

ம. ஆட்டிறைச்சி

     [ஆட்டு + இறைச்சி = ஆட்டிறைச்சி.]

ஆட்டீற்று

 ஆட்டீற்றுāṭṭīṟṟu, பெ. (n.)

   ஆண்டுதோறும் ஈனுகை (இ.வ.);; calving every year (Loc.);.

     [ஆண்டு → ஆட்டு. ஈன் → ஈற்று.]

ஆட்டு

ஆட்டு1āṭṭudal, செ.குன்றாவி (v.t.)

   1. அசைத்தல்; to move, shake, wave, rock as a cradle.

 to swing.

   2. துரத்துதல்; to drive away, score off.

     “ஆட்டி விட்டா றலைக்கும்” (ஐந். ஐம். 34);.

   3. அலைத்தல்; to harass, afflict, vex

     “ஒருவனாட்டும் புல்வாய் போல” (புறநா. 193);.

   4. வெல்லுதல்; to conquer:

     “இகலமராட்டி” (சிலப்.5,225);.

   5. ஆடச்செய்தல்; to cause to dance, as a girl, a cobra or a monkey.

     “நச்சர வாட்டிய நம்பன் போற்றி” (திருவாச. 3,106);.

   6. நீராடுதல், குளித்தல்; to bathe.

     “ஆன்பாறழைத்த வன்பா லாட்ட” (சேதுபு. கடவு.12);.

   7 அரைத்தல்; to grind in a mill, as sesamum or sugar cane.

     “கரும்பாட்டிக் கட்டி சிறு காலைக் கொண்டார்” (நாலடி. 35);.

   ம. ஆட்டு;   க., பட. ஆடு, தெ. ஆடு. து. ஆடுனி;     [ஆடு (த.வி.); → ஆட்டு (பி.வி.);]

 ஆட்டு2āṭṭu, பெ. (n.)

   1. விளையாட்டு; sport, play.

     “அன்னவகை யாட்டயர்ந்து” (பரிபா. 10.97);

   2. கூத்து; dancing;

     “உரையும் பாட்டு மாட்டும் விரைஇ (மதுரைக்.616); (செ.அக.);.

   3. அலைப்பு; movement, shaking.

   4. ஆடுந்தன்மை; posture of a (dancing); movement.

   5. ஆட்டுந்தன்மை; way by which a posture is effected.

   6. வல்லமை; power, strength. (கதி. அக.);.

   க. ஆட்டுதன;   தெ. ஆட;கொ. ஆடா.

     [ஆடு (த.வி.); → ஆட்டு (பி.வி.);. பிறவினைகளே தொழிற் பெயராகும். ஒ.நோ. கூடு → கூட்டு]

 ஆட்டுāṭṭu,    இடை. (Part.) பெயரீறு; formative suffix. உண்டாட்டு.

ஆட்டுக்கசப்பு

 ஆட்டுக்கசப்புāṭṭukkasappu, பெ. (n.)

   ஆட்டின் பித்தம்; bile in the bile-duct of a sheep. (சா.அக);.

     [ஆடு + கசப்பு – ஆட்டுக்கசப்பு. கசப்பு = கசப்புள்ள பித்தநீர்.]

ஆட்டுக்கசாலை

 ஆட்டுக்கசாலைāṭṭukkacālai, பெ. (n.)

ஆட்டுக்கிடை (இ.வ.);: sheep-fold.

     [ஆடு கசாலை → ஆட்டுக்கசாலை.

கசாலை = தங்குமிடம். கச்சல் = சிறுமை. ஆலை = இடம் கச்சாலை → கசாலை = சிறிய இடம்.

இதே சொல், கச்சாலை → கச்சாரி → கச்சேரி = எனவும் திரிந்தது,

கசாலை பார்க்க;see kašalai.]

ஆட்டுக்கடா

 ஆட்டுக்கடாāṭṭukkaṭā, பெ. (n.)

   ஆணாடு; ram, =e-goat.

   ம. ஆட்டுகொற்றன். க. ஆடு;தெ. ஏட

     [ஆடு + கடா – ஆட்டுக்கடா. கடா பார்க்க;see kadā.]

ஆட்டுக்கத்திக்கோலா

 ஆட்டுக்கத்திக்கோலாāṭṭukkattikālā, பெ. (n.)

   மீன் வகையிலொன்று; belone strongulara,

     [ஆடு – ஆட்டு+கத்தி+கோலா.]

ஆட்டுக்கல்

ஆட்டுக்கல்1āṭṭukkal, பெ. (n.)

   1. அரைக்கும் கல்லுரல்; stone-mortal.

     “உரலுலக்கை யேந்திரஞ் சுளகாட்டுக்கல்” (பிரபோத. 11,34);.

ம. ஆட்டுகல்லு.

     [ஆடு → ஆட்டு. ஆட்டு + கல்-ஆட்டுக்கல்.]

 ஆட்டுக்கல்2āṭṭukkal, பெ. (n.)

   ஆட்டு ரோசனை; the bezoar of the sheep. (சா.அக.);.

ம.ஆட்டிங்கல்லு.

     [ஆடு+கல்-ஆட்டுக்கல்=ஆட்டின் வயிற்றில் கல் போன்று திரண்டிருக்கும் நஞ்சுமுறிப்பான்.]

 ஆட்டுக்கல்3āṭṭukkal, பெ. (n.)

   நஞ்சு வகைகளுள் ஒன்று (அமுதபாடாண வகை);; a kind of poison. (சா. அக.);.

     [ஆட்டுக்கல்=கூட்டியரைத்த செய்நஞ்சு.]

ஆட்டுக்காதுக்கள்ளி

 ஆட்டுக்காதுக்கள்ளிāṭṭukkātukkaḷḷi, பெ. (n.)

ஆட்டுச்செவிக்கள்ளி பார்க்க;see attu-c-cevi-k-kalli.

ஆட்டுக்காற்கல்

 ஆட்டுக்காற்கல்āṭṭukkāṟkal, பெ. (n.)

   கொக்கைக்கல்; coral stone (W);

     [ஆடு + கால் – ஆட்டுக்கால். ஆட்டுக்கால் + கல் – ஆட்டுக்காற்கல் = ஆட்டுக்கால் வடிவிலமைந்த பவழக்கல்.]

ஆட்டுக்காலடம்பு

 ஆட்டுக்காலடம்புāḍḍukkālaḍambu, பெ. (n.)

   அடப்பங்கொடி; goats-foot, convolvulus-pomaea biloba. A plant creeping but never twining. (சா.அக.);

மறுவ. முசற்றழை.

ஆட்டுக்கால்

ஆட்டுக்கால்āṭṭukkāl, பெ. (n.)

   1. அடப்பங்கொடி, ஆட்டுக்காலடம்பு; a kind of Creeper.

   2. ஆட்டின் கால்; sheep’s leg.

   3. பூமருதம் (மலை.);; flowering murdah – Terminalia paniculata (சா.அக.);.

ஆட்டுக்கிடாய்

 ஆட்டுக்கிடாய்āṭṭukkiṭāy, பெ. (n.)

ஆட்டுக்கடா பார்க்க;see āņu-k- kadā.

   ம. ஆட்டுகொற்றன். ஆட்டுமுட்டன்;   க. ஆடு;தெ. எட

     [ஆடு + கிடாய் = ஆட்டுக்கிடாய்.]

கிடாய் பார்க்க;see kidāy.

ஆட்டுக்கிடை

 ஆட்டுக்கிடைāḍḍukkiḍai, பெ. (n.)

   ஆடுகளைக் கிடத்துமிடம். ஆட்டுப்பட்டி; sheep fold, sheep-pen.

     “ஆட்டுக்கிடையிலே ஓநாய் புகுந்ததுபோல” (பழ.);.

   ம. ஆட்டின்கிட;க.ஆடுமனெ

     [ஆடு+கிடை.]

ஆட்டுக்கிடை படுக்கை

 ஆட்டுக்கிடை படுக்கைāḍḍukkiḍaibaḍukkai, பெ. (n.)

   ஈளை (சயநோய்); நோயைக் குணப்படுத்துவதற்காக ஆட்டுக்கிடை நடுவில் படுத்துறங்குதல்; consumptive patient is said to be cured by taking his bed in the midst of the sheep-fold. (சா.அக.);

     [ஆடு+கிடை+படுக்கை.]

ஆட்டுக்கிறை

ஆட்டுக்கிறைāṭṭukkiṟai, பெ. (n.)

   ஆட்டு வரி; tax collected on sheep. (S.I.I. vi. 155);.

   க. ஆடுதேறெ;ம.ஆட்டுப்பாட்டம்

     [ஆடு + கு + இறை – ஆட்டுக்கு இறை → ஆட்டுக்கிறை. இறை = அரசனுக்கு இறுக்கப்படும் (செலுத்தப்படும்); வரி.]

ஆட்டுக்குட்டி

 ஆட்டுக்குட்டிāṭṭukkuṭṭi, பெ. (n.)

   ஆட்டின் குட்டி; lamb, the young of the sheep.

ம. ஆட்டின் குட்டி.

     [ஆடு+குட்டி-ஆட்டுக்குட்டி.]

ஆட்டுக்குளம்பெண்ணெய்

 ஆட்டுக்குளம்பெண்ணெய்āṭṭukkuḷambeṇīey, பெ. (n.)

   ஆட்டின் காற்குளம்பினின்றும் எடுக்கும் எண்ணெய்; oil prepared from the sheep hoof. (சா.அக.);.

     [ஆடு + குளம்பு + எண்ணெய் = ஆட்டுக்குளம் பெண்ணெய்.]

ஆட்டுக்கொம்பவரை

 ஆட்டுக்கொம்பவரைāṭṭukkombavarai, பெ. (n.)

   ஆட்டுக் கொம்பைப் போன்ற ஒருவகை அவரைக் காய்; a species of country bean resembling the horn of the sheep. (சா.அக.);.

ம. ஆட்டுக்கொம்பன் அவரய்க்க

     [ஆடு+கொம்பு=ஆட்டுக்கொம்பு+அவரை.]

ஆட்டுக்கொம்பு

 ஆட்டுக்கொம்புāṭṭukkombu, பெ. (n.)

ஆட்டின் தலையிலுள்ள கொம்பு. இது தமிழ் மருத்துவத்தில்

   புடமிடுவதற்குப் பயன்படும்; sheep’s horn, used in Tamil medicine for purposes of calcination. (சா.அக);.

     [ஆடு+கொம்பு-ஆட்டுக்கொம்பு.]

ஆட்டுக்கொம்பு வாழை

 ஆட்டுக்கொம்பு வாழைāṭṭukkombuvāḻai, பெ. (n.)

   ஆட்டுக் கொம்பைப் போலிருக்கும் வாழை. இது நீலகிரி மாவட்டத்திலும் பிறவிடங்களிலும் பயிராகிறது; a species of banana (plantain); resembling sheep’s horn, sheep’s horn banana-Musa sapientum (Spaciosum);. This is found grown in Nilgiri district and some other places. (சா.அக.);.

     [ஆடு+கொம்பு-ஆட்டுக்கொம்பு+வாழை.]

ஆட்டுக்கொம்புப்பாலை

 ஆட்டுக்கொம்புப்பாலைāṭṭukkombuppālai, பெ. (n.)

   ஆட்டுக்கொம்பைப்போல் நுனியில் கூர்மையுள்ள இலைகளைக் கொண்ட ஒருவகைப் பாலை; wedge-leaved ape flower – mimusops hexandra. (சா.அக.);.

     [ஆடு+கொம்பு-ஆட்டுக்கொம்பு+பாலை.]

ஆட்டுக்கொம்பொதி

 ஆட்டுக்கொம்பொதிāṭṭukkombodi, பெ. (n.)

   ஆட்டுக் கொம்பு போன்ற காயையுடைய ஒதிய மரம்; long- leaved trumpet-tree with a pod like the ram’s horn. (சா.அக.);.

மறுவ.ஆற்றுக்கொம்பொதியமரம்,பெரும்பூம்பாதிரிமரம்.

     [ஆடு+கொம்பு-ஆட்டுக் கொம்பு+ஒதி. ஒதி = ஒதியமரம்.]

இம்மரத்தைக் குறிக்கும் ஆத்துக்கொம்பொதிய மரம், ஆற்றுக்கொம்பொதிய மரம் ஆகியன தவறான வடிவங்கள்.

ஆட்டுக்கொழுப்பு

 ஆட்டுக்கொழுப்புāṭṭukkoḻuppu, பெ. (n.)

   களிம்பு செய்வதற்காகப் பயன்படுத்தும் ஆட்டின் நிணம். நாட்டு மருத்துவர்கள் இக் கொழுப்புடன் சங்கம் பழம், சாதிக்காய், வால்மிளகு முதலியவற்றைச் சேர்த்து அரத்தங்கக்கல், ஈளை (சயம்); முதலிய நோய்களுக்கு மருந்தாகத் தருவர்; at of the sheep used in preparing ointments-Adeps ovissuet. native physicians employ mutton-suet in the preparation of ointments and also administer it internally with the fruit Azima tetracantha, nutmeg and cubeb in hemoptysis and in certain stages of pthysis pulmonis (சா.அக.);.

     [ஆடு+கொழுப்பு = ஆட்டுக்கொழுப்பு.]

ஆட்டுக்கோட்டுப்பாலை

 ஆட்டுக்கோட்டுப்பாலைāṭṭukāṭṭuppālai, பெ. (n.)

ஆட்டுக்கொம்புபாலை பார்க்க;see Blu-kkõmbupālai.

     [ஆடு+கோடு – ஆட்டுக்கோடு+பாலை=ஆட்டுக் கோட்டுப்பாலை. கோடு = கொம்பு.]

ஆட்டுக்கோன்

 ஆட்டுக்கோன்āṭṭukāṉ, பெ. (n.)

   சிவன்; siva, the Hindu God (கதி.அக.);.

     [ஆட்டு=கூத்து. கோன் = தலைவன். ஆட்டுக்கோன் = ஆடல்வல்லான், தில்லைக்கூத்தன், சிவன்.]

ஆட்டுச்சக்கரணி

 ஆட்டுச்சக்கரணிāṭṭuccakkaraṇi, பெ. (n.)

   மலையரளி என்னும் நாய்த்தேக்கு மரம்; woolly – leaved fire brand teak (சா.அக.);.

     [ஆடு+சக்கரணி = ஆட்டுச்சக்கரணி.]

ஆட்டுச்செவிக்கள்ளி

 ஆட்டுச்செவிக்கள்ளிāṭṭuccevikkaḷḷi, பெ. (n.)

   ஆட்டின் காதைப் போன்ற இலைகளுள்ள ஒருவகைக் கள்ளி; species of spurge-wort, the leaves of which resemble the horn of a sheep – Euphorbia (genus); (சா.அக.);.

     [ஆடு+செவி – ஆட்டுச்செவி = ஆட்டின்காது. ஆட்டுச்செவி + கள்ளி = ஆட்டுச்செவிக்கள்ளி.]

ஆட்டுச்செவிப்பதம்

ஆட்டுச்செவிப்பதம்āṭṭuccevippadam, பெ. (n.)

   1. வழுக்கைப்பதம்; soft immature growth of anything compared to a goat’s ear.

   2. இளநீர் வழுக்கைப்பதம்; immature state like the soft kernel of a tender coconut.

     [ஆடு + செவி – ஆட்டுச்செவி. ஆட்டின்காது. ஆட்டுச்செவி + பதம் = ஆட்டுச்செவிப்பதம்.]

ஆட்டுதப்பி

 ஆட்டுதப்பிāṭṭudappi, பெ. (n.)

   ஆடு அசையிடும் இரை; cud of the sheep.

ஆட்டுத்துகள்

 ஆட்டுத்துகள்āṭṭuttugaḷ, பெ. (n.)

   இரும்புத்தூள், அரப்பொடி; iron filings (S.D);.

     [ஆட்டு=ஆட்டுதல், துளைத்தல், அராவுதல். ஆட்டு + துகள் – ஆட்டுத்துகள் = ஆட்டுதலால், துளைத்தலால் அல்லது அராவுதலால் உதிரும் இரும்புப் பொடி.]

ஆட்டுத்துழாய்

 ஆட்டுத்துழாய்āṭṭuttuḻāy, பெ. (n.)

   மலைத்துளசி (சித்.அக.);; mountain basil – Ocimum gratissimum.

ஆட்டுத்தேவர்

 ஆட்டுத்தேவர்āṭṭuttēvar, பெ. (n.)

   ஆட்டுவிக்கும் சிறுதெய்வம்; demi-god which causes suffering.

     “ஆட்டுத்தேவர் தம் விதியொழுகி” (தேவா.);

     [ஆடு+தேவர்.]

ஆட்டுத்தொட்டி

 ஆட்டுத்தொட்டிāṭṭuttoṭṭi, பெ. (n.)

   ஆட்டுக்கிடை; sheep fold, sheep-pen

க. ஆடுமனெ

     [ஆடு+தொட்டி – ஆட்டுத்தொட்டி. தெ. தொட்டி.. (தொழுவம்);.]

 ஆட்டுத்தொட்டிāṭṭuttoṭṭi, பெ.(n.)

   கால்நடை களை புலாலுக்காக அறுக்கும் இடம் (சூளை);; slaughter house.

     [ஆடு+தொட்டி]

ஆட்டுப்பட்டி

ஆட்டுப்பட்டிāṭṭuppaṭṭi, பெ. (n.)

   1. ஆட்டுக்கிடை; sheep-fold.

   2. ஆட்டுப்பட்டியுள்ள ஊர்; village where sheep fold is situated.

     [ஆடு + பட்டி – ஆட்டுப்பட்டி.. பள் → படு → பட்டி படுக்குமிடம், தங்குமிடம்.]

ஆட்டுப்பிழுக்கை

 ஆட்டுப்பிழுக்கைāṭṭuppiḻukkai, பெ. (n.)

   ஆட்டின் கழிவுப் பொருள்; excreta or dung of the sheep.

     “பிழுக்கை வாரியும் பால் கொள்வர்” (கந். தேவா.);.

     [ஆடு + பிழுக்கை.]

ஆட்டுப்பூட்டு

 ஆட்டுப்பூட்டுāṭṭuppūṭṭu, பெ. (n.)

   சிறுமியர் விளையாட்டு; girls game. (த.நா.வி.);.

     [ஆடு+பூட்டி.]

ஆட்டுமந்தை

ஆட்டுமந்தைāṭṭumandai, பெ. (n.)

   1. ஆட்டின் கூட்டம்; flock of sheep or goats.

   2. ஆடுகள் ஒன்று கூடுமிடம்; place where sheep or goats are gathered.

   3. கண் மூடிப் பின்பற்றும் கூட்டத்தினர்; group of blind followers.

     [ஆடு + மந்தை – ஆட்டுமந்தை. மன்று → மந்து → மந்தை = ஒன்று கூடுமிடம்.]

ஆட்டுமயிர்

 ஆட்டுமயிர்āṭṭumayir, பெ. (n.)

   கம்பளி நெய்ய உதவும் ஆட்டின் மயிர்; wool, fleece or hair of sheep and goats.

     [ஆடு + மயிர்.]

ஆட்டுமயிர்ச்சரக்கு

 ஆட்டுமயிர்ச்சரக்குāṭṭumayirccarakku, பெ. (n.)

   கம்பளித்துணி (புதுவை);; woollen cloth. (Pond.);.

     [ஆடு+மயிர்-ஆட்டுமயிர்+சரக்கு=ஆட்டுமயிர்ச் சரக்கு. சரக்கு = பொருள்.]

ஆட்டுமறிக்கூலி

 ஆட்டுமறிக்கூலிāṭṭumaṟikāli, பெ. (n.)

   நிலத்தில் கிடைவைக்கத் தருங்கூலி; hire paid by a farmer to the owner of a flock of sheep or goats for their detention in his field for manure.

     [ஆடு + மறி + கூலி – ஆட்டுமறிக்கூலி. மறித்தல் = ஆடுகள் வேறிடஞ் செல்லாமல் ஒரிடத்தில் தடுத்துத் தங்க வைத்தல்.]

ஆட்டுரல்

 ஆட்டுரல்āṭṭural, பெ. (n.)

   ஆட்டுக்கல்; stone mortar for grinding.

ம. ஆட்டுக்கல்லு.

     [ஆட்டு + உரல் – ஆட்டுரல் (வி.தொ.);.]

ஆட்டுலா

 ஆட்டுலாāṭṭulā, பெ. (n.)

   ஆட்டுக்காலடம்பு (கொடி வகை); (சித்.அக.);; goat’s foot creeper.

     [ஆடு + உலா – ஆட்டுலா.]

ஆட்டுவரி

 ஆட்டுவரிāṭṭuvari, பெ. (n.)

   ஆட்டிற்காக வாங்கப்படும் வரி; tax levied on sheep or goats.

   ம. ஆட்டுப்பாட்டம்;க.ஆடுதேரெ.

     [ஆடு + வரி = ஆட்டுவரி.]

ஆட்டுவாலன் திருக்கை

ஆட்டுவாலன் திருக்கைāṭṭuvālaṉtirukkai, பெ. (n.)

   ஒருவகைத் திருக்கை;   மீன் வகைகளுள் ஒன்று. இதன் வால் நீளமாயிருக்கும். சிறிய மீன் சிவப்பாகவும், பெரிய மீன் ஈய வண்ணமாகவும், வால் பகுதி கறுப்பாகவும், பொதுவாக அதிக வளர்ச்சியுள்ளதாகவுமிருக்கும். இது தன் வாலின் முள்ளினால் தாக்கும். இதனால் ஏற்படும் புண் கடுந் தீங்கு விளைவிக்கும். (சா.அக.);; shak having the length of the tail 3 to 4 times that of the body, the upper surface of the young one is reddish-brown;

 the adult is lead coloured but black in the tail;

 grows to a large size. Wounds inflicted by the spike of its tail are dangerous (S.D.);.

     [ஆடு + வாலன் + திருக்கை. ஆடு = ஆடுதல், அசைதல், அடிக்கடி அசைத்துக் கொண்டிருத்தல், தன் வாலை அடிக்கடி ஆட்டிக் கொண்டிருக்கும் இயல்பு பற்றி இத்திருக்கை மீன் ‘ஆடுவாலன் திருக்கை’ எனப் பெயர் பெற்றிருக்கலாம்.]

ஆட்டுவால் திருக்கை

 ஆட்டுவால் திருக்கைāṭṭuvāltirukkai, பெ. (n.)

ஆட்டு வாலன் திருக்கை பார்க்க;see altu -valan-tirukkai.

     [ஆட்டுவால்+திருக்கை.]

ஆட்டுவிப்போன்

ஆட்டுவிப்போன்āṭṭuvippōṉ, பெ. (n.)

   1. நட்டுவன் (நாமதீப);; dance master.

   2. பாடாய்படுத்துபவன்; tormenter.

     [ஆடு(த.வி.); → ஆட்டு(பி.வி.); → ஆட்டுவி(இருமடி.பி.வி.);.]

ஆட்டூர வேம்பு

 ஆட்டூர வேம்புāṭṭūravēmbu, பெ. (n.)

   மலை வேம்பு (சித்.அக.);; mountain neem.

     [ஆட்டூரம் + வேம்பு.]

ஆட்டூரம்

 ஆட்டூரம்āṭṭūram, பெ. (n.)

   மலைவேம்பு; large neem tree-Melia azadirachta (S.D.);.

     [ஆட்டூர வேம்பு பார்க்க;see attura-vembu.]

ஆட்டூர்தி

 ஆட்டூர்திāṭṭūrti, பெ. (n.)

   தீக்கடவுள்; god of fire.

     [ஆடு+ஊர்தி.]

ஆட்டை

ஆட்டை1āṭṭai, பெ. (n.)

   விளையாட்டில் தொடங்கும் முறை (நெல்லை);; turn in a game (Tn);.

     [ஆடு + ஐ – ஆட்டை.. ஆடு = ஆட்டம், விளையாட்டு.]

 ஆட்டை2āṭṭai, பெ. (n.)

   ஆண்டு; year.

ம.ஆட்ட

     [ஆண்டு → ஆண்டை → ஆட்டை]

ஆட்டை வட்டன்

ஆட்டை வட்டன்āṭṭaivaṭṭaṉ, பெ. (n.)

ஆட்டை வட்டம் பார்க்க;see āttaivațiam (S.I.I.ii,403);.

ஆட்டை வட்டம்

ஆட்டை வட்டம்āṭṭaivaṭṭam,    கு.வி.எ. (adv.) ஆண்டுதோறும்; every year, annually.

     “ஆட்டைவட்டம் அரைக்காற்காசு பொலிசை” (S.I.I.ii,125);.

     [ஆண்டு → ஆட்டை. வட்டம் = முழுமை, நிறைவு. ஆட்டை வட்டம் = ஆண்டு நிறைவு, ஆண்டு முடிவு, ஒவ்வோர் ஆண்டு முடிவு.]

ஆட்டை வாரியம்

 ஆட்டை வாரியம்āṭṭaivāriyam, பெ. (n.)

   ஊராண்மைக்கும் அறமுறைக்கும் பொறுப்பேற்ற பழங்கால ஊரவைப்பிரிவு; ancient village administration and judicial division.

     [ஆண்டு → ஆட்டை + வாரியம்]

ஆட்டை வாரியர்

ஆட்டை வாரியர்āṭṭaivāriyar, பெ. (n.)

   சிற்றுார் ஆளுகையை ஆண்டு தோறும் மேற்பார்வை செய்யும் அவையினர்; annual committee for supervising the management of village affairs (S.I.I. iii, 271);.

     [ஆண்டு → ஆட்டை. ஆட்டை + வாரியர்.]

ஆட்டைக்கருமம்

 ஆட்டைக்கருமம்āṭṭaikkarumam, பெ. (n.)

   முதலாண்டு முடிவில் செய்யப்படும் நீத்தார்கடன்; first annual ceremony, performed on the same day of the moon on which the person died (W.);

     [ஆண்டு → ஆண்டை → ஆட்டை+கருமம்.]

ஆட்டைக்காணிக்கை

ஆட்டைக்காணிக்கைāṭṭaikkāṇikkai, பெ. (n.)

   ஆண்டுக்கொருமுறை செலுத்தப்படும் ஒரு பழைய வரி; an ancient village cess collected every year (I.M.P.Тр.234);.

ம.ஆண்டக்காழ்ச்ச

     [ஆண்டு → ஆண்டை → ஆட்டை + காணிக்கை.]

ஆட்டைக்கோள்

ஆட்டைக்கோள்āṭṭaikāḷ, பெ. (n.)

   ஆண்டுதோறுஞ் செலுத்த வேண்டிய தொகை; yearly payment.

     “ஆட்டைக்கோளாகக் கொடுப்பான்” (T.A.S.ii, 44);.

     [ஆண்டு → ஆட்டை = ஆண்டுக்கொருமுறை. கொள் → கோள் = பெறுவது.]

ஆட்டைச் சம்மாதம்

ஆட்டைச் சம்மாதம்āṭṭaiccammātam, பெ. (n.)

   வரிவகை; village cess (I.M.P. Cg. 524);.

     [ஆண்டு → ஆட்டை+சம்மாதம்.]

ஆட்டைச்சிராத்தம்

 ஆட்டைச்சிராத்தம்āṭṭaiccirāttam, பெ. (n.)

ஆட்டைக் கருமம் பார்க்க;see attai-k-karumam.

     [ஆண்டு → ஆட்டை + Skt. சிரார்த்தம்.]

ஆட்டைத்திதி

 ஆட்டைத்திதிāṭṭaiddidi, பெ. (n.)

ஆட்டைக் கருமம் பார்க்க;see attai-k-karumam.

ஆட்டைத்திருநாள்

 ஆட்டைத்திருநாள்āṭṭaittirunāḷ, பெ. (n.)

   அரசனின் பிறந்தநாள், பிறந்தநாள் பெருமங்கலம்; birth anniversary of a king.

ம. ஆட்டத்திருநாள்

     [ஆண்டு → ஆட்டை + திருநாள் – ஆட்டைத் திருநாள்.]

ஆட்டைத்திவசம்

 ஆட்டைத்திவசம்āṭṭaittivasam, பெ. (n.)

ஆட்டைக் கருமம் பார்க்க;see attai-k-karumam.

ஆட்டைப்படி

 ஆட்டைப்படிāḍḍaippaḍi, பெ. (n.)

   ஒராண்டுக்கு ஒதுக்கியளிக்கப்பட்ட பொருள்; allotment for the year.

ம.ஆட்டப்படி

     [ஆண்டு → ஆட்டை + படி – ஆட்டைப்படி. படி = அளவு, அளந்து தரப்பட்ட பொருள்.]

ஆட்டைப்பாழ்

ஆட்டைப்பாழ்āṭṭaippāḻ, பெ. (n.)

   ஆண்டு முழுதும் கரம்பாகக் கிடந்த நிலம்; cultivable land left waste throughout the year (S.l.l. iv, 155);.

க. ஆடவல

     [ஆண்டு → ஆட்டை + பாழ் = ஆட்டைப்பாழ்.]

ஆட்டைப்பூடு

 ஆட்டைப்பூடுāṭṭaippūṭu, பெ. (n.)

   ஆண்டுக்கொரு முறை விளையும் பூண்டு; annual plant (S.D.);.

     [ஆண்டு → ஆட்டை. ஆண்டு. பூண்டு → பூடு = ஆட்டை + பூடு = ஆட்டைப்பூடு.]

ஆட்டோசை

 ஆட்டோசைāṭṭōcai, பெ. (n.)

   ஆட்டின் குரலைப் போன்ற தார விசையினோசை (நாமதீப.);; seventh note of the gamut, as resembling the bleating of sheep.

     [ஆடு + ஒசை – ஆட்டோசை = ஆட்டின் ஒசை.]

ஆட்படு

ஆட்படு1āḍpaḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   1. அடிமையாதல்; on to become a devoted servant, commonly to a deity.

     “ஆனாலவனுக்கிங் காட்படுவாராரேடி” (திருவாச. 12:12);.

   2. தலைப்படுதல்; to become involved voluntarily. நானே ஆட்பட்டேன் (உ.வ.);.

   3. உயர்நிலையடைதல்; to raise from obscurity, become a man of some property and consequence. அவன் என்னால் ஆட்பட்டான் (யாழ்ப்.);.

   4. உடல் நலமடைதல்; to recuperate after sickness (J.);.

     [ஆள்+படுதல்-ஆட்படுதல். 1. .ஆள்=பிறர்க்குப் பணியாற்றும் ஆள்.

   2. ஆள்=தன் ஆளுந்தன்மை அல்லது செயல் திறனைத் தன்னலத்திற்கன்றிப் பிற நலத்திற்களிக்கும் ஆள்.

   3. ஆள் = பிறரால் மதிக்கப்படும் ஆள்.

   4. ஆள் = உடலளவில் ஆள். ஆட்படல்=ஆளாதல், முழு உடல் நலம் பெறல். ஆள்=ஆளும் தன்மை]

 ஆட்படு2āḍpaḍuttal,    18 செ.குன்றாவி. (v.i.)

    அடிமை கொள்ளுதல், அடிமையாக்குதல்; loaccept as a devoted slave.

     “உன்னடியார்க் காட்படுத்தாய்” (திவ். திருப்பள்ளி. 10);.

க ஆள்தன கொள்

     [ஆள்+படுத்தல்=ஆட்படுத்தல்.]

ஆட்பலி

ஆட்பலிāṭpali, பெ. (n.)

   மாந்தரைக் கொன்று படைக்கும் படையல், படையல் கொடுத்தல் (நரபலி);; human sacrifice.

     “தலைக்காட்பலி திரிவர்” (திவ். இயற். நான் முகன். 52);.

     [ஆள்+பலி-ஆட்பலி.]

ஆட்பழக்கம்

ஆட்பழக்கம்āṭpaḻkkam, பெ. (n.)

   1 பல்லோர் நட்பு; friendship with many.

   2. மக்கள் நடமாட்டம்; being frequented by men. ஆட்பழக்கமில்லாத வழி (உ.வ.);.

     [ஆள்+பழக்கம் – ஆட்பழக்கம்.]

ஆட்பார்-த்தல்

ஆட்பார்-த்தல்āṭpārttal,    4 செ.கு.வி. (v.i.)

   1 ஆள் தேடுதல்; to be on the look out for victims as Yama.

     “ஆட்பார்த்துழலுமருளில் கூற்று” (நாலடி. 20.);.

   2. பணி செய்தற்கு ஆட்பார்த்தல்; to recruit person for work.

   3. வேற்றாள் வாராமல் நோக்குதல்; to watch against detection as an accomplice.

     [ஆள்+பார் = ஆட்பார்.]

ஆட்பாலவன்

ஆட்பாலவன்āṭpālavaṉ, பெ. (n.)

   1. ஆட்கொள்ளப்பட்டவன்; devotee.

     “ஆட்பாலவர்க்கருளும் வண்ண

மும்” (தேவா. 1178,4);.

   2. ஆட்பட்டவன்; one who is accepted as a devotee. க. ஆள்தன

     [ஆள் + பால் + அவன் = ஆட்பாலவன்.]

ஆட்பிடியன்

ஆட்பிடியன்āḍpiḍiyaṉ, பெ. (n.)

   1. முதலை; crocodile, alligator.

   2. ஆளைப்பிடிப்பவள், ஒழுக்கமற்றவள் (இராட்.);; vamp.

ம.ஆள்ப்பிடியன்.

     [ஆள்+பிடியன்=ஆட்பிடியன்.]

ஆட்பிரமாணம்

 ஆட்பிரமாணம்āṭpiramāṇam, பெ. (n.)

ஆள்மட்டம் பார்க்க;see ālmattam.

 Skt. pramäna → த.பிரமாணம்.

     [ஆள்+பிரமாணம்-ஆட்பிரமாணம்.]

ஆணகம்

ஆணகம்1āṇagam, பெ. (n.)

ஆளகம் பார்க்க;see ālagam.

 ஆணகம்2āṇagam, பெ. (n.)

   கோளகநஞ்சு; mineral poison.

     [ஆணம்2 → ஆணகம்.]

ஆணங்கம்

 ஆணங்கம்āṇaṅgam, பெ. (n.)

   ஆண்குறி; genital of a male as opposed to pennangam, genital of a female.

     [ஆண் + அங்கம். அங்கம் = உறுப்பு. Skt. anga.]

ஆணங்காய்

 ஆணங்காய்āṇaṅgāy, பெ. (n.)

   ஆண்பனையின் பாளை, ஆண்பனையின் காய்; branched spadix of the flowers of the male palmyra tree (சா.அக.);.

     [ஆண் + அம் + காய். அம் = சாரியை.]

ஆணணி

ஆணணிāṇaṇi, பெ. (n.)

   மறவர் படைவகுப்பு; military parade.

     “ஆணணி புகுதலும் அழிபடை தாங்கலும்” (சிறுபாண். 211);.

     [ஆண் + அணி.]

ஆணத்தி

ஆணத்தி1āṇatti, பெ. (n.)

   ஆணை, கட்டளை; order, command (S.I.I.iii.93);.

   ம. ஆண;   க. ஆணதி;   தெ.ஆணதி;பிராகி., பாலி. ஆணத்தி. Skt. ājnapti.

     [ஆணை + அத்தி = ஆணத்தி = ஆணை. அத்து = சாரியை. ‘இ’ உடைமை குறித்த ஈறு. த ஆணத்தி → பிராகி. ஆணத்தி. ஆணை பார்க்க;see anal.]

 ஆணத்தி2āṇatti, பெ. (n.)

   கற்பூரம்; camphor.

ஆணன்

ஆணன்āṇaṉ, பெ. (n.)

   ஆண்மையுடையவன்; one having the qualities that become a man, as courage. tortitude etc.

     “அரவாட்டிய வாணனே” (சிவதரு, சுவர்க்கநரக.222);.

     [ஆண் + அன். அன் = ஆண்பாலீறு.]

ஆணம்

ஆணம்1āṇam, பெ. (n.)

   1. அன்பு; love, friendship, affection.

     “ஆணமில் பொருளெமக்கு” (கலித்.1);.

   2. பற்றுக்கோடு; support.

     “தேவரை யாணமென் றடைந்து” (திவ். திருச்சந். 69);.

   3. கொள்கலம், ஏனம்; vessel. ம. ஆணம்;

க.ஆண.

     [ஒருகா. அணையம் → அணயம் → அணம் → ஆணம். அணையம் = தழுவுதல், அணைத்தல், நட்புக்கொள்ளல், பற்றுக் கோடாயிருத்தல், நிலைக்களமாதல், பொருள்களைக் கொள்ளும் கொள்கலனாதல்.]

 ஆணம்2āṇam, பெ. (n.)

   1. சாறு; soup.

   2. குழம்பு (பிங்.);; broth or thick consistent fluid curry. ஆட்டாணம், கோழியாணம் (உ.வ.);

   3. குழம்புத்தான்; vegetable relish in soup.

   ம. ஆணம்;க. ஆண (வெல்லப்பாகு);.

     [ஒருகா. அள் → அளம் → ஆளம் → ஆணம். அள் → அளம் = சேறு, சாறு, குழம்பு.]

 ஆணம்3āṇam, பெ. (n.)

   1. சிறுமை; smallness, meanness.

     “ஆணமில் சிந்தை வீரன்” (கந்தபு. வீரவாகு. கந்:39);. க. ஆணம், அணம்.

   2. செருக்கு, ஆணம் (கதி.அக.);; pride, arrogance, egotism.

     [ஒருகா. அணம் → ஆணம். அணம் = சிறுமை. ஆணவம் → ஆணம் (இடைக்குறை);.]

 ஆணம்4āṇam, பெ. (n.)

   1. காட்டுவேப்பிலை; wild neem

   2. காட்டுக்கொழுஞ்சி; opalorange (சா.அக.);.

     [ஒருகா. அண் → அணம் → ஆணம். அண் = உயர்வு. நாட்டு வேம்பு, நாட்டுக்கொழுஞ்சியினும் உயரமாக வளரும் இயல்பு பற்றிக் காட்டு வேம்பும் காட்டுக் கொழுஞ்சியும் இப்பெயர் பெற்றிருக்கலாம்.]

 ஆணம்5āṇam, பெ. (n.)

   வெடிப்பு, பிளப்பு; crack, cleft, breach.

   ம. ஆணம்;க. ஆணெ.

     [ஒருகா. ஆழ் + அம் → ஆழம் → ஆணம். பெரும்பாலும் நிலத்திற்றோன்றும் வெடிப்பே ஆணம் எனப்படும்.]

ஆணர்

ஆணர்1āṇar, பெ. (n.)

   பாணர் (அக.நி.);; pãnars.

     [ஒருகா. பாணர் → ஆணர்.]

 ஆணர்2āṇar, பெ. (n.)

   நன்மை (கதி.அக.);; goodness

   2. வளமை (கதி.அக.);; fertility, prosperity.

     [யாணர் → ஆணர்.]

 ஆணர்3āṇar, பெ. (n.)

   ஆண்மையுடையவர்; one who possesses manly characteristics.

     [ஆண் + ஆணர்.]

ஆணலி

ஆணலிāṇali, பெ. (n.)

   ஆண்தோற்றம் மிக்க அலி (தொல். பொருள். 605. உரை);; hermaphrodite human being in whom masculine features predominate.

 i.e. a male with only the genital organs, eunuch similar to those of the female.

     [ஆண் + அலி.]

ஆணலை

 ஆணலைāṇalai, பெ. (n.)

   கடலில் உயரமாக எழும்பும் அலை; high wave in the sea.

     [ஆண் + அலை. ஆண் = வலிமை.]

ஆணல்லாதவர்

ஆணல்லாதவர்āṇallātavar, பெ. (n.)

   இறைவழி பாட்டில் இல்லாதவர்; non-devotee.

     “ஆணலாத வரைக் கண்டால் அம்ம நான் அஞ்சுமாறே” (திரு வாச. 35.40);.

     [ஆண் + அல்லாதவர்.]

ஆணழகன்

ஆணழகன்āṇaḻkaṉ, பெ. (n.)

   அழகு வாய்ந்தவன் (கோவலன்கதை, 19);; handsome man, good looking man.

     [ஆண் + அழகன்.]

ஆணவப்பிணிப்பு

 ஆணவப்பிணிப்புāṇavappiṇippu, பெ. (n.)

   ஆணவக் கட்டு; matter which is eternally encasing the soul and lasting till its final liberation.

     [ஆணவம் + பிணிப்பு = ஆணவப் பிணிப்பு. பிணிப்பு = கட்டு.]

ஆணவமறைப்பு

 ஆணவமறைப்புāṇavamaṟaippu, பெ. (n.)

   ஆணவ மலத்தால் ஆதனுக்கு (ஆன்மா); ஏற்படும் அறியாமை; ignorance in which souls are enveloped because of anavam, which is an obstacle to the spiritual progress.

     [ஆணவம் + மறைப்பு.]

ஆணவமலம்

 ஆணவமலம்āṇavamalam, பெ. (.)

   ம. ஆணவமலம்;க. ஆணவமல..

     [ஆணவம் + மலம்.]

ஆணவம்

ஆணவம்1āṇavam, பெ. (n.)

   1. செருக்கு (தாயு. சின். 3);; pride, arrogance, egotism.

   2. ஆணவமலம், மும்மலத்தொன்று; one of the three malās (defilements);.

   ம. ஆணவம்;   க. ஆணவ; Skt:anava

     [ஆண் + அ+(வ்); + அம் = ஆணவம். அள் → அண் → ஆண். அள் = செறிவு, திண்மை, வலிமை. ஆண் + அ – ஆண = திண்மையுள்ள, செருக்குள்ள ஆண்தன்மை கொண்ட அ – கிழமைப் பொருளில் வந்த ஆறன் உருபு. வ் – உடம்படுமெய். அம்-பண்புப்பெயரரீறு.]

 ஆணவம்2āṇavam, பெ. (n.)

ஆணகம்2 பார்க்க;see anagam2

     [ஆணகம் → ஆணவம்.]

ஆணவலரிசி

 ஆணவலரிசிāṇavalarisi, பெ. (n.)

   வெல்லப்பாகிலிட்ட அவல் (கருநா.);; flattened rice soaked in molasses.

க. ஆணவலக்கி.

     [ஆணம்+அவல்+அரிசி, ஆணம் = சாறு, பாகு.]

ஆணா

ஆணாāṇā, பெ. (n.)

   1. காட்டுவேப்பிலை மரம்; downy axil-flowered shrubby wanpee – Clausena Wildenovii (pubescens);

   2. காட்டுக் கொழுஞ்சி; opal orange (சா.அக.);.

     [ஆணா = ஆண்மரம். ஆண் + ஆ = ஆணா. பெண்தன்மை பிணவு, பிணா என்றாற் போன்று ஆண்தன்மை ஆணா எனப்பட்டது.]

ஆணாடு-தல்

ஆணாடு-தல்āṇāṭudal,    5.செ.கு.வி. (v.i.)

   விருப்பப்படி நடத்தல்; to do as one pleases.

     “அசோதை யாணாட விட்டிட்டிருக்கும்” (திவ்.நாச்சி.3,9);.

     [ஆண் + ஆடுதல். ஆணைப்போன்றே தன் விருப்பப்படி தலைமையேற்றுச் செயற்படுதல்.]

ஆணாறு

ஆணாறுāṇāṟu, பெ. (n.)

   மேற்கு நோக்கியோடும் ஆறு; westward flowing rivers as opp. to Pennaru.

     “ஆணாறு பெண்ணாறுகள் ஒன்றின்றிக்கே” (ஈடு. 4,4, பிர);.

     [ஆண் + ஆறு.]

மேற்கு நோக்கிப் பாயும் ஆறுகளை ஆணாறுகள் என்றும் கிழக்கு நோக்கிப்பாயும் ஆறுகளைப் பெண்ணாறுகள் என்றும் அழைப்பது ஒரு மரபு வழக்கு.

ஆணி

ஆணி1āṇi, பெ. (n.)

   1. இரும்பாணி; nail, small spike.

     “அடிப்பேன் கவியிரும்பாணி கொண்டே” (தனிப்பா.1, 170, 22);.

   2. அச்சாணி; linch-pin.

     “உழுவார் உலகத்தார்க் காணி” (குறள், 1032);.

   3. எழுத்தாணி; stylus for writing.

     “பித்திகைக் கொழுமுகை யாணி கைக் கொண்டு” (சிலப். 8,55);.

   4. மரவாணி; peg, plug, wooden spike.

     “உரலாணி” (தொல், எழுத்து. 99. உரை);.

   5. உரையாணி; pin of gold for testing the standard of other gold.

     “ஆணிப்பொன்” (திவ். பெரியாழ். 131);.

   6. தைக்கும் ஊசி; sewing needle.

   ம., க., தெ., து., பட., குட. ஆணி;   கோத. ஆண்ய்;   துட.ஒண்ய்; Pali, škt āni

     [ஆழ் → ஆழி → ஆணி. ஆழ்வது ஆணி.]

 ஆணி2āṇi, பெ. (n.)

   1. புண்ணாணி; core of an ulcer.

   2. காயாணி; hard excrescence on the skin.

   3. பாதத்தில் முள் தைத்து ஒடிவதாலும் அல்லது பருக்கைக் கற்களின் மேல்நடப்பதாலும் அரத்தைப் போலுண்டாகும் முடிச்ச; horny induration and thickening of the skin caused in the foot by walking on sharp stones, or by running a thorn which is left un removed.

   4. கருவிழியிலுண்டாகும் ஒருவகை நோய்; disease affecting the cornea of the eye. (சா.அக.);.

க., தெ. ஆணி.

     [அள் → ஆள் → ஆண் + இ = ஆணி. அள் = செறிவு, திரட்சி, ஆணி = செறிந்து திரள்வது, கட்டியாவது. இ = உடைமை குறித்த ஈறு.]

 ஆணி3āṇi, பெ. (n.)

   1. அடிப்படை; support, basis, foundation.

   2. முதன்மை; original as in aniver.

     “ஆணியா யுலகுக் கெல்லாம்” (கம்பரா.கடறாவு. 27);.

     “உழுவார் உலகத்தார்க்கு ஆணி” (குறள்);.

   3. ஆசை (திவ் பெரியாழ் 5, 2, 3);; wish desire.

   4. மேன்மை, உயர்வு ; greatness, superiority.

   5. எல்லை (நாநார்த்த.);; limit, boundary.

   6. பேரழகு; exquisite beauty.

   ம. ஆணி, ஆணிக்கல்லு;. க., தெ. ஆணி.

     [ஆழ் → ஆண் + இ = ஆணி. ஆணி = ஆழ்ந்துள்ள ஆணி. தேர், வண்டி முதலியவற்றின் உறுப்புகளை இறுக்கிப் பிடிக்க முதன்மையானதாகவும் அடிப்படையாகவும் இருத்தலால் மேன்மைப்பொருளும் ஆசை, அழகுப்பொருள்களும் நிழல் பொருள்களாயின.]

 ஆணி4āṇi, பெ. (n.)

   1. வாள், அலகு; pointed edge of a sword.

   2. ஆணிமுத்து; pear superior.

   3. படுக்கை; bed.

க. ஆணி.

     [ஆணி = முதன்மை. ஆணி கூர்மையுடைமையின் கூரிய வாளலகும், கூர்மை தீட்டலான் ஒளியுடைமை பற்றி ஆணிமுத்தும், அழகுடைமையின் படுக்கையும் நிழல் பொருள்களாய் அவ்வவற்றைச் சுட்டின.]

 ஆணி5āṇi, பெ. (n.)

   1. நடுகழி, அடிக்கும் முளை; wooden peg.

   2. வலைகளின் முனைகளில் கட்டும் சிறு மூங்கிற்கழி; small bamboo stick tied at the end of a net.

ம., க., தெ., து., குட. ஆணி.

     [அள் → அண் + இ – அணி → ஆணி. அள் → பொருத்தல், சேர்த்தல். ஆணி – பொருத்தி அல்லது சேர்த்தி அமைப்பது.]

 ஆணி6āṇi, இடை. (part.)

   ஒரு பெயரீறு; suffix in words, indicating intensive force. உச்சாணி, சிரிப்பாணி சின்னாணி (உ.வ.);

     [அணம் → ஆணம் → ஆணி. அணம் = சாரியை, பெயரீறு. ஆணி = பெயரீறு. அணவுதல் = தொடுதல், நெருங்குதல். உச்சாணி = உச்சியை அல்லது முகட்டின் கொடுநுனியை மிக நெருங்கிய கூர்முனை. உச்சாணிக் கிளை = கிளையின் கடைகோடி முனை.]

 ஆணி7āṇi, பெ. (n.)

   நாட்பட முதிர்தல்;   மிகுதல், காழ்கொள்ளுதல்; to become hard, strong, and mature.

ஆணி மூலம்

 ஆணி மூலம்āṇimūlam, பெ. (n.)

   எருவாயின் (ஆசனம்); உட்புறம் ஆணியைப்போல் கட்டியாகவிருக்கும் ஒரு வகை மூலநோய்; hard vesicular tumour appearing inside the rectum – Internal piles.

     [ஆணி + மூலம். ஆணி = கட்டியான.]

ஆணி வேர்

ஆணி வேர்2āṇivēr, பெ. (n.)

   1. சொல்லின் மூலம்; root of a word, etymology.

   2. அடிப்படை; basic, foundation. குடும்பத்திற்கவனே ஆணிவேர் (உ.வ.);.

     [ஆணி + வேர்.]

ஆணிக்கணு

 ஆணிக்கணுāṇikkaṇu, பெ. (n.)

   மரத்தில் அமைகின்ற கணுக்கள் வகையுள் ஒன்று, உயிருள்ள கணு எனப்படும்; a kind of node.

ஆணிக்கல்

ஆணிக்கல்āṇikkal, பெ. (n.)

   1. பொன்னுரைக்குங்கல்; touch-stone for ascertaining the fineness of gold.

   2. பொன் நிறுக்குங்கல்; standard weight for gold.

     “கச்சிப்பேட்டு ஆணிக்கல்லால் நிறை இருபதின் கழஞ்சுபொன்” (S.S.I.I. 117);.

     [ஆணி + கல் = ஆணிக்கல் = முதன்மையான கல்.]

ஆணிக்கால்

 ஆணிக்கால்āṇikkāl, பெ. (n.)

   பருக்கைக் கற்களின் மேல் நடத்தலால் அல்லது காலில் முள் தைத்து ஒடிதலால் பாதத்தில் ஆங்காங்குத் திரட்சி கண்டு வலிமிகும் கால்; foot having a hard horny excrescence caused by the pricking of thorns or by walking on pointed pebbles (சா.அக.);.

ம., க. ஆணிக்கால்.

     [ஆணி + கால் → ஆணிக்கால் = ஆணிபோல் வலிதாய்த் திரட்சி கண்டு வலியெடுக்கும் கால்.]

ஆணிக்குருத்து

ஆணிக்குருத்துāṇikkuruttu, பெ. (n.)

   பனை, தெங்கு முதலியவற்றின் நடு அல்லது மூலக்குருத்து; heart or prime part of a palmyra shoot, central thick shoot of a palm.

   உறுதி, உறுதிப்பாடு; certainty, firmness.

     “பங்கமில்லாமலே ஆணிக்கையாக” (கனம் கிருட்டிணையர் கீர்த்.32);.

     [ஆணி = மேன்மை, அடிப்படை. ஆணி + கை – ஆணிக்கை = உறுதி, உறுதிப்பாடு.]

ஆணிக்கொம்பு

 ஆணிக்கொம்புāṇikkombu, பெ. (n.)

   மரவாப்பு (செங்கை.வழ);; wooden wedge.

     [ஆணி + கொம்பு.]

ஆணிக்கொள்ளு-தல்

ஆணிக்கொள்ளு-தல்āṇikkoḷḷudal,    13 செ.கு.வி. (v.i.)

   1. இருப்பிடத்தை நிலைப்படுத்திக் கொள்ளுதல்; to make one’s position firm, consolidation. இங்கே ஆணிக்கொண்டு பிறகு மற்ற காரியங்களை நீ பார்க்க வேண்டும். (உ.வ.);

   2. இறக்கும்போது கண் நிலைக்குத்திட்டு நிற்றல், ஒரு சாவுக் குறிப்பு; eyes remaining fixed just before death. This is considered one of the indications of approaching death.

     [ஆணி + கொள்ளுதல் = ஆணிக்கொள்ளுதல். ஆணிபோல் அசையாமல் செங்குத்தாகக் கண்பார்வை நிற்றல்.]

ஆணிக்கோவை

ஆணிக்கோவைāṇikāvai, பெ. (n.)

   1. உரையாணிகள் கோத்த மாலை;   2. கவுபால சித்தர்செய்த நூல். இதில் பொன் ஒருமாற்று முதற்கொண்டு பத்து மாற்றுவரையில், 27 தரமாகப் பிரித்து பொன்னின் மாற்றுகளை வரிசையாக அடியிற் காட்டியுள்ளபடி கண்டுபிடிப்பதற்கு உதவும் வகையில் விளக்கம் தரப்பட்டுள்ளது; treatise compiled by siddhas to test the purity of fineness of gold in general. According to this book, the standard of fineness of gold known in Tamil as marru, from 1 to 10, is further subdivided into fractions, for purposes of accuracy and correctness and arranged in order, according to the quality and degree of fineness into 27 grades as illustrated below.

 Each grade is represented by a slender bar of rod of gold of the standard of fineness of that grade known as the touch-needle. Thus, there are 27 needles prescribed for 27 grades and they are used in conjunction with the touchstone for purposes of testing the fineness of gold. These needles were impressed with marks for the sake of brevity, as mentioned below, opposite to each grade to indicate the various degrees of fineness.

பிரிவு எண். மாற்று ஆணி அடையாளம்

 Grade No. Degrees of Mark.

 Touch-needle

   1. 1 –

   2. 1½ .1

   3. 2 ..

   4. 2½ ..1

   5. 3 …

   6. 3½ …1

   7. 4 \

   8. 4½ ….

   9. 5 …..

   10. 5½ …..

   11. 6

   12. 6¼ ^

   13. 6½ ^

   14. 6¾ ^

   15. 7 ^

   16. 7¼

   17. 7½

   18. 7¾

   19. 8 \

   20. 8¼

   21. 8½ ^

   22. 8¾

   23. 9

   24. 9¼

   25. 9½

   26. 9¾

   27. 10 __

மேற்கண்ட மாற்று வகைகளின் கலப்புவகை.

   1 மாற்று முதல் 6 மாற்று வரையில் – தூய செம்பு + வெள்ளி. 6 மாற்று முதல் 9¾ மாற்று வரையில் – பொன் + செம்பு + வெள்ளி.

   10 மாற்று – தூய பொன்

   10½ மாற்று – உயர்ந்த பொன்.

பொதுவாகப் பொன்னின் மாற்று அறியும் மூன்று வகைகள்:

   1. உள்வெட்டு.

   2. மேல்வெட்டு.

   3. உரசல்.

 The following are the details of alloys of the several grades mentioned above:

   1 to 6 marru represent alloys of copper and silver.

   5 to 9 marru represent alloys of gold, copper and silver.

   10 marru represent only pure gold.

   10½ morru, no test prescribed for this rare gold.

 The gold under test is generally examined in three ways viz.

   1. deep cut. 2, superficial cut. 3, rubbing on touch—stone. The term ‘marru’ corresponds to the English term ‘Carat’ which is employed to denote the fineness of gold. (சா.அக.);.

     [ஆணி + கோவை = ஆணிக்கோவை = உரையாணிகள் கோத்த மாலை. கோவை + கோத்திருப்பது. கோர்வை → கோவை.]

ஆணிச்சவ்வு

ஆணிச்சவ்வுāṇiccavvu, பெ. (n.)

   1. வெள்விழியை யொட்டியுள்ள கருப்புச் சவ்வு; black membrane adjoining the white of the eye.

   2. விழிப்படலம்; cornea of the eye.

     [ஆணி + சவ்வு. ஆணி = முதன்மை, அடிப்படை. சவ்வு பார்க்க;see savvu.]

ஆணிச்சிதல்

ஆணிச்சிதல்āṇiccidal, பெ. (n.)

   1. முகப்பருவின் முளை; root of the pimple.

   2. சீழ்பிடித்த குழிப்புண்; core of the suppurating ulcer.

     [ஆணி + சிதல். ஆணி = அடிப்படை. சிதல் = சிதைப்புதல்.]

ஆணிச்செய்வகை

 ஆணிச்செய்வகைāṇicceyvagai, பெ. (n.)

   பொன் மாற்று அறிய உதவும் உரையாணி செய்யும் வகை; method of making the touch-nails to test the fineness of gold.

     [ஆணி + செய்வகை.]

ஆணிச்செருக்கம்

 ஆணிச்செருக்கம்āṇiccerukkam, பெ. (n.)

   ஒருவகை உப்பு நஞ்சு; poisonous compound of salt (சா.அக.);.

     [ஆணி + செருக்கம்.]

ஆணிடி

ஆணிடிāṇiḍi, பெ. (n.)

   உருமேறு; thunderbolt. (கந்தபு. நகரழி. 77. உரை);.

     [ஆண் + இடி.]

ஆணிதை-த்தல்

ஆணிதை-த்தல்āṇidaiddal,    4. செ.கு.வி. (v.i.)

   1. பொருந்த ஆணியடித்தல்; to nail, fasten with nails, as reapers.

   2. காலில் ஆணி குத்திப்பாய்தல்; piercing of nail in the foot.

     [ஆணி + தைத்தல். தள் → தய் → தை → தைத்தல் = தள்ளுதல், தூக்குதல், உட்செல்லுதல்.]

ஆணித் தங்கம்

 ஆணித் தங்கம்āṇittaṅgam, பெ. (n.)

ஆணிப் பொன் பார்க்க;see āņi–p–pon.

ஆணித்தரம்

ஆணித்தரம்āṇittaram, பெ. (n.)

   1 முதற்றரம்; nest quality, standard.

   2. உறுதி (வின்.);; firmness, அவர் ஆணித்தரமாகக் கூறினார்.

   3. நல்லமுத்து, கட்டி முத்து; solid pears of a superior quality. (சா. அக.);.

     [ஆணி + தரம். ஆணி = முதன்மை, உறுதி, வலிமை. தரம் = வகை.]

ஆணிநஞ்சு

 ஆணிநஞ்சுāṇinañju, பெ. (n.)

   கோளகப்பாடாணம்; a kind of arsenic.

     [ஆணி + நஞ்சு. ஆணி = முதன்மை.]

ஆணிநோய்

 ஆணிநோய்āṇinōy, பெ. (n.)

   பருக்கைக்கற்களின் மேல் நடப்பதாலும் பாதத்தில் முள் தைத்து ஒடிவதாலும், தசை தடித்துக் கட்டியாகி வலிமை மிகுவிக்கும் ஒரு நோய்; painful disease in the foot caused by the hard thorny excrescence arising from walking on pointed pebbles or by running a thorn in one’s foot – corn.

     [ஆணி + நோய்.]

ஆணிபாய்-தல்

ஆணிபாய்-தல்āṇipāytal,    12 செ.கு.வி. (v.i.)

   1.முள்தைப்பதனால் ஏற்படும் ஆணி என்னும் காய்ப்பு; formation of a conic mass extending down into the skin and producing pain and irritation.

   2. ஆணிதை-த்தல் பார்க்க see anital-.

     [ஆணி + பாய்.]

ஆணிப்படலம்

 ஆணிப்படலம்āṇippaḍalam, பெ. (n.)

   ஒருவகைக் கண்ணோய்; eye–disease, a disease of the cornea attended with the growth of horny tissue. (சா.அக.);.

     [ஆணி + படலம். ஆணி = முட்போன்ற தசை வளர்ச்சி. படலம் = படர்வது.]

ஆணிப்பரங்கி

 ஆணிப்பரங்கிāṇipparaṅgi, பெ. (n.)

   மாணிக்கம்; one of the nine gems.

     [ஆணி = முதன்மை, பரங்கி = பரல் போன்றது.]

ஆணிப்பரிகாரம்

ஆணிப்பரிகாரம்āṇipparikāram, பெ. (n.)

   1. சதையின் மேல் எழும்பிய காய்ப்பு நீங்குவதற்குச் செய்யும் மருத்துவம்; treatment for curing the corn.

   2. கருவிழியில் ஆணி பாய்ந்ததைக் குணப்படுத்துவதற்குச் செய்யும் கண் மருத்துவம்; operation performed on the cornea to remove the growth of a thorny tissue. (சா.அக.);

     [ஆணி + பரிகாரம். பரிதல் = ஒடுதல், நீங்குதல். காரம் = செய்வினை. பரிகாரம் = நீங்கச்செய்யும்வினை. ஆணிப்பரிகாரம் = ஆணி நீங்கச் செய்யும் மருத்துவம்.]

ஆணிப்பாரை

 ஆணிப்பாரைāṇippārai, பெ. (n.)

   பதிக்கப்பட்ட ஆணி முதலியவற்றைப் பிடுங்குவதற்குக் கடப்பாரையைப் போன்று இரும்பாலான சிறிய கருவி; a kind of iron clamp which is used to pluck nails etc. (தஞ்சை வழ);.

     [ஆணி + பாரை.]

ஆணிப்பிடிச்சி

 ஆணிப்பிடிச்சிāṇippiḍicci, பெ. (n.)

   சீனக்காரம்; alum, which is a whitish transparent astringent Salt.

     [ஆணி + பிடிச்சி.]

ஒருகா. பிடிப்புள்ளதாக அல்லது ஒட்டும் இயல்புள்ளதாக விருப்பதனால் அதன் முதன்மைப் பண்பு பற்றி இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம்.

ஆணிப்பிடுங்கி

 ஆணிப்பிடுங்கிāṇippiḍuṅgi, பெ. (n.)

   ஒருபக்கம் அடிப்பதற்கு ஏதுவாகத் தட்டையாகவும், மறுபக்கம் ஆணி முதலியன பிடுங்க ஏதுவாகப் பிளவு பட்டும் இருக்கும் சுத்தியல் வகை; small hammer used to pull out nails by its one side while the other side is used for driving nails.

     [ஆணி + பிடுங்கி.]

ஆணிப்புண்i

 ஆணிப்புண்iāṇippuṇ, பெ. (n.)

   உள்ளே ஆணிபாய்ந்த சிலந்திப்புண்; ulcer with a core or decayed tissue inside due to the impure, vitiated, debilitated condition of the blood, especially in diabetic carbuncle. (சா.அக.);.

     [ஆணி + புண். ஆணி = ஆணிபோன்ற காப்பு.]

ஆணிப்பூ

ஆணிப்பூāṇippū, பெ. (n.)

   1.

   கண் காசம்; cataract of the eye.

   2. கண்ணில் விழும் பால் நிறமான வெள்ளை மாசு; milk-white opacity in the cornea of the eye – Leucoma.

     [ஆணி + பூ = ஆணிப்பூ. பூப்போன்ற வெண்மாசு படியும் கண்நோய். ஆணி = வலிதாகப் பற்றி நிலை கொண்ட நோய்.]

ஆணிப்பூடு

 ஆணிப்பூடுāṇippūṭu, பெ. (n.)

ஆணிப்பூ பார்க்க;see anl-p-pu.

ஆணிப்பொன்

ஆணிப்பொன்āṇippoṉ, பெ. (n.)

   மாற்றுயர்ந்த பொன்; refined superior gold.

     “ஆணிப்பொன்னாற் செய்த … தொட்டில்” (திவ். பெரியாழ். 1,3,1);.

   ம. ஆணிப்பொன்னு;க. ஆணிப்பொன்

     [ஆணி + பொன் – ஆணிப்பொன் = உயர்ந்த பொன். ஆணி = மேன்மை, உயர்வு.]

ஆணிமலர்

 ஆணிமலர்āṇimalar, பெ. (n.)

   ஆணியின் தலை (இ.வ.);; head of a nail.

     [ஆணி + மலர். மலர் = மலர்போல் விரிந்த தலைப்பகுதி.]

ஆணிமலர்த் திருப்பி

ஆணிமலர்த் திருப்பிāṇimalarttiruppi, பெ. (n.)

   1. திருப்புளி; screw-driver.

   2. பிடித்தராவி; screw-wrench.

     [ஆணிமலர் + திருப்பி. ஆணிமலர் = ஆணியின் தலைப்பகுதி. திருப்பி = திருப்ப உதவுவது.]

ஆணிமுத்து

 ஆணிமுத்துāṇimuttu, பெ. (n.)

   குற்றமற்ற உயர்ந்த கட்டாணி முத்து, வயிரமுத்து; solid, superior pear of the finest quality.

க. ஆணிமுத்து.

     [ஆணி + முத்து. ஆணி = வன்மை, வயிரம்.]

ஆணிமுளை

 ஆணிமுளைāṇimuḷai, பெ. (n.)

   கட்டி, புண் முதலியவற்றின் நடுவிலுள்ள முளை; the core of an abscess or of any sore.

     [ஆணி + முளை. ஆணி = கட்டியான.]

ஆணியச்சு

 ஆணியச்சுāṇiyaccu, பெ. (n.)

   ஆணிகளை உருவாக்கும் அச்சு; nail plate, lathe (C.E.M.);.

     [ஆணி + ஆச்சு.]

ஆணியம்

 ஆணியம்āṇiyam, பெ. (n.)

ஆநியம் பார்க்க;see āniyam

ஆணியிடு-தல்

ஆணியிடு-தல்āṇiyiḍudal,    20 செ.கு.வி. (v.t.)

   கண் நிலைக்குத்துதல்; eyes becoming fixed in the central portion as a sign of approaching death,

     [ஆணி + இடு. ஆணியிடல் = செங்குத்தாகச் செருகல்.]

ஆணியிருமல்

 ஆணியிருமல்āṇiyirumal, பெ. (n.)

   நாட்பட்ட இருமல் நோய்; hard cough with a metallic sound.

     [ஆணி + இருமல். ஆணி = நன்கு வேரூன்றிய, நோய் முதிர்ந்த.]

ஆணிரோகம்

 ஆணிரோகம்aāṇirōkam, பெ. (n.)

ஆணிநோய் பார்க்க;see ani-noy.

     [ஆணி + ரோகம். skt. roga.]

ஆணிவேர்

ஆணிவேர்1āṇivēr, பெ. (n.)

   1. மரம் பூண்டு ஆகியவை முளைக்கும்போதே நீண்டு நிலத்தினுள் நேரே ஊடுருவிச் செல்லும் முகாமையான மூலவேர் அல்லது நடுவேர்; central root of a tree or a plant which begins to penetrate right down into the earth from its growth, tap-root.

   2. உச்சிவேர்; main of the central root. (சா,அக.);.

     [ஆணி + வேர். ஆணி = ஆழ்ந்து பாய்ந்த, தலைமையான.]

ஆணு

ஆணு1āṇu, பெ. (n.)

   இதன் (இரசம்);; quick silver, mercury.

     [ஆணம் → ஆணு. ஆணம் = நீர்மம்.]

 ஆணு2āṇu, பெ. (n.)

   1. அன்பு, நேயம்; attachment, affection.

     “ஆணுப் பைங்கிளி யாண்டுப் பறந்ததே” (சீவக. 1002);.

   2. இனிமை (சூடா.);; sweetness, agreeableness.

   3. நன்மை (சூடா.);; benefit.

     [ஆணம் → ஆணு. ஆணம்’ பார்க்க;see āņam’.]

ஆணெழுத்து

 ஆணெழுத்துāīeḻuttu, பெ. (n.)

   உயிர்க்குறிலும் உயிர்மெய்க்குறிலும் ஆகிய எழுத்துகள்; short vowels and short vowel consonants.

     [ஆண் + எழுத்து. முதன்மையான எழுத்து. ஆண்பாலெழுத்து பார்க்க;see annpaleluttu.]

ஆணை

ஆணை1āṇai, பெ. (n.)

   1. அதிகாரம்; power, authority.

     “அரும்பதி செல்வநல்கி யாணையும் வைப்பன்” (சி.சி. 2,31);.

   2. கட்டனை; mandate, order, edict.

     “அமரர்கோ னாணையில் அருந்துவோர் பெறாது” (மணிமே. 14,76);.

   3. ஏவல் (கதி.அக.);; command.

   4. ஆன்றோர் மரபு; rules, usages established by the learned of old.

     “தொல்லாணை நல்லாசிரியர்” (மதுரைக். 761);.

   5. மெய் (பிங்.);; truth.

   6. முறைமன்றத்தில் ஏற்கும் உறுதிமொழி (திவா.);; oath, as in a court of justice.

   7. உறுதியேற்குங்கால் விருப்பத்திற்குரிய ஒருவர் அல்லது ஒன்றன்மேல் அடித்துக்கூறுதல்; profane swearing, the word being affixed to the person or thing sworn by as. அப்பனாணை, கண்ணனாணை (உ.வ.);.

     “அவள் கண்ணிலும் காண்டிவ வில்லினும் ஆணை” (பாஞ்);.

   8. நெடுமொழி (சீவக.641);; vow.

   9. உறுதி மொழி கூறித் தடுக்கை (பிங்.);; checking by oath, constructing by imprecation.

   10. இலச்சினை (பிங்.);; sign of insignia of authority.

   11. முத்திரை; stamp, seal (w);.

   12. அடையாளம்; symbol, emblem.

   13. வெற்றி (சூடா.); conquest, victory.

   ம. ஆண;   க. ஆணெ;   தெ. ஆணது. ஆணெ;   பிராகி. ஆணா;   வ. ஆக்ஞா;   பா. ஆணா;   குச். ஆண்;   சிந்., மரா. ஆணா;   இந். ஆண்;சிங். ஆண.

     [ஆள் → ஆண் → ஆணை. ஆணை = பிறரை அடக்கியாளும் அதிகாரம். அதிகாரத்தால் பிறப்பித்த கட்டளை, உறுதியான கட்டளை, உறுதி, உண்மை,

உண்மையாகவும் உறுதியாகவும் செய்யப்படும் செயல், வெற்றி, அதிகாரம், உறுதி முதலியவற்றைத் தெரிவிக்கும் அடையாளம், இலச்சினை. ஒ.நோ.: கள் → கண் → கணை. பள் → பண் → பணை. மள் → மண் → மணை.]

வடமொழியில் கட்டளைப் பொருளில் வரும் ‘ஆக்ஞா’ தமிழ்ச் சொல்லான ‘ஆணை’ என்பதனோடு எவ்வகைத் தொடர்பும் இல்லாதது. வட மொழியாளர் ‘ஆக்ஞா’ என்னும் சொல்லை ஆ + க்ஞா எனப் பிரிப்பர். ‘ஆ’ பொருளில்லாத முன்னொட்டு. ‘க்ஞா’ – அறிதல் என்று மட்டும் பொருள் தரும் வேர்ச்சொல். இதுவும் தமிழ் ‘காண்’ வேரின் திரிபே என்பார் பாவாணர்.

   திராவிட மொழிகளில் மட்டுமன்று;வடஇந்திய மொழிகளனைத்திலும் தமிழ்ச் சொல்லான ‘ஆணை’ இடம்பெற்றிருப்பதும், மலையாள இலக்கண, நூலான இலீலாதிலகத்தில் 15-ஆம் நூற்பா விளக்கவுரையில் ‘ஆணை’ சமற்கிருத ‘ஆக்ஞா’ என்னும் சொல்லிலிருந்து பிறந்தது அன்று என்றும், வடநாட்டுப் பிராகிருதச் சொல்லான

     “ஆணா” என்பதே மூலச்சொல் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பிராகிருதச் சொற்கள் பெரும்பான்மை தமிழிலிருந்து பெற்ற கடன் சொற்களாதலின், தமிழ் ‘ஆணை’ பிராகிருதத்தில் ‘ஆணா’ என்றும், பிராகிருதவழி வடமொழிக்குச் சென்று ‘ஆக்ஞா’ என்றும் திரிந்திருத்தலே உண்மையாதல் காண்க.

வடமொழி தவிர்ந்த இந்தைரோப்பிய மொழிகளில் இச்சொல்லாட்சி புகாமை ஒன்றே இது மேலையாரியச் சொல்லன்று என்பதையும், வடபுல மொழிகளனைத்திலும் தமிழிலிருந்து பெற்ற கடன் சொல்லே வழங்குகிறது என்பதையும் தெரியக்காட்டும்.

இது ‘ஆள்’ (செய்); என இடும் கட்டளை, உறுதியாகச் செய்தே ஆகவேண்டிய கட்டளைகளைக் குறித்துப்பின் ஆணை வடிவுற்றது. ‘கள்’ திரட்சிப் பொருள் குறித்த சொல், முனை வடித்துத் திரட்டிக் (கண்திரட்டல்); கூராக்கப்பட்ட அம்பைக் குறிக்குங்கால் அதற்கேற்ற ஈறேற்கும் நெறியை யொட்டி ‘ஐ’ உடைமையீறு பெற்று நிலைமொழி ளகரமெய் ணகர மெய்யாகி ஆள் + ஐ = ஆணை சொல்வடிவுற்றது. இந்தைரோப்பிய மொழிகளில் ஆணையைக் குறிக்கும் order என்னும் சொல், ஒட்டு, சேர் எனப் பொருள்படும் ‘ar’ என்னும் ஏவலிலிருந்து தோன்றிப்பின், வரிசை, ஒழுங்கு எனப் பொருளால் வளர்ந்து, ஒழுங்குபடுத்தும் ஆணைப் பொருள் தந்து ar-order என வளர்ந்திருத்தலைக் காணின் ஆள் → ஆணை சொல் வளர்ச்சியையும் விளங்கிக் கொள்ளலாம்.

 ஆணை2āṇai, பெ. (n.)

 sakti (or); power of Šiva

     “ஆணையினீக்கமின்றி நிற்குமன்றே” (சி.போ.2);.

     [ஆள் → ஆண் → ஆணை = ஆளுந்திறம், ஆளுந் திறத்திற்குதவும் அறிவாற்றல், நுண்மாண் நுழைபுலவன்மை.]

ஆணை செலுத்து-தல்

ஆணை செலுத்து-தல்āṇaiseluddudal,    2. பி.வி. (casu.v.) அதிகாரம் செயற்படச் செய்தல், அரசு செலுத்துதல்; sway the sceptre, command, exercise the functions of government or authority.

     [ஆணை + செலுத்து.]

ஆணைசெல்(லு)-தல்

ஆணைசெல்(லு)-தல்āṇaiselludal,    13 செ.கு.வி. (v.i.)

   அரசோச்சுதல், அதிகாரம் செயற்படல்; power or authority or command being implemented or put to practice.

     [ஆணை + செல்.]

ஆணைச்சக்கரம்

ஆணைச்சக்கரம்āṇaiccakkaram, பெ. (n.)

   1. அரசாட்சி; reign, royal power.

   2. செங்கோல்; sceptre

     [ஆணை + சக்கரம். சக்கரம் = உருள்வது, நடப்பது, இயங்குவது.]

ஆணைபிறப்பி-த்தல்

 ஆணைபிறப்பி-த்தல்āṇaibiṟabbittal,    பி.வி. (caus.v.) ஆணை முதலியன வெளியிடுதல்; proclaim authority, give orders.

     [ஆணை + பிறப்பி.]

ஆணைப்பெயர்

ஆணைப்பெயர்āṇaippeyar, பெ. (n.)

   வலியோர் அஞ்சப்பேணியுலகம் பேசும் பெயர் (பன்னிருபா. 149);; name given to a hero, calculated to instil respect in the minds of the valiant.

     [ஆணை + பெயர். ஆணை = கட்டளை. எவரும் கட்டளையை அஞ்சியேற்றற்குரிய பதவிப்பெயர் அல்லது இயற்பெயர்.]

ஆணையச்சு

ஆணையச்சுāṇaiyaccu, பெ. (n.)

   யானை இலச்சினை பொறித்த பொற்காசு; gold coin bearing the figure of an elephant (I.M.P. Tp. 117);.

ம. ஆனயச்சு

     [ஆனை + அச்சு. அச்சு = அச்சடிக்கப்பட்ட காசு.]

ஆணையம்

 ஆணையம்āṇaiyam, பெ. (n.)

   சில செயல்களை நிறைவேற்றவும் மேற்பார்வையிடவும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள குழு; body of persons having authority to perform or supervise certain duties, commission.

     [ஆணை → ஆணையம்.]

ஆணையர்

 ஆணையர்āṇaiyar, பெ. (n.)

   குழுவால் அமர்த்தப் பெற்றவர்;   அரசு ஆணையங்களால் அதிகாரம் அளிக்கப்பட்டவர்; one appointed by commission, member of a commission, esp. of government boards etc., commissioner.

     [ஆணை → ஆணையர்.]

ஆணையோலை

ஆணையோலைāṇaiyōlai, பெ. (n.)

   கட்டளைத் திருமுகம்; royal, edict proclamation, summons

     “இன்று ஓராணையோலை .. வாராநின்றது” (திருக்கோ. 327. உரை.);.

     [ஆணை + ஓலை. ஆணை = கட்டளை. ஒலை = திருமுகம், மடல்.]

ஆணைவிடு-தல்

ஆணைவிடு-தல்āṇaiviḍudal,    20. செ.கு.வி. (v.i.)

    சூளுறவை நீக்குதல்; to release from the spell of an oath.

     [ஆணை + விடு.]

ஆணைவெளியிடு-தல்

ஆணைவெளியிடு-தல்āṇaiveḷiyiḍudal,    18.செ.குன்றாவி.

   ஆணை பிறப்பித்தல்; proclaim an order.

     [ஆணை + வெளியீடு.]

ஆணொப்பனை

 ஆணொப்பனைāṇoppaṉai, பெ. (n.)

   ஆண் கூத்துக்குச் செய்யும் ஒப்பனை; make up for male actor.

     [ஆண் + ஒப்பனை.]

ஆணொழிமிகுசொல்

 ஆணொழிமிகுசொல்āṇoḻimigusol, பெ. (n.)

     [ஆண் + ஒழி + மிகு + சொல்.]

ஆணோறை மயக்கம்

 ஆணோறை மயக்கம்āṇōṟaimayakkam, பெ. (n.)

   நறுமணமுள்ள மூலிகை, கற்பூரவல்லி; thick leaved lavendar. (சா.அக.);.

     [ஆண் + (உறை); ஒறை + மயக்கம். ஆண் = தலைமை, மிகுதி உறை = கார்ப்பு, மணம் மயக்கம் = செறிவு.]

ஆண்

ஆண்1āṇ, பெ. (n.)

   1. ஆண்பாற்பொது; male.

   2. வீரியம்; manliness, courage.

     “மான மதாணி யாணிற் றாங்கல்” (ஞானா.17.7);.

   3. தலைமை; superiority, excellence. (மாறன. 261, உதா. செய். 726, உரை);.

   4. போராளி; warrior.

     “ஆணணி புகுதலும்” (சிறுபாண். 211);.

   ம., க. ஆண்;   குட. ஆணி;   து. ஆணு;கூ. ஆனு.

     [ஆள் → ஆண். ஆளுந்திறம் வாய்ந்தவன், வினைத்திட்பம் கொண்டவன், ஆற்றல் மிக்கவன்.]

 ஆண்2āṇ, பெ. (n.)

   1. ஆண் மரம்; tree having a hard core.

     “ஆண்மரக்கிளவி” (தொல். எழுத்து. 304);.

   2. இதளியம்; mercury.

     [ஆண் = திண்மை. வயிரம் பாய்ந்து திண்மையுற்ற மரமும் நீர்ம வடிவிலுள்ள திண்ணிய மாழை (உலோகம்)யும் “ஆண்” பெயர் பெற்றன.]

 ஆண்3aṉaāṇ, பெ. (n.)

   1. வன்மை; strength.

   2. ஒளி; light.

   3. வெண்மை; whitness.

     [ஆண்1 → ஆண்3.]

 ஆண்4āṇ, பெ. (n.)

   வலப்பக்கம்; right side.

     [வில்லில் நாணேற்றும் வலப்பக்கம் ஆண்மைக் குரியதாயிற்று.]

 ஆண்5āṇ, பெ. (n.)

   அழகு; beauty.

     [யாண் → ஆண்.]

ஆண் கட்டு

 ஆண் கட்டுāṇkaṭṭu, பெ. (n.)

   விந்து கட்டுதல்; suspension of semen from being discharged. (சா.அக.);.

     [ஆண் + கட்டு. கட்டு = கட்டுதல், கட்டுப்படுத்துதல். ஆண் = ஆணின் விந்து (முதலா.பெ.);.]

ஆண் கோள்

ஆண் கோள்āṇāḷ, பெ. (n.)

 in the Hindu system of astrology any one of the three planets, Mars, Jupiter, or the Sun. (W.);.

     [ஆண்1 + கோள்.]

ஆண் சாவி

 ஆண் சாவிāṇcāvi, பெ. (n.)

   உட்டுளையில்லாத திறவுகோல்; key with a solid barrel. ஆண்திறவுகோல் பார்க்க;see an-tiravu-köl.

ஆண் செருப்படை

 ஆண் செருப்படைāṇceruppaḍai, பெ. (n.)

   சிறு செருப்படை; medicinal plant with small leaves.

     [ஆண் + செருப்படை]

ஆண் பெண்

 ஆண் பெண்āṇpeṇ, பெ. (n.)

   கணவன் மனைவி, இணை துணையர் (சூடா.);; husband and wife, married couple.

     [ஆண் + பெண்.]

ஆண் பைத்தியம்

 ஆண் பைத்தியம்āṇpaittiyam, பெ. (n.)

   ஆண்மகனின் மேல் பெண் கொண்ட ஒரு வேட்கை; insane sexual desire in a female over a male. It is opp to penpaittiyam, the one in the male. (சா.அக.);

     [ஆண் + பைத்தியம். பித்தம் → பித்தியம் → பைத்தியம். பித்தம் = மயக்கம், வெறி.]

ஆண் வசம்பு

 ஆண் வசம்புāṇvasambu, பெ. (n.)

   ஒருவகை வசம்பு; a variety of sweet flag-Acorus Calamus. (சா.அக.);

ஆண்கடன்

ஆண்கடன்āṇkaḍaṉ, பெ. (n.)

   ஆண்மக்கள் கடமை; man’s duty, responsibility.

     “ஆற்றாதார்க் கீவதா மாண் கடன்” (நாலடி. 98);.

     [ஆண் + கடன். கடன் = கடமை.]

ஆண்கடல்

 ஆண்கடல்āṇkaḍal, பெ. (n.)

   அலைமிகுதியாயெழுங் கடல் அல்லது கடற் பரப்பு; sea or an area or it where the wave is high. (முகவை. மீனவ.);.

     [ஆண் + கடல்.]

ஆண்கடி

 ஆண்கடிāṇkaḍi, பெ. (n.)

   தேங்காயின் கீழ்ப்பகுதி ஓடு; lower half of the coconut-shell. (துளுநா.);

ம. ஆண்முரி (மேற்பகுதி ஓடு பெண்முரி);

     [ஆண் + கடி. கடை → கடி = கீழ்ப்பகுதி.]

ஆண்கல்

 ஆண்கல்āṇkal, பெ. (n.)

   சிற்பங்கள் முதலியன அமைப்பதற்கு ஏதுவான முதன்மையான கருங்கல் (கம். வழ.);; superior variety of granite, used to carve statue etc.,

     [ஆண் + கல்.]

ஆண்குமஞ்சன்

 ஆண்குமஞ்சன்āṇkumañjaṉ, பெ. (n.)

   குங்கிலியம்; resinous gum used as an incense. It is opposed to சாம்பிராணி which is termed the female frankincense. (சா.அக.);.

     [ஆண் + குமஞ்சன். ஒருகா. குமஞ்சன் = நறுமணப் பொருள். நறுமணப் பொருள்களுள் சாம்பிராணி

   பெண்மை சார்ந்ததாகக் கூறப்படுதலின் குங்கிலியம் ஆண்மை சார்ந்ததாகலின் ஆண்குமஞ்சன் எனப் பெயர். பெற்றிருக்கலாம். குமஞ்சன் பார்க்க;:ee kumanjan]

ஆண்குமஞ்சன் பார்க்க;see an-kumanjan. ஆண்குறட்டை

 ஆண்குமஞ்சன் பார்க்க;see an-kumanjan. ஆண்குறட்டைāṇkumañjaṉpārkkaāṇkuṟaṭṭai, பெ. (n.)

   ஒருவகைக் குறட்டை, பேய்ப்புடலை; a bitter male snake-groud. (சா.அக.);.

     [ஆண் + குறட்டை (ஒருகா. குறட்டை = வளைந்த காய்); குறட்டை பார்க்க;see kயாta.]

ஆண்குமஞ்சான்

 ஆண்குமஞ்சான்āṇkumañjāṉ, பெ. (n.)

ஆண்கூடல்

 ஆண்கூடல்āṇāṭal, பெ. (n.)

   சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று; a knd of minor literature.

     [ஆண் + கூடல்.]

ஆண்கூத்து

 ஆண்கூத்துāṇāttu, பெ. (n.)

   நாடகத்தில் ஆணாக நடிப்பவன்;   ஆண் நடிப்பு; male character in drama (W.);.

     [ஆண் + கூத்து. கூத்து = நடிப்பு.]

இக்காலத்து இவர் ஆண்பாத்திரம் ஏற்று நடித்தார் என்பதைப் பண்டையோர் ஆண்கூத்து ஏற்று நடித்தார் என வழங்கினர். பாத்திரம் என்னும் வடசொல் வழக்கூன்றிய பின் இத்தூய தென்சொல் வழக்கிழந்தது.

ஆண்கை

ஆண்கைāṇkai, பெ. (n.)

   அவிநயக்கை வகை (சிலப். பக். 92, கீழ்க்குறிப்பு);; handpose in dancing.

     [ஆண்3 + கை.]

ஆண்கொடுவேலி

ஆண்கொடுவேலிāṇkoḍuvēli, பெ. (n.)

   வெண் கொடுவேலி; white-flowered lead wort. மறுவ : ஆண்கொடிவேலி.

     [ஆண்3 = வெண்மை. ஆண் + கொடுவேலி]

ஆண்சந்ததி

 ஆண்சந்ததிāṇcandadi, பெ. (n.)

ஆண் பிறங்கடை பார்க்க;see an—pisankadai

     [ஆண் + சந்ததி. Skt. Santana → த.சந்ததி.]

ஆண்சரக்கு

ஆண்சரக்குāṇcarakku, பெ. (n.)

   1. காரச் சரக்கு; substances containing alkali, Alkaloids,

   2 கல்லுப்பு.

   வெடியுப்பு. ஆகிய உப்புச்சரக்கு; alkaline bases, such as soda, rock salt, nitre, lime etc. It is opposed to பெண் சரக்கு அல்லது புளிச்சரக்கு, acid substances. (சா.அக.);.

     [ஆண்1 + சரக்கு. காரச் சரக்குகள் ஆண்சரக்கு என்றும் புளிப்புச் சரக்குகள் பெண்சரக்கு என்றும் மருத்துவ நூலார் ஆளும் மரபு பற்றி இப்பெயர் ஏற்பட்டது.]

ஆண்சிரட்டை

 ஆண்சிரட்டைāṇciraṭṭai, பெ. (n.)

   தேங்காயின் அடிப்பாதியோடு; lower half of the coconut shell

   ம. ஆண்முரி;து. ஆண்கடி.

     [ஆண் + சிரட்டை.]

ஆண்சோடணை

 ஆண்சோடணைāṇcōṭaṇai, பெ. (n.)

ஆண் ஒப்பனை பார்க்க;see an—oppana

     [சுவடி → சோடி → சோடணை.

சுவடி = ஜோடி என்றும் ஜோடனை என்றும் வடமொழியில் திரிந்துள்ள திரிபுகள் ‘சுவடி’ என்னும் தமிழ் வேர்ச் சொல்லிலிருந்து பல்கிப் பன்மடித் திரிபுற்றவை. சுவடி, சோடி பார்க்க;see suvadi, sõdi.]

ஆண்டகம்

 ஆண்டகம்āṇṭagam, பெ. (n.)

   மணமல்லிகைச் செடி (மனோரஞ்சிதம்);; flower, Heart’s joy, Cupid’s plant. (சா.அக.);.

     [ஆண்டு → ஆண்டகம். ஆண்டு = முளை, அரும்பு]

ஆண்டகை

ஆண்டகைāṇṭagai, பெ. (n.)

   ஆண்தன்மை (சீவக. 289);; manliness.

   2. பெருமையிற்சிறந்தோன் (பிங்.);; man of great eminencs.

   3. அரசரிற் சிறந்தோன் (கதி.அக.);; gem among kings.

   4. வீரன் (கதி.அக.);; hero, warrior.

     [ஆண் + தகை. தகை = தன்மை.]

ஆண்டகைமை

ஆண்டகைமைāṇṭagaimai, பெ. (n.)

   1 ஆண்தன்மை; manliness.

   2. வீரம்; heroism, inherent bravery, chivalry.

     [ஆண் + தகைமை. தகைமை = தன்மை.]

ஆண்டகையன்

ஆண்டகையன்āṇṭagaiyaṉ, பெ. (n.)

ஆண்டகை பார்க்க;see appaga.

     “ஆண்டு நிற்கும் ஆண்டகையனே” (புறநா. 292);.

ஆண்டபண்டம்

 ஆண்டபண்டம்āṇṭabaṇṭam, பெ. (n.)

   வீட்டுத் தட்டுமுட்டுப் பொருள்கள்; house hold articles ஆண்டபண்டம் அறுபதும் (உ.வ.);.

     [ஆண் = தலைமை, முதன்மை. ஆண் + பண்டம்.]

ஆண்டலை

ஆண்டலை1āṇṭalai, பெ. (n.)

   1. சேவல், பெடை: gallinaceous fowl, cock of hen.

     “ஆண்டலை யுயர்த்தவன்” (கந்தபு.தெய்வ.7);.

   2. ஆண்மகன் தலைபோன்ற தலையுடைய ஒரு பறவை; tabulous bird of prey having its head resembling that of a man.

   3 கோட்டான்; large hooting-owl.

     “ஊண்டலை துற்றிய வாண்டலைக் குரலும்” (மணிமே. 6,77);.

     [ஆண் + தலை + ஆண்டலை. தலையிற் கொண்டையும் தாடி போன்ற கீழ்ச்செவுள் அல்லது கீழிறகுடைமை பற்றிச் சேவலுக்கும் ஆண்டலைப் புள்ளுக்கும் இது பொதுப் பெயராயிற்று. சேவலைக்குறித்த சொல் பெடைக்கும் பெயரானது பொருட்புடை பெயர்ச்சி.]

 ஆண்டலை2āṇṭalai, பெ. (n.)

   படைத்தலைவன் (கதி.அக.);; commandar, chief of the army.

     [ஆண் } தலை – ஆண்டலை. ஆண்டலை = தலைமையான ஆடவன், ஆடவர்க்குத் தலைவன்.]

 ஆண்டலை3āṇṭalai, பெ. (n.)

   1. பூவாது காய்க்கும் மரம் (மூ.அ.);; non-flowering trees like the fig tree.

   2. அரசமரம்; peepul tree (ச.அக.);

     [ஒருகா. ஆண் + தலை = ஆண்டலை. ஆண்டலை = பூவாதமரம், மரங்களுள் தலைமையானதாகக் கருதப்படும் அரசமரம்.]

ஈனப்பனை ஆண்பனை என்று குறிப்பிடப்படுமாறு பூவா மரவகையும் மரங்களுக்குரிய பொதுத் தன்மையின் விலகிக் காணப்படுதலால் ஆண்டலையென்றும், ஆண்மை தலைமைப் பொருளும் தருதலான் தலைமையான மரம் எனப் பொருள் பயந்து உயர்வகை மரங்களுள் ஒன்றாகக் கருதப்படும் அரசமரத்தைக் குறிக்க ‘ஆண்டலை’ யென்றும் வழங்கியிருக்கலாம்.

ஆண்டலைக்கொடி

ஆண்டலைக்கொடிāṇḍalaikkoḍi, பெ. (n.)

   முருகக் கடவுளின் சேவற்கொடி (சூடா.1,23);; flag of the Lord Muruga, as having the figure of a cock

   2. பேய் முதலிய பலியை நுகரவொட்டாமல்

   ஆண்மகன் தலையும் பறவையின் உடலுமாக எழுதப்பட்ட கொடி (திருமுருகு 227, உரை);; tag displaying the figure of the and alai bird in order to scare away evil spirits from the offerings on the altar.

     [ஆண் + தலை + கொடி = ஆண்டலைக்கொடி.]

ஆண்டலைக்கொடியோன்

ஆண்டலைக்கொடியோன்āṇḍalaikkoḍiyōṉ, பெ. (n.)

   சேவற்கொடி யுயர்த்திய முருகக் கடவுள்; Tamil God, Muruga, whose flag displays the figure of a cock.

     [ஆண்டலை + கொடியோன். ஆண்டலை = சேவல். ஆண்டலை1 பார்க்க;see āndalal.]

ஆண்டலையடுப்பு

ஆண்டலையடுப்புāṇḍalaiyaḍuppu, பெ. (n.)

   ஆண்டலைப்புள் வடிவாகச் செய்து பறக்கவிடும் மதிற்பொறி (சிலப். 15, 211);; a kind of instrument shaped like the andalaj bird and fixed upon the ramparts of a fortified city, which would dart forth at the approaching hostile army, missiles calculated to peck at and bite their brains.

     [ஆண்டலை + அடுப்பு. ஆண்டலை = ஆண்டலைப் பறவை.]

ஆண்டல்

 ஆண்டல்āṇṭal, பெ. (n.)

   மூங்கில் முளை; bamboo shoot (சேரநா.);.

ம. ஆண்டல்

மறுவ: ஆண்டு

     [அண்டு → அண்டல் → ஆண்டல்.]

ஆண்டளப்பான்

 ஆண்டளப்பான்āṇṭaḷappāṉ, பெ. (n.)

   ஆண்டிற்கொரு முறை கதிரவனைச் சுற்றிவரும் வியாழன் என்னும் கோள் (திவா.);; planet Jupiter which takes one year to pass through one sign of the Zodiac.

     [ஆண்டு + அளப்பான் – ஆண்டளப்பான். ஞாயிற்றுக் குடும்பத்திலுள்ள கோள்களுள் ஒன்றான வியாழன் தன் வட்டப் பாதையில் கதிரவனை ஒரு முறை சுற்றி வருவதற்கு ஒராண்டு ஆதல் குறித்து ‘ஆண்டளப்பான்’ என்னும் பெயர் ஏற்பட்டது. ஆண்டளப்பான் = ஒராண்டில் தன் பாதையை அளந்து (கடந்து சென்று); முடிப்பான்.]

ஆண்டழி-த்தல்

ஆண்டழி-த்தல்āṇṭaḻittal,    4. செ.குன்றாவி. (v.t.)

   அசையும் அல்லது அசையாச் சொத்தைக் குறிப்பிட்ட குடும்பத்தார் முழுவதுமாய்த் துய்த்தல் (செங்கை. மீனவ. வழ.);; enjoyment to full measure of movable or immovable property by a family.

     [ஆண்டு + அழி.]

ஆண்டவன்

ஆண்டவன்āṇṭavaṉ, பெ. (n.)

   1. கடவுள்; God as ruler of heaven and earth, Lord

   2. உடையவன்; master.

   3. ஆளுகை செய்பவன். (கதி அக.);; ruler.

   4. அரசன் (கதி.அக.);; king.

   ம. ஆண்டவன்;பட. ஆண்டம.

     [ஆண்ட + அவன் = ஆண்டவன். ஆண்ட = உரிமையாக்கிக் கொண்ட, ஆட்சிபுரிந்த. ஆளுதல் = உரிமையாக்கி அல்லது உடைமையாக்கிக் கொண்டு பயன்படச் செய்தல்.]

இறைவனால் ஆட்கொள்ளப்பட்டோர் அவன் ஆணை வழிநின்று தனக்கும் உலகிற்கும் பயன்படும் வழியில் கடைத்தேறும் வாய்ப்புப் பெறுதலின், அத்தகு வாய்ப்பினை உயிர்களுக்கு நல்கும் இறைவன் ஆண்டவன் எனப்பட்டான். இறைவனுக்கும் அரசனுக்கும் ஒத்த மதிப்புத் தரப்பட்டமையின் இறைவனுக்கு ஆளாய்த்தொழும்பு பூணுதலை அடியார் விரும்புவது போல அரசனுக்கு ஆளாய்த் தொழும்பு பூணும் குடிகளும் அரசனை இறைவனாகவே கருதி ‘ஆண்டவன்’ என்றனர்.

ஆண்டவரசு

ஆண்டவரசுāṇṭavarasu, பெ. (n.)

   திருநாவுக்கரசர் (பெரியபு, திருநாவுக். 545. 201);; St. Tirunavukkarasar

     [ஆண்ட + அரசு = ஆண்டவரசு. சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்ட பெருமை கருதித் திருநாவுக்கரசரை ‘ஆண்டவரசு’ என அழைத்தல் மரபாயிற்று.]

ஆண்டாண்டு

ஆண்டாண்டுāṇṭāṇṭu, பெ. (n.)

   ஆங்காங்கு; here and there.

     “ஆண்டாண்டுறைதலும் அறிந்தவாறே” (திருமுருகு.249);.

     [ஆண்டு + ஆண்டு.]

ஆண்டான்

ஆண்டான்āṇṭāṉ, பெ. (n.)

   1. ஆண்டவன் (கம்பரா. கடறாவு. 62);; god.

   2. தலைவன்; master, lord.

     [ஆண்டவன் → ஆண்டான்.]

ம. ஆண்டான்.

ஆண்டான்வெட்டு

ஆண்டான்வெட்டுāṇṭāṉveṭṭu, பெ. (n.)

   பழைய நாணய வகை (பணவிடு. 142);; ancient coin.

     [ஆண்டான் + வெட்டு. உருவம் அல்லது எழுத்துப் பொறிக்கப்பட்ட நாணயம் வெட்டு எனப்பட்டது.]

ஆண்டார்

ஆண்டார்āṇṭār, பெ. (n.)

   உடையார் (அக.நி.);; owner, master, lord.

   2. தேவர் (அக.நி.);; gods.

   3. அடியார்; devotees.

     “திருநாள் சேவிக்க வந்த ஆண்டார்களுக்கும்” (S.I.I.ii.84);.

ம. ஆண்டார். க., தெ. ஆண்டாரி.

     [ஆண்டார் → ஆண்டவர். ஆண்ட + அவர் = ஆண்டவர் → ஆண்டார் = ஆண்டவர், ஆட்கொண்டவர், தலைவர், தேவர், ஆட்கொள்ளப்பட்ட அடியார்.]

ஆட்கொண்டவரைக் குறித்த ஆண்டார் எனுஞ்சொல் ஆட்கொள்ளப்பட்ட அடியாரையும் குறித்தது. செயப்படு பொருளை வினைமுதலாகக் கூறும் மரபு வழுவமைதி பற்றியதாகும்.

செயப்படு பொருளைச் செய்ததுபோலத் தொழிற்படக் கிளத்தலும் வழக்கினுளுரித்தே (தொல். சொல். வினை. 49);

இந்நூல் யான் செய்தது என்புழி செய்தது என்னும் முதல்வினை செய்யப்பட்டது எனச் செயப்பாட்டு வினைப் பொருள்படுதல் போலவும், புலி கொன்ற யானை என்புழி கொன்ற என்னும் பெயரெச்சம் கொல்லப்பட்ட எனச் செயப்படுபொருள் குறித்த பெயரெச்சப் பொருள்படுதல் போலவும் ஆண்டார் எனுஞ்சொல் ஆளப்பட்ட அடியாரைக் குறித்தது.

ஆண்டாள்

 ஆண்டாள்āṇṭāḷ, பெ. (n.)

சூடிக்கொடுத்தநாச்சியார். பெரியாழ்வாரின் திருமகளாரும், நாச்சியார் திருமொழி, திருப்பாவை ஆகிய பனுவல்களை இயற்றியவருமாகிய மாலிய (வைணவ); அடியார்: Vaisnava saint, daughter of Periyālvār, and author of the Tiruppaval and the Nacciyar – tirumol.

     [ஆண்டாள் = ஆட்கொள்ளப்பட்டவள்.]

ஆண்டாள் மல்லிகை

 ஆண்டாள் மல்லிகைāṇṭāḷmalligai, பெ. (n.)

   மல்லிகை வகை, (இ.வ..);; a species of Jasmine (loc.);. (செ.அக.); . . . . large double – flowered Arabian Jasmine (S.D);.

     [ஆண் + தாள் + மல்லிகை = ஆண்டாள்மல்லிகை.]

ஆண்டி

ஆண்டி1āṇṭi, பெ. (n.)

   1. பண்டாரம்; a class of Tamilian Saivaile,

   2. .துறவுக்கோலம்பூண்ட சிவனிய (சைவ); அடியார்; Tamil Saiva mendicant.

   3. இரப்போன்; begger.

   4. தவஞ்செய்யும் துறவி; one who meditates after renunciation, ascetic, recluse.

ம.,. க. ஆண்டி..

     [ஆண்டி = இறைவனால் ஆண்டருளப்பட்ட அடியவன். ஆண்டு + இ = ஆண்டி ‘இ’ வினைமுதலீறு.]

 ஆண்டி2āṇṭi, பெ. (n.)

   வரிக்கூத்துவகை (சிலப்.3,13, உரை);; masquerade, dance.

ம ஆண்டி யாட்டம்.

     [ஆண்டி = ஆண்டிக்கோலம்.]

 ஆண்டி3āṇṭi, பெ. (n.)

   முருகனுக்குரிய பெயர்களுள் ஒன்று; a name of Muruga, Tamil God.

     [ஆண்டி = ஆண்டிக்கோலத்தில் இருப்பவன்]

ஆண்டிசமாதி

 ஆண்டிசமாதிāṇṭisamāti, பெ. (n.)

   துறவியாயிருந்து இறந்தவரின் பள்ளிப்படை (சமாதி); யிற் பூசை செய்வதற்கென்று முற்றுாட்டாக விடப்பட்ட நிலம்; inam granted for worship at the tomb of anāngi (R.J.);.

     [ஆண்டி + சமாதி.]

ஆண்டிப்பள்ளிப்படை பார்க்க;seeandi-p-palli-p-padai

ஆண்டிச்சி

ஆண்டிச்சி1āṇṭicci, பெ. (n.)

   துறவுக்கோலம் பூண்ட சிவனிய (சைவ);ப் பெண் அடியார். ஆண்டி என்பதன் பெண்பால்; Tamil Saiva woman mendicant, fem. of ändi.

     [ஆண்டி + அத்தி = ஆண்டித்தி → ஆண்டிச்சி.]

ஆண்டிப்பள்ளிப்படை

 ஆண்டிப்பள்ளிப்படைāṇḍippaḷḷippaḍai, பெ. (n.)

   பள்ளிப்படைப் பூசகர்க்கு விடப்பட்ட முற்றூட்டு நிலம்; land granted to the priest for performing poojas at the tomb of an ascetic.

     [ஆண்டி + பள்ளி + படை.]

ஆண்டிப்புலவர்

ஆண்டிப்புலவர்āṇṭippulavar, பெ. (n.)

   17ஆம் நூற்றாண்டினரும் செஞ்சியையடுத்த ஊற்றங்கால் ஊரினரும் ஆசிரிய நிகண்டு இயற்றியவரும் நன்னூலின் ஒரு பகுதிக்கு உரை வரைந்தவருமாகிய தமிழ்ப் புலவர்; Tamil poet who lived in a village urrangăl near Cenji in the 17th century and wrote the Aciriya Nigandu and commentary on a portion of the Tamil grammar Nannul.

     [ஆண்டி + புலவர்.]

ஆண்டி முருகனுக்குரிய பெயர்களுள் ஒன்றாதலானும், இப்புலவருக்குப் பாவாடைப் புலவர் என்று வேறொரு பெயரிருத்தலானும், இவருடைய கோலத்தால் இவருக்கு இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம்.

ஆண்டிமதிக்குலம்

 ஆண்டிமதிக்குலம்āṇṭimadikkulam, பெ. (n.)

   வெள்ளிப்பாடாணம் (வெண்செந்தூரம்);; anarsenic compound containing silver. (சா.அக.);.

     [ஆண்டி + மதி + குலம். மதி = நிலவு குலம் = இனம், வகை. வெள்ளி சேர்த்துச் செய்யப்பட்டதால் வெண்மைப் பொருள் விளங்க இப்பாடாணம் ஆண்டி மதிக்குலம் எனப் பெயர் பெற்றிருக்கலாம்.]

ஆண்டிறன்

 ஆண்டிறன்āṇṭiṟaṉ, பெ. (n.)

   ஆண்டிறலோன் ஆண்டகை; respectable male.

     [ஆண் + திறம் – ஆண்டிறம் – ஆண்டிறன்.]

ஒ.நோ. GK. anīfandros, male. ஆண்டிரன் பார்க்க;see angiran

ஆண்டு

ஆண்டு1āṇṭu, பெ. (n.)

   பன்னிரண்டு மாதம் அல்லது 365 நாள் கொண்ட ஆண்டு என்னும் கால அளவு; year.

     “ஆண்டு” (சிலப்.1,24);.

   2. அகவை (வயது);; age. ஓராண்டுக்குட்டி (உ.வ.);.

   3. கொல்லமாண்டு (நெல்லை);; year of the Kollam era in Kerala.

   ம. ஆண்டு;   க., தெ., எடு;   து. ஒட்.: கோத. அட்.;   குட. அண்டி;   கொலா. எட்;   நா. யெட்;   கோண். யேண்டு;   பர். இயெட்;   கூ.ராண்டு (சென்றவாண்டு);; Cf. Eyon, yound, younder. A.S.geond, Ger.jener, that, foot, ya

     [ஆண்டு = மூங்கில்முளை. ஆண்டிற்கொருமுறை மடங்கல் (ஆவணி); திங்களில் சரியாக 365 நாள் இடை வெளிக்கொருமுறை முளைக்கும் மூங்கில் முளைக்கு ‘ஆண்டு’ என்னும் பெயர் உண்மையால் அதுவே ஆண்டைக் குறித்த கால அளவைப்பெயராயிற்று.]

வடமொழியில் ‘வர்ஷ’ என்றால் மழையென்று பொருள். ஒரு மழைக்காலத்திற்கும் மற்றொரு மழைக் காலத்திற்கும் உள்ள இடைக்காலம் ஏறத்தாழ ஒராண்டாதலின் ‘வர்ஷம்’ ஓராண்டுக்குரிய பெயராயிற்று. சம்வத்சர என்பது மாடு கன்றீனும் காலம் எனப்பொருள்பட்டு ஓராண்டைக்குறிக்கிறது. தமிழர் நாகரிகம் குறிஞ்சி நிலத்திலிருந்தே தொடங்கிவிட்டது என்பதற்கு மூங்கில் முளையைக் குறித்த ‘ஆண்டு’ காலப் பெயராக ஆளப்பட்டு வருவது சான்றாக அமைந்துள்ளது.

ஆண்டு2 பார்க்க;see andu2

 ஆண்டு2āṇṭu, பெ. (n.)

மூங்கில் முளை (சேரநா.);’ young sprout of bamboo (Kef.);.

ம. ஆண்டு, ஆண்டன்.

     [அண்டு → ஆண்டு. ஆண்டு = அண்டையிற் கிளைத்து முளைக்கும் மூங்கில் முளை.]

மூங்கில் முளைக்கு மலையாள மொழியில் ஆண்டு, ஆண்டை ஆண்டல், ஆண்டன் என்னும் பெயர்கள் உள்ளன. மூங்கிற்றுாரில் அண்டையில் கிளைக்கும் மூங்கில் முளைகள், அண்டு, அண்டை, என்றே தொடக்கத்தில் பெயர்பெற்று நாளடைவில் அண்டு → ஆண்டு → ஆண்டை. அண்டு → ஆண்டு → ஆண்டல் → ஆண்டன் எனத் திரிபுற்றிருக்கலாம். மூங்கிலுக்குப் பக்கமுளை ‘அண்டை’ எனப் பெயர் பெற்றிருப்பது சாலப் பொருந்துவதே. இது பன்னிரு மாதங்களுக்கு ஒருமுறை முளைக்கும் இயல்புடைத்தாதலின் இதனடிப்படையாக ஆண்டு என்னும் காலப்பெயர் தோன்றவும் வழிவகுத்தது.

அண்டு அண்மைப் பொருளிலும் சேர்ப்புப் பொருளிலும் வேலையாரிய மொழிகளிலும் வழக்கூன்றியுள்ளது.

 and: n, (emph); a end along with, in addition :ɔ OE. and ond, corr, to Offis, and (a);, ande, end al en, OS. ande, endi (Du, en);, OHG, anti, enti, inti, -nti (G, und);, and Skt. atha (:=-ntha); there upon, if it survived, would, owing to lack of stress, coincide -th and, (see AN’); connexion with OE. and -(as in and swaru ANSWER);, ON. and-, Goth. anda, anda-, =”d Skt. anti over against, Gr, anti against, L ante zetore, and OE. ende END, etc. is no longer gen. accepted. (O.D.E.E.);

 ஆண்டு3āṇṭu, பெ. (n.)

   அவ்விடம்; that place, there. ஆண்டு மஃதொப்பதில்” (குறள், 363);.

     [ஆ → அண்டு → ஆண்டு. ஆ = சேய்மைச் சுட்டு. அண்டு = அண்டை, இடம், பக்கம். ஒ.நோ. அந்தண்டை போ, இந்தண்டை வா.]

 ஆண்டு4āṇṭu, பெ. (n.)

   பழைமையான, காலத்தால் முற்பட்ட; ancient.

     [ஆ = நெடுஞ்சுட்டு, காலமுன்மை. ஆ → ஆண்டு. தமிழெழுத்துத் தோற்றம் என்னும் கட்டுரையில் பாவாணர் ‘முன்மொழி’ (1971 சனவரி); இதழில் ஆண்டு என்னும் சொல்லுக்குப் பழமை என்னும் பொருளும் உண்டு எனக் காட்டியுள்ளார்.]

ஆண்டு நிறைவு

ஆண்டு நிறைவுāṇṭuniṟaivu, பெ. (n.)

   1. குழந்தைகளின் முதலாண்டு நிறைவு நாள்; first birth anniversary, as a day of special celebration. (விதான, மைந்தர்,12);.

   2. நிறுவனம், பணி ஆகியவற்றின் ஓராண்டு நிறைவு; successful completion of one year of an institution or special work undertaken.

     [ஆண்டு + நிறைவு – ஆண்டு நிறைவு = ஒராண்டுக்காலம் முடிவடைதல்.]

ஆண்டு நூறுபட்டை

ஆண்டு நூறுபட்டைāṇṭunūṟubaṭṭai, பெ. (n.)

   நூறாண்டுகள் எய்தி முதிர்ந்த வேம்பு, பூவரசு, ஒதிகை முதலிய மரங்களின் பட்டை; bark of the trees like Margosa, portia, woolina etc., which are 100 years old.

     [ஆண்டு + நூறு + பட்டை. நூறாண்டு வளர்ந்து முதிர்ந்த மரத்தின் பட்டை.]

ஆண்டு மாறி

 ஆண்டு மாறிāṇṭumāṟi, பெ. (n.)

திருந்தாதவனாயும் காலத்தாலும் இடத்தாலும் ஒத்துப் போகும் இயல்பறியாமலும் ஒரு சீராக வாழ்க்கை நடத்த அறியாமலும் இருப்பவனைத் திட்டு

   வதற்குப்பயன்படுத்தும் வசைமொழி; term ot abuse implying that the person is past the period and place of progressing, incorrigible person. அவனொரு ஆண்டுமாறி (உ.வ.);

     [ஆள் → ஆண்டு + மாறி.]

ஆண்டு வரி

 ஆண்டு வரிāṇṭuvari, பெ. (n.)

   ஓராண்டு வரி; annual tax.

ம. ஆண்டுவரி

     [ஆண்டு + வரி.]

ஆண்டுகள்ளடவு

ஆண்டுகள்ளடவுāṇḍugaḷḷaḍavu, பெ. (n.)

   ஆண்டு வருமானம்; annual income (TASiii.216);.

     [ஆண்டுகள் + அடைவு = ஆண்டுகள்ளடவு. அடைவு → அடவு (இடைத்திரிபு);, அடைவு = சேர்வு, கருவூலத்தில் சேர்க்கப்படுவது, அரசுக்கு நிலவரியாக வரும் ஆண்டு வருவாய்.]

ஆண்டுத்தொகை

 ஆண்டுத்தொகைāṇṭuttogai, பெ. (n.)

   ஆண்டிறுதியில் பெறத்தக்கதொகை; sum total receivable in the year end.

     [ஆண்டு + தொகை.]

ஆண்டுப்பிறப்பு

 ஆண்டுப்பிறப்புāṇṭuppiṟappu, பெ. (n.)

   புத்தாண்டு; new year.

     [ஆண்டு + பிறப்பு.]

ஆண்டுமானம்

 ஆண்டுமானம்āṇṭumāṉam, பெ. (n.)

   ஆண்டுக் கணக்கின் பொருட்டு வழங்கும் கால அளவு; era.

     [ஆண்டு + மானம்.]

ஆண்டுமூஞ்சி

 ஆண்டுமூஞ்சிāṇṭumūñji, பெ. (n.)

   ஒரு வசைமொழி; term of abuse.

     [ஒருகா. ஆண்டு + முடிஞ்சி → ஆண்டுமூஞ்சி.]

வாழ்ந்து முடிந்தவன், என்று திட்டுவதன் நோக்கம், நன்கு வாழுங்காலத்து, உள்ளவற்றை அழியாமல் திறமையாக காக்குந் திறமின்மையைச் சுட்டிக் காட்டிப்பழித்தலாம். ஒ.நோ: கலியாணம் முடிந்துவிட்டது என்பதைக் கலியாணம் மூஞ்சி விட்டது என்பது கொச்சை வழக்கு.

ஆண்டுமூய்-தல்

ஆண்டுமூய்-தல்āṇṭumūytal,    2 செ.கு.வி (v.i.)

    மரபு குன்றல், வளர்ச்சியறுதல்; to stop developing to decline. அந்தக் குடும்பம் ஆண்டு மூய்ந்து போயிற்று (உ.வ.);.

     [ஒருகா. ஆண்டு + மாய் → ஆண்டுமாய் → ஆண்டுமோய் → ஆண்டுமூய். மாய்தல் = அழிதல்.]

ஆண்டுயர்த்தம்

 ஆண்டுயர்த்தம்āṇṭuyarttam, பெ. (n.)

   சம்பளம் பெறும் பணியாளருக்கு ஆண்டுக் கொருமுறை வழங்கப்படும் ஊதிய உயர்வு; increment.

     [ஆண்டு + உயர்த்தம்.]

ஆண்டுவரிக்கணிப்பு

 ஆண்டுவரிக்கணிப்புāṇṭuvarikkaṇippu, பெ.(n.)

   அரசுக்குச் செலுத்த வேண்டிய வளிப் பணத்தைத் தண்டும் ஆண்டிறுதி வருவாய் கணிப்பு; annual settlement of revenue.

     [ஆண்டு+வரி+கணிப்பு]

ஆண்டுவா-தல் (ஆண்டுவருதல்)

ஆண்டுவா-தல் (ஆண்டுவருதல்)āṇṭuvādalāṇṭuvarudal,    18 செ.கு.வி. (v.i.)

   பயன்பாட்டிற்குப் போதியதாதல்; to be sufficient for use. நித்தம் ஒருபடி தயிர் வாங்கியும் ஆண்டுவரவில்லை (உ.வ.);.

     [ஆண்டு + வா – ஆண்டுவா = ஆளுதற்கு அல்லது பயன்படுத்துதற்கு இயைந்து வருதல், போதியதாதல்.]

ஆண்டெழுத்துத்தேவை

ஆண்டெழுத்துத்தேவைāṇṭeḻuttuttēvai, பெ. (n.)

   பழைய வரிவகை; an ancient tax (Pudu. Insc. 399);.

     [ஆண்டு + எழுத்து + தேவை = ஆண்டெழுத்துத் தேவை. ஒருகா. ஆண்டுதோறும் எழுத்துப் பணிக்காகப் பெறும் வரியாகலாம்.]

ஆண்டை

ஆண்டை1āṇṭai, பெ. (n.)

   முதலாளி, தலைவன், பண்ணையார்; master, lord, landlord, used by people with reference to their feudal chief of a superior. ‘ஆண்டை கூலியைக் குறைத்தால், சாம்பான் வேலையைக் குறைப்பான்’ (பழ.);.

   ம. ஆண்டு;தெ. ஆண்டி.

     [ஆள் → ஆண் → ஆண்ட + ஐ = ஆண்டை = தன்னை ஆளுகின்ற அல்லது ஆளாகக் கொண்ட தலைவன். ஐ= பெயர்ச் சொல்லீறு.]

 ஆண்டை2āṇṭai, பெ. (n.)

   அங்கு, அவ்விடம்; that place, there (நாலடி. 91);.

     [ஆ = ஆண்டு → ஆண்டை. ஆ = அந்த (சேய்மைச்சுட்டு);.]

 ஆண்டை3āṇṭai, பெ. (n.)

   மூங்கில் முளை; young sprout of bamboo.

   ம. ஆண்டை. ஆண்டல், ஆண்டன்;   து. அண்டெ (மூங்கில் வளை);;பட. அண்டெ (ஊதுகுழல்);.

     [அண்டு → அண்டை → ஆண்டை அண்டு = பக்கம் மூங்கில் தூரின் அடிப்பக்கத்தில் கிளைத்தெழும் முளை அண்டையென்றழைக்கப்பட்டு முதனிலை நீண்டு ‘ஆண்டை’யாயிற்று.]

 ஆண்டை4āṇṭai, பெ. (n.)

   1. தேட்கொடுக்குச்செடி;. Indian turnsole-Heliotropium indicum.

   2. ஆதொண்டைக்கொடி; thorny creeping plant – capparis horrida,

   3. அழிஞ்சில்; sage-leaved alangium – Alangium lamarckii.

   4. ஆண்மரம்; tree having hard core.

     [ஒருகா. ‘ஆண்டை’ = வன்மை, திண்மை, முண்மையுடைமையால் மரம் மற்றும் செடி கொடியினத்திற்குள் ஒரு சாரானவற்றுக்கு இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம். ஆதொண்டை → ஆண்டை (மரூஉ);.]

ஆண்டைச்சிகை

 ஆண்டைச்சிகைāṇṭaiccigai, பெ. (n.)

   ஆண்டு நிலுவைக் கணக்கு; account of arrears or balance for the year.

     [ஆண்டு + ஐ + சிகை. = ஆண்டைச்சிகை.]

     ‘சிறங்கை → சிகை (கொ.வ);. கடந்த ஆண்டின் வரிக்குத் தவசம் அளக்கும்போது, அப்போதே தரப்படாத நிலுவைக்காக வட்டம் (வட்டி); பிடிக்கும் நோக்கில், ஒரு சிறங்கை அள்ளிப் போடுதல் மரபு. இச்சொல் பொதுவாக ஆண்டு நிலுவைக் கணக்கைக் குறிப்பதாயிற்று.

ஆண்டொழில்

 ஆண்டொழில்āṇṭoḻil, பெ. (n.)

   பெருஞ்செயல், அருஞ்செயல், வீரச்செயல்; mighty deeds or heroic deeds.

     [ஆண் + தொழில் – ஆண்டொழில் = ஆண்மை விளங்கச் செய்யப்படும் செயற்கரிய செயல்.]

ஆண்டொழில் மைந்தன்

 ஆண்டொழில் மைந்தன்āṇṭoḻilmaindaṉ, பெ. (n.)

   வில்லவன் – வல்வில் ஓரி; expert in archery. சொல்லுக்குக் கீரன்;

வில்லுக்கு ஓரி. (பழ.);.

     [ஆண் + தொழில் + மைந்தன் = ஆண்டொழில் மைந்தன். ஆண்தொழில் = ஆண்மை. மைந்து → மைந்தன். மைந்து = வலிமை மைந்தன் = வலிமை மிக்கவன்.]

ஆண்டோன்

ஆண்டோன்1āṇṭōṉ, பெ. (n.)

   1. உடையோன், முதலாளி (அக.நி.);; proprietor.

   2. தலைவன்; master.

   3. தேவன் (அக.நி.);; lord.

     [ஆள் → ஆண் → ஆண்டான் → ஆண்டோன். ‘ட்’ எழுத்துப்பேறு. ஆண்டோன் = ஆள்பவன், தலைவன்.]

 ஆண்டோன்2āṇṭōṉ, பெ. (n.)

   மாந்தன் (நாமதீப.);; man.

     [ஒரு கா. ஆள் → ஆண். ஆண் + ட் + (ஆன்); → ஒன் → ஆண்டோன். ஆண் → ஒன் ஆண்பாலீற்றுத்திரிபு. ஆள் = ஆளும் பணிக்குரிய மாந்தன், மாந்தர் கூட்டம்.]

வேலைக்கு ஆள் வேண்டும் என்னும்.உலக வழக்கில் ஆள் – மாந்தன் எனப் பொருள்படுதல் காண்க. ஆள் வேரினடியாக அண்டிரன் என்னும் தமிழ்க் குறுநில மன்னன் மரபும் ஆந்திர மரபும் பெயர் பெற்றுள்ளன. மேலையாரிய மொழிகளிலும் இவ்வேரினடியாகச் சொற்கள் கிளைத்துள்ளன.

 GK. anthropos—man, he who has the face of a man, andro, beforea vowelandr-combiningform meaning man cf. Andrew, Andrias, andron, dandy, ‘a fop’, and the second element in Alexander, Leander, Philander, cf. also the first element in anthropo- (E.C.E.D.E.L);.

மேலையாரிய மொழிகளில் பெயரின் முன்னொட்டாகவும் பின்னொட்டாகவும் வரும் and என்னும் சொல் ‘மாந்தன்’ என்று பொருள்படுகிறது.

ஆண்தண்டு

ஆண்தண்டு1āṇtaṇṭu, பெ. (n.)

   வலக்காதின் தண்டு (வின்);; small gristly protuberance of the right ear, opp to பெண் தண்டு. (சா.அக.);.

     [ஆண் + தண்டு. தண்டு = சிறிது தடித்திருப்பது. ஆண் = வலப்பக்கம்.]

சிவபெருமானின் இடப்பக்கம் உமையிருத்தலால் இடப்பக்கத்திற்குப் பெண் அடைமொழியாகவும் வலப்பக்கத்திற்கு ஆண் அடைமொழியாகவும் மருத்துவரால் பொதுவாக ஆளப்படும் குறியீடுகளாக அமைந்தன.

ஆண்நாள்

 ஆண்நாள்āṇnāḷ, பெ. (n.)

   தாழி (பரணி);;   ஆரல் (கார்த்திகை);;   உருள் (உரோகினி);;   கழை (புனர் பூசம்);;   கொடிறு (பூசம்);;   கைம்மீன் (அத்தம்);;   பனை (அனுடம்);;   முக்கோல் (திருவோணம்); முற்கொழுங்கால் (பூரட்டாதி);;பிற்கொழுங்கால்

 male stars are parani, kārtigal, urõgini, punarpūšam, pnšam, attam, anudam, tiruvõnam, pūrattādi, uttirattādi.

     [ஆண் + நாள்.]

ஆண்பனை

 ஆண்பனைāṇpaṉai, பெ. (n.)

   காய்க்காத பனை; male palmyra bearing no fruit.

     “குரும்பை ஆண்பனை” (சம். தேவா. திருவோத்தூர்);

     [ஆண் + பனை. ஈனாப்பனை ஆண்பனை எனப்பட்டது.]

ஆண்பாடு

ஆண்பாடுāṇpāṭu, பெ. (n.)

   1. ஆணின் குணம்; male characteristics.

   2. ஆண்களின் முயற்சி; efforts of the male members of the family used along with the expression, பெண்பாடு. ஆண்பாடு பெண்பாடு பட்டு அச்செயல் முடிந்தது (உ.வ.);.

     [ஆண் + பாடு. ஆண் = ஆண்மக்கள், பாடு = செயல், உழைப்பு படு → பாடு (மு.தி.தொ.பெ.);.]

ஆண்பாத்தி

 ஆண்பாத்திāṇpātti, பெ. (n.)

   உப்புப் பாத்தி வகை; crystalizer in salt pans, dist from பெண்பாத்தி.

     [ஆண் + பாத்தி.]

ஆண்பாற் பிள்ளைப்பாட்டு

ஆண்பாற் பிள்ளைப்பாட்டுāṇpāṟpiḷḷaippāṭṭu, பெ. (n.)

ஆண்பாற்பிள்ளைத் தமிழ் பார்க்க;see impar plait-tml.

     “ஆண்பாற் பிள்ளைப்பாட்டே” (இலக். வி. 806);.

     [ஆண்பால் + பிள்ளை + பாட்டு.]

ஆண்பாற்கிளவி

 ஆண்பாற்கிளவிāṇpāṟkiḷavi, பெ. (n.)

   தலைமகன் கூற்று; utterance of a hero.

     [ஆண் + பால் + கிளவி]

ஆண்பாற்பிள்ளைக்கவி

 ஆண்பாற்பிள்ளைக்கவிāṇpāṟpiḷḷaikkavi, பெ. (n.)

ஆண்பாற் பிள்ளைத் தமிழ் பார்க்க;see anpapillai-ttamil

     [ஆண்பால் + பிள்ளை + கவி. கவி = பாட்டு]

ஆண்பாற்பிள்ளைத்தமிழ்

 ஆண்பாற்பிள்ளைத்தமிழ்āṇpāṟpiḷḷaittamiḻ, பெ. (n.)

   தலைமகனைக் குழந்தையாகக் கருதி ஆண் குழந்தைப் பருவத்தைக் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை (வாரானை);, அம்புலி, சிறுபறை, சிற்றில், சிறுதேர் எனப் பத்துப் பருவங்களாகப் பிரித்து ஒரு பருவத்துக்குப் பத்துப் பாடல்களாக மொத்தம் நூறு பாடல்களில் வண்ணித்துப் பாடும் பனுவல்; poem celebrating the ten different stages of development in the infancy and childhood of a hero, viz., kappu, señgîrai, tāl, sappāni, muttam, vārānai, ambuli, sirupatai, sirril, sirutēt, opp. to Penpar pillai–t—tamil.

     [ஆண்பால் + பிள்ளை + தமிழ். பிள்ளைப் பருவத்தைப் பாடுவதால் பிள்ளைத்தமிழ் எனப்பட்டது பிள்ளைத்தமிழ், சிற்றிலக்கியங்களுள் ஒன்று.]

ஆண்பாலெழுத்து

ஆண்பாலெழுத்துāṇpāleḻuttu, பெ. (n.)

   1. அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்து குற்றெழுத்துகள் (இலக். வி.773, உரை);; five short Tamil vowels (செ.அக.);.

   2. பன்னிரண்டு உயிரெழுத்துகளும் அவையின்றி உயிர்மெய்க் குற்றெழுத்துகளும் (கதி.அக.);; twelve vowels and other short consonants of the Tamil language.

     [ஆண் + பால் + எழுத்து]

ஆண்பால்

ஆண்பால்āṇpāl, பெ. (n.)

   1. ஆண்வகை, ஆணினம், (தொல். பொரு. 603);; male sex.

   2. (இலக்.); ஐம்பால்களுள் ஒன்று;   3. ஆண்தன்மை; masculine quality. (சா.அக.);

     [ஆண் + பால். பால் = வகை, பாகுபாடு, தன்மை.]

ஆண்பிறங்கடை

ஆண்பிறங்கடைāṇpiṟaṅgaḍai, பெ. (n.)

   1. ஆண் தலைமுறை; male descendant, male lineage.

   2. ஆண் குழந்தை; male issue, male child.

     [ஆண் + பிறங்கடை பிறங்கு → பிறங்கடை. பிறங்குதல் = தோன்றுதல்.]

ஆண்பிள்ளை

ஆண்பிள்ளைāṇpiḷḷai, பெ. (n.)

   ஆண் குழந்தை; male child.

   2. ஆடவன்; man. நீ ஆண் பிள்ளையானால் இங்கே வா (உ.வ.);

   3. வல்லவன்; man of capacity or ability. இதைச் செய்து முடிக்கக்கூடிய ஆண் பிள்ளையா அவன்? (உ.வ.);.

   4. வீரன்; warrior. ‘ஆண் பிள்ளைகளான பீஷ்மத் துரோணாதிகளிறே’ (ஈடு, 7,4,5);.

   5. கணவன்; husband.

   ம. ஆண்பிள்ளை;து. ஆண்பாலெ

     [ஆண் + பிள்ளை. பிள்ளை = குழந்தை. ஆடவனையும் ஆண்மையையும் குறித்த போது ஆண் பிள்ளையென்பதிற் பிள்ளை பொருளிழந்த ஈறாகி வல்லவன், வீரன், கணவன் ஆகிய பொருள் தந்தது.]

ஆண்பிள்ளை அரிமா

 ஆண்பிள்ளை அரிமாāṇpiḷḷaiarimā, பெ. (n.)

   தறுகண் மறவன்;   எதற்கும் அஞ்சாத வீரன்; man of supreme valour and prowess as a brave lion.

     [ஆண்பிள்ளை + அரிமா.]

ஆண்பிள்ளைச் சிங்கம்

 ஆண்பிள்ளைச் சிங்கம்āṇpiḷḷaicciṅgam, பெ. (n.)

   வீரன்; hero, a term of praise.

     “ஆனையைப் பிடித்திடுவான் ஆண்பிள்ளைச் சிங்கம்” (திரைப்பாட்டு);.

     [ஆண்பிள்ளை + சிங்கம். Skt. simha → சிங்கம் = அரிமா. ஆண்பிள்ளையாகிய அரிமா என உருவக

வணியமைந்த சொல்லாட்சி. ஆண்பிள்ளை அரிமா பார்க்க;see anpillai-arima.]

ஆண்புள்குற்றம்

 ஆண்புள்குற்றம்āṇpuḷkuṟṟam, பெ. (n.)

   மாலை மங்கிய வேளையில் குழந்தைகளை வெளியிற் கொண்டு போவதாலுண்டாகும் ஓர் நோய்; a morbid diathesis in children supposedly caused by taking them out after dusk, when some inauspicious bird flys overhead.

     [ஆண்புள் + குற்றம்.]

ஆண்பூதியம்

 ஆண்பூதியம்āṇpūtiyam, பெ. (n.)

   ஆண்பிள்ளையிடம் ஏற்பட்ட ஒருவகை மெய்க்கூறு; male element of a sexual cell, amasculo-nucleus-Arsenoblast (சா.அக);.

     [ஆண் + பூதியம்.]

ஆண்பெண் அலி கோள்கள்

 ஆண்பெண் அலி கோள்கள்āṇpeṇaliāḷkaḷ, பெ. (n.)

   கோள்களுள் செவ்வாய், வியாழன், ஞாயிறு என்பன ஆண் கோள்கள். அறிவனும் (புதன்); காரி (சனி);யும் அலிகோள்கள். வெள்ளி, திங்கள், கருங்கோள். (இராகு); செங்கோள், (கேது); என்பன பெண் கோள்கள். (அபி. சிந்);; male planetsare Mars, Jupitorand Sun;

 hermaphroditeplanets are Mercury and Saturn;

 female planets are Venus, Moon, Moon’s ascending node and moon’s decending node. (சா.அக);.

     [ஆண் + பெண் + அலி + கோள்கள்.]

ஆண்பெண்ணலி நாள்கள்

 ஆண்பெண்ணலி நாள்கள்āṇpeṇṇalināḷkaḷ, பெ. (n.)

தாழி (பரணி);, ஆரல் (கார்த்திகை);, உருள் (உரோகிணி);, கழை (புனர்பூசம்);, கொடிறு (பூசம்);, கைம்மீன் (அத்தம்);, பனை (அனுடம்);, முக்கோல் (திருவோணம்);, முற்கொழுங்கால் (பூரட்டாதி);, பிற்கொழுங்கால் (உத்திரட்டாதி); என்பன ஆண் நாள் மீன்கள், மாழ்கு (மிருகசீரிடம்);, குன்று (சதயம்);, குருகு (மூலம்); இவை அலி நாள் மீன்கள். இரலை (அகவினி);, யாழ் (திருவாதிரை);, கவ்வை (ஆயிலியம்);, கொடுநுகம் (மகம்);, கணை (பூரம்);.

   மானேறு (உத்திரம்);, நெய்ம்மீன் (சித்திரை);, விளக்கு (சுவாதி);, சுளகு (விசாகம்);, தழல் (கேட்டை);, முற்குளம் (பூராடம்);, கடைக்குளம் (உத்திராடம்);, பறவை (அவிட்டம்);, தொழுபஃறி (இரேவதி); என்பன பெண் நாள் மீன்கள். (அபி.சிந்.);; male stars are parani, kārttigai, urõgini, punarpūšam, pūšam, attam, anugam, tiruvõnam, purattãdi, and uttirattadi;

 hermaphrodite stars are mirugaśiridam, sadayam and muiam, female stars are asupadi, tiruvādirai, āyilyam, magam, pūram, uttiram, sittirai, swādi, visāgam, kēttai, pūrādam, uttirāgam, avittam and irévadi.

     [ஆண் + பெண் + அலி + நாள்கள்.]

ஆண்மகன்

ஆண்மகன்āṇmagaṉ, பெ. (n.)

   1. ஆண் குழந்தை; male child.

   2. மாந்தன்; man.

   3. சிறந்தோன்; efficient man.

   4. கணவன்; husband.

   5. மகன்; son.

   6. துணிவுமிக்கவன்; man of courage.

     “ஆண்மகன் கையிலயில்வாள்” (நாலடி.386);

     [ஆள் → ஆண் + மகன்.]

ஆண்மக்கட் பருவம்

ஆண்மக்கட் பருவம்āṇmakkaṭparuvam, பெ. (n.)

   இளையோனாகுங்காலம் (பன்னிருபா. 226);; stage in the life of a male, when he comes of age.

     [ஆண்மக்கள் + பருவம். ஆண்மகனாக வளர்ச்சியெய்தும் பருவம். மீசையும் தாடியும் வளரும் பருவம்.

ஆண்மஞ்சள்

 ஆண்மஞ்சள்āṇmañjaḷ, பெ. (n.)

   கறிமஞ்சள்; turmeric used in curry.

     [ஆள் – ஆண் + மஞ்சள் (ஆளும் மஞ்சள்);.]

ஆண்மதப்பூ

 ஆண்மதப்பூāṇmadappū, பெ. (n.)

   மதனப்பூ; Indian cowslip creeper-pergularia winor. (சா.அக.);.

மறுவ: ஆண்மதன காமப்பூ

     [ஒருகா. ஆண் + மதனம் + பூ. ஆண்மதனப்பூ → ஆண்மதப்பூ. மதனம் → மதம் (இடைக்குறை);.]

ஆண்மரம்

ஆண்மரம்āṇmaram, பெ. (n.)

   1. வயிரம் பாய்ந்த மரம்; a class of trees in which the core is hard and s-table for timber.

     “உற்றவாண்மரம் உள் பிரமுடை மரமாம்” (சா.அக.);.

   2. நஞ்சை

   முறிக்கும் ஆண்மையுடைய அழிஞ்சில் மரம்; tree in which every part is an antidote for poison, sage – leaved alangium.

   3. சேராங்கொட்டை மரம்; marking nut tree – It is so called because it is an antidote against poison.

   4. காயா மரம்; tree not bearing fruit.

   5. கருங்காலி மரம்; sundra tree (சா.அக.);.

து. ஆண்மர.

     [ஆண் + மரம். ஆண் = ஆண்மை, வன்மை, மரங்களின் நடுவில் வயிரம் பாய்ந்து திண்ணிதாதல், எதிர்க்கும் வலிமையுடையதாதல். காய் காய்க்காத மரங்களை, ஆண்பாற்படுத்துக் கூறும் மரபுபற்றிக் காயாமரம் ஆண்மரம் எனப்பட்டது. நஞ்சு முறிக்கும் ஆற்றல் கொண்ட மரங்களின் வன்மையைக் குறிக்குஞ் சொல்லாக ‘ஆண்’ அடைமொழி ஆளப்பட்டுள்ளது.]

ஆண்மலடு

 ஆண்மலடுāṇmalaḍu, பெ. (n.)

   ஆண்மகனுக்கு ஏற்படும் மலட்டுத்தன்மை; want of fertility of fecundity in a man’s semen.

     [ஆண் + மலடு. மலடு பார்க்க;see maladu.]

ஆண்மாதுளை

 ஆண்மாதுளைāṇmātuḷai, பெ. (n.)

   பூமாதுளை; double-flowered pomegranate.

     [ஆண் + மாதுளை. மாதுளை பார்க்க;see mādulai.]

ஆண்மாறி

ஆண்மாறிāṇmāṟi, பெ. (n.)

   1. அடங்காக் குணமுள்ளவள்t; masculine woman, termagant.

   2. அடக்கமில்லாதவள்;   ; woman outrageous in conduct, immodest woman.

   3. ஆண் குணமுடையவள்; manlike woman. Virago, Amazon.

     [ஆண் + மாறி. மாறி = மாறியவள்.]

ஆண்மூங்கில்

ஆண்மூங்கில்āṇmūṅgil, பெ. (n.)

   1. கெட்டியான மூங்கில்; solid bamboo.

   2. கல்மூங்கில்; a species of solid bamboo. It is opposed to penmungil, the common hollow bamboo.

     [ஆண் + மூங்கில். ஆண் = வன்மை, வயிரம், திண்மை.]

ஆண்மெய்க்கூறு

ஆண்மெய்க்கூறுāṇmeykāṟu, பெ. (n.)

   1. ஆண் பிள்ளைகளுக்குண்டான இயற்கை, வலிமை, அறிவு முதலியன; essential nature, strength or virility, power, intellect, etc. of man.

   2. ஆண் மகனிடம் அமையத்தக்க மெய்க்கூறு; male element of a sexual cell, a masculo – nuelous Arsenoblast. (சா.அக.);.

     [ஆண் + மெய் + கூறு.]

ஆண்மெய்க்கூறுநூல்

 ஆண்மெய்க்கூறுநூல்āṇmeykāṟunūl, பெ. (n.)

   மாந்தன் உடற்கூறு பற்றியும், நோய் பற்றியும் ஆண்குறியின் மெய்ம்மைகளைப் பற்றியும் கூறும் நூல்; scientific study of masculine constitution and of the diseases of the male sex, especially the study of diseases of the male organ -Andrology (சா.அக);.

     [ஆண் + மெய் + கூறு + நூல்.]

ஆண்மெய்ம்மை

 ஆண்மெய்ம்மைāṇmeymmai, பெ. (n.)

   மாந்தன் உடற் கூற்றியல்; scientific study of masculine constitution.

     [ஆண் + மெய்ம்மை.]

ஆண்மை

ஆண்மைāṇmai, பெ. (n.)

   1. ஆளுந் தன்மை (தொல். சொல். .51);; controlling power.

   2. ஆண்தன்மை (சிலப்.6,56);; masculinity, virility.

   3. வெற்றி (பிங்.);; conquest, victory, success.

   4. வலிமை (பிங்.);; strength, power.

   5. செருக்கு; pride, conceit. நானென்ற வாண்மை

   6. உடைமை; possession used as a suffix.

     “புல்லறிவாண்மை” (குறள், 331);.

   7. வாய்மை (பிங்.);; truth.

   8. ஆண்பாலுணர்ச்சி வன்மை; having sexual power, a peculiar characteristic in males.

   ம. ஆண்ம, ஆணத்தம்;க. ஆண்ம.

     [ஆள் → ஆண் → ஆண்மை (வே.சொ.க.7);. ஆள் + மெய் – ஆண்மை = ஆளுந்தன்மை. மெய் = தன்மை, இயல்பு மெய் → மை. மெய் பார்க்க;see mey.]

ஆண்மை முதற்பெயர்

ஆண்மை முதற்பெயர்āṇmaimudaṟpeyar, பெ. (n.)

   ஆண்பாலையே விளக்கி நிற்கும் முதற்பெயர்; masculine noun denoting the stock or body. ‘சாத்தன்’ (நன்.283, உரை);.

     [ஆண்மை + முதல் + பெயர். முதற்பெயர் பார்க்க;see mudar-peyar.]

ஆண்மை முறைப்பெயர்

ஆண்மை முறைப்பெயர்āṇmaimuṟaippeyar, பெ. (n.)

   ஆண்பாலை உணர்த்தும் முறைப்பெயர்; masculine noun denoting relationship. தந்தை (நன். 283, உரை.);. [ஆண்மை + முறை + பெயர்.]

ஆண்மைக்குறைவு

 ஆண்மைக்குறைவுāṇmaikkuṟaivu, பெ., (n.)

   வலிமைக் குறைவு; loss of manly power, want of virility, impotency.

     [ஆண்மை + குறைவு.]

ஆண்மைச் சினைப்பெயர்

ஆண்மைச் சினைப்பெயர்āṇmaicciṉaippeyar, பெ. (n.)

   ஆண்பாலையே விளக்கி நிற்கும் சினைப்பெயர்; masculine nouns denoting parts of members of the body or names derived from such nouns.

     “முடவன்” (நன்.283, உரை);.

     [ஆண்மை + சினை + பெயர். சினை = உறுப்பு.]

ஆண்மைச்சினை முதற்பெயர்

ஆண்மைச்சினை முதற்பெயர்āṇmaicciṉaimudaṟpeyar, பெ. (n.)

   ஆண்பாலையே விளக்கி நிற்கும் சினை முதற்பெயர்; the noun, cinaimuda peyar which denotes masculine gender in particular ‘முடக்கொற்றன்’ (நன்.283 உரை);.

     [ஆண்மை + சினை + முதல் + பெயர். சினைமுதற் பெயர் பார்க்க;see cinal mudarpeyar.]

ஆண்மைதரு கிழங்கு

ஆண்மைதரு கிழங்குāṇmaidarugiḻṅgu, பெ. (n.)

   1. நிலப்பனங்கிழங்கு; ground palm of hog palm

   2. நிலச் சருக்கரைக்கிழங்கு; root of a plant

   3. அமுக்கிராகிழங்கு; the root of a plant.

   4. பொற் சீந்திற் கிழங்கு; root of a plant. (சா.அக.);.

மறுவ. நிலச் சருக்கரைக் கிழங்கு பூமிச் சருக்கரைக் கிழங்கு.

     [ஆண்மை + தரு + கிழங்கு.]

ஆண்மைப்பொதுப்பெயர்

ஆண்மைப்பொதுப்பெயர்āṇmaippoduppeyar, பெ. (n.)

   உயர்திணை யாண்பாலையும் அஃறிணை யாண் பாலையும் ஏற்கும் பொதுப்பெயர்; masculine nouns, common to the rational and irrational classes. ‘சாத்தன் இவன், சாத்தன் இவ்வெருது’ (நன்.284, உரை);.

     [ஆண்மை + பொது + பெயர்.]

ஆண்மையன்

ஆண்மையன்āṇmaiyaṉ, பெ. (n.)

   சிவன்; Lord Šva (திருவா. 6.8.8.);.

ஆண்மையிலி

 ஆண்மையிலிāṇmaiyili, பெ. (n.)

   பெண்தன்மை (நாமதீப.);; feminity, womanishness.

     [ஆண்மை + இலி. இலி = இல்லாத தன்மை.]

ஆண்ராசி

 ஆண்ராசிāṇrāci, பெ. (n.)

ஆணோரை பார்க்க;see āņõrai.

ஆண்வழி

ஆண்வழிāṇvaḻi, பெ. (n.)

   1. ஆண் தலைமுறை; male descendant, family descent in the male line.

   2. ஆண்குழந்தை; male child.

   3. ஆண் தலை முறையி (சந்ததி); லிருந்து உண்டான மரபு; male line, family descent in the male line.

ம. ஆண்வழி

     [ஆண் + வழி.]

ஆண்வெறுப்பு

 ஆண்வெறுப்புāṇveṟuppu, பெ. (n.)

   பெண்களுக்கு ஆண்களைக் கண்டால் உண்டாகும் வெறுப்பு; morbid dislike of or insane aversion to the male sex in women, Apandria.

     [ஆண் + வெறுப்பு.]

ஆதகம்

ஆதகம்ātagam, பெ. (n.)

   1. அன்பு; kindness, affection.

   2. ஆசை; love, desire.

   3. இஞ்சி; ginger (சா.அக.);.

ஆதகு

 ஆதகுātagu, பெ. (n.)

   கூந்தற்பனை; Indiansago-palm. It is so called from its numerous long and thin spadices. (சா.அக.);.

     [ஆதம் + கூந்தல் – ஆதகூந்தல். ஆதகூ → ஆதகு. ஆதம் = கூந்தற்பனை.]

ஆதகேரகம்

 ஆதகேரகம்ātaāragam, பெ. (n.)

   மாட்டுக்குளம்படி என்னும் கொடி; creeper, the leaves of which resemble the impressions of the hoof of cattle. (சா.அக.);.

ஆ [ஆ + த + கேரகம். ஆ = மாடு. கேரகம் = குளம்படி. → ஆத = ஆவினுடைய (திரவிடத்திரிபு);. குளகம் → கிடகம் → கேடகம் → கேரகம் (திரவிடத் திரிபு);.]

ஆதங்கம்

ஆதங்கம்1ātaṅgam, பெ. (n.)

   1. நோய்; disease, sickness.

   2. அச்சம்; fear.

     “இப்பா ராதங்க மாற (பாரத. அருச். தீர்த். 87);”.

     [Skt, a-tanka → த. ஆதங்கம்.]

 ஆதங்கம்2ātaṅgam, பெ. (n.)

   இவ்வாறு நிகழ்த்திருக்க வேண்டாம் அல்லது நிகழ வேண்டும் என்ற கவலை, மனக்குறை; feeling of regret or feeling of anxiety.

     ‘விடுப்பு எடுத்துப் போயும் நண்பரைக் கான முடியவில்லையே என்ற ஆதங்கம் அவருக்கு; அதனால்தான் வருத்தமாயிருக்கிறார்’.

த.வ. மனத்தாங்கல்.

 ஆதங்கம்3ātaṅgam, பெ. (n.)

   1. துன்பம்; gref.

   2. முரசினோசை; sound of drum.

     [Skt. ätanka → த. ஆதங்கம்.]

ஆதஞ்சனம்

 ஆதஞ்சனம்ātañjaṉam, பெ. (n.)

   நீறாக்கியது; that which is calcined or reduced to ashes (சா.அக.);.

ஆதண்

ஆதண்ātaṇ, பெ. (n.)

   1. நோய்; disease.

   2. வருத்தம்; affliction, suffering. (சா.அக.);.

     [ஆதன்5 → ஆதண் (கொ.வ.);.]

ஆததயிகள்

ஆததயிகள்ādadayigaḷ, பெ. (n.)

   கொடியோர் (குறள், 550, உரை.);; desperadoes, incendiaries, poisoners, murderers, as having one’s bow drawn to take another’s life.

த.வ. வன்கனாளர்.

     [Skt. atatayin → த. ஆததாயிகள்.]

ஆதனமூர்த்தி

ஆதனமூர்த்திātaṉamūrtti, பெ. (n.)

   1. படிமம்; image.

   2. சிவகுறி (இலிங்கம்);; liñga or emblem of sivan (சா.அக.);.

     [ஆதனம் + மூர்த்தி.]

     [Skt. asana → த. ஆதனம் + மூர்த்தி.]

ஆதனம்

ஆதனம்ātaṉam, பெ. (n.)

   நீளுதல்;     [ஒருகா. அதர் = வழி, நீண்ட பாதை, அதர் → அதரம் → அதனம் → ஆதனம்.]

 ஆதனம்1ātaṉam, பெ. (n.)

   1. யானைக் கழுத்து (நாநார்த்த.);; nape of the elephant.

   2. இருக்கை, பீடம் ( நாநார்த்த);; Seat.

   3. சீலை (வின்.);; cloth.

   4. தரை; ground.

   5. குண்டி (பிருட்டம்);; buttocks.

த.வ. இருக்கை.

     [Skt. åsana → த. ஆதனம்.]

 ஆதனம்2ātaṉam, பெ. (n.)

   ஒக இருக்கை (யோகாசனம்);, (நாநார்த்த);; yogic posture.

     “தலையினோ டாதனந்தட்ட” (ஈடு 3.5:3);.

ஆதனுங்கன்

ஆதனுங்கன்ātaṉuṅgaṉ, பெ. (n.)

   கடைக் கழகக்கால அரசர்களில் ஒருவன்;   புறம் 175,389-ல் பாடப்பட்டவன்; sangam noble.

     [ஆதன் + உங்கன் உ → உல் → உங்கு → உங்கன் = உயர்ந்தவன், சிறந்தவன்.]

ஆதனெழினி

ஆதனெழினிātaṉeḻiṉi, பெ. (n.)

   கடைக்கழகக் காலத்தில் வாழ்ந்தோன்;   அகம் 216-ல் பாடப்பட்டோன்; sangam noble.

     [ஆதன் + எழினி. எழில் → எழினி.]

ஆதனை

ஆதனை1ātaṉai, பெ. (n.)

   1. ஆமணக்கு; castor plant

   2. எலியாமணக்கு; adul oil plant.

   3. ஏரிக்கரைக் காட்டாமணக்கு; adul oil plant.

   4. காட்டாமணக்கு; common physic nut.

   5. சீமையாமணக்கு; bronze leaved physic nut.

   ம. ஆதன. ஆதலு;   க. ஆடலு;தெ. ஆடாலு.

     [அத்தளை → அதளை → ஆதளை]

ஆதனோரி

 ஆதனோரிātaṉōri, பெ. (n.)

   கடைக் கழகச் சிற்றரசர்களுள் ஒருவன்; sangan noble.

     [ஆதன் + ஒரி. ஊ → ஒ → (உயர்வு, தலைமை); → ஓரி.]

ஆதன்

ஆதன்1ātaṉ, பெ. (n.)

   1. உயிர் (சா.அக.);; life.

   2. உள்ளகம், ஆதன், ஆன்மா (திவா.);; soul.

     [ஆதன் = தலைவன். உடம்பினுள் தலைமையேற்ற உயிரும் ஆதனும் ஆதன் எனப்பட்டன.]

 ஆதன்2ātaṉ, பெ. (n.)

   1. அறிவில்லாதவன்; ignorant, person.

     “முன்பொருள் செய்யாதாராதரே” (சிறுபஞ். 20);.

   2. குருடன், (திவா.);; blindman.

     [அதல் = ஆட்டின் கழுத்திலுள்ள பயனற்ற ஊமணி. உதள் → அதள் → அதல். அதல் → அதன் → ஆதன் = பயனற்றவன், செயலற்ற கண்ணுள்ளவன்.]

 ஆதன்3ātaṉ, பெ. (n.)

   அருகன் (சூடா.);; Arhat.

     [ஆதன் = தலைவன். தமிழ்நாட்டு அருக சமயத்தவர் தம் தேவனை ஆதன் என்றனர்.]

 ஆதன்4ātaṉ, பெ. (n.)

   1. ஆசிரியன் (கதி.அக.);; teacher, pedagogue, preacher.

   2. மேலோன்; noble person.

   3. தலைவன், முதலாளி; chief, master.

   ம. ஆதன்;குட. ஆதன் முதலாளி)

     [அத்தன் → ஆத்தன் → ஆதன். அத்தன் = தந்தை, பெரியோன். ஆதன் = தலைவன். தலைமைமிக்க ஆசிரியன், சான்றோன்.]

ஒரு சொல், ஆசிரியன், தலைவன் எனப் பொருள்படும் சிறப்புப்பெயராகவோ, தந்தை, அண்ணன் எனப்பொருள்படும் முறைப் பெயராகவோ வழக்கூன்றியபின் அது இயற்பெயராகாது. ஆதலின் ஆதன் என்னும் சிறப்புப் பெயரின் தோற்ற வளர்ச்சியும், ஆதன் என்னும் இயற்பெயரின் தோற்றவளர்ச்சியும் வெவ்வேறானவை.

 ஆதன்5ātaṉ, பெ. (n.)

   1. மனம்; mind.

   2. கவலை, வருத்தம்; sorrow.

   3. பெருந்துன்பம் (அக.நி.);; agony.

   தெ. ஆத மனம், வருத்தம்);;   க. ஆதி நினைவு, நினைவோட்டம்); ம. ஆதி(கவலை);;   வ. .ஆதி (வருத்தம், கலக்கம், நோய்);;   பிராகி. ஆகி;   இந் யாத்;   உருது. யாத்;   மரா. யாத் பாலி. ஆடிநவ; Sinh. adnawa.

     [ஆ → ஆது → ஆதன் ஊ → ஒ → ஆ = முன் செலல், முன்னுறல், நினைத்தல், வருந்தல், நினைக்கும் உள்ளம். ஒ.நோ. முன் → மன் → மனம். முன்னுதல் = நினைத்தல்.]

ஆதன் என்னும் சொல் முன் செலற் கருத்துடைய ஆகாரச் சுட்டடிப் பிறத்தலான் உள்ளத்தின் கண்ணோடும் எண்ணமும் கவலையும் குறிக்கும் போது உள்ளம், உள்ளத்தின் கண்ணுள்ளதாகக் கருதப்படும் ஆதன் (ஆத்மா);, உயிர் ஆகியவற்றையும், எண்ணம், கவலை, வருத்தம் ஆகியவற்றையும் குறிக்கும்.

ஆதன் என்னுஞ் சொல்லே இந்தி, உருது போன்ற மொழிகளில் ‘யாத்’ (மனம், நினைவு வருத்தம்); எனத் திரிந்து வழங்கி வருகிறது.

 ஆதன்6ātaṉ, பெ. (n.)

   பழங்கால மக்களின் இயற் பெயர் வகை (தொல். எழுத். 348);; proper name in general use in ancient times.

     [ஆதன் = முன்னவன், மேலானவன், உயர்ந்தவன், சிறப்புமிக்கவன்;

பெற்றோர் குழந்தைகட்கிடும் இயற்பெயர்.]

ஆதனழிசி, ஆதனுங்கன், ஆதன் ஓரி எனச் சிற்றரசர் பெயர்களிலும் சேரலாதன், செல்வக்கடுங்கோ வாழியாதன் எனச் சேரவேந்தர் பெயர்களிலும் ஆதன் என்பது முன்னடையாகவோ பின்னடையாகவோ ஆளப்பெற்று தொன்றுதொட்டு வழங்கிவருதலானும், ஆதன், பூதன் என்பன இயற்பெயர்களென உரையாசிரியர்கள் எடுத்துக் காட்டுதலாலும், இது அறப்பழங்காலத் தமிழ் இயற்பெயர்களுள் ஒன்று எனத் தெரிகிறது. மேலையாரிய மொழிகளிலும் இதனையொத்த ஆதன் என்னும் இயற்பெயருள்ளமை அறியலாம்.

ஆதன் என்னும் இயற்பெயருக்கு ஆ → ஆகு என்பதே முனிலையாக அமைந்துள்ளது.

ஆகு. L. augere – to increase. இதில் auge என்பதே வினைமுதனிலை. ‘re’ என்பது நிகழ்கால வினையெச்ச (infinitive); ஈறு.

 E. augment v.t. and i, make or become greater;

 increase.

 M.E. f. F. augmenter. L. L augmentare, increase. E. augmentation (n); enlargement, growth, increase.

 E. augmentative, n. Having the property of increasing. Gram. of affix or derived word, increasing in force the idea of the original word f F. augmentatif or L. augmentativus.

ஆ. ஆகு என்னும் இரு முதனிலை வடிவங்களுள் எது முந்தியது என்பது பற்றி, இற்றை நாள்வரை இலக்கண ஆசிரியர்கள் ஒரு முடிவிற்கு வந்திலர் ஆ. ஆகு என்பன போன்றவற்றையே போ, போகு என்றனர்.

     “நச்சினார்க்கினியர் நன்னூலார் முதலாயினார் இயற்கை முதனிலை ஆ. போ என்றே இருக்குமென்றார். திருவள்ளுவர். திருமேலழகர் முதலாயினோர் முதனிலை ஆகு, போகு என்றேயிருக்குமென்றார்” என்பது சுவாமிநாத தேசிகரின் இலக்கணக்கொத்துரைக் குறிப்பு (86, உரை);.

போ என்பதன் ஈறு மிகையே போகு என்பது (புகு → போ → போகு → போது); இங்ஙனமே ஆ என்பதன் ஈறு மிகையாகிய ஆகு என்பதும் இருத்தல் வேண்டும் என்றார் பாவாணர்,

அகைதல் = தளிர்த்தல், செழித்தல். அகு → அகை.

முகு → முகை. அகு → ஆ என மருவுவது இயல்பே.

ஒநோ: பகு → பா. மிகு → மீ, அகு → ஆ → ஆகு.

ஆதன், பூதன் இயற்பெயர்களிரண்டும் தோன்றுதல், செழித்தல் என்னும் பொருளுடைய வேர்ச்

சொற்களினின்றே வளர்ந்திருக்கின்றன. பூ = பூத்தல், தோன்றுதல், வளர்தல், செழித்தல், மலர்தல்.

ஆ → ஆது → .ஆதல் = தோன்றுதல், வளர்தல், செழித்தல், பூ → பூதன். ஆ → ஆதன், மக்களுட் சிறந்தோனைத் தோன்றல் என்றழைப்பதைப்போன்றே ஆதன், பூதன் என்பனவும் சிறப்புக் கருதிய இயற்பெயர்களாயின.

தோன்றுதல், வளர்தல் கருத்து வேர்ச்சொற்கள் முன்வரற் கருத்துடைய உ → உல் என்னும் சுட்டடி மூல வேரிலிருந்து திரிபுற்று வளர்ந்திருப்பதைப் பாவாணர் சுட்டிக் காட்டுகிறார். உ (உல்); → ஊ = முன்வரற் கருத்துவேர். ஊ → ஒ → ஆ – முன்வரற் கருத்துத் திரிபு வேர். இதனாற்றான் ஆகார நெடிலுக்கும் அதன் குறுக்கமான அகரத்திற்கும் முன்மை, முதன்மைப் பொருள்களுண்டாயின. ‘ஆ’ உயிர் நெடிலுக்கு முன்மை, முதன்மைப்பொருள் தமிழில் பண்டே இருந்தமைக்குச் சான்றான சொல்லாட்சிகள் திரவிட மொழிகளில் காக்கப்பட்டுள்ளன.

தெலுங்கில் ஆதிகொனு = முற்படு, எதிர்கொள் எனப் பொருள்படுகிறது.

வடபகுதி, தென்பகுதி என்பவற்றை வடதலை, தென்தலை எனக் கூறுகிறோம். இதைப் போன்றே முன்பக்கம், முன்பகுதி என்பவற்றை

     “ஆதலை” என்னுஞ் செந்தமிழ்ச் சொல் சுட்டுகிறது. குமரிக்கண்ட காலத்தில் இச்சொல் பெருவழக்குப் பெற்றதாகல் வேண்டும். இஃது இன்றும் மறையாமல் குடியேற்றப் பாதுகாப்புச் சொல்லாகக் (colonial preservation); கன்னட மொழியில் வழங்கிவருகிறது. கன்னடப்புலவன் பம்பன் இயற்றிய பம்ப இராமாயணத்தில்

     “ராஜசிஹ்ன பாலித்வஜ சங்குலமும் படகமும் ஆதலெயொள் பரெ வஜ்ரபாகு பயணம் பந்தம்” (பம்பரா. 2-12);, என்று கூறப்பட்டுள்ளது. வச்சிரவாகு பயணம் சென்றபோது போர்ச் சின்னங்கள் ஆதலையில் (முன்பக்கம், முன்னால்); சென்றன என்று இப்பாடல் குறிப்பிடுகிறது. வடமொழி, பாலி, பிராகிருதம் ஆகிய வடபுலமொழிகளில் ‘ஆ’ முன்னொட்டு முன்செலற் கருத்திலேயே ஆளப்பட்டுள்ளது.

 Skt., pkt., pali. ā – to, towards.

 a-kula mixed up, a -rava make noise.

 a—lingana embrace.

ஆ – முன்மையும் முதன்மையும் சுட்டிய சொல்லாதலின், ஆ → ஆது → ஆதன் (முன்னவன், தலைவன்); தலைமைப் பொருள் தரும் செந்தமிழ்ச் சொல் என்று தெளிவாகிறது. இதனை அறியாதார் இதனை ‘அர்ஹத’ என்னும் வடசொல்லின் சிதைவாக்கிக் கூறுவர்.

ஆதன் என்னும் இயற்பெயரும், அப்பெயரடியாகத் தோன்றிய ஆதனூர், ஆதமங்கலம் என்னும் இடப்பெயர்களும் தமிழ்நாட்டில் மிகுதியாக இன்றும் காணப்படுதல் போன்றே ஏனைத் திரவிட மொழிகளிலும் காணப்படுகின்றன.

   இயற்பெயர்: ம. ஆதன்;   க. ஆத. ஆதப்ப. ஆதய்ய;   து. ஆதப்ப;தெ. ஆதிகான், ஆதிகாடு.

   இடப்பெயர்: ம. ஆதனூர்;க. ஆதனூரு, ஆதிபுர,

   ஆதவனி (ஆதனவினி);. (ஆதனவினி → ஆதன் அவினியின் பெயராலமைந்த ஊர்);;தெ. ஆதோனி.

ஆதன் ஆண்பால் இயற்பெயராய் வழங்கி வந்தது போன்றே, ஆதிபெண்பால் இயற்பெயராய் வழங்கி வந்துள்ளது. சோழன் கரிகாற் பெருவளத்தானின் மகள் ஆதிமந்தி. ஆதி = மூத்தவள். முன்னவள்.

காலத்தால் முன்மை, சேய்மை சுட்டிய ‘ஆ’ நெடுஞ் சுட்டடியிலிருந்து ஆதன் இயற்பெயர் தோன்றியதென்பர் சிலர். ஆதன் போன்று ஈதன் என அண்மைச் சுட்டடியாகப் பெயர்ச்சொல் தோன்றாமை அறிக முன்னுறல், வளர்தல் செழித்தல் கருத்துடைய ‘ஆ’ (அகு-ஆ); வேரிலிருந்து ‘ஆதன்’ பிறந்ததாகக் கொள்வதே ஏற்புடைத்து.

எனவே, இது பண்புகொள் பெயர்.

பாலறிவந்த உயர்திணைப் பெயர்களைக் குறிப்பிடுங்கால்,

     “நிலப்பெயர் குடிப்பெயர் குழுவின் பெயரே

வினைப்பெயர், உடைப்பெயர் பண்புகொள் பெயரே

பல்லோர்க் குறித்த முறைநிலைப் பெயரே

பல்லோர்க் குறித்த சினைநிலைப் பெயரே

பல்லோர்க் குறித்த திணைநிலைப் பெயரே

கூடிவரு வழக்கின் ஆடியற் பெயரே

இன்றிவ ரென்னும் எண்ணியற் பெயரொடு

அன்றியனைத்தும் அவற்றியல் பினவே” (தொல். சொல் .165);

பண்புகொள் பெயரெனவும் முறை நிலைப் பெயரெனவும் தொல்காப்பியர் சுட்டுவன, ஆதன் என்னும் இயற்பெயருக்கும் ஆதன் → ஆத (விளி); என்னும் முறைப்பெயருக்கும் பொருந்திவருதலைக் காணலாம்.

இயற்பெயர் – ஆதன் (முன்னவன், முதன்மையானவன்); –

பண்புகொள் பெயர்.

முறைப்பெயர் – ஆதன் (அத்தன் → ஆத்தன் → ஆதன்);

தந்தை போல்வான், தலைவன். – முறை – நிலைப் பெயர்.

இம் முறைப்பெயர் நாளடைவில் சிறப்புப்பெயராக ஆளப்பட்டு வருகிறது.

 ஆதன்7ātaṉ, பெ. (n.)

   மாந்தன்; man.

 H. admi, U. admi, asamid, Heb. Adam, Cir. Adam, Jap, hito.

     [ஒரு.கா. ஆள் → ஆளன். → ஆடன் → ஆதன்.]

இந்தி உருது மொழிகளில் ஆத்மி, ஆசாமி எனவும், எபிரேயம், சிர்கேசியன் மொழிகளில் ஆதம் எனவும், சப்பானியத்தில் இதோ எனவும் மாந்தனைக் குறிக்கும் சொற்கள், ஆதன் என்னும் தமிழ்ச் சொல்லையொத்து

வழங்கிவருதல் கவனித்தற்பாற்று. மன், மந்து எனும் சொற்கள், மாந்தனுக்கும் வேந்தனுக்கும் பொதுவாய் பண்டுதொட்டே வழங்கிவருதல் போன்று இச் சொல்லாட்சியும் மாந்தனையும் தலைவனையும் குறிக்கும்.

மாந்தனைக் குறித்த பழந்தமிழ்ச் சொல்லான ஆதன் கன்னடத்தில் ஆத (ata-);, ஆதனு atanu (அவன்); என ஆண்பாற் கட்டுச் சொல்லாகவும் தமிழில் தான், தன் எனத் தற்சுட்டாகவும் குறைந்து உருமாறி விட்டது.

 ஆதன்8ātaṉ, பெ. (n.)

   1. .உடம்பு; body.

   2. தான்; self.

ம. தை (இளங்கன்று, தென்னங்கன்று போன்ற மரநாற்று);.

க., தெ. ஆத்ம (உடம்பு, தான்); சீன. தாய் (கரு, வளரும் பரு ஈனுதல்);.

 Skt. தனு (உடம்பு); pali., pkt. தனு (உடம்பு);.

 Skt. atman (self);: Sinh.ãtmaya;

 pali.attan (self, body);;

 pkt. atta (self, soul, body);.

     [ஆ → ஆது → ஆதன். ஆ = முன்னுறல், வளர்தல் ஆதன் வளர்ந்த உடம்பு. ஆதன் → ஆது → ஆதை → ஆதய் → தாய் → தய் → தை. ஒ.நோ.: ம. தை. ஆதன் → தான். Skt. தனு (உடம்பு);. ஆதன் உடம்பைக் குறிக்குங்கால் தற்சுட்டாகி தான் (self); எனவும் பொருள்தரும். ஆதன் Skt. ஆத்மன் த. ஆத்மா, ஆன்மா.]

ஆத்மன் (ஆத்மா); என்னும் சமற்கிருதச் சொல்லின் மூலம் தெளிவாகத் தெரியவில்லை யென்று மானியர் வில்லியம்க திட்டமாகத் தெரிவிக்கிறார்.

 Skt. atman (fr. r. an to breathe or at, to go;

 or according to some, fr. r1, ah and connected with aham, i. or according to them, a contraction of avatman fr. rt. av, vā but the existence of the old Vedictormtman makes all these etymologies doubtful);

 the breath, soul, the principle of life and sensation, the individual soul, the self, the abstract individual. (atmanam sa hanti – she strikes herself); the person of whole body, mind, intellect, effort, pains, sun, fire wind, air.

 Goth- ahma, OG, aturn, Them, atuma. As aedhm (knowledge);, adhma (knowing (Gr…atma is used at the end of some compounds of atman. (S.E. Dict-Monier Williams);.

தமிழ், ஆரியம் வருமுன் சிந்து வெளி வரை பேசப்பட்ட செம்மொழியாதலால், வடஇந்திய மொழிகளின் மூலத்தாய் மொழியாகிய பிராகிருதத்தில் ஆதன் என்னும் சொல் ஆத்த, ஆத என்று மிகத் தெளிவாகவும், பாலி மொழியில் அத்தன் என்றும் சமற்கிருதத்தில் ஆத்மன், ஆத்மா என்றும் வழங்கிவருகிறது. கீழைமேலையாரிய மொழிகளான கோதிக்கப் பழஞ்செருமானியம், கிரேக்கம், இலத்தீனம் போன்றவற்றிலும் கீழை மொழிகளான சப்பான் சீன மொழிகளிலும் இதன்

வேர்மூலம் பரவியுள்ளதால் இதனைத் தொன்முது தமிழின் முன்முது அடிப்படையாகக் கொள்ளலாம். சமற்கிருதத்தில் உயிரைச் சுட்டிய பின் உயிர்த்தல் (மூச்சுவிடல்); பொருளும், மனத்தைக் குறித்தபின், அறிவுடைமை, கவலை, துன்பம், துன்பந்தரும் வெயில், சூரியன், தீ, காற்று போன்ற வழிநிலைப் பொருள்களும் தோன்றியிருத்தல் வேண்டும். இவை வெறும் பொருட்புடைபாடேயன்றி மூல வேர்ப்பொருளின எனக் கொள்ளவியலா.

பிராகிருத பாலி மொழிகளில் ஆதன் என்னும் வலியிரட்டித்து ஆத்த, (ata);, அத்தன், என வழங்குவதும், சமற்கிருதத்தில் ஆத்மன் என வழங்குவதும் இச்சொல்லின் முதனிலை ஆகார (ஆ → ஆகு → ஆது); நெடிலே என்பதை உறுதிப்படுத்தப் போதிய சான்றாகும். பகுத்தல் – பாத்தல் (பிரித்தல்); ஆயவாறு, அகுத்தல் – ஆத்தல் (அகு = தோன்றல் வளர்தல்); ஆயிற்றென்க.

கன்னட இலக்கியங்களில் ஆத்த சங்கர (உண்டாகிய போர்);, ஆத்தோதய (உண்டாகிய பிறப்பு);, ஆத்தபல (உண்டாகிய வலிமை); என்னுஞ் சொல்லாட்சிகள் (ஆத்த); ஆகிய, தோன்றிய, வளர்ந்த என்னும் பொருள்களில் ஆளப் பெற்றிருப்பதைக் காணலாம். நெடுமுதல் ஓரெழுத்தொருமொழியான வினைகள் ஆ → ஆத்து (ஆகு); எனத் தகரவல்லொற்றிரட்டித்தல் குடகு மொழியிலும் உள்ளது. வா = வந்தான் என்னும் தமிழ் இறந்தகால வினைமுற்று குடகு மொழியில் பா (ba); → பாத்து (battu); என வழங்கி வருகிறது. இவற்றைக் கூர்ந்து நோக்குங்கால் வட இந்தியமொழிகளில் ஆத்மன், ஆன்மா, ஆத்மி, யாத், தனு எனப் பல்வகை வடிவமாறுதல்களையும், பொருள் வேறுபாடுகளையும், ஆதன் என்னும் மூலச்சொல் பெற்றுள்ளதை அறியலாம்.

ஆதன் அழிசி

ஆதன் அழிசிātaṉaḻisi, பெ. (n.)

   கடைக்கழகக் காலப் புரவலன்;   புறம் 71 -ல் பாடப்பட்டவன்; sangam noble.

     [ஆதன் + அழிசி. அழி = கழிமுகம். அழிசி = காயல் அல்லது ஆறுகடலொடு கலக்கும் கழிமுகப் பகுதியின் தலைவன்.]

ஆதன் அவினி

ஆதன் அவினிātaṉaviṉi, பெ. (n.)

   கடைக் கழகக் காலப் பெருமகன்;   ஐங்குறுநூறு 1-10ல் பாடப்பட்டவன்; sangam noble.

     [ஆதன் + அவினி. அவல் = தாழ்நிலம் அவல் → _அவனி → அவினி = தாழ்நிலப்பகுதியின் தலைவன். ஒ.நோ. குட்டன்.]

ஆதன்மை

ஆதன்மைātaṉmai, பெ. (n.)

   பேதமை; folly.

     “ஈவதஃ.தாதன்மை” (நீலகேசி.214);. [ஆது → ஆதன் → ஆதன்மை]

ஆதன்மையால்

ஆதன்மையால்ātaṉmaiyāl,    வி.எ. (adv.) ஆகையால்; therefore.

     “ஆதன்மையா லதுவே நம துய்விடம்” (திவ்.பெரியதி. 2,4,9);.

     [ஆ + தன்மையால் – ஆத்தன்மையால் → ஆதன்மையால் அ → ஆ. சுட்டு நெடு முதலாயிற்று.]

ஆதபசுரம்

 ஆதபசுரம்ātabasuram, பெ. (n.)

   கோடைக் காலங்களில் காலைப் பொழுதில் ஓயாமல் வழி நடத்தலினால் பித்தம் கோளாறடைந் துண்டாகும் காய்ச்சல்; a billious fever arising from the deranged pittam due to constant exposure to the sun by walking in the mornings of the Summer season (சா.அக.);.

த.வ. பித்தக்காய்ச்சல்.

ஆதபத்திரம்

ஆதபத்திரம்ātabattiram, பெ. (n.)

   1. குடை; umbrella, as a protection against the sun.

   2. வெண்குடை (சூடா.);; white umbrella, as an emblem of the royalty.

     [Skt. åtapatra → த. ஆதபத்திரம்.]

ஆதபத்தைலம்

 ஆதபத்தைலம்ātabattailam, பெ. (n.)

   வெயிலில் வைத்துஎடுத்த நெய்மம்; oil obtained by leaving it with the ingredients exposed to the sun for some days (சா.அக.);.

த.வ. வெயில் சூட்டுநெய்மம்.

ஆதபநீயம்

 ஆதபநீயம்ātabanīyam, பெ. (n.)

   ஒரு வகை நெல்; a kind of paddy (சா.அக);.

ஆதபன்

ஆதபன்ātabaṉ, பெ. (n.)

   கதிரவன்; Sun, as the source of heat.

     “ஆதபனிடத்தன் றருந்தொழில் புரியு நீதியில்லை” (ஞானா. 57);.

     [Skt. á-tapa → த. ஆதபன்.]

ஆதபயோகம்

ஆதபயோகம்ātabayōkam, பெ. (n.)

   வெயிலின் கடுமையைத் தாங்கும் ஒகநிலை (மேருமந். 619. உரை);; a yogic condition in which the yogi is able to with stand the burning heat of the sun.

த.வ. சுடுவெயில் தவம்

     [Skt. alaba + yoga → த. ஆதபயோகம்.]

ஆதமதந்தம்

ஆதமதந்தம்ādamadandam, பெ. (n.)

   1. சிலந்திக்கட்டி; pimple, a small boil.

   2. நஞ்சுக்கட்டி; abscess, ulcer, venereal boil (சா.அக.);.

ஆதமம்

 ஆதமம்ātamam, பெ. (n.)

   அரத்தை; galangal – Alpinia galangal (சா.அக.);.

ஆதமர்ணிகப்பொருள்

ஆதமர்ணிகப்பொருள்ātamarṇigapporuḷ, பெ. (n.)

   கடனாகக் கொடுக்கும் பொருள் (சுக்கிரநீதி, 97);; money that is lent.

     [Skt. ådhamasaika → த. ஆதமர்ணிகம்.]

ஆதம்

ஆதம்1ātam, பெ. (n.)

   உயிர்i; life (சா.அக.);.

     [ஆதன் → ஆதம்.]

 ஆதம்2ātam, பெ. (n.)

   கூந்தற்பனை; a kind of palm tree.

   2. சந்தனமரம்; sandal wood tree. (சா.அக);.

     [அதவு (நெருங்கு); → அதவம் → ஆதம் (கூந்தற் பனை); மணமிகுதியால் சந்தனத்தைக் குறித்தது.]

 ஆதம்3ātam, பெ. (n.)

   அன்பு; regard, solicitude

     “ஆதமெய்திநின் றஞ்சலித் தேத்தியே” (கந்தபு. திருக்கல்யா.11);.

     [ஆர்த்தம் → ஆர்தம் → ஆதம்.]

 ஆதம்4ātam, பெ. (n.)

   காப்பு, பேணுதல் (ஆதரவு);; prop.stay, protection.

     “ஆதமிலி நாயேனை யல்லலறுத் தாட்கொண்டு” (திருவாச.31,5);.

     [ஒருகா. ஆர் + தரம் = ஆர் தரம் → ஆதரம் → ஆதம். தரல் → தரன் → தரம்.]

 ஆதம்ātam, பெ. (n.)

   1. கூந்தற் பனை; a kind of palm tree, so called from its numerous long, and thin spadices. Jaggery tree. Bastard Sago tree – Caryota urens.

   2. உயிர்; life.

   3. சந்தன மரம்; sandalwood tree – Santanum album (சா.அக.);.

ஆதம்பரம்

 ஆதம்பரம்ātambaram, பெ. (n.)

   மாதேவி; a tree flea-bane-Vernonia cinerea (சா.அக.);.

ஆதம்பேதி

 ஆதம்பேதிātambēti, பெ. (n.)

   செருப்பு நெருஞ்சில்; a thistle bearing red flowers; trailing indigo-Indigofera enneaphylla (சா.அக.);.

ஆதயம்

ஆதயம்1ātayam, பெ. (n.)

   1. வெயில்; sunshine, sunlight.

   2. ஒளி; lustre.

     “ஒருவழியினடையா வாதபஞ் சாயைபோல” (ஞானா. 63);.

த.வ. உருமம்.

     [Skt. å-tapa → த. ஆதபம்.]

 ஆதயம்2ātayam, பெ. (n.)

   மூலப்பகுதிகளுள் (பிரகிருதிகளுள்); ஒன்று (மேருமந். 165);; a pirakirudi.

     [Skt. ätapa → த. ஆதபம்.]

ஆதரணை

ஆதரணைātaraṇai, பெ. (n.)

   1. காத்தல், புரத்தல், உதவுதல்; support, shelter, help.

     “கை தூக்கி ஆதரணை செய்யும்” (கந்தபு. சீர். 31, 18);.

     [ஆர் + தரணை = ஆர். தரணை → ஆதரணை.]

 ஆதரணைātaraṇai, பெ. (n.)

   ஆதரவு; shelter, support, help.

     “கைதுரக்கி ஆதரனை செய்யும்” (கந்தபு. கீர். 31:18);.

     [Skt. adarana → த. ஆதரணை.]

ஆதரம்

ஆதரம்ātaram, பெ. (n.)

   அன்பு ஆசை (திவ். திருமாலை, 16);; regard, love, affection, kindness, respect.

     “தேங்கிய காதர ஆதரம் செப்பி” (தஞ்.வா.கோ.);

   2. ஆசை (சூடா.);; desire.

   3. மதித்துப் பேணுதல்; honour, hospitality.

     “ஆதரங்கள் பெருக்கினார்” (கோயிற்பு. இரணிய.95);.

 Skt. âdara.

     [ஆர் + தரம் = ஆர்.தரம் → ஆதரம். ஆர்தல் = மனம் நிறைதல், அன்பு. தரம் = நிலைமை.]

வடமொழியிலுள்ள ஆதர என்னுஞ் சொல்லை ஆ +தர எனப் பிரித்து வேர் காட்டுவர். ‘ஆ’ பொருளில்லாத முன்னொட்டு தர → த்ரு = உடைத்தல், பிளத்தல், வடமொழி வேர்மூலம் அன்பு, ஆசை போன்ற பண்புப் பெயர்களுக்குப் பொருந்தாமையும் தமிழ்ச்சொல்லே வடமொழியில் கடன் கொள்ளப்பட்டிருத்தலையும் சொல்லினமைப்பு விளக்கிக் காட்டுகிறது.

ஆதரவு

ஆதரவுātaravu, பெ. (n.)

   1 அன்பு (கந்தபு. மார்க்கண். 21);; love, affection, kindness. “ஆதரவற்ற சொல்லும் ஆணிகடவாத மரமும் பலன் செய்யா (பழ.);.

   2. உதவி; support, patronage.

   3. தேற்றுதல்; comfort, consolation.

ம., தெ. ஆதரவு: க. ஆதர.

     [ஆர் + தரவு → ஆர்தரவு – ஆதரவு → ஆர் = நிறைவு, அன்பு.]

ஆதரவுச்சீட்டு

 ஆதரவுச்சீட்டுaravuccīṭṭu, பெ. (n.)

   பற்றுச்சீட்டு; voucher.

     [ஆதரவு + சீட்டு.]

ஆதராதிசயம்

 ஆதராதிசயம்ātarātisayam, பெ. (n.)

   பேரன்பு; great regard, ardent desire.

     [Skt. å-dara+ati-saya → த. ஆதராதிசயம்.]

ஆதரி-த்தல்

ஆதரி-த்தல்ātarittal,    11. செ.குன்றாவி. (v.t.)

   1. பாதுகாத்தல்; to support, protect, patronize (W);.

   2. அன்புடன் பேணுதல், பரிந்தோம்புதல்; to treat with regard or kindness, to extend hospitality, to show honour to.

   3. ஆசைபொழிதல்; to favour.

     “அடியேனாதரித் தழைத்தால்” (திருவாச. 29,4);.

   ம. ஆதரிக்குக;   க. ஆதரிசு;தெ. ஆதரின்சு. ஆதலி-த்தல் பார்க்க;see adali.

     [ஆதலித்தல் → ஆதரித்தல். ஆதலித்தல் = ஆகச் செய்தல், நன்மைபெறச் செய்தல், காத்தல். ஒ.நோ. மூதலித்தல் → மூதரித்தல். ஊதவித்தல் → ஊதரித்தல் ஊதாரித்தனமாகச் செலவு செய்தல். ஊதல் = பறக்கச் செய்தல்.]

ஆகல் → ஆதல். ஆகலித்தல் → ஆதலித்தல், ஒருவனை ஆகச்செய்தல் (ஆகலித்தல்); என்பது வளரச்செய்தல், வளரத்தக்க சூழலமைத்துக் கொடுத்தல், பாதுகாத்தல் எனப் பொருள்படும்.

ஆதரிசனம்

ஆதரிசனம்ātarisaṉam, பெ. (n.)

ஆதரிசம்2 பார்க்க; see adarisam2.

     [Skt. å-darsana → த. ஆதரிசனம்.]

ஆதரிசம்

ஆதரிசம்1ātarisam, பெ. (n.)

   1. நூலுக்கு வழங்கப்படும் உரை; commentary.

   2. மூல ஏடு; original manuscript.

     [Skt. ädarša → த. ஆதரிசம்.]

 ஆதரிசம்2ātarisam, பெ. (n.)

   கண்ணாடி; Mirror.

     [Skt. å-darsa → த. ஆதரிசம்.]

ஆதர்

ஆதர்ātar, பெ. (n.)

   1. குருடர்; the blind.

   2. அறிவில்லாதவர்; the ignorant.

   3. ஊமணி; fleshy protuberance hanging down the neck of goat.

     [அதள் = தோல், மேற்றொலி. அதள் → அதல் → அதர் → ஆதர் = உள்ளீடில்லாமல் மேற்றோல் மூடிய பொய்த்தோற்றம்.]

ஆதர்ச

 ஆதர்சātarca, பெ.அ.(adj)

   மிகச் சிறந்த, எடுத்துக்காட்டாகச் சொல்லக் கூடிய; something ideal; perfect; model.

ஆதர்ச நண்பர்கள்.

ஆதலால்

ஆதலால்ātalāl,    வி.எ. (adv.) அப்படியிருத்தலால் (திவ்.பெரியதி. 5,8,8.); therefore, because of that

     “ஆதலால் இராமனுக்கு அரசை நல்கி” (கம்ப. அயோத்.மந்.33);.

ம. ஆதலால்.

     [ஆகுதல் = ஆதல் + ஆல் → ஆதலால் = ஆதலின் பொருட்டு, ஆகின்ற செயலால் அல்லது காரணத்தால்.]

ஆதலி

 ஆதலிātali, பெ. (n.)

   அத்தி (சா.அக.);; fig tree.

     [அதவு → ஆதவு → ஆதனி → ஆதலி.]

ஆதலி-த்தல்

ஆதலி-த்தல்ātalittal,    11 செ.குன்றாவி (v.t.)

   1. ஆகச்செய்தல்;   உதவுதல்; to favour, to help for betterment.

   2. துன்பத்தில் உதவுதல்; to support, in distress

   3. காப்பாற்றல்; to protect.

     [ஆதலித்தல் → (பிறவினை);. ஒ.நோ. ஆதலை (யாழ்ப்.); = உதவி. ஆதல் + ஈ = ஆதலி → ஆதலி (ஆகச் செய்); ‘ஈ’ – அருள்செய் எனப்பொருள்படும். துணைவினை.]

ஆதலினால்

 ஆதலினால்ātaliṉāl, வி.எ. (adv.)

ஆதலால் பார்க்க;see adalal.

     [ஆதல் + இன் + ஆல் = ஆதலினால், இன் – சாரியை.]

ஆதலை

 ஆதலைātalai, பெ. (n.)

   உதவி (கதி.அக.);; help, assistance.

     [ஆதல் + ஐ – ஆதலை = உதவி. ஆதல் = உதவுதல். ஐ -செயப்படுபொருள் பெயராக்க ஈறு.]

ஆதல்

ஆதல்1ātal, பெ. (n.)

   1. ஆகுதல்; becoming;

 happening.

     “நயனுடையான் நல்கூர்ந்தான் ஆதல்” (குறள். 219);.

   2. நூல் (அக.நி.);; book, treatise.

   3. மேம்பாடு; prosperty.

     “அருளற்றார் மற்று ஆதல் அரிது” (குறள்.248);.

   4. நன்மை; goodness.

     “ஆதல் நின்னகத் தடக்கி” (புறநா. 91);.

     [ஆகுதல் → ஆதல். ஆதல் = செய்யப்பட்ட நூல்.]

 ஆதல்2ātal, பெ. (n.)

   ஆசை (அக.நி.);; desire.

     [ஆர்தல் → ஆதல்.]

 ஆதல்3ātal, பெ. (n.)

   1. காட்சி, தோற்றம்; vision (R);. sight.

     [ஆல் + தல் → ஆதல் = பார்த்தல். க. ஆல் = பார். த. ஆல் = பொருந்துதல், உள்ளத்தைப் பார்வையாற் பொருத்தும் காட்சி.]

 ஆதல்4ātal, பெ. (n.)

   நுணுக்கம்; minuteness (R);.

     [ஆய்தல் → ஆதல் = நுணுக்கம். ஆய்தல் = துணுக்கம்.]

 ஆதல்5ātal, பெ. (n.)

   கூத்து (அக.நி.);; dance.

     [ஆடல் → ஆதல், ட → ததிரிபு. ஒ.நோ: கடவு → கதவு.]

 ஆதல்6ātal, பெ. (n.)

   தெரிதல்; selecting.

     [ஆய்தல் → ஆதல். ஆய்தல் = தெரிந்தெடுத்தல், ஆராய்தல்.]

 ஆதல்7ātal, இடை. (conj.)

   ஆவது எனப்பொருள்படும் இடைச்சொல்; conjunction which means ‘or’.

     “பொருந்துமோர் துலாத்தினாத லரைத்து லாம் பொன்னினாதல் …. தகடு செய்தே” (கூர்மபு. தான. 65.);.

     [ஆகுதல் = ஆதல். ஆதல் என்னுந் தொழிற் பெயர் கூட்டுச் சொற்களின் பின்னீறாய போது இடைச்சொல்லாயிற்று.]

ஆதளம்பால்

 ஆதளம்பால்ātaḷambāl, பெ. (n.)

   காட்டாமணக்குப் பால்; milky juice of physic nut plant (சா.அக.);.

     [ஆதளை + அம் + பால்.]

ஆதளை

ஆதளை2ātaḷai, பெ. (n.)

   மாதுளை; pomegranate tree (சா.அக.);.

     [மாதுளை → மாதளை → ஆதளை.]

ஆதவத்தைலம்

 ஆதவத்தைலம்ātavattailam, பெ. (n.)

   கதிரவன் சூடு படும் படி புடமிட்ட நெய்மம்; a medicated oil prepared by exposing it to the sun’s rays (சா.அக.);.

த.வ. வெயில் சூட்டுநெய்.

ஆதவன்

 ஆதவன்ātavaṉ, பெ. (n.)

   கதிரவன்; sun.

     [Skt. a-tapa → த. ஆதவன்.]

ஆதவம்

ஆதவம்ātavam, பெ. (n.)

   1. வெயில்; Sunshine.

   2. ஒளி (பிங்);; light.

     [Skt. å-tapa → த. ஆதவம்.]

ஆதவாழ்பூடு

 ஆதவாழ்பூடுātavāḻpūṭu, பெ. (n.)

   வாலைப்பூ நீர்; solvent liquid obtained by distillation from fuller’s earth (சா.அக.);.

     [ஒருகா. ஆதவாழ்யூடு என்னும் பெயர் கரைப்பானாகிய ஒரு நீர்மத்திற்குக் (திரவம்); குழூஉக்குறியாக இடப்பட்டிருக்கலாம்.]

ஆதானம்

ஆதானம்1ātāṉam, பெ. (n.)

   1. குதிரையணி (நாநார்த்த);; caparisons of a horse.

   2. பற்றுகை (மச்சபு. பிரமமு.ii);; taking, seizing.

     [Skt. ädana → த. ஆதனாம்.]

 ஆதானம்2ātāṉam, பெ. (n.)

   வைக்கை (சேதுபு. அகத். 38);; depositing, placeing usu in compounds as.

அக்கினியாதானம், கர்ப்பாதானம்.

     [Skt. å-dhåna → த. ஆதானம்.]

ஆதானும்

ஆதானும்ātāṉum, சு.பெ. (pron.)

   எதுவாயினும், யாதாயினும்; whatever, whichever.

     “ஆதானும் செய்ய” (திவ். இயற். பெரியதிருவ. 25);.

     [யாதானும் → ஆதானும்.]

ஆதாபாதை

 ஆதாபாதைātāpātai, பெ. (n.)

   விரைவுக்கோலம், மிகுந்த விரைவு கருதி அரைகுறையாகச் செய்யும் பணி; occasion of urgency, hasty work. இப்படி ஆதாபாதையாய் வேலை செய்யக்கூடாது (உ.வ.);.

     [அதைபதை → ஆதாபாதை. அதைபதை → விரைவு கருதிய எதுகை மரபிணைச் சொல். அதைபதை பார்க்க;see adai padai.]

ஆதாபாதையாக

 ஆதாபாதையாகātāpātaiyāka,    வி.எ. (adv.) விரைவுக்கோலத்தில்; in a state of urgency, hurriedly. எல்லாம் ஆதாபாதையாகச் செய்து முடித்து விட்டான். (உ.வ.).

     [அதைபதையாக → ஆதாபாதையாக. அதைபதை பார்க்க;see adaipadai.]

ஆதாம்

 ஆதாம்ātām, பெ. (n.)

   முதல் மாந்தன் (முதல்மனிதன்);; name of the firstman.

     [Heb. ádam → த. ஆதாம்.]

ஆதாயஞ்செலவு

ஆதாயஞ்செலவுātāyañjelavu, பெ. (n.)

   வரவுசெலவு; income and expenditure.

     [ஆதாயம் + செலவு ஆதாயம்1 பார்க்க;see adãyam.]

ஆதாயப்பங்கு

 ஆதாயப்பங்குātāyappaṅgu, பெ. (n.)

   ஊதிய (இலாப);ப் பங்கு (புதுவை);; dividend (Pond.);, share in profit or income.

     [ஆதாயம் + பங்கு.]

ஆதாயம்

ஆதாயம்1ātāyam, பெ. (n.)

   1. ஊதியம், கிட்டுபடி (இலாபம்);; profit, gain, income

     “வணிகருக் காதாய மீது நினைவு” (குமரே. சத. 9);.

   2. நன்மை (கதி.அக.);; benefit.

     “ஆதாயம் பெருகினால் ஆணவம் பெருகும்”

   3. வரவு; income.

     “ஆதாயமில்லாமல் செட்டி ஆற்றோடே போவானா?” (பழ.);.

   க., து., பட. ஆதாய;ம. ஆதாயம்.

     [ஒருகா. ஆகு + ஆயம் → (ஆது + ஆயம்); → ஆதாயம். ஆயம் = கூடுதல், தொகை. ஆதாயம் (ஆ.கு +

ஆயம்); தமக்காகிய கூடுதல் தொகை, ஊதியம் (இலாபம்); ஆகு → ஆது. ஒ.நோ: போகு → போது.]

 ஆதாயம்2ātāyam, பெ. (n.)

ஆதாயவரி

 ஆதாயவரிātāyavari, பெ. (n.)

   வருமானவரி; income tax.

   க. ஆதாயகர;ம. ஆதாயனிகுதி.

     [ஆதாயம் + வரி.]

ஆதார பேதம்

 ஆதார பேதம்ātārapētam, பெ. (n.)

ஆதார வேற்றுமை பார்க்க;see ādāra vērtumai.

     [ஆதாரம் + பேதம். Skt. beda → த. பேதம். பேதம் = வேற்றுமை.]

ஆதாரக்கம்பி

 ஆதாரக்கம்பிātārakkambi, பெ. (n.)

   சுவரின்மேற் போடும் சரப்பலகை (சென்னை);; wall plate (Madr.);

     [ஆதாரம் + கம்பி.]

கம்பி = நீண்ட வடிவிலுள்ளது. கொம்பு → கம்பு → கம்பி கம்பி = இரும்பாலான கம்பி மட்டுமின்றி மரத்தாலான நீண்ட கம்பும் கம்பி என இட வழக்காக வட தமிழகத்தில் சிற்சில விடங்களில் வழங்கும். கழைகளை அல்லது குறுமரத்தடிகளை இணைத்துக் கிணற்றின் நடுவில் அல்லது மேல் நின்று பூச்சு வேலை செய்வோர் அமைத்துக் கொள்ளும் இருக்கை ஆதாரக் கம்பி எனப்பட்டது. நாளடைவில் சிறு மரப்பலகைகளைக் கட்டி இணைத்த இணைப்பும் ஆதாரக்கம்பி எனப்பெயர் பெறுவதாயிற்று.

ஆதாரக்கல்

 ஆதாரக்கல்ātārakkal, பெ. (n.)

   கற்படிமத்தைத் தாங்கும் அடிக்கல்; pedestal of stone on which a stone idol is fixed (W);.

     [ஆதாரம் + கல்.]

ஆதாரக்கோவை

 ஆதாரக்கோவைātārakāvai, பெ. (n.)

   கொல்லன் கோவைக் கொடி;   இதன் அடிப்பகுதி வழ வழப்பாயிருக்கும்;   கணுக்களில் வளையுந் தன்மையுண்டு;   இலைகள் சற்றே சதைப் பற்றுள்ளவைகளாயும், காம்புகள் நீளமானவைகளாயும், மூன்று பகுப்பினவாயும், இருபக்கமும் சொரசொரப்பும் அரும்புகள் வாய்ந்தவைகளாயுமிருக்கும். பூக்கள் மஞ்சளாயும், விதைகள் கொஞ்சமாயும், வெண்மையாயும் தட்டையாயுமிருக்கும்; climbing shrut wit yellow flowers, so called from its root living in air;

 snake caper.

 It is a climbing shrub, leaves somewhat fleshy and three-lobed, long petioles with short bristly hairs;

 slightly toothed;

 flowers yellow;

 few seeded;seeds white and com pressed.

மறுவ. ஆகாயக்கருடன், கொல்லன்கோவை.

ஒருகா. ஆதாரம் + இல் + கோவை – ஆதாரமில்கோவை. ஆதாரக்கோவை = வேரின் தூர்கள் மேலே தெரியும்படி உள்ள கொடி. இதற்கு ஆகாயக்கருடன் எனப் பெயரிருப்பதும் இது பற்றியே.

ஆதாரசத்தி

ஆதாரசத்திātārasatti, பெ. (n.)

   சிவனின் தேவி, சிவசத்தி (சதாசிவ.31);; Siva – Sakti.

     [ஆதாரம் + சக்தி → ஆதாரசக்தி. Skt. Sakti → த. சத்தி.]

ஆதாரசிலை

 ஆதாரசிலைātārasilai, பெ. (n.)

ஆதாரக்கல் பார்க்க;see ādāra–k–kal.

     [ஆதாரம் + சிலை. Skt. sila → த சிலை = கல்.]

ஆதாரணை

 ஆதாரணைātāraṇai, பெ. (n.)

   தெய்வ வழிபாட்டின் போது உண்டாகும் தெய்வமருள் (தெய்வ ஆவேசம்); (நெல்லை);; possession by deity during worship.

     [ஆர் + தரல் – ஆர்தரணை → ஆதாரணை.]

ஆதாரதண்டம்

 ஆதாரதண்டம்ādāradaṇṭam, பெ. (n.)

   முதுகெலும்பு; back bone, vertebral column.

     [ஆதாரம் + தண்டம். தண்டு = தண்டம் → தண்டு போன்றிருக்கும் முதுகெலும்பு.]

ஆதாரநரம்பு

ஆதாரநரம்புātāranarambu, பெ. (n.)

   முதுகெலும்பிலுள்ள நரம்பு; spinal cord.

   2. மூலாதாரத்தின் நரம்புகள்; nerves of the scaral region (சா.அக.);.

     [ஆதாரம் + நரம்பு.]

ஆதாரநாடி

ஆதாரநாடிātāranāṭi, பெ. (n.)

   1 முதன்மையான நாடி; great arterial trunk which rises from the left ventricle of the heart Aorta.

   2. மூலாதார நாடி; sacral artery distributed over the structures around sacrum and Cocoys.

     [ஆதாரம் + நாடி.]

ஆதாரநிலை

 ஆதாரநிலைātāranilai, பெ. (n.)

   பற்றுக்கோடு (பிங்.);; Support, prop.

     [ஆதாரம் + நிலை.]

ஆதாரபீடம்

 ஆதாரபீடம்ātārapīṭam, பெ. (n.)

   ஆதாரக்கல் (வெட்.);; pedestal of stone (inx);.

     [ஆதாரம் + பீடம். Skt. pita → த. பீடம்.]

   ஆதாரவிருக்கை பார்க்க;

ஆதாரம்

ஆதாரம்1ātāram, பெ. (n.)

   1 பற்றுக்கோடு (சேதுபு. கந்த. 86);; support, stay, prop.

   2. மூலம்; source.

   3. அடிப்படை, அடிப்படைக் காரணம்; ground, basis. நீர் சொல்லும் பொருளுக்கு ஆதாரம் என்ன? (உ.வ.);.

   4. அடிப்படைச் சான்று, மூல ஆவணம், பற்றுச்சீட்டு; document, voucher, title deed by which a right to property is established and maintained.

   க., து. ஆதார;தெ. ஆதாரமு.

 Skt. adhara;

 Nep. Ãdhãr;

 Sinh. ãdhãraya;

 Mar., Pali. Ādhāra.

     [ஆ + தாரம். ஆ = முதன்மை, அடிப்படை. தாரம் = அரும்பண்டம், பொருள்.]

 ஆதாரம்2ātāram, பெ. (n.)

   1. உதவி; support.

   2. மழை; rain (W.);

   3. ஏரி (நாநார்த்த.);; tank.

   4. பகுதி, பிரிவு; section, chapter.

   5. உயிருக்கு ஆதாரமாகிய உடல்; body forming as it were a support to life.

   6. பாத்தி; pan.

   7. வாய்க்கால்; canal.

   ம. ஆதாரம்.;   கொ. ஆதார். Skt. ãdhãra; Sinh. ãdhãra

     [ஆகு + தரம் = ஆதாரம். தரு → தரம் = வருவழி, மூலம். ஆகு = இயல்கின்ற, முடிகின்ற.]

ஒன்றற்குச் செயற்பாட்டு மூலமாயிருப்பதும், மழை போன்று தானே மூலமாயிருப்பதும், ஆதாரம் எனப்பட்டது. அடிப்படைத் தலைப்புகள் ஒரு நூலினுட்பிரிவாக இருத்தலும், உலகவாழ்வுக்குப் பேணிக் காக்கப்படும் உடம்பு மூலமாயிருப்பதும், இப்பெயர்பெறக் காரணங்களாயின.

ஆகு + பயன் = ஆபயன் என முதனிலையீறுகெட்டுப் புணர்ந்தாற்போல் ஆகு + தரம் வினைமுதனிலையீறு கெட்டுப் புணர்ந்து வருமொழி முதனீண்டது. ஒநோ: ஆகு + வகை = ஆவகை.

 ஆதாரம்3ātāram, பெ. (n.)

   1. நிலை; situation.

   2. ஆறாதாரம்;   3. ஆதாரம்; basis or base.

   4. மூலாதாரம்; psychic centre situated between the anus and the genitals.

   து. ஆதார;   கொ. ஆதி; Mar. adhar.

     [ஆ + தாரம் = ஆதரம் → ஆதாரம். தரம் = வகை, நிலை. ஆ = முதன்மை, அடிப்படை ஆதாரம் = அடிப்படையான நிலை.]

ஆதாரலக்கணை

 ஆதாரலக்கணைātāralakkaṇai, பெ. (n.)

   இடவாகு பெயர் (சி.சி. பாயி. குருவகை. ஞானப்.);; metonymy, whereby the name of the support is figuratively used for the thing supported.

     [ஆதாரம் + இலக்கணை – ஆதாரவிலக்கணை → ஆதாரலக்கணை. (கொ.வ.);.]

ஆதாளி

ஆதாளிātāḷi, பெ. (n.)

   1. பேரொலி; noise, bustle, roar.

     “வானோர் பேரியாதாளி யுற நடிக்கும் சிற்பொது” (குற்றா. தல. திருக்குற்றா. 24.);.

   2. கலக்கம், குழப்பம்; agitation, perturbation, stir (W.);

   3. இடம்பப் பேச்சு; boasting, bragging, bravado.

     “ஆதாளி வாயனை” (திருப்பு. 557);,

   4. தாமிரத்தை நீறாக்கும் ஒரு மூலிகை; unknown herb said to possess the virtue of calcinating copper. (சா.அக.);.

ம. ஆதாளி

     [அதளி → ஆதளி → ஆதாளி.]

ஆதாளிக்காரன்

 ஆதாளிக்காரன்ātāḷikkāraṉ, பெ. (n.)

   இடம்பப் பேச்சுக்காரன்; braggart, boaster, vaunter.

     [ஆதாளி + காரன்]

ஆதாளித்தல்

ஆதாளித்தல்ātāḷittal, தொ.பெ. (vbl.n.)

   1. பேரொலி செய்தல்; making noise.

   2. குழப்பம் விளைத்தல்; agitating perturbing.

   3. வீம்பு பேசுதல்; boasting.

   4. களைப்படைதல்; becoming red.

ம. ஆதாளிக்குக

     [அதளித்தல் → ஆதளித்தல் → ஆதாளித்தல். ஆதளி = குழப்பம்.]

ஆதாளிமன்னன்

 ஆதாளிமன்னன்ātāḷimaṉṉaṉ, பெ. (n.)

   கரடி; bear.

     [அதளி → ஆதளி → ஆதாளி = குழப்பம். கூச்சலும் குழப்பமும் உண்டாக்கும் இயல்பு பற்றிக் கரடிக்கு ஆதாளி மன்னன் எனப் பெயரிடப்பட்டிருக்கலாம்.]

ஆதாளை

 ஆதாளைātāḷai, பெ. (n.)

   ஆமணக்கு; castor-plant.

ஆதளை பார்க்க;see adalai.

     [ஆதளை → ஆதாளை.]

ஆதி

ஆதி1āti, பெ. (n.)

   1. தொடக்கம்; beginning, commencement. (திருவாச. 7,1);.

   2. தொடக்கமுள்ளது; that which has a beginning.

     “வினை ஆதியோ அனாதியோ” (சி.போ. 2,2,3 சிற்.);.

   3. காரணம்; source, cause. (குறள். 543);.

   4. பழைமை (பிங்..);; antiquity.

   5. முதன்மை, தலைமை; first supreme head. எப்பொருட்கும் இறை (பிங்.);;

 independant sovereign, supreme ruler, emperor.

   7. கடவுள் (பிங்.);; the supreme being, the first, applied esp. to God.

   8. கதிரவன்; sun.

     “ஆதி வெயின் மணிப்பீடம் போன்றான்.” (பாரத. கிருட். 164);.

ம. ஆதி.

     [அகு → அகுதி → ஆதி. அகு → அகை = முன்வரல், முதலாதல்.]

பாவாணர், அகராதிக்கு அகரமுதலி எனப் பெயரிட்டார். ஆதி வடதமிழ்ச் சொல்லாதலின் தூய தென்சொல்லான முதலி என்பதை எடுத்தாண்டார். தொல்காப்பியத்தில் முதல் எனப் பொருள்படும் 26 இடங்களில், 25 இடங்களில் முதல் என்னும் சொல்லையும், ஒரே இடத்தில் ஆதி என்னும் சொல்லையும், தொல்காப்பியர் ஆண்டிருக்கிறார். பழந்தமிழ்ச் சான்றோர் அனைவரும் முதலிய, முதல என்னும் பொருளில் ஆதி என்னுஞ் சொல்லைப் பெரிதும் ஆளவில்லை. தமிழிலக்கியங்களில் பெருமளவுக்கு ஆட்சி பெறாததால் அதனைத் தூய தென் சொல்லாகப் பாவாணர் ஏற்றுக் கொள்ளவில்லை.

ஆதி என்னுஞ்சொல் தலைமை, முதன்மை என்று பொருள்படும் வடநாட்டுச் சொல். அதன் வேர் முன்வருதல் கருதிய அகு → ஆ என்னும் வினைமுதலே. இந்தியில் ஆகே என்பது முன்னால் என்று பொருள்படும். மராட்டிய மொழியில் ஆகுதலி என்பது தலைவாழையிலையைக் குறிக்கும். பழங்கன்னடத்தில் ஆதலை என்பது முன்வரிசை என்று பொருள்படும். தெலுங்கில் ஆதிகொனு = முற்படு எனப் பொருள்படும். ஆ என்னும் (சேய்மை); கட்டுச் சொல்லுக்கும் முன்வரல், மேம்படல் ஆகுதல் எனப் பொருள்படும் அகு → ஆ என்னும் வினைச் சொல்லுக்கும். எவ்வகைத் தொடர்புமில்லை.

ஆ சேய்மைச்சுட்டெனின் ஆ → ஆது எனத்திரியுமேயன்றி ஆதி எனத் திரியாது. தெலுங்கில் அது → அதி எனத் திரியினும் தமிழ் மரபுக்கு ஏற்றதன்று. முன்மை சுட்டிய முன்னொட்டாகவும் ‘ஆ’ தமிழில் ஆளப்படவில்லை. ஆ என்னும் முன்மை சுட்டிய சுட்டுச் சொல்லடியாக ஆதி தோன்றி. முந்தைய எனப் பொருள்பட்டதெனின், அண்மை சுட்டிய ஈ என்னும் சுட்டுச் சொல்லடியாக ஈதி என்னும் சொல் தோன்றி பிந்திய எனப் பொருள்பட்டிருத்தல் வேண்டுமன்றோ?

இது போன்றே தந்தையைக் குறிக்கும் அத்தன் என்னும் சொல் ஆதன் எனத் திரிந்து தலைவனையும் குறிக்கும். சேர மன்னர்களின் பெயர்களில் ஆதனழிசி, ஆதன் ஓரி எனவும் சேரலாதன், வாழியாதன் எனவும் இயற்பெயர்களாகவும், சிறப்புப் பெயர்களாகவும் இச்சொல் வழங்கி வந்திருக்கிறது. குடகு மொழியில் ஆத என்னுஞ்சொல் தலைவன் எனப் பொருள்படுகிறது. தலைவன் எனப் பொருள்படும் ஆதன் என்னுஞ்சொல் ஆதி எனத் திரிந்து தலைவி எனப் பொருள்படும். கரிகாற்சோழனின் மகள் பெயரிலுள்ள (ஆதிமந்தி); முதற்பெயர் ஆதி = தலைவி எனப்பொருள்படும். மந்தி = இளவரசி, ஆதிமந்தி = தலைமையான இளவரசி அல்லது மூத்த இளவரசி, ஆதி என்னும் பெண்பாற்சொல் பெயரெச்சமாகவோ இயற்பெயரல்லாத கூட்டுச் சொல்லின் முன்பின் உறுப்புகளாகவோ வழங்கியதற்கான சான்றில்லை. ஆதி பகவன் என்னும் சொற்றொடரில், ஆதி ‘தலைவி’ எனப் பொருள்படுவதாயின், அச்சொற்றொடர் அம்மையப்பனாகிய சிவபெருமானையே குறிக்கும். ஆதலின் தலைமை சுட்டிய ஆதி என்னும் பெண்பாற்சொல் பொதுச்சொல்லாயிற்று என்பதை ஏற்கவியலாது. வருதி, போதி என்றாற் போல், ஆதி என்பது ஏவல்வினையாகப் பொருள்படுமேயன்றி வேறு வகையாகத் தமிழில் பொருள்படுமாறில்லை.

இனி, மிகுதி → மீதி, பகுதி → பாதி எனத் திரிந்தது போன்று, அகுதி → ஆதி எனத் திரிந்ததாகக் கொள்ள இட முண்டு. அகுதி என்னும் சொல் முன்வந்தது முதன்மையானது எனப்பொருள்படும். அகு → அகுதி = முன்னாலிருப்பது, மேலே இருப்பது, முதலாவது அகுது, அகுதை என இயற்பெயர் கொண்டவர்களும் பழந்தமிழகத்தில் வாழ்ந்திருக்கின்றனர். இந்த அகுதி பெண்பாற் சுட்டியதன்று, முதன்மை மட்டும் சுட்டியது. அகு என்னும் வினைச்சொல் அகலெ (அடுத்து முதலாக வருவது); என இந்தியில் திரிந்து, இனியடுத்த

முதன்மையது எனப் பொருள்படுதலை ஒப்பிட்டு நோக்குக. எனவே, அகுதி → ஆதி எனத் திரிந்து, முதன்மை சுட்டிய சொல்லாக வடநாட்டு மொழிகளில் வழங்கி, பிறகு வடமொழியிலும் பெருக ஆட்சிபெற்றிருக்கிறது என அறியலாம். மிகு என்னும் வினையும் மிகுதி என்னும் பெயரும் தமிழில் பண்டுதொட்டு ஆட்சி பெற்றிருப்பதுபோல், அகு என்னும் வினையும், அகுதி என்னும் பெயரும் தமிழ்ச்சொற்களாயினும் தமிழில் பெருகிய ஆட்சி பெறவில்லை. ஆதலின் அதன் திரியான ஆதி என்னும் சொல்லைத் தமிழில் தோன்றி வளர்ந்த தனித்தமிழ்ச் சொல்லாகக் கொள்ளவியலாது. மிகுதி என்பதை நோக்க மீதி என்பது திரிபு வடிவமே, செந்தமிழ் வடிவமன்று. ஆதி என்பது வடநாட்டில் தோன்றி வளர்ந்து பெற்ற வடிவத்தைத் தமிழ்நாட்டிலேயே தோன்றி வளர்ந்து பெற்றிருப்பினும் அதனைத் திரிபு வடிவம் என்பதல்லது செந்தமிழ் வடிவம் எனக் கொள்ளலாகாது.

இனி, சூராதி சூரன், தேவாதி தேவன் என்னும் தொடர்களில் ஆதி என்னும் சொல், (அதி = மிகுதி); சூரன் + அதி சூரன் = சூராதி சூரன் எனத் திரிந்த திரிபாதலின் அது வினாவன்று. ஆதி என்பது தமிழ்ச் சொல்லேயென வற்புறுத்திய தமிழன்பர்கள் பலரும்முன்மை சுட்டிய ‘ஆ’ என்னும் இடைச் சொல்லையே சான்று காட்டினர். வினையடியாகத் தோன்றிய பெயர்ச்சொல் வடிவத்தை அவர்கள் வரையறுக்கவில்லை. அவர்கள் கூற்றின் வண்ணம், போகு → போது எனத் திரிவது போல் ஆகு → ஆது எனத் திரிந்ததாயின், ஆது என்னும் வினையின் முக்காலப் புடைபெயர்ச்சி தமிழில்யாண்டும் காணப்படவில்லை. ஆயின், ஆதி என்னுஞ்சொல் மிகப் பழைய காலத்தையும், மிக முந்தைய நிலையையும் குறித்த பெயர்ச்சொல்லாகப் பெருக ஆளப்பட்டுள்ளது. இப் பெயர்ச் சொல் வடிவமே முந்தைய எனப் பொருள்படும் பெயரெச்சப் பொருளையும், இச் சொல்லுக்குத் தந்தது. ஆதலின் பெயர்ச்சொல் பொருளே இதன் முழுமையான பொருள். ஆதி, செந்தமிழ்ச் சொல்லாயின் தலைமையையும் முதன்மையையும் ஆகிய பொருள்களைச் சுட்ட வேண்டுமேயன்றி, காலத்தால் முற்பட்ட பழமையைச் சுட்டுவது காலத்தின் கோலத்தால் ஏற்பட்ட வழிநிலைப் பொருளேயன்றி முதற்பொருள் ஆகாது. பழையது என்னும் சொல் பழமையைக் குறிக்குமேயன்றி தலைமையையும், முதன்மையையும் குறிக்காது. தொன்மை என்னும் சொல்லும் இவ்வாறே. முதன்மை என்று பொருள்படும் சொல் மட்டும் காலத்தால் முற்பட்ட நிலைமையையும் அகவையால் மூத்த தலைமையையும் குறிக்கும். முன்னவன் என்னும் சொல்லை ஒப்பு நோக்குக. எனவே, ஆதி என்பது முதன்மை கட்டிய பிறகே பழமையைச் சுட்டியிருக்கிறது என்பது போதரும்.

தமிழில் முதன்மை சுட்டிய பொருளே ஆட்சியில் பெருகி வழங்கியிருக்கிறது. பழமை சுட்டிய பொருள் வடநாட்டு மொழிகளில் இச்சொல்லுக்கு ஏற்றப்பட்டிருக்கிறது. ஆதலின், முன்மை சுட்டிய பிறகு முதன்மையையும் தலைமையையும் சுட்டிய ஆதி என்னும் தனிச்சொல் வடநாட்டிற்குச் சென்று வடநாட்டில்பழமைப்பொருளில் திரிந்ததால் அதனை (பிராகிருத

முதலிய வடதமிழ்) வடநாட்டுச் சொல்லென்று பாவாணர் வரையறுத்தார்.

   தமிழிலுள்ள பெயரெச்சங்கள் அனைத்தும் அகர வீறு கொண்டவை. முதல, எளிய, வலிய, நல்ல என்பவற்றை ஒப்பு நோக்குக. ‘ஆதி;தமிழிலக்கணக் கட்டுக்கோப்புக்குள் தோன்றி வளர்ந்த சொல்லாயின், ஆதிய என்றாற்போல் அகரவீற்றுப் பெயரச்சமாயிருத்தல் வேண்டும். இகரவீற்றுப் பெயரெச்சம் தமிழில் யாண்டும் ஆளப்படவில்லை. இகரவீற்றுப் பெயர்கள் பெயரச்சம் போல் முன்னுறுப்பாகிக் கூட்டுச் சொல்லாகுமிடத்து கோடி + கரை = கோடிக்கரை. மீதி + பணம் = மீதிப்பணம் என்றாற்போல் வல்லெழுத்து மிகுதல் வேண்டும். ஆதிபகவன் என்னும் கூட்டுச் சொல்லில் வல்லெழுத்து மிகுதல் வேண்டும். ஆதிபகவன் என்னும் கூட்டுச் சொல்லில் வல்லெழுத்து மிகாமை அறிக. இஃதொன்றே அதனை வடபுலச்சொல்லெனக் காட்டவல்லது.

வடமொழியில், adi – beginning, commencement, first எனப் பொருள்படுகிறது. இந்திராதி தேவர் என்றவிடத்து இந்திரன் முதலாகிய தேவர் எனப் பொருள்படும். தமிழிலும் ஆகிய என்னும் சொல் முதலிய என்னும் பொருளில் ஆளப்படுகிறது. வளர்தல், மேம்படல், ஆகுதல் எனப் பொருள்படும் அகு → ஆகு வினை வடிவே ஆதி என்னும் வடசொல்லின் மூலம் என்பதும் பெயர் வடிவம் வடபுல மொழி வழித்தென்பதும் இதனாலும் போதரும்.

   வடமொழி தவிர்ந்த மேலையாரிய மொழிகளில் ஆதி என்னும் சொல்லாட்சி காணப்படவில்லை. வடதமிழ்ச் சொல் மூலமே வடமொழியில் ஆதி என வடிவு கொண்டுள்ளது. இது முன்னால் அல்லது முதலிலிருப்பதைக் குறித்த அஃறிணை யொருமைச் சொல்லாக வழக் கூன்றியதால், காரி = கருத்த காளையைக் குறித்ததுபோல், ஆதி = மேலிருக்கும் பொருள்;முன்னால் அல்லது முதலிலிருக்கும் பொருளை அல்லது உயிரியைச் சுட்டியதாதல் வேண்டும்.

காரி, குறிப்பிட்ட கரிய காளையை அல்லது கரிய வேறு பொருளைச் சுட்டும்போது மட்டும் அவ்வடிவு கொள்ளும், காரிப்புள், காரிக்கிழார் என்பவற்றை ஒப்புநோக்குக. கன்னங் கரேலென்றிருக்கும் தன்மையை முழுமையாக விளக்க, காரி பெயர்வடிவுபெற்றது. இனி, பல்வகை நிறவேறு பாடுகளிலிருந்து கரிய நிறத்துப் பொருளைப் பிரித்துக் கூறவேண்டிய விடத்துக் கருஞ்சீரகம், கருமணி, கரியவிழி எனப் பண்பீறும், குறிப்புப் பெயரெச்சவீறும் கொள்ளும். அங்ஙனம் பொதுப்பொருளில் ஆதி என்னும் சொல் கரிய என்றாற்போல், தமிழில் ஆதிய எனக் குறிப்புப் பெயரெச்சமாகாததால் அது வடபுலச் சொல்லே எனத் தெளிக.

ஆதி என்னுஞ்சொல் முதல், முதலிய, முதலில் என்னும் பொருளில் கல்லாத மக்களின் பேச்சு வழக்கில் இன்றுகாறும் இடம்பெறவில்லை. மண்ணுக்குரிய சொல்லாயின் மக்களிடை அன்றோ வழங்கியிருக்க வேண்டும்.

சொல், வடிவத்தால் முற்றும் தமிழாயும் பொருளாட்சியில் தமிழகத்தில் தோன்றிய பொருளல்லாமல், ஏனைய திரவிட

நாடுகளிலோ அல்லது வேற்று மொழிச்சூழல்களிலோ வளர்ந்து பொருள் கொண்ட சொல்லைத் தமிழ்ச் சொல்லாக ஏற்றுக் கொள்வதில்லை. சொல்லும் பொருளும் ஒத்திருந்து தமிழில் வழங்குமாறு பிற திரவிட மொழிகளில் வளர்ந்திருந்தால் அவற்றையும் தமிழ்ச் சொல் என்று எற்றுக்கொள்கிறோம். இல், மனை, வீடு ஆகியவை தமிழிலும் திரவிட மொழிகளிலும் ஒத்து வழங்குகின்றன. இல் என்பதைத் தெலுங்குச்சொல் என்றும், மனை என்பதைக் கன்னடச்சொல் என்றும் நாம் சொல்வதில்லை. ஆயின், உறை என்பது தங்கியிருக்கின்ற வீட்டைக் குறித்த சொல்லாயினும் தமிழில் வீடு என்னும் பொருளில் பேச்சு வழக்கிலும் எழுத்து வழக்கிலும் பரவலாக இடம் பெறவில்லை. உறை என்பது இல், மனை போன்ற சொற்களைப் போன்றே மனைவியையும் குறிக்கலாம். பிராகுவி மொழியில் உறை என்பது வீட்டையும், பாசுகு மொழியில் உறை என்பது மனைவியையும் குறிக்கும் சொல்லென ஒப்பமுடிந்தாலும், தமிழ் உலக வழக்கிலும் இலக்கிய வழக்கிலும் உறை என்னும் சொல் மனைவி என்னும் பொருளில் பாசுகு மொழிக்குச் சென்ற தமிழ்ச்சொல் என்று சொல்வதல்லது செந்தமிழ் நாட்டுச் சொல்லென்று எவரும் கூறார்.

ஆதி என்பது வேரளவில் தமிழுக்குத் தன் சொல்லாயினும், தென்சொல்லன்று என்பதைப் பாவாணர் உறுதிப்படுத்தினார்.

 ஆதி2āti, பெ. (n.)

   ஆதிதாளம் (இசை);; particular variety of time measure (Mus);.

     [ஆ → ஆது → ஆதி (முன்னையது, முந்தியது); முதலாவதாக எண்ணிடப்பட்ட தாளவகை.]

 ஆதி3āti, பெ. (n.)

   குதிரையின் நேரோட்டம்; running of a horse in a straight course.

     “அடிபடு மண்டிலத் தாதி போகிய” (மதுரைக். 390);.

     [ஆ → ஆது → ஆதி, ஆதுதல் = முன்வரல். முற்படல், விரைதல், ஆது என்றே முதனிலைத் தொழிற் பெயராக நிற்றற்பாலது. ஈற்றுகரம் இகரமாகத் திரிந்தது. ஒ.நோ. ஆதாபாதையாக ஒடுகிறான் (கொங்.வ.);.]

 ஆதி4āti, பெ. (n.)

மனவருத்தம், கவலை. mental. pain, agony. ஆதிவியாதி (ஞானவா. தேவ.பூ. 49);.

     [அதை → ஆதை → ஆதி. அதைத்தல் = பதைத்தல், வருந்துதல், வேதல். ஒ.நோ. ஆதை → ஆதங்கம். (வருத்தம்);.]

 ஆதி5āti, பெ.எ. (adj.)

   1 முதலிய (முதலியன);; and