செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை வெளியீடு
31 தொகுதி 12000 பக்கங்கள் கொண்ட பேரகரமுதலி


1

10838

2769

3111

538

3554

677

1093

620

189

1004

402

2
க்
1

8212
கா
2579
கி
564
கீ
222
கு
4598
கூ
780
கெ
615
கே
391
கை
1101
கொ
2417
கோ
1754
கௌ
110
ங்
1

2
ஙா
2
ஙி
1
ஙீ
1
ஙு
1
ஙூ
1
ஙெ
1
ஙே
1
ஙை
1
ஙொ
5
ஙோ
1
ஙௌ
1
ச்
1

5235
சா
1186
சி
2424
சீ
439
சு
1261
சூ
420
செ
1529
சே
470
சை
23
சொ
409
சோ
365
சௌ
1
ஞ்
1

15
ஞா
44
ஞி
3
ஞீ ஞு ஞூ ஞெ
34
ஞே
5
ஞை
2
ஞொ
3
ஞோ
2
ஞௌ
1
ட்
1

1
டா
1
டி
1
டீ
1
டு
1
டூ
1
டெ
2
டே
1
டை
1
டொ
1
டோ
1
டௌ
ண்
1

1
ணா
1
ணி
1
ணீ ணு
1
ணூ
1
ணெ
2
ணே
1
ணை
1
ணொ
1
ணோ
1
ணௌ
த்
3113
தா
1530
தி
2203
தீ
393
து
1238
தூ
411
தெ
694
தே
856
தை
39
தொ
878
தோ
459
தௌ
ந்
1

2789
நா
204
நி
1860
நீ
1161
நு
14
நூ
18
நெ
892
நே
318
நை
89
நொ
210
நோ
159
நௌ
2
ப்
1

4560
பா
1824
பி
492
பீ
25
பு
2224
பூ
1133
பெ
1064
பே
483
பை
127
பொ
1218
போ
478
பௌ
2
ம்
4760
மா
1422
மி
535
மீ
268
மு
3016
மூ
949
மெ
396
மே
751
மை
152
மொ
284
மோ
242
மௌ
ய்
1

119
யா
426
யி
1
யீ
1
யு
46
யூ
20
யெ
9
யே
1
யை
1
யொ
1
யோ
98
யௌ
1
ர்
87
ரா
107
ரி
11
ரீ
7
ரு
24
ரூ
20
ரெ
6
ரே
16
ரை
10
ரொ
8
ரோ
23
ரௌ
ல்
117
லா
44
லி
8
லீ
5
லு
8
லூ
3
லெ
13
லே
21
லை லொ
20
லோ
63
லௌ
3
வ்
1

3800
வா
1329
வி
1638
வீ
515
வு
1
வூ
1
வெ
2164
வே
834
வை
229
வொ
1
வோ
3
வௌ
ழ்
1

1
ழா
1
ழி
1
ழீ
1
ழு
6
ழூ
1
ழெ
1
ழே ழை ழொ ழோ
1
ழௌ
ள்
1

2
ளா
1
ளி
1
ளீ
1
ளு
1
ளூ
1
ளெ
2
ளே
1
ளை
1
ளொ
1
ளோ
1
ளௌ
ற்
1

1
றா
1
றி
1
றீ
1
று
1
றூ
1
றெ
2
றே
1
றை
1
றொ
1
றோ
1
றௌ
ன்
1

1
னா
1
னி
1
னீ
1
னு
1
னூ
1
னெ
2
னே
1
னை னொ
1
னோ
1
னௌ
தலைசொல் பொருள்

அ1 a, பெ. (n.)

   அங்காத்தலாலேயே (வாயைச் சற்று விரிவாகத் திறத்தலாலேயே); ஒலிக்கப்படுவதாயும், வண்ணமாலையில் (குறுங்கணக்கிலும் நெடுங்கணக்கிலும்); முதலெழுத்தாயும் உள்ள உயிர்க்குறில்; the first letter and a short vowel of the Tamil Alphabet.

இற்றை மொழியியலார் இதைப் பிறப்பிடம் நோக்கி, நடுவக் குவியாத் தாழ்குறில் (central unrounded low short vowel); எனக் குறிப்பார்.

     “அஆ ஆயிரண் டங்காந் தியலும்” (தொல். எழுத்து. பிறப். 3);.

     ‘அகர முதல எழுத்தெல்லாம்’ (குறள், 1);.

   வண்ணமாலை என்பது அரிவரி. உயிரெழுத்தும் மெய்யெழுத்துமே கொண்டது குறுங்கணக்கு;அவற்றோடு உயிர்மெய்யெழுத்துங் கொண்டது நெடுங்கணக்கு;
 அ2 a, இடை. (part)

   சேய்மைச்சுட்டு; remote demonstrative.

 i. அகச்சுட்டு;

 demonstrative base forming an integral part of a word denoting or pointing out a remote person, place or thing.

   எ-டு: அவன், அங்கு, அது, அந்த; ii. புறச்சுட்டு;

 demonstrative prefix.

 demonstrative prefix to a noun, expressing remoteness of a person, place or thing actually pointed out by the hand.

   எ-டு: அப் பையன், அப் பக்கம், அம்மரம்; demonstrative prefix to a noun, referring to its antecedent.

   எ-டு: தலைக்கழகக் காலமே தமிழுக்குப் பொற்காலம். அக்காலத்து நிகழ்ந்ததே முதற்கடல்கோள்; demonstrative prefix expressing world-wide eminence.

   எ-டு:”அத் தம்பெருமான்’ (சீவக. 221);. (அ + தம் + பெருமான்.);;
 அ3 a, இடை. (part.)

   பல்வகை யீறுகள்; multifarious terminations and suffixes.

 i. பெயரீறுகள்r;

 noun endings.

 a neut. pl. noun suff.

எ-டு: சில, பல.

 gen. suff. followed by a neut. pl. noun.

எ-டு: என கைகள்

 ii. வினையீறுகள்;

 verb endings.

 a neut. pl. finite verb ending.

   எ-டு: வந்து வந்தன-(இ.கா.); வருகின்ற, வருகின்றன-(நி.கா.); வருவ, வருவன-(எ.கா.); நல்ல, நல்லன-குறிப்பு. தெரிநிலை; an optative verb ending.

   எ-டு: வரப்புயர வரப்புயர்க), அல்லிற்றுத் தொழிற்பெயரின் ஈறு கேடு;செய்யல் → செய்ய, உயரல் → உயர.

 a rel. part. ending.

   எ-டு: வந்த-(இ.கா.); வருகின்ற-(நி.கா.); தெரிநிலை. உள்ள, நல்ல-குறிப்பு; a neg. rel. part. ending.

   எ-டு: வாராத-தெரிநிலை. இல்லாத-குறிப்பு; an inf. ending.

எ-டு: செய்ய, வர, படிக்க.

 ending of rhythmic formulas of metrical feet ending in short vowel.

   எ-டு: தன, தனன, தத்த, தந்த, தய்ய, தன்ன, தனத்த, தனந்த, தான, தாத்த, தாந்த; a formative particle.

   எ-டு: நில்-நில, பிள்-பிள;
 அ4 a, இடை.. (part.)

   சாரியை; enunciative and connective particle.

 i. மெய்யெழுத்துச் சாரியை,

 enunciative particle employed in Tamil grammar to designate consonants.

   எ-டு: க்-க, ச்-ச.”வல்லெழுத் தென்ப கசட தபற” (தொல். எழுத்து. நூன். 19);; ii. புணர்ச்சிச் சாரியை;

 connective particle.

   பெயர்ச்சொற்களை இன்னோசைபட இணைக்கும் புணர்ச்சிச் சாரியை; an euphonic augment used in combination of words.

   எ-டு: செக்கார் + அ + குடி-செக்காரக்குடி தட்டார் + அ + பாட்டம்-தட்டாரப்பாட்டம் வண்ணார் + அ + பேட்டை-வண்ணாரப்பேட்டை;   தானாக வொலியாத மெய்யெழுத்தைச் சார்ந்து தன்னோடியைத்தொலிப்பது மெய்யெழுத்துச் சாரியை. செக்கார்குடி எனச் சாரியையின்றிப் புணர்வதே இயல்பாயினும், இன்னோசையும் ஒலிப்பெளிமையும்பற்றிச் செக்காரக்குடி யெனப் புணர்ந்ததென்று கொள்க. தமிழப்பிள்ளை என்னுந் தொடரையும் சிலர் சாரியைப் புணர்ச்சியாகக் கொள்வர்;   தமிழன் என்னுஞ் சொல்லே ஈறு கெட்டுத் தமிழ என நின்று, வலிமிக்குப் பிள்ளை யென்னுஞ் சொல்லொடு தமிழப்பிள்ளையெனப் புணர்ந்தது. இதில், நிலைச்சொல் மொழிபற்றிய இனங்குறித்ததேயன்றி மொழிமட்டுங் குறித்ததன்று. சோழியன் + வெள்ளாளன்-சோழிய வெள்ளாளன், கொங்கன் + வண்ணான்-கொங்கவண்ணான், வடுகன் + செட்டி-வடுகச்செட்டி, ஆரியன் + கூத்து-ஆரியக்கூத்து என்னும் புணர்ச்சொற்களை நோக்குக. இவற்றின் நிலைச்சொற்களைச் சோழியம், கொங்கம், வடுகம், ஆரியம் எனக் கொள்ளினும், அவை நாடோ மொழியோபற்றிய இனப் பெயரினின்று திரிந்தவையே. சோழி, ஆரி என நிலைச்சொற்கள் பிரியாமையையும் நோக்குக;
 அ5 a, இடை. (part.)

   ஓர் அசைச்சொல்; an expletive.

   பொருளின்றிச் செய்யுளில் இடம் அல்லது இசை நிரப்ப வரும் ஓர் அசைச்சொல்; an expletive in poetry.

     “தன்வழிய காளை” (சீவக. 494);.

 அ6 a, இடை. (part.)

   ஓர் உணர்ச்சியொலி; an expression of feeling or sentiment.

   ஊசி அல்லது முள் குத்தும்போதாவது, தீச் சுடும் போதாவது, தானாக எழும் திடுநோவுக் குறிப்பொலி; sudden involuntary expression of smarting pain caused by a sudden and unexpected prick of a needle or thorn or by contact with fire or embers.

 அ7 a, இடை. (part)

   பல்வகை முன்னொட்டுகள்; multifarious prefixes.

 i. அன்மைப்பொருள் முன்னொட்டு;

 prefix implying privation.

எ-டு: அகாலம் (காலம் அல்லாதது);.

 ii இன்மைப்பொருள் முன்னொட்டு;

 prefix implying negation.

   எ-டு: அவலம் = வலம் இல்லாமை, துன்ப நிலை, துயரம். துன்பமாவன ; வறுமை, கவலை, இழப்பு, நோய், இழவு முதலியன; iii. மறுதலைப்பொருள் முன்னொட்டு;

 prefix implying contrariety.

   எ-டு: அசுரன் (சுரனுக்கு மாறானவன்);. அன்மைப்பொருளுணர்த்தும் அல் என்னுஞ் சொல்லே கடைக் குறைந்து’அ’ என நிற்கும்;ஒ.நோ. நல் → ந. எ-டு: நக்கீரன், நச்செள்ளை, நத்தத்தன், நப்பின்னை, நப்பூதன், நப்பசலை. குல் → குள் → கு.

   எ-டு: குக்கிராமம் (இருபிறப்பி);, குக்கூடல். அன்மைப்பொருளினின்று இன்மைப் பொருளும் மறுதலைப்பொருளும் தோன்றும். அல் என்னுஞ் சொல் அன் என்றுந் திரியும். ஒ.நோ ; ஒல்-ஒன், கல்-கன், சில்-சின், துல்-துன், நல்-நன், பொல்-பொன், மல்-மன், வெல்-வென். அன் (அந்); என்பது முன்பின்னாக மாறி, வடமொழியில் ந என்றும், மேலையாரியத்தில் na, me, no என்றும் இயங்கும். இத் திரிபை அறிதற்கேற்ற மொழிநூற் பயிற்சி முற்காலத்தின்மையால், இச் சொல்லைத் தலைகீழாகக் கொண்டு,”நேர்ந்த மொழிப்பொருளை நீக்க வருநகரம் சார்ந்த துடலாயின் தன்னுடல்போம்– சார்ந்ததுதான் ஆவியேல் தன்னாவி முன்னாகும்” (நேமி. எழுத்து. 11); என்று நூற்பா யாத்தார் குணவீர பண்டிதர். அ அல்லது அல் என்னும் முன்னொட்டின் வரலாற்றையும் பொருள் வளர்ச்சியையும், அல்”, அல்” என்னுஞ் சொற்களின்கீழ்க் காண்க. காலம், வலம், சுரன் என்னும் சொற்கள் தூய தென்சொற்களே என்பது. அவ்வச் சொல்லின்கீழ் ஐயந் திரிபற விளக்கப்படும்; iv. அயற்சொல் முன்னொட்டு;

 prefix to foreign words.

   ரகரத்தில் தொடங்கும் அயற்சொற்களின் முன் வைத்தெழுதப்படும் இயக்க உயிரெழுத்து; enunciative prothesis of foreign words beginning with”r”.

எ-டு: ரத்ந → அரதனம். ரம்பா → அரம்பை.

 அ8 a, பெ. (n.)

   பல்வேறு பொருட்பெயர்; name of multifarious things.

 i. தெய்வப் பெயர்;

 name of deities.

   1. சிவன்;{šiva};     “ஆரும் அறியார் அகாரம் அவனென்று” (திருமந். 1751);;

   2. திருமால்;{Visடிய};     “அவ்வென் சொற்பொரு ளாவான்” (பாகவ. சிசுபா. 20);;

   3. நான்முகன்; Brahma.

     ”அ’ என்றது பிரமாவின் பெயருமாம்” (தக்கயாகப். 65, உரை);;

   அகரம் எல்லா எழுத்துகட்கும் முதலாயும், எல்லா எழுத்துகளொடும் கலந்தும், மெய்யெழுத்துகளையெல்லாம் இயக்குவதாயும் இருத்தல் போன்று, இறைவனும் வெளியொழிந்த எல்லாவற்றுக்கும் முதலாயும், எல்லாவற்றொடுங்கலந்தும், எல்லாவற்றையும் இயக்குபவனாயும் இருத்தலால்,’அ’ என்பது உவமையாகுபெயராக இறைவனைக் குறித்தது. சிவனியர் (சைவர்); சிவன் என்னும் பெயராலும், மாலியர் (வைணவர்); திருமால் என்னும் பெயராலும் இறைவனை (கடவுளை); வணங்குவதால்,’அ’ என்னும் முதலுயிரெழுத்து, சிவனையும் திருமாலையுங் குறிக்கும் உவமையாகுபெயராக ஆளப்பட்டது. ஆரியப் புணர்ப்பான முத்திரு மேனிக் (திரிமூர்த்தி); கொள்கையால், படைப்புத் தலைவனாகக் கூறப்பட்ட நான் முகனுக்கும் அது பெயராகக் கொள்ளப்பட்டது; ii. சில்வகை மருந்துச் சரக்குப் பெயர்;

 name of certain spices.

   1. சுக்கு; dried ginger (பரி.அக..);.

   2. திப்பிலி; long pepper, Piper longum.

 அ9 a, பெ. (n.)

   சிலவற்றின் குறி; symbol of certain things.

 i. (கணி.); பார்க்க; கவனிக்கப்படும் ஐம்புட்களுள் (பஞ்ச பட்சிகளுள்); ஒன்றான வல்லுாற்றைக் குறிக்கும் எழுத்து;

 ii. (கணக்கு); எட்டு என்னும் எண்ணின் குறியாக மேற்சுழியின்றி எழுதப்படும் அகர வரிவடிவு;

   வல்லுாற்றின் குறியும், எட்டென்னும் எண் குறியும், வல்லுாற்றின் பெயரொன்றின் முதலெழுத்தாகவும், எண்வகைப்பட்ட பொருளின் அல்லது பொருட்டொகுதியின் பெயர் முதலெழுத்தாகவும் இருக்கலாம்.”அவ்வாய் வளர்பிறை சூடி” என்னும் பெரும்பாணாற்றுப்படை யடியில் (412); உள்ள, அழகிய இடம் என்று பொருள்படும்;     ‘அவ்வாய்’ என்னும் கூட்டுச் சொல்லை, நச்சினார்க்கினியர் அ + வாய் என்று தவறாகப் பிரித்திருப்பதால், அகரம் அழகையுணர்த்தும் ஒரெழுத்துச் சொல்லென்று பலர் மயங்க இடமாயிற்று;

     ‘அம்’ என்னுஞ் சொல்லே’வாய்’ என்னுஞ் சொல்லொடு புணர்ந்து, அவ்வாய்’ என ஈறு திரிந்ததாகல் வேண்டும்;

   தெவ் + முனை-தெம்முனை என்னும் புணர்ச்சியில் வகரம் மகரமாகத் திரிந்தது போன்று, அம் + வாய் → வ்வாய் என்னும் புணர்ச்சியில் மகரம் வகரமாகத் திரிந்ததென்று கொள்வதே தக்கதாம். ஆதலால், அகரத்திற்கு அம்மைப்பொருள் இங்குக் கூறப்படவில்லை. அம்மை=அழகு. அங்காந்த அளவிற் பிறப்பதாகிய அகரம், அங்காப்போடு அண்ணம், அண்பல் (மேல் வாய்ப் பல்); முதலிய உறுப்புகளின் தொழிலாற் பிறக்கும் பிற எழுத்துகளோடும் நுண் வகையிற் கலந்திருப்பதை இறைவன் உயிர் தொறும் (அல்லது பொருள்தொறும்); நுண் வகையில் விரவிநிற்பதற்கு உவமமாகக் கொண்டு,”அக்கரங்கள் தோறும் சென்றிடும் அகரம் போல நின்றனன் சிவனுஞ் சேர்ந்தே” (சி. சி. சுப. 2; 2); என்று அருணந்தி சிவாசாரியார் கூறியிருப்பினும், அங்காத்தலின்றியும் மகரமெய் ஒலிக்கப்படுதலால், பிறவெழுத்துகளுடன் கலக்கும் அகரக் கலப்புப் பெரும்பான்மைபற்றியதேயன்றி முழுப்பான்மைபற்றியதன்று;     ‘பொருள’ என்று சாரியை பெறாதும், பொருளன’ என்று சாரியை பெற்றும், இருவகையாய்வரினும், குறிப்பு வினைமுற்று என்னும் வகையில் இரண்டும் ஒன்றே. இவை பெயராயின், குறிப்பு வினையாலணையும் பெயராம். ‘உன்னின’ என்பது ‘உன்னிய’ என்பதன் திரிபாதலால், அதில்’இன்’ என்னும் சாரியை இல்லை.”என கருத்திடை” (கந்தபு. உற்பத். மேருப். 56); என்னுந் தொடரிலுள்ள வருஞ்சொல் பால்பகா வஃறிணைப் பெயராகவுமிருத்தல் கூடுமாதலால், நிலைச்சொல் வேற்றுமையுருபை, ஆறாம் வேற்றுமைப் பன்மையுருபு ஒருமையில் வந்ததாகக் கொள்ளத் தேவையில்லை;

     ‘நடந்தது’ என்னும் அஃறிணை ஒன்றன் பால் வினைமுற்றின் ஈறு,’அது’ என்பதே. அதன் அகரமுதல் சாரியை அன்று.’நடந்தான்’ (நடந்து + ஆன்); என்பதிற்போல,’நடந்தது’ (நடந்து + அது); என்பதிலும் ஈறு முதற்குறையின்றி வந்தது. ‘நன்று’ (நல்-து);,”பாற்று’ (பால்-து); என்னும் குறிப்பு வினைமுற்றுகளில்’அது’ என்னும் ஈறு முதற்குறைந்து’து’ என நின்றது.’நல்லது’,’பாலது’ என்பன முதற் குறையா ஈறு கொண்டன.

அகரத்திற்குப் பின் வருஞ்சொல் முதன் மெய் மிகும் கூட்டுச்சொற்களிலெல்லாம், அகரம் சுட்டெழுத்தேயன்றி, அன்மையின்மை மறுதலையுணர்த்தும் முன்னொட்டாகாது; அகரம் முன்னொட்டாயின், வருஞ்சொல் முதன்மெய் மிகாது.

   எ-டு: அக்காலம் அவ்வலம் அச்சுரன் அப்பிராமணன் சேய்மைச் சுட்டு அகாலம் — அன்மை அவலம் — இன்மை முன்னொட்டு அசுரன் மறுதலை அபிராமணன்;   அகாலம் என்பது உலகவழக்கு. தொல்காப்பியத்திற்கு முந்தின இலக்கண இலக்கியப் புலவியம் அனைத்தும் அழிக்கப்பட்டு விட்டமையால், இதற்கு இன்று இலக்கியச் சான்று காட்ட இயலவில்லை.’அ’ என்னும் முன்னொட்டும் காலம்’ என்னும் பெயர்ச்சொல்லும் தூய தென்சொற்களே;   அமாம்சம் என்பது தமிழ் வழக்கன்று;   அப்பிராமணன், அபிராமணன் என்பன ஆரியப் பூசாரியர் தென்னாடு வந்தபின் தோன்றியவை;

அஃகடி

 அஃகடி aḵkaḍi, பெ. (n.)

   துன்பம் (இராட்.);; difficulty, trouble (R.);.

     [அஃகுதல் = சுருங்குதல், வறுமையடைதல். அடி = அடிப்பு, தாக்கு. அஃகு + அடி – அஃகடி..]

அஃகம்

அஃகம் aḵkam, பெ. (n.)

   முறைமை; course of action.

     “ஒரு ரிரண்டஃக மாயிற்று” (சீவக. 2087);.

 அஃகம் aḵkam, பெ. (n.)

   நீருற்று (பிங்.);; spring.

     “அஃகம் உறவியும் அசும்பும் ஊறல்” (பிங். 4 ; 110);.

     [அஃகு→ அஃகம் = சிறுத்து ஊறும் அல்லது ஒழுகும் நீர்நிலை.]

அஃகம்,

அஃகம், aḵkam, பெ. (n.)

   தவசம்; grain, cereal.

     “அஃசுமுங் காசுஞ் சிக்கெனத் தேடு” (கொ.வே. 13);.

க.. து. அக்கிதெ. அக்குள்ளு.

     [அஃகுதல் = சுருங்குதல், சிறுத்தல், நுணுகுதல், கூராதல். சோற்றுவகைக் குதவும் தவசங்களும் கறிவகைக் குதவும் பயறுகளும் ஆகக் கூலங்கள் பெரும்பாலும் இருவகைப்பட்டுள்ளன. அவரை, மொச்சை முதலிய பயறுகள் போன்று, பருத்த தவசம் ஒன்றுமேயில்லை. நெல்லுஞ் சோளமுமாகிய பெருந்தவசங்கள் காராமணி, தட்டை, துவரை முதலிய இடைத்தரப் பயறுகளினும் சிறுத்தும், கம்பு, வரகு, கேழ்வரகு, காடைக் கண்ணி, குதிரைவாலி, தினை, சாமை ஆகிய சிறு தவசங்கள் உழுந்து, கொள் (காணம்);, பச்சை (பாசி);, கல், காம்பை முதலிய சிறு பயறுகளினும் சிறுத்தும் இருத்தலை நோக்கின், தவசம் ஒப்புநோக்கிய சிறுமைபற்றி அ.;கம் எனப்பட்டதாகக் கருத இடமுண்டு;

நெல், புல் (கம்பு);, காடைக்கண்ணி, குதிரை வாலி, வரகு, தினை, சாமை ஆகிய பெரும்பால் தவசங்கள், இருபுறமுங் கூராயிருப்பதால் அ.;கம் எனப்பட்டன என்று கொள்ளுதலும் பொருந்தும். அஃகம் = கூர்மை.]

தானியம் என்னும் வடசொல் தமிழ் நாட்டில் வழக்கூன்றிய பின், அஃகம் என்னும் தென்சொல் வழக்கு வீழ்ந்து இலக்கியச் சொல்லாயிற்று. ஆயினும், அஃகவிலை யேறிவிட்டது’ என்பது இன்றும் அகவிலை யேறிவிட்டது’ என்று உலக வழக்கில் வழங்கி வருவது கவனிக்கத்தக்கது.

   தவசத்தைக் குறிக்கும் அஃகம் என்னும் தென்சொல்லிற்கும், பெறுமதியை அல்லது விலைமதிப்பைக் குறிக்கும் அர்க (argha); என்னும் வடசொல்லிற்கும் எள்ளளவுந் தொடர்பில்லை;

அஃகரம்

 அஃகரம் aḵkaram, பெ. (n.)

   வெள்ளெருக்கு; white madar.

     [எல்= ஒளி, வெள்ளை. கரம் = நஞ்சு. எல் கரம் → அல்கரம் → அஃகரம் = வெண்ணிறமாயும் நஞ்சாயும் உள்ள செடி.]

இதை அலர்க்க (alarka); என்னும் வட சொல்லோ டிணைப்பது பொருந்தாது.

அஃகல்

அஃகல் aḵkal, பெ. (n.)

   சிறிதாகல் (திவா.);; becoming small, being reduced.

   2. வறுமை (திவா.);; poverty. Destitution.

அஃகுதல் பார்க்க; { }

அஃகாக்காலை,

அஃகாக்காலை, aḵkākkālai, பெ.அ. (adj.)

   அளவு குறையாதாயின்; if not diminished.

     “ஆய்தம் அஃகாக்காலையான” (தொல். 2:7);.

     [அஃகு→அஃகா+காலை]

அஃகான்

அஃகான் aḵkāṉ, பெ. (n.)

   அ என்னும் எழுத்து; the letter

     ‘அ’.”அஃகா னடைவு மாகும்” (நன். 212);.

     [‘அ’வண்ணமாலை முதலெழுத்தான உயிர்க் குறில். ‘கான்’ எழுத்துச் சாரியை. ஃ (ஆய்தம்); இணைப்பெழுத்து.]

     ‘கான்’ என்பது ஐகார ஒளகார உயிர் நெடில்கட்கே சிறப்பான எழுத்துச் சாரியை. நன்னூலார் அதை மெய்கட்கும் இருவகைக் குறில்கட்கும் ஆண்டுவிட்டார்.

அஃகாமை,

அஃகாமை, aḵkāmai, பெ.(n.)

   குறையாமை; undiminished.

     “அஃகாமை செல்வத்திற்கு யாதெனின்” (குறள்.178);.

     [அஃகு+ஆ+மை]

அஃகி

அஃகி1 aḵki, வி.எச்.,

   அருகி; seldom

     “குறித்து எதிர்மொழிதல் அஃகித் தோன்றும்” (தொல். 22:42);.

     [அல்கு→.அஃகு→அஃகி]

 அஃகி2 aḵki, பெ.(n.)

ஊற்றுநீர்,

 spring water.

     “மேலிடாஅஃகி ஊறும் பைம்புனல்” (நி.க.கு.5:27);.

     [அல்கு-அஃகு+அஃகி]

     [அஃகம் – நீரூற்று. அஃகு→அஃகம்→அஃகி.அல்கு-அஃகு-அஃகி. ஊற்றுநீர்: பார்க்க]

அஃகியநுட்பம்,

அஃகியநுட்பம், aḵkiyanuṭpam,    பெ.(n.) குறை அறிவு; shallow knowledge,

     “உயர்ந்த கட்டிலு ரும்பில் சுற்றத்து அகன்ற தாயத்து அஃகிய நுட்பத்து (மலை,550-1);.

     [அஃகி+நுட்பம்]

அஃகியோன்,

அஃகியோன், aḵkiyōṉ, பெ.(n.)

   குறைவுற்றோன்; not well

     “சொல்லவும் ஆகாது அஃகியோனே” (குறு.346:8);.

     [அஃகு→அஃகியோன்]

அஃகு

 அஃகு aḵku, பெ. (n.)

   ஊறுநீர் (திவா.);; oozing Water.

     [அஃகம்= ஊறல், நீருற்று (பிங்.);. அஃகு → அஃகம். அஃகுதல் = நீரூறுதல். ‘அஃகு’ ஊறு நீரைக் குறிப்பின் முதனிலைத் தொழிலாகு பெயராம். ஊற்றுச் சுருங்கியும் ஒடுங்கியும் ஒழுகுவதால் அஃகு எனப்பட்டது.]

 அஃகு aḵku, பெ. (n.)

   தகுதி (சம்.அக.);; ftness.

இது அக்கு என்னும் உருதுச் சொல்லாகவும் இருக்கலாம்.

 U. hagg = உரிமை; claim, right.

அஃகு-தல்

அஃகு-தல் aḵkudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. உயிரெழுத்து அளவிற் குறுகுதல்; to be shortened. as a vowel.

     “தொடர் மொழி யிறுதி வன்மையூர் உகரம் அஃகும்” (நன். 94);.

   2. சுருங்குதல்; to shrink, to be reduced.

     “கற்பக் கழிமட மஃகும்” (நான்மணிக். 30);.

   3. குவிதல்; to become closed, compressed, as a flower.

     “ஆம்பல்…. மீட்டஃகுதலும்” (காஞ்சிப்பு. திருக்கண். 104);.

   4. கூம்புதல்; to become coniform, to taper to a point at one end.

   5. கூராதல்; to become sharp, acute.

     “அஃகி யகன்ற அறிவென்னாம்” (குறள், 175);,

   6. மனங்குன்றுதல்; to be dejected.

   7. கழிந்துபோதல்; to pass away,

     “அல்லாயிர மாயிர மஃகினவால்” (கம்பரா. யுத்த. அதிகா. 68);.

க. அக்குடிசு ; து. அக்கரு. அஃகு

 cf. acus, needle, pin. L., fr. I.-E. base ak-, ‘sharp pointed’, whence also acer,’sharp’, see acrid and cp. the first element in aciform. E. acute, L. {acitus},’sharp’, lit.’sharpened’, p.p. of acuere,”to sharpen”, which is rel. to acus,”needle” (K.C.E.D.E.L.);.

     [உல்→ உல்லாடி = மெல்லிய ஆள் (யாழ். அக.);. உல்லி = ஒல்லி (யாழ். அக.);. உல் → ஒல் → ஒல்கு. ஒல்குதல் = சுருங்குதல். ஒல்கு → அல்கு. அல்குதல் = சுருங்குதல். அல்கு → அலகு = கூர்மை. அல்கு → அஃகு.]

லகர ளகர மெய்கள் சிலவிடத்து ஆய்தமாக மாறுகின்றன. ஒ.நோ; ஒல்கு (பின்வாங்கு); → ஒஃகு, இள் → இள → இளகு. இள் → எள் → எள்கு → எஃகு. வெள்(விரும்பு); → வெள்கு → வெஃகு. வெஃகுதல் = பிறர்பொருளை விரும்புதல்.

அஃகு-தல்,

 அஃகு-தல், aḵku-, செ.குன்றாவி. (v.t.)

   மெல்லுதல், உண்ணுதல்; to chew eat. க.அகி.

     [அல்கு-அஃகு]

அஃகுல்லி

 அஃகுல்லி aḵkulli, பெ. (n.)

   உக்காரி யென்னும் சிற்றுண்டி (பிங்.);; a steamed meal-cake.

ஒ.நோ ; Skt. {Faskuli}.

அஃகுள்

 அஃகுள் aḵkuḷ, பெ. (n.)

அக்குள் பார்க்க;see akkul.

அஃகுவஃகெனல்

அஃகுவஃகெனல் aḵkuvaḵkeṉal, தொ.பெ. (vbl.n.)

   ஆடு மேய்க்கும் இடையன், ‘அஃ(கு);’ என்னும் ஒலியைத் திரும்பத் திரும்ப ஒலித்தல்; uttering the sound {ak(ku);} now and then as a shepherd, while grazing a flock of sheep or goats, to control their movements.

     “அஃகுவஃகென்று திரியும் இடைமகனே” (பெருந்தொ. 1423);.

ஆடுமேய்க்கும் இடையன், வழிவிலகி அல்லது எல்லை கடந்து செல்லும் ஆடுகளை, அஃகுவஃகென்று அதட்டித் திருப்புவது வழக்கம்.

     [‘அஃ’என்பது, மந்தையைவிட்டுத் தனித்துச் செல்லும் ஆட்டை இடையன் அதட்டும் ஒலி. ஆய்தமும் வல்லின மெய்யும் தமிழிற் சொல்லி றாகாமையின், உகரம் பெற்று ஈறாகும். அந் நெறிப்படி, ‘அஃ.’ என்பது, உயிரேறும் இனமெய்யாகிய ககரத்துடன் கூடி உகரம் பெற்று, ‘அஃகு’ என்றாயிற்று. ‘அஃ’ என்பது தனித்தும் இரட்டியும் நிகழும். ‘அஃகுவஃகு’ என்பது பன்மை குறித்த அடுக்குத்தொடர்.]

அஃகுவஃகெனல் ‘ஒயாது அலைதற் குறிப்பு; expr. of restless wandering’ என்று சென்னை அகரமுதலி (பிற்சேர்ப்பு); பொருள் குறித்திருப்பது பொருத்தமாய்த் தோன்றவில்லை.

அஃகு அஃகு என்னும் அடுக்குத்தொடர் அஃகஃகு என்று புணர்வதே நெறியாயினும், அஃகு என்பது பொருளுணர்த்தாத ஒலிக்குறிப்புச் சொல்லேயாதலின், ஒருவகை விலக்காக உடம்படுமெய் இடையிட்டுப் புணர்ந்த தெனக் கொள்ளல்வேண்டும்.”உயிர்வரின் உக்குறள் மெய்விட் டோடும்” (நன். 164); என நூற்பா யாத்த ஆசிரியரே, அந் நெறிக்கு விலக்காக,”ஆற னொருமைக் கதுவும் ஆதுவும்” (நன். 300); என்று புணர்த்துள்ளமை காண்க. இனி, அஃவஃகு என்றிருப்பினும், மெய்யீற் றுடம்படுமெய்யா யமையும்.

அஃகேனம்

அஃகேனம் aḵāṉam, பெ. (n.)

   மெல்லிய ககரமும் சார்பெழுத்து மூன்றனுள் ஒன்றுமான ஆய்தவெழுத்து; the letter’ak’ (ஃ);.

     “அஃகேன மாய்தம்” (யா. கா. 4, உரை);.

     [‘அ’முற்சாரியை ; ‘ஃ’ ஆய்தவெழுத்து;’ஏனம்’ பிற்சாரியை,’க்’ ஆய்தவெழுத்தை உயிரெழுத்தோடு இணைக்கும் மெய்.]

மெய்யெழுத்துகளெல்லாம் உயிரெழுத்தின் உதவியின்றித் தமித்து ஒலியாதவையாதலின், உலகவழக்கில் இகரச்சாரியையை முன்னும் (எ-டு: இக்);, செய்யுள் அல்லது இலக்கண வழக்கில் அகரச் சாரியையைப் பின்னும் (எ-டு: க் + அ-க);, பெற்றே இயங்க அல்லது ஒலிக்க இயலும். ஆய்தம் உயிரேறா மெய்வகையான சார்பெழுத்தாதலின், அது தனித்தொலிக்கும்போது அதற்கு முன்னும் பின்னும் சாரியை வேண்டும். இங்ஙனம் இருதலைச் சாரியை பெறும் ஆய்தத்திற்கு, ஏனச்சாரியை தனிச்சிறப்பாக உரியதாகும். அஃகேனம் என்பது, கொச்சை வழக்கில் அஃகேனா என்றும் அஃகன்னா என்றும் சிதைந்து வழங்கும். அஃகேனம், ககரமெய்யின் நுணுக்கமாதலின் ஆய்தம் என்றும், பின்வரும் வல்லின மெய்யை மெலித்தலின் நலிபு என்றும், மூன்று புள்ளிகளாற் குறிக்கப்படுதலின் முப்புள்ளியென்றும், உயிரும் மெய்யுமல்லாது தனித்து நிற்றலின் தனிநிலையென்றும் பெயர்பெறும்.

அஃகேனம் ககரத்திற்கு இனமானதென்பது, அதன் ஒலியினாலும், அதை ஏனச் சாரியையோடிணைக்கும் ககரமெய்யினாலும், நெடுங்கணக்கிலும் குறுங்கணக்கிலும் அது உயிருக்கும் மெய்க்கும் இடையிற் ககரத்தையடுத்து அதற்குமுன் வைக்கப்படுவதனாலும், பண்டை நெடுங்கணக்கு ஒலைச்சுவடிகளில் க-ஃ என்று குறிக்கப்பட்டு வந்ததனாலும் அறியப்படும். தென்னிந்திய அல்லது திரவிட மொழிக்குடும்ப ஒப்பியல் இலக்கண நூலாசிரியரான கால்டுவெலாரும் அதை’The guttural’ என்று குறித்திருப்பது கவனிக்கத்தக்கது. மிடற்றொலியெழுத்தென்பது ககரமே.

     “அஃகேன மாய்தந் தனிநிலை புள்ளி ஒற்றிப் பால வைந்தும் இதற்கே” என்று இருக்க வேண்டிய அவிநய நூற்பாவில் அஃகேனத்தை ‘அக்கேன’ மென்று யாப்பருங்கல (உறுப்பு. 2, பக். 28); விரிவுரை (விருத்தி);யில் தவறாக அச்சிட்டுள்ளதைப் பின்னர், பிழையும் திருத்தமும் என்னும் பகுதியின் முதற் பக்கத்தில் (i); பக்கவெண் வரியெண் குறிப்பிட்டு’அஃகேனம்’ எனத் திருத்தம் காட்டியுள்ளனர். இதனைப் பாராமல் சென்னை அகரமுதலியில் ‘அக்கேனம்’ என்று குறித்துப் பக்கவெண்ணும் காட்டியிருப்பது தவறு.

அஃகேனத்தைப் பின்பற்றியதே வட மொழி ‘விசர்க்கம்’ (visarga);. அதன் ஒலியொப்புமையையும், அதனையும் புள்ளி வடிவிலேயே ஒரு புள்ளி குறைத்து இரு புள்ளி வடிவாக எழுதுதலையும், வடமொழி வண்ண மாலையிலும் அதை உயிருக்கும் மெய்க்கும் இடையிற் ககரத்தை யடுத்து அதற்குமுன் வைத்திருத்தலையும் நேர்க்குக.

கால்டுவெலார் ஆழ்ந்தகன்ற நடுநிலையாராய்ச்சியாளரேனும், தமிழரின் முன்னோர் மேலையாசியாவினின்று வந்தவர் என்னுங் கொள்கை கொண்டிருந்ததனாலும், அவர் காலத்தில் தொல்காப்பியமும் பதினெண்மேற்கணக்கும் சிலப்பதிகாரமும் தலைமைத் தமிழ்ப் புலவர்க்குந் தெரியாது மறைந்து கிடந்தமையாலும், அவர்க்கு வழி காட்டத்தக்க தமிழறிஞர் ஒருவருமின்மையாலும், தமிழ இனம் சிறிதும் விழிப்பின்றி எல்லா வகையிலும் ஆரிய அடிமைத்தனத்தில் மூழ்கிக் கிடந்தமையாலும், ஆரியத்திற்கு முற்பட்ட பண்டைத் தமிழிலக்கியம் முற்றும் அழியுண்டபின் இந்திய நாகரிக இலக்கியம் முழுதும் சமற்கிருதத்திலுண்மையாலும், வட மொழி வண்ணமாலை தமிழெழுத்துகளுட் பெரும்பாலானவற்றைத் தன்னுட் கொண்டு, மிக விரிவடைந்து, எழுத்துகளின் முறை, பிறப்பு, மாத்திரை முதலியவற்றிலும் உயிர் மெய்யமைப்பிலும் தமிழ் நெடுங்கணக்கையும், வடமொழியிலக்கணம் புணர்ச்சி, சொல்லமைப்பு, வேற்றுமை, தொகை முதலியவற்றில் தமிழிலக்கணத்தையும் ஒத்திருப்பதனாலும், தமிழ் நெடுங்கணக்கும் எண் வேற்றுமையமைப்பும் வடமொழியைத் தழுவின என்று தவறாக முடிபுகொள்ள நேர்ந்தது. இலக்கண விலக்கியங்களில் மட்டுமன்றி மொழியமைப்பிலேயே தமிழ் முந்தியதும் மூலமானதுமாதலால், தமிழ் அஃகேனமே வடமொழி விசர்க்கமென்பதில் எட்டுணையும் இழுக்கில்லையென அறிக.

இனி, இக்காலத்துப் புலவர் சிலர், தமிழின் தொன்மை முன்மை மென்மைத் தன்மைகளைச் சற்றும் நோக்காது, புள்ளித் தொகை வேறுபாட்டாலும் இட வேறுபாட்டாலும் எழுத்து வேறுபாடுணர்த்தப்படும் சில அரபியெழுத்துகளைக் கண்டு மயங்கி, அஃகேனத்தையும் அதுபற்றிய நூற்பாக்களையும் பிறழவுணர்ந்து, தமிழ் எழுத்துகளால் எல்லா மொழியொலிகளையுங் குறிக்கவியலுமென்றும், ஏனை மொழிகளின் சிறப்பெழுத்துகளையெல்லாம் குறித்தற்கே அஃகேனம் தோன்றிற்றென்றும் கூறி, ஃப-F என்றும் ஃச-Z என்றும் எழுதிக் காட்டுவர்.

தமிழ் உலக முதன்மொழியாதலால் அக்கால மக்கள் வாயில் தோன்றிய முப்பான் எளியவொலிகளையே தமிழ் வண்ணமாலை கொண்டதென்றும், தமிழ் வரிவடிவுகள் தமிழ் ஒலிகளையே குறிக்க ஏற்பட்டவையென்றும், பிற்கால மொழிகளின் வல்லொலிகளையும் தமிழ் வரிவடிவுகள் குறிக்குமெனின், தமிழ் பிற்கால மொழிகட்கும் பிற்பட்டதாகக் கருதப்படுமென்றும், எழுத்தென்பது உண்மையில் எழுத்தொலியேயென்றும், எழுதப்படுதலால் அஃது எழுத்தெனப்பட்டதென்றும், ஆய்தத்தொடு பகரஞ் சேரின் ஆய்தமும் பகரமுமேயன்றி வேற்றொலியொன்றும் தோன்றாதென்றும், வேண்டியவாறெல்லாம் ஒலிகளை மாற்றும் மந்திரவாற்றல் ஆய்தத்திற்கில்லையென்றும்,

     “வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே.” (தொல். சொல். எச்ச. 5); என்பதை யொட்டி,

     “அயன்மொழிக்கிளவி அயலெழுத்தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே” என்றே கொள்ளல் வேண்டுமென்றும்,

     “அயன்மொழிக் கிளவி அயலெழுத் தெல்லாம்

ஆய்தத் துணைக்கொண் டெழுதல் வேண்டும்”

என்று தொல்காப்பியர் கூறாமையின், அவர் கூற்றிற்கு மாறானதைக் கொள்ளல் கூடாதென்றும், ஒவ்வொரு பெருமொழிக்குஞ் சில சிறப்பெழுத்துகளுண்டென்றும், எம்மொழிக்கும் ஏனைமொழிச் சிறப்பெழுத்துகளையெல்லாங் குறிக்கும் வரிவடிவில்லையென்றும், ஏனைமொழிச் சிறப்பெழுத்துகளையெல்லாங் கொள்ளின் எம்மொழியும் தன் இயல்பிழந்து வேறொரு மொழியாய் மாறிவிடுமென்றும், உலக முதன் மென்மொழியாகிய தமிழிற் கி.பி. இருபதாம் நூற்றாண்டுத் திரிமொழிகளின் வல்லொலியெழுத்துகளைப் புகுத்துதல் மென்பட்டொடு வன்கம்பளியை இணைத்தல் போல்வதென்றும் அறிந்து, அயன்மொழிச் சிறப்பெழுத்தைக் கலவாது, தமிழை என்றும் தமிழாகவே போற்றிக் காத்தல் வேண்டும்.

அஃதான்று

அஃதான்று aḵtāṉṟu, கு.வி.எ. (adv.)

   அதுவன்றி; besides.

     “அனைத்தனைத் தவ்வயின் அடைத் தோன் அஃதான்று, முன்னோன் காண்க” (திருவாச. 3 ; 28);.

     [அ.து + அன்று → ஃதன்று → அஃதான்று.]

அதுவுமல்லாது ‘besides’ என்று பொருள்படும் ‘அஃதன்று’ என்னுந் தொடர், செய்யுளில் ‘அஃதான்று’ என நீளும். இந் நீட்டம் பொருட்டெளிவும் இன்னிசையும் நோக்கியதாகும். அன்று என்னும் சொல் முற்று, எச்சம் ஆகிய இரண்டிற்கும் பொதுவாம். அஃதன்று என இருப்பின், அன்று என்பது முற்றெனத் தோன்றி முன் வந்த கூற்றை மறுக்கவுஞ் செய்யும். ஆதலால், அதன் எச்சத் தன்மையையுணர்த்த நீட்டம் வேண்டியதாகும். அதனால் இசையினிமையும் மிகுகின்றது.

இம் முறையை யொட்டியே, ‘அதன்று’ என்னும் தொடரும் செய்யுளில் ‘அதான்று’ என நீளவும் ‘அதாஅன்று’ என அளபெடுக்கவும் செய்யும்.

அது என்னுஞ் சொல்லே அஃது என்று திரிந்திருப்பதனால், அது + அன்று → அதன்று → அதான்று → அஃதான்று எனினும், அஃது + அன்று – அஃதன்று → அஃதான்று எனினும் இரண்டும் ஒன்றே.

அஃது

அஃது aḵtu, சு.பெ.

   அது; that, it.

     “மறத்திற்கும் அஃதே துணை” (குறள், 76);.

     [அ(சேய்மைச் சுட்டெழுத்து); → அல் → அது → அத்து → அஃது. ஒ.தோ ; பல் → பது → பத்து → பஃது.]

   1 அஃது என்னும் ஆய்தம் இடையிட்ட வடிவு இலக்கிய வழக்கிற்கே யுரியது; அதிலும் பெரும்பாலும் எழுவாயாகவே வழங்கும். அதனையடுத்து வருவது உயிர்முதற் சொல்லாயிருத்தல் வேண்டும்.

எ-டு: அஃதாவது, அஃதில்லை, அஃதொட்டம்.

அல்,

அத்து4 பார்க்க;see al., attu.

அஃதே

அஃதே1 aḵtē, சு.பெ.

   அதுவே; that very thing, the same as that, the self-same thing, only that.

     [அஃது + ஏ (தேற்றம், வரையறை, தனிநிலை ஆகிய பொருளுணர்த்தும் இடைச்சொல்.);]

 அஃதே2 aḵtē, சு.பெ.

அதுவா ?

 Is it that ?

 அஃதே3 aḵtē, இடை

   நீ சொல்வது சரிதான், அது உண்மையே, அப்படியே ஆகட்டும், ஆம்; Indeed, it is so, yes.

ம. அதே க. அவ்து தெ. அவ்னு.

     [அ.து + ஏ (உடன்பாட்டுப்பொருள் அல்லது ஒத்துக்கொள்வுப் பொருள்படும் இடைச் சொல்.);]

அஃதே எனினும் அதே எனினும் ஒக்கும். முன்னது இலக்கிய வழக்கு ; பின்னது உலக வழக்கு. ஆம் என்று பொருள்படும் அதே என்னும் உடன்பாட்டுப்பொருளிடைச் சொல், இற்றைச் சோழ பாண்டியெல்லைகளில் வழங்காவிடினும், பழஞ் சேரநாடாகிய மலையாள நாட்டில் வழங்கி வருகின்றது.

     ‘அஃதே, அவர் (தொல்காப்பியர்); சார்பெழுத்தென மூன்றே கொண்டாராலோ வெனின்; அஃதே, நன்று சொன்னாய்! ஒழிந்தவை எப்பாற்படு மென்றார்க்கு மூன்றாவதோர் பகுதி சொல்லலாவ தின்மையானும், முதலெழுத்தாந் தன்மை அவற்றிற்கின்மையானும், சார்பிற்றோன்றுதலானும், இப் பத்தும் சார்பாகவே கொள்ளவேண்டுமென்பது. அஃதே அமைக’ (நன். 59, மயிலை, உரை);.

இதில் வந்துள்ள ‘அஃதே மூன்றனுள், முதலிரண்டும் ‘அஃதொக்கும்’,’நீ கூறியது அமையும்’ என்றும், இறுதியது ‘அப்படியே ஆகுக’ என்றும் பொருள்படும் குறிப்பிடைச் சொற்களாகும்.

 அஃதே4 aḵtē, இடை (ind.)

   அப்படியா ?; Indeed? Really? Is it so?.

     “அஃதே யடிகளு முளரே” (சீவக. 1884);.

     [அஃ.து = அப்படி.. ‘ஏ’ வினாவிடைச் சொல்.]

     ‘அஃதே’ என்பது அதுவா என்று பொருள் படின் வினாவேற்ற சுட்டுப் பெயராம்.

அஃதை

அஃதை aḵtai, பெ. (n.)

   சோழனொருவன் மகள் பெயர்; name of a daughter of a {Côla} king.

     “அங்கலுழ் மாமை யஃதை தந்தை” (அகநா. 96 ; 12);. அகுதை என்று பாட வேறுபாடுமுண்டு. அச் சொல்லையே புலவர் அஃதை என்று திரித்திருக்கவுங்கூடும்.

அகுதை பார்க்க; see agudai.

     ‘அஃதை என்பது அஃதி, அகுதி எனவுந் திரிந்து திக்கற்றவன், திக்கற்றவள், திக் கற்றது என உயர்திணை யாணொருமை பெண்ணொருமை அஃறிணை யொருமையிலும் விரவிநிற்பதோர் பொதுச்சொல்’ என்று, இராமானுசக் கவிராயர்’ஒருமையிற் பன்மையும் பன்மையினொருமையும்’ என்னும் நன்னூல் நூற்பாவிற்கு (421); வரைந்த உரையுள் உரைத்தமைக்கு,”ஒருமை சுட்டிய பெயர்நிலைக் கிளவி” என்னும் தொல்காப்பிய நூற்பா (எச்ச. 65); உரையில்,”’அஃதை தந்தை….சோழர்’ என்புழிச் சோழரெல்லாரும் அஃதைக்குத் தந்தையாம் முறையராய் நிற்றலின்,”தந்தை’ என்னும் ஒருமை சோழர் என்னும் பன்மையோடு தனித்தனி சென்று கூடுதலின் வழுவிற்றேனும், ஈற்றுப் பன்மைபற்றி வழுவமைத்தார்” என்று நச்சினார்க்கினியர் கூறியது ஏதுவாயிருக்கலாம். எங்ஙனமிருப்பினும், அஃதை அல்லது அகுதையென்னுஞ் சொல்லிற்குத் திக்கற்ற – வன்-வள்-து என்னும் பொருளில்லை. கவிராயர் அச்சொல்லை அகதியென்னும் வடசொல்லோடு தொடர்புபடுத்திக்கொண்டதாகத் தெரிகின்றது. அதனால், தமிழ்ச்சொல் லகராதி கவிராயர் கூற்றையே மேற்கோளாகக் காட்டி, அஃதி, அஃதை என்னும் இரு சொல்லும் ‘அகதி’ என்பதன் மரூஉ என்று வெளிப்படையாகவுங் கூற நேர்ந்துள்ளது.

     ‘அகதி’ என்பது கதியற்ற ஒருவனையும் ஒருத்தியையும் ஒன்றையும் குறிக்கும் வட சொல். கடைக்கழகக் காலத் தமிழ்மக்கள் பெயர்கள், பெரும்பாலும் தனித்தமிழ்ச் சொற்களாகவேயிருந்தன. வளவன் என்று குடிப்பெயர் பெற்ற சோழனொருவன் மகள், ஊழ்வலியாற் புகலிலியாக நேர்ந்ததென்று கொள்ளினும், களைகணிலிகட்கெல்லாம் பொதுவான அகதி என்னும் வடசொல் தமிழ வேந்தனொருவன் மகளுக்கு இயற்பெயராயிருந்ததென்பது உத்திக்கும் இயற்கைக்கும் ஒரு சிறிதும் பொருந்தாது. இனி, ஒலியொப்புமை நோக்கினும், மூவெழுத்துள் ஒன்றே ஒத்துள்ளது. ஆதலால், அவ்விரு சொல்லையும் இணைப்பது பல்வேறறியாமையின் விளைவேயாம்.

அஃதை,

 அஃதை, aḵai, பெ. (n.)

   சோழ மன்னன் மகளின் பெயர்; name of the daughter of a chola king.

து.அக்கு.

     [அஃகு-அஃதை]

     [அஃகுதல்=சிறிதாதல், அஃதைஇளையவள், சிறியவள். மகளிர்க்கு இளமைப்பெயர் இயற்பெயராதல் உண்டு]

அஃறிணை

அஃறிணை aḵṟiṇai, பெ. (n.)

   உயிருள்ளனவும் உயிரில்லனவுமாகிய பகுத்தறிவில்லாத் தாழ்வகுப்புப் பொருள் தொகுதி; inferior class of beings and irrational things both animate and inanimate.

     ”உயர்திணை யென்மனார் மக்கட் சுட்டே

அஃறிணை யென்மனார் அவரல பிறவே” (தொல், சொல். கிளவி, 1);.”மக்கள் தேவர் நரகர் உயர்திணை மற்றுயிருள்ளவும் இல்லவும் அஃறிணை” (நன். 261);.

     [அல் = உயர்திணை யல்லாது தாழ்ந்த, திணை = வகுப்பு. அல் + திணை – அஃறிணை. நிலைச்சொல் லகர மெய்யிறு வருஞ்சொல் தகரமுதலொடு புணர்ந்து ஆய்தமாகத் திரிந்தது.

     “குறில்வழி லளத்தல் வணையி னாய்தம் ஆகவும் பெறுஉ மல்வழி யானே” என்பது நன்னூல் நூற்பா (228);. இஃது, அல்வழியில் தனிக்குறிலை யடுத்த லகரமெய் தகரத்தொடு புணரின் றகரமாகத் திரிவதும், அஃதல்லாது ஆய்தமாகத் திரிவதும், அவ்விரண்டுமாக உறழ்வதும், ஆக முந்நிலையடையும் என்று கூறுகின்றது. இது தொன்று தொட்டு வரும் இலக்கிய வழக்கைத் தழுவியதே யன்றிப் புதிய நெறியீடன்று.

எ-டு: நல் + திணை-நற்றிணை – றகரத் திரிபு அல் + திணை → ஃறிணை

பல் + துளி-பஃறுளி – ஆய்தத் திரிபு

சில் + தாழிசை-சிஃறாழிசை கல் + தீது = கற்றீது, கஃறீது – உறழ்ச்சி

தமிழிலக்கண முதனூலாசிரியன், பேருலகிலுள்ள எல்லாப் பொருள்களையும் பகுத்தறி வடிப்படையில் உயர்திணை (உயர்வகுப்பு);, அஃறிணை (தாழ்வகுப்பு); என இரு பெரு வகுப்பாக வகுத்து, கடவுளும் மாந்தரும் இன்ப வுலகடையும் மாந்தரான தேவரும் துன்பவுலகடையும் மாந்தரான நரகரும் ஆன, பகுத்தறிவுள்ள உயிர்களெல்லாம் உயர் திணையென்றும், அவ் வறிவில்லா உயிருள்ளனவும் இல்லனவுமான பொருள்களெல்லாம் அஃறிணையென்றும் வேறுபடுத்தி, அவ் வேறுபாட்டைப் பேச்சுவழக்கிலும் நிலை நிறுத்திவிட்டான்].

உயர்திணை பார்க்க;see uyartinai.

 அஃறிணை aḵṟiṇai, பெ.(n.)

   உயர்வு அல்லாதது ஆகிய உயிரின வகைமை (சாதி);; neuter gender,

     “புகா அறக் கிளந்த அஃறிணை மேன”(தொல்.2:49);.

     [அல்+திணை]

அஃறிணைஇயற்பெயர்

அஃறிணைஇயற்பெயர் aḵṟiṇaiiyaṟpeyar, பெ.(n.)

   ஆன்றோரால் இடப்பட்டு இயல்பாக வழங்கும் பெயர்; neuter noun;

தெரிநிலை உடைய அஃறிணை இயற்பெயர்” (தொல்.14 :17);.

     [அல்திணை+ அஃறிணை+ இயற்பெயர்]

அஃறிணைக்கிளவி

அஃறிணைக்கிளவி aḵṟiṇaikkiḷavi, பெ.(n.)

   அஃறிணைப் பொருளைக் குறிக்கும் சொல்; word denoting neuter gender,

     “அஃறிணைக் கிளவி என்று எண்ணுவழி மருங்கின் விரவுதல் வரையார்” (தொல்.10:43);.

     [அல்+திணை→அஃறிணை+கிளவி]

அஃறிணைச்சொல்

 அஃறிணைச்சொல் aḵṟiṇaiccol, பெ. (n.)

   அஃறிணைபற்றிய அல்லது குறித்த சொல்; word or term relating to the class of irrational things.

எ-டு: மாடு, மரம், கல், நிலம், வந்தது, உள்ளது.

அஃறிணைப்பெயர்

அஃறிணைப்பெயர் aḵṟiṇaippeyar, பெ.(n.)

   அஃறிணைப் பொருளைக் குறிக்கும் பெயர்ச் சொல்; noun denoting neuter gender,

     “உயர்திணைப் பெயரே அஃறிணைப் பெயர் என்று”(தொல்,4:15);.

     [அஃறிணை+பெயர்]

அஃறினைவிரவுப்பெயர்

அஃறினைவிரவுப்பெயர் aḵṟiṉaiviravuppeyar, பெ.(n.)

   உயர்திணையிலும் அஃறிணையிலும் கலத்தலையுடைய பொதுப் பெயர்ச் சொல்; common noun.

     “அஃறிணை விரவுப் பெயர் இயல்புமார் உளவே” (தொல்.5:13);.

     [அஃதிணை + விரவு+ பெயர்]

அஅன்ன ஆவன்னா

 அஅன்ன ஆவன்னா aaṉṉaāvaṉṉā, பெ. (n.)

   அரிவரி யென்னும் தமிழ் வண்ணமாலை (குறுங்கணக்கும் நெடுங்கணக்கும்);;  Tamil Alphabet.

   எழுத்துகளைக் கல்லா மக்கள், சிறப்பாகச் சிறுவர் சிறுமியர், எளிதாக ஒலித்துக் கற்கும் பொருட்டு, பண்டைத் தொடக்கப்பள்ளி யாசிரியர் உயிரும் உயிர்மெய்யுமாகிய இருவகைக் குறிலுக்கும்’அன்ன’ச் சாரியையும், இருவகை நெடிலுக்கும் அன்னா’ச் சாரியையும் ஏற்படுத்தினர்;     ‘அஆ’ என்னும் ஈரெழுத்தும் தமிழ் வண்ணமாலையின் முதலெழுத்துகளாதலின், அவை முதற்குறிப்பாகி, அம் முதற்குறிப்பே’அஅன்ன ஆவன்னா’ என்று வண்ணமாலைப் பெயராயிற்று. இது ‘alpha’, ‘beta’ என்னும் கிரேக்க இரு முதலெழுத்துகளும் சேர்ந்து”alphabetum’ என்று இலத்தீனிலும், ‘alphabet’ என்று ஆங்கிலத்திலும், வண்ணமாலைப் பெயராக வழங்குவது போன்றது;

   அ, இ, க, கி என்று ஒரு மாத்திரை யொலிக்குங்குறிலெழுத்துகளை விட்டொலிப்பது, சிறுபிள்ளைகட்குச் சற்று வருத்தமுற மூச்சு வாங்குவதால்,’அஅன்ன’ என்பது”ஆனா” என்றும் இஅன்ன என்பது’ஈனா’ என்றும், மாணாக்க நிலையிலும் பின்னும் ஒலிக்கப்பட்டுவந்தன. இவ்வொலிப்புமுறை குறில்களின் உண்மையான ஒலியளவை உடனே தெரிந்துகொள்ளத் தடையாயிருந்தமையின், இந்நூற்றாண்டுத் தொடக்கத்தில் அரசியற் கல்வித்துறையறிஞர், சாரியையின்றி ஒலிநூன் முறைப்படி அ, ஆ, இ, ஈ,… என்று ஒலித்துப் பயிலும் முறையைப் புகுத்திவிட்டனர். அதனால், இன்று ‘அஆ’ என்பது வண்ணமாலைப் பெயராக வழங்கி வருகின்றது. இது புணர்ச்சியில்’அவ்வா’ என்றாகும்;

அஅன்ன ஆவன்னாத் தெரியாதவன்

 அஅன்ன ஆவன்னாத் தெரியாதவன் aaṉṉaāvaṉṉātteriyātavaṉ, பெ. (n.)

   படியாதவன், அறிவிலி; illiterate, ignoramus.

அஆ

அஆ1 aā, பெ. (n.)

   தமிழ் வண்ணமாலை (இக்.வ,);; Tamil Alphabet (Mod.);.

   உனக்கு ‘அஆ’ தெரியுமா ? (படித்தோர் உ.வ.);. இது பழைய ‘அஅன்ன ஆவன்னா’ என்பதன் சீர்திருத்தம்;
 அஆ2 aā, இடை. (int)

   ஓர் இரக்கக் குறிப்பு; an exclamation of pity.

     “வழங்கான் பொருள்காத் திருப்பானேல் அஆ இழந்தானென் றெண்ணப் படும்” (நாலடி.-9);.

அஇவனம்

அஇவனம் aivaṉam, பெ. (n.)

ஐவனம் பார்க்க;see {aivanam.}

     ‘அகர இகரம் ஐகார மாகும்’ (தொல். எழுத்து. மொழி. 21);;

     ‘அகரமும் இகரமுங் கூட்டிச் சொல்ல ஐகாரம் போல இசைக்கும்; அது கொள்ளற்க என்றவாறு. போல என்றது தொக்கது. ஐவனம் அஇவனம் என வரும். ஆகுமென்றதனால் இது இலக்கண மன்றாயிற்று’ (நச். உரை);;

     ‘அம்முன் இகரம் யகரம் என்றிவை எய்தின் ஐயொத் திசைக்கும் அவ்வோ டுவ்வும் வவ்வும் ஒளவோ ரன்ன”‘ (நன். 125);;

     ‘அகரமுன் இகரமும் யகரமும் வரின், ஐகார ஓசை போல இசைக்கும்….. எ_று. போல இசைக்கு மெனவே, அவை ஆகா; போலியா மெனக் கொள்க. வ-று. அஇவனம், அய்வனம்-ஐவனம்…… என வரும்’ (நன். மயிலை. உரை);;

அஉ

அஉ au, பெ. (n.)

   1. நிலம், நீர், தீ, வளி, வெளி, கதிரவன், திங்கள், ஆதன் (ஆன்மா); ஆகிய எண்வடிவான சிவனும், அறவருளாட்டியாகிய கயற்கண்ணியும் மறவருளாட்டியாகிய காளியும் ஆகிய இருவடிவான சிவையும்;{Siva}

 whose eight forms are earth, water, fire, air, sky, sun, moon and soul and His consort {Sivai} who manifested herself in two forms, viz., {Kayarkanni} and {Kali}, the former an embodiment of the Divine grace that protects and the latter, of that which chastises.

     “அஉ அறியா அறிவிலிடைமகனே” (யாப். வி. 37, உரை, பக். 142);;

     “எட்டி னோடிரண் டும்அறி யேனையே” (திருவாச. 5 ; 49);;

   2. ஒரு மெய்ப் பொருளியல் மறைபொருட் குறியீடு; a mystic philosophical, term or symbol.

     [அகரவரிவடிவு தமிழில் எட்டு என்னும் எண்ணின் குறியாதலால் எண்பொருள் வடி வான சிவனையும், உகர வரிவடிவு இரண்டு என்னும் எண்ணின் குறியாதலால் இருவேறு வடிவு கொண்ட சிவையையும் குறித்தன. உமை என்பது வடசொல்லாதலால், அரன் உமை என்னும் பெயர்களின் முதலெழுத்துகள் அ.உ என்பது பொருந்தாது.;

அகக்கடவுள்

அகக்கடவுள் agaggaḍavuḷ, பெ. (n.)

   1. ஆதனுக்குள்ளிருக்குங் கடவுள் ; God, as immanent in the individual soul (W.);.

   2. வழிபடுதெய்வம் ; tutelary deity, the deity which a man worships as his own God or the God of his family or caste.

   3. ஆதன் (ஆன்மா); ; soul.

     [அகம் + கடவுள். கட → கடவுள். ‘உள்’ தொ.பெ. ஈறு. முக்கரணங்களையுங் கடந்து நிற்பவர் கடவுள்.]

அகக்கடுப்பு

அகக்கடுப்பு agaggaḍuppu, பெ. (n.)

   1. உள் வலி, வயிற்றுக்கடுப்புப்போல் உடம்பின் உள்ளுறுப்புகளுள் உண்டாகும் வலி ; irritation in the internal organs of the body.

   2. குடல் வலி ; colic pain due to irritation in the intestines.

   3. மனக்கடுப்பு, வெகுளி ; anger, indignation (சா.அக.);.

 | [அகம் + கடுப்பு. கடுத்தல் = மிகுதல், கடுமையாதல், நோதல். கடு → கடுப்பு (தொ.பெ.);. ‘பு’ தொ.பெ. ஈறு.]

அகக்கணு

அகக்கணு agaggaṇu, பெ. (n.)

   1. மரங்களிலுண்டாகும் உட்கணு ; inner tuberosity (W.);.

   2. எலும்பின் உட்புறந் தோன்றும் கணு ; any protuberance on the inner side of a bone, inner or internal tuberosity (சா.அக.);.

     [அகம் + கணு. கண்ணுதல் = பொருந்துதல். கண் → கணு = பொருத்து, பொருத்தில் தோன்றும் புடைப்பு.]

அகக்கண்

அகக்கண் agaggaṇ, பெ. (n.)

   1. உட்கண் ; inner vision.

   2. அறிவம் (ஞானம்); ; wisdom.

   3. மனம் ; mind.

   4. எலும்பின் உட்டுளை ; a cavity in a bone.

   5. புண்புரை ; an abnormal infiltration of ulceration, sinus (சா.அக.);.

அகக்கரணம்

அகக்கரணம் agaggaraṇam, பெ. (n.)

   1. மதி (புத்தி);, உள்ளம் (சித்தம்);, மனம், நானுணர்வு (அகங்காரம்); என்னும் உட்புலன்கள் அல்லது அறிவுப் புலன்கள் நான்கனுள் ஒன்று ; one of the four internal intellectual faculties viz., intellect, determinative power, mind and ego.

   2. மனம்; mind.

     “சமமகக் கரண தண்டம்” (கைவல். தத். 2);.

     [அகம் = உள். கரணம் = கருவி.]

கரணம் பார்க்க ;see karanam.

அகக்கருவி

அகக்கருவி agaggaruvi, பெ. (n.)

     “இக் கூறிய இலக்கணங்கள் கருவியுஞ் செய்கையுமென இருவகைய. அவற்றுட் கருவி, புறப்புறக்கருவியும் புறக்கருவியும் அகப்புறக் கருவியும் அகக்கருவியுமென நால்வகைத்து. நூன்மரபும் பிறப்பியலும் புறப்புறக்கருவி; மொழிமரபு புறக்கருவி; புணரியல் அகப்புறக்கருவி, எகர ஒகரம் பெயர்க்கீ றாகா” (தொல். எழுத்து. 272); என்றாற் போல்வன அகக்கருவி’ (தொல், எழுத்து, நூன். 1, நச். உரை);;

     [அகம் + கருவி. அகம் = உள், உள் நெருக்கம், பிறவற்றினும் நெருங்கிய தொடர்பு, முதற்றர உறவு. கரு → கருவி (தொ.ஆ.கு.);.]

கருவி பார்க்க ;see karuvi.

அகக்களிப்பு

 அகக்களிப்பு agaggaḷippu, பெ. (n.)

   மனமகிழ்ச்சி ; exultation, elation of spirits.

அகக்காட்சி

அகக்காட்சி agaggāṭci, பெ. (n.)

   இயற்தைக் காட்சி கம்மியனின் உள்ளத்தில் தோற்றுவிக்கும் வடிவம் ; the image produced by nature in the mind of a sculptor.

சிற்ப வடிவங்கள் இயற்கை உடற்கூறுகளைக் கொண்டிருப்பினும், அவற்றின் புறத்தோற்றத்தை அகக்காட்சியைக் கொண்டே அமைப்பது முதற்படியாகும்’ (சி. செ. பக். 118, பத்தி 4);.

அகக்காழ்

அகக்காழ் agaggāḻ, பெ. (n.)

   1. மரத்தின் உள் வயிரம் ; core of a tree, as the hardest part.

     “அகக்கா ழனவே மரமென மொழிப” (தொல். பொருள். மர. 86);.

   2. ஆண்மரம் (பிங்.);; male tree.

   3. வயிரக்கல் ; diamond, a substance of impenetrable hardness, adamant (சா.அக.);.

     [அகம் + காழ். காழ்த்தல் = மிகுதல், அளவு கடத்தல், முற்றுதல், வயிரங் கொள்ளுதல். காழ் (மூத.தொ.ஆ.கு.); = வயிரம்.]

அகக்குறி

அகக்குறி agagguṟi, பெ. (n.)

   1. உட்குறி. அதாவது, நோயினால் உடம்பினுட் காணுங்குறி ; internal symptom of a disease.

   2. காமவின்பக்குறி ; symptom of sexual pleasure (சா.அக.);.

அகக்கூத்து

அகக்கூத்து agagāttu, பெ. (n.)

   உண்மை (சத்துவம்);, ஒண்மை (இராசதம்);, இருண்மை (தாமதம்); என்னும் முக்குணத் தொடர்பான நடிப்பு அல்லது கூத்து ; exposition, by gesture and dancing of the three fundamental qualities.

     “குணத்தின் வழியதகக் கூத்தெனப் படுமே” (குணநூல்);,

     “அகத்தெழு சுவையா னகமெனப்படுமே” (சயந்தம்); – (சிலப். 3;12, அடியார்க். உரை);.

அகக்கூத்துக்கை

அகக்கூத்துக்கை agagāttuggai, பெ. (n.)

     ‘எழிற்கையுந் தொழிற்கையு மென்றது; எழிற்கை – அழகுபெறக் காட்டுங்கை. தொழிற்கை – தொழில்பெறக் காட்டுங்கை, உம்மையாற் பொருட்கையும் கூறப்பட்டது. பொருட்கை – பொருளுறக் காட்டுங்கை என்னை ?;

     “அவைதாம்,

எழிற்கை யழகே தொழிற்கை தொழிலே

பொருட்கை கவியிற் பொருளா கும்மே”

   என்றாராகலின். கொண்ட வகையறிந்து ; கொண்ட வகையறிதலாவது, பிண்டியும் பிணையலும் புறக்கூத்துக்குரிய கையென்றும், எழிற்கையும் தொழிற்கையும் அகக்கூத்துக்குரிய கையென்றும் அறிதல்’ (சிலப். 3;18-19, அடியார்க். உரை);;     [அகம் + கூத்து + கை. இம் முச்சொற்களும் தனித்தனி வருமிடத்துக் காண்க..]

அகக்கொதிப்பு

அகக்கொதிப்பு agaggodippu, பெ. (n.)

   1. உடம்பினுள் உண்டாகும் கடுப்பு ; irritation of the internal organs of the body.

   2. வெட்டை ; venereal heat in the system (சா.அக.);.

     [அகம் + கொதிப்பு. கொதி → கொதிப்பு (தொ.பெ.);. ‘பு’ தொ.பெ. ஈறு.]

அகக்கொல்லி

 அகக்கொல்லி agaggolli, பெ. (n.)

   தில்லைமரம் ; a tree, the milky juice of which is said to be used as a beverage by the {Siddhars} for promoting longevity, tiger’s milk-spurge, Excoecaria agallocha (சா.அக.);.

அகக்கோளாளர்

அகக்கோளாளர் agagāḷāḷar, பெ. (n.)

   அகம் படிப் பெண்டுகள் ; maid-servants, as in a temple.

     “காஞ்சுகி முதியரு மகக்கோ ளாள ரொடு” (பெருங், உஞ்சைக். 47;167-8);.

     [அகம் = உள், உள்ளிடம், மனை, கோயில். கோள் = கொள்ளுதல். ஆள் → ஆளர் = ஆள்கள். ‘அர்” ப.பா. ஈறு. அகக்கோளாளர் = கோயிற்பணிக்குக் கொள்ளப்பட்ட பெண்டிர்.]

   பண்டைக்காலத்தில், பத்தி மேலீட்டினால் கோயிற் பணிக்கென்று பெற்றோரால் ஒதுக்கப்பட்டவரும், தாமே அப்பணிக்குத் தம்மைத் தத்தஞ் செய்துகொண்டவரும், விலைக்குக் கொள்ளப்பட்டவரும், வழக்கமாகப் பணிசெய்துவருபவருமாக, கோயிற் பணிப்பெண்டிர் நால்வகையர்;

அகங்கரம்

அகங்கரம் agaṅgaram, பெ. (n.)

   தன்முனைப்பு (ஞானவா. வைராக். 85);; self-love, egotism.

     [Skt. aham-kara → த. அகங்காரம்.]

அகங்கரி-த்தல்

அகங்கரி-த்தல் agaṅgarittal,    4 செ.கு.வி. (v.i.)

   செருக்குதல் ; to be self-conceited.

     “தம்முனடிவீழ்ந் தகங்கரித்தான்” (பாரத. பதினே. 162);.

     [அகம் – மனம். கருமை – பெருமை, வலிமை, கொடுமை. கரு → கரி. கரித்தல் = மிகுதல், வலுத்தல், அடுத்தல், உறுத்துதல், காரமாதல்.]

அகம் பார்க்க ;see agam.

உப்புக் கரித்தல் என்னும் உலக வழக்கில் ‘கரித்தல் மிகுதற் பொருளையும், “செங்குட்டுவன் சினஞ்செருக்கி” (சிலப். 29, உரைப்பாட்டுமடை); என்னுஞ் செய்யுள் வழக்கில் ‘செருக்குதல்’ மிகுத்தற் பொருளையும் உணர்த்துதலால், செருக்குதற் கருத்திற்கு மிகுதற் கருத்தே அடிப்படையென்பது உணரப்படும். கரித்தல் என்னும் வினை வட மொழியிலில்லை.

அகங்கரிப்பு

அகங்கரிப்பு agaṅgarippu, பெ. (n.)

   செருக்கு ; arrogance, haughtiness.

     “அகங்கரிப்பு வரிலெவர்க்கு மறங்கெடுக்கும்” (பிரபோத. 7;25);.

     [அகம் = மனம். கரி → கரிப்பு (தொ.பெ.); = மிகவு, கடுப்பு, செருக்கு. ‘பு’ தொ.பெ. ஈறு.]

அகங்கார முதற்கரு

அகங்கார முதற்கரு agaṅgāramudaṟgaru, பெ. (n.)

   1. பிறவிக்கு மூலமாகிய கரு ; the operating or the first cause of transmigration.

   2. தலை ; head, which is supposed to be the seat of egotism (சா.அக.);.

அகங்காரக்கிரந்தி

 அகங்காரக்கிரந்தி agaṅgāraggirandi, பெ. (n.)

   மெய்ப்பொருள்களைத் தானென்றுகொள்ளும் செருக்குப் பிணைப்பு;     [Skt. aham-kara+kiranti → த. அகங்காரக்கிரந்தி.]

அகங்காரசைதன்னியவாதி

அகங்காரசைதன்னியவாதி agaṅgārasaidaṉṉiyavādi, பெ. (n.)

   உயிர்வளி முதலியவையே ஆதனெனக்கருதும் கொள்கையாளர் (சி.சி. 2, 73, மறைஞர்);; one who holds that the vital airs connecting with prana which are the effects of aham-kara are the soul.

     [Skt. aham-kåra + catanya+vadin → த. அகங்காரசைதன்னியவாதி.]

அகங்காரத்திரயம்

 அகங்காரத்திரயம் agaṅgārattirayam, பெ. (n.)

   புறநிலைக் கருவிவகை (சிவப். கட்.); (தைசதவகங்காரம், வைகரியகங்காரம், பூதாதியகங்காரம் முதலியன மூவகை அகங்காரங்கள்);;     [Skt. aham-kara + traya → த. அகங்காரத்திரயம்.]

அகங்காரம்

அகங்காரம் agaṅgāram, பெ. (n.)

   1. சினம் ; anger.

   2. செருக்கு ; conceit, arrogance, haughtiness.

     [அகம் = மனம். கரி → காரம் = மிகவு, வலிமை, கடுப்பு, செருக்கு. ‘காரம்’ முதனிலை திரிந்து ஈறு பெற்ற தொழிற்பெயர். ஒ.நோ ; கடி → கரி → காரம். அதிகரி → அதிகாரம், இளக்கரி → இளக்காரம்.]

   மனஞ் செருக்குதல் அல்லது மனச்செருக்கு என்பதே தமிழ் அகங்காரச் சொற்பொருளென்றும், நானுணர்வு அல்லது தற்பற்று என்பதை அடிப்பொருளாகவும் செருக்கு என்பதை வழிப்பொருளாகவும் கொண்டதே சமற்கிருத அஹம்கார’ச் சொல்லென்றும் வேறுபாடறிதல் வேண்டும்; Aham-kara = conception of one’s individuality, self consciousness, the making of self, thinking of self, egotism, pride, haughtiness; (in {Sãňkhya} phil.); third of the eight producers or sources of Creation, viz., the conceit or conception of individuality, individualization’ (M.S.E.D.);.

   தமிழ்க் கூட்டுச்சொல்லின் நிலைச்சொல் (அகம்); மனத்தைக் குறிப்பது; வருஞ்சொல் (காரம்); மிகுதலைக் குறிக்கும் ‘கரி’ என்னும் வினைமுதனிலை கொண்டது; சமற்கிருதக் கூட்டுச்சொல்லின் நிலைச்சொல் ‘நான்’ என்று பொருள்படுவது; வருஞ்சொல் (கார); செய்தலைக் குறிக்கும் க்ரு’ என்னும் வினை முதனிலை கொண்டது. இதனால், தமிழ் அகங்காரச் சொல்லும் சமற்கிருத அஹங்காரச் சொல்லும் பெரும்பாலும் ஒலியொத்திருப்பினும், வெவ்வேறு வகையில் அமைந்தவையென்பதும், முன்னது பின்னதன் வழியதன்றென்பதும் அறியப்படும்;   மனச்செருக்கு என்னும் தென்சொல், மனக் களிப்பு, அகங்காரம் என்னும் இருபொருள்படுவதும், இங்குக் கவனிக்கத்தக்கது;   இன்னும் இதன் விரிவை அகம் என்னுஞ் சொல்லின்கீழ்க் காண்க;
 அகங்காரம் akaṅkāram, பெ. (n.)

   செருக்கு; conceit, arrogance,

     [அகம்+காரம்=அகங்காரம்→அகம்.]

அகங்காரி

அகங்காரி agaṅgāri, பெ. (n.)

   1. கடுமனத்தன், சினத்தன் ; person of violent temper.

   2. செருக்கன், செருக்கி ; proud, conceited person.

     “என்போற் பகர்வா ரிலையென்றெண்ணகங் காரி’ (முல்லையந் 62);.

த. அகங்காரி → Skt. {aham-kärin}

     [அகங்காரம் → அகங்காரி. “இ” உடைமையுணர்த்தும் வி.மு.த. ஈறு.]

அகங்காரம் பார்க்க ;see {agarigdram.}

அகங்காரிக்கிரகம்

 அகங்காரிக்கிரகம் agaṅgāriggiragam, பெ. (n.)

   பிறந்த ஐந்தாம் நாளில், குழந்தைக்குத் தீங்கு விளைவிப்பதாய்க் கருதப்பெறும் நாண்மீன்; a disease ascribed to the baneful influences of malignant stars, it attacks a newborn baby on the fifth day.

     [Skt. aham-karin + graha → த. அகங்காரக்கிரகம்.]

அகங்காழ்

 அகங்காழ் agaṅgāḻ, பெ. (n.),

   உள்வயிரம்; inside hard core of trees in the class of exogens.

     [அகக்காழ் → அகங்காழ்.]

அகக்காழ் பார்க்க ;see aga-k-kal.

அகங்கை

அகங்கை agaṅgai, பெ. (n.)

   1. கையின் உட்புறம் ; inner surface of hand.

   2. விரல்களல்லாத கையின் உட்புறம் ; palm of hand,

   3. உள்ளங்கை, கையின் உட்புற நடுப்பகுதி ; central part of palm.

ம. அகங்கை ; தெ. அறசேயி, அரசெய்யி ; க., து, குட., கோத அங்கை, மா. அத்தெ; கொலா. ஆரன்கெயி.

     [அகம் (உள்); + கை.]

அகசம்

அகசம் agasam, பெ. (n.)

   1. எலுமிச்சை (மறை. அக.); ; sour lime, Citrus medica.

   2. அகத்தி (சித். அக.); ; West Indian pea-tree (செ.அக.); — Agastia’s plant, Coronilla grandifloraalias Agati grandiflora alias Sesbania grandiflora (சா.அக.);.

ஒ.நோ; அச்சம்,

     [2. அகத்தி → அகசி → அகசம்.]

அகசம்பங்கி

 அகசம்பங்கி agasambaṅgi, பெ. (n.)

   பெரிய சம்பங்கிமரம் ; a very large tree that bears yellow flowers—tulip tree, Indian magdolina, Michelia champaca (சா.அக.);.

அகசரிப்பு

 அகசரிப்பு agasarippu, பெ. (n.)

   ஒரு பொருளின் சுற்றெல்லையிலுள்ள பகுதி அப்பொருளின் நடுவத்தை (மையத்தை); நோக்கி நெருங்கும் ஆற்றல் (சக்தி); (இக். வ.); ; centripetal force (Mod.);.

     [அகம் = உள், நடு, நடுவம். சரிதல் = சாய்தல், இயங்குதல். சரி → சரிப்பு (தொ.பெ.);. ‘பு’ தொ.பெ. ஈறு.]

அகசாரசக்தி

 அகசாரசக்தி agasārasagti, பெ. (n.)

   ஒரு பொருளின் சுற்றெல்லையிலுள்ள பகுதி அப்பொருளின் நடுவத்தை நோக்கி நெருங்கும் ஆற்றல் (இ.வ.);; centripetal force.

     [Skt. aham+sara+sakti → த. அகசார சக்தி.]

     [த. சத்தி → Skt. sakti.]

அகசி

அகசி agasi, பெ. (n.)

   1. அகசம் 2 பார்க்க ;see {agašam} 2.

   2. சீமையகத்தி ; West Indian sesbane, Cassia alata.

   3. அலிசி ; linseed plant, Linum usitatissimum (சா.அக.);.

     [அகத்தி → அகசி.]

அகசிப்பிசின்

 அகசிப்பிசின் agasippisiṉ, பெ. (n.)

   ஒருவகைப் பிசின்; a kind of gum (சா.அக.);.

அகசியகாரன்

 அகசியகாரன் agasiyagāraṉ, பெ. (n.)

   நகைச்சுவையூட்டுபவன்; jester.

த.வ. நகையாண்டி, கோணங்கி, கோமாளி, பகடி.

     [அகசிய + காரன்.]

     [Skt. hasya → அகசிய(ம்);.]

அகசியம்

அகசியம் agasiyam, பெ. (n.)

   1. பகடிக் கூத்து (நல். பாரத. இராச. 17.);; mimicry, farce.

   2. ஏளனம்; ridicule, derision.

     [Skt. hasya → த. அகசியம்.]

அகசு

அகசு agasu, பெ. (n.)

   1. பகல் (சூடா. உள். 65);; day time.

   2. இராப்பகல் கொண்டதொரு நாள்; day including night.

     [Skt. ahan → த. அகசு.]

அகசுகம்

அகசுகம் agasugam, பெ. (n.)

   1. மனநலம் ; mental health.

   2. தன்னை அடைந்தவர்க்கு நலந்தரும் ஆற்றல் வாய்ந்த அரசமரம் ; a tree possessing healing powers and giving health to those who go under it—peepul tree, Ficus religiosa (சா.அக.);.

     [அகம் = மனம். Skt. {Sukha} → த. சுகம் = இன்பம், நலம்.]

அகசேபம்

 அகசேபம் agacēpam, பெ. (n.)

   கட்டுக்கொடி; a creeper, bind weed, Pedalium murex (சா.அக.);.

     [P]

அகசேருகம்

 அகசேருகம் agacērugam, பெ. (n.)

   முள்ளந்தண்டின்மை; the congenital absence of the spinal column, invertebrata (சா.அக.);.

அகசை

அகசை agasai, பெ. (n.)

   1. சிறுகல்லூரிச் செடி; a small variety of plant, Densiflora.

   2. மரத்திற்பிறந்தது; born of the tree or tree born.

   3. மலையிற் பிறந்தது; grown or originated in a mountain, pertaining to a mountain (சா.அக.);.

     [P]

அகச்சந்தானம்

 அகச்சந்தானம் agaccandāṉam, பெ. (n.)

     [அகம் = உள், உள்ளானது, நெருங்கியது, தற்கிழமையானது, தன்னைச் சேர்ந்தது, தன் கொள்கையானது, தன் கொள்கையைச் சேர்ந்தது.]

 Skt. {santäna} → த. சந்தானம்.

அகச்சமயம்

அகச்சமயம் agaccamayam, பெ. (n.)

 religious sects six in number intimately related to the {Šaiva Siddhānta}.

     “அகச்சமயத் தொளியாய்” (சிவப்பிர, 7);.

     [அகம் = தன் கொள்கையைச் சேர்ந்தது. சமை → சமையம் → சமயம்.]

சமயம் பார்க்க ;see (šamayam.);

அகச்சாதி

அகச்சாதி agaccāti, பெ. (n.)

     “ஆசானுக்கு அகச்சாதி காந்தாரம்” (சிலப். 13;112, அடியார்க். உரை);.

     [அகம் = தனக்கு இனமானது. Skt {iati} → த. சாதி = குலம், இனம், வகுப்பு, பிரிவு.]

அகச்சிறுமுழா

அகச்சிறுமுழா akacciṟumuḻā, பெ.(n.)

   ஒருகண் பறை; a drum has one centre heade where it is tapped. 35.3

     [அகம்+சிறு+முழா]

அகச்சுட்டு

 அகச்சுட்டு agaccuṭṭu, பெ. (n.)

   சேய்மை, அண்மை, முன்மை ஆகிய மூவிடங்களையும் சுட்டும் சொற்களின் முதலில் சொல்லுறுப்பாக வரும் ஆ, ஈ, ஊ அல்லது அ, இ, உ என்னும் மூவுயிரெழுத்துகள் ; demonstrative vowels a, i, o or, a, i, u forming initial parts of the remote proximate and frontal demonstrative words. e.g.,

ஆங்கு, சங்கு, ஊங்கு அவன், இவன், உவன்.

     [அகம் + சுட்டு. அகம் = உள்.]

சுட்டு பார்க்க ;see {$uttu,}

   முன்மை என்பது சேய்மைக்கும் அண்மைக்கும் இடையிலிருப்பதால், அதை இடைமைச் சுட்டென வழங்குவர். ஆயின், இடைமையென்பது திட்டவட்டமாக ஓர் இடத்தைச் சுட்டாமையாலும், ஊகார உகரங்கள் முன்னிடத்தையும் முன்னிலைப் பொருளையுமே சுட்டுவதாலும், அவற்றை முன்மைச் சுட்டென வழங்குவதே பொருத்தமாம்;

அகச்சுவை

அகச்சுவை agaccuvai, பெ. (n.)

அகச்சுவையாவன ; இராசதம், தாமதம், சாத்துவிகமென்பன. “குணத்தின் வழியதகக் கூத்தெனப் படுமே” என்றார் குணநூலுடையார், “அகத்தெழு சுவையா னகமெனப் படுமே” என்றார் சயந்தநூலுடையாருமெனக் கொள்க (சிலப்.. 3 ; 12. அடியார்க். உரை);.

     [அகம் = உள், மனம். சுவை = மனச்சுவை, உணர்ச்சி.]

   முக்குணத்தைத் தேவிகம் (divinity);, மாந்திகம் (humanity);, பேயிசும் (devilishness); என்று குறிப்பின் மிகப்பொருத்தமாயிருக்கும்;
 அகச்சுவை akaccuvai,    இசையோசையில் உள்ள ஒரு சுவை; an intrinsic musical note.

     [அகம்+சுவை]

அகச்சூடு

அகச்சூடு agaccūṭu, பெ. (n.)

   1. உட்சூடு, அதாவது உடம்பினுள் வெப்பம்; internal heat, bodily heat.

   2. கணைச்சூடு ; heat arising from a wasting disease in the system (சா.அக.);.

     [அகம் = உள், உடம்பின் உள். சுடு → சூடு (முத.தி.தொ.பெ.);.]

அகச்சூலி

அகச்சூலி agaccūli, பெ. (n.)

   1. ஆசுபத்திரா மரம் (சித்.அக.); ; the tree known as {ağupattird} maram (செ. அக.);.

   2. சிறிய சூலிமரம் ; toon tree, Cedrela toona (சா.அக.);.

அகச்செய்கை

அகச்செய்கை agacceygai, பெ. (n.)

     “இக்கூறிய இலக்கணங்கள் கருவியும் செய்கையுமென இருவகைய…… இனிச் செய்கையும் புறப்புறச் செய்கையும் புறச்செய்கையும் அகப்புறச் செய்கையும் அகச்செய்கையுமென நால்வகைத்து. “எல்லா மொழிக்கு முயிர்வரு வழியே’ (எழுத்து. 140); என்றாற் போல்வன புறப்புறச் செய்கை ; “லனவென வரூஉம் புள்ளி முன்னர்” (எழுத்து. 149); என்றாற் போல்வன புறச்செய்கை ; “உகரமொடு புணரும் புள்ளி யிறுதி” (எழுத்து. 163); என்றாற் போல்வன அகப்புறச் செய்கை ; தொகைமரபு முதலிய ஒத்தினுள் இன்ன ஈறு இன்னவாறு முடியுமெனச் செய்கை கூறுவனவெல்லாம் அகச் செய்கை (தொல். எழுத்து. நூன். 1, நச். உரை);;

     [அகம் = உள். நெருக்கவுறவு. செய் →. செய்கை (தொ.பெ.);. ‘கை’ தொ.பெ. ஈறு.]

அகச்சோலை

அகச்சோலை agaccōlai, பெ. (n.)

   இன்பக் கா (உய்யான வனம்); ; pleasure garden.

     ‘கற்பக விருட்சமுள. இவளது அகச்சோலையில்’ (தக்கயாகப். 66, உரை);;

     [அகம் = மனம், மனவின்பம்.]

சோலை பார்க்க ;see {Şālai.}

அகஞ்சுரிப்படுத்து-தல்

அகஞ்சுரிப்படுத்து-தல் agañjurippaḍuddudal,    2 பி.வி. (v.caus)

   1. மனத்தைத் தேற்றுதல் ; to compose, console, as the mind.

     ‘எனக்கோடுகிற தசையை உங்களுக்குச் சொல்லி அகஞ்சுரிப்படுத்தித் தரிக்கைக்கு’ (ஈடு, 8.2 ; 2);.

   2. குறையச் செய்தல் ; (ஈடு, 4.7 ;9);; to cause to diminish, lessen.

   1. அகம் சரிப்படுத்து → அகஞ்சுரிப்படுத்து. அகம் = மனம். சரி – சமம், நேர், செவ்வை, திருத்தம். சரிப்படுத்துதல் = சரியாக்குதல், திருத்துதல், தேற்றுதல்;   2. அகம் = உள். சுரிதல் = சுருங்குதல், குறைதல், உள்ளொடுங்குதல். சுரி (முத.தொ.ஆ.கு.); = சுருக்கம், குறைவு. சுரிப்படுத்துதல் = குறையச் செய்தல். ‘படு’ துணைவினை. படு (த.வி.); → படுத்து (பி.வி.);;

அகஞ்செவி

அகஞ்செவி agañjevi, பெ. (n.)

   உட்செவி; auricular cavity.

     ‘அகஞ்செவி நிரம்பும்படி ஆரவாரித்தன” (முல்லைப். 89, நச். உரை);;

     [அகம் – செவி, அகம் = உள். செவி = காது.]

அகஞ்சேரல்

 அகஞ்சேரல் akañcēral, பெ.(n.)

வீடு சென்றுசேர்தல்

 to reach house. (கொ.வ.வ.சொ.);

     [அகம்+சேரல்]

அகடனம்

அகடனம் agaḍaṉam, பெ. (n.)

   1. செய்யக் கூடாதது; that which cannot be done, impossibility.

   2. குறும்பு; mischief.

     [Skt. a-ghatana → த. அகடனம்.]

அகடன்

 அகடன் agaḍaṉ, பெ. (n.)

   மோசக்காரன், ஏமாற்றுக்காரன் (வின்.);; treacherous person.

     [Skt. a-ghatana → த. அகடன்.]

அகடம்

அகடம் agaḍam, பெ. (n.)

   1. நேர்மைக்கேடு, நெறிமுறையின்மை; injustice.

   2. சூழ்ச்சி; trick.

     [Skt. a-ghatana → த. அகடம்.]

அகடவங்கம்

 அகடவங்கம் agaḍavaṅgam, பெ. (n.)

   மாசற்ற கருமம்; lead not subjected to industrial or preparatory process, i.e., Crude in character-plumbago or black lead (சா.அக.);

அகடவிகடம்

அகடவிகடம் agaḍavigaḍam, பெ. (n.)

   1. பகடி; fun, humour.

   2. குறும்பு; prank, mischief.

   3. நுண்ணுத்தி; acute intellect.

     [Skt. agata + vikata → த. அகடவிகடம்.]

அகடிதகடனாசாமர்த்தியம்

அகடிதகடனாசாமர்த்தியம் agaḍidagaḍaṉācāmarddiyam, பெ. (n.)

   கூடாததைக் கூட்டுவிக்கும் வன்மை (வேதா.சூ.56, உரை);; ability to effect the impossible.

அகடியம்

 அகடியம் agaḍiyam, பெ. (n.)

   முறையின்மை (வின்.);; that which is injustice.

     [Skt. aghatita → த. அகடியம்.]

அகடு

அகடு agaḍu, பெ. (n.)

   1. உள், உட்புறம் ; interior.

     “செழுந்தோட் டகட்டினடைகிடக்கும்” (கூர்மபு. தக்கன்வே. 57);;

   2. வயிறு ; belly.

     “அகடாரார்” (குறள், 936);;

   3. நடு; middle.

     “மதியகடுதோய்” (தாயு. சச்சி. 6);.

   4. நடுவுநிலைமை ; impartiality.

     “அகடுற யார் மாட்டும் நில்லாது செல்வம்” (நாலடி. 2);;

     [அகு → அகள் (அகழ்); → அகண் → அகடு = உள், உட்புறம், நடு, நடுநிலை, உடம்பின் உள்ளும் நடுவும் உள்ள வயிறு.]

 அகடு agaḍu, பெ. (n.)

   முகடு (சம்.அ.க.கை); ; top, ridge, as of roof.

     [முகம் (முக்கு); → முகடு = மூக்குப் போன்ற வீட்டின் மேற்பகுதி. முகடு → (உகடு); → அகடு. இனி, அகைத்தல் = உயர்த்துதல் அகைப்பு = எழுச்சி. அகை → அகடு = வீட்டின் உயர்ச்சியான அல்லது எழுச்சியான பகுதி என்றுமாம்].

 அகடு agaḍu, பெ. (n.)

   பொல்லாங்கு (வின்.);; wickedness.

க., தெ. அகடு.

     [அகழ்தல் = தோண்டுதல், துளைத்தல், பிடுங்குதல். துளைத்தல் – வருத்துதல். பிடுங்குதல் = வருத்துதல், தொந்தரவு கொடுத்தல். அகழ் → அகடு.]

 அகடு akagṭu, பெ.(n.)

   யாழின் உறுப்புகளாகிய பத்தர் உச்சி வறுவாய் ஆகியனவற்றைக் குறிக்குஞ்சொல்; a term referring to certain partsofthehar-pyal. 35.3.

     [அகு-அகடு]

அகடுசெய்-தல்

அகடுசெய்-தல் agaḍuseytal,    1 செ.குன்றாவி. (vt.)

   துன்புறுத்துதல் (வின்.); ; to tease, vex.

அகடுரி

 அகடுரி agaḍuri, பெ. (n.)

   பாம்பு (சிந்தா.நி.);; snake.

     [அகடு – வயிறு. ஊர் → ஊரி. ‘இ’. வி.முத. ஈறு. ஊர்தல் = ஒட்டி நகர்ந்து செல்லுதல். அகடுரி = காலின்றி வயிற்றுப்புறத்தால் நகர்ந்து செல்வது.]

அகடுறல்

அகடுறல் Agapural வி.எ. (adv)

   நடுவுநிலைமைஅடைதல்; neutral position impartiality.

     “அகடுறயார்மாட்டும்நில்லாதுசெல்வம்.” (நாலடி:2);.

     [அகடு + உறல்]

அகட்டு

 அகட்டுபெ. (n.)  akaṭṭu,

   நன்றாக விரித்தல்; to wide open. (கொ.வ.வ.சொ.);.

     [அகற்று-அகட்டு(கொ.வ.);]

அகட்டு-தல்

அகட்டு-தல் agaṭṭudal,    5 செ.குன்றாவி. (v.t)

   அகல வைத்தல் ; to open wide.

     “அண்ணாந்து காலை யகட்டி நடந்து” (பஞ்ச. திருமுக. 876);;

ம. அகற்றுக, அகத்துக ; க. அகலிசு ; தெ. அகலிம்பு.

     [அகல் (த.வி.); → அகற்று (பி.வி.); → அகட்டு.]

அகட்டுத்தே

 அகட்டுத்தே agaṭṭuttē, பெ. (n.)

   பெருவயிற்றுத் தெய்வம், பிள்ளையார்; Ganeśa, the potbellied God.

     [அகடு = வயிறு. தே = தெய்வம். பல் பருத்தவனைப் பல்லன் என்பது போல், அகடு பருத்த தெய்வத்தை அகட்டுத்தே என்றனர்.]

தே பார்க்க ;see {ta.}

அகணி

அகணி agaṇi, பெ. (n.)

   1. உள், உட்புறம் ; inside, interior.

     ‘சுடுக்காயில் அகணி நஞ்சு, சுக்கிற் புறணி நஞ்சு (பழ.);.

   2. மரப்பட்டையின் உட்பக்கத்து நார் ; fibre in the inner side of the bark of a tree (சா.அக.);.

   3. மருதநிலம் (சூடா.); ; agricultural tract of land.

   4. நெல் வயல் ; paddyield.

     “அகணியின்கரை புரளு மெங்கணும்” (அரிசமய. குலசே. 8);.

   5. தென்னை பனைகளின் உள்மட்டை மேல் நார் ; upper rind of the stem of the coconut and palmyra frond.

     [அகம் = உள், உட்புறம், நாட்டின் உட்பட்ட மருதநிலம், மருதநில வயல்].

     “புறஞ்சிறை மாக்கட் கறங்குறித் தகத்தோர்

புய்த்தெறி கரும்பின் விடுகழை தாமரைப்

பூம்போது சிதைய வீழ்ந்தெனக் கூத்தர்

   ஆடுகளங் கடுக்கும் அகநாட் டையே” (புறநா. 28;11-14);;
 அகணி agaṇi, பெ. (n.)

   நம்பிக்கைக்குரிய நட்பினர் ; confidant.

     “அகணியாகிய ………… சகுனி” (பெருங். மகத. 26 ; 29-30);.

     [அகம் = உள்ளம். அகம் → அகன் → அகண் → அகணி = உள்ளம் ஒன்றிய உண்மை நட்பு, நண்பன்.]

 அகணி agaṇi, பெ. (n.)

   கடுக்காய் (சித்.அக.); ; gall-nut, Terminalia chebula.

அகணிக்கடுக்காய்

அகணிக்கடுக்காய் agaṇiggaḍuggāy, பெ. (n.)

   1. உட்சதைப்பற்றுள்ள கடுக்காய்; a gall-nut with thick fleshy portion surrounding the seed inside.

   2. முற்றிய கடுக்காய் ; a fully developed or ripe gall-nut (சா.அக.);.

     [அகம் → அகன் → அகண் → அகணி = உள். உட்சதைப்பற்று.]

அகணிதன்

அகணிதன் agaṇidaṉ, பெ. (n.)

   கடவுள்; god, as immeasurable.

     “தேவ முதல்வ வேதமி லகணித” (பெருந்தொ. 193);.

த.வ. வரம்பிலி.

     [Skt. aganita → த. அகணிதன்.]

அகணிதம்

 அகணிதம் agaṇidam, பெ. (n.)

   கணிக்கப்படாதது ; that which is beyond computation.

     ‘ம. அகணித ; க. அகண்ய ; Skt. agaņita.

     [‘அ’ எதிர்மறை முன்னொட்டு. கணி → கணிதம் = கணிக்கப்பட்டது. அகணிதம் = கணிக்கப்படாதது. ‘இதம்’ தொ.பெ. ஈறு.]

கணித்தல் பார்க்க ;see kanittal.

அகணிநாடு

 அகணிநாடு akaṇināṭu, பெ.(n.)

   மருதநாடு; agriculatural tract of land.

     “அசற அப்புலத்து அகணி நாடு ஒரீஇ”

     [அகணி+நாடு]

அகணிநார்

 அகணிநார் agkaṇinār, பெ.(n.)

   மரப்பட்டையின் உட்பத்து நார்; fibre in the inner side of the bark.

     [அகணி+நார்]

அகணிப்பாய்

 அகணிப்பாய் agaṇippāy, பெ. (n.)

   அகணிப் பிளாச்சினாற் பின்னிய மூங்கிற்பாய் ; bamboo mat plaited with thick splits.

     [அகம் → அகன் → அகண் → அகணி. ஒருகா. அகப் பகுதியொடு சேர்ந்த தடித்த மூங்கிற் பிளாச்சு.]

பாய் பார்க்க;see pay.

அகணிமுறம்

 அகணிமுறம் akaṇimuṟam, பெ.(n.)

   தென்னை பனைகளின் மட்டை நாரினைக் கொண்டு இரண்டடைப் பின்னக்களுடன் அழகாக உறுதியாக முடையப்பட்ட, அழகாகஉறுதியாகமுடையப்பட்ட, விலையும் அதிகமுள்ள முறம். (இ.வ.);; winnow plaited with upper rind of the stem of the stem of the coconut and palmayra frond.

     [அகணி+முறம்.]

அகணியகில்

 அகணியகில் agaṇiyagil, பெ. (n.)

   அகில் மரத்தின் உட்பாகம் ; that portion which is inside the agilwood tree (சா.அக.);.

அகணிக்கடுக்காய். அகில் பார்க்க ;see agani-k-kadu-k-kay, agil.

அகண்

 அகண் agaṇ, பெ. (n.)

   அண்மை (சம்.அக.);; nearness.

     [ஒருகா. அகம் + அண் – அகவண் → அகண்.]

அகண்ட வீணை

 அகண்ட வீணை agaṇṭavīṇai, பெ. (n.)

   பொருத் தின்றிக் குடமும் (பத்தரும்); கோடும் (தண்டும்); ஒரே நெடும் பலாக்கட்டையிற் செதுக்கப்பட்ட வீணை ; a lute whose whole body is made from a single block of jack-wood.

     [‘அ’ எதிர்மறை முன்னொட்டு. கண்ட = துண்டான, பகுக்கப்பட்ட அகண்ட = பகுக்கப்படாத, பொருத்தில்லாத. விண்னெனல் = விண் விண் என நரம்பு தெறித்தல். விண் → வினை.]

அகண்டகம்

அகண்டகம் agaṇṭagam, பெ. (n.)

   1. முள்ளில்லாத செடி அல்து காய் ; a thornless plant or fruit.

   2. முள்ளந்தண்டில்லாதது ; invertebrate (சா.அக.);.

   ம., க. அகண்டக ; Skt. Akantaka.

     [‘அ’ எதிர்மறை முன்னொட்டு. குள் → கள் → கண்டு → கண்டம் → கண்டகம் = முள்.]

அகண்டகாவேரி

 அகண்டகாவேரி agaṇṭagāvēri, பெ. (n.)

   ஈரோட்டிற்கும் (ஈரோடைக்கும்); திருச்சிராப்பள்ளிக்கும் இடையில், இரண்டாகப் பிரியாது ஓடும் காவேரியாறு ; the undivided {Kavéri} river, between Erode and its point of bifurcation close to {Thiruchirāppalli.}

     [‘அ’ எதிர்மறை முன்னொட்டு. கண்டம் = துண்டம், பிரிவு, பெருநிலப்பகுதி. அகண்டம் = பகுக்கப்படாதது. காவிரி → காவேரி.]

   கொள்ளிடம், காவிரி என இரண்டாகப் பிரியாத நிலையிலுள்ள காவிரி அகண்ட காவேரி;

அகண்டதீவம்

 அகண்டதீவம் agaṇṭatīvam, பெ. (n.)

   நந்தா விளக்கு ; lamp that burns perpetually, used in worship in temples.

     [அகண்டம் = பகுக்கப்படாதது. தீய் → தீய்வு → தீவு → தீவம் = விளக்கு.]

காலத்தாற் பகுக்கப்படாது என்றும் எரியும் தீவம் அகண்ட தீவம். Skt. Akhanda dipa.

   இனி, அகன்ற வட்டவடிவமான அகல்விளக்கு எனப் பொருள் கொள்ளின், ‘அகண்ட’ என்பது ‘அகன்ற’ என்பதன் திரிபாகும்;

அகண்டபூண்டு

அகண்டபூண்டு agaṇṭapūṇṭu, பெ. (n.)

   1. பிரமிப்பூடு ; a plant used in medicines, Gratiola monieri.

   2. வல்லாரை ; Indian penny wort, Hydrocotyle asiatica.

   3. வென்னர் (சித்தர்); உண்ணும் ஒரு கற்ப மூலிகை; a drug taken by Siddhas for rejuvenescence (சா.அக.);.

பூண்டு பார்க்க ;see {pündu.}

அகண்டமெழுகு

 அகண்டமெழுகு agaṇṭameḻugu, பெ. (n.)

   மூளையினின்று செய்யும் ஒருவகை மெழுகு ; a kind of paste prepared from the human brain (சா.அக.);.

மெழுகு பார்க்க ;see melugu.

அகண்டம்

அகண்டம் agaṇṭam, பெ. (n.)

   1. பகுக்கப்படாதது ; that which is indivisible.

     “அகண்டமா யமர்ந்த தன்றே” (கோயிற்பு. பதஞ். 65);.

   2. நிறைவு ; perfection.

     “அகண்டவறிவு” (ஞானவா. உபசாந். 34);.

   3. முழுதும், எல்லாம் (சூடா.); ; the whole,

   4. நந்தா விளக்கு ; perpetually burning lamp.

 Skt. {akhayda}

     [அல் → ‘அ’ எதிர்மறை முன்னொட்டு. கள் → கண்டு → கண்டம் = துண்டம். ஒ.நோ. துள் → துண்டு → துண்டம். பல கண்டமாகப் பகுக்கப்படாது ஒரே முழுமையாக இருப்பது அகண்டம்.]

 அகண்டம் agaṇṭam, பெ. (n.)

   அகன்ற வட்ட வடிவமான தகழி (அகல்); விளக்கு ; a round shaped oil burning open lamp.

     [அகல் → அகன்றம் → அகண்டம்.]

 அகண்டம் agaṇṭam, பெ. (n.)

   மூளை ; brain, medullary substance (சா.அக.);.

 அகண்டம் agaṇṭam, பெ. (n.)

   கடவுள் ; God. as the undivided One (W.);.

 Skt. akhanda

     [‘அ’ எதிர்மறை முன்னொட்டு. கண்டு → கண்டம் → கண்டன் = துண்டானவன். அகண்டன் = பல உறுப்புகளாக அல்லது மெய்ப் பொருள்களாகப் பகுக்கப்படாதவன், முழுமுதற் கடவுள்.]

   ஆவி வடிவில் எங்கும் நிறைந்து உயிர்க்குள் உயிராகவும் அணுவிற்குள் அணுவாகவும் நுண்ணிதிற் கலந்து, எல்லாம் வல்லனாகவும் எல்லாம் அறிந்தவனாகவும் என்றும் உள்ளவனாகவும் இருக்கும் தன்னந்தனி முதல் இறைவனை எவ்வகையிலும் பகுக்கப்படாதவனென்றே கெரீண்டு, கட்வுள் (எல்லாங் கடந்தவன்); என்றனர் முன்னைத் தமிழர்;   அக் கடவுளையே, ஒருசார் தமிழர் சிவன் என்னும் பெயரில் தொன்றுதொட்டு வழிபட்டு வருகின்றனர்;   ஆதலால் சிவம், சத்தி, சாதாக்கியம், ஈசுரம், சுத்தவித்தை எனச் சுத்த மாயையில் தோன்றும் ஐந்து தத்துவங்களாகச் சிவனைப் பகுப்பது, சிவனியத்தைப் புதிதாய்த் தழுவிய ஆரியர், அம் மதத்தை ஆரிய நெறியாகக் காட்டுதற்குப் புகுத்திய கொள்கையேயன்றி, குமரிநாட்டு முன்னைத் தமிழர் கொண்டதன்று;     “அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே யுலகு” (குறள், 1);,

     “சுவையொளி யூறோசை நாற்றமென் றைந்தின்

வகைதெரிவான் கட்டே யுலகு” (குறள், 27);

   என்று, தமிழ்மறையும் ஆரியர் கொள்ளும் போலிச் சிவமெய்ப் பொருள்களை விலக்கிக் கூறுதல் காண்க;   ஆகவே, அகண்டன் என்னும் கொள்கையும் சொல்லும் தமிழரனவே யென்று தெளிக;

அகண்டவடிவம்

அகண்டவடிவம் agaṇḍavaḍivam, பெ. (n.)

   பகுக்கப்படாத வடிவம், கடவுள் ; indivisible form, as of the Absolute.

     “அகண்ட வடிவப் பரம்பொருளாம்” (ஞானவா. பிரகலா. 9);.

அகண்டவரை

 அகண்டவரை agaṇṭavarai, பெ. (n.)

     (Yoga); a psychic centre situated in the cerebral region—Medulla oblongata, which is the upper enlarged end of the spinal cord reachable only through yoga.

     “அறிவான வையாவே கும்ப மேறி

அகண்டவரை அகண்டவரை காணுவாயே” (இராமதேவர்); – (சா.அக.);.

     [அகண்டம் = மூளை. வரை = எல்லை யளவு.]

   புருவிடை என்பது, இரு புருவத்திற்கும் நடுவே ஈரிதழ்த்தாமரை வடிவில் ஒகியராற் காணப்படும் நரம்புச் சக்கரம் ; a cakra in the body, described as a two-petalled lotus situated between the two eyebrows, one of the six dynamic Tattvic centres which are nerve plexuses.

அகண்டவறை

 அகண்டவறை agaṇṭavaṟai, பெ. (n.)

   மூளையின் கண்ணறை ; cells of the brain (சா.அக.);.

     [அகண்டம் + அறை.]

அகண்டவாய்

 அகண்டவாய் agaṇṭavāy, பெ. (n.)

   விரிவான வாய் ; wide or large mouth (சா.அக.);.

     [அகல் → அகன்ற (இ.கா.பெ.எ.); → அகண்ட.]

அகண்டவிளக்கு

 அகண்டவிளக்கு agaṇṭaviḷaggu,    நந்தா விளக்கு ; perpetually burning lamp.

     [விளங்கு → விளக்கு (பி.வி., முத.தொ.ஆ.கு.]

அகண்டதீவம் பார்க்க ;see agenda-tivam.

அகண்டி

 அகண்டி agaṇṭi, பெ. (n.)

   இசைக்கருவி வகை (இராட்..); ; a musical instrument (R.);.

அகண்டிதன்

அகண்டிதன் agaṇṭidaṉ, பெ. (n.)

   கடவுள் ; God, as an undivided whole.

     “அகண்டிதனகம்பன்” (மதுரைப் பதிற்றுப். 70);.

 Skt. akhandita

     [அகண்டிதம் → அகண்டிதன் = துண்டிக்கப்படாதவன், பகுக்கப்படாதவன்.]

   அகண்டிதம் பார்க்க ; sce agandidam.

   முந்தின சொற்குக் கூறிய சிறப்புக் குறிப்பையே இதற்குங் கொள்க;

அகண்டிதம்

 அகண்டிதம் agaṇṭidam, பெ. (n.)

   துண்டிக்கப்படாதது ; that which is undivided or indivisible.

 Skt. akhandita

     [‘அ’ எதிர்மறை முன்னொட்டு. கண்டு = துண்டு. கண்டு → கண்டி. கண்டித்தல் = துண்டித்தல். கண்டி → கண்டிதம் = துண்டிப்பு. ‘இதம்’ தொ.பெ. ஈறு. அகண்டிதம் = துண்டிக்கப்படாதது.]

     ‘அ’ என்னும் எதிர்மறை முன்னொட்டும் ‘கண்டு’ என்னும் சொல்லும் ‘இதம்’ என்னும் ஈறும் தமிழே யாதலால், ‘அகண்டிதம்’ என்னும் சொல்லும் தமிழெனக் கொள்ளப்பட்டது;

அகண்ணியம்

 அகண்ணியம் agaṇṇiyam, பெ. (n.)

   அவமதிப்பு ; dishonour, disgrace.

அங்கே போவது உனக்கு அகண்ணியம் (உ.வ.);.

 Skt. aganya.

     [‘அ’ எதிர்மறை முன்னொட்டு. கண்ணுதல் = கருதுதல், மதித்தல். கண் → கண்ணியம் = மதிப்பு. ‘இயம்’ தொ.பெ. ஈறு. அகண்ணியம் = மதிப்பின்மை, அவமதிப்பு.]

அகதங்காரன்

அகதங்காரன் agadaṅgāraṉ, பெ. (n.)

   1. நலத்தைக் கொடுப்போன்; one who restores health, a health-restorer.

   2. மருத்துவன்; a physician,

     [அகத(ம்); + காரன்.]

     [Skt. agada → த. அகத(ம்);.]

     [காரன் → Skt. kara.]

அகததந்திரம்

 அகததந்திரம் agadadandiram, பெ. (n.)

   நிலைத்திணை, (தாவரம்); விலங்கு முதலானவற்றின் நஞ்சினால், மாந்தர்க்கு ஏற்படும் நோய்களையும் அவற்றைக்களையும் முறைகளையும் விளக்கிக்கூறும் நூல்; a tantric science which treats of antidotes against vegetable, mineral and animal poisons toxicology.

த.வ. நஞ்சறுப்புநூல்.

     [Skt. agada + tantra → த. அகததந்திரம்.]

அகதன்

 அகதன் agadaṉ, பெ. (n.)

   நிறைநலமுடையான்; one who is free from disease, a healthy man.

த.வ. நலவான்.

     [Skt. agadya → த. அகதன்.]

அகதம்

அகதம் agadam, பெ. (n.)

   1. நோயின்மை; freedom from disease.

   2. மருந்து; a medicine, drug (especially); antidote.

   3. நஞ்சு நீக்கு மருந்து; antipoisonous remedy.

     [Skt. agada → த. அகதம்.]

அகதவேதம்

அகதவேதம் agadavēdam, பெ. (n.)

   1. மருத்துவ நூல்; medical science.

   2. நச்சு முறிவைப் பற்றிக் கூறுமோர் ஆயுள் வேத நூல்; an ayurvedic science dealing with several antidotes for poison.

     [Skt. agada + veda → த. அகதவேதம்.]

அகதி

அகதி1 agadi, பெ. (n.)

   வீடுபேற்று நிலை; the path of salvation.

     “அடைந்தனை அகதியை” (மேருமஞ். 173);.

     [Skt. a-gati → த. அகதி.]

 அகதி2 agadi, பெ. (n.)

   மரவகை (மலை); (வின்);; babul.

     [Skt. agate → த. அகதி.]

 அகதி3 agadi, பெ. (n.)

   இயற்கைப் பேரிடர், அரசியல் நெருக்கடி இன்ன பிறவற்றின் பொருட்டு தம் சொந்த நாட்டிலிருந்து பிற நாட்டிற் குடிபெயர்வோர்; one Without resources friends, destitute person.

த.வ. வழியிலி, ஏதிலி.

     [Skt. a-gati → த. அகதி.]

 அகதி4 agadi, பெ. (n.)

   1. பெண்ணோடு இணைந்து வாழாமை-சேராமை; not cohabiting with a woman.

   2. நலிந்தோன், வலிமையற்றவன்; a weak man.

     [Skt. a-gada → த. அகதி.]

அகதிசேத்திரத்தார்

அகதிசேத்திரத்தார் agadicēddiraddār, பெ. (n.)

   மேலுகத்தில் வாழ்பவர்களில் பெரியவர் (தக்கயாகப். 352, உரை.);; celestials higher than those of the svarga.

     [Skt. a-gati+ksetra → த. அகதிசேத்திரத்தார்.]

அகதேசி

 அகதேசி agatēci, பெ. (n.)

   உள்நாட்டு இரப்போன், பரதேசி என்பதற்கு எதிர்; native mendicant, dist. f. {paradēši.}

     [அகம் + தேசி.]

   அகதேசி பரதேசி என்னும் மரபிணைமொழி எதுகை நோக்கி ‘அரதேசி பரதேசி’ என்று தவறாக உலகவழக்கில் வழங்கிவருகிறது;

அகதேசு

 அகதேசு agatēcu, பெ. (n.)

   நோய்நொடியில்லாதவன்; one who is free from diseases.

     [Skt. agada → த. அகதேசு.]

அகத்தடிமை

அகத்தடிமை agattaḍimai, பெ. (n.)

   அணுக்கத் தொண்டு ; services of a devoted servant or follower.

     “அகத்தடிமை செய்யு மந்தணன்” (தேவா. 7.9 ; 6);.

ம. அகத்தோன், தெ. அடியடு, அடிய.

அகத்தடியாள்

அகத்தடியாள் agattaḍiyāḷ, பெ. (n.)

   வீட்டு வேலைக்காரி ; maid-servant of a house.

     “அகத் தடியாள் மெய்நோவ” (தனிப்பா. தி. 1, பக். 279);.

ம. அடியாட்டி

அகத்தன்

அகத்தன் agattaṉ, பெ. (n.)

   இடத்தினன் ; one who is in a place.

     “ஆதவ னெழுகிரி யகத்த, ராக்கினான்” (கந்தபு. யுத்த சிங்க. 328);.

அகத்தமிழ்

 அகத்தமிழ் agattamiḻ, பெ. (n.)

   அகத்திணை பற்றிய தமிழிலக்கியம் ; Tamil literature dealing with love.

அகத்தரையர்

அகத்தரையர் agkattaraiyar, பெ.(n.)

   சிவன்;மாதொருபாகன்; god sive.

     “இமவான் பெற்ற பெண்ணகத் தரையர்” (நாவு :1646);.

     [அகத்து-அகத்து+அரையர்]

அகத்தான்

அகத்தான் agattāṉ, பெ. (n.)

   1. உள்ளிடத் திருப்பவன் (இறை. 59, உரை); ; one who is in.

   2. இல்வாழ்வான் ; householder.

     “அகத்தாரே வாழ்வாரென் றண்ணாந்து நோக்கி” (நாலடி. 31);.

ம. அகத்தான்

அகத்தி

அகத்தி agatti, பெ. (n.)

   மக்கட்குக் கீரையும் மாட்டிற்குத் தழையுணவும் உதவுவதும், பெரும்பாலும் கொடிக்காலிலும் மிளகாய்த்தோட்டத்திலும் பயிரிடப்படுவதுமான சிறு மரவகை ; West Indian pea-tree, s. tr., Sesbania grandiflora, whose leaves are edible and also used as cattle food.

     “நல்லகத்தி வேரதனை நாடுங்கான் மேக மெனுஞ்

சொல்லகலுந் தாகமறுந் தோகையே மெல்லமெல்ல

மெய்யெரிவு கையெரிவு மேகனத்தி

மையெரிவும் போமென் றறி” (னுள்ளெரிவு (பதார்த்த. 47;5);.

   அகத்தியினங்கள்; species of sesban.

   சாழையகத்தி, ஒரு பழமரம் ; a fruit tree.

   சிற்றகத்தி, ஒரு சிறு மருந்துமரம் ; a small tree used for medicine.

   சீமையகத்தி, ஒரு செடிவகை; large-leafed eglandular senna, Cassia alata (L.);.

   செவ்வகத்தி, ஒரு செம்மலர்ச் சிறுமரம் ; a small tree with red flowers.

ம. அகத்தி ; க., து. அகசெ ; தெ. அகிசெ; த. அகத்தி → Skt. agasti.

     [அகம் அகத்தி. அகம் = உள். கொடிக் கால், மிளகாய்த் தோட்டம் முதலிய பிற செடி கொடித் தோட்டங்களினுள்ளே பயிரிடப்படுவதால், அகத்தியெனப் பெயர்பெற்றது போலும்.]

பேயகத்தி, சீமையகத்தி பார்க்க ;see pey-agatti, {šimai-y-agatti.}

     “அகத்தி ஆயிரங் காய்த்தாலும் புறத்தி புறத்தியே” என்பது, மருமகளுக்கும் அகத்தி மரத்திற்கும் பொதுவான இரட்டுறற் பழமொழி. அகத்திமரம் தோட்டத்திற்குள்ளிருந்து கொத்துக்கொத்தாக ஆயிரக்கணக்காய்க் காய்த்தாலும், அதன் காய்கள் ஒன்றிற்கும் பயன்படா. அதனால் மிளகாய்ச்செடியும் வெள்ளிலைக் கொடியும்போற் சிறப்பாகக் கருதப்படா. அதுபோன்று, வேற்றகத்திலிருந்து வீட்டிற்கு வந்த மருமகள் எத்தனை பிள்ளை பெற்றாலும், மகளைப்போல் அன்பாக மாமியாரால் நடத்தப்படுவதில்லை என்பது, பழமொழிக் கருத்து;

அகத்திக்கறுப்பு

 அகத்திக்கறுப்பு agattiggaṟuppu, பெ. (n.)

   சில சிற்றூர்த் தெய்வங்கட்குச் சாத்தும் ஆடை வகை (தஞ்சை); ; a kind of garment put on certain village deities (Tj.);.

அகத்திக்கீரை

 அகத்திக்கீரை agattigārai, பெ. (n.)

   இலைக் கறிக்கு உதவும் அகத்தித் தழை; sesban leaves used as edible greens.

அகத்திசரறுகு

அகத்திசரறுகு agattisaraṟugu, பெ. (n.)

   சிற்றறுகு (இராட்,); ; species of grass, short in stature like Agastya (R.);.

     [Skt. agastya + {1ša} – அகஸ்திச → த. அகத்திசன் → அகத்தியர். வ. ஈசன் = கடவுள், தேவன், தெய்வத்தன்மையுள்ளவன். அகத்தியர் குள்ளராயிருந்ததனால், அவரைப்போல் உருவிற் சிறிதான சிற்றறுகு அகத்திசாறுகு எனப் பெயர்பெற்றது.]

அகத்திடு-தல்

அகத்திடு-தல் agaddiḍudal,    17 செ.குன்றாவி. (v.t)

   1. கையால் உள்ளணைத்தல் (திவா.);; to fold in the arms, embrace.

   2. செருகுதல் ; to insert (W.);.

   3. உள்ளிடுதல் (கலித். 4. உரை); ; to enclose, enfold.

அகத்திணை

அகத்திணை agattiṇai, பெ. (n.)

   கைக்கிளை, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, பெருந்தினை என்னும் ஏழு பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ள காதலின்ப வொழுக்கம் ; love, as a mental experience of lovers or conjugated couple classified into seven forms according to ecology and stress of passion.

     “கைக்கிளை முதலாப் பெருந்திணை யிறுவாய்

முற்படக் கிளந்த எழுதிணை யென்ப” (தொல். பொருள். அகத். 1);.

     [அகம் + திணை.]

அகத்திணைப்புறம்

அகத்திணைப்புறம் agattiṇaippuṟam, பெ. (n.)

   அகத்தினைக்குப் புறம்பான கைக்கிளை, பெருந்திணை என்னும் இருதினைகள் (தொல். பொருள். அகத். 54, நச். உரை);; the two forms of undesirable love, viz., unreciprocated love, and love by force, as opposed to reciprocal love.

     [அகம் + திணை + புறம்.]

அகத்தினள்

அகத்தினள் agattiṉaḷ, பெ.(n.)

   மனத்தில் உள்ளவள்; one who is seated in mind.

     “அரிமலர்க் கண்ணி நின் அகத்தினள் ஆக”. (பெருங். 74:45);.

அகத்திப்பழுப்பு

 அகத்திப்பழுப்பு agattippaḻuppu, பெ. (n.)

அகத்திக்கறுப்பு பார்க்க ;see agatti-k-karuppu.

அகத்தியநட்சத்திரம்

 அகத்தியநட்சத்திரம் agattiyanaṭcattiram, பெ. (n.)

   அகத்திய விண்மீன்; the star canopus.

அகத்தியன், அகத்தியனார்

அகத்தியன், அகத்தியனார் agattiyaṉagattiyaṉār, பெ. (n.)

   1. சில வேத மந்திரங்களின் ஆசிரியரும், தென்னாட்டில் ஒரு பிராமணக் குடியேற்றத்தை நிறுவியவரும், ஒரு முத்தமிழ்ச் சார்புநூலும் சில மருத்துவ நூலும் இயற்றிய வரும் தோரா. கி.மு. 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவருமான ஓர் ஆரியச் சான்றோர் ; an Aryan sage, author of several Vedic hymns, said to have founded a Brähmin colony in South India, written some books on medicine. and composed a Tamil grammar.

   2. அகத்திய நாண்மீன் ; the star Canopus, of which Agastya is the regent.

     ‘அகத்தியனென்னு மீன் உயர்ந்த தன்னிடத்தைக் கடந்து மிதுனத்தைப் பொருந்த’ (பரிபா. 11;11. உரை);;

     [Skt ga = செல். ‘அ’ எதிர்மறை முன்னொட்டு. Skt. aga = அசையாதது, மலை. Skt. As = எறி. அகஸ்திய (Agastya); = மலையை எறிந்தவன் அல்லது அடக்கியவன்.]

   ஆரியர் இந்தியாவிற்குட் புகுந்தபின், சில நூற்றாண்டுகளாக விந்த(விந்திய); மலையைக் கடந்து தெற்கே வர இயலவில்லை. முதன் முதலாக அதைக் கடந்தவர் அகத்தியர். அதனால், அவருக்கு விந்தமலையை வென்றவர் என்றும், விந்தமலையின் செருக்கை அடக்கியவரென்றும் புகழ்ச்சி எழுந்தது. இக் காலத்தும், எவரெசிற்று (Everest); முடியேறிய வரை அக் குவட்டை வென்றவர் (conqueror of the Everest); என்று கூறுதல் காண்க;   விந்தமலையை அடக்கியதனால் அகத்தியர் அப்பெயர் பெற்றார் என்னும் வடநூலார் கூற்று, பொருத்தமுடையதாய்த் தோன்றவில்லை. ஏனெனின், விந்தமலையைக் கடக்கு முன்னரும் அவருக்கு அப்பெயர் இருந்ததாகத் தெரிகின்றது;   அகத்தியன் என்னும் பெயரை யொத்த Augustus, Augustainus, Augustanus, Augustulus முதலிய இலத்தீன் பெயர்களும், Augusti என்னும் செருமானியப் பெயரும், Augustine என்னும் ஆங்கிலப் பெயரும் மேலைநாடுகளில் மக்கள் இயற்பெயர்களாகத் தொன்று தொட்டு வழங்கி வந்திருக்கின்றன. அவற்றிற்கெல்லாம் மூலமாகத் தோன்றும் augustus என்னும் இலத்தீன் சொல்லிற்கு, consecrated (திருப்படையல் செய்யப்பட்ட);, venerable (வணங்கப்படத்தக்க); என்று பொருள் சொல்லப்படுகின்றது;   இலத்தினை யடுத்து வழங்கும் கிரேக்கத்திற்கு இனமான ஒரு மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட ஒர் இனத்தாரின் வழிவந்த வேத ஆரியக் குரவர் ஒருவர்க்கு அம் மேலைப் பெயர் இடப்பட்டதென்று கொள்வது, இயற்கைக்கு முற்றும் ஒத்ததே. ஆகவே, அகத்தியன் என்னும் ஆரியச் சொல்லிற்கு, வணங்கப்படத்தக்கவன் என்று பொருள் கூறுவதே பொருத்தமாம்;   இலக்கண நூல் முதற்கண் இயற்றமிழ்க்கே தோன்றியிருத்தல்கூடும். அதுவும் எழுத்திலக்கணம், சொல்லிலக்கணம், சொற்றொடரிலக்கணம், செய்யுளிலக்கணம், பொருளிலக்கணம் என்னும் ஐந்நிலைப்பட்டிருத்தல் வேண்டும். அதன்பின் இசையிலக்கணமும் நாடகவிலக்கணமும் முன்பின்னாக நெடுங்காலங் கடந்து தோன்றியிருக்கும். இறுதியில் இயல் இசை நாடகம் என்னும் மூன்றன் இலக்கணமும் ஒரே தொகுதியாகச் சேர்க்கப்பட்டிருக்கும். இத்தகைய முத்தமிழ் இலக்கண நூலொன்றை, தமிழனே. எத்துணைப் பேரறிஞனாயினும், தனிப்பட ஒரேயடியில் தோற்றியிருத்தல் இம்மியும் இயலாது. அங்ஙனமிருப்பவும், ஒர் ஆரியன் வடநாட்டினின்று வந்தவுடன் முத்தமிழ் இலக்கண முதனுாலை இயற்றினான் என்றல், ‘நரிமா அரிமாக் குருளை யீன்றது’ என்பது போன்ற செய்தியே;   அகத்தியன் என்னும் சொல் ஆரியமாயினும், அகத்தியத்தின் பெருமையும் தமிழியன்மையும் நோக்கி, இங்குத் தமிழ்ச் சொற்றொகுதியொடு சேர்க்கப்பட்டது;

அகத்தியம்

அகத்தியம் agattiyam, பெ. (n.)

   தோரா. கி.மு. 12ஆம் நூற்றாண்டில், அகத்திய முனிவரால் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் மாபிண்டம் என்னும் முத்தமிழிலக்கணச் சார்புநூல் ; a poetic work of grammar by sage Agastya, dealing with the three conventional classes of Tamil literature, and based upon earlier Tamil treatises, ascribed to circa 12th century B.C.

 அகத்தியம் agattiyam, பெ.(n.)

   மிகத் தேவை (அடிப்படை);யானது (அத்தியாவசியம்);; that which is indispensable, essential.

மறுவ. கட்டாயம்

     [அகம்+அகத்து-அகத்தியம்]

அகத்தியர்

 அகத்தியர் agattiyar, பெ. (n.)

அகத்தியன் பார்க்க ;see agattiyan.

அகத்தியர் குழம்பு

 அகத்தியர் குழம்பு agattiyarguḻmbu, பெ. (n.)

   பெருங்காயம், இந்துப்பு, இதள் (ரசம்);, வெண்காரம், மனோசிலை, அரிதாரம், நேர்வாளம், ஓமம், கருஞ்சீரகம் என்னுஞ் சரக்குகளைச் சேர்த்து அகத்தியர் செய்ததாகச் சொல்லப்படும் பெயர்பெற்ற நலக்கழிச்சல் மருந்து; a famous cathartic medicinal compound, ascribed to Agastya, the ingredients being asafoetida, rock salt, mercury, borax, realgar, yellow orpiment, true croton, bishop’s weed and black cumin.

     [Skt Agastya → த. அகத்தியன், அகத்தியர்.]

அகத்தியர் தேவாரத்திரட்டு

அகத்தியர் தேவாரத்திரட்டு agattiyartēvārattiraṭṭu, பெ. (n.)

   அகத்தியர் பெயரால் வழங்கும் 25 தேவாரப் பதிகத் தொகுதி ; a collection of 25 hymns from the {Tāvaram,} erroneously attributed to sage Agastya.

     [அகத்தியர் + தேவாரம் + திரட்டு.]

அகத்தியல்

 அகத்தியல் agattiyal, பெ.(n.)

   மனநிலை; disposition of the mind.

     “அகத்து இயல் முகத்துக் காட்ட”.

     [அகம்+அகத்து+இயல்]

அகத்தியா

அகத்தியா agattiyā, பெ. (n.)

   1. அளந்தறியக் கூடா ஆழம்; unfathomable abyss.

   2. கடல்; ocean.

அகத்தியான்பள்ளி

அகத்தியான்பள்ளி agattiyāṉpaḷḷi, பெ. (n.)

   திருமறைக்காட்டிற்கு அருகிலுள்ள ஒரு திருநகர் (தேவா. 2.212); ; a shrine near Tirumaraikkadu {}.

     [அகத்தியன் → அகத்தியான். பள்ளி = தவநிலையம்.]

அகத்திருத்துவம்

அகத்திருத்துவம் agattiruttuvam, பெ. (n.)

   செயலின்றி நிற்குங் கடவுட்டன்மை (வேதா. சூ. 47.);; divine attribute of not being agent.

     [Skt. a-kartrtuva → த. அகத்திருத்துவம்.]

அகத்திருள்

அகத்திருள் agattiruḷ, பெ. (n.)

   அறியாமை; ignorance said to be the darkness of mind

     “அகத்திருளும் நிறைகங்குல் புறத்திருளும்” (பெரிய. 1338);.

     [அகம்+அத்து+இன்+அள்]

அகத்தீசுரப்புல்

 அகத்தீசுரப்புல் agattīcurappul, பெ. (n.)

அகத்தீசரறுகு ;see {agattišar-arugu.}

     [Skt. agastya + {išvara} + த. புல் – அகஸ்தீச்வரப்புல் → அகத்தீசுவரப்புல் → அகத்திசுரப்புல்.]

அகத்தீடு

அகத்தீடு agattīṭu, பெ. (n.)

   1. எண்ணம்; thought, idea.

     “அகத்தீடு முற்றும் பிரணவமாகப் பிறங்கி” (கச்சி, வண்டு. 352);.

   2. கையால் உள்ளணைக்கை (அகநா. 26;17, உரை); ; embrace.

     [அகத்து + இடு – அகத்திடு. இடு → ஈடு.]

அகத்துக் கூன்

அகத்துக் கூன் Agattu-kuy, பெ.(n.)

   உவளக (அந்தப்புரத்து);க் கூனி; disabled servant maid in the royal quarters of the queen.

     “புறத்து அமைச்சின் நன்றகத்துக் கூன்” (பழ. 295);.

     [அகம்+கூன்]

அகத்துண்டம்

அகத்துண்டம் agattuṇṭam, பெ.(n.)

   குறைப்படும் தொகை; deficit amount.

     “குடிமகன் ஊணொபாதி படகிடந்த சிகை அகத் துண்டம் காட்டாதொழிய” (SII, viii.25.);

     [அகம்+துண்டம்.]

அகத்துமாத்தாக

 அகத்துமாத்தாக agattumāttāga, வி.அ. (adv.)

   முன்னேற்பாடு இல்லாமல், தற்செயலாக; accidentally, by chance, unexpectedly.

     “தெருவில் அகத்துமாத்தாக நண்பரைச் சந்தித்தேன்”.

     [அகத்துமாத்து + ஆக.]

     [Skt. akasmat → த. அகத்துமாத்து.]

அகத்துரைப்போன்

அகத்துரைப்போன் agatturaippōṉ, பெ. (n.)

   1. மனச்சான்று ; the inner voice, the voice of conscience (இராட்.);.

   2. கடவுள் ; God.

     [அகத்து + உரைப்போன். அகம் = மனம்.]

அகத்துறுப்பு

அகத்துறுப்பு agattuṟuppu, பெ. (n.)

   1. அன்பு, அருள், இரக்கம் முதலிய மனப்பண்பு ; qualities of the heart, as love, grace, mercy.

     “அகத் துறுப் பன்பி லவர்க்கு” (குறள், 79);.

   2. உடலின் உள்ளுறுப்பு ; internal organs of the body.

     [அகத்து + உறுப்பு.]

அகத்துழிஞை

 அகத்துழிஞை agattuḻiñai, பெ. (n.)

     [அகத்து + உழிஞை.]

அகத்துழிஞையான்

 அகத்துழிஞையான் agattuḻiñaiyāṉ, பெ. (n.)

     [அகத்துழிஞையான் = அகத்தோன்.]

அகத்தூண்

அகத்தூண் agattūṇ, பெ.(n.)

   வண்டியின் ஒருறுப்பு; part of cart.

     “அகத்தூண் அமைதி”. (பெருங் 53: 54);

     [P]

அகத்தெழு வளியிசை

 அகத்தெழு வளியிசை Agatteluvaliyisai, பெ.(n.)

   அடிவயிற்றிலிருந்து உந்தப்படுகின்றகாற்றினால் எழும் ஓசை; the distinct sound produced by rising air from the navel.

     [அகம்+அத்து+எழு+வளி+ஓசை]

அகத்தெழுவளி

அகத்தெழுவளி agatteḻuvaṉi, பெ. (n.)

   அடிவயிற்றில் (மூலாதாரத்தில்); எழுகின்ற காற்று; the air rising from the navel.

     “அகத்து எழு வளி இசை அரில்தப நாடி” (தொல்.3:20);.

     [அகம்+அத்து+எழு+வளி]

அகத்தை

 அகத்தை agattai, பெ. (n.)

   தாய் ; mother

அகத்தொண்டன்

அகத்தொண்டன் agattoṇṭaṉ, பெ. (n.)

   வீட்டு வேலைக்காரன் ; domestic servant.

     ‘ஒருவர் மனையிற் பணிசெய்யும் அகத்தொண்டர்க்குளதாகிய உரிமை’ (சி.போ.பா. 8;1,பக்.429);.

     [அகம் + தொண்டன். அகம் = வீடு.]

அகத்தோன்

 அகத்தோன் agattōṉ, பெ. (n.)

அகத்துழிஞையான் பார்க்க ;see {agatt(u);-uliñaiyán.}

அகத்தோன் செல்வம்

அகத்தோன் செல்வம் akattōṉcelvam, பெ. (n.)

   மதிலின் உள்ளிடத்தில் உள்ளவனது செல்வ மிகுதி; wealth in the fort of a king.

     “அகத்தோன் செல்வமும்……..புறத்தோன் அணங்கிய பக்கமும்.” (தொல்.20:10);.

     [அகம்+அத்து+(ஆன்); ஒன்+செல்வம்]

அகத்மாத்து

 அகத்மாத்து agatmāttu,    வி.எ. (adv.) தற்செயலாய்; causelessly by chance, unexpectedly.

     “அவனை அகஸ்மாத்தாய்ச் சந்தித்தேன்” (இ.வ.);.

     [Skt. a-kasmat → த. அகத்மாத்து.]

அகநகர்

அகநகர் aganagar, பெ. (n.)

   1. கோட்டைக்குள் அடங்கிய நகரப்பகுதி (சிலப். 14; 69, அடியார்க். உரை); ; interior of a fortified town.

   2. உவளகம் (அந்தப்புரம்); ; women’s appartments in a palace.

     “அகநகர் கைவிட்டு'” (மணிமே. 23;57);.

     [அகம் + நகர். அகம் = உள்.]

அகநகர்ச்சுற்றம்

அகநகர்ச்சுற்றம் akanakarccuṟṟam, பெ. (n.)

   அரசனின் உடன் சுற்றம் (பரிசனங்கள்);; official staff of the king.

     “அரசும் உரிமையும் அகநகர்ச் சுற்றமும் ஒரு மதில் எல்லைக்காத்தல் நின் கடன்” (மணி.25:122:23);.

     [அகம்+நகர்+சுற்றம்]

அகநகை

அகநகை aganagai, பெ. (n.)

   இகழ்ச்சிநகை (சிலப். 16;164, அடியார்க். உரை);; derisive laughter.

     [அகம் + நகை.]

அகநகை-த்தல்

அகநகை-த்தல் aganagaittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   இகழ்ச்சியாகச் சிரித்தல்; to laugh in derision.

     “அகநகைத் துரைத்து” (சிலப். 16;164);.

அகநாடகம்

அகநாடகம் aganāṭagam, பெ. (n.)

   மனத்திலுள்ள காதலைப் புலப்படுத்தும் நளிநயங்களோடு கூடிய நடம் (சிலப். 3;14, அடியார்க். உரை);; dance accompanied by gestures expressing love.

     [அகம் + நாடகம்.]

அகநாடகவுரு

அகநாடகவுரு aganāṭagavuru, பெ. (n.)

   அக நாடகத்திற்குரிய பாடல்கள் (சிலப். 3 ;14, அரும். உரை); ; various kinds of musical compositions used in performing dances expressing love.

     [அகம் + நாடகம் + உரு.]

அகநாடு

அகநாடு aganāṭu, பெ. (n.)

   1. உள் நாடு ; interior of a territory.

     “அகநாடு புக்கு” (மதுரைக். 149);.

   2. மருதநிலம் ; agricultural tract.

     “புறஞ்சிறை மாக்கட் கறங்குறித் தகத்தோர்

புய்த்தெறி கரும்பின் விடுகழை தாமரைப்

பூம்போது சிதைய வீழ்ந்தெனக் கூத்தர்

ஆடுகளங் கடுக்கும் அகநாட்டையே” (புறநா. 28;11-14);.

     [அகம் + நாடு.]

அகநானூறு

அகநானூறு aganāṉūṟu, பெ. (n.)

   கடைக் கழகக்காலப் புலவர் ஏறத்தாழ நூற்றறு பதின்மர் அகப்பொருள்பற்றிப் பாடியனவும், உருத்திரசன்மரால் தொகுக்கப்பட்டனவுமான நானுாறு அகவற்பாத் திரட்டு ; Ananthology of 400 love-lyrics in agaval metre by about 160 poets of the period of the 3rd Tamil Academy, compiled by {Uruttirašanman.}

     [அகம் + நானூறு.]

அகநாழிகை

அகநாழிகை aganāḻigai, பெ. (n.)

   தெய்வப் படிமையிருக்கும் கருவறை, உண்ணாழிகை; sanctuary of a South Indian (Hindu); temple.

     ‘அகநாழிகைப் பணிசெய்வார்’ (T.A.S. i, 6);.

ம. அகநாழிக

     [அகம் + நாழிகை.]

நாழிகை பார்க்க ;see naligai.

அகநிலை

அகநிலை aganilai, பெ. (n.)

   1. உள்ளிடம் ; inside (W.);.

   2. மனத்துள்ளிருக்குங் கடவுள் (இராட்.);; God as residing in one’s mind (R.);.

   3. நகர் ; town.

     “அரைசுமேம் படிஇய வக நிலை” (சிலப் 5 ;161);;

   4. குல(சாதி);ப் பெரும் பண்வகை நான்கனுள் ஒன்று; one of the four primary melody-types.

     [அகம் + நிலை.]

 அகநிலை aganilai, பெ. (n.)

பரதக்கலையில் கையாளும் ஒரு முத்திரை நிலை.

 An hand posture in Bharathanatyam.

     [அகம்+நிலை]

அகநிலைக் கொச்சகம்

 அகநிலைக் கொச்சகம் aganilaiggoccagam, பெ. (n.)

     [அகநிலை + கொச்சகம்.]

அகநிலைக் கோவை

அகநிலைக் கோவை akanilaikāvai, பெ. (n.)

   அக ஒழுக்கம் பற்றிய தொகுப்பு; a collection of works on love themes.

     “ஐந்திணை தழுவிய அகநிலைக்கோவை” (ப.பா.341.);

     [அகம்+நிலை+கோவை]

அகநிலைக்குறிஞ்சி

அகநிலைக்குறிஞ்சி aganilaigguṟiñji, பெ. (n.)

   குறிஞ்சிப் பண்ணின் ஒருவகை; a primary melody-type, a variety of {kuriñji.}

     “தென்னுறு பாலை குறிஞ்சியே மருதஞ்

செவ்வழி யென்னுநா னிலத்திற்

பின்னகம் புறமே யருகியல் மற்றைப்

   பெருகிய லுறழவெண் ணிரண்டாய்” (கந்தபு. அசுர, சூரன் அரசிருக். 23);;     [அகம் + நிலை + குறிஞ்சி.]

அகநிலைச் செய்யுட்டாழிசை

அகநிலைச் செய்யுட்டாழிசை aganilaisseyyuṭṭāḻisai, பெ. (n.)

கடவுளை வண்ணித்துப் புகழாததும், அகப்பொருள்பற்றிய ஒத்தாழிசைக் கலிப்பாவிற்குரியதுமான செய்யுளுறுப்பு ;{tališai,}

 which does not deal with the greatness of God, being a member of an {ottališaikkali *erse} which deals only with an amatory theme.

     [அகநிலை + செய்யுள் + தாழிசை.]

     ‘வண்ணித்துப்புகழ்தலின் வண்ணக மெனப் படும். என்னை? தரவினானே தெய்வத்தினை முன்னிலையாகத் தந்து நிறீஇப் பின்னரத் தெய்வத்தினைத் தாழிசையானே வண்ணித்துப் புகழ்தலின், அப்பெயர் பெற்றதாகலின். ஒழிந்த உறுப்பான் வண்ணிப்பினுஞ் சிறந்த உறுப்பு இதுவென்க’ (தொல்.பொருள்.செய். 140, பேரா. உரை);;

அகநிலைச் செவ்வழி

 அகநிலைச் செவ்வழி aganilaiccevvaḻi, பெ. (n.)

   செவ்வழிப் பண்ணின் ஒருவகை; a primary melody-type, a variety of {Seyvali.}

     [அகநிலை + செவ்வழி.]

செவ்வழி பார்க்க ;see {}

அகநிலைப் பசாசம்

 அகநிலைப் பசாசம் aganilaippacācam, பெ. (n.)

     [அகநிலை + பசாசம்.]

அகநிலைப்பாலை

 அகநிலைப்பாலை aganilaippālai, பெ. (n.)

     [அகநிலை + பாலை.]

அகநிலைமருதம்

அகநிலைமருதம் aganilaimarudam, பெ. (n.)

     “அகநிலை மருதமும் புறநிலை மருதமும்” (சிலப். 8;39);.

அகநிலையொத்தாழிசை

அகநிலையொத்தாழிசை aganilaiyottāḻisai, பெ. (n.)

   1. கலிப்பா வகை (பாப்பா. 91); ;   2. கலிப்பாவுறுப்பு வகை (தொல், பொருள். செய். 138, பேரா. உரை);; an element of kali verse.

     [அகநிலை + ஒத்தாழிசை.]

அகனம்

 அகனம் agaṉam, பெ. (n.)

   வேங்கைமரம் (பச்.மூ.); ; Indian kino tree.

ஒ.நோ ; அசனம்.

அகனாதி

அகனாதி agaṉāti, பெ. (n.)

   1. கொடுவேலி (சித்.அக.); ; Ceylon leadwort.

   2. இதள் (வை.மூ.); ; quick Silver.

ஒ.நோ. ; அசுனாதி.

அகனும் புறனும்

அகனும் புறனும் akaṉumpuṟaṉum, பெ. (n.)

   உள்ளும் புறமும்; in and out

     “இழுக்கா யாப்பின் அகனும் புறனும்” (சில.8);.

     [அகம்-அகன்+உம்+புறன்+உம்]

அகனெடுங்கலம்

 அகனெடுங்கலம் agaṉeḍuṅgalam, பெ.(n.)

   ஒருவகைப் பெரும் ஏனம் (அண்டா);; large vessel, Cauldron.

     [அகல்+நெடு→ நெடும்+கலம்]

அகனைந்திணை

அகனைந்திணை agaṉaindiṇai, பெ. (n.)

   குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்திணைக்குமுரிய இருதலைக் காதல் ; the five forms of reciprocated love related to the five natural regions of the Tamil country.

     “மக்கள் நுதலிய அகனைந் திணையும்” (தொல். பொருள். அகத். 54);.

     [அகம் → அகன் + ஐந்திணை.]

அகன்

அகன் agaṉ, பெ. (n.)

   1. உள் ; inside.

   2. மனம் ; mind.

   3. காதல் ; love.

     [அகம் → அகன் (போலி);.]

 அகன் agaṉ, பெ. (n.)

   கணவன் (மலை.); ; husband.

 அகன் agaṉ, பெ.எ. (adj.)

   அகன்ற ; broad.

     “சிலம்பாற் றகன்றலை” (சிலப். 11;108);.

     “அகன்பணை” (திருக்கோ. 11);, “அகன் மணி” (திவா.);.

     [அகல் → அகன்.]

அகன்கூனை

அகன்கூனை akaṉāṉai, பெ. (n.)

   கருப்பஞ் சாறு காய்ச்சும் கொப்பரை; abroad vessel.

     “எந்திரத்து ஒழுகு சாறு அகன் கூனையின் ஊழ்முறைமுழுசி”(சிட் 15:48);.

     [P]

அகன்னம்

 அகன்னம் agaṉṉam, பெ. (n.)

   செவிடு; deafness (சா.அக.);.

அகன்னியகனி

 அகன்னியகனி agaṉṉiyagaṉi, வி.அ. (adv.)

   நாடொறும்; daily, from day to day.

     [Skt. ahani + ahani → த. அகன்னியகனி.]

அகன்னியசனி

 அகன்னியசனி agaṉṉiyasaṉi, பெ. (n.)

   நாளுக்கு நாள்; from day to day (சா.அக.);.

அகன்பதி

அகன்பதி akaṉpati, பெ. (n.)

   பேரூர்; a big town.

     “பங்கியப் பாசடைத் தடம் சூழ்

பழனநாட்டு அகன் பதிகள் பலவும் நண்ணி.” (பெரிய.2357.);.

     [அகல்+பதி]

அகன்மகம்

அகன்மகம் agaṉmagam, பெ. (n.)

   செயப்படு பொருள் குன்றிய வினை (பி.வி. 35, உரை.);; intransitive verb.

     [Skt. a-karmaka → த. அகன்மகம்.]

அகன்மணி

அகன்மணி akaṉmaṇi, பெ. (n.)

   மாணிக்கம்; diamond.

     “அரதனம் சலாகை அகன்மணி.” (நிக.தி.6-7);.

     [அகல்+மணி]

அகன்றான்

அகன்றான் akaṉṟāṉ, பெ. (n.)

   நீங்கினவன்; sage.

     “மூப்பின் கண்நன்மைக்கு அகன்றானும்” (திரி.17:1);

     [அகன்று-அகன்றான்]

அகன்றார்

அகன்றார் akaṉṟār, பெ. (n.)

   செல்வசெழிப்பு உடையவர்; well to do people.

     “அழுக்கற்று அகன்றாரும் இல்லை” (குறள். 17:10.);.

     [அகல்+அகன்றார்]

அகன்றிசினோர்

அகன்றிசினோர் akaṉṟiciṉōr, பெ. (n.)

   அன்புடையவர்; beloved people.

     “கள்வர் போல்வர் நீ அகன்றிசினோர்க்கே” (குறு.127:6);.

     [அகன்று+இசின்+(ஆர்);ஓர்]

அகன்றிசைப்பு

அகன்றிசைப்பு agaṉṟisaippu, பெ. (n.)

   செய்யுளில் உரைநடை கலக்கும் யாப்புக் குற்றம் ; defect in poetical composition caused by the introduction of prose in verse.

     “கானக நாடன் கருங்கோன் பெருமலைமே

லானை கிடந்தாற்போ லாய பெருங்கற்க

டாமே கிடந்தன கொல்லோ வவையேற்றிப்

பெற்றிப் பிறக்கி வைத்தா ருளர் கொல்லோ”

     ‘இது முன் செய்யுளாய் வந்து இறுதி பரவிக் கட்டுரையாய் வந்தமையால், அகன்றிசைப் பென்னுங் குற்றமாயிற்று” (யாப். வி. 35, உரை, பக். 404);.

     [அகன்று + இசைப்பு.]

யாப்பு முறையினின்று அகன்று இசைப்பது அகன்றிசைப்பு எனப்பட்டது.

அகன்றிடல்

அகன்றிடல் akaṉṟiṭal, தொ.பெ. (vbi.n.)

   நீங்குதல்; relief.

     “வயிறு உற்ற அடு சூலை மறப்பிணி தான் அந்நின்ற நிலைக்கண் அகன்றிடலும்” (பெரிய.1341.);.

     [அகன்று+இடல்]

அகன்றிலர்

அகன்றிலர் akaṉṟilar, பெ. (n.)

   நெருங்கினர்; close friendly people

     “அழுத்தினர் அழுந்திலர் அகன்றிலர் அகன்றார்.” (யுத்.12:16.);

     [அகன்று+இல்+ஆர்]

அகன்றில்

அகன்றில் agaṉṟil, பெ. (n.)

   ஆண் அன்றில்; male Greek-partridge.

     “குறுங்கான் அகன்றில்” (ஐங்குறு. 381. பா.வே.);.

     [மகன்றில் → அகன்றில்.]

     “மகன்றில் பார்க்க ;see maganril.

அகபார்

 அகபார் agapār, பெ. (n.)

   செய்தி (P.T.L.);; news.

     [U. akhbar → த. அகபார்.]

அகபாலம்

 அகபாலம் agapālam, பெ. (n.)

   தலையில்லாத அழகற்ற தோற்றம்; a monster with partial or complete absence of cranjum-Acranium.

அகப் புறச் சமயம்

 அகப் புறச் சமயம் agappuṟaccamayam, பெ. (n.)

 six religious sects not intimately related to orthodox {Saivism.}.

     [அகப்புறம் + சமயம்.]

அகப்பகை

அகப்பகை agappagai, பெ. (n.)

   உட்பகை; ஒரு குடும்பம், இனம், வகுப்பு, அமைப்பகம், நிறுவனம், நாடு முதலியவற்றுள் ஒன்றற்குள்ளேயே தோன்றி, ஒற்றுமையைக் குலைத்துப் பகைவர்க்குக் காட்டிக்கொடுக்கும் பகை, புறப் பகைக்கு எதிர் ; enmity within a family group of relatives, community, class, organization, establishment or country, leading to disunity and destruction.

     “புறப்பகை கோடியின் மிக்குறினு மஞ்சார்

அகப்பகை யொன்றஞ்சிக் காப்ப” (நீதிநெறி. 55);.

ம. அகப்பக

     [அகம் + பகை.]

அகப்பக்கம்

அகப்பக்கம் agappaggam, பெ. (n.)

   2. உட்பக்கம்; inside.

     [அகம் + பக்கம்.]

அகப்படச் சூத்திரி-த்தல்

அகப்படச் சூத்திரி-த்தல் agappaḍaccūttirittal,    4 செ.கு.வி. (v.i.)

   பொருள் புலப்படாவாறு உள்ளடங்க நூற்பா இயற்றுதல் ; to versify grammatical rules rendering the meaning obscure.

     ‘குறித்த பொருள் விளங்காமையின் அகப்படச் சூத்திரியாராகலானும்’ (தொல். சொல். கிளவி. 35, சேனா. உரை);;

 Skt. Sutra → த. சூத்திரம் → சூத்திரி. அகப்பட + சூத்திரி.]

அகப்படு-தல்

அகப்படு-தல் agappaḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   1. உட்படுதல், உள்ளடங்குதல் ; to be included.

     “சத்தவிருடிக் கணமகப்பட…… முனித்தலை வரும்” (உத்தரரா. வரையெடு. 69);;

   2. குறைதல் ; to be diminished, shortened. (தொல். பொருள். செய்.134, பேரா. உரை);.

   3. சிக்கிக் கொள்ளுதல் ; to be entangled.

மான் வலைக்குள் அகப்பட்டுக்கொண்டது (உ.வ.);.

     ‘அகப்பட்டுக் கொள்வேன் என்றா கள்வன் களவெடுக்கிறது’ (பழ.);.

   4. பிடிபடுதல் ; to be caught.

     “கொண்டல் வண்ண னகப்படா னெவர்க்கும்” (பாரத. கிருட். 174);.

வேட்டைக்குப் போனால் முயல் அகப்படுமா? (உ.வ.);.

   5. வசப்படுதல் ; to be brought under one’s influence, to become subordinate.

   ஊரெல்லாம் அவனுக்கு அகப்பட்டிருக்கிறது (உ.வ.);;   6. கிடைத்தல் ; to be obtained.

     “யாழுடை யார்மணங் காணணங் காய்வந் தகப்பட்டதே” (திருக்கோ, 7);;

     ‘அகப்பட்டதைச் சுருட்டடா கம்பளியப்பா (பழ.);.

ம. அகப்பெடுக; க., தெ. அகபடு.

அகப்படுத்து-தல்

அகப்படுத்து-தல் agappaḍuddudal,    2 பி.வி. (v. caus.)

   1. சிக்கவைத்தல் ; to entrap.

     “பரதவர் வலையி னகப்படுத் தரிய” ‘(பாரத.குரு. 105);.

   2. பிடித்தல் ; to catch hold of.

     “மற்றவன் பெருமுரண் முருக்கிக். கையகப்படுத் துய்ப்பனால்” (கந்தபு. மகேந். வச்சிர. 6);;

அகப்படை

அகப்படை agappaḍai, பெ. (n.)

   நம்பகமான அணுக்கத்தொண்டர் ; trustworthy attendants.

     ‘அகப்படை யென்று மிடுக்கரா யிருப்பாரை’ (ஈடு, 10 ; 1. பிர.);;

     [அகம் + படை.]

 அகப்படை akappaṭai, பெ. (n.)

   கமுக்க (அந்தரங்க);ப் படை; confidential military force

     “உறுதியில் பொரு தமது அகப்படை”(வி.பா.28:47.);

     [அகம்+படை]

அகப்பட்டி

அகப்பட்டி agappaṭṭi, பெ. (n.)

   அகக் கட்டுப்பாடு இல்லாதவன்-ள் ; an irresponsible person.

     “அகப்பட்டி யாவாரைக் காணின்” (குறள், 1074);;

     [அகம் + பட்டி.]

அகப்பணி

அகப்பணி agappaṇi, பெ. (n.)

   1. மறைமுகமான தொண்டு ; confidential service.

     “அங்கு அகப்பணி செய்வர் விண்ணோர்” (திவ். திருவாய். 10.2;6);.

   2. வீட்டுவேலை ; domestic work.

     [அகம் + பணி.]

அகப்பத்தியம்

அகப்பத்தியம் agappattiyam, பெ. (n.)

   1. மருந்து உண்ணுங்காலத்து உட்கொள்ளும் வரம்பிட்ட உணவு, புறப்பத்தியம் அல்லது மறு பத்தியம் என்பதற்கு எதிர் ; diet or regimen observed during the course of taking medicine.

   2. மருத்துவக் காலத்திற் புணர்ச்சியின்பந்தவிர்கை ; abstention from sexual intercourse, while under medical treatment.

     [அகம் + பத்தியம்.]

பத்தியம் பார்க்க ;see pattiyam.

அகப்பத்து

 அகப்பத்து agappattu, பெ.(n.)

   ஊரையொட்டியுள்ள வயல்; paddyfield adjacent to village.

     [அகம்+பற்று-அகப்பற்று-அகப்பத்து (கொ.வ.);]

அகப்பரம்

 அகப்பரம் agapparam, பெ. (n.)

   திண்ணை ; pial, a raised platform under the varandah used for sitting.

     [ஒருகா. அகம் = வீடு. புறம் = வெளி. அகப்புறம் → அகப்பரம் = வீட்டு வெளித் திண்ணை. இனி, அகம் = உள்; பரம் = மேல், மேலிடம், மேடு, திண்ணை, அகப்பரம் = உள் திண்ணை என்றுமாம்.]

அகப்பரிவாரம்

அகப்பரிவாரம் agapparivāram, பெ. (n.)

   1. வீட்டு வேலைக்காரர் (சீவக. 292, நச். உரை); ; domestic servants.

   2. அரண்மனைப் பணியாளர் ;ம. அகப்பரிவாரம்

     [அகம் + பரிவாரம்.]

பரிவாரம் பார்க்க ;see parivaram.

அகப்பற்று

அகப்பற்று agappaṟṟu, பெ. (n.)

   1. தன் உடம்பின்மீதுள்ள பற்றெண்ணம், புறப்பற்று என்பதற்கு எதிர் (குறள், 345, பரிமே. உரை); ; attachment to self, self-love, opp. to purapparru.

     “போமே யகப்பற்றென் றுந்தீபற” (அவிரோ. 14);.

   2. சிற்றுார்ப் பங்காளிகள் அவ்வப்போது பகிர்ந்து பயன்படுத்தும் ஊர் நிலம்

   3. தொடக்கந்தொட்டுக் குளப்பாசனமுள்ள நிலம் (நெல்லை); ; land which has been irrigated by a tank since the very beginning (Tn.);.

ம. அகப்பற்று

     [அகம் + பற்று.]

அகப்பா

அகப்பா agappā, பெ. (n.)

   1. கோட்டை மதில் ; fortified wall, wall of a fort or fortress.

     “அகப்பா எறிந்த அருந்திறல்” (சிலப். 28;144);.

   2. மதிலுண்மேடை (பிங்.); ; mound within inner fortifications.

   3. அகழி (பிங்.); ; ditch around a fort.

ம. அகப்ப

     [உகப்பு → அகப்பு → அகப்பா.]

அகப்பு பார்க்க ;see agappu.

அகப்பாகுடி

 அகப்பாகுடி akappākuṭi, பெ. (n.)

   சேர நாட்டு உம்பர்க்காட்டுப்பகுதியில் மலையிடையிருந்த குறுநாட்டுப் பகுதி; a region in umbarkadu area in the western range forest of Kerala.

மறுவட அகப்பா.க.பாகுடி.

     [அகழ்ப்பு (அகழி);- அகழ்ப்பா- அகழிசூழ்ந்த கோட்டை(அகழ்ப்பா-குடி- அகழிப்பாகுடி (அகழ்ப்பா நகர் குடியிருப்பு); அகழ்ப்பா என்னும் சொல்லே சிந்து வெளியில் அரப்பா எனத் திரிந்திருக்கக்கூடும்.]

அகப்பாடு

அகப்பாடு agappāṭu, பெ. (n.)

   1. அகப்படுதல் ; being caught or obtained.

   2. உண்ணிகழ்ச்சி ; internal occurrence.

   3. நெருங்கிருக்கை ; being close.

     “அகப்பாட் டண்மையன்” (பெருங். மகத. 18;20);.

   4. புதுக் கண்டுபிடிப்பு (புதுவை); ; discovery (Pond.);.

     [அகப்படு → அகப்பாடு.]

அகப்பாட்டு

அகப்பாட்டு agappāṭṭu, பெ. (n.)

   1. அகப்பொருட் செய்யுள், புறப்பாட்டு என்பதற்கு எதிர் ; love-poem, opp. to purappattu.

   2. அகநானூறு (கலித். 37. நச். உரை); ; an anthology of love-lyrics.

     [அகம் + பாட்டு.]

அகநானூறு பார்க்க ;see {aga-naniiru.}

அகப்பாட்டுறுப்பு

அகப்பாட்டுறுப்பு agappāṭṭuṟuppu, பெ. (n.)

   அகப்பொருளின் அல்லது அகத்திணையின் பன்னிரு கூறு ; the twelve members of agapporul or agattinai.

   1. இயல் பகத்திணை;

 method of defining a thing or showing its nature, quality, etc.

   2. வகையத்திணை;

 amplification or detailing at large what has been said briefly.

   3. பொதுவகத்திணை; the rule for summing up or recapitulating.

   4. சிறப்பகத்திணை;

 the rule for discriminating or explaining the difference between things.

   5. உவமவகத்திணை; the rule for illustrating a subject by metaphors, comparisons, etc.

   6. புறநிலையகத்திணை; the rule for exemplifying a subject through examples.

   7. எதிர்நிலையகத்திணை; the rule for elucidating a point through its opposite.

   8. காரண (அ); கருவியகத்திணை; revealing the condition or quality of a thing by its origin.

   9. காரியவகத்திணை; proving a thing by its effects.

   10. காரகவகத்திணை;

 the rule for relating an action, event, etc., to which belong the following;

 who.

 what.

 by what helps.

 why.

 where.

 when.

 what manner or how.

   11. முன்னவையகத்திணை;  the rule for foretelling events from signs.

   12. பின்னவையகத்திணை;  the rule for foretelling the consequences of any action (p.); – (W.);.

     “அகத்திணை யியல்பே யறைபடும் வகையே

பொதுச்சிறப் புவமை புறநிலை யெதிர் நிலை

கருவி காரியங் காரக முன்னவை

   பின்னவை யெனவாம் பிரிவீ ராறே” (தொன். வி. பொருள். 2; 2);;     “அவற்றுள், இயல்புரைத் தொப்ப வியம்புத லியல்பே” (க்ஷ 3);.

     “தொகைவிரித் துரைத்தல் சொற்பொருள் வகையே” (க்ஷ 4);.

     “பொதுவெனப் பலவை யடக்கு மொன்றே

சிறப்பென வொன்றி னடங்கும் பலவே” (க்ஷ 5);.

     “உவமை யெனப்பிறி தொப்ப வுரைத்தலே” (க்ஷ 6);.

     “புறநிலை யொப்பிழி வாக்கமென மூன்றே” (க்ஷ 7);.

     “குறித்தவை காட்ட மறுத்தவை காட்டி

யெதிரில் விளக்க லெதிர்நிலை யென்ப” (க்ஷ 8);.

     “காரண நான்குங் காரிய நான்கும்

விரித்துத் தன்பொருள் விளக்க லுரித்தே” (க்ஷ 9);.

     “காரக மென்ப கருத்தா கருமங்

கருவி கருத்திடங் காலந் திறனேழே” (க்ஷ 10);.

     “முன்னவை பின்னவை முன்பின் னடந்தன

பன்னித் தன்பொருள் பயன்படப் பகர்தலே” (க்ஷ 11);.

   இந் நூற்பாக்கள், வீரமாமுனிவரின் சொந்தக் கூற்றுகளேயன்றித் தொல்காப்பியத்தையோ வேறு முன்னூலையோ தழுவியனவல்ல;   இவை கூறும் பாகுபாடு அகப்பாட்டுறுப்பென வின்சிலோ அகரமுதலியிற் கூறப்பட்டிருப்பதால், இவற்றை இங்கு மேற்கோளாகக் காட்டலாயிற்று;     ‘காரணம்’ என்பது ‘கரணம்’ என்பதன் நீட்டம். ‘காரியம்’ என்பது ‘இயம்’ என்னும் திரிப்பீறு பெற்ற அதன் திரிசொல்;

     ‘காரகம்’ என்பதைக் ‘கருமகம்’ என்று தமிழிற் குறிக்கலாம்;

     ‘காரணம்’, ‘காரியம்’ என்னும் சொற்களை முறையே, ‘கரணியம்’, ”ருமியம்’ என்றுங் குறிக்கலாம்;

   இதன் விளக்கத்தைக் கரணம் என்னும் உருப்படியிற் காண்க;
 அகப்பாட்டுறுப்பு agappāṭṭuṟuppu, பெ. (n.)

     “தினையே கைகோள் கூற்றே கேட்போர்

இடனே காலம் பயனே முன்னம்

மெய்ப்பா டெச்சம் பொருள்வகை துறையென்

றப்பா லாறிரண் டகப்பாட் டுறுப்பே” (நம்பியகப், 211);.

     [அகம் + பாட்டு + உறுப்பு.]

அகப்பாட்டுவண்ணம்

அகப்பாட்டுவண்ணம் agappāṭṭuvaṇṇam, பெ. (n.)

     “அகப்பாட்டு வண்ணம், முடியாத் தன்மையின் முடிந்ததன் மேற்றே” (தொல், பொருள். செய். 222);;

   எ-டு : “உண்கண் சிவப்ப தெவன்கொ லன்னாய்” (ஐங்குறு. 21);;     [அகம் + பாட்டு + வண்ணம்.]

அகப்பாட்டெல்லை

 அகப்பாட்டெல்லை agappāṭṭellai, பெ. (n.)

   குறித்த வரம்பைத் தன்னகத் தடக்கிக்கொள்ளும் எல்லை (தொல், பாயி. இளம். உரை); ; confining limit or boundary.

     [அகப்படு → அகப்பாடு + எல்லை.]

அகப்பு

அகப்பு agappu, பெ. (n.)

   ஆழம் (வின்.); ; depth.

     [அகழ்தல் = தோண்டுதல். அகழ் → அகழ்ப்பு → அகப்பு = தோண்டப்பட்ட அல்லது தோண்டப்படும் ஆழம்.]

அகழ்ப்பு பார்க்க ;see agalppu.

 அகப்பு agappu, பெ. (n.)

   மரப்பிளப்பிற் செலுத்தும் மரத்துண்டு, ஆப்பு (இ.வ.);; wedge (Loc.);.

     [அகைத்தல் = அடித்தல், செலுத்துதல். அகை → அகைப்பு → அகப்பு அடித்துச் செலுத்தப்படும் ஆப்பு.]

 அகப்பு agappu, பெ. (n.)

   எழுச்சி (சம்.அக.); ; height.

     [உகத்தல் = உயர்தல். உக → உகப்பு = உயர்ச்சி. “உகப்பே உயர்தல்” (தொல். சொல். உரி. 8);. உகப்பு → அகப்பு. உ → அ சொல்லாக்கத் திரிபு. ஒ.நோ.; உகை(த்தல்); → அகை(த்தல்);.]

அகப்புரை

 அகப்புரை akappurai, பெ. (n.)

தாழ்வாரம்:

 verandah.

     [அகம்+புரை]

 அகப்புரை akappurai, பெ. (n.)

   நுழை வாயிலைத்தாண்டிப் பக்கவாட்டில் அமைந்த அறை; front room adjacent to the entrance.

     [அக்க(ம்);+சாலை]

அகப்புறக் கைக்கிளை

அகப்புறக் கைக்கிளை agappuṟaggaiggiḷai, பெ. (n.)

   அன்பினைந்திணை என்னும் இரு தலைக்காதற்குப் புறமான ஒருதலைக் காதல் ; unreciprocated love, as outside the sphere of reciprocal love.

     [அகம் + புறம் + கைக்கிளை.]

   மக்கள் விருப்பத்தைக் கவனியாது பெற்றோரால் முடித்து வைக்கப்படும் திருமணங்களுள், மணமகன் மணமகள் என்னும் இருவருள் ஒருவர் மட்டும் காதலித்து, இன்னொருவர் கடமைக்காக இணங்கியிருப்பதே, ஒருதலைக் காமம் என்னும் கைக்கிளையாகும்;     “காமஞ் சாலா இளமை யோள்வயின்

ஏமஞ் சாலா இடும்பை யெய்தி

நன்மையுந் தீமையும் என்றிரு திறத்தால்

தன்னொடும் அவளொடும் தருக்கிய புணர்த்துச் சொல்லெதிர்பெறாஅன் சொல்லியின்புறல்

புல்லித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பே” (தொல். பொருள். அகத். 50);

   என்பது, நூற்பாவிற் குறித்துள்ளவாறு, சொல்லளவான காமக் குறிப்பேயன்றிக் கூட்டத்தொடு கூடிய ஒழுக்கமோ மண வாழ்க்கையோ அன்று. ஆகவே, கைக்கிளைக் குறிப்பு, கைக்கிளையொழுக்கம் அல்லது கூட்டம் எனக் கைக்கிளை இருதிறத்தது என அறிக. இங்ஙணமே, பெருந்திணைக்குறிப்பு, பெருந் திணையொழுக்கம் எனப் பெருந்திணையும் இருதிறத்ததாம். அது பெருந்திணையிற் கூறப்படும்;

அகப்புறக்கருவி

 அகப்புறக்கருவி agappuṟaggaruvi, பெ. (n.)

     [அகம் + புறம் + கருவி.]

அகப்புறத்தலைவன்

 அகப்புறத்தலைவன் agappuṟattalaivaṉ, பெ. (n.)

     [அகப்புறம் + தலைவன்.]

அகப்புறத்திணை

அகப்புறத்திணை agappuṟattiṇai, பெ. (n.)

   அகப்பொருட்டினை ஏழனுள், அகனைந் திணைக்குப் புறம்பான கைக்கிளை, பெருந்திணைகள் (யாப். வி.பக். 528); ; the two forms of love kaikkilai and perundinai out of seven, as outside the sphere of {aganaindinai.}.

     [அகப்புறம் + திணை.]

   அகப்பொருட்குப் புறம்பான புறப்பொருட்டிணை ஏழிருப்பதால், அகப்பொருட்குள்ளேயே சற்றுப் புறம்பானது அகப்புறம் எனப்பட்டது. இங்ஙனம் புறப்பொருட்குள்ளும் சற்றுப் புறம்பானது புறப்புறம் எனப்படும்;

அகப்புறப்பாட்டு

அகப்புறப்பாட்டு agappuṟappāṭṭu, பெ. (n.)

   கைக்கிளை, பெருந்திணைகளுக்குரிய செய்யுள் ; poem describing love which is unreciprocated or improper if not criminal.

     “அகப்புறப்பாட்டு மிகப்பில வவையே” (நம்பியகப். 250);;

     [அகப்புறம் + பாட்டு.]

அகப்புறப்பெருந்திணை

அகப்புறப்பெருந்திணை agappuṟapperundiṇai, பெ. (n.)

   இருதலைக் காமமென்னும் அகனைந்திணைக்குப் புறமாகிய பொருந்தாக் காமம் (நம்பியகப். 243); ; improper or criminal love, as outside the sphere of mutual love.

     [அகப்புறம் + பெருந்தினை.]

அகப்புறப்பொருள்

 அகப்புறப்பொருள் agappuṟapporuḷ, பெ. (n.)

   அகப்புறத்திணைகட்குரிய ஒருதலைக் காமமும் பொருந்தாக் காமமும் ; themes relating to unreciprocated and improper or criminal love.

     [அகப்புறம் + பொருள்.]

அகப்புறமுழவு

அகப்புறமுழவு agappuṟamuḻvu, பெ. (n.)

   தண்ணுமை, தக்கை, தகுணிச்சம் முதலிய இடைநிலைத் தோற்கருவிகள் (சிலப். 3 ; 27, அடியார்க். உரை); ; drums of the medium grade, like tantumai, takkai amd taguaiccam, etc., used as accompaniment to music and dancing.

     ‘அகமுழவாவன ; முன்சொன்ன உத்தமமான மத்தளம், சல்லிகை, இடக்கை, கரடிகை, பேரிகை, படகம், குடமுழா வெனவிவை.

   அகப்புற முழவாவன ; முன்சொன்ன மத்திமமான தண்ணுமை, தக்கை, தகுணிச்சம் முதலாயின;   புறமுழவாவன; முன் சொன்ன அதமக் கருவியான கணப்பறை முதலாயின;   புறப்புற முழவாவன; முற்கூறப்படாத நெய்தற்பறை முதலாயின’ என்று அடியார்க்கு நல்லார் (சிலப். 3;27, உரை); கூறியிருப்பதால், அகம் அகப்புறம் புறம் என்று வகுத்த மூவகை முழவுகளும், முறையே, முதல் இடை கடைப்பட்ட மங்கல முழவுகள் என்பதும், புறப்புறம் என்று இழித் தொதுக்கியவை அமங்கலப் பறைகள் என்பதும் உய்த்துணரப்படும்;

அகப்புறம்

அகப்புறம் agappuṟam, பெ. (n.)

   1. ஒன்றோடு தொடர்புகொண்டு அதற்குச் சற்றுப் புறம்பானது ; that which is related to, but is not of the essence.

   2. அகத்திணைப்புறம் பார்க்க;see {aga-t-tinai-p-puram. -}

     [அகம் + புறம்.]

அகப்புலி

 அகப்புலி agappuli, பெ. (n.)

   பொருள்கள், சொத்து (கரு.அக.); ; things, property.

     [பொலிதல் = செழித்தல், மிகுதல். அகப்பொலி → அகப்புலி.]

அகப்பூ

அகப்பூ agappū, பெ. (n.)

   நெஞ்சத்தாமரை ; heart-lotus, used fig.

     “அகப்பூ மலைந்து” (சீவக. 1662);.

ம. அகமலர்

     [அகம் + பூ.]

அகப்பூசை

 அகப்பூசை agappūcai, பெ. (n.)

   மன வழிபாடு ; worshipping in mind, meditation.

     [அகம் + பூசை.]

அகப்பேய்ச்சித்தர்

 அகப்பேய்ச்சித்தர் agappēyccittar, பெ. (n.)

   அடிக்கடி தம் மனத்தை ‘அகப்பேய்’ என்று விளித்துப் பனுவல் பாடிய ஒரு வென்னர் (சித்தர்); ; name of a Siddha, author of a poem in which the mind is addressed as “mind-devil’ in every stanza.

     [அகம் + பேய் + சித்தர்.]

அகப்பை

 அகப்பை agappai, பெ. (n.)

   சோறு, குழம்பு, காய்கறி முதலிய சமைத்த உணவுப் பொருள்களை முகந்து பரிமாற உதவும் நீண்ட பிடியுள்ள சிரட்டை அல்லது சிறுகலம் (சூடா); ; ladle, large spoon with a long handle, usu. of coconut shell.

     ‘அகப்பை அறுசுவை யறியுமா? (பழ);.

     ‘அகப்பை குறைந்தால் கொழுப்பெல்லாம் அடங்கும்” (பழ);.

     ‘அகப்பை பிடித்தவன் தன்னவனானால் அடிப்பந்தியில் இருந்தாலென்ன? கடைப்பந்தியில் இருந்தாலென்ன?’ (பழ.);;

ம. அகப்பான் ; க. அகபெ ; தெ. அகப ; து. காபெ.

     [அகழ்தல் = தோண்டுதல், முகத்தல். அகழ் → அகழ்ப்பு → அகழ்ப்பை → அகப்பை, ஒ.நோ.; கேழ்ப்பு → கேழ்ப்பை → கேப்பை. சமைத்த உணவு வகைகளைக் கலத்திலிருந்து அகழ்ந்து (தோண்டி அல்லது முகந்து); எடுத்தற்குச் சிரட்டையாலும் மரப்பிடியாலும் செய்யப்பட்ட கருவி அகப்பை.]

அகப்பைக்கணை

 அகப்பைக்கணை agappaiggaṇai, பெ. (n.)

   அகப்பைக் காம்பு ; handle of ladle.

     [அகப்பை + கணை.]

அகப்பைக்கின்னரி

 அகப்பைக்கின்னரி agappaiggiṉṉari, பெ. (n.)

   அகப்பை வடிவில் .செய்த விளையாட்டு நரம்பிசைக் கருவி ; stringed toy musical instrument shaped like a coconut-shell ladle.

     [அகப்பை + கின்னரி.]

கின்னரி பார்க்க ;see kinnari.

அகப்பைக்குறி

அகப்பைக்குறி agappaigguṟi, பெ. (n.)

   1. அகப்பையளவு (ஈடு, 1.4; 6, அரும்.);; measure of quantity, a coconut-shell ladle can hold.

   2. நெற்குவியலின்மேல் இடும் சாணிப்பாற்குறி ; marks of cow-dung solution poured from a ladle on heaps of paddy.

     “கண்ணாரக் கண்டதற்கு ஏன் அகப்பைக் குறி ?’ (பழ.);;

   3. அகப்பை விழும் நிலையைக் கொண்டு குறிபார்த்தல் (லின்.); ; prognostication by observing the lying position and direction of a ladle let fall perpendicularly, practised by women.

     [அகப்பை + குறி.]

குறி பார்க்க ;see kuri.

அகப்பைக்கூடு

 அகப்பைக்கூடு agappaigāṭu, பெ. (n.)

   அகப்பைசெருகி ; rack for ladles.

     [அகப்பை + கூடு.]

அகப்பைசெருகி

 அகப்பைசெருகி agappaiserugi, பெ. (n.)

   அகப்பைகள் செருகி வைக்கும் சட்டம்; perforated frame for holding ladles, the handles being inserted into the perforations.

அகப்பைசொருகி

 அகப்பைசொருகி agappaisorugi, பெ. (n.)

அகப்பைசெருகி பார்க்க ;see {agappai-šerugi.}.

அகப்பைநோய்

 அகப்பைநோய் akappainōy, பெ. (.n)

   உணவு இல்லாமல் மெலிந்து நோயாளியைப் போல் காணப்படுதல்; the unfed and underfed looking like a patient, due to the scarcity of food, (வ.சொ.அக.);.

     [அகப்பை+நோய்]

அகப்பையடி

அகப்பையடி agappaiyaḍi, பெ. (n)

   1. அகப்பையினாலடிக்கும் அடி ; a blow dealt with a ladle.

   2. பட்டினி ; starvation.

   3. அகப்பையின் அடிப்பகுதி ; the bottom of a ladle.

     [அகப்பை + அடி.]

அகப்பையடிபடு-தல்

அகப்பையடிபடு-தல் agabbaiyaḍibaḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   1. அகப்பையினாலடிபடுதல் ; to be beaten with a ladle.

   2. பட்டினி போடப்படுதல் ; to be starved.

     [அகப்பை + அடி + படு.]

அகப்பையைச் சுருங்கப்பிடி-த்தல்

அகப்பையைச் சுருங்கப்பிடி-த்தல் agappaiyaiccuruṅgappiḍittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   பிள்ளைகட்குத் தண்டனையாகச் சாப்பாட்டைக் குறைத்தல் ; to decrease the quantity of food given, as a punishment, to children.

     [அகப்பை + ஐ + சுருங்க-பிடி.]

அகப்பொருட்கைக்கிளை

அகப்பொருட்கைக்கிளை agapporuṭgaiggiḷai, பெ. (n.)

   காமம் நுகர்தற்குரிய கன்னித் தலைமகளின் காதற் குறிப்பை அறியும் வரை, தலைமகன் அவளைச் சாராதுநின்று தன் நெஞ்சொடு கூறல் (நம்பியகப். 28); ; theme in which a lover is talking to his own mind, while awaiting indications from his sweet heart of her love in response to his.

     [அகம் + பொருள் + கைக்கிளை.]

அகப்பொருட்கோவை

அகப்பொருட்கோவை agapporuṭāvai, பெ. (n.)

   களவில் தொடங்கிக் கற்பில் முடியும் அகப்பொருட்டலைவன் தலைவியரின் காதல் வாழ்க்கையை, நானுாற்றிற்குக் குறையாத கட்டளைக்கலித்துறையில் கோவைபடக் கூறும் பனுவல் வகை; division of poem, in not less than 400 kattalaikkalitturai verses which treats of the continuous life of lovers, beginning with clandestine union and culminating in married and domestic life.

     “ஆறிரண் டுறுப்பும் ஊறின்றி விளங்கக் கூறுவ தகப்பொருட் கோவை யாகும்” (இலக். வி. 816);.

     [அகம் + பொருள் + கோவை.]

அகப்பொருட்டலைவன்

 அகப்பொருட்டலைவன் agapporuṭṭalaivaṉ, பெ. (n.)

   அகப்பொருட் செய்யுளில் வரும் காதலன் ; hero of a love-poem.

     [அகம் + பொருள் + தலைவன்.]

அகப்பொருட்டலைவி

 அகப்பொருட்டலைவி agapporuṭṭalaivi, பெ. (n.)

   அகப்பொருட் செய்யுளில் வரும் காதலி ; heroine of a love-poem.

     [அகம் + பொருள் + தலைவி.]

அகப்பொருட்டுறை

 அகப்பொருட்டுறை agapporuṭṭuṟai, பெ. (n.)

   அகப்பொருள் பற்றிய பொருட்கூறு ; a theme of love-poetry.

     [அகம் + பொருள் + துறை.]

அகப்பொருட்பெருந்திணை

அகப்பொருட்பெருந்திணை agapporuṭperundiṇai, பெ. (n.)

   இருதலைக் காமத் தலைவனுந் தலைவியும் இன்பம் நுகர்ந்துவருங்கால், இடைக்காலத்தில் ஏற்பட்ட சில இன்ப நுகர் ச் சித் தடைகளை எடுத்துக்கூறுவது; narration of obstacles encountered in the love-life of genuine lovers.

     “அகன்றுழிக் கலங்கலும் புகன்றமடற் கூற்றும்

குறியிடை யீடுந் தெளிவிடை விலங்கலும்

வெறிகோள் வகையும் விழைந்துடன் போக்கும்

பூப்பிய லுரைத்தலும் பொய்ச்சூ ளுரையும்

தீர்ப்பி லூடலும் போக்கழுங் கியல்பும்

பாசறைப் புலம்பலும் பருவமாறுபடுதலும்

வன்புறை யெதிர்ந்து மொழிதலும் அன்புறு

மனைவியுந் தானும் வனமடைந்து நோற்றலும்

பிறவும் அகப்பொருட் பெருந்திணைக் குரிய” (நம்பியகப். 243);.

     [அகம் + பொருள் + பெருந்தினை.]

அகப்பொருள்

அகப்பொருள் agapporuḷ, பெ. (n.)

   1. நாற் பொருள்களுள் ஒன்றான இன்பம் ; pleasure, as one of the four objectives of life.

   2. காமவின்பம் ; sexual pleasure.

     ‘நீ புறப்பொருளை விரும்பி அகப்பொருளைக் கைவிட்டதிலே’ (கலித்.15, நச். உரை);.

   3. அகத்திணையென்னும் இன்பவொழுக்கங் கூறும் இலக்கண நூல் ; a grammar of love-theme.

   எ-டு : இறையனாரகப் பொருள், நம்பியகப்பொருள் ;   4. இன்பவொழுக்கங் கூறும் நூற்றொகுதி; love-literature,

   5. அகத்திணையாகிய பொருள் ; love-theme.

     “புலவோ ராய்ந்த வருந்தமி ழகப் பொருள்” (நம்பியகப். 1);;

   6. உட்பொருள் ; inner meaning.

     “நான்மறை யகப்பொருள் புறப்பொரு ளறிவார்” (கம்பரா. யுத்த. இரணிய. 32);;

   7. வீட்டிலுள்ள பொருள்; household effects.

     “அகப்பொரு டமக்கருளு வார்க்கஃது நல்கி யுகப்புறு பரத்தையர்கள்” (தணிகைப்பு. திருநகரப். 78);;

ம. அகப்பொருள்

     [அகம் + பொருள்.]

அகப்பொருள் விளக்கம்

 அகப்பொருள் விளக்கம் agapporuḷviḷaggam, பெ. (n.)

   ஓர் அகத்தினை நூல் ; name of a grammar of love-poetry.

நம்பியகப்பொருள் விளக்கம் பார்க்க ;see nambi-y-aga-p-porul vilakkam.

     [அகம் + பொருள் + விளக்கம்.]

அகமகன்

 அகமகன் agamagaṉ, பெ. (n.)

   கடைக்கழகக் காலத்திற்குப்பின் தமிழ்நாட்டிற் புகுத்தப்பட்டதும், சிவனின் மூத்த மகனாகச் சொல்லப்படுவதும், காப்புத் தெய்வமாகக் கருதப்படுவதும், பெரும்பாலும் வீடுதொறும் வழிபடப்.படுவதுமான ஆனைமுகப் பிள்ளையார்த் தெய்வம் (சம்.அக.); ; elephant-headed God {Ganeśa}, the eldest son of {Śiva,} commonly worshipped in Hindu homes.

அகமகிழ்ச்சி

அகமகிழ்ச்சி agamagiḻcci, பெ. (n.)

   மனக்களிப்பு (பிரபோத. 27;33); ; joy, inward happiness.

     [அகம் + மகிழ்ச்சி.]

அகமகிழ்வு

அகமகிழ்வு akamakiḻvu, பெ. (n.)

   அகமகிழ்ச்சி பார்க்க; see agamagilcci

     “அழகு தன் அக மகிழ்வுற”. (சூளா. 437.);.

     [அகம்+மகிழ்வு]

அகமடல்

அகமடல் agamaḍal, பெ. (n.)

   பாளை ; spathe.

     “அகமடல் வதிந்த வன்புபுரிபேடை” (பெருங். மகத. 4 ; 47);;

     [அகம் + மடல்.]

அகமணை

அகமணை Agamaṇai, பெ. (n.)

   ஓடத்தின் உட்கட்டை; wooden piece on a boat;

     “துறை படி அம்பி அகமணை ஈறும்”. (ஐங்.17:8);.

     [அகம்+மணை]

அகமணைத்தட்டு

அகமணைத்தட்டு agamaṇaittaṭṭu, பெ. (n.)

   வண்டியினுறுப்புவகை ; a part in the frame work of a cart.

     “புறமணைப் பலகையு மகமனைத் தட்டும்” (பெருங், உஞ்சைக். 58; 50);;

     [அகமனை + தட்டு.]

அகமண்டலம்

அகமண்டலம் akamaṇṭalam, பெ. (n.)

   உள்வட்டம்; inner cirecle.

     “மலை ஆறும் ஏழு கடலும் பாதமலர் சூழ் குளம்பின் அக மண்டலத்தின் ஒரு பால் ஒருங்க”. (மங்.11:4-3);.

     [அகம்+மண்டலம்]

அகமனம்

 அகமனம் agamaṉam, பெ. (n.)

   பெண்ணின்பம் பெறாதவன்; abstinence from sexual intercourses (சா.அக.);.

     [Skt. a-gamana → த. அகமனம்.]

அகமனி

அகமனி agamaṉi, பெ. (n.)

   1. திருமணமாகாதவன்; a confirmed bachelor, a celibate.

   2. வான்வழிச் செல்லும் ஆற்றலில்லாதவன்; one who is incapable of travelling in the aerial regions as opposed to gamani (சா.அக.);.

     [Skt. a-gamana → த. அகமனி.]

அகமனை

அகமனை akamaṉai, பெ. (n.)

உள்வீடு

 inner apartment;

     “அனைய வேலை அகமனை எய்தினன்” (அயோ. 4:223);.

     [அகம்+மனை]

அகமன்

அகமன் agamaṉ, பெ. (n.)

   1. ஒருவகை விலையுயர்ந்த கல்; a kind of precious stone.

   2. இடி; thunder boll.

   3. முகில்; cloud.

   4. இரும்பு; iron (சா.அக.);.

     [Skt. a-gama → த. அகமன்.]

அகமம்

 அகமம் agamam, பெ. (n.)

   மரம் (உரி.நி.);; tree.

     [Skt. agama → த. அகமம்.]

அகமரி-த்தல்

அகமரி-த்தல் agamarittal,    4 செ.கு.வி. (v.i.)

   கருப்பையில் இறத்தல் (சீவரட். 207);; to die in the womb.

     [த.மடி → Skt. mari (mru);. அகம் + மரி – அகமரி.]

அகமருடணபாதாளயோகம்

அகமருடணபாதாளயோகம் agamaruḍaṇapātāḷayōgam, பெ. (n.)

   ஒக விருக்கை வகையு ளொன்று; a yoga.

     “மானெசதடாகத்தில் அகமருஷணபாதாள யோகம் பண்ணின துர்வாசர்” (தக்கயாகப். 552, உரை.);.

     [Skt. aghamarsana + pataja + yoga → த. அகமருடணபாதாளயோகம்.]

அகமருடணம்

அகமருடணம் akamaruṭaṇam, பெ. (n.)

   மறை மந்திரச் சிறப்பு; speciality of sacred hymns;

     “அன்றியும் விசேட மிக்க அகமருண்டணங்களாவன” (தி.தி.48:10);

     [அகம்+மருடணம்]

 அகமருடணம் agamaruḍaṇam, பெ. (n.)

   1. மறை மந்திரத்தின் வகை; name of particular vedic hymn, as sin-effacing.

   2. அகமருடண மந்திரம் கூறிச் செய்யும் நீராடல்; ablution holding the right hand containing water up to the nose while repeating the above vedic hymn.

     [Skt. aghamarsana → த. அகமருடணம்.]

அகமலர்

அகமலர் akamalar, பெ. (n.)

நெஞ்சக் கமலம்

 heart respresented as lotus;

     “அக மலர் மேல் மன்னும்” (சிலப் 12:3:3);.

     [அகம்+மலர்]

அகமலர்ச்சி

 அகமலர்ச்சி agamalarcci, பெ. (n.)

   மனமகிழ்ச்சி (திவா.); ; joy, happiness, as blossoming of the mind.

     [அகம் + மலர்ச்சி.]

அகமலர்ச்சியணி

அகமலர்ச்சியணி agamalarcciyaṇi, பெ. (n.)

   ஒரு பொருளின் உயர்வுதாழ்வுகளை இன்னொரு பொருளின் உயர்வுதாழ்வுகளோடு ஒப்பு நோக்குவதனாற் புலப்படுத்தும் பொருளணி வகை (அணியி. 69); ; figure of speech in which the excellences and defects of one object are brought out, through a comparison with the same qualities in another object.

   அகமலர்ச்சியணி – ஒரலங்காரம் ; அஃது, ஒன்றின் குணத்தான் மற்றொன்றின் குணமும், ஒன்றின் குற்றத்தான் மற்றொன்றின் குற்றமும், ஒன்றின் குணத்தான் மற்றொன்றின் குற்றமும், ஒன்றின் குற்றத்தான் மற்றொன்றின் குணமும் வருணிக்கப்படுவது. இதனை வடநூலார் ‘உல்லாசாலங்காரம்’ என்பர் (குவ. 69); – (சங்.அக.);;     [அகமலர்ச்சி + அணி.]

அகமலை

 அகமலை agamalai, பெ. (n.)

   பெரியகுளம் வட்டத்திலுள்ள சிற்றூர்; a village inPeriyakulam Taluk.

     [அகம்+மலை]

அகமாட்சி

அகமாட்சி agamāṭci, பெ. (n.)

   இல்லறத்திற்குரிய நற்குண நற்செய்கைகள் (உபதேசகா. சூராதி. 77);; good qualities and deeds befitting an ideal family life.

     [அகம் + மாட்சி. அகம் = வீடு, இல்லறம்.]

அகமார்க்கம்

அகமார்க்கம்1 akamārkkam, பெ. (n.)

அருளியல்பு.

 Kind approach

     “வாதனையைச் சொல்லும் அக மார்க்கத் தால் அவர்கள் மாற்றினர்காண்” (சை:சா:2:50);.

     [அகம்+மார்க்கம்]

 அகமார்க்கம்2 akamārkkam, பெ. (n.)

   1. மெய்க்கூத்து; நாட்டியவகை; a kind of dance. (தெ.கோ.சா.3:2);.

     [அகம்+மார்க்கம்]

 அகமார்க்கம் agamārggam, பெ. (n.)

   1. அருமையிற்பாடல் (பிங்.);; a high style of singing, difficult to attain.

   2. முக்குணம் பற்றிவரும் மெய்க்கூத்து (சிலப். 3, 12, உரை);; exposition, by gesture and dancing, of three gunas, viz. sattva, rajas, tamas.

     [Skt. agha + marga → த. அகமார்க்கம்.]

அகமாலிகம்

 அகமாலிகம் agamāligam, பெ. (n.)

   கருங்குமிழ் மரம் (சித். அக.);; black coom teak.

அகமிசைக்கிவர்-தல்

அகமிசைக்கிவர்-தல் agamisaiggivartal,    2 செ.கு.வி. (v.i.)

   கோட்டை மதிலின்மேல் ஏறி நின்று போர்புரிதல் ; to fight on the ramparts.

     “அகமிசைக் கிவர்ந்தோன் பக்கமும்” (தொல், பொருள். புறத். 13);;

     “மதின்மிசைக் கிவர்ந்தோன் பக்கமும்”

என்றும், “மதின்மிசைக் கிவர்ந்த மேலோர்

பக்கமும்” என்றும், இரு பாட வேறுபாடு முண்டு.

     [அகமிசைக்கு + இவர்.]

அகமிடறு

அகமிடறு akamiṭaṟu, பெ. (n.) க

   குரல்வளை; larynx.

     “ஐந்தானத்து அகமிடறுசுற்றி” (நாவி. 6:93-2);.

     [அகம்+இடறு]

அகமிந்திரம்

அகமிந்திரம் agamindiram, பெ. (n.)

அகமிந்திரலோகம் பார்க்க;see agamindira-logam,

     “அருகன துருவ மில்லா ரகமிந்திரத்துட் டோன்றார்” (மேருமந்.75);.

     [Skt. aham-indra → த. அகமிந்திரம்.]

     [வேந்தன் → இந்தன் → இந்தர் → இந்திரன் → Skt. indra.]

அகமிந்திரலோகம்

அகமிந்திரலோகம் agamindiralōgam, பெ. (n.)

   வானுலுகத்திலொன்று (திருக்கலம். 6, உரை.);;     [Skt. aham+indra+loka → த. அகமிந்திர லோகம்.]

     [உலவு → உலகு → Skt. loka → த. லோகம்.]

அகமுகமா(கு)-தல்

அகமுகமா(கு)-தல் agamugamāgudal,    6 செ.கு.வி. (v.i.)

   உள்நோக்குதல் ; to be turned or pointed inward.

     “அகமுகமாந் தொடர்பால்” (ஞானவா. சுரகு. 12);.

     [அகமுகம் + ஆ(கு);.]

அகமுகம்

 அகமுகம் agamugam, பெ. (n.)

   உள்முகம் ; the state of being turned inward.

     [அகம் + முகம்.]

அகமுடையான்

அகமுடையான் agamuḍaiyāṉ, பெ. (n.)

   1. கணவன் ; husband, as master of the house.

   2. வீட்டுக்காரன் ; householder.

   3. அகம்படியக் குலத்தான் (I.M.P. Tj. 1033);; person of the Agambadiyar caste.

ம. அகத்தான்

     [அகம் + உடையான்.]

அகமுடையாள்

 அகமுடையாள் agamuḍaiyāḷ, பெ. (n.)

   மனைவி, அகமுடையான் என்பதன் பெண்பால் ; wite, fem. of agamudaiyán.

ம. அகத்தாள்

     [அகம் + உடையாள்.]

அகமுழவு

அகமுழவு agamuḻvu, பெ. (n.)

   மத்தளம், சல்லிகை, இடக்கை, கரடிகை, பேரிகை, படகம், குடமுழா என்னும் உயர்நிலைத் தோற் கருவிகள் (சிலப். 3;27, அடியார்க். உரை);; high quality drums, viz., mattalam, šalligai, idakkai, karadigai, pērigai, padagam and kudamula.

அகமெய்ப்பாடு

 அகமெய்ப்பாடு agameyppāṭu, பெ. (n.)

   காதலால் உடம்பின் புறத்துத் தோன்றும் விளர்ப்பு, பசப்பு, மெலிவு, விதிர்ப்பு முதலிய முப்பத்திரு வகைப்பட்ட உணர்ச்சி வெளிப்பாடு ; physical manifestation of emotions, such as paleness, sallowness, feebleness, trembling, thirty-two in number, due to love-sickness.

மெய்ப்பாடு பார்க்க;see mey_p-padu.

     “அகமெய்ப் பாடே யறையுங் காலை….

எண்ணாற் றுறையு மென்மனார் புலவர்”

     [அகம் + மெய்ப்பாடு. மெய்ப்படு → மெய்ப்பாடு (தொ.பெ.);. படுதல் = தோன்றுதல்.]

அகமேனி

அகமேனி akamēṉi, பெ. (n.)

   உள்நிலை; intention.

     “மிகமேனி மெலிவு எய்தி மேகலையும் ஈடு அழுந்து என் அகமேனி ஒழியாமே” (சட. 9; 7:10);

     [அகம்+மேனி]

அகமொடுக்கு

 அகமொடுக்கு agamoḍuggu, பெ. (n.)

   கொள் கொம்பு (சம்.அக.); ; pole for a creeper.

     [அகம் + ஒடுக்கு.]

அகம்

அகம் agam, பெ. (n.)

   1. உள்ளிடம், புறம் என்பதற்கு எதிர் ; inside, opp. to puram.

     “அகம்புற நிறைந்த சோதியாய்” (தாயு. சிவன்செ. 4);.

   2. உள்ளடங்குகை ; being subordinate.

     “அகப்பட்டி யாவாரைக் காணின்” (குறள், 1074);.

   3. உடம்பினகத்துள்ள மனம்; mind.

     “அகமலர்ந் தீவார்” (பதினொ. திருவிடை. மும். 7);.

அகம் அங்கே ஆக்கை இங்கே (பழ.);. ‘அகம் ஏறச் சுகம் ஏறும்’ (பழ.);.

     ‘அகம் மலிந்தால் அஞ்சும் மலியும், அகம் குறைந்தால் அஞ்சும் குறையும்’ (பழ.);.

   4. நெஞ்சம் ; heart,

   5. ஆதன் (ஆன்மா); ; soul.

     “அதுவதுதா னென்னு மகம்” (சி.போ.சிற். 3.6);.

   6. மார்பு ; chest.

     “புல்லக மகன்றது” (சிலப். 30;16);.

   7. அகப்பொருள் என்னும் காதல் ; love-theme.

   8. எழுவகைப்பட்ட அகத்திணை ; love, as a mental experience of lovers, of seven forms.

   9. காதலால் விளையும் காமலின்பம் ; sexual pleasure.

     ‘யாண்டும் உள்ளத்துணர்வே நுகர்ந்து இன்பமுறுவதோர் பொருளாதலின், அதனை அகம் என்றார்” (தொல். பொருள். அகத். 1, நச். உரை);;

   10. அகப் பொருள்பற்றிய அகநானூறு என்னும் அகவற்றொகை ; an anthology of 400 love-lyrics.

     “அகம்புறமென்றித்திறத்த வெட்டுத் தொகை” (தனிப்பாட்டு);;

   11. வதியும் உள்ளிடங் கொண்ட வீடு (பிங்.);; house.

   12. ஒரு நிலப்பகுதியின் உள்ளிடமான மருதநிலம் ; agricultural tract.

     “ஆலைக் கரும்பி னகநா டணைந்தான்” (சீவக. 1613);;

   13. இடம் (திவா.); ; place.

   14. எங்கும் பரந்துள்ள இடமாகிய விசும்பு (தைலவ. பாயி. 22); ; sky, space. –,

இடை (ind);

   1. இடவேற்றுமை யுருபுகளுள் ஒன்று ; a loc. ending.

     “உள்.அகம் புறம் இல் இடப்பொருளுருபே” (நன். 302);;

   2. ஓர் இடப்பெய ரீறு ; a suff. of place names.

எ-டு :

கானகம், தமிழகம்,

   3. ஒரு பொருட்பெயரீறு ; a suff, forming names of objects.

எ-டு : கேடகம், பாடகம்,

   4. ஒரு தொழிற்பெய ரீறு; a verbal noun suff.

எ-டு : நம்பகம், நாடகம்.

   5. ஒரு பண்புப் பெயரீறு ; an abstract noun suff.

எ-டு : காழகம் (கருமை);.

ம. அகம்; க. அ.கெ.

     [அகழ்தல் = தோண்டுதல். அகைதல் = ஒடிதல், அகைத்தல் = அறுத்தல். ஒருகா. அகு → அகம் = உட்டுளை, உள், குடி, வீடு. ஒ.நோ.; புரை = துளை, வீடு. E. hold = small mean dingy abode. ஒ.நோ.; இகுதல் = தாழ்தல். இகுத்தல் = தாழ்த்தல். இகுப்பம் = தாழ்வு. இகு → இகழ் → இகழ்த்தல் = தாழ்த்தல், தாழ்வாகக் கருதுதல்.]

 அகம் agam, பெ. (n.)

   தவசம், கூலம் ; cereals, grain.

அகமது குறைவி லாதாய் (நல், பாரத. ஆதி. வியாசருற். 8);.

     [அஃகம் → அக்கம் → அகம்.]

 அகம் agam, பெ. (n.)

   வெள்வேல் (மலை.);; panicled babul.

     [அக்கு = கூர்மை, முள், அக்கு → அகு → அகம்.]

 அகம் akam, பெ. (n.)

   திமிர், செருக்கு; haughtiness pride (இ.வ.);

     [அகு(அகை);-அகம்]

அகம்படி

அகம்படி agambaḍi, பெ. (n.)

   1. உள்ளிடம் ; inside.

     “திருவயிற்றி னகம்படியில் வைத்து” (திவ். பெரியதி. 11.6 ; 8);.

   2. மனம் ; mind.

     “அகம்படிக் கோயிலானை” (தேவா. 5.91;1);.

ம. அகம்படி.

   3. திருக்கோயிலில் அல்லது அரண்மனையிற் செய்யும் அகத்தொண்டு; service in a sanctuary or inner appartments of a palace.

     ‘அகம்பாடிப் பெண்டுகள்’ (I.M.P. Tp. 274.);.

   4. அடியார் ; devotees (ஈடு, 5.8; 2);.

     [அகம்பு + உள். அகம்பு + அடி – அகம்படி. புறம்படி என்பதற்கு எதிர்.]

 அகம்படி akampaṭi, பெ. (n.)

   1.குடும்பம்; family. (தெ.கோ.சா. 3;2);.

     [அகம்+படி]

அகம்படி வேளான்

அகம்படி வேளான் akampaṭivēḷāṉ, பெ. (n.)

வீரபாண்டியனின் நான்காம் ஆட்சியாண்டில் கி.பி.1301 இல் இருந்த அரண்மை உவளகக் (அந்தப்புர);க் காவலர்.

 Name of the the palace guard during the period of Veerapandiyan during 1012 A.D.

     [அகம்படி+வேள்+ஆன்]

அகம்படித்தொண்டு

அகம்படித்தொண்டு agambaḍittoṇḍu, பெ. (n.)

   அணுக்கத்தொண்டு ; service, as in a sanctuary.

     “கோயிலுள்ளா லகம்படித் தொண்டு செய்வார்” (பெரியபு. தில்லை. 4);.

     [அகம்பு + அடி + தொண்டு.]

     ‘அகம்படிமை’ என்றும் வழங்கும்.

அகம்படிப்பெண்டுகள்

அகம்படிப்பெண்டுகள் agambaḍippeṇḍugaḷ, பெ. (n.)

   கோயிலகப் பணிப்பெண்கள், அகக்கோளாளர் (தக்கயாகப், 95, உரை);; maid servants in a temple.

     [அகம்பு + அடி + பெண்டுகள்.]

அகம்படிமறமுதலி

அகம்படிமறமுதலி akampaṭimaṟamutali, பெ. (n.)

   அகம்படி மறவர் என்ற வீரர்களுக்குத் தலைவன்; Captiain of the soldiers known an agambadi maravar

     “குலோத்துங்க சோழக் கடம்பராயந் அகம்படி மறமுதலிகளில்” (IPS, 181.);

     [அகம்படி+மறம்+முதலி]

அகம்படிமுதலிகள்

அகம்படிமுதலிகள் agambaḍimudaligaḷ, பெ. (n.)

   திருக்கோயிற் பணியாளர்;ம. அகம்படி

     [அகம்பு + அடி + முதலிகள்.]

 அகம்படிமுதலிகள் akampaṭimutalikaḷ, பெ. (n.)

   அந்தப்புரத்து அதிகாரிகள் (தெ.கோ.சா.3 :2);; Officers of the royal chamber meant for queen.

     [அகம்+படி+முதலிகள்]

அகம்படிமை

அகம்படிமை agambaḍimai, பெ. (n.)

அகம்படித் தொண்டு பார்க்க ;see agambadi-t-tondu.

     “அகம்படிமைத் திறலினர்” (கோயிற்பு. பாயி. 13);.

     [அகம்பு + அடிமை.]

அகம்படியர்

அகம்படியர் agambaḍiyar, பெ. (n.)

   1. வீட்டு வேலை செய்வோர் ; domestic servants.

     ‘அவ்வவர்க்குரிய அகம்படியர் (திவ். திருப்பா. 4;72, வியா);.

   2. தஞ்சை, மதுரை மாவட்டங்களில் முன்பு குறுநில மன்னர் அரண்மனைகளிற் பணிசெய்து, இன்று உழவுத்தொழில் செய்துவரும் ஒரு குலத்தார் ; name of a caste of agriculturists in Thanjāvūr and Madurai districts, who originally were doing service in the palace of ancient chieftains.

ம. அகம்படிக்காரன்

     [அகம்பு + அடியர்.]

அகம்படியார்

 அகம்படியார் agambaḍiyār, பெ. (n.)

   திருக் கோயில்களிலும் அரண்மனைகளிலும் அகத்தொண்டு செய்வார் ; those who do service in a sanctuary or inner appartments of a palace.

     [அகம்பு + அடியார்.]

அகம்பனம்

 அகம்பனம் agambaṉam, பெ. (n.)

   மூச்சுத் திணறுதல்; suspension of the vital function when the lungs are deprived of air, suffocation.

அகம்பன்

அகம்பன் akampaṉ, பெ. (n.)

   அசைவு இல்லாதவன்;     “அவ்வுரை கேட்டு வந்தான் அகம்பன் என்று அமைந்த கல்விச் செல்வியான் ஒருவன்”. (ஆர. 77:68);

     [அகம்பு+அன்]

அகம்பன்மாலாதனார்

 அகம்பன்மாலாதனார் akampaṉmālātaṉār, பெ. (n.)

   கடைக்கழகப் புலவரின் பெயர்; name of a sangam poet.

     [அகம்பன் (சமணரின் இயற்பெயர்);+மால் (அருகன்);+ஆதன்.]

பாண்டிய நாட்டு அகமலை ஊரினராகிய சேரர் குடியினர்.

அகம்பம்

 அகம்பம் agambam, பெ. (n.)

   ஒரு செய் நஞ்சு (கற்பரிபாடாணம்); (வை. மூ.);; a mineral poison.

அகம்பரன்

அகம்பரன் akamparaṉ, பெ. (n.)

   நானே கடவுள் எனும் கோட்பாடு; a doctrine imagining self as god.

     “அகம்பரன் என்னாது.அரங்கனை நாடில்” (அட் 3:88);.

     [அகம்+பரன்]

அகம்பாடு

அகம்பாடு agambāṭu, பெ. (n.)

   உள்ளீடான மெய்ப்பொருள் ; essential truth.

     “விச்சையினகம்பா டுணர்ந்தறிவு முற்றுபயனுற்றவரை யொத்தாள்” (கம்பரா. பால. கோலங். 39);;

     [அகம்படு → அகம்பாடு.]

அகம்பால்

அகம்பால் akampāl, பெ. (n.)

உள்ளே, in,

 innermost part;

     “யாதும் யாவரும் இன்றி நின் அகம்பால் ஒடுங்கி”. (சட. 1:4);.

     [அகம்+பால் அகம் = உள்ளே. இடம். அகம்பால் = உள்ளிடம் உள்ளே.]

அகம்பிரமம்

அகம்பிரமம் akampiramam, பெ. (n.)

யானே முழுமுதற் பொருள்

 the doctrine imagining self as god;

     “அல்லிறந்து பகலிறந்து அகம்பிரமம் இறந்து போய்” (சிவ 200);.

     [அகம்+பிரமம்]

 அகம்பிரமம் agambiramam, பெ. (n.)

   1. செருக்கு; self-importance.

   2. திமிர்; pride.

     [Skt. aham+bhirama → த. அகம்பிரமம்.]

அகம்பிரமவாதி

 அகம்பிரமவாதி agambiramavāti, பெ. (n.)

   தானே கடவுளென (பிரமமென்று); வழக்கிடுபவன் (வாதிப்பவன்);; one who holds that Self is Brahman, Advaitin.

     [Skt. aham + pirama + vadin → த. அகம்பிரமவாதி.]

அகம்பு

 அகம்பு agambu, பெ. (n.)

   உள் ; புறம்பு என்பதற்கு எதிர் ; inside; opp. to purambu.

ம. அகமே

     [அகம் → அகம்பு.]

அகம்மகியாகமனம்

அகம்மகியாகமனம் agammagiyāgamaṉam, பெ. (n.)

   1. விலைமகளை விரும்பிச் சேர்தல்; cohabiting with a public Woman or a prostitute.

   2. பிறன் மனையாளைப் புணர்தல்; illicit intercourse with a married woman (சா.அக.);.

     [Skt. a-gamya + gamana → த. அகம்மகியாகமனம்.]

அகம்மியகை

அகம்மியகை agammiyagai, பெ. (n.)

   1. கண்டவனோடு கூடிக்கலந்தவள்; a married woman who has had illicit intercourse, an adulteress.

   2. விலை மகள்; un married female guilty of fornication (சா.அக.);.

     [Skt. a-gamya → த. அகம்மியகை.]

அகம்மியம்

அகம்மியம் agammiyam, பெ. (n.)

   1. அணுகக் கூடாதது; the unapproachable, that which is not fit to be approached.

   2. அறியக் கூடாதது; the inconceivable, incomprehensible.

     “பிரத்தியக்ஷாதி பிரமாண சதுட்டயங்களிலும் அகம்மிய மாதலாலே” (சி.சி. அளவை 1, சிவாக்.);.

   3. ஒரு பேரெண் (பிங்.);; the thousand quintillions.

     [Skt. a-gamya → த. அகம்மியம்.]

அகம்மியா

 அகம்மியா agammiyā, பெ. (n.)

   விலைமகள்; a prostitute, a harlot.

     [Skt a-gamyaga → த. அகம்மியா.]

அகம்மியாகமனன்

அகம்மியாகமனன் agammiyāgamaṉaṉ, பெ. (n.)

   1. கெடுமதியன் (தூர்த்தன்);; he who commits lewd acts, a fornicator.

   2. பிறனில் விழைவோன்; an adulterer.

     [Skt. a – gamyå → த. அகம்மியா.]

கம் → கமனம் → கமனன்.

அகம்மியாகமனம்

 அகம்மியாகமனம் agammiyāgamaṉam, பெ. (n.)

   தகுதியற்றவளோடு புணர்கை; inter course with a woman who is not fit to be approached.

     “அகம்மியாக மணஞ்செய்து பிராயச்சித்தஞ் செய்து சுத்தரானாரையும்” (கல்.);.

     [அகம்மியா + கமனம்.]

     [Skt. a-gamya → த. அகம்மியா.]

கம் → கமனம்.

அகம்மியை

அகம்மியை1 agammiyai, பெ. (n.)

   பொதுமகள் (வின்.);; harlot.

     [Skt. a-gamyå → த. அகம்மியை.]

 அகம்மியை2 agammiyai, பெ. (n.)

அகம்மியா பார்க்க;see agammiya.

அகம்வறியோன்

அகம்வறியோன் akamvaṟiyōṉ, பெ. (n.)

   முழுமகன் (அறிவிலி);; fool.

     “அகம் வறியோன் நண்ணல் நல் கூர்ந்தன்று”. (முது. 9:8);.

     [அகம்+வறியோன்]

அகயாறு

அகயாறு agayāṟu, பெ. (n.)

   ஆற்றோரத்தின் உள் நிலப்பகுதி; protruding bank towards the stream.

     “நிலத்திலும் அகயாற்றுப் படுகையிலும்” (SII. Xvii.604.);.

     [அகம்+ஆறு]

அகரகாயம்

 அகரகாயம் agaragāyam, பெ. (n.)

   உடம்பின் முன் பக்கம்; the fore or front part of the body (சா.அக.);.

     [Skt. agara + kaya → த. அகரகாயம்.]

அகரக்களங்கு

 அகரக்களங்கு agaraggaḷaṅgu, பெ. (n.)

   தூய்மைய்றற இதளியம்; an impure oxide of mercury (சா.அக.);.

     [அகர(ம்); + களங்கு.]

     [Skt. agar → த. அகரம்.]

அகரக்கிளவி

 அகரக்கிளவி akarakkiḷavi, பெ. (n.)

   அகரஎழுத்து; the letter a.

     [அகரம்+கிளவி]

அகரசீர்மை

அகரசீர்மை agaracīrmai, பெ. (n.)

   ஆரியப் பார்ப்பனச் சேரி (அக்கிரகாரம்); (M.E R 389 of 1916);; Brähmin quarters.

     [அகரம் + சீர்மை. Skt, simi → த. சீமை → சீர்மை.]

   மூவேந்தரும் பிராமணர் என்னும் ஆரியப் பார்ப்பனர்க்கு மருதநிலத்துக் குடியேற்றங்களைத் தானமாக அளித்துவந்தனர். அவை பொதுவாகச் ‘சதுர்வேதி மங்கலம்’ எனப் பெயர் பெற்றன;   நாளடைவில், பிராமணர் தமிழர் குடியிருப்பையொட்டியும் வாழத் தொடங்கினர். ஊர்க்கோடியில் தனிக் கூட்டமாக வாழ்ந்ததனால், அவர் குடியிருப்பு அக்கிராகரம் எனப்பட்டது; Skt. agra = நுனி ; GK. acros, topmost, outermost; E. acro, highest, topmost, terminal, tipped with; at the point or extremity of.

   அக்ர + அகரம் – அக்ராகரம். ஊர்க்கோடியிலிருந்ததனாலும் மருதநிலக் குடியிருப்பாதலாலும், ஆரியப் பார்ப்பனச்சேரி அக்ராகரம் எனப்பட்டதென்பது பொருத்தமே;   ஆயின், அக்ராகரம் (agra-kara); என்னாது அக்ரஹார (agra-hara); என்பதே, தொன்று தொட்ட பிராமண வழக்காயிருந்து வருகின்றது;   எனினும், “அகர மாயிரம் அந்தணர்க் கீயிலென்” என்னும் திருமந்திர (1860); வடியிலும், அதுபோன்ற பிறவிடத்தும், அகரம் என்னும் சொல் மருதநிலத்தூரைக் குறிக்கும் தென்சொல்லாகவே கொள்ளப்படும்;

அகரத்தன்

அகரத்தன் akarattaṉ, பெ. (n.)

அகரமாகிய திருமால்:

 God Thirumal.

     “எட்டெழுத்துள் ஓது அசுரத்தனை” (அட. 7:9:95);.

     [அகரம்+அத்து+அன்]

அகரத்திரவம்

 அகரத்திரவம் agarattiravam, பெ. (n.)

   பால், தயிர் ஆகியவற்றின் ஏடு; the thin upper part of standing milk or curd (சா.அக.);.

அகரநீர்

 அகரநீர் agaranīr, பெ. (n.)

   முத்துச்சிப்பியின் நடுவிலிருக்கும் நீர்; the water deposited in the centre of a pearl. (சா.அக.);.

     [அகர(ம்); + நீர்.]

     [Skt. agara → த. அகர(ம்);.]

அகரந்தென்

 அகரந்தென் akaranteṉ, பெ. (n.)

   சைதாப்பேட்டை வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Saidapet Taluk.

     [ஒருகா.தென் அகரம்→அகரந்தென்.]

அகரபரணி

 அகரபரணி agarabaraṇi, பெ. (n.)

   பூனைக்காலி; a plant, cow-hage or cat-bean (சா.அக.);.

அகரபாதம்

 அகரபாதம் agarapātam, பெ. (n.)

   பாதத்தின் முற்பகுதி; the fore part of the foot (சா.அக.);.

     [அகர(ம்); + பாதம்.]

     [Skt. ahara → த. அகர(ம்);.]

பதி → பதம் → பாதம்.

அகரப்பயிற்சி

 அகரப்பயிற்சி akarappayiṟci, பெ. (n.)

   அகரத்தை அளபெடையாக நீள ஒலித்தும், சுரத்தானங்களில் ஒலித்தும் பழகும் முறை; a musical practice of signing allowing extra vowellength.

     [அகரம்+பயிற்சி]

அகரப்பற்று

அகரப்பற்று agarappaṟṟu, பெ. (n.)

   பிராமணருக்குத் தானஞ் செய்யப்பட்ட நிலம் (M.E.R. 556 of 1919);; land gifted to Brāhmins.

     [அகரம் + பற்று.]

அகரமுதலான்

அகரமுதலான் akaramutalāṉ, பெ. (n.)

   சிவபெருமான்; sivan.

     “அகர முதலானை அணி ஆப்பனூரானை” (தேவா.சம். 1:88-5);.

     [அகம்+முதலான்]

அகரமுதலி

 அகரமுதலி agaramudali, பெ. (n.)

   அகரத்தில் தொடங்கி, ஒரு மொழியின் எல்லாச் சொற்களையும், அல்லது பெரும்பாற் சொற்களையும் வண்ணாமாலை வரிசைப்படுத்திப் பொருள் கூறும் சொற்பொத்தகம் ; Dictionary giving all the words of a language or a majority of them with their meanings and arranged alphabetically beginning with ‘a’.

     [அகரம் + முதலி. படைத். பாவாணர்.]

அகராதி பார்க்க ;see agaradi.

அகரமேற்று-தல்

அகரமேற்று-தல் agaramēṟṟudal,    2 பி.வி. (v. caus.)

   பிராமணரை மருதநிலத்தூரிற் குடியேற்றுதல் ; to establish a [Brähmin] colony in an agricultural tract.

     “அகரமேற்றி நன்றிகொ டேவதான நல்கி” (திருவாலவா. 48 ; 22);.

     [அகரம் + ஏற்று.]

அகரம்

அகரம் agaram, பெ. (n.)

     ‘அ’ என்னும் தமிழ் வண்னமாலை முதலெழுத்து;

 the letter ‘a’ with which the Tamil alphabet begins.

     “அகர முதல் னகர இறுவாய்” (தொல், எழுத்து. நூன். 1);. ‘கரம்’ குறிற் சாரியை;

 அகரம் agaram, பெ. (n.)

   1. மெய்யெழுத்துச் சாரியை ; particle employed to enunciate consonants.

   2. மெய்யெழுத்திற்கும் உயிர் மெய்க்கும் பொதுவான சாரியை ; enunciative particle common to consonants and vowel consonants (or syllabic consonants);.

     “மகரத் தொடர்மொழி மயங்குதல் வரைந்த” (தொல். எழுத்து. மொழி. 49);.

     “இஇடை நிலைஇ ஈறுகெட ரகரம்

நிற்றல் வேண்டும் புள்ளியொடு புணர்ந்தே” (தொல். எழுத்து. புள்ளி. 31);.

   மகரத் தொடர்மொழி என்பதில் ‘மகரம்’ என்னுஞ் சொல் (ம் + அகரம்); மகர மெய்யைக் குறித்தலையும், ரகரம் நிற்றல் என்பதில் ‘ரகரம்’ என்னுஞ்சொல் ரகர மெய்க்கும் ரகர உயிர்மெய்கட்கும் பொதுவாக நிற்றலையும் நோக்குக;
 அகரம் agaram, பெ. (n.)

   1. மருதநிலத்தூர் ; town in an agricultural tract.

   2. ஊர் (பிங்.); ; town.

     [அகம் → அகர் → அகரம் = அகநாடென்னும் மருதநிலத்தூர், நகரம்.]

 Cf. L. ager, field; GK. agros; Skt. ajra; OE. aecer; OHG, ackar; ON. akr; Goth, akrs; E. acre.

அகநாடு பார்க்க ;see aga-nadu.

 அகரம் agaram, பெ. (n.)

   இதள் (பாதரசம்); (வின்.);; mercury.

 அகரம் agaram, பெ. (n.)

   தேர் (மலை.);; chariot, temple car.

அகரம்தூளி

 அகரம்தூளி agaramtūḷi, பெ. (n.)

செங்கற்பட்டு மாவட்டத்தில் உள்ள ஓர் ஊர்.

 Name of the village in chengalpattu taluk.

     [அகரம்+தூளி]

அகரராசசம்

 அகரராசசம் agararāsasam, பெ. (n.)

   சிவதை; a herb, Indian rhubarb (சா.அக.);.

அகராதி

அகராதி agarāti, பெ. (n.)

   ஒரு மொழியிலுள்ள சொற்களையெல்லாம் அல்லது அவற்றின் பெரும்பகுதியை, வண்ணமாலை வரிசைப்படியமைத்தும் பொருள்கூறும் சொற்பொத்தகம்; Dictionary, a book containing the words of a language alphabetically arranged together with their meanings.

     [அகர முதற்சொல்லை அல்லது சொற்களை முதலிற் கொண்டுள்ளமையால் சொற்பொத்தகம் அகராதியெனப்பட்டது. அகரம் + ஆதி – அகராதி.]

   தொடக்கத்தில், தமிழிலக்கியத்திலுள்ள அருஞ்சொற்களின் பட்டிகளே, செய்யுள் நடையிற் பொருள்கூறி, உரிச்சொல் என்றும் உரிச்சொற்றொகுதி என்றும் பெயர்பெற்று வழங்கிவந்தன. பின்னர், அவை ‘நிகண்டு’ என்னும் வடசொற் பெயரால் வழங்கத் தலைப்பட்டன;   1594-ல் முதன்முதலாக, சிதம்பரரேவண சித்தர் என்பவர் தம் நிகண்டை வண்ணமாலை வரிசைப்படுத்தி அதற்கு அகராதி நிகண்டு எனப் பெயரிட்டார்;   18ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வீரமா முனிவர் (Father Beschi); முதன்முதலாகச் செய்யுள் நடையை விட்டுவிட்டு மேலை நாட்டு முறையைக் கையாண்டு, பெயர், பொருள், தொகை, தொடை என்னும் நால் வகைத் தலைப்பிற் சொற்களைத் தொகுத்து, சதுரகராதி என்று பெயரிட்டார்;   அதன்பின், 1779-ல் பெப்பிரசியசு (Fabricius);, பிரேய்த்தாப்து (Breithaupt); என்னும் இரு செருமானிய லுத்தரன் விடையூழியர் (Missionaries);, தமிழும் இங்கிலேசுமாயிருக்கிற அகராதி என்னும் பெயரில் ஒரு தமிழாங்கில அகரமுதலி வெளியிட்டனர்.பின்னர் ‘அகராதி’ என்னும் பெயர் பெரு வழக்காயிற்று;   பதினெண்கீழ்க்கணக்கில் ஒரு நூல் ஏலாதி யெனப்பெயர் பெற்றிருப்பினும் ஆதி என்னும் சொல் தூய தென்சொல்லாகத் தோன்றாமையால், இன்று அகராதி அகரமுதலி யெனப்படுகின்றது;
 அகராதி2 akarāti, பெ. (n.)

   அதிகம் படித்தவர்களை அழைக்கும் கிணடற்சொல்; a metaphorical term to represent an erudite scholar.

அவன் ஒரு அகராதி (இ.வ.);

     [அகம்+அறுதி]

அகராதி பிடித்தவன்

 அகராதி பிடித்தவன் akarātipiṭittavaṉ,    எதற்கும் ஒத்துவராதவன்; unadjustable person.

     [அகராதி+பிடித்தவன்]

அகராதி வரிசை

 அகராதி வரிசை agarātivarisai, பெ. (n.)

அகராதி முறை பார்க்க ;see agaradi-murai.

அகராதிக்கலை

 அகராதிக்கலை agarātiggalai, பெ. (n.)

   அகர முதலித் தொகுப்புக்கலை ; lexicography.

     [அகராதி + கலை.]

அகராதிநிகண்டு

அகராதிநிகண்டு agarātinigaṇṭu, பெ. (n.)

   சிதம்பர ரேவண சித்தர் 1594-ல் வண்ணமாலை வரிசைப்படி தொகுத்த செய்யுள்நடைச் சொற்களஞ்சியம் ; name of a thesaurus in verse, as giving the words in alphabetical order, by {šidambara Rēvaņa šittar.} A.D. 1594.

அகராதிப்படித்தவன்

அகராதிப்படித்தவன் agarātippaḍittavaṉ, பெ. (n.)

   1. அதிகங் கற்றவன் ; a very learned person.

     ‘அகராதி படித்தவன் அஞ்சிப் பேசுவானா?’ (பழ.);.

   2. சொன்ன கருத்தை மாற்றுபவன், சொற்பொருள் திரிப்பவன் ; punster, quibbler.

   அவன் பெரிய அகராதி படித்தவன் ; அவனொடு பேசாதே (உ.வ.);;     ‘அகராதி படித்தவனுக்கு எதிராகப் பேசாதே’ (பழ.);.

     ‘அகராதி படித்துவிட்டால் அடக்கமின்றிப் பேசுவதா?’ (பழ.);.

அகராதிமுறை

 அகராதிமுறை agarātimuṟai, பெ. (n.)

   வண்ண மாலை வரிசை ; alphabetical order.

அகராதியொழுங்கு

 அகராதியொழுங்கு agarātiyoḻuṅgu, பெ. (n.)

அகராதி முறை பார்க்க ;see agaradi-murai.

     [அகராதி + ஒழுங்கு.]

அகராது

 அகராது agarātu, பெ. (n.)

   கொன்றை (வை.மு.);; Indian laburnum.

அகரி

 அகரி agari, பெ. (n.)

   ஒருவகைப் புல்; a kind of grass (சா.அக.);.

அகரிடணம்

அகரிடணம் agariḍaṇam, பெ. (n.)

   1 வெறுப்பு; dislike.

   2. வருத்தம்; sorrow.

     [Skt. a-harsana → த. அகரிடணம்.]

அகரு

அகரு akaru, பெ. (n.)

   அகில் பார்க்க; see agil.

     “அகரு வாழை எமை ஆரம் இணைய” (பரி.12:5);

     [அகில்+அகரு]

அகருதம்

அகருதம் agarudam, பெ. (n.)

   வீற்றிருக்கை (சிந்தா. நி. 13.);; sitting in state.

     [Skt. agaru → த. அகருதம்.]

அகருமகம்

அகருமகம் agarumagam, பெ. (n.)

   செயப்படு பொருள் குன்றிய வினை (வீரசோ. தாது. 2, உரை.);; intransitive verb.

     [Skt. a-kar-maka → த. அகருமகம்.]

அகர்க்கணனம்

 அகர்க்கணனம் agarggaṇaṉam, பெ. (n.)

   கலியூழி தொடங்கிக் குறித்த காலம் வரை கணித்தெடுத்த, மொத்த எண்;     [அகர் + கணனம்.]

     [Skt. ahar → த. அக(ர்);.]

கண் → கணம் → கணனம்.

அகர்ணகம்

 அகர்ணகம் agarṇagam, பெ. (n.)

அகர்ணம் பார்க்க;see agarnam (சா.அக.);.

அகர்ணம்

அகர்ணம் agarṇam, பெ. (n.)

   1. காதின்மை; lack of ears, absence of ears.

   2. காது கேளாமை; thickness of hearing, defect in the power of hearing.

   3. செவிடு; lack or loss complete or partial of the sense of hearing.

     [Skt. aghar → த. அகர்ணம்.]

அகர்த்தவியம்

அகர்த்தவியம் agarttaviyam, பெ. (n.)

   செய்யத்தகாதது; that which ought not to be done.

     “கர்த்தவிய வகர்த்தவிய விடய மாயினவால்” (சூத. எக்கி. பூ. 10, 20);.

     [Skt. a-kartavya → த. அகர்த்தவியம்.]

அகர்த்தா

 அகர்த்தா agarttā, பெ. (n.)

   செயற்பாடற்றவன்; one who is not agent.

     “பிரஹ்மவித் தானவன் கர்மத்தில் அகர்த்தா என்னும் புத்தியால்” (விசாரசா);.

     [Skt. a-karta → த. அகர்த்தா.]

அகர்த்திருவாதம்

அகர்த்திருவாதம் agarttiruvātam, பெ. (n.)

   படைத்தவன் இல்லை என்னும் தருக்கம் (சி.சி. பர. சௌத்.-1, உரை.);; system of thought which denies the existence of a creator.

     [Skt. a-kartr+vada → த. அகர்த்திருவாதம்.]

அகர்நாதன்

 அகர்நாதன் agarnātaṉ, பெ. (n.)

   பகலவன்; ruler of the day i.e., the sun.

     [Skt. a-kar-natha → த. அகர்நாதன்.]

அகர்மகர்த்தரிப்பிரயோகம்

 அகர்மகர்த்தரிப்பிரயோகம் agarmagarttarippirayōgam, பெ. (n.)

   செயப்படு பொருள் குன்றிய வினை (வின்.);;     [Skt. a-karma – kartari + prayoga → த. அகர்மகர்த்திரிப்பிரயோகம்.]

அகர்முகம்

அகர்முகம் agarmugam, பெ. (n.)

   வைகறை; early dawn.

     “அகர் முகமப் பாடுநர்க்கு”. (தைலவ. பாயி. 53);.

     [அகர் + முகம்.]

     [Skt. ahan → த. அகர்.]

அகறல்

அகறல் agaṟal, பெ. (n.)

   1. அகலம் (சூடா); ; width, extension.

   2. கடத்துதல் ; passing beyond.

     “அடர்மலர்க் காற் குங் கட்கு மகறலால்” (இரகு. மாலை. 35);.

   3. நீங்கல் ; separation, removal.

     “அகறலினாற் பிறருடல் போற்றன்னுடலந் தனினு முறுதிதருமபிமான மின்மையேயாகி” (வேதா. சூ.459);.

     [அகல் + தல் – அகறல்.]

அகற்சி

அகற்சி agaṟci, பெ. (n.)

   1. அகலம் ; breadth.

     “அன்ன மாபெருங் கயிலையி னகற்சியும் நிவப்பும்” (உபதேசகா. கைலை. 14);.

   2. பிரிவு ; separation.

     “அயலோ ராயினு மகற்சி மேற்றே” (தொல். பொருள். அகத். 38);.

   3. துறவறம் ; ascetic life.

     “அருளொடு புணர்ந்த வகற்சியானும்” (தொல். பொருள். புறத். 21);.

ம. அகல்ச (பிரிவு); ; க. அகலிகெ (பிரிவு); ; தெ. அகலுட (பிரிவு);.

அகற்பன்

அகற்பன் agaṟpaṉ, பெ. (n.)

   ஒப்பில்லாதவன்; one who is incomparable,

     “கற்பவர்க ணற்புலனில் நிற்புறு மகற்பா” (சேதுபு. சருவதீ. 27.);.

த.வ. ஒப்பிலி.

     [Skt. a-kalpa → த. அகற்பன்.]

அகற்பப்பிராணாயாமம்

 அகற்பப்பிராணாயாமம் agaṟpappirāṇāyāmam, பெ. (n.)

   மந்திரச் சடங்குகளின்றி உயிர்ப்பினை ஒழுங்கு படுத்தும் ஒகவகை; restraint of breath practised without the use of mantras or meditation.

     [Skt. a – kalpa + piranayama → த. அகற்பப்பிராணாயாமம்.]

அகற்பவிபூதி

அகற்பவிபூதி agaṟpavipūti, பெ. (n.)

   இயற்கையிலுண்டான திருநீறு (சைவச. பொது. 186, உரை.);; sacred ashes found in nature.

     [Skt. a-kalpa + vibhudi → த. அகற்பவிபூதி.]

     [புழுதி → பூதி → Skt. vi-bhudi.]

அகற்பிதமரணம்

 அகற்பிதமரணம் agaṟpidamaraṇam, பெ. (n.)

   முதிரா இறப்பு; death occurring before the prescribed time, unnature death.

     [அகற்பித(ம்); + மரணம்.]

     [Skt. a-kalpita → த. அகற்பிதம்.]

அகற்றம்

அகற்றம் agaṟṟam, பெ. (n.)

   பரப்பு ; width, expanse.

     “எயில தகற்றமும்” (பெருங். மகத. 14;25);.

     [அகல் → அகற்று → அகற்றம்.]

அகற்றல்

அகற்றல் agaṟṟal, தொ. பெ. (vbl.n.)

   மந்திர வலிமையால் ஒருவரை ஓரிடத்தினின்று நீங்கச் செய்தல் (திருக்காளத். பு. 33; 23); ; causing a person to quit his place through magic.

     [அகல் → அகற்று → அகற்றல்.]

அகற்று-தல்

அகற்று-தல் agaṟṟudal,    2 பி.வி. (v.caus.)

   1. விரிவுபடுத்துதல் ; to widen, broaden, extend.

     “களிறுசென்று களன.கற்றவும்” (புறநா. 26 ; 3);.

   2. பெருகச்செய்தல் ; to increase.

     “மடங்கொன் றறிவகற்றுங் கல்வி” (நீதி நெறி. 3);.

   3. நீக்குதல் ; to remove.

     “இன்பம் பெருக்கி யிருள கற்றி” (திருவாச. 47;11);.

ம. அகற்றுக ; க. அகலிசு ; தெ. அகலின்சு (விரிவுபடுத்துதல்);.

     [(அகல் (த.வி.); → அகற்று (பி.வி.);.]

அகலகோட்டா

 அகலகோட்டா akalaāṭṭā, பெ. (n.)

   ஒசூர் வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Husur Taluk.

     [ஒருகா. அகழி+கோட்டை]

அகலக்கட்டை

 அகலக்கட்டை agalaggaṭṭai, பெ. (n.)

   அகலக் குறைவுள்ளது, பொதுவாக அகலக் குறைவுள்ள துணி ; that which lacks width, ordinarily applied to cloth.

     [அகலம் + கட்டை.]

அகலக்கரை

அகலக்கரை akalakkarai, பெ. (n.)

   அகலமுள்ள பெரிய சரிகைக் கரை (ம.வ.கொ. 67);; broad border of a cloth.

     [அகலம்+ கரை]

 அகலக்கரை agalaggarai, பெ.(n.)

   ஆடையின் அகன்ற பகட்டுக்கரை (இ.வ.); (டப்பாக்கரை);; thick border of the cloth.

     [அகலம்+கரை]

அகலக்கவி

அகலக்கவி akalakkavi, பெ. (n.)

விரித் துரைக்கும் பாடல்; (வித்தாரக் கவி);

 descriptive poem.

     “இவ்வகையே காட்டும் அகலக் கவிக்கு “(வெ. பா.22);

     [அகலம்+கவி]

அகலக்கால் வை-த்தல்

அகலக்கால் வை-த்தல் agalaggālvaittal,    4 செ.கு.வி. (v.i.)

   செலவு, வினைமுயற்சி முதலியவற்றில் அளவுகடந்து போதல் ; to go beyond limits, as in enterprise, spending, etc.

     ‘அகலக்கால் வைக்காதே’ (பழ.);.

     [அகலம் + கால் + வை.]

அகலசத்து

 அகலசத்து agalasattu, பெ. (n.)

   மலைச்சத்து, சிலாத்து ஒரு துணைத் தாதுப் பொருள்; fossil exudation stone lack supposed to issue from stones of mountains is hot weather (சா.அக.);.

     [Skt. agal-sat → த. அகலசத்து.]

அகலத்தவன்

அகலத்தவன் akalattavaṉ, பெ. (n.)

   பெருமையுடையோன்; honourable person

     “ஆளியைச்சேர்ந்த அகலத்தவனுக்கிளைய” (Sll, vi, 167.);.

     [அகலம்+அத்து+அவன்]

அகலத்தேடு-தல்

அகலத்தேடு-தல் agaladdēṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   நீங்க வகைபார்த்தல் ; to seek escape.

     “அவன்றான் அகலத் தேடிலும்” (திவ். திரு வாய். பன்னீ.);.

-, 5 செ.குன்றாவி. (v.t.);

   விரிவாகத் தேடிப்பார்த்தல் ; to search extensively.

அகலநில்-தல்

அகலநில்-தல் agalaniltal,    14 செ.கு.வி. (v.i.)

   ஒதுங்கி நில், விலகி நில் ; to stand aloof, to stand afar.

     ‘அகல இருந்தால் பகையும் உறவாம்’ (பழ.);.

     ‘அகல இருந்தால் புகல உறவு’ (பழ.);.

அகலநீக்கு-தல்

அகலநீக்கு-தல் akalanīkkutal, செ.கு.வி(v.i)

   அழித்துவிடுதல்; to destroy.

     “அதிராஜரை அகலநீக்கி” (E1, xvii,16.);.

     [அகல+நீக்கு]

அகலந்தோன்

அகலந்தோன் akalantōṉ, பெ. (n.)

   அகலமான மார்பை உடையவன்; a man of broad chest.

     “மான்மதச் சாந்து ஆர் அகலந்தோன் வரைபோலும் தோற்றம்” (பரி 16:44-6);

     [அகலம்(மார்பு);+அத்து+அவன்]

அகலன்

அகலன் agalaṉ, பெ. (n.)

   1. பருத்தவன் ; stout man.

   2. தீண்டாதவன் (சம்.அக.); ; member of the untouchable class.

     [அகல் + அன்.]

அகலப்பா

அகலப்பா agalappā, பெ. (n.)

   தனிநிலைச் செய்யுளாகவோ தொடர்நிலைச் செய்யுளாகவோ பரந்த பனுவல் ; voluminous work of poetry, epic poem.

     “ஈங்ககலப் பாக்க ளிரண் டாகும்” (வெண்பாம். செய். 5);.

     [அகலம் + பா.]

 அகலப்பா agalappā, பெ. (n.)

   அகலக்கவி பார்க்க; see agala-k-kavi.

     “ஈங்கு அகலப்பாக்கள்” (வெ.பா:27);

     [அகலம்+யா]

அகலமணி

அகலமணி agalamaṇi, பெ. (n.)

   ஒருவகை அணிகலன்; a kind of ornament.

     “ஆணி 49 அகலமணி.101ம்”(Sll, wi,329.);.

     [அகலம்+மணி]

அகலமுனி

 அகலமுனி agalamuṉi, பெ. (n.)

   ஆடுதின்னாப் பாளை; a plant which even the goat will not eat (சா.அக.);.

     [P]

அகலம்

அகலம் agalam, பெ. (n.)

   1. பரப்பு ; extent, expanse.

     “சென்னி யகல முப்பா னிராயிர மாம்” (கந்தபு. அசுர அண்ட. 29);;

     ‘அகல உழுகிறதைவிட ஆழ உழுகிறது மேல்’ (பழ.);.

   2. குறுக்களவு ; width.

ஆடையினகலம் மூன்று முழம் (உ.வ.);.

   3. பெருமை ; greatness.

     “நின் தோற்றமு மகலமு நீரினுள” (பரிபா. 4 ; 30);;

   4. ஞாலம் (அ.க.நி.); ; Earth.

   5. வானம் (பிங்.);; sky, atmosphere.

   6. உழாது விடப்பட்ட நிலம். தரவை நிலம் ; uncultivated land.

   7. மார்பு ; breast, chest.

     “மலைப்பரு மகலம்” (புறநா. 78 ; 4);.

   8. அகலப்பா ; voluminous poetic work, extensive poem.

     “ஆசு மதுரஞ் சித்திர மகலம்” (இலக். வி. 763);.

   9. அகலவுரை ; claborate commentary.

     ‘பொழிப்பு அகலம் நுட்பம் நூலெச்சம் என்னும் உரை’ (இறை.1. உரை);.

   10. விரிவாகச் சொல்கை ; elaboration.

     “உரைத்தனை சுருக்கி யாங்கள் நன்றித னகலங் கேட்க” (கந்தபு. பாயிரப். 81);;

   11. இடம் (பொதி.நி.); ; place.

   12. வாய் ; mouth.

     “குளத்தனைய தூம்பி னகலங்கள்” (நான்மணிக். 73);;

ம. அகலம்; க. அகல.

     [அகல் + அம்.]

 அகலம் agalam, பெ. (n.)

   1. வேப்பலகு (வை.மு.); ; leaf of margosa.

ஒ.நோ. ; அலகு.

   2. யானைத்திப்பிலி ; elephant pepper.

ஒ.நோ. ; அலகம்.

     [ஒருகா. அலகு → அலகம் → அகலம்.]

 அகலம் agalam, பெ. (n.)

   யாழின் ஓர் உறுப்பு. (12:38.);; a part of harp.

     [அகல்+அம்]

அகலர்

 அகலர் agalar, பெ. (n.)

   கீழ்மக்கள் ; low-born persons, outcastes (W.);.

அகலறை

அகலறை agalaṟai, பெ. (n.)

   1. பாசறை ; military camp.

     “மாக்க ணகலறை யதிர்வன முழங்க” (பட்டினப். 237);;

   2. மலைப்பக்கம் (பட்டினப். 237, நச். உரை); ; slope of a hill, hillside.

     [அகல் + அறை.]

அகலவாய்ச்சி

 அகலவாய்ச்சி agalavāycci, பெ. (n.)

   மரத்தை அல்லது பலகையைச் செதுக்கும் தச்சுக்கருவி வகை ; howel, cooper’s tool for smoothing work. adze.

அகலவுரை

அகலவுரை agalavurai, பெ. (n.)

   விரிவானவுரை (இறை.1, உரை); ; elaborate commentary.

     [அகலம் + உரை.]

அகலவுழு-தல்

அகலவுழு-தல் agalavuḻudal,    1 செ.கு.வி. (v.i.)

   மேலாக உழுதல் ; to plough shallowly.

அகலாதரை

 அகலாதரை agalātarai, பெ. (n.)

   ஆடாதோடை; a plant winter cherry (சா.அக.);.

அகலாப்பிணி

அகலாப்பிணி agalāppiṇi, பெ. (n.)

தீராத நோய்.

 Prolonging desease;

     “அகலாப்பிணி இல்லோர்”(வெ.பா. 78.);

     [அகலாத+பிணி]

அகலி-த்தல்

அகலி-த்தல் agalittal,    4 செ.கு.வி. (v.i.)

   1. விரிவுறுதல் ; to broaden out, extend, widen.

   2. பெருகுதல் ; to enlarge.

     “அகலி யாவினை யல்லல் போயறும்” (தேவா. 2.161 ; 1);;

     [அகல் → அகலி.]

ம. அகலிக்குக ; க. அகலிசு ; தெ. அகலின்சு.

அகலிகை

அகலிகை agaligai, பெ. (n.)

   கவுதமன் மனைவி; Ahalya, wife of Gaudama, one of pansa-kanniyar q.v.

     “அகலிமெய்க் கேள்வன்” (நல். பாரத கிருட்டிணார்ச்சுன. 99);.

     [Skt. agalya → த. அகலிகை.]

அகலிடத்தவர்

அகலிடத்தவர் agalidattavar, பெ. (n.)

உலகத்தவர்.

 people,

     “அன்றுவந்தெனை அகலிடத்தவர் முன்னே ஆளதாக என்று ஆவணங்காட்டி,”(வன். 7:62-5);

     [அகலிடம்(உலகம்);+அத்து+அவர்]

அகலிடப்பாரம்

அகலிடப்பாரம் akaliṭappāram, பெ. (n.)

நாடாளும் பெரிய பொறுப்பு நிலத்தைத் தாங்கும் சுமை.

 the responsibility on the person who is ruling the country, withstand the weight of the land.;

     “அகலிடப்பாரம் அகலநீக்கி” (சிலம்.30:180);

     [அகலிடம்+பாரம்]

அகலிடம்

அகலிடம் agaliḍam, பெ. (n.)

   அகன்ற இடமாகிய ஞாலம் ; Earth, as a wide place.

     “அகலிட நீரேற்றான்” (தேவா. 3.324;9);;

     [அகல் + இடம்.]

அகலிய

 அகலிய agaliya, பெ.எ. (adj.)

   அகன்ற, அகலமான ; broad, wide.

அகலியம்

 அகலியம் agaliyam, பெ. (n.)

   கிளைகளுடன் அகன்று வளரும் மரம் (பிங்.);; tree, as broadening out with branches.

     [அகல் → அகலி → அகலியம்.]

அகலியா

அகலியா agaliyā, பெ.எ., (adj.)

   பெருகாத; not increasing:

     “உகலிஆழ்கடல் ஓங்குபார்உளிர் அகலியாவினை அல்லல் போய் அறும்.” (சம் 2:25: 1);.

     [அகல்+இஆ]

அகலியான்

அகலியான் akaliyāṉ, பெ. (n.)

   கடவுள்;   அகன்றவன்; god:

     “ஆழாதே ஆழ்ந்தான் அகலாது அகலியான்.” (சேர. 3:3);.

     [அகலி+ஆன்]

அகலியை

 அகலியை agaliyai, பெ. (n.)

அகலிகை பார்க்க;see agaligai.

     [Skt. ahalya → த. அகலியை.]

அகலுள்

அகலுள் agaluḷ, பெ. (n.)

   1. அகலம் (திவா.); ; width.

   2. பெருமை (திவா.); ; greatness.

   3. அகன்ற தெரு (சிலப். 1 ; 47, அடியார்க். உரை); ; broad street.

   4. ஊர் (திவா.); ; town, village.

   5. நாடு (திவா.); ; country.

   6. ஞாலம் (ஆ.நி.); ; Earth.

     [அகல் + உள்.]

அகலோகம்

அகலோகம் akalōkam, பெ. (n.)

சூழிடம்.

 surrounding

     “அகலோகம் எல்லாம் அடியவர்கள் தற்குழ” (பூந்:2:6);

     [அகல்-உலகம்]

அகல்

அகல் agal, பெ. (n.)

   1. விரிவு ; wideness.

   2. பரப்பு ; extent of space, expanse.

   3. அல்குல் (பிங்.); ; the part immediately above pudendum muliebre.

   4. வாயகன்றகலமான சட்டி ; earthen pot, having a wide mouth.

     “காரகற் கூவியர்” (பெரும்பாண். 377);.

   5. விளக்குத் தகழி ; hollow earthen vessel for lamp.

     “திருவிளக்குத் திரியிட்டங்ககல்பரப்பி” (பெரியபு. கலிய.15);.

   6. ஓர் அளவு ; (தொல். எழுத்து. தொகை 28, உரை); ; a measure of capacity.

   7. உள்ளூர் (பொதி.நி.); ; inland town or village.

   8. ஊரின் உட்புறம் (பொ.நி.); ; the interior or inner part of a town or village.

   9. நாடு (பொதி.நி.); ; country, province.

   10. பெருமரம் (வின்.); ; tooth-leaved tree of Heaven, Ailanthus excelsa.

   11. வெள்வேல் (சங்.அக.); ; panicled babul.

ம. அகல் (தகழி); ; க. அகல் ; து. அகொலி ; கட. அகலெ.

அகல்(லு)-தல்

அகல்(லு)-தல் agalludal,    13 செ.கு.வி. (v.i.)

   1. விரிவடைதல் ; to widen, spread, extend.

     “விலங்ககன்ற வியன்மார்ப” (புறநா. 3;16);.

   2. ஆக்க முறுதல், பெருகுதல், வளர்ச்சியடைதல் ; to prosper, increase, develop, grow, progress.

     “அழுக்கற் றகன்றாரு மில்லை” (குறள், 170);.

   3. நீங்குதல் ; to leave, vanish.

     “பாயிரு ளகல” (புறநா. 25; 1);;

   4. பிரிதல் ; to separate, part.

     “அகன்றபூங் கொடியை” (பாரத. குரு. 79);.

   5. கடத்தல் (திவா.); ; to pass beyond, cross, leap over.

   6. நைந்து கிழிதல் ; to be worn out, to be torn.

வேட்டி அகன்று போயிற்று (வின்.);.

ம. அகலுக ; க. அகல் ; தெ. அகலு.

அகல்லியமாமிசம்

அகல்லியமாமிசம் agalliyamāmisam, பெ. (n.)

   சமைக்கப்படாத இறைச்சி, பச்சூன் (சி.சி. பர. சௌத். 29, வேலப்.);; meat not dressed.

     [Skt. a-kalya+mamisa → த. அகல்லியமாமிசம்.]

அகல்வட்டம்

 அகல்வட்டம் agalvaṭṭam, பெ. (n.)

   கதிரவனை அல்லது திங்களைச் சுற்றிப் போட்டிருக்கும் பெருங்கோட்டை ; large halo around the Sun or Moon.

     ‘அகல்வட்டம் பகல் மழை’ (பழ.);.

அகல்வு

அகல்வு agalvu, பெ. (n.)

   1. அகலம் ; extent, expanse.

     “ஒருநிரல் செல்லுமுள்ளகல்வுடைத் தாய்” (பெருங், உஞ்சைக்.49;59);;

   2. அடர்த்தியின்மை; sparseness.

     “பைத்த நிலத்தி னகன்ற பயிரகல்வி னீங்கப் பதித்து” (தணிகைப்பு. திருநாட்டுப். 93);.

   3. நீங்குகை ; removal.

     “அமிழ்தம் வவ்வி யகல்வழி” (காஞ்சிப்பு. முத்தி. 10);.

அகல்வோர்

அகல்வோர் agalvōr, பெ. (n.)

   1. விலகியிருப்பவர் ; those who live or remain apart.

   2. நீண்டாதார் (வின்.); ; outcastes, untouchables.

அகளங்கன்

அகளங்கன் agaḷaṅgaṉ, பெ. (n.)

   1. மாசிலாதவன் ; one free from impurity.

     “அகளங்க னனகன்” (நல். பாரத. ஆரணிய, கெளசிக. 77);.

   2. புத்தன் (திவா.); ; the Buddha.

     [அ + களங்கன்.]

அகளங்கமூர்த்தி

அகளங்கமூர்த்தி akaḷaṅkamūrtti, பெ. (n.)

   புத்தன்; Buddha.

     “சுதன் அகளங்கமூர்த்தி……பூமிசை நடந்தோன் புத்தன்” (நிக.1:26.); இலையோ” (நீல. 5:32);

     [அல்+களங்கம்+மூர்த்தி]

அகளங்கம்

அகளங்கம் agaḷaṅgam, பெ. (n.)

   1. மாசின்மை ; blemishlessness.

     “அகளங்க வுருவுடைய னாகலின்” (செங்கழு. விநா. பிள். அம். 2);;

   2. ஒரு கனிய நஞ்சு (சீதாங்க பாடாணம்); (மூ.அ.); ; a mineral poison.

     [அ + களங்கம். ‘அ’ எதிர்மறை முன்னொட்டு.]

களங்கம் பார்க்க ;see kalarigam.

அகளசகளத்தார்

அகளசகளத்தார் akaḷacakaḷattār, பெ. (n.)

   அருவுருவர்; visible and non-visible god. (சகளவடிவினர்);

     “ஆன நடம் ஐந்து அகள சகளத்தர்” (மூல.2727);.

     [அகளம்+சகளம்+அத்து+ஆர்]

அகளத்தி

 அகளத்தி akaḷatti, பெ. (n.)

   ஆளத்தி என்பதன் முதல் வடிவம்; correct form of the word alatti

     [அகல்-ஆல்-கள்+அத்தி]

அகளம்

அகளம் agaḷam, பெ. (n.)

   1. *சாடி (பிங்.); ; jar.

   2. மிடா (திவா.); ; large earthen pot.

   3. நீர்ச்சால் ; bucket.

     ”அகளத் தன்ன நிறைகனை” (மலைபடு..104);;

   4. யாழின் பத்தர் ; head of the lute, being shaped like a bowl, resonator.

     [அகல் + அம் – அகலம் → அகளம்.]

அகளுதி

 அகளுதி agaḷudi, பெ. (n.)

   வேம்பு (பச்.மு.); ; margosa tree.

அகழானெடு-த்தல்

அகழானெடு-த்தல் agaḻāṉeḍuttal,    4 செ.கு.வி. (v.i.)

   வளை தோண்டுதல் (வின்.);; to make holes in the earth; to burrow, as rats.

     [அகழான் + எ.டு.]

 அகழானெடு-த்தல் agaḻāṉeḍuttal,    4 செ.கு.வி. (v.i.)

   வளை தோண்டுதல் (வின்.); ; to make holes in the earth; to burrow, as rats.

     [அகழான் – எ.டு.]

அகழான்

 அகழான் agaḻāṉ, பெ. (n.)

   வளை தோண்டும் வயலெலி அல்லது காட்டெலி ; field rait or wild rat.

     [அகழ் → அகழான்.]

அகழெலி பார்க்க ;see agal-eli.

 அகழான் agaḻāṉ, பெ. (n.)

   வளை தோண்டும் வயலெலி அல்லது காட்டெலி ; field rat or wild rat.

     [அகழ் → அகழான்.]

அகழெலி பார்க்க ;see agal-eli.

அகழி

அகழி agaḻi, பெ. (n.)

   1. கோட்டையைச் சூழ்ந்துள்ள நீர்க்கிடங்கு ; ditch surrounding a fortification, moat.

     “அகழிசூழ் போகி” (சிலப். 13;183);;

     ‘அகழிவாய் முதலைபோல் வாயைப் பிளக்கிறான்’ (பழ.);;

     ‘அகழியிலே விழுந்த முதலைக்கு அதுவே வைகுந்தம்’ (பழ.);;

   2. கிடங்கு ; pit. depression.

     “பாருடைத்த குண்டகழி” (புறநா. 14;5);;

க. அகழு ; தெ. அகட்த.

     [அகழ் → அகழி.]

 அகழி agaḻi, பெ. (n.)

   வாயகன்ற கலம் ; pot with a wide mouth.

     “ஓரசுழி பெய்த்தற்பின்” (தைலவ. தைல. 94.);.

     [அகல் → அகலி → அகழி.]

   பாவினம் ; stanza of four lines of equal length, each line containing not less than six feet.

     “கழிநெடிலடிநான் கொத்திறின் விருத்தமஃ

தழியா மரபின தகவ லாகும்” (யாப். வி. 77);.

   துறை, தாழிசை, மண்டிலம் என்னும் மூன்றும் தூய தமிழ் யாப்பு வகைகள். மண்டிலம் என்பது எல்லா வடியும் அளவொத்து வரும் செய்யுள். நிலைமண்டில வாசிரியப்பா, அடிமறிமண்டில வாசிரியப்பா என்பவற்றை நோக்குக;   நாற்பாவிற்குமுரிய மண்டிலம் என்னும் இனம், அளவொத்த அடிகளாலேயே அமைதல் காண்க;   மண்டிலம் என்பது வட்டம். வட்டம் என்னும் சொல் முழுமையை அல்லது நிறைவைக் குறிக்குமாதலால், எல்லா வடிகளும் நிரம்பி வரும் பாவினம், மண்டிலம் எனப்பட்டது. வடமொழியாளர் வட்டம் என்னும் தென் சொல்லை வ்ருத்த எனத் திரித்தனர். ஒ.தோ; த. நடம் → நட்டம் → பிராகி. நட்ட → Skt. nirtta. இங்ஙனமே, வட்டம் என்னும் சொல்லும் திரிக்கப்பட்டது. த. வட்டம் → பிராகி. வட்ட → Skt. virtta;     ‘மண்டிலம்’ என்னும் சொல் வட்டம் என்னும் பொருளதாதலால், மண்டிலயாப்பை ‘வ்ருத்த யாப்பு’ என்றனர் தமிழ்நாட்டு வட மொழியாளர். வடமொழி (வேதமொழியும் சமற்கிருதமும்); தேவமொழியென நம்பப்பட்டதனாலும், இற்றை மொழியாராய்ச்சி முற்காலத்தின்மையாலும், மண்டிலத்திற்கு ‘விருத்தம்’ என்னும் வடசொற் பெயரைத் தமிழர் ஏற்றுக்கொண்டு வழங்கிவந்திருக்கின்றனர்;

   மூவடியாலும் நாலடியாலும் வரும் வெளி மண்டிலம் தவிர, மற்ற முப்பா மண்டிலங்களும் நாலடியாலேயே அமையும். வட மொழியிற் பொதுவாக விருத்தம் எனப்படும் யாப்புவகை ஈரடியே கொண்டது. இது வேத யாப்பிற்குப் பிற்பட்டதாதலால், தமிழையே பின்பற்றியதாகும்;   மண்டிலம் (மண்டலம்);, தாண்டகம் என்னும் சொற்களும், அவை குறிக்கும் யாப்பு வகைகளும், தூய தமிழேயென்பது, அச்சொற்களின் கீழ் ஐயந்திரிபற விளக்கப்படும்;விருத்தம் என்று சொல்லப்படும் தமிழ் யாப்புவகைகள் அனைத்தையும் இனி மண்டிலம் என்றே வழங்கல் வேண்டும்.

 அகழி agaḻi, பெ. (n.)

   1. கோட்டையைச் சூழ்ந்துள்ள நீர்க்கிடங்கு ; ditch surrounding a fortification, moat.

     “அகழிசூழ் போகி” (சிலப். 13;183);.

     “அகழிவாய் முதலைபோல் வாயைப் பிளக்கிறான்” (பழ.);;

     ‘அகழியிலே விழுந்த முதலைக்கு அதுவே வைகுந்தம்’ (பழ.);;

   2. கிடங்கு ; pit, depression.

     “பாருடைத்த குண்டகழிஞ (புறநா. 14;5);.

க. அதழு ; தெ. அகட்த.

     [அகழ் → அகழி.]

 அகழி agaḻi, பெ. (n.)

   வாயகன்ற கலம் ; pot with a wide mouth.

     “ஒரசுழி பெய்ததற்பின்” (தைலவ. தைல. 94);.

     [அகல் → அகலி → அகழி.]

அகழிதிருத்து-தல்

அகழிதிருத்து-தல் agaḻidiruddudal,    5 செ.கு.வி. (v.i).

   பயிரிடுதற்காகச் சிறிய பள்ளங்களைத் தூர்த்துச் சமமாக்குதல் ; to fill up small pits and level the ground for cultivation.

     ‘புன்செய்த் திடல் கல்லி அகழி திருத்தி’ (S.I.I. v, 216);.

அகழு

 அகழு agaḻu, பெ. (n.)

   பெருமரம் (அக.நி.); ; tooth leaved tree of Heaven.

அகழுநன்

அகழுநன் akaḻunaṉ, பெ. (n.)

   அகழ்வோன் பார்க்க; see {agalvon.}

     “பொருள் கொள்வான் அகழுநன் போன்று இலையோ” (நீல. 5:32.);.

     [அகழ்+உ+நன்]

அகழெலி

 அகழெலி agaḻeli, பெ. (n..)

   வளை தோண்டும் எலி (பிங்,);. ; field rat, Millardia meltada.

     [அகழ் + எலி.]

அகழ்

அகழ் agaḻ, பெ. (n.)

   1. அகழி ; moat.

     “வையயு மொருபுறத் தகழாம்” (திருவிளை. திருநகரப். 17);;

   2. குளம், நீர்த்தேக்கம் ; tank, reservoir.

     “நீர்நசைஇக் குழித்தவகழ்” (பெரும்பாண். 108);.

ம. அகழி ; க. அகழ் ; து. அகள்.

அகழ் எலி

அகழ் எலி akaḻeli, பெ. (n.)

   ஒரு வகை எலி; a kind of a rat.

     “இரும்பல் அகழ் எலி” (நிக. 8:224);.

     [அகழ்+எலி]

அகழ்-தல்

அகழ்-தல் agaḻtal,    2 செ.குன்றாவி (v.t.)

   1. தோண்டுதல் ; to dig out, excavate.

     “அகழ் வாரைத் தாங்கும் நிலம்போல” (குறள், 151);;

   2. பிடுங்குதல் ; to pluck out, as an eye.

     “தனது கண் ணகழ்ந்து” (திருக்காளத், பு. 6;36);;

   3. அடியோடு களைதல், மூலத்தோடு நீக்குதல் ; to uproot.

     “அகழ்தரு பாவத் தினராய்” (சூத. சிவ. 13;31);;

ம. அகழுக; க. அகழ் ; துட.. அட் ; கோத. அல் ; கொலா. அகுல்.

 அகழ்-தல் agaḻtal,    2 செ.குன்றாவி (v.t.)

   1. தோண்டுதல் ; to dig out, excavate.

     “அகழ் வாரைத் தாங்கும் நிலம்போல” (குறள், 151);;

   2. பிடுங்குதல் ; to pluck out, as an eye.

     “தனது கண் ணகழ்ந்து” (திருக்காளத். பு. 6 ; 36);;

   3. அடியோடு களைதல், மூலத்தோடு நீக்குதல் ; to uproot.

     “அகழ்தரு பாவத் தினராய்” (சூத. சிவ. 13;31);.

ம. அகழுக ; க. அகழ் ; துட. அட் ; கோத. அவ் ; கொலா. அகுல்.

அகழ்ச

அகழ்ச agaḻca, பெ. (n.)

   1. அகழி ; moat.

     “வையையு மொருபுறத் தகழாம்” (திருவிளை. திருநகரப். 17);;

   2. குளம், நீர்த்தேக்கம் ; tank, reservoir.

     “நீர்நசைஇக் குழித்தவகழ்” (பெரும்பாண். 108);.

ம. அகழி; க. அகழ் ; து. அகள்.

அகழ்த்துவங்கொள்-தல்

அகழ்த்துவங்கொள்-தல் agaḻttuvaṅgoḷtal,    16 செ.கு.வி. (v.i)

   கடைகாலெடுத்தல் (வானந் தோண்டுதல்); ; to dig out for laying foundation.

     “‘தேவர் தங்கட் கோய்வுறு கோயி லகத்துவங் கொள்க” (விதான நல்வினை. 12);;

     [அகழ் → அகழ்த்துவம் + கொள்.]

   மேற்கோளில், அகழ்த்துவம் என்பது அகத்துவம் எனத் தவறாகக் குறிக்கப்பட்டுள்ளது. அத் தவற்று வடிவத்தைச் சரியானதாகக் கொண்டு, “கர்ப்பக்கிரகத் தன்மை, வீட்டுத் தன்மை” என மதுரைத் தமிழ்ச்சங்க அகர முதலி பொருள் கூறியுள்ளது;
 அகழ்த்துவங்கொள்-தல் agaḻttuvaṅgoḷtal,    16 செ.கு.வி. (v.i)

   கடைகாலெடுத்தல் (வாணந் தோண்டுதல்); ; to dig out for laying foundation.

     ”தேவர் தங்கட் கோய்வுறு கோயிலகத்துவங் கொள்க” (விதான, நல்வினை. 12);;

     [அகழ் → அகழ்த்துவம் + கொள்.]

   மேற்கோளில், அகழ்த்துவம் என்பது அகத்துவம் எனத் தவறாகக் குறிக்கப்பட்டுள்ளது. அத்தவற்று வடிவத்தைச் சரியானதாகக் கொண்டு, “கர்ப்பக்கிரகத் தன்மை, வீட்டுத் தன்மை” என மதுரைத் தமிழ்ச்சங்க அகர முதலி பொருள் கூறியுள்ளது;

அகழ்ந்தோர்

 அகழ்ந்தோர் akaḻntōr,    தோண்டினவர்; sdiggers.

     “ஆர்கலி அகழ்ந்தோர் கங்கை அவனியில் கொணர்ந்தோர்.”

     [அகழ்வான்-அகவான்]

அகழ்ப்பு

 அகழ்ப்பு agaḻppu, பெ. (n.)

   ஆழம் (வின்); ; depth.

   இச்சொல் தவறாக அகப்பு எனச் சென்னை அகரமுதலியிற் குறிக்கப்பட்டுள்ளது;
 அகழ்ப்பு agaḻppu, பெ. (n.)

   ஆழம் (வின்.); ; depth.

   இச் சொல் தவறாக அகப்பு எனச் சென்னை அகரமுதலியிற் குறிக்கப்பட்டுள்ளது;

அகழ்வான்

 அகழ்வான் akaḻvāṉ, பெ. (n.)

   வயல் வரம்புகளிலும் நிலத்திலும் நிறைய வளைகளைத்தோண்டியபின் பாதுகாப்பிற்காக வளைகளின் முகப்புகளில் மண் தள்ளி அடைத்து விட்டு ஏதாவது ஒரு வளையில் மட்டும் பாதுகாப்பாக இருக்கும் ஒருவகை யெலி. (இ.வ.);; a rat which lives in a particular hole after digging many holes and sealing them.

     [அகழ்-அகழ்வான் அகவான் நிலத்தை அகழ்ந்து வளை தோண்டுவது]

வரப்புகளிலும் நிலத்திலும் நிறைய வளைகளைத் தோண்டிவிட்டு தோண்டிய வளைகளின் முகப்புகளில் மண்ணைத் தள்ளி அடைத்து விட்டு ஏதாவது ஒரு வளையின் உள்ளே இருக்கும் எலி வகை.

அகழ்வினையாளர்

அகழ்வினையாளர் akaḻviṉaiyāḷar, பெ. (n.)

   தோண்டும் தொழிலைச் செய்பவர்; diggers.

     “அகழ்விணையாளரை அவ்வயின் தரீஇ” (பெருங். 90:78);

     [அகழ்+வினை+ஆளர்]

அகழ்வோன்

அகழ்வோன் akaḻvōṉ, பெ. (n.)

   தோண்டுபவன்; diggers.

     “நீர்திகழ் சிலம்பின் நன் பொன் அகழ்வோன்” (அக.282:4);.

     [அகழ்+(ஆன்);ஓன்]

அகவஎலை

 அகவஎலை agavaelai, பெ. (n.)

   நாரி, செந்நிற இலையுடைய செடி; a plant known as “nari” with red leaves (சா.அக.);.

அகவஞ்சம்

 அகவஞ்சம் agavañjam, பெ. (n.)

   வெள்ளி; silver (சா.அக.);.

அகவடி

அகவடி agavaḍi, பெ. (n.)

   உள்ளங்கால் ; sole of foot,

     ‘அகல்டி யங்கை” (திருவிளை. உக்கிரபா. 41);.

     [அகம் + அடி.]

அகவடித்தட்டு-தல்

அகவடித்தட்டு-தல் akavaṭittaṭṭutal, செ. குன்றாவி (v.t)

   நடனம் ஆடுகையில் காலின் பாதத்தால் தரையைத் தட்டுவது; tap the floor with soul of the feet (35:11);.

     [அகம்+அடி+தட்டு]

அகவனசம்

அகவனசம் akavaṉacam, பெ. (n.)

   மனமாகிய தாமரை; as mind compared to lotus.

     “அகவனசம் முகவனசம் அவை மலர்” (ஒட்.5:92);.

அகத்தாமரை பார்க்க.

 see agattamarai.

     [அகம்+வனசம்]

அகவன்மகள்

அகவன்மகள் agavaṉmagaḷ, பெ. (n.)

   பாண் மகள் ; female bard of the Pânar caste.

     “வெண் கடைச் சிறுகோலகவன் மகளிர்” (குறுந் 298);.

அகவன்மண்டிலம்

அகவன்மண்டிலம் agavaṉmaṇṭilam, பெ. (n.)

   அளவொத்த கழிநெடிலடி நான்குகொண்ட ஆ.சிரியமண்டிலம் என்னும் ஆசிரியப் பாவினம் ; stanza of four lines of equal length, each line containing not less than six feet.

     “கழிநெடிலடிநான் கொத்திறின் விருத்தமஃ

தழியா மரபின தகவ லாகும்” (யாப். வி. 77);.

   துறை, தாழிசை, மண்டிலம் என்னும் மூன்றும் தூய தமிழ் யாப்பு வகைகள். மண்டிலம் என்பது எல்லா வடியும் அளவொத்து வரும் செய்யுள். நிலைமண்டிலவாசிரியப்பா, அடிமறிமண்டில வாசிரியப்பா என்பவற்றை நோக்குக;   நாற்பாவிற்குமுரிய மண்டிலம் என்னும் இனம், அளவொத்த அடிகளாலேயே அமைதல் காண்க;மண்டிலம் என்பது வட்டம். வட்டம் என்னும் சொல் முழுமையை அல்லது நிறைவைக் குறிக்குமாதலால், எல்லா வடிகளும் நிரம்பி வரும் பாவினம், மண்டிலம் எனப்பட்டது. வடமொழியாளர் வட்டம் என்னும் தென் சொல்லை வ்ருத்த’ எனத் திரித்தனர். ஒ.நோ. த. நடம் → நட்டம் → பிராகி. நட்ட → Skt. nirtta. இங்ஙனமே, வட்டம் என்னும் சொல்லும் திரிக்கப்பட்டது. த. வட்டம் → பிராகி. நட்ட l → Skt. virtta.

     ‘மண்டிலம்’ என்னும் சொல் வட்டம் என்னும் பொருளதாதலால், மண்டில யாப்பை ‘வ்ருத்த யாப்பு’ என்றனர் தமிழ்நாட்டு வட மொழியாளர். வடமொழி (வேதமொழியும் சமற்கிருதமும்); தேவமொழியென நம்பப்பட்டதனாலும், இற்றை மொழியாராய்ச்சி முற்காலத்தின்மையாலும், மண்டிலத்திற்கு ‘விருத்தம்’ என்னும் வடசொற் பெயரைத் தமிழர் ஏற்றுக்கொண்டு வழங்கி வந்திருக்கின்றனர்;

   மூவடியாலும் நாலடியாலும் வரும் வெளி மண்டிலம் தவிர, மற்ற முப்பா மண்டிலங்களும் நாலடியாலேயே அமையும். வட மொழியிற் பொதுவாக விருத்தம் எனப்படும் யாப்புவகை ஈரடியே கொண்டது. இது வேதயாப்பிற்குப் பிற்பட்டதாதலால், தமிழையே பின்பற்றியதாகும்;   மண்டிலம் (மண்டலம்);, தாண்டகம் என்னும் சொற்களும், அவை குறிக்கும் யாப்பு வகைகளும், தூய தமிழேயென்பது, அச்சொற்களின் கீழ் ஐயந்திரிபற விளக்கப்படும்;   விருத்தம் என்று சொல்லப்படும் தமிழ் யாப்பு வகைகள் அனைத்தையும் இனி மண்டிலம் என்றே வழங்கல் வேண்டும்;

அகவயம்

அகவயம் akavayam, பெ. (n.)

மனவயம் (சங்கற்பம்);.

 intension;

     “தன் அக வசத்து வருவுதங்க” (யுத், 36:3);.

     [அகம்+வயம்]

அகவயல்

அகவயல் akavayal, பெ. (n.)

மருதநிலம்

 wet land;

     “அகவயல் இளநெல் லரிகால் குடு” (பரி. 7:27);

     [அகம் + வயல்]

அகவயிரம்

 அகவயிரம் agavayiram, பெ. (n.)

   அகக்காழ் (இராட்.);; hard core of a tree (R.);.

     [அகம் + வயிரம்.]

அகவர்

அகவர் agavar, பெ. (n.)

   நாட்டில் வாழ்வார் (பொருந. 220);; inhabitants of a country.

 அகவர் agavar, பெ. (n.)

   வைகறையிற் பாடி அரசனைத் துயிலெழுப்பும் பாணர் ; bards who rouse the king from sleep with songs in the early morning.

     “நாளீண்டிய நல்லகவர்” (மதுரைக். 223);.

 அகவர்1 akavar, பெ. (n.)

நாட்டில் வாழ்பவர்.

 local people:

     “அகவர் நீனிற முல்லைப்பஃறிணை நுவல” (பொ.220-21);.

     [அகம்+அவர்]

 அகவர்2 akavar, பெ. (n.)

பாட்டுப்பாடும் பாணருள் ஒரு வகையினர்.

 bards who sing lyrics. (35:11);

     [அகவு+வரை]

அகவற்கரிதகம்

 அகவற்கரிதகம் agavaṟgaridagam, பெ. (n.)

   ஆசிரியப்பா வடிவான கலிப்பாவின் இறுதியுறுப்பு ; last member of certain kinds of kali verse.

ஆசிரியச் சுரிதகம் பார்க்க ;see diriyac-curidagam.

     [அகவல் + சுரிதகம்.]

அகவற்சீர்

 அகவற்சீர் agavaṟcīr, பெ. (n.)

   ஆசிரியப்பாவிற்குரிய இயற்சீர்கள் ; metrical feet of two syllables each, chiefly found in asiriyappa.

     [அகவல் + சீர்.]

அகவற்பா

 அகவற்பா agavaṟpā, பெ. (n.)

   அகவலோசையுடைய ஆசிரியப்பா ; one of four kinds of verse, having agaval rhythm.

     [அகவள் + பா.]

அகவற்றாழிசை

அகவற்றாழிசை agavaṟṟāḻisai, பெ. (n.)

   அளவொத்த மூவடி கொண்ட ஆசிரியப்பாவின் வகை ; variety of agaval verse containing three lines of equal length.

     “மூன்றடி யொத்த முடிவின வாய்விடின்

ஆன்ற வகவற் றாழிசை யாமே” (யாப். வி. 75);.

     [அகவல் + தாழிசை.]

அகவற்றுறை

அகவற்றுறை agavaṟṟuṟai, பெ. (n.)

   நான்கடி கொண்டு ஈற்றயலடி குறைந்தும், ஈற்றயலடி குறைந்து இடைமடக்காயும், இடையிடை குறைந்தும், இடையிடை குறைந்து இடைமடக்காயும் வரும் ஆசிரியப்பாவினம்; variety of agaval verse of four lines, in which the middle lines may differ in length from the first or last line.

     “கடையத னயலடி கடைதபு நடையவும்

நடுவடி மடக்காய் நான்கடி யாகி

யிடையிடை குறைநவு மகவற் றுறையே” (யாப். வி. 76);.

     [அகவல் + துறை.]

அகவற்றுள்ளல்

அகவற்றுள்ளல் agavaṟṟuḷḷal, பெ. (n.)

   வெண்டளையுங் கலித்தளையுங் கலந்துவரும் துள்ளலோசை ; a rhythm in kali metre.

     ”வெண்டளை தன்றளை யென்றிரண் டியையின்

   ஒன்றிய வகவற் றுள்ளலென் றோதுப” (யா.கா. 21, உரை);;     [அகவல் + துள்ளல்.]

அகவற்றூங்கல்

அகவற்றூங்கல் agavaṟṟūṅgal, பெ. (n.)

   ஒன்றாத வஞ்சித்தளையான் வரும் தூங்க லோசை (யா. கா. 21, உரை);; a rhythm in vañji metre.

     [அகவல் + தூங்கல்.]

அகவலன்

அகவலன் agavalaṉ, பெ. (n.)

   பாணன் ; bard of the Pânar caste who sings on the battle-field.

     “களம் வாழ்த்து மகவலன்” (பதிற்றுப். 43);.

அகவலன் பண்பாட அதுகேட்டுப் பெண் பாட (பழ.);.

     [அகவல் + அன்.]

 அகவலன் akavalaṉ, பெ. (n.)

அழைத்துப் புகழும் பாணன்.

 A bard addresses while singing;

     “கண்டி நுண்கோல் கொண்டு களம் வாழ்த்தும் அகலவன் பெறுக மாவே.”(பமி.43:27:8);.

     [அகவு-அகவல்+அன்]

அகவலம்

 அகவலம் akavalam, பெ. (n.)

   அரக்கோணம் வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in arakkonam Taluk.

     [அகம்+வலம்.]

அகவலியற்சீர்

அகவலியற்சீர் agavaliyaṟcīr, பெ. (n.)

   பெரும் பாலும் ஆசிரியப்பாவிற்குரிய ஈரிய லசைச் சீர்கள் ; metrical feet of two iyal syllables each chiefly found in asiriyappa.

     [அகவல் + இயற்சீர்.]

   இயலசை மயக்கத்தால் ஏற்பட்ட தேமா (நேர்நேர் –);. புளிமா (நிரைநேர் {} -);, கருவிளம் (நிரைநிரை { } );, கூவிளம் (நேர்நிரை-{ }); ஆகிய நான்கும் இயல்பான ஆசிரிய வியற்சீர்கள்;     “இயலசை மயக்கம் இயற்சீர்” (தொல். பொருள். செய்.13);;

   இனி, உரியிசையுடன் நேர் என்னும் இயலசை மயங்குவதால் ஏற்படும் நேர்புநேர் (சேற்றுக்கால், வேணுக்கோல்);, நிரைபுநேர் (களிற்றுத்தாள், முழவுத்தோள்);, என்னும் இருசீரும், ஆசிரிய வியற்சீரின்பாற்படும்;     “நேரவண் நிற்பின் இயற்சீர்ப் பால”

   இங்ஙனமே, இயலசையுடன் உரியசை மயங்குவதால் ஏற்படும் நேர் நேர்பு (போரேறு);, நேர்நிரைபு (பூமருது);, நிரை நேர்பு (கடியாறு);, நிரைநிரைபு (மழகளிறு); என்னும் நாற்சீரும், கூவிளம் (பாதிரி);, கருவிளம் (கணவிரி); என்பனபோல ஆசிரிய வியற் சீராகக் கொள்ளப்படும்;     “இயலசை யீற்றுமு னுரியசை வரினே

நிரையசை யியல வாகு மென்ப”

அகவலுரிச்சீர்

அகவலுரிச்சீர் agavaluriccīr, பெ. (n.)

   உரியசை மயக்கத்தாலும், உரியசையுடன் இயலசை விரவுவதாலும், ஏற்படும் ஈரசை ஆசிரியவுரிச்சீர்கள் ; bisyllabic metrical feet, in which, either both the syllables are uri or the succeeding one is ival.

     [அகவல் + உரிச்சீர்.]

   உரியசை மயக்கமான நேர்புநேர்பு (வீடு பேறு);, நிரைபுநேர்பு (வரகுசோறு);, நிரைபு நிரைபு (முடவுமருது);, நேர்புநிரைபு (பாறு குருகு); என்னும் நான்கும் இயல்பான ஆசிரிய வுரிச்சீர்கள்;     “உரியசை மயக்கம் ஆசிரிய வுரிச்சீர்” (தொல். பொருள். செய். 13, பேரா. உரை);;

   உரியசையும் இயலசையுங் கலந்த நேர்பு நிரை (நீடுகொடி, நாணுத்தளை);. நிரைபு நிரை (குளிறுபுலி, விரவுக்கொடி); என்னும் இரண்டும் ஆசிரிய வுரிச்சீரின்பாற்படுவன;     “முன்னிரை யுறினும் அன்ன வாகும்” (தொல். பொருள். செய். 14, பேரா. உரை);;

   இற்றை யிலக்கண நூல்கட்கெல்லாம் தொல்காப்பியம் மூலமாதலின், அதனொடு முரண்படும் கூற்றுகள் பெரும்பாலுங் கொள்ளத்தக்கன வல்ல;   உரிச்சீர் என்பது, முற்கால முறைப்படி உரியசைச் சீரையோ, பிற்கால முறைப்படி மூவசைச் சீரையோ குறித்தல் வேண்டும்;   பிற்கால இலக்கண நூல்களுட் சிறந்தயாப்பருங்கலத்திலும்;     “ஈரசை கூடிய சீரியற் சீரவை

யீரிரண் டென்ப வியல்புணர்ந் தோரே”

     “கூடிய” என்ற மிகையால் இயற்சீரை ஆசிரிய வுரிச்சீர் என்று வழங்குவாரும் உளர் ; என்னை ?

     “இயற்சி ரெல்லாம் ஆசிரிய வுரிச்சீர்”

   என்றார் காக்கைபாடினியார்” என்று, வேண்டாது மிகைபடக் கூறியுள்ளார்;   யாப்பருங்கலக் காரிகை 10-ல் “ஒண்சீ ரகவ லுரிச்சீர்” என்னும் ஈற்றடித் தொடரும் “ஒண்சீ ரகவ லியற்சீர்” என்றே ஒருகால் இருந்திருக்கலாம். அதனால், தளையோ ஒசையோ சிறிதுங் கெடவில்லை ஆகவே, இயற்சீர் நான்கையும் அகவலுரிச் சீர் என்று அகரமுதலிகள் கூறுவது பொருந்தாது;

அகவலை

அகவலை akavalai, பெ. (n.)

நெடுவலை.

 long net;

     “தடம் கண் விழிகளின் அகவலைப் படுப்பான்.” (சட.6:2:9);.

     [அகம்(உள்ளாழ்ந்த-நீண்ட);+வலை]

அகவலோசை

அகவலோசை agavalōcai, பெ. (n.)

   ஆசிரியப் பாவிற்குரிய ஓசை ; rhythm peculiar to agaval metre.

     “இயற்சீர்த் தாகியும் அயற்சீர் விரவியும்

தன்றளை தழுவியும் பிறதளை தட்டும்

அகவலோசைய தாசிரியம்மே” (மயேச்சுரம்);.

   ஏந்திசை யகவலும், தூங்கிசை யகவலும், ஒழுகிசையகவலுமென, அகவலோசை மூன்று வகைப்படும்;     “நேர்நே ரியற்றளை யான்வரு மகவலும்

நிரைநிரை யியற்றளை யான்வரு மகவலும்

ஆயிரு தளையுமொத் தாகிய வகவலும்

ஏந்தல் தூங்கல் ஒழுகல் என்றிவை

யாய்ந்த நிரனிறை யாகு மென்ப” (இலக். வி. 732, உரை);.

     [அகவல் + ஓசை.]

அகவல்

அகவல் agaval, பெ. (n.)

   1. மயிற்குரல் (பிங்.);; the call or cry of a peacock.

   2. அழைக்கை (பிங்.); ; calling, addressing.

   3. பாடல் (குறுந். 298); ; singing.

   4. நடஞ்செய்தல் (பிங்.); ; dancing.

   5. எடுத்தலோசை (பிங்.); ; high tone, acute accent.

   6. அகவற்பாவிற்குரிய ஓசை (யா.கா. 21); ; rhythm peculiar to agaval metre.

   7. ஆசிரியப்பா ; one of the four chief kinds of metre in Tamil prosody.

     “அகவல் என்ப தாசிரி யம்மே” (தொல், பொருள். செய். 80);.

ம. அகவல்

அகவல்விருத்தம்

அகவல்விருத்தம் agavalviruttam, பெ. (n.)

   ஆசிரிய விருத்தம்; a metre in prosody

     “அகவல் விருத்தம் கட்டளை யொலியும் கலியின் விருத்தமும் கவின் பெறு பாவே”.(ப.பா.:189);

     [அகவு-அகவல்+விருத்தம்]

அகவாசிகம்

 அகவாசிகம் agavācigam, பெ. (n.)

   கருங்குறிஞ்சா; a black variety of kurinja, a plant (சா.அக.);.

அகவாட்டி

 அகவாட்டி agavāṭṭi, பெ. (n.)

   மனைவி (வின்.); ; wife.

     [அகம் + ஆட்டி – அகவாட்டி. அகம் = வீடு. ஆள் → ஆளன் → ஆட்டி (பெ.பா. ஈறு.);]

 அகவாட்டி agavāṭṭi, பெ. (n).

   மனைவி (வின்.);; wife.

     [அகம் + ஆட்டி – அகவாட்டி. அகம் = வீடு. ஆள் → ஆளன் → ஆட்டி (பெ.பா. ஈறு.);]

அகவான்

அகவான் akavāṉ,    அகழ்வான்பார்க்க அகழ்வான்; see {agalvan}

 அகவான் agavāṉ, பெ. (n.)

   முதலாளிக்கு நிகராகச் செயல்படுபவன்; a agency.

     “நேரிருந்து சீமையகவா னிகழ்த்த” (பஞ்ச. திருமு. 2164);.

     [H. agawani → த. அகவான்.]

அகவாயில்

அகவாயில் agavāyil, பெ. (n.)

   மனம் ; mind.

     “அகவாயி லெண்ணத்தின் ஏற்ற மறிந்து” (குருபரம். 258);;

     [அகம் + வாயில்.]

அகவாய்

அகவாய் agavāy, பெ. (n.)

   1. உள்ளிடம் ; interior, inside.

     “அகவாயிற் பெருச்சாளி” (திவ். திருமாலை 7, வியா.);.

   2. மனம் (சம். அக. கை.); ; mind.

   3. கதவுநிலை ; door-frame.

     ‘திருக்கற்றளிப் பலகைப்படையும் பஞ்சரமும் அகவாயுஞ் செய்தான்’

     [அகம் – வாய்.]

 அகவாய் agavāy, பெ. (n.)

   1. உள்ளிடம் ; interior, inside.

     ‘அகவாயிற் பெருச்சாளி’ (திவ். திருமாலை 7, வியா.);;

   2. மனம் (சம்/ அக.கை..); ; mind.

   3. கதவுநிலை ; door-frame.

     ‘திருக்கற்றளிப் பலகைப் படையும் பஞ்சரமும் அகவாயுஞ் செய்தான்’ (Pudu, Insc. 635);;

     [அகம் + வாய்.]

 அகவாய் akavāy, பெ. (n.)

   உள் கால்வாய்; internal canal.

     “இவ்வூர் அகவாயின் வெங்கூர் நாலாங் கண்ணாற்று” (SII. Xii, 287.);.

     [அகம்+வாய்]

அகவாய்க்கோடு

அகவாய்க்கோடு agavāygāṭu, பெ. (n.)

   வண்டியின் நெடுஞ்சட்டம் ; long bar of the body of a cart.

     “அகவாய்க் கோடும் புறவாய்ப் பூணும்” (பெருங், உஞ்சைக். 58 ; 48);;

     [அகம் + வாய் + கோடு.]

 அகவாய்க்கோடு agavāygāṭu, பெ. (n.)

   வண்டியின் நெடுஞ்சட்டம் ; long bar of the body of a cart.

     “அகவாய்க் கோடும் புறவாய்ப் பூணும்” (பெருங். உஞ்சைக். 58 ; 48);;

     [அகம் + வாய் + கோடு.]

அகவாலிசுரோதம்

 அகவாலிசுரோதம் agavālisurōtam, பெ. (n.)

   வால் நீண்ட குரங்கு; a long-tailed monkey (சா.அக.);.

அகவிதழ்

அகவிதழ் agavidaḻ, பெ. (n.)

   உள்ளிதழ் ; inner petal of a flower.

     “அம்மல ரகவிதழ்” (கலித். 77 7);;

     [அகம் + இதழ்.]

 அகவிதழ் agavidaḻ, பெ, (n.)

   உள்ளிதழ் ; inner petal of a flower.

     “அம்மல ரகவிதழ்” (கலித். 77 ; 7);.

     [அகம் + இதழ்.]

 அகவிதழ் akavitaḻ, பெ. (n.)

   மலர்களின் உள் இதழ்; innerpetal5

     “”அம்முகை மிசை.அம்மலர் அகவிதழ்த் தண்பனி உறைத்தரும்.” (கலி 77:6–7);.

     [அகழ்+இதழ்]

அகவினை

அகவினை akaviṉai, பெ. (n.)

   1. இடையூறு கீழறுப்பு:

 disturb. (தெ.கோ.சா.3:2);.

     [அகம்+வினை]

அகவிரல்

அகவிரல் agaviral, பெ. (n.)

   விரலின் உட்புறம் ; inner side of a finger.

     ‘விக்கின நரம்பை அக விரலாலும் புறவிரலாலுங் கரணஞ் செய்து’ (சீவக. 657, நச். உரை);;

     [அகம் + விரல்.]

 அகவிரல் agaviral, பெ. (n.)

   விரலின் உட்புறம்; inner side of a finger.

     ‘வீக்கின நரம்பை அக விரலாலும் புற விரலாலும் கரணஞ் செய்து’ (சீவக. 657, நச். உரை);;

     [அகம் + விரல்.]

அகவிருள்

 அகவிருள் agaviruḷ, பெ. (n.)

   அறியாமையாகிய மனவிருள் ; spiritual ignorance, as inner darkness.

     “அக்வீருட் பானு” (திருவேங். சத. தனியன்);.

     [அகம் + இருள்.]

 அகவிருள் agaviruḷ, பெ. (n.)

   அறியாமையாகிய மனவிருள் ; spiritual ignorance, as inner darkness.

     “அக்வீருட் பானு” (திருவேங். சத. தனியன்);.

     [அகம் + இருள்.]

அகவிரை,

அகவிரை, agavirai பெ. (n.)

   உள்ளிடத்திருக்கும் (கபோதகத்தலை என்னும்); வீட்டின் உறுப்பு; a small plank on the inner pillar.

     “நல் இல் அகவிரை உறையும் வண்ணப் புறவின்” (நற்.71:7-8.);.

     [அகவு அறை.இறை-இரை.(கொ.வ.);]

அகவிலை

அகவிலை agavilai, பெ. (n.)

   உள்ளிதழ் ; inner petal of a flower.

     “அகவிலை யாம்பல்” (தேவா. 4.55 ; 8);;

     [அகம் + இலை.]

 அகவிலை agavilai, பெ. (n.)

   தவசவிலை ; cost of foodgrains.

     “நெல்லு மகவிலை குறைந்து” (திருநெல், பு. நெல்லு. 4);;

     ‘அகவிலை யறிவா தவன் துக்கம் அறியான்’ (பழ.);;

     ‘அகவிலை ஏறினால் அவளுக்கென்ன, அகமுடையான் இருக்கிறான் தேடிப்போட’ (பழ.);;

     ‘அகவிலை தெரியாது அவள் பேச்சுப் புரியாது’ (பழ.);;

     ‘அகவிலையால் திண்டாடும்போது வைர அட்டிகை கேட்டாளாம்’ (பழ.);;

     [அஃகம் → அகம் + விலை.]

 அகவிலை agavilai, பெ. (n.)

   உள்ளிதழ் ; inner petal of a flower.

     “அகவிலை யாம்பல்” (தேவா. 4.55 8);;

     [அகம் + இலை.]

 அகவிலை agavilai, பெ. (n.)

   தவசவிலை ; cost of food grains.

     “நெல்லு மகவிலை குறைந்து” (திருநெல், பு. நெல்லு. 4);.

     ‘அகவிலை யறிவா தவன் துக்கம் ‘அறியான்’ (பழ.);.

     ‘அகவிலை ஏறினால் அவளுக்கென்ன, அகமுடையான் இருக்கிறான் தேடிப்போட’ (பழ.);;

   அகவிலை தெரியாது அவள் பேச்சுப் புரியாது (பழ.);;     ‘அகவிலையால் திண்டாடும்போது வைர அட்டிகை கேட்டாளாம்’ (பழ.);;

     [அஃகம் → அகம் + விலை.]

அகவு

 அகவு agavu, பெ. (n.)

   அமுக்கிரா (மூ.அ.); ; species of withania.

அகவு-தல்

அகவு-தல் agavudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. மயில் அகவுதல் ; to call or cry, as a peacock.

     ‘பல் பொறி மஞ்ஞை வெல்கொடி யகவ’ (திரு முருகு. 122);;

   2. பாடுதல் ; to sing.

     ‘அகவலன் பெறுக மாவே’ (பதிற்றுப். 43;28);;

   3. நடஞ்செய்தல் (பிங்.); ; to dance, as a peacock.

   4. நெடுமையாதல் (ஈடு, 6.2;9); ; to become long, lengthen out.

—,

   5 செ.குன்றாவி. (v.t.);

   அழைத்தல் (பிங்.); ; to call, summon.

 Skt. {ä-hvé}

 அகவு-தல் agavudal,    5 செ.கு.வி. (v.i)

   1. மயில் அகவுதல் ; to call or cry, as a peacock.

     ‘பல் பொறி மஞ்ஞை வெல்கொடி யகவ” (திரு முருகு. 122);;

   2. பாடுதல் ; to sing.

     “அகவலன் பெறுக மாவே” (பதிற்றுப். 43 ; 28);.

   3. நடஞ் செய்தல் (பிங்.); ; to dance, as a peacock.

   4. நெடுமையாதல் (ஈடு, 6.2 ; 9);; to become long, lengthen out.

–, 5 செ.குன்றாவி. (v.t.);

   அழைத்தல் (பிங்.); ; to call, summon. Skt. {ä-hve}

அகவுநர்

 அகவுநர் akavunar,    கிணைப்பறையை முழக்கிக் கொண்டு பாடுபவர்; bards who sings with beating kinai-p-parai

     [அகவு+அகவுநர்]

அகவுயிர்

அகவுயிர் agavuyir, பெ. (n.)

   உடம்பினுள் உள்ள உயிர் ; in-dwelling soul.

     “என தகவுயிர்க் கமுதே யென்னும்” (திவ். திருவாய். 2.4;6);.

     [அகம் + உயிர்.]

 அகவுயிர் agavuyir, பெ. (n.)

   உடம்பினுள் உள்ள உயிர் ; in-dwelling soul.

     “என தகவுயிர்க்கமுதே யென்னும்” (திவ். திருவாய். 2.4;6);;

     [அகம் + உயிர்.]

 அகவுயிர் akavuyir, பெ. (n.)

   ஆதன், (ஆன்மா);; soul.

     [அகம்+உயிர்]

அகவேளை

அகவேளை agavēḷai, பெ. (n.)

   1. நண்பகல் ; midday.

   2. நள்ளிரவு ; midnight.

     [அகம் + வேளை.]

அகவை

அகவை agavai, பெ. (n.)

   1. உள்ளிடம் ; inside.

     “ஆய கானத் தகவையுள்'” (உபதேசகா. சிவவி. 143);;

   2. உட்பட்ட பருவம் ; age within a certain milit.

     ”ஈராறாண் டகவையாள்” (சிலப். மங்கல. 24);.

   3. ஆண்டுப்பருவம் ; age.

உன் அகவை என்ன? (உ.வ.);.

–, இடை. (ind.);

   இடவேற்றுமை யுருபு ; a loc. ending.

     “ஆடித் திங்க ளகவையின்” (சிலப். உரை பெறுகட் 3);;

 அகவை agavai, பெ. (n.)

   1. உள்ளிடம் ; inside.

     “ஆய கானத் தகவையுள்” (உபதேசகா. சிவவி. 143);;

   2. உட்பட்ட பருவம் ; age within a certain milit.

     “ஈராறாண் டகவையாள்” (சிலப். மங்கல. 24);.

   3. ஆண்டுப்பருவம் ; age.

உன் அகவை என்ன? (உ.வ.);.

–, இடை. (ind.);

   இடவேற்றுமை யுருபு ; a loc. ending.

     “ஆடித் திங்க ளகவையின்” (சிலப். உரை பெறுகட். 3);.

அகவையாள்

அகவையாள் akavaiyāḷ, பெ. (n.)

   உடல் வளர் நிறைவுக்கு உட்பட்ட பருவத்தாள்; age bound prescribed.

     “ஈர் ஆறு ஆண்டு அகவையாள்” (சிலப். 11:24);

     [அகவை+ஆள்]

அகாடி

அகாடி akāṭi, பெ. (n.)

   1. முன்; front.

   2. குதிரை முன்னங்காற் கயிறு (வின்.);; rope used for tying a horse’s fore-feet.

     [U. agari → த. அகாடி.]

அகாடிபிச்சாடியில்லாதவன்

 அகாடிபிச்சாடியில்லாதவன் akāṭibiccāṭiyillātavaṉ, பெ. (n.)

   கட்டுக்கடங்காதவன் (இ.வ.);; person free from all responsibility, as a horse bound neither before nor behind.

     [அகாடிபிச்சாடி + இல்லாதவன்.]

     [U. agari + pichware → த. அகாடிபிச்சாடி.]

அகாண்டகுசுமம்

 அகாண்டகுசுமம் agāṇṭagusumam, பெ. (n.)

   பருவந் தவறிப் பூக்கை; blossoming out of season (சா.அக.);.

     [அகாண்டம் + குகமம்.]

     [Skt. a-ganta → த. அகாண்ட(ம்);.]

அகாண்டசாதம்

 அகாண்டசாதம் akāṇṭacātam, பெ. (n.)

   குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே பிறந்தது; premature birth (சா.அக.);.

     [Skt. a-ganta+jata → த. அகாண்டசாதம்.]

அகாண்டசூலை

 அகாண்டசூலை akāṇṭacūlai, பெ. (n.)

   குத்தல் வலி; acute pain (சா.அக.);.

     [அகாண்டம் + சூலை.]

     [Skt. a-ganta → த. அகாண்டம்.]

     [த. சூலை → Skt. sula.]

அகாண்டபாதசாதம்

 அகாண்டபாதசாதம் akāṇṭapātacātam, பெ. (n.)

   பிறந்தவுடன் இறத்தல்; dying soon after birth (சா.அக.);.

     [Skt. akanda + pata + jata → த. அகாண்ட பாதசாதம்.]

அகாண்டபாதம்

 அகாண்டபாதம் akāṇṭapātam, பெ. (n.)

   இயற்கைக்கு மாறான நிகழ்ச்சி; unnatural or untimely occurence (சா.அக.);.

     [Skt. akanda + pata → த. அகாண்டபாதம்.]

அகாண்டம்

அகாண்டம் akāṇṭam, பெ. (n.)

   1. இசையாக் காலம்; out of season before the natural time.

   2. முண்டமில்லாதது; that without a trunk (சா.அக.);.

     [Skt. akanda → த. அகாண்டம்.]

அகாதசுரம்

 அகாதசுரம் akātasuram, பெ. (n.)

   அளவிறந்த காய்ச்சல்; a condition marked by excessively high temperature or aggravated febrile symptoms, hyperpyretia (சா.அக.);.

     [அகாதம் + சுரம்.]

     [Skt. a-gadha → த. அகாத(ம்);.]

அகாதநோய்

 அகாதநோய் akātanōy, பெ. (n.)

   கடுமையான நோய்; a virulent disease (சா.அக.);.

     [அகாத(ம்); + நோய்.]

     [Skt. a-gadha → த. அகாதம்.]

அகாதன்

 அகாதன் akātaṉ, பெ. (n.)

   வஞ்சகன் (யாழ்.அக.);; deceit full man.

த.வ. கேடன்.

     [Skt. a-gadha → த. அகாதன்.]

அகாதபசி

 அகாதபசி akātabasi, பெ. (n.)

   அளவிறந்த பசி; extreme hunger, hyperorexia (சா.அக.);.

த.வ. யானைப்பசி.

     [அகாதம் + பசி.]

     [Skt. a-gadha → த. அகாத(ம்);.]

அகாதபித்தம்

 அகாதபித்தம் akātabittam, பெ. (n.)

   கொடிய பித்தம்; excessive secretion of bile, hypercholia (சா.அக.);.

     [அகாதம் + பித்தம்.]

     [Skt. a-gadha → த. அகாத(ம்);.]

பித்து → பித்தம்.

அகாதப்படுஞ்சமயம்

 அகாதப்படுஞ்சமயம் akātappaḍuñjamayam, பெ. (n.)

   துன்பக்காலம் (வின்.);; times of adversity.

     [அகாதம் + படுஞ்சமயம்.]

     [Skt. a-gadha → த. அகாத(ம்);.]

அகாதப்புளிப்பு

 அகாதப்புளிப்பு akātappuḷippu, பெ. (n.)

   கூடுதற் புளிப்பு; excess of acidity, hyperacidity (சா.அக.);.

     [அகாதம் + புளிப்பு.]

     [Skt. a-gadha → த. அகாதம்.]

அகாதம்

அகாதம்1 akātam, பெ. (n.)

   1. மிக்க ஆழம் (அஷ்டப். அழகரந். 15.);; great depth.

   2. நீந்துபுனல் (பிங்.);; water of swimming depth.

   3. மிகுதி; excess.

     [Skt. a-gadha → த. அகாதம்.]

 அகாதம்2 akātam, பெ. (n.)

   தேவகணத்தால் வெட்டப்பட்ட குளம் (நாநார்த்த);; tank formed by divine agency.

     [Skt. a-gadha → த. அகாதம்.]

அகாதவலி

அகாதவலி akātavali, பெ. (n.)

   1. தாங்க வொண்ணா மிகு வலி; excessive sensibility to pain, hyperadigesia.

   2. ஆழ்ந்த வலி; deep seated pain (சா.அக.);.

     [அகாத(ம்); + வலி.]

     [Skt. a-gadha → த. அகாத(ம்);.]

அகாதவியர்வை

 அகாதவியர்வை akātaviyarvai, பெ. (n.)

   விட்டொழியா வியர்வை; excessive sweating, Hyperphidrosis (சா.அக.);.

     [அகாத(ம்); + வியர்வை.]

     [Skt. a-gadha → த. அகாத(ம்);.]

வியர் → வியர்வை.

அகாதவுதிரம்

அகாதவுதிரம் akādavudiram, பெ. (n.)

   1. மிகுதியான குருதி; vast quantity of blood, Polyemia.

   2. அளவிறந்த குருதி; superabundance of blood, Plethora (சா.அக.);.

     [Skt. a-gadha+udhira → த. அகாதவுதிரம்.]

அகாதவொழுக்கு

 அகாதவொழுக்கு akātavoḻukku, பெ. (n.)

   அளவிறந்த அரத்தப்போக்கு; excessive evacuation as in bleeding or purging, hypercenosis (சா.அக.);.

     [அகாதம் + ஒழுக்கு.]

     [Skt. a-gadha → த. அகாத(ம்);.]

ஒழு → ஒழுகு → ஒழுக்கு.

அகாதிகள்

அகாதிகள் agātigaḷ, பெ. (n.)

முத்திப்பேறு, முத்திச் செயல், (Jaina.);

 unobstuctive karmas helpful in emancipation, four in number.

     “தீர்ப்ப தகாதிகள்” (திருநூற். 88.);.

     [Skt. a-ghatin → த. அகாதிகள்.]

அகாதிதகம்

அகாதிதகம் agādidagam, பெ. (n.)

   1. கடித்துத் தின்னக் கூடாதது; that which can only be swallowed and not masticated.

   2 அகாத்தியம்2 பார்க்க;see agattiyam2.

அகாத்தியம்

அகாத்தியம்1 akāttiyam, பெ. (n.)

   1. பொல்லாங்கு; wickedness.

   2. ஏய்ப்பு வஞ்சகம்; deceit.

     [Skt. aghatya → த. அகாத்தியம்.]

 அகாத்தியம்2 akāttiyam, பெ. (n.)

   கடித்துண்ணத் தகாதது; that which is not fit for chewing (சா.அக.);.

அகாந்தம்

 அகாந்தம் akāndam, பெ. (n.)

   தான்றி (பச்.மூ.); ; belleric myrobalan.

     [அக்கந்தம் → அகாந்தம்.]

அக்கந்தம் பார்க்க ;see akkandam.

அகாமம்

 அகாமம் akāmam, பெ. (n.)

   காமமின்மை ; absence of desire or lust.

     [அ + காமம். ‘அ’ எதிர்மறை முன்னொட்டு.]

காமம் பார்க்க ;see {kāmam.}

அகாமவினை

அகாமவினை akāmaviṉai, பெ. (n.)

   அறியாது அல்லது விருப்பவுணர்ச்சியின்றிச் செய்யுஞ் செயல் ; unintentional action.

     “கிருகபதியகாம வினையினுக்குப் பரிகாரம் பகர்ந்திடுவர்” (சிவதரு. பரிகார, 2);.

     [அ + காமம் + வினை.]

 அகாமவினை akāmaviṉai, பெ. (n.)

   விரும்பாமலே செய்யும் தொழில்; unintentional action.

     “கிருகபதி யகாம வினையினுக்குப் பரிகாரம் பகர்ந்திடுவர்” (சிவதரு. பரிகார-2);.

அகாரணன்

 அகாரணன் akāraṇaṉ, பெ. (n.)

   கடவுள்; god, as uncaused.

     [Skt. a-karana → த. அகாரணன்.]

அகாரணமாக

 அகாரணமாக akāraṇamāka, கு.வி.எ. (adv.)

   கரணியமின்றி; without proper reason.

அகாரணமாகச் சந்தேகப்பட்டுக் காரியத்தை கெடுத்துவிடாதே (இ.வ.);.

     [அகாரணம் + ஆக.]

     [Skt. a-karana → த. அகாரணம்.]

அகாரணம்

அகாரணம்1 akāraṇam, பெ. (n.)

   நேர்ச்சி (தற்செயல்); (வின்.);; accident.

     [Skt. a-karana → த. அகாரணம்.]

 அகாரணம்2 akāraṇam, பெ. (n.)

   காரணமின்மை; absence of cause.

     “அகாரணத் தெதிர்த்தீர்” (காஞ்சிப்பு. தக்கீச. 12);.

     [Skt. a-karana → த. அகாரணம்.]

அகாரம்

அகாரம் akāram, இடை. (part.)

     ‘கரம்’ என்பது ‘அ’ என்னும் எழுத்தின் சாரியை. அகரம் = அ.

     ‘அ’ என்பதும் அகரம்’ என்பதும் மெய்யெழுத்தின் சாரியை.

க = க், ககரம் = க்

     ‘கரம்’ என்பது குறிற்கே யுரிய சாரியை யாதலின், ‘அகாரம்’ என்றோ ‘ககாரம்’ என்றோ உரைநடையிற் குறித்தல் வழுவாம்.

     “ரகார ழகாரம் குற்றொற் றாகா” (தொல். எழுத்து. மொழி. 16); என்பது செய்யுள் வடிவான நூற்பாவாதலின், ‘அகரம்’ என்பது “அகாரம்’ என இன்னோசையும் இசைநிறைவும்பற்றி நீண்டொலித்தது. இதை இயல்பென்று கொள்வது தவறாகும்.

வடமொழியிலக்கணம் தமிழிலக்கணத்திற்குப் பிந்தியதும் அதைத் தழுவியதுமாதலின், தமிழ்முறையறியாது நெடிற்குரிய காரச் சாரியையையும் குறிற்கேற்றிக்கொண்டது. இதையறியாத பிற்காலத் தமிழிலக்கண நூலாசிரியரும் வடநூல் முறையைப் பின்பற்றுவராயினர்.

கரம், காரம், கான் பார்க்க ;see karam, karam, kdn.

 அகாரம் akāram, பெ. (n.)

   வீடு (பிங்.);; house.

     [Skt. agara → த. அகாரம்.]

அகாரவுப்பு

 அகாரவுப்பு akāravuppu, பெ. (n.)

   கல்லுப்பு (வை.மூ.); ; rock-salt.

     [அ+-காரம் + உப்பு – அகாரவுப்பு. ‘அ’ எதிர்மறை முன்னொட்டு.]

அகாரி

 அகாரி akāri, பெ. (n.)

   கடவுள் (வின்.);; god.

     [Skt. a-karin → த. அகாரி.]

அகாரியம்

அகாரியம் akāriyam, பெ. (n.)

   தகாத செய்கை; improper act, unworthy deed, criminal or sinful action.

     “நாவகாரியஞ் சொல்லிலாதவர்” (திவ். பெரியாழ். 4, 4, 1);.

த.வ. தீச்செயல்.

     [Skt. a-karya → த. அகாரியம்.]

அகாருண்யம்

அகாருண்யம் akāruṇyam, பெ. (n.)

   அருளின்மை (மேருமந். 97, உரை.);; mercilessness.

த.வ. இரக்கமின்மை.

     [Skt. a-karunya → த. அகாருண்யம்.]

அகாலகாலன்

அகாலகாலன் akālakālaṉ, பெ. (n.)

   எமன் போன்றவன்; one who is like yama

     “அகங்க்ய விக்ரமந் அகாலகாலன்” (SII, iii, 2066.);.

     [அகாலம்+காலன்]

அகாலச்சாவு

 அகாலச்சாவு akālaccāvu, பெ. (n.)

   இளமை அல்லது மூப்பிற்கு முந்திய சாவு ; premature or early death.

     [அ + காலம் + சாவு.]

அகாலப் பிள்ளைப்பேறு

 அகாலப் பிள்ளைப்பேறு akālappiḷḷaippēṟu, பெ. (n.)

   உரிய காலத்திற்குமுன் பிள்ளை பெறுகை ; premature delivery of child.

     [அ + காலம் + பிள்ளை + பேறு.]

அகாலப்பேறுகாலம்

 அகாலப்பேறுகாலம் akālappēṟukālam, பெ. (n.)

அகாலப் பிள்ளைப்பேறு பார்க்க ;see agala-p-pillai-p-peru.

     [அ + காலம் + பேறு + காலம்.]

அகாலம்

அகாலம் akālam, பெ. (n.)

   1. தகாத அல்லது உரிய காலமல்லாத காலம்; inauspicious or inopportune time.

     “அகாலத்தி லுன்னுடை யுடலைவிட நினைப்பதென்” (ஞானவா. பிரகலாத. 61);.

   2. பஞ்ச காலம் (வின்.); ; times of scarcity.

     [அ + காலம். ‘அ’ எதிர்மறை முன்னொட்டு.]

காலம் பார்க்க ;see kalam.

அகாலவுணவு

 அகாலவுணவு akālavuṇavu, பெ. (n.)

அகால வுண்டி பார்க்க ;see agala-v-undi.

     [அ + காலம் + உணவு.]

அகாலவுண்டி

 அகாலவுண்டி akālavuṇṭi, பெ. (n.)

   காலந் தவறி யுண்ணும் உணவு ; untimely meal.

     [அ + காலம் + உண்டி.]

அகி

அகி agi, பெ. (n.)

   இரும்பு (பிங்.); ; iron.

 அகி1 agi, பெ. (n.)

   பாம்பு; snake.

     “கடி யகிப்பிணி தீர்ந்ததன்பின்” (சேதுபு. இராமனருச். 30.);.

     [Skt. ahi → த. அகி.]

 அகி2 agi, பெ. (n.)

   1. ஈயம்; lead plumbum.

   2. ஒருவகை மரம்; a kind of tree.

   3. கதிரவன்; the sun (சா.அக.);.

அகிகண்டம்

 அகிகண்டம் agigaṇṭam, பெ. (n.)

   மயிர்மாணிக்கம்; wild fenougreeks-sider rhombifolia (சா.அக.);.

     [P]

அகிகாந்தம்

அகிகாந்தம் agigāndam, பெ. (n.)

   1. காற்று; wind, air.

   2. ஞாயிறு (சூரிய); காந்தம்; sun stone-Jasper (சா.அக.);.

அகிகை

அகிகை agigai, பெ. (n.)

   1. இலவமரம்; silk-cotton tree, Bombaz Malabricum.

   2. பட்டுப்பருத்தி (இலவம் பஞ்சு);; Silk-cotton, Вombax pentan drum (சா.அக.);.

     [P]

அகிகோசம்

 அகிகோசம் agiācam, பெ. (n.)

   பாம்புச் சட்டை; the slough or cast-off skin of a snake (சா.அக.);.

     [அகி + கோசம்.]

     [Skt. ahi → த. அகி.]

     [கோயம் → கோசம்.]

அகிச்சத்திரம்

அகிச்சத்திரம் agiccattiram, பெ. (n.)

   1. ஒருவகை நஞ்சு; a kind of vegetable poison.

   2. ஒருவகை பூடு; a plant, Odina pennata (சா.அக.);.

அகிஞ்சனன்

 அகிஞ்சனன் agiñjaṉaṉ, பெ. (n.)

   ஆதரவு இல்லாதோன்; destitute-person.

த.வ. ஏதிலி.

     [Skt. a-kincana → த. அகிஞ்சனன்.]

அகிஞ்சிரம்

அகிஞ்சிரம் agiñjiram, பெ. (n.)

   1. செங்கத்திரி; caper shrupcapparis sepiaris alias cactas opimtia.

   2. கருக்குவாளி; the plant Momordica Cochin-Chinesis (சா.அக.);.

அகிஞ்சை

அகிஞ்சை agiñjai, பெ. (n.)

   1. கொல்லாமை; abstinence from killing.

   2. துன்பமின்மை; harmlessness (சா.அக.);.

     [Skt. a-himsa → த. அகிஞ்சை.]

அகிதன்

 அகிதன் agidaṉ, பெ. (n.)

   பகைவன் (யாழ்.அக.);; foe, enemy.

     [Skt. a-hita → த. அகிதன்.]

அகிதம்

அகிதம்1 agidam, பெ. (n.)

   1. உணவு; food.

   2. நன்மை இல்லாதது; that which is not conformable to a standard of taste.

   3. தீமை; evil.

     “அகித மொருவர்க்கு மெண்ணிலாதோர்” (திருவேங்.சத. 87.);.

   4. (இதம்);இன்மை; unpleasantness.

     [Skt. a-hita → த. அகிதம்.]

 அகிதம்2 agidam, பெ. (n.)

   1. பகை; hostility.

   2. உரிமையின்மை; absence of right or claim.

     [Skf. a-hlta → த. அகிதம்.]

 அகிதம்3 agidam, பெ. (n.)

   1. தகாதது (தாயு. எங்கு நிறை.1);; that which is unfit, unsuitable.

   2. இடையூறு; obstruction.

     “இந்தத் தன்மத்துக்கு அகிதம் பண்ணினவன்” (S. II. ii, 499.);.

     [Skt. a-hita → த. அகிதம்.]

அகிதலம்

அகிதலம் agidalam, பெ. (n.)

   கீழுலகம்; serpent world in the nether regions.

     “அகிதல வரவினது” (இரகு. யாகப். 79.);.

     [அகி + தலம்.]

     [Skt. ahi → த. அகி.]

தளம் → தலம்.

அகிதுண்டிகன்

 அகிதுண்டிகன் agiduṇṭigaṉ, பெ. (n.)

   பாம்பாட்டி; a snake charmer;

 a snake exhibitor (சா.அக.);.

     [P}

அகிநிர்வலயோனி

 அகிநிர்வலயோனி aginirvalayōṉi, பெ. (n.)

அகிகோசம் பார்க்க;see agi-kosam (சா.அக.);.

அகினி

அகினி akiṉi, பெ. (n.)

   பனை மட்டையிலிருந்து உஉரித்தெடுக்கப்பட்ட நார்; palmyra fibre.

     [அகணி-அகினி); (கொ.வ.);]

கூடை பின்னலில் பயன்படும் அழுத்தமான பட்டை. (ம.வ.சொ.67);

அகினெய்

 அகினெய் agiṉey, பெ. (n.)

அகிற்சாந்தம் பார்க்க ;see agir-candam.

     [அகில் + நெய்.]

அகிபதி

அகிபதி agibadi, பெ. (n.)

   1. ஆதிசேடன்; adisesan.

     “அகிபதியாயிர தலையா லரிதாகப் பொறுக்கின்ற” (பெருந்தொ. 392);.

   2. பெரும்பாம்பு, பாம்புக்கரசன்; a big snakes, a king of snakes.

     [Skt. ahi + pati → த. அகிபதி.]

அகிபுக்கு

அகிபுக்கு agibuggu, பெ. (n.)

   1. கீரி; a mongoose, Herpestes Mungo.

   2. மயில்; the pea-cock-pavocristatus.

   3. (கருடன்); கலுழன்; the Brahminy kite, Haliastur indicus.

     [P]

அகிபுசம்

அகிபுசம் agibusam, பெ. (n.)

   1. கலுழன்; the Brahminy kite, Haliastar indicus.

   2. மயில்; the peacock, Pavo-Cristatus.

   3. கந்த நாகுலி; the inchneumon plant, Vanda roxburghi (சா.அக.);.

அகிபுட்பம்

 அகிபுட்பம் agibuṭbam, பெ. (n.)

   நாகேசுரப்பூடு; a plant, ceylon ironwood, Mesaca roxburghi (சா.அக.);.

அகிபூதனம்

 அகிபூதனம் agipūtaṉam, பெ. (n.)

   குழந்தைகட்கு எருவாயிலண்டை சேரும் கழிமாசு மற்றும் சிறுநீர் முதலானவற்றை, அடிக்கடி தூய்மைப் படுத்தாமையால், அவ்விடத்தில் தினவுடன் குருக்கள் கண்டு பின்னர் பாம்பைப் போல் சட்டை கழற்றித் துன்புறுத்துமொரு தோல் நோய்; itch-like eruptions appeating about the anus in children and resulting in sloughing, owing to the deposit of urine, perspiration, faeces etc. consequent on the neglect in cleansing that part (சா.அக.);.

அகிபேனம்

அகிபேனம் agipēṉam, பெ. (n.)

   1. பாம்பின் நஞ்சு; saliva of the snake;the snake poison.

   2. கசகசாச் செடியின் பால்; opium, Papaver Somniferam (சா.அக.);.

அகிமாறல்

 அகிமாறல் agimāṟal, பெ. (n.)

   வெள்வேல் (பச்.மூ.);; panicled babool.

அகிம்சை

 அகிம்சை agimcai, பெ. (n.)

   தீங்கு செய்வதிலிருந்தும் வன்முறையில் ஈடுபடுவதிலிருந்தும் நீங்கிய நிலை; non-violence.

     [Skt. a-himsa → த. அகிம்சை.]

அகியம்

அகியம் akiyam, பெ. (n.)

   இரும்பு; Iron.

     “கருங்கொல் அகியம் கருந்தாது அயிலும் இரும்பின் பெயரே” (நிக.பி. 6:141.);.

     [எஃகு-அஃகு-அகியம்]

அகிரிபு

 அகிரிபு agiribu, பெ. (n.)

அகிபுக்கு பார்க்க;see agibukku (சா.அக.);.

அகிருத்தியம்

 அகிருத்தியம் agiruttiyam, பெ. (n.)

   தவறான செய்கை; illegal action as rape, adultery etc. (சா.அக.);.

     [Skt. a-hrtya → த. அகிருத்தியம்.]

அகிருத்திரமவிடம்

 அகிருத்திரமவிடம் agiruttiramaviḍam, பெ. (n.)

   மரம், புல், பூண்டு முதலான நிலத்திணைப் பொருள்களினாலும், நஞ்சு முதலிய தாதுக்களினாலும், தேள், பாம்பு, சிலந்தி முதலிய நச்சுயிர்களின் சேர்க்கைனாலும் ஏற்படும் கொடிய நோய்; diseases arising indirectly from the vegetables, mineral and animal poisons, is opposed to.

கிருத்திரமவிடம் – poisons imported into the system directly by mixing it with other substances (சா.அக.);.

அகிரை

அகிரை agirai, பெ. (n.)

   1. குரலடைப்பு; obstruction to the place of production of the voice.

   2. குரலின்மை; voicelessness due to some peripheral lesion aphonia (சா.அக.);.

     [Skt. a-hir → த. அகிரை.]

அகிர்

 அகிர் agir, பெ. (n.)

   தலைப் பொடுகுவகை (இராட்.); ; a kind of scurf, dandruff (R);.

ஒ.நோ; அசறு.

அகிர்ப்புத்தினி

அகிர்ப்புத்தினி agirpputtiṉi, பெ. (n.)

   இரவு 15 முழுத்தத்தில் மூன்றாவது (விதான குணா.73, உரை);;     [Skt. ahir – budhnya → த. அகிர்ப்புத்தினி.]

அகிற்கட்டை

 அகிற்கட்டை agiṟgaṭṭai, பெ. (n.)

   அகில்மரக் கட்டை ; block of eagle-wood.

     [அகில் + கட்டை.]

மறுவ. அகிலங்கட்டை, அகிற்குறடு.

அகிற்குடம்

அகிற்குடம் agiṟguḍam, பெ. (n.)

   அகில் புகைக்குங் கலம் ; vessel meant for burning agar incense.

     “அகிற்குடம் பரப்பி” (சீவக. 2391);.

     [அகில் + குடம்.]

அகிற்குறடு

அகிற்குறடு agiṟguṟaḍu, பெ. (n.)

   1. அகிற் கட்டையால் செய்யப்பட்ட பாதக்குறடு ; slipper made of eagle-wood.

   2. அகிற் கட்டை பார்க்க ;see agir-kattai.

     [அகில் + குறடு.]

அகிற்குறை,

அகிற்குறை, akiṟkuṟai, பெ. (n.)

   அகில் மரக்கட்டை; agil wood piece.

     “பரிய அகிற்குறை பிளந்து புகைப்பார்கள் பாங்கு எல்லாம்” (பெரிய.2235.);

     [அகில்+குறை]

அகிற்கூட்டு

அகிற்கூட்டு agiṟāṭṭu, பெ. (n.)

   அகில், கற்பூரம், காசுக்கட்டி, தேன், ஏலம் முதலியன சேர்ந்த நறுமணக் கலவை ; a fragrant mixture of agar, camphor, catechu, honey, cardamom and other spices.

     [அகில் + கூட்டு.]

     “உந்துசந் தனங்கர்ப் பூர முடனெரி காசு செந்தே னந்தவே லங்க ளென்ப வகிற்கூட்டு” (சூடா. 12;36); என்பதில், அகில் விட்டுப் போயிருத்தல் வேண்டும் ; அல்லது சந்தனத்தை அகிலாகக் கொண்டிருத்தல் வேண்டும்.

அகிற்சாந்தம்

அகிற்சாந்தம் agiṟcāndam, பெ. (n.)

   காரகிற் கட்டையை நீர் தோய்த்து உரசியமைத்த சந்தனம் போன்ற தேய்வை அல்லது திண் குழம்பு ; eagle-wood made into paste.

     “காழகிற் சாந்தம்” (சிலப். 13;115);.

     [அகில் + சாந்தம்.]

மறுவ. அகினெய்

அகிற்புகை

 அகிற்புகை agiṟpugai, பெ. (n.)

   அகிற் கட்டையை யெரிப்பதால் எழும் நறும் புகை ; fragrant fumes of burning eagle-wood.

     [அகில் + புகை.]

அகில

 அகில agila, பெ. (n.)

   மாதர் அணியும் ஒலிக்குங் காற் சிலம்பு (பொதி.நி.); ; anklets, worn by women that produce a tinkling sound while walking.

 அகில agila, கு.பெ.அ. (adj.)

   நாடு அல்லது உலகுதழுவிய; all.

அகில இந்தியத் தொழிளாளர் சங்கம் (இக்.வ.);.

   அகில இந்திய வானொலி;அகில உலகப் புகழ் (இ.வ.);.

     [Skt. a-kila → த. அகில.]

அகிலகலாவல்லி

அகிலகலாவல்லி akilakalāvalli, பெ. (n.)

   கலைமகள்; Godess of learning

     “என்று சொல்லி அகிலா கலா வல்லி இறைஞ்சி இருத்தலுமே” (ஒட். 5:220);.

     [அகிலம்+கலை+வல்லி]

 அகிலகலாவல்லி agilagalāvalli, பெ. (n.)

   கலைமகள் (தக்கயாகப். 220);; Kalaimagal.

     [அகிலகலா+வல்லி.]

     [Skt. akhila+kala → த. அகிலகலா.]

கலை → Skt. kala.

     [P]

அகிலங்கட்டை

 அகிலங்கட்டை agilaṅgaṭṭai, பெ. (n.)

அகிற் கட்டை பார்க்க ;see agir-kattai.

     [அகில் + அம் + கட்டை.]

அகிலசரீரம்

அகிலசரீரம் agilasarīram, பெ. (n.)

   1. உடம்பின் முழுபாகம்; the body as a whole.

   2. எல்லாச் சிற்றுயிர்களின் உடம்பு; bodies of all creatures in general (சா.அக.);.

     [Skt. a-kila+sarira → அகிலசரீரம்.]

அகிலதம்

 அகிலதம் agiladam, பெ. (n.)

   வெற்றிலைக் கொடி; the betel plant or creeper (சா.அக.);.

அகிலப்பிரகாசன்

அகிலப்பிரகாசன் agilappiragācaṉ, பெ. (n.)

   எங்கும் விளங்கும் புகழுடையவன்; one whose fame is world-wide.

     “அகிலப்பிரகாசன் திம்மையவப்பையன்” (பெருந்தொ. 1251);.

     [Skt. akhila + pra – kaša → த. அகிலப் பிரகாசன்.]

அகிலம

அகிலம2 agilama, பெ. (n.)

   1. நிலம்; earth.

     “எந்தைதன் னேவலாலகிலந் துறந்தவாறென” (இரகு. சிதைவ. 72);.

   2. நீர் (பிங்.);; water.

     [Skt. a-khila → த. அகிலம்.]

அகிலமேதகி

 அகிலமேதகி agilamētagi, பெ. (n.)

   சிறுகாஞ்சொறி (சித்.அக.);; small climbing nettle.

அகிலம்

அகிலம்1 agilam, பெ. (n.)

   1. எல்லாம், முழுவதும் (திவா.);; all;

 the whole

   2. உலகு; earthy.

   3. உலகம் முழுதும்; universe or entire world.

     “அகிலத்துள்ளதோர் கணங்களும்” (கந்தபு. பார்ப். 9);

அகிலம் அறிந்த செய்தி (இக்.வ.); அவர் புகழ் அகிலம் எங்கும் பரவிற்று (இ.வ.);.

     [Skt. a-khila → த. அகிலம்.]

அகிலரூபன்

 அகிலரூபன் agilarūpaṉ, பெ. (n.)

   கடவுள்; god, as assuming all forms.

     [Skt. akhila + rupan → த. அகிலரூபன்.]

அகிலாண்டகோடி

 அகிலாண்டகோடி agilāṇṭaāṭi, பெ. (n.)

   எண்ணிறந்த உலகங்கள்; innumerable worlds.

     “அகிலாண்ட கோடியெல்லாம்” (தாயு. திருவருள்விலா.);.

     [அகிலாண்டம் + கோடி.]

     [Skt. akhila + anda → த. அகிலாண்டம்.]

அகிலாண்டநாயகி

அகிலாண்டநாயகி agilāṇṭanāyagi, பெ. (n.)

   மலைமகள் (தக்கயாகப். 613);; Malaimagal.

     [அகிலாண்டம் + நாயகி.]

     [Skt. akhila + anda → த. அகிலாண்டம்.]

அகிலாண்டம்

 அகிலாண்டம் agilāṇṭam, பெ. (n.)

   அனைத்துலகம் (வின்.);; the whole universe.

     [Skt. akhil – anda → த. அகிலாண்டம்.]

அகிலுறுப்பு

அகிலுறுப்பு agiluṟuppu, பெ. (n.)

   ஒரு கலவைப் புகைப்பொருளின் ஆறுறுப்புகளுள் ஒன்றான அகில் ; eagle-wood as one of the six ingredients of a mixed fragrant fumigant.

     [அகில் + உறுப்பு.]

அயிர், தேன், பிசின், பச்சிலை, சந்தனம், அகில் என்பன அவ்வாறுறுப்புகள்.

 The six ingredients are sugar-candy, honey, resin, patchouli, sandal and eagle-wood.

     “நேர்கட்டி செந்தே னிரியாசம் பச்சிலை ஆர மகிலு றுப்போ டாறு” (சிலப். 5;14, அடியார்க். உரை);.

இவற்றுள் அயிரும் அகிலும் முதன்மையானவை. அவ்விரண்டினாலுமே ஒரு புகைக்கலவை அமைந்திருக்கலாம்.

     “குடதிசை மருங்கின் வெள்ளயிர் தன்னொடு

குணதிசை மருங்கிற் காரகி றுறந்து” (சிலப். 4 ; 3.5-6);,

     “இருங்கா ழகிலொடு வெள்ளயிர் புகைப்ப” (நெடுநல். 56);.

அகிலோலிகம்

 அகிலோலிகம் agilōligam, பெ. (n.)

அகிலதம் பார்க்க;see agiladam (சா.அக.);.

அகில்

அகில் agil, பெ. (n).

   1. ஒருவகை நறுமண மரம் ; eagle-wood, Aquilaria agallocha.

   2. அகில் மரத்தின் அடியிலும் கிளைகளிலுமிருந்தும் பெறப்படும் நறும்பிசின் ; a fragrant resin called agar obtained from the trunk and branches of eagle-wood.

ம. க., து. அகில் ; தெ. அகரு, பர். அகலு.

 Heb. aghalim; L. aquilla ; Port, aguila ; Sp. Aguila ; Gk. Agallochon ; E. eagle-wood. agila, agalloch; Skt. agaru; Pkt. agaluya, agara.

     [“கள்ளி வயிற்றி னகில்பிறக்கும்” என்று நான்மணிக்கடிகை (6); கூறுவதால், அகின்மரம் ஒருவகை முண்மரமாயிருக்கலாம். கள் = முள். கள் → கள்ளி = முட்செடி, முண்மரம்.]

அக்கு = அகில். அஃகு = நுண்மை, கூர்மை, அஃகு → அக்கு → அக்கில் → அகில். ஒ.நோ.; முள் = நுண்மை, கூர்மை.]

     “யானைவெண் கோடும் அகிலின் குப்பையும்” (சிலப். 25 ; 37); குன்றக்குறவர் சேரன் செங்குட்டுவனுக்குக் காணிக்கையாகப் படைத்ததனாலும், “குடமலைப் பிறந்த கொழும்பஃ றாரம்” (சிலப். 10 ; 1.06); என்பதற்கு, அருஞ்சொல்லுரை யாசிரியர் “தாரம்-சந்தனம் அகில் முதலாயின” என்று உரை வரைந்திருப்பதனாலும், தமிழகத்திலும்; “குணதிசை மருங்கிற் காரகி றுறந்து”

அகில்குடம்

அகில்குடம் akilkuṭam, பெ. (n.)

   நறும்புகைக் குடம்; fragrant smoke pot.

     “தாழ நாற்றுமின் தாமங்கள் அகில்குடம் பரப்பி” (சீவ. 12:12.);.

     [அகில்+குடம்]

அகில்கூட்டு

அகில்கூட்டு akilāṭṭu, பெ. (n.)

   ஒரு வகை மண (வாசனைக்); கலவை; fragrant paste of sandal wood.

     “வந்து சந்தனம் கர்ப்பூரம் உடன்னரிகாசு செந்தேன் அந்த ஏலங்கள் என்ப அகில் கூட்டு ஓர் ஐந்தும் தாமே” (நிக.12:37.);.

     [அகில்+கூட்டு]

அகில்வகை

அகில்வகை agilvagai, பெ. (n.)

   அருமணவன், தக்கோலி, கிடாரவன், காரகில் முதலிய அகில் வகைகள் ; different varieties of cagle-wood, the chief of them being arumanavaŋ, {takkõli}. {kidāravan}, and karagil.

     ‘அருமணவன், தக்கோலி, கிடாரவன், காரகிலென்று சொல்லப்பட்ட பலவகைத்தாய தொகுதியும்’ (சிலப். 14;108, அடியார்க். உரை);.

     ‘அருமணம்’ என்பது கீழைக்கடல் தீவுகளுள் ஒன்று. அங்கிருந்து வந்தது அருமணவன்.

     ‘கிடாரவன்’ என்பது கடாரத்தினின்று வந்ததுபோலும் ! ‘கடாரம்’ என்பது காழகம் (Burma); அல்லது சுமதுரை (Sumatra);.

     “புகைக்கினுங் காரகில் பொல்லாங்கு கம ழாது” என்று நறுந்தொகை (26); பாடுவதால், காரகில் தலைசிறந்ததா யிருந்திருக்கலாம்.

அகில்விறகு

அகில்விறகு agilviṟagu, பெ. (n.)

   பண்டைநாட்செல்வமகளிர் கூதிர்காலத்தில் குளிர்காய நெருப்பெரிக்கும் அகிற்கட்டை ; blocks of eagle. wood used in olden days by women of noble families as fuel for kindling fire, to warm themselves during winter.

     “முகிறோய் மாடத் தகிறரு விறகின்

மடவரன் மகளிர் தடவுநெருப் பமர்ந்து

நறுஞ்சாந் தகலத்து நம்பியர் தம்மொடு

குறுங்க ணடைக்குங் கூதிர்க் காலையும்” (சிலப். 14; 98-101);.

அகிளி,

 அகிளி,பெ. (n.)    மதுராந்தகம்வட்டத்திலுள்ளசிற்றுார்; a village in Madurantakam Taluk

     [ஒருகா.அருள்-அகுனி-அகிளி]

அகிவிடபாகம்

அகிவிடபாகம் agiviḍapāgam, பெ. (n.)

   1. பாம்பின் நஞ்சிறக்கல்; neutralizing the poison of snake.

   2. கந்தநாகுலி; the chneumon plant, Vandaro-burghil (சா.அக);.

அகிவைரி

அகிவைரி agivairi, பெ. (n.)

   1. பாம்பின் பகைவன் (சத்துரு);, மயில்; a peacock Pavo-cristatus.

   2. கருடன்; the Brahmini kite, halidstur inducus (சா.அக.);.

     [Skt. ahi + vairin → த. அகிவைரி.]

அகீம்

 அகீம் aām, பெ. (n.)

   அரபு பாரசீக மருத்துவ நூல்களில் தேர்ச்சியடைந்த உனானி மருத்துவன்; a physician who is well acquainted with Persian and Arabic system of medicines (சா.அக.);.

     [U. ahaq → த. அகீம்.]

அகீர்த்தி

 அகீர்த்தி aārtti, பெ. (n.)

   கீர்த்தியின்மை, அவமானம் ; ill-fame, disgrace.

     [அ + கீர்த்தி. ‘அ’ எதிர்மறை முன்னொட்டு.]

கீர்த்தி பார்க்க ;see kirtti.

அகுசலவேதனை

 அகுசலவேதனை agusalavētaṉai, பெ. (n.)

   வருத்த (துக்க);வுணர்ச்சி; experience of sorrow.

     [Skt. a – Kušala + vedana → த. அகுசல வேதனை.]

அகுசுமாதிதம்

 அகுசுமாதிதம் agusumādidam, பெ. (n.)

   சிவப்புக் குண்டுமிளகாய்; a variety of red chilly (சா.அக.);.

அகுசுலாபு

 அகுசுலாபு agusulāpu, பெ. (n.)

   அதிவிடயம்; a medicinal root used in dysentery. Indian atees, Aconitam Heterophyllum (சா.அக.);.

அகுசுளாபு

அகுசுளாபு agusuḷāpu, பெ. (n.)

   1. அதிவிடை (சங்.அக.);; atis.

   2. அகுசுலாபு பார்க்க;see agusulabu.

அகுடகந்தம்

 அகுடகந்தம் aguḍagandam, பெ. (n.)

   பெருங்காயம்; asafetida, Ferula asfoeida (சா.அக);.

அகுடம்

 அகுடம் aguḍam, பெ. (n.)

   கடுகுரோகிணி (மலை.); ; black hellebore.

அகுடாரிசம்

 அகுடாரிசம் aguṭārisam, பெ. (n.)

   கருங்குங்கிலியம்; black dammer, canarium strictum (சா.அக.);.

     [Skt. agaru → த. அகுடாரிசம்.]

அகுட்டம்

 அகுட்டம் aguṭṭam, பெ. (n.)

   மிளகு (வின்.); ; black pepper.

அகுணியகில்

 அகுணியகில் aguṇiyagil, பெ. (n.)

   செம்பில் (L.); ; cup-calyxed white cedar.

அகுதார்

 அகுதார் agutār, பெ. (n.)

   உரிமையாளி; holder of a right. one in whom any property, perquisite or privilege is vested.

     [U. haq-dar → த. அகுதார்.]

அகுதி

அகுதி agudi, பெ. (n.)

   ஏதிலி; destitute, helpless person

     “அகுதியிவ டலையின்விதி யானாலும் விலகரிது” (திருப்பு.142);.

த.வ. திக்கற்றவன்.

     [Skt. a-gati → த. அகுதி.]

அகுதை

அகுதை agudai, பெ. (n.)

   சோழனொருவன் மகள் ; name of the daughter of a Côla king.

அஃதை பார்க்க ;see akdai.

 அகுதை agudai, பெ. (n.)

   ஒரு கொடையாளி ; a philanthropist.

     “மணநாறு மார்பின் மறப்போ ரகுதை” (புறநா. 347;5);. இவன் பெயர் அஃதை என்றும் எழுதப்படும்.

 அகுதை akutai, பெ. (n.)

   குறுநில மன்னன் பெயர்; name of the chieftain.

     “வயங்கு பெருந்தானை அகுதை” (அகம் 112.);

க.அகுந்தலெ (உயர்வு-மேன்மை);

     [ஆகு-ஆகுந்தி-அகுந்தி-(பெருக்கம், மிகுதி, உயர்வு, தலைமை]

அகுன்றி

 அகுன்றி aguṉṟi, பெ. (n.)

   இசைக்கருவிவகை (அக.நி.); ; a kind of musical instrument.

அகுப்பியகம்

 அகுப்பியகம் aguppiyagam, பெ. (n.)

அகுப்பியம் பார்க்க;see aguppiyam (சா.அக.);.

அகுப்பியம்

 அகுப்பியம் aguppiyam, பெ. (n.)

   பொன் அல்லது வெள்ளி; not a base metal but gold or silver (சா.அக.);.

அகும்பை

 அகும்பை agumbai, பெ. (n.)

   கவிழ்தும்பை (மலை.); ; species of Trichodesma.

அகுயலம்

அகுயலம் aguyalam, பெ. (n.)

   தீமையாயுள்ளது; that which is bad or inauspicious.

     “குயலாகுயலம்மெனக் கூறும் வினை” (நீலகேசி. 490);.

     [Skt. a-kusala → த. அகுயலம்.]

அகுரம்

 அகுரம் aguram, பெ. (n.)

   வயிற்றுத் தீ; fire in the stomach, Gastric fire (சா.அக.);.

     [Skt. a-hir → த. அகுரம்.]

அகுரா

அகுரா agurā, பெ. (n.)

   மோதிரக்கண்ணி; a – rambling shrub 10-15 ft. (சா.அக.);.

     [Skt. a-hir → த. அகுரா.]

அகுர்

 அகுர் agur, பெ. (n.)

அகுரா பார்க்க;see agura (சா.அக.);.

     [Skt. a-hir → த. அகுர்.]

அகுலாதிகம்

 அகுலாதிகம் agulātigam, பெ. (n.)

   கரிசலாங் கண்ணி (சித்.அக.); ; a medicinal plant, usually found in marshy places.

அகுலி

அகுலி aguli, பெ. (n.)

   நறுவிலி (மலை); ; sebestan species and its varieties.

நறுவலி பார்க்க ;see naruwili.

 Note The correct spelling is 5 நறுவிழி, but colloquially it is நறுவிலி. பின் வருவன நறுவிலியின் வகைகள் (The following are the different species);;

சிறு நறுவிலி – Cordia myxa.

பெறு நறுவிலி – a variety bearing large fruits-Cordia obliqua.

நாய் நறுவிலி – Cordia monoica.

பொன் நறுவிலி – Cordia sebestena (speciosa);.

நாறு நறுவிலி — Eugenia jambolana. (caryophyllifolia);.

அச்சி நறுவிலி — Cordia sebestena.

அகுலோதிகம்

 அகுலோதிகம் agulōtigam, பெ. (n.)

   கருங் கொடுவேலி (சித்.அக.); ; a black variety of Ceylon leadwort.

அகுல்

 அகுல் agul, பெ. (n.)

   அடுப்பு ; oven.

     [ஒருகா. அழல் → அகல் → அகுல்.]

அகுளிநாதன்

 அகுளிநாதன் aguḷinātaṉ, பெ. (n.)

   ஒன்பான் (நவநாத); சித்தருளொருவர்; one of the nine original Siddhars (சா.அக.);.

அகுளுதி

 அகுளுதி aguḷudi, பெ. (n.)

   வேப்பமரம் ; margosa tree, Azadirachta indica.

 அகுளுதி aguḷudi, பெ. (n.)

அகுளுதி பார்க்க;see aguludi.

அகுளை

 அகுளை aguḷai, பெ. (n.)

   கல்லடிச் சேம்பு (சித்.அக.); ; an inferior variety of $émbu.

அகுள்

 அகுள் aguḷ, பெ. (n.)

   அலைதாடி (களகம்பள);த்தோல்; the excrescence of a goat’s neck (சா.அக);.

அகுவைக்கட்டி

 அகுவைக்கட்டி aguvaiggaṭṭi, பெ. (n.)

   அரையாப்பு (சங்.அக.); ; venereal tumour in the groin.

அகூடகந்தகம்

 அகூடகந்தகம் aāṭagandagam, பெ. (n.)

   பெருங்காயம் (வை.மூ);; asafoetida, Ferula Asafoetida (சா.அக.);.

அகூடகந்தம்

 அகூடகந்தம் aāṭagandam, பெ. (n.)

   அகூடகந்தகம் பார்க்க; aguda-kandagam (சா.அக.);.

அகூபாரன்

 அகூபாரன் aāpāraṉ, பெ. (n.)

அகூபாரம் பார்க்க;see agubaram (சா.அக.);.

அகூபாரம்

அகூபாரம் aāpāram, பெ. (n.)

   1. கடல் ஆமை; sea-turtle, Chelonia.

   2. கடல்; sea.

   3. கல்மலை; rock;hill (சா.அக.);.

     [P}

அகெளரவம்

அகெளரவம்1 ageḷaravam, பெ. (n.)

   இகழ்ச்சி, மதிப்புக்குறைவு; disrespect, irreverence.

கூத்துப் பார்க்க வந்தவர்கள் தூங்குவதைக் கூத்தர்கள் கெளரவமாக நினைப்பதில்லை (சா.அக.);.

த.வ. மதிப்புக்கேடு.

     [Skt. a-gaurava → த. அகெளரவம்.]

 அகெளரவம்2 ageḷaravam, பெ. (n.)

   வணக்கமின்மை; degradation, dishonour.

     “அங்கேபோய் அவன் அகெளரவமடைந்தான்”.

     [Skt. a- gaurava → த. அகௌரவம்.]

அகேசன்

அகேசன் aācaṉ, பெ. (n.)

   1. மயிரில்லாதவன்; one who has lost the hair on the scalp, a baldheaded man.

   2. மொட்டையன்; one with clean shaven head (சா.அக.);.

     [Skt. a-kesa → த. அகேசன்.]

அகேசம்

அகேசம் aācam, பெ. (n.)

   1. மொட்டை; shaven head.

   2. வழுக்கை; baldness, Alopecia.

   3. மயிரின்மை, மயிர்க்குறைவு; absence or lack of hair-atrichia (சா.அக.);.

     [Skt. a-keasa → த. அகேசம்.]

அகை-தல்

அகை-தல் agaidal,    2 செ.கு.வி. (v.i.)

   1. தளிர்த்தல் ; to sprout.

     “கொய்குழை யகைகாஞ்சி” (கலித். 74;5);.

   2. செழித்தல் ; to thrive, flourish, grow well, as vegetation.

     “சுயமயை வயனிறைக்கும்” (மதுரைக் 92);.

   3. மலர்தல் ; to blossom, to expand.

     “அகைமத்தத் தளி வர்க்கத் தளகக்கொத் தினரே” (தக்கயாகப். 98);.

ம. அக ; க. அகெ ; தெ., கூ. ஆகு ; து., அத்தெ குட. அகெ ; கோண். ஆசீ ; கொலா. எத் ; குரு. அகரார்ன.

     [உல் → உல்லரி = தளிர். உல் → உல → உலவை = பசுந்தழை. உல் → உள் → உழு → உகு → உகை → அகை. ஒ.நோ ; நுல் → நுள் → நுழு → நுழை – நுழாய் = இளம்பாக்கு. நுழு → நுகு → துகும்பு = பனங்குருத்து. முல் → முள் → முழு → முகு → முகை = அரும்பு.]

 அகை-தல் agaidal,    2 செ.கு.வி. (v.i.)

   1 எரிதல் ; to burn.

     “அகையெரி யானாது” (கலித். 139 ; 26);.

   2. வருந்துதல் ; to suffer.

     “அகையே லமர்தோழி” (சீவக. 1524);.

     [அழல் → அழு → அகு → அகை. அழல் = நெருப்பு.]

 அகை-தல் agaidal,    2 செ.கு.வி. (v.i)

   1. ஒடிதல் ; to be broken, crumpled.

     “அகைந்தவித்துணை மலரெனக்கருளுதியென்றாள்” (பாரத. புட்ப யாத். 40);.

   2. காலந்தாழ்த்தல் ; to delay.

     “அகையா தென தாலி தழைக்குமென” (சீவக. 1379);.

     [அக்கு → அகு → அகை. அக்கு = துண்டு. அகை = துண்டாதல், ஒடிதல், காலந்தாழ்த்தல்.]

 அகை-தல் agaidal,    2.செ.கு.வி. (v.i)

   செல்லுதல் ; to go forth, proceed.

     [உகை → அகை.]

அகை-த்தல்

அகை-த்தல் agaittal,    2 பொ.வி. (com.v.)

   1. தளிர்த்தல், கிளைத்தல் ; to sprout.

     “குப்பைக் கீரை கொய்கண் ணகைத்த” (புறநா. 159;9);.

   2. மலர்த்துதல் ; to spread or expand by force.

அகைத்தல் – வலிய மலர்த்தலுமாம் (தக்க யாகப். 98);.

     [உகு → உகை → அகை. அகை = தளிர்த்தல்.]

 அகை-த்தல் agaittal,    4 செ.குன்றாவி, (v.t.)

   வருத்துதல், துன்புறுத்துதல் (சூடா.);; to trouble, oppress.

     [அழல் → அழு → அகு → அகை. அழல் = மனம் எரிதல், வருந்துதல்.]

 அகை-த்தல் agaittal,    2 செ.கு.வி. (v.i.)

   விட்டு விட்டுச் செல்லுதல் (தொல். பொருள். செய். 229, பேரா. உரை); ; to quit, desert, leave behind.

–. 4. செ.குன்றாவி. (v.t.);

   1. ஒடித்தல், முறித்தல் ; to break.

     “உம்பலகைத்த வொண்முறி யாவும்” (மலைபடு. 429);.

   2. அடித்தல் (பிங்.);; to beat.

   3. அறுத்தல் ; to cut into pieces.

     “மயிருக்கொன் றாகவாங்கி யகைத்தகைத் திடுவர்’ (சீவக. 2766);.

     [அக்கு → அகு → அகை. அக்கு = துண்டு. அகைத்தல் = துண்டாக்குதல், ஒடித்தல், முறித்தல், அறுத்தல்.]

 அகை-த்தல் agaittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   1. செலுத்துதல் (சூடா.); ; to drive, cause to go, send forth.

   2. இழுத்தல் (பொதி.நி.); ; to draw towards.

     [உகைதல் = செல்லுதல். உகைத்தல் = செலுத்துதல். உகை → அகை.]

 ag (ak);, to drive, urge, conduct.

 Gk. agein, ago; L. ag-ere, to drive; Icel. ak-a (pt. t. ak);, to drive; Skt. aj, to drive– (S.E.D.E.L.);.

மேலை யாரியச் சொற்களின் மெய், தமிழை யொத்து மிடற்றொலியாய் (guttural); இருப்பதும் சமற்கிருதத்தில் அஃது அண்ணவொலியாய்த் (palatal); திரிந்திருப்பதும் கவனிக்கத்தக்கது. ககரச் சொல்லே மூல அல்லது திருந்திய வடிவம்.

 அகை-த்தல் agaittal,    2 செ.கு.வி. (v.i.)

   எழுதல் (சூடா.);; to rise.

–, 4 செ.குன்றாவி, (v.t.);

   உயர்த்துதல் (சூடா.); ; to raise.

     [உக → உகை → அகை. உகத்தல் = உயர்தல்.]

 அகை-த்தல் akaittal, செ.கு.வி. (v.i.)

   வருந்துதல்; feeling.

     “கழுப்பல ஏற்றி அகைப்பர்” (சூளா.1939);.

     [அகு-அகை]

அகைப்பு

அகைப்பு agaippu, பெ. (n.)

   வருத்தம், முயற்சி, மனத்திட்பம், அதன் விளைவு ; suffering, effort, result of effort, effect of will.

     “அண்டந் திருமால்கைப்பு” (திவ். இயற். 4;37);.

     [அழு → அழல் = நெருப்பு, எரிவு. அழலுதல் = எரிதல், பொறாமை கொள்ளுதல். அழு → அழுங்கு. அழுங்குதல் = வருந்துதல், துன்புறுதல். அழுங்கு → அழுக்கு = பொறாமை. அழு → அகு → அகை. அகைதல் = எரிதல்.]

 அகைப்பு agaippu, பெ. (n.)

   இடையிடை விட்டுச் செல்லுகை ; movements with breaks for stopping.

     “அகைப்பு வண்ணம்” (தொல். பொருள். செய். 221);.

     [உகை → அகை → அகைப்பு.]

 அகைப்பு agaippu, பெ. (n.)

   1. எழுச்சி; rising, elevation.

   2. மதிப்பு ; esteem.

     “அகைப்பில் மனிசரை” (திவ். இயற். 4;38);.

     [உகத்தல் = உயர்தல். உ.க → உகை. உகைத்தல் = எழுதல், உயரக் குதித்தல், எழும்புதல். உகை → அகை.]

அகைப்புவண்ணம்

அகைப்புவண்ணம் agaippuvaṇṇam, பெ. (n.)

     “அகைப்பு வண்ணம் அறுத்தறுத் தொழுகும்” (தொல். பொருள். செய். 221);.

     [அக்கு = துண்டு, கூறு. அக்கு → அகு → அகை. அகைத்தல் = கூறுபடுத்துதல், அறுத்தல், அறுத்தறுத்து அல்லது விட்டு விட்டுச் செல்லுதல் அகை = கூறுபாடு.]

அகைமம்

அகைமம் agaimam, பெ. (n.)

   1. புல்லுருவி (பச்.மூ); ; honey-suckle, mistletoe.

   2. கருந்தாளி மரம் (சித்.அக.); ; a tree, Diospyros ebenum.

அகையாறு

அகையாறு agaiyāṟu, பெ. (n.)

   கிளையாறு ; river branch.

     ‘இவ்வூர் அகையாறும் ஆக இறையிலி’ (S.I.I. ii, 56);.

     [அகை + ஆறு.]

அகைவாய்க்கால்

அகைவாய்க்கால் agaivāyggāl, பெ. (n.)

   கிளை வாய்க்கால் (S.I.I. iii, 171); ; subsidiary canal.

     [அகை + வாய்க்கால், அகை = கிளை.]

அகோ

அகோ aā, இடை (part.)

   இகழ்ச்சிக் குறிப்பு இடைச்சொல்; onomo. Expression.

     “அரசனின் அகத்து மாட்சி அகோ பெரிது” (யசோ. 1:64.);

     [அஃதோ+அதே+அகோ]

அகோசரம்

 அகோசரம் aācaram, பெ. (n.)

   புலனுக்கெட்டாதது (வின்.);; that which cannot be comprehended by the senses.

     [Skt. a-gocara → த. அகோசரம்.]

அகோசரிமுத்திரை

அகோசரிமுத்திரை aācarimuttirai, பெ. (n.)

   செவித்துளையிரண்டினையும் பஞ்சால் அடைத்துக் கொண்டு, தலையை இருதோள்களிலும் சாய்த்துச் செவியில் உண்டாகும் ஓசையைக் கேட்டுக் கொண்டிருக்கும் ஒகவிருக்கை வேறுபாடு (யோகஞானா. 34.);;     [அகோசரி + முத்திரை.]

     [Skt. a-gosarin → த. அகோசரி.]

அகோதாரை

 அகோதாரை aātārai, பெ. (n.)

   மிகப்பொழிகை (வின்.);; pouring in torrents, as rain.

த.வ. பெரும்பெய்கை.

அகோத்திரம்

 அகோத்திரம் aāttiram, பெ. (n.)

   நற்குலமின்மை (வின்.);; want of good ancestry.

     [Skt. a-gotra → த. அகோத்திரம்.]

அகோபிலம்

அகோபிலம் aāpilam, பெ. (n.)

   சிங்கவேள் குன்றம் என்னுந் திருப்பதி; name of a Vaisnava shrine in Kamul.

     “சொலகோவில நரசிங்கம்” (திருச்செந். பு. 18, 43.);.

     [Skt. aho-bila → த. அகோபிலம்.]

அகோரக்காய்ச்சல்

 அகோரக்காய்ச்சல் aārakkāyccal, பெ. (n.)

   கடுமையான காய்ச்சல்; a high fever, Hyperpyrexia (சா.அக.);.

     [அகோரம் + காய்ச்சல்.]

     [Skt. a-ghora → த. அகோரம்.]

அகோரசிவாசாரியர்

 அகோரசிவாசாரியர் aārasivāsāriyar, பெ. (n.)

   சிவ (சைவ);பத்ததி இயற்றியவருள் ஒருவர்; name of a spiritual preceptor author of a Saiva book of ritual.

     [Skt. a-ghora + sivacarya → த. அகோர சிவாசாரியர்.]

அகோரன்

அகோரன் aāraṉ, பெ. (n.)

   சிவன் (சூத. எக்கி.பூ, 33,2);; Sivan, as formidable.

     [Skt. a-ghora → த. அகோரன்.]

அகோரப்பசி

அகோரப்பசி aārappasi, பெ. (n.)

   1. கொடிய பசி; a voracious hunger.

   2. அடங்காப் பசி; a gluttonous appetitie, Adephagia (சா.அக.);.

த.வ. பெரும்பசி, யானைப்பசி.

     [அகோரம் + பசி.]

     [Skt. a-ghora → த. அகோரம்.]

அகோரப்பல்லதகி

அகோரப்பல்லதகி aārappalladagi, பெ. (n.)

   1. சங்கிலை; the leaf of a plant. Monetia barlerioides.

   2. பீச்சங்கிலை; smooth Volkameria, Cleodendron inerme (சா.அக.);.

அகோரமயமாதி

 அகோரமயமாதி aāramayamāti, பெ. (n.)

   உடம்பினுள் வெப்பத்திற்குக் காரணமான இடம், உச்சகம்; the seat of heat in that portion of the body situated in the forebain, thermogenic centre (in the carpus striatum); (சா.அக.);.

அகோரம்

அகோரம்1 aāram, பெ. (n.)

   1. கொடுமை (திருநெல். பு.சுவேத. 88);; fierceness, formidableness. (திருநெல். பு. 88);.

   2. சிவன் முகத்தொன்று (சிவதரு. பரிகார. 89);; face of Sivan which is turned southward, one of five Sivan-mugam, q.v.

   3. சிவமந்திரம் (சைவச. பொது. 324);; a Šaiva mantra.

த.வ. கொடுந்தோற்றம்.

     [Skt. a-ghora → த. அகோரம்.]

 அகோரம்2 aāram, பெ. (n.)

   1. அறிவு (சி.சி.1. 59);; wisdom.

   2. வெப்பம் (யாழ்.அக.);; heat.

     [Skt. a-ghora → த. அகோரம்.]

அகோரவிரம்

 அகோரவிரம் aāraviram, பெ. (n.)

   அல்கிடம், ஆறிதழி (சுவாதிட்டானம்);; one of the six psychic centres of the body that is sitnated in the genital region.

அகோரவுபாதி

 அகோரவுபாதி aāravupāti, பெ. (n.)

   மிகவும் கொடிய வலி; excessive pain, Hyperalgia (சா.அக.);.

     [Skt. a-ghora-ubadha → த. அகோரவுபாதி.]

அகோரவெரிச்சல்

 அகோரவெரிச்சல் aāravericcal, பெ. (n.)

   தாங்கொணா எரிச்சல்; unberable burning sensation in the body (சா.அக.);.

     [அகோர+எரிச்சல்.]

     [Skt. a-ghora → த. அகோரம்.]

எரி → எரிச்சல்.

அகோராத்திரம்

 அகோராத்திரம் aārāttiram, பெ. (n.)

   பகலிரவு; day and night.

     [Skt. aho-ratra → த. அகோராத்திரம்.]

அகோரி

 அகோரி aāri, பெ. (n.)

   மோதிரக்கண்ணிச்செடி ; species of Hugonia (L.);.

அகோரை

 அகோரை aārai, பெ. (n.)

   இரண்டரை நாழி கைக் கால அளவு (வின்.); ; hour, a measure of time.

 அகோரை aārai, பெ. (n.)

   வெப்பநாள்; a sultry day (சா.அக.);.

த.வ. முதுவேனில்.

     [Skt. a-ghora → த. அகோரை.]

அகோவனம்

அகோவனம் aāvaṉam, பெ. (n.)

   தரிசு ; waste land.

     ‘இத்தேவர் பழந்தேவதானத்தில் அகோவனமாகக் கிடந்த திடலை’ (S.I.I. vii, 309);.

அக்கக்காய்

அக்கக்காய் akkakkāy, கு.வி.எ.

   துண்டு துண்டாக (உ.வ.);; asunder (com.u.);.

அக்கு6 பார்க்க;see Akku6.

து. அக்கக்க

     [அகு→ அக்கு = துண்டு. ‘அக்கக்கு’ அடுக்குத் தொடர்.’ஆய்’ கு.வி.எ. ஈறு.]

அக்கசாலை

அக்கசாலை akkacālai, பெ. (n.)

   1. பொன், வெள்ளி முதலிய கணியவேலை செய்யுமிடம் (சிலப். 16 126, அடியார்க். உரை);; metal works.

   2. தங்கசாலை (வின்.);; mint.

     [அலங்குதல்= ஒளி செய்தல் (பிங்.);. அலங்கு → அலக்கு → அலக்கம் = ஒளி. ஒ.நோ ; இலங்கு → இலக்கு → இலக்கம் = ஒளி. அலக்கம் → அக்கம் = ஒளியுள்ள பொன், பொன், போன்ற பிற கனியம். ஒ.நோ ; அரத்தம் = சிவப்பு. அரத்தம் → அத்தம் = சிவப்பு.]

பண்டைத் தமிழகமான குமரி நாட்டில் முதன்முதற் பொன்னே கிடைத்தமையால், பொன்னின் பெயரே பின்னர்க் கனியப் பொதுப்பெய ராயிற்று. எ-டு: வெண் பொன் = வெள்ளி, செம்பொன் = செம்பு, கரும்பொன் = இரும்பு.”துாண்டிற்பொன் மீன்விழுங்கி யற்று” என்னும் குறளடியில் (931); பொன் என்னும் பெயர் அடையடுக்காதே இரும்பைக் குறித்தல் காண்க. அக்கசாலை என்னும் கூட்டுச்சொல் வட மொழியில் இல்லை. அக்கம் என்னும் சொல்லிற்கு”அர்க்க (arka); என்னும் வடசொல்லை மூலமாகக் காட்டியுள்ளது, சென்னை அகரமுதலி. ‘அர்க்க’ என்னும் வடசொல்லிற்கு ஒளிக் கதிர், ஒளிவீச்சு, கதிரவன், பன்னிரண்டு, [அ.து + ஏ (வினாவிடைச்சொல்.);]

செம்பு, மதச்சடங்கு, புகழ்ச்சி, பாட்டு, பாடகன், அண்ணன், உணவு என்னும் பொருள்களைக் கூறி, அச் சொல் ஒளிர் தலையும் போற்றுதலையும் குறிக்கும் ‘அர்ச்’ (arc); என்னும் மூலத்தினின்று தோன்றியதாகக் குறித்துள்ளது, மானியர் வில்லியம்சு சமற்கிருத-ஆங்கில அகரமுதலி.

     ‘அர்க்க’ என்னும் வடசொற்குச் செம்பு என்னும் பொருளிருக்குமாயின் அச் சொல்’அரக்கம்’ என்னும் தென்சொல்லினின்றே திரிந்திருத்தல்வேண்டும். அரக்கு = சிவப்பு, செம்மெழுகு, செவ்வைப்புநஞ்சு. அரக்காம்பல் = செவ்வாம்பல் அரக்கு → அரக்கம் = சிவப்பு, அரத்தம், அவலரக்கு.

அரக்கம் → Skt, arka = செம்பு.

நெருப்பிற்கு அல்லது அதன் குணமாகிய ஒளிக்கு வெண்மை, செம்மை, பொன்மை என்னும் முந்நிறமிருப்பதால், நெருப்பைக் குறிக்க, உல் என்னும் வேர், அல் → அர் என்றும், இல் → இர் என்றும், எல் → எர் என்றும் திரிந்து வெவ்வேறு சொற்களைப் பிறப்பிக்கும்.

இது உல் என்னும் உருப்படியில் விளக்கப்படும்.

கனியங்களெல்லாவற்றுள்ளும் ஒளிமிக்கது பொன் என்பது கண்கூடு. பொன் என்னும் பெயரும்,”சுடச்சுடரும் பொன்போல்” என்னும் குறட் சொற்றொடரும் (267); அதனை நினைவுறுத்தும்.

 அக்கசாலை akkacālai, பெ.) (n.)

   கொற்கை மூதூர்க்கு அருகே அமைந்த ஊர்; a name of a village near korkai.

     [அக்க(ம்);+சாலை]

அக்கசாலை= காசு அடிக்கும் இடம், அக்கசாலையை உடைய ஊரும் அக்கசாலை என்று பெயர்பெற்றது.

அக்கசாலைப்பெரும்பள்ளி,

அக்கசாலைப்பெரும்பள்ளி, akkacālaipperumpaḷḷi, பெ. (n.)

ஆழ்வார் பேரில்

   உண்டாக்கப்பட்ட புத்த மதப்பள்ளி;     “அக்க சாலைப்பெரும்பள்ளி ஆழ்வார் கோயிலுக்குத் திருவுத்சவம்”(4VNM3. P47);

     [அக்கசாலை+பெரும்+பள்ளி]

அக்கசாலையர்

 அக்கசாலையர் akkacālaiyar, பெ. (n.)

   தட்டார் (பிங்.); ; goldsmiths, jewellers.

க. அக்கசால, அக்கசாலிக ; தெ. அக்கசால, அகசாலி ; து. அக்கசாலெ ; மரா. அகதாளி.

அக்கச்சி

அக்கச்சி akkacci, பெ. (n.)

   1. மூத்த உடன் பிறந்தாள்; elder sister.

   2. அக்கை முறையினள்; elder cousin-sister related either by blood or marriage.

   3. மதிப்புரவு பற்றி அக்கச்சி என்று விளிக்கப்படும் மூத்த பெண்; any senior girl or woman addressed akkacci. out of courtesy.

அக்கை பார்க்க;see akkai.

     ‘அக்கச்சி யுடமை அரிசி, தங்கச்சி யுடமை தவிடா?’ (பழ.);.

     [அக்கை + அச்சி (தாய்); – அக்கைச்சி → அக்கச்சி. அக்கை தாய் போன்றவளாதலால் அச்சியெனப்பட்டாள்.]

அக்கட

அக்கட akkaḍa, இடை. (int.)

   ஒரு வியப்புக்குறிப்பு; an exclamation of wonder.

     “அக்கட விராவணற் கமைந்த வாற்றலே” (கம்பரா. யுத்த இராவணன் மந்திரப். 32);.

ம. அக்கடா (விளி.இ.);;க. அக்கட, அக்கடக் கட (அ.தொ.);. அக்க-வியப்பு, துயரம், வெறுப்பு, அழுக்காறு முதலியன உணர்த்தும் இடைச்சொல், தெ. அக்கட, அக்கடக்கட (அ.தொ.);, அக்கசமு (வியப்பிடைச்சொல்);.

     [அக்கை = தாய். அக்கை → அக்க (விளி);. ‘அட’ ஒரு பொது விளிச்சொல் அல்லது வியப்பு, துயரம் முதலியன உணர்த்தும் இடைச்சொல். அக்க + அட – அக்கட.]

சிறுபிள்ளைகள், பெரியதொன்றைக் கண்டு வியக்கும்போதும், அழகியதொன்றைக் கண்டு மகிழும்போதும், தீயதொன்றை அல்லது காணாததொன்றைக் கண்டு அஞ்சும் போதும், நோய்நிலையில் அல்லது துன்ப நிலையில் வருந்தும்போதும், தாயை அல்லது தந்தையை ஒருமுறையும் பன்முறையும் விளிப்பதும், நோவுறும்போது அவ்விளிப் பெயரைப் பன்முறை சொல்லிப் புலம்புவதும் இயல்பே. முதற்காலத்திற் சிறுபிள்ளைகளாற் சொல்லப்பட்ட அவ் விளிப்பெயர்கள் பின்னர் வளர்ச்சிநிலையிலும் வழங்கியதனால் நாளடைவிற் பல்வேறு குறிப்பிடைச் சொற்களாக மொழிவழக்கில் நிலைத்து விட்டன.

ஐயன், அக்கை, அத்தன், அப்பன், அம்மை, அன்னை முதலிய தாய் தந்தை முறைப் பெயர்களின்கீழ், அவ்வப் பெயரினின்று திரிந்துள்ள குறிப்பிடைச் சொற்களைக் காண்க.

அக்கட என்னுஞ் சொல் வேறு உணர்ச்சிகளையும் உணர்த்தக்கூடிய குறிப்பிடைச் சொல்லே.

 அக்கட akkaḍa, கு.வி.எ.

   அவ்விடம், அங்கு, அப் பக்கம்; there, thither, that side.

     “அக்கட போவெனும்” (தனிப்பா. தி. 2, பக். 3);.

     [அ= அந்த. கடை-பக்கம். அக்கடை → தெ. அக்கட.]

அக்கடை பார்க்க;see a-k-kadai.

இது தமிழ்த்திரிபான கொடுந்தமிழ்ச் சொல்லேயன்றி, தெலுங்கினின்று வந்த திசைச்சொல்லன்று.

அக்கடா

 அக்கடா akkaṭā, பெ.(n.)

   மண்ணெண்ணெய்த் திரியடுப்பைப் பற்ற வைக்க உதவும் நுனியில் தக்கை பொருத்திய கம்பி; a wire device to lit the kerosene stove. (வ.சொ.அக.);

அக்கடாவெனல்

 அக்கடாவெனல் akkaṭāveṉal, பெ. (n.)

   நெடு வழி வந்த அல்லது வருந்தி யுழைத்த இளைப்புக் களைப்புத் தீர, நிழலில் ஓய்ந்திருத்தற் குறிப்பு; expr. of repose in a shady spot, after a long tedious journey or arduous labour.

தெ. அக்கடா

     [அக்கை= தாய். அக்கை → அக்க (விளி);. ‘அடா’ ஒரு விளியிடைச்சொல். அக்க + அடா → க்கடா.]

நெடுவழிப்போக்கரும் கடுவுழைப்பாளரும் இடையிலும் கடையிலும் இளைப்பாறும் போது,’அக்கடா’ என்று சொல்லி அமர்வது வழக்கம்.

இனி, குடும்பத் தொல்லையால் நெடுநாள் இடர்ப்பட்ட நிலைமையினின்று நீங்கி அமைதியுறுவதும், அக்கடாவென்றிருத்தல் எனப்படும்.

     ‘இதுவரை எத்தனையோ ஆண்டு உங்களாலே படாதபாடெல்லாம் பட்டேன். இனி, உங்களைவிட்டுப் பிரிந்து அக்கடாவென் றிருக்கப்போகிறேன்’ என்பது ஒர் உலகவழக்குத் தாய் கூற்று.

அக்கடா என்பது, ஒர் ஒய்வுக்குறிப்பு விளிப்பெயரேயன்றி ஒலிக்குறிப்பன்று. அக்கட என்னும் வியப்புக்குறிப்புச் சொல்லிற்கு உரைத்த விளக்கத்தை, ஏற்குமளவு இதற்குங் கொள்க.

அக்கடி

அக்கடி akkaḍi, பெ. (n.)

   1. மரக்கலம் கடுங் காற்றால் கயிற்றடியுண்டு அங்குமிங்கும் அலைதல்; difficulty or trouble experienced in a voyage by a ship which is being tossed about in a storm and battered by its ropes.

   2. ஏதம், துன்பம்; peril, distress (R.);.

எனக்கு அக்கடியாயிருக்கிறது (உ.வ.);.

ம. அக்கடி, அக்கிடி, அக்கிளிப்பு ; க. அக்கடிதக்கடி.

     [அக்கம் = கயிறு. அடி = அடிப்பு. அக்க + அடி → க்கடி.)

அக்கடை

 அக்கடை akkaḍai, பெ. (n.)

   அப் பக்கம் ; that side.

     [அ + கடை → க்கடை.]

 அக்கடை akkaḍai, கு.வி.எ. (adv.)

   அங்கே; there.

தெ. அக்கட

     [அ + கடை → க்கடை.]

அக்கட்டா என

 அக்கட்டா என akkaṭṭāeṉa, இடை(int.)

சும்மா இருத்தல்

 to keep quiet. Expression of repose (கொ.வ.வ.சொ.);.

     [அக்கடா(ஒலிக்குறிப்பு);+என]

அக்கட்டை

 அக்கட்டை akkaṭṭai, பெ. (n.)

அந்தப்பக்கம் (கொ.வ.வ.);

 that side.

     [அ+கடை-அக்கடை-அக்காட்டை]

அக்கணம்

 அக்கணம் akkaṇam, பெ. (n.)

   வெண்காரம்; borax (W.);.

அக்கணா

 அக்கணா akkaṇā, பெ. (n.)

   தான்றி; belleric myrobalan, Terminalia belerica.

மறுவ. அக்கத்தான். அக்கந்தம், அக்கம், அக்காடுதி, அக்காத்தான், அக்காந்தி.

அக்கதம்

 அக்கதம் akkadam, பெ.(n.)

   மங்கல அரிசி; unbroken grains of rice mixed with turmeric or saffron used in benediction or worship.

     “அறுகு வெள்ளரிசி கட்டி அக்கதம் என்றாகும்”

     [அக்க(ம்);+நீர்]

அக்கதேவி

 அக்கதேவி akkatēvi, பெ. (n.)

   சோனைப்புல் (மலை.);; species of grass.

அக்கத்தான்

 அக்கத்தான் akkattāṉ, பெ. (n.)

அக்கணா பார்க்க;see akkaņa.

அக்கந்தம்

 அக்கந்தம் akkandam, பெ. (n.)

அக்கணா பார்க்க;see akkaņa.

அக்கந்து

 அக்கந்து akkandu, பெ. (n.)

   போரடிக்குங் களத்திற் பொலி தூற்றுகையில், மணிக்குவியலுக்கு அப்பாற்போய் விழுந்துகிடக்கும் பதர்த்திரள் (யாழ்ப்.);; the chaff which separates, in the process of threshing and forms a sort of ridge all around the threshing floor (J.);.

அக்கனக்காய்

 அக்கனக்காய் akkaṉakkāy, பெ. (n.)

   பூவந்திக்கொட்டை ; soapnut, Sapindus emarginatus (சா.அக.);.

     [அக்கனம் + காய்.]

அக்கன்

அக்கன் akkaṉ, பெ. (n.)

   அக்கை ; elder sister.

     ‘நாம் கொடுத்தனவும் அக்கன் கொடுத்தனவும்’ (S.I.I. ii, 2);.

அக்கை பார்க்க ;see akkai.

ம. அக்கன் ; க. அக்கன், அக்கனு ; தெ. அக்க ; கோத. அக்ன் ; துட. ஒக்ன்.

     [அக்கை → அக்கன். இது அம்மை → அம்மன் என்னுந் திரிபை ஒத்தமைந்தது.]

இங்ஙனம் அன்னீறு பெற்ற பெண்பாற் பெயர்கள் ஆண்மறத்தன்மையை உணர்த்தும்.

எ-டு : மாரியம்மை → மாரியம்மன்.

 அக்கன் akkaṉ, பெ. (n.)

   அக்குமணியை அல்லது மாலையை அணிந்தவன் ; wearer of {rudrāksa} beads.

     [அக்கு = சிவமணி. அக்கு → அக்கன். ‘அன்’ ஆண்பாலீறு.]

 அக்கன் akkaṉ, பெ. (n.)

   நாய் (சூடா); ; dog.

     [அக்கு = எலும்பு. அக்கு → அக்கன் = எலும்பை விருப்பமாய்க் கடிக்கும் நாய்.]

   இதுபற்றிய பழமொழிகள் வருமாறு ;     ‘எலும்பு கடிக்கிற நாய்க்குப் பருப்புஞ் சோறும் ஏன்?’,

     ‘எலும்பு கடிக்கிற நாய் இரும்பைக் கடிக்குமா?’,

     ‘கடிக்க வந்த நாய்க்கு எலும்பைப் போட்டாற்போல்’;

     “If you beat a dog with a bone it won’t howl”.

வெறிநாயையும், எண்காற் காட்டுப்பன்றியையும், ஒருவகைச் செடியையும், ஒர் அரசனையும் குறிக்கும் ‘அலர்க்க’ (alarka); என்னும் வடசொல்லிற்கு ‘அக்கன்’ என்னும் தென்சொல்லோடு தொடர்பில்லை.

அக்கப்படம்

அக்கப்படம் akkappaṭam,  a cloth piece of a saint.

     “அக்கப்படம் கோவணம் நெய்து” (நம். 3:80);.

     [அக்கம்+படம். அக்கம்-செம்மை, படம் = அணியும் சீலை]

அக்கப்பறை

 அக்கப்பறை akkappaṟai, பெ. (n.)

   அலைகை (சம்.அக.);; wandering about.

     [ஒருகா.கடுங்காற்றிலகப்பட்ட மரக்கலக் கயிறும் பாயும் அலசடிப்படுவதுபோல், துன்புற்று அங்குமிங்கும் அலைகை, அக்கம் = கயிறு. பற → பறை = பறத்தல், காற்றிற் பறத்தல்.]

அக்கப்பாடு

அக்கப்பாடு akkappāṭu, பெ. (n.)

   1. மரக்கலச் சேதம்; disaster at sea, shipwreck (வின்.);.

   2. கப்பற் சரக்கிழப்பு; loss of cargo (W.);.

     [.ஒருகா. அக்கம் = கூலச்சரக்கு ; பாடு = கெடுகை.]

அக்கப்போர்

அக்கப்போர் akkappōr, பெ. (n.)

   1. கலகம் (கொ.வ..);; affray, scuffle (colloq.);.

   2. தொந்தரவு, தொல்லை (கொ.வ.);; worry, trouble (colloq.);.

ம. அக்கப்போரு.

     [ஒருகா.அக்கு = துண்டு, சிறியது. அக்கு + போர் → க்குப்போர் = சிறுபோர், கலகம், தொந்தரவு. அக்குப்போர் → அக்கப்போர். இனி, அக்கு → அக்கம் + போர் → க்கப்போர் என்றுமாம். அக்கக்காய் (துண்டு துண்டாக);, அக்குணிப் பிள்ளை (சிறுபிள்ளை); என்னும் வழக்குகளை நோக்குக.]

அக்கமணி

அக்கமணி akkamaṇi, பெ. (n.)

சிவமணி (உருத்திராக்கம்);;{rudrākșa}

 bead.

     “பொறியர வக்க மணித்தொடை பூண்டு” (திருக்காளத். பு. 5 ; 27);.

     [அக்கம் + மணி. உருண்டையாயிருப்பதனாலும் மணிபோல் அணியப்படுவதனாலும் அக்குக்காய் மணியெனப்பட்டது.]

அக்கமம்

அக்கமம் akkamam, பெ. (n.)

   பொறுமையின்மை, (சிந்தா.நி. 31);; impatience.

     [Skt. a-ksamā → த. அக்கமம்.]

அக்கமாலை

அக்கமாலை akkamālai, பெ. (n.)

   1. சிவமணி (உருத்திராக்க); மாலை; string of {rudrāksa} beads.

     “புகலுறு மக்க மாலை புனைகுவோர்” (பிரபோத, 18;3);.

   2. மன்றாட்டு (செப); மாலை; rosary.

     “புத்தக மக்க மாலை…… பொருந்து கையாள்” (திருவாலவா. கடவுள்வா. 20);.

     [அக்கம் + மாலை.]

 அக்கமாலை akkamālai, நான்முகனின் பிரம்மாவின் சிற்பத்தில் வலது மேற்கை ஏந்தியிருக்கும் மாலை.

 string of beads in the hands of Brahma.

     [அக்கம்+மாலை]

அக்கம்

அக்கம் akkam, பெ. (n.)

   தவசம்; cereal.

அஃகம் பார்க்க;see akkam’.

     ‘அக்கவிலை யறியாதவன் துக்கமறியான்’. (பழ);.

க., து. அக்கி.

     [அஃகம்→ அக்கம்.]

அக்கம் என்பது அகம் என்னும் தொகும்.

 அக்கம் akkam, பெ. (n.)

வெண்மை, கருமை, செம்மை, பொன்மை, குரால் (கபிலம்-brown); என்னும் நிறங்களால் ஐவகைடிபட்டதும், ஒன்று முதல் பதினாறு வரை முண்முனைகளைக் கொண்டதும், ஒருவகைச் சிறப்பான மருத்துவ ஆற்றல் கொண்டதாகக் கருதப்படுவதும், குமரிநாட்டுக் காலந்தொட்டுச் சிவ நெறித் தமிழரால் அணியப்பட்டுவருவதும், பனிமலையடிவார நேபாள நாட்டில் இயற்கையாக விளைவதும், அக்கமணி என்று பெயர் வழங்கியதும், ஆரியர் தென்னாடு வந்தபின் உருத்திராக்கம் (ருத்ராக்ஷ); எனப் பெயர் மாறியதுமான காய்மணி ;{Rudråkșa}

 bead, a Nepalese product, of five different colours, having one to sixteen pointed projections over the surface, considered to possess some rare medical properties, and customarily worn by the Tamilian Saivites from Lemurian or pre-historic times.

     “தலையெலும் பப்புக் கொக்கிற அக்கம்” (திருப்பு. 475);.

அக்கு பார்க்க; ;see akku.

     [அள்= கூர்மை (திவா.);. அள் → அள்கு → அஃகு. ஒ.நோ. வெள் → வெள்கு → வெ.ஃகு = விரும்பு, மிக விரும்பு, பிறர் பொருளை விரும்பு. அஃகு → அக்கு = கூர்மை, முனை, முண் முனை, முண்முனையுள்ள அக்கமணி.”உருப்பு லக்கை யணிந்தவர்” (திருவானைக் கோச் செங். 4);. அக்கு → அக்கம் = பெரிய அக்க மணி, ‘அம் பெருமைப்பொருட் பின்னொட்டு. ஒ.நோ ; விளக்கு → (கலங்கரை); விளக்கம்.]

கடவுண்மணி, சிவமணி, தெய்வமணி, நாயகமணி, கண்மணி, கண்டம், கண்டி, கண்டிகை, முண்மணி என்பன அக்கமணியின் மறுபெயர்கள். இவற்றுள் முதல் நான் கொழிந்த ஏனைய வெல்லாம், அக்கு அல்லது அக்கம் என்னும் பெயரைப் போன்று, கூர் முனைகளைக் கொண்டதென்றே பொருள் படுவன. முண்மணி என்பது வெளிப்படை.

கடவுளையே ஒருசார் தமிழர் சிவன் என்னும் பெயரால் வழிபடுவதால், ‘கடவுண் மணி’ முதலிய நாற்பெயரும் ஒருபொருட் சொற்களே.

கடவுள்மணி, முள்மணி என்பன கடவுண்மணி, முண்மணி என்று புணர்ந்தது போன்றே, கள்மணி என்பதும் கண்மணியென்று புணரும். குள் → கள் = முள். கள் → கள்ளி = முள்ளுள்ள செடி. ஒ.நோ ; முள் → முள்ளி, (நீர்); முள்ளி. குள் → குளவி = கொட்டும் முள்ளுள்ளது. குள்ளுதல் = கிள்ளுதல் (நெல்லை);. குள் → கிள் → கிள்ளி →. கிளி = கூரிய மூக்கினாற் கிள்ளுவது. கள் → கண்டு = கண்டங்கத்தரி (முட் கத்தரி);. கண்டு → கண்டம் = கள்ளி, கண்டங் கத்தரி, எழுத்தாணி, கண்டு → கண்டல் = முள்ளி, நீர்முள்ளி, தாழை. கண்டு → கண்டகம் = முள், நீர்முள்ளி, வாள். கண்டல் → கண்டலம் = முள்ளி. கண்டகம் → கண்டகி = முள்ளுள்ள தாழை, இலந்தை, மூங்கில், முதுகெலும்பு. கண்டு → கண்டி = முனைகளுள்ள உருத்திராக்கம். கண்டி → கண்டிகை = உருத்திராக்கமாலை.

ஆரியப் பூசாரியர், இருபெருந் தூய தமிழ மதங்களாகிய சிவனியத்தையும் (சைவத்தையும்); மாலியத்தையும் (வைணவத்தையும்); ஆரியப்படுத்தும் வகையில், தமிழரின் முத் தொழிற் கடவுளை மூவேறு ஒருதொழில் திருமேனிகளாகப் பகுத்து, முத்திருமேனிக் (திரிமூர்த்தி); கொள்கையைப் புதிதாக வகுத்து, படைப்பிற்கு வேதத்திற் சொல்லப்படாத பிரமா (Brahma); என்னும் ஒரு தெய்வத்தைப் படைத்து, காப்பிற்கு விஷ்ணு என்னும் வேதக் கதிரவத் தெய்வத்தை விண்டு என்னும் திருமாலொடும், அழிப்பிற்கு உருத்திரன் (ருத்ர-Rudra); என்னும் வேதக் காற்றுத் தெய்வத்தைச் சிவனொடும் இணைத்து, கண்மணி என்னுங் கூட்டுச் சொல்லைக் கண் + மணி என்று தவறாகப் பிரித்து, அக்கம் என்னும் தென்சொல்லை அக்ஷ என்று திரித்து அதற்குக் கண் என்று வடமொழிவழிப் பொருளூட்டி, சிவமணி என்பதை யொப்ப ருத்ராக்ஷ என்னும் பெயரைப் புணர்த்து, அது உருத்திரன் (ருத்ர); என்னும் சிவன் கண்ணினின்று தோன்றியதால் அப்பெயர் பெற்றதென்று கூறி, அதற்குச் சான்றுபோல் முப்புர எரிப்பு (திரிபுர தகனம்); என்னுங் கதையுங் கட்டி, ஆராய்ச்சியில்லார்க்குத் தெரியாவாறு உண்மையை முற்றும் மறைத்து விட்டனர்.

இற்றைத் தமிழர்க்குப் பொதுவாக மதத் துறையிற் பகுத்தறிவின்மையால், கண்மணியென்பது சிவன் கண்ணினின்று தோன்றிய மணியேயென்றும், அக்கம் என்ப்து அக்ஷ என்னும் வடசொற்றிரிபேயென்றும், ஆரியப் புராணப் புரட்டை யெல்லாம் முழுவுண்மை யென்றும், அதை ஆராய்தல் இறைவனுக்கு மாறான அறங் கடை (பாவம்); என்றும் நம்பிக்கொண்டிருக்கின்றனர்.

ஆரியவேதக் காற்றுத் தெய்வமாகிய உருத்திரனுக்கும் சிவனுக்கும் யாதொரு தொடர்புமில்லை. மங்கலம் என்று பொருள்படும் சிவ என்னும் ஆரிய அடைமொழி இந்திரன், அக்கினி, உருத்திரன் என்னும் ஆரிய வேத முச்சிறு தெய்வங்கட்கும் பொதுவாக வழங்கப்பட்டுள்ளது. அதற்குச் சிவந்தவன் என்று பொருள்படும்-சிவன் என்னும் செந்தமிழ்ப் பெயர்ச்சொல்லொடு எள்ளளவுந் தொடர்பில்லை. அந்தி வண்ணன், அழல்வண்ணன், செம்மேனியன், மாணிக்கக்கூத்தன் முதலிய சிவன்பெயர்களை நோக்குக.

உருத்திரன் என்னும் ஆரியத் தெய்வ இயல் விளக்கமும், அவனுக்கும் சிவனுக்குமுள்ள மாபெரு வேறுபாடும், முப்புர எரிப்புக் கதையின் முழுப்புரட்டும், உருத்திராக்கம் என்னுஞ் சொல்லின்கீழ்க் கூறப்படும்.

சிவநெறி குமரிநாட்டிலேயே தோன்றி வளர்ச்சியடைந்துவிட்ட தூய தமிழ மதமாதலாலும், அக்கமணி மேனாடுகளில் விளையாமையாலும், கிரேக்கத்திற்கு இனமான ஒரு மொழியைப் பேசிக்கொண்டிருந்த மேலையாசிய ஆரிய வகுப்பார் இந்தியாவிற்குட் புகு முன்னரே, தமிழர் இந்தியா முழுதும் பரவி வடஇந்தியத் தமிழர் முன்பு திரவிடராயும் பின்பு பிராகிருதராயும் மாறியதனாலும், அக்கமணியைச் சிவனியர் குமரி நாட்டுக் காலந்தொட்டு அணிந்து வந்ததனாலும், அம்மணிக்கு அப்பெயரே உலக வழக்கில் வழங்கியதனாலும், தமிழ் முறைப்படி முண்மணி என்பதே அப் பெயர்ப் பொருளாம்.

 அக்கம் akkam, பெ. (n.)

   1½ காசு மதிப்புள்ள ஒரு பழைய சிறு காசு (S.I.I. ii.123);; an ancient coin, 1½th value of the {kašu}.

     [அஃகுதல்= சுருங்குதல், சிறுத்தல். அஃகு → அஃகம் = சிறு காசு. அஃகம் → அக்கம். தவசத்தைக் குறிக்கும் அஃகம் என்னும் சொல்லும் அக்கம் என்று திரிந்திருத்தலை நோக்குக.]

ஒளி, ஒளிக்கதிர், கதிரவன், செம்பு என்று பொருள்படும் அர்க்க (arka); என்னும் வட சொல்லை, இதற்கு மூலமாகக் காட்டுவது பொருந்தாது.

 அக்கம் akkam, பெ. (n.)

அக்கனா பார்க்க;see akkana.

 அக்கம் akkam, பெ. (n.)

   கயிறு (சூடா.);; rope, cord.

அக்கடி பார்க்க;see akkadi.

தெ.உத்தமு;க. அக்க ; துட. ஒத்ம், பட ஒத்த் ; து. உக்கி;பர். உட்க். உத்க்.

     [ஒருகா.அல்லுதல் = முடைதல், பின்னுதல், பின்னிக்கொள்ளுதல், அள்ளுதல் = செறிதல். அள்ளல் = நெருக்கம். அள் = செறிவு, பற்றிரும்பு. அள் → அள்கு → அட்கு → அக்கு. அக்கம் = செறிக்கும் அல்லது சேர்த்துக்கட்டுங் கயிறு.]

 அக்கம் akkam, பெ. (n.)

   1. பொன்; gold.

   2. பொன், வெள்ளி முதலிய கனியம்; metal.

தெ. அக்க ; க. அக ; பிராகி, அக்கோ.

     [அலக்கம்→ அக்கம் = ஒளியுள்ள பொன், பொன்போன்ற பிற கனியம்.]

 அக்கம் akkam,    மிகுதி; excess.

     [அஃகம்-தவசம். அஃகம்-அக்கம். தவசச் விளைச்சல் போன்ற மிகு பெருக்கம். ஏராளம்.]

 அக்கம் akkam, பெ. (n.)

   உலகப் படத்தில் நிலநடுக்கோட்டின் இருபாலும் உள்ள கிடைவரை (வின்.);; terrestrial latitude.

த.வ. நிலகிடைக்கோடு.

     [Skt. aksa → த. அக்கம்.]

 longitude

நெடுவரை எனவும்

 latitude

கிடைவரை எனவும் கூறப்படும்.

அக்கம்காரை

 அக்கம்காரை akkamkārai, பெ. (n.)

   ஒருவகைக் கடல்மீன்; a kind of sea-fish, Chorinemus moadetta (queen-fish);.

அக்கம்பக்கம்

 அக்கம்பக்கம் akkambakkam, பெ. (n.)

   அண்டையயல்; this side and that side, in the neighbourhood, all around.

     ‘பகலில் அக்கம்பக்கம் பார்த்துப் பேசு’ (பழ.);.

பக்கம் பார்க்க;see pakkam.

     [அடு → அடுக்கு → அடுக்கம் = பக்கம், அண்மை. ஒ.நோ ; ம. அடுக்கல் = பக்கம். அடுக்கம் → அக்கம். ‘அக்கம்பக்கம்’ எதுகை மரபினைச்சொல். எதுகை நோக்கி அடுக்கம் அக்கம் எனத் தொக்கது. எனினுமாம்.]

அக்கம்பாரை (தோல்பாரை)

 அக்கம்பாரை (தோல்பாரை) akkambāraitōlpārai, பெ. (n.)

   ஒருவகை கடல்மீன்; a kind of sea fish, Chorinemus spp.

அக்கரகாரம்

அக்கரகாரம் akkarakāram, பெ. (n.)

   ஒரு மருந்துவேர் ; pellitory root, Pyrethri radix.

     “அக்கர காரம் அதன்பேர் உரைத்தக்கால் உக்கிரகா லத்தோடம் ஒடுங்காண் — முக்கியமாய்க் கொண்டாற் சலமூறும் கொம்பனையே தாகசுரம் கண்டாற் பயந்தோடுங் காண்” (பதார்த்த. 1025);.{U, akkarkarhā}.

     [ஒருகா. அக்கரம் + காரம்.]

   அக்கரகாரம்பற்றிச் சாம்பசிவம்பிள்ளை அகரமுதலி கூறுவது;அக்கரகாரம் வடஆப்பிரிக்கா தேசத்தில் விளையும் ஒருவகைப் பூமரம், அக்கரகார வேர் (ஒரு); மருந்துவேர். இது முக்கியமாய் வடஆப்பிரிக்காக் கண்டத்திலிருந்து பம்பாய் வழியாகக் கொண்டுவரப்படும். எல்லாக் கடைகளிலும் காணலாம். இது துண்டு துண்டாகவும், மேற்புறம் மங்கல் நிறமாகவும், உள்ளே வெண்மையாகவும் இருக்கும். இதை மெல்லுவதனால், வாய்க்கு அழற்சியையும் நாக்கிலும் உதட்டிலும் விருவிருப்பையுங் கொடுக்கும். பல்வலிக்கு மெல்லுவதுண்டு. கருக்கிட்டுக் (கஷாயமிட்டுக்); குடிக்க ஊதை (வாத); நோய் குணப்படும்.

அக்கரகாலம்

 அக்கரகாலம் akkarakālam, பெ. (n.)

   தாள அளவை; chief unit of time.

     [அக்கரம்+காலம்.]

     [Skt. a-ksara → த. அக்கர(ம்);.]

அக்கரக்காலம்

 அக்கரக்காலம் akkarakkālam,  time measure for an alphabet.

     [அக்கரம்+காலம்]

அக்கரச்சுதகம்

அக்கரச்சுதகம் aggaraccudagam, பெ. (n.)

   ஒருபொருள் பயப்பதோர் சொற்கூறி, அச்சொல்லில், ஒரோ ரெழுத்தாக நீக்க, வேறுவேறு பொருள் பயக்கும் சித்திரப்பா (தண்டி. 95;யாப். வி. ஒழிபி. 1, உரை.);; verse composed with a play on words, a word by gradual elimination becoming different words with different meaning, as in kanakari, nakari, kari, or palavi, pala, pa.

த.வ. நீங்கெழுத்துப்பா

     [அக்கரம் + கதகம்.]

     [Skt. a-ksara – cyutaka → த. அக்கரச்சுதகம்.]

அக்கரதாரணை

அக்கரதாரணை akkaratāraṇai, பெ. (n.)

   தொண்பது (ஒன்பது); வகைச் சிவவோகங்களில் (தாரணையுள்); ஒன்று (யாப். வி. 96, பக். 516);; one of navataranai, practised by Saiva Yogis.

     [அக்கர(ம்); + தாரணை.]

     [Skt. ak sara + dharana → த. அக்கரதாரணை.]

அக்கரதீபம்

அக்கரதீபம் akkaratīpam, பெ. (n.)

   வட மொழியிலுள்ள ஐம்பத்தோ ரெழுத்துகளைக் குறிக்குமுகத்தான் கோயிலிலேற்றப் பெறும்ஐம்பத்தொரு விளக்கு; row of 51 lights set up in temples, as representing the 51 letters of the Skt. alphabet.

முப்பது விளக்கு ஏற்றுவது தமிழ் மரபு.

   30 lights representing Tamil tradition.

த.வ. எழுத்து விளக்கு.

     [Skt. a-ksara → த. அக்கரம்.]

     [தீ → தீவம் → Skt. dipa → த. தீபம்.]

அக்கரன்

 அக்கரன் akkaraṉ, பெ. (n.)

   அக்கரன், கொம்பன், படுவன் என்னும் மூவகைக் கக்கற் கழிச்சல்களுள் (வாந்திபேதிகளுள்); ஒன்று. இது கொப்பூழின்கீழ்ச் சார்ந்து, சூட்டுக் கழிச்சல் (உஷ்ணபேதி); போலும், செரியா மாந்தம் போலும் வெண்மையாகவும் சோறு சோறாகவும் கழிச்சல் கண்டு, குடலிரைச்சல், குமட்டல், நெஞ்சுக் குத்தல், நாவறட்சி, தாகம், கிடைபொருந்தாமை, வியர்வை, வலி, உடல் குளிரல் முதலிய குணங்களைக் காட்டும் ; one of the three kinds of cholera contemplated in the Tamil Medical Science. It is marked by an acute catarrhal inflammation of the mucous membrane of the stomach and the intestines, enteric pain, thirst, perspiration, parched tongue, restlessness, rumbling noise in the stomach, nausea, chest pain, presence of partially digested food in the facces, cold skin etc. The other two kinds are {komban} and {paduvan} (சா.அக.);.

 அக்கரன் akkaraṉ, பெ. (n.)

கடவுள் (சங்.அக.);

 God, as the indestructible one.

     [Skt. a-ksara → த. அக்கரன்.]

அக்கரப்பாளையம்

 அக்கரப்பாளையம் akkarappāḷaiyam, பெ. (n.)

   வேலூர்மாவட்டம்ஆரணிக்குஅருகில்உள்ளஓர்உர்; Name of the village in the Vellore district near the Aarani.

     [அக்காரம்-அக்ரம்+பாளையம்]

அக்கரம்

அக்கரம்1 akkaram, பெ. (n.)

   வெள்ளெருக்கு (மலை); ; white madar.

     [அக்கு = வெள்ளை. அக்கு → அக்கரம். இனி. எல் = வெள்ளை, கரம் = நஞ்சு ; எல்கரம் → அல்கரம் → அஃகரம் → அக்கரம் என்றுமாம்.]

மறுவ. அக்கரம்மா

 அக்கரம் 2 akkaram, பெ. (n.)

   மாமரம் (மலை.); ; mango tree.

அக்காரம் பார்க்க ;see {akkâram*}.

     [அக்காரம் = சருக்கரை, சருக்கரைபோல் இனிக்கும் மாங்கனி, அக் கனி தரும் மரம். அக்காரம் = மாமரம் (மு.அ.);. அக்காரம் → அக்கரம்.]

சருக்கரைக்குட்டி என்று ஒருவகை மாங்கனி பெயர் பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது.

 அக்கரம் 3 akkaram, பெ. (n.)

   ஒருவகை மருந்து வேர் (மு.அ.); ; pellitory root,

அக்கரகாரம் பார்க்க ;see akkara-karam.

தெ. அக்கர ; க. அக்கல ; ம. அக்கரம் கொல்லி.

 அக்கரம் akkaram, பெ. (n.)

   1. வாய்நோய் வகை ; thrush, aphthae- parasitic stomatitis.

     “அக்கரங்கள் தீர்க்கும்”பதார்த்த, 325).

   2. சுழிச்சல் (பேதி); வகை ; a form of diarrhoea.

     “சொல்லவே யக்கரத்தின் தன்மை பாரு” (சிகிச்சா, பக். 747);.

   ம. அக்கரம்; க. அத்ர ; து. அக்ர. அத்ரோ ;தெ. அக்கரமு.

 அக்கரம்1 akkaram, பெ. (n.)

   1. எழுத்து (சிவதரு. கோபுர. 219);; letter of the alphabet writing symbol.

   2. கற்றல் (திவா.);; learning.

     “அக்கரம் பிறர்கட் பொறாதவன்” (திருவாலவா. 18, 12);.

த.வ. எழுத்து.

     [Skt. a-ksara → த. அக்கரம்.]

 அக்கரம்2 akkaram, பெ. (n.)

   1. வானம்; sky.

   2. வீடுபேறு (நாநார்த்த);; salvation.

   3. அறம் (நாநார்த்த);; virtue.

   4. கடுமையானது; that which is strong or virulent.

     “அக்கர விடத்திற் பாவ நிரையினால்” (மேருமந். 793);.

த.வ. மேற்கட்டு.

     [Skt. aksara → த. அக்கரம்.]

அக்கரம்மா

 அக்கரம்மா akkarammā, பெ. (n.)

   வெள்ளெருக்கு ; white madar. Calotropis gigantea (albiflora); (சா.அக.);.

அக்கரம் பார்க்க ;see “akkaram”.

அக்கரவர்த்தனம்

அக்கரவர்த்தனம் akkaravarttaṉam, பெ. (n.)

   ஒருபொருள் பயப்பதோர் சொற்கூறி அச்சொல்லோடு, ஒரோ ரெழுத்தாகக் கூட்ட வேறுவேறு பொருள் பயக்கும் சித்திரப் பா (பி.வி. 26, உரை.);; verse composed with a play on words, a word by gradual addition becoming different words with different meaning, as in kam, nagam, kanagam, kokanagam, or ka, kavikaviri.

த.வ. சேர்ப்பெழுத்துப்பா

     [Skt. a-ksara + vardhana → த. அக்கரவர்த்தனம்.]

அக்கரவர்த்தி

 அக்கரவர்த்தி akkaravartti, பெ. (n.)

அக்கரவர்த்தனம் பார்க்க;see akkara-varttanam.

த.வ. சேர்ப்பெழுத்துப்பா

     [Skt. a-ksara + vrddhi → த. அக்கரவர்த்தி.]

அக்கரவிந்து

அக்கரவிந்து akkaravindu, பெ. (n.)

   நால்வகைச் சொற்களுள், ஒன்றாயதும், உந்தி யினின்று முகிழ்த்து, நெஞ்சகத்தைச் சென்றடைவதுமான இசைவடிவிலமைந்த ஒலி வடிவெழுத்து (அஷ்டப்பிரக. இரத்தின. 40);; Sound from the navel, One of four kinds of vakku.

     [அக்கர(ம்); + விந்து.]

     [Skt. aksara → த. அக்கர(ம்);.]

அக்கரவிலக்கணம்

 அக்கரவிலக்கணம் akkaravilakkaṇam, பெ. (n.)

   அறுபத்து நன்கு கலைகளுள் ஒன்றாகிய எழுத்திலக்கணம்; orthography one of sixty four arts.

     [அக்கரம் + இலக்கணம்.]

     [Skt. a-ksara → த. அக்கரம்.]

இலக்கு → இலக்கணம் → Skt. laksana.

அக்கரா

 அக்கரா akkarā, பெ. (n.)

   அக்கரகாரமென்னும் மருந்து வேர்; pellitory root.

     [U. akarkarha → த. அக்கரா.]

அக்கராலத்தி

அக்கராலத்தி akkarālatti, பெ. (n.)

   வடமொழியிலுள்ள 51 எழுத்துக்களைக் குறிக்கும் கோயில் தீவவகை (குற்றா. கல சிவபூசை. 48.);; row of 51 lights set up in temples as representing the 51 letters of the Skt. alphabet.

     [அக்கர(ம்); + ஆலத்தி.]

     [Skt. a-ksara → அக்கர(ம்);.]

     [ஆலா → ஆலாத்து → ஆலாத்தி → Skt. aratti.]

அக்கரிவாள்

 அக்கரிவாள் akkarivāḷ, பெ. (n.)

அக்கறுவாள் பார்க்க ;see {akkaruval}.

அக்கரை

அக்கரை akkarai, பெ. (n.)

   1. ஆற்றின் அல்லது கால்வாயின் எதிர்க்கரையான மறு கரை  the opposite bank of a river or canal.

     “இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை (பழ.);. ”

     “அக்கரைப் பாகலுக்கு இக்கரைக் கொழு கொம்பா? (பழ.);. ”

   2. கடலின் அப்பாற்பட்ட மறுகரை ; the opposite shore of a sea or ocean.

     “அளக்கரக்கரை காண்பான்”(சுந்தரத். 10);.

ம. அக்கர ; க. அத்தல் கரெ, அத்த கரெ, அத்கட கரெ, தெ. அவ்வல கர, குட. அப்பர கரெ, து. ஆபெ கரெ ; பிரா. ஒ கர்ரக்.

     [அ (சேய்மைச் சுட்டு); = அந்த. அ + கரை – அக்கரை.]

அக்கரைச்சீமை

 அக்கரைச்சீமை akkaraiccīmai, பெ. (n.)

   கடலுக்கு அக்கரையிலுள்ள நாடு ; country on the opposite shore.

     [அ + கரை + சீமை. Skt. {Sima} (எல்லை, நாடு); → த. சீமை.]

அக்கரை நாடு என்றே வழங்கலாம்.

அக்கரைதேசிகள்

அக்கரைதேசிகள் akkaraitēcikaḷ, பெ.(n.)

   ஓர் இனப் பிரிவு; a kind of race.

     “மலைமண்டலத்து அக்கரை தேசிகளில் கிட்டிணன் நாறணநம்பி” (KANNOT. 19681134);. (கல்.அக.);.

     [அக்கரை+தேசிகன்]

அக்கரைப்பச்சை

 அக்கரைப்பச்சை akkaraippaccai, பெ. (n.)

   ஆற்றின் ஒரு கரையினின்று பார்க்கும் மாட்டிற்கு அல்லது மாந்தனுக்கு, எதிர்க்கரை பசேர் என்று தோன்றும் பொய்த்தோற்றம் ; illusion that causes a person on one bank believe that the vegetation on the other bank is greener or more fertile.

அது உனக்கு அக்கரைப் பச்சையாயிருக்கிறது (உ.வ.);.

     [அ + கரை, பக → பச்சு → பச்சை.]

அக்கரைப்படுத்து-தல்

அக்கரைப்படுத்து-தல் akkaraippaḍuddudal,    2 பி. வி. (v. caus.)

   ஆளையேனும் சரக்கை யேனும் பரிசலில் அல்லது படகிலேற்றி ஆற்றைக் கடப்பித்தல் ; to ferry over a river passengers or cargo in boat or coracle.

     [அ + கரை + படுத்து. படு (த.வி.); → படுத்து (பி.வி.);. ‘து’ பி.வி. ஈறு.]

அக்கரையர்

அக்கரையர் akkaraiyar, பெ. (n.)

   மேலுலக வாணர் (பரலோகவாசிகள்); ; heavenly beings, as inhabiting the regions beyond the ocean of worldly life.

     ‘அக்கரையராய் ……… நித்ய ஸீரிகளில் ஒருவர் வந்தவதரித்தார்’ (உபதேச ரத். அவதா. பக். 1);.

     [அ + கரை + அர் (பலர்பாலீறு);.]

இவ்வுலக வாழ்க்கை ஒரு கடல் கடத்தலைப் போன்றிருத்தலால், இதைக் கடந்து விண்ணுலகையடைந்தவர் அக்கரையர் எனப்பட்டனர்.

அக்கரையான்

 அக்கரையான் akkaraiyāṉ, பெ. (n.)

   கடலுக்கு அக்கரையிலுள்ள நாட்டான் ; one who lives on the farther shore.

     [அ + கரை + ஆன் (ஆண்பாலீறு);.]

அக்கரைவைப்பகம்

 அக்கரைவைப்பகம் aggaraivaippagam, பெ. (n.)

   ஒரு வைப்பகத்தின் பெயர் (இக்.வ.); ; Overseas Bank (Mod.);.

     [அ + கரை + வைப்பு + அகம். வை → வைப்பு (தொ.பெ.);. ‘பு’ தொ.பெ. ஈறு.]

அக்கரோட்டு

 அக்கரோட்டு akkarōṭṭu, பெ. (n.)

மரவகை

 English walnut.

     [U.akhrot → த. அக்கரோட்டு.]

அக்கறக்கி

 அக்கறக்கி akkaṟakki, பெ. (n.)

   செந்தினை ; red millet, Setaria italica (சா.அக.);.

அக்கறந்தான்

அக்கறந்தான் akkaṟandāṉ, பெ. (n.)

   சுடுக்காய் ; chebulic myrobalan (T.C.M. ii, 12, 429);.

ஒ.நோ ; அக்காத்தான்.

அக்கறுவாள்

 அக்கறுவாள் akkaṟuvāḷ, பெ. (n.)

   சப்பாத்துக் கள்ளியையும் முட்செடிகளையும் வெட்ட உதவும் அறுவாள் வகை; bill-hook for lopping thorns and prickly pear.

     [அக்கு = முள், முட்செடி. அறுவாள் (வினைத் தொகை); = .வெட்டுக்கத்தி. ஒ.நோ ; அக்கக்காய் = துண்டு துண்டாக, அகைதல் = ஒடிதல். அகைத்தல் = முறித்தல், அறுத்தல்.]

அரிதல் = சிறு கத்தியால் அல்லது அரிவாள் மணையலகால், காய்கறி முதலிய மெல்லியவற்றைச் சிறுசிறு துண்டுகளாக மென்மையாய் நறுக்குதல். அறுத்தல் = பெரியவற்றையும் வன்மையானவற்றையும், இரண்டாகவோ பல பெருந்துண்டுகளாகவோ, சிறு கத்தியாலும் பெருவாளாலும் முன்னும் பின்னும் வன்மையாய் இழுத்தராலியும் கத்தரித்தும் வெட்டியும் துணித்தல். ஆதலால், அரிவாள் வேறு ; அறுவாள் வேறு. ஆகவே, அக்சுறுவாளை அக்கரிவாள் என்பது தவறாம்.

அக்கறை

அக்கறை akkaṟai, பெ. (n.)

   பற்று, ஊக்கம், கவனம், கருத்து, கவலை ; interest, concern, care.

அவனுக்குப் படிப்பில் அக்கறையில்லை (உ.வ.);.

   2. தேவை ; need, necessity.

தேர்வில் தேறித் தகுதித்தாள் பெற்று வேலைதேடுவது யாருக்கு அக்கறை? உனக்கா எனக்கா? (உ.வ);.

     ‘அவரவர் அக்கறைக்கு அவரவர் பாடுபடுவார்” (பழ.);.

தெ. அக்கற ; க. அக்கறெ ; து. அக்கரெ ; U. akhass.

     [ஒருகா. அகக்குறை என்பது அக்கறை என்று திரிந்திருக்கலாம். குறை = தேவை அல்லது இன்மையுணர்ச்சி. அகக்குறை = ஒன்றின்மையால் அதைப் பெறுதற்கேற்ற முயற்சியை அல்லது விருப்பத்தை யுண்டுபண்ணும் மனக்குறை.]

அக்கறை யென்னுஞ் சொல்லில் உள்ளது வல்லின றகரம். “உம்பரக்கரையா யனுப்ப” என்னும் பாடலில் (தனிப்பா. தி. 1, பக். 374); இடையின ரகரம் வந்திருப்பது, ஏட்டுப் பிழையாயிருத்தல் வேண்டும்.

அக்கறைப்படு-தல்

அக்கறைப்படு-தல் akkaṟaippaḍudal,    20 செ. கு.வி. (v.i.)

   பற்றுவைத்தல், ஊக்கங் கொள்ளுதல் ; to become interested.

நீ அக்கறைப்பட்டால் அஃது உனக்குக் கிடைக்கும்.

     [அக்கறை + படு. படுதல் = கொள்ளுதல்.]

அக்கலாட்டி

 அக்கலாட்டி akkalāṭṭi, பெ. (n.)

   காசுக்கட்டி ; black catechu, Catechu nigrum (சா.அக.);.

அக்கல்

அக்கல் akkal, பெ. (n.)

   1. அறிவு; wisdom sensibility.

   2. செய்தி (சென்னை);; news.

     [Ar. aql → த. அக்கல்.]

அக்களவு

அக்களவு akkaḷavu, பெ. (n.)

   1. எலும்பின் அளவு ; the size of a bone.

   2. பூநீர் ; a liquid salt said to be obtained from the soil of fuller’s earth during the dewy season. (Several versions are told about the method of collecting this. For details see under {pūnir} (சா. அக.);.

     [அக்கு + அளவு. அள → அளவு (தொ.பெ., பண்.பெ.);. ‘வு’ தொ.பெ. அல்லது பண்.பெ.ஈறு.]

அக்களிப்பு

அக்களிப்பு akkaḷippu, பெ. (n.)

   மனமகிழ்ச்சி ; exultation.

     “சக்களத்திகள் அக்களிப்பொடு கெக்கலிப்பட” (ச. ச. ச. கீர்த். 186);.

அகக் களிப்பு பார்க்க ;see aga-k-kalippu.

     [அகம் = மனம். களிப்பு = மகிழ்ச்சி. அகம் + களிப்பு – அகக்களிப்பு → அக்களிப்பு (மரூ.உ);.]

அக்கழற்சி

 அக்கழற்சி akkaḻṟci, பெ. (n)

   எலும்புக்கு உண்டாகும் அழற்றி ; inflammation of bone, Osteitis (சா.அக.);.

     [அக்கு = எலும்பு, அழல் → அழற்சி (தொ. பெ.);. ‘சி’ தொ.பெ. ஈறு.]

அக்கழலை

 அக்கழலை akkaḻlai, பெ. (n.)

அக்கழற்சி பார்க்க ;see {akkalarci}.

     [அக்கு = எலும்பு. அழல் → அழலை = அழற்சி. ‘ஐ’ தொ.பெ. ஈறு.]

அக்கழி

 அக்கழி akkaḻi, பெ.(n.)

   தாழ்ப்பாள்; latch.

மறுவ. அகக்கழி

     [அகம்+கழி]

அக்கழித்தல்

அக்கழித்தல் akkaḻittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   வேருடன் அழித்தல்; ruin.

     [அக்கு+அழி-த்தல்]

அக்கழிவு

 அக்கழிவு akkaḻivu, பெ. (n.)

   எலும்பிற்கு ஏற்படும் அழிவு ; death or decay of bone, Osteolysis or Osteonecrosis (சா.அக.);.

     [அக்கு + அழிவு. அழி → அழிவு (தொ.பெ.);. ‘வு’ தொ.பெ. ஈறு.]

அக்கவடம்

 அக்கவடம் akkavaḍam, பெ. (n.)

   அக்க மாலை ; string of rudraksha beads.

வடம் பார்க்க ;see vadam.

     [அக்கம் + வடம்.]

அக்கவாலதி

 அக்கவாலதி akkavāladi, பெ. (n.)

   நெருஞ்சில் (சா.அக.); ; cow’s thorn, a small prostrate herb, Tribulus terrestris.

     [ஒருகா, அக்கம் + வாலதி = வால்போல் நீண்ட முனைகளையும் அக்கமணி (உருத்திராக்கம்); போல உருண்ட வடிவினையுமுடைய முள்வகை. த. வால் → வாலம் → Skt. {väladi}.]

அக்கா

அக்கா akkā, பெ. (n.)

   1. தாய் ; mother.

   2. மூத்த உடன்பிறந்தாள் ; elder sister.

   3. அரத்தக் கலப்புள்ள உறவினர்க்குள் அக்கைமுறைப்பட்டவள் ; elder cousin-sister.

   4. மணவுறவால் அக்கைமுறைப்பட்டவள்; an older woman who has acquired the relationship of a cousin through marriage.

   5. மதிப்புரவால் அக்கா என்று விளிக்கப்படும் அல்லது சொல்லப்படும் உறவல்லா மூத்த பெண் ; any unrelated elderly woman addressed or spoken of as akka out of courtesy.

   6. திருமகளுக்கு அக்கையாகச் சொல்லப்படும் மூதேவி; Goddess of misfortune said to be the elder sister of Tirumagal (Laksmi);, the Goddess of wealth.

   7. அக்கை என்பதன் விளிவடிவம்; vocative of akkai.

ம., தெ., க. அக்க ; து. அக்க. அக்கெ ; குட. அக்கெ ; கோத அக்ன் ; துட. ஒக்ன், ஒக்கொக், கோண். அக்கா, தக்கா ; கொலா. அக்காபாயீ.

     [அம்ம → அவ்வ → அக்க → அக்கா (விளி);. அம்மை → அவ்வை → அக்கை → அக்கா (விளி);. ஒ.நோ. செம் → செம்மை → செவ்வை, செம்→ செவ் → செவ → செவப்பு → செகப்பு, செவ → சிவ → சிவப்பு → சிகப்பு, செவ் → செவ்வல் → செக்கல் (செந்நிறம்); → செக்கர் = சிவப்பு. ம → வ → க, போலித்திரிபு அல்லது ஒலித்திரிபு.]

அக்கா என்னுஞ் சொல்லின் திரிந்த வடிவங்கள், வடதிரவிட மொழிகளிற் பாட்டனையுங் குறிக்கும்.

   எ-டு;மொழி சொல் குறிக்கும்

வடிவம் இனமுறை

கோண்டி அக்கோ தாய்ப்பாட்டன்

கூய் அக்கெ பாட்டன்,

குவி அக்கு முன்னோன் பாட்டன்

பர்சி (பர்ஜி); அக்க தாய்ப்பாட்டன்

பெற்றோர் (இருமுதுகுரவர்); என்னும் முறையில் தாயுந் தந்தையும் சமமானவராதலால், தாய்ப்பெயர் முதலில் தந்தையைக் குறித்து, பின்னர்த் தாய்க்குத் தாயாகிய பாட்டியைப் போன்றே தந்தைக்குத் தந்தையாகிய பாட்டனையுங் குறித்ததென்க.

சித்திய (Scythian); இனச்சொற்கள்

   1. அக்கையைக் குறிப்பவை ;துங். ஒக்கி, அக்கின்; மங். அச்சர்; திபெ. அச்செ; துரு. எதெ; மார். அக்கை; உகி. இக்கென்.

   2. அண்ணனைக் குறிப்பவை;மங். அக்க; துங். அக்கி; உய். அச்ச.

   3. பாட்டியைக் குறிப்பது ;இலாப். அக்கெ.

   4. தங்கையைக் குறிப்பது;ஆசு.துரு. அக்க.

   5. கிழவனைக் குறிப்பவை;ஆசித். இக்கி; பின். உக்கொ; அங். அத்.

அக்கா (அக்க); என்னுஞ் சொல் முதன் முதல் தாயையே குறித்து, பின்பு தாய் போன்ற மூத்த உடன்பிறந்தாளுக்கு வழங்கி வருகின்றது. இன்றும் தமிழருள் ஒரு சிலர் தம் தாயை அக்கா என்றே விளிப்பதுங் குறிப்பதும் வழக்கம். தாயைக் குறிக்கும் அச்சி என்னும் சொல்லும், இன்று சில வகுப்பாரிடை, சிறப்பாகத் தாழ்த்தப்பட்டோரிடை, அக்கைக்கு வழங்கி வருகின்றது. பெற்றோர்க்குப் பின் மூத்த மகனும் மூத்த மகளுமே குடும்பப் பொறுப்பாளிகளும் நடத்தாளிகளுமாதலால், “தந்தைக்குப் பின் தமையன், தாய்க்குப் பின் தமக்கை’ என்னும் மரபுச் சொலவடையும் உள்ளது. ஐயன் என்னுஞ் சொல் தனித்த நிலையில் தந்தையைக் குறிப்பது போன்றே, அக்கை யென்னுஞ் சொல்லும் தனித்த நிலையில் முதற்காலத்தில் தாயைக் குறித் திருத்தல்வேண்டும்.

ஆண்பாலில் அக்கைக்குச் சமமானவன் அண்ணன்.

சிறுமியை, சிறப்பாகத் தங்கையை, ஆர்வம் பற்றித் தாய் என விளிப்பதும் குறிப்பதும் இன்றும் வழக்கம்.

இளையவரைத் தம்பி தங்கையென்றும், மூத்தவரை அண்ணன் அக்கையென்றும், முதியவரைப் பாட்டன் பாட்டியென்றும் விளிப்பதும் குறிப்பதும் திருந்திய மக்கட் பண்பாதலால், பாட்டன் முறைப்பெயர் கிழவனைக் குறிப்பதும் இயற்கையின்பாற்பட்டதே. மொழி வேற்றுமையால் முறைப் பெயர்களின் பால் வேறுபடுவதும் உலகப் பொதுவியல்பே.

ஆரிய இனச்சொற்கள்

   இலத் அக்கா (தாய்); ; Acca Larentia, mother of the lares.

வ. அக்கா (தாய்); ; பிராகி. அக்கா ; மரா. அக்கா.

   அக்கா என்று பொதுப்பட வருமிடமெல்லாம், மூத்த உடன்பிறந்தாளையே குறிக்கும்;   பிராகிருதமும் மராத்தியும் உண்மையில் ஆரிய மல்லவேனும், ஆரியத்தன்மையடைந்துள்ளமையால் ஆரியமெனப்பட்டன;     ‘akka, f. (voc. akka, Pan.); a mother (used contemptuously);; N. of a woman ; (supposed to be a term of foreign origin ; cf. L., Acca.);’

   என்று, மானியர் வில்லியம்சு சமற்கிருத ஆங்கில அகரமுதலி (பக். 2); குறித்திருப்பது கவனிக்கத்தக்கது;தாயைக் குறிக்கும் அவவை என்னும் சொல் மூத்த உடன்பிறந்தாளையும் பாட்டியையும் குறிப்பது போன்றே, அக்கை என்னும் சொல்லும் அவ்விருமுறையையுங் குறிக்கின்றதென்க. எ-டு : தவ்வை (தம் + அவ்வை); = தமக்கை. அவ்வை = பாட்டி.

இக்கி, உக்கொ, அக் என்னும் சித்தியச் சொற்கள் முதியோனைக் குறித்தலால், முதுமையுணர்த்தும் ‘அக்’ என்னும் மூலத்தினின்று அக்கா என்னுஞ் சொல் தோன்றியிருக்கலாமென்று கால்டுவெலார் கருதினார். ஆயின், அக்கா என்னும் சொல்லுணர்த்தும் பொருள்கட்கெல்லாம் அடிப்படையானது அம்மையென்னும் தாய்முறைப் பொருளேயென்பதும், மகர வொலியே வகரவொலி வாயிலாகக் ககர வொலியாக மாறியிருத்தல் கூடுமென்பதும், மேற்காட்டிய சொற்களாலும் ஏதுக்களாலும் விளக்கமாதல் காண்க.

முதற்காலத்தில், அக்க என்னும் அகரவீற்று வடிவே இயல்பான வடிவாயிருந்திருத்தல் வேண்டும். செந்தமிழ் என்னும் பண்பட்ட நிலையில் அகரவீறு ஐகார வீறாக்கப்பட்டு அக்கை என்றானதாகத் தெரிகின்றது. அதன்பின், அக்கை என்பதே எழுவாயும், அக்க, அக்கா என்னும் இரண்டும் விளிவேற்றுமையும் ஆயின.

எ-டு : அக்கை வந்தாள்; அக்க வா; அக்கா போ.

பிற்காலத்தில், கொச்சை வழக்கில், நெடிலீற்று விளிவடிவே எழுவாயுமாயிற்று.

எ-டு : அக்கா வந்தாள்.

   ஒ.நோ ;எழுவாய் விளி எழுவாய்

அம்மை அம்ம, அம்மா அம்மா

அப்பன் அப்ப, அப்பா அப்பா

ஐயன் ஐய, ஐயா ஐயா

   இங்ஙணம் விளிவடிவே எழுவாயுமானதால், அக்கை தங்கச்சிமார் (தங்கைமார்); என்னும் மரபிணைச்சொல் ‘அக்கா தங்கச்சிமார்’ என்றே கொடுந்தமிழ் என்னும் கொச்சையுலக வழக்கில் வழங்கி வருகின்றது. இது செந்தமிழ் என்னும் உயர்ந்தோர் உலக வழக்கினின்று வேறுபட்டதென்பதை அறிதல் வேண்டும்;

அக்காகலம்

 அக்காகலம் akkākalam, பெ.

   அகில் (பரி.அக.);, அகில்மரம் ; eaglewood (சா.அக.);.

அக்காக்காய்

அக்காக்காய் akkākkāy, பெ. (n.)

   பெண்டிர் சிறுபிள்ளைகட்குத் தலைவாரிச் சடைபின்னும் போது, அப் பிள்ளைகள் திமிறாது அமைதியாயிருத்தற்பொருட்டு, அவர்களின் கவனத்தையீர்க்க, அருகிலுள்ள காக்கையை வந்து பின்னச் சொல்வதுபோல் நடிக்கும் நடிப்பில் அதை விளிக்கும் விளிப்பு ; a playful invitation by a child’s mother or nurse addressed to an imaginary or real crow to come and braid the child’s hair along with her, the purpose being to divert the attention of the child and make it stay quiet without moving its head.

     “பின்னை மணாளனைப் பேரில் கிடந்தானை

முன்னை யமரர் முதல்தனி வித்தினை

என்னையும் எங்கள் குடிமுழு தாட்கொண்ட

மன்னனை வந்து குழல்வாராய் அக்காக்காய்!

மாதவன் தன்குழல் வாரா யக்காக்காய்!” (திவ். பெரியாழ். 2.5 ; 1);.

     “பிண்டத் திரளையும் பேய்க்கிட்ட நீர்ச்சோறும்

உண்டற்கு வேண்டிநீ ஒடித் திரியாதே

அண்டத் தமரர் பெருமான் அழகமர்

வண்டொத் திருண்ட குழல்வாராய் அக்காக்காய்!

மாயவன் தன்குழல் வாரா யக்காக்காய்!” (திவ். பெரியாழ். 2.5 ;7);.

     [அ + காக்காய். காக்கை(எழு.); → காக்காய் (விளி);. ஐ → ஆய், விளித்திரிபு. அகர முன்னொட்டுப் பலுக்கெளிமையும் ஒலிப்பினிமையும் பற்றியது. பலுக்கு (தென்சொல்); = உச்சரிப்பு (வடசொல்);.]

பெரியாழ்வார் திருமொழி 2ஆம் பத்து 5ஆம் திருமொழிப்பொருள் தலைப்பு, ‘கண்ணன் குழல்வாரக் காக்கையை வாவெனல்’ என்றிருத்தலையும், அத் திருமொழியின் முதல் 9 பாவிசையும் “குழல்வாராய் அக்காக்காய்’ என்று முடிதலையும், இறுதிப் பாவிசையில் “குழல்வார வாவென்ற ஆய்ச்சி சொல்” என்று குறித்திருத்தலையும், அடுத்த திருமொழிப்பொருள் தலைப்பு, ‘காக்கையைக் கண்ணனுக்குக் கோல் கொண்டுவர விளம்புதல்’ என்றிருத்தலையும் நோக்குக.

காகங்கள், ஏதேனும் இரை கிடைக்குமென்று, அடிக்கடி வீட்டுக் கூரைகளில் வந்தமர்ந்து, ‘கா கா’ எனக் கரையும். சிறு பிள்ளைகட்குப் பறவைகள் மீது விருப்பமுண்டாதலால், அவர்கட்குத் தலைவாரும் போது அவர் அசையாது அமைதியாயிருத்தற் பொருட்டு, தாய்மார் அல்லது செவிலியர் காக்கையைத் தம் பிள்ளைகட்குத் தலைவார அழைப்பதுபோல் விளித்து, அப் பிள்ளைகளின் மனநிலைக் கேற்றவாறு சில செய்திகளைச் சொல்வது வழக்கம்.

பெரியாழ்வார் திருமொழி கண்ணன் புகழ்ப்பாடலாதலால், பெரும்பாலும் கண்ணன் செயல்களும் திருவிளையாடல்களும் தெய்வத்தன்மையுமே திருமொழிச் செய்திகளாயமைந்தன.

அக்காக்குருவி

 அக்காக்குருவி akkākkuruvi, பெ. (n.)

   அக்கா என்னும் ஒலி தோன்றக் கத்தித் திரியும் குருவி வகை ; koel, a bird that keeps crying akka, Eudynamis honorata.

     [அக்கா + குருவி. ‘அக்கா’ ஒலிக்குறிப்பு.]

அக்காடச்செல்லிகண்டன்

அக்காடச்செல்லிகண்டன் aggāṭaccelligaṇṭaṉ, பெ. (n.)

   1. தாவிச் செல்லும் அணிற் பிள்ளை ; a species of rodents with long bushy tails living in trees and distinguished by their capacity to leap long distances.

   2. பறக்கும் அணில் ; flying squirrel, Petaurista philippensis.

அக்காடச்செல்லிகண்டன் மர அணிலில் ஒரு வகை போலும் (சா.அக.);.

     [P]

அக்காடி

 அக்காடி akkāṭi, பெ. (n.)

   அக்கையென்னும் முறைப்பெயரின் விளிவடிவம் ; voc, of akkai.

     [அக்கை → அக்கா (விளி); + அடி (விளியசை);.]

அக்காடி (அண்மை விளி);, அக்காடீ (சேய்மை விளி);. இது அருமை பற்றியதாகக் கருதப்படினும், தாழ்ந்தோர் வழக்காம்.

அக்காடிதல்

அக்காடிதல் akkāṭidal, பெ. (n.)

   1. ஒரு வகைச் செய்ந்நஞ்சு (கெளரி பாடாணம்); ; a kind of arseaic preparation (?);.

   2. ஒரு வகைப் பறங்கி வைப்புநஞ்சு (பாடாணம்); ; a kind of arsenic processed by the Chinese (?); (சா.அக.);.

   இருபொருளும் வினாக் குறியிடப்பட்டிருப்பதால் ஐயுறவுப் பொருள் என்பது அறியப்படும்;

அக்காடிப்பயறு

 அக்காடிப்பயறு akkāṭippayaṟu, பெ. (n.)

   மொச்சைக்காய் ; black-seeded dolichos, Lablab vulgaris (சா.அக.);.

அக்காடீ

 அக்காடீ akkāṭī, இடை. (int.)

   இரங்கல், அச்சம், நோவு முதலியவற்றையுணர்த்தும் குறிப்புச் சொல் ; an exclamation of grief, pain, fear etc.

     [அக்கை → அக்கா (விளி); + அடீ (விளியசை);. அடா (ஆ.பா.); – அடீ → அடி (பெ.பா.);.]

அக்கா என்பது விளிப்பெயராயினும், உணர்ச்சிக் குறிப்பானமையின் இடைச்சொல்லாயிற்று. அக்காடீ ஆத்தாடி என்பது மரபிணைக் கூட்டுச்சொல். இது இலக்கியத்திற்கும் உயர்ந்தோர்க்கும் ஏலாத ஒருவகை இழிவழக்காம்.

   அக்காடீ ஆத்தாடி என்று அலறிக்கொண்டு ஓடிவந்தாள் (உ.வ.);;   அக்காடி என்னும் சொல் குறிப்புச்சொல்லான வகையை அக்கட என்னுஞ் சொல்லின் கீழ்க் காண்க;   ஆழ்ந்த உணர்ச்சி நேரங்களில், பிள்ளைப் பருவங் கடந்த ஆண்மக்கள் தந்தையையும் பெண்மக்கள் தாயையும் விளிப்பதே இயல்பாதலால், ஆத்தாடி என்பது பெண்பாற் கூற்றாம். சிற்றிளம்பருவத்தில் இருபாற் பிள்ளைகளும் தாயொடும் தமக்கையொடும் நெருங்கிப் பழகுவதால், அக்கட என்பது இருபாற் பொதுவானது, மேற்கூறிய நெறி முறைக்கு விலக்கென்க;   அக்காடீ என்பது, அக்காடி என்பதன் நீட்டமான சேய்மை விளி;

அக்காடுதி

 அக்காடுதி akkāṭudi, பெ. (n.)

   தான்றி (மலை.);; belleric myrobalan (சா.அக.);.

அக்காணி

அக்காணி akkāṇi, பெ. (n.)

   பூதவுடம்பு ; gross mortal body.

     “கயிற்றும் அக்காணி கழித்து” (திவ். பெரியாழ். 5.2;3);;

 | [ஒருகா. அச்சாணி → அக்காணி. அச்சு = உடம்பு. ஆணி = அடிமூலம். அக்காணி = பிறவிக்கு அடிக்களமாயிருப்பது.]

 அக்காணி akkāṇi, பெ.(n.)

   பதநீர்; sweet toddy drawn in a pot lined with lime to prevent fermentation.

     [அக்காரம்+நீர்-அக்காரநீர்-அக்காணிர்அக்காணி (கொ.வ.);]

அக்காதேவி

 அக்காதேவி akkātēvi, பெ. n.)

   வறுமைத் தெய்வமும் திருமகளின் அக்கையாகச் சொல்லப்படுபவளுமான மூதேவி (சங்.அக.); ; Goddess of poverty, represented as the elder sister of Tirumagal (Laksmi);, in mythology.

ம. அக்காள்

     [அக்கா = திருமகளின் அக்கை. தேவன் (ஆ.பா.); – தேவி (பெ.பா.].

   மூதேவி திருப்பாற்கடலில் திருமகளுக்கு முந்தித் தோன்றினாள் என்பது ஆரியத் தொன்மம் (புராணம்);;

அக்காத்தான்

 அக்காத்தான் akkāttāṉ, பெ. (n.)

   தான்றி (மலை.); ; belleric myrobalan.

அக்காத்தி

 அக்காத்தி akkātti, பெ. (n.)

   திக்கற்றவன்; one without resources or friends.

அவன் அக்காத்தியாய்த் திரிகிறான் (இ.வ.);.

த.வ. திக்கிலி, போக்கிலி.

     [Skt. a-gati → த. அக்காத்தி.]

அக்காத்தை

 அக்காத்தை akkāttai, பெ. (n.)

   அக்கை, மூத்த உடன்பிறந்தாள் (இ.வ.); ; elder sister (Loc.);.

     [அக்கா + ஆத்தை – அக்காத்தை.]

   அக்கா என்னும் தனிச்சொல்லே மூத்த உடன்பிறந்தாளைக் குறிக்கப் போதியதாம். அக்கையின் தாய்த்தன்மையை உணர்த்தற்கு ஆத்தை என்னும் தாய்ப்பெயர் சேர்ந்து அக்காத்தை என்னும் கூட்டுச் சொல் தோன்றிற்று. இது அண்ணனை அண்ணாச்சியென்பது போன்றது;   தாய்க்குப்பின் தமக்கை என்னும் கருத்துப் பற்றி, ஆத்தை என்னும் சொல் கண்ணியம் அல்லது அருமை குறித்த பின்னொட்டாகச் சேர்க்கப்பட்டுள்ளது;

அக்காந்தி

 அக்காந்தி akkāndi, பெ. (n.)

   தான்றி (பரி. அக..);; belleric myrobalan.

   அக்கந்தம், அக்காந்தி, அக்காத்தான், அங்காத்தான் என்பன, ஒரே பெயரின் பல்வேறு வடிவங்களாகத் தோன்றுகின்றன;

அக்கானி

 அக்கானி akkāṉi, பெ. (n.)

அக்கார நீர் பார்க்க ;see akkara-nir.

அக்காமக்காஞ்சீமை

 அக்காமக்காஞ்சீமை akkāmakkāñcīmai, பெ.(n.)

   சேய்மையில் இருக்கும் ஊர், இடம்; a distant place.(இ.வ.);

     [அக்கா+அக்காம்+சீமை]

அக்காரக் கனி

அக்காரக் கனி akkārakkaṉi, பெ.(n.)

இனிய சுவை மிகுபழம் பொருள்; கடிகைத்தடங்குன்றின் மிசை இருந்த அக்காரக் கனியை (மங்.9:9:4);.

     [அக்காரம்+கனி]

அக்காரக்காரம்

 அக்காரக்காரம் akkārakkāram, பெ. (n.)

   ஒரு மருந்துச் சரக்கு ; a drug.

அக்காரடலை

அக்காரடலை akkāraḍalai, பெ. (n.)

   சருக்கரை சேர்த்துச் சமைத்த சோறு ; rice boiled with sugar,

     “ஆம்பா லக்கா ரடலை யண்ப னீருறமிர்தம்” (சீவக. 928);.

ம. அக்காரடல

     [சருக்காரம் → சக்காரம் → அக்காரம் = சருக்கரை அடுதல் = சமைத்தல். அடு → அடல் → அடலை = சோறு. அக்காரம் + அடலை – அக்காரடலை.]

அக்காரடிசில்

அக்காரடிசில் akkāraṭicil, பெ.(n.)

   சருக்கரைப் பொங்கல்; rice boiled in milk with ghee and sugar.

     “நூறு தடா நிறை அக்காடிசில்”. (திவ்,திருப்ப.9:6);

     [அக்காரம்-சருக்கரை. அடுதல்→அடிசில் அக்காரம்+அடிசில்]

அக்காரடியல்

அக்காரடியல் akkāraḍiyal, பெ. (n.)

   சருக்கரைப் பொங்கல் (M.E.R. 582 of 1920);; rice boiled in milk with ghee and sugar.

     [அக்காரம் = சருக்கரை அடுதல் → அடுசல் → அடிசல் → அடியல். (தொ.ஆகு.]

     [அக்காரம் + அடியல் – அக்காரவடியல் → அக்காரடியல். அகரம் இடையில் தொக்கது.]

அக்காரநீர்

 அக்காரநீர் akkāranīr, பெ. (n.)

   பதநீர் (நாஞ்.);; sweet toddy.

ம. அக்கானி

     [அக்காரம் = சருக்கரை. அக்கார நீர் = சருக்கரைபோல் இனிக்கும் அல்லது சருக்கரை போன்ற கருப்புக்கட்டி காய்ச்சப்படும் பதநீர்.]

   அக்காரநீர் என்பது, இன்று கொச்சை வழக்கில் அக்கானி என்று வழங்குகின்றது;   பதநீர் என்பது பாண்டிநாட்டு வழக்கு; தெளிவு என்பது சோழநாட்டு வழக்கு; பனஞ்சாறு என்பது சென்னை வழக்கு;

அக்காரம்

அக்காரம் akkāram, பெ. (n.)

   1. சருக்கரை ; sugar.

     “அக்கார மன்னா ரவர்க்கு” (நாலடி.. 374);. “ஆடையுஞ் சருக்கரையும் அக்காரமாகும்” (பிங். 10 ; 5);;

   2. கரும்பு (மு.அ.);; sugar-canc.

முந்து. சருக்காரம்

     [சருக்காரம் = வட்டம். சருக்கரம் → சருக்கரை = முதற்கண் வட்ட வடிவாக அல்லது உருண்டை வடிவாகக் காய்ச்சப்பட்ட வெல்லக் கட்டி. சருக்கரம். சருக்காரம் → சர்க்காரம் → சக்காரம் → அக்காரம்.]

   சருக்கரை பிற்காலத்திற் பல்வேறு வடிவில் வார்க்கப்பட்டது; பல்வேறு வகையிற் சீர்திருத்தப்பட்டது. அயிர், கண்டு, கற்கண்டு முதலியன திருத்திய வகைகளாம்;   பதநீர் அக்காரநீர் எனப்படுவதாலும், பனைமரம், முழுகிப்போன பழம் பாண்டி நாட்டுக் குறிஞ்சி நிலத்தும் முல்லை நிலத்தும் இயற்கைக் கருப்பொருளாயிருந்ததனாலும், கரும்பு, நாகநாடெனப்படும் கீழைக்கரைத் தீவுகளினின்று சேரவேந்தனொருவனாற் கொண்டுவரப்பட்டமையாலும், இன்றும் பனங்கருப்புக்கட்டி வட்டவடிவமாக அல்லது அரையுருண்டை வடிவமாக வார்க்கப்பட்டு வட்டெனப்படுவதாலும்,சருக்கரையென்னும் பெயர் முதற்காலத்திற் கருப்புக்கட்டியையே குறித்திருக்கலாம்;
 அக்காரம் akkāram, பெ. (n.)

   மாமரம் (மு.அ.);; mango tree.

     [அக்காரம் = சருக்கரைபோல் இனிக்கும் மாங்கனி அல்லது மாங்கனி வகைகளுள் ஒன்று, அக் கனிமரம். கனியைக் குறிப்பின் பண்பாகு பெயரும், மரத்தைக் குறிப்பின் சினையாகு பெயரும் இருமடியாகுபெயரும் ஆகும்.]

   இன்றும், சருக்கரைக்குட்டி என்று ஒரு வகை மாங்கனி பெயர் பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது;   மாவை ஒன்றாகக் கொண்ட முக்கனியென்னும் தமிழ்நாட்டு வழக்கு, வரலாற்றிற்கெட்டாத் தொன்றுதொட்டது;
 அக்காரம் akkāram, பெ. (n.)

   ஆடை ; cloth. clothes.

     “ஆடையுஞ் சருக்கரையும் அக்காரமாகும்” (பிங், 10 ; 5);;

தெ. அங்கி ; க. அங்கரேக்கு.

     [சருக்காரம் = வட்டம். சருக்காரம் → சக்காரம் → அக்காரம் = வட்டம், சுற்று, உடம்பைச் சுற்றியுடுக்கப்படும் ஆடை. சுற்றுதல் = உடுத்தல். “கூறை யரைச்சுற்றி வாழினும்” (நாலடி. 281);. “சுற்ற லுடுத்தல்” (பிங், 6 ; 184);. ஒ.நோ.; வட்டம் → ஆடை. “வாலிழை வட்டமும்” (பெருங். உஞ்சைக்.. 42 ; ;208);. பரிவட்டம் = ஆடை. “ஈறில் விதத்துப் பரிவட்ட முழி னிரைத்தே” (பெரியபு. ஏயர்கோ. 36);. வட்டத் தலைப்பாகை, வட்டத் தாறு முதலிய வழக்குகளையும் நோக்குக.]

அக்காரவடிசில்

அக்காரவடிசில் akkāravaḍisil, பெ. (n.)

   சருக்கரைப் பொங்கல் வகை ; rice boiled in milk and ghee with sugar.

     “அக்கார வடிசில். சொன்னேன்” (தில். நாய்ச் 9 ; 6);.

     [அக்காரம் = ச்ருக்கரை. அடுதல் → அடுசல் → அடிசில் (தொ.ஆ.கு.); = அடப்பட்ட சோறு. அடுதல் = சமைத்தல்.]

அக்காரை

அக்காரை akkārai, பெ. (n.)

   இனிப்புச் சிற்றுண்டி வகை ; a kind of sweet cake.

     ‘அக்காரையாக அடப்பட்டதுமாம்’ (சீவக. 928, நச். உரை);.

     [அக்காரம் = சருக்கரை, இனிப்பு. அக்காரம் → அக்காரை = இனிப்புச் சிற்றுண்டி.]

அக்கால்

அக்கால் akkāl, இடை. (int.)

அப்போது,

 then

     “அக்கால் வருவார் எங்காதலோரே” (குறுந். 277:8.);

     [அ+கால்]

அக்காளன்

 அக்காளன் akkāḷaṉ, பெ. (n.)

   ஒருவகைக் காட்டுப்புல் (மலை.); ; species of wild grass.

அக்காளி

 அக்காளி akkāḷi, பெ. (n.)

அக்காளிப்பிரசாதம் பார்க்க ;see {akkali-p-piraśddam}.

அக்காளிப்பிரசாதம்

அக்காளிப்பிரசாதம்,பெ. (n.)    கோயிலில் தெய்வத்திற்குப் படைக்கப்படும் திருச்சோற்று வகை;     [ஒரு கா. அங்காளி → அக்காளி. Skt. {prasāda} → த. பிரசாதம்.]

   ஸாத என்பது மேலை யாரியமொழி யொன்றிலு மில்லாத வடநாட்டுச் சொல். சோறு என்னும் சொல்லே சோறு → -சோது → சாது → ஸாத என்று திரிந்திருக்கலாம். ஏனெனின், ப்ரஸாத என்னும் முன்னொட்டுப் பெற்ற சொல்லன்றி, ஸாத என்னும் தனிச்சொல் வடமொழி வழக்கிலில்லை. தமிழில் மட்டும் ‘சாதம்’ என்று சோறுகுறித்து வழங்கி வருகின்றது;   மாணிக்கவாசகர், சோறு என்னுஞ் சொல்லைப் “பாதகமே சோறு பற்றினவா தோணோக்கம்” என்னும் திருவாசக அடியில் (15 ; 7); பேரின்பப் பேறு அல்லது அறப்பயன்மிக்க திருவினை என்னும் பொருளில் ஆண்டிருப்பதுபோல், ‘சாதம்’ என்னும் சொல்லும் திருக்கோயில் அல்லது மதத்தொடர்பாகச் சிறப்புப் பொருளில் ஆளப்பட்டு வந்திருக்கின்றது; அக்காளிமண்டை பார்க்க ;see “akkali-mandai.”

அக்காளிமண்டை

 அக்காளிமண்டை akkāḷimaṇṭai, பெ. (n.)

   மொந்தையாகப் படைக்கப்படும் திருக்கோயில் திருச்சோறு;     [ஒருகா. அங்காளி → அக்காளி. மொத்தை → மொந்தை → மண்டை. இனி, மொண்டை (மொந்தை); → மண்டை, மண்டையளவான சோறு என்றுமாம்.]

முதற்காலத்தில் அக்காளிமண்டையென்று வழங்கிய முழுத் தூய தமிழ் வழக்கே, ஆரியப் பூசாரியர் தென்னாடு வந்தபின் அக்காளிப் பிரசாதம் என இருபிறப்பியாக (hybrid); மாற்றப்பட்டிருக்கலாம்.

அக்காள்

அக்காள் akkāḷ, பெ. (n.)

   1. மூத்த உடன் பிறந்தாள் (உ.வ.); ; elder sister.

   2. அரத்தவுறவுள்ள அக்கை முறையினள் ; elder cousin sister.

   3. மனக்கலப்பால் ஏற்பட்ட அக்கை முறையினள் ; a senior girl or woman who has become a cousin-sister through marriage alliance.

     “அக்காளைப் பழித்துத் தங்கை அலவை (அபசாரி); ஆனாள்” (பழ.);.

அக்கா பார்க்க ;see akka.

   சில முறைப்பெயர்களின் விளிவடிவங்கள், கொச்சை வழக்கில் எழுவாயாக வழங்கி வருகின்றன. அவற்றுட் பெரும்பாலன பாலீறும் பெற்றுள்ளன. இது இருமடி வழுவாம்;எ-டு :

எழுவாய் விளி பாலீறு பெற்ற

யெழுவாய் விளியெழுவாய்

அம்மை அம்மா அம்மாள்

அக்கை அக்கா அக்காள்

ஆத்தை ஆத்தா ஆத்தாள்

ஆய் ஆயா ஆயாள்

தங்கை தங்கா(ய்); தங்காள்

அப்பன் அப்பா அப்பார்

ஐயன் ஐயா ஐயார்

அண்ணன் அண்ணா அண்ணார்

   பாலீறு பெற்றும் பெறாதும் வரும் விளியெழுவாய்ப் பெயர்கள் பழமொழிகளிலும் தனிப்பாடல்களிலும் இடம்பெற்றிருப்பினும், வழுவமைதி பெறா வழுவேயாம்;

அக்கி

அக்கி akki, பெ. (n.)

   ஒருவகைப் பூச்சி (வின்.);; an insect.

 அக்கி1 akki, பெ. (n.)

   கற்றாழை (சித்.அக.);; aloe.

     [ஒருகா. அங்கனி (கற்றாழை); → அங்கி → அக்கி.]

 அக்கி akki, பெ. (n.)

   சூட்டினால் (உடலின் மிகு வெப்பத்தால்); சிறுசிறு கொப்புளப் படலமாகத் தோன்றும் தோல்நோய்; herpes.

ம. அக்கி, அக்கிக்கரப்பன்; தெ. அக்கி ; பிராகி. அக்கி.

     [உல் → உல → உலர், உலை. உல்→ உள் → ஒள் → ஒளி → ஒளிர் → ஒளிறு. உள்→ அள் → (அழு); → அழல். அழு → அகு → அகை. அகைதல் = எரிதல். “அகையெரி யானாது’ (கலித். 139 ; 26);. அகு → அக்கு → அக்கி = தீ. சூடு, சூட்டுக்கரப்பன்.]

அக்நி என்னும் வடசொல்லை மூலமாகக் கொள்வர் ஒரு சாரார். அதுவுந் தென் சொற் றிரிபே யென்பதை அவர் அறியார்.

உள் → உண் → உண. உணத்தல் = காய்தல். உண → உணங்கு. உணங்குதல் = காய்தல். உண் → உண்ணம் → Skt. {பspa}. உள் → அள் → (அழு); → அழல் → அழன் → அழனம் = தி (பிங்..);, வெம்மை (பிங்.);. அழன் → அழனி → (அகனி); → Skt. agni; L. ignis.

ழ → க. போலித்திரிபு. ஒ.நோ. மழ(வு); → மக(வு);, தொழு(தி); → தொகு(தி);, முழை → முகை, குழை → குகை.

தளதள → தழதழ → தகதக. தகதகவெனல் = மின்னுதல், ஒளிர்தல். தக → தகம் = எரிவு, சூடு. தகம் → தங்கம் = ஒளிரும் மாழை. தக → திக → திகழ் → திங்கள். தக → தகை = வெப்பம், நீர்வேட்கை. தகம் → தாகம் = நீர் வேட்கை. தக → – Skt. dah.

 அக்கி akki, பெ.(n.)

   1. தீ; fire.

     “அக்கி உமிழ்ந்தது வாயுக் கரத்திலே” (திருமந்.370.);

   2. கண், eye

     “நயனம் நேத்திரமே அக்கம். . . . அக்கி …. கண் ஆம்” (சூடா.296);

     [அஃகு→அக்கு→அக்கி]

அக்கிக்காய்ச்சல்

அக்கிக்காய்ச்சல் akkikkāyccal, பெ. (n.)

   1. உடம்பில் அக்கியை எழுப்பும் ஒருவகைக் காய்ச்சல் ; a fever accompanied by herpes, herpetic fever.

   2. உடம்பிற் சிறு குருக்களையெழுப்பும் ஒருவகைக் காய்ச்சல்; an eruptive fever, the eruption which characterises such fever, Exanthema.

   3. குழந்தைகளுக்கு அக்கியை யெழுப்பும் தணிமுறைக் காய்ச்சல் ; remittent fever in children followed by a rash, Exanthema subitum (சா.அக.);.

     [அக்கி + காய்ச்சல், காய் → காய்ச்சல் (தொ.ஆ.கு.);. ‘சல்’ தொ.பெ. ஈறு.]

அக்கிக்கொடி

 அக்கிக்கொடி akkikkoḍi, பெ. (n.)

   ஒருவகைக் கொடி ; a creeper, twin-leaved mountain ebony (சா.அக.);.

அக்கிசசூர்

 அக்கிசசூர் akkisasūr, பெ. (n.)

   கண்ணோய் வகையு ளொன்று; disease of the eye.

     [Skt. akshi+sa-sur → த. அக்கிசசூர்.]

அக்கிடம்

அக்கிடம் akkiḍam, பெ. (n.)

   1. வசம்பு ; sweet flag, Acorus calamus.

   2. கற்றாழை ; Indian aloe, Aloe vera (officinalis); (சா.அக.);.

அக்கினி

அக்கினி akkiṉi, பெ. (n.)

   நெருஞ்சில் (மலை.);; tribulus plant.

     [அ.கு = கூர்மை, அஃகு → அக்கு → அக்கில் → அக்கிலி → அக்கினி.]

 அக்கினி akkiṉi, பெ. (n.)

   1, தீ; fire.

   2. தீக்கடவுள் (பிங்.);; Agni, the god of fire, regent of the south east, one of asta-tikku-p-palakar. q.v.s.

   3. வேள்வித் தீ; sacrificial fire.

   4. உணவைச் செரிமானம் செய்யும் வயிற்றுத் தீ; digestive fire.

   5. முளரிப் (ரோசா); பூவுள்ள கொடிவகை; rosy-flowered lead wort.

   6. பகல் 15 முழுத்தத்துள் பதினொராவதும் இரவு 15 முழுத்தத்துள் ஏழாவதும் (விதான. குணா. 73, உரை);;   7. வெடியுப்பு (மூ.அ.);; saltpetre.

   8. ஒருவகை உப்பு; ammonium chloride.

   9. செடிவகை (மலை);; tribulus plant.

உள் → உண் → உண. உணத்தல் = காய்தல், உண → உணங்கு → உணங்குதல் = காய்தல். உண் → உண்ணம் → Skt. usna. உள் → அள் → (அழு); → அழல் → அழன் → அழனம் = தீ (பிங்.);, வெம்மை (பிங்.);. அழன் → அழனி → Skt. agni → த. அக்னி → L. ignis.

அக்கினிஇரசம்

 அக்கினிஇரசம் akkiṉiirasam, பெ. (n.)

   இதளியம், கந்தகம், கடுக்காய் முதலான சரக்குகளைப் பொடித்து கருவேலங்கருக்குக் கியாழத்தினாலரைத்து ஈளை நோயகல உட்கொள்ளுமொருவகை மாத்திரை (அநு.வை);; a kind of pill used in asthma which is containing mercury, sulphur and gall-nut as its chief ingredients (சா.அக.);.

     [Skt. agni+rasa.]

அக்கினிகட்டல்

அக்கினிகட்டல் aggiṉigaṭṭal, பெ. (n.)

   1. நெருப்பை மூலிகையாலாவது மந்திர ஆற்றலிலாவது சுட்டெரிக்கா திருக்கச் செய்தல்; stopping the power of fire by medicinal plants or by witch crafts.

   2. மூத்திரத்தைக் கட்டல்; suppression of urine (சா.அக.);.

த.வ. தீக்கட்டு.

     [அக்கினி + கட்டல்.]

     [Skt. agni → த. அக்கினி.]

அக்கினிகணம்

 அக்கினிகணம் aggiṉigaṇam, பெ. (n.)

   செய்யுண் முதற்சீராக அமைக்கத் தகாததும் நிரைநேர்நிரை என வருவதுமாகிய தீய செய்யுட்கணம்;த.வ. தீக்கணம்.

     [அக்கினி + கணம்.]

     [Skt. agni → த. அக்கினி.]

அக்கினிகண்டம்

அக்கினிகண்டம் aggiṉigaṇṭam, பெ. (n.)

   1. வயிற்றுத்தீ; abdominal or gastric fire.

   2. உடம்பினுள் பாலகம் (மூலாதாரம்);, அட்டக (சுவாதிட்டான); மென்னுமிரு அடிப்படைகளுக் கிடையேயிருக்குமொரு பகுதி; that portion of the pelvic region between the pelvic and hypogastric plexuses, representing the seat of fire.

   3. கொங்கணர் கடைக் காண்டத்தில் சொல்லியுள்ள நாற்பத்து முக்கோணச் சக்கரத்தினொரு பகுதி; that portion demonstrating the philosophical conceptions of fire in a diagram called

நாற்பது முக்கோணம்,

 consisting of 40 magic triangles, a mysterious diagram described in the secret science of ‘kadaikkandam’.

த.வ. அழற்கண்டம்.

     [அக்கினி + கண்டம்.]

     [Skt. agni → த. அக்கினி.]

அக்கினிகபம்

அக்கினிகபம் aggiṉigabam, பெ. (n.)

   1. கடல் நுரை; a decayed cuttle fish bone sepia octopedia, alias ossepiac.

   2. ஞாயிறு (சூரிய); காந்தம்; a glass which collects the rays of the sun into a focus, producing intense heat and it times producing even fire-burning glass (சா.அக.);.

     [Skt. agni + kabha → த. அக்கினிகபம்.]

அக்கினிகம்

அக்கினிகம் aggiṉigam, பெ. (n.)

   1. அக்கினிமுகம் பார்க்க;see akkini-mugam.

   2. ஒரு பாம்பு; a kind of serpent.

   3. இந்திர கோபப் பூச்சி; a scarlet insect lady fly-Mutella occidentalis (சா.அக.);.

த.வ. அழலிகம்.

     [Skt. agnigam → த. அக்கினிகம்.]

அக்கினிகம்பி

 அக்கினிகம்பி aggiṉigambi, பெ. (n.)

   ஒருவகை வெடியுப்பு; a kind of saltpetre.

     [அக்கினி + கம்பி.]

     [Skt. agni → தை. அக்கினி.]

அக்கினிகரப்பன்

அக்கினிகரப்பன் aggiṉigarappaṉ, பெ. (n.)

   1. நமைச்சலையும் எரிச்சலையுமுண்டாக்கும் அக்கியைப் போன்ற ஒரு வகைக் கரப்பான்; a skin disease of the type of herpes attended with itching and burning, Herpes desquamans alias Tinea inbricata.

   2. நமைச்சலையும், எரிச்சலையுமுண்டாக்கும் ஒரு வகைச் கரப்பான் நோய்; red spots consisting of small papulae and terminating in a browish itchy scab;a kind of eczema marked by itching and burning, Eczema papulosum (சா.அக.);.

த.வ. அழல்கரப்பான்.

     [அக்கினி + கரப்பன்.]

     [Skt. agni → த. அக்கினி.]

அக்கினிகரப்பான்

 அக்கினிகரப்பான் aggiṉigarappāṉ, பெ. (n.)

அக்கினிகரப்பன் பார்க்க;see akkini-karappan (சா.அக.);.

     [அக்கினி + கரப்பான்.]

     [Skt. agni → த. அக்கினி.]

அக்கினிகருப்பை

 அக்கினிகருப்பை aggiṉigaruppai, பெ. (n.)

   சாமைப் பயிர்; a kind of millet, Panicum (சா.அக.);.

த.வ, அழல்கருப்பை.

     [அக்கினி + கரு + பை.]

சாமைச் சோறு உடலில் வெப்பம் மிகுவிக்கும் எனும் அடிப்படையில் உண்டான பெயர்.

     [Skt. agni → த. அக்கினி.]

     [P]

அக்கினிகருமம்

அக்கினிகருமம் aggiṉigarumam, பெ. (n.)

   1. தீயினாற் சுடல்; actual cauterization (as an ulcer); by means of heated wire or rod thermocautery.

   2. மருந்தின் உதவியால் உடம்பிற்குச் சூடு எழுப்பும் ஆற்றல்; thermo genetic potency (சா.அக.);.

த.வ. தீச்சூடு.

     [அக்கினி + கருமம்.]

     [Skt. agni → த. அக்கினி.]

அக்கினிகர்ப்பம்

அக்கினிகர்ப்பம்1 aggiṉigarppam, பெ. (n.)

   1. தீப்பொறி; spark of fire.

   2. புதுமைக் குணங்களுடைய பளிங்குக்கல் வகை; a crystal with fabulous qualities (சா.அக.);.

     [Skt. agni + garbha → த. அக்கினிகர்ப்பம்.]

 அக்கினிகர்ப்பம்2 aggiṉigarppam, பெ. (n.)

   1. நெருப்பைத் தன்னிடமாகக் கொண்டது; pregnant with fire.

   ஞாயிறு (சூரிய); காந்தம்; a gem said to contain and give out sun’s heat, the sunstone.

   3. கடல்நுரை; a frothy substance engendered by the submarine fire.

   4. நீர்மேல் நெருப்பு; a fire plant, Ammania Vesicatoria (சா.அக.);.

     [Skt. agni + garbha → த. அக்கினிகர்ப்பம்.]

அக்கினிகலை

அக்கினிகலை1 aggiṉigalai, பெ. (n.)

   மூக்கின் வழியாக வரும் உயிர்ப்பு (வின்.);; breath coming from the nostrils, in sara-sattiram.

த.வ. அழல்உயிர்ப்பு.

     [அக்கினி + கலை.]

     [Skt. agni → த. அக்கினி.]

 அக்கினிகலை2 aggiṉigalai, பெ. (n.)

   1. உயிர்ப்பு மூச்சு; respiration.

   2. வல கலை; the vital air passing through the right nostril. It has for its quality heat.

   3. இடைகலை, வலகலை; currents of prana coming through the nostrils or more properly, the two channels called nadis for the currents of prana working respectively in the left half of the body, (the left sympathetic); and the right half of the body (the right sympathetic);.

   4. உயிர்ப்பின் பகுதி, உயிர்ப்பினை உள்வாங்கல் அல்லது வெளிவிடல்; a part of respiration referring either to inhalation or exhalation.

   5. நெருப்பு அல்லது வெப்பத்தைப் பற்றிக் கூறும் நூல்; the science heat, Thermology (சா.அக.);.

     [அக்கினி + கலை.]

     [Skt. agni → த. அக்கினி.]

அக்கினிகல்பம்

 அக்கினிகல்பம் aggiṉigalpam, பெ. (n.)

   நெருப்பு அல்லது வெப்பத்தன்மை வாய்ந்தது; that which has the nature of fire or heat as the case may be (சா.அக.);.

     [அக்கினி + கல்பம்.]

     [Skt. agni → த. அக்கினி.]

அக்கினிகாரியம்

அக்கினிகாரியம் akkiṉikāriyam, பெ. (n.)

   1. சமையல் முதலிய வீட்டு வேலை; cooking and other domestic work.

   2. சூடு போடல்;     [அக்கினி + காரியம்.]

     [Skt. agni → த. அக்கினி.]

அக்கினிகீடம்

அக்கினிகீடம் akkiṉiāṭam, பெ. (n.)

   1. கடித்தால் கடி வாயிலில் அரத்தங் கம்மி, இலுப்பைப் பூ பேரீச்சங்காய் முதலியன போல் கொப்புளங்களை எழுப்பி எரிச்சலை உண்டாக்கும் ஒருவகை நச்சுயிரினம்; a class of venomous creature causing swelling in the bitten part, which becomes livid ant gives raise to boils of varied sizes. It consists of 24 kinds.

   2. ஒருவகைப் உயிரினத்தின் நஞ்சு; the poison of a particular kind of creatures.

   3. அக்கினிபாதச் சிலந்தி பார்க்க;see akkini-pada-c-cilandi (சா.அக.);.

த.வ. அழலூட்டி.

     [அக்கினி + கீடம்.]

     [Skt. agni → த. அக்கினி.]

அக்கினிகுணப்பாடு

 அக்கினிகுணப்பாடு aggiṉiguṇappāṭu, பெ. (n.)

   நெருப்பு அல்லது வேறு வகை வெப்பத்தினாலுடம்பிலுள்ள நோயைக் குணப்படுத்தல்; treatment of diseases in the system by the application of heat, Thermotherapy (சா.அக.);.

த.வ. அழல்குணப்பாடு.

     [அக்கினி + குணப்பாடு.]

     [Skt. agni → த. அக்கினி.]

அக்கினிகுணம்

 அக்கினிகுணம் aggiṉiguṇam, பெ. (n.)

   உடம்பிலுள்ள சூட்டை எழுப்புங் குணம்; the quality of producing heat, Thermogenic property (சா.அக.);.

த.வ. அழற்குணம்.

     [அக்கினி + குணம்.]

     [Skt. agni → த. அக்கினி.]

அக்கினிகுமாரன்

அக்கினிகுமாரன்1 aggiṉigumāraṉ, பெ. (n.)

   முருகக் கடவுள்; kandan, as offspring of Agni.

த.வ. அழற்குமரன்.

     [அக்கினி + குமாரன்.]

     [Skt. agni → த. அக்கினி.]

த. குமரன் → Skt. ku-mara.

 அக்கினிகுமாரன்2 aggiṉigumāraṉ, பெ. (n.)

   உடம்பு குளிர்வடையுங் காலத்துச் சூடுண்டாகும்படிச் செய்யக் கொடுக்கும் ஒருவகை மாத்திரை; a kind of medicinal pill which produces a quickly diffused and transient increase of vital energy and heat in the bodily system, a diffusible or a general stimulant (சா.அக.);.

த.வ. அழற்குமரன்.

     [அக்கினி + குமாரன்.]

     [Skt. agni → த. அக்கினி.]

அக்கினிகுமாரம்

அக்கினிகுமாரம் aggiṉigumāram, பெ. (n.)

   ஒரு கூட்டுமருந்து (பதார்த்த. 1211);; a compound medicine.

த.வ. அழற்குமரம்.

     [அக்கினி + குமாரம்.]

     [Skt. agni → த. அக்கினி.]

அக்கினிகுமாரி

அக்கினிகுமாரி aggiṉigumāri, பெ. (n.)

   அகத்தியர் 1500இல் சொல்லியபடி பதினெண் குட்டம், பெருவயிறு, விப்புருதி முதலிய நோய்களுக்குக் கொடுக்கும் ஒரு வகைக் குளிகை; a medicinal pill used in curing the eighteen kinds of leprosy, abdominal dropsy (ascites);, abscess etc, as prescribed in Agastiyar’s work (1500); (சா.அக.);.

த.வ. அழற்குளிகை.

     [அக்கினி + குமாரி.]

     [Skt. agni → த. அக்கினி.]

அக்கினிகுலம்

 அக்கினிகுலம் aggiṉigulam, பெ. (n.)

   அரச குலத்தொன்று; agni race of kings, as descended from Agni, one of three irasakulam, q.v.

த.வ. கதிர்க்குடி, கதிரவக்குடி.

     [அக்கினி + குலம்.]

     [Skt. agni → த. அக்கினி.]

அக்கினிகெற்பம்

 அக்கினிகெற்பம் aggiṉigeṟpam, பெ. (n.)

அக்கினிக்கூர்மை பார்க்க;see alkkini-k-kurmai (சா.அக.);.

அக்கினிகை

 அக்கினிகை aggiṉigai, பெ. (n.)

அக்கினிக் கூர்மை பார்க்க;see akkini-k-kurmai (சா.அக.);.

அக்கினிகொழுந்து

 அக்கினிகொழுந்து aggiṉigoḻundu, பெ. (n.)

   தீ நாக்கு; the little flame of a fire (சா.அக.);.

     [அக்கினி + கொழுந்து.]

     [Skt. agni → த. அக்கினி.]

அக்கினிகோணம்

 அக்கினிகோணம் akkiṉiāṇam, பெ. (n.)

   தென் கீழ் மூலை; the SE. quarter, as under the guardianship of Agni.

த.வ. அழல்மூலை.

     [அக்கினி + கோணம்.]

     [Skt. agni → த. அக்கினி.]

த. கோண் → கோணம் (மூலை); → Skt. kona.]

அக்கினிகோதகம்

 அக்கினிகோதகம் aggiṉiātagam, பெ. (n.)

   பெண்கள் தீட்டுக்காலத்தில் நாளும் மேற்கொள்ளும் குளியல்; the daily bath during the menstrual period or period or uncleanliness (சா.அக.);.

அக்கினிகோத்திரம்

அக்கினிகோத்திரம் akkiṉiāttiram, பெ. (n.)

   பார்ப்பனர்க்கு மட்டுமுரிய தீவழிபாடு, நாடொறுங் காலையிற் செய்யும் தீவேள்வி (திருக்காளத். பு. 26, 6);; sacrifice to Agni and certain other dieties performed daily, morning and evening at a particular time.

     [Skt. agni + hotra → த. அக்கினிகோத்திரம்.]

அக்கினிகோத்திரி

 அக்கினிகோத்திரி akkiṉiāttiri, பெ. (n.)

   தீ வேள்வி செய்வோன்; one who habitually performs agni-hotra.

     [Skt. agni + hotrin → த. அக்கினி கோத்திரி.]

     [P}

அக்கினிகோபம்

 அக்கினிகோபம் akkiṉiāpam, பெ. (n.)

   பித்தம்; bile, one of the three humours in the body (சா.அக.);.

அக்கினிகோமுச்சிரவல்லி

 அக்கினிகோமுச்சிரவல்லி akkiṉiāmucciravalli, பெ. (n.)

   கொடிவேலி; a plant, white flowered leadwort, Plumbago Zeylanica (சா.அக.);.

அக்கினிக்கட்டு

அக்கினிக்கட்டு akkiṉikkaṭṭu, பெ. (n.)

   தீ அடக்கல்; art of suspending the action of fire by magic.

     “காடுகட் டக்கினிக்கட்டு காட்டித் தருவேன்” (குற்றா. குற. 116.1);,

     [அக்கினி + கட்டு.]

     [Skt. agni → த. அக்கினி.]

கள் → கடு → கட்டு.

அக்கினிக்கணம்

 அக்கினிக்கணம் akkiṉikkaṇam, பெ. (n.)

   தீப்பொறி; spark (சா.அக.);.

     [அக்கினி + கணம்.]

     [Skt. agni → த. அக்கினி.]

கள் → கண் → கணம் → Skt. gana.

அக்கினிக்கண்

 அக்கினிக்கண் akkiṉikkaṇ, பெ. (n.)

   அரத்தக் கண்; blood-shot eye (சா.அக,);.

த.வ. செங்கண்.

     [அக்கினி + கண்.]

     [Skt. agni → த. அக்கினி.]

கள் (கருமை); → கண்.

அக்கினிக்கண்ணன்

அக்கினிக்கண்ணன் akkiṉikkaṇṇaṉ, பெ. (n.)

   1. கொடியவன்; cruel man.

   2. நெருப்பைக் கண்ணாக வுடையவன், தீங்கு பயக்குங் கண்ணுடையவன் (இ.வ.);; man of evil eye Lit., a fire-eyed man.

     [அக்கினி + கண்ணன்.]

     [Skt. agni → த. அக்கினி.]

கள் → கண் → கண்ணன்.

அக்கினிக்கப்பம்

 அக்கினிக்கப்பம் akkiṉikkappam, பெ. (n.)

   கடல் நுரை (வை.மூ.);; cuttle-bone.

     [அக்கினி + கப்பம்.]

     [Skt. agni → த. அக்கினி.]

அக்கினிக்கப்பரை

 அக்கினிக்கப்பரை akkiṉikkapparai, பெ. (n.)

   கோயில் திருவிழா முதலியவற்றில் எடுக்கும் நெருப்புச்சட்டி (இ.வ.);; fire-pot as in temple procession.

த.வ. தீச்சட்டி.

     [அக்கினி + கப்பரை.]

     [Skt. agni → த. அக்கினி.]

கொப்பரை → கப்பரை.

     [P]

அக்கினிக்கரப்பான்

 அக்கினிக்கரப்பான் akkiṉikkarappāṉ, பெ. (n.)

   நோய்வகை (வின்.);; severe type of herpes.

     [அக்கினி + கரப்பான்.]

     [Skt. agni → த. அக்கினி.]

அக்கினிக்கல்

 அக்கினிக்கல் akkiṉikkal, பெ. (n.)

   சக்கிமுக்கிக்கல் (R);; flint, pyrites.

த.வ. அழற்கல்.

     [அக்கினி + கல்.]

     [Skt. agni → த. அக்கினி.]

குல் → கல்.

அக்கினிக்கள்ளி

 அக்கினிக்கள்ளி akkiṉikkaḷḷi, பெ. (n.)

   கொப்புளங்களை எழுப்பும் ஒரு வகைக் கள்ளி; a kind of spurge the juice of which on coming in contact with the body, causes blistens, Euphorbia (genus); (சா.அக.);.

     [Skt. agni → த. அக்கினி.]

கள் → கள்ளி.

அக்கினிக்காட்டம்

அக்கினிக்காட்டம் akkiṉikkāṭṭam, பெ. (n.)

   1. அகருக்கட்டை;see agaru-k-kattai.

   2. அகில் பார்க்க;see agil (சா.அக.);

     [Skt. agni+kastha → த. அக்கினிக்காட்டம்.]

த. கட்டை → Skt. kasta.

அக்கினிக்காரியம்

 அக்கினிக்காரியம் akkiṉikkāriyam, பெ. (n.)

   எரியோம்பல் முதலியன; religious rites performed in the consecrated fire.

     [அக்கினி + காரியம்.]

     [Skt. agni → த. அக்கினி.]

அக்கினிக்காற்று

 அக்கினிக்காற்று akkiṉikkāṟṟu, பெ. (n.)

   வெப்பக்காற்று; a fierce hot wind (சா.அக.);.

     [அக்கினி + காற்று.]

     [Skt. agni → த. அக்கினி.]

அக்கினிக்குண்டம்

 அக்கினிக்குண்டம் akkiṉikkuṇṭam, பெ. (n.)

   வேள்வி வளர்க்குங் குழி; enclosed pit for consecrated fire.

     [அக்கினி + குண்டம்.]

     [Skt. agni → த. அக்கினி.]

     [P]

அக்கினிக்குமரம்

 அக்கினிக்குமரம் akkiṉikkumaram, பெ. (n.)

   முன்பேற்ற உணவுசெரியாமை மற்றும் நீர்கோத்தல் முதலிய நோய்களுக்குக் கொடுக்கும் ஒரு வகைக் கூட்டு மருந்து; a medicinal compound used for curing indigestion, cold etc., stomachic stimulant (சா.அக.);.

     [அக்கினி + குமரம்.]

     [Skt. agni → த. அக்கினி.]

அக்கினிக்குமாரரசம்

 அக்கினிக்குமாரரசம் akkiṉikkumārarasam, பெ. (n.)

   இதளியம் (இரசம்); கந்தகம், முதலிய சரக்குகளைச் சேர்த்து, செரியாமை மற்றும் கழிச்சல் முதலான நோய்களுக்குக் கொடுக்கும் ஒரு மருந்து (அநு.வை.);; a medicinal preparation consisting of mercury, sulphur, pepper etc. as its chief ingredients, given for indigestion, diarrhoea, etc., stomachic tonic (சா.அக.);.

த. நெருப்பிளஞ்சாறு.

அக்கினிக்குளிகை

அக்கினிக்குளிகை aggiṉigguḷigai, பெ. (n.)

   சுரம், சன்னி முதலிய நோய்களுக்குத் தட்சிணாமூர்த்தி திருமந்திரம் 1500இல் சொல்லிய முறைப்படி செய்த ஒரு மாத்திரை; a pill prepared as per process laid down in the work of Dakshinamurthy Thirumandiram (1500);; prescribed for delirium, fever etc. (சா.அக.);.

த.வ. தீக்குளிகை.

     [அக்கினி + குளிகை.]

     [Skt. agni → த. அக்கினி.]

அக்கினிக்கூர்மை

அக்கினிக்கூர்மை akkiṉikārmai, பெ. (n.)

   1. கடல் நுரை; decayed cuttlefish bone, Os sepiac.

   2. சவட்டுப்பு; a kind of Salt extracted from the fuller’s earth or dhoby’s earth (சா.அக.);.

த.வ. சூட்டுக்கூர்ப்பு.

     [அக்கினி + கூர்மை.]

     [Skt. agni → த. அக்கினி.]

அக்கினிக்கூறு

அக்கினிக்கூறு akkiṉikāṟu, பெ. (n.)

   1. உடம்பிலுள்ள சூட்டின் தன்மை; the nature or effect of heat in the system.

   2. நெருப்பின் பாகம்; section of the fire.

   3. உடம்பில் சூடுண்டாகும் பகுதிகள்; different centres in the body producing heat, Thermogenic centres (சா.அக.);.

     [அக்கினி + கூறு.]

     [Skt. agni → த. அக்கினி.]

அக்கினிக்கேது

 அக்கினிக்கேது akkiṉikātu, பெ. (n.)

   புகை; smoke (சா.அக.);.

     [Skt. agnikedu → த. அக்கினிக்கேது.]

அக்கினிக்கொடி

 அக்கினிக்கொடி akkiṉikkoḍi, பெ. (n.)

   சிறுதேக்கு; fire creерег, Cleоdendron Serrata (சா.அக.);.

அக்கினிக்கோடைச்சோளம்

அக்கினிக்கோடைச்சோளம் akkiṉikāṭaiccōḷam, பெ. (n.)

   சோளவகை (விவசா. 3);; a kind of maize.

த.வ. செஞ்சோளம்.

     [அக்கினி + கோடைச்சோளம்.]

     [Skt. agni → த. அக்கினி.]

     [P]

அக்கினிசக்தி

அக்கினிசக்தி akkiṉisakti, பெ. (n.)

   1. செரிமான ஆற்றல்; the power of digestion.

   2. நெருப்பின் வல்லமை; the power of fire (சா.அக.);.

த.வ. அழலாற்றல், தீத்திறம்.

     [Skt. agni + sakti → த. அக்கினிசக்தி.]

அக்கினிசஞ்சீவிகுமாரன்

அக்கினிசஞ்சீவிகுமாரன் aggiṉisañsīvigumāraṉ, பெ. (n.)

   பதினெட்டு வகை இசிவு (சன்னி);க்கும் தேனில் அல்லது இஞ்சிச்சாற்றில் இழைத்துக் கொடுக்கும் போகர் முறைப்படிச் செய்த ஒரு மாத்திரை; a pill prepared according to the process of Bogar and macerated in honey or juice of ginger before use, is prescribed for 18 kinds of delirium and apoplexy (சா.அக.);.

த.வ. இசிவு குளிகை.

     [இசிவு குளிகைக்கு இடப்பட்ட வடமொழிப் பெயர்.]

அக்கினிசன்மன்

 அக்கினிசன்மன் akkiṉisaṉmaṉ, பெ. (n.)

   முருகக் கடவுள் (வின்.);; Kandan, as born of the god of fire.

த.வ. அனற்பிறவன்.

அக்கினிசமதீபனம்

அக்கினிசமதீபனம் akkiṉisamatīpaṉam, பெ. (n.)

   1. செரிமான ஆற்றலைத் தூண்டுதல்; simulation of digestion.

   2. செரிமான ஆற்றலை ஒழுங்குபடுத்துதல்; regulation of digestion.

   3. சமாக்கினி; moderate appetite (சா.அக.);.

த.வ. அழல்சமன்மை.

     [Skt. agni + samati-bhana → த. அக்கினி சமதீபனம்.]

அக்கினிசம்பவம்

அக்கினிசம்பவம் akkiṉisambavam, பெ. (n.)

   1. நெருப்பின் தோற்றம்; production from fire.

   2. காட்டுக் குங்குமப்பூ; safflower, Carthamus tinctorius.

   3. நெருப்பினால் ஏற்பட்ட நிகழ்ச்சி; that which happened from the action of fire or is resulting from fire (சா.அக.);.

த.வ. அழல்நிகழ்ச்சி.

     [Skt. agni + sam – bhava → த. அக்கினி சம்பவம்.]

அக்கினிசர்ப்பம்

 அக்கினிசர்ப்பம் akkiṉisarppam, பெ. (n.)

   கொள்ளிவாய்ப் பேய்; a metenor that appears in the night and flirts about over marshy grounds, The ignis – Fataus, is known by several names sch as “will o” the wisp, jack-o-lantorn, Fire-drake, Foolish-Fire, Corpse candle etc. (சா.அக.);.

     [Skt. agni + sarpa → த. அக்கினிசர்ப்பம்.]

அக்கினிசாட்சி

 அக்கினிசாட்சி akkiṉicāṭci, பெ. (n.)

   திருமணச் சடங்கில் தீ வளர்த்து அதனை முன்னிலைப்படுத்துதல்; in the presence of sacred fire.

த.வ. அழற்சான்று.

அக்கினிசாதகம்

 அக்கினிசாதகம் aggiṉicātagam, பெ. (n.)

செரியாமை; முன் உண்டது அறாமை,

 indigestion or want of digestion (சா.அக.);.

த.வ. செரியாநோய்.

அக்கினிசாரம்

அக்கினிசாரம் akkiṉicāram, பெ. (n.)

   1. கண் மருந்து; medicines for the eyes, Collyrium.

   2. கடல்நுரை; a frothy substance floating on the sea (சா.அக.);.

     [அக்கினி + சாரம்.]

     [Skt. agni → த. அக்கினி.]

அக்கினிசாலம்

அக்கினிசாலம் akkiṉicālam, பெ. (n.)

   1. கடல் நுரை; decayed cuttlefish bone, Os sepiae.

   2. நெருப்பைக் கொண்டு செய்யும் ஒரு தந்திரம் அல்லது கண்கட்டு வித்தை; a trick or magic performance with the agency of fire.

   3. ஒரு பூண்டு, அதாவது நீர்மேல் நெருப்பு; a plant, (unidentified); (சா.அக.);.

த.வ. மாயக்கலை.

     [P]

அக்கினிசிகம்

அக்கினிசிகம் aggiṉisigam, பெ. (n.)

   1. வெந்தோன்றி; fire flame, flame from flower.

   2. கார்த்திகைக் கிழங்கு; the root of November – flower plant, Gloriosa superba.

   3. மஞ்சள்; saffron, Crocus indicus.

   4. சீந்தில்; moon creeper, Menispermum cordifolium (சா.அக.);.

அக்கினிசிகை

அக்கினிசிகை aggiṉisigai, பெ. (n.)

   1. குங்குமப் பூ; a safflower plain, European saffron – Crocus sativus.

   2. கார்த்திகைக் கிழங்கு; methonia superba alias Gloriosa Superba (சா.அக.);.

     [Skt. agni-sika → த. அக்கினிசிகை.]

அக்கினிசித்தன்

அக்கினிசித்தன் akkiṉisittaṉ, பெ. (n.)

   தீ வழிக் குடி (S.I.l. ii., 528);; a Brahmin who regularly performs agni-hotra.

     [Skt. agni-cit → த. அக்கினிசித்தன்.]

அக்கினிசித்து

அக்கினிசித்து akkiṉisittu, பெ. (n.)

அக்கினி சித்தன் (S. i.i. ii, 519); பார்க்க;see akkinisittan.

     [Skt. agni-cit → த. அக்கினி சித்து.]

அக்கினிசிலாசம்

அக்கினிசிலாசம் akkiṉisilāsam, பெ. (n.)

   1. மலைமேல் விளையும் கொடிவேலி; leadwort growing on the top of hills or mountains.

   2. கருங்கொடி வேலி, நீலக் கொடி வேலி; a plant cape lead wort or blue-flowered, leadwort, Plumbago capensis (சா.அக.);.

அக்கினிசிலேட்டுமம்

 அக்கினிசிலேட்டுமம் akkiṉisilēṭṭumam, பெ. (n.)

   இருமல், கோழை, உடம்பெரிச்சல், கால் கை அழற்சி, நீர்வேட்கை, உண்டபின் பசி முதலிய குணங்களைக் காட்டும் ஒருவகைக் கோழைக்கட்டு நோய்; a phlegmatic disease characterised by cough;

 bronchial secretion, thirst, burning sensation of the limbs;

 hunger after food etc., a kind of consumption (சா.அக.);.

த.வ. அழற்கோழைநோய்.

     [Skt. agni + salesman → த. அக்கினிசிலேட்டுமம்.]

அக்கினிசிலை

 அக்கினிசிலை akkiṉisilai, பெ. (n.)

   நெருப்புக்கல்; flint used in older days to strike fire (சா.அக.);.

த.வ. தீத்தட்டிக்கல்.

     [Skt. agni + sila → த. அக்கினிசிலை.]

அக்கினிசிவாகம்

 அக்கினிசிவாகம் akkiṉisivākam, பெ. (n.)

அக்கினிசிலாசம் பார்க்க;see akkini-silasam (சா.அக.);.

அக்கினிசேகரம்

அக்கினிசேகரம் akkiṉicēkaram, பெ. (n.)

   1. மஞ்சள்; turmeric, Crocus indicus.

   2. குங்குமம்; a fragrant tree, Crocus sativus.

   3. குங்குமத்தூள்; a kind of red powder worn by Indian ladies on their for head.

   4. குசும்பா மரம்; a tree the seeds of which are used by dyers, Carthamus tinctorious (சா.அக.);.

த.வ, அழலம்

அக்கினிசேவகன்

அக்கினிசேவகன் aggiṉicēvagaṉ, பெ. (n.)

   1. கருநாபி; a black variety of poisonous plant, a contium ferox.

   2. கருநாபிக் கிழங்கு; the poisonous root of plant black aconite root (சா.அக.);.

த.வ. அழற்சேவை.

அக்கினிச்சட்டி

அக்கினிச்சட்டி akkiṉiccaṭṭi, பெ. (n.)

   1. கோயில் திருவிழாக்களில் எடுக்கும் நெருப்புச் சட்டி (இ.வ.);; fire-pot, as in temple procession, etc.

   2. சவத்தை எரியூட்டுதற் பொருட்டு எடுத்துச் செல்லும் நெருப்புச் சட்டி (இ.வ.);; fire-pot carried in front of the bier for cremating the corpse.

த.வ. தீச்சட்டி.

     [அக்கினி + சட்டி.]

     [Skt. agni → த. அக்கினி.]

அக்கினிச்சலம்

அக்கினிச்சலம் akkiṉiccalam, பெ. (n.)

   1. குப்பைமேனி; a plant a vermifuge, Acalypha indica.

   2. அக்கினிசிகம், 2 பார்க்க;see akkini-sigam.

   3. நெருப்பும் தண்ணீரும்; fire and water (சா.அக.);.

     [அக்கினி + சலம்.]

     [Skt. agni → த. அக்கினி.]

சலசல → சலம் → Skt. jala.

     [P}

அக்கினிச்சிலம்

அக்கினிச்சிலம்1 akkiṉiccilam, பெ. (n.)

   செங்காந்தள் (L);; red species of Malabar glory lily.

 அக்கினிச்சிலம்2 akkiṉiccilam, பெ. (n.)

அக்கினிசிகம் பார்க்க;see akkini-sigam (சா.அக.);.

அக்கினிச்சிவம்

 அக்கினிச்சிவம் akkiṉiccivam, பெ. (n.)

   குப்பைமேனி; a rubbish plant, Acalypha indica, is used as an antidote to poisonous bites.

     [Skt. agni+sikha → த. அக்கினிச்சிவம்.]

அக்கினிச்சுவத்தர்

அக்கினிச்சுவத்தர் akkiṉiccuvattar, பெ. (n.)

   தேவ மூதாதையஞள் ஒரு பிரிவினர்; manes of gods who, when living on earth, maintained the sacred domestic fires, but did not perform the agnistoma or other sacrifices.

     “அக்கினிச் சுவத்தரெனும் தேவர் பிதிர்க்களும்” (கூர்மபு. பிருகு. 13);.

     [Skt. agni – svatta → த. அக்கினிசுவத்தர்.]

அக்கினிச்சுவாசம்

அக்கினிச்சுவாசம் akkiṉiccuvācam, பெ. (n.)

   தீப்போற்சுடும் உயிர்ப்பு (தக்கயாகப். 476, உரை);; fiery breath.

த.வ. அழல்உயிர்ப்பு.

     [Skt. agni + svasa → த. அக்கினிச்சுவாசம்.]

அக்கினிச்சுவாலை

அக்கினிச்சுவாலை akkiṉiccuvālai, பெ. (n.)

   1. தீ நாக்கு; flame of fire.

   2. பெருந்தீ; large fire-conflagration.

   3. சிவன்; the god Sivan.

   4. சிரிஞ்சிப் பூ; a plant with red flowers used by dyers, Grislea tomentosaa (சா.அக.);.

த.வ. தீக்கொழுந்து.

     [Skt. agni + jvala → த. அக்கினிச்சுவாலை.]

அக்கினிச்சூனுவிரசம்

 அக்கினிச்சூனுவிரசம் akkiṉissūṉuvirasam, பெ. (n.)

   பலகறைப் பற்பம், சங்குபற்பம், கெந்தி, இதளியம் (இரசம்,); ஆகியவற்றை வேப்பம்பட்டைச் சாற்றிலரைத்து சுரம், குன்மம் முதலிய நோய்களுக்குக் கொடுக்கும் ஓர் ஆயுள்வேத மருந்து (அநு. வை.);; an ayurvedic medicinal compound consisting of sulphur, mercury and certain other calcined mineral powders impregnated with calcium oxides as ingredients, and given for consumption, fever, dyspepsia etc. (சா.அக.);.

த.வ. வேதிமருந்து.

அக்கினிச்சூரணம்

 அக்கினிச்சூரணம் akkiṉiccūraṇam, பெ. (n.)

   கொடிவேலியுடன் மற்ற சரக்குகளுஞ் சேர்ந்த ஒரு வகைச் சூரணம்; a medicinal compound in which the lead-wort forms in chief ingredient (சா.அக.);.

த.வ. கொடிவேலிப்பொடி.

     [Skt. agni + curna → த. அக்கினிச்சூரணம்.]

அக்கினிச்செடி

 அக்கினிச்செடி akkiṉicceḍi, பெ. (n.)

   செங்கொடி வேலி; a fire plant, rosy-flowered lead-wort, Plumbago rosea (சா.அக.);.

த.வ. கொடிவேலி.

     [அக்கினிச் + செடி.]

     [Skt. agni → த. அக்கினி.]

அக்கினிச்சேர்வை

அக்கினிச்சேர்வை akkiṉiccērvai, பெ. (n.)

   1. புண்ணாக்கக் கூடிய ஒரு சீலை மருந்து; a plaster used to raise blisters on the skin-vesicating or cantharides plaster.

   2. காரச் சீலை; blister plaster (சா.அக.);.

த.வ. காரச்சீலை.

     [அக்கினி + சேர்வை.]

     [Skt. agni → த. அக்கினி.]

அக்கினிட்டி

 அக்கினிட்டி akkiṉiṭṭi, பெ. (n.)

   நெருப்பிடுகலம் (பிங்.);; fire-pan, censer.

த.வ. அழற்சட்டி.

     [Skt. agnisthika → த. அக்கினிட்டி.]

அக்கினிட்டோமம்

அக்கினிட்டோமம் akkiṉiṭṭōmam, பெ. (n.)

   வேள்வி வகை; variety of Jyotistoma which is the main type of the soma sacrifice.

     “அக்கினிட் டோம மாற்றிய பயன்களை யடைவர்” (மச்சபு. தடாக. 26);.

     [Skt. agnistoma → த. அக்கினிட்டோமம்.]

அக்கினிதமம்

 அக்கினிதமம் akkiṉidamam, பெ. (n.)

   கண்டங்கத்திரி; a narcotic, plant, Jacquins nightshade – solanum jacquini (சா.அக.);.

     [Skt. agni + tamam → த. அக்கினிதமம்.]

     [P]

அக்கினிதம்

அக்கினிதம் akkiṉidam, பெ. (n.)

   1. செரியாமையைப் போக்கும், ஒரு மருந்து; a medicine which removes indigestion, Stomatic.

   2. உடம்பில் வெப்பத்தைக் கொடுக்கும் பொருள்; that which lends heat to the system (சா.அக.);.

அக்கினிதிசை

 அக்கினிதிசை akkiṉidisai, பெ. (n.)

   தென் கிழக்கு; the S.E. quarter, as under the guardianship of Agni.

த.வ, அழல்திசை.

     [அக்கினி + திசை.]

     [Skt. agni → த. அக்கினி.]

அக்கினிதிவ்வியம்

 அக்கினிதிவ்வியம் akkiṉidivviyam, பெ. (n.)

   தீத்திற ஆய்வு; ordeal by fire.

     [Skt. agni + divya → த. அக்கினிதிவ்வியம்.]

அக்கினிதீபதி

 அக்கினிதீபதி akkiṉidīpadi, பெ. (n.)

   அருந்தியது அறாமையானேற்படும் வயிற்றிரைச்சல்; rumbling noise in the stomach from indigestion (சா.அக.);.

அக்கினிதீபனம்

அக்கினிதீபனம் akkiṉitīpaṉam, பெ. (n.)

   1. செரிமான ஆற்றலை வளர்க்கும் மருந்து; a medicine that excites the action of digestion and strengthens the functional activity of the stomach, stomachic.

   2. செரிமான ஆற்றலைப் பெருக்குகை; increase of the power of digestion (சா.அக.);.

த.வ. செரிமானி.

     [Skt. agni + dibana → த. அக்கினிதீபனம்.]

அக்கினிதேவன்

 அக்கினிதேவன் akkiṉitēvaṉ, பெ. (n.)

   நெருப்பு (தீ);க் கடவுள்; Agni, the god of fire.

த.வ. அழலோன்.

     [அக்கினி + தேவன்.]

     [Skt. agni → த. அக்கினி.]

அக்கினிதோசம்

 அக்கினிதோசம் akkiṉitōcam, பெ. (n.)

   வளிக் கோளாறினால் உண்டாகும் நோய்; defects arising from gastric disorders (சா.அக.);.

த.வ. வளிநோய்.

     [Skt. agni + dosa → த. அக்கினிதோசம்.]

அக்கினித்தம்பனம்

அக்கினித்தம்பனம் akkiṉittambaṉam, பெ. (n.)

அக்கினித்தம்பம், 1 பார்க்க;see akkini-t-tambam 1 (சா.அக.);.

     [அக்கினி + தம்பனம்.]

     [Skt. agni → த. அக்கினி.]

அக்கினித்தம்பன்

 அக்கினித்தம்பன் akkiṉittambaṉ, பெ. (n.)

   சிவபெருமான் (வின்.);; Sivan, in the form of a column of fire.

த.வ. அழற்கம்பன்.

     [அக்கினி + தம்பன்.]

     [Skt. agni → த. அக்கினி.]

அக்கினித்தம்பம்

அக்கினித்தம்பம் akkiṉittambam, பெ. (n.)

   1. அக்கினிக்கட்டு நெருப்பு, முதலானவற்றைச் சுடாதிருக்கச் செய்யும் மாயக்கலை (வித்தை);; suspending the action of fire – a kind of magic.

   2. நெருப்புத் தூண்; pillar of fire.

   3. அறுபத்து நான்கு கலை மற்றும் அறிவியல்களிலொன்று; one of the 64 Indian arts and sciences (சா.அக.);.

த.வ. அழற்கம்பம்.

     [அக்கினி + தம்பம்.]

     [Skt. agni → த. அக்கினி.]

அக்கினித்தாழி

 அக்கினித்தாழி akkiṉittāḻi, பெ. (n.)

   வேள்வித் தீ வைக்கும் பானை (இ.வ.);; earthen pot which holds the sacred domestic fire.

த.வ. தீச்சட்டி.

     [அக்கினி + தாழி.]

     [Skt. agni → த. அக்கினி.]

அக்கினித்திட்டம்

 அக்கினித்திட்டம் akkiṉittiṭṭam, பெ. (n.)

அக்கினிவரை பார்க்க;see akkini-varai (சா.அக.);.

அக்கினித்திரயம்

 அக்கினித்திரயம் akkiṉittirayam, பெ. (n.)

   மூன்று வேள்வித் தீக்கள் (வின்.);; the three sacrificial fires.

த.வ. முத்தீ.

     [Skt. agni + traya → த. அக்கினித்திரயம்.]

அக்கினித்திராவகம்

அக்கினித்திராவகம்1 aggiṉittirāvagam, பெ. (n.)

   பட்ட இடம் அல்லது பொருள்களை எரித்துவிடும் தன்மையுள்ள நீர்மமாகிய எரிநீர்மம்; acids which corrode or burn the

 parts of which they are applied.

த.வ. எரிநீரம்.

     [Skt. agni + dravaka → த. அக்கினித்திராவகம்.]

 அக்கினித்திராவகம்2 aggiṉittirāvagam, பெ. (n.)

   செடிவகை (வை.மூ);; a plant.

த.வ. அழற்செடி.

     [Skt. agni + dravaka → த. அக்கினித்திராவகம்.]

அக்கினித்துண்டவடுகம்

 அக்கினித்துண்டவடுகம் aggiṉittuṇḍavaḍugam, பெ. (n.)

   செரிமானமின்மைக் (அக்கினி மாந்தத்திற்குக் கொடுக்கும் ஒரு வகை ஆயுள்வேத மாத்திரை (அநுவை);; a medicinal pill given in ayurveda for dyspepsia (சா.அக.);.

த.வ. அழல்வடகம்.

அக்கினிநட்சத்திரம்

அக்கினிநட்சத்திரம் akkiṉinaṭcattiram, பெ. (n.)

   1. ஒரு விண்மீன்; the third naksatra.

   2. மூன்றாம் கால் (பாதம்); முதல் உரோகிணி முதற் கால் (பாதம்); வரை சூரியன் நிற்கும் காலம்;த.வ. அழல்மீன்.

     [Skt. agni + naksatra → த. அக்கினி நட்சத்திரம்.]

அக்கினிநாள்

அக்கினிநாள் akkiṉināḷ, பெ. (n.)

அக்கினி நட்சத்திரம் (சோதிட. சிந். 55.); பார்க்க;see akkini-natsattiram.

த.வ. கோடைக்காலம்.

     [அக்கினி + நாள்.]

     [Skt. agni → த. அக்கினி.]

அக்கினிநீர்

அக்கினிநீர்1 akkiṉinīr, பெ. (n.)

   எரிநீர் (திராவகம்); வகை (பாண்டி.);; nitric acid.

த.வ. எரிநீரம்.

     [அக்கினி + நீர்.]

     [Skt. agni → த. அக்கினி.]

 அக்கினிநீர்2 akkiṉinīr, பெ. (n.)

   1. வளி(பாசக); நீர்; gastric fluid.

   2. சிறுநீர்; urine (சா.அக.);.

     [அக்கினி + நீர்.]

     [Skt. agni → த. அக்கினி.]

அக்கினிபகவான்

அக்கினிபகவான் aggiṉibagavāṉ, பெ. (n.)

   தீக்கடவுள் (தக்கயாகப்.103, உரை);; agni, the god of fire.

த.வ. அழற்கடவுள், தீக்கடவுள்.

     [அக்கினி + பகவான்.]

     [Skt. agni → த. அக்கினி.]

த. பகவன் → Skt. bhaga-van.

அக்கினிபஞ்சகம்

அக்கினிபஞ்சகம் aggiṉibañjagam, பெ. (n.)

   பஞ்சகத் தொன்று (சோதிட. சிந். 213);;த.வ. அழல்ஐந்தகம்

     [Skt. agni + panjaka → த. அக்கினிப்பஞ்சகம்.]

அக்கினிபம்

 அக்கினிபம் akkiṉibam, பெ. (n.)

   நெருப்பைப் போல் ஒளிர்வது, பொன்; gold (சா.அக.);.

     [Skt. agnibha → த. அக்கினிபம்.]

அக்கினிபயம்

 அக்கினிபயம் akkiṉibayam, பெ. (n.)

   நெருப்பைக் காணநேர்ந்தவிடத்துண்டாம் அச்சம்; morbid dread of fire or heat, Therторhobia (சா.அக.);.

த.வ. அழலச்சம்.

அக்கினிபரீட்சை

அக்கினிபரீட்சை akkiṉibarīṭcai, பெ. (n.)

   தீயைக் கொண்டு மேற்கொள்ளும் ஆய்வு (சங்.அக.);; ordeal by fire, an acid test.

   2. கடினமான பணியை மேற்கொள்ள முற்படுகை; to take risk job.

த.வ. அழல்தேர்வு.

     [Skt. agni + pariksa → த. அக்கினிபரீட்சை.]

அக்கினிபல்லி

 அக்கினிபல்லி akkiṉiballi, பெ. (n.)

   இருளில் ஒளிரும் ஒரு கொடி; fire-brand creeper a creeper shining in dark, Cardiospermum halicacabum (சா.அக.);.

த.வ. ஒளிர்கொடி.

     [Skt. agni + palli → த. அக்கினிபல்லி.]

அக்கினிபாதச்சிலந்தி

 அக்கினிபாதச்சிலந்தி akkiṉipātaccilandi, பெ. (n.)

   நச்சுத்தன்மையுள்ள ஒருவகைச் சிலந்திப் பூச்சி; a kind of spider possessing in its leg a powerful poisonous principles which causes blisters, when coming in contact with the body, a kind of blistering spider (சா.அக.);.

     [P]

த.வ. அழற்சிலந்தி.

அக்கினிபித்தசுரம்

அக்கினிபித்தசுரம் akkiṉibittasuram, பெ. (n.)

   ஆறு நாள் முதல் பத்துநாள் வரை உணவுகொள் வேட்கையின்மை, வாய்குமட்டல், வாய்க்கசப்பு, எரிச்சல், கைகாலுளைவு முதலிய குணங்களைக் காட்டும், ஒருவகை பித்தக் காய்ச்சல்; a fever characterised by loss of appetite with thirst for a duration of 6 to 10 days, nausea, bitterness of taste, burning sensation, pain in the limbs etc., a kind of gastro-billious fever (சா.அக.);.

த.வ. அழற்காய்ச்சல்.

     [அக்கினி + பித்தம் + சுரம்.]

     [Skt. agni → த. அக்கினி.]

அக்கினிபிரவேசம்

அக்கினிபிரவேசம்1 akkiṉibiravēcam, பெ. (n.)

   ஒருவன் தன் தூய்மை, நேர்மை முதலியவற்றை, வெளிப்படுத்த மேற் கொள்ளும் கடும் நடவடிக்கை அல்லது செய்கை; a trial or an ordeal to which one subjects oneself to prove one’s innocence.

த.வ. அழவேறல்.

     [Skt. agni + pravesa → த. அக்கினிபிரவேசம்.]

அக்கினிபீசம்

அக்கினிபீசம் akkiṉipīcam, பெ. (n.)

   1. பொன்; gold.

   2. காட்டுச் சீரகம்; a seed (digestive); wild Cumin, Veronia anthelmintica (சா.அக.);.

த.வ. அழல்வித்து.

அக்கினிபுமான்

 அக்கினிபுமான் akkiṉibumāṉ, பெ. (n.)

   ஊரகப் பெண்தெய்வத்தின் முன்பு, தீச்சட்டியோடு ஆடுதற்காக விடப்பட்ட இறையிலிநிலம் (R.T.);; inam granted for the service of dancing with a fire-pot before the village goddess.

த.வ. அழல் இறையிலி.

     [Skt. agni + puman → த. அக்கினிபுமான்.]

அக்கினிபுராணம்

 அக்கினிபுராணம் akkiṉiburāṇam, பெ. (n.)

   பதினெண்தொன்ம(புராண);த் தொன்று; a chief puranam.

     [Skt. agni + purana → த. அக்கினிபுராணம்.]

அக்கினிபூ

அக்கினிபூ akkiṉipū, பெ. (n.)

   முருகக் கடவுள் (மச்சபு. குமார. 115);; Kandan, as born of fire.

த.வ. அழல்தோன்றல்.

     [அக்கினி + பூ.]

     [Skt. agni → த. அக்கினி.]

அக்கினிப்பாகு

 அக்கினிப்பாகு akkiṉippāku, பெ. (n.)

அக்கினிக்கேது பார்க்க;see akkini-k-kédu (சா.அக.);.

அக்கினிப்பிரளயம்

 அக்கினிப்பிரளயம் akkiṉippiraḷayam, பெ. (n.)

   தீயினாலுண்டாம் உலகழிவு (வின்.);; destruction of the world by fire.

த.வ. அழல்அழிவு.

     [Skt. agni + pra-laya → த. அக்கினிப்பிரளயம்.]

அக்கினிப்பிரவேசம்

அக்கினிப்பிரவேசம் akkiṉippiravēcam, பெ. (n.)

   1. தீப்புகுதல்; entering fire, as an ordeal.

   2. உடன்கட்டை யேறுகை (R.);,

 sati, suttee.

த.வ. தீப்பாய்வு.

     [Skt. agni + pra-vesa → த. அக்கினிப்பிரவேசம்.]

அக்கினிப்பிராமணன்

 அக்கினிப்பிராமணன் akkiṉippirāmaṇaṉ, பெ. (n.)

   சவத்தை எரியூட்டு சடங்கு நடத்துவிக்கும் பார்ப்பான் (Cm);; Brahmin who conducts the funeral rites when a dead body is cremated.

த.வ. ஈமப்பார்ப்பான்.

     [Skt. agni + brahmana → த. அக்கினிப் பிரமாணன்.]

அக்கினிப்பிரீதிசெய்தல்

அக்கினிப்பிரீதிசெய்தல் akkiṉippirītiseytal, பெ. (n.)

   1. புடமிடல்; calcinations.

   2. நெருப்புக்கு இரையாதல்; giving anything an as offering to fire, as for example, the burning of the dead (சா.அக.);.

த.வ. அழலூட்டல்.

     [அக்கினிபிரீதி + செய்தல்.]

     [Skt. agni + priti → த. அக்கினிபிரீதி.]

அக்கினிப்பிலவு

 அக்கினிப்பிலவு akkiṉippilavu, பெ. (n.)

   காட்டுப் பலா, பேய்ப் பலா; a tree-jungle jack, wild jack, Atro hirsuta (சா.அக.);.

த.வ. அழல்பலா.

     [Skt. agni → த. அக்கினி.]

அக்கினிப்பிளப்பு

 அக்கினிப்பிளப்பு akkiṉippiḷappu, பெ. (n.)

   எரிமலை (வின்.);; volcano.

     [அக்கினி + பிளப்பு.]

     [Skt. agni → அக்கினி.]

அக்கினிப்பிளாசுத்திரி

 அக்கினிப்பிளாசுத்திரி akkiṉippiḷācuttiri, பெ. (n.)

அக்கினிச்சேர்வை பார்க்க;see akkini-c-cervai (சா.அக.);.

     [Skt. agni + E. Plaster → த. அக்கினி பிளாகத்திரி.]

அக்கினிப்பிழம்பு

அக்கினிப்பிழம்பு akkiṉippiḻmbu, பெ. (n.)

அக்கினிச்சுவாலை, 1 பார்க்க;see akkini-c-cuvalai (சா.அக.);.

த.வ. அழற்பிழம்பு, தீக்கொழுந்து.

     [அக்கினி + பிழம்பு.]

     [Skt. agni → த. அக்கினி.]

அக்கினிப்புடைப்பு

 அக்கினிப்புடைப்பு akkiṉippuḍaippu, பெ. (n.)

   நெருப்புக் கொப்புளம்; a collection of watery fluid benath the superficial layer of the skin-blister (சா.அக);.

த.வ. அழற்கொப்புளம்.

     [அக்கினி + புடைப்பு.]

     [Skt. agni → அக்கினி.]

அக்கினிப்பொறி

 அக்கினிப்பொறி akkiṉippoṟi, பெ. (n.)

   துமுக்கி (துப்பாக்கி);; gun.

     [அக்கினி + பொறி.]

     [Skt. agni → அக்கினி.]

     [P]

அக்கினிப்போக்கு

அக்கினிப்போக்கு akkiṉippōkku, பெ. (n.)

   1. உடம்பினுள் வெப்பம் பரவியிருக்கும் நிலைமை; the distribution of heat in the system.

   2. உடம்பிலுள்ள வெப்பம், வயிற்றோட்டம் (பேதி);,

   சிறுநீர் முதலியவற்றால் கழிதல் அல்லது உடம்பை விட்டகலல்; the dissipation of bodily heat by means of radiation, discharge of excretions etc., Thermolysis (சா.அக.);.

த.வ. அழற்போக்கு.

     [அக்கினி + போக்கு.]

     [Skt. agni → த. அக்கினி.]

அக்கினிமச்சம்

 அக்கினிமச்சம் akkiṉimaccam, பெ. (n.)

   இறால்; fire-fish; prawn so called because it contains phosphorous, Astacus (சா.அக.);.

     [P]

அக்கினிமணி

 அக்கினிமணி akkiṉimaṇi, பெ. (n.)

   ஞாயிறு (சூரிய); காந்தக் கல்; a kind of flint said to emit fire when exposed to the sun, burning glass, sun-stone (சா.அக.);.

த.வ. அழற்கல்.

     [அக்கினி + மணி.]

     [Skt. agni → த. அக்கினி.]

அக்கினிமண்டலம்

அக்கினிமண்டலம்1 akkiṉimaṇṭalam, பெ. (n.)

   1. ஏழுமண்டலங்களுள் தீக்குரிய இடம் (சது.);; the region of fire, one of sapta-mandalam.

   2. அடி வயிறு (வை.மூ.);; lower abdomen.

த.வ. அழல்மண்டலம்.

     [அக்கினி + மண்டலம்.]

     [Skt. agni → த. அக்கினி.]

 அக்கினிமண்டலம்2 akkiṉimaṇṭalam, பெ. (n.)

   ஓர் ஒகவிடம் (ஜீவோற்பத். 30);; fire centre situate between Water and earth in the region of muladaram of great in significance in yoga practice

த.வ. அழல்மண்டலம்.

அக்கினிமதனம்

 அக்கினிமதனம் akkiṉimadaṉam, பெ. (n.)

   காமத்தீ; the fire of sexual love;

 heat of passion (சா.அக.);.

த.வ. அழலெ.

அக்கினிமந்தசுரம்

அக்கினிமந்தசுரம் akkiṉimandasuram, பெ. (n.)

   ஏழு அல்லது பத்து நாள் வரை பசி, நீர் மற்றும் உணவுகொள் வேட்கையின்மை, வலிமைக்குறைவு, எரிச்சல், கழிமாசுக்கட்டு, தலைவலி, வாய்குமட்டல், ஏப்பம், வாந்தி, விக்கல், கை, கால் வலி முதலிய குணங்களைக் காட்டும் ஒருவகை காய்ச்சல்; a fever marked by absence of hunger and thirst for duration of 7 to 10 days. weakness, burning Sensation, constipation, headache, tastelessness, belching, vomiting, hiccough, pain in the limbs etc.,

 sometimes it brings about several complications such as, typhoid, diarrhoea etc. in the later stages as an after effect (சா.அக.);.

த.வ. அழற்காய்ச்சல்.

     [அக்கினி + மந்தசுரம்.]

     [Skt. agni → த. அக்கினி.]

அக்கினிமந்தமூலயோகம்

 அக்கினிமந்தமூலயோகம் akkiṉimandamūlayōkam, பெ. (n.)

   கோழை (சீத); பித்தத்திற்குக் கொடுக்குமோர் ஆயுள்வேத மருந்து (அநு.வை.);; a medicinal compound in ayurveda given for diseases of the digestive organs (சா.அக.);.

த.வ. அழல்தணிப்பான்.

அக்கினிமந்தம்

அக்கினிமந்தம் akkiṉimandam, பெ. (n.)

   1. உடல் வெப்பம் மிகுந்து வயிறு பொருமிக் கொண்டிருக்க, மேலும் உண்பதாலும், மிகுதியாய்க் கொதிக்கும் நீரை உட்கொள்வதாலும் உண்டாகும் செரியாமை நோய்; impaired or imperfect digestion arising from excessive heat in the system or from some errors in the diet, or by drinking water excessively – not-indigestion. It is also said to be due to catarrh of the mucous coat of the stomach and to the presence of abnormal ferments arising from gastric disorders, Dyspepsia,

   2. முன்னை அல்லது பசு முன்னை; spinous fire-brand teak or Indian headache tree, Premna integrifolia.

   3. உடம்பின் தீயளவு குறைவு; gastric insufficiency.

   4. பசிவேட்கையின்மை; loss of appetite, Anorexia (சா.அக.);.

த.வ. செரியாநோய்.

     [அக்கினி + மந்தம்.]

     [Skt. agni → த. அக்கினி.]

அக்கினிமந்தவாயு

 அக்கினிமந்தவாயு akkiṉimandavāyu, பெ. (n.)

   செரியாமையினால் வயிற்றிலும், குடலிலும் வளி தங்குவதனாலேற்படும் ஓர் ஊதை நோய்; a condition marked by the presence of gases in the alimentary canal. it arises mainly from the fermontation of the contents of the stomach and the intestines, Flatulent Dyspepsia (சா.அக.);.

த.வ. அழல்ஊதை.

     [அக்கினி + மந்தம் + வாயு.]

     [Skt. agni → த. அக்கினி.]

அக்கினிமாடன்

அக்கினிமாடன்1 akkiṉimāṭaṉ, பெ. (n.)

   நெருப்பினிடத்தில் விருப்பத்தை உண்டாக்கும் ஓர் இசிவு நோய்; devilish nature creating a morbid desire or mania for fire. (in females);, a kind of hysteria (சா.அக.);.

த.வ. அழலிசிவு.

     [அக்கினி + மாடன்.]

     [Skt. agni → த. அக்கினி.]

 அக்கினிமாடன்2 akkiṉimāṭaṉ, பெ. (n.)

   ஊரகச் சிறு தெய்வம். (மதி. களஞ்/ ii, 9);; a village deity.

த.வ. அழல்மாடன்.

     [அக்கினி + மாடன்.]

     [Skt. agni → த. அக்கினி.]

அக்கினிமாதா

 அக்கினிமாதா akkiṉimātā, பெ. (n.)

   கொடிவேலி; a plant white-flowered leadwort, Plumbago zeylanica (சா.அக.);.

த.வ. அழல்தாய்.

அக்கினிமாந்தம்

அக்கினிமாந்தம் akkiṉimāndam, பெ. (n.)

   செரியாமை நோய் (வின்.);; indigestion.

     “அக்கினி மாந்தம் கைகால் யெரிவுழலை” (தைலவ. தைல.58.);.

த.வ. அழல்மாந்தம்.

     [அக்கினி + மாந்தம்.]

     [Skt. agni → த. அக்கினி.]

அக்கினிமாந்தியம்

 அக்கினிமாந்தியம் akkiṉimāndiyam, பெ. (n.)

   வயிறு கோளாறடைவதினால் நீருஞ் சோறுங் கொள்ள வல்லமையற்று மாந்தம் ஏற்பட்டு அதனால் புளியேப்பம், வயிற்றுப்புசம், கழிமாசு வெளியேறாதிருத்தல் முதலிய தீக்குணங்களை யுண்டாக்கித் துன்புறுத்தும் ஒரு வகைச் செரியாமை நோய்; a derangement of the stomach, resulting in the disorder of its functions as tympanites, sour belching, constipation etc, due to insufficient quantity or impaired quality of the gastric juice or to the deficient action of the gastric muscles, Afonic dyspepsia (சா.அக.);.

த.வ. அழல்மாந்தம்.

     [அக்கினி + மாந்தம்.]

     [Skt. agni → த. அக்கினி.]

     [மந்தம் → மாந்தம் → மாந்தியம்.]

அக்கினிமானி

 அக்கினிமானி akkiṉimāṉi, பெ. (n.)

   வெப்பத்தின் ஏற்ற இறக்க வேறுபாடுகளை அளந்தறியுங் கருவி; an instrument for recording heat variation, thermograph;

த.வ. அழல்மானி.

     [அக்கினி + மானி.]

     [Skt. agni → அக்கினி.]

அக்கினிமுகச்சிலந்தி

 அக்கினிமுகச்சிலந்தி aggiṉimugaccilandi, பெ. (n.)

   அக்கினி பாதச் சிலந்தியைப் போன்ற ஒரு வகைச் சிலந்தி; a kind of blistering spider of the species of akkini-c-cilandi;

 the only difference is that his insect contains the poisonous principle in its face instead of in the legs, mandibles are furnished with a curved claw perforated at the extremily, like a poison fang, a gland furnishes a certain colourless poisonous fluid which is injected into the object

 wounded by the claw, a species of spider (சா.அக.);.

த.வ. அழல்முகச்சிலந்தி.

     [அக்கினி + முகம் + சிலந்தி.]

     [Skt. agni → த. அக்கினி.]

அக்கினிமுகம்

அக்கினிமுகம் aggiṉimugam, பெ. (n.)

   1. சேங்கோட்டை; the nut of the fire-face tree causing blisters on the skin; marking nut-semicarpus anacardium.

   2. சித்திரமூலம்; a plant, the bark of which invariable acts as a vesicatory;leadwort-plumbgao zeylanica.

   3. கார்த்திகைக் கிழங்கு; the root of a plant, which also possesses similar blistering properties, Gloriosa superba (சா.அக.);.

த.வ. அழல்முகம்.

     [அக்கினி + முகம்.]

     [Skt. agni → த. அக்கினி.]

அக்கினிமுகலவணம்

 அக்கினிமுகலவணம் aggiṉimugalavaṇam, பெ. (n.)

   சித்திரமூலம், சிவதைவேர், இந்துப்பு முதலானவற்றைப் புடமிட்டுச் செரிமான ஆற்றலுக்குக் கொடுக்கும் ஒரு மருந்து (அநு.வை.);; a compound of salt extracted from blister root and burbith root, and used for promoting digestion (சா.அக.);.

த.வ. அழல்முகவுப்பு.

     [அக்கினி + முகம் + லவணம்.]

     [Skt. agni → த. அக்கினி. Skt. lavana → த. லவணம்.]

அக்கினிமுகி

 அக்கினிமுகி aggiṉimugi, பெ. (n.)

   சேங்கொட்டை; marking nut (சா.அக.);.

த.வ. அழல்முகத்தி.

அக்கினிமூலம்

அக்கினிமூலம் akkiṉimūlam, பெ. (n.)

   1. அக்கினிமுகம், 1 பார்க்க;see akkini-mugam.

   2. பெருங்குடலின் கீழ்ப் பகுதியில் தங்கியிரா னின்ற சூடு அல்லது வெப்பம் அதாவது வயிற்றுத்தீ (மூலாக்கினி);;   3. பரியன் (அபான); வளியின்னிமித்தமாய், உடம்பின் சூட்டை உட்கொண்டிருக்கும்பாலகம் (மூலாதாரம்);; heat through the action of apana (one of the 10 vital airs in the system); (சா.அக.);.

த.வ. அழல்மூலம்.

     [அக்கினி + மூலம்.]

     [Skt. agni → த. அக்கினி.]

அக்கினிமூலவாயு

 அக்கினிமூலவாயு akkiṉimūlavāyu, பெ. (n.)

   ஒலிப்புடன் கழிந்து, கிறுகிறுத்த வயிறு வலித்துளையும் போது மலத்தில் அரத்தம் கலந்து விழுந்து, வலங் குன்றி, முகம் வேறுபட வெளுத்துக் காணும் ஒர் ஊதை நோய்; a disease characterised by frequent evacuation of stools mixed with blood, causing colic pains, giddiness, progressive failure of strength etc. It is marked by pinched feature and anaemia, Dysenteric diarrhoea (சா.அக.);.

த.வ. அழல்மூலஊதை.

     [அக்கினி + மூலவாயு.]

     [Skt. agni → த. அக்கினி;

 Skt. vayu → த. வாயு.]

அக்கினிமூலி

அக்கினிமூலி akkiṉimūli, பெ. (n.)

   1 கற்றாழை; a plant fommon Indian aloe Aloe typica.

   2. அக்கினி, 1 பார்க்க;see akkini (சா.அக.);.

த.வ. அழல்மூலி.

     [அக்கினி + மூலி.]

     [Skt. agni → த. அக்கினி.]

     [P]

அக்கினிமூலை

அக்கினிமூலை akkiṉimūlai, பெ. (n.)

   தென்கீழ்த் திசை; the SE quarter, as under the guardianship of Agni.

     “அக்கினி மூலை திங்கள்” (மச்சபு. சாந்தி. 8.);.

த.வ. அழல்மூலை.

     [அக்கினி + மூலை.]

     [Skt. agni → த. அக்கினி.]

அக்கினியன்

அக்கினியன் akkiṉiyaṉ, பெ. (n.)

   செவ்வாய்; mars.

     “பவுமனக் கினியன்” (சாதகசிந். 6.);.

த.வ. அழலன்.

     [Skt. agniya → த. அக்கினியன்.]

அக்கினியாசம்

அக்கினியாசம் akkiṉiyācam, பெ. (n.)

   1. பித்தப் பை; the pear shaped reservoir for the bile on the under surface of the liver, gal bladder.

   2. செரிமான நீருக்கு உறைவிடம்; the seat of gastric juice i.e., stomach.

   3. சிறுநீர்ப் பை; the membraneous sac which serves as a reservoir for the urine bladder (சா.அக.);.

அக்கினியாசயம்

அக்கினியாசயம் akkiṉiyācayam, பெ. (n.)

   1. சற்றொப்ப 12 விரற்கடை நீளமிருக்கும் இரைக்குடலோடு சேர்ந்திருக்கும் சிறிய குடலின் முதற்பகுதி; the first part of the small intestines beginning at the pylorous, it is about 12 finger’s breadth long-Duodenum.

   2. உடம்பின் உறைவிடமான பித்தப்பை (பித்தாசயம்);; the per-shaped membrancous sac in the right lobe of the liver, constituting the reservoir for the bile Galls (bladder);, thermogenic centre in the system (சா.அக.);.

அக்கினியாடன்

 அக்கினியாடன் akkiṉiyāṭaṉ, பெ. (n.)

   எட்டி மரம்; strychnine tree, Strychnos nuxvomica (சா.அக.);.

த.வ. அழலாடன்.

     [P]

அக்கினியாதானம்

 அக்கினியாதானம் akkiṉiyātāṉam, பெ. (n.)

அங்கியாதானம் பார்க்க;see angi-y-adanam.

     [அக்கினி + ஆதனம்.]

     [Skt. agni + a – dhana → த. அக்கினியாதனாம்.]

அக்கினியாத்திரம்

 அக்கினியாத்திரம் akkiṉiyāttiram, பெ. (n.)

   தீயைக்கக்கிக் கொண்டு செல்லும் அம்பு (வின்.);; arrow emitting fire.

த.வ. அழலம்பு.

     [அக்கினி + அத்திரம்.]

     [Skt. agni + astra → த. அக்கினியாத்திரம்.]

அக்கினியாராதனைக்காரன்

 அக்கினியாராதனைக்காரன் akkiṉiyārātaṉaikkāraṉ, பெ. (n.)

   தீக்கடவுளை வணங்கும் பாரசீகன் (பாண்டி.);; parsee, as workshipping fire.

த.வ. அழல்போற்றியன்.

     [அக்கினி + ஆராதனை + காரன்.]

     [Skt. agni + a-radhana → த. அக்கினியாராதனை.]

அக்கினியாளுமுறை

 அக்கினியாளுமுறை akkiṉiyāḷumuṟai, பெ. (n.)

   உடம்பினிலுள்ள சூட்டைக் கட்டுப்படுத்தி ஒழுங்குபடுத்தல்; regulating or controlling the bodily temperature, Thermotactic (சா.அக.);.

த.வ. அழலாளுமுறை.

     [அக்கினி + ஆளும் + முறை.]

     [Skt. agni → அக்கினி.]

அக்கினியாள்வோன்

 அக்கினியாள்வோன் akkiṉiyāḷvōṉ, பெ. (n.)

   உடல் வெப்பத்தை ஒரொழுங்கிற்குட் படுத்துவதற்கென மூளையிலமைந்த ஒரு பொருள்; an eminence of gray substance in the brain for controlling the bodily heat, Tuber cinereum (சா.அக.);.

த.வ. அழல்ஆள்வோன்.

     [அக்கினி + ஆள்வோன்.]

     [Skt. agni → த. அக்கினி.]

அக்கினியிணக்கம்

 அக்கினியிணக்கம் akkiṉiyiṇakkam, பெ. (n.)

   உடம்பினில் தோன்றும் தீயளவு, சம நிலையடைதல்; the normal adjustment of the bodily temperature, Thermotaxis (சா.அக.);.

த.வ. அழலிணக்கம்.

     [அக்கினி + இணக்கம்.]

     [Skt. agni → த. அக்கினி.]

அக்கினியுபாதை

 அக்கினியுபாதை akkiṉiyupātai, பெ. (n.)

   தீயால் நேருங்கேடு (இ.வ.);; injury or damage by fire (சா.அக.);.

த.வ. அழற்கேடு.

     [Skt. agni + badha → த. அக்கினியுபாதை.]

அக்கினியுப்பு

அக்கினியுப்பு akkiṉiyuppu, பெ. (n.)

   1. வெடியுப்பு; a kind of salt, nitre-potassium nitrate.

   2. ஆறாங் காய்ச்சலுப்பு; a native preparation of potassium nitrate – nitras potassae.

   3. பூநீரினின்று காய்ச்சியெடுக்கும் ஐந்தாங்காய்ச்சலுப்பு; a kind of salt boiled and filtered five times in the course of its extraction from the fuller’s earth.

   4. தலையோட்டி னின்று உருவான ஓர் உப்பு; an euphemistric term used for denoting a kind of salt extracted from the skull of the foetus.

     “அண்டமதான அக்கினியுப்பை கண்டறியார்கள் காசினிமூடர் பிண்ட மதனிற் பிறந்தது காணார் சண்டனைச் சேர்வர் சாஸ்திரம் பார்த்தே” (சட். சூத்.); (சா.அக.);.

த.வ. அழலுப்பு.

     [அக்கினி + உப்பு.]

     [Skt. agni → த. அக்கினி.]

அக்கினியோகம்

அக்கினியோகம் akkiṉiyōkam, பெ. (n.)

   நன்றல்லா காலம் (சூடா. உள். 32.);; inauspicious conjuction of the tithi with the day of the week, viz., the 6th on Mon., the 7th on Tues., the 8th on Wed., the 9th on Thurs, the 10th on Fri. the 11th on Sat, the 12th on Sun.

த.வ. அழற்காலம்.

     [Skt. agni + yoga → த. அக்கினியோகம்.]

அக்கினியோத்திரம்

அக்கினியோத்திரம் akkiṉiyōttiram, பெ. (n.)

   காலை மற்றும் மாலை வேளைகளில், தீ முதலிய தெய்வங்களைக் குறித்துச் செய்யும் வேள்விச்சிறப்பு (தக்கயாகப். 112, உரை.);; sacrifice to Agni and certain other deities, performed every morning and evening.

த.வ. அழல்வழிபாடு.

     [Skt. agni-hotra → த. அக்கினியோத்திரம்.]

அக்கினிரசம்

அக்கினிரசம் akkiṉirasam, பெ. (n.)

   1. இந்திரகோபப் பூச்சி; a red coloured insect known as lady fly;

 Mutella occidentalis, a classified natural drugs described in the Tamil medicinal science on account of its

 great usefulness in medicines.

   2. பொன்; gold.

   3. தீத்திறம்; virulence of fire.

   4. பாசக நீர்; gastric fluid (சா.அக.);.

த.வ. அழற்பூச்சி.

     [Skt. agni + rasa → த. அக்கினிரசம்.]

அக்கினிரணம்

 அக்கினிரணம் akkiṉiraṇam, பெ. (n.)

   தீப்புண்; any injury caused by fire or dry-heat burns (சா.அக.);.

த.வ. அழற்புண்.

     [Skt. agni + v-rana → த. அக்கினிரணம்.]

அக்கினிரோகணி

அக்கினிரோகணி akkiṉirōkaṇi, பெ. (n.)

   1. அக்குள் கட்டி; a supportive axillary gland;

 a hard inflammatory swelling in the armpit.

   2. சுரத்தினாலடிபட்டு உடம்பு இளைத்தவர்களுக்கு அக்குளில் கட்டி யுண்டாகி நெருப்பைப் போல் எரிச்சலையும், சதை வெடிப்பு, மயக்கம், முதலியவற்றை விளைவிப்பது மல்லாமல் சில சமயம் ஏழு நாளுக்குள் சாக்காட்டையுண்டு-பண்ணுமொரு நோய்; a very fatal contagious epidemic disease characterised by fever, pain, swelling of the axillary lymphatic gland;

 delirium and coms, in majority of cases, it may end in death, Bubonic plague (சா.அக.);.

த.வ. அழல்நோய்.

     [Skt. agni + roga → த. அக்கினிரோகணி.]

அக்கினிரோகம்

அக்கினிரோகம் akkiṉirōkam, பெ. (n.)

   1. ஒரு வகைக் கண்ணோய்; a kind of eye-disease.

   2. பித்தநோய்; bilious disease (சா.அக.);.

த.வ. அழலி.

     [Skt. agni + roga → த. அக்கினிரோகம்.]

அக்கினிர்மமந்தினி

 அக்கினிர்மமந்தினி akkiṉirmamandiṉi, பெ. (n.)

   தழுதாழை; a medicinal shrub, wind-killer, Cleodendron phlomoides (சா.அக.);.

அக்கினிலிங்கம்

 அக்கினிலிங்கம் akkiṉiliṅgam, பெ. (n.)

   ஐந்து குறி (இலிங்கங்);களுள் நெருப்பு வடிவிலான திருவண்ணாமலையில் உள்ள சிவக்குறி (சிவலிங்கம்);; lingam of fire.

த.வ. அழல்தாணு.

     [Skt. agni + linga → த. அக்கினிலிங்கம்.]

அக்கினிவகை

 அக்கினிவகை aggiṉivagai, பெ. (n.)

   மருந்தெரிக்கும் திட்டம் அல்லது எரிப்புத் திட்டம்; exactness or accuracy in determining the quantity of heat required for burning for purposes of preparing medicines (சா.அக.);.

த.வ. அழல்வகை.

     [அக்கினி + வகை.]

     [Skt. agni → த. அக்கினி.]

வகு → வகை.

அக்கினிவர்ணசிலந்திக்கடி

 அக்கினிவர்ணசிலந்திக்கடி akkiṉivarṇasilandikkaḍi, பெ. (n.)

   கடிவாயில் எரிச்சலையும், சுரம், மயிர்க்கூச்சம், உடம்பெரிவு, குருக்கள் ஆகிய குணங்களையு முண்டாக்கும் ஒரு வகைச் சிவப்புச் சிலந்திக்கடி; a bite of the red species of spider marked by a reddish base and burning sensation, at the affected part, followed by fever, horripilation, and eurptions or pustules, in the body (சா.அக.);.

த.வ. அழல்நிறச்சிலந்திக்கடி.

அக்கினிவர்த்தனம்

அக்கினிவர்த்தனம் akkiṉivarttaṉam, பெ. (n.)

   1. வயிற்றுத்தீ (உதராக்கினி);யை மிகுதிப்படுத்தும் மருந்து; a stimulant increasing the digestive power or exciting the functional activity of the stomach, stomachic.

   2. ஓமம்; Bishop’s weed, Carum Copticum (சா.அக.);.

த.வ. பசித்தூண்டி.

     [Skt. agni + vardhana → த. அக்கினிவர்த்தனம்.]

அக்கினிவாகனம்

அக்கினிவாகனம் akkiṉivākaṉam, பெ. (n.)

   1. வெள்ளாடு; goat.

   2. ஆட்டுக்கடா; he-goat (சா.அக.);.

த.வ. அழலூர்தி.

அக்கினிவாகம்

அக்கினிவாகம் akkiṉivākam, பெ. (n.)

   1. புகை; smoke.

   2 ஆடு; sheep (சா.அக);.

அக்கினிவாகு

 அக்கினிவாகு akkiṉivāku, பெ. (n.)

அக்கினிவாகம் பார்க்க;see akkini-vagam (சா.அக.);.

அக்கினிவாதம்

 அக்கினிவாதம் akkiṉivātam, பெ. (n.)

   செரிமான நீரால் ஏற்பட்ட (வாத); வளிநோய்; a kind of gastric disease, Gastralgia (சா.அக.);.

த.வ. அழல்வளி.

     [Skt. agni + vata → த. அக்கினிவாதம்.]

அக்கினிவிகாரம்

அக்கினிவிகாரம் akkiṉivikāram, பெ. (n.)

   1. உண்ட உணவுகளை வயிற்றுனுள் பக்குவம் செய்வதற்கேற்ற செரிமான நீர் கோளாறடைவதனால் உண்டாகும் நோய்; a disease caused by gastric disorders, Gastricism.

   2. செரித்தற்கான தீயளவு வேறுபாடுகள்; the change in the digestive faculty.

   3. பித்தக்கோளாறு; bilious disorders (சா.அக.);.

த.வ. அழல்திரிபு.

     [Skt. agni + vikara → த. அக்கினிவிகாரம்.]

அக்கினிவிசர்ப்பி

 அக்கினிவிசர்ப்பி akkiṉivisarppi, பெ. (n.)

   சுரம், வயிற்றாலெடுத்தல் (பேதி);, நீர் மற்றும் பசிவேட்கை, அயர்வு, கக்கல், மயக்கம், உறக்கக்கேடு, உடம்பில் சில இடங்களில் நெருப்புக் கொப்புளங்களைப் போன்ற கொப்புள எரிச்சல் கண்டு அவ்விடங் கறுத்தல், மற்றவிடங்களில் நீலம் அல்லது செந்நிறமுண்டாதல் முதலியவற்றை உண்டாக்குமொருவகை படரும் தன்மையுடைய தோல்நோய்; an acute specific, febrile disease with inflammation of the skin, accompanied by an eruption of a flery acrid humour in some part of the body, and a peculiar blue colour in other parts, the symptoms are-purging, thirst, swooning, vomiting and the characteristic rash with a Well defined margin upon the skin. It is of a spreading nature, St. Anthony’s fire, Erysipelas (சா.அக.);.

த.வ. அழல்படர்த்தி.

     [Skt. agni + visarpi → த. அக்கினிவிசர்ப்பி.]

அக்கினிவிடபாகம்

 அக்கினிவிடபாகம் akkiṉiviḍapākam, பெ. (n.)

   உடம்பில் நஞ்சு ஊடுருவி, அரத்தம் முறித்து, அதனால் வளிமுதலா எண்ணிய இரண்டு மிகுத்து, வயிறளைதல், கக்கல், கோழை, அயர்வு, வாய்நீரொழுக்கு, வீக்கம், புரட்டல், உடம்பு மெலிதல், இருமல், பக்க நோய் முதலியவற்றை உண்டாக்கும் உடம்பின் நிலைமை; a condition of the body in which the quality of the blood is altered by the reason of the presence in it of a poison collected in the system. It is marked by the following symptoms – increase of humours in the system, with rumbling noise in the stomach, vomiting, salivation, swelling, restlessness, emciation, cough, pain on the sides and so on. It usually terminates in death – a kind of Toxemia (Blood Poisoning); (சா.அக.);.

த.வ. அழல்நஞ்சம்.

     [அக்கினி + விடம் + பாகம்.]

     [Skt. agni + visa → த. அக்கினிவிடம்.]

பகு → பாகம்.

அக்கினிவிடம்

 அக்கினிவிடம் akkiṉiviḍam, பெ. (n.)

   அதிக வெப்பத்தினால் குருதியோட்டத்திலோ உடம்பிலுள்ள வேறு உறுப்புக்களினாலோ ஏற்படும் நஞ்சு; any toxic substance formed in the blood or any other living organism in the body by heat, Thermotoxin (சா.அக.);.

த.வ. அழல்நஞ்சு.

     [Skt. agni + visa → த. அக்கினிவிடம்.]

அக்கினிவியாபகம்

 அக்கினிவியாபகம் aggiṉiviyāpagam, பெ. (n.)

   வெப்பம் பரவுகை; diffusing of heat, Thermodiffusion (சா.அக.);.

     [Skt. agni + vyabaga → த. அக்கினிவியாபகம்.]

அக்கினிவிரணம்

அக்கினிவிரணம் akkiṉiviraṇam, பெ. (n.)

   1. தீப்புண்; an injury on the body caused by fire-burns.

   2. சூடிட்ட புண்; cauterised wound (சா.அக.);.

     [Skt. agni + vrana → த. அக்கினிவிரணம்.]

அக்கினிவிருத்தி

அக்கினிவிருத்தி akkiṉivirutti, பெ. (n.)

   1. வயிற்றுத் தீயளவு மிகுகை; increase in the digestive power improved digestion.

   2. பசி மற்றும் வயிற்று ஆற்றலையுண்டாக்கும் மருந்து; a medicine that excites the action of and strengthens the stomach, stomachic (சா.அக.);.

     [Skt. agni + vrtti → த. அக்கினிவிருத்தி.]

அக்கினிவெள்ளை

அக்கினிவெள்ளை akkiṉiveḷḷai, பெ. (n.)

   கேழ்வரகு வகை (விவசா. 3);; a species of rågi.

அக்கினிவேசசம்மிதை

 அக்கினிவேசசம்மிதை akkiṉivēsasammidai, பெ. (n.)

   சரக சம்மிதையென்னும் ஓர் ஆயுள் வேத நூல்; an ayurvedic science named ‘charaka samhita’ (சா.அக.);.

அக்கினிவேசர்

அக்கினிவேசர் akkiṉivēcar, பெ. (n.)

   சரக சம்மிதை என்னும் ஆயுள் வேத நூலையியற்றிய முனிவர் (ஓர் இருடி);. இவர் ஆத்திரேய முனிவரின் மாணாக்கர் அறுவருள் ஒருவர். ஆத்திரேயர், உலகத்தாருக்குதவும்படி ஆயுள் வேத நூலை இயற்றவேண்டிக் கயிலையில் நடந்த மருத்துவக்கழகத்தில், அதிக முயற்சி எடுத்து உழைத்தவர். ஆத்திரேயர் வாக்கின்படி அவரது மாணாக்கர்களறுவரும் தனித்தனியாக மருத்துவ நூல்கள் எழுத, அவற்றுள், அக்கினி வேசர் எழுதியது மிகவும் பொருத்த முள்ளதாகவும் பட்டறிவை யொட்டினதாகவுமிருக்கக் கருதி, முனிவர்களால் அதைச் சிறந்ததாக எடுக்கப்பட்டது. சரகசம்மிதை என்பது அக்கினிவேசரால் எழுதப்பட்டுப் பின்னர் சரகரால் வடமொழியில் திருத்தப்பட்டுள்ள நூல். இது சற்றொப்ப கி.மு.1000 வருடத்திற்கு முந்தியிருக்கலாமென ஊகிக்கப்படும்; a rishi (Saint); who compiled an ayurvedic science now called charaka samhita. He is one of the six pupils of Atreya who took prominent part in the sanitary commission held in the Himalaya mountains for purposes of introducing ayurveda into this world. It is said that each of the five pupils wrote a treatise on medicine and the sages selected that of Agnivesa as the most practical. This was subsequently modified by charaka, under whose name it became known and his book is undoubtedly the most ancient and continues to be the most celebrated medical work in the possession of the modern Hindus. It is in Sanskrit and it is not definitely known at what period of the world’s history it was written. It is roughly calculated to be at about 1000 B.C. (Em. Med. men.); (சா.அக.);.

அக்கினிவேதனை

 அக்கினிவேதனை akkiṉivētaṉai, பெ. (n.)

அக்கினியுபாதை பார்க்க;see akkini-y-ubadai (சா.அக.);.

அக்கினிவேந்திரம்

அக்கினிவேந்திரம் akkiṉivēndiram, பெ. (n.)

   1. கல்லுருவி; drawing out stone, as from the bladder, gravel plant, Ammannia baccifera.

   2. இலவங்கம்; clove tree, Caryophyllus aromaticus,

   3. நீர் மேல் நெருப்பு என்னும் ஒரு பூண்டு; fire on water or water-fire, a kind of plant, blistering, Ammannia-Ammannia vesicatoria (சா.அக.);.

அக்கிப்படுவன்

 அக்கிப்படுவன் akkippaḍuvaṉ, பெ. (n.)

   குளிர் காய்ச்சல் கண்டு உடம்பிற் சில பாகங்களிற் சதை வீங்கிச் சிவந்து வலியுண்டாகி, தினவும் எரிச்சலும் கூடிய குருக்களை யெழுப்பி, சில நாளுக்குள் குணமடையும் ஒரு தோல்நோய் ; a contagious skin disease appearing with eruptions on certain parts of the body, Idiopathic erysipelas.

     [படுதல் = தோன்றுதல், பருத்தல். படு → படுவன்.]

அக்கிப்படை

 அக்கிப்படை akkippaḍai, பெ. (n.)

   உடம்பில் அக்கியைப்போலெழும்பும் ஒருவகைப் படை ; a variety of skin eruption characterised by small vesicles in clusters of the nature of herpes, Herpes farinosus.

     [படுதல் = பரத்தல். படு → படை. ‘ஐ’ தொ.பெ. ஈறு.]

அக்கிப்பிச்சல்

அக்கிப்பிச்சல் akkippiccal, தொ.பெ. (vbl.n.)

   1. அக்கி யெழும்பல் ; formation of grouped vesicles on an inflamed skin in any part of the body, Herpes.

   2. பல்லி எச்சம் (மூத்திரம்); உடம்பிற்படுவதால் அக்கியைப்போற் சிறுசிறு கொப்புளங்கள் தோன்றுதல் ; formation of a group of small ulcers on the surface of the skin, as a result of blistering caused by the urine of lizards (சா.அக.);.

     [பீச்சு → பீச்சல் (தொ.பெ.);. ‘அல்’ தொ.பெ. ஈறு.]

அக்கிப்புடை

 அக்கிப்புடை akkippuḍai, பெ. (n.)

   அம்மைக் கொப்புளங்கள் போன்ற குருக்கள் உடம்பின் மேல் திரட்சியாகத் தோன்றுவதால் உண்டாகும் சிவந்த வீக்கம் ; a swelling on a reddish base caused by the eruption of vesicles and papulae in groups on the surface of the skin, Herpes zoster (சா.அக.);.

     [புடைத்தல் = வீங்குதல். புடை (முத.தொ. ஆகு.);]

அக்கிப்பூடு

 அக்கிப்பூடு akkippūṭu, பெ. (n.)

   கொடிமாமரம் ; a species of spreading mango tree. (சா.அக.);.

     [பூணுதல் = பொருந்துதல், நெருங்கிச் சேர்தல், பூண் → பூண்டு → பூடு = நிலத்தோடொட்டிப் படர்ந்து கிடக்கும் நிலைத்திணை வகை. நிலத்தின் கீழ்ப் பற்கள் இறுகப் பொருந்தி விளையும் உள்ளி வகை.]

அக்கிமகாரம்

 அக்கிமகாரம் akkimakāram, பெ. (n.)

அக்கரகாரம் பார்க்க ;see akkara-karam.

அக்கிமச்சா

 அக்கிமச்சா akkimaccā, பெ. (n.)

   அமுக்கிரா இலை (பரி.அக.); ; leaf of Indian winter cherry (செ.அக.);

   அமுக்கிறா இலை ; the leaf of the plant horse-root, Withania somnifera (சா.அக.);.

அக்கியம்

அக்கியம் akkiyam, பெ. (n.)

 அக்கியம் akkiyam, பெ. (n.)

   1. ஈயமணல் ; lead ore.

   2. துத்தநாக மணல் ; zinc ore (சா.அக.);.

அக்கியானம்

 அக்கியானம் akkiyāṉam, பெ. (n.)

அஞ்ஞானம் பார்க்க;see annanam.

     [Skt. agnanam → த. அக்கியானம்.]

அக்கியானி

அக்கியானி akkiyāṉi, பெ. (n.)

   1. அறிவிலி; person without spiritual knowledge.

   2. புறச்சமயத்தான்; heathen.

த.வ. அஞ்ஞானி.

     [Skt. a-jnanin → த. அக்கியானி.]

அக்கியெழுது-தல்

அக்கியெழுது-தல் akkiyeḻududal,    5 செ.கு.வி. (v.i.)

   அக்கிப் படலத்திற்கு மருந்தாக, அதன் மேற் செங்காவிக் குழம்பினால் மடங்கல் (சிங்கம்); அல்லது நாய் உருவம் வரைதல் ; to paint the figure of a lion or dog with red ochre on the herpes sore, as a cure.

ம. அக்கியெழுத்து

   மருத்துவர் பலரிருப்பினும், பொற் கொல்லர் அல்லது குயவரைக்கொண்டு அக்கியெழுதுவிப்பதே வழக்கம்;

அக்கிரகண்ணியன்கி

 அக்கிரகண்ணியன்கி aggiragaṇṇiyaṉgi, பெ. (n.)

   முதல்வனாக மதிக்கப்படுபவன்; one who is considered foremost, highest in rank.

     “மகா வீரர்க்கெல்லாம் அக்கிர கண்ணியன்” (சி.சி. பாயி. சிவாக்.);.

     [அக்கிர(ன்); + கண்ணியன்.]

     [Skt. agra → த. அக்கிர(ன்);.]

கண் → கண்ணியம் → கண்ணியன் → Skt. ganya.

அக்கிரகத்தம்

அக்கிரகத்தம் aggiragattam, பெ. (n.)

   1. கை நுனி; the extremity of the arm.

   2. வலக்கை; the right hand (சா.அக.);.

     [Skt. agra + hasta → த. அக்கிரகத்தம்.]

அக்கிரகாரப்பிரதிட்டை

 அக்கிரகாரப்பிரதிட்டை akkirakārappiradiṭṭai, பெ. (n.)

   பார்ப்பனக் குடிகளை வீடுகட்டிக் குடியேற்றுகை; establishment of a number of Brahmin families in a village, one of sapda-sandanam.

     [Skt. agra-hara+prati-stha → த. அக்கிரகாரப் பிரதிட்டை.]

அக்கிரகாரம்

அக்கிரகாரம் akkirakāram, பெ. (n.)

   1. பார்ப்பனர் வாழும் குடியிருப்பு; the area in a village or town where Brahmin traditionally live.

   2. முற்காலத்தில் பார்ப்பனர்க்குக் கொடுக்கப்பட்ட இறையிலியூர் (M.M);; village formerly allotted to Brahmins at a favourable assessment or rent free.

த.வ. பார்ப்பனச்சேரி.

     [Skt agra-hara → த. அக்கிரகாரம்.]

அக்கிரகாரவாடை

 அக்கிரகாரவாடை akkirakāravāṭai, பெ. (n.)

   பெரும்பாலும் பார்ப்பனரும் சிறுபான்மை பிற இனத்தவரும் பயன்கொள்ளும் பொருட்டு, இறையிலியாக விடப்பட்ட ஊரகப்பகுதி (W.G.);; part of a village exempt from revenue, usually owned by Brahmins but sometimes by other classes.

     [அக்கிரகார(ம்);+வாடை.]

     [Skt. agra-hara → த. அக்கிரகார(ம்);.]

அக்கிரகோடி

 அக்கிரகோடி akkiraāṭi, பெ. (n.)

   நண்பகல் வரி(ரேகை);க்கும் உச்சிக்கோட்டுக்கும் இடையேயுள்ள சக்கரவாளத்தின் பகுதி (பாண்டி.);;     [அக்கிரம்); + கோடி.]

     [Skt. agra → த. அக்கிர(ம்);.]

கோடு → கோடி.

அக்கிரசங்கை

அக்கிரசங்கை1 akkirasaṅgai, பெ. (n.)

   தகுதி முதன்மைபற்றி ஒருவற்கு நடத்தும் மதிப்புரவு; honours paid to the first in rank.

     [Skt. agra + sankhya → த. அக்கிரசங்கை.]

 அக்கிரசங்கை2 akkirasaṅgai, பெ. (n.)

   1. கணைக்காலின் முன் பாகம்; the anterior border of the leg from the ankle to the knee, shin.

   2. முன்தொடை; the front portion of thigh (சா.அக.);.

     [Skt. agra + sanga → த. அக்கிரசங்கை.]

அக்கிரசந்தானி

 அக்கிரசந்தானி akkirasandāṉi, பெ. (n.)

   வாழ்பவர்களுடைய நன்மை தீமைகளெழுதப் படுவதாகக் கூறப்படும் கூற்றுவனுடைய குறிப்பேடு; register of good and bad actions of all beings, maintained by Yama.

     [Skt. agra + samdhåni → த. அக்கிரசந்தானி.]

அக்கிரசன்

 அக்கிரசன் akkirasaṉ, பெ. (n.)

   உடன்பிறப்புகளுள் மூத்தவன்; elder brother, first-born.

த.வ. தமையன்.

     [Skt. agra-ja → த. அக்கிரசன்.]

அக்கிரசன்மன்

அக்கிரசன்மன் akkirasaṉmaṉ, பெ. (n.)

   1. தமையன்; elder brother.

   2. பார்ப்பான்; Brahmin.

     [Skt. agra – ja → த. அக்கிரசன்மன்.]

அக்கிரசம்பாவனை

 அக்கிரசம்பாவனை akkirasambāvaṉai, பெ. (n.)

   முதல் பரிசில்; priority of attention, because of rank, priority in presentation of gifts, as a mark of honour.

     [Skt. agra + sambhåvanå → த. அக்கிர சம்பாவனை.]

அக்கிரசருமம்

அக்கிரசருமம் akkirasarumam, பெ. (n.)

   1. நுனித்தோல்; the foreskin. 2 ஆண்குறியின் நுனித்தோல்;

 the foreskin of the penis, prepuce (சா.அக.);.

     [Skt. agra + carman → த. அக்கிரசருமம்.]

அக்கிரசா

 அக்கிரசா akkiracā, பெ. (n.)

அக்கிரச்சா (வின்.); பார்க்க;see akkiracca.

     [Skt. agra + jya → த. அக்கிரசா.]

அக்கிரசாலை

 அக்கிரசாலை akkiracālai, பெ. (n.)

   பார்ப்பனர்க்கு உணவளிக்குமிடம் (Insc.);; feeding-house for Brahmins.

     [அக்கிர(ம்); + சாலை.]

     [Skt. agra → த. அக்கிரம்.]

சால் → சாலை.

அக்கிரசாலைப்புறம்

 அக்கிரசாலைப்புறம் akkiracālaippuṟam, பெ. (n.)

   பார்ப்பனர்க்கு உணவளிக்கும் பொருட்டு வேந்தனால் விடப்பெறும் இறையிலி நிலம் (Insc.);; endowment land to provide a feeding-house for Brahmins.

     [அக்கிர(ம்); + சாலைப்புறம்.]

     [Skt. agra → த. அக்கிர(ம்);.]

தமிழர் வரலாற்றில் இடைக்காலத்தில் தோன்றிய வழக்கம்.

அக்கிரசூதகம்

 அக்கிரசூதகம் aggiracūtagam, பெ. (n.)

   மங்கையின் முதற்பூப்பு; the first menstruation (சா.அக.);.

     [Skt. agra + sutaka → த. அக்கிரசூதகம்.]

அக்கிரச்சா

 அக்கிரச்சா akkiraccā, பெ. (n.)

   கோள், விண்மீன் முதலியன நேர்கிழக்கிற்கு வடபுறமாவது தென்புறமாவது விலகியுதிக்கும் போது அவ்விடத்துக்கும் நேர் கிழக்கிற்கும் இடையிலுள்ள வட்டப் பகுதியின் குறுக்களவு வகை (வின்.);;     [Skt. agra +jya → த. அக்கிரச்சா.]

அக்கிரணி

 அக்கிரணி akkiraṇi, பெ. (n.)

   முதல்வன் (சம்.அக.);; leader, foremost person.

     [Skt. agra-ni → த. அக்கிரணி.]

அக்கிரணிவாசி

 அக்கிரணிவாசி akkiraṇivāci, பெ. (n.)

   அமுக்கிரா; horse-root or Indian – winter-cherry – Physalis somni fera alias withania somnifera (சா.அக.);.

அக்கிரதாம்பூலம்

 அக்கிரதாம்பூலம் akkiratāmbūlam, பெ. (n.)

   மதிப்புரவின் பொருட்டு முதற்கண் கொடுக்கும் தாம்பூலம்; priority in presentation of pānsupāri.

     [அக்கிர(ம்); + தாம்பூலம்.]

     [Skt. agra → த. அக்கிர(ம்);.]

தம்பலம் → தாம்பூலம் → Skt. tambula.

அக்கிரன்

 அக்கிரன் akkiraṉ, பெ. (n.)

   உடன்பிறப்புகளுள் மூத்தவன் (வின்.);; elder brother.

த.வ. தமையன்.

     [Skt. agra → த. அக்கிரன்.]

அக்கிரபாசம்

அக்கிரபாசம் akkirapācam, பெ. (n.)

   1. முன் பக்கம்; the fore part of anything.

   2. நுனி; the extreme point of anything.

   3. உடம்பின் முன் உறுப்பு அதாவது கை, கால்; one of the extremities of an animal body, namely the arm or the leg, especially the latter (சா.அக.);.

     [அக்கிர(ம்); + பாசம்.]

அக்கிரபூசை

 அக்கிரபூசை akkirapūcai, பெ. (n.)

   முதன் மதிப்புரவு; first act of reverence.

     [அக்கிர(ம்); + பூசை.]

     [Skt. agra → த. அக்கிர(ம்);.]

பூசு → பூசை → Skt. puja.

அக்கிரமசூதகம்

அக்கிரமசூதகம் aggiramacūtagam, பெ. (n.)

   1. முறைமைக்கு எதிராகக் காணும் மாதவிலக்கு; menstruation which does not recur at proper intervals, irregular menstruation.

   2. அகாலசூதகம்;see agala-südagam (சா.அக.);.

     [Skt. a+krama + sudaka → த. அக்கிரமசூதகம்.]

அக்கிரமச்சா

 அக்கிரமச்சா akkiramaccā, பெ. (n.)

அக்கிரச்சா (வின்.); பார்க்க;see akkiracca.

     [Skt. agrima + jya → த. அக்கிரமச்சா.]

அக்கிரமச்சியை

 அக்கிரமச்சியை akkiramacciyai, பெ. (n.)

   அக்கிரச்சா (வின்.);;பார்க்க;see akkiraccả.

     [Skt. agrima + jya → த. அக்கிரமச்சியை.]

அக்கிரமண்டபம்

அக்கிரமண்டபம் akkiramaṇṭabam, பெ. (n.)

   கோயிலின் முகமண்டபம்; front hall of a temple.

     “திருவக்கிர மண்டபமும் செய்தான்” (புதுக்.கல். 634);.

     [அக்கிர + மண்டபம்.]

     [Skt. agra → த. அக்கிர(ம்);.]

மண்டகம் → மண்டவம் → மண்டபம் → Skt. mandapa.

     [P]

அக்கிரமதேவியார்

அக்கிரமதேவியார் akkiramatēviyār, பெ. (n.)

   அரசமா தேவி (M.E.R. 165 of 1925);; the chief queen.

     [அக்கிரம் + தேவியார்.]

     [Skt. agra → த. அக்கிரம.]

அக்கிரமப்பிரசவம்

 அக்கிரமப்பிரசவம் akkiramappirasavam, பெ. (n.)

   இயற்கை நிலைக்கு வேறுபட்ட மகப்பேறு; labour differing from its natural state by its difficulty, duration or danger involved, preternatural labor (சா.அக.);.

த.வ. கொடுமகப்பேறு.

     [Skt. a-krama+pra-sava → த. அக்கிரமப் பிரசவம்.]

அக்கிரமப்பிரேதவடக்கம்

அக்கிரமப்பிரேதவடக்கம் akkiramappirētavaḍakkam, பெ. (n.)

   பாம்பு முதலிய நச்சுயிரிகளால் கடியுண்டு சிலநேரங்களில் உயிரடங்கிப் பிணத்தைப்போல் கிடக்கும் நோயாளியை இறந்து விட்டதாகக் கருதி புதைக்கை; a wrong or mistaken burial of a living patient in the cataleptic state induced by Snake, bite or sting of poisonous insects, on the authoritative pronouncement of the doctor in attendance (சா.அக.);.

     [அக்கிரமம் + பிரேதம் + அடக்கம்.]

     [Skt. a-krama+pireda → த. அக்கிரமப்பிரேதம்.]

அடங்கு → அடக்கு → அடக்கம்.

பிணத்தை 90 நாழிகை வரைக்கும் புதைக்கக் கூடாதென்று சத்தியாரூடம், சித்தாரூடம், நாகாரூடம் முதலிய சில தமிழ் நூல்கள் கூறுகின்றன.

அக்கிரமப்புணர்ச்சி

அக்கிரமப்புணர்ச்சி akkiramappuṇarcci, பெ. (n.)

   முரணாக, மாதவிலக்கான பெண், மகப்பேறுற்றவள், நோயாளி அல்லது மருந்துணவிலிருக்கும் பெண் ஆகிய இவர்களுடன் கூடும் முறைகேடான கூட்டம்;   2. அறநூல்களிற் கூறப்பட்டவற்றிற்கு எதிராகக் கைம்பெண், பொதுமகள், பிறன்மனை, தாயார், உடன் பிறந்தாள், மூத்தவள், குரு மனைவி முதலானவர்களைத் திருட்டுத் தனமாய் கூடும் முறை கேடான புணர்ச்சி;   3. பிறன்மனை, பருவமடையாப்பெண், இசையா பெண் ஆகியோரை வலியப் புணர்தல்;     [அக்கிரம(ம்); + புணர்ச்சி.]

     [Skt. a-krama → த. அக்கிரம(ம்);.]

புல் → புள் → புண் → புணர் → புணர்ச்சி. ‘சி’ தொழிற்பெயரீறு.

அக்கிரமப்பேச்சு

 அக்கிரமப்பேச்சு akkiramappēccu, பெ. (n.)

கேடு விளைக்குஞ் சொல் (R);

 improper, evil speech, calumny.

     [அக்கிரம(ம்); + பேச்சு.]

     [Skt. a-krama → த. அக்கிரம(ம்);.]

அக்கிரமமலம்

 அக்கிரமமலம் akkiramamalam, பெ. (n.)

   காலந்தவறி மலங்கழித்தல்; passing stools at irregular intervals-defecation (சா.அக.);.

     [அக்கிரம(ம்); + மலம்.]

     [Skt. a-krama → த. அக்கிரம(ம்);.]

அக்கிரமம்

அக்கிரமம்1 akkiramam, பெ. (n.)

   1. ஒழுங்கின்மை; irregularity; (in medicine); not occurring successively or at proper time.

   2. முறைமையல்லாதது; non-conformity to rule.

   3. நேர்மையின்மை; injustice.

   4. கொடுமை; cruelty.

த.வ. அன்முறை, அல்நயம்.

     [Skt. a-krama → த. அக்கிரமம்.]

 அக்கிரமம்2 akkiramam, பெ. (n.)

   1. அட்டூழியம்; unjust or unfair act;atrocity.

     ‘குடிசைகளுக்குத் தீ வைத்தது அக்கிரமம் இல்லையா?” (இ.வ.);.

   2. தொல்லை; mischief, nuisance.

     ‘நாய்களின் அக்கிரமம் பொறுக்க முடியவில்லை’ (இ.வ.); (கிரியா.);.

த.வ. நயக்கேடு.

     [Skt. a-krama → த. அக்கிரமம்.]

அக்கிரமாமிசம்

அக்கிரமாமிசம் akkiramāmisam, பெ. (n.)

   நெஞ்சகம் (அரத்தாசயம்);; the primary organ

 of the blood’s motion an animal, namely the heart

   2. நெஞ்சாங்குலையின் தசைப்பற்று; the muscles of the heart (சா.அக.);.

     [Skt. agra + mamsa → த. அக்கிரமாமிசம்.]

அக்கிரமி

அக்கிரமி1 akkiramittal,    4 செ.கு.வி. (v.i.)

   தீங்கு செய்தல் (பஞ்ச. திருமுக. 81);; to do wrong or mischief.

     [Skt. a-krama → த. அக்கிரமி-,]

 அக்கிரமி2 akkirami, பெ. (n.)

   அறமுறை பிழைத்தோன் (நீதி);; one who is unjust.

த.வ. அறக்கேடன்.

     [Skt. a-kramin → த. அக்கிரமி.]

அக்கிரம்

அக்கிரம்1 akkiram, பெ. (n.)

   திருப்படையல்; sacred meal, food-offering.

     “போழங் குமர னமைச்ச அக்கிரம்” (T.A.S. iii. 166);.

     [Skt. agra → த. அக்கிரம்.]

 அக்கிரம்2 akkiram, பெ. (n.)

   1. நுனி; tip.

     “தருப்பை கைக்கொண்டக்கிரங் கிழக்கதாக” (இரகு. கடி. 79.);.

   2. உச்சி; the upper part of anything especially the head in an animal.

   3. மேற்பாகம்; the front side of anything.

   4. சிறப்பு முதன்மை; that which is foremost, first

   5. கோள் கீழ் மேல்வீதி அகறல் (வின்.);;   6. இரந்து பெற்ற நாலு கவள வுணவு (பிச்சை); (கூர்மபு. நித்திய கன். 17);; four handful of food given as alms.

     [த. அகரம் (முதன்மை); → Skt. agra → த. அக்கிரம்.]

அக்கிரரோகம்

 அக்கிரரோகம் akkirarōkam, பெ. (n.)

   இயல்பாகக் கண் சிவந்து மாறும்; மலரவிழிக்க வொட்டாது, கண்ணீர் ஒழுகி, இமை தடித்துக் கடைக்கண்ணில் அறுப்பது போல வலியையும் கூச்சத்தையு முண்டாக்கிப் பீளைதள்ளுமொரு கண்ணோய்; an inflammation of the superficial tissues of the eye, especially of the conjunctive, which will soon disappear. It is marked by an acute pain on the ocrnea of the eye, a catarrhal or muco-purulent secretion and swelling of the eyelids, Conjunctivitis (சா.அக.);.

த.வ. கண்ணோய்.

     [Skt. a-kra+roga → த. அக்கிரரோகம்.]

அக்கிரவம்

 அக்கிரவம் akkiravam, பெ. (n.)

   தான்றிக்காய்; the fruit of the tree, Belleric myrobalan – Terminalia belerica (சா.அக.);.

     [Skt. agrava → த. அக்கிரவம்.]

அக்கிரா

 அக்கிரா akkirā, பெ. (n.)

அக்கிராரம் (பொதி.நி.); பார்க்க;see akkiraram.

த.வ. பார்ப்பனச்சேரி.

     [Skt. a-gra → த. அக்கிரா.]

அக்கிராகியச்சரக்கு

 அக்கிராகியச்சரக்கு akkirākiyaccarakku, பெ. (n.)

   மருத்துவத்தில் ஏற்றுக்கொள்ளப்படாத மருந்துப்பண்டம்; in medicine non official drug, a drug not recognised by the pharmacopocia (சா.அக.);.

     [அக்கிராகியம் + சரக்கு.]

     [Skt. a-grahya → த. அக்கிராகியம்.]

சர் → சரகு → சரக்கு.

அக்கிராகியம்

அக்கிராகியம் akkirākiyam, பெ. (n.)

   1. ஏற்றுக் கொள்ளத்தகாதது; that which is inadmissible.

   2. புலனாகாதது; that which cannot be perceived.

     “அக்கிராகியமான தேஜோரூபமாம்” (சி.சி. பாயி. சிவாக்.);.

     [Skt. a-grahya → த. அக்கிராகியம்.]

அக்கிராசனம்

 அக்கிராசனம் akkirācaṉam, பெ. (n.)

   அவைத் தலைமை; seat of honour, the chair at a meeting.

     [Skt. agra + asana → த. அக்கிராசனம்.]

அக்கிராசனர்

 அக்கிராசனர் akkirācaṉar, பெ. (n.)

   அவைத் தலைவர்; chairman, president.

     [Skt. agra + ášana → த. அக்கிராசனர்.]

அக்கிராசனாதிபதி

 அக்கிராசனாதிபதி akkirācaṉādibadi, பெ. (n.)

   அவைத்தலைவர்; chairman, president.

     [Skt. agra + asana + adipadi → த. அக்கிராசனாதிபதி.]

அக்கிராசன்

அக்கிராசன் akkirācaṉ, பெ. (n.)

   எலும்புருக்கி நோயுண்டாக்குவதாகக் கருதப்படுங் கோள் (தஞ். சரசு. iii, 172);;

அக்கிராசியம்

 அக்கிராசியம் akkirāciyam, பெ. (n.)

அக்கிராகியம் பார்க்க;see akkiragiyam (சா.அக.);.

     [Skt. a-grahya → த. அக்கிராசியம்.]

அக்கிராத்தம்

அக்கிராத்தம் akkirāttam, பெ. (n.)

   1. கை நுனி; extremities of the hand.

   2. வலக்கை; the right hand (சா.அக.);.

     [Skt. agra + hastam → த. அக்கிராத்தம்.]

அக்கிராந்தம்

அக்கிராந்தம் akkirāndam, பெ. (n.)

   1. சேம்பு (பச்.மு.);; Indian kales (செ.அக.);.

   2. சோம்பு ; aniseed, seeds of the plant, Pimpinella anisum (சா.அக.);.

அக்கிராரம்

 அக்கிராரம் akkirāram, பெ. (n.)

   பார்ப்பனர் வாழும் பகுதி அல்லது வீதி; Brahmin street.

     “அக்கிராரச் சேஷியுமோ வப்படிவே” (தனிப்பா.);.

த.வ. பார்ப்பனச்சேரி.

     [Skt. agra-håra → த. அக்கிராரம்.]

அக்கிரியன்

 அக்கிரியன் akkiriyaṉ, பெ. (n.)

   தமையன் (வின்.);; elder brother.

     [Skt. agriya → த. அக்கிரியன்.]

அக்கிரியம்

 அக்கிரியம் akkiriyam, பெ. (n.)

   முதலிலுண்டானது அல்லது பிறந்தது; the first born (சா.அக.);.

த.வ. தலைச்சன், முதற்பிள்ளை.

     [Skt. agniya → த. அக்கிரியம்.]

அக்கிரு

 அக்கிரு akkiru, பெ. (n.)

   விரல் (வின்.);; finger.

     [Skt. agru → த. அக்கிரு.]

அக்கிருகம்

 அக்கிருகம் aggirugam, பெ. (n.)

   மாஞ்சரோகணி; a rare plant used by Siddhars for strengthening the body, a drug unidentified? (சா.அக.);.

அக்கிரேசரன்

 அக்கிரேசரன் akkirēcaraṉ, பெ. (n.)

   தலைவன்; leader.

     [Skt. agra-asana→agre-sara → த. அக்கிரேசரன்.]

அக்கிரோனம்

 அக்கிரோனம் akkirōṉam, பெ. (n.)

அக்கிரகோடி (பாண்டி); பார்க்க;see akkira kodi.

அக்கிலாங்கொடி

 அக்கிலாங்கொடி akkilāṅgoḍi, பெ. (n.)

   கருப்பு நாகதாளி ; black and few-spined prickly pear, Opuntia nigricans.

     [அக்கு = முள். அக்கில் + ஆம் + கொடி. ‘இல்’ சிறுமைப்பொருட் பின்னொட்டு. “ஆம்” புணர்ச்சிச் சாரியை.]

அக்கிலிப்பிக்கிலி

அக்கிலிப்பிக்கிலி akkilippikkili, பெ. (n.)

   1. குழப்பம் ; confusion,

   2. மனக்குழப்பம் (இ.வ.); ; confusion of mind (Loc.);.

தெ. அக்கிலி

     [பிக்கு = 1. சிக்கு (வின்); (தெ. பிக்கு);. 2. குழப்பம் (வின்); (தெ. பிக்கு);. அக்கல் பிக்கல் என்னும் இணைச்சொல் அக்கிலிப் பிக்கிலி என்று திரிந்திருக்கலாம்.]

அக்கிலு

 அக்கிலு akkilu, பெ. (n.)

   நெருஞ்சில் (மு.அ.);; tribulus plant.

     [அஃகுதல் = கூராதல். அஃகு → அக்கு → அக்கில் → அக்கிலு.]

அக்கிள்

 அக்கிள் akkiḷ, பெ. (n.)

அக்குள் பார்க்க ;see akkul.

அக்கீகத்து

அக்கீகத்து akākattu, பெ. (n.)

   1. வழக்கை எடுத்துரைக்கை (P.T.L.);; statement of a case.

   2. உண்மை; truth, fact.

     [U. haqiqat → த. அக்கீகத்து.]

அக்கீம்

 அக்கீம் akām, பெ. (n.)

   மகமதிய மருத்துவன்; Muhammadan doctor.

     [U. hakim → த. அக்கீம்.]

அக்கு

அக்கு akku, பெ. (n.)

   எருத்துத் திமில் (பிங்.);; ox’s hump.

   2. சிவமணி (உருத்திராக்க மணி); ; rudrākşa bead.

     “அக்கையணிந்தவர்” (திருவானைக் கோச்செங். 4);;

   3. அகில் (மலை);; eagle wood.

   4. உசா (L);; sand-paper tree.

     [அஃகுதல் = சுருங்குதல், குவிதல், கூராதல், நுண்ணிதாதல், அஃகு → அக்கு. எருத்துத் திமில் குவிந்தது. சிவமணி, மத்தங்காய் (ஊமத்தங் காய்); போலும் பலாக்காய் போலும் முட்போன்ற முனைகளையுடையது. அக்கு = கூரிய முனை. ஒ.நோ.; முள்மணி → முண்மணி = சிவமணி. கள் (முள்); மணி → கண்மணி = சிவமணி. கள் → கள்ளி = முட்செடி. ஒ.நோ.; முள் → முள்ளி = முட்செடி.]

 ak, to be sharp, to pierce. Gk. ak-ros, pointed. ak-ohé, whetstone. ak-me, edge.

 L., ac-us, needle. ac-uere, to sharpen, ac-iés, edge. – acumen, anything sharp. AS. ecg, edge. E. acute, sharp, pointed. f. L. acutus, p.p. of acuere, Fr. aigu, acute.

அக்கு என்பதே முதன்முதல் தோன்றிய இயற்கையான பெயர். அது ‘அம்’ என்னும் பெருமைப்பொருட் பின்னொட்டுப் பெற்று அக்கம் என்றானது. ஒ.நோ.; முத்து → முத்தம் (பருமுத்து);. அக்கம் = பருஞ் சிவமணி.

ஆரியப் பூசாரியர் அக்கம் என்பதைச் சமற்கிருதத்தில் அக என்று திரித்து, அதற்குக் கண் என்று வடமொழிப் பொருள்கொண்டு, ஆரிய உருத்திரனைத் (Rudra); தமிழ்ச் சிவனாக்கி, சிவமணியை உருத்திராக்கம் (ருத்ராக்ஷ); என்றனர். அக்காலத்தில் மொழி நூல் வளர்ச்சி பெறாமையாலும், ஆரிய மொழி தேவமொழியென நம்பப்பட்டமையாலும், தமிழர் அதை எதிர்த்திலர்.

வேத ஆரியர் இந்தியாவிற்குட் புகு முன்னரே, அவர் முன்னோர் மேலையாசியாவில் ஒரு தனி வகுப்பினராகத் தோன்று முன்னரே, வடதிரவிடரான பிராகிருதர் ஐரோப்பா சென்று ஆரியராக மாறு முன்னரே, மாந்தன் பிறந்தகமான குமரிநாட்டுத் தமிழருள் ஒரு சாராரான சிவனியர் குறிஞ்சி நிலமான நேபாளநாட்டு அக்குமணியை யணிந்து அதைச் சிவமணியாக்கினர்.

இன்னும் இதன் விளக்கமும், “ருத்ராக்ஷ’ என்னும் வடசொல்லையே தென்சொல்லின் மூலமாகக் காட்டுவதற்கு ஆரியர் புனைந்த கதையின் புரட்டும், ‘உருத்திராக்கம்’ என்னுஞ் சொல்லின்கீழ்க் காண்க.

அகில் ஒருவகை முண்மரத்தின் வயிரம். ‘கள்ளி வயிற்றி னகில் பிறக்கும்” (நான் மணிக். 6);.

உகா இலை சிறு முட்படலம்போற் சுரசுரப்பானது.

 அக்கு akku, பெ. (n.)

   எட்டி (மலை.);; strychnine.

 அக்கு akku, பெ. (n.)

   முள் ; thorn, anything sharp or pointed.

     [அள் = கூர்மை, அள் → அள்கு → அஃகு → அக்கு.]

 அக்கு akku, பெ. (n.)

   1. வெள்ளை (திவ். பெரியாழ். 1.7 ; 3. லியா.);; whiteness.

   2. எலும்பு ; bone.

     “அக்கும் புலியி னதளுமுடையார்” (திவ். பெரிய தி. 9.6 ; 1);.

   3. சங்கு ; chank.

   4. சங்குமணி ; chank bead or ring.

     “அக்கின் ணகையிவள்” (திருக்கோ. 376);.

     [எல் = ஒளி, வெள்ளை. ஒருகா. எல் → அல் → அல்கு → அஃகு → அக்கு என்று திரிந்திருக்கலாம். அக்கு = வெள்ளை, வெள்ளையான எலும்பு, வெண்சங்கு.]

எலும்பு வெண்ணிறமானது. அதனாலேயே எலும்பெனப்பட்டது. எலும்புபோற் சங்கு வெண்ணிறமானது. சங்கினாற் செய்யப்பட்ட மணியும் சங்கெனப்பட்டது; கருவியாகுபெயர். இனி, இயற்கையான சங்கு முண்முனைகளையுடைமையால் அக்கெனப் பட்டது என்றுமாம்.

 அக்கு akku, பெ. (n.)

   பலகறை (சங்.அக.); ; cowry.

     [அக்கு = வெள்ளை, வெள்ளையான பலகறை.]

   பறையலகு → பலகறை (ஒருவகை முறை மாற்று);. ஒரு சொல்லின் எழுத்துகள் அல்லது ஒரு கூட்டுச்சொல்லின் சொற்கள் முன்பின்னாக முறை மாறுவது முறைமாற்று. விசிறி → சிவிறி என்பது எழுத்து முறை மாற்று இல்முன் → முன்றில் என்பது சொன் முறைமாற்று. பறையலகு (பறை அலகு); என்பது பலகறை என்று மாறியபோது, பகரமும் அகரமும் முன்போன்றே நிற்க, ‘றை’ “லகு” என்னும் அசைகளே முறைமாறியிருப்பதால், இதை இடையிட்ட அசைமாற்று என்றே கூறல்வேண்டும். “பறையல கனைய வெண்பல்” (சீவக. 2773);;   ஒரத்திற் கூரிய முனைவரிசையுள்ள சில பறவை யலகுபோலிருப்பதால், ‘கவடி’ பறை யலகு எனப்பெயர் பெற்றது போலும் இது உவமையாகுபெயர்;
 அக்கு akku, பெ. (n.)

   துண்டு ; piece.

அக்கக் காய் = துண்டுதுண்டாக.

     [அகைத்தல் = அறுத்தல். “அகைத்தகைத் திடுவர்” (சீவக. 2766);. அகு → அகை. ஒ.நோ; பகு → பகை அகு → அக்கு = துண்டு.]

 அக்கு akku, பெ.(n.)

   1. அன்பு; affection love

   2.பரிவு; special care.

   3. பற்று; innate desire.

     [அல்-நெருக்கம், அன்பு. அல்+கு-அஃகு-அக்கு]

 அக்கு akku, பெ. (n.)

   உரிமை; claim, right.

     [U. hagg → த. அக்கு.]

அக்குக்கணம்

அக்குக்கணம் akkukkaṇam, பெ. (n.)

   1. எலும்பைப் பற்றிய ஒரு கணநோய். இது பொதுவாகக் குழந்தைகட்கு ஏற்படும். இதனால் எலும்பிற்குள்ளிருக்கும் மூளைத் தாது தாக்கப்பட்டு அழிவுறும்; a disease, chiefly in infants, affecting the bones in the system and in which the cells of the bone marrow disappears, Osteotabes.

   2. குழந்தைகட்கு உச்சிக்குழி மூடாமல் எலும்புகளைத் தாக்கி, அதனால் அவை மெதுவாகி வளைந்தும் கோணலாகியும் காணுவதோடு, நரம்புநோய், காய்ச்சல், வலிப்பு, சதைவலி முதலிய குணங்களைக் காட்டும்நோய் ; a constitutional disease in children, marked by bending and distortion of the bones, delayed closure of the fontanels, and degeneration of the liver and the spleen. There are often riervous affections, feverishness, convulsions, pain in the muscles etc., a kind of rickets (சா.அக.);..

     [அக்கு = எலும்பு. கணம் = கணை.]

அக்குக்கழலை

அக்குக்கழலை akkukkaḻlai, பெ. (n.)

   1. எலும்பின்மே லுண்டாகும் கழலைக் கட்டி ; a hard tumour developing on a bone, Osteoma.

   2. எலும்பின் கழலைக் கட்டி ; tumour of a bone, Osteoncus (சா.அக.);.

     [அக்கு = எலும்பு. கழல் → கழலை = நெகிழ்ந் தசையுங் கட்டி.]

அக்குக்குறுக்கம்

 அக்குக்குறுக்கம் akkukkuṟukkam, பெ. (n.)

   எலும்பு சிறிதாகல் ; diminution of a bone, retarded ossification (சா.அக.);.

     [அக்கு = எலும்பு. குறு → குறுகு → குறுக்கு → குறுக்கம். ‘அம்’ தொ.பெ. ஈறு.]

அக்குக்குறுக்கி

 அக்குக்குறுக்கி akkukkuṟukki, பெ. (n.)

   எலும்பைச் சிறியதாக்கும் நோய் ; a disease causing diminution in the size of a bone, rickets, atrophy of the bone, Osteonabrosis.

     [அக்கு = எலும்பு. குறு → குறுகு → குறுக்கு → குறுக்கி. ‘இ’ வி.முத. ஈறு.]

அக்குசு

அக்குசு akkusu, பெ. (n.)

   1. அக்கறை; interest, concern.

     “அவன் அக்குசோடு வேலை செய்கிறான்” (பே.வ.);.

   2. விரைவு; quick.

அக்குசா வேலை முடிக்க வேண்டுமாம்.

     [U. akhass → த. அக்குக.]

அக்குசை

அக்குசை akkusai, பெ. (n.)

   துறவு பூண்டு வேள்வி புரியும் சமணக் கைம்பெண்; jaina widow – ascetic.

     “நூல்கள் வாங்கும் அக்குசைகள்” (திருவிளை. சமணரைக். 17.);.

     [Skt. akusa → த. அக்குசை.]

அக்குச்சரி

அக்குச்சரி akkuccari, பெ. (n.)

   சங்குவளையல் ; shell-bracelet,

     “கைச்செறி யக்குச்சரி” (தக்க யாகப். 100);;

     [அக்கு = வெண்சங்கு. சுரி → சரி = வளை, வளையல்.]

அக்குச்சுருக்கம்

 அக்குச்சுருக்கம் akkuccurukkam, பெ. (n.)

அக்குக்குறுக்கம் பார்க்க ;see {akku-k-kurukkam}.

அக்குணி

 அக்குணி akkuṇi, பெ. (n.)

   சிறிதளவு ; small quantity, trifle.

எனக்கு அக்குணி கொடுத்தான் (உ.வ.);.

     [அக்கு = அறுப்பு, வெட்டு. அக்குண்ணுதல் = அறுக்கப்படுதல். ‘உண்’ ஒரு செயப்பாட்டுப் பொருள் துணைவினை. அக்குண்ணி → அக்குணி = அறுக்கப்பட்ட சிறு துண்டு. “இ” செயப். வி.முத. ஈறு.]

அக்குணிப்பிள்ளை

அக்குணிப்பிள்ளை akkuṇippiḷḷai, பெ. (n.)

   1. சிறுகுழந்தை ; child congenitally small.

   2. நாடிக் குற்றத்தினால் (தோஷத்தினால்); அல்லது காரணந் தெரியாது இளைத்துச் சிற்றளவாகவுள்ள குழந்தை ; child abnormally small due to bad humours of the system or to emaciation with no obvious cause, Marasmus infantalis (சா.அக.);.

     [புள் – பிள் → பிள்ளை.]

அக்குணி பார்க்க ;see akkuni.

அக்குத்தாப்பாபேசு-தல்

 அக்குத்தாப்பாபேசு-தல் akkuttāppāpēcutal, செ.கு.வி. (v.i)

   முறைகேடாகப் பேசுதல்; to speak indecently. (வ.சொ.அக.);

     [எக்குத்தப்பாகப்பேசு→அக்குத்தப்பாகப் பேசு]

அக்குத்தொக்கு இல்லாதவன்

 அக்குத்தொக்கு இல்லாதவன் akkuttokkuillātavaṉ, பெ.(n.)

 orphan.

     “பாசத்தைப் பெறவோ செலுத்தவோ யாரும் இல்லாதவன்”;

 One who has none to be affectionate

     “அவனுக்குஅக்குதொக்குஇல்லை” (வ.சொ.அக.);

அக்குரன்

 akkuran

பெ. (n.);

   கடையெழுவள்ளல்களுள்ஒருவன்; one of the seven beneficient chieftains in ancient Tamil nadu.

     “அக்குரன் அனையை”. (பதிற்றுப்);.

மறுவ. அக்குமாரன்.

தெ.அக்குட(ஆற்றல் சான்றமறவன்);

த.அக்காடு-முடிவுக்கு கொண்டுவா.

     [அக்கு-பணியச்செய், அடக்கியாள்]

அக்குப்பீளை

 அக்குப்பீளை akkuppīḷai, பெ. (n.)

   கண் பீளை; muco-purulent discharge from the eyes (சா.அக.);.

     [அக்கு + பீளை.]

     [Skt. akra → த. அக்கு.]

அக்குரன்

 அக்குரன் akkuraṉ, பெ. (n.)

   இடையேழு வள்ளல்களுளொருவன் (பிங்.);; name of a liberal chief, one of sevan idai-vallai, q.v.

     [Skt. a-krura → த. அக்குரன்.]

அக்குரு

அக்குரு akkuru, பெ. (n.)

   1. விரல்; finger.

   2. அகில் பார்க்க;see agil.

அக்குருக்கி

 அக்குருக்கி akkurukki, பெ. (n.)

   எலும்புருக்கி என்னும் நோய் ; consumption (W.);— a disease causing necrosis or degeneration of the bone, Osteonecrosis (சா.அக.);.

     [அக்கு + உருக்கி. அக்கு = எலும்பு. உருகு (த.வி.); → உருக்கு (பி.வி.); → உருக்கி. ‘இ’ வி.முத. ஈறு.]

அக்குரூரன்

 அக்குரூரன் akkurūraṉ, பெ. (n.)

   யாதவர் தலைவருள் ஒருவன் (பாகவத.);; name of a уādava, a devotee and uncle of Krsna.

     [Skt. a-krura → த. அக்குரூரன்.]

அக்குரோசம்

 அக்குரோசம் akkurōcam, பெ. (n.)

   கருஞ் சீந்தில்; a black variety of. சீந்தில்; moon creeper, Menispermum cordifolium alias Tinosphora Cordifolia (சா.அக.);.

     [P]

அக்குரோணி

அக்குரோணி akkurōṇi, பெ. (n.)

   பெரும்படை வகை; army consisting of 21,870 chariots, 21,870 elephants, 65,610 horses, and 109,350 foot soldiers, according to Skt. authorities, Tamil nigandus giving differently.

     [Skt. aksauhini → த. அக்குரோணி.]

அக்குரோதம்

 அக்குரோதம் akkurōtam, பெ. (n.)

   காமப்பூ; a flower which excites venery, Cupid’s plant, Pergularia minor alias p. tomentosa (சா.அக.);.

அக்குல்லி

அக்குல்லி akkulli, பெ. (n.)

   1. அஃகுல்லி பார்க்க ;see akkulli,

   2. ஒருவகைச் சிற்றுண்டி (சங்.அக.); ; a kind of confectionary.

   3. பிட்டு (மு.அ.); ; a kind of steamed meal cake.

ஒ.நோ ; Skt. {Saskuli}

     [அஃகுல்லி → அக்குல்லி.]

அக்குல்லு

 அக்குல்லு akkullu, பெ. (n.)

   நெல்வகை (நெல்லிடு.);; a kind of paddy.

தெ. அக்குல்லு

அக்குளு

அக்குளு akkuḷu, பெ. (n.)

   அக்குள் கூச்சம் (கலித். 94 ; 20. உரை);; tickling sensation in the armpit.

     [அக்குள் – அக்குளு (முத.தொ.பெ.); = அக் குளுப்பு.]

அக்குளு-த்தல்

அக்குளு-த்தல் akkuḷuttal,    4 செ.கு.வி. (v.i.)

   அக்குளிற் கூச்சமுண்டாக்குதல் ; to tickle the armpit.

     “அக்குளுத்துப் புல்லலு மாற்றேன்”‘ (கலித். 94 ; 20);.

     [அக்குள் (பெ.); → அக்குளு (வி.);]

அக்குளுக் காட்டு-தல்

அக்குளுக் காட்டு-தல் akkuḷukkāṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   அக்குளிற் கூச்சமுண்டாக்குதல் (கிச்சுக்கிச்சு மூட்டுதல்); (கலித். 94;20. உரை); ; to tickle the armpit.

     [அக்குள் → அக்குளு காண் (த.வி. → -காட்டு (பி.வி.);. காண் + து – காட்டு. காட்டுதல் = காண்பித்தல், தோற்றுதல், உண்டாக்குதல்.]

அக்குள்

 அக்குள் akkuḷ, பெ. (n.)

   விலாக்குழி, கமுக்கூடு; armpit.

ம. அக்குளம் ; க. கங்குழு, கங்குள், கவுங்குள்; தெ. சங்க, கெளங்குலி, து. கங்கள.

     [ஒருகா. அக்கு (அக்கம்); = பக்கம். உள் = உள்ளிடம். ஒ.நோ; பக்கம் = சிறகு.]

அக்கிள் என்பது கொச்சை வடிவு.

அக்குள் கட்டி

 அக்குள் கட்டி akkuḷkaṭṭi, பெ. (n.)

   அக்குளில் நிலப்பூசணிக் கிழங்களவு பருமனுங் கெட்டியுமாய் எழும்பும் கட்டி ; inflammatory swelling of a lymphatic gland of the size of white yam under the armpit, Bubo (சா.அக.);

அக்குள் படை

 அக்குள் படை akkuḷpaḍai, பெ. (n.)

   அக்குளில் தோன்றும் படை ; ringworm of the axilla (armpit);, Tinea axillaris (சா.அக.);.

அக்குள் மயிர்

 அக்குள் மயிர் akkuḷmayir, பெ. (n.)

   கமுக்கூட்டு மயிர் ; the hairs in the armpit (axilla);, Glandebalae (சா.அக.);.

     [மை = கருப்பு. மை → மயி → மயிர் = கரிய முடி.]

அக்குள் பார்க்க ;see akkul.

அக்குள்பாய்ச்சு-தல்

அக்குள்பாய்ச்சு-தல் akkuḷpāyccudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. விளையாட்டாகப் பிறர் கமுக்கூட்டுள் கைவிட்டு மெல்லச் சொறிந்து கூச்சமுண்டாக்குதல் ; to tickle a person’s armpit for fun.

   2. காமக் குறிப்பொடு ஒரு பெண்ணின் கமுக்கூட்டுள் கைவிடுதல் அல்லது கூச்சமுண்டாக்குதல் ; to touch or tickle a female person’s armpit as an amorous gesture.

ம. கிக்கிளி, கிக்கிளியிடல் ; க. அக்கள ; தெ. கிதகித பெட்டு,

     [பாய் (த.வி.); → பாய்ச்சு (பி.வி.);. ‘சு’ பி.வி. ஈறு.]

அக்குள் பார்க்க ;see akkul.

அக்குவடம்

அக்குவடம் akkuvaḍam, பெ. (n.)

   சங்குமணி வடம் ; string of shell beads for the neck or waist.

     “அக்கு வடமுடுத்து” (திவ். பெரியாழ். 1.7 ; 2);.

     [அக்கு = வெண்சங்கு. வள் → வட்டு → வட்டம் → வடம். உருண்டு திரண்ட கயிறு அல்லது தொடரி (சங்கிலி.]

அக்குவலி

 அக்குவலி akkuvali, பெ. (n.)

   எலும்புநோவு ; pain in a bone or in the bones, Ostealgia or Ostalgia (சா.அக.);.

அக்குவா

 அக்குவா akkuvā, பெ. (n.)

   சிற்றுண்டிவகை ; cake, sweet cake (சா.அக.);.

அக்கேனம்

 அக்கேனம் akāṉam, பெ. (n.)

அஃகேனம் பார்க்க ;see {akké nam}.

அக்கை

அக்கை akkai, பெ. (n.)

   1. அன்னை ; mother.

   2. உடன்பிறந்த மூத்தாள்; elder sister.

   3. அரத்த வுறவுற்ற அக்கை முறையாள்; cousin-sister.

   4. திருமணவுறவாலான அக்கை முறையாள்; a senior girl or woman who has become a cousin-sister through marriage alliance.

   5. மதிப்பினால் அல்லது அன்பினால் அக்கா என்று விளிக்கப்படும் அல்லது சொல்லப்படும் உறவல்லாத மூத்த பெண் ; an unrelated senior girl or woman addressed or spoken of as akka by courtesy or love.

     [அம்மை → அவ்வை → அக்கை.]

   செந்தமிழ் நடையில் அல்லது இலக்கண முறையில் எழுவாயாக வழங்கக் கூடிய வடிவம், அக்கை என்பதே. அக்கா என்பது கொச்சை; அக்காள் என்பது கொச்சையும் வழுவுங் கலந்தது;   இருளர் பேச்சில் தாயைக் குறிக்கும் அக்வெ என்னுஞ் சொல், அக்கல்வை (அக்கை + அவ்வை); என்னும் இணைச்சொல்லின் திரிபாயிருக்கலாம். இது, சில வகுப்பார் தந்தையை அப்பச்சி என்று வழங்குவது போன்றது;   அக்கை யென்னும் திரவிடச்சொல் சித்திய மொழிகளிற் பெருவழக்காக வழங்கினும், அது திரவிடச் சொல்லேயன்றிச் சித்தியச் சொல்லாகாது. அக்கை யென்பதன் இனச் சொல் சித்திய மொழிகளில் தங்கையையும் குறித்தலால், அது முதுமையையுணர்த்தும் ‘அக்’ என்னும் மூலத்தினின்று தோன்றியதென்பதும் பொருந்தாது;   மேலும், உலக முதல் உயர்தனிச் செம்மொழியாயிருப்பதும், சொல்வளம் மிக்கதென்று கால்டுவெலாராற் பாராட்டப்பெற்றதுமான தமிழ், அக்கையைக் குறிக்கச் சொல்லின்றிச் சித்தியமொழிக் குடும்பத்தினின்று கடன்கொண்டதென்பது, உத்திக்குப் பொருந்துவதன்று;   பொதுவாக, அன்னைமுறைப் பெயர்களே அக்கைக்கும் வழங்கிவருகின்றன. அவ்வை, அக்கை, அத்தி, அச்சி என்னும் நாற்பெயரும் தாய்க்கும் மூத்த உடன்பிறந்தாட்கும் பொதுவாயிருத்தலையும், அவை தாயையே முந்திக் குறித்தலையும் நோக்குக;   வகரம் ககரமாகத் திரிவது பன்மொழிப் பொதுவியல்பு;எ-டு : சிவப்பு → சிகப்பு. E. ward-guard,

   செவ்வல் என்பது செக்கல் என்று திரிந்திருத்தலால், அவ்வை என்பதே அக்கையென்று திரிந்திருத்தல் வேண்டும்;அவ்வை யென்னுஞ் சொன்மூலத்தை, அச்சொல்லுருப்படியிற் காண்க.

     “Can. and Tel, akka, elder sister; Tam, akkei, akka, and akkal; Marațhi akka. In Sansakka-signifies a mother; and an improbable Sans, derivation has been attributed to it by native scholars. I believe this word to be one of those which the Sans. has borrowed from the indigenous Dravidian tongues; and this supposition is confirmed by its extensive use in the Scythian group. The Sans. signification of this word, a mother, differs, it is true, from the ordinary Dravidian meaning, an elder sister; but mother is one of its meanings in poetical Tamil, and a comparison of its significations in various languages shows that it was originally used to denote any elderly female relation, and that the meaning of the ultimate base was probably ‘old’. The following are Scythian instances of the use of this root with the meaning of elder sister, precisely as in the Dravidian languages; Tungusian oki or akin; Mongolian achan; Tibetan achche; a dialect of the Turkish ege; Mordvin aky; other Ugrian idioms iggen. The Lappish akke signifies both wife and grandmother. The Mongolaka, Tungusian aki, and the Uigur acha, signify an elder brother; whilst the signification of old man is conveyed by the Ostiak iki, the Finnish ukko, and the Hungarian agg. Even in the Ku. a Dravidian dialect, akke means grandfather. The ultimate base of all these words is probably ak, old. On the other hand, akka, in Osmanli Turkish, means a younger sister; and the same meaning appears in several related idioms. It may, therefore, be considered possible that akka meant originally sister; and then clāer sister or younger sister, by secondary or restricted usage. The derivation of akka, from a root signifying old, would appear to be the more probable one.” (C.G.D.F.L.pp. 611-12);.

அக்கைச்சி

 அக்கைச்சி akkaicci, பெ. (n.)

   மூத்த உடன் பிறந்தாள் ; elder sister.

ம. அக்கச்சி

     [அக்கை + அச்சி – அக்கைமச்சி → அக்கைச்சி.. அச்சி = தாய்.]

   அக்கை தாய் போன்றவளாதலால், அச்சி என்பது மதிப்பும் அன்பும் பற்றிப் பின்னொட்டாகச் சேர்க்கப்பட்டது;   அக்கை என்பது தாயைக் குறிக்குமாயின், அக்கைச்சி அல்லது அக்கச்சி என்பது அம்மாச்சி என்பது போன்று பாட்டியைக் குறிக்கும்;அக்கச்சி பார்க்க ;see akkacci.

அக்கோ

 அக்கோ akā, இடை. (int.)

   வியப்பு, இரக்கம், துயரம் முதலியவற்றையுணர்த்தும் குறிப்பு ; an exclamation of wonder, pity, grief etc.

     [அக்கை → அக்கோ (விளி);. அக்கை என்பது முதற்காலத்தில் தாயைக் குறித்ததனால், அதன் விளிவடிவம் வியப்பு, இரக்கம் முதலியவற்றையுணர்த்தும் குறிப்பிடைச் சொல்லாயிற்று. ஒ.நோ.; அம்மை → அம்மோ, அன்னை → அன்னோ.]

அக்கோடகம்

 அக்கோடகம் agāṭagam, பெ. (n.)

   கடுக்காய்; Indian gall nut or ink nut, Terminalia Chebula (சா.அக.);.

அக்கோடிகம்

 அக்கோடிகம் agāṭigam, பெ. (n.)

   கருஞ்சூரை; a black variety of the shrub, Jujubi-zizyphus oenoplia (சா.அக.);.

அக்கோணி

அக்கோணி akāṇi, பெ. (n.)

   பெரும்படை வகை; vast army.

     “எழுப தக்கோணி புடமுள செங்களம்” (திருவகுப்பு. சித்து. 43);.

     [Skt. aksauhini → த. அக்கோணி.]

அக்கோரம்

 அக்கோரம் akāram, பெ. (n.)

   ஊசிக் காந்தம்; the magnetic oxide or iron which attracts needles;

 load stone, Feri Oxidum, a combination of the protoxide and peroxide of iron (சா.அக.);.

அக்கோலம்

அக்கோலம் akālam, பெ. (n.)

   1. தேற்றாங் கொட்டை ; clearing nut, so called from its power of purifying muddy water.

   2. தேற்றாமரம் ; clearing nut tree, Strychnos pototorium (சா.அக.);.

     [ஒருகா. அம் + கோலம் – அங்கோலம் → அக்கோலம்.]

அஙினே

 அஙினே aṅiṉē, வி.எ. (adv.)

அங்கே,

 there.

அஙினே போய்ப் பார் (இ.வ.);.

அஙினேயிஙினே

 அஙினேயிஙினே aṅiṉēyiṅiṉē, வி.எ. (adv.)

   அங்கேயிங்கே; here and there.

அஙினே யிஙினே கிடக்கிறதை யெல்லாம் பொறுக்கு (இ.வ.);.

அங்ககசாயம்

அங்ககசாயம் aṅgagacāyam, பெ. (n.)

   1. வித்தமிழ்து, விந்து; the essence of the body referring to the semen virile.

   2. சிறுநீர்; urine (சா.அக.);.

அங்ககணிதம்

 அங்ககணிதம் aṅgagaṇidam, பெ. (n.)

   எண்கணிதம்; arithmetic.

     [அங்கம் + கணிதம்.]

     [Skt. anga → த. அங்கம்.]

அங்ககம்

அங்ககம் aṅgagam, பெ. (n.)

   1. உடலுறுப்பு; organ of the body.

   2. உடலுறுப்புகளின் உட்பகுதி; the interior part of an organ (சா.அக.);.

     [அங்கம் + அகம்.]

     [Skt. anga → த. அங்கம்.]

அங்ககாரம்

அங்ககாரம் aṅgakāram, பெ. (n.)

   நாட்டிய வகை (திருவினை. கான்மா.9);; a mode of dancing.

     [அங்க(ம்); + காரம்.]

     [Skt. anga → த. அங்கம்.]

     [P]

அங்ககீனன்

 அங்ககீனன் aṅgaāṉaṉ, பெ. (n.)

   உடம்பினில் ஊனமுற்றவன்; one who is wanting in the perfection of bodily organs or having organic deformity (சா.அக.);.

     [Skt. anga + hina → த. அங்ககீனன்.]

அங்கக்கறிப்பு

அங்கக்கறிப்பு aṅgakkaṟippu, பெ. (n.)

   1. உடம்பின் அமைப்பு;   2. உடலுறுப்பினால் காட்டும் சைகை; any action of the body or limbs intended to express in idea or feeling such as, nodding the head to express assent or dissent etc.,

   3. ஆண் அல்லது பெண் காட்டும் காதல் வெளிப்பாடு காமக்குறிப்பு

   4. பிணியுற்றார்தம் உடம்பிற் காணும் அடையாளங்கள்;     [அங்கம் + கறிப்பு.]

     [Skt. anga → த. அங்கம்.]

கறி → கறிப்பு.

அங்கக்களரி

அங்கக்களரி aṅkakkaḷari, பெ. (n.)

   ஒரு மதிப்புரவுச் சின்னம்; an honorary symbol offered by a king.

     “நமக்கு உண்டான வரிசை: பாவாடை, சேமயிர் அடக்கம், நாடகசாலை, பகல்விளக்கு, ஏறச்சங்கு, இறங்கு சங்கு, அங்கக்களரி, புலித்தண்டை” (IPS.715.);.

     [அங்கம்+களரி]

 அங்கக்களரி aṅgakkaḷari, பெ. (n.)

   கோயிலில் காணிக்கை யளித்தோர்க்குச் செய்யும் மதிப்புரவு (இ.வ.);; honours to liberal donors, in a temple.

     [அங்கம் + களரி.]

     [Skt. anga → த. அங்கம்.]

அங்கக்காரன்

அங்கக்காரன் aṅgakkāraṉ, பெ. (n.)

   1. மெய்க்காவலன் (திவ். நாய்ச்சி. 9, உரை);; body-guard.

   2. அழகுபடுத்திக் கொள்வோன்; dandy, top.

   3. முகமூடிக்காரன், பொய்த் தோற்றங்காட்டுவோன்; masquerader.

     [அங்க(ம்); + காரன்.]

     [Skt. anga → த. அங்கம்.]

அங்கக்கிரகம்

 அங்கக்கிரகம் aṅgaggiragam, பெ. (n.)

   உடல் வலுவின்மையால் கெண்டைக்கால், கைகளில் தானாகவே காணும் நரப்பிசிவு; a spasmodic and painful contraction of the muscles of the calf and the arm observed in weak or debilitated persons or in those of neurotic tendency-cramps (சா.அக.);.

அங்கக்கிரியை

அங்கக்கிரியை aṅkakkiriyai, பெ. (n.)

   தாளம் போடும் போது கையாற் செய்யும் வினைகள்; poses of body and movements while dancing.

     [அங்கம்+skt.கிரியை]

 அங்கக்கிரியை aṅgakkiriyai, பெ. (n.)

   மெய்யாற் செய்யும் கூத்துத் தொழில் (சிலப். 3, 12. உரை.);;     [Skt. anga + kriya → த. அங்கக்கிரிகை.]

அங்கக்குறி

அங்கக்குறி aṅgakkuṟi, பெ. (n.)

   1. உடம்பின் குணம்; bodily symptom.

   2. உடம்பின் அடையாளம்; descriptive marks on the body.

   3. ஆண் அல்லது பெண்குறி; genital of a male or a female (சா.அக.);.

     [அங்கம் + குறி.]

     [Skt. anga → த. அங்கம்.]

அங்கக்குறிப்புநூல்

 அங்கக்குறிப்புநூல் aṅgakkuṟippunūl, பெ. (n.)

   உடலமைப்பைப் பற்றியும், உடலுறுப்புகளின் குறிப்புகளைப் பற்றியும், சொல்லும் நூல்; science dealing in the general designs of the body and its organs, as learned by dissection, Anatomy (சா.அக.);.

     [அங்கம் + குறிப்பு + நூல்.]

     [Skt. anga → த. அங்கம்.]

அங்கக்கூறு

அங்கக்கூறு aṅgakāṟu, பெ. (n.)

   1. உடம்பின் இயல்பு வேறுபாடு முதலியவை; peculiarity of the constitution or temperament idiosyncrasy.

   2. உடற் பகுதிகள்; different parts of the body.

   3. உடம்பின் தன்மை; nature of the body (சா.அக.);.

     [அங்கம் + கூறு.]

     [Skt. anga → த. அங்கம்.]

அங்கக்கோற்பூச்சி

 அங்கக்கோற்பூச்சி aṅgakāṟpūcci, பெ. (n.)

   உடம்பினுள்ளிருக்கும் கோற்புழு; a round Worm found inside the body (சா.அக.);.

     [அங்க(ம்); + கோல் + பூச்சி.]

     [Skt. anga → த. அங்கம்.]

அங்கங்கு

 அங்கங்கு aṅgaṅgu, சு.வி.எ. (demons. adv.)

   அந்தந்த இடத்தில் ; here and there, at different places.

     ‘அங்கங்கு குறுணி அளந்துகொட்டிக் கிடக்கிறது’ (பழ.);.

     [அங்கு + அங்கு.]

அங்கங்கே

அங்கங்கே aṅgaṅā, சு.வி.எ. (demons. adv.)

அங்கங்கு பார்க்க ;see angangu.

     “அங்கங்கே கலைகள் தேறும் அறிவன்போல் இயங்கும்” (திருவிளை. தருமிக்கு. 19);.

     [அங்கு + அங்கு + ஏ.]

அங்கசங்கம்

அங்கசங்கம்1 aṅgasaṅgam, பெ. (n.)

   மெய்யுறு புணர்ச்சி (சித்தா. நி. 35);; sexual intercourse.

     [அங்க(ம்); + சங்கம்.]

     [Skt. anga → த. அங்கம்.]

சங்கம் → Skt. sanga.

 அங்கசங்கம்2 aṅgasaṅgam, பெ. (n.)

   ஆரவாரப் பகட்டு; ostentation, foppery.

     “அவன் அங்கசங்கமாயுள்ளவன்” (இ.வ.);.

     [Skt. anga → த. அங்கம்.]

அங்கசன்

அங்கசன்1 aṅgasaṉ, பெ. (n.)

   காமவேள் (பிங்.);; Kaman as born in the mind.

     [Skt. anga-ja → த. அங்கசன்.]

 அங்கசன்2 aṅgasaṉ, பெ. (n.)

   மகன் (நாநார்த்த.);; son.

     [Skt. anga-ja → த. அங்கசன்.]

அங்கசபிசாகம்

 அங்கசபிசாகம் aṅgasabisākam, பெ. (n.)

   கருநாயுருவி; black variety of the plant, Indian burr, Achyrantnes aspera (சா.அக.);.

அங்கசம்

அங்கசம் aṅgasam, பெ. (n.)

   1. குருதி; blood.

   2. நோய்; disease, sickness.

   3. மயிர்; hair.

   4. காமம்; sexual enjoyment.

   5. சங்குச் செய்ந் நஞ்சு; an acid prepared from a kind of impure arsenic called ‘sangupashanam’ used in Indian medicine.

   6. ஆயுள்வேதப்படிப் பல மூலிகைகளின் உப்பெடுத்தும் செய்யும், ஒரு நீர்மம்; according to ayurveda, an acid prepared from different kinds of salts obtained by incinerating the roots of several plants.

   8. குடிமயக்கம்; intoxication (சா.அக.);.

     [Skt. anga-ja → த. அங்கசம்.]

அங்கசலனம்

அங்கசலனம் aṅgasalaṉam, பெ. (n.)

   1. உடல் நடுக்கம்; an inroluntary trembling of the body through cold, fear or desease.

   2. உடல் அதிர்வாட்டம்; alternate contraction and relaxaction of the muscles of the body, Tremor (சா.அக.);.

     [அங்கம் + சலனம்.]

     [Skt. anga → த. அங்கம்.]

அங்கசலனவாதம்

அங்கசலனவாதம் aṅgasalaṉavātam, பெ. (n.)

   ஊதைநோய் தோற்றும் உணவுப் பண்டங்களை உண்பதால், வளிமிகுந்து நாடி நரம்புகளைத் தாக்குவதனால், அது உடம்பு முழுவதும் பரவிக்கை கால்களில், நடுக்கத்தை உண்டாக்கும், ஒரு வகை வளி(வாத); நோய்; a kind of paralysis, progressive in its course by the aggravated condition of vayuarising from consumption of food containing excess of starchy substances, it effects the whole nervous system and is marked by a characteristic tremor of the limbs and the head and is also know as paralysis agitans, shaking palsy or parkinson’s disease, and is most common in males over 40 years of age (சா.அக.);.

அங்க + சலன(ம்); + வாதம்.]

     [Skt. anga + vata → த. அங்கவாதம்.]

அங்கசாதனம்

அங்கசாதனம்1 aṅgacātaṉam, பெ. (n.)

   உடற்பயிற்சி; bodily exercise (சா.அக.);.

     [Skt. anga + sadhana → த. அங்கசாதனம்.]

 அங்கசாதனம்2 aṅgacātaṉam, பெ. (n.)

   உடலுறுப்புகளால் காட்டும் அடையாளம்; body sign, mark.

த.வ. உடற்குறி.

     [Skt. anga + sadhana → த. அங்கசாதனம்.]

அங்கசாதனம்பிடி-த்தல்

அங்கசாதனம்பிடி-த்தல் aṅgacātaṉambiḍittal,    4 செ.கு.வி. (v.i.)

   துப்பறிதல்; to find out anything by signs or circumstances, fixing suspicion upon one.

த.வ. உளவறிதல்.

     [அங்கசாதனம் + பிடி-த்தல்.]

     [Skt. anka + sadhana → த. அங்கசாதனம்.]

அங்கசாலை

அங்கசாலை aṅgacālai, பெ. (n.)

   வேளாண் குடிகள் செலுத்தும் வரிவகை (I.M.P.Cg. 1095.);; a tax paid by cultivators.

     [அங்கம் + சாலை.]

     [Skt. anga → த. அங்கம்.]

அங்கசாலைக்காரன்

 அங்கசாலைக்காரன் aṅgacālaikkāraṉ, பெ. (n.)

   ஊர் நலப்பணியாளன்; village servant who, by order of the headman, assembles the villagers and procures things wanted.

     [அங்க(ம்); + சாலைக்காரன்.]

     [Skt. anka → த. அங்கம்.]

அங்கசுத்தம்

 அங்கசுத்தம் aṅgasuttam, பெ. (n.)

   அணிவகை; an ornament.

அங்கசுபாதி

 அங்கசுபாதி aṅgasupāti, பெ. (n.)

   சிறுபுள்ளடி; a medicinal plant hedysaram (சா.அக.);.

     [P]

அங்கசூதம்

 அங்கசூதம் aṅgacūtam, பெ. (n.)

   கொன்றை (சித். அக.);; Indian labarnum.

அங்கசேட்டை

அங்கசேட்டை aṅgacēṭṭai, பெ. (n.)

   1. கால் கைகளாற் குறும்பியற்றல்; doing mischief with the limbs.

   2. கை கால்களை வறிதே யாட்டுகை; antic gestures.

     “அங்கசேஷ்டை புரியாமல்” (திருவேங். சத.63.);.

த.வ. புலக்குறும்பு

     [Skt. anga + cesta → த. அங்கசேட்டை.]

அங்கசேதனம்

 அங்கசேதனம் aṅgacētaṉam, பெ. (n.)

   உடம்பினுறுப்பை அறுத்தகற்றுகை; the removal of limb or part of the body by using knife, ligature, or any other means, amputation (சா.அக.);.

     [அங்கம் + சேதனம்.]

     [Skt. anga + chedana → த. அங்கசேதனம்.]

அங்கசேதனவித்தை

 அங்கசேதனவித்தை aṅgacētaṉavittai, பெ. (n.)

   உடற்கூற்று நூல் (புதுவை);; anatomy.

     [அங்கம் + சேதனம் + வித்தை.]

     [Skt. anga + cetana → த. அங்கசேதனம்.]

     [த. வித்தை → Skt. vidya.]

அங்கசேதம்

அங்கசேதம் aṅgacētam, பெ. (n.)

   1. உடம்பினுறுப்புகளைத் தறித்தல் அல்லது அழித்தல்; excision or mutilation of a member of part of the body, amputation.

   2. உறுப்புக்குறைவு; absence or defect of any part of organ.

   3. உறுப்பழிவு; loss by mutilation etc. of an organ or a part these of (சா.அக.);.

     [அங்க(ம்); + சேதம்.]

     [Skt. anga → த. அங்கம்.]

அங்கசேவை

அங்கசேவை aṅgacēvai, பெ. (n.)

   குருவின் திருவடி தொழுகை (விவேகசிந்.26);; personal service to a preceptor, as washing his feet, etc.

த.வ. பாதத்தொழுகை.

     [Skt. anga + seva → த. அங்கசேவை.]

அங்கசோதனை

 அங்கசோதனை aṅgacōtaṉai, பெ. (n.)

   உடம்பை ஆராய்கை; examination of the body (சா.அக.);.

     [Skt. anga + sodhana → த. அங்கசோதனை.]

அங்கச்சோர்வு

 அங்கச்சோர்வு aṅgaccōrvu, பெ. (n.)

   ஆண்குறித் தளர்ச்சி; want of erectile power in the penis impotency (சா.அக.);.

     [அங்க(ம்); + சோர்வு.]

     [Skt. anga → த. அங்கம்.]

அங்கடத்தன்

 அங்கடத்தன் aṅgaḍattaṉ, பெ. (n.)

   பாசிப்பயறு ; green gram, Phaseolus mungo (சா.அக.);.

அங்கடியிங்கடி

 அங்கடியிங்கடி aṅgaḍiyiṅgaḍi, சு.வி.எ. (demons.adv.)

   அங்குமிங்கும் ; here and there (Näfi.);.

அங்கிடியிங்கிடி (தொ.வ.);.

     [அங்கு + இடை + இங்கு + இடை.]

அங்கணநீர்

அங்கணநீர் aṅkaṇanīr, பெ. (n.)

   சாய்க்கடை நீர்; drainage water.

     “ஊர் அங்கணநீர் உரவு நீர்ச் சேர்ந்தக்கால்” (நால. 18:5.);.

     [அங்கணம்+நீர்]

அங்கணன்

அங்கணன் aṅgaṇaṉ, பெ. (n.)

   1. கண்ணழகன்; one who has beautiful eyes.

     “அங்கணனுக்குரியார்” (கம்பரா. பால. கடிமண. 96);.

   2. அருளாளன், அருட்பார்வையன் ; one who has gracious eyes.

     “அழக னங்கணன்” (கம்பரா. அயோத். சித்திர. 1);.

   3. சிவன்;{Šiva,}

 as gracious-eyed.

     “அங்கணனே யருளாய்” (தேவா. 7.25;4);.

 அங்கணன் aṅgaṇaṉ, பெ. (n.)

அங்கண பாடாணம் பார்க்க;see angina-padanam (சா.அக.);.

அங்கணப்பிரியம்

அங்கணப்பிரியம் aṅgaṇappiriyam, பெ. (n.)

   1. பெண்ணிற்குகந்தது; dear to woman.

   2. அசோகு; asoka tree, saraca indica (சா.அக.);.

     [Skt. angina + priya → த. அங்கணப்பிரியம்.]

அங்கணம்

அங்கணம் aṅgaṇam, பெ. (n.)

   1. சாய்கடை (சலதாரை); ; drain, ditch, sewer.

     ‘ஊரங் கண நீர் உரவுநீர் சேர்ந்தக்கால்” (நாலடி. 175);.

   2. சாய்கடை யொட்டிய உள்முற்றம் ; inner courtyard in a house,

   3. சேறு (பிங்.); ; mud.

   4. கட்டடப் பிரிவு (இராட்.); ; division of a building chamber, room (R.);.

   5. இரு தூண்களுக்கு கிடைப்பட்ட இடம் (இராட்.); ; space between two pillars (R.);.

க. அங்கண

   6. நான்கு தூண்களுக்கிடைப்பட்ட இடம் (C.G.); ; space enclosed by four pillars.

   7. மனைக்குரிய 72 சதுர அடி நிலப்பரப்பளவு (C.G.);; superficial measure for house sites, about 12 ft. long by 6ft. broad.

தெ. அங்கணமு.

   8. இடம் (திருநூற். 18, உரை);; space, place.

ம. அங்கணம்.

ம. அங்கணம் ; க., து, வ. பிராகி, மரா. அங்கண ; தெ. அங்கணமு; குவி. அங்கணி ; பா. அங்கணம் ; குச். ஆங்குணம் ; இந். அங்கண், ஆங்கண்.

     [வங்கு → அங்கு. அங்குதல் = சாய்தல். வளைதல். அங்கு + அணம் – அங்கணம். கழிநீர் செல்லும் சாய்கடை, வாட்டஞ்சாய்வாயிருப்பதால் அங்கணம் எனப்பட்டது.]

 அங்கணம் aṅgaṇam, பெ. (n.)

   1. கடுக்காய் (வை.மு.); ; chebulic myrobalan.

   2. வெள்ளெருக்கு ; white madar, l. sh., Calotropis giganteaalbiflora.

 அங்கணம் aṅgaṇam, பெ. (n.)

   ஒரு கணியநஞ்சு (மிருத பாடாணம்); (மு.அ.); ; a mineral poison.

மறுவ. அங்கவன்

 அங்கணம்1பெ. (n.)    திறந்தவெளிக் குளிப்பிடம்; Open bathing place.

     “இப்படிஅங்கணமாஇருந்தாஎப்படிக்குளிக்கிறது” (வ.சொ.அக);

   2. வீட்டினுள் அங்கணம் போன்று அமைத்த கழுதை கட்டுமிடம்; stable of ass. (வ.சொ.அ.க);.

     [அங்கு+கணம்]

 அங்கணம் aṅkaṇam, பெ. (n.)

   வீட்டின் அளவினைக் குறிக்கப் பயன்படும் சொல்; anganam a tamil word used to measure house area.

     [(அங்கணம்); முற்றத்தைக் குறித்த சொல். நீட்டளலவுகுறித்த அங்கணமாயிற்று);]

 அங்கணம் aṅgaṇam, பெ. (n.)

   1. கடுக்காய் மரம்; common myrobalan tree, Indian myrobalan, Terminalia chebala.

   2. பத்து முழஅளவு;   10 cubit’s measure.

   3. உப்பு (இலவணம்);; any salt, but generally common salt.

   4. பொரிகாரம்; an artificial or manufactured salt borax, a mineral chemically called sodium biborate. (Na2B4O7); (சா.அக.);.

அங்கணர்தம்பாணி

 அங்கணர்தம்பாணி aṅkaṇartampāṇi, பெ. (n.)

   ஆறு நரம்புகளையுடைய பண்; tune from six stringed musical instrument.

     [அங்கணி+தம்+பாணி]

அங்கணாரிட்டு

அங்கணாரிட்டு aṅkaṇāriṭṭu, வி.எ. (adv.)

   புருவநெறித்து; shrinking the borw.

     “சொக்கணும் அங்கணாரிட்டுத் துடை தட்டிச் சிரித்தருளி” (தி.தி. 52::8.);.

     [அம்+கண்+(ஏறிட்டு);ஆரிட்டு (சொ.வ.]

அங்கணாளன்

அங்கணாளன் aṅgaṇāḷaṉ, பெ. (n.)

   1. கண்ணோட்ட முடையவன் ; gracious person, as one who looks with favour.

     “அறனறிந் தொழுகு மங்க ணாளனை” (கலித்.144 ; 70);.

   2. சிவபெருமான் ; Lord Siva.

     “கைக்கொண்ட அங்கணாளன் றிருவுருவம்” (காஞ்சிப்பு. சிவ்புண். 33);.

     [அங்கண் + ஆளன் – அங்கணாளன்.]

அங்கணாளர்,

அங்கணாளர்,பெ. (n.)    சிவன்; Siva

     “அங்கனாளர்தம்அபிமுகத்தினில்அடிஉறைப்போல்” (பெரிய2986);

     [அம்+கண்+(அறிட்டு); ஆரிட்டு); (சொ.வ.);]

அங்கணி

 அங்கணி aṅgaṇi, பெ. (n.)

   சிவை (மலைமகள்); (சங். அக.); ; Malaimagal (Pārvat);, as gracious eyed.

 அங்கணி aṅgaṇi, பெ. (n.)

   கற்றாழை (மலை.); ; aloe.

 Skt. afganä.

அங்கணிதம்பூண்டு

 அங்கணிதம்பூண்டு aṅgaṇidambūṇṭu, பெ. (n.)

   பருத்தி ; cotton plant, Gossypium arboreum (சா.அக.);.

அங்கணேல்-தல்

அங்கணேல்-தல் aṅgaṇēltal,    துயிலுணர்தல் (தூக்கத்தினின்று விழித்தல்) ; to awake.

     “தேவியை……… அங்கணேற்றபிற் காணாது” (பெருங். வத்தவ. 7.92);.

     [அங்கண் + ஏல் – அங்கணேல்.]

அங்கண்

அங்கண் aṅgaṇ, சு.வி.எ. (demons. adv.)

   அவ்விடம் ; there.

     “அங்க ணுற்றிலர்” (கந்தபு. சூரன்தண்டஞ் 29);.

     [அங்கு + அண்.]

 அங்கண் aṅgaṇ, பெ. (n.)

   1. அழகிய கண் ; beautiful eye.

   2. கண்ணோட்டம் ; kindness, favouritism.

     “அங்க ணுடைய னவன்” (கலித். 37 ; 22);.

     [அம் + கண் – அங்கண். அம் = அழகிய, பொருந்திய, அன்பான.]

 அங்கண் aṅgaṇ, பெ. (n.)

   அழகிய இடம் ; beautiful spot.

     “அங்கண் விசும்பி னகனிலா” (நாலடி. 151);.

     [அம் + கண் – அங்கண். அம் = அழகிய, கண் = இடம்.]

அங்கண்ணன்

அங்கண்ணன் aṅgaṇṇaṉ, பெ. (n.)

   1. அழகிய கண்ணுடையவன் ; one with beautiful eyes.

   2. மிகுந்த ஆர்வமுள்ளவன் ; one who is very affectionate.

     “அங்கண்ண னுண்டவென் னாருயிர்க்கோதிது” (திவ். திருவாய். 9.6 ; 6);. | 3. சிவன் ; {Śiva.}

     [அம் + கண் + அன் – அங்கண்ணன்.]

அங்கதச்செய்யுள்

அங்கதச்செய்யுள் aṅgadacceyyuḷ, பெ. (n.)

   வசைப்பாட்டு, அங்கதப்பாட்டு ; satire, lampoon.

     “வசையொடும் நசையொடும் புணர்ந்தன் றாயின் அங்கதச் செய்யுள் என்மனார் புலவர்” (தொல். பொருள். செய். 125);.

     [அங்கதம் + செய்யுள்.]

அங்கதந்திரம்

 அங்கதந்திரம் aṅgadandiram, பெ. (n.)

   மந்திரவினை அல்லது செய்வினை பற்றியநூல்; a tantric science treating of magical diagrams, marks of figures (சா.அக.);.

த.வ. செய்வினை நூல்.

அங்கதன்

அங்கதன் aṅgadaṉ, பெ. (n.)

   வாலியின் மகன் (கம்பரா. அங்கதன்றூ. 9);; name of the son of Vali.

     [Skt. angada → த. அங்கதன்.]

அங்கதப்பாட்டு

அங்கதப்பாட்டு aṅgadappāṭṭu, பெ. (n.)

அங்கதச் செய்யுள் பார்க்க ;see arigada-c-ceyyul.

     “அங்கதப்பாட்டவற்றளவோ டொக்கும்” (தொல். பொருள். செய். 152);.

     [அங்கதம் + பாட்டு.]

அங்கதம்

அங்கதம் aṅgadam, பெ. (n.)

   1. வசை, பழிப்பு ; abuse

     ‘அங்கத மென்பது வசை’ (தொல். பொருள். செய். 124, பேரா. உரை);.

   2. அங்கதச் செய்யுள் பார்க்க ;see arigada-c-ceyyul.

   3. பொய் (அக.நி.); ; falsehood.

     “அங்கதந் தானே அரில்தபத் தெரியின் செம்பொருள் கரந்த தெனவிரு வகைத்தே” (தொல். பொருள். செய். 120);. “செம்பொரு ளாயின் வசையெனப் படுமே” (தொல். பொருள். செய். 121);. “மொழிகரந்து சொலினது பழிகரப் பாகும்” (தொல், பொருள். செய். 122);.

 அங்கதம் aṅgadam, பெ. (n.)

   தோட்கடகம் வாகுவளையம் ; bracelet worn on the upper arm.

     “புயவரை மிசை ………….. அங்கதம்” (திருவிளை. மாணிக். 12);.

ம. அங்கதம் ; க., வ. அங்கத ; தெ. அங்கதமு.

     [அங்குதல் = வளைதல். அங்கு → அங்கதம் = வளையல், கடகம்.]

 அங்கதம் aṅgadam, பெ. (n.)

   1. யானையின் உணவு ; food of elephants.

     “போந்த பிடியினமு மங்கதங் கிட்டாம லறமெலிந்து” (பஞ்ச. திருமுக. 158);.

 அங்கதம் aṅgadam, பெ. (n.)

   1. மார்பு (அக.நி.); ; breast.

   2. (மார்பினால் ஊர்ந்து செல்லும்); பாம்பு ; snake.

     “அங்கத மொக்குஞ் சில” (இரகு. யாகப். 71);.

அங்கதர்

அங்கதர் aṅgadar, பெ. (n.)

   வசைகூறுவோர் ; those who use abusive language, revilers.

     “பொலா வங்கதர்க் கெளியே னலேன்” (தேவா. 3.297;10);.

அங்கதாரி

அங்கதாரி aṅgatāri, பெ. (n.)

   1. ஆதன் (சீவன்);; soul.

   2. எலும்பு; bone.

   3. உடம்பு; body (சா.அக.);.

     [Skt. anga + darin → த. அங்கதாரி.]

அங்கதாளம்

அங்கதாளம் aṅgatāḷam, பெ. (n.)

   தாளவகை (பரத. தாள 4 உரை);;     [அங்கம் + தாளம்.]

     [Skt. anga → த. அங்கம்.]

அங்கதி

அங்கதி aṅgadi, பெ. (n.)

   1. வளி; wind.

   2. நெருப்பு; fire.

   3. நோய்; disease (சா.அக.);

     [Skt. anga → த. அங்கதி.]

அங்கதேவதை

அங்கதேவதை aṅgadēvadai, பெ. (n.)

   சிறுதெய்வம்; attendant deity of a superior god.

     “அங்கதேவதைக்கு இருநாழி உரி அரி” (T.A.S. ii, 173.);.

     [அங்கம் + தேவதை.]

     [Skt. anga → த. அங்கம்.]

அங்கத்தன்

அங்கத்தன் aṅkattaṉ, பெ. (n.)

   அகன்ற மார்பை உடையவன்; a person who is having broad chest.

     “அப்பனே அலர்மேல் மங்களை அங்கத்தனே” (அட. 6:30.);

     [அங்கம்+அத்து+அன்]

அங்கத்தளர்ச்சி

அங்கத்தளர்ச்சி aṅgattaḷarcci, பெ. (n.)

   1. விம்மி நிமிர்வுறுந் தன்மையின்மை; want of erectile power.

   2. உடல் நலக்குறைவு; bodily relaxation owing to advance age infirmity (சா.அக.);.

     [அங்கம் + தளர்ச்சி.]

     [Skt. anga → த. அங்கம்.]

அங்கத்தவர்

 அங்கத்தவர் aṅgattavar, பெ. (n.)

   அவ்விடத்திலுள்ளவர் ; the inhabitants of that place as opposed to “this place’.

அங்கத்தவரானால் என்ன, இங்கத்தவரானால் என்ன? (உ.வ.);.

     [அங்கு + அத்து + அவர்.]

அங்கத்தார்

அங்கத்தார் aṅkattār, பெ. (n.)

   அங்க நாட்டு மக்கள்; people belonging to Anga land.

     “அந்தமில் சீர் அங்கத்தார்” (பெ.பா. 3:183.);.

     [அங்கம்+அத்து+ஆர்]

அங்கத்தாளம்

 அங்கத்தாளம் aṅkattāḷam, பெ. (n.)

தாளத்தின் உறுப்புகளின் வழியாக அமைந்த எண்ணிக்கைத் தாளம்.

     [அங்கம்+தாளம்]

அங்கத்தினர்

 அங்கத்தினர் aṅgattiṉar, பெ. (n.)

   உறுப்பினர்; member.

     [அங்கம் + அத்து + இனர்.]

     [Skt. anga → த. அங்கம்.]

அங்கத்தீ

அங்கத்தீ aṅgattī, பெ. (n.)

   1. வயிற்றுத்தீ; fire in the stomach-gastric or digestive fire.

   2. உடம்பிற் பரவிநிற்கும் சூடு; the heat felt through out the system, animal heat.

   3. உடம்பினில் பல இடங்களில் தோற்றுஞ் சூடு; the therogenic heat at the different centres of the body.

   4. காம இன்பத்தால் உடம்பினில் ஏற்படும் சூடு, காமச் சூடு; heat arising in the body from excess of passion or love (சா.அக.);.

த.வ. மேனிச்சூடு, காங்கை.

     [அங்கம் + தீ.]

     [Skt. anga → த. அங்கம்.]

அங்கத்து

 அங்கத்து aṅgattu, பெ.எ. (adj.)

   அவ்விடத்து ; of that place.

     [அங்கு + அத்து. ‘அத்து’ இடப்பொருட் சாரியை.]

அங்கத்துவம்

 அங்கத்துவம் aṅgattuvam, பெ. (n.)

   உறுப்பினர் தகுதி; member ship.

அவர் தொடர்ந்து மூன்று கூட்டங்களுக்கு வராததால் தம் அங்கத்தவத்தை இழந்தார்.

த.வ. உறுப்பாண்மை.

     [Skt. anga → த. அங்கத்துவம்.]

அங்கநதி

அங்கநதி aṅganadi, பெ. (n.)

   1 மூளையின் நீர்; the cerebro spinal fluid.

   2. சிறுநீர்; urine discharged from the body (சா.அக.);.

அங்கநியாசம்

அங்கநியாசம் aṅganiyācam, பெ. (n.)

   மறைமொழியோடு உறுப்புகளைத் தொடுகை (திருக்காளத். 4, 5, 39);; touching some parts of the body with the fingers pronouncing the appropriate mantras.

த.வ. மெய்தீண்டல்.

     [Skt. anga + nyasa → த. அங்கநியாசம்.]

அங்கநூல்

அங்கநூல் aṅganūl, பெ. (n.)

   1. மறைநூல்; sciences auxiliary to the vedas.

     “சோதிடாதிமற்றங்கநூல்” (தாயு. சிதம்பர. 10);.

   2. சமண தோன்றிய (சைனாகம); வேறுபாடுகளு ளொன்று; a class of jaina scriptures.

     “அங்கநூலாதி யாவும்” (யசோதர. 1, 57);.

த.வ. அடிப்படைநூல்.

     [அங்க(ம்); + நூல்.]

     [Skt. anga → த. அங்கம்.]

அங்கந்திறத்தல்

 அங்கந்திறத்தல் aṅgandiṟattal, தொ.பெ. (vbl.n.)

   வாயால் வயிற்றாலெடுக்கை (வாந்தி பேதி);, நாட்பட்ட கழிச்சல் முதலிய நோய்களின் நிமித்தம் எருவாய் திறந்து போதல்; gaping of the anus owing to the relaxed condition of the sphinctre muscles. It is sometimes noticed in choloera, chronic diarrhoea or dysentary (சா.அக.);.

த.வ. எருவாய்திறப்பு.

     [அங்கம் + திற-,]

     [Skt. anga → த. அங்கம்.]

அங்கனபாடாணம்

 அங்கனபாடாணம் aṅgaṉapāṭāṇam, பெ. (n.)

   ஒருவகைச் செய்ந்நஞ்சு; a mineral poison, a kind of a arsenic in its natural state (சா.அக.);.

அங்கனம்

 அங்கனம் aṅgaṉam, வி.எ. (adv.)

   அப்படி. அங்ஙன் ; so, in that manner, thus.

     [ஆங்கனம் → அங்கனம்.]

 அங்கனம் aṅgaṉam, பெ. (n.)

அங்கணம் பார்க்க ;see anganamo.

அங்கனி

 அங்கனி aṅgaṉi, பெ. (n.)

   கற்றாழை (மலை.);; aloe.

அங்கணி பார்க்க ;see angani.

 Skt. afiganä

அங்கனீனம்

அங்கனீனம் aṅgaṉīṉam, பெ. (n.)

   1. உறுப்புக் குறை; defect or want of an organ.

   2. உறுப்புக்கேடு; deformity of an organ.

     [Skt. anga + hina → த. அங்ககீனம்.]

அங்கனை

 அங்கனை aṅgaṉai, பெ. (n.)

   பெண் (திவா.);; woman.

     [Skt. angina → த. அங்கனை.]

அங்கனைப்பால்

 அங்கனைப்பால் aṅgaṉaippāl, பெ. (n.)

   முலைப் பால்; woman’s breast milk (சா.அக.);.

த.வ. முலையமுது.

     [அங்கனை + பால்.]

     [Skt. angina → த. அங்கனை.]

அங்கன்

அங்கன் aṅgaṉ, பெ. (n.)

   புதல்வன் (திவ். இயற். 3, 65.);; son.

     [Skt. anga → த. அங்கன்.]

அங்கபங்கமழி-த்தல்

அங்கபங்கமழி-த்தல் aṅgabaṅgamaḻittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   வருத்துதல் (வின்.);; to vex, irritate, torment.

த.வ. மெய்வருத்துதல்.

     [அங்கபங்க(ம்); + அழி-.]

     [Skt. anga-banga → த. அங்கபங்கம்.]

அங்கபங்கம்

அங்கபங்கம்1 aṅgabaṅgam, பெ. (n.)

   பெருமை (இ.வ.);; pomp, pride.

 அங்கபங்கம்2 aṅgabaṅgam, பெ. (n.)

   1. உடற் குற்றம்; defect in the organ of a body.

   2. உடலுறுப்புக் குறைபாடு; mutilation of deformity of an organ.

   3. முடக்கு நோயாலே உடற்சோர்வு; poss of motion in a living part or member-paralysis (சா.அக.);.

த.வ. மெய்யுறவு.

     [Skt. anga + bhanga → த. அங்கபங்கம்.]

அங்கபடி

 அங்கபடி aṅgabaḍi, பெ. (n.)

   ஏறுமிதி, அடிதாங்கி; stirrup (W.);.

     ‘அங்கவடி’ என்றும் கூறப்படும்.

க. அங்கவடி ; தெ. அங்கவணெ ; து. அங் கோலெ.

அங்கபடியெலும்பு

 அங்கபடியெலும்பு aṅgabaḍiyelumbu, பெ. (n.)

   குதிரை சேணத்து அங்கவடியைப் போலவிருக்கும் காதெலும்பு; the stirrup shaped bone of the middle ear articulating with the incus. It is one of the chains of small bones found in the tympanic cavity stapes (சா.அக.);.

த.வ. செவிஎன்பு.

அங்கபறைநாதி

 அங்கபறைநாதி aṅgabaṟaināti, பெ. (n.)

   இலவங்கப்பட்டை ; Cinnamomum zeylanicum (சா.அக.);.

அங்கபாதி

 அங்கபாதி aṅgapāti, பெ. (n.)

   முடக்கொற்றான் ; balloon-vime, s. cl., Cardiospermum halicacabum (சா.அக.);.

அங்கபாலி

அங்கபாலி aṅgapāli, பெ. (n.)

   1. மருத்துவச்சி; midwife;

 nurse.

   2. ஒரு பூடு; a plant. (சா.அக.);.

த.வ. மருத்துவச்செவிலி.

அங்கபூவம்

அங்கபூவம் aṅgapūvam, பெ. (n.)

   அங்காகம பூர்வாகமங்கள்;     ‘அங்கபூவமாதிநூலோதி” (மேருமந். 124);.

     [Skt. anga + puva → த. அங்கபூவம்.]

அங்கப்பதக்கணம்

அங்கப்பதக்கணம் aṅgappadakkaṇam, பெ. (n.)

அங்கப்பிரதட்சிணம் (திருவாலவா. 34.13); பார்க்க;see anga-p-piratatcinam.

த.வ. மெய்யுறுசுற்று, உருள்தண்டம்.

     [Skt. anga + pra – daksina → த. அங்கப்பதக்கணம்.]

அங்கப்பயிற்சி

 அங்கப்பயிற்சி aṅgappayiṟci, பெ. (n.)

அங்கசாதனம் பார்க்க;see anga-sadanam.

     [அங்க(ம்); + பயிற்சி.]

     [Skt. anga → த. அங்க(ம்);.]

அங்கப்பழுது

அங்கப்பழுது aṅgappaḻudu, பெ. (n.)

   1. உறுப்புக்குறைபாடு; defect in an organ of the body.

   2. உறுப்புக்கேடு; malformation or deformity in an organ (சா.அக.);.

த.வ. உறுப்புக்குறை.

     [அங்க(ம்); + பழுது.]

     [Skt. anga → த. அங்கம்.]

அங்கப்பானை

 அங்கப்பானை aṅgappāṉai, பெ. (n.)

   எரியூட்டப்பட்ட சாம்பல், எலும்பு முதலியவடங்கிய பானை; an earthen vessel containing the bones and ashes of the dead (சா.அக.);.

த.வ. ஈமத்தாழி, ஈமப்பானை.

     [அங்க(ம்); + பானை.]

     [Skt. anga → த. அங்கம்.]

அங்கப்பால்

அங்கப்பால் aṅgappāl, பெ. (n.)

   தாய்ப்பால் (முலைப்பால்); ; mother’s milk.

     “அங்கப்பா லுண்ணாமல் தேகம் உதித்தீரோ” (பெண் -மதி மாலை, 30);.

அங்கப்பிச்சு

 அங்கப்பிச்சு aṅgappiccu, பெ. (n.)

   உடம்பிலிருக்கும் பித்து; bile in the system (சா.அக.);.

     [அங்கம் + பிச்சு.]

     [Skt. anga → த. அங்கம்.]

பித்து → பிச்சு.

அங்கப்பிரதக்கணம்

அங்கப்பிரதக்கணம் aṅgappiradakkaṇam, பெ. (n.)

அங்கப்பிரதட்சிணம் (சீகாழிக் தலவி. 14.); பார்க்க;see anga-p-piratatcinam.

     [Skt. anga + pradaksina → த. அங்கப் பிரதக்கணம்.]

அங்கப்பிரதட்சணம்

 அங்கப்பிரதட்சணம் aṅgappiradaṭcaṇam, பெ. (n.)

   கோயில் திருச்சுற்றினை உடலாற் புரண்டு வரம்வருகை; rolling the body to the right, to and around a sacred place, generally in fulfilment of a vow.

த.வ. உருள்தண்டம், மெய்யுறு சுற்று.

     [Skt. anga + pradaksina → த. அங்கப்பிரதட்சணம்.]

     [P]

அங்கப்பிரளி

 அங்கப்பிரளி aṅgappiraḷi, பெ. (n.)

   தன் உடம்பைச் சுருட்டிக் கொள்ளும் தன்மையுள்ள மரவட்டை; a creature capable of twisting its body into a round fold;millepees Hydenocarpus inebrains (சா.அக.);.

     [அங்கம் + பிரளி.]

     [Skt. anga → த. அங்கம்.]

புரள் → பிரள் → பிரளி.

     [P]

அங்கப்பிராயச்சித்தம்

 அங்கப்பிராயச்சித்தம் aṅgappirāyaccittam, பெ. (n.)

   உடல் தூய்மையின் பொருட்டானதொரு குற்றநிக்கம், தீட்டுக் கழிப்பு (வின்.);; expiation for bodily impurity, such as that caused by the death of a relative.

த.வ. தீட்டுக்கழிவு.

     [Skt. anga + praya-c-citta → த. அங்கப்பிராயச்சித்தம்.]

அங்கப்புண்

அங்கப்புண் aṅgappuṇ, பெ. (n.)

   1. உடலுறுப்புகளில் ஏற்படும் புண்; sore or wound developed in an organ.

   2. ஆண்குறிப் புண்; sore or ulcer on the penis.

   3. உடலிற்காணும் புண்; itches, sore or other wound on the body (சா.அக.);.

த.வ. மேனிப்புன்.

     [அங்க(ம்); + புண்.]

     [Skt. anga → த. அங்கம்.]

அங்கமணி

அங்கமணி aṅgamaṇi, பெ. (n.)

   மணப்பெண் கணவன் வீட்டிற்குத் தன்னுடன் கொண்டு செல்லும் சீர்வரிசை ; dowry in the form of jewels, clothes, furniture, vessels, etc., which a married girl takes with her to her new home.

     “இதுக்கு அங்கமணி செய்யலாவதே” (திவ். திருமாலை, 37, வியா.);.

க. அங்கமணி

 அங்கமணி aṅkamaṇi,    சிற்பங்களிற் காணலாகும் ஓர் மார்பணி; chest cover seen in statues. (5:71.).

     [அங்கம்+மணி]

அங்கமணிக்கூடை

 அங்கமணிக்கூடை aṅgamaṇikāṭai, பெ. (n.)

   மணப்பெண்ணிற்குக் கூடையில் வைத்துக் கொடுக்கும் வரிசை (இராட்.);; a basket of presents to a bride (R.);.

     [அங்கமணி + கூடை]

அங்கமணிதிரவியம்

அங்கமணிதிரவியம் aṅgamaṇidiraviyam, பெ. (n.)

   மணமகன் பரிசம் (S.I.I.VI. 152.);; dowry.

     [அங்க + மணி + திரவியம்.]

     [Skt. anga → த. அங்க(ம்);;

 Skt. dravya → த. திரவியம்.]

அங்கமணிப்பணம்

அங்கமணிப்பணம் aṅgamaṇippaṇam, பெ. (n.)

   சீர்வரிசைப் பணம் (S.I.I. vi, 152);; dowry money.

     [அங்கமணி + பணம்.]

அங்கமண்

 அங்கமண் aṅgamaṇ, பெ. (n.)

   அழமண் ; fuller’s earth (சா.அக.);.

அங்கமருடம்

அங்கமருடம் aṅgamaruḍam, பெ. (n.)

   1. உடலுறுப்பில் ஏற்படும் வலி; pain in the limbs.

   2. உடம்பு வலி; pain in the body.

   3. ஊதை நோய்; pain in the joints (சா.அக.);.

த.வ. மெய்வருத்தம்.

அங்கமர்த்தன்

 அங்கமர்த்தன் aṅgamarttaṉ, பெ. (n.)

   உடம்பை அழுத்தித் தேய்ப்பவன்; a servant who shampooes his master’s body – shampooer (சா.அக.);.

அங்கமாலை

அங்கமாலை aṅkamālai, பெ. (n.)

   நாவுக்கரசர் இயற்றிய பதிகங்களுள் ஒன்று; One of the poetic composition of Appar.

     “செல்கதி காட்டிடப் போற்றும் திரு அங்க மாலையும்” (பெரிய. 1660.);.

     [அங்கம்+மாலை]

 அங்கமாலை aṅgamālai, பெ. (n.)

   சிற்றிலக்கிய வகை (இலக். வி. 835.);; members of bones worn by Sivan.

     [அங்கம் + மாலை.]

     [Skt. anga → த. அங்கம்.]

அங்கம்

அங்கம் aṅgam, பெ. (n.)

   கொன்றை (பச்.மு.); ; Indian laburnum.

 அங்கம் aṅgam, பெ. (n.)

   வரிவகை (T.A.S. iii. 266); ; a petty cess.

 அங்கம் aṅgam, பெ. (n.)

   கட்டில் ; couch, bedstead, cot.

     “அணையங்க மீதே” (திருப்பு.128);.

 அங்கம் aṅgam, பெ. (n.)

   வெட்டுகை (பொதி.நி.); ; cutting, chopping.

 அங்கம் aṅgam, பெ. (n.)

   1. பாடலிபுத்திரத்திற்குக் கிழக்கில் உள்ள ஒரு பழைய நாடு ; an ancient country which lay east of Pātaliputra, modern Patna.

     “அங்கநாடி.துவும்” (கம்பரா. பால. தாடகை. 2);.

   2. அந்நாட்டு மொழி (திவா.); ; language of that country.

சிவபெருமானால் எரிக்கப்பட்ட காமனின் உடம்பு (அங்கம்); வீழ்ந்த இடத்தைத் தன்னுட் கொண்டதனால், அங்கநாடெனப்பட்டதென்பது, பிற்காலக் கட்டுக்கதையாகும்.

 அங்கம் aṅgam, பெ. (n.)

   கோளக நஞ்சு (பாடாணம்); (மு.அ.); ; a mineral poison.

 அங்கம் aṅkam, பெ. (n.)

   வயிறு; stomach.

அங்கம் காயுது. (இ.வ.);

     [அங்கு+(வளைவு);+அம்]

 அங்கம்1 aṅgam, பெ. (n.)

   1. உடலுறுப்பு; a part of the body.

   2. அரையின் மேலுள்ள உடம்பின் பகுதி; the portion of the main body without the limbs-trunk.

   3. எலும்புக் கூடு; the solid frame-work of mere bones-skeleton.

   4. உடம்பு; body.

   5. மேனியழகு; well-formed human shape-symmetry.

   6. மருத்துவ நூல்; medical science.

   7. உயிர்; the soul.

   8. கோளக செய்நஞ்சு (பாடாணம்);; one of the 32 kinds of mineral poison.

   9. மனம்; mind.

   10. பத்து; the numeral ten.

   11. மூளை; brain (சா.அக.);.

     [Skt. anga → த. அங்கம்.]

அங்க எனும் வடமொழிச்சொல் வளைதல் பொருள்படும் ‘அன்ச்’ எனும் வேரிலிருந்து பிறந்ததாக மோனியர் வில்லியம்சு வலிந்துரைக்கிறார். வடநாட்டில் வழங்கிய பல்வேறு பாகத (பிராகிருத); மொழிகளில் வயிற்றைக் குறித்த அங்க எனும் சொல்லே வடமொழியில் கடன் சொல்லாயிற்று எனத் தெரிகிறது. அஃகு-அக்கு-அங்கு எனச் சுருங்குதல் பொருளில் வழங்கிய தமிழ்ச் சொல். பாகதம் எனும் வடதமிழில் அங்கு-அங் எனத் திரிந்தது.

 அங்கம்2 aṅgam, பெ. (n.)

   1. ஒரு முழுமையின் அல்லது அமைப்பின் பகுதி; part of a whole or an organization.

     ‘படைத்துறை அரசின் ஓர் அங்கம்’.

   2. (நாடகத்தில்); ஒரு பெரும்பிரிவு; act (of a play);,

     ‘செய்தியைக் கேட்டதும் அங்கமெல்லாம்பதறியது’.

     [Skt. anga → த. அங்கம்.]

அங்கம்ஐந்து

அங்கம்ஐந்து aṅkamaintu, பெ. (n.)

   ஐந்தியம், பஞ்சாங்கம்; Astrlogical calendar.

     “திதியே வாரம் நாள் யோகம் கரணம் எனப் பகரும் சோதிப் பஞ்சாங்கம் ஆகும்.

     ” (நிக.தி. 12:63.);.

     [அங்கம்+ஐந்து]

அங்கம்நான்கு

அங்கம்நான்கு aṅkamnāṉku, பெ. (n.)

   நாற்படை, சதுரங்கம்; four frontier in the military.

     “சதுரங்கம் யானை, தேர், குதிரை, காலாள்.” (நிக.தி. 12:38.);.

     [அங்கம்+நான்கு]

அங்கம்பத்து

அங்கம்பத்து aṅkampattu, பெ. (n.)

   பத்து உறுப்பு, தசாங்கம்; a country consisting of ten parts.

     “ஆறும் மலையும் யானையும் குதிரையும் நாடும் ஊரும் கொடியும் முரசும் தாரும் தேரும் தசாங்க எனப்படும்.”. (நிக.தி. 12:154.);.

     [அங்கம்+பத்து]

அங்கம்மா

 அங்கம்மா aṅgammā, பெ. (n.)

   அங்காளம்மை, காளியின் ஒரு வடிவம் ; name of a form of Kali.

ம. அங்கம்ம ; க., தெ. அங்கம்மா, அங்களம்ம.

     [அம் + காளி + அம்மை – அங்காளியம்மை → அங்காளியம்மா → அங்காளம்மா → அங்கம்மா.]

அங்கயற்கண்ணி

அங்கயற்கண்ணி aṅgayaṟkaṇṇi, பெ. (n.)

   மதுரையிற் கோயில்கொண்டிருக்கும் மீனக் கண்ணி (மீனாட்சி); யம்மை ; Minaksi, Goddess of the Madurai temple.

     “அங்கயற் கண்ணி தன்னொடு மமர்ந்த வாலவாய்” (தேவா. 3.378; 1);.

     [அம் + கயல் + கண்ணி.]

அங்கயோகம்

அங்கயோகம்1 aṅgayōkam, பெ. (n.)

   1. எண்ணுறுப்பு யோகம் (R);; yoga which consists of eight forms of discipline.

   2. எலும்பு மாலை (தேவா. 295, 7);; necklace of bones worn by Šivan.

     [Skt. anga + yoga → த. அங்கயோகம்.]

 அங்கயோகம்2 aṅgayōkam, பெ. (n.)

   ஓகநிலை வகை (சங்.அக.);;     [P]

அங்கரக்கன்

அங்கரக்கன் aṅgarakkaṉ, பெ. (n.)

   மெய்க்காவலன்; body-guard.

     “அங்கரக்கர் சதகோடி யமைந்தோர்” (கம்பரா. இராவணன்றானை காண்.10);.

த.வ. மெய்க்காப்பாளன், மெய்ம்மறை.

     [Skt. anga + raksa → த. அங்கரக்கன்.]

     [த. அரக்கன் → Skt. raksa.]

அங்கரக்கா

 அங்கரக்கா aṅgarakkā, பெ. (n.)

   நீண்ட சட்டை; long coat worn by men, tunic.

     [U. angarkha → த. அங்கரக்கா.]

அங்கரங்கம்

 அங்கரங்கம் aṅgaraṅgam, பெ. (n.)

   உலகின்பம்; wordly pleasure (சா.அக.);.

அங்கரங்கவைபவம்

அங்கரங்கவைபவம் aṅgaraṅgavaibavam, பெ. (n.)

   எல்லா நுகர்ச்சிகளும்; all kinds of enjoyment.

     “ஸ்வாமிக்கு அங்கரங்க வைபவத்துக்கு விடுவித்த கிராமம் (S.i.i.i. 71);.

அங்கரங்கவைபோகம்

 அங்கரங்கவைபோகம் aṅgaraṅgavaipōkam, பெ. (n.)

அங்கரங்கவைபவம் பார்க்க;see angaranga-vaibavam.

அங்கரட்சிணி

 அங்கரட்சிணி aṅgaraṭciṇi, பெ. (n.)

   மெய்யுறை (போர்க்கவசம்);; coat of mail

     [Skt. anga + raksini → த. அங்கரட்சிணி.]

அங்கரமாதி

 அங்கரமாதி aṅgaramāti, பெ. (n.)

   ஒருவகைச் செய்நஞ்சு (கெளரி பாடாணம்); (இராட்.); ; a processed arsenic (R.);.

அங்கரமோதகி

 அங்கரமோதகி aṅgaramōtagi, பெ. (n.)

   கருதாரத்தை (சித்.அக.); ; a species of narattai.

அங்கரவல்லி

 அங்கரவல்லி aṅgaravalli, பெ. (n.)

   பெருங் குறிஞ்சா (சித்.அக.); ; a species of scammony swallow-wort.

அங்கராகம்

அங்கராகம் aṅgarākam, பெ. (n.)

   உடம்பிற் பூசப்பெறும் நறுமணப் பொருள்; cosmetic.

     “அங்கராக மணியார மார்ப” (பாரத. மணி. 109);.

     [Skt. anga + raga → த. அங்கராகம்.]

அங்கராகி

 அங்கராகி aṅgarāki, பெ. (n.)

   புறத்தே காண்குறும் மேனி மயிர்; hair on the body (சா.அக.);.

     [Skt. anga + raga → த. அங்கராகி.]

அங்கராக்கு

 அங்கராக்கு aṅkarākku,    சட்டை (கொ.வ.வ.சொ.); shirt.

     [அங்னம்+அரக்கு.]

அங்கராயர்

அங்கராயர் aṅgarāyar, பெ. (n.)

   கள்ளர்குலப் பட்டப்பெயர்களுள் ஒன்று (கள்ளர் சரித். பக். 145);; a title of Kallars.

அங்கருகம்

 அங்கருகம் aṅgarugam, பெ. (n.)

   மயிர் (சங்.அக.);; hair.

     [Skt. anga + ruha → த. அங்கருகம்.]

அங்கரூகம்

அங்கரூகம் aṅgarūkam, பெ. (n.)

அங்கருகம் (சிந்தா. நி. 35); பார்க்க;see angarugam.

     [Skt. anga + ruha → த. அங்கரூகம்.]

அங்கரூபகம்

 அங்கரூபகம் aṅgarūpagam, பெ. (n.)

   மயிர்; hair (சா.அக.);.

அங்கர்

அங்கர் aṅgar, பெ. (n.)

   அங்கநாட்டார் ; inhabitants of {Añgadēśa.}.

     “அங்கர் மாகத ராரியர்” (திருவிளை. திருமண. 74);.

 அங்கர் aṅgar, பெ. (n.)

   அங்கநாட்டார்; argadesa, the country about Benares,

     “அங்கர் மாகத ராரியர்” (திருவிளை. திருமண. 74);.

     [Skt. anga → த. அங்கர்.]

அங்கர்கோமான்

 அங்கர்கோமான் aṅgarāmāṉ, பெ. (n.)

   அங்க நாட்டரசனான கன்னன் (சூடா);; Karடிa, king of {Añgadeśa.}.

 அங்கர்கோமான் aṅgarāmāṉ, பெ. (n.)

   அங்கநாட்டை ஆட்சிசெய்த கண்ணன்;(சூடா);; Karnan, as king of anga-desam.

     [அங்கர் + கோமான்.]

     [Skt. anga → அங்கர்.]

அங்கர்யாரி

 அங்கர்யாரி aṅgaryāri, பெ. (n.)

   நங்கூரந் தூக்கியெடுக்கும் கப்பிக் கயிறு (கடலியல்);; cat tackle for drawing up an anchor.

த.வ. நங்கூரத்தாரம்.

     [E. anchor → த. அங்கர்.]

அங்கலட்சணநூல்

 அங்கலட்சணநூல் aṅgalaṭcaṇanūl, பெ. (n.)

   உடலுறுப்புகளின், அமைப்பு அழகு முதலானவற்றைப் பற்றிக் கூறும் உடற்கூற்றிலக்கண நூல்; that branch of science describing the structural beauty, symmetrical disposition of organs and due proportion of the several parts of the body to each other (சா.அக.);.

     [அங்கம் + லட்சணம் + நூல்.]

     [Skt. anga + laksana → த. அங்கலட்சணம்.]

இலக்கு → இலக்கணம் → Skt. laksana.

அங்கலாகாசம்

 அங்கலாகாசம் aṅgalākācam, பெ. (n.)

   மனநல மருத்துவர்கள் பயன்படுத்தும் மந்திரக் கோல்; a magic rod or want used by conjurors occultists, seers and other psychologists to effect a cure in diseases or to attain success in any of their attempts (சா.அக.);.

அங்கலாப்பு

 அங்கலாப்பு aṅgalāppu, பெ. (n.)

அங்கலாய்ப்பு பார்க்க ;see angalayppu.

அங்கலாய்-த்தல்

அங்கலாய்-த்தல் aṅgalāyttal,    4 செ.கு.வி. (v.i.)

   1. துயருறுதல் ; to lament, grieve, sorrow.

     “அங்கலாய்ப் பாளே” (இராமநா. ஆரணிய. பக். 187);.

   2. பொறாமை கொள்ளுதல்; to be envious, jealous.

     ‘ஆடுமறித்தவன் செய் விளையுமா, அங்கலாய்த்தவன் செய் விளையுமா? (பழ.);.

–, 4 செ.குன்றாவி. (v.t);

   வெஃகுதல் (இச்சித்தல்);; to covet (W.);.

     [அகம் + கலாய் – அங்கலாய். அகம் = மனம். கலாய்த்தல் = கலகித்தல், கலங்குதல்.]

அங்கலாய்ப்பு

அங்கலாய்ப்பு aṅgalāyppu, பெ. (n.)

   1. கலக்கம் ; disquiet, mental worry.

   2. அருவருப்புக் கொள்கை ; becoming disgusted.

   3. பேராவல் (யாழ்.அக.);; yearning.

   4. பேராசை (சங்.அக.); ; greed.

ம. அங்கலாய்க்க ; க., து. அங்கலாப்பு ; தெ. அங்கலார்ச்சு.

     [அகம் + கலாய் – அகங்கலாய் → அங்கலாய். அகம் – மனம், கலாய்த்தல் – கலகித்தல், கலங்குதல்.]

அங்கலி

 அங்கலி aṅgali, பெ. (n.)

   கொங்கை (சித்.அக.); ; breast.

 அங்கலி aṅkali, பெ. (n.)

   பசி; hunger.

தெ. ஆங்கிலி

     [அங்கல்-வயிறு கருங்கல். பசி. அங்கல்-அங்கலி]

அங்கலிங்கம்

 அங்கலிங்கம் aṅgaliṅgam, பெ. (n.)

   வீரசைவர் தங்கள் உடலில் அணிந்துகொள்ளும் இலங்கக் குறி, இலங்கம்; lingam worn by lingayates on their person.

     [Skt. anga + linga → த. அங்கலிங்கம்.]

அங்கவடி

அங்கவடி aṅgavaḍi, பெ. (n.)

   1. அங்கபடி பார்க்க ;see ariga-padi.

   2. பாலூட்டியின் காதிலுள்ள அங்கவடி போன்ற சிற்றெலும்பு ; stirrup-bone.

அங்கவத்திரம்

அங்கவத்திரம்1 aṅgavattiram, பெ. (n.)

   மேலாடை (இ.வ.);; upper cloth.

     [Skt. anga + vastra → த. அங்கவத்திரம்.]

 அங்கவத்திரம்2 aṅgavattiram, பெ. (n.)

   அடுக்கடுக்கான மடிப்புக்களுடன் ஆண்கள் தோளில் போட்டுக் கொள்ளும் நீண்ட துண்டு; a long pleated piece of ornamental cloth on the shoulder.

     [Skt. anga + vastra → த. அங்கவத்திரம்.]

     [P]

அங்கவன்

 அங்கவன் aṅgavaṉ, பெ. (n.)

   ஒரு கனிய நஞ்சு (வை.மு.); ; a mineral poison.

மறுவ. அங்கணன்

அங்கவம்

 அங்கவம் aṅgavam, பெ. (n.)

   பழவற்றல் ; dried fruit (சா.அக.);.

அங்கவயிச்சியர்

அங்கவயிச்சியர் aṅgavayicciyar, பெ. (n.)

   ஆயுள்வேத மருத்துவன் (s.i.i.v, 164);; ayurvedic physician.

     [Skt. anga = vaidya → த. அங்கவயிச்சியர்.]

அங்கவாதம்

அங்கவாதம் aṅgavātam, பெ. (n.)

   1. உடலுறுப்பிற் காணும் ஊதை (வாத); நோய்; rheumatism or other nervous affection of the limbs or organs of the body.

   2. உடம்மை அடுத்த ஊதை (வாதம்);; a constitutional affection of the nerves of the whole body.

   3. எலும்பிற்காணும் ஒர் ஊதை (வாத); நோய்; neuralgia of the bone, osteoneuralgia (சா.அக.);.

த.வ. கைகால்முடக்கு.

     [Skt. anga + vata → த. அங்கவாதம்.]

அங்கவாவகம்

 அங்கவாவகம் aṅgavāvagam, பெ. (n.)

   உடம்பைப் பிடித்தல் அல்லது தேய்த்தல்; shampooing or rubbing the body (சா.அக.);.

அங்கவிகிர்தம்

அங்கவிகிர்தம் aṅgavigirtam, பெ. (n.)

   1. உறுப்பு (அங்க);க் குறைவு; defect in an organ.

   2. உடம்பின் வேறுபாடு; structural changes of the body or its parts (சா.அக.);.

த.வ. உறுப்புமுடம்.

     [Skt. anga + vi-krta → த. அங்கவிகிர்தம்.]

அங்கவிகுருதி

அங்கவிகுருதி aṅgavigurudi, பெ. (n.)

   1. உடல்நோய்; disease of the body.

   2. உடலுறுப்புகளின் நோய்; disease of an organ in the body.

   3. உடம்பின் மாறுபாடு; change of apperance in the body, as in collapse, fainting, apoplexy etc., (சா.அக.);.

     [Skt. anga + vikrti → த. அங்கவிகுருதி.]

அங்கவித்திகை

அங்கவித்திகை aṅgavittigai, பெ. (n.)

   கணிதம் (சிந்தா. நி. 37);; a kind of maths.

     [Skt. anka + vidya → த. அங்கவித்திகை.]

அங்கவியல்பு

 அங்கவியல்பு aṅgaviyalpu, பெ. (n.)

அங்க விலக்கணம் பார்க்க;see anga-v-ilakkanam (சா.அக.);.

     [அங்கம் + இயல்பு.]

     [Skt. anga → த. அங்கம்.]

அங்கவிலக்கணம்

 அங்கவிலக்கணம் aṅgavilakkaṇam, பெ. (n.)

   உடம்பின் தன்மை (குணங்கள் அல்லது இயல்புகள்);; the natural disposition or other distinguishing characteristic features of the body or its parts (சா.அக.);.

த.வ. உடற்கூற்றிலக்கணம்.

     [அங்க(ம்); + இலக்கணம்.]

     [Skt. anga → த. அங்கம்.]

அங்கவீனன்

 அங்கவீனன் aṅgavīṉaṉ, பெ. (n.)

   உறுப்புக்குறைந்தவன் (வின்.);; one who has bodily defects

     “physically handicapped”.

த.வ. உடற்குறை.

     [Skt. anga + hina → த. அங்கவீனன்.]

அங்கவீனம்

 அங்கவீனம் aṅgavīṉam, பெ. (n.)

   உறுப்புக் குறைவு; maimediness.

     [Skt. anga + hina → த. அங்கவீனம்.]

அங்கா

அங்கா aṅgā, பெ. (n.)

   1. வாய்திறப்பு ; opening the mouth.

     “அங்கா முயற்சி” (நன். 86);.

   2. கொட்டாவி; yawn.

அங்கா-த்தல்

அங்கா-த்தல் aṅgāttal,    3 செ.கு.வி. (v.i)

   வாய் திறத்தல் ; to open the mouth.

     “அஆ ஆயிரண் டங்காந்தியலும்” (தொல். எழுத்து. பிறப்.3);.

து. அங்காவுனி குட. அங்கால் ; கூ. அங் கலங்க ; குவி. அங்கலசலி ; பர். அங்கலங்க மா. அங்கலெ ; கொலா. அங்கசி ; குரு. அங்கல் ; கோண். அங்ஙல் ; மண். அங்லா ; மங். அங்கை.

     [ஆ → அங்கா. ‘ஆ’ வாய்திறத்தல் ஒலிக் குறிப்பு.]

அங்காகமம்

அங்காகமம்1 aṅgākamam, பெ. (n.)

   சமணத் தோன்றியங்களுள் ஒன்று (சிலப். 10, 187, உரை.);; one of the classes of jaina scriptures.

     [Skt. anga + agama → த. அங்காகமம்.]

 அங்காகமம்2 aṅgākamam, பெ. (n.)

   1. காமம் தொடர்பான உடற்கூற்றியல் நூல்; a scientific treatise on sex and sexual enjoyments.

   2. கொக்கோகம்; a book kokkogam.

     [Skt. anga + agama → த. அங்காகமம்.]

அங்காகருடணநாசசாரி

 அங்காகருடணநாசசாரி aṅgākaruḍaṇanācacāri, பெ. (n.)

   இசிவு நோய்க்குரிய மருந்து; an agent allaying or relieving convulsions or spasmodic pains, as narcotics, nitrites etc., (சா.அக);.

அங்காகருடணம்

அங்காகருடணம் aṅgākaruḍaṇam, பெ. (n.)

   1. உடம்பின் தசை இழுத்தல்; contraction of a limb.

   2. இழுப்பு; contracture of a limb, as in paralysis.

   3. வலிப்பு; convulsion (சா.அக.);.

த.வ. உடலிழுப்பு.

     [Skt. anga + a-karsana → த. அங்காகருடணம்.]

அங்காகருடணவாதம்

 அங்காகருடணவாதம் aṅgākaruḍaṇavātam, பெ. (n.)

   நாக்குப் போன்ற உறுப்புகளை உள்ளுக்கிழுக்கும், முடக்கு ஊதை (வாத); நோய்; a kind of paralysis in which organs like the tongue etc., are drawn in (சா.அக.);.

த.வ. முடக்குவளி.

     [Skt. anga + a-karsana+vata → த. அங்காகருடணவாதம்.]

அங்காங்கம்

அங்காங்கம் aṅgāṅgam, பெ. (n.)

   1. நான்மறை உறுப்பு நூல் (உபாங்கம்.);; auxiliary or secondary organs (சா.அக.);.

     [Skt. anganga → த. அங்காங்கம்.]

அங்காங்கிபாவம்

அங்காங்கிபாவம் aṅgāṅgipāvam, பெ. (n.)

   உடல் உறுப்புகளின் உறவு; relation of the subsidiary or accessory and principal.

     “அருவினி லுருவந் தோன்றி யங்காங்கி பாவமாகி” (சி.சி.1, 27);.

     [Skt. angangi-bhava → த. அங்காங்கிபாவம்.]

அங்காடி

அங்காடி aṅgāṭi, பெ. (n.)

   1. கடை, கடைத்தெரு ; bazaar, bazaar street.

     “அரசுலிழை திருவி னங்காடி வீதியும்” (சிலப். 14;179);.

   2. நாட்சந்தை; daily market.

     ‘அங்காடி மேயும் பழங்கன்று ஏறாதலும் உண்டு’ (பழ.);.

     ‘அங்காடி விலையால் எங்கோடிப் போனாளோ !’ (பழ.);.

     ‘அங்காடி விலையை (கூடையை); அதிர அடிக்காதே’ (பழ.);.

     ‘அங்காடிக்காரியைச் சங்கீதம் பாடச் சொன்னால் வெங்காயம் கறிவேப்பிலை என்பாள்’ (பழ.);.

ம. அங்காடி. ; க., தெ., கோத அங்காடி ; து., இரு. அங்கடி, அங்காடி ; துட. ஒதொடி ; கொலா. அங்கடி ; நா. அங்காறி ; பர். அங் கொட் ; சிங். அங்கணிய.

     [அம்முதல் (தெ.); = விற்றல். கடை = இடம். கடை → கடி → காடி என்று திரிந்திருக்கலாம். அம் + காடி – அங்காடி.]

பண்டைத் தமிழக மாநகர்களில், சிறப்பாக வேந்தர் தலைநகர்களில், நாள்தொறும் பகலிலும் மாலையிலும் பல பண்டங்களும் விற்கும் அங்காடிச் சந்தைகள் நடைபெற்று வந்திருக்கின்றன. பகற்சந்தை ‘நாளங்காடி’ யென்றும், மாலைச் சந்தை ‘அல்லங்காடி’ யென்றும் பெயர் பெற்றிருந்திருக்கின்றன.

     “நடுக்கின்றி நிலைஇய நாளங் காடியில்” (சிலப். 5 ; 63);.

     ‘அல்லங்காடியு முண்டாதலின், இதனை

நாளங்காடி யென்றார்’ (அடியார்க். உரை);.

     “அல்லங் காடி யழிதரு கம்பலை” (மதுரைக் 544);.

     ‘நாளங்காடி அல்லங்காடி யாகிய இரண்டு

கூற்றையுடைத் தென்றார்’ (மதுரைக். 365, நச். உரை);.

     ‘அம்முதல்’ என்னும் வினைச்சொல் இற்றைத் தமிழகத்தில் வழங்காவிடினும், குமரி நாட்டில் வழங்கியிருத்தல் வேண்டும்.

அம்முதல் = பொருந்துதல், ஒத்தல், ஒத்த மதிப்புள்ள பொருளுக்கு மாறுதல்.

அங்காடி கூறு-தல்

அங்காடி கூறு-தல் aṅgāṭiāṟudal,    5 செ.கு.வி. (v.i.)

   பண்டங்களை விற்குமாறு பெயர் சொல்லிக் கூவுதல் (இராட்); ; to cry out the names of goods for sale in order to attract buyers (R.);.

அங்காடிக்கூலி

அங்காடிக்கூலி aṅgāṭikāli, பெ. (n.)

   கடைவரி (I.M.P.Tj. 119);; tax collected from stalls put up in the bazaar.

     [அங்காடி + கூலி.]

அங்காடிபாரி-த்தல்

அங்காடிபாரி-த்தல் aṅgāṭipārittal,    4 செ.கு.வி. (v.i.)

   மனவரசாளுதல் (மனோராஜ்யம் பண்ணுதல்);, வானக்கோட்டை கட்டுதல் ; to build castles in the air.

அங்காடிப்பண்டம்

அங்காடிப்பண்டம் aṅgāṭippaṇṭam, பெ. (n.)

   1. கடைச்சரக்கு ; article sold in the market.

   2. கடையில் வாங்கக்கூடிய சரக்கு; article available in the market.

     ‘அங்காடிப் பண்டங்கிடீர் எனக்கரிதாயிற்று’ (திவ். திருநெடுந். 16, வியா);.

   3. எளிதாய்ப் பெறக்கூடியது ; that which is easily obtained.

     [அங்காடி + பண்டம்.]

அங்காடிப்பாட்டம்

 அங்காடிப்பாட்டம் aṅgāṭippāṭṭam, பெ. (n.)

     [அங்காடி + பாட்டம்.]

அங்காதிபாதசாத்திரி

 அங்காதிபாதசாத்திரி aṅgātipātacāttiri, பெ. (n.)

   உடற்கூற்று ஆராய்ச்சியாளர்; one who is versed in the doctrine and principle of anatomy;one who has studies the structure of the body by dissection, anatomist (சா.அக.);.

அங்காத்தான்

 அங்காத்தான் aṅgāttāṉ, பெ. (n.)

   தான்றி (பச்.மூ.);; belleric myrobalan.

அக்காந்தி பார்க்க ;see akkāndi.

அங்கானுகூல

 அங்கானுகூல aṅgāṉuāla, கு.பெ.எ. (adj.)

   உடம்பிற்குத் தகுதியாக; agreeable to the body (சா.அக.);.

அங்கானுலேபனம்

 அங்கானுலேபனம் aṅgāṉulēpaṉam, பெ. (n.)

   உடம்பிற் பூசுதல்; anointing the body (சா.அக.);.

அங்காப்பு

அங்காப்பு aṅgāppu, பெ. (n.)

   1. வாய் திறக்கை ; opening the mouth.

     “முயற்சியுள் அஆ அங்காப் புடைய” (நன். 76);.

   2. நீர்வேட்கை ; thirst.

     “அங்காப் பொழிய வருணனுக்கு” (அழகர் கலம். 68);.

     [ஆ → அங்கா → அங்காப்பு.]

அங்காமி

 அங்காமி aṅgāmi, கு.பெ.எ. (adj.)

   நிரந்தரமல்லாத; temporary.

     “அங்காமி குமஸ்தா” (C.G);.

     [U. hangami → த. அங்காமி.]

அங்காமிப்பட்டா

 அங்காமிப்பட்டா aṅgāmippaṭṭā, பெ. (n.)

   நில ஆவண (பட்டா); வகைகளுள் ஒன்று; temporary or limited title-deed.

     [U. hangami – patta → த. அங்காமிப்பட்டா.]

அங்காரகதோடம்

 அங்காரகதோடம் aṅgāragatōṭam, பெ. (n.)

கணிய நூலில் செவ்வாயினால் ஏற்படுவதாகக் கூறப்படும் குற்றம் (astrol.);

 malefic influence of mars.

த.வ. செவ்வாய்க்குறை.

     [Skt. angaraka+dosa → த. ஆங்காரகதோடம்.]

அங்காரகன்

அங்காரகன் aṅgāragaṉ, பெ. (n.)

   1. நெருப்பு (திவா.);; fire.

   2. செவ்வாய் (திவா.);; the planet mars.

   3. செந்நீர் முத்து (சிலப். 14, 195);; pearl with a pink lustre.

     [Skt. angaraka → த. அங்காரகன்.]

அங்காரகமணி

அங்காரகமணி aṅgāragamaṇi, பெ. (n.)

   1. பவளம்; coral.

   2. மணி (இரத்தினம்);; ruby (சா.அக.);.

அங்காரகம்

அங்காரகம்1 aṅgāragam, பெ. (n.)

   தீ (அக.நி.);; fire.

 அங்காரகம்2 aṅgāragam, பெ. (n.)

   உடலிற் பூசும் நறுமணக்குழம்பு (அக.நி.);; scented unguent.

த.வ. மணக்கலவை.

     [Skt. angaraga → த. அங்காரகம்.]

 அங்காரகம்3 aṅgāragam, பெ. (n.)

   1. கரி (வின்.);; charcoal.

   2. தழற்கரி (சங்.அக.);; heated charcoal.

     [Skt. angaraka → த. அங்காரகம்.]

 அங்காரகம்4 aṅgāragam, பெ. (n.)

   பிருங்கராசம் என்னும் ஒரு படர்கொடி; a spreading creeper; white or yellow amaranthes, Verbesina caledulacealias eclipta prostata (சா.அக.);.

த.வ. கையாந்தகரை

     [Skt. angara-ka → த. அங்காரகம்.]

அங்காரகவல்லி

 அங்காரகவல்லி aṅgāragavalli, பெ. (n.)

   சிறுதேக்கு (பச்.மு.);; bushy fire brand teak.

     [அங்காரகம் + வல்லி.]

     [Skt. angara-ka → த. அங்காரக(ம்);.]

அங்காரசய்யாப்பிரமணம்

அங்காரசய்யாப்பிரமணம் aṅgārasayyāppiramaṇam, பெ. (n.)

   தீப்பிழம்புக்குமேல் சுழலும் நிரயச் சிறப்பு; hell where in one revolves on a bed of fire.

     “அங்காரசய்யாப்பிரமண மாநிரயம்” (சேதுபு. துராசார. 37);.

     [Skt. angara + sayya + bhramana → த. அங்காரசய்யாப்பிரமணம்.]

அங்காரதாளிகை

அங்காரதாளிகை aṅgāratāḷigai, பெ. (n.)

   1. சூட்டடுப்பு; an earthen ware portable heating apparatus for baking, used in an Indian household.

   2. நெருப்புச் சட்டி, கணப்புச் சட்டி; fire-pot (சா.அக.);.

     [P]

அங்காரன்

அங்காரன் aṅgāraṉ, பெ. (n.)

செவ்வாய் (அறப். சத. 50);

 the planet mars.

     [Skt. angara → த. அங்காரன்.]

அங்காரபரிபாசிதம்

 அங்காரபரிபாசிதம் aṅgārabaribācidam, பெ. (n.)

   பொரித்த கறி; fried curry (சா.அக.);.

அங்காரமஞ்சரி

 அங்காரமஞ்சரி aṅgāramañjari, பெ. (n.)

   கழற்சி; a plant, Caesalpinia bonduceell (சா.அக.);.

அங்காரம்

அங்காரம்1 aṅgāram, பெ. (n.)

   1. நெருப்பு; fire.

   2. தழற்கரி; live charcoal.

     [Skt. angara → த. அங்காரம்.]

 அங்காரம்2 aṅgāram, பெ. (n.)

   மாத்துவர் நெற்றியி லணியுங் கரிக்கோடு; sectarian charcoal mark placed on the forehead by Madhva Brahmans.

     “ஆங்கதனிடையங் காரமுந் தீட்டி” (பிரபோத. 11, 17);.

     [Skt. angara → த. அங்காரம்.]

அங்காரவல்லன்

 அங்காரவல்லன் aṅgāravallaṉ, பெ. (n.)

அங்காரவல்லி பார்க்க;see angaravalli.

     [அங்காரம் + வல்லன்.]

     [Skt. angara → த. அங்காரம்.]

அங்காரவல்லி

அங்காரவல்லி1 aṅgāravalli, பெ. (n.)

   1. பூடுவகை; gushy firebrand leak.

   2. பெருங்குறிஞ்சா; green wax flower.

     [அங்காரம் + வல்லி.]

     [Skt. angara → த. அங்காரம்.]

 அங்காரவல்லி2 aṅgāravalli, பெ. (n.)

   1. சிறுதேக்கு; blue flowered saw-leaved glory tree, Cleodendron sphoenanthes.

   2. பெருங்குமிழ்; a plant Galedupa arborea.

   3. கஞ்சா; gunjah-cannabis sativa (சா.அக.);.

அங்காரவாயு

 அங்காரவாயு aṅgāravāyu, பெ. (n.)

   நச்சுவளி; noxious suffocating gas like that in wells, pits, mines etc. chokedamp (சா.அக.);.

     [Skt. angara + vayu → த. அங்காரவாயு.]

அங்காரவாரிதி

 அங்காரவாரிதி aṅgāravāridi, பெ. (n.)

   கையாந்தகரை; a medicinal plant known as white amaranthus, Eclipta prostata (சா.அக.);.

     [P]

அங்காரி

அங்காரி aṅgāri, பெ. (n.)

   வெண்காரம் (மு.அ. );; borax.

 அங்காரி aṅgāri, பெ. (n.)

அங்காரதாளிகை, 2 பார்க்க;see angarataligai (சா.அக.);.

     [Skt. angara → த. அங்காரி.]

அங்காரிகம்

அங்காரிகம் aṅgārigam, பெ. (n.)

   1. கரும்புத் தண்டு; the stalk of the sugar-cane.

   2. பலாசு; the bud of கிஞ்சுகம். Butea frondosa (சா.அக.);.

அங்காரிகை

அங்காரிகை aṅgārigai, பெ. (n.)

   1. கரும்புத்தடி; stalk of the sugar-cane.

   2. முருக்கம் பூங்கொத்து; bunch of murukku flowers.

     [Skt. angarika → த. அங்காரிகை.]

அங்காரிதம்

அங்காரிதம் aṅgāridam, பெ. (n.)

   1. ஒரு கொடி; a creeper.

   2. பலாசு; the early blossom of கிஞ்சுகம், Butea frondosa (சா.அக.);.

அங்காலே

 அங்காலே aṅgālē, சு.வி.எ. (demons. adv.)

   அங்கே (யாழ்ப்.); ; there (J.);.

அங்காலே இங்காலே அலையாதே (இ.வ.);.

     [அங்கு + ஆல் + ஏ.]

அங்காளகை

 அங்காளகை aṅgāḷagai, பெ. (n.)

   கரும்பு (பச்.மூ.);; sugar-cane.

     [அம் + காளகை. காளம் → காளகம் → காளகை. காளம் = கருமை.]

அங்காளதேவி

அங்காளதேவி aṅgāḷatēvi, பெ. (n.)

   அங்காளம்மை ; a Goddess.

     “அங்காள தேவியெனை யாண்டுகொண்ட சோதி” (பஞ்ச. திருமுக. 670);.

     [அங்காளி + தேவி – அங்காளிதேவி – அங்காளதேவி.]

அங்காளம்மை

 அங்காளம்மை aṅgāḷammai, பெ. (n.)

   அங்காளம்மைத் தெய்வம் ; a Goddess.

     ‘அங்காளம்மைத் தெய்வம் அகப்பைக்கூர் வழியாய் வரும்’ (பழ.);.

     [அங்காளி + அம்மை – அங்காளியம்மை → அங்காளம்மை.]

தெ. அங்காளம்ம

பெண்தெய்வப் பெயர்கட்குமுன், அழகை உணர்த்தும், ‘அம்’ என்னும் முன்னொட்டுச் சேர்ப்பது மரபு.

ஒ.நோ ; அம் + கயற்கண்ணி – அங்கயற் கண்ணி.

இம் முறையில், காளி அங்காளியெனப்பட்டாள். காளி தூய தமிழ்த் தெய்வம் என்பதும், காளி என்னும் பெயர் தூய தமிழ்ச்சொல் என்பதும் ‘காளி’ என்னும் உருப்படியில் விரிவாக விளக்கப்படும்.

அங்காளி

 அங்காளி aṅgāḷi, பெ. (n.)

   பாலைநிலத் தெய்வமாகிய ; Goddess Kali, a female deity.

     [அம் + காளி – அங்காளி.]

அங்கி

அங்கி1 aṅgi, பெ. (n.)

   1. (விட்டங்களைத் தாங்கும் தாய்நிலை உத்திரம் போலும்); முதன்மையான உடம்புச் சட்டம்; principal.

     “கூறும் மங்கியல தங்கமிலை” (வேதாரணி. மாகாசமச். 7);.

   2. நீள் குப்பாயம்; long jacket.

     “அங்கியினை யங்குமெ யணிந்தவருமானார்” (இரகு. தேனு. 28);.

   3. பாதிரியார் அணியும் நீள் வெள்ளுடை; cassock.

     [Skt. angin → த. அங்கி.]

 அங்கி2 aṅgi, பெ. (n.)

   1. நெருப்பு (பிங்.);; fire.

   2. தீக்கடவுள் (கந்தபு. பாயிர. 53);; Agni.

   3. பெருந்தீ; digestive faculty, gastric fire.

     “உடற்காதார மடலங்கி மாந்தல்” (தைலவ. பாயி. 1);.

   4. ஆரல் (கார்த்திகை); மீன் (பரிபா. 11, 7);; the third naksatra.

   5. கதிரவன்; sun.

     “பனிப்பகை யங்கியைப் பழிப்பர்” (திருக்காளத். 4, 30, 14);.

     [Skt. agni → த. அங்கி.]

 அங்கி3 aṅgi, பெ. (n.)

   1. சாதி லிங்கம் (வை.மூ);; vermilion.

   2. கைம்மீன் என்னும் (அத்தம்); 13 ஆம் விண்மீன் (R);;   13th nasatram.

     [Skt. agni → த. அங்கி.]

அங்கிகாரியம்

அங்கிகாரியம் aṅkikāriyam, பெ. (n.)

   தீயில்செய்யப்படும்வேள்விமுதலியன; sacrificial ceremonies.

     “அர்த்தயாமத்துக்குசசெந்நெலரிசிகுறுணியிருநாழியும்அங்கிகாயத்துக்கும்கூழாகும்.” (Sil.xx322);.

     [அங்கி+காரியம்]

அங்கிக்கரு

 அங்கிக்கரு aṅgikkaru, பெ. (n.)

   சாதிலிங்கம்; a beautiful red colouring matter artificially prepared from sulphur and mercury vermilion (சா.அக.);.

த.வ. அழற்கரு.

அங்கிங்கு

அங்கிங்கு aṅgiṅgu, கு.வி.எ. (adv.)

   அங்கே அல்லது இங்கே ; here or there.

     “அங்கிங் கெனாதபடி” (தாயு. கடவுள். 1);.

     [அங்கு + இங்கு.]

அங்கிசகம்

 அங்கிசகம் aṅgisagam, பெ. (n.)

   தன்னொறுப்பு; kind of asceticism.

த.வ. புலனடக்கம்.

     [Skt. hamsaka → த. அங்கிசகம்.]

அங்கிசக்குரு

 அங்கிசக்குரு aṅgisakkuru, பெ. (n.)

   இதளியம் (இரசம்); முதலிய தாதுக்களைக் கட்டுவதற்காகக் கொங்கணவன் பொன்னாக்க நூலிற் சொல்லிய முறைப்படி செய்யும், ஒருவகைக் குரு மருந்து; a medicine with an active principle prepared as per method prescribed in the alchemical science of Korganavar for consolidating mercury and other minerals (சா.அக.);.

த.வ. இதளியக்குரு.

அங்கிசபாதி

 அங்கிசபாதி aṅgisapāti, பெ. (n.)

அங்குசவாதி (பரி.அக.); பார்க்க;see angusavadi.

 அங்கிசபாதி aṅgisapāti, பெ. (n.)

அங்குசவாதி (யாழ்.அக.); பார்க்க: see angusavadi.

     [Skt. hamsa + padika → த. அங்கிசபாதி.]

அங்கிசம்

அங்கிசம்1 aṅgisam, பெ. (n.)

   எகினப் (அன்னப்); புள்; swan.

     “பிரமாவினுடைய இராச அங்கிசமும்: (தக்கயாகப். 151);.

த.வ. எகினம்.

     [Skt. hamsa → த. அங்கிசம்.]

 அங்கிசம்2 aṅgisam, பெ. (n.)

   கூறு; part, portion.

     “மாதவப்பட்ட னங்சிச வவதாரமாகி” (ஞானவா. முடிவு.);.

த.வ. பங்கு.

     [Skt. amsa → த. அங்கிசம்.]

 அங்கிசம்3 aṅgisam, பெ. (n.)

   1. தோள்; shoulder.

   2. வாழை; plantain tree.

   3. பங்கு; division (சா.அக.);.

த.வ. கிளைப்பு.

அங்கிசயன்

 அங்கிசயன் aṅgisayaṉ, பெ. (n.)

   யாக வகை; name of a sacrifice.

த.வ. அழலாவுதி.

     [Skt. agni-caya → த. அங்கிசயன்.]

அங்கிசு

அங்கிசு aṅgisu, பெ. (n.)

   1. கதிரவன்; the sun.

   2. ஞாயிற்றுக் கதிர் (சூரியக் கிரகணம்);; the sun’s rays (சா.அக.);.

த.வ. அழல்.

     [Skt. agni → த. அங்கிசு.]

அங்கிசுமாலி

 அங்கிசுமாலி aṅgisumāli, பெ. (n.)

   பன்னிரு (துவாதச); கதிரவ இனத்தவருள் ஒருவன் (பிங்.);; a deity representing the sun, one of the tuvadasadittar, q.v.

த.வ. அழல்தேவு.

     [Skt. amsu-malin → த. அங்கிசுமாலி.]

அங்கிடபாதி

 அங்கிடபாதி aṅgiḍapāti, பெ. (n.)

அங்கிசபாதி பார்க்க;see angisapadi (சா.அக.);.

த.வ. அங்குசவாதி

     [Skt. hamsa-padika → த. அங்கிடபாதி.]

அங்கிடம்

அங்கிடம்1 aṅgiḍam, பெ. (n.)

   1. சீதாங்க வைப்பு நஞ்சு; a kind of mineral poison.

   2. சாரத்தைக் கட்டுமோர் மருந்து; a chemical capable of consolidating muriate of ammonia sold in the abzaar.

த.வ. அழல்நஞ்சு.

     [Skt. hamsa → த. அங்கிடம்.]

 அங்கிடம்2 aṅgiḍam, பெ. (n.)

   1. வாழை; plantain tree.

   2. தசை (மாங்கிசம்);; flesh.

அங்கிடியிங்கிடி

 அங்கிடியிங்கிடி aṅgiḍiyiṅgiḍi, கு.வி.எ. (adv.)

அங்கடியிங்கடி பார்க்க ;see arigadi-yirigadi.

அங்கிடுதத்தி

அங்கிடுதத்தி aṅgiḍudaddi, பெ. (n.)

   நிலை கெட்டவன் (யாழ். அக.);; a person of vagrant habits.

   2. அடிக்கடி கட்சி மாறுபவன் ; one who frequently changes his party, turn-coat.

     [அங்கு + இடு + தத்தி.]

அங்கிடுதிருப்பினர்

 அங்கிடுதிருப்பினர் aṅgiḍudiruppiṉar, பெ. (n.)

   குறளை கூறுபவ-ன்-ள் ; tale-bearer.

     ‘அங்கிடுதிருப்பி எங்கடி போனாய், சின்னண்ணன் செத்த இழவுக்குப் போனேன்’ (பழ.);.

     [அங்கு + இடு + திருப்பி.]

அங்கிடுதுடுப்பன்

அங்கிடுதுடுப்பன் aṅgiḍuduḍuppaṉ, பெ. (n.)

   குறளை கூறுவோன் (இராட்.); ; tale-bearer.

   2. அடிக்கடி கட்சி மாறுவோன் (வின்.); ; one who frequently changes his party, turn-coat (W.);.

   3. நாடோடி (வின்.); ; vagrant (W.);.

அங்கிடுதொடுப்பி

 அங்கிடுதொடுப்பி aṅgiḍudoḍuppi, பெ. (n.)

   குறளை கூறுவோன் ; slanderer, tale-bearer.

     ‘அங்கிடுதொடுப்பிக்கு அங்கிரண்டு குட்டு, இங்கிரண்டு சொட்டு’ (பழ.);.

அங்கிட்டு

அங்கிட்டு aṅgiṭṭu, கு.வி.எ. (adv.)

   1. அவ்விடம், அவ்விடத்தில் ; there, yonder.

     ‘அங்கிட்டுப் பிறந்து’ (ஈடு, 6.8;11);.

   2. அப்பால் ; away.

அங்கிட்டுப்போ (உ.வ.);.

ம. அங்கோட்டு

     [அங்கு + இட்டு.]

அங்கிட்டு இங்கிட்டு (அங்கிட்டிங்கிட்டு)

 அங்கிட்டு இங்கிட்டு (அங்கிட்டிங்கிட்டு) aṅgiṭṭuiṅgiṭṭuaṅgiṭṭiṅgiṭṭu, கு.வி.எ. (adv.)

   அந்தப் பக்கம் அல்லது இந்தப் பக்கம் ; this side or that side.

என் மகன் என்னை அங்கிட்டிங்கிட்டுப் போகவிடமாட்டான் (உ.வ.);.

அங்கிட்டோமம்

அங்கிட்டோமம்1 aṅgiṭṭōmam, பெ. (n.)

   தீயால் செய்யப்படும் வேள்வி வகை; variety of the jyotistoma.

     “அங்கிட்டோமங் கோமேத மிராச சூயம்” (உத்தரரா. திக்கு. 117);.

த.வ. அழலோமம்.

     [Skt. agni-stoma → த. அங்கிட்டோமம்.]

     [P]

 அங்கிட்டோமம்2 aṅgiṭṭōmam, பெ. (n.)

   திருமணி (கோமேதகம்);; cinnamon stone, Onyx (சா.அக.);.

த.வ. அழற்கல்.

அங்கிதம்

அங்கிதம்1 aṅgidam, பெ. (n.)

   பாட்டுடைத் தலைவனைக் குறிக்கும் பெயர்; the name given, in a poem, to a person who is the hero.

     “ஓர் அங்கிதம் வைத்துப் பாடுகிறது” (R);.

த.வ. உள்ளாளன்.

     [Skt. ankita → த. அங்கிதம்.]

 அங்கிதம்2 aṅgidam, பெ. (n.)

   1. அடையாளம்; sign.

     “அங்கிதம் பிறவுமே லறைய நின்றவே” (கந்தபு. இந்திரபுரி 37.);.

   2. தழும்பு; scar.

     “இவன் செருவிற் கொண்ட வங்கிதத்து” (இரகு. யாகப். 103.);.

த.வ. அடையாளம்.

     [Skt. ankita → த. அங்கிதம்.]

அங்கிதாரணம்

 அங்கிதாரணம் aṅgitāraṇam, பெ. (n.)

   தீயின் திறம் நினைத்து அமைத்தல்; concentrating on the principle of fire, as operating in the body (சா.அக.);.

த.வ. அழற்கோவை.

     [அங்கி + தாரணம்.]

     [Skt. agni → த. அங்கி.]

அங்கிதிசை

 அங்கிதிசை aṅgidisai, பெ. (n.)

   தென்கிழக்கு (திவா.);; the S.E quarter, as under the guardianship of Agni.

த.வ. அழல்திசை.

     [அங்கி + திசை.]

     [Skt. agni → அங்கி.]

அங்கித்தம்பனை

அங்கித்தம்பனை aṅgittambaṉai, பெ. (n.)

   நெருப்புச் சுடாமலிருக்கச் செய்யவல்லதொரு கலை (திருவாலவா. 38, 23.);; art of suspending the action of fire by magic.

த.வ. அழல்தடை.

     [அங்கி + தம்பனை.]

     [Skt. agni → த. அங்கி.]

அங்கித்தேவன்

அங்கித்தேவன் aṅgittēvaṉ, பெ. (n.)

   தீக்கடவுள்; the god to fire.

     “அங்கித் தேவனருளென” (பெருங். உஞ்சைக். 43,151);.

த.வ. அழற்கடவுள்.

     [அங்கி + தேவன்.]

     [Skt. agni → த. அங்கி.]

அங்கிநாள்

அங்கிநாள் aṅgināḷ, பெ. (n.)

   1. ஆரல் (கார்த்திகை); (பிங்.);; the third naksatra.

   2. கைம்மீன் (அத்தம்); (சூடா.);; the thirteenth naksatra.

த.வ. ஆரல்.

     [அங்கி + நாள்.]

     [Skt. agni → த. அங்கி.]

அங்கினீண்டான்

 அங்கினீண்டான் aṅgiṉīṇṭāṉ, பெ. (n.)

   கருஞ் செம்பை; bastard sensitive plant-sesbania aegyptiaca alias, S. Aculeata (சா.அக.);.

அங்கிமாந்தம்

அங்கிமாந்தம் aṅgimāndam, பெ. (n.)

   நோய்வகை (கடம்ப. 4, இல்லா. 94);; a kind of disease.

த.வ. அழல்மாந்தம்.

     [அங்கி + மாந்தம்.]

     [Skt. agni → த. அங்கி.]

அங்கியங்கடவுள்

அங்கியங்கடவுள் aṅgiyaṅgaḍavuḷ, பெ. (n.)

   தீக்கடவுள்; Agni.

     “அங்கியங் கடவுள் அறிகரி யாக” (தொல். பொருள். 142, உரை.);.

     [அங்கியம் + கடவுள்.]

     [Skt. agni → த. அங்கி.]

அங்கியாதானம்

அங்கியாதானம் aṅgiyātāṉam, பெ. (n.)

   வேள்விக்காகத் தீயைச் சேர்க்கும் தொழில் (திருக்காளத். 4, 29, 33);; initiatory ceremony of placing the sacred fire on the altar and consecrating it.

த.வ. அழற்கொடை.

     [அங்கி + ஆதனம்.]

     [Skt. agni → த. அங்கி.]

அங்கியூட்டு-தல்

அங்கியூட்டு-தல் aṅgiyūṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   சீலைமண் செய்தல்; to coat a long piece of cloth with clay or red sand and to cover or tie it round the edges of the mouth, as of a bottle etc., to make them air-tight. To lute this is a method adopted by the alchemists, and vaidyans for calcination of metals (சா.அக.);.

த.வ. மண்ணீடுசெய்தல்.

அங்கிரகம்

 அங்கிரகம் aṅgiragam, பெ. (n.)

   உடம்பினோய்; disease of the body, bodily ailment (சா.அக.);.

த.வ. மெய்ப்பிணி.

     [Skt. anga + graham → த. அங்கிரகம்.]

அங்கிரசு

அங்கிரசு aṅgirasu, பெ. (n.)

அங்கிரன் (மச்சபு. இருடிமான்.57); பார்க்க;see angiran.

     [Skt. angirasu → த. அங்கிரசு.]

அங்கிரன்

 அங்கிரன் aṅgiraṉ, பெ. (n.)

   ஒரு முனிவன் (வின்.);; name of a sage.

     [Skt. angiras → த. அங்கிரன்.]

அங்கிரம்

அங்கிரம் aṅgiram, பெ. (n.)

   பதினெண் துணைத் தொன்மத்துளொன்று; a secondary purana, one of 18 uba-puranam.

     [Skt. angiras → த. அங்கிரம்.]

அங்கிரா

அங்கிரா aṅgirā, பெ. (n.)

   ஒரு முனிவன் (காஞ்சிப்பு. சத்ததா. 2);; name of a sage.

     [Skt. angiras → த. அங்கிரா.]

அங்கிரி

அங்கிரி1 aṅgiri, பெ. (n.)

   மரவேர் (நாநார்த்த.);; root, as of tree.

     [Skt. anghri → த. அங்கிரி.]

 அங்கிரி2 aṅgiri, பெ. (n.)

   மாட்டு நோய்வகை (பெரியமாட். 102);; a cattle – disease.

     [Skt. angiri → த. அங்கிரி.]

 அங்கிரி3 aṅgiri, பெ. (n.)

   பாதம், தாள் (பிங்.);; foot.

     [Skt. anghri → த. அங்கிரி.]

அங்கிரிநாமகம்

 அங்கிரிநாமகம் aṅgirināmagam, பெ. (n.)

   மரமூலம்; root of a tree (சா.அக.);.

த.வ. மரவேர்.

     [Skt. anghri+namaka → த. அங்கிரிநாமகம்.]

அங்கிரிபம்

 அங்கிரிபம் aṅgiribam, பெ. (n.)

   மரம்; tree (சா,அக.);.

     [Skt. anghri-pa → த. அங்கிரிபம்.]

அங்கிரிபாணி

 அங்கிரிபாணி aṅgiripāṇi, பெ. (n.)

 a child who habitually sucks the thumb, thumb sucker (சா.அக.);.

த.வ. கைசூப்பி, விரல்சூப்பி.

அங்கிரிபானம்

 அங்கிரிபானம் aṅgiripāṉam, பெ. (n.)

   விரல் சப்புதல்; sucking the finger or the toes as done by infants (சா.அக.);.

த.வ. விரற்சூப்பல்.

அங்கிரிப்பலா

 அங்கிரிப்பலா aṅgirippalā, பெ. (n.)

   சிற்றா மல்லி, பற்களையொத்தும் சிறியனவுமான மல்லிவகை; short tubed Arabian jasmine, Jasminum sambac (typica); (சா.அக.);.

த.வ. மூக்குமல்லி.

அங்கிரிவல்லி

 அங்கிரிவல்லி aṅgirivalli, பெ. (n.)

   மூவிலை; a plant-liedysarum, Lagopodioides, c.f.

அங்கிசபாதி (சா.அக.);.

த.வ. இலைவள்ளி.

     [அங்கிரி + வல்லி.]

     [Skt. angira → த. அங்கிரி.]

அங்கீகரணம்

 அங்கீகரணம் aṅākaraṇam, பெ. (n.)

   உடன் படுகை, உடன்படிக்கை; assenting, accepting.

த.வ. உடன்பாடு.

     [Skt. angikarana → த. அங்கீகரணம்.]

அங்கீகரி-த்தல்

அங்கீகரி-த்தல் aṅākarittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   ஏற்றுக்கொள்ளுதல்; to accept, receive approve.

     “சித்தம்வைத் திடவுமங் கீகரித் திடுமகா தேவதேவா” (அறப். சத. 100);.

த.வ. ஏற்பளித்தல்.

     [Skt. angi-kar → த. அங்கீகரி-.]

அங்கீகாரம்

அங்கீகாரம் aṅākāram, பெ. (n.)

   1. உடன்பாடு; acceptance, approval.

   2. வரவேற்பு; hospitality.

     “அங்கீகார மனைத்துஞ் செய்தான்” (ஞானவா. சிகித். 81.);.

த.வ. ஏற்பு

     [Skt. angi-kara → த. அங்கீகாரம்.]

அங்கீகிருதம்

 அங்கீகிருதம் aṅākirudam, பெ. (n.)

   ஏற்றுக் கொள்ளப்பட்டது (சங்.அக.);; that which is agreed to, accepted.

     [Skt. angi-krta → த. அங்கீகிருதம்.]

அங்கு

 அங்கு aṅgu, சு.வி.எ. (demons. adv.)

   அவ்விடம் அவ்விடத்தில், அவ்விடத்திற்கு ; there, thither.

     ‘அங்கும் இருப்பான் இங்கும் இருப்பான், ஆக்கின சோற்றுக்குப் பங்கும் இருப்பான்’ (பழ.);.

     ‘அங்கும் தம்பி இங்கும் தம்பி அகப்பட்டுக் கொண்டான் தும்மட்டிப்பட்டன்’ (பழ.);.

     [ஆங்கு → அங்கு.]

 அங்கு aṅgu, பெ. (n.)

   உடலுறுப்பு; limb of the body (சா.அக.);.

     [Skt. anga → த. அங்கு.]

அங்குஅட்டை

அங்குஅட்டை aṅkuaṭṭai, பெ. (n.)

   சரிகை போடப் பயன்படும் சுங்குவிற்கு இணையாகப் பயன்படுத்தப்பெறும் சாகாடு தறிக்குரிய துளைகள் உடைய அட்டை; A plate containing holes used in parity with a border of cloth. (நெ.தொ.சொ.51.);.

     [அங்கு+அட்டை]

அங்குசன்

 அங்குசன் aṅgusaṉ, பெ. (n.)

   வைப்பு நஞ்சு (வை.மூ.);; angusa pasanam a mineral poison.

     [Skt. ankusa → த. அங்குசன்.]

அங்குசபிசாரி

 அங்குசபிசாரி aṅgusabisāri, பெ. (n.)

   பேரீச்சம் பழம்; fruit of the date palm, Phoenix dactylifera (சா.அக.);.

அங்குசம்

அங்குசம் aṅgusam, பெ. (n.)

   1. யானைத் துறட்டி ; elephant goad.

     “அங்குசம் கடாவ ஒருகை” (திருமுருகு 110);, “பகழிங்குசமும்” (கந்தபு. உற்பத். விடைபெ. 37);.

   2. வாழை (மலை.); ; plantain.

ம. அங்குசம் ; க. அங்குச ; தெ. அங்குசமு, அங்குசம் ; Skt. ankusa.

     [அங்குதல் = வளைதல், அங்கு → அங்குசம்.]

     ‘அங்குசம்’ என்னும் சொல் பண்டையிலக்கிய வழக்கில் இடம்பெறுவதாலும், தமிழ் வேரினின்று பிறந்திருத்தலாலும், அங்கதம் (வளையல், கொடுவாய்); என்னுஞ் சொல்லைப் பெரிதும் ஒத்திருத்தலாலும், வாழையென்னும் பொருளுடைமையாலும், ‘வி’ கரம் சேர்ந்து ‘கொள்’ என்னும் கூலத்தைக் குறித்தலாலும், இங்குத் தென்சொல்லாகக் கொள்ளப்பட்டது.

வாழை குலை தள்ளியபின், சிறப்பாகப் பூ விரியுமுன், அங்குசம் போன்ற தோற்றங் கொள்ளுதலால் அங்குசம் என்னும் உவமையாகுபெயர் பெற்றதுபோலும் !

 அங்குசம் aṅgusam, பெ. (n.)

   தையற்காரரின் விரற்கூடு (இராட்);; thimble.

     [Skt. angusthan → த. அங்குசம்.]

அங்குசரோசனம்

 அங்குசரோசனம் aṅgusarōsaṉam, பெ. (n.)

   கூவை நீறு (இராட்.);; flour of East Indian arrowroot.

     [Skt. ankusa + rocana → த. அங்குசரோசனம்.]

அங்குசவாதி

 அங்குசவாதி aṅgusavāti, பெ. (n.)

   சிறுபுள்ளடி;(பச்.மூ.);; scabrous ovate unifoliate tick-trefoil.

     [Skt. hamsa + padika → த. அங்குசவாதி.]

அங்குசவி

 அங்குசவி aṅgusavi, பெ. (n.)

   கொள் (வின்.); ; horse gram.

     [அங்குசம் →- அங்குசவி.]

கொள்ளுக்காய் வளைந்து அங்குசத்தை ஒரு புடையொத்திருப்பது கவனிக்கத்தக்கது. காணம், கொள் என்னும் பெருவழக்கான பெயர்களும், இப்பொருட்காரணம் பற்றியனவே. அப் பெயர்களைக் காண்க.

அங்குசோலி

 அங்குசோலி aṅgucōli, பெ. (n.)

   அறுகம்புல் (மூ.அ.); ; harialli grass, Cynodon dactylon.

அங்குடம்

 அங்குடம் aṅguḍam, பெ. (n.)

   திறவுகோல் (யாழ்.அக.);; key.

     [Skt. ankuta → த. அங்குடம்.]

     [P]

அங்குடாகினி

 அங்குடாகினி aṅguṭākiṉi, பெ. (n.)

   கருங் கடுகுரோகினி; black hellibore, Helliborus nigheralias picrorriza kurroa (சா.அக.);.

     [Skt. anguta → த. அங்குடாகினி.]

அங்குட்டப்பருமன்

 அங்குட்டப்பருமன் aṅguṭṭapparumaṉ, பெ. (n.)

   பெருவிரல் கனம்; as thick as the thumb (சா.அக.);.

     [அங்குட்டம் + பருமன்.]

     [Skt. angusha → த. அங்குட்டம்.]

அங்குட்டப்பிரமாணம்

 அங்குட்டப்பிரமாணம் aṅguṭṭappiramāṇam, பெ. (n.)

அங்குட்டமாத்திரம் பார்க்க;see angutta-mattiram. (சா.அக.);.

     [Skt. angustha+pra-mana → த. அங்குட்டப்பிரமாணம்.]

அங்குட்டமாத்திரம்

 அங்குட்டமாத்திரம் aṅguṭṭamāttiram, பெ. (n.)

   பெருவிரலளவு; as big as the thumb (சா.அக.);.

அங்குட்டமுதல்ரோமம்வரை

 அங்குட்டமுதல்ரோமம்வரை aṅguṭṭamudalrōmamvarai, பெ. (n.)

   கால் பெருவிரல் முதல் தலைமயிர் வரை; from the big toe to the head i.e., from toe to top figuratively the whole body (சா.அக.);.

த.வ. அடிமுதல் முடிவரை.

அங்குட்டம்

அங்குட்டம்1 aṅguṭṭam, பெ. (n.)

   1. பெருவிரல்; thumb, great toe.

     “தாளங்குட்டத்தைத் திகழிரதத்தினூன்றி” (வரத. பாகவத. பற்கு 20);.

   2. பெருவிரலளவு; measure of a thumb.

     “அங்குட்டமென்னு மளவிற்றா முருவுவாய்ந்த” (பாகவத. சூரியமண் 20);.

     [Skt. angustha → த. அங்குட்டம்.]

 அங்குட்டம்2 aṅguṭṭam, பெ. (n.)

   பாண்டு (வை.மு.);; a condition to the biliary passages, general dropsy (சா.அக);.

     [Skt. angustha → த. அங்குட்டம்.]

அங்குட்டரூபி

அங்குட்டரூபி aṅguṭṭarūpi, பெ. (n.)

   1. பெருவிரலளவினன்; a person of very small size, Lilliputian.

   2. அகத்தியர்; the sage Agastyar (சா.அக.);.

     [Skt. angustha + rupin → த. அங்குட்டரூபி.]

அங்குட்டவாதம்

 அங்குட்டவாதம் aṅguṭṭavātam, பெ. (n.)

   பெருவிரல் வளி; neurosis of the thumb or the great toe, similar to cramp (சா.அக.);.

     [Skt. angustha + vata → த. அங்குட்டவாதம்.]

அங்குணம்

அங்குணம்1 aṅguṇam, பெ. (n.)

   வெங்காரம் (R.);; bогах.

     [Skt. tankana → த. அங்குணம்.]

 அங்குணம்2 aṅguṇam, பெ. (n.)

   கோதுமை; wheat, Triticum vulgara alias T. sativum (சா.அக.);.

     [Skt. tankana → த. அங்குணம்.]

அங்குத்தறி

 அங்குத்தறி anguitary பெ. (n.)

சுங்கின்உதவியால்சரிகைவடிவங்களைமாற்றி

   அமைத்தற்குரியதறிவகை; the loom that change its designs.

 அங்குத்தறி aṅkuttaṟi, பெ. (n.)

   சுங்கின் உதவியால் சரிகை வடிவங்களை மாற்றி அமைத்தற்குரிய தறி வகை; the loom that change its designs.

     [அங்கு+தறி]

அங்குத்தான்

அங்குத்தான்1 aṅguttāṉ, பெ. (n.)

   துன்னர் விரலில் அணியுங்கூடு; thimble.

 அங்குத்தான்2 aṅguttāṉ, பெ. (n.)

   பெருந்தாரா; a wild goose (சா.அக.);.

அங்குத்தி

 அங்குத்தி aṅgutti, பெ. (n.)

அங்குற்றி பார்க்க ;see angurri.

அங்குத்தை

அங்குத்தை aṅguttai, பெ. (n.)

   1. அவ்விடம்; that place.

     ‘அங்குத்தை வார்த்தையை இங்கே சொல்லி’ (ஈடு);.

   2. தேவீர், பெரும்பாலும் சிவ மடங்களில் வழங்குவதும் ‘தாங்கள்’ என்னுஞ் சொல்லினும் உயர்வு மிக்கதுமான ஒரு முன்னிலைச்சொல் ;     “your worthiness”, “your holiness’ a term of highest respect, used in the second person singular chiefly in Saiva mutts.

அங்குற்றி பார்க்க ;see angurri.

அங்குமிங்கும்

 அங்குமிங்கும் aṅgumiṅgum, வி.எ. (adv.)

   அவ்விடத்தும் இவ்விடத்தும்; here and there.

அங்குமிங்கும் திரிகிறான் (உ.வ.);

     [அங்கும் + இங்கும்.]

அங்குமிங்கும்பாடி

அங்குமிங்கும்பாடி aṅgumiṅgumbāṭi, பெ. (n.)

   1. ஒரு கட்சியை வெளிப்படையாகவும் மற்றொரு கட்சியை மறைவாகவும் சேர்ந்தவன் (வின்.);; one who is an overt member of one party while being a secret member of another (W.);.

   2. மாறுபட்ட இருவேறு கட்சிகளைச் சேர்ந்தவனாக நடிப்பவன் அல்லது ஏமாற்றுபவன் ; double crosser, double – dealer.

   3. நம்பத் தகாதவன் ; unreliable person.

     [அங்கும் + இங்கும் + பாடி.]

அங்குயாசக்காய்

 அங்குயாசக்காய் aṅguyācakkāy, பெ. (n.)

   பலகறை; cowry (சா.அக.);.

அங்குரகம்

அங்குரகம் aṅguragam, பெ. (n.)

   கூடு (சிந்தா. நி. 39);; nest.

     [Skt. ankura-ka → த. அங்குரகம்.]

அங்குரப்பிராணி

 அங்குரப்பிராணி aṅgurappirāṇi, பெ. (n.)

   மூளை சீவி; a generic name for microorganism whether animal or vegetable microbe (சா.அக.);.

     [Skt. ankuara + pranin → த. அங்குரப்பிராணி.]

அங்குரம்

அங்குரம் aṅguram, பெ. (n.)

   குப்பைமேனி (வின்.); ; Indian acalypha.

 அங்குரம்1 aṅguram, பெ. (n.)

   நீர் (நாநார்த்த.);; water.

     [Skt. ankura → த. அங்குரம்.]

 அங்குரம்2 aṅguram, பெ. (n.)

   1. வாழை; plantain tree, Musa parasidiaca.

   2. பூண்டின் முளை; the shoot of plant.

   3. முளை; sprout from a seed.

     “அங்குரம் போல் வளர்ந்தருளி” (பெரியபு. திருஞா. 53);.

   4. குருதி; blood.

   5. மயிர்; hair.

     [Skt. ankura → த. அங்குரம்.]

அங்குரார்ப்பணம்

அங்குரார்ப்பணம் aṅgurārppaṇam, பெ. (n.)

   பாலிகை தெளிக்கை (நெடுநல். 75. உரை);; ceremony preliminary to a marriage or other auspicious ceremony in which certain seeds are placed in vessels for sprouting,

த.வ. முளைப்பாலிகை, முளைக்கட்டு.

     [Skt. ankura + arpana → த. அங்குரார்ப்பணம்.]

அங்குரி

அங்குரி1 aṅgurittal,    4. செ.கு.வி. (v.i.)

   1. முளைத்தல்; to sprout

     “வித்துட்டங்கியே யங்குரித்து” (திருவாத. பு. மந்தி 7);.

   2. தோற்றுவித்தல்; to originate, to be born.

     “குருவுமக் குலத்திலங் குரித்தான்” (பாரத. குருகு. 31);.

   3. வெளிப்படுதல்; to reveal oneself appear.

     “ஆண்டு மன்றல் பெற்றங்குரித்தார்” (பாரத. திரெளபதிம.98);.

த.வ. முளைப்பு.

     [Skt. ankura → த. அங்குரி-.]

 அங்குரி2 aṅguri, பெ. (n.)

   1. கைவிரல்; finger.

   2. கால் விரல்; toe.

     [Skt. anguri → த. அங்குரி.]

 அங்குரி3 aṅguri, பெ. (n.)

   தளிர்த்தல்; sprouting (சா.அக.);.

     [Skt. ankuri → த. அங்குரி.]

அங்குரிதம்

 அங்குரிதம் aṅguridam, பெ. (n.)

   முளைத்தது; that which has sprouted forth (சா.அக.);.

     [Skt. ankurita → த. அங்குரிதம்.]

அங்குறளி

 அங்குறளி aṅkuṟaḷi, பெ. (n.)

   கோள்மூட்டுபவர்; backbiter

     [அம்+குறளி]

அங்குற்றி

 அங்குற்றி aṅguṟṟi, பெ. (n.)

   திருமடத் தம்பிரான்கள்’ போலும் உயர்ந்தோரை. நோக்கி வழங்கும் முன்னிலை உயர்வுச் சொல் ; a term of highest respect, meaning ‘your worthiness’ pr your holiness”, used in addressing religious dignitaries like heads of mutts.

     [அங்கு + உறு + இ – அங்குற்றி. அங்கு + உறு + ஐ – அங்குற்றை.]

மறுவ. அங்குத்தி, அங்கத்தி, அங்குற்றை, அங்குத்தை.

அவ்விடத்திருந்தாய் (வினையாலணையும் பெயர்); என்பது சொற்பொருள் ; கண்ணியம் மிக்க அல்லது தெய்வத்தன்மையுள்ள தாங்கள் என்பது கருத்துப் பொருள்.

     ‘இ’, ‘ஐ’ முன்னிலை யொருமை யீறுகள்.

றகர வடிவுச் சொற்கள் திருந்தினவும், தகர வடிவுச் சொற்கள் அவற்றின் திரிபுகளும் ஆகும்.

நீர், நீங்கள், தாங்கள், அங்குற்றி (அங்குற்றை); என்பன, முறையே ஒன்றினொன்று உயர்ந்த முன்னிலைப் பெயர்கள்.

அங்குற்றை

 அங்குற்றை aṅguṟṟai, பெ. (n.)

அங்குற்றி பார்க்க ;see angurri.

அங்குலதோரணம்

 அங்குலதோரணம் aṅgulatōraṇam, பெ. (n.)

   சிவனியர்கள் நெற்றியிலணியும் திருநீற்றுக் கோடு (C.m.);; marks of sacred ashes worn by Saivites on their foreheads in three horizontal lines.

     [Skt. angula-torana → த. அங்குலதோரணம்.]

     [P]

அங்குலப்பரிட்சை

அங்குலப்பரிட்சை aṅgulappariṭcai, பெ. (n.)

   பெண்களின் பிறப்புறுப்பிற் கைவிரலை யிட்டுக் கருப்பையைத் தூக்கியும் இறக்கியும் பார்த்துக் குழந்தை உண்டாயிருப்பதை அறிந்து, கருப்பத்தை உறுதி செய்யும் ஒரு கைமுறை; a method of diagnosing pregnancy from the 4th to the 8th month by pushing up the uterus with the finger inserted into the vagina so as to cause the embryo to rise and fall again like a heavy body in Water, impinging on the tip of the finger in the rebound, in a characteristic way, Internal Ballottement (சா.அக.);.

த.வ. விரல்தேறல்.

     [Skt. angula + pariksa → த. அங்குலப் பரீட்சை.]

அங்குலம்

அங்குலம்1 aṅgulam, பெ. (n.)

   அணிவிரல், சுண்டு விரலுக்கு முன்னுள்ள விரல் (அக.நி.);; ring finger.

த.வ. மோதிரவிரல்

     [Skt. angula → த. அங்குலம்.]

அங்குலம் என்னும் சொல் கணையாழி (மோதிரம்); அணியும் சிறப்பு நோக்கி அணிவிரல் என்னும் பொருளில் தமிழில் மட்டுமே உள்ளது. வடமொழியில் இல்லை.

     [P]

 அங்குலம்2 aṅgulam, பெ. (n.)

   1. கைவிரல்; finger.

     “கமலங்க ணிகரு மங்குலத் திருக்கை” (மருதூ 48);.

   2. கை அல்லது காலின் பெருவிரல்; thumb or great toe.

   3. ஒருவிர லகலம்; inch, a measure of length, as a finger’s breadth.

     “அங்குலத்தளவை யாமே”. (கந்தபு. அண்ட. 5);.

த.வ. விரலம், விரற்கிடை.

அங்குலராசி

 அங்குலராசி aṅgularāci, பெ. (n.)

   பூநாகம் போன்ற ஒரு வகைச் சிறிய பாம்பு; a species of small snakes about an inch in length, as punagam (சா.அக.);.

     [Skt. angula + raji → த. அங்குலராசி.]

     [P]

அங்குலி

அங்குலி1 aṅguli, பெ. (n.)

   1. விரல் (திவா.);; finger or toe.

     “அங்குலி யெண்களி னமைத்து” (பெரியபு. ஆனாய. 13);.

   2. கணையாழி; fingering, toe-ring.

     “மேல்விரல் தனக்கு மங்குலி பொருத்தி” (நல். பாரத. திரெள. 30);.

     [Skt. anguli → த. அங்குலி.]

 அங்குலி2 aṅguli, பெ. (n.)

   1. ஆதனின் இருப்பிடமாகக் கருதப்பெறும் புருவ நடுவம்; the space between the eye-brow considered as the seat of soul.

     “அரங்குலி கூடி யகப்புறம்” (திருமந். 1191);.

     [Skt. anguli → த. அங்குலி.]

 அங்குலி3 aṅguli, பெ. (n.)

   1. யானைத் துதிக்கையின் நுனி; the tip of an elephantstrunk.

     “அக்கிரி குலங்கள்விடு மங்குலியி ணுண்டி வலை” (கலிங். 285.);.

   2. ஐவிரலி (பரி.அக.);; aivirali, a creeper bearing red fruits.

     [Skt. anguli → த. அங்குலி.]

அங்குலிகம்

அங்குலிகம் aṅguligam, பெ. (n.)

   கணையாழி; finger-ring.

     “அங்குலிக மொன்றுபுன லாழ்தரு கிணற்றில் விழ” (பாரத. வாரணா.51);.

த.வ. மோதிரம்.

     [Skt. angulika → த. அங்குலிகம்.]

அங்குலிசத்திரம்

 அங்குலிசத்திரம் aṅgulisattiram, பெ. (n.)

   தொண்டையில் அறுவை மருத்துவம் செய்தவற்காக விரலில் மாட்டிக்கொண்டு பயன்படுத்தும் ஒரு வகைக் கத்தி; a surgical knife used in an operation of the throat;

 a scraping instrument held in the hand scarper (சா.அக.);.

த.வ. விரற்கத்தி.

     [Skt. anguli + sastra → த. அங்குலிசத்திரம்.]

     [P]

அங்குலிசந்தேசம்

 அங்குலிசந்தேசம் aṅgulisandēsam, பெ. (n.)

   விரல் நொடித்தல்; making a sharp noise by striking the ball of the thumb, snaing the thumb (சா.அக.);.

     [Skt. anguli + san-desa → த. அங்குலிசந்தேசம்.]

அங்குலிதோரணம்

 அங்குலிதோரணம் aṅgulitōraṇam, பெ. (n.)

   தோரணம் போல் நெற்றியிலணியும் சந்தனச் சாந்து; a decorative mark on the forehead drawn with sandal paste or other materials.

த.வ. தோரணச்சாந்து.

     [அங்குலி + தோரணம்.]

     [(Skt. anguli + torana → த. அங்குலிதோரணம்.]

அங்குலித்திரம்

அங்குலித்திரம் aṅgulittiram, பெ. (n.)

   கைவிரலுறை (சிந்தா.நி. 39);; thimble.

     [Skt. anguli-tra → த. அங்குலித்திரம்.]

அங்குலித்திராணம்

 அங்குலித்திராணம் aṅgulittirāṇam, பெ. (n.)

அங்குலித்திரம் (யாழ்.அக.); பார்க்க;see angulittiram.

     [Skt. anguli + tirana → த. அங்குலிதிராணம்.]

அங்குலித்திராணிகம்

 அங்குலித்திராணிகம் aṅgulittirāṇigam, பெ. (n.)

   இசிவு (சன்னி); முதலிய நாய்களினால் தாக்குண்டு பல் கிட்டியிருக்கும் போது நோயாளிகளின் வாயைத் திறக்க முயலுகையில் அவர்கள் தம் பற்களால் விரல்கடிபடாமல் இருப்பதற்காகப் பயன்படுத்தும் ஒரு வகைக் கருவி; asurgical instrument akin to pincers for keeping a part or for holding anything difficult to be held by the hand forceps;a surgical instrument of holding the mouth open mouth gag (சா.அக.);.

த.வ. கிட்டுக்கோல்.

     [Skt. anguli + tirana → த. அங்குலிதிராணிகம்.]

அங்குலிபிராசனம்

 அங்குலிபிராசனம் aṅgulibirācaṉam, பெ. (n.)

   விரல்களினால் அள்ளியெடுத்து உண்ணுகை; eating with the fingers (சா.அக.);.

த.வ. விரலூட்டு.

     [Skt. anguli + prasana → த. அங்குலிபிராசனம்.]

அங்குலிப்பருவன்

 அங்குலிப்பருவன் aṅgulipparuvaṉ, பெ. (n.)

   விரற்கணு; finger joint (சா.அக.);.

     [Skt. anguli-paruva → த. அங்குலிப்பருவன்.]

அங்குலிமுகம்

 அங்குலிமுகம் aṅgulimugam, பெ. (n.)

   விரல் நுனி; tip of the finger (சா.அக.);.

     [அங்குலி + முகம்.]

     [Skt. anguli → த. அங்குலி.]

அங்குலிமுத்திரை

 அங்குலிமுத்திரை aṅgulimuttirai, பெ. (n.)

   முத்திரை மோதிரம் (யாழ்.அக.);; signet ring.

     [அங்குலி + முத்திரை.]

     [Skt. anguli → த. அங்குலி.]

அங்குலியம்

 அங்குலியம் aṅguliyam, பெ. (n.)

   கணையாழி (யாழ்.அக.);; finger ring.

     [Skt. anguliya → த. அங்குலியம்.]

அங்குள்

 அங்குள் aṅguḷ, பெ. (n.)

   குறட்டைப்பழம், சவுரிப்பழம் (வை.மூ.);; bitter snake-gourd.

அங்குவள்ளி

 அங்குவள்ளி aṅkuvaḷḷi, பெ. (n.)

   பெரியகுளம் வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Periyakulam Taluk.

     [அங்கு+(பள்ளி); வள்ளி]

அங்கூதியிற்கூதி

 அங்கூதியிற்கூதி aṅātiyiṟāti, பெ. (n.)

   கோட்சொல்லி ; tale – bearer, back – biter.

     ‘அங்கூதி இங்கூதி அடுப்பூதி” (பழ.);.

     [அங்கு + ஊதி + இங்கு + ஊதி.]

அங்கே

 அங்கே aṅā, வி.எ. (adv.)

   அவ்விடத்தில்; there.

     ‘அங்கே கண்டான் இங்கே செய்கிறான்’ (பழ.);.

     ‘அங்கேண்டி மகளே கஞ்சிக்கு அழுகிறாய், இங்கே வாடி காற்றாய்ப் பறக்கலாம்’ (பழ.);.

     [அங்கு + ஏ.]

அங்கேக்கு

 அங்கேக்கு aṅākku, வி.எ. (adv.)

   அவ்விடத்திற்கு (ஆம்); ; thither (Ām);.

அங்கேயிங்கே

அங்கேயிங்கே aṅāyiṅā, வி.எ. (adv.)

   1. அந்தப் பக்கம் அல்லது இந்தப் பக்கம்; this side or that side.

அங்கேயிங்கே பார்க்கக் கூடாது (உ.வ.);.

   2. அங்குமிங்கும்; here and there.

அங்கே யிங்கே போகக் கூடாது (உ.வ.);.

     [அங்கே + இங்கே.]

அங்கை

அங்கை aṅgai, பெ. (n.)

   உள்ளங்கை ; palm of hand.

     “அக்கேபோ லங்கை யொழிய விரலழுகி” (நாலடி. 123);.

     [அகம் + கை – அங்கை (மரூஉப் புணர்ச்சி);.]

அங்கையில் வட்டா-தல்

அங்கையில் வட்டா-தல் aṅgaiyilvaṭṭātal,    6 செ.கு.வி. (v.i.)

   அடைதற்கு மிக எளிதாக அண்மையிலிருத்தல் ; to be at hand; to be | within one’s reach.

     “அங்கையில் வட்டா மிவளெனக் கருதுகின் றாயே” (தில். பெரிய தி. 10.9 ; 3);.

அங்கையுள்நெல்லி

 அங்கையுள்நெல்லி aṅgaiyuḷnelli, பெ.(n.)

   உள்ளங்கை நெல்லிக் கனி போல் தெளி வானது (கரதலாமலகம்);; a fruit of the myrobalan placedon the palm of the hand, fig, perception at once easy and quite ..clear.

     [அங்கை+உள்+நெல்வி]

அங்கொன்றிங்கொன்றாக

 அங்கொன்றிங்கொன்றாக aṅgoṉṟiṅgoṉṟāka, வி.எ. (adv.)

   நீண்ட இடையிட்டு ; sparsely, at distant intervals.

அங்கொன்றிங்கொன்றாக நட்டிருக்கின்றான் (உ.வ.);.

     [அங்கு + ஒன்று + இங்கு + ஒன்று + ஆக.]

அங்கோடிங்கோடு

அங்கோடிங்கோடு aṅāṭiṅāṭu, வி.எ. (adv.)

   அங்குமிங்கும் (ஈடு. 1.4; 9);; here and there.

     [அங்கோடு + இங்கோடு.]

அங்கோலதைலம்

 அங்கோலதைலம் aṅāladailam, பெ. (n.)

   கண்கட்டுக்கலைக்குரிய நெய்மம் (சம்.அக.);; oil extracted from angola seeds for magical purposes (சா.அக.);.

     [Skt. ankola + taila → த. அங்கோலதைலம்.]

அங்கோலம்

அங்கோலம் aṅālam, பெ. (n.)

   1. அழிஞ்சில் (மலை.);; sage-leaved alanguim.

   2. மரவகை (L);; thin sage leaved Indian linden.

     [Skt. ankola → த. அங்கோலம்.]

அங்கோலவைரவன்

 அங்கோலவைரவன் aṅālavairavaṉ, பெ. (n.)

அழிஞ்சில் (மலை.);

 sage-leaved alangium.

     [Skt. ankola + bhairava → த. அங்கோலவைரவன்.]

அங்கோலை

அங்கோலை aṅālai, பெ. (n.)

   அழிஞ்சிற் பட்டை; bark.

     “அத்தமதியுதய மங்கோலை” (இராசவைத். 270);.

     [Skt. ankola → த. அங்கோலை.]

அங்ஙனம்

அங்ஙனம் aṅṅaṉam, வி.எ. (adv.)

   1. அவ்விடம் ; there, in that place.

   2. அவ்வகை, அப்படி ; in that manner.

     [அங்கனம் → அங்ஙனம்.]

அங்ஙனே

அங்ஙனே aṅṅaṉē, வி.எ. (adv.)

   1. அவ்விடம் ; there, in that place.

     “அன்பருக் கங்ஙனே யமிர்தசஞ் சீவிபோல் வந்து” (தாயு. சுக. 4);.

   2. அவ்வகை அப்படி ; in that manner.

     “அங்ங்னே வடமொழியில் வசனங்கள் சிறிது புகல்வேன்” (தாயு. சித்தர். 10);.

     [அங்ஙன் + ஏ.]

அங்ஙனேயிங்ஙனே

 அங்ஙனேயிங்ஙனே aṅṅaṉēyiṅṅaṉē, வி.எ. (adv.)

   அங்கேயிங்கே ; here and there.

அங்ஙன்

அங்ஙன் aṅṅaṉ, வி.எ. (adv.)

அங்கனம் பார்க்க ;see anganam.

 அங்ஙன் aṅṅaṉ, வி.எ. (adv.)

   அவ்விடம் ; there.

     “நம்மொடு மங்கன் குலாவினான்” (திருக் காளத். பு, 16 ; 16);.

     [அங்ஙனம் → அங்கன்.]

அசகங்கை

 அசகங்கை asagaṅgai, பெ. (n.)

   தில்லைப்பால்; the milky juice of the tree called tiger’s milk spurge, Excoecaria agallocha (சா.அக.);.

அசகசாந்தரம்

 அசகசாந்தரம் asagasāndaram, பெ. (n.)

   பெரும் வேறுபாடு; wide disparity, as between a goat and an elephant.

த.வ. ஆட்டானைவேறுபாடு.

     [Skt. aja+gaja + antara → த. அசகசாந்தரம்.]

அசகணாகம்

 அசகணாகம் asagaṇāgam, பெ. (n.)

   கருந் துவரை (சித்.அக.);; a kind of doll.

அசகண்டம்

 அசகண்டம் asagaṇṭam, பெ. (n.)

   தைவேளை (சித்.அக.);; a species of cleome.

     [Skt. ajakanta → த. அசகண்டம்.]

அசகண்டா

 அசகண்டா asagaṇṭā, பெ. (n.)

அசகண்டம் பார்க்க;see asakandam.

அசகந்தம்

 அசகந்தம் asagandam, பெ. (n.)

   மொச்சி நாற்றம்; goat’s smell.

த.வ. ஆட்டுமுடை.

     [அச(ம்); + கந்தம்.]

     [Skt. aja → த. அச(ம்);.]

அசகந்திகம்

 அசகந்திகம் asagandigam, பெ. (n.)

   எலுமிச்சந் துளசி; lemon basil, Ocinum Gratissimum (சா.அக.);.

     [Skt. aja. Kandika → த. அசகந்திகம்.]

அசகம்

அசகம் asagam, பெ. (n.)

   1. வரையாடு (சிந்தா, நி. 46.);; mountain sheep.

   2. வெள்ளுள்ளி; garlic.

   3. அகத்தி பார்க்க;see agatti.

   4. உடம்பு பருத்து எங்கும் கரணைக் கிழங்கு முளைகளைப் போல் கொப்புளங்களையும், புண்களையும், உண்டாக்கும் எட்டுவகை அம்மையுளொன்று; one of the eight kinds of small-pox in which pustules develop to the size of yam-root shoots and spread all over the body.

   5. கண்மணியில் சிவப்பாகச் தசை வளர்ந்து பிதுங்கி, சீழ் வடியும் ஒரு கண்ணோய்; a disease of the pupil of the eye in which Small reddish tumours are found protruding through the transparent cornea and discharging pus (சா.அக.);.

     [Skt. aja → த. அசகம்.]

அசகரம்

அசகரம் asagaram, பெ. (n.)

   மலைப்பாம்பு (தேசிகப். 18, 1);; boa-constrictor.

     [Skt. aja-gara → த. அசகரம்.]

     [P]

அசகர்ணகம்

 அசகர்ணகம் asagarṇagam, பெ. (n.)

   குங்கிலியம்; Indian dammer, Shorea robusta (சா.அக.);.

     [Skt. asa – karnaka → த. அசகர்ணகம்.]

அசகர்ணம்

 அசகர்ணம் asagarṇam, பெ. (n.)

   மருதமரம்; goast’s ear tree, Terminalia alata alias T. tomentosa (சா.அக.);.

     [Skt. aja-karna → த. அசகர்ணம்.]

அசகல்லி

அசகல்லி asagalli, பெ. (n.)

   குழந்தைகட்கு வரும் நோய்வகை (பதார்த்த. 1155);; a disease of children.

     [Skt. ajagalla → த. அசகல்லி.]

அசகல்லிகாரோகம்

அசகல்லிகாரோகம் asagalligārōgam, பெ. (n.)

அசகல்லி (பதார்த்த. 155, உரை); பார்க்க;see asagalli.

     [Skt. ajagallika + roga → த. அசகல்லிகா ரோகம்.]

அசகவம்

அசகவம் asagavam, பெ. (n.)

   சிவபெருமானுடைய வில் (சிந்தா.நி. 46);; the bow of Sivan.

     [Skt. ajagava → த. அசகவம்.]

அசகா

 அசகா asakā, இடை. (part.)

   குருதியைக் கொண்டு கருவிழியில் பளபளப்பான புண் கொப்புளத்தையுண்டாக்கி, அதைச் சுற்றிலும் சிறுசிறு கொப்புளங்களை எழுப்பி, அதனால் அக்கண்ணில் அதிக வலியையும் அரத்தம் போல் சிவந்த நீர் ஒழுக்கையும் உண்டாக்கும் ஒரு கண்ணோய்; painful reddish growth resembling the hard excreta of a goat, found shooting forth from beneath the Surface of the cornea With Small vesicles around it. It is attended with excessive pain the reddish slimy secretion, Vesicular keratitis (சா.அக.);.

     [Skt. ajaka → த. அசகா.]

அசகாமிகம்

 அசகாமிகம் asagāmigam, பெ. (n.)

   கரு மொச்சை (சித்.அக.);; a kind of black bean.

     [Skt. aja-kamika → த. அசகாமிகம்.]

அசகாயசூரன்

 அசகாயசூரன் asakāyasūraṉ, பெ. (n.)

   துணை வேண்டாப் பெருவீரன்; hero able to accomplish great things without assistance.

த.வ. தனியாண்மை வீரன், மையான் மறவன்.

     [அசகாயன் + சூரன்.]

     [Skt. a-sahaya → த. அசகாய(ன்);.]

அசகாயம்

 அசகாயம் asakāyam, பெ. (n.)

   சிறு (சொற்ப); புண்; simple injury (சா.அக.);.

     [Skt. asa + Mhr. Ghaya → த. அசகாயம்.]

அசகாரிதம்

 அசகாரிதம் asakāridam, பெ. (n.)

   முயல்; a hare (சா.அக);.

     [Skt. asa-garida → த. அசகாரிதம்.]

அசகாவம்

அசகாவம் asakāvam, பெ. (n.)

   1. ஒரு நச்சுயிரி; a Venomous vermin.

   2. அட்டை, தேள் முதலியன; centipedes, scorpion, etc., (சா.அக.);.

     [Skt. asa + kåvam.]

அசகியம்

அசகியம் asagiyam, பெ. (n.)

   1. தாங்க முடியாதது; that which is unbearable.

   2. அருவருப்பு; loathing.

     [Skt. a-sahya → த. அசகியம்.]

அசகியாபீடம்

 அசகியாபீடம் asagiyāpīṭam, பெ. (n.)

   தாங்கவொண்ணா வலியுண்டாக்குகை; causing an unbearble pain (சா.அக.);.

அசகும்பி

 அசகும்பி asagumbi, பெ. (n.)

   ஒரு வகை நீர்ப் பூடு; an aquatic plant, Pistia stratiotes (சா.அக.);.

     [Skt. asa → த. அசகும்பி.]

அசகை

 அசகை asagai, பெ. (n.)

   பருத்தும், தடித்தும் கொப்புளங்களை எழுப்பி புண் உண்டாக்கி மூட்டுகளிலும் முகத்திலும் வீக்கமும், நீர் வேட்கையும், பிசுபிசுப்புள்ள சீழ் முதலியனவும் உண்டாக்கும் ஒருவகை அம்மைநோய்; a kind of small pox; marked by large and well on the face and the joints. It is followed by thirst and discharge of sticky pus (சா.அக.);.

த.வ. அசர் அம்மை.

     [Skt. asaga → த. அசகை.]

அசக்கியன்

 அசக்கியன் asakkiyaṉ, பெ. (n.)

   இயலாதவன் (R.);; unskilled or unfit person.

     [Skt. a-sakya → த. அசக்கியன்.]

அசக்கியம்

அசக்கியம்1 asakkiyam, பெ. (n.)

   செய்ய வியலாதது; that which is impossible or impracticable.

     “தியானம் புரிதற் கசக்கிய மாதலினால்” (சூத. எக்கிய. பூ. 9, 3);.

த.வ. அருவினை.

     [Skt. a-sakya → த. அசக்கியம்.]

 அசக்கியம்2 asakkiyam, பெ. (n.)

   நாகமணல் (வை.மு.);; sand containing lead.

     [Skt. a-sankhya → த. அசக்கியம்.]

அசக்கீரம்

 அசக்கீரம் asakāram, பெ. (n.)

   ஆட்டுப்பால் (பரி.அக.);; goat’s milk.

     [Skt. aja + ksira → த. அசக்கீரம்.]

அசக்கு-தல்

அசக்கு-தல் asakkudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. அசைத்தல்; to shake.

     “அகடசக் கரவின் மணியா” (கந்தபு. பாயிரம், 1);.

     [அசங்கு (த.வி.); → அசக்கு (பி.வி.);. aiakku causative of ašarigu.]

அசக்கு – cf. E. shake, ME. schaken, shaken. fr. OE. scacan, “to shake, to move, quickly, flee, depart rel. to ON. and Swed. skaka, Dan. skage, ‘to shift, turn, reel’. F. secourer, to shake—(K.C.E.D.E.L.);.

அசங்கதம்

அசங்கதம்1 asaṅgadam, பெ. (n.)

   1. ஒழுங்கின்மை; irregularity.

   2. இகழ்ச்சி; contempt, disrespect.

த.வ. நேரன்மை.

     [Skt. a-sangata → த. அசங்கதம்.]

 அசங்கதம்2 asaṅgadam, பெ. (n.)

   1. பொருத்தமில்லாதது; that which is inconsistent.

   2. பொய் (வின்.);; falsehood.

த.வ. நேரிலி.

     [Skt. a-sangata → த. அசங்கதம்.]

 அசங்கதம்3 asaṅgadam, பெ. (n.)

   படைவகுப்பு (குறள், 767, உரை.);; incompact, open array of an army.

     [Skt. a – samhata → த. அசங்கதம்.]

அசங்கதி

அசங்கதி asaṅgadi, பெ. (n.)

   1. பொருத்தமின்மை; inconsistency.

   2. தொடர்பின் மையணி (மாறனலங். 203);; figure of speech in which cause and effect are represented as not co-existent.

த.வ. நிகரன்மை.

     [Skt. a-sangata → த. அசங்கதி.]

அசங்கதியாடு-தல்

அசங்கதியாடு-தல் asaṅgadiyāṭudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   பகடிசெய்தல்; to ridicule, treat with contempt.

     “அந்த மாமுனி யுரைத்ததை யசங்கதி யாடி” (செவ்வந்திப்பு. உறையூரழித். 60);.

த.வ. வகடி.

     [அசங்கதி + ஆடு-.]

     [Skt. a-sangati → த. அசங்கதி.]

அசங்கன்

அசங்கன் asaṅgaṉ, பெ. (n.)

   பற்றற்றவன்; one who is free from attachment.

     “இந்த வான்மா வென்றுவே யசங்கனாவன்” (விவேகசூடா. 114);.

த.வ. பற்றிலி.

     [Skt. sanga → த. அசங்கன்.]

அசங்கமம்

அசங்கமம் asaṅgamam, பெ. (n.)

   1. ஒற்றுமை யின்மை; disunion, opposition.

   2. கோள்கள் கதிரவனுக்கு எதிர்நிற்கை;த.வ. ஒன்றாமை.

     [Skt. a-sangama → த. அசங்கமம்.]

அசங்கம்

அசங்கம்1 asaṅgam, பெ. (n.)

   பற்றின்மை; nonattachment, freedom from worldly ties.

     “அயற்சங்க மறல் அசங்கமாகும்” (ஞானவா. உற். 47);.

த.வ. பற்றறவு

     [Skt. a-sanga → த. அசங்கம்.]

 அசங்கம்2 asaṅgam, பெ. (n.)

அசங்கமம் (வின்.); பார்க்க;see asangamam.

     [Skf. A-sanga → த. அசங்கம்.]

அசங்கற்பமாசம்

அசங்கற்பமாசம் asaṅgaṟpamāsam, பெ. (n.)

   கதிரவன் ஓர் ஒரையில் இருந்து அடுத்த ஒரைக்குச் செல்லும் முதல் மற்றும் முடிவுகளில், காருவா வர, நிகழும் மாதம் (விதான. குணா. 81, உரை);;     (Astrol.); month in which the new moon appears at the beginning or end of the sun’s passage from one sign of the zodiac to another.

த.வ. கூடாமாதம்.

     [அசங்கற்பம் + மாசம்.]

     [Skt. a-sankalpa → த. அசங்கற்பம்.]

மாதம் → மாசம்.

அசங்கிதம்

அசங்கிதம் asaṅgidam, பெ. (n.)

   தூய்மையின்மை; uncleanliness,

     “காக்கை யெச்சமாதிகளில் யாவருக்கும் அசங்கித புத்தி யெப்படித் தோற்றுமோ” (வேதாந்தசாரம். பக். 6);.

த.வ. தூவாமை.

     [Skt. a-sahyata → த. அசங்கிதம்.]

அசங்கியம்

அசங்கியம்1 asaṅgiyam, பெ. (n.)

   எண்ணிக்கை யிலடங்காதது; that which is innumerable, unnumbered.

த.வ. எண்ணிலி.

     [Skt. a-sankhya → த. அசங்கியம்.]

 அசங்கியம்2 asaṅgiyam, பெ. (n.)

   1. அருவருப்பு (இ.வ.);; uncleanliness,

   2. ஒழுக்கமின்மை, துப்புரவின்மை; uncleanliness.

த.வ. குப்படை.

     [Skt. a-sahya → த. அசங்கியம்.]

அசங்கியாதம்

அசங்கியாதம் asaṅgiyātam, பெ. (n.)

   எண்ணிக்கையற்றது (மேருமந். 6, உரை);; that which is innumerable, countlessness.

த.வ. எண்ணிலி.

     [Skt. sankhyata → த. அசங்கியாதம்.]

அசங்கியேயம்

 அசங்கியேயம் asaṅgiyēyam, கு.பெ.எ. (adj.)

   எண்ணிறந்தது; that which is innumerable.

     ‘அசங்கியேய கிரந்தம்’.

த.வ. எண்ணிலி.

     [Skt. a-sankhyeya → த. அசங்கியேயம்.]

அசங்கு-தல்

அசங்கு-தல் asaṅgudal,    5 செ.கு.வி. (v.i)

   அசைதல் ; to stir, move, shake.

     “சங்கர நான்முகர் கைத்தலம் விண்ட சங்கிட” (கம்பரா. யுத்த. இராவணன் வதை. 28);.

ம. அசங்குக; க. அசி ; தெ. அசியாடு ; குருக். அசர்னா.

     [அல் → அலு → அலுங்கு → அலங்கு → அசங்கு.]

அசங்கை

அசங்கை1 asaṅgai, பெ. (n.)

   அச்சமின்மை; fearlessness, security.

     “அசங்கையனை” (தேவா. 683.9.);.

த.வ, அஞ்சாமை.

     [Skt. a-sanka → த. அசங்கை.]

 அசங்கை2 asaṅgai, பெ. (n.)

   மதிப்பின்மை (யாழ்ப்.);; dishonour.

த.வ. மதியாமை.

     [Skt. a-sankhya → த. அசங்கை.]

அசங்கையன்

அசங்கையன் asaṅgaiyaṉ, பெ. (n.)

   ஐயமில்லாதவன்; one who has no doubts.

     “அசங்கையனை யமரர்கடஞ் சங்கையெல்லாங் கீண்டானை” (தேவா. 683, 9);.

த.வ. தெள்ளியன்.

     [அசங்கை + அன்.]

     [Skt. a-sanka → த. அசங்கை.]

அசசரம்

அசசரம் asasaram, பெ. (n.)

   1. நெருஞ்சி; cows thorn.

   2. முருங்கை; horse radish tree.

த.வ. நீரப்பயிரி.

     [Skt. iksura → த. அசசரம்.]

அசசிரிங்கி

அசசிரிங்கி asasiriṅgi, பெ. (n.)

   1. ஒதியமரம்; Indian ash tree, odina wodier.

   2. நரிக்காந்தள்; goat’s horn mangrove, Aegiceras majus.

   2. ஆடுதின்னாப்பாளை; worm-killer, Aristolochia bracteata (சா.அக.);.

த.வ. நீரவேரி.

     [Skt. asa + siringi → த. அசசிரிங்கி.]

அசசீரம்

 அசசீரம் asasīram, பெ. (n.)

   ஆட்டுப்பால்; sheep’s milk (சா.அக.);.

     [Skt. aja + sira → த. அசசீரம்.]

அசசுரம்

அசசுரம் asasuram, பெ. (n.)

   1. நெருஞ்சில்; a thorny shrub, Tribulus terrestris.

   2. முருங்கை; drumstick tree, Hyperanthera moringa alias Moringa Pterygosperma (சா.அக.);.

அசசெந்தா

 அசசெந்தா asasendā, பெ. (n.)

   நுண்ணுயிர்க் கொல்லி; germ-killer, an agent that destroys germs-germicide.

     [Skt. aja + senda → த. அசசெந்தா.]

அசஞ்சத்தி

அசஞ்சத்தி asañsatti, பெ. (n.)

   பற்றின்மை (ஞானவா.உற். 47, உரை);; non-attachment, indifference to worldly things.

     [Skt. a-sam-sakti → த. அசஞ்சத்தி.]

அசஞ்சலன்

அசஞ்சலன் asañsalaṉ, பெ. (n.)

   மனந்தளராதவன் (ஞானா. 48,15);; one who is steady, unmoved.

த.வ. அஞ்சாநெஞ்சன்.

     [Skt. a-cancala → த. அசஞ்சலன்.]

அசஞ்சலம்

 அசஞ்சலம் asañsalam, பெ. (n.)

   மனந் தளராமை; steadiness, imperturbability.

த.வ. நடுங்கா உள்ளம்.

     [Skt. a-cancala → த. அசஞ்சலம்.]

அசடன்

அசடன் asaḍaṉ, பெ. (n.)

   1. மடையன், மூடன்; fool, stupid, silly man.

     “அசட னறிவிலி” (திருப்பு. 1241);.

   2. கீழ்மகன்; low mean person.

     “அசடர் பெரியோ ராவரோ” (குமரேச. சத. 15);.

ம. அசடன் ; க. அசட.

அசடம்

அசடம் asaḍam, பெ. (n.)

   இயங்கக் கூடியது; non-inert, conscious being.

     “அசட மநாமயம்” (கைவல்ய. சந்தே. 137);.

த.வ. இயலி.

     [Skt. a-jada → த. அசடம்.]

அசடு

அசடு asaḍu, பெ. (n.)

   1. புண்ணின் பொருக்கு; an incrusted substance formed over a sore in healing, scab.

   2. மாழை (உலோகம்); முதலியவற்றிலிருந்து பெயரும் பொருக்கு; small splinter of a surface as of a plate of metal, the scum or extraneous matter in metals thrown off in the process of melting.

   3. குற்றம், பழுது ; fault, defect, blemish.

     “அறிவுளோர் தமக்கும் யாதோ ரசடது வருமே யாகில்” (விவேகசிந். 64);.

   4. அறிவு மழுக்கம்; stupidity.

   5. அறிவு மழுங்கி ; stupid man, fool.

அந்த அசடு எங்கே? (உ.வ.);.

   6. அறியாமை; ignorance.

ம., க. அசடு.

     [அயறு → அசறு → அசடு → அயறு = புண் வழலை.]

ஒ.நோ ; Scab, dry rough incrustation formed over sore in healing, cicatrice; mange, itch or similar skin-disease; kind of fungous plant disease; mean dirty fellow (Arch.);; (trade unionism); workman who refuses to join strike or union or takes striker’s place, black-leg— (C.O.D.);.

அசடுதட்டு-தல்

அசடுதட்டு-தல் asaḍudaḍḍudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. அறியாமை புலப்படுதல் ; ignorance or folly becoming evident.

   2. பொலிவழிதல் ; to lose beauty, brightness, as a town.

அந்த ஊர் அசடுதட்டியிருக்கிறது (உ.வ.);.

அசடுவழி-தல்

அசடுவழி-தல் asaḍuvaḻidal,    2 செ.கு.வி. (v.i.)

   அறியாமை பெருகி வெளிப்படுதல்; to display gross ignorance.

அவனிடத்தில் அசடுவழிகிறது (உ.வ.);.

அசடுவா

 அசடுவா asaḍuvā, பெ. (n.)

   பால்; milk (சா.அக.);.

அசடெழும்பல்

 அசடெழும்பல் asaḍeḻumbal, தொபெ. (vbl.n.)

   சிம்பெழும்பல்; membranous separation of bone or other tissues from the living structure, as in dry necrosis, etc., exfoliation (சா.அக.);.

     [அசடு + எழும்பல்])

அசடை

 அசடை acaṭai, பெ. (n.)

   மிகச் சிறிய மீன்வகை; a kind small fish. (இ.வ);.

     [அசரை-அசடை]

அசட்டன்

அசட்டன் asaṭṭaṉ, பெ. (n.)

   1. குற்றமுள்ளவன்; delinquent, offender, culprit, criminal.

   2. கீழ் மகன் ; low, mean person.

     “கள்வ ராயுழ லசட்டர்க ளைவரை” (கம்பரா. பால. திருவவ. 76);.

அசட்டாட்டம்

 அசட்டாட்டம் asaṭṭāṭṭam, பெ. (n.)

   புறக் கணிப்பு (இராட்.); ; disregard, contempt (R.);.

     [அசடு + ஆட்டம்.]

அசட்டாளம்

அசட்டாளம் asaṭṭāḷam, பெ. (n.)

   1. பாண்டலழுக்கு ; filthiness.

   2. ஒழுங்கின்மை ; disorder, confusion, muddle.

க. அசட்டாள ; தெ. அசட்டாளுவு.

அசட்டி

 அசட்டி asaṭṭi, பெ. (n.)

அசமதாகம் பார்க்க;see asama-dagam (சா.அக.);.

அசட்டுச்சிரிப்பு

 அசட்டுச்சிரிப்பு asaṭṭussirippu, பெ. (n.)

   மடத்தனமான சிரிப்பு ; foolish laughter.

     [அசடு + சிரிப்பு.]

அசட்டுப்பிசட்டெனல்

 அசட்டுப்பிசட்டெனல் asaṭṭuppisaṭṭeṉal, பெ. (n.)

   பேதைத்தனமாய் நடந்துகொள்கை; behaving foolishly, stupidly.

ம, மரா. அசகட விசகட.

     [‘அசடு’ என்னும் சொல்லின் எதுகை யிரட்டிப்பு.]

அசட்டுவிழி

அசட்டுவிழி asaṭṭuviḻi, பெ. (n.)

   1. மனக் களங்கத்தை வெளிப்படுத்தும் பார்வை ; telltale look.

   2. அறியாமையை வெளிப்படுத்தும் பார்வை; ignorant look.

அசட்டுவிழி விழிக்கிறான் பார் (உ.வ.);.

     [அசடு + விழி.]

அசட்டை

அசட்டை asaṭṭai, பெ. (n.)

   1. புறக்கணிப்பு; contempt,

     “அசட்டையற் றொழுகி மையலாக்குவன்” (நல். பாரத. துட்டியந்த. 29);.

   2. நினைவோட்டமின்மை; inattention, heedlessness, indifference.

     ‘காரியத்தில் அசட்டையாயிருந்துவிட்டான்’.

த.வ. கடைகணிப்பு.

     [Skt. a-sraddha → த. அசட்டை.]

அசதபன்னி

 அசதபன்னி asadabaṉṉi, பெ. (n.)

அசனபன்னி பார்க்க;see asana-panni (சா.அக.);.

அசதி

அசதி asadi, பெ. (n.)

   1. களைப்பு ; tiredness, fatigue, weariness.

   2. தூக்க மயக்கம் ; drowsiness.

   3. சோர்வு ; langour, depression of spirits.

   4. வலுவின்மை; weakness.

   5. மறதி ; forgetfulness.

   6. ஒளவையாரால் அசதிக் கோவை பாடப்பெற்றவன்; name of a shepherd, said to be the hero of {Avvaiyar’s Aşadi-k-kóvai,} as having forgotten his name when he was asked.

ம. அசதி, தெ. அசது.

     [அயர் → அயர்தி → அசர்தி → அசதி.]

 அசதி asadi, பெ. (n.)

   சடுதி (வின்.); ; suddenness (W.);.

 அசதி acati, பெ. (n.)

சோர்வு, அயர்வு. (நெ.வ.வ.சொ.35.);.

 tiredness.

     [அயர்தி+அயதி+அசதி]

 அசதி1 asadi, பெ. (n.)

   1. இழித்துரை, நக்கல் பேச்சு; scoffing.

   2. நட்புடன் கூடிய நகைச்சுவை; banter, pleasantry.

த.வ. நகையாட்டு.

     [Skt. hasiti → த. அசதி.]

 அசதி2 asadi, பெ. (n.)

   காணாவொலி (அசரீரி);; voice from heaven, utterance of an invisible speaker.

     “உரைத்த தந்தரத்தே யோரசதி யாங்கு” (பாரத வெண். 268);.

த.வ. சேணொலி.

     [Skt. asaririn → த. அசதி.]

 அசதி3 asadi, பெ. (n.)

   கற்பில்லாதவள் (சூடா.);; unchaste woman.

     [Skt. a-sati → த. அசதி.]

அசதி நோய்

 அசதி நோய் asadinōy, பெ. (n.)

   நரம்புத் தளர்ச்சியால் ஏற்படும் நோய்; a disease resulting from nervous exhaustion, neurasthenia (சா.அக.);.

அசப்பு

__,

பெ. (n.);

அசதி பார்க்க;see {ašadio.}

அசதிக்கிளவி

அசதிக்கிளவி asadikkiḷavi, பெ. (n.)

   ஏளனப் பேச்சு; derisive speech.

     “அசதிக் கிளவி நயவர மிழற்றி” (பெருங். இலாவாண. 17, 191);.

த.வ. நகைமொழி.

     [அசதி + கிளவி.]

     [Skt. hasitid → த. அசதி.]

கிள் → கிள → கிளவி.

அசதிக்கோவை

 அசதிக்கோவை asadikāvai, பெ. (n.)

   ஒளவையாரால் அசதி என்பவன்மேற் பாடப்பட்டதும் இறந்துபட்டதுமான ஒரு கோவைப் பனுவல்; name of a love-poem in praise of Aşadi, attributed to Avvaiyar and now not extant.

     [அசதி + கோவை.]

அசதியாடு-தல்

அசதியாடு-தல்1 asadiyāṭudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   ஏளனம் செய்தல்; to ridicule, laugh at.

     “ஒறுக்கப்படுவா ரிவரென்றங் கசதியாடி” (சீவக. 1871);.

த.வ. நகையாடுதல்.

     [அசதி + ஆடு-,]

     [Skt. hasiti → த. அசதி.]

 அசதியாடு-தல்2 asadiyāṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   நகைச்சுவைச்சொல் (வார்த்தை); கூறுதல்; to indulge in banter, pleasantry.

     “அமிர்தனாரோடு…. வானோ ரசதியா டிடங்கள்” (சூளா. சீய. 192);.

த.வ. நகையாடுதல்.

     [Skt. hasiti → த. அசதி.]

அசதீபம்

அசதீபம் asatīpam, பெ. (n.)

   கோயிலிலுள்ள வழிபாட்டு விளக்கு வகை (பரத. ஒழிபி. 41, உரை.);; a kind of light used in temple worship.

     [அச(ம்); + தீபம்.]

     [Skt. aja → த. அசம்.]

த. தீவம் → Skt. dipa → த. தீபம்.

அசத்தக்குலை

 அசத்தக்குலை asattakkulai, பெ. (n.)

   அரத்தம் வெளிப்படும் ஒருவகைக் குலைநோய்; an inter-nal disease, so called from the discharge of blood from the viscera (சா.அக.);.

     [அரத்தம் + குலை.]

அசத்தன்

அசத்தன் asattaṉ, பெ. (n.)

   வலுவற்றவன், ஆற்றலில்லாதவன்; weak, incompetent person.

     “புகலரு மசத்தர் தம்பாற் பொருந்திய வலகை யேபோல்” (சிவப்பிர. உண்மை, 26);.

த.வ. நோஞ்சான்.

     [Skt. a-sakta → த. அசத்தன்.]

அசத்தி

அசத்தி1 asatti, பெ. (n.)

   வலுவின்மை; inability powerlessness.

     “கிலேசத்தா லசத்தி யாற் றுயரம்” (சூத. எக்கிய. பூ. 17, 15);.

     [Skt. a-sakti → த. அசத்தி.]

 அசத்தி2 asatti, பெ. (n.)

   துறத்தல்; detachment from worldly feelings or passions (சா.அக.);.

     [Skt. a-sadyah → த. அசத்தி.]

அசத்தியநிருவாணம்

 அசத்தியநிருவாணம் asattiyaniruvāṇam, பெ. (n.)

அசத்தியோநிர்வாண தீட்சை (சித். பிர.); பார்க்க;see asattiyo-nirvana-titcai.

     [Skt. a-sadya + nirvana → த. அசத்திய நிருவாணம்.]

அசத்தியம்

அசத்தியம் asattiyam, பெ. (n.)

   பொய்; untruth, falsehood,

     “அசத்திய மறியீர்” (உபதேசகா. சிவத்துரோ. 128);.

த.வ. சுள்ளு.

     [Skt. a-satya → த. அசத்தியம்.]

அசத்தியோநிர்வாணதீட்சை

அசத்தியோநிர்வாணதீட்சை asattiyōnirvāṇatīṭsai, பெ. (n.)

   நிருவாண நோன்பு வகை (சி.சி. 8, 4 சிவஞா.);;     [Skt. a–sadya + nirvana + diksa → த. அசத்தியோநிர்வாணதீட்சை.]

அசத்து

அசத்து1 asattu, பெ. (n.)

அசத்தி பார்க்க;see asatti (சா.அக.);.

     [Skt. a-sat → த. அசத்து.]

 அசத்து2 asattu, பெ. (n.)

   1. இல்லாதது (திருக்காளத். பு. 5, 44.);; that which is non-existent.

   2. பொய்ந்நெறி; false course.

     “அசத்தினிற் செல்கிலாச் சதுமுகத்தவற்கு” (கம்பரா. இராவணன் வதை. 117);.

   3. நிலையில்லாதது (திருக்காளத். பு. 32, 40);; that which is unstable.

   4. மாயை (சூத். சிவ. 8, 10);; Illusion,

   5. தீயோன் (இ.வ.);; wicked person.

த.வ. பொய்ப்பொருள்.

அசத்துரு

 அசத்துரு asatturu, பெ. (n.)

   நண்பன் (வின்.);; friend.

த.வ. பகையிலி.

     [Skt. a-satru → த. அசத்துரு.]

அசத்துவம்

அசத்துவம்1 asattuvam, பெ. (n.)

   ஆற்றலற்றது; characterised by astenia or loss of strength, Asthenic (சா.அக.);.

     [Skt. a-satva → த. அசத்துவம்.]

 அசத்துவம்2 asattuvam, பெ. (n.)

   ஏலாமை; deficiency or loss of vital or muscular power, adynamia (சா.அக.);.

     [Skt. a-sat-va → த. அசத்துவம்.]

அசத்யகதனம்

அசத்யகதனம் asadyagadaṉam, பெ. (n.)

   பொய்பேசுகை; uttering lies.

     “அசத்யகதனமும் சுகதனுக்குண்டு” (நீலகேசி. 1, உரை);.

     [Skt. a-satya+kadana → த. அசத்யகதனம்.]

அசநாமகம்

 அசநாமகம் asanāmagam, பெ. (n.)

   ஒரு வகைத் தாது; a kind of mineral (சா.அக.);.

அசநீர்

 அசநீர் asanīr, பெ. (n.)

   ஆட்டு மூத்திரம்; goats urine (சா.அக.);.

த.வ. ஆட்டு உச்சை.

     [அச(ம்); + நீர்.]

     [Skt. aja → த. அசம்.]

அசநீர்வாயு

 அசநீர்வாயு asanīrvāyu, பெ. (n.)

   நோய் வகையுளொன்று; a kind of disease (சா.அக);.

அசநோற்பவவிக்கல்

 அசநோற்பவவிக்கல் asanōṟpavavikkal, பெ. (n.)

   உணவுக் குற்றங்களினால் வயிற்றில் வளி மிகுத்து அதனால் தொண்டைக் கம்மல், சிணுக்கிருமல், முதலியவற்றை உண்டாக்கும் ஐந்து வகை விக்கல்களுள் ஒரு விக்கல்; a kind of hiccough due to the neurotic condition of the stomach arising from dietary defects or indigestion. It is marked by sore throat, feeble Voice and a sligh cough. It is one of the five kinds of hiccough described in the Indian medical science, singultus

 gastricus nervosus (சா.அக.);.

அசந்ததி

 அசந்ததி asandadi, பெ. (n.)

   வழித் தோன்றலில்லாமை; the state or condition remaining issueless (சா.அக.);.

த.வ. பூண்டறுகை.

     [Skt. a-santati → த. அசந்ததி.]

அசந்தர்ப்பம்

அசந்தர்ப்பம்1 asandarppam, பெ. (n.)

   1. இயலாக் காலம்; unsuitable time.

     ‘அவன் வர அசந்தர்ப்பமா யிருக்கிறது’.

   2. வாய்ப் (வசதி);யின்மை; in convenience.

     ‘அசந்தர்ப்பத்தால் கடன் கொடுக்கக் கூடவில்லை’.

   3. பொருத்தமின்மை; irrelevancy.

     ‘அசந்தர்ப்பமாகப் பேசாதே’ (கொ.வ);.

த.வ. அல்லாக்காலம்.

     [Skt. a-san-darbha → த. அசந்தர்ப்பம்.]

 அசந்தர்ப்பம்2 asandarppam, பெ. (n.)

   இழவு; death.

     ‘வீட்டில் ஒரு அசந்தர்ப்பம் நடந்துவிட்டது’ (இ.வ.);.

     [Skt. a-sandarbha → த. அசந்தர்ப்பம்.]

அசந்தாகம்

 அசந்தாகம் asandākam, பெ. (n.)

   உப்பு; common salt (சா.அக.);.

அசந்தானம்

 அசந்தானம் asandāṉam, பெ. (n.)

அசந்ததி பார்க்க;see asandadi (சா.அக.);.

     [Skt. a-san-tana → த. அசந்தானம்.]

அசந்தீண்டாப்பாலை

 அசந்தீண்டாப்பாலை asandīṇṭāppālai, பெ. (n.)

   ஆடுதின்னாப்பாளை; a plant which even goat will not touch owing to its extreme bifferness, Aristolochia bracteata (சா.அக.);.

த.வ. ஆடுதீண்டாப்பாளை.

     [அசம் + தீண்டாப்பாலை.]

     [Skt. aja → அசம்.]

அசந்துட்டி

 அசந்துட்டி asanduṭṭi, பெ. (n.)

   பொந்திகை யின்மை; discontent, dissatisfaction.

த.வ. மனக்குறை.

     [Skt. a-san-tusti → த. அசந்துட்டி.]

அசனங்கொள்ளல்

 அசனங்கொள்ளல் asaṉaṅgoḷḷal, பெ. (n.)

   சோறுண்ணுகை; eating boiled rice i.e. taking food (சா.அக.);.

த.வ. அயினிகொள்ளல்.

     [அசனம் + கொள்ளல்.]

     [Skt. asana → த. அசனம்.]

அசனசாலை

 அசனசாலை asaṉasālai, பெ. (n.)

   உணவு விடுதி (pond.);; eating house.

த.வ. அயினிச்சாலை.

     [அசன(ம்); + சாலை.]

     [Skt. asana → த. அசன(ம்);.]

அசனபன்னி

அசனபன்னி1 asaṉabaṉṉi, பெ. (n.)

   சிற்றகத்தி (மலை);; comman sesban.

 அசனபன்னி2 asaṉabaṉṉi, பெ. (n.)

   1. சோறு; boiled rice.

   2. வெள்ளுள்ளி; white onion, Alluim sepra.

   3. வேங்கை; kino tree, Terminalia tomentosa alias pterocarpus marsupium (சா.அக.);.

த.வ. அயினியுளி.

அசனபர்ணி

 அசனபர்ணி asaṉabarṇi, பெ. (n.)

   ஒருவகைப் பூடு; a plant, Marsilea quadrifolia (சா.அக.);.

அசனபாணிகம்

 அசனபாணிகம் asaṉapāṇigam, பெ. (n.)

   கருப்புக் கொடி; black bottle-flower, Webera corymbosa (nigrum); (சா.அக.);.

அசனப்பல்

 அசனப்பல் asaṉappal, பெ. (n.)

   பாற்பல்; milk-tooth (சா.அக.);.

     [அசன(ம்); + பல்.]

     [Skt. asana → த. அசன(ம்);.]

அசனப்பிரியன்

 அசனப்பிரியன் asaṉappiriyaṉ, பெ. (n.)

   மிகுதியாக உண்பவன்; an epicurean (சா.அக.);.

த.வ. பேருண்டியன்.

     [Skt. asana + priya → த. அசனப்பிரியன்.]

அசனப்பிரியம்

 அசனப்பிரியம் asaṉappiriyam, பெ. (n.)

   உணவின் மேலுள்ள ஆர்வவேட்கை; desire for food (சா.அக.);.

த.வ. அயனிவேட்கை.

     [Skt. asana + priya → த. அசனப்பிரியம்.]

அசனப்பூடு

 அசனப்பூடு asaṉappūṭu, பெ. (n.)

   வெள்ளைப் பூடு (சித்.அக.);; garlic.

     [அசனம் + பூடூ]

அசனப்பெருக்கம்

 அசனப்பெருக்கம் asaṉapperukkam, பெ. (n.)

   வயிற்றுத்தீ மிகுதியால் அளவிறந்து உண்ணுகை; indulging the appetite to excess as a result of great hunger (hyperorexial); (சா.அக.);.

த.வ. அயினிப்பெருக்கம்.

     [அசனம் + பெருக்கம்.]

     [Skt. asana → த. அசன(ம்);.]

அசனமருந்தல்

 அசனமருந்தல் asaṉamarundal, தொ.பெ. (vbl.n.)

   சோறுண்டல்; taking food (சா.அக.);.

த.வ. அயினிஅருந்தல்.

     [அசனம் + அருந்தல்.]

     [Skt. a-sana → த. அசனம்.]

அசனமாற்றல்

 அசனமாற்றல் asaṉamāṟṟal, தொ.பெ. (vbl.n.)

   ஏற்கும் உணவை மாற்றுதல்; changing the food or diet (சா.அக.);.

த.வ. அயினிமாற்றல்.

     [அசனம் + மாற்றல்.]

     [Skt. a-sana → த. அசனம்.]

அசனம்

அசனம் asaṉam, பெ. (n.)

   1. பகுதி (பிங்.);; portion.

   2. அளவு (பிங்.);; measure.

 அசனம் acaṉam, பெ. (n.)

கோழி அறுத்து பொங்கலிட்டு அன்னதானம் செய்தல். (நெ.வ.வ.சொ.26.);

 a village festival.

     [ஆச்சி-அசி+காடு]

 அசனம்1 asaṉam, பெ. (n.)

   1. உணவு; food.

     “கொடுப்பி னசனங் கொடுக்க” (நான்மணி. 81);.

   2. சோறு (சூடா.); bold rice.

   3. பசி (பிங்.);; hunger.

   4. கொழுப்பு (பிங்.);; fat.

த.வ. அயினி.

     [Skt. asana → த. அசனம்.]

 அசனம்2 asaṉam, பெ. (n.)

   நீண்ட மரவகை (பிங்.);;İndian kino-tree.

     [Skt. asana → த. அசனம்.]

 அசனம்3 asaṉam, பெ. (n.)

   1. வேங்கை மரம்; east Indian kino, Terminalia formentosa alias – pterocarpus marsupium.

   2. உண்ணல்; eating.

     [Skt. a-sana → த. அசனம்.]

அசனம்பண்ணல்

அசனம்பண்ணல் asaṉambaṇṇal, தொ.பெ. (vbl.n.)

   1. உண்ணுதல்; eating food.

   2. சோறு சமைத்தல்; cooking food, preparing meals (சா.அக.);.

த.வ. அயினிசெய்தல்.

     [அசனம் + பண்ணல்.]

     [Skt. a-sana → த. அசனம்.]

அசனவு

 அசனவு asaṉavu, பெ. (n.)

   இலையத்தி (பரி.அக.);; a kind of country fig.

அசனவேதி

அசனவேதி asaṉavēti, பெ. (n.)

   1. செடிவகை (இராச. வைத். 37.);; cumin.

   2. செரிக்கச் செய்யும் பொருள் (இராசவைத். 52);; digestive.

     [Skt. asana – bhedin → த. அசனவேதி.]

அசனாசயம்

 அசனாசயம் asaṉāsayam, பெ. (n.)

   இரைப்பை (வின்.);; stomach.

     [Skt. asana + a-saya → த. அசனாசயம்.]

     [P]

அசனாத்(து)

 அசனாத்(து) asaṉāttu, பெ. (n.)

   கட்டளை (P.T.L.);; order, warrant.

     [Ar. asnad → த. அசனாத்(து);.]

அசனாமிர்ததைலம்

அசனாமிர்ததைலம் asaṉāmirdadailam, பெ. (n.)

வேங்கைப்பட்டை, சீந்தில் முதலியவற்றினின்றும் வடிக்கும் ஒருவகை நெய்மம் (தைலவ. தைல.47);:

 unguent made of the bark of pterocarpus marsupium, Tinospora Cadifolia and other herbs.

     [Skt. asana + amrta + taila → த. அசனாமிர்த தைலம்.]

அசனி

அசனி asaṉi, பெ. (n.)

   1. இடி; thunderbolt.

     “பெருவிறலசனி” (ஞானா. 19);;

   2. வானவர் கோன்படை (பிங்.);; weapon of Indra.

   3. நறும்புகை (சாம்பிராணி);யிலை (இராசவைத்.);; frankincense leaf.

     [Skt. asani → த. அசனி.]

அசனிபாதம்

அசனிபாதம் asaṉipātam, பெ. (n.)

   இடியின் வீழ்ச்சி (சி.சி. 11, 7. சிவாக்);; stroke of lightning.

     [அசனி + பாதம்.]

     [Skt. asani → த. அசனி.]

அசனியேறு

அசனியேறு asaṉiyēṟu, பெ. (n.)

இடியேறு:

 thunderbolt.

     “அசனியேறென வுரப்பி” (கூர்மபு. அந்தகா. 61);.

     [அசனி + ஏறு.]

     [Skt. a-sani → த. அசனி.]

அசனுகம்

 அசனுகம் asaṉugam, பெ. (n.)

   கருவழிகை; abortion (சா.அக.);.

அசனுதம்

 அசனுதம் asaṉudam, பெ. (n.)

   கருவழிக்கும் மருந்து; a medicine that could bring about abortion, abortive drugs (சா.அக.);.

த.வ. கருக்கொல்லி.

அசனேற்பவவிக்கல்

 அசனேற்பவவிக்கல் asaṉēṟpavavikkal, பெ. (n.)

அசநோற்பவிக்கல் பார்க்க;see asanorpa-vikkal (சா.அக.);.

அசனோமந்தாரை

 அசனோமந்தாரை asaṉōmandārai, பெ. (n.)

   கருப்பு மந்தாரை; a black variety of flowering shrub,

மந்தாரை,

 Bauhmia variegata (சா.அக.);.

அசன்

அசன்1 asaṉ, பெ. (n.)

   1. திருமால் (நாநார்த்த.); visnu.

   2. சிவபெருமான் (நாநார்த்த.);; Sivan.

   3. மன்மதன் (நாநார்த்த.);; the god of love.

   4. இரகு மன்னர் மன்னனின் மகன்; a son of Raghu.

   5. உந்தன் வளிக்கு(உதானவாயுவுக்கு);ரிய கடவுள் (வேதாந்தசாரம். பக். 43);; the god who actuates the utanan.

     [Skt. aja → த. அசன்.]

 அசன்2 asaṉ, பெ. (n.)

எடுத்துக்காட்டுப் போலிகளுளொன்று: (Log.);

 fallacy of illustrating the invariable concomitants between the middle term and the major term with a non-existent thing.

     “சன்னு மசன்னு மென்றிரு வகையாம்” (மணிமே. 29, 362);.

     [Skt. a-sat → த. அசன்.]

 அசன்3 asaṉ, பெ. (n.)

   1. பிறப்பிலி (வின்.);; being without birth, as the deity.

   2. தசரதன் தந்தை (வின்.);; name of the father of Dašaratha.

   3. அயன் (வின்.); பார்க்க;see ayan.

     [Skt. a-ja → த. அசன்.]

அசன்னியம்

அசன்னியம் asaṉṉiyam, பெ. (n.)

   நிமித்தம் (சகுனம்); (சிந்தா.நி.56);; omen.

     [Skt. a-jan-ya → த. அசன்னியம்.]

அசன்றிகா

 அசன்றிகா asaṉṟikā, பெ. (n.)

   தைவேளை (மலை.);; species of cleome.

அசபம்

அசபம்1 asabam, பெ. (n.)

   வேள்வி மந்திரம் (வின்.);; the hamsa mantra, known as ајара.

     [Skt. a-japa → த. அசபம்.]

 அசபம்2 asabam, பெ. (n.)

   1. இயல்பாகப் பலுக்கும் முனிவர்கள் மாயையில் ஒன்றுவதற்காக (லயப்படுவதற்காக); ‘அவன் தான் நான்’ எனப் பொருள்படும் அம்ச அல்லது சோகம் என்னும் மந்திரம்; a particular mantram, Hamsam which is but ‘soham’ (He is I); described in one of the 108 kinds of upanishads, uttered by yogis without effort during inhalation for identifying him with the self.

   2 குண்டலிலுள்ள ஓர் ஆற்றல் (சக்தி);; a cosmic power said to be lying dormant and coiled up in the kundalini situated in Mooladar. (மூலாதாரம்);

     “குண்டலி” யதனிற் கூடிய அசபை (விநாயகர் அகவல்);,

 the base of the spine in the region of the sacral plexus. It is described in the Tantric science of the Dravedians. It is roused by Siddhars by special forms of meditation and other practices for purposes of spiritual awakening and it is by this power, the acquire wonderful psychic powers, spiritual visions and finally the highest Spiritual illumination (சா.அக.);.

த.வ. ஒன்றல்மந்திரம்.

     [Skt. a-japa → த. அசபம்.]

அசபா

அசபா asapā, பெ. (n.)

மறைமொழி வகை (தாயு. தேசோ. 6);

 the hamsa mantra, known as asapa.

     [Skt. a-japa → த. அசபா.]

அசபை

அசபை asabai, பெ. (n.)

அசபம்1 பார்க்க;see asabam (சா.அக.);.

     [Skt. a-japa → த. அசபை.]

அசபையடிமூலி

 அசபையடிமூலி asabaiyaḍimūli, பெ. (n.)

   பூண்டு வகையுளொன்று; a kind of plant (சா.அக.);.

அசப்பியன்

 அசப்பியன் asappiyaṉ, பெ. (n.)

   கணவாய் மீன்; cuttle-fish (சா.அக.);.

     [P]

அசப்பியம்

 அசப்பியம் asappiyam, பெ. (n.)

   அவைக்குப் பொருந்தாச் சொல்; indecent language or expression, as unfit for an assembly.

     [Skt. a-sabhya → த. அசப்பியம்.]

அசப்பிரியை

 அசப்பிரியை asappiriyai, பெ. (n.)

   ஆடு விருப்பமாகத் தின்னும் இலந்தை; that plant which is dear to a goat jujube (சா.அக.);.

     [Skt. aja + priya → த. அசப்பிரியை.]

அசப்பு

அசப்பு asappu, பெ. (n.)

   கவனமின்மை; inattentiveness, absence of mind.

     “ஒருவ ரசப்பிலே யென்னை யழைத்த போது” (அருட்பா, 6, பிள்ளைப்பெரு. 53);.

ம. அயர்ப்பு.

     [அயர் → அயர்ப்பு → அசர்ப்பு → அசப்பு.]

 அசப்பு acappu, பெ. (n.)

ஒரு கோணம் ஒப்புமை

 resemblence.

     “ஒரு அசப்புல அவள் பார்க்க நன்றாக இருப்பாள். (வ.சொ.அக.);. [அயப்பு-அசப்பு]

அசமசமன்

அசமசமன் asamasamaṉ, பெ. (n.)

   ஒப்பில்லாதாருக்கு ஒப்பானவன்; person comparable only to peerless men.

     “அரிகேசரி அசமசமன் ஶ்ரீமாறவர்மன்” (பெருந்தொ.889);.

த.வ. நேரிலிநேரன்.

அசமஞ்சசம்

 அசமஞ்சசம் asamañsasam, பெ. (n.)

   பொருத்தமில்லாதது; that which is inconsistent, improper.

     [Skt. a-samanjasa → த. அசமஞ்சசம்.]

அசமஞ்சன்

அசமஞ்சன் asamañsaṉ, பெ. (n.)

   1. சகரன் மகன் (பாகவத. 9, 6, 16);; name of the cruel son of Sagara.

   2. தீயோன்; ill-behaved person, wicked man.

     [Skt. a-samanja → த. அசமஞ்சன்.]

அசமடம்

அசமடம்1 asamaḍam, பெ. (n.)

   ஓமம் (பரி.அக.);; bishop’s weed.

     [Skt. aja-mõda → த. அசமடம்.]

 அசமடம்2 asamaḍam, பெ. (n.)

அசமதாகம் பார்க்க;see asamadagam (சா.அக.);.

     [Skt. aja-moda → த. அசமடம்.]

அசமணிப்பலகை

 அசமணிப்பலகை acamaṇippalakai, பெ. (n.)

   மணவிழாவில் மங்கலப் பொருள்கள் வைக்கும் பலகைத் தட்டு; a wooden plate used to keep auspicious things in marriage ceremony.

     [அசமணி+பலகை]

கசவர் பழங்குடிகளின் சொல்லாட்சி.

அசமதாகம்

அசமதாகம் asamatākam, பெ. (n.)

   1. செடிவகை; bishop’s-weed, herbaceous plant.

   2. ஓமம் (மலை.);; omum.

     [Skt. ajamodi-ga → த. அசமதாகம்.]

அசமதாகவிதை

 அசமதாகவிதை asamadākavidai, பெ. (n.)

   ஓமம் போன்ற ஒரு விதை; a seed, nearly the sarrie as omum;Ajmuid-Apium graveloans. It is an aromatic and medicinal seed (சா.அக.);.

     [அசமதாக(ம்); + விதை.]

     [Skt. ajamodika → த. அசமதாக(ம்);.]

அசமதாகவோமம்

 அசமதாகவோமம் asamatākavōmam, பெ. (n.)

அசமதாகவிதை பார்க்க;see asama-taga-vidai (சா.அக.);.

     [அசமதாகம் + ஓமம்.]

     [Skt. ajamodika → த. அசமதாக(ம்);.]

அசமநாகி

 அசமநாகி asamanāki, பெ. (n.)

   குரோசாணி, ஓமம்; khorasan omum, Henbane – Hyoscyamus niger (சா.அக.);.

     [Skt. ajamonaka → த. அசமநாகி.]

அசமநீர்

 அசமநீர் asamanīr, பெ. (n.)

   வெள்ளாட்டுச் சிறுநீர்; goat’s urine (சா.அக.);.

த.வ. ஆட்டு உச்சை.

     [அசம + நீர்.]

     [Skt. aja → த. அசம.]

அசமந்தம்

அசமந்தம் acamantam, பெ. (n.)

   அறிவு மழுங்கல், சோம்பல்; stupidity laziness.

     “அவன் ரொம்ப அசமந்தம்வே.” (வ.சொ.அ.க);.

     [அயர்→அசர்→அச+மந்தம்]

 அசமந்தம்1 asamandam, பெ. (n.)

   மந்தம்; sloth, indolence.

த.வ. நீர்மந்தம்.

     [Skt. aja+manda → த. அசமந்தம்.]

 அசமந்தம்2 asamandam, பெ. (n.)

   1. மலையத்தி; downy climbing cluster fig, Ficus macro carpa.

   2. மடிமைக்குணம்; lethargy (சா.அக.);.

அசமந்திபம்

 அசமந்திபம் asamandibam, பெ. (n.)

   மலையத்தி நீண்ட கொடிவகை (மலை.);; downy climbing cluster fig.

     [Skt. as-manta → த. அசமந்திபம்.]

அசமம்

அசமம் asamam, பெ. (n.)

   1. ஓமம்; bishop’s weed.

   2. நீர்முள்ளி; water thorn.

     [Skt. ajamo → த. அசமம்.]

அசமருதம்

 அசமருதம் asamarudam, பெ. (n.)

   மரவகை (மலை.);; country fig.

அசமாருதம்

 அசமாருதம் asamārudam, பெ. (n.)

அசமந்திபம் பார்க்க;see asamandibam (சா.அக.);.

அசமுகி

 அசமுகி asamugi, பெ. (n.)

   சூரபதுமன் தங்கை (சந்தபு.);; name of the sister of sura-padma, as goat-faced.

     [Skt. aja-mukhi → த. அசமுகி. த. முகம் → Skt. mukha → mukhi.]

அசமுசாரி

 அசமுசாரி asamusāri, பெ. (n.)

   கழிமாசுக் கட்டி; a state of the bowels in which the evacuation are free and regular without difficulty (சா.அக.);.

அசமேலிகம்

 அசமேலிகம் asamēligam, பெ. (n.)

   கருப்பு அம்மான் பச்சரிசி; a black species of an annual plant, Euphorbia hyphorbia hypericifolia alias E. lndica (சா.அக.);.

அசமோடிகம்

 அசமோடிகம் asamōṭigam, பெ. (n.)

   பல பூண்டுகளைக் குறிக்கும் பெயர்; a common name for several plants such as, carroway, ajwan, parsley etc., (சா.அக.);.

அசமோதகம்

அசமோதகம் asamōtagam, பெ. (n.)

   1. ஓமம்; dill seed-sison ammi-carum copticum.

   2. அசமதாகம் பார்க்க;see asama-tagam (சா.அக.);.

     [Skt. ajamodika → த. அசமோதகம்.]

அசமோதம்

 அசமோதம் asamōtam, பெ. (n.)

அசமோதகம் பார்க்க;see asa-modagam (சா.அக.);.

     [Skt. ajamoda → த. அசமோதம்.]

அசமோதாகம்

 அசமோதாகம் asamōtākam, பெ. (n.)

   கருப்பு அருகம்புல்; a black bent grass-cynodon dactylon (சா.அக.);.

த.வ. காரருகு.

அசமோதை

அசமோதை asamōtai, பெ. (n.)

   1. ஓமம்; bishop’s weed.

   2. இலவம் பிசின்; gum of silk cotton.

     [Skt. aja-moda → த. அசமோதை.]

அசம்

அசம் asam, பெ. (n.)

   1. அத்தி (சா.அக.);; fig tree.

   2. சந்தனம் (மலை.);; sandal.

   3. வெங்காயம் (மூ.அ.);; onion.

   4. மூவாட்டை நெல் (வின்.);; three-year-old paddy.

   5. நெற்குவை (தைலவ. தைல. 47);; heap of paddy.

     [அதம் = அத்தி, அதம் → அசம்.]

 அசம்1 asam, பெ. (n.)

அசமடம் (T.C.M. ii, 2, 429); பார்க்க;see asamadam.

     [Skt. aja → த. அசம்.]

 அசம்2 asam, பெ. (n.)

   1. ஆடு; sheep.

   2. வெள்ளாடு; goat (சா.அக.);.

     [Skt. aja → த. அசம்.]

அசம்பந்தம்

 அசம்பந்தம் asambandam, பெ. (n.)

   தொடர்பின்மை; unconnectedness, irrelevancy.

     [Skt. a-sambandha → த. அசம்பந்தம்.]

அசம்பவம்

அசம்பவம்1 asambavam, பெ. (n.)

   1. பாழ் (சூன்யம்); (சித். அக.);; nothingness.

   2. பிறவாமை (வின்.);; non-existence.

   3. பொய் (தருக்கசங். நீலகன் 15);; false-hood.

த.வ. நிகழாநிகழ்வு.

     [Skt. a-sambhava → த. அசம்பவம்.]

 அசம்பவம்2 asambavam, பெ. (n.)

   1. நேரக் கூடாமை; impossibility, improbability.

   2. ஒவ்வாமை; inconsistency.

   3. கூறும் இலக்கணம், இலக்கிய மொன்றிலும் இல்லையாகும் குற்றம் (தருக்கசங்.);; fault of total inapplicability of a definition, one of three tosam.

த.வ. நேராநிகழ்வு.

     [Skt. a-sam-bhava → த. அசம்பவம்.]

அசம்பவாலங்காரம்

அசம்பவாலங்காரம் asambavālaṅgāram, பெ. (n.)

   கூடாமையணி (அணியி. 36);; figure of speech in which the impossible is imagined.

     [Skt. a-sam-bhava + alan – kara → த. அசம்பவாலங்காரம்.]

அசம்பாதை

அசம்பாதை asambātai, பெ. (n.)

   படை செல்லும் வழி (சிந்தா. நி. 55);; the route of an army.

த.வ. படைச்சாலை.

     [அசம் + பாதை.]

     [Persn. asam → த. அசம்.]

அசம்பாவிதம்

அசம்பாவிதம் asambāvidam, பெ. (n.)

   1. நேரக்கூடாதது; that which cannot happen.

   2. பொருத்தமில்லாதது; that which is inconsistent.

த.வ. நினையா நிகழ்வு.

     [Skt. a-sam-bhavita → த. அசம்பாவிதம்.]

அசம்பாவிதோபமை

அசம்பாவிதோபமை asambāvitōpamai, பெ. (n.)

   கூடாவுவமை (தண்டி. 30, உரை);;த.வ. கூடா வுவமை.

     [Skt. a-sam – bhavita + upa-ma → தி. அசம்பாவிதம்.]

அசம்பி

 அசம்பி asambi, பெ. (n.)

அசம்பை பார்க்க;see {ašambai.}

அசம்பிரஞ்ஞாதசமாதி

அசம்பிரஞ்ஞாதசமாதி asambiraññātasamāti, பெ. (n.)

   தான்வேறு கடவுள் வேறென்ற, வேறுபாட்டுணர்வற்ற ஒகநிலை(சி.சி. 10, 4, ஞானாப்);;த.வ. இரண்டற்ற ஒகம்.

     [Skt. a-sam – prajnata + samadhi → த. அசம்பிரஞ்ஞாதசமாதி.]

அசம்பிரேட்சியகாரித்துவம்

 அசம்பிரேட்சியகாரித்துவம் asambirēṭsiyakārittuvam, பெ. (n.)

   ஆராயாது செயல் (பஞ்சதந்.);; action without fore thought.

த.வ. ஓராவினை.

     [Skt. a-sam – preksya + karitva → த அசம்பிரேட்சியகாரித்துவம்.]

அசம்பிரேட்சியம்

அசம்பிரேட்சியம் asambirēṭsiyam, பெ. (n.)

   முன்விழிப்பின்மை (சிந்தா. நி. 59);; lack of forethought.

     [Skt. a-sampreksya → த. அசம்பிரேட்சியம்.]

அசம்பை

 அசம்பை asambai, பெ. (n.)

   வழிப்போக்கர் தோட்பை (வின்.); ; traveller’s bag hung on the shoulder.

ம. பயிம்ப; க. கசும்பெ; தெ. அசிமி; து. பசும்பெ; பய்ம்பெ.

     [அசம் + பை..]

அசம்போகம்

அசம்போகம் asambōkam, பெ. (n.)

   1. சேர்க்கைக்குத் தகுதியற்றது; unsuited for intercourse;one with whom intercourse in forbidden.

   2. இன்பமின்மை; absence of sexual intercourse or union.

   3. பட்டறிவின்மை; having no experience. (சா.அக.);.

த.வ. கூட்டின்மை.

     [Skt. a-sam-bhoga → த. அசம்போகம்.]

அசம்மதம்

 அசம்மதம் asammadam, பெ. (n.)

   உடன்பாடின்மை; dissent.

த.வ. ஒப்பாமை.

     [Skt. a-sam-mata → த. அசம்மதம்.]

அசம்மதி

 அசம்மதி asammadi, பெ. (n.)

அசம்மதம் பார்க்க;see a-sammadam.

     [Skt. a-sammati → த. அசம்மதி.]

அசயம்

அசயம் asayam, பெ. (n.)

   1. கோரைப்புல்; a grass of the Cyperusgenus-Cyperuspentenuis.

   2. ஈசுரப்புல்; a kind of grass sacred to Sivan (சா.அக.);.

த.வ. நீரங்கோரை.

அசரக்கம்

 அசரக்கம் asarakkam, பெ. (n.)

   கசகசா; poppy seed or white poppy, Papaver somniferum (சா.அக.);.

அசரணன்

 அசரணன் asaraṇaṉ, பெ. (n.)

   புகலற்றவன்; he who has no refuge.

த.வ. போக்கிலி.

     [Skt. a-sarana → த. அசரணன்.]

அசரணம்

 அசரணம் asaraṇam, பெ. (n.)

   புகலின்மை (ஜீவஸம்.);; absence of protection or refuge.

     [Skt. a-sarana → த. அசரணம்.]

அசரணயோனி

 அசரணயோனி asaraṇayōṉi, பெ. (n.)

   கலவித்தொழில் முடிப்பதற்கு முன்னதாகவே பெண்களுக்குநாதநீரை வெளிப்படுத்தும் ஒரு வகைக் கருப்பை நோய்; a raginal disease in which larger quantity or ova is secreted before the completion of sexual act (சா.அக.);.

     [Skt. asarana + yoni → த. அசரணயோனி.]

அசரணை

அசரணை asaraṇai, பெ. (n.)

   புகலற்றவள்; she who has no refuge.

     “அசரணையாய்ப் புறந்திண்ணையிற் கிடந்து” (நீலகேசி. 246, உரை);.

த.வ. போக்கிலி.

     [Skt. a-sarana → த. அசரணை.]

அசரப் போடு-தல்

அசரப் போடு-தல் asarappōṭudal,    19 செ. குன்றாவி. (v.t.)

   காலந்தாழ்த்தி வைத்தல் (உ.வ.);; to shelve, defer consideration of, allow to lie over (com.u.);.

தெ. அசரவேயு.

     [அசர + போடு. அயர → அசர.]

அசரம்

அசரம் asaram, பெ. (n.)

   நிலத்திணை; motionless things.

     “அசர சர பேதமான” (தாயு. சின். 4);.

     [Skt. a-cara → த. அசரம்.]

அசராதி

 அசராதி asarāti, பெ. (n.)

   கொன்றை (சித்.அக.);; Indian laburnum.

     [Skt. raja-taru → த. அசராதி.]

அசராது

 அசராது asarātu, பெ. (n.)

   கொன்றை; cassia tree;

 Indian laburnum-cassia indica (சா.அக.);.

     [Skt. rája-taru → த. அசராது.]

அசரீரன்

அசரீரன் asarīraṉ, பெ. (n.)

   மன்மதன் (சிந்தா. நி. 55);; Kaman, the god of love.

த.வ. உருவிலி.

     [Skt. a-sarira → த. அசரீரன்.]

அசரீரி

அசரீரி1 asarīri, பெ. (n.)

   பரம்பொருள், மேலானவன் (சித்தபரமேஷ்டி);;     “அருக னசரீரி யாசிரியன்” (திருக்கலம். 41);.

த.வ. பரன்.

     [Skt. a-saririn → த. அசரீரி.]

 அசரீரி2 asarīri, பெ. (n.)

   1. உடலில்லாதது (சி.சி. 1, 38, ஞானப்.);; incorporeal being.

   2. மேலிருந்து வரும் ஒலி; voice from heaven, utterance of an invisible speaker.

     “என்றது வானினிடத் தசரீரி” (பாரத. புட்ப. 79);.

த.வ. மெய்யிலி, உருவிலி, உடம்பிலி.

     [Skt. a-sarinin → த. அசரீரி.]

அசரை

 அசரை asarai, பெ. (n.)

   ஒருவகைக் கடல்மீன்; a kind of sea-fish, Lepidoc ephalichthyus.

அசர்

 அசர் asar, பெ. (n.)

   தலைப்பொடுகு (வை.மூ.);; dandruff, scurf.

     [அசறு → அசர்.]

அசர்-தல்

அசர்-தல் asartal,    2.செ.கு.வி. (v.i.)

   1. களைப்பாற் சோர்வடைதல் ; to become weary or worn-out with fatigue.

   2. ஆழ்ந்த தூக்கத்தில் உணர் விழத்தல் ; to lose sensation during deep sleep.

அசர்ந்து தூங்கிவிட்டேன் (உ.வ.);.

   3. வியப்பால் மயங்குதல் ; to become astonished or amazed.

அந்தச் சிறுமியின் நடனத்தைக் கண்டு அவையோரெல்லாரும் அசர்ந்து போயினர் (உ.வ.);.

ம. அயர்க்க; க. அசுர், தெ. அசுருசுரு; து. அசுரு.

     [அயர் → அசர்.]

அசறு

அசறு asaṟu, பெ. (n.)

   1. சேறு (பிங்.);; mud, mire.

   2. தலைப்பொடுகு (உ.வ.);; dandruff, scurf.

   3. புண்ணின் பொருக்கு; scab.

     ‘ஆறின புண்ணினும் அசறு நிற்கும்’ (பழ.);- (சா.அக.);.

   4. புண்ணிலுள்ள அழுக்கு; ; impure matter in an ulcer or sore.

   5. ஆடுகளுக்குண்டாகுஞ் சொறிநோய் ; scab in sheep and goats.

   6. செடிப்பூச்சி வகை ; minute insect that sticks on leaves and injures plants.

   7. ஒருவகை வண்டு ; a kind of beetle (சா.அக.);.

   8. புழு; (சா.அக.);.

     [அயறு → அசறு.]

அசறுக்கம்

 அசறுக்கம் asaṟukkam, பெ. (n.)

   கருஞ்சிவப்பு நிறம் ; dark-red colour (W.);.

அசறுபாய்-தல்

அசறுபாய்-தல் asaṟupāytal,    2 செ.கு.வி. (v.i.)

   அசும்பொழுகுதல் (திவ். பெரியாழ். 5.4; 8, வியா.);; to trickle.

அசறுபிடி-த்தல்

அசறுபிடி-த்தல் asaṟubiḍittal,    4 செ.கு.வி. (v.i.)

   1. செடியில் அல்லது பழத்தில் பூச்சி பிடித்தல்; sticking of small insects to fruits or herbs.

   2. புண்ணின்மேல் பக்கு உண்டாதல்; the formation of scab on a sore while it is healing (சா.அக.);.

அசறுப்புழுநோய்

 அசறுப்புழுநோய் asaṟuppuḻunōy, பெ. (n.)

   உடம்பினுள் சிறு பூச்சிகளினாலேற்படும் நோய்கள் ; diseases arising from the action of microbes in the system (சா.அக.);.

     [அசறு + புழு + நோய்.]

அசற்காரியம்

 அசற்காரியம் asaṟkāriyam, பெ. (n.)

   முறையற்ற செய்கை; bad or improper deed.

த.வ. அன்முறைவிளைவு.

     [அச(ற்); + காரியம்.]

     [Skt. a-sat → த. அசல்.]

அசற்காரியவாதம்

அசற்காரியவாதம் asaṟkāriyavātam, பெ. (n.)

   உருவாக்கலுக்குமுன், இல்லாமலே தொழில் தோன்றுமென்னுங் கொள்கை (சித். மர. கண். 11);; creationistic doctrine of causation according to which the effect does not exist before its production.

த.வ. காரணமில் வினைக் கொள்கை.

     [அசத்+காரியம்+வாதம்.]

     [Skt. a-sat + த. அசத்(து); + Skt. vada → த.வாதம்.]

அசற்சரக்கு

அசற்சரக்கு asaṟsarakku, பெ. (n.)

   1. இயற்கை மருந்து; natural drug as distinguished from artificial compound.

   2. உயர்ந்த; a superior kind of drug unadulterated (சா.அக.);.

த.வ. மூலச்சரக்கு.

     [அசல் + சரக்கு.]

     [U. asl → த. அசல்.]

அசற்சீட்டு

 அசற்சீட்டு asaṟsīṭṭu, பெ. (n.)

   மூல ஆவணம்; original bond.

த.வ. மூலச்சீட்டு.

     [அசல் + சீட்டு.]

     [Skt. a-sal → த. அசல்.]

அசற்சூத்திரர்

அசற்சூத்திரர் asaṟsūttirar, பெ. (n.)

   ஊன் உணவு தவிராதிருக்கும் சமய நெறி நில்லா வேளாளர் (சூத்திரர்); (சி.போ.பா. சிறப்புப். புது.);; Sudras who do not abstain from animal food and are not religious.

     [Skt. a+sar+sudra → த. அசற்சூத்திரர்.]

அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்னும் நாற்பாற் தொழின்முறைப் பாகுபாட்டைத் தீய முறையிற் பயன்படுத்திக்கொண்டு பிராமணர் சத்திரியர் வைசியர் சூத்தரர் என்னும் நால்வருணப் பிறவி வகுப்புகளாக வகுத்து அவை முறையே ஒன்றினொன்று தாழ்ந்தவையென்றும் தாம் பிராமணரும் ஏனையர் ஏனை மூவகுப்பாருமாவர் என்றும், இப்பாகுபாடு இறைவன் படைப்பே என்றும், கூறிவிட்டனர் ஆரியப் பூசகர் (த.ம.பக்.60);.

அசற்பாத்திரம்

 அசற்பாத்திரம் asaṟpāttiram, பெ. (n.)

   தானம்பெறத் தகுதியற்றவன்; unworthy recipient.

     [Skt. a-sat+patra → த. அசற்பாத்திரம்.]

அசற்பிரதி

அசற்பிரதி asaṟpiradi, பெ. (n.)

   1. முதற்படி; the original.

   2. உண்மை படி (வின்.);; fair copy.

த.வ. மூலப்படி.

     [U. asl + Skt. prati → த. அசற்பிரதி.]

அசலகத்தான்

 அசலகத்தான் asalagattāṉ, பெ. (n.)

அடுத்த வீட்டுக்காரன் (இராட்.);,

 neighbour (R.);.

     [அசல் + அகத்தான்.]

அசலகம்

அசலகம் asalagam, பெ. (n.)

   அடுத்த வீடு (திவ். பெரியாழ். 2.9 ; 6);; neighbouring house, next door.

ம. அசலாத்து

     [அயலகம் → அசலகம்.]

அசலகால்

 அசலகால் asalakāl, பெ. (n.)

   தென்றல் காற்று (சிந்தா. நி.);; south breeze.

த.வ. தென்கால்.

     [அசல(ம்); + கால்.]

     [Skt. a-cala → த. அசல(ம்);.]

அசலசலம்

அசலசலம் asalasalam, பெ. (n.)

   சிவ விலங்கவேறுபாடு; linga that is both immovable and movable as permanently fixed in an alter for initiation, or daily taken out for private workship.

     “மண்டலமுங் காணி னசலசலம்” (சைவச. பொது. 123);.

த.வ. நிலை இயங்கு திருமேனி.

     [Skt. a-sala+cala → த. அசலசலம்.]

அசலசலலிங்கம்

அசலசலலிங்கம் asalasalaliṅgam, பெ. (n.)

   ஒரு வகை இலங்கம் (சைவச. பொது. 123, உரை.);;த.வ. பனியிலங்கம்.

     [Skt. a-cala+cala + linga → த. அசலசல லிங்கம்.]

அசலன்

அசலன் asalaṉ, பெ. (n.)

   1. அசைவிலாதவன்; one who is motionless.

     “இந்த ஆன்மா அசரீரியுமா யசலனுமாய்” (சி.சி. 8, 6, மறைஞா);.

   2. கடவுள்; god, as motionless.

   3. அருகக் கடவுள் (திவா.);; Arhat.

த.வ. அசைவிலி.

     [Skt. a-cala → த. அசலன்.]

அசலம்

அசலம்1 asalam, பெ. (n.)

   1. ஒரு வகை நஞ்சு (கற்பாடாணம்); (வை.மூ.);; a mineral poison.

   2. ஆப்பு (நாநார்த்த.);; wedge used in splitting wood, peg, stake.

     [Skt. a-sala → த. அசலம்.]

 அசலம்2 asalam, பெ. (n.)

   1. அசையாதது; that which is fixed.

     “அசித்தா யசலமாகி” (சிவப்பிர. பொது. 10);.

   2. மலை (திவா.);; mountain.

   3. சிவலிங்க வேறுபாடு (பேதம்);; immovable linga, as the temple gopura.

     “கோபுரமாதி யசலம்” (சைவச. பொது. 132);.

     [Skt. a-sala → த. அசலம்.]

 அசலம்3 asalam, பெ. (n.)

   1. நிலம்; the earth.

   2. இரும்பு; iron (சா.அக.);.

     [Skt. a-sala → த. அசலம்.]

அசலம்பனம்

 அசலம்பனம் asalambaṉam, பெ. (n.)

   நீலாஞ்சனம்; antimony (சா.அக.);.

அசலர்

அசலர் asalar, பெ. (n.)

   அயலார் ; neighbours, strangers.

     “அசலருஞ் செச்செச் செச்செ யென” (திருப்பு. 459);.

அசலலிங்கம்

அசலலிங்கம் asalaliṅgam, பெ. (n.)

   வழிபாட்டுக்குரிய கோபுர முதலியன (சைவச. பொது. 122);;த.வ. கண்டுதொழுதேவிகம்.

     [Skt. a-cala + linga → த. அசலலிங்கம்.]

அசலவுற்பத்தி

 அசலவுற்பத்தி asalavuṟpatti, பெ. (n.)

   கற்பரி செய்நஞ்சு (பாடாணம்);; poison found underneath rocks (சா.அக.);.

     [Skt. a-cala + utt. Patti → த. அசலவுற்பத்தி.]

அசலாமாங்கம்

 அசலாமாங்கம் asalāmāṅgam, பெ. (n.)

   வெட்டிவேர்; root of kusa grass-Andropogon aromaticus alias A-muricatum (சா.அக.);.

அசலார்

 அசலார் asalār, பெ. (n.)

   பிறர் (உ.வ.); ; others.

     “அசலார் உடைமைக்குப் பேயாய்ப் பறக்கிறது” (பழ.);.

அசலிடு-தல்

அசலிடு-தல் asaliḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   எல்லை கடத்தல் ; to pass beyond the limits; to overstep.

     ‘பிராதிகூல்யம் அசலிட்டுத் தன்னளவும் வருமென்று (திவ். பெருமாள். 3;1, அவ.);.

அசலை

அசலை asalai, பெ. (n.)

   மீன்வகை; a kind of fish.

     “நெற்றிலியசலை மசறி” (குருகூர்ப். 20);.

     [அயிலை → அயலை → அசலை.]

 அசலை asalai, பெ. (n.)

   1, நிலம் earth.

     “அசலை மங்கை” (கந்தபு. இரணியன்யு. 56);.

   2. மலைமகள் (கூர்மபு. திருக்கல். 20);; Parvati.

     [Skt. a-sala → த. அசலை.]

அசலோமன்

 அசலோமன் asalōmaṉ, பெ. (n.)

   பூனையவரை; cowhage, Carpopogon pruriens (சா.அக.);.

அசலோமி

 அசலோமி asalōmi, பெ. (n.)

   பொற்றலைக் கையாந்தகரை; a medicinal plant with yellow flower, mary-gold Verbesina-verbesina Calendulacea (சா.அக.);.

அசல்

அசல் asal, பெ. (n.)

   1. அண்டை, பக்கம்; neighbourhood, vicinity.

   2. அண்டைவீட்டான்-ர் ; next-door neighbour or neighbours.

     “அசல் வாழ்ந்தால் ஐந்துநாள் பட்டினி கிடப் பாள்” (பழ.);.

     “அசல்வீட்டு விளக்கை மூச்சு விட்டு அணைப்பாள்” (பழ.);.

   3. வேற்றூரது, வெளிநாட்டது, உறவல்லாதது (அக.நி.);; that which is foreign, strange.

     [அயல் அசல்.]

 அசல் asal, பெ. (n.)

அசவல் பார்க்க;see ašaval.

 அசல் acal, பெ. (n.)

   துணி காயப் போட உதவும் மூங்கிற் கழி, கயிறு முதலியன; a cloths line, rope, etc. (வ.சொ.அக.);

     [அயல்-அசல்]

 அசல் asal, பெ. (n.)

   1. நிலம்; the earth.

   2. மேன்மையானது; superior.

   3. இயற்கை; natural.

   4. முதல் படி; the original (சா.அக.);.

     [U. asi → த. அசல்.]

அசல்குறிப்பு

 அசல்குறிப்பு asalkuṟippu, பெ. (n.)

   நாடோறும் எழுதும் குறிப்பு; day-book.

த.வ. அன்றாடு குறிப்பு.

     [அசல் + குறிப்பு.]

     [U. asi → த. அசல்.]

அசல்சமா

 அசல்சமா asalsamā, பெ. (n.)

   நிலக்குத்தகை யாளரிடமிருந்து திறை செலுத்துவதற்காக அரசால் வழங்கப்பட்ட மூல ஆவணம் (R.F.);; original rent or revenue charged upon lands without any extra cess, also the amount taken as the basis of a revenue settlement.

த.வ. திறையாவணம்.

     [U. asi + jama → த. அசல்சமா.]

அசல்சாதி

 அசல்சாதி asalsāti, பெ. (n.)

   மூலி, கஞ்சாங் கோரை; a kind of wild white basil-ocimum alba (சா.அக.);.

     [U. asi + jati → த. அசல்சாதி.]

அசல்பிளந்தேறிடு-தல்

அசல்பிளந்தேறிடு-தல் asalpiḷandēṟiḍudal,    17 செ.குன்றாவி, (v.t.)

     ‘வீடுபேற்றின் பின் ஒருவர் தம் நல்வினைகளை நண்பரிடத்தும் தீவினைகளைப் பகைவரிடத்துஞ் சேர்ப்பிக்கை’ (அஷ்டாதச. அர்ச்சி.பிர. 1);;

 to transfer one’s merits to friends and sins to enemies on one’s attaining final bliss.

     [அசல் + பிளந்து + ஏறு + இடு.]

அசல்பேரீசு

 அசல்பேரீசு asalpērīsu, பெ. (n.)

   ஆதி நிலவரித் திட்டம் (R.F.);; standard or original assessment of the land revenue without any extra cess.

த.வ. மூலவரியீடு.

     [U. asi + perij → த. அசல்பேரீசு.]

அசல்விடு-தல்

அசல்விடு-தல் asalviḍudal,    20 செ.கு.வி. (v.i.)

அசல்விட்டுக்கிட-த்தல் பார்க்க;see asal-wittuk-kida-.

     [அசல் + விடு.]

அசல்விட்டுக்கிட-த்தல்

அசல்விட்டுக்கிட-த்தல் asalviḍḍukkiḍattal,    3 செ.கு.வி. (v.i.)

   சூழ்ந்துள்ள நிலங்கள் அறுவடையான பின்னும், அறுவடையாகாதிருத்தல் (நாஞ்.);; to remain unharvested while the surrounding fields have been harvested (Näfi.);.

     [அசல் + விடு + கி.ட.]

அசல்வியாச்சியம்

 அசல்வியாச்சியம் asalviyāssiyam, பெ. (n.)

   முறையான வழக்கு; original suit.

த.வ. மூலவழக்கு.

     [U. asi + vyaja → த. அசல்வியாச்சியம்.]

அசவல்

 அசவல் asaval, பெ. (n.)

   கொசுகு (சூடா);; gnat, mosquito.

அசவாகனன்

 அசவாகனன் asavākaṉaṉ, பெ. (n.)

   நெருப்புக் கடவுள்; Agni, as riding a goat.

த.வ. ஆட்டு ஊர்தியன்.

     [Skt. aja + vahana → த. அசவாகனன்.]

அசவாகிகம்

 அசவாகிகம் asavāgigam, பெ. (n.)

   கருப்பு கசகசா; black poppy seeds (சா.அக.);.

அசவை

அசவை1 asavai, பெ. (n.)

   மறைமொழி வகை (வின்.);; hamsamantra.

     [Skt. a-japa → த. அசலை.]

 அசவை2 asavai, பெ. (n.)

   1. முள்வேங்கை; spinous kino tree-Bredelia refusa;

 B. Hamiltoniana.

   2. பெருவிரலடி; the root of the thumb (சா.அக.);.

அசா

அசா acā, பெ. (n.)

   1. தளர்ச்சி ; languor, faintness.

     “அசாஅத்தா னுற்ற வருத்தம்” (நாலடி. 201);.

   2. துன்பம்; distress.

     “அரிவை புலம்பசா விடவே” (குறுந் 338);.

     [அயா → அசா.]

அசாகசம்

 அசாகசம் asākasam, பெ. (n.)

   பொய் (யாழ்ப்);; lie (J.);.

 அசாகசம் asākasam, பெ. (n.)

   அமைதி (யாழ்.அக.);; gentleness.

     [Skt. a-sahasa → த. அசாகசம்.]

அசாகம்

 அசாகம் acākam, பெ. (n.)

   அரசு, அரசமரம் (பரி.அக.);; pipal tree.

அசாகரம்

 அசாகரம் acākaram, பெ. (n.)

   கரிசாலை (சா.அக.); ; eclipse plant, Eclipta prostrata.

அசாகளத்தனம்

அசாகளத்தனம் acākaḷattaṉam, பெ. (n.)

   ஆட்டின் கழுத்திற் றொங்குந் தசை; nipple or fleshy protuberance hanging down from the neck of goats.

     “அசாகளத்தனம் போல அதிக சங்கியை கொள்வது ஏற்றிற்கு” (சிவசமவா. 39);.

     [Skt. aja + gala + stana → த. அசாகளத்தனம்.]

அசாகை

அசாகை acākai, பெ. (n.)

   1. களி (சங்.அக.);; a paste of flour.

   2. புற்கை, ஒருவகைக் கஞ்சி ; a kind of porridge of rice or other grains.

   3. சாகாமை ; the condition or nature of being immortal (சா.அக.);.

 அசாகை acākai, பெ. (n.)

   கிளைபிறிதின்மை; without branches (சா.அக.);.

த.வ. கிளையிலி.

அசாக்கிரதை

 அசாக்கிரதை acākkiradai, பெ. (n.)

   விழிப்பின்மை; inattentiveness, heedlessness, carelessness.

த.வ. மந்தநிலை, கவனக்குறை.

     [Skt. a-jagratta → த. அசாக்கிரதை.]

அசாசருமம்

 அசாசருமம் acācarumam, பெ. (n.)

   ஆட்டுத் தோல்; sheep’s skin (சா.அக.);.

அசாசி

அசாசி acāci, பெ. (n.)

   1. சீரக வகை; black cumin.

   2. படர் கொடிவகை; gulancha.

     [Skt. ajaji → த. அசாசி.]

அசாசீவி

 அசாசீவி acācīvi, பெ. (n.)

   மூட்டுப்பொருத்து, எலும்பு முறிவு, மருத்துவம், அட்டை விடல் முதலியவற்றைச் செய்யும் பழங்காலத் தமிழினத்தாராகிய ஆட்டுவணிகர்; a class of men called ‘attuvangar’ who could attend to dislocated joints and fractured bones in olden days amongst the Tamilians. They also used to apply leeches in the way that we do at present (சா.அக.);.

த.வ. ஆடுவாழி.

     [Skt. a-ja + jiva → த. அசாசீவி.]

அசாடம்

 அசாடம் acāṭam, பெ. (n.)

   தாளிசபத்திரி; plant facourtia cataphracta (சா.அக.);.

     [Skt. asata → த. அசாடம்.]

அசாணிமூலி

 அசாணிமூலி acāṇimūli, பெ. (n.)

அச்சாணி மூலி பார்க்க;see accdai-milli.

அசாதம்

அசாதம் acātam, பெ. (n.)

   1. பிறவாதது; that which is not born.

   2. தூய்மையின்மை; uncleanliness (சா.அக.);.

த.வ. சீத்தை.

     [Skt. a-sadha → த. அசாதம்.]

அசாதாரணம்

அசாதாரணம் acātāraṇam, பெ. (n.)

   1. சிறப்பானது (ஈடு. 6, 1, 7);; that which is not common, special thing, rarity.

   2. காரண(ஏது);ப் போலிகளுளொன்று (மணிமே.29, 212);;த.வ. சீர்மை.

     [Skt. a-sadharana → த. அசாதாரணம்.]

அசாதி

 அசாதி acāti, பெ. (n.)

   செவ்வாய்க் கோள் (சங்.அக.);; mars, as ruling the astrol. house arise.

     [Skt. aja-pati → த. அசாதி.]

அசாது

 அசாது acātu, பெ. (n.)

   கற்பிழந்தவள்; an unchaste woman (சா.அக.);.

     [Skt. a-sadha → த. அசாது.]

அசாத்திய அதிசாரம்

 அசாத்திய அதிசாரம் acāddiyaadicāram, பெ. (n.)

   பலவகை நாற்றத்துடன் கழிச்சல் கண்டு சுரமும், மயக்கமு முண்டாக்கி நினைவு தடுமாறச் செய்யும் நோய்; a severe type of chronic diarrhoea characterised by fever, giddiness, loss of consciousness, fetid fecal discharge, etc. It may generally end in death, acute inflammatory Diarrhoea (சா.அக.);.

த.வ. கடுங்கழிச்சல்.

     [Skt. a-sathya + atisara → த. அசாத்திய அதிசாரம்.]

அசாத்தியகட்டி

 அசாத்தியகட்டி acāttiyagaṭṭi, பெ. (n.)

   சீழ் கட்டுண்டு சதையாக மாறும் ஆறாத கட்டி; a chronic abscess in which the pus is absorbed and converted into a flesh-like mass-cold abscess. It is of comparatively slow development with little inflammation (சா.அக.);.

த.வ. கட்டுண்கட்டி, கட்டாங்கட்டி.

     [அசாத்திய(ம்); + கட்டி.]

     [Skt. a-sadhya → த. அசாத்தியம்.]

அசாத்தியகண்டமாலை

 அசாத்தியகண்டமாலை acāttiyagaṇṭamālai, பெ. (n.)

   அருகின் வேரைப் போல் கழுத்தைச் சுற்றிலும் முதலில் கிளைத்து எழும்புவதும், பிறகு அழுந்துவதுமாயுள்ள ஒரு தீராத நோய்; a disease showing itself by crops of glandular tumours round the neck, which suppurate and heal up every time at the onset (சா.அக.);.

த.வ. கடுங்கண்டமாலை.

     [அசாத்தியம் + கண்டமாலை.]

     [Skt. a-sadhya → த. அசாத்தியம்.]

அசாத்தியகபாலநோய்

 அசாத்தியகபாலநோய் acāttiyagapālanōy, பெ. (n.)

   தலையில் காணும், ஒரு தீராத நோய்; a disease of the scalp.

த.வ. கடுமண்டைநோய்.

     [அசாத்திய(ம்); + கபாலநோய்.]

     [Skt. a-sadhya → த. அசாத்திய(ம்);.]

கன்னப்புலம் → கப்பாளம் → கபாலம் = மண்டை, தலை.

அசாத்தியகருப்பம்

 அசாத்தியகருப்பம் acāttiyagaruppam, பெ. (n.)

   பெண்களின் அடிவயிற்றில் சிக்கிச் கொண்டு வெளிப்படா நிலையில், வயிற்றைக் கீறி எடுக்க நேரிடும் கருப்பம்; pregnancy in which the delivery is obstructed in the natural passages by transverse presentation and the child is removed by operation as in Contracted pelvis (சா.அக);.

த.வ. கடுங்கருப்பம்.

     [அசாத்தியம் + கருப்பம்.]

     [Skt. a-sadhya → த. அசாத்தியம்.]

குரு → கரு → கருப்பம்.

அசாத்தியகழலை

அசாத்தியகழலை acāttiyagaḻlai, பெ. (n.)

   1. உடம்பில் பதிய ஆழ்ந்தும் பக்கங்களில் துளிர்த்தும். உடம்பு முழுவதும் பரவி அடிக்கடி கிளைக்கும் தன்மை வாய்ந்து, கடைசியாக ஆவியையும் பற்றும் ஒருவகைத் தீராத கழலை; tumours which tend infiltrate the tissues, and produce secondary growth in the adjacent glands. They are disseminated through out the body, affect the general health, tend to recur after removal and eventually destroy life-malignant tumors.

   2. அரத்தக் கழலை முதலியனவற்றிலும், எலும்புப் பொருந்துகளின் பள்ளங்களிலும் பருத்துத் தோன்றும் தீராத தசைக் கட்டிகள்; incurable tumours appearing in the regions of circulation in the cavity of an artery or in any vulnerable joint of the body, such as those formed in cases of ancurism, hematoma etc. malignant tumor (சா.அக.);.

த.வ. கடுங்கழலை.

     [அசாத்திய(ம்); + த. கழலை.]

     [Skt. a-sadhya → அசாத்திய(ம்);.]

கழல் → கழலை = கழற்சிக்காய் போன்ற கட்டி.

அசாத்தியகழிச்சல்

 அசாத்தியகழிச்சல் acāttiyagaḻiccal, பெ. (n.)

   உலாவும் காலத்தினும், கோடையிலும், கக்கல், கழிச்சல் (வாந்தி பேதி);, அல்லது வயிற்றளைச்சல் (சீதபேதி); கண்டு மலத்துடன் குருதி கலந்து வந்த காலத்தும், எலும்புருக்கி நோய் முதலிய கொடிய நோய்களின் ஈறாக மாறா கழிச்சல் கண்ட காலத்தும் ஏற்படும் தீராத கழிச்சல்கள்; any acute dysentry or diarrhoea occurring with serious mucous or bloody stools in some circumstances.

த.வ. கடுங்கழிச்சல், பெருவாயிநோய்.

     [அசாத்தியம் + கழிச்சல்.]

     [Skt. sadhya → த. அசாத்தியம்.]

அசாத்தியகாசம்

 அசாத்தியகாசம் acāttiyakācam, பெ. (n.)

   இருமல் மிகுந்தும், மேல்மூச்சு, நீர்வேட்கை, கழிச்சல் முதலிய குணங்களுடன் கூடியதும், சிறுவர்களைத் தாக்கிக் கண்டத்திலுள்ள சுரியக(விசுத்திக்); கோளத்தை வீங்கச் செய்து, அதனால் நெஞ்சடைப்பு உண்டாக்கி எதிர்பாராது திடீரென உயிரிழக்கச் செய்யும் ஈளைநோய்; spasmodic asthma marked by severe paroxysms, hard breathing, thirst, purging etc., thymic asthma occurring usually in children or adults characterised by obstruction to respiration due to enlargement of the thymus, with a tendency to end in sudden death. It is therefore considered incurable (சா.அக.);.

த.வ. கடுஈளை.

     [அசாத்தியம் + காசம்.]

     [Skt. a-sadhya → த. அசாத்திய(ம்);.]

கால் → கார் → காய் → காசம்.

அசாத்தியகுட்டம்

 அசாத்தியகுட்டம் acāttiyaguṭṭam, பெ. (n.)

   உடம்பிலுள்ள தசை, நாடி, நரம்பு முதலியவற்றறில் பூச்சிகள் ஏற்பட்டு அதனால் உடம்பில் திமிர், புண், சதையழுகல், விரற்குறைவு முதலிய துன்பங்களை உண்டாக்கி மற்றும் வேற்றுக் குரல், உருமாற்றம் முதலிய வேறுபாடுகளையும் காட்டும் ஒரு வகைக் குட்ட நோய்; a chronic form of leprosy arising from a constitutions disorder due to a specific mircobe (bacillus leprate); in the skin and nerve. It is marked by a nesthesia, deep ulceration, and gangrene. The lesion is also followed by affection of the larynx and change of appearance in the body (சா.அக.);.

த.வ. கடுங்குட்டம்.

     [அசாத்தியம் + குட்டம்.]

     [Skt. a-sadhya → த. அசாத்திய(ம்);.]

அசாத்தியகுணம்

 அசாத்தியகுணம் acāttiyaguṇam, பெ. (n.)

   நோய்கள் தீராது இறப்பிற்கேதுவாக்கும் தன்மையைக் குறிக்கும் நிலைமை; a condition in which disease exhibit symptoms impossible for treatment, but pointing to death (சா.அக.);.

த.வ. கடுங்குணம்.

     [அசாத்தியம் + குணம்.]

     [Skt. a-sadhya → த. அசாத்திய(ம்);.]

அசாத்தியகுறி

 அசாத்தியகுறி acāttiyaguṟi, பெ. (n.)

   தீர்க்க வொண்ணா நோய்களின் அடையாளம் அல்லது இலக்கணம்; symptom or symptoms which are clear indications that the disease cannot be cured, but ill prove fatal ultimately (சா.அக.);.

த.வ. கடுங்குறி.

     [அசாத்தியம் + குறி.]

     [Skt. a-sadhya → த. அசாத்திய(ம்);.]

அசாத்தியசன்னி

 அசாத்தியசன்னி asāttiyasaṉṉi, பெ. (n.)

   உடம்பினின்று அரத்தம் மூளை, முள்ளந்தண்டைத் தாக்குவதால் உளவேறுபாடு உண்டாகி நாடித்துடிப்பு மேல்மூச்சு உண்டாகும் ஒருவகை இசிவு (சன்னி);; apoplexy arising from the Some causes in considered incurable and its invariably fatal.

த.வ. கடும் இசிவு.

     [Skt. a-sadhya + san – ni → த. அசாத்திய சன்னி.]

அசாத்தியசிலேட்டுமம்

 அசாத்தியசிலேட்டுமம் asāttiyasilēṭṭumam, பெ. (n.)

   பித்தம் அல்லது வளி மிகுதலால் நீடித்து இடர் செய்யக்கூடிய கோழைக் கட்டு நோய்; a chronic phlegmatic disease due to the physiological activities of the body resulting from the combination of the two humours bile and gas in the system. The disease in considered incurable (சா.அக.);.

த.வ. கடுங்கோழைக்கட்டு.

     [Skt. a-sadhya + salesman → த. அசாத்திய சிலேட்டுமம்.]

அசாத்தியசுவாசம்

 அசாத்தியசுவாசம் asāttiyasuvāsam, பெ. (n.)

   காய்ச்சல், கக்கல் (வாந்தி);, நீர்வேட்கை, கழிச்சல் வீக்கம் இவற்றுடன் காணுவதாகிய நாட்பட்ட ஈளை, நெஞ்சகக் கோழைக்கட்டு; chronic asthma and bronchitis attended with fever, vomiting, thirst, purging and swelling. These are considered incurable (சா.அக.);.

த.வ. கடுகளை.

     [Skt. a. sadhya + svasa → த. அசாத்திய சுவாசம்.]

அசாத்தியசோகை

 அசாத்தியசோகை acāttiyacōkai, பெ. (n.)

   உடம்பு முழுவதும் குருதி குறைந்து பரவிய வீக்கம் நெடு நாளாகியும் வாடாமற் போன காலத்தும், வயிறு, எரு (மல);வாய், அல்குல், ஆண்குறி ஆகிய இவ்விடங்களில் வீக்கங் கண்டு அத்துடன் காய்ச்சல், மேல் மூச்சு, கழிச்சல் முதலிய தீயகுணங்கள் கண்டபோதும், எலும்பிலுள்ளிருக்கும் மச்ச சத்துவை நோயானது தாக்கின பொழுதும், குருதி யூறுகை, குருதி ஊட்டம் குறைவடைந்த காலத்தும் ஏற்பட்ட தீராத குருதிக்கேடு; anemia which is reckoned as in curable and at times proves fatal.

த.வ. கடுஞ்சோகை.

     [அசாத்தியம் + சோகை.]

     [Skt. a-sadhya → த. அசாத்திய(ம்);.]

சோர்பு → சோகு → சோகை.

அசாத்தியசோபை

 அசாத்தியசோபை acāttiyacōpai, பெ. (n.)

அசாத்தியசோகை பார்க்க;see asattiya-sogai (சா.அக.);.

     [Skt. a-sadhya + sobha → த. அசாத்திய சோபை.]

அசாத்தியதாகம்

 அசாத்தியதாகம் acāttiyatākam, பெ. (n.)

   நோயினால் தாக்கப்பட்டு அறிவழிந்த காலத்திலும், நாக்கு வெளிப்பட நீண்டு விட்ட காலத்திலும், தொண்டைக்குள் நீர் இறங்காத காலத்திலும், இறக்குந் தறுவாயிலும் காணும் தீராத நீர்வேட்கை; unquenchable or morbid thirst (polydypsia); in a patient exhibiting the some symptoms.

த.வ. கடுந்தாகம்.

     [அசாத்திய(ம்); + தாகம்.]

     [Skt. a-sadhya → த. அசாத்திய(ம்);.]

அசாத்தியநரை

 அசாத்தியநரை acāttiyanarai, பெ. (n.)

   அகவை முதிர்வால் ஏற்பட்ட நரை; permanent greyness of hair due to old age (சா.அக.);.

த.வ. கடுநரை.

     [அசாத்திய(ம்); + நரை.]

     [Skt. a-sadhya → த. அசாத்திய(ம்);.]

அசாத்தியநாடி

 அசாத்தியநாடி acāttiyanāṭi, பெ. (n.)

   நாடி நடையைத் தன்மாத்திரைக்குக் கொண்டுவர முடியாத காலத்திலும், நாடி நடையில் விரைவு மேன்மேலும் அதிகரித்துச் சாவிற்கு ஏதுவாகும் காலத்திலும் ஏற்பட்ட நாடியோட்டம்; pulse which is incapable of being restored to its normal condition or the abnormal increase in the pulse rate indicating the approach of death (சா.அக.);.

த.வ. கடுநாடி.

     [அசாத்திய(ம்); நாடி.]

     [Skt. a-sadhya → த. அசாத்திய(ம்);.]

அசாத்தியபல்நோய்

 அசாத்தியபல்நோய் acāttiyabalnōy, பெ. (n.)

   பல் வேரடியிற் புண்ணுண்டாகும் போது, சீழ் வடிந்து புரையோடின காலத்திலும் சொத்தை விழுந்த பொழுதும் உண்டாகும் பல் நோய்கள்; severe tooth ache, accompanied by inflammation of the tough fibrous membrane surrounding the teeth (dental periosteam);, attended with discharge of pus, due to necrosis of the alveoil or rotten condition of the gum and cariess of the tooth (சா.அக.);.

த.வ. கடுபல்நோய்.

     [அசாத்திய(ம்); + பல்நோய்.]

     [Skt. a-sadhya → த. அசாத்திய(ம்);.]

அசாத்தியபித்தம்

அசாத்தியபித்தம் acāttiyabittam, பெ. (n.)

   1 அளவிறந்த பித்தம்; excessive secretion of bile in the system.

   2. கள்ளுண்டவனைப் போல் உணர்ச்சியற்று வாய் வறண்டு நீர்வேட்கை முதலிய குணங்களை உண்டாக்கும் ஒருவகைப்பித்த நோய்; a bilious disease followed by insensibility similar to the condition of a drunker person and marked by parched tongue and intense thirst

   3. ஊதையும் (வாதமும்); கோழையும் கூடிய ஒரு பித்த நோய்; a chronic biliousness due to the concerted action of the three dhoshas (humours); in the system (சா.அக.);.

த.வ. கடும்பித்தம்.

     [அசாத்திய(ம்); + பித்தம்.]

     [Skt. a-sadya → த. அசாத்திய(ம்);.]

அசாத்தியபிரமேகக்கட்டி

 அசாத்தியபிரமேகக்கட்டி acāttiyabiramēkakkaṭṭi, பெ. (n.)

   நெஞ்சு, எருவாய் (குதம்);, தலை, தோள், முதுகு ஆகிய இவ்விடங்களிலாவது உடம்பில் வேறு மறையுப்பு மூட்டுகளிலாவது எழும்பி, நோயாளியைப் பாயும் படுக்கையுமாய்க் கிடத்தும் தீராத வெட்டைநோய் எழுப்பிய கட்டி; gummatus tumour appearing about the region of the heart, anus, head, shoulder, back or any of the vital joints of the body attended with supervening symptoms producing extreme prostration in a patient (சா.அக.);.

த.வ. கடுமேகக்கட்டி.

     [அசாத்திய(ம்); + பிரமேக(ம்);+கட்டி.]

     [Skt. a-sadhya → த. அசாத்தியம்;

 Skt. prameha → பிரமேகம்.]

அசாத்தியபிரமேகம்

 அசாத்தியபிரமேகம் acāttiyabiramēkam, பெ. (n.)

   நோய் கொண்ட பெண்களைப் புணர்வதினால் ஏற்பட்ட வெள்ளை நெடு நாட்களாகக் குணப்படாமல், ஊதைபித்த வெட்டைநோய், தந்தி வெட்டைநோய், சிறுநீர் கல்லடைப்பு ஆகிய நோய்களாக மாறிப் பண்டுவஞ் செய்து குணப்படுத்தவியலா தோல்நோய்; gonorrhea which is said to be chronic when it is being neglected for a longtime without adequate treatment, and when it develops in its last stage into gonorrheal rheumatism gleets, stricture of urinal passage arising from neglected gleets and stone in the bladder, moreover in bad cases, the disease may spread from the bladder to the kidneys or in a woman it may reach the womb and its appendages (சா.அக.);.

த.வ. கடுமேகம்.

     [Skt. a-sådhya + pra-méha → த. அசாத்திய பிரமேகம்.]

அசாத்தியபீலிகம்

அசாத்தியபீலிகம் acāttiyapīligam, பெ. (n.)

   1. மண்ணீரலுக்கு ஊதையினால் ஏற்படும் நரம்பு வலி; a radiating neuralgic pain resulting from the morbid condition of the spleen, splenalgia.

   2. வீங்கிப் பருத்துக் காணும் மண்ணீரல் நெடு நாளாகியும் பண்டுவத்துக்கு இணங்காமல் அதனால் கூடுதற் கழிச்சல் உண்டாக்கும் ஒரு தீராத நோய்; a chronic form of the enlargement of spleen marked by anemia and emaciation due to its being long unattended to. at the last stage, diarrhoea or dysentery becomes permanent and the person sinks (சா.அக.);.

த.வ. கடு ஈரல்நோய்.

     [Skt. a-sadhya + piliga → த. அசாத்திய பீலிகம்.]

அசாத்தியமசூரிகை

 அசாத்தியமசூரிகை acāttiyamacūrigai, பெ. (n.)

   அம்மை நோயில் கொப்புளங்கள் ஏற்பட்டு, அக்கொப்புளங்களில் குருதி போய் கலந்து கருகி முகத்தில் குழி விழுந்து, குணமுறாவெனக் கருதப்படும் நோய்; a severe form of variola or small-pox.

த.வ. நலமுறாக்குழியம்மை.

அசாத்தியமூடகர்ப்பம்

 அசாத்தியமூடகர்ப்பம் acāttiyamūṭagarppam, பெ. (n.)

   வலுக்குறைவு, சோர்வு இன்னபிறவற்றின் நிமித்தம் வாயுவானது கருப்பத்தை நிலை தடுமாறச் செய்து, கருப்பை, வயிறு இவற்றில் குத்தல் உண்டாக்கி கருவுற்றார்தம் கழுத்து நிற்காமலும் கைகால் குளிர்ந்தும், அறிவழிந்தும் போகச் செய்வதுடன், கருவுற்றவளை இறக்கச் செய்யும் கருப்பம்; a condition or pregnancy brought about by the child in the uterus taking an unnatural course or position due to pressure through weakness, languor etc., it is marked by share pain in the genital and the abdomen, chillness of the extremetics, loss of senses, and lack of formness in the neck. It finally ends in the death of both the mother and the child (சா.அக.);.

த.வ. கடுமூடக்கருப்பம்.

     [அசாத்திய(ம்); + மூட + கருப்பம்.]

     [Skt. a-Sådhya → த. அசாத்திய(ம்);.]

அசாத்தியமேகம்

 அசாத்தியமேகம் acāttiyamēkam, பெ. (n.)

   தீர்க்க முடியாத வெள்ளை நோய்களுள் ஒன்று; incurable urinery diseases.

த.வ. கடுவெட்டை.

     [Skt. a- sadhya + meha → த. அசாத்தியமேகம்.]

அசாத்தியம்

அசாத்தியம்1 acāttiyam, பெ. (n.)

   1. நிலை நிறுத்த முடியாதது (சி.சி. அளவை 1, சிவாக்);; that which is impracticable, impossible of accomplishment.

   2. அசாத்தியரோகம் பார்க்க;see asattiya-rogam.

த.வ. செயற்கரிது, செயற்கருமை.

     [Skt. a-Sådhya → த. அசாத்தியம்.]

 அசாத்தியம்2 acāttiyam, பெ. (n.)

   மிகுதி; something, in excess.

     ‘அவனுக்கு அசாத்திய நம்பிக்கை’.

த.வ. மிகை.

     [Skt. a-sadhya → த. அசாத்தியம்.]

 அசாத்தியம்3 acāttiyam, பெ. (n.)

   1. முடியாமை; impossibility.

   2. குணமாகாமை; that state or condition in which no cure or remedy from medical skill is possible.

   3. இயலாமை; impracticability (சா.அக.);.

த.வ. ஆகாமை.

     [Skt. a-šādhya → த. அசாத்தியம்.]

அசாத்தியரோகம்

அசாத்தியரோகம் acāttiyarōkam, பெ. (n.)

   சூதமுனிநாடி 30-ன் வாக்கியப்படி கூறியுள்ள நோய்கள்; a diseases mentioned sutamuni 30.

த.வ. கடும்பிணி.

     [Skt. a-sadhya + roga → த. அசாத்தியரோகம்.]

அசாத்தியவதிசாரம்

 அசாத்தியவதிசாரம் acāddiyavadicāram, பெ. (n.)

   மலவாய்ப் புண்பட்டாலும், அங்கந்திறந்தாலும், வயிறு பெருப்பதாலும், சில்லிட்டாலும் அல்லது வேறு எவ்வகையான தீயகுறிகளைக் காட்டினாலும் அது தீராது என்று கருதப்படும் ஒருவகை செரியாமைக் கழிச்சல்; incurable diarrhoea accompanied by ulcerational-the anus, gaping of the anus, distended abdomen and chillness of the extremities (சா.அக.);.

த.வ. செரியாக்கழிச்சல்.

அசாத்தியவாதரோகம்

 அசாத்தியவாதரோகம் acāttiyavātarōkam, பெ. (n.)

   அதிக நடுக்கம், வீக்கம், தாங்கமுடியாத வலி, உடம்பு முழுவதும் திமிர் ஆகிய குணங்களுடன் உடம்பு மெலிவு வாட்டம் முதலிய குறிகளையுங்காட்டும் ஓர் ஊதை (வாத); நோய்; a form of chronic rheumatism attended With characteristic tremor of the musches, swelling, unbearable pain, numbness, and progeressive muscular atrophy (சா.அக.);.

த.வ. கடுவூதை.

     [Skt. a-Sådhya+vata+roga → த. அசாத்திய வாதரோகம்.]

அசாத்தியவாந்தி

 அசாத்தியவாந்தி acāttiyavāndi, பெ. (n.)

   இருமல், இரைப்பு, முக்குற்றம் முதலிய குணங்களோடு கழிமலமாகவும், குருதி அல்லது சீழாகவும், கழிமாசு மூத்திரங்கள் தீநாற்றத்துடனும் உண்டாகும் தீராத வாயாலெடுக்கை; in curable vomiting attended with cough, hard breathing, deranged condition of the three humours in the system etc., and marked by the presence of fecal matter, blood or fetid stomach contents (சா.அக.);.

த.வ. கடுங்கக்கல்.

     [Skt. a-sadhya + vandi → த. அசாத்தியவாந்தி.]

அசாத்தியவிடக்கடி

 அசாத்தியவிடக்கடி acāttiyaviḍakkaḍi, பெ. (n.)

   நச்சுயிரிகள் தீண்டலினால் ஏற்படும் நோய்கள்; bites of poisoning creatures diseases.

த.வ. கடுநஞ்சுக்கடி.

     [அசாத்திய(ம்); + விடம் + கடி.]

     [Skt. a-sadhya – visa → த. அசாத்தியவிடம்.]

அசாத்தியவிடக்குறி

 அசாத்தியவிடக்குறி acāttiyaviḍakkuṟi, பெ. (n.)

   உடம்பில் எவ்வகையினாலாவது, உட்கொண்ட நஞ்சு, மருந்துகளால் தீராது சாவிற்கேதுவாக்கும் குறிகள்; fatal symptoms of poisons exhibited in the system of a patient at the time when no antidotes administered.

த.வ. கடுநஞ்சுக்குறி.

     [அசாத்திய(ம்); + விடம் + குறி.]

     [Skt. a-sådhya-visa → த. அசாத்தியவிடம்.]

அசாத்தியவித்திரதிக்கட்டி

அசாத்தியவித்திரதிக்கட்டி acāddiyaviddiradikkaṭṭi, பெ. (n.)

   1. வயிற்றின் உட்புறத்தில் கட்டி யுண்டாகி உடைந்து மிக்க துன்பம் உண்டாக்கி, வாயால், சீழ், குருதி முதலியவற்றை விழச் செய்யும் ஒரு வகைக் கட்டி; an incurable abscess developed inside the abdomen the contents of which (pus and blood); find their way out through the mouth.

த.வ. கடுவயிற்றகக்கட்டி

     [அசாத்தியவிரத்திரதி + கட்டி.]

     [Skt. a-sådhya + vidradhi → த. அசாத்தியவித்திரதி.]

அசாத்தியவிரணம்

 அசாத்தியவிரணம் acāttiyaviraṇam, பெ. (n.)

   ஆறாத புண்கள் (இராண);; incurable ulcer.

த.வ. கடும்புண்.

     [Skt. a-sådhya + vrana → த. அசாத்தியவிரணம்.]

அசாத்தியவீக்கம்

 அசாத்தியவீக்கம் acāttiyavīkkam, பெ. (n.)

   நீர்வேட்கை, மெலிவு, காய்ச்சல், கக்கல், விக்கல், வயிற்றோட்டம் ஆகியவற்றோடு கூடி நச்சு தொடர்பாகச் சாவும் ஏற்படும் வடியாத வீக்கம்; in reducible swelling arising from the effects of poison and poisonous bites and characterised by the following symptoms – dyspnoea, thirst, weakness, fever, vomiting, hiccough, dysentery etc. It is extremely hard to cure and may every soon prove fatal (சா.அக.);.

த.வ. கடுவீக்கம்.

     [அசாத்தியம் + வீக்கம்.]

     [Skt. a-Sådhya → அசாத்தியம்.]

அசாத்தியவெலிவிடம்

 அசாத்தியவெலிவிடம் acāttiyaveliviḍam, பெ. (n.)

   உயிர்ப் பொடுக்கம், வீக்கம், வேற்றுருவம், சுரம், அரத்தங்கக்கல் (வாந்தி);யாகிய குணங்களை உண்டாக்கும் ஒருவகை எலிக்கடி; an incurable rat-bite characterised by faintness, swelling, change of features, fever, vomiting of blood and other symptoms (சா.அக.);.

த.வ. கடுஎலிநஞ்சு.

     [அசாத்திய + எலி + விடம்.]

     [Skt. asadya → த. அசாத்திய. Skt. visa → த. விடம்.]

அசாத்திரமுயற்சி

 அசாத்திரமுயற்சி acāttiramuyaṟci, பெ. (n.)

   நூன் முறையின்றி வழக்கிலுள்ள சமயச் சடங்கு (வின்.);; religious ceremonies in vogue though not sanctioned by sastras, dist. fr sattiramuyarci.

வ. வாடிக்கை முயற்சி.

     [அசாத்திர(ம்); + முயற்சி.]

     [Skt. a-sastra → த. அசாத்திரம்.]

அசாத்திரீயம்

 அசாத்திரீயம் acāttirīyam, பெ. (n.)

   கலை நூல்கட்கு எதிரிடையானது; that which is contrary to the sastra.

த.வ. நூல்நெறி இகப்பு.

     [Skt. a-sastra → த. அசாத்திரீயம்.]

அசாத்மியபோசனம்

 அசாத்மியபோசனம் acātmiyapōcaṉam, பெ. (n.)

   இடம், காலம், இயல்பு உணர்ச்சி, பழக்கம் முதலியவற்றிற்கு மாறுபாடான உணவு; food unsuitable to one’s constitution when considered with other circumstances, such as place, climate, natural temperament habit idiosyncrasy etc.

த.வ. மாறுபடு உண்டி.

     [Skt. a-sadhmibhójana → த. அசாத்தியபோசனம்.]

அசாத்மியம்

 அசாத்மியம் acātmiyam, பெ. (n.)

   புதுவதாய் வழக்கமில்லாததை வழக்கப்படுத்திக் கொள்ளுவதனால் உடம்புக்கு ஒத்துக்கொள்ளாத் தன்மை; unsuitability to the constitution brought about by acquired habit; disagreement to one’s constitution due to adopting a thing contrary to one’s habit (சா.அக.);.

த.வ. அல்வழக்கு ஒவ்வாமை.

     [Skt. a-sadhmi → த. அசாத்மியம்.]

அசாந்தன்

 அசாந்தன் acāndaṉ, பெ. (n.)

   அமைதி யில்லாதவன்; restless man, one without tranquility.

த.வ. தெம்மாடி.

     [Skt. a-sånta → த. அசாந்தன்.]

அசாந்திரி

 அசாந்திரி acāndiri, பெ. (n.)

   நில சருக்கரைக் கிழங்கு; a potherb. convolvulus argentens (சா.அக.);.

அசாபாலகன்

 அசாபாலகன் acāpālagaṉ, பெ. (n.)

அசாசீவி பார்க்க;see asa-sivi (சா.அக);.

அசாமி

 அசாமி acāmi, பெ. (n.)

   ஆள் (கொ.வ.);; an individual.

த.வ. ஆள்.

     [U. asami → த. அசாமி.]

அசாயசூரன்

 அசாயசூரன் acāyacūraṉ, பெ. (n.)

அசகாய சூரன் பார்க்க;see a-sagaya-suran.

அசாரதை

 அசாரதை acāradai, பெ. (n.)

   சாறுஇன்மை; that which is sapless (சா.அக.);.

அசாரம்

அசாரம்1 acāram, பெ. (n.)

   1. ஆமணக்குச் செடி; castor oil plant, Ricinus communis.

   2. வாழை; plantain tree, Musa paradisiaca.

   3. சாறற்றது; that which is deprived of sap or juice.

   4. சாறமின்மை அல்லது பயனின்மை; that which is without strength or value, which is unsubstantial (சா.அக.);.

 அசாரம்2 acāram, பெ. (n.)

   கொலுமண்டபம்; royal audience hall or royal court.

த.வ. திருவோலக்கம்.

     [U. hazar → த. அசாரம்.]

அசாரவாசி

அசாரவாசி acāravāci, பெ. (n.)

   அரசன் வாயில் காவலன்; watchman of the king’s gate.

     “ஒரு பூசல் உண்டென்று கூறிய அசாரவாசிக்கு” (சீவக. 430, உரை);.

     [U. hazar + Skt. vasi → த. அசாரவாசி.]

அசாறூன்

 அசாறூன் acāṟūṉ, பெ. (n.)

   இது சிறுநீர்க் கல்லடைப்பு, குருதிசிக்கல், ஊதை, வெள்ளைப்படுதல், காமாலை, நீரடைப்பு, நரம்பிசிவு, கீல்வாதம், வீக்கம் முதலிய நோய்களுக்கு உதவுவதும் புகையிடத் தேள் ஒடிப்போவதுமான ஒரு சேணிய (யுனானி); மருந்து; a well known drug in unani medicine. It is prescribed in cases of stricture of urinary passages, stone in the bladder, scantry discharge (as in menstruation);, rheumatism, dropsy, jaundice etc., a fumigation of this drug drives away scorpion (சா.அக.);.

அசாவிடு-தல்

அசாவிடு-தல் acāviḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   இளைப்பாறுதல்; to rest.

     “இரைதேர்ந்துண் டசா விடூஉம் புள்ளினம்” (கலித். 132; 3);.

     [அயாவிடு → அசாவிடு.]

அசாவு-தல்

அசாவு-தல் acāvudal,    5 செ.கு.வி. (v.i.)

   தளர்தல்; to be discouraged, to lose heart, to droop, languish, grow slack.

     “அறுமை யுடைத்தென்றசாவாமை வேண்டும்” (குறள், 611);.

     [அயாவுறு → அசாவுறு → அசாவு.]

அசாவுறு-தல்

அசாவுறு-தல் acāvuṟudal,    20 செ.கு.வி. (v.i.)

   தளர்தல் ; to be discouraged.

     “அசாவுறு செருவில்வென் றாடல்கொள் வதற்கு” (கந்தபு. யுத்த. முதனாட். 383);.

     [அயா + உறு – அயாவுறு → அசாவுறு.]

அசாவேரி

அசாவேரி acāvēri, பெ. (n.)

   இளவேனிற் கால பண்களுளொன்று (பாத. இராக. 77);;     [Skt. asavari → த. அசாவேரி.]

அசி

அசி asi, பெ. (n.)

   அரசமரம்; papal tree.

மறுவ. அசாகம்

     [அரசு-அசு-அசி]

 அசி1 asittal,    4 செ.கு.வி. (v.i.)

   நகைத்தல்; to laugh.

     “புள்ளெலா மசிப்ப போன்று” (சீவக. 659);.

     [Skt. has → த. அசி-,]

 அசி2 asittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   உண்ணுதல் (தேவா. 867, 3.);; to eat, consume.

     [Skt. as → த. அசி-,]

 அசி3 asi, பெ. (n.)

   உயிர் (வின்.);; soul.

     [Skt. asi → த. அசி.]

 அசி4 asi, பெ. (n.)

   அம்பு (பொதி.நி.);; arrow.

     [Skt. asita → த. அசி.]

 அசி5 asi, பெ. (n.)

   1. வாள் (திவா.);; sword, knife.

   2. படைக்கலம் (சூடா);; weapon.

     [Skt. asi → த. அசி.]

 அசி6 asi, பெ. (n.)

   ஏளனச் சிரிப்பு (சூடா.);; derisive laughter.

     [Skt. hasi → த. அசி.]

அசிகம்

 அசிகம் asigam, பெ. (n.)

   கீழுதட்டுக்கும் மோவாய் கட்டைக்கும் இடையேயுள்ள பகுதி; that part of the face between the under lip and the chin (சா.அக.);.

அசிகியம்

அசிகியம் asigiyam, பெ. (n.)

   1. தாங்கக் கூடாதது; that which is unbearable.

   2. அருவருப்பு; Ioathing, disgust.

     [Skt. sahya → த. அசிகியம்.]

அசிகை

அசிகை1 asigai, பெ. (n.)

   பொறாமை (கொ.வ);; envy, jealousy.

     [Skt. asuya → த. அசிகை.]

 அசிகை2 asigai, பெ. (n.)

   நகைத்துப் பேசும் பேச்சு; mirthful conversation.

     “கசுகுசென்னவே சொல் லசிகை யென்னடி” (மதுரகவி. 4);.

     [Skt. hasika → த. அசிகை.]

அசிக்காடு

அசிக்காடு acikkāṭu, பெ. (n.)

மயிலாடுதுறையிலிருந்து 15 கி.மீ. தொலைவிலுள்ள ஓர் ஊர்.

 Name of avilage 15km. from mayiladutrurai.

     [அசி (அரசமரம்); +காடு]

அசிங்கம்

அசிங்கம்1 asiṅgam, பெ. (n.)

   அருவருப்பு (இ.வ.);; digust.

த.வ. சீத்தை, தூத்தை.

     [Skt. sahya → த. அசிங்கம்.]

 அசிங்கம்2 asiṅgam, பெ. (n.)

   தூய்மையின்மை துப்புரவின்மை; uncleanness, impurity, as unbearable.

     “அசிங்கமான இடம்” (கொ.வ.);.

   2. அழகின்மை; disorder, repulsiveness.

     “அசிங்கமான வேலை” (கொ.வ.);.

த.வ. அருவருப்பு.

     [Skt. a-sahya → த. அசிங்கம்.]

 அசிங்கம்3 asiṅgam, பெ. (n.)

   1. தரக்குறைவு, மட்டம்; obscenity.

     ‘அவன் குறையைச் சுட்டிக் கட்டி அசிங்கமாகச் கேலி செய்தார்’.

   2. இழிநிலை தரத்தக்கது; unbecoming.

     [Skt. sahya → த. அசிங்கம்.]

அசிங்ஙுவத்தன்மை

அசிங்ஙுவத்தன்மை asiṅṅuvattaṉmai, பெ. (n.)

   தன் அலுவலில் பற்றில்லாமை (விசாரசந். 341);; non-attachment in respect of one’s affairs.

     [அசிங்வுவ(ம்); + தன்மை.]

     [Skt. ia-sahya-tva → த. அசிங்ஙு(ம்);.]

அசிசெறுகாத்துப்பு

 அசிசெறுகாத்துப்பு asiseṟukāttuppu, பெ. (n.)

   கரியுப்பு; black salt (சா.அக.);.

அசிதகருணி

 அசிதகருணி asidagaruṇi, பெ. (n.)

   கருப்பு வழுதலை; black brinjal plant-solanum melongenum (சா.அக.);.

அசிதத்துருமம்

 அசிதத்துருமம் asidaddurumam, பெ. (n.)

   மலைப்பச்சை; Mysore gamboge;painter’s gamboge-xanthochymus pictorius (சா.அக.);.

அசிதன்

அசிதன்1 asidaṉ, பெ. (n.)

   1. வெல்லற்கரியோன்; he who is unconquerable.

   2. திருமால்; Visnu.

     [Skt. a-jita → த. அசிதன்.]

 அசிதன்2 asidaṉ, பெ. (n.)

   1. காரி(சனி);க் கடவுள்;   2. நீலநிறத்தோன்; blue colloured god (Visnu);.

அசிதமயப்பூ

 அசிதமயப்பூ asidamayappū, பெ. (n.)

   பூநீர்; an efflorcent salt obtained from the soil of fuller’s earth (சா.அக.);.

அசிதம்

அசிதம்1 asidam, பெ. (n.)

   1. சிரிப்பது; that which laughs.

   2. அலர்வது; that which blossoms.

     [Skt. hasita → த. அசிதம்.]

 அசிதம்2 asidam, பெ. (n.)

   கருமை; blackness.

     “அசித வெங்கட-குண்டு” (இரலு. குச. 83.);.

     [Skt. a-sita → த. அசிதம்.]

 அசிதம்3 asidam, பெ. (n.)

   சிவதோன்றியத்து ளொன்று; an ancient saiva scripture in sanskrit, one of 28 Sivagamam, q.v.

 அசிதம்4 asidam, பெ. (n.)

   1. நச்சு விலங்கு; a poisonous animal.

   2. கரும்பாம்பு; a black snake.

   3. நீலிப்பூடு; indigo plant, Indigofera tinctoria (சா.அக.);.

அசிதர்

அசிதர் asidar, பெ. (n.)

   தீர்த்தங்கரருள் ஒருவர் (திருக்கலம. காப்பு, உரை.);; name of a jaina Arhat, one of 24 Tirttangarar. q.v.

     [Skt. ajita → த. அசிதர்.]

அசிதவெலி

 அசிதவெலி asidaveli, பெ. (n.)

   நச்சுத் தன்மையுள்ள ஒருவகைக் கருப்பு எலி; a kind of black poisonous rat.

த.வ. காரெலி.

அசிதாசுமம்

 அசிதாசுமம் asitāsumam, பெ. (n.)

   இந்திர நீலமணி; a precious stone of the corundum class and of various shades of blue sapphire (சா.அக.);.

த.வ. நீலக்கல்.

அசிதாம்புருகம்

 அசிதாம்புருகம் asitāmburugam, பெ. (n.)

   நீலோற்பலம் (மலை);; blue water lily.

     [Skt. asita + ambu + ruha → த. அசிதாம்புருகம்.]

அசிதாரு

அசிதாரு asitāru, பெ. (n.)

   நிரயச் சிறப்பு (சிவதரு. சுவர்க்க. 115);; hell in which sword like trees from instruments of torture.

     [Skt. asi+taru → த. அசிதாரு.]

அசிதாலவனம்

அசிதாலவனம் asitālavaṉam, பெ. (n.)

   நிரயச் சிறப்பு (சிவதரு சுவர்க்க. 145);; hell in which sword-like palmyra palms instruments of torture.

     [Skt. asi → த. அசி.]

அசிதேசுமம்

 அசிதேசுமம் asitēsumam, பெ. (n.)

   வெள்ளைக்கல் (புட்பராகம்);; a white precious stone-lapis lazali (சா.அக.);.

அசிதை

அசிதை1 asidai, பெ. (n.)

   1. பராசக்தி மாற்றுரு (சைவச. பொது. 74, உரை);;   2. நீலிச் செடி (L);; Indian indigo.

     [Skt. asita → த. அசிதை.]

 அசிதை asidai, பெ. (n.)

   அவுரி; indigo plant, Indigofera tinctoria (சா.அக.);.

     [Skt. asita → த. அசிதை.]

அசிதோகம்

 அசிதோகம் asitōkam, பெ. (n.)

கற்பலா பார்க்க;see karpala.

     [Skt. asitokada → த. அசிதோகதம்.]

அசிதோற்பலம்

அசிதோற்பலம் asitōṟpalam, பெ. (n.)

   1. நீலத்தாமரை; blue lotus, Monochria vaginalis.

   2. நீலமணி; sapphire.

   3. கருங் குவளை (நீலோற்பலம்);; blue-water lily, Nymphaca stellata (சா.அக.);.

அசித்தம்

அசித்தம் asittam, பெ. (n.)

   காரண (ஏது);ப்போலிகளுளொன்று (மணிமே. 29, 192);; fallacy of hetu being unsustainable.

     [Skt. a-siddha → த. அசித்தம்.]

அசித்தி

அசித்தி asitti, பெ. (n.)

   கைகூடாமை; incompleteness, failure.

     “தாவறு மசித்தி சித்தி தம்மி லலையாதே” (பிரபோத. 27, 80);.

த.வ. எய்தாமை.

     [Skt. a-siddhi → த. அசித்தி.]

அசித்திரன்

அசித்திரன் asittiraṉ, பெ. (n.)

   கள்வன் (சிந்தா. நி. 57.);; thief.

     [Skt. asitra → த. அசித்திரன்.]

அசித்து

அசித்து asittu, பெ. (n.)

   அறிவில் பொருள் (சடம்);; that which is non-intelligent, matter.

     “சித்த சித்தொ டீசனென்று செப்புகின்ற மூவகைத்தத்துவத்தின்” (பாரத. பதினைந். 1);.

த.வ. அறிவில் பொருள்.

     [Skt. a-sit → த. அசித்து.]

அசிந்தம்

 அசிந்தம் asindam, பெ. (n.)

   ஒரு பேரெண் (யாழ்.அக.);; a thousand quadrillions.

     [Skt. a-cintya → த. அசிந்தம்.]

அசிந்திதன்

அசிந்திதன் asindidaṉ, பெ. (n.)

   மனத்துக் கெட்டாதவன், கருதற்கரியவன், தனிச் சிறப்பினன் (சி.போ. சிற். 12, 3, 1);; one who is inconceivable or incomprehensible.

த.வ. எண்ணற்கரியான்.

     [Skt. a-cintita → த. அசிந்திதன்.]

அசிந்தியம்

அசிந்தியம் asindiyam, பெ. (n.)

   1. நினைவிற் கெட்டாதது; that which is inconceivable.

   2. ஒரு பேரெண் (வின்.);; the number 1000 quadrillions.

த.வ. நினைவிகப்பு.

     [Skt. a-cintya → த. அசிந்தியம்.]

அசினபத்திரி

 அசினபத்திரி asiṉabattiri, பெ. (n.)

அசினப் பத்திரிகை பார்க்க;see asinappattirigai.

     [Skt. asi + patra → த. அசினபத்திரி.]

அசினபத்திரை

 அசினபத்திரை asiṉabattirai, பெ. (n.)

அசினப்பத்திரிகை பார்க்க;see asina-p-pattirigai.

     [Skt. asi + patra → த. அசினபத்திரை.]

அசினப்பத்திரிகை

 அசினப்பத்திரிகை asiṉappattirigai, பெ. (n.)

   வவ்வால் (யாழ்.அக.);; bat.

த.வ. வவ்வால்.

     [Skt. ajina + patrika → த. அசினப்பத்திரிகை.]

அசினம்

அசினம்1 asiṉam, பெ. (n.)

   விலங்குகளின் தோல்; hairy skin of an animal, esp. black buckskin, used as a seat or covering and for other purposes.

     “நன்னூ லுடன்பூ ணசினத்தை” (பாரத. நச்சுப். 17.);.

     [Skt. ajina → த. அசினம்.]

 அசினம்2 asiṉam, பெ. (n.)

   மான்தோல்; the skin of deer (சா.அக.);.

     [Skt. ajina → த. அசினம்.]

அசினயோனி

 அசினயோனி asiṉayōṉi, பெ. (n.)

   மான்; deer (சா.அக.);.

     [Skt ajina + yoni → த. அசினயோனி.]

     [P]

அசிபகாந்தம்

அசிபகாந்தம் asibakāndam, பெ. (n.)

   23 மா மூலிகைகளுளொன்றான கருப்பு விழுதி; dark vizhudhi – one of the 23 rare drugs of high potency (மா. identified);

அசிபதம்

 அசிபதம் asibadam, பெ. (n.)

   ஒகநிலைக்குரிய தத்துவமசி என்னும் தொடரியத்தில் அசி என்னுஞ் சொல்; the word aši in the sentence, tat-tvam-asi.

     “தத்துவ- பதார்த்தங்க ளிரண்டுக்கும் அசிபதத்தினால் ஐக்கியக்கூடும்” (சா.அக);.

     [Skt. asi + pada → த. அசிபதம்.]

அசிபத்திரகம்

 அசிபத்திரகம் asibattiragam, பெ. (n.)

   கரும்பு (மலை.);; sugar-cane.

     [Skt. asi + patraka → த. அசிபத்திரகம்.]

அசிபத்திரம்

அசிபத்திரம் asibattiram, பெ. (n.)

   கத்தியைப்போன்று இலைகளையுடைய மரங்கள் வளர்ந்திருக்கும் நிரயச் சிறப்பு; hell where trees have leaves as sharp as swords.

     “அசிபத்திரிமெனும்… நரகிடை” (குற்றா. தல. கவுற்சன. 67);.

     [Skt. asi + patra → த. அசிபத்திரம்.]

அசிபத்திரவனம்

அசிபத்திரவனம் asibattiravaṉam, பெ. (n.)

   1. அசிபத்திரம் (சேதுபு. தனுக். 3);;பார்க்க;see asipattram.

   2. நிரையம்; hell.

     [Skt. asi-patra + vana → த. அசிபத்திரவனம்.]

அசிபத்திரி

அசிபத்திரி asibattiri, பெ. (n.)

   1. அசிபத்திரம் பார்க்க;see asipattiram.

   2. கத்தியைப் போன்ற இலைகள்; sword shaped leaves (சா.அக.);.

     [Skt. asi + patra → த. அசிபத்திரி.]

அசிப்பு

அசிப்பு asippu, பெ. (n.)

   ஏளனச் சிரிப்பு; derisive laughter.

     “அசிப்பிலனாசி” (பெருங். மகத. 14, 225);.

     [அசி + பு.]

     [Skt. asi → அசி.]

அசிமேதம்

 அசிமேதம் asimētam, பெ. (n.)

   ஒரு வகை நாற்றப் பூடு; a stinking plant, fetid mimosa (சா.அக.);.

     [Skt. asi + meta → த. அசிமேதம்.]

அசிரத்தை

 அசிரத்தை asirattai, பெ. (n.)

   கவனிப்பின்மை; inattention indifference.

     [Skt. sraddha → த. அசிரத்தை.]

அசிரநானம்

 அசிரநானம் asiranāṉam, பெ. (n.)

   கழுத்து வரையில் குளிக்கை; a bath upto the neck without immersing or wetting the head (சா.அக.);.

     [Skt. asi + snana → த. அசிரநானம்.]

அசிரன்

அசிரன் asiraṉ, பெ. (n.)

   1. தீ; agni.

   2. கதிரவன்; sun.

   3. கவந்தன்; Kabandha, a demon.

     [Skt. asira → த. அசிரன்.]

அசிரபத்திரகம்

 அசிரபத்திரகம் asirabattiragam, பெ. (n.)

   கத்தூரி வெண்டை; mustk mallow plant, Abelmoschus esculentes (சா.அக.);.

     [Skt. asira+bhadra → த. அசிரபத்திரகம்.]

அசிரபித்தம்

 அசிரபித்தம் asirabittam, பெ. (n.)

அரத்த பித்தம் பார்க்க;see aratta-pitam (சா.அக.);.

     [அசிரம் + பித்தம்.]

     [Skt. asira → த. அசிரம்.]

அசிரமாத்திரிகம்

 அசிரமாத்திரிகம் asiramāttirigam, பெ. (n.)

உணவுப்பால், உடலில் உணவிலிருந்து ஊறும் கொழுப்புக் கலந்த வெள்ளை நிணநீர் (அன்ன ரசம்);

 chyle (சா.அக.);.

த.வ. நிணநீர்.

     [Skt. ajira + matra → த. அசிரமாத்திரிகம்.]

அசிரம்

அசிரம்1 asiram, பெ. (n.)

   1. காற்று; wind.

   2. புலனுறுப்புக்கள்; object of senses.

   3. தவளை; frog.

   4. முற்றம்; court-yard.

   5. உடம்பு; body.

     [Skt. ajira → த. அசிரம்.]

 அசிரம்2 asiram, பெ. (n.)

   தீ; fire.

     [Skt. asira → த. அசிரம்.]

 அசிரம்3 asiram, பெ. (n.)

   1. வெட்டிவேர்; a fragrant root;

 khus root, Andropogon muricatus.

   2. வெள்ளை; whiteness.

   3. தலைமயிர்; hair of the head (சா.அக.);.

     [Skt. ajira → த. அசிரம்.]

அசிரவணம்

அசிரவணம் asiravaṇam, பெ. (n.)

   1. செவிடு; deafness.

   2. காதின்மை; state of condition of being deprived of ear.

   3. காது கேளாமை; thickness of hearing (சா.அக.);.

     [Skt. a-sravana → த. அசிரவணம்.]

அசிராற்சகம்

 அசிராற்சகம் asirāṟsagam, பெ. (n.)

   வெண்துளசி; white basil (சா.அக.);.

     [Skt. asira + saga → த. அசிராற்சகம்.]

அசிரி

 அசிரி asiri, பெ. (n.)

   அருவருப்பானவன் (இ.வ.);; dirty fellow.

     [Skt. a-siri → த. அசிரி.]

அசிருத்திரரோகம்

 அசிருத்திரரோகம் asiruttirarōkam, பெ. (n.)

அசிர்க்கரநோய் பார்க்க;see asirukkara-noy (சா.அக.);.

     [Skt. asi + rudhra + rõga → த. அசிருத்திர ரோகம்.]

அசிருபாதம்

அசிருபாதம் asirupātam, பெ. (n.)

   1. கண்ணீர்ப் பெருக்கு; habitual or persistent overflow of tears due to over secretion or impleded outflow of excretion, Epiphora c.f. Lachrymation.

   2. குருதிப் பெருக்கு; the flow of blood from wounded or ruptured vessels, Hemorrhage (சா.அக.);.

     [Skt. asira-pathas → த. அசிருபாதம்.]

அசிர்-த்தல்

அசிர்-த்தல் asirttal,    4 செ.குன்றாவி. (v.t)

   ஐயுறுதல்; to doubt.

     ‘தாய்வழியை நினைத்து அசிர்த்தாரிறே’ (ஈடு, 6.7 ; 1);.

     [அயிர் → அசிர்.]

அசிர்க்கசிராவகம்

 அசிர்க்கசிராவகம் asirggasirāvagam, பெ. (n.)

   குருதியொழுக்கு; bleeding, letting blood (சா.அக.);.

     [Skt. asira-sravaga → த. அசிர்க்கசிராவகம்.]

அசிர்க்கதரம்

 அசிர்க்கதரம் asirkkadaram, பெ. (n.)

   மாதவிலக்குப் பெருக்கு; excessive menstruation, Menorrhagia (சா.அக.);.

த.வ. பெரும்பாடு.

     [Skt. asitra-tara → த. அசிர்க்கதரம்.]

அசிர்க்கபாதம்

அசிர்க்கபாதம் asirkkapātam, பெ. (n.)

   1. குருதி வீழ்ச்சி; the flew of blood.

   2. குருதித் துளி; a drop of blood.

   3. குருதி யொழுக்கு; oxing of blood from a wound (சா.அக.);.

     [அசிர்க்க + பாதம்.]

     [Skt. asira → த. அசிர்.]

அசிர்க்கபானம்

 அசிர்க்கபானம் asirkkapāṉam, பெ. (n.)

   அரத்தம் குடிக்கை; drinking of blood (சா.அக.);.

     [Skt. asira-pana → த. அசிர்க்கபானம்.]

அசிர்க்கரநோய்

அசிர்க்கரநோய் asirkkaranōy, பெ. (n.)

   1. குருதி தொடர்பான நோய்; any disease arising from altered condition of blood in the system.

   2. குருதிப் பெருக்கை யுண்டாக்கும் பெரும்பாடு, மூக்குத்துளை வழி ஏற்படும் குருதியொழுக்கு முதலிய நோய்கள்; disease resulting in hemorrage such as menorrhagias Epistaxis, hemoptysis etc. (சா.அக.);.

த.வ. குருதிநோய்.

     [அசிர்க்கர(ம்); + நோய்.]

     [Skt. asirakara → த. அசிர்க்கர.]

அசிர்க்கரம்

அசிர்க்கரம் asirkkaram, பெ. (n.)

   2. பக்குவப்படாத நிலைமையிலுள்ள நிணநீர்; lymph-chyle before its conversion into blood (சா.அக.);.

     [Skt. asira-kara → த. அசிர்க்கரம்.]

அசிர்க்கவகம்

 அசிர்க்கவகம் asirggavagam, பெ. (n.)

   குருதிக்குழாய்; blood vessel (சா.அக.);.

     [Skt. asir + vaha → த. அசிர்க்கவகம்.]

அசிர்க்கின்மிசிரம்

 அசிர்க்கின்மிசிரம் asirkkiṉmisiram, பெ. (n.)

   குருதிக் கலப்பு; mixing with the blood (சா.அக.);.

     [Skt. asir+misra → த. அசிர்க்கின்மிசிரம்.]

அசிர்க்கின்முகம்

 அசிர்க்கின்முகம் asirggiṉmugam, பெ. (n.)

   குருதி முகம்; bloody face (சா.அக.);.

     [Skt. asirmuga → த. அசிர்க்கின்முகம்.]

அசிர்க்கு

 அசிர்க்கு asirkku, பெ. (n.)

   குருதி; blood (சா.அக.);.

     [Skt. asir → த. அசிர்க்கு.]

அசிவம்

 அசிவம் asivam, பெ. (n.)

   நோயுண்டாக்கும் ஒரு வகைப் பேய்; the name of demon causing diseases (சா.அக.);.

     [Skt. asi → த. அசிவம்.]

அசீட

அசீட acīṭa, கு.பெ.எ. (adj.)

   1. மூளையற்ற; absence of brain.

   2. மூளையில்லாத; brainless (சா.அக.);.

     [Skt. asita → த. அசீட.]

அசீடன்

 அசீடன் acīṭaṉ, பெ. (n.)

   மூளையில்லாத தோர் கொடு விலங்கு; a species of monster without even a trace of the brain or a rudimentary representation of it Anecephalus (சா.அக.);.

     [Skt. a-sita → த. அசீடன்.]

அசீடம்

 அசீடம் acīṭam, பெ. (n.)

   தலையற்றது;த.வ. முண்டம்.

     [Skt. asita → த. அசீடம்.]

அசீடவ

 அசீடவ acīṭava, கு.பெ.எ. (adv.)

   மூளையற்றதின் தொடர்பானது; pertaining to a anercephalu, Anercephaloid (சா.அக.);.

அசீடவத்தி

 அசீடவத்தி acīṭavatti, பெ. (n.)

   ஈரல் முதலிய உறுப்புகளிலிருக்கும் ஒரு வகையான தலையில்லா நாக்குப் பூச்சி; a headless worm found in the liver and other organs; the bladder worm, Acepholocyst (சா.அக.);.

அசீடி

 அசீடி acīṭi, பெ. (n.)

   தலையற்றது; headless, Аcephalus (சா.அக.);.

த.வ. முண்டம்.

     [Skt. aiti → த. அசீடி.]

அசீதகரன்

 அசீதகரன் acītagaraṉ, பெ. (n.)

   கதிரவன்; the sun (சா.அக.);.

     [Skt. asitagara → த. அசீதகரன்.]

அசீதனு

 அசீதனு acītaṉu, பெ. (n.)

   சூட்டுடம்பு; heat body (சா.அக.);.

     [Skt. asita → த. அசீதனு.]

அசீதம்

 அசீதம் acītam, பெ. (n.)

   வெப்பம்; intense heat of the sun or of the body (சா.அக.);.

     [Skt. asita → த. அசீதம்.]

அசீதளம்

அசீதளம் acītaḷam, பெ. (n.)

   கருப்பூரம்; camphor.

     “துல்லிய மசீதளம் பூலாங் கிழங்கசை” (தைலவ. தைல. 6.);.

     [Skt. a-sitala → த. அசீதளம்.]

அசீதி

அசீதி1 acīti, பெ. (n.)

   எண்பது; eighty.

     “அதற்கு நீள மசீதியு மைந்துமால்” (சிவதரு. கோபுர.86);.

     [Skt. asiti → த. அசீதி.]

 அசீதி2 acīti, பெ. (n.)

   ஆடவை, கன்னி, சிலை, மீன(ம்); மாதங்களின் பிறப்பு (சைவச. பொது.15.);; beginning of the 3rd, 6th, 9th and 12th solar months, considered sacred.

     [Skt. sad-asiti → த. அசீதி.]

அசீரகம்

அசீரகம் acīragam, பெ. (n.)

   மகப்பேற்றின் பின் தாய்ப்பால் இன்மை; failure or insufficiency of the mother’s milk after childbirth, Agalactia alas Agalaxia.

   2. பால் மறுத்தல்; accustom to do Without the mother’s milk, causing an infant to cease from taking food by sucking, but to take it in the ordinary way, weaning (சா.அக.);.

த.வ. பாற்கேடு.

     [Skt. ajiraka → த. அசீரகம்.]

அசீரணக்காய்ச்சல்

 அசீரணக்காய்ச்சல் acīraṇakkāyccal, பெ. (n.)

   முன் உண்ட உணவு அறாமையால் வயிறு மிகப் பொருமிக்கழிந்து, புளியேப்பம், கொட்டாவி, விக்கல் ஆகிய குணங்களைக் காட்டும் ஒருவகைக் காய்ச்சல்; a fever arising from indigestion or other gastric disturbances. It is characterised by rumbling noise in the stomach, purging, sour belch, yawning, hiccough etc., gastric fever (சா.அக.);.

த.வ. செரியாக் காய்ச்சல்.

     [அசீரண(ம்); + காய்ச்சல்.]

     [Skt. ajirna → த. அசீரணம்.]

அசீரணக்கிராணி

அசீரணக்கிராணி acīraṇakkirāṇi, பெ. (n.)

   1. மகப்பெற்றார்தம் குடல் கோளாறினால் உண்ட உணவு செரியாமல் ஏற்படும் வயிற்றுப் போக்கு; chronic diarrhoea in women after-delivery due to the functional derangement of the bowels.

   2. குழந்தைகளுக்கு முறைப்படி தாய்ப் பாலூட்டத் தவறினாலும், மிகுத்தூட்டினாலும், பால் குற்றத்தினாலும் அல்லது முன்னை கழிமாசுக்கட்டாலும், ஏற்படும் கழிச்சல்; a chronic diarrhoea in infants caused by improper feeding, over feeding, deleterious property of the milk or by accumulation in the bowels of hard faecal matter (சா.அக.);.

த.வ. செரியாக்கழிச்சல்.

     [Skt. ajina + grahani → த. அசீரணக்கிராணி.]

அசீரணசுரம்

 அசீரணசுரம் asīraṇasuram, பெ. (n.)

அசீரணக்காய்ச்சல் பார்க்க;see asirana-k-kayccal (சா.அக.);.

     [அசீரண(ம்); + சுரம்.]

     [Skt. ajirna → த. அசீரணம்.]

அசீரணசூலை

 அசீரணசூலை acīraṇacūlai, பெ. (n.)

   உணவு செரியாமையினாலும் கழிமாசு(மல);க் கட்டினாலும் அடிவயிற்றில் உண்டாகும் ஒரு குத்தல் நோய்; an acute abdominal pain due to indigestion and accumulation of faeces in the intestines, stercoral colic (சா.அக.);.

த.வ. செரியாச்சூலை.

     [அசீரண(ம்); + சூலை.]

     [Skt. ajirna → அசீரணம்.]

அசீரணநாடி

 அசீரணநாடி acīraṇanāṭi, பெ. (n.)

   முன் உண்ட உணவு செரியாமையைக் காண்பிக்கும் நாடி; a pulse indicating the digestive disorders (சா.அக.);.

த.வ. செரியாநாடி.

     [அசீரண(ம்); + நாடி.]

     [Skt. ajirna → அசீரணம்.]

அசீரணபித்தம்

 அசீரணபித்தம் acīraṇabittam, பெ. (n.)

   பித்தம் அதிகமானதால் கழிமாசு கட்டியாகி, தலைவலி, செரியாமை, வயிற்றிரைச்சல், வாய்நீர் ஊறல் முதலிய குணங்களைக் காட்டும் ஒரு பித்த நோய்; excessive secretion of bile marked by constipation,headache, indigestion, rumbling noise in the stomach, hyper salivation and other gastric disturbance (சா.அக.);.

த.வ. செரியாப்பித்தம்.

     [அசீரண(ம்); + பித்தம்.]

     [Skt. ajirna → த. அசீரணம்.]

பித்து → பித்தம்.

அசீரணபேதி

 அசீரணபேதி acīraṇapēti, பெ. (n.)

   கழிச்சல்; diarrhoea from indigestion undigested discharges.

     [Skt. ajirna + bhedin → த. அசீரண(ம்);பேதி.]

அசீரணம்

அசீரணம் acīraṇam, பெ. (n.)

   1. செரியாமை; indigestion.

   2. அழிவுபடாதது; that which is unimpaired.

     “அசீரணமாஞ் சித்துருவால்” (ஞானவா. சிகித். 13);.

த.வ. அறாயாமை.

     [Skt. ajirna → த. அசீரணம்.]

அசீரணரோகம்

 அசீரணரோகம் acīraṇarōkam, பெ. (n.)

   பொதுவாக உணவின் குற்றத்தினாலும், மிதமிஞ்சி உண்பதாலும் செரிமான உறுப்புகளின் தொழில் வேறுபாடு அடைந்து உண்ட உணவு செரியாமல், வயிற்றில் புளிப்பு அதிகமாக ஏற்பட்டு, அதனால் வாய்ப்புண் பொங்கல் (அட்சரம்);, வளி(வாயு); பரிதல், ஏப்பம், புளியேப்பம், நெஞ்செரிச்சல் கழிமாசுக்கட்டு, எதிர்க் களித்தல் (மலபந்தம்);, முதலிய குணங்களும், சில சமயம் மயக்கம், உணவின் மீது வெறுப்பு (அரோசிகம்);, முதலியவுங்காணும் நோய்; indigestion in one or other of its numerous forms, occurring as a result of disorders of the digestive organs, due to the fermentation of the food taken. It is marked by sore in the mouth, flatulence, belching, eructation of gas smelling like rotten eggs, heartburn, slight eructation after meals, constipation etc, and accompanied at times, by giddiness and nausea. This is generally caused by errors in diet, as when some irritating, over rich or high material is taken, Dyspepsia (சா.அக.);.

த.வ. செரியாநோய்.

     [Skt. ajirna + roga → த. அசீரணரோகம்.]

அசீரணவாயு

 அசீரணவாயு acīraṇavāyu, பெ. (n.)

   செரியாமையால் உண்டாகும் ஊதைநோய்; flatulence from indigestion.

த.வ. செரியாஊதை.

     [Skt. ajirna + vayu → த. அசீரணவாயு.]

அசீரணவெரிச்சல்

 அசீரணவெரிச்சல் acīraṇavericcal, பெ. (n.)

   உண்ட உணவு செரியாமல் வயிற்றில் புளித்து அதனால் உண்டாகும் நெஞ்செரிவு; a burning sensation felt at the pit of the stomach. It is due to the fermentation of the contents of the stomach, heart burn Cardialgia (சா.அக.);.

த.வ. நெஞ்செரிச்சல்.

     [அசீரண(ம்); + எரிச்சல்.]

     [Skt. ajirna → த. அசீரணம்.]

எல் → எரி → எரிச்சல்.

அசீரியம்

அசீரியம் acīriyam, பெ. (n.)

   அழியாதது; that which is indestructible.

     “அக்கிராகிய மசீரியம்” (சூத. எக்கிய. பிரம. 10, 13);.

     [Skt. a-jirya → த. அசீரியம்.]

அசீர்

 அசீர் acīr, பெ. (n.)

   தட்டுமுட்டு (யாழ்ப்.);; domestic utensils (J.);.

 அசீர் acīr, பெ. (n.)

   அணியம் (ஆயத்தம்); (யாழ்.அக.);; readiness.

     [U. hazir → த. அசீர்.]

அசீர்த்தி

அசீர்த்தி acīrtti, பெ. (n.)

   செரியாமை; indigestion.

     “அக்கினி தேவற் கசீர்த்தியென்று” (ஒழிவி. கிரியைக். 3.);.

     [Skt. a-jirti → த. அசீர்த்தி.]

அசீவனி

அசீவனி acīvaṉi, பெ. (n.)

   1. பாழ்த்தன்மை; the quality or state of being nothing-Nihitity.

     [Skt. ajivan → அசீவனி.]

அசீவன்

 அசீவன் acīvaṉ, பெ. (n.)

   உயிரிலி (சடம்);; that which is lifeless, a non-existent thing (சா.அக.);.

     [Skt. ajiva → த. அசீவன்.]

அசீவம்

அசீவம்1 acīvam, பெ. (n.)

   ஒன்பதுவகை சொற்பொருள்களுளொன்று (சீவக. 2814, உரை.);;     [Skt. a-jiva → த. அசீவம்.]

 அசீவம்2 acīvam, பெ. (n.)

   1. இறப்பு; death.

   2. பாழ் (சூனியம்);; nothingness, the condition or state of being nothing.

   3. நாக்கற்றது; that which is tongueless (as in frog); (சா.அக.);.

த.வ. பாழ்வு.

     [Skt. ajiva → த. அசீவம்.]

அசு

அசு asu, பெ. (n.)

   1. உயிர்வளி (சிந்தா. நி. 57);; the vital breath or airs of the body.

   2. தென்புலக் காற்று (சீவன்);; the life of the spiritual world.

   3. உடலை விட்டுப் பிரிந்த ஆதன்; the departed soul.

   4. உயிர் (பிராமணன்);; animal life.

   5. வருத்தம்; grief.

   6. மூச்சு; respiration (சா.அக.);.

த.வ. மூச்சுக்காற்று.

     [Skt. asu → த. அசு.]

அசுகதாபம்

 அசுகதாபம் asugatāpam, பெ. (n.)

   மூச்சுக் குழாயில் ஏற்படும் அழற்சி நோய்; inflammation of the mucous membrane of the bronchial tubes, Bronchitis (சா.அக.);.

அசுகந்தம்

 அசுகந்தம் asugandam, பெ. (n.)

   தீ நாற்றம்; bad smell (சா.அக.);.

     [அசு + கந்தம்.]

     [Skt. asu → த. அசு.]

காந்து → கந்து → கந்தம்.

அசுகம்

அசுகம்1 asugam, பெ. (n.)

   1. காற்று; air.

   2. வருத்தம்; grief.

   3. மூச்சுக் குழற் பகுதி; one of the two tubes of the wind pipe, Bronchus.

   4. குரள்வளை; wind-pipe.

     [Skt. a-sukha → த. அசுகம்.]

 அசுகம்2 asugam, பெ. (n.)

   நலக்குறை; illness.

த.வ. நலக்கேடு.

     [Skt.a-šukha → அசுகம்.]

அசுகரம்

 அசுகரம் asugaram, பெ. (n.)

அசுகதாபம் பார்க்க;see ašugatābam (சா.அக.);.

அசுகி

 அசுகி asugi, பெ. (n.)

   கடுகு (பரி.அக.); ; mustard.

அசுகுசு

 அசுகுசு acukucu, பெ. (n.)

மிகவும் அருவருப்பானது”

 most disgust. Loathing. (இ.வ.);

     [அசு+குசு]

அசுகுசு-த்தல்

அசுகுசு-த்தல் asugusuttal,    4 செ.கு.வி. (v.i.)

   1. அருவருத்தல் (வின்.);; to feel disgust.

   2. ஐயுறுகை; to suspect.

அசுகுணி

அசுகுணி asuguṇi, பெ. (n.)

   செடிப்பூச்சி வகை (வின்.);; a small insect breeding and feeding on plants.

     [P]

   2. காதில் வரும் கரப்பான் (வின்.);; a kind of eruption, chiefly about the ears.

     [அகவுணி → அசுகுணி.]

அசுவுணி பார்க்க;see { }.

அசுகை

அசுகை1 asugai, பெ. (n.)

   அருவருப்பு (தெய்வச் விறலி.504);; loathing, disgust.

த.வ. சீற்றம், மிகு வெறுப்பு.

     [Skt. šahya → அசுகை.]

 அசுகை2 asugai, பெ. (n.)

   1. அசூயை பார்க்க;see asuyai.

   2. ஐயம் (வின்.);; Conjectural circumstance.

     [Skt. šahya → த. அசுகை.]

அசுக்காட்டு-தல்

அசுக்காட்டு-தல் asukkāṭṭudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   பகடிசெய்தல் (திவ். திருப்பா. 28, வ்யா);; to ridicule, mock.

த.வ. நகுவித்தல்.

     [அசு + காட்டு-]

     [Skt. has → த. அசு.]

அசுசி

அசுசி asusi, பெ. (n.)

   துப்புரவின்மை; impurity uncleanness.

     “தேறா ரசுசியென் றகல்வார்” (நல். பாரத. உமாமகே. 58.);.

த.வ. குப்படை.

     [Skt. a-suci → த. அசுசி.]

அசுடகம்

அசுடகம் asuḍagam, பெ. (n.)

   1. உலராதது; that which is undried.

   2. பசுமை; greeness that state of being cold and damp, rawness (சா,அக.);.

     [Skt. asu → த. அசுடகம்.]

அசுணன்

 அசுணன் asuṇaṉ, பெ. (n.)

   உள்ளிவகை (மலை);; garlic.

     [Skt. iasuna → த. அசுணன்.]

அசுணமா

அசுணமா asuṇamā, பெ. (n.)

   அசுணம் ; an extinct animal.

     “அசுணமாமுடியுமா போலே” (ஶ்ரீவசன. 41);.

     ‘அசுணமாச் செவிப்பறை அடுத்தது போலும்’ (பழ.);.

அசுணம் பார்க்க ;see ašuņam.

அசுணம்

அசுணம் asuṇam, பெ. (n.)

   இன்னிசை நுண்னுணர்ச்சியுள்ளதும், இன்சுவை யூனுடையதும், பிடிப்பவர் புதர்மறைவில் நின்று முன்பு இனிய யாழிசையால் மயக்கிப் பின்பு திடுமெனக் கடும்பறையை முழக்குவதால் அதனைப் பொறுக்க மாட்டாது இறந்து படுவதும், வேறுவகையிற் பிடித்தற்கரியதும், பண்டைத் தமிழகத்திலேயே (குமரிநாட்டிலேயே); இறந்துபட்டதாகக் கருதப்படுவதுமான ஒரு விலங்கினம் ; an extinct animal of ancient Tamil Nadu, reputed to have been a table delicacy and believed to have been so susceptible to harmony that when it was fascinated by melodious notes of music, a sudden loud beat of a drum caused its instantaneous death.

     “அசுணங் கொல்பவர் கைபோல் நன்றும்

இன்பமுந் துன்பமு முடைத்தே” (நற்.304);.

     “இன்ன ளிக்குரல் கேட்ட வசுணமா

அன்ன ளாய்மகிழ் வெய்துவித்தாளரோ” (சீவக. 1402);.

     “இசைகொள் சீறியா ழின்னிசை கேட்ட

அசுண நன்மா வந்நிலைக் கண்ணே

பறையொலி கேட்டுத்தன் படிமறந்ததுபோல்”

அசுணம் என்பது ஒரு பறவையினம் என்று கூறும் அறிஞரும் உளர். ஆயின், அசுணமா என்றே யன்றி அசுணப்புள் அல்லது அசுணப் பறவை என்று வழக்கின்மையானும், பண்டை யுரையாசிரிய ரெல்லாரும் விலங்கென்றே யுரைத்தமையானும், அங்ஙனமே இங்குங் கொள்ளப்பட்டது.

   அசுணமா-கேகயப்புள், இசையறி பறவை; a species of bird (which is); charmed by music and is said to die while under the charm.

என்பது சாம்பசிவம்பிள்ளை தமிழ்-ஆங்கில அகரமுதலி (பக்.72);.

 அசுணம் asuṇam, பெ. (n.)

   வெள்ளைப் பூண்டு; garlic, Allium Sativum (சா.அக.);.

     [Skt. lasuna → த. அசுணம்.]

     [P]

அசுண்டவாயு

அசுண்டவாயு asuṇṭavāyu, பெ. (n.)

   எல்லா உயிர்களுக்கும் உணவின் மீது வேட்கை பிறப்பிப்பதும் அரக்கர், விண்ணவர், சித்தர்கள் ஆகிய இவர்களும், பறவைகளும், விண்ணில் உலாவுவதற்கு ஆதாரமாயுள்ளதும் பூமிக்கு மேல் 650 கல்லுக்கு அப்பால் இருப்பதுமானகாற்று; a thin, subtle matter, much finer and rarer than air, occupying the heavenly space. It is an etheric medium of extreme tenuity and elasticity universally diffused in space above the earth at an altitude of 50 x 13 or 650 miles.

 It is said to be the medium of transmission of vital force to Super physical beings like the Rakshashas, Gandarvas, Siddhars, etc., travelling in the etheric regions and also to birds flying far high in the Serial regions (சா.அக.);.

த.வ. மீமிசைவளி.

     [Skt. asunta + vayu → த. அசுண்டவாயு.]

அசுதாரணன்

அசுதாரணன் asutāraṇaṉ, பெ. (n.)

   சிவபெருமான் (சிந்தா.நி.54);; Sivan.

     [Skt.asu+dharana → த. அசுதாரணன்.]

அசுதி

அசுதி asudi, பெ. (n.)

   1. அண்டி வழியாகப் பெருங்குடற்குள் நீர் அல்லது கிசம் (gas); செலுத்துகை (புதுவை);; enema (pond.);.

   2. அதைச் செலுத்தும் பீச்சாங்குழல் (புதுவை);; clyster pipe (Pond.);.

அசுதை

அசுதை asudai, பெ. (n.)

   நஞ்சு (சிந்தா.நி. 50);; poison.

     [Skt.a-sudha → த. அசுதை.]

அசுத்த

 அசுத்த asutta, பெ.எ. (adj.)

   தூய்மையற்ற; impure (சா.அக.);.

     [Skt. a-suddha → த. அசுத்த.]

அசுத்ததத்துவம்

அசுத்ததத்துவம் asuddadadduvam, பெ. (n.)

   மெய்ப் பொருள் (தத்துவ); வகை (சிவப். கட்);; antak-kara (mam. 5. ñānēntiriyam, 5 karumentiriyam, 5 tapmāttiraj 5 plūdam.

த.வ. ஆதன்கோட்பாடு.

     [Skt.a-suddha → த. அசுத்தம்.]

அசுத்தபற்பம்

 அசுத்தபற்பம் asuttabaṟbam, பெ. (n.)

   நோய்களைக் கண்டிப்பதற்குப் மாற்றாகக் குட்டம், வெள்ளை (பாண்டு);, கோழை, ஊதை (வாதம்); முதலிய பல நோய்களைப் புதிதாக உண்டாக்கி உயிருக்குத் தீங்கு விளைவிக்கும் தூய்மைமுறைப்படி, செய்பாகம், கைபாகம், புடபாகம் முதலியவற்றை, முறைப்படி கொள்ளாமல் செய்யும் நீற்றுமானப் பொருள்; impure calcined compounds prepared Without consistency in the observance of rules and practice laid-down in the Tamil medical science for cleansing, compounding, grinding and calcining medicines, especially metals and chemicals. Such imperfect, defective and crude preparations, instead of curing disease as intended, may in their train bring on new complaints and complications endangering life, like leprosy, general dropsy, consumption, rheumatism etc., (சா.அக.);.

த.வ. கூடாப்பொடி.

     [Skt. asuddha + bhasman → த. அசுத்தபற்பம்.]

அசுத்தபுவனம்

 அசுத்தபுவனம் asuttabuvaṉam, பெ. (n.)

   ஆதன் மெய்ப்பொருள் (ஆன்ம தத்துவம்);; operation of the soul in relation to the constituent principles in nature including elements, bodily and mental organs, faculties matter etc. (சா.அக.);.

     [Skt. asuddha + bhuvana → த. அசுத்த புவனம்.]

அசுத்தப்பிரபஞ்சம்

 அசுத்தப்பிரபஞ்சம் asuttabbirabañsam, பெ. (n.)

   கலை மெய்ப்பொருள் முதல் புடவி மெய்ப்பொருள் (பிருதிவிதத்துவம்); ஈறாகிய மெய்ப் பொருள் (தத்துவம்);;த.வ. மெய்ப்பொருள் பேரண்டம்.

     [Skf. a-suddha + pra-panca → த. அசுத்தப் பிரபஞ்சம்.]

அசுத்தமாயை

அசுத்தமாயை asuttamāyai, பெ. (n.)

   தூய்மையில்லா வுலகத்திற்கு முதற் காரணமான மாயை (சி.சி. 1, 19 மறைஞா.);;தவ புரைமாயை.

     [அசுத்த(ம்); + மாயை.]

     [Skt.a-suddha → த. அசுத்தம்.]

மள் → மய் → மாய் → மாயை (வே.க.462.);.

அசுத்தம்

அசுத்தம்1 asuttam, பெ. (n.)

   1. தூய்மையின்மை; impurity, foulness.

   2. தீட்டு (திவா.);; ceremonial impurity, incorrectness.

   3. திருத்தமின்மை; inaccuгасу, incorrectness.

   4. கழிமாசு (மலம்);; excrement.

     “சூகரங்க ளசுத்த மேவிய ளைந்து” (சி.சி.பர.லோகா.மறு. 28.);.

த.வ. குப்படை.

     [Skt.a-suddha → த. அசுத்தம்.]

 அசுத்தம்2 asuttam, பெ. (n.)

   பரத்தைமை (வேசி மார்க்கம்);; prostitution (சா.அக.);.

     [Skt.a-suddha → த. அசுத்தம்.]

 அசுத்தம் asuttam, பெ. (n.)

   உடல் (அ.); மனமாசுடையோன்; person impure in body or mind.

     [Skt.a-suddhan → த. அசுத்தன்.]

அசுத்தவாயு

 அசுத்தவாயு asuttavāyu, பெ. (n.)

   தூய்மைக் கேடான காற்று; impure or contaminated air (சா.அக.);.

த.வ. புரைவளி.

     [skt.a-suddha + vayu → த. அசுத்தவாயு.]

அசுத்தாத்துவா

 அசுத்தாத்துவா asuttāttuvā, பெ. (n.)

அசுத்த தத்துவம் (ஞானா. கட்); பார்க்க;see asutta tattuvam.

     [Skt.a-suddh + attuvan → த. அசுத்தாத்துவா.]

அசுத்தாவி

அசுத்தாவி asuttāvi, பெ. (n.)

   1. தூய்மை யில்லாத ஆவி; impure gas.

   2. தூய்மை யில்லாத ஆன்மா, அதாவது பேய் (கிறித்);; impure soul i.e., unclean or evil spirit, demon.

     [அசுத்தம் + ஆவி.]

     [Skt.asuddha → த. அசுத்த(ம்);.]

ஆவு → ஆவி.

அசுத்தி

 அசுத்தி asutti, பெ. (n.)

   தூய்மையின்மை; impurity, uncleanness.

     [Skt.asuddhi → த. அசுத்தி.]

அசுத்தை

அசுத்தை asuttai, பெ. (n.)

   ஒழுக்கமற்றவள்; unchaste woman.

     “அசுத்தை யென்றே யறிந்துவைத் தவளை நீத்தோம்” (உத்தரரா. சீதை.56);.

     [Skt.asuddha → த. அசுத்தை.]

அசுனம்

 அசுனம் asuṉam, பெ. (n.)

   வெள்ளுள்ளி (பரி.அக.);; garlic.

த.வ. பூண்டு.

     [Skt. Iasuna → த. அசுனம்.]

அசுனாதி

 அசுனாதி asuṉāti, பெ. (n.)

   இதள் (வை.மு.);; mercury.

ஒ.நோ.; அகனாதி

அசுனி

 அசுனி asuṉi, பெ. (n.)

   அனிச்சை மரம்; tree, white-flowered justice wort, Rhinacanthus communis (சா.அக.);.

அசுபக்கிரகம்

அசுபக்கிரகம் asubaggiragam, பெ. (n.)

   தீக்கோள்; malevolent planet.

     “சுபா சுபக் கிரகம்” (விதான. மரபி. 2, உரை);.

     [Skt.a-subha+graham → த. அசுபக்கிரகம்.]

அசுபக்கிரியை

அசுபக்கிரியை asubakkiriyai, பெ. (n.)

   இறந்தோர்க்குச் செய்யும் சடங்கு; nauspicious rites of ceremonies, as for the dead.

     “ஈன்றோர்க் கன்றிப் பல் லகபப் கிரியை செயல்” (திருவானைக். கோச்செங். 59.);.

த.வ. ஈம நடப்பு.

     [Skt.a-subha+kriya → த. அசுபக்கிரியை.]

அசுபங்கம்

அசுபங்கம் asubaṅgam, பெ. (n.)

   1. உயிர்கட் கேற்படும் பேரிடர்; danger to life.

   2. அச்சந் தரும் உயிர்; fear for life (சா.அக.);.

த.வ. உயிரிடர்.

     [Skt.a-subhanga → த. அசுபங்கம்.]

அசுபதி

 அசுபதி asubadi, பெ. (n.)

   பொன் (வை.மூ.);; gold.

அசுபபாவனை

அசுபபாவனை asubabāvaṉai, பெ. (n.)

   உடலின் கழிவு, நிலையின்மை முதலியவற்றைக் கருதும் உடலியல்புகள் (மணிமே. பக். 388, கீழ்க்குறிப்பு);;     [Skt.asubha+bhavan → த. அசுபபாவனை.]

அசுபம்

அசுபம்1 asubam, பெ. (n.)

   அமுக்கிரா (பச்.மூ);; Indian winter cherry.

 அசுபம்2 asubam, பெ. (n.)

   1. தீவினை; sin.

   2. தீமை; evil.

த.வ. பாழ்வினை, அன்மங்கலம்.

     [Skt.a-subha → த. அசுபம்.]

அசுபாவக்கபம்

அசுபாவக்கபம் asubāvakkabam, பெ. (n.)

   1. குருதியாக மாறுவதற்குப் பக்குவப்படாமல் இருக்கும் கோழை; the phlegm which incapable of developing itself into blood.

   2. இயற்கையாக உடம்பினுள் அமையப் பெற்ற கோழைக்கும் அதிகமாகவுள்ள கோழை; phelgm in excess of that naturally existing in the system (சா.அக.);.

த.வ. அல்கோழை.

     [Skt.a-svabhava + kapha → த. அசுபாவக்கபம்.]

அசுபாவக்காமம்

அசுபாவக்காமம் asupāvakkāmam, பெ. (n.)

   1. இயல்புக்கு மாறாக ஏற்படும் விருப்பம் அல்லது காமம்; unnatural desire or lust.

   2. முறைகேடான செயல்களைச் செய்யத் தூண்டும் வேட்கை (காமச்சேட்டை);; Sexual perversions (சா.அக.);.

த.வ. பெருந்திணைக்காமம்.

     [அசுபாவ(ம்); + காமம்.]

     [Skt.a-svabhava → த. அசுபாவ(ம்);.]

கமம் = நிறைவு, மகிழ்வு, விருப்பம். கமம் → காமம்.

அசுபாவக்குணம்

அசுபாவக்குணம் asupāvakkuṇam, பெ. (n.)

   1. இயல்புக்கு மாறாகவேற்படும் தன்மை; unnatural quality.

   2. பித்து; insanity (சா.அக.);.

த.வ. அல்குணம்.

     [அசுபாவ(ம்); + குணம்.]

     [Skt.a-svabhava → த. அசுபாவ(ம்);.]

கொள் (கொண்); → கொணம் → குணம்.

அசுபாவக்குறி

அசுபாவக்குறி asupāvakkuṟi, பெ. (n.)

   1. இயல்புக்கு மாறான அடையாளம்; unnatural symptom.

   2. இறப்புக்குறி; symptom of death, not found ordinarily in man (சா.அக.);.

த.வ. அல்குறி.

     [அசுபாவ(ம்); + குறி.]

     [Skt.a-svabhava → த. அசுபாவ(ம்);.]

குழி → குறி

அசுபாவச்செய்கை

அசுபாவச்செய்கை asupāvasseykai, பெ. (n.)

   1. இயற்கைக்கு மாறாகச் செய்யும் செயல்கள்; perverted acts.

   2. முரணிய இன்பக் களியாட்டங்கள்;   3. இசிவு(சன்னி);, மனக்கோட்டம், பித்து, முதலிய நோய்களால் அறிவிழந்து செய்யும் செய்கை; un natural symptoms found in persons suffering from apoplexy, delirium, insanity, etc.,

த.வ. அல்செய்கை.

     [அசுபாவம் + செய்கை.]

     [Skt.a-svabhava → த. அசுபாவம்.]

செய் → செய்கை.

அசுபாவதவிரத்தம்

அசுபாவதவிரத்தம் asupāvadaviraddam, பெ. (n.)

   1. இயல்புத் தன்மையற்ற குருதி; blood deprived of its natural quality.

   2. கெட்ட குருதி; impure blood.

த.வ. அல்குருதி.

     [அசுபாவத(ம்); + அரத்தம்.]

     [Skt.a-svabhavata → த. அசுபாசத(ம்);.]

அசுபாவப்பிரமேகம்

 அசுபாவப்பிரமேகம் asupāvappiramēkam, பெ. (n.)

   தாய்தந்தையரின் உடற் கூறுபாட்டின் முரண்பாட்டாலும், மாறுபாடான பண்டங்களை உண்பதாலும், மருத்துவம் செய்யத் தவறியதாலும் முறைகேடான மருத்துவத்தாலும், உண்டாகும் சிறுநீர் நோய்கள்; urinary diseases due to other than natural causes, i.e. generally arise from contagion or congenital causes, but in the following instances they may be acquired by external causes viz. difference in the nature of the Constitutions of the parent, errors in diet, neglect to take prompt remedial measures, defective treatment giving rise to complications, especially in gonorrhea.

     [Skt. a-šubhava + pra-mēha → த. அசுபாவப் பிரமேகம்.]

அசுபாவப்புணர்ச்சி

அசுபாவப்புணர்ச்சி asupāvappuṇarssi, பெ. (n.)

   1. இயல்புக்கு மாறாக ஆணுடனாவது பெண்ணுடனாவது கொள்ளும் எருவாய்ப்புணர்ச்சி; coitus against the order of nature with any man or Woman gratifying the sexual appetite by unusual and unnatural methods.

   2. கீழ்வகை விலங்குகளுடன் செய்யும் புணர்ச்சி; un natural connection of a man or woman with the lower order of animals.

   3. பெண்களின் ஓரினப்புணர்ச்சி; coitus between Woman and women.

த.வ. அல்புணர்ச்சி.

     [அசுபாவ(ம்); + புணர்ச்சி.]

     [Skt.a-subhava → த. அசுபாவ(ம்);.]

புணர் → புணர்ச்சி.

அசுபாவம்

 அசுபாவம் asupāvam, பெ. (n.)

   இயல்பல்லா நிலை; lack of own condition or state of being.

த.வ. அல்லியல்பு.

     [Skt. a-šva-bhava → த. அசுபாவ(ம்);.]

அசுப்பு

அசுப்பு asuppu, பெ. (n.)

   1. திடுநிநிலை; suddenness, quickness.

அசுப்பிலே சாகிறது (இராட்.);.

   2. கவனமின்மை (புதுவை);; inattentiveness, absence of mind (Pond.);.

   3. உளவறிகை (சங்.அக.);; spying.

     [அயர்ப்பு → அசர்ப்பு → அசப்பு → அகப்பு.]

அசுமகேது

 அசுமகேது asumaātu, பெ. (n.)

   மலையில் விளையும் ஒரு நச்சுப்பூண்டு; a poisonous plant found on hilltops (சா.அக.);.

     [அசும(ம்); + கேது.]

     [Skt. asman → த. அசும(ம்);.]

சே → சேது → கேது = சிவப்புவடிவான நச்சுப் பூண்டு.

அசுமக்கதலி

அசுமக்கதலி asumakkadali, பெ. (n.)

   1. கல்வாழை; stone plantain, Musasuperba.

   2. மலைவாழை; rock plantain, Canma indica (சா.அக.);.

     [அசும(ம்); + கதலி.]

     [Skt. asman → த. கதலி.]

     [குதல் → (கதல்); → கதலி = சிறியது.]

     [P]

அசுமசத்து

 அசுமசத்து asumasattu, பெ. (n.)

   கல்சத்து, கல்மதம்; a gelatinous substance, secreted from rocks in summer, bitumen (சா.அக.);.

த.வ. சிலாசத்து.

     [அசும(ம்); + சத்து.]

     [Skt.asman → த. அசுமம்.]

சள் → (சண்); → சத்து.

அசுமசம்

அசுமசம் asumasam, பெ. (n.)

   1 அகமசத்து பார்க்க;see asumasatu.

   2. கல்லிற் பிறந்தது; rock-born.

   3. இரும்பு; iron (சா.அக.);.

     [Skt.asman → த. அசுமசம்.]

அசுமசாரம்

அசுமசாரம் asumasāram, பெ. (n.)

   1. அசுமசத்து பார்க்க;see asuma-sattu.

   2. கல்லில் உருவாகும் எண்ணெய் முதலிய பொருள்கள்; a generic name for native hydrocarbons more or less oxgenated Such as, rock-oil, petroleum etc., bitumen.

   3. இரும்பின் சாரம், நீலக்கல்; iron shappire. (சா.அக.);.

     [அசும(ம்); + த. சாரம்.]

     [Skt. asman → த. அசும(ம்);.]

சாறு → சாறம் → சாரம்.

அசுமத்தம்

 அசுமத்தம் asumattam, பெ. (n.)

   ஆதன் மெய்ப்பொருள்; that portion of the spirit Connected with the attributes of existence, the principle of vitality. (சா.அக.);.

அசுமந்தகம்

அசுமந்தகம் asumandagam, பெ. (n.)

   1. நாணற் புல்; thatch grass.

   2. தருப்பைப் புல்; sacrificial grass.

     [Skt. asmanda → த. அசுமத்தகம்.]

அசுமந்தம்

அசுமந்தம்1 asumandam, பெ. (n.)

   இறப்பு; death.

     [Skt. asuranta → த. அசுமந்தம்.]

 அசுமந்தம்2 asumandam, பெ. (n.)

   அடுப்பு; oven (சா.அக.);.

     [Skt. asmanta → த. அசுமந்தம்.]

அசுமன்

அசுமன் asumaṉ, பெ. (n.)

   1. அருமணியு ளொன்று; a kind of precious stone.

   2. இடி; thunderbolt.

   3. முகில்; cloud.

   4. இரும்பு; iron. (சா.அக.);.

     [Skt. asman → த. அசுமன்.]

அசுமபித்தம்

 அசுமபித்தம் asumabittam, பெ. (n.)

   சீறுநீர்ப் பையில் உண்டாகும் கற்களைக் கரைக்குந் தன்மையுள்ளதொரு பூண்டு; a plant capable of dissolving the stone in the bladder coleus sentellarioides (சா.அக.);.

     [அகம(ம்); + பித்தம்.]

     [Skt.asma → த. அசும(ம்);.]

பித்து → பித்தம்.

அசுமபுட்பம்

 அசுமபுட்பம் asumabuṭbam, பெ. (n.)

   நறும்புகை (சாம்பிராணி);; benzoin (சா.அக.);.

அசுமம்

அசுமம் asumam, பெ. (n.)

   1. தீத்தட்டிக்கல், சக்கிமுக்கிக்கல்; a siliceous concretion usually transparent, flint.

   2. கல்; stone.

   3. இரும்பு; iron.

   4. முகில்; cloud (சா.அக.);

     [Skt. ašman → த. அசுமம்.]

அசுமரவரம்

அசுமரவரம் asumaravaram, பெ. (n.)

   1. வெண்மருது; white murdah, pentiptera arjuna alias terminalarjuna.

   2. கல்லடைப்புக்குக் கொடுக்கும் ஒரு மருந்து; a medicine having the property of breaking up stone in the bladder, lithontripte (சா.அக.);.

     [P]

அசுமரி

 அசுமரி asumari, பெ. (n.)

   கல்லடைப்பு (Med);; calculus.

     [Skt. ašmari → த. அசுமரி.]

அசுமரிக்கினம்

 அசுமரிக்கினம் asumarikkiṉam, பெ. (n.)

   மாவிலிங்கம்; round berried lingam tree, Crataevaroxburghi, used as lithontriptic i.e., an agent that dissolves stone (சா.அக.);.

அசுமரிரோகம்

 அசுமரிரோகம் asumarirōkam, பெ. (n.)

   நீரடைப்பு அல்லது கல்லடைப்பு நோய், சிறுநீரில் கற்கள் உருவாகித் திரண்டு தீர்த்தாரை. ஊத்தாம்பிள்ளை, குண்டிக்காய் முதலிய உறுப்புக்களை அடைக்கும் சிறுநீர் நோய்; a urinary disease.

     [Skt. asmari + röga → த. அசுமரிரோகம்.]

அசுமலோட்டிரநியாயம்

 அசுமலோட்டிரநியாயம் asumalōṭṭiraniyāyam, பெ. (n.)

   ஒன்றோடு ஒன்றைச் சீர்தூக்கி, அவற்றின் சிறுமை பெருமை கற்பிக்கும் நெறி; maxim of the stone and clod used to denote relative superiority and inferiority as clod is hard compared with cotton but soft compared with stone.

த.வ. சீர்நோக்குமுறை.

     [Skt. asman + Iösta + nyåya → த. அசுமலோட்டிரநியாயம்.]

அசுமாத்தம்

 அசுமாத்தம் asumāttam, பெ. (n.)

   சந்தடி; noise. ‘வீட்டில் ஆள் இருப்பதற்கான அசுமாத்தமே இல்லை’.

த.வ. ஆள்அரவம்.

அசுமானகிரி

 அசுமானகிரி asumāṉagiri, பெ. (n.)

   மேற்கட்டி; canopy, tester.

     [U. asmangiri → த. அசுமானகிரி.]

அசுமாரோபணம்

அசுமாரோபணம் asumārōpaṇam, பெ. (n.)

   அம்மி மிதிக்கை (சீவக. 2464, உரை.);; ceremony of the bridegroom’s placing the bride’s right foot on the grinding stone.

த.வ. கல்மிதி.

     [Skt. asman + årópana → த. அசுமாரோ பணம்.]

அசுமாற்றம்

அசுமாற்றம் asumāṟṟam, பெ. (n.)

   1. குறிப்பு, சாடை (யாழ்ப்.); ; hint, slight indication, gesture.

   2. அயிர்ப்பு (யாழ்ப்.); ; doubt, suspicion (J.);.

அசுமோத்தம்

அசுமோத்தம் asumōttam, பெ. (n.)

   1. அசுமசத்து பார்க்க;see asuma-satu.

   2. கல்லினின்று உண்டானது; made of stone (சா.அக);.

அசும்பு

அசும்பு asumbu, பெ. (n.)

   1. வீசுகை (பொதி.நி);; scattering, throwing.

   2. ஒளிர்வு காந்தி (பொ.தி.நி.); ; lustrc.

   3. ஊற்று (பிங்.);; spring.

   4. கிணறு (திவா.);; well.

   5. நீர்ப்பொசிவு; ooze, exudation.

     “அசும்பிவர் சாரல்” (சீவக. 522);.

   6. சேறு (பிங்.);; soft mud.

     “தாழ்கண் ணசும்பின்” (மணிமே. 8;6);.

   7. உளைநிலம் (திவா.);; miry place.

   8. வழுக்குநிலம் ; slippery ground.

   9. சிறுதிவலை ; minute drop of water.

     “மழை தூங் கசும்பினிற் றுன்னி” (திருக்கோ. 149);.

   10, பற்று ; adherence, connection.

     “அசும்பறத் துடைத்தும்” (ஞானா. 41);.

   11. வறுமை ; want, poverty.

   12. குற்றம் ; blemish, fault.

     “அசும்பற வகன்ற ஞானத் துறவனே” (சேதுபு. சங்கர. 92);.

     [அள் → அய் → அயிம்பு → அசிம்பு → அசும்பு.]

 அசும்பு acumpu, பெ. (n.)

   நெல்வயலில் நெருக்கமாக முளைக்கத் தொடங்கியிருக்கும் களைகள்; a kind of weed in paddy field. (இ.வ.);

     [அசு+அசும்பு]

அசும்பு-தல்

அசும்பு-தல் asumbudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. ஒழுகுதல்; to flow.

     “அசும்பு பொன்வரை” (சீவக. 533);.

   2. பரவுதல் ; to spread, be diffused.

     “அவிரொளி யசும்ப” (காஞ்சிப்பு. பன்னிரு. 164);.

   3. வழுக்குதல் ; to be slippery.

     “சோலைத்தே னொழுகிறின் றகூம்புயர் சந்தனத் தொகுதிக் குன்றம்” (சீவக. 3063);.

     [அள் → அய் → அயிம்பு → அசிம்பு → அசும்பு.]

அசும்புசெய்-தல்

அசும்புசெய்-தல் asumbuseytal,    1 செ.கு.வி. (v.i.)

   ஒளிர்தல் ; to shine, emit light.

     “ஆய பொதியில் வளைபொன்னா லசும்பு செய்து” (திருவிளை. உலவா. 17);.

அசுயை

 அசுயை asuyai, பெ. (n.)

அசூயை பார்க்க;see asuyai.

     [Skt. asűya → த. அசுயை.]

அசுரகுரு

 அசுரகுரு asuraguru, பெ. (n.)

   அசுரர் குரவனான வெள்ளி ; Velli, the preceptor of the Asuras.

அசுரசந்தி

 அசுரசந்தி asurasandi, பெ. (n.)

   அந்தி நேரம் ; evening twilight.

அசுரசம்

 அசுரசம் asurasam, பெ. (n.)

   ஒரு பூடு; a plant, basilicum (சா.அக.);.

     [Skt. asurasa → த. அசுரசம்.]

அசுரதாரு

அசுரதாரு acuratāru, பெ. (n.)

   மரச்சிற்பங்களைச் செய்யவுதவும் மரவகைகள்; kind of woods used to make wooden icon statues. 5:21.

அசுரநாள்

அசுரநாள் asuranāḷ, பெ. (n.)

   19ஆம் நாண் மீனான மூலம் (பிங்.); ; Mulam the 19th lunar asterism.

அசுரன்

அசுரன் asuraṉ, பெ. (n.)

   1. அசுர வகுப்பினருள் ஒருவன்; one of the class of Asuras.

   2. நவச்சாரம் ; hydrochlorate of ammonia – Sal ammoniac (சா.அக.);.

   3. இராகு ; Rāhu, the ascending node of the moon.

   4. கேது ;{ }; the descending mode of the moon.

     “தகை பெறு பூத சம்போ தனனென்று மசுர னென்றும்” (மச்சபு. புவநகோச. 27);.

அசுரபி

 அசுரபி asurabi, பெ. (n.)

   முடைநாற்றம்; a bad Smell or odour (சா.அக.);.

     [Skt. asurabhi → த. அசுரபி.]

அசுரமணம்

 அசுரமணம் asuramaṇam, பெ. (n.)

அசுரம் பார்க்க ;see {ašuram}.

அசுரமந்திரி

 அசுரமந்திரி asuramandiri, பெ. (n.)

   அசுரரின் மந்திரியான வெள்ளி (திவா.);; Velli, as minister of the Asuras.

அசுரமருத்துவம் (அசுரவைத்தியம்)

அசுரமருத்துவம் (அசுரவைத்தியம்) asuramaruttuvamasuravaittiyam, பெ. (n.)

   அறுவை மருத்துவம்; surgery (W.);.

     ‘மீன்தேர் கொட்பிற் பணிக்கயம் மூழ்கிச்

சிரல்பெயர்ந் தன்ன நெடுவெள்ளுசி

நெடுவசி பரந்த வடுவாழ் மார்பின்

அம்புசேர் உடம்பினர்” (பதிற். 42 ; 2-5);,

     “ஆரார் தலைவணங்கார் ஆரார்தாம் கையெடார்

ஆரார்தாம் சத்திரத்தி லாறாதார் – சீராரும்

தென்புலியூர் மேவுஞ் சிவனருள்சே ரம்பட்டத்

தம்பிடிகான் வாசலிலே தான்”

     “உடலிடைத் தோன்றிற் றொன்றை

யறுத்ததன் உதிர முற்றிச்

சுடலுறச் சுட்டு வேறோர் மருந்தினால் துயரம் தீர்வர்”

     “…… கருவியிட் டாற்றுவார்

புண்வைத்து மூடார் பொதிந்து” (நீதிநெறி. 56);

என்பவற்றால், அசுர மருத்துவம் என்னும் அறுவை மருத்துவம் தமிழ் மருத்துவமே யென்பது பெறப்படும்.

அசுரமாயம்

 அசுரமாயம் asuramāyam, பெ. (n.)

   பேய் பூதங்களைக் கொண்டு செய்யும் மாயவினை; a kind of magic, performed with the aid of evil spirits— demoniacal magic.

அசுரம்

அசுரம் asuram, பெ. (n.)

   கொல்லேறு கோடல், திரிபன்றி யெய்தல், கன வில் நாணேற்றல் முதலிய மறவினைகளும் அருவினைகளுஞ் செய்து ஒரு பெண்ணை மணத்தல்; acquirement of a bride by the successful performance of some valiant deed enjoined by her father, such as seizing of a wild bull, shooting down of a whirling target in the shape of a boar, bending of a heavy bow and fastening its string, etc.

மன்றல் எட்டாவன ; பிரமம், பிரசா பத்தியம், ஆரிடம், தெய்வம், காந்தருவம், அசுரம், இராக்கதம், பைசாசம் என்பன.

அவற்றுள்………அசுரமாவது; கொல்லேறு கோடல், திரிபன்றி யெய்தல், வில்லேற்றுதல் முதலியன செய்து கோடல்.

     “முகையவிழ் கோதையை முள்ளெயிற் றரிவையைத்

தகைநலங் கருதுந் தருக்கினி ருளரெனின்

இவையிவை செய்தாற் கெளியண்மற் றிவளெனத்

தொகைநிலை யுரைத்த பின்றைப் – பகைவலித்

தன்னவை யாற்றிய வளவையில்

தொன்னிலை யசுரந் துணிந்த வாறே”

     (தொல். பொருள். கள. 1. நச். உரை);.

     “கொல்லேற்றுக் கோடஞ்சு வானை மறுமையும்

புல்லாளே ஆய மகள்” (கலித். 103);

என்னும் பண்டைத் தமிழாயர் மரபின்படி, கண்ணபிரானார் எழுவிடை தழுவி நப் பின்னையை மணந்தார்.

கதிரவக் குலமாகிய சோழர்குடியின் வட நாட்டுக் கிளையைச் சேர்ந்த இரகுராமனார், கனவில் நாணேற்றிச் சீதையை மணந்தார்.

திங்கட்குலமாகிய பாண்டியர் குடியின் வட நாட்டுக் கிளையைச் சேர்ந்த அருச்சுனன், திரிபன்றி யொத்த சுழல்மீனை யெய்து திரெளபதியை மணந்தான்.

அசுரம் என்பது, தலைமகட்குப் பொன் பூட்டிச் சுற்றத்தார்க்கு வேண்டுவன கொடுத்துக் கொள்ளும் மணவகை என்று, சென்னை அகரமுதலிப் பின்னிணைப்புக் கூறுவது மறச்செயல் ஒன்றையுங் குறியா விடினும், பெருவழக்கான தமிழ் மரபிற்கு ஒத்ததாகவே யிருத்தல் காண்க.

அசுரர்

அசுரர் asurar, பெ. (n.)

   ஆரியர்க்கும் தேவர்க்கும் பகைவராகவும், பதினெண் கணத்துள் ஒரு கணமாகவும் சொல்லப்படும் ஓர் உயர்திணை வகுப்பார் ; a rational class of beings said to be inimical to the Aryan race and gods, and constituting one of the eighteen classes of celestial hosts.

     [சுரர் = தேவர். சுரர் x அசுரர் = தேவரல்லாதார், தேவர்க்குப் பகைவர். ‘அ’ அன்மை மறுதலைப் பொருள் முன்னொட்டு.)

ஆரியப் புராணங்களில் அசுரர் என்று பொதுவாகச் சொல்லப்படுபவரின் வரலாற்றையும் இயல்பையுங் கூர்ந்து நோக்குங்கால், அவர் ஆரியர்க்கு மாறாயிருந்த தமிழ வேந்தரும் மன்னரு மென்றே கருத இடந்தருகின்றது. அசுரனும், திருமாலின் ஐந்தாம் தோற்றரவான மாணி (பிரமச்சாரி); யுருவால் அழிக்கப்பட்டவனுமான மகாபலிச் சக்கரவர்த்தி உண்மையில், மாவலி என்ற பெயர் கொண்டவனும், செங்கோலனும், மாபெருங் கொடைவள்ளலுமான ஒரு சேரவேந்தனே.

சோ வென்னும் அரணிருந்த சோணிதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட அரசனும், கண்ணபிரானான திராவிட மன்னனுடன் போர் புரிந்து தோற்றவனுமான, வாணாசுரன் என்பவன் மாவலி வேந்தனின் மைந்தனே.

மணிமேகலை காலத்துக் கிள்ளிவளவன் என்னும் சோழ வேந்தனின் கோப்பெருந் தேவியாயிருந்த சீர்த்தி என்னும் கோமகள், மாவலி வழிவந்தவளே.

எருமையூர் அரையம் (மைசூர் ராஜ்யம்);, கருநூல் மாவட்டம், வடார்க்காடு மாவட்டம் ஆகியவற்றின் பகுதிகளைக் கொண்ட வாண கோப்பாடியை, இடைக்காலத்திற் பன்னூற்றாண்டாகச் சீருஞ் சிறப்புமாக ஆண்டுவந்த வாணகோவரையர் என்னும் சிற்றரசக் குடியினர் வாணன் கொடிவழியினரே.

அசுர மணம், அசுர மருத்துவம், அசுர வினை முதலிய வழக்காறுகள், தமிழ நாகரிகத்திற்கும் வாழ்க்கை நெறிக்குமே பொருந்துவனவாயிருக்கின்றன.

   அசுரன் என்னும் சொல்லைப்பற்றிப் பேரா. (P. S.); சுப்பிரமணிய சாத்திரியார் தம் வடமொழி நூல் வரலாறு என்னும் பொத்தகத்தில் வரைந்திருப்பது வருமாறு;     ‘ஸெண்ட் அவெஸ்தாவில் கடவுள் அஹீர மஸ்தா, மஸ்தா, அஹீர என்ற சொற்களால் வழங்கப்படுகின்றார். ஆங்குள்ள மஸ்தா என்ற சொல்லும் வடமொழி மஹித என்ற சொல்லும் ஒருபொருட் கிளவியாயிருத்தல் கூடும். அவ்வாறே அஹீர, அஸீர என்ற சொற்களும் ஆகும். ஆங்கு அஹீர என்பது விசேஷணச் சொல்லாகவும் மஸ்தா என்பது விசேஷியச் சொல்லாகவும் இருக்கலாம். ருக் வேதத்திலும் அஸீர என்ற சொல் விசேஷணமாகவே வழங்கப்பட்டுள்ளது. அன்றியும் கடவுளுக்குப் பகையினத்தாராகத் தேவர் ஸெண்ட் அவெஸ்தாவிற் கூறப்பட்டனர். ஆதலின் அஸீரர், தேவர் இச்சொற்களுடைய பொருளின் வரலாறு நன்கு ஆராய்தற்கு உரியது.’

     “அஸீர; என்ற சொல் பலமுள்ளவன் என்ற பொருளோடு அக்கினி, இந்திரன், வருணன், ஸோமன், வஸீக்கள், மித்திரா வருணர், வாயு, ருத்திரன், பர்ஜந்யன், ஸவிதா, மருத்துக்கள் முதலியோர்க்கு அடை மொழியாக வழங்கப்பட்டது. சிலவிடத்து அச் சொல்லே பலத்தைக் கொடுப்பவன் என்ற பொருளையுங் கொண்டது. அஸீரரான தேவர்களுக்கும் மேலானவன் என்ற வழக்கு உளது. தேவரல்லாதார்க்கும் அஃது அடை மொழியாய் வழங்கப்பட்டுள்ளது. தேவரல்லாதார் என்பது தேவரைப் போன்றவரும் தேவரிடத்தினின்று வேறுபட்டவருமான விருத்திரர் முதலியோரைக் குறிக்கும். சிலவிடத்து விசேஷியச் சொல்லின்றி விசேஷணச் சொல்லாகிய அஸீர; என்பது மாத்திரம் ருக்வேதத்திலும், அஹீர; என்பது மாத்திரம் ஸெண்ட் அவெஸ்தாவிலும் வழங்கப்பட்டன. ருக் வேதத்தின் பிற்பகுதியில் அஸீர என்ற சொல் விசேஷியமின்றி வழங்கப்படின், அஃது அதேவரையுங் குறிக்குமென்றும் பத்தாம் மண்டிலம் 124ஆம் ஸூக்தத்திலுள்ள அஸீர; என்ற சொற்கு அவ்வாறே பொருள் கொள்ள இடன் இருக்கின்றது என்றும், மாக்டானல் கூறுகின்றார். அந்த ஸூக்தத்தில் அஸீரரான பிதரர்க்கு’ என்றும், அவர் மாயையின்றி அஸரர் ஆயினர்’ என்றும் பொருட் கொண்ட இரு தொடர்களில் அச்சொல் காணப்படுகின்றது. இரண்டாவது தொடரில் அவர் என்பது அக்கினி, ஸோமன், வருணன் இவரைக் குறிக்கின்றமையால், அச்சொற்குப் பலமுள்ளவன் என்றே அங்குப் பொருளாகக் கொள்ளலாம் எனத் தோற்றுகின்றது. ஆகலின் ருக்வேத ஸம்ஹிதை முழுமையிலும் அஸீர என்ற சொற்குப் பலமுள்ளவன், பலத்தையளிப்பவன், உயிருள்ளவன், உயிரையளிப்பவன் முதலிய பொருளில் ஒன்றைக் கொளல் தகும். அச்சொல் அக்கினி முதலிய தேவதைகட்கு அடைமொழியே எனக் கொளலுந் தகும்” (வ.நூ.வ. பக். 43-46);.

அதர்வவேதம்-நான்காம் வேதம்-காலம்

     “அஸீர; என்ற சொல் ருக்வேத ஸம்ஹிதையில் பலமுடையவன், உயிர்கொடுப்போன் என்ற பொருளில் வழங்கப்பட்டது. தேவர்களுக்குப் பகைவன் என்ற பொருளில் அங்குக் கூறப்படவில்லை. ஈண்டுச் சிலவிடத்துப் பலமுடையவன், உயிர்கொடுப்போன் என்ற பொருளிலும், சிலவிடத்துத் தேவர்க்குப் பகையினன் என்ற பொருளிலும் அச் சொல் வழங்கப்பட்டுள்ளது. முற்கூறிய பொருளைக் கொண்ட அஸீர; என்ற சொல்லைக் கொண்ட மந்திரங்கள் பழையன எனவும், பிற்கூறிய பொருளைக் கொண்ட அச்சொல்லைக் கொண்ட மந்திரங்கள் பிற்காலத்தன எனவும் கொள்ளல் தகும். பிற்கூறிய பொருளிலேயே அச்சொல் அதர்வவேதத்தில் வழங்கப்பட்டது என மாக்டானல் கூறுவது ஆராய்தற்குரியது. ருக் வேதத்தில் அச்சொல் பலமுடையோன், உயிர்கொடுப்போன் என்ற பொருளிலே பத்து மண்டலத்துள்ளும் வழங்கப்பட்டதாகக் கொள்ளல் கூடும் என முன்னரே கூறப்பட்டது” (ஷெ.பக். 105-6);.

அசுரற்றடிந்தோன்

 அசுரற்றடிந்தோன் asuraṟṟaḍindōṉ, பெ. (n.)

   சூரபதுமன் என்னும் அசுரனைக் கொன்றவனாகச் சொல்லப்படும் முருகன் (சுந்தர புராணம்);; Muruga, as the slayer of the Asura called Sūrapadmā (Skanda purāna);.

     [அகரன் + தடிந்தோன். தடிதல் = கொல்லுதல்.]

அசுரவினை (அசுரகிருத்தியம்)

 அசுரவினை (அசுரகிருத்தியம்) asuraviṉaiasuragiruttiyam, பெ. (n.)

   அசுரர் செய்தற்குரிய அருஞ்செயல்; marvellous work, Herculean labour, as of Asurās.

அசுரவியம் (அசுரவாத்தியம்)

 அசுரவியம் (அசுரவாத்தியம்) asuraviyamasuravāttiyam, பெ. (n.)

   முரசு முதலிய இசைக்கருவிகள் (நாஞ்.);; musical instruments like drum, etc. (Nāñ.);.

அசுராவம்

 அசுராவம் asurāvam, பெ. (n.)

   வெண்கலம்; bell-metal (சா.அக.);.

அசுருத்திரரோகம்

 அசுருத்திரரோகம் asuruttirarōkam, பெ. (n.)

அசிருத்தரரோகம் பார்க்க;see asirutararõgam. (சா.அக.);.

த.வ. பெரும்பாடு.

     [Skt. asurudhra + roga → த. அசுருத்திரரோகம்.]

அசுருநாலி

 அசுருநாலி asurunāli, பெ. (n.)

   கண்ணீர்த் தாரையிற் காணும் ஒரு புண்; a sinuous ulcer opening in the passage of tears in the eye, fistula lacrimalis (சா.அக.);.

     [Skt. asrunali → த. அசுருநாலி.]

அசுருநேத்திரம்

 அசுருநேத்திரம் asurunēttiram, பெ. (n.)

   நீர்வடியும் கண்; eye with tears (சா.அக.);.

த.வ. நீர்க்கண்.

     [Skt. ašuru + nétra → த. அசுருநேத்திரம்.]

அசுருமயம்

 அசுருமயம் asurumayam, பெ. (n.)

   கண்ணீர்ப் பெருக்கு; fullness of tears (சா.அக.);.

     [Skt. asru maya → த. அசுருமயம்.]

அசுருவதனம்

 அசுருவதனம் asuruvadaṉam, பெ. (n.)

   அழுமூஞ்சி; tear-face (சா.அக.);.

     [Skt. asuru + Vadana → த. அசுருவதனம்.]

அசுருவென்பு

 அசுருவென்பு asuruveṉpu, பெ. (n.)

   கண் குழியில் பதிந்திருக்கும் மென்மையான சிறியதோர் எலும்பு; a very small soft bone resembling the finger-nail, situated at the anterior and upper part of the orbit, Lachrymal bone (சா.அக.);.

த.வ. பிசிர் எலும்பு.

     [அசுரு + என்பு.]

 Skt. ašru → த. அசுரு.]

     [எல் → என் → என்பு.]

அசுர்

அசுர் asur, பெ. (n.)

   ஆரியர்க்குப் பகைவரான ஒரு வகுப்பார் ; an anti-Aryan’ race of people said to be demons in {Purānās}.

     “அசுரைச் செற்ற…… மாதவன்” (திவ். இயற். திருவிருத். 67);.

     [அசுரர் → அசுர்.]

அசுழம்

அசுழம் asuḻm, பெ. (n.)

   நாய்; dog.

     “கருதசுழ மாமிந்த மட்டைதனை யாள” (திருப்பு. 140);.

தெ. அசுர

அசுவகதி

அசுவகதி asuvagadi, பெ. (n.)

   1. குதிரை நடை; speed of horse.

   2. குதிரை நடைவகைகள்; paces of horse.

த.வ. குதிரைநடை

     [அசுவ(ம்); + கதி.]

     [Skt.ašva → த. அசுவம்.]

கது → கதி → Skt. gati.

அசுவகந்தாதி

 அசுவகந்தாதி asuvagandāti, பெ. (n.)

   அமுக்கிராங் கிழங்குடன் மற்ற கடைச் சரக்குகளையும் கொண்டு செய்யப்பெறும் ஒரு எண்ணெய் (தைலம்);; a medicated oil prepared with the horse-root as a chief ingredient and some other bazaar drugs (சா.அக.);.

     [அசுவகந்தம் + ஆதி.]

     [Skt. asvagandha → த. அசுவகந்தம்.]

அகுதி → ஆதி → Skt. adi.

அசுவகந்தாதிச்சூரணம்

 அசுவகந்தாதிச்சூரணம் asuvagandātissūraṇam, பெ. (n.)

   அமுக்கிராங் கிழங்கை முதன்மையாகக் கொண்டு, பிற கடைச் சரக்குகளையும் உடன் சேர்த்துச் செய்யப் பெரும் பொடி (சூரணம்);; powder of horse-root mixed with the powder of some other minor bazaar drugs (சா.அக.);.

     [அசுவகந்தம் + ஆதி + சூரணம்.]

     [Skt. cürna → த. சூரணம்.]

அசுவகந்தி

 அசுவகந்தி asuvagandi, பெ. (n.)

   அமுக்கிரா (மலை.);; Indian winter cherry, species of withania.

     [Skt. asva-gandhå → த. அசுவகந்தி.]

அசுவகந்திச்சூரணம்

 அசுவகந்திச்சூரணம் asuvagandissūraṇam, பெ. (n.)

   அமுக்கிராக் கிழங்குடன், திரிகடுகு, ஏலம், கிராம்பு, சிறுநாவற்பூ முதலியவற்றைக் கலந்து பொடி செய்து சருக்கரை சேர்த்து, வீக்கம், காய்ச்சல், வாயிலெடுத்தல், இருமல், மந்தப் பசி முதலிய நோய்களுக்குப் பயன்படுத்தும் மருந்துக் கூட்டு; a mixture of the powdered drugs such as horse-root, dry ginger, pepper, long-pepper, caradamon, clove, Cassia buds, and Sugar, prescribed for swelling in the body, fever, vomiting, cough, dull appetite etc.

த.வ. அமுக்கிராப்பொடி.

அசுவகந்தித்தைலம்

 அசுவகந்தித்தைலம் asuvagandittailam, பெ. (n.)

   அமுக்கிராங் கிழங்குடன் சில கடைச் சரக்குகளையும் சேர்த்து நல்லெண்ணெயில் காய்ச்சி வடித்துத் தலைமுழுகப் பயன்படுத்தும் ஒரு நெய்மம்; a medicated oil prepared by boiling horse-root and some other bazaar durgs in gingelly oil and then filtered, used for anointing (சா.அக.);.

     [அசுவகந்தி + தைலம்.]

     [Skt. ašva-gandha + bila → த. அசுகந்தித்தைலம்.]

அசுவகந்தை

 அசுவகந்தை asuvagandai, பெ. (n.)

அசுவகந்தி பார்க்க;see asuva-gandi (சா,அக.);.

     [Skt. asva – gandha → த. அசுவகந்தை.]

அசுவக்கர்ணகம்

 அசுவக்கர்ணகம் asuvaggarṇagam, பெ. (n.)

அசுவகர்ணம் பார்க்க;see asuvakarnam (சா.அக.);.

     [அசுவ(ம்); + கர்ணகம்.]

     [Skt. ašva → த. அசுவம்.]

     [கன் → கன்னம் → Skt. karna → த, கர்ணகம்.]

அசுவக்கர்ணம்

அசுவக்கர்ணம் asuvakkarṇam, பெ. (n.)

   1. குதிரைக் காது; a medicinal plant, the leaves of which resemble the ears of a horse, horse ear three-Indian-dammer, Shorea robusta alias vatica robusta.

   2. குதிரைக் காதைப் போன்ற எலும்பு முறிவு; particular fracture of the bone (resembling the ear of a horse); (சா.அக.);.

த.வ. குங்கிலிய மரம், குதிரைச்செவி பூடு.

     [அசுவ(ம்); + கர்ணம்.]

கன் → கன்னம் → Skt. karna.

அசுவக்கினம்

 அசுவக்கினம் asuvakkiṉam, பெ. (n.)

   அலரி; horse bane or horse killer, Indian oleander, nerium odorum (சா.அக.);.

     [Skt. asvaghna → த. அசுவக்கினம்.]

அசுவக்கிரந்தம்

 அசுவக்கிரந்தம் asuvakkirandam, பெ. (n.)

அசுவசாத்திரம் பார்க்க;see asuva-sattiram (சா.அக.);.

அசுவக்கிழங்கு

 அசுவக்கிழங்கு asuvakkiḻṅgu, பெ. (n.)

   அழுக்கிராங் கிழங்கு; horse root, withania somnifera alias physalis flexuosa (சா.அக.);.

     [அசுவம் + கிழங்கு.]

     [Skt. ašva → த. அசுவம்.]

கீழ் → கிழக்கு → கிழங்கு.

அசுவக்குரம்

அசுவக்குரம் asuvakkuram, பெ. (n.)

   1. வெள்ளைக் காக்கணம்; white-flowered mussel-shell creeper, clitorea ternatea albifora.

   2. குதிரைக்குளம்படி; horse’s hoof plant.

   3. ஒரு நறுமணப்பொருள் (மீனம்பர்);; a perfume (apparently ambergris which is a concretion of the indigestible portion of the cuttle-fish); (சா.அக.);.

     [அசுவம் + குரம்.]

     [Skt. asva → த. அசுவம்.]

குல் → குர → குரம் → Skt. khura.

அசுவக்கெந்தி

 அசுவக்கெந்தி asuvakkendi, பெ. (n.)

அசுவகந்தி பார்க்க;see ašuva-kandi (சா.அக.);.

அசுவசாகுடம்

 அசுவசாகுடம் asuvasākuḍam, பெ. (n.)

   ஒரு வகைப் பூடு; an unknown plant (சா.அக.);.

அசுவசாத்திரம்

 அசுவசாத்திரம் asuvasāttiram, பெ. (n.)

   குதிரையியல்பு கூறும் நூல்; hippology.

த.வ. குதிரைநூல், பரிநூல்.

 Skt. ašva + šāstra → த. அசுவசாத்திரம்.]

அசுவசிகிச்சை

 அசுவசிகிச்சை asuvasigissai, பெ. (n.)

   குதிரை மருத்துவம்; the art of Science of healing or treating the disease of horses. (சா.அக.);

     [Skt. ašva + cikitsā த. அசுவசிகிச்சை.]

அசுவச்சட்டிரம்

 அசுவச்சட்டிரம் asuvassaṭṭiram, பெ. (n.)

   நெருஞ்சில்; a thorny shrub, small Caltrope-tribulus terrestris (சா.அக.);.

     [Skt. aśva-danshtra – த. அசுவசட்டிரம்.]

அசுவணி

 அசுவணி asuvaṇi, பெ. (n.)

   சொறி (இ.வ.);; eczema (Loc.);.

அசுவதட்டிரம்

 அசுவதட்டிரம் asuvadaṭṭiram, பெ. (n.)

   நெருஞ்சில் (மலை.);; tribulus plant.

     [Skt. asva-damsfra → த. அசுவதட்டிரம்.]

அசுவதரம்

 அசுவதரம் asuvadaram, பெ. (n.)

   கோவேறு கழுதை; the male offspring of a he-ass and a mare or a horse and a she-ass;

 the male of a mule (சா.அக.);.

     [Skt. asvatara → த. அசுவதரம்.]

     [P}

அசுவதரி

 அசுவதரி asuvadari, பெ. (n.)

   பெண்கோவேறு கழுதை; the female offspring of a mule (சா.அக.);.

     [Skt. aśvatari → த.அசுவதரி.]

அசுவதாட்டியா-தல்

அசுவதாட்டியா-தல் asuvatāṭṭiyātal,    5 செ.கு.வி. (v.i.)

   பேச்சு முதலியவற்றில் தங்குதடையிலவாதல்; to be fluent in speaking.

     “அவன் அசுவதாட்டியாய்ப் பேசுகிறான்” (வின்.);.

     [அசுவம் + தாட்டி + ஆ-.]

     [Skt.dardhya → த. தாட்டி.]

அசுவதி

அசுவதி asuvadi, பெ. (n.)

   இரலை (அசுவதி); என்னும் விண்மீன் (தணிகை. திருநகர. 31);; the first naksatram.

     [Skt. asvini < த. அசுவதி.]

அசுவதீபம்

அசுவதீபம் asuvatīpam, பெ. (n.)

   கோயில் வழிபாட்டு விளக்கு வகை (பரத. ஒழிபி. 42.);; a kind of temple light, used in workship.

     [அகவம் + தீபம்.]

     [Skt. asvas → த. அசுவம்.]

தீ → தீவம் → Skt. dipa → த. தீபம்.

     [P]

அசுவத்த விவாகம்

 அசுவத்த விவாகம் asuvattavivākam, பெ. (n.)

   பிள்ளையில்லாதவன் பிள்ளைப் பேறடையும் பொருட்டு, அரசமரத்தை நட்டு மகனாகக் கருதி வளர்த்துப்பின் அவ்வரச மரத்திற்கு வேம்பை மனைவியாக்கிப் புரியும் திருமணச்சடங்கு (கொ.வ.);; rites of marriage performed with a pipal tree as bridegroom and a margosa as bride, the pipal having been planted by a sonless person with a view to be getting a son and having been reared by him as his first son.

த.வ. வேம்பரசு மணம், அரசமரத்திருமணம்

     [Skt. asvattha + vivaha → த. அசுவத்த விவாகம்.]

அசுவத்தமேதம்

 அசுவத்தமேதம் asuvattamētam, பெ. (n.)

   வெள்ளால், மகப்பேறு வழங்கி; wlow fig tree, Ficus benjamina (சா.அக.);.

     [Skt. asvat + habheda → த. அசுவத்தமேதம்.]

அசுவத்தம்

அசுவத்தம் asuvattam, பெ. (n.)

   1. அரசமரம் (மூ.அ.);; holy tree-ficus religiosa.

   2. அத்திமரம்; fig tree, ficus racenosa alias f. glomerata.

     [Skt. asvattha → த. அசுவத்தம்.]

அசுவத்தவிருட்சம்

 அசுவத்தவிருட்சம் asuvattaviruṭsam, பெ. (n.)

அசுவத்தம் பார்க்க;see asuvattam, (சா.அக.);

     [Skt. asvattha + Vrksa → அசுவத்த விருட்சம்.]

அசுவத்தாதி

 அசுவத்தாதி asuvattāti, பெ. (n.)

   கருவழுதலை; a black species of brinjal, solanuim mеlangепа (சா.அக.);.

அசுவத்தை

அசுவத்தை asuvattai, பெ. (n.)

   1 நெட்டிலிங்க மரம்; Indian mast tree, Polyathia longifolia.

   2. நெடுநாரை; Wynad coffee cherry mutmeg, Polyathia coffecoides.

   3. பூப்பருத்தி; flowering cotton, Thespesia populneoides.

     [Skt. asvaltha → த. அசுவத்தை.]

அசுவநோய்நூல்

 அசுவநோய்நூல் asuvanōynūl, பெ. (n.)

   குதிரை நோய்களைப் பற்றி விளக்கும் நூல்; a treatise in disease of horse, hippo pathology (சா.அக.);.

த.வ. பரிநோய்நூல்.

     [அசுவ(ம்); + நோய்நூல்.]

     [Skt. ašva → த. அசுவ(ம்);.]

அசுவந்தம்

அசுவந்தம்1 asuvandam, பெ. (n.)

   இறப்பு (யாழ்.அக.);; death.

     [Skt. asu+anta → த. அசுவந்தம்.]

 அசுவந்தம்2 asuvandam, பெ. (n.)

   1. வயல்; field.

   2. அடுப்பு; oven.

     [Skt. asmanta → த. அசுவந்தம்.]

அசுவனீயம்

 அசுவனீயம் asuvaṉīyam, பெ. (n.)

அசுவநோய் நூல் பார்க்க;see asuvanoy-nul (சா.அக.);.

த.வ. குதிரைநோய்நூல்.

அசுவன்

 அசுவன் asuvaṉ, பெ. (n.)

அசமதாகம் பார்க்க;see asama-tagam (சா.அக.);

     [Skt. ašva → த. அசுவன்.]

அசுவபதி

அசுவபதி asuvabadi, பெ. (n.)

   விசயநகர அரசர்கள் கொண்ட பட்டப்பெயர்களுளொன்று (I.M.p. Md. 81.);; a title of Vijayanagar kings.

     [Skt. ašva + pati → த. அசுவ + பதி.]

அசுவபரி

 அசுவபரி asuvabari, பெ. (n.)

   ஒரு பூச்செடி (வின்.);; oleander, as horse-killer.

     [Skt. asva-måra → த. அசுவபரி.]

அசுவபரீட்சை

 அசுவபரீட்சை asuvabarīṭsai, பெ. (n.)

   குதிரை யிலக்கணமறியும் கலை; Scientific study of the horse, hippology.

     [Skt. asva + parkas → த. அசுவபரீட்சை.]

அசுவபலம்

அசுவபலம் asuvabalam, பெ. (n.)

   1. அமுக்கிராங் கிழங்கு; horse root, Withania somnifera.

   2. ஒருவகைக் கறி; a kind of curry-Trigonella foenum graecum (சா.அக.);.

     [அசுவ + பலம்.]

     [Skt. asva → த. அசுவம்.]

பழு → பழம் → Skt. phala → த. பலம்.

அசுவபுச்சகம்

 அசுவபுச்சகம் asuvabussagam, பெ. (n.)

   ஒரு பூடு; a plant, Glucine debilis (சா.அக.);.

     [Skt asvapucchaka → த. அசுவயுச்சகம்.]

அசுவமியம்

 அசுவமியம் asuvamiyam, பெ. (n.)

   ஒரு வகை நஞ்சு; a mineral poison.

அசுவமேதப்பிரதக்கணம்

அசுவமேதப்பிரதக்கணம் asuvamēdappiradakkaṇam, பெ. (n.)

   திருவிடைமருதூரில் வெளிச்சுற்றை வலம்வருகை (கோபாலகிருஷ்.8.);; circumambulation of the outer courtyard of the temple at Tiruvida-marudur.

     [Skt. aśva-medha + pradaksina → த. அசுவமேதப்பிரதக்கணம்.]

அசுவமேதம்

 அசுவமேதம் asuvamētam, பெ. (n.)

   ஒரு வேள்வி; horse sacrifice.

த.வ. குதிரைவேள்வி.

     [Skt. asva + medha → த. அசுவமேதம்.]

அசுவமேதயாகம்

 அசுவமேதயாகம் asuvamētayākam, பெ. (n.)

   பேரரசர் தம் அரசாணையைப் பிறரும் ஏற்கும் முறையில் பட்டத்துக் குதிரையை அண்டை நாடுகளுக்கு அனுப்பி, அதனைப் பிடிக்க வந்தோரை வென்று, அதனைக் கொண்டுவந்து, காவு கொடுத்துச் செய்யும் வேள்வி; a ceremonial sacrifice of the invincible horse brought back after being sent to other kingdoms by the emperor who by means of this asserted his sovereign power.

த.வ. பரிவேள்வி.

     [Skt. ašva + mēdha + yāga → த. அசுவமேதயாகம்.]

அசுவம்

அசுவம்1 asuvam, பெ. (n.)

   தூய்மையற்றது; that which is unclean.

     “அவைதா நிலையாதுயரா மசுவம்” (நீலகேசி. 493.);.

     [Skt. a-subha → த. அசுவம்.]

 அசுவம்2 asuvam, பெ. (n.)

   1. குதிரை; horse.

   2. குதிரைப்பல் நஞ்சு (பாடாணம்); (மூ.அ.);; a mineral poison.

அசுவரலி

 அசுவரலி asuvarali, பெ. (n.)

அசுவலரி பார்க்க;see asuvalari (சா.அக.);.

அசுவரோகம்

 அசுவரோகம் asuvarōkam, பெ. (n.)

   குதிரை நோய்; a horse disease (சா.அக.);.

     [Skt. asva + rõga → த. அசுவரோகம்.]

அசுவர்த்தோ

 அசுவர்த்தோ asuvarttō, பெ. (n.)

   அரசமரம்; holy peepul tree, ficus religiosa (சா.அக.);.

அசுவலரி

 அசுவலரி asuvalari, பெ. (n.)

   குதிரையைக் கொல்வது, அலரிச் செடி; horse-killer, Nerium odorum alias N.rubrum (சா.அக.);.

     [அசுவ + அலரி.]

     [Skt. asva → த. அசுவம்.]

     [அலர் → அலரி.]

அசுவவலக்கால்

 அசுவவலக்கால் asuvavalakkāl, பெ. (n.)

   வாலுளுவை; spindle tree, celastrus paniculata alias vernonia Anthelmintica (சா.அக.);.

அசுவவாதம்

 அசுவவாதம் asuvavātam, பெ. (n.)

   குதிரைக் குட்டியின் பாய்ச்சல் போல் உடம்பு முழுவதும் குலுங்கும்படிச் செய்வதும், அண்டத்தை வீங்கச் செய்வதும், விதைப்பையிலும், அடிவயிற்றிலும் மிகையாக வலியுண்டாக்குவதுமான ஓர் ஊதை (வாத); நோய்; a nervous disease a functional disorder of the nervous system marked by a trembling skin to the gambol of a foal, of the entire body, swelling of the scrotum and unbearable pain in the genital and the abdomen (சா.அக.);.

     [Skt. ašva+väta → த. அசுவவாதம்.]

அசுவவாரம்

 அசுவவாரம் asuvavāram, பெ. (n.)

அசுவவாலம் பார்க்க;see asuva-valam (சா.அக.);.

     [Skt. asva + vära → த. அசுவவாரம்.]

அசுவவாரியர்

அசுவவாரியர் asuvavāriyar, பெ. (n.)

   குதிரை செலுத்துவோர் (சிலப். 5,54, உரை);; riders on horseback, horsemen.

த.வ. குதிரை வீரர்.

     [அசுவ(ம்); + வாரியர்.]

     [Skt. asva → த. அசுவ(ம்);.]

வாரி → வாரியர் → வாரி → Skt. vara.

அசுவவாலம்

 அசுவவாலம் asuvavālam, பெ. (n.)

   பேய்க் கரும்பு; wild sugar-cane-saccharam spontaneum (சா.அக.);.

     [அசுவ + வாலம்.]

     [Skt. asva → த. அசுவம்.]

வால் → வாலம் → Skt. vala.

அசுவவைத்தியம்

 அசுவவைத்தியம் asuvavaittiyam, பெ. (n.)

அசுவசிகிச்சை பார்க்க;see asuva-sigiccai (சா.அக.);.

த.வ. பரிமருத்துவம்.

     [Skt. asva + vaidya → த. அசுவவைத்தியம்.]

அசுவாசம்

அசுவாசம் asuvāsam, பெ. (n.)

   1. மூச்சின்மை; partial or complete suspension of breath.

   2. மூச்சுவிட முடியாமை; difficult or forced respiration, Apnoca.

     [Skt. a-svåsa → த. அசுவாசம்.]

அசுவாதிகன்

 அசுவாதிகன் asuvātigaṉ, பெ. (n.)

   குதிரை மருத்துவன்; one skilled in the treatment of horses (சா.அக.);.

     [Skt. asva → த. அசுவம்.]

அசுவாதிசூரணம்

 அசுவாதிசூரணம் asuvātisūraṇam, பெ. (n.)

அசுவகந்தாதிச்சூரணம் பார்க்க;see asuva-kandadi-c-curanam (சா.அக.);.

     [Skt. ašva + surna → த. அசுவாதிசூரணம்.]

அசுவாபரி

 அசுவாபரி asuvāpari, பெ. (n.)

அசுவபரி பார்க்க;see asuva-pari (சா.அக.);.

அசுவாபாணிதம்

 அசுவாபாணிதம் asuvāpāṇidam, பெ. (n.)

   கரு(ப்பு); மருதோன்றி; a black variety of henna plant, barlerea cristata (சா.அக.);.

அசுவாமணக்கு

 அசுவாமணக்கு asuvāmaṇakku, பெ. (n.)

   சிறுபீளை; wolly caper, Illecebrum lanatum alias Achurantheslanata, formerly garland of this plant was worn by soldiers when storm of fort (சா.அக.);.

அசுவாரசியம்

அசுவாரசியம் asuvārasiyam, பெ. (n.)

   1. இனிமையற்றது; that which is disagreeable.

   2. ஈடுபாடு இல்லாமை; lack of interest or enthusiasm.

     ‘அவன் சொல்வதை அசுவாரசியமாகக் கேட்டுக் கொண்டிருந்தான்’ (உ.வ.);.

த.வ. ஏற்பின்மை.

     [Skt. a-svårasya → த. அசுவாரசியம்.]

அசுவாரி

 அசுவாரி asuvāri, பெ. (n.)

   எருமை; a buffalo, especially the female (சா.அக.);.

     [P]

அசுவினி

 அசுவினி asuviṉi, பெ. (n.)

   இரலை விண்மீன்; the first naksatra.

     [Skt. ašvini → த. அசுவினி.]

அசுவினிகுமாரரசம்

 அசுவினிகுமாரரசம் asuviṉigumārarasam, பெ. (n.)

   ஆயுள்வேத முறைப்படி அணியம் செய்து, தோல்தொடர்பிலான நோய்கட்குக் கொடுக்கப்படும், ஒரு வகை மாத்திரை; a kind of pill prepared according to the principles of ayurveda and prescribed for venereal complaints (சா.அக.);.

     [Skt. asvini-kumara-rasa → த. அசுவினி குமாரரசம்.]

அசுவினிதேவர்

 அசுவினிதேவர் asuviṉitēvar, பெ. (n.)

   வானவர் மருத்துவர்; twin vedic gods who are physicians of heaven, as twin horsemen.

     [அசுவினி + தேவர்.]

     [Skt. a-svin → த. அசுவினி.]

தேய்வு → தேவு → தேவன் → Skt. deva.

அசுவு

 அசுவு asuvu, பெ. (n.)

அசுவுணி பார்க்க;see ašuvuņi.

அசுவுணி

 அசுவுணி asuvuṇi, பெ. (n.)

   செடிப்பூச்சி வகை; a destructive insect.

அசுகுணி பார்க்க;see ašuguņi.

அசுவேதம்

 அசுவேதம் asuvētam, பெ. (n.)

   வியர்வை யின்மை; suppressed perspiration (சா.அக.);.

அசூசம்

அசூசம் acūcam, பெ. (n.)

   1. மாதவிலக்கு; menstruation.

   2. மாசு; uncleanliness in general (சா.அக.);.

த.வ. கொளை, கொணக்கு.

     [Skt. asusa → த. அசூசம்.]

அசூசி

 அசூசி acūci, பெ. (n.)

அசூசம் பார்க்க;see asusam (சா.அக.);.

த.வ. தூய்மைக்கேடு, மாசு.

     [Skt. a-suci → த. அசூசி.]

அசூசை

 அசூசை acūcai, பெ. (n.)

பொறாமை (இ.வ.); envy.

     [Skt. asuyå → த. அசூசை.]

அசூதி

அசூதி1 acūti, பெ. (n.)

   மலடி (வின்.);; sterile woman.

     [Skt. a-suti → த. அசூதி.]

 அசூதி2 acūti, பெ. (n.)

   1. பெறாமை; non-production.

   2. அம்மை; small pox, Variola (சா.அக.);.

     [Skt. a-suti → த. அசூதி.]

அசூதிகம்

 அசூதிகம் acūtigam, பெ. (n.)

   மலடு; barreness (as in a woman); (சா.அக.);.

     [Skt. a-sütika → த. அசூதிகம்.]

அசூதிசரதி

 அசூதிசரதி asūdisaradi, பெ. (n.)

   மலடி; a Woman who grows old without having brought forth a child;

 a barren woman (சா.அக.);.

     [Skt. a-suti-carati → த. அசூதிசரதி.]

அசூயாபரன்

 அசூயாபரன் acūyāparaṉ, பெ. (n.)

   பொறாமை கொண்டவன்; envious man, jealous person,

     [Skt. asuya + para → த. அசூயாபரன்.]

அசூயை

அசூயை acūyai, பெ. (n.)

   பொறாமை (மச்சபு. மன்வந்தர 22);; envy, intolerance, jealousy.

த.வ. அழுக்காறு.

     [Skt. asüva → த. அசூயை.]

அசூரி

 அசூரி acūri, பெ. (n.)

   பெரிய அம்மைநோய்; small-pox.

     [Skt. masuri → த. அசூரி.]

அசூர்

 அசூர் acūr, பெ. (n.)

   உடனிருக்கை (சமூகம்); (P.T.L.);; presence, as of a person in authority.

த.வ. குமுகம்.

     [U. hazur → த. அசூர்.]

அசூர்வாசலட்டவணை

அசூர்வாசலட்டவணை acūrvācalaṭṭavaṇai, பெ. (n.)

   அரண்மனைக்கணக்கு; palace accounts.

     “அசூர் வாசலட்டவணையிற் பிரவேசச் செலவெழுதி” (சரவண.பணவிடு. 146);.

அசெளகரியம்

அசெளகரியம்1 aseḷagariyam, பெ. (n.)

   1. வாய்ப் பில்லாமை; lack of opportunity.

   2. நலமின்மை (இ.வ.);; Want of comfort, unhealthiness.

த.வ. நலிவு.

     [Skt a-saukhya → த. அசௌக்கியம்.]

அசெளக்கியம்

 அசெளக்கியம் aseḷakkiyam, பெ. (n.)

   நலக்குறை; illness, sickness.

த.வ. நலிவு, நலக்கேடு.

     [Skt. a-saukhya → த. அசெளக்கியம்.]

அசேகம்

 அசேகம் acēkam, பெ. (n.)

முழுவதும் அவ்வளவும்

 whole, entire.

அந்த விழாவுக்கு ஊரு அசேகமும் வந்து விட்டது.”

     [ஒருகா.அச்சு-அசேகம்]

அசேசம்

அசேசம் acēcam, பெ. (n.)

   எல்லாம்; all, everything, as without consciousness.

     “அசேஷகோத்திரத்து அசேஷசூத்திரத்தில்” (S.I.I.i, 84.);.

     [Skt. a-sesa → த. அசேசம்.]

அசேதனம்

அசேதனம் acētaṉam, பெ. (n.)

   அறிவில்லாதது (சித். சிகா. 21, 2);; that which is insensible, Without consciousness.

த.வ. அறிவிலி.

     [Skt. a-cétana → த. அசேதனம்.]

அசேதனி

 அசேதனி acētaṉi, பெ. (n.)

   மயக்கத்தை விளைவிக்கும் பொருள்; a substance that produces loss of sense or insensibility, Anesthetic (சா.அக.);.

     [Skt. a-cetana → த. அசேதனி.]

அசேவகவாதம்

 அசேவகவாதம் acēvagavātam, பெ. (n.)

   உடலிலுண்டாம் ஊதைப்பிடிப்பு நோய்வகை (R.);; a kind of ventrosity in the body.

     [Skt. a-sevaka + vata → த. அசேவகவாதம்.]

அசை

அசை asai, பெ. (n.)

   1. அசைகை அல்லது அசைக்கை ; shaking.

   2. அசைச்சொல்; expletive.

அசைச்சொல் பார்க்க ;see a$ai-ccol.

   3. நேர், நிரை, நேர்பு, நிரைபு என நால் வகைப்படும் செய்யுளுறுப்பு; metrical syllable, of which there are four kinds, viz., nér, nirai, mērbu, and niraibu.

     “மாத்திரை யெழுத்திய லசைவகை யெனா அ” (தொல். பொருள். செய். 1);.

     “அசைத்திசை கோடலி னசையே” (இலக். வி. 711);.

   4. (இசை); தாளத்தில் ஒரு மாத்திரைக் காலம் ;     ‘கொட்டு மசையும்…… அசை ஒரு மாத்திரை; அதற்கு வடிவு, எ. ……அசையாவது தாக்கியெழுதல்’ (சிலப். 3;16, அடியார்க். உரை);.

   5. ஆடுமாடுகள் உட்கொண்ட இரையை மீட்டும் மெல்லுகை; cud.

     “அருந்தும் பசும்புல் லுணாத்தெவிட்டி யசைவிட்டுறங்குங்கன்று” (கூர்மபு. கண்ணனவ. 83);.

   6. சுவடித் தூக்கு; sling for carrying or preserving old books.

   7. குற்றம் (சம்.அக.கை.); ; fault, blemish.

   8. e-L-so (Los naorul.9);;  body, trunk.

 அசை acai, பெ. (n.)

   படுக்கை தலை யனைகளை வைக்கவுதவும் மரத்தினாலான சட்டக்கோவைத் தொங்கல்; swinging wooden stand for the bed and pillows.

     [அசு-அசை]

அசை-தல்

அசை-தல் asaidal,    2 செ.கு.வி. (v.i.)

   1. அலுங்குதல் ; to shake slightly.

ஓர் இலைகூட அசையவில்லை (உ.வ.);. ‘அசைந்து தின்கிறது மாடு, அசையாமல் தின்கிறது’ வீடு (பழ.);.

   2. நுடங்குதல், துவளுதல்; to be flexible.

     “அசையியற் குண்டாண்டோர்ஏஎர்” (குறள். 1098);.

   3. தள்ளாடுதல் ; to totter, stagger.

     “வெங்கழுத் தசைய நின்று சுமந்திளைத்தனர்” (பாரத. முதற்போ. 36);.

   4. இயங்குதல்; to move, stir.

     ‘அவனன்றி யோரணுவும் அசையாது’ (பழ.);.

   5. ஆடுதல், கூத்தாடுதல் (பிங்.);; to dance.

   6. மெல்லச் செல்லுதல்; to walk or ride slowly.

   7. புடைபெயர்தல், செல்லுதல், விட்டுப்போதல் ; to go away, depart.

     “அசைந்திடா தொழிகவென” (ஞானவா. 955. 70);.

   8. உலாவுதல் ; to move along, as wind

     “தென்றியா யசைந்து மெல்லச் சினகரம் புகுது மெல்லை” (கந்தபு. உற்பத். திருவவ. 11);.

   9. கைகாலோய்தல், உடம்பு தளர்தல் ; to become weary, exhausted, weak, infirm as a limb of the body, to become worn-out with fatigue.

     “நடைமெலிந் தசைஇய நன்மென் சீறடி” (சிறுபாண். 32);.

   10. உளைதல், நோதல் ; to ache, as an exhausted limb of the body.

   11. நீர்வேட்கையால் இளைத்தல், விடாய்த்தல் ; to suffer from thirst.

     “உண்ணு நீர்வேட் டசைந்தே னெனவு ரைப்ப” (சீவக. 1592);.

   12. கலங்குதல், தடுமாறுதல் ; to be perplexed, disconcerted.

     “மடங்கலின் றோற்ற நோக்கி யந்தக னசைந்து நின்றான்” (கந்தபு. யுத்த, சிங்க. 310);.

   13. நீங்குதல், குறைதல் ; to be removed, to diminish.

     “அசையாது நிற்கும் பழி” (ஆசாரக். 74);.

   14. இளைப்பாறுதல்; to rest.

     “புன்மேய்ந் தசைஇ” (பு.வெ. 1;11);,

     “கடும் பரி நெடுந்தேர் பூட்டுவிட் டசைஇ” (புறநா. 141 ; 3);.

 I5. இராத் தங்குதல் ;

 to stay for the night.

     “கல்லென் சீறு ரெல்லியி னசைஇ” (அகநா. 63);.

   16. தங்கியிருத்தல்; to lodge, to stay.

     “தாவில் கொள்கை மடந்தையொடு சின்னாள் ஆவினன்குடி யசைதலு முரியன்” (திருமுருகு. 175-6);.

   17. திரிதல், பலவிடந் தங்குதல்; to wander, sojourn.

     “அங்கண் அசைந்திடு தன்மை யுன்னி யருள்செய்” (கந்தபு. உற்பத்.தேவகிரி. 10);.

   18. இருத்தல், கிடத்தல் ; to be or lie in a place.

     “குறங்கின் மிசை யசைஇய தொருகை” (திருமுருகு. 109);.

   19. சோம்புதல் ; to be idle, inactive, indolent.

     “இலமென் றசைஇ யிருப்பாரைக் காணின்” (குறள், 1040);.

   20. அஞ்சுதல் (சங்.அக.);; to fear, to be afraid of.

ம. அயவு; க. அசி, தெ. அசியாடு, து. அசலெ; குரு. அசர்னா.

     [அல் → அலை → அசை.]

அசை-த்தல்

அசை-த்தல் asaittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   1. அலுங்குதல் ; to shake slightly.

     “ஆடி யாடி. யசைந்தசைந் திட்டு” (திவ். பெரியாழ். திரு. 137);.

   2. ஆட்டுதல் ; to shake violently.

     “நந்திபிரான் றிருப்பிரம்பை யசைத்தருள” (காஞ்சிப்பு. மணிகண். 34);.

   3. இயக்குதல் ; to move, stir.

   4. வீசுதல் ; to fan.

     “ஆலவட்ட மசைத்தனர்” (கந்தபு. உற்பத். திருக்கைலா. 21);.

   5. கட்டுதல் ; to tie, bind, fasten.

     “புலித் தோலை யரைக்கசைத்து” (தேவா. 7.24;1);.

   6. வருத்துதல் ; to afflict, persecute.

     “நாய் நாவி னல்லெழி லசைஇ” (சிறுபாண். 17);.

   7. தட்டுதல்; to knock at.

     “கதவஞ்சேர்ந் தசைத்தகை” (கலித். 68);.

   8. சார்த்துதல்; to join with.

     “அசைநிலைக் கிளவியாகி வருநவும்” (தொல். சொல். இடை. 2);.

   9. ஓசையெடுத்தல் ; to raise the pitch.

   10. ஒற்றறுத்தல் ; to set to time-measure.

     “அசைவிளங்கும் பாடலொடு” (பு.வெ. 7;18);.

   11. சொல்லுதல்; to say.

     “சேட னாயிர நாவி னாலு மசைக்கினும்” (குற்றா. தல, திருக் குற்றா. 70);.

     [அல் → அலை → அசை.]

சங்க அகராதியில், அசைத்தல் என்னும் சொல்லிற்கு இறுமாப்பு என்றொரு பொருள் குறிக்கப்பட்டுள்ளது, அத்துணைப் பொருத்தமாகத் தோன்றவில்லை.

அசைகம்பு

 அசைகம்பு asaigambu, பெ. (n.)

   ஒன்பதடி நீளமுள்ளதும் வண்ணம் பூசியதும் சலங்கை கட்டியதுமான பரவர் மணக்கோல்; nine-foot painted rod with tinkling bells, used in Parava weddings.

அசைகை

 அசைகை asaigai, பெ. (n.)

   பொறாமை (வின்.);; envy.

     [Skt. asuya → த. அசைகை.]

அசைகொம்பு

 அசைகொம்பு asaigombu, பெ. (n.)

   கட்டு கொம்பு ; splint.

அசைசிமிழ்

 அசைசிமிழ் acaicimiḻ, பெ. (n.)

மாட்டின் அசையும் திமில் குறையுடையது என்றும் குடும்பத்திற்கு ஆகாதுஎன்றும் கருதப்படுவது:

 moving hump on a bullock”s back; it is considered as a bad omen. (வ.சொ.அக.);.

     [அலை-அயை-அசை+சிமிழ்]

அசைச்சீர்

 அசைச்சீர் asaissīr, பெ. (n.)

     [அசை +- சீர்.]

அசைச்சீர் வாய்பாடு பார்க்க;see asai.c-cirvdypadu.

அசைச்சீர் வாய்பாடு

அசைச்சீர் வாய்பாடு asaissīrvāypāṭu, பெ. (n.)

   நேரசைக்கு ‘நாள்’ என்றும், நிரையசைக்கு ‘மலர்’ என்றும் இருவகை ஓரசைச் சீர்க்குக் கொள்ளப்படும் எடுத்துக்காட்டு வடிவங்கள்; the two formulas, viz., ndland malar, representing a metrical monosyllabic foot of one vowel and two vowels respectively.

     “அசைச்சீர்க்குதாரண நாண்மலரே” (யா.கா. 7);.

     [அசை + சீர் + வாய்பாடு.]

அசைச்சொல்

 அசைச்சொல் asaissol, பெ. (n.)

   முன்னிலை யசைச்சொல் என்றும், மூவிடப் பொது அசைச் சொல் என்றும், ஈற்றசை யென்றும், உரையசை யென்றும், வியங்கோ ளசைச்சொல் என்றும், பிரிவி லசைநிலை யென்றும்; பெரும்பாலும் பெயர்நிலையைச் சார்ந்தும், சிறுபான்மை அவற்றைச் சாராதும், ஒரோவழியிரட்டியும்; உருத்திரிந்தும், பொருளிறந்தும், பொருள் மறைந்தும், பொருள் குன்றியும், பொருள் நிறைந்தும்; குறிப்பாகவும் வெளிப்படையாகவும்; இருவகை வழக்கிலும் தொன்று தொட்டு வழங்கிவரும் இடைச்சொல் வகை; expletive particles and various kinds of indeclinable words.

     [அசை + சொல்.]

அசைதன்னியம்

அசைதன்னியம் asaidaṉṉiyam, பெ. (n.)

   1. அறியாமை; ignorance.

   2. அறிவுக்குருடு; blindness owing to Want of wisdom.

   3. மெய்ப்பொருளறிவின்மை; absense or want of philosophical knowledge or Wisdom (சா.அக.);.

     [Skt. a-caitanya → த. அசைதன்னியம்.]

அசைத்தொழில்

அசைத்தொழில் asaittoḻil, பெ. (n.)

   தாக்கியெழுதல் (சிலப். 3;16, அடியார்க். உரை);; raising the hand immediately after Striking.

     [அசை + தொழில்.]

அசைநிலை

அசைநிலை asainilai, பெ. (n.)

அசைச்சொல் பார்க்க;see asai.c-col.

     “அசைநிலைக் கிளவியாகி வருநவும்” (தொல், சொல், இடை. 2);.

அசைநிலையளபெடை

அசைநிலையளபெடை asainilaiyaḷabeḍai, பெ. (n.)

   அசைகோடற்பொருட்டுக் கொண்ட அளபெடை ; lengthening of sound for the sake of metre.

எ-டு; ‘செறாஅஅய் வாழிய நெஞ்சு’ (பிர. விவே. 5, உரை);.

     [அசைநிலை + அளபெடை.]

அசைந்தாடு-தல்

அசைந்தாடு-தல் asaindāṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   கூத்தாடுதல் (இராட்.);; to dance (R.);.

     [அசைந்து + ஆடு.]

அசைந்தாடுசீலை

 அசைந்தாடுசீலை asaindāṭusīlai, பெ. (n.)

   தொட்டிற்சீலை (இராட்.); ; cradle improvised out of cloth (R.);.

     [அசைந்து + ஆடு + சீலை.]

அசைபறி-தல்

அசைபறி-தல் asaibaṟidal,    2 செ.கு.வி. (v.i.)

   அசைபோடுதல் (இராட்.); ; to chew the cud (R.);.

     [அசை + பறி.]

அசைபோடாமை

 அசைபோடாமை asaipōṭāmai, பெ. (n.)

   மாடுகளுக்கு வரும் ஒரு நோய்; a disease in cattle, marked by loss of ability to chew the cud (சா.அக.);.

அசைபோடு-தல்

அசைபோடு-தல் asaipōṭudal,    20 செ.கு.வி. (v.i.)

   ஆடுமாடுகள் தாம் உட்கொண்ட இரையை இரைப்பையின் முதலறையிலிருந்து வாய்க்குக் கொண்டுவந்து ஓய்வாகமெல்லுதல்; to bring back the cud from the first chamber of the stomach into mouth and chew at leisure, as ruminating animals.

ம. அயிவிறக்குக, அகவிறக்குக; க. அகி; து. அக்கியுனி; துட. அக்த்.

அசைப்பு

அசைப்பு asaippu, பெ. (n.)

   1. அசைக்கை; shaking.

     “மலர்க்கையசைப்பின்” (காஞ்சிப்பு. பரசிரா. 11);.

     ‘அசைப்புக்கு ஆயிரம் பொன் வாங்குகிறது’ (பழ.);.

   2. சொல் (திவா.);; speech.

   3. சொல்லுகை ; speaking.

   4. இறுமாப்பு (யாழ்ப்.);; arrogance (J.);.

அசைமீட்டு-தல்

அசைமீட்டு-தல் asaimīṭṭudal,    5 செ.கு.வி. (v.i)

   அசைபோடும் விலங்குகள் தாம் உண்ட இரையை மீட்டும் மென்று இரைப்பையினுட் செலுத்துதல் (சங்.அக.); ; to chew the cud and pass it on to the second chamber of the stomach, as ruminating animals.

அசையடி

அசையடி asaiyaḍi, பெ. (n.)

   ஒருவகைக் கலிப்பாவின் உறுப்பான அம்போதரங்கம்; one of the component parts of a variety of kalippa metre.

     “நீர்த்திரை போன்ம் மரபொன்று நேரடி முச்சீர் குறள்நடுவே மடுப்பின்…… அது அம்போ தரங்க வொத் தாழிசை” (யா.கா. 30);, “அசையடி முன்ன ரராகம் வந்து” (யா.கா. 31);.

     [அசை + அடி.]

அசையந்தாதி

அசையந்தாதி asaiyandāti, பெ. (n.)

   செய்யுளில் ஒரடியி னீற்றசை அடுத்த அடிக்கு முதலசையாக வருந்தொடை (தொல்,பொருள். செய். 99, பேரா.உரை);; metrical composition in which the same syllable ends one line and begins the succeeding of a stanza.

எ-டு :

     “குன்றகச் சாரற் குதித்தன கோண்மா

மாவென மதர்த்தன கொடிச்சி வான்கண்ஞ

என்பது அசையந்தாதி. ‘அந்தாதி’ வட சொல். அதை, தமிழில் ஈறுதொடங்கி அல்லது இறுதிமுதலி என்னலாம்.

     [அசை + அந்தாதி.]

அசையாக்கட்டை

 அசையாக்கட்டை asaiyākkaṭṭai, பெ. (n.)

   ஒருவகைச் செடி ; a kind of plant.

அசையாததுரையார்

அசையாததுரையார் asaiyādaduraiyār, பெ. (n.)

   கள்ளர்குலப் பட்டப்பெயர்களு ளொன்று (கள்ளர் சரித். பக். 145);; a title of Kallars.

அசையாநிலை

 அசையாநிலை asaiyānilai, பெ. (n.)

   சில நோய்களில் உடம்பும் உள்ளமும் ஒருங்கே அசையாது நிற்கும் நிலை; a fixed and motionless state of both body and mind in certain diseases (சா.அக.);.

அசையாப்பிடாரி

 அசையாப்பிடாரி acaiyāppiṭāri, பெ. (n.)

அடங்காதவள்:

 uncontrollable woman. (கொங்கு.வ.);.

மறுவ. அடங்காப்பிடாரி

     [அசையாத+பிடாரி]

அசையாப்பொருள்

 அசையாப்பொருள் asaiyāpporuḷ, பெ. (n.)

   இயங்குதிணை என்பதற்கு எதிரான நிலைத் திணை ; category of immovables, opp. to {ašaiyum porul.}

     [அசையாத → அசையா (ஈ.கெ.எ.ம.பெ.எ.); + பொருள்.]

அசையாமணி

 அசையாமணி asaiyāmaṇi, பெ. (n.)

   குடிகளின் பெருந் துன்பவேளைகளிலன்றி வேறு சமையங்களில் அசைக்கப்படாத, அரண்மனைவாயில் ஆராய்ச்சி மணி ; bell attached to the royal palace to apprise the sovereign of any calamity, as being seldom rung.

     [அசையாத → அசையா (ஈ.கெ.எ.ம.பெ.எ.); + மணி.]

அசையாமை

அசையாமை asaiyāmai, பெ. (n.)

   அசையாத் தன்மை; immovability.

     “விஞ்சு மசைவசை யாமை யிரண்டு மொன்றாய்” (ஞானவா. சிகித். 160);.

அசையாவிணைப்பு

 அசையாவிணைப்பு asaiyāviṇaippu, பெ. (n.)

   அசைவில்லாதபொருத்து ; immovable articulation or joint with no intervening tissue between the bones, as the bones of the pelvis (சா.அக.);.

     [அசையாத → அசையா (ஈ.கெ.எ.ம.பெ.எ.); + இணைப்பு.]

அசையிடு-தல்

அசையிடு-தல் asaiyiḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   அசைபோடுதல் ; to chew the cud (W.);.

     [அசை + இடு.]

அசையியல்

அசையியல் asaiyiyal, பெ. (n.)

   நுடங்கிய இயல்புடைய பெண்; slender woman.

     “அசையியற் குண்டாண்டோ ரேனர்” (குறள், 1098);.

     [அசை + இயல்.]

அசையு

 அசையு asaiyu, பெ. (n.)

   அமுக்கிரா (மலை);; species of withania.

அசையும்பொருள்

 அசையும்பொருள் asaiyumboruḷ, பெ. (n.)

   நிலைத்திணை என்பதற்கு எதிரான இயங்கு திணை ; category of movables, opp. to {ašaiyapporu!.}.

அசையெழுத்து

 அசையெழுத்து acaiyeḻuttu, பெ. (n.)

   மெய் உயிரொலியுடன் கூடியிருப்பதை அடையாளப்படுத்தும் எழுத்து; syllabic letter.

     [அசை+எழுத்து]

தமிழில் க.கா.கி.கீ, என்பன போன்று வரும் உயிர்மெய் எழுத்துகள் அசையெழுத்துகளாம்.

அசைவம்

 அசைவம் asaivam, பெ. (n.)

   இறைச்சி, மீன் முதலியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளும் முறை;     ‘திருமணத்திற்குப்பின் அசைவ உணவேற்கப் பழகிக் கொண்டான்’ (உ.வ.);.

த.வ. புலவுண்டி, புலவுணா, புலவூண், புல்லுணவம், புலவுணவம்.

     [Skt. a-sava → த. அசைவம்.]

சிவ → சிவம் → Skt. sava.

 அசைவம் asaivam, பெ. (n.)

   கள்; toddy (சா.அக.);.

அசைவாடு-தல்

அசைவாடு-தல் asaivāṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. அசைதல் ; to shake, move, stir.

   2. மேலுலாவிச் செல்லுதல் ; to hover over, move or stir, as wind on the surface of water (W.);.

     [அசைவு + ஆடு.]

அசைவிடு-தல்

அசைவிடு-தல் asaiviḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   1. அசைபோடுதல் ; to chew the cud.

     “அசைவிட் டுறங்குங் கன்று” (கூர்மபு. கண்ணனவ. 83);.

   2. இளைப்பாறுதல் (பரிபா. 6 ; 2);; to rest.

அசைவின்மை

அசைவின்மை asaiviṉmai, பெ. (n.)

   1. அசைவிலாமை ; cessation of motion.

   2. சோகம் ; temporary partial or complete suspension of the function of respiration and circulation.

   3. பித்தத்தினால் உடம்பு மயக்கங்கொண்டிருப்பதுபோல் அசைவற்றுக் கிடத்தல்; senseless and motionless condition of the body due to bilious causes (சா.அக.);.

   4. முயற்சி ; effort, enterprise.

     “ஆகூழாற் றோன்று மசை வின்மை” (குறள், 371);.

     [அசைவு + இன்மை.]

அசைவு

அசைவு asaivu, பெ. (n.)

   1. அசைகை, ஆட்டம்; shaking, moving about, swinging.

     “தூண மொத் தசைவற நின்றான்” (காஞ்சிப்பு. சார்ந்தா. 13);.

   2. உண்கை,

 eating.

     “நஞ்சினை யசைவு செய்தவன்” (தேவா. 3.111 ; 3);.

     ‘அசைவிருந்தால் விட்டுப் போகமாட்டான்’ (பழ.);.

   3. அதிர்ச்சி; vibration.

   4. புடை பெயர்ச்சி; movement (சங்.அக.);.

   5. இளைப்பு, தளர்வு, சோர்வு ; weariness, faintness, exhaustion.

     “நாட்டிடை நெறியசைவு தீரவிருந்து” (சீவக. 1185);.

   6. சோம்பல் ; laziness, sloth.

     “ஆகூழாற் றோன்றும் அசைவின்மை” (குறள், 371);.

   7. பாடற்குற்றம் ; a flaw in singing.

     “நாசி காகுளி பேசுறு குற்ற மசை வொடு மாற்றி” (கல்லா. 22);.

   8. தப்பு; slip, failure.

     “அசைவில ரெழுந்து” (மதுரைக்.650);.

   9. நிலை தவறுகை ; to swerve from principle or path of virtue.

     “ஒரசை விலாதவ ணறைந்த னன்” (பாரத.கிருட்.138);.

   10. முன்னிலைமை கெட்டு வருந்துதல் ; suffering caused by loss of position.

     “இளவே யிழவே யசைவே” (தொல். பொருள். மெய்ப். 5);.

   11. வருத்தம்; suffering.

     “என்னுழை யசைவின் றையனைத் தம்மின்” (சீவக. 1814);.

   12. மனக்கலக்கம்; perturbation, agitation of mind.

     “அசைவிலாடவன் றன்னை” (கந்தபு. அசுர, சூரன் தண்டஞ் 28);.

   13. பின்னிடுதல் ; to fall back, retreat.

     “அசைவி லூக்கத்து நசைபிறக் கொழிய” (சிலப். 5;95);.

   14. தோல்வி; defeat.

     “அசைவில படையருள் புரிதரு மவன்” (தேவா. 1.20 ; 6);.

   15. முடிவு; end (சம்.அ.க. கை.);.

   16. அசையுமிடங்கள், அதாவது மூட்டுகள்; joints (சா.அக.);.

அசைவுசெய்-தல்

அசைவுசெய்-தல் asaivuseytal,    1 செ.குன்றாவி. (v.t.)

   உண்ணுதல் ; to eat.

     “நஞ்சினை யசைவு செய்தவன்” (தேவா. 3.111;3);.

ம. அசிக்க; க., தெ. அசன.

     [அலகசைத்து உண்பதால், உண்ணுதல் அசைவுசெய்தல் எனப்பட்டது.]

அசைவுதிர்-தல்

அசைவுதிர்-தல் asaivudirdal,    2 செ.கு.வி. (v.i.)

   இளைப்பாறுதல் ; to take rest.

அசைவுபோடு-தல்

அசைவுபோடு-தல் asaivupōṭudal,    20 செ.கு.வி. (v.i.)

   அசையிடுதல் ; to chew the cud.

அசைவெட்டு-தல்

அசைவெட்டு-தல் asaiveṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   அசைபோடுதல் ; to chew the cud (W3);.

ம. அசவெட்டுக, அயவெட்டுக.

அசோகன்

அசோகன் acōkaṉ, பெ. (n.)

   1. அருகன்; Arhat, to whom the asoka tree is sacred.

   2. மோரிய வரசருளொருவன்; name of the Maurya emperor who issued the edicts anjoining the principles and practice of buddhism 272-231 B.C.

அசோகம்

அசோகம் acōkam, பெ. (n.)

   1. ஒருவகை மரம், பிண்டி; a sacred tree.

     “பொழி பெயல் வண்மையான் அசோகந்தண் காவினுள்” (கலித். 57 ;12);.

     “பூமலி அசோகின் புனை நிழல் அமர்ந்த நான்முகற் றொழுதுநன் கியம்புவன் எழுத்தே” (நன். 56);.

   2. வாழை; plantain (W.);.

 அசோகம்1 acōkam, பெ. (n.)

   1. இதளியம் (பாதரசம்);; mercury.

   2. திமிசுமரம்; east Indian kino.

     [Skt. asoka → த. அசோகம்.]

 அசோகம்2 acōkam, பெ. (n.)

   கவலையின்மை (தஞ்சைவா.11.);; freedom from sorrow.

     [Skt. asoka → த. அசோகம்.]

 அசோகம்3 acōkam, பெ. (n.)

   1. அகத்தி; Agastya’s plant, Sesbania grandiflora alias coronila Grandiflora.

   2. மருதமரம்; Aryuna tree, winged myrobalan, Terminalla alata alias tomentosa.

     [Skt. asoka → த. அசோகம்.]

அசோகரோகினி

 அசோகரோகினி acōkarōkiṉi, பெ. (n.)

   கடுகுரோகினி; bear’s foot;

 black Hellibore Helleborus niger alias picrorrhiza kurroa.

     ‘நேபாளத்தில் விளையும் மருந்துப்பூடு’ (சா.அக.);.

அசோகவனம்

அசோகவனம் acōkavaṉam, பெ. (n.)

   இராவணனுடைய பூந்தோட்டம் (இராமநா. சுந். 6.);; Ravana’s pleasure garden.

     [அசோக(ம்); + வனம்.]

     [Skt. asóka → த. அசோகம்.]

அசோகவனிகை

அசோகவனிகை acōgavaṉigai, பெ. (n.)

   1. அசோகவனம் பார்க்க;see asogavanam.

   2. அசோகமரச்சோலை; a grove ofa asoka tree.

     [அசோக(ம்); + வனிகை.]

     [Skt. asöka → த. அசோகம்.]

வனம் → Skt. vana → vanikä → த. வனிகை.

அசோகவாசவாடை

 அசோகவாசவாடை acōkavācavāṭai, பெ. (n.)

   புனுகு; a perfume from the anal glands of the civer cats-civet (சா.அக.);.

அசோகாட்டமி

 அசோகாட்டமி acōkāṭṭami, பெ. (n.)

   ஒரு நோன்புநாள்; eighth tithi of the bright fortnight of caittiram, as the day for drinking an infusion of three asoka buds with a view to drive away sorrow.

     [Skt. ašõka + astami → த. அசோகாட்டமி.]

அசோகாதிதம்

 அசோகாதிதம் acōkādidam, பெ. (n.)

   சிவதுளவி; a kind of basil sacred to Svan (சா.அக.);.

அசோகி

 அசோகி acōki, பெ. (n.)

   சீவக மூலி; a kind of plant; Indian Coecinea cephalandra indica (சா.அக.);.

அசோகு

அசோகு1 acōku, பெ. (n.)

   நலம் (பொதி.நி.);; health, ease.

     [Skt. a-soka → த. அசோகு.]

 அசோகு2 acōku, பெ. (n.)

   மரவகை; Indian mast-tree.

த.வ. செயாலமரம்.

     [Skt. asóka → த. அசோகு.]

அசோகை

 அசோகை acōkai, பெ. (n.)

   சவுரிப்பூண்டு; a crooper bearing red fruits (சா.அக.);.

அசோடகத்தி

 அசோடகத்தி acōṭagatti, பெ. (n.)

   செவ்வகத்தி; a red species of agathi tree, coronilla coccinea (சா.அக.);.

அசோணம்

அசோணம் acōṇam, பெ. (n.)

   1. வாழை; plantain (சா.அக.);.

   2. குறட்டை; bitter snake-gourd (மலை);.

அசோண்டி

 அசோண்டி acōṇṭi, பெ. (n.)

அசோணம் பார்க்க;see alonam.

அசோதம்

அசோதம் acōtam, பெ. (n.)

   1. அவுரி (பரி.அக.);; indigo (genus); indigofera.

   2. வெள்ளிலோத்திரம் ; lodhra.

அசோதை

அசோதை acōtai, பெ. (n.)

   கண்ணபெருமானை வளர்த்த தாய் (திவ். பெரியாழ். 1,2,1);; Krsna’s foster mother.

     [Skt. yasoda → த. அசோதை.]

அசோனம்

 அசோனம் acōṉam, பெ. (n.)

அசோணம் பார்க்க;see asanam.

     [அசோனம் → அசோனம்.]

 அசோனம் acōṉam, பெ. (n.)

அசோணம் பார்க்க;see asonam (சா.அக.);.

அசோரிதம்

 அசோரிதம் acōridam, பெ. (n.)

   வால்மிளகு; tail pepper, Cubeb (சா.அக.);.

அசோலம்

 அசோலம் acōlam, பெ. (n.)

   தேற்றாமரம்; water-clearing nut tree, Strychnos Potatoram (சா.அக.);.

அசௌகரியம்

அசௌகரியம்2 asaugariyam, பெ. (n.)

   தொல்லை; disadvantage.

     ‘வீட்டுக்கு மூத்த பிள்ளையாக இருப்பதில், செளகரியங்களும் உண்டு அசெளகரியங்களும் உண்டு’.

த.வ. நலி, ஏந்தின்மை.

     [Skt. a-saukarya → த. அசௌகரியம்.]

அச்சகம்

அச்சகம் accagam, பெ. (n.)

   1. நீர்முள்ளி (மலை.);; species of Hygrophila (Lex.);; a thorny plant, nail-dye—Barleria longifolia alias Suellia longifolia (சா.அக.);.

   2. ஈரவுள்ளி ; onion, Allium leepa.

 அச்சகம் accagam, பெ. (n.)

   அச்சடிக்கும் இடம் ; printing press.

     [அச்சு + அகம்.]

அச்சகாரம்

 அச்சகாரம் accakāram, பெ. (n.)

   முன்பணம் (இ.வ.);; earnest money advance payment.

த.வ. அச்சாரம்.

     [Skt. satyankara → த. அச்சகாரம்.]

அச்சக்கொடை

அச்சக்கொடை accakkoḍai, பெ. (n.)

   அச்சத் தாற் கொடுக்குங் கொடை (சுக்கிர நீதி, 145);; gift made out of fear of something or somebody.

     [அச்சம் + கொடை.]

அச்சங்கரனை

 அச்சங்கரனை accaṅgaraṉai, பெ. (n.)

அச்சாணிக்கொடி பார்க்க ;see accapi-k-koli.

அச்சங்கொடி

 அச்சங்கொடி accaṅgoḍi, பெ. (n.)

   ஒருவகைக் கொடி ; a kind of creeping plant, climbing Indian linden, Grewia heterotricha (சா.அக.);.

அச்சச்சுவை

அச்சச்சுவை accaccuvai, பெ. (n.)

   அகச்சுவை எட்டனுள் ஒன்றான அச்சம் ; sentiment offear or terror.

     “அணங்கே விலங்கே கள்வர்தம் இன்றயெனப் பிணங்கல் சாலா அச்சம் நான்கே” (தொல், பொருள். மெய்ப். 8);.

     [அச்சம் + சுவை.]

அச்சஞ்சு

அச்சஞ்சு accañcu, பெ. (n.)

   ஐந்தைந்து வீதம்; each of five.

     “இந்நிலக் கடமையில் அச்சஞ்சு பழங்காசு வெவ்வெற்று வகை இரட்டி” (SII, xiv.41.);.

     [(ஐந்து); அஞ்சு+ஆஞ்சு]

அச்சடல செயநீர்

 அச்சடல செயநீர் assaḍalaseyanīr, பெ. (n.)

   வேகாதுப்பு செயநீர், மாந்த உடலினின்று சித்தர்கள் மட்டுமே அறிந்த ஒரு கமுக்க முறையில் செய்யப்பட்ட ஓர் அனைத்துக் கரைப்பான் நீர்மம் ; a liquid preparation from the human body made by a secret process known only to Siddhās. It is a universal solvent (சா.அக.);.

அச்சடி

 அச்சடி accaḍi, பெ. (n.)

அச்சடிச்சீலை பார்க்க ;see accadi-c-cilai.

     “நினைத்தால் எடுப்பார்கள் நெருஞ்சிப்பூ அச்சடியை” (நா.பா.);.

     [அச்சு + அடி.]

அச்சடி-த்தல்

அச்சடி-த்தல் accaḍittal,    4 செ.குன்றாவி. (v.t)

   1. உருக்கெழுத்தைப் பதித்தல்; to print, as a book.

   2. முத்திரையைப் பதித்தல் ; to stamp, impress pattern.

ம. அச்சடி

     [அச்சு + அடி.]

அச்சடிச்சீலை

 அச்சடிச்சீலை accaḍiccīlai, பெ. (n.)

   சித்திர வண்ணம் அல்லது ஓலிய வுருவம் பதிக்கப்பட்ட ஆடை ; chintz.

ம. அச்சன் சேல

     [அச்சு + அடி + சீலை.]

அச்சடிச்சேலை

 அச்சடிச்சேலை accaḍiccēlai, பெ. (n.)

அச்சடிச்சீலை பார்க்க ;see accadi-a-cilai.

     [அச்சு + அடி + சேலை.]

அச்சடியன்

 அச்சடியன் accaḍiyaṉ, பெ. (n.)

   அச்சடிச்சிலை (செ. அக.);. – சாயப்புடைவை வகை (யாழ். அக.);; a kind of chintz for saree.

     [அச்சு + அடி + அன்.]

அச்சடியோலை

 அச்சடியோலை accaḍiyōlai, பெ. (n.)

   முத்திரையிடப்பட்ட ஓலை ; stamped õlai (palm leaf prepared for writting);.

ம. அச்சடியோல

     [அச்சு + அடி + ஓலை.]

அச்சடுக்கி

 அச்சடுக்கி accaḍukki, பெ. (n.)

   அச்சுக்கோப்பாளன் ; compositor.

     [அச்சு + அடுக்கு + இ (ஒருமையீறு);.]

அச்சடுக்கு-தல்

அச்சடுக்கு-தல் accaḍukkudal,    5 செ.கு.வி. (v.i.)

   உருக்கெழுத்தைச் சொல்லாகக் கோத்தல் ; to compose, set up type to form words.

     [அச்சு + அடுக்கு.]

அச்சடை

அச்சடை accaḍai, பெ. (n.)

   கீழ்காய்நெல்லி ; a small medicinal plant, Phyllanthus niruri.

     “மிரியல் வழுதுணை மூலமா லூர மச்சடை” (தைலவ. தைல. 4);.

அச்சடையாளம்

அச்சடையாளம் accaḍaiyāḷam, பெ. (n.)

   1. அடிமை யென்பதைக் காட்டுஞ் சூட்டுக் குறி (கிறித்.வ.);; marks branded on the body of a slave.

   2. முத்திரை யச்சுருவம் ; stamped impression.

   3. 2-sylloum J told;  resemblance, as in bodily features.

     [அச்சு + அடையாளம்.]

அச்சணம்

 அச்சணம் accaṇam, பெ. (n.)

   வெள்ளைப் பூண்டு (பரி.அக.); ; garlic.

 அச்சணம் accaṇam, கு.வி.எ. (adv.)

   உடனே (இராட்.);; immediately.

     [Skt. a+kshana.]

அச்சதந்தெளி-த்தல்

அச்சதந்தெளி-த்தல் accadandeḷiddal,    4 செ.கு.வி. (v.i.)

   அருகும் அரிசியும் இடல் (இ.வ.);; to sprinkle a mixture of rice and cynodon grass, as on a newly married couple.

     [அச்சதம் + தெளி-]

     [Skt. aksata → த. அட்சதை.]

அச்சதறி

அச்சதறி accadaṟi, பெ. (n.)

   ஒரு பழைய வரி (S.I.I. i. 91);; an ancient tax.

அச்சத்தி

 அச்சத்தி accatti, பெ. (n.)

   கத்தரி (மு.அ.);; brinjal.

அச்சத்திரி

 அச்சத்திரி accattiri, பெ. (n.)

   கத்தரி (சித். அக.);; brinjal.

அச்சனம்

அச்சனம் accaṉam, பெ. (n.)

   நெய்வார் கருவி வகை ; a weaver’s implement.

     ‘நூல் புடவையாய்த் திரிதற்கு அச்சனம் முதலாயின ஸாதனம்’ (நீலகேசி, 421, உரை);.

அச்சன்

அச்சன் accaṉ, பெ. (n.)

   1. தந்தை; father.

     ‘குடநாட்டார் தந்தையை அச்சனென்றும்…. வழங்குப’ (தொல். சொல். எச். 4. நச். உரை);.

   2. கடவுள்; God.

     “அச்ச னின்றனைத் தும் விளைத் தாலென” (தணிகைப்பு. பிரமன் சிருட்டி. 23);.

ம. அச்சன்; க. அச்ச அச்ச, து., குட. அத்தெ; கோத அச், குரு. அச்சோத்; பிராகி. அச்ச.

     [த. அத்தன் (தந்தை); → அச்சன். ஒ.நோ. பித்தன் → பிச்சன்.]

     ‘அச்சன்’ என்னும் தூய தென்சொற்கு, ‘ஆர்ய’ என்னும் வடசொல்லொடு எவ்வகைத் தொடர்புமில்லை. துளுவச் சொல்லின் திரிபே பிராகிருதச் சொல்லும்.

கடவுள் எல்லாவுயிர்கட்கும் தந்தை போலுதலால் அச்சன் எனப்பட்டார்.

 அச்சன் accaṉ, பெ. (n.)

   அழிஞ்சில் ; ancola fruit plant, Alangium lamarckii.

அச்சன் முள்(ளு)

 அச்சன் முள்(ளு) accaṉmuḷḷu, பெ. (n.)

   அச்சாணிக்கொடியில் காணப்படும் முள்(ளு);; thorn of the plant accani-k-kodi.

அச்சபல்லம்

அச்சபல்லம் accaballam, பெ. (n.)

   கரடி (சிந்தா.நி.50);; bear.

     [Skt. accha-bhalla → த. அச்சபல்லம்.]

அச்சமம்

 அச்சமம் accamam, பெ. (n.)

   முயிற்றுப்புல் (மலை.);; species of grass.

அச்சமரம்

 அச்சமரம் accamaram, பெ. (n.)

   நான்முகப் புல்லுருவி ; a plant-parasite, Saccharum spontaneum (சா.அக.);.

அச்சமாடல்

அச்சமாடல் accamāṭal, பெ. (n.)

   பிறர்க்கு அச்சமுண்டாகப் பேசுதல் ; talk meant for frightening others, intimidating talk.

     “அழுக்கா றவாவஞ்ச மச்ச மாடலும்” (நன்.. 31);.

     [அச்சம் + ஆடல். ஆடல் = பேசுதல்.]

அச்சமாமுகம்

 அச்சமாமுகம் accamāmugam, பெ. (n.)

   புல்லுருவி ; honeysuckle, mistletoe, Loranthus elasticus (சா.அக.);.

அச்சமாயிதம்

 அச்சமாயிதம் accamāyidam, பெ. (n.)

   செங்சுழற்றிக் கொடி ; a red species of creeper, Molucca bean, Caesalpinia bonducella (சா.அக.);.

அச்சம்

அச்சம் accam, பெ. (n.)

   அகத்தி (திவா.);; West-Indian pea-tree, Sesbania grandiflora.

 அச்சம் accam, பெ. (n.)

   சன்னம்; thinness.

இந்தத் தகடு அச்சமாயிருக்கிறது (உ.வ.);.

 அச்சம் accam, பெ. (n.)

   வெரு (பயம்); ; fear, dread, terror.

     ‘அச்சம் அற்றவன் அம்பலம் ஏறுவான் (பழ.);. ‘அச்சம் ஆண்மை குலைக்கும்’ (பழ.);.

ம. அச்சம்; க. அஞ்சிகெ.

 அச்சம்1 accam, பெ. (n.)

   வைப்புநஞ்சு (சங்.அக.);; a mineral poison.

 அச்சம்2 accam, பெ. (n.)

   அன்னை (பொதி. நி. 19, பி-ம்);; mother.

     [த. அச்சி → Pkt. ajja → த. அச்சம்.]

 அச்சம்3 accam, பெ. (n.)

   1. தெளிவு (ஈடு. 1, 1, 11);,

 clearness.

   2. பளிங்கு (யாழ்.அக.);; crystal.

   3. கரடி (யாழ்.அக.);; bear.

     [Skt. accha → த. அச்சம்.]

அச்சம்பேரளம்

 அச்சம்பேரளம் accambēraḷam, பெ. (n.)

   சிகப்பு அடுக்கலரி அல்லது இரட்டைச் சிகப்பலரி ; South sca rose, Nerium odorum (சா.அக.);.

அச்சயன்

 அச்சயன் accayaṉ, பெ. (n.)

   அழிவில்லாதவன் கடவுள்; god, as the imperishable one.

த.வ. நீடுவாழி.

     [Skt. aksaya → த. அச்சயன்.]

அச்சயில்கரணை

 அச்சயில்கரணை accayilkaraṇai, பெ. (n.)

   ஒரு முட்கொடி; axil-spined.jack.

அச்சாணிக்கொடி பார்க்க ;see accdni-k-ködi.

அச்சரக்காய்ச்சல்

 அச்சரக்காய்ச்சல் accarakkāyccal, பெ. (n.)

   அச்சர நோயுடன் வருங் காய்ச்சல் (வின்.);; fever accompanying thrush, Febris aphthosa.

     [அச்சரம் +_காய்ச்சல்.]

அச்சரசு

 அச்சரசு assarasu, பெ. (n.)

   துறக்கவுலகிலி ருப்பதாகக் கருதப்படும் தேவமகள்; celestial nymph, courtesan of svargam.

த.வ. அரமகள்.

     [Pkt. accharasas → Skt. apsaras → த. அச்சரசு.]

அச்சரம்

 அச்சரம் accaram, பெ. (n.)

   பெரும்பான்மை பிள்ளைப் பருவத்திலும் சிறுபான்மை இள வட்டப் பருவத்திலும் வாயில் அல்லது நாவில் சிறுசிறு கொப்புளங்களாக எழும் நோய்; thrush, aphthae, Parasitic stomatitis.

ம. அக்கரம்; க., து. அக்ர; தெ. அட்சரமு.

     [அக்கரம் → அச்சரம்.]

 அச்சரம் accaram, பெ. (n.)

   எழுத்து (இ.வ.);; letter.

த.வ. எழுத்து.

     [Skt. aksara → த. அச்சரம்.]

அச்சரிபுச்சரி

அச்சரிபுச்சரி accaribuccari, பெ. (n.)

   1. தினவெடுக்கை ; itching sensation.

   2. தொந்தரவு ; annoyance, vexation, worry,

அச்சரிபுச்சரியாயிருக்கிறது (உ.வ.);.

அச்சறுக்கை

 அச்சறுக்கை accaṟukkai, பெ. (n.)

   அச்சத்தை நீக்குதல் ; removal of fear.

     [அச்சம் + அறுக்கை.]

அச்சறை

 அச்சறை accaṟai, பெ. (n.)

   அச்செழுத்துகளைப் போட்டுவைக்கும் அறைகளையுடைய தட்டம் ; case (printing);.

     [அச்சு + அறை.]

அச்சறை தாங்கி

 அச்சறை தாங்கி accaṟaitāṅgi, பெ. (n.)

   அச்சறைத் தட்டுகளைச் செருகிவைக்கும் நிலைச்சட்டம்; stand (printing);.

     ‘அச்சுத் தட்டுத் தாங்கி’ என்றும் குறிக்கப்பெறும்.

     [அச்சு + அறை + தாங்கி.]

அச்சறைத்தட்டம்

 அச்சறைத்தட்டம் accaṟaittaṭṭam, பெ. (n.)

அச்சறை பார்க்க ;see acc(u);-arai.

     [அச்சு + அறை + தட்டம்.]

அச்சறைத்தட்டு

 அச்சறைத்தட்டு accaṟaittaṭṭu, பெ. (n.)

அச்சறை பார்க்க ;see acc(u);-arai.

     [அச்சு + அறை + தட்டு.]

அச்சலச்சலாய்

 அச்சலச்சலாய் accalaccalāy, வி.எ. (adv.)

   பாட்டம் பாட்டமாய் ; shower after shower.

அச்சலச்சலாய் மழைபெய்கிறது (உ.வ.);.

நளி (கார்த்திகை); மாத மழை அச்சலச்சலாய்ப் பெய்யும் (உ.வ.);.

     [அச்சல் + அச்சல் + ஆய்.]

அச்சலத்தி

 அச்சலத்தி accalatti, பெ. (n.)

   சலிப்பு ; tediousness, weariness.

ஒரே பாட்டைத் திரும்பத் திரும்ப கேட்கிறது எனக்கு அச்சலத்தியாயிருக்கிறது (உ.வ.);.

அச்சலத்தி புச்சலத்தி

 அச்சலத்தி புச்சலத்தி accalattibuccalatti, பெ. (n.)

   சலிப்புணர்ச்சியின் மிகுதியைக் குறிக்கும் அச்சலத்தி என்னுஞ் சொல்லின் எதுகையிரட்டிப்பு; a duplication of the second syllable of accalatti expressing intensity of the feeling of tediousness or disgust.

ஒ.தோ; அச்சரிபுச்சரி

அச்சல்

 அச்சல் accal, பெ. (n.)

   ஒரு பாட்டம் மழை; a shower of rain.

     [ஒருகா. அஞ்சல் → அச்சல்.]

அச்சழிவு

அச்சழிவு accaḻivu, பெ. (n.)

   முத்திரை தேய்ந்த பணம் (பணவிடு. 142); ; defaced coin, coin worn-out by use.

     [அச்சு + அழிவு.]

அச்சவபிநயம்

அச்சவபிநயம் accavabinayam, பெ. (n.)

   ஒருவரின் அச்சவுணர்ச்சியைக் காட்டும் மெய்ப்பாடுகளைத் தோற்றுவிக்கும் உடம்பு அல்லது உறுப்புச் செய்கையான நளிநயம் ; artistic gesticulation or theatrical action which expresses the sentiment of fear.

     “அச்ச வவிநயம் ஆயுங் காலை

யொடுங்கிய வுடம்பு நடுங்கிய நிலையும்

அலங்கிய கண்ணுங் கலங்கிய வுளணுங்

கரந்துவர லுடைமையுங் கையெதிர் மறுத்தலும்

பரந்த நோக்கமு மிசைபண் பினவே’ (சிலப். 3;13, அடியார்க். உரை);.

     [அச்சம் + அபிநயம். Skt. abhi-naya → த. அவிநயம்.]

அவிநயத்தைத் தமிழில் நளிநயம் என்னலாம்.

அச்சவுபதை

அச்சவுபதை accavubadai, பெ. (n.)

   அரசன் தான் தெரிந்தெடுத்த ஒருவரை அமைச்சராகவோ வேறு உயரதிகாரியாகவோ அமர்த்து முன், அவர்க்கு உயிரச்ச முண்டுபண்ணும் ஒரு சூழ்நிலையைத் தோற்றுவித்து, அதன் வாயிலாக அவரின் மறத்தையும் உண்மைத் திறத்தையும் தேர்தல் ; King’s clandestine test of a candidate’s ability and honesty by exposing him to situations which call for display of courage amidst fear of death before appointing him minister or as any other high authority of State.

     “அச்சவுபதையாவது, (அரசன்); ஒரு நிமித்தத்தின்மேலிட்டு ஒர்மைச்சனால் ஏனையோரை அவனில்லின்கண் அழைப்பித்து. 10

     ‘இவர் அறைபோவான் எண்ணற்குக் குழீஇயினா ரென்று தான் காவல் செய்து, ஒருவனால் இவ்வரசன் நம்மைக் கொல்வான் சூழ்கின்றமையின் அதனை நாம் முற்படச் செய்து நமக்கினிய அரசனொருவனை வைத்தல் ஈண்டையாவர்க்கு மியைந்தது; நின் கருத்தென்னை?’ எனச் சூளுறவோடு சொல்லுவித்தல். (இதில்); திரிபிலனாயவழி எதிர்காலத் துந்திரிபிலனெனக் கருத்தளவையால் தெளியப்படுமென்பதாம்” (குறள், 501, பரிமே. உரை);.

   அரசன், அறம் பொருள் இன்பம் உயிரச்சம் என்னும் நான்கு தெளிவகைகளால் அமைச்சனையும் ஏனையுயரதிகாரிகளையும் தேர்ந்தெடுப்பது, அவரையமர்த்துமுன்பேயன்றி அமர்த்தின. பின்பன்று. திருவள்ளுவர், வலியறிதல் காலமறிதல் இடனறிதல் என்பவற்றிற்குப் பின்னும், தெரிந்து வினையாடல் என்பதற்கு முன்னும், தெரிந்து தெளிதல் என்னும் அதிகாரத்தை வைத்திருத்தலாலும்;     “தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை

தீரா இடும்பை தரும்’ (508);,

     “தேறற்க யாரையுந் தேராது தேர்ந்தபின்

தேறுக தேறும் பொருள்’ (509);,

     “தேரான் தெளிவுந் தெளிந்தான்கண் ஐயுறவும்

தீரா இடும்பை தரும்ஞ (510);

   என்று அவரே கூறுதலாலும்; எந்தப் பதவிக்கும் ஒருவரை அமர்த்துமுன்னன்றிப் பின் ஆராய்ந்து திறந்தெரிவது இயற்கையன்மையாலும்; அரசியல் முறை முற்றத் துறை போய திருவள்ளுவர் மறந்தும் அங்ஙனம் கூறாராதலாலும்;     ‘ஒரமைச்சனால், ஏனையோரை அவனில்லின் கண் அழைப்பித்து ……… சொல்லுவித்தல்’ என்று பரிமேலழகரும், “Test of Minister’s or Officer’s honesty’ என்று ஓர் அகரமுதலியும் உரைத்திருப்பது பொருந்தாது.

இனி, நால்வகைத் தேர்திறம்பற்றிய “அறம்பொரு எளின்பம்” என்னும் குறள், வட நூற் பொருண்மையை உட் கொண்டு திருவள்ளுவர் ஒதியதாகப் பரிமேலழகர் குறித்திருப்பதும் தவறென்பது ‘நாற்பொருள்’ என்னும் உருப்படியில் விளக்கப்பெறும்.

அச்சவுபதை (இ.பி.); த. அச்சம் + St. upa-dha = தேர்திறம் அல்லது தெளிவகை.

அச்சா

 அச்சா accā, பெ. (n.)

   இடை (int.);;   மிகநன்று (இ.வ.);; well done, very good.

த.வ. நன்று.

     [U. accha → Skt. accha → த. அச்சா.]

அச்சாணி

அச்சாணி accāṇi, பெ. (n.)

   1. கடையாணி; linch pin.

     “தேர்க் கச்சாணி யன்னார்” (குறள், 667);.

     ‘அச்சாணி இல்லாத் தேர் முச்சானும் ஓடாது’ (பழ.);.

   2. நிலவேம்பு (சித்.அக.);; French chiretta.

   3. கருப்பு வேம்பு (சா.அக.); ; black neem, Garuga pinnata.

   4. உத்தாமணி ; hedge cotton, Daemia extensa.

ம. அச்சாணி (கடையாணி);

     [அச்சு + ஆணி.]

அச்சாணிக்கொடி

 அச்சாணிக்கொடி accāṇikkoḍi, பெ. (n.)

   ஒரு முட்கொடி, அச்சயில்கரணை; also accayil karanai, axle-spined jack, Cudrania javanensis.

மறுவ. அச்சங்கரணை, அச்சயில்கரணை, அச்சாணிமுள்.

அச்சாணிமுள்(ளு)

 அச்சாணிமுள்(ளு) accāṇimuḷḷu, பெ. (n.)

அச்சாணிக்கொடி பார்க்க;see accani-k-kodi.

அச்சாணிமூலி

 அச்சாணிமூலி accāṇimūli, பெ. (n.)

   வேலிப் பருத்தி (மலை.); ; a hedge-twiner.

     [அச்சாணி + மூலி.]

அச்சானம்

அச்சானம் accāṉam, பெ. (n.)

   அறிவில்லாத் தன்மை (ஞானா. பாயி. 6, 26.);; spiritual ignorance.

த.வ. அறியாமை.

     [Skt. a-jnana → த. அச்சானம்.]

அச்சானியம்

அச்சானியம் accāṉiyam, பெ. (n.)

   தீக்குறி; bad omen.

     “எப்போதும் அச்சானியம் பேசாதே?” (வ.சொ.அக);.

     [அழிச்சல்-அழிச்சாலியம்-அழிச்சானியம் (கொ.வ.);]

 அச்சானியம் accāṉiyam, பெ. (n.)

   1. தீக்குறி முதலியவற்றால் நேரும் மனவேறுபாடு; unhappiness, painful state of mind, as from a bad omen.

அங்கேபோக மனசுக்கு அச்சானியமாயிருக்கிறது (இ.வ.);.

   2. மங்கல மின்மை; inauspiciousness.

ஏன் அச்சானியமாய்ப் பேசுகிறாய்? (இ.வ.);.

த.வ. தீத்திறம்.

     [Skt. a-jnana → த. அச்சானியம்.]

அச்சான்

 அச்சான் accāṉ, பெ. (n.)

   அச்சிலுண்டாகும் உருவம் ; cast taken from a mould.

     [அச்சு + ஆன் (ஒன்றன்பாலீறு);.]

அச்சான்கொடி

 அச்சான்கொடி accāṉkoḍi, பெ. (n.)

அச்சங் கொடி பார்க்க ;see accarigodi.

அச்சாப்பொங்கா

 அச்சாப்பொங்கா accāppoṅgā, பெ. (n.)

அச்சோப் பெண்காள் பார்க்க ;see accö-p-pepgal.

அச்சாரம்

 அச்சாரம் accāram, பெ. (n.)

   ஒரு பொருளை வாங்குவதற்கு அடையாளமாக முன்பணம் தந்து உறுதிப்படுத்திக் கொள்ளுதல்; a token advance to purchase a thing.

     “அச்சாரம் போட்ட பின்னே என்னடா பேச்சு மாத்தற?” (வ.சொ.அக.);

     [அச்சு+ஆரம்]

 அச்சாரம் accāram, பெ. (n.)

   முன்பணம் (இ.வ.);; earnest money, advance given to ratify a bargain.

     ‘அச்சாரம் கொடுத்தால்தான், வீட்டை வேறுயாருக்கும் விடமாட்டார்கள்’ (இ.வ.);.

த.வ. முன்காசு.

     [Skt. satyankara → த. அச்சாரம்.]

அச்சாறு

 அச்சாறு accāṟu, பெ. (n.)

   ஊறுகாய் (பர.வ.);; pickles.

த.வ. உப்பின்காய்.

     [U. accar → த. அச்சாறு.]

அச்சாளத்தி

அச்சாளத்தி accāḷatti, பெ. (n.)

   ஆளத்தி பாடுதலில் ஒரு வகை; a type of song in tamil. 35:21

     [அச்சு+ஆளத்தி]

அச்சாவாகன்

அச்சாவாகன் accāvākaṉ, பெ. (n.)

   வேள்வியில் தலைமைப் பூசகருக்கு உறுதுணை புரிபவன்; priest, officiating at some sacrifices as a co-adjutor of hotr.

   2. மூடன் (இ.வ.);; stupid dunce.

த.வ. உழையாளன்.

     [Skt. accha-vaka → த. அச்சாவாகன்.]

அச்சி

அச்சி acci, பெ. (n.)

   1. தாய் ; mother.

   2. அக்கை (பள்.);; elder sister.

   3. நாயர்குலப் பெண் ; a Nāyar woman.

—, இடை. (part.);

   ஒரு பெண் பாலீறு ; a fem. suff.

ம.., க. அச்சி

     [அச்சன் (ஆ.பா.); – அச்சி (பெ.பா.);. எ-டு : மருத்துவச்சி, வேட்டுவச்சி.]

 அச்சி acci, பெ. (n.)

அகத்தி (இராசவைத்.);.

 West-Indian pea-tree.

   2. பாலையுடைச்சி ; tender wild jack, Pajanelia sheedii.

   3. பூதப்பூ (பூதபுட்பம்); ; Indian trumpet flower, Oroxylum indicum (சா.அக.);.

 அச்சி acci, பெ. (n.)

   சுமதுரைத் தீவின் வட மேலை நாடு ; Achen or Acheen, the N.W. division of Sumatra (சா.அக.);.

     ‘அச்சியிலே போனாலும் அகப்பை அரைக்காசு’ (பழ);. — (தண்டலை 99);.

     ‘அச்சியிலும் பிச்சைக்காரன் உண்டு’ (பழ.);.

     ‘அச்சி என்றால் உச்சி குளிருமா, அழுவணம் என்றால் கை சிவக்குமா?’ (பழ.);.

தெ. அச்சி

 அச்சி acci, பெ. (n.)

   கட்டை வண்டியின் அச்சாணி; wooden cart wheel pivotal nail. (கொ.வ.வ.சொ.);.

     [அச்சாணி-அச்சு-அச்சி(கொ.வ.);]

அச்சி மரக்கயிறு

 அச்சி மரக்கயிறு accimarakkayiṟu, பெ. (n.)

   மாட்டுக்கயிறு; a rope.

     [அச்சு+மரம்+கயிறு]

அச்சிக்கிச்சிலி

 அச்சிக்கிச்சிலி accikkiccili, பெ. (n.)

   அச்சி நாட்டுக் கிச்சிலிப் பழம்; a kind of orange grown in Acheen (N.W. of Sumatra); (சா.அக.);.

     [அச்சி + கிச்சிலி.]

அச்சிக்குதிரை

 அச்சிக்குதிரை accikkudirai, பெ. (n.)

   அச்சி நாட்டு மட்டக்குதிரை (இராட்.);; Achin pony (R.);.

     [அச்சி + குதிரை.]

அச்சிடு-தல்

அச்சிடு-தல் acciḍudal,    7 செ.குன்றாவி. (v.t.)

   பொத்தகம் முதலியவற்றிற்கு உருக்கெழுத்துப் பதித்தல் ; to print, as a book.

     [அச்சு + இடு.]

அச்சித்தினை

அச்சித்தினை accittiṉai, பெ. (n.)

   அச்சி நாட்டினின்று கொண்டுவந்து விளைக்கப்பட்ட தினைவகை ; variety of Italian millet, Setaria italica, as from Achin.

   2. ஒருவகைப் புல் ; a kind of grass.

     [அச்சி + தினை.]

அச்சிநடை

 அச்சிநடை accinaḍai, பெ. (n.)

   அச்சிக் குதிரையின் நடைவேகம் ; amble of the Achin pony.

அச்சிநறுவிலி

 அச்சிநறுவிலி accinaṟuvili, பெ. (n.)

   சிவப்புப் பூப்பூக்கும் ஒருவகை மரம். அச்சிநாட்டினின்று கொண்டுவந்து மைசூரில் பயிராக்கப்பட்டது. அதன் பட்டை நாரினால் கயிறு திரிக்கப்படும் ; scarlet long-flowered sebasten, Cordia sebastena, a tree peculiar to Achin, brought and naturalised in Mysore. Ropes are made from the fibre of its bark.

அச்சினி

 அச்சினி acciṉi, பெ. (n.)

   எட்டாம் மாதம் (சித்.அக.); ; eighth month.

 அச்சினி acciṉi, பெ. (n.)

   எட்டாம் மாதம் (சித்.அக.);; eighth month.

த.வ. எட்டாம்திங்கள்.

     [Skt. asta → த. அச்சினி.]

அச்சிப்பாக்கு

 அச்சிப்பாக்கு accippākku, பெ. (n.)

   அச்சிநாட்டினின்று இறக்குமதியான பாக்கு ; arecanut imported from Achin.

     [அச்சி + பாக்கு.]

அச்சிமட்டம்

 அச்சிமட்டம் accimaṭṭam, பெ. (n.)

   அச்சிநாட்டு மட்டக்குதிரை ; Achin pony.

ம. அச்சிமட்டம்

அச்சிமரக்குண்டு

 அச்சிமரக்குண்டு accimarakkuṇṭu, பெ. (n.)

   அச்சுமரக்குழி; a mould.

     [அச்சு+மரம்+குண்டு(குழி);]

அச்சிமுட்டி

 அச்சிமுட்டி accimuṭṭi, பெ. (n.)

அச்சு நூலும் துணி நூலும் சேரும் இடம்

 a device in loom.

     [அச்சு(அச்சி);+முட்டி]

அச்சியர்

அச்சியர் acciyar, பெ. (n.)

   சமணத் துறவினியர் ; Jain women ascetics.

     “அங்கபூ வாதி நூலு ளச்சியர்க் குரிய வோதி” (மேருமந். 619);.

அச்சியில்கரணை

 அச்சியில்கரணை acciyilkaraṇai, பெ. (n.)

அச்சாணிக்கொடி பார்க்க;see accapi-k-kodi.

அச்சிரம்

அச்சிரம் acciram, பெ. (n.)

   முன்பனிக் காலம் ; early dewy season.

     “அரிதில் தோன்றும் அச்சிரக் காலையும்” (சிலப். 14;105);.

     [த. அல் = இரவு. Skt. sisira = பனிக்காலம். அல் + சிசிரம் – அற்சிசிரம் → அச்சிரம் = முன்னிரவிற் பனி பெய்யுங் காலம்.]

அல் என்பது, அல்லங்காடி என்பதிற் போன்று இங்கு மாலையை அல்லது முன்னிரவைக் குறித்தது.

அச்சிரம் என்பது தென்சொல்லும் வடசொல்லும் கலந்த இருபிறப்பி (hybrid);.);

அச்சிருங்கி

அச்சிருங்கி acciruṅgi, பெ. (n.)

   ஆடுதின்னாப் பாலை ; worm-killer, 4ristolochia bracteata.

அச்சிறுபாக்கம்

அச்சிறுபாக்கம் acciṟupākkam, பெ. (n.)

   ஒரு சிவநகர் ; a Śiva shrine.

     “அச்சிறு பாக்கத் தணைந்தார்” (பெரியபு. திருஞா. 1132);.

     [அச்சு + இறு + யாக்கம்.]

அச்சிவெல்லம்

 அச்சிவெல்லம் accivellam, பெ. (n.)

   அச்சிநாட்டினின்று முற்காலத்தில் இறக்குமதியான ஒரு வகை வெல்லம் ; a kind of jaggery formerly imported from Achin.

அச்சீடு

 அச்சீடு accīṭu, பெ. (n.)

   அச்சிடுகை; printing.

     [அச்சு + இடு. இடு → ஈடு.]

அச்சு

அச்சு accu, பெ. (n.)

   1. கட்டளைக் கருவி; mould.

அச்சிலே வார்த்த உருவம் (உ.வ.);.

   2. கம்பியச்சு; wire-mould.

     “கம்பி வாங்கு மச்சென லாயதால்” (இர்கு. திக்கு. 189);.

   3. உருக்கெழுத்து ; printing type.

   4. குத்தும் முத்திரை ; stamp.

   5. *சரியொப்பு ; exact likeness.

     “கடைமாந்த ரச்சாய்” (சேதுபு. வேதா. 16.);.

   6. அடையாளம் ; sign, mark, print, stamp,

     “பவளத் திருமார்பிலச்சிட் டவர்க்கு” (ஏகாம். உலா, 211);.

   7. அச்சுக்கட்டு; weaver’s reed instrument for pressing down the threads of the woof.

   8. பண்ணை ; comb-like frame in a loom through which the warp threads are passed and by which they are pressed or battened together.

ம. க., தெ. அச்சு ; து. அச்சி.

     [அட்டுதல் – வார்த்தல், உருக்கி வார்த்தல். அட்டு → அச்சு = வார்ப்புக் கருவி. அச்சிலே வார்த்த உருவங்களெல்லாம் வார்ப்பு அல்லது வார்ப்படம் என்று சொல்லப்படுவதை நோக்குக.]

 அச்சு accu, பெ. (n.)

   1. சக்கரங் கோத்த மரம் ; axle.

     “பீலிபெய் சாகாடும் அச்சிறும்” (குறள், 475);.

     ‘அச்சில்லாத் தேர் ஒடவும் அகமுடையான் இல்லாதவள் பிள்ளை பெறவும் கூடுமா?” (பழ);.

   2. அச்சுருவாணி (பிங்.);; axle-bolt.

   3. திரிகை யச்சு ; central pin of a mill-stone.

   4. தாங்கல், நிலைக்களம்; support, basis.

     “செந்நாப் போதார் புனற்கூடற் கச்சு” (திருவள்ளுவமா. 21);.

   5. வலிமை ; strength.

     “வேந்தடர்த்த வச்சு” (சீவக. 2777);.

   6. மூல வுருவம் ; original form.

     “சுரர்களாய்த் துய்ப்ப ரென்னிற் சொன்னவச் சழியும்” (சி.சி.2;42);.

   7. உடம்பு; body.

     “அச்செடுத்திடு முயிர்கள்” (கந்தபு. மகேந் சூரன்.அமைச். 137.);.

   8. செய் வரம்பு, அச்சுக் கட்டின நிலம் ; ridge in a field.

ம., க., தெ., து. அச்சு ; Skt. Aka.

 OE. aex, eax; ME. ax, axel; ON. oxul; E. axle.

 அச்சு accu, பெ. (n.)

   ஊழி (வின்.);; epoch, yuga (W.);.

 அச்சு accu, பெ. (n.)

   மட்பாண்டத் திரிகை சுழலும் நடுவ(மைய); இரும்புக் கம்பி.(ம.வ.சொ. 67.);; pinhold of potter”s wheel.

     [P]

அச்சு மை

 அச்சு மை accumai, பெ. (n.)

   அச்சிட உதவும் மை ; printing ink.

அச்சு வார்ப்படச்சாலை

 அச்சு வார்ப்படச்சாலை accuvārppaḍaccālai, பெ. (n.)

   அச்செழுத்துகளை வார்க்கும் வார்ப்படப் பட்டறை ; type foundry.

     [அச்சு + வார்ப்படம் + சாலை.]

அச்சுக்கட்டி

அச்சுக்கட்டி accukkaṭṭi, பெ. (n.)

   1. ஆடையிற் சாய அச்சுவேலை செய்வோன் (சிலப். 5 ; 17, அரும்.);; one who folds and ties clothin dyeing, where by any desired figure is printed.

   2. நாட்டு அறுவை மருத்துவன் (இ.வ.);; Indian country surgeon (Loc.);.

   3. நெசவுத் தொழிலுக்குரிய அச்சுக்கட்டு செய்பவன் ; weaver’s reed maker.

     [அச்சு + கட்டி.]

அச்சுக்கட்டு

அச்சுக்கட்டு accukkaṭṭu, பெ. (n.)

   1. அச்சடித்தற்குச் சேலையை மடிக்கை ; folding of cloth in dyeing whereby the desired figure is printed.

   2. நெய்வார் கருவி வகை ; weaver’s reed.

   3. வரம்பு கட்டிய செய் (இரா.பி.);; field with ridges, lands divided into beds to admit and retain water for the cultivation of paddy (R.F.);.

க., தெ. அச்சுக்கட்டு

     [அச்சு + கட்டு.]

 அச்சுக்கட்டு accukkaṭṭu, பெ. (n.)

   காஞ்சிபுரம் வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Kanchipuram Taluk.

     [அச்சு+கட்டு]

அச்சுக்கட்டு-தல்

அச்சுக்கட்டு-தல் accukkaṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. ஒவியம் வரையுமுன் ஈனை வரைந்து கொள்ளுதல் ; to draw the out line of a picture.

   2. நன்செய் புன்செய் வரம்பு கட்டுதல்; to form a ridge around a field.

     [அச்சு + கட்டு.]

அச்சுக்கட்டை

அச்சுக்கட்டை accukkaṭṭai, பெ. (n.)

அச்சு மரம் பார்க்க ;see accu-maram.

     [அச்சு + கட்டை.]

 அச்சுக்கட்டை accukkaṭṭai, பெ. (n.)

மட்பாண்டங்களில் முத்திரையிடும் கட்டை. (ம.வ.சொ.67.);

 block of wood having design for sealing pottary.

     [அச்சு+கட்டை]

அச்சுக்கம்பி

 அச்சுக்கம்பி accukkambi, பெ. (n.)

   குண்டுக் குழாயில் (gun); மருந்திடிக்கும் இருப்புக் கருவி; iron ramrod.

     [அச்சு + கம்பி.]

அச்சுக்கம்பு

 அச்சுக்கம்பு accukkambu, பெ. (n.)

   குண்டுக் குழாயில் மருந்திடிக்கும் மரத்தடி ; wooden ramrod.

ம. அச்சுக்கோல்

     [அச்சு + கம்பு.]

அச்சுக்கரு

 அச்சுக்கரு accukkaru, பெ. (n.)

   வார்ப்படம் வார்க்கும் அச்சு; matrix.

     [அச்சு + கரு.]

அச்சுக்கலை

 அச்சுக்கலை accukkalai, பெ. (n.)

   அச்சுத்தொழிற் கலை ; art of printing.

     [அச்சு + கலை.]

அச்சுக்கலைஞர்

 அச்சுக்கலைஞர் accukkalaiñar, பெ. (n.)

   அச்சுத்தொழிலில் வல்லுநர் ; one skilledin the art of printing.

     [அச்சு + கலைஞர்.]

அச்சுக்கூடம்

 அச்சுக்கூடம் accukāṭam, பெ. (n.)

   அச்சடிக்கும் சாலை, அச்சகம்; printing house.

ம. அச்சுக்கூடம்; க. அச்சுகூட; தெ. அச்ச கூடமு.

     [அச்சு + கூடம்.]

அச்சுக்கோ-த்தல்

அச்சுக்கோ-த்தல் accukāttal,    4 செ.குன்றாவி. (v.t.)

   உருக்கெழுத்தைச் சொல்லாக அடுக்குதல்; to set up type to form words, compose.

     [அச்சு + கோ.]

 அச்சுக்கோ-த்தல் accukāttal, செ.குன்றாவி.

   1. நூலைத்தறியில் இணைத்தல். (ம.வ.சொ. 67.);.; to set up thread in weavers loom.

   2.நெய்து முடிந்த பின் மீண்டும் புதிய

பாவு நூலைத் தறியில் இணைத்தல். (நெ.தொ.க..51); connecting new thread pan.

     [அச்சு+கோ-]

அச்சுக்கோப்பாளன்

 அச்சுக்கோப்பாளன் accukāppāḷaṉ, பெ. (n.)

   அச்சடுக்கி, கோப்பாளன் ; compositor.

     [அச்சி + கோப்பு + ஆளன்.]

அச்சுக்கோப்புப் பொறி

 அச்சுக்கோப்புப் பொறி accukāppuppoṟi, பெ. (n.)

   அச்செழுத்துகளைக் கோக்க உதவும் பொறி ; type composing machine.

     [அச்சு + கோப்பு + பொறி.]

அச்சுக்கோல்

அச்சுக்கோல்1 accukāl, பெ. (n.)

நூலை இழுத்துக் கட்டும் நீண்ட வடிவ குச்சி. (நெ.தொ.க. (5.1.);.

 a length stick used in loom.

     [அச்சு+கோல்]

 அச்சுக்கோல்2 accukāl, பெ. (n.)

   வடி நூலின் மேலும் கீழுமாக உள்ள சிறிய நீள உருளைக் குச்சி. (நெ.தொ. க. 51);; a stick used in loom.

     [அச்சு+கோல்]

அச்சுச்சட்டி

அச்சுச்சட்டி accuccaṭṭi, பெ. (n.)

   முத்திரையிடப்பட்ட சட்டி (ம.வ.சொ.67.);.; sealed pot.

     [அச்சு+சட்டி]

அச்சுதந்தெளி-த்தல்

அச்சுதந்தெளி-த்தல் accudandeḷiddal,    4 செ.கு.வி. (v.i.)

அச்சதம்தெளித்தல் பார்க்க;see accadam-teli.

     “மங்கல வச்சுதந் தெளித்து…. வாழ்த்தினர்” (சீவக. 2411);.

     [அச்சுதம் + தெளி-.]

     [Skt. a-ksata → த. அச்சுதம்.]

அச்சுதன்

அச்சுதன் accudaṉ, பெ. (n.)

   1. எஞ்ஞான்றும் அழிவில்லாதவன்; the imperishable one.

     “அச்சுதனாஞ் சிவன்” (கந்தபு அவைபுகு 8);.

   2. திருமால் (திவா.);; Thirumal (Visnu);.

   3. முருகன் (பொதி.நி.);; Lord Murugan.

   4. அருகன்; Arhat.

     “அச்சுத னடிதொழுது”.

த.வ. அழிவிலி.

     [Skt. a-cyuta → த. அச்சுதன்.]

அச்சுதன்முன்னோன்

 அச்சுதன்முன்னோன் accudaṉmuṉṉōṉ, பெ. (n.)

   பலபத்திரன் (பிங்.);; Balabhdran, elder brother of Krishnan.

     [அச்சுதன் + முன்னோன்.]

     [Skt. a-cyuta → த. அச்சுதன்.]

அச்சுதம்

அச்சுதம்1 accudam, பெ. (n.)

   அருகும் அரிசியும் கூடியது; mixture of rice and cynodon grass, used in benediction or workship.

     “வாழிய ரூழியென்னா அச்சுதங் கொண்டு” (சீவக. 2494);.

     [Skt. a-ksata → த. அச்சுதம்.]

 அச்சுதம்2 accudam, பெ. (n.)

   அழிவில்லாதது; the imperishable.

     “அச்சுத மனந்தஞ் சாந்தம்” (ஞானவா. சிகித். 148);.

     [Skt. a-cyuta → த. அச்சுதம்.]

 அச்சுதம்3 accudam, பெ. (n.)

   இந்திரர்களில் ஒருவனுக்குரிய உலகம் (தக்கயாகப். 265);; the world of an Indran.

த.வ. அமருலகம்.

     [Skt. a-cyuta → த. அச்சுதம்.]

அச்சுதை

அச்சுதை accudai, பெ. (n.)

   மலைமகள் (கூர்மபு. திருக்கல் 23.);; Malaimagal, as the imperishable one.

     [Skt. a-cyuta → த. அச்சுதை.]

அச்சுத் தட்டுத் தாங்கி

 அச்சுத் தட்டுத் தாங்கி accuttaṭṭuttāṅgi, பெ. (n.)

அச்சறைதாங்கி பார்க்க;see accalai. tårigi.

     [அச்சு + தட்டு + தாங்கி.]

அச்சுத்தகடு

 அச்சுத்தகடு accuttagaḍu, பெ. (n.)

   பாள அச்சுத் தகடு, நெகிழ்வற்ற உருச்சட்டம்; sterco plate.

     [அச்சு + தகடு.]

அச்சுத்தடி

 அச்சுத்தடி accuttaḍi, பெ. (n.)

   நெம்புதடி (புதுவை);; lever in mechanics (Pond.);.

     [அச்சு + தடி.]

அச்சுத்தாலி

அச்சுத்தாலி accuttāli, பெ. (n.)

   காசுமாலை (திவ். திருப்பா. 7. வியா.);; necklace of gold coins or other stamped pieces.

     [அச்சு + தாலி.]

அச்சுத்திரட்டு-தல்

அச்சுத்திரட்டு-தல் accuddiraṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   பழுதுற்ற வண்டியச்சினை உருப்படுத்துதல் ; to repair a worn-out axle by welding with iron and turning on a lathe.

     [அச்சு + திரட்டு.]

அச்சுத்திருத்து-தல்

அச்சுத்திருத்து-தல் accuddiruddudal,    5 செ.கு.வி. (v.i)

   1. நன்செய் நேர்த்தி செய்தல்; to arrange plots in a field in suitable order.

   2. அச்சுத் தாள்களைத் திருத்துதல் ; to correct the printed proofs.

     [அச்சு + திருத்து.]

அச்சுத்துணி

 அச்சுத்துணி accuttuṇi, பெ. (n.)

   அச்சிடப்பட்ட துணி ; printed textile.

     [அச்சு + துணி.]

அச்சுத்துளையிடு

 அச்சுத்துளையிடு accuttuḷaiyiḍu, பெ. (n.)

   அச்சுத்துளையிடுதல் ; making holes with a punch.

     [அச்சு + துளையிடு.]

அச்சுத்தொழில்

 அச்சுத்தொழில் accuttoḻil, பெ. (n.)

   நூல் செய்தித்தாள் போன்றன அச்சிடும் பணி; the profession of printing.

     [அச்சு+தொழில்]

அச்சுனிகள்

அச்சுனிகள் accuṉigaḷ, பெ. (n.)

   அச்சுவினி தேவர்; twin vedic gods.

     “அச்சுனிகள் தீர்த்தம்” (வேதாரணி தீர்த்த. 27);.

     [Skt. asvin → த. அச்சுனிகள்.]

அச்சுபிச்சிலாம்

 அச்சுபிச்சிலாம் accupiccilām, பெ. (n.)

   உடல் குடல் எல்லாம்; that means all the parts of the body.

     [அச்சு+பிச்சு+எல்லாம்]

அச்சுபிணை-த்தல்

அச்சுபிணை-த்தல் accupiṇaittal, செ.குன்றாவி. (v.t.)

   பிணைத்தல், பாவிணைப் பண்னையிலுள்ள இழைகளுடன் தறிக்கு வெளியே பண்ணையைக் கொண்டு இணைத்தல். (நெ.சொ.க.52.);; connecting device in loom.

     [அச்சு+பிணை]

அச்சுப்படி

 அச்சுப்படி accuppaḍi, பெ. (n.)

   அச்சிட்டதன் ஒரு படி ; printed copy.

     [அச்சு + படி.]

அச்சுப்படிமை

 அச்சுப்படிமை accuppaḍimai, பெ. (n.)

   அச்சிட உதவும் படக்கட்டை ; printing block.

     [அச்சு + படிமை.]

அச்சுப்படிவம்

 அச்சுப்படிவம் accuppaḍivam, பெ. (n.)

   அச்சிடப்பட்ட படிவம் ; printed forms.

     [அச்சு + படிவம்.]

அச்சுப்பலகை

 அச்சுப்பலகை accuppalagai, பெ. (n.)

   நெசவுக் கருவிகளுள் ஒன்று (வின்);; weaver’s bar (w.);.

     [அச்சு + பலகை.]

 அச்சுப்பலகை accuppalakai, பெ. (n.)

   அச்சு வெல்லம் வார்க்கப்பயன்படும் பலகை; iaggery mould.

     [அச்சு + பலகை]

      [P]

அச்சுப்பானை,

அச்சுப்பானை,பெ. (n.)    அச்சுச்சட்டிபார்க்க: (ம.வ.சொ.67.); see accu-c-Catti

     [அச்சு+பானை]

அச்சுப்பிழை

 அச்சுப்பிழை accuppiḻai, பெ. (n.)

   அச்சில் நேர்ந்த பிழை ; typographical mistake, printer’s devil.

     [அச்சு + பிழை,]

அச்சுப்பூட்டி விளையாடு-தல்

அச்சுப்பூட்டி விளையாடு-தல் accuppūṭṭiviḷaiyāṭudal,    5 செ. கு. வி. (v.i.)

   பந்து, புளியங் கொட்டை முதலியன கொண்டு விளையாடுதல் (இராட்.);; to play with balls, tamarind seeds, etc. (R.);.

     [அச்சு + பூட்டி + விளையாடு.]

அச்சுப்பூட்டியிழு-த்தல்

அச்சுப்பூட்டியிழு-த்தல் accuppūṭṭiyiḻuttal,    4 செ.கு.வி. (v.i.)

   தறியூடு நூலைச் செலுத்துதல் (வின்.); ; to pass the thread through the loom (W.);.

     [அச்சு + பூட்டி + இழு.]

அச்சுப்பொறி

 அச்சுப்பொறி accuppoṟi, பெ. (n.)

   அச்சிடும் பொறி, அச்சு எந்திரம்; printing machine.

     [அச்சு + பொறி.]

அச்சுப்போடு-தல்

அச்சுப்போடு-தல் accuppōṭudal,    19 செ.குன்றா வி. (v.t.)

   அச்சடித்தல் ; to print.

     [அச்சு + போடு.]

அச்சுமட்டம்

அச்சுமட்டம் accumaṭṭam, பெ. (n.)

அச்சி மட்டம் ;see acci-mattam.

     “கட்டுப்படாத தந்த அச்சுமட்டம்” (மது. வா. ஞா. கோ. 97);.

அச்சுமரம்

அச்சுமரம் accumaram, பெ. (n.)

   வண்டியில் உருள்கோத்த மரம்; axle-tree.

     ‘அச்சுமரத்தின் மேலே…… நெடுகக்கிடக்கின்ற பருமரங்களை’ (பெரும்பாண். 48, நச்.உரை);.

க. அச்சுமர

 அச்சுமரம் accumaram, அச்சு இணைந்த ஆளுயர நீள் சதுரமான கருவி. (நெ.சொ.க. 52.)

 device in loom.

அச்சுமூசை

 அச்சுமூசை accumūcai, பெ. (n.)

   அச்செழுத்தின் அச்சுரு ; type mould.

அச்சுரம்

அச்சுரம் accuram, பெ. (n.)

   1. நெருஞ்சி (மூ.அ.);; tribulus plant.

   2. முருங்கை (வின்.);; horseradish tree.

     [Skt. iksura → த. அச்சுரம்.]

     [P]

அச்சுரு

 அச்சுரு accuru, பெ. (n.)

   உரு அச்சு, கட்டளைச் சட்டம் ; mould, matrix.

     [அச்சு + உரு.]

அச்சுருளி

 அச்சுருளி accuruḷi, பெ. (n.)

   அச்சுப்பொறி உருளை ; cylinder used in printing machine.

     [அச்சு + உருளி.]

அச்சுறு-தல்

அச்சுறு-தல் accuṟudal,    20 செ.கு.வி. (v.i.)

   அச்சமடைதல் ; to fear, dread.

     “அச்சுறுகின்றதென் னாவ தாகுமால்” (கந்தபு. யுத்த தரும கோ. 19);.

     [அச்சம் + உறு. – அச்சுறு.]

அச்சுறுகொழுந்தொடர்

அச்சுறுகொழுந்தொடர் accuṟugoḻundoḍar, பெ. (n.)

   மதயானை விசையாதபடி, மரங்களிலிரும்பைத் தைத்த தொடரியை அதன் கழுத்தில் மாலைபோல் இட்டு மரத்திற் கட்டும் தடுப்பு ; iron chain put round the neck of a must elephant like a garland and fastened to a tree.

     “அச்சுறு கொழுந்தொடர் யாப் பழித்து” (சீவக. 1836);.

     [அச்சு + உறு + கொழுந்தொடர்.]

அச்சுறுக்கை

 அச்சுறுக்கை accuṟukkai, பெ. (n.)

   அச்சமுண்டாக்குகை ; threat, intimidation.

     [அச்சம் + உறுக்கை. உறுக்கை = உண்டாக்குதல்.]

இச் சொல் சில அகரமுதலிகளில் ‘அச் சறுக்கை’ என்று தவறாகக் குறிக்கப்பட்டுள்ளது.

அச்சுறுத்து-தல்

அச்சுறுத்து-தல் accuṟuddudal,    2 பி.வி. (v. caus.)

   அச்சமுண்டாக்குதல் ; to frighten, threaten, intimidate.

     “அஞ்சியச் சுறுத்தலும்” (தொல், பொருள். கள. 24);.

ம. அஞ்சுக; க., தெ. அஞ்சு.

     [அங்குதல் = வளைதல். அங்கு → அஞ்சு. அஞ்சுதல் = வளைதல், வணங்குதல், வெருவுதல், ங்க → ஞ்ச.

ஒ.நோ. பொங்குதல் = செழித்தல். பொங்கு → பொஞ்சு. பொஞ்சுதல் = செழித்தல்.

இங்கே → இஞ்சே (கீழை நெல்லை வட்டாரக் கொச்சை வழக்கு);.

 cf. E. bank, galley-rower’s bench; OHG. bank; F. banc; OS. banc; OE. benc, E. bench. nk-nch.]

வணங்கு என்னும் சொல்லின் அடிப்படைப் பொருள் வளை என்பதே. வணங்கத்தக்கவர் தேவராயினும் மக்களாயினும் அஞ்சத்தக்கவராகவேயிருப்பர்.

அச்சுலக்கை

 அச்சுலக்கை acculakkai, பெ. (n.)

   துலாவைத் தாங்குங் கட்டை ; axle of a well-sweep.

     [அச்சு + உலக்கை.]

அச்சுவசாத்திரம்

 அச்சுவசாத்திரம் accuvacāttiram, பெ. (n.)

   குதிரையியல்பு கூறும் நூல்; hippo logy.

     [Skt. asva + sastra → த. அச்சுவசாத்திரம்.]

அச்சுவதரம்

அச்சுவதரம் accuvadaram, பெ. (n.)

   1. கோவேறு கழுதை (நாநார்த்த.);; mule.

   2. பாம்பு வகையு ளொன்று; a kind of snake.

     [Skt. asva-tara → த. அச்சுவதரம்.]

அச்சுவதி

அச்சுவதி accuvadi, பெ. (n.)

   முதல் விண்மீனான இரலை (அசுவதி);; the first naksatra asuvadi, alias iralai.

     “மறுவில் அச்சுவதி யாதி யிரேவதி யீறா மாதர்” (நல். பாரத. பதினெட்.23);.

     [Skt. asvini → த. அச்சுவதி.]

அச்சுவத்தம்

 அச்சுவத்தம் accuvattam, பெ. (n.)

   அரசமரம் (பிங்.);; pipal.

     [Skt. asvattha → த. அச்சுவத்தம்.]

அச்சுவத்தாமன்

 அச்சுவத்தாமன் accuvattāmaṉ, பெ. (n.)

அசுவத்தாமா பார்க்க;see asuvattama.

     [Skt. asvatthaman → த. அசுவத்தாமன்.]

அச்சுவத்தாமா

அச்சுவத்தாமா accuvattāmā, பெ. (n.)

   அச்சுவத்தாமன் (பாரத, பதினைந். 27.);; accuvattaman, son of Dronar.

     [Skt. asvatthaman → த. அச்சுவத்தாமா.]

அச்சுவன்

அச்சுவன் accuvaṉ, பெ. (n.)

   குதிரை யினத்தைச்சார்ந்த ஆடவன் (கல்லா. 5,மயிலேறு.);; man of horse-like nature, one of three adavar-sadis.

த.வ. பரியன்.

     [Skt. asva → த. அச்சுவன்.]

அச்சுவமுகாதனம்

அச்சுவமுகாதனம் accuvamukātaṉam, பெ. (n.)

   கால்மடித்து இரண்டு முழங்காலிலும் முழங்கைகளை யூன்றி இரண்டு உள்ளங் கைகளையும் கன்னத்தில் வைத்திருக்கும் ஒகவிருக்கை வகை (தத்துவப் 108, உரை.);; a yogic pose in which the person sits cross legged, places his elbows on his knees and rests his cheeks on the palm of his hands.

     [அச்சுவம் + முகம் + ஆதனம்.]

     [Skt. asva → த. அச்சுவம். Skt. a-sana → த. ஆதனம்.]

     [P]

அச்சுவமேதம்

 அச்சுவமேதம் accuvamētam, பெ. (n.)

   குதிரை ஈதல் (அசுவமேதம்); (உத்தரரா);; horse sacrifice.

த.வ. குதிரைவேள்வி.

     [Skt. asva + medha → த. அச்சுவமேதம்.]

அச்சுவம்

அச்சுவம்1 accuvam, பெ. (n.)

   குதிரை; horse.

     “இந்த அச்சுவம் கூர்ச்சரம்” (திருவிளை. நரிபரி. 105);.

     [Skt. asva → த. அச்சுவம்.]

 அச்சுவம்2 accuvam, பெ. (n.)

   அக்கரகாரம் (எரிச்சலூட்டும் வேர் செடிவகை); (பொதி.நி.);; pellitory root.

     [Skt. asva-gandha → த. அச்சுவம்.]

அச்சுவரி

அச்சுவரி accuvari, பெ. (n.)

   பழைய வரிவகை (I.M.P. Tn. 104);; an ancient tax.

ம. அச்சு வரி

     [அச்சு + வரி.]

அச்சுவாதீதம்

 அச்சுவாதீதம் accuvātītam, பெ. (n.)

   செவ்வலரி வகை (சித்.அக.);; a kind of red oleander.

     [Skt. asvamara → த. அச்சுவாதீதம்.]

அச்சுவார்ப்படம்

 அச்சுவார்ப்படம் accuvārppaḍam, பெ. (n.)

   மாழையை (உலோகத்தை); உருக்கி அச்செழுத்துகளாக வார்த்தல்; type founding.

     [அச்சு + வார்ப்படம்.]

அச்சுவினி

 அச்சுவினி accuviṉi, பெ. (n.)

   இரலை விண்மீன் (அசுவினி); (திவா.);; name of the first naksatra, part of Aries.

     [Skt. asvini → த. அச்சுவினி.]

அச்சுவினிகள்

அச்சுவினிகள் accuviṉigaḷ, பெ. (n.)

   அச்சுவினி தேவர் (பிங். 86.);; twin vedic gods who are physicians of heaven.

     [அச்சுவினி + கள்.]

     [Skt. asvin → த. அச்சுவினி.]

அச்சுவினிதேவர்

 அச்சுவினிதேவர் accuviṉitēvar, பெ. (n.)

   தேவமருத்துவர் (பிங்.);; twin vedic Gods who are physician’s of heaven.

     [அச்சுவினி + தேவர்.]

     [Skt. asvini → த. அச்சுவினி.]

அச்சுவினிமதலையர்

 அச்சுவினிமதலையர் accuviṉimadalaiyar, பெ. (n.)

   நகுலசகதேவர் (பிங்.);; Nagula and Sagadevas, the fourth and fifth of the Pandavar.

     [அச்சுவினி + மதலையர்.]

     [Skt. asvini → த. அச்சுவினி.]

அச்சுவிழுது

 அச்சுவிழுது accuviḻudu, பெ. (n.)

   கைத்தறி நெசவிற் பயன்படும் ஒருவகை நூல், தலை நூல் ; a kind of thread used in handloom weaving.

அச்சுவெல்லம்

 அச்சுவெல்லம் accuvellam, பெ. (n.)

   கருப்பஞ்சாற்றுக்கட்டி; jaggery moulded in the shape of a cone with the top flattened.

     [அச்சு+வெல்லம் அச்சில் (கட்டளையில்); வார்த்தெடுத்த வெல்லம்]

      [P]

அச்செடுத்தல்

அச்செடுத்தல் acceṭuttal, செ.கு.வி. (v.t.)

   திரிகையில் வைத்து வேண்டிய வடிவம் செய்தல். (ம.வ.செ. 67.);; the control pin of a potter”s wheel.

     [அச்சு+எடு]

அச்சென

அச்சென acceṉa, வி.எ. (adv.)

   விரைவாக; quickly, swiftly.

     “அச்செனத் தணந்தேகி” (கந்தபு. மகேந் நகர்புகு. 97);.

அச்செழுத்தலகு

அச்செழுத்தலகு acceḻuttalagu, பெ. (n.)

அச்செழுத்துகளின் புள்ளி அளவு.

   1 புள்ளி I/72 அல்லது 0.01383 விரலம் ; unit of measurement for type bodies.

     [அச்செழுத்து + அலகு.]

அச்செழுத்து

 அச்செழுத்து acceḻuttu, பெ. (n.)

   அச்சடித்த எழுத்து ; printed letter or script.

     [அச்சு + எழுத்து.]

அச்சேறு-தல்

அச்சேறு-தல் accēṟudal,    5 செ.கு.வி. (v.i.)

   அச்சடிக்கப்படுதல் ; to be printed.

     [அச்சு + ஏறு.]

அச்சை

அச்சை accai, பெ. (n.)

   அச்சத்தால் வரும் நோய் ; a disease arising from fear (சா.அக.);.

 அச்சை accai, பெ. (n.)

   வேதத் தொடரியம் (வாக்கியம்);; vedic hymn.

     “முப்பத்திரண்டு அச்சையும் ஐஞ்சு வாரமுமோதி” (T.A.S. i. 8);.

     [Skt. rca → த. அச்சை.]

அச்சொடுபுரி-தல்

அச்சொடுபுரி-தல் accoḍuburidal,    2 செ.குன்றாவி, (v.t.)

   மூலவடிவாகச் செய்தல், சரியொப்பாகச் செய்தல் ; to make similar to the original.

அச்சோ

அச்சோ accō, இடை. (int.)

   1. ஓர் இரக்கச் சொல் ; an exclamation of pity.

     “அச்சோ எனப் பல் இமையோரையீண்டு சிறைவைத்த பாவம்” (கந்தபு. அவை புகு, 43);.

   2. ஒரு வியப்புமொழி ; an exclamation of wonder.

     “அச்சோ ஒருவ ரழகியவா” (தில்,பெரியதி. 9.2;1);.

அச்சோப்பருவம்

அச்சோப்பருவம் accōpparuvam, பெ. (n.)

   1. தாய் குழந்தையை அணைக்க ‘அச்சோ அச்சோ என்று கூறி அழைக்கும் பருவம்; childhood, as the age when the mother seeks her child’s embrace, saying acco acco.

     “ஆரத் தழுவாய்வந் தச்சோ அச்சோ” (திவ். பெரியாழ். 1.8;6);.

     [அச்சோ + பருவம்.]

அச்சோப்பெண்காள்

 அச்சோப்பெண்காள் accōppeṇkāḷ, பெ. (n.)

   விளக்கைச் சுற்றிவந்தவாறு கைகொட்டிப் பாடிக்கொண்டு மகளிர் ஆடும் ஆட்டம் (பிராம.);; dance of women round a lamp singing and clapping hands (Brăh.);.

     [அச்சோ + பெண்காள்.]

அஞன்

 அஞன் añaṉ, பெ. (n.)

   அறிவிலான் (திவா.);; ignorant person.

     [Skt. a-jna → த. அஞன்.]

அஞராட்டி

அஞராட்டி añarāṭṭi, பெ. (n.)

   நோயுள்ளவள்; sickly woman.

     “அழிவுடை யுள்ளத் தாரஞ ராட்டி” (சிலப். 13; 80);.

அஞர்

அஞர் añar, பெ. (n.)

   1. நோய் (திவா.);; disease.

   2. துன்பம் ; distress, calamity.

     “பேரளுர்க் கண்ணள் பெருங்காடு நோக்கி” (புறநா. 247 ; 6);.

   3. வழிநடந்த வருத்தம்; fatigue.

     “ஆர வுண்டு பேரளுர் போக்கி” (பொருந. 88);.

   4. அச்சம் (திவா.);; fear.

   5. வழுக்குநிலம் (திவா.); ; slippery ground.

     [அயர் →- அஞர் = தளர்ச்சி, நோய், துன்பம், அச்சம்.]

அஞலம்

அஞலம் añalam, பெ. (n.)

   1. கொசு ; mosquito.

   2. நுளம்பு (திவா.); ; a species of gnat.

     [அஞல் → அஞலம். ‘அம்’ பெருமைப்பொருட் பின்னொட்டு.]

அஞல் பார்க்க;see aial.

 அஞலம் añalam, பெ. (n.)

   ஐவிரை (பஞ்ச வாசம்); (பொதி.நி.);; the five aromatics.

     [ஒருகா. ஐ + நலம் – ஐந்நலம் → ஐஞ்ஞலம் → அருலம். நலம் = நறுமை (வாசனை);.

கை (விரல் தொகை); = ஐந்து, வறட்டி முதலிய பொருள்களை விற்கும்போது, ஒவ்வோர் ஐந்தையும் ஒவ்வொரு கை என்று சொல்வது வழக்கம். கை → ஐ → ஐது → ஐந்து → அஞ்சு.]

     “In some languages the word used to signify five properly means a hand, or is derived from a word which has that meaning, —the number of fingers on each hand being five. In Lepsius’s opinion, the word for ten, which is used in all the Indo-European dialects, had its origin in the Maeso-Gothic tai-hun, two hands. Applying this principle to the Dravidian languages, ei, five, might be presumed to be derived from kei, Tam. a hand, by the proces$of the softening away of the initial consonant.”—(C.C.G.D.L., pp. 338-39);.

 In many languages the word for ‘five is identical with or similar to the word for “hand”; “ten is frequently two hands or pair of hands’ or ‘the upper part”; “twenty” is in some languages called “all digits’, ‘hands and feet’, ‘the whole man” or something of the sort. There are also expressions for the numbers from six to nine which are clearly based on finger counting, since they say for “six” something like “one on the left hand’, for “nine perhaps “one short of two hands’.-The Origin and Derivation of Language, pp. 183-4.

அஞல்

 அஞல் añal, பெ. (n.)

   கொசுகு (சிந்தா.நி.);; a species of gnat.

     [அள் = கூர்மை, அள் → அய் → அயல் → அஞல் = கூரிய உறிஞ்சியாற் குருதியை உறிஞ்சுவது.]

அஞ்சக்கரம்

 அஞ்சக்கரம் añjakkaram, பெ. (n.)

   சிவ வழிபாட்டில் ஓதுவதும், சிவாயநம அல்லது நமசிவா(வ); ய என்னும் ஐந்தெழுத்துக்கொண்டதுமான, திருவைந்தெழுத்தென்னும் சிவ வணக்க மந்திரம் ; the five-lettered mantra, viz., ši va ya na ma or na ma ši(ci); va(wa); ya, uttered in the worship of šiva (சா.அக.);.

     “அஞ்சக் கரத்தின் அரும்பொருள்” (விநா. அகவல்);.

     [த. அஞ்சு + அக்கரம் – அஞ்சக்கரம் (இ.பி.);. Skt. aksara → த. அக்கரம்.]

அஞ்சடுக்குமல்லிகை

 அஞ்சடுக்குமல்லிகை añjaḍuggumalligai, பெ. (n.)

   ஐந்தடுக்கு இதழுள்ள மல்லிகைப் பூ வகை ; jasmine flower with five rows of petals (சா.அக.);.

     [ஐந்து → அஞ்சு + அடுக்கு + மல்லிகை.]

அஞ்சடுக்குமுலி

 அஞ்சடுக்குமுலி añjaḍukkumuli, பெ. (n.)

   கருவூமந்தம் பூ ; black dhatura flower (சா.அக.);.

     [ஐந்து → அஞ்சு + அடுக்கு + மூலி.]

அஞ்சணங்கம்

 அஞ்சணங்கம் añjaṇaṅgam, பெ. (n.)

   எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்னும் ஐந்தமிழிலக்கணம் (யாழ்ப்.);; the five divisions of Tamil grammar, viz., orthography, accidence, science or subject-matter, prosody and rhetoric.

     [அணங்குதல் = ஒலித்தல். அணங்கு = எழுத்து. அணங்கு → அணங்கம் = இலக்கணம் (சிந்தா.நி.);. இனி, அணங்கு = அழகு (பிங்.);. அணங்கு → அணங்கம் = மொழியின் அழகை அல்லது ஒழுங்கை விளக்கும் இலக்கணம் என்றுமாம்.]

ஒ.நோ. Gk. gramma, thing written, letter of alphabet; grammetiké, art of letters.

 Gk. grammatikē; L. grammatica; O.F. gramaire; ME. grammar; E. grammar, “Art and science dealing with a language’s inflexions or other means of showing relation between words as used in speech or writing, and its phonetic system (usu. divided into phonology, accidence and syntax.);”—(C.O.D.);.

அஞ்சணங்கியம்

 அஞ்சணங்கியம் añjaṇaṅgiyam, பெ. (n.)

   ஐந்திலக்கணத்திற்கும் எடுத்துக்காட்டான ஐவகையிலக்கியம் ; the theoretical divisions of classics illustrating the five divisions of grammar.

     [அஞ்சு + அணங்கியம். ஐந்து → அஞ்சு. அணங்கம் → அணங்கியம் = இலக்கணத்தைத் தழுவிய இலக்கியம்.]

அஞ்சதி

 அஞ்சதி añjadi, பெ. (n.)

   காற்று; wind (சா.அக.);.

தெ. அஞ்சதி

அஞ்சத்தம்

 அஞ்சத்தம் añjattam, பெ. (n.)

   சுக்கு ; dry ginger (சா.அக.);.

அஞ்சநம்

 அஞ்சநம் añjanam, பெ. (n.)

அஞ்சனம் பார்க்க;see anjanam (சா.அக.);.

     [Skt. anjana → த. அஞ்சநம்.]

அஞ்சநாலா

அஞ்சநாலா añjanālā, பெ. (n.)

   1. கருங் காக் கணம் ; blue-flowered mussell-shell creeper, Clitoria ternatea (சா.அக.);.

   2. கருங்குவளை, நீலோற்பலம் ; blue water – lily, Pontederia (சா.அக.);.

அஞ்சனகுமாரி

 அஞ்சனகுமாரி añjaṉagumāri, பெ. (n.)

   சிமிட்டி; bitter apple, cucumis colocynthis (சா.அக.);.

அஞ்சனகேசி

அஞ்சனகேசி añjaṉaāci, பெ. (n.)

   ஒரு ஏறண (தருக்க); நூல் (யாப். வி.பக், 540.);; a treatise on logic.

     [Skt. añjana + kesa → த. அஞ்சனகேசி.]

அஞ்சனக்கலிக்கம்

அஞ்சனக்கலிக்கம் añjaṉakkalikkam, பெ. (n.)

   1. கண்ணிலிடும் மருந்து; a medicine of chronic headache.

   2. கண்ணுக்கிடும் மை; colyrium.

   3. மந்திரப் பொருளைக் காட்டும் மந்திர மை (வின்.);; magic black pigment rubbed on the eyes or palms of who Wishes to discover anything lost.

     [அஞ்சனம் + கலிக்கம்.]

     [Skt. anjana → த. அஞ்சனம்.]

கல் → கலி → கலிக்கம்.

அஞ்சனக்கல்

அஞ்சனக்கல்1 añjaṉakkal, பெ. (n.)

   கருநிமிளை (மூ.அ.);; sulphuret of antimony, black bismuth, used as a collyrium, as a combustible in fire works.

த.வ. நீலாஞ்சனக்கல்.

     [அஞ்சனம் + கல்.]

 Skt. anjana → த. அஞ்சனம்.]

     [குல் → கல்.]

அஞ்சனக்கல்செந்தூரம்

அஞ்சனக்கல்செந்தூரம் añjaṉakkalcendūram, பெ. (n.)

   1. தோல்நோய், வெள்ளைநோய், கீல்வாயு முதலியவற்றிற்குப் பயன்படுத்தப்படுவதும் கிச்சிலிப் பழ நிறமும், களிம்பு சுவையுமுடைய ஒருவகைச் சிவப்பு மருந்துப் பொடி; the sulphide of antimony With a small but indefinite amount of the oxide, sulphuretted antimony, Antimonium sulphurettum, an astrigent, used in skin diseases, syphilitic affections, rheumatism etc.

   2. துரிசுச் செந்தூரம்; calcined red-oxide of blue vitriol prepared as per method laid down in Tamil medical science (சா.அக.);.

     [அஞ்சனம் + கல் + செந்தூரம்.]

     [Skt. anjana → த. அஞ்சன(ம்);.]

குல் → கல். சிந்தூரம் → செந்தூரம்.

அஞ்சனக்கல்பற்பம்

அஞ்சனக்கல்பற்பம் añjaṉakkalpaṟpam, பெ. (n.)

   பலவகை வெள்ளை நோய்கள், காய்ச்சல், இருமல், தோல்நோய் முதலிய வற்றிற்குக் கொடுக்கும் வெண்மையாகவும், சுவையற்றதாகவும் இருக்கும் பொடி (பற்பம்);; calcined antimony prepared according to Tamil medical science and prescribed for the 20 kinds of venereal complaints such as fever, consumption, skin diseases and so on. White in Colour and heavy, readily melts in fire and disappears as a gas, Antimony oxidum (சா.அக.);.

     [அஞ்சனம் + கல் + பற்பம்.]

     [Skt. anjana → த. அஞ்சனம்.]

     [Skt. bharman → த. பற்பம்.]

அஞ்சனக்காரன்

அஞ்சனக்காரன் añjaṉakkāraṉ, பெ. (n.)

   1. மந்திர மையிடுவோன்; conjurer, sorcerer who uses the magic black pigment.

     “அஞ்சனக் காரன் முதுகில் வஞ்சனைக் காரன் ஏறினான்”.

   2. கண்ணுக்குக் கலிக்கமிட்டு நோய்களைக் குணப்படுத்து வோன்; one who cures diseases by applying collyrium to the eyes (சா.அக.);.

     [அஞ்சனம் + காரன்.]

     [Skt. anjana → த. அஞ்சனம்.]

கரு → காரன் = வினைமுதல் ஆண்பாற் பெயரீறு.

அஞ்சனக்கோல்

அஞ்சனக்கோல் añjaṉakāl, பெ. (n.)

   கண்ணுக்கு மைதீட்டுங்கோல்; pencil to paint the eyelashes with collyrium.

     “அஞ்சனக் கோலி னாற்றா நாகம்” (சீவக. 1994.);.

     [அஞ்சனம் + கோல்.]

     [Skt. anjana → த. அஞ்சனம்.]

குல் → (கொல்); → கோல்.

அஞ்சனச்சலாகை

 அஞ்சனச்சலாகை añjaṉaccalākai, பெ. (n.)

   கூர் மழுங்கியதாகவும், இரு முனைகளுடையதாகவும், எட்டு அங்குல நீளமுள்ளதாகவும் இருக்கும். மருந்துக்குத் தக்கபடி, வெவ்வேறு மாழைகளைக் கொண்டு செய்யப்படும் கண்ணில் மருந்து தீட்டப் பயன்படுத்தும் பொன், வெள்ளி, செம்பு, இரும்பு, சிலை முதலியவற்றால் செய்த, ஒரு நீளமான தடித்த கம்பியைப் போன்ற கருவி; an instrument like a probe used by native doctors for applying eye-salve. It is made of gold, silver, iron or stone, according to the kind of medicines, to be used. It is a thing rod of about eight inches and blunt at the extremities (சா.அக.);.

     [அஞ்சனம் + சலாகை.]

     [Skt. anjana → த. அஞ்சனம்.]

சல் → சலம் → சலாகை.

அஞ்சனத்தார்

 அஞ்சனத்தார் añjaṉattār, பெ. (n.)

   விளைச்சலை மதிப்பிடுவோன் (R.T.);; estimator or appraiser of produce.

     [U. ancenadar → த. அஞ்சனத்தார்.]

அஞ்சனத்திரவியம்

 அஞ்சனத்திரவியம் añjaṉattiraviyam, பெ. (n.)

   ஐங்கோல நெய்மம்; a medicated ointment with magical or magnetic vitrues, prepared from the plant alinjil;

 Sage – leaved Indian Linden-grewia excelsa Agnivesha (சா.அக.);.

த.வ. ஐங்கோலம்.

அஞ்சனநாமிகாவர்த்தமம்

 அஞ்சனநாமிகாவர்த்தமம் añjaṉanāmikāvarttamam, பெ. (n.)

   இமைகளின் நடுவிலாவது முனைகளிலாவது குருதியைக் கக்கும், சிவந்த கட்டிகளை எழுப்பி, நமைச்சலையும், வலியையும் உண்டாக்கும் ஒரு வகைக் கண்ணோய்; an eye disease marked by the growth of small tumours in the centre or at the edges of the eyelid, causing inflammation and pain, Bichparo adenoma (சா.அக.);.

த.வ. கருங்கண்கட்டி.

அஞ்சனநிதானம்

 அஞ்சனநிதானம் añjaṉanitāṉam, பெ. (n.)

   கண்ணுக்கிடும் மையை பற்றி ஒர் ஆயுள் வேத நூல்; a treatise on ophthalmology compiled (சா.அக.);.

த.வ. மைநூல்.

     [Skt. aniana + nidana → த. அஞ்சனநிதானம்.]

அஞ்சனப்படம்

அஞ்சனப்படம் añjaṉappaḍam, பெ. (n.)

   கரியால் ஓவியம் வரையப்பட்ட படத்துணி (பஞ்சதசப்பிர. 2.);; cloth on which a figure is drawn with charcoal.

த.வ. கரி ஓவியத் துணி.

     [அஞ்சனம் + படம்.]

     [Skt. anjana → த. அஞ்சனம்.]

பட்டம் → படம்.

     [P]

அஞ்சனப்பாடாணம்

அஞ்சனப்பாடாணம் añjaṉappāṭāṇam, பெ. (n.)

   1. தமிழ் மருத்துவத்தில் சொல்லியுள்ள முப்பத்திரண்டு நஞ்சுள் ஒன்று, பொற்றொட்டி நஞ்சு உருவாக்குங் கால், அடியில் நிற்கும் கசடு, மருத்துவத்திற்கு உதவுவது (போகம் 7000);; according to the Tamil medical science, one of the thirty two kinds of poisons, one of the mineral poisons found as a sediment at the bottom in the preparation of another poison in a gold vessel.

   2. நீலாஞ்சன நஞ்சு; poisonous compound of sulphate of antimony.

   3. கல்லீயம்; a kind of hard lead, pewter (சா.அக.);.

த.வ. கடுங்கசடு நஞ்சு.

     [Skt. anjana + pasana → த. அஞ்சனபாடாணம்.]

அஞ்சனமாலி

 அஞ்சனமாலி añjaṉamāli, பெ. (n.)

   மந்திரக்கலை செய்வோர் பயன் கொள்வதற்குரிய கருநாய்; a black dog from its eyes unguents are prepared and used in sorcery (சா.அக.);.

அஞ்சனமிடல்

அஞ்சனமிடல் añjaṉamiḍal, தொ.பெ. (vbl.n.)

   1. கண்ணிற்கு மையெழுதுகை; painting black pigment on eye-lids (by women);.

   2. கலிக்கமிடுகை; applying a pungent eye salve (சா.அக.);.

     [அஞ்சனம் + இடல்.]

     [Skt. anjana → த. அஞ்சனம்.]

இடு → இடல்.

அஞ்சனம்

அஞ்சனம் añjaṉam, பெ. (n.)

   தெய்வப் படிமையை மந்திரங் கூறி நீராட்டுகை ; a ceremonial bath given to the idol of the deity.

மஞ்சனம் பார்க்க ;see maijanam.

 அஞ்சனம் añcaṉam, பெ. (n.)

   ஒரு வகை நெல்; a kind of paddy.

     [அஞ்சு-அஞ்சனம்]

 அஞ்சனம்1 añjaṉam, பெ. (n.)

   1. அஞ்சனகேசி (யாப். வி.பக். 540); பார்க்க;see anjana-kesi.

   2. அவுரி (வை.மூ.);; indigo.

   3. சலவைக்கல் (R}; marble.

     [Skt. anjana → த. அஞ்சனம்.]

 அஞ்சனம்2 añjaṉam, பெ. (n.)

   1. மேற்பூச்சு மருந்து; a semi-solid ointment consisting of fatty substances mixed with an active principle or drug-unguentum.

   2. மறைபொருளைக் காட்டும் மை; a magic black paint used for finding out concealed or hidden treasures or things.

   3. மை மாயக்கலை; magic art using unguents.

   4. கருவைக் கொண்டு செய்யப்பெறும் மை; unguent prepared from embryo.

   5. கருமாக்கல்; a darkish blue-colured stone, sulphuset of antimony.

   6. நீலத் தோற்றமுள்ள மலை; blue mountain, as the Nilgiris.

   7. இருள்; darkness.

   8. சண்பகம்; champak, Michela champaca.

   9. இமைகளில் எரிச்சல், குத்தல், வலி இவற்றுடன் கூடிய, சிறிய, மென்மையான செந்நிறக் கட்டியை எழுப்பும் ஒருவகைக் கண்ணோய்; a small, soft, copper-coloured pustule appearing on the eye-lid and attended with burning and pricking sensation and a slight pain;

 a sebaceous cyst of an eyelid, Blepharo atheroma.

த.வ. கரும் மை.

     [Skt. anjana → த. அஞ்சனம்.]

அஞ்சனலா

அஞ்சனலா añjaṉalā, பெ. (n.)

   1. கருங்காக் கணம்; mussel-shell cгеeper.

   2. கருங்குவளை (நீலோற்பலம்);; blue water lilly.

     [Skt. anjana → த. அஞ்சனலா.]

அஞ்சனவண்ணன்

அஞ்சனவண்ணன் añjaṉavaṇṇaṉ, பெ. (n.)

   திருமால் (சிலப்.6, 47);; Tirumāl (Visņu); as dark-complexioned.

     [அஞ்சன(ம்); + வண்ணன்.]

     [Skt. anjana → த. அஞ்சன(ம்);.]

வண் → வண்ணம் → வண்ணன்.

அஞ்சனவண்ணம்

 அஞ்சனவண்ணம் añjaṉavaṇṇam, பெ. (n.)

   மை வண்ணம்; black colour like that of a unguent (சா.அக.);.

     [அஞ்சன(ம்); + வண்ணம்.]

 Skt. anjana → த. அஞ்சனம்.]

வள் → வன் → வண்ணம்.

அஞ்சனவர்ணம்

 அஞ்சனவர்ணம் añjaṉavarṇam, பெ. (n.)

அஞ்சனவண்ணம் பார்க்க;see anjana-vannam (சா.அக.);.

     [அஞ்சன(ம்); + வர்ணம்.]

     [Skt. anjana → த. அஞ்சனம்.]

வண் → வண்ணம் → Skt. varna.

அஞ்சனவர்த்தி

 அஞ்சனவர்த்தி añjaṉavartti, பெ. (n.)

   கண்ணோய்களில் கண்ணுக்கு இழைத்து இடப்பெறும் ஒரு மருந்துக் குளிகை; a medicinal pill used in eye-diseases as an external application (சா.அக.);.

     [Skt. anjana + vrdh → த. அஞ்சனவர்த்தி.]

அஞ்சனவித்தை

 அஞ்சனவித்தை añjaṉavittai, பெ. (n.)

   மையிட்டுப் பார்த்து நிலத்துள் மறைந்து கிடக்கும் பொருள்களைக் கண்டறியும் கலை; the art of discovering hidden treasure or other substances under the ground with the help of magic pigment (சா.அக.);.

     [Skt. anjana + vdhya → த. அஞ்சனவித்தை.]

அஞ்சனவுருவன்

அஞ்சனவுருவன் añjaṉavuruvaṉ, பெ. (n.)

   திருமால்; Visnu.

     “அஞ்சனவுருவின் றந்து நிறுத்தாங்கு” (புறநா. 174.);.

     [அஞ்சன(ம்); + உருவன்.]

     [Skt. anjana → த. அஞ்சனம்.]

உரு → உருவு → உருவம் → உருவன்.

அஞ்சனவெற்பு

அஞ்சனவெற்பு añjaṉaveṟpu, பெ. (n.)

   திருவேங்கடமலை (திவ். திருவாய். 8, 2, 8.);; the Tirupati hills.

     [அஞ்சன(ம்); + வெற்பு.]

     [Skt. anjana → த. அஞ்சன(ம்);.]

அஞ்சனா

அஞ்சனா1 añjaṉā, பெ. (n.)

   பயிர் விளைநிலத்திலுள்ள மதிப்பு (செங்கை);; estimate or appraisement of the probable amount and value of the Ccops standing on a field.

     [U. ancena → த. அஞ்சனா.]

 அஞ்சனா2 añjaṉā, பெ. (n.)

   1. மூக்கத்தாரி என்னும் ஒரு கடைச்சரக்கு; formerly a bazaar drug (now-unidentified);.

   2. ஒரு வகைப்பல்லி; a domestic lizard.

   3. ஒரு பாம்பு; a fabulous serpent.

   4.60) n; a black pigment or collyrium applied externally to the eyebrows or the eye-lids.

   5. ஒரு மரம்; a tree.

   6. மை தீட்டல்; the act of applying ointment or pigment.

   7. இறும்பூது காட்டும் மை; a magic ointment (சா.அக.);.

     [Skt. anjana → த. அஞ்சனா.]

அஞ்சனாட்சி

 அஞ்சனாட்சி añjaṉāṭci, பெ. (n.)

   மைதீட்டிய கண்ணுடையாள்; woman having her eyelashes painted with Collyrium.

த.வ. மை விழியாள்.

     [Skt. anjana + aksi → த. அஞ்சனாட்சி.]

அஞ்சனாதார்

 அஞ்சனாதார் añjaṉātār, பெ. (n.)

   விளை பயிரை மதிப்பிடுபவன் (C.G.);; estimator, appraiser.

த.வ. விலையீட்டாளர்.

     [U. ancenadar → த. அஞ்சனாதார்.]

அஞ்சனாதி

 அஞ்சனாதி añjaṉāti, பெ. (n.)

   வெள்ளை நாயுருவி; a white species of Indian burr, Achyranthes aspera (alba); (சா.அக.);.

அஞ்சனாதிகை

 அஞ்சனாதிகை añjaṉātigai, பெ. (n.)

   ஒரு வகைப் பல்லி; a kind of lizard (சா.அக.);.

அஞ்சனாதேவி

 அஞ்சனாதேவி añjaṉātēvi, பெ. (n.)

   நிலத்தின் அடியில் புதைந்துள்ள பொருள்களுக்குத் தலைவியான அரசி; goddess of treasures hidden underground (சா.அக.);.

     [அஞ்சனா + தேவி.]

அஞ்சனாமிகை

 அஞ்சனாமிகை añjaṉāmigai, பெ. (n.)

   கண்ணிமைகளின் வீக்கம்; swelling of eyelids stye (சா.அக.);.

     [அஞ்சனா + மிகை.]

மிகு → மிகை வீக்கம்.

அஞ்சனாலா

அஞ்சனாலா añjaṉālā, பெ. (n.)

   1. கருங் குவளை; a blue water-lilly pontederia alias Nymphoca stellata.

   2. கருங்காக்கணம்; blue flowered mussel-shell creeper, Clitoria ternatec (typical);.

அஞ்சனாவதி

 அஞ்சனாவதி añjaṉāvadi, பெ. (n.)

   வடகீழ்த் திசைப் பெண்யானை (வின்.);; name of the female elephant of the north-east, mate of cuppiradigam.

     [Skt. anjanavati → த. அஞ்சனாவதி.]

அஞ்சனி

அஞ்சனி añjaṉi, பெ. (n.)

   1. நாணற்புல்; a sweet grass, Saccharum Spontaneum.

   2. காயா அல்லது காசா; ironwood tree, Memecylon edule.

   3. கருங்குவளை; blue-water lilly, Pontederia alias Nymphoca stellata.

   4. வறட்சுண்டி; a bitter plant-Aristolochia bracteata (சா.அக.);.

அஞ்சனிகா

அஞ்சனிகா añjaṉikā, பெ. (n.)

   1. ஒரு வகைக் கரும் பல்லி; a kind of black lizard.

   2. ஒரு வகை நீலச் சுண்டெலி; a small blue mouse (சா.அக.);.

அஞ்சனை

அஞ்சனை añjaṉai, பெ. (n.)

   1. அனுமானுடைய தாய் (கம்பரா. நட்புக். 28.);; name of the mother of Hanuman

   2. வடதிசைப் பெண் யானை (வின்.);; name of the female elephant of the north, mate of Särvapaumam.

     [Skt. anjana → த. அஞ்சனை.]

அஞ்சனைசாபிதா

 அஞ்சனைசாபிதா añjaṉaicāpitā, பெ. (n.)

   புள்ளிக்கணக்கு (C.G.);; list or account of an estimate of the probable out-turn of standing crops.

     [U. ancena + japita → த. அஞ்சனைசாபிதா.]

அஞ்சன்

அஞ்சன்1 añjaṉ, பெ. (n.)

   1. காமன் (மன்மதன்);; Kaman.

   2. திருமால்; Visnu.

   3. பொறாமை யில்லாதவன்; one who is not envious.

   4. தலைவன்; person of eminence.

   5. வள்ளன்மையுடைய அரசன்; munificent king.

   6. பரம்பொருள்; the supreme being.

     [Skt. hamsa → த. அஞ்சன்.]

 அஞ்சன்2 añjaṉ, பெ. (n.)

   1. நால்வகைத் துறவியர்களுள் கடுமையான நோன்பு மேற்கொண்டு, தூயவிடங்களில் வாழும் ஒருவகைத் துறவி; a kind of ascetic.

     “சீரஞ்சன் கமண்டலம்” (சூத. ஞான. 6, 7);.

   2. நான்முகன் (சூத. எக்கிய உத். பிரம. 2, 15);; Brahman.

   3. பன்னிரு ஆதித்தவரில் ஒருவர் (கூர்மபு. ஆதவர்சிறப். 2.);; a deity representing the sun, one of the tuvadasaittar, q.v.

     [Skt. hamsa → த. அஞ்சன்.]

அஞ்சபாடாணம்

 அஞ்சபாடாணம் añjapāṭāṇam, பெ. (n.)

   பிறவிநஞ்சு வகை (பரி.அக.);; a mineral poison.

     [Skt. anjana + pasana → த. அஞ்சபாடாணம்.]

அஞ்சபாதம்

அஞ்சபாதம்1 añjapātam, பெ. (n.)

   1. (அன்னம்); புள்ளின் அடி; foot of the swan.

   2. புள்ளடிக் குறி; caret mark.

     [அஞ்ச(ம்); + பாதம்.]

     [Skt. hamsa → த. அஞ்ச(ம்);.]

படி → பதி = பதிவு. பதி → பதம் → பாதம் → Skt. pada.

 அஞ்சபாதம்2 añjapātam, பெ. (n.)

   சாதிலிங்கம்; bisulphate or red sulphate of mercury or cinnabar-Vermilion (சா.அக.);.

அஞ்சப்படு-தல்

அஞ்சப்படு-தல் añjappaḍudal, செயப். வி. (pass. v.)

   மதிக்கப்படுதல் ; to be respected, esteemed.

     “அலரேந்தி அஞ்சலிசெய் தஞ்சப் படுவான்” (சீவக. 1610);.

அஞ்சமிருகல்

 அஞ்சமிருகல் añjamirugal, பெ. (n.)

   சிற்றரத்தை ; Chinese galangal, Alpinia officinarum (சா.அக.);.

அஞ்சம்

அஞ்சம்1 añjam, பெ. (n.)

   1. வெள்ளையெருது; white bull.

   2. உயிர்வளி; piranan, one of the vital airs of the body.

     [Skt. hamsa → த. அஞ்சம்.]

 அஞ்சம்2 añjam, பெ. (n.)

   1. துறவறம் நான்கனுள் ஒன்று; kind of asceticism.

     ‘குடீசகம் பகூதக மஞ்சம்” (சூத.ஞான. 2.);.

   2. மறைமொழிவகை; hamsa mantra.

     “காயத்திரியதனி னதிக மஞ்சமா மந்திரம்” (காஞ்சிப்பு. திருவேக. 28.);.

     [Skt. hamsa → த. அஞ்சம்.]

 அஞ்சம்3 añjam, பெ. (n.)

   உரிமைப்பங்கு; share, portion.

     [Skt. amsa → த. அஞ்சம்.]

 அஞ்சம்4 añjam, பெ. (n.)

   1. அன்னப்பறவை; bird capable of separating water from milk.

   2. அசபை பார்க்க;see asabai (சா.அக.);.

 Skt. harmsa → த. அஞ்சம்.]

அஞ்சராகம்

 அஞ்சராகம் añjarākam, பெ. (n.)

   மஞ்சள் ; turmeric (சா.அக.);.

அஞ்சறைப்பெட்டி

 அஞ்சறைப்பெட்டி añjaṟaippeṭṭi, பெ. (n.)

   மஞ்சள், மிளகு முதலிய கறிச்சரக்குகள் வைப்பதற்குரிய ஐந்தறையுள்ள மரப்பெட்டி ; a spice box made of wood with five compartments.

     [ஐந்து → அஞ்சு + அறை + பெட்டி.]

     [P]

அஞ்சலப்பெட்டி, அஞ்சனப்பெட்டி, அஞ்சாரப்பெட்டி யென்னும் வடிவங்கள் கொச்சையாதலின் கொள்ளத்தக்கனவல்ல.

அஞ்சற்கடிதம்

 அஞ்சற்கடிதம் añjaṟkaḍidam, பெ. (n.)

   மடல்; letter by post.

அஞ்சல் மடல் பார்க்க ;see ańjal-madal.

     [அஞ்சல் + கடிதம்.]

அஞ்சற்கட்டு

 அஞ்சற்கட்டு añjaṟkaṭṭu, பெ. (n.)

அஞ்சற்பை பார்க்க ;see añjar-pai.

     [அஞ்சல் + கட்டு ]

அஞ்சற்காரன்

 அஞ்சற்காரன் añjaṟkāraṉ, பெ. (n.)

   அஞ்சற் கடிதம், கட்டு முதலியன கொண்டுவந்து கொடுப்பவன் ; a post or courier, post-runner, post-man.

ம. அஞ்சல்காரன்; க. அஞ்செதார, தெ. அஞ்செகாடு.

     [அஞ்சல் + காரன்.]

அஞ்சற்குளச்சி

 அஞ்சற்குளச்சி añjaṟkuḷacci, பெ. (n.)

அஞ்சற் குழற்சி பார்க்க ;see afjar-kularci.

அஞ்சற்குழற்சி

அஞ்சற்குழற்சி añjaṟkuḻṟci, பெ. (n.)

   32 வகைச் செயற்கை நஞ்சுகளுள் ஒன்று (குங்கும பாடாணம்);; one of the 32 kinds of processed arsenic preparations (சா.அக.);.

அஞ்சற்சான்று

 அஞ்சற்சான்று añjaṟcāṉṟu, பெ. (n.)

   அஞ்சல் வழி மடல் அனுப்பியதற்கான சான்று; certificate of posting.

     [அஞ்சல் + சான்று.]

அஞ்சற்பணவிடை

 அஞ்சற்பணவிடை añjaṟpaṇaviḍai, பெ. (n.)

   அஞ்சல்வழிப் பணம் அனுப்புதல்; money-order, sending money by post.

     [அஞ்சல் + பணம் + விடை. விடு → விடை.]

அஞ்சற்பணவிடைத்தாள்

 அஞ்சற்பணவிடைத்தாள் añjaṟpaṇaviḍaittāḷ, பெ. (n.)

   அஞ்சல்வழிப் பணம் அனுப்புதற்குரிய படிவம் ; money-order form.

     [அஞ்சல் + பணம் + விடை + தாள்.]

அஞ்சற்பற்றுச்சீட்டு

 அஞ்சற்பற்றுச்சீட்டு añjaṟpaṟṟuccīṭṭu, பெ. (n.)

   அஞ்சல்வழிப் பணம் அனுப்பியதற்கான பற்றுச்சீட்டு ; money-order receipt.

     [அஞ்சல் + பற்று + சீட்டு.]

அஞ்சற்பிரிப்பு

 அஞ்சற்பிரிப்பு añjaṟpirippu, பெ. (n.)

   மடல்கள் சென்று சேரவேண்டிய இடங்களுக்கு ஏற்பப் பிரித்து ஒழுங்குபடுத்தப்படுதல்; sorting of the letters.

     [அஞ்சல் + பிரிப்பு.]

அஞ்சற்பெட்டி

 அஞ்சற்பெட்டி añjaṟpeṭṭi, பெ. (n.)

அஞ்சல் போடும் பெட்டி,

 post-box.

     [அஞ்சல் + பெட்டி..]

     [P]

அஞ்சற்பை

 அஞ்சற்பை añjaṟpai, பெ. (n.)

   மடல்களை இட்டுக் கட்டும் பை; postal bag.

     [அஞ்சல் + பை.]

அஞ்சற்றலை

 அஞ்சற்றலை añjaṟṟalai, பெ. (n.)

   மடல்களுக்கு ஒட்டப்படும் அஞ்சல் வில்லை; postal stamp.

     [அஞ்சல் + தலை.]

அஞ்சலகம்

 அஞ்சலகம் añjalagam, பெ. (n.)

   அஞ்சல் நிலையம் ; post-office.

     [அஞ்சல் + அகம்.]

அஞ்சலகர்

 அஞ்சலகர் añjalagar, பெ. (n.)

   அஞ்சல் நிலைய அதிகாரி ; postmaster.

அஞ்சலகுஞ்சம்

 அஞ்சலகுஞ்சம் añcalakuñcam, பெ. (n.)

   கோலிகுண்டு; play ball of glass.

     “அஞ்சல குஞ்சம்”.

அஞ்சலட்டை

 அஞ்சலட்டை añjalaṭṭai, பெ. (n.)

மடலட்டை,

 post-card.

     [அஞ்சல் + அட்டை.]

அஞ்சலம்

அஞ்சலம் añjalam, பெ. (n.)

   1. சீலையின் ஒரம்; edge of a cloth (சா.அக.);.

   2. வாளுறை ; sheath of a sword (சங்.அக.);.

ம. அஞ்சலம் ; க. அஞ்சல ; தெ. அஞ்சலமு.

அஞ்சலர்

அஞ்சலர் añjalar, பெ. (n.)

   பகைவர் ; enemies.

     “அஞ்சலர் தனிப்போ ரேறே” (நல். பாரத. ஆரணிய. மார்க். 245);.

அஞ்சலளி-த்தல்

அஞ்சலளி-த்தல் añjalaḷittal,    4 செ.கு.வி. (v.i.)

அஞ்சல்தா-தல் பார்க்க; see artial-ia.

     [அஞ்சல் + அளி.]

அஞ்சலா

அஞ்சலா añjalā, பெ. (n.)

   1. காமமுள்ள; lustful (சா. அக.);.

   2. வலுவுள்ள; strong (சா.அக.);.

அஞ்சலாதிறை

 அஞ்சலாதிறை añjalātiṟai, பெ. (n.)

   ஒரு மூலிகை (சீவக மூலி); ; a kind of drug, Indian coccinia, Cephalandra indica (சா.அக.);.

அஞ்சலி

அஞ்சலி añjali, பெ. (n.)

   1. வெளவால்வகை; a kind of bat (R.);.

   2. வண்டுவகை ; a kind of beetle (சிந்தா.நி.64.);.

 அஞ்சலி añjali, பெ. (n.)

   நான்கு பலம்; a measure of weight = 4 palams.

     “சுழலடி யஞ்சலி யைந்து” (தைலவ. தைல. 54);.

ம. அஞ்சான்; க. அஞ்சலி,

 அஞ்சலி añjali, பெ. (n.)

   ஒருவகை அம்பு; a kind of arrow.

     “அஞ்சலி யஞ்சுகோடி தொடுத்திக லரக்க னெய்தான்” (கம்பரா. யுத்த. நாகபா. 113);.

ம. அஞ்சலிகம்

 அஞ்சலி añjali, பெ. (n.)

   வணக்கம், வணங்குதல் ; worship.

     [அங்கு → அஞ்சு → அஞ்சலி. அங்குதல் = வளைதல், வணங்குதல்.]

 அஞ்சலி añcali, பெ. (n.)

   இரட்டைக் கை முத்திரைகளில் ஒன்று; one of the two hand impression.

அஞ்சலி காரிகை

அஞ்சலி காரிகை añjaligārigai, பெ. (n.)

   1. ஒரு பூண்டுவகை (சங்.அக.); ; a kind of herb or shrub.

   2. தொட்டாற் சுருங்கி ; the sensitive plant, Mimosa pudica.

ம, தெ. அஞ்சலிகாரிக; க. அஞ்சலிகாரிகெ.

அஞ்சலி முத்திரை

 அஞ்சலி முத்திரை añjalimuttirai, பெ. (n.)

   அஞ்சலி செய்யும் கைக்குறி; hand-pose in worship.

     ‘அஞ்சலி வணக்கம் ஆருக்கும் நன்மை’ (பழ.);.

அஞ்சலி.

அஞ்சலி. añjali, பெ. (n.)

   1. ஆடுதின்னாப் பாலை (சங்.அக.); ; a worm-killer, Aristolochia bracteata.

   2. காட்டுப் பலா (காட்டுப் பிலவு);; jungle jack, Artocarpus hirsuta.

   3. தாழை ; fragrant screw pine, Pandanus odoratissimus (சா.அக.);.

   4. மாவிலிங்க மரம்; lingam tree, Crataeva religiosa (சங்.அக.);.

   5. வறட்சுண்டி ; floating sensitive-plant, Mimosa triqueira (W.);.

   6. சங்கங் குப்பி ; smooth volkameria (W.);.

   7. வண்டுகொல்லி ; cassia alata (alasa); (சா.அக.);.

தெ. அஞ்சலிக

அஞ்சலிஅத்தம்

 அஞ்சலிஅத்தம் añcaliattam, பெ. (n.)

   சிற்பங்களில் காணப்பெறும் ஒரு வகையான திருக்கரம்; a type of hand seen in the icon statues.

     [அஞ்சலி+அத்தம்]

அஞ்சலிகை

 அஞ்சலிகை añjaligai, பெ. (n.)

   வெளவால் வகை ; a kind of bat (R.);.

அஞ்சலிக்கை

 அஞ்சலிக்கை añjalikkai, பெ. (n.)

     ‘அஞ்சலி யென்ப தறிவுறக் கிளப்பின்

எஞ்ச லின்றி இருகையும் பதாகையாய்

வந்தகம் பொருந்து மாட்சித் தென்றனர்

அந்தமில் காட்சி யறிந்திசி னோரே”

     [P]

     [அஞ்சலி + கை. அஞ்சு → அஞ்சல் → அஞ்சலி.]

அஞ்சலித்தட்டு

அஞ்சலித்தட்டு añcalittaṭṭu, பெ. (n.)

   கும்மி நடனத்தில் கைகளைத் தட்டும் முறை. (2:107);; method of clapping in the kummi dance.

     [அஞ்சலி+தட்டு]

அஞ்சலினவர்

அஞ்சலினவர் añjaliṉavar, பெ. (n.)

   பாஞ்சராத் திரிகள் என்னும் மாலிய (வைணவ); வகுப்பினர்; Vaisnavās of the Pāficarātra sect.

     “அஞ்ச லினவர் புகழண்ணல்” (கந்தபு. திருவவ. 62);.

     [வ. பஞ்சம் = ஐந்து ராத்ரி = இரவு. பாஞ்ச ராத்திரம் (பாஞ்சராத்ர); = ஐயிரவிற் சொல்லப்பட்ட மாலியத் தொழுமறை (ஆகமம்);. பாஞ்ச ராத்திரத்தைக் கடைப்பிடிக்கும் மாலியர் பாஞ்சராத்திரிகள் அல்லது பாஞ்சராத்திரிகர் எனப்பட்டனர். இப் பெயரின் தமிழ் மொழி. பெயர்ப்பு ‘அஞ்சலினவர்’.

அஞ்சு = ஐந்து. அல் = இரவு. அஞ்சு + அல் + இன் + அவர் – அஞ்சலினவர் (பாஞ்ச ராத்திரிகள்);. ‘இன்’ சாரியை, “அவர்” ப.பா. ஈறு.].

அஞ்சலிப்பாலை

 அஞ்சலிப்பாலை añjalippālai, பெ. (n.)

ஆடு தின்னாப் பாலை பார்க்க;see diu-tima-ppalai.

அஞ்சலுறை

 அஞ்சலுறை añjaluṟai, பெ. (n.)

   மடலை (கடிதம்); உள்ளே வைத்து ஒட்டி அஞ்சலில் அனுப்ப உதவும் மேலுறை ; postal envelope.

     [அஞ்சல் + உறை.]

அஞ்சலொட்டகம்

 அஞ்சலொட்டகம் añjaloṭṭagam, பெ. (n.)

   அஞ்சல் சுமந்து செல்லும் ஒட்டகம்; camel carrying mail bags (R.);.

     [அஞ்சல் + ஒட்டகம்.]

அஞ்சலோமசம்

 அஞ்சலோமசம் añsalōmasam, பெ. (n.)

   அன்னபேதி; green vitriol, iron sulphate (சா.அக.);.

அஞ்சல்

அஞ்சல் añjal, பெ. (n.)

   சாலைக் கடத்தத்தில்;   குறிக்கப்பட்ட இடந்தொறும் வண்டிக்காளை அல்லது சுமையாள் மாற்றப்படும் ஏற்பாடு; relay.

     “ஒலைபிடித்தஞ்சலிலே யோடி” (பணவிடு. 281);.

   2. வழிப்போக்கில் தங்கும் இடம் ; resting place on a journey.

   3. மடல், கடித அஞ்சல் ; letter-post.

   ம, து. அஞ்சல்; க., தெ. அஞ்செ மரா. அஞ்சீ ; Gk. aggelos, a messenger; LL. angelus; OE. engel; E. angel, a divine messenger.

     [ஒருகா. அச்சல் → அஞ்சல்.]

   அச்சலச்சலாய் மழை பெய்கிறது = பாட்டம் பாட்டமாய் மழை பெய்கிறது; It rains repeatedly or successively shower after shower.

பாட்டம் – a batch of clouds.

நளி (கார்த்திகை); மாதத்திற் பாட்டம் பாட்டமாய் முகிற்கூட்டம் வந்து மழை பொழிவது மரபு. அஞ்சல் ஒருவகையில் பகுதிபகுதியாய் வரும் முகிற் கூட்டத்தை ஒத்திருத்தலால், அப் பெயர் பெற்றதுபோலும்.

 அஞ்சல் añjal, பெ. (n.)

   1. தோல்வி (பிங்.);; defeat.

   2. சோம்பல் (திவா.);; laziness, sloth.

 அஞ்சல் añjal, பெ. (n.)

   மனோசிலை; realgar, a mineral poison, Arsenicum bisulphuretum (சா.அக.);.

 அஞ்சல் añcal, பெ. (n.)

   வேகம்; speed

     “போய்விட்டு இப்போ ஒரு அஞ்சல்ல திரும்பிவிடுவேன்.” (வ.சொ.அக.);.

     [அச்சல்+அஞ்சல்]

அஞ்சல் எடுத்தல்

 அஞ்சல் எடுத்தல் añjaleḍuttal, பெ. (n.)

   அஞ்சற்பெட்டியில் சேர்ந்த மடல்களை எடுத்தல் ; letter-box clearance.

அஞ்சல் ஏவம்

 அஞ்சல் ஏவம் añjalēvam, பெ. (n.)

   அஞ்சலகப் பணமதிப்புத் தாள் ; postal-order.

அஞ்சல் செய்தல்

அஞ்சல் செய்தல் añjalceytal, பெ. (n.)

   1. அஞ்சற்பெட்டியில் மடலைப் போடுதல்; to post a letter.

   2. வானொலி, தொலைக்காட்சி நிலையங்களிலிருந்து பெறும் நிகழ்ச்சிகளை மறு ஒலி/ ஒளி பரப்புதல் ; relaying the broadcast or transmission received from other Radio and T.V. stations.

அஞ்சல் நிலையம்

அஞ்சல் நிலையம் añjalnilaiyam, பெ. (n.)

   1. அஞ்சற் பணியாற்றும் அலுவலகம் ; post-office.

   2. வானொலி/தொலைக்காட்சி ஒலி/ ஒளி பரப்புகளைப் பெற்று மறு ஒலி/ஒளி பரப்புச் செய்யும் நிலையம் ; a relay station for Radio and Television transmissions.

அஞ்சல் வண்டி

 அஞ்சல் வண்டி añjalvaṇṭi, பெ. (n.)

   அஞ்சலிற்குப் பயன்படுத்தப்படும் வண்டி (தபால் வண்டி);; stage-coach.

அஞ்சல்தா-தல் (தருதல்)

அஞ்சல்தா-தல் (தருதல்) añjaldādaldarudal,    18 செ.கு.வி. (v.i.)

   அடைக்கலந்தருதல் ; to give or assure protection, as saying “Fear not”.

     “அடைக்கலங்கொண் டஞ்சல்தந்து” (தேசிகப். 3 ;9);.

அஞ்சல்துறை

 அஞ்சல்துறை añjaltuṟai, பெ. (n.)

   அஞ்சல் தொடர்பான பணிகளில் ஈடுபட்டுள்ள துறை; postal department.

அஞ்சல்நாடி

 அஞ்சல்நாடி añjalnāṭi, பெ. (n.)

   விட்டு விட்டு அல்லது இடைவிட்டு அடிக்கும் நாடி; intermittent pulse (சா.அக.);.

அஞ்சல்பரப்பு-தல்

அஞ்சல்பரப்பு-தல் añjalparappudal,    5 செ. குன்றாவி, (v.t)

   மறு ஒலி / ஒளி பரப்புதல்; relaying the broadcast or transmission received from other Radio and Television stations.

அஞ்சல்மடல்

 அஞ்சல்மடல் añjalmaḍal, பெ. (n.)

   அஞ்சல்வழி அனுப்பப்படும் மடல் (கடிதம்); ; a letter bypost.

அஞ்சல்மாடு

 அஞ்சல்மாடு añjalmāṭu, பெ. (n.)

   அஞ்சல் வண்டிக்குக் கட்டப்படும் காளை; relay of bullocks, as in journey by stage.

அஞ்சல்வண்டிக்காளை

 அஞ்சல்வண்டிக்காளை añjalvaṇṭikkāḷai, பெ. (n.)

அஞ்சல்மாடு பார்க்க ;see afijal-madu.

அஞ்சல்வழங்கு-தல்

அஞ்சல்வழங்கு-தல் añjalvaḻṅgudal,    5 செ. குன்றாவி. (v.t.)

   அஞ்சலில் வந்த மடல்களை உரியவர்களுக்குக் கொண்டுபோய்க் கொடுத்தல் ; delivery of letters from the post-office.

அஞ்சல்வழிக்கல்வி

 அஞ்சல்வழிக்கல்வி añjalvaḻikkalvi, பெ. (n.)

   அஞ்சல்வழிப் பாடங்களை அனுப்பிக் கற்பிக்கும் கல்விமுறை ; education system by sending lessons by post, postal tuition.

     [அஞ்சல் + வழி + கல்வி.]

அஞ்சல்விடை

 அஞ்சல்விடை añjalviḍai, பெ. (n.)

   மறுமொழி விடுக்க உதவும் இரட்டை அஞ்சலட்டை; reply card.

அஞ்சவத்தை

அஞ்சவத்தை añjavattai, பெ. (n.)

     “ஆன்மாத் தங்கிய வஞ்சவத்தை” (சிவப்பிர. 51);.

     [த. அஞ்சு. Skt, avastha → த. அவத்தை = நிலை. அஞ்சவத்தை (இ.பி.);.]

அஞ்சாங்கல்

 அஞ்சாங்கல் añcāṅkal, பெ. (n.)

   சிறுவர் விளையாடும் ஒரு வகை விளையாட்டு; a type of game played by children. (கொ.வ.வ.சொ.);.

     [ஐந்து-அஞ்சு+அம்+கல்]

அஞ்சாங்காய்ச்சலுப்பு

 அஞ்சாங்காய்ச்சலுப்பு añjāṅgāyccaluppu, பெ. (n.)

   தமிழ் (சித்த); மருத்துவ முறைப்படி ஐந்துதரங் காய்ச்சித் துப்புரவு செய்த ஒருவகை வெடியுப்பு ; a kind of salt, boiled and purified five times according to the special process laid down in Tamil (Siddhas); medical science.

     [ஐந்தாம் → அஞ்சாம் + காய்ச்சல் + உப்பு.]

அஞ்சாங்குலத்தான்

அஞ்சாங்குலத்தான் añjāṅgulattāṉ, பெ. (n.)

   நால் வரணத்திற்கும் அப்பாற்பட்ட ஐந்தாங் குலத்தான் (பஞ்சமன்); எனப்பட்டவன்; one belonging to the 5th caste.

     [ஐந்தாம் → அஞ்சாம் + குலத்தான் – அஞ்சாங் குலத்தான்.]

அஞ்சாச்சிறப்பு

அஞ்சாச்சிறப்பு añjācciṟappu, பெ. (n.)

   வாகைத் திணை வேறுபாடுகளுள் ஒன்றான ‘சான்றோர் பக்கம்’ ; theme describing the nobility of great men.

     ‘சான்றோர் பக்கமாவது, பகைவர்கண்ணுந் தன்பாலார் கண்ணு மொப்புமையாகப் பாசறையுள்ளாச் தால்புடைமை கூறுதல் ‘அஞ்சாச் சிறப்பென் பதுமது’ (வீரசோ. பொருட். 19, உரை);.

     [அஞ்சாத → அஞ்சா (ஈ.கெ.எ.ம.பெ.எ.); + சிறப்பு.]

அஞ்சாடுதல்

அஞ்சாடுதல் añcāṭutal, பெ. (n.)

   கருவுற்ற பெண்ணுக்கு 5ஆவது மாத்தில் நடைபெறும் சீர்; presentation given to pregnant lady in the fifth month of her pregnancy.

     (கொ.வ.வ.சொ.3.);

     [ஐந்து-அஞ்சு+ஆடு]

அஞ்சாணிமூலி

 அஞ்சாணிமூலி añjāṇimūli, பெ. (n.)

அச்சாணிமூலி பார்க்க;see accali-mil.

அஞ்சானனன்

 அஞ்சானனன் añjāṉaṉaṉ, பெ. (n.)

   ஐந்து முகமுள்ள சிவன் ; Siva, as having five faces.

     [ஐந்து → அஞ்சு. Skt, anana → த. ஆனனம் = முகம். ஆனனம் → ஆனனன் = முகன். அஞ்சு + ஆனனன் – அஞ்சானனன்.]

அஞ்சானனம்

 அஞ்சானனம் añjāṉaṉam, பெ. (n.)

   அஞ்சா முகம் ; lion, as a fearless animal, fearless face.

அஞ்சாப்பட்டயம்

அஞ்சாப்பட்டயம் añjāppaṭṭayam, பெ. (n.)

   1. பகைவனுக்குத் தப்பிப் புகலடைந்தவனுக்கு அரசன் தரும் அடைக்கலப் பட்டயம் (யாழ்ப்.);; writ of authority granting refuge or protection.

   2. குற்றத்தாலிழந்த வுரிமைகளை மீளப் பெறுவதற்கு அரசன் அளிக்கும் குடியுரிமைப் பட்டயம் (யாழ்ப்ப.); ; royal certificate, formerly inscribed on metal, clearing a person from a charge of guilt and re-establishing his or her rights as a citizen.

   3. பிறர் கொடுமை செய்யாவாறு அரசன் அளிக்கும் காப்புறுதிப் பட்டயம் (யாழ்ப்.); ; writ of authority as security against oppression and ill-treatment by others (J.);.

     [அஞ்சாத → அஞ்சா (ஈ.கெ.எ.ம.பெ.எ.); + பட்டயம்.]

அஞ்சாமடை

 அஞ்சாமடை añcāmaṭai, பெ. (n.)

   பரமக்குடி வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Paramagudi Taluk.

     [ஐந்தாம்-அஞ்சாம்+மடை]

அஞ்சாமை

அஞ்சாமை añjāmai, பெ. (n.)

   அரசன் வினை செய்ய அச்சமுறாமை; fearlessness, as a kingly character.

     “அஞ்சாமை யீகை யறிவூக்க மிந்நான்கும்

எஞ்சாமை வேந்தற் கியல்பு” (குறள், 382);.

அஞ்சாலி

அஞ்சாலி añjāli, பெ. (n.)

   பழைய வரிவகை (T.A.S. v., 218);; an ancient petty cess.

     [ஒருகா. அஞ்சு + ஆலி. ஐந்து → அஞ்சு. அகல் = ஒரு முகத்தல் அளவு. அகல் → ஆல் → ஆலி = அகலளவு நெல், அஞ்சாலி = ஐந்தகல் நெல்.]

 அஞ்சாலி añcāli, பெ. (n.)

   எழுத்து மூலமான ஒப்புதல்; a written agreement.

     “பொறியாரையும் ஊராரையும் வளைச்சு அஞ்சாலி எழுதிப் படிப்பிச்சுக் கடமையுங் கொண்டு” (TAS, III, p. 59-63.);.

     [அஞ்சல்-அஞ்சாலி]

அஞ்சாலிகள்

 அஞ்சாலிகள் añjāligaḷ, பெ. (n.)

   நில வருமானத்தில் ஐந்திலொரு பங்கை மட்டும் வைத்துக் கொண்டு நான்கு பங்கை அரசனுக்குக் கொடுக்கும்படி வற்புறுத்தப்பட்ட உழுகுடிகள் (இராட்.);; cultivators who were entitled to only one-fifth of the produce of their cultivation, the remainder being compulsorily paid to the king (R.);.

     [ஒருகா, ஐந்திலோன்று சாலி = நில வருமானத்தில் அல்லது விளைச்சலில் ஐந்திலொரு பங்கையுடையவன். சாலுதல் – பொருந்துதல், உடைமை கொள்ளுதல். சால் → சாலி = உடைய – வன் – வள் – து.]

அஞ்சாலியிடையர்

 அஞ்சாலியிடையர் añjāliyiḍaiyar, பெ. (n.)

   மணமான பெண்கள் மங்கல அணியாக ஐந்தாலியணியும் இடையர் வகுப்பார் (வின்.);; herdsmen of a particular sub-caste whose women wear tali, with five jewels.

ம. அஞ்சாலி இடையர்

     [ஐ = ஐந்து. ஐ + தாலி + இடையர் – ஐந்தாலியிடையர் → அஞ்சாலியிடையர்.]

அஞ்சாவிரா

 அஞ்சாவிரா añjāvirā, பெ. (n.)

   கருங்குமிழ்; heart-leaved bell vervein, Gmelina arborea (சா.அக.);.

அஞ்சி

அஞ்சி añji, பெ. (n.)

   கடையெழு வள்ளல்களுள் ஒருவனான அதியமான் (அதிகமான்); அஞ்சி (புறநா.91;4);; Adiyaman Añji, a munificent chief of the Sangam age.

ம. அஞ்சி

     [ஒருகா, அச்சன் → அச்சி → அஞ்சி.]

 அஞ்சி añji, பெ. (n.)

   அஞ்சல் ; letter by post.

அஞ்சியில் பணம் வந்தது (உ.வ.);.

க. அஞ்செ தெ. அஞ்சிய, து. அஞ்சல்; மரா. அஞ்சீ.

 அஞ்சி añji, பெ. (n.)

   அஞ்சுபவன் ; coward.

     “அஞ்சி அஞ்சி வாழ்வதைவிட அஞ்சாமற் சாவதே மேல்”,

     ‘அஞ்சி ஆண்மை செய்ய வேணும்’,

     ‘அஞ்சினவனைக் குஞ்சும் விரட்டும்’ (பழ.);.

க. அஞ்சுகுளி

 அஞ்சி añci, பெ. (n.)

   1. குறுநில மன்னனைக் குறித்த பெயர்; name of a chieffain

   2. அதியமான்மரபினன்;  name of Adiyaman clan of chera dynasty.

ம.அஞ்சி-படைத் தலைவன்.க.அன்சு

     [அஞ்சல்- பிரிப்பு. அஞ்சி-குறு நிலப் பகுதிக்கு (தன் பங்குக்கு);த்தலைவன்.]

இராவணன் தம்பி வீடணனின் பெயரும் அஞ்சி என்பர். அஞ்சுபவன் எனத்தவறாகப் பொருள் கொண்டதால் வடமொழியில் விபிஷனன் எனப்பெயரிடடனர்.

அஞ்சி-த்தல்

அஞ்சி-த்தல் añjittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   தலை வணங்குதல்; to reverence, worship.

     “அஞ்சித்தல் சொற்ற பூசனை யடைவுமாம்” (காஞ்சிப்பு.திருவே. 36.);.

     [Skt. anc → த. அஞ்சி-.]

அஞ்சிஅஃதைமகள் நாகையார்

 அஞ்சிஅஃதைமகள் நாகையார்பெ. (n.)    பெண்பாற் புலவரின் பெயர்; name of a Tamil poetess.

ம.அஞ்சி. க.அன்சு. (அஞ்சு); பங்கு பிரிவு.

     [அஞ்சி (குறுநிலத் தலைவன்);அஃதை+மகள்+நாகை+ஆர்]

அஞ்சு எனும் சொல் பங்கு எனப் பொருள்படுதலால் தனக்குத் தரப்பட்ட பங்காகிய நிலப்பகுதியின் குறுநிலமன்னன் எனப்பொருள் படுகிறது.

அஞ்சிகம்

 அஞ்சிகம் añjigam, பெ. (n.)

   கண்; eye.

     “பொய்த்தொரு அஞ்சிகத்தி லிட்டு நன்றாய்ப் பொருந்தியே நீபார்க்கில் திறக்கும் தூசு” (கருவூ. குருநூல்);.

தெ. அஞ்சிகமு

அஞ்சிக்கை

 அஞ்சிக்கை añjikkai, பெ. (n.)

   அச்சம் ; fear.

ம. அஞ்சல்; க. அஞ்சிகெ, தெ. அஞ்சிக, அச்சிகமு; து. அஞ்சிகெ; துட. ஒசிக் கோத, கொலா. அஞ்சல்க் கூ. அச குவி. அச்சலி, பிரா. தீசிங்.

அஞ்சிதபதம்

அஞ்சிதபதம் añjidabadam, பெ. (n.)

   குதிங்காலை யூன்றிப் பாதத்தை மேனோக்கி வைத்து நிற்கை (பரத. பாவ. 83.);;     [அஞ்சித + பதம்.]

     [Skt. ancita → த. அஞ்சிதம்.]

பதி → பதம் → Skt. pada.

அஞ்சிதபத்திரி

 அஞ்சிதபத்திரி añjidabaddiri, பெ. (n.)

   வளைந்த இலைகளுள்ள ஒருவகைத் தாமரை; a lotus with curved leaves (சா.அக.);.

அஞ்சிதமுகம்

 அஞ்சிதமுகம் añjidamugam, பெ. (n.)

   வருத்த மாற்றாது இருதோண் மேற் றலைசாய்க்கை (வின்.);;     [அஞ்சிதம் + முகம்.]

     [Skt. anjita → த. அஞ்சித(ம்);.]

     [முகம் → Skt. mukha.]

அஞ்சிதம்

 அஞ்சிதம் añcitam, பெ. (n.)

   தெருக்கூத்தில் கதை மாந்தர்களாய் பிரிந்து ஒதுங்கி நிற்கும் நிலை; allotted position of characters in street drama.

     [அஞ்சு – அஞ்சிதம்]

அஞ்சினான் புகலிடம்

அஞ்சினான் புகலிடம் añjiṉāṉpugaliḍam, பெ. (n.)

   கைவருக்கஞ்சினார் அடைக்கலம் புகுமிடம்; refuge for the terrified, asylum for the timid (T.A.S. iv, 98);.

     [அஞ்சினான் + புகல் + இடம்.]

அஞ்சினி

அஞ்சினி añjiṉi, பெ. (n.)

   1. ஐந்தாம் மாதம்; fifth month.

   2. ஐந்து மாதச் சூலி (கருப்பிணி);; a woman with five months of pregnancy.

     [அஞ்சு + இனி (பெ.பா. ஈறு); – அஞ்சினி.

ஒ.நோ. பாடி → பாடினி.]

அஞ்சிமூலம்

அஞ்சிமூலம் añjimūlam, பெ. (n.)

   பழைய வரி வகை (T.A.S. iii, 216);; an ancient tax.

     [ஒருகா. அஞ்சுமூலம்.]

அஞ்சியத்தைமகள்நாகையார்,

 அஞ்சியத்தைமகள்நாகையார், añciyattaimakaḷnākaiyār, பெ. (n.)

   பெண்பாலார் புலவர்; woman poet.

     [அஞ்சி+அத்தை+மகள்+நாகையார்]

நாகை என்பது இவளுடைய பெயர். தகடூர்அதிகமான்அரசர்களில் அஞ்சி என்னும்அரசன் ஒருவனின் அத்தை மகள்.

அஞ்சிலேபிஞ்சிலே

 அஞ்சிலேபிஞ்சிலே añjilēpiñjilē, கு.வி.எ. (adv.)

   இளம்பருவத்தில் ; in the young age.

*அஞ்சிலே பிஞ்சிலே அடித்து வளர்க்க வேண்டும் (உ.வ.);.

     ‘அஞ்சிலே பிஞ்சிலே கொஞ்சாமல் அறுபதிற்கு மேல் கொஞ்சினானாம்’,

     ‘அஞ்சிலே பழுத்து ஆறிலே விழுந்தான்’,

     ‘அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?’ (பழ.);.

     [அஞ்சு = ஐந்து அகவை. பிஞ்சு = இளங்காய். இரு சொல்லும் இளமை குறித்து ஒரு பொருளில் வந்த மரபு இணைமொழி (idiomatic pair of words);.]

அஞ்சீரகம்

அஞ்சீரகம் añjīragam, பெ. (n.)

   1. அத்தி; fig tree, Ficus raccmosa.

   2. அத்திப் பழம்; fig fruit (சா.அக.);.

அஞ்சீரம்

 அஞ்சீரம் añjīram, பெ. (n.)

அஞ்சீரகம் பார்க்க;see anjiragam (சா.அக.);.

அஞ்சு

அஞ்சு añju, பெ. (n.)

   1. ஐந்து ; five.

     “அஞ்சு வைகலில் வகன்கிரி நண்ணி” (கந்தபு. தக்ஷ. வள்ளி. 225);.

அஞ்சுவிரலும்பட அடித்தான் (உ.வ.);.

     ‘அஞ்சுக்கு இரண்டு பழுதில்லை’,

     ‘அஞ்சுபுலன் அடங்கினால் அகிலமும் அடங்கும்’,

     ‘அஞ்சாவது பெண் கெஞ்சினாலும் கிடையாது’,

     ‘அஞ்சு காசுக்குக் குதிரையும்வேண்டும், அது ஆற்றைக் கடக்கப் பாயவும் வேண்டும்” (பழ.);.

   2. கவறாட்டத்தில் வழங்கும் ஒரு குழுஉக்குறி; acant used in dice-play.

     “அஞ்சென்பர்’ (கந்தபு. தக்ஷ. கயமுகனுற். 167);.

ம. அஞ்சு; க. அய்து, தெ. கொலா., குருக்., குரும். ஐது; து. ஐது குட. அஞ்சி, கோத. அஞ்ச்; துட. உத்; கூ. சிங்கி, கோண்டு. ஐயன், ஐகு, சையுங், பையுங், பர். சேந்து, சேவிர் (ஐவர்);; நா. ஐது, சேகுர் (ஐவர்);.

     [ ஐந்து → அஞ்சு.]

 அஞ்சு añju, பெ. (n.)

   அச்சம்; fear, terror.

     “அஞ்சுவரத்தகுந” (புறநா. 41);.

அஞ்சு சுண்ணாம்புக்குகை

 அஞ்சு சுண்ணாம்புக்குகை añsusuṇṇāmbuggugai, பெ. (n.)

   ஐந்துவகைச் சுண்ணாம்பினாற் செய்த குகை; அதாவது, கடல் நுரை, கல்லுப்பு, வெடியுப்பு, சீனக்காரம், சூடன் ஆகிய இவ்வைந்து சரக்குகளைத் தனித்தனியாக ஊதிச் சேர்த்து அரைத்து மூசை செய்து, அதற்குள் வேதைக்குண்டான உலோகங்களை அல்லது உபரசச் சத்துகளை வைத்து உருக்குங் குகை;     “வாதமஞ்சி யிதைக்கண்டால் வாயைப் பொத்தும்

வாதிக்கு மிதைவிட்டால் சுண்ணாம் பில்லை

போதவஞ்சு குகைக்குள்ளே சூதம் நீறும்

பொன்னீறும் வெள்ளிமுதல் போக்கு நீறும்

நாதமஞ்சும் உபரசங்க ளெல்லாம் நீறும்

நாதவிந்து முதல்நீறும் நாட்டில் காணே”

 A crucible made of five kinds of calcium compounds after grinding them into a paste. These compounds are derived by burning each of the following five substances into ash, viz., sea-froth, rock-salt, nitre, alum and camphor. The crucible thus prepared is capable of enduring extreme heat, even under a severe and scorching test, and this is made clear from the above stanza quoted from the Konganava’s work on alchemy (சா.அக.);.

     [ஐந்து + சுண்ணாம்பு + குகை. ஐந்து → அஞ்சு.]

அஞ்சு-தல்

அஞ்சு-தல் añjudal,    5 செ.கு.வி., 5 செ.குன்றாவி, v.i, & v.t.)

   1. வெருவுதல் (பயப்படுதல்);; to fear, dread.

     “அஞ்சுவ தஞ்சாமை பேதைமை” (குறள், 428);.

   2. மதித்தல் ; to respect, venerate.

   3. வணங்குதல் ; to worship.

ம. அஞ்சுக; க., தெ. அஞ்சு; து. அஞ்சுனி; பட அஞ்சினெ; கொலா., கொண்., கோத. அஞ்ச்; துட. ஒத்; கூ. அச பிரா. கீசிங், குவி. அத்தலி, அத்தரி, அத்தி.

     [அங்கு → அஞ்சு. அங்குதல் → அஞ்சுதல் = வளைதல், வணங்குதல், வெருவுதல். ங்கு → ஞ்சு.]

அஞ்சுகட்டிப்பூ

அஞ்சுகட்டிப்பூ añcukaṭṭippū, பெ. (n.)

   ஒரு வகை அணிகலன்; a kind of ornament.

     “அஞ்சுகட்டிப்பூப்பன்னிரண்டில்” (SII, ii, 51.);.

     [அந்த+கட்டி+பூ]

அஞ்சுகம்

அஞ்சுகம் añjugam, பெ. (n.)

   கிளி (சிந்தா.நி.);; parrot.

     [த. அம் (அழகிய); + Skt, suka → த. சுகம் = கிளி. அஞ்சுகம் (இ.பி.);.]

 அஞ்சுகம் añjugam, பெ. (n.)

   மெல்லாடை; fine cloth.

     [Skt. amsuka → த. அஞ்சுகம்.]

 அஞ்சுகம்2 añjugam, பெ. (n.)

   ஈயக்கல் (சிலாவங்கம்);; a stone containing lead or lead ore, hardened lead ore (சா.அக.);.

அஞ்சுகுளம்பாய்

அஞ்சுகுளம்பாய் añcukuḷampāy, பெ. (n.)

வடிவம் பொறித்த பாய்; (ம.வ.தொ. 67);.

 a mat with design.

     [அஞ்சுகுளம்+பாய்]

அஞ்சுகொம்பு

 அஞ்சுகொம்பு añjugombu, பெ. (n.)

ஐம்பொறி,

 the five sensory organs.

     “கப்பான அஞ்சுகொம்பில் மனந்தான் சென்று கலக்கத்தில் விழுகாதே கருத்துரன் றிப்பார்” (கொங்க. வாத காவியம்); – (சா.அக.);.

அஞ்சுங்குளிர்-தல்

அஞ்சுங்குளிர்-தல் añjuṅguḷirtal,    2.செ.கு.வி. (v.i.)

   ஐம்பொறியும் இன்பமடைதல் ; to be in ecstasy, as having all the five senses participate in the joy.

     ‘அகங்குளிர்ந்தால் அஞ்சுங்குளிரும்’ (பழ.);.

     [அஞ்சு = ஐம்பொறி (தொகைக்குறிப்பு);. குளிர்தல் = இன்பந் தருதல், இன்புறுதல், வெப்பநாட்டில் தட்பம் இன்பம் தருவதால், குளிர்ச்சி இன்பத்தைக் குறித்தது.]

அஞ்சுநீர்

அஞ்சுநீர் añjunīr, பெ. (n.)

   1. சரக்குகளைக் கட்டப் பயன்படுத்தும் ஐந்துவகை மருந்து நீர்; five kinds of liquid extracts used in medicine or in alchemy for consolidating drugs or metals that cannot stand the test of fire.

   2. ஐந்து வகைச் சரக்குகளைக் கொண்டு உருவாக்கும் ஒருவகைச் செயநீர் ; a liquid medicine prepared from a mixture of five drugs (சா.அக.);.

செயனீர் (செயல்நீர்); என்பது செயநீர் எனத் தவறாகக் குறிக்கப்பட்டது போலும்.

அஞ்சுநீறு

அஞ்சுநீறு añjunīṟu, பெ. (n.)

   1. ஐந்துவகைச் சுண்ணம் ; five kinds of calcined calcium compounds.

   2. ஐம்மாழைச் சுண்ணம் (பஞ்ச லோக பற்பம்);; a calcined product of five metals.

அஞ்சுபஞ்சலத்தார்.

அஞ்சுபஞ்சலத்தார். añjubañjalattār, பெ. (n.)

   தச்சர், கம்மியர் (கற்றச்சர்);, கொல்லர், கன்னார், தட்டார் என்னும் ஐவகைக் கொல்லர் அல்லது கம்மாளர் (I.M.P. Cg. 371);; the five artisan classes.

     [அஞ்சு கம்மாளர் → பஞ்ச கம்மாளர் → பஞ்ச கம்மாளம் → பஞ்ச கம்மாளத்தார் → பஞ்சாளத்தார் → பஞ்சலத்தார்.]

பஞ்சலத்தார் என்பது, அஞ்சு என்னும் பொருள் மறைந்து ஒரே குலப்பெயர்போல் வழங்கத் தலைப்பட்டபின், அஞ்சு என்னும் சொல்லை மிகைபடக் கூறலாக முற்சேர்க்க வேண்டியதாயிற்று. பஞ்ச என்னும் வட சொல் நிலைமொழியும், சிதைவு நிலையில் அஞ்சு என்னும் பொருள் மறைய ஒரளவு துணைசெய்தது.

பஞ்ச கம்மாளர் என்பது இருபிறப்பி (hybrid);. அரைஞாண் (நாண்); என்பது, வருஞ் சொற்பொருள் மறைந்தபின் அரைஞாண். கொடி எனப் பின்மிக்கது போல், பஞ்சலத்தார் என்பது நிலைச்சொற்பொருள் மறைந்த பின் அஞ்சு பஞ்சலத்தார் என முன்மிக்கது.

அஞ்சுபதம்

அஞ்சுபதம் añjubadam, பெ. (n.)

   சிவ வழிபாட்டு மந்திரமாகிய சிவாயநம என்னும் திரு வைந்தெழுத்து ; the five-lettered mantra ši va ya na ma, uttered in the worship of šiva.

     “அந்தியும் நண்பகலும் அஞ்சுபதம் சொல்லி” (தேவா. 7.83 ; 1);.

பதினெட்டாம்நாட் பெருக்கு என்பது பதினெட்டாம் பெருக்கு என இடைத் தொக்கது போன்று, அஞ்செழுத்துப் பதம் என்பது அஞ்சுபதம் என இடைத்தொக்கது.

     [த. ஐந்து → அஞ்சு + Skt, pada → த. பதம். அஞ்சுபதம் (இ.பி.);.]

அஞ்சுபயம்

 அஞ்சுபயம் añjubayam, பெ. (n.)

ஐந்து பயம் பார்க்க ;see aindu-payam.

அஞ்சுபுல்

 அஞ்சுபுல் añcupul, பெ. (n.)

   பழங்குடி மக்கள் கூரை வேயப்பயன்படுத்தும் புல்; a grass variety used by tribes for thatching roof.

     [அஞ்சு+புல்]

அஞ்சுப்பு

 அஞ்சுப்பு añjuppu, பெ. (n.)

ஐந்துப்பு பார்க்க ;see aind(u);-uppu.

     [ஐந்துப்பு → அஞ்சுப்பு.]

அஞ்சுமணிப்பூ

அஞ்சுமணிப்பூ añjumaṇippū, பெ. (n.)

   சாயுங் காலம் 5 மணிக்குப் பூக்கும் அந்திமந்தாரை; a flower that opens out its petals at 5 p.m.

     [ஐந்து அஞ்சு + மணி + பூ.]

அஞ்சுமான்

அஞ்சுமான் añjumāṉ, பெ. (n.)

   1. பன்னிரு இனத்தவருளொருவன் (திவா.);; a deity representing the sun, one of twelve member.

   2. சிவ தோன்றியங்களுளொன்று; an ancient Savam scripture in Sanskrit, one of 28 Sivagamam, q.v.

   3. கதிரவக் குல இளவரசன் (கூர்மபு. சூரிய. 43.);; name of the prince of the solar race.

     [Skt. amsuman → த. அஞ்சுமான்.]

அஞ்சுமாலி

 அஞ்சுமாலி añjumāli, பெ. (n.)

   கதிரவன்; the sun (சா.அக.);.

அஞ்சுமித்திரம்

 அஞ்சுமித்திரம் añjumittiram, பெ. (n.)

பஞ்சமித்திரம் பார்க்க;see panja-mittinam (சா.அக.);.

அஞ்சுமுத்திரைத்தகடு

 அஞ்சுமுத்திரைத்தகடு añjumuttiraittagaḍu, பெ. (n.)

ஐந்து முத்திரைத் தகடு பார்க்க;see aindu-muttirai-t-tagadu.

     [ஐந்து → அஞ்சு + முத்திரை + தகடு.]

 அஞ்சுமுத்திரைத்தகடு añjumuttiraittagaḍu, பெ. (n.)

   செப்புத்தாது செய்வதற்காகப் பழங்காலத்தில் பயன்படுத்தி வந்ததோர் உயர்ந்த செப்புத்தகடு; a kind of pure, thin copper plate used formerly for obtaining calcined copper known as copper aksir (சா.அக.);.

அஞ்சுமுத்துத்தாவடம்

அஞ்சுமுத்துத்தாவடம் añjumuttuttāvaḍam, பெ. (n.)

   ஐந்து முத்துவடங்கள் சேர்ந்த கழுத்தணி ; a necklace of five strings of pearls.

     ‘அஞ்சு முத்துத் தாவட மொன்றா யிருக்கு மது’ (திவ். பெரியதிரு. 1.1;5, அரும்.);.

     [ஐந்து → அஞ்சு + முத்து + தாழ்வடம் → தாவடம். வடம் = திரண்ட கொடி அல்லது கோவை.]

அஞ்சுமேனிதிரமம்

அஞ்சுமேனிதிரமம் añjumēṉidiramam, பெ. (n.)

   ஒரு பழங்காசு (M.E.R. 322 of 1923);; an ancient coin.

     [ஒருகா. திரம் (திடம், உறுதி); → திரமம்.]

அஞ்சுருக்காணியுப்பு

 அஞ்சுருக்காணியுப்பு añjurukkāṇiyuppu, பெ. (n.)

   முடியண்ட படருப்பு ; a kind of salt extracted from the human skull by a special process known only to Siddhās, and used in alchemy (சா.அக.);.

     [ஒருகா. அஞ்சு + உருக்கு + ஆணி + உப்பு.]

அஞ்சுருவாணி

அஞ்சுருவாணி añjuruvāṇi, பெ. (n.)

   தேரின் ஐந்து தட்டையும் ஊடுருவிச் செல்லும் நடு அச்சாணி ; centre-bolt binding together the five tiers of a temple car.

     “தடையற்ற தேரிலஞ் சுருவாணி போலவே தன்னிலசை யாது நிற்கும்” (தாயு. மெளன. 9);.

     ‘அஞ்சுரு ஆணியில்லாத் தேர் அசைவதரிது’ (பழ.);.

     [அஞ்சு + உருவு + ஆணி. அஞ்சு = ஐந்து தட்டு (தொகைக்குறிப்பு);.]

 அஞ்சுருவாணி añjuruvāṇi, பெ. (n.)

   1. துருசு ; copper acetate.

   2. பூநீறு ; an efflorescent salt collected in the soil of fuller’s earth (சா.அக.);.

அஞ்சுருவாணிக

 அஞ்சுருவாணிக añjuruvāṇiga, பெ. (n.)

     [அஞ்சு + உருவு – ஆணி.]

அஞ்சுருவாணிப்பூட்டு

 அஞ்சுருவாணிப்பூட்டு añjuruvāṇippūṭṭu, பெ. (n.)

   துருசுச் செம்பு ; copperextracted from copper sulphate or copper acetate (சா.அக.);.

     [அஞ்சுருவாணி + பூட்டு.]

அஞ்சுருவாணிமூலம்

 அஞ்சுருவாணிமூலம் añjuruvāṇimūlam, பெ. (n.)

   எல்லாவகை மருந்தையும் நீறாக்குந் தன்மையுடைய மூப்பு ; an old name for the supposed Universal Solvent, as well as for a medicine for all kinds of diseases (சா.அக.);.

அஞ்சுருவாணியுப்பு

அஞ்சுருவாணியுப்பு añjuruvāṇiyuppu, பெ. (n.)

   1. கல்லுப்பு ; salt precipitated at the bottom of the sea.

   2. பூநீறு ; an efflorescent salt found in the soil of fuller’s earth (சா.அக.);.

அஞ்சுளோநேமி

 அஞ்சுளோநேமி añjuḷōnēmi, பெ. (n.)

   திமிசு அல்லது வேங்கை மரம்; Malabar kino, pterocarpus marsupium, alias Terminalia Tomentosa (சா.அக.);.

அஞ்சுவண்ணத்தி

 அஞ்சுவண்ணத்தி añjuvaṇṇatti, பெ. (n.)

   ஐந்து நிறங் கலந்த ஐம்புள் நஞ்சு (பஞ்சபட்சி பாடாணம்);;  a kind of poison emitting five colours.

அஞ்சுவண்ணப்பேறு

அஞ்சுவண்ணப்பேறு añcuvaṇṇappēṟu, பெ. (n.)

   ஒரு வகை மதிப்புரவு; an hounour.

     “ஈஸ்ளீப்பு இருப்பானுக்கு அஞ்சு வண்ணமுபெடியாலும் வாயனத்தாலும் பாகுடமும் அஞ்சுவண்ணப் பேறும் பகல் விளக்கும்” (EI, iii.11.);.

     [ஐந்து+வண்ணம்+பேறு]

அஞ்சுவண்ணம்

அஞ்சுவண்ணம் añjuvaṇṇam, பெ. (n.)

   ஒருகார் வணிகர் குழு (T.A.S. ii, 69);; a trade guild.

அஞ்சுவனத்தார்

 அஞ்சுவனத்தார் añjuvaṉattār, பெ. (n.)

   தறி நெய்யும் முகம்மதியருள் ஒரு பிரிவார் (இராட்);; a sect of Muhammadan weavers (R.);.

அஞ்சுவன்னம்

அஞ்சுவன்னம் añjuvaṉṉam, பெ. (n.)

அஞ்சு வண்ணம் பார்க்க;see alit-warnam.

     “அயன் மிகு தானைய ரஞ்சுவன் னத்தவர்” (களவியற். பக். 93);.

     [அஞ்சுவண்ணம் → அஞ்சுவன்னம்.]

அஞ்சுவரணத்தான் (வரணத்தோன்)

 அஞ்சுவரணத்தான் (வரணத்தோன்) añjuvaraṇattāṉvaraṇattōṉ, பெ. (n.)

   துத்தநாகம் (இராட்.); ; zinc (R);.

     [ஐந்து வரணம் → ஐந்து வரணத்தான் → அஞ்சு வரணத்தான். வரணத்தான் → வரணத் தோன்.]

அஞ்சுவர்ணத்தான்

 அஞ்சுவர்ணத்தான் añjuvarṇattāṉ, பெ. (n.)

   நாகமணல்; lead-ore (சா.அக.);.

அஞ்சுவர்ணநிறத்தோன்

 அஞ்சுவர்ணநிறத்தோன் añjuvarṇaniṟattōṉ, பெ. (n.)

அஞ்சுவர்ணத்தான் பார்க்க;see añju-varanattán (சா.அக.);.

அஞ்சுவிரலி

 அஞ்சுவிரலி añjuvirali, பெ. (n.)

ஐவிரலி பார்க்க ;see ai-virali.

அஞ்சூகம்

 அஞ்சூகம் añjūkam, பெ. (n.)

   சிவப்பு அறைக் கீரை ; a red variety of garden greens, Amaranthus gangeticus (சா.அக.);.

அஞ்செடுப்பு

 அஞ்செடுப்பு añjeḍuppu, பெ. (n.)

   பூப்படைந்த பெண் குளித்த நாளில் தன் எதிர்காலப் பிள்ளைப்பேற்றிற் கறிகுறியாக, நிலத்திற் கீறிய ஐஞ்சதுரத்தினின்று பொருள்களைத் தன் மடியில் எடுத்துவைக்குஞ் சடங்கு (இ.வ.);; ceremony performed by a girl, on the day she bathes after attaining puberty, by placing in her lap articles from five squares marked on the ground, thus indicating her future role as mother of children (Loc.);.

     [அஞ்சு = ஐந்து பொருள் அல்லது பாவை (தொகைக்குறிப்பு);. எடுப்பு = மடியிலெடுத்து வைப்பு.]

அஞ்செட்டி

 அஞ்செட்டி añceṭṭi, பெ. (n.)

   ஒசூர் வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Hosur Taluk.

     [அஞ்சன்+செட்டி]

அஞ்செண்ணெய்த்தயிலம்

 அஞ்செண்ணெய்த்தயிலம் añjeṇīeyttayilam, பெ. (n.)

ஐந்தெண்ணெய்த்தயிலம் பார்க்க;see aind(u);-enney-t-tayilam.

     [அஞ்சு + எண்ணெய் (எள் + நெய்); + தயிலம். Skt. tila (எள்); → தைல → த. தயிலம்.]

அஞ்செருப்புடம்

 அஞ்செருப்புடம் añjeruppuḍam, பெ. (n.)

   ஐந்து வறட்டியைக் கொண்டு போடும் புடம்; a fire raised with five dry cow-dung cakes, used for calcination (சா.அக.);.

     [அஞ்சு + எரு + புடம்.]

அஞ்செலி

அஞ்செலி añjeli, பெ. (n.)

   1. காட்டுப்பலா; jungle jack, Artocarpus hirsuta (சா.அக.);.

   2. ஆடுதின்னாப்பாலை (சித். அக.);; worm killer.

   3. தாழை (பச்.மூ); ; fragrant screw pine (செ.அக.);.

அஞ்செழுத்து

அஞ்செழுத்து añjeḻuttu, பெ. (n.)

   சிவாயநம அல்லது நமசிவாய என்னும் ஐந் தெழுத்துக் கொண்ட திருவைந்தெழுத்து என்னும் சிவ வழிபாட்டு மந்திரம்; the live. lettered mantra, viz., na ma ši va ya or Ši ya ya na ma, uttered in the worship of šiva.

     “அஞ்செழுத்தை விதிப்படி யுச்சரிக்க” (சி.சி. சுபக். 9;8);. “அஞ்செழுத்தும் பாவனையும் அப்பனைப் போல் (அவனைப்போல்); இருக்கிறது’ (பழ.);.

இவ் வைந்தெழுத்துள், ‘சி’ சிவத்தையும், ‘வ’ அருளையும், ‘ய’ ஆதனையும் (ஆன்மாவையும்);, ‘ந’ மறைப்பாற்றலையும் (திரோதான சக்தியையும்);, ‘ம’ ஆணவக் குற்றத்தையும் குறிக்கும் (சிவப்பிர. 97, உரை);.

     [அஞ்சு + எழுத்து.]

அஞ்செவி

அஞ்செவி añjevi, பெ. (n.)

   உட்காது ; cavity of the ear.

     “அஞ்செலி நிறைய வாலின” (முல்லைப். 89);.

     [அகம் = உள். அகம் + -செவி – அகஞ்செவி → அஞ்செவி. ஒ.நோ.; அகங்கை → அங்கை.]

அஞ்சைக்களம்

அஞ்சைக்களம் añjaikkaḷam, பெ. (n.)

   மேல் கரைக் கொடுங்கோளுரிலுள்ள சிவன்கோயில்;šiva temple at Kodungälär, the modern Cranganore, on the West coast.

     “கடலங்கரை மேன் மகோதை………………..அஞ்சைக்களத் தப்பனே” (தேவா. 7.4;1);.

மறுவ திருவஞ்சைக்களம்

அஞ்சோளம்

 அஞ்சோளம் añjōḷam, பெ. (n.)

எருக்கு

 giant swallow-wort, sun plant, Calotropis gigantea (சா.அக.);.

அஞ்ஞத்துவம்

அஞ்ஞத்துவம் aññattuvam, பெ. (n.)

   அறியாமை (சிந்தா.நி.66.);; spiritual ignorance.

     [Skt. ajnatva → த அஞ்ஞத்துவம்.]

அஞ்ஞன்

அஞ்ஞன் aññaṉ, பெ. (n.)

   அறிவில்லாதவன் (பிரபோத. 38, 1);; ignorant person.

     [Skt. a-jna → த. அஞ்ஞன்.]

அஞ்ஞலம்

 அஞ்ஞலம் aññalam, பெ. (n.)

   கொசு ; mosquito (சா.அக.);.

அஞல் பார்க்க;see aial.

அஞ்ஞவதைப்பரணி

அஞ்ஞவதைப்பரணி aññavadaipparaṇi, பெ. (n.)

   மறைமுடிவுப் பொருளாகத் தத்துவராயர் பாடிய பரணி நூல் (தக்கையாகப். பக். 153);; a parani poem on vēdānda philosophy, by Tattuvarāyar.

     [Skt.a-jna + vadhabharani → த. அஞ்ஞவதைபரணி.]

அஞ்ஞாதசுகிருதம்

அஞ்ஞாதசுகிருதம் aññādasugirudam, பெ. (n.)

   தன்னை அறியாமல் வந்த நல்வினை (ஶ்ரீ வசன. 381, வ்யா.);; merit unconsciously aptained.

     [Skt. a-jnata + su-krta → த. அஞ்ஞாதசுகிருதம்.]

அஞ்ஞாதம்

 அஞ்ஞாதம் aññātam, பெ. (n.)

   அறியப்படாதது; that which is not known (சா.அக.);.

     [Skt a-jnata → த. அஞ்ஞாதம்.]

அஞ்ஞானத்தம்பம்

 அஞ்ஞானத்தம்பம் aññāṉattambam, பெ. (n.)

   குரல் நொந்து வாயினால் மூச்சுவிட்டு, நாவறண்டு, நெஞ்சுலருமோர் வகைத் தொண்டை நோய்; a disease marked by the affection of the throat, breathing through the mouth, dryness of the tongue and throat and depression of the chest (சா.அக.);

த.வ. தொண்டைகடுப்பன்.

     [Skt.a-jnata+tamba → த. அஞ்ஞானத் தம்பம்.]

அஞ்ஞானப்பாறை

 அஞ்ஞானப்பாறை aññāṉappāṟai, பெ. (n.)

   கருங்கல் பாறை; black granite rock (சா.அக.);.

     [அஞ்ஞான + பாறை.]

 Skt. a-jnana → த. அஞ்ஞானம்.]

அஞ்ஞானம்

அஞ்ஞானம் aññāṉam, பெ. (n.)

   1. அறியாமை; ignorance, spiritual ignorance.

   2. கிறித்துவத்திற்குப் புறச்சமயம் (கிறித்.);; non-christian religion, paganism.

     [Skt. a-jnana → த. அஞ்ஞானம்.]

அஞ்ஞானாசிரவம்

அஞ்ஞானாசிரவம் aññāṉāciravam, பெ. (n.)

   அறிவின்மை (மேருமந். 98, உரை.);; spiritual ignorance.

     [Skt ajnana + srava → த. அஞ்ஞானசிரவம்.]

அஞ்ஞானி

அஞ்ஞானி aññāṉi, பெ. (n.)

   1. அறிவிலான்; person without spiritual knowledge.

     “ஆங்கார வஞ்ஞானிகளா மானிடரும்” (பிரபுலிங். விமலை. 29.);.

   2. புறச்சமயி (கிறித்.);; non-christian, pagan.

     [Skt. a-jnanin → த. அஞ்ஞானி.]

அஞ்ஞான்று

அஞ்ஞான்று aññāṉṟu, கு.வி.எ. (adv.)

   1. அப்போது ; on that occasion, at that time.

     “அஞ்ஞான் றாடலை வெஃகி” (கந்தபு. தக்ஷ. காளிந்திப்.15);.

   2. அந்த நாளில்; on that day.

ம. அன்னு; க. அந்து, து. ஆனி தெ. நாடு; கோண். ஆண்டி, கூ. அண்டி..

     [அ + ஞான்று.]

அஞ்ஞாழிக்கால்

அஞ்ஞாழிக்கால் aññāḻikkāl, பெ. (n.)

   ஐந்து நாழி கொண்ட மரக்கால் வகை (S.I.I. iii, 241);; a grain measure of five ndlis.

ம. அஞ்ஞாழி

     [ஐ + நாழி + கால் – ஐந்நாழிக்கால் → அஞ்ஞாழிக்கால். கால் = மரக்கால்.]

அஞ்ஞை

அஞ்ஞை aññai, பெ. (n.)

   அன்னை; mother.

     “அஞ்ஞைநீ யேங்கி யழலென்று” (சிலப். 9;24);.

தெ. அன்னு; பிராகி. அன்னி.

     [அம்மை → அன்னை → அஞ்ஞை.]

 அஞ்ஞை aññai, பெ. (n.)

   அழகு (பொதி.நி);; beauty.

     [அம் = அழகு. அம் → அம்மை = அழகு. அம்மை → அஞ்ஞை.]

 அஞ்ஞை aññai, பெ. (n.)

   1. அறிவிலான்; ignorant person.

   2. கிடாய்; he-goat, male of the sheep.

     [Skt. a-jna → த. அஞ்ஞை.]

அஞ்ளுலாத்தி

 அஞ்ளுலாத்தி añḷulātti, பெ. (n.)

   நோய் கொண்டவள் ; a sickly woman (சா.அக.);.

அட

அட aḍa,    இடை (int.);   1. துயரம், இரக்கம், வியப்பு, வெறுப்பு முதலியவற்றை யுணர்த்தும் இடைச்சொல்; exclamation of regret, pity, surprise or wonder, dislike, etc.

துயரம் ; “அடகெடுவாய் பலதொழிலு மிருக்கக் கல்வி யதிகமென்றே கற்றுவிட்டோ மறிவில்லாமல்” (தனிப்பா. தி.1, பக். 241);. | இரக்கம்; அட தெய்வமே! ஏன் இந்தத் தாயில்லாப் பிள்ளை இப்படி இரு கண்ணுங் குருடாய்ப் பிறக்க வேண்டும்? (உ.வ.);. வியப்பு ; அட! அமெரிக்கர் திங்களையும் அடைந்து திரும்பி விட்டனர் (உ.வ.);. வெறுப்பு அல்லது சினம் ; அட போ, உனக்கென்ன தெரியும் அவன் செய்தி ? (உ.வ.);.

   2. விளியிடைச்சொல்;  vocative particle.

அட பயலே ! நான் சொன்ன படி செய் (உ.வ.);.

ம. அட; க. எலா, அலா ; தெ. அரே, அடே ; து. எலா ; துட. எத்.

     [ஏ (விளியிடைச்சொல்); → ஏல் → ஏல → ஏள → ஏழ → ஏட → (எட); → அட.]

அடகம்

அடகம் aḍagam, பெ. (n.)

   1. வசம்பு (பரி.அக.);; sweet flag.

அட்டகம் பார்க்க ;see attagam.

   2. நாய்வேளை ; dog–mustard plant, Cleome viscosa (சா.அக.);.

அடகு

அடகு aḍagu, பெ. (n.)

   1. இலைக்கறி ; greens, edible leaves.

     “மென்பிணி யவிழ்ந்த குறுமுறி யடகு” (மதுரைக் 531);.

   2. பச்சிலை; odoriferous Indian plant, medicinal green leaves.

     “ஆயிர மாண்டுபுல் லடகு மேயினான்” (கந்தபு. தக்ஷ. கயமுகனுற். 73);.

   3. மகளிர் விளையாட்டு வகை; a girls game.

     “கூட லனையாளை யாடா வடகினுங் காணேன்” (திணைமாலை. 4);.

க. ஆகு ; தெ. ஆக்கு ; கொண். ஆக்; கோண். ஆகீ ; கூ., பெங்., மண். ஆகி ; குவி. ஆக்கு ; குரு. அட்கா ; மா. அத்தெ ; பிராகி. டாக.

     [அடை = இலை. அடை → அடகு.]

 அடகு aḍagu, பெ. (n.)

   கொதுவை; pledge, pawn of personal property.

     “ஆபரணம் வைத்தடகு தேடுபொருள்” (திருப்பு. 606);.

ம. அடமானம் ; க. அடவு ; து. அடவு. அடாவு, தெ. அட்டமு.

     [அடை → அடைவு = அடைமானம். கொதுவை. அடைவு → அடவு → அடகு.]

அடகுபிடி-த்தல்

அடகுபிடி-த்தல் aḍagubiḍittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   கடனாகப் பணங்கொடுத்து அதற்கீடாக விலைபெறும் பொருள்களை வாங்கி வைத்தல்; to do pawn-broking.

 அடகுபிடி-த்தல் aḍagubiḍittal,    4 செ.கு.வி. (v.i.)

     [அடி → அடிகு → அடகு.]

அடகோலை

 அடகோலை aḍaālai, பெ. (n.)

   அடைமான ஓலை ; lease deed.

     [அடகு + ஓலை.]

அடக்க நிலைமை

அடக்க நிலைமை aḍakkanilaimai, பெ. (n.)

   1. செயப்பாடான நிலைமை; a quiescent condition, as in a woman in the act of sexual intercourse.

   2. பெண்ணின் மடமை ; modesty of a woman (சா.அக.);.

அடக்கச்சடங்கு

 அடக்கச்சடங்கு aḍakkaccaḍaṅgu, பெ. (n.)

   சவத்தை அடக்கஞ் செய்யும் வினை; burial.

     [அடக்கம் + சடங்கு.]

அடக்கச்செலவு

அடக்கச்செலவு aḍakkaccelavu, பெ. (n.)

   1. அடக்கவினைக்குச் செல்லும் பணச்செலவு; burial expenses.

   2. அடக்கச் சடங்கு (புதுவை);; burial (Pond.);.

     [அடக்கம் + செலவு.]

அடக்கஞ்செய்-தல்

அடக்கஞ்செய்-தல் aḍakkañjeytal,    1 செ.குன்றாவி. (v.t.)

   சவத்தைப் புதைத்தல் ; to bury the corpse.

     [அடக்கம் + செய்.]

அடக்கத்துச்சோரம்

 அடக்கத்துச்சோரம் aḍakkattuccōram, பெ. (n.)

   நாரி வெள்ளை (சுக்கிலம்);; a fluid dis- charged apart from the menstrual blood in women through vagina (சா.அக.);.

     [அடக்கம் + அத்து (சாரியை); + சோரம்.]

அடக்கமா(கு)-தல்

அடக்கமா(கு)-தல் aḍakkamākudal,    6 செ.கு.வி. (v.i.)

   1. பள்ளி (சமாதி); புகல் ; to enter into samādhi voluntarily to attain union with the Universal soul or the Divine spirit.

   2. ஒடுக்கமாதல் ; to become modest.

   3. சுருங்குதல் ; to shrink (சா.அக.);.

-, 5 செ.குன்றாவி, (v.t.);

   மூச்சொடுக்கல் ; to control the breath.

     [அடக்கம் + ஆ(கு);.]

அடக்கமானம்

அடக்கமானம் aḍakkamāṉam, பெ. (n.)

   படிமக் கலையிற் கையாளப்படும் அறுவகை அளவு மானங்களுள் ஒன்று ; one of the six kinds of dimensions observed in sculpture.

     ‘படிமத்தின் முன்புறத்தில் ஒரு தூக்கு நூலைத் தொங்க விட்டு, அந்த நூலிலிருந்து படிமத்தின் தலை, நெற்றி, மூக்கு, மோவாய், கழுத்து, மார்பு, கொப்பூழ் (நாபி);, தொடை ஆகிய உறுப்புகள், அந் நூலுக்குச் செங்குத்தாக எவ்வெவ்வளவு அடக்கம் கொண்டு இருக்கின்றன என்பதை அறிய உதவும் இவ்வளவை………… அடக்கமானம் என்றும் தாழ்த்துமானம் என்றும்…………….. சொல்வது நடைமுறை வழக்கு’ (சி.செ. பக். 184, பத்தி 5);.

     [அடக்கம் + மாணம். அடங்கு → அடக்கு → அடக்கம். மா + அனம் (தொ. பெ. ஈறு); – மானம்.].

அடக்கமெழுப்பு-தல்

அடக்கமெழுப்பு-தல் aḍakkameḻuppudal,    5 செ.குன்றாவி. (v.t)

   1. மயக்கந் தெளிவித்தல்; to restore consciousness as from stupor caused by snake bite, fits, etc.

   2. நஞ்சிறக்கல்

 to dispel poisonous effects through medicine or magical chant (சா.அக.);.

     [அடக்கம் + எழுப்பு.]

 அடக்கமெழுப்பு-தல் aḍakkameḻuppudal,    5 செ.கு.வி. (v.i.)

   மயக்கந் தெளிதல்; to regain consciousness as from stupor caused by snake bite or a fit (W);.

     [அடக்கம் + எழும்பு.]

அடக்கம்

அடக்கம் aḍakkam, பெ. (n.)

   1. அமைதி ; calmness.

     ‘அடக்கமற்ற பெண் அவிந்து போன கண்’,

     ‘அடக்கமே அறிவுக்கு வித்து’,

     ‘அடக்கம் ஆயிரம் பொன் தரும்’,

     ‘அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதார் கல்லார்’ (பழ.);.

   2. ஆரவாரமின்மை ; unostentatiousness.

   3. பிறர் செய்தியில் தலையிடாமை; non-interference.

     “அடக்கமுடையா ரறிவில ரென்றெண்ணிக் கடக்கக் கருதவும் வேண்டா!’ (மூதுரை, 16);.

   4. பணிவான ஒழுக்கம் ; humility, submission, subordination.

     ‘அடக்கமென்பது, உயர்ந்தோர்முன் அடங்கி யொழுகும் ஒழுக்கம்; அவை ; பணி ந் த மொழியுந் தணிந்த நடையுந் தானை மடக்கலும் வாய்புதைத்தலும் முதலாயின. (தொல். பொருள். மெய்ப். 12, பேரா. உரை);.

   5. தன்னடக்கம்; self-control.

     “இளையா னடக்க மடக்கம்” (நாலடி. 65);.

   6. பொறுமை; patience.

   7. ஐம்புல வடக்கம் ; subjugation of the five senses.

     “ஒருமையு ளாமைபோ லைந்தடக்க லாற்றின்” (குறள், 126);.

   8. மூச்சடக்கம் ; suppression of breath.

   9. உயிரொடுங்கியிருத்தல் ; subdued state of the animating powers, before death.

   10. மயக்கம் ; loss of consciousness, stupor as from snakebite.

   11. சவப் புதைப்பு; burial.

   12. சுருக் குகை ; contraction, as a tortoise withdrawing into its shell.

   13. மறைபொருள், கமுக்கம்; secret.

எல்லாம் அடக்கமாயிருக்கிறது (உ.வ.);.

   14. செறிந்திருக்கை; compactness.

எல்லாப் பொத்தகங்களையும் பெட்டிக்குள் அடக்கமாக வை (உ.வ.);.

   15. உள்ளடங்கிய பொருள்; contents, as of a box, enclosures, as of a letter.

   16. செலவொடு சேர்ந்த மொத்த விலை; cost price including incidental expenses.

வண்டி விலை மற்றச் செலவொடு சேர்த்து அடக்கம் எவ்வளவாகிறது?

   17. மொத்தச் செல்வு; total expenditure.

   வீடு கட்டினதற்குச் செலவு அடக்கம் எவ்வளவு ;   18. கருத்து (சங்.அக.);; gist.

   19. புதைபொருள் (செ.அக.);; treasure trove.

   20. வாணவகை (யாழ்ப்.); ; fireworks of crackers so arranged in layers, to produce a continuous series of bursts.

   21. பறைவகை ; a kind of drum.

     “நிசாளந் துடுமை சிறுபறை யடக்கம்” (சிலப். 3;27, அடியார்க். உரை);.

த. அடக்கம் → Skt. ɖhakkā.

     [அடங்கு → அடக்கு → அடக்கம்.]

 அடக்கம் aḍakkam, பெ. (n.)

   குறிப்பிட்ட எல்லையிலிருந்து படிமத்தின் முன்னுறுப்புகளும் பின்னுறுப்புகளும் அடங்கியிருக்கும் அடக்க அளவு ; distance encompassed by the organs above and below a given point on an image (சி.செ. பக். 184, பத்தி 2);.

     [அடக்கு → அடக்கம்.]

 அடக்கம்பெ. (n.)  aṭakkam,

பழம்பெரு தோற்கருவியினுள் ஒரு வகை.

 a kind of drum.

     [அடக்கு+அடக்க]

அடக்கம்பண்ணு-தல்

அடக்கம்பண்ணு-தல் aḍakkambaṇṇudal,    5 செ. குன்றாவி, (v.t)

   1. உள்ளடக்கி வைத்தல்; to pack, stow away.

   2. சவத்தைப் புதைத்தல் ; to bury, inter, entomb.

   3. மறைத்து வைத்தல் ; to conceal, put out of sight.

அடக்கற்பாலு-தல்

அடக்கற்பாலு-தல் aṭakkaṟpālutal, பெ.. (n.)

   ஈமக் கடனைச் செய்ய இயலுதல்; capability of burrying the deceased.

     “நடுக்கம் இல் நாமும் முன் நின்று அடக்கற் பாலம் என்று”. (பெருங்.105:187-8);.

     [அடிக்கல்-(புதைத்தல்);+பாலு]

அடக்கவிலை

 அடக்கவிலை aḍakkavilai, பெ. (n.)

   ஊதியங் கருதாது சென்ற செலவின் அளவாகக் குறிக்கப்பட்ட விலை ; actual cost price, rock-bottom price, non-profit cost price of manufactured articles, books, etc.

அடக்கவிலைப் பதிப்பு

 அடக்கவிலைப் பதிப்பு aḍakkavilaippadippu, பெ. (n.)

   ஊதியங்கருதாது செலவின் அளவாக விலை குறிக்கப்பட்ட பதிப்பு ; cost price edition, cheapest edition of a publication.

     [அடக்கம் + விலை + பதிப்பு.]

அடக்காப்புல்

 அடக்காப்புல் aḍakkāppul, பெ. (n.)

   பீனசப் புல் ; a kind of grass, Panicum dactylon.

அடக்கி

அடக்கி aḍakki, பெ. (n.)

   1. தன் திறமையை அல்லது நிலைமையை வெளிக்குக் காட்டாத ஆள் ; taciturn person, one who conceals his real circumstances or ability.

   2. சிறுநீர் மலங்களை அவ்வப்போது வெளிப்படுத்தாது அடக்கி வைப்பவன்-ள் ; one who postpones answering calls of nature.

அடக்கியல்

அடக்கியல் aḍakkiyal, பெ. (n.)

அடக்கியல் வாரம் பார்க்க (வீரசோ. யாப். 11. உரை);;see adakkiyal-varam.

அடக்கியல்வாரம்

அடக்கியல்வாரம் aḍakkiyalvāram, பெ. (n.)

     ‘அடக்கியல் வாரமென்பது அடக்கும் இயல் பிற்றாகிய வாரமென்றவாறு. …… அடக்கிய லென்றான், முன்னர்ப் பலவகையாற் புகழப்பட்ட தெய்வத்தினை ஒரு பெயர் கொடுத்தடக்கி நிற்றலின். வாரமென்றான், தெய்வக் கூற்றின் மக்களைப் புகழ்ந்த அடி மிகுமாதலி னென்பது’ – பேராசிரியருரை.

     “அடக்கியலின்றி அடிநிமிர்ந்தொழுகியும்” (செய். 149); என்று தொல்காப்பியரே கூறுதலால், அடக்கியல் என்பதும் சுரிதகத்திற்கு ஒரு பெயரென்பது பெறப்படும். ஆகவே, அடக்கியல்வாரம் என்பது இருபெயரொட்டாகும். இருபெயரும் வெவ்வேறு பொருட்கரணியங் குறித்தலாலேயே இருபெயரொட்டாயின. கலிப்பாவில் முற்கூறப்பட்ட பொருள்களையெல்லாம் அடக்கி நிற்பதனால் அடக்கியல் என்றும், பாட்டின் முடிபைக் கொண்டு மகுடம்போல உயர்ந்து நிற்றலால் வாரம் என்றும், சுரிதகம் பெயர் பெற்றதென்று கொள்ளலாம். வார்தல்=உயர்தல்.

பேராசிரியர், நீண்டு வருதலென்று பொருட் கரணியங் கொண்டார். வார்தல் = நீளுதல். இவ் வியல்பு வாரங்கொண்ட எல்லாக் கலிப்பாவிற்கும் ஏற்காமை அவர் கூற்றானே விளங்கும்.

அடக்கியொடுக்கி

அடக்கியொடுக்கி aḍakkiyoḍukki, கு.வி.எ. (adv.)

   1. முற்றுங்கீழ்ப்படுத்தி ; having subjugated completely.

   2. வேரறக் களைந்து ; having eradicated.

அடக்கிராவி

அடக்கிராவி aḍakkirāvi, பெ. (n.)

   நெல்வகை; variety of paddy (T.A.S. v., 204);.

அடக்கு-தல்

அடக்கு-தல் aḍakkudal,    5 செ.குன்றாவி. (v.t.)

அடங்கு என்பதன் பி.வி.

   1. அடங்கச் செய்தல் ; to bring under control.

கலகத்தை அடக்கிவிட்டார்கள் (உ.வ.);.

   2. கீழ்ப்படுத்துதல் ; to constrain, repress, bring to terms, to subjugate, curb, coerce, tame, break, as a horse.

   3. சுருக்குதல் (வின்.);; to condense, abbreviate.

   4. உள்ளடக்குதல் ; to pack, stow away.

   5. புதைத்தல் ; to bury,

   6. சிறுநீர், மலங்களை வெளிப்படுத்துவதைக் கடத்தி வைத்தல் ; to postpone answering calls of nature.

   ம. அடக்குக ; க. அடக்கு ; தெ. அடாசு;கோத அற்கு ; கூ. ஆட்ப ; துட. ஒர்க் ; குட. அடக் ; து. அடேவுனி ; கொலா. டாங்க்த் ; மா. அர்கெ ; கொண். டாங் ; குரு. அர்க்னா.

அடக்குப்பண்ணு-தல்

அடக்குப்பண்ணு-தல் aḍakkuppaṇṇudal,    5 செ.கு.வி. (v.i.)

   தடைசெய்தல் ; to hinder, stop.

     [அடக்கு + பண்ணு.]

அடக்குமுறை

 அடக்குமுறை aḍakkumuṟai, பெ. (n.)

   கண்டித் தடக்குகை (இக்.வ.);; repression (Mod.);.

     ‘அடக்குவா ரற்ற கழுக்காணி’, ‘அடக்குவா ரின்றேல் ஆமையும் தாவும்’ (பழ.);.

அடக்குமுறை யாட்சி

 அடக்குமுறை யாட்சி aḍakkumuṟaiyāḍci, பெ. (n.)

   கண்டித்தடக்கும் அரசாட்சி (இக்.வ.);; repressive government (Mod.);.

     [அடக்குமுறை + ஆட்சி.]

அடக்குமுறைச்சட்டம்

 அடக்குமுறைச்சட்டம் aḍakkumuṟaiccaḍḍam, பெ. (n.)

   கண்டித்தடக்கும் சட்டம் (இக்.வ.);; repressive legislation (Mod.);.

     [அடக்குமுறை + சட்டம்.]

அடக்குவி-த்தல்

அடக்குவி-த்தல் aṭakkuvittal, செயப்.வி (caus.v)

   ஈமக்கடன்களைச் செய்வித்தல்; to perform last rites.

     “அமரர் புகழத்தமனின் அடக்குவித்து ஈமம் ஏற்றி”. (பெருங்.105 : 189-90.);.

     [அடக்கு+வி]

அடக்குவி-த்தால்

அடக்குவி-த்தால் aṭakkuvittāl,    அமைந்திருக்கச் செய்த; to subdue.

     “அடக்குவித்தால் ஆர் ஒருவர் அடங்காதாரே.” (நாவு.6:95-3.);

அடங்க

அடங்க aḍaṅga, கு.வி.எ. (adv)

   1. உள்ளாக ; to be contained within.

     “அவனி முழுது மோரடிக்கு ளடங்க வளந்து கொண்டவனே” (சூத. முத்தி. 4;29);.

   2. முழுதும்; wholly, entirely.

     ‘வயலடங்கக் கரும்பும்’ (ஈடு, 8.9;4);.

ம. அடங்க, அடங்கனெ.

அடங்கன்முறை

 அடங்கன்முறை aḍaṅgaṉmuṟai, பெ. (n.)

   அப்பர், சம்பந்தர், சுந்தரர் என்னும் மூவர் தேவாரம் முழுதும் ; Tevaram, in the sense that it includes all the hymns of three Saints Appar, Sambandar and Sundarar.

     [அடங்கல் + முறை. அடங்கல் = எல்லாம். முறை = சிவநெறித் திருமுறை பன்னிரண்டுள் முதல் ஏழான மூவர் தேவாரம்.]

அடங்கம்

 அடங்கம் aḍaṅgam, பெ. (n.)

   கடுகுரோகிணி (பச்.மூ.); ; Christmas rose.

அடங்கலன்

அடங்கலன் aḍaṅgalaṉ, பெ. (n.)

   1. கீழ்ப்படியாதவன் ; insubordinate man.

   2. பகைவன் ; defiant enemy or foe.

     “அடங்கலர் முப்புர மெரித்தார்” (பெரியபு. இடங்கழி, 4);.

   3. புலன்கள் அடங்காதவன் ; one whose senses are not restrained.

     “அடங்கலர்க் கீந்த தானப் பயத்தினால்” (சீவக. 2842);.

அடங்கலமிசம்

 அடங்கலமிசம் aḍaṅgalamisam, பெ. (n.)

   ஓராண்டு விளைவு மதிப்பு (C.G.);; estimated annual produce of a piece of land.

     [த. அடங்கல் + Skt. .amsa → த. அமிசம் = கூறு.]

அடங்கலும்

அடங்கலும் aḍaṅgalum, கு.வி.எ. (adv.)

   எல்லாம், முழுதும் ; quite, entirely.

     “திக்கடங்கலும்” (திருவிளை. திருநகரங் கண்ட 13);.

     [அடங்கல் + உம் (முற்றும்மை);.]

 அடங்கலும் aṭaṅkalum, இடை, (part)

   முழுதும்; entire.

     “பெருநில மன்னன் இருநிலம் அடங்கலும் பசியும் பிணியும் பகையும் நீங்கி”. (சிலப்.5:11-2);.

     [அடங்கல்+உம்]

அடங்கல்

அடங்கல் aḍaṅgal, பெ. (n.)

   1. கீழ்ப்படிகை; submitting, obeying.

   2. பகுதியாக அமைகை ; being comprised or included.

   3. உள்ளிடம் பெற முடிக ; being possible to be stuffed into,

   4. செய்யத் தகுகை ; being fit or worthy to act or perform.

     “தாதைய ரிட்ட காரிய மடங்கலின் றாயினு மமையு மாயினும்” (சேதுபு. அவைய. 2);.

   5. தங்குமிடம்; abode.

     “அடங்கல் வீழிகொண்டிருந்தீர்” (பெரியபு. ஏயர்கோ. 59);.

   6. சாகுபடி நோட்டம் (சோதனை);; examination of the cultivation of village lands (R.F.);.

   7. சாகுபடிக் கணக்கு ; detailed village account showing lands cultivated and the nature of the crops.

   8. அடங்கல் (குத்தகை); வேலை ; contract work.

ம. அடங்கல்; தெ. அடங்கு ; பிரா. அட்கல்.

     [அடங்கு → அடங்கல்.]

அடங்கவும்

அடங்கவும் aḍaṅgavum, கு.வி.எ. (adv.)

அடங்கலும் பார்க்க ;see adañgalum.

     “உடம்ப டங்கவு மூன்கெட” (பெரியபு. திருநாவுக். 359);.

அடங்காஒழுக்கம்

அடங்காஒழுக்கம் aṭaṅkāoḻukkam, பெ.. (n.)

   ஐம்பொறிகளுள் அடங்காமல் பரத்தையரிடம் செல்லும் புறத்து ஒழுக்கம்; immoral sexual contact as a result of incapability of controlling senses.;

     “அடங்கா ஒழுகத்து அவன்வயின் அழிந்தோளை” (தொல்.22:9);.

     [அடங்கா+ஒழுக்கம்]

அடங்காக் கம்பலை

அடங்காக் கம்பலை aṭaṅkākkampalai, பெ.. (n.)

கட்டுப்பாடற்றபேரோசை; uproar.

     “நால்வகை வருணத்து அடங்காக் கம்பலை உடங்கு இயைத்து ஒலிப்ப.” (சிலப்.6:164-5);.

     [அடங்காத+கம்பலை]

அடங்காக்கரத்தி

 அடங்காக்கரத்தி aḍaṅgākkaratti, பெ. (n.)

     “சதுரக்கள்ளி” ;

 square spurge, Euphorbia quadruculli (சா.அக.);.

அடங்காக்கால்

அடங்காக்கால் aṭaṅkākkāl,    அடங்காவிடில்; if not suibmissive.

     “ஏற்பானும் தானும் அடங்காக்கால்.” (அற.84.);.

     [அடங்காத+கால்]

அடங்காத சத்தி

 அடங்காத சத்தி aḍaṅgātasatti, பெ. (n.)

அடங்காக்கரத்தி பார்க்க;see agaigi-kkaratti.

அடங்காதோர்

அடங்காதோர் aṭaṅkātōr, பெ.. (n.) ப

   பகைவர்; enemies.

     “அடி புறந்தருகுவர் அடங்காதோரே” (புற.35:34.);.

     [அடங்கு+ஆ-(தவர்);தோர்]

அடங்காத்தணலி

 அடங்காத்தணலி aḍaṅgāttaṇali, பெ. (n.)

   *கருப்புச் சித்திரமூலம் ; black or blue flowered leadwort, Plumbago zeylanica (சா.அக.);.

     [தழல் → தணல் → தணலி. அடங்காத → அடங்கா (ஈ.கெ.எ.ம.பெ.எ.); + தணலி.]

அடங்கானாய்

அடங்கானாய் aṭaṅkāṉāy,    தணியானாகி; crossing the limit of self control.

     “இடங்கழி காமமொடு அடங்கானாய்” (மணி.10:22.);.

     [அடங்கான்+ஆய்]

அடங்காப்பச்சை

 அடங்காப்பச்சை aḍaṅgāppaccai, பெ. (n.)

   முலைப்பால் ; a woman’s breast milk (சா.அக.);.

     [அடங்காத → அடங்கா (ஈ.கெ.எ.ம.பெ.எ.); + பச்சை.]

அடங்காப்பற்று

 அடங்காப்பற்று aḍaṅgāppaṟṟu, பெ. (n.)

   அரசன் கட்டளையை மீறுவோர் வதியும் ஊர் (யாழ்ப்.);; village rebellious against king’s order (J.);.

     [அடங்காத → அடங்கா (ஈ.கெ.எ.ம.பெ.எ.); + பற்று = பற்று = சிற்றுார்.]

அடங்காப்பிடாரி

 அடங்காப்பிடாரி aḍaṅgāppiḍāri, பெ. (n.)

   எவர்க்கும் அடங்காதவள்; termagant, shrew.

பிடாரி = காளி. காளி போற் சினமும் முரட்டுத் தன்மையுமுடையவளைக் காளியென்பது உலக வழக்கு. ‘அடங்காப் பிடாரியைக் கொண்டவனுங் கெட்டான், அறுகங் காட்டை உழுதவனும் கெட்டான்’ (பழ.);.

     [அடங்காத → அடங்கா (ஈ.கெ.எ.ம.பெ.எ.); +- பிடாரி.]

அடங்காமரம்

 அடங்காமரம் aḍaṅgāmaram, பெ. (n.)

   ஒரு வகை மரம் (இ.வ.); ; a kind of tree (Loc.);.

அடங்காமாரி

 அடங்காமாரி aḍaṅgāmāri, பெ. (n.)

அடங்காப் பிடாரி பார்க்க ;see adaňgd-p-pidari.

     [அடங்காத → அடங்கா (ஈ.கெ.எ.க.பெ.எ.); + மாரி.]

மாரி என்பது காளியின் பெயர்களுள் ஒன்று. மாரி பார்க்க ;see mari.

அடங்கார்

அடங்கார் aḍaṅgār, பெ. (n.)

   பகைவர் ; enemies.

     “அடங்காரை யெரியழலம் புகவூதி” (திவ். திருவாய். 4.8 ; 8);.

அடங்காவாரிதி

அடங்காவாரிதி aḍaṅgāvāridi, பெ. (n)

   1. கடலுப்பு (வின்.); ; sea-salt.

   2. சிறுநீர் ; urine.

அடங்கிடம்

அடங்கிடம் aḍaṅgiḍam, பெ. (n.)

   பேருழியிறுதியில் அனைத்தும் ஒடுங்கும் பரசிவம் ; ParaSivam, the highest form of Śiva, in whom all would be absorbed on the dissolution of the Grand Universe.

**விந்து நாதஞ் சத்தி நெறியே யடங்கி டும்பர சிவத்தினில்” (அருணாசலபு. திருமலைச். 5);.

     [அடங்கு + இடம்.]

அடங்கினர்

அடங்கினர் aṭaṅkiṉar, பெ.. (n.)

   1. பணிவு உடையவர்; one who is submissive.

     “நல் தவ முனிவரும் கற்று அடங்கினரும்” (மணி.26:74);.

   2. உறவினர்; relations.

     “சொல் அவிந்து இனிது அடங்கினரேமாக்கள்”(குறு. 6 12);.

     [அடங்கு-அடங்கினர்]

அடங்கினார்

அடங்கினார் aṭaṅkiṉār, பெ.. (n.)

   விதித்தன செய்து விலக்கிய ஒழிவார்;அடங்காது அடங்கினார்க்கு ஈதல் இடையே” (அற.84);.

அடங்கியகற்பு

அடங்கியகற்பு aṭaṅkiyakaṟpu, பெ.. (n.)

   கற்பு; chastity of compassionate attitude.

     “அடங்கிய கற்பின் நலங்கேழ் அரிவை.”(குற.339:1:8.);

     [அடங்கி+அ+கற்பு]

அடங்கியசாயல்

அடங்கியசாயல் aṭaṅkiyacāyal, பெ.. (n.)

   மென்மைத் தன்மை; soft behavoiour.

     “ஆறிய கற்பின் அடங்கிய சாயல்” (பதி.16:10.);

     [அடங்கு+அ+சாயல்]

அடங்கியான்

அடங்கியான் aṭaṅkiyāṉ, பெ.. (n.)

   மனம் மொழி மெய்கள் தீயவழியில் செல்லப் பெறாதவன்; a man of self control.

     “நிலையின்திரியாது.அடங்கியான் தோற்றம்.” (குறள் 13:4);.

     [அடங்குபவன்-அடங்கியான்]

அடங்கு-தல்

அடங்கு-தல் aḍaṅgudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. கீழ்ப்படிதல் ; to obey, yield, submit.

பெற்றோர்க் கடங்கி நடத்தல் வேண்டும் (உ.வ.);.

   2. அறத்தின்கண் அமைந்தொழுகுதல் ; to behave righteously.

     “கதங்காத்துக் கற்றடங்க லாற்றுவான்” (குறள், 150);.

   3. புலன் ஒடுங்குதல் ; to be still, to be subdued, as the mind of a sage.

     “சிந்தையு மென் போலச் செயலற் றடங்கிவிட்டால்” (தாயு. பராபர. 325);.

   4. உறங்குதல் ; to sleep.

     “விழித்துழி விழித்தும் அடங்குழி யடங்கியும்” (கல்லா. 7);.

   5. மக்கள் உறங்கி அமைதி நிலவுதல் ; to become quiet, as a result of all the inhabitants of a place having gone to sleep.

ஊர் அடங்கிவிட்டது (உ.வ.);.

   6. உடம்பு ஒடுங்குதல் ; to be reduced, as the body, through disease, old age or grief.

ஆறு மாதத்திற்குள் ஆள் அடங்கிவிட்டான் (உ.வ.);.

   7. நாடி நின்றுவிடுதல் ; to stop beating as the pulse.

நாடியடங்கிவிட்டது (உ.வ.);.

   8. மூச்சு நின்று விடுதல் ; to stop breathing, மூச்சடங்கி விட்டது (உ.வ.);

   9. நொசிப்பு நிலையடைதல் (சமாதிபுகல்);; to attain a state of intense contemplation as the final stage of yoga.

இராமலிங்க அடிகள் இறுதியில் அடங்கி விட்டார் (உ.வ.);.

   10. இறத்தல் (மங்.வ.);; to die (euphem.);.

எங்கள் அப்பனார் சென்ற ஆண்டே அடங்கிவிட்டார் (உ.வ.);.

   11. உள்ளாதல் ; to be comprised, included.

     “அளவை, காண்டல் கருத லுரையென் றிம் மூன்றின்டங்கிடுமே” (சி.சி.சுபக். அளவை, 1);.

   12. படிதல் ; to settle, subside, as dust.

தூசி

யடங்கத் தண்ணீர் தெளி (உ.வ.);.

   13. தங்குதல் ; to remain, stay.

   14. கிடத்தல் ; to lie, lie down.

     “வெள்ளேற் றெருத்தடங்கு வான்” (கலித். 104;19);.

   15. மனத்துள்ளிருத்தல்; to confine in the mind as a secret.

     “அடங்கரு நாணமும் பயமுங் கொண்டனன்” (சூத. எக்கி. 2.4;23);.

   16. சினையாதல் ; to be with young, as a cow impregnated.

மாடு அடங்கியிருக்கிறது (இ.வ.);.

   17. நெருங்குதல் ; to be close together, thick or crowded.

     “அலவன் கண்பெற வடங்கச் சுற்றிய” (கலித். 85 ; 6);.

   18. செய்யக்கூடியதாதல்; to become possible for doing.

     “இடங்கொளுந்தாதை யரிட்ட காரிய மடங்கலின் றாயினு மமையு மாயினும்” (சேதுபு. அவைய. 2);.

   19. தீர்தல் ; to be extinguished.

     “தழற்பசியடங்கிடாது” (சூத. எக்கி. பூ, 20 ; 6);.

   20. நின்றுபோதல்; to cease.

     “ஊறுநீரடங்கலி னுண்கயங் காணது” (கலித். 13;7);.

   21. மறைதல் ; to disappear or set, as a heavenly body.

     “ஆதித்த னடங்கு மளவில்” (கலித். 78;15, நச். உரை);.

அடங்குழி

அடங்குழி aṭaṅkuḻi,      (வி.எ.) (adv.)

உறங்கும் பொழுது:

 while sleeping.

     “விழித்துழி விழித்தும் அடங்குழி அடங்கியும்” (கல் 7:3);.

     [அடங்கு+உழி]

அடசட்டா

 அடசட்டா aḍasaḍḍā, பெ. (n.)

   சாகுபடி மதிப்பு (R.T.);; an estimate of cultivation.

அடசர்ப்புல்

 அடசர்ப்புல் aḍasarppul, பெ. (n.)

   பீனசப்புல்; a kind of grass, Panicum decrylon (சா.அக.);.

க. அடசல

அடசல்

அடசல் aṭacal, பெ.. (n.)

   திண்டிவனம் வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Tindivanam Taluk.

     [அடைசல்-அடசல்]

 அடசல் aṭacal, பெ.. (n.)

   இட்டிலியை வேக வைத்து எடுக்கும் அளவு; number of set while cooking of steamed cake (iddly); at steamed point (கொ.வ.வ.சொ..3);.

     [அடைசல்-அடசல்]

அடசி நில்

அடசி நில் aḍasinil,    5 செ.குன்றாவி. (v.t)

   அடையச் செய்தல், செறித்தல்; to set closely (சா.அக.);.

     “அழுந்த வாளி யொன்று பத்துநூறு வன்பொ டடசினான்” (பாரத. பதினா. 30);.

க.அடசு

     [அடைதல் = செறியக் குவித்தல். அடை → அடைக → அடக்.]

அடசு-தல்

அடசு-தல் aḍasudal,    5 செ.கு.வி. (v.i)

   1. செறிதல்; to be crowded.

   2. சிறிது ஒதுங்குதல் ; to move aside.

அடசுவயல்

 அடசுவயல் aṭacuvayal, பெ.. (n.)

   திருவாடானை வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Tiruvandanai Taluk.

     [அடை-அடைசு-அடசு+வயல்]

அடசுவர்

 அடசுவர் aḍasuvar, பெ. (n.)

   பால்; milk (சா.அக.);.

அடச்செம்பை

 அடச்செம்பை aḍaccembai, பெ. (n.)

   கருஞ் செம்பை ; common sesban, I. sh., Sesbania aegyptiaca.

அடஞ்சாதி-த்தல்

அடஞ்சாதி-த்தல் aḍañjātittal,    4 செ.கு.வி. (v.i.)

   வன்மங்கொள்ளுதல்; to maintain a stubborn, unyielding spirit of opposition.

     [Skt. hatha + sad → த. அடஞ்சாதி.]

அடடா

அடடா aḍaḍā, இடை. (int.)

   1. வியப்புக் குறிப்பு ; an expression of surprise.

அடடா ! அவன் எவ்வளவு இனிமையாகப் பாடுகின்றான்! (உ.வ.);.

   2. இகழ்ச்சிக் குறிப்பு; an ex. pression of contempt.

     “அடடா ! வெளியே புறப்படடா” (இராமநா. யுத்த. பக். 320);.

   3. வருந்தற் குறிப்பு; an expression of grief.

அடடா! மோசம் போனேனே! (உ.வ.);.

ம. அம்பம்பெடா, அம்பம்ப; க. அலலா, எலவெலவொ; தெ. அரரெ.

அடதாளம்

அடதாளம் aḍatāḷam, பெ. (n.)

   தாளவகை (பரத. தாள. 23.);;     [அட(ம்); + தாளம்.]

     [Skt. ata → த. அடம்.]

தாள் → தாளம் → Skt. tala.

அடத்தி

அடத்தி aḍatti, பெ. (n.)

   1. மொத்த வணிகம்; buying and selling in lots, wholesale.

   2. வாசி (வின்.);; premium for ready money.

   3. தரகு (இ.வ.);; Commission or agency business.

     [U. arhat → த. அடத்தி.]

அடத்திச்சீட்டு

 அடத்திச்சீட்டு aḍatticcīḍḍu, பெ. (n.)

   ஒரு செட்டியார் மற்றொரு செட்டிக்கு இவ்வளவு தொகைவரை கொடுக்கலா மென்று எழுதிக் கொடுக்குஞ்சீட்டு (இ.வ.);; note given by one Chetti to another, showing the amount within which to draw upon him for funds in trading.

     [அடத்தி + சீட்டு.]

     [U. arhat → த. அடத்தி.]

அடந்தகம்

 அடந்தகம் aḍandagam, பெ. (n.)

   வெள்ளைச் சாரணை; a kind of plant with white flowers of one-styled trianthema, Trianthema monogyna (சா.அக.);.

அடந்தாளம்

 அடந்தாளம் aḍandāḷam, பெ. (n.)

   தாளவகை (வின்.);;

அடந்தை

அடந்தை aḍandai, பெ. (n.)

   ஒரு தாளம்; a time measure in music (சங்.அக.);.

ம. அடந்த, அடதாளம்; க. அட்டதாள. அடதாள, தெ. அடிதாளமு.

 அடந்தை aṭantai, பெ.. (n.)

   தொண்டரடிப் பொடியாழ்வாரது திருவரங்கத்து வனங்கள்; Flower garden.

     “அடந்தை நடந்தை வனஞ்சூழ் அரங்கத்து அரவனை” (அட். 2:20);.

     [அடு-அடைந்தை]

அடப்பக்கத்தி

 அடப்பக்கத்தி aḍappakkatti, பெ. (n.)

   ஒரு வகைக் கடல்மீன்; a kind of sea-fish, Notopterus kapirat.

அடப்பக்கத்திப்பாறை

 அடப்பக்கத்திப்பாறை aḍappakkattippāṟai, பெ. (n.)

   ஒருவகைக் கடல்மீன்; a kind of sea-fish, Notopterus chitala.

அடப்பங்கொடி

அடப்பங்கொடி aḍappaṅgoḍi, பெ. (n.)

   1. ஆட்டுக்காலடம்பு அல்லது முயற்றழை (முசற்றழை);; goat’s foot creeper, goat’s foot convolvulus or hareleaf, Ipomaeabiloba.

   2. வெள்ளடம்பு; white goat’s foot, Ipomaea beladamboo alias Convolvulus flagelliformis (சா.அக.);.

     ‘அடப்பங் கொடியும் திரண்டால் மிடுக்கு’ (பழ.);.

ம. அடம்பு ; க., து. அடும்பு.

     [அடம்பு + அம் (சாரியை); + கொடி.]

     [P]

அடப்பதாதி

 அடப்பதாதி aḍappatāti, பெ. (n.)

   சிவப்புக் கூத்தன் குதம்பை; a kind of plant bearing red flowers, Inula indica.

     [த. அடப்பம் + Skt. tadi.]

அடப்பனார்

 அடப்பனார் aḍappaṉār, பெ. (n.)

   அடப்பன் என்னும் பட்டப்பெயரின் உயர்வுப் பன்மை வடிவம்; honorific form of the caste title adappaր.

அடப்பன்

 அடப்பன் aḍappaṉ, பெ. (n.)

   கடம்பு (மலை.);; common cadamba, Eugenia racemosa alias Anthocephalus cadamba (சா.அக.);.

 அடப்பன் aḍappaṉ, பெ. (n.)

   பரவர்குலப் பட்டப் பெயர் (யாழ்ப்.);; a caste title of Paravās (J.);.

அடப்பமரம்

 அடப்பமரம் aḍappamaram, பெ. (n.)

   வாதுமை மரம்; almond tree.

ம. அடமரம்

அடப்பம்

 அடப்பம் aḍappam, பெ. (n.)

   அடைப்பம் என்பதன் வேறு வடிவம்; dial. var. ofadaippam.

 அடப்பம் aḍappam, பெ. (n.)

   வாதுமை; almond, Amygdalus communis.

அடப்பம்விதை

அடப்பம்விதை aḍappamvidai, பெ. (n.)

   வாதுமைப் பருப்பு; almond kernel.

     “அடப்பம்விதையாம் வாதுமைப் பருப்பினாலே” (பதார்த்த, 785);.

அடப்பான்

அடப்பான் aḍappāṉ, பெ. (n.)

   வைரிப்புள், வல்லூறு (கலைமகள், 56 ; 189);; peregrine falcon.

அடப்பி

 அடப்பி aḍappi, பெ. (n.)

அடப்பன் பார்க்க;see adappan”.

அடப்பிமாதிகம்

 அடப்பிமாதிகம் aḍappimātigam, பெ. (n.)

   சிவப்புக் காசித்தும்பை; Benares red toombay (Lucas);, balsom flower, Impatiens genus (சா.அக.);.

அடப்பு

அடப்புபெ. (n.)  aṭappu,

   1.மூடி; lid.

   2.குடுவை: mug. (கொ.வ.வ.சொ.37);,

     [அடைப்பு-அடப்பு]

அடமருது

 அடமருது aḍamarudu, பெ. (n.)

   கடலாத்தி (Nels.);; stag’s horn trumpet flower.

அடமானம்

 அடமானம் aḍamāṉam, பெ. (n.)

அடைமானம் பார்க்க;see adai-manam.

அடம்

 அடம் aḍam, பெ. (n.)

   சுத்தி (இ.வா.);; knife (Loc.);.

க. அடகத்தி, தெ.அடகத்து; து. இடகத்தி; மரா. அடகிதா.

 அடம் aṭam, பெ.. (n.) த

   திடம், அழுத்தம்; strength, power

     “மாடு நல்ல அடமா இருக்கு” (வ.சொ.அக.);.

     [அடு-அடம்]

அடம்பாரம்

அடம்பாரம் aḍambāram, பெ. (n.)

   1. பண்டங்களின் ஏராளம் (தஞ்சை);; plenty, as of articles (Tj.);.

   2. முழுதும்; the entire, whole, altogether (W.);.

ம. அடம்பாடெ

அடம்பு

அடம்பு aḍambu, பெ. (n.)

   1. ஒரு படர்கொடி;     ‘அடம்பங் கொடியும் திரண்டால் மிடுக்கு’ (பழ.);.

     “தும்பைவெள் ளடம்பு திங்கள்” (பெரியபு. ஏயர்கோ. 100);.

   2. கடலிப்பூ; sea-flower, Adambia glabra (சா.அக.);.

   3. கடம்பு;   4. கொன்றை (சம்.அக. கை.);; Indian laburnum.

   5. ஒருவகை மரம்;ம. அடம்பு; க., து. அடும்பு.

அடயோகம்

அடயோகம் aḍayōkam, பெ. (n.)

   ஒக வகை; kind of yoga involving several disciplinary exercises of a taxing nature.

     “அடயோகத்தினால் வினை தொலைத்து” (திருக்காளத். பு. 18, 5.);.

     [அட + யோகம்.]

     [Skt. hatha → த. அடம்.]

ஓகம் → Skt. yôga.

அடரடிபடரடி

 அடரடிபடரடி aḍaraḍibaḍaraḍi, பெ. (n.)

   முனைந்து பொருகை, பெருங்குழப்பம் (வின்.);; desperate fighting, hard scuffle, great confusion.

அடரப்பட்டான்

அடரப்பட்டான் aṭarappaṭṭāṉ, பெ.. (n.)

   அடக்கப்பட்டவன்; one subdued.

     “அரக்கன் ஆண்மை அடரப்பட்டான் இறை” (சம்.1:57:9);.

     [அடர+பட்டான்]

அடரார்

 அடரார் aḍarār, பெ. (n.)

   பகைவர் (சிந்தா.நி.);; enemies.

அடரொலி

 அடரொலி aḍaroli, பெ. (n.)

   அதட்டுஞ்சொல் (பிங்.);; vehement noise to scare away beasts.

     [அடர் + ஒலி. அள் → அடு → அடர். அள்ளுதல் = நெருங்குதல். அடர்த்தல் = நெருங்கிப் பொருதல், வருத்துதல், கொல்லுதல்.]

அடர்

அடர்1 aḍarttal,    4 செ.குன்றாவி. (v.t.)

     ‘1அடர்தல்’ என்பதன் பி.வி. (caus. of agardal);.

   1. அமுக்குதல்; to press down, crush, squeeze.

     “திருவிரலா லடர்த்தான்வல் லரக்கனையும்” (தேவா. 7.97;8);.

   2. நெருக்குதல்; to press hard, exert pressure upon.

   3. வருத்துதல்; to oppress.

     “அடர்புலன் போக்கற் றோர்க்கும்” (கோயிற்பு. பாயி. 18);.

   4. தாக்குதல், போர் செய்தல்; to attack, make an onset upon, begin a quarrel.

     “ஆளை யாள்கொண்டடர்த்தனர்” (கந்தபு. யுத்த முதனாட். 111);.

   5. கொல்லுதல்; to kill.

     “இடங்கரை யாழி வலவ னடர்த்தது போல” (கல்லா. 59);.

   6. கெடுத்தல்; to destroy, remove.

     “பாவ மடர்த்தமர்வாரேசிவலோ சுத்து” (சைவச. பொது. 567);.

ம. அடர்க்குக ; க. அடரிசு ; தெ. அடரின்சு.

     [அடு → அடர்.]

 அடர்2 aḍarttal,    4 செ.குன்றாவி. (v.t.)

   பறித்தல்; to pluck, as coconuts.

தேங்காயடர்த்தல் (நாஞ்.);.

க. அடர்ச்சு; தெ. அடலின்சு.

     [ஒருகா. இட → அட → அடர். இடத்தல் = பெயர்த்தல், பறித்தல்.]

 அடர்1 aḍar, பெ. (n,)

   1. நெருக்கம்; closeness.

   2. நெருக்குதல்; the act of pressing, oppressing, troubling.

     “அடர்க்குறு மாக்களொடு” (மணிமே. 1.3 ; 40);.

     ‘அடர விதைத்து ஆழ உழு’,

     ‘அடர்த்தியை அப்போதே பார், புழுக்கத்தைப் பின்னாலே பார்’ (பழ.);.

     [அடு → அடர்.]

 அடர்2 aḍar, பெ. (n.)

   1. தகடு; thin flat plate of metal, esp. gold.

     “அடர்பொற் சிரகத்தால் வாக்கி” (கலித். 51;7);.

   2. பூவிதழ்; flower petal.

     “இலவம்பூ வடரனுக்கி” (சீவக. 179);.

   3. ஐயம்; doubt.

     [ஒருகா. அடி → அடர். அடித்தல் = சுத்தியால் அல்லது சம்மட்டியால் அடித்துத் தட்டையாக்குதல்.]

அடர்-தல்

அடர்-தல் aḍartal,    2 செ.கு.வி. (v.i.)

   1. நெருங்குதல், செறிதல்; to be close together, thick, crowded.

     “அறுகையு நெருஞ்சியு மடர்ந்து” (மணிமே.12;60);.

   2. போர் செய்தல்; to fight, engage in a battle.

     “எண்ணுறு படைகளில்வா றெதிர்தழீஇ யடரும் வேலை” (கந்தபு. உற்பத். தாரக 39);.

அடர்சோளம்

அடர்சோளம் aḍarcōḷam, பெ. (n.)

   கால்நடைத் தீனிக்காக அடர்த்தியாகப் பயிரிடும் காக்காய்ச் சோளம்; black Solam sown closely as a fodder crop [M. Cm. D. (1887);, 201].

அடர்ச்சி

அடர்ச்சி aḍarcci, பெ. (n.)

   1. நெருக்கம் (சிந்தா, நி.);; closeness.

   2. கொடியவுரை யெண்ணஞ் செயல்களாகிய மாந்திகத்தின் (இராசதத்தின்); குணம்; qualities of passion.

அடர்த்தருளி

அடர்த்தருளி aṭarttaruḷi, வி.எ. (adv.)

   பிளந்து; to cut into two.

     “அன்று இருகூறாய் அடர்த்தருளி” (ஒட்.பா.1);.

     [அடு-அடர்த்துஅருள்]

அடர்த்தல்

அடர்த்தல் aṭarttal,    உதைத்தல்; kicking

     “அல்லாத காலனை முன் அடர்த்தல் தோன்றும்” (நாவு 6:18:3);.

     [அடு-அடர்]

 அடர்த்தல் aṭarttal,    மெலிவித்தல்; to weaken

     “எடுப்பன் என்று இலங்கைக் கோன் வந்து எடுத்தலும் இருபது தோள் அடர்த்தனே ஆலவாயில் அப்பனே.” (நாவு 4:62.10);

     [அடர்-அடர்த்தல்]

அடர்த்தவர்

அடர்த்தவர் aṭarttavar, பெ.. (n.)

   அழுத்தியவர்;     “இலங்கைக் குரிசிலைக் குலவரைக் கீழ் உற அடர்த்தவர்”(சம் 393-8);.

     [அடு-அடர்த்ததவர்]

அடர்த்தி

 அடர்த்தி aḍartti, பெ. (n.)

   நெருக்கம்; closeness, thickness.

தலைமயிர் அடர்த்தியா யிருக்கிறது (உ.வ.);.

அடர்த்திப்பலகை

 அடர்த்திப்பலகை aḍarttippalagai, பெ. (n.)

   திண்னமான பலகை (யாழ்ப்.);; thick plank (J.);.

     [அடர்த்தி + பலகை.]

அடர்த்தோன்க

அடர்த்தோன்க aṭarttōṉka, பெ.. (n.) த

   தழுவினவன்; one who subdued the bull.

     “வனம் தலை ஏறு அடர்த்தோன்” (நம்2:56);

     [அடு-அடர்]

அடர்ந்தவர்

அடர்ந்தவர் aṭarntavar, பெ.. (n.)

   போர் செய்தவர்; fighters.

     “அங்கு அடர்ந்தவர் தம்மை அடர்ந்து” (தி.தி 14:10);

     [அடு-அவர்]

அடர்ந்தேற்றம்

அடர்ந்தேற்றம் aḍarndēṟṟam, பெ. (n.)

   கொடுமை, வல்லந்தம் (வின்.);; oppression, violence.

     [அடர்ந்து + ஏற்றம்.]

 அடர்ந்தேற்றம் aṭarntēṟṟam, பெ.. (n.)

   மொத்தமாக வரையறுக்கப்பட்ட வரி; totallydefined tax. (தெ.கோ.சா3:2);.

     [அடர்ந்து+ஏற்றம்]

அடர்ந்தேற்றி

 அடர்ந்தேற்றி aḍarndēṟṟi, பெ. (n.)

அடர்ந்தேற்றம் பார்க்க;see adarndsu)-érram.

     [அடர்ந்து + ஏற்றி.]

அடர்பு

அடர்பு aḍarpu, பெ. (n.)

   1. நெருக்கம்; closenes (சங்.அக.);.

   2. நெருங்கித் தொடர்கை; close pursuit.

அடர்ப்பம்

 அடர்ப்பம் aḍarppam, பெ. (n.)

   நெருக்கம் (uurrupti..);; closeness (J.);.

அடர்ப்பு

அடர்ப்பு aḍarppu, பெ. (n.)

   1. நெருக்குகை; pressure.

     “அவன் சங்கற்ப புருடனைப்போ லசைவற் றிருப்ப வடர்ப்பரிதாய்” (ஞானவா. ஞானவிண். 16);.

   2. போர்; struggle, battle.

     “அசனியி னயிற்படை யடர்ப்புமோ ரயலாக” (இரகு. திக்கு. 174);.

அடர்மை

அடர்மை aḍarmai, பெ. (n.)

   நொய்ம்மை; Lightness.

     “அரத்த வடர்மையும்” (பெருங். உஞ்சைக் 53;130);.

அடர்வான்

அடர்வான் aṭarvāṉ, பெ.. (n.)

   போர் செய்பவன்; warrior.

     “வாளால் மடிவித்து வலித்து அடர்வான்” (யுத் 20:32);

     [அடர்-அடர்வான்]

அடர்வித்தல்

அடர்வித்தல் aṭarvittal, தொ.பெ. (vbl.n.)

   வருந்தச் செய்தல்; to annoy.

     “செறிகழல் சேர் திருவடியின் விரலால் அடர்வித்தான் இடம் விரி நீர்வியலூரே.” (சம் 1:13:8);. [அடர்-அடர்வி]

அடர்வு

அடர்வு aṭarvu, பெ.. (n.)

   நெருக்கம்; very close.

     “உரம் நெரிதர வரை அடர்வு செய்தவன்.” (சம் 11:125:8);

     [அடர்+அடர்வு]

அடர்வைசூரி

 அடர்வைசூரி aḍarvaicūri, பெ. (n.)

   ஒன்றோடொன்று கலக்கும்படி நெருக்கமாக வார்க்கும் அம்மை நோய்; small-pox in which the pustules run together or into each other, confluent small-pox alias C. variola (சா.அக.);.

     [த. அடர் + Skt. masüraka < த. வைசூரி.]

அடறவினை

 அடறவினை aṭaṟaviṉai, பெ.. (n.)

   அகத்தீசுவரம் வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Agastheeswaram Taluk.

     [அடறு+விளை-மிளை-வினை]

அடலம்

அடலம் aḍalam, பெ. (n.)

   மாறாமை (சிந்தா. 5.);; state of remaining unchanged.

அடலி

 அடலி aḍali, பெ. (n.)

   அடுக்களை வேலைக்காரி, வெள்ளாட்டி (யாழ்ப்.);; a woman cook. maid-servant (J.);.

     [அடுதல் = சமைத்தல். அடு → அடல் → அடலி = சமையற்காரி.]

அடலை

அடலை aḍalai, பெ. (n.)

   1. காய்ச்சல்; fever (சா.அக.);.

   2. சுடலை (பொதி.நி.);; cremation ground.

   3. சோறு; cooked rice.

அக்காரடலை (உ.வ.);.

   4. சாம்பல்; ashes.

     “வேளும் புரமும் அடலைபட விழித்து” (உபதேசகா நரகா. 39);.

   5. நீறு (பற்பம்); (இராசவைத். 161);; metallic calx.

   6. திருநீறு; sacred ashes smeared on the body as a mark of a saivaite.

     “ஆதியாலயத் தடலைகொண்டு” (திருவிளை. சமணரைக். 82);.

   7. போர் (பிங்.);; battle.

   8. போர்க்களம்; battle-field.

     “அடலையினுணர்வின் றாகும்” (கந்தபு. யுத்த. சூரபன். 256);.

ம. அடர்களம்.

   9. துன்பம்; trouble, distress.

     “அடலைக்கடல் கழிவான்” (தேவா. 4.110 ; 6);.

ம. அடர்; க. அடலு ; தெ. அடலு, அடலடி.

     [அடு → அடல் → அடலை. அடுதல் = சுடுதல், சமைத்தல், பொருதல், கொல்லுதல்.]

 அடலை aḍalai, பெ. (n.)

அடலம் பார்க்க;see adalam.

அடலை புடலையாய்

அடலை புடலையாய் aḍalaibuḍalaiyāy, கு.வி.எ. (adv.) (நெல்லை)

   1. மிகத் துணிச்சலாய்; in an impetuous manner.

   2. திடுமென; Suddenly.

     [அடு → அடல் → அடலை → அடலைபுடலை – ‘அடலை’யின் எதுகையிரட்டல்.]

அடலைமுடலை

 அடலைமுடலை aḍalaimuḍalai, பெ. (n.)

   வீண் சொல் (யாழ்ப்.);; vain words (J);.

     [அடலை → அடலைமுடலை – ‘அடலை’யின் எதுகையிரட்டல்.]

அடலோர்

அடலோர் aṭalōr, பெ.. (n.)

   வலிமை உள்ளோர்; strong warrior

     “அடலோர் பயிற்றும் நின்சுடர் மொழி ஆண்மையும்” (இலா 15:2);

     [அடல்+(ஆர்);ஓர்]

அடல்

அடல் aḍal, பெ. (n.)

   1. சமைத்தல்; cooking.

   2. கொல்லுகை; killing, murdering.

     “அன்னவர் தமையட லரிய தாமெனின்” (கந்தபு. யுத்த மூவாயி. 70);.

   3. வருத்துதல்; to afflict, cause pain or suffering.

     “அடல்வண்ண வைம்பொறியும்” (சீவக. 1468);.

   4. பகை; hatred, enmity.

     “மன்னுசிற் றம்பலவர்க் கடலையுற் றாரின்” (திருக்கோ. 218);.

   5. போர் (சூடா.);; war, conflict.

     “அடல்வலிமானவர்” (கந்தபு. தேவ. தெய்வ. 67);.

   6. வலிமை; power, strength.

     “அடன்மாவின் பேரு ரித்திறந் தரித்தனை” (கந்தபு. உற்பத். மோன. 12);.

   7. வெற்றி; victory, success.

     “அடலயி னெடுவே லண்ணல்” (கந்தபு. யுத்த, சூரபன். 256);.

ம. அடல், அடர் ; க., தெ. அடரு.

     [அடு → அடல். அடுதல் = சமைத்தல், கொல்லுதல், வருத்துதல்.]

 அடல் aḍal, பெ. (n.)

   ஒருவகைக் கடல்மீன்; a kind of sea-fish, Cynoglossus semifasciatus.

அடளை

அடளை aḍaḷai, பெ. (n.)

   கடல்மீன்வகை; a kind of marine fish.

அடல்2 பார்க்க;see adal2.

அடவாதி

அடவாதி aḍavāti, பெ. (n.)

   1. பிடிவாதக்காரன்; obstinate person.

   2. தீராப்பகையுள்ளவன்; revengeful person.

     [Skt. hatha-vadin → த. அடவாதி.]

அடவாபிதன்

 அடவாபிதன் aḍavāpidaṉ, பெ. (n.)

   மஞ்சள்; turmeric, saffron, Curcuma longa (சா.அக.);.

அடவி

அடவி aḍavi, பெ. (n.)

   1. மரமடர்ந்த காடு; thick forest, jungle.

     “விந்தத் தடலியும்.” (சிலப். 6;29);.

     ‘அடவி சென்றும் விறகுக்குப் பஞ்சமா’ ? (பழ.);.

   2. சோலை; grove.

   3. மிகுந்த கூட்டம் அல்லது அளவு; large collection.

     “வேரிமலர் முண்டகத் தடவிதிக் கெறிய” (கல்லா. 56);.

   4. பூஞ்சோலை (நந்தவனம்); (திவா.);; pleasure-garden.

ம. க., கொலா., பிராகி., அடவி ; தெ. அடவி, அடி.வி.

     [அடு → அடர் → அடர்வி → அடவி = மரமடர்ந்த காடு.]

த. அடவி → Skt. ațavi. அட் (to wander); என்னும் மூலத்தினின்று திரிந்து, அலைந்து திரியும் இடத்தைக் குறிப்பது அடவி யென்னுஞ் சொல்லென்று வடமொழியாளர் பொருட்கரணியம் கூறுவது பொருந்தாது. இராமனும் பாண்டவரும் பிறரும் காட்டில் அலைந்து திரிந்ததை உட்கொண்டு அவர் அக்கருத்தைக் கொண்டிருக்கலாம். ஆயின், அது ஒரு சிலர்க்கே பொருந்துவதாதலானும், அடவியென்பது மரமடர்ந்த காட்டையே குறிக்குஞ் சிறப்புச் சொல்லாதலானும், ஆரியரொடு தொடர்பற்ற ஆனைமலைக் காடரும் அச்சொல்லைத் தொன்றுதொட்டு வழங்கி வருதலானும், தமிழ் வடமொழிக்கு முந்தியதாதலானும், அடவியென்பது தமிழ்ச் சொல்லேயென்பது தேற்றமாம்.

 அடவி aṭavi, பெ.. (n.)

   1. போர்ப்படை; army. (தெ.கோ.சா.3:2);.

     [அடர்+வி]

அடவிகம்

 அடவிகம் aḍavigam, பெ.. (n.)

   சாம்பல்; ashes (சா.அக.);.

அடவிக்கம்பம் பார்க்க;see adavi-k-kambam.

அடவிக்கச்சோலம்

அடவிக்கச்சோலம் aḍavikkaccōlam, பெ. (n.)

   1. கத்தூரி மஞ்சள்; long and round zedoary, Curcuma amada.

   2. ஒருவகை நறுமணப் பண்டம்; an aromatic drug.

ம. அடவிக்கச்சோலம்

     [அடவி + கச்சோலம்.]

அடவிக்கம்பம்

 அடவிக்கம்பம் aḍavikkambam, பெ.. (n.)

   சாம்பல்; ashes (சா. அக.);.

அடவிக்கல்

 அடவிக்கல் aḍavikkal, பெ. (n.)

   காட்டில் அகப்படும் கரும்புள்ளிக் கல், கானகக் கல்; a stone with black dots, found in the forest (சா.அக.);.

     [அடவி + கல்.)

அடவிக்காணம்

 அடவிக்காணம் aḍavikkāṇam, பெ. (n.)

   காட்டுக் கொள்; jungle horse-gram, Cassia absus (சா.அக.);.

     [அடவி + காணம்.]

அடவிக்கொல்

 அடவிக்கொல் aḍavikkol, பெ. (n.)

   கோரோசனை (பரி.அக.);; bezoar.

அடவிசரர்

அடவிசரர் aḍavisarar, பெ. (n.)

வேடர்; hunters.

     “அடவி சரர்குல மரகத வனிதையும்” (திருப்பு. 563);.

     [த. அடவி +- Skt. cara → த. சரர்.]

அடவிச்சொல்

 அடவிச்சொல் aḍaviccol, பெ. (n.)

   கோரோசனை; bezoar (மு.அ.);.

ஒ.நோ. அடவிக் கொல்.

அடவிநீர்

 அடவிநீர் aḍavinīr, பெ. (n.)

   காட்டாற்று நீர்; water of a jungle river (சா.அக.);.

அடவிப்புடவி

அடவிப்புடவி aṭavippuṭavi, பெ.. (n.)

   காட்டை அடுத்துள்ள நிலம்; proximity of forest area.

     “விந்தாடவிப்புடவிபோய்” (ஒட்.4:13);.

     [அடவி+புடவி]

அடவிமஞ்சள்

 அடவிமஞ்சள் aḍavimañjaḷ, பெ. (n.)

   மரமஞ்சள்; tree turmeric, Coscinium fenestratum (சா.அக.);.

அடவிமார்

அடவிமார் aḍavimār, பெ. (n.)

   நெசவாளருள் ஒரு வகுப்பார்; a class of weavers (M.E.R. 310 of 1916-B);.

     [அடை → அடைவு → அடைவி → அடவி + மகார் → மார் (ப. பா. ஈறு);.]

அடவிமூர்ச்சி

 அடவிமூர்ச்சி aḍavimūrcci, பெ. (n.)

   சிவப்புக் கிலுகிலுப்பை; rattle-wort, Crotolaria laburnifolia (சா. அக.);.

அடவிமேற்புல்லுருவி

 அடவிமேற்புல்லுருவி aḍavimēṟpulluruvi, பெ. (n.)

   கள்ளிப்புதரில் முளைக்கும் புல்லுருவி; a parasite found on kalli tree, Euphorbia genus.

     [அடவி + மேல் + புல்லுருவி.]

அடவிமை

 அடவிமை aḍavimai, பெ. (n.)

   கருங்கரிசாலை, கரிசலாங்கண்ணியின் கரிய வகை; black eclipse plant, Eclipta prostata (nigra);.

அடவியன்

அடவியன் 1 aḍaviyaṉ, பெ. (n.)

   காடுவாழ்நன்; forest-dweller.

ம. அடவிகன் ; க. அடவிசரரு.

 அடவியன் 2 aḍaviyaṉ, பெ. (n.)

   1. ஒலையீர்க்கு வாரடை (யாழ்ப்.);; mid-rib, as of a palm leaf(J.);.

   2. துடைப்ப வகை (யாழ்ப்.);; broom made of woody tendons or mid-ribs of palm leaves (J.);.

அடவியார்

அடவியார் aḍaviyār, பெ. (n.)

   கைக்கோளரின் குலப் பட்டப்பெயர்களுள் ஒன்று (இ.வ.);; a caste title of the Kaikkola weavers (Loc.);.

     [அடை → அடைவு → அடைவி → அடவி + ஆர் (உ. பன். ஈறு);.]

அடைதல் = 1. அடைக்கலம் புகுதல்.

     “அடைந்தவர்க் கருளா னாயின்” (கம்பரா. விபீடண. 111);.

   2. பேரின்ப வீடுபெறுதல்.

உலக வாழ்வில், ஒருவர் துன்பத்திற்கு அல்லது கொலைக்குத் தப்பி அடைக்கலம் புக அரசன், படைத்தலைவன், வலியவன், பெருஞ் செல்வன், முனிவன் முதலிய பலரிருப்பினும்,

இறைவனை அடைதலே சிறந்த அடைக்கலம் புகுதலாகக் கருதப்படும். இறைவன் பற்று விஞ்சியவர் நீறுபூசி, இலிங்கங்கட்டி முதலிய பட்டங்களைத் தாங்கிக்கொள்வதும் வழக்கம்.

கைக்கோளருள் ஒரு பிரிவார், இலிங்கம் என்னும் சிவக்குறி யணிபவர்; மற்றொரு பிரிவார் சீர்பாதம் என்னும் குலப்பட்டமுடையார். கோயில்களிலுள்ள தெய்வங்கட்குரிய சப்பரங்களையும் அணிகங்களையும் (வாகனங்களையும்); திருவிழாக் காலங்களில் தாங்கிச் செல்வார் சீபாதந் தாங்கிகள் எனப்படுவர். அப் பெயரின் குறுக்கமே சீபாதம் என்பது.

   தேவபத்தி மிகுதியால், ஒவ்வொரு கைக் கோளக் குடும்பமும் ஒரு பெண்ணைக் கோயில் தொண்டிற்கு ஒப்படைத்து வந்ததாகத் தெரிகின்றது. அதுபற்றி, எட்கார் தரசத்தன் (Edgar Thurston); தம் தென்னாட்டுக் குலமரபுகள் (Castes and Tribes of Southern India); என்னும் நூலிற் பின்வருமாறு தெரிவித் துள்ளார்;     “In every Kaikolan family, at least one girl should be set apart for and dedicated to temple service………”

     “Kaikolan girls are made Dasis either by regular dedication to a temple, or by the headman tying tali (náttu potfu);. The latter method is at the present day adopted because it is considered a sin to dedicate a girl to the god after she has reached puberty, and because the securing of the requisite official certificate for a girl to become a Dasi involves considerable trouble.”

     “It is said”, Mr. Stuart writes, “that, where the head of a house dies, leaving only female issue, one of the girls is made a Dasi in order to allow of her working like a man at the loom, for no woman not dedicated in this manner may do so” (Vol. III, p. 37);.

அடவியார் என்பது, பொருள்களை அடவு (mortgage); வாங்குபவர் என்றும் பொருள்படுமேனும், இறைவனை அடைந்தவர் அல்லது அடைக்கலமாகக் கொண்டவர் என்று பொருள் கொள்ளின், கைக்கோளரின் தேவ பத்தியைச் சிறப்பாகக் குறிக்குமாதலின், அதுவே பொருந்துவதாம்.

அடவியில்திருடி

 அடவியில்திருடி aḍaviyiltiruḍi, பெ. (n.)

   சதுரக் கள்ளி; square spurge, Euphorbia quadruculli.

அடவியீ

அடவியீ aḍaviyī, பெ. (n.)

   கடிக்கின் பெருந் தூக்கமும் மயக்கமும் உண்டாக்கும் காட்டு ஈ (சீவரட். 451);; an insect of the forest, the bite of which develops excessive sleep and stupor.

   2. ஒருவகைக் காட்டுப்புழு; a forest worm (சா.அக.);.

     [அடவி + ஈ.]

அடவிளாகம்

 அடவிளாகம் aṭaviḷākam, பெ.. (n.)

   செங்கற்பட்டு மாவட்டத்தில்உள்ள ஓர் ஊர்; name of the village in Chengalpattu.

     [அடர்+விளாகம்]

அடவு

 அடவு aḍavu, பெ. (n.)

   அடகு (W.G.);; pledge, pawn.

ம., க., து. அடவு ; தெ. அட்டமு.

     [அடைவு → அடவு.]

அடவுசெய்வார்

 அடவுசெய்வார் aḍavuseyvār, பெ. (n.)

அடவிமார் பார்க்க;see adavimar.

அடவோலை

 அடவோலை aḍavōlai, பெ. (n.)

   அடைமான ஓலை; lease-deed.

     [அடை → அடைவு → அடவு. அடவு + ஒலை.]

அடா

அடா 1 aṭā, இடை. (int.)

   1. இழிந்தோன், கீழ்ப்பட்டவன், சிறுவன், சண்டையிடும் பகைவன் ஆகியோரை விளிக்கும் விளி; a vocative addressed to an outcaste, or an inferior, or a small boy or a quarrelling enemy.

     “அவன் செத்த சேதியை நீ யறியாயோ அடா பித்த” (இராமநா. சுந்தர. பக். 267);.

     “நில்லடா சிறிது நில்லடா” (கம்பரா. யுத்த. நாகபா. 73);.

   2. இகழ்ச்சி, வெறுப்பு, வியப்பு, மன வருத்தம் முதலியவற்றின் குறிப்பிடைச்சொல்; an exclamation of contempt, hatred, surprise, regret, etc.

அடா ! இப்பொழுதுதானே பார்த்துவிட்டு வந்தேன். அதற்குள்ளேயா போய்விட்டார்! (உ.வ.);.

ம. எடா ; க. அடா ; தெ. ஏரா.

     [ஏலா → ஏளா → ஏழா → ஏடா → எடா → அடா.]

 அடா 2 aṭā, பெ.எ. (adj.)

அடாத பார்க்க; see adda.

     [அடாத → அடா (ஈ.கெ.எ.ம.பெ.எ.);.]

அடாஅது

அடாஅது aṭāatu, வி.எ. (adv)

   சமைக்காமல்; without cooking.

     “அடா அது அட்ட அமுதம் வாய்மடுத்து “(சேர.2:28);.

     [அடு-அடாது]

அடாக்களியவர்

அடாக்களியவர் aṭākkaḷiyavar, பெ.. (n.)

   ஒழுக்கக்கேடு பண்ணாத களிப்பையுடையவர்; merry men with decency.

     “சீவகன் அடாக்களியவர் தொழில் காண ஏகினான்.” (சீவ. 4:66);.

     [அடாத+களி+அவர்]

அடாசனி

அடாசனி aṭācaṉi, பெ. (n.)

   1. நீர்க்கால்களில் இயற்கையாகப் படரும் ஆரைக்கீரை; greens growing near water channels.

   2. புளியாரை (மலை.);; yellow wood-sorrel, Oxtilis corniculata.

அடாசு

 அடாசு aṭācu, பெ. (n.)

   மட்கின பொருள்; spoiled substance, damaged stuff, putrefied matter.

க. அடசல; து. அதெசு; மரா. அடசாண்டா.

     [அடு → அடாதது → அடாது → அடாசு = தகாதது.]

அடாசு-தல்

அடாசு-தல் aṭācudal,    5 செ.கு.வி. (v.i.)

   விலகுதல்; to recede, give place to.

—, 5 செ.குன்றாவி. (v.t.);

   திணித்தல்; to stuff.

க. அடசு

     [அடை → அடைசு → அடாசு.]

அடாஞ்சி

 அடாஞ்சி aṭāñji, பெ. (n.)

   இலவங்கப்பூ; flower of the clove tree, Caryophyllum (சா.அக.);.

அடாணா

 அடாணா aṭāṇā, பெ. (n.)

   ஒரு பண்;     [U. adhana → த. அடாணா.]

அடாத

 அடாத aṭāta, பெ.எ. (adi.)

   தகாத, பொருந்தாத; unfit, improper.

     [அடு + ஆ(எ.ம.இ.நி.); + த.]

அடாதஞ்சம்

 அடாதஞ்சம் aṭātañjam, பெ. (n.)

   துதிக்கையுள்ள அரிமாப் (சிங்கம்); போன்ற இறந்துபட்ட விலங்கினம், யாளி; an extinct animal resembling the lion, but with a proboscis like that of the elephant.

அடாதது

அடாதது aṭādadu, பெ. (n.)

   தகாதது; that which is unfit, improper.

     “தமக்கடாதது செய்துயிர் வாழ்வது தன்னில்” (பிரபுலிங்க. அக்கமா. துற. 21);.

ம. அடாதது

     [அடுத்தல் = பொருந்துதல், ஏற்றல், தகுதல். அடுத்தது x அடாதது (எ. ம. வினையா. பெ.);.]

அடாதான்

அடாதான் aṭātāṉ, பெ.. (n.)

   பொருந்தாதவன்; enemy.

     “அடாதான்பால், ஈரடியான் மூவுலகும் கொண்டானை” (ஒட்.1:215:16.);.

     [அடாதவன்-அடாதான்]

அடாது

அடாது aṭātu, பெ. (n.)

அடாதது பார்க்க;see adddadu.

     “அடாதுசெய் சடாசுரன்” (பாரத. சடாசு. 22);.

     ‘அடாது செய்பவர் படாதுபடுவர்” (பழ.);.

     [அடாதது → அடாது.]

அடாதுடி

 அடாதுடி aḍātuḍi, பெ. (n.)

   தீம்பு; perversity, wickedness.

க., தெ. அட்டாதிட்டி ; து. அட்டாதுட்டி.

அடாத்தியம்

 அடாத்தியம் aṭāttiyam, பெ. (n.)

   முறைகேடு (வின்.);; impropriety, injustice.

     [Skt. hathat → த. அடாத்தியம்.]

அடாத்து

அடாத்து aṭāttu, பெ. (n.)

   1. வலக்காரம் (வின்.);; violence, force.

   2. அவமதி (வின்.);; insult, provocation.

   3. வழியின்மை (இ.வ.);; unjustifiableness.

     [Skt. hathat → த. அடாத்து.]

அடாநிந்தை

அடாநிந்தை aṭānindai, பெ. (n.)

   1. நிலைக் களம் (ஆதாரம்); இல்லாப் பழிச்சொல்; unfounded reproach.

   2. பொறுக்கமுடியாப் பழிச்சொல்; unbearable slander.

     [த. அடா + Skt. ninda → த. நிந்தை = பழிப்பு. அடாத → அடா.]

அடாநெறி

அடாநெறி aṭāneṟi, பெ. (n.)

   தகாத வழி; evil ways.

     ”அடாநெறி யறைதல் செல்லா வருமறை” (கம்பரா. பால. எதிர்கொள். 1);.

     [அடாத → அடா + நெறி.]

அடா2 பார்க்க;see ada2.

அடாபிடாவெனல்

 அடாபிடாவெனல் aṭāpiṭāveṉal, பெ. (n.)

     ‘அடா’ என்று விளித்து மதிப்பின்றிப் பேசுதல்;

 talking impolitely addressing one ada.

ஏன் என்னை அடாபிடா என்று பேசுகிறாய்? மதிப்பாய்ப் பேசு (உ.வ.);.

அடாபிடி

 அடாபிடி aḍāpiḍi, பெ. (n.)

   வன்செயல்; violence.

ம. அடாபிடி

     [ஒருகா. அடா (தகாத); + அடி – அடாவடி → அடாபிடி.]

அடாபிடித்தனம்

 அடாபிடித்தனம் aḍāpiḍittaṉam, பெ. (n.)

   வன்செயல் தன்மை; the quality of being violent.

குண்டர்களைக் கொண்டு நன்கொடைப் பணந்தண்டுவது அடாபிடித்தனம்.

     [ஒருகா. அடா (தகாத); + அடி (தாக்கு); – அடாவடி → அடாபிடி.]

அடாபுடாவெனல்

அடாபுடாவெனல் aṭāpuṭāveṉal, பெ. (n.)

   ஓர் ஆடவனை மதிப்புரவின்றிப் பேசுதல்; speaking impolitely to a male person.

அவன் என்னை அடாபுடா என்று பேசுகிறான் (உ.வ.);.

     [அட → அடா. ‘புடா’ எதிரொலிச்சொல் (echo-word);. என் → எனல் (தொ.பெ.);. ‘அல்’ (தொ.பெ. ஈறு);.]

அடா1 பார்க்க;see ada1.

அடாப்பழி

அடாப்பழி aṭāppaḻi, பெ. (n.)

   தகாத பழிச் சொல் (சிலப். 9 ; 7, உரை);; slander, calumny, unjust accusation.

     [அடாத → அடா + பழி.]

அடா 2பார்க்க;see ada2.

அடாரளப்பூ

 அடாரளப்பூ aṭāraḷappū, பெ. (n.)

   முடக்கொற்றான்; a plant palsy curer, Cardiaspermum halicacabum.

அடார்

அடார் aṭār, பெ. (n.)

   புலி முதலிய விலங்குகளை அகப்படுத்தும் பொறி; trap for tigers and other animals.

     “பெருங்கல் லடாரும் போன் மென” (புறநா. 19;6);.

     [அடர்த்தல் = அமுக்குதல், நெருக்குதல். அடர் → அடார்.]

அடார்வெளி

 அடார்வெளி aṭārveḷi, பெ. (n.)

   தரிசு நிலம் (இராட்.);; uncultivated open land.

அடாற்காரம்

அடாற்காரம் aṭāṟkāram, பெ. (n.)

   வலக்காரம்; that which is done by force, by violence.

     “அடாற்காரத்தா லரிதாகப் பயிலுதலின்” (திருக்காளத். பு. 18, 10.);.

த.வ. வல்லந்தம்.

     [Skt. hathatkara → த. அடாற்காரம்.]

அடாலத்து

 அடாலத்து aṭālattu, பெ. (n.)

   முறைமன்றம் (P.N.);; court of justice.

த.வ. நயன்மன்றம்.

     [U. adalat → த. அடாலத்து.]

அடாவடி

அடாவடி aḍāvaḍi, பெ. (n.)

   1. கொடும்பேச்சு; violent talk.

   2. கொடுஞ்செயல்; outrage, violence.

ம. அடாபிடி; க., தெ. அடாவுடி; H. hadabadi.

     [அடா + அடி. அடாத → அடா.]

அடாவடி பேசு-தல்

அடாவடி பேசு-தல் aḍāvaḍipēcudal,    1செ.கு.வி (v.i.)

பெரும் பொய்பேசுதல்:

 to utter a biglie.

     [அடாவடி+பேசுதல்]

அடாவடித்தனம்

அடாவடித்தனம் aḍāvaḍittaṉam, ப.பெ. (abst.n.)

   1. போக்கிரித்தனம்; mischief.

   2. கொடுஞ்செயல்; act of violence, outrage.

அவன் செய்வதெல்லாம் அடாவடித்தனம் (உ.வ.);.

     [அடாவடி + தனம் (ப.பெ. ஈறு);.]

அடாவடியடி

அடாவடியடி1 aḍāvaḍiyaḍittal,    4 செ.கு.வி. (v.i.)

   1. வல்லடி வழக்காடுதல்; to lay unjust claim to the property of others using force.

அடாவடியடித்து அவன் பணத்தையெல்லாம் அக்கம்பக்கத்தார் கவர்ந்து கொண்டார்கள் (உ.வ.);.

   2. வம்புரையாடுதல்; to harass by mischievous talk, as a rowdy.

ம. அடாபிடி; க. அடாவுடி; தெ. அடாவடி.

     [அடா (தகாத, முறையற்ற); + அடி (தாக்கு); + அடித்தல் (தாக்கியுரைத்தல்);. அடுத்தல் = தகுதல். அடாத → அடா (ஈ.கெ.எ.ம.பெ.எ.);.]

அடாவடி → டாவடி → ராவடி (கடுங்கொ.);.

 அடாவடியடி2 aḍāvaḍiyaḍittal,    4 செ.கு.வி. (v.i.)

   கொடுமையாகப் பேசுதல்; to speak outrageously.

ஓயாமல் அவனிடம் போய் அடாவடியடிக்கிறார்கள்.

நேற்று இரவெல்லாம் எல்லாருஞ் சேர்ந்து அவனை அடாவடியடித்தார்கள் (உ.வ.);.

-, 4 செ.குன்றாவி. (v.t.);

   கொடுமை செய்தல்; to do violence, to perpetrate outrage.

அவன் பங்காளிகள் அடாவடியடித்து அவன் சொத்தையெல்லாம் பறித்துக்கொண்டார்கள் (உ.வ.);.

     [அடாவடி + அடி (து.வி.);.]

அடாவந்தி

அடாவந்தி aṭāvandi, பெ. (n.)

   1. முறையன்மை (அநியாயம்); (வின்.);; injustice, impropriety.

   2. இட்டேற்றம் (வின்.);; foisted accusation, false report, slander.

   3. துன்பம் (வின்.);; grievance.

     [அடா (அடாது); + வந்தி (வந்தது);. அடாது = தகாது.]

அடாவரி

 அடாவரி aṭāvari, பெ. (n.)

   முறைகேடான வரி (இராட்.);; unjust tax.

     [அடா + வரி. அடாத → அடா.]

அடாவழி

அடாவழி aṭāvaḻi, பெ. (n.)

   1. கடுவழி; rough path.

   2. தீயநெறி; evil ways.

ம. அடாவழி

     [அடா + வழி. அடாத → அடா.]

அடி

அடி aḍi,    4 செகுன்றாவி, (v.t.)

   1. விரித்த கையினாலாவது, கோல் முதலிய கருவியினாலாவது, ஆளை அல்லது அஃறிணைப் பொருளை அறைதல்; to beat a person, place or thing with open hand or an instrument, smite, hammer

   அவனைக் கன்னத்தில் ஐந்து விரலும்பட அடித்தான் (உவ);;   2. தண்டித்தல்; to punish

     “அக்கிரமத்தாற் குற்ற மடித்துத் தீர்த்து” (சி சி சுபக் 2.15);;

     “அடிக்கும் ஒரு கை, அணைக்கும் ஒரு கை” (பழ);;

குட்டையிலடித்தல்

   3. தோற்கருவியியக்குதல்; to play on musical instruments made of hollow cylinder or hemisphere with parchment stretched over the opening like drums (S);;

   அழகநம்பி நன்றாய் மதங்கம் (மிருதங்கம்);;அடிப்பான் (உவ);;   4. மணி யொலிப்பித்தல்; to ring a bell

   நிலையத்தில் சுமைதூக்கி (porter);;மணியடித்தவுடன் வண்டி புறப்பட்டுவிட்டது

   5. சிறகியக்குதல்; to flap the wings

கூட்டிலிருந்த குஞ்சு சிறகடித்துப் பறந்துபோய்விட்டது

   6. கல்லெறிந்து காய் வீழ்த்துதல்; to throw a stone and cause fruit(s);;

 to fall from a tree

   ஒரே கல்லால் ஒரு மாங் குலையை அடித்து விட்டான் (உவ);;   7. தண்ணீரை வலுவாகத் தெளித்தல்; to splash water with force

முகத்தில் தண்ணீரை அடி

   8. மருந்து அல்லது மருந்துநீர் சிவிறியால் தெளித்தல்; to spray liquid or powdered medicine

புன்செய்களுக்குப் பூச்சிமருந் தடித்தார்கள்

   9. மோதுதல்; to dash

   அலையடிக்கிறது தொடர்வண்டியிற் போகும்போது பலகணிக்கு வெளியே தலையை நீட்டியதால் தொலைவரிக்கம்பம் அடித்துவிட்டது (உவ);;   10. துவைத்தல்; to wash by beating wet clothes on a stone

வேட்டியை இரண்டடி அடித்துத் தா

   11. மாப்பிசைதல்; knead, as four

அப்பத்திற்கு மாவடிக்க வேண்டும்

   12. உடைத்தல்; to break, as clods of earth

   நிலத்தை உழுதபின் கட்டியடிக்க வேண்டும் (உவ);;   13. போரில் தாக்குதல்; to attack in battle

அடித்தான் பகதூர்வெள்ளை கங்கை கொண்டான் கயத்தாறுவரை

   14. வண்டி குலுங்குதல்; to jerk, jolt

   பேரியங்கியின் (bus);;   பின்புறமும், இயங்கி நரவண்டியும் (auto-ricksha);;ஒடும்போது தூக்கியடிக்கும்

   15. காலங் கடத்தி வருத்துதல்; to annoy by undue postponing

வாங்கின கடனைக் கொடாமல் இழுத்தடிக்கிறான்

   16 முத்திரை பொறித்தல்; to stamp, impress, mark on

முத்திரையடித்தல்

   17 பதித்தல்; to strike into, drive in

   சுவரில் ஆணியடித்திருக்கிறது நிலத்தில் முளையடிக்க வேண்டும் (உவ);;   18. அச்சிடுதல்; to print

அச்சடிக்கும் இடம்

   19.பொறியில் தைத்தல்; to sew on a machine

   ஒரு சொக்காய் (shirt);;அடித்துக் கொடு

   20. வெட்டுதல்; to dig

நீர்ப்பாசனத்திற்கு ஒரு கிணறடிக்கவேண்டும்

   21. செய்தல், கட்டுதல், அமைத்தல், பதித்தல்; to make, build, construct, pitch

 to make a stone implement by chiselling

அம்மி திரிகையுரல் அடிக்குமிடம்

 to sculpture by chiselling stone or casting metal

   வள்ளுவர் கோட்டத்தில் திருவள்ளுவர் படிமை கருங் கல்லில் அடித்துவைத்திருக்கிறது அவன் அடித்து வைத்த சிலை போலிருக்கிறான் (உவ);; to build, construct

மரத்தாலடித்த மனை சோற்றாலடித்த சுவர்

 to pitch, tent

   புதிதாய் வந்த வட்டக்காட்சிக்குப் (circus);;பெரிய கூடாரம் அடித்திருக்கிறார்கள்

   22. நகையாடிக்கூறுதல்; to joke, to make fun of

புது மணவாளப் பிள்ளையை முறைகாரப் பெண்கள் நையாண்டியடிப்பது வழக்கம்

   23. குறை சொல்லுதல்; to criticise

   கட்டத் தெரியாவிட்டாலும் கட்டின வீட்டிற்கு வக்கணையடிக்கத் தெரியும் (உவ);;   24. ஒட்டுதல்; to drive as cart, plough, bullocks, etc

வண்டியடித்தல், ஏரடித்தல், பிணையலடித்தல் முதலியன

   25. வண்டியிற் கொண்டுவருதல்; to cart நாலுவண்டி மணலடித்தான் (உவ);;

   26. வண்டியிற் கொண்டு நிலத்திலிடுதல்; to cart dry clay, manure, etc

நன்செய்க்குக் கரம்பையும் உரமும் அடிக்க வேண்டும்

   27. உள்ளிடுதல்; to apply, inject

காரைமுள் தைத்துக் களைந்தெடுத்த இடத்தில் எருக்கம் பால் அடிக்கவேண்டும்

   28. வாரிக்கொண்டு போதல்; to sweep away, as flood

களத்திலிருந்து நெல்லையெல்லாம் வெள்ளம் அடித்துக்கொண்டு போய்விட்டது

   29. கவர்தல்; to seize, snatch, steal, rob, plunder, take by force

கோழிக்குஞ்சைப் பருந்தடித்துக் கொண்டு போய்விட்டது அவன் பணப் பையை எவனோ அடித்துக்கொண்டு போய் விட்டான் அவன் சொத்தையெல்லாம் கொள்ளையடித்துவிட்டார்கள்

   30. நீக்குதல்; to remove, erase, cross out, nullify

அந்த மாணவன் பெயரை அடித்துவிட்டார்கள் பிழையான விடைகளையெல்லாம் ஆசிரியர் அடித்து வைத்திருக்கிறார் ஒரு சட்டம் இன்னொரு சட்டத்தை அடிக்கும்

   31. மறுத்தல்; to refute, contradict

அவன் சொல்வதையெல்லாம் அடித்துப் பேசு

   32. வெல்லுதல்; to defeat, overcome, win the game

அவனை ஒட்டப் பந்தயத்தில் அடித்து விட்டான்

     “அடித்தது ஆட்டம், பிடித்தது பெண்டு” (பழ);;

   33. வென்று பெறுதல்; to win, as a prize

அவன் பேச்சுப் போட்டியில் ஒரு வெள்ளிக் கிண்ணத்தை அடித்து விட்டான்

   34. கொல்லுதல்; to kill

     “புலியடிக்குமுன் கிலியடிக்கும்” (பழ);;

அவன் பேயடித்துச் செத்தான் பழைய வீட்டுப் புறக்கடையில் ஒரு பாம்பும் ஒரு தேளும் அடித்தார்கள் மருமகன் வந்திருந்தபோது கோழியடித்து விருந்திட்டார்கள் வேட்டைக்காரன் ஒரு முயலடித்துக்கொண்டு வந்தான்

   35. அழித்தல்; to ruin, destroy

திரௌபதி வஞ்சினம் கவுரவர் மரபை அடித்துவிட்டது

   36. அடித்து உதிர்த்தல்; to beat down fruits from trees

   37. கதிரினின்று தவசமணிகளை அடித்துப் பிரித்தல்; to beat and separate grains from spike or head of corn

இன்று களத்தில் நெல்லடித்தோம்

   38. பயிர்செய்தல், தவசம் விளைவித்தல்; to raise a crop, produce food grain

   அதே நிலத்தில் சென்ற ஆண்டு பத்து மூட்டை சாமையடித்தோம் (தரும);;   39. கரண்டியால் அடித்துக் கலக்குதல்; to stir with a spoon

   ஒரு முட்டையடித்து அடை சுடு;ஒரு குவளை தேநீர் அடித்துக்கொடு

   40. பேரளவாயுண்ணுதல்; to eat voraciously, to drink excessively

   கருப்பண்ணன் இன்று காலை இருபது இட்டிலியும் ஐந்து குவளை கொழுந்துநீரும் (தேநீரும்);;அடித்துவிட்டான்

   41. கொல்லாமற் சாக வைத்தல்; to cause death through indirect means

அவனைப் பட்டினிபோட்டுச் சாகடித்தார்கள்

   42. வெடி குண்டு வீசுதல்; to fire shots, discharge cannon balls

விட்டடித்தான் இரண்டு குண்டு

   43. தொலைவரி விடுதல்; to send telegraphic message

   மகனை உடனே வரச்சொல்லித் தொலைவரி (தந்தி);;யடித்தார்கள்

   44. தூசி துடைத்தல்; to dust

மேசை நாற்காலியில் தூசியடி

   45. ஏமாற்றுதல்; to cheat, defraud, swindle

   ஊரையடித்து உலையிற்போட்டு வாழ்கிறான் (உவ);;   46. கஞ்சாப் புகை குடித்தல் அல்லது கஞ்சாக் குழம்பு (லேகியம்);;   உண்ணுதல்; to smoke ganja or eat bhang

   கஞ்சா (பங்கி);;அடிக்கிறான்

   47. காசு உருவாக்குதல்; to mint, coin money

   காசடிக்கும் இடம் (தங்கசாலை);;   48. விற்றல்; to sell

என் வண்டியை எப்படியாவது கையடிக்கப் பார்க்கிறேன்

   49. மனப்பாடஞ் செய்தல்; to memorize, learn by rote

   பாடத்தையெல்லாம் உருவடித்துவிட்டான் (உவ);;   50. கையாளுதல்; to employ, use, handle, practise

   ஆங்கிலமுந் தமிழுங் கலந்தடிக்கிறான் (உவ);;   எ-டு;உழப்பியடித்தல், கலங்கடித்தல், சிதறடித்தல், போக்கடித்தல்

   51. அரித்தல்; to gnaw as white ant, to eat as moth

   பொத்தகத்தைப் பூச்சியடித்து விட்டது (இவ);;   52. மழித்தல்; to shave

அண்ணனுக்கு மீசையடி

   53. நைத்தல்; to crush

   இந்த வேரையடித்துப் புண்ணின்மேல் வைத்துக் கட்டு (இவ);;   54. ஒன்றில் மாட்டி வைத்தல்; to involve, entangle, implicate

என்னைக் குழப்பத்திலடித்துவிட்டு வந்து விட்டான்

   55. சுழித்தல்; to pass, as urine

   சிறுவன் நின்றுகொண்டே அடிக்கிறான் (நகை);;   56. அழுத்துதல்; to press down

   வண்டியில் முன்பொறை (முன்பாரம்);;   அடிக்கிறது, கொஞ்சம் பின்னால் நகருங்கள் (இவ);;   57. கெடுத்தல்; to spoil

   கருமத்தை (காரியத்தை);;உழப்பியடித்துவிட்டான்

   58. ஒன்றை எங்கேனும் தெரியாது விட்டு விடுதல்; to mislay a thing unwittingly and lose it

மாணவன் தன் ஊற்றுத்தூவலைப் போக்கடித்துவிட்டான்

   59. பொறியாற் குத்துதல்; to punch

   60. ஒன்றைச் செய்வித்தல்; to cause anything

   கன்னெய் (petrol);;விலையேற்றம் பல நாடுகளைக் கலங்கடித்து விட்டது

   61. துன்புறுத்துதல்; to afflict, persecute

   இட்டிலர் (Hitler);;   செருமானிய யூதரைச் சிதறடித்தார் (சிதற + அடித்தல் → சிதறடித்தல் = உலகெங்கும் சிதறிப் போமாறு துன்புறுத்துதல்);;   62. தூக்கந் தாக்குதல்; to be affected by sleepiness

அவனைத் தூக்கம் அடிக்கிறது, போய்த் தூங்கச் சொல்

   63. சாய்த்தல்; to bend, turn down

காற்று வேலியை அடித்து விட்டது

   64. விதை நசுக்குதல்; to castrate

   அது காயடித்த காளை (உவ);;ம அடி, அடிக்குக;க அடசு;தெ அடுசு ;து அடிபுனி

     [அடு → அடி]

 அடி 1 aḍi, பெ. (n.)

   அறை, தாக்கு, தட்டு, வீச்சு; beat, stroke, blast, blow, as a wind.

     ‘அடி அதிரசம் குத்து கொழுக்கட்டை’,

     ‘அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவார்’,

     ‘அடிக்கும் ஒரு கை அணைக்கும் ஒரு கை’,

     ‘அடிக்கிற புயலைத் தடுக்க முடியுமா? (பழ.);.

ம., க., கை., குற., து., குட. அடி ; தெ. அடுபு, ஆடு ; கோத. அய்ட் ; மா., கொலா. அட்க் ; பெங்., குவி. அத்த் ; இரு. அடிகெ ; பர்., ஒரி., கட. அட் ; துட. ஒட்ய் ; கொண். டக்.

     [அடு → அடி.]

 அடி 2 aḍi, பெ. (n.)

   1. கீழ்ப்பாகம், கீழ்ப்பகுதி; lower part, bottom, base, basement.

அடிவயிறு, அடிவாரம், அடித்தளம்.

     ‘அடி ஒட்டையாயிருந்தாலும் கொழுக்கட்டை வேகவேண்டியதுதானே’ (பழ.);.

   2. கீழிடம்; a place underneath.

நிலைப்பேழைக்கு அடியில் அடித்துப் பெருக்கு. மரத்தடியில் உட்கார். தேரடிக்கடை.

     ‘அடிச்சட்டிக்குள்ளே கரணம் போடலாமா’,

     ‘அடிவானம் கருத்தால் அப்பொழுதே மழை’,

     ‘அடிநாக்கில் நஞ்சும் நுனிநாக்கில் அமிர்தமுமா?’ (பழ.);.

   3. மண்டி

 sediment.

மண்டியை (அடியிலுள்ளதை);க் கீழே ஊற்று.

   4. அண்மை, ஒரம்; nearness.

கிணற்றடிப் புன்செய்.

   5. பாதம்; foot.

     “தோயு நிலத்தடி” (திருக்கோ. 3);,

     “இப்பாலை நடந்தபெருங் காலடி மேலடி மான டியே” (தனிப்பா. தி. 2, 4;7);.

   6. பாதமிதி; tread.

     “ஆத்தனுான்று மடிதொறுந்தோன்றிய நீத்தம் யாவும்” (கந்தபு. மகேந். காவலா. 8);.

   7. காற்றடம் (சம்.அக.);; footprint.

இம் மண்ணில் பதிந்துள்ள அடி எவ்வழிச் செல்லுகிறது?

   8. செருப்படி (ஒரு மூலிகை);; species of herb.

சிறுசெருப்படி, பெருஞ்செருப்படி.

   9. (திருநீறுஞ் சந்தனமும் வைக்கும்); மடல் தாங்கி; stand for a receptacle.

     ‘புஷ்கர பத்தி மடல் அடியோடு மொன்று’. (S.I.I. ii, 15);.

   10. மரஅடி; stump of a tree.

மரத்தின் அடிப்பகுதியைக் கதவுக்குப் பயன்படுத்து.

   11. அடி மரம்; trunk of a tree.

நேற்றடித்த காற்றில் அடிமரம் வேரோடு சாய்ந்தது.

   12. பன்னிரு விரலம் (அங்குலம்); கொண்ட நீட்டலளவு; linear measure of a foot = 12″,

வள்ளுவர் கோட்டத்தேரின் உயரம் 106 அடி.

   13. குறளடி, சிந்தடி, அளவடி, நெடிலடி, கழிநெடிலடியென ஐவகைப் படும் செய்யுள் வரி; metrical line, of which there are five kinds, viz., kuraladi, Sindadi, alavadi, mediladi and kalinediladi.

     “நாற்சீர் கொண்ட தடியெனப் படுமே” (தொல். பொருள். செய். 31);.

   14. தொடக்கம் (ஆதி);; beginning.

     ‘நடுவின்முடி வினிலடியி னன்றானபொருள்’ (ஞானவா. சனகரா. 22);.

   15. மூலம்; source.

இதனடியாக இது பிறந்தது.

   16. கடவுள்; Supreme Being.

     “ஆரே யறிவாரடியின் பெருமை” (திருமந். 2126);.

   17. பழைமை; antiquity.

     “அடியிட்ட செந் தமிழின்” (தாயு. மலைவளர். 4);.

   18. குல மூலம்; ancestry.

     “பனிமதி மரபிற் கடியுநீ” (பாரத. குரு. 25);

   19. வழிமரபு (சந்தானம்); (யாழ்ப்.);; lineage, descent (J.);,

வாழையடி வாழையென வந்ததிருக் கூட்டம்.

   20. மர வேர்; root of a tree.

     “அடியற்ற மரமென்ன வடியிலே வீழ்ந்து” (தாயு. தேசோ. 10);.

   21. சொல்வேர்; root of a word.

முகம் என்னுஞ் சொல் ‘முகு’ என்னும் அடியினின்று பிறந்தது.

   22. இசைப்பாட்டின் பல்லவி; the chorus of a song.

     ‘ஆயிரம் பாட்டிற்கு அடி தெரியும், ஒரு பாட்டிற்கும் உருத்தெரியாது’ (பழ.);.

   23. செண்டுவெளி (சூடா);; race course

   24. இடம் (பிங்.);; place.

தேரடியில் பார்த்தேன்.

   25. செல்வம்; riches, wealth.

     ‘அடியுடையார்க் கெல்லாம் சாதித்துக் கொள்ளலாமே’ (ஈடு, 4.2 ; 9);.

   26. ஆம்புடை (உபாயம்);; plan of action.

நல்ல அடி எடுத்தாய் (உ.வ.);.

   27. சூதாடுவோர் குழுஉக்குறிகளுள் ஒன்று; a conventional term in gambling.

     “அடியிது பொட்டையீ தென்பர்” (கந்தபு. தக்ஷ. கயமுகனுற். 168);.

   28. உள்மூலநோய்; internal piles or hemorrhoids situated within the sphincter ani (சா.அக.);.

அடிமூலம்.

   29. கனியம் (தாது);; mineral (சா.அக.);.

செம்பும் நாகமும் அடியாகக்கொண்டது பித்தளை.

   30. கல்லுப்பு; precipitated salt found at the bottom of the sea (சா.அக.);.

கடலின் அடியுப்பு.

   31. வழலை; fuller’s earth (சா.அக..);.

   32.. கட்டட நிலம்; building site.

மனையடி.

ம.,. க., குட. அடி ; தெ. அடி, அடுகு ; கோத. அட்ய் ; துட. ஒட்ய் ; கொண். அட்கி ; பர். சடுங் ; சிங். அடிய ; இந். ஏ.டி.

     [அண்டி → அடி.. இனி, அடு → அடி என்றுமாம்.]

 அடி 3 aḍi, இடை. (int.)

   அண்மையிலுள்ள சிறுமிகளையும் தாழ்ந்த நிலைமைப் பெண்களையும், பழக்கம் இழிவு பகைமை முதலியனபற்றி விளிக்கும் விளியிடைச் சொல், ‘அடா’ என்பதன் பெண்பால்; a vocative expressing familiarity, contempt or hatred addressed to small girls or inferior women who are nearby, fem. form of ada.

     ‘அடியென் றழைக்கப் பெண்டாட்டியில்லை, ஆண்பிள்ளை யெத்தனை பெண்பிள்ளை யெத்தனை என்கிறான், ‘என்னடி யம்மா தெற்கத்தியாள்! எந்நேரம் பார்த்தாலும் தொள்ளைக்காது’, அடி என்கிற மந்திரியுமில்லை, பிடி என்கிற அரசனுமில்லை’ (பழ.);.

அடா1 பார்க்க;see ada1.

 அடி aḍi, இடை (int.)

     ‘அடி’ என்னும் பெண்பால் விளியின் (மகடூஉ முன்னிலையின்); சேய்மைக்கேற்ற நீட்டல் வடிவம்;

 the lengthened form of the feminine address adi used on account of the remoteness of the addressee.

     “நில்ல டீஇயெனக் கடுகினன்” (கம்பரா. ஆரணிய, சூர்ப்பணகைப். 93);.

 அடி aṭi, பெ.. (n.)

   கூடைகளுக்கு முதலில் போடும் குச்சியால் ஆன பின்னல். (ம.வ.தொ.68.);; bottom plait.

   2.கட்ட விளையாட்டில் காய்களை நகர்த்தி, வெற்றி பாதை அடி எனப்படும்.

 To make the items in such a way to gain success.

   3.ஒயிலாட்டத்தின் வகை; stylish step in oyilattam.

     [அடு-அடி]

அடி நடத்து-தல்

 அடி நடத்து-தல் aṭinaṭattutal, செ.கு.வி. (v.i.)

திருடியவனின் கால் தடத்தை வைத்து

   திருட்டைக் கண்டு பிடித்தல்; to find out the theft by tracing the foot print of the thief.

     [அடி+நடத்து]

அடி-த்தல்

அடி-த்தல் aḍittal,    4.செ.கு.வி. (v.i.)

   1. விளையாடுதல்; to sport, play.

குண்டடித்தல், கோலியடித்தல், சிலம்படித்தல், நொண்டியடித்தல் முதலியன.

   2. தனியாக அல்லது கூடிக் கூத்தாடுதல்; to dance singly or in groups.

கூத்தடித்தல், கழியலடித்தல், கும்மியடித்தல் முதலியன.

     ‘நான் இவ்வமணக் கூத்தெல்லா மடித்தேன்’ (திவ். திருமாலை. 34, வியா.);.

   3. ஒரு நன்னிகழ்ச்சியின்போது கண்னன்ன உறவினர் ஒருவரின்மையால் மனம் வருந்துதல்; to suffer in mind due to the absence of a beloved person on a festive occasion.

நேற்று நிகழ்ந்த விருந்திற்கு நீங்களின்மையால் என் மனம் மிகவும் அடித்துக்கொண்டது (உ.வ.);.

   4. துடித்தல்; to twitch, move spasmodically.

இருநாளாய் எனக்குக் கண் அடித்துக்கொள்கிறது, என்ன நேருமோ, தெரியவில்லை (உ.வ.);.

   5. சாடை காட்டுதல்; to hint by gesture.

அவன் அவளைப் பார்த்துக் கண்ணடிக்கிறான் (உ.வ.);.

   6. உடம்பு சுடுதல்; to suffer from fever.

அவனுக்குக் காய்ச்சலடிக்கிறது (உ.வ.);.

   7. பூசுதல்; to besmear, daub.

வீட்டிற்கு வெள்ளையடிக்க வேண்டும் (உ.வ.);.

   8. தடவுதல்; to stroke, brush over.

அவனுக்குக் குழையடித்துத் தேட்கொட்டு வலியைப் போக்கினார்கள் (உ.வ.);

   9. அலப்புதல்; to chatter, prattle, swagger, bluff.

நாள் முழுவதும் அரட்டையடிக்கிறான். எங்கே போனாலும் வாயடிக்கிறான் (உ.வ.);.

   10. அசைத்தல்; to wag.

நாக்கடித்தல் = நாவசைத்தல், நாவசைத்துச் சொல்லுதல் அல்லது பேசுதல். இளநாக்கடித்தல் = ஒன்றன்மேல் விருப்பமில்லாததுபோற் காட்டுதல். இழந்த நாக்கடித்தல் = எண்ணிப் பாராது வாய்நேர்தல் (வாக்களித்தல்);.

   11. துணி காற்றில் அசைந்தாடுதல்; to flutter, as a flag or cloth hung for drying.

காயப்போட்ட வேட்டி காற்றிற் படபடவென்று அடிக்கிறது (உ.வ.);.

   12 மணி ஒலித்தல்; to sound or ring, as a bell.

கோயில் மணியடிக்கிறது (உ.வ.);.

   13. காற்று வீசுதல்; to blow, as strong wind.

புயற்காற்றடிக்கிறது (உ.வ.);.

     “சண்டமா ருதச்சுழல் வந்துவந் தடிப்ப’ (தாயு. தேசோ. 2);.

   14. மூக்கிற்குப் புலனாதல்; to be perceived by the sense of smell.

   பூக்கடைக்குப் போனால் நல்ல மணம் (வாசனை); அடிக்கிறது;குப்பைப் பக்கம் போனால் தீய நாற்றம் அடிக்கிறது (உ.வ.);.

   15. ஒளிர்தல்; to shine, as moon; to flash, as lightning.

நிலாப் பட்டுப்பட்டென்று அடிக்கிறது. நாலு பக்கமும் மின்னலடிக்கிறது (உ.வ.);.

   16. பொறியியங்குதல்; to work, as a machine.

இந்தத் தையற்பொறி நன்றாயடிக்குமா? (உ.வ.);.

   17. ஆக்கவாய்ப்பு மிகுதல்; to have continued good luck.

அவனுக்கு ஆக்கவாய்ப்பு (அதிர்ஷ்டம்); அடிக்கிறது (உ.வ.);.

   18. பழைய நிலை கொள்ளுதல்; to resile, as elastic bodies.

இந்த வில்லை (spring); முறுக்கினால் எதிர்த்தடிக்கும் (உ.வ.);.

   19. தாக்குதல்; to afflict the body.

வெக்கையடிக்கிறது, வாடையடிக்கிறது, பனியடிக்கிறது.

   20. மழை கனத்துப் பெய்தல்; to rain heavily.

மழை உரத்தடிக்கிறது.

   21. தண்ணீர் வேகமாய்ப் பாய்தல்; to issue forcibly, as water from a pipe.

தண்ணீர் குழாயிலிருந்து ‘சர்’ என்றடிக்கிறது (உ.வ.);.

   22. இயற்றுதல்; to perform, as an athletic feat.

அல்லாப்பாண்டியடித்தல்.

   23. இயங்குதல்; to move.

குதிரை பின்னுக்கடிக்கிறது.

   24. சேறு தெறித்தல்; to splash, as

வண்டி வரும்போது விலகு, இல்லாவிட்டாற் சேறடிக்கும் (உ.வ.);.

   25. நீந்தும்போது கைகால்களால் நீரையடித்தல்; to dabble, to strike water with hands and feet while swimming.

நீச்சலடித்தல்..

   26. திரும்புதல்; to turn.

குப்புற அடித்து விழுந்தான்.

   27. உணர்வு கெடுதல்; to become unconscious.

மயக்கமடித்து விழுந்தான்.

   28. ஒருவன் அல்லது ஒருத்தி வீணாகத் தன்னை வருத்திக் கொள்ளுதல்; to worry oneself unnecessarily, to complain vociferously and repeatedly.

ஏன் இப்படி அடித்துக்கொள்ளுகிறாய்?

   29. ஒன்றன்மேலடித்துச் சூளுறுதியை மிகுத்தல்; to increase the effect of swearing by striking on something important, dear or held sacred.

நீ திருடவில்லையென்று உன் பிள்ளை தலையில் அடித்துச் சொல் (உ.வ.);.

   30. விலை பேசிச் செய்த முடிவைக் கையிலடித்து உறுதிப்படுத்துதல்; to confirm a bargain by striking the palm of another.

விலைபேசி முடித்தவுடன் மாட்டுக்காரன் வாங்குகிறவன் கையில் அடித்துக் கொடுத்தான்.

   31. தேர்வில் தவறுதல்; to fail in an examination.

மதியழகன் ஆட்டை (ஆண்டு);த் தேர்விற் கோட்டடித்து விட்டான்.

   32. சுண்டுவில்லடித்தல்; to catapult.

நான் போனபோது மாட்டுக்காரப் பையன் கவட்டையடித்துக்கொண்டிருந்தான்.

   33. மார்பில் அறைந்துகொள்ளுதல்; to beat the breast and bewail the dead, as women do.

பெண்கள் மாரடித்து அழுகிறார்கள் (உ.வ.);

   34. துளையடித்தல்; to punch a hole.

சுவரில் கண்டகண்ட இடமெல்லாம் இப்படியா துளையடிப்பது?

   35. பூசுனம் பூத்தல்; to become mouldy.

மூடி வைத்த பலகாரத்திற் பூஞ்சான் அடித்துவிட்டது.

   36. படர்தல்; to spread, as moss.

பாசியடித்த குளத்தில் இறங்காதே.

   37. மழித்தல்; to shave.

தம்பிக்கு மொட்டையடி.

   38. தங்குதல்; to abide.

   அது மூதேவி யடித்த முகம்;அதனொடு பேசாதே (இ.வ.);.

   39. ஒரு திசை நோக்கியியங்குதல் (இ.வ.);; to proceed in a particular direction.

காக்கை வலமடித்தது; கரிக்குருவி இடமடித்தது (உ.வ.);.

   40. புலம்புதல்; to lament.

   நேற்று நடுச்சாமத்தில் இந்தப் பக்கம் பேயடித்துக்கொண்டு போனதே;அது உன் காதில் பட்டதா? (இ.வ.);.

   41. மலங்கழிதல்; to have loose motion.

மூன்று முறை வயிற்றாலடித்தது, களைத்துப் போய்விட்டான் (இ.வ.);.

   42. நெஞ்சு பதைத்தல்; to funk.

இருவர் நெஞ்சமும் அடித்துக்கொண்டன.

   43. திரிதல்; to roam about.

ஊரெல்லாம் சுற்றியடித்துவிட்டு வந்திருக்கிறான்.

   44. தீம்பு செய்தல்; to be iniquitous and unruly, to make an insolent display of wealth and luxury.

அண்ணனுந் தம்பியும் செல்வச் செருக்கினால் தலைகால் தெரியாமற் பெருங் கொட்டமடிக்கிறார்கள்.

   45. ஒரு வினையில் ஒட்டாரம் பண்ணுதல்; to be obstinate, to persist in anything.

எருது மொண்டியடிக்கிறது, எவ்வளவு அடித்தாலும் எழவில்லை, நகரவில்லை.

   46. சாய்தல்; to capsize, overturn, as a cart.

வண்டி பள்ளத்திற்போனபோது ஒசாரமடித்துவிட்டது (உ.வ.);.

   47. நடித்தல்;அவனுக்கு உண்மையாக நோயில்லை; நோயாளிபோல் நாடகமடிக்கிறான்.

   48. புறப்பட்டுப் போதல்; to proceed to a place.

பள்ளிக்கூடம் விட்டவுடன் நேரே ஊருக்கு அடித்துவிட்டான்.

   49. காலிற் கட்டியடித்தல்; to be tied to the feet and beaten about, an act of humiliation.

இது நடைமுறையிலன்றிப் பேச்சுவழக்காக மட்டுமுள்ளது. ஏதேனுமொரு துறையில் தாழ்ந்த திறமையுள்ளவரை உயர்ந்த திறமை யுள்ளவருடன் ஒப்பிடும்போது, இவ் வழக்கு நேரும். அன்று, பெரும்பாலும், காணுதல் என்னும் துணைவினை எதிர்மறை வடிவில் இதனொடு சேர்ந்து வரும்.

   எ-டு; இந்தப் பேராசிரியர் மும்மொழியுங் கற்றிருந்தாலும், மறைமலையடிகள் காலிற் கட்டியடிக்கக்கூடக் காணமாட்டார்; This professor, though conversant with three languages, cannot stand in comparison at all to Maraimalai Adigal, lit., This professor…… is not even fit to be tied to the feet of Maraimalai Adigal and beaten.

     “…… காலில்தான் கட்டியடிக்க வேண்டும்’ என்னும் வழக்கு உள்ளது. அது ஒப்பீட்டிலுள்ள ஏற்றத் தாழ்வைச் சற்றுக் குறைக்கும்.

எ-டு; வடமொழியில் வருணாசிரம தரும சாத்திரம் தொகுத்த மனுவைச் சிலர் திருவள்ளுவரோடு ஒப்பிடுவர். முன்னவரைப் பின்னவர் காலில் தான் கட்டியடிக்க வேண்டும்.

அடிஅற்று

அடிஅற்று aṭiaṟṟu,    கட்டுக்குலைந்து; to disunite.

     “யோசனை ஐ இரண்டின் அளவு அடி அற்று உக” (கிட்.11:36.);.

     [அடி+(அறு);அற்று]

அடிகண்மார்

அடிகண்மார் aḍigaṇmār, பெ. (n.)

   சமயக் குரவன்மார், சிறப்பாகச் சமணக் குரவர்; priests, esp. of the Jains.

     “அடிகண் மார்க்கு மேவிய தீங்கு தன்னை விளைப்பது” (பெரியபு. திருஞான. 641);.

     [அடிகள் + மார்.]

அடிகனத்த சட்டி

 அடிகனத்த சட்டி aḍigaṉattasaḍḍi, பெ. (n.)

   எண்ணெய், குழம்பு முதலியன காய்ச்சுவதற்காக அடிப்பாகத்தைக் கனதியாகச் செய்த மட்கலம்; earthen vessel with a bottom sufficiently thick, so as not to break or give way while preparing medicated oils, electuary, etc. (சா.அக.);.

     [அடி + கனத்த + சட்டி.]

அடிகனத்த தாழி

 அடிகனத்த தாழி aḍigaṉattatāḻi, பெ. (n.)

அடிகனத்த சட்டி பார்க்க;see adi-kanattašatti.

     [அடி + கனத்த + தாழி.]

அடிகல்

 அடிகல் aḍigal, பெ. (n.)

   செதுக்கித் திருத்திய கல்; dressed stone.

     [அடி + கல்.]

அடிகளார்

அடிகளார் aṭikaḷār, பெ.. (n.)

   இறைவயன் அடியவர்;     “பரமர் எம் அடிகளார்” (சம்.1:75:2);.

     [அடிகள்+கள்+ஆர்]

அடிகளேம்

அடிகளேம் aṭikaḷēm, பெ.. (n.)

   அடியேங்கள்; respected persons.

     “இந்த அடிகளேம் பணி நடத்த விரைவொடு வருவான் ஏக வேண்டும்.” (கோ.பு.5:108.);.

     [அடிகள்+(யாம்);ஏம்]

அடிகள்

அடிகள் aḍigaḷ, பெ. (n.)

   1. கடவுள்; God Almighty.

   2. திருமால்; Visnu.

     “மலர்மகள் விரும்பும் நம் அரும்பெற லடிகள்” (திவ். திருவாய். 1.3;1);.

   3. துறவறப் பெரியோர்; sages, ascetics.

இளங்கோவடிகள் கவுந்தியடிகள்.

     “‘அடிகள் நீரே அருளுகென் றாற்கு” (சிலப் பதி. 62);.

     “அடிகள் நீரே அருளுதி ராயின்” (சிலப். 10;62);.

   4. பேரறிஞரான இறையடியார் பெயருடன் இணைத்து வழங்கும் மதிப்புச் சொல் ; a term of respect added to the names of scholarly devotees.

எ-டு: மறை மலையடிகள்.

   5. அரசன்; king.

   6. அரசி; queen.

     ‘வீரசிம்மாசனத்து முக்கோக்கிழானடிகளோடும் வீற்றிருந்தருளிய’ (சோழவமி. பக். 102);.

   7. குரு; spiritual preceptor.

ம. அடிகள் ; க. அடிக.

     [அடிகள் என்பது திருவடிகள் என்பதன் குறுக்கம். திருவடி = திருப்பாதம். இறைவனுக்கு உருவமில்லாவிடினும், அவனுக்குச் செய்யவேண்டிய தாழ்மையான பத்தி வணக்கத்தைக் குறித்தற்கு, மாந்தனுறுப்பில் தாழ்வான பாதத்தின் பெயர், தூய்மை குறித்த திரு என்னும் அடைமொழியுடன் ஆளப்பட்டது. பின்னர், தெய்வத்தன்மையும் வணக்கத்திற்குரிமையுமுடைய பன்னிலை மக்கள், அடைமொழி நீங்கிய ‘அடிகள்’ என்னும் பெயராற் குறிக்கப்பெற்றனர்.]

அடிகள்மார்

அடிகள்மார் aṭikaḷmār, பெ. (n.)

   கோயிலில் நடனத்தைப் பேணிய மகளிர். 8:71); dancers in temple.

     [அடி+கள்+மார்]

அடிகாசு

அடிகாசு aḍikācu, பெ. (n.)

   பழைய வரிவகை (I.M.P. Sm. 91);; an ancient tax collected from stalls in markets.

அடிகாயம்

 அடிகாயம் aḍikāyam, பெ. (n.)

அடிக்காயம் பார்க்க;see adi-k-kayam.

அடிகாரன்

அடிகாரன் aḍikāraṉ, பெ. (n.)

   1. கறியுணவிற்காகக் கால்நடைகளைக் கொல்பவன்; butcher.

   2. சிலம்பம் வீசுவோன்; man who fences with long bamboo sticks.

அடிகாற்று

 அடிகாற்று aḍikāṟṟu, பெ. (n.)

   பெருங்காற்று (யாழ்ப்.);; powerful wind, strong gale, tempest, cyclone (J.);.

அடிகிட்டி

அடிகிட்டி aṭikiṭṭi, பெ. (n.)

கிட்டிப்புள் குச்சியைப் பலவாறு அடித்து விளையாடல். (ம.வி.41.);

 the way of playing kittipul game.

     [அடி+கிட்டி]

அடிகுடிமை.

அடிகுடிமை. aṭikuṭimai, பெ.. (n.)

   ஊழியம் செய்யும் குடிகள்; labourers working place or land.

     “மக்கள் மருமக்களை யடிகுடிமை வடக்கிலறையறுந்நாரான மேலைக்கோட்டை பெரும்புலியூர்” (IPS.683);.

     [அடி+குடிமை]

அடிகுளிர்-தல்

அடிகுளிர்-தல் aḍiguḷirtal,    2 செ.கு.வி. (v.i.)

   1. கால் சில்லிடுதல்; to become chill, as the legs or extremities of limbs.

   2. அண்டி சில்லிடுதல்; to become chill, as the anus (சா.அக.);.

அடிகூலி

 அடிகூலி aḍiāli, பெ. (n.)

   கல்லில் அம்மி திரிகை உரல் முதலியன உளியாற் செதுக்கியமைப்பதற்குக் கொடுக்குங் கூலி; charges for making grind-stone, hand-mill, stone mortar, etc., by cutting and chiselling.

அடிகேள்

அடிகேள் aṭiāḷ, பெ.. (n.)

   அடிகள் என்பதன் விளி; elongation of vocative form.

     “மால்விடை மேல் வருவீர் அடிகேள் சொலீர்.” (சம் 2:1:8);.

     [அடிகள்-அடிகேள்]

அடிகொள்(ளு)-தல்

அடிகொள்(ளு)-தல் aḍigoḷḷudal,    16 செ.கு.வி. (v.i.)

   தொடங்குதல்; to begin, commence (சா.அக.);.

அடிகோலு-தல்

அடிகோலு-தல் aḍiāludal,    7 செ.கு.வி. (v.i.)

அடிக்கோலு-தல் பார்க்க;see adi-k-kölu-.

அடிகோல் சயம்

அடிகோல் சயம் aḍiālcayam, பெ.. (n.)

   இருமல்நோயின் தொடக்கம்; incipient consumption (சா.அக.);.

 Skt. kšaya → 5. த. சயம்.

     [அடிகோல் + சயம்.]

அடிக்க

அடிக்க aṭikka,      (வி.எ.) (adv.)

   வீச; to below as wind.

     “மாரியது கூந்தல் மறித்து அடிக்க” (பெ.பொ.9:519.);.

     [அடி-அடிக்க]

அடிக்கடி

அடிக்கடி 1 aḍikkaḍi, பெ. (n.)

   அடிக்குச் சரியான அடி; blow returned.

     [அடிக்கு + அடி.]

 அடிக்கடி 2 aḍikkaḍi, கு.வி.எ. (adv.)

   1. அடி பெயர்க்குந்தோறும்; at every step.

     “அடிக்கடி படித்துகள் பரவை தூர்த்தன” (பாரத. பதினான். 201);.

   2. திரும்பத் திரும்ப, பல முறை; frequently, often, repeatedly.

     “அண்ணல் சாமந்தன் றுஞ்சா னடிக்கடி யெழுந்து” (திருவிளை. மெய்க்காட் 20);.

அவன் அடிக்கடி வந்து போகின்றான் (உ.வ.);.

ம. அடிக்கடி ; க. அடிகடிகெ; தெ. அடுகடு குன.

     [அடிக்கு + அடி.]

 அடிக்கடி aṭikkaṭi, இடை. (part)

   அடுத்தடுத்தது; successively. Often.

     “அலக்கு உக அலக்கு உக அடிக்கடி சிரித்தன” (கலிங்.9:18.);

அடிக்கடிசம்போகி

அடிக்கடிசம்போகி aḍikkaḍisambōki, பெ. (n.)

   1. சேவல்; cock.

   2. அடைக்கலங் குருவி; house sparrow.

இவை அடிக்கடி புணர்வதால் இப்பெயர் பெற்றன (சா.அக.);.

     [Skt. sambhögam (புணர்ச்சி); → த. சம்போகம் → சம்போகி = புணர்ச்சி செய்வது.]

அடிக்கட்டு-தல்

அடிக்கட்டு-தல் aḍikkaḍḍudal,    5 செ.கு.வி. (v.i.)

   புண் புடைத்தல்; to become inflamed, as a boil.

     [அடி + கட்டுதல்.]

அடிக்கட்டை

அடிக்கட்டை aḍikkaḍḍai, பெ. (n.)

   பாய்மரத்தின் அடிப்பாகம் (M. Navi. 81);; lower mast.

     [அடி + கட்டை..]

அடிக்கணை

அடிக்கணை aḍikkaṇai, பெ. (n.)

   கணைக் கால்; shin.

     “இணைவரால் நிகரடிக் கணை யாளை” (சேதுபு. விதும. 80);.

     [அடி + கணை.]

அடிக்கப்பிடிக்க

 அடிக்கப்பிடிக்க aḍikkappiḍikka, நி.கா.எ. (inf.)

   பந்தை அடிக்கவும் பிடிக்கவும்; to strike the ball and catch it.

கைப்பந்தாட்டத்தில் அடிக்கவும் பிடிக்கவும் நல்ல ஆளில்லை.

     [அடிக்க + பிடிக்க.]

அடிக்கயில்

 அடிக்கயில் aḍikkayil, பெ. (n.)

   தேங்காயின் அடிப்பாகம், கண்கயில் என்பதற்கு எதிரானது (யாழ்ப்.);; bottom half of a broken coconut shell, as opp. to the top half of the shell containing the three eyelets (J.);.

க. அடிகரட

     [அடி + கயில்.]

அடிக்கரு

 அடிக்கரு aḍikkaru, பெ. (n.)

   கடக (ஆடி); மாதத்து நீருண்ட மேகம்; dark clouds of the month of Adi, indicating plentiful rain in the ensuing monsoon. ‘ஆடிக் கருவழிந்தால் மழை குறைந்துபோம்’ (வின்);.

     [ஆடி + கரு.]

அடிக்கருத்து

 அடிக்கருத்து aṭikkaruttu, பெ.. (n.)

   ஓர் உரை, ஒரு கட்டுரை அல்லது கலைப் படைப்பின் உட்பொருள்; theme.

     [அடி+கருத்து]

அடிக்கரை

 அடிக்கரை aḍikkarai, பெ. (n.)

   கடற்கரையோரம்; fringe of the seashore.

அடிக்கரை பிடித்துப் போனால் முடிக்கரை சேரலாம் (உ.வ.);.

     [அடி + கரை.]

அடிக்கலம்

அடிக்கலம் aḍikkalam, பெ. (n.)

   சிலம்பு; Anklet.

     “அடிக்கல மரற்ற” (சீவக. 2041);.

     [அடி + கலம். அடி = பாதம். கலம் = அணிகலன், சிலம்பு.]

அடிக்கல்

 அடிக்கல் aḍikkal, பெ. (n.)

   அடிப்படைக் கல், கட்டுமானத்தின் அடையாளமாக முதன் முதலில் இடப்படும் கல்; foundation stone.

முதலமைச்சர் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார் (உ.வ.);.

க. அடிகல்

     [அடி + கல்.]

அடிக்கள்

அடிக்கள் aṭikkaḷ, பெ.. (n.)

   பாதங்கள்; feet.

     “காட்டீர் ஆணீர் நும்தம் அடிக்கள்” (மங்.4:9:7.);

     [அடி+கள்-அடிகள்(அடிக்கள்-வழுவமைதி);]

அடிக்கழஞ்சுபெறு-தல்

அடிக்கழஞ்சுபெறு-தல் aḍikkaḻñjubeṟudal,    19 செ. குன்றாவி. (v.t.)

   பெருமதிப்புப் பெறுதல்; to be highly valued.

     ‘உங்கள் போக்கு அடிக்கழஞ்சு பெறாதோ?’ (ஈடு, 1.4 ; 1);.

     [அடி + கழஞ்சு + பெறு.]

அடிக்கழிவு

அடிக்கழிவு aḍikkaḻivu, பெ. (n.)

   முறைகேடு; disorder, derangement, irregularity, confusion.

     ‘நீ செய்கிற அடிக்கழிவால்’ (ஈடு, 6.2;6);.

அடிக்காந்தல்

 அடிக்காந்தல் aḍikkāndal, பெ. (n.)

   எண்ணெய், குழம்பு முதலிய மருந்து வகைகளைக் காய்ச்சும்போது, அவை பாண்டத்தின் அடியிற் பற்றித் தீய்தல்; scorching due to overheating of medicines, under preparation, such as medicated oil, electuary, etc. adhering to the bottom of the vessel (சா.அக.);.

மறுவ. அடிபற்றிக் காந்தல்

     [அடி + காந்தல்.]

அடிக்காயம்

 அடிக்காயம் aḍikkāyam, பெ. (n.)

   அடியால் உண்டான புண்; contused wound, as caused by a blow or knock.

     [அடி + காயம்.]

அடிக்காரி

 அடிக்காரி aḍikkāri, பெ. (n.)

   புணர்ச்சியிற் பெருவிருப்பங் கொண்ட பெண்; a girl or woman having a strong desire for frequent copulatiom, a whore.

அடிக்காறை

 அடிக்காறை aṭikkāṟai, பெ.. (n.)

   காலில் அணியும் ஒருவகையணிகலன்; a kind of ornament which is worn an anklet.

     [அடி-காறை]

அடிக்கிண்டிவிடுதல்

அடிக்கிண்டிவிடுதல் aṭikkiṇṭiviṭutal, செ.குன்றாவி (v.t.)

கீழுள்ள வைக்கோலை மேலே உதறுதல். (வ.வ.வே.க.10.);.

 to take and spread the hay from beneath.

     [அடி+கிண்டி+விடு]

அடிக்கினார்கொளல்

அடிக்கினார்கொளல் aṭikkiṉārkoḷal, பெ. (n.)

   அடக்கிக் கொள்ளல்.; to control himself.

     “அத்தகு மரபின் அடக்கினர் கொளலே” (ப.பா.58);.

     [அடக்கு-அடக்கினார்+கொளல்]

அடிக்கில்

அடிக்கில் aṭikkil,      (வி.எ.) (adv.)

   வீசினால்; if blown.

     “மாருதம் சண்டம் அடிக்கில் என்” (மூல.2850);.

     [அடி-அடிக்கில்]

அடிக்கீழ்

அடிக்கீழ் aḍikāḻ, பெ. (n.)

   உன் பாதத்தின் கீழ் வாழ்வேன்’ என்னும் பொருள்கொண்ட ஒரு வணக்கச் சொல் (புறநா. 67;12. உரை);; your obedient servant as flourishing beneath your feet’, an ancient term of submissive respect in the first person.

     [அடி + கீழ்.]

அடிக்கீழ்ப்படுத்து-தல்

 அடிக்கீழ்ப்படுத்து-தல் aḍikāḻppaḍuddudal, பி.வி. (v. caus)

   வென்று தன் அதிகாரத்திற்குட்படுத்துதல்; to bring under subjection.

     [அடி + கீழ்ப்படுத்து.]

அடிக்குச்சி

 அடிக்குச்சி aḍikkucci, பெ. (n.)

   ஒரடி அளவு கோல் (இ.வ.);; foot-rule (Loc.);.

அடிக்கோல் பார்க்க;see adi-k-kol.

     [அடி + குச்சி.]

அடிக்குச்சு

 அடிக்குச்சு aḍikkuccu, பெ. (n.)

அடிக்குச்சி பார்க்க;see adi-k-kucci.

அடிக்குடலிசிவு

 அடிக்குடலிசிவு aḍikkuḍalisivu, பெ. (n.)

   சிறு குடலையிழுத்துப்பிடித்துத் துன்புறுத்தும் ஒரு கொடிய நோய்; a dangerous ailment with a severe colic or spasm due to intestinal obstruction, Iliac passion or Ileus (சா.அக.);.

     [அடி + குடல் + இசிவு.]

அடிக்குடல்

 அடிக்குடல் aḍikkuḍal, பெ. (n.)

   சிறுகுடலின் கீழ்ப்பாகம்; the lower part of the small intestimes (சா.அக.);.

     [அடி + குடல்.]

அடிக்குடி

அடிக்குடி aḍikkuḍi, பெ. (n.)

   இறைவனின் அடிமைத் தொண்டன்; a humble devotee.

     “வைத்திடிங் கென்னை நின்னடிக் குடியா” (தாயு. ஆசை. 37);.

ம. அடிக்குடி

     [அடி + குடி.]

அடிக்குடில்

அடிக்குடில் aḍikkuḍil, பெ. (n.)

   1. இறையடிமைக் குடும்பம்; family devoted to service of the deity.

     “அடி யோங்கள டிக்குடில் வீடு பெற் றுய்ந்ததுகாண்” (திவ். திருப்பல், 10);.

   2. அரண்மனை அல்லது கோயில் வேலைக்காரர் வாழும் அடிச்சேரி; servants’ quarters.

     “அன்னந்துஞ்சு மடிக்குடிலின்” (சீவக. 2588);.

   3. புறநகர்; suburb of a town or city (வின்.);.

   4. வேடரிருக்குமூர்; a village inhabited by hunters (சங்.அக.);.

     [அடி + குடில்.]

அடிக்குதல்

அடிக்குதல் aṭikkutal, பெ.. (n.)

   அவியச்செய்தல்; to reduce stiffness.

     “கொண்டடி மகளிரைப் பான்மையின் பிணித்துப் படிற்றுரை அடக்குதல்” (மணி. 18:109-10.);.

     [அடங்கு-அடக்கு]

அடிக்குருகு

அடிக்குருகு aṭikkuruku, பெ.. (n.)

   அடிக்குருத்து; sprout at the base.

     “செம்பொடிப் புரத்திக் கயங்களைக் கொம்பு ஒடித்து அடிக்குருகு துற்றியே” (ஒட்.5:496.);

     [அடி+குருகு]

அடிக்குள்

 அடிக்குள் aḍikkuḷ, கு.வி.எ. (adv.)

   மிக விரைவில்; in a moment.

ஓரடிக்குள் (ஓரடிக்குள்ளே); வந்துவிடு (உ.வ.);.

     [அடிக்கு + உள்.]

அடிக்குழம்பு

 அடிக்குழம்பு aḍikkuḻmbu, பெ. (n.)

   அடி மண்டி; that which settles at the bottom, sediment.

தெ. அடிகண்ட்லு

     [அடி + குழம்பு.]

அடிக்கொருக்க

 அடிக்கொருக்க aḍikkorukka, கு.வி.எ. (adv.)

அடிக்கொருக்கால் பார்க்க;see adikk(u);. oru-k-kal.

     [அடிக்கு + ஒருகால் – அடிக்கொருகால் → அடிக்கொருக்கால் → அடிக்கொருக்க (கொ.வ.);.]

அடிக்கொருக்கால்

அடிக்கொருக்கால் aḍikkorukkāl, கு.வி.எ. (adv.)

   1. ஒவ்வோர் அடுயெடுத்து வைப்பிற்கும் ஒருமுறை; once at every step.

அடிக்கொருக்கால் திரும்பிப் பார்க்கிறான்.

   2. ஒவ்வொரு குறுகிய நேரங் கழித்தும்; regularly at short intervals.

அடிக்கொருக்கால் தண்ணீர் கேட்கிறான்.

ஒருகால் பார்க்க;see oru-kal.

     [அடிக்கு + ஒருகால்.]

அடிக்கொள்(ளு)-தல்

அடிக்கொள்(ளு)-தல் aḍikkoḷḷudal,    16 செ.கு.வி. (v.i.)

   முளைத்தல், தோன்றுதல்; to sprout, originate.

     “வாட்டடங் கண்ணி மார்பில் வந்தடிக் கொண்ட ஞான்றே” (கூர்மபு. கண்ணனவ. 25);.

     [அடி + கொள்.]

அடிக்கோலு-தல்

அடிக்கோலு-தல் aḍikāludal,    7 செ.கு.வி. (v.i.)

   1. அடிப்படையிடுதல்; to lay a foundation, make preparations.

   2. தொடங்குதல்; to begin.

     “அடிக்கோலி ஞாலத்தாள் பின்னு நலம்புரிந்த தென்கொலோ” (திவ். இயற். 2; 82);.

     [அடி + கோலு.]

அடிக்கோல்

 அடிக்கோல் aḍikāl, பெ. (n.)

   ஒரடி அளவு கோல்; foot-rule.

     [அடி + கோல்.]

அடிசாய்-தல்

அடிசாய்-தல் aḍicāytal,    2 செ.கு.வி. (v.i.)

   அடிக்கீழ் நிழல் சாய்தல்; sun’s declining, as indicated by the lengthening of the shadow under one’s foot.

அடிசிற்சாலை

அடிசிற்சாலை aḍisiṟsālai, பெ. (n.)

   உணவுக் கொடையில்லம், அன்னசத்திரம்; rest house for providing food.

     ‘அடிசிற் சாலையும் அறப்புறமும்’ (சீவக. 76, உரை);.

     [அடிசில் + சாலை.]

அடிசிற்பள்ளி

அடிசிற்பள்ளி aḍisiṟpaḷḷi, பெ. (n.)

   மடைப் பள்ளி; kitchen.

     “ஐவே றமைந்த அடிசிற் பள்ளியும்” (பெருங். இலாவாண. 7 ; 1.33);.

க. அடிகெமனெ

     [அடிசில் + பள்ளி.]

அடிசிற்புறம்

அடிசிற்புறம் aḍisiṟpuṟam, பெ. (n.)

   உணவிற்காக விடப்படும் இறையிலி நிலம்; land assigned tax-free for providing food.

     “அடிசிற்புறம் ஆக்கினான்” (சீவக. 2577);.

     [அடிசில் + புறம்.]

அடிசிற்றளி

அடிசிற்றளி aḍisiṟṟaḷi, பெ. (n.)

   மடைப்பள்ளி; kitchen.

     “அடிசிற் றளியா னெய்வார்ந்து” (சீவக. 2579);.

     [அடிசில் + தளி.]

அடிசில்

அடிசில் aḍisil, பெ. (n.)

   1. சோறு; boiled rice.

   2. உணவு; food.

     ‘அடிசில் என்பது. __’ (தொல். சொல். கிளவி. 46, சேனா. உரை);.

க. அடிகெ

     [அடுசில் → அடிசில்.]

அடிசில் பார்க்க;see adušil.

அடிசில்கலம்

அடிசில்கலம் aṭicilkalam, பெ.. (n.)

   அடிசில் ஆக்கும் கலம் (சோறு சமைக்கும் பாத்திரம்);; cooking vessel.

     “அடிசில் கலம் கழீஇக் கருணை ஆர்ந்த இளவாளை” (சீவ.13:3.);.

     [அடிசில்+கலம்]

அடிசில்குழிசி

அடிசில்குழிசி aṭicilkuḻici, பெ.. (n.)

   சோற்றுப் பானை; cooking vessel.

     “குன்றா அடிசில் குழிசிகாணினும்” (பெருங். 37:253.);.

     [அடிசில்+குழிசி]

அடிசில்நூல்

அடிசில்நூல் aṭicilnūl, பெ.. (n.)

   சமைக்கும் முறை பற்றிக் கூறும் நூல்; a treatise on cookery.

     “ஐவருள் ஒருவன் அன்ன அடிசில் நூல் மடையன்” (சீவ 13:137);,

     [அடிசில்+நூல்]

அடிசூடு-தல்

அடிசூடு-தல் aṭicūṭutal, செ.குன்றா.வி. (v.t.)

   வணங்குதல்; to pay obeyance.

     “எழுந்து துள்ளினான் வீழ்ந்து இணை அடிசூடினான்.” (வி.பா.27:77.);.

     [அடி+குடு]

அடிசேர்-தல்

அடிசேர்-தல் aṭicērtal, செகுன்றாவி. (v.t.)

   வீழ்ந்து வணங்குதல்; to prostrate.

     “தப்பினேன் என்று அடி சேர்தலும் உண்டு.” (கலி.89:15.);.

     [அடி+சேர்]

அடிச்சட்டம்

 அடிச்சட்டம் aḍiccaḍḍam, பெ. (n.)

   கதவு, பலகணி முதலியவற்றின் அடியிலிடும் மரம்; bottom piece, as of a door.

     [அடி + சட்டம்.]

அடிச்சரக்கு

அடிச்சரக்கு aḍiccarakku, பெ. (n.)

   1. மட்டமான சரக்கு; inferior articles of merchandise.

   2. குப்பை; refuse.

     [அடி + சரக்கு.]

அடிச்சான்பிடிச்சான் வியாபாரம்

 அடிச்சான்பிடிச்சான் வியாபாரம் aḍiccāṉpiḍiccāṉviyāpāram, பெ. (n.)

அடித்தான்பிடித்தான் வியாபாரம் பார்க்க;see adittan-pidittan-viyabdram.

அடிச்சால்

 அடிச்சால் aḍiccāl, பெ. (n.)

   உழவின் முதற்சால்; first furrow in ploughing.

     [அடி + சால்.]

அடிச்சி

அடிச்சி aḍicci, பெ. (n.)

அடியவள்; devoted maiden, maid-servant.

     “புனைகோதை சூட்டுன் னடிச்சியை” (சீவக 481);.

     ‘அடிச்சிக்கு ஆசை அரசன் மீது’ (பழ.);.

     [அடி → அடித்தி → அடிச்சி.]

அடித்தி பார்க்க;see aditti.

அடிச்சிரட்டை

 அடிச்சிரட்டை aḍicciraḍḍai, பெ. (n.)

   தேங்காயின் அடிக்கொட்டாங்கச்சி, கண்சிரட்டையின் வேறானது (யாழ்ப்.);; thick half or bottom of a coconut shell, used as a vessel, dist. fr. kaņširattai (J.);.

     [அடி + சிரட்டை.]

அடிச்சீப்பு

 அடிச்சீப்பு aḍiccīppu, பெ. (n.)

   வாழைக்குலையின் முதற் சீப்பு; first formed comb in a bunch of plantains.

     [அடி + சீப்பு.]

அடிச்சுதளி

அடிச்சுதளி aṭiccutaḷi, பெ. (n.)

   பெருக்கி நீர்தெளித்துத் தூய்மை செய்தல்; cleaning.

     “மாமண்டபமும் திருமடப்பள்ளியும் அடிச்சுதளியும்” (TAS.iv.148-50);

     [அடித்து+அடிச்சு);+(தெளி);தளி]

அடிச்சுவடு

 அடிச்சுவடு aḍiccuvaḍu, பெ. (n.)

   பாதத் தடம்; footprint.

     [அடி + சுவடு.]

அடிச்சூடு

 அடிச்சூடு aḍiccūḍu, பெ. (n.)

   பாதத்திலுறைக்கும் வெப்பம்; heat felt in the soles of the feet when walking.

     [அடி + சூடு.]

அடிச்சூத்திரன்

 அடிச்சூத்திரன் aḍiccūttiraṉ, பெ. (n.)

   தாழ்ந்த வகுப்பினன்; a person of inferior caste.

     [அடி + சூத்திரன். Skt. südra → த. சூத்திரன்.]

நாற்குலம் பார்க்க;see mar-kulam.

அடிச்சேடம்

அடிச்சேடம் aṭiccēṭam, பெ.. (n.)

அடியை அருச்சித்த மலர்

     “திருவடிச் சேடமும் திகழச் குடினான்.” (சூளா.217.);.

     [அடி+சேடம்]

அடிச்சேரி

அடிச்சேரி aḍiccēri, பெ. (n.)

   1. பணியாளர் குடியிருப்பு (ஈடு. 6.7;1);; servants’ quarters, section of a town occupied by the labouring classes.

   2. ஊரிற் காணியாளர் குடியிருக்கும் பகுதி (W.G.);; part of a village in which the hereditary proprietors reside.

   3. நகரையடுத்த ஊர், புறநகர்;     [அடி + சேரி.]

அடிச்சேரியாள்

 அடிச்சேரியாள் aḍiccēriyāḷ, பெ. (n.)

   குச்சுக்காரி (நெல்லை);; low-class prostitute (Tn.);.

     [அடி + சேரியாள். குற்றில் → குச்சில் → குச்சு = குடிசை அல்லது சிறு கூரைவீடு. அதிற் குடியிருக்கும் எளிய பொதுமகள், குச்சுக்காரி.]

அடிச்சோறு

அடிச்சோறு aṭiccōṟu, பெ.. (n.)

பாத்திர அடியில் ஒட்டியுள்ள சோறு (கொ.வ.வ.சொ.4);.

 rice sticken at the bottom of the vessel.

     [அடி+சோறு]

அடிஞானம்

அடிஞானம் aḍiñāṉam, பெ. (n.)

   ஆவியியல் அல்லது இறையியல் அறிவு (பதிஞானம்);; spiritual wisdom.

     “அடிஞான மான்மாவிற் றோன்றும்” (சி.சி. சுபக். 8;28);.

அடிதடி

 அடிதடி aḍidaḍi, பெ. (n.)

   அடித்துச் செய்யும் சண்டை; quarrel that ends in blows.

கடைசியில் அந்த வழக்காரம் (dispute); அடிதடியில் தான் வந்து முடியும். அந்தத் தெருவெல்லாம் அடிதடியாய்க் கிடக்கிறது (உ.வ.);.

ம. அடிதட ; க. அடிதடி.

அடிதடில்

 அடிதடில் aḍidaḍil, பெ. (n.)

அடிதடி பார்க்க;see adidadi.

அடிதண்டம்

அடிதண்டம் aḍidaṇḍam, பெ. (n.)

   1. தலையெடுக்க வொட்டாத திடீர் அடி; sudden blow that incapacitates.

   2. அடிதண்டனை; flogging (W.);.

 அடிதண்டம் aṭitaṇṭam, பெ.. (n.)

   செய்யாத குற்றத்திற்கு இடப்பட்ட கட்டாய ஒறுப்புக் கட்டணம்; compulsory fine levied for a crime or fault actually not committed. (வ.சொ.அக.);

     [அடி+தண்டம்]

அடிதண்டா

அடிதண்டா aḍidaṇḍā, பெ. (n.)

   1. மண்வெட்டி (C.E.M.);; showel.

   2. கதவிற் குறுக்காக இடும் சட்டத் தாழ்ப்பாள்; bar laid across a door.

அடிதரிகம்

 அடிதரிகம் aḍidarigam, பெ. (n.)

   அசுவகெந்தி; a plant having the smell of a horse, Withania somnifera alias Physalis flexuosa (சா.அக.);.

குறிப்பு: திரு. சாம்பசிவம் பிள்ளை, அடித்திகம் என்பதற்குப் போன்றே அடிதரிகம் என்பதற்கும், ஆங்கிலப் பொருள் கூறியிருக்கின்றார். ஆயின் பின்னதற்குத் தமிழ்ப் பொருள் அமுக்கிரா என்னாது ‘அசுவ கெந்தி’ என்று வேறுபட்டுள்ளது.

அடிதரிகம் என்பது வேறு அகரமுதலிகளிற் காணப்படாமையாலும், மதுரைத் தமிழ்ச் சங்கத் தமிழ்ச்சொல் லகராதி அடித்திகம் என்பதற்கு அசுவகந்தி என்று பொருள் குறித்திருப்பதாலும், அடிதரிகம் என்பது அடித்திகம் என்பதன் (ஏட்டுப் பிழையால் நேர்ந்த); வேற்று வடிவமோ என ஐயுறக் கிடக்கின்றது.

அசுவகந்தி என்பதைக் குதிரைநாறி என்று தமிழிற் குறிக்கலாம்.

அடிதலை

அடிதலை aḍidalai, பெ. (n.)

   1. தொடக்கவிறுதி, முதலும் முடிவும்; beginning and end.

     “அடிதலை வரவிது” (அருணாசலபு. திருமலைச் 60);.

   2. வரலாறு; history, account.

   3. ஒழுங்கு; order, regularity (W.);.

—, பெ., கு.வி.எ. (n. & adv.);

   கீழ்மேல்; upside down.

க. அடிதலெ

அடிதலை தடுமாறு-தல்

அடிதலை தடுமாறு-தல் aḍidalaidaḍumāṟudal,    5 செ.கு.வி. (v.i.)

   தொடக்கவிறுதி தெரியாவாறு குழம்புதல்; to be confused, in the statement of serial or chronological order of things or events.

     “அந்தமில் மறையெல்லா மடிதலை தடுமாறி” (கந்தபு. பாயிரப். 1);.

     [அடி + தலை + தடுமாறு.]

அடிதலை தடுமாற்றம்

 அடிதலை தடுமாற்றம் aḍidalaidaḍumāṟṟam, பெ. (n.)

   முன்பின் முறையின்றிக் குழம்புதல்; utter confusion or disorder in things or statements, topsyturvydom.

அடிதவ்வு-தல்

அடிதவ்வு-தல் aḍidavvudal,    5 செ.கு.வி. (v.i.)

   அடிதாண்டிப் பழகுதல் அல்லது விளையாடுதல்; to jump over, as an exercise of children or young animals (W.);.

     [அடி + தவ்வு. தவ்வு = தாவு. தாண்டு.]

அடிதாறு

அடிதாறு aḍitāṟu, பெ. (n.)

   அடிச்சுவடு; footprint.

     “நிழலு மடிதாறு மானோம்” (திவ். இயற். பெரியதிருவந். 31);.

     [அடி + தாறு. அடி = பாதம்.]

அடிதாளம்

அடிதாளம் aḍitāḷam, பெ. (n.)

   கைகளால் தட்டும் தாளம்; beating time with the hand.

     ‘அடிதாளம் போடா விட்டால் பாட்டு வாராது என்பார்கள்’ (மதி. களஞ். ii, 72);.

     [அடி + தாளம், அடி = கைகளால் தட்டுதல்.]

அடிதாள்

 அடிதாள் aṭitāḷ, பெ. (n.)

அறுவடையில் தண்டு விட்டு அறுக்கப்பட்ட நெல்தாள்.

 paddy stalk cut leaving the stem.

     [அடி+தாள்]

அறுத்துக்கட்டிய நெற்பயிர் அரிதாள் எனவும் அறுத்தப்பின் எஞ்சிநின்ற அடிக் கட்டைத் தாள் அடித்தாள் எனவும் வழங்கப் பெறும். இத்தாளிலிருந்து வளர்ந்த நெற்பயிர் தாளடிப் பயிர் எனப்படும்.

அடிதின்னல்

அடிதின்னல் aḍidiṉṉal, தொ.பெ. (vbl. n.)

அடியுண்ணல் 1 பார்க்க;see adi-y-uņņal 1.

அடிதிரும்பு-தல்

அடிதிரும்பு-தல் aḍidirumbudal,    5 செ.கு.வி. (v.i.)

   பொழுது சாய்தல்; sun’s declining, as indicated by the turning eastward of the shadow under foot.

அடிதுடி

அடிதுடிபெ. (n.)    சண்டை;  quarrel. (கொ.வ.வ.சொ.4.).

     [அடி+தடி-அடிதடி-அடிதுடி]

     [கொ.வ.]

அடிதொடர்

அடிதொடர் aṭitoṭar, பெ.. (n.)

   அடியோடு தொடர்பு பட்டு; connected with

     “அடி தொடர்ந்து ஈர்ந்து நிலம் தோயும் இரும் பிடித்தடக்கையின்” (சிறு. 18:9.);.

     [அடி+தொடர்]

அடிதொடல்

அடிதொடல் aṭitoṭal, பெ.. (n.)

   அடியைத் தொட்டு ஆணையிடுதல்; to take oath touching the feel.

     “தன் பரங்குன்றத்து அடிதொட்டேன் என்பாய்” (பரி.8:62.);.

     [அடி+தொடு+அல்]

அடிதொடு கடன்

அடிதொடு கடன் aṭitoṭukaṭaṉ, பெ.. (n.)

   சூளற்ற கடன்; ceremony regarding oath taken.

     “நின் அடி தொடு கடன் இது மிடறு உகுகுருதி” (சிலப்.12:17.);.

     [அடி+தொடு+கடன்]

அடிதொடு குன்று

அடிதொடு குன்று aṭitoṭukuṉṟu, பெ.. (n.)

   வணங்கப்படும் குன்று; the hill worshiped

     “ஐய சூளின் அடி தொடு குன்று” (பரி.8:70.);.

     [அடி+தொடு+குன்று]

அடிதொடு-தல்

அடிதொடு-தல் aḍidoḍudal,    20 செ.கு.வி. (v.i)

   தெய்வத்தின் பாதந் தொட்டுச் சூளிடுதல்; to take an oath by touching the feet of God or a deity.

     “ஒழியப் போகேனுன்னடி தொட்டேன்” (மணிமே. 18;171);.

-, 19 செ.குன்றாவி. (v.t);

   பெரியோரின் பாதந் தொட்டு வணங்குதல்; to pay homage to great men by touching their feet.

     “கோனடி தொட்டேன்” (கலித். 94;36);.

     [அடி + தொடு. அடி = பாதம்.]

அடிதொறும்

அடிதொறும் aḍidoṟum, கு.வி.எ. (adv.)

   அடிக்கடி; often, repeatedly.

     “அடிதொறாயிரங்கள் சிந்தி” (சீவக. 106);.

     [அடி + தொறும்.]

எடுத்துக்காட்டிய செய்யுள் தொடரில் ‘உம்’மை தொக்கது.

அடிதோய்-தல்

அடிதோய்-தல் aṭitōytal,    காலால் தீண்டல்; to touch with leg.

     “கை வைக்கவும் அடி தோயவும் உடன் நின்று கலிக்கும் தொய்வக்க கொடி திசை தைவர நிற்பீர்” (ஒட்.5:11.);.

     [அடி+தோய்]

அடிதோறும்

அடிதோறும் aḍitōṟum, கு.வி.எ.

   ஒவ்வோரடிப்பின் போதும்; at every beat.

     [அடி + தோறும். அடி = அடிப்பு. தொறும் → தோறும்.]

 அடிதோறும் aḍitōṟum, கு.வி.எ. (adv.)

   1. அடிக்கடி; often, repeatedly.

   2. ஒவ்வொன்றன் அடியிலும்; at the bottom of everything.

   3. ஒவ்வொரு பாதத்தின்கண்ணும்; at every foot.

   4. செய்யுளின் ஒவ்வோரடியிலும்; in every line of a poem or verse.

     [அடி + தோறும். தொறும் → தோறும்.]

அடித்த வெண்ணெய்

 அடித்த வெண்ணெய் aḍittaveṇīey, பெ. (n.)

   துப்புரவு செய்த வெண்ணெய்; purified butter (சா.அக.);.

அடித்தடி

அடித்தடி aṭittaṭi, பெ.. (n.)

   அடிக்கும் தடி; attacking stick.

     “அடல் நாக எலும்புஎடுத்து நரம்பில் கட்டி அடித்தடியும் பிடித்து” (கலிங் 7:4);.

     [அடி+தடி]

அடித்தண்டு

 அடித்தண்டு aḍittaṇḍu, பெ. (n.)

   வேரையடுத்துள்ள தண்டு; that portion of the stalk nearest to the root (சா.அக.);.

     [அடி + தண்டு.]

அடித்தமை

அடித்தமை aṭittamai, பெ.. (n.)

   அடித்த செயல்;     “பொன்புரையும் மேனியில் அடித்தமை பொறாது” (விபா 12:109);

     [அடித்தல்-அடித்தமை]

அடித்தலம்

அடித்தலம் aḍittalam, பெ. (n.)

   1. கீழிடம்; lower part.

     “பாசறை கொண்டே யொப்ப வடித்தலம் படுத்து” (கந்தபு. அசுர. நகர் செய். 3.);.

   2. அடிப்படை (அஸ்திவாரம்);; foundation of a building (W.);.

   3. பாதம்; foot.

     “முத்தமிழ் விரகர் பொன்ன டித்தலம்” (பெரியபு. திருஞான. 1072);.

     ‘அடிச்சுவடு கொண்டு கள்ளனைப் பிடிக்கலாம்’ (பழ.);.

   4. திருவடி நிலை; sandals of a great person.

     “அடித்தல மிரண்டையு மழுத கண்ணினான் முடித்தல மிவையென முறையிற் சூடினான்” (கம்பரா. அயோத். திருவடிசூட்டு. 136);.

க. அடிதள

     [அடி + தலம். Skt. sthala → த. தலம்.]

அடித்தளம்

அடித்தளம் aḍittaḷam, பெ. (n.)

   1. கட்டடத்தின் அடிநிலைப் பரப்பு; ground foor.

   2. கிணற்றின் அடிப்பார்; foundation of a well.

   3. அடிவரிசை; lowest stratum, as of a pile (W.);.

   4. அடித்திண்டு (C.E.M.);; basement.

   5. கற்படுத்த நிலம் (சங்.அக,);; ground paved with stones, stone pavement.

   6. படையின் பின்னணி; rear guard of an army.

     [அடி + தளம்.]

அடித்தளை

அடித்தளை aṭittaḷai, பெ.. (n.)

   காலில் உள்ள விலங்கு; chain placed around a prisoner”s ankles.

     “கூடா மன்னர் அடித்தளை நீக்க அருள் சிறந்து ஒரு பால்” (சில 5:182:3.);.

     [அடி+தளை]

அடித்தள்ளிப்போ-தல்

அடித்தள்ளிப்போ-தல் aḍittaḷḷippōtal,    8 செ.கு.வி. (v.i.)

   1. இருக்கை (ஆசன); வாய் மூலம் வெளிப்பிதுங்கி நிற்றல்; protrusion of the rectal walls beyond the anus, prolapse of the rectum.

   2. பெண்கட்குக் கருப்பை வாய் தள்ளல் (உறுப்புத் தள்ளல்);; protrusion of the womb beyond the vulva, prolapse of the uterus (சா.அக.);.

     [அடி + தள்ளிப்போ.]

அடித்தழும்பு

 அடித்தழும்பு aḍittaḻumbu, பெ. (n.)

   அடியால் ஏற்பட்ட புண்ணின் வடு; cicatrice, mark left after healing of wound caused by a blow.

     [அடி + தழும்பு.]

அடித்தானம்

 அடித்தானம் aḍittāṉam, பெ. (n.)

   நிலைக்களம் (ஆதாரம்);; basis, foundation.

ம. க., து. அடி ; தெ. அடுகு.

     [த.அடி + Skt. sthāna → த. தானம் = இடம். மண்டுதல் = நெருங்குதல், நெருங்கித் தொடுதல் அல்லது தாக்குதல், தாங்குதல். மண்டுகால் = முட்டுக்கால், தாங்குகால். மண்டு → மண்டி = தாங்கி. மண்டி → அண்டி = தாங்கி, தாங்கி நிற்கும் அடிப்பகுதி, கைகாலில்லா உடம்பின் அடிப்பகுதி (anus);, அடி. அண்டி தள்ளுதல் = மல வாயிலைக் கொண்ட அடிப்பகுதி கீழிறங்குதல். அண்டி = அடிபோல் தோன்றும் நுனியிற் கொட்டையுள்ள பழம் பழுக்கும் ஒருவகை மரம். அண்டிக்கொட்டை (அண்டிமாங்கொட்டை); = மரமுந்திரிப் பழத்தின் அடியிலுள்ள கொட்டை. அண்டி → அடி.]

ஒ.நோ; தண்டி தடி. இனி, நிலத்தை அடுத்திருக்கும் பகுதி அல்லது உறுப்பு அடியெனப்பட்டது எனினுமாம். அடு → அடி.

ஒ.நோ; தொடு → தொடி.

அடித்தான்பிடித்தான் வியாபாரம்

 அடித்தான்பிடித்தான் வியாபாரம் aḍittāṉpiḍittāṉviyāpāram, பெ. (n.)

   சண்டை சச்சரவான செய்தி; an affair or matter involving quarrel and violent action.

அது, அடித்தான் பிடித்தான் வியாபாரம், நாம் அதில் தலையிட வேண்டியதில்லை (உ.வ.);.

     [அடித்தான் + பிடித்தான் + வியாபாரம். Skt.vyapara → த. வியாபாரம் = தொழில், வேலை, செய்கை, செய்தி.]

அடித்தி

அடித்தி aḍitti, பெ. (n.)

   அடியாள்; devoted maiden, maid-servant.

     “அடித்தி யாரு முன்பட்ட தொழிந்து நுங்கண் முகவியர்” (சீவக. 20.45);.

     [அடி → அடித்தி.]

 அடித்தி aḍitti, பெ. (n.)

   வணிக ஆணையாளர் (C.G.);; mercantile correspondent or agent.

     [U arhat → த. அடித்தி.]

அடித்திகம்

 அடித்திகம் aḍittigam, பெ. (n.)

   அமுக்கிரா (மலை.);; species of withania.

   அமுக்கிறா; horse-plant, Withania somnifera alias Physalis flexuosa (சா.அக.);.

அடித்திசை

அடித்திசை aṭitticai, பெ.. (n.)

   அடியிருக்கும் திசை; direction of the feet.

     “தடக்கை கூப்பி நின் அடித்திசைக்கு இறைஞ்ச” (பெருங்.47:96.);.

     [அடி+திசை]

அடித்திப்பை

 அடித்திப்பை aḍittippai, பெ. (n.)

 bed, that on which anything lies.

     [அடி + திப்பை.]

திப்பை பார்க்க;see tippai.

அடித்திவியாபாரம்

 அடித்திவியாபாரம் aḍittiviyāpāram, பெ. (n.)

   மொத்த வணிகம் (C.G.);; wholesale dealings.

     [U. arhat + skt. vyapara → த. அடித்தி வியாபாரம்.]

அடித்துக்கொண்டுபோ-தல்

அடித்துக்கொண்டுபோ-தல் aḍittukkoṇḍupōtal,    1. வாரிக்கொண்டு செல்லுதல்; to sweep away, as a flood, carry away with a rush.

வெள்ளம் வீடுகளையெல்லாம் அடித்துக்கொண்டுபோய்விட்டது.

   2. கொள்ளைகொண்டு செல்லுதல்; to plunder, rob and get away.

விசயநகர் அரண்மனையில் எஞ்சியிருந்த செல்வங்களையெல்லாம் கொள்ளைக் கூட்டம் அடித்துக்கொண்டு போய்விட்டது.

   3. துயர மிகுதியால் ஒரு பெண் தன் தலையில் அடித்துக்கொண்டு செல்லுதல்; to go about beating on the head, as a grief-stricken woman.

தன் மகன் இறந்து விட்டானென்று தொலைவரி (தந்தி); வந்ததும், தாய் தன் தலையில் அடித்துக்கொண்டு போனாள்.

   4. ஊர்காவலர் குற்றவாளிகளை அடித்துச் சிறைக்குக் கொண்டு செல்லுதல்; to beat the law-breakers and take them to prison, as policemen.

     [அடித்து + கொண்டு + போ.]

அடித்துக்கொல்(லு)-தல்

அடித்துக்கொல்(லு)-தல் aḍiddukkolludal,    7 செ. குன்றாவி. (v.t.)

   கையால் அல்லது கருவியாலடித்துக் கொல்லுதல்; to kill a person or animal by beating with hand(s); or weapons.

     [அடித்து + கொல்.]

அடித்துக்கொளுத்து-தல்

அடித்துக்கொளுத்து-தல் aḍiddukkoḷuddudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. பொதுமேடையில் தலை சிறந்த சொற்பொழிவாற்றுதல்; to deliver an excellent speech at a public meeting;

அன்று நடந்த பொதுக்கூட்டத்தில் ஆ. இராமசாமி (முதலியார்); அடித்துக்கொளுத்திவிட்டார் (உ.வ.);.

   2. பேச்சுப் போட்டியில் ஒப்புயர்வற்ற திறமை காட்டுதல்; to exhibit extraordinary talents in an oratorical contest.

நேற்றுப் பள்ளியில் நடந்த பேச்சுப்போட்டியில், உங்கள் மகன் அடித்துக்கொளுத்தி விட்டான் (உ.வ.);.

ம. அடிச்சுதகர்க்குக

     [அடித்து + கொளுத்து.]

அடித்துக்கொள்(ளு)-தல்

அடித்துக்கொள்(ளு)-தல் aḍiddukkoḷḷudal,    16 செ.கு.வி. (v.i.)

   1. தன்னை அறைந்து கொள்ளுதல்; to beat oneself once or repeatedly.

தன் கணவனுக்கு வேலைபோய்விட்டதென்று தன் தலையில் அடித்துக்கொண்டாள்.

   2. பன்முறை தடுத்துரைத்தல்; to repeatedly protest against.

அது செய்யத் தகாதென்று முன்னமே எத்தனையோ முறை அடித்துக்கொண்டேன்.

   3. அடிக்கடி சண்டையிடுதல்; to quarrel again and again.

இவ்விருவரும் நாள்தோறும் அடித்துக்கொள்கிறார்கள்.

   4. மனம் வருந்துதல்; to suffer in mind.

திடுமென்று ஆற்றில் வெள்ளம் வந்ததனால், என் மகன் திரும்பி வரும்வரை என் மனம் மிகவும் அடித்துக்கொண்டது (உ.வ.);.

     [அடித்து + கொள்.]

அடித்துச்சொல்(லு)-தல்

அடித்துச்சொல்(லு)-தல் aḍidduccolludal,    8 செ. குன்றாவி. (v.t.)

   வலியுறுத்திக் கூறல்; to say emphatically.

     [அடித்து + சொல்.]

அடித்துண்டு

 அடித்துண்டு aḍittuṇḍu, பெ. (n.)

   பிழைப்பு மூலம், வாழ்க்கைமுதல் (ஜீவனாம்சம்);; subsistence allowance.

     [அடி + துண்டு.]

மறுவ. அடுத்தூண்

அடித்துப்பிடுங்குகிறசுத்தியல்

 அடித்துப்பிடுங்குகிறசுத்தியல் aḍittuppiḍuṅgugiṟasuttiyal, பெ. (n.)

   ஆணியடிக்கவும் அதைப் பிடுங்கவும் பயன்படும் சிறு சம்மட்டி, கவைசுத்தியல்; small hammer used to drive nails in and pull them out.

அடித்துப்புரண்டுவிழு-தல்

அடித்துப்புரண்டுவிழு-தல் aḍidduppuraṇḍuviḻudal,    2 செ.கு.வி. (v.i.)

   1. வழுக்குநிலத்தில் வழுக்கிவிழுதல்; to slip and fall down violently on slippery ground.

   2. திகிலடைந்து கலைந்தோடுங் கூட்டத்தில் தடுக்கி விழுதல்; to tumble and roll in a stampede.

   3. சாவீட்டில் பெண்கள் மார்பிலடித்துப் புரண்டு விழுதல்; to beat the breasts and fall down in lamentation at a house where death has occurred.

     [அடித்து + புரண்டு + விழு.]

அடித்துப்புரண்டுவிழுந்தழு-தல்

அடித்துப்புரண்டுவிழுந்தழு-தல் aḍidduppuraṇḍuviḻundaḻudal,    1 செ.கு.வி. (v.i.)

   இழவு வீட்டில் மார்பிலடித்துக்கொண்டு தரையில் விழுந்து அழுதல்; to beat the breasts and fall down at a house where death has occurred and bewail, as a woman.

     [அடித்து + புரண்டு + விழுந்து + அழு.]

அடித்துப்புரண்டுவிழுந்தெழு-தல்

அடித்துப்புரண்டுவிழுந்தெழு-தல் aḍidduppuraṇḍuviḻundeḻudal,    2 செ.கு.வி. (v.i.)

   நெரிசலில் கீழே விழுந்து உருண்டு எழுதல்; to tumble and roll on the ground in stampede and rise.

     [அடித்து + புரண்டு + விழுந்து + எழு.]

அடித்துப்புரண்டுவிழுந்தெழுந்தோடு-தல்

அடித்துப்புரண்டுவிழுந்தெழுந்தோடு-தல் aḍidduppuraṇḍuviḻundeḻundōḍudal,    5 செ.கு.வி. (v.i.)

   நெரிசலில் தவறிக் கீழே விழுந்து உருண்டு விலகித் தப்பித்து ஓடுதல்; to tumble and roll on the ground in stampede, and rise and run away.

     [அடித்து + புரண்டு + விழுந்து + எழுந்து + ஒடு.]

அடித்துப்புரண்டோடு-தல்

அடித்துப்புரண்டோடு-தல் aḍidduppuraṇḍōḍudal,    5 செ.கு.வி. (v.i.)

   வெள்ளம்போல் வாரியடித்துக்கொண்டு போதல்; to roll and rush forward, as a water-fall or flooded river.

     [அடித்து + புரண்டு + ஒடு.]

அடித்துப்புரள்[ளு)-தல்

அடித்துப்புரள்[ளு)-தல் aḍidduppuraḷḷudal,    16 செ.கு.வி. (v.i.)

   சினந்து அடம்பிடிக்கும் குழந்தை அல்லது தினவு கொண்ட கழுதைபோல் தரையில் புரண்டு உருளுதல்; to roll on the ground, as a naughty child in anger or as an ass, to allay itching.

     [அடித்து + புரள்.]

அடித்துப்பேசு-தல்

அடித்துப்பேசு-தல் aḍidduppēcudal,    5 செ. குன்றாவி. (v.t.)

   மறுத்துப் பேசுதல்; to refute, contradict emphatically.

     [அடித்து + பேசு.]

அடித்துமுதலானது

 அடித்துமுதலானது aḍiddumudalāṉadu, பெ. (n.)

   கதிரையடித்துக் களத்திற் குவித்த கூலம்; quantity of grain threshed and heaped on the threshing-floor.

அடித்துவிடு-தல்

அடித்துவிடு-தல் aḍidduviḍudal,    18 செ.குன்றாவி. (v.t.)

   வலிமையாகச் செய்து முடித்தல் (இராட்.);; to accomplish by force (R.);.

அடித்துவிழு-தல்

அடித்துவிழு-தல் aḍidduviḻudal,    2 செ.கு.வி. (v.i.)

   இழவு வீட்டில் மாரடித்துக்கொண்டு விழுதல்; to beat the breasts and fall down at the house where death has occurred, as a woman.

அடித்துவிழுந்தழு-தல்

அடித்துவிழுந்தழு-தல் aḍidduviḻundaḻudal,    1 செ.கு.வி. (v.i.)

   இழவு வீட்டில் மாரடித்துக் கொண்டு விழுந்தழுதல்; to beat the breasts and fall down and bewail, as a woman, at the house where death has occurred.

     [அடித்து + விழுந்து + அழு.]

அடித்தூறு

 அடித்தூறு aḍittūṟu, பெ. (n.)

   மரத்தின் அடிக்கட்டை; stump of a tree.

     [அடி + தூறு.]

அடித்தேறு

 அடித்தேறு aḍittēṟu, பெ. (n.)

   முறைகேடு, நயனன்மை (அநீதி); (இ.வ.);; injustice (Loc.);.

     [அடி + தேறு.]

அடித்தொடை

அடித்தொடை aḍittoḍai, பெ. (n.)

   1. தொடையின் மேற்பாகம்; upper part of the thigh.

   2. தொடையின் பின்புறம்; the back part of the thigh.

   3. (யாப்.); செய்யுளின் அடிதொறும் தொடையமையத் தொடுப்பது;     [அடி + தொடை.]

அடித்தொண்டன்

அடித்தொண்டன் aṭittoṇṭaṉ, பெ.. (n.)

   மெய்யுணர்வு செய்யும் பணியினன்; an ardent devotee.

     “ஆரூர் நறுமலர் நாதன் அடித்தொண்டன்” (நாவ. 4:102:3);.

     [அடி+தொண்டன்]

அடித்தொண்டை

 அடித்தொண்டை aḍittoṇḍai, பெ. (n.)

   தொண்டையின் கீழ்ப்பகுதி; the lower part of the throat.

     [அடி + தொண்டை.]

அடித்தொண்டையிற் பேசு-தல்

அடித்தொண்டையிற் பேசு-தல் aḍiddoṇḍaiyiṟpēcudal,    5 செ.கு.வி., 5 செ.குன்றாவி. (v.i. & v.t.)

   குரலை அடித்தொண்டையிலடக்கிப் பேசுதல்; to speak in guttural voice.

     [அடி + தொண்டை + இல் + பேசு.]

அடித்தொழிலாட்டி

அடித்தொழிலாட்டி aṭittoḻilāṭṭi, பெ.. (n.)

   குற்றவேல் செய்பவள்; a maid servant.

     “ஐயை காணீர் அடித்தொழிலாட்டி” (சில. 16:12.);.

     [அடி+தொழில+ஆட்டி]

அடித்தொழில்

அடித்தொழில் aḍittoḻil, பெ. (n.)

   குற்றேவல்; menial service.

     “அப்பிறப் பியானின் னடித் தொழில் கேட்குவன்” (மணிமே. 22;1.34);.

     [அடி + தொழில்.]

அடித்தொழும்பன்

அடித்தொழும்பன் aṭittoḻumpaṉ, பெ.. (n.)

   திருவடித் தொண்டு செய்பவன்; a sincere servant.

     “உம் அடித் தொழும்பனேனைப் பயங்கெடுத்து” (பெரிய.3516.);.

     [அடி+தொழும்பு+அன்+ஏன்]

அடித்தோழி

அடித்தோழி aḍittōḻi, பெ. (n.)

   தலைமைத் தோழி; chief woman attendant, confidante of a lady.

     “அடித்தோழி சொல்” (சிலப்.29;4-ன் தலைப்பு);.

     [அடி + தோழி.]

அடிநகர்-தல்

அடிநகர்-தல் aḍinagartal,    2 செ.கு.வி. (v.i.)

   இடம்விட்டுப் பெயர்தல்; to move a little, to be dislodged.

அடிநடுமுடி

 அடிநடுமுடி aḍinaḍumuḍi, பெ. (n.)

   காரம், சாரம், உப்பு என்பவற்றை-சிறப்பாகச் சூதம், பூரம், சாரம் என்பவற்றைக் குறிக்கும் குழூஉக் குறியீடு; a veiled term referring in general to alkali, acid and salt but in particular, to mercury, subchloride of mercury and hydrochlorate of ammonia (சா.அக.);.

அடிநமைச்சல்

 அடிநமைச்சல் aḍinamaiccal, பெ. (n.)

   மலவாயிலைச் சுற்றிலும் உண்டாகும் தினவு; intense itching at the anus, Pruritus ani (சா.அக.);.

அடிநா

 அடிநா aḍinā, பெ. (n.)

   நாவின் அடிப்பகுதி; root or lower part of the tongue (W.);.

அடிநாச்சூலை

 அடிநாச்சூலை aḍināccūlai, பெ. (n.)

   ஊதையினால் (வாதத்தினால்); நாவினடியில் ஏற்படும் குத்தல் நோய்; a piercing pain at the root of the tongue.

     [அடி + நா + சூலை.]

அடிநாயேன்

அடிநாயேன் aḍināyēṉ, பெ. (n.)

     ‘நாய்போலத் தாழ்ந்த அடிமையாகிய நான்’ என்று பொருள்படும் ஒரு வணக்கச் சொல்;

 a term of humility referring to oneself as ‘Your humble slave dog.

     “உத்தம வடிநாயே னோதுவ துளது” (கம்பரா. அயோத். குகப். 37);.

அடிநாய்

அடிநாய் aḍināy, பெ. (n.)

   பெரியோர் முன் தன்னைத் தாழ்த்திக் கூறுஞ் சொல்; a term of humility meaning “slave-dog’. “அடிநாயுரை” (தேவா. 7.59 ;11);.

அடிநாள்

அடிநாள் aḍināḷ, பெ. (n.)

   1. முதல்நாள், தொடக்கநாள்; the first day.

   2. இளமைக் காலம்; தொடக்ககாலம்; early life, younger days, early period.

அடிநிமிர்கிளவி

அடிநிமிர்கிளவி aṭinimirkiḷavi, பெ.. (n.)

   பெருகி வரும் பண்ணத்தி; extending line of a stanza.

     “அடி நிமிர் கிளவி ஈர் ஆறு ஆகும்.” (தொல். 26:175.);.

     [அடி+நிமிர்+கிளவி]

அடிநிமிர்வு

அடிநிமிர்வு aṭinimirvu, பெ.. (n.)

   அடிகள் மிக்கு வருதல்; lines increasing.

     “அம்மை தானே அடி நிமிர்வு இன்றே” (தொல்.26:227.);.

     [அடி+நிமிர்வு]

அடிநிலம்

அடிநிலம் aḍinilam, பெ. (n.)

   அடிப்பக்கம், அடியிடம்; bottom of the fort-wall.

     “அடி நிலத்திலே படிவன விடிமுகி லனைத்தும்” (பாரத. கிருட், 60);.

அடிநிலை

அடிநிலை aḍinilai, பெ. (n.)

   1. அடிப்படை (அஸ்திவாரம்);; foundation.

     “ஆகமத்தாலடி நிலை பாரித்து” (பெரியபு. பூச. 6);.

   2. பாதக்குறடு; sandal.

ம. அடிநில

 அடிநிலை aḍinilai, பெ. (n.)

   தூணின் அடிப்பகுதி; the foot or lower member of a pillar.

     [P]

அடிநிலைச் சாத்து

அடிநிலைச் சாத்து aḍinilaiccāttu, பெ. (n.)

   குதிரை யங்கவடி; stirrup.

     “அடிநிலைச் சாத்தோ டியாப்புப் பிணியுறீஇ” (பெருங். இலாவாண. 18;22);.

     [அடி + நிலை + சாத்து.]

அடிநிழலார்

 அடிநிழலார் aḍiniḻlār, பெ. (n.)

   குடிகள் (P.);; subjects of a king.

அடிநிழல்

அடிநிழல் aṭiniḻl, பெ.. (n.)

   அருள்; compassion.

     “அடி நிழல்வட்டம் அடையத் தரூஉம்” (பெருங். 47:78.);.

     [அடி+நிழல்]

அடிநீர்

அடிநீர் aṭinīr, பெ.. (n.)

   கால் கழுவு நீர்; water treatment for washing the feet.

     “காதலன் அடிநீர், சுடுமண் மண்டையில் தொழுதனள் மாற்றி” (சில. 16:38-9.);.

     [அடி+நீர்]

அடிநீறு

அடிநீறு aḍinīṟu, பெ. (n.)

   பாதத்தூளி; dust on the feet.

     “நின்றபிரா னடிநீறு அடியோம் கொண்டு சூடுவதே” (திவ். திருவாய். 5.9 ;2);.

அடிபடாதவர்

அடிபடாதவர் aṭipaṭātavar, பெ.. (n.)

   அடிக்கப்படாதவர்; not beaten

     “விண்ணில் உறை வானவரில் யார் அடிபடாதவர் விரிஞ்சன் அரியே முதலினோர்.” (வி.பா. 12:107.);.

     [அடி+படாதவர்]

அடிபடு-தல்

அடிபடு-தல் aḍibaḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   1. அடிக்கப்படுதல்; to be beaten, struck.

     “பிட்டமுதுக் கடிபடுவோன்” (திருப்பு. 451);.

     “விண்ணிலுறை வானவரில் யாரடி படாதவர்” (பாரத. அருச். தவ. 107);.

   2. தாக்குண்ணுதல்; to hit against, stub, be attacked.

     “அவசமாகியடிபட் டெனைத்தா முறுப்புந் தூளாய்” (ஞானவா. மனத். 6);.

   3. நீக்கப்படுதல்; to be struck off, removed.

அவன் பெயர் அடிபட்டுப்போயிற்று.

   4. தானாக நீங்கிவிடுதல்; to be automatically cancelled, repealed, nullified.

புதுச் சட்டத்தால் பழைய சட்டம் அடிபட்டுவிட்டது.

   5. பலர் வாயில் வழங்குதல்; to be in every one’s mouth, be a household word.

அடுத்த ஆளுநராக அவர் வருவாரென்று, அவர் பெயர் எல்லார் வாயிலும் அடிபடுகிறது.

   6. செவிக்கெட்டுதல்; to reach one’s ears, as a rumour.

அந்தச் செய்தி நேற்றுத்தான் என் காதில் அடிபட்டது (உ.வ.);.

   7. உலகப் பட்டறிவில் அழுந்துதல்; to be involved, plunged.

பல வகைத் துன்பங்களிலும் கட்டங்களிலும் அடிபட்டவன் (உ.வ.);.

   8. செலவழித்தல்; to be spent, expended.

எத்தனை கலம் நெல்லானாலும் இந்தக் குடும்பத்தில் அடிபட்டுப்போம் (உ.வ.);

   9. கொல்லப்படுதல்; to be slaughtered.

இந்த நகரில் ஒரு நாளைக்கு இருநூறு ஆடுகள் அடிபடும் (உ.வ.);.

   10. நோய் நீங்குதல்; to be cured, eradicated, as a disease.

இந்த மருந்தாற் பல நோய்கள் அடிபடும் (உ.வ.);.

   11. தட்பவெப்ப நிலையால் தாக்குண்ணுதல்; to be weather-beaten.

இந்தக் கட்டடம் காற்றிலும் மழையிலும் அடிபட்டு உரங்குன்றிவிட்டது (உ.வ.);.

   12. அச்சிடப்படுதல்; to be printed, to be struck, as composed matter.

நாளைக்கு நாலு படிவம் (forms); அடிபடும் (உ.வ.);.

அடிபட்டவன்

அடிபட்டவன் aḍibaḍḍavaṉ, பெ. (n.)

   1. காயம்பட்டவன்; wounded person.

   2. தோற்றவன்; defeated contestant.

   3. இயற்கை நிலைமைகளைப் பட்டறிந்தவன்; one who has experienced different situations in life.

மழையிலுங் காற்றிலும் அடிபட்டவன் (உ.வ.);.

   4. ஒன்றிற் பழகினவன் அல்லது பயிற்சி பெற்றவன்; trained, experienced person.

அடிபணி-தல்

அடிபணி-தல் aḍibaṇidal,    2 செ.கு.வி. (v.i.)

   தண்டனிடுதல்; to fall at one’s feet, worship.

     “அடிபணிந்தேன் விண்ணப்பம்” (திவ். பெரி யாழ். 3.10 ; 2);.

அடிபதறு-தல்

அடிபதறு-தல் aḍibadaṟudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. அடிப்பதறு-தல் 1 பார்க்க;see adi-p-padara, 1.

   2. பாதம் உதறுதல் அல்லது துடித்தல்; shaking of the feet, as in shaking palsy (சா.அக.);.

அடிபந்து

 அடிபந்து aṭipantu, பெ.. (n.)

   எறியும் பந்து; playball.

     [அடி+பந்து]

அடிபறி-த ல்

அடிபறி-த ல் aḍibaṟidal,    2 செ.கு.வி. (v.i.)

   வேரொடு பெயர்தல்; to be uprooted.

     ‘ஊசி வேர் அடிபறிய’ (தக்கயாகப். 144, உரை);.

அடிபறி-த்தல்

 அடிபறி-த்தல் aṭipaṟittal, செ.கு.வி. (v.t.)

   சூழ்ச்சி செய்தல்; to plot, conspire.

     [அடி+பறி]

அடிபற்றிக்காந்தல்

 அடிபற்றிக்காந்தல் aḍibaṟṟikkāndal, பெ. (n.)

அடிக்காந்தல் பார்க்க;see adi-kkandal.

     [அடி + பற்றி + காந்தல்.]

அடிபற்று-தல்

அடிபற்று-தல் aḍibaṟṟudal,    5 செ.கு.வி. (v.i.)

அடிப்பற்று-தல் 1, 2 பார்க்க;see adi-p-parru-, 1, 2.

அடிபாடு

 அடிபாடு aḍipāḍu, பெ. (n.)

   மாடு, குதிரை முதலிய வீட்டு விலங்குகளின் உழைப்பு (இ.வ.);; labour, work, as done by domestic animals (Loc.);.

ம. அடிபாடு

அடிபிடி

 அடிபிடி aḍibiḍi, பெ. (n.)

   சண்டை; broil, fray, scuffle.

இரு கட்சியார்க்கும் எங்குப் பார்த்தாலும் அடிபிடியாய்க் கிடக்கிறது (உ.வ.);.

அடிபிடி-த்தல்

அடிபிடி-த்தல் aḍibiḍittal,    4 செ.கு.வி. (v.i.)

   1. எண்ணெய், மெழுகு முதலிய மருந்து வகைகளைக் காய்ச்சும்போது, அடிக்கடி. கிண்டாமையால் அடியிலுள்ள மருந்து தீய்ந்து சட்டியுடன் ஒட்டிக்கொள்ளுதல்; to stick to the bottom of vessel after having been scorched, as medicines such as oil and electuary, when they are not stirred up properly in the course of preparation (சா.அக.);.

   2. ஒருவனுடைய அடிச்சுவடு பற்றிப்போதல்; to trace one’s footstep.

   3. துப்பறிதல்; to get a clue, as to a crime.

அடிபிடிக்காமற் சாடு-தல்

அடிபிடிக்காமற் சாடு-தல் aḍibiḍikkāmaṟcāḍudal,    5 செ.கு.வி. (v.i.)

   பாண்டத்தினடியில் மருந்து, பற்றாதபடி, துடுப்புக்கொண்டு கிளறுதல் அல்லது துழாவுதல்; to stir with a wooden spatula, so as not to allow any thick solution of the medicine to adhere to the bottom of the vessel in which it is prepared.

     [அடி + பிடிக்காமல் – சாடு.]

அடிபிடிசண்டை

 அடிபிடிசண்டை aḍibiḍisaṇḍai, பெ. (n.)

   ஒருவரையொருவர் அடித்துக் கொண்டு செய்யுஞ் சண்டை; quarrel in which both parties exchange blows.

அண்ணன் தம்பியிருவர்க்கும் இன்று காலை அடிபிடி சண்டை (உ.வ.);.

அடிபிடிதாங்கி

 அடிபிடிதாங்கி aṭipiṭitāṅki, பெ.. (n.)

   முதுகுளத்தூர் வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Mudukulattur Taluk.

     [அடி+பிடி+தாங்கி]

அடிபிறக்கிடு-தல்

அடிபிறக்கிடு-தல் aḍibiṟakkiḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   பின்வாங்குதல்; to fall back, retreat.

     ‘அடிபிறக்கிட் டோனையும்’ (தொல். பொருள். புறத். 10, நச். உரை);.

அடிபிழை-த்தல்

அடிபிழை-த்தல் aḍibiḻaittal,    4 செ.கு.வி. (v.i.)

   நெறிதவறி நடத்தல்; to act unlawfully, illegally.

     “வேந்தன் அடிபிழைத் தாரை யொறுக்குந் தண்டத்து” (மணிமே. 19 ; 43);.

அடிபுதைதொடுதோல்

அடிபுதைதொடுதோல் aṭiputaitoṭutōl, பெ.). (n.)

   செருபபு; sandal, shoe.

     “நிரை புறத்து அடிபுதை தொடு தோல் பறைய ஏகி.” (அக.101:9.);.

     [அடி+புதை+தொடு+தோல்]

அடிபுதையரணம்

அடிபுதையரணம் aḍibudaiyaraṇam, பெ. (n.)

   பாதக்கூடு; boot or boot like sandal.

     “அடி புதை யரண மெய்தி” (பெரும்பாண். 69);.

     [அடி + புதை + அரணம்.]

அடிபுனைதோல்

அடிபுனைதோல் aḍibuṉaitōl, பெ. (n.)

   செருப்பு; sandal.

     “அடிபுனை தோலி னரண்சேர்ந்து” (பெருந்தொ. 437);.

அடிபெயர்-தல்

அடிபெயர்-தல் aḍibeyartal,    2 செ.கு.வி. (v.i.)

   காலெடுத்து வைத்தல்; to move a step, move from the spot where one stands.

அடிபெயர்-த்தல்

அடிபெயர்-த்தல் aḍibeyarttal,    4 செ.கு.வி. (v.i.)

அடிபெயர்-தல் பார்க்க;see adi-peyar.

அடிபெயர்த்தாடு-தல்

 அடிபெயர்த்தாடு-தல் aṭipeyarttāṭutal,    அடைவுகள் இட ஆடுதல்; to step and dance.

     [அடி+பெயர்த்து+ஆடு]

அடிபெயர்த்திடுவான்

அடிபெயர்த்திடுவான் aṭipeyarttiṭuvāṉ, பெ.. (n.)

   நடந்து செல்பவன்; one who walks.

     “வெள்ளிடை வெயிலில் புள்ளி வெயர்பொடிப்ப அடி பெயர்த்திடுவான் ஒருவன். “(ப.பி.3:16:42.);

     [அடி+பெயர்த்து+இடுவான்]

அடிபோடியெனல்

 அடிபோடியெனல் aḍipōḍiyeṉal, பெ. (n.)

   ஒரு பெண்ணை மதிப்புரவின்றிப் பேசுதல்; speaking impolitely to a woman.

அவன் என்னை அடிபோடி என்று பேசுகிறான் (உ.வ.);.

     [அட (ஆ. பா. விளி); – அடி (பெ. பா. விளி); – போ + அடி – போடி.]

அடிபோடு-தல்

அடிபோடு-தல் aḍipōḍudal,    20 செ.கு.வி. (v.i.)

அடிப்போடு-தல் பார்க்க;see adi-p-podu-.

 அடிபோடு-தல் aṭiyōṭutal, செ.கு.வி. (vi.)

நின்ற நிலையில் ஆடும் கும்மியாட்டம்.(2:92);.

 kummi play in standing position.

     [அடி+போடு]

      [P]

அடிப்படர்-தல்

அடிப்படர்-தல் aḍippaḍartal,    2 செ.கு.வி. (v.i.)

   1. கீழ்ப்பரவுதல்; to spread underneath; as roots, creepers.

   2. சூழ்நிலைகள் இசைந்து வருதல்; to be propitious.

     “நல்லூழி யடிப் படர” (மதுரைக். 21);.

     [அடி + படர்.]

அடிப்படி

 அடிப்படி aḍippaḍi, பெ. (n.)

   கதவு நிலையின் அடிமரப்படி; bottom piece of the frame of a door.

     [அடி + படி.]

அடிப்படு-தல்

அடிப்படு-தல் aḍippaḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   1. கீழ்ப்படையிலிருத்தல் (சங். அக.);; to be in the lower stratum.

   2. அடிச்சுவடுபடுதல்; to be worn-out by passing feet, as a path.

     “சிலநாளடிப்படிற் கல்வரையு முண்டா நெறி” (நாலடி. 154);.

   3. கீழ்ப்படிதல்; to obey, do another’s will willingly.

     “ஆணைகொண்டடிப்பட விருந்தன்று” (பு. வெ. 6;31);.

     “உரிய வம்புவி பல்லாண் டடிப்பட வாண்டான்” (பாரத. உலூகன். 3);.

   4. பழகுதல்; to become accustomed to.

     ‘ஒழுகுதலைக் கற்றலாவது அடிப்படுதல்’ (குறள், 140, பரிமே. உரை);.

   5. பழைமையாக வருதல்; to be long established.

     ‘அடிப்பட்ட சான்றோர்’ (நன். 266, மயிலை. உரை);.

     [அடி + படு.]

அடிப்படுத்து-தல்

அடிப்படுத்து-தல் aḍippaḍuddudal,    2 பி.வி. (v.caus.)

   1. கீழ்ப்படுத்துதல், அடக்கியாளுதல்; to subdue, subject, as a country, a foe.

     “பிறபுலங்க ளடிப்படுத்து” (பெரியபு. ஐயடி, 2);.

   2. பாதத்தின்கீழ் அடங்கச் செய்தல்; to hold or contain under a foot.

     “மாவலி யளிப்ப ஞால முழுவது மாய னெய்திப் பாவடிப் படுத்தி முன்னம் பண்பொடு கவர்ந்தவாறும்” (கூர்மபு. அனுக்கிரமணி. 9);.

   3. நிலைபெறச் செய்தல்; to establish firmly.

     ‘தன் நெறிமுறைமை அடிப்படுத்து வருதற்குப் பிரிவன்’ (கலித். 26, நச். உரை);.

ம. அடிப்பெடுக

     [அடி + படுத்து.]

அடிப்படை

அடிப்படை aḍippaḍai, பெ. (n.)

   1. நிலைக்களம் (ஆதாரம்);; foundation, base.

   2. சுவரின் அடித்தளம்; lowest layer of mud or brick in a wall, basement.

   3. சேனையில் தலைமையாகவுள்ள பகுதி; the main division of an army (W.);.

ம. அடிப்பட

     [அடி + படை.]

அடிப்பட்ட காந்தி

 அடிப்பட்ட காந்தி aḍippaḍḍakāndi, பெ. (n.)

   தீமுறுகற் செய்ந்நஞ்சு (பாடாணம்); (மூ.அ.);; an arsenic preparation.

மறுவ. அடிபட்ட காந்தி, அடிபட்ட முறுவல், அடியக்காந்தி, அடியட்காந்தி, அடியற்காந்தி (சா.அக.);.

அடிப்பட்ட சாந்தி

 அடிப்பட்ட சாந்தி aḍippaḍḍacāndi, பெ. (n.)

   பேரமைதி (மகாசாந்தி); (சங்.அக.);; absolute peace, tranquillity or composure.

அடிப்பட்ட சான்றோர்

அடிப்பட்ட சான்றோர் aḍippaḍḍacāṉṟōr, பெ. (n.)

   பண்டை நல்லிசைப் புலவர்; recognised scholars of yore.

     ‘இலக்கண மன்றெனினும் இலக்கண முடையதுபோல அடிப்பட்ட சான்றோரால் வழங்கப்பட்டு வருவதும்’ (நன். 266, மயிலை. உரை);.

அடிப்பட்ட முறுவல்

 அடிப்பட்ட முறுவல் aḍippaḍḍamuṟuval, பெ. (n.)

அடிப்பட்ட காந்தி பார்க்க;see adi-p-patta-kandi.

அடிப்பட்ட வழக்கு

 அடிப்பட்ட வழக்கு aḍippaḍḍavaḻkku, பெ. (n.)

   தொன்றுதொட்டு வரும் வழக்கு; ancient usage.

அடிப்பட்டடை நெல்

 அடிப்பட்டடை நெல் aḍippaḍḍaḍainel, பெ. (n.)

   களத்துப் பட்டடையில் வைக்கோலொடு கலந்துகிடக்கும் நெல் (R.T.);; grains of paddy caught in the straw on which paddy is heaped.

     [அடி + பட்டடை + நெல்.]

அடிப்பணி

அடிப்பணி aḍippaṇi, பெ. (n.)

   குற்றேவல்; menial service.

     “அன்னவற் குரிய னென்ன வடிப்பணி செய்வல்” (சீவக. 552);.

     [அடி + பணி.]

அடிப்பதறு-தல்

அடிப்பதறு-தல் aḍippadaṟudal,    5 செ.கு.வி. (v.i.)

   கால் நடுங்குதல்; to tremble, as the feet (W.);.

   2. நிலைதவறுதல் (யாழ்ப்.);; to fall in business, lose a situation or property (J.);.

   3. மனங்கலங்குதல் (யாழ்ப்.);; to be perplexed in consequence of failure (J.);.

     [அடி + பதறு.]

அடிப்பது

அடிப்பது aṭippatu, பெ.. (n.)

   வீசுவது; that which blows.

     “கொம்புக்கும் அப்பால் அடிப்பது ஓர் காற்று உண்டு” (மூல.2928);.

     [அ+அடிப்பது]

அடிப்பந்தி

அடிப்பந்தி aḍippandi, பெ. (n.)

   1. முதன்முறையுண்போர் வரிசை; row of people first sitting down to a meal.

     ‘இடுகிறவன் தன்னவனானால் அடிப்பந்தியிலிருந்தா லென்ன, கடைப் பந்தியி லிருந்தா லென்ன?’ (பழ.);.

   2. உண்போரின் முதல் வரிசை; front row of people at a meal.

     [அடி + பந்தி.]

அடிப்பரத்து-தல்

அடிப்பரத்து-தல் aḍipparaddudal,    5 செ.கு.வி. (v.i.)

   பூப்புக்குளிப்பு (ருதுஸ்நான);ச் சடங்கில் நிலத்தில் நெற்பரப்பி மணையிட்டு அதன்மேற் பூப்படைந்த பெண்ணை உட்கார வைத்தல்; to seat a girl on paddy spread on the ground, as part of the ceremony performed on her attaining puberty.

     [அடி + பரத்து.]

அடிப்பற்று

அடிப்பற்று aḍippaṟṟu, பெ. (n.)

   சமையலில் தீய்ந்துபோன சோறு, கறி முதலியன; food, curry, etc., charred in cooking.

   2. பாறையுப்பு (யாழ்.அக.);; rock-salt.

     [அடி + பற்று.]

அடிப்பற்று-தல்

அடிப்பற்று-தல் aḍippaṟṟudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. அடுகலத்தின் அடியிற் சோறு, கறி முதலியன தீய்ந்துபோதல்; to be scorched or charred, as rice, curry, etc., for want of water or over-heating when cooking.

   2. மிகு தீயினால் சோறு, கறி முதலியன அடுகலத்தினடியில் பற்றிக் கொள்ளுதல்; to stick to the bottom of the inside of the cooking vessel, as rice, curry, etc.

     “கனலடிப் பற்றா வண்ண மிடைவி டாமற் றுழாவி” (தைலவ. தைல. 94);.

   3. இறைவன் திருவடியைப் பற்றுதல் (ஈடு, 2.6 ;9);; to cling to the feet of God.

ம. அடிக்குபற்றுக; க. அடிகத்து.

     [அடி + பற்று.]

அடிப்பலகை

அடிப்பலகை aṭippalakai, பெ.. (n.)

திருவையில் மண்ணை உருட்டி வைக்கும் பலகை. (ம.வ.தொ.68);”

 a wooden plank used by the potters.

     [அடி+பலகை]

அடிப்பலன்

 அடிப்பலன் aḍippalaṉ, பெ. (n.)

   முதற்பயன்; first fruits or advantage.

     [அடி + Skt. phala. த. பழம் → Skt. phala → த. பலம் → பலன்.]

அடிப்பலம்

 அடிப்பலம் aḍippalam, பெ. (n.)

   அடிப்படை வலிமை; strength of groundwork or basis.

     [அடி + Skt. bala. த.வலம் → Skt. bala → த. பலம்.]

அடிப்பல்

 அடிப்பல் aḍippal, பெ. (n.)

   கீழ்வரிசைப் பற்களுள் ஒன்று; one of the teeth in the lower jaw.

     [அடி + பல்.]

அடிப்பாடு

அடிப்பாடு aḍippāḍu, பெ. (n.)

   1. அடிச்சுவடு; track, footprint.

     “நிலந்தனி லடிப்பா டுணர்ந்து” (நல். பாரத. சாந்தி. அரசநீ.155);.

   2. அடிப்பட்ட வழி (யாழ்.அக.);; beaten path.

   3. வழக்கு; usage, custom.

     ‘விகாரமாவன; பதத்துள் அடிப்பாடும் செய்யுட்டொடையும் ஒலியும் காரணமாக வல்த்தல் மெலித்தல் முதலாயினவாக வருவன’ (நன். 132, மயிலை. உரை);.

   4. உறுதியான நிலை; firminess, stability, fortitude.

     ‘இதிறே உபாயத்தில் அடிப்பாடு’ (ஈடு, 6.3 ; 3);.

   5. வரலாறு; origin, history.

     ‘உகந்தருளின நிலங்களுடைய அடிப்பாடு சொல்லுகிறது’ (திவ். திருநெடுந். 6, வியா.);.

   6. திருவடியில் ஈடுபாடு; attachment to the feet of God.

     ‘இதென்ன அடிப்பாடுதான்’ (ஈடு, 4.1;11);.

   7. முதனிலை; stem of noun or verb.

     ‘பகுதி, முதனிலை, வினையடி, அடிப்பாடு, தாது என்பனவெல்லாம் ஒரு பொருள்’ (நன். 321, இராமா. உரை);.

ம. அடிப்பாடு

     [அடிப்படு → அடிப்பாடு. படு → பாடு.]

அடிப்பாணர்

அடிப்பாணர் aṭippāṇar, பெ.. (n.)

   அடிமையாகிய பாணர்; slave panar

     “அடிப்பாணர் எனப்பிழைத்தார் அநேகர் ஆங்கே” (கலிங்.11:158.);.

     [அ+பாணர்]

அடிப்பான்

 அடிப்பான் aṭippāṉ, பெ.. (n.)

   விளையாடுபவன் வைத்திருக்கும் குண்டு, எறிகுண்டு, தெல்லு; rural play or strike stone ball. [அடி+ப்+ப்.+ஆன்]

அடிப்பான்காய்

 அடிப்பான்காய் aṭippāṉkāy, பெ.. (n.)

   எதிர் கட்சிக்காரர் குறிப்பிட்டுச் சொன்ன காயினை அடித்தல். (எறிகாய் விளையாட்டு);; to hit the aimed one.

     [அடிப்பான்+காய்]

அடிப்பாய்-தல்

அடிப்பாய்-தல் aḍippāytal,    2 செ.கு.வி. (v.i.)

   தாவிக் குதித்தல்; to leap over a mark, as a child, play at leap-frog (W.);.

     [அடி + பாய்.]

அடிப்பாரம்

அடிப்பாரம் aḍippāram, பெ. (n.)

   1. அடிப்படை (அஸ்திவாரம்); (கோயிலொ. 130);; foundation.

   2. கப்பலடியிலுள்ள சரக்குக் கனம், சாலையமைப்பின் அடிக்கனம்; ballast.

   3. சிரங்கின் புடைப்பு; swellings of eczema or itch.

     [அடி + Skt. bhära. த.பொறு → Skt. phar → bhr → bhāra → த.பாரம்.]

அடிப்பார்

அடிப்பார் aṭippār, பெ.. (n.)

   உழவர்; farmer

     “ஏர் அடிப்பார் கோல் எடுப்ப” (ந.வெ. 3:41.);.

     [அடி+ப்+ப்+ஆர்]

அடிப்பார்-த்தல்

அடிப்பார்-த்தல் aḍippārttal,    4 செ.கு.வி. (v.i.)

   1. நிழலளந்து பொழுதறிதல்; to measure time by one’s shadow.

   2. தகுந்த சமயம் நோக்குதல்; to wait for an opportunity.

     [அடி + பார்.]

அடிப்பிச்சை

அடிப்பிச்சை aḍippiccai, பெ. (n.)

   1. இரப்பெடுக்கப் போகும் போது கலத்திலிட்டுக் கொள்ளும் சிறிது அரிசி அல்லது சோறு; a small quantity of food in a beggar’s bowl as a start in proceeding to beg.

   2. சிறு மூலச்சொத்து; small ancestral property.

அவனுக்கு அடிப்பிச்சை ஏதாவது உண்டா? (உ.வ.);.

     [அடி + Skt bhiksa. ஒருகா. த. வேள் → வேட்கும் → க. பேகு → Skt. bhiks → bhiksä → த. பிச்சை. ஒ.நோ. க. பேகு; E. beg. வேள் → வேண் → வேண்டு → வேண்டும். வேள் → வேட்கும் = வேண்டும். வேண்டுதல் = விரும்புதல், கெஞ்சுதல், இரத்தல்.]

அடிப்பிடி-த்தல்

அடிப்பிடி-த்தல் aḍippiḍittal,    4 செ.கு.வி. (v.i.)

   1. சோறு, கறி முதலியன சமையற் கலத்தினடியிற் பற்றிப்போதல்; to stick to the bottom of the cooking vessel and become scorched, as rice, curry, etc. (யாழ்.அக.);.

   2. அடிச்சுவட்டைக் கண்டுபிடித்தல்; to trace a footprint.

   3. குறிப்பறிதல்; to get the clue.

   4. முதலிலிருந்து தொடங்குதல்; to begin from the beginning.

   5. தட்டி முடைதல் (செ.அக.);; to weave palmleaf screen.

   6. காலைப்பிடித்து வேண்டுதல்; to take hold of the feet in supplication.

அடிப்பினை

அடிப்பினை aḍippiṉai, பெ. (n.)

   1. வங்க மணல் (மூ.அ.);; sand containing lead, lead ore.

   2. வங்கம் (மூ.அ.);; lead.

அடிப்பிரதட்சிணம்

 அடிப்பிரதட்சிணம் aḍippiradaḍciṇam, பெ. (n.)

   அடியடியாய் மெதுவாய் நடந்து கோயிலை வலம்வருகை; going around a sacred place slowly, as if measuring the distance in feet, circumambulation.

     [அடி + Skt. pradaksina → த. பிரதட்சிணம்.]

அடிப்புக் கண்டுமுதல்

 அடிப்புக் கண்டுமுதல் aḍippukkaṇḍumudal, பெ. (n.)

   மொத்த நெல்விளைவு (R.T.);; gross out-put of paddy.

     [அடிப்பு + கண்டு முதல்.]

அடிப்புக்கூலி

 அடிப்புக்கூலி aḍippukāli, பெ. (n.)

   கதிரடிக்குங் கூலி; wages for threshing grain.

     [அடிப்பு + கூலி.]

அடிப்புறம்

அடிப்புறம் aṭippuṟam, பெ.. (n.)

   குதிக்கால்; hind leg.

     “ஓர் காலனைக் கருத்து அடிப்புறத்தினால் நிறத்து உதைத்த” (சம்2: 98:2);

     [அடி+புறம்]

அடிப்புல்

 அடிப்புல் aḍippul, பெ. (n.)

   நிலத்தினடியில் எறும்புகள் சேர்த்துவைக்கும் தவசம்; grain stored by ants under the ground.

     [அடி + புல். புல் = புல்லரிசி.]

அடிப்புல்லரிசி

 அடிப்புல்லரிசி aḍippullarisi, பெ. (n.)

   புல்லின் தண்டிலிருக்கும் விதைகள்; seeds in the stalk of green grass (சா.அக.);.

     [அடி + புல் + அரிசி.]

அடிப்பெருங்கடவுள்

அடிப்பெருங்கடவுள் aḍipperuṅgaḍavuḷ, பெ. (n.)

   எல்லாவற்றிற்கும் மூலமான முழுமுதலிறைவன்; the Supremé Being.

     “அடிப்பெருங்கடவு ளூழி யீறுதொறும்” (தக்கயாகப். 656);.

     [அடி + பெருங்கடவுள்.]

அடிப்பையாதகம்

 அடிப்பையாதகம் aḍippaiyātagam, பெ. (n.)

   காட்டெருமை; wild bufalo (சா.அக.);.

அடிப்பொடி

அடிப்பொடி1 aṭippoṭi, பெ.. (n.)

   பாதத்தூசுக்கு நிகரானஅடியார்; devotee.

     “தொண்டர் அடிப்பொடி ஆழ்வார்” (தேசி 12:16);.

     [அடி+பொடி]

 அடிப்பொடி2 aṭippoṭi, பெ.. (n.)

கால் தூசி,

 dust on the foot.

     “அடிப்பொடி என் தலைமேலும்” (SII.xii.54);.

     [அடி+பொடி]

அடிப்போடு-தல்

அடிப்போடு-தல் aḍippōḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   1. தொடங்குதல்; to lay the foundation, begin (W.);.

   2. ஒருவரிடம் உதவி பெறுதற்கு ஏற்ற செய்திகளை முன்னடிப்படையாகச் சொல்லிவைத்தல்; to say or do things as preparing the ground for getting favours from somebody.

இவன் பணத்திற்கு அடிப்போடுகிறான் (உ.வ.);.

     [அடி + போடு.]

அடிப்போடுதல்

அடிப்போடுதல் aṭippōṭutal,    20 செ.கு.வி. (v.i.)

   கூடை பின்னுவதற்கு முதல் முதலில் அடிப்போடுதல்; knitting the base for basket.

     [அடி+போடு]

அடிமடக்கு

அடிமடக்கு aḍimaḍakku, பெ. (n.)

   1. (அணி.); செய்யுளடி மீண்டும் அல்லது மீண்டும் மீண்டும் பொருள் வேறுபட்டுவரும் சொல்லணி வகை;   2. (யாப்.); செய்யுளடியின் பெரும் பகுதி பொருள் வேறுபடாது மீண்டும் வரும் யாப்பு வகை;

அடிமடி

அடிமடி aḍimaḍi, பெ. (n.)

   ஆடையின் உள் மடிப்பு; inner fold of the waist-cloth.

 அடிமடி aṭimaṭi, பெ.. (n.)

   ஆடையினுள் மடிப்பு (நெ.தொ.சொ.52);; inner fold of dress.

     [அடி+மடி]

அடிமடியில் நெருப்பைக்கட்டு-தல்

அடிமடியில் நெருப்பைக்கட்டு-தல் aḍimaḍiyilneruppaikkaḍḍudal,    5 செ.கு.வி. (v.i.)

   கன்னிப் பெண்ணை மணம்முடித்துத் தரும்வரை மிகவும் விழிப்போடு காக்கும் கடும் பொறுப்பேற்றல்; to take up the heavy responsibility of protecting as a mother or a matron, the virginity of a matured girl till she is given away in marriage, lit., to keep tied up embers in the inner fold of the waist-cloth.

     [அடி + மடி + இல் + நெருப்பு + ஐ + கட்டு.]

அடிமடை

 அடிமடை aḍimaḍai, பெ. (n.)

   முதன்மடை; head of a sluice.

அடிமடையன்

 அடிமடையன் aḍimaḍaiyaṉ, பெ. (n.)

   முழு முட்டாள்; utter idiot or fool.

அடிமட்டம்

 அடிமட்டம் aḍimaḍḍam, பெ. (n.)

   கீழ்மட்டம்; base level, bottom level.

அடிமணியிடு-தல்

அடிமணியிடு-தல் aḍimaṇiyiḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   தொடக்கஞ் செய்துவைத்தல்; to make a beginning, as placing gems in the place where a foundation is to be laid.

     “இனிமுடிக்கும் வென்றிக் கடிமணி யிட்டாய்” (கம்பரா. யுத்த. மகுடபங். 47);.

     [அடி + மணி + இடு.)

அடிமண்

அடிமண் aḍimaṇ, பெ. (n.)

   1. கீழ்மண்;  soil underneath.

   2. செய்வினைக்காக (சூனியத்திற்காக); எடுக்கும் காலிலொட்டிய மண்; earth that has been touched by a person’s foot, taken for witchcraft against him (W.);.

அடிமண்டி

அடிமண்டி aḍimaṇḍi, பெ. (n.)

   ஒரு கலத்தின் அடியில் தங்கும் மண்டி அல்லது கசடு; dregs, deposit.

     “தாம் தந்த மயர்வறு மதிநலமெல்லாம் அடிமண்டியோடே கலங்கிற்று என்னுங்கோள்’ (ஈடு, 1.4 ; 3, வியா.);.

அடிமனை

அடிமனை aḍimaṉai, பெ. (n.)

   நிலைக்களம் (ஆதாரம்);; basis, support.

     ‘எல்லாப் பண்ணிற்கும் இஃது அடிமனையாதலின்’ (சிலப். 3 ; 63, அடியார்க். உரை);.

 அடிமனை aḍimaṉai, பெ. (n.)

   1. சுற்றுச் சுவர்; walls of a building.

     “அடிமனை பவளமாக” (சீவக. 837);.

   2. வீடுகட்டுதற்குரிய அடிநிலம்; ground, plot.

அடிமயக்கு

அடிமயக்கு aḍimayakku, பெ. (n.)

 அடிமயக்கு aṭimayakku, பெ.. (n.)

   சித்திர கவி வகை; a kind of picture poetry in prosody.

     “சொற்றிடும் மாலை மாற்றே சூழிகுளம் அடிமயக்கு……..சருப்பதோபத்திரங்கள் ————- சித்திரகவி என்றாமே” (நிக.க. 12:26 :27-28);.

     [அடி+மயக்கு]

அடிமரம்

அடிமரம் aḍimaram, பெ. (n.)

   1. மரத்தின் அடி; trunk of a tree.

   2. பாய்மரத்தின் அடிப்பாகம் (M. Navi. 81);; lower mast.

அடிமறி

அடிமறி aḍimaṟi, பெ. (n.)

அடிமறிமாற்று பார்க்க;see adi-mari-madrzu.

     “அடிமறியான” (தொல். சொல். எச். 12);.

அடிமறிமண்டிலம்

அடிமறிமண்டிலம் aḍimaṟimaṇḍilam, பெ. (n.)

   அடிகளை எவ்வாறு முறை மாற்றினும் பொருள் மாறாவாறு, அதாவது, எல்லாவடிகளும் அடிதோறும் பொருள்முடியும் அளவடியாகப் பாடப்படும் அகவற்பா வகை; a kind of agavarpa verse so constructed that the lines are interchangeable without change of meaning.

     “நடுவாதி யந்தத்து அடைதரு பாதத் தகவல் அடிமறி மண்டிலமே” (யா. கா. 28);.

எ-டு :

     “சூரல் பம்பிய சிறுகான் யாறே

சூரர மகளி ராரணங் கினரே

வாரலை யெனினே யானஞ் சுவலே

சார னாட நீவர லாறே.”

அடிமறிமண்டிலவாசிரியம்

அடிமறிமண்டிலவாசிரியம் aḍimaṟimaṇḍilavāciriyam, பெ. (n.)

அடிமறிமண்டிலம் பார்க்க;see adi-mari-mandilam.

     “அகப்படு மடிமுதலிடையீ றாயின் அடிமறி மண்டில வாசிரிய மாதலும்” (இலக். வி. 734);.

     [அடி + மறி + மண்டிலம் + ஆசிரியம்.]

அடிமறிமாற்று

அடிமறிமாற்று aḍimaṟimāṟṟu, பெ. (n.)

   எண் வகைப் பொருள்கோள்களுள், பொருளுக்கு ஏற்றவாறு அடிகளையெடுத்துக் கூட்டுவதும், எந்த அடியை எங்கு நிறுத்தினும் ஓசையும் பொருளும் வேறுபடாததும் ஆகிய வகை; mode of construing in which the lines of a verse have to change places to give the one tended meaning, or can change places without affecting the rhythm and meaning at the same time, one of eight modes of construing verses.

     “ஏற்புழி யெடுத்துடன் கூட்டுறு மடியவும்

யாப்பீ றிடைமுத லாக்கினும் பொருளிசை

மாட்சியு மாறா அடியவும்.அடிமறி” (நன். 419);.

இந் நூற்பாவின்படி, (1); ஏற்புழிக்கூட்டும் அடிமறிமாற்று, (2); மாறா அடிமறிமாற்று என அடிமறிமாற்றுப் பொருள்கோள் இரு வகைப்படும். அவற்றுட் பின்னது, (அ); பொருளிசைமாட்சி மாறா அடிமறிமாற்று, (ஆ); பொருள்மாட்சி மாறா அடிமறிமாற்று என இருவகைப்படும்.

எ-டு :

     “நடுக்குற்றுத் தற்சேர்ந்தார் துன்பந் துடையார்

கொடுத்துத்தான் துய்ப்பினும் ஈண்டுங்காலீண்டும் மிடுக்குற்றுப்பற்றினும் நில்லாது செல்வம்

விடுக்கும் வினையுலந்தக் கால்.”

இது,

     “கொடுத்துத்தான் துய்ப்பினும் ஈண்டுங்கா லீண்டும்,

விடுக்கும் வினையுலந்தக் கால்

மிடுக்குற்றுப் பற்றினும் நில்லாது செல்வம், (இஃதறியார்);

நடுக்குற்றுத் தற்சேர்ந்தார் துன்பந் துடையார்”

என்று, பொருளுக்கேற்றவாறு அடிகள் கொண்டு கூட்டப்படுவதால், ஏற்புழிக்கூட்டும் அடிமறிமாற்று.

எ-டு :

     “மாறாக் காதலர் மலைமறந் தனரே

ஆறாக் கட்பனி வரலா னாவே

வேறா மென்றோள். வளைநெகி ழும்மே

கூறாய் தோழியான் வாழு மாறே.”

இஃது, எவ்வடியை எங்கு நிறுத்தினும் ஓசையும் பொருளும் வேறுபடாமையால் பொருளிசைமாட்சி மாறா அடிமறிமாற்று.

     “அலைப்பான் பிறிதுயிரை யாக்கலுங் குற்றம்

விலைப்பாலிற் கொண்டூன் மிசைதலுங் குற்றம்

சொலற்பால வல்லாத சொல்லுதலுங் குற்றம்

கொலைப்பாலுங் குற்றமே யாம்.”

இஃது, எவ்வடியை எங்கு நிறுத்தினும் பொருள் வேறுபடாவிடினும், ஈற்றடியால் ஒசை வேறுபட்டுவிடுவதால், பொருள்மாட்சி மாறா அடிமறிமாற்று.

இம் மூவகை அடிமறி மாற்றுகளுள், ஏற்புழிக்கூட்டும் அடிமறிமாற்று மறிதல் என்னும் சொல்லிற்குப் பொருந்தாமையால், அதனைத் தனியாக ஒரு பொருள்கோளாக்கி அடிமாற்று எனப் பெயரிடுவதே தக்கதாம்.

அடிமாடு

அடிமாடு aḍimāḍu, பெ. (n.)

   கறிசமைக்கக் கொல்வதற்குரிய மாடு; cattle for slaughter.

 அடிமாடு aṭimāṭu, பெ. (n.)

இறைச் சிக்காகக் கொல்லப்படும் மாடு. (கொ.வ. வ.சொ.4.);

 cow or bull to be killed for meat.

     [அடி+மாடு]

அடிமாட்டுவிலை,

 அடிமாட்டுவிலை, aṭimāṭṭuvilai, பெ. (n.)

   குறைவான விலை; lowest rate fathing.

     [அடிமாடு+விலை]

அடிமாடு=கறிசமைக்கக் கொல்வதற்குரிய மாடு. இதன் விலை வேறு பணிகளுக்காக வாங்கும் மாட்டின் விலையைக் காட்டிலும் குறைவாகவே இருக்கும்.

அடித்தல் : கொல்லுதல்.

ஒ.நோ. கோழியடித்தல்.

அடிமாண்டுபோ-தல்

அடிமாண்டுபோ-தல் aḍimāṇḍupōtal,    7 செ.கு.வி. (v.i.)

   அடியோடழிதல்; to perish completely, root and branch.

அடிமாற்று

 அடிமாற்று aḍimāṟṟu, பெ. (n.)

ஏற்புழிக் கூட்டும் அடிமறிமாற்று பார்க்க;see erpuli-k. kittum-adi-mari-marru.

     [அடி + மாற்று. படைத். பாவாணர்.]

அடிமுகனை

 அடிமுகனை aḍimugaṉai, பெ. (n.)

   தொடக்கம்; beginning (W.);.

அடிமுடி

அடிமுடி aḍimuḍi, பெ. (n.)

   1. காலுந் தலையும், பாதமுந்தலையும்; head and foot.

   2. ஒழுங்கு (யாழ்.அக.);; order, regularity (W.);.

   3. தொடக்கமும் முடிவும்; beginning and end.

     “அடிமுடியொன் றில்லாத வகண்ட வாழ்வே” (தாயு. பன்மாலை, 3);.

   4. வரலாறு (சங்.அக.);; history.

அடிமுட்டாள்

 அடிமுட்டாள் aḍimuḍḍāḷ, பெ. (n.)

   முழு மூடன்; utter fool or idiot.

அடிமுண்டம்

அடிமுண்டம் aḍimuṇḍam, பெ. (n.)

   1. வெட்டிய மரத்தின் அடிப்பாகம்; stump of a tree.

   2. பயனற்றவன்-ள்; worthless person (Loc.);.

அடிமுதன்மடக்கு

 அடிமுதன்மடக்கு aḍimudaṉmaḍakku, பெ. (n.)

   செய்யுளடியின் முதற்சீர் மடங்கிப் பொருள் வேறுபட்டு வரும் சொல்லணி; repetition of the initial foot in a poetic line with a variation in sense.

     [அடி + முதல் + மடக்கு.]

அடிமுந்தி

 அடிமுந்தி aḍimundi, பெ. (n.)

   சீலையின் உள் முகப்பு; the end of a woman’s cloth, which is worn inside.

     [அடி + முன் + தானை – அடிமூன்றானை → அடிமுந்தானை → அடிமுந்தி.]

அடிமுன்றானை பார்க்க;see adi-munranai.

அடிமுரண்டொடை

 அடிமுரண்டொடை aḍimuraṇḍoḍai, பெ. (n.)

     [அடி + முரண் + தொடை.]

அடிமுறை

அடிமுறை aṭimuṟai,    தற்காப்புவிளையாட்டுகளில்ஒன்றுஅடவு (14-8); One of the methods of self protection.

     [அடி+முறை]

அடிமூன்றானை

 அடிமூன்றானை aḍimūṉṟāṉai, பெ. (n.)

   சீலையின் உள்முகப்பு; the end of a woman’s cloth, which is worn inside.

     [அடி + முன் + தானை.]

அடிமூலம்

அடிமூலம் aḍimūlam, பெ. (n.)

   1. அடிவேர், ஆணிவேர்; main root (சா. அக.);.

   2. உள் மூலம்; internal hemorrhoids.

     [அடி + மூலம்.]

உள்மூலம் பார்க்க;see ul-mulam.

அடிமேலடியடி-த்தல்

அடிமேலடியடி-த்தல் aḍimēlaḍiyaḍittal,    4 செ.கு.வி. (v.i.)

   ஒரேயிடத்தில் மேலும் மேலும் அடித்தல்; to beat or strike repeatedly on the same spot.

     ‘அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும்’ (பழ.);.

     [அடி + மேல் + அடி + அடி.]

அடிமை

அடிமை aḍimai, பெ. (n.)

   1. தொழும்பு, பிறருக்குக் கட்டாயத் தொண்டு செய்யும் நிலைமை; slavery, bondage, servitude.

     “ஒன்னார்க் கடிமை புகுத்தி விடும்” (குறள், 608);.

   2. அடிமையாள், தொழும்பன்; Slave, formerly attached to land and transferable with it.

     “நீ அடிமையாதல் சாதிப்பன்” (பெரியபு. தடுத்தாட், 49);.

   3. தொண்டன், இறையடியான்; servant, devotee.

     “அஞ்சலஞ்சலென் றடிமைக்கு……….. நெஞ்சி லுணர்த்தும்” (தாயு. பராபர.124);.

     ‘அடிமை படைத்தால் ஆள்வது கடன்’ (பழ.);.

ம. அடிம; க. அடிமெ; தெ. அடிமெ, அடியண்டு.

அடிமைக்காசு

அடிமைக்காசு aḍimaikkācu, பெ. (n.)

   கோயில் வேலைக்காரரிடமிருந்து பெறும் வரிவகை (I.M.P. Sm. 38);; a fee collected from temple servants.

ம. அடிமக்காசு

     [அடிமை + காசு.]

அடிமைச்சீட்டு

 அடிமைச்சீட்டு aḍimaiccīḍḍu, பெ. (n.)

   அடிமையோலை; slave-bond.

     [அடிமை + சீட்டு.]

அடிமைத்தனம்

 அடிமைத்தனம் aṭimaittaṉam, பெ. (n.)

   பிறருக்குக்கட்டாயத்தொண்டு செய்யும் நிலைமை; compulsory slavery system.

     [அடிமை+தனம்]

அடிமைத்தொழில்

அடிமைத்தொழில் aṭimaittoḻil, பெ. (n.)

   திருப்பணி; voluntary service.

     “மால் குறள் ஆன அந்தணர்க்கு அடிமைத் தொழில் பூண்டாயே.” (மங். 2:1-1.);.

     [அடிமை+பணி]

அடிமைபுகு-தல்

அடிமைபுகு-தல் aṭimaipukutal, பெ. (n.)

   ஆட்படுவது; entrusting one self for voluntary service.

     “ஆடு புள் கொடி ஆதி மூர்த்திக்கு அடிமை புகுவதுவே” (சட4:10-7);.

     [அடிமை+புகு]

அடிமைபூண்(ணு)-தல்

அடிமைபூண்(ணு)-தல் aḍimaipūṇṇudal,    12 செ. கு.வி. (v.i.)

   1. அடிமையாயமைதல்; to be. come a bond-slave.

   2. திருத்தொண்டனாதல்; to become a devotee.

     “நானடிமை பூண்டேன்” (திவ். பெரியதி. 7.2;5);.

அடிமைப்படு-தல்

அடிமைப்படு-தல் aḍimaippaḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   அடிமையாதல்; to become a slave, to be enslaved.

     [அடிமை + படு.]

அடிமைப்படுத்து-தல்

அடிமைப்படுத்து-தல் aḍimaippaḍuddudal,    2. பி.வி. (v. caus.)

   அடிமையாக்குதல்; to enslave.

     [அடிமை + படுத்து.]

அடிமைப்பத்திரம்

 அடிமைப்பத்திரம் aḍimaippattiram, பெ. (n.)

   அடிமையோலை; slave-bond.

     [அடிமை + Skt. patra → த. பத்திரம் = ஒலை, ஆவணம்.]

அடிமைப்பள்ளன்

 அடிமைப்பள்ளன் aḍimaippaḷḷaṉ, பெ. (n.)

   பள்ளருள் அடிமைப்பணி செய்பவன் (P.T.L.);; serf or bond-labourer of the Palla caste.

     [அடிமை + பள்ளன்.]

அடிமையோலை

 அடிமையோலை aḍimaiyōlai, பெ. (n.)

   அடிமையாவணம் (அடிமைப்பத்திரம்);; bond of a slave.

ம. அடிம ஒல

     [அடிமை + ஓலை.]

அடிமொழி

அடிமொழி aṭimoḻi, பெ. (n.)

   அடிமொழி மாற்று என்னும் பொருள்கோள்; a constructing method of a poem.

     “அடிமொழி சுண்ணம்…..பொருளொடு ஒன்பான்.” (நேமி.செ.67.);.

     [அடிமை+மொழி]

அடிமோனைத்தொடை

அடிமோனைத்தொடை aḍimōṉaittoḍai, பெ. (n.)

     “எழுவா யெழுத்தொன்றின் மோனை” (யா. கா. 16);.

     [அடி + மோனை + தொடை.]

அடிம்பு

 அடிம்பு aḍimbu, பெ. (n.)

   சிவதை; Indian jalap, Convolvulus turpethum alias Ipomaea turpethum (சா.அக.);.

அடிம்புருகம்

 அடிம்புருகம் aḍimburugam, பெ. (n.)

அடிம்பு பார்க்க;see adimbu.

அடியகம்

அடியகம் aṭiyakam, பெ. (n.)

   பாதச் சுவட்டின் இடம்; the place of footprint.

     “பெருங்களிறு மித்தஅடியகத்து.”(அக 155:11.);.

     [அடி+அகம்]

அடியக்காந்தி

 அடியக்காந்தி aḍiyakkāndi, பெ. (n.)

அடிப்பட்ட காந்தி பார்க்க;see adi-p-patta-kandi.

அடியடியாக

அடியடியாக aḍiyaḍiyāka, கு.வி.எ. (adv.)

   1. ஒவ்வோரடியாக; line by line.

   2. தலை முறை தலைமுறையாக (யாழ்ப்.);; hereditarily, from generation to generation (J.);.

   3. அடிமேலடியாக; step by step.

     [அடி + அடி + ஆக.]

அடியட்காந்தி

 அடியட்காந்தி aḍiyaḍkāndi, பெ. (n.)

அடிப்பட்ட காந்தி பார்க்க;see adi-p-patta-kandi.

அடியந்தாதி

அடியந்தாதி aḍiyandāti, பெ. (n.)

   ஒரு செய்யுளின் ஓரடி அடுத்தவடியாகவேனும், ஒரு செய்யுளின் ஈற்றடி அடுத்த செய்யுளின் முதலடியாகவேனும் அமையுமாறு தொடுக்கப்படுவது; mode of versification, in which, a line in verse is repeated as the next line, or a line that ends one stanza begins the following stanza.

     “அடியுஞ் சீரு மசையு மெழுத்து

முடிவு முதலாச் செய்யுள் மொழியினஃ

தந்தாதித் தொடையென் றறிதல் வேண்டும்” (யாப். வி. 52, மேற். பக். 183);.

எ-டு:

     “ஆதியங் கடவுளை யருமறை பயந்தனை

போதியங்கிழவனை பூமிசையொதுங்கினை

போதியங் கிழவனை பூமிசை யொதுங்கிய

சேதியஞ் செல்வநின் றிருவடி பரவுதும்” (யாப். வி. 52, மேற். பக். 186);.

இதில் இரண்டாம் அடியே, ஈற்றெழுத்து மட்டும் மாறி மூன்றாம் அடியாய் அமைந்திருத்தல் காண்க.

     [அடி + அந்தாதி.]

அடியந்திரம்

 அடியந்திரம் aḍiyandiram, பெ.

   திருமணம், விருந்து முதலிய சிறப்பு (விசேடம்);; marriage, feast, etc., anything special.

     [ம. அடியந்தரம் → த அடியந்திரம்.]

அடியனாதி

 அடியனாதி aḍiyaṉāti, பெ. (n.)

   எண்ணிற்கு மெட்டாத் தொன்மை; time immemorial.

     [ அடி + Skt. anādi (அன் + ஆதி);.]

அன் பார்க்க;see an.

அடியனேன்

அடியனேன் aḍiyaṉēṉ, பெ. (n.)

   அடியேன், உன் அடியனாகிய நான்; a submissive term of respect meaning,

     “I, your slave, your humble servant.

     “உன்னடிய னேனும்வந் தடியிணையடைந்தேன்” (திவ். பெரியதி, 5.8;3);.

     [அடியன் + ஏன் (த. ஒ. ஈறு);.]

அடியன்

அடியன் aḍiyaṉ, பெ. (n.)

   1. கீழிருப்பவன்; he who is underneath.

   2. அடிமை; slave.

   3. தொண்டன்; devotee.

     [அடி + அன்.]

அடியன்தரம்

அடியன்தரம் aṭiyaṉtaram, பெ. (n.)

   இடையூறு; disturbance.

     “இப்பூமி பாட்டமாண்டு.முட்டிரட்டியும் அடியன்தரமும் தீர்த்து” (TAS. iii. 169-71.);.

     [அடி+அன்தரம்]

அடியம்

அடியம் aḍiyam, பெ. (n.)

     ‘அடியேன்’ என்பதன் பன்மை;

 pl. of adiyan.

     “அடியமில் லறத்தை யாற்றி” (கந்தபு. திருநகரப். 112);.

அடியரேங்கள்

அடியரேங்கள் aḍiyarēṅgaḷ, பெ. (n.)

     ‘அடிய னேன்’ என்பதன் இரட்டைப் பன்மை;

 double pl. of adiyanēn.

     “சிற்றடிய ரேங்கள் செயல் சீருளதை யன்றோ” (கந்தபு. தேவ. தெய்வ. 226);.

அடியரேம்

 அடியரேம் aḍiyarēm, பெ. (n.)

     ‘அடியனேன்’ என்பதன் பன்மை;

 pl. of adiyanēn.

அடியர்

அடியர் aḍiyar, பெ. (n.)

   1. அடிமைகள்; slaves.

     “அடியரு மாயமும் நொடிவனர் வியப்ப” (பெருங், உஞ்சைக். 34 ; 179);.

   2. அடியார், தொண்டர்; devotees.

     “பணிதற் கடியர் சென்றெதிர் கொள” (பெரியபு. திரு ஞான. 501);.

அடியறி-தல்

அடியறி-தல் aḍiyaṟidal,    2 செ.கு.வி. (v.i.)

   மூலகாரணந் தெரிதல்; to find out the first or primary cause.

     ‘அடியறியும் வியாசமுனிவர்’ (ஈடு, 1.1 ; 8);.

     [அடி + அறி.]

அடியறு-தல்

அடியறு-தல் aḍiyaṟudal,    2 செ.கு.வி. (v.i.)

   மூலமறுதல், முழுதும் அழிதல்; to be uprooted, completely removed.

     ‘அடியற்ற மரம்போல் அலறி விழுகிறது’,

     ‘அடி யற்றால் நுனி விழாம லிருக்குமா?’ (பழ.);.

     [அடி + அறு.]

அடியறு-த்தல்

அடியறு-த்தல் aḍiyaṟuttal,    4 செ.குன்றாவி. (v.t.)

   மூலத்தோடு நீக்குதல்; to eradicate.

     ‘அஹங்கார மமகாரங்களையும்…………அடியறுத்து’ (ரஹஸ்ய. 320);.

ம. அடியறுக்குக

     [அடி + அறு.]

அடியறுக்கி

 அடியறுக்கி aḍiyaṟukki, பெ. (n.)

   குயவன் மட்கல மறுக்குங் கருவி; flat piece of wood by which the potter marks his work and separates it from the wheel below (W.);.

     [அடி + அறுக்கி.]

அடியறை

 அடியறை aḍiyaṟai, பெ. (n.)

   அடியற்றது; that which has no basis or support.

     [அடி + அறை.]

அடியற்காந்தி

 அடியற்காந்தி aḍiyaṟkāndi, பெ. (n.)

அடிப்பட்ட காந்தி பார்க்க;see adi-p-patta-kandi.

அடியளபெடைத்தொடை

அடியளபெடைத்தொடை aḍiyaḷabeḍaittoḍai, பெ. (n.)

   செய்யுளடிகளின் முதற்கண் அளபெடை யமையத் தொடுப்பது; concatenation, in which, the initial feet of the lines of a verse begin with prolonged vowels or vowel consonants.

     “அடிதோறு முதன்மொழிக்கண் அழியா தளபெடுத் தொன்றுவ தாகு மளபெடையே” (யா. கா. 16);.

எ-டு:

     “ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை

ஆஅதும் என்னு மவர்.”

     “அங்ங் கனிந்த வருளிடத்தார்க் கன்புசெய்து

நங்ங் களங்கறுப்பா நாம்.”

     [அடி + அளபெடை + தொடை.]

அடியவன்

அடியவன் aḍiyavaṉ, பெ. (n.)

   1. அடிமை; slave.

   2. பத்தன் (பக்தன்);; devotee.

     “அமரர்நா யகன் றனக் கடியவன்” (கந்தபு. யுத்த. சிங்கமுகா 279);.

ம. அடியான்; க. அடிய ; தெ. அடிய. அடியடு.

அடியவர்

அடியவர் aḍiyavar, பெ. (n.)

   தொண்டர்; devotees.

     “அந்நகரில் வாழ்வாரு மடியவரு மனமகிழ்ந்து” (பெரியபு. திருஞான. 325);.

அடியவள்

அடியவள் aṭiyavaḷ, பெ. (n.)

   பத்திமை கொண்டவள் (பக்தை);; devotee.

     “ஆங்கு அது தன்னில் அடியவட்கு ஆகம் பாங்காய் மண் சுமந்து அருளிய பரிசும்.” (வாச.2:46);.

     [அடி+skt.antaram]

அடியாகெதுகை

 அடியாகெதுகை aḍiyāgedugai, பெ. (n.)

அடியெதுகைத்தொடை பார்க்க;see adi-yedugai-t-todai.

     [அடி + ஆகு + எதுகை.]

அடியாட்டி

அடியாட்டி aḍiyāḍḍi, பெ. (n.)

   அடியாள்; maid-servant.

     ‘கூனி சொன்னது கேட்க வேண்டா தொழிகிறது, அடியாட்டி யாகை யாலே’ (திவ். திருநெடுந் 12, வியா.);.

ம. அடியாட்டி, அடியாத்தி.

     [அடியான் (ஆ.பா.); – அடியாட்டி (பெ.பா.);.]

அடியானபடி

 அடியானபடி aḍiyāṉabaḍi, பெ. (n.)

   தலை; head (சா.அக.);.

     [அடி + ஆன + படி.]

இப் பொருள், அடியார் இறைவன் திருவடியைச் சூடும் கருத்தில், அடியார் தலை இறைவன் திருப்பாதத்திற்குப் படிபோலமையுங் குறிப்பைக் கொண்டதாயிருக்கலாம்.

அடியான்

அடியான் aḍiyāṉ, பெ. (n.)

   1. அடிமை; slave.

   2. ஏவலாளன்; man-servant.

   3. தொண்டன்; devotee, servant as of a deity.

     “குன்றாமல் உலக மளந்த அடியானை அடைந்தடியேன் உய்ந்த வாறே” (திவ். திருவாய். 9.4;10);.

ம. அடியான்; க. அடிய; தெ. அடியடு.

 அடியான் aṭiyāṉ, பெ. (n.)

   ஏசுதற்சொல்; an abusive term, scolding word. (வ.சொ.அக.);.

     [அடி+ஆன்]

அடியார்

அடியார் aḍiyār, பெ. (n.)

   1. அடிமையர்; slaves.

     “பின்னும் பகர்வாள் மகனே யிவன் பின் செல்தம்பி யென்னும் படியன் றடியாரினி னேவல் செய்தி” (கம்பரா. அயோத். நகர்நீங்கு. 147);.

   2. தொண்டர்; devotees.

     “அடியார்க் கெல்லா மலகிலா வினைதீர்க்க” (தாயு. ஆசை. 7);.

அடியார்க்குநல்லார்

அடியார்க்குநல்லார் aḍiyārkkunallār, பெ. (n.)

   சிலப்பதிகாரத்திற்குச் சிறந்த விரிவுரை வரைந்த 12ஆம் நூற்றாண்டு உரையாசிரியர்; name of a commentator of šilappadigaram, who lived in the 12th century A.D.

அடியார்க்குநல்லார் என்பது, அடியார்க் கன்பன் (பக்தவத்ஸல); என்பது போன்ற இறைவன் பெயர். இறைவன் பெயரை மக்கட்கு இயற்பெயராக இடுவது தொன்று தொட்ட தமிழர் வழக்கம். நல்லார் என்பது நல்லான் என்பதன் உயர்வுப் பன்மை.

அடியாறு

 அடியாறு aḍiyāṟu, பெ. (n.)

   தொன்று தொட்ட வரலாறு (இ.வ.);; historical succession from ancient times (Loc.);.

அடியாளுறுத்தி

 அடியாளுறுத்தி aḍiyāḷuṟutti, பெ. (n.)

   சிறு குறிஞ்சா; small Indian ipecacuanha, Gymnema sylvestre (சா.அக.);.

அடியாள்

அடியாள் aḍiyāḷ, பெ. (n.)

   பகைவரை அடிப்பதற்காக அமர்த்தப்படும் தடியன்; hooligan hired for beating enemies.

 அடியாள் aḍiyāḷ, பெ. (n.)

   குற்றேவற்பெண் (I.M.P. Sm. 38);; maid-servant.

ம. அடியாள்; க. அடியாளு.

அடியிசை

அடியிசை aṭiyicai, பெ. (n.)

   அடி ஓசை; sound of step.

     “அடியிசை கேட்கும் எல்லை அகன்று” (பெருங் 47:36-7);.

     [அடி+இசை]

அடியிடல்

அடியிடல் aṭiyiṭal, பெ. (n.)

   1.அடி வைத்தல்; to step.

     “தச்சு விடுத்தலும் தாம் அடியிடலும்” (வாச. 296.);.

   2.தொடக்கம் செய்தல்; to inaugurate.

     “பிறர் கொள்ளும் ஆர்வத்துக்கு அன்றே அடியிட்டாள்.” (ஒட்6:133.);

     [அடி+இடல்]

அடியிடு-தல்

அடியிடு-தல் aḍiyiḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   1. தொடங்குதல், தொடக்கஞ் செய்தல்; to make a beginning, commence an undertaking.

     “படிந்தழுவதற்குப்பாவாயடியிட்டவாறு” (சீவக. 1391);.

   2. கூடை, பாய் முதலியன முடைதற்கு அடியமைத்தல்; to make the bottom of a basket or one end of a mat as the first step in basket making or mat weaving.

   3. நடக்கக் காலெடுத்துவைத்தல்; to step forward.

     “பரவை வாயிலம்மட்டு மடியிட்டு” (தாயு. மலைவளர். 4);.

   4. நடத்தல்; to walk.

     “ஆடுந ராட நெஞ்சி னெண்ணினோ ரடியிட்டோர்கள்” (கூர்மபு. நவகண். 31);.

   5. மிதித்தல்; to tread on.

     “சேடன் முடியுங் கதிர் கொள் சென்னி வரையுந் தூளாட வடியிட்டு” (திருவிளை. மாயப். 6);.

   6. சீர்கள் தொடர்ந்து செய்யுளடியாக வமைதல்; to form a line in a verse, as metrical feet.

     “அடியிட்ட செந்தமிழினருமையிட் டாரூரில்” (தாயு. மலைவளர். 4);.

ம. அடியிடுக

     [அடி + இடு.]

அடியினை

அடியினை aṭiyiṉai, பெ. (n.)

   இரண்டு பாதங்கள்; feet.

ஐவரை வென்றோன் அடியிணைஅல்லது.” (சில 10:198);

     [அடி+இணை]

அடியியைபுத்தொடை

அடியியைபுத்தொடை aḍiyiyaibuttoḍai, பெ. (n.)

     “இறுதி யியைபு” (யா. கா. 16);.

எ-டு:

தளையவிழ் நறுமலரே தனியவள் திரியிடமே

முளைவளர் இளநகையே முழுமதி புரைமுகமே

இளையவள் இணைமுலையே எனையிடர் செய்தவையே”

   ஒன்றே, சிறியிலை வெதிரி னெல்விளை யும்மே;   இரண்டே, தீஞ்சுளைப் பலவின் பழமூழ்க் கும்மே;   மூன்றே, கொழுங்கொடி வள்ளிக் கிழங்குவீழ்க் கும்மே;நான்கே, அணிநிற வோரி பாய்தலின் மீதழிந்து

திணிநெடுங் குன்றந் தேன்சொரி யும்மே” (புறநா. 109);.

நன்மா மேனிச் சுணங்குமாரணங்கே

ஆடமைத் தோளி யூடலு மனங்கே

அரிமதர் மழைக்கணு மணங்கே

திருநுதற்பொலிந்த திலகமுமணங்கே” (யா. கா. 16, உரைமேற்.);.

     [அடி + இயைபு + தொடை.]

அடியிரட்டி-த்தல்

அடியிரட்டி-த்தல் aḍiyiraḍḍittal,    4 செ.கு.வி. (v.i.)

   1. இட்ட அடியின்மேல் அடியிடுதல்; to take steps without advancing, to mark time.

     “அடியிரட்டித் திட்டாடு மாட்டு” (பு. வெ. 2 ; 8);.

   2. அம்மானைச் செய்யுளின் இரண்டாமடியிரட்டுதல்; to be repeated immediately like the doubling of the second line of an ammānai verse.

எ-டு:

     “விரிந்தபுகழ்ப் புள்ளிருக்கு வேளுர் வயித்தியனார்

   பரிந்துவினை தீர்க்கவல்ல பண்டிதர்கா ணம்மானை;பரிந்துவினை தீர்க்கவல்ல பண்டிதரே யாமாயின்

மருந்துவிலை கைக்கூலி வாங்காரோ வம்மானை?

வாயினிலே மண்போட்டு வாங்குவார்கா ணம்மானை.”

இத்தகைய செய்யுள்களின் இரண்டாமடி ஈற்றுச் சீர் மாற்றியே மடக்கப்படும்.

     [அடி + இரட்டி.]

அடியிரல்

 அடியிரல் aḍiyiral, பெ. (n.)

   மண்ணீரல்; spleen (சா.அக.);.

     [அடி + ஈரல்.]

அடியிறங்கு-தல்

அடியிறங்கு-தல் aḍiyiṟaṅgudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. சூலிக்குப் பிள்ளைப்பேற்றுக் காலத்தில் வயிறு தளர்தல்; sinking due to loosening of the muscles of the abdomen in a woman, as a sign of approaching labour (சா.அக.);.

   2. அடித் தள்ளிப்போ-தல் 2 பார்க்க;see ali-i-talli-pPშ-, 2.

     [அடி + இறங்கு.]

அடியிலிடுகலசம்

 அடியிலிடுகலசம் aḍiyiliḍugalasam, பெ. (n.)

   எண்ணெய் வடிக்குங் கலம்; a vessel for filtering medicated oils (சா.அக.);.

     [Skt. kalaša → த.கலசம் = கும்பம்.]

அடியிலிடுகும்பம் அல்லது கலம் எனின் முற்றுந் தமிழாம்.

     [அடி + இல் + இடு + கலசம்.]

அடியிலேயுறை-தல்

அடியிலேயுறை-தல் aḍiyilēyuṟaidal,    2 செ.கு.வி. (v.i.)

   வழிபடுதல்; to worship, to be in reverence.

     ‘அடியிலே யுறைதல் வழிபாடென்னும் பொருடந்து நிற்றலின்’ (கலித். 140, நச். உரை);.

     [அடி + இல் + ஏ + உறை.]

அடியில்

அடியில் aṭiyil, பெ. (n.)

கீழ்ப்பகுதியில்

 below, bottom.

     “பல்லோர் காணும் பரூஉத்திரள் அடியில்”. (பெருங் 60:119);

     [அடி+இல்]

அடியில்தொடுவன

அடியில்தொடுவன aṭiyiltoṭuvaṉa, பெ. (n.)

   மிதியடி; shoe.

     “அடியில் தொடுவன பாதுகை, மிதியடி” (நிக.தி. 7:247.);.

     [அடியில்+தொவன்]

அடியீடு

அடியீடு aḍiyīḍu, பெ. (n.)

   1. அடியிட்டு மெல்ல நடக்கை; slow dignified steps, as of a king or a noble.

     “அருந்திறன் மாக்க ளடியீ டேத்த” (சிலப். 26 ; 90);.

   2. தொடக்கம்; beginning.

     [அடி + ஈடு. இடு → ஈடு.]

அடியுடுப்புமுண்டு

 அடியுடுப்புமுண்டு aḍiyuḍuppumuṇḍu, பெ. (n.)

   இடுப்புவேட்டி (நாஞ்.);; cloth worn round the waist (Näfi.);.

     [அடி + உடுப்பு + முண்டு.]

அடியுணி

 அடியுணி aḍiyuṇi, பெ. (n.)

   அடிபட்டவன்-ள்; one who is beaten (W.);.

     [அடி + உணி. உண்ணி → உணி.]

அடியுண்(ணு)-தல்

அடியுண்(ணு)-தல் aḍiyuṇṇudal,    12 செ.கு.வி. (v.i.)

   1. அடிக்கப்படுதல்; to be beaten.

   2. பலவிடத்துந் திரிந்து துன்பப்பட்டுப் பழகுதல்; to wander along experiencing all sorts of troubles.

     [அடி + உண்.]

அடியுண்டவன்

அடியுண்டவன் aṭiyuṇṭavaṉ, பெ. (n.)

   அடிப்பட்டவன்; wounded person.

     “அடியுண்டவன் ஆவி குலைந்து அயரார்” (யுத்.20:90);.

     [அடி+உண்டவன்]

அடியுண்ணல்

அடியுண்ணல் aḍiyuṇṇal, தொ.பெ. (vbl.n.)

   1. அடிபடுதல்; the act of receiving beatings.

   2. வெயிலிலும் மழையிலும் திரிந்து பழகுதல்; tramping here and there in sun and rain and becoming experienced.

     [அடி + உண்னல்.]

அடியுப்பு

 அடியுப்பு aḍiyuppu, பெ. (n.)

   கல்லுப்பு; common salt dug out from the bottom of the sea, where it is deposited after the evaporation of the sea-water (சா.அக.);.

     [அடி + உப்பு.]

அடியுரம்

அடியுரம் aḍiyuram, பெ. (n.)

   1. முன்பு இட்ட எரு; manure put in previous seasons.

   2. மரத்தைச் சுற்றியிடும் எரு (யாழ்ப்.);; manure added to the soil around a tree (J.);.

   3. அடுத்த ஆண்டிற்காகச் சேமித்து வைக்கப்படும் நடப்பு ஆண்டுத் தவசம் (யாழ்ப்.);; crop of a year preserved for subsistence during the following year (J.);.

   4. முன்னோர் தேட்டு முதுசொம் (யாழ்ப்.);; ancestral property (J.);.

   5. ஆற்றல் (யாழ்ப்.);; physical strength, power of wealth (I.);.

   6. அடிப்படை (யாழ்.அக.);; foundation.

     [அடி + உரம்.]

அடியுறை

அடியுறை aḍiyuṟai, பெ. (n.)

   1. பாத காணிக்கை; offering to God or a great-personage, as laid at His or his feet.

     “ஈட்டிய பல்பொருள்க ளெம்பிரானுக் கடியுறை யென்று” (திவ். பெரியாழ். 4.3;9);.

   2. வழிபாட்டுறைகை; living a life of reverence, as for a person worthy of respect.

     “அடியுறை காட்டிய செல்வேன்” (கலித். 140 ; 11);.

   3. ‘உன் பாதத்தில் வாழ்வேன்’ என்னும் பொருளில் வழங்கும் ஒரு வணக்கச்சொல்;     ‘your obedient servant who would be honoured to flourish under your feet’, an ancient term of submission and respect, in the first person.

     “நின் னடிநிழற் பழகிய வடியுறை” (புறநா. 198; 26);.

ம. அடியுற

     [அடி + உறை.]

அடியுறை மகளிர்

அடியுறை மகளிர் aṭiyuṟaimakaḷir, பெ. (n.)

   இறைவன் கோயிலில் உறைந்து கூத்தாடும் மகளிர்; dancers in the temple.

     “அடியுறை மகளிர் ஆடும்தோளே” (பரி. 14:5);.

     [அடி+உறை+மகளிர்]

அடியெடுத்தல்

அடியெடுத்தல் aḍiyeḍuttal,    4 செ.கு.வி. (v.i.)

   1. அடிவைத்தல்; to step.

     “அடியெடுத்துக் கொண்டென்பால் வரலா குங்கொல்” (சடகோபரந். 28);.

   2. அப்பாற் போதல்; to go beyond.

     “அடியெடுப்ப தன்றோ வழகு” (திவ். இயற். பெரிய திருவந். 30);.

     [அடி + எடு.]

அடியெடுத்துக்கொடு-த்தல்

அடியெடுத்துக்கொடு-த்தல் aḍiyeḍuttukkoḍuttal,    4 செ.கு.வி. (v.i)

   1. மாணவன் ஒரு வனப்பு (காவியம்); இயற்றுவதற்குத் தொடக்கச் சொல்லை அல்லது சொற்றொடரை ஆசிரியன் சொல்லியுதவுதல்; to help a student, as a teacher, to compose a poem, by suggesting an apt beginning word or phrase.

   2. ஓர் அடியாரான புலவர் ஒரு திருவனப்பை இயற்றுதற்கு, இறைவனே தொடக்கச் சொல்லை உடம்பிலிக் கூற்றாக வுரைத்தருளுதல்; to help a devotee to compose a sacred poem, by uttering the apt beginning word, as God Almighty in His invisible form often does.

     “அடைய லார்புரம் நீறெ ழத்திரு

நகைசெய் தன்றொரு மூவரைப்

படியின் மேலடி மைக்கொ ளும்பத

பங்க யங்கள்ப ணிந்துநின்

றடிக ளேயுன தடியர் சீரடி

யேனு ரைத்திட அடியெடுத்

திடர்கெ டத்தரு வாயெ னத்திரு

வருளை எண்ணியி றைஞ்சினார்.”

     “அலைபு னற்பகி ரதிந திச்சடை

யாட வாடர வாடநின்

றிலகு மன்றினி லாடு வார்திரு

வருளி னாலச ரீரிவாக்(கு);

     ‘உலகெ லாமென அடியெ டுத்துரை

செய்த பேரொலி யோசைமிக்

கிலகு சீரடி யார்செ விப்புலத்

தெங்கு மாகிநி றைந்ததால்’

     [அடி + எடுத்து + கொடு.]

அடியெதுகைத்தொடை

அடியெதுகைத்தொடை aḍiyedugaiddoḍai, பெ. (n.)

     “இரண்டாம் வழுவா எழுத்தொன்றின் எதுகை” (யா. கா. 16);.

     “துகடீர் பெருஞ்செல்வந் தோன்றியக்காற் றொட்டுப்

பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க

அகடுற யார்மாட்டு நில்லாது செல்வம்

சகடக்கால் போல வரும்”

     [அடி + எதுகை + தொடை.]

அடியெழுத்து

அடியெழுத்து aḍiyeḻuttu, பெ. (n.)

     ‘பன்னிருயிரும் பதினெண் மெய்யுமாகிய முதலெழுத்து’ (பேரகத் 8, உரை);.

     [அடி + எழுத்து.]

அடியேந்திரம்

 அடியேந்திரம் aḍiyēndiram, பெ. (n.)

அடியந்திரம் பார்க்க;see adi-yandiram.

அடியேன்

அடியேன் aḍiyēṉ, பெ. (n.)

     ‘உன் அடியானாகிய நான் என்னும் பொருளில் வரும் ஒரு வணக்கமொழி;

 a modest term of respect meaning, “I, your slave, your humble servant’.

     “நானும் உனக்குப் பழவடியேன்” (திவ். திருப்பல். 11);.

     [அடி + ஏன்.]

அடியேபிடித்து

 அடியேபிடித்து aḍiyēpiḍittu, கு.வி.எ. (adv.)

   தொடக்கத்திலிருந்து (ஆதியிலிருந்து);; from the beginning.

அடியேம்

அடியேம் aḍiyēm, பெ. (n.)

     ‘உம் அடியாராகிய யாம்’ என்னும் பொருளில் வரும் வணக்க மொழி, ‘அடியேன்’ என்பதன் பன்மை;

 a humble term of respect meaning, “We, your claves, your humble servants’, pl. of adiyén.

     “தொழுமடியேம் வல்வினையின் வேர்தடிந்தாய்” (கந்தபு. யுத்த தேவர்கள். 3);.

     [அடி + ஏம்.]

அடியொட்டி

அடியொட்டி aḍiyoḍḍi, பெ. (n.)

   1. தண்டனைக்குத் தப்பியோடும் தீவினையார் காலில் தைக்கும்படி நிலத்தில் நட்டுவைக்கும் இருப்பூசி; iron spikes planted in the ground, in order to pierce the feet of those, who try to run away and escape punishment for their evil deeds.

     “ஊளைக்கொண் டோடுகின்றா ருள்ளடி யூசி பாய” (சீவக. 2768);. இதன் உரை;

     ‘கூப்பிட்டு ஒடுகின்றவர்கள் அங்ஙன மோடாமைக்கு நட்டு வைத்த அடியொட்டி உள்ளடியிலே பாய்கையினாலே’.

   2. பூடு வகை (நெருஞ்சிமுள்);; a kind of thorny shrub.

     [அடி + ஒட்டி.]

அடியொத்தகாலம்

அடியொத்தகாலம் aḍiyottakālam, பெ. (n.)

   நிழல் பாதத்தடியில் நிற்கும் நண்பகல்; midday, as being the time when one’s shadow is at his feet.

     ‘வளைந்த வாயினையுடைய கூகை அடியொத்த காலத்தே கூப்பிடும்படியாகவும்’ (பட்டினப். 268, நச். உரை); — (க்ஷ அடிக்.); அடியொத்த காலம் = நிழல் அடியோடு பொருந்திய காலம் ; என்றது உச்சிக் காலத்தை.

     [அடி + ஒத்த + காலம்.]

அடியொற்று-தல்

அடியொற்று-தல் aḍiyoṟṟudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. பின்பற்றுதல்; to follow.

     ‘அதை அடியொற்றி யாயிற்று, இவர் இப்படி அருளிச் செய்தது’ (திருவாய். நூற். 1, வியா.);.

இயேசுவின் மாணவர் பன்னிருவருட் பதினொருவர் அவரை அடியொற்றிச் சென்றனர். மறைமலையடிகளின் சாகுந்தல நாடகம் எல்லா வகையிலும் மூலத்தை அடியொற்றியது.

   2. புறப்படுதல்; to start, to step out.

     ‘பரமபதத்தினின்றும் அடியொற்றினான், திருமலையளவும் பயணமுண்டாயிருந்தது’ (திவ். அமலனாதி. 3, வியா.);.

ம. அடியிருத்துக ; தெ. அடுகுபெட்டு.

     [அடி + ஒற்று.]

அடியோடு

அடியோடு aḍiyōḍu, கு.வி.எ. (adv.)

   வேருடன், முழுதும்; radically, completely, utterly.

     “அறஞ்செயா தடியோ டிறந்து” (திருப்பு. 57);.

     [அடி + ஒடு.]

அடியோட்டி

அடியோட்டி aḍiyōḍḍi, பெ. (n.)

   1. ஆனை நெருஞ்சில் போன்றவடிவுங் கூருமமைந்து, தன் மேல் நடப்பாரின் பாதங்களைக் கிழிக்கவல்ல இருப்பு முள் (வின்.);; caltrops, a spiked iron ball kept on the ground meant for piercing the feet of men who tread on it.

   2. நெருஞ்சில்; a thorny shrub, Tribulus terrestris (சா.அக.);.

     [அடி+ ஒட்டி – அடியொட்டி → அடியோட்டி.]

அடியொட்டி பார்க்க;see adi-y-otti.

அடியோன்

அடியோன் aḍiyōṉ, பெ. (n.)

   1. குற்றேவலன், வீட்டு வேலைக்காரன்; menial, household servant.

   2. அடிமை; slave.

அடியோர்

அடியோர் aḍiyōr, பெ. (n.)

   பிறர்க்குக் குற்றேவல் செய்வோர்; menial servants.

     “அடியோர் பாங்கினும்” (தொல். பொருள். அகத். 23);.

அடிலவோடாகம்

 அடிலவோடாகம் aḍilavōḍākam, பெ. (n.)

   ஒரு செடி. இதன் இலைகளும் வேரும் சாறு பிழிந்து, மந்தார ஈளை (மந்தாரகாசம்);, கோழை (கபம்); என்னும் நோய்கட்கு மருந்தென்று, மலையாள நாட்டில் வழங்குகிறார்களாம் (சங்.அக.);. – மலையாளத்தில் விளையுமொரு செடி; a plant found in Malabār, Justicia bivalvis ? (சா.அக.);.

அடிவட்டணை

அடிவட்டணை aṭivaṭṭaṇai, பெ. (n.)

   பாதங்களால் இயற்றும் நாட்டிய வகை; step-dance.

     “அடிவட்டணைகள் கட்ட நடம் அடி” (சம். 3:75-4.);.

     [அடி+வட்டணை]

அடிவட்டம்

அடிவட்டம் aḍivaḍḍam, பெ. (n.)

   1. பாத அளவு; measure of foot.

     “அடிவட்டத் தாலளப்ப” (திவ். இயற். 3 ;13);.

   2. இசைக்குழலின் (நாதசுரத்தின்); அடிப்பூண் (பரத. ஒழிபி. 6);; large end of the Indian clarionet.

அடிவண்டல்

 அடிவண்டல் aḍivaṇḍal, பெ. (n.)

   எண்ணெய் முதலியவற்றைக் காய்ச்சும்போது, அடியில் தங்கி நிற்கும் கசடு; the sediment deposited at the bottom of a vessel while boiling, in the preparation of a decoction, medicated oil, etc. (சா.அக.);.

 அடிவண்டல் aṭivaṇṭal, பெ. (n.)

   குடும்பத்தின் கடைசிக் குழந்தை, கடைக்குட்டி; the last child in a family.

     [அடி+வண்டல்]

அடிவம்பு

அடிவம்பு aṭivampu, பெ. (n.)

   அடியின் விளிம்பு; the brim of the foot.

     “சற்று அடி வம்பு அசைந்துச் சடைமுடி இலங்கும் தூது மற்றும் ஓர் கங்கை என்ன வருபவன்” (திதி.28:9.);.

     [அடி+(வடிம்பு);வம்பு]

அடிவயிறு

 அடிவயிறு aḍivayiṟu, பெ. (n.)

   கீழ்வயிறு; lower part of the abdomen.

அடிவயிற்றிசிவு

 அடிவயிற்றிசிவு aḍivayiṟṟisivu, பெ. (n.)

   மல மூத்திரங்களை யடக்குவதனாலும், மந்தத்தையுண்டாக்கும் பல பண்டங்களையுண்பதனாலும், வளி (வாயு); அடிவயிற்றில் தங்கி, அதனால் நரம்பு சுருங்கி, மல மூத்திரம் வராதபடி மேலே யிழுத்துப் பிடித்து, வலியையுண்டாக்கும் ஓர் ஊதை (வாத); நோய்; a spasm of the abdomen resulting in obstruction to the free movement of faeces and urine and causing pain (சா.அக.);.

     [அடி + வயிறு + இசிவு.]

அடிவயிற்றிறுக்கம்

 அடிவயிற்றிறுக்கம் aḍivayiṟṟiṟukkam, பெ. (n.)

   தாழ்வான இருக்கையில் அமர்தல், இறுக்கமான வுடைகளை யணிதல் முதலிய காரணங்களால், அடிவயிறு அடிக்கடி அழுந்தி, அதனால் நேரும் நிலைமை; abdominal compression, a condition brought about by the compression of bowels due to habitual sitting on a low seat and use of tight dress (சா.அக.);.

     [அடி + வயிறு + இறுக்கம்.]

அடிவயிற்றுக்கட்டு

 அடிவயிற்றுக்கட்டு aḍivayiṟṟukkaḍḍu, பெ. (n.)

   பிள்ளைபெற்ற பெண்கட்கு, மார்பிலிருந்து அடிவயிறு வரையும், கருப்பை யழுந்தும்படி துணியால் இறுகச் சுற்றிக் கட்டும் கட்டு; abdominal bandage, a tight bandage worn by women immediately after delivery round the abdominal region in order to exert pressure on the womb (சா.அக.);.

     [அடி + வயிறு + கட்டு.]

அடிவயிற்றுக்கருப்பம்

 அடிவயிற்றுக்கருப்பம் aḍivayiṟṟukkaruppam, பெ. (n.)

   பெண்களின் கீழ்வயிற்றிற் கருத் தங்கிப் புடைத்துக் காட்டும் ஒருவகைச் சூல்; abdominal pregnancy, lodgment of ovum in a woman, in the abdominal cavity (சா.அக.);.

     [அடி + வயிறு + கருப்பம்.]

அடிவயிற்றுக்கழலை

 அடிவயிற்றுக்கழலை aḍivayiṟṟukkaḻlai, பெ. (n.)

   ஆவிற்கு (பசுவிற்கு); அடிவயிற்றில் காணுமொரு கட்டி; abdominal tumour, a peritonitic disease attacking cows (சா.அக.);.

     [அடி + வயிறு + கழலை.]

அடிவயிற்றுக்கோளாறு

 அடிவயிற்றுக்கோளாறு aḍivayiṟṟukāḷāṟu, பெ. (n.)

   அடிவயிற்றி லேற்படும் குழப்பம்; disorder of the abdominal organs (சா.அக.);.

     [அடி + வயிறு + கோளாறு.]

அடிவயிற்றுட்சவ்வு

 அடிவயிற்றுட்சவ்வு aḍivayiṟṟuḍcavvu, பெ. (n.)

   கீழ்வயிற்றின் உட்புறச் சவ்வு; peritoneum, a membrane investing the internal surface of the abdomen (சா.அக.);.

     [அடி + வயிறு + உள் + சவ்வு.]

அடிவயிற்றுப்புரட்டல்

 அடிவயிற்றுப்புரட்டல் aḍivayiṟṟuppuraḍḍal, பெ. (n.)

   நீர்க்கொம்பன் (வாந்திபேதி);, பித்தக் கோளாறு, நஞ்சு முதலியவற்றால் வயிற்றில் ஏற்படும் புரட்டல; turning of bowels in cholera, bilious disorders, poisonous affections, etc. (சா.அக.);.

     [அடி + வயிறு + புரட்டல்.]

அடிவயிற்றுப்பொருமல்

அடிவயிற்றுப்பொருமல் aḍivayiṟṟupporumal, பெ. (n.)

   1. செரியாமையால் வயிற்றின் கீழ்ப் பாகத்திலேற்படும் உப்பசம்; distension of the abdomen due to the presence of gas in the intestines, flatus.

   2. அடிவயிற்றுச் சவ்வின் அழற்சியாலேற்படும் வீக்கம்; distension of the abdomen, due to the presence of gas or air in the peritoneal cavity, as in peritonitis, Peritoneal tympanites (சா.அக);.

     [அடி + வயிறு + பொருமல்.]

அடிவயிற்றுவலி

அடிவயிற்றுவலி aḍivayiṟṟuvali, பெ. (n.)

   1. கீழ்வயிற்றிற் காணும் வலி; abdominal pain in general.

   2. பெருங்குடலிற் காணும் வலி; colic.

   3. பித்தக் கோளாற்றினாலேற்படும் வலி; bilious colic.

   4. குடலிற் காணும் ஒரு கொடிய வலி; intestinal colic.

   5. மாதவிடாய்க் கோளாற்றினாற் பெண்கட்கு அடிவயிற்றிற் காணும் ஒரு கொடிய வலி; menstrual colic (சா.அக.);.

     [அடி + வயிறு + வலி.]

அடிவரலாறு

அடிவரலாறு aḍivaralāṟu, பெ. (n.)

   1. கரணியம் (காரணம்);; cause, source.

   2. பழைய வரலாறு; old history.

   3. கொடியவழி; lineage, ancestry (W.);.

அடிவரவு

 அடிவரவு aḍivaravu, பெ. (n.)

   பாடல்களின் முதற்குறிப்பு; mnemonic of initial syllables or initial words of stanzas in a poem.

அடிவருடி

அடிவருடி aḍivaruḍi, பெ. (n.)

   1. கால் பிடிப் பவ-ன்-ள்-ர்; massager.

   2. தான் எண்ணியது எய்தப் பிறரைப் போற்றுபவர்; booticker.

அடிவருடு-தல்

அடிவருடு-தல் aḍivaruḍudal,    5 செ.கு.வி. (v.i.)

   கால்பிடித்தல், உளைச்சல் சோம்பல் முதலியன தீரப் பாதங்களைப் பிடித்துப் பிசைதல்; to massage the feet to stimulate them to action or relieve pain.

அடிவரை

அடிவரை aḍivarai, பெ. (n.)

   1. மலையடிவாரம், தாழ்வரை; foot of a mountain.

     ‘அடிவரையிலே சிங்கம் பாய்ந்தாற்போல்’ (கலித். 86, உரை);.

   2. செய்யுளின் அடிவரம்பு; limit to the length of a poetic line or to that of a stanza or poem.

     “அடிவரை யில்லன ஆறென மொழிப” (தொல். பொருள். செய்.162);.

அடிவரையறை

அடிவரையறை aḍivaraiyaṟai, பெ. (n.)

   1. செய்யுளின் அடிவரம்பீடு; regulation regarding the number of lines in different kinds of stanzas or poems.

     ‘அடிவரையறை யின்மையும் அளவிய லென்பதும்’ (தொல். பொருள். செய்.164, பேரா. உரை);.

   2. பாட்டின் முதற்குறிப்பு வரிசை (மீனாட்சிசுந். சரித். 1, பக். 10);; index of initial syllables of the stanzas in a poem.

     [அடி + வரை + அறை.]

அடிவலம்கொள்ளல்

அடிவலம்கொள்ளல் aṭivalamkoḷḷal, பெ. (n.)

   விடைபெறுதல்; taking leave of.

     “ஏதம் இல் புகழினால் யான் அடிவலம் கொள்ளல் என்னா” (சூளா.570.);.

     [அடி+வலம்+கொள்ளல்]

அடிவளையம்

 அடிவளையம் aḍivaḷaiyam, பெ. (n.)

   அண்டி வாயிலுக்குள் அமைந்திருக்கும் மூவகை வளையங்களுள் அடிப்பாகத்திலுள்ளது; one of the three rings of sphincter muscles at the anus, which is located internally, sphincter ani internal சா.அக.).

அடிவழி

அடிவழி aṭivaḻi, பெ. (n.)

   அடியினது வழி; track of the step.

     “அடிவழிப் படூஉம் உரிமையுள் கம்மியன்” (பெருங்.47:31);.

     [அடி+வழி]

அடிவானம்

அடிவானம் aḍivāṉam, பெ. (n.)

   1. கீழ்வானம்;  horizon.

   2. அடிப்படை (அஸ்திவாரம்);; foundation, groundwork.

ம. அடிவானம்

     [2. அடிவாணம் → அடிவானம்.]

அடிவாரச்செயல்

 அடிவாரச்செயல் aḍivāracceyal, பெ. (n.)

   மண்டையோட்டின் மூலத்துளைக்கு முன்பாகவுள்ள ஒருவகை யெலும்பு; a strong quadrilateral plate of occipital bone in front of the foramen magnum, basilar process (சா.அக.);.

அடிவாரம்

அடிவாரம் aḍivāram, பெ. (n.)

   மலையினடி; foot of a hill.

     “பிடியுமடிவாரஞ் சேர்கயிலை” (தேவா. 1.68 ; 5);.

ம. அடிவாரம் ; க., பட. அடிவார ; தெ. அடி வாரமு.

அடிவாளி

அடிவாளி aṭivāḷi, பெ. (n.)

   காமனின் முதல் அம்பாகிய தாமரை; lotus the first arrowof the god, Kaman.

     ” அடிவாளி விள்ளும் பகற்காலம்” (ஒட். 3:275.);.

     [அடி+வாளி]

அடிவிடு-தல்

அடிவிடு-தல் aḍiviḍudal,    20 செ.கு.வி. (v.i.)

அடிவிரி-தல் பார்க்க;see adi.viri.

அடிவினை

அடிவினை 1 aḍiviṉai, பெ. (n.)

   ஆடையொலிக்கை; washing of clothes.

     “அடி வினைக் கம்மியர் வெடிபட வடுக்கிய” (பெருங். இலாவாண. 4;183);.

     [அடுதல் = கொல்லுதல், வருத்துதல். அடித்தல் = புடைத்தல், வருத்துதல், கொல்லுதல். அடு → அடி.]

ஆடடித்தல், கோழியடித்தல், முயலடித்தல், புலியடித்தல், பேயடித்தல் முதலிய வழக்குகள் கொலைத்தொழிலைக் குறித்தலையும், இந்தியில் ‘மார்னா’ என்னும் சொல் அடித்தல் என்றும் கொல்லுதல் என்றும் பொருள்படுதலையும் நோக்குக.

 அடிவினை 2 aḍiviṉai, பெ. (n.)

   1. கேடான சூழ்வினை; scheming, undermining, stratagem.

அவனுக்கு அடிவினை வைக்கிறான் (உ.வ.);.

   2. மாறாட்டம்; perversity

   3. கறுவு (இராட்.);; extreme malice (R.);.

அடிவினைக்காரன்

அடிவினைக்காரன் aṭiviṉaikkāraṉ, பெ. (n.)

மிகவும் கொடியவன், கீழறுப்பவன்,

 cut throat.

   2.காட்டிக் கொடுப்பவன்; traitor. (மீனவ););

     [அடி+வினை+காரன்]

அடிவின்(ளு)-தல்

அடிவின்(ளு)-தல் aḍiviṉḷudal,    16 செ.கு.வி. (v.i.)

அடிவிரி-தல் பார்க்க;see adi-viri-.

அடிவிரி-தல்

அடிவிரி-தல் aḍiviridal,    2 செ.கு.வி. (v.i.)

   1. பாதம் வெடித்தல்; to become cracked, as the skin of the feet.

   2. சமையற் கலத்தில் அடி கீறிப்போதல் அல்லது வெடித்தல்; to crack at the bottom, as a cooking vessel.

அடிவிளக்கு-தல்

அடிவிளக்கு-தல் aḍiviḷakkudal,    5 செ.கு.வி. (v.i.)

   இறையடியார், ஆசிரியர், துறவியர் முதலிய கண்ணியமுள்ள விருந்தினரின் பாதங்களைக் கழுவிச் சிறப்புச் செய்தல்; to wash the feet of an honoured guest.

     “திருந்தடி விளக்கிச் சிறப்புச் செய்தபின்” (மணிமே. 24 ; 96);.

அடிவீக்கம்

அடிவீக்கம் aḍivīkkam, பெ. (n.)

   1. உள்வீக்கம்; internal swelling.

   2. ஆழ்ந்த அல்லது அடிகனத்த வீக்கம்; a deep-seated swelling, as in carbuncle (சா.அக.);.

அடிவீழ்-தல்

அடிவீழ்-தல் aḍivīḻtal,    2 செ.கு.வி. (v.i.)

   தண்டனிடுதல், காலில் விழுந்து கும்பிடுதல்; to fall at another’s feet, as in worship or paying homage.

     “அடிகண் முன்னர் யானடி வீழ்ந்தேன்” (சிலப். 13; 87);.

க. அடிபீழ்

அடிவீழ்ச்சி

அடிவீழ்ச்சி aḍivīḻcci, பெ. (n.)

   வணக்கம்; prostration, homage.

     “தத்தையடி வீழ்ச்சி”‘ (சீவக. 2587);.

அடிவெண்குருத்து

 அடிவெண்குருத்து aḍiveṇkuruttu, பெ. (n.)

   தென்னை, பனை, வாழை முதலியவற்றின் அடியிளங் குருத்து; the tender white shoots of the palm and plantain trees.

அடிவெயிற்காய்-தல்

அடிவெயிற்காய்-தல் aḍiveyiṟkāytal,    2. செ.கு.வி. (v.i.)

   அடையுங்கால மஞ்சள் வெயிலிற் காய்தல்; to expose oneself to the rays of the setting sun (சா,அக.);.

     [அடி + வெயில் + காய்.]

அடிவை-த்தல்

அடிவை-த்தல் aḍivaittal,    4 செ.கு.வி. (v.i.)

   1. காலடி வைத்தல்; to place one’s foot.

   2. குழந்தை அடியெடுத்து வைத்து நடக்கப் பழகுதல்; to learn to walk, as a child.

   3. தொடங்குதல்; to begin.

   4. ஒரு வினை முயற்சியை மேற்கொள்ளுதல்; to enter into an afair.

   5. பிறர் கருமத்தில் தலையிடுதல்; to meddle in another’s affair.

 No Text.

—,

   4 செ.குன்றாவி. (v.t.);

   உள்நோக்கமாக ஒன்றைக் கொள்ளுதல்; to harbour an unrevealed intent or purpose in one’s mind.

அவன் எதையோ அடிவைத்துக்கொண்டு பேசுகிறான் (உ.வ.);.

அடிவைக்கும் ஆலாத்து

 அடிவைக்கும் ஆலாத்து aḍivaikkumālāttu, பெ. (n.)

   கப்பலில் பணியாளர் நின்று வேலை செய்ய உதவும் பெருங்கயிறு; cable that serves as a foot rest for workers in a ship.

அடு-தல்

அடு-தல் aḍudal,    17 செ.குன்றாவி. (v.t.)

   1. சுடுதல், வாட்டுதல், வறுத்தல், பொரித்தல்; to roast, fry.

   2. காய்ச்சுதல்; to boil.

     “அட்டாலும் பால்சுவையிற் குன்றாது” (மூதுரை, 4);.

   3. சமைத்தல்; to cook, dress, as food.

     “அமுதமடு மடைப்பள்ளி” (கல்லா. 14);.

   4. உருக்குதல்; to melt.

     ”அட்டொளி யரத்த வாய்க் கணிகை” (சீவக. 98);.

   5. கொல்லுதல்; to kill.

     “அடுநையாயினும்” (புறநா. 36;1);.

   6. பொருதல்; to fight, wage war.

     “அடுவாரடலுளோர்” (சேதுபு. தனுக்கோ. 34);.

   7. வெல்லுதல்; to conquer, subdue, as the senses, passions.

     “ஐம்பொறியு மட்டுயர்ந்தார்” (சீவக.1468);.

   8. வருத்துதல்; to trouble, afflict.

     “கழிபசி நோயடக் கவலும் பூதரும்” (கந்தபு. மகேந் சூரன்அமைச். 59);.

   9. அழித்தல்; to destroy, consume.

     “எல்லா புவனமும்…… அடுபவர்” (கந்தபு. யுத்த. ஏமகூடப். 18);.

   10. குற்றுதல்; to pound, as rice.

     “வித்தட் டுண்டனை” (புறநா. 227 ; 2);.

   11. இயக்கமறச் செய்தல்; to stop moving.

     “வியாத னீட்டிய கையடு நந்தி” (கந்தபு. கடவுள் வாழ்த்து, 19);.

ம., க., குட. அடு; தெ.வண்டு; து. அடுபினி ; கோத. அட்; கோண். அட்டாணி; துட. ஒட்; மா. அடான ; மரா. அட்ணெம் ; பிராகி. அட்டை.

     [உல் → உல. உலத்தல் = காய்தல். உல → உலவை = காய்ந்த மரக்கொம்பு (கலித். 1l);. உல → உலர். உலர்தல் = காய்தல். உல → உலை = நெருப்புள்ள அடுப்பு. உல் → உள் → ஒள் → ஒளி. உள் → உண் → உண்ணம் = வெப்பம். உண் → உண. உணத்தல் = காய்தல். உண → உணகு → உணங்கு. உணங்குதல் = காய்தல், சுடுதல், வருத்துதல். உணங்கு → அணங்கு. அணங்குதல் = வருத்துதல். உண் → உடு = ஒளியுள்ள நாண் மீன், வெள்ளி. உடு → அடு. அடுதல் = சுடுதல், சமைத்தல், எரித்தல், கொல்லுதல், வருத்துதல்.]

அடு-த்தல்

அடு-த்தல் 1 aḍuttal,    4 செ.கு.வி. (v.i)

   1. அண்மையிலிருத்தல்; to be adjacent, next, near.

     “அடுத்தநாட் டரசியல் புடைய” (கம்பரா. யுத்த. வீடணன், 79);.

   2. தகுந்ததாதல்; to be fit, becoming, deserving.

இப்படிச் செய்திருக்கிறாயே! இஃது உனக்கு அடுக்குமா? (உ.வ.);.

   3. நிகழ்தல்; to happen, occur.

     “ஆவி நைந்திற வடுத்ததென்?” (கம்பரா. அயோத் நகர்நீங்கு. 13);.

   4. கூத்தாடுதல் (பிங்.);; to dance.

—, 4 செ.குன்றாவி. (v.t.);

   1. கிட்டுதல்; to approach, approximate to, come in contact with.

     “மயிலன்னா ளடுத்து வயமா ருதியை” (பாரத. மணிமா. 3);.

   2. புகலடைதல்; to take refuge.

     “கற்பகசுந்தனையடுத் துய்வாம்” (சூத. முத். 1);.

   3. அடைதல்; to reach, arrive at.

தலைநகர் அடுத்தோம் (உ.வ.);.

   4. சார்தல், சேர்தல்; to join.

     “முனிவர் யாரு மடுத்திடு மவைக்க ணெய்தி” (கந்தபு. தக்க, ததீசியுத்தரப். 39);.

   5. சேர்த்தல்; to join together.

     “வெண்டுகி லடுத்து” (சீவக. 617);.

   6. அண்டிப் பற்றுதல்; to join, to seek protection from.

அடுத்தவனைக் கெடுக்கலாமா?

   7. கொடுத்தல்; to give.

     “வளைக்கரத் தார்க்கடுத்தோம்” (திருக்கோ. 357);.

   8. அமுக்குதல்; to press down.

     “எடுத்தான் புயந்தனை யடுத்தான் மருதரை” (தேவா. 1.95 ;8);.

   9. ஒப்புவித்தல் (S.I.I. ii, 250);; to assign.

     “இடித்து மின்னி யிருண்டு மேக மெழுந்த போதிது பெய்யுமென் றடுத்ததும்” (சி.சி. பர. உலகா. மறு. 2);.

   10. கருதுதல்; to infer, think, know.

ம. அடுக்க ; க. அட்டு ; தெ., து. அண்டு ; குட. அடி ; கூ. அட்ப ; குவி. அடு ; மா. அட்கெ. அட்யெ.

     ‘ad-, pref. of Latin origin expressing direction toward or addition to.—ad-appears in this form before a vowel and before the consonants d, h, j, m, v. It is simplified to a-before sc, sp, st. Before c, f, g, l, n, p, q, r, s and t. ad- is assimilated to ac-, resp. af-, ag-, al-, an-, ap-, ac-, ar-, as-, at-.—L. ad-, etc., fr. ad, “to, toward’, rel. to Umbr. ar-, ars-, Oscan ad-, az (for ad-s);, ‘to, toward’, and cogn. with Goth. at, OE. æt, at.

அடு → அடுக்கு.

 E add. v.t. and v.i. L. addere, to put to, lay on, give in addition to, add’, fr. ad-and-dere, fr. dare, =to give’. See date, “point of time’, and cp. addendum, additament, addition.

 E. at, prep.–OE art, rel, to ON., O.S., Goth. at, OFris. et, at, OHG. az, and cogn. with L. ad, “to, toward’, OIr. ad-, W. add-, Phryg. a 3-, a 3-, “to”. Cp. ad-. at-, assimilated form of ad-before t.”(K. C. E. D. E. L.);

     [அள்ளுதல் = நெருங்குதல். அள் → அண். அண்ணுதல் = நெருங்குதல் அண் → அடு. அடுத்தல் = நெருங்குதல், சேர்தல். அடு → அடுக்கு → அடுக்கல், அடுக்கம். இனி → அண் → அண்டு → அடு என்றுமாம்.]

அடுகனலவன்

அடுகனலவன் aḍugaṉalavaṉ, பெ. (n.)

   அழிப்புத் தொழில் செய்யும் ஊழித்தீ யுருத்திரன்; Rudra, the God of destruction.

     “அடுகனலவன் கூர்மாண்ட னாடகன்” (கந்தபு. உற்பத். திருக்கல். 94);.

     [அடு + கனல் + அவன்.]

அடுகலன்

அடுகலன் aḍugalaṉ, பெ. (n.)

   சமையற்கலம்; vessel for cooking.

     “அடுகலன் பிறவு மெரி பொனா லிழைத்து” (திருவிளை. திருநகரப். 64);.

க. அடுகல

     [அடு + கலம். கலம் கலன்.]

அடுகலம்

 அடுகலம் aḍugalam, பெ. (n.)

அடுகலன் பார்க்க;see adukkalan.

     [அடு + கலம்.]

அடுகளம்

அடுகளம் aḍugaḷam, பெ. (n.)

போர்க்களம்.

 battle-field.

     “அடுகளத்துள்……… வாளமர் வேண்டி” (தில். இயற். 1;81);.

அடுகாடு

அடுகாடு aṭukāṭu, பெ. (n.)

   சுடலை (சுடுகாடு);; burial ground.

     “அடுகாடு சேர அறமனார்” (பர.90.);

மறுவ இடுகாடு

     [அடு+காடு]

அடுகிடை

 அடுகிடை aḍugiḍai, பெ. (n.)

   அடுத்துக் கிடத்தல்; lying closely.

     [அடு + கிடை. கிடை = கிடத்தல்.]

அடுகிடைபடுகிடை

அடுகிடைபடுகிடை aḍugiḍaibaḍugiḍai, பெ. (n.)

   1. விரும்பியது பெறுமளவும் ஒருவர் வீட்டின்முன் படுத்துக்கிடக்கை; lying down at a person’s house determined not to leave the place till the thing asked for is obtained (W.);.

   2. நோய்வாய்ப்பட்டுப் பாயும் படுக்கையுமாய்க் கிடத்தல்; being completely bedridden, as in illness.

அவன் ஒரு மாதமாக அடுகிடை படுகிடையாய்க் கிடக்கிறான் (உ.வ.);.

அடுகிற்பார்

அடுகிற்பார் aṭukiṟpār, பெ. (n.)

   கொல்ல வல்லார்; the killers,

     “வென்று அடுகிற்பாரை வேர்ப்பித்து” (படி 65:1);.

     [அடுக்கி+பார்]

அடுகுரல்

அடுகுரல் aṭukural, பெ. (n.)

கொல்லும் குரல் ஓசை

 roar of a lion.

     “அடுகுரல் அரச சீயம் அதனை” (சூளா.1143);.

     [அடு+குரல்]

அடுகுறல்

அடுகுறல் aḍuguṟal, தொ.பெ. (Vbl.n.)

   கொல்லுதல்; killing.

     “அடுகுற் றிடுகு லமடற் கதைக டொடுகுற் றனர்” (கந்தபு. யுத்த மூவாயிர. 28);.

     [அடு → அடுகு + உறல். ‘கு’ சொல் விரி வீற்றுச் சாரியை.]

அடுகுவளம்

அடுகுவளம் aḍuguvaḷam, பெ. (n.)

   1. அடுக்கி வைக்கப்பட்ட உண்டிப்பெட்டி (ஈடு, 6.1;2);; pile of baskets or vessels containing cakes, sweet meats, etc., one on another.

   2. உண்டி; food.

     ‘அடுகுவளம் தடைப்படும் போல் காணும்’ (ஈடு, 10.4;3);.

     [அடுக்கு → அடுகு + வளம் = உண்டிப்பெருக்கம்.]

அடுகை

அடுகை aṭukai, பெ. (n.)

   சமைத்தல்; cooking.

     “சோறு அடுகை கற்கைக்கு” (ஒட் 6:119);.

அடிகெ.

     [அடு+கை+]

அடுகைமனை

அடுகைமனை aḍugaimaṉai, பெ. (n.)

   மடைப்பள்ளி; kitchen, cook-house.

     “அங்கிமுதற்றென்றிசை யந்தத் தடுகைமனை” (சிவதகு. சிவஞானதா. 70);.

க. அடிகெமனெ

     [அடு → அடுகை → மனை.]

அடுக்கடுக்காய்

அடுக்கடுக்காய் aḍukkaḍukkāy, கு.வி.எ. (adv.)

   கட்டுக்கட்டாய், கோப்புக்கோப்பாய், வரிசை வரிசையாய், தொகுதி தொகுதியாய், படை படையாய்; in piles, in tiers.

பெட்டிக்குள் அடுக்கடுக்காய் உடுப்புகளை வைத்திருக்கிறான் (உ.வ.);.

     “அண்டமவை யடுக்கடுக்கா யந்தரத்தி னிறுத்தும்” (தாயு. மண்டல. 1);.

     [அடுக்கு + அடுக்கு + ஆய்.]

அடுக்கடுக்காய் வாட்டு-தல்

அடுக்கடுக்காய் வாட்டு-தல் aḍukkaḍukkāyvāḍḍudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   கொத்துக் கொத்தாய் நெருப்பிலிட்டுச் சுடுதல்; to roast batch by batch.

     [அடுக்கு + அடுக்கு + ஆய் + வாட்டு.]

அடுக்கணி

அடுக்கணி aḍukkaṇi, பெ. (n.)

     “அடுக்கணி யொருபொருட் கடுக்கிய திரிசொல் அடுக்கி வைப்ப தடுக்கணி யெனப்படும்.” (இ-ள்.); சிறப்புக் காட்டவும், அன்பு துயர் களிப்பிவற்றை மிக்கெனத் தோற்றவும், ஒரு பொருளைத் தரும் பல திரிசொல் லடுக்கி வைப்ப தடுக்கணி யெனப்படும். (வ-று.);;

     “இகழ்ந்தொ ளித்தானோ வென்னை யிகழ்ந்தகன் றானோ

கொடிய நெஞ்சான்”,

     “என்னுயிர் காத்துப் புரந்தாண்ட வென்னிறைவன்

தன்னுயிர் பட்டிறந்து சாய்ந்தொழிந்தான் – பின்னுயிராய் மீண்டென்னைக் காத்தோம்ப மேவிப் புரந்தளிப்ப

யாண்டையும் யார்யா ரெனக்கு”

என்பன விவற்றுட் டுயரின் மிகுதியைக் காட்டப் பல திரிசொல் சிறப்பி லடுக்கி வந்தவாறு காண்க (தொன். வி. 317, நூற்பாவும் உரையும்);.

     [அடுக்கு + அணி.]

அடுக்கம்

அடுக்கம் aḍukkam, பெ. (n.)

   1. அடுக்கு; pile, tier.

   2. ஒன்றன்மேலொன்றாய் அடுக்கிச் செய்யப்பட்ட வீடு; a tier of houses.

     “விஞ்சு மேனில வடுக்கமும்” (கந்தபு. மகேந். நகர்புகு. 82);.

   3. பன்மலை வரிசை; a complex mountain range.

     “பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடும்” (சிலப். 11;19);.

   4. அரைமலை; middle of a mountain slope.

     “ஆடுமழை யணங்குசா லடுக்கம் பொழியுநும்” (புறநா. 151 ; 10 – 11);.

   5. “கறி வள ரடுக்கத்து மலர்ந்த காந்தள்” (புறநா. 168;2);.

   6. பக்கமலை; lesser mountain adjacent to a greater one.

     “மந்தியு மறியா மரன்பயி லடுக்கத்து” (திருமுருகு 4;2);.

   7. மரஞ்செறிந்த சோலை; thick grove.

குரங்கமை யுடுத்த மரம்பயி லடுக்கத்து” (சிலப். 10 ; 157);.

   8. மலைப் பக்கம்; hillside.

   9. பாறை; ledge of rock, stratum of stone.

     “மால்வரை யடுக்கத்து” (கலித். 44 ; 2);.

   10. படுக்கை; bed.

     “நறுவீ யடுக்கத்து மகிழ்ந்துகண் படுக்கும்” (அகநா. 2 ; 7);.

ம. அடுக்கம்

     [அடு → அடுக்கு + அம் (ஈறு);.]

 அடுக்கம் aṭukkam, பெ. (n.)

   திருக்கோயிலூர் வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Thirukkoyilur Taluk.

     [அடுக்கு+அம்]

அடுக்கம்பாறை

 அடுக்கம்பாறை aṭukkampāṟai, பெ. (n.)

   வேலூர் வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in vellore Taluk.

     [அடுக்கம்+பாறை]

அடுக்கலரி

 அடுக்கலரி aḍukkalari, பெ. (n.)

   இரட்டையலரி; double-flowered oleander.

     [அடு → அடுக்கு + அலரி. அலர் → அலரி.]

அடுக்கலிடு-தல்

அடுக்கலிடு-தல் aḍukkaliḍudal,    17 செ.குன்றாவி. (v.t.)

   உமியை முற்றும் போக்க, நெல் முதலியவற்றை இரண்டாம்முறை குற்றுதல்; to pound grains like paddy a second time to remove all husks (W.);.

     [அடு → அடுக்கு + அல் (தொ. பெ. ஈறு); – அடுக்கல். அடுக்கல் + இடு.]

அடுக்கல்

அடுக்கல் aḍukkal, பெ. (n.)

   1. ஒன்றன்மேலொன்றாக வைத்தல்; to pile up one on top of another.

     “திங்கண்மூன் றடுக்கிய திருமுக் குடைக்கீழ்” (சிலப். 11;1);.

   2. அடுக்கு; series.

     “ஆர வடுக்கல்பொன் னாக மிலங்க” (கந்தபு. மகேந். அவை புகு. 35);.

   3. குவியல்; heap, collection.

     “மீனத் தடுக்கன் முழுவது நோக்கி” (கந்தபு. அசுர. தேவரையேவல். 8);.

   4. படைபடையாய் அமைந்த மலை; mountain as stratified.

     “அடுக்கன் மீமிசை யருப்பம் பேணாது” (மலைபடு. 19);.

     [அடு → அடுக்கு + அல் (தொ.பெ. ஈறு);.]

அடுக்களை

அடுக்களை aḍukkaḷai, பெ. (n.)

   1. அடுப்பு; oven.

   2. சமையலறை; kitchen, cook-house.

     “வகையமை யடுக்களைபோல்” (மணிமே. 29;61);.

     ‘அடுக்களைப் பூனைபோல் இடுக்கிலே ஒளிக்கிறது’,

     ‘அடுக்களைப் பெண்ணுக்கு அழகு வேண்டுமா?’,

     ‘அடுக்களைக் கிணற்றிலே அமுதம் எழுந்தாற்போல்’ (பழ.);.

ம. அடுக்கள; க. அடுகள; தெ. அடசால; து. அட்கல.

     [அடு + களம் – அடுக்களம் → அடுக்களை. களம் → களை. களம் = இடம்.]

அடுக்களை காணுதல்

 அடுக்களை காணுதல் aḍukkaḷaikāṇudal, பெ. (n.)

   மருமகளின் தாய் அவளை வந்து காணும்போது செய்யும் சடங்கு (நாஞ்.);; a ceremony performed by the girl’s mother when she visits her daughter in her house (Näfi.);.

அடுக்களை குருக்கள்

 அடுக்களை குருக்கள் aḍuggaḷaiguruggaḷ, பெ. (n,)

   நாட்டுக்கோட்டைச் செட்டிப் பெண்டிர்க்குரிய குரு (செட்.நா.);; spiritual guru of the women of the Nåttukkottai Chetti caste.

அடுக்களைக்காணி

அடுக்களைக்காணி aṭukkaḷaikkāṇi, பெ. (n.)

   கோயில் மடைப்பள்ளிச் செலவுக்கு விடப்படும் நிலம்; the land donated to meet the expenses cookery.

     “சந்திரப்பிரவேசமே அடுக்களக் காணியா ஸ்ரீதுல்யம் சார்த்திப் பட்டயம் கொடுக்கையில்” (TAS.viii.P:7-8);.

     [அடுக்களை+காணி]

அடுக்களைப்புறம்

அடுக்களைப்புறம் aḍukkaḷaippuṟam, பெ. (n.)

   கோயில் மடைப்பள்ளிச் செலவிற்காக விடப்படும் மானியம் (M.E.R. 574 of 1926);; endowment for the kitchen expenses of a temple.

ம. அடுக்களப்புறம்

     [அடுக்களை + புறம்.]

அடுக்கவரை

 அடுக்கவரை aḍukkavarai, பெ. (n.)

அவரை பார்க்க;see avarai.

     [அடுக்கு + அவரை.]

அடுக்கானகன்னி

அடுக்கானகன்னி aḍuggāṉagaṉṉi, பெ. (n.)

   1. அழகும் குணமும் நிறைந்தவள் (வின்.);; perfect woman.

   2. பவளப்புற்றுச் செய்ந்நஞ்சு (பாடாணம்); (மூ.அ.);; an arsenic preparation.

     [அடுக்கு + ஆன + கன்னி.]

அடுக்காலாத்தி

 அடுக்காலாத்தி aḍukkālātti, பெ. (n.)

அடுக்குத்தீபம் பார்க்க;see adukku-t-tībam.

     [அடுக்கு + ஆலாத்தி.]

அடுக்காழி

அடுக்காழி aḍukkāḻi, பெ. (n.)

   மணிக்கல் பதிக்கப்பட்ட மோதிரம்; finger ring set with gems.

     ‘இரத்தினக் கற்கள் பதிக்கப்பெற்ற மோதிரம் அடுக்காழி என்று சொல்லப்படும்’ (சி. செ. பக். 100, பத்தி 7);.

     [அடுக்கு + ஆழி.]

அடுக்கிய கோடி

அடுக்கிய கோடி aṭukkiyaāṭi, பெ. (n.)

   பல்கோடி; multi crore.

     “அடுக்கிய கோடி பெறினும் குடிப் பிறந்தார் குன்றுவ செய்தல் இலர் ” (குறள் 96:4);. [அடுக்கிய+கோடி]

அடுக்கியல்

 அடுக்கியல் aḍukkiyal, பெ. (n.)

     [அடுக்கு + இயல்.]

அடுக்கிறை

 அடுக்கிறை aḍukkiṟai, பெ. (n.)

வெண்டாமரை,

 white lotus, Nelumbium speciosum (alba); (சா.அக.);.

அடுக்கிளநீர்

 அடுக்கிளநீர் aḍukkiḷanīr, பெ. (n.)

   ஆயிரங் காய்ச்சித் தேங்காயின் நீர்; water inside the kernel of a particular variety of coconut palm, which bears fruits abundantly.

     [அடுக்கு + இளநீர்.]

அடுக்கு

அடுக்கு aḍukku, பெ. (n.)

   1. ஒன்றன்மேலொன்றாக அடுக்கியது; pile, tier.

     “அண்டகோ டியையெலாங் கருப்பவறை போலவு மடுக்கடுக்காக வமைத்து” (தாயு. தேசோ. 7);.

   2. வரிசை; series, row.

கொலுப்பொம்மை யடுக்கு நன்றாயிருக்கிறது (உ.வ.);.

   3. அடுக்குக் கலம்; set of vessels which fit one within another.

என் பெண்ணுக்குச் சீர்வரிசையாகப் பித்தளை பதினோரடுக்கு வைத்தேன் (உ.வ.);.

   4. அடுக்குத் தொடர்; repetition of words.

     “தழுவு தொடரடுக் கெனவீ ரேழே” (நன். 152);.

   5. கோப்பு; file.

இக்கடிதத்தை அடுக்கிலே வை (உ.வ.);.

   6. செழிப்பு; prosperity.

அவள் அடுக்காய் வாழ்கிறாள் (உ.வ.);.

   7. நூலடுக்கு; four threads of yarn, a term used by weavers (W.);.

     [அடு → அடுக்கு.]

அடுக்கு நந்தியாவட்டம்

அடுக்கு நந்தியாவட்டம் aḍukkunandiyāvaḍḍam, பெ. (n.)

   1. அடுக்குக் கண்வலிப் பூ; doubleblossomed eye-flower, 1. sh., Tabernaemontana coronaria (L.); (செ.அக.);.

   2. இரட்டை நந்தியாவட்டம்; double-blossomed common waxflower; dog bane, Tabernaemontana coronaria (சா. அக.);.

     [அடுக்கு + Skt. nandyävarta → த. நந்தியா வட்டம்.]

அடுக்கு-தல்

அடுக்கு-தல் aḍukkudal,    5 செ.குன்றாவி. (v.t)

   1. கலங்கள்போல் ஒன்றன்மே லொன்றாக வைத்தல்; to pile up one on top of another.

     “திங்கண்மூன் றடுக்கிய திருமுக் குடைக்கீழ்” (சிலப்.11;1);.

     ‘அடுக்குகிற அருமை உடைக்கிற நாய்க்குத் தெரியுமா?’ (பழ.);.

   2. வரிசைப்பட வைத்தல்; to arrange in a series, row, or order.

பொத்தகங்களை யெல்லாம் வரிசையாக அடுக்கிவை (உ.வ.);.

   3. பணத்தை மேன் மேலும் பெருக்குதல்; to accumulate money or wealth.

     “அடுக்கிய கோடி பெறினும்” (குறள், 954);.

   4. சொற்களை மேன்மேலும் தொடுத்தல்; to go on speaking or adding words.

சொல்லச் சொல்ல கேட்காமல் அடுக்கிக்கொண்டே போகிறாள் (உ.வ.);.

ம. அடுக்கு; க. அடுகு; துட. ஒட்த்.

     [அடு → அடுக்கு.]

அடுக்குக்குலை-தல்

அடுக்குக்குலை-தல் aḍukkukkulaidal,    2 செ.கு.வி. (v.i.)

   1. வரிசை கலைதல்; to get into disorder, as a row or pile of things (W.);.

   2. நிலை கெடுதல்; to become deranged, as one’s business or circumstances.

   3. கற்பிழத்தல்; to lose one’s chastity, as a woman.

     [அடுக்கு + குலை.]

அடுக்குச் செம்பரத்தை

 அடுக்குச் செம்பரத்தை aḍukkuccembarattai, பெ. (n.)

   அடுக்காக இதழுள்ள இரட்டைச் செம்பரத்தைப் பூ; double shoe-flower (சா.அக.);.

   இது பின்வருமாறு மூவகைப்படும்; double lesh-coloured shoe-flower or scarlet shoe-flower, Hibiscus rosa-sinensis (carnea-plena);.

 double bluff-coloured shoe-flower, Hibiscus sinensis (flava-plena);.

 double white-coloured shoe-flower, Hibiscus mutabilis (alba rubescens);.

     [அடுக்கு + செம்பு + அரத்தை.]

அடுக்குச் செவ்வரத்தை

 அடுக்குச் செவ்வரத்தை aḍukkuccevvarattai, பெ. (n.)

அடுக்குச் செம்பரத்தை பார்க்க;see adukku-c-cembarattai.

     [அடுக்கு + செவ் (செம்); + அரத்தை.]

அடுக்குச்சட்டி

 அடுக்குச்சட்டி aḍukkuccaḍḍi, பெ. (n.)

   அடுக்குக் கலம்; tier of pots of a particular size and shape; set of such vessels which fit one within another.

     [அடுக்கு + சட்டி.]

அடுக்குச்சாத்து-தல்

அடுக்குச்சாத்து-தல் aḍukkuccāddudal,    5 செ.கு.வி. (v.i.)

   தெய்வத் திருமேனிக்குக் கொய்து ஆடையணிதல் (கோயிலொ. 38);; to adornam idol with a cloth gathered if, folds.

     [அடுக்கு + சாத்து.]

அடுக்குத்தீபம்

 அடுக்குத்தீபம் aḍukkuttīpam, பெ. (n.)

   ஒன்றன்மேலொன்றான வட்ட வரிசைகளாக அமைக்கப்பட்ட கோயில் விளக்குவகை; tier of lamps in circular rows, used in temple worship.

     [P]

     [அடுக்கு + தீவம். த. தீ → தீவு → தீவம் → Skt. dipa → த. தீபம்.]

அடுக்குத்தும்பை

 அடுக்குத்தும்பை aḍukkuttumbai, பெ. (n.)

   காசித்தும்பை (மலை.);; a species of double balsam, Banares tumbai, Leucas linifolia (சா.அக.);.

     [அடுக்கு + தும்பை.]

அடுக்குத்தொடர்

அடுக்குத்தொடர் aḍukkuttoḍar, பெ. (n.)

   உடன்பாடு, உணர்ச்சி, வற்புறை அல்லது தேற்றம், விரைவு, பல்கால் நிகழ்ச்சி, இசை நிறை முதலியனபற்றி, ஒரு சொல் இருமுறை முதல் நான்குமுறை வரை அடுக்கி வருவது; repetition of a word twice to four times in token of having followed what is said or to indicate one’s agreement, or emotion, or for emphasis or suggestive of swiftness or repetition of action, or as an expletive used to fill a gap in metre.

     “அசைநிலை பொருணிலை இசைநிறைக் கொருசொல்

இரண்டு மூன்றுநான் கெல்லைமுறை யடுக்கும்” (நன். 396);.

எ-டு:

   1. அசைநிலை

நல்லது நல்லது, மதி மதி, அடியேன் அடியேன்.

   2. பொருணிலை

வருக வருக, வாழ்க வாழ்க – மகிழ்ச்சி. அடி அடி, கொல் கொல் – சினம், பகை, வெறுப்பு.

பாம்பு பாம்பு, தீத்தீத்தீ–அச்சம்.

ஐயையோ (ஐயோ ஐயோ);, செத்தேன் செத்தேன்–துன்பம்.

அடாடா (அடா அடா);, கெட்டேன் கெட்டேன்–மனவருத்தம்.

உண்டு உண்டு, வருவான் வருவான்–வற்புறை.

வந்தேன் வந்தேன், போ போ போ — விரைவு.

திரும்பத்திரும்ப, போய்ப்போய், மேலும் மேலும்–பல்கால் நிகழ்ச்சி.

சரிசரி, ஆகட்டும் ஆகட்டும்–உடன்பாடு.

   3. இசைநிறை

ஏ ஏ, நல்குமே நல்குமே நல்குமே,

பாடுகோ பாடுகோ பாடுகோ பாடுகோ.

குறிப்பு: (1); உலக வழக்கும் செய்யுள் வழக்கும் என, அசைநிலை இரு வகைப்படும். அவற்றுள், முன்னது பொருள் குறியாது பிறர் சொல்வதைக் கேட்டற் குறியளவாக நிற்கும்; பின்னது பொருளற்று நிற்பதாகச் சொல்லப்படும்.

எ-டு:

என்செய்தேன் என் செய்தேன், என்னத்தைச் சொல்ல என்னத்தைச் சொல்ல.

     [அடுக்கு + தொடர்.]

அடுக்குந

அடுக்குந aṭukkuna, பெ. (n.)

   லவாகத் தொடர்ந்து வருவன; that which continues in multiples

     “வினை எஞ்சு கிளவி சொல் முறை முடியாது அடுக்குந வரினும்” (தொல் 15:36);.

     [அடுக்கு+ந]

அடுக்குப் பணியாரம்

 அடுக்குப் பணியாரம் aḍukkuppaṇiyāram, பெ. (n.)

   கோதுமை மாவால் ஏழு அடைகளைத் தட்டி நெய்கூட்டி, ஒன்றன்மேலொன்றாக அடுக்கிச் சுட்டெடுக்கும் பலகாரம். இதற்குப் பூரி எனவும் பெயர்; a kind of cake made of seven thin layers of wheat flour and fried in ghee (சா.அக.);.

     [அடுக்கு + பணியாரம்.]

அடுக்குப்பண்ணு-தல்

அடுக்குப்பண்ணு-தல் aḍukkuppaṇṇudal,    5 செ. குன்றாவி, (v.t.)

   அணியம் (ஆயத்தம்); செய்தல்; to prepare, to make preparation(s);.

     [அடுக்கு + பண்ணு.]

அடுக்குப்பருத்தி

அடுக்குப்பருத்தி aḍukkupparutti, பெ. (n.)

   பெரும்பருத்தி, ஒருவகை யுயர்ந்த பருத்தி (G. Sm. D. I, i, 227);; a superior variety of cotton raised in red loam.

     [அடுக்கு + பருத்தி.]

அடுக்குப்பற்சுறா

 அடுக்குப்பற்சுறா aḍukkuppaṟcuṟā, பெ. (n.)

   ஒருவகைச் சாம்பல் நிறச் சுறா; grey shark, Carcharias ellioti.

     [அடுக்கு + பல் + சுறா.]

அடுக்குப்பாத்திரம்

 அடுக்குப்பாத்திரம் aḍukkuppāttiram, பெ. (n.)

   ஒன்றனுள் ஒன்று அடுக்கி அடுக்காகவுள்ள கலங்கள்; a set of vessels or cups placed one inside of another or one upon another.

ம. அடுக்குப்பாத்திரம்; க. அடுக்கு பாத்ரெ.

     [அடுக்கு + Skt. pattra → த. பாத்திரம்.]

அடுக்குப்பானை

அடுக்குப்பானை aḍukkuppāṉai, பெ.(n.)

   1. பல்பொருள்கள் போட்டு வைப்பதற்கு ஒன்றன்மே லொன்றா யடுக்கிய மட்பானைகள்; big earthen pots piled one over another and used as receptacles.

   2. சில குலத்தார் கலியாணச் சடங்கிற்கு அடுக்கிவைக்கும் ஏழு கோலப் பானைகள்; tier of seven painted pots used at marriage ceremony among certain Castes.

     [அடுக்கு + பானை.]

அடுக்குப்பார்-த்தல்

அடுக்குப்பார்-த்தல் aḍukkuppārttal,    4 செ.கு.வி. (v.i.)

   1. தக்க துணை தேடுதல் (இ.வ.);; to look out for suitable help or companion (Loc.);.

   2. ஒத்திகை பார்த்தல் (யாழ்ப்.);; to rehearse, as stage players (J.);.

     [அடுக்கு + பார்.]

அடுக்குப்பாறை

 அடுக்குப்பாறை aḍukkuppāṟai, பெ. (n.)

   நிலத்தில் தளவரிசையாகப் பொத்தக ஏடுகள்போல் ஒன்றன்மே லொன்றா யமைந்த பல்வேறு படைக் கற்பாறை; a mound of rock composed of different horizontal strata of rocks, like the leaves of a book (சா.அக.);.

     [அடுக்கு + பாறை.]

அடுக்குப்பாற்சொற்றி

 அடுக்குப்பாற்சொற்றி aḍukkuppāṟcoṟṟi, பெ. (n.)

   பாற்சொற்றி யென்னும் செடிவகை; a variety of the plant, Ruellia secunda (W.);.

     [அடுக்கு + பாற்சொற்றி.]

அடுக்குப்பாளம்

 அடுக்குப்பாளம் aḍukkuppāḷam, பெ. (n.)

   தெய்வச்சிலைக்குப் பின்புறத்திற் சாத்தும் கொய்த ஆடை; cloth gathered into folds, worn on the back of an idol.

     [அடுக்கு + பாளம்.]

அடுக்குப்பூண்டு

 அடுக்குப்பூண்டு aḍukkuppūṇḍu, பெ. (n.)

   கோபுரப்பூண்டு; a kind of plant (சா.அக.);.

     [அடுக்கு + பூண்டு.]

அடுக்குமல்லிகை

 அடுக்குமல்லிகை aḍuggumalligai, பெ. (n.)

   பல இதழ் வரிசையுள்ள மல்லிகைவகை (மூ.அ.);; double-flowered jasmine, m. sh., Jasminum sambac.

அடுக்குமாடி

 அடுக்குமாடி aḍukkumāḍi, பெ. (n.)

   பல நிலையுள்ள கட்டடம் அல்லது வீடு; multi-storied building or house.

ஏழடுக்குமாடி.

அடுக்குமுள்ளி

 அடுக்குமுள்ளி aḍukkumuḷḷi, பெ. (n.)

   பெரு முள்ளி யென்னும் பூடுவகை (மூ.அ.);; thorn-bush, a variety of prickly night shade, Indian hyssop, Solanum (Genus); (சா.அக.);

அடுக்குமெத்தை

 அடுக்குமெத்தை aḍukkumettai, பெ. (n.)

   தேங்காய் நார், பருத்திப் பஞ்சு, இலவம் பஞ்சு, ஓதிமத் தூவி, நறுமென் மலரிதழ் ஆகியவற்றாலமைந்த மெத்தைகள் முறையே ஒன்றன்மே லொன்றா யமைந்த அஞ்சணைப் படுக்கை; bed with mattresses made of coconut fibre, cotton, silk-cotton, swan’s down and soft fragrant flower petals, placed one upon another in the given order.

 அடுக்குமெத்தை aḍukkumettai, பெ. (n.)

அடுக்குமாடி பார்க்க;see adukku-mddi.

அடுக்குளமைந்தோன்

 அடுக்குளமைந்தோன் aḍukkuḷamaindōṉ, பெ. (n.)

   ஒருவகைச் செய்ந்நஞ்சு (மிருத பாடாணம்);; a kind of arsenic preparation (சா.அக.);.

அடுக்குள்

அடுக்குள் aḍukkuḷ, பெ. (n.)

   1. அறைக்குள் அறை; room within a room.

   2. சமையலறை; kitchen (Brähm.);.

க. அடுகள

     [அடுக்கு + உள்.]

அடுக்குவட்டா

 அடுக்குவட்டா aḍukkuvaḍḍā, பெ. (n.)

   சாப்பாடு தூக்கிக்கொண்டு போவதற்குப் பல வட்டக் கிண்ணங்கள் ஒன்றன்மே லொன்றாக அமைந்த தூக்குக் கலம் (இக்.வ.);; tiffin-carrier or meal-carrier consisting of several cups or round vessels placed one upon the other (Mod.);.

அடுக்குவாகை

 அடுக்குவாகை aḍukkuvākai, பெ. (n.)

   பெரு வாகைமரம்; sirissa tree, Albizzia labbak (சா.அக.);.

அடுக்குவாழை

 அடுக்குவாழை aḍukkuvāḻai, பெ. (n.)

   பனை வாழை; a kind of plantain tree (சா.அக.);.

ம. அடுக்கன் வாழ

அடுக்குவிருசு

அடுக்குவிருசு aḍukkuvirusu, பெ. (n.)

   பொரி வாணவகை; (T.C.M. ii, 2, 598);; a kind of rocket.

அடுக்கூமத்தை

 அடுக்கூமத்தை aḍukāmattai, பெ. (n.)

   காட்டுமத்தை; downy datura, m. sh., Datura metal (சா.அக.);.

     [அடுக்கு + ஊமத்தை. த. மத்தை → Skt. matta → unmatta → த. ஊமத்தை.]

அடுங்கரை

அடுங்கரை aṭuṅkarai, பெ. (n.)

   இடிகரை; eroded bank,

     “உரவுத் திரை அடுங்கரை வாழையின் நடுங்க” (குறி.178-79);

     [அடும்+கரை]

அடுங்கால்

அடுங்கால் aṭuṅkāl, பெ.எ. (adj.)

   துன்பம் நேரும் பொழுது; at the time of difficulty.

     “இன்பம் கடல் மற்று காமம், அஃது அடுங்கால் துன்பம்அதனின் பெரிது.” (குறள் 117-6.);. [அடும்+கால்]

அடுங்குன்றம்

 அடுங்குன்றம் aḍuṅguṉṟam, பெ. (n.)

   யானை;  elephant (சா.அக.);.

     [அடுதல் = கொல்லுதல். குன்றம் = சிறுமலை. அடுங்குன்றம் = கொல்லுஞ் சிறுமலை போன்றது.]

அடுசிலைக்காரம்

 அடுசிலைக்காரம் aḍusilaikkāram, பெ. (n.)

   செந்நாயுருவி (மூ.அ.);; red species of Indian burr, Achyranthus aspera (சா.அக.);.

அடுசில்

அடுசில் aḍusil, பெ. (n.)

   சோறு; boiled rice.

     ‘அடுசில்நெய் யாகிய ஆவுதி’ (பதிற். 21, உரை);.

ம. அட்டம்; க. அடிகெ; தெ. அட்டமு; து. அட்யெ ; Skt. attam.

     [அடு → அடுதல் → அடுசல் → அடுசில்.]

அடுதொறும்

அடுதொறும் aṭutoṟum, பெ. (n.)

   போர்புரியும் போதெல்லாம், பொருந்தோறும்; through out the war period.

     “அட்டு ஆனானே குட்டுவன் அடுதொறும் பெற்று ஆனாரே பரிசிலர் களிறே” (பதி 41:1-2);.

     [அடு+தொறும்]

அடுத்த

அடுத்த aḍutta, கு.பெ.எ. (adj.)

   1. ஒட்டியுள்ள, நெருங்கியுள்ள; adjoining, contiguous, neighbouring, next.

     ‘அடுத்த வீட்டுக்காரி பிள்ளை பெற்றாளென்று அம்மிக்குழவி யெடுத்துக் குத்திக்கொண்டாளாம்’ (பழ.);.

   2. அண்டியுள்ள; support-seeking.

ம. அடுத்த; மா. அட்கெ; கூ. அட.

அடுத்தடுத்து

அடுத்தடுத்து aḍuttaḍuttu, கு.வி.எ. (adv.)

   1. ஒன்றன்பின் ஒன்றாக; one after another.

     “அடுத்தடுத்து வன்காய் பலபல காய்ப் பினும்” (நாலடி. 203);.

   2. அடிக்கடி; often, ever and anon.

     “அடுத்தடுத்து வேகமுடைத்தாம்” (நாலடி. 348);.

     ‘அடுத்தடுத்துச் சொன்னால் தொடுத்த காரியம் முடியும்’ (பழ.);.

ம. அடுத்தடுத்து

     [அடுத்து + அடுத்து.]

அடுத்தணித்தாக

அடுத்தணித்தாக aḍuttaṇittāka, கு.வி.எ. (adv.)

   மிக அண்மையில் (ஈடு, 9.8;7);; very near, close by.

     [அடுத்து + அணித்து + ஆக.]

அடுத்ததாட்டி

அடுத்ததாட்டி aṭuttatāṭṭi, அடுத்தமுறை:

 again next time. (கொ.வ.வ.சொ.4.);.

     [அடுத்த+(தடவை);தாட்டி]

அடுத்தது

அடுத்தது aṭuttatu, பெ. (n.)

   அருகில் உள்ள பொருள்; thing adjaceut.

     “அடுத்தது காட்டும் பளிங்கு போல்” (குறள் 71-6);

     [அடு+த்+த்த+து]

அடுத்தமுறை

அடுத்தமுறை aḍuttamuṟai, பெ. (n.)

   1. மறு தடவை; next time.

   2. நெருங்கின உறவு; nearest relationship.

அடுத்தல்செல்

அடுத்தல்செல் aṭuttalcel, செ.குன்றாவி (v.t.)

சேர்ப்பித்தல்:

 to entrust

     “உடைத்த பின்றை அல்லது நங்கையை அடுத்தல் செல்லான் அரசன்” (பெருங் 95:86-7);.

     [அடுத்தல்+செல்லான்]

அடுத்தவரைக் கெடு-த்தல்

அடுத்தவரைக் கெடு-த்தல் aḍuttavaraikkeḍuttal,    4 செ.குன்றாவி. (v.t.)

   புகலடைந்தவர்க்குத் தீங்கு செய்தல்; to ruin or kill refugees trea-cherously.

     ‘அடுத்தவரைக் கெடுக்கலாமா?’ (பழ.);.

     [அடுத்தவரை + கெடு.]

அடுத்தவர்

அடுத்தவர் aṭuttavar, பெ. (n.)

   அடைக்கலம் அடைந்தவர்; refugee

     “அடாத மன்னரை அடர்ந்து அடுத்தவரை அஞ்சல் என்று” (வி.பா. 10:50);.

     [அடுத்த+அவர்]

அடுத்தாரை மயக்கி

 அடுத்தாரை மயக்கி aḍuttāraimayakki, பெ. (n.)

   கஞ்சா. இதன் மறுபெயர்கள் கோரக்கர் மூலி, சித்தருண்ணு மூலி, கற்பத்து ஞானி, யோகம் வளர்க்கு மூலி என்பன; gunjah, Cannabis sativa. It is known by different names such as carl hemp, Korakkan’s drug, fimble, gallow grass, giddy plant, Indian hemp, wishing plant, victory (siddhi); plant and so on (சா.அக.);.

அடுத்தாரைக்கொல்லி

அடுத்தாரைக்கொல்லி aḍuttāraikkolli, பெ. (n.)

   நெருப்பு; fire (சா. அக.);.

ஒ.நோ. “சேர்ந்தாரைக் கொல்லி” (குறள், 306);.

     [அடுத்த + அவரை – அடுத்தவரை → அடுத்தாரை + கொல்லி.]

அடுத்தார்

அடுத்தார் aḍuttār, பெ. (n.)

   1. உதவி நாடி வந்தவர்; those who have approached for help.

   2. வந்து சேர்ந்தவர்; those who have joined, seeking protection.

அடுத்தாள்

 அடுத்தாள் aḍuttāḷ, பெ. (n.)

   உதவியாள் (இ.வ.);; assistant (Loc.);.

     [அடுத்த + ஆள்.]

அடுத்தி

 அடுத்தி aḍutti, பெ. (n.)

   முறைகேடான வட்டி (W.G.);; usury.

க. அட்; தெ. அடிதி ; து. அடவு.

     [அடு → அடர் → அடர்த்தி → அடத்தி → அடுத்தி.]

அடுத்து

அடுத்து aḍuttu, கு.வி.எ. (adv.)

   1. நெருங்கி, அண்டி; having approached.

     ‘அடுத்து வந்தவர்க்கு ஆதரவு சொல்வோன் குரு’ (பழ.);.

   2. மறு நிகழ்ச்சியாக; as the next item, next.

அடுத்து, பேரா. இராமசாமிக் கவுண்டர் அவர்கள் தொல்காப்பியம் பற்றி ஒர் அரிய ஆய்வுரை நிகழ்த்துவார்கள்.

   3. மேன்மேல்; again and again, further and further.

     “அதனை யடுத்துார்வ தஃதொப்ப தில்” (குறள், 621);.

அடுத்துக் கழுத்தறு-த்தல்

அடுத்துக் கழுத்தறு-த்தல் aḍuttukkaḻuttaṟuttal,    4 செ.குன்றாவி, (v.t.)

   1. நம்பிக்கைக் கேடு செய்து கொல்லுதல்; to kill by treachery.

   2. நண்பன்போற் பலநாட் பழகிக் கேடு செய்தல்; to do harm insidiously.

     [அடுத்து + கழுத்து + அறு.]

அடுத்துக்கெடு-த்தல்

அடுத்துக்கெடு-த்தல் aḍuttukkeḍuttal,    4 செ. குன்றாவி, (v.t)

   நட்புப்போற் சேர்ந்து கேடு செய்தல்; to ruin a person by associating with him, to kill by treachery.

     ‘அடுத்துக் கெடுப்பான் கபடன், தொடுத்துக் கெடுப்பாள் மடந்தை’ (பழ.);.

     [அடுத்து + கெடு.]

அடுத்துமுயல்-தல்

அடுத்துமுயல்-தல் aḍuttumuyaltal,    13 செ.கு.வி. (v.i.)

   இடைவிடாது முயலுதல்; to make continuous effort.

     “அடுத்து முயன்றாலும்” (மூதுரை, 5);.

     ‘அடுத்து முயன்றாலும் ஆகும் நாள்தான் ஆகும்’ (பழ.);.

அடுத்துள்ளோர்

அடுத்துள்ளோர் aṭuttuḷḷōr, பெ. (n.)

   சுற்றத்தார்; relation.

     “அத்தலை தம்பிமாரும் தாயரும் அடுத்துளோடும்” (யுத் 26:16);.

     [அடுத்து+உள்ளோர்]

அடுத்துவரலுவமை

அடுத்துவரலுவமை aḍuttuvaraluvamai, பெ. (n.)

எ-டு; பவளம் போன்றது கோவைப்பழம்; கோவைப்பழம் போன்றது சிவந்த உதடு. “துப்புறழ் தொண்டைச் செவ்வாய்” (சீவக. 107); என்பதில், ‘தொண்டை வாய்க்கு அடை துப்பை யொக்கும் தொண்டை போலும் செவ்வாயென இரண்டுவமையும் செவ்வாயை நோக்குதலின், அடுத்துவரலுவமை யன்று’ (நச். உரை);.

     [அடுத்து + வரல் + உவமை.]

அடுத்துவிளக்கு-தல்

அடுத்துவிளக்கு-தல் aḍudduviḷakkudal,    5 செ. குன்றாவி. (v.t)

   1. மாழை (உலோக);ப் பற்று வைத்தொட்டுதல்; to solder.

     ‘அடுத்து விளக்கின மொட்டும் பறளையும்’ (S.1.1. ii, 96);.

   2. அடுத்தாற்போல் விளக்கிச் சொல்லுதல்; to explain subsequently.

அடுத்தூண்

அடுத்தூண் aḍuttūṇ, பெ. (n.)

   பிழைப்பிற்கு விடப்பட்ட நிலம் (ஈடு. 4.8; 8);; land given for one’s livelihood.

ம. அடுத்தூண்

     [அடுத்து + ஊண்.]

 அடுத்தூண் aṭutturaṇ, பெ. (n.)

   மாதச் செலவுக்கு வேண்டிய பணம்; money needed for monthly expenses. (தெ.கோ.சா.3:2);.

     [அடுத்து+ஊண்]

அடுத்தேறு

அடுத்தேறு aḍuttēṟu, பெ. (n.)

   மிகை; excess.

     ‘அடுத்தேறாக வந்த கரத்தைக் கழித்து’ (ஈடு, 3.8; 9);.

     [அடுத்து + ஏறு.]

அடுநறா

 அடுநறா aḍunaṟā, பெ. (n.)

   காய்ச்சிய சாறாயம்; distilled intoxicating drink.

அடுபவர்,

அடுபவர், aṭupavar, பெ. (n.)

   வருந்துபவர்; those who suffer.

     “படு பொருள் இன்றி நெல்லிற்பதடிபோல் உள்ளிலர்மெய்அடுபவர்” (பெரிய.2717.);

     [அடு+ப்+அவர்]

அடுபாக்கு

அடுபாக்கு aṭupākku, வி.எ. (adv.)

   கெடுப்பதற்கு; to destroy.

     “நலிந்து ஒருவர் நாறம் அடுபாக்குப்புக்கால்.” (பழ. 354);

     [அடு+பாக்கு]

அடுபால்

அடுபால் aṭupāl, பெ. (n.)

   கொதிக்கும் பால்; boiling milk.

     “அடு பால் அன்ன என் பசலை மெய்யே” (நற். 175:9);.

     [அடு+பால்]

அடுபிணம்

அடுபிணம் aṭupiṇam, பெ. (n.)

கொலையுண்ட பிணம்

 body killed.

     “கொன்றுஆற்றுத்துறந்த மாக்களின் அடுபிணம்.” (நற் 329:2.);.

     [அடு+பிணம்)

அடுபுகை

__,

பெ. (n.);

   ஊர் சுடு புகை; blazing fire and smoke coming from settlements during war.

     “அடா அ அடு புகை அட்டு மலர் மார்பன்.” (பதி 20:1);

     [அடு+புகை]

அடுப்பங்கடை

அடுப்பங்கடை aḍuppaṅgaḍai, பெ. (n.)

   1. அடுப்பின் பக்கம்; side of the oven.

   2. சமையலறை; kitchen.

     [அடுப்பு + அம் (சாரியை); + கடை. கடை = பக்கம்.);

அடுப்பங்கரை

 அடுப்பங்கரை aḍuppaṅgarai, பெ. (n.)

அடுப்பங்கடை பார்க்க;see aduppari-kadai.

     [கடை → கரை.]

     ‘அடுப்பாங்கரை’ என்பது நீட்டிய உலக வழக்கு.

அடுப்பம்

அடுப்பம் aḍuppam, பெ. (n.)

   1. கனம்; heaviness, weight.

     ‘மேக அடுப்பமும் பார் அடுப்பமும் ஒத்தன பேய்க்கணங்கட்கு’ (தக்கயாகப் 361, உரை);.

   2. நெருங்கிய உறவு (நெல்லை);; close intimacy or relationship (Tn.);.

ம. அடுப்பம்

     [அடு → அடுப்பம். அடு = நெருங்கு.]

அடுப்பாம்மூலை

அடுப்பாம்மூலை aṭuppāmmūlai, பெ. (n.)

தென்கிழக்கு மூலை (அக்கினி மூலை);;(கொ.வ.வ.சொ.4.);.

 southeast corner of the house.

     [அடுப்பு+ஆம்+மூலை]

அடுப்பு

அடுப்பு aḍuppu, பெ. (n)

   1. சமையற் கலத்தை யேற்றி யெரிக்கவுதவும் முக்கற் கூட்டு; three stones arranged in triangular form to serve as an oven.

     ‘அடுப்புக் கூட்டுப்போல…… மூன்று புள்ளிவைத்து எழுதப்படுதலால்’ (நன். 90, சடகோ. உரை);.

அடுப்புக் கட்டிக்கு அழகு வேண்டுமா? (பழ.);.

   2. விறகிட்டு எரித்தற்கு மண், இரும்பு முதலியவற்றாற் செய்யப்பட்ட கருவி; oven, fire-place for cooking.

     “பாலைக் கறந் தடுப்பேற வைத்து” (திவ். பெரியாழ். 2.9;5);.

     ‘அடுப்பு மூன்றானால் அம்மா பாடு திண்டாட்டம்’ (பழ.);.

   3. அடுப்பு நெருப்பு; fire, in the oven.

அடுப்பெரிகிறதா பார் ? (உ.வ.);

     ‘அடுப்பு எரிந்தால்பொரிபொரியும்’,

     ‘அடுப்புநெருப்பும் போய் வாய்த்தவிடும் போச்சு’ (பழ.);.

   4. முக்கல் லடுப்பு வடிவான நாண்மீன் (பரணி);; the second lunar constellation.

   5. மனைவி (இழிசி.வ.);; wife.

   6. அச்சம் (பிங்.);; fear.

ம. அடுப்பு ; து. அட்பு, அட்கல.

     [அடுதல் = கடுதல், சமைத்தல். அடு → அடுப்பு.]

அடுப்பு ஊதி

 அடுப்பு ஊதி aḍuppuūti, பெ. (n.)

   பொருவா, ஒருவகைக் கடல்மீன்; a kind of sea-fish, Thryssa malabarica.

அடுப்புக்கரி

அடுப்புக்கரி aḍuppukkari, பெ. (n.)

   1. அடுப்பிலெரித்த கரி; dead coals from an oven.

   2. மரக்கரி; charcoal, as taken out from or used in an oven.

ம. அடுப்புக்கரி ; க. அடுகரி ; து. அட்கலகரி.

     [அடுப்பு + கரி.]

அடுப்புக்குட்டு

அடுப்புக்குட்டு aṭuppukkuṭṭu,    அடுப்பின் ஒரத்தில் இருக்கும் உருண்டை வடிவத் திட்டு. (கொ.வ.வ.சொ.4.); earthen oven with three protruding knobs.

     [அடுப்பு+குட்டு]

     [P]

அடுப்புக்கும்பி

 அடுப்புக்கும்பி aḍuppukkumbi, பெ. (n.)

   அடுப்புச் சாம்பல் அல்லது சுடுசாம்பல்; hot ashes in the oven.

     [அடுப்பு + கும்பி.]

அடுப்புக்கொட்டம்

 அடுப்புக்கொட்டம் aḍuppukkoḍḍam, பெ. (n.)

   சமையற் கொட்டகை; kitchen shed.

     [அடுப்பு + கொட்டம்.]

அடுப்புந்துடுப்புமாய்

 அடுப்புந்துடுப்புமாய் aḍuppunduḍuppumāy, கு.வி.எ. (adv.)

   சமையல்வேலை செய்து கொண்டு; engaged in cooking.

     “அடுப்புந்துடுப்புமாயிருக்கிறேன்; இப்போது வரமுடியாது” (உ.வ.);.

     [அடுப்பும் + துடுப்பும் + ஆய்.]

அடுப்புப்பற்றவை-த்தல்

அடுப்புப்பற்றவை-த்தல் aḍuppuppaṟṟavaittal,    4 செ.கு.வி. (v.i.)

   அடுப்பில் நெருப்பு மூட்டுதல்; to kindle fire in the oven.

     [அடுப்பு + பற்றவை.]

அடுப்புவெட்டு

 அடுப்புவெட்டு aḍuppuveḍḍu, பெ. (n.)

   மழித்த இடம் அடுப்புத் திறப்புப்போல் அல்லது தலை கீழான பகரம்போல் தோன்றுமாறு, முன்றலை மயிரை வறண்டி வைத்தல்; shaving the hair just above the forehead, in such a fashion that the shaven part looks like the opening of an oven.

அடுப்பூதி

அடுப்பூதி aḍuppūti, பெ. (n.)

   1. சமையற் கா-ரன்-ரி; cook.

   2. மூடன் (மதி. களஞ்.ii, 5);; fool.

     [அடுப்பு + ஊதி.]

அடுப்பூது-தல்

அடுப்பூது-தல் aḍuppūdudal,    5 செ.கு.வி. (v.i.)

   அடுப்பில் விறகு எரியாதபோது ஊதாங்குழல் வாயிலாகக் காற்றூதி யெரிய வைத்தல்; to blow and kindle the fire in the oven.

     “அடுப்பூதும் பெண்ணிற்குப் படிப்பென்னத்திற்கு?” (பழ.);.

     [அடுப்பு + ஊது.]

அடுப்பெரி-தல்

அடுப்பெரி-தல் aḍupperidal,    2 செ.கு.வி. (v.i.)

   1. அடுப்பில் நெருப்பு எரிதல்; to burn, as fire in the oven.

   2. வீட்டில் சமையல் நடைபெறுதல்; to do cooking in a house.

பணமுடையால் ஐந்து நாளாய் அடுப்பெரியவில்லை (உ.வ.);.

     [அடுப்பு + எரி.]

அடுப்பேற்று-தல்

அடுப்பேற்று-தல் aḍuppēṟṟudal,    5 செ.குன்றா வி. (v.t)

   உலைவைத்தல், சமைத்தற்கு நீரிட்ட கலத்தை அடுப்பின்மேல் வைத்தல்; to set a pot of water on the fire for boiling or cooking anything.

     [அடுப்பு + ஏற்று.]

அடுமகள்

அடுமகள் aṭumakaḷ, பெ. (n.)

   சமைப்பவள்; cooking woman.

     “அடுமகள் முகந்த அளவா வெண்ணெல். “புற, 399: 1).

     [அடு+மகள்]

அடுமடா

அடுமடா aṭumaṭā, பெ. (n.)

   சமைக்கும் பானை; cooking pot.

     “எடு மடா நமக்கு என்று சென்று புக்கு அடு மடா எலாம் அற அருந்தியே”(ஒட் 5:508.);

     [அடு+(மிடா);மடா]

அடுமா

 அடுமா aḍumā, பெ. (n.)

   கொட்டை (பரி.அக.);; nut.

     [ஒருகா. அண்டுமா (அண்டிமா); → அடுமா.]

அடும்பு

அடும்பு aḍumbu, பெ. (n.)

அடம்பு பார்க்க;see adambu.

     “அடும்பிவ ரணியெக்கர்” (கலித். 132 ;16);.

ம., க., து. அடும்பு.

     [அடம்பு → அடும்பு.]

அடுவது

அடுவது aṭuvatu, பெ. (n.)

   காய்ச்சப்படுவது; to be boiled.

உலைப்பெய்து அடுவதுபோலும் துயர்” (நால் 12:4);.

     [அடு+வ்+அது]

அடுவம்

 அடுவம் aḍuvam, பெ. (n.)

   மலைப்புன்கு (L.);; Wight’s Indian nettle.

அடுவல்

 அடுவல் aḍuval, பெ. (n.)

   வரகு நெல் கலப்பு (யாழ்ப்.);; mixture of paddy and common millet (J.);.

     [ஒருகா. அடு → அடுவல். அடு = சேர், கல.]

அடுவல்போடு-தல்

 அடுவல்போடு-தல் aṭuvalpōṭutal, செ.கு.வி. (vi.)

   மா, வெள்ளரி, வாழை போன்றவற்றின் காய்களைக் குழிதோண்டிப்புதைத்துப்பழுக்க வைத்தல்; to ripe the unripened fruits by putting in a pit.

     [அடுவல்+போடுதல்]

அடுவான்

அடுவான் aṭuvāṉ, பெ. (n.)

   சமையற்காரன்; temple cook

     “நந்தவனக் குடிகள் மூவர் சாலைக்கு அடுவான் ஒருத்தன்” (SlI.v.625);.

     [அடு+வ்+ஆன்]

அடுவி

அடுவி aṭuvi, பெ. (n.)

   பொருந்துபவள்; one who fits in.

உவர்நீங்கு கற்பின் எம் உயிர் உடம்பு அடுவி” (அக. 136:19);

     [அடு+இ]

அடே

 அடே aṭē, இடை. (part.)

     ‘அடா’ என்னும் ஆண்பால் (சேய்மை); விளியின் மறுவடிவம்;

 an exclamation of calling, another form of the masculine address ada.

     [அட (விளியி.); + ஏ (விளியு.);.]

அடேயப்பா

 அடேயப்பா aṭēyappā, இடை (int.)

   வியப்புக் குறிப்பு; an exclamation of astonishment.

     [அட (விளியி.); → அடே. அப்பன் → அப்பா (விளிப்பெயர்);. அடே + அப்பா – அடேயப்பா. முதற்காலத்தில் விளிப்பெயராக மட்டுமிருந்த ‘அப்பா’ என்னுஞ் சொல், பிற்காலத்தில் வியப்பிடைச் சொல்லுமாயிற்று.]

அப்பா பார்க்க;see appa.

அட, அடா, அடே, அடோ என்னும் பல் வடிவான விளியிடைச் சொல் தந்தை முறைப் பெயருக்கு முன்னும் வரும், பின்னும் வரும். ஆயின், இட வேறுபாட்டிற்கேற்பப் பொருள் வேறுபடும்.

   எ-டு;அடேயப்பா (அடாயப்பா); – வியப்புக் குறிப்பு.

அப்பாடா (அப்பா + அடா); – ஒய்வு அல்லது இளைப்பாறற் குறிப்பு.

அடை

அடை1 aḍaidal,    2 செ.கு.வி. (v.i.)

   1. பறவைகள் கூட்டில் இராத் தங்குதல்; to go to roost, as birds.

   2. பாம்புகள் வளைக்குட் புகுதல்; to resort to holes, as snakes.

   3. ஆடுமாடுகள் கூடிக்கிடத்தல்; to gather together and lie down for rest, as sheep or cattle.

   4. கோழி அடைகாத்தல்; to sit on eggs, as a hen.

   5. மாந்தர் இறந்தடங்குதல்; to attain eternal rest, die.

அந்தப் பெரியவர் அடைந்து விட்டார் (உ.வ.);.

   6. தூசி சேர்தல்; to collect, gather as dust.

மேசை நாற்காலிகளில் நாள்தோறும் தூசி வந்தடைகிறது (உ.வ.);.

   7. வண்டல் படிதல்; to be deposited, as alluvium.

   8. கிணறு தூர்தல்; to be silted up, choked up, filled up, closed, as a well.

   9. கடன் தீர்தல்; to be paid-up, as a debt.

கடனெல்லாம் அடைந்துபோயிற்று (உ.வ.);.

   10. சேர்ந்திறுகுதல்; to settle, become close, compact, hard, as sand by rain.

   11. பொருந்துதல்; join, mingle.

     “அணுவினோ டெல்லா மாகி யடைந்திடுந் தத்துவங்கள்” (சி. சி. சுபக் 2;78);.

   12. அடைகா யடைதல்; to be preserved, as pickles (W.);.

 No Text.

—,

   2 செ.குன்றாவி. (v.t.);

   1. சேர்தல்; to reach, arrive at.

     “கரைய டைந்தனர்” (பாரத. வாரணா. 2);.

   2. அடைக்கலம் புகுதல்; to take refuge in.

     “அடைந்தவர்க் கருளா னாயின்” (கம்பரா. யுத்த. வீடண. 108);.

   3. பெறுதல்; to get.

இந்தியா 1947ஆம் ஆண்டு ஆங்கிலராட்சியினின்று விடுதலையடைந்தது (உ.வ.);.

   4. சாணை அல்லது சூடு சேர்த்தல்; to heap up sheaves or ears of corn in pyramidal shape with round, square or rectangular base.

உழவர், அறுவடையின் பின், அரிக்கட்டுகளை அல்லது கதிர்களைச் சாணையாக அடைந்து வைப்பர் (உ.வ.);.

ம. அடயுக; க., பட. அடெ ; தெ. அடகு ; துட., கோத. அட்த ; து. அடெபுனி.

     [அள்ளுதல் = நெருங்குதல், சேர்தல், அள் → அண் → அடு → அடை. இனி, அண் → அண்டு → அடு → அடை என்றுமாம்.]

 அடை2 aḍaittal,    4 செ.கு.வி. (v.i.)

   1. ஊழால் முன்னமே நெறியிடப்படுதல் (விதிக்கப்படுதல்);; to be pre-ordained by destiny.

     ‘தனக்கடைத்த நாளறுதலின்’ (சீவக. 2831, நச். உரை);.

   2. வேலைக்கமர்த்தப்படுதல்; to be appointed, assigned.

     “கழினிக் கடைத்த மகளிர்” (திவா. 2 ; 140);.

   3. உறுப்பின் புலன் அல்லது செயல் கெடுதல்; to be obstructed, as the ear, throat.

வெடியோசை கேட்டதும் காது அடைத்துக் கொண்டது. அந்த மருந்து உண்டதிலிருந்து தொண்டை அடைக்கிறது (உ.வ.);.

   4. உரியதாதல்; to be appropriate.

     ‘அக்காலத்துக்கு அடைத்த காற்றுக்கள்’ (ஈடு, 10 ; 3, பிர.);.

   4 செ.குன்றாவி. (v.t.);

   1. கதவு சாத்துதல்; to shut, close the door.

     “பாடுநர்க் கடைத்த கதவின்” (புறநா. 151 ; 10);.

   2. வழிதடுத்தல்; to obstruct, block, as a passage.

     “வாழ்நாள் வழியடைக்குங்கல்” (குறள், 38);.

     ‘அடைத்தவன் காட்டைப் பார், மேய்த்தவன் மாட்டைப் பார்’ (பழ.);.

   3. துளையடைத்தல்; to fill up, a hole,

எலி வளையை அடைத்துவிட்டேன். (உ.வ.);.

   4. புகுத்துதல்; to put in, insert.

     “சுடுகிற் பெரிய கடலடைக்கும்” (தாயு. சொல்லரிய. 1);.

   5. பூட்டுதல், தாழிடுதல்; to lock, fasten.

     “அன்பிற்கு முண்டோ வடைக்குந் தாழ்” (குறள், 71);.

   6. சிறையில் வைத்தல்; to imprison.

     “செழிய னடைத்த சென்னி பாட” (கல்லா. 34 ; 7);.

   7. ஒளித்துவைத்தல்; to conceal, hide,

   8. ஒப்புவித்தல், ஒப்படைத்தல்; to entrust.

     “கணங்கடமக் கடைத்துப் புறப்பட்டான்” (திருவாலவா. 28 ;13);.

   9. குத்தகைக்கு விடுதல்; to lease, give in contract, farm out.

என் நிலத்தை வாரத்திற்கு அடைத்திருக்கிறேன் (உ.வ.);.

   10. கொடுத்தல்; to bestow.

     “உயிர்க்கின்ப மென்று மடைப் பானாம்” (சி. சி. சுபக்.1;54);.

   11. பிரித்தல்; to divide.

     ‘நாலு கூறாக அடைப்பதாகவும்’ (S.I.I. i, 64);.

ம. அடெக்க ; க. அடயிசு ; பர். அட்டொமர் ; பட. அட்டெக.

     [அடு → அடை.]

 அடை 1 aḍai, பெ. (n.)

   1. கோழி அடைகாத்தல்; incubation.

   2. பொருந்துகை; joining.

     “ஆடுகின்றனர் பண்ணடை வின்றியே பாடுகின்றனர்” (கம்பரா. அயோத். மந்தரை. 2);.

   3. சேர்ப்பிக்கை; delivering, conveying.

     “அவன்க ணடைசூழ்ந்தார் நின்னை” (கலித். 115;18);.

   4. அடைக்கலம்; resort, refuge.

   5. அடைக்கலப்பொருள் (ஈடு, 5.10;15);; deposit, that which has been accepted for safe keeping.

   6. சன்னமான அப்பவகை; thin cake, wafer.

     “நமக்கு மாவடை பழவனம் பிரியம்” (அழகர் கலம். 55);.

   7. தோசையைப்போல் தட்டிய மருந்து; a medicinal preparation pressed and shaped like a round and flat rice-cake (சா.அக.);.

   8. இலை; leaf.

     “புழற்கா லாம்ப லகலடை” (புறநா. 266;3);.

   9. வெற்றிலை; betel leaf.

     “நூறு காயடை கூடும்” (சி. சி. பர. உலகா. மறு. 7);.

   10. இலைக்கறி (பிங்.);; greens.

   11. முளை; sprout.

     “பூம்புற நல்லடை” (பெரும்பாண். 278);.

   12. சுமையடை (சும்மாடு);; load-pad or cushion for the head to bear a load.

   13. தாங்கி; prop, slight support (W.);.

   14. கனம் (பிங்.);; gravity, weight.

   15. கரை; bank, shore.

     ‘கடலுங் கடலடைந்த விடமுங் கடலெனப்படுதலின், அடைகடலென்பது அடையாகிய கடலென இருபெயர்ப் பண்புத்தொகை’ (தொல். சொல். எச்ச. 23, சேனா. உரை);.

   16. வழி (பிங்.);; way.

   17. அடைமொழி (விசேடணம்);; qualifying word or clause, attribute, adjunct.

     “ஈரடை முதலோ டாதலும்” (நன். 403);.

   18. பண்புச்சொல்; word denoting quality.

     “அடைசினை முதலென” (தொல். சொல். கிளவி. 26);.

   19. கலிப்பாவின் உறுப்பாகிய அடைநிலைக்கிளவி யென்னும் தனிச்சொல் (தொல். பொருள். செய். 131);; detached foot that is a constituent of kalippa.

   20. நிலவரி (வின்.);; land tax, king’s share of the produce of the land whether one-sixth or one-tenth or otherwise (W.);.

   21. விலை (பிங்.);; price.

   22. கருக்கு (கஷாயம்);; decoction.

   23. தேனடை; honey comb.

ம. அட ; க. அடெ, அடவு ; தெ. அட்டு ; து. அட்யெ.

     [அடு → அடை.]

 அடை2 aḍai, பெ. (n.)

   செருப்படை, செருப்படி (பச்.மு.);; a medicinal herb, Coldenia procumbens (சா.அக.);.

அடைக-தல்

அடைக-தல் aḍaigadal,    5 செ.கு.வி. (v.i.

   1. அடைதல் (சங்.அக.);; to reach.

   2. கிட்டுதல்; to get near.

   3. நெருங்குதல்; to crowd, get close together.

     “அஞ்சு பூத மடைசிய சவடனை” (திருப்பு. 63.8);.

   4. பொருந்துதல்; to be joined, placed.

     “உள்ளே சீலை யடைசின ….. சட்டை” (சீவக. 819, நச். உரை);.

   5. ஒதுங்குதல்; to deviate, recede, give place, make room.

அடைசி நில் (உ.வ.);.

–, 5 செ.குன்றாவி, (v.t.);

   1. நெருங்கச் சொரிதல் அல்லது எய்தல்; to shower upon.

     “அழுந்த வாளியொன்று பத்துநூறு வன்பொ டடைசினான்” (பாரத. பதினான். 30);.

   2. நெருக்குதல்; to press hard, exert pressure upon.

க. அடசு

     [அடைத்து → அடைச்சு → அடைசு.]

அடைகசாயம்

 அடைகசாயம் aḍaigacāyam, பெ. (n.)

அடைக்குடிநீர் பார்க்க;see adai-k-kudi-nir.

அடைகடல்

அடைகடல் aḍaigaḍal, பெ. (n.)

   கடற்கரை; sea coast.

     ‘அடைகட லென்பது அடையாகிய கடலென இருபெயர்ப் பண்புத்தொகை’ (தொல். சொல். எச்ச. 23, சேனா. உரை);.

அடைகட்டி

அடைகட்டி aḍaigaḍḍi, பெ. (n.)

   1. கலப்பையிலொட்டும் மண்; earth that sticks to the plough,

   2. வண்டல் படிந்த மண்கட்டி; a clod of silt, a lump of fine earth or clay (சா.அக.);.

அடைகட்டு-தல்

அடைகட்டு-தல் aḍaigaḍḍudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. நீர்ப்பெருக்கைத் தடுக்க அணைகட்டுதல்; to construct a dam.

     ‘அண்ட கடாகம் வெடித்து அடைகட்ட வேண்டும்படி’ (திவ். அமலனாதி. 2. வியா.);.

   2. வண்டி நகராதபடி சக்கரத்திற்குமுன் தடைவைத்தல்; to place a bar of wood or stone in front of a wheel of carriage to prevent it from moving.

   3. தேர் வண்டிகளின் சக்கரத்தைத் தூக்க அடியில் முட்டுக்கொடுத்தல்; to insert a piece of wood under a car or cart and thus lift the wheel out of a rut.

ம. அடயல்; க. அட்டசுட்டெ ; தெ. அட்ட கட்ட.

அடைகரை

அடைகரை aḍaigarai, பெ. (n.)

   கரைப்பக்கம்; shore.

     “உரவுத்திரை பொருத திணிமண லடைகரை” (குறுந். 175);.

அடைகலம்

 அடைகலம் aḍaigalam, பெ. (n.)

   சேமக்கலம், கோயில்களில் அடிக்கும் வட்ட மணி; gong used in temples.

அடைகல்

அடைகல் aḍaigal, பெ. (n.)

   1. பட்டடை; anvil.

     “சுட்ட வல்லிரும் படைகலைச் சுடு கலா ததுபோல்” (கம்பரா. சுந்தர. பாச. 58);.

   2. நிலைக்களக் கற்படை,

 stone base.

     “ஆமையாய் மேருத் தாங்கி யடைகலாய்க் கிடந்த போது” (சி. சி. பர. பாஞ்சரா. மறு. 11);.

ம. அடகல்லு ; க. அடெகல்லு ; தெ. டாகல்லு ; து. அட்டெ ; கோத. அர்கல்.

 அடைகல் aḍaigal, பெ. (n.)

   மதகடைக்குங் கல்; stone placed at the mouth of a sluice to stop the flow of water.

அடைகா-த்தல்

அடைகா-த்தல் aḍaikāttal,    4 செ.கு.வி. (v.i.)

   கோழி அவயங்காத்தல்; to incubate, as a hen.

அடைகாய்

அடைகாய் aḍaikāy, பெ. (n.)

   1. வெற்றிலை பாக்கு; betel and areca-nut.

   2. ஊறுகாய்; pickle (சா.அக.);.

   3. காயவைத்துப் பதப்படுத்திய காய்; dried and preserved fruit (சா.அக.);.

ம. அடுவந்து; க. அடுகாய்.

அடைகிட-த்தல்

அடைகிட-த்தல் aḍaigiḍattal,    4 செ.கு.வி. (v.i.)

   1. கோழி அடைகாத்தல்; to incubate, as a hen.

   2. தங்கியிருத்தல்; to abide, stay permanently.

     “முயலடை கிடக்குந் திங்கள்” (கூர்மபு. மேருவின். 16);.

அடைகியாழம்

 அடைகியாழம் aḍaigiyāḻm, பெ. (n.)

அடைக்கியாழம் பார்க்க;see agai-k-kiyalam.

அடைகில்லார்

அடைகில்லார் aṭaikillār, பெ. (n.)

   பெறாதவர்; non-receivers.

     “ஒப்பு அடைகில்லார் எல்லாம் உலந்தனர்” (சுற் 1:16);.

     [அடை+அடைகு]

அடைகு-தல்

அடைகு-தல் aḍaigudal,    9 செ.கு.வி. (v.i.)

   சேர்தல்; to reach.

–, 5 செ.குன்றாவி. (v.t.);

   பெறுதல்; to obtain.

     “புரையில் வீட்டின்ப மடைகு வான்” (வைராக். 17.);.

     [அடை → அடைகு. ‘கு’ சொல் விரிவீற்றுச் சாரியை.]

அடைகுடி

அடைகுடி aḍaiguḍi, பெ. (n.)

   1. சார்ந்த குடும்பம்; dependent family.

     ‘இவன் தானும் இவன் அடைகுடி……… ஆனைச்சாத்தனும்’ (S. I.I. ii, 444);.

   2. பயிரிடுங்குடி; cultivating tenant (S.I.I. ii, 250);.

ம. அடகுடி ; க. அட்டொக்கல்.

அடைகுத்து-தல்

அடைகுத்து-தல் aḍaiguddudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   அடைமானம் வைத்தல்; to mortgage.

     ‘குடியொடுகுடி பெறும் விலைக்கு அடை குத்துக என்று’ (S.I.I. v, 305);.

அடைகுறடு

அடைகுறடு aḍaiguṟaḍu, பெ. (n.)

   1. கம்மியர் பட்டடை (பிங்.);; anvil.

   2. பற்றுக்குறடு; tongs (W.);.

ம. அடகொரடு

 அடைகுறடு aṭaikuṟaṭu, பெ. (n.)

   பட்டடை; anivil.

     “பட்டடை அடை குறடே”. (நிக.தி.7: 214);.

     [அடை+குறடு]

அடைகுளம்

 அடைகுளம் aḍaiguḷam, பெ. (n.)

   போக்கில்லாத குளம் (யாழ்ப்.);; tank with no outlet (J.);.

அடைகுளிர்

அடைகுளிர் aṭaikuḷir, பெ. (n.)

   பெரும் பனி; severe cold.

     “ஆரப்பொதும்பனி அடைகுளிர் சாரல்,” (கல். 84:29.);.

     [அடை+குளிர்]

அடைகொடாதான்

அடைகொடாதான் aṭaikoṭātāṉ, பெ. (n.)

   நிறைத்து வையாதவன்; one who has not stored.

     “அருளினை நெஞ்சத்து அடை கொடாதானும்” (திரி.89.);,

     [அடை+கொடா+ஆன்]

அடைகொடு-த்தல்

அடைகொடு-த்தல் aḍaigoḍuttal,    4 செ.கு.வி. (v.i.)

   நிலவிளைவில் அரசன் பங்கைச் செலுத்துதல்; to pay the king’s share of the produce (W.);.

   2. நிறைத்து வைத்தல்; to fill up.

   3. அடைமொழி முன்வைத்தல்; to prefix an adjunct or epithet.

அடைகொளி

அடைகொளி aḍaigoḷi, பெ. (n.)

   அடைமொழியென்னும் சிறப்பிக்கும் சொல்லைக் கொண்டது (விசேடியம்); (நன். 401. சடகோ. உரை);; that which is qualified.

     [அடை + கொள் + இ. ‘இ’ உடைமை குறித்த ஈறு.]

அடைகொள்(ளு)-தல்

அடைகொள்(ளு)-தல் aḍaigoḷḷudal,    10 செ. குன்றாவி. (v.t.)

   1. பாதுகாப்பிற்காக ஒப்படைக்கப்பட்ட பொருளை ஏற்றுக்கொள்ளுதல்; to accept a deposit for safe keeping.

     ‘அடைகொண்டு பாழ்போக்குவா னொருவ னன்றே’ (ஈடு, 5.10 ; 5);.

   2. நிலத்தை ஒற்றியாகப் பெறுதல்; to take a land on mortgage.

     ‘இலட்சுமண நம்பி அடைகொண்ட நிலமும்’ (S. I.I. iv. 81);.

அடைகோட்டை

 அடைகோட்டை aḍaiāḍḍai, பெ. (n.)

   முற்றுகையிடப்பட்ட கோட்டை; a besieged fort.

அடைகோன்

 அடைகோன் aḍaiāṉ, பெ. (n.)

   அடைக்குந் திருகு; stop-cock (சா.அக.);.

அடைகோழி

 அடைகோழி aḍaiāḻi, பெ. (n.)

அடைக்கோழி பார்க்க;see adai-k-köli.

அடைக்க

 அடைக்க aḍaikka, கு.வி.எ. (adv.)

   முழுவதும்; entirely.

வீடடைக்க நோயாயிருக்கிறது (உ.வ.);.

ம. அடக்கம் ; க., பட. அடெ.

     [அடை → அடைக்க.]

அடைக்கண்

 அடைக்கண் aḍaikkaṇ, பெ. (n.)

   கண்ணிமைகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்ளும் நோய் (வைத். சங்.);; a disease that makes eyelids stick to each other, ankyloblepharon.

     [அடை + கண்.]

அடைக்கப்பட்டார்

அடைக்கப்பட்டார் aḍaikkappaḍḍār, பெ. (n.)

   கள்ளர் குலப் பட்டப்பெயர்களுளொன்று (கள்ளர் சரித். பக். 145);; a title of Kallars.

அடைக்கப்புடைக்க

 அடைக்கப்புடைக்க aḍaikkappuḍaikka, கு.வி.எ. (adv.)

   பரபரப்பாக, சுருக்காக, விரைவாக; hurriedly, quickly.

அடைக்கல அத்தம்

அடைக்கல அத்தம் aṭaikkalaattam, பெ. (n.)

சிற்பங்களில் காணப்பெறும் திருக்கரத்தின் வகை.5:55.25.

 an hand pose in sculpture.

     [அடைக்கலம்+அத்தம்]

அடைக்கலக்காதை

அடைக்கலக்காதை aṭaikkalakkātai, பெ. (n.)

   சிலப்பதிகாரக்காதையின் உட்பிரிவுகளுள் ஒன்று; one of the cantos in clappathigaram.

     “அடைக்கலக் காதையும் கொனலக்களக் காதையும்.” (சில:ப:76);.

     [அடைக்கலம்+காதை]

அடைக்கலக்குருவி

 அடைக்கலக்குருவி aḍaikkalakkuruvi, பெ. (n.)

அடைக்கலங்குருவி பார்க்க;see agaikkalaikuruvi.

     [அடைக்கலம் + குருவி.]

அடைக்கலக்கை

 அடைக்கலக்கை aṭaikkalakkai, பெ. (n.)

   இரு கைகளையும் நெஞ்சுற நோக்கி நெகிழ்ந்து நிற்பது; state of worshiping by folding palms towards bosom.

     [அடைக்கலம்+கை]

அடைக்கலங்கா-த்தல்

அடைக்கலங்கா-த்தல் aḍaikkalaṅgāttal,    4 செ. கு.வி. (v.i.)

   ஒப்படைக்கப்பட்ட பொருளைப் பாதுகாத்தல்; to protect one who seeks refuge, to take care of a deposit or trust.

     [அடைக்கலம் + காத்தல்.]

அடைக்கலங்காத்தான்

 அடைக்கலங்காத்தான் aḍaikkalaṅgāttāṉ, பெ. (n.)

அடைக்கலங்குருவி பார்க்க;see adaikkalari-kuruvi.

ம. அடக்காவு

     [அடைக்கலம் + காத்தான்.]

அடைக்கலங்குருவி

 அடைக்கலங்குருவி aḍaikkalaṅguruvi, பெ. (n.)

   வீட்டுக் கூரைகளிற் கூடுகட்டி வாழும் குருவி; house sparrow, Passer domesticus.

     “அடைக்கலங் குருவிக்கு ஆயிரத்தெட்டுக் கண்டம்” (பழ.);.

     [P]

ம. அடுக்கலக்குரிகில்

     [வீடுகளில் அடைந்து வாழ்வதால், அடைக்கலங்குருவி யெனப்பட்டது.]

அடைக்கலஞ்செய்-தல்

அடைக்கலஞ்செய்-தல் aḍaikkalañjeytal,    1 செ. குன்றாவி. (v.t.)

   சவத்தைப் புதைத்தல் (மதி. களஞ். ii, 145);; to bury, intern, entomb.

ம. அடக்கு

     [அடைக்கலம் + செய்.]

அடைக்கலத்தளம்

 அடைக்கலத்தளம் aḍaikkalattaḷam, பெ. (n.)

   புகலிடம் (இராட்.);; asylum, place of refuge (R.);.

     [அடைக்கலம் + தளம்.]

அடைக்கலத்தான்

 அடைக்கலத்தான் aḍaikkalattāṉ, பெ. (n.)

அடைக்கலங்குருவி பார்க்க;see adaikkalańkui trvi.

     [அடைக்கலம் + அத்து (சாரியை); + ஆன்.]

அடைக்கலப்பத்து

அடைக்கலப்பத்து aṭaikkalappattu, பெ. (n.)

   திருவாசகத்தில் உள்ள ஒரு பதிகம்; a chapter in Thiruvacagam.

     “அங்கணன்தனை நினைத்துஅங்கு அடைக்கலப்பத்துமுன்னாத் தூங்க வாசகங்கள் ஒதத் தொடங்கினார் வடக்கு நோக்கி”. (திதி 28:24);.

     [அடைக்கலம்+ பத்து]

அடைக்கலப்பொருள்

 அடைக்கலப்பொருள் aḍaikkalapporuḷ, பெ. (n.)

   பாதுகாப்பிற்காக ஒப்படைக்கப்பட்ட பொருள்; deposit, which is entrusted for safe keeping.

     [அடைக்கலம் + பொருள்.]

அடைக்கலமாதா

 அடைக்கலமாதா aḍaikkalamātā, பெ. (n.)

   இயேசுவின் தாய், அடைக்கலமளிக்கும் தேவஅன்னை (உரோ. கத்.);; The Lady of Refuge (R.C.);.

     [அடைக்கலம் + மாதா.]

அடைக்கலம்

அடைக்கலம் aḍaikkalam, பெ. (n.)

   1. புகலிடம்; asylum, refuge, shelter, person who gives shelter.

அவன் எல்லார்க்கும் அடைக்கலம் (உ.வ.);.

     ‘அடைக்கலம் என்று வந்தவன் படைக்கலம் எடுக்கிறான்’ (பழ.);.

   2. பாதுகாப்பிற்காக ஒப்படைக்கப்பட்ட அடைக்கலப் பொருள்; deposit, which is entrusted for safe keeping.

ம. அடைக்கலம்

அடைக்கலம்புகு-தல்

அடைக்கலம்புகு-தல் aḍaiggalambugudal,    2 செ.கு.வி. (v.i.)

   புகலடைதல்; to fly to one for shelter, take refuge.

அடைக்கலாங்குருவி

 அடைக்கலாங்குருவி aḍaikkalāṅguruvi, பெ. (n.)

அடைக்கலங்குருவி பார்க்க;see adaikkalari-kuruvi.

     [அடைக்கலம் + ஆம் + குருவி.]

அடைக்கல்

அடைக்கல் aṭaikkal, பெ. (n.)

   தூர்த்தல்; அடைத்தல்; to stop curb,

     “குரங்குகள் மலையைதுக்கக் களித்துத் தாம் புரண்டிட்டு ஒடித்தரங்க நீர் அடைக்கல் உற்ற கலம் இலா அணிலும் போலேன்.” (தொண்:27);.

     [அடை-அடைக்கல் (அடைத்தல்);]

அடைக்காயமுது

அடைக்காயமுது aṭaikkāyamutu, பெ. (n.)

   பாக்கு; betel nut/areca-nut.

     “நெல்லு உமியும் அடைக்காயமுதுபாக்கு பத்துக்கும்”. (தெகோ. சா.3:2);.

     [அடைகாய்+அமுது]

அடைக்காய்

அடைக்காய் aḍaikkāy, பெ. (n.)

   1. பாக்கு; areca nut.

     “வெள்ளிலை யடைக்காய் விரும்பி” (தாயு. சச்சி. 11);.

   2. தாம்பூலம்; pan supari.

     “விஞ்சிய வடைக்கா யுண்டி வழியிடை வெறுப்ப தாக்கி” (அருணாசலபு. திருமலைவலம். 26);.

ம. அடய்க்க; க., பட., குட. அடகெ. அடிகெ ; துட., கோத. அட்கெ ; து. அட்ட கட்டெரி.

     [அடை+காய். அடை=இலை, வெற்றிலை.]

அடைக்கியாழம்

 அடைக்கியாழம் aḍaikkiyāḻm, பெ. (n.)

அடைக்குடிநீர் பார்க்க;see agai-k-kudi-nir.

     [அடை + Skt. kasiya → த. கியாழம்.]

அடைக்குஞ்சவ்வு

 அடைக்குஞ்சவ்வு aḍaikkuñjavvu, பெ. (n.)

மூடுசவ்வு

 valve (சா.அக.);.

     [அடைக்கும் + சவ்வு.]

அடைக்குடிநீர்

அடைக்குடிநீர் aḍaikkuḍinīr, பெ. (n.)

   மரம், செடி, கொடி, புல் என்னும் நால்வகை நிலைத் திணையின் வேர் (கிழங்கு);, பட்டை, கட்டை, பிசின், இலை, பூ, கனி, வித்து என்னும் எண் வகை யுறுப்புகளையும் காரசாரச் சரக்குகளையும் சேர்த்து ஒன்றாக இடித்து, ஒரு பானையிலிட்டுப் பலநாட்குதவுமாறு சுண்டக் காய்ச்சி வடித்தெடுத்த கருக்கு (சங்.அக.);; a strong decoction of the roots, barks, woods, gums, leaves, flowers, fruits and seeds of several herbs, shrubs, creepers and trees, mixed up with some spices, boiled down to a certain degree and proportion with a view to preserve it for many days (சா.அக.);.

     “நான்காகச் செப்புவன்மை வேராதிகளை வெவ்வே றிடித்துச் சீவநீயத் தூறச் செய்தாக்கற் குடிநீ ரொப்பிலடை” (தைலவ. தைல. பாயிர, 29);.

     [அடை + குடி + நீர்.]

அடைக்குத்தகை

 அடைக்குத்தகை aḍaigguttagai, பெ. (n.)

   குத்தகைக்காரன் தவசமாகக் கொடுக்கும் அரசிறை; revenue in the form of grain from land leased out by Government.

ம. அடக்காணம்

     [அடை + குத்தகை.]

அடைக்குழி

 அடைக்குழி aṭaikkuḻi, பெ. (n.)

பல்லாங் குழியில் நிரப்ப இயலாத வெற்றுக்குழி (நெ.வ.);.empty pitin play board.

     [அடை+குழி]

அடைக்கெத்து

 அடைக்கெத்து aḍaikkettu, பெ. (n.)

   அடைக்கோழி சிறப்பாக இடுங்குரல்; peculiar clucking of a brooding hen.

     [அடை + கெத்து.]

     ‘அடைக்கத்து’ எனச் சில அகரமுதலிகள் குறிப்பது தவறாகும்.

அடைக்கோழி

 அடைக்கோழி aḍaikāḻi, பெ. (n.)

   அடைகாக்குங் கோழி; sitting hen.

ம. அடகோழி

     [அடை + கோழி.]

அடைசல்

 அடைசல் aḍaisal, பெ. (n.)

   பொருள் நெருக்கம்; crowded condition, density.

     [அடைத்தல் → அடைச்சல் → அடைசல்.]

அடைசாரல்

 அடைசாரல் aḍaicāral, பெ. (n.)

   பருவகாலத்து அடைமழை; heavy monsoon rains.

     ‘ஆனி முற்சாரல், ஆடி அடைசாரல்’ (பழ.);.

அடைசிலை

அடைசிலை aḍaisilai, பெ. (n.)

   பாளச்சிலை; cloth steeped in a medicinal preparation and put in the mouth for sore throat (W.);.

   1. காரச்சீலை; a corrosive plaster used in the treatment of abnormal or morbid growth of flesh or sores.

   2. மருந்துச்சீலை; plaster.

   3. புண்ணின் வாயில் மருந்திட்டு அடைக்கப்பட்ட சீலை; cloth soaked in medicine and plugged as is done to the mouth of a sinussore (சா.அக.);.

அடைசுபலகை

அடைசுபலகை aḍaisubalagai, பெ. (n.)

   1. வாயிற் கதவாகச் செருகுபலகை; boards inserted into grooves to form a door (W.);.

   2. கதவு நிலைகளின்மேல் வைக்குஞ் சூரிப் பலகை; plank placed above the lintel of a door frame (W.);.

க. அடவு, அட்டவலகெ.

அடைசுபொட்டணம்

 அடைசுபொட்டணம் aḍaisuboḍḍaṇam, பெ. (n.)

அடைசீலை பார்க்க;see adai-$ilai.

அடைசுமருந்து

 அடைசுமருந்து aḍaisumarundu, பெ. (n.)

   வாய்ப் புண்ணிற்காகக் கொப்புளிக்கும் மருந்து நீர்; any liquid preparation used for washing the mouth and the throat, gargle (சா.அக.);.

அடைசுவலை

 அடைசுவலை aḍaisuvalai, பெ. (n.)

   வலை வகை (இ.வ.);; a kind of net (Loc.);.

அடைசொல்

அடைசொல் aḍaisol, பெ. (n.)

   1. (இலக்.); அடைமொழி;   2. (இலக்.); ஈறு;     ‘கள்ளென்பது பன்மை அடை சொல்’ (தக்க. 463. உரை);.

அடைச்சல்

அடைச்சல் aṭaiccal, பெ. (n.)

   செருகுதல்; insert

     “அடைச்சல் சருகுதல் ஆம் செருகுதற்கே” (நிக.தி.9:14);.

     [அடை+அடைத்தல்]

அடைச்சீட்டு

 அடைச்சீட்டு aḍaiccīḍḍu, பெ. (n.)

   வரிப் பற்று முறி (யாழ்ப்..);; receipt for payment of tithe or tax (J.);.

     [அடை + சீட்டு.]

அடைச்சு-தல்

அடைச்சு-தல் aḍaiccudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. அடைவித்தல், சேரச்செய்தல்; to put, place.

     “அடைச்சிய கோதை பரிந்து” (கலித். 51;2-3);.

   2. செருகுதல் (சூடா.);; to insert, stick in, as flower in the hair.

   3. உடுத்துக்கொள்ளுதல்; to clothe or wrap oneself in.

     “நெடுந் தொடர்க் குவளை வடிம்புற வடைச்சி” (மதுரைக். 588);.

   4. பொத்துதல்; to shut, to close.

     “கையாற் செவிமுத லடைச்சிச் சொன்னாள்” (சீவக. 1048);.

க. அடசுவிகெ

     [அடைத்து → அடைச்சு.]

அடைதடையம்

 அடைதடையம் aḍaidaḍaiyam, பெ. (n.)

   பொய்யாய் உரிமைப்படுத்திய பொருள் (இ.வ.);; foisted property (Loc.);.

     [அடை + தடையம்.]

அடைதட்டி

 அடைதட்டி aṭaitaṭṭi, பெ. (n.)

   அடைத்தட்டி பார்க்க; see adarttaffi

     [அடை+ தட்டி]

அடைதரும் தோறும்

அடைதரும் தோறும் aṭaitarumtōṟum, வி.எ. (adv.)

   வரும் பொழுது எல்லாம்; when ever he comes.

     “கிளையொடு மகிழும் குன்றநாடன் அடைதரும் தோறும் அருமை தனக்கு உரைப்ப” (நற். 165:5-6.);.

     [அடை+தரும்+தோறும்]

அடைதூண்

அடைதூண் aḍaitūṇ, பெ. (n.)

   கடைதறி; pillar to which the churning rod is tied.

     “மத்து மந்தரம் வாசுகி கடைகயிறடைதூண் மெத்து சந்திரன்” (கம்பரா. பால. அகலிகை. மிகைப், 3-19);.

     [அடை + தூண்.]

அடைத்தகுரல்

 அடைத்தகுரல் aḍaittagural, பெ. (n.)

   கம்மிய குரல்; hoarse, husky voice (W.);.

அடைத்தட்டி

 அடைத்தட்டி aṭaittaṭṭi, பெ. (n.)

கட்டை வண்டியில் ஏற்றப்படும் எரு, மண் போன்ற பொருள்கள் முன் பகுதியில் சிந்தாதவாறு பொருத்தப்படும் மூங்கில் பட்டைகளினால் (பிளாச்சு); ஆன தட்டி, படல் முதலியன (இ.வ.);.

 side screw used to support in a loaded cart.

     [அடை+தட்டி]

     [P]

அடைத்தது

அடைத்தது aḍaiddadu, பெ. (n.)

   இட்ட கட்டளை; order or command given.

     “ஈதுனக் கடைத்த தென்ன” (கந்தபு. உற்பத். மேருப்;9);.

அடைத்தான்

அடைத்தான் aṭaittāṉ, பெ. (n.)

   தாங்கி நின்றான்; one who buttressed.

     ” அடைத் தானாம்சூலம் மழு” (நாவு 6:15:5);.

     [அடை+த்+த்+ஆன்]

அடைத்திட்டவன்

அடைத்திட்டவன் aṭaittiṭṭavaṉ, வி.எ. (adv.)

   அடைந்தவன்; one who reached

கடலை அடைத்திட்டவன்காண்மின்” (மங்.10:6-7.);.

     [அடைத்து+இட்டவன்]

அடைத்து

 அடைத்து aḍaittu, கு.வி.எ. (adv.)

   முழுவதும்; entirely, wholly.

வீடடைத்து நூல்கள் (உ.வ.);.

அடைத்துப்பெய்-தல்

அடைத்துப்பெய்-தல் aḍaittuppeytal,    1. செ.கு.வி. (v.i.)

   வானம் முகில் (மேகம்); மூடி, விடாது பெய்தல்; to rain incessantly with the whole sky overcast.

     [அடைத்து + பெய்.]

அடைத்தேற்று-தல்

அடைத்தேற்று-தல் aḍaiddēṟṟudal,    5 செ. குன்றாவி, (v.t.)

   வருந்திக் கரும முடித்தல் (ஈடு. 6.8;1);; to accomplish with difficulty, as lifting water to an upper channel.

     [அடைத்து + ஏற்று.]

அடைநிலப்பீர்க்கு

 அடைநிலப்பீர்க்கு aḍainilappīrkku, பெ. (n.)

   அதளை; species of bitter luffa.

அடைநிலை

அடைநிலை aḍainilai, பெ. (n.)

   கலிப்பாவினுறுப்பாகிய தனிச்சொல் (தொல். பொருள். செய். 131);; detached foot that is a constituent of kali verse.

அடைநீர்

அடைநீர் aṭainīr, பெ. (n.)

   சேர்ந்த தண்ணீர்; stored water.

     “குடை அடை நீரின் மடையினள் எடுத்த” (அக.275:2.);.

     [அடை+நீர்]

அடைநேர்-தல்

அடைநேர்-தல் aḍainērtal,    2 செ.குன்றாவி. (v.t)

   மகட்கொடைக்கு உடம்படுதல்; to agree to give one’s daughter, in marriage.

     ‘தலைவர்க்கே நம்மை அடைநேர்ந்தில ராயினும்’ (குறிஞ்சிப். 23, நச். உரை);.

அடைந்தார்

அடைந்தார் aḍaindār, பெ. (n.)

   1. அடைந்தவர்; those who have reached or arrived.

   2. அடைக்கலம் புகுந்தவர்; refugees.

   3. நண்பர்; friends.

   4. இறந்துபோனவர்; those who have passed away, the dead.

அடைந்தெழுந்திடுதல்

 அடைந்தெழுந்திடுதல் aḍaindeḻundiḍudal, பெ. (n.)

   கண்ணில் நீர் வடிந்து விழி கடுத்து, இமைகள் வீங்கிக் கண் சிவந்து, எரிச்சலுண்டாகிப் பீளைகட்டுவதும்; பூச்சியூர்வதுபோலரிப்புண்டாக்கி, மூக்கில் நீர்வடிவதுடன் அடுத்தடுத்து வலியையும் உண்டாக்குவதுமான ஒரு நோய்; a kind of ophthalmia characterised by itching sensation, water running through the nose and intermittent pain in the eyes (சா.அக.);.

அடைந்தோர்

அடைந்தோர் aḍaindōr, பெ. (n.)

   1. அடைக்கலம் புகுந்தவர்; those who have taken refuge.

     “அடைந்தோர் தம்மை யேமுற வினிதி னோம்பி” (கம்பரா. யுத்த. வீடண. 111);.

     ‘அடைந்தோரை ஆதரி’ (பழ.);.

   2. சுற்றத்தார் (சது.);; relatives.

அடைபடு-தல்

அடைபடு-தல் aḍaibaḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   1. அடைக்கப்படுதல்; to be shut or enclosed.

     ‘அடைபட்டுக் கிடக்கிறான் செட்டி, அவனை அழைத்துவா, பணம் பாக்கி என்கிறான் பட்டி’ (பழ.);.

   2. முடிதல்; to be completed.

   கடன் தீர்தல்; to be paid up, as debt.

     [அடை + படு.]

அடைபலகை

 அடைபலகை aṭaipalakai, பெ. (n.)

   கட்டை வண்டியில் மேல்பாகத்தில் நெடுக்கு வாட்டத்தில் பொருத்தப்படும் இரு நீளமான பலகைகள்; two planks fixed in a cart.

      [அடை+பலகை]

     [P]

அடைபுடை

அடைபுடை aḍaibuḍai, பெ. (n.)

   1. அக்கம் பக்கம்; surroundings.

   2. இராப்பகல்; day and night.

     “அடைபுடை தழுவி அண்டநின் றதிரும்” (திவ். பெரியதி. 4.10 ; 3);.

அடைபொருள்

அடைபொருள் aḍaiboruḷ, பெ. (n.)

   தேட்டுப் பொருள்; earnings.

     ‘அடைபொருள் கருதுவி ராயின்’ (இறை. 28, உரை, பக். 169);.

அடைப்பக்காரன்

அடைப்பக்காரன் aḍaippakkāraṉ, பெ. (n.)

   1. வெற்றிலைப் பை வைத்துக்கொண்டு அரசர்க்கும் பெருமக்கட்கும் வெற்றிலை மடித்துக் கொடுக்கும் வேலைக்காரன்; servant who carries the betel pouch, and gives folded betel leaves to kings and nobles for chewing.

   2. முடிதிருத்துபவர்; barber.

ம. அடப்பக்காரன் ; க. அடபதார ; தெ. அடபதாண்டு.

     [அடை + பை + காரன் (உடையானைக் குறிக்கும் ஈறு); – அடைப்பைக்காரன் → அடைப்பக்காரன். அடை = வெற்றிலை.]

அடைப்பைக்காரன் பார்க்க;see agai-p-paik-karan.

அடைப்படி

அடைப்படி aḍaippaḍi, பெ. (n.)

   அடைமானம் (S.I.I. iii, 307);; pledge.

     [அடை + படி.]

அடைப்பது

அடைப்பது aṭaippatu, பெ. (n.)

தடுப்பது:

 stopping.

     “நரைத் தலை முதியோள் இடித்து அடு கூலி கொண்டு அடைப்பது போல உடைப்பது நோக்கி” (கல் 49:24-5);

     [அடை-அடைப்பது]

அடைப்பன்

அடைப்பன் aḍaippaṉ, பெ. (n.)

   1. வரவெக்கை நோய் (G.Tj. D. i, 11);; aggravated constipation, a cattle disease.

   2. மாடுகளுக்குத் தொண்டையில் வரும் ஒரு வெக்கைநோய்; inflammation of the throat or parts adjacent to it, a common disease among cattle, Anthrax (சா.அக.);.

ம. அடப்பாம்குரு

 அடைப்பன் aḍaippaṉ, பெ. (n.)

   கடுக்காய்; Indian gall-nut, Terminalia chebula (சா.அக.);.

அடைப்பன்கட்டு

அடைப்பன்கட்டு aḍaippaṉkaḍḍu, பெ. (n.)

   1. ஆடுமாடுகளுக்குண்டாகும் ஒருவகை வெக்கை நோய்; a splenic fever, in sheep and cattle caused by minute organisms introduced into the blood, Malignant anthrax.

   2. ஆடு மாடுகளின் அடப்பன்கட்டு நோயினால் மாந்தருக்கு முண்டாகும் தொண்டையடைப்பு; a malignant pustule caused in men by infection from the animals so affected, contagious anthrax (சா.அக.);.

அடைப்பம்

அடைப்பம் aḍaippam, பெ. (n.)

   1. வெற்றிலைப் பை; betel pouch.

   2. மஞ்சிகன் (நாவிதன்); கருவிப் பை; barber’s razor case.

   3. பண்டங்கள் பெய்யும் பை (சங்.அக.);; bag for keeping miscellaneous things in.

   4. அடைப்பக்காரன் (I.M. P. N.A. 195);; servant serving betel.

ம. அடப்பம் ; க., து. அடப்ப; தெ. அடப்பமு; பிரா. கதப்ப.

     [அடைப்பை → அடைப்பம்.]

 அடைப்பம் aḍaippam, பெ. (n.)

   அடைக்கும் பொருள்; a stopper or a plug (சா.அக.);.

     [அடைப்பு + அம்.]

அடைப்பாசாரம்

 அடைப்பாசாரம் aḍaippācāram, பெ. (n.)

   காற்றோட்டமின்மை (சேலம்);; want of ventilation (Sm.);.

இந்த வீடு அடைப்பாசாரமாயிருக்கிறது (உ.வ.);.

     [அடைப்பு (ஒருகா. ஆசாரம் (அரசர்வாழ் கூடம்);.]

அடைப்பான்

அடைப்பான் aḍaippāṉ, பெ. (n.)

   1. கால்நடை நோய்வகை (கால், வி.15);; anthrax.

   2. அடைக்கும் மூடி; plug, stopper, cork.

அடைப்பான்வந்தை

அடைப்பான்வந்தை aḍaippāṉvandai, பெ. (n.)

   அடைப்பான் நோயை உண்டாக்கும் பூச்சி (கால். வி. 25);; anthrax parasite.

அடைப்பி

அடைப்பி aḍaippi, பெ.(n.)

   1எண்ணெய், அரிசி முதலியவை வைத்துக்கொள்ள உதவும் பெரிய அடைப்புச் சிமிழ்(டின்);; a large container made of tin,

   2. மெல்லிய மாழை முதலிய வற்றால் பலவகை அளவில் செய்யப்படும் மூடிபோட்ட கொள்கலம்; container (made of metal like tin or plastic); tin (of various sizes);.

   3. சிமிழ்; small box for keeping jewels, scent, etc, casket.

     [அடைப்பு-அடைப்பி]

அடைப்பிரதமன்

 அடைப்பிரதமன் aḍaippiradamaṉ, பெ. (n.)

   கன்னலமுது (பாயச); வகை; a kind of porridge.

ம. அடப்பிரதமன்

     [அடை + ம. பிரதமன்.]

அடைப்பு

அடைப்பு aḍaippu, பெ. (n.)

   1. மூடுகை; shutting, closing, stopping.

     ‘அடைப்பைப் பிடுங்கினால் பாம்பு கடிக்கும்’ (பழ.);.

   2. வேலி (பிங்.);; fence, enclosure.

   3. தடை; obstruction.

இது காற்றடைப்பான இடம் (உ.வ.);.

   4. அடைக்கும் மூடி; plug, stopper, cork.

   5. படற்கதவு; door or small gate of braided palm leaves or thorns but not of boards.

   6. வாரச் சாகுபடி, குத்தகை; lease.

   7. நோய் வகை; a disease.

     “சிகைபிடித் தீர்த்தோர் அடைப்புநீர்க் கடுப்புக்கல் லெரிப்பர்” (கடம்ப, பு. இலீலா. 146);.

   8. அடைப்பக்காரன்; servant serving betel (M.E.R. 203 of 1919);.

ம. அடப்பு ; க., து. அட்ட ; தெ. அட்டமு ; கோத. அட்வ் ; துட. அட்ப்; குட. அட ; மா. அடரெ; பர். அட்டொம்; பிரா. அர், அரி.

     [அடை → அடைப்பு. ‘பு’ தொ.பெ. ஈறு.]

 அடைப்பு aṭaippu, பெ. (n.)

   விலங்குகளின் பக்கவயிறு, விலாப்புறம்; the rib-side of animals.

     “என்னடா மேய்த்தாய் மாடு அடைப்பு நிரம்பவில்லை”. (வ.சொ.அக.);.

     [அடை-அடைப்பு]

அடைப்புக்கருக்கு

அடைப்புக்கருக்கு aḍaippukkarukku, பெ. (n.)

   கட்டடங்களின் வெற்றிடங்களை நிரப்பும் (அடைக்கும்); ஓவிய வேலைப்பாடு; loral or other ornamental designs sculptured on walls and pillars, architecturally intended to fill up empty spaces in a building. ‘கட்டடங்களின் குறிப்பிட்ட ஒருசில வெற்றிடமான பகுதிகளை இலை, கொடி, பூக்கள் செறிந்த கருக்கமைப்பால் நிரப்பி, அணிபெறச்செய்தல் ஒரு விதக் கலை வழக்காகும். இதற்கு அடைப்புக் கருக்கு என்று பெயர்’ (சி. செ. பக். 116, பத்தி 2);.

     [அடை → அடைப்பு. ‘பு’ தொ. பெ. ஈறு. கரு → கருக்கு = பொறித்த ஒவியம்.]

அடைப்புக்குச்சு

அடைப்புக்குச்சு aḍaippukkuccu, பெ. (n.)

   1. தக்கை; cork (சா.அக.);.

   2. குப்பி; மூடி.

 stopper (சா.அக.);.

     [அடைப்பு + குச்சு.]

அடைப்புக்குழல்

 அடைப்புக்குழல் aḍaippukkuḻl, பெ. (n.)

   தண்ணீர்க்குழாய்த் திருப்பு மூடி; a turning cock used for stopping or regulating the flow of water, liquids or gases in a pipe, stop-cock (சா. அக.);.

     [அடைப்பு + குழல்.]

அடைப்புண்(ணு)-தல்

அடைப்புண்(ணு)-தல் aḍaippuṇṇudal,    ஒன்றனுள் அடங்குதல்; to be included.

     ‘கழிந்தவற்றிலும் வருமவற்றிலும் அடைப்புண்ணுமிறே வர்த்தமானம்’ (ஈடு. 1.1 ; 4);.

     [அடைப்பு + உண்.]

அடைப்புமுதலிகள்

அடைப்புமுதலிகள் aḍaippumudaligaḷ, பெ. (n.)

   அவையின் கருமத் தலைவர் (M.E.R. 191 of 1925);; executive officers of an assembly.

அடைப்பை

அடைப்பை aḍaippai, பெ. (n.)

   1. வெற்றிலைப் பை; betel pouch.

     “செம்பொ னடைப்பையுட் பாகு செல்ல” (சீவக. 1303);.

   2. பாக்கு, வெற்றிலை, அட்டிகம் (சாதிக்காய்);, ஏலம் முதலிய நறும்பொருள்கள் வைத்திருக்கும் பை (பெரியபு. தடுத். 187, உரை);; bag containing spices, such as areca-nut, betel, nutmeg, and cardamom.

ம. அடப்பன் ; க., து. அடப; தெ. அடபமு.

     [அடை + பை.]

அடைப்பைகட்டு-தல்

அடைப்பைகட்டு-தல் aḍaippaigaḍḍudal,    5 செ.கு.வி. (v.i.)

   வெற்றிலை மடித்துக் கொடுத்தல்; to prepare and serve rolls of betel leaves with spices for chewing.

     ‘பிரதாபருத்திரனிடத்திற் போய் அவன் அடைப்பை கட்டிவரக் கம்பர் பாடிய வெண்பா’ (பெருந்தொ. 1203);.

     [அடை + பை + கட்டு.]

அடைப்பைக்காரன்

 அடைப்பைக்காரன் aḍaippaikkāraṉ, பெ. (n.)

   வெற்றிலை மடித்துக் கொடுக்கும் வேலைக்காரன்; servant who serves betel leaves rolled up with the required spices.

ம. அடப்பக்காரன்

     [அடை + பை + காரன் (உடையவனைக் குறிக்கும் ஈறு);.]

அடைப்பையான்

அடைப்பையான் aḍaippaiyāṉ, பெ. (n.)

அடைப்பைக்காரன் பார்க்க;see adappai-kkaran.

     ‘அடைப்பையான் கொள்ளச் சிறு கோல் கொடுத்தான்’ (பெருந்தொ. 863);.

     [அடை + பை + ஆன்.]

அடைமண்

அடைமண் aḍaimaṇ, பெ. (n.)

   1. கலப்பையிலொட்டும் மண் (யாழ். அக.);; earth that sticks to the plough.

   2. வண்டல் மண்; silt, alluvium.

   3. பொருக்கு மண்; sand and clay mixed with gravel and pebbles (சா.அக.);.

     [அடை + மண். அடு → அடை = ஒட்டுதல்.]

களிமண், மணல் என்னும் பொருள் இச் சொற்குப் பொருந்துவதாய்த் தோன்றவில்லை.

அடைமதிற்படு-தல்

அடைமதிற்படு-தல் aḍaimadiṟpaḍudal, கு.வி. (v.i.)

   முற்றுகையிடப்படுதல்; to be besieged.

     ‘நெடுநாட்பட அடைமதிற்பட்ட காலத்தே விளைத்துக் கோடற்கு’ (பதிற். 16 ; 2. உரை);.

     [அடை + மதில் + படு.]

அடைமழை

 அடைமழை aḍaimaḻai, பெ. (n.)

   விடாமழை, அடைத்துப் பெய்யும் மழை; continuous rain from an overcast sky.

     ‘ஐப்பசி அடைமழை, கார்த்திகை கனமழை’, ‘அடைமழைக்குக் குடை இல்லாதவனுக்கு ஐந்து பெண்டாட்டியாம்’, ‘அடைமழையில் நாற்று நட்டால் ஆற்றோடு போகும்’, ‘அடைமழை விட்டும் செடிமழை விடவில்லை’, (பழ.);.

ம. அடமழ ; க. அட்டமழெ.

     [அடை + மழை. அடை = அடைத்தல்.]

அடைமாங்காய்

அடைமாங்காய் aḍaimāṅgāy, பெ. (n.)

   1. மாங்காய் ஊறுகாய்; mango pickle.

   2. உப்பிட்டுக் காயவைத்த மாங்காய்; dried, salted mango (சா.அக.);.

ம. அடமாஙங, க. அட ; து. அடங்காயி.

     [அடை + மாங்காய்.]

அடைமானம்

அடைமானம் aḍaimāṉam, பெ. (n.)

   1. கொதுவை; pledge, property mortgaged.

   2. (தொல்லை தீரும்); வழிவகை; help. remedy, means.

   3. உவமை (யாழ்.அக.);; resemblance, comparison.

   4. ஒப்பானது, ஈடானது, படி (பிரதி);; equivalent (W.);.

ம. அடமானம்; க., பட. அடமான ; தெ. அட்டமு, அடமானமு; து. அடவு.

     [அடை + மாணம் (ஈறு);.]

அடைமானவோலை

 அடைமானவோலை aḍaimāṉavōlai, பெ. (n.)

   அடைமான ஆவணம் (பத்திரம்);; mortgage deed, deed of hypothecation.

     [அடைமானம் + ஓலை.]

அடைமுட்டுப் பலகை

 அடைமுட்டுப் பலகை aṭaimuṭṭuppalakai, பெ. (n.)

   பனை, தென்னை போன்ற மரமேறுபவர்களின் கத்தி முதலான பொருள்களை வைத்து இடுப்பில் கட்டிக் கொள்ளும் பெட்டிப் பலகை; basket made of spathe of palm, used by the people who climb palmtrees.

     [அடை+முட்டு+பலகை]

     [P]

அடைமுதற்பற்று

அடைமுதற்பற்று aḍaimudaṟpaṟṟu, பெ. (n.)

   குடிகட்குப் பற்றடைக்கப்பட்ட நிலம் (M.E.R. 209 of 1925);; land leased out to tenants.

     [அடை + முதல் + பற்று.]

அடைமூக்கு

அடைமூக்கு aṭaimūkku, பெ. (n.)

   மூக்கில் சளி அடைப்பு (கொ.வ.சொ..5.);; severe cold.

     [அடை+மூக்கு]

அடைமொழி

அடைமொழி aḍaimoḻi, பெ. (n.)

     “அடைமொழி யினமல் லதுந்தரும்” (நன். 402);.

அடைய

அடைய aḍaiya, கு.வி.எ. (adv.)

   முழுவதும்; completely, thoroughly, altogether.

     “கோயிலடைய விளக்கேற்றி” (பெரியபு. நமிநந்தி. 14);.

ம. அடய, அடவெ.

அடையங்கம்

 அடையங்கம் aḍaiyaṅgam, பெ. (n.)

   உழுந்து; black gram, Phaseolus mungo.

அடையடிமை

 அடையடிமை aḍaiyaḍimai, பெ. (n.)

   விலைக்குப்பெற்ற அடிமையாள் (இ.வ.);; purchased slave (Loc.);.

     [அடை + அடிமை.]

அடையடுத்தவாகுபெயர்

அடையடுத்தவாகுபெயர் aḍaiyaḍuttavākubeyar, பெ. (n.)

   ஆகுபெயர்வகை ; metonymical synecdochical expr. invariably including a qualifying word.

     ‘வெற்றிலை நடு’, ‘மருக்கொழுந்து நட்டான்’, ‘திருவாசகம்’ என்பவற்றில், வெறு மரு திரு என்னும் அடை மொழிகளால் அடுக்கப்பட்ட இலை, கொழுந்து, வாசகம் என்பன ஆகுபெயராதலால், இவை அடையடுத்த ஆகுபெயர்” (நன். 290, சடகோ. உரை);.

     [அடை + அடுத்த + ஆகுபெயர்.]

அடையன்

அடையன் aḍaiyaṉ, பெ. (n.)

   கடுக்காய்; gallnut (T.C.M. ii, 2,429);, Chebulic myrobalan.

அடையலர்

அடையலர் aḍaiyalar, பெ. (n.)

   பகைவர் (பிங்.);; enemies, foes.

     “அடையலார் தம்மை வென்று” (கந்தபு. யுத்த. அக்கினி. 131);. ‘அடையலரை அடுத்து வெல்லு’ (பழ.);.

ம. அடயலர்

     [அடை + அல் + அர். ‘அல்’ எ.ம.இ.நி.]

அடையலவர்

அடையலவர் aḍaiyalavar, பெ. (n.)

அடையலர் பார்க்க;see adaiyalar.

     “அடையலவ ராவி வெருவ” (திருப்பு. 4);.

ம. அடயலர்

அடையலார்

 அடையலார் aḍaiyalār, பெ. (n.)

அடையலர் பார்க்க;see adaiyalar.

     [அடை + அல் + ஆர். ‘அல்’ எ.ம.இ.நி.]

அடையல்

அடையல் aḍaiyal, பெ. (n.)

   1. அடைகை ; reaching.

     “சாயலு ளடையலுற் றிருந்தேன்” (தேவா. 7.58 ; 7);.

   2. அடைந்த பொருள்; acquired thing or property.

   3. எல்லாம் ; all.

   4. செருப்புவகை ; a kind of sandals.

     “புரிமென் பீலிப்போழ்புனை யடையல்” (பரிபா. 21;7);.

   5. நீர் தெளிதலா லுண்டான அடிமண்டி அல்லது வண்டல் ; a substance deposited from a liquid in which it had remained suspended, precipitate (சா.அக.);.

     [அடை + அல். ‘அல்’ தொ.பெ. ஈறு.]

அடையவளைஞ்சான்

அடையவளைஞ்சான் aḍaiyavaḷaiñjāṉ, பெ. (n.)

   1. கோயிலின் வெளிச்சுற்றுமதிற் புறத்தெரு; street surrounding the outermost walls of a temple.

     ‘அடையவளைஞ்சான் தளவிசை படுப்பித்தார்’ (S.I.I.i.84);.

   2. அடையவளைந்தான் பார்க்க;see adaiya-valaindan.

     [அடையவளைந்தான் → அடையவளைஞ்சான் (கொ.வ.);.]

அடையவளைந்தான்

அடையவளைந்தான் aḍaiyavaḷaindāṉ, பெ. (n.)

   1. அடையவளைஞ்சான்; street surrounding the outermost walls of a temple.

   2. தட்டுச்சுற்று வேட்டி; cloth tied around the waist and hanging down to the ankles.

   3. ஈட்டின் ஓர் அருஞ்சொல்லுரை; one of the glosses for the commentary Idu.

அடையாண்கிளவி

அடையாண்கிளவி aḍaiyāṇkiḷavi, பெ. (n.)

   குழுஉக்குறிபோல் வழங்கும் அடையாளச் சொல்; word used for recognition, pass-word.

     “அறியக் கூறிய அடையாண் கிளவியும்” (பெருங். உஞ்சைக். 56 ; 184);.

     [அடையாளம் + கிளவி – அடையாளங் கிளவி → அடையாண் கிளவி. கிளவி = சொல்.]

அடையாதவர்

அடையாதவர் aḍaiyātavar, பெ. (n.)

   பகைவர்; enemies, foes.

     “அடையாதவர் முவெயில். சீறும் விடையான்” (தேவா. 1.37 ;7);.

     [அடையாத + அவர் — அடையாதவர் (வினையா. பெ.);]

 அடையாதவர் aṭaiyātavar, பெ. (n.)

சேராதவர்

 those who not reach.

     “நெய்த்தானம் அடையாதவர் என்றும் அமர் உலகம் அடையாரே.” (சம் 1:15:6.);

     [அடை+ஆ+த்+அவர்]

அடையாதார்

 அடையாதார் aḍaiyātār, பெ. (n.)

அடையாதவர் பார்க்க;see adaiyddavar.

அடையாமல்

அடையாமல் aṭaiyāmal, வி.எ. (adv)

   மூடாமல்; not closed.

     “அடைவோம் நாம் போய்ச் சிவபுரத்து உள்அணியார்கதவுஅடையாமே” (வாச. 607);

     [அடை-அடையாமல்]

அடையாமை

அடையாமை aṭaiyāmai, பெ. (n.)

   அடையா வண்ணம்; not touched

     “அவலம் வந்து அடையாமை” (சம் 118:8);

     [அடை+ஆ+மை]

அடையார்

அடையார் aḍaiyār, பெ. (n.)

அடையாதவர் பார்க்க;see adaiyadavar.

     “அடையார்தம் புரங்கள்” (தேவா. 1.65 ; 1);.

அடையார்முந்தி

 அடையார்முந்தி aṭaiyārmunti, பெ. (n.)

   சேலையின் தலைப்பு முந்தி அல்லது மேல் முந்தி வகை; a kind of outer end of a saree or cloth.

     [அடையார்+முந்தி. முந்தானை →முந்தி.]

அடையாறு

அடையாறு aṭaiyāṟu, பெ. (n.)

   1.செங்கற் பட்டிலுள்ள செம்பரம்பாக்கத்து ஏரியினின்று புறப்பட்டுச் சென்னை வழியாகக் கடலோடு கலக்கும் ஓர் யாறு; a river in Chennai.

   2.அடையாறுகடலில் கலக்கும்பகுதி(பாக்கம்);; the place where the river adayar joins Bay of Bengal Sea.

     [அடை+ஆறு]

அடையாள அட்டை

 அடையாள அட்டை aṭaiyāḷaaṭṭai, பெ. (n.)

   ஒருவருடைய அடையாளத்தை உறுதிப் படுத்தும் வகையில் அவர்தம் நிழற்படம்பெயர், முகவரி முதலிய குறிப்படங்கிய அட்டை; identity card.

     [அடையாளம்+அட்டை]

அடையாளக்காரர்

அடையாளக்காரர் aḍaiyāḷakkārar, பெ. (n.)

   அரச விருதுகளையும் எடுபிடிகளையும் பிடித்துச் செல்வோர் (ரஹஸ்ய. 587); ; persons who carry the insignia of royalty or royal paraphernalia.

     [அடையாளம் + காரர்.]

அடையாளக்குறிப்பு

 அடையாளக்குறிப்பு aṭaiyāḷakkuṟippu, பெ. (n.)

சிறிதளவான ஒன்றன் அடையாளம்,

 a small sign.

மறுவ. அறிகுறி

     [அடையாளம்+குறிப்பு]

அடையாளப்பூ

 அடையாளப்பூ aḍaiyāḷappū, பெ. (n.)

   அரசக் குடியின் அடையாளமாக அணியும் பூ; particular flower worn as a symbol, as of a dynasty.

     ‘இப் பாட்டு……..வேம்புதலை யாத்த நோன்கா ழெஃகம் என அடையாளப்பூக் கூறின மையின், அகமாகாதாயிற்று’ (நெடுநல். நச். முன்னுரை);.

     [அடையாளம் + பூ.]

அடையாளம்

அடையாளம் aḍaiyāḷam, பெ. (n.)

   1. அறிகுறி; mark, symbol, emblem, seal, sign.

     “அந்தமில் குணங்கள் செய்கை யாதியா வடையா ளங்கண் முந்தையின் வழுவா வண்ணம் முறையினான் மொழிந்தான் முன்னோன்” (திருவிளை. மாமனாக. 32);.

     “தவத்தைச் சிதைத்ததுமோ ரடையாளம்” (தில். பெரியாழ். 3.10 ; 1);.

   2. நோய்க்குறி; symptoms of diseases.

தழும்பு (scar); முதலியனவும் அறிகுறியுள் அடங்கும்.

ம. அடயாளம் ; க. அடயாள ; தெ. அடியாளமு; துட. ஒட்யோள்ம்.

அடையாள்

அடையாள் aḍaiyāḷ, பெ. (n.)

   வேலையாள் (S.I.I. vii, 72);; servant.

     [அடை + ஆள்.]

அடையாவண்ணம்

அடையாவண்ணம் aṭaiyāvaṇṇam, பெ. (n.)

குறுகாதவாறு

     “காப்பார் காலன் அடையா வண்ணம்.” (சம் 1:12:6);

     [அடை+ஆ+வண்ணம்]

அடையுணி

 அடையுணி aḍaiyuṇi, பெ. (n.)

   ஒருவரைச் சார்ந்து உண்ப-ன்-ள்; one depending on another for food.

     [அடை + உண் + இ. ‘இ’ உடைமை குறித்த ஈறு.]

அடையுண்(ணு)-தல்

அடையுண்(ணு)-தல் aḍaiyuṇṇudal,    அடைபடுதல்; to be shut up or enclosed.

     ‘புலிக்குட்டி கூட்டிடத்தே அடையுண்டிருந்து’ (பட்டினப். 221, நச். உரை);.

     [அடை + உண்.]

அடையுழவு

அடையுழவு aṭaiyuḻvu, பெ. (n.)

   குத்தகையுழவு; lease cultivation.

     “பொருள் கவருவும் அடையுழவும் பாட்டமாளவும் குடியிருக்கவும்” (SII. v. 772.);.

     [அடை+உழவு]

அடையெழுது-தல்

அடையெழுது-தல் aḍaiyeḻududal,    5 செ.குன்றா வி. (v.t.)

   கணக்கிற் பதிவுசெய்தல்; (S.I.I. iv, 150);; to make an entry in an account.

     [அடை + எழுது.]

அடையோடறுதல்

 அடையோடறுதல் aḍaiyōḍaṟudal, பெ. (n.)

   ஒரு வகைக் கண்ணோய்; a kind of eye-disease (சா.அக.);.

அடையோடு

 அடையோடு aṭaiyōṭu, பெ. (n.)

அடைகாக்க மணல், பரப்பி முட்டைகளை வைக்கும் கூடைபோன்ற ஓடு.

 shells used to keep sand for hatching.

     [அடை+ ஒடு]

அடையோலை

அடையோலை aḍaiyōlai, பெ. (n.)

   அடைமான ஆவணம் (பத்திரம்); (I.M.P. S.A. 15);; bla document serving as evidence of pledge.

ம. அடயோல

     [அடை + ஓலை.]

அடைவளைந்தார்

அடைவளைந்தார் aḍaivaḷaindār, பெ. (n.)

   கள்ளர்குலப் பட்டப் பெயர்களுள் ஒன்று (கள்ளர் சரித். பக். 145);; a title of Kallars.

     [அடையவளைந்தார் → அடைவளைந்தார். அடைய = முழுதும். வளைதல் = முற்றுகையிடுதல்.]

அடைவாகவுண்ணல்

 அடைவாகவுண்ணல் aḍaivākavuṇṇal, பெ. (n.)

   தொடர்ச்சியாய் மருந்துண்ணல்; taking medicine continuously (சா.அக.);.

     [அடைவு + ஆக – உண்ணல்.]

அடைவிக்கச்சோலம்

 அடைவிக்கச்சோலம் aḍaivikkaccōlam, பெ. (n.)

அடவிக்கச்சோலம் பார்க்க;see adavi-k-kaccolam.

     [அடவி → அடைவி + கச்சோலம்.]

அடைவு

அடைவு aḍaivu, பெ. (n.)

   1. அடைகை; arrival, joining, acquisition.

   2. புகலிடம்; refuge.

     “அடைவிலோ மென்றுநீ யயர் வொழி” (தேவா. 3.282;5);.

   3. பறவைகள் தங்குமிடம்; roosting place for birds.

   4. கொதுவை; pledge (W.);.

   5. வரலாறு; origin, history.

     “கயிலையி னடைவு சொற்றாம்” (காஞ்சிப்பு. வீரரா. 1);.

   6. வழி (பிங்.);; path, way.

   7. வகை; kind, manner.

   8. முறை; order, course.

     “அடைவீன் றளித்த” (கல்லா. 6 ; 35);. “அங்கதி னொருசில வடைவிற் கூறுகேன்” (கந்தபு. அவையட. 12); ;

   9. நிரனிறையணி (வீரசோ. அலங். 12);; a figure of speech indicating the arrangement of two or more groups of words in their respective order.

   10. ஒப்புமை; resemblance, similarity.

   11. எல்லாம் ; all.

   12. துணை; help, aid.

     “நின்னை யடைவாக வுடன்போந்தேன்” (பெரியபு. திருஞான. 475);.

   13. தகுதி; fitness, propriety (W.);.

   14. ஏது; cause, occasion.

     “அடைவு துன்புறு வதற்கிலை” (பெரியபு. திருஞான. 1066);.

   15. ஆம்பல்; water-lily, Nymphaea edulis (சா.அக.);.

ம. அடவு ; க. அடவு.

     [அடை → அடைவு.]

 அடைவு aṭaivu, பெ. (n.)

   ஒன்றிலிருந்து மற்றொன்றை அடைவது, நெருங்கிச் சேர்வது. (14:236.);; one adhering to another.

     [அடை+அடைவு]

அடைவுகேடு

 அடைவுகேடு aḍaivuāḍu, பெ. (n.)

   முறைத் தவறு, முறைகேடு, ஒழுங்கின்மை; irregularity, impropriety, disorder, derangement.

அடைவுசரக்கு

அடைவுசரக்கு aḍaivusarakku, பெ. (n.)

   கற்பூரவகை (சிலப். 14 109, அடியார்க். உரை);; a kind of camphor.

அடைவுபடு-தல்

அடைவுபடு-தல் aḍaivubaḍudal,    20 செ,கு,வி, (v.i.)

   ஒழுங்காதல் (திவ். திருநெடுந் 22, வியா.);; to be in order, orderly.

அடைவே

அடைவே aḍaivē, கு.வி.எ. (adv.)

   1. ஒழுங்காக; regularly, in an orderly manner.

   2. நெடுக; a long.

     ‘கரையடைவே போன வாய்க் காலுக்கும்’ (S.I.I. ii, 103);.

ம., க. அடவு.

     [அடைவு + ஏ.]

அடைவை-த்தல்

அடைவை-த்தல் aḍaivaittal,    4 செ.குன்றாவி, (v.t.)

   1. அடைகாக்கும்படி கோழியை முட்டைகளின் மேல் வைத்தல்; to make a hen sit on eggs for incubation.

   2. தேன்கூடுகட்டுதல்; to build a hive, as bees.

தேன் அடைவைத்திருக்கிறது (உ.வ.);.

     [அடை + வை.]

அடைவைத்தபெட்டை

 அடைவைத்தபெட்டை aṭaivaittapeṭṭai, பெ. (n.)

அடைகாத்துக் கொண்டிருக்கும் கோழி,

 brooding hen.

     “அடைவைத்த பெட்டையாட்டம் எதற்கு விட்டிலேயே அடைந்து கிடக்கிறாய்?” (இ.வ.);.

     [அடை+வைத்த+பெட்டி]

அட்சகன்னம்

 அட்சகன்னம் aṭcagaṉṉam, பெ. (n.)

   நிலவுருண்டை கணிதவகை (வின்.);;     [Skt. aksa-karna → த. அட்சகன்னம்.]

அட்சக்கோடு

 அட்சக்கோடு aṭcakāṭu, பெ. (n.)

அட்சரேகை பார்க்க;see atca-regai.

     [அட்ச + கோடு.]

     [Skt. aksa → த. அட்சம்.]

அட்சச்சூலை

 அட்சச்சூலை aṭcaccūlai, பெ. (n.)

   வெப்ப நோய் வகை (R);; a kind of rheumatism.

     [அட்ச + சூலை.]

     [Skt. aksa → த. அட்ச(ம்);.]

சூல் → சூலை → Skt. šūlā.

அட்சதரோகம்

 அட்சதரோகம் aṭcadarōkam, பெ. (n.)

   உகிர் சுற்றுண்டாகி உகரின் வேரைக் கெடுத்து, அந்த உகிர் விழுவதற்கு முன்னமே மறுஉகிரை முளைக்கச் செய்யும் ஒரு நோய்; an inflammation of the bulbous ends of the fingers affecting the root of the nail, fresh nail crops up before the original one is shed, whitlow (சா.அக.);.

த.வ. உகிர்சுற்றுநோய்.

     [Skt. aksata + rõga → த. அட்சதரோகம்.]

அட்சதீபம்

 அட்சதீபம் aṭcatīpam, பெ. (n.)

   முருங்கை (பரி.அக.);; horse-radish tree.

அட்சதூரம்

அட்சதூரம் aṭcatūram, பெ. (n.)

   உலகின் சம கோட்டிலிருந்து வடக்கே அல்லது தெற்கேயுள்ள இடைவெளியின் அளவு (M. Navi. 57.);; latitude.

த.வ. கிடைவரை அளவு.

     [Skt. aksadura → த. அட்சதூரம்.]

அட்சதை

அட்சதை aṭcadai, பெ. (n.)

   1. மஞ்சள் கலந்த மங்கல அரிசி; unbroken grains of rice mixed with turmeric or saffron used in benediction or workship.

     “மாமல ரட்சதை யறுகதிற் சொரிந்து” (பிரபோத.11, 42);;

   2. அரிசி (இ.வ..);; rice.

த.வ. பொலியரிசி, அறுகு அரிசி.

     [Skt. a-ksata → த. அட்சதை.]

அட்சதைபோட்டுக்கொள்(ளு)-தல்

அட்சதைபோட்டுக்கொள்(ளு)-தல் aṭcadaipōṭṭukkoḷḷudal,    16 செ.கு.வி. (v.i.)

   வலிய தொரு வினையை மேற்கொள்ளுதல் (இ.வ.);; to voluntarily undertake to perform an act.

     [அட்சதை + போட்டுக்கொள்ளு-.]

     [Skt. a-kasta → த. அட்சதை.]

அட்சதைப்பொட்டு

 அட்சதைப்பொட்டு aṭcadaippoṭṭu, பெ. (n.)

   நெற்றியிலிடும் பொட்டுவகை; turmeric paste, blackened with charcoal powder and lime, used for marks on the forehead.

     [அட்சதை + பொட்டு.]

     [Skt. a-ksata → த. அட்சதை.]

அட்சதைவை-த்தல்

அட்சதைவை-த்தல் aṭcadaivaiddal,    4 செ.கு.வி. (v.i.)

   நற்செயல் அழைத்தற் குறியாக மங்கல அரிசி கொடுத்தல்; to distribute unbroken rice mixed with turmeric or saffron as an invitation to auspicious ceremonies. த.வ. பொலியரிசிவை.

     [அட்சதை + வை-.]

     [Skt. a-ksata → த. அட்சதை.]

அட்சத்தி

 அட்சத்தி aṭcatti, பெ. (n.)

   திப்பிலி; long pepper, Pipe longum (சா.அக.);.

அட்சபாதன்

அட்சபாதன்1 aṭcapātaṉ, பெ. (n.)

   கவுதம முனி; Gaudama, founder of the nyaya phil, as having an eye in his right foot.

அட்சு(ம்); + பாதன்.]

     [Skt. aksa → த. அட்ச.]

பதி → பதம் → பாதம் → பாதன் → Skt. padin.

 அட்சபாதன்2 aṭcapātaṉ, பெ. (n.)

   நாயப் பொருளைப் (நியாய சாத்திரம்); பின்பற்றி நடப்பவன் (வின்.);; follower of Nyaya philosophy propounded by Aksapādā.

த.வ. அறவாணன்.

     [அட்சு(ம்); + பாதன்.]

     [Skt. aksa → த. அட்ச.]

பாதம் → பாதன் → Skt. padin.

அட்சமணி

 அட்சமணி aṭcamaṇi, பெ. (n.)

   அக்கமணி; bead sacred to Sival);, Eleocarpus ganitus (சா.அக.);

த.வ. கள்மணி, முள்மணி.

     [அட்சம் + மணி.]

     [Skt. aksa → அட்சம்.]

மண் → மணி.

அட்சமாலிகை

 அட்சமாலிகை aṭcamāligai, பெ. (n.)

   நூற்றெட்டுபநிடதங்களுளொன்று; name of an upanisad

     [Skt. aksamalika → த. அட்சமாலிகை.]

அட்சமாலை

 அட்சமாலை aṭcamālai, பெ. (n.)

   வழிபாட்டு மாலை; rosary

த.வ. அக்கமாலை.

     [அட்ச + மாலை.]

     [Skt. aksa → த. அட்சம்.]

மால் → மாலை → Skt. mala.

அட்சம்

அட்சம்1 aṭcam, பெ. (n.)

   1. கண்; eye.

   2. நிலக்கோடு; terrestrial latitude.

     [Skt. aksa → த. அட்சம்.]

 அட்சம்2 aṭcam, பெ. (n.)

   1. அட்சமணி பார்க்க;see atcamani.

   2. வெங்காயம்; onion.

   3. தான்றி; devil’s abode, Terminalia belerica.

   4. பூண்டின் பெயர்களில் விதையைக் குறிக்க இறுதிமொழியாக வரும் சொல் (எ-டு:); உத்திராட்சம், கோகிலாட்சம்; in the name of plants, a termination showing the seed, as in Eleocarpus, and Coix barbafa (சா.அக.);.

     [Skt. aksa → த. அட்சம்.]

அட்சய

 அட்சய aṭcaya, பெ. (n.)

   வட மொழியாளரின் அறுபானாண்டுள் ஒர் ஆண்டு; name of the last year in the jupiter cycle of sixty years as followed by sanskri lovers.

     [Skt. aksaya → த. அட்சய.]

அட்சயதிருதியை

 அட்சயதிருதியை aṭcayadirudiyai, பெ. (n.)

   விடை (வைசாக); மாத வளர்பிறை மூன்றாம் பக்கலாகிய நன்னாள்; third tithi of the bright for night of vasagam, as securing merit to all deeds of virtue performed on that day.

த.வ. மங்கலமும்மி.

     [Skt. a-ksaya + trtiya → த. அட்சயதிருதியை.]

அட்சயதூணி

 அட்சயதூணி aṭcayatūṇi, பெ. (n.)

   அருச்சுனனுடைய அம்புக்கூடு (வின்.);; the quiver of Arjuna, as inexhaustible.

த.வ. அழிவில் தூணி.

     [அட்சய(ம்); + தூணி.]

     [Skt. a-ksaya → த. அட்சய(ம்);.]

     [P]

அட்சயன்

 அட்சயன் aṭcayaṉ, பெ. (n.)

   கடவுள்; god, as exempt from decay.

     [Skt. a-ksaya → த. அட்சயன்.]

அட்சயபாத்திரம்

அட்சயபாத்திரம் aṭcayapāttiram, பெ. (n.)

   1. தெய்வத்தன்மையால் உணவு குறையாத கலம் (வின்.);; divine vessel of inexhaustible food given to the Aandavas by the sun.

   2. இரந்துண் கலம்; vessel carried in begging, usu. by Bhágavatas.

த.வ. குறையாக்கலம், உலவாக்கலம், அமுதசுரபி.

     [Skt. a-ksayapātra → த. அட்சயபாத்திரம்.]

     [P]

அட்சயம்

அட்சயம்1 aṭcayam, பெ. (n.)

   1. கேடின்மை (சிந்தா. நி. 87.);; undecaying.

   2. குறைவு படாதது (இ.வ.);; that which is inexhaustible.

த.வ. அல்காமை.

     [Skt. a-ksaya → த. அட்சயம்.]

 அட்சயம்2 aṭcayam, பெ. (n.)

   கல்லுப்பு; common salt dug out from the bed at the bottom of the sea (சா.அக.);.

த.வ. கடலடி உப்பு.

அட்சயரசம்

அட்சயரசம் aṭsayarasam, பெ. (n.)

   கொங்கணவர் வாதகாவியம் 3000-இல் சொல்லியுள்ள பத்து வகை இதளியக் குளிகைகளுள் ஒன்று. இது சாரணைக் குதவும், இதைப் பதினொரு தடவை விடுவித்தாக்கால் எண் பெரும்பேறடையலாம். முழுமை நிலைக்குச் சென்று நிலைக்கலாம், திரும்பலாம். இதன் பெருமை அடியிற் கண்ட செய்யுளினால் விளங்கும்; One of the ten kinds of mercurial pills described in kunganavar’s work on Alchemy. It can be animated as per process laid down there in and if this is down eleven times. One can succeed in the performance of eight kinds of miracles vide (gjsişLefģ56); this pill Will also enable him to absorb himself into the absolute and return to his original state at pleasure, as explained in the above stanza.

     “ஒடலாம் அட்சய மாம் ரசத்தைக் கேளு உத்தமனே பதினொறுக்கால் விடுவித்தாக்கல் ஆடலாம் அஷ்டமா சித்தியெட்டும் அணிமாவும் கரிமாவும் வகிமாவோடு தேடலாம் மகிமாவும் பிராத்தியோடு சேர்ந்தயெட்டு மாடலாம் செப்பக்கேளு நீடலாம் பூரணத்திற் சென்று புக்கி நிலைக்கலாம் திரும்பலாம் நீங்கள் கேளே” (சா.அக.);

த.வ அழியாச்சாறு.

     [Skt. aksaya + raša → த. அட்சயரசம்.]

அட்சயவடம்

 அட்சயவடம் aḍcayavaḍam, பெ. (n.)

   தொன்மைக் காலத்தில் கயையிலிருந்த அழகியதோர் ஆலமரம்; undecaying banyan the name of a very ancient sacred tree that was in Gaya (சா.அக.);.

     [அட்சய(ம்); + வடம்.]

     [Skt. a-kşaya → த. அட்சயம்.]

வட்டம் → வடம் → Skt. vata.

அட்சரகணிதம்

 அட்சரகணிதம் aṭcaragaṇidam, பெ. (n.)

   குறிக் (பீச);கணிதம் (வின்.);;த.வ. குறிக்கணக்கியல், இயற்கணிதம்.

     [அட்சரம் + கணிதம்.]

     [Skt. aksara → த. அட்சரம்.]

கண் → கணி → கணிதம் → Skt. ganita.

அட்சரகாலம்

 அட்சரகாலம் aṭcarakālam, பெ. (n.)

   ஒரு தாளவளவை;த.வ. மாத்திரைக்காலம்.

     [அட்சர(ம்); + காலம்.]

     [Skt. a-ksara → த. அட்சரம்.]

கால் → காலம் → skt. kala.

அட்சரசமுத்திபலம்

 அட்சரசமுத்திபலம் aṭsarasamuttibalam, பெ. (n.)

   விளா; Wood apple, Feronia elephantum (சா.அக.);.

அட்சரசீவிகன்

 அட்சரசீவிகன் aṭcaracīvigaṉ, பெ. (n.)

   எழுத்தாளன் (யாழ்.அக.);; scribe, writer.

த.வ. சொல்லோஉழவன்.

     [Skt. aksara-jivika → த. அட்சரசீவிகன்.]

அட்சரசுத்தி

அட்சரசுத்தி aṭsarasutti, பெ. (n.)

   1. பலுக்கல் (ஒலிப்பு); திருத்தம்; correct utterance, accurate pronunciation.

   2. கையெழுத்துத் திருத்தம் (வின்.);; correct chirography.

த.வ. திருத்தப்பாடு, திருத்தப்பலுக்கல்.

     [Skt. aksara + šuddhi → த. அட்சரசுத்தி.]

அட்சரதீபம்

அட்சரதீபம் aṭcaratīpam, பெ. (n.)

   கோயிலிலேற்றும் ஐம்பத்தொரு திருவிளக்கு; row of 51 lights set up in temples, as representing the 51 letters of the Skt. alphabet.

த.வ. ஐம்பானோர் விளக்கு.

     [அட்சர + தீபம்.]

     [Skt. a-ksara → த. அட்சரம்.]

தீ → தீவம் → Skt. dipa → தீபம்.

வடமொழியாளர் தம் மொழிப் பெருமையை நிலைநாட்டுதற்காகக் கோயில் வழிபாட்டில் புதிதாகப் புகுத்தப்பட்ட ஆரியர் வழக்கம் முப்பான் விளக்கேற்றல் தமிழ் மரபு.

அட்சரதேவி

அட்சரதேவி aṭcaratēvi, பெ. (n.)

   கலைமகள்; goddess of letters.

     “அட்சர தேவி கோவின் விதிப்படி” (திருப்பு. 1126);.

த.வ. சொன்மடந்தை.

     [அட்சர(ம்); + தேவி.]

     [Skt. a-ksara → த. அட்சரம்.]

தேவன் → தேவி → Skt. devi.

அட்சரதோசம்

 அட்சரதோசம் aṭcaratōcam, பெ. (n.)

   எழுத்துப்பிழை (கொ.வ.);; error of spelling.

த.வ. எழுத்துவழு.

     [Skt. a-ksara + dõsa → த. அட்சரதோசம்.]

அட்சரத்தாபனம்

 அட்சரத்தாபனம் aṭcarattāpaṉam, பெ. (n.)

   சுருள் தகட்டில் மந்திர எழுத்துகளைப் பொறிக்கை (வின்.);; inscribing letters of mantras in mystical diagrams for amulets.

த.வ. எழுத்தேற்றம்.

     [Skt. a-ksara + sthåpana → த. அட்சரத்தாபனம்.]

அட்சரத்துடையோன்

 அட்சரத்துடையோன் aḍcarattuḍaiyōṉ, பெ. (n.)

   ஈ; fly (சா.அக.);.

அட்சரபோளம்

 அட்சரபோளம் aṭcarapōḷam, பெ. (n.)

   கரும் பிசின் (போளம்);; black myrrh, a black substance extracted from aloes and dried up (சா.அக.);.

த.வ. கள்ளிப்பிசின்.

அட்சரப்புல்

 அட்சரப்புல் aṭcarappul, பெ. (n.)

   பீனசப்புல்; a kind of grass, Panicum Dactylon (சா.அக.);.

த.வ. சளிப்புல்.

அட்சரமாந்தசுரம்

 அட்சரமாந்தசுரம் aṭsaramāndasuram, பெ. (n.)

அக்கரக்காய்ச்சல் பார்க்க;see akkara-k-kayccal. (சா.அக.);.

     [அட்சர(ம்); + மாந்தம் + சுரம்.]

     [Skt. aksara + த. அட்சர(ம்);.]

மந்தம் → மாந்தம்.

சுள் → சுரி → சுரம்.

அட்சரமாந்தம்

 அட்சரமாந்தம் aṭcaramāndam, பெ. (n.)

அக்கரப்படுவன் பார்க்க;see akkara-p- paduvan (சா.அக.);.

     [Skt. aksara → த. அட்சரம்.]

மந்தம் → மாந்தம்.

அட்சரமுகன்

அட்சரமுகன் aṭcaramugaṉ, பெ. (n.)

   மாணாக்கன் (சிந்தா.நி.96.);; student, disciple.

     [அட்சர(ம்); + முகன்.]

     [Skt.aksara → த. அட்சரம்.]

முகம் → முகன்.

அட்சரம்

அட்சரம் aṭcaram, பெ. (n.)

   1. எழுத்து; letter of the alphabet, writing-symbol.

   2. பண் வகைகளிளொன்று (பரத. இராக.27.);; one of the characteristic of melody-types.

   3. நா வெடிப்பு நோய் (பைஷஜ);; cracked tongue.

   4. குழந்தை நோய் வகை (பாலவா. 912);; a general name for several diseases of children.

     [Skt. a-ksara → த. அட்சரம்.]

அட்சரரேகை

 அட்சரரேகை aṭcararēkai, பெ. (n.)

   மண்டையின் பின்புறத்தில் குறுக்காக வோடுமோர் எலும்புப் பொருத்து; a suture running across the skull on its back portion, Lamboid suture (சா.அக.);.

த.வ. குறுக்கைப்பொட்டு.

     [Skt. aksara + rekha → த. அட்சரரேகை.]

அட்சரவகுப்பு

 அட்சரவகுப்பு aṭcaravaguppu, பெ. (n.)

   வாயிலுண்டாகும் கொப்புள வகைகள்; different varieties of stomatitis (சா.அக.);.

     [அட்சர + வகுப்பு.]

     [Skt. aksara → த. அட்சரம்.]

வகு → வகுப்பு.

அட்சரவிருட்சத்தி

 அட்சரவிருட்சத்தி aṭcaraviruṭcatti, பெ. (n.)

   பலா; jack tree, Artocarpus integrifolia (சா.அக.);.

அட்சராப்பியாசம்

 அட்சராப்பியாசம் aṭcarāppiyācam, பெ. (n.)

   முதன் முதலாகப் பள்ளியில் சேரும் குழந்தைக்கு எழுத்தறிவிக்கும் முறைமை (சடங்கு);; ceremony connected with a child’s beginning to learn the alphabet.

த.வ ஏடுதூக்கல், ஏடுமங்கலம்.

     [Skt. a-ksara + abhyảsa → த. அட்சராப்பியாசம்.]

அட்சராரத்தி

அட்சராரத்தி aṭcarāratti, பெ. (n.)

   வடமொழி எழுத்துகளின் எண் அளவாக 51 விளக்குகளை அடுக்கடுக்காகக் கொண்ட விளக்குத்தட்டுவகை (தமிழ்விடு. 236, கீழ்க்குறிப்பு);; metallic tray containing 51 lights arranged in tiers and waved in front of the deities, the number of lights representing the number of letters in the Sanskrit alphabet.

த.வ. ஐம்பானோர் ஆரத்தி.

     [Skt. aksara + aratti → த. அட்சராரத்தி.]

அட்சரேகை

 அட்சரேகை aṭcarēkai, பெ. (n.)

   நிலநடுக் கோட்டுக்கு வடக்கில் அல்லது தெற்கில் தொலைவைக் கணக்கிடும் முறையில் நிலவுருண்டையைச் சுற்றிக் கிழக்கிலிருந்து மேற்கில் செல்வதாக அமைத்துக் கொண்ட சுற்றுக் கோடு; line of latitude.

த.வ. கிடைவரை.

     [Skt. akşa + rekhả → த. அட்சரேகை.]

அட்சாம்சம்

 அட்சாம்சம் aṭcāmcam, பெ. (n.)

   நிலக் கோட்டின் கோணப் பகுதி; degree of terrestrial latitude.

த.வ. நிலக்கோணம்.

     [Skt. aksa + amsa → த. அட்சாம்சம்.]

அட்சாரம்

 அட்சாரம் aṭcāram, பெ. (n.)

   காரமின்மை; absence of alkali (சா.அக.);.

அட்சி

அட்சி1 aṭci, பெ. (n.)

   1. கண் (வின்.);; eye.

   2. நூற்றெட்டுபநிடதப் பகுதிகளிளொன்று; name of an upanisad.

     [Skt. aksi → த. அட்சி.]

 அட்சி2 aṭci, பெ. (n.)

   புறவுறுப்புகளை ஆய்வு செய்யும் கண்ணாடி; an instrument for examining certain openings in the body, Speculum (சா.அக.);.

அட்சிகம்

 அட்சிகம் aṭcigam, பெ. (n.)

   ஒரு மரம்; dalbergia tree (சா.அக.);.

அட்சிகோபம்

 அட்சிகோபம் aṭciāpam, பெ. (n.)

   கண்சிவப்பு; inflammation of the eye (சா.அக.);.

அட்சிகோளம்

 அட்சிகோளம் aṭciāḷam, பெ. (n.)

   கண்விழி; eye-ball (சா.அக.);.

     [அட்சி + கோளம்.]

     [Skt. aksi → த. அட்சி.]

கொள் → கோள் → கோளம்.

அட்சிணி

 அட்சிணி aṭciṇi, பெ. (n.)

   எண்வகை இன்பங்களுளொன்றாகிய தற்காலத்தில் துய்க்கும் சிறப்புரிமை (C.G.);; privileges actually enjoyed in an estate, one of astapõkam.

த.வ. எட்டிலோர் துய்ப்பு.

     [Skt. aksini → த. அட்சிணி.]

அட்சிதர்ப்பணம்

 அட்சிதர்ப்பணம் aṭcidarppaṇam, பெ. (n.)

   கண்ணில் துளித் துளியாயிடும் மருந்து; a fluid medicine to be dropped into the eye, eye drops (சா.அக.);.

த.வ. சொட்டுமருந்து.

     [Skt. aksi + tarppana → த. அட்சிதர்ப்பணம்.]

அட்சிதாரை

 அட்சிதாரை aṭcitārai, பெ. (n.)

   கருவிழி; pupil of the eye (சா.அக.);.

அட்சிபடலம்

 அட்சிபடலம் aḍcibaḍalam, பெ. (n.)

   கண்ணின் தோல்; coat of the eye (சா.அக.);.

த.வ. இரப்பை.

     [அட்சி + படலம்.]

     [Skt. aksi → த. அட்சி.]

படல் → படலம் = கண்படலம்.

அட்சிபந்தம்

அட்சிபந்தம் aṭcibandam, பெ. (n.)

   1. கண்ணோயில் கட்டும் கட்டு; bandage for the eyes in eye-diseases.

   2. கண்கட்டு வித்தை; a kind of illusion in magic.

   3. கண்ணைக் கட்டல்; binding the eyes (சா.அக.);.

த.வ. கண்கட்டு, கண்ணாங்கட்டு.

     [அட்சி + பந்தம்.]

     [Skt. aksi → த. அட்சி.]

பற்று → பத்து → பந்து → பந்தம் → Skt. bandha.

அட்சிபாகத்தியம்

 அட்சிபாகத்தியம் aṭcipākattiyam, பெ. (n.)

   கருவிழியில் வெண்ணிறச் சதை படர்ந்து மூடிக் கொள்வதுடன், குத்தலும், வலியும் கொண்டு கண்சிவந்து கருவிழியில் காணும் ஒருவகைக் கண்ணோய்; the appearance of a whitish milky film over the black of the eye slowly but completely shrouding it with its mass and attended with acute pain (சா.அக.);.

அட்சிபாகம்

அட்சிபாகம் aṭcipākam, பெ. (n.)

   1. வீக்கத்துடனும் அல்லது வீக்கமில்லாமலும் காணப்படும் கண் இரப்பையின் அழற்சி; an inflammation of the eye-lid with or without any local swelling.

   2. கண்ணோய்; Ordinary inflammation of the eyes ophthalmia (சா.அக.);.

த.வ. இரப்பையழற்சி.

     [அட்சி + பாகம்.]

     [Skt. aksai → த. அட்சி.]

பகு → பாகம்.

அட்சிபாகாத்தியரோகம்

 அட்சிபாகாத்தியரோகம் aṭcipākāttiyarōkam, பெ. (n.)

   கண்கள் வீங்குதல், கலங்கல், நீர்க்கம்மல், பீளைவடிதல், கருவிழி வெள்விழி சிவத்தல், எரிச்சல், அடிக்கடி வலியுறல் ஆகிய குணங்களையுண்டாக்கிப் பார்வையைக் கெடுக்குமோர் கண்ணோய்; a disease which destroys the eye-sight in the end, characterised by inflammation, swelling, burning, sensation, mucopurulent discharge and frequent pain (சா.அக.);.

த.வ. கண் நலிநோய்.

அட்சிபுருவம்

 அட்சிபுருவம் aṭciburuvam, பெ. (n.)

   கண் புருவம்; eye-brow (சா.அக.);.

     [அட்சி + புருவம்.]

     [Skt. aksi → த. அட்சி.]

புரு → புருவம் = கண்மேலுள்ள மயிர் வளைவு.

அட்சிலோமண்

 அட்சிலோமண் aṭcilōmaṇ, பெ. (n.)

   கண்மயிர்; eye-lash (சா.அக.);.

அட்சீபம்

அட்சீபம் aṭcīpam, பெ. (n.)

   1. மாமரத்தில் ஒரு வகை; a species of mango tree.

   2. முருங்கை; drumstick tree, Moringa pterygosрета (சா.அக.);.

அட்டகசம்

 அட்டகசம் aṭṭagasam, பெ. (n.)

   ஆடாதோடை; Malabar nut tree, justicewort, Adhatoda wasica (சா. அக.);.

 அட்டகசம் aṭṭagasam, பெ. (n.)

   ஆடாதோடை; Malabar nut trees, JusticeWort-Adhatoda vasica, a medicinal shrub commonly found in all hedges in S. India (சா.அக.);.

     [P]

அட்டகணம்

அட்டகணம்1 aṭṭagaṇam, பெ. (n.)

   நிலக்கணம், நீர்க்கணம், சந்திரகணம், இந்திரகணம் அல்லது இயமான கணம், சூரியகணம், தீக்கணம், வாயுகணம், வெளி (ஆகாச);க் கணம் என எண்வகையுடையனவும் நல்லவுந் தீயவுமாய் வருவனவுமானவும் நூன்முதற் சீர்கள் (வின்.);;த.வ. எண்கணம்.

     [அட்டம் + கணம்.]

     [Skt. astan → த. அட்டம்.]

 அட்டகணம்2 aṭṭagaṇam, பெ. (n.)

   சூலிகணம், முக்குக் கணம் (மூலக்கணம்);, ஆமக்கணம், தேரைக்கணம், மாகணம், சுழிக்கணம், கழிகணம், வறட்கணம் என வரும் எண்வகைக் கணங்கள்; a disease in children similar to tabes with progressive wasting of the body or a part of it and It consists of eight kinds, as enumerated above (சா.அக.);.

த.வ. எண்கணம்.

     [அட்டம் + கணம்.]

களம் → கணம் → Skt. gana.

அட்டகணி

 அட்டகணி aṭṭagaṇi, பெ. (n.)

அட்டகசம் பார்க்க ;see attakašam.

அட்டகணிதம்

 அட்டகணிதம் aṭṭagaṇidam, பெ. (n.)

   எண் கணிதச் செயல் முறைகள்; eight mathematical processes, viz.

     “சங்கலிதம், விபகலிதம், குணனம், பாகாரம், வர்க்கம், வர்க்கமூலம், கணம், கனமூலம்” (பிங்.);

     “குணகாரம், பரியச்சம், பாற்கரம், மூலம், மானதம், கன்மம், சலிதி, தருதம்” (சூடா.);

த.வ. எண்கணிதம்.

     [அட்டம் + கணிதம்.]

     [Skt. astan → த. அட்டம்.]

கண் → கணி → கணிதம்.

அட்டகத்தாதி

 அட்டகத்தாதி aṭṭagattāti, பெ. (n.)

   சிவப்புச் சர்க்கரைவள்ளி ; red sweet potato, panicled batatas, Ipomaea digitata alias Convolvulus balatas (சா.அக.);.

அட்டகந்தம்

அட்டகந்தம் aṭṭagandam, பெ. (n.)

   எண்வகை நறுமணப் பொருள்கள்; eight kinds of perfumes viz;

   1. சந்தனம்; sandal.

   2. அகரு; agallochum.

   3. மான்மணத்தி (கத்தூரி);; musk.

   4. பச்சைக் கருப்பூரம்; crude camphor.

   5. பச்சிலை; acheon leaf.

   6. குங்குமப்பூ; European saffron.

   7. விலாமிச்சை; kus kus.

   8. கோட்டம் (கோஷ்டம்);; costus (சா.அக.);.

த.வ. எண்கணம்.

     [அட்டம் + கந்தம்.]

     [Skt. astan → த. அட்டம்.]

காந்து → கந்து → கந்தம் → Skt. gandha.

அட்டகம்

அட்டகம் aṭṭagam, பெ. (n.)

   வசம்பு (மலை.);; sweet flag.

 அட்டகம் aṭṭakam, பெ. (n.)

   எட்டு பாகம் கொண்ட நிலக்கூறு;     “திருவடி சோமாசியார் அட்டகத்துக்கு மேக்கும்.” (SII, xiv.19.);

     [எட்டு-எட்டகம்-அட்டகம்]

 அட்டகம்1 aṭṭagam, பெ. (n.)

   மறைநூலில் அடங்கிய ஒருசார் மந்திரத்தொகுதி; a collection of mantras in the veda.

     “வருக்க முழுதும் வந்தவட் டகமும்” (கலிங். 170);.

த.வ. எட்டகம்.

     [Skt. astaka → த. அட்டகம்.]

 அட்டகம்2 aṭṭagam, பெ. (n.)

   எட்டன் தொகுதி; group of eight.

     “உருவமெலாம் பூத வுபாதாய சுத்தாட்டக வுருவ மென்னின்” (சி.சி. பர. சௌத். மறு. 17);.

     [Skt. astaka → த. அட்டகம்.]

அட்டகராசி

 அட்டகராசி aṭṭagarāci, பெ. (n.)

   சிறுசிமிட்டி; an unidentified plant (சா.அக.);.

அட்டகருமக்கரு

 அட்டகருமக்கரு aṭṭagarumaggaru, பெ. (n.)

   மாய (வித்தை); கூட்டுப் பொருள்கள்; ingredients for magical preparations employed in the atta-karumam, q.v., as plants, roots, skins, bones, flesh.

     [அட்ட + கருமம் + கரு.]

     [Skt. astan → த. அட்டம்.]

     [கரு → கருமம் → Skt. karman.

அட்டகருமசித்தி

 அட்டகருமசித்தி aṭṭagarumasitti, பெ. (n.)

   எண் வகை தொழில்களினாலடையும் பேறு (சித்தி);; an accomplished success derived from the practice of the eight kinds of magic success in witchery (சா.அக.);.

     [அட்ட + கருமம் + சித்தி.]

     [Skt. asta → த. அட்டம். Skt. siddhi → த. சித்தி.]

குரு → கரு → கருமம் → Skt. karman.

அட்டகருமப்பலகை

 அட்டகருமப்பலகை aṭṭagarumappalagai, பெ. (n.)

   எண் வகை தொழிலுக்கும் பயன்படுத்தும் வெவ்வேறு மரங்களால் செய்த உட்காரும் மணைகள்; eight sitting planks made of different kinds of Wood and used while chanting mantrams in the performance of the eight kinds of magic. They are respectively used according to ten prescribed rules of mantric science (சா.அக.);.

     [அட்டம் + கருமம் + பலகை.]

     [Skt. astan → த. அட்டம்.]

கரு → கருமம் → Skt. karman.

அட்டகருமம்

 அட்டகருமம் aṭṭagarumam, பெ. (n.)

   எண்வகை மாயக்கலைகள் (வசியம், மோகனம், தம்பனம், உச்சாடனம், ஆகர்ஷணம், வித்துவேஷணம், பேதனம், மாரணம்);; the eight magic arts.

     [அட்டம் + கருமம்.]

     [Skt. astan → த. அட்டம்.]

குல் → குரு → கரு → Skt. karman.

அட்டகவுடலம்

அட்டகவுடலம் aḍḍagavuḍalam, பெ. (n.)

அட்டகம்2 பார்க்க;see attagam2.

அட்டகாசம்

அட்டகாசம்1 aṭṭakācam, பெ. (n.)

   1. பெருநகை; loud laughter.

     “அனலுமிழ் கண்களு மட்டகாசமும்” (பிரபோத. 18, 74.);.

   2. ஆர்ப்பாட்டம்; pomp, parade, ostentation.

த.வ. வெற்றாட்டம், கொட்டம் அடித்தல், நகையாட்டம்.

     [Skt. atta-hasa → த. அட்டகாசம்.]

 அட்டகாசம்2 aṭṭakācam, பெ. (n.)

   1. கொடுஞ்சொல்; atrocity.

     ‘கொள்ளைக் காரர்களின் அட்டகாசம் பொறுக்க முடியவில்லை’.

   2. ஆர்ப்பாட்டம்; uproar.

     ‘குழந்தை அழுது அட்டகாசம் செய்துவிட்டது’.

   3. விளம்பரப்படுத்திக் கொள்ளும் முறை; ostentatious display.

     ‘முகத்தில் மூக்குத்தி, காதில் வைரக்கம்மல் என்று அட்டகாசத்துடன் காணப்பட்டாள்’.

   4. மிகச்சிறப்பு; superb, excellence.

     ‘என்ன அட்டகாசமாக ஆடினாள் தெரியுமா?’.

த.வ. கொட்டம் கொடும்பாடு.

     [Skt. alta-hasa → த. அட்டகாசம்.]

அட்டகிராம்

 அட்டகிராம் aṭṭagirām, பெ. (n.)

   எருமையூரில் (மைசூர்); இருக்கும் அசுகாவிலிருந்து வரும் ஒருவகை வெள்ளைச் சருக்கரை; a granulated white sugar exported from Aska in Mysore (சா.அக.);.

அட்டகிரி

 அட்டகிரி aṭṭagiri, பெ. (n.)

அத்தகிரி (பிங்.); பார்க்க;see atta-kiri.

     [Skt. astan + giri → த. அட்டகிரி.]

அட்டகீடம்

 அட்டகீடம் aṭṭaāṭam, பெ. (n.)

   ஒணான், தவளை, அடவி ஈ, வீட்டுப்பல்லி, காட்டுக் கொசு, குளவி, மலைக் கட்டெறும்பு, சிலந்திப் பூச்சி ஆகிய எட்டுவகை நச்சுயிரிகள்; the eight kinds of poisonous creatures viz., bloodsucker, frog, jungle-fly, house-lizard, malarial mosquito, wasp, stick ant and the spider (சா.அக.);.

     [அட்ட(ம்); + கீடம்.]

     [Skt. astan → த. அட்டம்.]

கீள் → கீழ் → கீழம் → Skt. kita.

     [P]

அட்டகுட்டம்

 அட்டகுட்டம் aṭṭaguṭṭam, பெ. (n.)

   எட்டு வகையான குட்ட நோய்; the eight kinds of leprosy.

த.வ. எண்குட்டம்.

     [அட்ட(ம்); + குட்டம்.]

     [Skt. asta → த. அட்டம்.]

குட்டு → குட்டம் → Skt. kusta.

அட்டகுணம்

 அட்டகுணம் aṭṭaguṇam, பெ. (n.)

   கடவுளின் எண்குணம்; the eight attributes of god.

த.வ. எண்குணம்.

     [Skt. astan → த. அட்ட(ம்);.]

குள் → குணம் → Skt. guna.

அட்டகுன்மம்

அட்டகுன்மம் aṭṭaguṉmam, பெ. (n.)

செரியாமையினாலெழுந்த எட்டு வகை குணங்களுடைய குன்ம நோய்கள். அவையாவன:

   1. எரி,

   2. உமட்டல் செய்தல்,

   3. இசிவு (சன்னி);,

   4. சிலேத்துமம்,

   5. சூலை,

   6. பித்தம்,

   7. வலி,

   8. ஊதை (வாதம்);; the eight kinds of indigestion. or dyspepsia characterised by

த.வ. எண்குத்தல்வலி.

     [அட்டம் + குன்மம்.]

     [Skt. astan → த. அட்டம்.]

குல் (குத்தல், வலி); → குன்மம் → Skt. gulma.

அட்டகுன்மலேகியம்

அட்டகுன்மலேகியம் aṭṭaguṉmalēgiyam, பெ. (n.)

   வயிற்றுநோய், வயிற்றுப்பிசம், செரியாமை முதலிய எட்டுவகை நோய்கள் தீருவதற்காக, அகத்தியர் வைத்திய காவியம் 1500-இல் சொல்லியுள்ளபடி உருவாக்கும் ஒருவகை இளகியம்; an electuary prepared as per process laid down in Agastya’s work (1500); on medicine. It is prescribed for eight kinds of dyspepsia such as, Colic, tympanities, indigestion etc. (சா.அக.);.

த.வ. குத்தல்வலி இளகியம்.

     [அட்டம் + குன்மம் + இலேகியம்.]

     [Skt. astan → த. அட்ட. Skt. lehya → லேகியம்.]

அட்டகுறி

 அட்டகுறி aṭṭaguṟi, பெ. (n.)

   நோயாளிகட்கு மருத்துவம் செய்வதற்கு முன் மருத்துவர்கள் கண்டறிய வேண்டிய எண்வகை அடையாளங்கள்; eight different kinds of tests to be applied or attended to by a physician before arriving at a correct diagnosis (சா.அக.);.

த.வ. எண்குறி.

     [அட்ட(ம்); + குறி.]

     [Skt. astan → த. அட்ட(ம்);.]

குல் → குறு → குறி.

அட்டகுலசெல்வம்

 அட்டகுலசெல்வம் aṭṭagulaselvam, பெ. (n.)

அட்டசித்தி பார்க்க;see atta-sitti (சா.அக.);.

     [அட்ட(ம்); + குலதெய்வம்.]

     [Skt. astan → த. அட்ட(ம்);.]

குல் → குலம் → Skt. kula. செல் → செல்வம்.

அட்டகுவடு

 அட்டகுவடு aḍḍaguvaḍu, பெ. (n.)

   திராமலை; a mountain containing a mineral called thara (copper and spelter); (சா.அக.);.

அட்டகை

அட்டகை1 aṭṭagai, பெ. (n.)

 the eight tithi.

     [Skt. astaka → த. அட்டகை.]

 அட்டகை2 aṭṭagai, பெ. (n.)

   1. ஒரு வேள்வி (திவா.);; a sacrifice.

   2. இறந்த நாட்கடன் வகை (கூர்ம உத்தரகா. அழற்க. 3);; sraddha or worship of the manes on the eighth tithi after the full moon in the 9th, 10th, and 11th solar months.

     [Skt. astaka → த. அட்டகை.]

அட்டகோணம்

அட்டகோணம்1 aṭṭaāṇam, பெ. (n.)

   1. எட்டு மூலையையுடைய உருவம்; octagon.

   2. எட்டு மூலை; the eight points of the compass.

த.வ. எண்கோணம்.

     [அட்டம் + கோணம்.]

     [Skt. astan → த. அட்ட(ம்);.]

கோண் → கோணம் → Skt. kona.

 அட்டகோணம்2 aṭṭaāṇam, பெ. (n.)

   1. மூச்சை உள்ளிழுத்தல் (பூரகம்);; yogi’s method of scientific inhalation.

   2. எண்கோணமுள்ள மறைமொழிச் சக்கரம்; an octagonal diagram used in magic (சா.அக.);.

     [அட்டம் + கோணம்.]

     [Skt. astan → த.அட்டம்.]

கோண் → கோணம்.

அட்டக்கரி

 அட்டக்கரி aṭṭakkari, பெ. (n.)

   மிகக் கருப்பு, மிகக் கருப்பானது ; jet black, that which is jet black.

ம. அட்டக்கரி

     [ஒருகா. அண்டம் (அண்டங்காக்கை); போன்ற கருப்பு என்றிருக்கலாம். ஒ.நோ.; நண்டுவாய்க் காலி → நட்டுவாய்க்காலி.]

அட்டக்கருப்பு

அட்டக்கருப்பு aṭṭakkaruppu, பெ. (n.)

   மிகக் கருப்பு, மிக்க கருப்பு; jet black.

     ‘கறுப்பு’ என்னும் வடிவம் சினத்தைக் குறிக்குஞ் சொல்லாதலால், கருநிறத்தைக் குறிக்குஞ் சொல்லைக் ‘கருப்பு’ என்றே சொல்லவும் எழுதவும் வேண்டும்.

     “கறுப்புஞ் சிவப்பும் வெகுளிப் பொருள்” என்று தொல்காப்பியம் (சொல், உரி. (5); கூறுதல் காண்க.

அட்டக்காய்

 அட்டக்காய் aṭṭakkāy, பெ. (n.)

   சாதிக்காய்; nutmeg, Myristica fragrans (சா.அக.);.

அட்டங்கால்

 அட்டங்கால் aṭṭaṅgāl, பெ. (n.)

அட்டணைக் கால் பார்க்க ;see attanai-k-kal.

அட்டசருமக்கரு

 அட்டசருமக்கரு aṭṭasarumakkaru, பெ. (n.)

   எட்டு வகை செய்வினைகளில் பயன்படுத்தும் கருமருந்து; a black magical paint used for attaining success in the practice and performance of the eight kinds of black magic consisting of roots, plants, bones, skin etc., as ingredients (சா.அக.);.

     [அட்டசருமம் + கரு.]

     [Skt. astan + carman → த. அட்டசருமம்.]

கள் → கரு.

அட்டசாந்திநெய்

அட்டசாந்திநெய் aṭṭacāndiney, பெ. (n.)

   அகத்தியர் வைத்தியகாவியம் 1500இல் சொல்லப்பட்டுள்ள எலும்புருக்கி, பெரும்பாடு, முதலிய எட்டுவகை நோய்களுக்குக் கொடுக்கும் மருந்து நெய்; a medical ghee in cow’s ghee prescribed for eight diseases viz. tuberclosis of the bone, consumption menorhagia etc. as contemplated in Agastyar’s work (1500); on medicines (சா.அக.);.

த.வ. எண்நோய் நெய்மம்.

அட்டசாரநிகண்டு

 அட்டசாரநிகண்டு aṭṭacāranigaṇṭu, பெ. (n.)

   தேரையர் செய்த, ஒரு தமிழ் மருத்துவ நூல்; a medical treatise compiled in Tamil by Terayar (சா.அக.);

அட்டசித்தி

 அட்டசித்தி aṭṭasitti, பெ. (n.)

   ஒக வழியைக் கடைப்பிடித்த சித்தர்கள் அடையும் எட்டுவகைப் பேறுகள் (பலன்கள்);; the eight kinds of siddhis or super human powers attained by Siddhars eddicted to yoga practice.

த.வ. எண்பேறு.

     [அட்ட(ம்); + சித்தி.]

     [Skt. astn → த. அட்ட(ம்);.]

செ → செத்து → சித்து → சித்தி → Skt. siddha.

அட்டசித்துக்குளிகை

 அட்டசித்துக்குளிகை aṭṭasittugguḷigai, பெ. (n.)

   எண் பெரும் பேறு (அட்டமா சித்தி);களை அடைவதற்கு மூலமாகச் சித்தர்கள் பயன்படுத்தும் சாரணை தீர்க்கப்பட்ட ஒரு இதளிய (இரச);க் குளிகை; a kind of mercurial pill sufficiently animated and used by Siddhars with a view to help them in exercising the eight super human powers attained by them (சா.அக.);.

த.வ. எண்பேற்றுக்குளிகை.

     [அட்டம் + சித்து + குளிகை.]

     [Skt. astan → த. அட்ட(ம்);.]

செ → செத்து → சித்து → Skt. siddhi.

குளம் → குளிகை → Skt. gulika.

அட்டசுபம்

 அட்டசுபம் aṭṭasubam, பெ. (n.)

   எண்வகை மங்கலப் பொருள் (யாழ்.அக.);; the eight auspicious objects.

த.வ. எண்மங்கலம்.

     [Skt. astan + subha → த. அட்டசுபம்.]

அட்டசூரணம்

அட்டசூரணம் aṭṭacūraṇam, பெ. (n.)

எல்லாவகை வளிநோய்களுக்கும் கொடுக்கப்படும்

   1. திரிகடுகு,

   2. பருத்தி விதை,

   3. கழற்சிப் பருப்பு,

   4. பெருங்காயம்,

   5. வளையலுப்பு,

   6. இந்துப்பு,

   7. கல்லுப்பு,

   8. கருவேம்பு ஆகிய எண்வகைச் சரக்குகள் சேர்ந்த மருந்துப்பொடி; a powdered mixture consisting of eight drugs viz.

   1. traid (of dry ginger pepper and long pepper);.

   2. cotton seed.

   3. bondue seed.

   4. asafoetida.

   5. glass gall (felvitriol);.

   6. rock salt.

   7. seasalt.

   8. black neem, a good remedy for all kinds of rheumatic affections and other disorders of vayu, if given onixed in proper mediams such as honey, ghee etc., as prescribed (சா.அக.);.

த.வ. எண்பொடி.

     [Skt. astan + curna → த. அட்டசூரணம்.]

அட்டசூலை

அட்டசூலை aṭṭacūlai, பெ. (n.)

   1. எட்டுவகை சூலைநோய்; eight kinds of diseases characterised by piercing or darting pain.

   2. எரு (மல); வாயில் கடுத்துச் சிறுநீர் துளித்துளியாய் விழும் ஒரு சூலைநோய்; a servere darting pain in the rectam attended with the passing of urine in drops (சா.அக.);.

த.வ. எண்சூலை.

அட்ட(ம்); + சூலை.]

     [Skt. astan → த. அட்ட(ம்);.]

சூல் → சூலை → Skt. sula.

அட்டணக்கால்

அட்டணக்கால் aṭṭaṇakkāl, பெ. (n.)

ஒரு கால் மேல் மற்றொரு காலைப் போடுதல். (கொ.வ.வ.சொ.36);.

   அட்டணைக்கால் பார்க்க; see attanam-kkal,

     [அட்டனை-அட்டணம்+கால்]

      [P]

அட்டணங்கால்

 அட்டணங்கால் aṭṭaṇaṅgāl, பெ. (n.)

அட்டணைக்கால் ;see attanai-k-kal.

அட்டணை

 அட்டணை aṭṭaṇai, கு.வி.எ. (adv.)

   குறுக்கே (வின்.); ; across.

     [அட்டம் + அணை.]

அட்டணைக்கால்

அட்டணைக்கால் aṭṭaṇaikkāl, பெ. (n.)

   1. உட்கார்கையிற் கால்மேல் காலாகக் குறுக்காக மடக்கிவைக்குங் கால்; folded legs in sitting cross-legged.

   2. கால்மேல் குறுக்காக இடுங்கால் ; one leg placed over the other in sitting, cross-legged.

     [அட்டம் + அணை + கால். அட்டம் = குறுக்கு. அணை = அணைக்கை, தழுவுகை, சேர்க்கை.]

து. அட்டகாரு

அட்டணைக்கால் போட்டிரு-த்தல்

அட்டணைக்கால் போட்டிரு-த்தல் aṭṭaṇaikkālpōṭṭiruttal,    3 செ.கு.வி. (v.i.).

   நாற்காலி போன்ற இருக்கைகளில் கால்மேல் காலிட்டு அமர்ந்திருத்தல்; to sit cross-legged, especially on a raised seat like a stool, chair or bench.

     [அட்டம் = குறுக்கு. அணை = அணைக்கை, தழுவுகை, சேர்க்கை. அட்டம் + அணை – அட்டணை.]

     [P]

அட்டதந்திரவாதம்

 அட்டதந்திரவாதம் aṭṭadandiravādam, பெ. (n.)

   உணர்ச்சியற்று, வாய் நீர் கசந்து, பற்கிட்டி, மூச்சற்றுப் பிணத்தைப் போற்கிடக்கச் செய்யும் ஒர் ஊதை (வாத); வளி நோய்; a nervous affection marked by loss of consciousness, bitter taste, lock jaw, breathlessness, and prostration, Asthenia (சா.அக.);.

அட்டதற்கம்

 அட்டதற்கம் aṭṭadaṟkam, பெ. (n.)

   இலவங்கப்பூ; the flower of the clove tree.

 Carophyllum aromaticus (சா.அக.);.

அட்டதளம்

 அட்டதளம் aṭṭadaḷam, பெ. (n.)

   எட்டு இதழ்களையுடைய தாமரைப் பூ; a lotus flower with eight petals (சா.அக.);.

த.வ. எட்டிதழ்.

     [அட்டம் + தளம்.]

     [Skt. astan → த. அட்டம்.]

தள் → தளம் → Skt. tala.

அட்டதா

அட்டதா aṭṭatā, பெ. (n.)

   1. எட்டுப்பிரிவு; eight Sections or divisions.

   2. எண்மடங்கு; eight times (சா.அக.);.

     [Skt. astan → த. அட்டதா.]

அட்டதாதிகம்

 அட்டதாதிகம் aṭṭatātigam, பெ. (n.)

   சிறுகொன்றை; small leaved cassiatree, Cassia fistvea (சா.அக.);.

அட்டதாது

அட்டதாது aṭṭatātu, பெ. (n.)

   வெள்ளி, பொன், செம்பு, இரும்பு, வெண்கலம், தராவங்கம், வெள்ளடம் (துத்தநாகம்); ஆகிய எண்வகை மாழை (உலோகம்);கள்; the eight kinds of minerals such as gold, silver, copper, iron, bellmetal, the dark metal (of copper and spelter);, lead or tin and zinc (frt. 95.);.

த.வ. எண்மாழை.

     [Skt. astan → த. அட்ட(ம்);.]

அட்டதானப்பரிட்சை

 அட்டதானப்பரிட்சை aṭṭatāṉappariṭcai, பெ. (n.)

   மருத்துவர்கள், நோயாளிகளின் நோய் நாடிப் பார்க்கும் போது நாடி, முகம், மலம், சிறுநீர் (அமுரி);, கண், நாக்கு, உடம்பு, குரல் (தொனி);, முதலியவற்றைக் கவனித்து தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள்; the examination of a patient in the following eight points with a view to correct diagnosis namely pulse, facial expression, stool, urine, eyes, tongue, the body in general and the voice, objective signs (சா.அக.);.

த.வ. எட்டிடத்தெரீ.

     [அட்டம் + தானம் + பரிட்சை.]

     [Skt. astan → த. அட்ட(ம்); Skt. pariksit → த. பரிட்சை.]

அட்டதானம்

 அட்டதானம் aṭṭatāṉam, பெ. (n.)

   உடம்பிலுள்ள எட்டு இடங்கள்; the eight situations in the body, viz, pulse, face, faces, urine, eye, tongue, body and voice (சா.அக.);.

த.வ. எட்டிடம்.

     [அட்ட(ம்); + தானம்.]

     [Skt. astan → த. அட்டம்.]

தா → தானம் → Skt. tana.

அட்டதாய்

 அட்டதாய் aṭṭatāy, பெ. (n.)

   சாமூலம், கொடி வேலி, எருக்கு, நெருஞ்சில், மாவிலங்கு, முதலிய தாயைப் போன்ற எண்வகை மூலிகைகள்; the eight kinds of mother drugs such as laburnam, leadwort, mudar, calrop, garic pear, etc. (சா.அக.);.

     [அட்டம் + தாய்.]

     [Skt. astan → த. அட்டம்.]

தம் + ஆய் → தாய்.

அட்டதிக்கயம்

 அட்டதிக்கயம் aṭṭadikkayam, பெ. (n.)

   எண்திசைகளில் காவல் புரியும் யானைகள்; elephants guarding the eight points of the compass.

த.வ. எண்திசையானை.

     [அட்டம் + திக்கு + கயம்.]

     [Skt. astan → த. அட்டம்.]

கய → கயம் → Skt. gaja.

     [P]

அட்டதிக்கு

 அட்டதிக்கு aṭṭadikku, பெ. (n.)

   எண்திசை; the eight points of the compass.

த.வ. எண்டிசை.

     [அட்டம் + திக்கு.]

     [Skt. astan → த. அட்டம்.]

அட்டதிக்குப்பாலகர்

 அட்டதிக்குப்பாலகர் aṭṭadigguppālagar, பெ. (n.)

   எட்டுத் திசைகளைக் காப்பதாக வடநூலார் கருதும் இந்திரன், அக்கினி, எமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், வடகீழ் திசையோன் (ஈசானன்); முதலானோர்; regents of the eight points of the compass, as world.

த.வ. எண்திசைக்காவலர்.

     [அட்ட + திக்கு + பாலகர்.]

     [Skt. astan → த. அட்ட(ம்);. Skt. pălaka → த. பாலகர்.]

அட்டதிசம்

 அட்டதிசம் aṭṭadisam, பெ. (n.)

   எருக்கு (மலை.);; madar, Calotropis gigantea.

அட்டதிசை

 அட்டதிசை aṭṭadisai, பெ. (n.)

அட்டதிசம் பார்க்க ;see attadi§am (சா.அக);.

அட்டதீரசம்

 அட்டதீரசம் aṭṭatīrasam, பெ. (n.)

   இரும்பு அரப்பொடி (பரி.அக.); ; iron filings.

அட்டதேறல்

அட்டதேறல் aṭṭatēṟal, பெ. (n.)

   காய்ச்சிய மது; distilled arrack.

     “அட்ட தேறலு மடாதமை தேறலும்” (கந்தபு. மகேந் நகர்புகு. 60);.

     [அடு → அட்ட = காய்ச்சிய. தேறு → தேறல் = தெளிவு, தெளிந்த மது, மது.]

அட்டநவகண்டம்

 அட்டநவகண்டம் aṭṭanavagaṇṭam, பெ. (n.)

   பழுவெலும்பு; rib-bone (சா.அக.);.

அட்டநாகபந்தம்

 அட்டநாகபந்தம் aṭṭanākabandam, பெ. (n.)

   சித்திரபா வகை; metrical composition which is fitted into a diagram representing eight snakes.

     [அட்டம் + நாகம் + பந்தம்.]

     [Skt. astan → த. அட்டம்.]

நகர் → நரகம் → Skt. naga.

அட்டநேமிநாதர்

 அட்டநேமிநாதர் aṭṭanēminātar, பெ. (n.)

அட்டனம்

அட்டனம் aṭṭaṉam, பெ. (n.)

   1. வட்ட வடிவமாகிய பரிசை; round shield.

   2. சக்கரப் படை (சிந்தா. நி.);; discus. Skt. attana

     [வட்டம் → வட்டனம் → அட்டனம்.]

அட்டனாதிப்பூடு

 அட்டனாதிப்பூடு aṭṭaṉātippūṭu, பெ. (n.)

   பெருந்தும்மட்டி; a large variety of bitter apple cucumis colocynthis (சா.அக.);.

அட்டன்

அட்டன் aṭṭaṉ, பெ. (n.)

   எண் வடிவமான சிவபெருமான் (தேவா. 855, 8.);; Sivan, as having atta-muttam q.v.

த.வ. எண்வடிவன்.

     [Skt astan → த. அட்டன்.]

அட்டபதபத்திரம்

 அட்டபதபத்திரம் aṭṭabadabaddiram, பெ. (n.)

   பொற்கூடு; gold leaf (சா.அக.);.

அட்டபந்தனம்

அட்டபந்தனம் aṭṭabandaṉam, பெ. (n.)

   தீங்குவராமல் தடுப்பதற்குத் திக்குத் தேவதைகளை மந்திரத்தால் எண் திசைகளிலும் நிறுத்துகை (சிந்தா. நி. 75.);; posting by incantations the regents of the eight cardinal points round a place toward of evil.

த.வ. எண்கட்டு.

     [அட்டம் + பந்தனம்.]

     [Skt. astan → த. அட்டம்.]

பந்தம் → Skt. bandha → bandhana.

அட்டபந்தம்

 அட்டபந்தம் aṭṭabandam, பெ. (n.)

   கடவுள் சிலைகள் அசைவற்றிருக்கும்படி அடியிடத்துச் சாத்தப்படும், ஒரு வகைக் கலவைச்சாந்து; a kind of prepared cement used to fix the stone idol firmly at its base.

     [அட்ட + பந்தம்.]

     [Skt. astan → த. அட்டம்.]

பற்று → பத்து → பந்து → பந்தம் → Skt. bandha.

அட்டபரிசம்

 அட்டபரிசம் aṭṭabarisam, பெ. (n.)

அட்டமெய்ப் பரிசம் பார்க்க;see atta-mey-p-parisam.

தட்டல், பற்றல் தடவல், தீண்டல், குத்தல், வெட்டல், கட்டல், ஊன்றல் (பிங்.);.

த.வ. எண்வகைமெய்யுணர்வு.

     [Skt. astan + sparisa → த. அட்டபரிசம்.]

அட்டபாதம்

அட்டபாதம் aṭṭapātam, பெ. (n.)

   1. எட்டுக்கால் பூச்சி; any eight legged insect.

   2. சிலந்திப்பூச்சி; the spider (சா.அக.);.

த.வ. எண்காலி.

     [Skt. astan → த. அட்டம்.]

பதி → பதம் → பாதம் → Skt. påda.

     [P]

அட்டபாலகர்

அட்டபாலகர் aṭṭapālagar, பெ. (n.)

அட்டதிக்குப்பாலகர் பார்க்க;see alta-tikku-p-p-palagar.

     “அட்டபாலகரும் வசுக்களும்” (நல். பாரத. குமாரச். 103.);.

 ISkt. astan + palaka → த. அட்டபாலகர்.]

அட்டபிரமி

 அட்டபிரமி aṭṭabirami, பெ. (n.)

   பெரும்பிரமி; a large species of பிரமி, a plant, Gratiola monieri (சா.அக.);.

அட்டபுகைச்சொல்

 அட்டபுகைச்சொல் aṭṭabugaiccol, பெ. (n.)

   ஆமணத்தி; a concretion found in the stomach and the intestines of Some animals such as cow etc., bezoar (சா.அக.);.

அட்டபுட்பம்

அட்டபுட்பம் aṭṭabuṭbam, பெ. (n.)

   1. எண்வகை மலர்கள்; eight kinds of flowers used in daily worship.

     “புன்னை, வெள்ளெருக்கு, சண்பகம், நந்தியாவர்த்தம், நீலேற்பலம், பாதிரி அலரி, செந்தாமரை” (புட்ப. 20);.

   2. எண்வகை அறங்கள்; eight virtues necessary for mental worship.

     “கொல்லாமை, ஐம்பொறியடக்கல், பொறை, அருள், அறிவு, வாய்மை, தவம், அன்பு” (ஆசார்ய);.

த.வ. எண்மலர்.

     [Skt. astan + puspa → த. அட்டபுட்பம்.]

அட்டப்பல்லக்கு

 அட்டப்பல்லக்கு aṭṭappallakku, பெ. (n.)

   குறுக்காகக் கொண்டுபோகும்படி யமைக்கப்பட்டதும், மிகப் பெரியோர்க்கே பயன்படுத்தப்படுவதுமான சிவிகை வகை; palanquin with curved roof having poles fixed at right angles to its body, so that it can be carried from the sides, used only for the most eminent persons.

     [அட்டம் + பல்லக்கு.]

அட்டமகசித்துக்குளிகை

 அட்டமகசித்துக்குளிகை aṭṭamagasittugguḷigai, பெ. (n.)

   எட்டு முறை சாரணை தீர்ந்த ஈரப்பதமான இதளியக் குளிகை; a mercurial pill animated eight times and endowed with the power of taking one through the etheric region (சா.அக.);.

     [அட்டமக + சித்து + குளிகை.]

     [Skt. astamaka → த. அட்டமக(ம்);.]

செத்து → சித்து → Skt. cit.

குளம் → குளிகை → Skt. gulika.

அட்டமகாரோகம்

 அட்டமகாரோகம் aṭṭamakārōkam, பெ. (n.)

அசாத்தியரோகம் பார்க்க;see asattiya-rogam (சா.அக.);.

     [அட்ட + மகா + ரோகம்.]

     [Skt. asta → த. அட்ட.]

     [மா → Skt. maha → த. மகா.]

அட்டமக்குறி

அட்டமக்குறி aṭṭamakkuṟi, பெ. (n.)

   நோயாளிகளிடம் கவனிக்க வேண்டிய எட்டுவகைக் குறிகள்; the eight symptoms to be studied in a patient before treatment examination of 1. hand (pulse);, 2. the two eyes, 3. facial expression, 4. condition of teeth, 5, condition and colour of the tongue, 6. faeces, 7. urine, 8. the body as a whole.

த.வ. எண்குறி.

     [அட்டமம் + குறி.]

     [Skt. astan → த. அட்டமம்.]

குல் → குறு → குறி.

அட்டமங்கலம்

அட்டமங்கலம் aṭṭamaṅgalam, பெ. (n.)

   1. எண்வகை மங்கலப்பொருள் (பிங்.);; the eight auspicious objects.

     “கவரி, நிறைகுடம், கண்ணாடி, தோட்டி, முரசு, விளக்கு, பதாகை, இணைக்கயல்”.

   2. எட்டுறுப்பில் வெண்மை யுடைய குதிரை (திருவாலவா. 28, 68.);

 horse which has auspicious white marks on its chest, its four hoofs, tail, face and head.

   3. சிற்றிலக்கிய வகை (இலக்.வி.843.);; a benedictory poem of eight stanzas in asiniyaviruttam metre.

த.வ. எண்மங்கலம்.

     [அட்டம் + மங்கலம்.]

     [Skt. astan → த. அட்டம்.]

     [மங்கல் → மங்கலம் → Skt. mangala.]

அட்டமசுத்தி

அட்டமசுத்தி aṭṭamasutti, பெ. (n.)

   கொண்ட நல்லோரைக்கு எட்டாமிடத்து, எந்தக் கோளுமில்லா திருக்கை (விதான. மைந்தர்வி. 13);;

அட்டமச்சனி

 அட்டமச்சனி aṭṭamaccaṉi, பெ. (n.)

   நிலவு (சந்திர); நல்லோரைக்கு எட்டாமிடத்து நிற்குங் காரி (சனி);;த.வ. எட்டாங்காரி.

     [Skt. astama + sani → த. அட்டமச்சனி.]

அட்டமம்

அட்டமம் aṭṭamam, பெ. (n.)

   எட்டாவது; eighth sign or place or position.

     “ஒத்தவுதயத்துக் கட்டமத்தே நிற்கு மோரதிபன்” (விதான. குணா. 87.);.

     [Skt. astama → த. அட்டமம்.]

அட்டமாசித்தி

 அட்டமாசித்தி aṭṭamācitti, பெ. (n.)

   எண்பெரும்பேறு; the eight super natural powers altainable by yoga.

     [அட்டம் + மா + சித்தி.]

     [Skt. astan → த. அட்டம்.]

சித்து → சித்தி.

அட்டமாசித்திமூலி

அட்டமாசித்திமூலி aṭṭamācittimūli, பெ. (n.)

   1. அட்டகரும சித்தி, இழுத்தல், ஏவுதல் முதலிய எட்டுவகை மந்திரங்களை ஏற்குங்கால் பயன்படுத்தும் மூலிகைகள்; roots of plants possessing psychic virtues, used in the performance of the eight kinds of magic.

   2. மயக்குவதற்காகப் பயன்படும் வடக்கே ஒடிய சங்கம் வேர்; the root of monetia branched out towards the north, used in magic to bring a woman. or an enemy to one’s side.

   3. எண்வகைப் பேறுகளைப் பெற வேண்டி பயன்படுத்தும் மந்திர ஆற்றல் வாய்ந்த மூலிகைகள்; psychic plants used in the attainment of the eight superhuman powers (சா.அக.);.

த.வ. எண்பேற்றுமூலி.

     [அட்டம் + மா + சித்தி + மூலி.]

     [Skt. astan → த. அட்டம்.]

அட்டமாணியம்

 அட்டமாணியம் aṭṭamāṇiyam, பெ. (n.)

ஊதியம் வாங்காமல் செய்யும் அதிகாரம்

 non salaried people”s prerogative.

     “ஏலே, என்ன ரொம்பத்தான் அட்டமணியம் பண்ணிக்கிட்டு அலையுதே?” (வ.சொ.அக.);.

     [அட்டம்(குறுக்கு);+மணியம்]

அட்டமாந்தம்

அட்டமாந்தம் aṭṭamāndam, பெ. (n.)

   குழந்தைகளுக்குச் செரியாமையினால் உண்டாகும் எட்டுவகை மாந்த நோய்கள்; the eight kinds of children’s diseases arising from indigestion. Viz.

   1. செரியாமாந்தம்; indigestion.

   2. போர்மாந்தம்; visceral obstruction.

   3. மலடிமாந்தம்; disgust of milk.

   4. பெரு மாந்தம்; flux and cold.

   5. வளி (வாத); மாந்தம்; inflation.

   6. சுழிமாந்தம்; curling of eyes.

   7. வலி மாந்தம்; convulsions or fits.

   8. கணமாந்தம்; dysentery and fever (சா.அக.);.

த.வ. எண்மாந்தம்.

     [அட்டம் + மாந்தம்.]

     [Skt. astan → த. அட்டம்.]

மந்தம் → மாந்தம் → Skt. manda.

அட்டமி

அட்டமி aṭṭami, பெ. (n.)

   எட்டாம்நாள் (திதி);; the eighth thi.

     “அட்டமியு மேனை யுவாவும்” (ஆசாரக். 48.);.

த.வ. எண்மி.

     [Skt. astami → த. அட்டமி.]

அட்டமிகை

அட்டமிகை aṭṭamigai, பெ. (n.)

   அரைப்பலம்; a measure of weight = 1/2 palam.

     “தவித்தனிக்கங் கட்டமிகை வெவ்வேறாக” (தைலவ. தைல. 54.);.

     [Skt. astamika → த. அட்டமிகை.]

அட்டமிடு-தல்

அட்டமிடு-தல் aḍḍamiḍudal,    17 செ.குன்றாவி. (v.t.)

   சுற்றுதல் (இராட்.); ; to turn, to move round (R.);.

க. அடன; தெ. அடனமு.

     [வட்டம் → அட்டம்.]

அட்டமுகடு

 அட்டமுகடு aḍḍamugaḍu, பெ. (n.)

   உச்சி (யாழ்ப்.); ; top (J.);.

அட்டமூர்த்தம்

அட்டமூர்த்தம் aṭṭamūrttam, பெ. (n.)

   சிவனின் எண்வகை வடிவம்; the eight forms of Sivan.

     “வருமட்ட மூர்த்தமாம் வாழ்வே” (கந்தர் கலி 65.);.

த.வ. எண்மேனி.

     [Skt. astan + murta → த. அட்டமூர்த்தம்.]

அட்டமூர்த்தி

அட்டமூர்த்தி aṭṭamūrtti, பெ. (n.)

   சிவன் (தேவா.53, 8.);;Šivan as having atta-murttan, α.ν.

     [Skt astan + murti → த. அட்டமூர்த்தி.]

அட்டமூலம்

அட்டமூலம் aṭṭamūlam, பெ. (n.)

   எட்டுவகை மூலிகைகள்; the name given for a group consisting of the following eight drugs, viz. 1. according of Tamil siddha medicine either group (a); or (b); (a);

   1. கண்டு பாரங்கி; cleodendron serratum.

   2. காஞ்சொறிவேர்; tragia involucrata (root of);.

   3. கோரைக் கிழங்கு; cyperus rotandus.

   4. சித்திரமூலம்; plumbago , alias p. zeylanica.

   5. சுக்கு; dry ginger.

   6. நன்னாரி; sarasaparilla.

   7. செவ்வியம் (மிளகு);; black pepper

   8. அரத்தை; galanga (சா.அக.);.

த.வ. எண்மூலி.

     [அட்டம் + மூலம்.]

     [Skt. astan → த. அட்ட(ம்);.]

அட்டமெய்ப்பரிசம்

அட்டமெய்ப்பரிசம் aṭṭameypparisam, பெ. (n.)

   சிற்சில செயல்களினால் ஏற்படும் உடம்பின் எட்டு வகையான உணர்ச்சிகள்; the eight sensations of the body arising from eight different kinds of actions, such as:-

   1. ஊன்றல்; pressing.

   2. கட்டல்; binding.

   3. குத்தல்; stabbing or pricking.

   4. தடவல்; rubbing.

   5. தட்டல்; cutting.

   6. பற்றல்; seizing.

   7. வெட்டல்; cutting.

   8. தீண்டல்; touching (சா.அக.);.

த.வ. எண்மெய்யுறல்.

     [அட்டம் + மெய் + பரிசம்.]

     [Skt. astan → த. அட்டம். Skt. sparisa → த. பரிசம்.]

அட்டம்

அட்டம் aṭṭam, பெ. (n.)

   1. அருகு ; nearness.

     “அடர்க்கு நாய்க ளட்டமாக விட்டு” (பெரியபு. கண்ணப். 76);.

   2. பக்கம்; side.

     ‘இரண்டட்டத்திலும் மரகத கிரியைக் கடைந்து மடுத்தாற்போல்’ (அஷ்டாதச. அர்ச்சி. பிர. 3);.

   3. குறுக்கு ; opposition, cross direction.

மாட்டுக்கு அட்டத்திலே போகாதே (உவ.);.

   4. மாறு, பகை ; hostility, enmity.

     “அட்டமாக வழுதிமே லமர்க்கெழுந்த தொக்குமே” (திருவிளை. கடல்சுவற. 9);.

     [அடு → அட்டம். அடுத்தல் = பக்கஞ்செல்லுதல். அடுத்தற் கருத்தினின்று குறுகுதல், எதிர்த்தல் முதலிய கருத்துகள் தோன்றின.]

 அட்டம் aṭṭam, பெ. (n.)

   1. மேல்வாய் ; palate.

     “அட்டத்திற் கட்டி” (திருமந்; 799);.

   2. அட்டாலை ; watch-tower on a fort (நாநார்த்த);.

   3. மேல்வீடு ; apartment on flat roof (நாநார்த்த.);.

   4. மேல்மாடி; upper storey.

     ”அட்டமிடுந் துவசமும்” (இராமநா.பாலகா.17);.

   5. அரசமனை (சங்.அக.);; king’s apartment.

ம. அட்டம், க., து. அட்ட; தெ. அட்டமு; கோத, அட்த்; துட. ஒட்மு; பிராகி. அட்டோ.

     [எட்டம் → அட்டம். எட்டம் = உயரம்.]

த. அட்டம் → Skt. atta.

 அட்டம் aṭṭam, பெ. (n.)

   சாதிக்காய் (மலை.);; nutmeg.

 அட்டம் aṭṭam, பெ. (n.)

   வட்டம் (இராட்);; circle (R.);.

     [வட்டம் → அட்டம்.]

 அட்டம் aṭṭam, பெ. (n.)

   சோறு, உணவு; boiled rice, food.

ம. அட்டம்; க. அட்ட; தெ. அட்டமு.

     [அடுதல் = சமைத்தல். அடு → அட்டம்.]

அடு-தல் பார்க்க ;see adu”-.

 அட்டம்1 aṭṭam, பெ. (n.)

   வழிபாட்டு வகை(R}; a kind of obeisance.

     [Skt. astan → த. அட்டம்.]

 அட்டம்2 aṭṭam, பெ. (n.)

   எட்டு; eight (சா.அக);.

     [த. எட்டு → Skt. astan → த. அட்டம்.]

அட்டம்பக்கம்

 அட்டம்பக்கம் aṭṭambakkam, பெ. (n.)

   அடுத்த பக்கம் (யாழ்ப்.); ; adjoining side (J.);.

அட்டம்பாரி-த்தல்

அட்டம்பாரி-த்தல் aṭṭambārittal,    4 செ.கு.வி. (v.i)

   1. பக்கஞ்சார்ந்து செல்லுதல் (யாழ்ப்.);; to walk by the side, walk abreast.

   2. பக்க வாட்டில் அகலித்தல், பருத்தல் (யாழ்ப்.);; to grow in bulk as a tree, an animal (J.);.

ம. அட்டம் ; தெ. அட்டமு; க. அட்ட.

     [அடு → அட்டம். அடுத்தல் = பக்கஞ்செல்லுதல், அடுத்தற் கருத்தினின்று குறுகுதல், எதிர்த்தல் முதலிய கருத்துகள் தோன்றின.]

அட்டம்விதை

 அட்டம்விதை aṭṭamvidai, பெ. (n.)

   வாதுமைப் பருப்பு; almond kernels (சா.அக.);.

அட்டயோகம்

அட்டயோகம்1 aṭṭayōkam, பெ. (n.)

   எண்வகை ஒக நிலை; yoga consisting eight forms of discipline

     “மெய்ஞ்ஞானந் தரு மட்டயோகத் தவமே” (கந்தர்கலி. 65.);.

த.வ. எண்ஓகம்.

     [Skt. astan + yoga → த. அட்டயோகம்.]

 அட்டயோகம்2 aṭṭayōkam, பெ. (n.)

   அரப்பொடி; iron flings (சா.அக.);.

அட்டரக்கு

அட்டரக்கு aṭṭarakku, பெ. (n.)

   உருக்கிய மெழுகு அல்லது அரக்கு ; melted wax or lac.

     “அட்டரக் கனைய செவ்வாயணிநலங்கருகி” (சீவக. 468);.

     [அடுதல் = காய்ச்சுதல், உருக்குதல். அட்ட + அரக்கு – அட்டரக்கு.]

அட்டரித்தான்

 அட்டரித்தான் aṭṭarittāṉ, பெ. (n.)

   கோவைக் கொடி; a creeper, Indian caper, Bryonia grandis (சா.அக.);.

அட்டர்

 அட்டர் aṭṭar, பெ. (n.)

அட்டம் பார்க்க;see “attam”.

     [அட்டம் → அட்டர்.]

அட்டலங்காய் புட்டலங்காய்

 அட்டலங்காய் புட்டலங்காய் aṭṭalaṅgāypuṭṭalaṅgāy, பெ. (n.)

   தாய் அல்லது செவிலித்தாய்;   சிறுபிள்ளையின் கால்களை நீட்டிவைத்து, அவற்றைக் கணுக்கால்மேல் வலக்கையால் இடசாரியாகவும் வலசாரியாகவும் தடவிக் கொடுத்துக்கொண்டு, ‘அட்டலங்காய் புட்டலங்காய்’ என்று தொடங்கும் மரபுச்சொற்றொடர்களைச் சொல்லி, இறுதியில் தானே தன் வினாவிற்கு விடை சொல்லும்போது பிள்ளையைச் சுட்டிக்காட்டும் விளையாட்டுக் காலப்போக்கு; a playful pastime for a child in which, the mother or the foster-mother recites some traditional nursery rhymes beginning with the words attalangay puttalangay while she keeps stroking the ankles of the child’s outstretched legs with her right hand and finally points out towards the child answering the question she has posed in the rhymes.

மரபுச் சொற்றொடர்கள்

     ‘அட்டலங்காய் புட்டலங்காய் அடுக்கடுக் காய் மாதுளங்காய்

பச்சரிசி குத்திப் பரண்மேலே வச்சிருக்கு

மாங்கா யுடைத்து மடிமேலே வச்சிருக்கு

தேங்கா யுடைத்துத் திண்ணையிலே வச்சிருக்கு

எந்தப் பூனை தின்றது? (வினா);

இந்தப் பூனை தின்றது! (விடை);’

அட்டலங்காய்புட்டலங்காய்,

அட்டலங்காய்புட்டலங்காய், aṭṭalaṅkāypuṭṭalaṅkāy, பெ. (n.)

குழந்தைகள் காலினை நீட்டி ஆடும் விளையாட்டு. (14-7);.

 a play of childrens leg.

     [அட்டலம்+காய்+புட்டலம்+காய்]

அட்டலி

 அட்டலி aṭṭali, பெ. (n.)

   மரவகை ; a kind of tree, Jatropha glauca (Nels.);.

அட்டலோகபற்பம்

 அட்டலோகபற்பம் aṭṭalōkabaṟbam, பெ. (n.)

   எண்வகை மாழைகளின் கலப்பு; calcined compound of eight metals.

எண் வகை மாழைகளாவன: பொன், வெள்ளி, செம்பு, இரும்பு, வெண்கலம், சங்கு, ஈயம், துத்தநாகம்.

த.வ. எண்மாழைப் பொடிப்பு.

     [Skt. astan + Ioha + bhasman → த. அட்டலோகப்பற்பம்.]

அட்டலோகம்

 அட்டலோகம் aṭṭalōkam, பெ. (n.)

அட்டதாது பார்க்க;see atta-tadu (சா.அக.);.

த.வ. எண்மாழை.

     [Skt. astan + Ioha → த. அட்டலோகம்.]

அட்டளைக்கல்

 அட்டளைக்கல் aṭṭaḷaikkal, பெ. (n.)

   தரையில் அடுக்கும் நெல் மூட்டைகளுக்குக் கீழே போடப்படும்கல்; a stand like stones applied in the bottom of rice bags, to prevent mosture.

     “மூட்டைக்குக் கீழே அட்டளைக்கல் போடுதே, இல்லாட்டி ஈரம் படிக்கும்.”

     [அட்டாலை→அட்டளை+கல்]

அட்டவசியம்

 அட்டவசியம் aṭṭavasiyam, பெ. (n.)

அட்டமாசித்தி பார்க்க;see attama-sitti (சா.அக.);.

த.வ. எண்வயம்.

     [அட்டம் + வசியம்.]

     [Skt. astan → த. அட்ட(ம்);.]

வயின் → வயர் → வசம் → வசி → வசியம்.

அட்டவசுக்கள்

 அட்டவசுக்கள் aṭṭavasukkaḷ, பெ. (n.)

   அனலன் முதலான எண்வகைக் குழு தெய்வங்கள்; the eight vasus, a class of deities.

த.வ. எண்தேவர்.

     [அட்டவசு + கள்.]

     [Skt. astan + vasu → த. அட்டவசு.]

அட்டவணை

அட்டவணை aṭṭavaṇai, பெ. (n.)

   1. பொருட்பட்டி, பொருட்குறிப்பேடு, பதிவேடு, பேரேடு; index, ledger, register, catalogue.

     “அட்டவணையிட்டது போலத்தனையுந் தானிருந்து” (பணவிடு. 30);.

   2. பதிவுபெற்ற பதவியாளர் என்பதைக் குறிக்கப் பதவிப் பெயருக்குமுன் சேர்க்கும் முன்னொட்டு;    எ-டு; அட்டவணை அரசிறையாளர் (தாசில்தார்);; prefix to an official designation to imply that the person holding the office is duly registered or gazetted as in attavanai-t-tahsildar (R.F.);

க. அட்டவணெ; து. அட்டகென; மரா. அடவண.

இச் சொல் மராட்டியச் சொல்லாயினும், ஐந்திரவிடம் (பஞ்ச திரவிடம்); என்னும் பண்டை முறைப்படி இங்குத் தமிழ்ச் சொல்லாகத் தழுவப்பட்டது.

அட்டவணைக்கணக்கன்

 அட்டவணைக்கணக்கன் aṭṭavaṇaikkaṇakkaṉ, பெ. (n.)

   பேரேடெழுதுங் கணக்கன் (W.);; accountant, ledger-keeper.

     [அட்டவணை + கணக்கன்.]

அட்டவணைக்காரன்

 அட்டவணைக்காரன் aṭṭavaṇaikkāraṉ, பெ. (n.)

அட்டவணைக் கணக்கன் பார்க்க;see attavanai-k-kanakkan.

அட்டவணைச்சாலை

 அட்டவணைச்சாலை aṭṭavaṇaiccālai, பெ. (n.)

   கணக்குவேலை பார்க்குமிடம் (இராட்);; counting house, office of accountants (R.);.

     [அட்டவணை + சாலை.]

அட்டவணைப்பிள்ளை

 அட்டவணைப்பிள்ளை aṭṭavaṇaippiḷḷai, பெ. (n.)

அட்டவணைக்கணக்கன் பார்க்க;see attavanai-k-kanakkan.

     [அட்டவணை + பிள்ளை.]

பண்டை நாளிற் கணக்குவேலை பார்ப்பவர் பெரும்பாலும் வெள்ளாளர் என்னும் வேளாளராக இருந்ததனால், கணக்க வேலைக்காரர் தமக்குரிய குலப்பட்டத்துடன் கணக்கப்பிள்ளை யெனப்பட்டனர்.

அட்டவண்ணைத்திருக்கை

அட்டவண்ணைத்திருக்கை aṭṭavaṇṇaittirukkai, பெ. (n.)

   நெடுக்களவு 3 அடியும் குறுக்களவு 6 அடியுமுள்ள பெருந்திருக்கை மீன் ; sting-ray, reddish brown fish, 6 feet across and 3 feet long, Pteroplatea micrura.

     [ஒருகா. அட்டம் + வண்ணை + திருக்கை.]

அட்டவத்தனாதி

 அட்டவத்தனாதி aṭṭavattaṉāti, பெ. (n.)

   கடுகு; mustard (சா.அக.);.

அட்டவத்தி

 அட்டவத்தி aṭṭavatti, பெ. (n.)

   நெருஞ்சி, யானைநெருஞ்சில்; a thorny plant, large caltrop pedalium murex (சா.அக.);.

அட்டவருக்கம்

அட்டவருக்கம் aṭṭavarukkam, பெ. (n.)

   எண்வகை மருந்துச்சரக்கு; a group of eight drugs viz-

   1. இந்துப்பு; rock-salt-Sodil chloridam.

   2. ஓமம்; bishop’s weed-Sison Ammi.

   3. கருஞ்சீரகம்; black cumin-Negella sativa.

   4. சீரகம்; cumin seed-Cuminum Cyminum.

   5. சுக்கு; dry gingerzingiber officinales.

   6. திப்பிலி; long pepper-Piper longum.

   7. பெருங்காயம்; asafoetidaFeraula foetida.

   8. மிளகு; pepper piper Nigram (சா.அக.);.

த.வ. எண்சரக்கு.

     [Skt. astan + varga → த. அட்டவருக்கம்.]

அட்டவருக்கு

 அட்டவருக்கு aṭṭavarukku, பெ. (n.)

அட்டவருக்கம் பார்க்க;see atta-varukkam (சா.அக.);.

     [Skt asan + varga → த. அட்டவருக்கு.]

அட்டவர்க்கம்

 அட்டவர்க்கம் aṭṭavarkkam, பெ. (n.)

அட்டவருக்கம் பார்க்க;see atta-varukkam (சா.அக.);.

     [Skt. astan + varga → த. அட்டவர்க்கம்.]

அட்டவிகாரம்

அட்டவிகாரம் aṭṭavikāram, பெ. (n.)

   மாந்தர்க்குண்டான எண்வகைத் தீய குணங்கள்; the eight kinds of bad qualities in man viz.:-

   1. காமம்; lust.

   2. உட்பகை (குரோதம்);; hatred.

   3. பித்து; madness.

   4. பொறாமை (மாற்சரியம்);; envy.

   5. இவறன்மை (உலோபம்);; avarice.

   6. பெரு வேட்கை (மோகம்);; sensuality.

   7. விரைவு; severity.

   8. இடும்பு; pride (சா.அக.);.

த.வ. எண்குணக்கேடு.

     [Skt. astan + vi-kara → த. அட்டவிகாரம்.]

அட்டவிதபரீட்சை

 அட்டவிதபரீட்சை aṭṭavidabarīṭcai, பெ. (n.)

   நோயாளியின் உடல் தொடுவுணர்வு அல்லது முகம், குரல், கண், மலம், சிறுநீர், நாநாடியாகிய எட்டனையும் தீர ஆய்வு செய்து நோயை அறிகை; diagnosis of a disease, by examining the state of udai sparisam or mugam, kural, kan, malam, muttiram, nanadi of a patient.

த.வ. எண்வகை நோட்டம்.

     [Skt. astan + vidha + parikasa → த. அட்டவிதபரீட்சை.]

அட்டவித்தயேசுவரர்

அட்டவித்தயேசுவரர் aṭṭavittayēcuvarar, பெ. (n.)

   அயனந்தர், சூக்குமர், சிவோத்தமர், ஏகநேத்திரர், ஏகருத்திரர், திருமூர்த்தி, நீலகண்டர், சிகண்டி என எண்வகையராய் படைப்புத் தொழிலை இறைவனேவற்படி நடத்துவோர் (சி.சி.8, 2);; the eight agents who perform the passa-kiruttyam under the orders of išvara, viz., anandar, suksmar, sivottamar, eganelliram, tirimurtti nilakangdar, sikangdi.

த.வ. எண்கருமம்.

     [Skt. astan + vidyesvara → த. அட்டவித்தியேசுவரர்.]

அட்டவீரட்டம்

 அட்டவீரட்டம் aṭṭavīraṭṭam, பெ. (n.)

   எட்டு வீரட்டாணப் பதிகள்; eight places celebrated as the scenes of Siva’s exploits.

     [அட்ட(ம்); + வீரட்டம்.]

 Skt. astan → த. அட்ட(ம்);.]

வீரம் + தானம் → வீரட்டானம் → Skt. vira-sthana.

அட்டவூறு

 அட்டவூறு aṭṭavūṟu, பெ. (n.)

   சருச்சரை, சீர்மை, தண்மை, திண்மை, நொய்ம்மை, மென்மை, வன்மை, வெம்மை என எண்வகைப்பட்ட உணர்ச்சி (யாழ்.அக.);; the sensation to touch, of eight kinds, viz., saruccrai, sirmai, tanmai, tinai, noymmal, menmai, vanmai, vemmai.

த.வ. எண்உணர்வு.

     [அட்ட(ம்); + ஊறு.]

     [Skt astan → த. அட்டம்.]

உல் → உறு → ஊறு.

அட்டவெச்சம்

 அட்டவெச்சம் aṭṭaveccam, பெ. (n.)

   உடம்பிற் காணப்படும் எட்டுவகையான குறைபாடுகள்; the eight kinds of defects found in the body viz.

   குருடு, செவிடு, ஊமை, பேடு, இருகை, இருகால் முடம்; blindness, deafness, dumbness, impotency, lameness, lacking of two hands and two legs (சா.அக.);.

த.வ. எண்குறை, எண் ஒச்சம்.

     [அட்ட(ம்); + எச்சம்.]

     [Skt. astan → த. அட்ட(ம்);.]

எஞ்சு → எச்சு → எச்சம்.

அட்டவெற்றி

 அட்டவெற்றி aṭṭaveṟṟi, பெ. (n.)

   வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை என வெற்றியைத் தரும் எட்டுவகைப் போர்கள் (யாழ்.அக.);; the eight kinds of fight leading to victory vetci, karandai, vanji, kanji, nocci, ulinai, tumbai, vagai.

த.வ. எண்வகைப் போர்.

     [அட்ட(ம்); + வெற்றி.]

     [Skt. astan → த. அட்டம்.]

வெல் → வெற்றி.

அட்டாங்கசங்கிரகம்

அட்டாங்கசங்கிரகம் aṭṭāṅgasaṅgiragam, பெ. (n.)

   இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ‘வாக்படாச்சாரி’ எழுதிய ஓர் ஆயுள் வேதநூல்; a work on medicine written about 2000 years ago by Vakbhatachary, an authority on ayurveda (சா.அக.);.

     [Skt. astanga + sangraha → த. அட்டாங்க சங்கிரகம்.]

அட்டாங்கநமக்காரம்

 அட்டாங்கநமக்காரம் aṭṭāṅganamakkāram, பெ. (n.)

   இருகால், இருகை, இருதோள், மார்பு, நெற்றி என்ற எட்டுஉறுப்புகள்; the eight limbs of the body, viz., feet, hands, shoulders, breast and forehead.

த.வ. எண்ணுறுப்பு தொழுகை.

     [Skt.astanga + namaskara → த. அட்டாங்க நமக்காரம்.]

அட்டாங்கம்

 அட்டாங்கம் aṭṭāṅgam, பெ. (n.)

உடம்பிலுள்ள எண் வகை உறுப்புகள்:- the eight members of the body. viz-

   தலை, ஒன்று; one head.

   கை, இரண்டு; two hands.

   கால், இரண்டு; two legs.

   செவி, இரண்டு; two ears.

   மார்பு அல்லது மெய், ஒன்று; chest or the trunk (சா.அக.);.

த.வ. எண்ணுறுப்பு.

     [Skt. astanga → த. அட்டாங்கம்.]

அட்டாங்கயோகம்

 அட்டாங்கயோகம் aṭṭāṅgayōkam, பெ. (n.)

   மூச்சுக்கட்டுப்பாடு (பிராணயம்); இயமம், நெறி(நியமம்);, இருக்கை (ஆசனம்);, புலனடக்கம் (பிரத்தியாகாரம்);, ஊழ்கம் (தியானம்);, நினைவொருமை (தாரணை);, அமைதி (சமாதி); ஆகிய எட்டு ஒகப் பயிற்சி நிலைகள்; the eight told yoga precises consisting of the restraint of the appeties, religious observances, position or porture of the body, breathing in a particular way, restraining the senses, silent meditation, fixing the mind on a member of the body, silen contemplative worship.

த.வ. எண்வகை ஓகம்.

     [அட்டாங்க + ஒகம்.]

     [Skt. astanga → த. அட்டாங்கம்,ஹ

ஒகம் → Skt. yoga.

அட்டாங்கால் போடு-தல்

அட்டாங்கால் போடு-தல் aṭṭāṅgālpōṭudal,    20 செ.கு.வி. (v.i.)

   மீன்வலை சுருட்டும்போது அல்லது மீன் பிடிக்கும்போது மீனவர்கள் சிறிதே உட்கார முயன்றாற்போல் முன் கால் அகற்றி அசைந்தவாறு நடத்தல் (மீனவ.);; to step out and walk as fishermen do with knees bent almost in a sitting posture while handling their nets (Fisher.);.

     [ஒருகா. அகட்டாங்கால் போடுதல் → அட்டாங்கால் போடுதல்.]

     [P]

அட்டாசிக்காய்

 அட்டாசிக்காய் aṭṭācikkāy, பெ. (n.)

   சிறு தும்மட்டிக்காய்; a Small species of bryonia, bitter apple, Cucumis colocynthus (சா.அக.);.

அட்டாட்சரவாசி

அட்டாட்சரவாசி aṭṭāṭcaravāci, பெ. (n.)

   1. எட்டு வகை அக்கர நோய்களைக் (ரோகங்களைக்); குணப்படுத்துவது; that which cures the eight kinds of aphasiac.

   2. ஆடாதோடை; a small shrub, winter Cherry, adathoda vasica (சா.அக.);.

     [Skt.asta-aksara + vasin → த. அட்டாட்சவாசி.]

அட்டாதசகணம்

 அட்டாதசகணம் aṭṭātasagaṇam, பெ. (n.)

   பதினென் கணம்; the eighteen classes of celestial hosts.

     [அட்டாதச + கணம்.]

     [Skt. astadasan → த. அட்டாதசம்.]

குள் → கண → கணம் → Skt. gana.

அட்டாதசகுணம்

அட்டாதசகுணம் aṭṭātasaguṇam, பெ. (n.)

   உடம்பிற்குரிய பதினெண் குணங்கள்; the eigteen qualities attributed to the human system viz.

   1. வியப்பு; surprise.

   2. இன்பம்; pleasure.

   3. உவகை; delight.

   4. உறக்கம்; sleep.

   5. துன்பம்; grief.

   6. கையறவு; helplessess.

   7. நரை; greyness.

   8. நினைப்பு; thought.

   9. நீர் வேட்டடல்; thirst.

   10. நோய்; disease.

   11. பசி; hunger.

   12. அச்சம்; fear.

   13. பிறப்பு; birth.

   14. கொள்கை, நெளி; self conceit.

   15. சாவு; death.

   16. வியர்த்தல்; perspiration.

   17. வெகுளி; anger.

   18. வேண்டல்; desire or avarice (சா.அக.);.

த.வ. பதினெண்குணம்.

     [அட்டாதச + குணம்.]

     [Skt. astadasan → த. அட்டாதசம்.]

கொள் → கொணம் → குணம் → Skt. guna.

அட்டாதசமூலம்

அட்டாதசமூலம் aṭṭātasamūlam, பெ. (n.)

   பதினெட்டு வகை மூலிகை; the eighteen kinds of medicinal plants viz.

   1. எருக்கு; giant swallow wort Calotropis gigantea.

   2. கண்டங்கத்திரி; yellow berried night shade, Solanum zanthocarpam.

   3. கரந்தை; sweet basil, Olimum Basilicum,

   4. கறிமுள்ளி; black thorny shrub Solanum indicam.

   5. குமிழ்; a thorny shrub, Gmelina arborea.

   6. கொடிவேலி; lead wort, Plumbago-Zeylanica.

   7. சங்கங்குப்பி; a shrub, Valkameriainermis.

   8. சிற்றாமல்லி; small jasmina, Jasminam fragrans.

   9. தழுதாழை; a plant, cleodendron phlomoides.

   10. தூதுளை; a thorny plant, Solanum trilobatam.

   11. நன்னாரி; Indian sarasaparilla Hemidesmus indicas.

   12. நொச்சி; wilo-leaves Justicia vitex negando.

   13. பாதிரி; trumpet flower tree Bignomia chelonoides.

   14. பேராமல்லி; large jasmine, Jasminam undulatam.

   15. மாலிங்கம்; a tree, garlic pear, Crataeve

 Roxbarghil.

   16. முருங்கை; dramstick tree, Anoma moringa.

   17. வில்வம்; tree, Crataeva marmelos alias Feronia pelucida.

   18. வேர்க்கொம்பு; dried ginger, Zingiber officinale (சா.அக.);.

த.வ. பதினெண்மூலிகை.

     [அட்டாதசம் + மூலம்.]

     [Skt. astadasan → த. அட்டாதசம்.]

அட்டாதசம்

 அட்டாதசம் aṭṭātasam, பெ. (n.)

   பதினெட்டு; eighten (சா.அக.);.

     [Skt. astadasan → த. அட்டாதசம்.]

அட்டாதுட்டம்

 அட்டாதுட்டம் aṭṭātuṭṭam, பெ. (n.)

அட்டாதுட்டி (வின்.); பார்க்க;see attatutti.

தெ. அட்டாதிட்டமு.

அட்டாதுட்டி

அட்டாதுட்டி aṭṭātuṭṭi, பெ. (n.)

   தாறுமாறு; disorder, improper, rough behaviour.

     [அட்டம்+(துட்டம்); துட்டி]

 அட்டாதுட்டி aṭṭātuṭṭi, பெ. (n.)

   அடாவடி; perversity, abusive language.

     “அட்டாதுட்டிகள் பேசி” (இராமநா.ஆரணி. 9.); (இ.வ.);.

தெ. அட்டாதிட்டி.

த.வ. முறைகேடு, வக்கரிப்பு.

அட்டான்

அட்டான் aṭṭāṉ, பெ. (n.)

   கொன்றவன்; a killer

     “கடந்து அட்டான் கேழ் இருங் குன்று” (பரி 2476);.

     [அடு-அட்டான்]

அட்டாபாதம்

அட்டாபாதம் aṭṭāpātam, பெ. (n.)

   1 எட்டுக் கால் பூச்சி; eight legged insect.

   2. சிலந்திப் பூச்சி; spider.

   3. பொன்; gold.

   4. சரபப் புள்; a fabulous eight legged bird supposed to have the faculty of attacking a lion (சா.அக);.);.

த.வ. எண்காலி.

     [அட்டா + பாதம்.]

     [Skt. astan → த. அட்டா.]

பதி → பதம் → பாதம் → Skt. påda.

அட்டாமுகம்

அட்டாமுகம் aṭṭāmugam, பெ. (n.)

   1. இகழ்ச்சி, கவலை, ஐயம் இவற்றாற் கோணிய முகம்; face turned aside in contempt, distraction or perplexity.

   2. சுளித்தமுகம்; wry face.

த.வ. கோணல்முகம்.

     [அட்டா + முகம்.]

     [Skt. asta → த. அட்டா.]

முகம் → Skt. mukha.

அட்டாரி

 அட்டாரி aṭṭāri, பெ. (n.)

அட்டாலி பார்க்க (Gærsøsu);;see attali.

     [அட்டாலி → அட்டாரி.]

அட்டாலகம்

அட்டாலகம் aṭṭālagam, பெ. (n.)

   1. கோட்டை மதின்மேலுள்ள காவற்கூடம்; watch-tower on a fort.

     ‘அட்டாலகமும் மதிற்பொறியு முதலாயின’ (குறள், 744, மணக். உரை);.

   2. மேல்வீடு (சங்.அக.);; apartment on flat roof.

ம, அட்டாலகம்; க. அட்டாளக; தெ. அட்டாலகமு.

     [த. அட்டாலகம் → Skt. Attalaka.]

அட்டாலம்

 அட்டாலம் aṭṭālam, பெ. (n.)

அட்டாலை பார்க்க ;see attalai.

அட்டாலி

அட்டாலி aṭṭāli, பெ. (n.)

   மாடிவீடு (கோவை);; house with an upper floor (Cm.);.

 அட்டாலி aṭṭāli, பெ. (n.)

வீட்டின் மேல் பகுதியில் உள்ள பரண். (கொ.வ.வ.சொ.3);.

 a shelf in the roof of a house.

     [அட்டாளி-அட்டாலி]

அட்டாலிகை

அட்டாலிகை aṭṭāligai, பெ. (n.)

   1. மேல்வீடு (சங்.அக.);; apartment on an upper storey.

   2. அரசர் மனை ; royal palace.

க. அட்டாள; தெ. அட்டாலிக.

     [அட்டாலை → அட்டாலம் → அட்டாலி → அட்டாலிகை. ‘கை’ சிறுமைப்பொருட் பின்னொட்டு (aug. suf);. அட்டாலிகை → Skt. aţţālikā.]

அட்டாலை

அட்டாலை aṭṭālai, பெ. (n.)

   1. மேல்வீடு (வின்.);; apartment on an upper storey.

   2. கோட்டை மதின்மேற் காவற்கோபுரம்; watchtower on a fort.

     “கீழ்பா லிஞ்சி யணைய வட்டாலை கட்டு” (திருவாலவா. 26 10);.

   3. தோட்டம், புன்செய், ஆட்டுப்பட்டி, சிற்றுார் முதலியவற்றின் காவற்பரண் (யாழ்ப்.);; raised covered platform from which one keeps watch on a garden, a field, a sheep-fold, a village, etc.

   4. அரசர் மனை (சங்.அக.); ; royal residence.

     “கதன வாயிலுங் கட்டுமட் டாலையும்” (கம்பரா. யுத்த. முதற்போர். 32);.

   5. காப்பு (சம். அக. கை.);; protection.

   6. மரவகை (இராட்.);; a species of tree (R.);.

ம. அட்டாலம்; க. அட்டாள, தெ. அட்டடி.

     [அட்டாலை → Skt. Attala. எட்டம் → அட்டம். எட்டம் = உயரம், அட்டம் + ஆலை – அட்டாலை.]

அட்டாலைச்செட்டி

அட்டாலைச்செட்டி aṭṭālaicceṭṭi, பெ. (n.)

   பழைய காசு (நாணய); வகை (சரவண. பணவிடு. 59);; an ancient coin.

     [அட்டாலை + செட்டி. அட்டாலைச் செட்டி யென்னுங் காசு, ஒரு மாடமாளிகையில் வாழ்ந்த பெருவணிகச் செட்டியின் மாழையினாலோ (உலோகத்தினாலோ); பொருளுதவியினாலோ மாராயம் பெற்ற நெடுமொழியினாலோ அச்சு அடிக்கப்பட்டதாக இருக்கலாம்.]

அட்டாலைச்சேவகன்

அட்டாலைச்சேவகன் aṭṭālaiccēvagaṉ, பெ. (n.)

   கோட்டை மதிற் காவற்கோபுரத்திலிருந்து காவல் புரியும் பொருநன் (போர் மறவன்);; soldier keeping guard on the watch-tower of a fort.

     “சந்திர சேகரனை யட்டாலைச் சேவகனை” (சொக்க, உலா, 276);.

 Skt. sèvaka → த. சேவகன்.

     [அட்டாலை + சேவகன்.]

அட்டாலைமண்டபம்

அட்டாலைமண்டபம் aṭṭālaimaṇṭabam, பெ. (n.)

   மேல் வீடாகக் கட்டப்பட்ட மண்டபம்; big hall forming the upper storey of a mansion.

     “கீட்டிசை மருங்கோ ரட்டாலை மண்டபஞ் செய்யென வதுகேட் டெழுந்தரசன்” (திருவிளை. யானை. 23);.

அட்டாளகம்

 அட்டாளகம் aṭṭāḷagam, பெ. (n.)

   மேல்மாடி (புதுவை);; upper storey (Pond.);.

     [அட்டாலகம் → அட்டாளகம்.]

அட்டாளப்பலகை

 அட்டாளப்பலகை aṭṭāḷappalakai, பெ. (n.)

   சுவரில் பொருத்தப்பட்டிருக்கும் பொருள்கள் வைக்கும் பலகை; a wooden loft. (வ.சொ.அக.);.

த.வ. அட்டாளம்.

     [அட்டாலை→அட்டாளை+பலகை]

அட்டாளி

 அட்டாளி aṭṭāḷi, பெ. (n.)

   அட்டாளப்பலகை பார்க்க; see attala-p-palagai.

     [அட்டாலி→அட்டாளி]

அட்டாளிகை

 அட்டாளிகை aṭṭāḷigai, பெ. (n.)

அட்டாளகம் பார்க்க ;see attalagam.

அட்டாளை

அட்டாளை aṭṭāḷai, பெ. (n.)

   1. அட்டாளகம் பார்க்க ;see attalagam.

   2. காவற்பரண் (யாழ்ப்.); ; covered platform used for watching a garden (J.);.

     [எட்டம் = உயரம். எட்டம் → அட்டம் = உயரமான கட்டடம். அட்டம் + ஆலை (சாலை); – அட்டாலை → அட்டாலம் → அட்டாலி → அட்டாலிகை.

அட்டாலம் → அட்டாலகம். அட்டாலி → அட்டாரி. அட்டாலம் → அட்டாளம் → அட்டாளகம். அட்டாலை → அட்டாளை. அட்டாலை மரம் காவற்பரணாகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.

காவற் கோபுரமும் காவற் பரணும் காவற்குப் பயன்பட்டதனால், அட்டாலைச் சொல்லிற்குக் காப்புப்பொருள் தோன்றியிருத்தல் வேண்டும்.]

அட்டாளைப்பெட்டி

 அட்டாளைப்பெட்டி aṭṭāḷaippeṭṭi, பெ. (n.)

   தட்டுகள் உள்ள பேழை (இ.வ.);; case with shelves (Loc.);.

     [அட்டாளை + பெட்டி.]

அட்டாவதானம்

அட்டாவதானம் aṭṭāvatāṉam, பெ. (n.)

ஒரே நேரத்தில் எண்வகை வினைகளில் நினைவு

   செலுத்துகை; art of attending to eight matters at a time.

     “அட்டாவதானமுந் தொல்காப்பியமு மகப்பொருளும்” (தனிப்பா. 1, 223, 13.);.

த.வ. எண்நினைவாற்றல், கண்கவனகம்.

     [Skt. astan + avadhana → த. அட்டாவதானம்.]

அட்டாவதானி

 அட்டாவதானி aṭṭāvatāṉi, பெ. (n.)

   ஒரே நேரத்தில் எட்டு வினைகளில் நினைவு செலுத்துபவர்; one skilled in the art of attending to eight matters at the time.

     “அட்டாவதானி சொக்கன்” (தஞ்சைவா. உரைச்சிறப்.);.

த.வ. எண்கவனகர்.

     [Skt. astan + avadhanin → த. அட்டாவதானி.]

அட்டி

அட்டி aṭṭi, பெ. (n.)

   1. செஞ்சந்தனம் (மூ.அ.);; red sandalwood, m. tr., Pterocarpus santalinus.

   2. சந்தனம் (மு.அ.);; sandal.

   3. இலுப்பை (மு.அ.);; South Indian mahua (L.);, long-leaved bassia, Bassia longifolia (சா.அக.);.

   4. எட்டி (மு.அ.); ; strychnine, Nux vomica.

   5. குன்றிவேர் ; Indian liquorice root, Abrus precatorius (சா.அக.);.

   6. பருப்பு ; kernel of shelled seeds (சா. அக.);.

 அட்டி aṭṭi, பெ. (n.)

   முன்னங் கால்களில் கழற்காயளவு உருண்டை கட்டுங் குதிரை (அசுவசா. பக். 112);; disease of horses which forms as a ball-like growth as big as bonduc-nuts, on the forelegs.

 அட்டி aṭṭi, பெ. (n.)

   1. தாழ்ப்பு (தாமதம்);; procrastination, delay.

     “அட்டிசெய நினையாதீர்” (அருட்பா, 6, திருவருட்பேறு, 2);.

   2. தடை ; hindrance, obstacle.

கேட்டவுடன் அட்டி சொல்லாமற் பணத்தைக் கொடுத்து விட்டான் (உ.வ.);.

ம. அட்டிமறிக்குக; க., தெ. அட்டி; து. அட்டி.

     [அட்டம் = குறுக்கு. அட்டம் → அட்டி = தடை, காலத்தாழ்ப்பு.]

 அட்டி aṭṭi, பெ. (n.)

   1. கப்பலின் பின்பக்கம் (இராட்.);; stern of a ship (R.);.

   2. மரப் பறையின் (பீப்பாவின்); மேல்புறம் அல்லது அடி ; head or bottom of a cask.

     [ஒருகா. அண்டி (அடி); → அட்டி.]

 அட்டி aṭṭi, பெ. (n.)

வரிசை

 row,

     “மூட்டைஎத்தனை அட்டி வைத்தாய்.”

     [அள்-அட்டு-அட்டி]

 அட்டி aṭṭi, பெ. (n.)

   அதிமதுரம்; wild liquoriceabrus precatorius (சா.அக.);.

     [Skt. yasti → த. அட்டி.]

அட்டிகதாகம்

 அட்டிகதாகம் aṭṭigatāgam, பெ. (n.)

அதிமதுரம் பார்க்க;see adi-maduram. (சா.அக.);

அட்டிகம்

 அட்டிகம் aṭṭigam, பெ. (n.)

   சாதிக்காய் (மலை.);; nutmeg, Myristica fragrans.

அட்டிகாலா

 அட்டிகாலா aṭṭikālā, பெ. (n.)

அட்டிகதாகம் பார்க்க;see attiga-dagam (சா.அக.);.

அட்டிகை

 அட்டிகை aṭṭigai, பெ. (n.)

   கழுத்தை யொட்டி யிருக்கும் பொன் அல்லது முத்து அணிவகை; closely fitting necklace of gold wires or of precious stones.

     “அட்டிகைக்கு ஆசைவைத்து எருமைச் சங்கிலியைக் கட்டிக்கொண்டாளாம்” (பழ.);.

ம., தெ. அட்டிக; க., கூ, அட்டிகெ.

     [ஒட்டு → அட்டு → அட்டி → அட்டிகை.]

அட்டிட்டல்

அட்டிட்டல் aṭṭiṭṭal, பெ. (n.)

   சமைத்துப் படைத்தல்; to cook and serve.

     “அட்டிட்டல் காணாது போதியோ பூம் பாவாய்” (சம். 22:47:6.);.

அட்டிதாமதம்

 அட்டிதாமதம் aṭṭidāmadam, பெ. (n.)

   சிறுசீரகம்; cumin seed, Cuminum cyminum (சா.அக.);.

அட்டினம்

 அட்டினம் aṭṭiṉam, பெ. (n.)

   சீரகம் (பரி.அக.);; cumin seed, Cuminum cyminum.

அட்டிப்பேறு

அட்டிப்பேறு aṭṭippēṟu, பெ. (n.)

   செப்புப் பட்டயத்துடன் நீர்வார்த்துக் கொடுக்கப்பட்ட மரபுரிமைத் தானம் (வெட்.);; gift, hereditary possessions and rights bestowed on a person by a copper-plate charter (Insc.);.

ம. அட்டிப்பேர், அட்டிப்பேறு.

     [அட்டுதல் = வார்த்தல். பெறு → பேறு = பெறுகை. அட்டிப்பேறு = உறுதிப்பொருட்டு நீர்வார்த்துக் கொடுக்கப்பெற்ற பேறு.]

 அட்டிப்பேறு aṭṭippēṟu, பெ. (n.)

   நீர் வார்த்துக் கொடுத்து ஒப்படைத்தல்; to made gifts by pouring water on the right hand of the donee. (தெ.கோ.சா. 3:2);.

     [அட்டு + இ + பேறு]

அட்டிமதுசாரம்

அட்டிமதுசாரம் aṭṭimaducāram, பெ. (n.)

   1. அதிமதுரம்; liauorice a gulecrirrhiza glabra.

   2. நாட்டு அதிமதுரம் அல்லது குன்றி வேர்; Indian liquorice root, Abrus precatorius (சா.அக.);.

     [Skt. yasi-madhukā → த. அட்டிமது.]

அட்டிமதுரம்

அட்டிமதுரம் aṭṭimaduram, பெ. (n.)

   பூடுவகை (பு.வெ. 12, உரை.);; liquorice-plant.

த.வ. அதிமதுரம்.

     [Skt. yasti-madhukå → த. அட்டிமதுரம்.]

அட்டிமதுரி

 அட்டிமதுரி aṭṭimaduri, பெ. (n.)

அட்டிமதுசாரம் பார்க்க;see atti-madušāram (சா.அக.);.

     [Skt. yasti + madhuka → த. அட்டிமதுரி.]

அட்டிமாமதி

 அட்டிமாமதி aṭṭimāmadi, பெ. (n.)

   கரு நொச்சி; a black species of purification plant, Justicia gendarussa (சா.அக.);.

அட்டிமை

அட்டிமை aṭṭimai, பெ. (n.)

   1. சீரகம் (மு.அ.);; cumin seed.

   2. கருஞ்சீரகம் (சா.அக.); ; black cumin, Nigella sativa (சா.அக.);.

   3. ஓமம் (வின்.); ; bishop’s weed (W.);, . Sison ammi (சா.அக.);.

அட்டியம்

 அட்டியம் aṭṭiyam, பெ. (n.)

அதிமதுரம் பார்க்க;see adi-maduram (சா.அக.);.

     [Skt. yasti → த. அட்டியம்.]

அட்டியல்

அட்டியல் aṭṭiyal, பெ. (n.)

   1. அடுக்குக்கலம் (இ.வ.);; a set of vessels of cylindrical shape fitting one within the other (Loc.);.

   2. அட்டிகை பார்க்க ;see attigai.

அட்டியல் போடுதல்

 அட்டியல் போடுதல் aṭṭiyalpōṭutal, செ.கு.வி. (v.i.)

   மூட்டைகளை ஒன்றின் மேல் ஒன்றாகச் சேர்த்து அடுக்குதல்; an arrangement of bags in order, to hold each other.

     “மூட்டைகளை அட்டியல் போடு.” (வ.சொ.அக.);.

   படைத்தல்;(மாகேசுவர பூசை);; offering.

     [கட்டியில்+போடு]

அட்டியோசம்

 அட்டியோசம் aṭṭiyōcam, பெ. (n.)

   அரப்பொடி; iron filings (சா.அக.);.

அட்டிரபாணிதம்

 அட்டிரபாணிதம் aṭṭirapāṇidam, பெ. (n.)

   சிவப்புப் புளியம் பிரண்டை; a red species of sour wild vine, Vitis setosa (சா.அக.);.

அட்டிரம்

 அட்டிரம் aṭṭiram, பெ. (n.)

   இலுப்பை; long leaved bassia, Bassia longifolia (சா.அக.);.

அட்டிற்சாலை

அட்டிற்சாலை aṭṭiṟcālai, பெ. (n.)

   சமையலறை; kitchen.

     ”அட்டிற்சாலையு மருந்துநர் சாலையும்” (மணிமே. 20 ;7);.

     [அட்டில் – சாலை.]

அட்டிற்பேறு

அட்டிற்பேறு aṭṭiṟpēṟu, பெ. (n.)

   கோயிற் பணியாளர்க்குத் திருப்படையற்சோறு வழங்குவதற்காக நிறுவிய அறக்கொடை; an endowment for the distribution of food to the servants of a temple (M.E.R. 448 of 1928-9);.

     [அட்டில் + பேறு.]

அட்டிற்று

அட்டிற்று aṭṭiṟṟu, பெ. (n.)

சமையல் அறையிலுள்ள உணவு

 feast.

     “அட்டிற்றுத் தின்பவர்ஆயிரவர் ஆபவே” (படி532);

     [அட்டு+இட்டு]

அட்டிலம்

 அட்டிலம் aṭṭilam, பெ. (n.)

   வீக்கம்; swelling (சா.அக.);.

     [Skt. asta → த. அட்டிலம்.]

அட்டிலாரோகம்

 அட்டிலாரோகம் aṭṭilārōkam, பெ. (n.)

அட்டிலாவாதம் பார்க்க;see attila-vādam (சா.அக.);.

     [Skt. asta + roga → த. அட்டிலாரோகம்.]

அட்டிலாவாதம்

 அட்டிலாவாதம் aṭṭilāvātam, பெ. (n.)

   தொப்புளின் கீழாகச் சிறுநீர்ப்பை, எருவாய்க்கிடையே காற்று தங்கி, அதிகரித்துச் சிறுகல்லைப் போல் சுமையாகவும், கெட்டியாகவுமுள்ள கட்டியை எழுப்பும் வளிநோய்; a disease in which the deranged and aggravated bodily vayu incarcerated or lodged in the region between the bladder and the anus, develops a thick lumpy tumour like a pebble, which is hard and non shifting in its character (சா.அக.);.

த.வ. வளிநோய்க்கட்டி.

     [Skt asti + vata → த. அட்டிலாவாதம்.]

அட்டில்

அட்டில் aṭṭil, பெ. (n.)

   1. மடைப்பள்ளி, சமையலறை; kitchen.

     “புனிற்றுநாய் குரைக்கும் புல்லெ னட்டில்” (சிறுபாண். 132);.

   2. வேள்விக் கூடம் ; place for performing sacrificial ceremonies.

     “அட்டின் மறையோ ராக்கிய வாவுதி” (சிலப். 10;143);.

     [அடு + இல் – அட்டில்.]

அட்டில்பள்ளியார்

அட்டில்பள்ளியார் aṭṭilpaḷḷiyār, பெ. (n.)

   மடைப்பள்ளியில் உள்ளவர்; cusinary staff.

     “ஆராட்டும்பணையமாகக் கொள்வது அட்டில் பள்ளியார்பணிக்குரியார்”(El.xxxi,33);

     [அட்டியல்+பள்ளி+ஆர்]

அட்டீலிகம்

 அட்டீலிகம் aṭṭīligam, பெ. (n.)

   கல்; stone (சா.அக.);.

அட்டீலிகாரோகம்

 அட்டீலிகாரோகம் aṭṭīlikārōkam, பெ. (n.)

   ஆண்குறியில் புண்ணை (விரணத்தை);ப் பிறப்பித்து, அதில் குழி விழுந்து கல்லைப்போல் கட்டியாக இருக்கும்படிச் செய்யும் ஒருவகைக் குய்யநோய்; a disease of the penis causing deep ulcers with hardened muscles all round it (சா.அக.);.

த.வ. குய்யப்பிணி.

     [Skt. asti + roga → த. அட்டீலிகாரோகம்.]

அட்டு

அட்டு aṭṭu, பெ. (n.)

   1. வெல்லம் ; cake of unrefined sugar.

   2. பனம்பழத்திலிருந்து செய்யப்பட்ட பனாட்டு என்னும் வெல்லக்கட்டி ; dried palmyra fruit jelly.

பனாட்டு பார்க்க ;see pandttu.

க., தெ. அட்டு.

     [அடுதல் = காய்ச்சுதல். அடு → அட்டு = காய்ச்சப்பட்டது.]

 அட்டு aṭṭu, பெ. (n.)

   அழுக்கான கூழ்ச்சேறு; dirty watery mud, slush.

   2. அழுக்கு ; dirt.

அவன் அட்டுப் பிடித்தவன் (உ.வ.);.

க. ஆட்டு

     [அள்ளுதல் = செறிதல். அள் = செறிவு. அள் → அள்ளல் = நெருக்கம், (மண் செறிந்த); சேறு. அள்ளு → அட்டு = அழுக்கும் மண்ணும் செறிந்த சேறு.]

 அட்டு aṭṭu, இடை (int.)

   பிறர் கூற்றை மறுக்கும் இடைச்சொல் ; an exclamation of contradiction (Loc.);.

அட்டு, அவன் ஆறு நாளுக்குள் ஆண்டுப் பாடத்தையெல்லாம் படித்து விடுவானாம் (இ.வ.);.

அட்டு-தல்

அட்டு-தல் aṭṭudal,    5 செ.கு.வி. (v.i)

   வடிதல்; to be discharged, as pus; to flow, as honey.

     “சீயட்டு முயவுநோய்” (சீவக. 2798);.

-, 5 செ.குன்றாவி. (v.t.);

   1. வார்த்தல்; to pour, as water or oil.

     “யாப்பினு ளட்டிய நீர்” (குறள், 1093);.

   2. நீர்வார்த்துத் தானஞ் செய்தல் ; to make gifts by pouring water on the right hand of the donee.

   3. நீர்வார்த்தாற் போற் கொண்டுவருதல் ; to bring, as a river.

     “அட்டித்தரப் பணியே” (தேவா. 7.20;1);.

   4. தான பட்டயம் (சாஸனம்); அளித்தல்; to endow, , as on a temple.

     ‘கோக்கரு நந்தடக்கன்…………………… அட்டின பூமி’ (T.A.S. i. 6);.

   5. இடுதல் ; to give.

     “அளகத்தி னட்டிய தாதும்” (திருக்கோ. 122);.

   6. செலுத்துதல் (S.I.I. ii, 147);; to remit money.

க. அட்டு ; து. அட்டுனி ; கோத, அட்; துட. ஒட்.

 அட்டு-தல் aṭṭudal,    5 செ.குன்றாவி, (v.t)

   ஒட்டுதல் ; to join, stick, paste.

க. அண்டிசு ; தெ. அண்டு ; து. அண்டு ; கோத. அண்ட்; கோண். அட்க்; கொண். அட்கி, கொலா.., நா. அட்.

     [ஒட்டு → அட்டு.]

 அட்டு-தல் aṭṭudal, ஏ.து.வி. (imp. aux. v.)

   ஓர் ஈரேவல் (வினை); ஒருமையீறு ; a verbal singular suffix used as imperative auxiliary in the sense of “let’.

எ-டு : அவன் செய்யட்டு, அது வரட்டு.

இதன் பன்மையீறு ‘அட்டும்’.

எ-டு; அவன் செய்யட்டும், அது வரட்டும்.

ம. அட்டே

     [ஒட்டு → அட்டு. ஒல் → ஒள் → ஒண் → ஒட்டு. ஒட்டுதல் = இசைதல், இணங்குதல், (செய்ய); விடுதல்.]

அவன் தூங்கவொட்டார் = அவனைத் தூங்கவிடார், அவன் தூங்க இசையார்.

செய்ய + ஒட்டு – செய்யவொட்டு → செய்யொட்டு → செய்யட்டு.

செய்யட்டு – நீர் அவன் செய்யவொட்டு (ஒருமை);. செய்யட்டும் – நீர் (நீம்); அவன் செய்யவொட்டும் (பன்மை);.

ஒ.நோ ; செய் (ஒருமை);, செய்யும் (பன்மை);. ‘உம்’ பன்மையீறு. ஊம் (நூம்); → உம். நூம் → நீம் (நீர்);.

     ‘செய்யட்டு’ என்பதில் ‘செய்’ (செய்ய); என்பது படர்க்கை யேவலும் ‘அட்டு’ (ஒட்டு); என்பது முன்னிலை யேவலும் ஆகும். ஆதலால், இது இணையேவல் அல்லது இருமடியேவல்.

     ‘செய்யட்டு’ என்பது போன்றதே ‘செய்வி’, ‘உண்பி’ என்பனவும். செய்ய + ஈ – செய்யவீ → செய்வீ → செய்வி. வி → பி. உண்ணவீ → உண்ணவி → உண்வி → உண்பி.

ஒ.நோ.; “செய்யென் வினைவழி விப்பி தனிவரின் செய்வியென் ஏவல் இணையின் ஈரேவல்” (நன். 138);.

இதில் ஈரேவல் என்றது உண்மையில் மும் மடியேவல், ஈறுநோக்கியே ஈரேவல் எனப்பட்டது.

     ‘செய்யட்டு’ என்னும் ஒருமை ஏவல் வழக்கருகிப்போனதினால் ‘செய்யட்டும்’ என்னும் பன்மை ஏவலே இன்று ஒருமையாகவும் வழங்கி வருகின்றது.

 அட்டு-தல் aṭṭutal, செ.குன்றாவி.(v.t.)

   உண்பித்தல்; to hoast

     “பாசம் தீக் கட்டுப்பலி அட்டினார்கள்” (மூல.150);.

     [ஆடு-அட்டு]

அட்டு-தல்,

அட்டு-தல், aṭṭutal, செ.குன்றா.வி. (v.i.)

   செலுத்துதல்; to remit.

     “இப்படி வழுவாமேய் அட்டுக.”(SII, Xiii, 44.);.

     [அடு-அட்டு]

அட்டுக்கிறை

அட்டுக்கிறை aṭṭukkiṟai, பெ. (n.)

   பழைய வரிவகை (S.I.I. iii, 311);; an ancient tax.

     [ஒருகா. அட்டுக்கு + இறை. அட்டு = வெல்லம். இறை = வரி.]

அட்டுக்குஞ்சு

அட்டுக்குஞ்சுபெ. (n.)  aṭṭukkuñcu,

பிறந்து ஓரிருநாள்களே ஆன பறவைக் குஞ்சு (கொ.வ.வ.சொ.3);.

 a newly born bird.

     [அடு(அடை);-அட்டு+குஞ்சி]

     [P]

அட்டுக்குட்டி

அட்டுக்குட்டிபெ. (n.)  aṭṭukkuṭṭi,

பிறந்து ஓரிரு நாள்களே ஆன குட்டி (கொ.வ.வ.சொ.3);.

     [அடு.(அடை);-அட்டு+குட்டி]

      [P]

அட்டுணவு

 அட்டுணவு aṭṭuṇavu, பெ. (n.)

   சமைத்த உணவு; cooked food.

     [அட்ட + உணவு.]

அட்டுண் பார்க்க ;see attiin.

அட்டுண்

அட்டுண் aṭṭuṇ, பெ. (n.)

   சன்மத்த உணவு ; cooked food.

     “அயலறியா வட்டுணோ வில்” (பழமொழி, 148);.

     [அட்ட + ஊண்.]

அட்டுப்பால்

அட்டுப்பால்பெ. (n.)  aṭṭuppāl,

தாயினை இழந்த குட்டிகளுக்கு வளரும் வரை புட்டிலில் பால் கொடுத்தல்

 to feed with feeding bottle. (கொ.வ.வ.சொ.3);.

     [அடு+பால்]

அட்டுப்பு

அட்டுப்பு aṭṭuppu, பெ. (n.)

   1. காய்ச்சிய வுப்பு (சா.அக.); ; salt produced by evaporating sea-water.

     “அமிர்தையிங் கட்டுப்பு” (தைலவ. தைல. 129);.

   2. கறியுப்பு; common salt extracted from soils containing it, either pure, singly or in combination with other salts by the process of filtration.

   3. பூநீர் (பூநீறு);. வெடியுப்பு, சீனம், சாரம், இந்துப்பு ஆகிய இவற்றைக் காமன் தண்ணீரில் (கழுதை மூத்திரத்தில்); கணக்காய் எரித்துப் பதங்கண்டு இறக்கி ஆறியபின் கட்டியாய் நிற்கும் ஒரு வகை வைப்புச் சரக்கு (மச்சமுனி, 800);; a salt obtained by boiling pooneer, nitre, alum, sal ammoniac and rock-salt dissolved in ass’s urine.

   4. இருபத்தைந்து வகை இலவணங்களி லொன்றாகிய காய்ச்சு இலவணம்; one of the 25kinds of salt described in the Indian Medical Science.

     [அட்ட + உப்பு.]

ம. க. அட்டுப்பு ; தெ. அட்டுப்பு, அண்டுப்பு.

அட்டும்

 அட்டும் aṭṭum, ஏ.து.வி. (imp, aux, v.)

அட்டுதல் பார்க்க ;see attuo.

அட்டுழியம்

 அட்டுழியம் aṭṭuḻiyam, பெ. (n.)

   கொடுந்தீம்பு ; atrocity.

அவன் பண்ணின அட்டுழியத்திற்கு அளவில்லை (உ.வ.);.

ம. அட்டூழியம்; க. அட்டுளி.

அட்டுவார்.

அட்டுவார். aṭṭuvār, பெ. (n.)

   கோவில்களில் சமைப்பவர்; temple cook.

     “திருமடைப்பள்ளி அட்டுவார்இருவற்கும் (El,xxviii,47.);.

     [அடு-அட்டு+ஆர்]

அட்டுவி-த்தல்

அட்டுவி-த்தல் aṭṭuvittal, செ.குன்றாவி. (v.i.)

   அமைப்பித்தல்; to construct.

     “கரையட்டுவிச்சு காரும் வெட்டுவிச்சு” (SII. V.727.);.

     [அட்டு-அட்டுவி]

அட்டூண்

அட்டூண் aṭṭūṇ, பெ.. (n.)

   சமைத்த உணவு; cooked food.

     “முட்டாது நடா அம் அட்டு ஊண் கம்பலும்”. (பெருங்.60:87);.

     [அட்டு+ஊண்]

அட்டை

அட்டை aṭṭai, பெ. (n.)

   நிலத்திலும் நீரிலும் வாழக்கூடியதும், நாங்கூழ்போற் குறுகி நீள்வதும், (தமிழ்நாட்டில்); ஒரு விரலம் (அங்குலம்); முதல் ஒரு சாண் வரை நீண்டு வளர்வதும், ஊனுடம்புகளில் ஒட்டிக்கொண்டு அரத்தத்தை யுறிஞ்சுவதும், புழுப்போன்றதுமான ஓர் ஊருயிரி; leech. “ஆக்க முண்டே லட்டைகள் போற் சுவைப்பர்” (திவ். திருவாய். 9.1;2);. ‘அட்டைக்கும் குட்டைக்குந்தான் உறவு, அதில் விழுந்த எருமைக்கு என்ன உறவு?’, ‘அட்டை செத்தால் குட்டைக்கு நட்டமா?’, ‘அட்டையைப் பிடித்து மெத்தையிலே வைத்தது போல’ (பழ.);;ம, தெ. அட்ட ; க., குட. அட்டெ,

     [ஒட்டு → அட்டு → அட்டை.]

 அட்டை aṭṭai, பெ. (n.)

   1. சன்னப் பலகை போன்று தடித்த தாளட்டை; card board.

   2. பொத்தகக் கட்டட அட்டை; bound book cover.

   3. செருப்பின் தோலட்டை; layer of the sole of a sandal or shoe.

க., து. அட்டெ ; தெ. அட்ட.

     [அள் = செறிவு, திண்மை. அள் → அட்டு → அட்டை = திண்ணமான தாட்பலகை அல்லது தோற்பட்டை.]

 அட்டை aṭṭai, பெ. (n.)

   பொத்தக மேலுறை; book cover.

க. அட்டெ ; தெ. அட்ட.

     [ஒருகா. சட்டை → அட்டை.]

பொத்தகப் போர்வையாகிய அட்டை, சன்னப் பலகை போன்ற திண்ணிய அட்டையல்லாத தடித்த தாளில் அல்லது மெல்லிய தாளிலேயே இடப்படுவதால், அதைக் குறிக்கும் பெயரைச் சட்டையென்னும் சொல்லின் திரிபாகக் கொள்வதே பொருத்தமாம்.

 அட்டை aṭṭai, பெ. (n.)

   துலாக்கட்டை; joist.

     [ஒருகா. ஒட்டு → ஒட்டை → அட்டை.]

 அட்டை aṭṭai, பெ. (n.)

   தலையில்லா முண்டம்; headless trunk.

தெ. அட்ட (உடம்பு, தலையில்லா முண்டம்.);; க., து. அட்டெ.

     [மொட்டை → மட்டை → அட்டை.]

அட்டை எழுத்து

 அட்டை எழுத்து aṭṭaieḻuttu, பெ. (n.)

அ முதல் னகரம் வரையுள்ள எழுத்துகள் அடங்கிய அரிச்சுவடிப் பொத்தகம்.

     [அட்டை+எழுத்து]

அட்டைக்கடி

அட்டைக்கடி aḍḍaikkaḍi, பெ. (n.)

   1. அட்டையினாற் கடிக்கப்படுதல் ; leech-bite.

   2. அட்டைக்கடி தழும்பு ; scar left by leech-bite (சா.அக.);.

     [அட்டை + கடி.]

அட்டைக்கடிப் பண்டுவம் (சிகிச்சை)

 அட்டைக்கடிப் பண்டுவம் (சிகிச்சை) aḍḍaiggaḍippaṇḍuvamcigiccai, பெ. (n.)

     “அட்டையை உறிஞ்சவிட்டு நோயாளிகளின் கெட்ட அரத்தத்தை வெளியேற்றிக் குணப்படுத்துதல்;

 the art of healing by draining blood by leechbite, leech-craft (சா.அக.);.

     [அட்டை + கடி + பண்டுவம்.]

அட்டைக்குப்பி

 அட்டைக்குப்பி aṭṭaikkuppi, பெ. (n.)

   பண்டுவத்திற்காக அட்டையை வைத்து வளர்க்கும் புட்டி ; glass tube for keeping leeches meant for curative purposes (சா.அக.);.

     [அட்டை + குப்பி.]

அட்டைக்குழி

அட்டைக்குழி aṭṭaikkuḻi, பெ. (n.)

   1. அட்டையுள்ள கிடங்கு ; pit of leeches.

   2. அட்டைக் கடியால் துன்புறும் நரகம் (வின்.); ; a pit in Hell said to be infested with leeches.

     [அட்டை + குழி.]

அட்டைப்பால்

 அட்டைப்பால் aṭṭaippāl, பெ. (n.)

   பனங்கள் ; palmyra toddy (சா.அக.);.

அட்டைப்பிசின்

 அட்டைப்பிசின் aṭṭaippisiṉ, பெ. (n.)

   அட்டையைப்போல் ஒட்டிக்கொள்ளும் பிசின்; a kind of gum which would stick like a leech.

     [அட்டை + பிசின்.]

அட்டைப்பிரயோகம்

 அட்டைப்பிரயோகம் aṭṭaippirayōkam, பெ. (n.)

   உடம்பில் அரத்தம் கெட்டுப்போயிருப்பினும், கட்டியிருப்பினும், அதை .வெளியேற்ற அட்டையைப் பயன்படுத்தல் ; application of leeches to the body of patients having impure or congested blood in their system (சா.அக);.

     [அட்டை + Skt.. pra-yoga → த. பிரயோகம் = பயன்படுத்தல்.]

அட்டைப்பூச்சி

 அட்டைப்பூச்சி aṭṭaippūcci, பெ. (n.)

   வயிற்றுக்குள் அட்டையைப்போல் ஒட்டிக்கொண்டு வாழ்வதும், நாடாப்போல் நீண்டதுமான பூச்சி வகை ; tape-worm, which breeds by sticking to the inside walls of the stomach, like a leech (சா. அக.);.

     [அட்டை + பூச்சி.]

அட்டையாடல்

அட்டையாடல் aṭṭaiyāṭal, பெ. (n.)

   போர்க்களத்திற் போர் மறவனுடல் துண்டிக்கப்பட்ட விடத்தும், துண்டிக்கப்பட்ட அட்டை இயங்கித் துடித்தல் போன்று மறச்செயல் காட்டியாடுகை (தொல், பொருள். புறத். 16, உரை);; hero’s body continuing to perform heroic deeds even after dismemberment, as the quivering of a leech after being cut in two.

க. அட்டெயாட

     [மட்டை → அட்டை. ஒ.நோ. மலர் → அலர். அட்டை = தலையற்ற முண்டம். அட்டையாடல் = போர்க்களத்தில் தலையற்றவிடத்தும் போர்மறவனுடல் சிறிது நேரம் மறச்செயல் காட்டி யாடுகை.]

அட்டையாடல் என்பது, இளம்பூரணர், நச்சினார்க்கினியர் ஆகிய இருவரின் தொல்காப்பியவுரையிற் கண்ட தொடர். அதிலுள்ள அட்டையென்னுஞ் சொல்லிற்கு, அவ்விருவரே ஊருயிரியாகிய அட்டையென்று பொருள் கொண்டுள்ளனர்.

அட்ட என்னும் தெலுங்கச் சொல் உடம்பைக் குறிப்பதால், அட்டையாடுதல் என்பது தலையில்லா முண்டம் ஆடுவதையே குறிக்குமென்பர் ஒருசாராராய்ச்சியாளர். அட்டை போலாடுதல் என்னும் உவமைப் பொருளினும், முண்டமாடுதல் என்னும் உவமையில்லாப் பொருளே சிறந்திருத்தலால், இளம் பூரணர்க்கு முந்திய உரையாசிரியர் அப்பொருளே கொண்டிருக்கலாமென்று கருத இடமுண்டு. அங்ஙனமாயின், அப்பொருள் வழக்கு இளம்பூரணர் காலத்தில் இறந்துபட்டிருத்தல் வேண்டும்.

மொட்டை =

   1. கூரின்மை.

   2. தட்டையான தலைக்கவிப்பு (மொட்டைத் தொப்பி);.

   3. மயிர் மழித்த அல்லது வெட்டின தலை (மொட்டைத்தலை);.

   4. தலையில்லா முண்டம்,

   5. கொம்பில்லா மாடு (மொட்டை மாடு);.

   6. கும்பமில்லாத் தேர் (மொட்டைத் தேர்);.

   7. முடியமையாக் கோபுரம் (மொட்டைக் கோபுரம்);.

   8. முகடில்லா மச்சு வீடு (மொட்டை மாடி);.

   9. கூண்டில்லா வண்டி (மொட்டை வண்டி);.

   10. ஆடையில்லாவுடம்பு (மொட்டைக் கட்டை);.

   11. இலை பூ, காய் கனி முற்றும் உதிர்ந்த மரம் (மொட்டை மரம்);.

   12. மரஞ்செடி கொடியில்லா மலை (மொட்டை மலை);.

மொட்டை → மட்டை. ஒ.நோ; மொண்டை → -மண்டை = மொள்கலம், இரப்போர் கலம், தலையோடு, இளவரசு மகுடம்.

மட்டை =

   1. மயிர் மழித்த மொட்டைத் தலை. ‘இறைவனில்லாமையால் தனித்துக் கொய்யப்பட்ட மொட்டையாகிய தலையுடனே’ (புறநா. 261 ; 17, உரை);.

   2. உடற் குறை (தலையில்லா முண்டம்);. ”யூபங் கவந்தம் மட்டை யுடற்குறை” (திவா. மக்கட் பெயர்த் தொகுதி);.

ஆகவே, ‘உடல் துண்டிக்கப்பட்ட விடத்தும் அட்டைபோல வீரனுடல் வீரச் செயல் காட்டி யாடுகை’ என்பது பொருந்தாது. தெலுங்கு கன்னடத்தில், அட்டை யென்னுஞ் சொல் தலையில்லா முண்டத்தைக் குறிப்பதும் இதை வலியுறுத்தும்.

அட்டையிலட்சணம்

அட்டையிலட்சணம் aṭṭaiyilaṭcaṇam, பெ. (n.)

   தன்வந்திரி வாகடம் 110-ல் சொல்லியுள்ள அட்டையைப்பற்றிய நெறிமைகள் (விதிகள்);; a treatise compiled by Dhanwantri on the art of healing by the use of leeches, a science on leech-craft (சா.அக.);.

     [த. இலக்கணம் → Skt. Laksana → த. இலட்சணம்.]

இலக்கணம் பார்க்க ;see ilakkaņam.

அட்டையெண்ணெய் (தயிலம்)

 அட்டையெண்ணெய் (தயிலம்) aṭṭaiyeṇīeytayilam, பெ. (n.)

   அட்டைத் தலைகளினின்று உருவாக்கும் ஒருவகை யெண்ணெய் ; an extract prepared from the heads of leeches and employed to prevent the formation of blood clots (சா.அக.);.

     [அட்டை + எண்ணெய்.]

அட்டையொட்டல்

 அட்டையொட்டல் aṭṭaiyoṭṭal, பெ. (n.)

   காத்துக்கொள்ளாத வழிப்போக்கர் மேலும், வேட்டைக்காரர் மேலும் அட்டை தானாகவே ஒட்டிக்கொண்டு அரத்தத்தை யுறிஞ்சல் ; sticking of leeches by themselves to the body of unwary travellers and hunters for sucking their blood (சா.அக.);.

     [அட்டை + ஒட்டல்.]

அட்டைவகை

 அட்டைவகை aṭṭaivagai, பெ. (n.)

   அட்டையின் பல்வேறு வகைகள் ; the different species of leeches.

   அட்டைகள் பின்வருமாறு வெவ்வேறு வகையில் இவ்விரு பிரிவாகப் பிரிக்கப்படலாம்;நல்லட்டை யென்பன மருத்துவத்திற்குப் பயன்படுவன. அவை ஆயுர்வேத மருத்துவப் படி ஆறாகும்.

அவையாவன ; குராலி (கபிலம்);, உள்ளியம் (பிங்கலை);, சங்குமுகன் (சங்குமுகி);, எலியன் (மூஷிகம்);, முளரிமுகன் (புண்டரீகமுகி);, மரையடைவண்ணன் (சபரிகம்);.

நிறவகையில் செவ்வட்டை, பச்சட்டை, காரட்டை, பொன்னட்டை என நான்காகப் பகுக்கலாம்.

அட்டைவிடல்

 அட்டைவிடல் aḍḍaiviḍal, பெ. (n.)

   உடம்பிலுள்ள கெட்ட அரத்தத்தை நீக்குமாறு, அட்டையை உறிஞ்சவிடல் ; employment of leeches for removing impure blood from a human body (சா.அக.);.

அட்டைவிதி

 அட்டைவிதி aṭṭaividi, பெ. (n.)

   அட்டையின் வேறுபாடுகளையும் அவற்றைக் கொண்டு செய்யும் பண்டுவ (சிகிச்சை); முறைகளையும் பற்றிக் கூறும் நூல் ; a treatise dealing with the various species of leeches, and the method of their application in the treatment of diseases (சா.அக.);.

 Skt. vidhi →. த.விதி = நெறிறிமை”

     [ஒட்டு → அட்டு → அட்டை.]

அட்டோலகம்

அட்டோலகம் aṭṭōlagam, பெ. (n.)

   1. ஆரவாரக் காட்சி (யாழ்ப்.; pomp, show, magnificence.

   2. கெந்தளிப்பு (யாழ்ப்.); ; mirth, festivity, rejoicing (J.);.

     [ஒட்டோலக்கம் → அட்டோலக்கம் → அட்டோலகம்.]

ஒட்டோலக்கம் பார்க்க ;see ottålakkam.

அட்டோலக்கம்

 அட்டோலக்கம் aṭṭōlakkam, பெ. (n.)

அட்டோலகம் பார்க்க ;see attolagam.

அண

அண1 aṇattal,    3 செ.கு.வி. (v.i.)

   பொருந்துதல்; to be joined, united.

     “முலைமுன் றணந்த சிறுநுதல்” (கல்லா. 13;12);.

     [அண் → அண. அண்ணுதல் = பொருந்துதல்.]

 அண2 aṇattal,    3 செ.கு.வி. (v.i.)

   1. தலையெடுத்தல்; to lift the head.

     “பாம்பணந்தன்ன” (பெருந. 13);.

   2. மேனோக்குதல்; to look upward.

     “நெற்கொ ணெடுவெதிர்க் கணந்த யானை” (குறிஞ்சிப். 35);.

து. அணவு, அணாவுனி.

     [அண் → அண.]

அண-த்தல்

அண-த்தல் aṇattal, செ.குன்றா.வி (v.t.)

   தலை தூக்கிப் பார்த்தல்; to raise head and see.

     “மலை உறை பகைத்து வான் உறைக்கு அணக்கும்.” (கல் 253:20);.

     [அண்-அண]

அணக்கம்

 அணக்கம் aṇakkam, பெ. (n.)

   அறிகுறி; indication, symptom.

     “அவர் வீட்டில்தான் இருக்கிறாரா? அணக்கமே இல்லையே. (வ.சொ.அக.);.

     [அணங்கு-அணக்கு+அம்]

அணங்கம்

அணங்கம் aṇaṅgam, பெ. (n.)

   இலக்கணம் (சிந்தா. நி. 103);; grammar.

     [அஞ்சணங்கம் = ஐந்திலக்கணம் (யாழ்.அக.);. அணங்கு + அம். அணங்கு = ஒலி, எழுத்து.]

ஐந்திலக்கணம் பார்க்க;see aind(u);-ilak-kanam.

அணங்கயர்-தல்

அணங்கயர்-தல் aṇaṅgayartal,    2 செ.கு.வி, (v.i.)

   திருவிழாக் கொண்டாடுதல்; to celebrate a religous festival.

     “சுறவ முண்மருப் பணங்கயர் வனகழிச் சூழல்” (பெரியபு. திருக்குறிப்.7);.

     [அணங்கு + அயல்.]

அணங்காடு-தல்

அணங்காடு-தல் aṇaṅgāṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   தெய்வமேறி யாடுதல்; dance of one possessed by the spirit of Velan.

     “அணங்கொடுத லன்றந்தோ” (திவ்.திருவாய்.4.6;5);.

     [அணங்கு+ஆடு.]

அணங்காட்டு

 அணங்காட்டு aṇaṅgāṭṭu, பெ. (n.)

   வேலன் வெறியாட்டு (வின்.);; dance under possession by Velan (W.);.

     [அணங்கு + ஆட்டு.]

அணங்கார்

 அணங்கார் aṇaṅgār, பெ. (n.)

   பெண்கள்; women (சங்.அக.);.

     [அணங்கு + ஆர் (ப.பா.ஈறு);,]

அணங்கினர்

அணங்கினர் aṇaṅgiṉar, பெ. (n.)

   தெய்வப்பெண்கள்; celestial damesels.

     “புடையுற வணங்கினர் போற்றி” (கந்தபு.தேவ.தெய்வ.10);.

அணங்கிய

அணங்கிய aṇaṅgiya, கு.பெ.எ. (adj.)

   அழகிய; beautiful.

     “சீரணங்கிய தேவர்கள்” (பெரியபு.திருநகரச்.10);.

அணங்கியம்

 அணங்கியம் aṇaṅgiyam, பெ. (n.)

   இலக்கியம்; literature.

அஞ்சணங்கியம் = ஐந்திலக்கியம்.

     [அணங்கு + இயம்.]

ஐந்திலக்கியம் பார்க்க;see aind(u);-ilakkiyam.

அணங்கியோன்

அணங்கியோன் aṇaṅgiyōṉ, பெ, (n.)

   வருத்தியவன்; one who persecuted.

     “பெருந்துறைக் கண்டிவ ளணங்கி யோனே” (ஐந்குறு.182);.

அணங்கு

அணங்கு1 aṇaṅgudal,    5 செ.கு.வி. (v.i.)

   ஒலித்தல்; to sound; make noise.

     “புகை யணங்க” (பு.வெ.10;8);.

     [ஒல் → ஒலி. ஒல் → அல் → அலம்பு. அலம்புதல் = ஒலித்தல். அல் → அலு → அலுங்கு → அணுங்கு. அணுங்குதல் = முணுமுணுத்தல், ஒலித்தல். அலுங்கு → அணுங்கு → அணங்கு.]

 அணங்கு2 aṇaṅgudal,    5 செ.கு.வி. (vi.i)

   1. அஞ்சுதல் (சங்.அக.);; to fear, to be afraid.

   2. வருந்துதல்; to suffer, to be distressed.

     “ஆடியுட் பாவை போனீ யணங்கிய தணங்க வென்றான்” (சீவக.957);.

   3. இறந்துபடுதல்; to die, to be slain.

     “நற்போ ரணங்கிய” (பு.வெ.7;27);.

   4. பொருந்துதல்; to be joined united.

     ‘உரையணங்குந் தமிழ்வேந்தன் (இறை. 50, உரை, பக்.230);.

   5. பின்னி வளர்தல்; to grow, thick with brancehs interlaced as bamboos.

     “முழுநெறி யணங்கிய நுண்கோல் வேரலோடு” (மலைபடு. 223);.

   6. விரும்புதல் (சங்.அக.);; to desire.

 அணங்கு aṇaṅgu,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. அஞ்சுதல்; to dread.

   2. வருந்துதல்; to afflict.

     “புறத்தோ னணங்கிய பக்கமும்” (தொல்.பொருள்.புறத்.10);;

   3. கொல்லுதல்; to kill, murder, slay.

     “அணங்குவாள் விடவரா” (கம்பரா. அயோத்.மந்தரை.53);;

     [உணங்கு → அணங்கு.]

 அணங்கு1 aṇaṅgu, பெ. (n.)

   1. ஒலி; sound.

   2. எழுத்து; letter.

     [ஒல் → அல் → அலு → அலுங்கு → அணுங்கு → அணங்கு.]

 அணங்கு2 aṇaṅgu, பெ. (n.)

   1. வருத்தம்; suffering, pain.

     “அணங்குசா லுயர்நிலை தழீஇ” (திருமுருகு.289);.

   2. வருத்துதல்; affliction.

     “அரவின் பொறியு மணங்கும் புணர்ந்த” (கலித்.50;6);.

   3. கொலை; killing (பிங்.);.

     “அணங்கு பார்த்து நகை முகிழ்த் தாவியோ டுணங்கு பேய்முலை” (கூர்மபு.கண்ணனவ.51);.

   4. அச்சம்; fear.

     “நான்முகத் தோன்கண் ணணங்குற வருபவர்க் கடிதிர்” (கூர்மபு. அட்டமு.5);.

   5. நோய் (பிங்.);; disease.

   6. காமநெறியால் உயிர்கொள்ளுந் தெய்வமகள்; demoness who destroys one’s life by kindling lust in him.

     “ஆயு மறிவின ரல்லார்க் கணங்கென்ப” (குறள், 918);.

   7. வருத்திக் கொல்லுந் தெய்வ மகள்; demoness who inflicts sufferings and takes away one’s life.

   8. கொல்லிப்பாவை; the demoness of literary fame who resided at the Kolli Hills.

   9. தெய்வம்; deity.

     “அணங் குருத் தன்ன கணங்கொ டானை” (புறநா. 362; 6);.

   10. தெய்வமகள்; celestial damsel.

     “அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ” (குறள், 1081);.

   11. தெய்வத்தன்மை; divinity.

     “சீரணங்கு மணிமாடத் திருச்சிற்றம் பலம் போற்றி” (கோயிற்பு. பாயிர. 2.);.

   12. (கொல்லும் பெண்தெய்வத்தின்); அழகு (பிங்.);; beauty.

   13. வடிவு; form.

     “அருந்திற லணங்கி னாவியர் பெருமகன்” (சிறுபாண். 86);.

   14. மையல்நோய்; lust.

   15. ஆசை (சூடா);; desire.

   16. வெறியாட்டு; dancing under religious excitation, esp. possession by the spirit of Velan.

   17. சிவ ஆற்றல்;šiva’s supreme energy.

     “பேரணங்கி னுடனாடும் பெரும்பற்றப் புலியூர்” (கோயிற்பு. பாயிர. 2);.

   18. அழகிய பெண்; beautiful woman.

   19. பெண்; woman.

     “ஆண்டவ் விராக்கத வணங்கு மெய்தும்” (சேதுபு. வேதாள 58);.

   20. பேய்மகள்; a female devil.

     “துணங்கையஞ் செல்விக் கணங்குநொடித் தாங்கு” (பெரும்பாண். 459);.

   21. பேய்; devil.

     “அணங்கே விலங்கே” (தொல், பொருள். மெய்ப். 8);.

   22. சண்டாளன் (பிங்.);; a person of low-caste.

   23. ஆளியின் குட்டி; young offspring of yali, an extinct animal.

     “ஆளியி னணங்கு மரியின் குருளையும்” (சிலப். 25 ; 48);.

ம. அணங்ஙு.

     [உணங்குதல் = காய்தல், வாடுதல், மெலிதல், வருந்துதல், செயலறுதல். உணங்கு → அணங்கு. அணங்குதல் = வருந்துதல், வருத்துதல், வருத்துதலே வருந்துதலல்லாத ஏனைப் பொருள்கட்கும் அடிப்படை.]

     “ஆளியி னணங்கு மரியின் குருளையும்” என்று சிலப்பதிகாரத்தில் வேறுபடுத்திக் (25 ; 48);

கூறப்பட்டிருப்பதால், ஆளி (யாளி); வேறு, அரி (சிங்கம்); வேறு என்பது பெறப்படும்.

     ‘யாளியை ஆளியென்றார், “கடிசொலில்லை” என்பதனான்’ என்று நச்சினார்க்கினியர் பொருநராற்றுப்படையுரையிற் (139); கூறியதினின்று, யாளி என்னுஞ் சொல்லே யானை → ஆனை என்பது போன்று முதன் மெய் நீங்கி ஆளியென வழங்கி வருவதை அறியலாம்.

அணங்கு என்னும் இளமைப் பெயர் ஆளி யினத்திற்கே சிறப்பாக வழங்கப்பட்டிருப்பதால், அதற்கொரு சிறப்பான பொருட் கரணியமும் இருத்தல் வேண்டும்.

     “ஆளி நன்மா வணங்குடைக் குருளை” என்னும் பொருநராற்றுப்படை படியில் (139);, குருளை என்பது ஆளிக்குட்டியின் பெயராகவும், அணங்குடையென்பது அதற்கு அடைமொழியாகவும் வந்துள்ளன. இவ் வடைமொழியின் பொருளை விளக்கும் வகையில்,

     “மீளி மொய்ம்பின் மிகுவலி செருக்கி முலைக்கோள் விடாஅ மாத்திரை ஞெரேரெனத் தலைக்கோள் வேட்டங்களிறட் டாஅங்(கு);” என்னும் அடுத்த மூவடியமைந்துள்ளன. அவற்றுள் முதலடியை நச்சினார்க்கினியர் கரிகாற் பெருவளத்தானைப்பற்றியதாகப் பிரித்துக் காட்டினும் ஏனையீரடிகளையும் 139ஆம் அடியொடு சேர்த்து, அவற்றிற்கு, ஆளியாகிய நல்ல மாவினது வருத்துதலையுடைய குருளை முலையை யுண்டலைக் கை விடாத இளைய பருவத்தே கடுக, முற்பட இரையைக் கோடற்குக் காரணமான வேட்டையிலே களிற்றைக் கொன்றாற் போல’ என்று பொருள் வரைந்திருப்பதால், ஆளியின் குட்டியைக் குறிக்கும் அணங்கு என்னுஞ் சொற்கும் வருத்துதல் என்பதே பொருட்கரணியம் என்பது தேற்றம்.

ஆளி பார்க்க;see ali.

அணங்கு ஆட்டுமுதியோள்

அணங்கு ஆட்டுமுதியோள் aṇaṅkuāṭṭumutiyōḷ, பெ. (n.)

   குறிசொல்பவள்; foreteller woman.

     “அணங்கு ஆட்டு முதியோள் முறம் கொள் நெல் எடுக்க” (கல் 17:24);.

     [அணங்கு+ஆட்டு+முதியோர்]

அணங்குசார்ந்தாள்

அணங்குசார்ந்தாள் aṇaṅgucārndāḷ, பெ. (n.)

   தேவராட்டி; temple-priestess divinely inspired and possessed with oracular powers.

     “அழைத்தபணி யென்னென்றா ளணங்கு சார்ந்தாள்” (பெரியபு. கண்ணப், 49);.

அணங்குடையாட்டி

அணங்குடையாட்டி aṇaṅguḍaiyāḍḍi, பெ. (n.)

   தெய்வமேறி யாடுபவள்; a divinely inspired woman having oracular powers.

     “அப்பெற்றியில் வாழ்த்தும் அணங்குடையாட்டி” (பெரியபு. கண்ணப். 67);.

     [அணங்கு + உடை + ஆட்டி.]

அணங்குதாக்கு

 அணங்குதாக்கு aṇaṅgutākku, பெ. (n.)

   காம நெறியா லுயிர்கொள்ளுந் தெய்வமகளால் தாக்கப்படுகை; possession by a demoness of lust.

     [அணங்கு + தாக்கு.]

அணங்குத்தாக்கு

 அணங்குத்தாக்கு aṇaṅguttākku, பெ. (n.)

அணங்குதாக்கு பார்க்க;see anarigu-takku.

அணங்குறைவாள்

அணங்குறைவாள் aṇaṅguṟaivāḷ, பெ. (n.)

அணங்குடையாட்டி பார்க்க;see apaர்g(u);udai-y-alli.

     “அணங்குறை வாளையுங் கொண்டு” (பெரியபு. கண்ணப். 153);.

     [அணங்கு + உறைவாள்.]

அணங்குற்றோர்

அணங்குற்றோர் aṇaṅkuṟṟōr, பெ. (n.)

   நோய் உற்றோர்; those afflicted.

     “பின்னிருங் கூந்தல்அணங்குற்றோரே…” (ஜங். 173:4);

     [அணங்கு+உற்றோர்]

அணங்கெழுந்தாடு-தல்

அணங்கெழுந்தாடு-தல் aṇaṅgeḻundāṭudal,    5 செ.கு.வி. (v.i.)

அணங்காடு-தல் பார்க்க;see anang(u);-adu- (சிலப். 5 ; 70);.

     [அணங்கு + எழுந்து + ஆடு.]

அணங்கொடி

அணங்கொடி aṇaṅkoṭi, பெ. (n.)

   அணுகு கின்ற அழகிய கொடி; visible flag.

     “அணங்கொடி மாடவீதி ஆரூர் எம் அடிகளாரே.” (நாவு. 4 53-8.);.

     [அணங்கு+கொடி]

அணத்தான்

 அணத்தான் aṇattāṉ, பெ. (n.)

   ஓணான் (கோவை);; blood-sucker, Calotes verisicolor (Cm.);.

     [அணத்தல் = தலையெடுத்தல். அண → அணந்தான் → அணத்தான் → அடிக்கடி தலையெடுக்கும் ஓணான்.]

     [P]

அணந்தல்

 அணந்தல் aṉantal, பெ. (n.)

   திருவண்ணாமலை வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Thiruvannamalai Taluk.

     [ஒருகா.அண்ணன்+ஏந்தல்]

அணன்

அணன் aṇaṉ, பெ. (n.)

   1. பொருந்தியவன்; one who possesses, as greatness.

     “சீரணனை” (தில். இயற். நான். 67);.

   2. இரண்டறக் கலந்தவன்; one who is inseparably united with the universe.

     [அண் + அன்.]

அணப்பு

அணப்பு aṇappu, பெ. (n.)

   1. முப்பத்தைந்திலிருந்து ஐம்பதுவரைப்பட்ட கசம் (yd.); கொண்ட நீட்டலளவு (G. Tp. D. i, 179);; a measure of length = 35 to 50 yds.

   2. அரைச் செறுவிற்கு (acre); மேற்பட்ட சதுர அளவு (G. Tp. D. i., 179);; a square measure exceeding acre.

     [அணை → அணைப்பு → அணப்பு.]

ஒர் அணைப்புத் தொலை (துாரம்); = ஒரு படைச்சால் நீளம். ஒர் அணைப்பு = ஓரிணை யேர்கொண்டு ஒரு நாளில் உழக்கூடிய நிலப் பரப்பு. அணைத்தல் = தழுவுதல், சேர்த்தல், கட்டுதல், கையை வளைத்துக் கட்டித் தழுவினாற்போல் சால்வளைத்து உழுதல்.

 அணப்பு aṇappu, பெ. (n.)

   விளைவயலின் ஒரு பகுதி (கொ.வ.வ.சொ.5.);; a small division in field.

     [அண-அணைப்பு]

அணம்

அணம் aṇam, பெ. (n.)

   1. மேல்வாய்; the palate or the roof of the mouth.

     “பல்லணத் தொழிலின்” (நன். 74);.

   2. மேல்வாய்ப்புறம்; the side of the upper jaw (சா.அக.);.

மேல்வாய் என்பது மேல்வாய்ப்புறத்தையுங் குறிக்குமாதலால், அதை ஒரு தனிப் பொருளாகக் குறிக்கத் தேவையில்லை.

     [அண்ணம் → அணம்.]

அணரசம்

அணரசம் aṇarasam, பெ. (n.)

   பணியார வகை (இந்துபாக. 289);; a sweet confection made of rice flour, ghee, etc.

     [U. anarsa → த. அனரசம்.]

அணரி

அணரி aṇari, பெ. (n.)

   மேல்வாய்; palate, roof of the mouth.

     ‘அணரியிலே கரையையும்’ (ஞானா. 44, உரை);.

     [அணர் → அணரி.]

அணரிடு-தல்

அணரிடு-தல் aṇariḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   கொக்கரித்தல்; to shout in token of triumph.

     “சொக்கனுமங் கணரிட்டுத் துடைதட்டிச் சிரித்தருளி” (திருவாலவா. 52 ; 8);.

     [அணர் + இடு. ஒருகா. சேவல் போரில் வென்றபின் தலைதூக்கிக் கொக்கரித்தாற்போல், போர்மறவனும் வெற்றி பெற்றபின் தலை நிமிர்ந்து ஆரவாரித்தல். அணர்தல் = மேனோக்குதல், மேலெழுதல்.]

அணரிநோக்கி

 அணரிநோக்கி aṇarinōkki, பெ. (n.)

   செங்கொன்றை; red Indian cassia, Cassia marginata (சா.அக.);.

அணர்

அணர் aṇar, பெ. (n.)

   1. மேல்வாய்ப்புறம் (பிங்.);; the side of the upper jaw.

   2. மேற்பரடு; hard palate (சா.அக.);.

   3. மீசை முளைக்குமிடம்; that part of the face where the moustache grows.

     [அணல் → அணர்.]

அணர்-தல்

அணர்-தல் aṇartal,    2 செ.கு.வி. (v.i.)

   மேனோக்கிச் செல்லுதல்; to rise, move upward.

     “அணரி நுனிநா வண்ண மொற்ற” (தொல். எழுத்து. பிறப். 12);.

     [அண் → அண → அணர்.]

அணர்ச்செவி

அணர்ச்செவி aṇarccevi, பெ. (n.)

   எடுத்த அல்லது மேனோக்கிய காது; prominent or erect ears.

     “நோன்புறத் தணர்ச்செவிக் கழுதைச் சாத்தொடு” (பெரும்பாண். 79-80.);.

     [அணர் + செவி.]

அணற்கமந்திரம்

 அணற்கமந்திரம் aṇaṟkamandiram, பெ. (n.)

   தூதுவளை; three-lobed night shade, Solanum trilobatum (சா.அக.);.

அணல்

அணல் aṇal, பெ. (n.)

   1. மேல்வாய்ப்புறம் (பிங்.);; the side of the upper jaw.

   2. உள்மிடறு (பிங்.);; throat, windpipe.

   3. கழுத்து; neck.

     “கறையணற் குறும்பூழ்” (பெரும் பாண். 205);.

   4. கீழ்வாய்ப்புறம் (திவா.);; lower part of the mouth; chin.

   5. தாடி; beard.

     “மையணற் காளை” (புறநா. 83;1);.

   6. அலைதாடி; dewlap.

     “மொய்யணலானிரை” (பு. வெ. 1;12);.

ம., க. அணல்.

     [அண் → அணல்.]

அணவன்

அணவன் aṇavaṉ, பெ. (n.)

   பொருந்தினவன்; one who has taken abode, resident.

     “குரங்காடு துறைதனி லணவன்தான்” (தேவா. 5.63 ; 4);.

     [அண → அணவு → அணவன்.]

அணவல்

அணவல் aṇaval, பெ. (n.)

   பல் (சம்.அக.கை);; tooth.

–, தொ.பெ. (vbl.n.);

   1. அணுகுதல்; to go near, approach, come close to.

   2. பொருந்துதல்; to unite.

ம. அணயுக; க. அணெ, அணி.

     [அண் → அண → அணவு → அணவல். அண்ணுதல் = நெருங்குதல், அணவுதல் = பொருந்துதல். நெருங்கியிருத்தலால் அல்லது பொருந்துதலால், பல் அணவல் எனப்பட்டது போலும். இது தொழிலாகுபெயர்.]

அணவா

அணவா1 aṇavādalaṇavarudal,    18 செ.கு.வி. (v.i.)

   அணுகுதல்; to come near.

     [அண் → அண (நி.கா.வி.எ.); + வா.]

 அணவா2 aṇavādalaṇavarudal,    18 செ.கு.வி. (v.i.)

   மேலுயர்த்தப்படுதல்; to be raised.

     “நீர்வழிக் கணவரு நெடுங்கைய வாகி” (பெருங், உஞ்சைக். 54 ; 42);.

     [அண் → அண (தி.கா.வி.எ.); + வா.]

 அணவா aṇavā, பெ. (n.)

   ஒரு பூண்டு; a plant (unidentified); (சா.அக.);.

அணவு

அணவு1 aṇavudal,    5 செ.கு.வி. (v.i.)

   மேல் நோக்கிச் செல்லுதல்; to go upward, ascend.

     “அந்தர வகடுதொட் டணவு நீள் புகழ்” (சீவக. 1239);.

     [அண் → அண → அணவு.]

 அணவு2 aṇavudal,    5 செ.குன்றாவி, (v.t.)

   1. அணுகுதல் (சூடா.);; to go near, approach, come close to.

   2. தொடுதல், புல்லுதல் (சூடா.);; to embrace.

     “மாடக்கொடிகதிரணவுந்திருவெள்ளியங்குடி” (திவ். பெரிய திரு. 4.10 ;4

   3. பொருந்துதல்; to unite.

   4. ஒட்டுதல் (பிங்.); ; to stick to, adhere to.

   5. புணர்தல் ; to have sexual intercourse (சா.அக.);.

ம. அணவு ; க. அணசு.

     [அண் → அண → அணவு.]

 அணவு1 aṇavu, தொ.பெ. (vbl.n.)

   பொருந்துதல் ; joining, uniting.

     “இருகரை யணவுறக் கிடக்கும்” (உபதேசகா. மச்ச. 12);.

     [அண் → அண → அணவு.]

 அணவு2 aṇavu, பெ. (n.)

நடு (பிங்.);:

 middle.

     [உள் = உள்ளிடம், நடு. உள் → உண் → அண் → அண → அணவு.]

அணா

அணா aṇā, பெ. (n.)

   இன்பப்போக்கு, பற்றாட்டு; pastime, recreation, hobby, sport.

     ‘அணாவாய்த்துக் காலங்கழிக்க’ (ஈடு);.

     [அண்ணுதல் = பற்றுதல். அணா = மனம் பற்றிய ஆட்டு.]

 அணா aṇā, பெ. (n.)

   1. பணம்; money, the small coin termed fanam, whether of gold or of silver.

   2. தட்டார்நிறை; goldsmith’s weight. i.e.,

மஞ்சிட்டி = 1 அணா.

   3. ஆறு குண்டுமணி எடை;   6 grains,

   4. வீசம்;   1/16 part (சா.அக.);.

த.வ. ஆனைக்காசு.

     [U. ana → த. அணா.].

அணாப்பன்

 அணாப்பன் aṇāppaṉ, பெ. (n.)

   ஏமாற்றுபவன்; a male cheat, swindler, deceiver.

     [அணாப்பு + அன் (ஆ.பா. ஈறு);.]

அணாப்பி

அணாப்பி aṇāppi, பெ. (n.)

   ஏமாற்றுபவள்; deceitful woman.

     “அணாப்பிகள், படிறிகள்” (திருப்பு. 343);.

     [அணாப்பு + இ (பெ.பா. ஈறு);.]

அணாப்பு

 அணாப்பு aṇāppu, தொ.பெ. (vbl.n.)

   ஏமாற்றுகை (இ.வ.); ; deceit, fraud (Loc.);.

அணாப்பு பார்க்க ; see anapрu.

ம. அணப்பு

அணாப்பு-தல்

அணாப்பு-தல் aṇāppudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   ஏமாற்றுதல்; to deceive, cheat.

     “அணாப்பித் துலக்கஞ் சீர்த்துத் திரிமானார்” (திருப்பு. 381);.

     [அணா (அணவு); → அணாப்பு. அணாப்பு = ஒக்க அல்லது பொருந்தச் சொல்லி ஏமாற்றுதல். ஒ.நோ.: ஏய்தல் = ஒத்தல், ஏய்த்தல் = ஏமாற்றுதல்.]

அணார்

அணார் aṇār, பெ. (n.)

   கழுத்து; neck.

     “அணார் சொறிய” (திவ். பெரியாழ். 3.5;8);.

     [அணல் → அணர் → அனார்.]

அணாவு-தல்

அணாவு-தல் aṇāvudal,    5 செ.குன்றாவி, (v.t.)

   கிட்டுதல்; to approach.

     “அருக்கன் மண்டலத் தணாவு மந்த ணாரூர்” (தேவா. 2.237 ; 1);.

     [அணவு → அணாவு.]

அணி

அணி aṇi, பெ. (n.)

   1. அழகு (பிங்.);; beauty.

     “அணிமாழ்கி (கந்தபு. உற்பத். காமதக. 8);.

   2. அணிகலம்; ornament, jewel.

     ‘அணியென்பது கவிப்பன கட்டுவன செறிப்பன பூண்பன வென்னுந் தொடக்கத்தன’ (தொல், சொல். கிளவி. 46, சேனா. உரை);. ‘அணிபூண்ட நாய்போல’, ‘அணியெல்லாம் ஆடையின் பின் (பழ.);.

   3. ஒப்பனை (பிங்.);; embellishment, decoration.

   4. சொல்லணி பொருளணியென்னும் இருவகை யிலக்கிய அழகு; figure of speech.

     “வல்லோ ரணிபெறச் செய்வன செய்யுள்” (நன். 268);.

   5. அணியிலக்கணம்; rhetoric.

   6. தொழிற்கருவி; mechanic’s tool.

   7. வழிப்போக்கு, போர் முதலியவற்றிற்குரிய பூட்டுப் பொருத்துகள்; outfit for journey, equipment for battle.

   8. கோலம்; disguise.

     “அணரியி னரங்கின்மே லாடுநர்போல்” (ஏலாதி, 24);.

   9. அடுக்கு; tier.

     “அணிநிலை மாடம்” (பெருங். உஞ்சைக். 33 ;105);.

   10. திரள்; pile, heap.

     “அணியணி யாகிய தாரர்” (பரிபா. 6 ; 31);.

   11. கூட்டம்; assembly, gathering.

     “தேவ ரணிதொழ” (கோயிற்பு. பதஞ்சலி. 9);.

   12. பெருமை (பிங்.);; greatness.

   13. வரிசை; order, row.

     “சுருப்பணி நிரைத்த” (கல்லா. 15;5);.

   14. ஒழுங்கு; regularity.

   15. பூமாலை (சங்.அக.); ; flower-garland.

   16. படை வகுப்பு (பிங்.);; array of an army.

   17. படையுறுப்பு (பிங்.);; division of an army.

   18. அழகுதோன்றும் முகம்; beautiful face, face.

     “நண்பகன் மதியம்போ னலஞ்சாய்ந்த வணியாட்கு” (கலித். 121;18);.

   19. இனிமை; pleasantness.

     “அணிநிலா” (சிலப். 4;3);.

   20. நன்மை; goodness.

   21. கூட்டுச்சரக்கு (சம்பாரம்); (சங்.அக.);; curry-stuf.

   22 அன்பு (பிங்.);; love.

   23. தேரின் அச்சாணி (சங்.அக.);; linch pin.

   24. அண்மை; nearness.

   25. எல்லை; limit, boundary (யாழ்.அக.);.

   26. நுணா; a tree, Morinda umbellata alias M. citrifolia (சா.அக.);.

   27. முப்பத்தைந்தைக் குறிக்கும் குழுஉக் குறி (சோதிட அக.); ; cant for the number 35.

–, இடை. (part.);

   ஓர் உவமவுருபு; an adjectival word of comparison.

     “நிலவிரி சுதி ரணி நிகரறு நெறியினை” (சீவக. 2562);.

ம. க., தெ., து., குட அணி ; பிராகி. அணிய.

     [அண் → அணி. குழு உக்குறிப் பொருள் பொருளணயின் தொகைபற்றியதாயிருக்கலாம்.]

 அணி aṇi, கு.வி.எ. (adv.)

   அருகில்; near.

     “இனியணி யென்னுங் காலையும் இடனும் வினையெஞ்சு கிளவியுஞ் சுட்டும் அன்ன” (தொல், எழுத்து. உயிர்மயங். 34);.

க. அணி

     [அண் → அணி.]

அணி நகை

அணி நகை aṇinakai, பெ. (n.)

   ஒளி பொருந்திய அணிகள்; glittering jewellery.

     “அணிநகை இடை இட்ட ஈகையம் கண்ணிபோல்.” (கலி 32:4);.

     [அண்+நகை]

அணி-தல்

அணி-தல் aṇidal,    2 செ.கு.வி. (v.i.)

   1. அழகாதல்; to be beautiful.

     “பாஅ யன்ன பாறையணிந்து” (மதுரைக். 278);.

   2. அணிகலமாதல் (செ.அக.); ; to be an ornament.

     “ஐயிரு திசையினு மணிந்து செல்வன” (கந்தபு. தேவ. தெய்வ. 65);.

   3. வரிசையாதல்; to be drawn up in lines.

     “ஐயிரு திசையினு மணிந்து செல்வன” (கந்தபு. தேவ. தெய்வ. 65);-(சங். அக.);.

   4. பரத்தல்; to spread.

     “சுணங்கணி யாகம்” (கலித். 4;17);.

-, 2 செ.குன்றாவி. (v.t);

   1. அலங்கரித்தல்; to adorn.

     “இக்கோ நகரணிக” (கம்பரா. அயோத். மந்தரை, 33);.

   2. தாங்குதல்; to bear, as weapons; to wear, as dress.

     “ஆத லாற்றனை வியப்பதற் கன்றவை யணிதல்” (கந்தபு. தக்க ததீசியுத். 14);.

   3. பூணுதல்; to wear, as jewels.

   4. பொருந்துதல்; tojoin.with.

     “சாறயர்ந் தன்ன காரணி யாணர்த் தூம்பகம்” (பதிற். 81 ; 20-21);.

   5. படை வகுத்தல்; to put in array, as an army.

     “இத்தக வாக வணிந்திரு சேனையும்” (பாரத. பதின்மூன் 8);.

   6. சூழ்தல்; to surround.

     “துகிலணி யல்குற் றுளங்கி யன் மகளிர்” (சிறுபாண். 262);.

   7. வண்ணித்தல்; to describe in embellished language.

     “அனையதை யணியமாட்டாது” (பிரபுலிங்க. கைலாச. 8);.

ம. அணியுக

     [அண் → அணி. அண் = மேல். அணி = மேலிடு.]

 அணி-தல் aṇital, செ.குன்றாவி. (n.)

   தடவுதல்; smear.

     “அரை விளைகலை நல்லார் அறுகின் நெய் அணிந்தனரே.” (சிவ. 12 : 53 );.

   2. தாங்குதல்; to wear

     “சடை மேல் இள மதியோடுஆறு அணிந்தார்” (சம். 3:65:3);

   3.உடுத்தல்; to dress

     “கருமானின் உரிஆடை மீது இலங்க அணிந்தான் இடையோர் தொடி” (சம்.1:2:2.);

அணிஅளகு

அணிஅளகு aṇiaḷaku, பெ. (n.)

   புணிக் கோலுடன் உள்ள புணையல் அளவு (நெ.கோ.க.52.);; a measure in handloom work.

     [அணி+அலகு]

அணிகம்

அணிகம் aṇigam, பெ. (n.)

   1. அணிகலம்; ornament.

     “அணிகமாப் பணிகள் செய்து” (சீவக 2811);.

   2. ஊர்தி; conveyance, vehicle.

     “அணிகமூர்ந் தமர ரீண்டி” (சீவக. 3115);.

     [அணி → அணிகு → அணிகம். அண் = மேல். அணிகம் = மேலூர்ந்து செல்வது.]

அணிகயிறு

அணிகயிறு aṇigayiṟu, பெ. (n.)

   குதிரையின் கடிவாளம்; reins.

     “அணிகயிறு தெரிபு வருவார்” (பரிபா. 9 ; 52);.

அணிகலச்செப்பு

 அணிகலச்செப்பு aṇigalacceppu, பெ. (n.)

   நகைப்பெட்டி (பிங்.);; jewel-casket.

     [P]

     [அணிகலம் + செப்பு.]

அணிகலன்கள்

அணிகலன்கள் aṇigalaṉgaḷ, பெ. (n.)

   நகை நட்டு ; ornaments, jewels.

     “செய்யணி கலன்கள் சிந்தி” (சீவக. 117);.

     [அணிகலம் → அணிகலன்.]

அணிகலம்

அணிகலம் aṇigalam, பெ. (n.)

   1. நகை ; ornament, jewel.

   2. நகைப்பெட்டி (புதுவை);; jewel-casket (Pond.);;

   3. கம்மாளர் கருவி (யாழ்.அக.); ; smith’s instrument.

ம. அணிகலம்

அணிகள்

அணிகள் aṇikaḷ, பெ. (n.)

   படை வகுப்புகள்; cadre of army.

     “அணிகள் ஒரு முகமாக உந்தின.” (கலிங். 11:134);.

     [அணி+கள்]

அணிகிற்பார்

அணிகிற்பார் aṇikiṟpār, பெ. (n.)

   சூடிக் கொள்வோர்; one who wears.

     “இத்தலத்தினில் இம் மலர்ப்பரிமளம் இல்லை

என்று அணிகிற்பார்” (வி.பா. 42:69.);.

     [அணி+அணிகிற்பார்]

அணிகிலாதவர்

அணிகிலாதவர் aṇikilātavar, பெ. (n.)

   பூசாதவர்; one who has not smeared vibuti on the forehead.

     “வெண்ணீறு அணிகிலாதவரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே.” (வாச. 518);.

     [அணிக்கு+இயலாதவர்]

அணிகோல்

அணிகோல் aṇiāl, பெ. (n.)

   அணி தெரி வதற்காக இழைகள் அணி மாறி வரும் இடங்களில் பயன்படுத்தும் கோல். (நெ.கொ.க. 52);; an implement in loom.

     [அணி+கோல்]

அணிக்கடவு

 அணிக்கடவு aṇikkaṭavu, பெ. (n.)

   உடுமலைப் பேட்டை வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Udumalipet Taluk.

     [அணி+கடவு]

அணிக்கிழங்கு

 அணிக்கிழங்கு aṇikkiḻṅgu, பெ. (n.)

   நுணாவின் அடிவேர்க் கிழங்கு; the bulbus root of the nuna (சா.அக.);.

     [ஒருகா. அடிக்கிழங்கு → அணிக்கிழங்கு.]

அணிசநாசம்

 அணிசநாசம் aṇisanāsam, பெ. (n.)

   நாக மல்லிகை; snake jasmine, Rhinacanthus communis (சா. அக.);.

அணிசெய் ஆடையன்

 அணிசெய் ஆடையன் aṇiseyāṭaiyaṉ, பெ.(n.)

   புனைவான உடை உடுப்பவன் (சிங் காரக்காரன்);; fop gaily dressed person.

     [அணி+செய்+ஆடையன்]

அணிச்சுரம்

 அணிச்சுரம் aṇiccuram, பெ. (n.)

அணிசநாசம் பார்க்க;see aņišanašam.

அணிச்சுராவிதம்

 அணிச்சுராவிதம் aṇiccurāvidam, பெ.. (n.)

   சிவப்புக் கீழ்க்காய் நெல்லி; red small-leaved feather foil, Phyllanthus polyphyllus alias P. niruri (சா.அக.);.

அணிச்சை

 அணிச்சை aṇiccai, பெ. (n.)

   நாகமல்லி (பச்.மு.);; ringworm root.

ஒ.நோ; அனிச்சை.

அணிஞ்சகம்

 அணிஞ்சகம் aṇiñjagam, பெ. (n.)

   கொடிவேலி; Ceylon leadwort, Plumbago zeylanica (சா.அக.);.

அணிஞ்சில்

அணிஞ்சில்1 aṇiñjil, பெ. (n.)

   1. கொடிவேலி (மலை.);; Ceylon leadwort.

   2. சிற்றாமுட்டி (மலை.); ; rose-coloured sticky mallow.

   3. நொச்சி (மலை.); ; five-leaved chaste tree.

   4. முள்ளி (மலை.); ; species of Solanum.

 அணிஞ்சில்2 aṇiñjil, பெ. (n.)

அழிஞ்சில் (வின்.);:

 sage-leaved tree, Alangium.

     [அழிஞ்சில் → அணிஞ்சில்.]

அணிஞ்சேபம்

 அணிஞ்சேபம் aṇiñjēpam, பெ. (n.)

   சிவப்புக் கொம்மட்டி; a red variety of water-melon, Citrullus vulgaris (சா.அக.);.

அணிதா

அணிதா aṇitā, செ.கு.வி. (v.t.)

   அழகு செய்; adding smartness.

     “ஆடியும் ஆடையும் அணிதரு கலன்களும்” (சில. 28:63);

     [அணி+தகு]

அணிதைவரல்

அணிதைவரல் aṇitaivaral, தொ.பெ. (abln.n.)

அணிவகைளைச் செறித்தலும் திருத்தலும்,

 adjust ornaments and reset dress.

     “ஊழ் அணிதைவரல் உடை பெயர்த்து உடுத்தலொடு” (தொல். 24:14);.

     [அணி+தைவரல்]

அணித்தக

அணித்தக aṇittaka, வி.எ. (adv.)

அழகு பொருந்த

 fitting

     “அணித்தகப்பல்பூங்கானல் அல்கிலம் வருதல்” (அக. 20:9-10);.

     [அணி+தகு]

அணித்தகு

அணித்தகு aṇittaku, பெ.எ. (adj.)

அணிபெற வகுக்கத்தக்க

 appropriate.

     “அணித்தகு புரி குழல் ஆயிழை தன்னொடும்” (சில. 15:99);.

     [அணி+தக]

அணித்தகை

அணித்தகை aṇittakai, பெ. (n.)

   பேரழகன்; a smart person.

     “பணித்த மாற்றம் அணித் தகைக்கு உரைப்ப” (பெருங் 36:354.);.

     [அணி+தகை]

அணிநிலைமாடம்

அணிநிலைமாடம் aṇinilaimāṭam, பெ. (n.)

   அடுக்கான மேனிலைகளுள்ள வீடு அல்லது கட்டடம்; storeyed house.

     “அத்தம் பெயரிய வணிநிலை மாடத்து” (பெருங். உஞ்சைக். 33; 105);.

அணிநுணா

 அணிநுணா aṇinuṇā, பெ. (n.)

   இராமசீத்தா (யாழ்ப்.);; bullock’s heart, s, tr., Anona reticulata.

ஒ.நோ; Span. anona.

அணிந்தம்

 அணிந்தம் aṇindam, பெ. (n.)

   கோபுரவாயிலின் முகப்பிலுள்ள மேடை (வின்.);; pial at the entrance of a temple tower.

     [அணி → அணிந்து → அணிந்தம் → அளிந்தம் → Skt. alinda.]

அணிந்தருளி

அணிந்தருளி aṇintaruḷi, வி.எ. (adv.)

   அணிந்து கொண்டு; clad with jwellery.

     “அழகின் மேல் அழகுற அணி அனைத்தும் அணிந்தருளி (கலிங். 10-49);.

     [அணிந்து+அருளி]

அணிந்தற்றுப்போ-தல்

அணிந்தற்றுப்போ-தல் aṇindaṟṟuppōtal,    8 செ.கு.வி. (v.i.)

   வறுமைப்படுதல் (இராட்);; to become destitute (R.);.

     [ஒருகா. அழிந்தற்றுப்போ → அணிந்தற்றுப்போ.]

அணிந்தவை

அணிந்தவை aṇintavai, பெ. (n.)

ஒப்பனை செய்யப்பட்டவை,

 decorated.

“கோல யானை நால் இரண்டு மிகையாஆயிரம்அணிந்தவை.” (பெருங் 60:203-4);.

     [அணி-அணிந்தவை]

அணிந்தவைதிருத்தல்

அணிந்தவைதிருத்தல் aṇindavaidiruddal, பெ. (n.)

   காதல் மயக்குற்ற இளம்பெண் தன் நெகிழ்ந்துபோன வளையல் முதலிய அணிகளைச் செறித்தல், இருபத்து நான்கு மெய்ப் பாட்டுச் செயல்களுள் ஒன்று; one of the 24 emotional acts of a maiden overwhelmed with love, such as tightening the loosened bracelets.

     “அணிந்தவை திருத்தல்” (தொல், பொருள். மெய்ப். 15);.

அணிந்திடு-தல்

அணிந்திடு-தல் aṇintiṭutal, செ.குன்றா.வி. (v.t.)

நிறுத்தி விடுதல்:to stop.

     “அப்பெருஞ் சேனையில் அவனை உள்ளறத் துப்பு உற அணிந்திடின் துன்னல் ஆகுமோ. “(வி.பா.41. 187);

     [அணிந்து+இடு]

அணிந்துரை

அணிந்துரை aṇindurai, பெ. (n.)

   முகவுரை, பாயிரம்; preface (நன். 1);.

     [அணிந்து + உரை.]

அணிபடு-த்தல்

அணிபடு-த்தல் aṇibaḍuttal,    5 செ.குன்றாவி, (v.t.)

   1. சுவடித்தல், அழகுபடுத்துதல்; to decorate.

     “அண்டம் வெஃக அணிபடுத் திட்டவை” (கந்தபு. உற்பத். திருக்கல். 31);.

   2. ஒழுங்காக்குதல்; to set in order, arrange, regulate.

அணிபெறு-த்தல்

அணிபெறு-த்தல் aṇibeṟuttal,    5 செ.குன்றாவி. (v.t.)

   அழகுபெறச் செய்தல், புனைதல்; to adorn.

     “அந்நகருக்கோர்நாம மணிபெறுத்தி யளித்தனனே” (கந்தபு. அசுர நகர்செய். 22);.

அணிப்பாடு

 அணிப்பாடு aṇippāṭu, பெ. (n.)

   வணிக மருமம் (இ.வ.); ; trade secret (Loc.);.

க. அணிபாடு

அணிப்பூ

 அணிப்பூ aṇippū, பெ. (n.)

   புளி; tamarind, Tamarindus indica (சா.அக.);.

அணிமா

அணிமா aṇimā, பெ. (n.)

அட்டமாசித்திகளின் சிற்பவடிவங்களில் ஒன்று (5:117);; a feature in sculpture,

     [அண்-அணிசமா]

அணிமாக்கசங்கு

 அணிமாக்கசங்கு aṇimākkasaṅgu, பெ. (n.)

இந்துப்பு; rock-salt (சா.அக.);.

அணிமாறுதல்

அணிமாறுதல் aṇimāṟutal, பெ. (n.)

இழை தன் அணியில் செல்லாமல் வேறொரு அணியுடன் சேர்ந்திருத்தல். (நெ.கொ.க. 52);.

 changing of thread line in handloom operation.

     [அணி+மாறுதல்]

அணிமாவலி

 அணிமாவலி aṇimāvali, பெ. (n.)

   சிவகங்கை வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Sivagangai Taluk.

     [அணி+மாவலி]

அணிமுகம்

அணிமுகம் aṇimugam, பெ. (n.)

   அலங்காரமான வாயில்முகப்பு; decorated portal.

     “வாயின் மாடத் தாய்நல வணிமுகத்து” (பெருங். மகத. 3 ; 31);.

அணிமுலை

அணிமுலை aṇimulai, பெ. (n.)

   1. பூசணி (மலை.);; pumpkin.

   2. அழிஞ்சில்; ancola fruit plant, Alangium lamarckii (சா.அக.);.

அணிமுலைப்பால்

 அணிமுலைப்பால் aṇimulaippāl, பெ. (n.)

   பூசணிக்காம்பினின்று ஒழுகும் நீர்; fluid oozing out of the pumpkin peduncle (சா.அக.);

     [அணி முலை + பால்.]

அணிமுலைமாது

 அணிமுலைமாது aṇimulaimātu, பெ. (n.)

   பூசணிக்காய்; pumpkin, Cucurbita maxima.

அணிமை

அணிமை1 aṇimai, பெ. (n.)

   அருகு; nearness, proximity, either of time or place.

     “மூதூரணிமையின்” (காஞ்சிப்பு. நாட், 16);.

     [அண் → அணி → அணிமை.]

 அணிமை2 aṇimai, பெ. (n.)

   1. நுண்மை (சிந்தா.நி. 105);; minuteness.

   2. அணுவைப் போல் நுண்மையாகை, எண்பெரும் பெற்றிகளுள் ஒன்று; supernatural power of becoming as small as an atom, one of emperum-perrigal.

     [அள் = கூர்மை, நுண்மை. அள் → அண் → அணி → அணிமை.]

அணியக்கால்

 அணியக்கால் aṇiyakkāl, பெ.(n.)

   கப்பலின் முன்னணியத்திலிருந்து வெளியே புறப்படும் உத்திரம்; bow sprul.

     [அணிய(ம்);+கால்]

அணியத்துக்கட்டை

 அணியத்துக்கட்டை aṇiyattukkaṭṭai, பெ. (n.)

     [அண் → அணி → அணியம். அணியம் + அத்து + கட்டை.]

அணியன்

அணியன்1 aṇiyaṉ, பெ. (n.)

   1. அழகன்; handsome man.

   2. அணியுடையவன்; one who possesses ornaments.

   3. அணிகளையணிந்தவன்; one who is wearing ornaments.

     [அணி →- அணியன்.]

 அணியன்2 aṇiyaṉ, பெ. (n.)

   நெருங்கினவன்; one who is very close.

     “நாய்க்காற் சிறு விரல்போ னன்கணியர்” (நாலடி. 218);.

க. அணுக

     [அணி → அணியன்.]

அணியப் பாய்மரப் பாய்

 அணியப் பாய்மரப் பாய் aṇiyappāymarappāy, பெ. (n.)

   அணியத்திலுள்ள பாய்மரத்திற் கட்டும் பாய் (புதுவை); ; sail of the mast on the prow of a vessel (Pond.);.

     [அணியம் + பாய் + மரம் + பாய்.]

அணியப் பாய்மரப்பருமல்

 அணியப் பாய்மரப்பருமல் aṇiyappāymarapparumal, பெ. (n.)

அணியப் பாய்மரப் பாய் பார்க்க;see aniya-p-раymara-p-рау.

     [அணியம் + பாய்மரம் + பருமல்.]

அணியம்

அணியம் aṇiyam, பெ. (n.)

   படைவகுப்பு; array of an army.

   2. உடனே வினைதொடங்கற்கேற்ற நிலை (ஆயத்தம்); (வின்.);; readiness.

க. அணி.

   3. கப்பலின் முன்பக்கம்; forepart of a vessel, stem, prow.

அணியத்திலே கிழிந்தாலுங் கிழிந்தது, அமரத்திலே கிழிந்தாலுங் கிழிந்தது (உ.வ.);.

   4. துணைக்கருவி; apparatus (சா.அக.);.

   5. ஆட்டின் தலை; sheep’s head (சா.அக.);.

ம. அணியம்; து. அண்ய.

     [அணி → அணியம் = போருடையணிந்து படைக்கலங்களைத் தாங்கி நிற்றல்போல், அல்லது போர்க்களத்திற் படைவகுப்பு வகுக்கப்பட்டதுபோல், வினை உடனே தொடங்கற்கேற்ற நிலை, ஒருகா, போர்ப்படையின் முன்னணியும் கப்பலின் முன்பக்கமும் போர் தொடங்குவதையொத்தது போலும், போர்முகத்தில் வெட்டப்படும் ஆட்டுக்கடாவெட்டு.]

 அணியம் aṇiyam, பெ.(n.)

   செயலாக்க முனைப்பு; completely prepared for action.

தவ. செயல்முனைப்பு

     [அணி-அணியம்]

அணியல்

அணியல் aṇiyal, பெ. (n.)

   1. வரிசை; line, order.

     “அளக்கர்வாய் முத்தமூர லணியலா ரணியின் சோதி” (கம்பரா. அயோத். கைகேயி சூ. 79);.

   2. மாலை; garland.

     “அணிய லணிகுவ னன்றி” (நைடத. அன்னத்தைத்தூ. 99);.

   3. அழகுசெய்கை; adorning, decorating.

     “கறைமிட றணியலு மணிந்தன்று” (புறநா. 1;5);.

ம. அணியல்

     [அணி + அணியல்.]

அணியாதோர்

அணியாதோர் aṇiyātōr, பெ. (n.)

   அணிகலன் பூணாதவர்; those who are not wearing ornaments.

     “இறை கொண்டோருள் அணியாதோரை ஆராய்ந்து வழி தரும்.” (பெருங். 40:42-3);.

     [அணி+ஆ+சி+த்+(ஆர்);ஒர்]

அணியாத்தரங்கன்

 அணியாத்தரங்கன் aṇiyāttaraṅgaṉ, பெ. (n.)

   அணில்; squirrel (சா.அக.);.

அணியாவயல்

 அணியாவயல் aṇiyāvayal, பெ. (n.)

   சிவகங்கை வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Sivagangai Taluk.

     [அணியா+வயல்]

அணியிடுவான்வரி

அணியிடுவான்வரி aṇiyiḍuvāṉvari, பெ. (n.)

   பழைய வரிவகை (S.I.I. iv, i22);; an ancient tax.

அணியியல்

அணியியல் aṇiyiyal, பெ. (n.)

   1. (இலக்.); அணியிலக்கணம்;   2. ஒரு பண்டை அணியிலக்கண நூல் (சிலப். 2 ; 27, உரை);; an ancient work on rhetoric.

     [அணி + இயல்.]

அணியிலக்கணம்

 அணியிலக்கணம் aṇiyilakkaṇam, பெ. (n.)

   சொல்லணி பொருளணி யென்னும் இருவகை யணிகளையும் பற்றிக் கூறும் இலக்கணம்; rhetoric.

     [அணி + இலக்கணம்.]

அணியிழை

அணியிழை aṇiyiḻai, பெ. (n.)

   1. அழகிய அணிகலம்; beautiful jewel or ornament.

   2. அழகிய அணிகளையணிந்த பெண்; woman, adorned with beautiful jewels.

     “அணியிழை தன்னோய்க்குத் தானே மருந்து” (குறள், 1102);.

     [அணி + இழை.]

அணியுஞ்செம்பு

 அணியுஞ்செம்பு aṇiyuñjembu, பெ. (n.)

   உயர்ந்த களிம்பற்ற செம்பு; superior copper which is free from verdigris, pure copper (சா. அக.);.

     [அணியும் + செம்பு.]

அணியெண்

அணியெண் aṇiyeṇ, பெ. (n.)

   35 என்னும் எண், தண்டியலங்காரம் என்னும் தமிழ் அணியிலக்கண நூலிற் சொல்லப்பட்டுள்ள பொருளணிகளின் தொகை; the number 35, as that of porul ani in Tandiyalangaram, a Tamil treatise on rhetoric.

     “அணியெண் முதலிரண்டரைத்தூக்கு” (தைலவ. தைல, 42);.

அணியொட்டிக்கால்

 அணியொட்டிக்கால் aṇiyoṭṭikkāl, பெ. (n.)

   தலைப்பக்கம் வேலைப்பாடமைந்த தமிழ் நாட்டுக் கோயிற் கற்றூண்; Dravidian temple pillar with ornamented capital.

அணியொட்டிக்கால் மண்டபம் (உ.வ.);.

     [அணி + ஒட்டி + கால்.]

அணிற்காலன்

 அணிற்காலன் aṇiṟkālaṉ, பெ. (n.)

   மாடு வகை; species of Cow.

     [அணில்+காலன்]

அணிற்பிள்ளை

அணிற்பிள்ளை aṇiṟpiḷḷai, பெ. (n.)

   1. அணிற் குட்டி; young of squirrel.

   2. அணில்; squirrel,

     [அணில் + பிள்ளை.]

சிலர் அணிலைப் பிள்ளையைப்போல் வீட்டில் வளர்ப்பதால், அதன் குட்டிமட்டுமன்று, முழுவளர்ச்சியடைந்த அணிலும், பிள்ளையெனப்படும். இருக்கும் பிள்ளை மூன்று, பறக்கும் பிள்ளை மூன்று, ஒடும் பிள்ளை மூன்று என்பது ஒரு சொலவடை. ஒடும் பிள்ளை மூன்றனுள் ஒன்று அணில்,

 அணிற்பிள்ளை1 aṇiṟpiḷḷai, பெ. (n.)

நான்கு கட்டத்திற்குள் சிறுகல்லினை எடுத்து ஆடல்; a children”s play.

     [அணில்+பிள்ளை]

 அணிற்பிள்ளை2 aṇiṟpiḷḷai, பெ. (n.)

காக்கைக்குஞ்சு விளையாட்டில் மற்றொரு பெயர்; name of a game.

     [அணில்+பிள்ளை]

அணிலம்

அணிலம் aṇilam, பெ. (n.)

   அணில்; squirrel.

     “தரங்கநீ ரடைக்க லுற்ற சலமிலா வணிலம்” (திவ். திருமாலை, 27);.

     [அணில் → அணிலம்.]

அணிலாடி

 அணிலாடி aṇilāṭi, பெ. (n.)

   செஞ்சி வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Senji Taluk.

     [அணில்+ஆடி]

அணில்

அணில் aṇil, பெ. (n.)

   மரங்களில் வாழ்வதும், சாம்பல் நிறமும் மயிரடர்ந்த வாலும் முதுகில் மூவெள் வரியும் உள்ளதும், வால் நீங்கலாக 8 விரலம் (அங்குலம்); நீளம் வளர்வதும், வேகமாய் ஓடவும் தாவவும் வல்லதும், கொறிப்பான் (rodent); வகுப்பைச் சேர்ந்ததுமான_உயிரி (பிராணி);; squirrel, Furambulus palmarum, a kind of arboreal rodent of ashen grey colour, growing to a length of about 8 inches excluding the tail, with three whitish stripes along the whole length of the back and with bushy tail, distinguished by its agility and power of leaping and fast-running.

     “மூவரி யணிலொடு” (தொல், பொருள். மர. 6);.

     ‘அணில் கொப்பிலும் ஆமை கிணற்றிலும்’,

     ‘அணில் நெட்டியா தென்னை சாயும்?’,

     ‘அணிற்பிள்ளைக்கு நுங்கு அரிதோ? ஆண்டிச்சி பிள்ளைக்குச் சோறு அரிதோ?’,

     ‘அணிற்பிள்ளையின் தலை மீது அம்மிக் கல்லை வைத்தது போல’ (பழ.);.

ம. க., பட., துட. அணில்; து. சணில்.

     [அணி → அணில் = முதுகில் மூவரியுள்ளது. அணி = வரி.]

   சாம்பசிவம் பிள்ளை தமிழ்-ஆங்கில அகர முதலி அணிலைப்பற்றிச் சிறப்பாகக் கூறுவது வருமாறு ; Squirrel, Sciurus palmarum. It is the name given to the various species of rodents living in trees………… The several species are;

   1. பனையேறியணில் ;  palm squirrel.

   2. வரியணில்;  striped squirrel, Pencillatus.

   3. பறவையணில் ;  flying squirrel, Pteromis petaurista.

 Besides the above three, there are also striped squirrels of Travancore, Nilgiris, Malabar, etc.

 The other South Indian species are–Elephinstonei, Layardi, Macrourus, Tristriatus, Sublineatus.

அணில் வால் பூண்டு

அணில் வால் பூண்டு aṇilvālpūṇṭu, பெ. (n.)

   வயல்களில் வளரும் களைச்செடி. (வ.வ.வே.க.10);; a weed.

     [அணில்+வால்+பூண்டு]

அணில்வரிக் கொடுங்காய்

அணில்வரிக் கொடுங்காய் aṇilvarikkoḍuṅgāy, பெ. (n’)

   வெள்ளரிக்காய் (புறநா. 246 ; 1);; cucumber.

     [அணில் + வரி + கொடும் + காய்.]

அணில்வரியன்

அணில்வரியன் aṇilvariyaṉ, பெ. (n.)

   1. வெள்ளரிவகை (யாழ்ப்.);; mottled watermelon, Citrullus vulgaris (J.);.

   2. வரிப் பலாப்பழம் (யாழ்ப்.); ; a streaked jackfruit (J.);.

   3. முதுகில் வரியுள்ள ஆவு (பசு); (யாழ்ங்.);; cow with a large stripe on its back (J.);.

   4. ஒருவகைக் கோடுள்ள பட்டு (யாழ்ப்.);; a kind of silk cloth with stripes (J.);.

அணில்வாற்றினை

 அணில்வாற்றினை aṇilvāṟṟiṉai, பெ. (n.)

   அணிலின் வாலைப்போன்ற கதிருள்ள ஒரு வகைத் தினை (யாழ்ப்.); ; species of Italian millet, Panicum italicum (J.);.

     [அணில் + வால் + தினை.]

அணிவகு-த்தல்

அணிவகு-த்தல் aṇivaguttal,    4 செ.குன்றாவி. (v.t.)

   தானை, குதிரை, யானை, தேர் என்னும் நால்வகைப் படைகளையும், வெற்றிபெறற் கேற்றவாறு பெரும்படைத் தலைவன் தான் கருதியபடி போர்க்களத்தில் வகுத்து நிறுத்துதல் ; to draw up in battle array, as the commander-in-chief or generalissimo, all the four constituents of an army, namely infantry, cavalry, elephantry and chariotry, on the battle-field in strategic formation.

     “மண்ணகத்தணி யணிகளாக மகீபர்தம்மை வகுத்துளான்” (பாரத. படையெழுச். 38);.

அணிவகுப்பு

அணிவகுப்பு aṇivaguppu, பெ. (n.)

   படை மறவரை வரிசைப்பட நிறுத்துதல்; strategic formation of an army in battle array.

அணிவகுப்பு எனினும் படைவகுப்பு எனினும் ஒக்கும். அது வடிவு (வியூகம்);, உறுப்பு என இருதிறப்படும்.

தண்டம், மண்டலம், சக்கரம், சகடம், பருந்து முதலியனவாக வடிவு பலவகைப்படும். வடிவின்வகை, சேனையின் அளவையும் படையின் வகையையும் போர்க்களத்தின் பரப்பையும் அவ்வப்போது நேரும் போர் நிலைமையையும் படைத்தலைவன் திறமையையும் பொறுத்தது.

ஒட்டு, உண்டை, அணி என்பன வடிவின் பெயர்கள்.

     “ஒட்டும் யூகமு முண்டையு மணியு

மற்றிவை படையின் வகுப்பென லாகும்” (பிங், 6 ; 402);.

தூசி (தூசு);, கூழை, நெற்றி, கை, அணி என்பன உறுப்பின் பெயர்கள். உறுப்புகள் என்பன வடிவுகளின் பிரிவுகள். பருந்து வடிவின் உறுப்புகள் ஏழாகலாம். தார், தூசி, கொடி என்பன ஒருபொருட் சொற்கள். அவை படையின் முன்னணியைக் குறிப்பன.

கூழை யென்பது பின்னணி. அதன் பிற்பகுதி கடைக்கூழை யெனப்படும்.

     “தூசியுங் கூழையு நெற்றியுங் கையு

மணியு மென்ப தப்படைக் குறுப்பே” (பிங். 6;403);.

     “தாரே முன்செல் கொடிப்படை யாகும்” (பிங், 6 ; 405);.

படையியல்பற்றிக் கூறும் பண்டைத் தமிழ்ப் பொருள் நூல்களெல்லாம் இறந்துபட்டன. அதனாலேயே, பரிமேலழகர் படை வகுப்பாவது வியூகம் ; அஃது எழுவகை உறுப்பிற்றாய், வகையால் நான்காய், விரியால் முப்பதாம்……………. இவற்றின் பெயர்களும் இலக்கணமும் ஈண்டுரைப்பிற்பெருகும். அவையெல்லாம் வடநூல்களுட் கண்டுகொள்க’ என்று உரைத்தார் (குறள், 767, பரிமே. உரை);. தொன்றுதொட்டு வருதல் சேர சோழ பாண்டியரென்றாற்போலப் படைப்புக் காலந் தொடங்கி மேம்பட்டு வருதல்’ என்று அவரே (குறள், 955, உரை); கூறியிருப்பதால், இறந்துபட்ட தமிழ் நூல்களே வடநூல்கட்கு முதனூல்களென்பது தானே பெறப்படும்.

அணிவடம்

 அணிவடம் aṇivaḍam, பெ. (n.)

   கழுத்திலணியும் மணிமாலை; ornamental string of jewels, necklace.

அணிவரிசை

 அணிவரிசை aṇivarisai, பெ.(n.)

   பிறர் மணங் கொள்ளும் வகையில் காட்சிப்படுத்தப்பட்ட பொருள்களின் பெருந்தொகுதி; array

     [அணி+வரிசை]

அணிவி-த்தல்

அணிவி-த்தல் aṇivittal, செயப்.வி. (v.caus.)

   எழுதச் செய்தல்; to make to write. “orio

“அங்கு அதன் பாதத்து ஈரத்து அருகுகலாம் அணிவித்திட்டான்.”குள930),

     [அணி-அணிவி]

அணிவியூகம்

 அணிவியூகம் aṇiviyūkam, பெ. (n.)

   படை வகுப்பு; military array.

     [அணி + Skt. vyaha → த.வியூகம்.]

அணிவிரல்

அணிவிரல் aṇiviral, பெ. (n.)

   மோதிர விரல்; ring-finger.

     “அதிரதர் தம்மை யெண்ணி லணிவிரல் முடக்க வொட்டா” (பாரத. நிரைமீட் 91);.

ம. அணிவிரல்

     [அணி + விரல். அணி = மோதிரம், கைந்நகை. அண் → அணி.]

     [P]

அணிவில்

அணிவில் aṇivil, பெ. (n.)

   பேரேடு (கணக். பதி. 36);; ledger.

அணிவிளக்கு-தல்

அணிவிளக்கு-தல் aṇiviḷakkudal,    5 செ.குன்றாவி. (v.t)

   அலங்கரித்தல்; to adorn.

     “தில்லைநகர் மணிவீதி யணிவிளக்கும்……… அனபாயன்” (பெரியபு. புகழ்ச் 8);.

அணிவீதி

அணிவீதி aṇivīti, பெ. (n.)

   மடவளகாம்; mut complex”

அண்ணலவன் கண் எதிரே அணி விதிமடி விடை மேல்.”(பெரிய 130);

     [அணி+வீதி]

அணிவு

அணிவு aṇivu, பெ. (n.)

   அணிகை; wearing.

     “புனையிழைகள் அணிவும்” (திவ். திருவாய். 8.9 ; 5);.

ம. அணிவு

     [அணி → அணிவு.]

அணிவேர்

அணிவேர் aṇivēr, பெ. (n.)

   வெட்டிவேர்; cuscuss grass root, Andropogon aromatices.

     “அணிவேர் தகரம் பூரம்” (தைலவ. தைல. 86);.

அணு

அணு aṇu, பெ. (n.)

   1. நுண்மை (பிங்.);; minuteness, smallness, subtleness.

     ‘அணு அளவு இலாபத்திலும் அரைப்பங்கு பாழ்’, ‘அணு மாமேரு ஆகுமா?’,

     ‘அணுவும் மலையாச்சு மலையும் அணுவாச்சு (பழ.);.

   2. பகுக்க முடியாவாறு நுண்மையானது; minute particle of matter, atom.

     “அணும யங்குமின் நுழை கதிர் எறிந்தவா ளாக” (பிரபுலிங்க. கோரக். 53);;

     ‘அவனின்றி அணுவு மசையாது’ (பழ.);.

   3. ஆதன் (ஆன்மா);; soul.

     “அன்னை யொப்ப வணுக்கட்கு நல்லவர்” (திருவாலவா. 34 ;19);.

   4. நுண்ணுடம்பு (சூக்கும சரீரம்);; subtle body.

     “உளமணுவாய்ச் சென்று” (சி.போ. சிற். 2.3 ; 1);.

   5. நுண்ணாற்றல் வடிவம் (சூக்கும சத்திரூபம்);; a body or form having minute power.

     “வித்துச் சாகாதி யணுக்க ளாக வேற்றதேல்” (சி.சி. சுபக். 1;14);.

   6. மந்திரம் (பொதி.நி.);; mantra.

   7. பொடி (பிங்.); ; dust.

   8. தினை; Italiam millet, Panicum italicum (சா.அக.);.

   9. வரகு; common millet (சா.அக.);.

ம,. க., து. அணு.

     [அள் = கூர்மை, அள் → அள்கு → அஃகு. அஃகுதல் = கூரிதாதல், சுருங்குதல், நுண்ணிதாதல். அள் → அண் → அணு = நுண்மை, நுண்ணியது, மிகச் சிறியது.]

அணுஆர் அணி

அணுஆர் அணி aṇuāraṇi, பெ. (n.)

   உயிர்க்கு உயிராகிய திருவருள்; blessing that thrills the innermost soul.

     “ஆயும் அளிவும் கடந்து அணு ஆர்அணி “மூல 239)

     [அணு+ஆர்+அணி]

அணுகஒட்டு-தல்

அணுகஒட்டு-தல் aṇukaoṭṭutal, செகுன்றா.வி. (v.t.)

   சேரவிடல்; allow to join.

     “அவனுடன் அணுக ஒட்டேன்.”(வி.பா.27:156);

     [அனுக+ஒட்டு]

அணுகம்

 அணுகம் aṇugam, பெ. (n.)

   செஞ்சந்தனம் (பச். மூ.);; red sanders.

அணுகலர்

 அணுகலர் aṇugalar, பெ. (n.)

   பகைவர்; enemies, foes.

அணுகா அணிமை

அணுகா அணிமை aṇukāaṇimai, பெ. (n.)

   உடனாந்தன்மை; inseparable union.

அவ்வினைப் பயன் நீ அணுகா

அணிமை” (ப.பி 5:5-6);.

     [அனுகா+அணிமை]

அணுகா முன்னம்

அணுகா முன்னம் aṇukāmuṉṉam, பெ. (n.)

   சேர்வதற்கு முன்னம்; before reaching

     “அற்றவன் தலை மீது ஓங்கி அண்டம் உற்று அணுகாமுன்னம் “யுத் 28:53,

     [அணுகாத+முன்னம்]

அணுகாரணவாதம்

அணுகாரணவாதம் aṇukāraṇavātam,    ஐம்பூத நுண்ணணுக்களே உலக முதற்கருவி யென்னுங் கொள்கை (சி.சி. சுபக். 1;11, சிவஞா); doctrine that the Universe is created from the atoms of the five elements.

     [அணு + காரணம் + வாதம். Skt, karaரa → த. காரணம். Skt vada → த. வாதம். காரணம் = த. கரணியம். வாதம் = த. உறழ். அணுகாரண வாதம் → த. அணுகரணியவுறழ்.]

அணுகார்

 அணுகார் aṇukār, பெ. (n.)

அணுகலர் பார்க்க;see anugalar.

அணுகியான்

அணுகியான் aṇukiyāṉ, பெ. (n.)

   நெருங்கிய வன்; close person.

     “யாதும்அணுகாது அணுகியான்”(சே3-4);.

     [அணுகியவன்-அணுகியான்]

அணுகிற்றல்

அணுகிற்றல் aṇukiṟṟal, தொ.பெ. (vbl.n.)

   கிட்டுவேன்; meeting.

     “யான் உன்னை எங்கு வந்து அணுகிற்றனே.”(சட32-5);

     [அணுகு+நிற்றல்-அணுகிற்றல்]

அணுகு-தல்

அணுகு-தல் aṇugudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   கிட்டுதல், நெருங்குதல்; to draw near, approach.

     “தாணிழன் மருங்கி லணுகுபு” (பொருந. 149);.

     [அள் → அண் → அணு → அணுகு.].

அணுகுபு

அணுகுபு aṇukupu, வி.எ.(adv)

அண்ணிதாக

 closely

தாள் நிழல் மருங்கின் அணுகுபு குறுகி “(பொரு 149);.

     [அணுகு+பு]

அணுகுறு-தல்

அணுகுறு-தல் aṇukuṟutal, செ.குன்றாவி (v.t)

   நெருங்குதல்; nearing.

     “அண்டர் தானவர் அரக்கரும் அணுகுறாவனத்தில்.”(விபா 14: 25);.

     [அணுகு+தல்]

அணுக்க சேவகம்

அணுக்க சேவகம் aṇukkacēvakam, பெ. (n.)

   அருகில் இருந்து செய்யும் தொண்டு; to be near and serve always.

     “ஓவா அணுக்கச் சேவகத்தில் உள்ளோர்.”(பெரிய 13491);.

     [அணுக்கம்+சேவகம்]

அணுக்கச்சேவகம்

அணுக்கச்சேவகம் aṇuggaccēvagam, பெ. (n.)

   அரசர் முதலியோரிடம் அணுகிச் செய்யும் ஊழியம்; service to kings and nobles as personal attendant.

     “அணுக்கச் சேவகத்திலுள்ளோர்” (பெரியபு. ஏயர்கேர். 332);.

     [அணுக்கம் + Skt. sevaka → த. சேவகம்.]

அணுக்கம் பார்க்க;see anukkam.

அணுக்கடிக்கை

அணுக்கடிக்கை aṇukkaḍikkai, பெ. (n.)

   உண்ணெருக்கமாகுகை (ஈடு, 7.3 ; 4);; becoming intimate, becoming a confidential friend.

     [அணுக்கு + அடிக்கை. அடி → அடிக்கை.]

அணுக்கு பார்க்க;see anukku.

அணுக்கத்தொண்டன்

அணுக்கத்தொண்டன் aṇukkattoṇṭaṉ, பெ. (n.)

   1. அரசனுக்கு நெருங்கிப் பணிசெய்வோன்; one who renders service to a king as his personal attendant.

   2. இறைவனுக்கு நெருங்கிய அடியான்; an ardent devotee of God.

     [அணுக்கம் + தொண்டன்.]

அணுக்கநம்பி

அணுக்கநம்பி aṇukkanambi, பெ. (n.)

   சுந்தரமூர்த்தி நாயனார் (செந். XXV; 342);; Saint Sundarar.

     [அணுக்கம் + நம்பி.]

அணுக்கன்

அணுக்கன் aṇukkaṉ, பெ. (n.)

   1. அண்மையன்; one who is near.

     “வீரனை யணுக்கனாய்த் தொழுதான்” (தணிகைப்பு. நந்தி. 40);.

   2. தொண்டன்; devotee, as being near to God.

     “அவ்வப் புவன பதிகளுக்கு அணுக்கராய் வைகி” (சி.போ. பா. 8;1, பக். 429);.

   3. உண்ணெருக்கமானவன் (அந்தரங்கமானவன்); (திவ். பெரியாழ்.. 5.4 ; 11);; one who is intimate.

   4. குடை; umbrella.

     “அணுக்கனைக் கவிழ்த்துப் பிடித்தாற்போலே” (ஈடு, 5.6;6);.

     [அணுக்கம் → அணுக்கன்.]

அணுக்கன்திருவாயில்

 அணுக்கன்திருவாயில் aṇukkaṉtiruvāyil, பெ. (n.)

   உண்ணாழிகை (கர்ப்பக்கிருக); வாயில்; entrance to the inner sanctuary.

அணுக்கம்

அணுக்கம்1 aṇukkam, பெ. (n.)

   அண்மை, நெருக்கம்; proximity, nearness, closeness.

     “அணுக்க வன்றொண்டர்” (பெரியபு. வெள்ளா. 3);.

     [அள்ளுதல் = நெருங்குதல், செறிதல். அள் → அண். அண்ணுதல் = நெருங்குதல். அண் → அணு → அணுகு. அணுகுதல் = கிட்டுதல், நெருங்குதல். அணுகு → அணுக்கு → அணுக்கம்.]

 அணுக்கம்2 aṇukkam, பெ. (n.)

   1. சந்தனம்; sandalwood (அ.க.நி.);.

ஒ.நோ.: அணுகம்.

   2. பாம்பு; snake.

அணுக்கர்

அணுக்கர் aṇukkar, பெ. (n.)

   அகத் தொண்டர்; close devotees.

     “அணுக்கருக்கு அணிய செம்பொன்அம்பலத்தாடி”(மாளி 4: 4);.

     [அண்+அணுக்கர்]

அணுக்கற்பிதம்

அணுக்கற்பிதம் aṇukkaṟpidam, பெ. (n.)

   1. (உடலியங்.); அணுவைப்பற்றிய கோட்பாடு;   2. (வேதி.); அணுவின் கோட்பாடுகளைக் கற்பிக்கும் நூல்; the elements consist of indivisible atoms.

 the atoms of different elements unite in fixed proportions.

 they enter into chemical combinations (சா.அக.);.

     [அணுக்கற்பிதம் = அணுக்கோட்பாடு. அணு + கற்பிதம். Skt. kalpita → த. கற்பிதம்.]

அணுக்கள்

அணுக்கள் aṇukkaḷ, பெ. (n.)

ஐம் பூதங்களுக்குக் காரணமான மூலப் பொருள்கள்; source particles to the five elements of the nature.

     “நிறைந்த இவ்வணுக்கள்ளபூதமாய்நிகழின்.”(மணி27 : 138);

     [அனு+கள்]

அணுக்கவிளக்கு

அணுக்கவிளக்கு aṇukkaviḷakku, பெ. (n.)

   கோயில் திருமேனிக்கு (மூர்த்திக்கு);ப் பக்கத்தில் எரியும் திருவிளக்குவகை; light burning near the chief deity of a temple.

     ‘இரவை ஸந்திக்கு அணுக்க விளக்காக எரியவைத்த விளக்கு ஒன்றுக்கு’ (S.I.I. viii, 34);.

அணுக்காபிதம்

 அணுக்காபிதம் aṇukkāpidam, பெ. (n.)

   செஞ்சந்தனம்; red sandal-pterocarpus santalinus (சா.அக.);.

அணுக்கி

அணுக்கி aṇukki, பெ. (n.)

   திருவடியாள்; a female devotee.

=அணுக்கி மாரும் அநேகர் இருக்கவே” (கலிங். 321);.

     [அணுக்கன் (ஆ.பா.); – அணுக்கி (பெ.பா.);.]

அணுக்கிமார்

அணுக்கிமார் aṇukkimār, பெ. (n.)

   அருகிலிருந்து ஏவல் செய்யும் பெண்டிர்; close maid servents.

     “அரம்பையார் ஒத்துள அணுக்கிமாரும் அநேகர் இருக்கவே.” (கலிங்.11:10);

     [அணுக்கம்+ அணுக்கி+மார்]

அணுக்கிருமி

அணுக்கிருமி aṇukkirumi, பெ. (n.)

   1. அரத்த மோடும் நரம்பிடங்களில் பிறந்து அவற்றில் உலாவும் அறுவகைப் பூச்சிகளுள் ஒன்று; the minute organisms which appear in organic matter and are found moving in blood-vessels, Bacteria.

   2. சிறிய புழு; a germ, microbe.

     [அணுக்கிருமி = அணுப்புழு. அணு + Skt. krimi → த.கிருமி.]

அரத்தக்கிருமி பார்க்க;see aratta-k-kirumi.

அணுக்கு

அணுக்கு aṇukku, பெ. (n.)

   அணிமை, நெருங்கிய அண்மை; nearness.

     “தன்ன பேரணுக் குப்பெற்ற பெற்றியி னோடு” (திருக்கோ. 373);.

     [அண் → அணுக்கு.]

அணுக்கொப்புளம்

 அணுக்கொப்புளம் aṇukkoppuḷam, பெ. (n.)

   மிகச் சிறிய கொப்புளம்; a minute vesicle (சா.அக.);.

     [அணு + கொப்புளம்.]

அணுக்கோட்பாடு

 அணுக்கோட்பாடு aṇukāṭpāṭu, பெ. (n.)

   அணுவின் கற்பனை (அணுக்கொள்கை);; the theory that all matter is composed of atoms and the weight of each atom differs in different substances, the hypothesis that all chemical combinations take place between the ultimate particles of bodies and in proportions expressed by the simple multiple of the number of atoms, Atomic theory (சா.அக.); – Atomic theory that states that elemental bodies consist of indivisible atoms of definite relative weight, and that atoms of different elements unite with each other in fixed proportions, which determine the proportions in which elements and compounds enter into chemical combination— (C.O.D.);.

     [அணு + கோள் + படு. கோட்படு → கோட்பாடு = கொள்கை.]

அணுக்கற்பிதம் பார்க்க;seeanu-k-karpidam.

அணுசதாசிவர்

 அணுசதாசிவர் aṇusatāsivar, பெ. (n.)

     [Skt. Sadasiva → த. சதாசிவம் = அருட்சிவம்.]

அணுசதாசிவர் = த. அணுவருட்சிவர்.

அணுசாத்திரம்

 அணுசாத்திரம் aṇucāttiram, பெ. (n.)

   நுண்ணணுக்களைப்பற்றிய நூல்; the science of atoms, atomology.

     [Skt. Sastra → த. சாத்திரம் = நூல்.]

அணுசாத்திரம் = த. அணுநூல்.

அணுசைவம்

அணுசைவம் aṇusaivam, பெ. (n.)

   பதினாறு வகைச் சிவனியத்துள் (சைவத்துள்); ஒன்று; அது சிவனை உள்ளும் புறமும் ஐந்தொழில் (பஞ்ச கிருத்தியம்); செய்வனென்றறிந்து அம்மணக்கோலம் (திகம்பர வேடம்); பூண்டு, நன்னெறியிலக்கணத்தோடு (சன்மார்க்கலக்கணத்தோடு); கூடிக் குருவிலங்கக் கோலம் (குருலிங்க வேடம்); பொருளாய்ச் சிவன் செய்யுந் தொழில்களைப் பட்டறிவிலே (அனுபவத்திலே); பார்த்து, இன்பம் (ஆனந்தம்); பொங்கி அதன்கண் மனம் ஒன்றிவிடுவதே (மனோலய மாவதே); வீடு (மோட்சம்); என்று சொல்வது (த.நி.போ. 259); – (சங்.அக.);; Saiva sect which holds that an initiate into Šaivism should realise Śiva as performing the pañca-kiruttiyam in and out of himself, take delight there in and get absorbed in mind one of the 16 Šaivam.

     [சிவன் → சிவம் → Skt. saiva → த. சைவம்.]

அணுதரிசினி

 அணுதரிசினி aṇudarisiṉi, பெ. (n.)

   நுண்பொருளைப் பெரிதாகக் காட்டும் கண்ணாடி; microscope.

     [Skt. drs → த. தரிசி → தரிசினி. அணு தரிசினி = அணுக்காணி, பூதக்கண்ணாடி, பெருக்கங்காட்டி.]

அணுத்தத்துவம்

 அணுத்தத்துவம் aṇuttattuvam, பெ. (n.)

   நுண்ணணுவின் உண்மையைப்பற்றியவொரு நூல்; the science dealing with the philosophy of atoms, the doctrine of the formation of all things from individual particles endowed with gravity and motion, atomic philosophy (சா.அக.);.

     [அணு + தத்துவம். த. தான் → Skt. tat → tattva = அதாயிருக்குந் தன்மை, உண்மைத் தன்மை, மெய்ப்பொருள். Skt. tattva → த. தத்துவம்.]

அணுத்திரள்

 அணுத்திரள் aṇuttiraḷ, பெ. (n.)

   தனிமையாகத் தோற்றமளிக்கும் அணுக்கூட்டமாகிய ஒரு பொருள்; a very minute particle of matter consisting of a number of atoms and capable of existing in a separate form—a molecule (சா.அக.);.

     [அணு + திரள்.]

அணுத்துவம்

அணுத்துவம் aṇuttuvam, பெ. (n.)

   1. நுண்மை;  minuteness, atomic nature (செ.அக.);.

   2. அணுக்கள் அமைந்திருக்குந் தன்மை; chemical valency of an atom—Atomicity (சா.அக.);.

     [அணு → Skt. anutva → . அணுத்துவம் = அணுத்தன்மை, அணுமை.]

அணுத்தைலம்

 அணுத்தைலம் aṇuttailam, பெ. (n.)

   பல சரக்குகளைச் சேர்த்து மூக்கிற் பிழிவதற்காக உருவாக்கிய ஒருவகையெண்ணெய்; a medicated oil prepared from several drugs for application in the nostrils (சா.அக.);.

     [அணு + தைலம். Skt tila → த. தைலம் = எண்ணெய். அணுத்தைலம் = அணுஎண்ணெய்.]

அணுநுட்பம்

 அணுநுட்பம் aṇunuṭpam, பெ. (n.)

   நுண்ணணு (பரமாணு);, அணுவிற்கணு; the ultimate unit of an element which is incapable of further sub-division—Atom (சா.அக.);.

அணுநூல்

 அணுநூல் aṇunūl, பெ. (n.)

   அணுவைப்பற்றிய நூல் (அணுசாத்திரம்); ; the science of atoms— Atomology.

அணுபட்சம்

அணுபட்சம் aṇubaṭcam, பெ. (n.)

   1. சிவனது ஏவலின்கீழ்த் தூவிலாவுலகத்தில் (அசுத்த பிரபஞ்சத்தில்); தொழில் புரியும் (அனந்தர், சீகண்ட வுருத்திரர் போன்ற); மிகு சமைவுற்ற (பரியக்குவ மடைந்த); ஆதன்களான (ஆன்மாக்களான); சிவ வேறுபாடுகள் (பேதங்கள்); (சி.போ. பா. 2 ; 4, பக். 276);;   2. ஆதன்கள் (ஆன்மாக்கள்); தாமே சமைவுற்று (பக்குவப்பட்டு); இறைவனை அடையும் நெறி, சம்புபட்சத்தின் எதிர்; the spontaneous mode of elevation of the souls to the feet of God, dist. from šan;bupațcam.

     “ஆனநெறி யாஞ்சரியை யாதிசோ பானமுற் றணுபட்ச சம்புபட்ச மாமிரு விகற்பமும்” (தாயு. மெளன. 5);.

     [பகு → பக்கம் (பகுதி, வகுப்பு, கட்சி.] → Skt. paksa → த பட்சம். அணுபட்சம் = ஆதன் பக்கம்.]

அணுபரசிவன்

அணுபரசிவன் aṇubarasivaṉ, பெ. (n.)

அணுபட்சத்துப் பரசிவன்;(šaiva.);

 Para-Śiva of apupatcam.

     “அணுபர சிவாந்த அநேகே சுரர்கள்” (சி.சி. சுபக். 3 ; 74, ஞானப். உரை);.

     [புரம் → பரம் → பர = மேலான, உயர்ந்த. சிவ → சிவன். பரசிவன் = உயர்நிலைச் சிவன் (Śiva in His highest form);.]

அணுபரிணாமவாதம்

 அணுபரிணாமவாதம் aṇubariṇāmavātam, பெ. (n)

   அணுவிலிருந்து எல்லா உலகங்களும் உண்டாயிருப்பதாகக் கூறும் கொண்முடிபு (சித்தாந்தம்); (இக்.வ.);; atomism (Mod.);.

     [Skt. parinâma = த மாற்றம். Skt. vädam = த. உறழ். அணுபரிணாமவாதம் = அணுமாற்றவுறழ்.]

அணுபலை

 அணுபலை aṇubalai, பெ. (n.)

   காட்டுப்பயறு; small wild-gram, Phaseolus amarus (சா.அக.);.

அணுபேதம்

அணுபேதம் aṇupētam, பெ. (n.)

   ஆதன்பக்க வேறுபாடு (ஆன்மபட்ச பேதம்);; difference of apupatcam.

     “சிவபேத மணுபேத மெனப் பிரமாதி” (சி.சி. சுபக். 2 ; 74, ஞானப். உரை);.

     [Skt. bheda → த. பேதம் = வேறுபாடு.]

அணுபை

அணுபை aṇubai, பெ. (n.)

   மின்னல் (சிந்தா.நி. 105);; lightning.

     [Skt. anu-bha → த. அணுபை.]

அணுப்பகுப்பு

 அணுப்பகுப்பு aṇuppaguppu, பெ. (n.)

   அணுவைக் கூறுபடுத்துதல் (இக்.வ.);; splitting of atom (Mod.);.

     [அணு + பகுப்பு.]

அணுப்பிச்சி

 அணுப்பிச்சி aṇuppicci, பெ. (n.)

   நுண்டுளி சிதறுங் கருவி; an instrument that throws a jet of spray (சா.அக.);.

அணுப்பிரி-த்தல்

அணுப்பிரி-த்தல் aṇuppirittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   நீரை நுண்துளிகளாகப் பிரித்தல்; the mechanical process of breaking liquid into spray, atomization (சா.அக.);.

     [அணு + பிரி.]

அணுமூர்த்தி

 அணுமூர்த்தி aṇumūrtti, பெ. (n.)

   ஆதத் திருமேனி (ஆன்மமூர்த்தி); (சங். அக.);; an attributive name of Siva.

அணுமூலுதுவரை

 அணுமூலுதுவரை aṇumūluduvarai, பெ. (n.)

   போகர் நிகண்டிற் சொல்லப்பட்டுள்ள ஒரு வகைத் துவரை ; a kind of red-gram referred to in the Bhāgar Nighandu (சா.அக.);.

அணுமை

அணுமை aṇumai, பெ. (n.)

   அணுத்தன்மை; atomicity.

     [அணு → அணுமை.]

 அணுமை aṇumai, பெ. (n.)

   அணிமை; nearness.

     “வரைந்த அணுமைக் கண்ணே” (ஐங்குறு. 83, உரை);.

     [அண் → அணு (அண்ணு); → அணுமை. இனி, அண் → அணி < அணிமை → அணுமை என்றுமாம்.]

அணுவதம்

அணுவதம் aṇuvadam, பெ. (n.)

   ஒர் அருக நோன்பு (அருங்கலம். 64:65);; subordinate duties or vows of jaina laymen.

த.வ. அணுநோன்பு.

     [Skt.. anu + vrata → த. அணுவதம்.]

அணுவலி

அணுவலி aṇuvali, பெ. (n.)

   1. ஆதன் ஆற்றல் (ஆன்மசக்தி);; the power of the soul.

     “அடங்கிடு மனாதி முத்தன் வலியணு வலியு மென்னில்” (சிவதரு. சிவஞானயோ. 107);.

   2. அணுவின் ஆற்றல் (இக்.வ.); ; atomic power (Mod.);.

அணுவிடை

 அணுவிடை aṇuviḍai, பெ. (n.)

   அணுவினிடை (அணுவாந்திரிகம்);; inter-molecule (சா.அக.);.

அணுவிரதம்

 அணுவிரதம் aṇuviradam, பெ. (n.)

   ஒரு சமண நோன்பு; subordinate duties or vows of Jaina laymen.

     [Skt. vrata → த. விரதம் = நோன்பு. அணு விரதம் = அணுநோன்பு.]

அணுவிற்கணு

அணுவிற்கணு aṇuviṟkaṇu, பெ. (n.)

   1. நுண்ணணு (பரமாணு);; the smallest atom.

     “அணுவிற் கணுவாய் அப்பாலுக் கப்பாலாய்” (விநா.அகவல்);.

   2. ஆதன் (ஆன்மா);; soul.

     [அணுவிற்கு + அணு.]

அணுவில்அணு

அணுவில்அணு aṇuvilaṇu, பெ. (n.)

   உயிர்க்கு உயிர்; innermost soul.

     “அணுவில் அணுவின் பெருமையில் நேர்மை”(மூல 668);,

     [அணு+இல்+அணு]

அணுவுருவம்

அணுவுருவம் aṇuvuruvam, பெ. (n.)

   1. அணு வகை; a kind of atom.

     “ஒழிந்திடு மணுருபங்கள்” (சி.சி. சுபக், 1 ; 11);.

   2. நுண்ணிய வடிவம்; minuteness.

     [அணு + உருவம். உரு → உருவு → உருவம் → Skt. rüpa.]

அணுவுருவி

அணுவுருவி aṇuvuruvi, பெ. (n.)

   1. ஆதன் (ஆன்மா);; soul.

   2.. கடவுள்; God.

     [அணு + உருவி. உரு → உருவு → உருவி → Skt. rüpi.]

அணுவெடை

 அணுவெடை aṇuveḍai, பெ. (n.)

   மிகச் சிறு பொருளின் நிறை; the weight of an atom of an element, atomic weight (சா.அக.);.

     [அணு + எடை.]

அணை

அணை3 aṇai, பெ. (n.)

   1. அணைக்கட்டு; embankment, bund, dam, ridge for retaining water in a field.

     ‘அணைகடந்த வெள்ளத்தை மறிப்பவர் யார்?’,

     ‘அணைகடந்த வெள்ளம் அழுதாலும் வராது’,

     ‘அணைகட்ட இறங்கி ஆற்றோடுபோய்விட்டான்’ (பழ.);.

   2. தடை; hindrance, obstacle.

     “அணையின்றி யுயர்ந்த வென்றி” (கம்பரா. யுத்த. கும்ப. 159);.

   3. நீர்க்கரை; bank of a river, seashore.

     “அணையை நூக்கிச் சென்ற நீர் வெள்ளம்” (பெரியபு. திருஞான. 723);.

   4. செய்கரை (சேது);; causeway, bridge.

     “அலைகடற்றலை யன்றணை வேண்டிய” (கம்பரா. பால. ஆற்றுப். 9);.

   5. முட்டு; support, prop, buttress.

மரம் விழாதபடி அணை வை (உ.வ.);.

   6. உதவி; protection, help, accessoriness to a crime (W.);.

   7. இருக்கை (ஆசனம்); ; raised seat, couch.

     “அரியணையனுமன்றாங்க” (கம்பரா. யுத்த திருமுடி. 38);.

   8. மெத்தை; cushion, mattress.

     “அணைமரு எளின்றுயில்” (கலித். 14 ; 1);

   9. படுக்கை, துயிலிடம் (பிங்.);; bed, couch, sleeping place.

     “நுண்ணிடையாள் வெவ்வுயிர்த்து மெல்லணைமேல் வீழ்ந்த போது” (பெரியபு. தடுத்தாட். 172);.

   10. தழுவல்; embrace.

   11. புணர்ச்சி (பிங்.); ; coition, copulation.

   12. ஒரேர் மாட்டிணை; a yoke of oxen (W.);.

ஒரணையேர்மாடு, ஈரணை யேர்மாடு (உ.வ.);.

   13. தலையணை (பொதி. நி.);; pillow.

   14. மணை (பொதி.நி.); ; small low wooden seat.

   15. அணைமரம்; a wooden frame.

ம. அண ; க., பட. அணெ ; தெ. ஆன கட்ட.

     [அள் → அண் → அண → அணை.]

அணை-தல்

அணை-தல்1 aṇaidal,    2 செ.கு.வி. (v.i.)

   1. உண்டாதல், பிறத்தல்; to be born.

தவத்தாலணைந்த புதல்வன் (உ.வ.);.

   2. படுத்தல்; to be laid down.

     “அணைய தரவணை மேல்” (திவ். திருவாய். 2.8 ;1);.

   3. அவிதல்; to be extinguished.

விளக்கணைந்தது (உ.வ.);

–, 2 செ.குன்றாவி. (v.t.);

   1. அடைதல், சார்தல்; to approach, come near.

     “பெருந்துறை மருங்கினி லணைந்தார்” (திருவாத. திருப் பெருந். 23);.

     ”அணைந்திது நெஞ்சஞ் சாம லறைவதென்” (திருவாலவா. 29 ; 14);.

   2. பொருந்துதல்; to touch, come in contact with.

     “பாரணையா வடிதாங்க” (திருநூற். 91);.

     ”அடுகொலைக் கணைந்த முகிலுருப் பெறும்” (கல்லா. 15 ; 26-7);.

   3. புணர்தல்; to copulate with.

     “கிரதுவினை யணைந்து பெற்றாள்” (கூர்மபு. பிருகுவா. 8);.

ம. அணயுக; க. அணெ ; தெ. அண்டு ; து. அணெபுனி.

     [அள் → அண் → அண → அணை.]

அணை-த்தல்

அணை-த்தல்2 aṇaittal, பெ. (n.)

   4 செ.குன்றாவி. (v.t.);

   1. உண்டாக்குதல்; to produce.

     “மம்மரே யணைக்குங் கள்” (சேதுபு. திரு நாட். 54);.

   2. அடுத்துச்சேர்த்தல்; to join, put close to, as heaping with earth the base of a tree trunk.

மரத்துக்கு மண் அணைத்தான் (உ.வ.);.

   3. அமைத்துவைத்தல்; to cause to happen, to predestine.

     “அல்லன் மிக வுயிர்க் கிவைதா னணைத்தது” (சிவப்பிர. 25);.

   4. அடைகிடத்தல்; to incubate.

     “குருகு மன்னமும் வால்வளைக் குப்பையை யண்டமும் பார்ப்பு மாமென வணைக்கும்” (கல்லா. 46 ; 23-4);.

   5. தழுவுதல்; to embrace, hold, clasp in the arms.

     “அன்னை யடுங்கனா வொழித்து வல்லே யணைத்திடப் பெறுஞ் சிறார்” (காஞ்சிப்பு. தக்கே. 59);.

   6. கட்டுதல்; to tie, fasten, as animals.

     “களிறணைக்குங் கந்தாகும்” (நாலடி. 192);.

   7. கூட்டி முடித்தல்; to tie up in a bunch.

     “அணைத்த கூந்தல்” (திருமுருகு. 200);.

   8. அவித்தல்; to quench.

விளக்கை யணைத்தான் (உ.வ.);. தீயணைக்கும் பொறி.

க. அணெ

     [அள் → அண் → அண → அணை.]

அணைகட-த்தல்

அணைகட-த்தல் aṇaigaḍattal,    3 செ.கு.வி. (v.i.)

   1. வெள்ளம் எல்லை கடந்து மீளா நிலையடைதல் ; to overflow an embankment, as flood, beyond control.

     “அணைகடந்த வெள்ளம் அழுதாலும் வராது” (பழ.);.

   2. ஒரு வினை உரிய காலத்திற் செய்யப்படாமையால் ஒரு வாய்ப்பு என்றும் இழக்கப்படுதல்; to be lost for ever, as a chance, owing to failure to do a thing in time.

அணைகட்டிப்பேசு-தல்

அணைகட்டிப்பேசு-தல் aṇaigaṭṭippēcudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   ஒருவன் தன் குற்றத்தை மறைத்துப் பேசுதல் ; to speak in veiled terms to escape blame.

     [அணைகட்டி + பேசு.]

அணைகட்டு-தல்

அணைகட்டு-தல் aṇaigaṭṭudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   அணைக்கட்டு அமைத்தல்; to construct a dam.

     “குரக்கினத் தாலே குரைகட றன்னை நெருக்கி யணைகட்டி” (திவ். பெரியாழ். 1.6;8);.

அணைகயிறு

அணைகயிறு aṇaigayiṟu, பெ. (n.)

   1. பால் கறக்கும்போது ஆவின் பின்னங்காலிற் கட்டுங் கயிறு; cord used for tying together a cow’s hind-legs when she is milked.

   2. பால் கறக்கும் போது ஆவின் முன்னங்காலிற் கன்றைக் கட்டுங் கயிறு; cord with which a calf is tied to the cow’s foreleg, when she is milked.

அணைகல்

 அணைகல் aṇaigal, பெ. (n.)

   தீட்டுக்கல்; whetstone.

அணைகவர்

 அணைகவர் aṇaikavar, பெ. (n.)

   சுவருக்கு முட்டாகக் கட்டும் சுவர்; supporting wall.

மறுவ.உதைசுவர், முட்டுச்சுவர்

அணைகிலார்

அணைகிலார் aṇaikilār, பெ. (n.)

   சேராதவர்; those who not approached.

     “ஆனைக்

காவில் அம்மானை அணைகிலார்”(நாவு 15 37: 1);

     [அணுகு+இல்+ஆரி]

அணைகு-தல்

அணைகு-தல் aṇaikutal, செ.குன்றாவி.(v.t.)

   சேருதல்; joining.

     “அறிவர் மா அணின அரங்கின் மீது துரங்கு மலர்த் தாம வாசங் கொண்டு அணைகுவீரே.”(கலம் 70);

     [அனை+கு]

அணைகோலு-தல்

அணைகோலு-தல் aṇaiāludal,    10 செ.கு.வி. (v.i.)

   வெள்ளத்தைத் தடுக்க அணை அமைத்தல்; to form an embankment to confine flood.

     “வெள்ளம் வருவதற்கு முன்ன ரணைகோலி வையார்” (நன்னெறி, 30);.

அணைக்கட்டி

 அணைக்கட்டி aṇaikkaṭṭi, பெ. (n.)

   உழுசாலிற் பெயருங் கட்டி; furrow-slice, clod of earth that turns up while ploughing.

     [அணை + கட்டி.]

அணைக்கட்டிபோடு-தல்

அணைக்கட்டிபோடு-தல் aṇaikkaṭṭipōṭudal,    19 செ.குன்றாவி. (v.t.)

   உழுசாலிற் பெயர்ந்த கட்டிகளை யுடைத்து நிரவுதல் (இ.வ.);; to break the clods of earth turned up by the plough and level up the ground (Loc.);.

     [அணை + கட்டி + போடு.]

அணைக்கட்டு

அணைக்கட்டு aṇaikkaṭṭu, பெ. (n.)

   நீர்ப் பாசனத்திற்காக ஆறு, கால்வாய்களின் குறுக்கே கட்டும் அணை; anaicut, dam for regulating the flow of water in an irrigating channel.

   2. செய்கரை;  embankment, dyke.

க. அணெகட்டு

     [அணை + கட்டு.]

     [P]

அணைக்கல்

 அணைக்கல் aṇaikkal, பெ. (n.)

   அணையிலுள்ள குத்துக்கல்; upright stones in a dam.

     [அணை + கல்.]

அணைக்காடு

அணைக்காடு aṇaikkāṭu, பெ. (n.)

   1. அணை நீர்ப்பாசனவயல்; fertile landofdam irrigation,

   2.மிக அதிக விளைச்சல்,

 excessive production of food grains.

இந்தத் தடவை அணைக்காடாக விளைச்சல் கண்டிருக்கிறது.(இ.வ.);.

     [அனை+காடு]

அணைக்காரன்

 அணைக்காரன் aṇaikkāraṉ, பெ. (n.)

   அணைக்கட்டின் காவற்காரன்; watchman of an anaicut.

     [அணை + காரன் (பணிசெயல்பற்றிய ஆ.பா. ஈறு);.]

அணைசு

அணைசு aṇaisu, பெ. (n.)

   இசைக்குழலின் வெண்கலச் சீவாளி அல்லது ஊதி; metalic mouth-piece of a wind instrument.

     ‘வெண்கலத்தாலே அணைசு பண்ணி இடமுகத்தை யடைத்து’ (சிலப். 3 ; 26, அடியார்க். உரை);.

ம. அணசி

     [அணை → அணைசு.]

 அணைசு aṇaicu, பெ. (n.)

ஒன்றனுக்குப் பக்கத் துணையாயிருப்பதுகாப்பு:support.

     [அணை→அணை சு- அணைந்து இருப்பது]

அணைசு-தல்

அணைசு-தல் aṇaisudal,    5 செ.கு.வி. (v.i.)

   ஒதுங்குதல், விலகுதல்; to step aside and give way to a superior, as a mark of respect.

ஒ.நோ; அடைசுதல்

அணைசுப்பலகை

 அணைசுப்பலகை  aṇaicuppalakai, பெ. (n.)

பூ வேலைப்பாடுகள்அமைந்த கதவுகளின் பின்புறம் வலிமைக்காகவும் காப்பிற்காகவும் இணைக்கப்படும் பலகை; the plank which supports the engraved front side of a door.

மறுவ.தாங்கு பலகை

     [அணைசு+பலகை]

அணைசொல்

 அணைசொல் aṇaisol, பெ. (n.)

   துணைச்சொல்; word supplied to assist a hesitating speaker, a prompt (W.);.

அணைதறி

 அணைதறி aṇaidaṟi, பெ. (n.)

   யானை, குதிரை, மாடு முதலியவற்றைக் கட்டும் கம்பம் அல்லது குறுந்தறி; post or peg for tying elephants, horses, cows, etc.

அணைப்பார்

அணைப்பார் aṇaippār, பெ. (n.)

   நினைப்பவர்; those who remember,

     “ஆகத்து அணைப்பார் அனைவதே ஆயிர வாய்நாகத்து அணையாள் நகர்”(பொ.32);

     [அணை-அணைப்பார்]

அணைப்பிடி-த்தல்

அணைப்பிடி-த்தல் aṇaippiṭittal,    2.செ.கு.வி. (v.i)

   வெயிலில் அலைதல், தொடர்ந்து அனலில் இருத்தல் போன்றவற்றால் சிறுநீர் வலியுடன் சொட்டுச் சொட்டாக வெளியேறுதல் (இ.வ.);; urinary trouble.

     [அனை(தடை);+பிடி]

அணைப்பு

அணைப்பு1 aṇaippu, பெ. (n.)

   1. தழுவுகை; embracing.

   2. ஒரு நாளில் இரண்டேரைக் கொண்டு உழக்கூடிய நிலப்பரப்பு;ம. அணச்சல்

     [அணை → அணைப்பு.]

 அணைப்பு2 aṇaippu, பெ. (n.)

அணாப்பு பார்க்க; seе аnаррu.

அணைப்புச்சக்கை

 அணைப்புச்சக்கை aṇaippuccakkai, பெ. (n.)

வாசற்காலின் மேற்புறத்தில் வெளிப்புறமாக

ஒவிய வேலைப்பாடுகளைக் கொண்ட பலகையை அணைத்துப் பிடிக்குமாறு பக்கவாட்டில் பொருத்தப்படும் அகலமான சட்டம்.

 broad wooden plank fixed to the side frames of the door to hold sculptured figurines.

     [அணைப்பு+சக்கை]

 அணைப்புச்சக்கை aṇaippuccakkai, பெ. (n.)

வாசற்காலின் மேற்புறத்தில் வெளிப்புறமாக

அணைப்புத்தூரம்

அணைப்புத்தூரம் aṇaipputtūram, பெ. (n.)

   ஓர் உழவுச்சால் தொலைவு (G. Sm.D.I.i. 287);; length of a furrow from one end of the field to the other, approximately taken as 50 yds.

     [அணைப்பு + Skt, dira → த. தூரம்.]

அணைப்புத்தூரம் = த. அணைப்புத் தொலைவு.

அணைமரம்

 அணைமரம் aṇaimaram, பெ. (n.)

   கன்றிழந்த ஆவைக் கறத்தற்கு அணைக்குங் கணைமரம் (இ.வ..); ; narrow wooden enclosure in which a cow is penned for milking, especially when it has lost its calf and resents milking (Loc.);.

அணைமுதல்

அணைமுதல் aṇaimutal, பெ. (n.) ”

பனை நிலைப் புரவியின் அணை முதல் பிணியிக்கும் கழிகுழ்படப்பை “(பட் 312);.

     [அணை+முதல்]

அணையமறி

 அணையமறி aṇaiyamaṟi, பெ. (n.)

   பிள்ளை பிறந்தவுடன் நஞ்சுக்கொடி விழாமை; retention of placenta, incarcerated placenta (சா.அக.);.

அணையமாதி

 அணையமாதி aṇaiyamāti, பெ. (n.)

   நஞ்சுக் கொடி முதலியன; placenta and other secundines (சா. அக.);.

     [அணையம் + ஆதி. Skt. adi = முதல், முதலியன. அணையமாதி = அணைய முதல், அணைய முதல, அணைய முதலியன.]

அணையம்

 அணையம் aṇaiyam, பெ. (n.)

   கருப்பையில் தாய்க்கும் பீளுக்கும் தொடர்பை யுண்டுபண்ணுவதும், நஞ்சுக் கொடியொடு சேர்ந்ததுமான ஓர் உறுப்பு ; an organ within the womb of mammals in pregnancy, establishing connection between the pregnant mother and the foetus by means of the umbilical cord, placenta (சா.அக.);.

அணையாடை

அணையாடை aṇaiyāṭai, பெ. (n.)

   1. சேய்க்கு அடியிலிடும் துணிப்படுக்கை; strip of cloth used as a bed for an infant.

     “அணையாடை மண்பட வுந்தி யுதைந்து கவிழ்ந்து” (பட்டினத். உடற்கூற்று.);.

   2. பிறந்த குழவிக்குத் தொப்புளிறுக்குஞ் சீலை (இ.வ.);; cloth tied over the navel of an infant (Loc.);— (W.);.

ம. அணச்சீல

     [அணை + ஆடை.]

அணையாத அன்பு

அணையாத அன்பு aṇaiyātaaṉpu, பெ. (n.)

   நிலையான அன்பு; standard love,

     “அணையாத அன்பே உடைய அனலாடி..” (மூல 2576.);

     [அணையாத+அன்பு]

அணையார்

அணையார் aṇaiyār, பெ. (n.)

   பகைவர்;  enemies, foes.

     “அணையார்தம் படைக் கடலில்” (பாரத, பதினே. 260);.

     [அணை + ஆ (எ.ம.இ.நி.); + ஆர் (ப.பா. ஈறு);.]

அணையுறுமூக்கு

அணையுறுமூக்கு aṇaiyuṟumūkku, பெ. (n.)

   1. பேய்க்கொள்; wild bitter gram.

   2. காட்டுக்கொள்; wild-gram, Rynchosia (Genus); (சா.அக.);.

அணைவு

அணைவு aṇaivu, பெ. (n.)

   1. தழுவுகை (சங்.அக.);; embracing.

     “முன்னும் பின்னு மருங்கு மணைவெய்த” (பெரியபு. ஏயர்கோ. 369);.

   2. தழுவப்பட்டது; that which is embraced.

     [அணை → அணைவு.]

அணைவுக்கை

 அணைவுக்கை aṇaivukkai, பெ. (n.)

   பிணையலின் ஒரு பிரிவு; a hand pose in dance.

     [அனைவு+கை]

அணோக்கம்

அணோக்கம் aṇōkkam, பெ. (n.)

   மேனோக்கம்; looking upward, high aspiration.

     [அண் = மேல். நோக்கம் = பார்வை, குறிக்கோள். அண் + நோக்கம் –அண்ணோக்கம் → அணோக்கம்.]

பல அகரமுதலிகளில் இச்சொற்கு ‘மரம்’ அல்லது ‘மரப்பொது’ என்று பொருள் குறிக்கப்பட்டுள்ளது.

     “மரப்பொதுவெனப் பொருள்படும் ‘அநோகஹம்’ என்னும் வடமொழியைத் திரித்து அணோக்கம் என எழுதினாரும் உளர்”

என்று தமிழ்ச்சொல்லகராதி யென்னும் மதுரைத் தமிழ்ச்சங்க அகரமுதலி குறித்திருப்பது கவனிக்கத்தக்கது.

 அணோக்கம் aṇōkkam, பெ. (n.)

   1. மரப் பொது; tree in common.

   2. மரம்; tree (சா.அக.);.

அணோசுரோத்திரியம்

 அணோசுரோத்திரியம் aṇōcurōttiriyam, பெ. (n.)

   இறையிலி வகை (M.M.);; inam village in which the interest of the inadar is so many annas out of each rupee of revenue, the rest going to government.

அண்

அண் aṇ, பெ. (n.)

   1. மேல், மேற்பக்கம் (சங்.அக.);; upper part.

   2. வேட்டைநாயின் உருவுகயிறு; leash for dogs, running knot (w.);.

   3. தடியில் வெட்டிய வரை (இராட்);; notch, indentation made in a stick (R.);.

ம., க. அண்.

     [உ → உண் → ஒண் → அண். அண் = மேல், மேல்வாய். அண்பல் = மேல்வாய்ப் பல்.]

அண்ணம் = மேல்வாய்ப்புறம். அண்ணல் = மேலோன், தலைவன், அரசன், கடவுள். அண்ணன் = மேலோன், மூத்தோன், தமையன். அண்ணாத்தல் = மேனோக்குதல். அணத்தல் = தலையெடுத்தல், தலைதூக்குதல். அணர்தல் = மேனோக்கியெழுதல். அணர் = மேல்வாய்ப்புறம். அணரி = மேல்வாய்ப்புறம். அணவுதல் = மேனோக்கியெழுதல். அணிதல் உடம்பின்மேலிடுதல் (to put on);.

 E. on, prep.–ME., fr. OE. on, an, rel. to OS. an, ON. đ, Du, aan, OHG, ana, MHG. ane, G. an, Goth. ana, ‘on, upon’, and cogn. with Avestic ana, “on”, Gk. ava, OSlav. na, OPruss. no, na, “on, upon’.

 E. on, n., the on or leg side of the field.

 Fr. on, adj.

அண்ட லி

 அண்ட லி aṇṭali, பெ. (n.)

   காஞ்சிபுரம் மாவட்டத்தில் கோவிலூர்க்கு அருகே உள்ள ஓர் ஊர்; name of the village in Kanchipuram neargthe kovilur.

     [அண்டல்-அண்டலி]

அண்டகடம்

அண்டகடம் aṇḍagaḍam, பெ. (n.)

அண்ட கடாகம் (கந்தபு.அண்ட.18); பார்க்க;see angdаќаdagаm.

     [அண்டம் + கடம்.]

     [Skt. anda → த. அண்டம்.]

கடு → கடம். கடு = கடுமையான ஒடு. அம் – பருமை (அகற்சி); குறித்த சொல்லாக்க ஈறு.

அண்டகடாகம்

அண்டகடாகம் aṇṭagaṭāgam, பெ. (n.)

   உலக உருண்டையின் மேல் ஓடு (திருவிளை. தீர்த்த. 9.);; imaginary shell which surrounds the universe.

த.வ. நிலமேலோடு, கோளகம்.

     [அண்டம் + கடாகம்.]

     [Skt. anda → த. அண்டம்.]

அண்டகபாலம்

அண்டகபாலம் aṇṭagapālam, பெ. (n.)

அண்டகடாகம் (தேவா. 246, 2); பார்க்க;see andаќаdagm.

     [அண்ட(ம்); + கபாலம்.]

     [Skt. anda → த. அண்டம்.]

கன்னப்புலம் → கப்பளம் → கப்பாளம் → Skt. kapalam.

அண்டகமேனி

 அண்டகமேனி aṇṭagamēṉi, பெ. (n.)

அண்டகம் பார்க்க;see andagam (சா.அக.);.

அண்டகம்

அண்டகம் aṇṭagam, பெ. (n.)

   குப்பைமேனி (மலை.);; Indian acalypha.

 அண்டகம் aṇṭagam, பெ. (n.)

   1. கொட்டை; testicle.

   2. சிறுமுட்டை; ovum.

   3. குப்பைமேனி; rubbish plant, Acalph Indica (சா.அக.);.

த.வ. விதைக்கொட்டை.

     [Skt. anda → த. அண்டகம்.]

அண்டகலை

அண்டகலை aṇṭagalai, பெ. (n.)

   நிலவின் கலை; a current of prana or vital breath operating in the left nostril (சா.அக.);.

த.வ. இடைகலை.

     [அண்ட(ம்); + கலை.]

     [Skt. anda → த. அண்டம்.]

கல் → கலை (வ.வ. 110); இச்சொற்கு வடமொழியில் மூலமில்லை.

அண்டகை

அண்டகை1 aṇṭagai, பெ. (n.)

   அப்பவருக்கம் (சூடா.);; kind of cake.

தெ. அட் ட்ரிக.

 அண்டகை2 aṇṭagai, பெ. (n.)

   1. விதைக் கொட்டை; the bag containing the testicles-scretum.

   2. பழம்; fruit.

   3. பழத் தோல்; the outer skin of a fruit.

   4. சினைப்பை; ovary. (In Botany); a case enclosing the ovules or young seeds, to develop later on into pulpy fruit (சா.அக.);

     [Skt. andaka → த. அண்டகை.]

அண்டக்கட்டு-தல்

அண்டக்கட்டு-தல் aṇṭakkaṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   வீங்குதல்; to swell, as on account of a boil.

–, 5 செ.குன்றாவி, (v.t);

   முட்டித் தாங்க வைத்தல்; to prop up, support, buttress.

     [அண்ட + கட்டு. அண்டுதல் = நெருங்குதல், முட்டுதல், முட்டித் தாங்குதல்.]

அண்டக்கமர்

 அண்டக்கமர் aṇṭakkamar, பெ. (n.)

   மண்டையோட்டின் பிளப்பு; fissure of the skull-cranial fissure (சா.அக.);.

த.வ. மண்டைப்பிளப்பு.

     [அண்டம் + கமர்.]

     [Skt. anda → த. அண்ட.]

கவல் → கவர் → கமர்.

அண்டக்கற்பம்

அண்டக்கற்பம் aṇṭakkaṟpam, பெ. (n.)

   கல்லுப்பில் இருபது நாள் வைத்தெடுத்து, பின் அவித்த கருங்கோழி முட்டைகள்; the eggs of black fowls kept within a heap of rock-salt for 20 days and then taken out and boiled (சா,அக.);.

     [அண்ட(ம்); + கற்பம்.]

     [Skt. anda → த. அண்டம்.]

கரு → கருப்பம் → Skt. கற்பம்.

அண்டக்கல்

அண்டக்கல் aṇṭakkal, பெ. (n.)

   1. அண்டக்கல் எனப்படும் சிறு சுண்ணாம்புக் கற்கள்; an extensive group of secondary limestones composed of rounded paricles like the eggs of reptilesoolite. They are generally found 3 feet below the Soil of fuller’s earth between the months of September and November.

   2. சிற்றண்டம், பேரண்டம், நடுவண்டம், ஆணைக்கல், காரசாரக்கல், நடுமையக் கல்லெனப் பல வகையாய் குறியீட்டில் சொல்லப்படும் மண்ணில் உண்டாகும் ஒரு நஞ்சுக்கல்; a speices of limestone composed of globules clustered together and found underneath the calcareous soil. It is known by several technical names as mentioned above (சா.அக.);.

     [அண்ட(ம்); + கல்.]

     [Skt. anpa → த. அண்டம்.]

உல் → குல் → கல்.

அண்டக்கல்லுற்பத்தி

 அண்டக்கல்லுற்பத்தி aṇṭakkalluṟpatti, பெ. (n.)

   சிறு சுண்ணாம்புக் கற்களின் பிறப்பு; the production of the secondary limestones in nature or by a natural process – of life formation (சா.அக.);.

     [அண்டம் + கல் + உற்பத்தி.]

     [Skt. anda → த. அண்டம். Skt. ut-patti → த. உற்பத்தி.]

அண்டக்கழலை

அண்டக்கழலை aṇṭakkaḻlai, பெ. (n.)

   1 விதைப்பகுதியில் வரும் ஒருவகைக் கழலைக் கட்டி; a tumour of the testicle-orchidoncus.

   2. தலை மண்டையில் வரும் ஒரு கழலைக் கட்டி; a circumscribed edema of the scalp associated with inflammation of bone or marrow of the skull bones-puffy tumour.

   3. பிடுக்கில் உண்டாகும், ஒரு வகைக் கொழுப்புக் கழலை; a sebaceous orgreasy cyst of the scrotum, atheroma of the scrotum scrotum-lapillosum, c.f. Liparocele (a fatty scrotal tumour); (சா.அக.);.

த.வ. கழலைக்கட்டி.

     [அண்டம் + கழலை.]

     [Skt. anda → த. அண்ட(ம்);.]

கழல் → கழலை.

அண்டக்கிடாரம்

 அண்டக்கிடாரம் aṭaikkiṭāram, பெ. (n.)

   அளவில்லாதது; that which is immeasurable.

     “அவனுக்குச் சினம் அண்டகிடாரம் முட்டிப் போயிற்று” (வ.சொ.அக.);.

     [அண்டம்+கிடாரம்]

அண்டக்குகை

அண்டக்குகை aṇṭaggugai, பெ. (n.)

   மருந்தினைப் புகட்டிக் குகையைப் போல் பயன்படுத்திப் புடம் போட உதவும் கோழி முட்டையின் உட்கரு நீங்கிய ஒடு; the empty egg or shell of a black fowl used as Crucible for preparing medicines (சா.அக.);.

     [அண்டம் + குகை.]

     [Skt. anda → த. அண்டம்.]

குழி → குழை → குகை.

   அண்டகூடம் உலகக்கோளகை; globe of the universe.

     “அண்ட கூடமுஞ் சாம்பரா யொழியும்” (கம்பரா. அகலிகை. 14.);.

     [அண்டம் + கூடம்.]

     [Skt. anda → த. அண்டம்.]

கூடு → கூடம்.

அண்டக்கெவுனம்

 அண்டக்கெவுனம் aṇṭakkevuṉam, பெ. (n.)

   காட்டுப்பருத்தி; golden silk cotton, Cochlospermum gossypium (சா.அக.);.

     [P]

அண்டக்கேசரி

 அண்டக்கேசரி aṇṭakācari, பெ. (n.)

   சாம்பலுப்பு (சத்தியுப்பு);; salt obtaine by burning beared grass.

அண்டக்கொடு-த்தல்

அண்டக்கொடு-த்தல் aṇḍakkoḍuttal,    4 செ.குன்றாவி. (v.t.)

அண்டக்கட்டு-தல் பார்க்க;see anda-k-kattu-.

     [அண்ட + கொடு.]

அண்டக்கோசம்

அண்டக்கோசம்1 aṇṭakācam, பெ. (n.)

   1. ஓடு (கந்தபு.அண்ட.);; imaginary shell which surrounds the universe.

   2. விதைப்பை(இங்.வை.);; scrotum.

     [அண்டம் + கோசம்.]

கோறம் → கோசம் → Skt. kosa.

 அண்டக்கோசம்2 aṇṭakācam, பெ. (n.)

   1. விதையின் உறை; the outer covering of the testicles.

   2. முட்டைக்கருவின் மேல்தோல்; the sac or membraneous bag which contains the yolk of an egg.

   3. அண்டத்தின் மேல்தோல், விதை மற்றும் அதைச்சேர்ந்த உறுப்புகளடங்கிய பை; the pouch which contains the testicles and their accessory organs-scrotum (சா.அக.);.

     [அண்டம் + கோசம்.]

     [Skt. anda → த. அண்டம்.]

கோளம் → கோயம் → கோசம் → Skt. kosa.

அண்டக்கோசு

 அண்டக்கோசு aṇṭakācu, பெ. (n.)

   முட்டைக் கோசு; a Culinary vegetable which has the leave in dense round head-cabbage (சா. அக.);.

     [P]

அண்டக்கோளகை

அண்டக்கோளகை aṇṭagāḷagai, பெ. (n.)

   உலகவுருண்டை (கந்தபு. அண்ட.65.);; globe of the universe.

     [அண்டம் + கோளகை.]

     [Skt. anda → த. அண்டம்.]

கோள் → கோளகம் → கோளகை → Skt. golaka.

அண்டக்கோளம்

அண்டக்கோளம் aṇṭakāḷam, பெ. (n.)

அண்டகோளகை (திருவிளை.நகர. 21.); பார்க்க: see andakolagai.

     [அண்டம் + கோளம்.]

     [Skt. anda → த. அண்டம்.]

கொள் → கோள் → கோளம் → Skt. gola.

அண்டங்கரி

 அண்டங்கரி aṇṭaṅkari, பெ. (n.)

   அண்டங் காக்கையின் நிறம் போன்ற அடர்த்தியான நிறம்; utter black, that which is compared with jungle crow. (வ.சொ.அக.);.

     [அண்டம்+கரி]

அண்டங்காகம்

 அண்டங்காகம் aṇṭaṅgākam, பெ. (n.)

அண்டங்காக்கை பார்க்க;see anda-kakkai.

அண்டங்காக்கை

 அண்டங்காக்கை aṇṭaṅgākkai, பெ. (n.)

   பெரியதும், முற்றும் மிகக் கரியதுமான காட்டுக் காக்கை (பிங்.); ; Indian raven, a big jet black jungle crow, Corvus mactorhyncus.

     “அண்டங் காக்காய்குழறுகிறாப் போலே” (பழ.);.

ம. அண்டன்காக்க

     [P]

அண்டசம்

அண்டசம்1 aṇṭasam, பெ. (n.)

   முட்டையிற் பிறப்பன (சி.சி. 2, 89);; oviparous animals, one of four uyir-t-tonram, q.v.

     [Skt. anda-ja → த. அண்டசம்.]

 அண்டசம்2 aṇṭasam, பெ. (n.)

   1. பறவை (அக.நி.);; bird.

   2. ஒந்தி; chameleon.

   3. பாம்பு முதலியன; snake and other aquatics.

   4. மீன் முதலான நீர்வாழ் உயிரிகள்; fish and other aquatics.

   5. சங்கு (உரி.நி.);; Conch.

   6. ஆமை (அக.நி.);; tortoise.

     [Skt. anda-ja → த. அண்டசம்.]

அண்டசராசரம்

 அண்டசராசரம் aṇṭasarāsaram, பெ. (n.)

   இயலுலகம் முழுமையும்; universe cosmos.

     [Skt. anda + cara + a-cara → த. அண்டசராசரம்.]

அண்டசிதம்

 அண்டசிதம் aṇṭasidam, பெ. (n.)

   முட்டையின் வெண்கருவைப் போல் உடம்பிலிருக்கும் ஒருவகை ஊட்டம்; a substance of definite chemical composition resembling the white of an egg, found in the body, Albuminoid, protein (சா.அக.);.

     [Skt. anda + sita → த. அண்டசிதம்.]

அண்டசிறுநீர்

 அண்டசிறுநீர் aṇṭasiṟunīr, பெ. (n.)

   சிறுநீர்ப் பையில் தங்கி நிற்கும் சிறுநீர்; the urine stored up in the bladder before it is discharged (சா.அக.);.

     [அண்டம் + சிறுநீர்.]

     [Skt. anda → த. அண்டம்.]

சில் → சிறு + நீர்.

அண்டசு

 அண்டசு aṇṭasu, பெ. (n.)

   முட்டைவயிற் பிறப்பு; uviparous (சா.அக.);.

     [Skt. andaja → த. அண்டசு.]

அண்டசூலை

 அண்டசூலை aṇṭacūlai, பெ. (n.)

   வளிமிகுதியி (வாதத்தி);னால் விதையின் நரம்புகள் தாக்குண்டு குத்தல் மற்றும் வலியுண்டக்கும், ஒரு வகைச் சூலைநோய்; a neuralgic pain of severe dearting and throbbing character experienced in the testicle, Orcheoneuralgia (சா.அக.);.

     [அண்டம் + சூலை.]

     [Skt. anda → த. அண்டம்.]

சூல் → சூலை.

அண்டசெயநீர்

அண்டசெயநீர் aṇṭaseyanīr, பெ. (n.)

   1. கோழிமுட்டையில் இருந்து உருவாக்கும் ஒரு வகைச் செயநீர்; a peculair liquid prepared from the fowl’s egg which is mixed up with the required ingredients and kept exposed in the night-dew.

   2. தலைச்சன் பிள்ளைத் தலையைக் கொண்டு உருவாக்கும் ஒரு வகைச் செயநீர்; a liquid preparation obtained from the head of the first-born child after its death (சா.அக.);.

     [அண்டம் + செயநீர்.]

     [Skt. anda → த. அண்டம்.]

செய் + நீர் → செயநீர்.

அண்டசை

 அண்டசை aṇṭasai, பெ. (n.)

   நறுமணப்பொருள் (கத்தூரி); (பரி.அக.);; musk.

     [Skt. anda-ja → த. அண்டசை.]

அண்டசோதி

 அண்டசோதி aṇṭacōti, பெ. (n.)

   சோதி மரம்; a luminous tree said to be found on the top of hills, and is believed to contain phosphoroas (சா.அக.);.

     [Skt anda + jyotis → த. அண்டசோதி.]

அண்டச்சத்து

 அண்டச்சத்து aṇṭaccattu, பெ. (n.)

   மண்டையோட்டினின்று உருவாக்கும் ஊட்டம்; essence prepared from the human skull (சா.அக.);.

     [அண்டம் + சத்து.]

     [Skt. anda → த. அண்டம்.]

சங் → சண் → சத்து.

அண்டச்சவுக்காரம்

அண்டச்சவுக்காரம் aṇṭaccavukkāram, பெ. (n.)

   காக்கை, வெண்கோழி, புறா, கழுகு ஆகியவற்றின் முட்டைகளில் வகைக்கு ஐந்தெடுத்து, அவற்றுடன் செயநீர், கல்லுப்பு ஐந்து சுண்ணம் முதலியவற்றைச் சேர்த்து இடித்துச் சித்தர்கள் செய்யும், தாழ்ந்த வகை மாழைகளைப் பொன்னாக மாற்றும்;   ஒரு குளிகை; a pill used in alchemy. It is prepared by siddhars by a peculiar process known to themselves. The following are the ingredients:-

   1. one egg taken from each of the five birds, viz, crow, white fowl, pigeon and eagle.

   2. the well known fluid called jayancer.

   3. the five calcium compounds contemplated in the Tamil medicine.

   4. the crystallised salt collected from the beds of precipitated salt found at the bottom of the sea (சா.அக.);.

     [அண்டம் + சவுக்காரம்.]

     [Skt. anda → த. அண்டம்.]

உவர் → சவர் + காரம்.

அண்டச்சவ்வு

அண்டச்சவ்வு aṇṭaccavvu, பெ. (n.)

   1. மயிர் மண்டிய இறைச்சி; the scalp usually covered with hair, hairy scalp.

   2. தலைக்கறி; the outer covering of the head scalp (சா.அக);.

     [அண்டம் + சவ்வு.]

     [Skt. anda → த. அண்டம்.]

சவ் → சவ்வு.

அண்டச்சாரணை

 அண்டச்சாரணை aṇṭaccāraṇai, பெ. (n.)

   இதளியக் குளிகைக்குச் சாரணை தீர்ப்பதற்காகப் பயன்படுத்தும் முடியண்ட படருப்பு; a peculiar salt extracted from the human skull and used for animating mercurial pills (சா.அக.);.

     [அண்டம் + சாரணை.]

     [Skt. anda → த. அண்டம்.]

அண்டச்சுண்ணம்

அண்டச்சுண்ணம் aṇṭaccuṇṇam, பெ. (n.)

   1. ஊதை (வாதம்);, பித்தம், மருத்துவம், ஒகம் அறிவு (ஞானம்); முதலியவற்றிற்கு அடிப்படையான முப்பூச்சுண்ணம், அதாவது மூன்று வகையுப்புகளினாலான சுண்ண மருந்து; traid salt i.e., the union of three kinds of salts. This is considered highly useful in alchemy, medicine, yoga and gnana (spiritual wisdom); elixir vitae.

   2. மருத்துவத்திற்குப் பயன்படுவதும், மண்டையோட்டினைப் பயன்படுத்தி உருவாக்கப்படுவதுமான சுண்ண மருந்து; a cakium compound prepared from the human skull. It is used in medicine (சா.அக.);

     [அண்டம் + சுண்ணம்.]

     [Skt. anda → த. அண்டம்.]

சுள் → சுண் → சுண்ணம் → Skt. curna.

அண்டச்சுவர்

 அண்டச்சுவர் aṇṭaccuvar, பெ. (n.)

   உலகவுருண்டையின் புறத்தோற்றம் (பிங்.);; shell of the universe, as a Wall.

     [Skt. anda → அண்டம்.]

சுல் → சுவல் → சுவர்.

அண்டச்செந்தூரம்

அண்டச்செந்தூரம் aṇṭaccendūram, பெ. (n.)

   1. கோழிமுட்டை ஒட்டைக் கொண்டு செய்யும் செந்தூரம்; a red powder prepared out of the shells of a fowl’s egg.

   2. அடை காத்த கோழிமுட்டையோட்டை மற்றச் சரக்குகளுடன் சேர்த்துச் செய்யும் சிவப்பு மருந்து; a red oxide prepared by the calcination of egg-shells mixed with other drugs.

   3. கோழிமுட்டைக் குடுக்கைக்குள் வைத்து உருவாக்கும் மருந்து; any red oxide obtained by calcining the drug in question enclosed in a fowl’s egg shell.

   4. மண்டையோட்டில் வைத்து உருவாக்கும் செந்தூரம்; a red medicinal powder obtained by the calcination of drugs hermetically scaled in the human skull (சா.அக.);.

     [அண்டம் + செந்துரம்.]

     [Skt. anda → த. அண்டம்.]

சிந்தூரம் → செந்தூரம்.

அண்டச்சோர்வு

 அண்டச்சோர்வு aṇṭaccōrvu, பெ. (n.)

   விதைத்தளர்ச்சி; atony or laxness of the testiles, Orchidatonia (சா.அக.);.

     [அண்டம் + சோர்வு.]

     [Skt. anda → த. அண்டம்.]

சோர் → சோர்வு.

அண்டத்தாங்கம்

 அண்டத்தாங்கம் aṇṭattāṅgam, பெ. (n.)

   பெருங்குறிஞ்சா; a plant scammony swallow wort, secamore emetica (சா.அக.);.

அண்டத்தாசி

 அண்டத்தாசி aṇṭattāci, பெ. (n.)

   கண்டங்கத்திரி; prickly brinjal, Solanum xanthocarpum (சா.அக.);.

அண்டத்தாபிதம்

அண்டத்தாபிதம் aṇṭaddāpidam, பெ. (n.)

   1. விதையில் ஏற்படும் அழற்சி; inflammation of the testicles orchitis.

   2. பிடுக்கின் விதைப் பையில் ஏற்படும் அழற்சி; inflammation of the scrotum-scrotitis (சா.அக.);.

த.வ. விதைவீக்கம்.

     [Skt. anda + tapita → அண்டதாபிதம்.]

   அண்டத்தைமயினமாக்கி நாணற்புல்; nanal grass, Saccharaт spontaпешт (சா.அக.);.

அண்டத்தைலம்

 அண்டத்தைலம் aṇṭattailam, பெ. (n.)

   கோழிமுட்டை எண்ணெய்; medicinal oil extracted from hen’s eggs.

த.வ. முட்டை நெய்மம்.

     [அண்டம் + தைலம்.]

     [Skt. anda-taila → த. அண்டத்தைலம்.]

அண்டத்தோடு

அண்டத்தோடு aṇṭattōṭu, பெ. (n.)

   1. முட்டையோடு; the shell of an egg.

   2. மண்டையோடு; the skull of an animal, particularly human skull (சா.அக.);.

     [அண்டத்து + ஒடு.]

     [Skt. anda → த. அண்டம்.]

     ‘அத்து’ சாரியை.

அண்டத்தோல்

அண்டத்தோல் aṇṭattōl, பெ. (n.)

   1. முட்டையோடு; incorrectly but ususally referring to an egg-shell.

   2. முட்டை யோட்டின் உட் பக்கத்துச் சவ்வு; the membraneous lining inside the shell of an egg, egg envelope.

   3. மண்டையின் தோல்; the skin covering the head, scalo.

   4. விதைப் பையின் மேல்தோல்; the skin of the scrotam.

   5. முட்டையினுட்கருவின் சவ்வுப்பை; the membraneous bag which contains the yolk of an egg, yolk bag (சா.அக.);.

     [அண்டம் + தோல்.]

     [Skt. anda → த. அண்டம்.]

அண்டநாடு

அண்டநாடு aṇṭanāṭu, பெ. (n.)

   பாண்டி நாட்டின் ஒரு பகுதி (I.M.P. ii, 62);; a sub-division of the Pandya (country); Kingdom.

அண்டநீர்

அண்டநீர் aṇṭanīr, பெ. (n.)

   1. முட்டையின் வெண்கருவினின்று உருவாக்கும் நீர்; a liquid prepared from the white of the egg.

   2. நீராகச் செய்த வெண்கரு; liquified or dissolved white of the egg.

   3. அண்ட செயநீர்;see anda-šeya-nir.

   4. பிடுக்கில் சேர்ந்த நீர்; the fluid collected in the Scrotum, as in hydrocele.

   5. நிலத்தினின்று வரும் ஊற்று நீர்; Water flowing out from the earth, spring water, opposed to rain water from the sky (சா.அக.);.

     [அண்டம் + நீர்.]

     [Skt. anda → த. அண்டம்.]

அண்டநோய்

அண்டநோய் aṇṭanōy, பெ. (n.)

   1. தலைவலி; head-ache.

   2. விதைவலி; pain in the testicles, Orchialgia.

   3. வினா யூதை(விதை வாதம்);; hydrocele.

   4. குடலண்டநோய்; hernia.

   5. பொதுவாகப் பிடுக்கில் வரும் நோய்; any disease of the testicle or the scrotum (சா.அக.);.

     [அண்டம் + நோய்.]

     [Skt. anda → த. அண்டம்.]

அண்டன்

அண்டன் aṇṭaṉ, பெ. (n.)

   கடவுள்; god, as lord of the universe.

     “அண்டனாஞ் சேடனா மங்கு” (சி. போ. 9, 3, 1.);.

     [Skt. anda → த. அண்டன்.]

அண்டபகிரண்டம்

அண்டபகிரண்டம் aṇṭabagiraṇṭam, பெ. (n.)

   நிலவுருண்டையும் அதன் புறத்தவான உருண்டையும்; this world and the World beyond this sphere.

     ” அண்டபகி ரண்டமும் மாயா விகாரமே” (தாயு. பரிபூ. 4.);.

     [Skt. anda + bahiranda → த. அண்டபகிரண்டம்.]

அண்டபற்பம்

 அண்டபற்பம் aṇṭabaṟbam, பெ. (n.)

   கோழி முட்டைக் கருவைக் கொண்டு செய்யும் மருந்து; calcination of medicinal drugs with eggs.

     [Skt. anda + bhasman → த. அண்டபற்பம்.]

அண்டபவுத்திரம்

 அண்டபவுத்திரம் aṇṭabavuttiram, பெ. (n.)

   விதைப்பையைச் சார்ந்த நோய்; scrotal fistula.

     [Skt. anda + bhagan-dara → த. அண்டபவுத்திரம்.]

அண்டபித்தி

அண்டபித்தி aṇṭabitti, பெ. (n.)

அண்டப்பித்தி பார்க்க;see anda-p-pitti

     ‘ஒரு திருவடிகளே அண்டபித்திக்கு மவ்வருகேபோய்” (திவ். திருநெடுந். 5, வ்யா.);.

     [அண்டம் + பித்தி.]

     [Skt. anda → த. அண்டம்.]

அண்டபேதி

 அண்டபேதி aṇṭapēti, பெ. (n.)

   மாழைகளைப் பிரிக்கும் தன்மையுடைய மண்டை யோட்டினின்று செய்த, ஒரு கார மருந்து; a strong and powerful alkaline substance prepared from the human skull powdered and mixed with other ingredients (சா.அக.);.

     [Skt. anda + bhedin → த. அண்டபேதி.]

அண்டபேரண்டபட்சி

அண்டபேரண்டபட்சி aṇṭabēraṇṭabaṭci, பெ. (n.)

   1. இருதலையுடைய பெரும் பறவை (இ.வ.);; a monster bird.

   2. கழுகு (பாண்டடி);; eagle.

த.வ. கண்டபேரண்டப் பறவை.

     [Skt. gandabherunda + paksin → த. அண்டபேரண்டபட்சி.]

அண்டப்பரப்பு

அண்டப்பரப்பு aṇṭapparappu, பெ. (n.)

   ; expanse of the universe.

     “மாதிக் கொ டண்டப்பரப்பெலாம்” (தாயு.மௌன.3.);.

     [அண்டம் + பரப்பு.]

     [Skt. anda → த. அண்டம்.]

அண்டப்பவுத்திரம்

 அண்டப்பவுத்திரம் aṇṭappavuttiram, பெ. (n.)

   பிடுக்கில் உண்டாக்கும் ஓர் அரிதான குறிக்கட்டி நோய்; a chronic form of fistula in the scrotum, Scrotal fistula (சா.அக.);.

     [Skt. anda+bhagam-dara → த. அண்டப்பவுத்திரம்.]

அண்டப்பாத்திரம்

 அண்டப்பாத்திரம் aṇṭappāttiram, பெ. (n.)

   மண்டையோட்டினால் செய்த ஓர் ஏனம்; a vessel made out of the human skull for holding liquids and solid substances (சா.அக.);.

     [Skt. anda + patra → த. அண்டப்பாத்திரம்.]

அண்டப்பார்-த்தல்

அண்டப்பார்-த்தல் aṇṭappārttal,    4 செ.குன்றாவி. (v.t.)

   பொருந்தச் செய்தல்; to unite, join.

     [அண்டு → அண்ட + பார்.]

அண்டப்பித்தி

 அண்டப்பித்தி aṇṭappitti, பெ. (n.)

   உலகக் கோளத்தின் மேலோடு; the vault of the heavens, as the shell of the universe imagined to be in the form of an egg.

த.வ. புடவிச்சுவர்.

     [Skt. anda + bhitti → த. அண்டப்பித்தி.]

அண்டப்பிளவு

அண்டப்பிளவு aṇṭappiḷavu, பெ. (n.)

   1 மண்டையோட்டின் பிளப்பு அல்லது வெடிப்பு; a fissure of the skull-cranial fissure.

   2. மூளைப்பகுதியின் இடையேயுள்ள இடைவெளி; the fissure separating the two hemi-spheres of the brain, intercerebral fissure of longitudinal fissure.

   3. கருவில் ஏற்பட்ட முகத்தின் அருவெருப்பு; the two lowest facial fissures of the embryo, Mandibular fissures.

   4. விதைப்பையின் விந்துத் தாரையுள் ஏற்படும் வெடிப்பு அல்லது குறிக்கட்டி; a fissure of fistuala opening into any of the seminal passages scrotal or spermatic fissure of fistura (சா.அக.);.

     [அண்டம் + பிளவு.]

     [Skt. anda → த. அண்டம்.]

பிள் → பிள → பிளவு.

அண்டப்புத்து

 அண்டப்புத்து aṇṭapputtu, பெ. (n.)

அண்டப்புற்று பார்க்க: see anda-p-purru.

     [அண்டம் + புற்று.]

     [Skt. anda → த. அண்டம்.]

புல் → புற்று → புத்து.

அண்டப்புரட்டன்

 அண்டப்புரட்டன் aṇṭappuraṭṭaṉ, பெ. (n.)

   பெரும்போக்கிலி; consummate rogue.

த.வ. அடாவடிக்காரன்.

     [அண்டம் + புரட்டன்.]

     [Skt. anda → த. புரட்டன்.

புரள் + புரட்டு → புரட்டன்.

அண்டப்புற்று

 அண்டப்புற்று aṇṭappuṟṟu, பெ. (n.)

   பிடுக்கில் உண்டாகும் ஒர் (கிரந்திப் புற்றுநோய்ப் புண்);; cancer of the scrotum (சா.அக.);.

     [அண்டம் + புற்று.]

     [Skt. anda → த. அண்டம்.]

புல் → புற்று.

அண்டப்புளுகன்

 அண்டப்புளுகன் aṇṭappuḷukaṉ, பெ. (n.)

   மிகப்பெரிய பொய் பேசுகிறவன்; monstrous liar.

அவன் அண்டப் புளுகனாயிற்றே? (வ.சொ.அக.);.

     [அண்டம்+புளுகு+அன்]

 அண்டப்புளுகன் aṇṭappuḷugaṉ, பெ.(n.)

   பெரும் பொய்யன், கசப்புளுகன்; big liar.

     [அண்டம்+புளுகன்]

 அண்டப்புளுகன் aṇṭappuḷugaṉ, பெ. (n.)

   பெரும் பொய்யன்; monstrous rogue.

     [அண்டம் + புளுகன்.]

     [Skt. anda → த. அண்டம்.]

புள் → புளுகு → புளுகன்.

அண்டப்புளுகு

 அண்டப்புளுகு aṇṭappuḷuku, பெ. (n.)

மிகப்பெரிய பொய்

 monstrous lie.

     “அவன் அண்டப் புளுகு ஆகாசப்புளுகு பேசுகின்ற ஆள்”(வ.சொ.அக.);

     [அண்ட+புளுகு]

அண்டப்பூடு

 அண்டப்பூடு aṇṭappūṭu, பெ. (n.)

   முயல்; rabbit (சா.அக.);.

அண்டப்பூண்டு

 அண்டப்பூண்டு aṇṭappūṇṭu, பெ. (n.)

அண்டப்பூடு பார்க்க;see anda-p-pupu (சா,அக.);.

அண்டப்பேரொளி

 அண்டப்பேரொளி aṇṭappēroḷi, பெ. (n.)

   தலையின் மூளை; the superior portion of the brain, occupying the whole upper cavity of the skull cerebrum (சா.அக.);.

     [அண்டம் + பேரொளி.]

     [Skt. anda → த. அண்டம்.]

பேர் + ஒளி → பேரொளி.

அண்டப்பை

 அண்டப்பை aṇṭappai, பெ. (n.)

   விதைத் தோல்; bag containing the testiclesscrotum (சா.அக.);.

     [அண்டம் + பை.]

     [Skt. anda → த. அண்டம்.]

பொள் → பொய் (பய்); → பை.

அண்டப்பொகுட்டு

அண்டப்பொகுட்டு aṇṭappoguṭṭu, பெ. (n.)

அண்டகூடம் பார்க்க;see anda-kudam.

     “பூதலப் பரப்பி னண்டப் பொகுட்டினுட் புறத்துள்” (கம்பரா.பிணிவீட்டு.113.);.

     [அண்டம் + பொகுட்டு.]

     [Skt. anda → த. அண்டம்.]

பொக்கு → பொகுட்டு.

அண்டமயினா

 அண்டமயினா aṇṭamayiṉā, பெ. (n.)

அண்டத்தைமயினமாக்கி பார்க்க;see andattai-mayinamakki (சா.அக.);.

அண்டமயிமை

 அண்டமயிமை aṇṭamayimai, பெ. (n.)

அண்டத்தைமயினமாக்கி பார்க்க;see andattai-mayinamakki (சா.அக.);.

அண்டமான்

 அண்டமான் aṇṭamāṉ, பெ. (n.)

   ஒரு தீவு (H.J.);; Andaman islands in the eastern part of the Bay of Bengal.

     [Mal. agamitae → த. அண்டமான்.]

அண்டமுகடு

அண்டமுகடு1 aṇḍamugaḍu, பெ. (n.)

   புடவி (அண்ட); கடாகத்தினுச்சி; top of the imaginary shell that surrounds the universe.

     “அண்டமுகட்டுற நின்று சிரித்தனன்” (பாரத. கிருட். 202);.

     [அண்டம் + முகடு.]

     [Skt. anda → த. அண்டம்.]

 அண்டமுகடு2 aṇḍamugaḍu, பெ. (n.)

   மூதண்டம், நடு உச்சி; crown of the head. (சா.அக.);

     [அண்டம் + முகடு.]

     [Skt. anda → த. அண்டம்.]

அண்டமுடிமெழுகு

 அண்டமுடிமெழுகு aṇḍamuḍimeḻugu, பெ. (n.)

   மூன்று மாதம் நிரம்பிய தலைச்சன் கருப்பிண்டத்தின் தலை மண்டையோட்டை இடித்து, அதனின்று செய்யப்படும் ஒரு வகை மெழுகு; a wax like preparation obtained by reducing the head of the first foetus three months old, in a woman into a pulp as per process laid down in Siddhar’s science (சா.அக.);.

     [அண்ட + மூடி + மெழுகு.]

     [Skt. anda → த. அண்டம்.]

அண்டமுறுகல்

 அண்டமுறுகல் aṇṭamuṟugal, பெ. (n.)

   மண்டையோட்டினின்று உருவாக்கும் தீ முறுகல் நஞ்சு; a poisonous substance extracted from bone ash by incineration of the skull-phosphorus (சா.அக.);.

அண்டமேபிண்டம்

 அண்டமேபிண்டம் aṇṭamēpiṇṭam, பெ. (n.)

   அண்டத்திலுள்ளதே பிண்டத்திலுள்ளது என்னும் கொள்கை; what exists in nature, exists equally in a human being which is said to be a miniature of the world. The Hindu philosophic science recognise man as the microcosm possessing all the parts corresponding to the macrocosm or the solar system. This is the doctrine of macrocosm and microcosm. It was also traced to the oldest sacred books of the chinese and accepted by them (சா.அக.);.

     [அண்டம் + ஏ + பிண்டம்.]

     [Skt. anda → த. அண்டம்.]

பிள் → பிண்டம்.

     ‘ர’ தேற்றேகாரம்.

அண்டம்

அண்டம்1 aṇṭam, பெ. (n.)

   1. முட்டை (திவா.);; egg.

   2. நிலம்; the earth.

     “நீர்கொண்ட வண்டத்தும்” (அரிச். பு. பாயி. 3);.

   3. வானம் (திவா.);; sky, visible heavens.

   4. புடவி (அஷ்டாதச. தத்வத்.2, 34.);; universe in the shape of an egg.

   5. அண்ட விதை; testicle.

     “அண்டத்திலூறு செய்வனவால்” (திருவிளை. பரிநரி. 17.);.

   6. விதை; seed, nut.

     “இல்லமுறு மண்டங்க ணூறுபலம்” (தைலவ. தைல.33.);.

     [Skt. anda → த. அண்டம்.]

 அண்டம்2 aṇṭam, பெ. (n.)

   1. புழுகு சட்டம் (சம்.அக.); (Ms.);; sac of the civet cat.

   2. மூளை (வை.மூ);; brain.

   3. மண்டையோடு (யாழ்.அக.);; skull.

     [Skt. anda → த. அண்டம்.]

 அண்டம்3 aṇṭam, பெ. (n.)

   1. வழலை; a universal solvent consisting chiefly of calcium compounds extracted by a secret process of calcination known to Sidhhars, Alcanest.

   2. மான்மணத்தி (கத்துரி);ப்பை; the musk bag.

   3. மதம்; semen virile.

   4. அண்டநோய்; diseases of the testicles, probably the two kinds of hernia (சா,அக.);.

அண்டயம்

 அண்டயம் aṇṭayam, பெ. (n.)

   உடம்பிலிலுள்ள வெண்கருவின் ஆற்றலாகிய வெண்கருவூட்ட (அண்ட சித);த்தின் ஓரினம்; a substance in the body resembling the white of an egg, Albumin (சா.அக.);.

     [Skt. anda → த. அண்டம்.]

அண்டயெரு

 அண்டயெரு aṇṭayeru, பெ. (n.)

   பண்டுவ முப்பு; an old name for a medicine curative of all congestions, Alcahest (சா.அக.);.

அண்டயோனி

அண்டயோனி aṇṭayōṉi, பெ. (n.)

   1. கதிரவன், ஞாயிறு (பிங்.);; sun, as giving life to the earth.

   2. முட்டைவழிப் பிறப்பு (சங்.அக.);; oviparous animal.

     [Skt. anda + yoni → த. அண்டயோனி.]

அண்டரசம்

அண்டரசம் aṇṭarasam, பெ. (n.)

   1. தூய்மையான இதளியம் (பாதரசம்);; purified mercury.

   2. மூளையின் ஆற்றல்; essence of the brain.

   3. முட்டையின் கரு; the yolk of an egg (சா.அக.);.

     [Skt. anda + rasa → த. அண்டரசம்.]

அண்டரி

 அண்டரி aṇṭari, பெ. (n.)

   திருமுதுகுன்றம் (விருத்தாசலம்); வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Vriddhachalam Taluk.

     [அண்டர்-அண்டரி]

அண்டரிசனம்

 அண்டரிசனம் aṇṭarisaṉam, பெ. (n.)

   விதையடிக்கை; emasculation or semicastration orchotomy (சா.அக.);.

த.வ. காயடிக்கை.

     [Skt. anda-karashana → த. அண்டரிசனம்.]

அண்டரோகம்

 அண்டரோகம் aṇṭarōkam, பெ. (n.)

அண்ட நோய் பார்க்க;see anda-noy (சா.அக.);.

     [Skt. anda + roga → த. அண்டரோகம்.]

அண்டர்

அண்டர் aṇṭar, பெ. (n.)

   இடையர்; herdsmen, cowherds, shepherds.

     “அண்டர் மிண்டிப் புகுந்துநெய் யாடினார்” (திவ். பெரியாழ். 1.1 ; 5);.

ம. அண்டர்; சிங். எண்டேர.

     [அண்டுதல் = நெருங்குதல். அண்டு → அண்டர் = நெருங்கி அல்லது சேர்ந்து குடியிருப்பவர். ஒ.நோ.: சேர் → சேரி = வீடுகள் சேர்ந்து அல்லது நெருங்கியுள்ள இடையரூர்.]

 அண்டர் aṇṭar, பெ. (n.)

   பகைவர்; foes, enemies.

     “கால்வல் புரவி யண்ட ரோட்டி” (பதிற். 88;9);.

ம. அண்டர்

     [அண்டார் → அண்டர்.]

 அண்டர் aṇṭar, பெ. (n.)

   1. குன்று மலை போன்றவற்றின் மேலே வாழ்பவர்; hill dwellers.

   2. ஆடு மாடுகளை மேய்ப்போர்; cattle raisers.

   3. மீனவர்; fishermen.

ம.அண்டிலர். அண்டத்தி(ஓடக்காரி);.

     [அண்(மேல்);-அண்டர்]

அண்டர்நிலை

அண்டர்நிலை aṇṭarnilai, பெ. (n.)

   பொன்னாங் கண்ணி (தைலவ. பாயி. 57);; species of Alter nanthera (L.);. — an edible plant with yellow flowers, Illecebrum sessile (சா.அக.);.

அண்டலர்

அண்டலர் aṇṭalar, பெ. (n.)

   பகைவர்; foes, enemies.

     “அண்டல ரெனினுங் கண்டா லன்பு வைத்து” (யசோதர. 1 ; 25);.

ம. அண்டலர்

     [அண்டு + அலர்.]

அண்டலை

அண்டலை aṇṭalai, பெ. (n.)

   நெருங்குதல்; coming in close contact.

     “கண்டு உணராமை கடு மாப் புலி ஒன்று அண்டலை முதலியகண்டும் அறியாமை” (மணி.27:69-70);.

     [அண்டல்+ஐ]

அண்டல்

 அண்டல் aṇṭal, தெ.பெ. (vbl.n.)

   ஈடு செய்தல்; satisfy, by way of compensating something else,

     “அது அதற்கு ஒரு மாதிரியா அண்டல் பண்ணி வைத்திருக்கிறது.” (வ.சொ.அக.);.

     [அண்டு+அல்]

அண்டவச்சில்சாய்த்தல்

 அண்டவச்சில்சாய்த்தல் aṇṭavaccilcāyttal, பெ. (n.)

   முட்டை வடிவ அச்சில் மாழைகளை உருக்கியெடுக்கை; casting a melted metal into an oval shaped mould (சா.அக.);.

     [அண்டம் + அச்சில் + சாய்-.]

     [Skt. anda → த. அண்டம்.]

அண்டவடிவு

 அண்டவடிவு aṇḍavaḍivu, பெ. (n.)

அண்டவம் பார்க்க;see andavam (சா.அக.);.

     [அண்டம் + வடிவு.]

     [Skt. anda → த. அண்டம்.]

அண்டவம்

 அண்டவம் aṇṭavam, பெ. (n.)

   முட்டை வடிவு; the shape of an egg-oviform (சா.அக.);.

அண்டவர்த்தனம்

 அண்டவர்த்தனம் aṇṭavarttaṉam, பெ. (n.)

அண்டவிருத்தி பார்க்க;see anda-virutti (சா.அக.);.

     [Skt. апda + varttana → த. அண்டவர்த்தனம்.]

அண்டவலி

அண்டவலி aṇṭavali, பெ. (n.)

பிடுக்கிற் பொதுவாகக் காணப்படும். வலிகள்:-

   1. ஊதையினால் ஏற்படும் வலி.

   2. வளியினால் விதையில் ஏற்படும் குத்தல்.

   3. சூலையினால் ஏற்படும் குத்தல்; pains of the scrotum in general resalting from anyone or more of the morbid conditions of vayu e.g.:-

   1. pain due to the deranged condition of vadham – orchialgia or orchidargia.

   2. neuralgic pain due to nervous affection of the parts orchinoearalgia.

   3. acute pricking pain due to de ranged vadham, orchiodynia (சா.அக.);.

     [அண்டம் + வலி.]

     [Skt. anda → த. அண்டம்.]

அண்டவாசி

 அண்டவாசி aṇṭavāci, பெ. (n.)

   முட்டையின் உள்தாரை; a duct or passage for the egg in animals from ovary, Oviduct (சா.அக.);.

     [Skt. anda + vasi → த. அண்டவாசி.]

அண்டவாணன்

அண்டவாணன் aṇṭavāṇaṉ, பெ. (n.)

   தேவன்; god.

     “அண்டவாணனடி யுள்குதலால்” (தேவா. 1114, 11);.

     [அண்டம் + வாணம்.]

     [Skt. anda → த. அண்டம்.]

அண்டவாதசூலை

 அண்டவாதசூலை aṇṭavātacūlai, பெ. (n.)

   பிடுக்கிலாவது விதையிலாவது நீர் கலந்ததோடல்லாமல் குத்தல், வலி ஆகியன உண்டாக்கும் சூலை; a neuralgic pain of a severe darting character attended with a Collection of fluid in the scrotum (சா.அக.);.

     [அண்டம் + வாதம் + சூலை.]

     [Skt. anda + vata → த. அண்டவாத(ம்);.]

சுல் → சூல் → சூலை.

அண்டவாதம்

அண்டவாதம் aṇṭavātam, பெ. (n.)

   1. பிடுக்கில் நீர் இறங்கிப்பருத்துக் காணும் நோய்; a circumscribed collection of fluid in the scrotum, hydrocele or scrotal hydrocele.

   2. விதை வீக்கம், விதையைச் சூழ்ந்துள்ள தோற்பைக்குள் நீரிறங்கிப் பருத்துக்காணும் ஒரு நோய்; hydrocele due to collection of fluid in the serous covering of the testis-funicular hydrocee.

   3 விதைத்தசை ஊதைபிடுக்கினுள் தசை தடித்து வளர்ந்து நீரும் சேர்ந்து பருத்துக் காணும் ஒரு பிடிப்பு; enlargement of the scrotum due to collection of fluid and morbid growth of the skin, Elephantiasis of the scrotum.

   4. குடல்விதைவூதை (வாதம்);, வளி மிகுதியால் பிடுக்கில் குடலிறங்கி மரக்காற்போல் பருத்துக் காணும் ஒரு பிடிப்பு; swelling of the scrotum from the protrusion of a portion of the intestine through the abdominal opening and its Consequent decent into it (scrotum); hemia (சா.அக.);.

     [Skt. anda + vata → த. அண்டவாதம்.]

அண்டவாதரோகம்

 அண்டவாதரோகம் aṇṭavātarōkam, பெ. (n.)

அண்டவாதம் பார்க்க;see andavãdam (சா.அக.);.

     [Skt. anda + vata + roga → த. அண்டவாதரோகம்.]

அண்டவாயு

அண்டவாயு aṇṭavāyu, பெ. (n.)

   1. விதையூதை, வளி விதையோடு சேர்ந்து அழற்சியையும், விக்கத்தையும் உண்டாக்கும் ஒரு வளி நோய்; an infimmation and swelling of the testicles due to the deranged vayu affecting the part.

   2. வளி (வாயு); குடலில் தங்கி நரம்பு வழியாய் விதையிலிறங்கி பொருமி நரம்பு புடைத்துக் காணும் ஒரு நோய்; a disease of the scrotum due to the accumulation of gas (vaya); in the intestines, which, in turn is imparted to the scrotum, marked by swelling and pain of the spermatic card and the testis.

   3. விதை வீக்கம்; inflammation of the testicles followed by swelling (சா.அக.);.

     [Skt. anda + vayu → த. அண்டவாயு.]

அண்டவாரு

 அண்டவாரு aṇṭavāru, பெ. (n.)

   மருந்தரைக்கும் கலுவம்; a granite bowl in which substance are pulverised, pounded or ground down to a paste with a pestlemortar, this is specially used in preparing medicines (சா.அக.);.

     [P]

அண்டவித்தை

அண்டவித்தை aṇṭavittai, பெ. (n.)

   பத்து வகைப் பறவைகளின் முட்டைகளை மெழுகாகச் செய்து வேதைக்கு பயன்படுத்தும் ஒரு முறை; an alchemical preparation by a secret process, from 10 kinds eggs of different birds ground down to a paste with other ingredients (சா.அக.);.

     [அண்டம் + வித்தை.]

     [Skt. anda → த. அண்டம்.]

விழி → வித் → வித்தை.

அண்டவிருத்தி

அண்டவிருத்தி aṇṭavirutti, பெ. (n.)

   விரைநோய் வகை (தைலவ. தைல.97.);; enlargement of the scrotum, due to hydrocele or elephantiasis.

     [Skt. anda + vrddhi → த. அண்டவிருத்தி.]

அண்டவிர்த்துவாரம்

அண்டவிர்த்துவாரம் aṇṭavirttuvāram, பெ. (n.)

   1. முட்டை வடிவத்தைப் போன்ற ஒட்டை; shield shaped opening, Foraman ovale.

   2. கேடகம் என்ற ஆயுதத்தைப் போன்ற துளை; shield shaped opening-Foramen thyroideum (சா.அக.);.

அண்டவுப்பு

 அண்டவுப்பு aṇṭavuppu, பெ. (n.)

   மண்டை யோட்டிலிருந்து உருவாக்கப்படும் ஒரு வகை உப்பு; a salt prepared from the human skull (சா.அக.);.

     [அண்டம் + உப்பு.]

     [Skt. anda → த. அண்டம்.]

அண்டவுருள்

 அண்டவுருள் aṇṭavuruḷ, பெ. (n.)

   பூசணிக்காய்; pumpkin, cucurbitmaxima (சா.அக.);.

     [அண்டம் + உருள்.]

     [Skt. anda → த. அண்டம்.]

உரு → உருள்.

     [P]

அண்டவெண்கரு

 அண்டவெண்கரு aṇṭaveṇkaru, பெ. (n.)

   முட்டையின் வெள்ளைக் கரு; the white of an egg, Albumen (சா.அக.);.

     [அண்டம் + வெண் + கரு.]

     [Skt. anda → த. அண்டம்.]

குல் → குரு → கரு.

அண்டவெள்ளைரசம்

 அண்டவெள்ளைரசம் aṇṭaveḷḷairasam, பெ. (n.)

   முட்டையின் வெண்கருவினின்று உருவாக்கப்பெறும் ஒரு வகை ஊட்டம் (சத்து);; a liquid essence obtained by a special process from the white of an egg (சா.அக.);.

     [அண்டம் + வெள்ளை + ரசம்.]

     [Skt. anda → த. அண்டம், Skt. rasa → த. ரசம்.]

அண்டவோடு

அண்டவோடு aṇṭavōṭu, பெ. (n.)

   முட்டையோடு; the shell or outside covering of an egg, egg-shell.

   2. மண்டையோடு; the bony case which forms the frame work of the head, skull (சா.அக);.

     [அண்ட(ம்); + ஒடு.]

     [Skt. anda → த. அண்ட(ம்);.]

அண்டா

 அண்டா aṇṭā, பெ. (n.)

   ஒருவகைப் பெரும் ஏனம்; large vessel, cauldron.

     “அண்டா குண்டாவை அடகு வைத்துப் படிக்கவைத்தேன்” (பே.வ.);.

த. அகனெடுங்கலம்.

 U. handa → த. அண்டா.]

     [P]

அண்டாகாரகாசம்

 அண்டாகாரகாசம் aṇṭākārakācam, பெ. (n.)

   கண்ணிற்குள் முட்டை வடிவத்தைப் போல் உள்ள கண்ணாடி; the transparent lenticular organ behind the pupil – crystalline lens (சா.அக.);.

அண்டாகாரகோளம்

 அண்டாகாரகோளம் aṇṭākāraāḷam, பெ. (n.)

   முட்டையின் வடிவமான கோளம்; a gland of the shape of an egg-lenticular gland (சா.அக.);.

     [அண்டாகாரம் + கோளம்.]

     [Skt. andakara → த. அண்டாகாரம்.]

கொள் → கோள் → கோளம்.

அண்டாகாரம்

 அண்டாகாரம் aṇṭākāram, பெ. (n.)

   முட்டைவடிவம்; egg shape, oval shape lentiform (சா.அக.);.

     [Skt. andakära → த. அண்டாகாரம்.]

அண்டாசயம்

அண்டாசயம் aṇṭācayam, பெ. (n.)

   1. சினைப் பை;   2. விதையின் பை; the pouch that contains the testicles and their accessory organs, scrotum.

   3. அண்டங்களை அடக்கிக் கொண்டிருக்கும் பூம்பிஞ்சு;

அண்டாதவன்

அண்டாதவன் aṇṭātavaṉ, பெ. (n.)

   பகைவன்; foe, enemy.

     “அண்டா தவனாலெம் மகத் திலிரு ளுண்டாகிய தன்மை யுணர்ந்து” (கந்தபு. யுத்த. முதனாட், 351);.

அண்டாதோடல்

 அண்டாதோடல் aṇṭātōṭal, தொ. பெ. (vbl.n.)

   நோய் திரும்பவும் வராமல் உடம்பைவிட்டகலல்; a permanent or radical cure (சா.அக.);.

     [அண்டாது + ஒடல்.]

அண்டாபானை

 அண்டாபானை aṇṭāpāṉai, பெ. (n.)

   நெல் அவிக்கவும், விழாக்காலங்களில் சோறு சமைக்கவும் பயன்படுத்தும் பித்தளையால் ஆன பெரிய ஏனம். (இ.வ.);; a large vessel for cooking.

     [அண்டா+பானை]

     [P]

அண்டார்

அண்டார் aṇṭār, பெ. (n.)

   பகைவர்; foes, enemies.

     “அண்டார்.தமக் கோர ரியே” (கந்தபு. யுத்த. சிங்க. 470);.

ம. அண்டார்

     [அண்டாதவர் → அண்டாதார் → அண்டார்.]

அண்டாவர்த்தம்

அண்டாவர்த்தம் aṇṭāvarttam, பெ. (n.)

   குதிரைத்தண்டையடியில் இருக்கிற சுழி (அசுவசா. 148.);; curl of hair at the ankle of a horse.

அண்டிகம்

அண்டிகம் aṇṭigam, பெ. (n.)

   செந்நாய் (பிங்.);; a wild dog, Cyon dukhumensis (L.);. – a red wild dog, Canis dukhenensis alias C. primaerus (சா. அக.);

 அண்டிகம் aṇṭigam, பெ. (n.)

   1. கரிமா, அரிமா ஆகியவற்றிற்குக் காணும் காய்ச்சல்; fever in an elephant or a lion.

   2. தீங்கு விளைவிக்கும் நீர்; un whole some or bad water (சா.அக.);.

அண்டிகா

 அண்டிகா aṇṭikā, பெ. (n.)

   மட்பாண்டம்; an earthern vessel or pot (சா.அக.);.

அண்டிக்கொட்டை

 அண்டிக்கொட்டை aṇṭikkoṭṭai, பெ. (n.)

   முந்திரிக்கொட்டை (நெல்லை);; cashew-nut (Tn.);.

ம. அண்டி

     [அண்டி + கொட்டை. அண்டி = அடி.]

அண்டிதள்ளுகை

 அண்டிதள்ளுகை aṇṭidaḷḷugai, தொ.பெ. (vbl.n.)

   மலவாயின் (ஆசனத்தின்); உட்பகுதி வெளித்தள்ளல் (நெல்லை);; Prolapsus ani (Tn.);.

அண்டினவன்

அண்டினவன் aṇṭiṉavaṉ, பெ. (n.)

   நம்பிச் சேர்ந்தவன்; one who had taken refuge.

     “உற்றார் கன்மத்தா லண்டினவர்” (திருவாய். நூற். 81);.

அண்டினி

 அண்டினி aṇṭiṉi, பெ. (n.)

   குடற்காய்ச்சலின் விளைவால், பெண்ணின் பிறப்புறுப்பில் புணர்ச்சிக் காலத்தே தென்படும் ஒருவகை நீளுருண்டைக் கட்டி; a disease of the vagina resulting from typhoid fever, marked by an oval tumour felt during sexual intercourse (சா.அக.);.

அண்டிப்பருப்பு

 அண்டிப்பருப்பு aṇṭipparuppu, பெ. (n.)

   அண்டிக்கொட்டைபார்க்க; see and k-kotta (வ.சொ.அக.);.

     [அண்டி+பருப்பு]

அண்டிப்பருவம்

 அண்டிப்பருவம் aṇṭipparuvam, பெ. (n.)

புறாக்குஞ்சின் இறக்கை முளைக்காத இளம் பருவம்,

 early stage of dove. (வ.சொ.அக.);.

     [அண்டி+பருவம்]

அண்டிமா

 அண்டிமா aṇṭimā, பெ. (n.)

   மரமுந்திரி ; cashew.

அண்டிமாங்கொட்டை

 அண்டிமாங்கொட்டை aṇṭimāṅgoṭṭai, பெ. (n.)

   மரமுந்திரிக்கொட்டை; cashnew-nut.

ம. அண்டிமாங்ங

அண்டிமாண்டு

 அண்டிமாண்டு aṇṭimāṇṭu, பெ. (n.)

   கடனுறுதியாவணம் (இ.வ.);; promissory note, note of hand, as beginning with the words on demand.

     [E. on demand → த. அண்டிமாண்டு.]

அண்டிரன்

அண்டிரன் aṇṭiraṉ, பெ. (n.)

   1. கடையெழு வள்ளல்களுள் ஒருவனான ஆய் அண்டிரன்; one of the last seven liberal chiefs in South Indian History.

     “ஆஅ யண்டிர னடுபோரண்ணல்” (புறநா. 129;5);.

   2. ஆடவன்; male human being.

   3. சமர்த்தன்; clever or capable man.

   4. மாந்தன் (சிந்தா. நி. 114);; man.

தெ. அண்டீருண்டு

     [ஆண் + திறம் – ஆண்டிறம் → ஆண்டிறன் = ஆண்டிறலோன், ஆண்டகை. ஒ.நோ.: Gk. anir, andros, male.]

அண்டில்

 அண்டில் aṇṭil, பெ. (n.)

   மாடு, குதிரை முதலியவற்றின் கண்ணிற் பற்றுமொரு பூச்சி (யாழ்ப்.);; parasite that sticks to the eyes of cattle and horses (J.);.

     [அண்டு → அண்டில்.]

அண்டுப்புழு பார்க்க;see andu-p-pulu.

அண்டீரன்

அண்டீரன் aṇṭīraṉ, பெ. (n.)

     (நாநார்த்த.);

   1. ஆண்டகை; hero, warrior.

   2. மாந்தன்; man.

தெ. அண்டீரண்டு, அண்டீரடு.

     [அண்டிரன் → அண்டீரன்.]

அண்டு

 அண்டு aṇṭu, பெ. (n.)

   மணிமாலை முதலியவற்றின் தனியுரு (இ.வ.);; unit in a string of beads, link in a chain (Loc.);.

அந்தத்தொடரிக்கு (சங்கிலிக்கு); இன்னும் நாலு அண்டு வேண்டும் (உ.வ.);.

தெ. அண்டு

 அண்டு aṇṭu, செ.கு.வி. (v.i.)

   சிதைந்து கிடத்தல்; piling up of waste.

     “குப்பை யெல்லாம் அண்டுகிடக்கிறது”. (வ.சொ.அக.);.

     [அண்டு+து+அண்டு]

அண்டு தள்ளுகை

அண்டு தள்ளுகை aṇṭudaḷḷugai, பெ. (n.)

   1. மலவாயின் (ஆசனத்தின்); உள்ளுறுப்பு வெளித்தள்ளல்; protrusion of the rectal walls beyond the anus, prolapsis of the anus or the rectum.

   2. பெண்களின் குறித்துளையின் (யோனித் துவாரத்தின்); சதை நழுவி வெளி வருதல்; a condition in which the walls of the vagina are thrust out beyond the normal limit (சா.அக.);.

க. அண்டு

அண்டிதள்ளுகை பார்க்க;see andi-tallugai.

அண்டு-தல்

அண்டு-தல் aṇṭudal,    5 செ.குன்றாவி, (v.t.)

   1. கிட்டுதல்; to approach.

     “அண்டினள் சேர்தலும்” (கந்தபு. தக்க. திருமண. 45);.

   2. ஏற்றல், பொருந்துதல்; to fit, to be appropriate to.

     “ஆகார மாமுவமைக் கண்டா தென்னும்” (ஞானவா. முமுட்சு. 27);.

   3. பற்றுக்கோடாகக் கொள்ளுதல் ; to have as a support.

ஒருவனை அண்டிப் பிழைக்க இடமில்லை (உ.வ.);.

   4. ஒதுங்குதல்; to take refuge in, retire for shelter.

     ‘அண்ட நிழலில்லாமற் போனாலும் ஒண்ட அடியுண்டு’ (பழ.);.

   5. அழுந்துதல் (சங்.அக.);; to get pressed, to be impressed, to press hard.

ம. அண்டுக; க. அண்டிசு; தெ. அண்டு; கோத. அண்ட்.

     [அள் → அண் → அண்டு.]

 அண்டு-தல் aṇṭutal, செ.கு.வி. (v.i.)

   நெருங்குதல்; to be close together.

     “ஏன் இப்படி அண்டுகிறாய்? தள்ளி உட்கார்.” (வ.சொ.அக.);.

     [அள்→அண்→அண்டு]

அண்டுகம்

 அண்டுகம் aṇṭugam, பெ. (n.)

   ஒரு பறவை; a kind of bird (சா.அக.);.

அண்டுபடு-தல்

அண்டுபடு-தல் aṇḍubaḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   பிடிபடுதல் (இ.வ.); ; to be within reach (Loc.);.

அண்டுப்புழு

 அண்டுப்புழு aṇṭuppuḻu, பெ. (n.)

   அண்டில் (யாழ்ப்.);; worm that enters the eyes of cattle and horses (J.);.

     [அண்டு + புழு.]

அண்டை

அண்டை aṇṭai, பெ. (n.)

   1. அண்மை; nearness, vicinity.

=அண்டையில் ஒரு கடையும் இல்லை (உ.வ.);.

   . அயல்; neighbourhood.

அண்டைவீட்டுக் கடன் ஆகாது (உ.வ.);. ‘அண்டைவீட்டுக் கடனும் பிட்டத்துச் சிரங்கும் ஆகாது’, ‘அண்டைவீட்டுச் சண்டை கண்ணுக்குக் குளிர்ச்சி’ (பழ.);.

   3. பக்கம்; side, direction.

அந்த வூர்க்கு நாலண்டையும் வழி (உ.வ.);.

   4. ஓட்டையடைக்கும் ஒட்டு; thing attached, annexed, as a plug to close a hole, patch.

சீலைக்கு அண்டை வைத்துத் தைத்தான் (உ.வ.);.

   5. முட்டு; prop, support.

சுவர் சாயாதபடி அண்டை கொடு (உ.வ.);.

   6. வரப்பு; field bund, ridge of a field.

     “அண்டை கொண்டு கெண்டை மேயும்” (திவ். திருச்சந்த, 49);.

   7. நீர்தூவுங் கருவி; a contraption that squirts water, used on certain festive occasions.

     “வெண்பொ னண்டை கொண்டு” (திருவிளை, உக்கிரபா. 24);.

   8. ஒரு கட்டியின் அல்லது காயத்தின் விளைவாக மற்றோரிடத்தில் தோன்றும் வீக்கம்; sympathetic pain or swelling.

முழங்கால் கட்டியினால் துடையில் அண்டைகட்டியிருக்கிறது (உ.வ.);.

–, இடை. (part);

   இட வேற்றுமை யுருபு; a loc. ending.

கிணற்றண்டை நில். என்னண்டை பணமில்லை (உ.வ.);.

க. அண்டெ; தெ. அண்ட.

     [அண்டு → அண்டை.]

அண்டைகட்டு-தல்

அண்டைகட்டு-தல் aṇṭaigaṭṭudal,    5 செ.கு.வி. (v.i)

   ஓருறுப்பில் உண்டான கட்டி அல்லது காயத்தின் விளைவாக மற்றோருறுப்பில், பொதுவாகக் கமுக்கூட்டில் அல்லது கவானில், வலி அல்லது வீக்கம் தோன்றுதல்; to get pain or swelling in the glands generally in the armpit or in the loins as a sympathetic response to swelling or pain in the connected limbs of the body.

அண்டைகொள்(ளு)-தல்

அண்டைகொள்(ளு)-தல் aṇṭaigoḷḷudal,    10 செ.குன்றாவி. (v.t.)

   பக்கத்துணை கொள்ளுதல்; to gain the support of, secure the help of.

     ‘கிருஷ்ணனை அண்டை கொண்டு’ (திவ். திரு நெடுந் 13, வியா.);.

அண்டைபோடு-தல்

அண்டைபோடு-தல் aṇṭaipōṭudal,    20 செ.கு.வி. (v.i.)

   ஒட்டுப்போடுதல் (இ.வ.);; to mend, patch (Loc.);.

அண்டைமஞ்சள்

 அண்டைமஞ்சள் aṇṭaimañjaḷ, பெ. (n.)

   முட்டையின் மஞ்சட் கரு; the yellow portion of the hen’s egg as distinguished from the white-yolk (சா.அக.);.

     [அண்டை + மஞ்சள்.]

     [Skt. anda → த. அண்டம்.]

மஞ்சல் → மஞ்சள்.

அண்டையயல்

 அண்டையயல் aṇṭaiyayal, பெ. (n.)

   அக்கம் பக்கம்; neighbourhood.

அண்டையயல் பார்த்துப் பேசவேண்டும் (உ.வ.);.

     [அண்டை + அயல்.]

அண்டைவீடு அடுத்தவீடு

 அண்டைவீடு அடுத்தவீடு aṇḍaivīḍuaḍuttavīḍu, பெ. (n.)

   அக்கம்பக்கத்து வீடுகள்; neighbouring houses.

அண்டை வீடு அடுத்த வீடெல்லாம் சிரிக்கும்படி சண்டை போடுகிறார்கள் (உ.வ.);.

அண்டைவெட்டு-தல்

அண்டைவெட்டு-தல் aṇṭaiveṭṭudal,    5 செ.குன்றாவி. (v.t.)

வரப்புவெட்டுதல் (இ.வ.);; to cut or trim the ridge or bunds in the field (Loc.);.

     [அள்ளுதல் = நெருங்குதல், செறிதல். அள் → அண். அண்ணுதல் = நெருங்குதல். அண் → அண்டு. அண்டுதல் = நெருங்குதல். அண்டு → அண்டை = நெருங்கிய பக்கம், ஒட்டு, முட்டு, திரட்சி, வரப்பு.]

அண்டோடு

அண்டோடு aṇṭōṭu, பெ. (n.)

   1. மண்டை ஒடு; the skull in common.

   2. மனிதரின் மண்டை ஓடு; human skull (சா.அக.);.

     [அண்டம் + ஒடு.]

     [Skt. anda → த. அண்டம்.]

ஒட்டு → ஓடு → ஓடு.

அண்டோட்டுவித்தை

 அண்டோட்டுவித்தை aṇṭōṭṭuvittai, பெ. (n.)

   நாய், நரி, கழுதை முதலிய விலங்குகள் மற்றும் மனிதரின் மண்டை ஒடுகளைக் கொண்டு செய்யும் மந்திரக்கலை (குறளிவித்தை);; sorcery or witch craft performed with the aid of the skull of a dog, fox, ass or human being (சா.அக.);.

     [அண்டம் + ஒடு + வித்தை.]

     [Skt. anda → த. அண்டம்.]

அண்ண

அண்ண aṇṇa, வி.எ. (adv.)

   இயைய; according to.

     “சார்பின் தோன்றித் தத்தமில் மீட்கும் இலக்கு அண்ணத் தொடர்தலின்.” (மணி 30:17-8);.

     [அண்+அ]

அண்ண முண்டி

 அண்ண முண்டி aṇṇamuṇṭi, பெ. (n.)

   அண்ணன் மனைவி, அண்ணி; wife of one”s elder brother (வ.சொ.அக.);.

     [அண்ணன்+(பெண்டு);முண்டி(கொ.வ);]

அண்ணகன்

 அண்ணகன் aṇṇagaṉ, பெ. (n.)

   விதை யெடுக்கப்பட்டவன் (வின்.);; eunuch.

த.வ. காயடிபட்டவன், பேடி.

     [Skt. sandaka → த. அண்ணகன்.]

அண்ணக்குஞ்சம்

 அண்ணக்குஞ்சம் aṇṇakkuñjam, பெ. (n.)

   உண்ணாக்கு; pendulum of the palate, uvula (சா.அக.);.

     [அண்ணம் + குஞ்சம்.]

அண்ணச்சோர்வு

 அண்ணச்சோர்வு aṇṇaccōrvu, பெ. (n.)

   மேல் வாயின் நரம்புச் சோர்வு; paralysis of the palate, palatoplegia (சா.அக.);.

     [அண்ணம் + சோர்வு.]

அண்ணணி

அண்ணணி aṇṇaṇi, கு.வி.எ. (adv.)

   நெருங்கிய அண்மையில்; in close proximity.

     ‘அண்ணணிக் கொண்டான்’ (தொல். எழுத்து. உயிர்மயங். 44, நச். உரை);.

     [அண்ணுதல் = நெருங்குதல். அண் → அணி = அண்மையில். அண் + அணி → அண்ணணி = நெருங்கிய அண்மையில், மிக அண்மையில்.]

அண்ணணித்து

அண்ணணித்து aṇṇaṇittu, பெ. (n.)

   மிக அண்மையானது; that which is close by, very near.

     “அண்ணணித் தூராயின்” (கலித். 108;36);.

     [அண் + அணித்து.]

அண்ணத்தாபிதம்

அண்ணத்தாபிதம் aṇṇaddāpidam, பெ. (n.)

   1. மேல் வாயழற்றி; inflammation of the palate, Palaitis.

   2. வாயின் மேற்பரட்டிற் காணும் அழற்றி; inflammation of the hard palate, uranisconitis (சா.அக.);.

     [அண்ணம் + Skt. tabita → த. தாபிதம்.]

அண்ணத்தொங்கணி

 அண்ணத்தொங்கணி aṇṇattoṅgaṇi, பெ. (n.)

அண்ணக்குஞ்சம் பார்க்க;see appa-k-kuriam.

     [அண்ணம் + தொங்கணி.]

அண்ணந்தாள்

 அண்ணந்தாள் aṇṇandāḷ, பெ. (n.)

அண்ணாந்தாள் பார்க்க;see anaandal.

அண்ணனார்

 அண்ணனார் aṇṇaṉār, பெ. (n.)

   அண்ணன் என்பதன் உயர்வுப்பன்மை; honorific of annan.

     [அண்ணன் + ஆர் (உ.ப. ஈறு);.]

அண்ணார் என்னுங் கொச்சை வடிவம், அண்ணனார் என்பதன் மரூஉவன்று. அண்ணா என்னும் விளிவடிவே, ரகர மெய்யீறு பெற்று அண்ணார் என்று தவறாக வழங்கிவருகின்றது.

அண்ணன்

அண்ணன் aṇṇaṉ, பெ. (n.)

   1. தமையன், தம்முன் (பிங்.);; elder brother.

     “முன்னவ னண்ணன் மூத்தோன்” (சூடா.);.

   2. மதிக்கத்தக்க மூத்தோன்; respectable elderly man.

     ‘அண்ணனுக்குத் தம்பி அல்லவென்று போகுமா?’,

     ‘அண்ணனுக்குப் பெண் பிறந்தால் அத்தை அயல்நாட்டாள்’,

     ‘ஐந்து வயதில் அண்ணன் தம்பி, பத்து வயதில் பங்காளி” (பழ.);.

ம. அண்ணன்; க., பட., குட. அண்ண ; தெ., குவி. அன்ன; து. அண்ணெ; கோத. அண்ணன்; இரு., குரு., துட. ஒணென்; கொலா. அணுக்; கோண். தன்னால்; கொர. ஆண்; எரு. அண; சப். அண்ணா.

அண்ணப்பரடு

 அண்ணப்பரடு aṇṇapparaḍu, பெ. (n.)

   மேல் வாயின் கரடு; hard or bony palate (சா.அக.);.

     [அண்ணம் + பரடு.]

அண்ணப்பிளப்பு

 அண்ணப்பிளப்பு aṇṇappiḷappu, பெ. (n.)

   மேல் வாயின் அல்லது மேற்பரட்டின் வெடிப்பு; a fissure or a narrow opening in the palate, Uranisochasma, Palatoschisis (சா.அக.);.

அண்ணப்பிளவு

 அண்ணப்பிளவு aṇṇappiḷavu, பெ. (n.)

   மேல் வாயின் பிளவு; a cleft or congenital fissure of the palate, cleft palate (சா.அக.);.

     [அண்ணம் + பிளவு.]

அண்ணமார்

அண்ணமார் aṇṇamār, பெ. (n.)

   1. ஒரு சிற்றுார்ச் சிறுதெய்வம் (கோவை); ; a minor village deity (Cm.); — (L.);.

   2. ஓர் அசுரப் பெண் தேவதை; a female evil spirit, demoness (சா.அக.);.

அண்ணமார்கல்

 அண்ணமார்கல் aṇṇamārkal, பெ. (n.)

   கட்டடத்தில் தட்டை வளைவின் குத்துக்கல் (சென்னை);; upright bricks of a flat arch (Madr.);.

     [அண்ணம் + ஆர் + கல் – அண்ணமார்கல் = வளைவின் மேற்பகுதியிற் பொருத்திய குத்துக்கல்.]

அண்ணம்

அண்ணம் aṇṇam, பெ. (n.)

   1. மேல்வாய்; palate, roof of the mouth.

     “அண்ண நண்ணிய பல்” (தொல். எழுத்து. பிறப். 11);.

   2. உண்ணாக்கு (திவா.); ;u

 vula.

   3. அண்ணாக்கு; the soft palate behind the uvula, palatum molle (சா.அக.);.

ம. அண்ணம்; க. அங்கல, அண்ணாலிகெ; தெ. அங்கிலி ; து. அண்ண; நா. அங்குல்; பட. அங்குவ.

     [அண் + அம்.]

அண் என்பது மேற்புறத்தைக் குறித்த சொல்லாதலால், அண்ணம் என்பதற்குக் கீழ்வாய்ப்புறம் என்றும் சில அகரமுதலிகள் பொருள் குறிப்பது பொருந்தாது.

அண்ணம் வீழ்ச்சி

அண்ணம் வீழ்ச்சி aṇṇamvīḻcci, பெ. (n.)

   1. அண்ணாக்கு விரிந்து தொங்கல்; sagging of the soft palate, Uvuloptosis.

   2. உண்ணாக்கு வளர்த்தி; elongation or pendulous condition of the uvula, staphyloptosis (சா.அக.);.

அண்ணம்வெடிப்பு

 அண்ணம்வெடிப்பு aṇṇamveḍippu, பெ. (n.)

அண்ணப்பிளப்பு பார்க்க;see appa-p-pilappu.

அண்ணலார்

அண்ணலார் aṇṇalār, பெ. (n.)

   சிவன்;Śiva.

     “ஆடன் மேவிய வண்ண லாரடி” (பெரியபு. ஏயர்கோ. 98);.

ம. அண்ணலார்

     [அண்ணல் + ஆர் (உ.ப. ஈறு);.]

அண்ணல்

அண்ணல் aṇṇal, பெ. (n.)

   1. பெருமை; greatness.

     “அண்ணலங் குமரரா மென்று” (பாரத. திரெள. 63);.

   2. உயர்வு, சிறப்பு; exaltation, excellence, loftiness.

     “ஒங்கு மண்ணல் மால்வரை” (கூர்மபு. திருக்கல்.18);.

   3. தலைமை; superiority.

     “அண்ணல் மணி நெடுந்தேர்” (திருக்கோ. 256);.

   4. பெருமையிற் சிறந்தோள்; greatman, superior.

     “அகத்தியனுக்கோத்துரைக்கு மண்ணல்” (சிவப்பிர. 4);.

   5. தலைவன்; master.

     “அடுபோரண்ணல் கேட்டிசின் வாழி” (மதுரைக். 207, 208);.

   6. தந்தை (அரு.நி.);; father.

   7. அண்ணன் (நாநார்த்த.);; elder brother.

   8. குரு, குரவன், ஆசிரியன்; preceptor, spiritual guide.

   9. முல்லைநிலத் தலைவன் (தொல், பொருள். அகத். 20, நச். உரை);; ruler of a land predominantly pastoral.

   10. அரசன் (சூடா.);; king.

   11. சிவன்;šiva.

     “அண்ண லாரு மதுவுணர்ந்து” (பெரியபு. திருநாவுக். 296);.

   12. கடவுள்; God.

     “அண்ண லருளா னண்ணி” (சிவப்பிர. 19);.

   13. புத்தன் (பொதி.நி.);; the Buddha.

   14. அருகன் (நாநார்த்த.);; Arhat.

ம. அண்ணல்; க. அ.ண்ணலெ; தெ. அண்ணு.

அண்ணல்வல்லி

 அண்ணல்வல்லி aṇṇalvalli, பெ. (n.)

   கோவை; Indian caper, Cephalandra indica alias Bryonia grandis (சா.அக.);.

அண்ணவெலும்பு

 அண்ணவெலும்பு aṇṇavelumbu, பெ. (n.)

   மூக்கின் பின்புறத்திலிருக்கும் எலும்பு; the bony structure behind the nostrils (சா.அக.);.

     [அண்ணம் + எலும்பு.]

அண்ணவோதை

 அண்ணவோதை aṇṇavōtai, பெ. (n.)

   நாவாற் கொட்டும் ஒலி; clicking sound produced by pressing the tongue against the roof of the mouth (W.);.

     [அண்ணம் + ஓதை.]

அண்ணா

அண்ணா1 aṇṇā, பெ. (n.)

   உண்ணாக்கு; uvula.

     “அண்ணா வுரிஞ்சி மூக்குயர்த்தார்” (சீவக. 2703);.

ம. அண்ணா

     [உள் + நா — உண்ணா → அண்ணா.]

 அண்ணா2 aṇṇā, பெ. (n.)

   திருவண்ணாமலை; Tiruvannamalai, a siva shrine.

     “உயர்பொழி லண்ணாவி லுறைகின் றாரும்” (தேவா. 6.16;5);.

     [அருணமலை → அண்ணாமலை — அண்ணா.]

 அண்ணா3 aṇṇā, பெ. (n.)

   1. அண்ணன்; elder brother.

   2. தந்தை (பிராம.);; father (Brahm,);.

     [அண்ணன் → அண்ணா (விளி);.]

முறைப்பெயர்களின் விளிவடிவை முதல் வேற்றுமையாக (எழுவாயாக); வழங்குவது பிற்காலத்தெழுந்த வழுவழக் காதலால், அதைப் பொத்தகங்களிற் கையாளாததோடு பேச்சிலும் விட்டுவிடல் வேண்டும். இவ் வழக்கு, கன்னட முதலிய திரவிடமொழிகளில் வழுவமைதியாயினும், தமிழில் ஆகாது.

அண்ணா-த்தல்

அண்ணா-த்தல் aṇṇāttal,    3 செ.கு.வி. (v.i.)

   1. மேல்நோக்குதல்; to look up ward.

செம்பில் வாய்படாமல் தண்ணீரை அண்ணாக்கக் குடி (உ.வ.);.

   2. மேனோக்கிப் பார்த்தல்; to look up intently.

     “அண்ணாந்து கேட்பரழகழ கென்பர்” (தனிப். தி. 2, பக்.293);.

   3. தலைநிமிர்தல்; to hold the head erect.

     “நண்ணார் நாண அண்ணாந் தேகி” (புறநா. 47 ; 8);.

   4. நிமிர்ந்து நிற்றல்; to stand erect.

     “அண்ணாந் தேந்திய வன முலை” (நற். 10;1);.

   5. வாய் திறத்தல்; to gape, open the mouth.

     “அண்ணாத்தல் செய்யா தளறு” (குறள், 255);.

ம. அண்ணா ; க. அண்ணெ ; து. அண்ணாவுனி, அணாவு.

அண்ணாக்க

 அண்ணாக்க aṇṇākka, கு.வி.எ. (adv.)

   மேனோக்கி, பல்லில் அல்லது உதட்டிற் படாமல்; with head turned upward gulping food or drink without the vessel or food touching the teeth and lips.

தண்ணீரை அண்ணாக்கக் குடி மருந்தை அண்ணாக்க விழுங்கிவிடு (உ.வ.);.

ம. அண்ணான்னு

அண்ணாக்கறுத்தல்

அண்ணாக்கறுத்தல் aṇṇākkaṟuttal, தொ.பெ. (vbl.n)

   1. உண்ணாக்கு வளர்ச்சியைக் கத்தியாலறுத்து நீக்கல்; the surgical operation of the uvula ora part there of, uvulotomy.

   2. உண்ணாக்குச் சதை கரையும்படி கார மருந்திடல்; application of corrosive drug to the uvula to reduce its size (சா.அக.);.

     [உள் + நாக்கு – உண்ணாக்கு → அண்ணாக்கு + அறுத்தல்.]

அண்ணாக்கழற்றி

அண்ணாக்கழற்றி aṇṇākkaḻṟṟi, பெ. (n.)

   1. உண்ணாக் கழற்சி; inflammation of the uvula, uvulitis.

   2. மேல்வாயின் கீழ்ப்புறத்திற் காணும் அழற்சி; inflammation of the soft palate, Palatitis (சா.அக.);.

     [அண்ணாக்கு + அழற்சி. உள் + நாக்கு — உண்ணாக்கு → அண்ணாக்கு.]

அண்ணாக்கு

 அண்ணாக்கு aṇṇākku, பெ. (n.)

   உண்ணாக்கு; uvula.

     ‘அண்ணாக்கும் தொண்டையும் அதிர அடைத்தது’ (பழ.);.

ம. அண்ணாக்கு; க. அண்ணாலிகெ; தெ. அங்கிலி.

     [உள் + நாக்கு – உண்ணாக்கு → அண்ணாக்கு.]

அண்ணாக்குப் பிரிவு

 அண்ணாக்குப் பிரிவு aṇṇākkuppirivu, பெ. (n.)

   இரண்டாகப் பிரிந்த உண்ணாக்கு; a split uvula, bifid uvula (சா.அக);.

     [உண்ணாக்கு → அண்ணாக்கு + பிரிவு.]

அண்ணாக்கெடுத்தல்

 அண்ணாக்கெடுத்தல் aṇṇākkeḍuttal, தொ. பெ.

   உண்ணாக்கிற்கு மேற்புறந் தொங்கும் சதையை, வாய்க்குட் கையை விட்டோ உச்சிமயிரைத் தூக்கிப்பிடித்தோ தொங்காதவாறு செய்தல்; arresting the sagging of the soft palate, either by thrusting the fingers into the mouth, or by holding the head up by the hair on the crown.

     [உண்ணாக்கு → அண்ணாக்கு + எடுத்தல்.]

அண்ணாச்சி

 அண்ணாச்சி aṇṇācci, பெ. (n.)

   அண்ணனார் (தெற்கு);; elder brother (South);.

ம. அண்ணாச்சி, அண்ணாழ்வி.

     [அண்ணாட்சி → அண்ணாச்சி.]

அண்ணாட்சி

 அண்ணாட்சி aṇṇāṭci, பெ. (n.)

   அண்ணனார் (தெற்கு);; elder brother (South);.

     [அண்ணன் + ஆட்சி — அண்ணாட்சி. ஒ.நோ ; அண்ணன் + ஆள்வி — அண்ணாள்வி → அண்ணாவி.]

பொதுவாக, அண்ணன் என்பது படியாதவர் வழக்கும், அண்ணாட்சி என்பது படித்தவர் வழக்கும் ஆகும்.

     ‘தந்தைக்குப் பின் தமையன்’ என்னும் முறைப்படி ஆண்மக்கள் பலருள்ள குடும்பத்தில் மூத்தவனே தந்தைக்குப் பின் குடும்ப ஆட்சியை மேற்கொள்வானாதலால், அவன் தம்பி தங்கைமாரால் அண்ணாட்சியென விளிக்கப்பட்டான். முதற் காலத்தில் மூத்த அண்ணனுக்கு வழங்கிய பெயர்வடிவம், பிற்காலத்தில் இளைய அண்ணன்மார்க்கும் வழங்கலாயிற்று. அவருள் வேறுபாடு குறிக்க ‘மூத்த’, ‘இளைய’ அல்லது ‘பெரிய’, ‘சின்ன’ என்னும் அடைகள் சேர்க்கப்பட்டன.

அண்ணாத்து-தல்

 அண்ணாத்து-தல் aṇṇāttutal, செ.கு.வி. (v.i.)

ஏனத்தில் உள்ள கூழ் போன்றவற்றை மேலே தூக்கி ஒரே மூச்சில் குடித்தல்:

 to drink at a stretch.

     [அண்ணா-அண்ணாத்து]

     [P]

அண்ணாத்தை

அண்ணாத்தை aṇṇāttai, பெ. (n.)

   1. அண்ணன், சில சமயங்களில் இழிவு குறித்தது (வடக்கு);; elder brother, sometimes in contempt (North);.

   2. வெறும் பெரியவர் (இ.வ.);; idler, worthless fellow (Loc.);.

     [ஒருகா. அண்ணன் + தே — அண்ணாத்தை அல்லது அண்ணன் + அத்தன் → அண்ணத்தன் → அண்ணத்தை → அண்ணாத்தை.]

அண்ணாத்தை என்பது, சில சமயங்களில் இளையவர்க்கும் தகுதியில்லாதவர்க்கும் இழிவு குறித்த பகடிச்சொல்லாக வழங்கினும், மூத்தவர்க்கும் தகுதியுள்ளவர்க்கும் அண்ணனார், தமையனார், அண்ணாட்சி என்பன போன்று மதிப்புச் சொல்லாகவும் வழங்கிவருகின்றது.

தெய்வத்தையும் தலைவனையுங் குறிக்கும் தே என்னும் சொல்லைப் பின்னொட்டாகப் பெற்று வழங்கும் நாயன்தே என்பது போன்று, அண்ணாத்தே என்னுஞ் சொல்லுந் தோன்றி அண்ணாத்தை யென்று மருவியிருக்கலாம்.

ஒ.நோ ; நாயன்தே → நாயந்தே → நாயிந்தே → நயிந்தே → நயிந்தை. அண்ணாத்தே → அண்ணாத்தை.

இனி, அண்ணன் அல்லது அண்ணா என்னுஞ் சொல் தந்தையைக் குறிக்கும் அத்தன் என்னுஞ் சொல்லொடு புணர்ந்து அண்ணாத்தன் → அண்ணாத்தை என்று திரிந்ததாகக் கொள்ளவும் இடமுண்டு.

அத்தை யென்பது பெண்பாற் பெயராதலின், அண்ணாத்தையென்னும் புணர்ச் சொல்லின் வருஞ்சொல்லாக இருத்தல் இயலாது.

அண்ணாநாடு

அண்ணாநாடு aṇṇānāṭu, பெ. (n.)

   திருவண்ணாமலை வட்டாரம்; the region about Tiruvannāmalai.

     ‘அண்ணாநாட்டு எல்லையில் திருந் திகை யாற்றை யடைத்து’ (S.I.I.vii,44);.

அண்ணாந்தாள்

 அண்ணாந்தாள் aṇṇāndāḷ, பெ. (n.)

   ஒருவனைக் குனியவைத்து. அவன் கழுத்தைச் சுற்றி ஒரு கயிற்றைத் தொங்கவிட்டு, அதன் ஒரு முனையை ஒருகாற் பெருவிரலிலும் மற்றொரு முனையை மற்றொருகாற் பெருவிரலிலுங் கட்டி, முதுகின்மேல் ஒரு கனத்த கல்லையும் ஏற்றி, நீண்ட நேரம் அதே நிலையில் இருக்கச் செய்யுந் தண்டணை; placing an individual in a stooping position, fastening a string to each great toe, passing the bight over the back of the neck, and putting a stone on his back, as a punishment (E.T.);. — தலையையுங் காலிற் பெருவிரலையுஞ் சேர்த்துக் கட்டித் தலை நிமிர்ந்திருக்கச் செய்யுந் தண்டனை (சங்.அக.);; fastening the head and toes of an individual, and making him hold his head in an erect position, as a punishment (S.D.);.

அண்ணாந்தாள்பூட்டு-தல்

அண்ணாந்தாள்பூட்டு-தல் aṇṇāndāḷpūṭṭudal,    5 செ.குன்றாவி, (v.t.)

   அண்ணாந்தாள் தண்டனையிடுதல்; to inflict anaandal punishment.

அண்ணாந்துபார்-த்தல்

அண்ணாந்துபார்-த்தல் aṇṇāndupārttal,    4 செ.கு.வி. (v.i.)

   மேல்நோக்கிப் பார்த்தல்; to look upward.

–, 4 செ.குன்றாவி. (v.t.);

   கூர்ந்து பார்த்தல்; to look into, consider deeply.

     “அண்ணாந்து பார்க்க வழியு முடம்பே” (திருமந். 2139);.

அண்ணாமலை

அண்ணாமலை aṇṇāmalai, பெ. (n.)

   சிவன் கோயில்கொண்டுள்ள திருவண்ணாமலை; Tiruvannāmalai, a Śiva shrine.

     “அண்ணாமலையங் கமரர் பிரான்” (பெரியபு. திருஞான. 970);.

     ‘அண்ணாமலையாருக்கு அறுபத்து நான்கு பூசை, ஆண்டிகளுக்கு எழுபத்து நான்கு பூசை, அண்ணாமலையார் அருளுண்டானால் மன்னார்சாமி வம்பா செய்யும்?’ (பழ.);.

     [அருணமலை → அண்ணாமலை.]

அண்ணாமலை முழும்

அண்ணாமலை முழும் aṇṇāmalaimuḻum, பெ. (n.)

   24 விரல்கொண்டதும், முன்பு தஞ்சைப் பெருவுடையார் திருக்கோயிற்கும் பின்பு திருவண்ணாமலைத் திருக்கோயிற்கும் கட்டுமானத்திற் பயன்படுத்தியதுமான அளவுகோல்; a standard measuring rod, so called because it was used in the construction of the temples at Thafijāvūr and Tiruvanqāmalai.

     ’24 விரல்கொண்ட கிஷ்கு முழத்திற்குத் தஞ்சை முழமென்றும் ஒரு பெயர் வழக்கில் உண்டு. தஞ்சைப் பெருவுடையார் திருக் கோயிலை நிருமாணிப்பதில் இம் முழம் கையாளப் பெற்றமையால் இப் பெயர் பெற்றது. திருவண்ணாமலைத் திருக்கோயிலை அமைப்பதற்குப் பயன்படுத்திய அளவுகோல் இம் முழக்கோலாகையினால் இதற்கு அண்ணாமலை முழமென்று மற்றொரு பெயருமுண்டு’ (சி.செ. பக். 3. பத்தி 1);.

     [அருணமலை → அண்ணாமலை + முள் → முழி (மொழி); → முழம்.]

அண்ணார்

அண்ணார் aṇṇār, பெ. (n.)

   பகைவர், வணங்கார்; enemies, recalcitrants.

     “அண்ணார் புரமவிய” (உபதேசகா. திரிபுர. 112);.

ம. அண்ணார்

     [அண் + ஆ (எ.ம.இ.நி.); + ஆர் (ப.பா. ஈறு);. ‘ஆர்’ புணர்ச்சியில் முதல் கெட்டது.]

கொச்சை வழக்கில் உயர்வுப் பன்மையாக அண்ணனைக் குறிக்கும் அண்ணார் (அண்ணா + ஆர்); என்னுஞ்சொல், வழுஉச் சொல்லாதலின் இவ் வகரமுதலியிற் கொள்ளப்படவில்லை.

அண்ணனார் பார்க்க;see annanar.

அண்ணாளன்

அண்ணாளன் aṇṇāḷaṉ, பெ. (n.)

   1. பெண் வழிச் செல்வோன் (இ.வ.); ; husband under the authority of his wife, hen-pecked husband (Loc.);.

   2. அலி (இ.வ.); ; hermaphrodite (Loc.);.

இச்சொல் ஷண்ட என்னும் வடசொல்லொடு தொடர்புடையதாகத் தெரியவில்லை.

அண்ணாள்வி

அண்ணாள்வி aṇṇāḷvi, பெ. (n.)

   அண்ணனார், அண்ணாட்சி; elder brother or cousin.

     ‘எங்களண்ணாழ்வி (அண்ணாள்வி); செய்த பணி’ (T.A.S. i, 103);.

ம. அண்ணாழ்வி

அண்ணாழ்வி என்பது, ஆழ்வார். என்னுஞ் சொல்லைப் பின்பற்றின தவற்று வடிவமாகும்.

     [அண்ணன் + ஆள்வி – அண்ணாள்வி. ஆள்வு → ஆள்வி = ஆள்வோன், ஆளி.]

அண்ணாவி

அண்ணாவி aṇṇāvi, பெ. (n.)

   1. ஆசிரியன்; teacher.

     ‘தன்னாலே தான் கெட்டால் அண்ணாவி என்ன செய்வான்?’, ‘அண்ணாவி தான் செத்தார், அவர் சொல்லிக் கொடுத்த பாடமுமா செத்தது?’, ‘அண்ணாவி விழுந்ததும் ஒர் அடவுதான்’ (பழ.);.

   2. கூத்துப் பயிற்றுவோன், நாடக ஆசிரியன்; dancing master, director of theatrical performances.

   3. அதிகாரி ; master, superior, one in authority.

நீ அதற்கு அண்ணாவியல்லை (உ.வ.);.

   4. புலவன் (யாழ்.அக.);; poet.

ம. அண்ணாவி

     [அண்ணன் + ஆள்வி — அண்ணாள்வி → அண்ணாவி.]

 அண்ணாவி aṇṇāvi, பெ. (n.)

   வில்லுப் பாட்டினைக் கற்றுதரும் ஆசிரியர்; folksong teacher

     [அண்ணன்-அண்ணாவி]

அண்ணி

 அண்ணி aṇṇi, பெ. (n.)

   அண்ணன் மனைவி; elder brother’s wife.

     ‘அண்ணன்தான் கூடப் பிறந்தான், அண்ணியுமா கூடப்பிறந்தாள்?’ (பழ.);.

அண்ணி-த்தல்

அண்ணி-த்தல் aṇṇittal,    4 செ.கு.வி. (v.i.)

   1. நெருங்குதல் ; to come near, get close.

   2. பொருந்துதல்; to join, unite.

     “அடியார்க் கென்று மாரமுதா யண்ணிக்கு மையாற்றான் காண்” (தேவா. 6.30;2);.

   3. தித்தித்தல்; to taste sweet.

     “சிந்தை செயச்செயக் கருப்புச் சாற்றிலு மண்ணிக்குங் காண்மினே” (தேவா. 5.61 ; 5);.

     [அண் → அண்ணி. அண்ணுதல் = நெருங்குதல், பொருந்துதல், தித்தித்தல்.]

அண்ணிது

அண்ணிது aṇṇidu, பெ. (n.)

   1. அண்மை ; proximity, nearness.

   2. அண்மையிலுள்ள; that which is near.

     [அண் + இது. இனி, அண்ணியது → அண்ணிது என்றுமாம். அண்ணிது → அண்ணீசு (யாழ். அக.);. ஒ.நோ.: பெரிது → பெரிசு.]

அண்ணிமை

 அண்ணிமை aṇṇimai, பெ. (n.)

   அண்மை (ஈடு);; nearness.

     [அண்மை → அணிமை → அண்ணிமை.]

அண்ணியது

அண்ணியது aṇṇiyadu, பெ. (n.)

   கிட்டியது; that which is near.

     “அண்ணிய தாயுமகன்றும்” (கூர்மபு. பொது. 12);.

அண்ணியன்

அண்ணியன் aṇṇiyaṉ, பெ. (n.)

   1. அண்மையன்; he who is near.

   2. நெருங்கிய உறவினன்; close kinsman.

     ‘தமப்பன் பகையாக அவனிலும் இவன் அண்ணிய னென்று வர நின்ற ப்ரஹலாதன்’ (ஈடு, 10 ; 3, பிர. பக். 70);.

     [அண் → அண்ணியன்.]

அண்ணியர்

அண்ணியர் aṇṇiyar, பெ. (n.)

   அடுத்து உள்ளவர்; close friends.

     “அண்ணியர் அகன்றவர் திறத்தும் ஆணையான்” (சூளா. 52.);

     [அண்ணு+இ+அர்]

அண்ணு-தல்

அண்ணு-தல் aṇṇudal,    5 செ.குன்றாவி, (v.t.)

   1. கிட்டுதல்; to approach, draw near.

     “அண்ணிய தாயு மகன்றும்” (கூர்மபு. பொது. 12);.

   2. சேர்தல்; to join, unite with.

     “உன்னடிக்கீழண்ணியமெய் யடியவர்க்கு” (திரு விளை. மெய்க்காட். 8);.

   3. ஒத்தல்; to resemble.

     “புகலும் வாளரிக் கண்ணியர்” (கம்பரா. பால, வரைக்காட். 28);.

து. அண்டுனி

     [அள் → அண் → அண்ணு.]

அண்ணுக்குத்திஉழவு

 அண்ணுக்குத்திஉழவு aṇṇukkuttiuḻvu, பெ. (n.)

   நன்கு சரிவர உழப்படாத நிலப்பதம்;   பெரும்பாலும் அன்றே உழுது விதைக்கும் படியான நிலப்பதம் (இ.வ.);; make shift cultivation.

     [அண்ணா+குத்து+உழவு]

அண்ணுண்டார்

அண்ணுண்டார் aṇṇuṇṭār, பெ. (n.)

   கள்ளர் குலப் பட்டப்பெயர்களுள் ஒன்று (கள்ளர் சரித். பக். 145);; a caste title of Kallars.

     [ஒருகா. ‘அரண்வென்றார்’ என்பது அண்ணுண்டார் என்று திரிந்திருக்கலாம்.]

அண்ணுத்திப்பிரியர்

அண்ணுத்திப்பிரியர் aṇṇuttippiriyar, பெ. (n.)

   கள்ளர்குலப் பட்டப்பெயர்களுள் ஒன்று (கள்ளர் சரித். பக். 145);; a caste title of Kallars.

ஒருகா. ‘ஐந்நூற்றுப் பேரர்’ என்பது இதன் மூலமாயிருந்திருக்கலாமென்று, சென்னை அகரமுதலி கருதுகின்றது. அதை ‘ஐந்நூற்றுப் பிரிவார் அல்லது ‘ஐந்நூற்றுப் பெரியார்’ என்று கொள்ளவும் இடமுண்டு.

அண்ணெரிஞ்சான்பூண்டு

 அண்ணெரிஞ்சான்பூண்டு aṇīeriñjāṉpūṇṭu, பெ. (n.)

   இது கொச்சை வடிவமாதலாற் கொள்ளத்தக்கதன்று;     [அன்றெரிந்தான் பூண்டு → அண்ணெரிஞ்சான் பூண்டு.]

அன்றெரிந்தான் பூண்டு பார்க்க;see anrerindan-pū ndu.

அண்ணை

 அண்ணை aṇṇai, பெ. (n.)

   பேய் (பொதி.நி.);; devil, ghost, goblin.

     [மண்ணை (பேய்); → அண்ணை.]

அண்பல்

அண்பல் aṇpal, பெ. (n.)

   மேல்வாய்ப் பல்; upper tooth or teeth.

     “அண்பல முதனா விளிம்புற வருமே” (நன். 77);.

ம. அணப்பல்லு

     [அண்பல் = அண்ணத்தைப் பொருந்திய பல்.]

சீவகசிந்தாமணி 928ஆம் செய்யுளிலுள்ள,

     “அண்பன் னீரு றமிர்தம்” என்னுந் தொடருக்கு,

     ‘அடிப்பல்லில் நீருறமிர்தம்—புளிங்கறி’ என்று நச்சினார்க்கினியர் குறிப்புரை வரைந்திருக்கின்றார். ‘அண்பல்’ என்பதற்கு ‘அடிப்பல்’ என்னும் பொருள் எங்ஙனம் பொருந்துமென்பது தெரியவில்லை. புளிங்கறிக்கோ பிறவகை யுண்டிகட்கோ உமிழ்நீர் சுரப்பின், அது எல்லாப் பற்கும் பொதுவாதலால், இங்கு ‘அண்பல்’ என்பதற்கு, அண்ணி அல்லது நெருங்கிய பற்கள் என்று பொதுப்படக் கூறுவதே பொருத்தமாம்.

அண்பினார்

அண்பினார் aṇpiṉār, பெ. (n.)

   அண்டினவர்; those who have taken refuge.

     “அண்பினார் பிரியார்” (தேவா. 3.379 ; 6);.

     [அண் → அண்மு → அண்பு + இன் + ஆர்.]

அண்பு-தல்

அண்பு-தல் aṇpudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. அண்ணுதல்; to approach (தேவா. 3.379 ; 6);.

   அண்டுதல்; to associate with, to take refuge.

     [அண் → அண்மு → அண்பு.]

அண்மனைக்காணி

 அண்மனைக்காணி aṇmaṉaikkāṇi, பெ. (n.)

   படைக்கு வேண்டிய உணவுப்பொருள்களை நேரடியாக விளைவிப்பதற்காக அரசியலார் வைத்துக்கொள்ளும் பண்ணைகள்; estate run directly by the government for the supply of grain to troops.

     [அரண்மனை + காணி.]

அண்மு-தல்

அண்மு-தல் aṇmudal,    5 செ.குன்றாவி. (v.t)

   கிட்டுதல்; to approach.

     “அணிமாடத் திடை யோர் மண்டபத்தை யண்மி” (கம்பரா. பால. திருவவ. 61);.

     [அண்மை → அண்மு.]

 அண்மு-தல் aṇmutal, செ.கு.வி. (v.t)

   நெருங்கு நெருங்குதல்; to come close.

     “அம் கண் நாயகற் காண வந்து அண்மினார்.” (அயோ, 7-10);.

     [அன்-அண்மு]

அண்மை

அண்மை aṇmai, பெ. (n.)

   1. காலத்தால் அல்லது இடத்தால் நெருங்கியுள்ள நிலைமை; nearness of time or place.

     “அண்மையாற் சேய்த்தன்றி” (கலி. 108 ; 35);.

   2. பொருள் தொடர்புள்ள இரு சொற்கள் அல்லது தொடர்ச் சொற்கள் ஒன்றையொன்று அடுத்து நிற்றல், தொடர்ச்சொற்கள் பொருள் தொடர்பு கொள்ளு முறை மூன்றனுள் ஒன்று; immediate proximity of the qualifying (or governing); and the qualified (or governed); words to each other, one of the three modes by which words” or phrases express their syntactic relationship.

   3. அடையுந் தன்மை; nature of approaching or joining.

     “விண்ணவர்பாலண்மையிலனாகு மண்ணல்” (கந்தபு. உற்பத். காமதக. 38);.

     [அண் → அண்மை.]

அண்மைச்சுட்டு

 அண்மைச்சுட்டு aṇmaiccuṭṭu, பெ. (n.)

 Gram.) demonstrative letter or word denoting the nearness of a person, place, thing or time; dist. from $éymai-c-cuttu.

இவன் இங்கு இதைச் செய்தது இன்றுதான் (உ.வ.);.

     [அண்மை + சுட்டு.]

அண்மைவிளி

 அண்மைவிளி aṇmaiviḷi, பெ. (n.)

நாய், பூனை முதலிய சில வீட்டு, விலங்குகட்குப் பெயரிட்டு விளிப்பினும், அப்பெயர்கள் அவற்றிற்கு ஒருவகை அடையாளச் சொல்லாகவேயிருத்தலால், அவற்றின் விளி மக்கட்பெயர்விளிக் கொப்பாகக் கொள்ளப்படா.

அண்வரு-தல் (அண்வா-தல்)

அண்வரு-தல் (அண்வா-தல்) aṇvarudalaṇvādal,    18 செ.கு.வி. (v.i.)

   1. அருகில் வருதல்; to come near.

   2. அருகிலிருத்தல்; to be close, near.

     ‘ஆவண வீதியெல்லாம்நிழல் பாயநின் றண்வருமே’ (இறை. 2. உரை, பக். 53);.

அத

அத ada, பெ. (n.)

   அத்தி; country fig, Ficus glomerata..

     ‘அதக்குறிது’ (தொல். எழுத்து. உயிர். 1. நச். உரை);.

மறுவ. அதவம், அதவு, அதா.

அதககந்தி

 அதககந்தி adagagandi, பெ. (n.)

   கந்தக வண்டல்; precipitated sulphur, Lac-sulphur or Milk of sulphur (சா.அக.);.

அதகக்கொடி

 அதகக்கொடி adagaggoḍi, பெ. (n.)

   பெருமருந்துக் கொடி; a twining plant, Indian birthwort, Aristolochia Indica (சா.அக.);.

அதகடி

 அதகடி adagaḍi, பெ. (n.)

அதட்டு (யாழ்ப்.);:

 menace, threat, hectoring (J.);.

     [அதக்கு + அடி – அதக்கடி → அதகடி.]

அதகன்

அதகன்1 adagaṉ, பெ. (n.)

   வலிமையுள்ளவன்; strong powerful person.

     “உறுதுயர் தீர்த்த வதகன்” (திவ். பெரியாழ். 2, 1, 9.);.

     [Skt. hataka → த. அதகன்.]

 அதகன்2 adagaṉ, பெ. (n.)

   1. மருந்து கொடுப்பவன்; one who administers medicine.

   2. மருத்துவன்; one who prescribes remedies for diseases or who is skilled in the art of healing, Physician (சா.அக.);.

அதகப்தி

 அதகப்தி adagapdi, பெ. (n.)

   இடுப்பின் கீழ் உணர்ச்சியற்றுக் கால் விழுகை, முடக்கு ஊதை பக்கவலிப்பு; paralysis of the legs and the lower part of the body, Paraplegia (சா.அக.);.

அதகப்பாடி

 அதகப்பாடி atakappāṭi, பெ. (n.)

   தர்மபுரி வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Dharmapuri Taluk.

     [அதிகன்+பாடி]

அதகமனம்

 அதகமனம் adagamaṉam, பெ. (n.)

   வண்டலாகப் பிரிந்து தங்கல்; the process by which a substance is made to separate from another or other substances in a solution and fall to the bottom – precipitation (சா.அக.);.

அதகம்

அதகம்1 adagam, பெ. (n.)

   1. மருந்து; medicine, medicament.

     “அதங்க கண்ட பையண னாகம்” (சீவக. 403);;

   2. உயிர்தரு மருந்து (பிங்.);; restorative that brings the dead to life.

   3. கொடிவகை (மலை.);; Indian birthwort.

   4. சுக்கு (தைலவ.);; dried ginger.

     [Skt. agada → த. அதகம்.]

 அதகம்2 adagam, பெ. (n.)

   அடையல்; precipitate (சா.அக.);.

அதக்காயநாளம்

 அதக்காயநாளம் adakkāyanāḷam, பெ. (n.)

   ஈரலின் இடப்புற நாளம்; a large hollow vein of the liver, Vena cava hepatica.

அதக்காயம்

 அதக்காயம் adakkāyam, பெ. (n.)

   தொடை, கால், பாதம், இவை அடங்கிய உடம்பின் பகுதி; that portion of the body below the hip comprising the thinghs, the leg and the feet, lower extremity (சா.அக.);.

அதக்காயவெலும்பு

 அதக்காயவெலும்பு adakkāyavelumbu, பெ. (n.)

   இடுப்பின் கீழேயுள்ள எலும்பு; bone of the lower extremity (சா.அக.);.

அதக்கு

அதக்கு atakku, பெ. (n.)

   வாயில் ஏதாவது ஒன்றைப் போட்டுமெல்லுதல் (கொ.வ.வ.சொ.6);; chewing something.

     [அதை=அதைக்கு]

அதக்கு-தல்

அதக்கு-தல் adakkudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. மெல்ல அழுக்குதல்; to press gently or softly as is done to a boil to bring out the pus or other matter (சா.அக.);.

   2. கீழ்ப்படுத்துதல், அடக்குதல்; to subdue, subject, control.

     “மாவலியைக் குறும்பதக்கி” (திவ். பெரியாழ். 4. 9;7);.

   3. கசக்கியிளக்குதல் (வின்.);; to grind, rub in the hand, press softly, soften, as fruit.

   4. வாயில் அடக்குதல்; to cram in the mouth, as betel, as a monkey, its food.

   5. குதப்புதல்; to turn about food in the mouth, munch.

ம. அதக்குக ; க. அதுக்கு ; தெ. அதுமு.

     [அல் → அலு → அலுங்கு → அலுக்கு → அதுக்கு → அதக்கு. அலுங்குதல் = அசைதல். அலுக்குதல் = அசைத்தல். அதுக்குதல் = அசைத்து இளக்குதல், கசக்குதல், அடக்குதல். ல → த, போலி.]

அதங்கதம்

 அதங்கதம் adaṅgadam, பெ. (n.)

   யானைத் தீனி (அக.நி.);; food of elephant.

அதங்கம்

 அதங்கம் adaṅgam, பெ. (n.)

   ஈயம் (மு.அ.);; lead, plumbum.

     [ஒருகா. அதக்கு → அதக்கம் → அதங்கம் = எளிதாய் இளகுவது.]

 அதங்கம் adaṅgam, பெ. (n.)

   ஈயம் (மூ.அ.);; lead, plumbum.

     [Skt. tanka → த. அதங்கம்.]

அதங்கோடு

 அதங்கோடு adaṅāṭu, பெ. (n.)

   சேரநாட்டில் திருவனந்தபுரம் பக்கத்திலுள்ள ஒரு பழைய ஊர்; an old town in the Céra or Kérala country near Trivandrum.

அது பின்னர் வேணாட்டுத் தலைநகரானபோது திரு என்னும் அடைபெற்றுத் திருவதங்கோடு எனப்பட்டது. அப்பெயர் பின்னர்த் திருவிதாங்கூர் என மருவிற்று. ஆங்கிலர் காலத்தில் அது திருவாங்கூர் (Travancore); எனக் குறுகிற்று. அவ்வூரைத் தலைநகராகக் கொண்ட நாடும் திருவாங்கூர் எனப் பெற்றது.

அதங்கோட்டாசான்

அதங்கோட்டாசான் adaṅāṭṭācāṉ, பெ. (n.)

   கி.மு. 6ஆம் அல்லது 7ஆம் நூற்றாண்டில், நிலந்தரு திருவிற் பாண்டியன் அவைக்களத்தில் தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்ட போது, அவ்வரங்கிற்குப் புலமைத் தலைமை தாங்கி அந்நூற்கு ஒப்பந் தந்த அதங்கோட்டு வாணனான பேராசிரியன்; a great Tamil scholar of Adańgådu, who as president, gave his approval to Tolkāppiyam when it was presented before a learned assembly for acceptance, in the immediate presence of King Nilandaruthiruvir Pandiyan, who ruled over the Pandya Kingdom in the 6th or 7th century B.C.

     [அதங்கோடு + ஆசான்]

அதசம்

அதசம் adasam, பெ. (n.)

   1. காற்று; wind.

   2. ஆதன்; soul (சா.அக.);.

அதசயம்

 அதசயம் adasayam, பெ. (n.)

   தரையில் உறங்குகை; sleeping on the ground (சா.அக.);.

அதசி

 அதசி adasi, பெ. (n.)

   சணல்; fiax or hemp, crotolaria juncea (சா.அக.);.

அதட்டம்

அதட்டம் adaṭṭam, பெ. (n.)

   1. பாம்பின் கீழ்வாய்ப் பல் (சீவக. 1286.);; lower fang of a serpent.

   2. பாம்பினுயிர்ப்பு (சூடா.);; breath of a snake.

     [Skt. adhó-damstra → த. அதட்டம்.]

அதட்டு

 அதட்டு adaṭṭu, பெ. (n.)

   வெருட்டும் ஓர் உரத்த ஒலி அல்லது சொல்; rebuke, ranting, hectoring.

ஒர் அதட்டுப் போட்டான் ஊர் வெடிக்க (உ.வ.);.

     [அரட்டு → அதட்டு.]

அதட்டு-தல்

அதட்டு-தல் adaṭṭudal,    5 செ.குன்றாவி, (v.t.)

   1. உறுக்குதல்; to rebuke authoritatively, hector.

     “எவரு மடங்க ……… அதட்டு வான் போன்று” (பிரபோத. 11;1);.

   2. ஒலித்து உரப்புதல்; to frighten with a vehement or sudden noise, as a beast.

     “உரத்த தொனியோ டதட்டி” (நல். பாரத. உத்தரநிரை, 334);.

     ‘அதட்டிப் பேசினால் உண்மை அழிந்தா போகும்?’ (பழ.);.

க. அதடு

     [அரட்டு → அதட்டு.]

அதத்தசஞ்சயம்

 அதத்தசஞ்சயம் adaddasañsayam, பெ. (n.)

   உடம்பின் கீழ்ப் பகுதியில் தங்கியுள்ள சிறுநீர் மற்றும் கழிமாசு (மல மூத்திரம்);; the faeces and the urine in the lower region of the trunk (சா.அக.);.

அதனப்பற்று

 அதனப்பற்று adaṉappaṟṟu, பெ. (n.)

   அதிகப் பற்று; debit in account, overdraft.

உன் கணக்கு அதனப்பற்றா யிருக்கிறது (உ.வ.);.

அதனப்பிரசங்கி

 அதனப்பிரசங்கி adaṉappirasaṅgi, பெ. (n.)

   அடங்காப் பேச்சாளி; impudent speaker.

     [அதனம் + Skt. prasaåga → த. பிரசங்கம் → பிரசங்கி.]

அதனப்பிரசங்கி = அதனப் பொழிவாளன்.

அதனம்

 அதனம் adaṉam, பெ. (n.)

   அதிகம், மிகுதி, மிகை; much, excess.

தெ. அதனமு

     [அதித்தல் = மிகுதல். அதி + அனம் – அதனம்.]

அதனா

 அதனா adaṉā, பெ.அ. (adj.)

   தாழ்ந்த; mean, low.

     ‘அதனா மனிதன்’ (இ.வ.);.

     [U. adna → த. அதனா.]

அதன்மம்

அதன்மம் adaṉmam, பெ. (n.)

   அறமல்லாதது; that which is unrighteous.

     “அருளினா லுரைத்த நூலின் வழிவரா ததன்மஞ் செய்யின்” (சி.சி.2.33.);.

     [Skt. a-adharma → த. அதன்மம்.]

அதன்மர்

 அதன்மர் adaṉmar, பெ. (n.)

   கீழ்மக்கள் (பிங்.);; base, low persons.

     [Skt. a-dharma → த. அதர்ம → அதன்மர்.]

     ‘ர்’ பலர்பால் ஈறு.

அதன்மாத்திகாயம்

 அதன்மாத்திகாயம் adaṉmāddikāyam, பெ. (n.)

அதர்மாத்திகாயம் பார்க்க;see adarmáttikāyam.

அதன்மி

அதன்மி adaṉmi, பெ. (n.)

   ஒழுக்கங்கெட்டவள்; fallen woman.

     “அதன்மி யாரென வாங்கவன் வினவ” (பெருங். உஞ்சைக். 35, 69.);.

த.வ. அறக்கேடன்.

     [Skt. a-dharmin → த. அதன்மி.]

அதபட்சம்

 அதபட்சம் adabaṭcam, பெ. (n.)

   சுக்கு; dried ginger (சா.அக.);.

அதபவாதம்

 அதபவாதம் adabavādam, பெ. (n.)

   ஆயுள் வேதத்தில் சொல்லியுள்ள ஓர் ஊதை (வாத); நோய்; a rheumatic disease mentioned in the ayurvedic science (சா.அக.);.

     [Skt. adha+vata → த. அதபவாதம்.]

அதபு

அதபு adabu, பெ. (n.)

   1. வணக்கம்; obedience.

   2. மதிப்புறவு (மரியாதை);; manners.

     “அதபு கெட்டவன்”.

த.வ. மதிப்பு.

     [Ar adab → த. அதபு.]

அதப்பாதாளம்

 அதப்பாதாளம் adappādāḷam, பெ. (n.)

   காணவொண்ணா ஆழம்; chasm, abyss.

     [Skt. adhas + påtålam → த. அதப்பாதாளம்.]

அதப்பித்தாள்

 அதப்பித்தாள் atappittāḷ, பெ. (n.)

   நிழல் பகுதியில் கதிர் வளர்ச்சியடைந்து காணப்படும் நெற்பயிர்; fertile paddy growth in the shaddy area.

     [அதைப்பு+தாள்]

அதப்பியம்

 அதப்பியம் adappiyam, பெ. (n.)

   அவையல் கிளவி (யாழ்ப்.);; indecent language,

     [Skt. a-sabhya → த. அதப்பியம்.]

அதப்பு

 அதப்பு adappu, பெ. (n.)

   செருக்கு (இ.வ.);; arrogance (Loc.);.

 அதப்பு adappu, பெ. (n.)

   மதிப்புறவு; reverence/manner.

     [U. adab → த. அதப்பு.]

அதமசரீரம்

 அதமசரீரம் adamasarīram, பெ. (n.)

 kalpaka tree.

அதமதசம்

 அதமதசம் adamadasam, பெ. (n.)

   வெங்காரம் (வை.மூ.);; borax.

அதமதானம்

 அதமதானம் adamadāṉam, பெ. (n.)

   கைம்மாறு, அச்சம் முதலியவை கருதிய கொடை (வின்.);; charity for selfish ends through fear, as the lowest kinds of benevolence.

     [அதம(ம்); + தானம்.]

     [Skt. adhama → த. அதம(ம்);.]

அதமன்

அதமன் adamaṉ, பெ. (n.)

   கடையன்; low, mean, vile person.

     “கமுகு போல்வ ரதமர்” (நீதிவெண். 91);.

த.வ. கீழ்மகன், கீழோன், இழிந்தோன்.

     [Skt. adhama → த. அதமன்.]

அதமன்கோட்டை

அதமன்கோட்டை atamaṉāṭṭai, பெ. (n.)

அதியமான் கோட்டை, தகடூர் நாட்டு வள்ளல் அதியமான் வாழ்ந்ததும் தருமபுரிக்கு அருகில் 5 கல் தொலைவில் உள்ளதும் ஆகிய ஊர்.

 Name of the village 5 k.m. from Dharmapuri.

     [அதியமான்→அதமன்+கோட்டை]

அதமபட்சம்

 அதமபட்சம் adamabaṭcam,      (வி.அ.) (adv.)

   குறைந்தது; at least.

த.வ. கீழ்ப்பாடு.

     [Skt. adhama + paksa → த. அதமபட்சம்.]

அதமம்

 அதமம் adamam, பெ. (n.)

   கீழ்நிலை; that which is lowest, worst.

     [Skt. adhama → த. அதமம்.]

அதமர்ணன்

அதமர்ணன் adamarṇaṉ, பெ. (n.)

   கடன் வாங்குவோன் (சுக்கிரநீதி, 97.);; one who takes loans debtor.

     [Skt. adha-marna → த. அதமர்ணன்.]

அதமவிம்சதி

அதமவிம்சதி adamavimcadi, பெ. (n.)

   அறுபது ஆண்டு (வருடங்);களுள் பிலவங்க முதல் அட்சய வரையுள்ள 20 ஆண்டுகள் (பெரியவரு.);; the last twenty years from pila-vanga to atcaya, in the jupiter cycle.

     [Skt. adha-ma-vimsati → த. அதமவிம்சதி.]

அதமாதமன்

 அதமாதமன் adamādamaṉ, பெ. (n.)

   மிகக் கீழானவன்; vilest of the vile, most worthless fellow.

     [Skt. adhama + adhama → த. அதமாதமன்.]

அதம்

 அதம் adam, பெ. (n.)

   அத்தி (சூடா.); ; country fig, Ficus glomerata.

     [அத → அதம்.]

அதம்பம்

 அதம்பம் adambam, பெ. (n.)

   ஒரு கணிய நஞ்சு (கற்பரி பாடாணம்); (மு.அ.);; a mineral poison.

அதம்பழம்

அதம்பழம் adambaḻm, பெ. (n.)

   அளித்த பழம் (அருங்கலச் 123); ; over-ripe fruit.

அதம்பு

அதம்பு adambu,    5 செ.குன்றாவி. (v.t.)

   கண்டித்தல் (வின்.);; to rebuke,

தெ. அதல்பு.

     [ஒருகா. அரம்பு → அதம்பு.]

அதம்பு-தல்

அதம்பு-தல் adambudal,    5 செ.கு.வி. (v.i.)

   அடங்காது பேசுதல் (இ.வ.); ; to speak intemperately (Loc.);.

க. அதப்பு.

அதரகுட்டம்

 அதரகுட்டம் adaraguṭṭam, பெ. (n.)

   இதழில் தோன்றும் புற்றுநோய்; cancer of the lip (சா.அக.);.

த.வ. இதழ்புற்று.

     [அதர + குட்டம்.]

     [Skt. adhara → த. அதர(ம்);.]

அதரஞ்செய்-தல்

அதரஞ்செய்-தல் adarañjeydal,    1 செ.குன்றாவி. (v.t.)

   தடைசெய்தல்; to obstruct.

     “புரை யிடத்திற் சென்று அதரஞ் செய்யு மவர்களும்” (T.A.S. iii, 194);.

அதரணவித்தை

 அதரணவித்தை adaraṇaviddai, பெ. (n.)

   செய்வினை; black magic (சா.அக.);.

அதரபானம்

அதரபானம் adarapāṉam, பெ. (n.)

   மகளி ரிதழூறும் நீர் (சீவக. 190, உரை.);; drinking the lips, kissing the lower lip.

     [Skt. adhara → pana → த. அதரபானம்.]

அதரமதம்

 அதரமதம் adaramadam, பெ. (n.)

   புலனுகர் ஈடுபாட்டி லிதழூறும் நீர்; a secretion from the lower lip of woman through lust (சா.அக.);.

த.வ. மகளிர் இதழூறும் நீர்.

     [Skt. adhara + amrta → த. அதரமதம்.]

அதரம்

அதரம் adaram, பெ. (n.)

மஞ்சள் (பரி.அக.);:

 turmeric.

 அதரம்1 adaram, பெ. (n.)

   கீழ் (நாநார்த்த.);; place or space below,

     [Skt. adhara → த. அதரம்.]

 அதரம்2 adaram, பெ. (n.)

   அல்குல் (நிதம்பம்);; the external part of the organs of generation of the female, vulva (சா.அக.);.

த.வ. குய்யம். கருவாய்.

     [Skt. adhara → த. அதரம்.]

 அதரம்3 adaram, பெ. (n.)

   1. கீழுதடு(பிங்);; lower lip.

   2. இதழ் (உதடு); (சூடா);; lip.

     [Skt. adhara → த. அதரம்.]

அதரவன்

 அதரவன் adaravaṉ, பெ. (n.)

   வெண்டோன்றி (வை.மூ.);; Malabar glory-lily.

அதரவாய்வு

 அதரவாய்வு adaravāyvu, பெ. (n.)

   வளித் தொல்லையால் வாய் மற்றும் இதழி (உதட்டி);ற் காணும் நோய்; a disease of the lip of the mouth or that of the genital of a female (சா.அக.);.

     [Skt. adhara + våyu → த. அதரவாய்வு.]

அதராமிர்தம்

 அதராமிர்தம் adarāmirdam, பெ. (n.)

அதரமதம் பார்க்க;see adara-madam (சா.அக.);.

     [அதர(ம்); + அமிர்தம்.]

     [Skt. adhara → த. அதர(ம்);.]

அமிழ்து → அமிர்து → Skt. amrta.

அதரிகொள்(ளு)-தல்

அதரிகொள்(ளு)-தல் adarigoḷḷudal,    10 செ.குன்றாவி. (v.t)

   களத்திற் கதிரைக் கடாவிட்டு உழக்குதல்; to thresh grain with cattle on the threshing floor.

     “அதரி கொள்பவர்” (மதுரைக். 94);.

   2. பகையழித்தல்; to tread upon enemies, as on a threshing floor.

     “கொண்டனை பெரும குடபுலத் ததரி” (புறநா. 373 ; 26);.

அதரிசனன்

அதரிசனன் adarisaṉaṉ, பெ. (n.)

   1. பார்க்க முடியாதவன்; one who is destitute of the sense of sight.

   2. கண் பார்வையற்றவன்; a blind man (சா.அக.);.

     [Skt. adharsana → த. அதரிசனன்.]

அதரிசி

 அதரிசி adarisi, பெ. (n.)

அதரிசனன் பார்க்க;see adarisanan (சா.அக.);.

     [Skt. adharsana → த. அதரிசி.]

அதரிடைச்செலவு

அதரிடைச்செலவு adariḍaiccelavu, பெ. (n.)

   மறவர் நிரைமீட்சிக்குப் புறப்படும் புறத்துறை (பு.வெ. 2;3);; theme of an episode in which warriors set forth to recover cattle seized by enemies.

     [அதர் + இடை + செலவு.]

அதரிதிரி-த்தல்

அதரிதிரி-த்தல் adaridiriddal,    4 செ.குன்றாவி. (v.t.)

   கதிரைக் கடா விட்டு உழக்குதல்; to thresh grain with cattle.

     “அதரி திரித்த வாளுகு கடாவின்” (புறநா. 371 ;17);.

     [அதரி + திரி.]

அதருண்டாதல்

அதருண்டாதல் ataruṇṭātal, பெ. (n.)

   1 கழிவு உண்டாகை; formation of a deposit or sediment.

   2. கிட்டம் ஏற்படுகை; formation of dross on iron or steel. (சா.அக.);

     [அதர்+உண்டாதல்.]

அதருமம்

 அதருமம் adarumam, பெ. (n.)

   அறமல்லாதது; that which is unrighteous.

த.வ. அறக்கேடு.

     [Skt. a-dharma → த. அதருமம்.]

அதர்

அதர்1 adar, பெ. (n.)

   1. வழி; way, path, public road.

     “ஆக்க மதர்வினாய்ச் செல்லும்” (குறள், 594);.

     “ஆனினங் கலித்த வதர் பல கடந்து” (புறநா. 138 ; 1);.

க., தெ. தாரி.

   2. முறைமை; order.

     “அதர்படத் துதித்து” (திருவாலவா. 25 ; 26);.

 அதர்2 adar, பெ. (n.)

   1. சிறுகல் (பொதி.நி); ; gravel.

   2. நுண்மணல் (பிங்.); ; fine sand.

க. அதுரு.

   3. புழுதி (சூடா);; dust

   4. மருந்துக் கசடு (சித்.அக.); ; sediment in medicine.

 அதர்3 adar, பெ. (n.)

தலைப்பொடுகு,

 dandruf.

     “குழலான மாலைப் பார்த்தா லதர்மிடைந்து ளூறிடும்” (நூற்றெட்டுத் திருப்பு. 56);.

ஒ.நோ ; அசறு

 அதர்4 adar, பெ. (n.)

   ஊமணி, ஆட்டின் கழுத்தில் தொங்கும் தசைக்காம்பு (சூடா);; a kind of wattle or excrescence under the neck of goats and sheep.

     “ஆட்டின் கழுத்தில் அதர்கறந்த வாறே” (திருமந். 2937);.

     [ஒருகா. அதள் → அதல் → அதர். அதள் = தோல்.]

 அதர்5 adar, பெ. (n.)

   நீளக்கிடங்கு (யாழ்ப்.);; a long excavation for a foundation or long pit, ditch or trench.

அதர்கோள்

 அதர்கோள் adarāḷ, பெ. (n.)

   வழிப்பறி (திவா.);; highway robbery.

அதர்பறி-த்தல்

அதர்பறி-த்தல் adarpaṟiddal,    4 செ.கு.வி. (v.i.)

   நீளக்கிடங்கு வெட்டுதல்; to dig a long pit for a foundation, ditch or trench.

     [அதர் + பறி. அதர் = நீளக்கிடங்கு.

அதர்ப்படு-தல்

அதர்ப்படு-தல் adarppaḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   நெறிப்படுதல்; to conform to rules.

     “அதர்ப் பட யாத்தலோ டனைமர பினவே” (தொல், பொருள். மர. 99);.

     [அதர் + படு. அதர் = வழி.]

அதர்மம்

 அதர்மம் adarmam, பெ. (n.)

அதருமம் பார்க்க;see adarumam.

த.வ. அறங்கடை, அல்லறம், அறக்கேடு.

     [Skt. a-dharma → த. அதர்மம்.]

அதர்மாத்திகாயம்

 அதர்மாத்திகாயம் adarmāddikāyam, பெ. (n.)

   ஐந்து அருக (சமன); மத உட்பொருள்களு ளொன்று;     [Skt. adharma + asti-kåya → த. அதர்மாத்தி காயம்.]

அதர்வசிகை

 அதர்வசிகை adarvasigai, பெ. (n.)

   நூற்றெட்டுபநிடதங்களுளொன்று; name of an upanisad.

     [Skt. atharvasikha → த. அதர்வசிகை.]

அதர்வசிரசு

அதர்வசிரசு adarvasirasu, பெ. (n.)

   நூற்றெட்டுபநிடதங்களுளொன்று (சி.சி. 8, 11, மறைஞா.);; name of an upanisad.

     [Skt. atharvaširas → த. அதிர்வசிரசு.]

அதர்வணம்

அதர்வணம் adarvaṇam, பெ. (n.)

   நான்காம் மறை (திருவானைக். கோச்செங். 127.);; name of the fourth veda.

த.வ. தீமறை.

     [Skt. atharva → த. அதர்வணம்.]

அதர்வம்

அதர்வம் adarvam, பெ. (n.)

அதர்வணம் (காஞ்சிப்பு. வயிரவீ, 12.); பார்க்க;see adarvanam.

     [Skt. atharvan → த. அதர்வம்.]

அதர்வை

அதர்வை adarvai, பெ. (n.)

   1. வழி; way, path.

     “அம்புதல் அதர்வை’ (பெருங். உஞ்சைக். 53 ;145);, தெ. தோவ.

   2. ஒருவகைக் கொடி; a climber.

     “அதர்வைக் கொடிபுரை கயிற் றொடு கொளுத்தினர்” (பெருங். உஞ்சைக். 55;53-54);.

அதறஞ்சி

 அதறஞ்சி adaṟañji, பெ. (n.)

   காட்டுமுருங்கை; wild drum-stick tree, Moringa conconensis alias Ormocarpum sennoides (சா.அக.);.

அதறு-தல்

அதறு-தல் adaṟudal,    5 செ.கு.வி. (v.i.)

   பதறுதல் (திசைச்.);; to be shaken by fear (Prov.); (சங்.அக.);.

அதற்றி

 அதற்றி adaṟṟi, பெ. (n.)

   மாவிலங்கமரம்; lingam tree, Crataeva religiosa (Rox burghii); (சா.அக.);.

அதலகுதலம்

 அதலகுதலம் adalagudalam, பெ. (n.)

   பெருங்குழப்பம் (இ.வ.);; tumult, great confusion.

த.வ. கலவரம்.

     [Skt atala+ku=tala → த. அதலகுதலம்.]

அதலதலம்

அதலதலம் adaladalam, பெ. (n.)

   1. காரீயம்; black lead;plumbago.

   2. காரீய மணல்;

அதலபாதாளம்

 அதலபாதாளம் atalapātāḷam, பெ. (n.)

அளவிட முடியாத ஆழம் அல்லதுபள்ளம்,

 immeasurable depths, chasm.

மணல் முகட்டு மேலிருந்து அதலபாதாளத்தில் தள்ளிவிடுவது போன்ற காட்சி மெய்சிலிர்க்க வைத்தது. (வ.சொ.அக.);.

     [அவல்-அதல்-அதலம்+பாதாளம்]

 அதலபாதாளம் adalapādāḷam, பெ. (n.)

   அளவிட முடியாத ஆழம் அல்லது பள்ளம்; immeasurable depths, chasm.

     ‘மலை மேலிருந்து அதல பாதாளத்தில் விழுவது போன்று ஒரு கனவு’ (கிரியா.);.

த.வ. ஆழ்நிரயம்.

     [Skt. atala + patala → த. அதலபாதாளம்.]

அதலமூலி

 அதலமூலி adalamūli, பெ. (n.)

   ஆடுதின்னாப் பாலை; a plant, worm-killer, Aristolochia bracteata.

அதலம்

அதலம் adalam, பெ. (n.)

   கீழேழுலகத் தொன்று; name of a world under the earth, first of kilelulagam, q.v.

     “அதல விதலமுத லந்தத் தலங்களென” (திருப்பு. 138.);.

த.வ. கீழுலகு, நிரயம்.

     [Skt. atala → த. அதலம்.]

அதலாயிலோகம்

அதலாயிலோகம் adalāyilōkam, பெ. (n.)

   1. நிலவுலகின் கீழுண்டாகும் தாதுப் பொருள்; any ingredient or natural in organic substance in the earth’s crust obtained by mining-mineral.

   2. நிலத்திற்குள் விளையும் மாழை (உலோகம்);; any metal dug out from the earth (சா.அக.);.

     [Skt. atala + loha → த. அதலாயிலோகம்.]

அதலி

 அதலி adali, பெ, (n.)

அதிலி பார்க்க;see adili.

     [அதிலி → அதலி.]

அதளக்காய்

 அதளக்காய் adaḷakkāy, பெ. (n.)

அதளங்காய் பார்க்க;see adalangay (சா.அக.);.

அதளங்காய்

 அதளங்காய் adaḷaṅgāy, பெ. (n.)

   பீர்க்கங்காய்; acute-angled cucumber, Cucumis actutangalus (சா.அக.);.

அதளப்பிச்சி

 அதளப்பிச்சி adaḷappicci, பெ. (n.)

   செந்நிறமான சீமைப் பிச்சி, வாதுமையைப் போன்றது. பாரசீகத்திலிருந்து கொண்டுவரப்பட்டதால் பாரசீகப் பழம் எனப்படும்; a well-known fruit of a pale-red colour allied to the almond, supposed to have been brought originally from Persia, and hence the name Persian fruit (சா.அக.);.

அதளமேலிச்சாரணை

 அதளமேலிச்சாரணை adaḷamēliccāraṇai, பெ. (n.)

   சிவப்புச் சத்திச் சாரணை; a red variety of the plant, Boerhaavia procumbens alias B. repens (சா.அக.);.

 அதளமேலிச்சாரணை adaḷamēliccāraṇai, பெ. (n.)

   சிவப்புச் சத்திச்சாரணை; a red variety of a plant, Boerhaavia procumbens alias B. repens (சா.அக.);.

அதளி

 அதளி adaḷi, பெ. (n.)

   குழப்பம், ஆரவாரம் (வின்.);; noise, tumult.

ம. அதளி

ஒ.தோ ; ஆதாளி

அதளை

அதளை1 adaḷai, பெ. (n.)

   1. நீர்ப்பீர்க்கு; a bitter plant, Cucumis tuberosus.

   2. பாகல்; fig-gourd, Momordica charantia.

   3. நிலப்பீர்க்கு; gourd plant, Cucurbita acutangulus.

   4. புளியதளை; ones; a variety of sour gourd of the species of Cucurbita (சா.அக.); – (செ.அக.);

   1. நிலப்பீர்க்கு (மு.அ.);; species of bitter Iuffa.

   2. புளியுருண்டை (வின்.); ; ball made of the pulp of tamarind fruit.

 அதளை2 adaḷai, பெ. (n.)

   1. பெரும்பாண்டம்; large pot (W.);.

   2. காவற் குடிசை; hut for shelter of those who watch over the harvest (W.);.

 அதளை ataḷai, பெ. (n.)

   மதுரை வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Madurai Taluk.

     [அதளம்-அதளை(செடி);]

அதளைவயல்

 அதளைவயல் ataḷaivayal, பெ. (n.)

   திருப்பத்துர் வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Tiruppathur Taluk.

     [அதளை(செடி);+வயல்]

அதளைவற்றல்

 அதளைவற்றல் adaḷaivaṟṟal, பெ. (n.)

   நிலப் பீர்க்கு வற்றல்; the preserves of adalai fruit (சா.அக.);.

அதள்

அதள் adaḷ, பெ. (n.)

   1. தோல்; skin.

     “அதளோன் துஞ்சுங் காப்பின்” (பெரும் பாண். 151);.

   2. மரப்பட்டை; bark.

     “வேங்கை யதள்” (தைலவ.);.

   3. எருதின் அலைதாடி; bull’s dew-lap (சங்.அக.);.

     [அத்து → அது → அதள் = உடம்பின்மேல் ஒட்டியிருப்பது.]

அதள்புனையரணம்

அதள்புனையரணம் adaḷpuṉaiyaraṇam, பெ. (n.)

   தோற் கைத்தளம் என்னும் கையுறை; glove used in warfare.

     “அதள்புனை யரணமும்” (சிலப். 14;170);.

     [அதள் + புனை – அரணம்.]

அதழ்

அதழ் adaḻ, பெ. (n.)

   பூவிதழ்; petal.

     “ஞெகி ழதழ்க் கோடலும்” (கலித். 101; 4);.

     [உது → உதழ் → அதழ்.]

அதவம்

அதவம் adavam, பெ. (n.)

   1. அத்தி; country fig.

     “வெண்கோட் டதவத் தெழுகுளிறு மிதித்த வொருபழம்” (குறுந் 24);.

   2. நெய்த் துடுப்பு; ladle for ghee used in sacrifice.

     “அதவமாய் நறுநெ யுண்டு” (கம்பரா. ஆரணிய விராதன். 44);.

     [அத → அதவு → அதவம்.]

அதவல்குதவல்

அதவல்குதவல் adavalkudaval, பெ. (n.)

   தீனி செரியாது கழிந்த சாணி; loose dung of cattle.

     ”சாணி அதவல்குதவலாகப் போடும்” (பெரியமாட் 104);.

அதவா

அதவா adavā, இணைப். (Conj.) அல்லது or,

     “அதவா முரட்போர் தனக்கஞ்சுமோ” (பாரத. பதினேழா. 232.);.

     [Skt. athava → த. அதவா.]

அதவாய்வு

 அதவாய்வு adavāyvu, பெ. (n.)

   சவுட்டு மண்; fuller’s earth (சா.அக);.

அதவிடம்

அதவிடம்1 adaviḍam, பெ. (n.)

   அதிவிடை (வின்.);; atis.

     [Skt. ati-visa → த. அதவிடம்.]

 அதவிடம்2 adaviḍam, பெ. (n.)

   அதவிடயம்; Indian atees, Aconium heterophyllum (சா.அக.);.

அதவு

அதவு adavu, பெ. (n.)

   அத்தி; country fig.

     “அதவுதி ரரிசி யன்ன” (கல்லா. 99 ;18);.

     [அத → அதவு.]

அதவு-தல்

அதவு-தல் adavudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. எதிர்த்து நெருக்குதல்; to attack.

     “அதவிப் போர் யானை யொசித்து” (திவ். இயற். 2; 89);.

   2. கொல்லுதல்; to kill.

     “முதலை மடுவினி லதவிய புயலென” (திருப்பு. 282);.

அதவுநெய்

 அதவுநெய் adavuney, பெ. (n.)

   அத்திப் பிசின்; the gum of the fig tree (சா.அக..);.

அதவுபாசனம்

 அதவுபாசனம் adavupācaṉam, பெ. (n.)

   புணர்ச்சி; sexual intercourse (சா.அக.);.

அதவை

 அதவை adavai, பெ. (n.)

   கீழ்மகன் (இ.வ.);; vile person.

     [Skt. hata → த. அதவை.]

அதா

அதா1 atā, பெ. (n.)

   அத்தி (பரி.அக.);; country fig.

     [அத → அதா.]

 அதா2 atā, இடை (int.)

   இடத்தைச் சுட்டிக் காட்டும் சேய்மைச்சுட்டு; demons. int. meaning “behold there!’

அதா பார் மயில்!

ஒ.நோ ; அதோ, அந்தா.

தெ. அதிகோ, அதுகோ.

அதாகம்

 அதாகம் atākam, பெ. (n.)

   சிவப்புச் சிவதை; Indian red rhubarb orjalap, Ipomaca turpethum (சா.அக.);.

அதாங்கி

 அதாங்கி atāṅgi, பெ. (n.)

   ஒரு காட்டுமரம் (கா.வ..);; a kind of wild tree, Nagetta, l, tr. Gordonia obtusa, Kāņar usage (L.);.

அதாசலம்

 அதாசலம் atācalam, பெ. (n.)

   காட்டுமல்லிகை வகை (மலை.);; wild jasmine.

     [P]

அதாட்டியம்

 அதாட்டியம் atāṭṭiyam, பெ. (n.)

வல்லமை:

 strength. (வ.சொ.அக.);.

     [அத்து-அத்தட்டு-அதாட்டு+அம்]

அதாதிமந்தம்

 அதாதிமந்தம் atātimandam, பெ. (n.)

   ஆயுள் வேதப்படிக் கண்ணைப் பற்றிய ஐந்து வகை மாந்த நோய்களுள் ஒன்று; one of the five kinds of ophthalmia according to ayurveda.

அதாதிமாந்தரோகம்

 அதாதிமாந்தரோகம் atātimāndarōkam, பெ. (n.)

அதாதிமந்தம் பார்க்க;see adādimandam (சா.அக.);.

     [அதாதி + மாந்த(ம்); + ரோகம்.]

     [Skt. ati → த. அதாதி, Skt. roga → த. ரோகம்.]

அதாதிரு

அதாதிரு atātiru, பெ. (n.)

   இவறன் மாலையன் (சிந்தா. நி. 137.);; miser.

     [Skt. a-datr → த. அதாதிரு.]

அதாது

அதாது atātu, பெ. (n.)

   1. தாது வல்லாதது; that which is not a mineral.

   2. வித்தமிழ்தின்மை; absence of semen (சா.அக.);.

     [அ + தாது.]

     [Skt. a → த. அ.]

தாது → Skt. dhattu.

அதான்று

அதான்று atāṉṟu, இடை. (conj.)

   அதுவன்றி, அதுவல்லாமல்; besides, moreover.

அது + அன்று – அதுவன்று, அதன்று. இங்ஙனம் புணர்வதே இயற்கையான முறை. செய்யுளில் ஒரோவிடத்து ‘அதான்று’ என வருவதுபற்றி, “அன்றுவரு காலை யாவா குதலும்

செய்யுண் மருங்கி னுரித்தென மொழிப” (தொல். எழுத்து. உயிர். 56); என்று தொல்காப்பியர் நூற்பா யாத்தார்.

எதுகை நோக்கியோ இசை நிறைப்புப் பற்றியோ, செய்யுளில் எழுத்துகள், நீள்வதும் அளபெடுப்பதும் இயல்பு. அதனால், ‘அதன்று’ என்பது ‘அதான்று’ என நீட்டல் திரிபு பெற்றும், ‘அதாஅன்று’ என அளபெடுத்தும் வரும். ‘அதான்று’ என்பதே ஒரு செய்யுள் நீட்டம். ‘அதாஅன்று’ என்பதோ, அதன்மேலும் ஓர் அளபெடை நீட்டம். உரையாசிரியன்மார் இதை நோக்காது, மேற் கூறிய நூற்பாவிற்கு, அதாஅன்றம்ம, இதாஅன்றம்ம, உதாஅன்றம்ம, ‘அதாஅன்றென்ப வெண்பா யாப்பே’ என அளபெடுத்த தொடர்களையே எடுத்துக் காட்டியுள்ளனர்.

     ‘அதான்று என்னும் புணர்ச்சொல்லின் ஆகாரத்தை, தொல்காப்பியர் ‘அது’ என்னும் நிலைச்சொல்லீற்றுத் திரிபாகக் கொண்டார். அங்ஙனமே உரையாசிரியன்மாரும் கொண்டனர்.

ஆயின், நன்னூலாரோ, அவ்வாகாரத்தை வருஞ்சொன் முதலெழுத்துத் திரிபாகக் கொண்டு, “அதுமுன் வருமன் றான்றாந் தூக்கின்” (நன். 180); என நூற்பாவியற்றினார். ஆயினும், சொற்புணர்ச்சியளவில் இருவரிடையும் ஒரு வேறுபாடுமில்லை.

அதுவன்று, அதன்று என்னும் புணர்ச்சியே உலகவழக்கிற்கும் உரைநடைக்கும் ஒத்ததென்பதும், அதான்று, அதாஅன்று என்பன செய்யுட்கே யுரியன வென்பதும், ‘மொழிந்த பொருளோ டொன்ற வவ்வயின் மொழியா ததனை முட்டின்றி முடித்த லென்பதனால், அதன்று இதன்று உதன்று என உகரங் கெட்டுத் தகரவொற்று நிற்றல் கொள்க’ என்று நச்சினார்க்கினியரும், ‘ஆன்றேயாம் என இயல்பை விலக்காமையின், அதுவன்று அதன்று என வருவனவுங் கொள்க’ என்று நன்னூல் விரிவுரைஞர் சங்கரநமச்சிவாயப் புலவரும், ‘ஆன்றேயாமெனத் தேற்றேகாரங் கொடாமையால், அதுவன்று, அதன்று என வருவனவுங் கொள்க’ என்று நன்னூல் விரிவுரைஞர் இராமானுசக்கவிராயரும், ‘ஆன்றேயா மென்னாமையால், அதன்று, அதுவன்று என நீளாமலும் வரும்’ என்று நன்னூற் காண்டிகையுரைஞர் சடகோப ராமானுசாசாரியாரும் உரைத்ததினின்று தெளியப்படும். “உயிர்வரின் உக்குறள் மெய்விட் டோடும்

யவ்வரினிய்யாம்முற்றுமற்றொரோவழி” என்னும் நன்னூல் 164ஆம் நூற்பா இங்குக் கவனிக்கத் தக்கது.

அதாரன்

அதாரன் atāraṉ, பெ. (n.)

   1. மணமாகதவன், மாணி; one who is unmarried, an un married man, Bachelor.

   2. மனைவி யிழந்தவன்; one who has lost his wife, a widower (சா.அக.);.

த.வ. மாணி.

     [Skt. a-dara → த. அதாரன்.]

அதாலத்து

 அதாலத்து atālattu, பெ. (n.)

   முறைமன்றம்; court of justice.

     [U. adalat → த. அதாலத்து.]

அதாவது

 அதாவது adāvadu, கு.வி.எ.தொ. (adv. phr.)

   அஃது என்னவென்றால்; that is to say, namely.

இடைக்கால மலையாள நாட்டிற் பெரு வழக்காயிருந்தது மருமக்கட்டாயம்; அதாவது, ஒருவனது சொத்தை அவனுக்குப் பின் அவனுடைய உடன்பிறந்தாளின் புதல்வர் அடையும் உரிமைமுறை.

ம. அதாயது

     [அது + ஆவது – அதாவது.]

அதாவரிசி

 அதாவரிசி atāvarisi, பெ. (n.)

   வெட்பாலை யரிசி; dysentery rosebay bitter oleander, Nerium antidysentericum alias Hollarhena antidysentericum (சா.அக.);.

அதாவெட்டில்

 அதாவெட்டில் atāveṭṭil, கு.வி.எ. (adv.)

   தற்செயலாய் (இ.வ.);; unexpectedly, by chance.

அதாவெட்டுக்காரன்

 அதாவெட்டுக்காரன் atāveṭṭukkāraṉ, பெ. (n.)

   போலியாக நடிப்போன்; bogus personage, bogus tax-gatherer.

     “ஆயக்காரன் ஐந்து பணங்கேட்பான் அதாவெட்டுக்காரன் ஐம்பது பணங்கேட்பான்”.

     [அதாவெட்டு + காரன்.]

     [U adawat → த. அதாவெட்டு.]

அதி

அதி1 adiddal,    4 செ.கு.வி. (v.i.)

   1. மிகுதல்; to increase, to become abundant.

   2. மிகையாதல்; to exceed, to become excessive.

   3. சிறத்தல்; to excel, to become excellent.

     “அதிக்கின்ற ஐவருள் நாத மொடுங்க” (திருமந். 610);.

அதி → Skt. ati. Sinh. ati.

     [அதை → அதி. அதைத்தல் = வீங்குதல், பருத்தல், மிகுதல், செருக்குதல்.]

 அதி2 adi, இடை. (pref.)

   மிகுதிப்பொருள் தரும் முன்னொட்டு; pref implying intensity. excessiveness, rarely made use of in poetry or prose.

     “அதிநுட்பம் யாவுள” (குறள். 636);. செல்வம் மிகமிகச் செருக்கு அதிகரிக்கும் (உ.வ.);.

அதி → Skt. adhi.

 அதி3 adi, பெ. (n.)

   வலையர் குலம்; the Valaiya caste.

     “காதலியோடதியரையன் கனகமழை பொழிந்து” (திருவாலவா 22;18);.

அதிகசுரசாந்தினி

 அதிகசுரசாந்தினி adigasurasāndiṉi, பெ. (n.)

   வல்லாரை; a bitter plant, Hydrocotyle asiatica, so called from its soothing effect in cases of excessive fever (சா.அக.);.

     [Skt. atiga → த. அதிகம்.]

அதிகடப்பால்

அதிகடப்பால் adigaḍappāl, பெ. (n.)

   1. எருக்கம்பால்; milk of the spurge, Calotropis gigantea.

   2. யானைப்பால்; elephant’s milk (சா.அக.);.

     [அதி + க்டம் + பால். அதி = மிகுந்த, கடுமையான. கடம் = 1. காடு. 2. மதம்.]

அதிகடம்

 அதிகடம் adigaḍam, பெ. (n.)

   யானை; elephant (சங்.அக.);.

     [அதி = மிகுந்த. கடம் = மதம். அதிகடம் = மதமிக்க யானை, யானை.]

அதிகண்டகம்

 அதிகண்டகம் adigaṇṭagam, பெ. (n.)

   பெருங்காஞ்சொறி; nettle plant of the big species, Tragia involucrata (சா.அக..);.

     [அதி + கண்டகம். அதி = மிகுந்த. கள் → கண்டு → கண்டம் → கண்டகம் = முள்.]

அதிகண்டம்

அதிகண்டம்1 adigaṇṭam, பெ. (n.)

   ஒகம் இருபத்தேழி லொன்று (விதான. பஞ்சாங்க. 25);;     [Skt. atiganda → த. அதிகண்டம்.]

 அதிகண்டம்2 adigaṇṭam, பெ. (n.)

   1 இறக்கும் நேரத்தில் ஏற்படும் துன்பம்; pangs or agony of death.

   2. பெரிய துண்டம்; a big piece.

   3. பெரிய கழுத்து; a swollen neck-colloid goitre.

   4. உயிருக்கு இடர் விளைவிக்கக் கூடிய எதிர்பாராத நிகழ்வு; an accident or other crisis endangering human life (சா.அக.);.

அதிகண்ணி

அதிகண்ணி adigaṇṇi, பெ. (n.)

   1. முன்துடரி; a species of tugari plant, Rhamnus circumcissus.

   2. பெருங்கண்ணையுடையவள்; a woman with big eyes (சா.அக..);.

அதிகதம்

அதிகதம் adigadam, பெ. (n.)

   1. வளி (வாயு);; air.

   2. எட்டாதது; that which is beyond reach (சா.அக.);.

     [Skt. ati-gata → த. அதிகதம்.]

அதிகதை

 அதிகதை adigadai, பெ. (n.)

   வெற்றுரை (வின்.);; meaningless talk, senseless expression.

     [அதி = மிகுந்த கத்துதல் = உரக்கக் கூவுதல், உரக்கச் சொல்லுதல். கத்து → கதை. ஒ.நோ ; நச்சு → நசை, கதை = பலருக்கு உரக்கச் சொல்லும் பழைய வரலாறு, வரலாற்றுக் கதை, கட்டுக்கதை.]

இதன் விளக்கத்தைக் கதை என்னும் உருப்படியில் காண்க.

அதிகதை → Skt. ati-katha.

அதிகத்தி

 அதிகத்தி adigaddi, பெ. (n.)

   குருக்கத்தி; a species of fig tree.

அதிகநங்கை

 அதிகநங்கை adiganaṅgai, பெ. (n.)

   சிறியாணங்கை; snake-root, Polygala glabra (சா.அக.);.

அதிகநாரி

 அதிகநாரி adiganāri, பெ. (n.)

அதிகநாறி பார்க்க;see adiga-ndri.

அதிகநாறி

அதிகநாறி adiganāṟi, பெ. (n.)

 Ceylon leadwort – (சா.அக..);

   1. கொடிவேலி; Ceylon leadwort, Plumbago zeylanica.

   2. மிகுதியாக நாற்றமுடையது; that which is excessively fetid or that which has a strong smell.

   3. பெருங்காயம்;   4. பீநாறி; a fetid plant or tree, Sterculia foetida.

மறுவ. அதிகநாரி. அதிகநாலம். அதிகாரி. அதிபதுங்கி.

அதிகநாலம்

 அதிகநாலம் adiganālam, பெ. (n.)

   கொடிவேலி; Ceylon leadwort.

அதிகநாறி பார்க்க;see adiga-nari.

அதிகநாலினி

 அதிகநாலினி adiganāliṉi, பெ. (n.)

   சிவப்புத் தட்டைப் பயிறு; a red variety of gram (சா.அக.);.

அதிகநாவி

 அதிகநாவி adiganāvi, பெ. (n.)

   வெண்ணாவி; white aconite, a poisonous root.

அதிகந்தம்

அதிகந்தம் adigandam, பெ. (n.)

   1. நறுமணப் புல் வகை (மூ.அ.);; fragrant species of grass.

   2. மர வகை (மூ.அ.);; champak.

   3. கந்தகம் (மூ.அ.);; sulphur.

     [Skt. ati-gandha → த. அதிகந்தகம்.]

அதிகன்

அதிகன் adigaṉ, பெ. (n.)

   1. கடையெழு வள்ளல்களு ளொருவனான அதிகமான்; Adigaman, a liberal chieftain of the 2nd century A.D.

     “அரவக் கடற்றானை யதிகனும்” (சிறுபாண்.103);.

   2. மேம்பட்டவன்; superior person.

     “பகைஞர்க் கெல்லா மதிகனாய்” (பிரபோத. 26 ; 110);.

   3. பரம்பொருள்; Supreme Being.

     “அதிகன் வேணியி லார்தரு கங்கையை” (கந்தபு. உற்பத்தி. திருக்கயி. 20);.

 அதிகன் atikaṉ, பெ. (n.)

   1 அதியமான் குடி மரபினன்; chieftain of Chera dynasty.

   2. மேம்பட்டவன்; man of high position.

க.அத்திக (தலைவன்);.து.அதிக (சொத்தினை ஆளும் குடியுரிமை);. தெ.அதிக்கு (மேம்பட்டவன்);.

     [அதி-அதியன்-அதிகன்]

அதிகப் பாடி

 அதிகப் பாடி atikappāṭi, பெ. (n.)

சேலம் மாவட்டத்தில் உள்ள ஓர் ஊர்.

 Name of the village in salem.

     [அதிகன்+பாடி]

அதிகப்படி

 அதிகப்படி adigappaḍi, பெ. (n.)

   அளவிற்குமேலிருக்கை; being excessive, overmuch.

     [அதிகம் + படி (அளவு);.]

அதிகப்படு-தல்

அதிகப்படு-தல் adigappaḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   மிகுதியாதல்; to increase, become greater.

     [அதிகம் + படு. படுதல் = உண்டாதல்.]

அதிகப்பற்று

 அதிகப்பற்று adigappaṟṟu, பெ. (n.)

   அளவிற்கு அதிகமாகப் பற்றிக்கொண்ட பொருள்; debit in account, overdraft.

     [அதிகம் + பற்று.]

அதிகப்பிரசங்கம்

 அதிகப்பிரசங்கம் adigappirasaṅgam, பெ. (n.)

   அடங்காப் பேச்சு; impudent talk.

     [அதிகம் + Skt. prasanga → த. பிரசங்கம் = சொற்பொழிவு.]

அதிகப்பிரசங்கி

அதிகப்பிரசங்கி adigappirasaṅgi, பெ. (n.)

   1. வளவளத்த பேச்சாளி; garrulous person.

   2. அடங்காப் பேச்சாளி; impudent fellow.

     [அதிகம் + Skt. prasa figa → த. பிரசங்கம் → பிரசங்கி.]

அதிகப்பேச்சு

 அதிகப்பேச்சு adigappēccu, பெ. (n.)

   கோட்டி (பைத்தியம்);, இசிவு (சன்னி);, பக்கச்சூலை (அதிர்தாக்கம்);, பேய்கோள் முதலிய நோய்களினால் அறிவுகெட்டு, உடம்பிலுள்ள கூழ்ம் பாலும் (chyle); அரத்தமும் சுண்டுமாறு அளவிறந்து பேசுதல்; excessive indulgence in talking resulting in the loss of vital forces of the chyle and blood in the system, as in lunacy, delirium, apoplexy, devilry, etc. (சா.அக..);.

     [அதிகம் + பேச்சு. பேசு → பேச்சு.]

அதிகமரிச்சம்

அதிகமரிச்சம் adigamariccam, பெ. (n.)

வாலுளுவை யரிசி (சு.வை.ர. 558);;seeds of climbing-staff plant.

ஒ.நோ ; அதிபறிச்சம்

அதிகமாதம்

அதிகமாதம் adigamādam, பெ. (n.)

   மூவாண்டிற் கொருமுறை அதிகப்பட்டு வரும் மாதம் (விதான. குணா. 81. உரை);; intercalated month occurring once in three years.

     [அதிகம் + மாதம்.]

அதிகமானஞ்சி

 அதிகமானஞ்சி adigamāṉañji, பெ. (n.)

அதியமான் நெடுமானஞ்சி பார்க்க;see adiyaman neduman-nanji.

அதிகமான்

அதிகமான்1 adigamāṉ, பெ. (n.)

   கி.பி. 2ஆம் நூற்றாண்டில், இற்றைத் தருமபுரியான தகடூரைத் தலைநகராகக் கொண்டு, கொங்கு நாட்டின் ஒரு பகுதியையாண்ட சேரர்குடிச் சிற்றரசன், கடையெழு வள்ளல்களுள் ஒருவன்; a liberal chief of the Céra family, who reigned over a part of the Kohgu country in the 2nd century A.D. with Tagadir, modern Dharmapuri, as his capital.

     ‘அது சேரமான் செல்வுழித் தகடூரிடை அதிகமான் இருந்ததாம்’ (தொல், பொருள். புறத். 7, நச். உரை);.

     [அதிகம் → அதிகன் = மேம்பட்டவன். மகன் → மான், அதிகன் + மான் (ஆ. பா. ஈறு); – அதிகமான்.]

 அதிகமான்2 adigamāṉ, பெ. (n.)

   கள்ளர்குலப் பட்டப்பெயர்களுள் ஒன்று (கள்ளர் சரித். பக். 145);; a caste title of Kallars.

ஒருசார் கள்ளர், அதிகமான் வழிவந்த பிற்காலச் சிற்றரசருள் ஒருவனுடைய படை மறவராயிருந்திருக்கலாம்.

 அதிகமான் atikamāṉ, பெ. (n.)

தகடுர் நாடாண்ட சேரர் குடிச் சிற்றரசன்

 a king of Cera family who ruled Tagadur region.

     [அதியன்→அதிக + (மகன்); மான்→அதிகமான்.]

அதிகமான் நெடுமான் அஞ்சி

 அதிகமான் நெடுமான் அஞ்சி atikamāṉneṭumāṉañci, பெ. (n.)

அதிகமான் பார்க்க

 See adiga-mân

     [அதிகன்-அதிகமான்]

அதிகமாலி

 அதிகமாலி adigamāli, பெ. (n.)

   குருக்கத்தி; tripterocarp creeper, Hiptage madablota (சா.அக.);.

அதிகம்

அதிகம்1 adigam, பெ. (n.)

   1. மிகுதி (திவா.);; much abundance, excess, surplus.

     ‘அதிக ஆசை அதிக நட்டம்’, ‘அதிகக் கரிசனமானாலும் ஆமுடையானை அப்பா என்றழைக்கிறதா? (பழ.);.

   2. ஒன்றினொன்று மிகுதி; one being in excess of another.

     “போகந் துய்ப்ப ரொன்றற்கொன் றதிகமாக” (சூத. (முத்தி. 35. 2;26);.

   3. மேன்மை; excellence.

     “அதிகமாயின திருப்பணி” (பெரியபு. ஏயர்கோ. 7);.

   4. யாவற்றுள்ளும் உயர்வு; pre-eminence.

     “எவ்வகைய வுலகத்துந் தருமதலமதிகம்” (திருவிளை. தலவிசே. 3);.

   5. சேனை; army (சங்.அக.);.

   6. தாங்குவதினும் தாங்கப்படுவதைப் பெரிதாகக் காட்டும் ஓர் அணி; a figure of speech in which, that which is supported is shown to be larger than the support.

     “உலக முழுதடங்கு மாவிசும்பி லுன்றனலகில் குணமடங்கா வாம்” (விசாகப். அணியி. 41);.

   7. ஊதியம் (வின்.);; gain, profit.

   8. பொலிவு (திவா.);; brightness, blooming complexion.

   ம. அதிகம்; க., து., கொங். அதிக ; தெ. அதிகமு; Pali atiga.

     [அதி + இகம் (ஈறு); – அதிகம்.]

 அதிகம்2 adigam, பெ. (n.)

   குருக்கத்தி (மலை.);; common delight-of-the-woods (செ.அக.);.

அதிகரணத்தண்டம்

அதிகரணத்தண்டம் adigaraṇaddaṇṭam, பெ. (n.)

   பழைய வரிவகை (S.I.I.ii, 353.);; an ancient tax.

     [அதிகரணம் + தண்டம்.]

     [Skt. adhi-karana → த. அதிகரணம்.]

அதிகரணத்தைலம்

அதிகரணத்தைலம் adigaraṇaddailam, பெ. (n.)

   தலைமுழுக்கெண்ணெய் (தைலம்);; a medicated oil prepared as per process aid down in Agastyar vallathi 600 and used for oil bath in cases of obstinate fever.

அகத்திய வல்லாதி 600இல் சொல்லிய முறைப்படி, விடாத காய்ச்சலுக்காக வடித் தெடுத்த நெய்மமருந்து (சா.அக.);.

அதிகரணந்தண்டம்

அதிகரணந்தண்டம் atikaraṇantaṇṭam, பெ. (n.)

   மேல் நீதி மன்றத்தில் செலுத்தும் ஒறுப்புக் கட்டணம்; a fine paid in the high court.

     “கரணத் தண்டமும் அதிகரணத் தண்டமும்” (SIl.ii,73);.

     [அதிகரணம்+தண்டம்]

அதிகரணம்

அதிகரணம் adigaraṇam, பெ. (n.)

   1. அடிப்படை (சி.சி.1, 65, சிவஞா.);; substratum, support.

   2. ஏழாம் வேற்றுமைப் பொருள் (பி.வி.9.);; place, as the sense of the loc.

   3. ஒரு செய்தியைக் குறித்த பகுதி (சி.போ. சிற். 1, அவ.);; section of a work, treating of one subject.

     [Skt. adhi-karana → த. அதிகரணம்.]

அதிகரம்

 அதிகரம் adigaram, பெ. (n.)

   காட்டுமல்லிகை (வின்.);; wild jasmine, Jasminum angustifolium (சா.அக.);.

 அதிகரம் adigaram, பெ. (n.)

   காட்டு மல்லிகை; wild jasmine, Jasminum angustifolium (சா.அக.);.

அதிகராவிகம்

 அதிகராவிகம் adigarāvigam, பெ. (n.)

   செந்துளசி; a red variety of basil, Ocimum (genus); (சா.அக.);.

     [P]

அதிகரி-த்தல்

அதிகரி-த்தல் adigariddal,    4 செ.கு.வி. (v.i.)

   1. மிகுதல், அதிகப்படுதல்; to increase, enlarge.

     “அதிகரித்த குந்தனை” (தைலவ. தைல. 13);.

   2. வளர்ச்சியடைதல்; to grow, develop, make progress.

   3. வினையில் முனைதல்; to be diligently engaged in.

     ‘ஐவர்க்கும் பரதந்த்ரனாய்க் கொண்டு தூதக்ருத்யத்திலே அதிகரித்து’ (திவ். பெரியாழ். 1.8 ; 3, வியா.);.

   4. நூற் பெரும்பிரிவாதல்; to be the subject or topic forming the major section of a literary work.

எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என்றாற் போல்வன.

   5. அதிகாரத்தொடு பொருந்தவருதல்; to fit in with the theme of a chapter or major section of a literary work.

     ‘அதிகாரமாவது ; எடுத்துக் கொண்ட அதிகாரம் இதுவாதலின், இச்சூத்திரத்து அதிகரித்த பொருள் இதுவென அவ்வதிகாரத்தோடு பொருந்த உரைக்க வேண்டுழி உரைத்தல்’ (நன். 21, சங்கரநமச். உரை);.

   6. உரிமைபூண்டு கொண்டாடல்; to cherish, as a right.

     ‘மறைமொழிகளை யதிகரிக்கும் பிராமணர்’ (சிவதரு. பாயி. 9, உரை);.

   7. உரிமைபூண்டு கற்றல்; to learn a best-suited art or study an appropriate literary work.

     “அவைநீ அதிகரித்தற் குரியை” (அரிசமய. பராங்குச. 78);.

   8. அதிகாரஞ் செலுத்துதல்; to exercise authority.

அதிகாரம்-அதிகரித்தல். அஃது இருவகைப்படும். அவற்றுள் ஒன்று, வேந்தன் இருந்துழியிருந்து தன்நிலம் முழுவதும் தன்னாணையின் நடப்பச் செய்வது’…… (நன், எழுத்து. முன்னுரை, சிவஞான. விருத்.);.

   9. தலைமைப்பட்டு நிற்றல் ; to be supreme.

ம. அதிகரிக்குக ; க. அதிகரிசு.

     [கடுத்தல் = மிகுதல், கடுமையாதல், விரைதல், நோதல், உறைத்தல், சினத்தல், புளித்தல், உவர்த்தல் முதலியன. இப்பொருள்களுள் முதலதே ஏனையவற்றிற்கெல்லாம் அடிப்படை. உப்புக்கடுத்தல் என்பது உப்புச்சுவை மிகுதலே. இங்ஙனமே பிறவும்.

கடு → கடி → கரி.

கடி = மிகுதி, விரைவு, கரிப்பு (உறைப்பு);. கரித்தல் = மிகுதல், உறுத்துதல், உறைத்தல். உப்புக்கடுத்தல் = உப்புக்கரித்தல்.

கரி → காரம் = மிகுதி, கடுமை, உறைப்பு, சினம், வலிமை, பயன்படுத்துரிமை, ஆளுமதிகாரம். கரி – அதிகரி (மீமிசைச்சொல்);. அதிகரித்தல் = மிகப்பெருகுதல்.

காரம் → காரன் = உரியவன், உடையவன், ஆள்பவன். காரன் (ஆ.பா. ஈறு); – காரி (பெ.பா.ஈறு);. காரி = உரியவள், உடையவள்.]

ஆட்டுக்காரன், கடைக்காரன், சொந்தக்காரன், தோட்டக்காரன், நிலத்துக்காரன், பணக்காரன், மாட்டுக்காரன், வண்டிக்காரன், வீட்டுக்காரன், பிள்ளைக்காரி, பூக்காரி, தயிர்க்காரி முதலிய நூற்றுக்கணக்கான காரன் – காரி யீற்றுப் பெயர்கள் உரியவரை அல்லது உடையவரையே குறித்தல் காண்க.

கொள்ளைக்காரன், நாட்டாண்மைக்காரன், வேலைக்காரன் முதலிய பெயர்கட்கும், அவ்வத் தொழிலையுடையவர் என்பதே முதற்பொருள்; அவற்றைச் செய்பவர் என்பது பொருந்திவரும் வழிப்பொருளே.

குதிரைக்காரன், கோழிக்காரன், முட்டைக்காரன், பிள்ளைக்காரி முதலிய பெயர்கள், செய்பவர் என்னும் பொருட்கு இம்மியும் பொருந்தாமையுங் கண்டு உண்மை தெளிக.

ஆகவே காரன் என்னும் பெயருக்கு அல்லது ஈற்றிற்கு அதிகாரன், உரியவன், உடையவன் என்பனவே பொருளாம். ஆதலால், மிகுதலைக் குறிக்கும் ‘கரி’ என்னும் தென்சொல்லே அதன் முதனிலையாகும். செய்தலைக் குறிக்கும் ‘கரு’ என்னும் வழக்கிறந்த தென்சொல்லையோ, ‘க்ரு’ என்னும் அதன் திரிபான வடசொல்லையோ, முதனிலையாகக் கொள்வது பொருந்தாது. செய்தற் பொருளை அடிப்படையாகக் கொண்ட கருமம், கருவி, கரணம் முதலிய சொற்களும், மிகுதற் பொருளை அடிப்படையாகக் கொண்ட காரன், அதிகாரன் முதலிய சொற்களும் வெவ்வேறு மூலத்தின என்றறிதல் வேண்டும்.

அதிகர்

அதிகர் adigar, பெ. (n.)

   1. பெரியோர்; great men, wise men, saints.

     “அதிகருக் கமுதமேந்தல்” (சூடா. 12 ; 99);.

   2. அதிகமான் குடியினர்; name of the line of Adigamān, a branch of the Céras.

     [அதிகம் → அதிகன் → அதிகர் (ப.பா.);.]

அதிகர்ணம்

 அதிகர்ணம் adigarṇam, பெ. (n.)

   பொருள்; substance (சா.அக.);.

அதிகற்றாதி

 அதிகற்றாதி adigaṟṟādi, பெ. (n.)

   கொடுவேலி (மலை.);; Ceylon leadwort, Plumbago zeylanica.

அதிகல்

 அதிகல் adigal, பெ. (n.)

   காட்டுமல்லிகை (வின்.);; wild jasmine.

ஒ.நோ ; அதிரல்

அதிகழிச்சல்

அதிகழிச்சல் adigaḻiccal, பெ. (n.)

   1. மிகுதியாகக் கழிச்சலாதல்; excessive purgation, Hypercatharsis.

   2. அதிக அரத்தப்போக்கு; excessive bleeding.

   3. வயிற்றோட்டம்; diarrh(o);ea.

   4. வயிற்றளைச்சல் (சீதபேதி);; dysentery (சா.அக.);.

     [அதி + கழிச்சல்.]

அதிகவணி

அதிகவணி adigavaṇi, பெ. (n.)

அதிகம், 6 பார்க்க;see adigam, 6.

அதிகவாரம்

 அதிகவாரம் adigavāram, பெ. (n.)

   பிராமணர் முதலிய சிறப்புரிமையாளர்க்கு விளையுளில் (மாசூலில்); பிரித்துக் கொடுக்கும் அதிகப் பங்கு; an extra share assigned to Brähmins or other privileged persons in the distribution of the farm yield (W.G.);.

     [அதிகம் + வாரம்.]

அதிகவுச்சம்

அதிகவுச்சம் adigavuccam, பெ. (n.)

   கோள்களின் மிகுந்த வுச்சநிலை; highly elevated position of planets.

     “அதிகவுச்சந் தனையுரைக்கிற்

கதிரவ னுக்குத்தா

னானமே டந்தனிலே

பாகையொரு பத்தாம்

மதிதனக்கே ரிடபத்திற்

றான்.மூன்று பாகை

வருஞ்சேய்க்கு மகரத்தி

லிருபத்தெட் டாகுந்

துதிபுதற்குக் கன்னியினிற்

பதினைந்து பாகை

சொற்குருவுக் கேகடகந்

தனிலைந்து பாகை

புதியபுதற் கேமீனி

லிருபத்தேழ் பாகை

புகழ்ச்சனிக்குக் கோலிலிரு

பதுபாகை யென்பார்” (சாதக சிந், 129);.

     [அதிகம் + உச்சம்.]

அதிகாசம்

அதிகாசம் adikācam, பெ. (n.)

   பெருநகை (சிந்தா. நி. 120.);; loud laughter.

த.வ. வெடிச்சிரிப்பு.

     [Skt. ati-asya → த. அதிகாசம்.]

அதிகாந்தம்

அதிகாந்தம் adikāndam, பெ. (n.)

   1. ஒரு விலையுயர்ந்த ஒளிக்கல் (வின்.);; a precious stone

   2. செவ்வானம் (சிந்தா.நி. 137);; famered sky at sunset.

   3. பேரழகு; great beauty.

     [காந்துதல் = எரிதல், ஒளிர்தல். காந்து → காந்தம். அதிகாந்தம் = மிகுந்த வொளியுள்ளது.]

அதிகாந்தி

 அதிகாந்தி adikāndi, பெ. (n.)

   குருக்கத்தி; tripterocarp creeper, Hiptage madablota (சா.அக.);.

அதிகாயசித்தி

 அதிகாயசித்தி adikāyasiddi, பெ. (n.)

   கருமருது; a tree, black marudu Negroe’s olive, Terminalia tementosa alias T.alata (சா.அக,);.

அதிகாயன்

அதிகாயன் adikāyaṉ, பெ. (n.)

   1. பருத்த உடம்புடையோன்; one having a gross or flesh body, a stout man.

   2. உடம்பில் மிகுந்த காயமுடையோன்; one with serious injuries.

   3. உடம்பில் தழும்புடையோன்; one with numerous scars on the body (சா.அக.);.

அதிகார ஏவலர்

 அதிகார ஏவலர் adikāraēvalar, பெ.(n.)

   வெள்ளிவில்லை அணிந்த தொண்டர்;   தலைமை உதவியாளர் (தபேதார்);; head peon of a district or divisional office as wearing a silver badge.

     [அதிகார+ஏவலர்]

அதிகார நூற்பா (சூத்திரம்)

அதிகார நூற்பா (சூத்திரம்) adikāranūṟpācūddiram, பெ. (n.)

   தான் ஒன்றையும் சிறப்பாக நெறியிடாது (விதித்திடாது); ஒர் இலக்கணச் செய்தியைப் பொதுப்படக் குறித்துப் பல நூற்பாக்கட்குமுன் படிக்கப்பட்டு, அவற்றுக்குப் பொருள் கொள்ளும்போது, அவற்றுடன் சேர்ந்து பொருள் கொள்ளப்படும் நூற்பா; a mirpa (śīitra); defining the scope of the other niirpas in a section of a treatise.

எ-டு :

     “அவற்றுவழி மருங்கின் சாரியை வருமே” (தொல். எழுத்து. புண. 16);.

     “அவைதாம் இன்னே வற்றே அத்தே அம்மே

ஒன்னே ஆனே அக்கே இக்கே

அன்னென் கிளவி உளப்படப் பிறவும்

அன்ன என்ப சாரியை மொழியே” (தொல், எழுத்து. புண. 17);.

     “அவற்றுள்

இன்னின் இகர மாவின் இறுதி

முன்னர்க் கெடுதல் உரித்து மாகும்” (தொல், எழுத்து. புண. 18);.

     [அதிகாரம் + நூற்பா.]

அதிகாரக்கணக்கு

 அதிகாரக்கணக்கு adikārakkaṇakku, பெ. (n.)

   அரசியல் வருமானக் கணக்கு (யாழ்ப்.);; accounts relating to State revenue (J.);.

     [அதிகாரம் + கணக்கு.]

அதிகாரசிவன்

 அதிகாரசிவன் adikārasivaṉ, பெ. (n.)

 The Mahésvara aspect of Śiva in which the Energy of action predominates.

     [அதிகாரம் + சிவன்.]

அதிகாரச்சாலை

அதிகாரச்சாலை adikāraccālai, பெ. (n.)

   1. அலுவலகம்; office (R.);.

   2. வழக்குமன்றம்; court (R.);.

ம. அதிகார மண்டபம், தெ. அதிகரணமு.

     [அதிகாரம் + சாலை.]

அதிகாரச்சியார்

அதிகாரச்சியார் atikāracciyār, பெ. (n.)

   பெண்அதிகாரி; lady officer

     “அதிகாரிச்சியார் ஐயாரன் தேவியார் முன் செய்கின்ற நிபந்தத்திற்கு முதலாக” (SIl.vii,1017);.

     [அதிகாரம்+(அத்தி);அச்சி+ஆர்]

அதிகாரஞ்செலுத்து-தல்

அதிகாரஞ்செலுத்து-தல் adikārañjeluddudal,    5 செ.கு.வி. (v.i.)

   ஆட்சி நடாத்துதல், தன் கட்டளையை நிறைவேற்றுவித்தல்; to exercise authority.

     [அதிகாரம் + செலுத்து.]

அதிகாரடாகை

அதிகாரடாகை adikāraṭākai, பெ. (n.)

   அதிகாரத்தால் உண்டாகும் செறுக்கு; pride of power.

     “அதிகாராடாகையின்மே லார்த்து” (சரவண. பணவிடு. 109);.

     [Skt. adikara+U.tiga → த. அதிகாரடாகை.]

அதிகாரதத்துவம்

அதிகாரதத்துவம் adikāradadduvam, பெ. (n.)

   வினை மிகுந்து கல்வி குறைந்த சிவ மெய்ப்பொருள் (சி.சி.1, 65, ஞானப்.);;

அதிகாரநந்தி

 அதிகாரநந்தி adikāranandi, பெ. (n.)

   சிவன் கோயில் திருவிழாக்களில் பயன்படுத்தும் ஊர்தி வகை; vehicle of Sivan with the face of a bull and body of man, used generally on the morning of the third day of festival in some temples, as representing Nandikesvarar who is the commandant of the city of Sivan.

     “அதிகார நந்தி சேவை”.

அதிகாரன்

அதிகாரன் adikāraṉ, பெ. (n.)

   1. அதிகாரி; officer, superintending official, a person of authority.

     ‘வரிகளைச் சுமத்தி அநியாயஞ் செய்த பூர்விக அதிகாரர்கள் சதிகாரர்களே’ (பெண்மதிமாலை, பக். 136);.

   2. அதிகார சிவன் பார்க்க;see adigara-Śivan.

ம. அதிகாரர்

அதிகாரபத்திரம்

 அதிகாரபத்திரம் adikārabaddiram, பெ. (n.)

   கொடுப்பிசைவு ஆவணம் அதிகார ஆவணம்; letter of authority, power of attorney.

அதிகாரப் பொன்

அதிகாரப் பொன் adikārappoṉ, பெ. (n.)

   பொற்காசாக வாங்கப்பட்ட பழைய வரிவகை (S.I.I. iv, 195);; a kind of ancient tax, in gold.

     [அதிகாரம் + பொன்.]

அதிகாரப்புறனடை

அதிகாரப்புறனடை adikārappuṟaṉaḍai, பெ. (n.)

   ஒரு நூலின் அதிகார விறுதியில், முற்கூறாதவற்றையெல்லாம் கூறியவற்றைக் கொண்டு முடித்துக்கொள்ளுமாறு கூறும் பொது நூற்பா; general permissive rule at the end of a chapter, sanctioning grammatical forms, not specifically dealt with earlier.

     “பிண்டந் தொகைவகை குறியே செய்கை

கொண்டியல் புறனடைக் கூற்றன சூத்திரம்” (நன். 20);.

     (இ-ள்.); ‘பிண்டமெனவும் தொகையெனவும் வகையெனவும் குறியெனவும் செய்கையெனவும், இவற்றை அலைவறக்கொண்டு இவற்றின் புறத்து அடையாய் வரும் புறனடையெனவும் கூறுங் கூற்றினையுடையவாம், மேற்கூறிய சூத்திரங்கள் (நன். 20, சங்கர நமச். உரை);.

எ-டு :

தொல். எழுத்ததிகாரப் புறனடை நூற்பா

     “கிளந்த வல்ல செய்யுளுள் திரிநவும்

வழங்கியல் மருங்கின் மருவொடு திரிநவும்

விளம்பிய இயற்கையின் வேறுபடத் தோன்றின்

வழங்கியல் மருங்கின் உணர்ந்தன ரொழுக்கல்

நன்மதி நாட்டத் தென்மனார் புலவர்” (தொல், எழுத்து. குற்றிய. 77);.

     [அதிகார்ம் + புறன் + அ டை.]

அதிகாரப்பேறு

அதிகாரப்பேறு adikārappēṟu, பெ. (n.)

   பழைய வரிவகை (S.I.I. iv, 125);; an ancient tax.

     [அதிகாரம் + பேறு.]

அதிகாரமலம்

 அதிகாரமலம் adikāramalam, பெ. (n.)

     [அதிகாரம் + மலம்.]

அதிகாரமுறை

அதிகாரமுறை adikāramuṟai, பெ. (n.)

   நூற் பிரிவின் முறைவைப்பு; logical order of subjects in a book.

     ‘அதிகார முறைமை என்பது, முன்னின்ற சூத்திரப் பொருண்மை பின்வருஞ் சூத்திரத் திற்கும் பெறற்பாலன பெறவைத்தல்; அவை;

     “இயற்கைப் பொருளை யிற்றெனக் கிளத்தல்” (தொல். சொல். கிளவி, 19);

என்றவழி இற்றெனக் கிளத்த லுரிமை பூண்டதன்றே. அதனை,

     “செயற்கைப் பொருளை யாக்க மொடு கூறல்” (தொல், சொல். கிளவி, 20);

என்புழியுங் கொள்ள வைத்தலும் “குற்றிய லிகரம் நிற்றல் வேண்டும்” (தொல், எழுத்து. மொழி. 1);

என்பதனை “குற்றிய லுகரம் வல்லா றூர்ந்தே” (தொல். எழுத்து. மொழி. 3); நிற்றல் வேண்டும் என்று கொள்ளவைத்தலும் போல்வன.

இனி, வழக்கியலும் வழக்கியலாற் செய்யப்பட்ட செய்யுளியலும்பற்றி எழுந்த இலக்கணம் இயற்றமிழெனப்படும். அச் செய்யுளின்றி அமையாத இசையிலக்கணம் இசைத் தமிழெனப் பெயரெய்தி அவ்வியற்றமிழ்ப் பின்னர் வைக்கப்பட்டதெனப்படும்; இவ் விரண்டன்வழி நிகழ்த்துங் கூத்திலக்கணங் கூறிய நாடகத்தமிழ் அவற்றுப் பின்னர்த்தாமென முறைமை கூறுதலும்; இனி இயற்றமிழுள்ளும் எழுத்ததிகாரத்தோடு சொல்லதிகாரத்திற்கும், சொல்லதிகாரத்தோடு பொருளதிகாரத்திற்கும் இயைபு கூறுதலும்; அதிகாரத்துள் ஒத்துப் பலவாகலின் அவை ஒன்றன்பின் ஒன்று வைத்தற்கு இயைபு கூறுதலும்; அவ்வாறே சூத்திரத்திற்கு இயைபு கூறுதலுமெல்லாம் அதிகாரமுறைமைக்கு இன மென்று சேர்த்தியுணரப்படும்’ (தொல். பொருள். மர. 110, பேரா. உரை);.

     [அதிகாரம் + முறை.]

அதிகாரமேலெழுத்து

அதிகாரமேலெழுத்து adikāramēleḻuddu, பெ. (n.)

   கீழலுவலர் பிறப்பித்த கட்டளையை மாற்றியெழுதும் ஆணை; revisional order.

     ‘திருச்சிவிந்திரத்து மஹாஸ்பையோம் அதிகார மேலெழுத்து’ (T.A.S. iii, 71);.

     [அதிகாரம் + மேலெழுத்து.]

அதிகாரம்

அதிகாரம்1 adikāram, பெ. (n.)

   1. அதிகரித்தல்; the act of increasing, enlargement.

     ‘எழுத்ததிகார மென்பதற்கு எழுத்து அதிகரித்தல் எனப் பொருள் கூறுவாரும் உண்டு’ (நன். எழுத்து. முன்னுரை, இராமா. விருத்.);.

   2. உடைமை, உடையனாந் தன்மை; possession, ownership.

இவனே இந்த வீட்டின் அதிகாரமுடையவன் (உ.வ.);.

   3. உரிமை; right of possession or enjoyment.

     ‘அதிகார மென்ற பொருண்மை……… கிழமையெனவும் கொள்ளப்படும் (தொல். பொருள். மர. 110. பேரா. உரை);.

   4. ஆட்சி; rule, dominion, sovereignty.

     ‘அதிகாரத்தைத் தன்மாட்டு வைத்து மன்னவன் வறிதே யிருப்ப’ (சி.போ. பா. 6 ; 2, பக். 376);.

   5. பதவி வலிமை, அலுவலாற்றல்; public office, power, authority.

அவருக்குப் பணியாளரை அமர்த்தவுந் தள்ளவும் அதிகாரமுண்டு. அழுத பிள்ளையும் வாய் மூடும் அதிகாரம் (உ.வ.);. ‘அதிகாரம் இல்லாவிட்டால் பரியாரம் வேண்டும்’ (பழ.);.

   6. தலைமை; headship, leadership.

   7. நூற் பெரும்பிரிவு; main division of a treatise.

எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம். ‘எழுத்தை நுதலிவரும் பல ஒத்தினது தொகுதி எழுத்ததிகாரம் என்றாராயிற்று’ (நன். எழுத்து. முன்னுரை, சிவஞான. விருத்.);.

   8. நூல் (பிங்.); ; a scientific work, a grammatical treatise.

   9. முறைமை; order, regulation.

     ‘அதிகார மென்ற பொருண்மை யென்னை யெனின், முறைமையெனவும்……..கொள்ளப்படும்’ (தொல், பொருள். மர. 110, பேரா. உரை);.

   10. தகுதி; fitness, worthiness, eligibility.

     “அனையவ னதிகாரந் தெரிந்து” (வேதா. சூ. 19);.

   11. அமையம் (சந்தர்ப்பம்);; context.

     ‘பொருளென்பது அதிகாரத்தான் வருவித்து, அளவென்பது பின்னுங் கூட்டி யுரைக்கப்பட்டன’ (குறள், 478, பரிமே. உரை);.

   12. கூற்றம், நாட்டுப் பிரிவு (தாலுக்காவின் உட்பகுதி); (நாஞ்சி.); ; administrative sub-division of a taluk (Näfi.);.

   13. இடம்; place.

     ‘அதிகாரமென்ற பொருண்மை……… இடமெனவும்……… கொள்ளப்படும்’ (தொல், பொருள். மர.110, பேரா. உரை);.

   14. (சிவ.); மூன்றவத்தைகளுள் ஒன்றான செயல் மிக்குத் தோன்றுங் கடவுள் நிலை (சி. போ. பா, 2 ; 2, பக். 163);;ம. அதிகாரம் ; க., து., பட. அதிகார ; தெ. அதிகாரமு ; கொங். அதிகார்.

     [அதி = மிகுந்த, பெருத்த. கரித்தல் = மிகுதல். கரி → காரம் = மிகுதி, கடுமை, வலிமை. அதிகாரம் = மிகுதி, வலிமை, ஆட்சி.]

 அதிகாரம்2 adikāram, பெ. (n.)

   பணியாரவகை (நாஞ்..);; a kind of sweet cake (Náñ.);.

அதிகாரவர்த்தனை

அதிகாரவர்த்தனை adikāravarddaṉai, பெ. (n.)

   வரித்தொகுதி (M.E.R. 428 of 1913);; a collection of taxes.

அதிகாரவுரை

அதிகாரவுரை adikāravurai, பெ. (n.)

   ஒரு நூற்பாவிற்கு அதிகாரத்தோடு அல்லது நூற்பிரிவோடு பொருந்த ஓரிரு சொல்லை வருவித்துரைக்கும் உரை, நூலுரை பதினான்கனுள் ஒன்று; supplying of an ellipsis to complete the sense of a rule or passage according to the context, one of the 14 requisites of a commentary.

     ‘அதிகாரத்தால் வருவிக்கப்பட்டதென அதிகாரத்தொடு பொருந்தக் காட்டி யெழுது முரை அதிகாரவுரை’ (நன். 21. இராமா. விருத்.);.

     [அதிகாரம் + உரை.]

அதிகாரவோலை (பத்திரம்)

 அதிகாரவோலை (பத்திரம்) adikāravōlaibaddiram, பெ. (n.)

   ஒருவன் தனக்குத் தலைமாறாக (பதிலாக); வினையாற்றவோ வழக்காடவோ இன்னொருவனுக்கு எழுதிக்கொடுக்கும் ஓலை; letter of authority, power of attorney by which a person appoints another to act for him in business or legal matters.

     [அதிகாரம் + ஓலை.]

அதிகாரி

அதிகாரி1 adikāri, பெ. (n.)

   1. கேள்வித்தலைவர் (விசாரணைக் கர்த்தா); (வெட்.);; executive or superintending officer (Insc.);.

     “அதிகாரியுடனே எதிர்பண்ணலாமா?’,

     ‘அதிகாரியும் தலையாரியும் ஒன்றானால் விடியுமட்டும் திருடலாம்’,

     ‘அதிகாரி வீட்டில் திருடித் தலையாரி வீட்டில் வைத்ததுபோல’,

     ‘அதிகாரி வீட்டுக் கோழிமுட்டை குடியானவன் வீட்டு அம்மியையுடைத்ததாம் (பழ.);.

   2. அரசியல் அலுவலர்; government officer or official.

   3. மேலதிகாரி; superior, higher authority over one.

நீ எனக்கு அதிகாரியா?

   4. ஓர் அதிகாரத்தின் தலைமையலுவலன் (நாஞ்.);; officer in charge of a adigăram (Năfi.);.

   5. (சிவ.); பெருவுடையார் (மகேசுவரன்); (சி.சி. 5.1 ; 65, மறைஞா.);;   6. உரிமையுள்ளவன்; rightful claimant, proprietor, owner, master.

   7. ஒரு படிப்புத் துறையில் அல்லது ஒரு நூலறிவில் தேர்ச்சிபெற்றவன்; an authority on a subject or a branch of knowledge.

நூலகக் கல்விக்கு அரங்கநாதன் ஒர் அதிகாரி, குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்திற்குச் சந்திரசேகரன் ஒர் அதிகாரி, பெரியபுராணத்திற்குக் கோவைச் சுப்பிர மணிய முதலியார் ஒர் அதிகாரியாவர்.

   8. ஒரு நூலைக் கற்கத் தகுந்தவன்; one qualified to study a literary or scientific work.

     ‘அந்நூல்…………… கேட்டற்குரிய அதிகாரிகளாவார் இவரென்பது தூஉம்’ (நன். சிறப்புப். சிவஞான. விருத்.);.

ம. க., தெ., கொங். அதிகாரி ; து. அதிகாரத்தே.

     [அதிகாரி → Skt. adhikärin.]

 அதிகாரி adikāri, பெ. (n.)

   1. கொடிவேலி; Ceylon leadwort.

அதிகநாறி பார்க்க;see adiga-hari.

   2. (அதி + காரி); மிக்க கருமை; jet black.

   3. கொடிய நஞ்சு; a virulent poison.

   4. வெண்காரம்; borax (சா. அக.);.

கொடிவேலி என்பதன் மறுவடிவம் ‘கொடுவேலி’.

     [அதிகாரி = மிகக் கரியது என்பது மிகப் பொருத்தம்.]

அதிகாலங்காரம்

அதிகாலங்காரம் adikālaṅgāram, பெ. (n.)

   பெருமையணி (அணியி.41.);; figure of speech in which the contained is described as greater than the container, or the container than the contained.

     [Skt. adhika + alankara → j. mamy.]

அதிகாலம்

அதிகாலம் adikālam, பெ. (n.)

   1. விடியற் கருக்கல்; early dawn.

     “அதிகால விழிப்பின் குணத்தைக் காண்” (பதார்த்த 1309);.

   2. நெடுநேரம்; long time (சா.அக.);.

அதிகாலை

அதிகாலை adikālai, பெ. (n.)

அதிகாலம் 1. பார்க்க;see adi-kalam1.

     ‘அதிகாலை எழாதவன் வேலை அழுதாலும் தீராது’ (பழ.);.

அதிகிருச்சிரம்

அதிகிருச்சிரம் adigirucciram, பெ. (n.)

   12 நாள் கைக்கொள்ளும் ஒரு நோன்பு; an extraordinary fasting and penance lasting 12 days.

     [Skt. atikrcchra → த. அதிகிருச்சிரம்.]

அதிகுகம்

 அதிகுகம் adigugam, பெ. (n.)

   பேராமல்லி; single-flowered Arabian jasmine, Jasminum sambuc (சா.அக.);.

அதிகுணன்

அதிகுணன் adiguṇaṉ, பெ. (n.)

   1. மேலான குணமுள்ளவன்; one possessing extraordinary attributes.

     “களிறது பிளிறிட வுரிசெய்த அதிகுணன்” (தேவா. 1.22;5);.

   2. கடவுள்; God, as transcending all attributes.

   3. அருகன் (திவா.);; Arhat.

அதிகுணம்

 அதிகுணம் adiguṇam, பெ. (n.)

   மிகு நற்பண்பு, மேலான தன்மை; good quality, virtuous character, extraordinary greatness.

அதிகும்பை

 அதிகும்பை adigumbai, பெ. (n.)

   கரிசலாங்கண்ணி (மலை.); ; species of eclipta (செ.அக.); .

   பொற்றலைக் கையாந்தகரை; Marigold verbisena, Wedelia calundulacea (சா.அக.);.

அதிகேரம்

 அதிகேரம் adiāram, பெ. (n.)

   சீதா செங்கழுநீர்; a kind of water-lily, Grewia rotundifolia (சா.அக.);.

அதிகை

அதிகை adigai, பெ. (n.)

   1. அதிகமானது; that which is much or in excess.

     ‘பலாதிகயானால்’ (பெளட் மாயா 55, உரை); (சங்.அக.);.

   2. (நடுநாடென்னும்); தென்னார்க் காடு மாவட்டத்திலுள்ளதும், சிவபெருமான் முப்புரத்தை யெரித்ததாகச் சொல்லப்படுவதுமான ஒரு சிவநகர், எண் மறத்தாவுகளுள் ஒன்று;Śiva shrine in South Arcot district where Šiva is believed to have reduced to ashes the Tiripuram, one of Atta Virattam.

 அதிகை atikai, பெ. (n.)

   தென் ஆர்க்காடு மாவட்டத்தில் பண்ணுருட்டிக்கு அருகில் உள்ள ஓர் ஊர்; name of the village in south arcot near the Panrutti.

     [அதியன்→அதிகை.]

அதிகோரம்

அதிகோரம் adiāram, பெ. (n.)

   நெல்லி (T.C.M. ii, 2;429);; Emblic myrobalan.

அதிகோலம்

அதிகோலம் adiālam, பெ. (n.)

   1. மிக்கவழகு; excessive beauty (சா.அக.);.

   2. அழிஞ்சில் (மூ.அ.); ; sage-leaved alangium, Alangium lamarckii.

அதிகோவம்

 அதிகோவம் adiāvam, பெ. (n.)

அதிகோலம் பார்க்க;see adi-kölam.

அதிகோவிகம்

 அதிகோவிகம் adiāvigam, பெ. (n.)

   செந்தோட்டி; climbing nettle, Tragia involucrata (சா.அக.);.

அதிக்கண்டம்

அதிக்கண்டம் adikkaṇṭam, பெ. (n.)

     ‘அதிக் கண்ட மென்றும்………. சீரை………. பகர்வர்’ (யாப். வி. 22, மேற். பக். 97);.

அதிக்கம்

அதிக்கம் adikkam, பெ. (n.)

   மேன்மை; excellence.

     “அதிக்க மன்னவர் முகம்” (இரகு. கடிமண. 40);.

     [அதி → அதிக்கம்.]

அதிக்கிரமம்

அதிக்கிரமம்1 adikkiramam, பெ. (n.)

   1. மீறுகை; overstepping, going beyond, transgression.

   2. முறைகேடு; iniquity.

     “அன்ன தன்மைய னதிக்கிரமங்கள் கேட்டு” (உத்தரரா. வரையெடு. 2);.

     [Skt. ati-krama → த. அதிக்கிரமம்.]

 அதிக்கிரமம்2 adikkiramam, பெ. (n.)

   கற்பழித்தல்; committing excess of sin sexually (சா.அக.);.

     [Skt. ati-krama → த. அதிக்கிரமம்.]

அதிக்கிரமி-த்தல்

அதிக்கிரமி-த்தல் adikkiramiddal,    4 செ.குன்றாவி. (v.i.)

   1. மேற்படுதல்; to exceed, as proper bounds.

   2. மீறுதல்; to transgress.

     [Skt. ati-krama → த. அதிக்கிரமி.]

அதிக்கிராந்தம்

அதிக்கிராந்தம் adikkirāndam, பெ. (n.)

   கடந்தது (சி.சி. 7, ஞானப்.);; that which transcends.

த.வ. வரம்பிகவு.

     [Skt. ati-kranta → த. அதிக்கிராந்தம்.]

அதிக்கிராவி

அதிக்கிராவி atikkirāvi, பெ. (n.)

   நெல்வகையுள் ஒன்று; a kind of paddy,

     “மணவாரியும் சம்பாவும் அதிக் கிராவியும் விரைச்சு

புழுக்கோளாயிப் போக ” (TAS. v.P208.);.

     [அதி+கிராவி]

அதிக்குதி

 அதிக்குதி adikkudi, பெ. (n.)

   வெற்றியினால் அல்லது உயர்நிலையால் ஏற்படும் செருக்கு நடை (யாழ்ப்.); ; ostentatious conduct, because of success or superiority, as jumping up and down (J.);.

அதிங்கன்

 அதிங்கன் adiṅgaṉ, பெ. (n.)

அதிங்கம் பார்க்க;see adingam.

அதிங்கம்

அதிங்கம் adiṅgam, பெ. (n.)

   1. அதிமதுரம்; liquorice plant.

     “அதிங்கத்தின் கவளங் கொண்டால்” (சீவக. 750);.

   2. குன்றி (L.);; crab’s-eye.

     [அதிங்கு → அதிங்கம்.]

அதிங்கு பார்க்க;see adirigu.

அதிங்காலிகம்

 அதிங்காலிகம் adiṅgāligam, பெ. (n.)

   செம்புளியம் பிரண்டை; a red variety of புளிப் பிரண்டை, hairy wildyine, Vitis setosa alias cissus acida (சா.அக.);.

அதிங்கு

அதிங்கு adiṅgu, பெ. (n.)

   அதிமதுரம்; liquorice plant.

     “அரக்கு மதிங்கும்” (பெருங். இலா வாண. 18 ; 46);.

மறுவ. அதிங்கை, அதிங்கம், அதிங்கன்.

அதிங்கை

 அதிங்கை adiṅgai, பெ. (n.)

அதிங்கம் பார்க்க;see adirigam.

அதிசங்கலிதம்

 அதிசங்கலிதம் adisaṅgalidam, பெ. (n.)

   ஒன்றுமுதலிய எண்களை இரட்டித்துப் பெருக்க வருந் தொடரெண் (வின்.);; summation of a series in geometrical progression whose first term is one, and ratio two.

     [Skt. ati + san-kalita → த. அதிசங்கலிதம்.]

அதிசங்கை

அதிசங்கை adisaṅgai, பெ. (n.)

   வீண் ஐயம் (கோயிலோ.29);; needless suspicion.

     [Skt. ati + sanka → த. அதிசங்கை.]

அதிசத்திரகம்

 அதிசத்திரகம் adisaddiragam, பெ. (n.)

அதிசத்திரம் பார்க்க;see adi-sattiram (சா.அக.);.

     [Skt. atichatra → த. அதிசத்திரகம்.]

அதிசத்திரம்

அதிசத்திரம் adisaddiram, பெ. (n.)

   1. விண்மீன் சீரகம்; star anise, Illecium ani satum.

   2. காளான்; mushroom.

   3. மருதோன்றி; nail dye, Barleria longifolia (சா.அக.);.

அதிசந்தானம்

அதிசந்தானம் adisandāṉam, பெ. (n.)

   பொய் (சிந்தா. நி. 122.);; falsehood.

     [Skt. atisandhana → த. அதிசந்தானம்.]

அதிசனசி

அதிசனசி adisaṉasi, பெ. (n.)

   1. கொடிவேலி; ceylon leadwort, Plumbago Zeylanica.

   2. அதிக நாற்றமுடையது; that which is excessively fetid or that which has a strong smell.

   3. பெருங்காயம்; asafetida.

   4. பீநாறி; a fetid plant or tree, Stereulia foetida (சா.அக.);.

அதிசமாதியோகம்

 அதிசமாதியோகம் adisamādiyōkam, பெ. (n.)

   தன்னை மறந்து புரியும் மனவொடுக்கம் (யோகம்);; a profound meditation in yoga practice in which the yogee is not only insensible to the surroundings but also forgets his own body (சா.அக.);.

     [அதிசமாதி + ஓகம்.]

     [Skt. ati + samadhi → த. அதிசமாதி.]

ஒகம் → Skt. yoga.

அதிசயக்குளிகை

 அதிசயக்குளிகை adisayagguḷigai, பெ. (n.)

   ஐந்து முறை சாரணைத் தீர்ந்த ஒரு இதளியக் குளிகை; a mercurial pill animated five times.

     [அதிசயம் + குளிகை.]

     [Skt. atisaya → த. அதிசயம்.]

குள் → குளி → குளிகை.

அதிசயச்சொல்

 அதிசயச்சொல் adisayassol, பெ. (n.)

   வியப்புச் சொல்; expression of wonder.

     [அதிசயம் + சொல்.]

     [Skt. atisaya → த. அதிசயம்.]

அதிசயன்

 அதிசயன் adisayaṉ, பெ. (n.)

   அருகன் (திவா.);; Arhat, as superhuman.

     [Skt. atisaya → த. அதிசயன்.]

அதிசயபுட்பி

 அதிசயபுட்பி adisayabuṭbi, பெ. (n.)

   அத்தி; Indian fig-tree, ficus glomerata. It is so called from its flowers not visible to any.

இதன் பூ ஒருவர் கண்ணுக்கும் புலப்படாத கரணகத்தை முன்னிட்டு இப்பெயர் (சா.அக.);.

     [Skt. atisaya + pusp → த. அதிசயபுட்பி.]

அதிசயமாலை

 அதிசயமாலை adisayamālai, பெ. (n.)

   பண்டார நூல்களிலொன்று; name of a Sava Siddhanda treatise by Ambalavana-tesigar, one of pangdara-sattiram, q.v.

     [அதிசயம் + மாலை.]

     [Skt. atisaya → த. அதிசயம்.]

அதிசயமொழி

 அதிசயமொழி adisayamoḻi, பெ. (n.)

   வியப்புச் சொல் (பிங்.);; expression of wonder.

     [அதிசயம் + மொழி.]

     [Skt. atisaya → த. அதிசயம்.]

அதிசயம்

அதிசயம்1 adisayam, பெ. (n.)

   1. அருக(சைன); தலைமை இறைப்பண்புகள்;     “சகசாதிசயம், கர்ம க்ஷயாதிசயம், தெய்வீகாதிசயம்” (சீவக. 2813);.

   2. உயர்வு நவிற்சியணி (தண்டி 54.);; hyperbole.

   3. வியப்பு; astonishment, wonder.

     “அடிகளில் வழிபோந்த வதிசய மறியேனே” (தேவா. 938, 1);.

     [Skt. atisaya → த. அதிசயம்.]

 அதிசயம்2 adisayam, பெ. (n.)

   1. அதிநோய்; a severe type of disease.

   2. கொடிய என்புருக்கி (சய); நோய்; an acute form of consumption.

   3. மிகுநோய்; excessive secretion and discharge or urine, polyuria (சா.அக.);.

அதிசயவுவமை

அதிசயவுவமை adisayavuvamai, பெ. (n.)

   மிகையுவமை (வீரசோ. அலங். 14, உரை);;     (Rhet.); a smile which states that there is no difference between uvamanam and uvamayam except in their loci.

     [அதிசயம் + உவமை.]

     [Skt. atisaya → த. அதிசயம்.]

அதிசயி-த்தல்

அதிசயி-த்தல் adisayiddal,    4 செ.கு.வி. (v.i.)

   வியப்படைதல்; to wonder, to be surprised.

     “அலமந் தேங்கி யதிசயித்து” (கந்தபு. திருமண. 31);.

     [Skt. atisaya → த. அதிசயி.]

அதிசயோக்தி

அதிசயோக்தி adisayōkdi, பெ. (n.)

   உயர்வு நவிற்சியணி (அணியி. 13.);; hyperbole.

     [Skt. atisayokti → த. அதிசயோக்தி.]

அதிசரணம்

 அதிசரணம் adisaraṇam, பெ. (n.)

அதிசரண யோனி பார்க்க;see adi-sarana-yoni (சா.அக.);.

     [Skt. ati šarana → த. அதிசரணம்.]

அதிசரணயோனி

 அதிசரணயோனி adisaraṇayōṉi, பெ. (n.)

   மிகுதியாகக் கலவியில் ஈடுபடுவதால் பிறப்புறுப்பில் ஏற்படும் நோய்; a disease of the vagina.

     [Skt. ati-sarana+yoni → த. அதிசரணயோனி.]

அதிசரம்

 அதிசரம் adisaram, பெ. (n.)

   நெட்டுயிர்ப்பு (வின்.);; sigh.

     [Skt. ati-cara → த. அதிசரம்.]

அதிசரி-த்தல்

அதிசரி-த்தல் adisariddal,    4. செ.கு.வி. (v.i.)

   கடந்து போதல்; to pass by, as a planet.

     “கிரகங்க ளதிசரித்து வக்கிரிக்கிறது” (வின்.);.

     [Skt. ati-car → த. அதிசரி.]

அதிசருமகூச்சம்

 அதிசருமகூச்சம் adisarumaāssam, பெ. (n.)

அதீதகூச்சம் பார்க்க;see adida-kūccam (சா.அக.);.

     [அதிசருமம் + கூச்சம்.]

     [Skt. ati-carman → த. அதிசருமம்.]

அதிசாகரம்

 அதிசாகரம் adicākaram, பெ. (n.)

   ஒரு தமிழ்க் கணித நூல் (கணக்கதி. பாயி.);; name of a Tamil mathematical work.

அதிசாதிகம்

 அதிசாதிகம் adicādigam, பெ. (n.)

அதிகராவிகம் பார்க்க;see adigaravigam (சா.அக.);.

அதிசாமியை

 அதிசாமியை adicāmiyai, பெ. (n.)

   வெண் குன்றிச் செடி; white country liquorice, Abrus precatorius (alba-); (சா.அக.);.

அதிசாரக்கடுப்பு

 அதிசாரக்கடுப்பு adicārakkaḍuppu, பெ. (n.)

   செரியாமற் கழிதலால் ஏற்படும் வயிற்று வலி; colic arising from diarrhoea due to indigestion, Sabbural colic (சா.அக.);.

     [அதிசாரம் + கடுப்பு.]

     [Skt. atisara → த. அதிசாரம்.]

கடு → கடுப்பு.

அதிசாரக்கழிச்சல்

அதிசாரக்கழிச்சல் adicārakkaḻiccal, பெ. (n.)

   1. இயல்பாய் ஏற்படும் கழிச்சல்; ordinary or simple diarrhoea.

   2. செரியாமையினால் சோம்பல் உண்டாகி வாயாலெடுப்பு, கழிச்சல், வலுவின்மை, களைப்பு முதலிய குணங்களையுண்டாக்கும் ஒரு வகைக் கழிச்சல்; an acute diarrhoea marked by serious stools as in cholera and vomiting attended with fatigue, Weakness and sometimes collapse, Choleraic diarrhoea.

   3. வயிற்றளைச்சல்; diarrhoea with mucous and bloody stool, Dysenteric diarrhoea (சா.அக.);.

     [அதிசாரம் + கழிச்சல்.]

     [Skt. ati-sara → த. அதிசாரம்.]

கழி → கழிச்சல்.

அதிசாரக்காய்ச்சல்

 அதிசாரக்காய்ச்சல் adicārakkāyccal, பெ. (n.)

   செரியாமையினால் ஏற்படும் ஒரு காய்ச்சல்; fever caused by diarrhoea, Febrilis diarrhoea (சா.அக.);.

     [அதிசாரம் + காய்ச்சல்.]

     [Skt. ati-sara → த. அதிசாரம்.]

அதிசாரக்கினி

 அதிசாரக்கினி adicārakkiṉi, பெ. (n.)

   அதிவிடயமெனும் ஒரு மருந்துச் சரக்கு; Indian atees, Aconitum hoterophylum (சா.அக.);.

அதிசாரங்கட்டி

அதிசாரங்கட்டி adicāraṅgaṭṭi, பெ. (n.)

   1. செரியாமையினால் ஏற்படும் கழிச்சலைக் குணப்படுத்தும் சரக்கு; any drug capable of stopping or arresting diarrhoea from indigestion.

   2. கற்கடக சிங்கி; galls of pistacia, Rhus succedanea (சா.அக.);.

     [அதிசாரம் + கட்டி.]

     [Skt. ati-sara → த. அதிசாரம்.]

அதிசாரசன்னி

 அதிசாரசன்னி adisārasaṉṉi, பெ. (n.)

   நச்சுக் காய்ச்சல் வகை (இங். வை.);; typhoid fever.

     [Skt. atisara + sanni → த. அதிசாரசன்னி.]

அதிசாரசன்னிபாதசுரம்

 அதிசாரசன்னிபாதசுரம் adisārasaṉṉipādasuram, பெ. (n.)

   வயிற்றோட்டக் கழிச்சலுடன் கூடிய காய்ச்சல்; typhoid fever accompanied by diarrhoea (சா.அக.);.

     [அதிசாரசன்னிபாதம் + சுரம்.]

     [Skt. atisara + san – ni + pada → த. அதிசாரசன்னிபாதம்.]

சுள் → சுர் → சுரம்.

அதிசாரசாந்தி

அதிசாரசாந்தி adicāracāndi, பெ. (n.)

   1. வயிற்றுப் போக்கைக் குணப்படுத்தும் மருந்து; any remedy which controls the motion in dysentery.

   2. காட்டாத்தி; jungle autti, Woodfordia floribunda (சா.அக.);.

     [அதிசார(ம்); + சாந்தி.]

     [Skt. ati-sara → த. அதிசாரம்.]

அதிசாரசிலேட்டுமம்

அதிசாரசிலேட்டுமம் adisārasilēṭṭumam, பெ. (n.)

   1. செரியாமையினால் காய்ச்சல், வயிற்றிரைச்சல், விலாக்குத்து, நெஞ்சுவலி, நாவறட்சி, உடம்பெரிச்சல், இருமல், நீர்வேட்கை முதலிய குணங்களை உண்டாக்கும் ஒரு நோய்; a form of diarrhoea from indigestion due to the phlegmatic condition of the system. It is marked by rumbling noise in the bowels, darting pain in the sides and in the inter costal region, chest pain, parched tongue, burning sensation of the body, Cough, thirst etc.,

   2. செரியாமையினால் குழந்தைகளுக்கு வயிற்றோட்டமும் சீதளமும் குளிர்ச்சியும் ஏற்பட்டு, அத்துடன் காய்ச்சலும் காணுமோர் கோழைக் கட்டு; diarrhoea from indigestion in children due to phlegmatic causes. It is followed by fever and watery stools containing thin, white mucous – watery or serous diarrhoea (சா.அக.);.

     [Skt. ati-sara+salesman → த. அதிசார சிலேட்டுமம்.]

அதிசாரசுரசமரசி

 அதிசாரசுரசமரசி adisārasurasamarasi, பெ. (n.)

அதிசாரக்கினி பார்க்க;see adi-sara-k-kini (சா.அக.);.

அதிசாரசுரம்

 அதிசாரசுரம் adisārasuram, பெ. (n.)

அதிசாரக்காய்ச்சல் பார்க்க;see adi-sara-k-kayccal (சா.அக.);.

     [அதிசார + சுரம்.]

     [Skt. ati-sara → த. அதிசாரம்.]

சுல் → சுர் → சுரம்.

அதிசாரஞ்சுருக்கி

அதிசாரஞ்சுருக்கி adicārañjurukki, பெ. (n.)

   1. இலவம் பிசின்; the gum of the silk cotton tree.

   2. அதிசாரக் கழிச்சலை கண்டிக்கும் மருந்து; any drug capable of arresting diarrhoea (சா.அக.);.

     [அதிசாரம் + சுருக்கி.]

     [Skt. ati-sara → த. அதிசாரம்.]

அதிசாரணம்

 அதிசாரணம் adicāraṇam, பெ. (n.)

   மாவிலங்க வகை (மூ.அ.);; species of crataeva.

     [Skt. atisarana → த. அதிசாரணம்.]

அதிசாரத்திரவியம்

 அதிசாரத்திரவியம் adicāraddiraviyam, பெ. (n.)

   வயிற்றுளைவிற்காகக் கொடுக்கும் கடைச்சரக்குகளின் தொகுப்பு; a group of elementary drugs prescribed for arresting or regulating diarrhoea, Astringents (சா.அக.);.

     [Skt. ati-sara+dravya → த. அதிசாரத் திரவியம்.]

அதிசாரநாசனி

அதிசாரநாசனி adicāranācaṉi, பெ. (n.)

   1. வெட்பூலா; white honey plant, Flueggia.

   2. தீன்பூ; an unidentified drug (சா.அக.);.

அதிசாரபந்தனி

 அதிசாரபந்தனி adicārabandaṉi, பெ. (n.)

   மருவகம்; a plant known as maid’s love, Artemesia abrotanum (சா.அக.);.

அதிசாரபந்து

 அதிசாரபந்து adicārabandu, பெ. (n.)

அதிசாரங் கட்டி பார்க்க;see adi-saran-katti (சா.அக.);.

அதிசாரபித்தம்

 அதிசாரபித்தம் adicārabiddam, பெ. (n.)

   வயிற்றிலிரைச்சலுடன் ஏற்படும் கழிச்சல், வயிற்றுப்பசம், விலாவலி, ஈரலெரிச்சல், மயக்கம் முதலிய குணங்களை உண்டாக்கும் ஒரு நோய்; a form of diarrhoea arising from the deranged condition of bile in the system. It is marked by rumbling noise in the stomach, accompanied by purging, distension, of the abdomen, pain in the sides, burning sensation, giddiness and other abdominal disorders, Gastrogenic diarrhoea (சா,அக.);.

     [அந்தக(ம்); + பித்தம்.]

     [Skt. ati-såra → த. அதிசாரம்.]

பித்து → பித்தம் → Skt. pitta.

அதிசாரபேதி

 அதிசாரபேதி adicārapēdi, பெ. (n.)

   கழிச்சல் (பேதி); வகை; kind of diarrhea.

     [Skt. ati-sara+bhedin → த. அதிசாரபேதி.]

அதிசாரமூரி

 அதிசாரமூரி adicāramūri, பெ. (n.)

   ஊணங் கொடி; a winding plant, Convolvulus racimosus (சா.அக.);.

அதிசாரம்

அதிசாரம்1 adicāram, பெ. (n.)

   கோள்களின் வழக்கத்திற்கதிகமான நடை; accelerated motion of a planet from one sign to another.

     [Skt. ati-cära → த. அதிசாரம்.]

 அதிசாரம்2 adicāram, பெ. (n.)

   1. கழிச்சல் வகை (திருக்காளத். 4. 17, 33);; kind of diarrhoea.

   2. அதிமதுரம் (இராசவைத்.);; liquorices.

   3. மிகச் சிறியதொரு பின்னவெண் (நான். பால.);; a very small fraction = 1/18, 38,400.

     [Skt. ati-sara → த. அதிசாரம்.]

 அதிசாரம்3 adicāram, பெ. (n.)

   1. சத்திசாரம், வெடியுப்பு, எரியுப்பு (நவாச்சாரம்);, சோற்றுப்பு, பூநீறு முதலியவற்றைக் கொண்டு செய்யும் ஒரு வகை உப்பு; a kind of salt prepared from a mixture of nitre, sal-ammoniac, common salt and pooneer (fuller’s earth);.

   2. சவ்வீரம்; corrosive sublimate, Hydrargyri perchloridum.

   3. அதிக ஊட்டம்; essence or extract.

   4. மிக்க இனிப்பு; excessive sweetness.

   5. கல்லுப்பு; rock – salt (மூ.அ.);.

     [Skt. ati-sara → த. அதிசாரம்.]

அதிசாரம்போக்கி

 அதிசாரம்போக்கி adicārambōkki, பெ. (n.)

   ஓதிய மரம்; Indian ash tree, Odina wodier. It is so called from its virtue of curing diarrhoea (சா.அக.);.

     [அதிசாரம் + போக்கி.]

     [Skt. ati-sara → த. அதிசாரம்.]

போக்கு → போக்கி.

அதிசாரரோகம்

 அதிசாரரோகம் adicārarōkam, பெ. (n.)

   செரியாமைக் கழிச்சல் அல்லது வயிற்றளைச்சல்; diarrhoea or dysentery (சா.அக.);.

     [Skt. ati-sara+roga → த. அதிசாரரோகம்.]

அதிசாரவக்கிரம்

அதிசாரவக்கிரம் adicāravakkiram, பெ. (n.)

   கோள் முன்சென்று திரும்புகை (விதான. கோசா. 15, உரை);; passage and retrogression of a planet.

     [Skt. ati-cara+vakkiru → த. அதிசாரவக்கிரம்.]

அதிசாரவுபரசம்

அதிசாரவுபரசம் adisāravubarasam, பெ. (n.)

   1. கருப்பத்தில் உண்டாகும் ஒரு வகை நீர்; a fluid of the uterus.

   2. பனிக் குடத்து நீர்; a liquid that, forms in the anniotic sac in which the foetus lies-liquor amni (சா.அக.);.

     [Skt. ati-sara + upa-rasa → த. அதிசாரவுபரசம்.]

அதிசிகுவை

 அதிசிகுவை adisiguvai, பெ. (n.)

   அடி நாக்கின்கீழ் வீக்கத்தை உண்டாக்கிப் பிணிநீர்ப்பை அல்லது சிறுமுளைகள் போல் கொப்புளங்களை எழுப்பி, உண்ண முடியாது வலி உண்டாக்கும் ஒரு நோய்; a disease of the under surface of the tongue of the under surface of the tongue accompanied by a cyst or swelling and pustules all Over the parts and thereby causing inability to take food (சா.அக.);.

     [Skt. ati + jihva → த. அதிசிகுவை.]

அதிசிரம்

 அதிசிரம் adisiram, பெ. (n.)

   தலைகீழாகப் பிடித்தல்; holding head downward or upside down (சா.அக.);.

அதிசிவம்

 அதிசிவம் adisivam, பெ. (n.)

   நாக்கு அல்லது உண்ணாக்கில் உண்டாகும் ஒருவகை வீக்கம்; a peculiar swelling of the tongue or (uvala); (சா.அக.);.

     [Skt. ati + jihva → த. அதிசிவம்.]

அதிசிவிகம்

 அதிசிவிகம் adisivigam, பெ. (n.)

அதிசிவம் பார்க்க;see adi-sivam (சா.அக.);.

     [Skt, ati + jihva → த. அதிசிவிகம்.]

அதிசீதம்

அதிசீதம் adicīdam, பெ. (n.)

   நிரயங்களு ளொன்று (சிவதரு. சுவர்.112);; name of a hell of extreme cold.

     [Skt. ati-šita → த. அதிசீதம்.]

அதிசுட்கம்

 அதிசுட்கம் adisuṭkam, பெ. (n.)

   வயிற்றுத் தீயின் (சமாக்கினியின்); குறைவால் நாளுக்கு நாள் உடம்பு மெலிந்து, கழுத்து வயிறு தொடை முதலிய உறுப்புகள் உலர்ந்து சூம்பித் தேவாங்கைப்போல் இளைத்த உருவத்தை அடையச் செய்யும் நோய்; a progressive wasting disease arising from decreased appetite due to digestive disorders. It is marked by reduction of fat, loss of blood and weakening of muscles in the thighs, neck, abdomen, etc. and a general emaciation owing to lack of nutrition, Idiopathic muscular atrophy (சா.அக.);.

அதிசுரம்

 அதிசுரம் adisuram, பெ. (n.)

   சுடுங்காய்ச்சல்; high fever, Hyperpyrexia (சா.அக.);.

அதிசுழுத்தி

 அதிசுழுத்தி adisuḻuddi, பெ. (n.)

   மயக்கத்தோடு கூடிய தூக்கம்;

அதிசூக்குமதேகம்

அதிசூக்குமதேகம் adicūkkumadēkam, பெ. (n.)

   பூதம், தன்மாத்திரை, அறிவுப் பொறி (ஞானேந்திரியம்);, கருமப் பொறி (கன்மேந்திரியம்);, உட்கருவி (அந்தக்கரணம்);, குணம், மூலப்பகுதி, கலாதி என்பவற்றில் ஒவ்வொன்றும் கொண்ட நுண்ணுடல் (சி.போ.பா. 2, 3, பக். 194);;     [Skt. ati + suksma + dega → த. அதிசூக்குமதேகம்.]

அதிசூக்குமம்

அதிசூக்குமம் adicūkkumam, பெ. (n.)

   மிகுநுண்மம் (மிகுபுரியட்டகம்); (சி.போ. பா. 2, 3, பக், 194.);; anything very subtle.

த.வ. மீநுண்டு.

     [Skt. ati-sūksma → அதிசூக்குமம்.]

அதிசூக்குமை

அதிசூக்குமை adicūkkumai, பெ. (n.)

   சிவ சத்தி மாறுபாடுகளுளொன்று (சதாசிவ. 21, உரை.);;     [Skt. ati-sūksmå → த. அதிசூக்குமை.]

அதிசூரன்

 அதிசூரன் adicūraṉ, பெ. (n.)

   பெருமறவன்; great hero, one who excels in valour.

அதிசெளரபம்

 அதிசெளரபம் adiseḷarabam, பெ. (n.)

   மாமரவகை (மலை.);; sweet mango, as very fragrant.

     [Skt. ati + saurabha → த. அதிசௌபரம்.]

அதிசோபனை

அதிசோபனை adicōpaṉai, பெ. (n.)

   மலைமகள் (கூர்மபு. திருக்கலியாண. 22.);; Parvati.

     [Skt. ati-sobhana → த. அதிசோபனை.]

அதிச்சத்திரம்

 அதிச்சத்திரம் adiccaddiram, பெ. (n.)

   காளான் (மலை.);; mushroom.

     [Skt. atichatra → த. அதிச்சத்திரம்.]

     [P]

அதிட்டகன்மம்

அதிட்டகன்மம் adiṭṭagaṉmam, பெ. (n.)

   நன்மை தீமைகளைத் துய்க்கச் செய்யுஞ் செயல் (சிவப்பிர. 19. உரை. பக். 213);; the invisible karma which causes enjoyment and suffering.

     [Skt. a-drsta + karman → த. அதிட்டகன்மம்.]

அதிட்டக்காரன்

 அதிட்டக்காரன் adiṭṭakkāraṉ, பெ. (n.)

   நல்வாய்ப்புள்ள மனிதன், நற்பேறுடையோன்; fortunate man.

த.வ. பேற்றாளன்.

     [அதிட்டம் + காரன்.]

     [Skt. a-drsta → த. அதிட்டம்.]

அதிட்டசன்மபோக்கியம்

அதிட்டசன்மபோக்கியம் adiṭṭasaṉmapōkkiyam, பெ. (n.)

   வானுலக (கவர்க்க);த்திலேயாதல் நிரயத்திலேயாதல் மறு பிறவியிலேயாதல் நிகழ்வுறும் வினை நுகர்வம் (சி.சி. 4, 40, சிவாக்.);; enjoyment of the fruits of karma, either in heaven, hell or in succeeding birth.

     [Skt. adrsta + janma + pokkiyam → த. அதிட்டசன்மபோக்கியம்.]

அதிட்டச்செல்லி

 அதிட்டச்செல்லி adiṭṭaccelli, பெ. (n.)

   வைப்பு நஞ்சு (வின்.);; prepared arsenic.

அதிட்டச்சொல்லி

 அதிட்டச்சொல்லி adiṭṭaccolli, பெ. (n.)

அதிட்டச்செல்லி (மூ.அ.); பார்க்க;see atitta-c-celli.

அதிட்டம்

 அதிட்டம் adiṭṭam, பெ. (n.)

   நற்பேறு; fortune.

த.வ. ஆகூழ்

     [Skt. adrista → த. அதிட்டம்.]

அதிட்டவசம்

 அதிட்டவசம் adiṭṭavasam, பெ. (n.)

   எதிர்பாராத வகையாக ஏற்பட்ட நன்மை; sheer luck (கிரியா.);.

     [அதிட்ட(ம்); + வசம்.]

     [Skt. a-drsta → த. அதிட்ட(ம்);.]

வயம் → வசம்.

அதிட்டாதா

 அதிட்டாதா adiṭṭādā, பெ. (n.)

அதிட்டாத்திரு பார்க்க;see adittattiru.

     [Skt. adhisthåtå → த. அதிட்டாதா.]

அதிட்டாத்திரு

அதிட்டாத்திரு adiṭṭāddiru, பெ. (n.)

   தலைமை உடையவன்; ruler, chief, protector.

     “ஈசனதிட்டத்திடுவாம்” (வேதா. சூ. 79.);.

     [Skt. adhi-sthatr → த. அதிட்டாத்திரு.]

அதிட்டானமானம்

அதிட்டானமானம் atiṭṭāṉamāṉam, பெ. (n.)

   சிற்பங்களின் உயரத்தினை முடிவு செய்யும் மரபு 5:20; deciding the height of Statue.

     [அதிட்டாளம்+மானம்]

அதிட்டானம்

அதிட்டானம் adiṭṭāṉam, பெ. (n.)

   1. நகர் (நாநார்த்த.);; city.

   2. இருக்கை (M.E.R. 343 of 1927-8);; seat.

   3. தேர்க்கால் (நாநார்த்த);; chariot-wheel.

   4. கோயில் விமானத்தின் கீழுள்ள பகுதி (M.E.R 146 of 1928-9);; the base of a temple vimanam.

   5. புகழ் (நாநார்த்த.);; fame.

   6. ஆரவாரிக்கை (நாநார்த்த.);: roaring, shouting.

   7. நிலைக்களம்; place, abode.

த.வ. அடிவாணம்.

     [Skt. adhi-sthåna → த. அதிட்டானம்.]

அதிட்டி-த்தல்

அதிட்டி-த்தல் adiṭṭiddal,    4. செ.குன்றாவி. (v.t.)

   நிலைக்களமாகக் கொள்ளுதல் (சி.போ.சிற்.4, 1, பக். 86);; to abide in, stand on.

     [Skt. adhi-sthå → த. அதிட்டி.]

அதிதனு

 அதிதனு adidaṉu, பெ. (n.)

   பொன் (வின்.);; gold.

அதிதலசிலேட்டுமம்

 அதிதலசிலேட்டுமம் adidalasilēṭṭumam, பெ. (n.)

   கோழைநோய்; a kind of phlegmatic disease (சா.அக.);.

அதிதாகம்

 அதிதாகம் adidākam, பெ. (n.)

   மிகுந்த நீர் வேட்கை; intense thirst, Anadypsia (சா.அக.);.

க. அதிதாக

     [அதி + தாகம். Skt. daha → த. தாகம்.]

அதிதானம்

அதிதானம் adidāṉam, பெ. (n.)

   பெருங்கொடை (சிந்தா. நி. 143);; munificence, liberal giving.

அதிதாபகவாதம்

 அதிதாபகவாதம் adidāpagavādam, பெ. (n.)

   உடம்பைத் தவிக்கச் செய்யும் ஒர் ஊதை (வாத); நோய்; a kind of nervous prostration arising from errors in diet and extending all over the body (சா.அக.);.

     [அதி + தாபகம் + வாதம்.]

     [Skt. ati → த. அதி. Skt. Våta → த. வாதம்.]

தபம் → தாபம் → தாபகம்.

அதிதாரம்

 அதிதாரம் adidāram, பெ. (n.)

   இலந்தை (மலை.);; jujube tree, Ziziphus jujuba.

மறுவ. அதிநாரம்

அதிதி

அதிதி1 adidi, பெ. (n.)

   1. விருந்தினன் (சைவச. மாணாக். 27);; one entitled to hospitality, guest.

   2. இறந்தநாட் கடன் செய்தற்கு ஒவ்வாத நாள்; an unsuitable tithi, the first of two tithis in the same month, on which ceremonies that are regulated by the tithis cannot be performed.

   3. இரவு 15 முழுத்தத்துள் பத்தாவது (விதான. குணா. 73, உரை.);; the tenth of 15 divisions of night.

     [Skt. a-tithi → த. அதிதி.]

 அதிதி2 adidi, பெ. (n.)

   கசியபர் மனைவி (கம்பரா. சடாயு. கா. 29.);; name of a daughter of Daksa, wife of Kasyapa and mother of all the gods.

     [Skt. aditi → த. அதிதி.]

 அதிதி3 adidi, பெ. (n.)

   1. நிலம்; earth.

   2. மலை மகள்; Părvati.

     [Skt. aditi → த. அதிதி.]

அதிதிநாள்

 அதிதிநாள் adidināḷ, பெ. (n.)

   கழை (புனர்பூசம்); (பிங்.);; the seventh naksatra, as presided over by Adidi.

த.வ. ஏழாமுடு.

     [அதிதி + நாள்.]

     [Skt. aditi → த. அதிதி.]

அதிதிபூசிதம்

 அதிதிபூசிதம் adidipūcidam, பெ. (n.)

   சத்தி சாரணை; a plant;

 spreading hogweed, Boerhaavia procumbens alias B. diffusa (சா.அக.);.

அதிதிபூசை

அதிதிபூசை adidipūcai, பெ. (n.)

   விருந்தோம்பல்; hospitality to a guest.

     “கமழ்சுவை யடிசிலா னதிதி பூசையும்” (காஞ்சிப்பு. திருநகர. 103.);.

     [அதிதி + பூசை.]

     [Skt. atithi → த. அதிதி.]

பூசு → பூசை.

அதிதிப்பம்

 அதிதிப்பம் adidippam, பெ. (n.)

   உணவவா வின்மை; loss of appetite, Anorexia (சா.அக.);.

அதிதீபம்

 அதிதீபம் adidīpam, பெ. (n.)

   பேரரத்தை; greater galangal, Alpinnia galanga (major); (சா.அக.);.

அதிதும்மற்பீனசம்

 அதிதும்மற்பீனசம் adidummaṟpīṉasam, பெ. (n.)

   கபால வறட்சியினாலும் மூக்கெலும்பில் அடிபடுவதனாலும் காற்றுடன் மூக்கு, கண், வாய், செவி ஆகிய இடங்களை அடைப்பதனாலும் எந்நேரமும் தும்மலை உண்டாக்கும் மூக்கடைப்பு வகை (பீனசம்);; a kind of nasal catarrh marked by constant sneezing, due to the dryness of the scalp, traumatic causes and obstruction in nasal passages and other openings due to the deranged condition of Vayu, acute catasthal Rhinitis (சா.அக);.

த.வ. மூக்கடை சீந்தல்.

     [அதி + தும்மல் + பீனசம்.]

     [Skt. ati → த. அதி. Skt. pinasa → த. பீனசம்.]

தும்மு → தும்மல்.

அதிதூதன்

 அதிதூதன் adidūdaṉ, பெ. (n.)

அதிதூலரோகம்

அதிதூலரோகம் adidūlarōkam, பெ. (n.)

   1. ஆண்களுக்கு உடம்பைப் பருக்கச் செய்யும் ஒரு நோய்;   2. பெண்களுக்கு மாதவிலக்கு, வளி செல்வாக்கு முதலிய கரணியங்களினால் உடம்பு பருத்துக் காணுவதல்லாமல் நெஞ்சு, தொடை, வயிறு, பிட்டம் முதலியன பருத்தும் அதனால் களைப்பு, இரைப்பு, மேல் மூச்சு முதலிய குணங்களையும் காட்டும் ஒரு நோய்;த.வ. வீங்கல்நோய்.

     [Skt. ati + sthula + roga → த. அதிதூல ரோகம்.]

அதிதெய்வம்

அதிதெய்வம் adideyvam, பெ. (n.)

   இடத்தையாளுந் தெய்வம், எழுந்தருளியிருக்குந் தெய்வம்; presiding deity.

     “புரம்பொடி படுத்த புண்ணியனே யதிதெய்வம்” (சூத. எக்கி, பூ. 6 ; 4);.

அதிதேசம்

அதிதேசம் adidēcam, பெ. (n.)

   1. ஒன்றற்குரியதை மற்றொன்றற்கு ஏற்றிக் கூறுகை; extending a rule to an analogous case.

   2. ஒப்புமையானுணர்த்துகை;     “அதிதேச வாக்கியம்” (தர்க்கபா. 29.);.

     [Skt. atidesa → த. அதிதேசம்.]

அதிதேசி-த்தல்

அதிதேசி-த்தல் adidēciddal,    4 செ.குன்றாவி. (v.t.)

   ஒன்றற்குரியதை மற்றொன்றிற்கு ஏற்றிக் கூறுதல் (ஈடு, 10, 10, 6.);; to extend to an analogous case.

     [Skt. ati-desa → த. அதிதேசி.]

அதிதேவதை

 அதிதேவதை adidēvadai, பெ. (n.)

   குலதெய்வம்; presiding deity, as of a mantra.

     [Skt. adhi → த. அதி.]

த. தேவி → Skt. devata → த. தேவதை.

அதிதேவன்

அதிதேவன் adidēvaṉ, பெ. (n.)

   1. குலதெய்வம்; tutelary deity.

   2. மேலான கடவுள்; Supreme God.

   ம. அதிதேவன் ; க. அதிதேவதெ ; தெ. அதி தேவுடு; Pali atideva.

அதிதோவயம்

 அதிதோவயம் adidōvayam, பெ. (n.)

   முழுமையான எரிநீர்; a fluid that dissolves any substance or in which any solution is effected, universal solvent (சா.அக.);.

அதிநரம்

 அதிநரம் adinaram, பெ. (n.)

   சீமை அதிமதுரம்; sweet root, Glycirrhiza glabra (சா.அக.);.

அதிநாரம்

 அதிநாரம் adināram, பெ. (n.)

   இலந்தை; Indian plum, Ziziphus jujuba (சா.அக.);.

அதிதாரம் பார்க்க;see adidaram.

அதிநிதி

 அதிநிதி adinidi, பெ. (n.)

   எரியுப்பு (நவச்சாரம்);; hydrochlorate of ammonia-Sal ammoniac (சா.அக.);.

அதிநீசம்

அதிநீசம் adinīcam, பெ. (n.)

   1. ஐவகைப் புணர்ச்சியுளொன்று;     “விழைவற அதிநீச மென்ன” (கொக்கோ. 3, 7);.

   2. கோள்கள் தாழ்வான (பாகை); கோட்டிலிருக்கை (சோசிட.சிந்.);; Skt. ati-nica → த. அதிநீசம்.]

அதிநீர்

அதிநீர் adinīr, பெ. (n.)

   1. மிக்க நீர்; water in excess, as in cold.

   2. அளவிற்கு மிஞ்சின மூத்திரம்; excessive urination, as in diabetes (சா.அக.);.

அதிநீலம்

 அதிநீலம் adinīlam, பெ. (n.)

   இலுப்பை; honey tree, Bassia longifolia alias B. latifolia (சா.அக.);.

அதிநுட்பம்

அதிநுட்பம் adinuṭpam, பெ. (n.)

   1. மிகு நுண்மை; microscopic minuteness.

   2. விளங்காத அல்லது விடுவிக்க முடியாத நுண்ணிய சிக்கலான செய்தி; that which is exceedingly minute, complex and difficult to understand or solve.

     “மதிநுட்ப நூலோடுடையார்க் கதிநுட்பம்

யாவுள முன்னிற் பவை” (குறள், 636);.

அதிநுண்கணிதம்

 அதிநுண்கணிதம் adinuṇkaṇidam, பெ. (n.)

   வகையீட்டு நுண்கணிதம் (புதுவை);; Differential Calculus (Pond.);.

அதிநோய்

 அதிநோய் adinōy, பெ. (n.)

   அழிஞ்சில் (பரி.அக.);; sage-leaved alangium.

அதினாதிபூண்டு

 அதினாதிபூண்டு adiṉādipūṇṭu, பெ. (n.)

   கொடி வேலி; Ceylon lead-wort, Plumbago zeylanica.

அதிபங்கத்தோற்றம்

அதிபங்கத்தோற்றம் atipaṅkattōṟṟam, பெ. (n.)

   முடிமுதல் அடிவரை ஒழுங்கின்றி அமைந்த அமைந்த சிற்பவடிகம்(5-38);; irregular shape of the Statue.

     [அதி+பங்கம்+தோற்றம்]

அதிபங்கம்

அதிபங்கம் atipaṅkam, பெ. (n.)

   சிற்பநிலைகளிற் ஒன்று(1:120);; a posture of statue.

     [அதி+பங்கம்]

அதிபசமி

 அதிபசமி adibasami, பெ. (n.)

   கொன்றை (மலை.);; Indian laburnum, Cassia fistula.

தெ. அதிபசிமி

அதிபசி

 அதிபசி adibasi, பெ. (n.)

   கடும்பசி; abnormal increase in the sensation of hunger, Hyperorexia (சா.அக.);.

அதிபதாதி

 அதிபதாதி adibadādi, பெ. (n.)

   செம்பசளை; a red species of Indian spinach, Spinacha oleracea (சா.அக.);.

அதிபதி

அதிபதி1 adibadi, பெ. (n.)

   1. அரசன் (பெரியபு. கண்ணப்ப. 7);; ruler, king, sovereign.

   2. தலைவன் (திவ். திருவாய். 6, 10, 3);; lord, master, superior.

   3. உரிமையுடையோன்; one who has the right.

     ‘அரசன் என்பவன் ஒரு நாட்டின் அதிபதி’ (கிரியா.);.

த.வ. தலைவன்.

     [Skt. adhi + pati → த. அதிபதி.]

 அதிபதி2 adibadi, பெ. (n.)

   சண்பகமரம் (மூ.அ.);; champak.

அதிபதிங்கி

 அதிபதிங்கி adibadiṅgi, பெ. (n.)

   கொடிவேலி; a plant, leadwort, plumbago Zeylanic (சா.அக.);.

அதிபதிச் சங்கம்

 அதிபதிச் சங்கம் adibadiccaṅgam, பெ. (n.)

   வாலுளுமை; climbing staff-plant, Celastrus paniculata alias Vernonia anthelmintica (சா.அக.);.

அதிபதிச்சம்

 அதிபதிச்சம் adibadiccam, பெ. (n.)

அதிபதிச் சங்கம் பார்க்க;see adi-padi-c-cangam (சா.அக.);.

அதிபதிஞ்சி

 அதிபதிஞ்சி adibadiñji, பெ. (n.)

அதிபதிங்கி பார்க்க;see adi-padingi (சா.அக.);.

அதிபதிப்பொருத்தம்

 அதிபதிப்பொருத்தம் adibadibboruddam, பெ. (n.)

   மணமக்கட் பொருத்தங்களுள் ஒன்று (வின்.);;     (Astrol.); a correspondence between the horoscopes of the prospective bride and bridegroom.

     [Skt. adhi + pati → த. அதிபதி.]

அதிபதுங்கி

 அதிபதுங்கி adibaduṅgi, பெ. (n.)

   கொடுவேலி (மூ.அ.);; Ceylon leadwort, Plumbago zeylanica.

அதிபத்தநாயனார்

அதிபத்தநாயனார் adibaddanāyaṉār, பெ. (n.)

   அறுபத்துமூன்று சிவனடியார்களுள் ஒருவர்; name of a canonized Saiva saint, one of 63.

அதிபத்திரம்

அதிபத்திரம் adibaddiram, பெ. (n.)

   1. தேக்கு மரம்; teak tree, Teetona grandis.

   2. மயிர் மாணிக்கம்; morning mallow, Sida acuta (சா.அக.);.

அதிபன்

 அதிபன் adibaṉ, பெ. (n.)

   தலைவன் (பிங்.);; lord.

     [Skt. adhi-pa → த. அதிபன்.]

அதிபம்

 அதிபம் adibam, பெ. (n.)

   வேம்பு (சித்.அக.);;  margosa.

 அதிபம் adibam, பெ. (n.)

   மூளையின் சிறப்பு மிக்க உயர்ந்த கூறு; the superior portion of the brain, cerebrum (சா.அக.);.

     [Skt. adhipa → த. அதிபம்.]

அதிபர்

அதிபர் adibar, பெ. (n.)

   1. உரிமையாளர்; owner.

     ‘தொழில் அதிபர்’.

   2. ஆட்சித்தலைவர்; one who heads a state.

   3. தலைமை ஆசிரியர்; head of an educational institution.

     ‘பாடசாலை அதிபர்’.

   4. ஒருநாட்டின் தலைவர்; one who heads a country.

     [Skt. adhi-pa → த. அதிபர்.]

அதிபறிச்சம்

 அதிபறிச்சம் adibaṟiccam, பெ. (n.)

   வாலுளுவை (மூ.அ.);; climbing staff plant (செ.அக.); — intellect tree, Celastrus pariculata (சா.அக.);.

அதிபற்கூச்சம்

 அதிபற்கூச்சம் adibaṟāccam, பெ. (n.)

   பற்கள் அதிகமாகக் கூசுதல்; over-sensitiveness of the teeth, Odonthemodia.

     [அதி + பல் + கூச்சம்.]

அதிபலம்

அதிபலம் adibalam, பெ. (n.)

   1. நேர்வாளம் (பச்.மூ.);; true croton-oil plant, Croton tigilium.

   2. மயிர் மாணிக்கம்; morning mallow, Sida aclita (சா.அக.);.

அதிபலா

 அதிபலா adibalā, பெ. (n.)

   சிறுதுத்தி; evening mallow, Abutilon crispum (சா.அக.);.

ம. அதிம்பல

அதிபலை

 அதிபலை adibalai, பெ. (n.)

   பேராமுட்டி (தைலவ.);; species of Hibiscus (செ.அக.); — fragrant sticky mallow, Pavonia odorata (சா.அக.);.

அதிபாதகம்

அதிபாதகம் adipādagam, பெ. (n.)

   பெரும் கரிசு (பாவம்); (தணிகைப்பு. அகத். 226.);; henious sin.

     [Skt. ati + pataka → த. அதிபாதகம்.]

அதிபாதிதம்

அதிபாதிதம் adipādidam, பெ. (n.)

   1. முழுதும் ஒடிந்தது; that which is completely broken.

   2. முழுவதும் முறிந்த எலும்பு;

அதிபாரகம்

 அதிபாரகம் adipāragam, பெ. (n.)

   கோவேறு கழுதை; mule which is an offspring of an ass and a mare or a horse and a she-ass (சா.அக.);.

அதிபாற் சொரிவு

அதிபாற் சொரிவு adipāṟcorivu, பெ. (n.)

   1. மிகுதியான பால் சுரப்பு; excessive secretion of milk, Hyperlactation.

   2. முலைப்பால் மிகுதியாகச் சுரந்து ஒழுகுதல்; excessive secretion and flow of milk in a nursing woman, Galactorrhea.

     [அதி + பால் + சொரிவு.]

அதிபித்தம்

 அதிபித்தம் adibiddam, பெ. (n.)

   பித்த மிகுதி; excessive secretion of bile, Hypercholia.

அதிபிள்ளை

 அதிபிள்ளை adibiḷḷai, பெ. (n.)

   மூத்த மனைவி (கோவை);; senior wife (Cm.);.

     [ஒருகா. Skt.adi + த. பிள்ளை (மனைவி);.]

அதிபுரசத்தான்

 அதிபுரசத்தான் adiburasaddāṉ, பெ. (n.)

   அலரி; oleander rosebay, Nerium odorum.

அதிபூதம்

அதிபூதம் adipūdam, பெ. (n.)

   1. மாயைமலம்; the spiritual substratum of the material or gross objects (சா.அக.);.

   2. மாயை யாற்றல்; the all penetrating influence of the Supreme Spirit.

   3. முதனிலை (பிரகிருதி); மாயை, அதாவது உலகத்திற்குக் கரணியமான (காரணமான); மாயை; material Maya (illusion); as the base on which this material world is created.

தூவில் (அசுத்த); மாயை பார்க்க;see tivilmayay.

   4. உடம்பிற்கு (சரீரத்துக்கு); வேறாயும், பொறிகட்குப் புலனாயும் (இந்திரியங்களுக்கு விடயமாயும்); இருக்கும் பொருள் (விசாரசா, 29);; matter which is different from the body and perceived by the senses (சா.அக.);.

   5. பரம ஆதன் (பரமாத்துமா); ;  the Supreme or Universal Soul (சா.அக.);.

ம. அதிபூதம்; க. அதிபூத.

     [அதி + பூதம். பூத்தல் = தோன்றுதல். பூ → பூது → பூதம் = ஐம்பொருட் கூறுகளுள் ஒன்றாகத் தோன்றியது.]

இதன் விளக்கத்தைப் பூதம் என்னும் உருப்படியிற் காண்க.

அதிப்பிரசங்கம்

அதிப்பிரசங்கம் adippirasaṅgam, பெ. (n.)

   வேண்டுவ பகராது மற்றொன்று விரிக்கை (தருக்கசங். பக். 249.);; digression, introducing extraneous matter.

     [Skt. ati+pra-sanga → த. அதிப்பிரசங்கம்.]

அதிமதுக்குரு

 அதிமதுக்குரு adimadukkuru, பெ. (n.)

   நீரிழிவு நோயில் சருக்கரையினாலேற்படும் சிறுகொப்புளங்கள்; small papules occurring in diabetes due to irritation of the skin, Symptomatic prurigo (சா.அக.);.

     [அதி + மது + குரு.]

அதிமதுக்குருதி

 அதிமதுக்குருதி adimadukkurudi, பெ. (n.)

   அதிகமாகத் தித்திப்புச் சேர்ந்த அரத்தம்; excess of sugar in the blood, Hyperglycemia (சா. அக.);.

     [அதி + மது + குருதி.]

அதிமதுரகவி

அதிமதுரகவி adimaduragavi, பெ. (n.)

   15ஆம் நூற்றாண்டில் காளமேகப் புலவர் காலத்திலிருந்த திருமலைராயன் அவைக்களத் தலைமைப் புலவர் (தமிழ்நாவ, 209);; name of the poet laureate in the court of Thirumalairayan, contemporary of Kalamēgappulavar, 15th century.

     [மத்து → மது → மதுர் → மதுரம். அதி + மதுரம் + Skt. kavi – அதிமதுரகவி.]

மதுரம் பார்க்க;see maduram.

அதிமதுரப்பால்

 அதிமதுரப்பால் adimadurappāl, பெ. (n.)

   அதிமதுரச் செடியின் வேரினின்று வடிக்கும் பால். இக் கடைச்சரக்கு வாயிலடக்கிக் கொள்ளின் நாவறட்சி, வாய்ப்புண், வேக்காளம் முதலியவற்றை நீக்கும்; a dry extract prepared from the decoction of the roots of honey-creeper by evaporation, used as a cure for persistent thirst or parched tongue, stomatitis or ulcers of the mouth, inflammation of the mouth, etc. (சா.அக.);.

     [அதிமதுரம் + பால்.]

அதிமதுரம்

அதிமதுரம் adimaduram, பெ. (n.)

   மிக இனிமையானது; that which is very sweet.

     “அதிமதுரக் கனியொன்று” (பெரியபு. காரைக். 25);.

ம., க. அதிமதுர ; தெ. அதிமதுரமு.

 அதிமதுரம் adimaduram, பெ. (n.)

   1. நறுமணப் பூடுவகை;     “பிங்குணம் பிரச பூர வருந்ததி மதுரம்” (மச்சபு. சருவ. 8);.

 liquoriceplant, Glycyrrhiza glabra (செ.அக.);

   சீமை அதிமதுரம்; honey-creeper, Glycirrhiza triphylla (சா.அக.);.

   2. குன்றி (மலை.); ; crab’s-eye (செ.அக.);.

   3. நாட்டு அதிமதுரம் அல்லது குன்றிவேர்; Indian liquorice root, Abrus precatorious (சா.அக.);.

ம. அதிமதுரம் ; க. அதிமதுர ; தெ. அதிமதுரமு.

அதிமந்தம்

அதிமந்தம் adimandam, பெ. (n.)

   மிகுந்த கண்ணோவையும் ஒற்றைத் தலைவலியையும் உண்டாக்கும். ஒரு கண்ணோய்; a disease invariably attended with an excruciating pain in the eye, and extending upward to one side of the head (சா.அக.);.

     [அதி + மந்தம். மொத்து → மொந்து → மொந்தம் → மந்தம்.]

அதிமந்தம் – முழுக்கண்ணோய் மூன்றனுள் ஒன்று. அது ஊதையதிமந்தம் (வாதாதி மந்தம்);, பித்தவதிமந்தம், கோழையதிமந்தம் (சிலேட்டுமாதிமந்தம்);, அரத்தவதிமந்தம் (ரக்தாதிமந்தம்);, மிகையதிமந்தம் (அதாதிமந்தம்); என ஐவகைப்படும் (சீவரட். 258); – (சங்.அக.);.

அதிமந்தாரம்

 அதிமந்தாரம் adimandāram, பெ. (n.)

   கண் வலித்துக் கடுத்து நீர் வடிந்து, பாவையிற் குத்தலுண்டாகிப் பார்வை நாளுக்குநாள் இருண்டுவரும் தீராக் கண்ணோய்; a chronic incurable disease of the eye, marked by inflammation and darting pain of the cornea, watery discharge from the eyes, hazy vision and gradual loss of sight (சா.அக.);.

     [மந்தம் + ஆரம் (ஓர் ஈறு); – மந்தாரம்.]

அதிமயிர்வளர்த்தி

அதிமயிர்வளர்த்தி adimayirvaḷarddi, பெ. (n.)

   1. தலைமயிர் அதிகமாக வளர்தல்; excessive growth of hair on the scalp.

   2. உடம்பில் அதிகமாக மயிர் முளைத்தல்; excessive growth of hair all over body, Hypertrichiasis universalis (சா.அக.);.

அதிமலம்

அதிமலம் adimalam, பெ. (n.)

   1. மாவிலிங்கம் (மூ.அ.);; species of crataeva (செ.அக.); — sacred lingam tree, Crataeva religiosa (சா.அக.);.

   2. அதிக மலந்தள்ளல்; excessive discharge of faecal matter (சா.அக.);.

அதிமல்லி

அதிமல்லி adimalli, பெ. (n.)

   மாவிலங்கம் (மறை.அக.);; a species of crataeva.

ஒ.நோ ; அதிமலம் 1.

அதிமாங்கிசம்

 அதிமாங்கிசம் adimāṅgisam, பெ. (n.)

   தசை வளர்ந்து துன்புறுத்தும் கண்ணோய்; a disease of the conjunctiva characterised by the thickening of the membrane, ptergium (சா.அக.);.

அதிமாதம்

 அதிமாதம் adimādam, பெ. (n.)

அதிக மாதம் பார்க்க;see adiga-mddam.

அதிமானுடம்

 அதிமானுடம் adimāṉuḍam, பெ. (n.)

   மாந்தனுடைய ஆற்றலுக்கு மேற்பட்டது; that which is superhuman.

     [Skt. ati + manusa → த. அதிமானுடம்.]

அதிமாமிசகம்

அதிமாமிசகம் adimāmisagam, பெ. (n.)

   1. ஈறு சுரந்து அதனால் ஏற்படும் பல்வலி; painful sensation in the gum of the teeth due to its abnormal growth.

   2. உண்ணாக்கு வளர்ந்து அதனாலுண்டாகும் அழற்சி; inflammation due to the elongation of the uvula, uvulitis (சா.அக.);.

     [Skt. adhi + mamsa → த. அதிமாமிசகம்.]

அதிமாமிசக்கழலை

 அதிமாமிசக்கழலை adimāmisakkaḻlai, பெ. (n.)

   தசை வளர்ச்சியுள்ள கழலைக் கட்டி; a tumour blended with sarcoma, hemangio sarcoma (சா.அக.);.

     [அதிமாமிசம் + கழலை.]

     [Skt. adhi+mamas → த. அதிமாமிசம்.]

அதிமாமிசசருமன்

 அதிமாமிசசருமன் adimāmisasarumaṉ, பெ. (n.)

   வெள்விழிமேல் தசை வளர்ந்து உலர்ந்த அரத்த உண்டையைப்போல் கறுத்தும், பருத்தும் இருக்கும் ஒரு கண்ணோய்; a soft, thick, extended overgrowth of flesh resemling a dried clot of blood in colour, on the white of the eye (சா.அக.);.

     [Skt.adhi+mamsa+carman → த. அதிமாமிசசருமன்.]

அதிமாமிசாசருமரோகம்

அதிமாமிசாசருமரோகம் adimāmicācarumarōkam, பெ. (n.)

   1. கண்ணின் வெள் விழியில் சதை வளர்ந்து காணப்படும் ஒரு நோய்; a fleshy growth in the white of the eye.

   2. பிறவியில் ஏற்படும் சதை மடிப்பு; an anomaly of the eye in which a patch of the thickened conjunctive extends over a part of the cornea, Epitarsus or congenital pterygium (சா.அக.);.

     [ISkt. adhi+mamsa+carman+roga → த. அதிமாமிசசருமரோகம்.]

அதிமார்க்கநூல்

அதிமார்க்கநூல் adimārkkanūl, பெ. (n.)

அதிமார்க்கிகசாத்திரம் (சித். பிர. பக். 14); பார்க்க;see adimarkiga-sattiram.

     [அதிமார்க்கம் + நூல்.]

     [Skt. ati-marga → த. அதிமார்க்கம்.]

அதிமார்க்கம்

அதிமார்க்கம் adimārkkam, பெ. (n.)

   1. அகப் புறச் சமயம் (சித. பிர. 14);;   2. சைவாகமப் பிரிவினுள் ஒன்று (சி.போ.பா. 17.);; a section of Saivagamas.

     [Skt. ati + marga → த. அதிமார்க்கம்.]

அதிமார்க்கிகசாத்திரம்

அதிமார்க்கிகசாத்திரம் adimārggigacāddiram, பெ. (n.)

   பாசுபதம் ‘காபாலிகம்’ மாவிரதமென்னும் மதக் (மார்க்கங்); கோட்பாடுகளைக் கூறும் நூல்கள் (சாத்திரம்); (விவேகசிந். 17.);;     [Skt. ati + margika + sastra → த. அதிமார்க்கிகசாத்திரம்.]

அதிமிதம்

 அதிமிதம் adimidam, பெ. (n.)

   ஈரமில்லாதது; that which is deprived of moisture (சா.அக.);.

அதிமிதி

 அதிமிதி adimidi, பெ. (n.)

   வீம்பாட்டம், ஒட்டோலக்க நடை (யாழ்ப்.);; acting very ostentatiously because of prosperity (J.);.

அதிமித்திரன்

அதிமித்திரன் adimiddiraṉ, பெ. (n.)

   கணவன் (சிந்தா. நி. 132.);; husband.

     [Skt. ati + mitra → த. அதிமித்திரன்.]

அதிமிருத்தியாதிமாத்திரை

 அதிமிருத்தியாதிமாத்திரை adimiruddiyādimāddirai, பெ. (n.)

   ஆன்மணத்தி (கோரோசனை); மாத்திரை (வின்.);; medicinal pill made of bezoar.

     [அதிமிருத்தி + ஆதி + மாத்திரை.]

     [Skt. ati → mrtya → த. அதிமிருத்தியாதி.]

அதிமுணி

 அதிமுணி adimuṇi, பெ. (n.)

   பிறருடைய கிணற்றிலிருந்து நீரிறைத்துப் பயிரிடுவதற்காகக் கிணற்றுக்காரருக்குக் கொடுக்கும் வாரம்; dues payable by owners of fields to owners of wells for drawing water from the wells for irrigating their fields (R.T.);.

     [ஒருகா. அதிகம் + உணி.]

அதிமுத்தகம்

அதிமுத்தகம் adimuddagam, பெ. (n.)

   1. அனிச்சை; ring-worm root, Rhinacanthus communis.

   2. மஞ்சள் மந்தாரை; mountain ebony, Bauhinia tomentosa (சா.அக..);.

அதிமூத்திரநீக்கி

 அதிமூத்திரநீக்கி adimūddiranīkki, பெ. (n.)

   சிவப்புப் பொன்னாங்கண்ணி; a red species of edible plant, river blatty, Illecebrum sessile (சா.அக.);.

     [அதிமுத்திரம் + நீக்கி.]

அதிமூத்திரம்

அதிமூத்திரம் adimūddiram, பெ. (n.)

   1. மூத்திரம் மிகுதியாகப் பெய்தல்; excessive secretion of urine, Hyperdiuresis.

   2. ஒருவகை நீரிழிவு; a kind of diabetes, Diabetes insipidus (சா.அக.);.

     [அதி + மூத்திரம்.]

அதிமூத்திரவொழுக்கு

 அதிமூத்திரவொழுக்கு adimūddiravoḻukku, பெ. (n,)

   மூத்திரம் மிகுதியாக வொழுகுதல்; an excessive flow of urine, Urorrhagia, urethrorrhea (சா.அக.);.

     [அதி + மூத்திரம் + ஒழுக்கு.]

அதிமேசு

 அதிமேசு adimēcu, பெ. (n.)

   அரசிறை சார்நிலைப் பணியாளரிட்ட புள்ளிமதிப்பு (இ.வ.);; estimate of standing crop, made by a subordinate revenue officer.

த.வ. புள்ளிமதிப்பு.

     [U. azmaish → த. அதிமேசு.]

அதிமேற்றிராசனம்

 அதிமேற்றிராசனம் adimēṟṟirācaṉam, பெ. (n.)

   அதிமேற்றிராணியரின் இருப்பிடம் (R.C.);; archiepiscopal see or diocese.

     [Skt. adi → அதி + Syr. Metran + Skt. a-sana → த. அதிமேற்றிராசனம்.]

அதிமோகம்

அதிமோகம் adimōkam, பெ. (n.)

   1. விருப்ப (இச்சை); யுறழ்ச்சி; excessive venereal impulse in the male-satyriasis.

   2. ஒருதலைக் காமம்; abnormal increase of the sexual impulse before it is reciprocated sexual hyperesthesia (சா.அக.);.

     [Skt. ati + mõha → அதிமோகம்.]

அதிமோதம்

 அதிமோதம் adimōdam, பெ. (n.)

   மர மல்லிகை; jasmine tree, Jasmine arboreum (சா.அக.);.

அதியசனம்

அதியசனம் adiyasaṉam, பெ. (n.)

   1. உண்ட உணவு செறியாமுன்னம் மீண்டு உணவு உட்கொள்ளுதல்; eating too soon after a meal before it is digested.

   2. அளவு கடந்து உண்கை; immoderate eating (சா.அக.);.

     [Skt. ati + asana → த. அதியசனம்.]

அதியண்டம்

 அதியண்டம் adiyaṇṭam, பெ. (n.)

   பூனைக்காலி; cowhage plant – carpopogon pruriens alias, Flacourtia cataphracta (சா.அக.);.

அதியத்தம்

 அதியத்தம் adiyaddam, பெ. (n.)

   எலும்பின் மேற் கூறு; the upper part of a bone (சா.அக.);.

     [Skt. ati + asthi → அதியத்தம்.]

அதியத்தி

 அதியத்தி adiyaddi, பெ. (n.)

   எலும்பின் மேல் எலும்பு வளர்தல்; a bone growing over another a bony growth projecting outward from the surface of a bone, Expostoses (சா.அக.);.

     [Skt. ati + asthi → த. அதியத்தி.]

அதியன்

அதியன் adiyaṉ, பெ. (n.)

   1. மேம்பட்டவன்; one who is pre-eminent.

     “திருவாவடு துறையுள் அதியனே” (தேவா. 7.70;4);.

   2. அதிகமான்; Adigaman.

ம. அதியன்

     [அதிகன் → அதியன்.]

அதியன்விண்ணத்தனார்

 அதியன்விண்ணத்தனார் atiyaṉviṇṇattaṉār, பெ. (n.)

   ஒரு புலவரின் பெயர்; name of a poet.

     [அதியமான்+விண்ணத்தன்+ஆர்.]

அதியமான்

அதியமான்1 adiyamāṉ, பெ. (n.)

   கடையெழு வள்ளல்களுளொருவன்; a liberal chief of the 2nd century A.D.

     “அணியூ னணிந்த யானை யியறேர் அதியமான்” (புறநா. 101; 4.5);.

அதியமான் நெடுமானஞ்சி பார்க்க;see adiyaman-medund n-afiji.

     [அதிகன் → அதியன். மகன் → மான். அதியன் + மான் (ஆ.பா. ஈறு); – அதியமான்.]

 அதியமான்2 adiyamāṉ, பெ. (n.)

அதிகமான் பார்க்க;see adigaman=.

அதியமான் நல்லூர்

 அதியமான் நல்லூர் atiyamāṉnallūr, பெ. (n.)

   செங்கற்பட்டு மாவட்டத்தில் உள்ள ஓர் ஊர்; name of the village in chengalpattu,

     [அதியமான்+நல்லூர்.]

அதியமான் நெடுமானஞ்சி

அதியமான் நெடுமானஞ்சி adiyamāṉneḍumāṉañji, பெ. (n.)

   கடையெழு வள்ளல்களுள் ஒருவனும் ஒளவையாரைச் சிறப்பாகப் போற்றினவனுமான ஒரு சிற்றரசன்; hame of an ancient chief noted for his liberality and for his patronage of the poetess Avvai, one of seven Kadaivallal.

     ‘அதியமான் நெடுமானஞ்சியை ஒளவையார் பாடியது’ (புறநா. 87, கொளு);.

     [அதியன் + மான் + நெடு + மான் + அஞ்சி.]

அதியமான்பெருவழி

 அதியமான்பெருவழி atiyamāṉperuvaḻi, பெ. (n.)

   அதியமான் பெயரிலமைந்த நெடுஞ்சாலை; highway named after adiyamānthe chieftain of tagadūr

     [அதியமான்+பெருவழி]

அதியமான்பெருவழிக்கல்

அதியமான்பெருவழிக்கல் atiyamāṉperuvaḻikkal, பெ. (n.)

   அதியமான் பெயரி லமைந்த நெடுஞ்சாலையில் நடப்பட்ட காவதக்கல்; milestone erected each at a distance of 5 miles (kåvatam); in the highway named afterådyaman, king of cēraclan –

அதியமிலபரணி

அதியமிலபரணி adiyamilabaraṇi, பெ. (n.)

   1. புளியிலை; tamarind leaves, Tamarindus indica.

   2. மாவிலை; mango, leaf, Mangiferus indica.

   3. புளிச்சிறு கீரை; a medicinal plant having sour leaves sour greens, Oxalis corniculata (சா.அக.);.

அதியமிலம்

அதியமிலம் adiyamilam, பெ. (n.)

   1. புளிமா; sour mango tree, Spondias mangifera.

   2. புளிநாரத்தை; a species of citron, Citron aurantium (சா.அக.);.

     [Skt. ati + amia → த. அதியமிலம்.]

அதியம்

அதியம் adiyam, பெ. (n.)

   1. ஒரு மருந்து (சங்.அக.);; a kind of medicine.

   2. ஒருவகைச் செயற்கை நஞ்சு (அப்பிரகப் பாடாணம்);; a kind of mineral poison prepared from mica (சா.அக.);.

அதியரத்தம்

அதியரத்தம் adiyaraddam, பெ. (n.)

   1. மிகச் சிவப்பு; bright red.

   2. உடம்பிலுள்ள அரத்தமிகை; excessive blood in the body, Hyperemia (சா.அக.);.

ம., க. அதிரக்த.

     [அதி + அரத்தம்.]

அதியருவதம்

அதியருவதம் adiyaruvadam, பெ. (n.)

   1. ஏற்கெனவே யுள்ள கழலைமேற் புறப்படும் மற்றொரு கரையாக் கழலைக் கட்டி; an incurable tumour cropping upon another existing one, secondary tumour.

   2. ஒரே காலத்தில் அல்லது ஒன்றன் பின் ஒன்றாக எழும்பும் பல கழலைக் கட்டிகள்; numerous contiguous tumours cropping up simultaneously or one after another, multiple tumour (சா.அக.);.

     [அதி + அருவதம்.]

அதியரையன்

அதியரையன் adiyaraiyaṉ, பெ. (n.)

   மீன் வலைஞர் தலைவன்; chief of fishermen.

     “இலங்கதி யரையனம் மன்பன்” (திருவால வா. 22;9);.

     [அதி + அரையன்.]

அதியர்

அதியர் adiyar, பெ. (n.)

   அதிகமான் குடியினர்; name of the line of Adigamān, a branch of the Ceras.

     “ஆர்கலி நறவி னதியர் கோமான்” (புறநா. 91; 3);.

அதியர்கோமான்

அதியர்கோமான் adiyarāmāṉ, பெ. (n.)

   அதிகர்குடித் தலைவனான அதியமான் நெடுமானஞ்சி; Adiyaman, a chief of a branch of the Cēras.

     “ஆர்கலி நறவி னதியர் கோமின்

போரடு திருவிற் பொலந்தா ரஞ்சி” (புறநா. 91 ; 3-4);.

     [அதியன் → அதியர் + கோமான். கோ + மகன் – கோமகன் → கோமான்.]

அதியாச்சிரமம்

அதியாச்சிரமம் adiyācciramam, பெ. (n.)

   வாழ்க்கைநிலை நான்கும் கடந்த நிலை (சி.சி.8,32,சிவாக்.);; the Order beyond the four acciramam.

     [Skt. ati + ä-sirama → த. அதியாச்சிரமம்.]

அதியாத்துமிகம்

அதியாத்துமிகம் adiyāddumigam, பெ. (n.)

   1. உயிருக்குரியது; relating to the soul.

   2. இறையாதன் (பரமாத்துமா);; the supreme spirit (சா.அக.);.

     [Skt. ati + atmika → த. அதியாத்துமிகம்.]

அதியாமம்

அதியாமம் adiyāmam, பெ. (n.)

   அறுகம்புல் (மூ.அ.);; Cynodon grass (செ.அக.); – (சா.அக.);

   1. அருகம்புல்; couch grass, Agrostis linearis.

   2. முயற்புல்; Cynodon grass, Cymodon dectylon.

 அதியாமம் adiyāmam, பெ. (n.)

   1. அறுகம் புல்; couch grass, Agrostis linearis.

   2. முயற்புல்; cynodon grass, cynodon dactylon (சா.அக.);.

அதியால்

 அதியால் adiyāl, பெ. (n.)

   பெரியோருக்கிடுங் காணிக்கை; present or offering made to a superior, nuzzer.

     [U. hadiya → த. அதியால்.]

அதியுச்சம்

 அதியுச்சம் adiyuccam, பெ. (n.)

     [அதி + உச்சம். உத்தி → உச்சி → உச்சம்.]

அதியுமிழ்-தல்

அதியுமிழ்-தல் adiyumiḻdal,    2 செ.குன்றாவி. (v.t.)

   1. அதிகமாக வாய்நீரூறலால் அடிக்கடி துப்புதல்; constant spitting owthg to excessive flow of saliva.

   2. இதன் (ரச); மருந்தைத் தவறாகப் பயன்படுத்தலால் அளவிற்கு மிஞ்சி வாய்நீர் ஒழுகல்; abnormal flow of saliva due to misuse of mercury drugs, Mercurialism alias Mercury ptyalism (சா.அக.);.

     [அதி + உமிழ்தல்.]

அதியோகம்

அதியோகம் adiyōkam, பெ. (n.)

   நற்கோள் நிலையுள் ஒன்று (விதான. காதக. 23. உரை);;     [Skt. ati + yoga → த. அதியோகம்.]

அதியோனிப்பூப்பு

 அதியோனிப்பூப்பு adiyōṉippūppu, பெ. (n.)

   பூப்பெய்தற்கு முன்னதாகவே பிறப்புறுப்புகள் விரைவாக வளர்ச்சியடைதல்; excessive activity of the genital glands, resulting in precocious puberty, genital over-development etc., Hyper genitalism (சா.அக.);.

     [அதியோனி + பூப்பு.]

     [Skt. ati + yõni → த. அதியோனி.]

அதியோமகம்

 அதியோமகம் adiyōmagam, பெ. (n.)

   சிவப்பு வாடா மல்லி; red globe ever lasting jasmine, Gomphrena globosa (சா.அக.);.

அதிர வீசுங்கை

அதிர வீசுங்கை atiravīcuṅkai, பெ. (n.)

நூற்றியெட்டு

   ஆடலியக்கங்களில் ஒன்று; one of 108 dance movements.

     [அதிர+வீசும்+கை]

அதிரசக்கட்டை

 அதிரசக்கட்டை atiracakkaṭṭai, பெ. (n.)

   அதிரசத்தில் உள்ள எண்ணெயை அழுத்தி வடிக்குமாறு செய்யப்பட்ட இருபகுதிகளைக் கொண்ட மரக்கருவி; a twin wooden plank need to squeeze extract oil in fried rie Cake.

      [அதிரசம்+கட்டை]

     [P]

அதிரசம்

அதிரசம்1 adirasam, பெ. (n.)

   1. பலவகைப் பூண்டுகளின் பெயர்; the names of various plants.

   2. இதளியம்; mercury.

   3. ஒரு தித்திப்புக் குடிநீர்; a sweet drink like syrup mixed with water (சா.அக.);.

     [Skt. ati + rasa → த. அதிரசம்.]

 அதிரசம்2 adirasam, பெ. (n.)

   வெல்லப்பாகில் அரிசிமாவைக் கலந்து எண்ணெயில் சுட்டு உருவாக்கப்படும் ஒருவகை திண்பண்டம்; a kind of thick flat round cake made by frying a sweetened rice flour (கிரியா.);.

த.வ. பணியாரம்.

     [Skt. ati + rasa → த. அதிரசம்.]

அதிரடி

அதிரடி adiraḍi, பெ. (n.)

   1. பெருங்கலக்கம்; violent agitation.

     “அச்சந் திகிலு மதிரடியுஞ் சொற்பனமும்” (பஞ்ச. திருமுக. 720);.

   2. மிரட்டு (நெல்லை);; bluff (Tn.);.

   3. கடுவிலை; excess, as of prices.

விலை அதிரடியாயிருக்கிறது (உ.வ.);.

   4. கடும்பேச்சு; violent language.

     [அதிர் + அடி.]

அதிரடிக்காரன்

 அதிரடிக்காரன் adiraḍikkāraṉ, பெ. (n.)

   கேட்பார்க்கு அதிர்ச்சி அல்லது அச்சம் உண்டாகுமாறு உரத்த குரலிற் கடுமையாகப் பேசுபவன்; boisterous fellow.

     [அதிர் + அடி + காரன்.]

அதிரடிப்படை

 அதிரடிப்படை atiraṭippaṭai, , பெ. (n.)

   திடுமென தாக்குதல் நடத்தத் தேர்ந் தெடுக்கப்பட்ட மறவர் குழு; commando Squad.

     [அதிரடி+படை]

அதிரதன்

அதிரதன் adiradaṉ, பெ. (n.)

   தேரோட்டி (பாரத. அணிவ. 1.);; warrior who fights from his car with warriors innumerable, one of four tarvirar q.v.

     [Skt. ati-ratha → த. அதிரதன்.]

அதிரதம்

அதிரதம் adiradam, பெ. (n.)

   தேர்வகை நான்கனு ளொன்று (ஶ்ரீபத்ம. தென்றல் விடு. 67, குறிப்பு);; a class of chariots, one of four iradam, q.v.

     [Skt. ati-ratha → த. அதிரதம்.]

அதிரர்

அதிரர் adirar, பெ. (n.)

   அசுரர்; Asuras.

     “அதிரர் தேவ ரியக்கர்” (தேவா. 5.32;8);.

     [அசுரர் → அதிரர்.]

அதிரல்

அதிரல் adiral, பெ. (n.)

   1. நடுங்கல்; trembling.

   2. காட்டுமல்லிகை; wild jasmin(e);.

     ‘விரிமலர் அதிரலும்’ (சிலப். 13 ; 156, அரும்.);.

   3. புனலி (மோசிமல்லிகை);; hog-creeper.

     “அதிரல் பூத்த ஆடுகொடிப் படாஅர்” (முல்லைப். 51); (செ. அக.);

   புனலிப்பூ; bastard rosewood climber, Dalbergia volubilis (சா.அக.);.

   4. அடித்தூறு; spreading base of a tree’s trunk, stump (W);.

 அதிரல் atiral, பெ. (n.)

   ஒரு வகைக் கொடி; a creeper, dillenia Indica.

     [அதிர்-அதிரல்]

அதிராகம்

 அதிராகம் adirākam, பெ. (n.)

   கந்தகம் (மூ.அ.);; sulphur.

அதிராகு-தல்

 அதிராகு-தல் adirākudal, செ.கு.வி. (v.i.)

   பருவ முற்ற கடாரி இணைசேரக் காளையைத் தேடுதல்; urge formatting aroused in cow.

கடாரி அதிராகியுள்ளது (கொங்.வ.);.

     [அதிர்+ஆதல்]

அதிராசன்

 அதிராசன் adirācaṉ, பெ. (n.)

   பேரரசன் (insc.);; emperor.

த.வ. மன்னர்மன்னன், கோவேந்தன்.

     [அதி + ராசன்.]

     [Skt.. adhi → த. அதி.]

அரசு → அரசன் → ராசன்.

அதிராத்திரம்

அதிராத்திரம் adirāddiram, பெ. (n.)

   திங்கள் வேள்வி வகைகளிளொன்று (திருக்காளத். பு. 7, 43);; variety of the Jyotistoma, the main type of the soma sacrifice.

     [Skt. ati-ratra → த. அதிராத்திரம்.]

அதிராத்திரியாசி

அதிராத்திரியாசி adirāddiriyāci, பெ. (n.)

கற்றுவல்ல பார்ப்பானுக்குரியதோர் பட்டப் பெயர்;(s. i.i. v. 161.);.

 a title of learned Brahmins.

     [Skt. atiratra + yajin → த. அதிராத்திரியாசி.]

அதிராம்பட்டினம்

 அதிராம்பட்டினம் atirāmpaṭṭiṉam, பெ. (n.)

தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரு கடற்கரை நகரம்.

 Name of the village in Tanjavur

     [எதிரான்(இளவரசர்-அதிரான்+பட்டினம்]

அதிராம்பை

 அதிராம்பை adirāmbai, பெ. (n.)

   பொற்றலைக் கையாந்தகரை (மலை.);; a medicinal herb (செ.அக.);; eclypta with yellow flowers, Marygold verbesina, Wedelia calendulacea (சா.அக..);.

அதிராயம்

 அதிராயம் adirāyam, பெ. (n.)

   இறும்பூது (அதிசயம்); ; amazement, wonder (W.);.

அதிராவடிகள்

 அதிராவடிகள் adirāvaḍigaḷ, பெ. (n.)

   மூத்த பிள்ளையார் திருமும்மணிக்கோவையின் ஆசிரியரான ஒரு சிவனடியார் (பதினொ.);; name of a Šaiva saint, author of the Mütta Pillaiyar Tirumummanikkövai.

அதிரி

 அதிரி adiri, பெ. (n.)

   கல்; stone (சா.அக.);.

அதிரிகர்ணி

 அதிரிகர்ணி adirigarṇi, பெ. (n.)

   காக்கணம்; a plant, crow’s beak, Clitoral ternatea (சா.அக.);.

அதிரிசன்

 அதிரிசன் adirisaṉ, பெ. (n.)

   கண் பார்வை இல்லாதவன்; a blind man (சா.அக.);.

அதிரிசம்

அதிரிசம் adirisam, பெ. (n.)

   1. குருடு; blindness.

   2. காண்குறவியலாமை; incapability of seeing (சா.அக.);.

அதிரிசயம்

அதிரிசயம் adirisayam, பெ. (n.)

   1. காணக்கூடும் பொருளைக் காண்குறவியலாமற் செய்யும் ஒரு கலை (வித்தை);; the art of rendering a visible thing invisible.

   2. தன்னைப் பிறர் பார்க்காதபடி மறைத்துக் கொள்ளும் கலை(வித்தை);, மறைப்பு மையைக் கொண்டு சித்தர் செய்யும் கலை; the art of making oneself invisible to others or making things invisible, performed art of Siddhars with the help of a magic unguent prepared by them (சா.அக.);.

த.வ. மைக்கட்டு, கண்கட்டுக்கலை.

அதிரிசாரம்

அதிரிசாரம் adiricāram, பெ. (n.)

   1. இரும்பு; iron.

   2. கற்சத்து; essence of stone.

   3. கல்மதம்; a fossil exuding from rocks, Asphaltum (சா.அக.);.

     [அதிரி + சாரம்.]

     [Skt. atiri → த. அதிரி.]

சாறு → சாரம்.

அதிரிசியம்

 அதிரிசியம் adirisiyam, பெ. (n.)

அதிரிசயம் பார்க்க;see adirisayam (சா.அக.);.

அதிரிச்சியம்

அதிரிச்சியம் adiricciyam, பெ. (n.)

   பண்டங்களைப் பிறர் கண்ணிற் காணக்கூடாமல் மறைக்கும் கலை (வித்தை);; art of making visible objects invisible.

     ‘புசரிலா வதிரிச்சிய மஞ்சனம்’ (திருவிளை. எல்லாம் 17);.

     [Skt. adrsya → த. அதிரிச்சியம்.]

அதிரித்தம்

அதிரித்தம் adiriddam, பெ. (n.)

   மிகையானது; that which is greater.

     “ஆணவமல சாமர்த்தியத்தினைக் காட்டிலும் அதிரித்தம்” (சிவசம.43);.

     [Skt. ati-rikta → த. அதிரித்தம்.]

அதிருக்கு

 அதிருக்கு adirukku, பெ. (n.)

   கண் பார்வை தெரியாமை; blindness (சா.அக.);.

அதிருசன்

 அதிருசன் adirusaṉ, பெ. (n.)

அதிரிசன் பார்க்க;see adirisan (சா.அக.);.

அதிருசியம்

அதிருசியம் adirusiyam, பெ. (n.)

   1. காணக் கூடாதது (சித். மர. கண். 3);; that which is invisible.

   2. அறுபத்து நாலு கலையுள் தன்னைக் பிறர் காண்குறவொட்டாமல் மறைக்கும் கலை; art of making oneself invisible, one of arupattunalu-Kalai, q.v.

த.வ. காண்பிலி.

     [Skt. a-drsya → த. அதிருசியம்.]

அதிருட்டக்கட்டை

அதிருட்டக்கட்டை adiruṭṭakkaṭṭai, பெ. (n.)

   1. நற்பேறின்மை (இ.வ.);; lack of good fortune.

   2. அதிட்டவீனன் (இ.வ.);; one who suffers ill-fortune.

     [அதிருட்ட(ம்); + கட்டை.]

     [Skt. a-drsta → த. அதிருட்டை.]

கள் → கட்டை.

அதிருட்டசாலி

 அதிருட்டசாலி adiruṭṭacāli, பெ. (n.)

   நற்பேறுடையான்; fortunate person.

     [அதிருட்டம் + சாலி.]

     [Skt. a-drsta → த. அதிருட்ட(ம்);.]

சால்→ சாலி.

அதிருட்டபரதந்திரத்துவம்

அதிருட்டபரதந்திரத்துவம் adiruṭṭabaradandiradduvam, பெ. (n.)

   அறப்பயன் அறங்கடை வயத்தனாகை (விவேகசிந். 3);; being subject to the results to punniyam and pavam.

     [அதிருட்டம் + பரம் + தந்திரம் + தத்தும்.]

     [Skt. a-drsta → த. அதிருட்டம். Skt. adhvan → த. அத்துவம்.]

அதிருட்டபோக்கியம்

அதிருட்டபோக்கியம் adiruṭṭapōkkiyam, பெ. (n.)

   மறுபிறவியில் துறக்க நிரய (சொர்க்க நரக);ங்களில் நுகரும் நுகர்ச்சி (சி.சி. 2, 39, ஞானப்);; effects of unseen actions, experienced of after-life.

     [Skt. a-drsta + bhogya → த. அதிருட்டபோக்கியம்.]

அதிருட்டம்

அதிருட்டம் adiruṭṭam, பெ. (n.)

   1. ஐம்பொறிகளால் காணப்படாதது; that which cannot be perceived by the senses.

   2. பார்வைக்கு எட்டாதது; that which is beyond the reach of vision.

   3. ஊழ்; destiny, luck.

   4. நல்லூழ்; good luck.

   5. குருவிடம் முழுமையாகப் படைக்கை (பரநியாசம்); ;     [Skt. a-drsta → த. அதிருட்டம்.]

அதிருட்டயத்தினம்

அதிருட்டயத்தினம் adiruṭṭayaddiṉam, பெ. (n.)

   பயன்தரும் முயற்சி; fruitful attempt.

     “தேவர் செய்தருளின அதிர்ஷ்டயத்னமாய் இப்படிப் பலித்தது” (S. i.i. vi, 189);.

     [Skt. a-drsta + yatna → த. அதிருட்டயத்தினம்.]

அதிருட்டானுகூலம்

அதிருட்டானுகூலம் adiruṭṭāṉuālam, பெ. (n.)

   நற்பேறு பயன்; luck.

     “இவனுடைய அதிருஷ்டானுகூலம் எப்படியோ?” (தமிழறி.24.);.

     [Skt. a-drsta+anu-kula → த. அதிருட்டானுகூலம்.]

அதிருத்ரகும்மி

 அதிருத்ரகும்மி atirutrakummi, பெ. (n.)

   கும்மிப்பாடலின் ஒருவகை, விரைவுக்கும்மி; a play of laddies.

     [அதி+உருத்திரம்+கும்மி]

அதிருப்தி

 அதிருப்தி adirupdi, பெ. (n.)

   பொந்திகையின்மை, நிறைவின்மை; dissatisfaction, displeasure.

     ‘அதிருப்தியான பதில் கூறினார்’.

த.வ. மனக்குறை.

     [Skt.a-trpti → த. அதிருப்தி.]

அதிருப்பை

 அதிருப்பை adiruppai, பெ. (n.)

   பொற்றலைக் கையாந்தகரை; eclypta with yellow flowers marygold verbesina, WedeIlia calendulacea (சா.அக.);.

அதிரூதை

அதிரூதை adirūdai, பெ. (n.)

   33 அகவை முதல் 50 அகவைக்குட்பட்டவள்; a woman of any age between 33-50 (சா.அக.);.

     [Skt. ati + rudai → த. அதிரூதை.]

அதிரூபம்

 அதிரூபம் adirūpam, பெ. (n.)

   தான்றிக்காய்; belleric myrobalan, or devil’s abode, Terminalia belerica (சா.அக.);.

     [P]

அதிரோகம்

அதிரோகம்1 adirōkam, பெ. (n.)

   கருக்குநீர் (வின்.);; consumption.

     [Skt. ati-roga → த. அதிரோகம்.]

 அதிரோகம்2 adirōkam, பெ. (n.)

   1. எலும்புருக்கி (சய ரோகம்);; consumption.

   2. ஈளை நோய்; asthma.

   3. தொந்த நோய்; chronic disease (சா.அக.);.

     [Skt. ati+roga → த. அதிரோகம்.]

அதிரோமம்

 அதிரோமம் adirōmam, பெ. (n.)

   உடம்பு முழுவதும் மயிர் முளைத்தல்; growth of hair all over the body, Hypertrichosis universalis (சா.அக.);.

     [Skt. ati+roma → த. அதிரோமம்.]

அதிர்

அதிர் adir, பெ. (n.)

   1. நடுக்கம்; shivering.

   2. அச்சம்; fear.

   3. கடுவிலை; exorbitant demand or price.

அதிர்-தல்

அதிர்-தல் adirdal,    2 செ.கு.வி. (v.i.)

   1. குலுங்குதல்; to shake, quake, tremble, as by an earthquake, by the fall of a tree, by the rolling of chariots, by the loud report of a gun.

நிலமதிர்ந்தது (உ.வ.);.

     “பெண்ணொருத்தி பேசிற் பெரும்பூமி தானதிரும்” (நீதிவெண். 31);. ‘அதிர அடித்தால் உதிர விளையும்’, ‘அதிர ஆடிக் குடியைக் கெடுத்தாள்’ (பழ.);.

   2. உடம்பு நடுங்குதல்; to be startled, as by the sound of a cannon.

   3. உளம் நடுங்குதல்; to be alarmed, as by reports of robbery, by the prevalence of an epidemic.

     “அதிர வருவதோர் நோய்” (குறள், 429);.

   4. விசையாகத் துடித்தல்; to vibrate.

   5. முழங்குதல்; to resound, as thunder, to reverberate, to sound as a drum, to roar as a lion.

     “அதிர மாமுழவு” (திருவாலவா. 37 ; 23);.

   6. எதிரொலித்தல்; to echo.

     “குரல்கேட்ட கோழி குன்றதிரக் கூவ” (பரிபா. 8;19);.

ம. அதிருக ; க. அதிரு ; தெ. அதரு ; து. அதுருனி.

அதிர்-த்தல்

அதிர்-த்தல் adirddal,    4 செ.கு.வி. (v.i.)

   1. முழங்குதல்; to thunder, roar, as the sea.

     “மதித்த வேலையல் வேலையி னுடைந்தென வாய்விட் டதிர்த்த” (கந்தபு. தக்க ததீசியுத். 325);.

   2. கலங்குதல்; to be confused.

     “சுற்றானதிர்ப்பிற் பொருளதிர்க்கும்” (நான்மணிக். 21);.

–, 4 செ.குன்றாவி. (v.t.);

   1. அசைத்தல்; to shake.

   2. நடுங்கச் செய்தல்; to cause alarm by shouting, intimidate.

     “பின்னதிர்க்குஞ் செய்வினை” (நான்மணிக். 69);.

   3. அதட்டுதல்; to rebuke, menace.

     “அரிப்பதாக னுரகப் பதாகனை யதிர்த்து” (பாரத. பதினெட். 186);.

   4. சொல்லுதல்; to say, tell (பிங்.);.

   5. அசைத்துத் தள்ளுதல் (சங்.அக.);; to shake and push away.

     “அஞ்செழுத்தா லதிர்த்தெழுந்து” (கோயிற்பு. பாயி. 9);.

அதிர்காணி

அதிர்காணி adirkāṇi, பெ. (n.)

   காணியாட்சியுரிமை; proprietary right in village lands.

     ‘தனக்கு அதிர்காணியாக’ (S.I.I. iv, 156);.

     [அதிர் + காணி.]

அதிர்சன்னி

அதிர்சன்னி adircaṉṉi, பெ. (n.)

   1. இசிவு நோயால் ஏற்படும் அதிர்ச்சி; tremors in delirium.

   2. தாங்கமுடியா நோவு, அடி, காயம், புண் முதலியவற்றாலேற்படும் அதிர்ச்சி யிசிவு; delirium as a result of unbearable pain, severe blow, wound, ulcer, etc., Traumatic delirium.

     [அதிர் + சன்னி. Skt. sannipädå → த. சன்னி = இசிவு.]

அதிர்ச்சி

அதிர்ச்சி adircci, பெ. (n.)

   1. அசைவு (சா.அக.);; shaking.

   2. அதிகப்படுதல் (சங்.அக.);; increase.

   3. நடுங்குகை (திவா.);; trembling as by an earthquake, from thunder.

   4. அச்சம்; fear.

   5. பேரோசை (திவா.); ; loud noise or report.

   6. பிளிறல், உரறல்; roaring.

     “காய்சினக் களிற திர்ந்திடு மதிர்ச்சி” (உபதேசகா. விபூதி. 118);.

   7. மின்வலியால் நரம்பிற்கும், கடுந்துயரச் செய்தியால் மனத்திற்கும் ஏற்படும் திடுந்தாக்கு; electric shock or sudden and violent emotion caused by unbearable tragic news.

க. அதிருவிகெ

     [அதிர்த்தி → அதிர்ச்சி.]

அதிர்த்தி

அதிர்த்தி adirddi, பெ. (n.)

   அதிர்ச்சிப் பேரோசை; loud noise or report.

     ‘அதுதான் இவன் கன்றுமறித் தோடுகிற வதிர்த்தியாலும் (திவ். பெரியாழ். 3.2 ; 3, வியா.);.

     [அதிர் → அதிர்த்தி.]

அதிர்ப்பு

அதிர்ப்பு adirppu, பெ. (n.)

   1. அதிர்ச்சி, நடுக்கம்; trembling.

     “இப்படி யருஞ்சம ரிழைத்திடு மதிர்ப்பினில்” (உபதேசகா. சூராதி. 28);.

   2. எதிரொலி; echo.

     “எதிர்குதி ராகின் றதிர்ப்பு” (பரிபா. 8;21);.

க. அதிர்ப்பு

     [அதிர் → அதிர்ப்பு.]

அதிர்வசிரசு

அதிர்வசிரசு adirvasirasu, பெ. (n.)

   நூற்றெட்டு மறையின் அறிவுப் பகுதிகளிளொன்று (சி.சி. 8, 11, மறைஞா.);; name of an Upanisad.

     [Skt. atharvasiras → த. அதிர்வசிரசு.]

அதிர்விலை

 அதிர்விலை adirvilai, பெ. (n.)

   மன நடுங்கத் தக்க கடுவிலை; exorbitant demand, fabulous price.

அதிர்வு

அதிர்வு adirvu, பெ. (n.)

   1. நடுக்கம்; shaking trembling.

   2. யாழ்நரம்பின் அதிர்ச்சி; tremolo in a stringed instrument.

     “செம்பகை யார்ப்பே யதிர்வே கூடம்” (சிலப். 8 ; 29);.

க. அதிர்கெ ; தெ. அதுரு.

     [அதிர் → அதிர்வு.

அதிர்வெடி

 அதிர்வெடி adirveḍi, பெ. (n.)

அதிர்வேட்டு பார்க்க;see adir-véttu.

அதிர்வேட்டு

அதிர்வேட்டு adirvēṭṭu, பெ. (n.)

   1. குழாய்வெடியோசை; explosion of a rocket, usu. in temple festivals.

   2. வெடிகுழாய் (யாழ்ப்.); ; rocket (J.);.

தெ. அதுருவேடு

அதிறாப்பை

 அதிறாப்பை adiṟāppai, பெ. (n.)

   பொடுதலை; a plant, Verbena nodiflora.

அதிலவிதம்

 அதிலவிதம் adilavidam, பெ. (n.)

   வெள்ளிலோத்திரம்; bark of a silvery-white tree (lodram);, Simplocos racemosa, a foreign plant (சா.அக.);.

அதிலவோடகம்

 அதிலவோடகம் adilavōṭagam, பெ. (n.)

   கேரளமண்ணிற் காணக்கூடும் ஒரு செடி; a plant found in Malabar, Justicia bivalvis (சா.அக.);.

     [P]

அதிலி

 அதிலி adili, பெ. (n.)

   ஒருவகை வேர்; a kind of root.

     ‘காக்கணம் வேர், அதிலிவேர், பாலை வேர் இம் மூன்றும் அரைத்துப் பாத மேற் பூச்சுச் செய்யவும், நச்சுத் தீண்டாது’

அதிலோகமருஞ்சாகம்

 அதிலோகமருஞ்சாகம் adilōkamaruñjākam, பெ. (n.)

   இதளிய கருப்பூரம்; muriate of mercury (சா.அக.);.

அதிலோகம்

 அதிலோகம் adilōkam, பெ. (n.)

   ஒரு மருந்துப் பண்டம் (இரச கருப்பூரம்); (வை.மூ.);; sublimate of mercury.

அதிவகா

 அதிவகா adivakā, பெ. (n.)

   ஒரு மருந்துச் சரக்கு; a bazaar drug called Indian atee, Aconitum heterophyllum (சா.அக.);.

த.வ. அதிவசம், அதிவிடயம்.

அதிவசம்

அதிவசம்1 adivasam, பெ. (n.)

   1. அதிவிடை; atis.

   2. வசம்பு; sweet flag.

     [Skt. ativisa → த. அதிவசம்.]

 அதிவசம்2 adivasam, பெ. (n.)

அதிவிடயம் பார்க்க;see adividayam (சா.அக.);.

அதிவசம்பு

 அதிவசம்பு adivasambu, பெ. (n.)

அதிவகா பார்க்க;see adivagā.

அதிவசம் → அதிவசம்பு.

அதிவன்னாச்சிரமி

அதிவன்னாச்சிரமி adivaṉṉāccirami, பெ. (n.)

அதிவர்ணாச்சிரமி (சூத. முக்தி. 5, 16.); பார்க்க;see adivarnaccirami.

     [அதி + வன்ன + ஆச்சிரமி.]

     [Skt. ati → த. அதி. Skt. asramin → த. ஆச்சிரமி.]

அதிவர்ணாச்சிரமி

 அதிவர்ணாச்சிரமி adivarṇāccirami, பெ. (n.)

   குலக்கேடன்; one who is above castes and orders.

     [அதி + வரணம் + ஆச்சிரமி.]

     [Skt. ati → த. அதி. Skt. asramin → ஆச்சிரமி.]

அதிவாசம்

அதிவாசம்1 adivācam, பெ. (n.)

   இறந்த நாட் சடங்குக்கு முதல்நாள் மேற்கொள்ளும் உண்ணா நோன்பு; fast on the day previous to that of the sraddha ceremony.

     [Skt. ati + vasa → த. அதிவாசம்.]

 அதிவாசம்2 adivācam, பெ. (n.)

   திருமணத்துக்கு முன் நிகழ்வாக நிகழ்த்துஞ் சடங்குவகை (சீவக. 2363, உரை);; a preparatory ceremony before marriage.

     [Skt. adhi + vasa → த. அதிவாசம்.]

அதிவாதநாடி

 அதிவாதநாடி adivādanāṭi, பெ. (n.)

   உடம்பில் வளி மிகுத்திருப்பதைக் குறிக்கும் நாடி நடை; pulsation indicating excess of hatulancy in the system.

     [அதி + வாத(ம்); + நாடி.]

 Skt. ati + vata → த. அதிவாதம்.]

நாழி → நாடி.

அதிவாதம்

அதிவாதம்1 adivādam, பெ. (n.)

   கடவுள் மங்கலஞ் செய்தற்குரிய சடங்கு (சிவதரு. சிவஞானதா. 71);; preliminary consecratory ceremony for invoking the presence of god in an image.

     [Skt. adhi + vada → த. அதிவாதம்.]

 அதிவாதம்2 adivādam, பெ. (n.)

   புனைந்துரை; exaggeration, hyperbole.

     [Skt. ati-vada → த. அதிவாதம்.]

அதிவாலகன்

 அதிவாலகன் adivālagaṉ, பெ. (n.)

   குழந்தை; infant.

அதிவாவிகம்

 அதிவாவிகம் adivāvigam, பெ. (n.)

   சிவப்பு மருதோன்றி; red-leaved fragrant nail dye, Lawsonia spinosa alias Barteria cristata.

அதிவிடயம்

 அதிவிடயம் adiviḍayam, பெ. (n.)

   ஒரு மருந்துச் சரக்கு; a bazaar drug called Indian atees, Aconitum heterophyllum.

     [P]

அதிவிடாகிகம்

 அதிவிடாகிகம் adiviṭāgigam, பெ. (n.)

   செம்முளரி; red rose.

அதிவிடை

அதிவிடை1 adiviḍai, பெ. (n.)

   ஒரு மருந்துச் செடி (தைலவ. தைல. 4);; atis, s.sh., Aconium heterophyllum.

     [Skt. ati-visa → த. அதிவிடை.]

 அதிவிடை2 adiviḍai, பெ. (n.)

அதிவகா பார்க்க;see adivaga.

     [Skt. ati + visa → த. அதிவிடை.]

அதிவியர்வை

 அதிவியர்வை adiviyarvai, பெ. (n.)

   மிகுதியாக வியர்வை காணல்; excessive sweating, Hyperephidrosis (சா.அக.);.

அதிவியாத்தி

 அதிவியாத்தி adiviyāddi, பெ. (n.)

அதிவியாப்தி (தருக்கசங்.); பார்க்க;see adiviyapti.

     [Skt. ati + vyapti → த. அதிவியாத்தி.]

அதிவியாப்தி

 அதிவியாப்தி adiviyāpdi, பெ. (n.)

   இலக்கியமல்லாததன் கண்ணும், இலக்கணம் சொல்லுங் குற்ம்;     [Skt. ati-vyapti → த. அதிவியாப்தி.]

அதிவிருட்டி

அதிவிருட்டி adiviruṭṭi, பெ. (n.)

   மிகுபெயல்; excessive rain.

     “கொள்ளை யதிவிருட்டி நீங்கும்” (குற்றா. தல. சிவபூசை. 46);.

     [Skt. ati + vrsti → த. அதிவிருட்டி.]

அதிவிருத்தம்

 அதிவிருத்தம் adiviruddam, பெ. (n.)

   வரம்பு மீறுகை (நாநார்த்த.);; transgression.

     [Skt. ati-vrtta → த. அதிவிருத்தம்.]

அதிவீரம்

 அதிவீரம் adivīram, பெ. (n.)

   பறங்கிப் பாடாணம்; a mineral poison.

அதிவீரராமபாண்டியன்

அதிவீரராமபாண்டியன் adivīrarāmapāṇṭiyaṉ, பெ. (n.)

   16ஆம் நூற்றாண்டில் திருநெல்வேலி நாட்டை யாண்டவரும், நைடதம், காசி காண்டம் முதலிய பனுவல்களின் ஆசிரியரும், இறுதிக்காலப் பாண்டியருள் ஒருவருமான சிற்றரசர்; name of a later Pandya king of Thirunelvéli, author of the Naidadam, Kašikandam and other works during 16th century.

அதிவெப்பம்

 அதிவெப்பம் adiveppam, பெ. (n.)

   மிக்க கொதிப்பு; high temperature, excessive heat, Hyperthermia (சா.அக.);.

அதிவெள்ளை

 அதிவெள்ளை adiveḷḷai, பெ. (n.)

   ஒரு செயற்கை நஞ்சு (பரங்கிப் பாடாணம்);; sublimate of mercury (சா.அக.);.

அதிவெள்ளைச்செந்தூரம்

 அதிவெள்ளைச்செந்தூரம் adiveḷḷaiccendūram, பெ. (n.)

அதிவெள்ளை பார்க்க;see adi-vellai.

     [அதி + வெள்ளை + செந்தூரம்.]

அதிவேகதீபனம்

 அதிவேகதீபனம் adivēkadīpaṉam, பெ. (n.)

   யானைப் பசி; excessive hunger, Bulimia.

அதீசாரம்

 அதீசாரம் atīcāram, பெ. (n.)

அதிசாரம் பார்க்க;see adi-saram.

     [Skt. ati-sära → த. அதிசாரம்.]

அதீதன்

அதீதன் atītaṉ, பெ. (n.)

   1. மண், பெண், பொன் என்னும் மூன்றும் கடந்தவன்; one who has surrendered all the three that is naturally attractive in this world i.e., world, women and wealth.

   2. அன்பினின்றும் விடுவிக்கப்பட்டவன்; one who is released from the clutches of Maya.

     [Skt. atita → த. அதீதன்.]

அதீதப்பிரசவம்

 அதீதப்பிரசவம் atītappirasavam, பெ. (n.)

அகாலப்பிரசவம் பார்க்க;see akala-p-pirasavam.

     [Skt. atita + pra-sava → த. அதீதப்பிரசவம்.]

அதீதம்

அதீதம்1 atītam, பெ. (n.)

   1. கடந்தது (சி.சி.1.57);; that which has gone, beyond, risen above.

   2. அதீதவெடுப்பு (பரத. தாள.43); பார்க்க;see adida-y-eduppu (Mus.);

 variety of kiragam, q.v.

     [Skt. atita → த. அதீதம்.]

 அதீதம்2 atītam, பெ. (n.)

   1. பொன்; gold.

   2. எட்டாதது; that which is beyond reach.

   3. கொன்றை மரம்; cassia tree.

     [Skt. atita → த. அதீதம்.]

அதீதர்

 அதீதர் atītar, பெ. (n.)

   அறிவர்; ascetics, sages, as having risen above the world.

த.வ. பெற்றியர், சித்தர்.

     [Skt. atita → த. அதீதர்.]

அதீதவிடந்தீண்டி

 அதீதவிடந்தீண்டி atītaviḍandīṇḍi, பெ. (n.)

   நாகப்பாம்பு; a very venomous reptile, cobra.

     [அதீதவிடம் + தீண்டி.]

     [Skt. atita + visa → த. அதீதவிடம்.]

     [P]

அதீதவெடுப்பு

 அதீதவெடுப்பு atītaveḍuppu, பெ. (n.)

   குரல் முன்னும் தாளம் பின்னும் வரும் எடுப்பு வகை;   வடமொழி முன்னொட்டு வகை;     [அதீத(ம்); + எடுப்பு.]

     [Skt. atita → த. அதீத(ம்);.]

அதீதாவத்தை

அதீதாவத்தை atītāvattai, பெ. (n.)

   1. மூலாதாரத்தில் ஆதன் தங்கி அறிவற்ற நிலை (அவிச்சை); மாத்திரையில் வயப்படும் ஆதனின் ஐந்தாம் நிலை (சி.போ.3.6 சிற்.);; the transcendent-fifth state of the soul.

     [Skt. atita + avastha → த. அதீதாவத்தை.]

அதீதியம்

அதீதியம் atītiyam, பெ. (n.)

   ஆசையின்மை (சிந்தா. நி. 143);; absence of desire or attachment.

     [Skt. atindriya → த. அதீதியம்.]

அதீந்திரியம்

அதீந்திரியம் atīndiriyam, பெ. (n.)

   பொறியறிவிற்கெட்டாதது (மச்சபு. பிரமாண்ட. 17);; that which is beyond the cognisance of the senses.

     [Skt. ati + indriya → த. அதீந்திரியம்.]

அதீனம்

அதீனம்1 atīṉam, பெ. (n.)

   வயம்; influence, control.

     “சந்தமுறு பிராணவளி யதீன மேயாய்” (சூத. எக்கிய. பூ. 4, 4);.

     [Skt. adhina → த. அதீனம்.]

 அதீனம்2 atīṉam, பெ. (n.)

   1. உரிமை; right of possession.

   2. சார்பு; dependence.

     [Skt. adhina → த. அதீனம்.]

அதீபனம்

 அதீபனம் atīpaṉam, பெ. (n.)

   பசிவேட்கை யின்மை (யாழ்ப்.);; want of appetite, anorexia.

     [Skt. a-dipana → த. அதீபனம்.]

அதீரம்

 அதீரம் atīram, பெ. (n.)

   ஊக்கமின்மை; want of courage.

     [Skt. atita → த. அதீரம்.]

அது

அது adu, சு.பெ. (demons. pron.)

   1. பொதுவாக மெய்ம்முதற் சொல்லின்முன் ஆளப்படும் அஃறிணை யொருமைச் சேய்மைச் சுட்டுப் பெயர்; that, a demonstrative pronoun denoting a remote singular young child, animal or inanimate object, generally used before a consonant.

     ‘அததற்கு ஒரு கவலை ஐயாவுக்கு எட்டுக் கவலை’, ‘அது மூன்றே முக்கால் நாழிகை வாழ்வு’ (பழ.);.

   2. அஃறிணை யுலகைக் குறிக்கும் சுட்டுப்பெயர்; a pronoun denoting the inanimate world.

     “அவனவளதுவெனு மவைமூ வினைமையில்” (சி.போ. 1);.

   3. முற்கூறியதைக் குறிக்கும் சுட்டுப் பெயர்; a pronoun referring to something mentioned or a statement made before.

நேற்று ஒருமாம்பழம் தின்றேன்; அது மிக இனிமையாயிருந்தது. இந்தியா ஆங்கிலத்தை விடமுடியாதென்று, தலைமை மந்திரினியார் இந்திரா காந்தியம்மையார் தெரிவித்திருக்கின்றார்; அது மிக நல்ல செய்தி (உ.வ.);.

ம., க., கோத., துட., பட., குட. அது ; தெ. அதி ; து. அவு ; குரு. ஆத் ; கோண்., பர்., கொலா., அத் ; பிரா. ஏத்.

     [அ → அல் → அது. ஒ.நோ.; மெல் → மெது. இனி, ஆது → அது என்றுமாம்.]

 அது adu, இடை (part)

   1. அஃறிணையொருமை வினைமுற்றீறு ; a neut. sing, ending of the finite verb.

அது வந்தது (உ.வ.);

   2. காலங்காட்டும் தொழிற்பெயர் ஈறுகளுள் ஒன்று; a tense-showing vbl. n. ending.

அவன் வந்தது எனக்குத் தெரியாது (உ.வ.);.

   3. ஆறாம் வேற்றுமை யொருமை யுருபு; a gen. ending followed by a neut. sing.

     “ஆற னொருமைக் கதுவும் ஆதுவும் பன்மைக் கவ்வு முருபாம்” (நன். 300);. எனது கை, எனது பொத்தகம் (உ.வ.);.

   4. முதனிலைப்பொருளீறுகளுள் (பகுதிப்பொருள் விகுதிகளுள்); ஒன்று; an expletive noun suff.

     “உருவினுயிர் வடிவதுவு முணர்ந்திலர்” (சி.சி. 8;36);.

     “மரமது மரத்திலேறி மரமதைத் தோளில் வைத்து” (தனிப்பா. தி. 2; 573);.

அது இது எனல்

அது இது எனல் aduidueṉal, தொ.பெ. (vbl.n.)

   1. ஏதேனும்-ஒன்றுபற்றி முறையிடுதல்; to complain about something or other.

என்னிடத்தில் அது இது என்று சொல்லக் கூடாது (உ.வ.);.

   2. ஏதேனும் ஒன்று கேட்டல்; to ask something or other.

என்னிடம் அது இது என்று கேட்கக்கூடாது (உ.வ.);.

     [என் + அல் (தொ.பெ. ஈறு);.]

அதுகுபடி

அதுகுபடி adugubaḍi, பெ. (n.)

   1. தரிசு நிலத்தைக் குறைந்த வரியிற் பயிரிட விடுதல்; giving waste land to a cultivator at a low rate of assessment on condition of his cultivating it (W.G.);.

   2. பயிரிடத் தகுதியாக ஒரு நிலத்தைத் திருத்தும்பொருட்டுக் குறைந்த தீர்வைக்குக் கொடுக்கப்படும் பாசன நீர்; supplying water to a cultivator at a low rate of assessment on condition of his bringing a piece of unoccupied land into cultivation (R.T.);.

தெ. அதுகுபடி

     [ஒருகா. அதுக்கு → அதுகு + படி.]

அதுக்கம்

அதுக்கம் adukkam, பெ. (n.)

   1. அமுக்கம்; reduced condition, as of a boil.

   2. ஒதுக்கம்; stuffing into the mouth.

   3. அடிப்பு; beating.

     [ஒடுங்கு → ஒதுங்கு → அதுங்கு → அதுக்கு. அதுக்கு + அம் – அதுக்கம்.]

அதுக்கு

 அதுக்கு adukku, பெ. (n.)

   ஏனங்களின் ஒடுக்கு; state of being pressed in as of parts of a vessel, dent, or depression in a metal utensil.

     [அதுங்கு → அதுக்கு.]

அதுக்கு-தல்

அதுக்கு-தல் adukkudal,    5 செ.குன்றாவி, (v.t.)

   1. அழுக்குதல்; to press with the fingers, as a ripe fruit or boil.

   2. பிசைதல்; to squeeze, pinch, as the stomach in grief.

     “அவ்வயிறதுக்கும்” (திருவிளை. வன்னியுங். 41);.

   3. கடித்தல்; to bite, as one’s lips.

     “நண்ணுந் துயரந்தனை நோக்கி நகையாச் சினவி யித ழதுக்கி” (கூர்மபு. தக்கன்வே. 32);.

   4. நறுக்குதல்; to cut into pieces, mince as vegetables.

     “வீரநோய் வெகுளி தோற்றி விழுப்பற வதுக்கி யிட்டுக் காரகற் பொரிப்பர்” (சீவக. 2771);.

   5. மெல்லுதல்; to chew.

     “வாயினி லதுக்கிப் பார்த்து” (பெரியபு. கண்ணப்ப. 118);.

   6. வாயிலடக்குதல்; to stuff into the mouth, as does a monkey.

   7. அடித்தல்; to slap with the hand, beat with a stick.

     “தாளிற மூர்க்க ரதுக்கலின்” (சீவக. 936);.

ம. அதுக்குக ; க. அதகு ; தெ. அதுமு ; து. அலமுனி.

     [ஒடுங்கு → ஒதுங்கு → அதுங்கு (த.வி.); – அதுக்கு (பி.வி.);.]

அதுக்கெடு-த்தல்

அதுக்கெடு-த்தல் adukkeḍuddal,    4 செ.கு.வி. (v.i.)

   ஏனங்களைத் தட்டி நெளிவெடுத்தல்; to remove a dent, smooth out the dented surface of a metal utensil.

     [அதுங்கு → அதுக்கு + எடு.]

அதுங்கு-தல்

அதுங்கு-தல் aduṅgudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. அமுங்குதல்; to be forced out or in by pressure, to be stuffed in, compressed.

   2. ஒதுங்குதல்; to draw to one side.

     [ஒடுங்கு → ஒதுங்கு → அதுங்கு.]

அதுட்டவிரணம்

 அதுட்டவிரணம் aduṭṭaviraṇam, பெ. (n.)

   சீழ், அரத்தம், சிலை நீர் முதலியன வடிந்தாலும், மருத்துவத்துக்கு ஆறும் காயம்; an ulcer that could heal under treatment though attended with discharges of fluid, blood and pus.

அதும்பு-தல்

அதும்பு-தல் adumbudal, செ.கு.வி. (v.i.)

   மொய்த்தல்; to Swarm.

     “முரல்வண் டதும்புங் கொழுந்தேன்” (திருவாச. 6;36);.

     [ஒல்லுதல் = பொருந்துதல், கூடுதல், ஒல் → அல் → அது → அதும்பு.]

அதும்பை

 அதும்பை adumbai, பெ. (n.)

   கவிழ்தும்பை; a flowering plant.

அதுலன்

அதுலன் adulaṉ, பெ. (n.)

   ஒப்பற்றவன்; one who is unequalled.

     “வான்மிசை யதுலன்” (காஞ்சிப்பு. இரணீச. 5);.

த.வ. ஒப்பிலி.

     [Skt. a-tula → த. அதுலன்.]

அதுலம்

அதுலம் adulam, பெ. (n.)

   1. ஒப்பற்றது;   ஈடு இணை இல்லாதது; that which is unequalled.

     “அசங்க மதுலம்” (கைவல்ய. சந்தே. 137);.

   2. ஒரு பேரெண் (வின்.);; a thousand quintillions.

     [Skt. atula → த. அதுலம்.]

அதுலிதம்

அதுலிதம் adulidam, பெ. (n.)

   அசைவின்மை (சிந்தா. நி. 120);; state of being at rest.

     [Skt. a-tulita → த. அதுலிதம்.]

அதெந்து

அதெந்து adendu, இடை. (int.)

அச்சந் தீருமாறு ‘அது என்ன?’ என்று அருளொடு வினவற் குறிப்பு’.

     “What is that?” as a question uttered by one to dispel the fears of his dependant or to encourage him.

     “ஆதியே அடியேனாதரித் தழைத்தால் அதெந்துவே யென்றரு ளாயே” (திருவாச. 29 ; 1);.

ம. அதெந்து

     [அது + எந்து. எது → எத்து → எந்து = என்னது? இனி, என்னது (என் + அது); → என்று (என் + து); → எந்து என்றுமாம். ஒ.நோ ; த. ஒன்று → க. ஒந்து.]

ஒருவன் துன்புற்று மேலோன் துணை வேண்டி விளிக்கும்போது, அம் மேலோன் அதென்னவென்று வினவுவது இயல்பே.

     “எத்தால் வாழலாம், ஒத்தால் வாழலாம்” என்னும் பழமொழியினின்று எது என்னுஞ் சொல்லிற்கு ‘எத்து’ என்னும் வடிவுண்மை அறியப்படும். ஆதலால், ‘அதெந்து’ என்னுங் கூட்டுச்சொல் திசைச் சொல் என்றும், தெலுங்கச்சொல் என்றும் கொள்வது தவறாம்.

அதே

அதே atē, சு.பெ. (demons. pron.)

   1. ‘அதுதான்’ என்று பொருள்படும் தேற்றேகாரம் பெற்ற படர்க்கை யொன்றன்பாற் சுட்டுப் பெயர்; a demons, pron. of the third person irr. sing. comb. with the emphatic particle ‘e’, and meaning,

     “It is the same’.

   2. ‘அதுதானா?’ அல்லது ‘அதுவா?’ என்று பொருள்படும் வினாவேகாரம் பெற்ற படர்க்கை யொன்றன்பாற் சுட்டுப்பெயர்; a demons. pron. of the third person irr. sing. comb. with the interrogative particle ‘e’ and meaning

     “Is it the same?” or

     “Is it that?”

—,

பெ.எ. (adj.);.

   அதுவேயான, அதையேயொத்த; the same, the very same.

அதே வண்டியில் நாங்களும் ஏறிக்கொண்டோம். அதே நிறத்தில் அவரும் சட்டையணிந்திருந்தார்.

__,

இடை. (part.);

   ஆம்; yes.

கூறுவோன்; ஒற்றுமையின்மையாலேயே மூவேந்தரும் வலிமை குன்றி ஆட்சியிழந்தனர். கேட்போன்; அதே.

ம., க., குட. அதே.

ஒ.நோ ; அஃதே

     [அது + ஏ (தேற்ற வினா இடைச்சொல்); – அதே.]

அதை-த்தல்

அதை-த்தல் adaiddal,    4 செ.கு.வி. (v.i.)

   1. வீங்குதல்; to swell, to be puffed up.

கன்னம் அதைத்திருக்கிறது.

   2. செருக்குதல்; to grow arrogant, become proud.

இவனுக்கு அதைத்துப்போயிற்று (வின்.);.

   3. தாக்கி மீளுதல்; to rebound, recoil.

அதைத்து விழுந்த பந்து.

   4. அலைதல்; to wander about.

     “உனை நாடி யதைத்தொழிந் தேன்” (திருமந். 1691);.

அதைப்பு

அதைப்பு adaippu, பெ. (n.)

   1. வீக்கம்; swelling.

   2. நீர்க்கோப்பு; dropsy, an unnatural collection of fluid in any cavity of the body.

   3. செருக்கு; pride.

   4. தாக்கி மீளல்; rebounding.

   5. விம்மல்; turgescence (சா.அக.);.

   6. =எலும்பினெழுச்சி; protuberance of a bone, tuberosity.

அதைரியம்

 அதைரியம் adairiyam, பெ. (n.)

   மனவுறுதியில்லா தன்மை; want of fortitude, timidity, dispiritedness.

     [Skt. a-dhairya → த. அதைரியம்.]

அதோ

அதோ atō, இடை (int.)

   சேய்மையிடத்தைச் சுட்டிக் கவனிக்கச்செய்தற் குறிப்பு; behold there!

     ‘இதோ’ என்பதற்கு எதிர்;

 look there! opp. ido.

     “அங்கதோ வுள்கறுத் தழகிற் றேய்ந்தது” (சீவக. 2679);.

ம. அதா ; க. அதோ.

     [அது → அதா → அதோ.]

அதோகதி

அதோகதி1 adōkadi, பெ. (n.)

   1. தாழ்நிலை; low state, degraded condition.

   2. நிரயம் (பிங்.);; hell.

   3. நிரய மேழனுளொன்று (பிங்.);; a hell, one of elu-naragam, q.v.

த.வ. வீழ்நிலை, கீழ்அளறு.

     [அதோ + கதி.]

     [Skt. adhas → த. அதோ.]

 அதோகதி2 adōkadi, பெ. (n.)

   கையறுநிலை; utter helplessness, miserable plight.

     ‘நீங்களும் போய்விட்டால் எந்நிலை அதோகதிதான்’.

த.வ. அவலம்.

     [அதோ + கதி.]

     [Skt. adhas → த. அதோ.]

அதோகந்தம்

 அதோகந்தம் atōkandam, பெ. (n.)

   நாயுருவி; a plant, Achyranthes aspera.

     [P]

அதோங்கம்

அதோங்கம் atōṅgam, பெ. (n.)

   இடுப்பிற்குக் கீழேயுள்ள பகுதி (தைலவ. தைல. 54, உரை);; part of the body below the waist.

     [Skt. adhas + anga → த. அதோங்கம்.]

அதோசததோடம்

 அதோசததோடம் adōcadadōṭam, பெ. (n.)

   நீரிழிவு நோய் தொடர்பால் தொப்புளின் கீழ் காற்று அழுத்துவதனால் மலம் நழுகல், வாயுலர்தல் முதலிய குணங்களைக் காட்டும் ஐவகைக் குற்றங்களுள் ஒன்று; one of the five affections of the body marked by evacuation of bowels, parched tongue etc, due to the deranged vayuarising from the affection of urinary organs and extending to the abdominal region.

அதோசாணு

 அதோசாணு atōcāṇu, பெ. (n.)

   முழங்காலுக்குக் கீழுள்ள பகுதி; below the knee.

அதோசீவிகம்

 அதோசீவிகம் atōcīvigam, பெ. (n.)

   உண்ணாக்கு; the uvula.

     [Skt. adhas + jivika → த. அதோசீவிகம்.]

அதோதரம்

 அதோதரம் atōtaram, பெ. (n.)

   அடிவயிறு; the abdominal region.

     [அதோ + உதரம்.]

     [Skt. adhas → த. அதோ.]

அதோதிதம்

அதோதிதம் adōdidam, பெ. (n.)

   1. சிவப்பு முள்ளுக்கீரை; red nail dye plant, Amaranthus spinosus.

   2. செம்முள்ளி; common nail dye, Barteria prionitis alias Bcristata.

அதோதுவாரம்

 அதோதுவாரம் atōtuvāram, பெ. (n.)

அதோங்கம் பார்க்க;see adongam.

     [Skt. adhas + dvara → த. அதோதுவாரம்.]

அதோநாபி

 அதோநாபி atōnāpi, பெ. (n.)

   கொப்பூழின் கீழ்ப்பாகம்; that portion below the navel region.

     [Skt. adhas + nabhi → த. அதோநாபி.]

அதோனியாமிகாசத்தி

அதோனியாமிகாசத்தி atōṉiyāmikācatti, பெ. (n.)

   ஆன்மாக்களுக்குங் கீழாகவுள்ள இன்ப நுகர்ச்சியை விளைவிக்குமாணவ மலத்தின் ஆற்றல்; the power of anava (one of the 3 evil passions of the soul); driving one to enjoy the transient pleasures of this world which are Considered low and inferior in the light of spiritual philosophy.

த.வ. கீழவா.

அதோபகாசம்

 அதோபகாசம் atōpakācam, பெ. (n.)

   சேர்க்கை; sexual intercourse.

த.வ. புணர்ச்சி.

அதோபக்தம்

 அதோபக்தம் atōpaktam, பெ. (n.)

   உணவு உண்டவுடனே எடுத்துக் கொள்ளும் மருந்து; a dose of medicine to be taken just after meals.

அதோபரம்

 அதோபரம் atōparam, பெ. (n.)

   மலம் கழியும் உறுப்பு; the anus.

த.வ. எருவாய்.

அதோபாகம்

அதோபாகம் atōpākam, பெ. (n.)

   1. அடிப்பக்கம்; bottom.

   2. கீழ்ப்பாகம்; the lower portion, especially of the body foot.

     “பிரமாண்டத்ததோடாகம்” (சிவதரு. கோபுர. 30);.

     [அதோ + பாகம்.]

     [Skt. adhas → த. அதோ. வகு → பகு → பாகம்.]

அதோபாதம்

அதோபாதம் atōpātam, பெ. (n.)

   1. கீழ்ப்பாதம்; the lower portion of the foot.

   2. கீழ்க்கால்; the lower portion of the leg.

   3. சிறு மூளையினிரண்டு கூறுகளையும் இணைத்துக் கொண்டிருக்கும் நார்க்கட்டுக் களாலாகிய கால்கள் இரண்டிலொன்று; one of the fibrous bands by which the cerebellam is attached to the brain-linferior crus.

     [அதோ + பாதம்.]

     [Skt. adhas → த. அதோ.]

பதி → பதம் → பாதம்.

அதோபாரதோசவரி

 அதோபாரதோசவரி atōpāratōcavari, பெ. (n.)

   உடம்பின் அடிப்பாகத்தைக் குணப்படுத்தல் அல்லது உறுதிப்படுத்துகை; curing or strengthening the lower part of the body.

அதோபிரகன்னாளம்

 அதோபிரகன்னாளம் atōpiragaṉṉāḷam, பெ. (n.)

   கீழ் உடம்பினின்று நெஞ்சாங் குலைக்குக் கொண்டு போகும் குருதிக்குழாய்; a vein formed by the junction of the two common iliac veins.

 It empties into the right auricle of the heart, Inferior Venacava.

அதோமாயை

 அதோமாயை atōmāyai, பெ. (n.)

   அசுத்த மாயை; inferior illusion, material maya.

     [அதோ + மாயை.]

     [Skt. adhas → த. அதோ.]

மள் → மய் → மாய் → மாயை.

அதோமார்க்கம்

அதோமார்க்கம் atōmārkkam, பெ. (n.)

   1. கீழ்நோக்கிய வழி;   2. கீழ் நெறியா (மார்க்கமா);கிய சடங்கு;     “தாழ்ந்தநெறி” (சி.சி.251, சிவாக்.);

   3. நாயுருவி; a plant Indian burr, Achyranthes aspera.

த.வ. தாழ்நெறி.

     [Skt. adhas + mårga → த. அதோமார்க்கம்.]

அதோமுகக்கட்டி

 அதோமுகக்கட்டி atōmugaggaṭṭi, பெ. (n.)

   வயிறு அல்லது இடுப்பு முதலிய கீழ்ப்பாகங்களிற் பெரிதாயும், கருப்பாயும், எழும்பி மிக்க வலியை யுண்டாக்கி, நிமிர வொட்டாமற் செய்வதும் பிசுபிசுப்பான நீர் வடிவதுமான ஒரு வகைக்கட்டி; a large blue-coloured abscess appearing on the abdomen or on the back or other parts of the lumber region and rendering the patient unable to stand or sit erect, is marked by a deep-seated pain and slimy discharge, Lumbar or psosas abscess.

த.வ. சுரக்கட்டி.

     [அதோ + முகம் + கட்டி.]

     [Skt. adhas → த. அதோ.]

அதோமுகசிரம்

அதோமுகசிரம் atōmugasiram, பெ. (n.)

அதோ முகம், 2 பார்க்க (பரத. பாவ. 76);;see ado-mugam2.

     [அதோ + முகம் + சிரம்.]

     [Skt. adhas → த. அதோ. Skt. siras → த. சிரம்.]

அதோமுகம்

அதோமுகம் atōmugam, பெ. (n.)

   1. கீழ்நோக்கிய முகம்; the face that looks downwards.

     “ஐந்து முகத்தோ டதோமுகமும்” (கந்தர்கலி. 78);.

   2. தலை குனிந்து பார்க்கை (சது.);;   3. தலைகீழான நிலை; inverted position.

     “அதோ முகமாகி ……. கொம்பர் நாலு மொருவனை” (இரகு. சம்புக. 41);.

   4. கடற் கழிமுகம் (பிங்.);; mouth of a river, confluence of a river with sea.

   5. கறி முன்னை; a plant, Premnaesculenta.

     [அதோ + முகம்.]

த.வ. கீழ்முகம், கீழக்காந்தலை.

     [Skt. adhas → த. அதோ.]

அதோமுகவாதம்

 அதோமுகவாதம் atōmugavātam, பெ. (n.)

   உடம்பினில் கீழ் முகமாக நோக்கும் காற்று (வாதம்);; a disease resulting in the descent of vayu (air);.

     [அதோ + முகம் + வாதம்.]

     [Skt. adhas → த. அதோ. Skt. vata → த. வாதம்.]

அதோமுகி

 அதோமுகி atōmugi, பெ. (n.)

   கவிழ் பூந்தும்பை வகை (வின்.);; a low annual plant flourishing in dry localities of Trichodesma.

     [அதோ + முகி.]

]Skt. adho → த. அதோ. முகம் → முகி.]

அதோமுகியான்

 அதோமுகியான் atōmugiyāṉ, பெ. (n.)

   ஈற்றா; a cow in calf.

அதோமுரரத்தபித்தம்

 அதோமுரரத்தபித்தம் atōmurarattabittam, பெ. (n.)

   உடம்பின் கீழ்ப் பகுதியில் சிறுநீர், மலம், மயிர் ஆகியவற்றின் துளைகள் வழியாக அரத்தப் போக்கையுண்டாக்கும் ஒரு வகை நோய்; hemorrhage or discharge of blood through the natural openings in the lowest part of the body such as, the vagina, the urinary passage, the anus and the hair follicles.

த.வ. குருதிக்கொப்புளம்.

அதோயந்திரம்

 அதோயந்திரம் atōyandiram, பெ. (n.)

   கீழ்ப் பாகத்திலுள்ள உறுப்பமைவு; the lower part of an apparatus.

     [Skt. adhas + yantra → த. அதோயந்திரம்.]

அதோரத்தபித்தம்

 அதோரத்தபித்தம் atōrattabittam, பெ. (n.)

   எரு(மல);வாய், பெண் பிறப்புறுப்புத்துளை அல்லது சிறுநீர்ப்பை இவற்றினின்று வெளிவரும் குருதியொழுக்கு; a discharge blood from the anus, bladder of the vagina.

     [அதோ + ரத்த + பித்தம்.]

     [Skt. adhas + rakta → த. அதோரத்தம்.]

அதோலம்பம்

அதோலம்பம்1 atōlambam, பெ. (n.)

   உறக்கம்; sleep.

     [Skt. adhas + lamba → த. அதோலம்பம்.]

 அதோலம்பம்2 atōlambam, பெ. (n.)

   செங்குத்தான நிலை (வின்.);; perpendicularity.

     [Skt. adhas + lamba → த. அதோலம்பம்.]

அதோலோகம்

 அதோலோகம் atōlōkam, பெ. (n.)

   கீழுலகம்; lower world.

     [அதோ + லோகம்.]

     [Skt. adhas → த. அதோ.]

த. உலகம் → Skt. loka → த. லோகம்.

அதோளி

அதோளி atōḷi, கு.வி.எ. (adv.)

அதோள் பார்க்க;see adõl.

க., பட. அல்லி.

     “சுட்டு முதலாகிய விகர விறுதியும்” (தொல். எழுத்து. தொகை. 17);. ‘அதோளிக் கொண்டான், இதோளிக் கொண்டான், உதோளிக் கொண்டான், எதோளிக் கொண்டான்…… எனவும் இவை மிக்கன. அதோளி அவ்விடமென்னும் பொருட்டு’ (தொல். எழுத்து. தொகை. 17, நச். உரை);.

அதோள், அதோளி; இதோள், இதோளி; உதோள், உதோளி; எதோள், எதோளி என்பன இறந்துபட்ட குமரிநாட்டுச் சொற்கள்.

அதோள்

அதோள் atōḷ, கு.வி.எ. (adv.)

   அங்கே, அவ்விடத்தில்; there.

     ‘இதனானே. அதோட் கொண்டான், இதோட் கொண்டான், உதோட் கொண்டான், எதோட் கொண்டான்……… என உருபு வாராது உருபின் பொருள்பட வந்தனவுங் கொள்க’ (தொல். எழுத்து. புள்ளி. 103, நச். உரை);.

     [அது → அதோ → அதோல் → அதோள். ஒ.நோ ; இந். உதர் ; Skt. tatra ; E. thither.]

அதோவசம்

 அதோவசம் atōvasam, பெ. (n.)

   கருப்பை; the vulva, Pandendum muliebre.

அதோவதனம்

 அதோவதனம் adōvadaṉam, பெ. (n.)

அதோமுகம் பார்க்க: see ado-mugam.

     [Skt. adhas + vadana → த. அதோவதனம்.]

அதோவாயு

அதோவாயு atōvāyu, பெ. (n.)

   1. பரியன்வளி; vital air-agent for expelling the contents of the stomach.

   2. கீழ் நோக்கு(ம்); வளி (வாயு);; the wind passing downwards.

     [Skt. adhas + vayu → த. அதோவாயு.]

அத்தக

அத்தக1 attaga, கு.வி.எ. (adv.)

   அத்தன்மையதாக; in that manner.

     “அத்தக நிறீஇ” (பெருங். இலாவாண. 6 ; 150);.

     [‘அ’ சேய்மைச்சுட்டு. தகுதல் = பொருந்துதல், ஒத்தல். தகு → தகை = பொருத்தம், ஒப்பு, தகுதி, தன்மை. தகு → தக (நி. கா. வி. எ.);. அ + தக – அத்தக – அதற்குப் பொருந்த, அத்தன்மையதாக.]

 அத்தக2 attaga, கு.வி.எ.

   அழகு பொருந்த; beautifully.

     “அத்தக வரிவைய ரளத்தல் காண்மின்” (பரிபா. 12;44);.

     [அம் = அழகு. தக = பொருந்த அம் + தக – அந்தக → அத்தக.]

அத்தகடகம்

அத்தகடகம் attagaḍagam, பெ. (n.)

   கைவளை; bracelet.

     “அத்தகடகம் தோள்வளை” (அரிச். பு. விவாக. 115.);.

த.வ. கைக்கடகம்.

     [அத்த(ம்); + கடகம்.]

     [Skt. hasta → த. அத்த(ம்);.]

அத்தகண்டாதனம்

அத்தகண்டாதனம் attagaṇṭātaṉam, பெ. (n.)

   ஒருகாலை மேல் நீட்டி, அவ்வாறு நீட்டிய காலை ஒரு கையைக்கொண்டு கட்டி, மற்றைக்கையை நிலத்தில் நீட்டியுமிருக்கும் காலை நிலத்தில் ஊன்றியும், மற்றொரு காலை நிலத்தில் நீட்டியுமிருக்கும் இருக்கை வகை (தத்துவப். 108, உரை.);;     [அத்தகண்டம் + ஆதனம்.]

     [Skt. hasta → த. அத்தம்.]

அத்தகம்

அத்தகம்1 attagam, பெ. (n.)

   கருஞ்சீரகம் (மலை.);; black cumin, Nigella sativa.

 அத்தகம்2 attagam, பெ. (n.)

   கணக்கன்; accountant.

     “அத்தகங் கூட்டமிடு மங்கணத்தில்” (நெல்விடு. 318);.

     [ஒருகா. அத்தகன் → அத்தகம்.]

 அத்தகம் attagam, பெ. (n.)

   1. ஆமணக்கு; castor oil plant ricinus communis.

   2. கருஞ்சீரகம்; black cumin seed, Niggella sativa (சா.அக.);.

அத்தகம்பவாதம்

 அத்தகம்பவாதம் attagambavātam, பெ. (n.)

   கைகளை நீட்டவும், மடக்கவும் முடியாதபடிச் செய்யும் ஒர் ஊதை நோய்; a disease of the joints of the arms marked by degenerative changes involving the structure of the various articulations and resulting in rigidity and deformity, Rheumatoid arthritis (சா.அக.);.

     [அத்த(ம்); + கம்ப(ம்); + வாதம்.]

     [Skt hasta → த. அத்தம். Skt. vata → வாதம்.]

அத்தகாண்டகம்

 அத்தகாண்டகம் attagāṇṭagam, பெ. (n.)

   முத்து; pearl (சா.அக.);.

அத்தகாதிதம்

 அத்தகாதிதம் addakādidam, பெ. (n.)

   ஒரு மருந்துச் செடி (அதிவிடையம்);; a medicinal plant (சா.அக.);.

அத்தகானி

அத்தகானி attakāṉi, பெ. (n.)

   பொருட்கேடு (தஞ்.சரசு, 1, 307);; lose of wealth.

த.வ. அத்தநாசம்.

     [Skt. artha-hani → த. அத்தகாணி.]

அத்தகிதம்

 அத்தகிதம் addagidam, பெ. (n.)

   சிவப்பு மூக்கறைச் சாரணை; a red creeper (சா.அக.);.

     [அத்தம் = சிவப்பு.]

அத்தகிரி

அத்தகிரி attagiri, பெ. (n.)

   கதிரவன் மறையும் மலை (சீவக. 18. உரை);; western mountain.

     [Skt. asta+giri → த. அத்தகிரி.]

அத்தகைச்சாரணை

 அத்தகைச்சாரணை attagaiccāraṇai, பெ. (n.)

   சிவப்பு வட்டச் சாரணை; a red species of round-leaved plant (சா.அக.);.

     [அத்தம் = சிவப்பு.]

அத்தகோரம்

 அத்தகோரம் attaāram, பெ. (n.)

   நெல்லி; emblic myrobalan (W.);.

அத்தகோளம்

அத்தகோளம் attaāḷam, பெ. (n.)

   1. உடம்பில் நீர் பொசிகின்ற கருவியின் பாதி, வியர்வைக் கோளத்தின் பகுதி; one half of a sweat gland.

   2. பாதிகோளம்; half the portion of any gland (சா.அக.);.

     [அத்த(ம்); + கோளம்.]

     [Skt. ardha → த. அத்த(ம்);.]

கொள் → கோள் → கோளம்.

அத்தக்கூலி

அத்தக்கூலி attakāli, பெ. (n.)

வேலை இருந்தால் மட்டுமே கூலி வாங்கும் தொழிலாளி. (கொ.வ.வ.சொ.5);.

 labourer who gets daily wage.

     [அற்றை-அத்தை-அத்த+கூலி]

அத்தங்கார்

 அத்தங்கார் attaṅgār, பெ. (n.)

   அத்தை மகள் (பிராம.);; paternal aunt’s daughter (Brahm.);.

     [ஒருகா. அத்தை மங்கையார். மங்கை = பெண், மகள்.]

அத்தங்கி

 அத்தங்கி attaṅgi, பெ. (n.)

   முழங்கால்; knee (சா.அக.);.

அத்தசாமம்

 அத்தசாமம் attacāmam, பெ. (n.)

   நள்ளிரவு (வின்.);; midnight.

த.வ. அர்த்தசாமம்.

     [அத்த(ம்); + சாமம்.]

     [Skt. ardha → த. அத்த(ம்);.]

யாமம் → சாமம்.

அத்தஞ்சடம்

 அத்தஞ்சடம் attañjaḍam, பெ. (n.)

   ஒரு வகை நஞ்சு (கெளரி பாடானம்);; yellow oxide of arsenic (சா.அக.);.

அத்தடம்

அத்தடம் attaḍam, பெ. (n.)

   1. ஒரு மருந்துச் சரக்கு (அதிவிடையம்); ; a bazaar drug called Indian atees (atis);, Aconitum heterophyllum.

   2. பொன்; gold.

அத்ததாளி

 அத்ததாளி attatāḷi, பெ. (n.)

   காட்டுப்பூவரசு (L.);; falsefern tree.

அத்தத்தாவெனல்

அத்தத்தாவெனல் attattāveṉal, தொ.பெ. (vbl.n.)

   குழந்தை தந்தையை அடுத்தடுத்துக் கூப்பிடுதல் ; child calling its father repeatedly.

     “அடுத்தடுத் தத்தத்தா வென்பான்” (கலித். 81;19);.

     [அத்தன் = தந்தை. அத்தன் → அத்தா (விளி);. அத்தா + அத்தா -அத்தத்தா (பன்முறைபற்றிய அடுக்குத்தொடர்);.]

அத்தநாசம்

 அத்தநாசம் attanācam, பெ. (n.)

   பொருட்கேடு (வின்.);; loss of money, destruction of property.

     [அத்த(ம்); + நாசம்.]

     [Skt. artha + nasa → த. அத்தநாசம்.]

அத்தநாரி

 அத்தநாரி attanāri, பெ. (n.)

   கட்டுக் கொங்கை; kidney plum tree, prussic-acid tree, Pygeum wightianum (சா.அக.);.

அத்தநாரீசுரன்

 அத்தநாரீசுரன் attanārīcuraṉ, பெ. (n.)

   ஒரு பாதி பெண்வடிவான சிவன் (வின்.);; a manifestation of Sivan.

த.வ. மாதொருபாகன், மங்கைபங்கன்.

     [Skt. ardha + narisvara → த. அந்த நாரீசுரன்.]

அத்தநாள்

அத்தநாள்1 attanāḷ, பெ. (n.)

   ஒருபாதி நாள் (திவா.);; half a day.

த.வ. அரைநாள்.

     [அத்த(ம்); + நாள்.]

     [Skt. ardha → த. அத்த.]

 அத்தநாள்2 attanāḷ, பெ. (n.)

   ஒரு விண்மீன் (கைம்மீன்);; the 13th vinmin.

த.வ. கைம்மீன்.

     [அத்த(ம்); + நாள்.]

     [Skt. hasta → த. அத்தம்.]

அத்தனாபேதி

 அத்தனாபேதி attaṉāpēti, பெ. (n.)

   கடுக்காய் சேர்ந்த குய்யபேதி (என்னுங் கழிச்சல் மருந்து);; a purgative containing ink-nut as the chief ingredient (சா.அக.);.

     [அத்தன் + ஆ (இணைப்பிடைச்சொல்); + பேதி, Skt, bhedin → த. பேதி = பிரிப்பு, கழிச்சல், கழிச்சல் மருந்து.]

அத்தனை

அத்தனை attaṉai, பெ. (n.)

   அவ்வளவு; that much.

     “நீருரைத்த தொன்றை நான்செய்யு மத்தனை” (பெரியபு. இயற். 9);.

கடுகத்தனை கொடுத்தான். அத்தனையுந் தின்றுவிட்டான் (உ.வ.);.

 அத்தனை attaṉai, பெ.எ. (adj)

   1. அத்தொகையான; so many.

   அத்தனைபேருந் தேறி விட்டனர். அத்தனை மரங்களும் பட்டுப் போய்விட்டன (உ.வ.);;     “அத்தனையும் நேர்ந்தாள் உப்பிட மறந்தாள்” (பழ.);;

   2. அவ்வளவு; so much.

     “அத்தனை குணக் கேடர் கண்டதாக் கேட்டதா வவனிமிசை யுண்டோ சொலாய்” (தாயு. ஆனந்தமான பரம். 9);;

ம. அத்தன

     [அ (சேய்மைச்சுட்டு);; + துணை (அளவு);; → தனை.]

அத்தன்

அத்தன்1 attaṉ, பெ. (n.)

   1. அப்பன்; father.

     “என்னத்தனை வென்றிசை கொண்டிலனோ” (கந்தபு. உற்பத். காமதக. 10);.

   2. தமையன்; elder brother.

   3. மூத்தோன் (திவா.);; elder.

   4. உயர்ந்தோன்; person of rank or eminence.

     “அத்தரின் அரும் பொருள்” (திருவிளை. மெய்க்காட். 34);.

   5. குரு; priest.

     “அத்தனே யடுவ லாண்மை” (பாரத. பதினைந், 27);.

   6. சிவன்; Siva.

     “அத்தாவுனக் காளாயினி யல்லேனென லாமே” (தேவா. 7.1 ; 1);.

   7. திருமால்; Višnu.

   8. வைரவன்; Bhairava.

   9. அருகன்; Arhat.

ம. அத்தன்

 Hit. at-ta-as; L. atavus, great-grandfather’s grandfather (ata+ayus, grandfather);; Pkt. atta.

     [ஒல்லுதல் = பொருந்துதல், இயலுதல். ஒல் → ஒள் → ஒண். ஒண்ணுதல் = பொருந்துதல், இயலுதல். ஒல் → ஒற்று ; ஒள் → ஒட்டு. ஒற்று → ஒத்து → அத்து ; ஒட்டு → அட்டு. அத்துதல் = சார்தல்; to lean om. குடும்பம் தந்தையைச் சார்ந்திருத்தலால், அத்தன் என்னும் பெயர் அத்து என்னுஞ் சொல்லினின்று தோன்றியிருக்கலாம். அத்து → அத்தன். கால்டுவெலார் கருத்தும் இஃதே.]

தந்தையைக் குறிக்கும் அத்தன் என்னும் தமிழ்ப்பெயர் திரவிட மொழிகளில் வழக்கற்றது. அதன் திரிபான அத்தான் என்னும் (முறை வேறுபட்ட); ஆண்பாற் பெயரும், அத்தி, அத்தையென்னும் பெண்பாற் பெயர்களும் திரவிட மொழிகளிலும் பிராகிருதத்திலும் சமற்கிருதத்திலும் வழங்கி வருகின்றன.

அத்தன் என்பதன் திரிபான அச்சன், அஜ்ஜ என்னும் தந்தை முறைப்பெயர்களும் பாட்டன் முறைப்பெயர்களும், திரவிட மொழிகளில் வழங்கி வருகின்றன. அவை அச்சன் என்னும் உருப்படியிற் காட்டப்பட்டன.

இலத்தீன் மொழியில், avus என்பது பாட்டனையும், atavus என்பது பூட்டனின் பாட்டனையும் குறிக்கும் முறைப்பெயர்களாகும். ஆகவே, ata என்னும் இலத்தீன் சொல்லைச் சேயானின் தந்தைமுறைப் பெயராகக் கொள்ளலாம்.

பாட்டனின் தந்தை பூட்டன் ; பூட்டனின் தந்தை சேயான்.

 அத்தன்2 attaṉ, பெ. (n.)

   1. கடுக்காய் (மு.அ.);; chebulic myrobalan, Terminalia chebula.

   2. வெள்ளீயம் (மு.அ.); ; white lead, tin.

அத்தன்பாதம்

 அத்தன்பாதம் attaṉpātam, பெ. (n.)

   செருப்படை ; a medicinal plant, Coldenia procumbens (சா.அக.);.

அத்தன்புள்ளடி

 அத்தன்புள்ளடி attaṉpuḷḷaḍi, பெ. (n.)

அத்தன்பாதம் பார்க்க ;see attan-pddam.

அத்தபாகம்

 அத்தபாகம் attapākam, பெ. (n.)

   செம்பாகம்; half a share, half a portion (சா.அக.);.

த.வ. சரிபாதி.

     [அத்தம் + பாகம்.]

     [Skt. ardha → அத்தம்.]

பகு → பாகு → பாகம்.

அத்தப்பிரகரன்

 அத்தப்பிரகரன் attappiragaraṉ, பெ. (n.)

   ஒரு காணாக்கோள் (சங்.அக.);;     [Skt. ardha-prashara → த. அத்தப்பிரசுரன்.]

அத்தப்பிரகரம்

அத்தப்பிரகரம் attappiragaram, பெ. (n.)

   4 1/4 நாழிகை கொண்டது; a period consisting of 4 1/4 naligai (1 naligai = 24 minutes); (சா.அக.);.

அத்தப்பிரபஞ்சம்

அத்தப்பிரபஞ்சம் attabbirabañjam, பெ. (n.)

அர்த்தப்பிரபஞ்சம் (சி.போ.பா.2,2,பக்.134, புது.); பார்க்க;see arttappira-panjam.

     [Sk. Artha + pra-panca → த. அத்தப் பிரபஞ்சம்.]

அத்தப்பொருந்தி

அத்தப்பொருந்தி attapporundi, பெ. (n.)

   1. இருபாதியை ஒன்று சேர்ப்பது; that which joins the two halves.

   2. எலும்பு முறிவை ஒன்றாகச் சேர்க்கும் பூடு; a plant capable of curing the fracture of bones (சா.அக.);.

     [அத்தம் + பொருந்தி.]

     [Skt. ardha → த. அத்தம்.]

பொரு → பொருந்து.

அத்தமனம்

அத்தமனம் attamaṉam, பெ. (n.)

   1. கோள்கள் மறைகை; setting, as of the sun.

     “அத்தமன முதய மில்லை” (ஞானவா. தாசூர. 7.);. 2. அழிவு;

 destruction.

     “உதயாத்த மனமறிவுக் குளவாகாவே” (பிரபோத.32, 18);.

     [Skt. astamana → த. அத்தமனம்.]

அத்தமம்

 அத்தமம் attamam, பெ. (n.)

அத்தமயம் (வின்); பார்க்க;see attamayam.

     [Skt. astama → த. அத்தமம்.]

 அத்தமம் attamam, பெ. (n.)

   கதிரவன் மறைவு; setting, as of the sun or moon.

த.வ. ஏற்பாடு.

     [Skt. astama → த. அத்தமம்.]

அத்தமயம்

அத்தமயம் attamayam, பெ. (n.)

   படு ஞாயிறு; setting, as of the sun.

     “அத்தமய வெற் படைந்தான் கதிராயிரத்தோன்” (கந்தபு. தெய்வ. 146);.

த.வ. சாயுங்காலம், எற்பாடு.

     [Skt. astamaya → த. அத்தமயம்.]

அத்தமானம்

அத்தமானம்1 attamāṉam, பெ. (n.)

   ஆமணக்கு (மூ.அ.);; castor-plant.

     [Skt. asta-mäna → த. அத்தமானம்.]

 அத்தமானம்2 attamāṉam, பெ. (n.)

   கதிரவன் மறையும் மேற்கு மலை; the western mountain behind which the sun is supposed to set.

     “கதிரோன் றோன்று முதயத்தோ டத்தமானம்” (கம்பா.இரணி. 151);.

த.வ. குடகுமலை.

     [Skt. asta-mana → த. அத்தமானம்.]

அத்தமி-த்தல்

அத்தமி-த்தல் attamittal,    4 செ.கு.வி. (v.i.)

   ஞாயிறு மறைதல்; to set, as the sun.

     [Skt, asta → த. அத்தமி-.]

அத்தமேற்காலாதனம்

அத்தமேற்காலாதனம் attamēṟkālātaṉam, பெ. (n.)

   கீழே கிடந்தவண்ணம் இரண்டுகாலும் சம்மணமாக மடித்து, அவ்வாறு மடித்த காலிரண்டுந் தலைக்கு மேலாக உயர்த்திக் கையாற்பிடித்துக் கொண்டு கிடக்கையாகிய இருக்கை வகை (தத்துவப். 108, உரை);;     [அத்தம் + மேல் + கால் + ஆதனம்.]

     [Skt. hasla → த. அத்தம்.]

அத்தமேற்கால்

அத்தமேற்கால் attamēṟkāl, பெ. (n.)

அத்தமேற்காலாதனம் பார்க்க;see attamerkaladanam.

     “அத்தமேற்கா லேகபாத மேகவத்தம்” (தத்துவப். 108);.

     [அத்தம் + மேல் + கால்.]

     [Skt. hasta → த. அத்தம்.]

அத்தம்

அத்தம்1 attam, பெ. (n.)

   1. குக்கில் (மு.அ.);; Indian bdellium.

   2. ஒரு மருந்துச்செடி (அதிவிடையம்); (மு.அ.);; atis.

   3. கரிசலாங்கண்ணி (இராசவைத்.);; species of eclipta, Eclipta alba.

   4. குந்துருக்கம்; white dammer, Vateria indica (சா.அக.);.

   5. கருங்குங்கிலியம்; black dammer, Canarium strictum.

   6. வெள்ளை யாமணக்கு; white castor plant, Jatropha Curcas (சா.அக.);.

   7. ஒருவகை நஞ்சு (கெந்தி பாடாணம்);; a kind of arsenic.

 அத்தம்2 attam, பெ. (n.)

   கண்ணாடி; mirror.

     “அத்தமதின் முன்பின்போல்” (வேதா. சூ. 108);.

தெ. அத்தமு

 அத்தம்3 attam, பெ. (n.)

   1. ஆள் வழங்காக்காடு (திவா.);; jungle.

   2. செல்லுதற்கரிய காட்டுப் பாதை; rough and difficult jungle path.

     “ஆளி லத்த மாகிய காடே” (புறநா 23;22);.

   3. வழி (பிங்.);; way.

     [அறு → அற்றம் = அறுதல், ஆளில்லாமை. அற்றம் → அத்தம்.]

     “அத்தம்’ என்னும் தென்சொல் சிறப்பாக ஆள் வழங்கா அருநெறியையே குறித்தலால், பொதுவான வழியைக் குறிக்கும் ‘அத்வன்’ (adhvan); என்னும் வடசொல்லினின்று தோன்றியிருத்தல் இயலாது. சிறப்புப் பொருட் சொல்லினின்றே பொதுப்பொருட் சொல் தோன்றியிருத்தல் வேண்டும்.

 அத்தம்4 attam, பெ. (n.)

   1. முடிவு ; end, termination.

   2. அழிவு (நாநார்த்த.); ; destruction.

     [அறுதல் = நீங்குதல், முடிதல், அற்ற பேச்சு = முடிவான பேச்சு. அறு → அற்றம் = அழிவு, முடிவு. அற்றம் → அத்தம்.]

 அத்தம்5 attam, பெ. (n.)

   செம்மை ; red colour.

     [அரத்தம் = செந்நீர் (குருதி);, செந்நிறம். அரத்தம் → அத்தம் = சிவப்பு.]

 அத்தம் attam, பெ. (n.)

   1. மாலை நேரம்; evening.

   2. அந்திப் பொழுது; twilight cock;

 shut.

   3. பொழுது சாய்கை; sunset (சா.அக.);

     [Skt asta → த. அத்தம்.]

அத்தம்பியார்

 அத்தம்பியார் attambiyār, பெ. (n.)

   அக்கை கணவன், அத்தான் (இ.வ.); ; sister’s husband (Loc.);.

     [ஒருகா. அத்தி + நம்பியார் – அத்தம்பியார். அத்தன் = அப்பன். அத்தி = அன்னை, அக்கை. நம்பி = ஆடவருட் சிறந்தோன், ஆடவன், கணவன்.]

அத்தயாமம்

அத்தயாமம் attayāmam, பெ. (n.)

   நாட் பொழுதில் பதினாறிலொரு பங்கு கொண்ட நேரம்;   1/16 of the period constituting a day (சா.அக.);.

த.வ. அரையாமம்.

     [அத்தம் + யாமம்.]

     [Skt. asta → த. அத்தம்.]

சாமம் → யாமம்.

அத்தரசிதம்

 அத்தரசிதம் addarasidam, பெ. (n.)

   மயில்துத்தம் (மு.அ.);; native hydrous silicate of zinc, calamin.

குறிப்பு ; இதையொத்த சொல் வட மொழியிலின்மையால், இது இத் தென்சொல் லகரமுதலியிற் சேர்க்கப்பட்டது.

அத்தராவாயு

 அத்தராவாயு attarāvāyu, பெ. (n.)

   புளிமம் தேங்கி, உடம்பின் வலுவைக் குறைக்குமோர் வளி; a find of indigestion characterised by over eructation and weakness (சா.அக.);.

அத்தரேகை

 அத்தரேகை attarēkai, பெ. (n.)

   மருத்துவத் தொழிலுக்குத் தகுதியுடையவன் என்பதற்கு அறிகுறியாக, அவன் உள்ளங் கையில் அமைந்துள்ள வரிகள் (ரேகை);; a peculiar link or curling mark in the palm of the hand as in indication that he will be proficient in medicine (சா.அக.);.

த.வ. கைவரை.

     [அத்தம் + ரேகை.]

     [Skt. hasta → த. அத்தம்.]

வரி → வரிகை → ரேகை → Skt. rekha.

அத்தர்

 அத்தர் attar, பெ. (n.)

   முளரி(ரோஜா);, மல்லிகை முதலிய மலரிதழ்களிலிருந்து எடுக்கப்படும் நறுமண நெய்; fragrant essence obtained from the petals of rose, jasmine, etc. and used as a perfume.

த.வ. பூச்சாறை.

     [U. atnir → த. அத்தர்.]

அத்தலைப்பொருந்தி

 அத்தலைப்பொருந்தி attalaipporundi, பெ. (n.)

அத்தப்பொருந்தி பார்க்க;see atta-p-porundi (சா.அக.);.

அத்தளி புத்தளி

அத்தளி புத்தளி attaḷiputtaḷi, பெ. (n.)

   சிறு குழந்தைகள் கையினைத் தரையில் ஊன்றி விளையாடல்(14-9);; children play.

     [அத்தளி+புத்தளி(ஒலிக்குறிப்பு);]

அத்தவசனம்

 அத்தவசனம் attavasaṉam, பெ. (n.)

   நினைத்த பொருளை விளக்குஞ்சொல்; word that exactly expresses one’s meaning.

த.வ. பொருண்மொழி.

     [Skt. artha + vacana → த. அத்தவசனம்.]

அத்தவத்திரதம்

அத்தவத்திரதம் addavaddiradam, பெ. (n.)

   ஒருவகை மருந்துச் சரக்கு; a kind of drug.

     “துத்த மாஞ்சி யத்தவத் திரதம்” (பெருங். மகத. 17;147);.

அத்தவாளம்

அத்தவாளம்1 attavāḷam, பெ. (n.)

   காடு ; jungle (W.);.

     [அத்தம் + வாளம். அத்தம் = காடு. வாளம் = வட்டம், வட்டாரம், நிலப்பகுதி.]

 அத்தவாளம்2 attavāḷam, பெ. (n.)

   1. முன்றானை (ஈடு, 9; 10, பிர.); ; outer loose end of a saree.

   2. முன்றானைபோல் ஆடவர் தோண்மேலணியும் மேலாடை (பிங்.);; a garment loosely worn by men on their shoulders.

   3. போர்வைச் சீலை (சங்.அக.);; covering upper cloth.

     “வடக முல்லாச மத்த வாளம்” (பிங். 6;179);. “அத்தவாளப்பட்டு மதளும் வடகம்” (பிங். 10;987);. ‘வடகம், அத்த வாளம் உடைவிசேடம்’ (சீவக. 462, நச். உரை);.

     [ஒருகா. அற்றம் → அத்தம் = முடிவு, கடை. வாலம் → வாளம் = நீண்ட துணி. அத்தவாளம் = சேலையின் முன்கடைப் பக்கமான வெளிமுந்தி (முன்றானை);. போர்வைச் சீலை உடம்பைப் போர்ப்பதில் முன்றானையையும் மேலாடையையும் ஒரளவு ஒக்கும்.]

 அத்தவாளம்3 attavāḷam, பெ. (n.)

   உள்ளக் கிளர்ச்சி, கெந்தளிப்பு; hilarity, elation, mirth.

     “வடக முல்லாசமத்த வாளம்” (பிங். 6 ;179);.

 அத்தவாளம் attavāḷam, பெ. (n.)

   வடகம்; a mixture of different kinds of drugs, spices, etc., in which onion and mustard form the chief ingredients (சா.அக.);.

     “அத்தவாளப் பட்டு மதளும் வடகம்” (பிங். 10;987);.

குறிப்பு ; அத்தவாளம் என்னும் சொல்லிற்குச் சில அகரமுதலிகளில் வடகம் என்றொரு பொருள் குறிக்கப்பட்டுள்ளது; சிலவற்றிற் குறிக்கப்படவில்லை.

வடகம் என்னும் சொல், சீவகசிந்தாமணியில் ஒருவகை மேலாடை என்னும் பொருளில் ஆளப்பட்டும், சிலப்பதிகாரவுரையில் (14;108); துகில் என்னும் உயர்ந்த துணியின் முப்பத்தாறு வகைகளுள் ஒன்றன் பெயராகக் குறிக்கப்பட்டும் உள்ளது. பிங்கல நிகண்டும் சூடாமணி நிகண்டும் இச்சொற்குத் தோல், அத்தவாளம் என்று இருபொருளே குறித்துள்ளன. இவை அத்தவாளம் என்றது உடைவகையையே.

சாம்பசிவம் பிள்ளை தமிழ் – ஆங்கில அகர முதலி யொன்றே, அத்தவாளம் என்னும் சொற்கு, தாளிக்கும் உருண்டையான வடகம் என்னும் பொருளைக் குறித்துள்ளது.

இஃது, அத்தவாளம் என்பதன் பெயர்களுள் ஒன்றான வடகம் என்னும் சொல்லின் மறு பொருளைக் குறிக்குமாயின், ஒருபொருட் சொல்லில் மறுபொருட் கூறல் என்னுங் குற்றமாகும். இது பிறவிக் குருடனுக்குப் பாலின் இயல்பை யுணர்த்திய கதையை நினைவுறுத்தும்.

 அத்தவாளம்1 attavāḷam, பெ. (n.)

   1. மேலாடை; upper garment.

   2. முன்றானை (ஈடு.9, 10, ப்ர.);; outer end of a cloth.

   3. காடு (வின்.);; jungle.

த.வ. தோள்தானை.

     [Skt hasta + Mar.vala → த. அத்தவாளம்.]

 அத்தவாளம்2 attavāḷam, பெ. (n.)

   ஆயுள் வேதத்திற் சொல்லியுள்ள ஒரு வகை மாத்திரை;

அத்தாங்கம்

அத்தாங்கம் attāṅgam, பெ. (n.)

அத்தாங்காதனம் பார்க்க;see attangadanam.

     “கேசாங்கமு மத்தாங்கம்” (தத்துவப். 107.);.

     [Skt. hasta + anga → த. அத்தாங்கம்.]

அத்தாங்காதனம்

அத்தாங்காதனம் attāṅgātaṉam, பெ. (n.)

   கையிரண்டும் மடித்து நிலத்திலூன்றி உடல் மேற்பட நிற்கும் இருக்கை வகை (தத்துவப். 107, உரை);; a yogic posture in which a person stands on folded hands, keeping the body aloft.

த.வ. கைத்தாங்கல் ஒகநிலை.

     [அத்தாங்கம் + ஆதனம்.]

     [Skt. hasta + anga → த. அத்தாங்கம்.]

அத்தாசம்

 அத்தாசம் attācam, பெ. (n.)

   உயர்வெளி (அந்தரம்);; mid-air, aloft or above the head.

அவனை அத்தாசமாய்த் தூக்கிக்கொண்டு போனான் (உ.வ.);.

     [அத்தாயம் → அத்தாசம்.]

அத்தாச்சி

அத்தாச்சி1 attācci, பெ. (n.)

   அண்ணி (அண்ணன் மனைவி); (இ.வ..);; elder brother’s wife (Loc.);.

க., து., பட. அத்திகெ.

     [அத்தன் = பெரிய அண்ணன், அண்ணன். அச்சி = அன்னை, அக்கை. அத்தன் + அச்சி – அத்தாச்சி.]

அண்ணன், சிறப்பாகப் பெரியண்ணன் தந்தையொத்தவனாதலால், அவன் மனைவி தாயொத்தவள் என்பது கருத்து.

 அத்தாச்சி2 attācci, பெ. (n.)

   நாத்தூணாள் (கணவன் ; உடன்பிறந்தாள்); (இ.வ.);; husband’s sister (Loc.);.

க. அத்திகெ; பட. அத்திகெனன்னி.

     [அத்தான் = மூத்த அளியன் (மைத்துனன்);, கணவன். அச்சி = அன்னை, அக்கை. அத்தான் + அச்சி – அத்தாச்சி.]

அண்ணியும் மூத்த நாத்தூணாளும் முறையிலும் மதிப்பிலும் ஒத்தவர் என்பது கருத்து.

இளைய நாத்தூரணாளைக் கொழுந்தி யென்பது மரபு. அத்தாச்சியென்னும் பெயர் கொழுந்தியைக் குறிக்குமாயின், அச்சியென்பது அன்பு அல்லது அருமைபற்றியதாகும்.

ஒ.நோ ; தங்கை + அச்சி – தங்கைச்சி.

அத்தாச்சோடு

அத்தாச்சோடு attāccōṭu, பெ. (n.)

   அவ்வளவு பெரியது; thing such a big. (கொ.வ.வ.சொ.5.);.

     [அத்தனை+(சுவடு); சோடு]

அத்தாணி

அத்தாணி attāṇi, பெ. (n.)

   பவானி வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Bhavani Taluk.

     [ஒருகா.ஆற்று+அணி-ஆற்றணி-அத்தாணி]

 அத்தாணி1 attāṇi, பெ. (n.)

   ஒலக்கமண்டபம்; hall of audience durbar hall, presence chamber.

     “அண்டத் தமரர்கள் சூழ வத்தாணி யுள்ளங் கிருந்தாய்” (திவ். பெரியாழ். 2,7,9.);.

     [Pkt. attain → Skt. asthana → த. அத்தாணி.]

 அத்தாணி2 attāṇi, பெ. (n.)

   1. அண்மை; nearness.

   2. கமுக்கம்; intimacy.

     [Pkt. Attain → Skt. a-sthana → த. அத்தாணி.]

அத்தாணிச்சேவகம்

அத்தாணிச்சேவகம் attāṇiccēvagam, பெ. (n.)

   அறமன்றப் பணிவிடை (திவ். திருப்பல். 8.);; service of king or God.

     [அத்தாணி + சேவகம்.]

     [Pkt. attain → Skt. asthana → த. அத்தாணி.]

     [சே2 + அகம் → சேவகம்.]

அத்தாணிமண்டபம்

அத்தாணிமண்டபம் attāṇimaṇṭabam, பெ. (n.)

   ஒலக்க மண்டபம் (சி.போ. சிற். 5,1,1);; hall of audience, presence-chamber.

     [அத்தாணி + மண்டபம்.]

     [Pkt. attain → Skt. asthana → த. அத்தாணி.]

அத்தாந்தரம்

அத்தாந்தரம்1 attāndaram, பெ. (n.)

   நிலையற்ற நிலை; helpless condition.

     “அவனை அந்தாந்தரத்தில் விட்டுவிட்டான்” (இ.வ.);.

     [Skt. ardha + antara → த. அத்தாந்தரம்.]

 அத்தாந்தரம்2 attāndaram, பெ. (n.)

   கைப்பணம் வரவுசெலவு செய்யுங்கணக்கன்; cashier.

     “அம்பலஞ்செயத்தாந்தரம் என்றும்” (நெல்விடு. 317.);.

த.வ. பொருளாளர், காசாளர்.

     [Skt. hasta + antara → த. அத்தாந்தரம்.]

அத்தானம்

 அத்தானம் attāṉam, பெ. (n.)

   கோபுரவாயில் (R.);; gateway under a turret or tower, as of a pagoda.

     [Skt. a-sthana → த. அத்தானம்.]

     [P]

அத்தான்

அத்தான்1 attāṉ, பெ. (n.)

   1. அக்கை கணவன்; elder sister’s husband.

   2. மனைவி தமையன்; wife’s brother, when elder.

   3. கணவன் தமையன்; husband’s brother, when elder.

   4. அம்மான் மகன்; maternal uncle’s son, when elder.

   5. அத்தை மகன்; paternal aunt’s son, when elder.

     [அத்தன் → அத்தான் = மதிப்பில் தந்தையை அல்லது தமையனை ஒத்தவனாய், மணஞ் செய்துகொள்ளும் முறையில் உள்ளவன். இனி, அத்தை மகன் → அத்தைமான் → அத்தான் என்றுமாம்.]

 அத்தான்2 attāṉ, பெ. (n.)

   முடக்கொற்றான் (பரி.அக..);; balloon-vine.

     [முடங்கொன்றான் → முடக்கொற்றான். முடக்கற்றான் என்னும் தவறான வடிவை, முடக்கு + அற்றான் என்று பிரித்ததனால் ஏற்பட்ட ‘அற்றான்’ என்னுங் குறுக்கம் ‘அத்தான்’ என்று திரிந்திருக்கலாம்.]

அத்தான்மதனி

 அத்தான்மதனி addāṉmadaṉi, பெ. (n.)

அத்தான் மதினி பார்க்க;see attdn-madini.

அத்தான்மதினி

 அத்தான்மதினி addāṉmadiṉi, பெ. (n.)

   அத்தை மகன் மனைவி (பிராம.);; wife of the paternal aunt’s son (Brāhm.);.

அத்தாபத்தி

 அத்தாபத்தி attāpatti, பெ. (n.)

அத்தியாவத்தை (நெல்லை); பார்க்க;see attiyavastai.

     [Skt. atyapat → த. அத்தாபத்தி.]

அத்தாபம்

அத்தாபம்1 attāpam, பெ. (n.)

அத்தாபத்தி (இ.வ.); பார்க்க;see attāpatti.

     [Skt. atyapat → த. அத்தாபம்.]

 அத்தாபம்2 attāpam, பெ. (n.)

அத்தியாவத்தை பார்க்க;see attiyavattai.

     [Skt. atyapat → த. அத்தாபம்.]

அத்தாயப்படு-தல்

அத்தாயப்படு-தல் addāyappaḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   கட்டப்படுதல், துன்பப்படுதல் (இ.வ.);; to suffer, to be distressed (Loc.);.

அவன் மிக அத்தாயப்படுகிறான் (உ.வ.);.

     [அத்தாயம் + படு.]

அத்தாயம்

அத்தாயம் attāyam, பெ. (n.)

   1. கடைசற் சக்கரத்தின் மிதிதடி (யாழ்ப்.);; treadle of a turner’s lathe (J);.

   2. உயர்வெளி (அந்தரம்);; mid-air aloft or above the head.

அவனை அத்தாயமாய்த் தூக்கியெறிந்தான் (உ.வ.);.

   3. இளைப்பு; fatigue, weariness.

   4. கட்டம், துன்பம்; difficulty, distress.

அத்தாய்

 அத்தாய் attāy, பெ. (n.)

     [ஆடை → ஆதை → ஆதாய் → அத்தாய்.]

அத்தாரம்

 அத்தாரம் attāram, பெ. (n.)

   மரமஞ்சள்; tree turmeric, Coscinium fenestratum (சா.அக.);.

அத்தாளத்திருவமுது

அத்தாளத்திருவமுது attāḷattiruvamutu, பெ. (n.)

   இராச் சாப்பாடு; dinner.

     “இராஅத்தாளத் திருஅமிர்தத்தின்னு அரி அஞ்ஞாழியும் கூடே” (TAS. v P63-83.);.

     [அத்தாளம்+திரு+அமுது]

அத்தாளம்

 அத்தாளம் attāḷam, பெ. (n.)

   இராச் சாப்பாடு (இ.வ..);; supper (Loc.);.

     “அத்தாளப் பட்டினியு மப்படியே” (சரவண. பணவிடு.);.

ம. அத்தாழம்

     [அல் + தாலம் – அற்றாலம் → அத்தாளம்.]

அல் = இரவு. தாலம் = தட்டு, உண்கலம், உண்டி (இடவாகுபெயர்);.

ஒ.நோ. E. dish = vessel for holding food, food so held, particular kind of food.

 அத்தாளம் attāḷam, பெ. (n.)

   இரவு உணவு; Supper.

     [அல்+தாளம்]

அத்தாளி

 அத்தாளி attāḷi, பெ. (n.)

   காட்டுப் பூவரசு; falsefern tree.

அத்ததாளி பார்க்க;see attatali.

     [அத்ததாளி → அத்தாளி.]

அத்தாள்

 அத்தாள் attāḷ, பெ. (n.)

   தாய் (இராட்.);; mother (R.);.

தெ. அத்த

ஒ.நோ ; ஆத்தாள்

     [அத்தை → அத்தா → அத்தாள். அத்தன் (ஆ.பா.); – அத்தி (பெ.பா.); = அன்னை. அத்தன் (ஆ.பா.); – அத்தை → ஆத்தை (பெ.பா.); = அன்னை.]

ஐகாரவீற்று அன்னை (அல்லது அக்கை); முறைப்பெயர்களின் ஆகாரவீற்று விளிவடிவங்கள் பல, கொச்சை வழக்கில் ளகர மெய்யீறு ஏற்றும் ஏலாதும் எழுவாய் வடிவுகளாக வழங்கிவருகின்றன.

எ-டு : அம்மை → அம்மா → அம்மாள்.

இம் முறையில், ஆத்தை என்பது ஆத்தாள் என்று திரிந்து வழங்குகின்றது.

அத்தி (அன்னை); என்பது, இலக்கண முறைப்படி, அத்தீ என்று ஈறுநீண்டே விளியேற்கும். ஆதலால், ள கர மெய்யீறு பெறாது.

இன்று தந்தையின் உடன்பிறந்தாளையும் மாமியையுங் குறிக்கும் அத்தையென்னுஞ் சொல், முதற்காலத்தில் அன்னையையுங் குறித்திருத்தல் வேண்டும். அன்றேல், அத்தாள் என்னும் வடிவு பெற்றிராது.

பிராகி., வ. அத்தா.

ஐகார ஈறு ஆகார ஈறாகத் திரிவது பிராகிருத ஆரிய (சமற்கிருத); இயல்பே.

அத்தாழம்

அத்தாழம் attāḻm, பெ. (n.)

   மாலைக்காலம்; evening time.

     “அத்தாழத் திருவமிர்தினும் அந்தியின் முன்னை அரி அளக்கக் கடவிர்” (TAS.iii. 8, 189-91.);.

     [எல்(கதிரவன்);-அல் (தாழ்); தாழம்]

அத்தாவரி

 அத்தாவரி attāvari, பெ. (n.)

   வெட்பாலையரிசி (பரி.அக.);; the drug known as vetpalaiyariši (செ.அக.); – வெட்பாலரிசி;

 dyer’s oleander, seeds of Wrightia tinctoria (சா.அக.);.

அத்தி

அத்தி1 atti, பெ. (n.)

   1. அன்னை; mother.

   2. அக்கை; elder sister.

ம. அத்திக ; க. அத்திகெ (அக்கை); ; தெ. அத்தி (தாய்);; கூ. அத (பாட்டி); ; பிரா. அத்தி (தாய்);; பிராகி. அத்தா (தாய்);.

வ. அத்தா = அன்னை, அக்கை; அந்தி(கா);, அத்திகா = அக்கை.

வடமொழி ஆவீறு தமிழில் ஐயீறாவது போன்று, தமிழ் ஐயீறு வடமொழியில் ஆவீறாகும்.

அத்தன் (ஆ.பா.); – அத்தி (பெ.பா.);.

அத்தி என்னுஞ் சொல், அக்கை யென்னும் பொருளில் தமிழில் வழக்கற்றது. ஆயின், அதன் திரிபான அச்சி என்னும் வடிவம் அப் பொருளில் உலக வழக்கில், சிறப்பாகத் தாழ்த்தப்பட்ட வகுப்பாரிடை வழங்கி வருகின்றது.

மூத்த உடன்பிறந்தாள் தாய்க்குச் சமமாதலால், தாய் முறைப்பெயர் அக்கைக்கு வழங்கி வருவது இயல்பே.

ஒ.நோ ; அவ்வை = அன்னை, அக்கை. தம் + அவ்வை = தவ்வை = தமக்கை.

     ‘கை’ கு.பொ.பின். (dim. suff.);

எ-டு : குடி → குடிகை = சிறுகோயில். கன்னி → கன்னிகை = இளங்கன்னி. அண்ணன் தந்தையை யொத்தவனாயின் அண்ணி தாயை யொத்தவளாதலால் கன்னடத்தில் ‘அத்திகெ’ என்பது அண்ணியைக் குறிக்கின்றது. ஐகார ஈறு கன்னடத்தில் எகர ஈறாவது இயல்பே.

இம் முறையில், அத்திகை என்பது, முதற் கண் அக்கைமாருள் இளையவளைக் குறித்திருக்கலாம்.

அன்னையும் அக்கையும் போலப் பாட்டியும் அன்னையு மிருத்தலால், இடைப்பட்ட அன்னை முறைப்பெயர் அக்கைக்கு வழங்குவது போன்று பாட்டிக்கும் சிறுபான்மை வழங்கி வருகின்றது.

ஒ.நோ ; அவ்வை = அன்னை, பாட்டி..

தமிழ்ச்சொல் திரவிடத்தில் வழங்குவது போன்றே, திரவிடச்சொல் பிராகிருதத்திலும், பிராகிருதச்சொல் சமற்கிருதத்திலும் வழங்கி வருகின்றனவென அறிக.

 அத்தி2 atti, இடை. (part.)

   ஒரு பெண்பாலீறு; a fem. suff.

எ-டு : நட்டுவத்தி, வேட்டுவத்தி, குறத்தி, மறத்தி.

அன்னை முறைப்பெயர், பொதுவாக மதிப்பான பெண்ணைக் குறிப்பதுடன், பெண்பாலீறாகவும் வழங்கும்.

எ-டு : அந்த அம்மை யார் ?

ஒர் அம்மையார் வந்திருக்கிறார்.

ஒர் அம்மா வந்திருக்கிறது (கொச்சை);. மதிப்பான பெண்

கண்ணம்மை,

பொன்னம்மை.

கண்ணம்மா.

பொன்னம்மா (கொச்சை);. பெண்பாலீறு

இந்த முறையிலேயே, அத்தி என்னும் அன்னை முறைப்பெயரும் பெண்பாலீறாகும்; ஏனைப் பொருள்களில் அது வழக்கற்றது.

     ‘அத்தி’ என்னும் சொல்லே இகரவீறு பெற்ற ஒரு பெண்பாற் பெயராதலால் முன்னை யிலக்கண நூலார் அதை ஒர் ஈறாகக் கூறிற்றிலர். வீரசோழியம் என்னும் பின்னை யிலக்கண நூலில் அஃது ஒரு பெண்பாலீறாகக் கூறப்பட்டுள்ளது. “அச்சியொடாட்டியணியாத் தியத்தி” (வீரசோ. சொல். தத்திதப். 4);. ஆயின், அச் சொல்லின் வரலாற்றை அந் நூலாசிரியர் அறிந்தவரல்லர்.

 அத்தி3 atti, பெ. (n.)

   நாட்டிலுங் காட்டிலும் 40 அடி உயரம் வரை வளர்வதும், கரந்து பூப்பதும், பலவகைப்பட்டதும், மருத்துவத்திற்கு மிகப் பயன்படுவதும், பெரும்பாலுஞ் சாலைகளின் இருமருங்கும் நிழன்மரமாக வளர்க்கப்படுவதுமான ஒருவகைப் பெருமரம்; a large cryptogamous species of tree of many varieties, growing up to a height of 40 feet in both wild and cultivated conditions, useful for medicinal purposes, and very often seen on avenues and trunk roads.

   அத்தியின் வகைகளாவன (சா.அக.); ;இது மிக அரியது ; மணமுள்ளது; நீல மலை, காசுமீரம், காபூல் முதலிய இடங்களிலுள்ள மலைச்சாரல்களிற் பயிராவது. இதன் கனியையுண்டால் அரத்தப் பெருக்கமுண்டாகி மலக்கட்டு நீங்கும்.

இதன் கனி பட்டாணிக் கடலையளவிருக்கும்.

     [ம., க., தெ., பட., குட. அத்தி ; து. அர்த்தி ; துட. ஒத்ய் ; கோத. அத்ய் ; சிங். அத்திக்கா, அட்டிக்கா.]

     [அத்துதல் = ஒட்டுதல். அத்து → அத்தி = கிளைகளையொட்டிக் காய்க்கும் காய்களையுடைய மரம்.]

ஊழலத்தி என்றொரு வகையத்தியைச் சங்க அகரமுதலி குறிக்கின்றது. ஒருகால் அது விழலத்தியின் மறுபெயராயிருக்கலாம்.

நாயத்தியென்னும் ஒருவகையுண்டு. தாழ்ந்த வகையான நிலைத்திணையின் பெயர்கள் பொதுவாக நாயென்னும் அடை மொழி பெறுவதால், நாயத்தியும் தாழ்ந்ததாய் இருத்தல் வேண்டும்.

   அத்திப் பழமொழிகள் ;     ‘அத்திக் காயைப் பிட்டுப் பார்த்தால் அங்கு மிங்கும் பொள்ளல்.’

     ‘அத்திப் பழத்தைப் பிட்டுப் பார்த்தால் அத்தனையும் புழு.’

     ‘அத்திப் பழத்தைப் பிட்டுப் பார்த்தால் அதற்குள்ளும் விதையிருக்கும்.’ ‘அத்திப் பூவை ஆர் அறிவார்?’

     ‘அத்திப் பூவைக் கண்டவர் உண்டா? ஆந்தைக் குஞ்சைப் பார்த்தவர் உண்டா?’

     ‘அத்தி பூத்தாற்போல் (இருக்கிறது);.’

     ‘அத்திபோல் துளிர்த்து (ஆல்போல் தழைத்து, அறுகுபோல் வேரூன்றி, அரசு போல் ஓங்கி, மூங்கில்போற் சுற்றம் முசியாமல் வாழ்ந்திருப்பீர்);’ ‘அத்தி மரத்தில் தொத்திய கனிபோல்.’

 அத்தி4 atti, பெ. (n.)

   1. எருக்கங் கிழங்கு; madar root or root of Calotropis gigantea.

   2. செவ்வாமணக்கு; red castor oil plant, communis.

   3. கருவிளை ; a wild creeper. Clitoria ternatea.

   4. குன்றிமணி; rosary pea abrus precatorius.

   5. வேங்கை; kino rosewood. Pterocarpus santalinus.

   6. வாலை (பாதரசம்);; mercury obtained by distillation from vermillion.

   7. கண் நரம்புகளுள் ஒன்று; one of the neroes of the eye.

   8. மயக்கம்; swoon (சா.அக.);.

     [செவ்வாமணக்கு, குன்றிமணி ஆகிய இரண்டின் பெயரும் அத்தம் (சிவப்பு); என்னும் மூலத்தினின்று தோன்றியிருக்கலாம்.]

 அத்தி5 atti, பெ. (n.)

   1. மலை; mountain.

   2. வெருகஞ்செடி; tuberous-rooted herb, Arum macrohizon (செ.அக.);.

 அத்தி6 atti, பெ. (n.)

   பறவை (பொதி.நி.);; bird.

 அத்தி1 atti, பெ. (n.)

   1. பானை (பிங்.);; elephant.

   2. தெய்வானை (திருப்பு.);; one of the two wives of Skanda.

   3. ஓர் அரசன் (பாரத. குருகுல.28);; name of a prince of the lunar race, as the founder of Hastinapura.

     [Skt. hastin → த. அத்தி.]

 அத்தி2 atti, பெ. (n.)

   எலும்பு (பிங்.);; bone.

     [Skt. asthi → த. அத்தி.]

அத்திகங்கம்

 அத்திகங்கம் attigaṅgam, பெ. (n.)

   பொழுதுவணங்கி (சூரிய காந்திப்பூ.);; sun flower, Helianthus annuns alias Hindicus (சா.அக.);.

அத்திகன்னி

 அத்திகன்னி attigaṉṉi, பெ. (n.)

   வெருகஞ் செடிவகை (மலை.);; ol, tuberous rooted herb, Arum macrorwzon.

     [Skt. hasti-karna → த. அத்திகன்னி.]

அத்திகபம்

அத்திகபம் attigabam, பெ. (n.)

   1. கணவாய் மீனெலும்பு; cuttle fish bone.

   2. கடனுரை; sea-froth (சா.அக.);.

அத்திகரம்

அத்திகரம் attigaram, பெ. (n.)

   1. பலகறை; cowry.

   2. ஊனீர்; serum (சா.அக.);.

அத்திகர்ணி

அத்திகர்ணி attigarṇi, பெ. (n.)

   சிற்றாமணக்கு; castor-plant.

     “அத்திகர்ணியவிசு” (தைலவ. தைல. 113);.

     [Skt. hasti-karna → த. அத்திகர்ணி.]

அத்திகாயம்

அத்திகாயம்1 attikāyam, பெ. (n.)

   ஐந்து அருக (சைன); மத மெய்ப்பொருள்கள் (தத்துவங்கள்);;     [Skt. asti-kaya → த. அத்திகாயம்.]

 அத்திகாயம்2 attikāyam, பெ. (n.)

   1. எலும்பிலேற்பட்ட புண் (காயம்);; an injury to the bone or a wound from the affection of a bone.

   2. எலும்பு முறிவு; fracture of a bone (சா.அக.);.

     [அத்தி + காயம்.]

     [Skt. asthi → த. அத்தி.]

கள் → கய் → காய் → காயம்.

அத்திகிரிமான்மியம்

 அத்திகிரிமான்மியம் attigirimāṉmiyam, பெ. (n.)

   சிற்றிலக்கிய (பிரபந்த);ங்களுளொன்று; name of a poem on the Visushrine at Kānjipuram by Vēdāntadēšika.

     [Skt. hasti-giri + mahatmya → த. அத்திகிரி மான்மியம்.]

அத்திகும்பம்

 அத்திகும்பம் attigumbam, பெ. (n.)

   எலும்புப் பானை; an urn for preserving the bones of the dead (சா.அக.);.

த.வ. என்புத்தாழி.

     [அத்தி + கும்பம்.]

     [Skt. asthi → த. அத்தி.]

கும்பு → கும்பம் → Skt. kumbha.

அத்திகூடம்

அத்திகூடம் attiāṭam, பெ. (n.)

   யானைக்கூடம்; elephant stables,

     “ஆயிடை யத்தி கூடத் தயலெழுந்து” (யசோதர.2, 21.);.

த.வ. யானைத்தறி.

     [அத்தி + கூடம்.]

     [Skt. hastin → த. அத்தி.]

கூடு → கூடம்.

அத்திகேசரம்

 அத்திகேசரம் attiācaram, பெ. (n.)

   சிவப்பு வல்லி; a red creeper (சா.அக.);.

அத்திகை

 அத்திகை attigai, பெ. (n.)

   தமக்கை; elder sister.

   ம., க. அத்திகெ; Skt. attiga.

     [அத்தி (அக்கை); + கை (கு.பொ.பின்.); – அத்திகை (இளைய அக்கை, அக்கை.);.]

அத்திகோசத்தார்

அத்திகோசத்தார் attiācattār, பெ. (n.)

   வணிகச் சாத்துக்சகுத் துணையாகச் சென்ற யானைப் படை மறவர்; escorting soldiers for elephant wing of the army.

     [அத்தி+கோசத்தார்]

 அத்திகோசத்தார் attiācattār, பெ. (n.)

   ஒரு குழுவின் பெயர் (தொல். சொல். 167. உரை.);; name of an ancient clan.

த.வ. யானைக்குழுவார்.

அத்திகோசம்

அத்திகோசம் attiācam, பெ. (n.)

   யானை சுமத்தற்குரிய பொருள் படைத்த பெரு வணிகர் வகையார்; a kind of merchant, whose store of wealth is so large as to need an elephant to carry it.

     “ஐம்பெருங்குழுவு மத்திகோசமும்” (பெருங். வத்தவ. 9, 5, அரும்);.

த.வ. யானைவாணிகக்குடி.

     [Skt. hastin + kosan → த. அத்திகோசம்.]

அத்திகோபம்

 அத்திகோபம் attiāpam, பெ. (n.)

   சிவந்து தோன்றும் கண்ணோய் வகை (வின்.);; a disease of the eye.

     [அத்தி + கோபம்.]

     [Skt. asthi → த. அத்தி.]

குப்பள் = சிவப்பு. குப்பள் → குப்பு → கோப்பு → கோபம்.

அத்திகோலம்

 அத்திகோலம் attiālam, பெ. (n.)

   அழிஞ்சில் (மலை.);; sage-leaved alangium.

அத்திகோவிகம்

 அத்திகோவிகம் attiāvigam, பெ. (n.)

   சிவப்பு எலிச் செவிப் பூடு; a red species of rat’s ear plant, Evolvulus emarginatas (சா.அக.);.

அத்திக்கனி

அத்திக்கனி attikkaṉi, பெ. (n.)

   1. அத்திப் பழம்; fig fruit.

   2. கரிசலாங்கண்ணி; species of eclipta (செ.அக.); – eclipse plant, Eclypta alba (சா.அக.);.

     [அத்தி + கனி.]

அத்திக்கன்னி

 அத்திக்கன்னி attikkaṉṉi, பெ. (n.)

   வெருகு; toddy bird, Paradoxurus niger.

 It is so called from its attachment to toddy trees, where it hangs its curious pensile nests (சா. அக.);.

அத்திக்கரணி

அத்திக்கரணி attikkaraṇi, பெ. (n.)

   1. சிற்றாமணக்கு; small-seeded castor plant, Rhicinus communis.

   2. பலாசு; bastard plant, Butea frondosa (சா.அக.);.

அத்திக்கள்

 அத்திக்கள் attikkaḷ, பெ. (n.)

   அத்திப் பதநீர், அத்திப்பால், நாட்டத்தி வேரினின்று எடுக்கப்படும் கள்; toddy extracted from the country fig.

ம. அத்திக் கள்ளு

மறுவ. அத்திப் பதநீர். அத்திப்பால், அத்தி நீர்.

அத்திக்கழலை

 அத்திக்கழலை attikkaḻlai, பெ. (n.)

   எலும்பைப் பற்றிய கழலைக் கட்டி; a bone tumour (சா.அக.);.

த.வ. என்புக்கழலை.

     [அத்தி + கழலை.]

     [Skt. asthi → த. அத்தி.]

அத்திக்கவிப்பு

 அத்திக்கவிப்பு attikkavippu, பெ. (n.)

   எலும்பின் மேல் கவிந்துள்ள சவ்வு; the tough fibrous membrane surrounding the bone periosteum (சா.அக.);.

த.வ. என்புக்கவிப்பு.

     [அத்தி + கவிப்பு.]

     [Skt. asthi → த. அத்தி.]

கவி → கவிப்பு.

அத்திக்காய் பரு

 அத்திக்காய் பரு attikkāyparu, பெ. (n.)

   ஒரு மேகப் புண்ணோய்; a fig-wart of venereal origin, a kind of verruca in secondary syphilis (சா.அக.);.

அத்திக்காய்க்கிரந்தி

 அத்திக்காய்க்கிரந்தி attikkāykkirandi, பெ. (n.)

   மேகநோயினால் உடம்பு முழுவதும் அத்திக்காய்ப் பருமன் கட்டிகளை யெழுப்பும் ஒரு புண்ணோய்; a syphilitic affection causing fig-size ulcers of warts all over the body (சா.அக.);.

     [அத்திக்காய் + Skt, granthi → த. கிரந்தி.]

அத்திக்காளிக்கீரை

 அத்திக்காளிக்கீரை attikkāḷikārai, பெ. (n.)

   கோழிக்குறும்பான் கீரை; a kind of amaranthus known as cock’s green, Portulaca oleracea (சா.அக.);.

அத்திக்கிர்ந்தி

 அத்திக்கிர்ந்தி attikkirndi, பெ. (n.)

   எலும்புகள் நொறுங்குதலால் உண்டாகிப் பருத்துயர்வதும் அமுங்குவதுமாக இருக்கு மோர் புண்கட்டி; an ulcerous diseases due to the death of a bone arising from syphilitic causes syphilitic causes (சா.அக.);.

த.வ. துருத்துக்கழலை.

     [Skt. asthi + granthi → த. அத்திக்கிரந்தி.]

அத்திக்குட்டிமல்ம்

அத்திக்குட்டிமல்ம் attikkuṭṭimalm, பெ. (n.)

   1. கண்டில் வெண்ணெய்; a drug unidentified.

   2. யானைக் குட்டியின் சாணி; the faeces of an elephant’s kid (சா.அக.);.

அத்திக்கூடு

 அத்திக்கூடு attikāṭu, பெ. (n.)

   எலும்புக் கூடு; a skeleton (சா.அக.);.

த.வ. என்புக்கூடு.

     [அத்தி + கூடு.]

     [Skt. asthi → த. அத்தி.]

குல் → குள் → கூடு.

     [P]

அத்திக்கொடி

 அத்திக்கொடி attikkoḍi, பெ. (n.)

   கொடியத்தி; a fig çreeper, Ficus repens (சா.அக.);.

ம. அத்திக்கிழங்குவள்ளி

     [அத்தி + கொடி.]

அத்திக்கொம்பு

 அத்திக்கொம்பு attikkombu, பெ. (n.)

   யானைக் கொம்பு; elephant’s tusk (சா.அக.);.

த.வ. யானை மருப்பு.

     [அத்தி + கொம்பு.]

     [Skt. hastin → த. அத்தி.]

அத்திக்கோலிகம்

 அத்திக்கோலிகம் attigāligam, பெ. (n.)

   சிறு குறிஞ்சா; a small Indian ipecacuanha, Gymnema parviflorum (சா.அக.);.

அத்திசந்தி

 அத்திசந்தி attisandi, பெ. (n.)

எலும்பின் மூட்டு the joint of bones (சா.அக.);.

     [அத்தி + சந்தி.]

     [Skt. asthi → த. அத்தி.]

அந்து → சந்து → சந்தி.

அத்திசம்

 அத்திசம் attisam, பெ. (n.)

   நீர்முள்ளி; a thorny shrub, Hygrophila spinosa (சா.அக);.

 அத்திசம் attisam, பெ. (n.)

   எலும்புக்குள் தோன்றுவது; that which is produced in the bone like its marrow (சா.அக.);.

த.வ. என்பியம்.

     [Skt. asthi → த. அத்திசம்.]

அத்திசம்மாரகம்

 அத்திசம்மாரகம் attisammāragam, பெ. (n.)

   நான்முகப் பிரண்டை; bone setter, Vitis quadrangulariS (சா.அக.);.

     [P]

அத்திசா

 அத்திசா atticā, பெ. (n.)

   கொடி முந்திரிகை; common grapervine, Vitis vinefera (சா.அக.);.

அத்திசாரபேதி

 அத்திசாரபேதி atticārapēti, பெ. (n.)

   எலும்பு, மூளை இவற்றின் சாரத்தை வெளிப்படுத்தி கழி மலத்தோடு கலந்து வருமோர் வகை வயிற்றுக் கழிச்சல்; a kind of dysentary marked by the discharge of marrow and other substance from the cavities of bones (சா.அக.);.

     [Skt. asthi + sarabedi → த. அத்திசாரபேதி.]

அத்திசிங்குவை

அத்திசிங்குவை attisiṅguvai, பெ. (n.)

   பதின் நாடியுளொன்று (சிலப். 3, 26, உரை.);; a principal tubular vessel of the human body, one of tasa-nadi, q.v.

     [Skt. hastijihva → த. அத்திசிங்குவை.]

அத்திசிராவம்

அத்திசிராவம் attisirāvam, பெ. (n.)

   1. பெண்களுக்கு அல்குல் வழியாகவோ அல்லது கருப்பைக் குள்ளிருந்தோ பால்போல் வெண்ணிறமாயோ அல்லது சளி, சீழ் முதலியன போலவோ நீர்மமாக வெளிப்பட்டு, அல்குலிலும், முதுகிலும் வலியுண்டாக்கி அடிவயிறு கனத்து, நாளுக்கு நாள் உடம்பு மெலிந்து, கை காலோய்ந்து போகும்படிச் செய்யும் நோய்; a disease in women characterised by a whitish viscid discharge from the vagina or uterine cavity due to the congestion of the these parts, arises from weakness, perturbation of the mind abortion or premature labour, rude coitus etc.

   2. எலும்புருக்கி நோய்; a tabes marked by a secretion of the marrow from the bony tissues with a darting pain ostcotabes,

   3. இதள் (இரச); தாதுவின் கொதிப்பினால் குருதியின் இயற்கை நிறம் கெட்டு வெளிப்படுமோர் நோய்; a wasting disease arising from the discharge of blood, with its natural colour altered, owing to the overheated condition of the chyle in the system (சா.அக.);.

     [Skt. asthi + srava → த. அத்திசிராவம்.]

அத்திசூடு

அத்திசூடு atticūṭu, பெ. (n.)

   1. வெப்பம்; heat.

   2. கதகதப்பு; feverishness.

அத்திதந்தம்

அத்திதந்தம்1 addidandam, பெ. (n.)

   முள்ளங்கிச் செடிவகை; radish, as resembling elephant tusk.

     “விடமரக் கனிமுருக் கத்தி தந்தம்” (தைலவ. தைல. 73.);.

     [Skt. hastidanta → த. அத்திதந்தம்.]

 அத்திதந்தம்2 addidandam, பெ. (n.)

   யானைத் தந்தம்; the tusk of the elephant ivory.

     [Skt. hastindanta → த. அத்திதந்தம்.]

அத்திதாதுசுரம்

 அத்திதாதுசுரம் attitātusuram, பெ. (n.)

   உடம்பை உருக்கச் செய்யும் எலும்பைப் பற்றிய வோர் வகைக் காய்ச்சல்; a kind of fever resulting in the emaciation of the body the due to the affection of bones (சா.அக.);.

     [அத்தி + தாது + சுரம்.]

     [Skt. asthi → த. அத்தி.]

உல் → சுல் → சுர் → சுரம்.

அத்திதேலம்

 அத்திதேலம் attitēlam, பெ. (n.)

   ஆவியாய்ப் போகக் கூடிய நெய்மம்; a volatile oil, such as petrol, etc. (சா.அக.);.

அத்தித்திப்பிலி

 அத்தித்திப்பிலி attittippili, பெ. (n.)

   கொடிவகை (மூ.அ.);; elephant – pepper climber.

     [அத்தி + திப்பிலி.]

     [Skt. hasti → த. அத்தி.]

திப்பிலி → Skt. pippili.

அத்தித்திவகம்

 அத்தித்திவகம் attittivagam, பெ. (n.)

   எலும்பின் பாகத்தையடுத்த சவ்வு; the membrane investing the bones of animals, Periosteum (சா.அக.);.

அத்தித்தேக்கி

 அத்தித்தேக்கி attittēkki, பெ. (n.)

   சிறு கொத்தவரை (சீனியவரை);; a small species of cluster beans, Cyamopsis peoralioides (சா.அக.);.

     [அத்துதல் = ஒட்டுதல். தேக்குதல் = நிறைத்தல், கூட்டுதல், கொத்தாக்குதல். கிளை யொட்டிக் கொத்துக்கொத்தாய்க் காய்த்தலால், கொத்தவரையெனப்பட்டது.]

அத்திநகம்

 அத்திநகம் attinagam, பெ. (n.)

   நகர வாயிலின் படிச்சுருள் (சூடா.);; raised mound protecting the approach to the gate of a fort or city, furnished with an inner staircase and loopholes for discharging arrows.

     [Skt. hasti – nakha → த. அத்திநகம்.]

அத்திநகர்

அத்திநகர் attinagar, பெ. (n.)

   அத்தினாபுரம்; Hastinapuram near modern Delhi.

     “அத்திநகரெய்தினா னாங்கு” (பாரதவெண். 147);.

     [அத்தி + நகர்.]

     [Skt. hastin → த. அத்தி.]

நகு → நகர்.

அத்திநாடிவிரணம்

 அத்திநாடிவிரணம் attināṭiviraṇam, பெ. (n.)

   எலும்பின் வழியே பிறந்து அந்த எலும்பின் நரம்புகளுக்கு வலியுண்டாக்கும் ஒரு மென்மையான கட்டி; a cold abscess formed in the surrounding tissues of a bone and marked by a chronic infimmation of the periosteum (சா.அக.);.

அத்திநாத்திவாதம்

 அத்திநாத்திவாதம் attināttivātam, பெ. (n.)

   எலும்பை அழிக்கக்கூடியவோர் வளிநோய் (வாதம்);; a disease marked by the molecular decay or death of a bone-osteonecrosis (சா.அக.);.

அத்திநீர்

 அத்திநீர் attinīr, பெ. (n.)

அத்திப்பதநீர் பார்க்க;see atti-p-pada-nir.

அத்திநூல்

 அத்திநூல் attinūl, பெ. (n.)

   எலும்பினுடைய தன்மையையும், அதன் அமைப்பையும் பற்றிக் கூறும் நூல்; the science of the nature and structed of the bones, Osteology (சா.அக.);.

     [அத்தி + நூல்.]

     [Skt. asthi → த. அத்தி.]

அத்திநோய்

அத்திநோய் attinōy, பெ. (n.)

   1. எலும்பில் ஏற்படும் நோய்; disease of the bone.

   2. எலும்பில் ஏற்படும் வலி; pain in a bone or in the bones-Ostalgia (சா.அக.);.

     [அத்தி + நோய்.]

     [Skt. asthi → த. அத்தி.]

அத்திந்தல்

 அத்திந்தல் attintal, பெ. (n.)

விழுப்புரத்திற்கு அருகில் உள்ள ஓர் ஊர்.

 Name of the village near Viluppuram.

     [ஒருகா.அத்தன்+ஏந்தல்]

அத்தினபுரம்

அத்தினபுரம் attiṉaburam, பெ. (n.)

   நூற்று வர்தம் தலைநகர் (சீவக. 2182, உரை);; Hastinapura.

     [Skt. hastinapura → த. அத்தினபுரம்.]

அத்தினாபுரம்

அத்தினாபுரம் attiṉāpuram, பெ. (n.)

   அத்தி என்பவனால் வடநாட்டில் பாரத காலத்தில் நிறுவப்பட்ட நகரம்; capital city of pandavas named by the king atti being the master mind of the construction of the city. (பாரத.குரு:68);

     [அத்தியின்+புரம்-அத்தினாபுரம்]

வடமொழியில் இது Hastinapuri எனத்திரிந்தது.

அத்தினாபுரி

அத்தினாபுரி attiṉāpuri, பெ. (n.)

   அத்தினாபுரம் (பாரத. குருகுல. 29.);; Hastinapuram.

     [Skt. hastinapuri → த. அத்தினாபுரி.]

அத்தினி

அத்தினி1 attiṉi, பெ. (n.)

   1. பிடி (பிங்.);; female elephant.

   2. பெண்வகை (கல்லா.7, மயிலேறு கொக்கோ. 1, 15-18.);;     [Skt. hastini → த. அத்தினி.]

 அத்தினி2 attiṉi, பெ. (n.)

   1. காக்கை; crow.

   2. விருப்பம் (இச்சை); கொண்ட பெண்; a woman highly lustful.

   3. வழலை; fuller’s earth.

   4. மூன்று அல்லது நான்கு திங்கள் வளர்ச்சியுள்ள பிண்டக்கரு; human foetus three or four months old i.e., the fourth and the last class of foetus according to the classification contemplated in the Tamil medical science (சா.அக.);.

அத்தினிமார்பிண்டத்தவலமுடி

அத்தினிமார்பிண்டத்தவலமுடி attiṉimārpiṇḍattavalamuḍi, பெ. (n.)

   நால்வகைச் சாதிகளிலொன்றாகிய அத்தினி சாதிப் பெண்ணின் முதற்பிண்டத்தின் மண்டையோடு; the skull of the first foetus of the one of the 4 classes of women called Athini (the lowest class); (சா.அக.);.

அத்தின்

அத்தின் attiṉ, பெ., 5ஆம் வேற்.

   அதனின், அதனின்று; from that

     “தானத்தின் வேறாகுந் தான்” (சி.போ. 3;7. வெண்பா);.

     [அது → அத்து + இன். ஒ.நோ ; எது → எத்து. ‘எத்தால் வாழலாம், ஒத்தால் வாழலாம்’ (பழ.);.]

அத்திபங்கம்

அத்திபங்கம் attibaṅgam, பெ. (n.)

   1. எலும்பின் முறிவு; the fracture of a bone.

   2. எலும்பின் கோணல்; the curvature or bending of a bone-osteocampsia (சா.அக.);.

     [Skt. asthi + bhanga → த. அத்திபங்கம்.]

அத்திபஞ்சரம்

அத்திபஞ்சரம் attibañjaram, பெ. (n.)

   எலும்புக்கூடு (சிந்தா. நி. 147);; skeleton.

     [Skt. asthipanjara → த. அத்திபஞ்சரம்.]

அத்திபந்தனம்

 அத்திபந்தனம் attibandaṉam, பெ. (n.)

   எலும்புகளைக் ஒன்று கட்டுகின்ற நார்; a ligament or a ligamental fibre (சா.அக.);.

     [அத்தி + பந்தனம்.]

     [Skt. asthi → த. அத்தி.]

அத்திபேதம்

 அத்திபேதம் attipētam, பெ. (n.)

   எலும்பின் வேற்றுமை; the different varieties of bones (சா.அக.);.

     [Skt. ashti + bhéda → த. அத்திபேதம்.]

அத்திபேதி

அத்திபேதி1 attipēti, பெ. (n.)

   யானையின் மலக்குடலைத் துப்புரவாக்கும் மருந்து (வின்.);; purgative for elephants.

     [Skt. hastibhedin → த. அத்திபேதி.]

 அத்திபேதி2 attipēti, பெ. (n.)

   எலும்பை நீராக்கும் மருந்து; a medicine capable of converting the bone into a liquid (சா.அக.);.

     [Skt. asthi-bhédin → த. அத்திபேதி.]

அத்திபைரவி

 அத்திபைரவி attibairavi, பெ. (n.)

   சீமைவிளா; European Wood apple, Feronia elephantum (சா.அக.);.

அத்திப்பட்டை

 அத்திப்பட்டை attippaṭṭai, பெ. (n.)

   அத்தி மரத்தின் உரி (மேல்தோல்); ; bark of the fig tree.

     [அத்தி + பட்டை.]

   இப் பட்டைச்சாறு, நச்சுக்கடி, புலி அல்லது பூனை யுகிர்ப் பறண்டல் பிளவை, பெரும்பாடு ஆகியவற்றைக் குணமாக்கும்; The juice from this bark is a cure for poisonous bites, scratches caused by tiger’s claws or cat’s paw, carbuncles and menorrhagia.

அத்திப்பதநீர்

 அத்திப்பதநீர் addippadanīr, பெ. (n.)

   அத்தி மரத்தின் வேரினின்று வடியும் நீர் அல்லது கள்; a fluid exuding from the root of the fig tree.

   இஃது உடம்பிற்குக் குளிர்ச்சியையுண்டாக்கி, வெட்டைச் சூடு, கண்ணெரிச்சல் முதலியவற்றைப் போக்கும்; This is used for cooling down the human body system, and for removing venereal heat and for curing inflammation of the eyes.

     [அத்தி + பதநீர்.]

அத்திப்பற்று

 அத்திப்பற்று attippaṟṟu, பெ. (n.)

செய்யாறு வட்டத்தில் உள்ள ஓர் ஊர்.

 Name of the village in Syarue.

     [அத்தி+பற்று.]

திருவோத்தூர்கல்வெட்டிலும்வல்லம் கல்வெட்டிலும் அத்திபற்று என்னும் பெயர் காணப்படுகிறது.

அத்திப்பழச்சாறு

 அத்திப்பழச்சாறு attippaḻccāṟu, பெ. (n.)

   அத்திப்பழத்தின் பிழியல்; the juice of fig fruit.

   இது, மதுமேகம், மூத்திரநோய் முதலியவற்றிற்குக் கொடுக்கும் சுண்ணம் (பற்பம்);, செந்தூரம் முதலிய மருந்துகட்கு உடன்குடிப்பாக (அனுபானமாக); உதவும்; This is used by native physicians as a medium in the administration of calcined oxides and red oxides or other metalic preparations, for curing diabetes and urinary disorders (சா.அக.);.

     [அத்தி + பழம் + சாறு.]

அத்திப்பால்

 அத்திப்பால் attippāl, பெ. (n.)

   அத்திமரத்தினடியிற் குத்தியெடுக்கப்படும் பால்; the milky juice of the country fig tree collected from the stem.

   நாட்டத்திப்பால் அரத்தக்கழிச்சல், வயிற்றுக்கடுப்பு, வயிற்றுப்போக்கு, நீரிழிவு, மூலம், பெரும்பாடு, அரத்தமூத்திரம் முதலியவற்றைக் குணமாக்கும். அயல்நாட்டத்திப் பாலோ, உடம்பிற் பட்டாற் சிவந்து புண்ணாகும்; The juice of the country fig tree is a good remedy for dysentery, inflammation or irritation of the stomach, diarrhoea, diabetes, piles, memorrhagia, blood in the urine, etc. But, the juice of the foreign fig tree has only a blistering effect (சா.அக.);.

     [அத்தி + பால்.]

அத்திப்பிடிப்பு

அத்திப்பிடிப்பு attippiḍippu, பெ. (n.)

   1. எலும்பிற்குக் காணும் அழற்சி; inflammation of the bones.

   2. மூட்டு அல்லது எலும்புப் பொருத்துகளிற் காணும் பிடிப்பு; inflammation of the joints, Osteoarthiritis.

   3. மூட்டுகளிலுள்ள குருத்தெலும்புகள் வன்மையடைவதனால் ஏற்படும் பிடிப்பு; arthritis marked by the growth of the cartilage at the edge of the joints, Hypertrophic arthritis (சா.அக.);.

     [அத்தி + பிடிப்பு.]

     [Skt. asthi → த. அத்தி.]

புள் → பிள் → பிண் → பிடி → பிடிப்பு.

அத்திப்புரசாதனி

 அத்திப்புரசாதனி attippuracātaṉi, பெ. (n.)

   அவுரிப் பூடு; indigo plant, Indigofera elephantum (சா.அக.);.

அத்திமண்டூகி

 அத்திமண்டூகி attimaṇṭūki, பெ. (n.)

   முத்துச் சிப்பி; a molluse which yields pearls, pearl oyster (சா.அக.);.

     [P]

அத்திமல்லன்

 அத்திமல்லன் attimallaṉ, பெ. (n.)

   ஒர் இயர்பெயர்; a proper name.

     [அத்தி+மல்லன்]

செய்யாறு திருப்போத்தூர் இறைவனுக்கு சந்தனப் பூச்சுக்கும் கற்பூரத்திற்கும் பிறவற் றிற்குமாக

அத்திமானம்

 அத்திமானம் attimāṉam, பெ. (n.)

   ஆமணக்கு (சித்.அக.);; castor plant.

அத்திமுகத்தோன்

 அத்திமுகத்தோன் attimugattōṉ, பெ. (n.)

   பிள்ளையார் (பிங்.);; Ganēša, as elephant faced.

த.வ. ஆனைமுகப் பெருமான்.

     [அத்தி + முகத்தோன்.]

     [Skt. hasti → த. அத்தி.]

முகம் → முகத்தோன்.

அத்திமூர்

 அத்திமூர் attimūr, பெ. (n.)

   போளுர் வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Polur Taluk.

ஒருகா

     [அத்திமரம்+ஊர்]

அத்திமேகம்

 அத்திமேகம் attimēkam, பெ. (n.)

   யானையின் சிறுநீரை யொத்து ஒருவேளை தடைபடாமலும், ஒருவேளை தடைபட்டும், வெண்ணிறமாகவோ சிறிது நிறம் மாறியோ காணுமொரு அரிதான வெள்ளை நோய்; a chronic diabetes chracterised by the passing of a large quantity of pale or light coloured urine with or without hindrance, in an Unbroken stream like that passed by an elephant, Diabetes in sipidus or D. mellitus (சா.அக.);.

     [Skt. hastin + meha → த. அத்திமேகம்.]

அத்திமேற்புல்லுருவி

 அத்திமேற்புல்லுருவி attimēṟpulluruvi, பெ. (n.)

   அத்திமரத்தில் முளைத்திருக்கும் புல்லுருவிப் பூடு ; a parasitic plant found growing on fig tree, Banda roxburghii (சா.அக.);.

அத்திம்பியார்

அத்திம்பியார்1 attimbiyār, பெ. (n.)

   அக்கை கணவன் (பிராம.); ; elder sisters’s husband (Brāhm.);.

மறுவ. அத்தம்பியார், அத்திம்பேர்.

     [ஒருகா. அத்தி + நம்பியார் – அத்திநம்பியார் → அத்திம்பியார்.]

அத்தம்பியார் பார்க்க;see attambiyđr.

 அத்திம்பியார்2 attimbiyār, பெ. (n.)

   அத்தை கணவன் (பிராம.); ; paternal aunt’s husband (Brāhm.);.

     [ஒருகா. அத்தை + நம்பியார் + அத்தைநம்பியார் → அத்திம்பியார்.]

அத்திம்பேர்

 அத்திம்பேர் attimbēr, பெ. (n.)

   அக்கை கணவன் (பிராம.); ; elder sister’s husband (Brāhm.);.

     [ஒருகா. அத்தி + நம்பியார் – அத்திநம்பியார் → அத்திம்பேர்.]

 அத்திம்பேர் attimbēr, பெ. (n.)

   அத்தை கணவன் (பிராம.);; paternal aunt’s husband (Brāhm.);.

     [ஒருகா. அத்தை + நம்பியார் – அத்தைநம்பியார் → அத்திம்பியார் → அத்திம்பேர்.]

அத்தியக்கன்

அத்தியக்கன் attiyakkaṉ, பெ. (n.)

   தலைவன்; master, lord, leader, director, Superintendent.

     “கணாத்தியக்கரை” (விநாயகபு. 80. 792);.

     [Skt. adhyaksa → த. அத்தியக்கன்.

அத்தியக்கம்

அத்தியக்கம் attiyakkam, பெ. (n.)

   காண்டலென்னுமளவை; perception as a mode of proof.

     “ஆக்கைவிதம் பேதமென அத்தியக்க மறிவிக்கும் (சிவதரு. சிவஞானயோ. 19);.

     [Skt. adhyaksa → த. அத்தியக்கம்.]

அத்தியக்கினி

 அத்தியக்கினி attiyakkiṉi, பெ. (n.)

   திருமண காலத்து நெருப்பெதிரே பெண்ணுக்குக் கொடுக்குஞ் சீர்வரிசைப்பொருள் (W.G.);; gifts made to a woman before the sacred fire at her wedding, which become her separate property, a variety of sir.

     [Skt. adhyagni → த. அத்தியக்கினி.]

அத்தியசனம்

 அத்தியசனம் attiyasaṉam, பெ. (n.)

   முதல் நாள் உண்டவுணவு செரிக்காமலே மறுநாள் கொள்ளு முணவு; food taken on the next day before the digestion of that taken on the previous day (சா.அக.);.

அத்தியட்சன்

 அத்தியட்சன் attiyaṭcaṉ, பெ. (n.)

அத்தியக்கன் பார்க்க;see attiyakkan.

த.வ. தலைவன்.

     [Skt. adhyaksa → த. அத்தியட்சன்.]

அத்தியந்தம்

அத்தியந்தம்1 attiyandam, எ.வி. (adv.)

   மிகவும்; much, excessively.

     [Skt. atyanta → த. அத்தியந்தம்.]

 அத்தியந்தம்2 attiyandam, பெ. (n.)

   ஒரு பேரெண் (வின்.);; ten thousand quadrillions.

     [Skt. atyanta → த. அத்தியந்தம்.]

 அத்தியந்தம்3 attiyandam, வி.அ. (adv.)

   முழுதும் அனைத்தும், அறவே; to the last end, entirely.

     “பாவங்களை அத்தியந்தம் போக்கடிக்கிறவர்களையும்” (வேதாந்தசா. 13);.

     [Skt. atyanta → த. அத்தியந்தம்.]

அத்தியந்தல்

 அத்தியந்தல் attiyantal, பெ. (n.)

   திருவண்ணாமலை வடத்திலுள்ள சிற்றுார்; a village in Thiruvannamalai Taluk.

     [அத்தி+ஏந்தல் (ஏரி);]

அத்தியந்தாபாவம்

அத்தியந்தாபாவம் attiyandāpāvam, பெ. (n.)

   முழுதுமின்மை (பிரபோத. 42, 4.);;     [Skt. atyantabhava → த. அத்தியந்தாபாவம்.]

அத்தியயனபட்டர்

 அத்தியயனபட்டர் attiyayaṉabaṭṭar, பெ. (n.)

   பூசகன்; emple priest.

     [Skt. adhyayana+bhatta → த. அத்தியயனபட்டர்.]

அத்தியயனம்

அத்தியயனம் attiyayaṉam, பெ. (n.)

   ஒதல்; learning, studying, esp. the veda.

     “அத்தியயனத்தொடு வலமாத்திரிந்து” (நல். பாரத.தருமசா. 177.);.

த.வ. மறையோதல்.

     [Skt. adhyayana → த. அத்தியயனம்.]

அத்தியயனவிருத்தி

அத்தியயனவிருத்தி attiyayaṉavirutti, பெ. (n.)

   கோயிலில் மறைநூலோதற்கு விடப்பட்ட இறையிலி நிலம் (M.E.R.493-4 of 1926.);; tax-free land endowed for the service of reciting the vedas in temples.

த.வ. மறையோத்துப்புரப்புக்கொடை.

     [Skt. adhyayana + vrtti → த. அத்தியயன விருத்தி.]

அத்தியயனாங்கம்

அத்தியயனாங்கம் attiyayaṉāṅgam, பெ. (n.)

அத்தியயனவிருத்தி (M.E.R. 197 of 1924.); பார்க்க;see attiyayana-virutti.

     [Skt. adhyayana + anga → த. அத்தியயனாங்கம்.]

அத்தியயனோற்சவம்

அத்தியயனோற்சவம் attiyayaṉōṟcavam, பெ. (n.)

   திருமால் கோவிலின் விழா வகை (கோயிலொ. 8);; festival in Visnu temples during which are chanted the divyaprabandha and vedic hymns for ten nights before (pagalpattu);, and ten days after (irāppattu); vaigunda-egadasi.

த.வ. மறையோதல் விழா.

     [Skt. adhyayana + utsava → த. அத்தியயனோற்சவம்.]

அத்தியயம்

 அத்தியயம் attiyayam, பெ. (n.)

   இறப்பு; death (சா.அக.);.

அத்தியற்பம்

 அத்தியற்பம் attiyaṟpam, பெ. (n.)

   அளவிட்டிது; very little.

த.வ. மீச்சிறிது.

     [Skt. atyalpa → த. அத்தியற்பம்.]

அத்தியற்புதம்

 அத்தியற்புதம் addiyaṟpudam, பெ. (n.)

   பெரு வியப்பு; exceeding wonder.

     [Skt. atyadbhuta → த. அதியற்புதம்.]

அத்தியவசாயம்

 அத்தியவசாயம் attiyavacāyam, பெ. (n.)

   மனப்போக்கு; inclination, turn of mind.

     [Skt. adhyava – saya → த. அத்தியவசாயம்.]

அத்தியாகாரம்

அத்தியாகாரம்1 attiyākāram, பெ. (n.)

   அவாய் நிலையால் வருவித்து முடிக்கை (பி.வி. 50, உரை);.);;     [Skt. adhyahara → த. அத்தியாகாரம்.]

 அத்தியாகாரம்2 attiyākāram, பெ. (n.)

   அளவிறந்த உணவு; too much of food.

     [Skt. adhyahara → த. அத்தியாகாரம்.]

 அத்தியாகாரம்3 attiyākāram, பெ. (n.)

   பெருஞ்சீரகம்; star-anise, Illecium anisatum (சா.அக.);.

     [Skt. adhyahara → த. அத்தியாகாரம்.]

அத்தியாகாரி

 அத்தியாகாரி attiyākāri, பெ. (n.)

   மிகு உணவு உண்போன், கழிபேரிரையான்; one who eats in excess, a glutton (சா.அக.);.

அத்தியாகினம்

 அத்தியாகினம் attiyākiṉam, பெ. (n.)

   கருஞ்சீரகம் (பரி.அக.);; black cumin.

அத்தியாசம்

அத்தியாசம் attiyācam, பெ. (n.)

   ஒன்றன் குணத்தை மற்றொன்றன் மேலேற்றுகை; erroneous superimposition, transference of an attribute from one thing to another which does not really possess it.

     “உற்றவத்தியாச விலக்கணமாம் வேறொன்றி லொன் றுணர்தலாம்” (வேதா சூ. 90.);.

     [Skt. adhyasa → த. அத்தியாசம்.]

அத்தியாசவாதம்

 அத்தியாசவாதம் attiyācavātam, பெ. (n.)

   முகத்தில் ஒரு பக்கமும், அதற்கு மாறாக உடம்பில் மற்றொரு பக்கமுமாகக் காணுமோர் முடக்குவளி(வாத); நோய்; a paralysis of the facial muscles of one side with paralysis of the limbs on the corresponding opposite side ot the body, Aternate paralysis (சா.அக.);.

     [Skt. adhyasa+vata → த. அத்தியாசவாதம்.]

அத்தியாண்டான்

அத்தியாண்டான்1 attiyāṇṭāṉ, பெ. (n.)

   ஓர் இயர்பெயர்; a proper name.

     [அத்தி+ஆண்டான்]

இரண்டாம் இராசராசனுடைய ஆட்சி யாண்டில் திருவோத்தூர் கோயில் விளக்கு வைக்க வேண்டி 30 பசுகளை தானமாக வழங்கினான். இவனுடைய காலம் 1167 கோப்பெருஞ்சிங்கன் பாடல் கல்வெட்டு களைக் கொண்ட அத்தியை இவன் ஆண்டவன்.

அத்தியாத்துமசாத்திரம்

அத்தியாத்துமசாத்திரம் attiyāttumacāttiram, பெ. (n.)

   சாங்கியம், பாதஞ்சலம், வேதாந்தம் என மூவகைப்பட்ட ஆதன் அறிவியல் நூல் (விவேகசிந்.15.);; the spiritual science, of three kinds, sangiyam, pādanjalam, vēdāndam.

     [Skt. adhyatma + såstra → த. அத்துயாத்தும சாத்திரம்.]

அத்தியாத்துமமதம்

அத்தியாத்துமமதம் addiyāddumamadam, பெ. (n.)

   பாசுகரீயம் மாயாவாதம் சத்தப்பிரமவாதம் கீரீடாப்பிரம வாதம் என நால்வகைப்பட்டு உயிரின் வடிவத்தை விளக்கும் மதம் (விவேகசிந். 16);; the doctrine of the soul of four kind, paskariyam, mãyăvadam, satta-p-pirama-vadam, kirida-p-pirama-vatam.

     [Skt. adhyåtma → த. அத்தியாத்துமம்.]

அத்தியாத்துமம்

 அத்தியாத்துமம் attiyāttumam, பெ. (n.)

   ) நூற்றெட்டுபநிடதங்களுளொன்று; name of an upanisad.

     [Skt. adhyatma → த. அத்தியாத்துமம்.]

அத்தியாத்துமிகம்

 அத்தியாத்துமிகம் attiyāttumigam, பெ. (n.)

அத்தியான்மிகம் பார்க்க;see attiyāņrmigam.

     [Skt. adhyatmika → த. அத்தியாத்துமிகம்.]

அத்தியானந்தயோனி

 அத்தியானந்தயோனி attiyāṉandayōṉi, பெ. (n.)

   பெண்களுக்கு அடிக்கடி முயக்கத்தில் மிகுதியாக இச்சையுண்டாக்குமொரு நோய்; a disease in women which knows no satisfaction in sexual pleasures in sane sexual desire in the female, Nymphomania (சா.அக.);.

த.வ. கடுங்காமம்.

அத்தியானம்

அத்தியானம் attiyāṉam, பெ. (n.)

   மறைநூல் கற்கை; learning, studying, esp. the Veda.

     “அத்தியான மாமினையர் கத்துவதும்” (பிரபோத. 11, 4.);.

     [Skt. adhyayana → த. அத்தியானம்.]

அத்தியான்மிகம்

அத்தியான்மிகம் attiyāṉmigam, பெ. (n.)

   1. ஆதனுக்குரியது (வின்.);; pertaining to the soul.

   2. சைவ தோன்றியங்களுள் ஒரு பகுதி;     “வைதிகம் அத்தியான்மிகம் அதிமார்க்கம்…. என நூல்களை ஐவகைப்படுத்து” (சி.போ.பா. சிறப். 17.);.

   3. ஆதன் பிறரால் அடையுந் துன்பம் (சி.சி. 2, 39, சிவாக்.);;த.வ. ஆதன்மம்.

     [Skt. adhyatmika → த. அத்தியான்மிகம்.]

அத்தியாபகன்

அத்தியாபகன் attiyāpagaṉ, பெ. (n.)

   திருமறைப் பயிற்றுவிப்போன் (பிரபோத.11,15);; teacher, instructor of the Veda.

த.வ. மறையாசான்.

     [Skt. adhyapaka → த. அத்தியாபகன்.]

அத்தியாபனம்

 அத்தியாபனம் attiyāpaṉam, பெ. (n.)

   மறை நூல் பயிற்றுகை; teaching the Veda.

த.வ. மறையோதல்.

     [Skt. adhyapana → த. அத்தியாபனம்.]

அத்தியாமிசம்

 அத்தியாமிசம் attiyāmisam, பெ. (n.)

   எலும்பின் மேலுண்டாகுங் கழலைக் கட்டி; a sarcoma situated closed to the outer surface of a bone, paresteal sarcoma (சா.அக.);.

த.வ. என்புக்கழலை.

அத்தியாம்சரக்கு

 அத்தியாம்சரக்கு attiyāmcarakku, பெ. (n.)

   யானையைப் போல் எளிதில் கட்டுப்படாத சரக்கு; minerals that cannot be easily consolidated substances that pass away into vapour or fumes before fire, like, sulphur, mercury, etc., (சா.அக.);.

அத்தியாயனம்

அத்தியாயனம் attiyāyaṉam, பெ. (n.)

   மறைநூல் ஒதுகை (சிந்தா. நி. 121);; reciting the Vedas.

த.வ. மறையோதல்.

     [Skt. adhyayana → த. அத்தியாயனம்.]

அத்தியாயம்

 அத்தியாயம் attiyāyam, பெ. (n.)

   நூற்பிரிவு (பிங்.);; chapter, division of a book.

த.வ. இயல்.

     [Skt. adhyaya → த. அத்தியாயம்.]

அத்தியாரோபம்

அத்தியாரோபம் attiyārōpam, பெ. (n.)

   ஒன்றன் தன்மையை மற்றொன்றில் ஏற்றிக் கூறுகை (வேதா. சூ. 28.);; erroneously attributing the properties of one thing to another.

த.வ. பிறிதேற்றம்.

     [Skt. adhyaropa → த. அத்தியாரோபம்.]

அத்தியாளி

அத்தியாளி attiyāḷi, பெ. (n.)

   யானையாளி (பெரும்பாண். 257-9 அடிக்குறிப்பு);; a fabulous animal.

     [அத்தி+யாளி.]

     [Skt. hastin → த. அத்தி.]

அத்தியாவசியம்

 அத்தியாவசியம் attiyāvasiyam, பெ. (n.)

   மிக தேவை (அடிப்படை);யானது; that which is indispensable or essential.

த.வ. அகத்தியம், கட்டாயம்.

     [Skt. atyavasya → த. அத்தியாவசியம்.]

அத்தியாவத்தை

 அத்தியாவத்தை attiyāvattai, பெ. (n.)

   நெருக்கடியான நிலை (இ.வ.);; critical condition, as of a disease-stricken person.

     [Skt. atyavastha → த. அத்தியாவத்தை.]

அத்தியாவாகனிகம்

 அத்தியாவாகனிகம் attiyāvāgaṉigam, பெ. (n.)

   பெண் கணவன் வீட்டுக்குச் செல்லுங்காற் பெறுஞ் சீதனம் (W.G.);; gifts made to a bride when she is conducted to the bridegroom’s house, which become her separate property, a variety of Sidamam.

த.வ. தாய்மனைச்சீர்.

     [Skt. adhyavahanika → த. அத்தியாவாகனிகம்.]

அத்தியாவிரதவாதம்

 அத்தியாவிரதவாதம் addiyāviradavādam, பெ. (n.)

   உடம்பில் எலும்பின் கூறுகளில் வீக்கம் அல்லது கழலைக் கட்டியைப் போல் காணுமோர் வளி (வாத); நோய்; an indurated swelling or tumour that forms upon bones from various causes, but chiefly-syphilis-syphiilitic node (சா.அக.);.

த.வ. என்பு ஊதை.

அத்தியிளக்கம்

அத்தியிளக்கம் attiyiḷakkam, பெ. (n.)

   1. எலும்பின் நுண்மங்கள் மெதுவடைதல்; softening of the bony tissue, ossifluence.

   2. எலும்பு இளக்கமடைதல்; softening of the bones, Ostcomalacia or nolities ossium (சா.அக.);.

     [அத்தி+இளக்கம்.]

     [Skt. asthi → த. அத்தி.]

அத்தியூர்

அத்தியூர் attiyūr, பெ. (n.)

   காஞ்சியில் திருமால் கோயில் கொண்டுள்ள தோரிடம் (யாப். வி. 93, பக். 351);; little Kanjeevaram which has a Visnu shrine.

     [Skt. hastin → த. அத்தி.]

அத்திர

 அத்திர attira, எ.வி. (adv.)

   ஆவியாய்ப் போகக் கூடியது; capable of passing off into vapour-volatile (சா.அக.);.

அத்திரசத்திரம்

அத்திரசத்திரம் attirasattiram, பெ. (n.)

   கைவிடு படை, கைவிடாப் படைகள் (திருவானைக், திருவிழா. 11);; missiles and weapons.

     [Skt. astra + šastra → த. அத்திரசத்திரம்.]

அத்திரசிகிச்சை

அத்திரசிகிச்சை attirasigissai, பெ. (n.)

   1. அம்பைப் போல் உடம்பினுள் மருந்தைப் புகட்டுமொரு வகை மருத்துவ முறை; a method of treatment in which liquid medicine is introduced into the system by a needle, Injection.

   2. கத்தியாலறுத்து மருத்துவம் செய்தல்; the operative branch of the medical practice (சா.அக.);.

     [Skt. astra + cikitsa → த. அத்திரசிகிச்சை.]

அத்திரதம்

 அத்திரதம் addiradam, பெ. (n.)

   இஞ்சி; ginger, Zinziber officinale.

அத்திரதேவர்

அத்திரதேவர் attiratēvar, பெ. (n.)

   விழாக் காலங்களில் வீதிவலம் வரும் படைக்கல வடிவ திருமேனி (திருவானைக். திருவிழா. 11);; Weapon-god taken found the streets during festivals.

     [அத்திர(ம்); + தேவர்.]

     [Skt. astra → த. அத்திர(ம்);.]

அத்திரத்துவம்

 அத்திரத்துவம் attirattuvam, பெ. (n.)

   ஆவியாய்ப் போதல்; vapourising or dissipating spontaneously into atmosphere, volatility (சா.அக.);.

அத்திரநீர்

 அத்திரநீர் attiranīr, பெ. (n.)

   கழுதையின் சிறுநீர்; ass’s urine (சா.அக.);.

அத்திரபரீட்சை

 அத்திரபரீட்சை attirabarīṭcai, பெ. (n.)

   அறுபத்து நாலு கலையுள் ஒன்றாகிய வில்வித்தை; archery, one of arupattunalu-kalai, q.ν.

     [Skt. astra + pariksa → த. அத்திரபரீட்சை.]

அத்திரப்பல்

அத்திரப்பல் attirappal, பெ. (n.)

   1. குழந்தை கட்கு 7ஆம் மாத முதல் 36ஆம் மாதம் வரை முளைக்கும் 20 பற்கள்; the 20 temporary or milk teeth that grow in children between the 7th and 36th month.

   2. பாற்பல்; the tooth of the first dentition, milk-tooth.

   3. குதிரைப் பல்; horse tooth (சா.அக.);.

அத்திரப்பால்

அத்திரப்பால் attirappāl, பெ. (n.)

   1. கழுதைப் பால்; ass’s milk.

   2. குதிரைப் பால்; horse’s milk (சா.அக.);.

அத்திரப்பிடுக்கன்

அத்திரப்பிடுக்கன் attirappiḍukkaṉ, பெ. (n.)

   1. குதிரைப்பிடுக்கன்மரம்; horse almond tree, Sterculia foetida.

   2. பருத்த பிடுக்கையுடையவன்; one with a big scrotum (சா.அக.);.

     [அத்திரம் + பிடுக்கன்.]

அத்திரப்பொருள்

 அத்திரப்பொருள் attirapporuḷ, பெ. (n.)

   ஆவியாக மாறிக் காற்றில் கலக்கக் கூடிய பொருள்கள்; bodies which are capable of passing off into vapour and mingling in the atmosphere-volatile substances like camphor, alchohol etc. (சா.அக.);.

அத்திரம்

அத்திரம்1 attiram, பெ. (n.)

   1. குதிரை; horse.

   2. கழுதை; ass (அ.க.நி.);.

 அத்திரம்2 attiram, பெ. (n.)

   1. இலந்தை; (மு.அ..);; jujube, sh. & s. tr., Zizyphus jujuba.

   2. இஞ்சி (பச்.மு.); ; green ginger, Zinziber officinale.

   3. குங்கிலியம் (சித்.அக.); ; Indian bdellium.

   4. கடுக்காய்ப் பூ ; Japanese wax-tree.

   5. குக்கில் ; a resin, Balsmodendron roxburghii (சா.அக);.

 அத்திரம்1 attiram, பெ. (n.)

   வில் (நாநார்த்த);; bow.

     [Skt. astra → த. அத்திரம்.]

அத்திரயூகம்

அத்திரயூகம் attirayūkam, பெ. (n.)

   படை அணி வகுப்பு வகை (பாரத. பதினெட். 15.);; arrow-shaped battle array.

த.வ. வில்லுருப்படை வகுப்பு.

     [Skt. astra + vyuha → அத்திரயூகம்.]

அத்திரவக்கிதம்

 அத்திரவக்கிதம் addiravakkidam, பெ. (n.)

   முளரி (தாமரை);ப் பூவிதழ்; filaments of lotus.

அத்திரா

 அத்திரா attirā, பெ. (n.)

   அரசு (சித்.அக.);; pipal.

அத்திராதாளி

 அத்திராதாளி attirātāḷi, பெ. (n.)

   யானை; elephant (சா.அக.);.

அத்திரி

அத்திரி attiri, பெ. (n.)

   1. ஒட்டகம் (பிங்.);; camel.

   2. குதிரை; horse.

     “மனப்பே ரத்திரி யுகைத்து” (ஞானா. 33 ;10);.

   3. கழுதை (திவா.);; ass.

   4. கோவேறு கழுதை; mule.

     “வான வண்கைய னத்திரி யேற” (சிலப். 6; 119);.

   5. உலைத்துருத்தி (திவா.);; forge, bellows.

ம. அத்திரி

 அத்திரி1 attiri, பெ. (n.)

   1. கதிரவன்; sun.

   2. விண்; sky, firmament.

     [Skt. adri → த. அத்திரி.]

 அத்திரி2 attiri, பெ. (n.)

   மலை; mountain (சா.அக.);.

     [Skt. adri → த. அத்திரி.]

அத்திரிகா

 அத்திரிகா attirikā, பெ. (n.)

   சிறு சிமிட்டி; a kind of plant (சா.அக.);.

அத்திரிகாரம்

 அத்திரிகாரம் attirikāram, பெ. (n.)

   இரும்பு; iron (சா.அக.);.

     [Skt. adrigara → த. அத்திரிகாரம்.]

அத்திரிசாரம்

 அத்திரிசாரம் attiricāram, பெ. (n.)

   இரும்பு (வை.மூ);; iron.

     [Skt. adrišara → த. அத்திரிசாரம்.]

அத்திரிப்பாய்ச்சல்

 அத்திரிப்பாய்ச்சல் attirippāyccal, பெ. (n.)

   குதிரை தாவியோடும் வேகம்; gallop of a horse.

     [அத்திரி + பாய்ச்சல்.]

அத்திரியர்

அத்திரியர் attiriyar, பெ. (n.)

   கள்ளர்குலப் பட்டப் பெயர்களுள் ஒன்று (கள்ளர் சரித். பக். 145);; a title of Kallars.

     [அத்திரி = குதிரை. அத்திரி → அத்திரியன் = குதிரை மறவன்.]

சோழர் குதிரைப்படையினரின் வழிவந்த கள்ளர், தம் முன்னோரின் தொழிலடிப் பெயரை இன்று தம் குலப் பட்டப்பெயராகக் கொண்டுள்ளதாகவிருக்கலாம்.

அத்திரியன் (ஒருமை); – அத்திரியர் (பன்மையும் உயர்வுப் பன்மையும்);.

அத்திரு

 அத்திரு attiru, பெ. (n.)

   அரசு, அரசமரம் (மலை.);; pipal tree, Ficus religiosa.

அத்திரெட்சை

அத்திரெட்சை attireṭcai, பெ. (n.)

   1. உணர்ச்சி; passion.

   2. ஆசை; desire (சா.அக.);.

அத்திரெணம்

 அத்திரெணம் attireṇam, பெ. (n.)

அத்தி விரணம் பார்க்க;see attiviranam (சா.அக.);.

அத்திறாதாளி

 அத்திறாதாளி attiṟātāḷi, பெ. (n.)

   யானை; elephant (சா.அக.);.

அத்திலிகை

 அத்திலிகை attiligai, பெ. (n.)

   நஞ்சுத் தொடர்பான நீரட்டையை (சூகையை);க் கையாள்வதால் (பிரயோகிப்பதால்); வளி (வாயு); வேகமடைந்து உடம்பிலெழும்புங் காய்ப்பருக்கள்; eruptions of hard stone-like pimples on the body due to activisation of vayu locally where a plaster of poisonous Şüka (leech); has been applied.

அத்திலை

 அத்திலை attilai, பெ. (n.)

   செருப்படை (மு.அ.);; a low spreading plant, species of coldenia, Coldenia procumbens.

அத்திவங்கம்

 அத்திவங்கம் attivaṅgam, பெ. (n.)

   காரீயம்; lead, plumbago (சா.அக.);.

அத்திவலி

 அத்திவலி attivali, பெ. (n.)

   எலும்பிற் காணும் வலி; pain in the bone or bones, Ostalgia (சா.அக.);.

     [அத்தி+வலி.]

     [Skt asthi → த. அத்தி.]

அத்திவாரம்

அத்திவாரம் attivāram, பெ. (n.)

   அடிக் கட்டடச் சுவரின் அடிப்பாகம்; foundation.

     “அத்திவார மிருத்தி” (அரிச். பு.இந்தி. 19.);.

த.வ. கடைக்கால், அடிவானம்.

     [U. ustuwar → த. அத்திவாரம்.]

அத்திவிசாணிகா

 அத்திவிசாணிகா attivicāṇikā, பெ. (n.)

   வாழை; plantain tree, Musa paradisiaca (சா.அக.);.

அத்திவிரணம்

 அத்திவிரணம் attiviraṇam, பெ. (n.)

   எலும்பில் உண்டாகும் புண்; a sore affecting the bones (சா.அக.);.

     [Skt. asthi + vrana → த. அத்திவிரணம்.]

அத்திவீரம்

 அத்திவீரம் attivīram, பெ. (n.)

   சவ்வீரம்; Hydrargiri perchloridum (சா.அக.);.

அத்திவெட்டை

 அத்திவெட்டை attiveṭṭai, பெ. (n.)

   ஒழுக்கக் கேட்டினால் எலும்பில் பாய்ந்த மேகச்சூடு; venereal heat affecting the bones in the system, Osteotabes (சா.அக.);.

த.வ. அங்கவெட்டை.

     [அத்தி+வெட்டை.]

     [Skt. asthi → த. அத்தி.]

அத்திவேர்

அத்திவேர் attivēr, பெ. (n.)

   1. மயிர்க்கால்; root of the hair.

   2. யானைமயிர்; elephant’s hair (சா.அக.);.

     [அத்தி + வேர்.]

     [Skt. hastin → த. அத்தி.]

அத்தீர்

 அத்தீர் attīr, பெ. (n.)

   குழித்தாமரை (பரி.அக.);; rootless nelumbo.

 sky lotus, Distia stralioles (சா.அக.);.

அத்து

அத்து1 addudal,    5 செ.குன்றாவி, (v.t.)

   1. அப்புதல்; to apply, as medicine to a wound.

மருந்தைக் காயத்தின்மே லத்தி வைத்தான் (வின்.);.

   2. இரு அல்லது பல துண்டை ஒன்றாகப் பொருத்தியிசைத்தல்; to join two or more parts making them fit in with one another.

அத்தித் தைத்தான் (வின்.);.

   3. சார்தல்; to lean on.

என் தோளை அத்திக்கொண்டு வா (வின்.);.

   4. எட்டுதல்; to reach.

அந்தச் செய்தி தலைவர் காதிலும் அத்திப்போய் விட்டது (உ.வ.);.

ம. அத்துக; க. அதுகு ; தெ. அத்து.

     [உ → உத்து → அத்து. உத்தல் = பொருந்துதல், ஒத்தல்.]

 அத்து2 attu, பெ. (n.)

   1. அரைப்பட்டிகை (பிங்..);; girdle, waist ornament.

   2. தையல் (பிங்.); ; sewing.

     [உ → உத்து → அத்து.]

 அத்து3 attu, பெ. (n.)

   1. சிவப்பு; redness.

     “அத்து ணாடையர்” (சீவக. 1848);.

   2. செவ்வை (சங்.அக.); ; straightness, correctness, sound condition.

   3. துவர் ; astringents.

     “ஆடு நீரன வத்து மண்களும்” (சீவக. 24.18);.

   4. காட்டத்தி; wild-fig, Ficus glomerata alias F. guitata (சா.அக.);.

   5. கடப்பம்பட்டை (இராசவைத்.); ; bark of common kadamba.

   6. அழிஞ்சிற்பட்டை (இராசவைத்.);; bark of sage-leaved alangium.

ம. அத்து ; து. அத்தசமர.

     [நிறப்பெயர்கள், பொதுவாக அவ்வந் நிறங்களையுடைய பொருள்களின் பெயரினின்று அமைந்துள்ளன. அப்பொருள்கள் கட்டியாகவோ நீராகவோ ஆவியாகவோ இருக்கலாம். நெருப்புச் சிவந்திருப்பதால், நெருப்பு வடிவானதும் தோற்றத்திலும் மறைவிலும் சிவந்து தோன்றுவதுமான கதிரவன் பெயரினின்று, செந்நிறப் பெயர் தோன்றிப் பல்வேறு வடிவாகத் திரிந்துள்ளது].

உல் → உர் → உரு. உருத்தல் = அழலுதல், எரிதல். உர் → க. உரி. உல் → எல் = கதிரவன். எல் → எர் → எரி = நெருப்பு, சிவப்பு. எரிமலர் = முருக்கமலர், செந்தாமரை மலர். எர் → தெ. எறு → எறுப்பு = சிவப்பு. எரங்காடு = செந்நிலம்.

உல் (எல்); → அல் → அல → அலத்தம் = செம்பருத்தி. அலத்தம் → அலத்தகம் = செம்பஞ்சுக் குழம்பு. அலத்தம் → அரத்தம்.= சிவப்பு, செந்நீர் (குருதி);, அரக்கு. அலத்தகம் → அரத்தகம்.

அல் → அல → அலக்கு → அரக்கு = சிவப்பு, செம்மெழுகு.

எல் → இல் → இல. → இலத்தி = இரத்தி = செங்கனி முட்செடி. இலத்தி → இலத்தை → இலந்தை = செங்கனி முட்செடி. இலத்தை → இலதை (மலை.);.

அல் → அது → அத்து = சிவப்பு, துவர்ப்பு, துவர்ப்பொருள். பாக்கு, காசுக்கட்டி முதலிய செந்நிறப் பொருள்கள் துவர்த்தலால், அத்து என்னுஞ் சொல் துவர்ப்புப் பொருள் பெற்றது.

ஒ.நோ. ; மெல் → மெது → மெத்து.)

 அத்து4 attu, சு.பெ. (demons. pron.)

   1. அது; that, it.

     “அத்தொ டொருமருவு கோள்” (செளந். 11);.

     ‘அத்தோடே நின்றது அலைச்சல்; கொட்டோடே நின்றது குலைச்சல்’ (பழ.);.

   2. எல்லை; boundary, limit.

     ‘அத்து மீறிக் கத்தாதே’, ‘அத்துமீறிப் போனான், பித்துக்கொள்ளி ஆனான்’ (பழ.);.

     [அது → அத்து. ஒ.நோ. ; மெது → மெத்து.]

 அத்து5 attu, இடை. (part)

   உருபு புணர்ச்சியில், மகர மெய்யீற்றுப் பெயர்ச்சொல்லிற்கும் வேற்றுமையுருபிற்கும் இடையில் சாரியையாக வரும் இணைப்பிடைச்சொல்; an euphonic increment inserted between a noun ending in ‘4Jub’ and its case-ending in declension, the final syllable ‘அம்’ of the noun being elided invariably in prose.

     “இன்னே வற்றே அத்தே அம்மே

அன்ன என்ப சாரியை மொழியே” (தொல், எழுத்து. புண. 17);.

     “அத்தின் அகரம் அகரமுனை யில்லை” (தொல், எழுத்து. புண. 23);.

எ-டு : மரம் + ஐ (மரம் + அத்து + ஐ); – மரத்தை, முகம் + இல் (முகம் + அத்து + இல்); – முகத்தில்.

 அத்து attu, இடை. (part.)

   கிழமைப்பொருளிலும் இடப்பொருளிலும் வரும் சாரியையாகிய உருபு போலி; an euphonic increment generally used as a genitive or locative case ending.

எ-டு :

மரத்து வேர் – கிழமை வேற்றுமை.

பட்டினத்துப்பிள்ளை – இடவேற்றுமை.

குன்றத்திருந்தான் – இடவேற்றுமை.

அத்துச்சாரியையேற்ற பெயர், பெயரொடு கூடின் கிழமை அல்லது இடப்பொருளையும் வினையொடு கூடின் இடப்பொருளையும் உணர்த்தும்.

அத்துகமணி

 அத்துகமணி attugamaṇi, பெ. (n.)

   அரசு, அரசமரம் (பச்.மூ.); ; pipal tree.

அத்துகமானி

 அத்துகமானி attugamāṉi, பெ. (n.)

   அரசு, அரசமரம் (மலை.); ; pipal tree, Ficus religiosa.

மறுவ. அத்துகமணி, அத்துமணி, அத்து மானி.

அத்துகமேதி

 அத்துகமேதி attugamēti, பெ. (n.)

   சிறுசிலும் பான்; a kind of plant (சா.அக.);.

அத்துகம்

அத்துகம் attugam, பெ. (n.)

   1. ஆமணக்கு (மலை.);; castor-plant, Recinus communis.

   2. ஆமணக்கமரம் (சங்.அக.);; castor-tree.

அத்துகோசகம்

 அத்துகோசகம் attuācagam, பெ. (n.)

   சிறு சீரகம், பெருஞ்சீரகத்திற்கு எதிர்; cumin, Cuminum cyminum, opp. to peruñjiragam.

அத்துசம்

 அத்துசம் attusam, பெ. (n.)

   மரமஞ்சள் (பச்.மு.);; tree-turmeric, Coscinium fenestratum.

அத்துச்சம்

 அத்துச்சம் attuccam, பெ. (n.)

   கோள்களின் நல்லுச்சநிலை (சங்.அக.);;     [Skt. alyucca → த. அத்துச்சம்.]

அத்துணை

 அத்துணை attuṇai, பெ. (n.)

   அவ்வளவு; that much, so much.

அஃது அத்துணை நன்றாயில்லை (உ.வ.);.

     [அ (சேய்மைச்சுட்டு); + துணை (அளவு); – அத்துணை.]

அத்துதல்

 அத்துதல் addudal, பெ. (n.)

   அரத்தைப்பூடு; galangal, Alpinia galangal (சா.அக.);.

அத்துபடி

அத்துபடி attupaṭi, பெ. (n.)

   முழுமையான அறிவு (கொ.வ.வ.சொ.6.);; thoroughly well known.

     [அற்று+படி]

அத்துபோ-தல்

அத்துபோ-தல் attupōtal, செ.கு.வி. (v.i.)

   வரம்பு கடத்தல்; to be cut off. (கொ.வ.வ.சொ.6);.

     [அற்று+போ]

அத்துமணி

 அத்துமணி attumaṇi, பெ. (n.)

அத்துகமானி பார்க்க;see attugamani.

அத்துமம்

 அத்துமம் attumam, பெ. (n.)

   அரத்தை (மு.அ.);; galangal, Alpinia galangal.

அத்துமாகசம்

 அத்துமாகசம் attumākasam, பெ. (n.)

   சிறு செந்தொட்டி; small climbing nettle, Tragia involucrata (சா.அக.);.

அத்துமானி

 அத்துமானி attumāṉi, பெ. (n.)

அத்துகமானி பார்க்க;see attugandni.

அத்துமீறு-தல்

 அத்துமீறு-தல் attumīṟutal, செ.கு.வி. (v.i.)

   வரம்புகடத்தல்; to cross the limit, trespass.

     [அத்து+மீறு]

அத்துராதி

 அத்துராதி atturāti, பெ. (n.)

   வால்மிளகு; tail pepper, Piper cubeba (சா.அக.);.

அத்துலாக்கி

 அத்துலாக்கி attulākki, பெ. (n.)

   கருஞ்சீரகம் (மூ.அ..);; black cumin, Nigella sativa.

மறுவ. அத்துலாக்கினம், அத்துவர்க்கயம், அத்துவர்க்காயம், அத்துவாக்காயம்.

அத்துலாக்கினம்

 அத்துலாக்கினம் attulākkiṉam, பெ. (n.)

அத்துலாக்கி பார்க்க;see attulakki (சா.அக.);.

அத்துலி

 அத்துலி attuli, பெ. (n.)

   சிறுதெல்லு ; a kind of creeper (சா.அக.);.

அத்துளாசுண்ணம்

 அத்துளாசுண்ணம் attuḷācuṇṇam, பெ. (n.)

   ஈரற்சுண்ணம்; a calcined powder prepared out of gall-stone (சா.அக.);.

அத்துவசம்

 அத்துவசம் attuvasam, பெ. (n.)

   ஒரு பூடு; the plant swarmúli (சா.அக.);.

அத்துவசல்லியம்

 அத்துவசல்லியம் attuvasalliyam, பெ. (n.)

   நாயுருவி; Indian burr, Achyranthes aspera (சா.அக.);.

அத்துவசிரமம்

 அத்துவசிரமம் attuvasiramam, பெ. (n.)

   வழிநடைக் களைப்பு; fatigue from travel (சா.அக.);.

அத்துவசுத்தி

அத்துவசுத்தி attuvasutti, பெ. (n.)

   தீக்கை காலத்தில் ஆறு வழிகளிலும் இறந்தகால வினைகளையெல்லாம் அழிக்கை (சைவச. ஆசாரி. 64);;     [Skt. adhvan+suddhi → த. அத்துவசுத்தி.]

அத்துவசோதனை

 அத்துவசோதனை attuvacōtaṉai, பெ. (n.)

அத்துவசுத்தி பார்க்க;see attuva-sutti.

     [Skt. adhvan + šõdhana → த. அத்துவ சோதனை.]

அத்துவநியாசம்

 அத்துவநியாசம் attuvaniyācam, பெ. (n.)

   அத்துவத் தூய்மை (சுத்தி);; purification of attuva.

     [Skt. adhvan + nyasa → த. அத்துவநியாசம்.]

அத்துவபோக்கியம்

 அத்துவபோக்கியம் attuvapōkkiyam, பெ. (n.)

   ஒருவகை மரம், மாம்புளிச்சை; a tree called travellers delight, spondias mangifera (சா.அக.);.

அத்துவம்

 அத்துவம் attuvam, பெ. (n.)

   சிவப்பு ; redness (சா.அக.);.

     [அத்து = சிவப்பு. அத்து → அத்துவம்.]

அத்துவயதாரகம்

 அத்துவயதாரகம் attuvayatāragam, பெ. (n.)

   நூற்றெட்டு மறையின் அறிவுப் பகுதியி லொன்று; name of an upanisad.

     [Skt. A-dvaya-tåraka → த. அத்துவயதாரகம்.]

அத்துவரியு

அத்துவரியு attuvariyu, பெ. (n.)

   1. வேள்வி செய்வாருள் ஒருவன்; chief Yajur-vedic priest at a sacrifice.

     “வன்றிறல் வசுக்க ளத்துவரியு” (மச்சபு. சந்திரோ. 12.);.

   2. வினைத் தலைமை கொள்பவன் (வகிப்பவன்);; active leader, as an adhvaryu.

     ‘அவன் அத்துவரியுவாய் நின்று பாடுபடுகிறான்’.

     [Skt. adhvaryu → த. அத்துவரியு.]

அத்துவர்க்கயம்

 அத்துவர்க்கயம் attuvarkkayam, பெ. (n.)

   கருஞ் சீரகம்; black cumin, Nigella sativa (சா.அக.);.

அத்துவர்க்காயம்

 அத்துவர்க்காயம் attuvarkkāyam, பெ. (n.)

அத்துவர்க்கயம் பார்க்க;see attuvarkkayam.

அத்துவவிலிங்கம்

அத்துவவிலிங்கம் attuvaviliṅgam, பெ. (n.)

   மெய்ப்பொருள் வடிவான (லிங்கம்); குறி; linga comprising all the 36 tattvas from earth to Sivan.

     “மண்முதற் சிவமீறானவத்துவ விலிங்கம்” (திருவிளை.இந்திரன்.13);.

இலங்க வடிவுநிலையில் இறைவ னாற்றலைக் குறிக்கும் அடித்தளத்திற்கு ஆவுடையாள் என்றும் மேல்நிற்கும் இலங்கத்திற்கு ஆவுடையப்பன் என்றும் பெயர்.

     [Skt. adhvan + linga → த. அத்துவவிலிங்கம்.]

அத்துவா

அத்துவா attuvā, பெ. (n.)

   1. வழி; way, road.

   2. நெறி (சித்.);;     “அத்துவா வெல்லா மடங்கச் சோதித் தபடி” (தாயு. எந்நாட். அன்பர்.1.);.

     [Skt. attuvăn → த. அத்துவா.]

அத்துவாக்காயம்

 அத்துவாக்காயம் attuvākkāyam, பெ. (n.)

அத்துவர்க்கயம் பார்க்க;see attuwarkkayam.

அத்துவாசுத்தி

அத்துவாசுத்தி attuvācutti, பெ. (n.)

அத்துவசுத்தி பார்க்க;see atuva-sutti

     “அத்துவா சுத்திபண்ணி” (சி.சி. 8, 6.);.

     [Skt. adhvan → த. அத்துவாசுத்தி.]

அத்துவாசைவம்

அத்துவாசைவம் attuvācaivam, பெ. (n.)

   சிவனியம் (சைவம்); பதினாறனுள் ஒன்று; Saiva sect which holds that an initiate should by introspection perceive the six attuvas and meditate on Sivan who is beyond them, one of 16 saivam, q.v.

அத்துவாந்தம்

 அத்துவாந்தம் attuvāndam, பெ. (n.)

   வைகறை மற்றும் மருண்மாலையொளி; twilight (சா.அக.);.

அத்துவானம்

அத்துவானம்1 attuvāṉam, பெ. (n.)

   செவ் வானம் (சங்.அக.);; red tinted sky.

     [அத்து + வானம். அத்து = சிவப்பு.]

 அத்துவானம்2 attuvāṉam, பெ. (n.)

   1. பாழ்ங்காடு (சங்.அக.);; desert.

அது அத்துவானக் காடு (உ.வ.);.

   2. பாழிடம்; desolate place.

அத்துவானப் பொட்டல் (உ.வ.);.

   3. பாழ்; ruins.

தெ. அத்துவானம்

     [அத்தம் = ஆள்வழங்கா அருநெறி, கடுங்காட்டு வழி. வனம் = காடு. அத்தவனம் → அத்து வானம்.]

அத்துவிதம்

அத்துவிதம் adduvidam, பெ. (n.)

   ஒருமை;   இரண்டின்மை; non-duality.

     “அத்துவித வத்துவை” (தாயு. பரசிவ. 3.);.

     [Skt. a-dvaita → த. அத்துவிதம்.]

அத்துவிதவுண்மை

அத்துவிதவுண்மை adduvidavuṇmai, பெ. (n.)

   1. இரண்டின்மை என்னும் கொள்கை; the doctrine of the existence of but one principle in the universe the doctrine or principle of non-duality.

   2. ஒரு தமிழ் (தத்துவ); மெய்ப் பொருள் நூல்; a treatise in Tamil on non-dulaity (சா.அக.);.

     [அத்துவிதம் + உண்மை.]

     [Skt. advaita → த. அத்துவிதம்.]

அத்துவேசம்

 அத்துவேசம் attuvēcam, பெ. (n.)

   பகையின்மை; freedom from hatred or malevolence.

     [Skt. a-dvésa → அத்துவேசம்.]

அத்துவைதம்

அத்துவைதம் adduvaidam, பெ. (n.)

   1. இரண்டன்மை; non-duality.

   2. ஒரு பொருண்மைக் கொள்கை; doctrine of non-duality, monism.

     [Skt. a-dvaita → த. அத்துவைதம்.]

அத்துவைதி

 அத்துவைதி adduvaidi, பெ. (n.)

   இரு பொருளொருமைக் கோட்பாடுடையவன்; one who holds the doctrine of non-duality monist.

     [Skt. a-dvaitin → த. அத்துவைதி.]

அத்தூரம்

 அத்தூரம் attūram, பெ. (n.)

   மரமஞ்சள் (மு.அ.);; tree-turmeric, Coscinium fenestratum.

அத்தேயம்

அத்தேயம் attēyam, பெ. (n.)

   திருடாமை (சூத. ஞான. 13, 7.);; non-stealing, absence of frand.

த. வ. கள்ளாமை.

     [Skt. a-steya → த. அத்தேயம்.]

அத்தை

அத்தை1 attai, பெ. (n.)

   1. தந்தையுடன் பிறந்தவள்; father’s sister.

     “கானிடையத்தைக் குற்ற குற்றமும்” (கம்பரா. சுந்தர. பாசப், 44);.

     ‘அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா எனலாம்’, ‘அத்தைமகளானாலும் சும்மா வருமா’,

     ‘அத்தைமகள் சொத்தை அவள் கேட்கிறாள் மெத்தை (பழ.);.

   2. மனைவியின் தாய்; wife’s mother, motherin-law.

     “மாமியை யத்தையைத் தோயின்” (கூர்மபு. பிராயச். 1);.

   3. கணவன் தாய்; husband’s mother, mother-in-law.

     “அரசர்க் கத்தையர்க்கு” (கம்பரா.அயோத் தைல. 39);.

   4. தாய்; mother.

   5. தமக்கை; elder sister.

   6. தலைவி (பிங்.); ; lady, woman of rank or eminence.

   7. குருபத்தினி (நாநார்த்த.);; guru’s wife.

ம. அத்த (தந்தையுடன் பிறந்தாள் . கணவன் அல்லது மனைவியின் தாய்);; க.அத்தி (அத்தை, மாமி);; க. சோதர் அத்தெ, சோதர் அத்தி (தந்தையுடன் பிறந்தாள், அம்மான் மனைவி);, தெ. அத்த (மாமி, தந்தையுடன் பிறந்தாள், அம்மான் மனைவி);, து. அத்தெ (மாமி);, கட. ஆத்த (மாமி, தந்தையுடன் பிறந்தாள்);; கோண். ஆத்தி (தந்தையுடன் பிறந்தாள்); ; குவி. அத்த; பிராகி. அத்தா (மாமி, தந்தையுடன் பிறந்தாளின் கணவன்);; மரா. அத்தா (மூத்தவள்);.

     [அத்தன் (ஆ.பா.); – அத்தை (பெ.பா.); = அத்தனுடன் (தந்தையுடன்); பிறந்தவள். அம்மையுடன் பிறந்தவன் அம்மான் எனப்பட்டதுபோல், அத்தனுடன் பிறந்தவள் அத்தை யெனப்பட்டாள்.]

     ‘அத்தி’ யென்னும் இகரவீற்றுப்பெண்பாற் சொல், என்றும் தாயை அல்லது தமக்கையையே குறிக்கும். ஆதலால், அத்தி யென்னுஞ் சொல்லை அத்தை யென்னுஞ் சொல்லோடு மயக்க இடமில்லை. ஆயினும், கவனிப்பின்மையாலோ திசை வழக்காகவோ, இவ்வீரீற்றுச் சொற்களும் ஒன்றோடொன்று மயங்கியும் வந்திருக்கின்றன. அம்மயக்கமெல்லாம் ஏனைத் திரவிட ஆரிய மொழிகளிலன்றித் தமிழிலில்லை. ஆதலால், ஐகார வீற்றுச்சொல் அத்தியை அல்லது தாயைக் குறிக்குமிடத்து, ஆத்தை யென்று முதல் நீட்டம் பெறும். அதுவே ஆத்தா என்றும் ஆத்தாள் என்றும் கொச்சை வழக்கில் திரிந்து வழங்குகின்றது.

 அத்தை2 attai, பெ. (n.)

   கற்றாழை (இராச வைத்.);; common Indian aloe, Aloe vera (afficinalia);.

 அத்தை3 attai, சு.பெ., 2ஆம் வே. (demons. pron., acc.c.)

   அதை, அதனை; acc. of that or it.

     “அத்தை யறியாதே” (தாயு. ஆனந்தக். 13);.

     ‘அத்தைத்தான் சொல்வானேன் வாயைத் தான் வலிப்பானேன்’ (பழ.);.

     [அது → அத்து + ஐ (2ஆம் வே. உ.); – அத்தை.]

 அத்தை4 attai, இடை. (part.)

   ஒரு முன்னிலையசைச்சொல்; a poetic expletive joined to a verb in the 2nd pers.

     “நடுக்கின்றி நிலியரோ வத்தை” (புறநா. 2;20);.

     [அது → அத்து → அத்தை. அத்தையென்னும் 2ஆம் வே. உருபேற்ற சுட்டுப்பெயரே, தன் பொருளிழந்து முன்னிலையசைச்சொல்லாகப் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கலாம்.]

     ‘செய்யிய ரத்தை’ என்னுமிடத்து, ‘செய்க அதை’ யென்று பொருள் கொள்ள இடமுண்டு; ஆயின், அத்தையென்பதைச் செய்யுளில் இடத்தை நிரப்ப வரும் பொருளற்ற சொல்லென்று கொண்ட பின், அதைப் பொருள் பொருந்தாத சொல்லொடும் இணைக்கலாம்.

     “எல்லாச் சொல்லும் பொருள்குறித்தனவே” (தொல், சொல். பெய. 1); என்பது, சொல்லமைதியின் அடிப்படை நெறிமுறையாம்.

அத்தைசார்

அத்தைசார் attaicār, பெ. (n.)

   அத்தையார் (தந்தையுடன் பிறந்தவள்);; father’s sister.

அத்தை, 1. பார்க்க ;see attai1.

     [ஆர். → உ.பன். ஈறு. யா → சா. போலி.]

அத்தைதாளி

 அத்தைதாளி attaitāḷi, பெ. (n.)

   காட்டுப் பூவரசு; falsefern tree, Filicium decipiens.

அத்தைநாறி

 அத்தைநாறி attaināṟi, பெ. (n.)

   காட்டுக் கோங்கு (L.);; prussic acid tree.

அத்தைபிள்ளை

 அத்தைபிள்ளை attaibiḷḷai, பெ. (n.)

   அத்தான் (இ.வ..);; father’s sister’s son (Loc.);.

அத்தைப்பாட்டி

 அத்தைப்பாட்டி attaippāṭṭi, பெ. (n.)

   பாட்டனுடன் பிறந்தாள்; grand-father’s sister.

     ‘அத்தைப்பாட்டி போல அளந்து கொட்டுகிறாள் பெரிதாக’ (பழ.);.

     [அத்தை + பாட்டி.]

அத்தொய்தன்

அத்தொய்தன் attoytaṉ, பெ. (n.)

   ஒப்பற்றவன்; one who is matchless, without a second.

     “அத்தொய்தனா யிருக்கிற வுனக்குப் பயமென்ன?” (வேதாந்தசா. 85.);.

     [Skt. a-dvaitin → த. அத்தொய்தன்.]

அத்தொய்தம்

அத்தொய்தம் attoytam, பெ. (n.)

அத்துவிதம் பார்க்க (வேதாந்தசா. 84);;see attuvidam.

     [Skt. a-dvaita → த. அத்தொய்தம்.]

அத்தோ

 அத்தோ attō, இடை. (int.)

   வியப்பு, இரக்கம் முதலியவற்றையுணர்த்தும் குறிப்பிடைச் சொல் (பிங்.); ; an exclamation of wonder, pity, etc.

     [அத்தன் = தந்தை, அத்தன் → அத்தோ, ஒ.நோ ; ஐயன் → ஐயோ (இரக்கக் குறிப்பு);. தாய் தந்தை முறைப்பெயர்களின் விளிவடிவங்கள் பல்வேறு குறிப்பிடைச் சொற்களாவது, முன்னரே கூறப்பட்டது.]

அக்கோ பார்க்க;see akko.

அத்தோரியாமம்

 அத்தோரியாமம் attōriyāmam, பெ. (n.)

 variety of the iyotstoma, the main type of the soma sacrifice.

     [Skt. aptoryama → த. அத்தோரியாமம்.]

அத்யாபி

 அத்யாபி atyāpi,      (வி.அ.) (adv.)

   இப்போதும்; even now, to this day, down to the present time.

     “அத்யாபி அப்படியே நடந்து வருகிறது”.

     [Skt. adyåpi → த. அத்யாபி.]

அத்விதீயம்

 அத்விதீயம் atvitīyam, பெ. (n.)

   இணையற்றது; that which is matchless, peerless.

     [Skt. a-dvitiya → த. அத்விதீயம்.]

அநகம்

 அநகம் anagam, பெ. (n.)

   புல்லுருவி; a parastic plant, Loranthus (genus); (சா.அக.);.

அநக்கினி

 அநக்கினி anakkiṉi, பெ. (n.)

   வயிற்றுத்தீயின் செய்கையற்றவன்; one who is deprived in his system of the action of gastric fire, said to be the cause of hunger (சா.அக.);.

அநங்கதுந்துமி

 அநங்கதுந்துமி naṅkatuntumi, பெ. (n.)

   துந்துமி இசைக்கருவியின் வேறுபெயர்; name of a musical drum.

     [அணங்கு(காளி);+துந்துமி]

அநங்கன்

 அநங்கன் anaṅgaṉ, பெ. (n.)

   காமன்; the Indian Cupid (சா.அக.);.

த.வ. உருவிலி.

அநங்கம்

அநங்கம் anaṅgam, பெ. (n.)

   1. மல்லிகை; jasmine, Jasminum sambue.

   2. இருவாட்சி; a running flower plant, Jasminum sambue.

   3. உடலின்மை; having no Corporeal body.

   4. உடலற்ற தன்மை; the quality or state of being incогрогеal, Incorporeality (சா.அக.);.

அநங்கலி

 அநங்கலி anaṅgali, பெ. (n.)

   எலும்புருக்கி நோய்க்கு மருந்தாகப் பயன்படும் சிறுதேட் கொடுக்கி; small leaved, Tiaridium Indicum, a cure for all affections of bones as necrosis etc.

இதனால் தீராத எலும்புருக்கி நோயும், போகும் (சா.அக.);.

அநதிரோகம்

 அநதிரோகம் anadirōkam, பெ. (n.)

   நோயில்லாமை; not much affected by disease (சா.அக.);.

     [Skt. a-nadi + roga → த. அநதிரோகம்.]

அநநுபாடணம்

அநநுபாடணம் ananupāṭaṇam, பெ. (n.)

   தோல்வித்தானத் தொன்று (செந். Iii, 13);; a fault in argumentation.

     [Skt. an-anubhäsana → த. அநநு பாடாணம்.]

அநந்தஞானி

 அநந்தஞானி anandañāṉi, பெ. (n.)

   கதிரவன்; the sun (சா.அக.);.

அநந்தன்

அநந்தன் anandaṉ, பெ. (n.)

   1. வெடியுப்பு; nitre potassium nitrate (kNO3);.

   2. பிறவிநஞ்சு; a kind of native arsenic (சா.அக.);.

அநந்தம்

அநந்தம் anandam, பெ. (n.)

   1. பிறவி நஞ்சு; one of the 32 kinds of native arsenic.

   2. பொன்; gold.

   3. வானம்; sky;

 either pervading all space.

   4. கொடிப் பசலை; nail dye, Barleria prionitis.

   5. நன்னாரி; Indian Sarasaparilla, Hemidesmus indicus (சா.அக.);.

அநந்தவாதம்

 அநந்தவாதம் anandavātam, பெ. (n.)

   முகமும், கழுத்தும் சோரும்படிச் செய்யும் நோய்; a form of paralysis affecting the muscles of the face, mouth and pharynx, Bulbar paralysis (சா.அக.);.

அநந்தை

அநந்தை anandai, பெ. (n.)

   1. அறுகு; sacred grass;

 harialli grass, Agrostis linearis.

   2. கொத்தான் கொடி; leafess creeper, Cassytha filiformis.

   3. நெல்லிமரம்; small leaved goose-berry, Phyllanthus emblica (சா.அக.);.

அநபத்தியம்

 அநபத்தியம் anabattiyam, பெ. (n.)

   கால்வழி மரபின்மை; incapacity to produce children or progeny-sterility (சா.அக.);.

     [Skt. a-na → த. அந.]

பற்று → பத்தி → பத்தியம்.

அநம்

 அநம் anam, பெ. (n.)

   சோறு; boiled rice (சா.அக.);.

     [Skt. ana → த. அநம்.]

அநம்பு

அநம்பு anambu, பெ. (n.)

   1. சாதகப்புள்; lark.

   2. நீரில்லாதது; that which is destitute of water or is waterless.

   3. ஈரமில்லாதது; that which is deprived of moisture (சா.அக.);.

     [Skt. a-na → த. அநம்பு.]

அநயம்

அநயம் anayam, பெ. (n.)

   1. தீவினை; evil karma.

   2. இடர்; danger.

   3. தீது; anything inauspicious.

   4. சூது முதலியன; gambling.

     [Skt. a-naya → த. அநயம்.]

அநரவன்

அநரவன் anaravaṉ, பெ. (n.)

   1. வெந்தோன்றி; plough root, Gloriosa superba.

   2. நஞ்சு; poison.

   3. செய்ந்நஞ்சு; a kind of prepared arsenic (சா.அக.);.

அநலபித்தம்

 அநலபித்தம் analabittam, பெ. (n.)

   உண்ட உணவைச் செரிக்கச் செய்யும் பித்த நீர்; a fluid secreted in the stomach forming the principle agent in digestion, gastric juice (சா.அக.);.

த.வ. இரைப்பை நீர், சேமிப்பு நீர்.

     [அநல + பித்தம்.]

     [Skt. ana → த. அநல.]

அநலாடுவேந்தன்

 அநலாடுவேந்தன் analāṭuvēndaṉ, பெ. (n.)

   கார்முகில் நஞ்சு; a kind of prepared dark arsenic (சா.அக.);.

அநல்

அநல் anal, பெ. (n.)

   1. கொடிவேலி; a plant, ceylon lead, wort, Plumbago zeylanica.

   2. பித்தம்; bile. 3 வயிற்றுத்தீனி;

 warmth of the stomach, gastric fire.

   4. வன்னியிலை; the leaves of the vanni tree;

 Arjunas penance tree, Prosopis spicigera (சா.அக.);.

அநல்வென்றி

 அநல்வென்றி analveṉṟi, பெ. (n.)

   தங்கம்; refined gold (சா.அக.);.

அநா

 அநா anā, பெ. (n.)

   மூச்சு; breath, respiration (சா.அக.);.

த.வ. உயிர்வளி.

அநாகதசுரம்

 அநாகதசுரம் anākadasuram, பெ. (n.)

   நெஞ்சகத்திலிருந்தெழும் காய்ச்சல்; a fever arising from disorders or diseases in the region of the heart (சா.அக.);.

     [அநாகத + சுரம்.]

     [Skt. a-na + gata → த. அநாகதம்.]

அநாகதம்

அநாகதம் anākadam, பெ. (n.)

   1. சொல்லப்படாதது; that which cannot be revealed or divulged.

   2. அறியப்படாதது; that which cannot be ordinarily recognised.

   3. வருங்காலம்; the future.

   4. ஆறாதாரங்களி லொன்று;     [Skt. a-na + gata → அநாகதம்.]

அநாகரிகம்

அநாகரிகம் anāgarigam, பெ. (n.)

   1. நாகரிகமின்மை; boorishness, uncivilizedness.

   2. பண்பாடின்மை; uncultured state.

     [அல் → அ + நாகரிகம்.]

அநாகாரம்

 அநாகாரம் anākāram, பெ. (n.)

   உணவின்மை; being deprived of food (சா.அக.);.

     [Skt. a-na + a-hara → த. அநாகாரம்.]

அநாசிகன்

 அநாசிகன் anācigaṉ, பெ. (n.)

   மூக்கில்லாதவன்; one who is deprived or destitute of nose (சா.அக.);.

     [Skt. a-nasika → → த. அநாசிகன்.]

அநாதன்

அநாதன் anātaṉ, பெ. (n.)

   1. தனக்குமே லொரு தலைவனில்லாதவன்; one who has no superior, the deity.

     “ஞாலம் விழுங்கும நாதனை” (திவ். இயற். திருவிருத். 79.);.

   2. திக்கில்லாதவன்; one who has no protector, poor, helpless person.

     “அநாதர்களா யுனையடையுமவர்” (சேதுபு. கவிசம்பு. 67.);.

     [Skt. a-natha → த. அநாதன்.]

அநாதப்பள்ளிக்கூடம்

 அநாதப்பள்ளிக்கூடம் anātappaḷḷikāṭam, பெ. (n.)

   ஏதிலிகட்குரிய பள்ளிக்கூடம் (இக்.வ.);; school for helpless orphanage for children.

     [அநாத + பள்ளிக்கூடம்.]

     [Skt. a-natha → த. அநாதம்.]

கூடு → கூடம்.

அநாதப்பிரேதம்

 அநாதப்பிரேதம் anātappirētam, பெ. (n.)

   உரிமை கோரா உயிரற்ற மாந்த உடல்; unclaimed corpse.

     [Skt a-natha + prêta → த. அநாதப்பிரேதம்.]

அநாதப்பிள்ளை

 அநாதப்பிள்ளை anātappiḷḷai, பெ. (n.)

   ஏதிலிப்பிள்ளை; orphan, as without guardians.

     [அநாத(ம்); + பிள்ளை.]

     [Skt. anatha → த. அநாதம்.]

அநாதரட்சகர்

 அநாதரட்சகர் anātaraṭcagar, பெ. (n.)

   திக்க (கதிய);ற்றவர்களின் கடவுள்; saviour of the helpless, lord.

     [Skt. a-natha + rakska → த. அநாதரட்சகர்.]

அநாதர்விசிகம்

 அநாதர்விசிகம் anātarvisigam, பெ. (n.)

   ஏதிலிகட்குரிய காப்பகம்; a place where children without parents or anyone to take care of them and also infants, deserted, or left exposed are brought up-founding hospital (சா.அக.);.

     [Skt. anatha + visikha → த. அநாதர்விசிகம்.]

அநாதி

 அநாதி anāti, பெ. (n.)

   திக்கற்றவன், ஏதிலி; helpless person.

     [Skt. a-jnati → த. அநாதி.]

அநாதிபதி

 அநாதிபதி anādibadi, பெ. (n.)

   உயிர்ப்படக்க நிலை (துரியாதீதம்.);; the highest state or soul completely free from corporeal entanglements (சா.அக.);.

அநாதிவெயில்

 அநாதிவெயில் anātiveyil, பெ. (n.)

   நின்று களைப்பாற நிழல் எதுவுமற்ற வெட்டவெளியில் காயும் உச்சி வெயில் (இ.வ.);; midday hot sun unbearable on the plains.

     [அநாதி+வெயில்]

அநாதுரம்

 அநாதுரம் anāturam, பெ. (n.)

   நலக்குறை வின்மை; being free from disease (சா.அக.);.

அநாதை

அநாதை1 anātai, பெ. (n.)

   திக்கற்றவன் (வின்.);; poor, helpless man.

த.வ. ஏதிலி, அற்றோன்.

     [Skt. a-natha → த. அநாதை.]

 அநாதை2 anātai, பெ. (n.)

   சிவன் மற்றும் சிவையின் வேறுபடுதோற்றம் (சதாசிவ. 22);;     [Skt. a-natha → த. அநாதை.]

அநாதையாக

 அநாதையாக anātaiyāka, கு.வி.அ. (adv.)

   உரிமை கொண்டாடுவார் இல்லாமல்; uncared for.

     [அநாதை + ஆக.]

     [Skt. anatha → த. அநாதை.]

அநான்மா

அநான்மா anāṉmā, பெ. (n.)

   1. உடம்பு; body.

   2. உயிரற்ற உடல்; that which is not a soul i.e., material body and the material world (சா.அக.);.

த.வ. பிணம்.

     [Skt. a. nā + ātmā → த. அநான்மா.]

அநாமதேயன்

 அநாமதேயன் anāmatēyaṉ, பெ. (n.)

   புகழில்லாதவன், பலரால் அறியப்படாதவன் (அப்பிரசித்தன்);; man unknown to fame, as nameless.

த.வ. மொட்டையன்.

     [Skt. a-nama → த. அநாமம். தேசன் → தேயன்.]

அநாமதேயம்

அநாமதேயம் anāmatēyam, பெ. (n.)

   1. இன்னார் என இனம் கண்டுகொள்ளக் கூடிய பின்னணிச் செய்திகள் ஏதும் இல்லாத நிலை; anonymity, that which is without any identity.

     ‘அநாமதேயக் கடிதம்’.

   2. பலராலும் அறியப்படாத நிலையில் இருப்பவர்; non-entity.

     ‘அரசியலில் இன்று அவர் ஒரு அநாமதேயம்’ (இ.வ.);.

த.வ. மொங்கான்நிலை, மொட்டைநிலை.

     [Skt. anama → த. அநாமம்.]

திகை → திகைதல் = முடிதல். திகை = முடிவு. எல்லை. திகை → திசை → தேசம், ய → ச போலி.

ஒ.நோ. தேசம் → தேயம். நேசம் → நேயம்.

அநாமயன்

 அநாமயன் anāmayaṉ, பெ. (n.)

   நோயில்லாதவன்; one who is free from disease (சா.அக.);.

     [Skt. a-nåmaya → த. அநாமயன்.]

அநாமயம்

 அநாமயம் anāmayam, பெ. (n.)

   நோயற்ற தன்மை; the state of being free from disease, healthy (சா.அக.);.

     [Skt. a-namaya → த. அநாமயம்.]

அநாமிகை

அநாமிகை anāmigai, பெ. (n.)

   கணையாழி விரல்; ring-finger, as having no specific name.

     “பெருவிரலை யநாமிகையோ டியையக் கூட்டி” (கூர்மபு. சுத்தாசம. 10.);.

     [Skt. a-namika → த. அநாமிகை.]

அநாயகம்

 அநாயகம் anāyagam, பெ. (n.)

   அரசின்மை; want of a ruler, anarchy.

     [Skt. nayaka → த. அநாயகம்.]

அநாயம்

அநாயம் anāyam, பெ. (n.)

   வீண் (தேவா. 859, 7.);; uselessness.

     [Skt. a-nyaya → த. அநாயம்.]

அநாயாசகவாதம்

 அநாயாசகவாதம் anāyācagavātam, பெ. (n.)

   குளிர்ச்சியினாலும், தீயமருந்துப் பண்டங்களை உண்பதனாலுமுண்டாகி, உடம்பில் எல்லா நரம்புகளிலும், அவ்வவ் வுறுப்புகளுக் கியற்கையாக வேற்பட்ட தொழில்களை இயக்கி குருதியோட்டம், சிறுநீர்கழிமாசு இவற்றைத் தாக்கி, அதனால் உடம்பு குத்தல், மறத்தல், கனத்தல் முதலிய குணங்களை உண்டாக்குமோர் ஊதை (வாத); நோய்; a kind of nervous affection characterised by shooting pain, numbness, heaviness etc., in the body, is due to the affection of the natural function of the respective organs, with reference to the circulatory system as well as to the interference to the derangement of ‘vayu’ caused by errors in diet and climatic conditions such as, chillness etc. (சா.அக.);.

     [Skt. a-nayacaka + vata → த. அநாயாசகவாதம்.]

அநாயாசம்

 அநாயாசம் anāyācam, பெ. (n. )

   மிக எளிதில் இயற்கையாக; effortlessness.

     ‘பாராட்டத் தகுந்த அநாயாசமான நடிப்பு’ (இ.வ.);.

     [Skt. anåyåca → த. அநாயாசம்.]

அநாரியதித்தம்

 அநாரியதித்தம் anāriyadiddam, பெ. (n.)

   நிலவேம்பு; ground neem, French chirreta – Andrographis paniculata alias Justicia paniculata (சா.அக.);.

அநாரோக்கியம்

அநாரோக்கியம் anārōkkiyam, பெ. (n.)

   1. நலமின்மை; not sound and vigorous in body-unhealthiness.

   2. நோய்; disease (சா.அக.);.

     [Skt. anå + arogya → த. அநாரோக்கியம்.]

அநார்ச்சவம்

 அநார்ச்சவம் anārccavam, பெ. (n.)

   நோய்; disease (சா.அக.);.

அநாவசியம்

 அநாவசியம் anāvasiyam, பெ. (n.)

   தேவையற்றது; that which is un necessary.

     ‘இந்த நீண்ட விளக்கம் அநாவசியம்’ (இ.வ.);.

     [Skt. a. nävašya → த. அநாவசியம்.]

அநாவத்துவம்

 அநாவத்துவம் anāvattuvam, பெ. (n.)

   உயிரோடிருத்தல்; the state of being endowed with breath or life (சா.அக.);.

     [Skt. anadhvan → த. அநாவத்துவம்.]

அநாவிருத்தி

 அநாவிருத்தி anāvirutti, பெ. (n.)

   மீளப் பிறவாமை; not to be born again, not to suffer, metempsychosis (சா.அக.);.

     [Skt. ana + vrtti → த. அநாவிருத்தி.]

அநாவிலம்

 அநாவிலம் anāvilam, பெ. (n.)

   களங்கமின்மை, தெளிவு; being free from sediment;

 clearness (சா.அக.);.

அநிசம்

அநிசம்1 anisam, வி.எ. (adv.)

   எப்பொழுதும்; always.

     “அநிசம் பற்றின்றி நிற்கும்” (ஞானவா. புண்ணி. 11);.

     [Skt. anišam → த. அநிசம்.]

 அநிசம்2 anisam, பெ. (n.)

   1. தூக்கமின்மை; sleeplessness.

   2. அழியாமை (நித்தியம்);; that which is eternal.

   3. அநித்தியம் பார்க்க;see anittiyam (சா.அக.);.

அநிச்சாபிராரத்தம்

 அநிச்சாபிராரத்தம் aniccāpirārattam, பெ. (n.)

   ஊழ்வினை; an invincible necessity (சா.அக.);.

த.வ. பழவினை.

     [Skt. anicca + prå-redha → த. அநிச்சா பிராரத்தம்.]

அநிச்சை

அநிச்சை aniccai, பெ. (n.)

   1. நாகமல்லிகை; snake jasmine, Rhinacanthus communis.

   2. பேய்ச்சேம்பு; a bitter plant (சா.அக.);.

அநிதம்

அநிதம்1 anidam, பெ. (n.)

   அளவுகடந்தது; that which is unrestricted, unlimited.

     “அநித கோடி யணிமுடி மாலையும்” (பெரியபு. திருமலை. 5);.

     [Skt. a-niyata → த. அநிதம்.]

 அநிதம்2 anidam, பெ. (n.)

   நிலையற்றது;. that which is transient or unstable.

     “அநிதவுடற் பூதமாக்கி” (திருமந். 1854);.

     [Skt. a-nitya → த. அநிதம்.]

அநித்தம்

அநித்தம்1 anittam, பெ. (n.)

அநித்தியம் (சி.சி.பா. நிகண். 7); பார்க்க;see anittiyam.

த.வ. நிலையாமை.

     [Skt. a-nithya → த. அநித்தம்.]

 அநித்தம்2 anittam, பெ. (n.)

சிவபெருமான்,

   சிவையின் வேறுபடுதோற்றம் (சிவசக்தி பேதம்); (அக.நி.);;     [Skt. a-nitya → த. அநித்தம்.]

அநித்தியம்

அநித்தியம் anittiyam, பெ. (n.)

   1. நிலையாமை; instability.

   2. நிலையற்றது; that which is transient, unstable.

     “இந்த வநித்திய வாழ்வு வேண்டேன்” (காஞ்சிப்பு. திருநெறிக். 18);.

     [Skt. a-nitya → த. அநித்தியம்.]

அநித்திரை

அநித்திரை anittirai, பெ. (n.)

   1. உறக்கமின்மை; sleeplessness.

   2. கோழை நிரம்பிய தொழிலினால், உடம்பிற்குண்டாகும் நிலைமை; sleeplessness due to the phlegmatic condition of the system, Insomnia.

     [Skt. a-nidra → த. அநித்திரை.]

அநிந்திரியம்

 அநிந்திரியம் anindiriyam, பெ. (n.)

   உறுப்பில்லாதது; that which has no animal organ (சா.அக.);.

     [Skt. a-nindriya → த. அநிந்திரியம்.]

அநிந்திரியவது

 அநிந்திரியவது anindiriyavadu, பெ. (n.)

   சிற்றுயிரிகளின் அமைப்பில்லாத பொருள்; substance devoid of the structure of a living being (சா.அக.);.

     [Skt. a-nindriya + vastu → த. அநிந்திரியவது.]

அநிப்பிராயயம்

 அநிப்பிராயயம் anippirāyayam, பெ. (n.)

   புருவத்தையும், கண்ணோரங்களையுந் தாக்கி வலியையும் விக்கத்தையுமுண்டாக்குமொரு கண்ணோய்; pain and swelling of the eyelids and outer corners of the eyes (சா.அக.);.

அநிமாலினம்

 அநிமாலினம் animāliṉam, பெ. (n.)

   இறப்பு; death.

த.வ. சாவு.

அநிமிடன்

 அநிமிடன் animiḍaṉ, பெ. (n.)

   இமையா திருப்பவன்; one who does not wink (சா.அக.);.

     [Skt. a+nimisa → த. அநிமிடன்.]

அநிமேசம்

அநிமேசம் animēcam, பெ. (n.)

   1. ஒரு வகை மீன்; a kind of fish.

   2. பேய்; devil (சா.அக.);.

அநியதபோக்கியம்

அநியதபோக்கியம் aniyadapōkkiyam, பெ. (n.)

   முதலில் நல்லதாகக் கருதப்பட்டும் பின் தகாதென விலக்கப்பட்ட வினைப்பயன் (சி.சி. 2,39, ஞானப்.);;     [Skt. a-niyata + bhogya → த. அநியதபோக்கியம்.]

அநியாயதண்டம்

அநியாயதண்டம் aniyāyadaṇṭam, பெ. (n.)

   1. முறைகேடான வரி (பாண்டி);; legal tax.

   2. வீண்செலவு (கொ.வ.);; wasteful expenditure.

த.வ. முறையிலா வரி.

     [அநியாய + தண்டம்.]

     [Skt. a-nyaya → த. அநியாயம்.]

தண்டு → தண்டம்.]

அநியாயம்

அநியாயம் aniyāyam, பெ. (n.)

   1. நேர்மையற்றது, தவறான செயல், கொடுமை (தாயு. சுகவாரி. 12);; injustice, wrong action.

   2. வீண் (தாயு. சச்சி. 5);; uselessness.

த.வ. முறைகேடு, அல்நயம், அன்னாயம்.

     [Skt. a-nyaya → த. அநியாயம்.]

அநிருத்தன்

அநிருத்தன்1 aniruttaṉ, பெ. (n.)

   1. திருமாலின் படைவகுப்புத் தலைவன் வகை (அஷ்டாதச. தத்வத். உ, 48);; the vyuha manifestation of Visnu as preserver.

   3. கண்ணபெருமான் பெயரன் (சிலப். 6, 54, உரை);; name of the grandson of Krishnan.

     [Skt. aniruddha → த. அநிருத்தன்.]

 அநிருத்தன்2 aniruttaṉ, பெ. (n.)

   1. தடை யற்றவன்; one who is irresistible.

   2. அடங்காதவன்; one who is irrepressible.

   3. ஒற்றன்; spy.

     [Skt. a+ni-ruddha → த. அநிருத்தன்.]

அநிருத்தம்

அநிருத்தம் aniruttam, பெ. (n.)

   மெய்ப்பிக்கப்படாதது (நிருபிக்கப்படாதது); (திருக்காளத். பு. 32, 40);; that which is not defined.

த.வ. நிறுவாதது.

     [Skt. anirukta → த. அநிருத்தம்.]

அநிர்தம்

 அநிர்தம் anirtam, பெ. (n.)

   மாயை; delusion, as of water in the mirage.

     [Skt. a.nir → த. அநிர்தம்.]

அநிர்தேசியம்

 அநிர்தேசியம் anirtēciyam, பெ. (n.)

   இத்தன்மைத்தென்று கூறொணாதது; that which is indescribable.

     [Skt. a-nirdesya → த. அநிர்தேசியம்.]

அநிர்வசனம்

அநிர்வசனம் anirvasaṉam, பெ. (n.)

   மாயை (சி.சி.1, 27, சிவஞா.);; mayai.

     [Skt. a-nr-vacana → த. அநிர்வசனம்.]

அநிர்வசனீயக்கியாதி

 அநிர்வசனீயக்கியாதி anirvasaṉīyakkiyāti, பெ. (n.)

   அறிவெனவும் அறிவற்றதெனவும் உறுதிசெய்யவியலாத தொன்றை யுணருந் திரிபுணர்வு; error consisting in the cognition of what is not determinable either as real or unreal.

     [Skt. a-nir-vaana+khyāti → த. அநிர்வசனீயக்கியாதி.]

அநிர்வசனீயம்

அநிர்வசனீயம் anirvasaṉīyam, பெ. (n.)

   1. சரியாக (நிருபிக்க); மெய்ப்பிக்க முடியாதது; that which is indefinable.

   2. மாயை; maya.

     [Skt. a-nirvacaniya → த. அநிர்வசனீயம்.]

அநிர்வாச்சியம்

அநிர்வாச்சியம் anirvācciyam, பெ. (n.)

அநிர்வசனீயம் (வேதா. சூ. 58); பார்க்க;see anirvasaniyam.

     [Skt. a-nirvacya → த. அநிர்வாச்சியம்.]

அநிலசகன்

 அநிலசகன் anilasagaṉ, பெ. (n.)

   நெருப்பு; fire.

     [Skt. a-nilacaka → த. அநிலசகன்.]

அநிலசம்

 அநிலசம் anilasam, பெ. (n.)

   செம்முகக் குரங்கு; red faced monkey (சா.அக.);.

     [Skt. anilaca → த. அநிலசம்.]

அநிலச்சூலை

 அநிலச்சூலை anilaccūlai, பெ. (n.)

   ஊதையினாலேற்படும் சூலை; acute arthritis associated with gout, acute gouty arthritis (சா.அக.);.

     [அநில + சூலை.]

     [Skt. a-nila → த. அநிலம்.]

சுல் → சூல் → சூலை.

அநிலன்

அநிலன் anilaṉ, பெ. (n.)

   1. காற்று (வாயு);; air.

   2. உயிர்வளி; oxygen (சா.அக.);.

     [Skt. a-nila → த. அநிலன்.]

அநிலம்

அநிலம் anilam, பெ. (n.)

   1. காற்று; wind.

   2. பிறப்பு; birth.

   3. ஊதை (வாத); நோய்; rheumatism (சா.அக.);.

     [Skt. a-nila → த. அநிலம்.]

அநிலாமயம்

 அநிலாமயம் anilāmayam, பெ. (n.)

   ஊதை (வாத); நோய்; morbid affection of the deranged wind (vayu); such as, flafiulence, rheumatism etc.

     [Skt. anila-maya → த. அநிலாமயம்.]

அநீகினி

 அநீகினி anīkiṉi, பெ. (n.)

   தாமரைப் பூ; lotus, Nelumbium speciosum.

அநீதம்

 அநீதம் anītam, பெ. (n.)

அநீதி பார்க்க;see anidi.

     [(Skt. a-niti → த. அநீதம்.]

அநீதி

 அநீதி anīti, பெ. (n.)

   கொடுமை; injustice.

     [Skt. a-niti → த. அநீதி.]

அநு

அநு anu, பெ. (n.)

   1. கதுப்பு; jaw.

   2. நோய்; disease.

   3. சாவு; death.

   4. முலைப்பால்; woman’s breast milk.

   5. இணை; like or equal to.

     [Skt. hanu → த. அநு.]

அநுகன்

 அநுகன் anugaṉ, பெ. (n.)

   காம விருப்பம் (விச்சை); யுடையவன்; one who is inclined to lewdness, a wanton.

த.வ. பெண் பித்தன்.

     [Skt. anuka → த. அநுகன்.]

அநுகோதம்

 அநுகோதம் anuātam, பெ. (n.)

   மூளையின் பின் பக்கத்தின் கீழ்ப் பிரிவாகிய சிறு மூளை; that portion of the brain which is posterior to and underlying the great cerebral mass, Cerebellum.

     [Skt. anugöta → த. அநுகோதம்.]

அநுகோர்த்தம்

 அநுகோர்த்தம் anuārttam, பெ. (n.)

அநுகோதம் பார்க்க;see anu-kodam.

     [Skt. anugota → த. அநுகோர்த்தம்.]

அநுக்கம்

அநுக்கம் anukkam, பெ. (n.)

   1. பாம்பு; snake.

   2. அச்சம்; fear.

   3. சோம்பல்; lethargy.

   4. துன்பம்; suffering.

அநுசந்தானம்பண்ணல்

அநுசந்தானம்பண்ணல் anusandāṉambaṇṇal, பெ. (n.)

   1. இடைவிடாது நினைதல்; continuous thinking.

   2. இடையீடில்லாவோகம்; continuous meditation or contemplation.

     [அணுசந்தானம் + பண்ணல்.]

     [Skt. anu-santåna → த. அநுசந்தானம்.]

பண் → பண்ணல்.

அநுசயம்

அநுசயம் anusayam, பெ. (n.)

   1. காலில் வரும் நோய்; a disease of the leg.

   2. உடம்பில் மேற்பாகத்திற் காணுமொரு வகைக் கொப்புளம் அல்லது கட்டி; a boil or abscess in the upper part of the body.

   3. தலையில் வரும் கட்டி; a boil or abscess on the head.

     [Skt. anu-ksaya → த. அநுசயம்.]

அநுசிரஞ்சவாதம்

 அநுசிரஞ்சவாதம் anusirañsavātam, பெ. (n.)

   தாடையின் பூட்டைத்தழுவி (யனுசரித்து); எந்நேரமும் வாயைத் திறந்தாவது மூடியாவதிருக்கச் செய்யுமொரு வகை ஊதை (வாத); நோய்; a kind of tetanic spasam of the jaw, which keeps the mouth always shut or open, thereby rendering the patient unable to chew things or to speak.

     [Skt. anu-cirani-ja+vata → த. அனுசிரஞ்சவாதம்.]

அநுட்டணசீதம்

 அநுட்டணசீதம் anuṭṭaṇacītam, பெ. (n.)

   வெயில்;   குளிர்ச்சியற்றது; that which is neither hot or cold.

     [Skt. anusna + sita → த. அநுட்டணசீதம்.]

அநுட்டணம்

 அநுட்டணம் anuṭṭaṇam, பெ. (n.)

   சூடின்மை; that which is devoid of heat.

     [Skt. anusna → த. அநுட்டணம்.]

அநுட்டணாசீதம்

 அநுட்டணாசீதம் anuṭṭaṇācītam, பெ. (n.)

அநுட்டணசீதம் பார்க்க;see anuttanašidam.

     [Skt. anusna + sita → த. அநுட்டணாசீதம்.]

அநுட்டினம்

 அநுட்டினம் anuṭṭiṉam, பெ. (n.)

   கருங்குவளை (நீலோற் பலம்);; blue lotus, Nymphae Craerulea.

     [Skt. anusna → த. அநுட்டினம்.]

அநுதரிசனம்

அநுதரிசனம் anudarisaṉam, பெ. (n.)

   1. கள் குடித்தல்; drinking toddy.

   2. கட்குடிக்கும் கலையம்; a mud pot used drinking toddy.

     [Skt. anu + darišana → த. அநுதரிசனம்.]

அநுதரிசம்

அநுதரிசம் anudarisam, பெ. (n.)

   1. வேட்கை; thirst.

   2. மதுவருந்தும் மட்கலம்; an earthern pot for drinking toddy.

     [Skt. anu + darisa → த. அநுதரிசம்.]

அநுதாபசுரம்

 அநுதாபசுரம் anutāpasuram, பெ. (n.)

   ஒற்றுணர்ச்சியினாலுண்டாகும் சுரம்; sympathetic fever.

த.வ. பரிவிரக்கக் காய்ச்சல்.

     [Skt. anu → த. அநு.]

அநுதாவனம்

 அநுதாவனம் anutāvaṉam, பெ. (n.)

   தூய்மையாக்குகை; cleaning.

அநுதினம்

 அநுதினம் anudiṉam, பெ. (n.)

   நாடொறும்; daily.

     [Skt. anu + dina → த. அநுதினம்.]

அநுதேகம்

 அநுதேகம் anutēkam, பெ. (n.)

   நுண்ணுடல்; astral body.

     [Skt. anu + deha → த. அநுதேகம்.]

அநுத்தம்பவாதம்

அநுத்தம்பவாதம் anuttambavātam, பெ. (n.)

   1. இரு தாள்களையும் மரக்கச் செய்து இறுக்கி நாவையுள்ளுக்கிழுத்துத் துன்பத்தை விளைவிக்கு மோர் ஊதை (வாத); நோய்; a kind of spasm characterised by the affection of the jaws, and contraction or drawing in of the tongue, a kind of tetanus.

   2. மோவாய்க் கட்டைப் பிடிப்பு; a spasm of the muscles of mastication

 commonly called lock-jaw.

   3. இசிவால் (சன்னியால்); தாளிறுத்தல்; a tetanic condition of the muscles of the jaw, Trismusim.

அநுத்தானம்

 அநுத்தானம் anuttāṉam, பெ. (n.)

   முகம் குப்புறவிருக்கும்படி கிடத்தல்; lying with the face downwards.

     [Skt. anu + sthana → த. அநுத்தானம்.]

அநுத்துருதம்

அநுத்துருதம் anuddurudam, பெ. (n.)

   1. ஒரு காலவளவு; a period of time.

   2. ஒரு மாத்திரையின் காற்பங்கு;    1/4 of a moment.

அநுத்துவாகம்

 அநுத்துவாகம் anuttuvākam, பெ. (n.)

   திருமணமேற்கா நோன்பு; unmarried state, celibacy.

அநுபசயம்

 அநுபசயம் anubasayam, பெ. (n.)

   நோய் குணப்படாத நிலைமை; the state of being incurable, incurability.

     [Skt. anu + caya → த. அநுபசயம்.]

அநுபந்தம்

அநுபந்தம் anubandam, பெ. (n.)

   1. பிறந்த குழந்தை; new-born child.

   2. ஒன்றோடொன் றிணைக்கப்பட்டது; that which is collaterally connected, concomiant, adjunct.

   3. சேர்க்கப்பட்டது; appendage.

த.வ. இணைப்பு.

அநுபர்தை

அநுபர்தை anubartai, பெ. (n.)

   நீர்வேட்கை (தாகம்);; thirst.

   2. விக்கல்; hiccough.

அநுபவம்

அநுபவம் anubavam, பெ. (n.)

   1. கண்டறியுமறிவு; the knowledge gained by trial or repeated trials, observation and experience.

   2. மனத்தாற்றோன்றும் அறிவு; practical wisdom experienced by the changes and trials of life.

த.வ. பட்டறிவு.

     [Skt. anu-bhava → த. அநுபவம்.]

அநுபவாமிர்தம்

 அநுபவாமிர்தம் anubavāmirtam, பெ. (n.)

   தமிழிற் செய்த வைராக்கிய சதகம்; a treatise on determination or will-power complied in Tamil.

     [Skt. anubhava + a-mrta → த. அநுபவாமிர்தம்.]

அநுபாகம்

 அநுபாகம் anupākam, பெ. (n.)

   தாடையைச் சேர்ந்த பகுதி;     [அநு + பாகம்.]

     [Skt. anu → த. அநு.]

அநுபானம்

அநுபானம் anupāṉam, பெ. (n.)

   மருந்தையுள்ளே செலுத்துதற்குதவியாகக் குடிக்கும் நீர் அல்லது குடிநீர்; water of other liquid taken as a basis for swallowing medicine without difficulty, vehicle.

   2. உட்கொள்ளுவதற்காக வேண்டிய மருந்தைக் குழைத்து நாவால் நக்கிப் பயன்கொள்ளுதற்குரிய தேன் முதலிய பொருள்கள்; a thick syrupy medicament, like honey, ghee or other substances mixed with the intended medicine and taken in by licking, linctus.

த.வ. துணைப்பருகம்.

     [Skt. anu + pana → த. அநுபானம்.]

அநுபோகம்

 அநுபோகம் anupōkam, பெ. (n.)

அநுபவம் பார்க்க;see anubavam.

த.வ. நுகர்ச்சி.

     [Skt. anu + bhoga → த. அநுபோகம்.]

அநுமரணம்

அநுமரணம் anumaraṇam, பெ. (n.)

   உடன் கட்டையேறுகை; ascending the funeral pile or pyre with the deceased husband, sati.

த.வ. உடன்கட்டை.

     [அநு + மரணம்.]

     [Skt. anu → த. அநு.]

மடி → மரி + அணம்-மரணம் (வ.வ.54.);.

அநுமை

 அநுமை anumai, பெ. (n.)

   கண்ணின் கீழிமை; that part immediately below the eye-lid.

அநுரசம்

 அநுரசம் anurasam, பெ. (n.)

   உண்ட பின்பு ஏற்படும் சுவை; a secondary flavour;

 a taste which succeeds eating and drinking after taste.

     [Skt. anu + rasa → த. அநுரசம்.]

அநுராகபோகம்

அநுராகபோகம் anurākapōkam, பெ. (n.)

   1. சிற்றின்ப நுகற்சி; sexual enjoyment.

   2. காம வேட்கை; sexual bliss.

     [Skt. anu-räga + bhõga → த. அநுராகபோகம்.]

அநுராகமூலி

 அநுராகமூலி anurākamūli, பெ. (n.)

   காமவேட்கையுண்டாக்கும் மூலிகை; a drug exciting sexual desire, Aphrodisiac.

     [அநுராக(ம்); + மூலி.]

     [Skt. anu-raga → த. அநுராக(ம்);.]

அநுராகம்

அநுராகம் anurākam, பெ. (n.)

   1. சிற்றின்ப விருப்பம்; carnal appetite, lust

   2. ஆசை; lover attachment.

த.வ. விழைச்சு, காமவேட்கை.

     [Skt. anu + raga → த. அனுராகம்.]

அநுற்பத்தி

 அநுற்பத்தி anuṟpatti, பெ. (n.)

   பிறவாமை; not being born again; absence of birth.

     [Skt. anut-patti → த. அநுற்பத்தி.]

அநுலேபகம்

அநுலேபகம் anulēpagam, பெ. (n.)

   1. உடம்பிற் பூசும் சந்தன முதலிய நறுமணப் பொருள்கள்; perfumes like sandal paste etc, smeared over the body.

   2. பூசும் நெய்மம்; any soft unctuous substance used for smearing particularly over the body or the diseased part, an unguent or ointment.

   3. நெய்மம் முதலியவற்றைப் பூசுதல்; anointing the body with unguents.

     [Skt. anu-lepaka → த. அனுலேபகம்.]

அநுலேபனம்

அநுலேபனம் anulēpaṉam, பெ. (n.)

   1. பூசுதல்; smearing or anointing the body.

   2. பூசும் பொருள்; oily or emollient application.

     [Skt. anu-lepana → த. அனுலேபனம்.]

அநுலேபம்

 அநுலேபம் anulēpam, பெ. (n.)

அநுலேபகம் பார்க்க;see anulebagam.

     [Skt. anu-lepa → த. அநுலேபம்.]

அநுலோபனம்

 அநுலோபனம் anulōpaṉam, பெ. (n.)

   குடலுக்குள் ஏற்படும் இயற்கையான அசைவு; a peculiar motion of the intestines and other tubular organs in digestion-peristalsis.

     [Skt. anu-lopana → த. அநுலோபனம்.]

அநுலோமனம்

 அநுலோமனம் anulōmaṉam, பெ. (n.)

   வளியை (வாயுவை);க் கண்டித்து வெளிப்படுத்தும் கழிச்சல் மருந்து; a pursative which helps to check or remove the doshas in the system especially vayu (wind);, by setting them free.

     [Skt. anu-loma → த. அனுலோமனம்.]

அநுவாசம்

 அநுவாசம் anuvācam, பெ. (n.)

   நறுமண மூட்டுகை; imparting smell.

     [Skt. anu-våsa → த. அநுவாசம்.]

அநுவாசிதம்

அநுவாசிதம் anuvācidam, பெ. (n.)

   1. அணியமாக்கிச் செலுத்துதல்; that which is prepared and administered as in enema.

   2. புகையிடுதல்; fumigating.

     [Skt. anu-väšita → த. அநுவாசிதம்.]

அநுவிருத்தம்

 அநுவிருத்தம் anuviruttam, பெ. (n.)

   முட்டை வடிவம்; shape like that of an egg-oval shape.

     [Skt. anu-vrita → த. அநுவிருத்தம்.]

அநுவெல்லிதம்

அநுவெல்லிதம் anuvellidam, பெ. (n.)

   1. கட்டுக்கட்டல்; bandaging or securing with bandages.

   2. கால் கை கட்டு; the bandage applied to the extremities.

அநூகன்

 அநூகன் anūkaṉ, பெ. (n.)

   பிறப்பிலி; one who is free from re-birth.

     [Skt. anuka → த. அநூகன்.]

அநூடன்

 அநூடன் anūṭaṉ, பெ. (n.)

   திருமணம் செய்யாதவன்; an un married person, celibate.

     [Skt. anüta → த. அநூடன்.]

அநூரு

 அநூரு anūru, பெ. (n.)

   முடவன்; a lame person.

அநூர்த்துவாத்தி

 அநூர்த்துவாத்தி anūrttuvātti, பெ. (n.)

   மேற்கதுப்பெலும்பு; superior maxillary bone.

அநேகமாக

அநேகமாக anēkamāka, கு.வி.அ. (adj.)

   1. பெரும்பாலும்; mostly, almost.

     ‘அநேகமாக என்னைத் தவிர அனைவரும் உணவருந்தி விட்டனர்’.

   2. அறிந்த வளவில்; most probably.

     ‘அநேகமாக இது வீண் முயற்சிதான்’.

     [அநேகம் + ஆக.]

     [Skt. an-eka → த. அநேக(ம்);.]

அநேகம்

 அநேகம் anēkam, பெ. (n.)

   பல; many.

     ‘மாதத்தில் அநேக நாட்கள் கஞ்சிதான் உணவு’ (உ.வ.);.

த.வ. மிகவு மிகுதி.

     [Skt. an-eka → த. அநேகம்.]

அநேகாங்கம்

 அநேகாங்கம் anēkāṅgam, பெ. (n.)

   பலவுறுப்புகள்; several organs.

த.வ. பல்லுறுப்பு.

     [Skt. an-ekia + anga → த. அநேகாங்கம்.]

அநேகாந்தம்

 அநேகாந்தம் anēkāndam, பெ. (n.)

   ஐயம்; that which is doubtful.

     [Skt. an-ekanta → த. அநேகாந்தம்.]

அநேடமூகன்

 அநேடமூகன் anēṭamūkaṉ, பெ. (n.)

   செவியிலூமன்; a person who is both deaf and dumb, deaf mute.

     [அநேட + மூகன்.]

     [Skt. an-eta → த. அநேட(ம்);.]

மூழ் → முகு → மூகன்.

அநேடமூகம்

 அநேடமூகம் anēṭamūkam, பெ. (n.)

   கேளாச் செவியும் ஊமையுமாந் தன்மை; loss of speech; deaf dumbness deaf-mutes.

     [அநேட + மூகம்.]

     [Skt. aneta → த. அநேட.]

அநேதிரு

 அநேதிரு anētiru, பெ. (n.)

   வெப்பம் அல்லது மின் ஆற்றல் எளிதில் ஊடுருவக்கூடாத பொருள்; a substance which does not transmit a force like that of hear or electricity.

     [Skt. anati → த. அநேதிரு.]

அநோக்கம்

அநோக்கம் anōkkam, பெ. (n.)

   1. மரம்; tree.

   2. மரப்பொது; tree in common.

அந்

 அந் an, பெ. (n.)

   அன் எதிர்மறை முன்னொட்டு; a prefix having the force of a negative meaning.

அந்த

அந்த anda, கு.பெ.எ. (adj.)

   அங்குள்ள, அன்றுள்ள, முன்சொன்ன என்று பொருள்படும் சேய்மைச்சுட்டுப் பெயரெச்சம்; that.

     “காலா லந்தக் கருங்கனி சிதைத்தேன்” (மணிமே. 17 ; 34); ‘அந்த வெட்கக்கேட்டை ஆரோட சொல்கிறது’ (பழ.);.

ம. அ ; க., து., பட., தெ. ஆ ; துட. அமுன்.

     [ஆ → அ → அல் → அது → அத்து → அந்து → அந்த ‘அ’ பெயரெச்ச ஈறு. அந்து + அ – அந்த.]

 அந்த anda, இடை. (int.)

   இரக்கக் குறிப்புச் சொல்; exclamation of pity.

     “அந்தொக்க வரற்றவோ” (கம்பரா. யுத்த இராவணன் சோ. 38);.

   சிங். அந்தோ; Skt. hanta.

     [அத்தன் (தந்தை); → அத்தோ → அந்தோ → அந்த → Skt. hanta. இனி, அத்தன் → அத்த → அந்த என்றுமாம். ஒ.நோ ; ஐயன் → ஐயோ, ஐயன் → ஐய.]

     “செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்துந்

தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி”

என்னும் தொல்காப்பிய நூற்பா (சொல். எச். 4); உரையில் நச்சினார்க்கினியர்,

     ‘பன்னிரு நிலமாவன ; பொங்கர் நாடு, ஒளி நாடு, தென்பாண்டிநாடு, குட்டநாடு, குட நாடு, பன்றிநாடு, கற்காநாடு, சீதநாடு, பூழிநாடு, மலையமானாடு, அருவாநாடு, அருவாவடதலை எனத் தென்கீழ்பால் முதலாக வடகீழ்பா லீறாக எண்ணுக.

     ‘இனிப் பன்னிரண்டையுஞ் சூழ்ந்த பன்னிரண்டாவன ; சிங்களமும், பழந் தீவும், கொல்லமும், கூபமும், கொங்கணமும், துளுவும், குடகமும், கருநடமும், கூடமும், வடுகும், தெலுங்கும், கலிங்கமுமாம்.

     “………சிங்களம் அந்தோ வென்பது…….. எனவுரைத்தார்.

தெய்வச்சிலையார்,

     “பன்னிருநிலமாவன ; வையை ஆற்றின்…… (பொதுங்கர்); நாடு, ஒளிநாடு, தென் பாண்டிநாடு, கருங்குட்டநாடு, குடநாடு, பன்றிநாடு, கற்காநாடு, சீதை (சீத);நாடு, பூழிநாடு, மலாடு, அருவாநாடு, அருவா வடதலை என்ப. இவை செந்தமிழ் நாட்டகத்த. செந்தமிழ் (சேர்ந்த); நாடென்றமையால், பிற நாடாகல் வேண்டுமென்பார் உதாரணங் காட்டுமாறு ; –

     “கன்னித் தென்கரைக் கடற்பழந் தீபம் கொல்லங் கூபகஞ் சிங்கள மென்னும் எல்லையின் புறத்தவும், கன்னடம் வடுகம் கலிங்கம் தெலிங்கம் கொங்கணம் துளுவம் குடகம் குன்றகம்” என்பன.’

     “……அந்தோ என்பது சிங்களவர் ஐயோ என்பதற்கிட்ட பெயர்…… எனவுரைத்தார்.

நன்னூற் காண்டிகை யுரையாசிரியன்மாராகிய சடகோபராமானுச கிருட்டிணமா சாரியன்மாரோ, 273ஆம் நூற்பாவுரையில்,

-“ஐயோ என்பதை ‘அந்தோ என்பது, சிங்களநாட்டுச் சொல்’ என்று முன்னையவுரையாசிரியர்கள் எழுதியிருந்தாலும், அது ‘ஹந்த’ என்னும் வடசொல்லின் சிதைவு என்று தெரிதலால், இங்குக் கொள்ளப்படவில்லை” என்று உரைத்துள்ளனர்.

மேற்கூறிய நால்வரும் ‘அந்தோ’ என்னுஞ் சொல்மூலத்தை அறியாமையாலேயே அதைச் சிங்களச் சொல்லென்றும், வடசொல்லென்றும் பிறழக் கொண்டனர்.

இரக்கம், நோதல், அச்சம், வியப்பு முதலிய குறிப்புகளை யுணர்த்தும் தமிழ்ச்சொற்கள் பெரும்பாலும் பெற்றோர் முறைப்பெயரினின்றே தோன்றியுள்ளன என்பது, முன்னரே அக்கை, அச்சன், அத்தன் முதலிய சொற்களின் கீழ் விளக்கப்பட்டது. ஆண்டுக் காண்க.

அந்தோ என்னும் தமிழ்ச்சொல்லே, சிங்களத்தில் இயல்பாகவும், வடமொழியில் திரிந்தும் வழங்குகின்ற தென்க.

அந்தகக்கல்

 அந்தகக்கல் andagaggal, பெ. (n.)

   ஒரு தமிழ் மருந்துச் சேர்க்கை சரக்கு; one of the one hundred and twenty kinds of natural drugs and other substances described in the Tamil medical vocabulary.

அந்தகக்கவி வீரராகவ முதலியார்

அந்தகக்கவி வீரராகவ முதலியார் andagaggavivīrarāgavamudaliyār, பெ. (n.)

   17ஆம் நூற்றாண்டினவரும், கழுக்குன்றப்புராணமும் பிற பனுவல்களும் இயற்றியவரும், கடும்பா (ஆசுகவி); வல்லுநரும், பிறவிக் குருடருமான ஒரு தமிழப் பாவலர்; name of a blind poet, author of the Kalukkunra-p-puranam and other works, 17th century.

     [Skt. andhaka + kavi + Vīra + Rāghava + த. முதலியார்.]

அந்தகசநியாயம்

 அந்தகசநியாயம் andagasaniyāyam, பெ. (n.)

   ஒன்றை முற்ற ஆராயாது அதனொரு பாகத்தை மட்டும் கண்டு உறுதிசெய்யும் நெறி; maxim of the blind men and the elephant, used to denote arriving at a wrong one sided conclusion, as the blind men who, each feeling a different part of the elephant, formed erroneous opinions as to what the elephant was like.

த.வ. குருடன் கண்ட யானைநெறி.

     [Skt. andha + gaja + nyaya → த. அந்தகசநியாயம்.]

த. கயம் → Skt. gaja.

அந்தகசன்னி

அந்தகசன்னி andagasaṉṉi, பெ. (n.)

   1. மூளைக்கு அதிர்ச்சியை யுண்டாக்கிக் கண்ணைக் குருடாக்கும் ஒரு வகை இசிவு; an apoplexy affecting the cerebral system and marked by loss of eyesight.

   2. அந்தக சன்னி பாதசுரம் பார்க்க;see andaga-sanni-pada-suram.

   3. நஞ்சினால் ஏற்படும் இசிவு; delirium due to arsenical poisoning.

     [Skt. andhaka + san-ni → த. அந்தகசன்னி.]

அந்தகசன்னிபாதசுரம்

 அந்தகசன்னிபாதசுரம் andagasaṉṉipātasuram, பெ. (n.)

   நடுக்கமாய்க் காய்ச்சல் கண்டு, விக்கல், நீர்வேட்கை, சோர்வு, இரைப்பு, உப்பசம் முதலிய குணங்களையும் மற்றும் தலை நடுக்கம், மறதி, இசிவு முதலிய மூளையின் கோளாறுகளையும், இறப்பையு முண்டாக்குமொரு காய்ச்சல் நோய்; a fever characterised by high temperature hiccough, thirst, languor, hard breathing, swelling, etc, coupled with the shaking of the head, forgetfulness, confusion of mind, delirium and other cerebral manifestations. It is sometimes extremely fatal, Typhus fever.

     [அந்தகம் + சன்னி + பாதம் + சுரம்.]

     [Skt. andhaka + san-ni → த. அந்தகசன்னி.]

பதி → பதம். சுள் → சுர் → சுரம்.

அந்தகசன்னிபாதம்

அந்தகசன்னிபாதம் andagasaṉṉipātam, பெ. (n.)

   இசிவுநோய் (சன்னிபாத);வகை (சீவரட்.);; one of 13 kinds of sanni, q.v.

     [அந்தகம் + சன்னி + பாதம்.]

     [Skt. andhaka + san-ni → த. அந்தகசன்னி.]

பதி → பாதம்.

அந்தகசயன்

 அந்தகசயன் andagasayaṉ, பெ. (n.)

   சிவபெருமான் (வின்.);; Sivan.

     [Skt. antaka – jaya → த. அந்தகசயன்.]

அந்தகசூரணர்

அந்தகசூரணர் andagacūraṇar, பெ. (n.)

   சிவ வேறுபாடு (பேதம்); இருபத்தைந்தனுளொன்று (காஞ்சிப்பு. சிவபுண். 24, தலைக்குறிப்பு);;     [Skt. andhakasura + harana.]

அந்தகச்சாரம்

 அந்தகச்சாரம் andagaccāram, பெ. (n.)

   சவட்டுப்பு; salt produced from earth impregnated with soda; salt extracted from fuller’s earth (artificially);.

     [அந்தம் + சாரம்.]

     [Skt. antaka → அந்தகம். காரம் → சாரம்.]

அந்தகன்

அந்தகன்1 andagaṉ, பெ. (n.)

   1. அழிப்போன்; destroyer.

     “இராவணாந்தகனை” (திவ். பெரியுதி. 2,3,7);.

   2. கூற்றுவன் (திவா.);; Yama, as causing death.

   3. மரஞ் செடிகளில் ஒட்டி வளரும் பூடுவகை (மலை.);; species of loranthus,

   4. வழலை (சவர்க்காரம்); (மூ.அ.);; soap.

     [Skt. antaka → த. அந்தகன்.]

 அந்தகன்1 andagaṉ, பெ. (n.)

   1. குருடன் (தேவா. 859. 4);; blind man.

   2. ஓரசுரன் (திருவிளை. அருச். 16);; name of an asura.

   3. ஓர் அரசன் (பாகவத. 9, எதுமரபு. 29);; name of a descendant of Yadu, and ancestor of Krisna.

     [Skt. andhaka → த. அந்தகன்.]

 அந்தகன்3 andagaṉ, பெ. (n.)

   1. வெள்ளாடு; goat.

   2. காய்ச்சு வழலை; a kind of salt obtained by repeated boiling.

   3. காசிச்சாரம்; a mineral salt.

   4. சீர்பந்த நஞ்சு; a kind of native arsenic.

   5. காசு நஞ்சு; one of the 32 kinds of prepared arsenic.

   6. திராய்; a mineral one consisting of copper and spelter.

அந்தகன்கணம்

அந்தகன்கணம் andagaṉgaṇam, பெ. (n.)

   குழந்தை நோய் வகை (பாலவா.511);; a disease of children.

     [அந்தகன் + கணம்.]

     [Skt. antaka → த. அந்தகன்.]

குண் → கண் → கண → கணம்.

அந்தகன்பீடம்

 அந்தகன்பீடம் andagaṉpīṭam, பெ. (n.)

   தராமலை (R);; mountain where zinc is found.

     [அந்தகன் + பீடம்.]

     [Skt. antaka → த. அந்தகன்.]

புள் → பிள் → பீடு → பீடம்.

அந்தகம்

அந்தகம் andagam, பெ. (n.)

   ஆமணக்கு (மலை.);; castor-plant.

 அந்தகம் andagam, பெ. (n.)

   1. அந்தகசன்னி பார்க்க;see andaga-sanni.

   2. ஒரு வகை செய் (சாலாங்க); நஞ்சு; a kind of arsenic.

   3. ஒரு வகை செய் (அவுபல); நஞ்சு; one of the 32 kinds of native arsenic.

   4. குருடு; blindness.

     [Skt. andhaka → த. அந்தகம்.]

அந்தகரணம்

அந்தகரணம் andagaraṇam, பெ. (n.)

   1. குருடாக்கல்; causing blindness.

   2. கண்ணைக் குருடாக்கும் நோய்; an ulcer causing loss of eye-sight.

     [Skt. andhaka + vrana → த. அந்தகரணம்.]

அந்தகரூபி

அந்தகரூபி andagarūpi, பெ. (n.)

   1. எலி; rat.

   2. குருடன்; a blind person.

     [Skt. andhaka + rupin → த. அந்தகரூபி.]

அந்தகலை

 அந்தகலை andagalai, பெ. (n.)

   நிலவின் (சந்திர); கலை; the vital air passing through the left nostril.

     [அந்த + கலை.]

     [Skt. anta → த. அந்த. குல் → கல் → கலை (பிரிவு);.]

அந்தகாரம்

அந்தகாரம்1 andakāram, பெ. (n.)

   1. இருள் (பிங்.);; darkness, gloom.

   2. அறியாமை, மனவிருள்; nescience, mental darkness.

     “மும்மலம் போர்த்த வந்தகாரப் படலவிருள்” (மச்சபு. பாயி. 16);.

     [Skt. andha-kåra → த. அந்தகாரம்.]

 அந்தகாரம்2 andakāram, பெ. (n.)

   நெல்லி; Indian gooseberry, Phyllanthus emblica.

     [Skt. andha-kara → த. அந்தகாரம்.]

அந்தகாரி

 அந்தகாரி andakāri, பெ. (n.)

   சிவன் (பிங்.);; Sivan, as the foe of Andhakasura or Yama.

     [Skt. antaka + ari → த. அந்தகாரி.]

அந்தகாலம்

அந்தகாலம் andakālam, பெ. (n.)

   இறப்புறுங் காலம்; time of death.

     “அந்தகால மடைவதன் முன்னம்” (திவ். பெரியாழ். 4,5,3);.

த.வ. இறுதிக்காலம்.

     [(அந்த(ம்); + காலம்.]

     [Skt. anta → த. அந்த.]

அந்தகூபம்

 அந்தகூபம் andaāpam, பெ. (n.)

அந்தக்கேணி (P.N.); பார்க்க;see anda-k-keni.

     [அந்த + கூபம்.]

     [Skt. anta → த. அந்த. கூவல் → கூவம் → கூபம்.]

அந்தகை

 அந்தகை andagai, பெ. (n.)

   அடிவயிற்றினில் வலப்பக்கமாகப் பெருங்குடலின் தொடக்கத்தி லுள்ள பை; the large blind pouch in which the largo intestine beging a branch of an intestine with one end closed caecum.

அந்தகோ

அந்தகோ andaā, இடை (int.)

   இரக்கக் குறிப்புச்சொல்; an exclamation of pity.

     “அந்த கோவிது வருவதே யெனக்கு” (வேதா ரணியபு. பிரமசா. 22);. அந்த பார்க்க;see anda=.

     [அத்தன் → அத்த → அந்த → அந்தவோ → அந்தகோ. ஒ.நோ.; ஐயன் → ஐய → ஐயவோ → ஐயகோ; அம்மை → அம்ம → அம்மவோ → அம்மகோ. வ → க, போலி.]

அந்தகோரம்

 அந்தகோரம் andaāram, பெ. (n.)

   நெல்லி (மலை.); ; emblic myrobalan (செ.அக.); – gooseberry tree, Phyllanthus emblica (சா.அக.);.

மறுவ. அந்தகோலம், அந்தகோளம்.

அந்தகோலம்

 அந்தகோலம் andaālam, பெ. (n.)

அந்தகோரம் பார்க்க;see andagóram.

அந்தகோலாங்கூலநியாயம்

 அந்தகோலாங்கூலநியாயம் andaālāṅālaniyāyam, பெ. (n.)

   பிறிதை நம்பித் துன்பமடைதலைக் காட்டும் நெறி; maxim of the blind man and the cow’s tail, used to denote being misled, as the blind man who came to grief through holding on to a cow’s tail, under a misapprehension, trusting the advice of a stranger.

த.வ. ஆன்வால் அவசல நெறி.

     [Skt. andha + gõ + langula + nyaya → த. அந்தகோலாங்கூலநியாயம்.]

அந்தகோளம்

 அந்தகோளம் andaāḷam, பெ. (n.)

அந்தகோரம் பார்க்க;see andagóram.

அந்தக் கழுதை இந்தக் கழுதை

 அந்தக் கழுதை இந்தக் கழுதை antakkaḻutaiintakkaḻutai, பெ. (n.)

கண்ணா மூச்சி விளையாட்டினைப் போன்ற விளையாட்டு

 a children”s game similiar to hide and seek.

     [அந்த+கழுதை+இந்த+கழுதை]

அந்தக்கணம்

 அந்தக்கணம் andakkaṇam, பெ. (n.)

   குழந்தைகளுக்கு மூளையில் கனல் ஏறி அதனால் உடல் வெதும்பி நாவுலர்ந்து, முகம் மஞ்சள் நிறமடைந்து காணுமொரு வகைக் கணைநோய்; a disease in children arising from the affection of the brain. It is marked by emaciation, dryness of the tongue, yellow face and other symptoms characteristic of Tabea mesenterica.

அந்தக்கண்

 அந்தக்கண் andakkaṇ, பெ. (n.)

   குழிவிழுந்த கண்; sunken eyes.

     [அந்தம் + கண்.]

     [Skt. anta → த. அந்தம்.]

அந்தக்கரணசாட்சி

 அந்தக்கரணசாட்சி andakkaraṇacāṭci, பெ. (n.)

   மனச்சான்று (சாட்சி); (வின்.);; conscience.

     [அந்த(ம்); + கரணம் + சாட்சி.]

     [Skt. antah → த. அந்த. Skt. saksin → த. சாட்சி.]

அந்தக்கரணம்

அந்தக்கரணம் andakkaraṇam, பெ. (n.)

   உட்கருவி (சி.போ.சிற். 4, 1);; inner seat of thought, feeling and volition, consisting of four aspects.

மனம், புத்தி, சித்தம், அகங்காரம்.

     [அந்தம் + கரணம்.]

     [Skt. antah → த. அந்த. கரு → கரணம்.]

அந்தக்காரி

 அந்தக்காரி andakkāri, பெ. (n.)

   அழகி (வின்.);; beautiful woman.

     [அந்தம் + காரி.]

     [Skt. anta → த. அந்த.]

அந்தக்கிருமி

 அந்தக்கிருமி andakkirumi, பெ. (n.)

   உடம்பில் நுண்ணுயிரிகளால் ஏற்படும் ஒரு வகை நோய்; a disease caused by worms in the body.

     [Skt. anta + krmi → த. அந்தக்கிருமி.]

அந்தக்கெடு-த்தல்

அந்தக்கெடு-த்தல் andakkeḍuttal,    4 செ.குன்றாவி. (v.t.)

   உருக்குலைத்தல்; to injure the beauty of a person or a thing to deface or disfigure.

     [அந்தம் + கெடு-.]

     [Skt. anta → த. அந்தம். சுள் → சுடு → கெடு.]

அந்தக்கேணி

அந்தக்கேணி andakāṇi, பெ. (n.)

   மறைகிணறு; hidden well, covered well.

     “அந்தக் கேணியு மெந்திரக் கிணறும்” (பெருங். உஞ்சைக். 33, 3);.

     [அந்தம் + கேணி.]

     [Skt. anta → த. அந்த. குள் → குணி → கேணி.]

அந்தசடம்

அந்தசடம் andasaḍam, பெ. (n.)

   1. வயிறு; stomach.

   2. அடிவயிறு; abdomen.

     [Skt. anta + jada → த. அந்தசடம்.]

அந்தசெயநீர்

 அந்தசெயநீர் andaseyanīr, பெ. (n.)

   வழலையுப்பு செயநீர்;

அந்தச்சம்

 அந்தச்சம் andaccam, பெ. (n.)

அந்தச்சு பார்க்க;see andaccu.

     [அந்தச்சு → அந்தச்சம்.]

அந்தச்சித்திரம்

அந்தச்சித்திரம் andaccittiram, பெ. (n.)

   உட்கலகம் (சிவசமவா. 38);; internal discord.

     [Skt. antas-chidra → த. அந்தச்சித்திரம்.]

அந்தச்சு

 அந்தச்சு andaccu, பெ. (n.)

   வடிவின் சரியொப்பு; striking resemblance.

     [அந்த + அச்சு – அந்தச்சு (அதே வடிவம்);.]

அந்தச்சுண்ணம்

 அந்தச்சுண்ணம் andaccuṇṇam, பெ. (n.)

   வழலைச் சுண்ணம், முப்புச் சுண்ணம்;     “The king of metals’.

     [அந்த(ம்); + சுண்ணம்.]

     [Skt. anta → த. அந்தம். சுள் + சுண் → சுண்ணம்.]

அந்தச்சோபம்

 அந்தச்சோபம் andaccōpam, பெ. (n.)

   புளிப்பு; sourness.

அந்தணநாகம்

 அந்தணநாகம் andaṇanākam, பெ. (n.)

   பொன்னிறமான நல்ல பாம்பு; cobra of a golden colour, lit. Brähmin cobra, so called because of its bright colour.

     [அந்தணன் + நாகம் – அந்தண நாகம் = பிராமணன் நிறமுள்ள நல்லபாம்பு.]

அந்தணநாபி

அந்தணநாபி andaṇanāpi, பெ. (n.)

   நாபிவகை (மூ.அ.);; white variety of aconite — (செ.அக.);

   1. நச்சுத் தன்மையைப் போக்குமொரு முதன்மையான மருந்து; sacerdotal antidote for a kind of poison.

   2. வெண்ணாபி; a white variety of aconite root (சா.அக.);.

அந்தணன்

அந்தணன் andaṇaṉ, பெ. (n.)

   1. அழகிய அருளாளன்; the gracious one.

   2. முனிவன் துறவி; sage, recluse, ascetic.

     “அந்தண ரென்போ ரறவோர்மற் றெவ்வுயிர்க்குஞ் செந்தண்மை பூண்டொழுக லான்” (குறள். 30);.

   3. அறவோன் (பொதி, நி.);; virtuous person.

   4. தூயோன்; pure person.

     “தேவர்க்கும் அறிய லாகா அந்தணனை” (திவ். திருநெடுந் 4);.

   5. பிராமணன்; Brahmin.

     “நூலே கரகம் முக்கோல் மணையே ஆயுங் காலை யந்தணர்க் குரிய” (தொல். பொருள். மர. 71);.

   6. பிராமணவகை நாகம்; cobra of the Brahmin variety.

     “அந்தண னாறு மான்பா லவியினை (சீவக. 1287);.

   7. பிரமன்; Brahma (பிங்.);.

   8. சிவன்; Siva.

     “யாழ்கெழு மணிமிடற் றந்தணன்” (அகநா. கடவுள்வா.);.

   9. அருகன்; Arhat (சங்.அக.);.

   10. கடவுள்; God (சங்.அக.);.

   11. வியாழன்; Jupiter.

     “மற்றவன் மேலுயரந்தண னுலவும்” (கூர்மபு. மண்டல. 16);.

   12. காரி; Saturn (சங்.அக.);.

   13. ஒரு சிறந்த முழுத்தம் (முகூர்த்தம்);; a highly auspicious time.

     “அரன்பாம் பனுட மகம்புட் புனலாடி யந்தணன் றேர்” (விதான, குணா. 72;73);. இது பகலிலே எட்டாவதாக நிகழுமென்றும் நூறாயிரங் குற்றத்தைப் போக்குமென்றும் சொல்லப்படும் (சங்.அக.);.

ம. அந்தணன்

     [அம் + தணம் + அன் (ஈறு); – அந்தணன்.]

அந்தணர் பார்க்க;see andanar.

அந்தணமை

அந்தணமை andaṇamai, பெ. (n.)

   1. அழகிய குளிர்ந்த அருட்டன்மை; comely graciousness.

   2. துறவுநிலை; asceticism.

   3. பிராமணத் தன்மை; Brahminhood.

     “குளித்துமூன்றனலை யோம்புங் குறிகொளந் தணமை தன்னை யொளித்திட்டேன்” (திவ். திரு மாலை, 25);.

     [அந்தண்மை → அந்தணமை.]

அந்தண்மை பார்க்க;see andanmai.

அந்தணரறுதொழில்

அந்தணரறுதொழில் andaṇaraṟudoḻil, பெ. (n.)

   ஓதல், ஒதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் (திவா.);; the six occupations of the Brähmins, viz., learning, teaching, sacrificing, conducting sacrifices, giving and receiving.

     [அந்தணர் + ஆறு + தொழில். ஆறு → அறு.]

இது பிற்காலக் கொள்கையும் வழக்குமாகும். ஆரியப் பூசாரியர் தென்னாடு வருமுன், அந்தணர் என்னும் பெயர் தமிழத் துறவியரையே சிறப்பாகவும், தமிழப் பூசாரியரையும் புலவரையுமே பொதுவாகவுங் குறித்ததனால், தமிழமுறைப்படி அந்தண ரறுதொழில் ஒதல், ஒதுவித்தல், ஈதல், ஏற்றல், தூதுபோதல், சந்துசெய்தல் என்னும் ஆறேயாகும்.

ஒளவை, அதியமான் விடத் தொண்டைமானுழைத் தூது சென்றதையும் (புறநா. 95);, கோவூர்கிழார், உறையூர் முற்றியிருந்த சோழன் நலங்கிள்ளியையும் அடைத்திருந்த நெடுங்கிள்ளியையும் பாடிச் சந்துசெய்ததையும் (புறநா. 45); நோக்குக. இதனால்,

     “ஆபயன் குன்று மறுதொழிலோர் நூன்மறப்பர்

காவலன் காவா னெனின்”

என்னுங் குறளில் (560); உள்ள ‘அறுதொழிலோர்’ என்னுஞ் சொல், தமிழ அந்தணர்க்குப் பொருந்துதலையுங் காண்க.

சந்துசெய்தலில், தலைவன் தலைவியர் பிணக்குத் தீர்த்தலும் அடங்கும்.

   பேகனால் துறக்கப்பட்ட கண்ணகி காரணமாக, அவனைக் கபிலர் (புறநா.143);, பரணர் (புறநா. 144, 145);, அரிசில்கிழார் (புறநா. 146);, பெருங்குன்றூர்கிழார் (புறநா. 147); பாடியதையும்;     “கழிவினும் நிகழ்வினும் எதிர்வினும் வழிகொள

நல்லவை யுரைத்தலும் அல்லவை கடிதலும்

செவிலிக் குரிய வாகு மென்ப” (பொருள். கற். 12);,

     “சொல்லிய கிளவி அறிவர்க்கும் உரிய” (பொருள். கற். 13);

     “என்னும் தொல்காப்பிய நூற்பாக்களையும் நோக்குக.

அந்தணர்

அந்தணர் andaṇar, பெ. (n.)

   1. அழகிய குளிர்ந்த அருளையுடைய துறவியர்; the gracious ascetics.

     “அந்தண ரென்போ ரற வோர்மற் றெல்வுயிர்க்குஞ் செந்தண்மை பூண்டொழுக லான்” (குறள், 30);.

   2. பிராமணர்; Brahmins.

     “ஆறறி யந்தணர்க் கரு மறை பலபகர்ந்து” (கலித்.கடவுள்வா. 1);.

     [அம் = அழகு. தணம் = குளிர்ச்சி, குளிர்ந்த அருள். தணம் → தணன் = குளிர்ந்த அருளுடையவன். தணன் (ஒருமை); – தணர் (பன்மை);. அம் + தணம் + அர் (ஈறு);.]

     ‘அந்தத்தை அணவுவார் அந்தணர் என்றது, வேதாந்தத்தையே பொருளென்று மேற்கொண்டு பார்ப்பாரென்றவாறு’ என்று நச்சினார்க்கினியர் அந்தணர் என்னுஞ் சொல்லிற்குக் கூறியுள்ள பொருட்காரணம் பொருந்தாது.

அந்தணர்சேரி

அந்தணர்சேரி andaṇarcēri, பெ. (n.)

அந்தண் பாடி பார்க்க;see andan-padi.

     “அந்தணர் சேரி யகவித ழாக” (பெருங். மகத. 3 ; 87);.

அந்தணர்வாக்கு

அந்தணர்வாக்கு andaṇarvākku, பெ. (n.)

   1. வேதம் (சிந்தா. நி.);; the vedas.

   2. பிராமணர் கூற்று; sayings of Brāhmins.

அந்தணாட்டி

அந்தணாட்டி andaṇāṭṭi, பெ. (n.)

   1. அழகிய குளிர்ந்த அருளுடையவள்; gracious woman.

   2. துறவினி (பெண்துறவி);; a woman ascetic.

   3. பிராமணத்தி; a Brähmin woman.

     “மந்திர நாவி னந்த ணாட்டி” (பெருங். இலாவாண. 17; 18);.

     [அம் + தணம் + ஆட்டி (பெ.பா. ஈறு); – அந்தணாட்டி, அந்தணாளன் என்பதன் பெண்பால். ஆள் + தி – ஆட்டி.]

அந்தணாளன்

அந்தணாளன் andaṇāḷaṉ, பெ. (n.)

   1. அழகிய குளிர்ந்த அருளாளன்; gracious person, gracious one.

     “செய்யதீ வண்ண ரந்த ணாளர் கண்டீர்” (தேவா. 5.8;6);. | 2. முனிவன்;

 sage, recluse, hermit.

     “அந்த ணாளனுன் னடைக்கலம் புகுத” (தேவா. 7.55;1);.

   3. பிராமணன்; Brahmin.

     “அந்த ணாளனு மதி சயித் தரும்பெறன் மகட்கு” (திருவிளை.விருத்தகு. 5);.

     [அம் + தணம் + ஆளன் (ஈறு); – அந்தணாளன். ஆள் + அன் – ஆளன்.]

அந்தணி

அந்தணி andaṇi, பெ. (n.)

   1. அழகிய குளிர்ந்த அருளுள்ளவள்; gracious woman.

   2. துறவினி; female ascetic.

   3. பிராமணத்தி; a Brahmin woman.

     “அந்தணி தான்கொண் டெழுந்த தவத்துறை நீங்கி” (பெருங். உஞ்சைக். 36;195-6);.

ம. அந்தணி

     [அந்தணன் (ஆ.பா.); – அந்தணி (பெ.பா.);. அம் + தணம் + இ (பெ.பா. ஈறு); – அந்தணி.]

அந்தணாட்டி பார்க்க;see andandtti.

அந்தண்

அந்தண் andaṇ, பெ. (n.)

   1. துறவியர் வகுப்பு; a class of ascetics.

     “அந்தண ரென்போ ரறவோர்மற் றெவ்வுயிர்க்குஞ் செந்தண்மை பூண்டொழுக லான்” (குறள், 30);.

   2. பிராமணர் குலம்; Brahmin caste.

     “அந்தண்மா முதுகுரவரென் றுன்னினன்.”

     [அந்தணன் → அந்தண்.]

அந்தணன் பார்க்க;see andanan.

அந்தண்டை

அந்தண்டை andaṇṭai, பெ. (n.)

கு.வி.எ. (adv.);

   1. அந்தப் பக்கம்; that side.

போ அந்தண்டை.

   2. அப்பால், அக்கரைப்பக்கம்; beyond, the opposite side.

சென்னைக்கு அந்தண்டை திருப்பதி. ஆற்றிற்கு அந்தண்டை எங்கள் புன்செய் இருக்கிறது (உ.வ.);.

     [அ → அந்த + அண்டை.]

அந்தண்பாடி

அந்தண்பாடி andaṇpāṭi, பெ. (n.)

   1. தமிழ்ப் பார்ப்பார் குடியிருப்பு (பழை.வ.); ; quarters where the learned Tamilians lived (Arch.);.

   2. பிராமணர் குடியிருக்குமிடம்; quarters where Brāhmins reside.

     “அந்தண் பாடியு மணுகி யல்லது” (பெருங். மகத. 4;33);.

     [அந்தணர்பாடி → அந்தண்பாடி.]

அந்தணன் பார்க்க;see andanan.

அந்தண்புலவன்

அந்தண்புலவன் andaṇpulavaṉ, பெ. (n.)

   1. கற்ற துறவி (பழை.வ.);; a learned ascetic (Arch.);.

   2. பிராமணப் புலவன்; Bráhmin scholar.

     “மறையறிய வந்தண் புலவர்” (நான்மணிக். 91);.

     [அந்தணப்புலவன் → அந்தண் புலவன்.]

அந்தணன் பார்க்க;see andanan.

அந்தண்மை

அந்தண்மை andaṇmai, பெ. (n.)

   1. அழகிய குளிர்ந்த அருள்; comely graciousness.

     “அந் தண்மை பூண்ட……… அந்தணர்” (திருமந். 234);.

   2. துறவுநிலை; asceticism.

   3. பிராமணத் தன்மை; Brāhminhood.

     [அம் = அழகிய. தண் = குளிர்ந்த மை = தன்மை, தன்மையுணர்த்தும் ஈறு. அம் + தண் + மை – அந்தண்மை.]

அந்ததமசம்

அந்ததமசம் andadamasam, பெ. (n.)

   காரிருள் (சிந்தா. நி. 164);; pitch darkness.

     [Skt. andha-tamas → த. அந்ததமசம்.]

அந்ததரமிச்ரம்

அந்ததரமிச்ரம் andadaramicram, பெ. (n.)

   நிரயவகை (சி.போ.பா.23,பக்.204);; a hell.

     [Skt. andha-tara+mišra → த. அந்ததரமிச்ரம்.]

அந்ததரம்

அந்ததரம் andadaram, பெ. (n.)

   சிவனியக் கொண்முடிபு (சைவ சித்தாந்தம்); (சி.போ.12, 4, பக். 242);;Šaiva siddhānda philosophy.

     [Skt. anta-tara → த. அந்ததரம்.]

அந்தத்து

அந்தத்து1 andattu, பெ. (n.)

   நிலைமை; rank, condition, standing.

     “எத்தனையந்தத் தென்றியம்புவேன்” (தெய்வச். விறலி. 221);.

     [Skt. antastu → த. அந்தத்து.]

 அந்தத்து2 andattu, பெ. (n.)

   1. மேல்மாடி; storey of a building.

   2. ஒழுங்கு; order, regularity.

     “இவற்றை அந்தஸ்தோடுவை” (R);.

     [Skt. antar + stha → த. அந்தத்து.]

அந்தத்துவம்

 அந்தத்துவம் andattuvam, பெ. (n.)

   குருடு; blindness.

     [Skt andhatva → த. அந்தத்துவம்.]

அந்தந்த

 அந்தந்த andanda, கு.பெ.எ. (adj.)

   பெரும்பான்மை, எந்தெந்த, ஒவ்வொரு, எல்லாம் என்னுஞ் சொற்களுள் ஒன்றோடு உடனுறவுச் சொல்லாகவும் (correlative); சிறுபான்மை தனித்தும் நின்று, பல பொருளிடங் காலஞ் செயல்களைத் தனித்தனி குறிக்கும் சேய்மைச் சுட்டுப் பெயரெச்ச வடுக்கு; reduplication of the remote, demons. adj. anda, meaning, “such and such’, ‘respective’, ‘proper’, ‘fitting’ or ‘appropriate”.

எ-டு : பொத்தகங்களை எந்தெந்த இடத்திலிருந்து எடுத்தீர்களோ அந்தந்த இடத்தில் வைத்துவிடுங்கள். ஒவ்வொருவரும் எந்தெந்த வேலைக்குத் தகுதியென்று கண்டு அந்தந்த வேலையில் அமர்த்த வேண்டும். எல்லாப் பயிர்களையும் அந்தந்தக் காலத்திற் பயிரிட வேண்டும். அந்தந்தக் காலத்திலேயே பாடங்களைப் படித்து வந்திருந்தால் தேர்வுச் சமையத்தில் திண்டாட வேண்டியதில்லையே!

அந்தந்தலை

 அந்தந்தலை andandalai, பெ. (n.)

   முடிவும் முதலும் (வின்.);; end and beginning.

த.வ. அந்தாதி.

     [அந்த(ம்); + தலை.]

 Skt. anta → த. அந்தம்.]

அந்தனம்

 அந்தனம் andaṉam, பெ. (n.)

   கடுக்காய்; inknut, Terminalia chebula (சா.அக.);.

அந்தனாதி

 அந்தனாதி andaṉāti, பெ. (n.)

   பழம்புளி; tamarind, kept in storage for a long time.

அந்தன்

அந்தன் andaṉ, பெ. (n.)

அந்தனம் பார்க்க;see andanam (மலை.);.

 அந்தன் antaṉ, பெ. (n.)

   அழகன் (திருப்பு.40);; handsome man.

க.அந்த.[அம்>அந்தனம்>அந்தம்-அந்தன்]

 அந்தன்1 andaṉ, பெ. (n.)

   1. கூற்றுவன் (தேவா. 978, 5.);; Yama.

   2. காரி (சனி); (திவா.);; saturn.

     [Skt. anta → த. அந்தன்.]

 அந்தன்2 andaṉ, பெ. (n.)

   1. குருடன்; blind man.

     “அந்தர் கரமுற்ற தடியன்றி யறிவார்” (திருவாத, பு. புத்தரை. 79.);.

   2. அறிவிலான்; fool, ignorant man.

     “கூடற்பெருமான் செந்தாள் விடுத்துறை யந்தர்கள்” (கல்லா. 7.);.

     [Skt. andha → த. அந்தன்.]

அந்தபூதனாகிரகதோடம்

 அந்தபூதனாகிரகதோடம் andapūtaṉāgiragatōṭam, பெ. (n.)

   குழந்தைகளுக்குக் காய்ச்சலுண்டாக்கி அதனால் பாலுண்ணாது, வாயால்வயிற்றாலெடுத்தல், கழிச்சல், இருமல் அல்லது விக்கல், வீக்கம், குப்புறக் கிடத்தல் ஆகிய இக்குணங்களைக் காட்டுமொரு வகைக் கோட்குற்றம்; a morbific diathesis in children characterised by fever, aversion to milk, vomiting dysentery or diarrhoea, cough or hicough, swelling and an inclination lie always on the face.

த.வ. அகட்டுத்துகடம்.

அந்தப்பங்குநியாயம்

 அந்தப்பங்குநியாயம் andappaṅguniyāyam, பெ. (n.)

   குருடன் தோள்மேல் முடவன் அமர்ந்து வழிப்படுத்துவது போன்ற நெறி; maxim of the lame man and the blind man, used to illustrate mutual dependence for mutual advantage, as the lame man, mounted on the shoulders of the blind man, is able to direct him in the right way.

அந்தப்பம்

 அந்தப்பம் antappam, பெ. (n.)

   கொங்கு நாட்டில் உள்ள ஓர் ஊர்; name of the village kongunadu.

     [ஒருகா.ஏந்தல்+குப்பம்]

அந்தப்பரம்பரை

 அந்தப்பரம்பரை andapparambarai, பெ. (n.)

   குருடரைக் குருடர் பின்பற்றும் நெறி; maxim of the blind leading the blind.

     [Skt. andha + parampara → த. அந்தப்பரம்பரை.]

அந்தப்பர்வகம்

 அந்தப்பர்வகம் andapparvagam, பெ. (n.)

   அகக்கணு (வின்.);;     [Skt. antar + parvan → த. அந்தப்பர்வகம்.]

அந்தப்புரம்

அந்தப்புரம் andappuram, பெ. (n.)

   1. அரசமாதேவியினிருக்கை (திவா.);; queen’s apartments in a royal palace.

   2. மகளிருறைவிடம்; zenana.

த.வ. உவளகம்.

     [அந்த(ம்); + புரம்.]

     [Skt. antar → த. அந்த.]

புர் → புரை = உயர்வு. புர் → புரம் = உயர்ந்தமனை.

அந்தப்பூதனா

 அந்தப்பூதனா andappūtaṉā, பெ. (n.)

   கோள்களின் ஏவலினால் குழந்தைகளுக்கு நோயுண்டாக்குமொரு பெண் பேய்; a female demon bringing about disease in children under the influence of evil planets.

     [Skt. anta → த. அந்த.]

பூது → பூதம் → பூதனா = பருத்த பெண் பூதம்.

அந்தப்போதிகை

 அந்தப்போதிகை andappōtigai, பெ. (n.)

   யானையின் பின்னங்காற் சங்கிலி; chain fastening the hind-leg of an elephant.

     [அந்தம் + போதிகை.]

     [Skt. anda → த. அந்த.]

     [P]

அந்தமந்தம்

அந்தமந்தம் andamandam, பெ. (n.)

   1. உறுப்புக்கேடு; the malformation of an organ in the body-deformity.

   2. செரியாமை; indigestion.

     [அந்த(ம்); + மந்தம்.]

     [Skt. anta → த. அந்த(ம்);.]

அந்தமுள்

 அந்தமுள் andamuḷ, பெ. (n.)

   குறிஞ்சா; a plant, common Indian Ipecacuanha, Tylophora asthlmatica.

அந்தமூசிகம்

 அந்தமூசிகம் andamūcigam, பெ. (n.)

   ஒரு வகைப் புல்; a kind of grass, Lepeocericis serrata.

     [Skt. anta + mucika → த. அந்தமூசிகம்.]

அந்தமூசை

 அந்தமூசை andamūcai, பெ. (n.)

   ஒரு பக்கம் துளைவிட்டு மூடிய ஒரு சிறிய குடுவை (மூசை);; a small covered crucible with a hole in the side.

     [அந்தம் + மூசை.]

     [Skt. anta → த. அந்த.]

அந்தம்

அந்தம் andam, பெ. (n.)

   அழகு; beauty, comeliness.

     “அந்தஞ் சான்ற பிடியொடு பெண்ணே” (தொல். பொருள். மர. 3);. அந்தங் கெட்டவள் (உ.வ.);.

ம. அந்தம் ; க., து. அந்த ; தெ. அந்தமு.

     [அம் = அழகு. அம் → அந்து → அந்தம். அந்தம் என்பதற்கு முடிவு என்று பேராசிரியர் பொருளுரைத்திருப்பது அத்துணைப் பொருத்தமாய்த் தோன்றவில்லை.)

 அந்தம்1 andam, பெ. (n.)

   1. ஈறு (நாநார்த்த.);;   2. உறுதி (நாநார்த்த.);; certainly.

   3. அழிவு (நாநார்த்த.);; destruction.

   4. உறுப்பு (நாநார்த்த.);; limb.

   5. அணியம் (நாநார்த்த.);; nearness.

   6. இயல்பு (நாநார்த்த.);; nature.

     [Skt. anta → த. அந்தம்.]

 அந்தம்2 andam, வி.அ. (adv.)

   வரைக்கும்; as far as, up to till.

     “சேவப்ப நாயக்கர் முதல் விசயராகவ நாயக்கரந்தம்” (தஞ். சரசு. i, 319);.

     [Skt. anta → த. அந்தம்.]

 அந்தம்3 andam, பெ. (n.)

   கமுக்கம்; secrecy

     “அந்தக் கோட்டி” (பெருங். உஞ்சைக். 54, 91);.

     [Skt. antas → த. அந்தம்.]

 அந்தம்4 andam, பெ. (n.)

   பச்சைக் கருப்பூரம் (வை.மூ.);; refined camphor.

     [Skt. anta → த. அந்தம்.]

 அந்தம்5 andam, பெ. (n.)

   இருட்டு (நாநார்த்த.);; darkness.

     [Skt. andha → த. அந்தம்.]

 அந்தம்6 andam, பெ. (n.)

   1. முடிவு; termination, end, close.

     “அந்தமில் சிறப்பின்” (தொல். பொ. 243);.

   2. இறப்பு (திவ். பெரியாழ். 4, 5, 3);; death.

     [Skt. anta → த. அந்தம்.]

 அந்தம்7 andam, பெ. (n.)

   1. உறுப்பு; an organ of the body.

   2. எலும்பின் கடை; extremity of bone.

   3. நஞ்சு; poison.

   4. நீர்; water.

   5. சோறு; food, boiled rice.

   6. பிண்டம்; foetus.

   7. தலைச்சன் குழந்தை மண்டையோட்டி லிருந்து செய்யப்படுமொரு வகை மண்டையோட்டு(அண்ட);ச் சுண்ணம்; a calcined compound prepared from the skull of the first-born child.

     [Skt. anta → த. அந்தம்.]

அந்தயெரு

அந்தயெரு andayeru, பெ. (n.)

   மருத்துவ உப்பு; a kind of salt prepared out of 3 kinds of salts called ‘muppu’ by a secret process known only to Siddhars, is used for curing all kinds of diseases and is primary used in Tamil medicine.

அந்தர காந்தாரம்

 அந்தர காந்தாரம் antarakāntāram, பெ. (n.)

   வன்சுரங்களில் ஒன்று; a musical note.

     [அந்தரம்+காந்தாரம்]

அந்தரகணம்

 அந்தரகணம் andaragaṇam, பெ. (n.)

   செய்யுட்கணத்தொன்று (திவா.);; metrical foot to two nirai and one nēr (-);, as karuvilangay,, considered inauspicious at the commencement of a poem.

     [அந்தர(ம்); + கணம்.]

     [Skt. antara → த. அந்தரம். கள் → களம் → கணம்.]

அந்தரகாந்தாரம்

 அந்தரகாந்தாரம் andarakāndāram, பெ. (n.)

   பதினாறுவகைப் பண்களில் மூன்றாவது பண்;     [அந்தர(ம்); + காந்தாரம்.]

     [Skt. antara → த. அந்தரம்.]

அந்தரகாமி

 அந்தரகாமி andarakāmi, பெ. (n.)

   வான் வழியாய்ச் செல்வது; that which passes through the air.

த.வ. வானோடி.

     [Skt. antara + Kamin → த. அந்தரகாமி.]

அந்தரகும்பகம்

 அந்தரகும்பகம் andaragumbagam, பெ. (n.)

   மூச்சுக் காற்றைக் குடலினுள்ளேயே அடக்குதல்; the act of retaining the vital air in the intestines by suppression of breath.

த.வ. மூச்சடக்கம்.

     [அந்தர + கும்பகம்.]

     [Skt. antara → த. அந்தர(ம்);.]

கும்பம் → கும்பகம் → Skt. Kumbha.

அந்தரகெந்தன்

 அந்தரகெந்தன் andaragendaṉ, பெ. (n.)

   இதளிய நஞ்சு (சூத பாஷாணம்);; a kind of mercurial poison.

அந்தரக்கோன்

 அந்தரக்கோன் andarakāṉ, பெ. (n.)

   புல்லூரி; a parasitic plant.

அந்தரங்கக்கரப்பான்

 அந்தரங்கக்கரப்பான் andaraṅgakkarappāṉ, பெ. (n.)

   ஆண்குறி (கோச); மலரின் தோலிற்கடியில் வட்டமாய்ச் சிவந்து எரிச்சலோடு காணும் தழும்பு; an intense itching on the inner side of the foreskin of the penis marked by crops of papules with inflammation and burning sensation, pruritus.

     [அந்தரங்கம் + கரப்பான்.]

     [Skt. antar + anga → த. அந்தரங்கம்.]

அந்தரங்கச்சொறி

 அந்தரங்கச்சொறி andaraṅgaccoṟi, பெ. (n.)

   மேகச் சூட்டினால் ஆண், பெண் குறியிடங்களிற் பொறுக்க முடியாத நமைச்சலோடு சிறிய வியர்க்குருக்கள் போற்காணும் ஒரு வகைச் சொறிசிரங்கு; a chronic skin disease marked by the development of small pale papules and intense itching of the genitals in both the male and the female, is due to the venereal heat, Prurigo.

த.வ. பாலுறுப்புச்சொறி.

     [அந்தரங்கம் + சொறி.]

     [Skt. antar + anga → த. அந்தரங்கம்.]

சுல் → சுர் → சுறு → சொறி.

அந்தரங்கத்தானம்

அந்தரங்கத்தானம் andaraṅgattāṉam, பெ. (n.)

   1. பெண்குறி; the private part of a

 female.

   2. மறைவான இடம்; a secret place.

   3. மனம்; mind.

     [Skt. antar + anga + sthana → த. அந்தரங்கத்தானம்.]

அந்தரங்கத்தியானி

 அந்தரங்கத்தியானி andaraṅgattiyāṉi, பெ. (n.)

   ஆமை (வை.மூ);; tortoise

     [Skt. antaranga + dhyanin → த. அந்தரங்கத்தியானி.]

அந்தரங்கன்

 அந்தரங்கன் andaraṅgaṉ, பெ. (n.)

   உற்ற நண்பன்; intimate friend.

     [Skt. antar + anga → த. அந்தரங்கன்.]

அந்தரங்கபரிகரம்

அந்தரங்கபரிகரம் andaraṅgabarigaram, பெ. (n.)

   மந்தண மற்றும் உண்மைச் சுற்றம் (ஈடு. 10, 1, ப்ர. அரும்.);; faithful retinue, loyal attendants.

த.வ. அணுக்கச்சுற்றம்.

     [Skt. antar + anga + pari-hara → த. அந்தரங்கபரிகரம்.]

அந்தரங்கம்

அந்தரங்கம் andaraṅgam, பெ. (n.)

   1. மறை பொருள், கமுக்கம் (நல். பாரத. உமாம. 307);; privacy, secrecy.

   2. உள்ளம்; mind.

     “அவனுக்கு அந்தரங்கத்தில் பாசமுண்டு”.

   3. உட்கருத்து; in most thought.

   4. நெருங்கிய நட்பு; intimate friendship.

     “இருவரும் அந்தரங்க முள்ளவர்கள்” (உ.வ.);.

த.வ. கமுக்கம்.

     [Skt. antar + anga → த. அந்தரங்கம்.]

அந்தரசமி

அந்தரசமி andarasami, பெ. (n.)

   1. செரியாமை; indigestion.

   2. வளி மிகுதியான் வயிறு உப்புகை; inflation of the bowels due to wind, Tympanites.

     [Skt. antarasam → த. அந்தரசமி.]

அந்தரசரிதர்

அந்தரசரிதர் andarasaridar, பெ. (n.)

   வான்வழிச் செல்வோர் (பாரத. உலூக. 18);; super human being moving in the air.

     [Skt. antara + carita → த. அந்தரசரிதர்.]

அந்தரசாமி

 அந்தரசாமி andaracāmi, பெ. (n.)

   வான் வழியில் செல்வதிலேயே விருப்பமுடையோன்; he who has always a mania for passing or travelling in the serial regions.

அந்தரசாரி

அந்தரசாரி andaracāri, பெ. (n.)

   வான் வலம் வருவோன் (மணிமே. 28, 69);; superhuman being moving in the air.

த.வ. வான்வலசையன், வானுலவி.

     [Skt. antara + sarin → த. அந்தரசாரி.]

அந்தரசைவம்

 அந்தரசைவம் andarasaivam, பெ. (n.)

   ஒரு சிவனிய வகை (சைவபேதம்);; Saiva sect which holds that Saivan should be contemplated as immanent in the whole universe.

     [Skt. antara + saiva → த. அந்தரசைவம்.]

சிவன் → சிவனியம்.

சிவ → விசம் → Skt. saiva → த. சைவ.

அந்தரச்சிந்து

 அந்தரச்சிந்து andaraccindu, பெ. (n.)

   ஒருவகை நஞ்சு (மூ.அ.);; a mineral poison.

அந்தரஞ்சனம்

 அந்தரஞ்சனம் andarañjaṉam, பெ. (n.)

   கொடி மாதுளை; lemon citron – citrus (lemoni medica);.

அந்தரடி-த்தல்

அந்தரடி-த்தல் andaraḍittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   தலைகீழாகப் பாய்தல்; to turn a somersault, tumble.

த.வ. குட்டிக் கரணம் போடுதல், குப்புறப் பாய்தல்.

     [அந்தர் + அடி-,]

     [Skt. antar → த. அந்தர்.]

அடு → அடி.

அந்தரட்சி

 அந்தரட்சி andaraṭci, பெ. (n.)

   உடம்பின் துளை வழியாக விட்டு ஆய்வு செய்யும் கருவி; an instrument for the examination of a body cavity through its natural outlet, Endoscope.

அந்தரட்டிக்குருக்கள்

 அந்தரட்டிக்குருக்கள் andaraṭṭikkurukkaḷ, பெ. (n.)

   நீத்தார் நிகழ்வு (கருமாதி); செய்விக்குங் குருக்கள்; priests who help in funeral rites.

     [அந்தரட்டி + குருக்கள்.]

     [Skt. antya-isti → அந்தரஷ்டி → த. அந்தரட்டி.]

குல் → குரு → குருக்கள்.

அந்தரதம்

 அந்தரதம் andaradam, பெ. (n.)

   குடற்புழு; a Worm in the intestines.

     [Skt. antarata → த. அந்தரதம்.]

அந்தரதாகம்

அந்தரதாகம் andaratākam, பெ. (n.)

   1. இறக்குந் தறுவாயில் ஏற்படும் நீர்வேட்கை; intense thirst in a dying person.

   2. மேக வெட்டையின் தொடர்பினால் ஏற்பட்டு மிகுதியான நீர் வேட்கையை யுண்டாக்குமொரு நோய்; intense thirst arising from the parched condition of the tongue, etc. due to urinary disorders as diabetes etc.

     [அந்தர(ம்); + தாகம்.]

     [Skt. antara → த. அந்தரம்.]

தவி → தாவம் → தாகம்.]

அந்தரதிசை

 அந்தரதிசை andaradisai, பெ. (n.)

   கோணத் திசை; intermediate point of the compass.

     [அந்தர(ம்); + திசை.]

     [Skt. antara → த. அந்தரம்.]

திக்கு → திகை → திசை.

அந்தரதுந்துபி

அந்தரதுந்துபி andaradundubi, பெ. (n.)

   தெய்வவாச்சியம்; drum of the gods.

     “அந்தர துந்துபி முதலா மளவில் பெருகொலி” (பெரியபு. திருஞான. 98);.

     [Skt. andara + dundubi → த. அந்தரதுந்துபி.]

அந்தரதுந்துமி

அந்தரதுந்துமி andaradundumi, பெ. (n.)

   தேவமுரசு; the drum of the celestials.

     “ஆர்ப்பன பல்லியமோ வந்தரதுந்து மியுமே” (தக்கயாகப். 112);.

     [Skt. antara + dundhubi → த. அந்தரம் + துந்துமி.]

அந்தரத்தர்பார்

 அந்தரத்தர்பார் andarattarpār, பெ. (n.)

அந்தர்தர்பார் பார்க்க;see andardarbar.

     [Skt. antara + U. darbảr → த. அந்தரத்தார்.]

அந்தரத்தாசி

 அந்தரத்தாசி antarattāci, பெ. (n.)

   அந்தி நேரத்தில் உலவும் விலைமகள்; prostitute wandering in the evening. (முகவை);

     [அந்திநேரம்-அந்தரம்+தாசி]

அந்தரத்தாசி என்பது நிரந்தரத்தாசி என்பதன் எதிர்ச்சொல்.

அந்தரத்தாமரை

அந்தரத்தாமரை andarattāmarai, பெ. (n.)

   குழித்தாமரை, குளிர்தாமரை (ஆகாசத் தாமரை); (பதார்த்த. 319);; a weed, Pistia stratiotes.

     [அந்தரம் + தாமரை.]

     [Skt. antara → த. அந்தரம்.]

அந்தரத்தில்நில்(ற்)-த(ற)ல்

அந்தரத்தில்நில்(ற்)-த(ற)ல் andarattilnilṟtaṟal,    14 செ.கு.வி. (v.i.)

   ஆதரவற்றிருத்தல் (இ.வ.);; to be helpless.

     [அந்தரம் + அத்து + இல் + நில்-,]

     [Skt. antara → த. அந்தர(ம்);.]

அத்து = சாரியை.

அந்தரத்தில்விடு-தல்

அந்தரத்தில்விடு-தல் andaraddilviḍudal,    18 செ.குன்றாவி. (v.t.)

   ஏதிலியாக்குதல்; to leave helpless,

     “என்னை அந்தரத்தில் விட்டான்” (இ.வ.);.

     [அந்தரம் + அத்து + இல் + விடு-,]

     [Skt. antara → த. அந்தரம்.]

அந்தரத்தேசரி

 அந்தரத்தேசரி andarattēcari, பெ. (n.)

   சிறுபசலை; small Indian purslane, Portulaca qudrifida.

அந்தரநதி

அந்தரநதி andaranadi, பெ. (n.)

   வான் (ஆகாய); கங்கை (வரத. பாகவத. சுபத்.18);; the celestial Ganga.

     [Skt. antara + nadi → த. அந்தரநதி.]

அந்தரநாதன்

அந்தரநாதன் andaranātaṉ, பெ. (n.)

   இந்திரன் (கந்தபு. தெய்வ. 241);; Indran, as the lord to heaven.

     [Skt. antara + natha → த. அந்தரநாதன்.]

அந்தரபட்பம்

 அந்தரபட்பம் andarabaṭbam, பெ. (n.)

   பலாசு; tisso flower, Butea frondosa.

அந்தரபவனி

 அந்தரபவனி andarabavaṉi, பெ. (n.)

   வான்வழிப் பயணம் (வின்.);; motion through the air.

     [அந்தர(ம்); + பவனி.]

     [Skt. antara → த. அந்தரம்.]

அந்தரபுருடன்

 அந்தரபுருடன் andaraburuḍaṉ, பெ. (n.)

   ஆன்மா; the soul.

த.வ. ஆதன்.

     [Skt. antara + purusa → த. அந்தரபுருடன்.]

அந்தரப்படு-தல்

அந்தரப்படு-தல் andarappaḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   பெருந்துன்பமுறுதல்; to be in great distress.

     “இவள் நோக்காமையிறே அந்தரப்பட்டது” (ஈடு. 7, 1, ப்ர.);.

     [அந்தர(ம்); + படு-,]

     [Skt. antara → த. அந்தரம்.]

அந்தரப்பல்லியம்

அந்தரப்பல்லியம் andarappalliyam, பெ. (n.)

அந்தரதுந்துமி பார்க்க;see andaratundumi.

     “அந்தரப்பல்லியங் கறங்க” (திருமுரு. 119);.

     [அந்தர(ம்); + பல்லியம்.]

     [Skt. antara → த. அந்தரம்.]

அந்தரப்பிசாசு

 அந்தரப்பிசாசு andarappicācu, பெ. (n.)

   தகாச்சாவு அடைபவர் பெறும் பேயுருவம்; ghost of one who died through suicide or violence.

     [அந்தர(ம்); + பிசாசு.]

     [Skt. antara → த. அந்தரம்.]

பிள் → பியம் → பிசம் → பிசசு → பிசாசு.

அந்தரமத்திபுத்தி

 அந்தரமத்திபுத்தி andaramattibutti, பெ. (n.)

   கோள்களின் நித்தியகதியில் உண்மைக்கும் மத்திமத்துக்குமுள்ள வேறுபாடு;     [அந்தரமத்திம + புத்தி.]

     [Skt. antara+mattima → த. அந்தரமத்திம(ம்);.]

அந்தரமாமூலி

 அந்தரமாமூலி andaramāmūli, பெ. (n.)

அந்தரத்தாமரை பார்க்க;see andara—t-tamarai (சா.அக.);.

     [அந்தர(ம்); + மா + மூலி.]

     [Skt. antara → த. அந்தர(ம்);.]

அந்தரம்

அந்தரம் andaram, பெ. (n.)

   1. வெளி; open space.

   2. உட்பகுதி; interior space.

     “பந்த ரந்தரம் வேய்ந்து” (பதிற்றுப். 51);.

   3. இருள் (பிங்.);; darkness.

   4. வானம்; sky, firmament.

     “அந்தரம் பாரிடமில்லை” (திவ். திருப்பள்ளி. 7);.

   5. நடு; intermediate space.

     “மற்றோ ரந்தர விசும்பில்” (சீவக. 836);.

   6. இடம்; place.

     “அந்தரமி தல்லவென” (பாரத. ஒன்பதாம். 22);.

   7. இடுப்பு; waist.

     “அந்தர மேற்செம்பட்டோடு” (திவ். திருவாய். 7, 6, 6.);.

   8. நடு(வு); நிலை; impartiality.

     “அந்தரந் தீர்ந்துலகளிக்கு நீரினால் தந்தையுங் கொடியன்” (கம்பரா. மந்தரை. 60);.

   9. வானுலகம் (பிங்.);; heaven.

   10. வேறுபாடு; difference.

     “அந்தரம் பார்க்கி னன்மை யவர்க்கிலை” (கம்பரா. மாரீச. 75.);.

   11. கெடுவிளைவு; contrariety, unsoundness

     “விரிகோவண நீத்தார் சொல்லும் அந்தர ஞான மெல்லாம்” (தேவா. 74, 10);.

   12. கோயில் (பிங்.);; temple.

   13. தீமை; evil.

     “என்மனை வாழும் பெண்ணால் வந்த தந்தரம்” (கம்பரா. கைகேசி. 40);.

   14. கூட்டம் (பிங்.);; crowd.

     [Skt. antara → த. அந்தரம்.]

 அந்தரம்2 andaram, பெ. (n.)

   முடிவு (பிங்.);; close, end.

     [Skt. antara → த. அந்தரம்.]

 அந்தரம்3 andaram, பெ. (n.)

   1. புறம்பு (நாநார்த்த.);; outside, exterior.

   2. எல்லை (நாநார்த்த.);; limit, boundary.

   3. அயலானது (நாநார்த்த.);; neighbourhood distinction.

   4. தனிச்சிறப்பு (நாநார்த்த.);; distinction.

   5. அந்தரான்மா (நாநார்த்த.); பார்க்க;see andaranma.

   6. மறைவு (நாநார்த்த.);; hiding, concealment.

   7. துளை (நாநார்த்த.);; hole.

   8. குழி (நாநார்த்த.);; pit.

   9. ஆடை (நாநார்த்த.);; cloth.

   10. இடைகழி (சம்.அக. Ms.);; passage next to the entrance of a house.

   11. காலநீட்டிப்பு (நாநார்த்த.);; interval.

   12. அவசரம் (நாநார்த்த.);; occasion, time.

   13. இடையூறு; impediment.

     “அந்தரம் புகுந்த துண்டென (கம்பரா. நிந்தனை. 4);.

   14. மேகம் (பொதி. நி.); cloud.

   15. அளவு (பொதி.நி);; standard measure, normal form.

     [Skt. antara → த. அந்தரம்.]

 அந்தரம்4 andaram, பெ. (n.)

   1. விருப்பம்; desire.

   2. புருவத்தினடு; space between the eyebrows.

   3. தனிமை; loneliness.

   4. மாறுபாடு; difference (சா.அக.);.

     [Skt. antara → த. அந்தரம்.]

அந்தரர்

அந்தரர் andarar, பெ. (n.)

   1. தேவர்; celestials, as dwellers in heaven.

     “அந்தரர்கோன் (திருவாச. 9, 3);.

   2. பதினெண்கணத்து ளொருவர்; a class of demigods, as being in the intermediate space, one of padinen-kanam, q.v.

     [Skt. antara → த. அந்தரர்.]

அந்தரவனசம்

 அந்தரவனசம் andaravaṉasam, பெ. (n.)

   கொடிப்பாசிவகை (பச்.மூ.);; a kind of moss.

அந்தரவனம்

 அந்தரவனம் andaravaṉam, பெ. (n.)

   மக்களில்லாக் காடு (வின்.);; uninhabited desert.

த.வ. அத்துவானம்.

     [Skt. antara + vana → த. அந்தரவனம்.]

அந்தரவல்லி

 அந்தரவல்லி andaravalli, பெ. (n.)

   கொல்லங் கொவ்வை (மலை.);; species of corallocarpus.

     [Skt. antara-valli → த. அந்தரவல்லி.]

அந்தரவாசம்

அந்தரவாசம்1 andaravācam, பெ. (n.)

   கொட்டைப்பாசி; an epiphytic medicinal plant (சா.அக.);.

     [Skt. antara + vāsa → த. அந்தரவாசம்.]

 அந்தரவாசம்2 andaravācam, பெ. (n.)

   வான்வெளியில் இயங்குகை; moving in the aerial regions (சா.அக.);.

     [Skt. antara + vảsa → த. அந்தரவாசம்.]

அந்தரவாசி

 அந்தரவாசி andaravāci, பெ. (n.)

   வானில் வலம்வருவோன்; a superhuman being moving in the aerial regions. (சா.அக.);.

     [Skt. antara + väsin → த. அந்தரவாசி.]

அந்தரவாண்டு

 அந்தரவாண்டு andaravāṇṭu, பெ. (n.)

   குறித்த நாளெல்லைகட்கு இடைப்பட்ட காலம் (வின்.);; the period of time between any two given dates (சா.அக.);.

     [அந்தர(ம்); + ஆண்டு.]

     [Skt. antara → த. அந்தரம்.]

அந்தரவாயு

அந்தரவாயு andaravāyu, பெ. (n.)

   1. குடல் (வாயு); வளி; gas or air in the intestines, flatulence.

   2. வளியினால் உண்டாகும் குடலிறக்கம்; the descent of the bowels from its normal position, as a result of the de ranged conditions of vayu in the system, Rupture.

   3. வான்வெளியில் உள்ள காற்று; atmosphere air.

   4. இடுப்பிலேற்பட்ட (வாயு); வளிநோய்; hip-pain due to wind in the system (சா.அக.);.

     [Skt. antara + vảyu → த. அந்தரவாயு.]

அந்தரவாயுக்கிரகணி

 அந்தரவாயுக்கிரகணி andaravāyuggiragaṇi, பெ. (n.)

   குடலில் தங்கிய வளியினால் உண்டவுடன் வயிறிரைந்து கழிச்சலாகி நீர்வேட்கை, தளர்ச்சி, விலாவிசிவு, விக்கல் முதலிய குணங்களை உண்டாக்கும் நாட்படு வயிற்றோட்டம்; a form of chronic diarrhoea characterised by rumbling noise in the stomach and purging, thirst, fatigue, Spasmodic pain on the sides, hiccough etc. is due to gas or air in the intestines (Flatus); and occurs soon after meals, Flatulent diarrhoea (சா.அக.);.

     [Skt. antara + vāyu + kiragani → த. அந்தரவாயுக்கிரகணி.]

அந்தரவிகூசனம்

 அந்தரவிகூசனம் andaraviācaṉam, பெ. (n.)

   வயிற்றிரைச்சல்; rumbling of the bowels (சா.அக.);.

அந்தரவிட்டை

 அந்தரவிட்டை andaraviṭṭai, பெ. (n.)

   குடலிலிறங்கி நிற்கும் கழிமாசு (மலம்);; faecal matter in the intestines as opposed to வெளி தள்ளு மலம் discharged faces (சா.அக.);.

     [அந்தர(ம்); + விட்டை.]

     [Skt. antara → த. அந்தரம்.]

அந்தரவிதனம்

 அந்தரவிதனம் andaravidaṉam, பெ. (n.)

   ஒரு கண்ணோய்; an eye-disease (சா.அக.);.

     [Skt. antara + vyathana → த. அந்தரவிதனம்.]

அந்தரவித்திரதி

 அந்தரவித்திரதி andaraviddiradi, பெ. (n.)

   உடம்பினுள்ளுறுப்புகளிற் காணுங் கழலைக் கட்டி; a tumour like raised abscess in the interior organs of the body (சா.அக.);.

     [Skt. antara = Vidradhi → த. அந்தரவித்திரதி.]

அந்தரவினியோகம்

அந்தரவினியோகம் andaraviṉiyōkam, பெ. (n.)

   வரிவகை (S.I.I.i, 136);; a tax.

     [Skt. antara + viniyðga → த. அந்தரவினி யோகம்.]

அந்தரவிருத்தி

அந்தரவிருத்தி andaravirutti, பெ. (n.)

   1. குடல் பருத்தல்; enlargement of distension of the bowels.

   2. குடல் தன்னிடத்தை விட்டு நழுவி அடிவயிற்றிற் குள்ளிறங்காமல் ஆண்குறிக்கு மேற்பருத்துக் தோற்றுகை; the displacement of bowels with protursion or swelling appearance above the penis when they have not passed quite through the inguinal canal, Imperfect hernia.

   3. உடம்பின் உட்புறத்திலிருந்து பருமனாதல்; swelling remaining internally.

   4. இடுப்புப்பருத்தல்; enlargement of the waist and buttocks.

   5. வளியினால் பல நிலைகளில் வளர்ச்சியுற்று, சிறுகுடல் அழற்சியையும், விதைப்பையில் பெருக்கத்தையும் ஏற்படுத்தும் குடலண்ட வளர்ச்சிநோய்; a rupture caused by the muscles over the bowels, giving way and letting some portion of the intestines escape outwards beneath the skin, arises from the aggravated condition of vayu in the iliac region (சா.அக.);.

     [Skt. antara + vrddhi → த. அந்தரவிருத்தி.]

அந்தரவீச்சு

 அந்தரவீச்சு andaravīccu, பெ. (n.)

   பெரும்பொய் (இ.வ.);; outrageous lying.

     [அந்தர(ம்); + வீச்சு.]

     [Skt. antara → த. அந்தரம்.]

அந்தரவீச்சுக்காரன்

 அந்தரவீச்சுக்காரன் andaravīccukkāraṉ, பெ. (n.)

   ஏமாற்று(மோச);க்காரன் (வின்.);; fraudulent man, cheat.

     [அந்தர(ம்); + வீச்சுக்காரன்.]

     [Skt. antara → த. அந்தரம்.]

அந்தரவுலகம்

அந்தரவுலகம் andaravulagam, பெ. (n.)

   வானுலகம்; svarga.

     “அந்தரவுலகத் தமரர்கோமான்” (பெருங். உஞ்சைக். 37, 96);.

     [அந்தரம் + உலகம்.]

     [Skt. antara → த. அந்தரம்.]

உலம் → உலகம்.

அந்தரவேட்டணசவ்வு

 அந்தரவேட்டணசவ்வு andaravēṭṭaṇasavvu, பெ. (n.)

   வயிற்றின் உட்பகுதியைச் சூழ்ந்துள்ள நீரடங்கிய இரட்டைச் சவ்வுப் பை; peritoneum (சா.அக.);.

அந்தராசிபிழைப்பு

 அந்தராசிபிழைப்பு antarācipiḻaippu, பெ. (n.)

   உறுதியற்ற வேலை பிழைப்பு (இ.வ.);; indefinite work, unstable lively hood.

     [அந்தரம்+வாசி+பிழைப்பு]

அந்தராசியாக

 அந்தராசியாக antarattācieṉpatunirantarattācieṉpataṉetirccolantarāciyāka, பெ. (n.)

   எந்தவொரு பிடிமானமும் இல்லாமல் ஏதிலியாக; vagabond.

     [அந்தரம்+வாசியாக]

அந்தராஞ்சம்

 அந்தராஞ்சம் andarāñjam, பெ. (n.)

   தோளிற்கும் நெஞ்சிற்கும் இடையேயுள்ள கூறு; that part of the body between the shoulder and the breast (சா.அக.);.

     [Skt. antaransa → த. அந்தராஞ்சம்.]

அந்தராத்மா

அந்தராத்மா andarātmā, பெ. (n.)

   1. பரவாதன் (பரமான்மா.);; indwelling soul.

   2. மனம் (இ.வ.);; mind.

     [Skt. antar + atma → த. அந்தராத்மா.]

அந்தரான்மா

அந்தரான்மா andarāṉmā, பெ. (n.)

   1. கடவுள் (விவேக. சூடா. 152.);; god, as immanent.

   2. நான்கு வாக்குக்களோடும் கூடி வலம்வரும் உயிர் (சி.போ. பா. 6, 2, பக். 317);;     [அந்தர் + ஆன்மா.]

     [Skt. antar → த. அந்தர்.]

அந்தராபதியை

 அந்தராபதியை andarāpadiyai, பெ. (n.)

   கருவுற்றவள்; a pregnant woman (சா.அக.);.

த.வ. சூலி.

அந்தராபத்தம்

 அந்தராபத்தம் andarāpattam, பெ. (n.)

   உணவிற்கிடையே கொள்ளுமருந்து; a medicine taken between two meals (சா.அக.);.

அந்தராபவச்சத்துவம்

 அந்தராபவச்சத்துவம் andarāpavaccattuvam, பெ. (n.)

   இறப்பிற்கும் மீள்பிறப்பிற்கும் இடைப்படு காலத்தில் ஆதனுக்கேற்படு நிலைமை; the Soul in its existence between death and rebirth (சா.அக.);.

     [Skt. antaråbhava-sattva → த. அந்தராபவச் சத்துவம்.]

அந்தராயப்பாட்டம்

அந்தராயப்பாட்டம் andarāyappāṭṭam, பெ. (n.)

   பணமாகத் தண்டும் வரிவகை (I.M.P Cg 1070.);; certain taxes collected in cash.

     [அந்தர் + ஆயம் + பாட்டம்.]

     [Skt. antara → த. அந்தர்.]

   ஆய் → ஆயம்;பாடு → பாட்டம்.

அந்தராயம்

அந்தராயம் andarāyam, பெ. (n.)

   1. இடையூறு (சூடா.);; obstacle, impediment.

   2. (Jaina.); எண் குற்றங்களுள் இடையூ றியற்றுவது; obstructive karma, one of en-kurram, q.v.

   3. உள்வரும்படி; internal revenue as of a temple.

     [அந்தர் + ஆயம்.]

     [Skt. antara → த. அந்தர்.]

அந்தராயவேணிமயம்

அந்தராயவேணிமயம் antarāyavēṇimayam, பெ. (n.)

   ஒரு வகை வரி; a kind of tax.

     “திருநந்தவனக் குடிகள் ஒன்பதின்மார்க்கு அந்தராய வேனிமயம் நீக்கி” (SII, iv, 1285.);.

     [அந்தராயம்+வேள்+நியமம்]

அந்தராயாமதனுத்தம்பவாதம்

 அந்தராயாமதனுத்தம்பவாதம் andarāyāmadaṉuddambavādam, பெ. (n.)

   உடம்பினுள்ள வளி (வாயு); கடுமை (பிரகோப); மடைந்து, விரல்கள், புறங்கால்கள், வயிறு, மார்பு, இதயம், தொண்டை ஆகிய இவற்றை உடம்பிலுள்ள என்புக்கட்டுகள் உள்ளுக் கிழுக்க உடம்பு சுருங்கி முன்னம் குனிந்து உள்ளாக வளைந்து குறுகுவதனாலேற்படும் ஓர் ஊதைநோய்; a disease due to the accumulation of the extremely enraged ‘vayu’ (nerve force); in the regions of the fingers, insteps, abdomen, chest, heart and throat and forcibly draws in the local ligaments, when the body becomes contracted and bends forward bringing about a curvature of the inner trunk (சா.அக.);.

அந்தராளன்

 அந்தராளன் andarāḷaṉ, பெ. (n.)

   உயர்குல தந்தைக்கும் இழிகுலத் தாய்க்கும் பிறந்தபிள்ளை (திவா.);; son of an upper caste (anuloma); father and lower caste mother.

     [Skt. antarala → த. அந்தராளன்.]

அந்தராளமண்டபம்

அந்தராளமண்டபம் andarāḷamaṇṭabam, பெ. (n.)

   கருவறையை அடுத்த மண்டபம் (I.M.P..Tn. 270.);; ante-chamber to the inner sanctuary of a South Indian temple.

த.வ. கருவறை மண்டபம், முகமண்டபம்.

     [அந்தராள(ம்); + மண்டபம்.]

     [Skt. antarala → த. அந்தராள(ம்);.]

அந்தராளம்

அந்தராளம் andarāḷam, பெ. (n.)

   1. இடைப்பட்ட யிடம்; intermediate space.

   2. திசைநாற் கோணம் (பிங்.);; intermediate points of the compass.

   3. அந்தராளமண்டபம் பார்க்க;see andarala-mandabam.

த.வ. இடைமண்டபம்.

     [Skt. antarala → த. அந்தராளம்.]

அந்தரி

அந்தரி andari, பெ. (n.)

   தோற்கருவி வகை; a kind of drum (சிலப். 3; 27, அடியார்க். உரை);.

ம. அந்தரி

 அந்தரி antari, பெ. (n.)

   பண்டைய தோற் கருவியினுள் ஒன்று; a musical drum.

     [P]

 அந்தரி1 andarittal,    4 செ.கு.வி. (v.i.)

   1. தனித்திருத்தல் (வின்.);; to be forlorn, solitary lonely.

   2. உதவியற்றிருத்தல் (வின்.);; to be friendless, helpless.

   3. மாறுதல்; to differ, to be inconsistent.

     “விதி யந்தரிக்க

வொழுதி” (திருநூற். 62);.

   4. கழித்தலா லுண்டாகும் வேறுபாடு அறிதல் (வின்.);; to find the difference between two quantities.

     [Skt. antara → த. அந்தரி-,]

 அந்தரி2 andari, பெ. (n.)

   1. மலைமகள் (பிங்.);; Parvati.

   2. கூளித்தலைவியாகிய கரிய பாலை நிலத் தெய்வம், காளி (பிங்.);; Durga.

     [Skt. antara → த. அந்தரி.]

அந்தரிட்சம்

அந்தரிட்சம் andariṭcam, பெ. (n.)

   1. வானம்; atmosphere.

   2. நற்பேறு; heaven.

     “அந்தரிட்சஞ் செல … கனல் புகுங் கபிலக்கல்லது” (செந். பத். 4, 232.);.

     [Skt. antari – ksa → த. அந்தரிட்சம்.]

அந்தரிந்திரியம்

அந்தரிந்திரியம் andarindiriyam, பெ. (n.)

   உட்கருவி (அந்தக்கரணம்); (பிரபோத.39, 30);; inner seat of thought, feeling and volition.

     [Skt. antar → indriya → த. அந்தரிப்பு.]

அந்தரிப்பு

 அந்தரிப்பு andarippu, பெ. (n.)

   வழி (கதி);யின்மை (வின்.);; helplessness.

     [Skt. antar → த. அந்தர் → அந்தரிப்பு.]

அந்தரிமுழவு

 அந்தரிமுழவுபெ. (n.)    கொற்றவையாகிய அந்தரியை வழிபடும் விழாவில் முழக்கப்படும் முழவு; a musical drum.

     [அந்தரி+முழவு]

அந்தரியாகப்பூசை

அந்தரியாகப்பூசை andariyākappūcai, பெ. (n.)

   மானசபூசை;     “அறைந்தவை மூர்த்திசேர்க்கி லந்தரி யாக பூசை” (ஞானபூசா. 14.);.

த.வ. மனப்பூசனை.

     [அந்தரியாகம் + பூசை.]

     [Skt. antar + yaga → த. அந்தரியாகம்.]

அந்தரியாகம்

அந்தரியாகம் andariyākam, பெ. (n.)

   மனவழிபாடு (சி.சி.9, 10);; mental worship, орр. to pagiryagam.

     [Skt. antar + yaga → த. அந்தரியாகம்.]

அந்தரியாமி

அந்தரியாமி andariyāmi, பெ. (n.)

   கடவுள் (வேதா. சூ. 41);; god, as being immanent in the universe and governing it.

     [Skt. antar + yamin → த. அந்தரியாமி.]

அந்தரிலம்பம்

 அந்தரிலம்பம் andarilambam, பெ. (n.)

   கூர்க்கோணங்கள் கொண்ட முக்கோணம் (வின்.);; acute-angled triangle.

     [Skt. antas + lamba → த. அந்தரிலம்பம்.]

அந்தரிலயம்

அந்தரிலயம் andarilayam, பெ. (n.)

   உயிர்ப்படக்கம் (துரியா தீதம்); (சிந்தா.நி.165.);;     [Skt. antas + laya → த. அந்தரிலயம்.]

அந்தரீபம்

அந்தரீபம் andarīpam, பெ. (n.)

   தீவம் (சிந்தா.நி. 162.);; Island.

     [Skt. antaripa → த. அந்தரீபம்.]

அந்தரீயம்

 அந்தரீயம் andarīyam, பெ. (n.)

   அரையிற் கட்டும் வேட்டி (Brah.);; waist cloth, dist. fr. uttariyam.

     [Skt. antariya → த. அந்தரீயம்.]

அந்தருவேதி

அந்தருவேதி andaruvēti, பெ. (n.)

   வேள்விச் சாலையினுள்ளிடம் (காஞ்சிப்பு. அந்தரு. 22.);; inside of the sacrificial ground.

     [Skt. antar + vėdi → த. அந்தருவேதி.]

அந்தரேணம்

அந்தரேணம் andarēṇam, பெ. (n.)

   நடுவிடம்;   இடைப்பட்டயிடம் (சிந்தா. நி. 164.);; intermediate space.

     [Skt. antaréna → த. அந்தரேணம்.]

அந்தரை

அந்தரை andarai, பெ. (n.)

   பரவர், பட்டப் பெயர்; a title of Paravas (T.A.S. iv, 179);.

அந்தர்

அந்தர் andar, பெ. (n.)

   112 எடை (இ.வ.);; hundred weight = 112 lbs.

     [E. hundred → த. அந்தர்.

அந்தர்கதசுரம்

 அந்தர்கதசுரம் andarkadasuram, பெ. (n.)

   உட்காய்ச்சல்; internal fever.

     [அந்தர்சுதம் + சுரம்.]

     [Skt. antargata → த. அந்தர்கத(ம்);. சுல் → சுர் → சுரம்.]

அந்தர்குதவளையம்

 அந்தர்குதவளையம் andarkudavaḷaiyam, பெ. (n.)

   எரு (மல); வாயிற்குள்ளிருக்கும் வளையம்;     [அந்தர் + குதம் + வளையம்.]

     [Skt. antar → த. அந்தர்.]

குல் → குத்து → குத்தம் → குதம். வள் → வளை → வளையம்.

அந்தர்க்கதம்

அந்தர்க்கதம் andarkkadam, பெ. (n.)

   உள்ளடங்கியது (சி.சி.121.சிவாக்.);; that which is included, suppressed.

     [Skt. antargata → த. அந்தர்க்கதம்.]

அந்தர்சடரம்

 அந்தர்சடரம் andarcaḍaram, பெ. (n.)

   இரைக்குடல்; the stomach.

     [அந்தர் + சடரம்.]

     [Skt. antar → த. அந்தர்.]

சடம் → சடர் → சடரம்.

அந்தர்சரீரம்

அந்தர்சரீரம் andarcarīram, பெ. (n.)

   1. ஆவிவுடல்; body interior, inner body, astral body.

   2. உள்ளுறுப்பு (உள்ளிந்திரியம்);; internal organ.

த.வ. ஆவிமேனி.

     [Skt. antar + sarira → த. அந்தர்சரீரம்.]

அந்தர்சீவி

 அந்தர்சீவி andarcīvi, பெ. (n.)

   ஒர் உயிர் பிறிதோருயிரியைப் பற்றுகை; an animal – parasite living within the body of another animal, Entozoon.

த.வ. உயிரேற்றம்.

     [Skt. antar + jiving → த. அந்தர்சீவி.]

அந்தர்தர்பார்

 அந்தர்தர்பார் andartarpār, பெ. (n.)

   முறைதவறி நடக்கும் அலுவலகம் (இ.வ.);; public office notoriously ill-conducted, maladministration.

     [Skt. antara + U. darbảr → த. அந்தர்பர்பார்.]

அந்தர்திருட்டி

 அந்தர்திருட்டி andartiruṭṭi, பெ. (n.)

   உண்முக நோக்கு; looking into one’s own soul, Introspection.

த. உள்நோக்கு.

     [Skt. antar + drsti → drtti → த. அந்தர்திருட்டி.]

அந்தர்த்தகனம்

 அந்தர்த்தகனம் andarttagaṉam, பெ. (n.)

   மது நீர் வடிகை; distillation of spirit of liquor.

     [Skt. antar → த. அந்தர்.]

தக → தகன் + அம்-தகனம்.

அந்தர்த்தானம்

அந்தர்த்தானம்1 andarttāṉam, பெ. (n.)

   மறைகை; disappearance, vanishing.

     “அந்தர்த்தானமாய் சேர்ந்து போவார்” (மச்சபு. அசுர. 31);.

     [Skt. antardhåna → த. அந்தர்த்தானம்.]

 அந்தர்த்தானம்2 andarttāṉam, பெ. (n.)

   1. மறைவிடம்; a concealed or covered place.

   2. உள்ளிடம்; private part.

   3. பெண் குறி; the genital of a female.

     [Skt. antar+stahana → த. அந்தர்த்தானம்.]

அந்தர்ப்பவி-த்தல்

அந்தர்ப்பவி-த்தல் andarppavittal,    4 செ.கு.வி. (v.i.)

   உள்ளடங்கியிருத்தல்; to be contained, inherent.

     “ஆன்மா பதிபதார்த்தத்தில் அந்தர்ப்பவிக்குமெனின்” (சிவசம. 39);.

த. உள்ளடங்குதல்.

     [Skt. antar-bhåva → த. அந்தர்ப்பவி-,]

அந்தர்ப்பாகம்

அந்தர்ப்பாகம் andarppākam, பெ. (n.)

   1. உட்பாகம்; internal portion.

   2. மறைவிடம்; private part. i.e. the genital portion.

     [அந்தர் + பாகம்.]

     [Skt. antar → த. அந்தர். பகு → பாகம்.]

அந்தர்ப்பூதம்

 அந்தர்ப்பூதம் andarppūtam, பெ. (n.)

   உள்ளடங்கினது; that which is included.

     [அந்தர் + பூதம்.]

     [Skt. antar-bhuta → த. அந்தர். பூது → பூதம்.]

அந்தர்மலக்கிருமி

 அந்தர்மலக்கிருமி andarmalakkirumi, பெ. (n.)

   உடம்பினுள்ளுண்டாகும் கோழை, குருதி, கழிமாசு (மலம்);, சிறுநீர் ஆகியவற்றில் பிறக்கும் நாக்குப் பூச்சி; micro-organism found in the phlegm, blood, faces, urine etc.

     [அந்தர் + மலம் + கிருமி.]

     [Skt. antar → த. அந்தர். Skt. krmi → த. கிருமி.]

அந்தர்மிருதம்

 அந்தர்மிருதம் andarmirudam, பெ. (n.)

   பிண்டப் பிறப்பு; dead at the birth, still born.

     [Skt. antar + mrta → த. அந்தர்மிருதம்.]

அந்தர்முகம்

அந்தர்முகம் andarmugam, பெ. (n.)

   1. உண்ணோக்கு; looking inward.

   2. ஓகநிலையிலொன்று; a posture in the yoga practice.

     [அந்தர் + முகம்.]

     [Skt. antar → த. அந்தர்.]

அந்தர்முகி

அந்தர்முகி andarmugi, பெ. (n.)

   அடங்கிய மனமுடையவன்; one who has controlled his mind, and said of a yogi.

   2. உண்ணோக்கமுடையவன்; one who is always engaged in looking inwards, a state in yoga.

த.வ. உள்நோக்கி.

     [Skt. antar+mukhi → த. அந்தர்முகி.]

த. முகம் → Skt. mukhi.

அந்தர்முகியோனி

 அந்தர்முகியோனி andarmugiyōṉi, பெ. (n.)

   பெண்கள் வயிறு முட்ட உண்டபிறகு வன்புணர்ச்சி செய்வதனால் வளி மிகுத்து, உள்நோக்கிய முகமாகவெழும்பி குறியை விரிக்க முடியாதபடி வலியையும், பூவொதுங்குவதால், அங்குள்ள எலும்பு, நாடி, நரம்பு முதலியவற்றிற்கு வலியையு முண்டாக்கி அடிவயிற்றில் சூலையையு முண்டாக்குமொரு நோய்; a vaginal disease characterised by pain in every part of the genital, bone, muscles, nerves etc., inability to stretch the part and darting pain in the abdomen and in the lower region just above the pubis, is due to the deranged condition of vayu arising from violent or rude intercourse When the stomach is full after meals.

த.வ. உள்ளெரிச்சல்நோய்.

     [Skt. antar+mukhi+yoni → த. அந்தர்முகியோனி.]

த. முகம் → Skt. mukhi.

அந்தர்யாகம்

 அந்தர்யாகம் andaryākam, பெ. (n.)

அந்தரியாகப்பூசை பார்க்க;see andariyaga-p-pusai.

     [Skt. antar-y-aga → த. அந்தர்யாகம்.]

அந்தர்யாமித்துவம்

அந்தர்யாமித்துவம் andaryāmittuvam, பெ. (n.)

   திருமால் நிலையுளொன்று (அஷ்டாதச. தத்வத். 3, 42);; manifestation of Visou as being immanent in the universe and governing it, one of five tirumal-nilai.

     [Skt. antar-yåmitvam → த. அந்தர்யாமித்துவம்.]

அந்தர்யோகம்

 அந்தர்யோகம் andaryōkam, பெ. (n.)

   சுழுத்தி நிலை; a state of deep thought or abstraction, reverie.

     [Skt. antar + yoga → த. அந்தர்யோகம்.]

அந்தர்யோனி

 அந்தர்யோனி andaryōṉi, பெ. (n.)

   பெண் குறியினுட்புறம்; the internal portion of the genital of a female.

த.வ. உள்நோனி.

     [Skt. antar + yoni → த. அந்தர்யோனி.]

அந்தர்வதி

 அந்தர்வதி andarvadi, பெ. (n.)

   சூலுற்றவள் (கருப்பிணி);; a pregnant woman.

த.வ. சூலி.

அந்தர்வமி

அந்தர்வமி andarvami, பெ. (n.)

   1. வளி (வாயு);; flatulence.

   2. செரியாமை; indigestion.

அந்தர்வாகினி

 அந்தர்வாகினி andarvākiṉi, பெ. (n.)

   கீழாறு; stream within a stream.

அந்தர்வித்திரதி

 அந்தர்வித்திரதி andarviddiradi, பெ. (n.)

   பெண்களுக்குண்டாகும் மாதவிடாய் தடைபட்டு, அதனால் குருதி கோளாறடைந்து, கருப்பையிற் திரண்டு கறுத்த கொப்புளங்களாற் சூழப்பட்டு, அழற்சி, வலி, காய்ச்சல் ஆகியவற்றை உண்டாக்குமொரு தீட்டு (சூதக); நோய்; a menstrual disease in women arising from the altered condition of blood in the Womb due to the supression of menstrual flow, is marked by fever, dark ulcers in the womb, inflammation and pain in the vagina, a kind of Amenorrhea.

     [Skt. antar + vidradi → த. அந்தர்வித்திரதி.]

அந்தர்வேகசுரம்

 அந்தர்வேகசுரம் andarvēkasuram, பெ. (n.)

   எலும்பிற்குள்ளிருக்கும் கொழுப்புப் பொருளை (மச்ச); தாதுவைப் பற்றி ஏற்படும் ஒரு வகைக் காய்ச்சல்; a fever due to the affection of the marrow in the bone.

அந்தர்வேதி

அந்தர்வேதி andarvēti, பெ. (n.)

   1. வேள்விச் சாலையினுள்ளிடம் (காஞ்சிப்பு. அந்தரு. 22);; inside of the sacrificial ground.

   2. கங்கை யமுனைகட்கு நடுவிலுள்ள பகுதி; district between the Ganga and Yamuna rivers.

     “அவர்களை யந்தர்வேதிசென் றுடன்கொணர்வா யென்று” (கோயிற்பு. இரணிய. 107);.

     [Skt. antar + vedi → த. அந்தர்வேதி.]

அந்தலை

அந்தலை andalai, பெ. (n.)

   1. சந்திப்பு (யாழ்ப்.);; juncture (I.);.

   2. முடிவு (யாழ்ப்.);; end, extremity, border (J.);.

   3. மேடு (யாழ்ப்.); ; projection as of roof (J.);.

     [அந்துதல் = சந்தித்தல். அந்து → அந்தல் → அந்தலை.]

அந்தளகத்தார்

அந்தளகத்தார் antaḷakattār, பெ. (n.)

   பல்லக்கு வீரர்; palanquin beare.

     “அடைத்த நியாயம் உத்தம சோழத் தெரிந்த அந்தளகத்தார்” (Sll.ii,12);.

     [அந்தளகம்+அத்து+ஆர்]

அந்தளகத்தாளார்

அந்தளகத்தாளார் andaḷagattāḷār, பெ. (n.)

   கவசந் தாங்கிய போர்மறவர்; warriors wearing coat of mail.

உத்தமசோழத் தெரிந்த வந்தளகத்தாளார் (S.1.1. ii, 97);.

     [அந்தளகம் + அத்து (சாரியை); + ஆள் + ஆர் (ப.பா. ஈறு);.]

அந்தளகம்

அந்தளகம் andaḷagam, பெ. (n.)

   கவசம்; coat of mail (S. I. I. ii, 98, குறிப்பு);.

ஒ.நோ ; தெ. பொந்தளமு

     [அந்தளம் → அந்தளகம்.]

அந்தளம்

 அந்தளம் andaḷam, பெ. (n.)

   கவசம் (பிங்.);; coat of mail.

     [உம் → உந்து → அந்து → அந்தளம்.]

 அந்தளம் andaḷam, பெ. (n.)

   புல்லுருவி; a parasitic plant (சா.அக.);.

அந்தளி

 அந்தளி andaḷi, பெ. (n.)

   தேவர் கோயில்; temple (சங்.அக.);.

 அந்தளி antaḷi, பெ. (n.)

   திருக்கோயிலூர் வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Tirukkoyilur Taluk.

     [அம்+தளி]

அந்தவருணி

 அந்தவருணி andavaruṇi, பெ. (n.)

   சிறு நெருஞ்சில்; a thorny shrubtribalus terrestris (சா.அக.);.

அந்தா

அந்தா andā, இடை. (int.)

   அதோ!, ஒரு சேய்மைச்சுட்டுச் சொல், ஒரு பொருளைச் சுட்டிக் கவனிக்கச்செய்தற் குறிப்பு; remote demonstrative.

     [அது → அத்து → அந்து → அந்தா.]

 அந்தா andā, இடை. (int.)

   1. ஒரு வியப்புக் குறிப்பு; an exclamation of wonder.

     “அந்தாவிவ வளயிராணி” (கந்தபு. அசுர. அசமுகிப். 17);.

   2. ஒரு மகிழ்ச்சிக் குறிப்பு; an exclamation of joy.

     “அந்தாவுய்ந்தேன்” (கந்தபு. அசுர, அசுரர்தோ. 1);.

     [அத்தன் (தந்தை); → அத்தா (விளி); → அந்தா.

ஒ.நோ ; அப்பன் → அப்பா, அடேயப்பா (வியப்புக் குறிப்பு);.]

அந்தாக

அந்தாக andāka, பெ. (n.)

     ‘அப்படியே யாகுக!’ என்று பொருள்படும் ஓர் இசைவுத் தொடர்புச் சொல்;

 an expression, meaning ‘Let it be so.

     “அந்தாக வென்றுவந் தையனும்” (கம்பரா. யுத்த நிகும்பலை. 101);.

     [அது → அத்து → அந்து + ஆக. ஆகு + அ (வியங். ஈறு); – ஆக, இனி, அன்னது → அன்று

     [அன் + து) → அந்து + ஆக என்றுமாம்.]

அந்தாசி

அந்தாசி andāci, பெ. (n.)

   1. நஞ்சற்ற பாம்பு; a non-poisonous snake.

   2. ஒருவகை மீன்; a kind of fish.

அந்தாச்

 அந்தாச் andāc, பெ. (n.)

   மதிப்பு (W.G.);; estimate.

த.வ. மதிப்பீடு.

     [U. andaz → த. அந்தாச்.]

அந்தாச்கட்டு-தல் _, செ.

குன்றாவி. (v.t.);

மதிப்பிடுதல் (C.G.);,

 to estimate.

     [அந்தாச் + கட்டு-,]

     [U. andaz → த. அந்தாச்.]

அந்தாச்பட்டி

 அந்தாச்பட்டி andācpaṭṭi, பெ. (n.)

   அறுவடைக்குமுன் கணக்கிடப்பெறும் பயிரின் விலைமதிப்பு (R.T.);; estimate of the value of a standing crop.

த.வ. மதிப்பீட்டுப்பட்டி, கண்டுமுதல்பட்டி.

     [U. andaz → த. அந்தாச்.]

அந்தாதி

அந்தாதி1 andāti, பெ. (n.)

   1. அந்தாதித்தொடை (காரிகை. உறுப். 17); பார்க்க;see andadi-t-todai.

   2. ஒரு சிற்றிலக்கியம்; poem in which the last letter, syllable or foot of the last line of one stanza is identical with the first letter, syllable or foot of the succeeding stanza, the sequence being kept on between the last and the first stanza of the poem as well.

     “அந்தாதிமேலிட் டறிவித்தேன்” (திவ். இயற். நான். 1.);.

த.வ. ஈறுதொடங்கி, கடைமுதல்பா.

     [அந்தம் + ஆதி.]

     [Skt. anta + adi → த. அந்தாதி.]

 அந்தாதி2 andātittal,    4 செ.கு.வி. (v.i.)

   முடிவிலும் முதற்கண்ணும் வருதல்; to follow the rules of andadi.

     “அடிமடக்கா யந்தாதித்து” (மாறனலங். 267, உரை.);.

     [அந்தம் + ஆதி.]

     [Skt. anta → த. அந்தம்.]

 அந்தாதி3 andāti, பெ. (n.)

   1. முதலும் முடிவும்; beginning and end.

   2. தலைமுதல் அடிவரையுள்ள உறுப்பு; the limps from head to foot.

     “உருக்கோதை மேனிக்கந்தாதியைத் திட்டில்” (குலோத். கோ. 131.);.

     [அந்தம் + ஆதி.]

     [Skt. anta → த. அந்தம்.]

அந்தாதித்தொடை

அந்தாதித்தொடை andātittoḍai, பெ. (n.)

   அடிதோறும் இறுதிக்கணின்ற சீரும் அசையும் எழுத்தும் மற்றையடிக்கு முதலாவதாக வரத் தொடுப்பது (இலக். வி. 725.);;     [அந்தம் + ஆதி + தொடை.]

     [Skt. anta → த. அந்தம்.]

அந்தாதியாக

அந்தாதியாக andātiyāka,    வி.எ. (adv.) இடைவிடாமல்; without intermission.

     “அநாதிகாலம் அந்தாதியாக ஸம்ஸரித்துப் போந்த வடியேனுக்கு” (ரஹஸ்ய. 1329.);.

     [அந்தம் + ஆதி + ஆக.]

     [Skt. anta → த. அந்தம்.]

அந்தாதியுவமை

அந்தாதியுவமை andātiyuvamai, பெ. (n.)

   இறுதிச் சொல்லையே மடக்கி ஆதியாகக் கொண்டு, உவமை பெறக் கூறும் அணி (மாறனலங். 10, உரை.);;     [அந்தம் + ஆதி + உவமை.]

     [Skt. anta → த. அந்தம்.]

உ → உவ் → உவ → உவமை.

அந்தான்

 அந்தான் andāṉ, பெ. (n.)

   கப்பல் அல்லது படகிலுண்டாகுஞ் சிறு பொத்தல் வழியே தண்ணிர் புகாதபடி அடைக்குஞ் சிறுபலகை; a small wooden board nailed over a hole in a ship or boat to close a leak (R.);.

     [அத்துதல் = இரு துண்டை ஒன்றாயிணைத்தல், ஒட்டுப்போட்டுத் தைத்தல். அத்து → அந்து → அந்தான்.]

அந்தாயம்

அந்தாயம் andāyam, பெ. (n.)

   1. போலிகை (மாதிரி); (இ.வ.);; model (Loc.);.

   2. குத்து மதிப்பு; rough estimate.

ம. அந்தாயம்

அந்தாரப்பனை

 அந்தாரப்பனை andārappaṉai, பெ. (n.)

   தொட்டிப்பானை; a species of palmyra (சா.அக.);.

 அந்தாரப்பனை andārappaṉai, பெ. (n.)

   தொட்டிப் பனை; a species of palmyra (சா.அக.);.

அந்தாலசி

 அந்தாலசி andālasi, பெ. (n.)

   முகம் விடாக் கட்டி; a boil or abscess which does not has point;

 a blind boil or abscess (சா.அக.);.

அந்தாலே

 அந்தாலே andālē, சு.கு.வி.எ. (demons. adv.)

   அங்கே (யாழ்ப்.); ; there, over there (J.);.

     [அது → அத்து → அந்து + ஆல் + ஏ. அந்து = அங்கு. ‘ஆல்’ இடவுருபு. ‘ஏ’ பிரிநிலை அல்லது தேற்றப்பொருளிழந்த ஈற்றசை. ஒ.நோ ; பின் → பின்னால் → பின்னாலே, பிறகு → பிறகால் → பிறகாலே.]

அந்தாளி

 அந்தாளி andāḷi, பெ. (n.)

ம., க. அந்தாளி.

அந்தாளிக்குறிஞ்சி

 அந்தாளிக்குறிஞ்சி andāḷikkuṟiñji, பெ. (n.)

அந்தாளி பார்க்க;see andali.

     [அந்தாளி + குறிஞ்சி.]

அந்தாளிபாடை

 அந்தாளிபாடை andāḷipāṭai, பெ. (n.)

     [அந்தாளி + Skt bhasa → த. பாடை.]

அந்தி

அந்தி andi, பெ. (n.)

   1. ஒரு தெரு இன்னொரு தெருவிற் குறுக்காக வந்து சேர்வதால், அல்லது மூவேறு தெரு ஒன்றுகூடுவதால், ஏற்படும் முச்சந்தி; junction of two or three streets.

     “அந்தியுஞ் சதுக்கமு மாவண வீதியும்” (சிலப். 14;213);.

   2. இரவும் பகலுங் கலக்கும் விடியற்காலை; morning twilight, as joining night with day.

     “காலை யந்தியும்” (புறநா. 34 ; 8);.

   3. பகலும் இரவுங் கலக்கும் மாலைக் காலம்; evening twilight, as joining day with night.

     “மாலை யந்தியும்” (புறநா. 34 ; 8);. ‘அந்தி ஈசல் அடைமழைக்கு அறிகுறி’, ‘அந்தி ஈசல் பூத்தால் அடைமழை அதிகரிக்கும்’. ‘அந்தி மழை அழுதாலும் விடாது’, ‘அந்தி மழையும் விடாது ஒளவையாரைப் பிடித்த பிணியும் விடாது’ (பழ.);.

   4. அந்தியுஞ் சந்தியுஞ் செய்யுந் திருமன்றாட்டு; morning and evening prayers.

     “ஓதி யுருவெண்ணு மந்தியால்” (திவ். இயற். 1 ; 33);.

   5. மாலை யந்தியிற் பூக்கும் அந்திமந்தாரை; plant whose flowers blossom at 5 p.m., Mirabilis jalapa.

   6. மாலைச் செவ்வானம்; red glow of sunset.

     “அந்தி வண்ணர்தம் மடியவர்க் கமுதுசெய்வித்து” (பெரியபு. அமர்நீதி. 3);.

   7. மாலையொடு தொடங்கும் இரவு; night.

     “அந்தி காவலன்” (திவ். பெரியதி. 8.5 ; 1);.

   8. பொருத்து, முடிவு; joint, end.

     “அந்திக் கடலிற் கடிதோட” (திருப்பு. 76); (சங்.அக.);.

   9. பகல் முடிவு போன்ற ஊழி முடிவு; dissolution of the universe at the end of an aeon.

     “படரணி யந்திப் பசுங்கட் கடவுள்” (கலித். 101; 24);.

   10. பாலையாழ்த்திறவகை; an ancient secondary melody-type of the palai class.

ம. அந்தி ; க., தெ. அன்த.

     [உம் → உந்து → அந்து → அந்தி.]

உம்முதல் = கூடுதல், பொருந்துதல், கலத்தல். உம் = சொல்லும் பொருளும் இரண்டும் பலவுமாய்க் கூடுதலைக் குறிக்கும் இடைச்சொல்.

எ-டு :

     “மழவும் குழவும் இளமைப் பொருள” (தொல். சொல். உரி. 14);.

     “இன்பமும் பொருளும் அறனும்” (தொல், பொருள். கள. 1);.

உம் → உந்து.

     “உம்உந் தாகும் இடனுமா ருண்டே” (தொல்..சொல். இடை. 44);.

உந்து → அந்து. ஒ.நோ.; உகை → அகை.

அந்துதல் = கலத்தல், அந்து → அந்தி = இரு தெரு அல்லது முத்தெருக் கூடும் முச்சந்தி, பகலும் இரவுங் கலக்கும் காலை அல்லது மாலைவேளை.

     “காலை யந்தியும் மாலை யந்தியும்” என்று புறநானூறு (34); கூறுவதால், முதற்கண் ‘அந்தி’ யென்பது இரு வேளைக்கும் பொதுவாய் வழங்கினமை அறியப்படும். பின்னர் மாலையை வேறு படுத்தற்குச்சகரமெய் சேர்க்கப்பட்டுச் ‘சந்தி’ யென்னுஞ் சொல் தோன்றிற்று. காலையும் மாலையும் என்னும் பொருளில், அந்தியுஞ் சந்தியும் என்று இன்றும் உலகவழக்கு வழங்குதல் காண்க.

அமைத்தல் என்னும் பொதுப்பொருட் சொல், சோறமைத்தலைச் சிறப்பாகக் குறிக்கச் சமைத்தல் என்று சகரமெய் பெற்றிருத்தலை இதனுடன் ஒப்புநோக்குக.

     ‘அந்தி’, ‘சந்தி’ ஆனபோது, ‘அந்து’, ‘சந்து’ ஆயிற்று. சந்து = உறுப்புப் பொருத்து, இரு பகைவரை ஒப்புரவாக்கும் இணைப்பு.

முச்சந்தியைக் குறித்த ‘அந்தி’யும் ‘சந்தி’ யாயிற்று. அதனால், அந்தியுஞ் சதுக்கமும் என்பது சந்தியுஞ் சதுக்கமும் என மோனைத் தொடராயிற்று. சந்திக்கிழுத்தல், சந்தி சிரித்தல், சந்தியில் விடுதல் என்னும் வழக்குகளில், ‘சந்தி’யென்பது இன்று முச்சந்திக்கும் நாற்சந்திக்கும் பொதுவாகும்.

சந்து → சந்தை. ஒ.நோ.; மந்து → மந்தை.

சந்தை = பெரும்பாலும் நாட்டுப்புற நகர்களில், கிழமைக் கொருநாள், பல்வேறிடங்களினின்று பல்வேறு விற்பனையாளர் பல்வேறு பொருள்களைக் கொண்டுவந்து விற்கும் கிழமையங்காடி.

சந்தித்தல் என்னும் பொருளில் அந்தித்தல் என்னும் சொல் தமிழில் வழங்கியிருத்தலால், சந்தித்தல் அல்லது சந்திப்பு என்னும் சொல் தென்சொல்லே.

சந்தித்தலைக் குறிக்கும் ‘ஸம்-தா’ (sam-dha); என்னும் வடசொல் முதனிலை, ஸம் (உடன், கூட, together);, தா (இடு, வை, put); என்னும் இருசொற் கொண்ட கூட்டுச்சொல்; சந்து என்பதன் மூலமான ‘அந்து’ என்னும் தமிழ் முதனிலையோ தனிச்சொல்.

முச்சந்தி, நாற்சந்தி, சந்துசெய்தல், சந்தை என்னும் பொருள்கள் வடசொல் வழக்கிலில்லை.

சென்னை அகரமுதலியில், தெருக்கூடுமிடத்தைக் குறிக்கும் சந்தியென்னுஞ் சொற்கும் சந்து என்னும் சொற்கும் ‘ஸம்-தி’ (sam-dhi); என்னும் வடசொல் வடிவும், சந்தையென்னுஞ் சொற்கு ஸம்-தா’ (sam-dha); என்னும் வடசொல் வடிவும், காலை மாலை வேளையைக் குறிக்கும் சந்தியென்னுஞ் சொற்கு ஸம்-த்யா’ (sam-dhya); என்னும் வட சொல் வடிவும் மூலமாகக் காட்டப்பட்டுள்ளன. அவற்றின் பொருந்தாமை, தமிழின் முன்மையையும் தமிழ்ச்சொல்லின் மூலத்தையும் நோக்கின் வெள்ளிடை மலையாம்.

 அந்தி andi, பெ. (n.)

   அக்கை (சங்.அக.);; elder sister.

ம. அந்தி ; தெ. அந்திக.

     [அத்தி = தாய், அக்கை. அத்தி → அந்தி.]

 அந்தி andi, பெ. (n.)

   தில்லைமரம் (மலை.);; blinding tree, tiger’s milk-spurge, Excoecaria agallocha (சா.அக.);.

 அந்தி andi, பெ. (n.)

 அந்தி andi, இடை (part.)

   ஓர் அசைச்சொல் (பொதி. நி.);; an expletive.

     [அந்தில் → அந்தி.]

     “அந்தில் ஆங்க அசைநிலைக் கிளவியென்

றாயிரண் டாகு மியற்கைய என்ப” (தொல், சொல். இடை. 19);.

 அந்தி anti, பெ. (n.)

பாலையாழில் பிறக்கும்பண் (13:120.);,

 a musical note.

     [அந்து+அந்தி]

அந்தி-த்தல்

அந்தி-த்தல் andittal,    4 செ.கு.வி. (v.i.)

   பொருந்துதல் (பொதி.நி.);; to fitin.

–, 4 செ.குன்றாவி. (v.t.);

   1. கிட்டுதல்; to approach.

     “வேதம் அந்தித்தும் அறியான்” (திருவிளை. நகர. 106);.

   2. சந்தித்தல்; to unite, join, meet.

     “யமபடையென வந்திக்குங்கட்கடையாலே” (திருப்பு. 55);.

   3. முடித்து வைத்தல்; to tie up in a knot.

     “அந்தித் திருக்கும் பொருளில்லை” (திருவாலவா. 30;14);.

   4. ஏற்படுத்துதல் (நியமித்தல்); ; to appoint, ordain.

     “அந்தித்த நின் புணர் ப்பை” (கந்தபு. மகேந்திர. சயந்தன்புலம். 58);.

க., தெ. அந்து.

     [உம் → உந்து → அந்து → அந்தி.]

அந்தி பார்க்க;see andi=.

அந்திகா

 அந்திகா andikā, பெ. (n.)

அந்திகை பார்க்க;see andligai.

     [Skt. andhaka → த. அந்திகா.]

அந்திகாசிரயம்

அந்திகாசிரயம் andikācirayam, பெ. (n.)

   நிலத்திணை (சிந்தா. நி. 162.);; plants and other immoveable objects.

     [Skt. antika + a-sraya → த. அந்திகாசிரயம்.]

அந்திகால்

 அந்திகால் andikāl, பெ. (n.)

   சுரபுன்னை, ஒரு மரம்; a tree, soorapoon, Octrocarpus longifolius (சா.அக.);.

அந்திகிருதன்

 அந்திகிருதன் andigirudaṉ, பெ. (n.)

   குருடனாக்கப் பட்டவன்; one who is rendered blind (சா.அக.);.

     [Skt. andha + krta → த. அந்திகிருதன்.]

அந்திகுணம்

 அந்திகுணம் andiguṇam, பெ. (n.)

   பெருங் காயம்; asafoetida (சா.அக.);.

அந்திகூப்பு-தல்

அந்திகூப்பு-தல் andiāppudal,    5 செ.கு.வி. (v.i.)

   மாலைத் தெய்வ வணக்கஞ் செய்தல்; to offer evening prayers or perform evening worship.

     “மந்திரத் தந்தி கூப்பி” (பெருங், உஞ்சைக். 55;7-8);.

ம. அந்தி வழங்குக

அந்திகை

அந்திகை andigai, பெ. (n.)

   1. அண்மை; nearness, neighbourhood (சங்அக.);.

   2. இரவு; night.

ம. அந்திகம் ; தெ. அந்திகமு.

 அந்திகை andigai, பெ. (n.)

   அக்கை; elder sister (சங்.அக.);.

ம. அந்தி ; தெ. அந்திக.

     [அத்தி = அன்னை, அக்கை. அத்தி → அந்தி → அந்திகை = இளைய அக்கை. ‘கை’ கு.பொ.பின். ஒ.நோ.; கன்னி → கன்னிகை.]

 அந்திகை andigai, பெ. (n.)

   அடுப்பு; oven (சங்.அக.);.

ம., தெ. அந்திக ; க. அந்திகெ.

 அந்திகை andigai, பெ. (n.)

   1. கண்ணோய்; a disease of the eye.

   2. குருடு; blindness (சா.அக.);.

     [Skt. andhaka → த. அந்திகை.]

அந்திக்கடை

 அந்திக்கடை andikkaḍai, பெ. (n.)

   மாலையில் விற்குங்கடை, அல்லங்காடி; evening bazaar.

ம. அந்திக்கட

     [அந்தி + கடை.]

அந்திக்களை

 அந்திக்களை antikkaḷai, பெ. (n.)

   களைவெட்டு அதிகமாக இருக்கும் போது, மதிய இளைப் பாறலுக்குப் பின் நிகழ்த்தும் களைவெட்டு; evening part-time work in the field.

     [அந்தி+களை+வெட்டு]

     (இதற்குக் காலைகளைவெட்டும் கலியை விடக் குறைவாக இருக்கும்.); (இ.வ.);

 itaṟkukkālaikaḷaiveṭṭumkaliyaiviṭakkuṟaivākairukkumiva,

அந்திக்காசம்

 அந்திக்காசம் andikkācam, பெ. (n.)

   மாலைக்கண்; night blindness, Nyctalopia (சா.அக.);.

     [அந்தி + காசம். Skt, kica → த. காசம் = கண்ணோய்.]

அந்திக்காப்பு

அந்திக்காப்பு andikkāppu, பெ. (n.)

   1. குழந்தைகளுக்கு அந்திப் பொழுதிற் செய்யுங் காப்புச்சடங்கு; mystic rite performed in the evening for a child, to avert evil (திவ். பெரியாழ். 2 ; 8, வியா. பிர.);.

   2. கடவுட்கு மாலைக்காலத்துச் செய்யும் வழிபாடு (மதுரைக், 460, நச். உரை, அடிக்குறிப்பு);; evening service performed in a temple.

ம. அந்திக்காப்பு

     [அந்தி + காப்பு.]

அந்திக்காவலன்

அந்திக்காவலன் andikkāvalaṉ, பெ. (n.)

   இராக் காலத்துக் காவலன் போன்ற திங்கள்; moon, as the lord of night or night guardian.

     “அந்தி காவல னமுதுறு பசுங்கதிர்” (திவ். பெரியதி. 8.5;1);.

அந்திக்கோன்

அந்திக்கோன் andikāṉ, பெ. (n.)

   இரவிற்கு அரசனான திங்கள்; moon.

     “அந்திக் கோன்றனக் கேயருள் செய்தவர்” (தேவா. 5.25;1);.

     [அந்தி + கோன்.]

அந்திசந்தி

அந்திசந்தி andisandi, பெ. (n.)

   1. காலை அல்லது மாலை; morning or evening.

   2. காலையும் மாலையும்; morning and evening.

   அந்தியுஞ் சந்தியும் = 1. காலையும் மாலையும்; both (in the); morning and evening.

   2. எப்போதும்; always.

அவனுக்கு அந்தியுஞ் சந்தியும் இதுதான் வேலை (உ.வ.);.

அந்திசந்துவாதம்

 அந்திசந்துவாதம் andisanduvātam, பெ. (n.)

   இராக்காலத்தில் மூட்டுகளைத் தாக்கும் ஊத (வாத); நோய்; a disease affecting the joints during the night, evening arthritis, gout (சா.அக.);.

     [அந்தி + சந்து + Skt, vita → த. வாதம்.]

அந்திதோசம்

 அந்திதோசம் anditōcam, பெ. (n.)

அந்திப்புள் தோசம் பார்க்க;see andi-p-pul-tošam.

     [அந்தி + Skt. dosam → த.தோசம்.]

அந்திநடவு

அந்திநடவு antinaṭavu, பெ. (n.)

   காலை 10 மணி முதல் மாலை வரை நடும் நடவு செய்தல்; implanting work done till evening.

     [அந்தி+நடவு]

அந்திநட்சத்திரம்

 அந்திநட்சத்திரம் andinaṭcattiram, பெ. (n.)

   மாலை வெள்ளி, விடிவெள்ளிக்கு எதிர்; evening star (W.); opp, vidivelli.

     [அந்தி + நட்சத்திரம். Skt. naksatra → த. நட்சத்திரம் = வெள்ளி.]

அந்திபகல்

அந்திபகல் andibagal, பெ. (n.)

   1. இரவும் பகலும்; night and day.

     “அந்திபசு லாச் சிவனை யாதரித்து” (பட்டினத்துப் பொது. 2.);.

   2. (சிவ.); கீழால் மேலால் நிலைகளைக் (கேவல சகலாவத்தைகளைக்); குறிக்கும் குறிப்புச்சொல்;

அந்திபந்தி

 அந்திபந்தி andibandi, பெ. (n.)

   கும்பகம்; suppression of breath (சா.அக.);.

அந்திபூதன்

 அந்திபூதன் andipūtaṉ, பெ. (n.)

   குருடனானவன்; one who has become blind (சா.அக.);.

அந்திபூதம்

 அந்திபூதம் andipūtam, பெ. (n.)

   குருடாதல்; becoming blind (சா.அக.);.

அந்திப்பீளை

 அந்திப்பீளை andippīḷai, பெ. (n.)

   சிறுபூளை; woolly caper, Achyranthes lanata (சா.அக.);.

     [அந்தி + பீளை. பூளை → பீளை.]

அந்திப்புள்தோசம்

அந்திப்புள்தோசம் andippuḷtōcam, பெ. (n.)

   பொழுதடையும் நேரத்தில் பறவைகள் கூடு நோக்கிப் பறந்து போகும்போது குழவிகளைப் புறத்துக் காட்டலால் நேரும் தீட்டு; disease of babies caused by their being exposed at sunset when birds fly to their nests.

     [அந்தி = மாலைத் தொடக்க வேளை. புள் = பறவை. Skt. dosa → த. தோசம் = குற்றம், தீட்டு.]

தோஷ என்னும் வடசொல் தமிழில் தோடம் என்றும் திரியும். அதனால், பால வாகடத் திரட்டு என்னும் மருத்துவ நூலில் (93);, ‘அந்திப்புட்டோடம்’ என்னும் வடிவு ஆளப்பட்டுள்ளது.

அந்திப்பூ

அந்திப்பூ andippū, பெ. (n.)

   அந்திமல்லிகை (மலை.);; four o’clock flower, Mirabilis jalapa.

ம. அந்திமலரி, அந்திமந்தாரம்.

     [அந்தி + பூ.]

இது, அந்தி மந்தார வேளையிற் பூப்பதால் அந்திமந்தாரம், அந்திமந்தாரை யென்றும், சாயுங்காலம் 5 மணிக்குப் பூப்பதால் அஞ்சு மணிப் பூ என்றும் பெயர் பெறும்.

அந்திப்பூட்டு

 அந்திப்பூட்டு antippūṭṭu, பெ. (n.)

   வயல் களில் மாலை நேரங்களில் உழவு செய்வது; tilling the landin the evening.

     [அந்தி+பூட்டு]

ஏர் ஓட்டுதல், கமலை ஓட்டுதல், எரு வடித்தல் போன்ற வேலைகளில் உச்சிப் பொழுதில் மதிய உணவு மற்றும் ஒய்விற்குப் பின் தொடர்ந்து செய்யும் வேலை; (இ.வ.);

     [P]

அந்திப்பொழுது

 அந்திப்பொழுது andippoḻudu, பெ. (n.)

   கையெழுத்து மறையும் மாலை மசங்கல் நேரம்; evening twilight, dusk, about the time when written characters start fading and become indistinct (சா.அக.);.

ம. அந்திகெட்டந்தி

     [அந்தி + பொழுது.]

அந்திமக்காலம்

அந்திமக்காலம் andimakkālam, பெ. (n.)

   இறப்புவேளை (ஶ்ரீவசன. 1, 69.);; last moments, close of life.

     [அந்திமம் + காலம்.]

     [Skt. antima → த. அந்திமம்.]

அந்திமக்கிரியை

 அந்திமக்கிரியை andimakkiriyai, பெ. (n.)

   இறந்தவர்க்குச் செய்யும் இறுதிச் சடங்கு; funeral rites.

     [Skt. antima + kriya → த. அந்திமக்கிரியை.]

அந்திமதசை

 அந்திமதசை andimadasai, பெ. (n.)

அந்திமக்காலம் பார்க்க;see andimakalam.

அந்திமந்தாரம்

 அந்திமந்தாரம் andimandāram, பெ. (n.)

அந்திமந்தாரை பார்க்க;see andi-mandarai.

அந்திமந்தாரை

 அந்திமந்தாரை andimandārai, பெ. (n.)

   அஞ்சு மணிப் பூ; four o’clockflower, Mirabilis-jalapa.

ம. அந்திமந்தாரம்

மறுவ. அந்திமந்தாரம், அந்திமல்லி, அந்தி மல்லிகை, அந்திமலர்ந்தான், அந்திமலரி.

அந்திமந்தி

 அந்திமந்தி andimandi, பெ. (n.)

   மாலை மங்கற் பொழுது; evening twilight.

அந்திமந்தி நேரத்தில் வெளியே போகாதே (உ.வ.);.

அந்திமம்

 அந்திமம் andimam, பெ. (n.)

     [Skt. antima → த. அந்திமம்.]

அந்திமலரி

 அந்திமலரி andimalari, பெ. (n.)

அந்தி மந்தாரை பார்க்க;see andi-mandārai.

அந்திமலர்ந்தான்

 அந்திமலர்ந்தான் andimalarndāṉ, பெ. (n.)

அந்திமந்தாரை பார்க்க;see andi-mandarai.

அந்திமல்லி

 அந்திமல்லி andimalli, பெ. (n.)

அந்திமந்தாரை பார்க்க;see andi-mandarai.

ம. அந்திமலரி

அந்திமல்லிகை

 அந்திமல்லிகை andimalligai, பெ. (n.)

அந்தி மந்தாரை பார்க்க;see andi-mandarai.

அந்திமாலை

அந்திமாலை andimālai, பெ. (n.)

   1. மாலைப் பொழுது; evening.

     “அந்திமாலைச் சிறப்புச் செய் காதையும்” (சிலப். பதி. 66);.

   2. மாலைக்கண்; night-blindness, Nyctalopia.

   3. பகுதி அல்லது முழுதும் பார்வை கெடும் கண்ணோய் வகை (M.L.);; partial or total loss of sight, Amaurosis.

ம. அந்திக்குருடு

அந்தியகமனம்

 அந்தியகமனம் andiyagamaṉam, பெ. (n.)

   இறப்பு; dying, going to the end of life (சா.அக.);.

அந்தியகாபிம்

அந்தியகாபிம் andiyakāpim, பெ. (n.)

   1. முடிவு காலம்; the last period of life.

   2. சாகுங்காலம்; the last moments preceding death (சா.அக.);.

அந்தியக்கிரியை

 அந்தியக்கிரியை andiyakkiriyai, பெ. (n.)

   இறந்தவர்க்குச் செய்யும் சடங்கு; funeral rites.

     [Skt. antya + kriya → த. அந்தியக்கிரியை.]

அந்தியசன்

அந்தியசன் andiyasaṉ, பெ. (n.)

   புலையன்; man of the lowest caste.

     “அந்நியசர் வண்ணார் முதலோர் மனை” (சைவச. பொது. 243.);.

     [Skt. antya-ja → த. அந்தியசன்.]

அந்தியத்துகசுரம்

 அந்தியத்துகசுரம் andiyattugasuram, பெ. (n.)

   சாகுங் காலத்துக் காணுமொரு கொடுங் காய்ச்சல்; a Severe type of fever that precedes death (சா.அக.);.

அந்தியபரணி

 அந்தியபரணி andiyabaraṇi, பெ. (n.)

   ஒரு ஆயுள்வேத மூலிகை; a plant of the terminalia genus used in ayurveda (சா.அக.);.

அந்தியமட்டும்

 அந்தியமட்டும் andiyamaṭṭum, பெ. (n.)

   சாகும் வரை; till the time of death (சா.அக.);.

     [அந்திய + மட்டும்.]

     [Skt. antya → த. அந்தியம்.]

அந்தியம்

அந்தியம் antiyam, பெ. (n.)

   பத்தாயிரம் (குவளை); கோடி குறித்த பேரெண். (1000000 000000);; thousandbillion.

     [அந்து-அந்தியம்]

 அந்தியம்1 andiyam, பெ. (n.)

   1. இறப்பு; death.

   2. இறக்குங் காலம்; the last period preceding death, the moment of death.

   3. பூடு; a plant cyperus (genus); Hexastachyus communis (சா.அக.);.

     [Skt. antya → த. அந்தியம்.]

 அந்தியம்2 andiyam, பெ. (n.)

   ஒருபேரெண் (பிங்.);; the number 1000 billions.

     [Skt. antya → த. அந்தியம்.]

அந்தியவோடாலிகாகிரகம்

அந்தியவோடாலிகாகிரகம் andiyavōṭāligāgiragam, பெ. (n.)

   எட்டாம் நாளில் எட்டாம் மாதத்தில் அல்லது எட்டாம் ஆண்டில் தாயை அல்லது குழந்தையைத் தாக்குமொரு வகை கோளின் விளைவால் வரும் குற்றம்; a morbific diathesis in a child or the mother in the 8th year or the 8th month or the 8th day after delivery, is due to the influence of an evil planet called ‘aryaka’ (சா.அக.);.

அந்தியிழவு

அந்தியிழவு antiyiḻvu, பெ. (n.)

   இறந்தோரின் வீட்டில் பதினெட்டு நாள் வரையிலும் மாலையில் ஒப்பாரி வைத்து அழும் நிகழ்ச்சி; lamenting song sung for 18 days in the house of the deceased.

     [அந்தி+இழவு]

ஒரு வகை இனத்தாரில் இறந்தோர் வீட்டில் பதினெட்டாம் நாள் சடங்கு வரையில் நாள்தோறும் மாலையில் உறவின் முறையாரும் தெரு மக்களும் ஒப்பாரி வைத்து அழுது புலம்பும் நிகழ்ச்சியில் மகளிர் மட்டும் இடம்பெறுவர்.

அந்தியுழவு

 அந்தியுழவு andiyuḻvu, பெ. (n.)

   கோடையில் அந்தி நேரத்தில் உழுகை (நாஞ்.);; tilling the soil in the evening time during summer (Näfi.);.

     [அந்தி + உழவு.]

அந்தியேட்டி

 அந்தியேட்டி andiyēṭṭi, பெ. (n.)

   நீத்தார் நிகழ்வுகள்; lit, after-ceremonies applied to funeral rities obsequies.

     [Skt. antya + isti → த. அந்தியேட்டி.]

அந்தியேட்டிக்குருக்கள்

 அந்தியேட்டிக்குருக்கள் andiyēṭṭikkurukkaḷ, பெ. (n.)

   நீத்தார் நிகழ்வு (கருமாதி); செய்விக்குங் குருக்கள்; priests who help in funeral rites.

     [அந்தியேட்டி + குருக்கள்.]

     [Skt. antya + isti → த. அந்தியேட்டி.]

குரு → குருக்கள். அந்தரட்டிக்குருக்கள் பார்க்க.

அந்திரகாசம்

 அந்திரகாசம் andirakācam, பெ. (n.)

   வானத்தில் நிலவு உதிக்கும் போது, கண் புகைச்சல் நீங்கியும், மற்றக் காலத்தில் கண் சிவந்து பார்ப்பதற்கு அச்சமாயும், நாட்பட்டால் காரிருளையுங் கொடுக்கும் ஒரு வகைக் கண்ணோய்; a disease of the eye in which the vision is clear before moonlight but dart at other times, is a condition in which the patient sees better in an obscure light than in bright sun-light, Hemeralopia (சா.அக.);.

     [அந்திர + காசம்.]

     [Skt. antra → த. அந்திரம் → அந்திர.]

கால் → கார் → காய் → காசம்.

அந்திரகிராணி

 அந்திரகிராணி andiragirāṇi, பெ. (n.)

   குடற் கோளாறினால் ஏற்படும் நாட்படு செரியாமை (கிராணி);க் கழிச்சல்; a chronic diarrhoea due to intestinal disorders (சா.அக.);.

     [Skt. antra + grahani → த. அந்திரகிராணி.]

அந்திரக்கண்மணி

 அந்திரக்கண்மணி andirakkaṇmaṇi, பெ. (n.)

   நீலமணி (மூ.அ.);; sapphire.

     [அந்திர + கண்மணி.]

     [Skt. antara → த. அந்திர.]

அந்திரக்கொடிச்சி

 அந்திரக்கொடிச்சி andirakkoḍicci, பெ. (n.)

   கந்தகம் (மூ.அ.);; sulphur.

அந்திரசுரம்

 அந்திரசுரம் andirasuram, பெ. (n.)

   குடலில் வீக்கம் கண்டு அதனிமித்த முண்டாகுமொரு வகைக் கடுங்காய்ச்சல்; a severe type of fever characterised by morbid changes of peculiar intestinal lesions, Typyoid or Enteric fever (சா.அக.);.

     [அந்திர + சுரம்.]

     [Skt. antra → த. அந்திரம்.]

சுல் → சுர் → சுரம்.

அந்திரட்டி

 அந்திரட்டி andiraṭṭi, பெ. (n.)

   சாக்காடெய்தினா ரொருவர்தம் முப்பத்தொன்றாம் நாள் செய்யப்படும் சடங்கு; funeral rite performed on the thirty first day.

     [Skt. antya + isti → த. அந்திரட்டி.]

அந்திரட்டை

 அந்திரட்டை andiraṭṭai, பெ. (n.)

 corr. of அந்தியேஷ்டி (இ.வ.);

     [Skt. antya + isti → த. அந்திரட்டை.]

அந்திரதாபிதம்

 அந்திரதாபிதம் andiradāpidam, பெ. (n.)

   குடலின் அழற்சி; inflammation of the intestines, Enteritis (சா.அக.);.

     [Skt. antra + sthapita → த. அந்திரதாபிதம்.]

அந்திரன்

அந்திரன் andiraṉ, பெ. (n.)

   வேடன் (சிந்தா.நி. 160);; hunter.

 Skt. andhra

 அந்திரன் antiraṉ, பெ. (n.)

   தேவன், கடவுள்; celestial person, god.

அந்திரனை ஆரூரில் அம்மான் தன்னை(தேவா.723-4);

     [அண்+தன்-அந்தன்-அந்தரன்-அந்திரன்]

 அந்திரன் andiraṉ, பெ. (n.)

   தேவன்; god.

     “அந்திரனை யாரூரி லம்மான் யன்னை” (தேவா. 723, 4.);.

     [Skt. antara → த. அந்திரன்.]

அந்திரபுரீதரம்

 அந்திரபுரீதரம் andiraburītaram, பெ. (n.)

   சிறு குடலுக்கும், பெருங்குடலுக்கும் காணுமொரு அழற்சி; inflammation of the small intestines and of the colon, Entero-colitis (சா.அக.);.

அந்திரமயம்

 அந்திரமயம் andiramayam, பெ. (n.)

   குடலை உள்ளடக்கியது; consisting of entrails (சா.அக.);.

     [Skt. antra + maya → த. அந்திரமயம்.]

அந்திரமுட்டிவாயு

 அந்திரமுட்டிவாயு andiramuṭṭivāyu, பெ. (n.)

   குடல் முட்டி வளி; an intestinal complaint due to the deranged condition of ‘vayu’ in the system (சா.அக.);.

     [அந்திர(ம்); + முட்டி + வாயு.]

     [Skt. antra → த. அந்திர. Skt. vayu → த. வாயு.]

அந்திரம்

அந்திரம் andiram, பெ. (n.)

   1. குடல்; intestines;

 bowels.

   2. இரைப்பை யொழிந்த மற்றக் குடல்

   முதலானவை; the bowels and the other abdominal viscera excepting the stomach.

   3. சிறு குடல்; small intestines (சா.அக.);.

     [Skt. antra → த. அந்திரம்.]

அந்திரருகம்

 அந்திரருகம் andirarugam, பெ. (n.)

   குடல் இறக்கம் (வாதம்);; a hernia containing a loop of the intestine, Enterocele (சா.அக.);.

அந்திரர்

அந்திரர் andirar, பெ. (n.)

   ஆந்திரர்; the Andhras.

     “அந்திரர் முதலிய வரசர்” (பெருந்தொ. 788);.

 Skt. ändhra

அண்டிரன், ஆந்திரன் பார்க்க;see andiran, đndiran.

அந்திரலோகிதம்

 அந்திரலோகிதம் andiralōkidam, பெ. (n.)

   சிறுபொடுதலை; a small creeper of the species of பொடுதலை, Verbena nodiflora (சா.அக.);.

அந்திரவசனம்

 அந்திரவசனம் andiravasaṉam, பெ. (n.)

   பச்சையான கொட்டைப்பாக்கு (மூ.அ.);; raw areca-nut.

அந்திரவர்த்தமன்

 அந்திரவர்த்தமன் andiravarttamaṉ, பெ. (n.)

   குடல் வளர்ச்சி (விருத்தி.);; hernia commonly known as rupture (சா.அக.);.

     [Skt. antra + vardhana → த. அந்திர வர்த்தமன்.]

அந்திரவாதம்

அந்திரவாதம் andiravātam, பெ. (n.)

   1. பெருங்குடலில் பற்பல வளி (வாயுக்கள்); சேர்ந்து வயிறு பருத்து வலியுண்டாகி, உப்பல், சிறுநீர், கழிமாசு (மல மூத்திர);க் கட்டு, கக்கல் (வாந்தி);, நெஞ்சுவலி முதலிய குணங்களை யுண்டாக்கும் நோய்; a disease of the colon marked by heaviness of bowels, pain, distension of the abdomen, retention of faces and urine, vomiting, chest pain etc., is due to the accumulation of gases in the intestines.

   2. குடல் நரம்பிற் காணும் வலி; neuralgia of the intestine, Enteralgin (சா.அக.);.

     [Skt. antra + vāta → த. அந்திரவாதம்.]

அந்திரவாயு

 அந்திரவாயு andiravāyu, பெ. (n.)

   குடல் வளி (வாயு);; the flatulent nature of the intestines, flatulency (சா.அக.);.

     [Skt. antra + vāyu → த. அந்திரவாயு.]

அந்திரவாயுசூலை

 அந்திரவாயுசூலை andiravāyucūlai, பெ. (n.)

   குடலில் வளி (வாயி); சேருவதனால் ஏற்படும் குத்தல் நோய்; an acute abdominal pain due to the accumulation of gas, intestinal colic (சா.அக.);.

     [அந்திரவாயு + சூலை.]

     [Skt. antra + vāyu → த. அந்திரவாயு.]

சுல் → சூல் → சூலை.

அந்திரவிரணம்

அந்திரவிரணம் andiraviraṇam, பெ. (n.)

   1. சிறுகுடலிற் காணுமோர் புண் (விரண); நோய்; an inflammation of the duodenum, Duodenitis.

   2. சிறுகுடற் புண்; ulcer of the duodenum, peptic ulcer.

   3. குடற்புண்; ulceration of the intestines, Entereicosis (சா.அக.);.

     [Skt. antra + vrana → த. அந்திரவிரணம்.]

அந்திரவிருட்சம்

 அந்திரவிருட்சம் andiraviruṭcam, பெ. (n.)

   தில்லை மரம்; a tree, mountain slender tiger’s milk, Excoecaria crenulata (சா.அக.);.

     [Skt. antra + vrksa → த. அந்திவிருட்சம்.]

அந்திரவிருத்தி

அந்திரவிருத்தி1 andiravirutti, பெ. (n.)

   1. குடல் கவுட்டியின் வழியால் பிடுக்கிற்குள் இறங்காமலே ஆண்குறித் தண்டிற்கு மேற்பாகமாகக் காணும் வீக்கம் அல்லது புடைப்பு; protrusion of the bowels with an appearance of swelling just above the penis, without descending through the groin into the scrotum; hernia which has not passed quite through the orifice, Incomplete hernia.

   2. ஊதையினால் சிறுகுடல் வலுக்குறைந்து கவுட்டியின் வழியாய்க் கீழிறங்கிக் காற்றுப்பை போற் பருத்துக் காணும் நோய்; a disease in which a portion of the small intestines which is pressed down through the groin (inguinal canal); decends into the scrotum and becomes swollen like an inflated air bladder, linguinal hernia (direct); (சா.அக.);.

த.வ. அடிக்குடும்பி.

     [Skt. antra + vrddhi → த. அந்திவிருத்தி.]

 அந்திரவிருத்தி2 andiravirutti, பெ. (n.)

அந்திரவர்த்தமன் பார்க்க;see andiravarttaman (சா.அக.);.

     [Skt. antra + vrddhi → த. அந்திரவிருத்தி.]

அந்திரி

அந்திரி andiri, பெ. (n.)

   1. மலைமகள்; Parvadi.

   2. கொற்றவை; Kali.

     [Skt. antari → த. அந்திரி.]

அந்தில்

அந்தில் andil, பெ. (n.)

   1. இடம் (அ.க.நி.);; place.

   2. இரண்டு (பொதி.நி.); ; two.

–, சு.கு.வி.எ. (demons. adv.);

   அவ்விடம்; there.

     “அந்தி லரங்கத் தகன்பொழில்” (சிலப்.11 ; 6);.

–, இடை. (part.);

   ஓர் அசைச்சொல்; an expletive in poetry.

     “அந்தில் ஆங்க அசைநிலைக் கிளவியென்

றாயிரண் டாகு மியற்கைய என்ப” (தொல், சொல். இடை. 19);.

     [அந்த + இல் – அந்தில். இல் = இடம்.]

 அந்தில் andil, பெ. (n.)

   வெண்கடுகு (பிங்.);; white mustard, Brassica alba.

அந்திவண்ணன்

 அந்திவண்ணன் andivaṇṇaṉ, பெ. (n.)

   செவ்வானம்போற் சிவந்த சிவன் (பிங்.);;Śiva, His body having the red hue of sunset.

     [அத்தி + வண்ணன். வண்ணம் → வண்ணன்.]

அந்திவயல்

 அந்திவயல் antivayal, பெ. (n.)

   திருவாடானை வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Tiruvadanai Taluk.

     [அந்தி+வயல்]

அந்திவீருகம்

 அந்திவீருகம் andivīrugam, பெ. (n.)

   சிறு முள்ளங்கி; wall radish, Bluemea aurita (சா.அக.);.

அந்து

அந்து andu, சு.கு.வி.எ. (demons, adv.)

   அப்படி; in that way.

     “அந்துசெய் குவெனென” (கம்பரா. யுத்த. இராவணன்வதைப். 61);.

க. அந்து ; தெ. அடு ; து. அஞ்ச.

     [அ → அன் → அனை → அனைத்து → அந்து = அவ்வளவு, அப்படி.]

 அந்து andu, பெ. (n.)

   நெற்பூச்சி; a small greywinged insect found in stored paddy (செ.அக.);.

     “அந்துகடி துண்டுபோய கதிர்நெல்லும்” (பிரபோத, 19 ; 6);. ‘அந்துாது நெல்லானேன்’ (பழ.);.

— a small insect that causes damage to stored paddy or other grains, Weevil (சா.அக.);.

க. அந்தி

 அந்து andu, பெ. (n.)

   மொத்தக் கூட்டுத் தொகை (இ.வ.);; total, aggregate (Loc.);.

தெ. அந்து

     [ஒருகா. அனைத்தும் → அந்தும் → அந்து = அவ்வளவும், முழுதும்.]

 அந்து andu, பெ. (n.)

   கணுக்கால் வளை (பாத கிண்கிணி); (நாநார்த்து.);; anklet.

     [Skt. andu → த. அந்து.]

அந்துகம்

அந்துகம் antukam, பெ. (n.)

   1. வீரக்கழல்; anklet

   2. யானை கட்டும் இரும்புத் தொடரி (சங்கிலி);; chain used to fasten the leg of elephant.

     [அத்து(தொடு, சேர்);-அந்து-அந்துகம்]

 அந்துகம் andugam, பெ. (n.)

   யானைத் தொடரி (R);; chain for an elephant’s leg.

     [Skt anduka → த. அந்துகம்.]

அந்துக்கண்ணி

 அந்துக்கண்ணி andukkaṇṇi, பெ. (n.)

   புளிச்சைக்கண்ணி; blear-eyed, ill-looking girl or woman.

     ‘அந்துக்கண்ணிக்கு அழுதாலும் வாரான் அகமுடையான்’ (பழ.);.

     [அந்து + கண்ணி.]

அந்துதிம்

 அந்துதிம் andudim, பெ. (n.)

   வாகை மரம்; a tree, Acacia sirissa (சா.அக.);.

அந்துப்போதிகை

அந்துப்போதிகை anduppōtigai, பெ. (n.)

   யானையின் பின்காற் தொடரி (சங்கிலி); கட்டுங் குறுந்தறி; stake for fastening the hind leg chain of an elephant.

     “அடுகளி றந்துப் போதிகை பரிந்து” (சீவக. 1831.);.

     [அந்து + போதிகை.]

     [Skt. andu → த. அந்து.]

அந்துளியிற்துளியா-தல்

அந்துளியிற்துளியா-தல் anduḷiyiṟtuḷiyātal,    4 செ.கு.வி. (v.i)

   1. தலை சுழலுதல்; to suffer from vertigo.

   2. பதைபதைத்தல்; to throb with pain, shiver with fear or grief.

–, 4 செ.குன்றாவி. (v.t);

   சூறையாடல்; to plunder, pillage.

அந்துவஞ்செள்ளை

 அந்துவஞ்செள்ளை antuvañceḷḷai, பெ. (n.)

   தகடுர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையின் மனைவி; name of chera queen and wife of the chera king. tagadurerindaperuncérall frumpora.

     [அந்துவன்+செள்ளை]

மையூர் (மைசூர்); கிழான் மகளாகிய அந்துவஞ்செள்ளை அந்துவன் மரபைச் சார்ந்தவள்.

அந்துவன்

அந்துவன் antuvaṉ, பெ. (n.)

   அண்ணன், மூத்தவன்; elder person,

   2.அழகியவன்; smart person, beloved person.

   3.நெருங்கியவன்; a close friendly person.

அந்துவற்கொரு தந்தை ஈன்ற மகன்(பதிற்.);

தஅந்து(சேர்தல்);து அந்தப்ப, அந்தய்ய,

ம.அந்திக்க-(அருகில்);அந்தி தமக்கை.

     [அண்(மேல்);+து-அந்து+அன்-அந்துவன்(மேலோன்,உயர்ந்தவன்);]

அந்துவாசம்

 அந்துவாசம் anduvācam, பெ. (n.)

   கொட்டைப் பாசி (வை.மூ.);; a kind of moss.

அந்தூல்பல்லக்கு

அந்தூல்பல்லக்கு andūlpallakku, பெ. (n.)

   பல்லக்கு வகை (தக்ஷிண. இந். சரித். 444);; a kind of palanquin.

     [அந்தூல் + பல்லக்கு.]

     [Skt andola → த. அந்தூல்.]

பல் → பல்லக்கு.

அந்தேசம்

 அந்தேசம் andēcam, பெ. (n.)

   வழி (கதி);யின்மை (யாழ்ப்.);; extremity, great straits.

அந்தேசாதிகம்

 அந்தேசாதிகம் andēcātigam, பெ. (n.)

   தேற்றா (விதை); மரம்; water clearing nut tree, Strychnos potatorium (சா.அக.);.

அந்தேசாதிம்

 அந்தேசாதிம் andēcātim, பெ. (n.)

அந்தே சாதிகம் பார்க்க;see andé-sadigam (சா.அக.);.

அந்தேசாலம்

 அந்தேசாலம் andēcālam, பெ. (n.)

   தேற்றா மரம் (பச்.மூ.);; clearing nut tree.

அந்தேசோலிகம்

 அந்தேசோலிகம் andēcōligam, பெ. (n.)

   சிறு எழுத்தாணிப் பூடு; a plant with flowers like a style or style plant, Prenanthes sarmentosa (சா.அக.);.

அந்தை

அந்தை andai, பெ. (n.)

   ஒரு பழைய நிறைவகை (தொல். எழுத்து. தொகை 28, நச். உரை);; an ancient standard weight.

     [ஒருகா. அண்டை → அந்தை.]

அந்தைமந்தை

 அந்தைமந்தை andaimandai, பெ. (n.)

   மந்த குணம்; sluggishness, dull nature (சா.அக.);.

அந்தோ

அந்தோ andō, இடை. (int.)

   1. வியப்புருக்கக் குறிப்புச்சொல்; an exclamation of reverential wonder.

     “அந்தோவென் னாருயிரே யரசே யருள்” (திவ். பெரியதி. 7, 2;6);.

   2. இரக்கக் குறிப்புச் சொல்; an exclamation of pity.

     “பெற்றிலள் தவமந்தோ பெருநில மகள்” (கம்பரா. அயோத். வனம்புகு. 25);.

     [அத்தன் (தந்தை); → அத்தோ (விளி); → அந்தோ.]

இச் சொல் இரக்கம், துயரம், துன்பம், வியப்பு முதலிய பல குறிப்புகளை உணர்த்துமேனும், இரக்கக் குறிப்பே இதற்குச் சிறப்பாகவுரியதாம்.

ஐயோ என்னும் சொல் இரக்கம், துயரம், துன்பம், வியப்பு முதலிய பல குறிப்புகளையுணர்த்தினும், இரக்கக் குறிப்பையே சிறப்பாகவுணர்த்துதலை இதனுடன் ஒப்பு நோக்குக.

சொல்லாராய்ச்சியும் மொழியாராய்ச்சியுமில்லாத காலத்தில், நச்சினார்க்கினியரும், தெய்வச்சிலையாரும், பிறரும் ‘அந்தோ’ என்னும் குறிப்புச் சொல்லைச் சிங்களச் சொல்லென்றும் வடசொல்லென்றும் மயங்கினர். அது சிங்களத்திற்கும் வடமொழிக்கும் முந்தின குமரிநாட்டுத் தென்சொல்லென்பதை அவரறியார்.

     “நன்றீற் றேயும் அன்றீற் றேயும்

அந்தீற் றோவும் அன்னீற் றோவும்

அன்ன பிறவுங் குறிப்பொடு கொள்ளும்”

என்னும் தொல்காப்பிய நூற்பா (சொல். இடை. 34); உரையில், ‘அந்திற் றோவும் அன்னீற் றோவுமாவன; அந்தோ அன்னோ என்பன’ என்றும், ‘அடுக்கியும் அடுக்காதும் இரங்கற் குறிப்பு வெளிப்படுக்கும்’ என்றும், சேனாவரையர் கூறியிருத்தல் காண்க.

தமிழிலுள்ள இரங்கல் துயர துன்ப வியப்புக் குறிப்புச் சொற்களுட் பெரும்பாலன பெற்றோர் முறைப்பேயரின் விளிகள் என்னும் உண்மையை அறியின், அந்தோ

அன்னோ முதலிய குறிப்புச் சொற்களின் மூலம் வெள்ளிடைமலையாய் விளங்கும்.

     [அத்தன் → அத்தோ → அந்தோ, அத்தன் → அத்த → அந்த → அந்தவோ → அந்தகோ. அத்தோ → அச்சோ. அன்னை → அன்னோ.]

அத்த பார்க்க;see anda’.

 அந்தோ andō, இடை. (int.)

   கவனிக்கச் செய்யுஞ் சேய்மைச்சுட்டுக் குறிப்பு; remote demonstrative.

   அந்தோ பார்; behold there!

     [அ அது அத்து அந்து அந்தோ. ஒ.தோ; அதோ.]

அந்தோட்டம்

அந்தோட்டம் andōṭṭam, பெ. (n.)

   1. இதழி லுண்டாகும் புண்; a sore on the lip due to the disease, as in thrush, Labiomycosis.

   2. இதழ் வெடிப்பு; a crack or fissure in the lip (சா.அக.);.

அந்தோமா

 அந்தோமா antōmā, கு.வி.எ. (ap.adv.)

   அந்தப் பக்கமாக. (இ.வ.);; that side.

     [அந்த+ஒரமாக]

அந்தோர்

 அந்தோர் andōr, பெ. (n.)

   நெல்லி (மலை.);; emblic myrobalan (செ.அக.); -– (சா.அக.);

 Endian gooseberry tree, Phyllanthus emblica.

அந்தோளகம்

அந்தோளகம் antōḷakam, பெ. (n.)

   பல்லக்கு; palanquin.

     “பகல் விளக்கும் பாவாடையும் அந்தோளகமும் குடையும்” (El.iii,11.);.

     [அந்தோள்+அகம்]

அந்நகத்தி

 அந்நகத்தி annagatti, பெ. (n.)

   வயிற்றுளைவு; a flux in which the stools consist chiefly of blood and mucus, accompanied with griping of the bowels, Dysentery (சா.அக.);.

அந்நகோடகன்

 அந்நகோடகன் annaāṭagaṉ, பெ. (n.)

   கதிரவன்; the sun. (சா.அக.);.

அந்நசலம்

 அந்நசலம் annasalam, பெ. (n.)

அன்னசலம் பார்க்க;see anna-salam.

     [அந்ந(ம்); + சலம்.]

     [Skt. anna → த. அந்ந(ம்);.]

அந்நபேதி

 அந்நபேதி annapēti, பெ. (n.)

அன்னபேதி பார்க்க;see anta-bedi.

     [Skt. anna + bhedin→ த. அந்நபேதி.]

அந்நியதீபம்

 அந்நியதீபம் anniyatīpam, பெ. (n.)

   கடைநிலைவிளக்கு என்னும் அணி;     [அந்திய + தீபம்.]

     [Skt. antya → த. அந்தியம்.]

த. தீவம் → Skt. dipa → த. தீபம்.

அந்நியன்

அந்நியன் anniyaṉ, பெ. (n.)

   1. அறிமுகம் இல்லாதவன், வேற்றாள்; a stranger.

     ‘அந்நியர்கள் முன்பாகவும் இந்த மாதிரி பேசுகிறாரே’.

   2. இனத்தாலோ, மதத்தாலோ, நாட்டாலோ வேறுபட்டவன்; one who is an alien, foreinger.

     ‘கோயில் கருவறையின் உள்ளே அந்நியர் நுழைய அனுமதி இல்லை’.

த.வ. அயலான்.

     [Skt. anya → த. அந்நியன்.]

அந்நியபுட்டம்

 அந்நியபுட்டம் anniyabuṭṭam, பெ. (n.)

   குயில்; a well known bird with a melodius Voice, Indian cuckoo (சா.அக.);.

அந்நியமாதல்

 அந்நியமாதல் anniyamātal, பெ. (n.)

   தொடர்பில்லா நிலை; alienation.

த.வ. அயலாதன்.

     [அந்நியம் + ஆதல்.]

     [Skt. a-nya →த. அந்நியம் ஆ → ஆதல்.]

அந்நியம்

அந்நியம் anniyam, பெ. (n.)

   1. தனதல்லாதது, தனக்குரிமை இல்லாதது; that which is not one’s own, that which is alien.

     ‘அந்நிய நாடு’.

   2 ஒருவருக்குத் தொடர்பு இல்லாதது; that which has no relation.

     ‘பெண் சொந்தமா, அந்நியமா?’.

     [Skt. a-nya → த. அந்நியம்.]

 அந்நியம் anniyam, பெ. (n.)

அந்நியபுட்டம் பார்க்க;see anniya-putam (சா.அக.);.

அந்நியாயகாரி

அந்நியாயகாரி anniyāyakāri, பெ. (n.)

   தீங்கிழைப்போன்; treacherous person, as sinner.

     “அந்நியாய காரிகளாய்ப் போந்த இவர்கள்” (s. i.i. iv. 140.);.

     [Skt. a-nyaya-karin → த. அந்நியாயகாரி.]

அந்நியேத்துகவாதம்

 அந்நியேத்துகவாதம் anniyēttugavātam, பெ. (n.)

   உணவின் குற்றத்தினாற் பிறந்து, தோள், முதுகு, கழுத்து, தலை, விலா ஆகிய இவ்விடங்களில் பரவிப் பித்தத்துடன் கூடி, ஒரு நாள் விட்டு மறுநாளில் துன்பத்தை உண்டாக்கிக் காய்ச்சல், வேட்கை முதலிய குணங்களையுமுண்டாக்கும் ஒர் ஊதை நோய்; a disease of the nervous system marked by perplexity, fever, swoon, thirst etc., is occurs every alternate day and is due to the deranged condition of ‘vayu’ which extends through the neck, the head or the ribs, arises from incompatible articles of diet (சா.அக.);.

அந்நீர்

அந்நீர் annīr, பெ. (n.)

   1. நாரி சுக்கிலம்; a fluid discharge from the vagina.

   2. தேங்கிய நீர்; stagnant water or water spoiled from long keeping (சா.அக.);.

அனகன்

அனகன் aṉagaṉ, பெ. (n.)

   1. கடவுள் (கந்தபு. தெய்வ. 208);. 208);; God, as the sinless one, Brahman, Šivan, Arhat.

   2. அழகுள்ளவன் (கம்பரா. நீர்விளை. 1);; handsome man.

     [Skt. an-agha → த. அனகன்.]

அனகம்

அனகம் aṉagam, பெ. (n.)

   புல்லுருவி (மலை.);; species of Loranthus, a parasitic plant.

     [ஒருகா. அல் → அன் (அல்லாத); → அகம் (இடம்);. தனக்குரியதல்லாத இடத்தில் வளர்வது.]

 அனகம் aṉagam, பெ. (n.)

   கரிச (பாவம);ற்றது: குற்றமற்றது; sinless, pure.

     “அனகமா நெறிபடரடிகள்” (கம்பரா. சடாயுவுயிர். 39);.

     [Skt. an-agha → த. அனகம்.]

அனக்குடி

 அனக்குடி aṉakkuṭi, பெ. (n.)

   கும்பகோணம் வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Kumbakkaaaam Taluk.

     [அணை+குடி]

அனசனம்

அனசனம் aṉasaṉam, பெ. (n.)

 ceremony of fasting, preliminary to giving up one’s life.

     “அண்ண லணசனத் தவமமர்ந்தான்’ (யசோதர. 1,20);.

     [Skt. an-ašana → த. அனசனம்.]

அனசனவிரதம்

 அனசனவிரதம் aṉasaṉaviradam, பெ. (n.)

அனவனம் பார்க்க; see anašaam.

     [Skt. an-asana + விரதம் → த. அனசன விரதம்.]

அனத்தம்

அனத்தம் aṉattam, பெ. (n.)

   1. பயனற்றது; that which is worthless, useless.

     “அனத்தமான வுள்ளந்தான” (ஞானவா. உபசாந். 11);.

   2. பொல்லாங்கு; evil, Calamity.

     “அனத்தக் கடலுளழுந்தி” (திவ். பெரியாழ். 5,3,7);.

     [Skt. an-artha → த. அனத்தம்.]

அனந்தசயனன்

அனந்தசயனன் aṉandasayaṉaṉ, பெ. (n.)

   திருமால் (திவ். பெரியாழ். 1,7,2);; Tirumal, as reclining on adisesan.

த.வ. அரவத்துயிலோன், பாம்பனையான்.

     [Skt.an-anta+sayana → த. பாம்பணையான்.]

அனந்தசயனம்

அனந்தசயனம் aṉandasayaṉam, பெ. (n.)

   1. திருமாலின் பாம்புப் படுக்கை; couch of Tirunal consisting of the coils of adsesan.

   2. திருவனந்தபுரம்:

 Trivandrum, as the seat of the shrine wherein Tirunal is represented as reclining on the serpent ădisésan.

த.வ. அரவத்துயில்.

     [Skt. ar-anta+sayana → த. அனந்தசயனம்.]

அனந்தசுகம்

அனந்தசுகம் aṉandasugam, பெ. (n.)

   கடையிலாவின்பம் (சீவக. 2846, உரை);; limitless bliss.

     [Skt. an-anta+sukha → த. அனந்தசுகம்.]

அனந்தஞானம்

அனந்தஞானம் aṉandañāṉam, பெ. (n.)

   கடையிலாவறிவு (சீவக.2846, உரை);; limitless knowledge.

     [Skt. an-anta+nana → த. அனந்தஞானம்.]

அனந்தஞானி

 அனந்தஞானி aṉandañāṉi, பெ. (n.)

   அருகன் (சூடா.);; Arhat, as all-knowing.

 Skt. an-anta+nani → த. அனந்தஞானி.]

அனந்ததரிசனம்

அனந்ததரிசனம் aṉandadarisaṉam, பெ. (n.)

   கடையிலாக் காட்சி (சீவக. 2846, உரை);; limitless vision.

     [Skt. ananta + darsana → த. அனந்த தரிசனம்.]

அனந்தன்

அனந்தன் aṉandaṉ, பெ. (n.)

   1. கடவுள்; God, as the endless one.

   2. திருமால்; Tirumal.

   3. சிவன்; Sivan.

   4. நான்முகன்; Brahman.

   5. (அருகன்); சமணன்; Arhat.

   6. (அஷ்டமநாகம்); எண் வகை பாம்புகளுளொன்று (பிங்.);; a serpent which supports the earth in the South-East, one of asgamச்-magam, q.v.

   7. திருமாலின் பாம்பணை (ஆதிசேடன்); (திவ். பெரியாழ். 5, 4, 8);; Adisésar, couch of Tirumal.

   8. பதஞ்சலி (கோயிற்பு. நடரா. 37.);; the grammarian patanjali.

   9. ஒருவகைப் பிறவி நஞ்சு (மூ.அ.);; a prepared arsenic.

அனந்தம்

அனந்தம் aṉandam, பெ. (n.)

   1. அளவின்மை (திவா.);; limitlessness, infinity

   2. அளவற்றது (பிங்.);; that which is boundless.

   3. வானம் (பிங்.);; sky, atmosphere.

   4. ஒரு பேரெண் (வின்.);; a hundred-thousand quadrillions.

     [Skt. an-anta → த. அனந்தம்.]

அனந்தரம்

 அனந்தரம் aṉandaram, பெ. (n.)

   வேலிப்பருத்தி (பச்.மு.);; species of doemia.

அனந்தர்

அனந்தர்1 aṉandar, பெ. (n.)

   1. தூக்கம்; sleep.

     “மோக வனந்தர் முயல்வோர்க்கு” (ஞானா. 62:23);.

   2. மயக்கம்; drowsiness, stupor, loss of consciousness, inebriety.

     “அனந்தர் நோக்குடைக்……………கடைசி மங்கையர்” (சீவக. 1249);.

   3. தூக்கத்தின்பின் விழிப்பு; waking.

     “கட்டுயி லனந்தர்போல்” (சீவக. 1097);.

   4. மனத்தடுமாற்றம்; confusion of mind.

     ‘மனங்கொள்ளா அனந்தருள்ள முடை யாளாய்’ (தொல். பொருள். கள.11, உரை);.

   5. பித்து; bile (சா.அக.);.

     [அனந்தல் → அனந்தர்.]

 அனந்தர்2 aṉandar, பெ. (n.)

   பருத்தி (மலை);; cotton-plant.

 அனந்தர் aṉandar, பெ. (n.)

 Arhat, one of the twenty-four tirttafikarar, q.v.

     [Skt. an-anta → த. அனந்தர்.]

அனந்தலோசனன்

 அனந்தலோசனன் aṉandalōcaṉaṉ, பெ. (n.)

   புத்தன் (திவா.);; Buddha, as having a limitless number of eyes.

     [Skt. an-anta-lõcana → த. அனந்த லோசனன்.]

அனந்தல்

அனந்தல் aṉandal, பெ. (n.)

   1. தூக்கம்; sleep, slumber.

     “அனந்த லாடேல்” (ஆ.சூ. 31);.

   2. மயக்கம்; drowsiness, stupor.

     “பழஞ் செருக் குற்றநும் மனந்த றீர” (மலைபடு. 173);.

   3. மந்தவொலி; low tone, soft mournful sound, as of a drum.

     “எடுத்தெறி யனந்தற் பறை” (புறநா. 62:5); (சா.அக.);.

   4. சிறு தூக்கம்; a soft or gentle sleep, especially in the morning.

   5. மதம்; an extravagant sexual passion too strong to be controlled, infatuation.

அனந்தாழ்வான்

 அனந்தாழ்வான் aṉandāḻvāṉ, பெ. (n.)

   ஆதிசேடன்; the serpent adisésar.

     [அனந்தன் + ஆழ்வான்.]

     [Skt. an-anta → த. அனந்தன்.]

அனந்தை

அனந்தை1 aṉandai, பெ. (n.)

   1. சிறுகாஞ்சொறி (நாநார்த்த.);; small climbing nettle.

   2. நன்னாரி (நாநார்த்த.);; Indian sarasaparilla,

   3. குப்பைமேனி (நாநார்த்த.);; Indian acalpha.

   4. அறுகு (நாநார்த்த);; harial grass.

   5. கடுமரம் (நாநார்த்த.);; chebulic myrobalan.

   6. சீந்தில் (நாநார்த்த);; Gulancha.

   7. செங்காந்தள் (நாநார்த்த.);; red species of malabar glory-lily.

   8. பதினாறு கலையுளொன்றான ஒகநிலை (தத்துவப். 142);;     [Skt. an-antā → த. அனந்தை.]

 அனந்தை2 aṉandai, பெ. (n.)

   உலகம்; world.

த.வ. மண்ணகம்.

     [Skt. an-antä → த. அனந்தை.]

அனன்னியம்

அனன்னியம் aṉaṉṉiyam, பெ. (n.)

   வேறன்மை; identical thing.

     “கடத்தொடு மட் கனன்னியம்” (வேதா. சூ. 127);.

     [Skt. an-anya → த. ஆனன்னியம்.]

அனன்னியார்கம்

அனன்னியார்கம் aṉaṉṉiyārkam, பெ. (n.)

   வேறொருவருக்கு உரிமையாகாமலிருப்பது (திவ். திருவாய். 6,1,1, பன்னீ.);; that on which none else has a claim.

     [Skt. an-anya+arha → த. அனன்னியார்கம்.]

அனபை

அனபை aṉabai, பெ. (n.)

   ஒரு வேள்வி (விதான. சாதக. 23);; configuration of the planets in which the favourable planets occupy the 12th place from the moon.

     [Skt. anaphå → த. அனபை.]

 Gr. anaphä.

அனம்பு

அனம்பு aṉambu, பெ. (n.)

   1. வானம்பாடி; Indian skylark.

   2. நீரில்லாதது; that which is deprived of Water.

     [அல் → அன் (எ.ம. மூன்.); + அம்பு (நீர்);.

     [P]

அனயகம்

அனயகம் aṉayagam, பெ. (n.)

   1. இருள்வாசி (இருவாட்சி); (வை.மு.);; tuscan jasmine.

   2. மல்லிகை; jasmine.

அனயம்

அனயம் aṉayam, பெ. (n.)

   1. தீவினை; evil deed.

   2. கடுந்தொல்லை; danger.

   3. தீயது; inauspiciousness.

   4. துன்பம்; misery.

த.வ. மங்கலமின்மை.

     [Skt. a-naya → த. அனயம்.]

அனரவன்

அனரவன் aṉaravaṉ, பெ. (n.)

   1. வெண்காந்தள்; white species of Malabar glory-lily (W);.

   2. செங்காந்தள்; Malabar glory-lily (L.);.

   3. ஐம்புன் நஞ்சு (பஞ்சபட்சி பாடாணம்); ; a prepared arsenic (R.);.

     [ஒருகா. அனல் → அனலவன் → அனரவன்.]

அனர்த்தம்

அனர்த்தம் aṉarttam, பெ. (n.)

   1. பொருளற்றது (திவா.);; that which is without meaning, nonsense.

   2. பயனற்றது; worthless, useless.

     “அருந்தங்க ளனர்த்த மாகும்” (ஞானவா. வீமபா. 5);.

   3. துன்பம்; calamity, evil.

     “பிறவியான வனர்த்தத்தில்” (ஞானவா. வைராக். 28);,

   4. குழப்பம்; muddle.

     [Skt. an-artha → த. அனர்த்தம்.]

அனர்வன்

 அனர்வன் aṉarvaṉ, பெ. (n.)

அனரவன் பார்க்க;see anaravan.

அனற்கண்

அனற்கண் aṉaṟkaṇ, பெ. (n.)

   1. சிவந்த கண் (சா.அக.);; red or blood-shot eye.

   2. சினக்கண்; fiery eye indicating anger.

   3. அழற்சியினாற் சிவந்த கண்; inflamed eye.

க. அனலகண்

     [அனல் + கண்.]

அனற்கண்டர்

 அனற்கண்டர் aṉaṟkaṇṭar, பெ. (n.)

   துரிசு; plue vitriol, copper acetate (சா.அக.);.

     [அனல் + கண்டர்.]

அனற்கண்பார்வை

அனற்கண்பார்வை aṉaṟkaṇpārvai, பெ. (n.)

   1. நடைமிகையால் ஏற்படுங் கண்ணழற்சி (சா.அக.);; inflammation of the eye due to heatin the system caused by excessive working.

   2. சினப்பார்வை; fiery look (சா.அக.);.

     [அனல் + கண் + பார்வை. பார் → பார்வை. ‘வை’ தொ.பெ. ஈறு.]

அனற்கல்

அனற்கல் aṉaṟkal, பெ. (n.)

   தீயுரசிக்கல் (சக்க முக்கிக்கல்); (தைலவ. தைல. 127);; lint.

     [அனல் + கல்.]

அனற்குவை

 அனற்குவை aṉaṟkuvai, பெ. (n.)

   நெருப்பிடு கலம் (பிங்.);; fire pan.

     [அனல் + குவை. குவி → குவை. ‘ஐ’ தொ. பெ. ஈறு.]

அனற்சுக்கிரன்

அனற்சுக்கிரன் aṉaṟcukkiraṉ, பெ. (n.)

   1. கண்ணில் வெள்ளை விழும் நோய்வகை; a disease causing white speck in the eye.

   2. கருவிழியில் நெருப்பைப்போற் காந்தலையுண்டாக்கும் கண்ணோய்வகை; inflammation of the cornea of the eye attended with burning sensation, Keratitis (சா.அக.);.

     [அனல் + Skt. §ukra → த. சுக்கிரன் = வெள்ளி (venus);.]

அனற்சுண்ணம்

 அனற்சுண்ணம் aṉaṟcuṇṇam, பெ. (n.)

   பிரண்டைத்தூள், சதுரக்கள்ளிப்பட்டை, உப்பு முதலிய சரக்குகளைச் சேர்த்துப் பொடி செய்து, மேனோக்கும் வளி (வாயு);, காமாலை முதலிய நோய்களுக்குக் கொடுக்குஞ் சுண்ணம் (சூரணம்);; a powder made of adamant creeper, bark of square spurge, common salt, etc., and prescribed for dyspeptic complaints or gastric troubles, jaundice, etc.

     [அனல் + சுண்ணம்.]

சுண்ணம் பார்க்க;see šuņņam.

அனற்சுரம்

 அனற்சுரம் aṉaṟcuram, பெ. (n.)

   உடம்பில் நெருப்பைப்போற் சூட்டையுண்டாக்குங் காய்ச்சல்நோய்; burning fever, Hyperpyrexia.

     [அனல் + சுரம்.]

அனற்பொறி

 அனற்பொறி aṉaṟpoṟi, பெ. (n.)

   தீப்பொறி (திவா.);; spark of fire.

     [அனல் + பொறி.]

அனற்றாகம்

 அனற்றாகம் aṉaṟṟākam, பெ. (n.)

   அனலினால் ஏற்படுந் தாகம்; thirst arising from intense heat of the surroundings or of the body.

     [அனல் + தாகம்.]

தாகம் பார்க்க;see tagam.

அனற்றிராவகம்

 அனற்றிராவகம் aṉaṟṟirāvagam, பெ. (n.)

   அனலிறக்கியம் (அக்கினித் திராவகம்);; nitrous acid (சா.அக.);.

     [அனல் + Skt. drävaka → த. திராவகம்.]

அனற்று-தல்

அனற்று-தல் aṉaṟṟudal,    5 செ.குன்றாவி, (v.t.)

   1. சுடுதல், சூடுண்டாக்குதல்; to heat, make hot.

வெயில் உடம்பை அனற்றுகிறது.

   2. எரித்தல்; to burn, consume with fire.

     “அனற்றினா னல்ல னென்றிக் காலத்தும் வெறுத்தார்” (காஞ்சிப்பு. கழுவாய். 179);.

   3. கடுஞ்சூட்டினால் உடம்பு காய்தல்; to affect with excessive heat, as in fever, used impersonally.

காய்ச்சல் உடம்பை அனற்றுகிறது.

   4. வயிறுளைதல்; to affect with colic pains used impersonally.

எனக்கு வயிற்றை அனற்றுகிறது.

   5. சினத்தல்; to be angry with.

     “குமரனை யனற்று மாற்றலர்” (சூளா. அரசியற். 89);. 6. வீணாகவுதவுதல்;

 to give in vain, as to a worthless person or for a useless purpose.

ஐம்பது உருபா உனக்கு (அதற்கு); அனற்றினேன்.

-, 5 செ.கு.வி. (v.i.);

   முணங்குதல்; to moan, groan with pain (W.);.

     [அனல் (த.வி.); → அனற்று (பி.வி.);.]

அனலசம்

 அனலசம் aṉalasam, பெ. (n.)

   பேய்க்கொம்மட்டி (பச்.மு.);; colocynth (செ.அக.); – bitter apple, Cucumis colocynthus (சா.அக.);.

     [ஒருகா. அனல் + அசம்.]

அனலடுப்பு

அனலடுப்பு aṉalaḍuppu, பெ. (n.)

   கூண்டடுப்பு (இந்துபாக. 68);; covered brick-oven for baking bread and biscuits.

     [அனல் + அடுப்பு. அடு → அடுப்பு.]

அனல் பார்க்க;see anal.

அனலதீபனம்

 அனலதீபனம் aṉalatīpaṉam, பெ. (n.)

   பசியையுண்டாக்குவது; that which excites hunger, Stomachic (சா.அக);.

     [அனல் → அனலம். Skt. dipana → த. தீபனம்.]

அனலநட்சத்திரம்

 அனலநட்சத்திரம் aṉalanaṭcattiram, பெ. (n.)

     [அனல் → அனலம் + Skt. naksatra → த. நட்சத்திரம் = நாண்மீன், வெள்ளி.]

அனலன்

 அனலன் aṉalaṉ, பெ. (n.)

   நெருப்புத் தேவன்; god of fire.

ம. அனலன்

     [அனல் → அனலன். ‘அன்’ ஆ.பா. ஈறு.]

அனலபித்தம்

 அனலபித்தம் aṉalabittam, பெ. (n.)

   சூட்டினால் உடம்பு முழுதுந் தடிப்புண்டாகித் தூக்கம் வராமை, தலைவலி, வயிற்றுச்சூலை, நாவில் திமிர், படலமெழும்பல், விக்கல், இளைத்தல், களைப்பு, தாகம், கால்நோய் முதலியவற்றையுண்டாக்கும் ஒருவகைப் பித்தநோய்; a disease caused by the deranged pittam, and attendèd with the following symptoms: thick patches all over the body, sleeplessness, head-ache, piercing pain in the stomach, loss of sensation in the tongue, eruptions, hiccough, emaciation, fatigue, thirst, pain in the legs, etc. (சா.அக.);.

     [அனல் → அனலம். பித்து → பித்தம்.]

அனலமுரி

 அனலமுரி aṉalamuri, பெ. (n.)

   அமுரியுப்பு; uric salt (சா.அக.);.

     [அனல் + அமுரி, உவரி → உமரி → அமரி → அமுரி.]

அனலம்

அனலம் aṉalam, பெ. (n.)

   1. நெருப்பு; fire.

     “அனங்கா னலம்” (தஞ்சைவா. 39);.

   2. வெப்பம்; heat.

   3. செரிக்குந்திறன்; digestive power.

   4. செரிநீர்; gastric juice.

   5. பித்தம்; bile.

   6. சேரான்கொட்டை; dhoby nut, Semicarpus anacardium.

   7. கொடுவேலி (தைலவ. தைல. 135);; Ceylon leadwort –

   சித்திர மூலம்; Ceylon leadwort, Plumbago zeylanica (சா.அக.);.

   8. அனல நாண்மீன் (நட்சத்திரம்); (விதான, குணாகுண. 40);; the 7th, 14th, 16th and 25th lunar asterisms counted from the lunar asterism occupied by Mars.

ம. அனலம்

     [அனல் → அனலம். ‘அம்’ (பெ.பொ.பின்.);.]

அனலாடி

அனலாடி aṉalāṭi, பெ. (n.)

   சிவன்;Śiva who is holding fire in the hand while dancing.

     “போருலவு மழுவான் அனலாடி” (தேவா. 1. 29:6); ;

     [அனல் + ஆடி. ஆடு → ஆடி. ‘இ’ வி.முத. ஈறு.]

அனலாற்றி

அனலாற்றி aṉalāṟṟi, பெ. (n.)

   1. உடம்பிலுள்ள வெப்பத்தைத் தணிக்கும் பொருள் (சா.அக);; anything that can subside the heat in the system.

   2. காய்ச்சலைத் தணிக்கும் மருந்து; a remedy that allays fever, Febrifuge.

   3. தண்ணிர்; water (சா.அக.);.

     [அனல் + ஆற்றி. ஆறு (த.வி.); → ஆற்று (பி.வி.); → ஆற்றி. “இ” வி.முத.ஈறு.]

அனலி

அனலி aṉali, பெ. (n.)

   1. நெருப்பு; fire.

     “அனலியுண்ண விடுவனோ” (கந்தபு. யுத்த. அக்கினி. 197);.

   2. கதிரவன் (பிங்.);; the Sun.

க. அனலு; Skt. anala.

     [அனல் → அனலி. ‘இ’ உடைமை குறித்த வி.முத. ஈறு.]

அனலிமுகம்

 அனலிமுகம் aṉalimugam, பெ. (n.)

   கதிரவப் புடம் (சூரியபுடம்); (மு.அ); ; exposure of certain substances to the Sun in the preparation of medicines.

     [அனல் → அனலி = கதிரவன். ‘இ’ வி.முத. ஈறு. முகம் = முகம்நோக்க வைத்தல்.]

அனலுக்குளசையாச் சூதகத்தி

அனலுக்குளசையாச் சூதகத்தி aṉalugguḷasaiyāssūtagatti, பெ. (n.)

   சுணங்கன் மரம், 21 மா (மகா); மூலிகைகளுள் ஒன்று; an unknown or unidentified tree supposed to be fire-proof, providing one of the 21 invaluable drugs used by Siddhars for purposes of rejuvenation.

     [அனல் → அனலுக்கு (4ஆம் வே.); + உள் (7ஆம் வே.உ.); + -அசையா (ஈ.கெ.எ.ம.பெ.எ.); + சூதகத்தி. அசை → அசையாத → அசையா. சூதகத்தி – சூது + அகத்தி அல்லது சூத + அகத்தி.]

அனலுண்ணி

 அனலுண்ணி aṉaluṇṇi, பெ. (n.)

   தீக்கோழி; ostrich.

     [அனல் + உண்ணி. உண் → உண்ணி. ‘இ’ வி.முத. ஈறு.]

அனலேறு

 அனலேறு aṉalēṟu, பெ. (n.)

   இடி (சூடா.);; thunder bolt.

     [அனல் + ஏறு (ஏறுவது, மேல்விழுவது);. ‘ஏறு’ முத.தொ.ஆ.கு.]

அனலோடுவேந்தன்

 அனலோடுவேந்தன் aṉalōṭuvēndaṉ, பெ. (n.)

   கார்முகில் நஞ்சு (பாடாணம்);; a mineral poison (W.);.

     [அனல் + ஓடு + வேந்தன். ‘ஓடுவேந்தன்’ வினைத்தொகை. வேந்தன் = வேந்தன் போன்றது.]

அனல்

அனல் aṉal, பெ. (n.)

   1. தீ (பிங்.); ; fire

   2. வெப்பம்; heat, as of fever, warmth, glow.

   3. இடி; thunderbolt.

     “பைம்புனலோ டனலக மடக்கி” (இரகு. ஆற்று. 4);.

   4. வன்னியிலை; the leaf of the vanni tree, suma tree, Prosopis spicigera (சா.அக.);.

   5. உயிர்த் துன்பங்களுள் ஒன்று; one of the several troubles attributed to life (சா.அக.);.

   6. பித்தம்; bile (சா.அக.);.

   7. கொடுவேலி (தைலவ. தைல. 129);; Ceylon leadwort.

ம. அனல் ; க. அனல ; தெ. அடரு (துன்பம்); ; து. அர்லு ; துட. அச் ; பட அனலு.

 Skt., Sinh., Mar. anala ; Pers. ãdar.

     [உல் → உல → உலை. உல் → அல் → அன் → அனல்.]

அனல்(லு)-தல்

அனல்(லு)-தல் aṉalludal,    13 செ.கு.வி. (v.i)

   அழலுதல்; to burn, glow, blaze, to be hot, to cause heat, as the Sun, a fire, as fever.

     “ஊர லோவா தனன்று” (சூளா. சீய. 1.64);.

ம. அனலுக ; க. அனலு ; து. அர்லுனி.

     [உல் → உல → உலை. உல் → அல் → அன் → அனல்.]

அனல்காலி

அனல்காலி aṉalkāli, பெ. (n.)

   1. சூரியகாந்தக் கல்; sunstone (மு.அ.);.

   2. நஞ்சுள்ள சிவந்த கால்களையுடைய சிலந்திப் பூச்சி (அக்கினி பாதச் சிலந்தி);, உடம்பிற் பட்டவிடங்களிற் கொப்புளிக்கச் செய்வது; a spider with poisonous substance in its legs which causes blisters on coming into contact with human body (சா.அக.);.

     [கால் → காலி. “இ” உடைமை குறித்த வி. முத. ஈறு.]

அனல் பார்க்க;see anal.

அனல்பாலி

 அனல்பாலி aṉalpāli, பெ. (n.)

   தில்லைமரம்; blinding tree, Excoecaria agallocha.

     [அனல் = நெருப்பு, வெப்பம். பால் → பாலி. ‘இ’ உடைமை குறித்த வி.முத.ஈறு. சூட்டுக் கொப்புளங்களையுண்டாக்கும் பாலையுடையது அனல்பாலி.]

அனல்வாதம்

அனல்வாதம்1 aṉalvātam, பெ. (n.)

   1. உடம்பின் வெப்பத்தினாலுண்டாகும் ஊதை (வாத); நோய்; a nervous affection arising from too much heat in the system.

   2. மிகுந்த எரிச்சலை யுண்டாக்கும் ஊதை (வாத); நோய்; a nervous condition marked by a sensation of intense burning pain, Thermaglia (சா.அக.);.

     [Skt. Vista → த. வாதம் = காற்று, வலி (வாத); நோய்.]

அனல் பார்க்க;see anal.

 அனல்வாதம்2 aṉalvātam, பெ. (n.)

   திருஞான சம்பந்தர் மதுரையிற் சமணரை வென்ற அனற் போர் (பெரியபு. திருஞான. 779-791); ; the fire test in Madurai, in which Tiruñanašambandar won, defeating the Jains, his religious opponents.

     [Skt vada → த. வாதம் = சொற்போர்.]

அனல் பார்க்க;see anal.

அனல்வாதை

அனல்வாதை aṉalvātai, பெ. (n.)

   1. தண்டனையாக அல்லது பகைவரால் உயிருடன் எரிக்கப்படுதல்; being burnt alive, as a punishment or by enemies.

   2. வெப்பநோய் அல்லது துன்பம்; disease or suffering due to heat.

   3. எரிபசி; severe hunger.

     [Skt badha → த. வாதை = துன்பம், நோய்.]

அனல் பார்க்க;see anal.

அனல்விதை

 அனல்விதை aṉalvidai, பெ. (n.)

   நேர்வாளம்; kings’ seed, Chinese castor, Croton tiglium alias C. jamalgota or Tiglium officinalis (சா.அக.);.

     [வித்து → விதை.]

அனல் பார்க்க;see anal.

சா.அகரமுதலியில் அனல்விந்தை என்றுள்ளது. ஒருகால் அச்சுப்பிழையாயிருக்கலாம்.

நெருப்புப்போல் எரிக்குங் கடுங்கழிச்சல் மருந்தாதலால், நேர்வாளம் அனல்விதையெனப்பட்டது.

அனல்விரை

 அனல்விரை aṉalvirai, பெ. (n.)

அனல்விதை பார்க்க;see anal-vidai.

     [விதை → விரை.]

அனல் பார்க்க;see anal.

அனல்வீசு-தல்

அனல்வீசு-தல் aṉalvīcudal,    5 செ.கு.வி. (v.i.)

   வெக்கையடித்தல்; heat being radiated, as by a flame.

அனல்வென்றி

 அனல்வென்றி aṉalveṉṟi, பெ. (n.)

   தங்கம் (மூ.அ.); ; gold, as being indestructible by fire.

     [அனல் + வென்றி. வெல் → வென்றி (தொ.பெ.); ‘தி’ தொ.பெ. ஈறு. ‘றி’ புணர்ச்சித் திரிபு. ‘அனல்வென்றி’ தொ.ஆ.கு.]

அனல் பார்க்க;see anal.

அனல்வேகியிலை

 அனல்வேகியிலை aṉalvēkiyilai, பெ, (n.)

   எருக்கிலை; madar leaf (சா.அக.);.

     [அனல் + வேகி + இலை. வேகு → வேகி. “இ” வி.முத. ஈறு.]

அனல், இலை பார்க்க;see anal, ilai.

அனாகுலன்

அனாகுலன் aṉākulaṉ, பெ. (n.)

   கவலையற்றவன்; one who is collected, self possessed, not perplexed or confused.

     “அறிவனனாகுலன்” (ஞானா. 10);.

     [Skt. anakulon → த. அனாகுலன்.]

அனாசி

 அனாசி aṉāci, பெ. (n.)

 pine-apple.

     [Port. ananas → த. அனாசி.]

அனாதி

அனாதி aṉāti, பெ. (n.)

   1. தொடக்கமில்லாதது; that which has no beginning.

   2. கடவுள்; god, who has no beginning.

   3. சிவன் (பிங்.);; Sivan.

     “அனாதியேக தத்துவ சொரூபத்தை” (தாயு. பரசிவ. 3);.

த.வ. ஏதுமிலி.

     [Skt. an-adi → தி. அனாதி.]

அனாதிகாலம்

 அனாதிகாலம் aṉātikālam, பெ. (n.)

   மிகப் பழங்காலம், நெடுங்காலம்; ancient, time immemorial.

     ‘உலகம் அனாதி காலமாகவே இருந்து வருகிறது’.

     [அனாதி + காலம்.]

     [Skt. an-adi → த. அனாதி.]

அனாதித்தரிசு

 அனாதித்தரிசு aṉātittarisu, பெ. (n.)

   நெடுங்காலம் விளைவிக்காத நிலம்; immemorial Waste land.

     [அனாதி + தரிசு.]

     [Skt. an-adi → த. அனாதி.]

அனாதித்திட்டு

 அனாதித்திட்டு aṉātittiṭṭu, பெ. (n.)

   நெடுங்காலம் பயிரிடப்படாத நிலம் (R.T.);; immemorial waste-land.

     [அனாதி + திட்டு.]

     [Skt. an-adi → த. அனாதி.]

அனாதிபாழ்

அனாதிபாழ் aṉātipāḻ, பெ. (n.)

   நெடுங்காலம் பாழடைந்துள்ள இடம்; place in ruins from time immemorial.

     “ஊற்றுக்கட்டுக் கோட்டத்து அனாதிபாழாய்க் கிடந்த ஊர்” (S.I.I. iv. 99);.

த.வ. தொன்பாழிடம்.

     [அனாதி + பாழ்.]

     [Skt. an-adi → த. அனாதி.]

அனாமத்து

 அனாமத்து aṉāmattu, பெ. (n.)

   தனிமையான; separate, not belonging to any specified item.

த.வ. தனிநிலை, கேட்பாரற்றது.

     [U. amānat → த. அனாமத்து.]

அனாமத்துச்சிட்டா

 அனாமத்துச்சிட்டா aṉāmattucciṭṭā, பெ. (n.)

   பொதுச் சிட்டை (குறிப்பேடு);; miseellaneous account note.

த.வ. பொதுச்சிட்டை

     [U. amānat-citta → த. அனாமத்துச்சிட்டா.]

சிட்டை-சிறுகுறிப்பேடு.

அனாமயன்

அனாமயன் aṉāmayaṉ, பெ. (n.)

   1. நோயற்றவன்; one not subject to disease, as God.

     “நாதனனாமயன்” (ஞானா. 48);.

   2. அருகன் (சூடா.);; Arhat.

     [Skt. an-amaya → த. அனாமயன்.]

அனாமயம்

அனாமயம் aṉāmayam, பெ. (n.)

   நோயின்மை; health, freedom from disease.

     “அசட மனாமயம்” (கைவல்ய. சந்தேக. 137.);.

     [Skt. an-åmaya → த. அனாமயம்.]

அனாயம்

அனாயம் aṉāyam, பெ. (n.)

   1. முறைகேடு; i

 njustice.

   2. வீண்; unprofitableness.

     “ஆவி யனாயமே யுகுத்தெனைய” (கம்பரா. கும்ப. 140);.

     [Skt. a-nyåya → த. அனாயம்.]

அனாயாசம்

 அனாயாசம் aṉāyācam, பெ. (n.)

   வருத்தமின்மை; absence of pain.

     [Skt. an-ayäsa → த. அனாயாசம்.]

அனாவசியம்

 அனாவசியம் aṉāvasiyam, பெ. (n.)

   தேவையற்றது; unneccessary.

த.வ. தேவையின்மை.

     [Skt. an-å-vasya → த. அனாவசியம்.]

அனி

அனி aṉi, பெ. (n.)

   1. நெற்பொரி (இராச. வைத்.);; parched rice, pop-rice.

   2. பத்தாயப் பெட்டி (இ.வ.);; large box (Loc.);.

அனிகம்

 அனிகம் aṉigam, பெ. (n.)

   சிவிகை (சூடா.);; palanquin.

     [அணிகம் → அணிகம்.]

அனிச்சநாகம்

 அனிச்சநாகம் aṉiccanākam, பெ. (n.)

   மல்லிகை; jasmine, Jasminum sambac (சா.அக.);.

அனிச்சம்

அனிச்சம்1 aṉiccam, பெ. (n.)

   மோந்தாலும் வாடும் பூவகை; flower supposed to be so delicate as to droop or even perish when smelt

     “மோப்பக் குழையு மனிச்சம்” (குறள், 90);.

ம. அனிச்சம்

 அனிச்சம்2 aṉiccam, பெ. (n.)

   வரகு; red millet (சா.அக.);.

அனிச்சி

 அனிச்சி aṉicci, பெ. (n.)

   நாகமல்லி (பச்.மு.);; singworm root.

அனிச்சை

அனிச்சை aṉiccai, பெ. (n.)

அனிச்சி பார்க்க;see anicci (மலை.);.

 அனிச்சை1 aṉiccai, பெ. (n.)

   விருப்பின்மை (வேதா. சூ. 175);; absence of desire.

த.வ. ஒவ்வாமை.

     [Skt. an-iccha → த. அனிச்சை.]

 அனிச்சை2 aṉiccai, பெ. (n.)

   பழக்கத்தின் காரணமாக அல்லது தன்னை அறியாமல் ஒரு செயலைச் செய்கிற தன்மை; that which is involuntary.

     “கண் இமைப்பது ஒரு அனிச்சைச் செயல்”

     [Skt. an-icchä → த. அனிச்சை.]

அனிஞ்சில்

 அனிஞ்சில் aṉiñjil, பெ. (n.)

   வில்வம் (சங்.அக.);; bael (செ.அக.); — Indian bael, Holy fruit tree, Aegle marmelos (சா.அக.);.

அனிட்டம்

அனிட்டம் aṉiṭṭam, பெ. (n.)

   வெறுப்பு, வெறுப்பானது; that which is indesirable, umpleasent.

     “அனிட்டநின் றகற்றி யிட்டநன் குதவி” (சிவப்பிரபந். நெடுங்கழி. 4);.

     [Skt. an-rta → அனிஷ்டம் → த. அனிட்டம்.]

அனித்தம்

அனித்தம் aṉittam, பெ. (n.)

   சந்தனம் (அக.நி.);; sandalwood tree.

அனுக்கம்2 பார்க்க;see anukkam2.

அனிருதம்

 அனிருதம் aṉirudam, பெ. (n.)

   பொய்; false hood.

     [Skt. an-rta → த. அனிருதம்.]

அனிலம்

அனிலம் aṉilam, பெ. (n.)

   1. பிறக்கை (பொதி.நி);; existence, birth.

   2. அச்சம் (அக.நி.);; fear.

அனீகினி

அனீகினி aṉīkiṉi, பெ. (n.)

   படை; army.

     “அனீகினித் தூளி” (பாரத. வாரணா. 76);.

     [Skt. anikini → த. அனீகினி.]

அனீசு

அனீசு aṉīcu, பெ. (n.)

   1. பெருஞ்சீரகம்; anise (W.);.

   2. நாண்மீன் (நட்சத்திர); சீரகம் (மூ.அ);; star-anise.

     [Fr. anis → த. அனீசு.]

அனு

அனு aṉu, பெ. (n.)

   மிகச்சிறிது; a very little thing, tiny thing.

 அனு1 aṉu, இடை.(prep.)

     ‘பின்’ எனப் பொருள் தரும் வடமொழி முன்னடைகளுலொன்று;

 a sanskrit prefix meaning after.

     [Skt. hanu → த. அனு.]

 அனு2 aṉu, பெ. (n.)

   தாடை; jaw.

     “நின்னனு வற்றிடலா லனுமனெனும் பேர்பெற்று” (உத்தரரா. அனுமப். 34);.

     [Skt. hanu → த. அனு.]

 அனு3 aṉu, பெ. (n.)

   1. மஞ்சள் (நாநார்த்த.);; turmeric.

   2. கருவி (நாநார்த்த.);; weapon.

   3. நோய் (நாநார்த்த.);; disease,

   4. இறப்பு (நாநார்த்த.);; death.

   5. நாகணம் என்னும் மணந் தரும் மரம் (நாநார்த்த.);; a tree yielding an aromatic substance.

   6. முகம் (பொதி. நி.);; face.

     [Skt. hanu → த. அனு.]

அனு க் கி ர கி – த் த ல்

அனு க் கி ர கி – த் த ல் aṉuggiragittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   அருள் செய்தல்; to show favour to, bestow grace upon, have mercy on.

     [Skt. anu-graha → த. அனுக்கிரகி-.]

அனுகதம்

அனுகதம் aṉugadam, பெ. (n.)

   தொடர்ந்து வருவது; that which follows of Comes after.

     “அணுகதமா யப்பொழுதே. பார்வைகள் வந்தடையும்”(ஞானவா.தாகுர். 21);.

     [Skt. anu-gata → த. அனுகதம்.]

அனுகம்

 அனுகம் aṉugam, பெ. (n.)

   செஞ்சந்தனம் (மு.அ.);; red sandal.

     [அனுக்கம் → அனுகம்.]

அனுகம்பம்

அனுகம்பம் aṉugambam, பெ. (n.)

   இரக்கம்; sympathy, compassion.

     “அனுகம்பம்…… உடையவரே சிறந்தார்” (சிவதரு. பல. 39);.

     [Skt. anu-kampä → த. அனுகம்பம்.]

அனுகற்பம்

அனுகற்பம் aṉugaṟpam, பெ. (n.)

   மந்தையில் இருந்து எடுத்த ஆவின் (பசுவின்); சாணத்தைக் கொண்டு முறைப்படி உண்டாக்கிய திருநீறு; generally a less stringent alternative to a rule, here applied to the sacred ashes prepared according to rule from cowdung picked up in pasture lands one of three viputi.

     “இனியனு கற்பந்தனையும் கூறுவம்” (சைவக. பொது. 179);.

     [Skt. anu-kalpa → த. அனுகற்பம்.]

அனுகாரம்

 அனுகாரம் aṉukāram, பெ. (n.)

   ஒன்றைப் போலச் செய்கை (திவ். திருப்பா. வியா. பிர.);; imitation.

     [Skt. anu-kära → த. அனுகாரம்.]

அனுகூலன்

அனுகூலன் aṉuālaṉ, பெ. (n.)

   இதமாக நடப்பவன் (திவ். பெரியாழ். 4,4,2);; one who is friendly or helpful.

     [Skt. anu-kūka → த. அனுகூலன்.]

அனுகூலம்

அனுகூலம் aṉuālam, பெ. (n.)

   1. நன்மை; good, blessing.

   2. உதவி; friendly assistance, kindness.

   3. (காரிய சித்தி); வினை கைகூடல்; success, prosperity.

த.வ. கைகூடல்.

     [Skt. anu-kula → த. அனுகூலம்.]

அனுக்கம்

அனுக்கம்1 aṉukkam, பெ. (n.)

   1. அசைவு; shaking.

   2. இசையலுக்கு; embellishment in singing or music.

   3. வருத்தம்; suffering distress, pain, grief.

     “மனமனுக்கம் விட” (கம்பரா. அயோத். கைகேயிசூழ். 56);.

   4. அச்சம்; fear (W.);.

   5. வலுக்குறைவு; weakness, as from disease, lethargy, indolence.

அனுக்கமாகப் பேசினார் (W.);.

   6. முணக்கம்; mumbling, moaning, groaning.

அனுக்கமாக வாசிக்கிறான் (வின்.);.

   7. குழந்தைநோய்; infantile sickness (ஈடு, 5. 10 : 3, ஜீ.);.

   8. பாம்பு; snake (சா.அக.);.

     [அலுங்கு → அனுங்கு → அனுக்கு → அனுக்கம் (தொ.பெ.);. அனுங்குதல் = அசைதல். அனுக்குதல் = அசைத்தல். ‘அம்’ தொ.பெ. ஈறு.]

 அனுக்கம்2 aṉukkam, பெ. (n.)

   சந்தனம் (பச்.மு.);; sandalwood tree.

அனுக்கிரகம்

அனுக்கிரகம் aṉuggiragam, பெ. (n.)

   1. அருள்; grace, mercy.

   2. (சிவனியம்); கடவுளின் ஐந்தொழில்களிலொன்று (பஞ்ச கிருத்தியம்);;த.வ. ஏற்றருளல்.

     [Skt. anu-graha → த. அனுக்கிரகம்.]

அனுக்கிரி-த்தல்

அனுக்கிரி-த்தல் aṉukkirittal,    4 செ. குன்றாவி. (v.t.)

   அருள் செய்தல்; to bless, to show favour to.

     “வேங்கட வராட்கொண் டனுக்கிரிக்க” (தெய்வச் விறலிவிடு. 29);.

     [Skt. anu-gri → த. அனுக்கிரி-.]

அனுக்கு-தல்

அனுக்கு-தல் aṉukkudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. அசைத்தல்; to shake.

   2. கொக்கான் முதலிய விளையாட்டில் தொடக்கூடாததைத் தொடுதல் (யாழ்ப்.);; to touch or strike un-designedly, as in the kokkan play (J.);.

   3. வருத்துதல்; to distress, cause to suffer, oppress.

     “மென்மருங் கனுக்குங் குன்ற வெம்முலை” (உபதேசகா. சிவவிரத. 3.81);.

   4. கெடுத்தல்; to ruin.

     “அல்லனுக்கு பன்மணிச் சிலம்பிடை” (தணிகைப்பு. நகரப். 5);.

     [அனுங்கு (த.வி.); → அனுக்கு (பி.வி.);.]

அனுக்குசிரம்

 அனுக்குசிரம் aṉukkusiram, பெ. (n.)

     [அனுக்குதல் = அசைத்தல், நடுக்குதல். ‘அனுக்குசிரம்’ வினைத்தொகை.]

சிரம் பார்க்க;see širam.

அனுங்கு-தல்

அனுங்கு-தல் aṉuṅgudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. அசைதல்; to shake.

ஒர் இலைகூட அனுங்கவில்லை.

   2. கொக்கான் முதலிய விளையாட்டில் தொடக்கூடாதது தொடப்படுதல் (யாழ்ப்.);; to be touched unawares as in the kokkan play, causing a forfeit (J.);.

   3. முணுமுணுத்தல் (யாழ்ப்.);; to mumble, mutter, moan (J.);.

   4. வருந்துதல்; to suffer pain, to be in distress.

     “பஞ்சனுங் கடியினார்” (சூளா. நகர. 25);.

     “அனுங்க வென்னைப் பிரிவுசெய்து ஆயர் பாடி கவர்ந்துண்ணும்” (திவ். நாய்ச் 638);.

   5. வாடுதல் (பிங்.);; to fade, wither, droop.

   6. கெடுதல்; to perish.

     “வாட்படை யனுங்க னேடர்” (சீவக. 436);.

   7. இழுகுதல், பின் வாங்குதல் (யாழ்ப்.);; to be reluctant, unwilling, to back away (J.);.

     [அல் → அலை → அசை. அல் → அலு → அலுங்கு → அனுங்கு.]

அனுசன்

 அனுசன் aṉusaṉ, பெ. (n.)

   தம்பி (பிங்.);; younger brother.

     [Skt. anu-ja → த. அனுசன்.]

அனுசம்

அனுசம் aṉusam, பெ. (n.)

 the 17th naksatra, part of Scorpio.

     [Skt. anu-radha → த. அனுசம்.]

அனுசயம்

அனுசயம்1 aṉusayam, பெ. (n.)

   செய்ததற்கு வருந்தும் தன்மை; repentance.

     “அனுசயப்பட்டது விதுவென்னாதே” (தேவா. 784:6);.

த.வ. கழிவிரக்கம்.

     [Skt. anu-šaya → த. அனுசயம்.]

 அனுசயம்2 aṉusayam, பெ. (n.)

   1. வழக்காடுகை; contest, objection.

   2. பெரும்பகை; feud.

   3. பின்கூறு தொடர்பகுதி; Sequel.

     [Skt. anu-šaya → த. அனுசயம்.]

அனுசரணை

அனுசரணை aṉusaraṇai, பெ. (n.)

   1. சார்ந்தொழுகுகை; following, going after.

   2. உதவி (கொ.வ.);; support, help.

     [Skt. anu-sarana → த. அனுசரணை.]

அனுசரனம்

அனுசரனம் aṉusaraṉam, பெ. (n.)

   சார்ந்தொழுகல் (கோயிலொ. 13);; folowing, going after.

     [Skt. anu-Sarana → த. அனுசரணம்.]

அனுசரி-த்தல்

அனுசரி-த்தல் aṉusarittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   1. பின்பற்றுதல்; to follow, practice.

   2. உடன்படுதல் (ஆமோதித்தல்);; to support, second.

   3. வழிபடுதல் (வின்.);; to worship, reverence.

   4. கொண்டாடுதல் (வின்.);; to celebrate, keep, as a day, observe, as a rite.

     [Skt. anu-šara → த. அனுசரி-.]

அனுசரிப்பு

அனுசரிப்பு aṉusarippu, பெ. (n.)

   1. பின்பற்றுகை; following, observing.

   2. இணக்கம்; conformity.

     [Skt. anu-šara → த. அனுசரிப்பு.]

அனுசாரி

அனுசாரி1 aṉucāri, பெ. (n.)

   பின்பற்றுவோன்; adherent, follower.

     “நேசானுசாரியாய் விவகரிப்பேன்”(தாயு. பரிபூர. 1);

     [Skt. anu-sarin → த. அனுசாரி.]

 அனுசாரி2 aṉucāri, பெ. (n.)

   மாணாக்கன்; disciple.

     [Skt. anu-särin → த. அனுசாரி.]

அனுசிதம்

அனுசிதம் aṉusidam, பெ. (n.)

   1. தகாதது; that which is unfit, improper.

     “யானை யனுசிதமென்றதனைச் சிதைக்க” (பெரியபு. கோச்செங். 4);..

   2. பொய் (திவா.);; falsehood.

   3. கக்கல்; வாயாலெடுப்பு செய்கை (உரி நிக.);; vomiting.

     [Skt. an-ucita → த. அனுசிதம்.]

அனுசுருதி

அனுசுருதி aṉusurudi, பெ. (n.)

   ஒத்த சுருதி (சீவக.657, உரை);;த.வ. ஒத்தொலி.

     [Skt. anu-sruti → த. அனுசுருதி.]

அனுசூதன்

அனுசூதன் aṉucūtaṉ, பெ. (n.)

   விடாது தொடர்ந்திருப்பவன் (வேதா.சூ.99);; one whose connection is regular and uninterrupted.

     [Skt. anu-syüta → த. அனுசூதன்.]

அனுசென்மம்

 அனுசென்மம் aṉuseṉmam, பெ. (n.)

     [Skt. anu-janma → த. அனுசென்மம்.]

அனுசை

 அனுசை aṉusai, பெ. (n.)

   தங்கை; younger sister.

     [Skt. anu-jä → த. அனுசை.]

அனுசைவர்

 அனுசைவர் aṉusaivar, பெ. (n.)

 saiva initiates among ksatryas or vaisyas.

     [Skt anu-sava → த. அனுசைவர்.]

அனுச்சை

அனுச்சை aṉuccai, பெ. (n.)

   அனுமதி; permission.

     “அரசனு மனுச்சை செய்ய” (திருவிளை. சமணரை. 10);.

த.வ. ஒப்புகை.

     [Skt. anu-jhä → த. அனுஞ்ஞை → அனுச்சை.]

அனுஞ்ஞாலங்காரம்

அனுஞ்ஞாலங்காரம் aṉuññālaṅgāram, பெ. (n.)

   வேண்டலணி (அணியி. 71);; figure of speach in which an undesirable thing is counted as ultimately leading to something desirable.

     [Skt. ansnå → த. அனுஞ்ஞாலங்காரம்.]

அனுட்டணம்

அனுட்டணம் aṉuṭṭaṇam, பெ. (n.)

   1. வெப்பமின்மை (சங். அக.);; coolness.

   2. சோம்பல் (யாழ்.அக.);; idleness.

     [Skt. an-usna → த. அனுட்டணம்.]

அனுட்டானம்

அனுட்டானம் aṉuṭṭāṉam, பெ. (n.)

   1. (சந்தியாவந்தனம்); காலை, உச்சி, மாலை வழிபாடு; observance of religious rites.

     “வயங்கனுட்டானம்பண்ணி” (மச்சபு. வீம. 21);.

   2. .வழக்கம்; established custom.

     [Skt. anu-sthåna → த. அனுட்டானம்.]

அனுட்டானி-த்தல்

அனுட்டானி-த்தல் aṉuṭṭāṉittal,    4 செ. குன்றாவி. (v.t.)

   வழிபடுதல்; to practice.

     “சொல்லிய தனுட்டானித்து” (விவேக. குடா. 37);.

     [Skt. anushana → த. அனுட்டானி-.]

அனுட்டி-த்தல்

அனுட்டி-த்தல் aṉuṭṭittal,    4 செ. குன்றாவி.(v.t.)

   பின்பற்றுதல்; to practice, as religious rites.

     “மனிதரு மனுட்டித்து…. வீடடைந்தார்” (திருவிளை. இந்திரன் முடி. 29);.

     [Skt. anustha → த. அனுட்டி.]

அனுதபி-த்தல்

அனுதபி-த்தல் aṉudabiddal,    4 செ.குன்றாவி. (V.t.)

   1. கழிந்ததற்கிரங்குதல்; to repent.

   2. பிறர் இன்பதுன்பங்களில் அவரோடொன்றுதல் (கிறித்.);; to sympathise.

     [Skt. anu-täpa → த. அனுதவி.]

அனுதாத்தம்

அனுதாத்தம் aṉutāttam, பெ. (n.)

   படுத்தலோசை; grave accent, esp. vedic.

     “உதாத்தமோசை யனுதாத்த சொரிதம்” (திருவிளை. தடாதகை. 8);.

     [Skt. an-udata → த. அனுதாத்தம்.]

அனுதாபம்

அனுதாபம் aṉutāpam, பெ. (n.)

   1. கழிவிரக்கம்; repentance, remorse.

   2. இரக்கம்; pity.

   3. பிறர் இன்ப துன்பங்களில் அவரோ டொன்றுகை(Chr.);; sympathy.

த.வ. அருளிரக்கம்.

     [Skt. anu-tapa → த. அனுதாபம்.]

அனுதாபி

 அனுதாபி aṉutāpi, பெ. (n.)

   ஓர் இயக்கத்தில் உறுப்பினராக இல்லாமல் (ஆதரவு); முன்னுதவி தருபவர்; பற்றாளர்; sympathizer (mostly of a political party);.

த.வ. ஆதரவாளர்.

அனுதினம்

அனுதினம் aṉudiṉam, பெ. (n.)

   நாடோறும் (திருவிளை. விடையில. 4.);; every day, daily.

     [Skt. anu-dina → த. அனுதினம்.]

அனுநாசிகம்

அனுநாசிகம் aṉunācigam, பெ. (n.)

   மெல்லெழுத்து (பி.வி. 5);; nasal.

     [Skt. anu-näsika → த. அனுநாசிகம்.]

அனுபந்தன்

அனுபந்தன் aṉubandaṉ, பெ. (n.)

   தீமைக்கு உடன்படுபவன்; accomplice, one who approves a sinful act.

     “காயுமவர்க் கனுந்தருமாயுள்களித்தீரே”(சிவதரு. கவாக். 195);.

     [Skt. anu-bandha → த. அனுபந்தன்.]

அனுபந்தம்

அனுபந்தம் aṉubandam, பெ. (n.)

   1. உறவின் முறை; relation, connection.

   2. நூலின்பின் சேர்க்கப்படும் பிற்சேர்க்கை (இக்.வ.);; appendix, Supplement.

     [Skt. anu-bandha → த. அனுபந்தம்.]

அனுபமன்

அனுபமன் aṉubamaṉ, பெ. (n.)

   ஒப்பில்லாதவன்; one who is incomparable.

     “அனுபமன் செழியன்”(திருவாலவா. 13, 15.);.

த.வ. இணையிலி.

     [Skt. an-ирата → த. அனுபமன்.]

அனுபமை

அனுபமை aṉubamai, பெ. (n.)

   1. ஒப்பில்லாதது; that which is incomparable, matchless.

   2. தென்மேற்றிசைப்பெண் யானை (சது.);; name of the female elephant of the southwest, mate of kumutam.

     [Skt. an-upamå → த. அனுபமை.]

அனுபலத்தி

அனுபலத்தி aṉubalatti, பெ. (n.)

   ஒன்றன் இன்மையால் மற்றொன்றின் இன்மையை அறியும் ஏது (சி.சி.அளவை. 10, மறைஞா.);; inference of the absence of one thing from the absence of something else.

     [Skt. an-upalabdhi → த. அனுபலத்தி.]

அனுபலத்தியேது

 அனுபலத்தியேது aṉubalattiyētu, பெ. (n.)

அனுபலத்தி பார்க்க; see anubalatti.

     [Skt. an-upalab-dhi+hetu → த. அனுபலத்தியேது.]

அனுபல்லவி

 அனுபல்லவி aṉuballavi, பெ. (n.)

   இசைப்பாடலில் இரண்டாம் உறுப்பான உடனெடுப்பு; second section of the south Indian melody known askirthanam.

த.வ. இடைநிலை.

     [Skt. anu +palavi → த. அனுபல்லவி.]

இசைப்பாடலில் எடுப்பு உடனெடுப்பு தொடுப்பு என மூன்று கூறுகளாகப் பகுத்துள்ளனர். அவற்றை வடமொழியில் முறையே பல்லவி, அனுபல்லவி, சரணம் என்பர்.

அனுபவக்காட்சி

 அனுபவக்காட்சி aṉubavakkāṭci, பெ. (n.)

 perception by actual experience.

     [அனுபவம் + காட்சி.]

     [Skt. anu-bhava → த. அனுபவம்.]

அனுபவசாலி

 அனுபவசாலி aṉubavacāli, பெ. (n.)

   பட்டறிவு மிக்கவன்; person of large experience.

     [அனுபவம் + சாலி]

     [Skt. anubhava → த. அனுபவம்.]

த. சாலி, சாலுதல் = நிறைதல். சாலி = நிறைந்தவன், மிகுந்தவன்.

அனுபவம்

அனுபவம் aṉubavam, பெ. (n.)

   1. பட்டறிவு; experience.

இமையோர் மெய்த்தனுபவ முதவுவுர்” (இரகு. திக்குவி. 86);.

   2. துய்ப்பு; enjoyment.

     “அந்த வீடுஅவன் அனுபவத்தில் இருக்கிறது”.

த.வ. வினையறிவு.

     [Skt. anu-bhava → த. அனுபவம்.]

அனுபவி

அனுபவி1 aṉubavittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   1. துய்த்தல்; to experience good or evil.

     “இச்சாப மனுபவித்தல்லது விடாதல்” (காஞ்சிப்பு. அரிசா. 15);.

   2. உரிமையாகக் கையாளுதல்; to enjoy possession of.

     “சொத்தை அவன் அனுபவிக்கிறான்”.

   3. இன்பநுகர்தல்; to enjoy happiness.

 I[kt. anu-bhava → த. அனுபவி-,.]

 அனுபவி2 aṉubavi, பெ. (n.)

   1. இன்பமாய் வாழ்பவன்; one who lives a life of enjoyment

   2. ஆன்மஞானி (வேதா. சூ. 14);; one who has realised one’s self.

     [Skt. anu-bhavi → த. அனுபவி.]

அனுபானம்

 அனுபானம் aṉupāṉam, பெ. (n.)

   மருந்து வைக்கும் கலன்; vehicle of medicine.

     [Skt. anu-påna → த. அனுபானம்.]

அனுபாலனம்

 அனுபாலனம் aṉupālaṉam, பெ. (n.)

   காப்பு; preservation.

     [Skt. апu-раlаnа → த. அனுபாலனம்.]

அனுபூதி

அனுபூதி aṉupūti, பெ. (n.)

   காட்சியறிவு (வேதா. சூ. 151);; perception, apprehension, realisation.

த.வ. பட்டறிவு.

     [Skt. anu-bhuti → த. அனுபூதி.]

அனுபோகசாலி

 அனுபோகசாலி aṉupōkacāli, பெ. (n.)

அனுபவசாலி பார்க்க; see apubavasal.

     [Skt. anubhoga → த. அனுபோகசாலி.]

அனுபோகம்

அனுபோகம் aṉupōkam, பெ. (n.)

   1. துய்ப்பு:

 Enjoyment.

     “சிவமாதுடனே யனுபோகமதாய்” (திருப்பு. 518);.

   2. பழக்கம்; experience,practice.

   3. கையாட்சி; legal possession.

   4. நுகர வேண்டிய தீவினைப்பயன்; that which is fated to be experienced, esp. results of evil deeds.

     “அனுபோகம் தொலைந்தால் அவிழ்தம் பலிக்கும்”

     [Skt. anu-bhoga → த. அனுபோகம்.]

அனுபோகி

அனுபோகி1 aṉupōkittal,    4 செ. குன்றாவி.(v.t.)

   துய்த்தல்; to enjoy.

     “அன்னை தந்தை யிருவருந்தா னனுபோகிக்க” (ஞானவெட்டி. பாயி. 24);.

த.வ. இன்பம் நுகர்தல்.

     [Skt. anu-bhõga → த. அனுபோசி-.]

 அனுபோகி2 aṉupōki, பெ. (n.)

   இன்பநுகர்ச்சி யுடையவன்; one who has experience of the pleasures of life.

     [Skt. anu-bhögin → த. அனுபோகி-.]

அனுப்படி

அனுப்படி aṉuppaḍi, பெ. (n.)

   1. கருமச் செய்திகள், கருமச் சூழ்நிலைகள்; affairs in general, circumstances.

   2. கையிருப்பு; balance in account.

   3. முந்தின ஆண்டு வருமானம்; revenue of the previous year.

     [அல்லுதல் = பொருந்துதல். அல் → அன் → அனு. படி = நிலைமை.]

அனுப்படி நிலுவை

 அனுப்படி நிலுவை aṉuppaḍiniluvai, பெ. (n.)

   கையிருப்பு; balance in account.

     [அனு + படி + நிலுவை, நில் → நிலு → நிலுவை. ‘வை’ தொ.பெ. ஈறு.]

அனுப்படியிறக்கு-தல்

 அனுப்படியிறக்கு-தல் aṉuppaḍiyiṟakkudal,    பழைய நிலுவையைப் புதுக்கணக்கிற்குக் கொண்டுவருதல்; to carry forward the balance to a new account.

     [அனு + படி + இறக்கு. இறங்கு (த.வி.); → இறக்கு (பி.வி.);.]

அனுப்பன்

 அனுப்பன் aṉuppaṉ, பெ. (n.)

   கோவை மதுரை முகவை நெல்லை மாவட்டங்களிற் காணப்படும் கன்னடக் கவுண்டருள் ஒரு பிரிவார்; a division of Kanarese Goundas, found Ար Coimbatore, Madurai, Ramanathapuram and Thirunelveli districts.

அனுப்பிரவேசம்

 அனுப்பிரவேசம் aṉuppiravēcam, பெ. (n.)

   தொடர்ந்து புகுகை; entering after another.

     [Skt. anu-pavéša → த. அனுப்பிரவேசம்.]

அனுப்பிராசம்

அனுப்பிராசம் aṉuppirācam, பெ. (n.)

   வழியெதுகை (இலக். வி. 748. உரை);; repetition of rhyming syllables.

     [Skt. anu-prasa → த. அனுப்பிராசம்.]

அனுப்பு

அனுப்பு1 aṉuppu, பெ. (n.)

   பழைய வரிவகை. (M.E.R. 427 of 1928-9; an ancient tax.

 அனுப்பு2 aṉuppu, பெ. (n.)

   உதவியாக உப்புடன் சேர்ந்தது; that which has combined with salt to confer suitable consistency (சா.அக.);.

     [அனு + உப்பு – அனுப்பு. அல் → அன் → அனு = உடன்கலந்தது.]

அனுப்பு-தல்

அனுப்பு-தல் aṉuppudal,    5 செ.குன்றாவி. (v.t)

   1. போகச்செய்தல்; விடுத்தல்; to send, des, patch.

     ‘எனைச் சோழ நாட்டுக்கனுப்ப வேணும்’ (தமிழ்நாவ.254);, மறைமலையடிகள் எழுதிய பொத்தகங்களின் ஒரு முழுத்தொகுதி ஒவ்வொரு பெருநூல் நிலையத்திற்கும் அனுப்பப்பட்டுள்ளது.

   2. வழிவிடுதல்; to accompany a person for a short distance out of respect or love.

ம., தெ. அனுப்பு.

அனுமக்கொடியோன்

 அனுமக்கொடியோன் aṉumakkoḍiyōṉ, பெ. (n.)

   குரங்குக் கொடியுடைய அருச்சுனன்; Arjunan, as having the figure of Hanuman as his flag.

     [அனுமன் + கொடியோன்.]

     [Skt. hanumän → த. அனுமன்.]

அனுமதம்

அனுமதம் aṉumadam, பெ. (n.)

   வீணைவகை (பாரத. ஒழிபி. 15);; kind of lute.

அனுமதி

அனுமதி aṉumadi, பெ. (n.)

   இசைவு, ஒப்புக் கொள்வு; permission, assent, approval.

     “அனுமதி பெற்று” (சேதுபு. சேதுயா. 15);.

ம., து. அனுமதி ; க. அனுமோத ; Mar. anumata; Nep, anumati.

     [அல் → அன் → அனு = உடன். மத்து (மட்டு); → மத்தி → மதி. மதித்தல் = அளவிடுதல், கருதுதல், உயர்வாகக் கருதுதல், ஒப்புக்கொள்ளுதல், இசைதல்.]

அனுமதி-த்தல்

அனுமதி-த்தல் aṉumadiddal,    4 செ.கு.வி., செ.குன்றாவி. (v.i. & v.t)

   உடன்படுதல், இசைவு தரல்; to permit, to consent to.

ம. அனுமதிக்குக ; க. அனுமோதிசு.

     [அல் → அன் → அனு = உடன். மத்து (மட்டு); → மத்தி → மதி. மதித்தல் = அளவிடுதல், கருதுதல், உயர்வாகக் கருதல், ஒப்புக் கொள்ளுதல், இசைதல்.]

     ‘அனுமதித்தல்’ என்னுஞ் சொல் தமிழில் தோன்றாது வடமொழி வழியாய் வரினும், ‘அனு’ என்னும் முன்னொட்டும் ‘மதி’ என்னும் வினைச்சொல்லும் தனித்தனி தமிழாயிருத்தலின், அவற்றின் கூட்டுச்சொல்லும் தமிழாதற்கு ஏற்கும் என்றறிக. த. அனு → Skt. anu. + Skt. mati. இதனால் ‘அவமதி’ என்னுஞ் சொல்லும் தமிழாய் அமைதல் உணர்க.

அனுமதிச்சீட்டு

 அனுமதிச்சீட்டு aṉumadiccīṭṭu, பெ. (n.)

   அம்பகம், இசைவுமுறி; permit.

     [அனு + மதி + சீட்டு. சீட்டு → சீட்டு = முறி, ஒலை.]

அனுமந்தன்

அனுமந்தன் aṉumandaṉ, பெ. (n.)

   அனுமன் (இராமநா. சுந்தர. 31);; nom. pl. of Hanumat, Hanuman.

     [ISkt. hanuman-tan → த. அனுமந்தன.]

அனுமன்

அனுமன் aṉumaṉ, பெ. (n.)

   காற்றின் புதல்வன் (அனுமன்); (உத்தரரா. அனுமப். 34);; non. sing. of Hanumat Hanuman.

     [Skf. Hanu-mân → த. அனுமன்.]

அனுமரணம்

அனுமரணம் aṉumaraṇam, பெ. (n.)

   உடன் இறப்பது; woman who dies with her husband, sati.

     “பந்தமுற வனுமரணஞ் செய்த வுருக்குமணி” (நல். பாரத. முத்தியடை. 6);.

த.வ. உடன்கட்டை.

     [ Skt. anu-marana → த. அனுமரணம்.]

அனுமாசகண்ணி

 அனுமாசகண்ணி aṉumācagaṇṇi, பெ. (n.)

   பொன்னாங்கண்ணி (சித்.அக.);; a plant grow. ing in damp places.

அனுமாசக்காய்

 அனுமாசக்காய் aṉumācakkāy, பெ. (n.)

   பொன்னாங்கண்ணி (மலை.);; species of Altermathera.

அனுமாசகண்ணி பார்க்க;see anumaša.-kaņņi.

அனுமாசாக்கா

 அனுமாசாக்கா aṉumācākkā, பெ. (n.)

   பொன்னாங்கண்ணி; an edible plant, Illecebrum sessile (சா.அக.);.

அனுமாசக்காய் என்று மலையகராதியும், அனுமாசாக்கா என்று சாம்பசிவம் பிள்ளை அகராதியும் கூறுவது ஒன்றாய்த்தானிருத்தல் வேண்டும். ஆயின், அவற்றுள் எது சரியான வடிவம் என்பது தெரியவில்லை.

அனுமானபலன்

 அனுமானபலன் aṉumāṉabalaṉ, பெ. (n.)

 benefit of the doubt.

     [Skt. anu-mảna+phala → த. அனுமானபலன்.]

அனுமானப்பிரமாணம்

 அனுமானப்பிரமாணம் aṉumāṉappiramāṇam, பெ. (n.)

   கருதலளவை; inference, as a mode of proof.

     [Skt. anu-mäna+pirāmāna → த. அனுமானப்பிரமானம்.]

அனுமானம்

அனுமானம் aṉumāṉam, பெ. (n.)

 one of the six means of acquiring true knowledge.

     “கருத்தள வாவது குறிக்கொளனுமானத்தனு மேயத் தகைமை யுணருந் தன்மைய தாகும்” (மணிமே. 27 : 25-27);.

   2. ஐயுறவு; doubt.

     “இனியிங் கிதற்கு மனு மானமோ” (தாயு. அகிலா. 1);.

   3. அயிர்ப்பு; suspicion.

அனுமானப்பட்ட புள்ளி.

ம. அனுமானம் ; க., து. அனுமான ; தெ. அநுமானமு ; Sinh., Mar., Nep. anumãna.

     [அல் → அன் → அனு (உடன், கூட, பொருந்த);. மாத்தல் (வழக்கிறந்த வினை); = அளத்தல். மா + அனம் – மானம் (அளவு, அளவீடு);. அனுமானம் = புகையால் அதனொடு சேர்ந்த நெருப்பை அறிதல்போல், ஒன்றால் அதனொடு சேர்ந்த இன்னொன்றை அறிதல்.]

அனுமதித்தல் என்னுஞ் சொல்லிற்குக் கூறிய சிறப்புக் குறிப்பை, அனுமானம் என்னுஞ் சொல்லிற்குங் கொள்க. இதனால் ‘அவமானம்’ என்னுஞ் சொல்லும் தமிழாய் அமைதல் உணர்க.

அனு → Skt. anu. மானம் → Skt. mēna.

அனுமானவுறுப்பு

 அனுமானவுறுப்பு aṉumāṉavuṟuppu, பெ. (n.)

 members of an Indian syllogism, which are five in number, viz., proposition, cause or reason, example, relation, conclusion.

     [அனுமானம் + உறுப்பு. உறு → உறுப்பு.]

அனுமானம் பார்க்க;see anumanam.

அனுமானி-த்தல்

அனுமானி-த்தல் aṉumāṉittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   1. அனுமான அளவையாலறிதல்; to determine by inference.

   2. உன்னித்தல்; to. guess.

   3. அயிர்த்தல்; to suspect.

     [அனுமானம் → அனுமானி. ஒ.நோ. தன்மானம் → தீர்மானி.]

     ‘அனுமானி’ என்னும் வினைச்சொல் வடமொழியிலின்மையை நோக்குக.

அனுமான்

 அனுமான் aṉumāṉ, பெ. (n.)

   காற்றின் புதல்வன் (அனுமன்);; Hanuman, the monkey god, who greatly aided Rama in his war with Rävana.

த.வ. திருக்குரக்கன்.

     [Skt. Hanu-män → த. அனுமான்.]

அனுமி-த்தல்

அனுமி-த்தல் aṉumittal,    4 செ.குன்றாவி.(v.t.)

   கருதுதல்; to infer.

     “தூய மதிஞ ரனுமித்துச் சொல்லு மருங்குல்” (பிரபுலிங். பிரபு. 37);.

த.வ. உன்னித்தல்.

     [Skt. anu-mité – த. அனுமி.]

அனுமிதி

அனுமிதி aṉumidi, பெ. (n.)

கருதலளவையா லுண்டாகும் அறிவு (தருக்கசங். 45);; (log.);.

 knowledge obtained by inference.

     [Skt. anu-miti → த. அனுமிதி.]

அனுமூலம்

 அனுமூலம் aṉumūlam, பெ. (n.)

   பேய்த்துளசி; wild basil, Ocimum adscendens alias O. cristatum (சா.அக.);.

அனுமேயம்

அனுமேயம் aṉumēyam, பெ. (n.)

   கருதலால் (அனுமானத்தால்); அறியத்தக்கது (மணிமே. 27, 26);; (log.);; that which is inferable.

     [Skt. anu-meya → த. அனுமேயம்.]

அனுமை

 அனுமை aṉumai, பெ. (n.)

   கண்ணின் புறவருகு; the front of the temples close to the back of the eye.

அனுமோனை

அனுமோனை aṉumōṉai, பெ. (n.)

   இனவெழுத்தால் வரும் மோனைத் தொடை (தொல். பொருள். செய். 94, பேரா. உரை);; vowell and consonantal assonance in metrical alliteration.

     [அல் → அன் → அனு = பொருந்தியது, ஒத்தது, இனம், கிளை. முகம் → முகன் → முகனை → மோனை.]

அனுயோகம்

அனுயோகம் aṉuyōkam, பெ. (n.)

   தருக்கத்தில் எழுப்பும் வினா (பு.வெ.8,19, உரை);; question in argument.

     [Skt. anu-yoga → த. அனுயோகம்.]

அனுராகம்

அனுராகம் aṉurākam, பெ. (n.)

   1. அன்பு (திவ். திருவாய், 8,8,8);; attachment, affection, love.

   2. காமப்பற்று; lasciviousness.

     “அனுராக போக மிகுமாதர்” (பாரத. குரு. 139);.

     [Skt. anu-räga → த. அனுராகம்.]

அனுரூபம்

அனுரூபம் aṉurūpam, பெ. (n.)

   ஏற்றது; fitness, suitability.

     “தோன்றினர்கருமவனுரூபமாய்” (சூத. சிவ. 11, 14);.

     [Skt. anu-rūpa → த. அனுரூபம்.]

அனுலோமன்

 அனுலோமன் aṉulōmaṉ, பெ. (n.)

   உயர்குல ஆடவனுக்கு இழிகுலப் பெண்ணிடம் பிறந்தவன்; offspring of parents where the mother is inferior in caste to the father.

     [Skt. anu-lõma → த. அனுலோமன்.]

அனுவட்டம்

அனுவட்டம் aṉuvaṭṭam, பெ. (n.)

   ஒருவகை உருண்டை முத்து (S. I. I. ii, 143);; variety of round pearls.

     [அல் → அன் → அனு. வள் → வட்டு → வட்டம்.]

வட்டம் பார்க்க;see vattam.

அனுவர்த்தனம்

 அனுவர்த்தனம் aṉuvarttaṉam, பெ. (n.)

   பின்பற்றுதல்; following, compliance.

     [Skt. anu-vartana → த. அனுவர்த்தனம்.]

அனுவல்லிப்பூடு

 அனுவல்லிப்பூடு aṉuvallippūṭu, பெ. (n.)

   கஞ்சா; Indian hemp, Cannabis satira alias – C. indica (சா.அக.);.

     [அனு + வல்லி + பூடு.]

அனு பார்க்க;see amu.

     [P]

அனுவாகம்

 அனுவாகம் aṉuvākam, பெ. (n.)

   மறையின் உட்பகுப்பு; a sub-division of the veda.

     [Skt. anu-vaka → த. அனுவாகம்.]

அனுவாதம்

அனுவாதம் aṉuvātam, பெ. (n.)

   முன்னர் பெறப்பட்டதைப் பின்னர் எடுத்துக் கூறுதல் (குறள், 7239, உரை);; repeating by way of explanation.

     [Skt. anu-váda → த. அனுவாதம்.]

அனுவிருத்தி

அனுவிருத்தி aṉuvirutti, பெ. (n.)

   1. தொடர்ச்சி (சி.சி.2, 60, சிவாக்.);; continuance.

   2. கூடவிருக்கை (சூத. எக்கி. பூ. 19,10);; being with, attending.

     [Skt. anu-vrtti → த. அனுவிருத்தி.]

அனுவுரு

அனுவுரு aṉuvuru, பெ. (n.)

   ஒத்த வடிவம்; similar form, appropriate form.

     “அனுவுருக்கொண்டுரு மாறி” (பாரத. திரெள. 49);.

     [அல் → அன் → அனு = பொருந்தின, ஒத்த, உருத்தல் = தோன்றுதல். உரு = தோற்றம், வடிவம்.]

அனுவெதுகை

அனுவெதுகை aṉuvedugai, பெ. (n.)

   இனவெழுத்தால் வரும் எதுகைத்தொடை (தொல். பொருள். செய். 94, பேரா. உரை);; vowell and consonantal assonance in metrical rhyme.

     [அல் → அன் → அனு. எதிர்தல் = கூடுதல், பொருந்துதல். எதிர் → எதிர்கை → எதுகை.]

அனுவெழுத்து

அனுவெழுத்து aṉuveḻuttu, பெ. (n.)

   1. மோனையெழுத்து; alliterative letter.

   2. இனவெழுத்து, கிளையெழுத்து; related letter.

     [அல் → அன் → அனு. எழுது → எழுத்து (தொ.ஆ.கு.);.]

அனேகமாய்

அனேகமாய்2 aṉēkamāy, வி.எ.(adv.)

   1. பெரும்பாலும்; mostly, almost, very nearly.

   2. நிகழக்கூடிய; most probably.

     ‘அவர் அனேகமாய் இன்று வருவார்’

     [Skt. an-éka → த. அனேகமாய்.]

அனேகம்

அனேகம்1 aṉēkam, பெ. (n.)

   பல; many, not one.

     “யானைமீதுவரும் யானையுமனேக மெனவே” (கலிங். அவதா. 57);

     [Skt. an-éka → த. அனேகம்.]

 அனேகம்2 aṉēkam, பெ. (n.)

   காலம்; time.

     [Skt. an-aka → த. அனேகம்.]

அனேகாந்திகம்

அனேகாந்திகம் aṉēgāndigam, பெ. (n.)

   1. பலவகை; many ways.

   2 ஏது போலிகளுள் ஒன்று; a fallacy in reasoning. (log.);.

     [Skt. an-aikåntika → த. அனேகாந்திகம்.]

அனேகான்மவாதம்

 அனேகான்மவாதம் aṉēkāṉmavātam, பெ. (n.)

   ஆன்மாக்கள் பல உண்டு எனும் கொள்கை; doctrine which maintains the existence of individual soul.

     [Skt. ar-éka + åtma + våda → த. அனேகான்மவாதம்.]

அனை

அனை1 aṉai, சு.பெ.எ. (demons. adj.)

   1. அந்த; that.

     “அனைநால்வகையும்” (தொல். பொருள். பொருளியல், 51);.

   2. அத்தகைய; such.

     [அ (சே.சு.); → அன் → அனை.]

 அனை2 aṉai, பெ. (n.)

   1. ஒருவகை ஆற்றுமீன்;   அனைக்கெளுத்தி; a kind of fresh-water fish.

     “அனையுகளு நன்னீர்” (பாரத சூது 13);.

   2. கடல் அனைக்கெளுத்தி; a sea-fish, a slonder long eel.

அனை-த்தல்

அனை-த்தல் aṉaittal,    2.செ.கு.வி. (v.i.)

   உதைகொடுத்தல்; to give a good thrash.

     “அவனை இரண்டு அணை அணைத்தால் தான் கம்மா இருப்பான். (வ.சொ.அக.);.

     [அண்-அணை]

அனைக்கருங்கிழங்கு

 அனைக்கருங்கிழங்கு aṉaikkaruṅgiḻṅgu, பெ. (n.)

   பூபரிக்கிழங்கு; the root of a plant (unidentified); (சா.அக.);.

அனைத் துரிமை விற்பனை

 அனைத் துரிமை விற்பனை aṉaitturimaiviṟpaṉai, பெ.(n.)

   எல்லா உரிமைகளையும் விலைக்குக் கொடுத்துவிடுகை (சத்தக் கிரயம்);; absolute sale.

     [அனைத்து+உரிமை+விற்பனை.]

அனைத்தவன்

அனைத்தவன் aṉaittavaṉ, பெ. (n.)

   தடுத்தவன்; one who checked

     “வெள்ளம் அனைத்தவன் வில்லை எடுத்து”(பால, 13: 30);.

     [அண்-அனை]

அனைத்து

அனைத்து aṉaittu, கு.பெ.எ. (adj.)

   எல்லா; all.

     “அனைத்துலகும் இன்பமுற” (மனோன். த.வா.);.

-, கு.வி.எ. (adv.);

   அவ்வளவு; much, thus far.

     “மனத்துக்கண் மாசில னாத லனைத்தறன்” (குறள், 34);.

-, பெ. (n.);

   அத்தன்மையது; that which is of such a nature.

     “அனைத்தாகப் புக்கிமோ” (கலித். 78:24);.

க. அனித்து

     [அ (சே.சு.); → அன் → அனை → அனைத்து. ‘ஐ’ சாரியை, ‘து’ (அது); ஒன்.பா. ஈறு.]

அனைத்து ஊடாட்டம்

 அனைத்து ஊடாட்டம் aṉaittuūṭāṭṭam, மெ(n.)

   எல்லாவற்றிலும் ஊடுருவியிருக்கை; all pervasiveness, immanen.

     [அனைத்து+ஊடாட்டம்]

அனைத்துக்கரிசுநீக்கச்சடங்கு

 அனைத்துக்கரிசுநீக்கச்சடங்கு aṉaittukkarisunīkkassaḍaṅgu, பெ.(n.)

சரிசு நீங்க செய்யும் நடப்புக் காரியம் (சர்வப்பிராயச் சித்தம்);.

 Ceremoney for the expiation of all sins performmed generally at the time of death.

     [அனைத்து+கரிசு+நீக்க+சடங்கு]

அனைத்துநோய் நீக்கி

 அனைத்துநோய் நீக்கி aṉaittunōynīkki, பெ.(n.)

   அனைத்துநோய்களையும் குணப்படுத்தவல்லது; cure all panacea.

     [அனைத்து+நோய்+நீக்கி]

அனைத்தும்

அனைத்தும் aṉaittum, பெ. (n.)

   எல்லாம்; all, the whole.

     “இகழ்விலிவ் வனைத்து மென்கோ” (திவ். திருவாய். 3.4:1);.

ம. அனைத்தும், அனத்தும் ; க. அனித்து.

     [அனைத்து + உம் (முற்றும்மை, முற்றுப் பொருள் தரும் இடைச்சொல்);.]

அனைத்தூடி

 அனைத்தூடி aṉaittūṭi, பெ.(n.)

   எங்கும் நிறைந்தவன்; god on omnipresent.

     [அனைத்து+ஊடி]

அனைந்தவன்

அனைந்தவன் aṉaintavaṉ, பெ. (n.)

   செய்பவன்; performer.

     “மயேந்திரப் பள்ளியுள்ளோடு அனைந்தவன் கழல் உணர்ந்து உய்ம்மினே.”(சம் 3:31-9);.

     [அனை-அனைத்தவன்]

அனைந்துள்ளோர்.

அனைந்துள்ளோர். aṉaintuḷḷōr, பெ. (n.)

   உடன்இருந்தோர்; those who accompanied.

     “சீர் பெருகு நில நக்கர் -மற்று எனையோர் அணைந்துள்ளோர்.” (பெரிய.3153.);

     [அனைத்து+உள்ளோர்]

அனைய

அனைய aṉaiya, கு.பெ.எ. (adj.)

   1. அத்தன்மையான; such.

     “அனைய மாதவன்” (கம்பரா. அயோத். பள்ளி. 139);.

   2. ஒத்த; the same, similar.

     “என்னனைய முனிவரரும்” (கம்பரா. பால. கையடை. 8);.

     [அ (சே.சு.); → அன் → அனை → அனைய. ‘ஐ’ சாரியை. ‘அ’ பெ.எ. ஈறு.]

அனையன்

அனையன் aṉaiyaṉ, சு.பெ. (demons. pron.)

   1. அத்தன்மையன்; such a man.

     “அனைய ரப்புன லேறினர்” (கம்பரா. அயோத். வனம் புகு. 38);.

   2. ஒத்தவன்; similar man.

     [அ (சே.சு.); → அன் → அனை → அனையன். ‘ஐ’ சாரியை. ‘அன்’ ஆ.பா. ஈறு.]

அனைவரும்

அனைவரும் aṉaivarum, சு.பெ. (demons. pron.)

   எல்லாரும்; all persons.

     “அனைவருந் தொழு துடன்வர” (கந்தபு. தேவ. தெய்வ. 261);.

க. அனிபரு ; தெ. அந்தரு.

     [அ (சே.சு.); → அன் → அனை → அனைவர் → அனைவரும். ‘ஐ’ சாரியை. ‘அர்’ ப.பா. ஈறு. ‘உம்’ முற்றும்மை.]

அனோபகம்

 அனோபகம் aṉōpagam, பெ. (n.)

   பேய்த்தேற்றா; a kind of bitter, water-filter nut tree (சா.அக.);.

அன்

அன்1 aṉ, சு.கு.பெ.எ. (demons. adj.)

   அன்னன், அன்னள், அன்னர், அன்னது, அன்ன என்னும் சேய்மைச்சுட்டு அல்லது ஒப்புமை குறித்த சொற்களின் முதனிலை; base or stem of the words annan, annal , aրըar, aրոadu, and aրըa, signifying remoteness or similarity.

ம., க. அன்.

     [அ (சே.சு.); → அன்.]

அன் என்னும் சேய்மைச்சுட்டடி, ஒப்புமை குறிக்கும்போது தன் சுட்டுத்தன்மையை இழந்து நிற்கும்.

 அன்2 aṉ, இடை. (part.)

   1. பெயரீறு; noun suff.

 masc. sing. Suff.

   எ-டு. அவன், மருதன், மலையன், செய்பவன். (ஆ); அஃறிணை யொருமைப் பெயரீறு; neut. sing. suff.

எ-டு : மொழியன் (பெரும்பேன்);, அணில்வரியன் (வெள்ளரிக்காய்);.

   2. வினைமுற்றீறு; verb-ending

     (அ); ஆண்பாற் படர்க்கை வினைமுற்றீறு;

 suf. of the rational class in the 3rd pers. sing. masc.

   எ-டு : அவன் வருவன். (ஆ); தன்மையொருமை வினைமுற்றீறு; suff. of the lst pers. sing.

எ-டு : யான் வருவன்.

   3. ஒரு சாரியை; an euphonic augment.

எ-டு : ஒன்றன் கூட்டம்.

ம., க. அன் ; தெ. ண்டு ; குட. ஆனு.

     [அ (சே.சு.); → அன் (ஆண்பாற் படர்க்கை யொருமையீறு);. ஒ → ஒல் → ஒன் (ஒன்று); → அன் (அ.ஒ.பெ.ஈறு);. ஏன் → (த.ஒ.பெ.); → என் → அன் (த.ஒ. வி.மு.ஈறு);. வருவேன் → வருவென் → வருவன். ஒருகா. இன் (கிழமைப் பொருளில் வரும் சாரியை); → அன்.]

     ‘அன்’ என்னும் ஆண்பாலீறு அவன் என்னும் சுட்டுப்பெயர்க் குறுக்கமன்று. அச் சுட்டுப்பெயர் அன்னீறு பெற்றதே.

அன் (ஆ.பா. ஈறு);

 Cf. an- Christian, Aryan, European, Gregorian, ruffian, unitarian, vegetarian; en-E. warden.

வினையாலணையும் பெயர் ஈற்றளவிற் பொதுவகைப் பெயரினின்று வேறுபட்டதன்று. ஆதலால், அதைப் பிரித்துக் கூற வேண்டியதில்லை.

அஃறிணை யொருமையுணர்த்தும் ‘அன்’, ‘ஆன்’ ஈறுகள் ஆண்பாலீறுகளொடு தொடர்புடையன வல்ல. அவை ஒன்று என்னும் எண்ணுப் பெயரின் மறுவடிவான ‘ஒன்’ என்பதன் திரிபே. ஒன் → அன் → ஆன். உள் → உள்ளான் = உள்ளல்.

அன் (அஃறிணை யொருமையீறு);

எ-டு : பச்சைநாடன், அலவன், விரியன், புறாப்பிடியன், குண்ணடியன்.

 Cf. E. an-amphibian

 E. on-accordion

தன்மையொருமை வினைமுற்றீறான ‘அன்’ என்பதும் ஆண்பாலீற்றொடு தொடர்புடையதன்று.

மரத்தின் வேர் என்பது போலுள்ள ஒன்றின்கூட்டம் என்னும் தொடர்ச்சொல், ஒன்றன்கூட்டம் என்று திரிந்திருக்கலாம்.

அன்ன

அன்ன1 aṉṉa, கு.வி.எ. (impl.f.v.)

   அத் தன்மையாயிருக்கின்றன; are of the same kind, are similar.

     “அப்பா லொன்பதும் அவற்றோ ரன்ன” (தொல். சொல். பெய.14);.

– பெ. (n.);

   அத்தன்மையானவை; such or similar things.

     “அன்ன பிறவும்” (தொல். சொல். பெய. 16);.

-, கு.பெ.எ. (adj.);

   அத் தன்மையான; such or similar.

     “அன்ன மரபின் மொழிவயி னான” (தொல். எழுத்து. தொகை. 1);.

– இடை (part.);

   ஓர் உவமவுருபு; a sign of comparison.

     “மலரன்ன கண்ணாள்” (குறள், 1119);, ‘அருமருந் தன்ன பிள்ளை’.

     “அன்ன ஆங்க மான இறப்ப

என்ன உறழத் தகைய நோக்கொடு

கண்ணிய எட்டும் வினைப்பா லுவமம்” (தொல். பொருள். உவம. 12);.

     [அ (சே.சு.); → அன் → அன்ன = அத்தகைய, ஒத்த, போன்ற ‘அ’ பெ.எ. ஈறு.]

 அன்ன2 aṉṉa, இடை. (part.)

   பண்டைக்காலத்து உலகவழக்குக் குறித்த சாரியை; an enunciative particle added to short vowels and short vowel-consonants in ancient colloquial usuage.

எ-டு : அ.அன்ன, இஅன்ன, க.அன்ன, கி.அன்ன.

அன்னக்களை

 அன்னக்களை aṉṉakkaḷai, பெ. (n.)

   பசி அல்லது மிகுவுணவால் வரும் சோர்வு; fatigue resulting from hunger or over eating.

     [அன்னம் + களை.]

     [Skt. anna → த. அன்னம்.]

அன்னக்காவடி

அன்னக்காவடி1 aṉṉakkāvaḍi, பெ. (n.)

   உணவு இரவல் ஏந்தும் காவடி; pole with two baskets suspended from the ends to receive boiled rice begged from door to door for distribution to mendicants.

     [அன்னம் + காவடி.]

     [Skt. anna → த. அன்னம்.]

 அன்னக்காவடி2 aṉṉakkāvaḍi, பெ. (n.)

   வறுமையானவன்; destitute person. begger.

     [அன்னம் + காவடி.]

     [Skt. anna → த. அன்னம்.]

அன்னக்கொடியோன்

அன்னக்கொடியோன் aṉṉakkoḍiyōṉ, பெ. (n.)

   நான்முகன் (சிந்தா. நி. 366);; Brahma.

     [அன்னம் + கொடியோன்.]

     [Skt. anna → த. அன்னம்.]

ஒதிமம் எனும் அன்னப்பறவையைக் கொடியின் அடையாளமாய்க் கொண்டவன்.

அன்னசத்திரம்

அன்னசத்திரம் aṉṉasattiram, பெ. (n.)

   உணவுயிடுஞ்சாலை; choultry where cooked rice is distributed gratuitously.

     “அன்ன சத்திரங்கட்டி”(குற்றா. குற. 90, 1.);.

     [Skt. anna+šatra → த. அன்னசத்திரம்.]

அன்னசலம்

அன்னசலம் aṉṉasalam, பெ. (n.)

   1. கஞ்சி; water extracted from boiled rice.

   2. சோற்றுநீர் (நீராகாரம்);; water extracted from cold rice.

     [Skt. anna → த. அன்னம்.]

த. சலம் → Skt. ஜலம்.

அன்னசாரம்

 அன்னசாரம் aṉṉacāram, பெ. (n.)

அன்னசாறம் பார்க்க; see annasaram.

     [Skt. anna+sära → த. அன்னசாரம்.]

அன்னசாறம்

 அன்னசாறம் aṉṉacāṟam, பெ. (n.)

   கஞ்சி; rice gurel.

     [அன்னம் + சாறம.]

     [Skt. anna → த. அன்னம்.]

சாறு → சாறம்.

அன்னசிராத்தம்

 அன்னசிராத்தம் aṉṉasirāttam, பெ. (n.)

   பாகம் பண்ணிய உணவு கொண்டு செய்யும் இறந்தநாட்கடன்; offering of cooked articles of food to Brahmans in honour of the menes, dist.fr

ஆமசிராத்தம் andஇரணிய சிராத்தம்

     [Skt. anna+širattam → த. அன்னசிராத்தம்.]

அன்னதானக்குறுவை

 அன்னதானக்குறுவை aṉṉatāṉakkuṟuvai, பெ. (n.)

   மூன்று மாதத்தில் விளையும் நெல்வகை; a kind of paddy matures in three months.

     [அன்னம் + தானம் + குறுவை.]

     [Skt. anna → த. அன்னம்.]

அன்னதானச்சம்பா

 அன்னதானச்சம்பா aṉṉatāṉaccambā, பெ. (n.)

   சம்பா நெல்வகை (ஏரெழு. உரை);; variety of sampa paddy.

     [அன்ன(ம்); + தானம் + சம்பா.]

     [Skt. anna → த. அன்னம்.]

அன்னதானம்

அன்னதானம்1 aṉṉatāṉam, பெ. (n.)

   உணவளிக்கை; giving away food in charity.

     “அன்னதான மகிலநற்றானங்கள்”( கம்பரா. பாயி.);.

த.வ. ஊண்கொடை

     [அன்னம் + தானம்.]

     [Skt. anna → த. அன்னம்.]

 அன்னதானம்2 aṉṉatāṉam, பெ. (n.)

   மூன்று மாதத்தில் விளையும் நெல் வகை (M.M);; kind of paddy. harvertel within 3 months.

     [அன்னம் + தானம்.]

     [Skt. anna → த. அன்னம்.]

அன்னதீபம்

அன்னதீபம் aṉṉatīpam, பெ. (n.)

   கோயில் விளக்கு வகை (பரத. ஒழிபி. 41);; kindoftemple lamp having the shape of a swan.

     “Swan shaper temple lamp”

     [அன்னம் + தீபம்.]

     [Skt. hamsa → த. அன்னம்.]

ஓதிம (அன்னப்பறவை); வடிவிலமைந்துள்ள விளக்கு.

அன்னத்துரோகம்

 அன்னத்துரோகம் aṉṉatturōkam, பெ. (n.)

   உண்டவீட்டுக்கு இரண்டகம் பண்ணுகை; treachery to the house by one where one has been fed.

     [Skt. anna+turokam → த. அன்னத் துரோகம்.]

அன்னன்

 அன்னன் aṉṉaṉ, பெ. (n.)

   அப்படிப்பட்டவன்; such a man.

அன்னபம்

 அன்னபம் aṉṉabam, பெ. (n.)

   ஆலமரம் (மு. அக.);; banyan tree.

அன்னயம் பார்க்க;see amnayam.

அன்னபானம்

அன்னபானம் aṉṉapāṉam, பெ. (n.)

   சோறும் நீரும்; food and drink.

     “அபேக்ஷிதம் அன்னபானாதிகள்” (அஷ்டாதச. முமுக்ஷீ. 1, 38.);

     [Skt. anna+panam → த. அன்னாபானம்.]

அன்னபிச்சை

அன்னபிச்சை aṉṉabiccai, பெ. (n.)

   சோறாக வாங்கும் இரப்பு (மீனாட். சரித்.i, 19);; begging of boiled rice.

த.வ. ஊணிரப்பு.

     [Skt. anna-bhiksa → த. அன்னபிச்சை.]

அன்னபேதி

அன்னபேதி aṉṉapēti, பெ. (n.)

   மருந்து சரக்குவகை (பதார்த்த. 1116);; green vitriol, ferrisulphas, so called as it liquefies boiled rice.

     [Skt anna-bhiksa → த. அன்னபேதி.]

அன்னபோதம்

அன்னபோதம் aṉṉapōtam,    இதளியம் (சு.வை.ர.536); mercury,

அன்னப்பால்

 அன்னப்பால் aṉṉappāl, பெ. (n.)

   அரிசி கொதிக்கும் போது எடுக்குங் கஞ்சி; water strained from boiling rice, used as a very mild diet in sickness.

     [அன்னம் + பால்.]

     [Skt. anna → த. அன்னம்.]

அன்னம்

அன்னம் aṉṉam, பெ. (n.)

   1. தங்கம் (வை.மு.);; gold.

   2. மலம் (நாநார்த்த);; faeces.

 அன்னம் aṉṉam, பெ. (n.)

   சோறு; food, victuals, esp. boiled rice.

     [Skt. anna → த. அன்னம்.]

அன்னம்பிடி-த்தல்

அன்னம்பிடி-த்தல் aṉṉambiḍittal,    4 செ.கு.வி.(v.i.)

   நெல்மணி பால்பற்றுதல் (கொ.வ.);; to be in the milk, as of grains of paddy.

த.வ. பால் பிடித்தல்.

     [அன்னம் + பிடி-.)

     [Skt. anna → த. அன்னம்.]

அன்னயம்

 அன்னயம் aṉṉayam, பெ. (n.)

   ஆலமரம் (பச். மூ.);; banyan tree.

மறுவ. அன்னபம்

அன்னரசம்

 அன்னரசம் aṉṉarasam, பெ. (n.)

   உணவின் ஊட்டம்; essence of food, nutriment.

     [Skt. anna+rasan → த. அன்னரசம்.]

அன்னலுந்துன்னலும்

 அன்னலுந்துன்னலும் aṉṉalunduṉṉalum, பெ. (n.)

   தூறலுந்தும்பலும், இடைவிடாத அடை மழைத்தூறல்; unintermittent drizzle or gentle rain.

அன்னல்

அன்னல் aṉṉal, பெ. (n.)

   1. அனல் (சம்.அக.);, வெயில்; Sunshine.

   2. புகை (ஈடு, 8.5:4);; smoke.

     [அல் → அன் → அன்னல் → அனல்.]

அன்னவன்

அன்னவன் aṉṉavaṉ, பெ. (n.)

   1. அத்தன்மையன்; such a man.

     “அன்ன வன்புகழ் கேட்டலும்” (நைடத. அன்னத்தைத்து, 37);.

   2. ஒத்தவன்; he who resembles.

     “அருங்கலக்கொடி யன்னவ னேகினான்” (சீவக 1372);.

ம. அன்னவன

     [அ (சே.சு.); → அன் → அன்ன → அன்னவன். ‘அன்’ ஆ.பா. ஈறு.]

அன்னவம்

 அன்னவம் aṉṉavam, பெ. (n.)

   கடல் (சூடா.);; see.

     [Skt. armava → த. அன்னவம்.]

அன்னவூறல்

 அன்னவூறல் aṉṉavūṟal, பெ. (n.)

   வடிகஞ்சி (வின்.);; gruel congee, water in which rice has been boiled.

     [அன்னம் + ஊறல்.]

     [Skt. anna → த. அன்னம்.]

அன்னவெட்டி

 அன்னவெட்டி aṉṉaveṭṭi, பெ. (n.)

   சோறு பரிமாறுவதற்குரிய கரண்டி (கொ.வ);; a spoon type vessel for serving rice.

த.வ. சோற்றுக்கரண்டி, கைகரண்டி.

     [அன்னம் + வெட்டி.]

     [Skt. anna → த. அன்னம்.]

அன்னா

அன்னா1_, சு.கு.வி.எ. (demons.adv.)

   அந்தா, அதோ (நெல்லை);; there ! (Tn.);.

     [அ (சே.சு.); → அன் → அன்னா.]

 அன்னா2 aṉṉā, இடை. (part.)

   பண்டைக் காலத்து உலகவழக்கு நெடிற்சாரியை; an enunciative particle added to long vowels and long vowel-consonants in ancient colloquial usage.

எ-டு : ஆவன்னா, ஈயன்னா, காவன்னா, கீயன்னா.

அன்னாசி

 அன்னாசி aṉṉāci, பெ. (n.)

   செந்தாழை என்னும் பழச்செடி; pine-apple, native of Maxico and Panama.

     [E. Anisi → த. அன்னாசி.]

     [Por.t ananas → த. அன்னாசி.]

     [Braz. namas → த. அன்னாசி.]

அன்னான்

அன்னான் aṉṉāṉ, பெ. (n.)

   1. அத்தன்மையன்; such a man.

   2. அவன்; he.

அன்னாபிடேகம்

 அன்னாபிடேகம் aṉṉāpiṭēkam, பெ. (n.)

   கடவுளுக்குச்சோற்றால் செய்யும் திருமுழுக்கு; cermony of pouring boiled rice over an idol in a temple.

     [Skt. anna-abhi-seka → த. அன்னாபிடேகம்.]

அன்னாய்

அன்னாய் aṉṉāy, இடை. (part.)

   ஓர் அசை நிலை; an expletive in poetry.

     “அன்னாய் பின்னவத் தைப்படும்” (சி.சி. பர. செளந். மறு. 8);.

     [அன்னை → அன்னாய் (விளி);. ‘ஆய்’ விளியுருபு.]

அன்னார்

 அன்னார் aṉṉār, பெ. (n.)

   சுல்தார்; asbestos (செ.அக.); — Indian asbestos, earth-flux or mountain flux (சா.அக.);.

     [கல்நார் → கன்னார் → அன்னார்.]

அன்னியத்தன்

அன்னியத்தன் aṉṉiyattaṉ, பெ. (n.)

   1. புறம்பானவன்; one who is outside a particular community or society.

   2. அறிமுகமில்லாதவன்; stranger.

     [Skt. anya+stha → த. அன்னியத்தன்.]

அன்னியன்

அன்னியன் aṉṉiyaṉ, பெ. (n.)

   1. புறம்பேயுள்ளான்; stranger, alien, foreigner.

   2. பிறன் (உத்தரரா. இலவண. 15);; other than oneself.

த.வ. அயலவன், உறவிலான்.

     [Skt. anya → த. அன்னியன்.]

அன்னியம்

அன்னியம் aṉṉiyam, பெ. (n.)

   1. வேறாகை (சி.போ.7,1,1}; being separate.

   2. வேறானது; that which is different.

   3. பிற நாட்டுள்ளது (வின்.);; that which is foreign, alien.

     [Skt anya → த. அன்னியம்.]

அன்னியாயம்

 அன்னியாயம் aṉṉiyāyam, பெ. (n.)

அநியாயம் பார்க்க; see aniyāyam.

     [Skt. anya → த. அன்னியாயம் (கொ.வ.);.]

அன்னியோன்னியம்

 அன்னியோன்னியம் aṉṉiyōṉṉiyam, பெ. (n.)

   ஒற்றுமை; mutuality, reciprocity, union, fellowship, initimacy.

மறுவ, ஒன்றிப்பு.

     [Skt. anyónya → த. அன்னியோன்னியம்.]

அன்னிலா

 அன்னிலா aṉṉilā, பெ. (n.)

   சீத்தா, அணிநுணா; custard apple, Anona squamosa (சா.அக.);.

அன்னீயம்

 அன்னீயம் aṉṉīyam, பெ. (n.)

   கரும்பு; sugarcane, Saccharum officinarum (சா.அக.);.

அன்னுகம்

அன்னுகம் aṉṉugam, பெ. (n.)

   1. பேய்ப் பசலை, மயக்கத்தை யுண்டுபண்ணும் ஒரு வகைக் கொடி; a bitter variety of creeping plant (Portulaca);, Portulaca meridiana, with a stupefying effect when consumed.

   2. பேய்ப்பருத்தி; golden silk-cotton, Cochlospermum, gossypium.

அன்னுராவி

 அன்னுராவி aṉṉurāvi, பெ. (n.)

   அப்பாவி (இ.வ.);; simpleton (Loc.);.

     [ஒருகா. அன் (எ.ம.முன்.); + அராவி அல்லது அன் (எ.ம.முன்.); + உராவி, அராவுதல் = தேய்த்தல், அரித்தல், வருத்துதல். உராவுதல் = வலிபெறுதல்.]

அன்னுழி

அன்னுழி aṉṉuḻi, கு.வி.எ. (adv.)

   அப்பொழுது; at that time, then.

     “அன்னுழியுமையவ ளகத்து ளோர்செய லுன்னினள்” (கந்தபு. உற்பத். பார்ப்பதி. 1);.

     [அ (சே.சு.); → அன் = அந்த. உழி = இடம். அன்னுழி = அவ்விடம், அவ்விடத்து, அப்போது.]

அன்னுழி என்னுஞ் சொல்லை, அவ்விடம் என்னும் பொருளிற் பெயர்ச்சொல்லாகவும் ஆளலாம்.

உழி பார்க்க;see uli.

அன்னுழை

அன்னுழை aṉṉuḻai, கு.வி.எ. (adv.)

   அவ்விடம்;   அவ்விடத்திற்கு; there, to that place.

     “மன்னு மன்னுழை போய பின்னர்” (திருவாலவா. 18:10);.

     [அ (சே.சு.); → அன் (அந்த); + உழை (இடம்);. உழி → உழை.]

அன்னை

அன்னை1 aṉṉai, பெ. (n.)

   1. தாய்; mother.

     “அன்னை என்செய்யில் என்?” (திவ். திருவாய். 5. 3:6);.

   2. தமக்கை (சூடா.);; elder sister.

   3. மலைமகள் (பார்வதி);; Malaimagal (Parvati); (பிங்.);.

   4. தோழி (பொதி, நி.); ; female companion or friend.

 Turk. anne ; Hung. anya.

     [அம்மை → அன்னை. அம் → அன். ம் → ன், போலி. ஒ.நோ. : அகம் → அகன், இடம் → இடன், உரம் → உரன், கலம் → கலன், சமம் → சமன், திறம் → திறன், நலம் → நலன், புலம் → புலன், முகம் → முகன், வரம் → வரன்.]

காதலும் அருமையும்பற்றி எப் பருவப் பெண்ணையும் இருபாலாரும் தாய் எனச் சொல்வதும் விளிப்பதும் தொன்றுதொட்ட மரபு. தோழி தலைவியைத் தலைமைபற்றியும் தாய் அல்லது அன்னை எனச் சொல்வதும் விளிப்பதும், இருவகை வழக்கிற்கும் உரியதாகும்.

     “அன்னை என்னை என்றலும் உளவே

தொன்னெறி முறைமை சொல்லினும் எழுத்தினும்

தோன்றா மரபின என்மனார் புலவர்” (தொல், பொருள். பொருளியல், 52);.

அன்னை என்பது, தலைவியும் தோழியும் ஒருவரையொருவர் குறிப்பது அல்லது விளிப்பது. என்னை என்பது, என் + ஐ என்று பிரிந்து தலைவியுந் தோழியும் தலைவனைக் குறிக்கும் (அல்லது விளிக்கும்); பெயராகவும், ‘என் அன்னை’ என்பதன் குறுக்கமாகித்

தலைவியும் தோழியும் ஒருவரையொருவர் குறிக்கும் (அல்லது விளிக்கும்); பெயராகவும் இருப்பது.

ஐ = தலைவன். “என்னைமுன் நில்லன் மின்” (குறள், 771);. அன்னை என்னை என்பன, அண்மைவிளியில் இயல்பாகவும் அன்னாய், என்னாய் என்று உருபேற்றும் வரும். என்னை யென்பது ஆண்பாலுணர்த்தின், இயல்பல்லாதபோது என்னைய, என்னையா என்று விளியேற்கும்.

 அன்னை2 aṉṉai, பெ. (n.)

   கொன்றைமரம்; common cassia, Cassia fistula (சா.அக.);.

அன்னோ

அன்னோ aṉṉō, இடை. (int.)

   1. ஐயோ ! அந்தோ ! ஓர் இரக்கக் குறிப்பு; alas ! an exclamation expressive of pity, distress.

     “பல்கால் முயங்கினள் மன்னே அன்னோ” (அகநா. 49 : 9);.

   2. அகோ !, ஆகா; ha ! hah ! an exclamation expressive of wonder.

தெ. அன்னா

     “அந்தீற் றோவும் அன்னீற் றோவும்

அன்ன பிறவுங் குறிப்பொடு கொள்ளும்” (தொல். சொல். இடை. 34);. அன்னீற்றோ = அன்னோ.

     [அன்னை → அன்னோ (விளி);. ‘ஒ’ விளியுருபு.]

தாய்தந்தை முறைப்பெயர்கள் விளியுருபேற்று, இரக்கம், துயரம், வருத்தம், வியப்பு, மகிழ்ச்சி முதலிய உணர்ச்சிகளையுணர்த்தும் என்பது, முன்னரே குறிக்கப்பட்டது.

அக்கோ, அகோ, அச்சோ, அத்தோ, அந்தோ பார்க்க;see akkõ, agõ, accõ, attõ, andõ.

அன்னோன்றி

 அன்னோன்றி aṉṉōṉṟi, பெ. (n.)

   வலியற்றவன்; person of a weak or feeble constitution.

     [அல் (எ.ம.முன்.); + நோன்றி. நோற்றல் → நோன்றல் = பொறுத்தல், வலிமையோடிருத்தல். நோன்பு = பொறை, வலிமை. நோல் → நோன்றி → நோன்றான், நோன்றாள், (வினையா.பெ.);. ஒ.நோ.: ஆள் → ஆண்டி = அடியாரை ஆட்கொள்ளும் துறவி. ‘இ’ ஒ. ஈறு, நொண்டி யென்பதிற்போன்று.]

அன்னோபிதம்

 அன்னோபிதம் aṉṉōpidam, பெ. (n.)

   மஞ்சட் குன்றிமணி; yellow bead-vine, Abrus precatorius (சா.அக.);.

அன்பகம்

 அன்பகம் aṉpagam, பெ. (n.)

   சமுத்திரப்பாலை (சங்.அக.);; elephant creeper —

   சமுத்திர சோகிப்பூண்டு; canvolvulus, Cissampelos pareira (சா.அக);.

சமுத்திரப் பாலையைக் கடற்பாலை யெனலாம்.

அன்பகர்

 அன்பகர் aṉpagar, பெ. (n.)

அன்பகம் பார்க்க;see anbagam.

     [அன்பகம் → அன்பகர்.]

அன்பனாதி

 அன்பனாதி aṉpaṉāti, பெ. (n.)

   கணவன்மேலுண்டாகும் காம மேலிட்டினாலும், என்றுங் கலவியிலேயே எண்ணங்கொண்டிருப்பதனாலும், பெண்டிர்க்குண்டாகும் சுரநோய்; hysteric fever mainly in young women, due to excessive passion towards their lovers, or to a morbid desire for sexual intercourse, or to lack of control over emotions.

அன்பன்

அன்பன் aṉpaṉ, பெ. (n.)

   1. நண்பன், தோழன்; friend, companion.

   2. கணவன்; husband.

     “அன்பனைக் காணா தலவுமென் னெஞ் சன்றே” (சிலப். 18:17);.

   3. பத்தன்; pious man, devotee.

     “குருகூர் நகர்நம்பிக் கன்ப னாய்” (திவ். கண்ணிநுண். 11);.

ம. அன்பன் ; Pers. Ahbab ; F. ami.

     [அன்பு → அன்பன்.]

அன்பரீசப்பூ

 அன்பரீசப்பூ aṉparīcappū, பெ. (n.)

   மலர்ந்த கிளிஞ்சில் சுண்ணாம்பு; quick lime (சா.அக.);.

அன்பரீசம்

 அன்பரீசம் aṉparīcam, பெ. (n.)

   கிளிஞ்சல்; bivalve shell (சா.அக.);.

அன்பர்

அன்பர்1 aṉpar, பெ. (n.)

அன்பகம் பார்க்க;see anbagam.

     [அன்பகம் → அன்பகர் → அன்பர்.]

 அன்பர் 2 aṉpar, பெ. (n.)

   நண்பர்; friends.

அன்பிலி

அன்பிலி aṉpili, பெ. (n.)

   அன்பில்லாதவன்; one who is devoid of love or affection.

     “அன்பிலி பெற்ற மகன்” (கலித். 86 : 34);.

     [அன்பு + இலி. இல் → இ.லி. ‘இலி’ வி. முத. ஈறு.]

அன்பு

அன்பு aṉpu, பெ. (n.)

   1. தொடர்புடையார் மாட்டு உண்டாகும் பற்று; love, attachment.

     ‘அன்பொத்த அவர்’ (பரிபா. 6 : 21, உரை);.

   2. நேசம்; affection, friendship.

   3. அருள், இரக்கம் (பிங்.);; grace, compassion.

   4. பத்தி; devotion, piety.

     “நரரோ டொத்துத் திரிபவர்க் கன்புசெய்வார்” (திருநூற். 80);.

   5. எல்லார் மாட்டும் இயல்பாகவுள்ள பற்று; natural love towards. all.

     “அன்புடையார் அன்பு முரியர் பிறர்க்கு” (குறள், 72);.

ம., க. அன்பு ; தெ. அனுகு ; து. அங்கு.

     [ஒல் → அல். அல்லுதல் = பொருந்துதல். அல் + பு – அன்பு. ‘பு’ பண்.பெ., தொ.பெ. ஈறு. ஒ.நோ. : தெல் + பு – தென்பு, நல் + பு – நன்பு, வல் + பு – வன்பு. அன்பு, உள்ளம் ஒன்றிப் பொருந்துவதன் விளைவாதலால் அப் பெயர் பெற்றது. ஒ.நோ. : ஆர்தல் = பொருந்துதல். ஆர் → ஆர்வு → ஆர்வம் = அன்பு ; ஆவலொடு கூடிய பற்றுள்ளம்.]

அன்புகூர்-தல்

அன்புகூர்-தல் aṉpuārtal,    2 செ.கு.வி. (v.i.)

   மிக நேசித்தல்; to abound in affection for, love intensively.

     “பிரானைப் பணிந்தன்பு கூர்வாமரோ” (பாரத மிகைப். காப்பு. 1);.

     [அன்பு + கூர். கூர்தல் = மிகுதல். “கூர்ப்புங் கழிவும் உள்ளது சிறக்கும்” (தொல். சொல். உரி. 16);. “சால வுறுதவ நனிகூர் கழி மிகல்” (நன். 456);.]

அன்புடைக்காமம்

அன்புடைக்காமம் aṉpuḍaikkāmam, பெ. (n.)

     “ஐந்திணையுடைய. தன்புடைக் காமம்” (நம்பியகப். 4);.

     [அன்பு + உடை + காமம். உடைய (கு.பெ. எ.); → உடை.]

காமம் பார்க்க;see kamam.

அன்புவிசம் (விஷம்)

 அன்புவிசம் (விஷம்) aṉpuvisamvišam, பெ. (n.)

   விடாயுப்பு (நாதவுப்பு);; a kind of salt prepared from female menstrual fluid, a solvent medium (சா. அக.);.

     [அன்பு + Skt. visa → த. விசம்.]

அன்புவேணிகை

 அன்புவேணிகை aṉpuvēṇigai, பெ. (n.)

   செம்பாவட்டை; a red variety of the plant pavattai, Pavetta indica (சா.அக.);.

அன்மதம்

 அன்மதம் aṉmadam, பெ. (n.)

   கன்மதம் (புதுவை); ; rock alum (Pond);.

     [கல் + மதம் – கன்மதம் → அன்மதம்.]

அன்மயம்

அன்மயம்1 aṉmayam, பெ. (n.)

   மாறு, மறுப்பு; opposition, contradiction.

     “உரைத்த நல்லுரைக் கன்மய மில்லை” (கம்பரா. யுத்த. மருத்து. 92); (செ.அக.);.

வை. மு. கோபாலகிருட்டிணமாசாரியாருரையில், ‘அன்வயம்’ என்ற பாடம் கொள்ளப்பட்டு, பொருத்தம் என்று பொருளுரைக்கப்பட்டுள்ளது. அன்மையம், அன்மயம் என்பன பாடவேறுபாடுகளாகக் காட்டப்பட்டுள்ளன.

 அன்மயம்2 aṉmayam, பெ. (n.)

   ஐயம் (சந்தேகம்);, ஐயுறவு (சிந்தா.நி.);; doubt.

இதுவும் முன்னதும் ஒரு சொல்லாகவேயிருப்பினும் இருக்கலாம்.

அன்மை

அன்மை aṉmai, பெ. (n.)

   1. அல்லாமை, ஒன்று இன்னொன்றாயிராமை, இன்மையினின்று வேறுபட்டது; reciprocal negation or difference, negation of identity, dist. f. inmai.

     “தன்மை சுட்டலும் உரித்தென மொழிப

அன்மைக் கிளவி வேறிடத் தான” (தொல். சொல். கிளவி, 25);.

   2. தீமை; evil.

     “அன்மை கடியுந் தவவலியால்” (சேதுபு. முத்தீர். 8);.

     [அல் → அன்மை → ‘மை’ பண்.பெ. ஈறு.]

அன்மொழி

அன்மொழி aṉmoḻi, பெ. (n.)

   1. அன்மொழித் தொகை பார்க்க;see an-moli-t-togai.

     “ஐந்தொகை மொழிமேற் பிறதொகல் அன் மொழி” (நன். 369);.

   2. புறமொழி; backbiting, slander.

     [அல் + மொழி – அன்மொழி.]

அன்மொழித்தொகை

 அன்மொழித்தொகை aṉmoḻittogai, பெ. (n.)

அன்யாபதேசம்

அன்யாபதேசம் aṉyāpatēcam, பெ. (n.)

   1. உள்ளுறையல்லாத வெளிப்படைப் பொருள் (ஈடு. 6, 5, ப்ர.);; allegorical presentation of one idea under the image of another.

   2. சாக்கிட்டுச் சொல்லுஞ் சொல்; innuendo.

     [Skt. anya+apa-dssa → த. அன்யாபதேசம்.]

அன்றன்றாடு

 அன்றன்றாடு aṉṟaṉṟāṭu, கு.வி.எ. (adv.)

   ஒவ்வொரு நாளும், அந்தந்த நாளில்; every day.

அன்றன்றாடு பாடு கழிகிறதே பெரிதாயிருக்கின்றது, அதில் எங்ஙனம் மீத்துவைக்க முடியும் ? (உ.வ.);.

     [அன்று + அன்று + ஆடு (முத.தொ. பெ.);. ஆடுதல் = நுகர்தல், காலங்கழித்தல்.]

அன்றன்று

அன்றன்று1 aṉṟaṉṟu, கு.வி.எ. (adv.)

   1. நாள்தோறும், அன்றாடம்; daily, from day to day.

   2. அந்தந்த வேளையில்; then and there.

சில்லறைக் கடன்களையெல்லாம் அன்றன்று கொடுத்துத் தீர்த்திருக்கவேண்டும் (உ.வ.);.

ம. அன்றன்று, அன்னன்னு : க., பட. அந்தந்து.

     [அன்று + அன்று. ‘அன்றன்று’ பன்மை பற்றி வந்த அடுக்குத்தொடர்.]

அன்று2 பார்க்க;see anru2.

 அன்றன்று2 aṉṟaṉṟu, செ.கு.வி. (v.i.)

   அடுக்கி வந்த ஒன்றன்பாற் படர்க்கை எதிர்மறைக் குறிப்புவினைமுற்று; duplication of neut. sing, neg. appellative verb.

     [அன்று + அன்று – அன்றன்று. எதிர்மறை பற்றி வந்த அடுக்குத்தொடர்.]

அன்றமை

அன்றமை aṉṟamai, பெ. (n.)

 air.

இது ‘anlima’ (breath); என்னும் இலத்தீன் சொல்லையும் ‘aimos’ (vapour); என்னும் கிரேக்கச் சொல்லையும் பெருமருங்கு ஒத்திருக்கின்றது. ஆங்கிலராட்சி தமிழ்நாட்டில் தோன்றியபின் இச்சொல் தமிழிற் புகுந்திருந்தால், ஆங்கில வழியாக இலத்தீன் அல்லது கிரேக்கச் சொல்லையொத்த இச்சொல் தோன்றிற்றெனலாம். ஆயின், கி.பி. 1600-ல் பிரித்தானியக் கிழக்கிந்தியக் குழும்பு (East India Company); தோன்றியதற்கு முன்பே, 1594-ல் சிதம்பர இரேவண சித்தர் தொகுத்த அகராதி நிகண்டில் இச்சொல் அமைந்திருப்பதால் அவ்வழி காட்ட இயலாது.

     ‘அன்’ (to breathe); என்னும் முதனிலை இந்திய-ஆரியத்திலிருப்பினும், அதினின்று திரிந்த ‘ஆத்மா’ (soul); என்னுஞ் சொல், மேலையாரியச் சொல்லளவு ‘அன்றமை’ என்னுஞ் சொல்லை ஒத்தில்லை.

தமிழில் மூச்சுவளியைக் குறிக்க, ‘air’ என்னும் ஆங்கிலச் சொல்லிற்கு நேரான சொல் வேறொன்றுமின்மையால், ‘அற்றமை’ யென்னுஞ் சொல் தென்சொல்லாயின் மிக அருமை வாய்ந்ததாகும்.

சிதம்பர இரேவண சித்தர் இச் சொல்லை எங்கணின்று கொண்டார் அல்லது எங்ஙனம் புனைந்தார் என்பது தெரியவில்லை.

அன்றாடகம்

 அன்றாடகம் aṉṟāṭagam, கு.வி.எ. (adv.)

   அன்றன்று, நாள்தோறும்; daily, from day to day.

     ‘அன்றாடக மூன்றுதினம் அந்திசந்தி கொள்வீரேல்” (சா.அக மேற்.);.

ம. அன்னேடம்

     [அன்று + ஆடு + அகம்.]

அன்றன்றாடு பார்க்க;see alr(u);-ar(u);-adu.

அன்றாடம்

 அன்றாடம் aṉṟāṭam, கு.வி.எ. (adv.)

அன்றாடகம் பார்க்க;see anradagam.

     [அன்றாடகம் → அன்றாடம்.]

அன்றாடு

அன்றாடு aṉṟāṭu, கு.வி.எ. (adv.)

அன்றன்று1 பார்க்க;see agramru1.

     ‘கைமேலே இலக்கைப் பெறாதார்க்கு அன்றாடு படிவிட வேணுமிறே’ (ஈடு, 4.8:7);, எப்படியாவது அன்றாடு பாடு கழியவேண்டும்.

     [அன்று + ஆடு.]

அன்றன்றாடு பார்க்க;see amr(u);-amr(u);-adu.

அன்றாடுகாசு

 அன்றாடுகாசு aṉṟāṭukācu, பெ. (n.)

   வழங்குகிற அல்லது செல்லுகிற காசு (நாணயம்);; coin in current use.

     [அன்று + ஆடு + காசு. ஆடுதல் = வழங்குதல்.]

அன்றாள்கோ

அன்றாள்கோ aṉṟāḷā, பெ. (n.)

   அப்பொழுது ஆளும் அரசன்; the then reigning king.

     ‘முட்டில் அன்றாள் கோவுக்கு நிசதி குன்றிப் பொன் மன்ற ஒட்டிக்கொடுத்தேன்’ (S.1.1.1, 115);.

அன்றி

அன்றி aṉṟi, இடை (conj.)

   1. அல்லாமல்; without, except by.

     ‘அவனன்றி அணுவும் அசையாது’ (பழ.);.

   2. அல்லாவிடத்து; unless, except when.

அவர் வந்தாலன்றி இங்கு ஒன்றும் நடவாது. மருந்து கொடுத்தாலன்றி அவன் பிழைக்கமாட்டான்.

   3. அல்லாமலும் (ஈடு, அவதா.);; besides.

அன்றியும், நான் சொல்வதை அவன் கேட்பதில்லை.

ம. அன்றி, அன்னி.

     [அல் → அன்று (அல் + து); → அன்றி (கு.வி. எ.);.]

     “அன்றி யின்றியென் வினையெஞ் சிகரம்

தொடர்பினு ளுகர மாய்வரி னியல்பே”

என்னும் நன்னூல் (173); நூற்பாவிற்கு,

     ‘இவ் விருமொழி யீற்று இகரமும் செய்யுளுள் உகரமாயும் வரப்பெறும்; அவ்வழி இயல்பாய் நிற்கும் மேல்வரும் வல்லினம் எ-று. வரின் எனவே, உகரமாதல் ஒருதலையன் றெனவும் உகரமாகாதவழி மிகுமெனவும் கொள்க.

வ-று. “வாளன்று பிடியா வன்கணாடவர்” “நாளன்று போகிப் புள்ளிடை தட்ப”, “உப்பின்று புற்கை யுண்கமா கொற்கை யோனே” என வரும் என்று மயிலைநாதரும், ‘அன்றி இன்றி யென்னும் வினையெச்சக் குறிப்புச் சொற்களினது ஈற்றிகரஞ் செய்யுட்கண் உகரமாய் வருமாயின், க ச த ப க்கள் பொதுவிதியான் மிகாது இயல்பாம் எ-று.

     ‘இவ்வாறு உடம்பொடு புணர்த்திக் கூறினமையின், இதற்கிதுவே விதியென்பதூஉம், உகரமாய்வரின் எனவே உகரமாதல் உடன் பாடென்பதூஉம், அஃது ஒரு தலையன்றென்பதூஉம் பெற்றாம்.

எ-டு :

     “நாளன்று போகிப் புள்ளிடை தட்பப்

பதனன்று புக்குத் திறனன்று மொழியினும்

வறிது பெயர்குநரல்லர் நெறிகொளப்

பாடான் றிரங்கு மருவிப்

பீடுகெழு மலையற் பாடி யோரே” (புறநா. 124);

எனவும், “உப்பின்று புற்கை யுண்கமா கொற்கையோனே” எனவும் வரும். ‘பிறவும் அன்ன’ என்று விருத்தியுரைகாரரும் உரைத்தார். பிற வுரையாசிரியன்மாரும் இவற்றையே தழுவினர்.

நூற்பாவும் உரைகளும், ‘அன்றி’, ‘இன்றி’ என்னும் வடிவங்களையே இயல்பாகவும், ‘அன்று’, ‘இன்று’ என்னும் வடிவங்களை அவற்றின் திரிபாகவும் கொண்டதாகத் தெரிகின்றது. அன்றி, இன்றி என்னும் இகரவீற்றுக் குறிப்புவினையெச்சங்கள், அல்லாது இல்லாது என்று பொருள்படும் அல்லது இல்லது என்னுஞ் சொற்களின் குறுக்கமான அன்று (அல் + து);, இன்று (இல் + து); என்பவற்றின் திரிபேயென்பதை, இவ் வினையெச்சங்களின் ஈறு துவ்வேயன்றித் திய்யன்று என்பதனாலும், ‘அவனல்லாது அணுவும் அசையாது’ என்னும் பழமொழி, ‘அவனன்றி அணுவும் அசையாது’ என்று வழங்குவதனாலும், அவனல்லது அல்லது அவனல்லாது என்பது அவனல்லதி அல்லது அவனல்லாதி என்று திரியாமையானும் உணர்ந்துகொள்க.

அன்றிக்கே

 அன்றிக்கே aṉṟikā, இடை (conj.)

அன்றி பார்க்க;see anri (ஈடு, அவதா.);.

     [அன்று → அன்றி → அன்றிக்கே.]

அன்றினார்

அன்றினார் aṉṟiṉār, பெ. (n.)

   பகைவர்; enemies.

     “அன்றினார் வெந்து வீழவும்” (தேவா. 4.89 : 10);.

     [அன்றுதல் = சினத்தல், பகைத்தல். அன்று → அன்றினார் (வினையா.பெ.);.]

அன்றியனைத்தும்

அன்றியனைத்தும் aṉṟiyaṉaittum, பெ. (n.)

   அவ்வனைத்தும், அவையெல்லாம்; all those.

     “அன்றியனைத்தும் கடப்பாடிலவே” (தொல், சொல். எச்ச. 53);.

     [அன்று → அன்றி. அ → அன் → அனை → அனைத்து → அனைத்தும். ‘உம்’ முற்றும்மை.]

     ‘அன்றி யனைத்தும்’ என்னுந் தொல்காப்பியத் தொடருக்கு, ‘அவ்வனைத்தும்’ என்று சேனாவரையர் பொருள் உரைத்துள்ளார். சொல்லப்பட்டவையல்லாமலும் அவைபோன்ற பிறவெல்லாம் என்று பொருள் கொள்ளவும் இடமுண்டு.

அன்றியில்

அன்றியில் aṉṟiyil, கு.வி.எ. (adv.)

   1. அன்றி, அல்லாது; except.

     ‘விவேகிக்கு ஒர் உபாதியன்றியில்’ (சி. சி. சுபக். 4: 8, சிவாக்.);.

   2. அல்லாமல்; except with, without.

உத்தரவன்றியில் உள்ளே வரக்கூடாது (உ.வ.);.

     [அன்று → அன்றி → அன்றியில்.]

அன்றியும்

அன்றியும் aṉṟiyum, இடை (conj.)

   அல்லாமலும் (சிலப். 5: 110, அரும்.);; besides, moreover.

அன்றியும், நான் பல சமையம் அவனுக்குப் பணங்கொடுத்து உதவியிருக்கிறேன்.

     [அன்று → அன்றி → அன்றியும். ‘உம்’ இறந்தது தழீஇய எச்சவும்மை.]

அன்றியுரை-த்தல்

அன்றியுரை-த்தல் aṉṟiyuraittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   மாறுபட்டுச் சொல்லுதல்; to speak in opposition or contradiction.

     “ஆரையு மன்றி யுரைப்பேன்” (தேவா. 7.73:10);.

     [அன்றுதல் = சினத்தல், பகைத்தல், மாறுபடுதல். அன்று → அன்றி (இ.கா.வி.எ.); + உரை.]

அன்றிற்றீவு

அன்றிற்றீவு aṉṟiṟṟīvu, பெ. (n.)

   வரலாற்று முன்னை எழுதீவுகளுள் ஒன்று (கிரெளஞ்சத் தீவு);; an annular continent or large island of pre-historic times.

     “அன்றிற் றீவினி னுறைப வரிவர்” (கம்பரா. யுத்த படைக்காட் 13);.

     [அன்றில் + தீவு. தீர்வு → தீவு.]

தீவு பார்க்க;see tivu.

அன்றில்

அன்றில் aṉṟil, பெ. (n.)

   1. ஆணும் பெட்டையும் இணைபிரியாததும், அவற்றுள் ஒன்றிறப்பின் மற்றொன்றும் உடனிறப்பதும், ஒருவரை யொருவர் இன்றியமையாக் கணவனும் மனைவியுமான காதலர்க்கு உவமையாக இலக்கியத்திற் கூறப்படுவதுமான கிரெளஞ்சப் பறவை; anril, a species of bird, the male and female of which are inseparable both in life and death, and veryfamiliar in Indian poetry as a standard or model of constancy and inseparable love. 2. 19ஆம் நாண்மீனாகிய மூலம் (பிங்.); ; the 19th lunar asterism.

ம. அன்றில்

     [அல் → அன்றி (கு.வி.எ.); + இல். அன்றில் = இணையன்றி அல்லது ஒன்றன்றி மற்றொன்று இல்லாதிருப்பது.]

சம்பிரதாய அகராதிக் கையெழுத்துப்படியில் (சம்.அக.); அன்றில் என்னுஞ் சொல்லிற்கு மயில் என்று ஒரு பொருள் குறித்திருப்பது பொருந்தாது.

அன்று

அன்று1 aṉṟu, பெ. (n.)

   அப்பொழுது, அந் நாள்; that time, that day.

அன்று விடியல், அன்று திங்கட்கிழமை.

-, கு.வி.எ. (adv.);

   அப்போது, அந்நாளில்; at that time, on that day.

     “அன்றவற் காங்கே பிணப்பறையாய்” (நாலடி. 23);.

ம. அன்னு ; க., பட. அந்து ; தெ. நாடு ; து. ஆனி ; கோண். அநீ ; குருக். அந்தி ; துட. அந்.

     [அ → அல் → அன்று (சே.சு. சொல்);.]

 அன்று 2 aṉṟu, பெ. (n.)

   மாறுபாடு; difference, incongruity.

     “ஒன்றிடையாயிரம் அன்றற வகுத்த” (அருட்பா. 6. அருட்பெருஞ்சோதியக. 621);.

     [அல் → அன்று (அல் + து); = அல்லது, மாறு, மாறானது.]

 அன்று3 aṉṟu, இடை. (part.)

   ஒர் அசைச்கொல்; an expletive.

     ‘சேவடி சேர்து மன்றே’ (சீவக. 1. உரை);.

 அன்று4 aṉṟu, கு.வி.மு. (adv.)

   ஒன்றன்பாற் படர்க்கை எதிர்மறைக் குறிப்பு வினைமுற்று; neuter sing neg. appellative verb.

நான் கேட்டது அதுவன்று (உ.வ.);.

அன்று-தல்

அன்று-தல் aṉṟudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. சினத்தல்; to get angry with.

     “அவ்வானத்தையன்றிச் சென்று” (திவ். இயற். திருவிருத்.18);.

   2. பகைத்தல்; to hate.

     “அன்றிய வாணன்” (திவ். பெரியதி. 4. 3:8);.

     [அல் → அன் → அனல். அன் → அன்று. அன்றுதல் = எரிதல், சினத்தல், பகைத்தல்.]

அன்றுதளிர்த்தான்

 அன்றுதளிர்த்தான் aṉṟudaḷirddāṉ, பெ. (n.)

   கிள்ளினவுடனே தளிர்க்குஞ்செடி; a plant which begins to grow immediately after it is nipped (சா.அக.);.

     [அன்று (அப்போதே, உடனே); + தளிர்த்தான் (வினையா.பெ.);. ‘ஆன்’ ஒ. ஈறு.]

இதை அன்றுதளிர்த்தான் செடியென்று சொல்ல வேண்டியதில்லை.

அன்றுமறுநாள்

 அன்றுமறுநாள் aṉṟumaṟunāḷ, கு.வி.எ. (adv.)

   அன்றைக்கு மறுநாள்; the day after (that day);.

அன்று மறுநாள் வந்துசேர்ந்தான்.

அன்றுமுதல்

அன்றுமுதல் aṉṟumudal, கு.வி.எ. (adv.)

   அவ்வேளையிலிருந்து, அந் நாளிலிருந்து; thence forth, from that day onward.

     “அன்றுமுதல் ….மறந்தறியேன்” (திவ். பெரியாழ். 4.10:9);.

அன்றெரிந்தான்

அன்றெரிந்தான் aṉṟerindāṉ, பெ. (n.)

   1. சிறு புள்ளடி (மலை);; species of Desmodium (செ.அக.); — a plant, trifoliate tick, Desmodium laxiflorum. It is so called because it is capable of being used as firewood immediately after it is cut (சா.அக.);.

   2. சிவனார்வேம்பு;Śivan’s neem, Indigofera aspalathoides (சா.அக.);.

     [அன்று (கிள்ளின. அன்றே); + எரிந்தான் (வினையா.பெ.);.]

அன்றெரிந்தான்பூண்டு என்று சொல்ல வேண்டியதில்லை.

அன்றே

அன்றே1 aṉṟē, கு.வி.எ. (adv.)

   அப்பொழுதே, அந்நாளே; at that very time, on the same day.

அன்றே புறப்பட்டுப் போய்விட்டான்.

     [அ → அன் → அன்று (காலம்பற்றிய சே. சு. சொல்); + ஏ (வன்புறை அல்லது பிரிநிலை குறித்த இடைச்சொல்);.]

 அன்றே2 aṉṟē, கு. வி. (impl.v.)

   அல்லதே; certainly not that.

ஆங்கிலம் இன்று அயன் மொழி யன்றே.

     [அல் → அன்று (எ.ம.கு.வி.மு.); + ஏ (தேற்றங் குறித்த இடைச்சொல்);.]

 அன்றே3 aṉṟē, இடை (ind.)

   அல்லவா?. ஒரு தேற்ற உடன்பாட்டுக் குறிப்புச் சொல்; isn’t it so?, a neg. interrogative equivalent to an emphatic affirmative.

     ‘அவனன்றே இது செய்வான் என அடுக்காது நின்றவழி, அன்றீற்றேவுக்குத் தெளிவு முதலாகிய பிறபொருளும் படும்’ (தொல். சொல். இடை. 34, சேனா.);.

     [அல் → அன்று (எ.ம.கு.வி.மு.); + ஏ (ஒலி வேறுபாட்டால் தேற்ற முணர்த்தும் வினா விடைச்சொல்.]

எதிர்மறை வினைமுற்று ஆ, ஏ, ஓ என்னும் வினாவிடைச்சொல் பெற்று உடன்பாட்டுப் பொருளை வலியுறுத்துவது, இருவகை வழக்கிற்கும் பொது. ஏகார வினாச் செய்யுள் வழக்கிலும், ஆகார ஓகார வினாக்கள் இரு வகை வழக்கிலும் வரும்.

எ-டு :

தெரிநிலைவினை – கடல் தாண்டினவன் கால்வாய் தாண்டமாட்டானா?

குறிப்புவினை – கடவுளுக்குக் கண் இல்லையா?

ஏகார வினா உலகவழக்கற்றுவிட்டதனால், அன்றோ என்று பொருள்படும் அன்றே என்னும் சொல்லின் வினாத்தன்மை விளங்கித் தோன்றவில்லை.

அன்றேஅன்றே

அன்றேஅன்றே aṉṟēaṉṟē, இடை (ind.)

   உடன்படாமையுணர்த்தும் அடுக்குச்சொல்; an idiomatic expression of dissent.

     ‘ஒருவன் ஒன்றுரைத்த வழி, அதற்கு மேவாதான் நன்றே நன்றே, அன்றே அன்றே என அடுக்கலும் வரும்; அவை மேவாமைக்குறிப்பு விளக்கும்’ (தொல். சொல். இடை. 34, சேனா.);.

     [அன்று (எ.ம.கு.வி.மு.); + ஏ (வினாவிடைச் சொல்);.]

     “நன்றீற் றேயும் அன்றீற் றேயும்

அன்ன பிறவுங் குறிப்பொடு கொள்ளும்” (தொல். சொல். இடை. 34);.

     ‘அன்றே’ என்பது தனித்து வரும்போது உடன்பாட்டுப்பொருளும், அடுக்கி வரும் போது எதிர்மறைப்பொருளும் உணர்த்தும் என அறிக. இது ஒலி வேறுபாட்டால் நிகழ்வது.

அன்றே என்பதன் ஈறு தேற்றேகாரமாயின், தனித்துவரினும் அடுக்கிவரினும் தேற்றமே உணர்த்தும்.

அன்றை

அன்றை aṉṟai, பெ. (n.)

   அந்நாள்; that day.

     “அன்றை யமரினில் ஒன்றுபட” (பாரத. ஆறாம். 24);.

-, கு.பெ.எ. (adj);

   அந்நாட்குரிய; of that day.

அன்றைச் செலவு.

     [அ → அன் → அன்று + ஐ (ஈறு – அல்லது சாரியை);.]

அன்றைக்கன்று

அன்றைக்கன்று aṉṟaikkaṉṟu, கு.வி.எ. (adv.)

   அன்றன்று; daily, from day to day.

     “அன்றைக்கன் றிருமடங்கா” (திருவிளை. மெய்க்கா. 12);.

     [அன்று (காலம்பற்றிய சே.சு.பெ.); + ஐ (சாரியை); + கு (4ஆம் வே.உ.); + அன்று (காலம்பற்றிய சே.சு.பெ.);.]

அன்றைக்கு

அன்றைக்கு aṉṟaikku, கு.வி.எ. (adv.)

   அந் நாளில்; on that day.

     [அன்று (காலம்பற்றிய சே.சு.பெ.); + ஐ (சாரியை); + கு (4ஆம் வே.உ.);. 4ஆம் வே.உ. 7ஆம் வே. பொருளில் வந்தது வேற்றுமை மயக்கம்.]

அன்றைத்தினம்

 அன்றைத்தினம் aṉṟaittiṉam, பெ. (n.)

   அந் நாள்; that day.

     [அன்று (காலம்பற்றிய சே. சு.பெ.); + ஐ (சாரியை); + Skt, dina → த. தினம். ‘அன்றைத் தினம்’ கு.பெ.எ. தொடர்.]

அன்றைநாள்

 அன்றைநாள் aṉṟaināḷ, பெ. (n.)

   அந்நாள்; that day.

     [அன்று + ஐ (சாரியை); + நாள்.]

அன்றைத்தினம் பார்க்க;see anrai-t-tinam.

அன்றைத்தினம் என்னும் வழக்கு, வீணாகவும் தமிழுக்குக் கேடாகவும் தினம் என்னும் வடசொல்லைக் கொண்டது.

அன்றோ

 அன்றோ aṉṟō, இடை (ind)

   அல்லவா?, அல்லவோ?, ஓர் உண்மையை வலியுறுத்தும் எதிர்மறை வினாச்சொல்; Is it not so?, a neg. interrogative, equivalent to an emphatic affirmative.

     [அல் → அன்று (அல் + து); + ஒ (வினா விடைச்சொல்);. அல் + அது – அல்லது → (அல்து); → அன்று (எ.ம.கு.வி.மு.);.]

அல்லவோ (அல்ல + ஓ); என்பது இழிந்தோர் உலக வழக்கு அன்றோ (அன்று + ஒ); என்பது உயர்ந்தோர் உலக வழக்கு. இரண்டும் செய்யுளிலும் அல்லது இலக்கியத்திலும் வரும். ஆயின், அல்லவோ என்பது அஃறிணைப் பன்மையுணர்த்தும்.

அன்வயம்

அன்வயம் aṉvayam, பெ. (n.)

 that which is inherent and inseparable.

     “அன்வயம் வெதிரேகம்” (மேருமந். 698);

த.வ. உடனொன்றிய இயல்பு.

     [Skt. anvaya → த. அன்வயம்.]

அன்வயி

அன்வயி1 aṉvayittal,    4 செ.குன்றாவி. (V.t.)

   1. பின்தொடர்தல் (கம்பரா. இரணிய. 136);; to follow, pursue.

   2. பாட்டிலும் உரைநடையிலும் ஒரு மொழியை மற்றொன்றோடு பொருட் பொருத்தமுறப் பொருத்துதல்; to construe one word with another with which it is syntactically connected.

     [Skt. anvaya → த. அன்வாயி-.]

 அன்வயி2 aṉvayittal,    4 செ.கு.வி. (V.i.)

   ஒரு சொல் மற்றொரு சொல்லுடன் இயைதல்; to fit in syntactically.

அப

அப1 aba,    இடை. (part.) வடமொழி முன்னொட்டு வகை; a Skt. adverbial or adnominal preposition implying contrariety, inferiority or distance.

     [Skt. apa → த. அப.]

 அப2 aba, இடை. (part.)

   1. ஏதாவது ஒரு பொருளுக்கு ஏற்படும் இழப்பு அல்லது அழிக்கை; the privation of any object or its attribute.

   2. உடம்பினெப்பகுதியிலாவது, உறுப்பு முதலிய அதைச்சார்ந்த இனத்திற்காவது இயல்பாக உண்டான தன்மையை அழித்தல்;      [Skt. apa → த. அப.]

அபகடம்

அபகடம் abagaḍam, பெ. (n.)

   ஏய்ப்பு; guile, dissimulation.

     “அபகட நினைவிகள்” (திருப்பு. 243);.

     [Skt. ava-kata → த. அபகடம்.]

அபகதவியாதியன்

 அபகதவியாதியன் abagadaviyādiyaṉ, பெ. (n.)

   நோய்வாய்ப்பட்டுப் பிறகு குணமடைந்தவன்; one who has recovered from an illness or a disease, convalescent.

த. வ. நோயகன்றோன்.

     [Skt. apa-ghata + vyadhistha → த. அபகத வியாதியன்.]

அபகனம்

 அபகனம் abagaṉam, பெ. (n.)

   உறுப்பு; organ (சா.அக.);.

     [Skt. apagana → த. அபகனம்.]

அபகமம்

 அபகமம் abagamam, பெ. (n.)

   இறப்பு; death (சா.அக.);.

     [Skt. apaga → த. அபகமம்.]

அபகம்

அபகம் abagam, பெ. (n.)

   இறப்பு (சிந்தா.நி.170);; death.

     [Skt. apa-ga → த. அபகம்.]

அபகரி-த்தல்

அபகரி-த்தல் abagarittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   கவர்தல்;   பிறருக்கு உரியதை நேர்மையற்ற முறையில் எடுத்துக் கொள்ளுதல்; to seize by violence, Snatch away, plunder, abduct.

     “எனையபகரிக்க வந்த சின்மயம்” (தாயு. ஆசை. 33);. வேறு ஒருவருக்குக் கிடைக்க வேண்டிய பதவி உயர்வை இவர் அபகரித்து விட்டாராம் (இ.வ.);.

     [Skt. apahar → த. அபகரி-,]

அபகாதம்

அபகாதம் abakātam, பெ. (n.)

   கொல்லுகை (சிந்தா.நி.169.);; killing.

     [Skt. apa-ghata → த. அபகாதம்.]

அபகாரம்

அபகாரம்1 abakāram, பெ. (n.)

   தீமை; injury, wrong, mischief.

     “அபகார மாற்றச் செயினும்” (நாலடி. 69.);.

     [Skt. apa-kåra → த. அபகாரம்.]

 அபகாரம்2 abakāram, பெ. (n.)

   கவர்கை; stealing, snatching away.

சுவர்ணபகாரம்.

     [Skt. apa-håra → த. அபகாரம்.]

அபகாரி

 அபகாரி abakāri, பெ. (n.)

   தீமை செய்வோன்; one who does evil to another, wrongdoer.

     [Skt. apa-karin → த. அபகாரி-,]

அபகீர்த்தி

 அபகீர்த்தி abaārtti, பெ. (n.)

   புகழின்மை; disgrace, ill fame, disrepute.

த.வ. அவப்புகழ்.

     [Skt. apa-kirti → த. அபகீர்த்தி.]

அபகுண்டனம்

அபகுண்டனம் abaguṇṭaṉam, பெ. (n.)

   சுற்றுகை (சிந்தா.நி.172.);; circling, revolving.

     [Skt. ava-kunthana → த. அபகுண்டனம்.]

அபகோலம்

 அபகோலம் abaālam, பெ. (n.)

   அழிஞ்சில்; sage-leaved alangium, Alangium lamarckil (சா.அக.);.

அபக்கியாதி

 அபக்கியாதி abakkiyāti, பெ. (n.)

   புகழின்மை; disrepute, disgrace, infamy.

     [Skt. apakhyåti → த. அபக்கியாதி.]

அபக்குரோசம்

அபக்குரோசம் abakkurōcam, பெ. (n.)

   இகழ்கை (சிந்தா. நி. 181);; treating with contempt.

     [Skt. apakrosa → த. அபக்குரோசம்.]

அபக்குவன்

அபக்குவன் abakkuvaṉ, பெ. (n.)

   பக்குவமடையாதவன் (தாயு. நினைவொ. 8.);; immature person, one not yet fit, esp. to be initiated.

     [Skt. a-pakva → த. அபக்குவன்.]

அபக்குவபுத்தி

அபக்குவபுத்தி abakkuvabutti, பெ. (n.)

   பக்குவப்படாத அறிவு; immature understanding (சா.அக.);.

     [அபக்குவ(ம்); + புத்தி.]

     [Skt. a – pakva + த. அபக்குவ(ம்);.]

புல் → புலம் = பொருளொடு பொருந்தும் அறிவு.

அறிவுறுப்பு அறிவுநூல் (சு.வி.36);

புலம் → புலன், புல் → புன் → (புந்தி); → புத்தி = அறிவு நல்வழி வழிவகை.

அபக்குவபோசனம்

 அபக்குவபோசனம் abakkuvabōcaṉam, பெ. (n.)

   முறையாகச் சமைக்காத உணவா யுண்ணுகை; elating food improperly cooked (சா.அக.);.

த.வ. ஏலா உணவு

     [Skt. a-pakva + bhojana → த. அபக்குவ போசனம்.]

அபக்குவம்

அபக்குவம் abakkuvam, பெ. (n.)

   முதிராமை; immaturity, unfitness.

     [Skt. a-pakva → த. அபக்குவம்.]

 அபக்குவம்2 abakkuvam, பெ. (n.)

   1. பழுக்காமை; unripeness.

   2. செரியாமை; indigestion (சா.அக.);.

     [Skt. apakva → த. ஆபக்குவம்.]

அபக்குவி

 அபக்குவி abakkuvi, பெ. (n.)

அபக்குவன் பார்க்க;see abakkuvan.

     [Skt. a-pakvin → த. அபக்குவி.]

அபங்கன்

அபங்கன்1 abaṅgaṉ, பெ. (n.)

   குறை வில்லாதவன்; one free from defect, perfect.

     “கொல் யானை யபங்கா” (தமிழ்நா. 129.);.

     [Skt. a-bhanga → த. அபங்கன்.]

 அபங்கன்2 abaṅgaṉ, பெ. (n.)

   கடவுள் (ஞான. 48.);; god as undivided whole.

     [Skt. a-bhanga → த. அபங்கன்.]

அபங்கம்

அபங்கம் abaṅgam, பெ. (n.)

   1. கோளகவைப்பு நஞ்சு (மூ.அ.);; a mineral poison.

   2. மராத்தியரது தெய்வப்பாடல்; Marathi devotional song.

     [Skt. a-bhanga → த. அபங்கம்.]

அபங்குரன்

அபங்குரன் abaṅguraṉ, பெ. (n.)

   திண்ணியன்; one who is firm or unshakable.

     “அபங்குர செங்கோ செங்கீரை” (குலோத் பிள்ளைத் 22);.

     [Skt. a-bhangura → த. அபங்குரன்.]

அபசகம்

 அபசகம் abasagam, பெ. (n.)

   சிற்றிலந்தை; small jujube tree, Scutia indica.

     [Skt. apasaka → த. அபசகம்.]

அபசகுனம்

 அபசகுனம் abasaguṉam, பெ. (n.)

   தீய குறி; bad omen.

த.வ. தீக்குறி.

     [Skt. apa-ša-guna → த. அபசகுனம்.]

அபசங்கம்

அபசங்கம் abasaṅgam, பெ. (n.)

   கால் (சிந்தா. நி. 174.);; leg.

     [Skt. apa-jangha → த. அபசங்கம்.]

அபசஞ்சாரம்

 அபசஞ்சாரம் abasañsāram, பெ. (n.)

   தொந்தத்தை மாற்றல்; purifying the contagion, disinfection (சா.அக.);.

     [Skt. apa + san-cara → த. அபசஞ்சாரம்.]

அபசஞ்சாரி

 அபசஞ்சாரி abasañsāri, பெ. (n.)

   நோயின் தொந்தங்களை மாற்றும் பொருள்; a substance that changes the attributes of a disease (சா.அக.);.

     [Skt. apa + sañ-càri → த. அபசஞ்சாரி.]

அபசப்தம்

அபசப்தம் abasabtam, பெ. (n.)

   1. வழுஉ மொழி; faulty expression.

   2. தீ மொழி; inauspicious expression.

   3. புகழின்மை; disrepute.

     [Skt. apa-šabda → த. அபசப்தம்.]

அபசயம்

அபசயம்1 abasayam, பெ. (n.)

   கேடு (மச்சபு. திரிபுரவி. 2);; destruction, ruin.

த.வ. அழிவு.

     [Skt. apa + jaya → த. அபசயம்.]

 அபசயம்2 abasayam, பெ. (n.)

   1. பறிக்கை; taking by force.

   2. தோல்வி; defeat.

     [Skt. apa-jaya → த. அபசயம்.]

அபசரிதம்

 அபசரிதம் abasaridam, பெ. (n.)

   தீயொழுக்கம்; improper conduct, misbehaviour.

     [Skt. apa-carita → த. அபசரிதம்.]

அபசற்பன்

அபசற்பன் abasaṟbaṉ, பெ. (n.)

   1. தூதன்; messenger.

   2. ஒற்றன்; spy.

     [Skt. apa-sarpa → த. அபசற்பன்.]

அபசவ்வியம்

அபசவ்வியம்1 abasavviyam, பெ. (n.)

   1. இடப்பக்கம்; left side.

     “நலத்த சவ்விய மேயப சவ்விய நாமம்” (வேதாரணி. பிரதக். 13);.

   2. மாறுபாடு; contrariety, disorder, as moving from right to left.

     [Skt. apa-savya → த. அபசவ்வியம்.]

 அபசவ்வியம்2 abasavviyam, பெ. (n.)

   1. வலப்புறம்; right side.

   2. எதிர்விளைவு; unfavourableness.

     [Skt. apa-savya → த. அபசவ்வியம்.]

அபசாரசக்தி

 அபசாரசக்தி abasārasakti, பெ. (n.)

   மைய நோக்க ஆற்றல் (புதுமை);; centrifugal force.

     [Skt apa-cára + sakti → த. அபசாரசக்தி.]

அபசாரப்படு-தல்

அபசாரப்படு-தல் abacārabbaḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   குற்றப்படுதல்; to be guilty of disregard, discourtesy, improper speech towards respectable people.

நான் இறைவனிடத்து அபசாரப்பட்டு விட்டேன்.

     [அபசார(ம்); + படு-,]

     [Skt. apa-såra → த. அபசாரம்.]

அபசாரம்

அபசாரம்1 abacāram, பெ. (n.)

   மதிப்புக் குறைவான செயல் (மச்சபு. சந்திரோ. 17.);; incivility, disrespectful conduct, irreverence.

     [Skt. apa-šảra → த. அபசாரம்.]

 அபசாரம்2 abacāram, பெ. (n.)

   1. இறப்பு; death.

   2. முறையற்ற மருந்துகள் (அவபத்தியம்);;     [Skt. apa-cåra → த. அபசாரம்.]

அபசி

அபசி abasi, பெ. (n.)

   1. அக்குள், ஆண்குறி, இடுப்பு ஆகியவிடங்களில் உண்டாகும் புற்றுநோய்; a cancer about the regions of the arm-pit root of the penis, and the waist.

   2. கண்டமாலை, கடினமும், மினுமினுப்பும் கூட்டி, வலிய முடிச்சுகளைப் போன்ற கட்டிகளைத் தாடைப் புறத்திலும், தொண்டையிலும், கழுத்தைச் சுற்றியும், மாலையைப் போல் ஒன்றன்பின் ஒன்றாக எழுப்பும் ஒருவகைப் புண்; a string of a large crop of hard, glossy, painless, glandular knots gradually growing about the joints of the jaw-bones, the tendons of the neck and about the throat, Scrofula (சா.அக.);.

த.வ. கண்டப்புற்று, கண்டமாலை.

     [Skt. apasi → த. அபசி.]

அபசிஅம்பர்

 அபசிஅம்பர் abasiambar, பெ. (n.)

   கருப்பு நிறமான அம்பர், (வேறு இரண்டு வகைகளாவன;   வெள்ளம்பர், கசகசா அம்பர்);; black amber. (the other two kinds are: poppy seeds amber, and white amber); (சா.அக.);.

அபசித்தாந்தம்

அபசித்தாந்தம்1 abasittāndam, பெ. (n.)

   தவறான முடிவு; wrong conclusion.

     “பன்னு மயசித்தாந்த மாகும்” (பிரபோத 43:3);.

     [Skt. apa-siddhånta → த. அபசித்தாந்தம்.]

 அபசித்தாந்தம்2 abasittāndam, பெ. (n.)

   தோல்வித்தானத் தொன்று (செந் iii, 13);; a fault in argumentation.

     [Skt. apa-siddhånta → தை. அபசிந்தாந்தம்.]

அபசுமாரகரோகம்

அபசுமாரகரோகம் abasumāragarōgam, பெ. (n.)

   கால்கை (காக்கை); வலிப்பு (சு.வை.ர.611);; epilepsy

     [Skt. apasmara-ka+roga → த. அபசுமாரசுரோகம்.]

அபசுமாரக்கிரகம்

 அபசுமாரக்கிரகம் abasumāraggiragam, பெ. (n.)

குழந்தைகளைத் தாக்குமொருவகைக் கோட்குற்றம் (கிரக தோடம்);.

   இது அறிவின்மை, மிக்கஅழுகை, வாயில்நுரை தள்ளல், உடம்பு நாற்றம், முதலிய குணங்களை உண்டாக்கும்; a morbific diathesis common in children, arising from the evil influence of planets. It is marked by senselessness, excessive weeping, frothy saliva from the mouth, fetid smell of the body etc. (சா.அக.);.

த.வ. கோள் குற்றம்.

     [Skt. apa-sumära + grha → த. அபசுமாரக் கிரகம்.]

அபசுமாரம்

அபசுமாரம்1 abasumāram, பெ. (n.)

   1. கால்கை (காக்கை); வலிப்பு; epilepsy, as marked by loss of memory.

   2. வெறுக்கத்தக்கது; that which is repulsive, disgusting.

     [Skt. apasmara → த. அபசுமாரம்.]

 அபசுமாரம்2 abasumāram, பெ. (n.)

   1. உணர்ச்சியின் தெளிவு நீங்குதல்; loss of senses or sensual feelings.

   2. உடம்பினுறுப்புக் கேற்படும் அழிவு; privation of any organ (சா.அக.);.

     [Skt. apa-sumåra+grha → த. அபசுமாரக் கிரகம்.]

அபசுமாரரோகம்

 அபசுமாரரோகம் abasumārarōkam, பெ. (n.)

   பித்தம் மிகுதியாகி உடல் முழுவதும் பரவுவதால் நரம்பைப் பற்றிக்கொண்டு அறிவைக் கலக்கும் நோய்; a nervous affection arising from the deranged condition of bile in the system. It directly affects the mind (சா.அக.);.

த.வ. பித்தமயக்கு.

     [Skt. apa-sumära + roga → த. அபசார ரோகம்.]

அபசுமாராசூரன்

அபசுமாராசூரன் abasumārāsūraṉ, பெ. (n.)

   முயலகன் (தென். இந். க்ஷேத். பக். 252);; an Asura over whose body Nagaraja dances.

     [Skt. apasumāra + šūra → த. அபசுமாரா சூரன்.]

அபசுவாசம்

 அபசுவாசம் abasuvāsam, பெ. (n.)

   ஐந்து வித வளி(வாயுக்);களில் ஒன்று; one of the five vital airs (சா.அக.);.

     [Skt. apa + svasa → த. அபசுவாசம்.]

அபச்சாயை

அபச்சாயை abaccāyai, பெ. (n.)

   1. நிழலற்றது; shadowless being, as a deity or celestial being.

   2. சாவுக்குறி; a sign of death.

   3. நிழலை அளந்து நாழிகை கணிப்பதில் மாதத்திற்குரிய தள்ளுபடியளவு; deduction from the length of one’s shadow, varying with the time of the year, made in calculating the hour of the day.

     [Skt. apacchaya → த. அபச்சாயை.]

அபச்சி

 அபச்சி abacci, பெ. (n.)

அபசி பார்க்க;see abasi (சா.அக.);.

அபச்சுமாரம்

அபச்சுமாரம் abaccumāram, பெ. (n.)

   1. கால்கை (காக்கை); வலிப்பு; epilepsy,

   2. பித்து; lunacy (சா.அக.);.

அபடங்கி

 அபடங்கி abaḍaṅgi, பெ. (n.)

   பதுமினி சாதிப் பெண்; one of the four classes of women divided according to lust (சா.அக.);.

அபட்கை

 அபட்கை abaṭkai, பெ. (n.)

   பாம்பின் கீழ்வாய் நச்சுப்பல் (வின்.);; lower fang of a snake.

     [Skt. apatkai → த. அபட்கை.]

அபட்சியம்

 அபட்சியம் abaṭciyam, பெ. (n.)

   உண்ணத் தகாதது; that which is unfit for consumption or is unwholesome (சா.அக.);.

     [Skt. abhaksya → த. அபட்சியம்.]

அபதந்திரகம்

 அபதந்திரகம் abadandiragam, பெ. (n.)

   வளி மிகுதியால் (வாதாதிக்கத்தினால்); மூளை தாக்கப்பட்டு, அதனாலேற்படும் இசிவு முதலான வலி; convulsions as a result of the affection of brain due to the aggravated condition of ‘vayu’ in the system, Apoplectic convulsions (சா.அக.);.

த.வ. மூளை இசிவு.

அபதந்திரம்

 அபதந்திரம் abadandiram, பெ. (n.)

அபதந்திரகம் பார்க்க;see abatandragam (சா.அக.);.

அபதரோகிணி

 அபதரோகிணி abadarōkiṇi, பெ. (n.)

   ஒரு புல்லுருவி; a parasitic plant, Epidendron tesselloides (சா.அக.);.

அபதர்ப்பணம்

அபதர்ப்பணம் abadarbbaṇam, பெ. (n.)

   1. உண்ணா நோன்பு; fasting.

   2. நோன்பு; low diet (சா.அக.);.

     [Skt. apa + tarppana → த. அபதர்ப்பணம்.]

அபதாங்கம்

 அபதாங்கம் abatāṅgam, பெ. (n.)

   கருவைக் கரைப்பதாலும் அல்லது கரு தானாகவே அழிவதாலும் காயமடைவதனாலும், மற்றும் வேறு வகைக் காரணங்களினாலும் ஏற்பட்ட மிகுதி அரத்த வொழுக்கினால் உடம்பிலுண்டாகும் அதிர்ச்சி; a condition due to excessive hemorrhage following closely upon an abortion or miscarriage or one incidental to an external blow or injury shock, is generally incurable (சா.அக.);.

த.வ. கருவிழி நடுக்கம்.

அபதானகம்

அபதானகம் abatāṉagam, பெ. (n.)

   1. எல்லா வகை நோய்களிலும் காணும் இசிவு; a general paroxysm found in all disease.

   2. வளியினால் நரம்புகள் தாக்கப்பட்டு அதனாலேற்படும் வலி அல்லது இசிவு; convulsion due to the affection of the nerves or nerve – centres of a functional or natural.

   3. கால்கை (காக்கை); வலியாற் காணுமிசிவு; a sharp paroxysm due to epilepsy-fit (சா.அக.);.

த.வ. நோய் இசிவு.

     [Skt. apa-dana → த. அபதானகம்.]

அபதானகவாதம்

அபதானகவாதம் abatāṉagavātam, பெ. (n.)

   1. உடம்பு சூடாகி வளி (வாயு); எல்லா நரம்புகளிலும் பரவுவதால், திடீரென எழுந்திருத்தல், உளறுதல், நடத்தல், நகைத்தல் முதலிய கெட்ட குணங்களைக் காட்டுமொரு நோய்; a neurotic disease of a functional origin extending to the nerve centres due to the aggravated condition of Vayu in the system, It is marked by the sudden rising of the person from bed, incoherent speech and peculiar laughter, a kind of neurosis.

   2. இசிவின்(வாதத்தின்); எழுச்சியினாலெழுந்து, நரம்புகளிற் பரவி எழுந்தெழுந்து விழுவதும், வலிப்புத் தவிர, மற்றபடி இயல்பாக ஏற்படும் கால்கை (காக்கை); வலிப்பு நோய்; a form of disease in which the patient falls to the ground at intervals and exhibits all symptoms of epilepsy except convulsions (சா.அக.);.

த.வ. இயல்பலா இயக்க நோய்.

     [Skt. apa-dana + våta → த. அபதானகவாதம்.]

அபதானம்

அபதானம் abatāṉam, பெ. (n.)

   நற்பெருஞ் செயல்; great or noble dead.

     “இதுவன்றோ அவனுடைய அபதான மிருக்கிறபடி” (ஈடு.2,8,8);.

த.வ. அருங்செயல்.

     [Skt. apa-dana → த. அபதானம்.]

அபதார்த்தம்

அபதார்த்தம் abatārttam, பெ. (n.)

   1. உள்ளதல்லாதது; nonentity.

   2. பயனற்றது; that which is useless.

     [Skt. a-padaritha → த. அபதார்த்தம்.]

அபதேசம்

அபதேசம் abatēcam, பெ. (n.)

   1. பெரும்புகழ்; fame.

   2. நிமித்தம்; cause, motive.

   3. தலைக் கீடு உரை (வியாஜம்);; pretext.

   4. குறி; mark, butt.

   5. இடம்; place.

     [Skt. apa-dēša → த. அபதேசம்.]

அபதேவதை

 அபதேவதை abadēvadai, பெ. (n.)

   ஆரஞர் தெய்வம், தீய தெய்வம்; demon, goblin, evil spirit.

     [Skt. apa-devatå → த. அபதேவதை.]

அபத்தக்களஞ்சியம்

 அபத்தக்களஞ்சியம் abattakkaḷañjiyam, பெ. (n.)

   குற்றச்சேமிப்புக் குவிப்பிடம்; storehouse of errors.

     [அபத்தம் + களஞ்சியம்.]

     [(Skt. a-baddha → த. அபத்தம்.]

குள் → குளஞ்சி → களஞ்சி + அம் → களஞ்சியம். களஞ்சியம் = கொள்ளிடம் இருப்பிடம்.

அபத்தசந்தம்

அபத்தசந்தம் abattasandam, பெ. (n.)

   1. உணவுகொள் வேட்கையின்மை; aversion of food.

   2. பசியின்மை; want of appetite (சா.அக.);.

     [Skt. a.baddha + santa → த. அபத்தசந்தம்.]

அபத்தமுகம்

 அபத்தமுகம் abattamugam, பெ. (n.)

   இழிசொல் வழங்குவோன்; foul-mouthed.

     [அபத்தம் + முகம்.]

     [Skt. a, baddha → த. அபத்தம்.]

அபத்தம்

அபத்தம் abattam, பெ. (n.)

   1. வழு; error.

   2. பொய்; falsehood.

   3. நிலையாமை; instability.

     “குடும்பத் தபத்த முணர்கின்” (ஞானவா. தாசூ. 60);;

   4. பேரிடர் (யாழ்ப்.);; disaster calamity.

த.வ. பொய்ப்பழி.

     [Skt. a-baddha → த. அபத்தம்.]

அபத்தம்பமர்மம்

 அபத்தம்பமர்மம் abattambamarmam, பெ. (n.)

   மூச்சுக் குழற் கிளைகள் இரண்டும் கூடுமிடம்; the meeting of the bifurcated branches of the bronchiallying on both sides of the breast (சா.அக.);.

த.வ. மூச்சுக்குழல் வருமம்.

     [Skt. a-baddhamba + marman → த. அபத்தம்பமர்மம்.]

த. மம்ருமம் → Skt. marman.

அபத்தம்பம்

 அபத்தம்பம் abattambam, பெ. (n.)

   மூச்சுக் குழாயின் பிரிவு; bronchial tubes or bronchia (சா.அக.);.

     [Skt. abaddhamba → த. அபத்தம்பம்.]

அபத்தம்பினி

 அபத்தம்பினி abattambiṉi, பெ. (n.)

   ஒரு பூடு; a plant (சா.அக.);.

அபத்திசந்தம்

 அபத்திசந்தம் abattisandam, பெ. (n.)

அபத்த சந்தம் பார்க்க;see abatta-šandam (சா.அக.);.

     [Skt. abaddha-sanda → த. அபத்திசந்தம்.]

அபத்தியசத்துரு

 அபத்தியசத்துரு abattiyasatturu, பெ. (n.)

   நண்டு; crab (சா.அக.);.

அபத்தியதை

 அபத்தியதை abaddiyadai, பெ. (n.)

   மருத்துவச்சி; midwife (சா.அக.);.

அபத்தியதோடம்

அபத்தியதோடம் abattiyatōṭam, பெ. (n.)

   நோயுற்ற காலத்தில் உட்கொண்ட தகுதியற்ற உணவால் திரும்பிய நோய் (சீவரட். 30.);; relapse caused by violation of dietary rules.

     [Skt. apathya + dosa → த. அபத்தியதோடம்.]

அபத்தியபதம்

 அபத்தியபதம் abaddiyabadam, பெ. (n.)

   பெண்குறி; female sexual organ (சா.அக.);.

அபத்தியம்

அபத்தியம்1 abattiyam, பெ. (n.)

   முறையாக (பத்தியம்); மருந்துணாத் தவறு; deviation from prescribed diet, improper or unsuitable diet, in medical treatment.

     “அபத்தியஞ் செய்திட றனக்கே கேடு” (வேதா. சூ. 175.);.

த.வ. பத்தியக்கேடு.

     [Skt. apathya → த. அபத்தியம்.]

 அபத்தியம்2 abattiyam, பெ. (n.)

   1. பிள்ளை (சிந்தா. நி. 168.);; child.

   2. மக்கட்பொது (நாநார்த்த.);; human being.

     [Skt. apatya → த. அபத்தியம்.]

அபத்திரவியம்

அபத்திரவியம் abattiraviyam, பெ. (n.)

   1. மாசு; want of cleanliness.

   2. கலப்பு; admixture (சா.அக);.

அபநயம்

அபநயம் abanayam, பெ. (n.)

   1. பிணி தீர்த்தல்; curing a disease.

   2. இறப்பு; death (சா.அக.);.

அபநாசி

 அபநாசி abanāci, பெ. (n.)

   மூக்கின்மை; lack of nose, congenital absence of a nose (சா.அக.);.

     [Skt. apa-näšika → த. அபநாசி.]

அபநித்திரை

 அபநித்திரை abanittirai, பெ. (n.)

   உறக்கமின்மை; sleeplessness inability to sleep, insomnia (சா.அக.);.

த.வ. உறக்கக்கேடு.

     [Skt. apa-nidra → த. அபநித்திரை.]

அபநிரியாணம்

அபநிரியாணம் abaniriyāṇam, பெ. (n.)

   படையெழுச்சி (சிந்தா. நி. 182.);; march of troops.

     [Skt. apa-niryåna → த. அபநிரியாணம்.]

அபனாதி

 அபனாதி abaṉāti, பெ. (n.)

   நிலத்துளசி; basil (சா.அக.);.

அபபாத்திரிதன்

 அபபாத்திரிதன் ababāddiridaṉ, பெ. (n.)

   இனத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டவன் (பிரஷ்டன்); (Cm.);; one who is excommunicated.

     [Skt. apa-patrita → த. அபபாத்திரிதன்.]

அபப்பிரசாதை

 அபப்பிரசாதை ababbiracātai, பெ. (n.)

   வயிற்றிற் கருவழித்தவள்; a female who has had a miscarriage, an aborted woman (சா.அக.);.

அபமட்டர்

 அபமட்டர் abamaṭṭar, பெ. (n.)

   வட்டத் திருப்பி; velvet leaf, Cissampelos pareira (சா.அக.);.

அபமம்

 அபமம் abamam, பெ. (n.)

   வான்கோள நடுநேர் வரையிலிருந்து விண்மீனுக்குரிய கோணத் தொலைவு;த.வ. விலகல் கோணம்.

     [Skt. apama → த. அபமம்.]

அபமரணம்

அபமரணம் abamaraṇam, பெ. (n.)

   1. அகால மரணம் பார்க்க;see akalamaranam.

   2. இயற்கைக்கு மாறான இறப்பு; unnatural death (சா.அக.);.

     [Skt. apa-marana → த. அபமரணம்.]

அபமானம்

அபமானம் abamāṉam, பெ. (n.)

   மானக்கேடு (அபகீர்த்தி); (சிந்தா. நி. 173.);; dishonour, disgrace.

த.வ. மானக்கேடு.

     [அப + மானம்.]

     [Skt. ava → த. அப.]

அபமார்க்கம்

அபமார்க்கம் abamārkkam, பெ. (n.)

   1. நாயுருவிச் சமூலம்; the plant as a whole;

 Indian burr, Achyranthes aspera.

   2. ஆதன் கடைத்தேறும் வழி; the path of emancipation (சா.அக);.

     [Skt. apa-marga → த. அபமார்க்கம்.]

அபமார்க்கி

அபமார்க்கி abamārkki, பெ. (n.)

   பூடுவகை (பதார்த்த. 395.);; species of Achyranthes.

     [Skt. apa-marga → த. அபமார்க்கி.]

அபமிருத்தியு

அபமிருத்தியு1 abamiruttiyu, பெ. (n.)

   இயற்கைக்கு மாறான இறப்பு; untimely, accidental or un natural death.

     [Skt. apa-mrtyu → த. அபமிருத்தியு.]

 அபமிருத்தியு2 abamiruttiyu, பெ. (n.)

   1. இடர்; agreat danger.

   2. நோய்; illness (from which a person recovers); (சா.அக.);.

அபமிருத்து

 அபமிருத்து abamiruttu, பெ. (n.)

அபமிருத்தியு பார்க்க;see aba-miruttiyu (சா.அக.);.

     [Skt. apa-mrtyu → த. அபமிருத்து.]

அபயகத்தம்

அபயகத்தம் abayagattam, பெ. (n.)

   1. அடைக்கலக் கை; right hand of an idol or great person raised in token of dispelling fear and assuring protection.

   2. கடவுளின் வலக்கை (அபய); முத்திரை பதிந்த சந்தன வில்லை; brittle cake of Sandal containing the impression of the right hand of the idol and presented to worshippers in temples.

     [Skt. a-bhaya + hasta → த. அபயகத்தம்.]

அபயகரம்

அபயகரம் abayagaram, பெ. (n.)

அபயாத்தம் பார்க்க;see abayattam,

     “ஆசை யளிக்கு மபயகரம் பாரேனோ” (பட்டினத். 209);.

த.வ. அடைக்கலங்கை, உதவிக்கை.

     [Skt. a-bhaya → த. அபயம்.]

அபயகுலசேகரன்

அபயகுலசேகரன் abayagulacēgaraṉ, பெ. (n.)

   திருமுறைகண்ட சோழன் (திருமுறைகண்.1);; a Cola-king.

அபயக்கல்

 அபயக்கல் abayakkal, பெ. (n.)

   எல்லைக்கல் (இ.வ.);; boundary stone, as removing fear of encroachment.

     [அபயம் + கல்.]

     [Skt. a-bhaya → த. அபயம்.]

அபயங்கொடு-த்தல்

அபயங்கொடு-த்தல் abayaṅgoḍuttal,    4 செ.குன்றாவி. (v.t.)

   அஞ்சலென் றருளுதல்; to dispel fear by raising the hand, give assurance of protection, give refuge.

த.வ. புகல்தரல்.

     [Skt. a-bhaya → த. அபயம்.]

அபயதானம்

அபயதானம் abayatāṉam, பெ. (n.)

   அடைக்கலந் தருகை (கம்பரா. வீபீடண. 120);; giving assurance of safety or protection.

     [அபயம் + தானம்.]

     [Skt. a-bhaya → த. அபயம்.]

அபயன்

அபயன்1 abayaṉ, பெ. (n.)

   1. அருகன் (திவா.);; Arhat, as without fear.

   2. சோழ மன்னருள் ஒருவன்; Cola king.

     “செய்யகோ லபயன்” (பெரியபு. திருமலை. 12.);.

     [Skt. a-bhaya → த. அபயன்.]

 அபயன்2 abayaṉ, பெ. (n.)

அபயன்கடுக்காய் பார்க்க;see abayankadukkāy.

     “அபயனெனுங் கடுக்காய்” (பதார்த்த. 963);.

 அபயன்3 abayaṉ, பெ. (n.)

   அச்சமில்லாதவன் (நாநார்த்த.);; fearless man.

     [Skt. a-bhaya → த. அபயன்.]

 அபயன்4 abayaṉ, பெ. (n.)

   உடம்பில் எலும்புகளைப் பற்றிய நோய்களைப் போக்கும் கருப்பு நிறமானதும் பொதிகை மலையில் விளைவதுமான கடுக்காய்; a species of black Indian myrobalan capable of curing disease affecting the bones in the system. Stanza goes to show that this drug is available in Podigai hills in the Tinnevelly District.

     “அபயனெனுங் கடுக்கா யங்க நோ யெல்லாம் அபயமிட் டோட வடிக்கும்-அபையற் கதிக நிறங் கறுப்ப தாகும் விளை பூமி பொதிகை மலையாம் புகல்” (பதார்த்த. சிந்); (சா.அக.);.

     [ISkt. a-bhaya → த. அபயன்.]

அபயன்கடுக்காய்

 அபயன்கடுக்காய் abayaṉkaḍukkāy, பெ. (n.)

   கடுக்காய் வகை; species of chebulic myrobalan.

     [அபயன் + கடுக்காய்.]

     [Skt. abhaya → த. அபயன்.]

அபயப்பிரதானம்

அபயப்பிரதானம் abayabbiratāṉam, பெ. (n.)

அபயதானம் (பிரபோத.22, 5); பார்க்க;see abayadanam.

     [Skt. a-bhaya + pra-dana → த. அபயப்பிரதானம்.]

அபயமிடு-தல்

அபயமிடு-தல் abayamiḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   அடைக்கலந்தரும்படி கூவுதல்; to call for succor, appeal for protection.

     “அபயமிடு குரலறியாயோ” (திருப்பு. 180.);.

     [அபய(ம்); + இடு-,]

     [Skt. a-bhaya → த. அபயம்.]

அபயமுத்திரை

 அபயமுத்திரை abayamuttirai, பெ. (n.)

   தஞ்சமளித்தலைக் காட்டுங் கைக்குறி; pose of the right hand, as of an idol, raised as a sign of protection.

     [அபயம் + முத்திரை.]

     [Skt. abhaya → த. அபயம்.]

அபயம்

அபயம்1 abayam, பெ. (n.)

   இலாமிச்சம் (நாநார்த்த.);; cuscus grass.

     [Skt. a-bhaya → த. அபயம்.]

 அபயம்2 abayam, பெ. (n.)

   மிளகு (வை.மூ);; pepper.

 அபயம்3 abayam, பெ. (n.)

   1. அச்சமின்மை; fearlessness, intrepidity, safety, security.

     “அபயமச்சம்” (பிரபோத. 27, 81);.

   2. அடைக்கலம்; refuge, protection.

     “மன்னா வுனக் கபயம்” (நளவெ. கலிநீ. 3);.

   3. அருள் (பிங்.);; god’s grace, as refuge.

     [Skt. a-bhaya → த. அபயம்.]

 அபயம்4 abayam, பெ. (n.)

   1. செவ்வியம்; common or black pepper, piper nigrum.

   2. ஒரு நறுமணப் புல்; a kind of scented grass (சா.அக.);.

அபயர்

 அபயர் abayar, பெ. (n.)

   வீரர் (உரி.நி);; warriors.

     [Skt. abhaya → த. அபயர்.]

அபயலை

அபயலை abayalai, பெ. (n.)

   இலாமிச்சை (தைலவ. தைல. 34);; cuscus grass, Andropogon muricatus.

அபயவத்தம்

அபயவத்தம் abayavattam, பெ. (n.)

   இணைக்கை வகை (சிலப். 3, 18, உரை);;     [Skt. avahittha → த. அபயவத்தம்.]

அபயவரதக்கை

அபயவரதக்கை abayavaradakkai, பெ. (n.)

   மனக்கருத்தைக் குறிப்பாய் விளக்கும் கை மற்றும் மெய் செய்கை (அபிநயக்கை); வகை (பரத. பாவ. 55.);;     [அபயவரதம் + கை.]

     [Skt. a-bhaya + varada → த. அபயவரதம்.]

அபயவாக்கு

 அபயவாக்கு abayavākku, பெ. (n.)

   அஞ்சலென்னும் அருட்சொல்; assurance of safety, word of encouragement.

     [அபயம் + வாக்கு.]

     [Skt. abhaya → த. அபயம்.]

அபயாதிசல்கம்

 அபயாதிசல்கம் abayātisalkam, பெ. (n.)

   மூச்சு, விக்கல் ஆகியவற்றிற்குச் சுக்கும், கடுக்காயும் சேர்த்து செய்த ஒரு வகைப் பிசுபிசுப்பான மருந்து; a paste of dry ginger, and country gallnut prescribed for hard breathing and hiccough (சா.அக.);.

     [Skt. a-bhayati + calka → த. அபயாதி சல்கம்.]

அபயாத்தம்

அபயாத்தம் abayāttam, பெ. (n.)

   அச்சந்தீர வமைக்குங் கை (சிந்தா.நி. 174);; hand raised in token of dispelling fear and assuring protection.

த.வ. தஞ்சக்கை, அடைக்கலக்கை.

     [Skt. a-bhaya + hasta → த. அபயாத்தம்.]

அபயாரிட்டம்

 அபயாரிட்டம் abayāriṭṭam, பெ. (n.)

   காய்ச்சல் கட்டி, செரியாமை, நெஞ்சுவலி, காமாலை, குடற்பூச்சி முதலிய நோய்களுக்குக் கொடுக்குமோர் ஆயுள்வேத மருந்து; an ayurvedic preparation given in cases of enlarged spleen, impaired digestion, chronic diarrhoea, heart-disease, jaundice, ascites, worms in the intestines etc. (சா.அக.);.

     [Skt. a-bhayå-rista → த. அபயாரிட்டம்.]

அபரகாத்திரம்

அபரகாத்திரம் abarakāttiram, பெ. (n.)

   கால்; leg,

     “வேழம்… மருப்புத்திண்கை யபரகாத் திரங்க டம்மாற்… கொன்றது” (சீவக. 806);.

     [Skt. a-vara + gåtra → த. அபரகாத்திரம்.]

அபரக்காத்திரம்

அபரக்காத்திரம் abarakkāttiram, பெ. (n.)

   1. கால்; leg.

   2. பின்கால்; hind leg (in quadrupeds); (சா.அக.);.

அபரக்கிரியை

 அபரக்கிரியை abarakkiriyai, பெ. (n.)

   சவச்சடங்கு; obsequies,

     “அபரக்கிரியை இன்றோடு முடிந்தது”.

த.வ. இறுதிக்கடன்.

     [Skt. a-para + kriya → த. அபரக்கிரியை.]

அபரங்கப்பருப்பு

 அபரங்கப்பருப்பு abaraṅgabbarubbu, பெ. (n.)

   உளுந்து; black gram, Phaseolus radiates (சா.அக.);.

அபரசன்

அபரசன் abarasaṉ, பெ. (n.)

   தம்பி (சிந்தா. நி. 166.);; younger brother.

     [Skt. apara-ja → த. அபரசன்.]

அபரசூரியன்

 அபரசூரியன் abaracūriyaṉ, பெ. (n.)

   அறிவ நடைகளிற் சிறந்தோன்; person pre-eminent in wisdom and character, as a second sun.

     [அபர(ம்); + சூரியன்.]

     [Skt. a-para → த. அபரம்.]

அபரஞானம்

அபரஞானம் abarañāṉam, பெ. (n.)

   நூலறிவு (ஒழிவி. கிரியை. 11. உரை);; that which is not divine wisdom, as knowledge of sastras.

     [Skt. a-para + Pkt. nana → த. அபரஞானம்.]

அபரஞ்சி

அபரஞ்சி1 abarañji, பெ. (n.)

   புடமிட்ட பொன்; refined gold.

     “ஆயிரத் தெட்டு மாற்றி னபரஞ்சி” (மச்சபு. தாரகாசுரவ. 26);.

 அபரஞ்சி2 abarañji, பெ. (n.)

   1. தங்க ஒள்ளிழை; gold leaf used in setting precious stones.

   2. கம்மாறு வெற்றிலை; a species of dark green and pungent thick betel leaf (சா.அக.);.

அபரஞ்சித்தூள்

அபரஞ்சித்தூள் abarañjittūḷ, பெ. (n.)

   1. தங்கப் பொடி; gold dust.

   2. பொன்மணல்; gold ore (சா.அக.);.

அபரதன்

 அபரதன் abaradaṉ, பெ. (n.)

   வெடியுப்பு; nitre potassium nitrate (சா.அக.);.

அபரதரன்

 அபரதரன் abaradaraṉ, பெ. (n.)

   வெடியுப்பு (வை.மூ.);; saltpetre.

அபரதி

அபரதி abaradi, பெ. (n.)

   தாமதிக்கை (சிந்தா.நி. 167.);; delay.

     [Skt. ava-rati → த. அபரதி.]

அபரத்துவம்

அபரத்துவம் abarattuvam, பெ. (n.)

   பின்மை (பிரபோத. 42.2);; being behind, coming after.

     [Skt. a-paratva → த. அபரத்துவம்.]

அபரநாதம்

 அபரநாதம் abaranātam, பெ. (n.)

   சிவக் கொண்முடிபுகளு ளொன்று (வின்.);; a Sivatattuvam.

     [Skt. apara + natha → த. அபரநாதம்.]

அபரபக்கம்

 அபரபக்கம் abarabakkam, பெ. (n.)

   தேய்பிறை (கிருஷ்ண பட்சம்);; the dark or latter half of the lunar month.

த.வ. இருட்பக்கம்.

     [Skt. apara → த. அபர(ம்);.]

அபரபட்சம்

 அபரபட்சம் abarabaṭcam, பெ. (n.)

அபரபக்கம் பார்க்க;see abarapakkam.

     [Skt. a-para + paksa → த. அபரபட்சம்.]

அபரபுத்தி

 அபரபுத்தி abarabutti, பெ. (n.)

   பின்புத்தி (வின்.);; indiscretion, after thought.

அபரபோகம்

அபரபோகம் abarabōkam, பெ. (n.)

   இம்மை மறுமைகளில் துய்க்கத்தக்க இன்பங்கள் (சி.சி. 8, 18.);; pleasures enjoyed in this world and the next.

     [Skt. a-para + bhoga → த. அபரபோகம்.]

அபரமார்க்கம்

 அபரமார்க்கம் abaramārkkam, பெ. (n.)

   வெண்ணாயுருவி; a white species of நாயுருவி, a plant, Indian burr, Acchyrathes aspera (சா.அக.);.

அபரமுத்தி

அபரமுத்தி abaramutti, பெ. (n.)

   1. பதமுத்தி; inferior state of bliss, attainment of heavens of deities, opp to paramutti.

   2. தூய மெய்ப்பொருள் (தத்துவங்);களிற் பெறும் வாழ்வு;     [Skt a-para + mukti → த. அபரமுத்தி.]

அபரம்

அபரம் abaram, பெ. (n.)

   1. பின் (பிங்.);; latter, being after in time or place.

   2. முதுகு (பிங்.);; back.

   3. யானையின் பின்னங்கால் (திவா.);; hind leg of an elephant.

   4. பொய் (பிங்.);; falsehood.

   5. நிரயம் (பிங்.);; hell.

   6. காப்பு (பிங்.);; coat of mail.

   7. மேற்கு; west.

     “அபர திசை”.

   8. சவ (பிண);ச் சடங்கு; obsequies.

   9. தோணியின் பின்பக்கம்; stern of a ship.

     [Skt. a-para → த. அபரம்.]

அபரராத்திரம்

 அபரராத்திரம் abararāttiram, பெ. (n.)

   நள்ளிரவிற் கடுத்த சாமம்; small hours of the night.

     [Skt. a-para-ratra → த. அபரராத்திரம்.]

அபரவங்கம்

 அபரவங்கம் abaravaṅgam, பெ. (n.)

   உடம்பை வில்லைப் போல் பின்புறமாக வளைக்குமோர் ஊதை (வாத); நோய்; a tetanic condition of the muscles, especially of the back, whereby there is an arching backward of the trunk which thus rests upon head and heels-Opisthrotonus (சா.அக.);.

த.வ. வில்லூதை.

     [Skt. a-para + anga → த. அபரவங்கம்.]

அபரவயசு

 அபரவயசு abaravayasu, பெ. (n.)

   முதிரகவை; old age.

     [Skt. a-para → த. அபரம்.]

அபரவலி

 அபரவலி abaravali, பெ. (n.)

   முதுகு வலி; pain in the back-Notalgia (சா.அக.);.

     [அபரம் + வலி.]

     [Skt. apara → த. அபரம்.]

அபரவாகீசுவரர்

 அபரவாகீசுவரர் abaravāācuvarar, பெ. (n.)

 a form of Sivan.

     [Skt. a-para + vagisuvarar → த. அபரவாகீசுவரர்.]

அபரவாகீசுவரி

 அபரவாகீசுவரி abaravāācuvari, பெ. (n.)

வித்தமிழ்தின் ஆற்றல் (விந்துசக்தி);

 a form of divine energy.

     [Skt. a-para + vagisuvari → த. அபரவாகீசுவரி.]

அபரவாக்கியம்

 அபரவாக்கியம் abaravākkiyam, பெ. (n.)

   பூகோள கணிதத்தில் பிழை தீர்க்க ஏற்பட்ட எண்மான வகை (வின்.);;     [Skt. a-para + vákya → த. அபரவாக்கியம்.]

அபரவிந்து

அபரவிந்து abaravindu, பெ. (n.)

அபரவாகீசுவரி (சி.போ. 2, 4, பக். 223); பார்க்க;see abara-vagisuvari.

     [அபர(ம்); + விந்து.]

     [Skt. a-para → த. அபர(ம்);.]

அபரா

 அபரா abarā, பெ. (n.)

   நஞ்சுக்கொடி; navel string, umbilical cord (சா.அக.);.

அபராங்கம்

அபராங்கம் abarāṅgam, பெ. (n.)

   முதுகுப்புறம்; the hinder part of the body, back.

     “வேடனத னபராங்கம் பிளக்க வெய்தான்” (பாரத. அருச்சுனன். தவ. 90.);.

     [Skt. a-para + anga → த. அபராங்கம்.]

அபராசி

 அபராசி abarāci, பெ. (n.)

   விட்டுணுக்கிராந்தி (நாமதீப.);; Vittunukkirandi, a medicinal plant.

     [Skt. a-paråji → த. அபராசி.]

அபராசிதன்

அபராசிதன்1 abarācidaṉ, பெ. (n.)

   1. சிவன்; Sivan.

   2. திருமால்; Visnu.

     [Skt. aparajita → த. அபராசிதன்.]

 அபராசிதன்2 abarācidaṉ, பெ. (n.)

   வெல்லப் படாதவன் (சங்.அக.);; he who is unconquered, invincible.

     [Skt. a-parā-jita → த. அபராசிதன்.]

அபராசிதம்

 அபராசிதம் abarācidam, பெ. (n.)

   விட்டுணுக் கிராந்தி; Vishnu plant, clitoria ternatia alias Evolvulus, alsinoides (சா.அக.);.

     [Skt. aparajita → த. அபராசிதம்.]

அபராசிதை

அபராசிதை abarācidai, பெ. (n.)

   1. கொற்றவை (துர்க்கை);; Durga.

   2. விட்டுணுக்கிராந்தி; a medicinal plant.

     [Skt. a-parajita → த. அபராசிதை.]

அபராணம்

அபராணம் abarāṇam, பெ. (n.)

   பிற்பகல்; afternoon, last watch of the day,

     “அபராணப் போழ்தி னடகிடுவ ரேனும்” (நாலடி. 207.);.

     [Skt. aparahna → த. அபராணம்.]

அபராதகாணிக்கை

 அபராதகாணிக்கை abarātakāṇikkai, பெ. (n.)

   செலுத்தற்குரிய நேர்த்திக் கடனைச் சரியாகச் சேர்ப்பிக்காத பிழைக்காகச் செலுத்தும் காணிக்கை (கொ.வ.);; gift of god made in expiation of failure to present the original gift in due time as vowed.

த.வ. தப்புக் காணிக்கை.

     [அபராத(ம்); + காணிக்கை.]

     [Skt. apa-rådha → த. அபராதம்.]

அபராதசாபணம்

அபராதசாபணம் abarātacābaṇam, பெ. (n.)

   மன்னிப்புக் கோருகை (குருபரம். 15);; seeking forgiveness (சா.அக);.

     [Skt. apa-rӑdha + ksapana → த. அபராதசாபணம்.]

அபராதம்

அபராதம் abarātam, பெ. (n.)

   1. குற்றம்; offence, transgression, fault, crime, sin.

     “அடியனேன் முன்னஞ் செய்த வபராதம்” (திருவிளை.நான்மாடக். 25);.

   2. தண்டம்; fine, penalty.

த.வ. தப்பு, தப்புக் கட்டணம்.

     [Skt. apa-rådha → த. அபராதம்.]

அபராதி

அபராதி abarāti, பெ. (n.)

   தீங்கிழைத்தோன்; offender, guilty person.

     “உறவினுக் கபராதியும்” (சிவதரு. பாவ. 68);.

     [Skt. apa-rådhin → த. அபராதி.]

அபராத்திரம்

 அபராத்திரம் abarāttiram, பெ. (n.)

   கடையாமம்; the last part of the night (சா.அக.);.

அபரான்னம்

அபரான்னம் abarāṉṉam, பெ. (n.)

   1. நண்பகலை யடுத்து வரும் ஆறு நாழிகைப் பொழுது; the period of the day which follows noon up to 2.24 p.m. (சா.அக.);.

த.வ. உச்சிசாய்வு.

அபராவதாரம்

 அபராவதாரம் abarāvatāram, பெ. (n.)

   முன்னெடுத்த தோற்றரவின் மாறுபடு தோற்றரவு; new, different incarnation.

     [Skt. apara + ava-tåra → த. அபராவதாரம்.]

அபரிக்கிரகம்

அபரிக்கிரகம் abariggiragam, பெ. (n.)

   1. பிறர்பால் ஏற்காமையாகிய நோன்பு

     ‘ the vow of not receiving anything from another.

   2. உரிமைச் சொத்துகளை நீக்கி விடுகை (மேருமந். பாயி XV);: (Jaina..);

 renouncing property.

     [Skt. a-parigraha → த. அபரிக்கிரகம்.]

அபரிசகுட்டம்

 அபரிசகுட்டம் abarisaguṭṭam, பெ. (n.)

   உடம்பு முழுவதும் வீங்கி வெடித்து அதினின்றும் கறுப்பு இரத்தம் வடிந்து, தொடக் கூடாத வலியை யுண்டாக்கும் ஒருவகைக் குட்டம்; a kind of leprosy analogons to syphilis, attended with swelling, ulceration and a discharged of venous blood. The prodromal symptoms are associated with hyperesthesia of skin (சா.அக.);.

த.வ. வெடிப்புக்குட்டம்.

அபரிசரம்

அபரிசரம் abarisaram, பெ. (n.)

   தொலைவு (தூரம்); (சிந்தா.நி. 173);; distance.

     [Skt. a-parisara → த. அபரிசரம்.]

அபரிச்சடம்

அபரிச்சடம் abariccaḍam, பெ. (n.)

   1. கருப்பம் முழுவதுமாகுமுன் பிறத்தல்; not born fully developed.

   2. குறை (அகால);ப் பிறப்பு; premature birth (சா.அக.);.

அபரிச்சதம்

 அபரிச்சதம் abariccadam, பெ. (n.)

   உடையின்மை; nakedness, nudity (சா.அக.);.

அபரிச்சின்னம்

 அபரிச்சின்னம் abaricciṉṉam, பெ. (n.)

   அளவிட முடியாதது; that which is unlimited.

     “எம்பெருமானது அபரிச்சின்னமான குணங்கள்”.

     [Skt. a-paricchinna → த. அபரிச்சின்னம்.]

அபரிதை

 அபரிதை abaridai, பெ. (n.)

   முயக்க மறியாத பெண்; a woman who has had no carnal knowledge of man, a virgin or an unmarried woman (சா.அக.);.

     [Skt. aparita → த. அபரிதை.]

அபரிபூதம்

அபரிபூதம் abaribūtam, பெ. (n.)

   1. முதிராதது; that which is not matured.

   2. திமிங்கிலம்; whale (சா.அக.);.

     [Skt. a-pari-buta → த. அபரிபூதம்.]

அபரிமிதம்

 அபரிமிதம் abarimidam, பெ. (n.)

   அளவின்மை (பிங்.);; unlimitedness, immeasurableness, immensity.

     [Skt. aparimita → த. அபரிமிதம்.]

அபருடவாக்கியம்

அபருடவாக்கியம் abaruḍavākkiyam, பெ. (n.)

   கொடுமையற்ற சொல் (தக்கயாகப். 664, உரை.);; agreeable speech.

த.வ. இன்சொல்.

     [Skt. a-parusa + vākya → த. அபருடவாக்கியம்.]

அபரூபம்

 அபரூபம் abarūbam, பெ. (n.)

   அழகின்மை; gross deviation from, beauty;

 disfigurement;

 deformity (சா.அக.);.

     [Skt. apa + rūpa → த. அபரூபம்.]

த. உருவம் → Skt. rūpa.

அபரை

 அபரை abarai, பெ. (n.)

அபரா பார்க்க;see abará (சா.அக.);.

அபரோட்சஞானம்

அபரோட்சஞானம் abarōṭcañāṉam, பெ. (n.)

   தெளிவான காட்சி அறிவு (பிரத்தியட்சஞானம்); (வேதா. சூ. 23, உரை.);; direct cognition as arising from the senses or such other sources of perception.

த.வ. காட்சியறிவு.

     [Skt. a-paröksa + Pkt. nana → த. அபரோட்ச ஞானம்.]

அபரோட்சம்

அபரோட்சம் abarōṭcam, பெ. (n.)

அபரோட்ச ஞானம் (வேதா. ஞ. 115.); பார்க்க;see abarotca-nanam.

     [Skt. aparõksa → த. அபரோட்சம்.]

அபர்யாப்தகம்

அபர்யாப்தகம் abaryābtagam, பெ. (n.)

   பற்றாக்குறை (மேருமந். 713, உரை.);; insufficiency.

     [Skt. a-paryaptaka → த. அபர்யாப்தகம்.]

அபலநாடி

 அபலநாடி abalanāṭi, பெ. (n.)

   குறை நாடி; feeble pulse, Arachnoid pulse (சா.அக.);.

     [அபலம் + நாடி.]

     [Skt. a-phala → த. அபலம்.]

அபலந்துரு

 அபலந்துரு abalanduru, பெ. (n.)

   பயன்தரா மரம்; non-fruit bearing tree, as acrub, young trees.

     [Skt. a-phala+dru → த. அயலந்துரு.]

அபலன்

 அபலன் abalaṉ, பெ. (n.)

   வலியற்றவன்; weak person.

     [Skt. a-bala → த. அபலன்.]

அபலம்

அபலம் abalam, பெ. (n.)

   திமிங்கிலம் (வை.மு.);; whale.

 அபலம்1 abalam, பெ. (n.)

   பயனின்மை; uselessness, barrenness.

     “பலாபல மிவற்றில் விருப்பமற” (ஞானவா. விரத. 10);.

     [Skt. a-phala → த. அபலம்.]

 அபலம்2 abalam, பெ. (n.)

   வலியின்மை; weakness, as want of strength.

     [Skt. a-bala → த. அபலம்.]

 அபலம்3 abalam, பெ. (n.)

   1. காய்ப்புமாறிய மரம் (R.T.);; tree which is past fruit-bearing.

   2. இழப்பு (நட்டம்); (பாண்டி);; loss.

     [Skt. a-phala → த. அபலம்.]

 அபலம்4 abalam, பெ. (n.)

   கொழு (நாநார்த்த.);; plough-share.

     [Skt. apala → த. அபலம்.]

 அபலம்5 abalam, பெ. (n.)

   1. மலடு; unfruitfulness, un productiveness.

   2. ஆற்றலரி; a plant, Tamarix indica.

   3. சோற்றுக் கற்றாழை; aloe (Aloe perfoliate);.

   4. ஒரு பூடு; a plant, Tapia crataeva (சா.அக.);.

அபலாடிகை

அபலாடிகை abalāṭigai, பெ. (n.)

   தாகம் (சிந்தா. நி. 178.);; thirst.

த.வ. நீர்வேட்கை.

     [Skt. apaläsikā → த. அபலாடிகை.]

அபலாபனம்

அபலாபனம் abalābaṉam, பெ. (n.)

   மறைக்கை; concealing, hiding.

     “இதனை அபலாபனம் செய்தல் யார்க்கும் ஒல்லாது” (சிவசம. 54.);.

     [Skt. apalapana → த. அபலாபனம்.]

அபலி

 அபலி abali, பெ. (n.)

   வெண்கடுகு (பச்.மு.);; white mustard, Brassica alba.

அபலை

 அபலை abalai, பெ. (n.)

   ஏதும் செய்வதறியாப் பெண்; woman, as weak.

த.வ. அவலி, அவலை.

     [Skt. a-bala → த. அபலை.]

அபல் முசுக்கு

 அபல் முசுக்கு abalmusukku, பெ. (n.)

   கத்தூரி வெண்டை; musk bendy, Hibiscus abelmoschus (சா.அக.);.

அபல்லியம்

 அபல்லியம் aballiyam, பெ. (n.)

   நோய்; sickness (சா.அக.);.

அபவனம்

அபவனம் abavaṉam, பெ. (n.)

   1. வளிவழங்கா விடம்; an ill-ventilated place.

   2. பூந்தோட்டம்; flower-garden (சா.அக.);.

     [Skt. apa-vana → த. அபவனம்.]

அபவம்

 அபவம் abavam, பெ. (n.)

அபலம் பார்க்க;see abalam.

     [Skt. apava → த. அபவம்.]

அபவரம்

 அபவரம் abavaram, பெ. (n.)

   நோயுண்டாக்கும் பேய்; a demon causing illness (சா.அக.);.

அபவருக்கம்

 அபவருக்கம் abavarukkam, பெ. (n.)

   பிறப்பறுகை; excemption from further transmigration (சா.அக.);.

     [Skt. apa + varga → த. அபவருக்கம்.]

அபவருத்தம்

அபவருத்தம் abavaruttam, பெ. (n.)

   அழிக்கை (சிந்தா. நி 172.);; destroying.

     [Skt. apa-vrtta → த. அபவருத்தம்.]

அபவர்க்கம்

அபவர்க்கம்1 abavarkkam, பெ. (n.)

   1. வீடுபேறு (முத்தி);; emancipation of the soul from bodily existence, final liberation.

     “அபவர்க்கமு மற்றடையான்” (ஞானா. 3, 10);;

   2. அபவருக்கம் பார்க்க;see abavarukkam.

     [Skt. apavarga → த. அபவர்க்கம்.]

 அபவர்க்கம்2 abavarkkam, பெ. (n.)

   ஈகம் (நாநார்த்த.);; bounty, gift.

     [Skt. apa-varga → த. அபவர்க்கம்.]

அபவாக்கு

அபவாக்கு abavākku, பெ. (n.)

   தீங்கு விளைக்குஞ்சொல் (சினேந், 454. உரை.);; evil word.

த.வ. தீச்சொல்.

     [அப + வாக்கு.]

     [Skt. apa → த. அப.]

அபவாதசூத்திரம்

 அபவாதசூத்திரம் abavātacūttiram, பெ. (n.)

   ஒரு நூற்பாவான் கொடு (விதி);க்கப்பட்டதற்கு முற்றும் மாறுபாடாகக் கொடு (விதி);க்கும், வேறு நூற்பா; a sutra whose import is opposed to that of another sutra.

த.வ. முரண்நூற்பா.

     [Skt. apa + vāda + sutra → த. அபவாத சூத்திரம்.]

அபவாதம்

அபவாதம் abavātam, பெ. (n.)

   1. பழி; calumny, slander, reproach.

     “உரையா தொழிதிமற் றொருவர்க் கபவாதம்” (சேதுபு. கவிசம்பு. 61);;

   2. புகழ்க்கேடு, அவகிர்த்தி; bad reputation.

     [Skt. apa-våda → த. அபவாதம்.]

அபவாரணம்

 அபவாரணம் abavāraṇam, பெ. (n.)

   சாவு; death (சா.அக.);.

அபவித்தன்

 அபவித்தன் abavittaṉ, பெ. (n.)

   பெற்றோரால் விடப்பட்டுப் பிறரால் ஏற்று(தத்து);க் கொள்ளப்பட்ட மகன்; son abandoned by his parents and adopted by a stranger, one of twelve puttiran, q.v.

     [Skt. apa-viddha → த. அபவித்தன்.]

அபவித்திரன்

 அபவித்திரன் abavittiraṉ, பெ. (n.)

   தூய்மையில்லாதவன்; one who is not clean (சா.அக.);.

     [Skt. apa+ viddhra → த. அபவித்திரன்.]

அபவித்திரம்

 அபவித்திரம் abavittiram, பெ. (n.)

   தூய்மையின்மை; uncleanliness (சா.அக.);.

     [Skt. apa + viddhra → த. அபவித்திரம்.]

அபவிருத்தி

அபவிருத்தி abavirutti, பெ. (n.)

   குறைவு (சிந்தா. நி. 172.);; decrease.

     [Skt. apa-vrddhi → த. அபவிருத்தி.]

அபவேட்டிதம்

அபவேட்டிதம் abavēṭṭidam, பெ. (n.)

   குறிப்புணர்த்தும் உடலுறுப்பசைவியக்கம் (சீவக. 1257, உரை.);;     [Skt. apavéstita → த. அபவேட்டிதம்.]

அபாகசாகம்

 அபாகசாகம் apākacākam, பெ. (n.)

இஞ்சி (பரி.அக.);,

 ginger.

     [Skt. apaka-saka → த. அபாகசாகம்.]

அபாகம்

அபாகம் apākam, பெ. (n.)

   1. முதிராமை; immaturity.

   2. இயலாக் குணம்;   முடியாமை; incapability of digesting food, the state of indigestion (சா.அக);.

     [Skt. a-päka → த. அபாகம்.]

அபாகிரோகம்

 அபாகிரோகம் apākirōkam, பெ. (n.)

   உடம்பில் உலர்ந்த கொப்புளங்கலெழும்பி நீண்ட நாள் வரைக்கும் இறக்கங்கொள்ளாமல் துன்பத்தை விளைவிக்குமோர் அம்மை நோய்; an abortive form of variola in which the vesicles which spread over several parts of the body dry before reaching the pustular stage and given them a blackish appearance, It takes a long time for the falling off of the scabs or crusts and thus puts the patient to a great deal of suffering, Variola vaccina strophica (சா.அக.);.

     [Skt. a-paka + roga → த. அபாகிரோகம்.]

அபாக்கியம்

 அபாக்கியம் apākkiyam, பெ. (n.)

   வாய்ப்புக் கேடு; wretchedness, misfortune.

த.வ. போகூழ்.

     [Skt. a-bhagya → த. அபாக்கியம்.]

அபாங்கமர்மம்

 அபாங்கமர்மம் apāṅgamarmam, பெ. (n.)

   மேல்வாய், கண், மூக்கு இவற்றின் நாடிகளுக்கு ஏற்படும் எட்டாத தொடர்பு; a pathologic formation of a passage between the arteries of the upper mouth, eyes and the nose, Anastomosis of the infra-orbital artery (சா.அக);.

த.வ. எட்டாவருமம்.

அபாங்கம்

அபாங்கம்1 apāṅgam, பெ. (n.)

   கடைக்கணிப்பு (சூடா.);; looking from the outer corner of the eye, gracious attention.

     [Skt. apanga → த. அபரங்கம்.]

 அபாங்கம்2 apāṅgam, பெ. (n.)

   நெற்றிக்குறி (நாநார்த்த.);; sectarian mark on the forehead.

     [Skt. apänga → த. அபாங்கம்.]

அபாசிரயம்

அபாசிரயம் apācirayam, பெ. (n.)

   பந்தர் (சிந்தா.நி.183);; pandal, pavilion.

     [Skt. apasraya → த. அபாசிரயம்.]

அபாசீனம்

அபாசீனம் apācīṉam, பெ. (n.)

   தெற்கு (சிந்தா. நி.183);; south.

     [Skt. apacina → த. அபாசீனம்.]

அபாடம்

அபாடம் apāṭam, பெ. (n.)

   தவறு; mistake.

     “உலகபாட மனுவென வுலாவுவன” (தக்கயாகப். 27);.

த.வ. பிழை, வழு

     [Skt. a-påtha → த. அபாடம்.]

அபாடவம்

அபாடவம் apāṭavam, பெ. (n.)

   1. நோய்; disease.

   2. அழகுக்கேடு; deviation from beauty, ugliness (சா.அக.);.

அபாண்டம்

 அபாண்டம் apāṇṭam, பெ. (n.)

   இடுபழி (நிந்தை);; deliberate evil report, slander.

     “அபாண்டமாய் என்மேற் சொல்லாதே” (இ.வ.);.

த.வ. இடுவந்தி, அடாப்பழி

     [Skt. abhanda → த. அபாண்டம்.]

அபாண்டவாத்திரம்

 அபாண்டவாத்திரம் apāṇṭavāttiram, பெ. (n.)

   பாண்டவ குலத்தை அழிக்கப் பயன்படுத்திய அம்பு; missile thrown out with a view to exterminating the Pandava clan.

     [Skt. apanda + astra → த. அபாண்ட வாத்திரம்.]

அஸ்திரம் → அத்திரம்.

அபாண்டவியம்

 அபாண்டவியம் apāṇṭaviyam, பெ. (n.)

அபாண்டவாத்திரம் பார்க்க;see apanda-v-attiram.

     [Skt. apändavya → த. அபாண்டவியம்.]

அபாதரன்

 அபாதரன் apātaraṉ, பெ. (n.)

   வெடியுப்பு; nitre-potassic nitrate (சா.அக.);.

அபாதானம்

அபாதானம் apātāṉam, பெ. (n.)

ஐந்தாம் வேற்றுமைப் பொருள் (தொல். சொல். குறிப்பு,

   பக். 115);     [Skt. apa-dana → த. அபாதனம்.]

அபாத்திரம்

அபாத்திரம் apāttiram, பெ. (n.)

   தானம் பெறத் தகுதியற்றவன்; unfit recipient, person unworthy to receive a gift.

     “இரப்பான் றன்னை யயாத்திரமென் றுன்னி” (சைவச. பொது. 421);.

     [Skt. a-påtra → அபாத்திரம்.]

அபாநம்

அபாநம் apānam, பெ. (n.)

   1. அபானம்1 பார்க்க;see albāņam.

   2. அபானம்2 பார்க்க;see abānam

   3. பாலகம் (மூலாதரம்);;   4. கீழ்; down (சா.அக.);.

     [Skt. a-paniya → த. அபாநம்.]

அபானக்கடுப்பு

 அபானக்கடுப்பு apāṉakkaḍuppu, பெ. (n.)

   எரு (மல); வாய்க் கடுப்பு; irritation of the rectum (சா.அக.);.

     [அபானம் + கடுப்பு.]

     [Skt. apana → த. அபானம்.]

கடு → கடுப்பு.

அபானக்காந்தல்

 அபானக்காந்தல் apāṉakkāndal, பெ. (n.)

   எருவாய் எரிச்சல்; burning sensation or inflammation of the anus or the rectum-proctitis (சா.அக.);.

     [அபானம் + காந்தல்.]

     [Skt. apana → த. அபானம்.]

காந்து → காந்தல் = எரிவு, சூடு காந்துகை.

அபானசுத்தி

 அபானசுத்தி apāṉasutti, பெ. (n.)

   எரு (குத);வாய் வழியே குடல் கழுவு மருத்துவம்; treatment by enema (சா.அக.);.

     [Skt. apana + suddhi → த. அபானசுத்தி.]

அபானத்தானலித்திரிதிக்கட்டி

 அபானத்தானலித்திரிதிக்கட்டி apāṉaddāṉaliddiridikkaṭṭi, பெ. (n.)

அபானலித் திரிதி பார்க்க;see abana-littiridi (சா.அக.);.

அபானத்துவாரம்

 அபானத்துவாரம் apāṉattuvāram, பெ. (n.)

   எரு (மல); வாயில்; the opening through which the excrement is expelled, anus (சா.அக.);.

த.வ. எருவாய்.

     [Skt. apåna + dvåra → த. அபானத்துவாரம்.]

அபானன்

 அபானன் apāṉaṉ, பெ. (n.)

   பரியன்வளி (பிங்.);; a vital air of the body, the downward vayu, which expels Wind, excrement, urine and semen, one of tacca-vayu.

     [Skt. apana → த. அபானன்.]

அபானப்பிரயோகநீர்

அபானப்பிரயோகநீர் apāṉappirayōkanīr, பெ. (n.)

   கழிமாசு அறக் கழிதனிமித்தம் எருவாயிற் புகட்டும் நீர்; a liquid substance injected into the lower intestines, to cleanise the bowels, clyster enema (சா.அக.);.

     [அபானப்பிரயோக(ம்); + நீர்.]

     [Skt. apana + pra-yoga → த. அபானப் பிரயோகம்.]

நூல் → நெல் → நெள் → நெகு → நெகி (நெகிள்); → நீள் → நீர் (வே.க.3:42);.

அபானமால்

 அபானமால் apāṉamāl, பெ. (n.)

அபானவாயு பார்க்க;see abana-vayu (சா.அக.);.

     [Skt. apāna + mal → த. அபானமால்.]

அபானம்

அபானம்1 apāṉam, பெ. (n.)

   கடுக்காய் மரம் (பச்.மூ.);; chebulic myrobalan.

 அபானம்2 apāṉam, பெ. (n.)

   எரு (மல); வாய் (மச்சபு.தீர்க்கதம.32);; anus.

     [Skt. apana → த. அபானம்.]

அபானரோகம்

 அபானரோகம் apāṉarōkam, பெ. (n.)

   எரு(மல);வாயில் ஏற்படும் நோய்; disease of the rectum or the anus, in general (சா.அக.);.

     [Skt. apana + roga → த. அபானரோகம்.]

அபானலித்திரிதி

 அபானலித்திரிதி apāṉaliddiridi, பெ. (n.)

   எருவாயிலிற் கடும் வலியுண்டாக்கும் கட்டி; an abscess of the anus causing intense pain-marginal abscess (சா.அக.);.

த.வ. எருவாய்க்கட்டி.

அபானவாயு

 அபானவாயு apāṉavāyu, பெ. (n.)

   பதின் வளியு ளொன்றாகியதும் கீழ்நோக்கிச் செல்லுவதுமான பரியன்வளி(வாயு);; one of the ten vital airs, having a tendency to pass downwards (சா.அக.);.

த.வ. பரியன் வளி.

     [Skt. apana + vayu → த. அபானவாயு.]

அபானவாயுக்கடுப்பு

 அபானவாயுக்கடுப்பு apāṉavāyukkaḍuppu, பெ. (n.)

   சூட்டினாலும், எருவாயி லுண்டாகும் புண்ணாலும் ஏற்படும் எரிச்சல்; a burning sensation due to excess of heat and ulceration of the arus-rectitis or proctitis (சா.அக.);.

த.வ. எருவாய் எரிச்சல்.

     [அபானவாயு + கடுப்பு.]

     [Skt. apanavayu → த. அபானம் + வாயு.]

கடு → கடுப்பு = வலி, எரிச்சல், நோவு.

அபானவாயுக்கெரிச்சான்

 அபானவாயுக்கெரிச்சான் apāṉavāyukkericcāṉ, பெ. (n.)

   புகையிலை; tobacco as an agent for driving out wind through the anus (சா.அக.);.

     [அபானவாயு + எரிச்சான்.]

     [Skt. apanavayu → த. அபானவாயு.]

எரி → எரிச்சன்.

அபானவிப்புருதி

 அபானவிப்புருதி apāṉavippurudi, பெ. (n.)

   குதத்திலெழும்பு மொரு வகைச் சிலந்தி; an ulcer inside the recturm or atits extermity c.f.

பவுத்திரம் (சா.அக.);.

த.வ. எருவாய்க்கட்டி.

     [Skt. apana + vidradhi → த. அபானவிப்புருதி.]

அபானவிரிவு

 அபானவிரிவு apāṉavirivu, பெ. (n.)

   எரு(மல); வாய் விரிதல்; dilatation of the rectum or of

 the anus-proctectasia (சா.அக.);.

த.வ. எருவாய்விரிவு.

அபானவிருத்தி

 அபானவிருத்தி apāṉavirutti, பெ. (n.)

   குடலில் பரியன்வளி பரிதல்; a condition marked by the presence of excessive gas in the intestines, flatulence (சா.அக.);.

த. வ. வளியேற்றம்.

     [Skt. apana + vritti → த. அபானவிருத்தி.]

அபானவேர்

 அபானவேர் apāṉavēr, பெ. (n.)

   மூல முளை; an e version of the rectal muccous membrance observed in cases of piles (சா.அக.);.

     [அபானம் + வேர்.]

     [Skt. apana → த. அபானம்.]

அபானியம்

 அபானியம் apāṉiyam, பெ. (n.)

   குடிக்கத் தகாதது; that which is unfit to drink (சா.அக.);.

அபானோத்காரம்

 அபானோத்காரம் apāṉōtkāram, பெ. (n.)

அபானவாயு பார்க்க;see abana-vayu (சா.அக.);.

அபாபம்

 அபாபம் apāpam, பெ. (n.)

   இறப்பு; death (சா.அக.);.

     [Skt. apåpa → த. அபாபம்.]

அபாமாருதமூலி

 அபாமாருதமூலி apāmārudamūli, பெ. (n.)

அபரமார்க்கம் பார்க்க;see abaramārkkam (சா.அக.);.

     [அபாமாருத(ம்); + மூலி.]

     [Skt apa + maruta → த. அபாமாருதம்.]

அபாமார்க்கசாரம்

 அபாமார்க்கசாரம் apāmārkkacāram, பெ. (n.)

   நாயுருவிச் சத்து அல்லது சாம்பல்; the essence or ashes obtained from the plant, Indian burr (சா.அக.);.

     [அபமார்க்க(ம்); + சாரம்.]

     [Skt. apa-marga → த. ஆபாமார்க்கம்.]

சாறு → சாறம் → சாரம்.

அபாமார்க்கம்

 அபாமார்க்கம் apāmārkkam, பெ. (n.)

   பூடுவகை (மலை);; species of Achyranthes.

     [Skt. apämärga → த. அபாமார்க்கம்.]

அபாம்பதி

அபாம்பதி apāmbadi, பெ. (n.)

   கடல் (சேதுபு. சேதுயாத். 13);; sea.

     [Skt. apåm-pati → த. அபாம்பதி.]

அபாயகரம்

 அபாயகரம் apāyagaram, பெ. (n.)

   கடுந்தொல்லை (ஆபத்து); (கொ.வ.);; dangerous condition.

     [Skt. apaya + kara → த. அபாயகரம்.]

அபாயக்கொடி

அபாயக்கொடி apāyakkoḍi, பெ. (n.)

   பேரிடர் குறிக்கும் கொடி; danger-signal, red flag.

த.வ. ஏதக்கொடி.

     [அபாய(ம்); + கொடி.]

     [Skt. apaya → த. அபாயம்.]

கொடு → கொடி → வளைந்து படரும் நிலைத் திணை வகை (வே.க.167);.

அபாயச்சங்கிலி

 அபாயச்சங்கிலி apāyaccaṅgili, பெ. (n.)

   மின் தொடர்வண்டியில் செல்லும் வழிப்போக்கர்களுக்கு ஏதமுறு நேரத்தில் வண்டியை உடன் நிறுத்திடுவதற்குரிய தொடரி; alarm chain (in trains);.

த.வ. ஏதத்தொடரி.

     [அபாய(ம்); + சங்கிலி.]

     [Skt. apäya → த. அபாயம்.]

அங்கு → சங்கு = வளைந்தது. சங்கு → சங்கிலி.

அபாயச்சங்கு

 அபாயச்சங்கு apāyaccaṅgu, பெ. (n.)

   பேரிடர் ஏற்படுமாயின் அதனை அறிவிப்பதற்கான பெருக்கொலிக் கருவி; siren (for warning or to signify danger.);.

தீப்பற்றத் தொடங்கியதும் அபாயச்சங்கு அலறியது.

த.வ. ஏதச்சங்கு.

     [அபாயம் + சங்கு.]

     [Skt. apåya → த. அபாயம்.]

சருக்கு → சக்கு → சங்கு.

அபாயதந்திரம்

 அபாயதந்திரம் apāyadandiram, பெ. (n.)

   ஏமாற்றுந் தந்திரம் (R.);; artifice, trick.

     [Skt. apaya → த. அபாயம்.]

அபாயம்

அபாயம்1 apāyam, பெ. (n.)

பேரிடர், ஏதம்

 calamity, danger, misfortune.

     “அபாய மொருநாளு மில்லை” (நல்வழி. 15);.

த.வ. ஏதம், ஊறு, இடுக்கண்.

     [Skt. apäya → த. அபாயம்.]

அபாரசக்தி

 அபாரசக்தி apārasakti, பெ. (n.)

   அளவிலாற்றல்; unlimited power.

த.வ. பேராற்றல்.

     [Skt. a-påra + sakti → த. அபாரசக்தி.]

அபாரணக்காலம்

 அபாரணக்காலம் apāraṇakkālam, பெ. (n.)

   உணவேற்கவொண்ணா வேளை; time not intended for taking food;

 untimely (சா.அக.);.

     [அபாரணம் + காலம்.]

     [Skt. а-рагала → த. அபாரணம்.]

அபாரணை

அபாரணை apāraṇai, பெ. (n.)

   உண்ணாமை (சிந்தா. நி.185);; fasting.

     [Skt. а-рагала → த. அபாரணை.]

அபாரம்

அபாரம்1 apāram, பெ. (n.)

   1. நல்லை;   முதல் தரமானது; exceptionally good, excellent or superb.

   2. அளவற்றது; immense.

அவர் புதுமையில் பற்றுள்ளவராயினும் பழமையிலும் அபார நம்பிக்கை கொண்டவர்.

த.வ. அருமை.

     [Skt. a-påra → த. அபாரம்.]

 அபாரம்2 apāram, பெ. (n.)

   சிறப்பானது, எல்லையற்றது (திவா.);; that which is boundless, as not having an opposite shore.

     [Skt. a-påra → த. அபாரம்.]

அபார்த்தகம்

அபார்த்தகம் apārttagam, பெ. (n.)

   தோல்வித் தானத் தொன்று (செந்.111, 13);; a fault in argumentation.

     [Skt. aparthaka → த. அபார்த்தகம்.]

அபார்த்தம்

 அபார்த்தம் apārttam, பெ. (n.)

   தவறான பொருள்; erroneous meaning,

     [Skt. apårtha → த. அபார்த்தம்.]

அபாலங்கம்

 அபாலங்கம் apālaṅgam, பெ. (n.)

   கொன்றை; a plant, Cassia fistual (சா.அக.);.

அபாவம்

அபாவம்1 apāvam, பெ. (n.)

   1. இன்மை; un-existence, negation. முன்னபாவம், அழிவுபாட்டபாவம், முழுதுமபாவம், ஒன்றினொன்ற பாவம் என (தருக்க.சங்.8);வும், என்றுமபாவம், இல்லத னபாவம், ஒன்றினொன்றபாவம், உள்ளத தனபாவம், அழிவுபாட்ட பாவம் (சி.சி.அளவை. 1, மறைஞா.); எனவும் கூறுகிறது.

   2. ஒர் அளவை (சி.சி. அளவை. 1);; non-congnition relied upon us proof of negation, one of six pirmanam, q.v.

     [Skt. a-bhava → த. அபாவம்.]

 அபாவம்2 apāvam, பெ. (n.)

   கேடு (நாநார்த்த.);; ruin, destruction.

     [Skt. a-bhava → த. அபாவம்.]

 அபாவம்3 apāvam, பெ. (n.)

   கடுக்காய்; gal-nut Chebasic Myrobalan-Terminalia chebula (சா.அக.);.

அபாவயோகம்

 அபாவயோகம் apāvayōkam, பெ. (n.)

   கரணங்களுக் கெட்டாத இறையுள் மனமொன்று (மனோலாயமா);வதற்காகச் செய்யும் ஐவகை ஒகத்திலொன்று; one of the five stages of yoga intended for bringing about the union of the mind with the divine spirit (சா.அக.);.

     [அபாவ(ம்); + ஒகம்.]

     [Skt. a-bhåva → த. அபாவம்.]

த. ஒகம் → Skt. yoga.

அபி

அபி abi, இடை. (pref.)

   1. அசைதல், போதல், கிட்டுதல் ஆகிய பொருள்களைத் தரும் வினைச் சொற்களோடு சேரும் ஒரு முன்னொன்டு; a prefix to verbs which expresses the notion of moving, going or approaching.

   2 மேன்மை, மிகுதி ஆகிய பண்புகளைக் காட்டும் பெயர்ச்சொற்களோடு சேரும் முன்னொட்டு; an intensive prefix to nouns, which expresses superiority, intensity, inferiority etc. (சா.அக.);.

     [Skt. abhi → த. அபி.]

அபிகதம்

அபிகதம் abigadam, பெ. (n.)

   அணுக்கம் (சமீபம்); (சிந்தா.நி. 179);; nearing.

     [Skt. abhi + gata → த. அபிகதம்.]

அபிகரணம்

 அபிகரணம் abigaraṇam, பெ. (n.)

   செவிபாகம்; the region of the ears (சா.அக.);.

அபிகருடணம்

 அபிகருடணம் abigaruḍaṇam, பெ. (n.)

   தேய்த்தல்; rubbing, anointing (சா.அக.);.

அபிகாசசேத்துமம்

 அபிகாசசேத்துமம் abikācacēttumam, பெ. (n.)

   இருமல், இளைப்பு, ஈளை, முதலியவையுண்டாகி வயிறு மந்தித்து, உடம்பு வற்றி, உருவழிந்து, வலுவைக் குறைக்குமொரு நோய்; a phlegmatic disease attended with cough, fatigue, phlegm etc., with the symptoms or loss of appetite, emaciation, loss of strength denutrition, change of features etc. (சா.அக.);.

த.வ. வலுவிழப்பு நோய்.

     [Skt. abhi-hasa-settum → த. அபிகாசசேத்துமம்.]

அபிகாதசம்

 அபிகாதசம் abikātasam, பெ. (n.)

   அடி அல்லது உடற் புண்ணால் ஏற்படும் அதிர்ச்சி; shock due to external injury or blow, traumatic shock (சா.அக.);.

த.வ. புண்ணதிர்ச்சி.

     [Skt. abhi + ghattaka → த. அபிகாதசம்.]

அபிகாதசுரம்

 அபிகாதசுரம் abikātasuram, பெ. (n.)

   கடும் உழைப்பின் நிமித்தம் உண்டாகும் காய்ச்சல் (ஜீவரட்);; fever due to wounds, over-exertion, etc.

த.வ. அலுப்புக்காய்ச்சல்.

     [அபிகாத(ம்); + சுரம்.]

     [(Skt. abhi + ghata → த. அபிகாதம்.]

சுல் → சுர் → சுரம்,

அபிகாதசூலை

 அபிகாதசூலை abikātacūlai, பெ. (n.)

   கல் முதலியவற்றால் செவியில் அடியுண்ட காலத்தில் அதனுள் சீழ், அரத்தம் முதலியன சேர்ந்து, குத்தலை யுண்டாக்குமொரு வகைக் காது நோய்; a disease of the ear marked by darting pain arising from the collection of pus and blood inside. It is due to traumatic causes, Otalgia or otitis (சா.அக.);.

த.வ. செவிக்குத்து.

     [Skt. abhi-ghata → த. அபிகாத(ம்);.]

கல் → சூல் → சூலை.

அபிகாதசோபை

அபிகாதசோபை abikātacōbai, பெ. (n.)

   1. இரசகந்த நஞ்சு, சேராங்கொட்டை முதலிய மருந்துகளினாலுடம்பி லுண்டாகுமொரு வகைச் சோகை நோய்; a form of anemia due to the action of certion poisons, such as mercury, sulphur, arsenic, marking nut etc., toxic anemia.

   2. ஆயுதப் புண்ணால் அரத்த வொழுக் கேற்பட்டு அதனால் உண்டாகும் சோகை; anemia due to the loss of blood from an injury or a wound, Traumatic anemia (சா.அக.);.

த.வ. கடுஞ்சோகை.

     [Skt. abhi-ghata+sobha → த. அபிகாதசோபை.]

அபிகாதி

அபிகாதி abikāti, பெ. (n.)

   பகைவன் (சிந்தா. நி. 173.);; enemy, foe.

     [Skt. abhi-ghatin → த. அபிகாதி.]

அபிகாமின்

 அபிகாமின் abikāmiṉ, பெ. (n.)

   புணர்ச்சி; sexual intercourse, copulation (சா.அக.);.

அபிகாயம்

அபிகாயம் abikāyam, பெ. (n.)

   1 ஒரு கொடிய ஈளை (காச); நோய்; asthma of a virulent type.

   2. உள்ளழற்சி; internal inflammation, as of the lungs in consumprion (சா.அக.);.

     [Skt. abhi-kaya → த. அபிகாயம்.]

அபிகாரம்

அபிகாரம்1 abikāram, பெ. (n.)

   1. கொள்ளை; robbery.

   2. தாக்குகை; attack.

   3. படையெழுச்சி; rising in arms.

     [Skt. abhihara → த. அபிகாரம்.]

 அபிகாரம்2 abikāram, பெ. (n.)

   1. தூவல்; scattering over

   2. தெளித்தல்; sprinkling (சா.அக.);.

அபிகிதத்துவம்

அபிகிதத்துவம் abigidadduvam, பெ. (n.)

   மேற்கோள் (சித்தா.நி. 173);; authority.

     [Skt. abhi-hita-tva → த. அபிகிதத்துவம்.]

அபிக்கியை

அபிக்கியை abikkiyai, பெ. (n.)

   1. பெயர்; name.

   2. புகழ்; fame. அழகு;

 beauty.

     [Skt. abhi-khya → த. அபிக்கியை.]

அபிசங்கசுரம்

 அபிசங்கசுரம் abisaṅgasuram, பெ. (n.)

   மருந்து, நஞ்சு, சினம், அச்சம், வருத்தம், விருப்பம் (இச்சை); எனும் மேற்காண் கரணியந் தொடர்பில் ஏற்படும் காய்ச்சல்; a fever due to the excited condition of the body, arising from any of the following. Seven causes viz-demomiac frenzy, virulent medicine, poison, anger, fear, distress and passion-ldiopathic fever (சா.அக.);.

த.வ. பதைப்புக் காய்ச்சல்.

     [அபிசாங்க(ம்); + சுரம்.]

     [Skt. abhij-sanga → த. அபிசங்க(ம்);.]

அபிசந்தம்

 அபிசந்தம் abisandam, பெ. (n.)

   அபிசியந்தம் பார்க்க; abisiyandam (சா.அக.);.

அபிசந்தாபம்

அபிசந்தாபம் abisandābam, பெ. (n.)

   போர் (சிந்தா.நி. 179);; fight.

     [(Skt. abhi-santapa → த. அபிசந்தாபம்.]

அபிசனம்

அபிசனம் abisaṉam, பெ. (n.)

   1. பிறப்பிடம்; birth place.

   2. குலம்; family.

   3. குலவிருது; insignia of a family or dynasty.

   4. அரசியற் சுற்றம்; attendants, retinue.

   5. புகழ்; fame.

     [Skt. abhi-jana → த. அபிசனம்.]

அபிசயந்திபோசனம்

 அபிசயந்திபோசனம் abisayandibōsaṉam, பெ. (n.)

   உடம்பை பருக்கச்செய்யக் கூடிய தயிர் முதலிய உணவுப்பொருள்கள்; articles of food such as, curd etc., likely to inflate the system (சா.அக.);.

த.வ. கொழுப்புணவு.

     [Skt. abhi + jayanti+bhojana → த. அபிசயந்திபோசனம்.]

அபிசரன்

அபிசரன் abisaraṉ, பெ. (n.)

   நண்பன் (சிந்தா. நி. 167);; friend.

     [Skt. abhi-cara → த. அபிசரன்.]

அபிசர்ச்சனம்

 அபிசர்ச்சனம் abisarssaṉam, பெ. (n.)

   கொலை; murder (சா.அக.);.

அபிசாங்கி

 அபிசாங்கி abicāṅgi, பெ. (n.)

   அத்தினி சாதிப் பெண்; last of the four classes the women divides according to lust (சா.அக.);.

அபிசாதன்

அபிசாதன்1 abicātaṉ, பெ. (n.)

   1. தக்கோன்; worthy person.

   2. அறிஞன் (நாநார்த்த.);; wiseman.

     [Skt. abhi-jata → த. அபிசாதன்.]

 அபிசாதன்2 abicātaṉ, பெ. (n.)

   உயர்குடிப் பிறந்தோன்; man of noble descent.

     [Skt. abhi-jata → த. அபிசாதன்.]

அபிசாதம்

அபிசாதம் abicātam, பெ. (n.)

   1. துன்பம்; pain, suffering.

   2. புண்படுகை; inflicting injury.

   3. வெடிப்பு; பிளவு; fissure, crack.

   4. வருத்தம்; torture, afflication.

   5. அதிக உழைப்பு; strain (physical);;

 exertion.

   6. கருப்பைச் சுருக்கம்; uterine contraction.

   7. பறவைக் காய்ச்சல்; fever in birds (சா.அக.);.

அபிசாதவாதம்

 அபிசாதவாதம் abicātavātam, பெ. (n.)

   விரைந்த நடை, ஊர்திகளில் ஏறி விரைவிற் செல்லல், மற்போர் செய்தல், நெடுந்தூரம் செல்லல், அதிக உழைப்பு முதலிய செய்கைகளினால் உடம்பு தாங்க முடியாமல் நரம்புகளுக்குச் சோர்வு ஏற்பட்டு, வலி, களைப்பு படுக்கையாய்க் கிடத்தல், இளைப்பு முதலிய குணங்களை யுண்டாக்கு மோர் ஊதை (வாத); நோய்; a functional disorder of the nervous system not dependent on any discoverable lesion, but supposes to arise from excessively fast walking, riding, wrestling, long journey, and undrue exertion, etc. It invades the whole system and is marked by pain, exhaustion, prostration fatigue, etc. (சா.அக.);.

த.வ. அலுப்பு ஊதை.

     [Skt. abhi-jata + vata → த. அபிசாதவாதம்.]

அபிசாபசுரம்

 அபிசாபசுரம் abisābasuram, பெ. (n.)

   அறிவர் (சித்தர்);, முனிவர் (யோகி); முதலிய பெரியோர்களின் சாவித்தலினால் ஏற்படும் காய்ச்சல்; fever from severe curse of siddhars; yogis and such other great man (சா.அக.);.

த.வ, சவிப்புக்காய்ச்சல்.

     [அபி + சாபம் + சுரம்.]

     [Skt. abhi → த. அபி.]

சாவி → சாவம் → சாபம் (சவிப்பு);. சுல் → சுர் → சுரம்.

அபிசாபனம்

அபிசாபனம் abicābaṉam, பெ. (n.)

   சாவிப்பு மொழி (சிந்தா.நி.171);; cursing,

த.வ. சவிப்பு.

     [அபி+சாபனம்.]

     [Skt. abhi → த. அபி.]

சாவம் → சாபம் → சாபனம்.

அபிசாரசுரம்

 அபிசாரசுரம் abisārasuram, பெ. (n.)

   இறப்பு மந்திரங்களால் வேள்வி செய்து உண்டாக்குவதாகக் கருதப்படும் ஒருவகைக் காய்ச்சல் (சீவரட்.);; fever supposed to be caused by death invoking incantations at a sacrifice.

த.வ. உருவேற்றக் காய்ச்சல்.

     [Skt. abhi-cara → த. அபிசாரம்.]

சுல் → சுர் → சுரம்.

அபிசாரமந்திரம்

அபிசாரமந்திரம் abicāramandiram, பெ. (n.)

   மனக்கோட்டம், ஆசை, வெறுப்பு, சாவு முதலியவையேற்படுத்தும் ஒருவனுக்குத் தீங்கிழைக்க வேண்டி வேள்வியினாலும் யந்திரம் அமைத்தலாலும் செய்து முடிக்கும் சாவிப்பு மந்திரம்; a magic for a malevolent purpose. It is practised with sacrificial fire or with spells and magic diagrams and is supposed to bring on or produce mental aberration, love, harted, paralysis, and death.

   2. மோகன மந்திரம்; one of the eight kinds of magical enchantments by which Super human powers are attained the power of bringing about libinous fascination by magic (சா.அக.);.

     [அபிசாரம் + மந்திரம்.]

]Skt. abhi-cara → த. அபிசாரம்.]

அபிசாரம்

அபிசாரம்1 abicāram, பெ. (n.)

   பிறர்க்குத் தீங்கு நாடி மறைமொழி செலுத்துகை; emloyment of mantras for a malevolent purpose, black art.

     “மாமதுவா லபிசார மமைத்து” (பிரபோத. 16, 27);.

     [Skt. abhi-cara → த. அபிசாரம்.]

 அபிசாரம்2 abicāram, பெ. (n.)

   1. இறப்பு; death.

   2. ஏவலாற் செய்யுங் கொலை (மரணம்);; black art for purpose of invoking death.

   3. பாழ் (சூனியம்);; magic practise to bring about insanity, disease etc;

 employment of spells for a malevolent purpose (சா.அக.);.

     [Skt. abhi-cara → த. அபிசாரம்.]

அபிசாரி

அபிசாரி abicāri, பெ. (n.)

   1. ஒழுக்கங்கெட்டவள்; unchaste woman.

   2. விலை மகள்; courtesan.

த.வ. பொதுமகள், பரத்தை.

     [Skt. abhisari → த. அபிசாரி.]

அபிசாரிகை

 அபிசாரிகை abicārigai, பெ. (n.)

அபிசாரி (வின்.); பார்க்க;see abisari.

     [Skt. abhicari-ka → த. அபிசாரிகை.]

அபிசாரிக்கை

 அபிசாரிக்கை abicārikkai, பெ. (n.)

   பிறருக்குக் கொலை, விருப்பம் (இச்சை);, பித்து முதலிய தீங்குகளை விளைவிப்பதற்காக வேண்டிச் செய்யும், மந்திர சாதனை; the practice of black art with the aid of magical enchantments for purposes of bringing about death, lust, lunacy or other evil effects in a person (சா.அக.);.

அபிசிக்தன்

 அபிசிக்தன் abisiktaṉ, பெ. (n.)

   திருமுழுக்கு பெற்றவன்; one who is anointed, installed, enthroned.

     [Skt. abhi-sikta → த. அபிசிக்தன்.]

அபிசிக்தர்

அபிசிக்தர் abisiktar, பெ. (n.)

   சைவரில் குருக்கள் வகையார் (மீனாட்.சரித்.1, 27);; persons belonging to a non Brahmin priestly caste who had been anointed as guru.

     [Skt. abhisikta → த. அபிசிக்தர்.]

அபிசித்து

அபிசித்து abisittu, பெ. (n.)

   கடைக்குள (உத்திராட);த்திற்பின் பதினைந்து நாழிகையும் முக்கோலி (திருவோண);த்தின் முன் நான்கு நாழிகையுஞ் சேர்ந்ததாகிய ஓர் ஒட்டு நாண்மீன் (குமாரசாமீ. நட்சத்திர.8);; nakastra introduced in certain siddhantas, consisting of the latter 15 naligais of ultiradam and the earlior four naligais of thiruvonam.

   2. பகல் முழுத்தத்துள் எட்டாவது (விதான. குணா.73 உரை);;த.வ. ஒட்டுநாண்மீன்.

     [Skt. abhi-jit → த. அபிசித்து.]

அபிசிந்தி

 அபிசிந்தி abisindi, பெ. (n.)

   மாசிப்பத்திரி; a hidustani term for santonin wood, Artemosia absinthium (சா.அக.);.

அபிசியந்தம்

 அபிசியந்தம் abisiyandam, பெ. (n.)

   ஒருவகைக் கண்ணோய்; ophthalmia due to the action of deransged vayu and it is attended with pricking pain, horripilation of the eyelashes and irritation of the eyes, conjunctivitis (சா.அக.);.

அபிசியந்தி

அபிசியந்தி abisiyandi, பெ. (n.)

   1. உடம்பினில் உள்ள நாளங்களின் பிசுபிசுப்பையும், அதனால் கை கால் கனாதியையும் உண்டாக்குமோர் கோழை (சிலேட்டுமம்);; anything that produces a sliminess in the channels and a consequent heaviness of the limbs.

   2. நீர் கசியச் செய்தல்; causing defluxions or watery effusions (சா.அக.);.

     [Skt. abhi-jayanti → த. அபிசியந்தி.]

அபிசுதம்

 அபிசுதம் abisudam, பெ. (n.)

   கஞ்சி; rice-water (சா.அக.);.

அபிசுரம்

 அபிசுரம் abisuram, பெ. (n.)

   ஏவலினால் உண்டாகுங் காய்ச்சல்; a fever caused by magic spells (சா.அக.);.

த.வ. ஏவல் காய்ச்சல்.

     [Skt. abhi → த. அபி.]

சுல் → சுர் → சுரம்.

அபிசோரா

 அபிசோரா abicōrā, பெ. (n.)

   பொட்டி லுப்பினால் சில்லிட்ட குடிநீர்; water cooled by means of solution of salpetre (சா.அக.);.

அபிசோலா

 அபிசோலா abicōlā, பெ. (n.)

   சுவைச் சாற்றினால் குளிர்ந்த குடிநீர்; water cooled by Syrup, a solution of sugar combined with other drugs (சா.அக.);.

அபிச்செடி

 அபிச்செடி abicceḍi, பெ. (n.)

   கசகசாச் செடி; poppy plany, Papaver somniferum (சா.அக.);.

     [அபினி + செடி.]

     [U. afin → த. அபினி.]

அபிஞ்ஞன்

 அபிஞ்ஞன் abiññaṉ, பெ. (n.)

   அறிஞன்; learned man, person of understanding.

     [Skt. abhi-jna → த. அபிஞ்ஞன்.]

அபிடங்கசுரம்

அபிடங்கசுரம் abiḍaṅgasuram, பெ. (n.)

   நஞ்சு, சீற்றம், அச்சம், வருத்தம், காமம் முதலிய காரணங்களால் உண்டாகும் காய்ச்சல் (சீவரட். 31);; fever due to poison, excessive anger, fear, grief or sexual indulgence.

     [அபிடங்கம் + சுரம்.]

     [Skt. abhisariga → த. அபிடங்க(ம்);.]

அபிடங்கம்

அபிடங்கம் abiḍaṅgam, பெ. (n.)

   சாவம், தீமொழி (சிந்தா.நி. 181);; curse.

     [Skt. abhisanga → த. அபிடங்கம்.]

அபிடதம்

 அபிடதம் abiḍadam, பெ. (n.)

அவுடதம் பார்க்க;see avudadam (சா.அக.);.

     [Skt. abhista → த. அபிடதம்.]

அபிடவம்

 அபிடவம் abiḍavam, பெ. (n.)

அபிசவம் பார்க்க;see abišavam (சா.அக.);.

அபிடியந்தம்

 அபிடியந்தம் abiḍiyandam, பெ. (n.)

   கண்ணின் வலு (பல);க் குறைவு; weakness of the eye (சா.அக.);.

அபிடேகக்காணி

அபிடேகக்காணி abiṭēkakkāṇi, பெ. (n.)

   வரிவகை (S.I.I.vii, 403);; a tax.

     [அபிடேகம் + காணி.]

     [Skt. abhiséka → த. அபிடேக(ம்);.]

அபிடேகக்கூட்டு

 அபிடேகக்கூட்டு abiṭēkakāṭṭu, பெ. (n.)

   திருமஞ்சன மாட்டுதற்குரிய நறுமணக் கலவை (வின்.);; macerated spices for anointing an idol.

     [அபிடேகம் + கூட்டு.]

     [Skt. abhiseka → த. அபிடேகம்.]

அபிடேகசுதர்

 அபிடேகசுதர் abiṭēkasudar, பெ. (n.)

அபிசிக்தர் பார்க்க;see abisiktar.

அபிடேகநாமம்

 அபிடேகநாமம் abiṭēkanāmam, பெ. (n.)

   அரசன், மடத்தலைவர் (மடாதிபதி); இவர்கள் பட்டம் பெறுங்காலத்துக்கு ஏற்கும் பெயர்; title assumed on entering office, as of a king.

     [Skt. abhiseka+naman → த. அபிடேகநாமம்.]

அபிடேகப்பால்

அபிடேகப்பால் abiṭēkabbāl, பெ. (n.)

   1. பால், இதளியம் முதலியவற்றைக் கொண்டு கொங்கணவர் முறைப்படி உருவாக்கிய மருந்து; a mercurial preparation obtained by boiling milk and mercury, with other ingredients for purposes of rejuvenation and transmutation of metals by a mystic process, as described in Konganava’s work on alchemy.

   2. மதிய மிர்தம்; an ambrosial fluid supposed to be oozing in drops from the opening behind the uvula during the advanced stage in yoga. It is said to promote longevity.

     “மேலான அபிஷேகப்பாலை யுண்டால் விரைந்தேழு நாளையிலே காயசித்தி” (கொங்வாத. காவி.); (சா.அக.);.

     [Skt. abhiseka → த. அபிடேகம்.]

அபிடேகமண்டபம்

அபிடேகமண்டபம் abiṭēkamaṇṭabam, பெ. (n.)

   திருமஞ்சனசாலை (I.M.P.cg. 331);; hall for the ceremonial bath of an idol, in a temple.

     [அபிடேகம் + மண்டபம்.]

     [Skt. abhiseka → த. அபிடேகம்.]

அபிடேகம்

அபிடேகம்1 abiṭēkam, பெ. (n.)

   1. நீர், தேன், முதலானவற்றைக் கடவுளின் முழு திருமேனிபடும்படி நீராட்டுதல்;     (திருமஞ்சனம்);;

 bathing of an idol with water, oil, ghee, milk, honey and other substances.

   2. பட்டஞ் சூட்டும் விழா; inauguration of a king by anointing, consecreation of a priest.

     “மன்னனைப் பராசரன்றா னபிடேகம்…. வழங்க” (சேதுபு. மங்கல. 79.);.

   3. மணிமுடி (திருவாலவா. 11, 4);; crown.

த.வ. முழுக்கு.

     [Skt. abhi-seka → த. அபிடேகம்.]

 அபிடேகம்2 abiṭēkam, பெ. (n.)

   தலையணி வகை (S.l.l. iii, 474);; a head ornament.

     [Skt. abhiseka → த. அபிடேகம்.]

அபிடேகி-த்தல்

அபிடேகி-த்தல் abiṭēkittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   திருமுழுக்கு செய்தல்; to bathe, to anoint.

     “ஆசிலாப் பொன்னிநீரா லமனுக் கபிடேகித்தோர்” (திருவாட்போக்கிப்பு. மாணிக்கமலைச் சிறப். 36);.

த.வ. திருமுழுக்காட்டுதல்.

     [Skt. abhi-seka → த. அபிடேகி-,]

அபிட்டம்

 அபிட்டம் abiṭṭam, பெ. (n.)

   இதளியம் (வின்.);; quicksilver.

     [Skt. avintyaja → த. அபிட்டம்.]

அபிதம்

அபிதம் abidam, பெ. (n.)

   காப்பு (இரட்சிகை); (சிந்தா. நி. 177);; protection.

     [Skt. abhidha → த. அபிதம்.]

அபிதர்மபிடகம்

 அபிதர்மபிடகம் abidarmabiḍagam, பெ. (n.)

   புத்த அறிவு நூல் மூன்றனுள் ஒன்று; name of the third section of Buddhist writings, as a basket of metaphysics.

அபிதா

அபிதா abitā, பெ. (n.)

   இடுக்கணுற்றுழி முறையிட்டுக் கூறுஞ்சொல்; exclamation used in calling for help.

     “கிரியெட்டும் அபிதா வபிதாவென” (திருப்பு. 1140);.

     [Skt avidha → த. அபிதா.]

அபிதானகோசம்

 அபிதானகோசம் abitāṉaācam, பெ. (n.)

   ஒரு வடமொழி யகரமுதலி; a Sanskrit medical dictionary (சா.அக.);.

     [Skt. abhi-dhana+kosa → த. அபிதானகோசம்.]

அபிதானசிந்தாமணி

அபிதானசிந்தாமணி abitāṉasindāmaṇi, பெ. (n.)

   1. ஏமச் சந்திரன் என்பவரால் செய்த ஒரு வடமொழி யகராதி; a sanskrit dictionary of synomyms by Hemachandran.

   2. சிங்காரவேலு முதலியாரால் தொகுக்கப் பெற்ற தமிழ்க் கலைக்களஞ்சியம்; an encyclopeadia compiled siñgāravelu mudaliyar (சா.அக.);.

     [Skt. abhi-dhana → த. அபிதானம்.]

சித்து + மணி – சித்தாமணி → சிந்தாமணி. மண்ணுதல் = கழுவுதல். மண் → மண்ணி → மணி = கழுவப்பெற்ற ஒளிக்கல்.

அபிதானசூடாமணி

அபிதானசூடாமணி abitāṉacūṭāmaṇi, பெ. (n.)

   வடமொழியில் எழுதப்பட்டதொரு மருத்துவ நூல்; an excellent work on materia medica compiled by Narahari of Kashmere. It is a glossary of medicinal substances with specifications of their Virtues. It is also known as RajaNigandu for, it was composed under the patronage of the kind of Kasmere in 700 A.D. (சா.அக.);.

த.வ. இராசநிகண்டு.

     [Skt. abhi-dhana → த. அபிதான(ம்);.]

சூடா+மணி+சூடாமணி.

அபிதானம்

அபிதானம்1 abitāṉam, பெ. (n.)

   பெயர் (பிங்);; name, appellation.

     [Skt. abhi-dhana → த. அபிதானம்.]

 அபிதானம்2 abitāṉam, பெ. (n.)

   மறைவு (நாநார்த்தை);; covering.

     [Skt. aidhana → த. அபிதானம்.]

 அபிதானம்3 abitāṉam, பெ. (n.)

   1. அபிதான கோசம் பார்க்க;see abidana-Kosam.

   2. நிகண்டு.; a vocabulary of synonyms, a dictionary.

   3. சலாகை; a surgeon’s probe (சா,அக.);.

     [Skt. abhi-dhana → த. அபிதனாம்.]

அபிதாபம்

 அபிதாபம் abitābam, பெ. (n.)

   அளவிறந்த வெப்பம்; extreme heat (சா.அக.);.

     [அபி + தாபம்.]

     [Skt. abhi → த. அபி.]

தவி → தாவம் → தாபம். தகம், சூடு, வெப்பம். தகம் → தாபம் = அளவிற்கதிகமான வெப்பம்.

அபிதார்த்தம்

அபிதார்த்தம் abitārttam, பெ. (n.)

   சொல்லுக்கு இயல்பான பொருள் (வேதா. சூ.118);; primary signification of a word.

     [Skt. abhi-dha+artha → த. அபிதார்த்தம்.]

அபிதேயம்

அபிதேயம் abitēyam, பெ. (n.)

   செஞ்சொற் பொருள் (தருக்கசங்.249);; that which is denoted by sen-jol.

     [Skt. abhi-dheya → த. அபிதேயம்.]

அபிதை

அபிதை abidai, பெ. (n.)

   நாநலம் (பி.வி.50,உரை);; primary significative capacity of a word.

     [Skt. abhi-dha → த. அபிதை.]

அபித்தியை

அபித்தியை abittiyai, பெ. (n.)

   விருப்பம் (இச்சை); (சிந்தா. நி. 181);; wish, desire.

     [Skt. abhi-dhya → த. அபித்தியை.]

அபிநந்தனர்

அபிநந்தனர் abinandaṉar, பெ. (n.)

   தீர்த்தங்கரருள் ஒருவர் (திருக்கலம், காப்பு. உரை);; name of a Jaina Arhat, one of 24 tinttargarar, q.v.

     [Skt. abhi-nandana → த. அபிநந்தனர்.]

அபிநயக்கை

 அபிநயக்கை abinayakkai, பெ. (n.)

   கைகாட்டு (அபிநயம்); மெய்ப்பாடு; gesture by hand.

     [Skt. abhi-naya → த. அபிநயம்.]

அபிநயசிரம்

 அபிநயசிரம் abinayasiram, பெ. (n.)

   தலையாற் செய்யும் மெய்ப்பாடு; pose of the head.

     [Skt. abhi-naya+siras → த. அபிநயசிரம்.]

அபிநயநூல்

 அபிநயநூல் abinayanūl, பெ. (n.)

   காமக் கலைப் பற்றிய ஒரு நூல்; a treatise on gestures of lust or of passion (சா.அக.);.

 Skt. abhi-naya → த. அபிநயம்.]

அபிநயன்

அபிநயன் abinayaṉ, பெ. (n.)

   கூத்தன் (சிந்தா. நி. 166);; dancer.

த.வ. அவிநயன், ஆடவல்லான், கூத்தப் பெருமான்.

     [த. அவிநயம் → Skt. abhi-naya → த. அபிநயன்.]

அபிநயம்

அபிநயம் abinayam, பெ. (n.)

   1. ஆடற்கலையில், களம், கருத்து, காலம் முதலியவற்றை முகத்தாலும், உடல் உறுப்புகளாலும் உணர்ச்சியோடு வெளிப்படுத்துதல்; communication and interpretation of meaningful ideas and emotions through facial expressions and rhytmic gestures of hands.

     “இருபத்து நான்கு ஒற்றைக்கை அபிநயங்களைக் காட்டி விளக்கினார்”.

   2. மனக்கருத்தைக் குறிப்பால் விளக்கும் உடற்செய்கை; indication of sentiment or purpose by look or gesture, gesticulation, theatrical action.

     “மகளிர்தங்க ளபிநயம்” (இரகு. தசரதன்சா. 30);.

த.வ. அவிநயம்.

     [த. அவிநயம் → Skt. abhi-naya → த. அபிநயம்.]

அபிநயவிடுகதை

 அபிநயவிடுகதை abinayaviḍugadai, பெ. (n.)

   ஒரு சொல்லின் பல பிரிவுகளை, மெய்ப்பாட்டால் காட்டும் புதிர் (பாண்டி);; acted charade.

     [அபிநயம் + விடுகதை.]

     [Skt. abhi-naya → த. அபிநயம்.]

அபிநயி

 அபிநயி abinayi, பெ. (n.)

   ஆடற் கலையில் உடல் உறுப்புகளை அசைத்தல்; show in gestures and postures (the feelings, emotions, etc.);

     “பக்திச் சுவையை அபிநயித்துக் காட்டினார்”.

த.வ. அவிநயி.

     [Skt. abhi-naya → த. அபிநயி.]

அபிநயி-த்தல்

அபிநயி-த்தல் abinayittal,    4 செ.குன்றாவி. (v.i.)

   நடித்தல்; to act, gesticulate.

த.வ. அவிநயி.

     [Skt. abhi-naya → த. அபிநயி-,]

அபிநவம்

அபிநவம் abinavam, பெ. (n.)

   புதிது; that which is quite new, fresh, modern.

     “ராகவ வபிநவ கவிநாதன்” (கம்பரா. தனி. 9);.

     [Skt. abhi-nava → த. அபிநவம்.]

அபிநாகனம்

 அபிநாகனம் abinākaṉam, பெ. (n.)

   கண்கட்டு; bandage over the eyes (சா.அக.);.

அபிநாகிதம்

 அபிநாகிதம் abinākidam, பெ. (n.)

   தேற்றான் கொட்டை; water cleaning nut, Strychnos potatorum (சா.அக.);.

அபிநாசசன்னி

அபிநாசசன்னி abināsasaṉṉi, பெ. (n.)

   1. அபிநியாசசன்னி பார்க்க;see abi-niyasa-sanni.

   2. இசிவுநோய் (இராட்);; a kind of sanni.

     [Skt. abhi-nasa+sanni → த. அபிநாசசன்னி.]

அபிநாசி

 அபிநாசி abināci, பெ. (n.)

அபீனசம் பார்க்க;see abinasam (சா.அக.);.

அபிநிதமாது

 அபிநிதமாது abinidamādu, பெ. (n.)

   பதுமினி சாதிப் பெண்; the first of the four classes to lust, chastity etc. (சா.அக.);.

அபிநியாசகரம்

 அபிநியாசகரம் abiniyācagaram, பெ. (n.)

   உட்காங்கை, நிறம்குன்றல், பசிநீங்கல், முகப்பளபளப்பு, பேச்சின்மை, ஐம்பொறி (பஞ்சேந்திரிய);த் தன்மைக் குறைவு, மயங்கிய உறக்கம் (நித்திரை); மற்றும் இசிவு (சன்னிபாத); குணங்கள் முதலியவற்றுடன் கூடிய சுரம்; a fever accompanied by a slight or impereeptible rise of the bodily beat or a slightly sub normal temperature, dullness of completion, loss of appetite, glassiness of face, loss of voice, loss of vital powers of the sensory organs, somnolence or subcomatose state and other concomitant symptoms of typhus fever, ardent fever (சா.அக.);.

த.வ.உட்காங்கைக் காய்ச்சல்.

     [Skt.abhi + nyasa → த. அபிநியாசம்.]

அபிநியாசசன்னி

 அபிநியாசசன்னி abiniyāsasaṉṉi, பெ. (n.)

   அளவிற்கதிகமாய்ச் சுரங்காய்ந்து, பசியின்மை, முக, உடம்பு வலி, மேல்மூச்சு, வலுக்குறைவு (பலவீனம்); ஐம்பொறிகளின் (பஞ்சேந்திரியத்); தன்மைக் குறைவு, மயங்கிய தூக்கம், அறிவின்மை முதலிய குணங்களைக் காட்டுமொரு வகை இசிவு (சன்னிபாத);ச் சுரம்; a kind of typhoid fever characterised by high temperature, loss of appetite, glossiness of face, pain all over the body, hard, breathing, weakness, depression of vital powers of the five sensory organs, sommolence, loss of consciousness etc. (சா.அக.);.

     [Skt. abhi + nyåsa + san-ni → த. அபிநியாச சன்னி.]

அபிநியாசவாதம்

 அபிநியாசவாதம் abiniyācavātam, பெ. (n.)

   உயிர்வளி, பரியன்வளி, ஊதை, பித்தம், கோழை முதலியவற்றை அதிகரிக்கச் செய்வதனால், அதிக சுரங்காய்ந்து, காதடியில் வீக்கத்தை உண்டுபண்ணும் ஓர் ஊதை (வாத); நோய்; a rheumatism marked by high fever and swelling below the lobes of the ears (சா.அக.);.

த.வ. காதடிவூதை.

     [Skt. abhi + nyasa + vata → த. அபிநயாசவாதம்.]

அபிநிவேசம்

அபிநிவேசம்1 abinivēcam, பெ. (n.)

   விருப்பம் (விசாரசந். 335);; desire.

     [Skt. abhinivesa → த. அபிநிவேசம்.]

 அபிநிவேசம்2 abinivēcam, பெ. (n.)

   ஊக்க மிகுதி; Zeal, earnestness.

     “வருந்தபி நிவேச மவையைந்தும்” (கூர்மபு. விபூ.19);.

     [Skt. abhinivesa → த. அபிநிவேசம்.]

அபிநீலம்

 அபிநீலம் abinīlam, பெ. (n.)

   மிகக்கருப்பு; very black or dark (சா.அக.);.

த.வ. கருநீலம், அட்டகருப்பு.

     [Skt. abhi + nila → த. அபிநீலம்.]

அபிந்நியாசம்

 அபிந்நியாசம் abinniyācam, பெ. (n.)

   இசிவு (சன்னி); வகை (வின்);; convulsions.

 Skt. abni-nyasa → த. அபிந்நியாசம்.]

அபினி

அபினி abiṉi, பெ. (n.)

   1. ஒருவகை (போதை); மதர்ப்புப் பொருள்; opium.

   2. அபின் பார்க்க;see abin.

     [U. afim → த. அபினி.]

அபினிச்சத்து

அபினிச்சத்து abiṉiccattu, பெ. (n.)

   1. அபினியி னின்று இறக்கும் சத்து; extract of opium-morphine or cocaine.

   2. அபின்சாரம் பார்க்க;see abin-saram.

     [அபினி + சத்து.]

     [U. afim → த. அபினி.]

அபினிச்சாராயம்

அபினிச்சாராயம் abiṉiccārāyam, பெ. (n.)

   1. கசகசாவினின்று எடுக்கப்படுவதும் பக்கிரிகளாலும், இன்னும் சிலரால் விழா (பண்டிகை);க் காலங்களில் உட்கொள்ளப்படுவதுமான பங்கி என்று சொல்லப்பட்ட ஒருவகை மது; an intoxicating liquor which is formed by macerating or infusin the poppy heads in Water and sweetening the smae with molasses. It is drunk by fakirs and by some others on festival occasions, bhang.

   2. அபினிச் சத்திலிருந்து வடிக்கும் ஒரு வகை மேனாட்டுச் சாராயம்; wine of opium, Vinum opili (சா.அக.);.

     [அபினி + சாராயம்.]

     [U. afim → த. அபினி.]

அபினிச்செம்பு

அபினிச்செம்பு abiṉiccembu, பெ. (n.)

   அபினி, கந்தகம், துருசு முதலான சரக்குகளைக் கொண்டு போகர் நூலிற் சொல்லிய முறைப்படி மெழுகாக்கிச் செம்புருகையில் கிராசங் கொடுத்துத் தூய்மை (சுத்தி); செய்த களிம்பற்ற ஒர் உயர்தரமான செம்பு; a purified superior copper free from verdigris, prepared, according to the process laid down in a Bogar’s work, using opium, sulphur, blue stone etc., as chief ingredients (சா.அக.);.

     [அபினி + செம்பு.]

     [U. afim → த. அபினி.]

செம் → செம்பு (வே.க.220);.

அபினித்தைலம்

 அபினித்தைலம் abiṉittailam, பெ. (n.)

   மேற்பூச்சு மருந்தாக ஊதை (வாத); நோய், ஊதை (வாத);ப்பிடிப்பு முதலான வலியுள்ள நோய்களுக்குப் பயன்படும் அபினிச் சத்திலிருந்து உருவாக்கும் நெய்மம்; an oily liquid preparation from the extract of opium used as an external application in cases of rheumatism, gout and other painful affections (சா.அக.);.

     [U. afim → த. அபினி.]

அபினிப்பாகு

 அபினிப்பாகு abiṉibbāku, பெ. (n.)

   கசகசாத் தோல், சாராயம், சருக்கரை ஆகிய இவற்றை வெந்நீரில் கலக்கிக் கொதிக்க வைத்துப் பாகுபதமாய் இறக்கியவொரு மருந்துப் பாகு; the syrup of poppies-surupus papavaris. It is a syrup prepared from poppy capsules, rectified spirit and refined sugar by boiling them sufficiently until the mass is reduced to a concentrated solution of sugar (சா.அக.);.

     [அபினி + பாகு.]

     [U. affirm → த. அபினி.]

பகு → பாகு.

அபினியிளகியம்

 அபினியிளகியம் abiṉiyiḷagiyam, பெ. (n.)

   கபாட இளகியம்;   மலத்தைக் கட்டக் குழந்தைகளுக்கு உருவாக்கிக் கொடுக்கும் ஒரு வகை இளகியம்; an electuary prepared with opium as a chief ingredient and given to children for arresting motions.

     [அபினி + இளகியம்.]

     [U. afim → த. அபினி.]

இளகு → இளகம் → இளகியம்.

அபினியுப்பு

 அபினியுப்பு abiṉiyubbu, பெ. (n.)

   அபினியினின்று எடுக்கப்படும் உப்புச் சத்து; alkaloids obtained from opium some of them are hydrochlorate, sulphate, and acedate of opium (சா.அக.);.

     [அபினி + உப்பு.]

     [U. afim → த. அபினி.]

உ → உப்பு = உயர்தல், படுதல், மேலெழும்பித் தோன்றுதல்.

அபினிரஞ்சம்

 அபினிரஞ்சம் abiṉirañjam, பெ. (n.)

   ஆங்கில முறைப்படியும் ஆயுள்வேத முறைப்படியும் செய்யக்கூடியதான அபினியைச் சாராயத்திற் கரைத்துப் புளிக்க வைத்து வடித்த ஒரு நீர்மச் சத்து; a preparation obtained by fermenting the solution of opium and alchohol according to either the English system or the ayurvedic system, it is known as Arishtam, Tincture of opium (சா.அக.);.

     [U. afim + niranja →த. அபினிரஞ்சம்.]

அபினிவைப்பு

 அபினிவைப்பு abiṉivaibbu, பெ. (n.)

   கடுகு, கசகசா, மராட்டிமொக்கு முதலான சரக்குகளைக் கொண்டு உருவாக்கி, அபினிக்குப் பகரமாக விற்கும் போலி அபினி; a faked opium prepared from a mixture of the following drugs as ingredients viz., mustard, poppy seeds, gunjah and buds of dhatura and sold as a substitute for the genuine drug (சா.அக.);.

     [அபினி + வைப்பு.]

     [U. afirm → அபினி.]

அபின்

 அபின் abiṉ, பெ. (n.)

   கசகசாச் செடியின் பால்; opium, inspissated juice of papaver somniferum (சா.அக.);.

த.வ. கஞ்சங்குல்லை, கசமத்தப்பிசின்.

     [U. afim → த. அபின்.]

அபின்சாரம்

 அபின்சாரம் abiṉcāram, பெ. (n.)

   பலவகை அபினிச் சத்துக்களிலொன்று; one of the several alkalods of olum-ladanam (சா.அக.);.

     [அபின் + சாரம்.]

     [U. afim → த. அபின்.]

சாறு → சாறம் → சாரம்.

அபின்னியாசம்

 அபின்னியாசம் abiṉṉiyācam, பெ. (n.)

   இசிவு (சன்னி); வகை (R.);; a kind of high fever attended with convulsion.

     [Skt. abhinyasa → த. அபின்னியாசம்.]

அபின்னை

அபின்னை abiṉṉai, பெ. (n.)

   திருமாலினின்று பிரிக்கப்படாத திருமகள்; Tirumagal, the Goddess of wealth inseparable from Tirumal (Vishu.);.

     ‘ஶ்ரீ எனப்படும் லகஷ்மி, விஷ்ணுவிடம் அபின்னையாக (பிரிக்க முடியாதவளாக); இருக்கின்றாள் என்பதைக் காட்டும்’ (சி. செ. பக். 133);.

     [அ (எ.ம. முன்.); + பின்னை. பிள் → பில் → பின் → பின்னை. பிள்ளுதல் = பிளவுபடுதல், வேறுபடுதல், பிரிக்கப்படுதல்.]

அபிபவம்

 அபிபவம் abibavam, பெ. (n.)

   அவமானம்; disgrace.

     [Skt. abhi-bhava → த. அபிபவம்.]

அபிபவி-த்தல்

அபிபவி-த்தல் abibavittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   அவமானப்படுத்துதல் (திவ்பெருமாள்தி. 2, 5, வ்யா. பக். 33);; to disgrace.

     [Skt. abi-bhava → த. அபிபவி-,]

அபிபிங்கலம்

 அபிபிங்கலம் abibiṅgalam, பெ. (n.)

   மிகச்சிவப்பு; very red or reddish brown (சா.அக.);.

த.வ. செக்கச்சிவப்பு.

அபிபூதன்

 அபிபூதன் abibūtaṉ, பெ. (n.)

   மறைக்கப் பட்டவன்; one who is concealed (சா.அக.);.

     [அபி + பூதன்.]

     [Skt. abhi → த. அபி.]

அபிப்பிராயபேதம்

அபிப்பிராயபேதம்1 abibbirāyabētam, பெ. (n.)

   மாறுபட்ட கருத்து; difference of opinion (சா.அக.);.

     [Skt. abhi-praya+bheda → த. அபிப்பிராய பேதம்.]

 அபிப்பிராயபேதம்2 abibbirāyabētam, பெ. (n.)

   மனவருத்தம்; hard feelings.

     “ஒரு சிறிய பிரச்சினையினால் இருவருக்குள்ளும் அபிப்பிராயபேதம் ஏற்பட்டுவிட்டது” (இ.வ.);.

த.வ.கருத்துமுரண்.

     [Skt. abhi-praya+bheda → த. அபிப்பிராயபேதம்.]

அபிப்பிராயம்

அபிப்பிராயம் abibbirāyam, பெ. (n.)

   1. சொந்தக் கருத்து; personal opinion.

   2. (ஒரு துறையில்); வல்லுநர் கொண்டிருக்கும் கருத்து, கலந்தாய்வு; professional opinion or advice.

     “வழக்குரைஞரிடம் அபிப்ராயம் கேட்டு அதன்படி செய்யலாம்” (இக்.வ.);.

   3. செயல்படுத்த திட்டமிட்டிருக்கும் எண்ணம்; intention.

     “பையனை மேலே படிக்க வைக்கும் அபிப்பிராயம் இல்லை” (இக்.வ.);.

   4. நோக்கம்; aim, intention.

த.வ. கருத்து.

     [Skt. abhi-praya → த. அபிப்பிராயம்.]

அபிமதம்

அபிமதம்1 abimadam, பெ. (n.)

   இணக்கம் (நாநார்த்த);; agreeableness.

     [Skt. abhi-mata → த. அபிமதம்.]

 அபிமதம்2 abimadam, பெ. (n.)

   விருப்பம்; desire, wish.

     “அவர வர்க்குள வபிமத மறைந்திடு மென்ன” (நல். பாரத. பாண்டவர்துற. 6);.

     [Skt. abhi-mata → த. அபிமதம்.]

அபிமந்தம்

 அபிமந்தம் abimandam, பெ. (n.)

   கண்ணோய்; a disease of the eye (சா.அக.);.

அபிமந்திரணம்

 அபிமந்திரணம் abimandiraṇam, பெ. (n.)

   மந்திரித்தல்; treating by magical enchantments (சா.அக.);.

அபிமந்திரம்

அபிமந்திரம் abimandiram, பெ. (n.)

   ஒதுகை (சிந்தா. நி. 182);; reciting mantras.

     [அபி + மந்திரம்.]

     [Skt. abhi → த. அபி.]

மன்+திரம்-மந்திரம்.

அபிமந்திரி-த்தல்

அபிமந்திரி-த்தல் abimandirittal,    4. செ.குன்றாவி. (v.t.)

   மறைமொழியால் அழிவை உண்டாக்குதல் (சீவக. 2411. உரை);; to consecrate by uttering mantras.

     [Skt. abhi → த. அபி.]

அபிமன்

அபிமன் abimaṉ, பெ. (n.)

   அருச்சுனருக்குச் சுபத்திரையிடம் பிறந்த மகன் (பெருங். உஞ்சை. 56, 58, குறிப்பு);; Arjuna’s son by Subhadrā.

     [Skt. abhi-manyu → த. அபிமன்.]

அபிமன்னியு

 அபிமன்னியு abimaṉṉiyu, பெ. (n.)

அபிமன்னு பார்க்க;see abimannu.

     [Skt. abhimanyu → த. அபிமன்னியு.]

அபிமன்னு

அபிமன்னு abimaṉṉu, பெ. (n.)

   அருச்சுனன் மகன் (நல்.பாரத. புத்திர. 117);; name of the son of Arjuna by Subhadrā.

     [Skt. abhimanyu → த. அபிமன்னு.]

அபிமபுத்தி

அபிமபுத்தி abimabutti, பெ. (n.)

   உருத்திரருள் ஒருவர் (தக்க யாகப். 443, உரை);; a Rudran.

அபிமானகளத்திரம்

 அபிமானகளத்திரம் abimāṉagaḷattiram, பெ. (n.)

   வைப்பாட்டி; concubine used euphem.

த.வ. காமக்கிழத்தி.

     [Skt. abhi-mana-kalatra → த. அபிமான களத்திரம்.]

அபிமானதுங்கன்

அபிமானதுங்கன் abimāṉaduṅgaṉ, பெ. (n.)

   அன்புமிக்கோன்; one who has great affection, attachment.

     “அணிகோட்டியர் கோனபிமான துங்கன் செல்வனை” (திவ். திருப்பல். 11);.

     [Skt. abhi-māna + tunga → த. அபிமான துங்கன்.]

அபிமானத்தி

 அபிமானத்தி abimāṉatti, பெ. (n.)

   வைப்பாட்டி; concubine, used euphem.

     [Skt. abhi-mana → த. அபிமானம்.]

அத்தி – பெண்பாலீறு.

அபிமானபுத்திரன்

 அபிமானபுத்திரன் abimāṉabuttiraṉ, பெ. (n.)

   வளர்ப்பு மகன்; on by affection, foster son, not recognized by law.

     [Skt. abhi-mana → த. அபிமான(ம்);.]

புது → புத்து → புத்திரன். புதியதாக குடும்பத்திற்கு வந்தவன்.

அபிமானம்

அபிமானம் abimāṉam, பெ. (n.)

   1. தன்மதிப்பு (மச்சபு. பன்வந். 22);; self-respect, sense of honour.

   2 ஒன்றன் குணத்தை மற்றொன்றன் மேலேற்றுகை; erroneous identification as of the soul with the body

     “செயிரி னாலுட னானெனு மபிமானம்” (சூத. சிவ. 12, 38);.

   3. பற்று; love, affection.

   4. உள்ளக்களிப்பு (சூடா);; joy, enthusiasm.

     “உலக இலக்கியத்தில் அவர் கொண்டிருந்த அபிமானம் அளவிடமுடியாது”.

   5. நன்மதிப்பு, உயர்வான உண்ணம்; admiration.

     “சிறந்த கதைகள் எழுதி மக்களின் அபிமானத்தைப் பெற்றவர்” (இக்.வ.);.

த.வ. தன்மதிப்பு, தன்மானம்.

     [Skt. abhi-mana → த. அபிமானம்.]

அபிமானவிருத்தி

 அபிமானவிருத்தி abimāṉavirutti, பெ. (n.)

   செருக்கு; egoism (சா.அக.);.

     [Skt. abhi-mana+vrtti → த. அபிமான விருத்தி.]

அபிமானி

அபிமானி1 abimāṉittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   1. மதித்தல்; to honour, esteem, respected.

   2. ஆதரித்தல்; to take great care of support, love.

     [Skf. Abhi-mani → த. அபிமானி-,]

 அபிமானி2 abimāṉi, பெ. (n.)

   பற்றுடையோன்; one who has affection, attachment.

த.வ. ஆர்வலன்.

     [Skt. abhi-manin → த. அபிமானி.]

அபிமானிதம்

 அபிமானிதம் abimāṉidam, பெ. (n.)

   புணர்ச்சி; copulation; sexual intercourse (சா.அக.);.

     [Skt. abhi-manin → த. அபிமானிதம்.]

அபிமுகன்

அபிமுகன் abimugaṉ, பெ. (n.)

   நல்லவன்; person favourably disposed.

     “ஐவரு மபிமுகராக” (நல். பாரத. சத்தியபா. 4);.

     [அபி + முகன்.]

     [Skt. abhi → த. அபி.]

முகம் → முகன்

அபிமுகம்

அபிமுகம் abimugam, பெ. (n.)

   1. நேர்முகம்; face turned towards.

     “வடக்கபிமுகம்” (நல். பாரத. கயிலை. 86);.

     [அபி + முகம்.]

     [Skt abhi → த. அபி.]

அபியங்கம்

 அபியங்கம் abiyaṅgam, பெ. (n.)

   நெய்மம் (தயிலந்); தேய்த்தல்; rubbing over the body with oil-unction; anointing or applying an oil or ointment with friction, inunction (சா.அக.);.

த.வ. எண்ணெய் முழுக்காட்டு.

     [Skt. abhi-anga → த. அபியங்கம்.]

அபியந்தரம்

 அபியந்தரம் abiyandaram, பெ. (n.)

   உள்; inside (சா.அக.);.

     [Skt. abhi+antara → த. அபியந்தரம்.]

அபியிதம்

அபியிதம் abiyidam, பெ. (n.)

   சொல்லுகை (சிந்தா. நி.182);; saying, speaking.

     [Skt. abhi-hita → த. அபியிதம்.]

அபியுக்தன்

 அபியுக்தன் abiyuktaṉ, பெ. (n.)

   அறிஞன் (திருக்கோ. நூன்முகம்.);; scholar of high standing.

     [Skt. abhi-yukta → த. அபியுக்தன்.]

அபியோகபத்திரம்

அபியோகபத்திரம் abiyōkabattiram, பெ. (n.)

   பிறராற் செய்யப்பட்ட துன்பத்தைக் கூறி முறையிடும் ஆவணம் (சுக்கிர. நீதி. 95);; petition, complaint in writing.

த.வ. முறையீட்டு ஆவணம்.

     [Skt. abhi-yoga + patra → த. அபியோக பத்திரம்.]

அபியோகம்

அபியோகம் abiyōkam, பெ. (n.)

   தனக்குப் பிறர் செய்த தீங்கை அரசனிடம் முறையிடுகை (சுக்கிரநிதி. 262);; complaint, representation to the king of the wrongs done to a person.

த.வ. முறையீடு.

     [Skt. abhi-yoga → த. அபியோகம்.]

அபிரங்கி

 அபிரங்கி abiraṅgi, பெ. (n.)

   கருநெல்லி; black berried feather foil, Phyllanthus reticulatus (சா.அக.);.

அபிராமஞ்சி

 அபிராமஞ்சி abirāmañji, பெ. (n.)

   சடா மாஞ்சில்; a plant, Valeriana jatamansi (சா.அக.);.

அபிராமன்

அபிராமன் abirāmaṉ, பெ. (n.)

   மனத்துக் கினியவன்; sweet charming person.

     “அபிராம விங்கு வருக” (திருப்பு. 59);.

     [Skt. abhi-rama → த. அபிராமன்.]

அபிராமம்

அபிராமம் abirāmam, பெ. (n.)

   அழகானது; that which is beautiful, lovely, pleasing, delightful.

     “கொடுஞ்சமரிற் பட்ட வடுத் துளைத்த கல்லபிராமம்” (தனிப்பா. 1, 92, 7);.

     [Skt. abhi-rama → த. அபிராமம்.]

அபிராமி

அபிராமி1 abirāmi, பெ. (n.)

   மலைமகள்; Parvadi as beautiful.

     [Skt. abhi-rami → த. அபிராமி.]

 அபிராமி2 abirāmi, பெ. (n.)

   மூலி, சார்வளை; a plant, Trianthema decandra (சா.அக.);.

அபிராமிபட்டர்

அபிராமிபட்டர் abirāmibaṭṭar, பெ. (n.)

   அபிராமியந்தாதி யியற்றியவர்; name of a Brahman devotee to Tirukkadavur in the Tanjore district, author of the abirami-y- andädi 18th C.

     [Skt. abhi-rami+bhatta → த. அபிராமிபட்டர்.]

அபிராமியந்தாதி

 அபிராமியந்தாதி abirāmiyandāti, பெ. (n.)

   ஒரு நூல்; name of a popular devotional poem on the goddess Abirami of Thirukkadavur by Abirami-pattar.

     [Skt. abhi-rami+anta+adi → த. அபிராமி யந்தாதி.]

அபிருசி

 அபிருசி abirusi, பெ. (n.)

   மிகுவிருப்பம்; great taste.

     [Skt. abhi-ruci → த. அபிருசி.]

அபிருத்தம்

 அபிருத்தம் abiruttam, பெ. (n.)

   மேக நோயினால் ஆண்குறியின் முன் தோலில் ஏற்படும் சுருக்கம்; the refraction of the prepuce behind the glanspenis, paraphymosis (சா.அக.);.

த.வ. முன்தோல் சுருக்கு.

அபிரேகம்

 அபிரேகம் abirēkam, பெ. (n.)

அப்பிரகம் பார்க்க;see appiragam (சா.அக.);.

     [Skt. abhraka → த. அபிரேகம்.]

அபிரேக்கு

அபிரேக்கு1 abirēkku, பெ. (n.)

   மீன் (மதி. களஞ். ii, 18);; fish.

 அபிரேக்கு2 abirēkku, பெ. (n.)

அப்பிரகம் பார்க்க;see appiragam (சா.அக.);.

அபிற்சாந்து

 அபிற்சாந்து abiṟcāndu, பெ. (n.)

   பூஞ்சாந்து; a tree bark sold in the bazzars (சா.அக.);.

அபிலாசம்

அபிலாசம் abilācam, பெ. (n.)

   விருப்பம் (சிந்தா. நி. 187);; desire, wish, longing.

     [Skt. abhi-Iasa → த. அபிலாசம்.]

அபிலாசை

அபிலாசை abilācai, பெ. (n.)

   விருப்பம்; desire wish.

     “அபிலாசையின்றி யாசாரியனைப் பிறிந்திருப்பா ரார்” (உபதேசரத். 64);

காசிக்குப் போய் வரவேண்டும் என்ற பாட்டியின் அபிலாசை நிறைவேறியது (இ.வ.);.

த.வ. அவா.

     [Skt. abhi-lasa → த. அபிலாசை.]

அபிலாபம்

அபிலாபம் abilābam, பெ. (n.)

பேச்சு (சிந்தா.நி. 169);, talk, speech.

     [Skt. abhi-lapa → த. அபிலாயம்.]

அபிவாகதாரை

அபிவாகதாரை abivākatārai, பெ. (n.)

   1. நிணநீர்த் தாரை முடிவு; the terminal ducts of the lymphatic gland.

   2. கோளத்தினின்று வெளிவரும் நிணநீர்த்தாரை; the efferent ressels of the lymphatic gland – vase efferentia (Lymphatica);.

     [Skt. abhi-vaja-dhara → த. அபிவாகதாரை.]

அபிவாதனம்

அபிவாதனம் abivātaṉam, பெ. (n.)

   தன் குலம், பெயர் முதலியன கூறி பெரியோரைத் தொழுகை; respectful salutation which describes the name and lineage of the person who salutes.

     “அபிவாதனத்தாற் பெரியோரை வணங்கல்” (கூர்மபு. வியாதர் கரும. 8);.

த.வ. தன்நவில் தொழுகை.

     [Skt. abhi-vadana → த. அபிவாதனம்.]

அபிவியஞ்சகம்

அபிவியஞ்சகம் abiviyañjagam, பெ. (n.)

   1. வெளிப்படுத்துகை; revealing, manifesting.

     “அது வைகரிவாக்குக்கு அபிவியஞ் சகஸ்தானம்” (சி. சி. 2, 62 சிவாக்.);.

   2. வெளிச்சம்; brightness.

     [Skt. abhi-vyanjaka → த. அபிவியஞ்சகம்.]

அபிவியத்தி

அபிவியத்தி abiviyatti, பெ. (n.)

   வெளிப்படுகை; manifestation.

     “நீர் கொண்ட சிவத்து வாபிவியத்திக்கு மீளப் பிறப்புண்டென்றவா றாயிற்று” (சிவசம. 35);.

     [Skt. abhi-vyakti → த. அபிவியத்தி.]

அபிவியாதம்

 அபிவியாதம் abiviyātam, பெ. (n.)

   விழுங்குவதற்காக வாயைத் திறத்தல்; opening one’s mouth for swallowing (சா.அக.);.

     [Skt. abhi-vyata → த. அபிவியாதம்.]

அபிவிருத்தி

அபிவிருத்தி abivirutti, பெ. (n.)

   1. மேன்மேலும் பெருகுகை; growth, prosperity, continuous advancement.

     “தங்குல மபிவிருத்தி யெய்தும்” (மச்சபு. சபிண்டீ. 29);.

   2. தொழில், பொருளாதாரம், உருவாக்கம் முதலியவற்றில் வளர்ச்சி; development.

தொழில் அபிவிருத்தி மிக்க நாடுகள்.

   3. முன்னேற்றம்; improvement (qualitatively);.

ஆசிரியர்களின் திறமையை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை.

த.வ. வளர்ச்சி, முன்னேற்றம், மேம்பாடு.

     [Skt. abhi-vrddi → த. அபிவிருத்தி.]

அபீசனம்

 அபீசனம் apīcaṉam, பெ. (n.)

   நோயற்ற நிலைமை; absence of disease.

அபீசி

அபீசி apīci, பெ. (n.)

   நிரய (நரகம்); வகை (சி.போ. பா. 2, 3, பக்.204);; a hell.

     [Skt. a-vici → த. அபீசி.]

அபீசு

 அபீசு apīcu, பெ. (n.)

   கைவிரல்கள்; fingers (சா.அக.);.

அபீடனம்

 அபீடனம் apīṭaṉam, பெ. (n.)

அபீசனம் பார்க்க;see abisanam (சா.அக.);.

     [Skt. abhisana → த. அபீடனம்.]

அபீடேகம்

 அபீடேகம் apīṭēkam, பெ. (n.)

அபிடேகம் பார்க்க;see abidegam.

த.வ. முழுக்கு.

     [Skt. abhi-seka → த. அபீடேகம்.]

அபீட்டம்

 அபீட்டம் apīṭṭam, பெ. (n.)

   விருப்பமானது; that which is desired.

     [Skt. abhista → த. அபீட்டம்.]

அபீட்டிதம்

அபீட்டிதம் apīṭṭidam, பெ. (n.)

   தொழுகை (சிந்தா. நி.180);; prayer.

     [Skt. abhistita → த. அபீட்டிதம்.]

அபீனசம்

அபீனசம் apīṉasam, பெ. (n.)

   1. நீர்க் கோப்பின்மை; absence of catarrh.

   2. மூக்கின் வறட்சி; dryness of the nasal.

   3. மூக்கடைப்பு; obstructions in the nostrils (சா.அக.);.

     [Skt. a-pinasa → த. அபீனசம்.]

அபீனசரோகம்

 அபீனசரோகம் apīṉasarōkam, பெ. (n.)

   சளியினால் மூக்கின் நரம்புகள் அடைபட்டு, மூக்கினின்று சளி வராது வறண்டு, மூச்சுவிடும் போது ‘குறு குறு’ என்ற ஒலியை யுண்டாக்கி எந்நேரமும் வியர்வையை யுண்டு பண்ணுமொரு நீர்க்கோப்பு நோய்; a disease of the nose arising from the phlegmatic condition of the body in which the mucous in prevented from being discharged owing to the obstruction in the nasal passages and the adjacent sinuses (சா.அக.);.

த.வ. நீர்க்கோப்பு.

     [Skt. apinasa + roga → த. அபீனசரோகம்.]

அபீரு

 அபீரு apīru, பெ. (n.)

   தண்ணீர் மீட்டான் கிழங்கு; a plant water root, Asparagus гасетоsus (சா.அக.);.

அபீர்

 அபீர் apīr, பெ. (n.)

   சந்தனத் தூள், முளரி (ரோசா);, கத்தூரி, கற்பூரம் முதலியவற்றைக் கொண்டு உருவாக்கும் ஒரு நறுமணப் பொடி; a perfumed powder made up of sandal wood powder zedoary, rose musk, camphor etc. (சா.அக.);.

     [Skt. abhi → த. அபீர்.]

அபுட்பபலம்

அபுட்பபலம் abuṭbabalam, பெ. (n.)

   1. பூவாது காய்த்தல்; bearing fruits without flowering.

   2. பலாமரம்; the jact tree, Artocarpus integrifolia.

   3. அத்திமரம்; fig tree, Ficus glemerata (சா.அக.);.

த.வ. பூவாமரம்.

அபுட்பம்

 அபுட்பம் abuṭbam, பெ. (n.)

   பூக்காதது, அதாவது மொட்டு; that which has not blossomed, a bud (சா.அக.);.

     [Skt. a-puspa → த. அபுட்பம்.]

அபுதன்

அபுதன் abudaṉ, பெ. (n.)

   மூடன் (திருக்காளத். பு.21, 11);; fool, dolt.

     [Skt. a-budha → த. அபுதன்.]

அபுத்திபூருவம்

அபுத்திபூருவம் abuttibūruvam, பெ. (n.)

   அறியக்கூடாமல் நிகழ்வுறுகை; that which is unintentional.

     “சிவபுண்ணியம் அபுத்திபூருவம் புத்தி பூருவமென் றிருவகைப்படும்” (சி.போ.பா. 8, 1, 2, பக். 169);.

த.வ. அறியா நிகழ்வு.

     [Skt. a-buddhi-purva → த. அபுத்திபூருவம்.]

அபுத்திரகன்

 அபுத்திரகன் abuttiragaṉ, பெ. (n.)

   பிள்ளைப் பெறாதவன்; one without male issue.

     [Skt. a-putraka → த. அபுத்திரகன்.]

த. புத்திரன் → Skt. putra.

அபுரூபம்

 அபுரூபம் aburūbam, பெ. (n.)

   அருமை (வின்.);; rarity. corr. of அபூர்வம்.

அபூதம்

 அபூதம் apūtam, பெ. (n.)

   முன் இல்லாதது; whatever has not been, has not happened.

த.வ. என்றுமிலி.

     [Skt. a-bhuta → த. அபூதம்.]

அபூதவுவமை

அபூதவுவமை apūtavuvamai, பெ. (n.)

   இல்பொருளுவமை (தண்டி.30);; figure of speech in which non-existent things are used as standards of comparison.

     [அபூத(ம்); + உவமை.]

     [Skt. a-bhüta → த. அபூதம்.]

உவ் → உவ → உவமை.

அபூபம்

 அபூபம் apūpam, பெ. (n.)

   அப்ப வகை (பிங்.);; small round cake made of flour of meal.

     [Skt. apupa → த. அபூபம்.]

அபூரணகாலம்

அபூரணகாலம் apūraṇakālam, பெ. (n.)

   1. முதிராமற் பிறந்தது; that which has come out before maturity.

   2. காலம் நிறைவுறு முன் பிறந்தது; that which has taken birth before the due time or the prescribed period (சா.அக.);.

த.வ. முதிராப்பிறப்பு.

     [அபூரண(ம்); + காலம்.]

     [Skt. a-purna → த. அபூரணம்.]

அபூரணம்

 அபூரணம் apūraṇam, பெ. (n.)

   முற்றாதது; that which is undeveloped (சா.அக.);.

     [Skt. a-purna → த. அபூரணம்.]

அபூரணி

 அபூரணி apūraṇi, பெ. (n.)

   பட்டுப்பருத்தி; silk cotton, Bombax malabaricum aliaS В.peptaphyllum (சா.அக.);.

அபூரி

அபூரி apūri, பெ. (n.)

அபூர்வி பார்க்க;see aburvi.

     “அபூரித் திருமேனிகளுக்குக் கொடுக்க…. அரிசி இருநாழி” (S.I.I.IV.129);.

     [Skt. apurvin → த. அபூரி.]

அபூரிதக்கரைசல்

 அபூரிதக்கரைசல் apūridakkaraisal, பெ. (n.)

 unsaturated solution.

த.வ. தொடர்கரைசல்.

     [அபூரிதம் + கரைசல்.]

     [Skt. a-purita → த. அபூரிதம்.]

அபூருவம்

அபூருவம் apūruvam, பெ. (n.)

   1. புதினம் (சிந்தா. நி. 183);; novelty.

   2. அரியது (இ.வ.);; rarity.

     [Skt. apurva → த. அபூருவம்.]

அபூர்ணகாலம்

 அபூர்ணகாலம் apūrṇakālam, பெ. (n.)

   பருவத்திற்குப் போதாத அல்லது குறைவான காலம்; the period wanting for maturity (சா.அக.);.

த.வ. முதிராக்காலம்.

     [அபூர்ண(ம்); + காலம்.]

     [Skt. apurna → த. அபூர்ண(ம்);.]

அபூர்வம்

அபூர்வம்1 apūrvam, பெ. (n.)

   1. புதிது; that which has not existed before, is quite new, rare.

   2. கருமத்தால் பிறப்புக் கோள்களினால் (சன்மாந்தரங்களிற்); வலுவினைக் கொடுக்கும்படி தோன்றுவது (சி.சி.பர.பிரபா.2);;த.வ. அரிது. அருந்தோற்றம்.

     [Skt. a-purva → த. அபூர்வம்.]

 அபூர்வம்2 apūrvam, பெ. (n.)

   1. அரிதாக ஒருமுறை நிகழ்வது அல்லது காணப்படுவது, அரிதானது; that which occasionally occurs or is seen, that which is rare.

இந்த வகையான கூத்து அபூர்வமாகத்தான் ஆடப்படுகிறது.

   2. முன்னர் அறிந்திராத வொன்று, புதுமையானது; that which is new or move.

     “அவர் அபூர்வமான ஒரு வழியில் இதை முடிக்க நினைக்கிறார்”.

   3. வழக்கத்துக்கு மாறானது; that which is unusual.

அபூர்வமாக அவன் காலை ஐந்து மணிக்கே எழுந்துவிட்டான்.

த.வ. நிகழாநிகழ்வு.

     [Skt. a-purva → த. அபூர்வம்.]

அபூர்வி

அபூர்வி apūrvi, பெ. (n.)

   தலயாத்திரிகரான மறைநூல் வல்ல அந்தணர் (I.M.P.Tj.32);; Brahmin pilgrims well-versed in the Vedas.

     [Skt. a-pürvin → த. அபூர்வி.]

அபெளருசேயம்

அபெளருசேயம் abeḷarucēyam, பெ. (n.)

   ஒருவராற் செய்யப்படாதது (ஈடு. 1, 1, 7);; that which is not made by any one, as the Vēdas.

     [Skt. a-pauruseya → த. அபௌருசேயம்.]

அபேசாக்கு-தல்

அபேசாக்கு-தல் apēcākkudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   உயர்த்துதல் (M. navi.98.);; to heave.

     [அபேசு + ஆக்கு-,]

     [E. upraise → அபேசு.]

ஆகு (த.வி.); – ஆக்கு (பி.வி.);.

அபேசுசெய்-தல்

அபேசுசெய்-தல் apēsuseytal,    1 செ.குன்றாவி. (v.t.)

   1. பருக்க வைத்தல் (இ.வ.);; to prostrate.

   2. விழுங்குதல்; to swallow.

   3. கவர்தல்; to misappropriate.

   4. திருடுதல் (மதி.களஞ். i, 187);; to steal.

     [அபேசு + செய்-,]

     [E. abase → த. அபேசு-,]

அபேசுபோடு-தல்

அபேசுபோடு-தல் apēcupōṭudal,    19 செ.குன்றாவி. (v.t.)

   திருடுதல் (மதி.களஞ். i, 77);; to steal.

     [அபேசு + போடு-,]

     [E. abase → த. அபேசு.]

அபேட்சகர்

 அபேட்சகர் apēṭcagar, பெ. (n.)

   வேட்பாளர்; candidate for an election.

     [Skt. apeksaga → த. அபேட்சகர்.]

அபேட்சி-த்தல்

அபேட்சி-த்தல் apēṭcittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   விரும்புதல்; to desire.

     [Skt. apeksi → த. அபேட்சி-,]

அபேட்சிதம்

 அபேட்சிதம் apēṭcidam, பெ. (n.)

   விரும்பப் பட்டது (ஈடு.);; that which is desired.

     [Skt. apeksita → த. அபேட்சிதம்.]

அபேட்சை

 அபேட்சை apēṭcai, பெ. (n.)

   விருப்பம்; desire.

     [Skt. apeksa → த. அபேட்சை.]

அபேதகம்

 அபேதகம் apētagam, பெ. (n.)

   கொத்துப் பசலை; cluster basella, Basella cordifolia alias B. lucida (சா.அக.);.

அபேதக்கட்சி

அபேதக்கட்சி apētakkaṭci, பெ. (n.)

அபேதவாதம், 2 பார்க்க (பாரதி. கட்டுரை, IV, 163);;see abédavadam.

த.வ. நிகராண்மைக்கட்சி.

     [Skt. a-bheda+kaksya → த. அபேதக்கட்சி.]

அபேதசைவம்

அபேதசைவம் apētasaivam, பெ. (n.)

   சிவனியம் பதினாறனுள் ஒன்று; Saiva sect which holds that the initiate should mediate on Sivan as one with himself, one of 16 Saivam, q.v.

     [Skt. abheda+saiva → த. அபேதசைவம்.]

சிவ → சிவம் → Skt. saiva.

அபேதம்

அபேதம் apētam, பெ. (n.)

   வேற்றுமையின்மை; absence of difference or distinction, identity.

     “பொன்னும் பணியும்போல அபேதம்” (சி.போ.சிற்.2, 1);.

     [Skt. a-bheda → த. அபேதம்.]

அபேதவாதம்

அபேதவாதம் apētavātam, பெ. (n.)

   1. ஆதனும் (சீவான்மா); பரவாதனும் (பரமான்மா); ஒன்றெனக் கூறும் கொள்கை (சொரூபசாரம், காப்பு உரை);; the doctrine identifying the individual soul with god.

   2. உலகத்துச் சொத்தை மக்களுக்குச் சமமாகப் பகிர்ந்து கொடுத்தல் தொழிலாளிகள் போட்டி முறையை மாற்றிக் கூடியுழைக்கு முறையைக் கையாளுதல் முதலிய கொள்கைகளை யுடைய அரசியல்வாதம் (புதுமை);; socialism.

     [Skt. a-bhéda-våda → த. அபேதவாதம்.]

அபேதவாதி

 அபேதவாதி apētavāti, பெ. (n.)

   ஒருமைக் கொண்முடிபாளன் (அத்துவைதி);; one who maintains the identity of the individual self With the Supreme Soul.

     [Skt. a-bheda+vadin → த. அபேதவாதி.]

அபேதிவாதம்

 அபேதிவாதம் apētivātam, பெ. (n.)

   முதியார் கூந்தல்; a plant, Poedería focida (சா.அக.);.

அபேனம்

 அபேனம் apēṉam, பெ. (n.)

   கசகசாச் செடி; poppy plant, Papaver somniferum (சா.அக.);.

அபேனரசம்

 அபேனரசம் apēṉarasam, பெ. (n.)

அபின் சாரம் பார்க்க;see abin-saram (சா.அக.);.

     [U. afim+rasa → த. அபேனரசம்.]

அபேயபானம்

 அபேயபானம் apēyapāṉam, பெ. (n.)

   குடிக்கத் தகாதது; that which is unfit to drink (சா.அக.);.

     [Skt. a-bhéya-påna → அபேயபானம்.]

அபையன்

 அபையன் abaiyaṉ, பெ. (n.)

அபயன் பார்க்க;see abayan (சா.அக.);.

     [Skt. abhaya → த. அபையன்.]

அபோகம்

 அபோகம் apōkam, பெ. (n.)

   சிற்றின்ப நுகர்வின்மை; absence of sexual enjoyment (சா.அக.);.

     [Skt. a-bhoga → த. அபோகம்.]

அபோக்தா

 அபோக்தா apōktā, பெ. (n.)

   துய்க்காதவன், புசிக்காதவன்; one who does not eat or enjoy.

     [Skt. a-bhoktr → த. அபோக்தா.]

அபோசனம்

அபோசனம் apōcaṉam, பெ. (n.)

   1. பட்டினி; starvation.

   2. நோன்பு; fasting (சா.அக.);.

     [Skt. a-bhojana → த. அபோசனம்.]

அபோசம்

அபோசம்1 apōcam, பெ. (n.)

   பருத்தி; cotton, Gossypium herbaceum (சா.அக.);.

 அபோசம்2 apōcam, பெ. (n.)

   உடம்பை ஆற்றலிழக்கச் செய்யுமொரு நோய்; a wasting disease resulting in weakness and loss of weight, size and function of an organ or organs, Atrophy (சா.அக.);.

அபோச்சியம்

அபோச்சியம் apōcciyam, பெ. (n.)

   உண்ணத் தகாதது; that which is prohibited as food.

     “போதமிகு ஞானிகட் கபோச்சியமொன் றேனுமிலை” (சூத.எக்சிய. 45, 3);.

     [Skt. a-bhojya → த. அபோச்சியம்.]

அபோதம்

அபோதம் apōtam, பெ. (n.)

   அறியாமை; ignorance, stupidity.

     “நின்னபோதமன்றி” (பாரத. சூது.183);.

     [Skt. a-bodha → த. அபோதம்.]

அப்காரி

அப்காரி apkāri, பெ. (n.)

   1. கள், தேறல் முதலியவை இறக்கி விற்பனை செய்கை; abkari, manufacture or sale of spirituous liquors.

த.வ. கள்வணிகம், மதுவிற்பனை.

     [U. abkari → த. அப்காரி.]

அப்சந்தீன்

 அப்சந்தீன் apcandīṉ, பெ. (n.)

   உனானி முறையில் வழங்கும் மூலிகை; a drug used the unani medicine (சா.அக.);.

     [U. ab-sandin → த. அப்சந்தீன்.]

அப்சரசு

 அப்சரசு apsarasu, பெ. (n.)

   மேலுலகப் பெண்கள்; a class of celestial nymphs.

த.வ. அரமகளிர்.

     [Skt apseras → த. அப்சரசு.]

அப்சூத்

 அப்சூத் apcūt, பெ. (n.)

   மிகுதி (PT.L.);; excess, increase.

     [Persn. afzud → த. அப்சூத்.]

அப்தபூர்த்தி

 அப்தபூர்த்தி aptapūrtti, பெ. (n.)

   முதலாமாண்டு நிறைவு; first anniversary of the child’s birth.

த.வ. முதல் வெள்ளணி.

     [Skt. abda + purti → த. அப்தபூர்த்தி.]

அப்தம்

 அப்தம் aptam, பெ. (n.)

   ஆண்டு; year.

த.வ. ஆண்டு.

     [Skt. abda → த. அப்தம்.]

அப்தா

 அப்தா aptā, பெ. (n.)

   கிழமை; week. அப்தாக் கணக்கு (C.G);.

த.வ. கிழமை.

     [U. hafta → த. அப்தா.]

அப்திபேனம்

அப்திபேனம் aptipēṉam, பெ. (n.)

   1. கடல்நுரை; sea froth.

   2. மீனெலும்பு; cuttle-fish bone (சா.அக.);.

அப்திமண்டூசி

 அப்திமண்டூசி aptimaṇṭūci, பெ. (n.)

   முத்துச் சிப்பி; pear-oyster (சா.அக.);.

அப்திமூன்

 அப்திமூன் aptimūṉ, பெ. (n.)

   உனானி மருத்துவத்தில் வழங்கும் ஒரு வகைக் கடைச்சரக்கு; a bazaar drug used in the unani System (சா.அக.);.

     [U. habdimun → த. அப்திமூன்.]

அப்ப

 அப்ப appa, பெ. (n.)

   அப்பன் என்னும் பெயரின் விளிவடிவம்; voc. of appan.

–, இடை. (int.);

   வியப்புக் குறிப்புச் சொல்; an exclamation of wonder.

அப்பகம்

 அப்பகம் appagam, பெ. (n.)

   வட்டத்திருப்பி; Indian pareira, Cissampelos pareira (சா.அக.);.

மறுவ. அப்பட்டர், அப்பட்டா, அப்பம்.

அப்பகாசம்

 அப்பகாசம் appakācam, பெ. (n.)

   சீமைச் சோம்பு; foreign aniseed or Armenian cumin, Carum garui (சா.அக.);.

அப்பக்காய்க்கறியமிது

அப்பக்காய்க்கறியமிது appakkāykkaṟiyamidu, பெ. (n.)

அப்பக்காய்க்கறியமுது பார்க்க;see appa-k-kāy-k-kari-y-amudu.

     ‘அப்பக்காய்க் கறியமிதுக்கு’ (S.I.I. ii, 127);.

அப்பக்காய்க்கறியமுது

 அப்பக்காய்க்கறியமுது appakkāykkaṟiyamudu, பெ. (n.)

   சமைத்த அப்பக்காய்க் கறி; a kind of curry preparation of appakkay.

     ‘அமிது’ கொச்சை வடிவம்.

அப்பைக்காய் பார்க்க;see appai-k-kay.

     [அப்பக்காய் + கறி + அமுது.]

அப்பக்கொடி

 அப்பக்கொடி appakkoḍi, பெ. (n.)

   கோவைக் கொடிவகை; a common creeper, weed, Ageratum conyzoides (சா.அக.);.

ம. அப்ப

அப்பச்சக்காணம்

அப்பச்சக்காணம் appaccakkāṇam, பெ. (n.)

   சினம், இவறன்மை (லோபம்); முதலிய குற்றங்கள் (மேருமந்.363);;     [Skt. apratyakhyana → த. அப்பச்சக்காணம்.]

அப்பச்சன்

அப்பச்சன் appaccaṉ, பெ. (n.)

   1. தந்தையின் தந்தை; paternal grandfather.

   2. தந்தை (நாஞ்.);; father (Näfi.);.

     [அப்பன் + அச்சன் – அப்பச்சன்.]

அப்பிச்சன் என்பது நாஞ்சில்நாட்டுக் கொச்சை வழக்கு.

அப்பச்சி

அப்பச்சி appacci, பெ. (n.)

   1. பாட்டன் (பள்.);; grandfather (Palla.);.

   2. அப்பன் (செட்.நா.); ; father (C.N.);.

     ‘அப்பச்சி குதம்பையைச் சூப்பப் பிள்ளை முற்றின தேங்காய்க்கு அழுகிறதுபோல’, ‘அப்பச்சிகோவணத்தைப் பருந்து கொண்டு ஓடுகிறது, பிள்ளை வீரவாளிப் பட்டுக்கு அழுகிறது’ (பழ.);.

   3. பள்ளர் மறவரை விளிக்கும் மதிப்புரவுப் பெயர்; a term of respect used by Pallas in addressing Maravas.

ம. அப்பச்சன்

     [அப்பன் + அச்சு – அப்பச்சு → அப்பச்சி = அப்பனைப் பெற்ற பாட்டன். அச்சன் = தந்தை. அச்சன் → அச்சு. ஒ.நோ ; அப்பன் → அப்பு.]

அப்பச்சன் என்றிருக்க வேண்டிய பெயர் அப்பச்சி என வழங்கிவருகின்றது. தந்தையை அப்பச்சியென்னும் செட்டிநாட்டு வழக்கு, பாட்டனைத் தந்தை பெயராலும் பாட்டியைத் தாய் பெயராலும் விளிக்கும் வழக்கின் தலைமாற்றாகும்.

 அப்பச்சி appacci, பெ. (n.)

   சிற்றுண்டி; light refreshment.

ம. அப்பாச்சி ; க., தெ. அப்பச்சி ; பிராகி. அபூப.

     [ஒருகா. அப்பம் + சோய் (சோறு); – அப்பச் சோய் என்னும் குழந்தை வழக்காகவோ செவிலி மொழியாகவோ (Nursery usage); இருக்கலாம்.]

அப்படா

அப்படா appaṭā, இடை. (int.)

   1. வியப்புக் குறிப்புச் சொல்; an exclamation of wonder.

   2. இளைப்பாறற்குறிப்புச் சொல்; an exclamation of repose.

வழிப்போக்கன் மரத்தடியில் ‘அப்படா’ என்று உட்கார்ந்தான் (உ.வ.);.

     [அப்பன் → அப்ப (விளி); + அடா (ஆ.பா. விளி); – அப்படா.]

அப்படி

அப்படி appaḍi, கு.வி.எ. (adv.)

   1. அவ்வாறு; So, in thatway.

     “அப்படி யொருத்தி செல்ல” (கந்தபு. தேவ. தெய்வ. 89);.

   2. அவ்வரிசையில்; in that order.

     ‘அப்படிப் பார்த்தாலும் விகடகவி, இப்படிப் பார்த்தாலும் விகடகவி’ (தென்னாலிரா.);. ‘அப்படிச் சொல் வழக்கை, அவன் கையில் கொடு உழக்கை’ (பழ.);.

   3. அத்தன்மை; in that manner.

ம. அப்படி

     [அ + படி _ அப்படி. படி = வகை, வண்ணம்.]

அப்படிக்கூடி

 அப்படிக்கூடி appaḍikāḍi, கு.வி.எ. (adv.)

   அவ்வழியாக; by that way.

அப்படிக்கூடி வா, போ (உ.வ.);.

     [அ + படி + கூடி. கூடு → கூடி (இ.கா. வி.எ.);.]

அப்படிப்பட்ட

 அப்படிப்பட்ட_, கு.வி.பெ. (adj.)

 of that type, kind or category.

அப்படிப்பட்ட வள்ளலை இன்று காணமுடியாது. அப்படிப்பட்ட திருட்டுப் பயலை ஏன் வீட்டில் வைத்துக்கொண்டிருக்கிறாய்? (உ.வ.);.

     [அ + படி + பட்ட. படு → பட்ட (இ.கா. பெ.எ.);. ‘படு’ துணைவினை.]

அப்படிப்போல்

 அப்படிப்போல் appaḍippōl, கு.வி.எ. (adv.)

   அதைப்போல்; like that, similarly.

     “ஆனைகட்டச் சங்கிலி தானெடுத்துக் கொடுக்கும் அப்படிப்போல் நமது வாயும்நமைக் கெடுக்கும்” (ச. ச. ச. கீர்த். );

     [அ + படி + போல்.]

அப்படியப்படியே

அப்படியப்படியே appaḍiyappaḍiyē, கு.வி.எ. (adv.)

   1. ஒன்றையும் எடுக்காமல் உடனே; without removing anything, leaving things as they are.

தொலைவரி வந்தவுடன் வேலைக்காரரை மட்டும் வைத்துவிட்டு எல்லாரும் அப்படியப்படியே எழுந்து புறப்பட்டுவிட்டார்கள் (உ.வ.);.

   2. வெவ்வேறு திசையில் அவரவரிடத்திற்கு; in various directions to their respective places.

கூட்டம் முடிந்தவுடன் எல்லாரும் அப்படியப்படியே போய்விட்டார்கள் (உ.வ.);.

     [அ + படி + அ + படி + ஏ (இடை.);. ‘அப்படியப்படி’ அடுக்குத்தொடர்.]

அப்படியாகப்பட்ட

 அப்படியாகப்பட்ட appaḍiyākappaḍḍa, பெ.எ. (adj.)

   அப்படிப்பட்ட சிறந்த; of such merit and importance.

அப்படியாகப்பட்ட மக்களையெல்லாம் பெற்றுவிட்டு இந்த நிலைமையிலிருக்கிறேன் (உ.வ.);.

     [அ + படி + ஆக + பட்ட ஆகு → ஆக (நி.கா.வி.எ.);. படு → பட்ட (இ.கா.பெ.எ.);. ‘படு’ துணைவினை.]

அப்படியாதற்குகந்த

அப்படியாதற்குகந்த appaḍiyātaṟguganda, பெ.எ. (adj.)

   அப்படிப்பட்ட, அருமையான; of such an excellence or merit.

அப்படியாதற் குகந்த பெருமக்களே போய்விட்டார்கள்; இனி மற்றவர்களைப்பற்றிக் கவனிப்பானேன்? (உ.வ.);.

     [அ + படி + ஆதற்கு + உகந்த. ஆ → ஆதல் (தொ.பெ.);. ஆதற்கு (4ஆம் வே.);. உக → உகந்த (இ.கா.பெ.எ.);. உகத்தல் = தகுதல், ஏற்றல்.]

இது இன்று ‘அப்படியாக்கொத்த’, ‘அப்படி யாக்கொந்த’ என்று கொச்சையாய் வழங்குகின்றது.

அப்படியிப்படி

அப்படியிப்படி appaḍiyippaḍi, வி.எ. (adv.)

   1. அப்பக்கம் இப்பக்கம், அத்திசை இத்திசை; this side or that side.

அப்படியிப்படித் திரும்பாதே.

   2. ஏதேனும் மாறாக; in any way against, anything different from.

உன்னைப்பற்றி அப்படியிப்படியென்று ஒன்றும் என் காதில் விழக்கூடாது (உ.வ.);.

     [அ + படி + இ + படி.]

அப்படியும்

அப்படியும் appaḍiyum, வி.எ. (adv.)

   1. அவ்வகையிலும்; in that way also.

அப்படியுஞ், சொல்லிப் பார்த்தேன்; அவன் கேட்கவில்லை (உ.வ.);.

   2. அப்படியிருந்தாலும்கூட; even in that event, even if it were so.

அப்படியும் அவன் தன் மனைவியைத் தன்னந்தனியாய் விட்டுவிட்டுப் போகலாமா? (உ.வ.);.

     [அ + படி + உம் (இடை.);.]

அப்படியும் இப்படியும்

அப்படியும் இப்படியும் appaḍiyumippaḍiyum, வி.எ. (adv.)

   1. அப்பக்கமும் இப்பக்கமும்; this side and that side.

அப்படியும் இப்படியும் திரும்பிக்கொண்டேயிருக்கிறான் (உ.வ.);.

   2. அவ்வகையிலும் இவ்வகையிலும், இருவகையிலும், சார்பாகவும் மாறாகவும்; in this way and that way, both ways, for and against.

அவன் அப்படியும் பேசுவான் இப்படியும் பேசுவான் (உ.வ.);.

     [அ + படி + உம் + இ + படி + உம்.]

அப்படியே

அப்படியே appaḍiyē, கு.வி.எ. (adv.)

   1. அந் நிலையிலேயே; in the same state or situation.

மரத்திலிருந்தவன் அப்படியே கீழே விழுந்து விட்டான். காமராசர் இளம்பருவத்திலேயே பேராயக்கட்சியிற் சேர்ந்து இறுதிவரை அப்படியே இருந்துவிட்டார் (உ.வ.);.

   2. ஒருவர் சொன்னபடியே; exactly as one said.

ஆசிரியர் சொன்னதை அப்படியே மாணவன் சொல்லிவிட்டான் (உ.வ.);.

   3. ஒருவர் செய்த படியே; exactly as one did.

தியாகராசப் பாடகர் எப்படிப் பாடினாரோ அப்படியே இவனும் பாடுகிறான் (உ.வ.);.

   4. அந்த வழியே; by that way alone.

அப்படியே போ (உ.வ..);.

     [அ + படி + ஏ (இடை.);.]

அப்பட்டச்சரக்கு

 அப்பட்டச்சரக்கு appaṭṭaccarakku, பெ. (n.)

   உயர்ந்த பண்டம்; high quality goods.

அப்பட்டம் பார்க்க;see appattam.

அப்பட்டச் சரக்கு என்பது கொச்சை வழக்கு.

அப்பட்டம்

அப்பட்டம் appaṭṭam, பெ. (n.)

   1. கலப்பற்றது, தூயது; that which is unmixed, unadulterht, pure.

அப்பட்டம் பால் (அப்பட்டப் பால்);, அப்பட்டம் எண்ணெய்.

   2. வெளிப்படையானது (இ.வ.); ; that which is plain (Loc.);.

க., பட. அப்பட்ட ; தெ. அப்பட்டமு, அபூடமு; கொங்., மரா. அபூட ; பிராகி. அபுட்ட

     [ஒருகா. அப்பு + அற்றம் – அப்பற்றம் → அப்பட்டம் = நீர் கலவாதது.]

அப்பட்டர்

 அப்பட்டர் appaṭṭar, பெ. (n.)

அப்பகம் பார்க்க;see appagam.

அப்பட்டா

 அப்பட்டா appaṭṭā, பெ. (n.)

   வட்டத்திருப்பி (மலை.);; Indian pareira.

அப்பகம் பார்க்க;see appagam.

அப்பணங்கட்டு-தல்

 அப்பணங்கட்டு-தல் appaṉaṅkaṭṭutal, செ.குன்றாவி (v.t.)

   ஒருவரின் செலவிற்கு பிறர் உதவி புரிதல்; expense met with by others;

ஒருவரின் பயணம் முதலியவற்றிற்குத் தேவையான உதவிகளைச் செய்து ஆயத்தப்படுத்தல்; (இ.வ.);

 to extend monetary help for travelling purpose.

     [அறப்பணம்+கட்டு]

அப்பணை

அப்பணை appaṇai, பெ. (n.)

கட்டளை:

 order.

     “இருகண நாயக்கற்கு ஸமுக அப்பணையும் பண்ணி தர்ம சாரனமுங் குடுத்து” (SII. xviii. 751.);.

     [அப்பு-அப்பனை]

 அப்பணை1 appaṇai, பெ. (n.)

   1. பிணை; security, bail.

   2. பற்றுக்கோடு; prop., support.

த.வ. பற்றுறுதி.

     [Skt. ajnapana → த. அப்பணை.]

 அப்பணை2 appaṇai, பெ. (n.)

   கட்டளை; command, mandate.

     “ராஜாவும் …. அப்பணையிட்டுவிட” (குருபரம்ஆறா.160);.

     [Skt. ajnapana → த. அப்பணை.]

அப்பத்தாள்

அப்பத்தாள் appattāḷ, பெ. (n.)

   1. தந்தையின் தாய் (நாஞ்.);; father’s mother (Näfi.);.

   2. தமக்கை; அக்கை (யாழ்ப்.);; elder sister (J.);.

     [அப்பன் + ஆத்தாள் – அப்பாத்தாள் → அப்பத்தாள். ஆத்தை → ஆத்தா → ஆத்தாள்.]

முறைப்பெயர்களின் விளி வடிவங்கள் பாலீறு பெற்று வழங்குவது கொச்சைத் தமிழ் வழக்கு.

அப்பநிவேதனம்

அப்பநிவேதனம் appanivētaṉam, பெ. (n.)

   அப்பமுது; bread or cake offering.

     “அப்ப நிவேதனம்” (S.I.I. iii, 150);.

அப்பமுது பார்க்க;see appamudu.

     [அப்பம் + நிவேதனம். Skt. nivedana → த. நிவேதனம்.]

அப்பன்

அப்பன் appaṉ, பெ. (n.)

   1. தந்தை; father.

     “அப்பன்நீ யம்மைநீ” (தேவா. 6. 95 ; 1);. ‘அப்பன் அருமை அப்பன் மாண்டால் தெரியும், உப்பின் அருமை உப்பு இல்லாவிட்டால் தெரியும்’, ‘அப்பன் செத்தும் தம்பிக்கு அழுகிறதா? அப்பன் மரித்தால் அந்தத் துணி எனக்கு’ (பழ.);.

   2. சிறுவரையும் கீழோரையும் விளிக்கும் அருமைச் சொல்; a term of endearment used in addressing little Children or inferiors.

   3. பெற்றோர் மகனைக் குறிக்கும் அருமைச்சொல்; a term of endearment used by parents in addressing their son, especially when young.

   4. வள்ளல், பெருநன்மை செய்தவன்; patron, benefactor.

     “கீழைச்சாரம் வெங்களப்பன், மேலைச்சாரம் எங்களப்பன்” (பழ.);.

   5. ஆண்பாற் பெயரீற்றுச்சொல்; so a component word suffixed to names of male persons.

கண்ணப்பன், செல்லப்பன்.

   6. பெரிய தகப்பன் (ஆதி);; father’s elder brother (Ādi.–Lex. Sup.);.

   7. திருநாவுக்கரசு நாயனார் (உபதேசகா. கடவுள்வா. 7);; Tirunavukkara$u Nayanar.

   திறமையிற் பெரியவன்; one’s better, superior in ability.

இவன் இசைக்குழல் (நாதசுரம்); இசைப்பதில் இராசரத்தினத்திற்கு அப்பனாய் வருவான் (உ.வ.);.

ம. அப்பன் ; தெ., க., து., பிராகி., பட. அப்ப ; குட. அப்பெ ; கோண். ஆபோரோல் ; கூ. ஆப; குருக். அப்பா ; பிரா. அபா ; கொங். பாபா ; சிங். அப்பா ; மணி. இபா ; வங். பாபா.

 Aram. abba, the father, my father, emphatic state of dbh, father.

 Chal. abba; Syr. abba or abbo, the father or grandfather.

 Heb. abh, father; Ar. ab, father.

 N.T. Gk. abba, father (Mark. xiv, 36);.

 Gk. abba; L. abba; E. abba, a title of honour.

 The following list of words for ‘father’ is given in

     “Some Problems in Kannada Linguistics’, by its author C. R. Sankaran, M.A.

 Sumere – Oceaniah ; ab.

 Melanesian ; o’fa, apa.

 Polynesian ; pa, term of respect denoting father.

 Indonesian ; pa, apai, apang, aba, pa.

 Mon-Khmer ; pa, pa, pápa, ipa, apa, dpe, apa, pa, apa, father ape, good father.

 Munda ; арра, аррал.

 Sumerian ; ap, abha.

 Akkadian ;,babu, ари.

 Egyptian ; ab, papa.

ஒருகா. தாயினும் வன்மையான தந்தையைக் குறிக்க, மகரத்திற்கு இனமான வல்லின மெய்ச் சொல்வடிவு கொள்ளப்பட்டிருக்கலாம்.

 அப்பன் appaṉ, பெ. (n.)

   தன்னுடைய மகனை அப்பன் என்று அழைக்கும் கொங்கு நாட்டு மரபு; a word of endearment used by father to address his son.

     [அப்பு+அப்பன்]

அப்பன்காளை

 அப்பன்காளை appaṉkāḷai, பெ. (n.)

   தாதர் என்னும் இரப்போர் வகுப்பார் வீடுவீடாய்க் கொண்டுபோய் மூக்கணாங்கயிற்றையிழுக்கும்போது, கேட்ட கேள்விக்கு உடன்பாட்டு விடை சொல்வதுபோல் தலையசைப்பதும், பலகறையாலும் வண்ணத்துணியாலும் அணி செய்யப்பட்டிருப்பதுமான பெருமாள் மாடு (இ.வ..);; sacred bull owned by men of the Tadar caste and trained to respond by nodding its head to questions put to it as it is taken round decked with multi coloured clothes and cowrie shells, to houses for the purpose of collecting alms (Loc.);.

ம. அப்பக்காள

பெருமாள்மாடு என்பதே பெருவழக்கு. சிலவிடங்களில் பூம்மாடு என்றும் சொல்லப்படும்.

அப்பப்ப

 அப்பப்ப appappa, இடை (int.)

   வியப்பு, இரக்கம், துயரம் முதலியவற்றின் குறிப்பு; exclamation of wonder, pity, grief, etc.

அப்பப்ப, வறுமை கொடிது! (உ.வ.);.

ம. அப்பப்பா ; க., தெ., பட. அப்பப்ப; து. அப்ப.

     [அப்பன் → அப்ப (விளி);. அப்ப + அப்ப – அப்பப்ப.]

அப்பப்பா

 அப்பப்பா appappā, இடை (int.)

அப்பப்ப பார்க்க;see appappa.

     [அப்பன் → அப்ப (விளி);; அப்ப + அப்பா – அப்பப்பா.]

அப்பமுது

 அப்பமுது appamudu, பெ. (n.)

   அப்பப் படையல்; bread or cake offering.

     [அப்பம் + அமுது.]

அப்பம்

அப்பம் appam, பெ. (n.)

   1. பண்ணிகார வகை; round cake of rice flour and sugar, fried in ghee.

     “அப்பம் ……. சுட்டுவைத்தேன்” (திவ். பெரியாழ். 2. 4;5);. ‘அப்பத்தை எப்படிச் சுட்டாளோ, தித்திப்பை எப்படி நுழைத்தாளோ?’, ‘அப்பம் என்றால் பிட்டுக்காட்ட வேண்டுமா?’, அப்பம் சுட்டது சட்டியில் அவல் இடித்தது திட்டையில்’ (பழ.);.

   2. அடை (பிங்.);; thin cake, wafer, bread.

   3. உணவு (கிறித்.);; food (Chr.);.

     ‘எங்கள் அன்றாட அப்பத்தை இன்று எங்களுக்குத் தாரும்’ (பரமண்டல மன்றாட்டு);.

ம. அப்பம் ; க., து. அப்ப; தெ. அப்பமு; வ. அபூபு; பிராகி. அபூய, அபூவ ; பிரா. அப்பம்.

     [உப்புதல் = பருத்தல், எழும்புதல். உப்பு → உப்பம் → அப்பம்.]

 அப்பம் appam, பெ. (n.)

   1. புட்டுத்திருப்பி; a plant, Sida acuta (சா.அக.);.

   2. வட்டத் திருப்பி; Indian pareira, Cissampelos pareira (சா.அக.);.

அப்பயத்துடராகம்

 அப்பயத்துடராகம் appayattuḍarākam, பெ. (n.)

   எட்டிமரம்; nux vomica tree, Strychnos nux vomica (சா.அக.);.

அப்பரியந்தம்

 அப்பரியந்தம் appariyandam, பெ. (n.)

   ஒதிய மரம்; Indian ash tree, Odina wodier (சா.அக.);.

     [Skt. ap-paryanta → த. அப்பரியந்தம்.]

அப்பர்

அப்பர் appar, பெ. (n.)

   1. ஆணாது, வெள்ளாட்டுக் கடா, செம்மறியாட்டுக் கடா; he-goat, ram.

     “மோத்தையுந் தகரும் உதளும் அப்பரும்………………… யாத்த ஆண்பாற் பெயரென மொழிப” (தொல். பொருள். மர. 2);.

   2. ஆண்குரங்கு; male monkey.

     ‘அப்பர் குரங்கென்றலுமாம்’ (தொல். பொருள். மர. 47, பேரா. உரை);.

     [ஒருகா. உப்பு → உப்பர் → அப்பர் = பருத்தது.]

விலங்குகளில் பெண்ணினும் ஆண் பருத்திருப்பது பெரும்பான்மை.

 அப்பர் appar, பெ. (n.)

   1. தேவார மூவருள் ஒரு வரும் சிவசமய குரவர் நால்வருள் ஒருவரும் ஆன திருநாவுக்கரசு நாயனார்; Tirunavukkaraśu Nayandr, one of the three celebrated authors of the Téváram.

     [அப்பன் → அப்பர் → அப்பனார் (உயர்வுப் பன்மை);.);

     “தொழுதணைவுற் றாண்டஅர சன்புருகத்

தொண்டர்குழாத் திடையே சென்று

பழுதில்பெருங் காதலுடன் அடிபணியப்

பணிந்தவர்தம் கரங்கள் பற்றி

எழுதரிய மலர்க்கையால் எடுத்திறைஞ்சி

விடையின்மேல் வருவார் தம்மை

அழுதழைத்துக் கொண்டவர்தாம் அப்பரே

எனஅவரும் அடியேன் என்றார்”

   2. தந்தையார்; father.

     “விற்பரம ரப்பரருள் வித்தகம ருப்புடைய பெருமாளே.” (திருப்பு. 3);.

   3. சிவன்; Siva.

     “அந்நீர் முகந்து கொண்டேறி அப்பர் கோயி லடைந்தகலுள்” (பெரியபு. நமிநந்தி. 13);.

திருநாவுக்கரசரின் முதுமையுஞ் சிவத்தொண்டும் நோக்கி, திருஞானசம்பந்தர் அவரை ‘அப்பர்’ என்றார். மூத்த பிள்ளையாரின் தந்தை சிவனென்பது தொல்கதை (புராணம்);. இறைவன் என்னும் முறையில் சிவன் எல்லா வுயிர்கட்கும் தந்தை.

அப்பறாத்தூணி

 அப்பறாத்தூணி appaṟāttūṇi, பெ. (n.)

அம்பறாத்தூணி பார்க்க;see amb(u);-ara-t-tūņi.

     [அம்பு + அறா (நீங்காத); + தூணி (கூடு);. அம்பறாத்தூணி → அப்பறாத்தூணி.]

அப்புராத்தூணி என்பது கொச்சை வடிவம்.

 அப்பறாத்தூணி appaṟāttūṇi, பெ. (n.)

   ஒரு வகை நஞ்சு (சரகண்ட பாடாணம்);; a kind of native arsenic (சா.அக.);.

அப்பளக்காரம்

அப்பளக்காரம் appaḷakkāram, பெ. (n.)

   அப்பளத்திற்குப் பயன்படுத்தப்படும் உறைப்பும் உவர்ப்புமுள்ள ஒரு கடைச்சரக்கு; a subcarbonate of soda, used chiefly in manufacturing appalams.

     “குடல்வாதஞ் சூலை கொடிதான வாத

மடல்புரியுமையு மறுக்கும் – நெடுவயிற்றி

னுப்பிசத்தினோடேயுயர்குன்ம நோயகற்று

மப்பளக் கார மது” (பதார்த்த, 1134);.

     ‘அப்பளாக்காரம்’ என்பது கொச்சை வழக்கு.

     [அப்பளம் + காரம்.]

அப்பளக்குழவி

 அப்பளக்குழவி appaḷakkuḻvi, பெ. (n.)

   அப்பளந் தேய்க்கும் உருளைக்கட்டை; rolling pin for smoothing out the dough for flour-cakes.

     [அப்பளம் + குழவி.]

அப்பளம்

அப்பளம் appaḷam, பெ. (n.)

   உழுத்தமாவினாலும் அரிசிமாவினாலும் செய்யப்படும் மெல்லிய அடை ; light, thin flour-cake, usually of black gram and rice.

     “வாதத்தை யுண்டாக்கு மாபலத்தை யுங்கொடுக்குஞ்

சீதத்தை மேவுகபந் தீர்க்குங்காண் – ஒதுமுழுந்

தப்பளஞ்சோற் றப்பளங்கா லாதிகள் விஞ்சாதுநிலை

யொப்பவளஞ் செய்யு முரை” (பதார்த்த 1446);.

ம. பப்படம்; க. அப்பள ; தெ. அப்பளமு; து. அப்பளோ பிராகி. அப்பட ; பட. பப்பட ; Skt. parpata.

     [அப்பளித்தல் = சமனாகத் தேய்த்தல். அப்பளி -→ அப்பளம்.]

     ‘சுவரை அப்பளித்துப் பூசுகிறான்’ என்னும் வழக்கை நோக்குக. ‘அப்பளாம்’ என்பது பிராமணக் கொச்சை வழக்கு.

அப்பளாசிட்டி

 அப்பளாசிட்டி appaḷāciṭṭi, பெ. (n.)

   அப்பளம் வெண்மையாதற்குப் பயன்படுத்தும் சாறுள்ள ஒரு பூண்டு; a herbaceous plant, the juice of which is used for making appalams look white (சா.அக.);.

அப்பளாவரம்

 அப்பளாவரம் appaḷāvaram, பெ. (n.)

   பொன்னேரி வட்டத்திவிலுள்ள சிற்றூர்; a village in ponneri Taluk.

     [ஒருகா.அப்பணை+புரம்]

அப்பளி-த்தல்

அப்பளி-த்தல் appaḷittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   சுவரிற் சாந்து பூசும்போது சமனாக்கித் தேய்த்தல்; to remove unevenness in the wall when plastering.

சுவரை அப்பளித்துப் பூசுகிறான் (உ.வ.);.

க. அப்பளிசு ; தெ. அப்பளிஞ்சு து. அப் பரீபு.

     [அப்பு → அப்பளி. அப்புதல் = சாத்துதல், பூசுதல்.]

அப்பழுக்கு

அப்பழுக்கு appaḻukku, பெ. (n.)

   1. மாசு, அழுக்கு, கறை; blot, dirt, speck.

அவன் உடுத்திருக்கும் ஆடை அப்பழுக்கில்லாதது (உ.வ.);.

   2. குற்றம், மாசு மறு; fault, guill, defect.

அவன் அப்பழுக்கில்லாதவன் (உ.வ.);.

     [ஒருகா. அப்பு + அழுக்கு – அப்பழுக்கு. அப்புதல் = படையாய் ஒட்டிக்கொண்டிருத்தல்.]

அப்பவருக்கம்

அப்பவருக்கம் appavarukkam, பெ. (n.)

   அப்பம் என்னும் பலகாரவினம்; various kinds of cakes or pastry, numbering ten and belonging to the class appam.

அபூபம், கஞ்சம், இலையடை, மெல்லடை, நொலையல், பூரிகை, சஃகுல்லி, போனகம், மண்டிகை, பொள்ளல் என்னும் பத்தும் அப்பவினமாம்.

     “அபூபங் கஞ்ச மிலையடை மெல்லடை

நொலையல் பூரிகை சஃகுல்லி போனக

மண்டிகை பொள்ளலு மப்ப வருக்கம்” (பிங். 6;17);.

அப்பம் → Skt. abüba.

பிங்கல நிகண்டு 10ஆம் நூற்றாண்டினதாதலால், அபூப என்னும் வடசொல்வடிவை ஆண்டுள்ளது.

     [அப்பம் + வருக்கம். Skt. varga → த. வருக்கம் = இனம்.]

அப்பவாணிகம்

 அப்பவாணிகம் appavāṇigam, பெ. (n.)

   பண்ணிகார விற்பனை; sweet-meat selling.

     [அப்பம் + வாணிகம்.]

அப்பவாணிகர்

அப்பவாணிகர் appavāṇigar, பெ. (n.)

   பண்ணிகாரம் விற்போர்; sweet-meat sellers (சிலப். 5;24, அடியார்க். உரை);.

     [அப்பம் + வாணிகர்.]

அப்பா

அப்பா appā, பெ. (n.)

   1. அப்பன் என்னும் தந்தை முறைப்பெயரின் விளிவடிவம்; voc. of appan.

   2. இளையவரும் கல்லாதவருமான ஆடவரை விளிக்குஞ் சொல் (நெல்லை);; a vocative employed in addressing young or illiterate men (Tn.);.

அப்பா! இந்தச் சுமையைச் சற்றுத் தூக்கிவிடு (உ.வ.);. ‘அப்பா என்றால் உச்சி குளிருமா?’ (பழ.);.

–, இடை. (int.);

   1. ஓர் இளைப்பாறற் குறிப்புச் சொல்; an exclamation of repose.

உழைப்பாளி, ‘அப்பா!’ என்று சொல்லி நிழலில் உட்கார்ந்தான் (உ.வ.);. ‘

   2. வியப்பு, துயரம், நோவு முதலியவற்றை யுணர்த்துங் குறிப்புச்சொல்; an exclamation of wonder, grief, pain, etc.

     “என்னப்பா மற்றில் வெழுபது வெள்ளமு மொருவன் தின்னப் போதுமோ’ (கம்பரா. யுத்த மூலபல. 40);. இது வியப்புக்குறிப்பு.

க., து., பட. அப்ப.

     [அப்பன் (தந்தை); → அப்பா (விளி);.]

அப்பாகம்

 அப்பாகம் appākam, பெ. (n.)

   வாலுளுவை (பச்.மு,);; climbing staff plant (செ.அக.);

— intellect tree, Celastrus paniculata (செ.அக.);.

அப்பாசி

அப்பாசி appāci, பெ. (n.)

   விசயநகர வேந்தரான கிருட்டிண தேவராயரின் பெயர்பெற்ற மந்திரி;     ‘Appāji, the famous minister of the Vijayanagar king Krisnadévarāyar.

     “அப்பாசி யூகி…… இவர்களினும் மெய்ப்பான புத்தி விதரணமும்” (தெய்வச். விறலி. 82);.

அப்பாடா

 அப்பாடா appāṭā, இடை. (int.)

   இளைப்பாறல், வியப்பு, நோவு ஆகிய குறிப்புகளை உணர்த்துஞ் சொல்; an exclamation of relief, wonder, surprise or pain.

மூட்டைக்காரன் தலையிலிருந்து மூட்டையை இறக்கி வைத்துவிட்டு ‘அப்பாடா’ என்று மரத்தடியில் உட்கார்ந்தான் (இளைப்பாறற் குறிப்பு);. தென்னாலி யிராமனாற் சூடிடப்பட்ட பிராமணர், ‘அப்பாடா! அப்பாடா!’ என்று கத்திக் கொண்டு ஓடினார்கள் (நோவுக் குறிப்பு);.

     [அப்பன் → அப்பா (விளி); + அடா (ஆ.பா. விளி); – அப்பாடா.]

இது பெரும்பாலும் ஆடவர் கூற்று.

அப்பாடி

 அப்பாடி appāṭi, இடை. (int.)

   அப்பாடா என்பதன் பெண்பால் வடிவம்; fem form of appddü.

     [அப்பன் → அப்பா (விளி); + அடி (பெ.பா. விளி); – அப்பாடி.]

இது பெண்டிர் கூற்று. உணர்ச்சியளவிற்கேற்ப இது ‘அப்பாடீ’ என்று நீளவுஞ் செய்யும்.

அப்பாடீ

 அப்பாடீ appāṭī, பெ. (n.)

   பின்னால் வரப் போகும் தீங்கினைச் சுட்டும் சொல்; a word denoting bad symptom or omen.

     “அப்படீ! நான் மாட்டேனப்பா (வ.சொ.அக.);.

     [அப்பன்+அடீ]

அப்பாட்டன்

 அப்பாட்டன் appāṭṭaṉ, பெ. (n.)

   தந்தையின் பாட்டன் (இ.வ.); ; great-grandfather (Loc.);.

     [அப்பன் + பாட்டன் – அப்பாட்டன்.]

அப்பாத்தாள்

 அப்பாத்தாள் appāttāḷ, பெ. (n.)

   தந்தையைப் பெற்ற பாட்டி (இ.வ.); ; father’s mother, paternal grandmother (Loc.);.

     [அப்பன் (தந்தை); + ஆத்தாள் (தாய்); – அப்பாத்தாள். ஆத்தை (தாய்); → ஆத்தா → ஆத்தாள்.]

அப்பாத்தை

 அப்பாத்தை appāttai, பெ. (n.)

   அக்கை, தமக்கை (இ.வ.); ; elder sister (Loc.);.

     [அப்பன் (தந்தை); + ஆத்தை (தாய், அக்கை); – அப்பாத்தை.]

இதில் ‘அப்பன்’ என்னும் நிலைச்சொல் பொருத்தமும் பயனும் அற்றது.

அப்பாயி

 அப்பாயி appāyi, பெ. (n.)

   பையன், இளைஞன் (இ.வ..);; boy, lad (Loc.);.

     [அப்பு → தெ. அப்பாய், அப்பாயி ; தெ. அப்பாயி → த. அப்பாயி.]

அப்பாய்

 அப்பாய் appāy, பெ. (n.)

   தந்தையின் தாய் (இ.வ..);; paternal grandmother (Loc.);. ம. அப்பாயி

     [அப்பன் + ஆய் (தாய்); – அப்பாய்.]

     ‘அப்பாயி’ என்பது கொச்சை வழக்கு.

அப்பாரகம்

 அப்பாரகம் appāragam, பெ. (n.)

   புளிமா; sour mango, Mangifera indica (சா.அக.);.

அப்பாரிசம்

 அப்பாரிசம் appārisam, பெ. (n.)

   அந்தப் பக்கம்; the other side (சா.அக.);.

அப்பாலுக்கப்பால்

 அப்பாலுக்கப்பால் appālukkappāl, பெ. (n.)

   மனத்திற்கு எட்டாத தொலைவு; distance beyond one’s imagination.

     “அணுவிற் கணுவா யப்பாலுக் கப்பாலாய்” (விநா. அகவல்); (சா.அக.);.

     [அப்பாலுக்கு + அப்பால்.]

அப்பாலுமடிச்சார்ந்தார்

அப்பாலுமடிச்சார்ந்தார் appālumaḍiccārndār, பெ. (n.)

   தமிழ்நாட்டிற்கு அப்பாற்பட்டவரும் சிவனடியார் அறுபத்து மூவர்க்கு முன்னும் பின்னு மிருந்தவருமான தொகையடியாருள் ஒரு வகுப்பார்; Those who, hailing from lands outside the Tamil country, have attained the feet of God, and who existed before and after the period of the 63 canonized Šaiva saints, one group of Togaiyadiyar.

     “மூவேந்தர் தமிழ்வழங்கு நாட்டுக் கப்பால்

முதல்வனார் அடிச்சார்ந்த முறைமை யோரும்

நாவேய்ந்த திருத்தொண்டத் தொகையிற் கூறும்

நற்றொண்டர் காலத்து முன்னும் பின்னும்

பூவேய்ந்த நெடுஞ்சடைமே லடம்பு தும்பை

புதியமதி நதியிதழி பொருந்த வைத்த

சேவேந்து வெல்கொடியா னடிச்சார்ந் தாரும்

செப்பியஅப் பாலுமடிச் சார்ந்தார் தாமே” (பெரியபு. அப்பாலுமடிச். 1);.

     [அப்பாலும் + அடி + சார்ந்தார்.]

அப்பால்

அப்பால் appāl, பெ. (n.)

   அப்பக்கம்; that side.

     “அப்பாலிருந்த வனசரித ரைவர்க்கு” (பாரத. நச்சுப், 16);.

–, கு.வி.எ. (adv.);

   1. அதன்மேல்; after that, afterwards, further, beyond.

     “பின்னவன் பெற்ற செல்வ மடியனேன் பெற்ற தன்றோ வென்னினி யுறுதி யப்பால்” (கம்பரா. அயோத். கைகேயி சூழ். 114);.

   2. பிறகு; afterwards, sometime later.

அப்பால் கொடுக்கிறேன் (உ.வ.);.

ம. அப்பால்

அப்பால் என்னும் இச் சொல் ஆரிய மொழிகளில் பல்வேறு வடிவில் முன்னொட்டாக (pref); வழங்குகின்றது.

எ-டு:

 Skt. apa, away from.

 Gk., apo, from, off, away; aph (before an aspirate);, away from,

 L. ap, away. ab, from, orig. form ap. aba, extended form of ab.

 E. of OE. of, weaker form of af, originally af, corresp. to OFris. af, of, ofe. OS. af, MLG. af prep. and adv. MDu. ave, af, of; Du. af adv. off; OHG. aba, ab; MHG. abe, ab. prep. and adv. Ger. ab adv. off, away; ON. af; Goth. af prep. and adv. OTeut. aba, un-accented by-form ab; corresp. to Skt. apa, away from, down from; Gk. apo; L. ab.

 E. off, originally the same word as OF; off being at first a variant spelling, which was gradually appropriated to the emphatic form, i.e. to the adverb and the prepositional senses closely related to it, while of was retained in the transferred and weakened senses, in which the prep. is usually stressless and sinks to (ov.);. Off appears casually from c 1400, but of and off

 were not completely differentiated till after 1600.

 E. offe, adv. and prep. An early ME. deriv. form from OF, on the analogy of INNE. ute OUTE, UPPE. (O.D.); The L. pref. ab also appears as a-. adv-, ay-, v-, as in a-vert, adv-ance, avaunt, v-anguard (S.E.D.E.L. p. 732);.

 E. apo-, ap-(before a vowel);, aph-(before an aspirated vowel);, pref. meaning

     “from, away from, asunder, separate”. –Gk, apo-, ap-, aph-, fr. apo,

     “from, away from’, cogn. with OI. apa, away from, L. ab (orig. ap);._=away from, from”, Goth. af, OE. of

     “away from, from’.

 E. of , assimilated form of ob-before f.

 off, adv., prep. and adj. The stressed form of of. Cp. offal, offing, offish, and the second element in doff. off, n. the offside (cricket); (K.C.E. D.E.L.);.

     [அ + பால்.]

அப்பாவி

 அப்பாவி appāvi, பெ. (n.)

   பேதை, வெள்ளந்தி, தீங்கில்லாதவன்-ள்; simpleton, artless and harmless person.

     [அல் → அ (எ.ம.முன்.); + Skt. papi → த. பாவி → அபாவி → அப்பாவி. Skt. papa (திவினை); → த. பாவம். பாவி = தீவினைஞன். அபாவி = தீவினைசெய்யாதவன், தீங்கில்லாதவன்.]

அப்பிகை

அப்பிகை appigai, பெ. (n.)

   ஏழாவதாகிய துலை (ஐப்பசி); மாதம் (தெ.இ.க.தொ.iii, 150);; the seventh Tamil month.

     [Skt. åsvayuja → த. அப்பிகை.]

அப்பிச்சி

அப்பிச்சி1 appicci, பெ. (n.)

   அப்பாவின் தம்பி, சித்தப்பா; father”s younger brother.

     [அப்பு-(அத்மதி);இத்தி]

 அப்பிச்சி2 appicci, பெ. (n.)

அம்மாவின் அப்பா,

 maternal grand father.

     [அப்பு+(அத்தி);இத்தி]

அப்பிதம்

அப்பிதம் appidam, பெ. (n.)

   முகில் (சிந்தா. நி. 186);; cloud.

     [Skt. abda → த. அப்பிதம்.]

அப்பியங்கனம்

 அப்பியங்கனம் appiyaṅgaṉam, பெ. (n.)

   எண்ணெய் (தேய்த்து);க் குளிக்கை; injunction, bathing with oil.

த.வ. முழுக்காட்டு.

     [Skt. abhyanjana → த. அப்பியங்கனம்.]

அப்பியங்கம்

அப்பியங்கம் appiyaṅgam, பெ. (n.)

   1. தலையிலும், உடம்பிலும் எண்ணெயைத் தேய்த்துக் கொண்டு இளஞ்சூடுள்ள தண்ணீரில் தலைமுழுகல்; anointing the head and the body with sesamum oil preparatory to bathing.

   2. உடம்பிற்கு நறுமண மூட்டுகை; to perfume the body.

   3. கண்ணுக்கு மை தீட்டுகை; painting the eyelids with collyrium (சா.அக.);.

த.வ. திருமுழுக்கு, நெய்யாட்டு.

     [Skt. abhyanga → த. அப்பியங்கம்.]

அப்பியசி-த்தல்

அப்பியசி-த்தல் appiyasittal,    4 செ.கு.வி. (v.i.)

   பழகுதல்; to practise.

     [Skt. abhyas → த. அப்பியசி-,]

அப்பியசூயகன்

அப்பியசூயகன் appiyacūyagaṉ, பெ. (n.)

   பொறாமைக்காரன் (சிந்தா.நி.181);; jealous, envious person.

     [Skt. abhyasuyaka → த. அப்பியசூயகன்.]

அப்பியஞ்சனம்

அப்பியஞ்சனம் appiyañjaṉam, பெ. (n.)

   1. எண்ணெய்; oil.

   2. எண்ணெய் பூசுகை; smearing the body with oil.

   3. மை தீட்டல்; applying collyrium to the eye lids.

     [Skt. abhyanjana → த. அப்பியஞ்சனம்.]

அப்பியந்தரபரிக்கிரகம்

அப்பியந்தரபரிக்கிரகம் abbiyandarabariggiragam, பெ. (n.)

   மனத்தைப் பற்றி வரும் பகை (குரோதம்);, மானம் முதலிய பதினான்கு குற்றங்கள் (மேருமந்.1207, உரை);;த.வ. ஈரேழ் மனமாசு.

     [Skt. abhyantara + pari-k-kraha → த. அப்பியந்தரபரிக்கிரகம்.]

அப்பியந்தரம்

 அப்பியந்தரம் appiyandaram, பெ. (n.)

   இடையூறு; obstacle, impediment.

     [Skt. abhyantara → த. அப்பியந்தரம்.]

அப்பியமதன்

 அப்பியமதன் appiyamadaṉ, பெ. (n.)

   நோயாளி; a sick person (சா.அக.);.

அப்பியமிதம்

அப்பியமிதம் appiyamidam, பெ. (n.)

   துன்பம் (சிந்தா. நி.187);; distress.

     [Skt. abhyamita → த. அப்பியமிதம்.]

அப்பியமேகம்

 அப்பியமேகம் appiyamēkam, பெ. (n.)

   மூத்திரம், யானையின் மதசலத்தைப் போல் ஆறுமணிக்கு ஒருமுறை, ஒவ்வொரு வேளைக்கும் ஒருபடியளவாக இறங்குவதும், காய்ச்சினால் உவர்மண்ணைப் போலடியில் வண்டல் படிவதுமான சிறுநீர் நோய்; a disease characterised by excessive secretion of urine as much as even one measure for every six hours and it leaves a sediment when heated-diabetes insipidus (சா.அக.);.

த.வ. உச்சைமேகம்.

     [அப்பிய + மேகம்.]

     [Skt. abhya → த. அப்பிய(ம்);.]

அப்பியம்

அப்பியம் appiyam, பெ. (n.)

   தேவர்க்கிடப்படும் திருப்படையல் (அறநெறி.26);; oblation to the gods.

     [Skt. havya → த. அப்பியம்.]

அப்பியவகாரம்

அப்பியவகாரம் appiyavakāram, பெ. (n.)

   உண்கை (சிந்தா.நி.179);; eating.

     [Skt. abhyavahāra → த. அப்பியவகாரம்.]

அப்பியாகதன்

அப்பியாகதன் appiyākadaṉ, பெ. (n.)

   நெருங்கிய பழக்கமுள்ள விருந்தினன்; familiar guest.

     “அப்பியாகதரோ டுத்தமவதிதிபூசை” (திருவானைக். கோச்செங்.160);.

த.வ. வாடிக்கை விருந்தாளி.

     [Skt. abhyägata → த. அப்பியாகதன்.]

அப்பியாகதி

அப்பியாகதி appiyākadi, பெ. (n.)

   தெரிந்த விருந்தினன்; familiar guest.

     “வரப்பட்ட அதிதி அப்பியாகதிகளுக்கு உண்டாகும் பசியைத் தணிப்பதற்கும்” (ஜீவப்பிரம்மைக்ய பக்.554);.

     [Skt. abhyågata → த. அப்பியாகதி.]

அப்பியாசம்

அப்பியாசம் appiyācam, பெ. (n.)

   1. பழக்கம்; practice, exercise.

     “கணக்குப் பொத்தகத்தின் கடைசியில் சில முக்கியமான அப்பியாசங்கள் இருந்தன”.

   2 பாடப்பயிற்சி (இ.வ.);; exercises based on rules.

   3. இயல்; chapter.

த.வ. பயிற்சி.

     [Skt. abhyāsa → த. அப்பியாசம்.]

அப்பியாசயோகம்

 அப்பியாசயோகம் appiyācayōkam, பெ. (n.)

   ஊழ்கம்; meditation (சா.அக.);.

த.வ. தவநிலை.

     [Skt. abhyåsa + yoga → த. அப்பியாச யோகம்.]

அப்பியாசவைந்தியம்

 அப்பியாசவைந்தியம் appiyācavaindiyam, பெ. (n.)

   தொடர் பழக்கத்தால் செய்யும் பண்டுவம்; the practices of a quack, quackery (சா.அக.);.

த.வ. பக்குவமருத்துவம்.

     [Skt. abhyåsa + vaidya → த. அப்பியாச வைத்தியம்.]

அப்பியாசி

அப்பியாசி1 appiyācittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   பயிலுதல்; to practise.

     “ஞானமாத்திரம் அப்பியாசித்தவனிடத்திலே” (பஞ்சதசப்.93);.

த.வ. பயிலல்.

     [Skt. abhyåsa → த. அப்பியாசி-,]

 அப்பியாசி2 appiyāci, பெ. (n.)

   தொழில் பழகுநர் (வேதா.சூ.14);; one who practices.

த.வ. வினைவலன், வினைவன்.

     [Skt. abhyasin → த. அப்பியாசி.]

அப்பியுதயம்

 அப்பியுதயம் appiyudayam, பெ. (n.)

   நன்னிகழ்வு; prosperity, welfare.

     [Skt. abhyu-daya → த. அப்பியுதயம்.]

அப்பிரகஅரிதகி

 அப்பிரகஅரிதகி appiragaaridagi, பெ. (n.)

   காக்கைப்பொன்பொடி (அப்பிரகபற்பம்);, கடுக்காய்த் தோல் முதலியவைச் சேர்ந்த, ஓர் ஆயுள்வேத மருந்து; an ayurvedic medicine comprising calcined mica and gall-nut powder as chief ingredients (சா.அக.);.

த.வ. காக்கைப்பொன் துகள்.

     [Skt. abhraka+haritaki → த. அப்பிரக அரிதகி.]

அப்பிரககற்பம்

 அப்பிரககற்பம் appiragagaṟpam, பெ. (n.)

   காக்கைப்பொன்னை (அப்பிரகத்தை);ச் செந்தூரம், பொடி (பற்பம்); முதலிய மருந்துகளாகச் செய்து பயன்படுத்தும் வகையை விளத்தமாய்க் குறிக்குமோர் ஆயுள் வேதநூல்; an ayurvedic treatise dealing with the method and use of several compounds of mica and their preparations in detail (சா.அக.);.

     [அப்பிர + கற்பம்.]

     [Skt. abhraka → த. அப்பிரகம். கல்பம் → கற்பம்.]

அப்பிரகக்கிண்ணி

 அப்பிரகக்கிண்ணி appiragaggiṇṇi, பெ. (n.)

   தகட்டுத்தாளை (அப்பிரகத்தை); உருகும்படிச் செய்து, மெழுகு கட்டி வார்த்தெடுக்கும் ஓர் ஏனம்; a basin made of melted mica cast into a mould (சா.அக.);.

     [அப்பிரகம் + கிண்ணி.]

     [Skt. abhraka → த. அப்பிரகம்.]

அப்பிரகக்குகை

 அப்பிரகக்குகை appiragaggugai, பெ. (n.)

   ஊதை(வாத); முறையில் பயன்படுத்துவதற்காக, காக்கைப்பொன் பொடியால் (அப்பிரக பற்பத்தினாற்); செய்த குகை; a crucible made of calcined mica for the purpose of using it in alchemy (சா.அக.);.

     [Skt. abhraka → த. அப்பிரகம்.]

அப்பிரகசிந்தூரம்

 அப்பிரகசிந்தூரம் appiragasindūram, பெ. (n.)

   காக்கைப் பொன்னா (அப்பிரகத்தா);லான மருந்துவகை (வின்.);; red oxide of talc or mica.

த.வ. காக்கைப்பொன் செந்தூரம்.

     [அப்பிரக(ம்); + சிந்தூரம்.]

     [Skt. abhraka → த. அப்பிரகம். செந்தூரம் → சிந்தூரம்.]

அப்பிரகசூதை

 அப்பிரகசூதை appiragacūtai, பெ. (n.)

   மலடி; a barren woman (சா.அக.);.

அப்பிரகசெந்தூரம்

 அப்பிரகசெந்தூரம் appiragasendūram, பெ. (n.)

   காக்கைப் பொன்னை (அப்பிரகத்தை); முறையாகத் தூய்மை செய்து, பிறகு அதைப் புடமிட்டெடுக்கும் ஒரு வகைச் செந்தூரம்; a red oxide of mica obtained after cleaning mica as per process laid down in the Tamil medical science for cleaning minerals and then subjecting it to calcination. It is a powder of brick-dust colour and a saline earthy taste, Chemically, it is a silicate of magnesia with iron in excess (சா.அக.);.

     [அப்பிரகம் + செந்தூரம்.]

     [Skt. abhraka → த. அப்பிரகம்.]

அப்பிரகச்சத்து

 அப்பிரகச்சத்து appiragaccattu, பெ. (n.)

   காக்கைப் பொன்னிலிருந்து (அப்பிரகத்தினின்று); உருவாக்கப்பெறும் ஊட்டம் (சத்து);; essence prepared from mica (சா.அக.);.

     [Skt. abhraka → த. அப்பிரகம்.]

அப்பிரகத்தகடு

அப்பிரகத்தகடு appiragattagaḍu, பெ. (n.)

   1. காக்கைப் பொன் (அப்பிரகச்); செதில்; a loose, filmy mass of talc separated in layers, Talc flakes.

   2. அப்பிரகத்தை உருக்கி அதனின்று உருவாக்குமொரு தகடு; plate obtained by melting mica (சா.அக.);.

த.வ. காக்கைப்பொன் தகடு.

     [அப்பிரக(ம்); + தகடு.]

     [Skt. abhraka → த. அப்பிரகம்.]

அப்பிரகநவநீதம்

 அப்பிரகநவநீதம் appiraganavanītam, பெ. (n.)

   காக்கைப் பொன்னால் (அப்பிரகத்தாற்); செய்த களிம்பு (வின்);; mica made into an ointment.

த.வ. காக்கைப்பொன் களிம்பு.

     [Skt. abhraka + nava-nita → த. அப்பிரக நவநீதம்.]

அப்பிரகபற்பம்

 அப்பிரகபற்பம் abbiragabaṟbam, பெ. (n.)

   காக்கைப் பொன்னை (அப்பிரகத்தை);ப் புடமிட்டு உருவாக்கி நீரிழிவு முதலிய நோய்களுக்குக் கொடுக்கும் மருந்து; an oxide of mica obtained by calcination as per process of India medical science. It is used for diabetes etc. (சா.அக.);.

த.வ. காக்கைப்பொன் மருந்து.

     [Skt. abhraka + bhaspa → த. அப்பிரகபற்பம்.]

அப்பிரகபாடாணம்

 அப்பிரகபாடாணம் appiragapāṭāṇam, பெ. (n.)

   பிறவிவைப்பு நஞ்சு வகை (மூ.அ.);; a mineral poison.

த.வ. காக்கைப்பொன் நஞ்சு.

     [Skt. abhraka + pasanam → த. அப்பிரக பாடாணம்.]

அப்பிரகமணல்

அப்பிரகமணல் appiragamaṇal, பெ. (n.)

   1. நிலத்தினின்று வெட்டி எடுக்கப்படும் அப்பிரகமும் மணலுங் கூடிய ஒரு மூலப்பொருள்; a mineral ore consisting of sand and talc, Tal core.

   2. கருமணல்; black sand mixed with mica (சா.அக.);.

த.வ. காக்கைப்பொன் மணல்.

     [Skt. abhraka → த. அப்பிரகம்.]

அப்பிரகம்

அப்பிரகம் appiragam, பெ. (n.)

   தகட்டுத்தாள் (மைக்கா);; mica, talc,

     “அப்பிரக மென்றறைந்தால் அண்டம் மகோதரமும்…. போம்” (பதார்த்த.1126);.

த.வ. காக்கைப்பொன், ஒட்டுத்தாள்.

     [Skt. abhraka → த. அப்பிரகம்.]

அப்பிரகாசம்

அப்பிரகாசம்1 appirakācam, பெ. (n.)

   விளக்கமின்மை; invisibility, indistinctness, darkness.

     “ஒருகாலத்துப் பிரகாச மொருகாலத் தப்பிரகாசம்” (சூத.எக்கிய.பூ.47:27);.

     [Skt. aprakaša → த. அப்பிரகாசம்.]

 அப்பிரகாசம்2 appirakācam, பெ. (n.)

   சடப்பொருள் (அசித்து);; matter, as insentient.

     “அவைதாம்…. அப்பிரகாசமாய் நிற்றலான்” (சி.போ.4:1);.

     [Skt. a-prakāša → த. அப்பிரகாசம்.]

அப்பிரகிருட்டம்

அப்பிரகிருட்டம் appiragiruṭṭam, பெ. (n.)

   காக்கை (சிந்தா.நி.187);; crow.

     [Skt. a-pra + krsta → த. அப்பிரகிருட்டம்.]

அப்பிரசன்

 அப்பிரசன் appirasaṉ, பெ. (n.)

   பிறங்கடை (வாரிசு.); இல்லாதவன்; one who is without issue (சா.அக.);.

அப்பிரசம்

 அப்பிரசம் appirasam, பெ. (n.)

   மலடு, குழந்தை பெற்றெடுக்க முடியாமை; barrenness (சா.அக.);.

த.வ. மலட்டுத் தன்மை, கொட்டு.

அப்பிரசாதை

அப்பிரசாதை appiracātai, பெ. (n.)

   மலடி (சிந்தா. நி.187);; barren woman.

     [Skt. aprajata → த. அப்பிரசாதை.]

அப்பிரசித்தம்

 அப்பிரசித்தம் appirasittam, பெ. (n.)

   வெளிப்படையாகாதது; that which is unknown, unpublished.

த.வ தெரியாதது.

     [Skt. a-prasiddha → த. அப்பிரசித்தம்.]

அப்பிரசித்தவிசேடணம்

அப்பிரசித்தவிசேடணம் appirasittavisēṭaṇam, பெ. (n.)

   பக்கப் போலிகளு ளொன்று (மணிமே. 29:151);;     [Skt. a-prasiddha + visesana → த. அப்பிர சித்தவிசேடணம்.]

அப்பிரசித்தவிசேடியம்

அப்பிரசித்தவிசேடியம் appirasittavisēṭiyam, பெ. (n.)

   பக்கப் போலிகளு ளொன்று (மணிமே.29, 152);;     [Skt. a-prasiddha + visesya → த. அப்பிர சித்தவிசேடியம்.]

அப்பிரசித்தவுபயம்

அப்பிரசித்தவுபயம் abbirasittavubayam, பெ. (n.)

   பக்கப் போலிகளுளொன்று (மணிமே.29, 152);;     [Skt. a-prasiddha + upaya → த. அப்பிரசித்தவுபயம்.]

அப்பிரசித்தாசம்பந்தம்

அப்பிரசித்தாசம்பந்தம் appirasittāsambandam, பெ. (n.)

   பக்கப் போலிகளு ளொன்று (மணிமே.29, 153);;     [Skt. a-prasiddha + asambandha → த. அப்பிரசித்தாசம்பந்தம்.]

அப்பிரசை

 அப்பிரசை appirasai, பெ. (n.)

   மகப்பேறு அற்றவள்; a woman deprived of issue (சா.அக.);.

     [Skt. apiraja → த. அப்பிரசை.]

அப்பிரதக்கிணம்

அப்பிரதக்கிணம் appiradakkiṇam, பெ. (n.)

அப்பிரதட்சிணம் பார்க்க;see a-p- piratatcinam.

     “நகரை யப்பிரதக்கிணமா

யதினடந்து” (பிரபோத.12:12);.

த.வ. இடம்வரல்.

     [Skt. a-pradaksina → த. அப்பிரதக்கிணம்.]

அப்பிரதட்சிணம்

 அப்பிரதட்சிணம் appiradaṭciṇam, பெ. (n.)

   வலமிருந்து இடம் வருகை; circumambulation from right to left.

த.வ. எதிர்வலம், இடச்சுற்று, இடம்வரல்.

     [Skt. a-pradaksina → த. அப்பிரதட்சிணம்.]

அப்பிரதானம்

 அப்பிரதானம் appiratāṉam, பெ. (n.)

   முதன்மையல்லாதது; that which is non-essential, secondary.

     [Skt. a-pradhana → த. அப்பிரதானம்.]

அப்பிரதானி

 அப்பிரதானி appiratāṉi, பெ. (n.)

   சிறியோன் (வின்.);; insignificant person.

     [Skt. a-pradhana → த. அப்பிரதானி.]

அப்பிரதிபை

அப்பிரதிபை abbiradibai, பெ. (n.)

   தோல்வித் தானத் தொன்று (செந்.iii, 13);; a fault in argumentation.

த.வ. எதிராடல் குற்றம்.

     [Skt. a-pratibhå → த. அப்பிரதிபை.]

அப்பிரதிப்பழம்

 அப்பிரதிப்பழம் appiradippaḻm, பெ. (n.)

   பேரீச்சைப் பழம் (பேரீந்து);; date fruit of date tree, Phoenix dactylifera (சா.அக.);.

அப்பிரதீரூபகதை

அப்பிரதீரூபகதை appiradīrūpagadai, பெ. (n.)

   அப்பிரதிபை (செந்.iii, 16);;பார்க்க;see appiradibai.

     [Skt. a-prati-rupa → த. அப்பிரதீருபகதை.]

அப்பிரத்தியட்சம்

 அப்பிரத்தியட்சம் appirattiyaṭcam, பெ. (n.)

   புலப்படாதது; that which is imperceptible, invisible.

     [Skt. a-pratyaksa → த. அப்பிரத்தியட்சம்.]

அப்பிரத்தியாக்கியானம்

அப்பிரத்தியாக்கியானம் appirattiyākkiyāṉam, பெ. (n.)

அப்பச்சக்காணம் (மேருமந்.1378, உரை); பார்க்க;see appaccakkanam.

     [Skt. aprathyakhyana → த. அப்பிரத்தியாக்கியானம்.]

அப்பிரபஞ்சம்

 அப்பிரபஞ்சம் abbirabañjam, பெ. (n.)

   எலிப் பயறு; a wild grain wild horse-gram (சா.அக.);.

     [Skt. a-p-pira-panja → த. அப்பிரபஞ்சம்.]

அப்பிரபுட்பம்

அப்பிரபுட்பம் abbirabuṭbam, பெ. (n.)

   நீர் (சிந்தா. 169);; water.

     [Skt. abhra-puspa → த. அப்பிரபுட்பம்.]

அப்பிரபுத்தன்

அப்பிரபுத்தன் abbirabuttaṉ, பெ. (n.)

   கூர்ந்துணர்வில்லாதவன் (திருக்களிற்றுப்.57, உரை);; person without acute intellect.

த.வ. மழுங்கன்.

     [Skt. a-prabuddha → த. அப்பிரபுத்தன்.]

அப்பிரமண்ணியம்

அப்பிரமண்ணியம் appiramaṇṇiyam, பெ. (n.)

   உதவி வேண்டிக்கூறும் குறிப்புமொழி (கலிங். 455, புது.);; an alarmist exclamation meaning a monstrous (lit. urbrahmanical); deed is perpetrated used in calling for help.

     [Skt. a-brahmanya → த. அப்பிரமண்ணியம்.]

அப்பிரமாணஐதிகம்

அப்பிரமாணஐதிகம் appiramāṇaaidigam, பெ. (n.)

   காணாத தொன்றை உளதென்றுரைக்கும் உலகவுரை (சி.சி. அளவை, 1, மறைஞா.);; unattested tradition.

த.வ. இல்லதை உளதெனல்.

     [Skt. a-pramâna + aitihya → த. அப்பிரமாண ஐதிகம்.]

அப்பிரமாணம்

அப்பிரமாணம் appiramāṇam, பெ. (n.)

   1. ஆணை (பிரமாணம்); யல்லாதது; that which is untrustworthy, not valid.

   2. பொய் ஆணை (பொய்சத்தியம்);; false oath.

     “அவன் முறையாயத்தில் அப்பிரமாணம் பண்ணினான்”.

   3. எல்லைக்குட் படாதது; that which is unlimited, illimitable.

     [Skt. a-pramåna → த. அப்பிரமாணம்.]

அப்பிரமாணிக்கன்

 அப்பிரமாணிக்கன் appiramāṇikkaṉ, பெ. (n.)

   பொய்யன் (வின்.);; liar.

     [Skt. a-prāmānika → த. அப்பிரமாணிக்கன்.]

அப்பிரமாணிக்கம்

அப்பிரமாணிக்கம்1 appiramāṇikkam, பெ. (n.)

   1. சான்றற்றது; that which is without sufficient proof or authority.

   2. கயமைத் தனம்

 dishonesty.

     [Skt. a-pramanika → த. அப்பிரமாணிக்கம்.]

 அப்பிரமாணிக்கம்2 appiramāṇikkam, பெ. (n.)

   உறுதியாகக் கொள்ளத் தகாதது (வின்.);; untrustworthiness, unreliability.

     [Skt. a-pramanika → த. அப்பிரமாணிக்கம்.]

அப்பிரமாதங்கம்

அப்பிரமாதங்கம் appiramātaṅgam, பெ. (n.)

   இந்திரனது யானை (சிந்தா.நி.169);; Indra’s elephant.

     [Skt. abhra-måtanga → த. அப்பிரமாதங்கம்.]

அப்பிரமு

 அப்பிரமு appiramu, பெ. (n.)

அப்பிரமை (வின்.); பார்க்க;see a-р-рігаmai.

     [Skt. Abhramu → த. அப்பிரமு.]

அப்பிரமேயம்

அப்பிரமேயம் appiramēyam, பெ. (n.)

   1. அளக்கமுடியாதது; that which is immeasurable.

   2. ஒரு பேரெண் (வின்.);; a hundred quintillions.

     [Skt. a-prameya → த. அப்பிரமேயம்.]

அப்பிரமை

 அப்பிரமை appiramai, பெ. (n.)

   கீழ்த்திசைப் பெண்யானை (சது.);; name of the female elephant of the East, mate of airavatam.

     [Skt. abhramu → த. அப்பிரமை.]

அப்பிரம்

அப்பிரம்1 appiram, பெ. (n.)

   முகில் (பிங்.);; cloud.

     [Skt. abhra → த. அப்பிரம்.]

 அப்பிரம்2 appiram, பெ. (n.)

   1. வானுலகம்; svarga.

   2. வானம்; sky.

     [Skt. abhra → த. அப்பிரம்.]

 அப்பிரம்3 appiram, பெ. (n.)

   1. பொன்; gold.

   2. காக்கைப் பொன் (அப்பிரகம்);; mica, talc (சா.அக.);.

     [Skt. abhra → த. அப்பிரம்.]

அப்பிரயோசனம்

 அப்பிரயோசனம் appirayōcaṉam, பெ. (n.)

   பயனின்மை; fruitlessness.

     [Skt. a-prayojana → த. அப்பிரயோசனம்.]

அப்பிராகிருதசரீரம்

 அப்பிராகிருதசரீரம் appirākirudasarīram, பெ. (n.)

   தெய்வத் தன்மைமிக்க மேன்மையான உடல்; divine body, as not made of gross matter.

     [Skt. a-praktrta + sarira → த. அப்பிராகிருதசரீரம்.]

அப்பிராகிருதம்

அப்பிராகிருதம் appirākirudam, பெ. (n.)

   இயற்கைக்கு அப்பாற்பட்டது (பிரகிருதி சம்பந்தமற்றது); (அஷ்டாதச. தத்வத்.3:51);; that Which transcends nature.

த.வ. இயற்கை இகவு.

     [Skt. a-prakrta → த. அப்பிராகிருதம்.]

அப்பிராகிருதலோகம்

அப்பிராகிருதலோகம் appirākirudalōkam, பெ. (n.)

   வீடுபேறு (பரமபதம்); (குருபர.5);; heaven.

     [Skt. a-prakrta + Ioka → த. அப்பிராகிருத லோகம்.]

அப்பிராணம்

அப்பிராணம் appirāṇam, பெ. (n.)

   1. ஆவி (உயிர்); அடங்குகை; absence of life.

   2. சாவு; death (சா.அக.);.

     [Skt. a-prana ? த. அப்பிராணம்.]

அப்பிராணி

அப்பிராணி appirāṇi, பெ. (n.)

   1. பேதை (உ.வ.);; harmless, undesigning person.

   2. நலிந்தோன்;   சத்தியில்லாதவன் (உ.வ.);; feeble, weak person.

பாவம், அப்பிராணி, அவனை ஏன் அடிக்கிறீர்கள் (இக்.வ.);.

த.வ. அமைதியாளன், வலியிலான், தீதிலான், வலுவிலி.

     [Skt. a-pranin → த. அப்பிராணி.]

அப்பிராத்தகாலம்

அப்பிராத்தகாலம் appirāttakālam, பெ. (n.)

   தோல்வித்தானத் தொன்று (செந்.iii, 13);; a fault in argumentation.

     [அப்பிராத்த(ம்); + காலம்.]

     [Skt. a-prapta → த. அப்பிராத்தம்.]

கால் (நீட்சி); → காலம்.

அப்பிராப்தி

 அப்பிராப்தி appirāpti, பெ. (n.)

   அடையாமை; non-attainment, non-acquisition.

த.வ. எய்தாமை.

     [Skt. a-pirapti → த. அப்பிராப்தி.]

அப்பிராப்பியம்

அப்பிராப்பியம் appirāppiyam, பெ. (n.)

   1. அடைதற்கரியது; that which is difficult to obtain.

     “அப்பிராப்பிய மென்றுரைக்கின்” (சூ.த.எக்கிய.பூ.38:15);.

   2. அடையத்தகாதது; that which is not fit to obtain.

அப்பிராப்பியமான தேவதாந் தரங்கள்.

த.வ. எய்தொணாதது.

     [Skt. a-prapya → த. அப்பிராப்பியம்.]

அப்பிராமணன்

 அப்பிராமணன் appirāmaṇaṉ, பெ. (n.)

   போலிப் பார்ப்பனன்; pseudo-Brahman.

     [Skt. a-brahmana → த. அப்பிராமணன்.]

அப்பிராமாணிக்கம்

 அப்பிராமாணிக்கம் appirāmāṇikkam, பெ. (n.)

   உறுதியாகக் கொள்ளத்தகாதது (வின்.);; untrust-worthiness, unreliability.

     [Skt. a-pramanika → த. அப்பிராமாணிக்கம்.]

அப்பிராமாணியம்

அப்பிராமாணியம் appirāmāṇiyam, பெ. (n.)

   அதிகாரமின்மை, உறுதியாகாமை, நிலையின்மை (பிரமாணமாகாமை); (சி.சி.8:5, ஞானப்.);; invalidity, unauthoritativeness.

     [Skt. a-pramanya → த. அப்பிராமாணியம்.]

அப்பிரியதரு

அப்பிரியதரு appiriyadaru, பெ. (n.)

   1. பயனில்லாத மரம்; contemptible tree; a tree not useful for any purpose.

   2. ஓதியமரம்; lindian ash tree, Odina wodier (சா.அக.);.

     [Skt. a-priya + taru → த. அப்பிரியதரு.]

அப்பிரியம்

அப்பிரியம் appiriyam, பெ. (n.)

   1. வெறுப்பு; dislike, unfriendliness.

   2. வெறுப்பான செயல்; disagreeable, offensive act.

     “எனக் கப்பிரியத்தை யாற்றினையால்” (நல். பாரத.இந்திர.77);.

     [Skt. a-priya → த. அப்பிரியம்.]

அப்பிரியா

 அப்பிரியா appiriyā, பெ. (n.)

அப்பிரியதரு பார்க்க;see appiriya-taru (சா.அக.);.

     [Skt. a-priya → த. அப்பிரியா.]

அப்பிரு

 அப்பிரு appiru, பெ. (n.)

   பேரோசனை (R.);; a kind of mineral, turquoise.

அப்பிருகம்

 அப்பிருகம் appirugam, பெ. (n.)

அப்பிரக பாடாணம் பார்க்க;see appiraga–padanam (சா.அக.);.

     [Skt. abhraka → த. அப்பிருகம்.]

அப்பிரேசம்

 அப்பிரேசம் appirēcam, பெ. (n.)

அப்பிரகம் பார்க்க;see appiragam (சா.அக.);.

     [Skt. abhrasa → த. அப்பிரேசம்.]

அப்பீரகம்

 அப்பீரகம் appīragam, பெ. (n.)

   நீண்ட மரவகை (மலை.);; Indian hog-plum.

அப்பீரா

 அப்பீரா appīrā, பெ. (n.)

   சீமையத்தி; foreign fig tree;

 European edible fig, Ficus carica (சா.அக.);.

அப்பு

அப்பு appu, பெ. (n.)

   1. அப்பன் (இ.வ.);; father (Loc.);.

   2. சிறுவரையுங் கீழோரையும் அன்புகாட்டி அழைக்குஞ் சொல் (இ.வ.);; a term of endearment used in addressing children or inferiors (Loc.);.

ம., க. அப்பு ; பட. அப்பி என்பது கொச்சை வழக்கு.

   3. வீட்டு வேலைக்காரன்; domestic man-servant. சிங். அப்பு.

     [அப்பன் → அப்பு.]

 அப்பு appu, பெ. (n.)

   1. ஐம்பூதங்களுள் ஒன்றான நீர் (பிங்.); ; water, as one of the five elements.

   2. கடல்; sea.

   3. பனிக்குடத்து நீர்; liquid of the amniotic sac, amnic liquor (சா.அக.);.

ம., க. அப்பு ; மரா. அப் ; L. aqua.

     [அப்பு → Skt, ap. அம்முதல் = பொருந்துதல், கலத்தல். அம் = நீர். அம் → அம்பு → அப்பு.]

அம்பு பார்க்க;see ambu”.

 அப்பு appu, பெ. (n.)

   அம்பு; arrow.

     “வில்லுமி ழப்பொடு” (கந்தபு. யுத்த இரண்டா. சூரபன். 41);.

     [அம்பு → அப்பு. இது வலித்தல் என்னும் செய்யுள் திரிபு.]

 அப்பு appu, பெ. (n.)

   துடை; thigh.

     “அம்ம வென்று அப்புத் தட்டி” (ஈடு 5.4;7);.

     [ஒருகா. அப்புதல் = ஒட்டுதல். அப்பு = ஒட்டிக்கொண்டிருக்கும் தொடை. ஒ.நோ ; துடு → தொடு → தொடை = துடை.]

 அப்பு appu, பெ. (n.)

   பாதிரிமரம் (மலை.);; trumpet tree, Stereospermum suaveolens.

 அப்பு appu, பெ. (n.)

   ஈயம்; lead (சா.அக.);.

 அப்பு appu, பெ. (n.)

   ஒரு கனிய நஞ்சு (வெள்ளைப் பாடாணம்); (வை.மு.);; a mineral poison.

 அப்பு appu, பெ. (n.)

   முட்டாள் (இ.வ..);; dolt, idiot (Loc.);.

     [அப்புண்டு – முட்டாள் (நெல்லை);. dolt, idiot (Tn.);. அப்புண்டு → அப்பு.]

 அப்பு appu, பெ. (n.)

   கடன்; loan debt (W.);.

     [தெ. அப்பு (கடன்); → த. அப்பு.]

 அப்பு appu, பெ. (n.)

   1. முற்குளம், 20ஆம் நாண்மீன்; the twentieth asterism.

   2. பகல் பதினைந்து முழுத்தத்துள் (முகூர்த்தத்துள்); ஆறாவது (விதான குணா. 73, உரை);; the sixth of 15 divisions of the day.

 அப்பு appu, பெ. (n.)

   முப்பத்தாறு மெய்ப் பொருள்களுள் ஒன்று; one of the 36 reals.

அது சிறுகோளத்தில் (சிற்றண்டத்தில்); நிலப்பூதத்திற்கும் தீப்பூதத்திற்கும் இடையிலிருக்கும் ஒரு பொதுவகையல்லாத (அசாதாரண); பூதமாய்ப் பிறைவடிவுள்ளதாய் வெண்ணிறமானதாய்த் தாமரைப்பூ அடையாளமுடையதாயிருக்குமென்றும், பெருங் கோளத்தில் (பேரண்டத்தில்); பருப்பொருட் பூதநில மெய்ப்பொருட்கு (தூலபூத பிருதுவி தத்துவத்திற்கு); அப்பால் பன் (தச); குணமதிகமாக மறைத்திருக்குமென்றும் சொல்வர் (சி. சி. சுபக். 2 ; 66, 67, 68, உரை; வி-ணி. 271); – (சங்.அக.);.

 அப்பு appu, பெ. (n.)

   ஐயா; sir.

அப்பு உங்களைத்ததானே.”

     [அப்பன்-அப்பு(விளி]

அப்பு-தல்

அப்பு-தல் appudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. பூசுதல்; to stick or daub with the hand, as sandal paste, to plaster with a trowel, as mortar.

     “அரைபடு மகிலுஞ் சாந்து மப்பி” (திருவிளை. நாட்டு, 13);.

   2. சாத்துதல்; to put on.

     “மலர்த்தார்…… அப்ப” (பதினொ. கோயிற்றிருப். 4);.

   3. ஒற்றுதல்; to apply repeatedly, as a fomentation (W.);.

   4. தாக்குதல்; to come to grips, to grapple with, as in wrestling.

     “இருவரும் புயங்களி னப்பி மொத்தினர்” (பாரத, பதினேழா. 147);.

   5. அறைதல் (சங்.அக.); ; to beat, strike.

   6. கும்முதல் (சங்.அக.);; to pommel.

   7. கவ்வுதல்; to snatch at firmly.

நாய் அப்பிக்கொண்டு போய்விட்டது (உ.வ.);.

   8. வாயில் திணித்தல்; to thrust in the mouth.

     “அவல்தேனு மப்பி யமுதுசெயும்” (திருப்பு. 1147);.

   9. கொட்டுதல் (சங்.அக.); ; to throw or cast into a vessel.

ம. அப்புக; க. அப்பிகெ; தெ. அப்பளிஞ்சு ; து. அப்பளிபுனி ; பிராகி. அப்பால ; பட. அப்பு.

     [அம்மு → அப்பு.]

அப்புக்கட்டு

அப்புக்கட்டு appukkaṭṭu, பெ. (n.)

   அம்புகளின் கற்றை (பதிற்றுப். 16 ; 4, உரை);; sheaf of arrows.

     [அம்பு + கட்டு.]

அப்புக்கட்டை

 அப்புக்கட்டை appukkaṭṭai, பெ. (n.)

   ஏருழவு பிறழாமல் இருப்பதற்காக ஏரின் மேக்காலுக்கு மேல் வைத்து அடிக்கும் கட்டை; a wooden piece fixed in the yoke.

     [அப்பு+கட்டை]

அப்புக்காத்து

 அப்புக்காத்து appukkāttu, பெ. (n.)

   வழக்குரைஞர் (யாழ்ப்.);; advocate, supreme-court pleader.

த.வ. வழக்கறிஞர்

     [E. advocate → த. அப்புக்காத்து.]

அப்புக்காய்

 அப்புக்காய் appukkāy, பெ. (n.)

   ஒருவகைக் காய்; a kind of unripe fruit (சா.அக.);.

அப்புக்குட்டி

 அப்புக்குட்டி appukkuṭṭi, பெ. (n.)

   ஒருவகைக் கடல்மீன்; sucker fish, remora (சா.அக.);.

     [ஒருகா. அப்புக்குள் + ஒட்டி – அப்புக்குளொட்டி → அப்புக்குட்டி. அப்பு = நீர்.]

அப்புசன்

அப்புசன் appusaṉ, பெ. (n.)

   1. நிலவு; moon.

   2. தன்வந்திரி; tanvantiri, the physician of the gods.

     [Skt. ab-ja → த. அப்புசன்.]

அப்புசம்

அப்புசம் appusam, பெ. (n.)

   1. சங்கு; chank.

   2. தாமரை; lotus.

   3. நீர்க்கடம்பு; water cadamba.

     [Skt. ab-ja → த. அப்புசம்.]

அப்புண்டு

 அப்புண்டு appuṇṭu, பெ. (n.)

   முட்டாள் (நெல்லை);; dolt, idiot (Tn.);.

அம்முண்டு பார்க்க;see ammundu.

     [அம்முண்டு → அப்புண்டு.]

அப்புதத்துவம்

அப்புதத்துவம் appudadduvam, பெ. (n.)

   முப்பத்தாறு தத்துவங்களுள் ஒன்று; one of the 36 reals.

     [அப்பு + Skt, tattva → த. தத்துவம். த. தான் → Skt. tat = அது. தத்வ = அதாயிருக்குந் தன்மை, தானாயிருக்கை, தனிப்பொருள், மெய்ப்பொருள்.]

அப்புதம்

 அப்புதம் appudam, பெ. (n.)

   கோரைவகை (பச்.மு.);; a sedge.

     [ஒருகா. அப்பு → அப்புது → அப்புதம் = நீரில் விளைவது.]

அப்புது

அப்புது appudu, இடை. (int.)

   பாகர் யானையைத் தட்டிக் கொடுத்து அமைதிப்படுத்தும்போது கூறும் ஒரு குறிப்புச்சொல்; expr. which a mahout uses while patting and quieting down an elephant.

     “அங்தையந் தலத்தினா லப்புதா தையெனக்

கொங்கலர் கண்ணியான் கொம்மைதான் கொட்டலும்

பொங்கிய வுவகையிற் பொலிந்துமாக் களிறவன்

றங்கிய பயிர்த்தொழி றடக்கையாற் செய்ததே” (சீவக. 1834);.

இ.ள் ; கண்ணியான், அப்புது அப்புது, ஆது ஆது. ஐ ஐ என்று கூறி, அங்கையாகிய அழகிய தலத்தாற் பொய்க்கத் தட்டினவளவிலே, அக் களிறு உவகையாற் பொலிந்து அவன்கட்டங்கிய பயிராற் றொழில்களைத் தன் கையாலே செய்த தென்க.

பயிராவன ; பரிபரி யென்பன முதலியன. தொழில் = தோட்டி முதலியன எடுத்துக் கொடுத்தல் (நச். உரை);.

பயிர் = மரபுக் குறிப்புமொழி (பரிபாஷை);.

யானை கூட்டங் கூட்டமாகத் தொன்று தொட்டுக் குடமலைத் தொடரில் வாழ்ந்து வருவதனாலும், தமிழவேந்தர் மூவரும் தொடக்கந்தொட்டுக் கொண்டிருந்த நால்வகைப் படையுள் யானைப்படை யொன்றாதலாலும், அரசர் வழிப்போக்கிற்கும் முரசறைந்து விளம்பரஞ் செய்தற்கும் விழாக் கால வூர்வலத்திற்கும் புலவர்க்குப் பரிசளிப்பிற்கும் யானை மிகப் பயன்பட்டதனாலும், யானையைப் பயிற்றுந் தொழில் தமிழர்க்கு நன்றாகத் தெரிந்ததே. அப் பயிற்சிக்குரிய சொற்களும் தனித்தமிழ்ச் சொற்களே. அவற்றின் பொருள் இன்று அறியப்படாமையால் அவை அயற்சொற்களாகா.

அப்புத்திரட்டி

 அப்புத்திரட்டி apputtiraṭṭi, பெ. (n.)

   கட்டுக் கொடி, நீரை உறைவிக்க வல்லது; a creeper which is capable of solidifying water, Smilax pseudo-china (சா.அக.);.

     [அம் → அம்பு → அப்பு + திரட்டி – அப்புத்திரட்டி. அம் = நீர். திரள் → திரட்டு → திரட்டி = திரள அல்லது உறையச் செய்வது.]

கட்டு என்னும் பெயரும் இப்பொருளதே.

அப்புநீர்

 அப்புநீர் appunīr, பெ. (n.)

   கடல்நீர்; Sea water (சா.அக.);.

     [அம் → அம்பு → அப்பு.]

அப்புநீறு

 அப்புநீறு appunīṟu, பெ. (n.)

   கடலுப்பு; sea-salt (சா.அக.);.

     [அப்பு = நீர், கடல். நீறு = சுண்ணம், பொடி.]

அப்புபூதவாதிமதம்

அப்புபூதவாதிமதம் appupūdavādimadam, பெ. (n.)

   அப்பு என்னும் பூதமே பரம்பொருள் என்று கொள்வோன் மதம் (த.நி.போ. 280);; the religion of one who holds that the element water is the Supreme Being.

அப்புப்பு

 அப்புப்பு appuppu, பெ. (n.)

   சோற்றுப்பு; common salt generally extracted from seawater and used with food (சா.அக.);.

     [அப்பு + உப்பு. அப்பு = நீர்.]

அப்புப்புச்செயனீர்

 அப்புப்புச்செயனீர் appuppucceyaṉīr, பெ. (n.)

   பிண்டவுப்புச் செயனீர்; a liquid obtained from the salt extracted from the foetus (சா.அக.);.

அப்புப்போடு-தல்

அப்புப்போடு-தல் appuppōṭudal,    19 செ.குன்றாவி. (v.t.)

   வாங்கின கடனைத் தீர்க்காது ஏமாற்றுதல் (இ.வ.);; to deceive by evading or denying repayment of debt (Loc.);.

அவன் ஐம்பது உருபா அப்புப் போட்டுக்கொண்டான்.

     [தெ. அப்பு = கடன். போடுதல் = வாயிற் போட்டுக்கொள்ளுதல், கவர்ந்துகொள்ளுதல், தனக்குப் பயன்படுத்திக்கொள்ளுதல்.]

அப்புமேழி

 அப்புமேழி appumēḻi, பெ. (n.)

   வயல் உழுதற்குரிய மேழிவகை; a kind of plough.

     [அப்பு = நீர், நீருள்ள வயல். மேழி = கலப்பையின் கைப்பிடி அல்லது மேற்பகுதி.

ஒருகா. மேலி → மேழி.]

அப்புரா

 அப்புரா appurā, பெ. (n.)

   பாதிரி; trumpet flower tree, Bignonia chelonoides (சா.அக);.

அப்புருவம்

அப்புருவம் appuruvam, பெ. (n.)

   1. உப்பு; salt.

   2. நவச்சாரம்; salammoniac, Ammonium hydrochiorate (சா.அக.);.

     [அப்பு + உருவம்.]

அப்புறக்கடல்

அப்புறக்கடல் appuṟakkaḍal, பெ. (n.)

   பெரும்புறக்கடல்; the mythical outermost sea.

     “அப்புறக்கட லுஞ்சுவையற்றன” (கம்பரா. யுத்த சேது. 61);.

     [அ + புறம் + கடல்.]

அப்புறத்தையோட்டிவைத்தான்

அப்புறத்தையோட்டிவைத்தான் appuṟattaiyōṭṭivaittāṉ, பெ.. (n.)

   காசுக்கட்டி; a brownred colouring matter obtained from areca-nut, Areca red, Arecin (சா.அக.);.

     [அப்புறம் + அத்து (சாரியை); + ஐ (2ஆம் வே.உ.); + ஒட்டி + வைத்தான்.]

அப்புறப்படுத்து-தல்

அப்புறப்படுத்து-தல் appuṟappaḍuddudal,    5 செ. குன்றாவி. (v.t.)

   இடத்தைவிட்டு அகற்றுதல், வேறிடத்திற்குக் கொண்டுபோய் வைத்தல்; to remove, send away.

     [அப்புறம் = அந்தப் பக்கம். படுதல் (த.வி.); = அமர்தல், சேர்தல். படுத்துதல் (பி.வி.); = சேர்த்தல், இடுதல், வைத்தல்.]

அப்புறம்

அப்புறம் appuṟam, பெ. (n.)

   அந்தப் பக்கம்; that side.

—,

கு.வி.எ. (adv.);

   1. அதன்பின், மேற்பட்டு; then, after that, thenceforward, furthermore

   2. சற்றுநேரங் கழித்து; after sometime, a little later.

அப்புறம் வா, தருகிறேன் (உ.வ.);.

   3. மற்றைப் பக்கம்; the other side.

     “அப்புற வுலகி லுள்ளார் அறிந் திட யானே சென்று செப்புவ னென்பான் போல” (கந்தபு. உற்பத். தேவகிரிப். 3);.

   4. வெளிப்பக்கம்; the outside.

     “சுற்ற மப்புற நிற்க” (கம்பரா. அயோத். குகப், 10);.

ம. அப்புறம் ; க. அப்பர ; து. அபர ; Nep. apar, Skt. apara.

     [அ + புறம்.]

அப்புலிங்கத்தலம்

அப்புலிங்கத்தலம் appuliṅgattalam, பெ. (n.)

   இலங்கம் (இலிங்கம்); நீர் வடிவாகவுள்ள திருவானைக்காவல் (திருவானைக். மூர்த்தி. 3);; Tiruvanaikkaval, where the linga in the shrine represents the element, water.

     [அப்பு + லிங்கம் + Skt sthala → த. தலம் (இடம்);.]

அப்புலிங்கம் பார்க்க;see appu-liigam.

அப்புலிங்கம்

 அப்புலிங்கம் appuliṅgam, பெ. (n.)

   ஐம்பூதங்களையும் நிகர்க்கும் ஐந்திலங்கங்களுள் ஒன்றானதும், திருவானைக்காவிலுள்ளதுமான நீரிலங்கம்; Linga in the shrine at Tiruvanaikkäval, as representing the element water, or; of the pañja linigams which represent the five elements.

     [அம் → அம்பு → அப்பு = நீர். இலக்கு → இலக்கம் = குறி. இலக்கம் → இலங்கம் → இலிங்கம் → லிங்கம் (கொச்சை); → Skt, liga. ஒ.நோ; அர் → அரங்கு → அரங்கம் → ரங்கச் (கொச்சை); → Skt, ranga. உல்→ உர் → அர் → அரத்தம் → ரத்தம் (கொச்சை); → Skt rakta. மாவிலிங்கம் (மரம்); என்பது மாவிலங்கச் என்று வழங்குதலையும் நோக்குக.]

சிவமதம் குமரிநாட்டில் தோன்றிய தூய தமிழ மதம். அம்மையப்பர் வழிபாடு போன்றே இலிங்க வழிபாடும் அங்குத் தோன்றியதாகும். உருத்திரன் என்னும் ஆரியச் சிறுதெய்வத்திற்கும் சிவன் என்னும் தமிழ இறைவனுக்கும், எத்தகைத் தொடர்புமில்லை. வேத ஆரியர், வட இந்தியச் சிவ நெறியாரை ஆண்குறித் தெய்வ வணக்கத்தார் (சிசிநதேவ); என்று முதற்கண் பழித்து வந்தனர். தமிழரது சிவமதம் மிகமிக வுயர்ந்த தென்று கண்ட பின்னரே, அவர் அதைத் தழுவலாயினர். இலங்கம் (லிங்கம்); என்னும் தென்சொல்லை வட சொல்லென்பது, தமிழரது சிவமதத்தை ஆரிய மதம் என்பது போன்றதே.

அப்புலோகிதம்

 அப்புலோகிதம் appulōkidam, பெ. (n.)

   சீமையிலந்தை; foreign jujube, Zizyphus jujuba (சா.அக.);.

அப்புளண்டம்

 அப்புளண்டம் appuḷaṇṭam, பெ. (n.)

   தகரை (மலை.);; fetid cassia (செ.அக);.

   தகரைச் செடி; ringworm plant, Cassia tora (சா.அக.);.

அப்புளாகாசம்

 அப்புளாகாசம் appuḷākācam, பெ. (n.)

   வேரில்லாக் கொத்தான்; princess hair, moss creeper, Cassytha filiformis (சா.அக.);.

அப்புவின் கூறு

 அப்புவின் கூறு appuviṉāṟu, பெ. (n.)

   உடம்பிலிருக்கும் நீர்ப்பாகங்கள், அதாவது சிறுநீர், அரத்தம், சுக்கிலம் (வெள்ளை); முதலியன; the liquid portion of the body, viz., urine, blood, semen, etc. (சா.அக.);.

அப்பூச்சி

 அப்பூச்சி appūcci, பெ. (n.)

   ஒளிந்துநின்று திடுமென்று தோன்றி மகிழ்விக்கும் விளையாட்டு; a game in which one hides and then makes a sudden appearance thus causing a pleasant surprise, bo-peep.

தெ. அப்பச்சி

     [ஒருகா. இராவேளையில் விளக்கு வெளிச்சத்தில் விட்டிற்பூச்சிகள் திடுமென்று தோன்றித் திடுமென்று மறைவதை யொத்த சிறுபிள்ளைகள் விளையாட்டாயிருக்கலாம். ‘அ’ என்பது ஒரு

முன்னொட்டாகவோ (pref); ‘அம்’. என்னும் சொற்றிரியாகவோ இருக்கலாம்.]

அப்பூச்சிகாட்டு-தல்

அப்பூச்சிகாட்டு-தல் appūccikāṭṭudal,    5 செ.கு. வி. (v.i.)

   கண்ணிதழை மடித்துச் சிறு பிள்ளைகளை அச்சுறுத்துதல்; to frighten children by the ghastly look of eyes with eyelids folded inside out.

     “அத்தூதன் அப் பூச்சி காட்டுகின்றான்” (திவ். பெரியாழ். 2. 1; 1);.

     [பூச்சி = அச்சம், அஞ்சத்தக்க வுருவம். ‘அ’ முன்னொட்டு.]

அப்பூடு

 அப்பூடு appūṭu, பெ. (n.)

அப்பொழுதும்:

 then.

     [அப்+பூடு]

அப்பூதி

அப்பூதி appūti, பெ. (n.)

   அப்பூதியடிகள்; name of a canonized Saiva saint.

     “ஒரு நம்பி அப்பூதி” (தேவா. 7 – 39 ; 4);.

அப்பூதியடிகள்

 அப்பூதியடிகள் appūtiyaḍigaḷ, பெ. (n.)

அப்பூதியடிகள் நாயனார் பார்க்க;see appidi-yadigal-nayanar.

அப்பூதியடிகள் நாயனார்

அப்பூதியடிகள் நாயனார் appūtiyaḍigaḷnāyaṉār, பெ. (n.)

   திருநாவுக்கரசு நாயனார் காலத்தவரும், அறுபத்து மூன்று நாயன்மாருள் ஒருவருமான சிவனடியார் (பெரியபு.);; name of a canonized Šaiva saint, contemporary of Tirunavukkaraşu Nayandr, one of the 63 Nayandrs.

     [அப்பூதி + அடிகள் + நாயனார்.]

அப்பை

அப்பை appai, பெ. (n.)

   1. அப்பைக்கோவை பார்க்க;see appai-k-kõvai (பாலவா. 347);.

   2. கொன்றை; common cassia, Cassia fistula (சா.அக.);.

   3. சரக்கொன்றை; Indian laburnum.

   4. கற்கோவை; a plant, Bryonia epigea.

   5. ஒரு சிறு கடல்மீன்; a marine fish, brownish, attaining more than one foot in length, Monocanthus monoceros.

அப்பைக்காய்

அப்பைக்காய் appaikkāy, பெ. (n.)

   கொவ்வைக் காய்; the unripe fruit of a climbing plant, Bryonia (சா.அக.);.

     “அப்பைக்காய் நெய் துவட்ட லாக்கினாள்” (தனிப்பா. தி. 1. பக். 39);.

அப்பைக்கிழங்கு

 அப்பைக்கிழங்கு appaikkiḻṅgu, பெ. (n.)

   அப்பைக்கோவைக்கிழங்கு; the root of a climber, Bryonia rostrata (சா.அக.);.

     [அப்பை + கிழங்கு.]

அப்பைக்கொடி

 அப்பைக்கொடி appaikkoḍi, பெ. (n.)

அப்பைக் கோவை பார்க்க;see appai-k-kövai.

     [அப்பை + கொடி.]

அப்பைக்கொவ்வை

 அப்பைக்கொவ்வை appaikkovvai, பெ. (n.)

அப்பைக்கோவை பார்க்க;see appai-k-kovai.

அப்பைக்கோவை

 அப்பைக்கோவை appaikāvai, பெ. (n.)

   ஒர் இவர்கொடி (மலை.); ; a climber, Bryonia rostrarа.

     [அப்பை + கோவை.]

அப்பைக்கோவைக்கிழங்கு

 அப்பைக்கோவைக்கிழங்கு appaikāvaikkiḻṅgu, பெ. (n.)

அப்பைக்கிழங்கு பார்க்க;see appai-k-kilarigu.

     [அப்பை + கோவை + கிழங்கு.]

அப்பைச்சுருக்கி

 அப்பைச்சுருக்கி appaiccurukki, பெ. (n.)

   சிறு கீரை; a kind of vegetable greens, Amaranthus campestris (சா.அக.);.

     [அப்பை + சுருக்கி.]

அப்பொழுது

அப்பொழுது appoḻudu, கு.வி.எ. (adv.)

   1. அந்தக் காலத்தில், அந்த நேரத்தில்; then, at that time.

     “அப்பொழு தலர்ந்த செந்தா மரையினை வென்ற தம்மா” (கம்பரா. அயோத். கைகேயிசூழ். 112);.

   2. அப்படியானால்; then, if so, in that case.

ம. அப்பொழுது ; க. ஆவொத்து ; தெ. அப்ரொத்து, அப்புடு ; து. ஆபொலே ; பட. ஆக ; பர்., கோண். அப்பொடு ; கொலா. அபுடு ; கை. அடோ ; நா. அபுர்.

     [அ + பொழுது.]

அப்பொழுதை

அப்பொழுதை appoḻudai, கு.பெ.எ. (adj.)

   அந்நேரத்திற்குரிய; of that time.

     “அப்பொழுதைத் தாமரைப்பூக் கண்பாதம்” (திவ். திருவாய். 2.5 ; 4);. அப்பொழுதை நிலைமை சரியாயில்லை (உ.வ.);.

     [அ + பொழுதை.]

அப்பொழுதைக்கு

 அப்பொழுதைக்கு appoḻudaikku, கு.வி.எ. (adv.)

   அந்த நேரத்திற்கு; for that time.

     [அ + பொழுதைக்கு.]

அப்போசுதலன்

 அப்போசுதலன் appōcudalaṉ, பெ. (n.)

   விவிலியத்தி(பைபிளி);ல் காணப்பெறும் கிறித்துவின் தலைமைச் சீடர் பன்னிருவருள் ஒருவர் (Chr.);; Apostle.

     [G. apostolos → த. அப்போசுதலன்.]

அப்போசுதலர்நடபடிகள்

 அப்போசுதலர்நடபடிகள் abbōcudalarnaḍabaḍigaḷ, பெ. (n.)

   அப்போசுதலரின் கிறித்துவ சமயக் கோட்பாடுகள் குறித்து, பைபிளால் அறியப்படும் ஒரு நூல் (Chr.);; name of a book in the Bible, viz., Acts of the Apostles.

     [G. apostolos → த. அப்போசுதலர்.]

அப்போது

அப்போது appōtu, கு.வி.எ. (adv.)

   1. அன்று, அந்த நேரத்தில்; then, at that time.

   2. அப்படியானால்; then, if it be so.

அப்போது நாம் திரும்பி வந்துவிடலாம் (உ.வ.);.

ம. அப்போது ; க., பட. ஆக.

     [அ + பொழுது → போது.]

அப்போதைக்கப்போது

அப்போதைக்கப்போது appōtaikkappōtu, கு.வி.எ. (adv.)

   1. அவ்வக் காலத்தில்; from

 time to time.

   2. அன்றன்று, உடனுக்குடனே; then and there, forthwith.

     [அ + பொழுதைக்கு + அ + பொழுது – அப்பொழுதைக்கப்பொழுது → அப்போதைக்கப்போது.]

அப்போழ்து

 அப்போழ்து appōḻtu, கு.வி.எ. (adv.)

   அன்று, அந்த நேரத்தில்; then, at that time.

ம. அப்போழ்

     [அ + பொழுது – அப்பொழுது → அப்போழ்து. பொழுது → போழ்து.]

அப்ரகம்

 அப்ரகம் apragam, பெ. (n.)

அப்பிரகம் பார்க்க;see appiragam (சா.அக.);.

     [Skt. abhraka → த. அப்ரகம்.]

அப்வாப்

 அப்வாப் apvāp, பெ. (n.)

   நிலத்தீர்வையுடன் ஏற்படுஞ் சில்லறைத் தீர்வை (R.T.);; miscellaneous head of taxation, in addition to the regular land assessment.

த.வ. சில்லறைவரி

     [U. abwab → த. அப்வாப்.]

அமங்கலம்

அமங்கலம் amaṅgalam, பெ. (n.)

   1. நன்மையல்லாத நிகழ்ச்சி; inauspicious occurrence.

   2. சாவு; death.

   3. கைம்மை; widowhood.

     “மங்கலங்களும் அமங்கலமாம்” (காஞ்சிப்பு. அனேகத. 8);.

ம. அமங்கள ; க. அமங்கல ; தெ. அமங்களமு. அமங்கலம் → Skt. amafigala.

     [அல் → அ (எ.ம.முன்.);. அ + மங்கலம் – அமங்கலம்.]

 அமங்கலம் amaṅgalam, பெ. (n.)

   ஆமணக்கு (சங்.அக.);; castor-plant, Ricinus communis.

 அமங்கலம் amaṅgalam, பெ. (n.)

   ஆமணக்கு; castor plant, Ricinus communis (சா.அக.);.

அமங்கலி

 அமங்கலி amaṅgali, பெ. (n.)

   கணவனையிழந்ததனால் தாலியில்லாதவளாகிய கைம்பெண் (பிங்.);; மங்கலி என்பதற்கு எதிர்; widow, as without the tali, opp. to marigali.

     [அல் → அ (எ.ம.முன்.);. மங்கலம் = தாலி. மங்கலம் → மங்கலி = தாலியுடையவள், கணவனொடு வாழ்பவள். அ + மங்கலி – அமங்கலி. “இ” பெ.பா. ஈறு.]

ம. அமங்கலி ; க. அமங்கலெ.

அமங்கலை

அமங்கலை amaṅgalai, பெ. (n.)

அமங்கலி பார்க்க;see a-maigali.

     “கைம்மையே கைனி பூண்ட கலன்கழி மடந்தை யேங்கி விம்மிய விதவை நான்கே அமங்கலை விளங்கு நாமம்” (சூடா. 2; 63);.

     [அ + மங்கலை – அமங்கலை.

     ‘ஐ’ பெ.பா. ஈறு. ஒ.நோ ; ஐயன் → ஐயை, பண்டிதன் → பண்டிதை.]

அமங்கலைநாள்

 அமங்கலைநாள் amaṅgalaināḷ, பெ. (n.)

அமசடக்கம்

அமசடக்கம் amasaḍakkam, பெ. (n.)

   1. மூடுகை; concealing, covering (R.);.

   2. காப்பாற்றுகை; protecting.

   3. அமைதி; quietness.

ம. அமயடக்கம்

     [அமை + அடக்கம் – அமையடக்கம் → அமயடக்கம் → அமசடக்கம்.]

அமசம்

 அமசம் amasam, பெ. (n.)

   நோய்; disease (சா.அக.);.

அமச்சன்

 அமச்சன் amaccaṉ, பெ. (n.)

அமைச்சன் பார்க்க;see amaiccan.

அமச்சு

 அமச்சு amaccu, பெ. (n.)

அமைச்சு பார்க்க;see amaiccu”.

அமஞ்சாக்கி

 அமஞ்சாக்கி amañcākki, பெ. (n.)

   அறந்தாங்கி தாலுக்காவிலுள்ள சிற்றுார்; a village in Arantagi Taluk.

     [ஒருகா.அமண+சாக்கி)

அமஞ்சி

அமஞ்சி amañji, பெ. (n.)

   1. கூலியில்லாமற் செய்யும் வலுக்கட்டாய வேலை; forced unpaid labour.

   2. வீணானது; that which is useless.

   3. போலிவேலைத் தட்டுமுட்டு; trumpery furniture.

ம. அமஞ்சி ; தெ. அமிதி.

அமைந்தபணி பார்க்க;see amainda-pani.

அமஞ்சிபணி

 அமஞ்சிபணி amañjibaṇi, பெ. (n.)

அமைந்த பணி பார்க்க;see amainda-pani.

ம. அமஞ்சிபணி

     [அமைந்தபணி → அமஞ்சிபணி.]

அமஞ்சியாள்

 அமஞ்சியாள் amañjiyāḷ, பெ. (n.)

   கூலியில்லாமல் வலுக்கட்டாய வேலை செய்பவன்; work. man pressed into service without wages, forced and unpaid labourer.

     [அமஞ்சி + ஆள்.]

அமஞ்சிவேலை

 அமஞ்சிவேலை amañjivēlai, பெ. (n.)

   போலி வேலை; shoddy work.

அமடு

அமடு amaḍu, பெ. (n.)

   சிக்குகை; being inveigled, entrapped.

     “மாதரா ரொளிரமளி பீடத்தி லமடுபடு வேனுக்கு” (திருப்பு. 422);.

     [ஒருகா. அமல்தல் = நெருங்குதல். அமல் → அமள் → அமடு.]

அமட்டம்

 அமட்டம் amaṭṭam, பெ. (n.)

அம்மட்டம் பார்க்க;see ammattam.

அமட்டு

அமட்டு amaṭṭu, பெ. (n.)

   1. அச்சுறுத்துகை; threat, menace.

   2. ஏய்ப்பு; wiles, tricks.

ம. அமட்டு

     [அமடு → அமட்டு.]

அமட்டு-தல்

அமட்டு-தல் amaṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. புரளுதல் (வின்.);; to wobble.

   2. நிலைப்படாதசைதல் (சங்.அக.); ; to be unsteady, as a bench on uneven legs.

–, 5 செ.குன்றாவி. (v.t.);

   1. அதட்டி அச்சுறுத்துதல்; to hector, bully, intimidate.

     “ஆராலு மென்னை யமட்ட வொண்ணாது” (திருமந். 2960);.

   2. மயக்குதல்; to overcome, as by sleep.

தூக்கம் வந்து என்னை அமட்டுகிறது (உ.வ.);.

   3. சிக்க வைத்தல் (வின்.);; to inveigle, entrap, ensnare.

ம. அமட்டுக ; க. அமரிசு ; தெ. அதடு.

     [அமடு (த.வி.); – அமட்டு (பி.வி.);]

அமணக்கூத்து

அமணக்கூத்து amaṇakāttu, பெ. (n.)

   1. நாணம் சிறிதுமின்றி ஆடையின்றியாடுங் கூத்து; wanton, naked dance.

   2. கட்டுக்கடங்காச் செயல் (திவ். திருமாலை. 34, வ்யா.);; disorderly, uncontrolled conduct.

     [அமணம் + கூத்து.]

     [Skt. sramana → த. அமண(ம்);.]

குல் → குத்து → கூத்து = பல வகைகளில் கால் குத்திட்டு ஆடுவது.

அமணன்பாழி

அமணன்பாழி amaṇaṉpāḻi, பெ. (n.)

   அமணர் கோயில்; jain temple.

     “அமணன் பாழியிற் சிம்மத்தைக் காட்டி” (ஈடு. 4, 6, 6);.

     [அமணம் + பாழி.]

     [Skt. sramana → த. அமணன்.]

அமணம்

அமணம் amaṇam, பெ. (n.)

   இருபதினாயிரங் கொட்டைப்பாக்கு;   20,000 areca nuts.

     “பதினாயிரங் கொட்டைப் பாக்கா யிருந்தனள் பைந்தொடியே’ (தனிப்பா. தி. 2. பக். 11);.

ம. அவணம்

அமணம் என்பது இருபதினாயிரம் என்னும் எண்ணைக் குறிக்கப் பாக்கு வணிகரால் ஆளப்படும் தொகைப்பெயர். அரையமணம் என்பது அதிற் பாதியாகும். அமணம் என்பது அம்மணம் என்னுஞ் சொல்லின் தொகுத்தலாதலால், அரையமணம் என்னுங் கூட்டுச்சொல் இடுப்பில் ஆடையின்றியிருக்கும் மொட்டைக்கட்டைநிலையென்று வேறொரு பொருளையுந் தரும். அணி கருதியும், ஒருவகை யிடக்கரடக்கல் பற்றியும், பாவாசிரியர் அக் கூட்டுச்சொல்லின் ஒரு பொருளை மற்றொரு பொருளைக் குறிக்குஞ் சொற்றொடரால் வட்டமொழி யணியாகக் (circumlocution or periphrasis); குறித்துள்ளார்.

 அமணம் amaṇam, பெ. (n.)

   1. சமணமதம்; Jainism.

   2. அரையில் ஆடையின்மை; nakedness, nudity, as the characteristic of Jaina ascetics.

     [Skt. sramana → த. அமணம்.]

அமணர்

அமணர் amaṇar, பெ. (n.)

   சமணர் (பெரியபு. திருஞான. 704);; Jains.

     [Skt. sramana → த. அமணர்.]

அமணழித்தோன்

 அமணழித்தோன் amaṇaḻittōṉ, பெ. (n.)

   திருஞானசம்பந்தர் (நாமதீப.);; St. Tirunana-sambandar.

     [அமணம் + அழித்தோன்.]

     [Skt. sramans → த. அமணம்.]

அமணானைப்படு-தல்

அமணானைப்படு-தல் amaṇāṉaippaḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   காமவெறி கொண்டு திரிதல்; to burn with lust.

     ‘களிறு …. அமணானைப் பட்டுத் திரியுமா போலே’ (திவ். இயற். திரு விருத். 15, வியா.);.

     [ஒருகா. கழிகாம முற்று அம்மணமாக மத யானை போல் மதியழிந்து திரிதலைக் குறிக்குந் தொடர்ச்சொல் வினையாக இருக்கலாம்.]

அமணி

அமணி amaṇi, பெ. (n.)

   திருவாடானை வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Tiruvadanai Taluk.

     [ஒருகா அம்+மணி]

 அமணி amaṇi, பெ. (n.)

   தெரு (சிந்தா.நி.204);; street.

     [Skt. amani → த. அமனி.]

அமண்

அமண் amaṇ, பெ. (n.)

   1. சமணமதம்; jainism.

     “வல்லமணாசற” (தேவா. 861, 11);.

   2. சமணர்; Jainas, as a sect.

     “வல்லமண் விடுத்த வேழம்” (திருவிளை. அங்கம். 3);.

   3. அரையில் ஆடையில்லாமை; nakedness, nudity.

     “குவிமுலையார் தம்முன்ன நாணமின்றி …. அமணே நின்றார்” (தேவா. 962, 7);.

   4. வரிக் கூத்து வகை (சிலப். 3, 13, உரை);; a inasquerade dance.

     [Skt. sramana → த. அமண்.]

அமண்டம்

 அமண்டம் amaṇṭam, பெ. (n.)

   ஆமணக்கு (மலை.);; castor-plant (சா.அக.);.

     [Skt. Amanda → த. அமண்டம்.]

அமண்டலம்

 அமண்டலம் amaṇṭalam, பெ. (n.)

   ஆமணக்கு (மலை.);; castor plant.

     [Skt. amanda → த. அமண்டலம்.]

அமண்டலாதி

 அமண்டலாதி amaṇṭalāti, பெ. (n.)

   செங்கடம்பு (சித்.அக.); ; small Indian oak (செ.அக.); — a red species of kadambu tree, Barringtonia acutangula (சா.அக.);.

அமதி

 அமதி amadi, பெ. (n)

   சமையம், காலம்; time, Context.

ம., க. அ.மதி.

     [அமைதல் = பொருந்துதல், நேர்தல். அமை → அமைதி → அமதி. ஒ.நோ.; அமை → அமையம் → அமயம்.]

அமதி’

 அஅன்ன ஆவன்னா aaṉṉaāvaṉṉā, பெ. (n.)

   அரிவரி யென்னும் தமிழ் வண்ணமாலை (குறுங்கணக்கும் நெடுங்கணக்கும்);;  Tamil Alphabet.

   எழுத்துகளைக் கல்லா மக்கள், சிறப்பாகச் சிறுவர் சிறுமியர், எளிதாக ஒலித்துக் கற்கும் பொருட்டு, பண்டைத் தொடக்கப்பள்ளி யாசிரியர் உயிரும் உயிர்மெய்யுமாகிய இருவகைக் குறிலுக்கும்’அன்ன’ச் சாரியையும், இருவகை நெடிலுக்கும் அன்னா’ச் சாரியையும் ஏற்படுத்தினர்;     ‘அஆ’ என்னும் ஈரெழுத்தும் தமிழ் வண்ணமாலையின் முதலெழுத்துகளாதலின், அவை முதற்குறிப்பாகி, அம் முதற்குறிப்பே’அஅன்ன ஆவன்னா’ என்று வண்ணமாலைப் பெயராயிற்று. இது ‘alpha’, ‘beta’ என்னும் கிரேக்க இரு முதலெழுத்துகளும் சேர்ந்து”alphabetum’ என்று இலத்தீனிலும், ‘alphabet’ என்று ஆங்கிலத்திலும், வண்ணமாலைப் பெயராக வழங்குவது போன்றது;

   அ, இ, க, கி என்று ஒரு மாத்திரை யொலிக்குங்குறிலெழுத்துகளை விட்டொலிப்பது, சிறுபிள்ளைகட்குச் சற்று வருத்தமுற மூச்சு வாங்குவதால்,’அஅன்ன’ என்பது”ஆனா” என்றும் இஅன்ன என்பது’ஈனா’ என்றும், மாணாக்க நிலையிலும் பின்னும் ஒலிக்கப்பட்டுவந்தன. இவ்வொலிப்புமுறை குறில்களின் உண்மையான ஒலியளவை உடனே தெரிந்துகொள்ளத் தடையாயிருந்தமையின், இந்நூற்றாண்டுத் தொடக்கத்தில் அரசியற் கல்வித்துறையறிஞர், சாரியையின்றி ஒலிநூன் முறைப்படி அ, ஆ, இ, ஈ,… என்று ஒலித்துப் பயிலும் முறையைப் புகுத்திவிட்டனர். அதனால், இன்று ‘அஆ’ என்பது வண்ணமாலைப் பெயராக வழங்கி வருகின்றது. இது புணர்ச்சியில்’அவ்வா’ என்றாகும்;

அமத்தம்

 அமத்தம் amattam, பெ. (n.)

   வெறியின்மை; sanity, soundness of mind

     [அல் → அ (எ.ம.முன்..); மத்தம் = மத்தியம், வெறி. அ + மத்தம் – அமத்தம்.]

அமத்தாசிகம்

 அமத்தாசிகம் amattācigam, பெ. (n.)

   சுருளி (சித்.அக.); ; iron-wood of Ceylon (செ.அக.);

   — சுருள்பட்டை; red creeper, Ventilago madraspatana (சா.அக.);.

அமத்திரம்

அமத்திரம் amattiram, பெ. (n.)

   1. ஏனம்; a vessel.

   2. வெண்கலம்; bell metal which is a mitture or an alloy of copper and powder.

அமந்தம்

அமந்தம் amandam, பெ. (n.)

   1. மந்தமின்மை, செரிமான நிலை; the state of being free from indigestion or dullness of appetite (சா.அக.);.

   2. சுறுசுறுப்பு; diligence, activity.

   3. விழிப்பு; watchfulness, vigilance, alertness.

   4. வினைத்திறம்; business ability.

   5. வேகம்; vehemence, force.

ம. அமந்தம் ; க. அமந்த ; தெ. அமந்தமு.

     [அல் → அ (எ.ம.முன்.);. மொத்தம் → மத்தம் → மந்தம். அ + மந்தம் – அமந்தம்.]

 அமந்தம் amandam, பெ. (n.)

   நாட்டு வாதுமை மரம்; wild almond myrobalan, Terminalia catappa.

அமந்தலம்

 அமந்தலம் amandalam, பெ. (n.)

   செங்கத்தரி (மூ.அ.);; orbicular-leaved caper shrub (செ.அக.); – false peacock’s foot tree, Niebuhria linearis (சா.அக.);.

அமந்தி

 அமந்தி amandi, பெ. (n.)

   நாட்டு வாதுமை (மூ.அ.);; Indian almond.

     [Fr amande → த. அமந்தி.]

அமனிதம்

 அமனிதம் amaṉidam, பெ. (n.)

   புளியாரை (சித்.அக.);; yellow wood-sorrel (செ.அக.);— sorrel, Oxalis corniculata (சா.அக.);.

அமனைக்கன்னி

 அமனைக்கன்னி amaṉaikkaṉṉi, பெ. (n.)

   காணம்; horse-gram, Dolichos uniflorus alias D. biflorus (சா.அக);.

ஒ.நோ.; அமளைக்கண்ணி

அமம்

அமம் amam, பெ. (n.)

   நோய் (சிந்தா. நி. 190);; disease, illness.

     [Skt. ama → த. அமம்.]

அமயம்

அமயம் amayam, பெ. (n.)

   சமையம்; right time, opportunity, context.

     “ஆனதோ ரமயந் தன்னி லாடின. ரமரர் மாதர்” (கந்தபு. உற்பத். திருக்கல், 72);.

     [அமைதல் = பொருந்துதல், நேர்தல். அமை → அமையம் → அமயம். ஒ.நோ.; நேர் → நேரம்.]

அமர

அமர amara, நி.கா.வி.எ. (inf)

   இருக்க, உட்கார; to sit, be seated.

     “குமரவே ளொருபுடையமர” (கந்தபு. உற்பத். சரவண. 25);.

–, இடை. (part.);

   ஓர் உவமவுருபு (தொல். பொருள். உவம 11, பேரா. உரை);; an adverbial of comparison.

     [அமர் + அ (தி.கா.வி.எ. ஈறு); – அமர.]

அமரகண்டம்

 அமரகண்டம் amaragaṇṭam, பெ. (n.)

   குதிரை வலிப்பு (சீவரட்.); ; a severe type of convulsion or spasm so called from its similarity to the attack in horses.

இது உடம்புவலி, மயக்கம், அசைவின்றிக் கிடத்தல், வியர்த்தல், பல்லை யிளித்தல் முதலிய குணங்களையுடைய ஒரு வலிப்பு நோய் (சா.அக.);.

     [மூலம் தெரியவில்லை. கண்டம் = சாவுக் கேதுவான நிலை.]

அமரகம்

அமரகம் amaragam, பெ. (n.)

போர்க்களம்; battle-field.

     “அமரகத் தாற்றறுக்குங் கல்லாமா” (குறள், 814);.

     [அமர் = போர். அகம் = இடம்.]

அமரகிச்சிலி

 அமரகிச்சிலி amaragiccili, பெ. (n.)

   மஞ்சட் கிச்சிலி; a gold coloured orange (சா.அக.);.

அமரகுணர்

 அமரகுணர் amaraguṇar, பெ. (n.)

   கடுக்காய்ப் பூ (சங்.அக.); ; flower of Chebulic myrobalan,

அமரகுந்தி

 அமரகுந்தி amarakunti, பெ. (n.)

   ஓமலூர் வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Omalur Taluk.

     [அமரன்+குந்தி]

அமரகோசம்

 அமரகோசம் amaraācam, பெ. (n.)

   ஒரு வடமொழி நிகண்டு; a Sanskrit vocabulary compiled by Amarasimhan (சா.அக.);.

     [Skt. amara + kosa → த. அமரகோசம்.]

அமரகோன்

அமரகோன் amaraāṉ, பெ. (n.)

மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்து (1314); திருவாய்ப் பாடி நாட்டவர்.

 Tiruvāyappăg man who lived during māravărma sundarapandian period (1314);.

     [அமர்+கோன்=அமரகோன்]

அமரக்காரன்

அமரக்காரன் amarakkāraṉ, பெ. (n.)

   1. சிற்றரசன் கீழுள்ள படைமறவன்; military retainer of a chief.

   2. ஆயிரங்காலாள்களுக்குத் தலைவன்; commander of thousand foot soldiers.

க. அமர ; தெ. அமரகாடு.

     [அமர் → அமரம். காரம் → காரன் (ஆ.பா. ஈறு);. அமரம் + காரன் – அமரக்காரன்.]

அமரசயம்

 அமரசயம் amarasayam, பெ. (n.)

   இரைக்குடல்; the stomach and the intestines where the food is digested (சா.அக.);.

     [Skt. ama-saya → த. அமரசயம்.]

அமரசிங்கம்

அமரசிங்கம் amarasiṅgam, பெ. (n.)

அமரகோசம் (பி.வி. 42); பார்க்க;see amarakosam. (சா.அக.);.

     [Skt. amara-simha → த. அமரசிங்கம்.]

அமரசிம்மன்

 அமரசிம்மன் amarasimmaṉ, பெ. (n.)

   அமரகோச மென்னும் வடமொழி நிகண்டை இயற்றியவன்; the author of a vocabulary in Sanskrit (சா.அக.);.

     [Skt. amara+simha → த. அமரசிம்மன்.]

அமரசிலை

அமரசிலை amarasilai, பெ. (n.)

   1. ஒருவகைக் கந்தகம்; a variety of sulphur (சா.அக.);.

   2. ஒருவகை வைப்பு நஞ்சு; a kind of prepared arsenic (சா.அக.);.

அமரசிலைக்கந்தகம்

 அமரசிலைக்கந்தகம் amarasilaiggandagam, பெ. (n.)

   ஒருவகை வைப்பு நஞ்சு; a kind of prepared arsenic (சா.அக.);.

அமரடக்கி

 அமரடக்கி amaraṭakki, பெ. (n.)

   நிலக் கோட்டை வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Nilakottai Taluk.

     [அமர்+அடக்கி]

அமரதாரு

அமரதாரு amaratāru, பெ. (n.)

   1. தேவதாரு; deccany deodar, erythroxylon monogynum.

   2. தேட்கொடுக்கி; scorpion plant, Heliotropium indicum (சா.அக.);.

     [Skt. amara + taru → த. அமரதாரு.]

அமரத்துவம்

அமரத்துவம் amarattuvam, பெ. (n.)

   அழிவின்மை (சிந்தா. நி. 213);; indestructibility, immortality.

த.வ. நிலைபேறு.

     [Skt. amara-tva → த. அமரத்துவம்.]

அமரநாயகம்

அமரநாயகம் amaranāyagam, பெ. (n.)

   1. படைத்தலைமை (M.E.R. 36 of 1928-9);; commandership.

   2. படைத் தலைவனுக்கு விடப்பட்ட நிலம் (I.M.P. Tn. 407);; grant of land to the commander of an army.

க. அமர ; தெ. அமரநாயகுடு, அமரமு.

அமரன்

அமரன் amaraṉ, பெ. (n.)

   போர்மறவன்; warrior.

     “அமர னாயி னமைவொடு நிற்கென” (பெருங், உஞ்சைக். 37 ; 202);.

     [அமர் = போர். அமர் → அமரன்.]

 அமரன் amaraṉ, பெ. (n.)

   வித்தமிழ்தை (இந்திரியத்தை);க் கட்டுக்குள் வைத்து ஆள்வோன்; one who controls the semen.

     [அமர்+அன்]

அமரன்வயல்

 அமரன்வயல் amaraṉvayal, பெ. (n.)

   திரு வாடானை வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Tiruvadanai Taluk.

     [அமர்(போர்வீரன்);+வயல்]

அமரபக்கம்

 அமரபக்கம் amarabakkam, பெ. (n.)

   தேய்பிறை (கிருட்டிணபட்சம்);; the dark fortnight.

த.வ. கரும்பக்கம்.

     [அமர(ம்); + பக்கம்.]

     [Skt. apara → த. அமர.]

பக்கு → பக்கம்.

அமரபயங்கரன்

 அமரபயங்கரன் amarapayaṅkaraṉ, பெ. (n.)

   கொங்கு நாட்டு அரசர்களில் ஒருவன்; a king of kongu country.

     [அமா+அ+பயங்கரன்]

அமரபர்த்திரு

அமரபர்த்திரு amarabarttiru, பெ. (n.)

   இந்திரன் (சிந்தா.நி. 188);; Indiran.

     [Skt. amara-bhartu → த. அமரபர்த்திரு.]

அமரபில்லம்

 அமரபில்லம் amarabillam, பெ. (n.)

   கண்ணிமையில் குருதி போற் சிவந்து தசை தடித்துப் பீளை தள்ளிக் கீழிமையை யொட்டிக் கொண்டு, கண்ணொளி மயங்கி நீர் வடியும் ஒரு கண்ணோய்; an eye disease characterised by inflammation of the eyelids, hyperemia of the conjunctiva with a catarhal or muco-purulent discharge, sticking of the eye-lids, defective vision etc., castarhal ophthalmia (சா.அக.);.

த.வ. இமைப்பிசிரி.

அமரபுட்பி

 அமரபுட்பி amarabuṭbi, பெ. (n.)

   ஒரு வகைச் செடி; a plant, Andropogon acicularis (சா.அக.);.

     [Skt. amara+pusp → த. அமரபுட்பி.]

அமரபுட்பிகம்

 அமரபுட்பிகம் amarabuṭbigam, பெ. (n.)

   ஒரு வகைப் பெருஞ்சீரகம்; a kind of anise, Anetheum sowa (சா.அக.);.

     [Skt. amara+puspika → த. அமரபுட்பிகம்.]

அமரமாலை

 அமரமாலை amaramālai, பெ. (n.)

   அமரகோசத்தைச் செய்த நூலாசிரியரே, செய்ததாகக் கருதப்படும் ஒரு வடமொழி அகராதி; the title of a dictionary considered to have been compiled by the same author as of the book known as ‘Amarakosam’ (சா.அக.);.

     [அமர(ம்); + மாலை.]

     [Skt. amara → த. அமரம்.]

அமரமுனிவன்

அமரமுனிவன் amaramuṉivaṉ, பெ. (n.)

   தேவமுனி; divine sage.

     “அமரமுனிவ னகத்தியன் றனாது” (மணிமே. பதிக. 11);.

     [அமர(ம்); + முனிவன்.]

     [Skt. amara → த. அமரம்.]

அமரம்

அமரம் amaram, பெ. (n.)

   கண்சூட்டுநோய் (தைலவ. தைல. 34);; disease of the conjunctival membrane of the eye, conjunctivitis (செ.அக.);

   – ஒருவகைக் கண்ணோய் (சங்.அக.);; a kind of disease of the eye.

     “விழியருக லொடுநீர்க் கம்மலும் அமரமுங் கண்ணோயு மேக வழறலைநோயு மாமையஞ் சிறகாமரோ” (தைலவ. தைல. 34);.

   கண்களின் இறப்பைத்தோலில் குருக்களைப் போலெழுப்பி, அப்பாகத்தை உருவழியச் செய்யும் ஒரு கண்ணோய்; a disease of the conjunctiva attended with the formation of small elevations on the conjunctiva of the lids which results in the deformity of the lids, Granular conjunctivitis or Trachoma (சா.அக.);.

 அமரம் amaram, பெ. (n.)

   1. பண்டைக் காலத்திற் சிற்றரசனால் அமரக்காரருக்கு விடப்பட்ட மானியம்; land or revenue granted in ancient times by a chief to his retainers for military service.

   2. ஆயிரங் காலாள்களை ஆளுகை; command of one thousand foot soldiers.

ம. அமரு ; க. அமர ; தெ. அமரமு.

     [அமர் = போர். அமர் → அமரன் = போர் மறவன். அமரன் → அமரம்.]

 அமரம் amaram, பெ. (n.)

   படகோட்டுந் தண்டு; oar used to steer a boat.

ம. அமரம் ; தெ. அமரமு ; து. அமர.

 அமரம் amaram, பெ. (n.)

   1. நஞ்சுக்கொடி; umbilical cord.

   2. பலவகைப் பூண்டு செடிகளின் பெயர்; Tiaridium indicum, Panicum dactylon, Cocculus cordifolia, Sanseviera roxburghiana, etc. (சா.அக.);.

ம., க. அமர.

 அமரம் amaram, பெ. (n.)

   1. இதளியம் (பாதரசம்);; mercury.

   2. பொன்; gold.

   3. ஒரு கிரந்த நிகண்டு; a thesaurus in Sanskrit.

   4. வெண்மை; whiteness.

   5. அழிவின்மை; immortality (சா.அக.);.

     [Skt. amara → த. அமரம்.]

அமரம்பால்

 அமரம்பால் amarambāl, பெ. (n.)

   பனங்கள்; palmyra toddy (சா.அக.);.

அமரம்பிரிதற்கண்

 அமரம்பிரிதற்கண் amarambiridaṟkaṇ, பெ. (n.)

   ஒருவகைக் கண்ணோய்; an eye disease (சா. அக.);.

அமரர்

 அமரர் amarar, பெ. (n.)

   பகைவர் (பிங்.); ; foes, enemies.

அமரார் பார்க்க;see amarar.

     [அமர்தல் = பொருந்துதல். அமரார் = பொருந்தாதவர், பகைவர். ஒ.நோ ; ஒன்றார், ஒன்னார், நண்ணார். துன்னார் = பொருந்தாதவர், பகைவர். அமரார் → அமரர்.]

அமரர்கற்பம்

 அமரர்கற்பம் amararkaṟpam, பெ. (n.)

   வானுலுகம் (R.);; heaven.

     [அமரர் + கற்பம்.]

     [Skt. amara → த. அமரர்.]

கல் → கல்பம் → கற்பம்.

அமரர்கோன்

அமரர்கோன் amararāṉ, பெ. (n.)

   இந்திரன் (திவ். திருவாய். 10, 2, 6);; Indran as king of gods.

த.வ. தேவர்தலைவன், அமரர்பதி.

     [அமரர் + கோன்.]

     [Skt. amara → த. அமரர்.]

கோ → கோவன் → கோன் = தலைவன், அரசன்.

அமரர்பதி

அமரர்பதி1 amararpadi, பெ. (n.)

   இந்திரன் (பிங்.);; Indran, as lord of gods.

     [Skt. amara+pati → த. அமரர்பதி.]

 அமரர்பதி2 amararpadi, பெ. (n.)

   தேவர் உலகம்; Svargam, as the abode of gods.

த.வ. வானவருலகம், துறக்கவுலகம்.

     [அமரர் + பதி.]

     [Skt. amara → த. அமரர்.]

அமரர்வணங்குங்கன்னி

 அமரர்வணங்குங்கன்னி amararvaṇaṅguṅgaṉṉi, பெ. (n.)

   இந்திர பாடாணம்; the poisonous arsenical compound of zinc.

அமரலோகம்

அமரலோகம் amaralōkam, பெ. (n.)

   தேவர் உலகம் (தேவா. 264,11);; world of gods.

த.வ. புத்தேளுலகு.

     [Skt. amara + loka → த. அமரலோகம்.]

த. உலகம் → Skt. loka.

உல் → உலவு → உலகு → உலகம்.

உலகம் என்னும் சொல்லிலுள்ள பெருமைப் பொருளின் பின்னொட்டாகிய

     “அம்” என்னும் ஈறு. சிறப்பாகத் தமிழுக்கே உரியது. (ஒ.நோ.); கம்பு → கம்பம். அரங்கு → அரங்கம். நிலை → நிலையம். நகர் → நகரம்.

     “அம்” ஈறு கெட்டு வழங்குவது வடமொழியின் இயல்பு

     (ஒ.நோ.); த. அம்பலம் → Skt. அம்பல.

த. முகம் → Skt. முக.

வடமொழியாளர் காட்டும் மூலம்

     “லோக்” என்பதாகும். இச்சொல்

     “பார்” என்னும் பொருண்மைத்து. இச்சொல்

     “look” என்னும் ஆங்கிலச் சொல்லோடு தொடர்புடையது. மேலும், இச்சொல்

     “நோக்கு” என்னும் தமிழ்ச்சொல்லினின்று முகிழ்த்த தென்பார் பாவாணர். சுற்றி வருவது, உருண்டையானது மக்கள் என்னும் பொருண்மையே அடிப்படையானது. உலகம் என்னும் சொல் பொதுமக்களைக் குறிப்பது பெருவழக்கு.

எ-கா. உலகம் என்ன சொல்லும் ?

ஓ.நோ.:- L. vulgus (volgus);, the people, common people, the great multitude, the public, L. vulgaris, E. vulgar, characteristic of the Common people.

அமரல்

அமரல் amaral, பெ. (n.)

   1. நெருக்கம் (பொதி. நி.);; closeness, density.

   2. மிகுதி (பொதி.நி.); ; abundance, excess.

   3. பொலிவு (திவா.); ; fertility, luxuriance, prosperity.

   4. பீடு, பெருமை, சிறப்பு (பொதி.நி.);; excellence, grandeur.

     [அமர்தல் = நெருங்குதல், பொருந்துதல். அமர் → அமரல்.]

அமரவல்லரி

 அமரவல்லரி amaravallari, பெ. (n.)

   கொத்தான்; a plant, Cassytha filiformis (சா.அக.);.

அமரவல்லி

 அமரவல்லி amaravalli, பெ. (n.)

அமரவல்லரி பார்க்க;see amara-vallari (சா.அக.);.

அமராசயம்

அமராசயம் amarācayam, பெ. (n.)

   1. இரைப்பை (வின்.);; stomach.

   2. கருப்பை (சிந்தா. நி. 188);; womb.

     [Skt. ama-aya → த. அமராசயம்.]

அமராஞ்சனம்

 அமராஞ்சனம் amarāñjaṉam, பெ. (n.)

   சந்தன மரம் (சித்.அக.);; sandalwood tree.

     [Skt. amara+anjana → த. அமராஞ்சனம்.]

அமராடு-தல்

அமராடு-தல் amarāṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   போர் செய்தல்; to fight, carry on war.

     “அந்தண் சேய்களுக் காயம ராடுநின் மைந்தன் றானு மடிந்தனன்” (சேதுபு. இராமதீ. 54);.

     [அமர் = போர். அமர் + ஆடு (துணை வினை);.]

அமராபகை

அமராபகை amarāpagai, பெ. (n.)

   பால்வீதி (ஆகாய கங்கை); (சிந்தா.நி.193);; the milky way.

     [Skt. amara+apa=ga → த. அமராபகை.]

அமராபதி

அமராபதி amarāpadi, பெ. (n.)

   இந்திரன் நகர் (சீவக.2335);; names of Indira’s capital.

     [Skt. amarapati → த. அமராபதி.]

அமராபரணன்

 அமராபரணன் amarāparaṇaṉ, பெ. (n.)

   போரையே அணிகலமாகக் கொண்டவன்; warrior, one who regards warfare as his decoration.

     “அருங்கலை வினோத னமரா பரணன்” (நன். சிறப்புப்பா.);.

     [அமர் + வ. ஆபரணன். Skt. äbharaya → த. ஆபரணம் = அணிகலம். ஆபரணம் → ஆபரணன்.

     ‘அன்’ ஆ.பா. ஈறு.]

அமராபுரம்

அமராபுரம் amarāpuram, பெ. (n.)

   அமராவதி; Indra’s capital, Amaravati

     “உடம்பராளு மமராபுரந்தவிர” (தக்கயாகப்.17);.

     [அமரா + புரம்.]

     [Skt. amara → த. அமரா.]

புர் → புரை = உயர்வு. புர் → புரம் = உயர்ந்தமனை.

அமரார்

அமரார் amarār, பெ. (n.)

   பகைவர்; foes, as not agreeing or associating cordially.

     “அமராரை வெல்ல வல்லான் வரோதயன் வாணன்” (தஞ்சைவா. 8);.

     [அமர்தல் = பொருந்துதல். அமர் → அமரார் = பொருந்தாதவர்.]

அமரி

அமரி amari, பெ. (n.)

   சிறுநீர் (பிங்.); ; urine.

ம. அமரி

     [உவரி → உமரி → அமரி.]

 அமரி amari, பெ. (n.)

   போர்த்தெய்வமான காளி (பிங்.); ; Kali, as war goddess.

     “பலர் தொழும் அமரி” (சிலப். 12 ; 66-7);.

ம., க., தெ. அமரி.

     [அமர் = போர். அமர் → அமரி.]

பண்டைத் தமிழகத்தில், வெட்சிமறவர் நிரைகவரச் செல்லு முன்பும், படைமறவர் போர்க்களத்திற்குச் செல்லு முன்பும் கொற்றவையென்னும் வெற்றித்தெய்வமாகிய காளிக்குக் காவு கொடுப்பது வழக்கம்.

     “மறங்கடைக் கூட்டிய துடிநிலை சிறந்த கொற்றவை நிலையும் அத்திணைப் புறனே” (தொல். பொருள். புறத். 4);.

 அமரி amari, பெ. (n.)

   கற்றாழை (மலை.);; aloe.

     [ஒருகா. குமரி → அமரி. கற்றாழைக்குக் குமரி என்றொரு பெயருமுண்டு. குமரி யென்பது காளிக்கும் பெயராதலால், அவளின் மறுபெயரான அமரி யென்னுஞ் சொல் கற்றாழையைக் குறிக்க ஆளப்பட்டிருக்கலாம்.]

 அமரி amari, பெ. (n.)

   1. நஞ்சு; poison.

   2. பேய்ப் புல்; a kind of poisonous grass (சா.அக.);.

 அமரி amari, பெ. (n.)

   காயகற்பம்; a medicine which promotes health and bestows longevity (சா.அக.);.

த.வ. வாணாள்மருந்து.

     [Skt. amara → த. அமரி.]

அமரிக்கை

 அமரிக்கை amarikkai, ப.பெ. (abs.n.)

   அமைதி, அடக்கம் (உ.வ.); ; quietness, stillness, tranquillity, calmness (com.u.);.

ம. அமர்ச்ச ; க. அமக ; தெ. அமரிக ; து. அமருனி.

     [அமர்தல் = அமைதல், அடங்குதல், அமைதியாயிருத்தல். அமர் → அமர்கை → அமருகை → அமரிக்கை. ஒ.நோ ; கோர் → கோரு → கோருகை → கோரிக்கை. எண் → எண்ணு → எண்ணுகை → எண்ணிக்கை.]

அமரிடணம்

அமரிடணம் amariḍaṇam, பெ. (n.)

   சினம் (சிந்தா. நி. 211);; anger.

     [Skt. amarsana → த. அமரிடனம்.]

அமரிதம்

 அமரிதம் amaridam, பெ. (n.)

   கடுக்காய் (மலை.);; chebulic myrobalan.

     [Skt. amrta → த. அமரிதம்.]

அமரிதாவிகம்

 அமரிதாவிகம் amaritāvigam, பெ. (n.)

   கையாந்தகரை (சித். அக.); ; a plant growing in damp places (செ.அக.);—செங்கரிப்பான் அல்லது சிவப்புக் கரிசலை ; a red variety of a plant, Euclypta prostrata (சா.அக.);.

அமரிப்புல்

 அமரிப்புல் amarippul, பெ. (n.)

   ஒட்டுப்புல் (சித்.அக.);; sticking grass.

     [அமர்தல் = பொருந்துதல், ஒட்டுதல். அமர் → அமரி. அமரி + புல்.]

அமரிப்பூகம்

 அமரிப்பூகம் amarippūkam, பெ.. (n.)

   செங்கரந்தை (சித்.அக.); ; red basil, Sphoeranthes.

அமரிய

 அமரிய amariya, பெ.எ. (adj.)

   பொருத; that which fought.

     “அமரிய சேனை” (சங்.அக.);

     [அமர்த்தல் = மாறுபடுதல், பொருதல், அமர் → அமரி → அமரிய.]

அமரியம்

அமரியம் amariyam, பெ. (n.)

   1. குருத்து (மலை.);; species of atlantia (செ.அக.);

   — குருந்தமரம்; wild lime tree, Atlantia missionis (சா.அக.);.

   2. சண்பகம்; champak.

   3. சண்பகப்பூ; flower of tulip tree, Michelia champaca (சா.அக.);.

அமரியுப்பு

 அமரியுப்பு amariyuppu, பெ. (n.)

   சிறுநீருப்பு; salt taken from urine.

     [அமரி = சிறுநீர். அமரி + உப்பு.]

அமரி பார்க்க;see amari”.

அமரியோன்

அமரியோன் amariyōṉ, பெ. (n.)

   போர்மறவன்; warrior.

     “அமரி யோர்களொ ரைம்பது வெள்ளத்தர்” (கந்தபு. மகேந். காவலா. 15);.

     [அமர்தல் = பொருதல். அமர் → அமரியவன் → அமரியான் → அமரியோன் (ஆ.பா.); – அமரியோர் (ப.பா.);.]

அமரிறை

அமரிறை amariṟai, பெ. (n.)

   வானவர், தலைவன், இந்திரன்; Indran.

     “அமரிறை யருள்வகை” (பெருங்.வத்தவ. 5, 76);.

     [அமர் + இறை.]

     [Skt. amara → த. அமர்.]

இறு → இறு-த்தல் = தங்குதல் இறு → இறை.

அமருடம்

அமருடம் amaruḍam, பெ. (n.)

   1. சினம்; anger.

   2. பொறுமையின்மை; impatience.

     [Skt. amarsa → த. அமருடம்.]

அமருலகம்

அமருலகம் amarulagam, பெ. (n.)

   வானுலகம் (திவ். பெரியதி. 2, 2, 10);; svargam.

     [அமர் + உலகம்.]

     [Skt. amara → த. அமர்.]

அமரேசன்

அமரேசன் amarēcaṉ, பெ. (n.)

   1. இந்திரன் (கந்தபு.தெய்வ.19);; Indiran.

   2. வியாழன் (விதான. குணா.37);; Jupiter, as preceptor of gods.

     [Skt. amara + isa → த. அமரேசன்.]

அமரேசம்

அமரேசம் amarēcam, பெ. (n.)

   குய்யாட்டக புவனத்து ளொன்று (சி.போ.பா.2, 3 பக். 213);;     [Skt. amara + isa → த. அமரேசம்.]

அமரை

அமரை amarai, பெ. (n.)

   1. தூண்; pillar.

   2. அறுகம்புல்; durva grass.

   3. சீந்தல்; gulancha (சா.அக);.

   4. அறுகு; panic grass, Cynodon dactylon.

   5. கருப்பை; the uterus of a female.

   6. கொப்பூழ்க்கொடி; the umbilical cord (சா.அக.);.

 அமரை amarai, பெ. (n.)

   1. அமராவதி; Amarāvadi.

   2. தூண்; pillar.

   3. அறுகம்புல்; durva grass.

   4. சீந்தில்; gulancha.

     [Skt. amara → த. அமரை.]

அமரோசை

அமரோசை amarōcai, பெ. (n.)

     “அத்தகைமை யாரோசை யமரோசை களினமைத்தார்” (பெரியபு. ஆனாய. 24);.

     [அம்முதல் = அமுங்குதல். அம் → அமர் → அமர்தல் = அமைதல். அடங்குதல், தாழ்தல். அமர் + ஓசை.]

 அமரோசை amarōcai, பெ. (n.)

   ஒருவகையான சுரநிரல்; a musical fluctuation.

     [அமர்+ஒசை]

அமரோர்

அமரோர் amarōr, பெ. (n.)

   அமரர் (திருப்பு. 518);; immortals, devas.

த.வ. வானோர்.

     [Skt. amara → த. அமரோர்.]

அமர்

அமர் amar, பெ. (n.)

   1. விருப்பம், அன்பு, காதல்; desire, wish, love.

     “வாலெயிற் றமர் நகை” (ஐங்குறு. 198);.

   2. போர் (சூடா.);; battle, war.

     “பூழி புனைந்தவர் பாலகனோ வமர்புரி வானே” (கந்தபு. யுத்த வரவுகே. 13);.

   3. போர்க்களம்; battle-field.

     “அஞ்சுவரு தானை யமரென்னு நீள்வயலுள்” (பு. வெ. 8; 5);.

   4. கோட்டைமதில் (வின்.); ; wall around a fort, battlement, rampart.

   5. வெறி; fury, rage, passion (சா.அக.);.

   6. நோய்க்கடுமை; virulency of a disease.

   7. காய்ச்சலின் மும்முரம்; the acme of fever (சா.அக.);.

 L. amo, tô love from inclination or passion, amo-amor, love, Cupid (C.L.D.);. E. amour, n., a Iove affair; F. =love’ fr. L. amorem, acc. of amor, =love’ fr. amare,

     ‘to love’ (K.C.E.D. E.L.);.

     [உம் → அம் → அமல் → அமர்.]

அமர்தல் = பொருந்துதல். பொருந்துதல் என்பது கூடுதல், ஒன்றாதல் என இருதிறப்படும். பல பொருள்கள் நெருங்கியிருத்தல் கூடுதல்; பல பொருள்கள் ஒன்றாய் இணைந்து விடுதல் ஒன்றுதல்.

போர்க்களத்தில் இரு பகைப்படைகள் கலத்தல் கூடுதல்; இருவரின் அல்லது பலரின் உள்ளங்கலத்தல் ஒன்றுதல். இவ்விருதிறக் கருத்தினால், அமர் என்னுஞ் சொல் விருப்பத்தையும் போரையுங் குறித்தது.

ஒ.நோ.; பொருதல் = பொருந்துதல், போர் செய்தல். பொரு → போர். அல்லுதல் =

பொருந்துதல். அல் + பு – அன்பு (உளம் பொருந்திய நேயம்);.

வெறி, மும்முரம் என்பன போர்த்தொழிற் குரிய குணங்கள்.

போரும் அன்பும் முற்றும் முரண்பட்டவையாயினும், மூலச்சொல்லும் மூலக்கருத்தும் ஒன்றாதல்பற்றி, இருபொருட் சொற்களும் ஒரே உருப்படியிற் கூறப்பட்டன என அறிக.

ஒ.நோ.; சமம் = ஒப்பு, போர். பொருதல் = ஒத்தல், போர்செய்தல்.

அமர் என்பது சமர் என்பதன் திரிபன்று ; சமர் என்பதே அமர் என்பதன் முதன்மிகையான திரிபு. ஒ.நோ.; அமை → சமை.

சமர் என்னும் உருப்படியில் இது விரிவாக விளக்கப்படும்.

அமர்-தல்

அமர்-தல் amartal,    2 செ.கு.வி. (v.i.)

   1. இருத்தல்; to abide, be seated, remain.

     “திருப்பரங் குன்றமர் சேயைப் போற்றுவோம்” (கந்தபு. கடவுள்வா. 12);.

   2. அமைதியாதல்; to become still or tranquil.

காற்றுமர்ந்தது (உ.வ.);

   3. இளைப்பாறுதல்; to rest, repose.

   4. படிதல்; to settle, be deposited, as a sediment, become close and hard, as sand by rain.

   5. பொருந்துதல்; to rest upon, as a javelin on the person.

     “தன்னம ரொள்வாளென் கைதந்தான்” (பு. வெ. 4;5);.

   6. பொலிதல் (திவா.);; to flourish, to be abundant.

   7. விளக்கணைதல்; to be extinguished, as a lamp.

     ‘விளக்கானது……காற்றினால் அமருமா போலே’ (குருபரம். 305);.

   8. ஏற்றதாதல்; to be suitable.

குலத்துக் கமர்ந்த தொழில் (உ.வ.);.

   9. திட்டமாதல்; to be settled, as an affair, to be engaged, as a house.

   10. வேலையிற் சேர்தல்; to join duty, to be established in a work.

வேலையில் அமர்ந்தான் (உ.வ.);.

   11. மகிழ்தல்; to be glad, to rejoice, to be delighted.

     “அகனமர்ந் தீதலி னன்றே” (குறள், 92);.

   12. உள்ளங்கிளர்ந்திருத்தல், இன்முகமாயிருத்தல்; to be cheerful.

     “முகனமர்ந்து இன்சொலனாகப் பெறின்” (குறள், 92);.

அமர்-த்தல்

அமர்-த்தல் amarttal,    4 செ.கு.வி. (v.i.)

   பொருதல், மாறுபடுதல்; to be at strife.

     “பேதைக் கமர்த்தன கண்” (குறள், 1084);.

ம. அமருக; க. அமர் ; தெ. அமரு.

அமர்அடக்கி

 அமர்அடக்கி amaraṭakki, பெ. (n.)

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஓர் ஊர்.

 name of the village in Tanjavur district.

     [அமர்+அடக்கி]

உள்நாட்டுக் கலகத்தை ஒடுகக்கூடிய ஒரு வீரன் “அமர்அடக்கி” என்றுஅழைக்கப்பட்டான். அவனுடைய பெயராலேயே இவ்வூர் வழங்கப்பட்டது.

அமர்கொடு-த்தல்

அமர்கொடு-த்தல் amarkoḍuttal,    4 செ.கு.வி. (v.i.)

   பொருதல்; to give battle, fight, wage war against.

     “கலுழனோ டெதிர்மலைந் தமர் கொடுத் தணர்களால்” (உபதேசகா. சூராதி. 22);.

அமர்க்கம்

 அமர்க்கம் amarkkam, பெ. (n.)

   எருக்கு; a milky shrub, giant swallow-wort, Calotropis gigantea.

அமர்க்களம்

அமர்க்களம் amarkkaḷam, பெ. (n.)

   1. போர்க் களம்; battle-field.

     “இடைந்தி லாவமர்க் களத்திடை” (இரகு. திக்கு. 172);.

   2. குழம்பிய ஆரவாரம்; confused noise, stir, bustle, as at a battle-field.

ம. அமர்க்களம் ; க. அமக்கள.

     [அம் → அமர் + களம் (வயல், நிலம், இடம்); – அமர்க்களம்.]

அமக்களம் என்பது கொச்சை வடிவம்.

அமர்த்த

அமர்த்த amartta, பெ.எ. (adj.)

   1. பொருந்திய; befitting, suitable.

   2. மாறுபட்ட; opposed in character, inconsistent.

   3. விரும்பிய; amorous (சங்.அக.);.

     [அமர் → அமர்த்த.]

அமர்த்தன்

 அமர்த்தன் amarttaṉ, பெ. (n.)

   திறமையில்லாதவன்; incapable person.

     “அமர்த்தனுக்கும் காணி வேண்டாம், சமர்த்தனுக்கும் காணி வேண்டாம்”.

     [Skt. a-samartha → த. அமர்த்தன்.]

அமர்த்திக்கை

 அமர்த்திக்கை amarttikkai, பெ. (n.)

   வீண் பெருமை பாராட்டுகை (இ.வ.);; giving oneself airs, being vainglorious (Loc.);.

     [அமர்த்து → அமர்த்தி + கை (தொ.பெ. ஈறு); – அமர்த்திக்கை.]

அமர்த்து-தல்

அமர்த்து-தல் amarddudal,    2 பி.வி. (v.caus.)

   1. அமைதியாயிருக்கச் செய்தல்; to make quiet, tranquilize.

   2. அடக்குதல்; to restrain.

   3. திட்டப்படுத்துதல்; to engage as, a house, a servant.

குடியிருக்க வீடமர்த்திவிட்டான் (உ.வ.);.

   4. நிலைநிறுத்துதல்; to establish, as one in life.

   5. இருத்துதல்; to seat.

   6. குடியிருக்கச் செய்தல்; to make one settle down.

–, 5 செ.கு.வி. (v.i.);

   பெருமிதம்பட நடித்தல்; to pose, affect greatness.

     “அமர்த்துத லிவ்வளவு வேணுமடி” (கவிகுஞ். 34);.

க. அமரிசு; தெ. அமர்ச்சு; து. அமருனி.

     [அமர் + து (பி.வி. ஈறு); – அமர்த்து.]

அமர்நீதிநாயனார்

அமர்நீதிநாயனார் amarnītināyaṉār, பெ. (n.)

   சிவனடியாரான அறுபத்துமூன்று நாயன்மாருள் ஒருவர்; name of a canonized Saiva saint, one of 63 (பெரியபு.);.

     [அமர் + Skt. niti + நாயனார்.]

அமர்ந்ததிருக்கோலப்படிமம்

அமர்ந்ததிருக்கோலப்படிமம் amarndadirukālappaḍimam, பெ. (n.)

   திருமாலின் இருந்த திருக்கோலவுருவம்; image of Tirumal (Vişņu); in the sitting posture.

     “ராஜச உயரத்தை அமர்ந்த திருக்கோலப் படிமங்கட்கும்……… உரியதாகத் தெரிந்தெடுத்தல் வேண்டும்’ (சி. செ. பக். 19);.

     [அமர் → அமர்ந்த (இ.கா.பெ.எ.); + திரு + கோலம் + படிமம். படி → படிமை → படிமம்.]

அமர்ந்ததிருக்கோலம்

 அமர்ந்ததிருக்கோலம் amarndadirukālam, பெ. (n.)

   திருமாலின் இருந்த திருக்கோலம்; the sitting posture of Tirumal (Visnu);.

அமர்ந்ததிருக்கோலப்படிமம் பார்க்க;see amarnda-tiru-k-köla-p-padimam.

அமர்ந்ததிருமேனி

அமர்ந்ததிருமேனி amarndadirumēṉi, பெ. (n.)

   திருமாலின் இருந்த திருக்கோலம் (சி. செ. பக். 22);; the image of Tirumal (Vişņu); in the sitting posture.

     [அமர் → அமர்ந்த (இ.கா.பெ.எ.); + திரு + மேனி. மேல் → (மேலி); → மேனி.]

அமர்ந்தநிலை

அமர்ந்தநிலை amarndanilai, பெ. (n.)

   இருந்த நிலை (சி.செ.பக்.138); ; sitting posture.

     [அமர் → அமர்ந்த (இ.கா.பெ.எ.); + நிலை. நில் → நிலை.

     ‘ஐ’ தொ.பெ. ஈறு.]

அமர்வு

அமர்வு amarvu, பெ. (n.)

   இருப்பிடம்; abode.

     “அரிபுருடோத்தமனமர்வு” (திவ். பெரியாழ். 4.7 ; 8);.

     [அமர் + வு (தொ.பெ. ஈறு); – அமர்வு.]

 அமர்வு amarvu, பெ. (n.)

   குறிப்பிட்ட செயலாற்றும் காலப்பகுதி; session, sitting,

கருத்தரங்கின் முதல் அமர்வில் என் கட்டுரையைப் படித்துவிட்டேன்.

     [அமர்+அமர்வு]

அமர்வு அடக்கம்

அமர்வு அடக்கம் amarvuaḍakkam, பெ.(n.)

   இறந்த துறவி முதலியோரை அமரவைத்துப் புதைத்தல் (சமாதியில் வைத்தல்);; burrying in a sullug posture, as the remains of an ascetic.

   2. கேடு செய்தல்; crushing out utterly.

     [அமர்வு+அடக்கம்]

அமலகமலம்

அமலகமலம் amalagamalam, பெ. (n.)

   ஆனீர் (கோமூத்திரம்); (சிந்தா.நி.189);; cow’s urine.

த.வ. கோமியம், ஆனுச்சை.

     [Skt. amala+kamala → த. அமலகமலம்.]

அமலகம்

அமலகம்1 amalagam, பெ. (n.)

   நெல்லி (மலை.);; emblic myrobalan.

     [Skt. åmalaka → த. அமலகம்.]

 அமலகம்2 amalagam, பெ. (n.)

   அருநெல்லி (சித்.அக.);; a species of gooseberry tree.

     [Skt. amalaka → த. அமலகம்.]

 அமலகம்3 amalagam, பெ. (n.)

   1. புளிய மரம்; tamarind tree, Tamarindus indicus.

   2. பித்தத்தால் ஏற்படும் வாய்ப்புளிப்பு; sour taste in the mouth from billiousness.

   3. வயிற்றுப் புளிப்பு; acidity of the stomach (from indigestion);.

   4. ஒரு செடி; a plant, Artocarpus lakuca.

   5. புளியாரை; woodsorrel, Oxalis Corniculata (சா.அக.);.

த.வ. அம்புளி.

     [Skt. amalaka → த. அமலகம்.]

புளியமரத்துக்கு அம்புளி என்னம் பெயருண்டு. சில வகை புளியம்பழம் சற்றே இனிக்கும் தன்மை நோக்கி அம்புளி எனவும் தீம்புளி எனவும் தமிழில் வழங்கப்படும். அம்புளி எனும் சொல் வடமொழியில் ஆமலக-ஆமல-அமல என்றெல்லாம் திரிபுற்றது. இது வடமொழி தமிழிலிருந்து பெற்ற கடன்சொல். புளிப்புச் சுவைநோக்கி நெல்லியையும் குறித்தது.

அமலகவடகம்

 அமலகவடகம் amalagavaḍagam, பெ. (n.)

   நெல்லிக்காய் வடகம்; a kind of dried cake of gooseberry (சா.அக.);.

     [அமலகம் + வடகம்.]

     [Skt. åmalaka → த. அமலகம்.]

அமலகாண்டம்

 அமலகாண்டம் amalakāṇṭam, பெ. (n.)

   ஒரு பூடு; a plant (unidentified); (சா.அக.);.

அமலகேசரம்

 அமலகேசரம் amalaācaram, பெ. (n.)

   நாரத்தை மரம்; citron tree, Citrus aurantium (சா.அக.);.

அமலசம்பீரம்

 அமலசம்பீரம் amalasambīram, பெ. (n.)

   எலுமிச்சை; lime tree, Citrus medica (சா.அக.);.

     [Skt. amalaka+campira → த. அமலசம்பீரம்.]

அமலசாகம்

 அமலசாகம் amalacākam, பெ. (n.)

   ஒரு செடி; a kind of sorrel (potherb); (சா.அக.);.

அமலசாந்தம்

அமலசாந்தம் amalacāndam, பெ. (n.)

   1. சுண்ணாம்பு; lime or slaked like.

   2. மாட்டுச் சாணி; cow’s dung.

அமலசாரம்

அமலசாரம் amalacāram, பெ. (n.)

   1. எலுமிச்சை; lime.

   2 ஓர் ஆரைச் செடி; a kind of sorrel.

   3. வடித்த கஞ்சிக் காடி; fermented rice water (சா.அக.);.

     [அமலம் + சாரம்.]

     [Skt. aamlaka → த. அமலகம்.]

அமலசுக்கிரம்

 அமலசுக்கிரம் amalasukkiram, பெ. (n.)

   ஒரு விலாரிச் செடி; a kind of sorrel plant (சா.அக.);.

அமலசூடம்

 அமலசூடம் amalacūṭam, பெ. (n.)

அமலசுக்கிரம் பார்க்க;see amala-sukkiram (சா.அக.);.

அமலதிக்தகசாயம்

 அமலதிக்தகசாயம் amaladigdagacāyam, பெ. (n.)

   துவர்ப்பு, கைப்பு, புளிப்பு இவை சேர்ந்த மருந்து நீர் (கசாயம்);; a decoction of astringent, bitter and sour drugs (சா.அக.);.

அமலத்திரவம்

 அமலத்திரவம் amalattiravam, பெ. (n.)

   புளிக்க வைத்த பழச்சாறு; acid or femented juice of fruits (சா.று.);.

     [Skt. amalaka+drava → த. அமலத்திரவம்.]

அமலநாயகம்

 அமலநாயகம் amalanāyagam, பெ. (n.)

   புளியாரை; wood sorrel, Oxalis corniculata (சா.அக.);.

அமலநிசா

 அமலநிசா amalanicā, பெ. (n.)

   சிச்சலிக் கிழங்கு; the root of a plant, Curcuma zerum (சா.அக.);.

அமலநிம்பூரம்

 அமலநிம்பூரம் amalanimbūram, பெ. (n.)

   எலுமிச்சை; lime-citrusmedica (சா.அக.);.

அமலந்தை

 அமலந்தை amalandai, பெ. (n.)

   புளிப்பு; sourness (சா.அக.);.

அமலனாதிப்பிரான்

 அமலனாதிப்பிரான் amalaṉātippirāṉ, பெ. (n.)

     ‘அமல னாதிப் பிரான்’ என்று தொடங்கும் திருப்பாணாழ்வார் பதிகம், நாலாயிரத் தெய்வப் பனுவலுள் (திவ்வியப் பிரபந்தத்துள்); ஒன்று;

 a division of Tivviyaprabandham.

     [அல் → அ (எ.ம.முன்.); + மலம் (குற்றம்); → மலன் (குற்றமுற்றவன்); – அமலன் = குற்றமற்றவன். வ. ஆதி = முதல். பெருமகன் → பெருமான் → பிரான். அமலனாதிப்பிரான் = குற்றமற்றவனும் உலக முதல்வனும் பெருமானுமான இறைவன், திருமால்.]

அமலன்

அமலன்1 amalaṉ, பெ. (n.)

   1. மாசிலன், மலம் நீங்கினவன்; one who is immaculate, freed from impurities, has attained liberation.

   2. கடவுள்; the Supreme Being, as immaculate.

த.வ. மாசிலான்.

     [Skt. a-mala → த. அமலன்.]

 அமலன்2 amalaṉ, பெ. (n.)

   கடுக்காய்; Indian gall-nut, Terminalia chebula (சா.அக.);.

அமலபஞ்சகம்

 அமலபஞ்சகம் amalabañjagam, பெ. (n.)

   ஐந்து வகைப் புளித்த காய், பழங்களின் சாறு; a mixture of the juices of five kinds of sour and unripe fruits (சா.அக.);.

அமலபத்திரை

 அமலபத்திரை amalabattirai, பெ. (n.)

   புளியாரை முதலிய பூடுகள்; oxalis and other plants (சா.அக.);.

அமலபனசம்

 அமலபனசம் amalabaṉasam, பெ. (n.)

   ஈரப்பலா; monkey jack tree, Artocarpus lacucha (Roxb.); (சா.அக.);.

அமலபலம்

 அமலபலம் amalabalam, பெ. (n.)

   புளியமரம்; tamarind tree, Manganifera indica (சா.அக.);.

அமலபித்தம்

அமலபித்தம் amalabittam, பெ. (n.)

   1. வயிற்றுப்புளிப்பு; acidity of the stomach.

   2. புளிப்பித்தம்; sourbile.

   3. நெஞ்செரிவு, குலையெரிவு; burning sensation of the chest or the heart (சா.அக.);.

     [அமல(ம்); + பித்தம்.]

     [Skt. amala → த. அமலம்.]

பித்து → பித்தம்.

அமலபேதனம்

 அமலபேதனம் amalapētaṉam, பெ. (n.)

   ஓர் ஆரைச் செடி; a sorrel plant (சா.அக.);.

அமலமஞ்சள்

 அமலமஞ்சள் amalamañjaḷ, பெ. (n.)

   மரமஞ்சள் (சித்.அக.);; tree turmeric.

அமலமேகம்

 அமலமேகம் amalamēkam, பெ. (n.)

   சிறுநீர் நோய்; acidity of the urine (சா.அக.);.

     [Skt. amala + mégha → த. அமலமேகம்.]

அமலம்

அமலம்1 amalam, பெ. (n.)

   1. ஒட்டுத்தாள் (அப்பிரகம்); (நா.நார்த்த.);; mica.

   2. அரி நெல்லி (சித்.அக.);; a species of gooseberry.

     [Skt. amalaka → த. அமலம்.]

 அமலம்2 amalam, பெ. (n.)

   1. மாசில்; that which is spotless, immaculate.

     “அமலமாம் பொருளை யேற்று” (கந்தபு.திருக்கல்.83);.

   2. அழுக்கின்மை (பிங்.);; purity cleanliness.

   3. மரமஞ்சள் (மலை.);; tree turmeric.

     [Skt. a-mala → த. அமலம்.]

 அமலம்3 amalam, பெ. (n.)

   1. மும்மலத்தினால் பற்றப் படாமை;   2. வெண்மை; whiteness.

   3. செவ்வள்ளி; red yam red sweet potato, Disorya parpurea.

   4. அரிநெல்லி; country star gooseberry, phyllanthus distinchus.

   5. அழகு; beauty.

   6. நெல்லி மரம்; gooseberry tree, Embilica officinalis.

   7. நஞ்சுக்கொடி; umbilical cord.

   8. ஒரு பூடு; the plant saptala.

   9. காக்கைப் பொன் (அப்பிரகம்);; tale.

   10. புளிப்பு; sourness or acidity.

   11. புளியாரை; wood sorrel, Oxalis corniculata.

   12. புளித்த தயிர்; sour curd.

     [Skt. amala → த. அமலம். அமலகம்1 பார்க்க.]

அமலருகம்

 அமலருகம் amalarugam, பெ. (n.)

   ஒரு வகை வெற்றிலை; a kind of betel leaf (சா.அக.);.

அமலர்

 அமலர் amalar, பெ. (n.)

   நெல்லிமுள்ளி (வை.மூ.);; dried flesh of gooseberry fruits.

     [Skt. ámalaka → த. அமலர்.]

அமலலோனி

 அமலலோனி amalalōṉi, பெ. (n.)

அமலலோனிகம் பார்க்க;see amala-lonigam (சா.அக.);.

அமலலோனிகம்

 அமலலோனிகம் amalalōṉigam, பெ. (n.)

   புளியாரைச் செடி; wood sorrel, Oxalia corniculata (சா.அக.);.

அமலவரித்திரா

 அமலவரித்திரா amalavarittirā, பெ. (n.)

அமலநிசா பார்க்க;see amala-nisa (சா.அக.);.

அமலவர்க்கம்

 அமலவர்க்கம் amalavarkkam, பெ. (n.)

   நாரத்தை;   கிச்சிலி முதலிய புளிப்பான இலைகளையுடைய மரம்; the class or trees and plants bearing leaves or fruits that taste sour such as, orange, lime, tamarind etc. (சா.அக.);.

     [Skt. amalaka+varga → த. அமலவர்க்கம். அமலகம் பார்க்க.]

அமலவல்லி

 அமலவல்லி amalavalli, பெ. (n.)

   ஒரு வகை செடி; a kind of plant, Pythonium bulbiferum (சா.அக.);.

அமலவாடகம்

 அமலவாடகம் amalavāṭagam, பெ. (n.)

   புளிமா; hog-plum, Spondias mangifera (சா.அக.);.

அமலவாடிகம்

 அமலவாடிகம் amalavāṭigam, பெ. (n.)

அமலருகம் பார்க்க;see amalarugam (சா.அக.);.

அமலவிருட்சம்

 அமலவிருட்சம் amalaviruṭcam, பெ. (n.)

   புளியமரம்; tamarind tree, Tamarindus indicus (சா.அக.);.

     [Skt. amalaka+vrksa → த. அமல விருட்சம்.]

அமலவேதசம்

அமலவேதசம் amalavētasam, பெ. (n.)

   1. ஒரு வகை ஆரைச்செடி; a kind of sorrel, Rumex vesicarius.

   2. காடி; vinegar obtained from fruits (சா.அக.);.

அமலா

 அமலா amalā, பெ. (n.)

   நெல்லி முள்ளி அல்லது நெல்லி வற்றல்; dried fruit of gooseberry, Phyllanthus emblica (சா.அக.);.

     [Skt. amalaka → த. அமலா.]

அமலாங்குசம்

 அமலாங்குசம் amalāṅgusam, பெ. (n.)

   ஒரு செடி; a kind of sorrel (சா.அக.);.

அமலாதியுசிதம்

 அமலாதியுசிதம் amalādiyusidam, பெ. (n.)

   புளித்த வுணவு அல்லது புளித்த மாங்காயைத் திண்பதால் ஏற்படுமொரு கண்ணோய்; a disease of the eyes caused by eating sour mangoes or fermented food (சா.அக.);.

அமலாயோகம்

 அமலாயோகம் amalāyōkam, பெ. (n.)

   நல்லோரை அல்லது (சந்திரன்); நிலவிற்குப் பத்தாமிடத்தில் நற்கோள்க ளிருக்கை (இலக்கினம்);;     [Skt. amala + yoga → த. அமலாயோகம்.]

அமலாளி

அமலாளி amalāḷi, பெ. (n.)

   வரிதண்டுவோன்; amaldar, an Indian revenue officer.

     “கட்டளவாய் நம்புமமலாளி பற்றினானென்றும்” (சரவண.பணவிடு.187);.

த.வ. தண்டல்நாயகன்.

     [U. amal → த. அமல்.]

ஆள் → ஆளி.

அமலிகம்

அமலிகம் amaligam, பெ. (n.)

   1. வயிற்றுப் புளிப்பு; acidity of the stomach.

   2. புளியாரை; wood sorrel, Oxalis corniculata (சா.அக.);.

     [Skt. amalaka → த. அமலிகம்.]

அமலித்தல்

 அமலித்தல் amalittal, பெ. (n.)

   புளித்தல்; acidified (சா.அக.);.

அமலினிட்டமணி

 அமலினிட்டமணி amaliṉiṭṭamaṇi, பெ. (n.)

   சிவன் அணிந்த அக்கமணி; a sacred berd worn by Sivan, Eleocarpus tuberculatus (சா.அக.);.

அமலை

அமலை amalai, பெ. (n.)

   1. மிகுதி (திவா.);; abundance.

   2. செறிவு ; denseness.

     “அடுசினத் தமலையை” (ஞானா. 43);.

   3. சோற்றுத் திரளை; lump of rice.

     “பிச்சைப் பாத்திரப் பெருஞ்சோற் றமலை” (மணிமே. 17;2);.

   4. சோற்றுருண்டை; rice ball.

     “வெண் னெறிந் தியற்றிய மாக்க ணமலை” (மலை படு. 441);.

   5. சோறு (திவா.);; boiled rice.

   6. கட்டி; boil.

   7. கடுக்காய் (மலை.);; chebulic myrobalan (செ.அக.); — ink-nut, Terminalia chebula (சா.அக.);.

   8. படைமறவர் திரண்டு பட்ட பகைவேந்தனைச் சூழ்ந்துநின்று ஆடுங் கூத்து; dance of soldiers who have gathered around a fallen enemy king.

     “களிற்றொடு பட்ட வேந்தனை அட்ட வேந்தன் வாளோர் ஆடும் அமலையும்” (தொல், பொருள். புறத். 14);.

   9. படைமறவர் திரண்டு பட்ட பகை வேந்தனைச் சூழ்ந்து நின்று பாடும் பாட்டு; songs sung by soldiers who have gathered around a fallen enemy king (தொல். பொருள். புறத் 14, இளம்பூ, உரை);.

   10. ஆரவாரம்; hubbub, confused yelling of war-cry, great din.

     “அறைகழல் வீரரார்க்கு மமலையை” (நைடத. நாட்டு. 13);.

   11. படைமறவர் தம் வேந்தனுடன் கூடியாடுங் கூத்து; dance of soldiers together with their king.

     “ஒள்வாளமலை” (பு. வெ. 147, கொளு.);.

     “காய்ந்தடு துப்பிற் கழன்மறவ ராடினார்

வேந்தொடு வெள்வாள் விதிர்த்து” (பு. வெ. 7 ; 21);.

     [அம்முதல் = பொருந்துதல், கூடுதல். அம் → அமல் → அமலை. அமலுதல் = நெருங்குதல், பொருத்துதல், மிகுதல்.]

 அமலை amalai, பெ. (n.)

   1. கொப்பூழ்க் கொடி; umbilical cord (சா.அக.);.

   2. பூவந்தி; soapnut tree.

ம., தெ. அமல.

 அமலை amalai, பெ. (n.)

   1. மாசற்றவள்; a woman who is pure.

   2. மலைமகள்; Parvadi.

   3. கீழாநெல்லி; a small plant.

   4. பூவந்தி; soapnut tree.

     [Skt. a-mala → த. அமலை.]

அமலைதாரம்

 அமலைதாரம் amalaitāram, பெ. (n.)

   அரிதாரம் (சித்.அக.);; orpiment.

அமலோத்கரம்

 அமலோத்கரம் amalōtkaram, பெ. (n.)

   எதிர்க்களித்தல்; sour eructation. (சா.அக.);.

த.வ. தேக்கெறிவு.

அமல்

அமல் amal, பெ. (n.)

நிறைவு (ஞானா. 34);.

 fullness.

ம. அமல்

     [அம் → அமல்.]

 அமல் amal, பெ. (n.)

   1. அதிகாரம்; authority, sway.

   2. மேலாய்வு (R.F.);; administration or management of any land or business of behalf of another.

     [U. amal → த. அமல்.]

அமல்[லு]-தல்

அமல்[லு]-தல் amalludal,    13 செ.கு.வி. (v.i.)

   1. நெருங்குதல்; to be close, thickly grown.

     “வேயமலகலறை” (கலித். 45;1);.

   2. பொருந்துதல்; to join, unite with.

   3. மிகுதல், அதிகரித்தல்; to be abundant, to increase.

     “தருக்கமல மலமென்ன” (திருவானைக் கோச், 3);.

   4. பரவுதல்; to spread, pervade.

     “எங்கணுந் தானினி தமலும்” (ஞானா. 14);.

–, 7 செ. குன்றாவி, (v.t.);

   1. அடைதல், சேர்தல்; to reach, arrive at.

     “அமலும் வேறிட மளவை யின்றியே விமல ரூபமாய் வரவும்” (சேதுபு. சீவதிர்த்த. 70);.

   2. அணைதல்; to embrace.

     “அமல லகல மகல லபய” (தண்டி. சொல். 6);.

ம. அமலிக்குக

     [அம்முதல் = பொருந்துதல். அம் → அமல்.]

அமல்தார்

 அமல்தார் amaltār, பெ. (n.)

   வரி தண்டுமதிகாரி (R.F.);; native collector of revenue corresponding to a tahsildar, mamlatdar.

த.வ. சுங்கவதிகாரி, தண்டல்நாயகன்.

     [U. amal-dar → த. அமர்தார்.]

அமல்நாமா

 அமல்நாமா amalnāmā, பெ. (n.)

   ஒரு பணியைச் செய்யும்படி கொடுக்கும் அதிகார ஆவணம் (R.T.);; warrant or authority from a public functionary for doing a piece of work.

த.வ. பணிக்கட்டளை.

     [U. amal+nama → த. அமல்நாமா.]

அமளி

அமளி amaḷi, பெ. (n.)

   1. மிகுதி; increase, abundance.

பனம்பழம் இப்போது நல்ல அமளியாயிருக்கும் (யாழ்ப்.);. ம. அமலி.

   2. ஆரவாரம்; tumult, uproar, bustle, stir, press of business.

     ‘வந்தபோ திருந்த அமளி காண்’ (திவ். திருநெடுந் 21, வியா.);.

   3. மக்கட் படுக்கை; bed, mattress, sleeping couch.

     “ஐந்துமூன் றடுத்த செல்வத் தமளிமூன் றியற்றி” (சீவக. 838);.

   4. கட்டில்; cot, bedstead.

     “மணிக்கா லமளி” (பெருங். உஞ்சைக். 33 ;106);.

   5. பள்ளியறை (சங். அக.);; bedroom.

     [அமல் → அமலி → அமளி. அமலுதல் = பொருந்துதல், மிகுதல், அமர்தல்.]

அமளிகுமளி

 அமளிகுமளி amaḷigumaḷi, பெ. (n.)

   பேராரவாரம்; great uproar.

ம. அமரல்

     [அமல் → அமலி → அமளி. கும்முதல் = கூடுதல், திரளுதல். கும் → குமல் → குமலி → குமளி. அமளிகுமளி – பொருளை மிகுத்துக் காட்டும் இணைமொழி (words in pairs);.]

அமளிதம்

 அமளிதம் amaḷidam, பெ. (n.)

   தீவதாட்சி; a fruit unknown in Southern India (சா.அக.);.

அமளிபண்ணு-தல்

அமளிபண்ணு-தல் amaḷibaṇṇudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. ஆரவாரஞ் செய்தல்; to make a great noise, raise hue and cry, make a fuss.

   2. சச்சரவு விளைத்தல்; to create disturbance, cause Commotion.

அமளி பார்க்க;see amali.

அமளை

அமளை amaḷai, பெ. (n.)

   1. கடுகுரோகணி (மலை.);; black hellebore (செ.அக.);—black hellebore or bear’s foot, Helleborus niger (சா.அக.);.

   2. மரவகை (L.);; diverse trifoliate sumach soap-nut, s. tr., Allophyllus cobbe.

 அமளை amaḷai, பெ. (n.)

   மழைநீரை மட்டுமே நம்பியிருக்கும் மானா வாரிப் பயிரில் விழும் பசளி போன்ற ஒருவகைக் களை; a weed like pasai (வ.சொ.அக.);.

     [அமல்-அமலை-அமளை]

அமளைக்கண்ணி

 அமளைக்கண்ணி amaḷaikkaṇṇi, பெ. (n.)

   கொள் (காணம்); (பச்.மூ.);; horse-gram.

அமளோகிதம்

 அமளோகிதம் amaḷōkidam, பெ. (n.)

   செங்கீரை (சித்.அக.);; cock’s comb greens.

அமாசயம்

 அமாசயம் amācayam, பெ. (n.)

   உண்ட வுணவும் தண்ணீருந் தங்குமிடம், வயிறு; a membraneous sac or receptacle to receive the food and water which we take-it serves as the principal organ of digestion, stomach (சா.அக.);.

அமாத்தம்

 அமாத்தம் amāttam, பெ. (n.)

   மனமழிந்து நிற்பது; the mind is raised from the gross to the subtle State to remain there in equilibrium (சா.அக.);.

அமாத்தியன்

 அமாத்தியன் amāttiyaṉ, பெ. (n.)

   அமைச்சன்; minister, counselor.

     [த. அமைத்தன் → Skt. ama-tya → த. அமாத்தியன்.]

அமாத்திரை

அமாத்திரை amāttirai, பெ. (n.)

   ஒம் என்னும் முளைமந்திரத்திலுள்ள மகரமெய்; the consonant “ம” (m); in the mystic syllable àm.

     ‘ஒம் என்ற பிரணவ ஒலியில் அ, உ, ம ஆகிய மூன்று எழுத்துகள் அடங்கும். இவற்றுக்கு மாத்திரைகள் என்று பெயர். ஒம் என்பதில் மெய் ஒற்றும் இருக்கின்றதல்லவா? இதனை அமாத்திரை என்பர் அறிஞர்’ (சி. செ. பக். 274);.

     [அ + மாத்திரை. மா → மாத்திரை.

     ‘திரை’ ப.பெ. ஈறு.]

ஒம் என்பதில் ஒ என்பதே உயிர்நாடியெழுத்து. மகரமெய் புறவெழுத்து அல்லது மிகையெழுத்து என்னுங் கருத்தில் அதை அமாத்திரை என்றனர் போலும்!

அமாநசியம்

அமாநசியம் amānasiyam, பெ. (n.)

   வலி (சிந்தா.நி.195);; pain.

     [Skt. ama-nasya → த. அமாநசியம்.]

அமாந்தக்காரன்

அமாந்தக்காரன் amāndakkāraṉ, பெ.. (n.)

   1. சவளி வணிகன் (புதுவை);; cloth merchant (Pond.);.

   2. தெருவிற் பண்டம் விற்கும் மூட்டைக்காரன்; street hawker (R.);.

அமாந்தம்

 அமாந்தம் amāndam, பெ. (n.)

   பொய் (நாஞ்.);; fib, lie (Nāñ.);.

அமாந்தம்பற்றவை-த்தல்

அமாந்தம்பற்றவை-த்தல் amāndambaṟṟavaittal,    4 செ.கு.வி. (v.i.)

   இல்லாததைச் சொல்லுதல் (நாஞ்.);; to fib (Nāñ.);.

அமானத்து

அமானத்து amāṉattu, பெ. (n.)

   1. ஒப்படைத்த பொருள்; deposit, anything held in trust.

   2. கருவூலத்தில் பெயர் விளத்தம் குறிக்காமல் வைத்த பணம் (R.F.);; money kept in suspense and not credited under any head.

     [U amanat → த. அமானத்து.]

அமானத்துச்சிட்டா

 அமானத்துச்சிட்டா amāṉattucciṭṭā, பெ. (n.)

   பொதுக்குறிப்பேடு; miscellaneous account.

     [U. amamat + cittha → த. அமானத்துச் சிட்டா.]

அமானம்

 அமானம் amāṉam, பெ. (n.)

   முடிவு தெரியாதது; that which is infinitive.

     “இப்படியே அமானமா பேசிக்கொண்டு இருந்தால் எப்படி?..” (வ.சொ.அக.);.

     [அல்+மானம்]

 அமானம் amāṉam, பெ. (n.)

   அளவின்மை (சூடா.);; boundlessness.

த.வ. வரம்பின்மை, கட்டுப்பாடின்மை.

     [Skt. a-måna → த. அமானம்.]

அமானவன்

 அமானவன் amāṉavaṉ, பெ. (n.)

   விரசைக் கரையிலுள்ள கடவுள் (உபதேசரத். சிறப்புப்.);;     [Skt. amanava → த. அமானவன்.]

அமானி

அமானி amāṉi, பெ. (n.)

   புளியாரை (மலை.);; yellow wood-sorrel.

ஒ.நோ.; அமனிதம்

 அமானி1 amāṉi, பெ. (n.)

   1. பொறுப்பு; security, trust, deposit.

   2. அரசுப் பொறுப்பிலுள்ள நிலம் (C.G.);; land held directly under the government, opp. to இஜாரா.

   3. வரி நிலுவை முதலியவற்றிற்காக அரசுப் பார்வையிலுள்ள நிலம் (C,G);; land under the management of government officers for arrears of revenue or for any other reason.

   4. உரிமையாளன் பொறுப்பில் இல்லாத நிலம்; land not held by the owner, for whom another holds it a trustee.

த.வ. சாராநிலம், உரிமைசாராநிலம்.

     [U. amani → த. அமானி.]

 அமானி2 amāṉi, பெ. (n.)

   வரையறுக்கப்படாதது; that which is not previously filled.

     “அமானியிலே கண்டுமுதல் பண்ணிக்கொள்” (இ.வ.);.

     [Skt. a-mani → த. அமானி.]

அமானிபாசேபாப்

 அமானிபாசேபாப் amāṉipācēpāp, பெ. (n.)

   ஆட்சியர் ஆளுகையிலுள்ள சில்லறை பயிர்செய்யும் நிலங்கள் (P.T.L.);; sundry farms under the management of a collector.

     [Ar. Amani + pajepap → த. அமானிபாசேபாப்.]

அமானிவெயில்

 அமானிவெயில் amāṉiveyil, பெ. (n.)

   மிகுந்த வெயில் பார்கக; excessive head of the sun.

     [அல்+(மானம்);-அமானி(அளவுகடந்தது);+வெயில்]

அமானுடகிருத்தியம்

 அமானுடகிருத்தியம் amāṉuḍagiruttiyam, பெ. (n.)

   மனித வல்லமையைக் கடந்த செயல்; superhuman act.

     [Skt. a-manusa+krtya → த. அமானுடகிருத்தியம்.]

அமானுடம்

 அமானுடம் amāṉuḍam, பெ. (n.)

   மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்டது; that which is superhuman.

     [Skt. manusya → த. அமானுடம்.]

அமானுடரோகம்

 அமானுடரோகம் amāṉuḍarōkam, பெ. (n.)

   தெய்வத்தினாலும், தேவதைகள், பேய் முதலியவற்றினாலும் ஏற்படும் நோய்; disease brought on through superhuman influences, here super human beings include the deities, demons, ghosts. monsters, malignant spirits etc. (சா.அக.);.

த.வ. புறச்சார்பு நோய்.

     [Skt. a-manusa + roga → த. அமானுடரோகம்.]

அமாமிக்கடம்பு

 அமாமிக்கடம்பு amāmikkaḍambu, பெ. (n.)

   செங்கடம்பு (சித்.அக.);; small Indian oak.

அமார்

 அமார் amār, பெ. (n.)

   கப்பற்கயிறு; ship’s cable.

     [Port amarva → த. அமார்.]

அமார்க்கம்

அமார்க்கம்1 amārkkam, பெ. (n.)

   சமய நெறியில்லாதது (வின்.);; irreligion.

     [Skt a-marga → த. அமார்க்கம்.]

 அமார்க்கம்2 amārkkam, பெ. (n.)

   நாயுருவி (பரி.அக.);; a plant.

     [Skt. a-marga → த. அமார்க்கம்.]

அமாவசியை

 அமாவசியை amāvasiyai, பெ. (n.)

   காருவா (வின்.);; new moon.

     [Skt. amavasya → த. அமாவசியை.]

அமாவாசி

அமாவாசி amāvāci, பெ. (n.)

   காருவா (அமாவாசை); (வின்.);; new moon.

     “ஆயிரம் வெதிபாத மொப்போ ரமாவாசி” (சேதுபு. சேதுபல.57);.

     [Skt. amå-våsi → த. அமாவாசி.]

அமாவாசை

அமாவாசை amāvācai, பெ. (n.)

   கதிரவனும் நிலவும் கூடி நிற்கும் நாள்; new moon, as the time when the sun and the moon dwell together.

     “பிற்றைநா ளமாவாசையில்” (உபதேசகா.சிவவி.229);.

த.வ. காருவா.

     [Skt. amå-våsyå → த. அமாவாசை.]

அமாவாசைக்கண்டம்

 அமாவாசைக்கண்டம் amāvācaikkaṇṭam, பெ. (n.)

   நோய் மிக்கார்க்கு காருவா நாளிலுண்டாகும் ஏதம், நேர்ச்சி (வின்.);; crisis of a disease occurring at the new moon.

த.வ. காருவாநேர்ச்சி.

     [அமாவாசை + கண்டம்.]

     [Skt. amä-väšyä → த. அமாவாசை.]

அமாவாசைக்கருக்கல்

 அமாவாசைக்கருக்கல் amāvācaikkarukkal, பெ. (n.)

   காருவா காரிருள்; great darkness in the night of the new moon day.

     [அமாவாசை + கருக்கல்.]

     [Skt. ama-väsyâ → த. அமாவாசை.]

கரு → கருகு → கருக்கு → கருக்கல்.

அமிசகம்

அமிசகம் amisagam, பெ. (n.)

   நாள் (சிந்தா. நி.193);; day.

     [Skt. amsaka → த. அமிசகம்.]

அமிசடக்கம்

 அமிசடக்கம் amisaḍakkam, பெ. (n.)

   அமைதி, அடக்கமான ஒழுக்கம்; modesty, quiet behaviour.

     [அமை + அடக்கம் – அமையடக்கம் → அமை சடக்கம் → அமிசடக்கம்.]

அமிசனம்

அமிசனம் amisaṉam, பெ. (n.)

   பிரிக்கை (சிந்தா. நி. 195);; dividing, parting.

     [Skt. amsana → த. அமிசனம்.]

அமிசபிதம்

 அமிசபிதம் amisabidam, பெ. (n.)

   தோளெலும்பின் கவை; a cavity in the scapula (shoulder blade); to receive the knob of the humerus, Glenoid cavity (சா.அக.);.

அமிசம்

அமிசம்1 amisam, பெ. (n.)

   பாகம்; part, portion.

     [Skt. amša → த. அமிசம்.]

 அமிசம்2 amisam, பெ. (n.)

   ஒதிமம் (அன்னப்புள்);; swan.

     [Skt. hamsa → த. அமிசம்.]

அமிசாமம்

அமிசாமம் amicāmam, பெ. (n.)

   மானசவாவி (சிந்தா. நி.196);; lake manasarowar, a sacred lake at the foot of Mt. Kailas.

     [Skt. hamsa → த. அமிசாமம்.]

அமிசு

 அமிசு amisu, பெ. (n.)

   அணு (பாண்டி);; atom.

     [Skt. amsa → த. அமிசு.]

அமிசுகம்

 அமிசுகம் amisugam, பெ. (n.)

   இலை; leaf (சா.அக.);.

அமிசை

 அமிசை amisai, பெ. (n.)

   தலையெழுத்து; lot.

     “ஆசையிருக்கிறது தாசில்பண்ண, அமிசையிருக்கிறது கழுதை மேய்க்க”.

     [Skt. amsa → த. அமிசை.]

அமிச்சை

அமிச்சை amiccai, பெ. (n.)

   அறிவு (சிந்தா.நி.212);; knowledge.

     [a-mithya → த. அமிச்சை.]

அமிஞை

 அமிஞை amiñai, பெ. (n.)

   தாயைப் பெற்ற பாட்டி (பள்.);; maternal grandmother (Pal.);.

     [அம்மை + அஞ்ஞை – அம்மைஞ்ஞை → அம்மிஞ்ஞை → அமிஞை. அன்னை → அஞ்ஞை.]

அமிஞ்சி

 அமிஞ்சி amiñji, பெ. (n.)

அமஞ்சி பார்க்க;see amaji.

     ‘அமிஞ்சிக்கு உழுதால் சரியாய் விளையுமா? (உ.வ.);.

அமிதசாகரர்

அமிதசாகரர் amidacākarar, பெ. (n.)

   11ஆம் நூற்றாண்டினரும், யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை என்னும் யாப்பிலக்கண நூல்களின் ஆசிரியருமாகிய ஒரு சமணத் துறவியார்; name of a Jaina sage of the 11th century and author of two grammatical treatises on Tamil prosody, viz. Yapparurigalam and Yapparuńgalakkârigai.

     “அளப்பருங் கடற்பெயரருந்தவத்தோனே” (யாப். வி.சி.பா.);

     [அ (எ.ம.முன்.); + Skt. mita + Skt. ságara.]

அமிதம்

அமிதம் amidam, பெ. (n.)

   அளவிறந்தது; that which is unmeasured, immense.

     “அமிதமாகிய பெரும்படை” (சூளா.கல்யாண.49);.

     [Skt. amita → த. அமிதம்.]

அமிதவாதி

 அமிதவாதி amidavādi, பெ. (n.)

   மிதமிஞ்சின கொள்கையுடையவன் (புதுமை);; extremist.

     [Skt. amita + vadin → த. அமிதவாதி.]

அமித்தியம்

அமித்தியம் amittiyam, பெ. (n.)

   பொய்யல்லாதது (வேதாந்தசா.84);; that which is not false.

     [Skt. a-mithya → த. அமித்தியம்.]

அமித்திரன்

 அமித்திரன் amittiraṉ, பெ. (n.)

   பகைவன் (உரி.நி.);; enemy, as unfriendly.

     [Skt. a-mitra → த. அமித்திரன்.]

அமினா

 அமினா amiṉā, பெ. (n.)

   அற (நீதி); மன்றத்தின் ஆணை (உத்தரவு);களை உரியவரிடம் சேர்ப்பிக்கும் பொறுப்பான அலுவலர்; subordinate officer of civil Court to Serve legal processes.

த.வ. விடையதிகாரி, கட்டளை அதிகாரி.

     [U. amin → த. அமினா.]

அமிரம்

 அமிரம் amiram, பெ. (n.)

   மிளகு (மலை.);; black pepper.

தெ. மிரியமு

அமிராகிதம்

 அமிராகிதம் amirākidam, பெ. (n.)

   செங்கருங்காலி (சித்.அக.);; red catechu.

அமிரிநாளம்

 அமிரிநாளம் amirināḷam, பெ. (n.)

   வெட்டி வேர; the root of a fragrant grass (khus khus);, Andropogon muricatus (சா.அக.);.

அமிருதை

அமிருதை amirudai, பெ. (n.)

   1. திப்பிலி; long pepper, Piper longum.

   2. மது; sweet drink.

   3. துளசி; holy basil, Ocimum sanctum (சா.அக.);.

அமிர்தகணத்தார்

அமிர்தகணத்தார் amirtagaṇattār, பெ. (n.)

   1. ஊரவையாரான கணப்பெருமக்கள் (I.M.P. Cg. 1027);; members of the committee for the management of village affairs.

   2. கோயிற் பண வருமானங்களைக் கணக்கிடுஞ் சவையார் (M.E.R. 90 of 1913);; members in charge of the cash receipts of a temple.

     [அமிர்தம் + கணத்தார்.]

அமிழ்து பார்க்க;see amildu.

அமிர்தகலை

அமிர்தகலை amirtagalai, பெ. (n.)

   திங்களின் 16 கூறுகளுள் ஒன்று; a digit or 1/16 of the moon’s disc; a phase of the moon.

     “அமிர்த கலையி னீரை மாந்தி” (சிலப். 5 ; 208, உரை);.

ம. அம்ருதகல

     [அமிர்தம் + கலை.)

அமிழ்து பார்க்க;see amildu.

நிலவொளி குளிர்ந்து இன்பந் தருவதனாலும், திங்களின் பெயராகிய மதியென்னுஞ் சொற்கு மது (தேன்); என்னுஞ் சொல்லை மூலமாகக் கொண்டதனாலும், திங்கட்கு

     ‘அமிர்தகிரணன்’ என்று வடமொழியில் ஒரு பெயரிருப்பதனாலும், மதியொளியிற் படுப்பதனால் மத்தம் உண்டாகுமென்று பண்டையோர் நம்பியதனாலும், திங்களின் கூறு அமிர்தகலையெனப்பட்டது.

அமிர்தகவிராயர்

அமிர்தகவிராயர் amirtagavirāyar, பெ. (n.)

   17ஆம் நூற்றாண்டிலிருந்தவரும் ‘ஒருதுறைக் கோவை’ யாசிரியருமான சிறந்த புலவர்; name of a poet, author of Oruturaikkövai, 17th century.

     [அமிழ்தம் → அமிர்தம் + வ. கவி + அரசன் → அரைசன் → அரையன் → அரையர் → ராயர்.]

அமிழ்து பார்க்க;see amildu.

அமிர்தகுணம்

அமிர்தகுணம் amirtaguṇam, பெ. (n.)

   சிறந்த குணம்; excellent quality (தெய்வச். விறலி. 147);.

அமிழ்து பார்க்க;see amildu.

     [அமிர்தம் + குணம். இனிமையும் நன்மையும் பற்றிச் சிறந்த குணம் அமிர்தகுணம் எனப்பட்டது.]

அமிர்தக்கடுக்காய்

அமிர்தக்கடுக்காய் amirtakkaḍukkāy, பெ. (n.)

   கடுக்காய் வகை; species of chebulic myrobalan (சா.அக.);.

   விம்மித் தசை மிகுந்துள்ள 32 வகைக் கடுக்காய்களிலொன்று; இது காசியில் விளையும்; தொண்டையிலுண்டாகும் கீச்சொலியையுங் கோழையையும் நீக்கும்; one of the 32 kinds of country gall-nuts which contain thick coverings and small kernels, said to grow in Benares and cure the wheezing sound or whistling noise in the throat due to phlegm (சா.அக.);.

     “அமிர்த மெனுங்கடுக்காயம்புவியி லுள்ள

திமிர்த சிலேட்டுமத்தைத் தீர்க்கும் — விமிதச்

சதைப்பற்றுண் டாயிருக்குஞ்சாற்றிலதன் றேசங்

கதிக்கொத்த காசியென்பார் காண்” (பதார்த்த 1004);.

     [அமிர்தம் + கடு – காய்.]

அமிழ்து பார்க்க;see amildu.

அமிர்தக்குமரி

 அமிர்தக்குமரி amirtakkumari, பெ. (n.)

   சீந்திற்கொடி, கற்றாழை முதலிய மூலிகைகளினின்று வடிக்கப்படும் எண்ணெய்; a medicated oil prepared from moon-creeper, aloe and other plants (சா.அக.);.

     [அமிர்தம் + குமரி. அமிழ்து → அமிர்து.]

அமிர்தக்குழல்

 அமிர்தக்குழல் amirtakkuḻl, பெ. (n.)

   உழுந்து மாவும், அரிசிமாவும், வெண்ணெயும், வெல்லப் பாகுஞ் சேர்த்து, நாவிற்கும் மனத்திற்கும் இன்பந்தருமாறு செய்யப்படும் ‘மனோகரம்’ என்னும் பணிகார வகை; confection made of black gram, rice and butter mixed with treacle.

உழுந்துமாவிற்குத் தலைமாறாகக் கடலை மாவைச் சேர்ப்பதுமுண்டு.

     [அமிர்தம் + குழல் (தேங்குழல் போன்றது);.]

அமிழ்து பார்க்க;see amildu.

அமிர்தக்கொடி

 அமிர்தக்கொடி amirtakkoḍi, பெ. (n.)

சீந்திற் கொடி (சங்.அக.);

– gulancha (செ.அக.);—moon creeper, bile killer, Tinosphora cordifolia alias Menispermum cordifolium (சா.அக.);.

     [அமிர்தம் + கொடி.]

அமிழ்து பார்க்க;see amildu.

அமிர்தக்கோலி

 அமிர்தக்கோலி amirtakāli, பெ. (n.)

   திருநெல்வேலி மாவட்டத்திலோடும் பொருநை (தாம்பிரவரணி); யாறு; the river Tamhiravarani, flowing in Thirunelveli district.

     [அமிர்தம் + கோலி.]

அமிழ்து பார்க்க;see amildu.

அமிர்தங்கலங்கு-தல்

அமிர்தங்கலங்கு-தல் amirdaṅgalaṅgudal,    5 செ.கு.வி. (v.i.)

   மூளை கலங்குதல் (வின்.);; brain being disturbed, shocked, as by a blow, concussion of the brain.

     [அமிர்தம் → அமிதம் → அமுதம் = சோறு. அமிர்தம் = குழைந்த சோறு போன்ற மூளை.]

அமிழ்து பார்க்க;see amildu.

அமிர்தசர்க்கரை

அமிர்தசர்க்கரை amirtasarkkarai, பெ. (n.)

   1. சீந்தில்மா; flour made from gulancha stalk.

   2. சீந்திற்கொடியினின்று எடுக்கப்படும் வெள்ளுப்பு, மண்ணீரல் வலுவிற்கும் மெலிந்த வுடம்பை வலுப்படுத்தற்கும் பயன்படுத்தப்படுவது; a white salt extracted from the moon-creeper, used in diseases of the spleen and as a tonic in convalescence.

     [அமிர்தம் + சருக்கரை. அமிர்தம் = சிந்திற் கொடி.]

அமிழ்து பார்க்க;see amildu.

அமிர்தசாரவெண்பா

 அமிர்தசாரவெண்பா amirtacāraveṇpā, பெ. (n.)

   தத்துவராயர் இயற்றிய ஒரு பனுவல்; name of a poem by Tattuvarayar.

     [அமிர்தம் + சாரம் + வெள்ளை + பா.]

அமிழ்து பார்க்க;see amildu.

அமிர்தசூரணம்

 அமிர்தசூரணம் amirtacūraṇam, பெ. (n.)

   சீந்திற்கொடிச் சுண்ணம், குடற் கோளாற்றிற்கும் காமாலைக்கும் பயன்படுத்தப்படுவது; a bitter and slightly nauseous powder of the dried tender shoots of the moon-creeper, Tinosphora cordifolia alias Menispermum cordifolium, prescribed as án alternative in cases of visceral obstructions and jaundice (சா.அக.);.

     [அமிர்தம் + சூரணம். சுள்ளெனல் = சுடுதல், எரித்துச் சாம்பல் அல்லது நீறாக்குதல், சுள் → கண் → சுண்ணம் = நீறு, பொடி. சுள் → சுர் → சூர் → துரணம்.]

அமிழ்து பார்க்க;see amildu.

அமிர்தசெந்தூரம்

 அமிர்தசெந்தூரம் amirtasendūram, பெ. (n.)

   சூலை, காயம், புரை, புண் முதலிய நோய்கட்குக் கொடுக்கும் செந்நீறு; a calcined red metallic oxide prescribed for healing acute pain, sores, sinuses or other wounds.

     [அமிர்தம் + செந்துாரம். செந்துள் → செந்தூளம் → செந்தூரம்.]

அமிழ்து பார்க்க;see amildu.

அமிர்ததலைச்சி

 அமிர்ததலைச்சி amirdadalaicci, பெ. (n.)

   சீந்திற்கொடி; gulancha (செ.அக.); – moon-creeper (சா.அக.);.

     [அமிர்தம் + தலைச்சி.]

அமிழ்து பார்க்க;see amildu.

அமிர்தநிலை

அமிர்தநிலை amirtanilai, பெ. (n.)

அமுத நிலை பார்க்க;see amuda-milai.

     “அறிந்து பதினைந் தமிர்தநிலை யாராய்ந்து” (விறலி விடு. 546);.

     [அமிர்தம் + நிலை.]

அமிழ்து பார்க்க;see amildu.

அமிர்தபதி

அமிர்தபதி amirdabadi, பெ. (n.)

   ஒரு பழந்தமிழ்ப் பனுவல் (யாப். வி. 95, பக். 487);; an ancient Tamil Poetic work.

     [அமிர்தம் + பதி.]

அமிழ்து பார்க்க;see ami!du.

அமிர்தபலா

 அமிர்தபலா amirtabalā, பெ. (n.)

   கொய்யா மரம்; guava tree, Pisidium guyara (சா.அக.);.

     [அமிர்தம் + பலா.]

அமிழ்து பார்க்க;see amildu.

அமிர்தபழம்

 அமிர்தபழம் amirtabaḻm, பெ. (n.)

   ஒரு நீல மலைப்பழம்; nectar fruit or pear, Pyrus communis, borne by a small thorny tree in the Nilgiris (சா.அக.);.

     [அமிர்தம் + பழம்.]

அமிழ்து பார்க்க;see amildu.

பேரிக்காய் மேனாட்டினின்று கொண்டு வந்து பயிராக்கப்பட்டது.

அமிர்தப்பால்

 அமிர்தப்பால் amirtappāl, பெ. (n.)

   தாய்ப்பால்; mother’s breast milk.

     [அமிர்தம் + பால்.]

அமிர்தமூடியவிடம்

அமிர்தமூடியவிடம் amirtamūḍiyaviḍam, பெ. (n.)

   மாச் சுக்கு; soft dried ginger (சா.அக.); – (தைலவ. தைல. 1);.

அமிர்தமூடுமிடம்

அமிர்தமூடுமிடம் amirtamūḍumiḍam, பெ. (n.)

அமிர்தமூடியவிடம் பார்க்க;see amirdam-müdiya-v-idam.

     “சீரமிர்த மூடுமிட மஃதை” (தைலவ. தைல. 1);.

குறிப்பு ; சங்க அகரமுதலியிலும் அதிலுள்ள மேற்கோளிலும்

     ‘மூடுவிடம்’ என்னும் பாடம் உள்ளது.

அமிர்தம்

அமிர்தம் amirtam, பெ. (n.)

   1. முலைப்பால்; woman’s breast milk.

   2. ஆவின் பால்; cow’s milk.

     “திலநெய் யமிர்தம்” (தைலவ. தைல. 1);.

   3. பாலிருப்பிடம்; the source of milk.

   4. வெண்ணெய்; butter.

   5. நெய்; ghee.

   6. தேன்; honey.

   7. இனிப்பு; sweetness.

   8. இனிப்பு பண்டம்; sweet cake.

   9. இனிமை; pleasantness.

     “அமிர்தங் கொளவுயிர்க்குங் கருங்கா ழகிலி னறும்புகை” (சீவக. 349);.

   10. நீர்; water.

   11. உணவு; food.

     “தந்தவ னமிர்த மூட்ட வுண்டு” (சீவக. 1178);.

   12. சோறு; boiled rice.

   13. இரவாது வரும் உணவு அல்லது பொருள்; unsolicited alms.

     “ஒன்றிரவாமல் வருவதே யமிர்தம்” (காஞ்சிப்பு. ஒழுக். 36);.

   14. நஞ்சு தீர்க்கும் மருந்து; antidote to poison.

   15. மயக்கந் தெளிவிக்கும் மருந்து; a reviving cordial.

   16. இதள் (பாதரசம்);; quick-silver.

   17. விந்து; semen virile.

   18. பொன்; gold.

   19. செல்வம்; prosperity.

   20. சாறாயம்; liquor, arrack.

   21. சீந்தில்; moon-creeper, Menispermum cordifolium.

   22. சிவப்பாமணக்கு; red castor seed, Ricinus communis.

   23. ஒரு பூண்டு; a plant, Phaseolus trilobus.

   24. ஒரு வேர்; the root of a plant.

   25. ஒரு வெள்ளை வைப்பு நஞ்சு; a white arsenic.

ம. அமிர்தம் ; க. அம்ருத ; தெ. அம்ருதமு.

குறிப்பு; இச் சொல் (அமிர்தம்); காய் கனிகளைக் குறிக்கும்போது செந்தாழை (அனாசி);, எலுமிச்சை, நெல்லி, கொய்யா, கடுக்காய், சீந்தில் முதலியவற்றைக் குறிக்கும் (சா.அக.);.

அமிழ்து பார்க்க;see amildu.

அமிர்தவடிகம்

 அமிர்தவடிகம் amirtavaḍigam, பெ. (n.)

   அமிர்தத்தைக் கொடுக்குஞ் சீந்திற்கொடி; moon-creeper which gives an essence like nectar (சா.அக.);.

     [அமிர்தம் + வடிகம்.]

அமிழ்து பார்க்க;see amildu.

அமிர்தவடை

 அமிர்தவடை amirtavaḍai, பெ. (n.)

   தித்திப்பான உழுந்துவடை; a sweet cake made of black gram and sugar.

     [அமிர்தம் + வடை.]

அமிழ்து பார்க்க;see amildu.

அமிர்தவல்லி

 அமிர்தவல்லி amirtavalli, பெ. (n.)

   சீந்திற் கொடி (சூடா.);; gulancha (செ.அக.);.

ம. அமிர்தவல்லி ; க. அம்ருதபல்லி ; தெ. அம்ருதவல்லி.

     [அமிர்தம் + வல்லி.]

அமிழ்து பார்க்க;see amildu.

அமிர்தவள்ளி

 அமிர்தவள்ளி amirtavaḷḷi, பெ. (n.)

   சர்க்கரை வள்ளிக் கிழங்கு; sweet potato, Ipomala batatas.

     [அமிர்தம் + வள்ளி.]

அமிழ்து பார்க்க;see amildu.

அமிர்தவிந்து

 அமிர்தவிந்து amirtavindu, பெ. (n.)

   இதள் (பாதரசம்); (சங்.அக.); ; quick-silver.

     [அமிர்தம் + விந்து.]

அமிழ்து பார்க்க;see amildu.

அமிர்தவுப்பு

 அமிர்தவுப்பு amirtavuppu, பெ. (n.)

   சீந்திலுப்பு; salt extracted from the moon-creeper, Tinosphora cordifolia.

அமிர்தசர்க்கரை பார்க்க;see amirda-Šarkkarai.

     [அமிர்தம் + உப்பு..]

அமிழ்து பார்க்க;see amildu.

அமிர்து

அமிர்து amirtu, பெ. (n.)

   1. முலைப்பால்; breast milk.

     “கனதனத்தி லூறுமமிர் தூட்டினளால்” (கந்தபு. தக்க. வள்ளி. 37);.

   2. சோறு; boiled rice.

     “அத்திரத்தா லந்நீ ரமிர்திற் புரோக்கிக்க” (சைவச. பொது. 296);.

   3. திணைநிலச் செல்வம்; products of particular tracts of land.

     “நாட்டகத் தமிர்து நளிகட லமிர்து நல்வரை யமிர்தமு மல்லாக் காட்டகத் தமிர்துங் காண்வர” (சீவக. 2110);.

     [அமிழ்து → அமிர்து.]

அமிழ்து பார்க்க;see amildu.

அமிலகரம்

 அமிலகரம் amilagaram, பெ. (n.)

   உயிர்வளி (பிராணவாயு);; a gaseous element which is very essential to respiration, Oxygen (சா.அக.);.

அமிலக்கினம்

 அமிலக்கினம் amilakkiṉam, பெ. (n.)

   உடலில் அழிந்த தாது உறுப்பை உள்வாங்குமல்லது வெளித்தள்ளு மருந்து;த.வ. அகப்புறந்தள்ளி.

அமிலதம்

 அமிலதம் amiladam, பெ. (n.)

   கறி, கந்தம் முதலியவற்றோடு கூடி காரவகை (அமிலவர்க்கங்);களை உண்டாக்கும் காய்கறிகள்; that which converts vegetables and roots into sour, substances (சா.அக.);.

     [Skt. amla-ta → த. அமிலதம்.]

அமிலதிகரணம்

 அமிலதிகரணம் amiladigaraṇam, பெ. (n.)

   உயிர்வளியைக் கலக்கச் செய்தல்; the act of uniting or causing to combine with охуgen, Oxygenation (சா.அக.);.

     [அமிலம் + அதி + கரணம்.]

     [Skt. amla + adhi → த. அமிலதி.]

அமிலத்தன்மை

 அமிலத்தன்மை amilattaṉmai, பெ. (n.)

அமிலம் பார்க்க;see amilam (சா.அக.);.

     [Skt. amla → த. அமிலம்.]

அமிலப்பிரதிகாரம்

 அமிலப்பிரதிகாரம் amilappiradikāram, பெ. (n.)

   புளிப் பெதிர்க்கை; the reciprocal action of acid, acid reaction (சா.அக.);.

அமிலமாக்கல்

 அமிலமாக்கல் amilamākkal, பெ. (n.)

   புளிப்பேற்றுகை; converting into acid, to make sour (சா.அக.);.

     [அமிலம் + ஆக்கல்.]

     [Skt. amla → த. அமிலம்.]

அமிலமை

 அமிலமை amilamai, பெ. (n.)

   காடி (திராவக);த் தன்மை, புளிப்புத்தன்மை; acidity, sourness (சா.அக.);.

     [Skt. amla → த. அமிலமை.]

அமிலம்

அமிலம் amilam, பெ. (n.)

   1. அரிக்கும் தன்மையும் புளிப்புச் சுவையும் கொண்ட காடி (திரவம்);; acid.

   2 புளிப்புப்பொருள்; sour substances.

   3. மண், மாழை முதலியவற்றோடு சேர்ந்து உப்பு வகைகளை உண்டு பண்ணுமொரு பொருள்;     [Skt. amla → த. அமிலம்.]

அமில்தார்

 அமில்தார் amiltār, பெ. (n.)

   வரி தண்டுமதிகாரி; office employed to collect revenue.

த.வ. அமல்தார்.

     [U. amal-dar → த. அமில்தார்.]

அமிழ்-தல்

அமிழ்-தல் amiḻtal,    2 செ.கு.வி. (v.i.)

   முழுகுதல், ஆழ்தல்; to sink, to be immersed, to plunge.

     “இன்பக் கடலூடே யமிழுவேனை” (திருப்பு. 36);.

ம. அமிழுக ; க. அவுகு ; து. கமரு ; பட. அமுகு.

     [அம்முதல் = அமுங்குதல். அம் → (அமில்); → அமிழ்.]

அமிழ்தக்கொடி

 அமிழ்தக்கொடி amiḻtakkoḍi, பெ. (n.)

அமிர்தக்கொடி பார்க்க;see amirda-k-kodi.

அமிழ்தம்

அமிழ்தம் amiḻtam, பெ. (n.)

   1. உணவு; food.

     “அங்கவர்க் கறுசுவை நால்வகை யமிழ்தம்” (மணிமே. 28;116);.

   2. உயிர்மருந்து; clixir.

     “தானமிழ்த மென்றுணரற் பாற்று” (குறள், 11);.

   3. முலைப்பால்; woman’s breast milk.

   4. ஆவின்பால்; cow’s milk.

   5. தீங்குடிப்பு; honey-sweet drink.

ம. அமுதம், அமிர்தம்.

     [அமிழ்து → அமிழ்தம்.]

அமிழ்து

அமிழ்து amiḻtu, பெ. (n.)

   1. உணவு; food.

   2. முலைப்பால்; woman’s breast milk.

   3. ஆவின்யால்; cow’s milk.

     “இருதூணி யமிழ்துகுத் ததின்” (தைலவ. தைல. 28);.

   4. உயிர்மருந்து; elixir.

     “அமிழ்தினு மாற்ற வினிதே” (குறள், 64);.

   5. உயிர்மருந்துபோற் சிறந்தது; anything as good as elixir.

   6. இனிப்புப் பண்டம்; sweet meat.

   7. தேங்கூழ்; honey-sweet salad or porridge.

ம. அமிர்து ; க., து. அம்ருத ; தெ. அம்ருதமு ; கொங். அம்ருத்.

     [மருமம் = மார்பு, முலை. மருமம் → மம்மம் = முலை. ஒ.நோ ; கருமம் → கம்மம். மம்மம் → L. mamma, milk – secreting organ of female in mammals.

மம்மம் → அம்மம் = முலை, முலைப்பால், குழந்தையுணவு. அம்மம் → அம்மு = முலைப் பால், குழந்தையுணவு, குழந்தைக்கு மதித்து ஊட்டும் சோறு. அம்முதல் = உண்ணுதல். அம்மு → அம்முது → அமுது = முலைப்பால், ஆவின்பால், உணவு. அமுது → அமுதம் = பால், உணவு. அமுதப்பால் என்பது உலக வழக்கில் தாய்ப்பாலான முலைப்பாலையே குறித்தல் காண்க.

அவிதல் = வேதல், சமைதல். அவி → அவிழ் = வெந்த சோற்றுப்பருக்கை, சோறு. அவி → அவிழ்து → அவிழ்தம் = சோறு.

அவிழ்து → அமிழ்து = சோறு, உணவு. அமிழ்து → அமிழ்தம் = சோறு, உணவு.

அமிழ்து → அமிது → அமுது → அமுதம். ஒ.நோ.; தாழ்வடம் → தாவடம். தாழ்வில்லை → தாழ்விலை → தாவிலை. உயிரிசைவு மாற்றம் (harmonic sequence of vowels); என்னும் நெறிப்படி, இறுதியுகரச் சார்பினால் இடையிகரம் உகரமாயிற்று, அமிது → அமுது என. இச் சொல்லைப் பின்பற்றியே அம்மு → அமுது என்னுந் திரிபு தோன்றியிருக்கலாம்.]

இங்ஙனம், பாலைச் சிறப்பாகக் குறிக்குஞ் சொல்லும், சோற்றைச்சிறப்பாகக் குறிக்குஞ் சொல்லும், வெவ்வேறு வகையில் திரிந்து அமுது என்னும் பொதுவடிவடைந்துவிட்டதனால், ஒன்றோடொன்று மயங்கி, அவ்விரு சொல்லும் பாலுஞ்சோறுமாகிய இரு பொருளையும் உணர்த்தத் தலைப்பட்டு விட்டன. ஆயினும், அமுது என்னுஞ் சொல் பெருவழக்காகச் சோற்றைக் குறிப்பது அமுதுசெய்தல், அமுதுபடைத்தல், அமுது பாறை, அமுதுமண்டபம், அமுதூட்டுதல், திருவமுது என்னும் சொல் வழக்குகளால் அறியப்படும்.

சோறு என்பது,

     “ஒருமொழி யொழிதன் னினங்கொளற் குரித்தே” (நன். 358); என்னும் நூற்பாவிற் கிணங்க, சோற்றுடன் உண்ணும் நால்வகை யுண்டிகளையுங் குறிக்கும். அதனால் அவையும் அமுதெனப்படும்.

எ-டு; பருப்பமுது, கறியமுது, இலையமுது, தயிரமுது, கன்னலமுது.

அமுதுகுத்துதல் என்னும் வழக்கில்

     ‘அமுது’ உறை மோரை யுணர்த்திற்று.

சோறு அரிசியின் திரிபாக்கமாதலால், அமுது அல்லது அவிழ் என்னுஞ் சொல் சிறுபான்மை அரிசியையும் குறிக்கும்.

எ-டு : அமுதுபடி = அரிசி.

     “அமுதுபடி புறம்பில்லையென்செய்கேன்” (திருவாலவா. 31;12);.

     “கலவுமி தின்றால் ஒரு அவிழ் (ஒரவிழ்); தட்டாதா?” (பழ.);.

ளகரமெய் போன்றே அதற்கினமான ழகர மெய்யும் ரகரமாகத் திரியும். அதனால், அமிழ்து என்பது அமிர்து என்றும், அமிழ்தம் என்பது அமிர்தம் என்றும் வடிவுகொள்ளும். இவ்வடிவே திருப்பாற்கடல் கடைந்த தொன்மக் கதைக்கு வழிவகுத்தது.

தென்சொற்களை வடமொழியில் ஆளும் போது, முதலிலுமிடையிலுமுள்ள உயிர்மெய்களின் உயிரைப்போக்கி ரகரஞ் சேர்த்துக் கொள்வது வடமொழியாளர் வழக்கம். தென்சொல்லில் ஏற்கெனவே ரகரமிருப்பின், அதை அப்படியே வைத்துக்கொள்வர்.

எ-டு : மதங்கம் → ம்ருதங்க, மிதி → ம்ருத், மெது → ம்ருது.

இம்முறைப்படி,

     ‘அமிர்தம்’ வடமொழியில்

     ‘அம்ருத’ என்றாயிற்று. அதை ஆரியச்சொல்லாக்க வேண்டி ஆரியவழிப் பொருட் காரணங் கூறின் அ + ம்ருத் என்று பகுத்து, சாவின்மை அல்லது சாவைத் தவிர்ப்பது என்று தான் பொருள் கூறவொண்ணும். ஆதலால் அங்ஙனம் பகுத்து, சுரர் என்னும் தேவர் தம் பகைவராகிய அசுரரைத் துணைக் கொண்டு திருப்பாற்கடலைக் கடைந்து சுரை (சுரா); யென்னும் அமிர்தமெடுத்துண்டு, சாவு நீங்கினர் என்று கதை கட்டிவிட்டனர். இக் கதையின் பொய்ம்மைச் சான்றுகளாவன ;

   1. திருப்பாற் கடலென்று ஒரு கடலும் இருந்ததின்மை. வெண்கடல் (white sea); என்று தான் ஒன்றுளது. அது தமிழிற் பாற் கடல் எனப்படும். பாற்கதிர், பாற்கவடி, பாற்கெண்டை, பாற்சுறா, பால்நண்டு, பால்வண்ணன், பால்வெள்ளி என்பன வெண்ணிறம் பற்றியன. நன்னீர், உவர் நீர், பால், தயிர், நெய், கருப்பஞ்சாறு, தேன் என்னும் எழுவகைக் கடற்கொள்கையை அடிப்படையாகக் கொண்டது திருப்பாற்கடல் கடைந்த கதை.

   2. சுரரும் அசுரரும் ஒரு வகுப்பார்க் கொரு வகுப்பார் உயிர்ப் பகைவராதலால் ஒரு வினைமுயற்சியில் இசைந்து ஈடுபட்டிருக்க முடியாமை. மேலும், நிலையான தேவர்க்குச் சுரை வேண்டியதில்லை; பிறவிக்குட்பட்ட தேவர்க்கு அது பயன்படாது.

   3. மந்தரமலையாகிய மத்து, வாசுகியென்னும் பாம்புக்கயிறு முதலிய கருவிகள் சிறுவரும் நம்பக்கூடாமை.

   4. மத்தமிழாது தாங்கிய திருமால் தடுக்க முடியாத நஞ்சைச் சிவபெருமான் உண்டதனால் அவன் கழுத்துக் கறுத்த தென்ற கூற்று.

   5. கதிரவன் திங்கள் மறைவிற்குக் காரணமாகக் கட்டப்பட்டுள்ள நிகழ்ச்சிகள்.

   6. கூடியுழைத்த அசுரருக்குத் திருமால் சுரையளிக்கவில்லையென்னும் முறை கேட்டுச் செய்தி. கிரேக்கர் வேத ஆரியரின் முன்னோருக்கு மிக நெருங்கியவராதலால்,

     ‘அம்ருத’ என்னும் வடசொல் கிரேக்க மொழியில்

     ‘அம்புரோசியா’ (ambrosia); என்று வழங்குவது, அச் சொல் ஆரியச் சொல் என்பதற்குச் சான்றாகாது.

     “வானின் றுலகம் வழங்கி வருதலாற்

றானமிழ்த மென்றுணரற் பாற்று”

என்னும் குறளில் (11);, அமிழ்து என்பது உயிர்மருந்து என்று பொருள்படுவதேயன்றி எக்கதையையுஞ் சுட்டுவதன்று. நீரும் சோறுமாகிய இருவகையுணவும், பசி நோய் நீங்கி உயிர்வாழ இன்றியமையாதனவாதலால், இருமருந்தெனப்படும். அவற்றுள் நீரே ஏனையதையும் விளைத்தலால், அதனை அமிழ்தம் என்று சிறப்பித் தார் ஆசிரியர்.

     ‘உணரற் பாற்று’ என்னும் தொடர் பொருள்பொதிந்த தொன்று.

இனி,

     ‘விருந்து புறத்ததாத்தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று’ என்னுங் குறளிலும் (82);, சாவாமருந்து என்பது சாவாமைக்கு ஏதுவான மருந்தென்று பொருள்படுவதேயன்றி, தேவருணவையோ திருப்பாற்கடற் கதையையோ நினைவுறுத்துவதன்று.

எல்லா மக்கட்கும் பிறப்பிலிருந்து இறப்பு வரை பல்வேறு, நோய்வருவது இயல்பு. மருந்துண்டு நோய் நீங்கினாற் பிழைப்பு; இன்றேற் சாவு. சிலர்,

     “நெடுநா ளிருந்தபேரும்நிலை யாகவே யினுங்காய கற்பந் தேடி நெஞ்சுபுண் ணாவ ரெல்லாம்” என்று தாயுமானவர் (பரிபூரணா. 10); பாடியதற்கேற்ப, இயற்கையுஞ் செயற்கையுமான மூவா மருந்துஞ் சாவாமருந்துந் தேடி உலகெங்குந் திரிவர். அத்தகைய மருந்தொன்றையே திருவள்ளுவர் தம் குறளிற் குறித்துள்ளார்.

     “சாவா மருந்தெனினும்” என்பதிலுள்ள உம்மை எதிர்மறையும்மையென்பதையும் முதன்மையாய்க் கவனித்தல் வேண்டும். ஏனெனின், மண்ணுலகிற் பிறந்தவரெல்லாம் மாய்வது திண்ணம். விருந்திருக்கத் தனித் துண்டலின் தீமையை விளக்கவே

     “சாவா மருந்தெனினும்” என்றார்.

     “அமிழ்தினு மாற்ற வினிதேதம் மக்கள்

சிறுகை யளாவிய கூழ்”

என்னுங் குறளிலும் (64);, அமிழ்து என்பது கருப்பஞ்சாறு, கன்னல் (பாயசம்);, பதநீர் (தெளிவு);, தேன்கலந்த பால், பழக்கூட்டு முதலிய உலகத்திலுள்ளனவும் உண்டினிமை கண்டனவுமான இன்குடிப்புகளுள் அல்லது தேங்கூழ்களுள் ஒன்றனையே குறிக்கும்.

     “பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி

வாலெயி றூறிய நீர்”

என்று திருவள்ளுவர் பின்னருங் கூறுதல் காண்க (1121);.

ஏதேனுமொரு வகையில் இருபொருள்களின் ஏற்றத்தாழ்வை ஒப்புநோக்கிக் கூறும்போது, கண்டறிந்தவற்றைப் பற்றிக் கூறுவதே பொருளுள்ளதும் எல்லார்க்கும் ஏற்பதுமாகும்.

அதுவே, அம்மம் அல்லது அவிழ் என்னும் மூலத்தினின்று திரிந்த அமிர்து என்னும் தனிச்சொல்லைக் கூட்டுச் சொல்லாகக் கொண்டு, அ+மிர்து என்று பகுத்து, சாவைத் தவிர்ப்பது என்று பொருள்கூறி, அதற்கொரு கதையுங் கட்டிச் சான்றாகக் காட்டுவது சற்றும் பொருந்தாது.

உகரவீற்றுப் பொருட்பெயர்ச் சொற்களெல்லாம் பெருமைப் பொருள் கருதாவிடத்தும் அம்மீறு பெறுவது இயல்பு.

எ-டு; கடுகு → கடுகம், குமுது → குமுதம், குரவு → குரவம், நஞ்சு → நஞ்சம், நரகு → நரகம், புறவு → புறவம், விளவு → விளவும்.

இங்ஙனமே அமிர்து அமிர்தமாயிற்று.

அமிழ்த்து-தல்

அமிழ்த்து-தல் amiḻddudal,    2 பி.வி. (v. caus.)

   1. அமுக்குதல்; to press down.

   2. முழுக்குதல், ஆழ்த்துதல்; to cause to sink, immerse, ingulf, drown.

     “ஆடன் மைந்த ரடங்க வமிழ்த்தி னான்” (சேதுபு. அக்கினி. 31);.

   3. மறைத்தல்; to cover, as eyelids cover the eyes.

     “அமிழிமைத் துணைகள்” (கம்பரா. பால. கோலங். 3);.

ம. அமிழ்த்துக ; க. அமுத ; து. அமபுனி ; பட. அமுக்கு ; கோத. அம்ங் ; துட. ஒம்க்.

     [அமிழ் (த.வி.); – அமிழ்த்து (பி.வி.);]

அமிழ்ந்து-தல்

அமிழ்ந்து-தல் amiḻndudal,    5 செ.கு.வி. (v.i.)

   ஆழ்தல், முழுகுதல்; to sink.

     “சூழ்ந்த புனற்கய மதனேர் விழுந்த மிழ்ந்தி மீள வெழும்” (சேதுபு. அகத். 14);.

ம. அமிழ்ந்துக ; தெ. அமுகு.

     [அம் → அமிழ் → அமிழ்ந்து.]

அமீதூரம்

 அமீதூரம் amītūram, பெ. (n.)

   செம்மறிக்கடா; the male of a sheep which butts with its head, ram (சா.அக.);.

அமீனா

அமீனா amīṉā, பெ. (n.)

   1. வல்லந்தமாய்க் கடன் நிலுவைத் தொகையைத் தண்டும் வருவாய் அலுவலர்; sub-ordinate officer employed to Collect arrears of revenue under a coercive process.

   2. அசையாச் சொத்துக்களை விற்றல், கைப்பற்றுதல் போன்ற நயமன்றக் கட்டளைகளை நிறைவேற்றும் அதிகாரி; subordinate officer employed by civil courts for various purposes such as to sell or deliver up possession of immovable property, carryout legal processes as a bailiff.

த.வ. தண்டலர்.

     [U – amin → த. அமீனா.]

அமீன்

அமீன்1 amīṉ, பெ. (n.)

   1. பணம் தண்டல் செய்யும் ஓர் அதிகாரி; subordinate officer employed to collect arrears of revenue under a coercive process.

   2. குடிம முறை மன்றக் கட்டளைகளை நிறைவேற்றுகிற ஓர் அதிகாரி; subordinate office employed by civil courts for Various purposes such as to sell or deliver up possession of immovable property, carry out legal processes as a bailiff.

த.வ. கட்டளை அதிகாரி, கட்டளையர்.

     [U. amin → த. அமீன்.]

 அமீன்2 amīṉ, பெ. (n.)

   கமுக்க (அந்தரங்க); அலுவலர் (M.Sm. D.I.278);; confidential officer.

த.வ. அணுக்க அதிகாரி, அணுக்கர், கமுக்க அலுவலன்.

     [U. amin → த. அமீன்.]

அமீன்கெச்சு

 அமீன்கெச்சு amīṉkeccu, பெ. (n.)

   சிற்றூரின் நிலஅளவுக் குறிப்பு; official plan of village lands.

     [U. amin + F. sketch → த. அமீன்கெச்சு.]

அமீர்

 அமீர் amīr, பெ. (n.)

   தலைவன்; commander, nobleman.

     [U. amir → த. அமீர்.]

அமுகம்

அமுகம் amugam, பெ. (n.)

   1. கடுக்காய்; gallnut, Chebulic myrobalan.

   2. சீந்தில்; gulancha, Tinospera cordifolia.

   3. நெல்லி; emblic myrobalan, Phyllanthus emblica.

அமுக்கடி

அமுக்கடி amukkaḍi, பெ. (n.)

   1. நெருக்கடி; density in a throng of people.

   2. மந்தாரம்; cloudiness.

   3. முட்டாயிருத்தல் (சங்.அக.);; to be in straitened circumstances.

   4. மூடமாயிருத்தல் (சங்.அக.); ; stupidity, ignorance.

   5. மூடிக்கொள்ளுதல் (சங்.அக.); ; to close, as a hand or flower.

     [அமுக்கு + அடி.]

 அமுக்கடி amukkaṭi, பெ. (n.)

   கிடைத்ததைப் பற்றிக் கொள்ளுதல்; grabbing whatever available.

     “அவன்அமுக்கடிக் காரனாயிற்றே!.” (வ.சொ. அக.);.

     [அமுக்கு+அடி]

அமுக்கனங்கிழங்கு

 அமுக்கனங்கிழங்கு amukkaṉaṅgiḻṅgu, பெ. (n.)

அமுக்கிராக்கிழங்கு பார்க்க;see amukkira-k-kilangu.

அமுக்கன்

அமுக்கன் amukkaṉ, பெ. (n.)

   1. மறைவாகக் கருமஞ்செய்வோன்; one who does things secretly.

   2. கரவுள்ளவன்; sly, cunning person, dissembler.

   3. தூங்கும்போது ஒரு பேய் மேலுட்கார்ந்து அமுக்குவதுபோல் தோன்றும் உணர்ச்சி; nightmare.

ம. அமுக்கன்

     [அமுக்கு → அமுக்கன்.

     ‘அன்’ ஆ.பா. ஈறு.]

அமுக்கம்

 அமுக்கம் amukkam, பெ. (n.)

   உள்ளே யமுங்கியிருக்குந் தன்மை; compression.

     [அமுக்கு → அமுக்கம்.]

அமுக்கலான்

 அமுக்கலான் amukkalāṉ, பெ. (n.)

   கட்டி, சிலந்தி முதலியவற்றைக் கரையச்செய்யுந் தழையுள்ள செடி; a plant whose leaves are used as absorbifacient.

     [அமுக்கு → அமுக்கல் → அமுக்கலான்.]

அமுக்கி

 அமுக்கி amukki, பெ. (n.)

அமுக்கன் பார்க்க;see amukkan.

     [அமுக்கு → அமுக்கி.

     “இ” ஒருமையீறு.]

அமுக்கிரா

 அமுக்கிரா amukkirā, பெ. (n.)

   ஒரு மருந்துச் செடி; a medicinal plant, Indian winter cherry, s.sh., Withania somnifera.

மறுவ. அமுக்கிரி, அமுக்குரா, அமுக்குரவு.

ம. அமுக்கிரம்; க. அமக்கீர.

     [P]

அமுக்கிராக்கிழங்கு

 அமுக்கிராக்கிழங்கு amukkirākkiḻṅgu, பெ. (n.)

   அமுக்கிராச் செடியின் கிழங்கு, கட்டிகளைக் கரைக்கும் மருந்து; the root of Indian winter cherry used as an absorbifacient.

     [அமுக்கிரா + கிழங்கு.]

மறுவ. அமுக்கனங்கிழங்கு, அமுக்கிராங் கிழங்கு.

அமுக்கிராங்கிழங்கு

 அமுக்கிராங்கிழங்கு amukkirāṅgiḻṅgu, பெ. (n.)

அமுக்கிராக்கிழங்கு பார்க்க;see amukkira-k-kilangu.

     [அமுக்கிரா + கிழங்கு.]

அமுக்கிராபொடி

 அமுக்கிராபொடி amukkirāpoṭi, பெ.) (n.)

அமுக்கிராக் கிழங்குடன், திரிகடுகு, ஏலம், கிராம்பு, சிறு நாவற்பூ முதலிவற்றைக் கலந்து செய்த மருந்துப் பொடி

 a mixture of the powdered drugs such as horse-root dry ginger, pepper, long pepper, cardamum, cloe, Cassia buds.

     [அமுக்கிரா+பொடி]

அமு-அமுக்கு-அமுத்துதல். வீக்கத்தை அமுக்குதல். குறைக்கும் மருத்துவ இயல்பு கொண்டது. அமுக்கலாங்கீரை எனப் பெயர் பெற்று பேச்சு வழக்கில் அமுக்கலாங்கீரை – அமுக்கராக் கீரை எனத் திரிந்தது.

அமுக்கிரி

அமுக்கிரி amukkiri, பெ. (n.)

அமுக்கிரா பார்க்க;see amukkira (தைலவ. தைல. 42);.

அமுக்கு

அமுக்கு amukku, பெ. (n.)

   1. அழுத்துகை; pressure, as in a nightmare.

அவன் அமுக்குண்டு கதறிக்கொண்டு கிடந்தான் (உ.வ.);

   2. அழுத்துகிற பொறை (பாரம்);; the thing that compresses, incumbent weight (W.);.

     [அம் → அமுங்கு → அமுக்கு (மு.தொ.பெ.);.]

அமுக்கு-தல்

அமுக்கு-தல் amukkudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. அழுத்துதல், நெருக்குதல், கசக்குதல்; to crush, press, squeeze, as a fruit or a boil.

   2. அமரச்செய்தல், பிடித்திழுத்தல்; to press down, pull back.

     “வெற்பி னுச்சி தொட்ட முக்கின சிலகரம்” (உபதேச. கூர்ம 15);.

   3. நீருள் அமிழ்த்துதல்; to press down into water, immerse.

     “ஆழ வழுக்கி முகக்கினு மாழ்கடலுள்” (மூதுரை, 19);.

   4. தோற்கடித்தல், அடக்கியொடுக்குதல்; to overcome, repress.

அவனைச் சண்டையில் அமுக்கி விட்டான் (உ.வ.);.

ம. அமுக்குக; க. அமுது, அவுங்கு ; தெ. அவுக்கு, அன்சு ; து. அமபுனி ; கோத. அம்க் ; துட. ஓம்க் ; பட. அமக்கு.

     [அம் → அமுங்கு → அமுக்கு.]

அமுக்குணி

அமுக்குணி amukkuṇi, பெ. (n.)

   அடக்கி; a reticent person, one who pretends not to know anything about an event or incident.

   2. இருந்த இடத்தைவிட்டு அசையாத-வன்-வள்; one who sits unmoved.

     [அமுக்கு + உண்ணி – அமுக்குண்ணி → அமுக்குணி.

     ‘இ’ ஒருமை யீறு.

     ‘உண்’ செயப்பாட்டுத் துணைவினை.]

அமுக்குணிப்பிள்ளையார்

அமுக்குணிப்பிள்ளையார் amukkuṇippiḷḷaiyār, பெ. (n.)

   1. பிள்ளையார்போல் இருந்த இடத்தைவிட்டு அசையாத-வன்-வள் (உ.வ.);; one who sits unmoved as the image of Ganeśa (Com.u.);.

   2. ஒன்றும் தெரியாத-வன்-வள் போல் நடிப்ப-வன்-வள்; dissembler, reticent person.

     [அமுக்கு + உண்ணி + பிள்ளையார்.]

அமுக்குணி பார்க்க;see amukkuni.

அமுக்குரவு

 அமுக்குரவு amukkuravu, பெ. (n.)

அமுக்கிரா பார்க்க;see amukkira.

அமுக்குரா

 அமுக்குரா amukkurā, பெ. (n.)

அமுக்கிரா பார்க்க;see amukkira.

ம. அமுக்கிரம்; க. அமங்குர.

அமுக்கொத்தி

 அமுக்கொத்தி amukkotti, பெ. (n.)

   கத்திவகை, பாசவன் கத்தி; cleaver, butcher’s knife (W.);.

     [அமுக்கு + கொத்தி. அமுக்கு + கத்தி எனினுமாம்.]

அமுங்காக்கொடி

 அமுங்காக்கொடி amuṅgākkoḍi, பெ. (n.)

   நெட்டி (சித்.அக.); ; sola pith.

அமுங்கு-தல்

அமுங்கு-தல் amuṅgudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. அமர்தல் (சங்.அக.); ; to become compressed, to sink to a lower level.

கட்டமுங்கிவிட்டது.

   2. அமிழ்தல்; to sink.

   3. அழுந்துதல்; to be pressed down, mashed, as ripe fruit.

   4. நெரிபடல்; to be crushed, as by a weight.

வீடுவிழ எல்லாரும் அமுங்கிப்போனார்கள் (உ.வ.);.

ம. அமுங்ஙுக, அமங்ஙுக; க. அமுக்கு, அமுகு ; தெ. அதுமு ; கோண். அதமன ; கொலா., நா. அதும்.

அமுசகம்

 அமுசகம் amusagam, பெ. (n.)

   செருப்படை (சித்.அக.);; a diffuse prostrate herb found in tank beds and in the harvested fields, Coldenia procumbens.

     [அம்முதல் = அமுங்குதல். அம் → அமுசு → அமுசகம்.]

அமுசம்

 அமுசம் amusam, பெ. (n.)

   சிறுசெருப்படை (மலை.);; a small variety of Coldenia procumbens.

     [அம்முதல் = அமுங்குதல். அம் → அமுசு → அமுசம்.]

அமுசு

 அமுசு amusu, பெ. (n.)

   ஒட்டடை ; soot.

     [அம் → அமுசு.]

 அமுசு amucu, பெ. (n.)

   அழகு, பேரழகு; beauty,

 charming.

     [அம்.(அழகு);அம்முது-அமுசு]

அமுணங்கம்

அமுணங்கம் amuṇaṅgam, பெ. (n.)

   அடக்கமின்மை (சிந்தா. நி. 190); ; want of self restraint.

     [முணங்குதல் = முடங்குதல், உள்ளடங்குதல். முணங்கு → முணங்கம் = உள்ளொடுக்கம், அடக்கம். அ (எ.ம.முன்.); + முணங்கம் – அமுணங்கம்.]

அமுதகடிகை

அமுதகடிகை amudagaḍigai, பெ. (n.)

   சில நாண்மீன் காலங்களில் மங்கல வினைகட்குரியனவாகச் சொல்லப்படும் நாழிகைகள் (விதான. குணா. 26;27);; auspicious hour of each day.

     [அமுதம் + கடிகை. அமுதம் = அமுதம்போற் சிறந்தது. கடிகை = நாழிகைவுட்டில், நாழிகை.]

அமுதகண்டலி

 அமுதகண்டலி amutakaṇṭali, பெ. (n.)

   பழம்பெரும் இசைக்கருவி; a musical instrument.

     [அமுதம்+கண்டம்+அளி]

அமுதகதிரோன்

 அமுதகதிரோன் amudagadirōṉ, பெ. (n.)

   திங்கள் (பிங்.);; moon.

     [அமுதம் + கதிரோன். அமுதம் = இனிமை, இன்பம். கதிரோன் = ஒளிக்கதிருடையது.]

அமுதகம்

அமுதகம் amudagam, பெ. (n.)

   1. கொங்கை; woman’s breast.

   2. பாற்கடல்; sea of milk.

   3. உண்டிச்சாலை; hotel, eating house.

   4. நீர்; Water.

     [அமுது (பால், உணவு); + அகம் (இடம்);.]

அமுதகரந்தை

 அமுதகரந்தை amudagarandai, பெ. (n.)

   சிவ கரந்தை (சித்.அக.);; fever basil (செ.அக.); – a plant, Schoenanthes zeylanica (சா.அக.);.

     [அமுதம் + கரந்தை. அமுதம் = சிறந்த மருந்து. கரந்தை = கரிய (நீல); நிறப் பூப் பூக்கும் பூண்டு. கள் → கர் → கரம் → கரந்து → கரந்தை.]

அமுதகிண்ணம்

அமுதகிண்ணம் amudagiṇṇam, பெ. (n.)

   1. பாற்கிண்ணம்; milk bowl.

   2. இளம்பெண் முலை; maiden’s breast (சா.அக.);.

     [அமுதம் (பாலுள்ளது); + கிண்ணம் (சிறுகலம், கிண்ணம் போன்ற வடிவுகொண்ட வுறுப்பு);.]

அமுதகுடம்

அமுதகுடம் amudaguḍam, பெ. (n.)

   1. பாற்குடம்; milk-pitcher.

   2. பெண்முலை; woman’s breast (சா.அக.);.

     [அமுதம் (பாலுள்ளது); + குடம் (உருண்ட கலம், குடம்போன்ற வுறுப்பு);.]

அமுதகுண்டம்

 அமுதகுண்டம் amudaguṇṭam, பெ. (n.)

   பாற்குடம்; milk pot.

     [Skt amrita + குண்டம். அமுதம் + குண்டம் (குண்டாயிருக்குங் கலம்);.]

அமுதகுண்டலி

 அமுதகுண்டலி amutakuṇṭali, பெ. (n.)

தோற்கருவியினுள் ஒன்று,

 a parcussion instrument.

     [அமுது+குண்டலி]

அமுதகுண்டா

 அமுதகுண்டா amudaguṇṭā, பெ. (n.)

   இரப் போர்கலம்; beggar’s bowl.

     [Skt. amrita + குண்டா. அமுதம் = உணவு, சோறு. குள் → குண்டு → குண்டா.]

அமுதகுலர்

அமுதகுலர் amudagular, பெ. (n.)

   1. இடையர் (வின்.); ; herdsmen, as dispensers of milk.

   2. சான்றோர் (வின்.); ; the learned, the great.

     [அமுதம் = பால், அமுதம்போற் சிறந்த அறிவு. குலம் = கூட்டம், தொழில்வகுப்பு, வகுப்பு. குலம் → குலன் (ஆ.பா.); – குலர் (ப.பா.);.]

அமுதகுழலற்றகோளம்

 அமுதகுழலற்றகோளம் amudaguḻlaṟṟaāḷam, பெ. (n.)

   அமுததாரையில்லாத கோளங்கள்; ductless glands (சா.அக.);.

     [அமுதம் + குழல் + அற்ற + கோளம்.]

அமுதகுழல்

 அமுதகுழல் amudaguḻl, பெ. (n.)

   அமுதகோளத்தின் குழாய்; the duct of a gland (சா. அக.);.

அமுதகுவிகம்

 அமுதகுவிகம் amudaguvigam, பெ. (n.)

அமுதக்குவிகம் பார்க்க;see amuda-k-kuvigam.

அமுதகோணிகம்

அமுதகோணிகம் amudaāṇigam, பெ. (n.)

   செங்கிளுவை; the whistling teal, Dendrocygna awsuree alias D. arcuata (சா.அக.);.

சில கூட்டுச்சொற்கள், செ. அகரமுதலியில் (Lexicon); வலிமிக்கும், சா. அகரமுதலியில் வலிமிகாதும் புணர்ந்துள்ளன.

எ-டு: செ. அகரமுதலி சா. அகரமுதலி

அமுதக்குவிகம் அமுதகுவிகம்

அமுதச்சேவிகம் அமுதசேவிகம்

இங்ஙனமே அமுதக்கோணிகம் என்று செ. அகரமுதலியிலும் (பின்னிணைப்பு);, அமுத கோணிகம் என்று சா. அகரமுதலியிலும் உள்ளன. இவ்விரண்டும் ஒன்றே.

எல்லா ஆங்கில அகரமுதலிகளிலும்

     ‘peal’ (அல்லது peel); என்பது ஒரு கடல்மீனென்றும்,

     ‘teal’ என்பது ஒரு வாத்து என்றுமே குறிக்கப்பட்டுள்ளன.

     ‘peal’ என்னும் கடல்மீன் பிரித்தானியத் தீவுக் கடல்களில் மட்டும் கிடைப்பது. அதன் பெயர்

     ‘Salmon grilse’ என்று அயர்லாந்திலும்,

     ‘sea-trout’ என்று இங்கிலாந்திலும் வழங்குகின்றது.

வீளை (whistle); யொலிக்கும் அஃறிணை வுயிரினங்களாகச் சில மரங்களும், மீன்களும், பறவைகளும், எலி பாம்பு போன்ற நிலவுயிரிகளும் ஆங்கில அகரமுதலிகளிற் குறிக்கப்படுகின்றன. அவை

     ‘whistler’ என்று பொதுப் பெயர் பெறுகின்றன.

கூட்டுச்சொற் பெயர் பெறின், whistle-coot, whistle-fish, whistle-insect, whistle-duck, whistle-pig, whistle-wing, whistle-wood என்றும் ; whistling dick, whistling duck, whistling eagle &&&& whistling kite whistling fish, whistling frog, whistling hawk, whistling marmot, whistling moth, whistling plover, whistling snipe, whistling swan, whistling teal, whistling thrush என்றும் குறிக்கப்படுகின்றன.

எருதந்துறைப் பேரகரமுதலியிலும் (The Oxford English Dictionary);

 Whistle-fish, a name for different species of rockling or sea-loach,

 Whistler 2. C. whistle-fish., Whistling fish = whistle=fish

என்றும். Peal, a name given to a. a grilse or young salmon; (now esp. one under two pounds in weight);; b. a smaller species of salmon என்றும் குறிக்கப்பட்டுள்ளது.

ஆயின்

     “whistle-peal’ என்றோ,

     “whistling peal’ என்றோ ஒரகர முதலியிலும் குறிக்கப்படவில்லை.

     ‘whistle-fish’ அல்லது

     ‘whistling fish’ என்று வருமிடமெல்லாம், rockling அல்லது sea-loach அல்லது three or five bearded rockling என்றே பொருள் கூறப்பட்டுள்ளது ; peal என்றோ, salmon, grilse என்றோ, sea-trout என்றோ கூறப்படவில்லை. ஆகவே,

     ‘peal’ என்பது விளைமீனினத்தைச் (whistle-fish); சேர்ந்ததன் றென்பது தெளிவாகின்றது.

மேலும்,

     ‘peal’ என்பது பிரித்தானியக் கடல் மீன்களுள் (British fishes); ஒன்றாயிருப்பதால், அதற்குத் தமிழ்நாட்டிற்

     ‘செங்கிளுவை’ யென்று பெயர் ஏற்பட்டிருக்கவும் முடியாது.

     ‘teal’ என்னும் சிறு குள்ளவாத்து வகை இந்தியாவிலுமுள்ளது.

 Teal, a small fresh-water fowl Querquedula or Anascrecca, or other species of the genus, the smallest of the ducks, widely distributed in Europe, Asia, and America; also locally applied to other genera of the Anatidae (O.E.D.);.

ஆகவே, சா. அகரமுதலியில்

     ‘அமுத கோணிகம்’ என்பதற்கு

     “whistling teal’ என்று குறித்திருப்பதே சரியென்பதும், செ. அகர முதலியில் (பின்னிணைப்பு);

     ‘whistling peal’ என்று குறித்திருப்பது தவறு என்பதும் அறியப்படும். இத் தவறு பெரும்பாலும் அச்சுப்பிழையாயிருக்கலாம்.

இதனால் கிளுவை யென்றொரு மீனிருப்பினும், செங்கிளுவை யென்பது பறவையினமென்பது அறியப்படும்.

செங்கிளுவையென்னுஞ் சொல்லிற்கு, செ. அகரமுதலி மூலத்தொகுதியிலேயே, 1. கீச்சுத் தாரா ; 2. ஒருவகை மரம் என்று இரு பொருளே கூறப்பட்டிருத்தல் காண்க.

அமுதகோளம்

 அமுதகோளம் amudaāḷam, பெ. (n.)

     [அமுதம் + கோளம். அமுதம் = உயிர்மருந்து ஒத்த சுரப்பு நீர். கோளம் = உருண்டை. குள் → கொள் → கோள் → கோளம்.]

அமுதக்கதிர்க்கடவுள்

அமுதக்கதிர்க்கடவுள் amudakkadirkkaḍavuḷ, பெ. (n.)

   திங்கள்; moon.

     “அமுதக் கதிர்க் கடவுள் ரவிகட் கிரட்டி தனி” (தக்கயாகப். 460);.

     [அமுதம் + கதிர் + கடவுள்.]

அமுதக்குவிகம்

 அமுதக்குவிகம் amudagguvigam, பெ. (n.)

   செங்கற்றாழை; a species ofaloe (சித்.அக.); — dull red-flowered aloe, Aloe vera (rosea); (செ.அக.);.

     [அமுதம் + குவிகம். அமுதம் = சிறந்த மருந்து. குவிகம் = மேனோக்கிக் குவிந்தது.]

அமுதக்கொடி

 அமுதக்கொடி amudakkoḍi, பெ. (n.)

   பெரு மருந்துக்கொடி (பச்.மூ.); ; Indian birthwort.

     [அமுதம் + கொடி.]

அமுதக்கோணிகம்

 அமுதக்கோணிகம் amudagāṇigam, பெ. (n.)

   செங்கிளுவை (சித்.அக.); ; whistling teal.

     [அமுதம் + கோணிகம். அமுதம் = சிறந்தது.]

அமுதங்கரந்த நஞ்சு

அமுதங்கரந்த நஞ்சு amudaṅgarandanañju, பெ. (n.)

   1. இஞ்சி; ginger.

   2. கடுஞ்சொல்லுங் கனிந்த மனமுமுடைய-வன்-வள்; a person of harsh words but kind disposition (W.);.

அமுதசகரம்

 அமுதசகரம் amudasagaram, பெ. (n.)

   மஞ்சிட்டி (வை.மூ.); ; Indian madder, mañjit.

ஒ.நோ ; அமுத்திரம்

அமுதசம்பூதன்

அமுதசம்பூதன் amudasambūdaṉ, பெ. (n.)

   பாற்கடலில் பிறந்த நிலவு (வரத. பாகவத. குருகு. 23);; Moon, as born from the ocean of milk.

     [Skt. a-mrta + sam – bhuta → த. அமுதசம்பூதன்.]

அமுதசருக்கரை

 அமுதசருக்கரை amudasarukkarai, பெ. (n.)

   சீந்திற்கிழங்கிலிருந்து செய்த சருக்கரை (சங்.அக.);; a medicinal vegetable salt prepared from the root or stem of the plant gulancha.

மறுவ. சீந்தில்மா

அமுதசாரணி

 அமுதசாரணி amudacāraṇi, பெ. (n.)

   வெள்வேல் (வை.மூ.);; panicled babul (செ.அக.); – white babool, white bark acacia, Acacia leucophloea (சா.அக.);.

அமுதசாரம்

அமுதசாரம் amudacāram, பெ. (n.)

   1. அமுதசாரணி பார்க்க;see amuda-Sarani.

   2. தேன்; honey (சா.அக.);.

   3. கற்கண்டு; sugar-candy (சா.அக.);.

அமுதசுரபி

அமுதசுரபி amudasurabi, பெ. (n.)

   மணிமேகலை கையிலிருந்த உலவாக் கலம் (அட்சய பாத்திரம்);; a vessel supplying inexhaustible food, used by Manimégalai, for feeding the poor.

     “அமுத சுரபியெனும் மாபெரும் பாத்திரம்” (மணிமே. 11;44-5);.

     [அமுதம் + சுரபி. சுரத்தல் = ஊறுதல், சொரிதல், கறத்தல். சுர → சுரப்பு → சுரப்பி → சுரபி → Skt. surabhi.]

அமுதசுரா

 அமுதசுரா amudasurā, பெ. (n.)

அமுதசாரணி பார்க்க;see amuda-Šarani,

அமுதசுறா

 அமுதசுறா amudasuṟā, பெ. (n.)

அமுதசுரா பார்க்க;see amuda-Šura.

     [அமுதம் + சுரா (சாரம்); → சுறா (வெள்வேல்);. சுர → சுரா.].

 அமுதசுறா amudasuṟā, பெ. (n.)

   பாற்சுறா; a white shark (சா.அக.);.

     [சுள் → சுர் → சுரி. சுரித்தல் = துளைத்தல், குத்துதல், வெட்டுதல். சுரி → சூரி = குத்தி, கத்தி வகை. சுர் → சுறு → சுற → சுறவு → சுறா. அமுதம் (பால், வெள்ளை); + சுறா (வெட்டும் செதிளுடைய மீன்.]

அமுதச்சேவிதம்

 அமுதச்சேவிதம் amudaccēvidam, பெ. (n.)

   சிறுகுறிஞ்சா (சித்.அக.); ; a medicinal climbing plant (செ.அக.);—

   அமுதசேவிதம்; small Indian ipecacuanha, Gymnema sylvestris (சா.அக.);.

அமுதச்சோகிதம்

 அமுதச்சோகிதம் amudaccōkidam, பெ. (n.)

   செங்குமிழ் (சித்.அக.); ; small cashmeer tree (செ. அக.); –

   அமுதசோகிதம்; red cashmcer tree, Gmelina tomentosa (சா.அக.);.

அமுததரம்

அமுததரம் amudadaram, பெ. (n.)

   1. மஞ்சிட்டி (மலை.);; muñjit.

   2. மஞ்சிட்டி; arnotto (L.); madder of Bengal, Bixa orellan (சா.அக.);.

அமுததாரை

அமுததாரை amudadārai, பெ. (n.)

   1. அமிர்தத் துளி; ambrosial drop.

     “அமுத தாரைகள் எற்புத் துளைதொறு மேற்றினன்” (திருவாச. 3 ; 174-5);.

   2. உடம்பினுள் அமுதந் தங்கி நிற்கும் பலவிடங்கட்குப் போகும் வழி; nerve channel through which ambrosia is supposed to circulate and reach several centres in the human system (சா.அக.);.

   3. முலைப்பால் வரும் வழி; milk duct, galactophorous duct.

அமுதநிலை

அமுதநிலை amudanilai, பெ. (n.)

   1. உடம்பில் அமுதந் தங்கிநிற்குங் கோளங்கள்; situation of several glands in the body supposed to be capable of producing secretions or vital fluids like ambrosia.

     “அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்” (விநா. அக.); – (சா. அக.);.

   2. மகளிர் உடம்பில் குறித்த காலங்களில் தொடுவதால் காமவின்பம் விளைப்பதாகக் கருதப்படும் பெருவிரல், புறந்தாள், பரடு, முழங்கால், அல்குல், கொப்பூழ், மார்பு, முலை, கைமூலம், கழுத்து, கன்னம், வாய், கண், நெற்றி, உச்சி என்னும் பதினைந் திடங்கள் (கொக்கோ. 2;1);; The 15 parts of a woman’s body supposed to yield sensuous delight when touched on particular days, viz., big toe, instep, ankle, knee, the part between the waist and the genital organ, navel, chest, breast, arm-pit, neck, cheek, mouth, eye, forehead and crown.

அமுதநீர்

அமுதநீர் amudanīr, பெ. (n.)

   1. விந்து, வெள்ளை (சுக்கிலம்); (சித்.அக.);; semen virile.

   2. விடாய் நீர் (சூதக நீர்); (சித்.அக.);; menstrual fluid or blood.

   3. பிண்ட நீர்; liquid contained in the amniotic sac in which the foetus lies (சா. அக.);.

   4. திரைந்த பாலினின்று பிரிக்கப்பட்ட நீர்; whey.

அமுதனார்

 அமுதனார் amudaṉār, பெ. (n.)

   மாலியக் குரவருள் (வைஷ்ணவாசாரியருள்); ஒருவரும் இராமானுசாசாரியரின் காலத்தவரும் இராமானுச நூற்றந்தாதியின் ஆசிரியருமானவர்; name of the author of the Ramanuša-nurranddai, contemporary of Rāmānujāchārya.

     [அமுதம் → அமுதன் (ஆ.பா.); – அமுதனார்.]

அமுதபுரம்

 அமுதபுரம் amudaburam, பெ. (n.)

   சிறுகுறிஞ்சா (பச்.மூ.);; a medicinal climbing plant.

அமுதச்சேவிதம் பார்க்க;see amuda-c. cēvidam.

அமுதப்பார்வை

 அமுதப்பார்வை amudappārvai, பெ. (n.)

   குளிர்ந்த இனிய பார்வை; sweet inspiring look, as a lady’s towards her lover (W.);.

     [அமுதம் + பார்வை.]

அமுதப்பால்

 அமுதப்பால் amudappāl, பெ. (n.)

   முலைப்பால்; woman’s breast milk (சா.அக.);.

     [அமுதம் + பால்.]

அமுதப்பீ

 அமுதப்பீ amudappī, பெ. (n.)

   தான்றிக்காய் (பச்.மூ.);; unripe fruit of belleric myrobalan.

     [அமுதம் + பீ.]

அமுதமூளை

 அமுதமூளை amudamūḷai, பெ. (n.)

   பெருமூளை;  cerebrum (சா.அக.);.

அமுதமேந்தல்

 அமுதமேந்தல் amudamēndal, தொ.பெ. (vbl.n.)

   பெரியோர்க்கு உண்டி படைத்தல் (சூடா.);; serving food to the holy or the great.

     [அமுதம் + ஏந்தல்.]

அமுதம்

அமுதம் amudam, பெ. (n.)

   1. முலைப்பால்; mother’s breast milk.

   2. ஆவின்பால்; cow’s milk (பிங்.);.

   3. தயிர் (வின்.);; curd.

   4. மழை (அக.நி.);; rain

   5. முகில் (பொதி.நி);; cloud.

   6. நீர்; water.

     “துலங்கிய வமுதம்” (கல்லா. 5);.

   7. சோறு (பிங்.);; boiled rice.

   8. உப்பு (பிங்.);; salt.

   9. இனிமை (நாமதீப.); ; sweetness.

     “தேன்பொதிந் தமுத மூறப் பயிரிலா நரம்பிற் கீதம்” (சீவக. 2048);.

   10. சுவை (பிங்.);; taste, flavour, relish.

   11. பெருமை (பொதி.நி.); ; eminence, greatness.

   12. சிறந்த தன்மை; excellence.

   13. விரும்பப்படுவது (சங்.அக.);; desirable thing.

   14. உயிர்மருந்து; nectar of life.

   15. சீந்தில் (மலை.);; gulancha.

   16.

     ‘திரிபலை’ யென்னும் முக்காய் (வின்.); -கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் என்பன;

 the three myrobalan fruits, viz., Terminalia chebula, Phyllanthus emblica and Terminalia bellerica (சா.அக.);.

   17. முக்கடுகம் என்னும் சுக்கு மிளகு, திப்பிலி; the three special spices, viz., dried ginger, pepper and long pepper.

   18. அமிர்தக் கடுக்காய்; a class of fleshy gall-nut with small kernels (சா.அக.);.

   19.

     ‘பூமிசர்க்கரை’ என்னும் நிலச்சருக்கரை (நாமதீப.);;

 necklaceberried climbing caper.

   20. காட்டுக்கொஞ்சி (பச்.மூ.);; opal orange, Glycosmis pentaphylla (சா.அக.);.

   21. விந்து (நாமதீப.);; semen.

   22. தலைப்பிண்டச் செயனீர்; a liquid essence prepared from the brain of the first-born child (சா.அக.);.

   23. உருக்கு; steel (சா.அக.);.

   24. அமுதகடிகை; auspicious hour of each day.

     “ஆங்கதன் மேனான் கமுத மென்னே” (விதான, குணாகுண. 27);.

   25. பேரின்ப வீடு (முத்தி);; final liberation from this world.

     “அமுதம் பெறுசண்டி” (தேவா. 7.65 ; 2);.

     [அம்மு (பால்); → அம்முது → அமுது → அமுதம். அவிழ் (சோறு); → அவிழ்து → அமிழ்து → அமிழ்தம் → அமிதம் → அமுதம்.]

அமிழ்து பார்க்க;see amildu.

அமுதர்

 அமுதர் amudar, பெ. (n.)

   பால் விற்கும் முல்லை நில மாக்கள், இடையர் (பிங்.);; herdsmen, as dispensers of milk.

     [அமுதம் (பால்); → அமுதன் (ஆ.பா.); – அமுதர் (ப.பா.);.]

அமுதவல்லபன்

அமுதவல்லபன் amutavallapaṉ, பெ. (n.)

   1314ல் வாழ்ந்த திருவாய்ப்பாடி நாட்டவர்.

 tiruvaypadd man who lived during 1314.

     [அமுதன்+வல்லபன்]

அமுதவல்லி

 அமுதவல்லி amudavalli, பெ. (n.)

   சீந்தில் (திவா.);; gulancha (செ.அக.);—moon-creeper, Tinosphora cordifolia alias Menispermum cordifolium (சா.அக.);.

அமுதவி

அமுதவி amudavi, பெ. (n.)

   1. கடுக்காய்; country gall-nut, chebulic myrobalan.

   2. அமுதவல்லி பார்க்க;see amuda-valli.

   3. நெல்லி; country goose berry, Phyllanthus emblica (சா.அக.);.

அமுதவிந்து

அமுதவிந்து amudavindu, பெ. (n.)

 a mystic symbol representing ether, in the form of a globular drop.

     “அறு புள்ளி அமுதவிந்து” (சி. சி. சுபக். 2 ; 68);.

அமுதவெழுத்து

அமுதவெழுத்து amudaveḻuddu, பெ. (n.)

     “கசதந பமவ வேழொடும் அகரம்

இகரம் உகரம் எகரம் நான்கும்

அமுத வெழுத்தென் றறைந்தனர் புலவர்” (இலக். வி. 779);.

     [அமுதம் + எழுத்து.]

அமிழ்து பார்க்க;see amildu.

அமுதவேணி

அமுதவேணி amudavēṇi, பெ. (n.)

   கங்கையை முடியிலணிந்தவன், சிவன் (திருப்பு.202);; Sivan, as having the Ganges in his matted hair.

     [அமுதம் + வேணி.]

அமுதாரி

 அமுதாரி amutāri, பெ. (n.)

   பூனைக்காலி (மலை.);; cowhage (செ.அக.); – cat-bean, Mucana pruriens (சா.அக.);.

அமுது

அமுது amudu, பெ. (n.)

   1. முலைப்பால்; breast milk.

   2. ஆவின் பால்; cow’s milk.

   3. உறை மோர்; butter-milk, used for curdling boiled milk.

   4. சோறு; boiled rice.

   5. உணவு; food.

     “வாடா மலரும் நல்லமுதும்” (ஞானவா. பிரகலா.8);.

   6. உப்பு; salt.

     “அள்ளலோங்களத் தமுதின் பண்டியும்” (கம்பரா. பால. நாட்டு. 54);.

   7. தெய்வத்திற்குப் படைக்கும் கறிவகை, உணவுவகைகளைக் குறிக்கும் பொதுச்சொல்; affix to the names of articles of food and drink offered to God.

எ-டு; கறியமுது, பருப்பமுது, இலையமுது, தயிரமுது.

   8. மழை (பொதி.நி.);; rain.

   9. நீர்; water.

     “அமுதுகொப்பளித்திட வாங்கி” (தைலவ. தைல. 34);.

   10. உயிர் மருந்து; elixir.

   11. இனிமை (பிங்.);; sweetness.

   12. இயற்கையாக விளையும் செல்வப் பொருள்; natural products.

     “கடல்படு மமுதும்” (நைடத. நாட்டு, 25);.

   13. நிலவொளி; moon light.

     “திங்க ளின்னமு திறைப்ப” (கூர்மபு. அட்ட. 27);.

   14. அமுதகடிகை; auspicious hour of each day.

     “பொன்னவன் கடத்துறினு மமுதெனப் போற்றுவரே” (விதான. குணாகுண. 25);.

   15. பேரின்ப வீடு, ஆதன் விடுதலை; eternal bliss, liberation of the soul.

     [அம்மு → அம்முது → அமுது. அவிழ் → அவிழ்து → அமிழ்து → அமிது → அமுது.]

அமிழ்து பார்க்க;see amildu.

அமுது படைத்-தல்

அமுது படைத்-தல் amudubaḍaiddal,    4 செ.குன்றாவி, (v.t.)

   உணவு பரிமாறுதல்; to serve food.

     “உழையிடை யமுது படையென” (திருவாலவா. 31; 11);.

அமுதுகுத்து-தல்

அமுதுகுத்து-தல் amuduguddudal,    5 செ.கு.வி. (v.i.)

   பிரைமோர் ஊற்றுதல் (மாலியப்பிராம.);; to add a little butter-milk to boiled milk to make curd (Vaişņ. Brāhm.);.

அமுதுசெய்-தல்

அமுதுசெய்-தல் amuduseydal,    1 செ.குன்றாவி. (v.t.)

   உண்ணுதல் (ஒரு கண்ணிய வினைச் சொல்);; to eat, dine (a term used to enhance respect);.

     “நறுவெண்ணெ யாயர் மங்கைய ரிடவிட வமுது செய்து” (பாரத. நச்சு. 1);.

அமுதுபடி

அமுதுபடி amudubaḍi, பெ. (n.)

   1. உணவு; food.

     ‘இவள்தான் அமுதுபடி திருத்துவது சாத்துப்படி திருத்துவதாகாநின்றாள்’ (தில். பெரியாழ். 3.7 ; 8. வியா.);.

   2. அரிசி; rice.

     “அமுதுபடி புறம்பில்லை யென்செய் கேன்” (திருவாலவா. 31;12);.

ம. அமுதுபடி

     [அமுது = சோறு. படி = நாழி. அளவு, அளவிட்ட சோறு அல்லது உணவு, அளவிட்ட அரிசி.]

 அமுதுபடி amutupaṭi, பெ. (n.)

   உணவுச் செலவு; expenditure of food stuff.

     [அமுது+படி]

அமுதுபாறை

 அமுதுபாறை amudupāṟai, பெ. (n.)

   பெருமாள் கோயில்களிற் சோற்றுடன் தயிரை அல்லது புளிச்சாற்றைக் கலக்குங் கற்பலகை; stone slab on which boiled rice is mixed with curds or prepared tamarind juice, in Vişou temples.

அமுதுபுரம்

 அமுதுபுரம் amuduburam, பெ. (n.)

   சிறு குறிஞ்சா; a medicinal climbing plant.

அமுதச்சேவிதம் பார்க்க;see amuda-c. cē vidam.

அமுதுமண்டபம்

 அமுதுமண்டபம் amudumaṇṭabam, பெ. (n.)

   கோயில் மடைப்பள்ளி (கல்வெட்.);; temple kitchen hall where food is prepared (Insc.);.

அமுதுமோர்

 அமுதுமோர் amudumōr, பெ. (n.)

   உறைமோர்; butter-milk used for curdling boiled milk.

அமுதுறை

அமுதுறை amuduṟai, பெ. (n.)

   எலுமிச்சை (சிந்தா.நி. 198);; sour lime, Citrus medica acida.

     [அமுது + உறை – அமுதுறை (பாலை உறையச் செய்யும் சாறுள்ள கனிமரம்);.]

அமுதுார்

 அமுதுார் amur, பெ. (n.)

   வந்தவாசி வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Wandiwash Taluk.

     [அமுது+ஊர்]

அமுதூட்டு-தல்

அமுதூட்டு-தல் amudūṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. குழந்தைக்குப் பாலூட்டுதல்; to feed a child with milk, to suckle.

   2. பிள்ளைக்கு ஏழாம் மாதம் சோறூட்டுதல் (பிங்.); ; to start feeding a child with boiled rice in the seventh month.

     [அமுது + ஊட்டு. உண் (த.வி.); – ஊட்டு (பி.வி.);.]

அமுதெழுத்து

 அமுதெழுத்து amudeḻuddu, பெ. (n.)

   பாட்டியற்படி ஒரு பனுவலின் அல்லது பாடலின் முதலில் வரவேண்டிய மங்கலவெழுத்து (பிங்.); ; a letter deemed auspicious for commencing a poem, acc. to Poetics.

அமுதவெழுத்து பார்க்க;see amuda-y-eluttu.

     [அமுது + எழுத்து.]

அமுதை

அமுதை amudai, பெ.. (n.)

   1. சீந்தில்; gulancha.

   2. கடுமரம்; chebulic myrobalan.

   3. நெல்லி; emblic myrobalan.

அமுதை → Skt. amrita.

     [அமுது → அமுதை.]

அமுத்தல்

 அமுத்தல் amuttal, பெ. (n.)

   கர்க்கடசிங்கி (பரி.அக.);; Japanese wax-tree.

அமுத்தி

 அமுத்தி amutti, பெ. (n.)

   விருப்பின்மை (சிந்தா.நி.);; dislike.

அமுத்திரம்

 அமுத்திரம் amuttiram, பெ. (n.)

   மஞ்சிட்டி (பச்.மூ.);; Indian madder, mañjit.

ஒ.நோ ; அமுதசகரம்

அமுந்திரம்

 அமுந்திரம் amundiram, பெ. (n.)

   முத்தக்காசு (பரி.அக.);; straight sedge.

அமுந்திரி

 அமுந்திரி amundiri, பெ. (n.)

   அரிசி (மாலி);; rice (Vaiśn.);.

     [ஒருகா. அமுது + அரி. அமுது = சோறு. அரி = அரிசி.]

அமுரி

அமுரி amuri, பெ. (n.)

   1. மூத்திரம், சிறப்பாகச் சிறுகுழந்தை மூத்திரம்; urine, esp. that of a child.

   2. கடல்நீர்; sea water.

   3. கருங்குன்றி; a black species of Indian liquorice, Abrus precatorius.

   4. ஒரு செடி; a plant.

எ-டு : அமுரி சுட்டுச் சாம்பலாக்கல்.

   5. ஒகப் பயிற்சியினால் உடலிலுண்டாகும் அமுதம்; nectar believed to be generated in the body by yogic exercises (செ.அக.);.

ஓகம் → Skt. yoga.

     [உவர் → உவரி → உமரி → அமரி → அமுரி.]

அமுரிகம்

 அமுரிகம் amurigam, பெ. (n.)

   சிறுநீருள் ளிருக்கும் ஒரு பளிங்கியற் பொருள்; a crystalline substance that exists in urine, urea (சா.அக.);.

     [அமுரி → அமுரிகம்.]

அமுரிசிங்கி

 அமுரிசிங்கி amurisiṅgi, பெ. (n.)

   ஒரு மருந்தெண்ணெய்; a kind of medicated oil (சா. அக.);.

அமுரிதம்

 அமுரிதம் amuridam, பெ. (n.)

   சிறுநீர் பெய்விக்கும் மருந்து; medicine exciting discharge of urine, diuretic (சா.அக.);.

ஒ.நோ ; அமுரியோட்டி

     [அமுரி → அமுரிதம்.]

அமுரித்திரகம்

 அமுரித்திரகம் amurittiragam, பெ. (n.)

   குண்டிக் காயினுள்ளிருக்கும் சிறுநீர்க் குழாய்கள்; the urinary tubes of the kidneys, urinoferous tubules (சா.அக.);.

     [அமுரி + திரகம். ஒருகா. துர → துரகம் → திரகம். துரத்தல் = செலுத்தல்.]

அமுரிநஞ்சு

அமுரிநஞ்சு amurinañju, பெ. (n.)

   சிறுநீர்ப் பொருள்கள் உடம்பின் தாதுவிற் சேர்வதனாலுண்டாகும் நச்சுத்தன்மை; urosepsis.

   2. சிறு நீரிலுண்டான நச்சுப்பொருள்; urotoxin (சா. அக.);.

அமுரிமுறி-த்தல்

அமுரிமுறி-த்தல் amurimuṟittal,    4 செ.கு.வி. (v.i.)

   சிறுநீரிலுள்ள களங்கங்களை நீக்குதல்; to remove the impurities in the urine (சா.அக.);.

அமுரியரத்தம்

 அமுரியரத்தம் amuriyarattam, பெ. (n.)

   சிறு நீர்க் கழிவு அரத்தத்திற் கலப்பதனாலேற்படும் நோய்; morbid condition of blood due to retention of urinary matter normally eliminated by kidneys, uraemia (சா.அக.);.

     [அமுரி + அரத்தம்.]

அமுரி பார்க்க;see amuri.

அமுரியான்

 அமுரியான் amuriyāṉ, பெ. (n.)

   நவச்சாரம்; ammonia hydrochlorate (சா.அக.);.

     [அமுரி → அமுரியான்.]

அமுரியுப்பு

அமுரியுப்பு amuriyuppu, பெ. (n.)

   சிறுநீரினின்றெடுக்கும் உப்பு; salt extracted from urine, urate.

   2. சுண்ணத்தினின்று (சுண்ணாம்பினின்று); நீரைப் பிரிக்கும் ஓர் உப்பு; a salt used for absorbing water from lime (சா.அக.);.

     [அமுரி + உப்பு.]

அமுரி பார்க்க;see amuri.

அமுரியோட்டி

 அமுரியோட்டி amuriyōṭṭi, பெ. (n.)

   சிறுநீரை அடிக்கடி வெளிப்படுத்தும் மருந்து; a medicine that hastens the secretion or excretion of urine, diuretic (சா.அக.);.

ஒ.நோ.; அமுரிதம்

     [அமுரி + ஒட்டி. ஒடு → ஒட்டு → ஒட்டி. ஒட்டுதல் = விரைந்து போக்குதல்.

     ‘இ’ வினைமுதல் ஈறு.]

   குறிப்பு;     ‘அமுர்தம்’ என்னும் வடிவு வழுநிலையாதலால், அச் சொல்லும் அதனை நிலைச் சொல்லாகக் கொண்ட கூட்டுச்சொற்களும் இவ்வகரமுதலியிற் கொள்ளப்பட்டில். அச்சொல் வழக்குள்ள இடமெல்லாம் அமிர்தம் அல்லது அமுதம் என்று மாற்றிக்கொள்க.

அமுறை

 அமுறை amuṟai, பெ. (n.)

   பூசணி மொக்குள் (இராசவைத்.);; pumpkin bud (சங்.அக.);.

அமுல்

அமுல் amul, பெ. (n.)

   1. அதிகாரம்; authority sway.

   2. மேல் உசாவு; administration or management of any land or business on behalf of another (R.R.);.

   3. நடைமுறைப்படுத்தம்; effect.

     ‘நாளையிலிருந்து இந்தச் சட்டம் அமுலுக்கு வருகிறது.

த.வ. நடைமுறைப்படுத்தம்.

     [U. amal → த. அமுல்.]

அமூர்த்தன்

அமூர்த்தன் amūrttaṉ, பெ. (n.)

   உருவில்லாதவன், சிவன் (சி.சி.1, 30, மறைஞா.);; Sivan, as formless.

த.வ. உருவிலன்.

     [Skt. a-murta → த. அமூர்த்தன்.]

அமூர்த்தம்

 அமூர்த்தம் amūrttam, பெ. (n.)

   உருவில்லாதது; that which is without form.

த.வ. உருவிலி.

     [Skt. a-murta → த. அமூர்த்தம்.]

அமை

அமை amai, பெ. (n.)

   1. அமைவு, பொருத்தம் (பிங்..);; fitness.

   2. அழகு (பிங்.); ; beauty.

   3. நாணல்; reed, kaus.

   4. கெட்டிமூங்கில்; solid bamboo.

     “அமையொடு வேய்கலாம் வெற்ப” (பழ. 357);.

   5. மூங்கில் (பிங்.);; bamboo, Bambusa arundinacea.

   6. கூந்தற்கமுகு; coca-palm (சா.அக.); – areca palm, Areca catechu (செ.அக.);.

ம. அம

     [அம்முதல் = பொருந்துதல், கூடுதல். அம் → அமை. அமைதல் = பொருந்துதல், சேர்தல்,

     ‘திரளுதல், கெட்டியாதல். அமைத்தல் = பொருத்துதல், புனைதல்.]

 அமை amai, பெ. (n.)

   தினவு (தைலவ. தைல. 124);; itching sensation.

     [நமை → அமை. நமை → நமைச்சல் = தினவு.]

 அமை amai, பெ. (n.)

   கதிரவனும் நிலவும் கூடி நிற்கும் நாளாகிய காருவா நாள்; new noon, as the time when the sun and the moon dwell together.

     “அமையதனின் மாளயந்தா னாற்றுவரேல்” (சேதுபு. துராசா. 41);.

த.வ. உவா.

     [Skt. ama → த. அமை.]

அமை-தல்

அமை-தல் amaidal,    2 செ.கு.வி. (v.i)

   1. நெருங்குதல்; to be near, crowd together, be close.

     “வழையமை சாரல்” (மலைபடு. 181);.

   2. பொருந்துதல்; to be attached, connected, joined.

     “பாங்கமை பதலை” (கந்தபு. தேவ. திருப்பர. 9);.

   3. நிறைதல்; to be full, complete.

     “உறுப்பமைந்து” (குறள், 761);.

   4. மாட்சிமையுடையதாதல்; to be excellent, glorious.

   5. அடங்குதல்; to be comprised, included.

   6. அடக்கமாயிருத்தல்; to become still, quiet, to subside, to be mild, gentle or tractable, to become submissive, modest or humble.

     “அமையா வென்றி யரத்தநெடு வேலோய்” (கல்லா. பாயி. வேலன். 15);.

   7. ஒடுங்குதல்; to be reverentially obedient or silent.

     “வாய் மொழி யமைந்து நின்றான்” (ஞானவா. வைராக். 134);.

   8. தங்குதல்; to abide.

     “மறந்தவ ணமையா ராயினும்” (அகநா. 37; 1);.

   9. பதிதல்; to be impressed, as on the mind.

   10. நட்பாய்ப் பொருந்துதல்; to become friendly or amiable.

     “அமைந்தாங் கொழுகான்” (குறள். 474);.

   11. வசமாதல்; to be brought into one’s possession.

     “அமைந்தாலு மின்பந் தேடும்” (ஞானவா. வைராக். 79);.

   12. உடன்படுதல்; to agree, acquiesce, submit.

     “கெழுதகைமை செய்தாங் கமையாக் கடை” (குறள், 803);.

   13. (இலக்.); வழுவாயினும் ஏற்புடையதாதல்; to be regularized, as irregular expressions.

     “பொருள் வேறுபட்டு வழீஇ யமையுமாறு” (தொல், பொருள். பொருளியல், 2, நச். உரை);.

   14. தகுதியாதல்; to be suitable, appropriate.

   15. அணியமாதல் (ஆயத்தமாதல்);; to prepare.

     “அமைதிர் போருக்கு” (கந்தபு. மகேந். வச்சிர. 14);.

   16. பொந்திகை (திருப்தி); யடைதல்; to be satisfied, contented.

அமைய வுண்மின் (வின்.);.

   17. போதியதாதல்; to suffice.

     “கற்பனவு மினி யமையும்” (திருவாச. 39;3);.

   18. தீர்மானமாதல்; to be settled, fixed up.

அந்த வீடு எனக்கு அமைந்துவிட்டது.

   19. ஏற்படுதல்; to come into existence, to become formed, to be produced or created.

எனக்கொருவர் துணையாயமைந்தார் (உ.வ.);.

   20. நிகழ்தல்; to happen, occur.

   21. முடிவடைதல்; to come to an end, to be finished.

     “அமைந்த தினிநின்றொழில்” (கலித். 82;35);.

   22. கூடியதாதல்; to be possible, practicable.

     “காரியம் ……… அமையுமாயினும்” (சேதுபு. அவை. 2);.

   23. இல்லையாதல்; to be non-existent.

     “துணையமை வடிவுஞ் சொல்லின்” (சீவக. 1721);.

ம. அமயுக

     [உம்முதல் = பொருந்துதல், கூடுதல். உம் = அம். அம்முதல் = பொருந்துதல். அம் → அமை.]

அமை-த்தல்

அமை-த்தல் amaittal,    4 செ.குன்றாவி, (v.t.)

   1. சேர்த்தல்; to bring together.

     “அனாதி யாதி யமைக்க வேண்டும்” (சி.சி. பர. லோகா. மறு. 18);.

   2. சாத்துதல்; to offer in worship.

     “அரு மறைத் தாபத னமைத்திடு செம்மலர்” (கல்லா. 15);.

   3. நாட்குறித்தல்; to appoint, fix, as time.

     “நாளமைத் தழைக்க” (கல்லா. 15);.

   4. ஏற்படுத்துதல், தோற்றுவித்தல், அமர்த்துதல்; to appoint, constitute, set up as a committee.

அதற்கு ஒரு குழு அமைக்க வேண்டும் (உ.வ.);.

   5. அடக்குதல்; to control, keep in subjection.

     “புலனைந்தும் விடயங் களிற் செலாதமைத்து” (வைராக். சத. 37);.

   6. நிறுத்துதல்; to stop.

     ‘திருவடிகளின் மார்த்தவத்தை நினைத்து இந்தக் கூத்தை அமைக்கைக்காக வணங்க’ (திவ். பெரியாழ். 1 . 9; 8, வியா.);.

   7. வசமாக்குதல்; to get into possession, get over to one’s interest.

   8. அமைதிபெறச் செய்தல்; to cause to be still, patient.

     “பாரிடக் கணங்களைப் பாணியா லமைத்து” (கந்தபு. யுத்த. அக்கினி. 67);.

   9. அழுத்துதல், பதித்தல்; to inlay.

     “பொற்குட முகட்டுக் கருமணி யமைத்தென” (கல்லா. 5);.

   10. (இலக்.); வழுவமைத்தல்; (Gram.);

 to regularize, as irregular expressions.

     ‘வழுப் படக் கூறினும் வரைவுகாரணத்தாற் கூறலின் அமைக்க வென்றவாறாம்’ (தொல். பொருள். பொருளியல், 16. நச். உரை);.

   11. பொறுத்தல்; to bear with, tolerate.

     “குற்ற மமைத்தருள்” (சேதுபு. துத்தம 10);.

   12. சமைத்தல்; to cook, prepare food.

     “ஐந்துபல் வகையிற் கறிகளும் வெவ்வே றறுசுவை மாறுமா றமைப்பேன்” (பாரத. நாடுகர. 14);.

   13. நூற்பா (சூத்திரம்); இயற்றி முடித்தல்; to compose a grammatical aphorism, which though succinct in form is comprehensive in import.

     “அவற்றுட்

சூத்திரந் தானே

ஆடி நிழலி னறியத் தோன்றி

நாடுத லின்றிப் பொருணனி விளங்க

யாப்பினுட் டோன்ற யாத்தமைப் பதுவே”

   14. படைத்தல்; to create.

     “அரனய னெனவுல கழித் தமைத் துளனே” (திவ். திருவாய். 1.1 ; 8);.

   15. சுட்டுதல்; to build, construct, as a township.

நகரமைப்புத் திட்டம்.

   16. அரசியற் சட்ட திட்டம் வகுத்தல்; to frame a Constitution.

அரசியலமைப்பு.

   17. ஊழிடுதல் (விதித்தல்);; to destine, fore-ordain, as God.

கடவுள் அமைத்தபடியே எல்லாம் நடக்கும் (உ.வ.);.

   18. ஒழுங்குபடுத்துதல்; to organize.

ம. அமய்க்குக

     [அமைதல் (த.வி.); – அமைத்தல். (பி.வி.);.]

அமைதல் பார்க்க;see amai-.

அமைச்சகம்

 அமைச்சகம் amaiccakam, பெ. (n.)

   ஓர் அமைச்சரின் பொறுப்பிலிருக்கும் அரசு ஆளுவத்துறை; ministry.

     [அமைச்சு+அகம்]

அமைச்சன்

அமைச்சன் amaiccaṉ, பெ. (n.)

   1. மந்திரி (பிங்.);; minister of a state.

     “விதுரனே யமைச்சனிக் காவ லற்கென வைத்தான்” (பாரத. சம்பவ. 21);.

   2. மந்திரித் தலைவன் (பிங்.);; prime minister.

   3. மந்திரித் தலைவனுடைய நட்பாளன் (பிங்.);; friend of the prime minister.

   4. வியாழன் (சூடா.);; the planet Jupiter.

ம. அமச்சன்; க. அமாத்ய ; தெ. அமாத்யுடு.

     ‘அமைச்சன்’ என்பது, இயல்பாக ஒரு மந்திரியைக் குறிக்குமேயன்றி, மந்திரித் தலைவனைக் குறிக்காது. மந்திரித் தலைவனைக் குறிக்கவேண்டின், முதலமைச்சன் அல்லது தலைமையமைச்சன் என்று குறித்தல் வேண்டும்.

மந்திரித் தலைவனின் நண்பனையும் அமைச்சன் என்பது சற்றும் பொருந்தாது.

பிருகற்பதி (ப்ருகஸ்பதி); என்று பெயர் கொண்டிருந்த ஒரு வடநாட்டு அமைச்சனை அப் பெயருள்ள வியாழக்கோளொடு மயக்கி, அக் கோளையும் அமைச்சன் என்றது தொன்மக் கூற்று. தொன்மம் = புராணம்.

இக்கால இந்திய நிலைக்கேற்றவாறு, நடுவண் அமைச்சர் தலைவனைத் தலைமை மந்திரி (Prime Minister); என்றும், நாட்டு அமைச்சர் தலைவனை முதலமைச்சன் (Chief Minister); என்றும் வேறுபடுத்திக் கூறலாம். மந்திரி (ஆ.பா.); – மந்திரினி (பெ.பா.);. அமைச்சன் (ஆ.பா.);-அமைச்சி (பெ.பா.);.

     ‘அமைத்தன்’ (அமைத்தோன்); என்னும் தென்சொல்லும்

     ‘அமாத்ய’ என்னும் வட சொல்லும் வடிவொத்திருப்பதால், இவற்றுட் பின்னதே முன்னதற்கு மூலமோவென ஆராய்ச்சியில்லார்க்கு ஐயுறவெழும்.

மானியர் வில்லியம்சு சமற்கிருத-ஆங்கில அகரமுதலியில்,

     ‘அமாத்ய’ என்னும் வட சொல்லிற்கு, inmate of the same house, belonging to the same house or family,

     “a companion (of a king);”, minister என்று பொருள் கூறி, அதற்கு மூலமாகக் காட்டப்பட்டுள்ள

     ‘அமா’ என்னும் சொற்கு, at home, in the house, in the house of, with, together என்று பொருள் குறிக்கப்பட்டுள்ளது.

இது பொருளும் பொருட்கரணியமும் (காரணமும்); பற்றி உழையன் என்னுஞ் சொல்லை யொத்தது.

உழை = பக்கம், இடம், ஏழனுருபுகளுள் ஒன்று.

     “பின்பா டளைதேம் உழைவழி யுழியுளி

உள் அகம் புறம்இல் இடப்பொருளுருபே” (நன். 302);.

உழையர் = பக்கத்தவர் (ஐங்குறு. 12. உரை);, அமைச்சர் (சூடா.);.

உழையிருந்தான் = அமைச்சன் (குறள், 638);.

     ‘அமாத்ய’ என்னும் வடசொல்லிற்கு அருகிருப்பவன் என்பதே பொருளாயினும், அச் சொல்லும் தென்சொல் தொடர்பினின்று தீர்ந்ததாகாது. அம்முதல் = நெருங்குதல், அடைதல், பொருந்துதல். அம் → அமை. அமைதல் = நெருங்குதல் (மலைபடு. 181);. அமை = நெருக்கம், அண்மை. அமை → Skt. amä.

அமைச்சன் பதவியிலும் வினையிலும் அரசனுக்கு அடுத்தவனாதலின், அருகிருத்தல் என்பது மட்டும் அத்துணையும் அவன் சிறப்பை யுணர்த்துவ தாகாது. பக்கத்திலிருக்கும் வேலைக்காரருக்கும் ஏவலருக்கும் உழையோர் என்னும் பெயருண்டு.

     “உலக மன்னவ னுழையோ ராங்குளர்” (மணிமே. 3 ; 46);.

     “இளங்கோவென் றுழையவர் கூற” (சீவக. 2864);.

     “உழைய ரோடி யரசுவா வருக வென்ன” (சூளா. கலியா. 100);.

     “உரைசெய் தாரர சற்குழை யாளரே” (யசோதர. 208);.

அரசனின் ஆள்வினைக்கும் போர்வினைக்கும் ஏற்ற மந்திரம் (சூழ்வுரை); கூறும் மந்திரி, அரசியல் வினையனைத்தையும் அமைப்பவனாதலால், அமைச்சன் என்னும் பெயர் அத் தொழில்பற்றியே அமைந்ததாகல் வேண்டும்.

     [அமை → அமைத்தோன் → அமைத்தன். ஒ.நோ.; வேய்ந்தோன் → வேந்தன். அமைத்தன் → அமைச்சன். த → ச. போலித் திரிபு. ஒ.நோ ; அத்தன் → அச்சன், நத்து → நச்சு, காய்த்தல் → காய்ச்சல், மேய்த்தி → மேய்ச்சி.]

அமைச்சன் – அமைச்சு. ஒ.நோ ; அரசன் – அரசு. சமற்கிருதந் தோன்றுமுன்பும், வேத ஆரியர் இந்தியாவிற்குட் புகு முன்னும் மூவேந்தராட்சி தென்னாட்டில் நிலைத்திருந்தது.

     “படைகுடி கூழமைச்சு நட்பர ணாறும்

உடையா னரசரு ளேறு” (குறள், 381); என்னும் திருவள்ளுவர் கூற்று, கி.மு. முதல் நூற்றாண்டினதாயினும், வரலாற்றிற்கு முன்னைச் செய்தி குறித்ததாகும்.

ஆதலால்,

     ‘அமாத்ய’ என்னும் வடசொல்

     ‘அமைத்தன்’ (அமைத்தோன்); என்னும் தென் சொல்லின் திரிபே யென்பது தெரிதரு தேற்றம். அதற்கு அண்மையிலிருப்பவன் என்று பொருள் கூறினும், அதுவும்,

     “ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று

சூழினுந் தான்முந் துறும்” (குறள், 380); என்பதற்கேற்ப, அதைத் தென்சொற்றிரிபென்றே காட்டுதல் காண்க.

அமைச்சரவை

 அமைச்சரவை amaiccaravai, பெ. (n.)

   அரசுத் துறைகளை ஆளுவம் செய்யும் (நிருவகிக்கும்); அமைச்சர்கள் அடங்கிய குழு; council of minister, cabinet.

     [அமைச்சர்+அவை]

அமைச்சாகிதம்

 அமைச்சாகிதம் amaiccākidam, பெ. (n.)

   செங்குறுந்தொட்டி; a red variety of rose-coloured sticky mallow, Pavonia zeylanica (சா.அக.);.

அமைச்சி

 அமைச்சி amaicci, பெ. (n.)

   பெண் அமைச்சர்; a woman minister.

     [அமைச்சன் (ஆ.பா.); – அமைச்சி (பெ.பா.);.]

 அமைச்சி amaicci, பெ. (n.)

   விரையூதம் (அண்டவாதம்);; hydrocele (சா.அக.);.

     [ஒருகா. அமை (கட்டி, கெட்டி); → அமைச்சி.]

அமைச்சியல்

அமைச்சியல் amaicciyal, பெ. (n.)

   1. மந்திரித் தொழில்; duties of a minister.

     “சிறுவராந்தனி முதல்வற்கு மமைச்சியல் செய்வார்” (கந்தபு. மகேந். அவை புகு. 114);.

   2. மந்திரியிலக்கணம்; qualifications of a minister.

     [அமை → அமைத்தன் → அமைச்சன் → அமைச்சு + இயல். இயல் = இலக்கணம், இயல்பு, தொழில்.]

அமைச்சு

அமைச்சு amaiccu, பெ. (n.)

   1. அமைச்சன்; minister.

     “அருவினையு மாண்ட தமைச்சு” (குறள், 631);.

   2. அமைச்சனது தன்மை, அதாவது அவன் குணங்களுஞ் செயல்களும்; nature and functions of a minister.

     [அமைத்தன் → அமைச்சன் → அமைச்சு.]

 அமைச்சு amaiccu, பெ. (n.)

   பித்தம்; bile (சா.அக.);.

அமைதல்

 அமைதல் amaidal, பெ. (n.)

   பொழுது (பொதி. நி.);; season, occasion, opportunity.

     [அமை → அமைதல்.]

அமைதி

அமைதி amaidi, பெ. (n.)

   1. பொருந்துகை; being attached, joined.

   2. உறைவிடம் (சங். அக.);; residence, dwelling place, habitat.

   3. பொருத்தம், தகுதி; fitness, propriety.

     “அகலிட நெடிதாளு மமைதியை” (கம்பரா. அயோத். வனம்புகு. 24);.

   4. மிகுதி; abundance, plenitude.

   5. நிறைவு; fulness, perfectness, completeness.

   6. சிறப்பு, மாட்சிமை; grandeur, glory, magnificence, splendour.

     “அண்ணலங் கடிநக ரமைதி செப்புவாம்” (சீவக. 78);.

   7. பொந்திகை (திருப்தி); ; satisfaction, contentment.

     “அமைதியொடு பேசாத பெருமை பெறு குணசந்த்ர ராமென விருந்த பேரும்” (தாயு. பரிபூரண 3);.

   8. தன்மை; nature.

     “ஆற்றின தமைதியங் கறியக் கூறினான்” (சீவக. 1176);,

   9. செய்கை, தொழில்; deed, action.

     “அவ்விடை செய்திடு மமைதி கூறுவாம்” (கந்தபு. தேவ. தெய்வ. 185);.

   10. சமையம்; occasion, opportunity.

     “அன்னதோ ரமைதி தன்னில்” (கந்தபு. யுத்த மூன்றா. 210);.

   11. நிகழ்ச்சி (சங்.அக.);; occurrence, incident, event.

   12. அடக்கம்; modesty.

   13. அமரிக்கை, சாந்தம்; calmness, quietude, serenity of spirit.

     “ஆய்ந்தறி பெரியோர் சிந்தை யமைதியின்” (இரகு. தேனு. 17);.

   14. அமைந்த மனநிலை; peace of mind.

   15. தாழ்மை, தாழ்ச்சி; humility, submissiveness.

     “தொழுதகை யமைதியி னமர்ந்தோயு நீயே” (பரிபா. 4.71);.

   16. கீழ்ப்படிவு (சங். அக.);; obedience.

   17. நன்னிலை; good condition.

     “செல்வம் விளைவுபல் வளஞ்செங்கோன்மை

கொல்குறும் பின்மை கொடும்பிணி யின்மை

யவ்வயி னாறு நன்னாட் டமைதி”

   18. இலக்கண வழுவமைதி; sanctioned deviation from grammatical rules, as in ‘class’, gender, number, person, tense, etc., recognised anomaly.

இவ்வழுவிற்கு அமைதி இது.

ம. அமதி ; தெ. அமதி.

     [அமை → அமைதி.]

அமைதி உருவங்கள்

அமைதி உருவங்கள் amaitiuruvaṅkaḷ, பெ. (n.)

   அடக்கமான தோற்றம் கொண்ட சிற்பங்கள் (11 : 43);; sculpture of calmpose.

     [அமைதி+உருவம்+கள்]

அமைதிக்கொடி

 அமைதிக்கொடி amaidikkoḍi, பெ.(n.)

   அமைதியைத் தெரிவிக்குங்கொடி (சமாதானக் கொடி);; flag of truce.

     [அமைதி+கொடி]

அமைதிப்பொடி

 அமைதிப்பொடி amaidippoḍi, பெ. (n.)

   மனவடக்கத்தை யுண்டுபண்ணும் ஒரு மருந்துப் பொடி; a powder inducing tranquillity or calmness, a sedative (சா.அக.);.

     [அமைதி + பொடி.]

அமைதிவாரி

 அமைதிவாரி amaitivāri, பெ. (n.)

ஆசியா வுக்கும் அமெரிக்காவுக்கும் இடைப் பட்டிருக்கும் பசுபிக் கடல்,

 pacific ocean.

     [அமைதி+வாரி]

அமைத்தன்

அமைத்தன் amaittaṉ, பெ. (n.)

   மந்திரி, அமைச்சன்; minister.

முதலமைத்தன் மகன் (M.E.R. 1926-7, p. 89);.

ம. அமச்சன்

அமைத்தன் → Skt. amatya.

     [அமைத்தல் = அரசியற் கருமங்களை ஒழுங்குசெய்தல். அமை → அமைத்தோன் → அமைத்தன்.]

அமைந்தபணி

அமைந்தபணி amaindabaṇi, பெ. (n.)

   ஒப்புக்கொண்ட வேலை; work that was accepted.

   2. இலவயமாகச் செய்வதாக ஒப்புக்கொண்ட வேலை; a job or work that was undertaken without wages.

   3. இலவயமாகச் செய்து முடிக்குமாறு கட்டளையிடப்பட்ட ஊர்ப்பொதுப்பணி; a village communal work that was ordained to be completed without wages.

     ‘இவ்வமஞ்ஞது பண்ணாதவன் பெருமானடி கள்க்கு ஐம்பதின்கழைஞ்ஞ பொன் தண்டம்’ (திருவல்லம் கல்வெட்டு – T.A.S. ii, 194);.

     [அமை → அமைந்த + பணி.]

அமைப்பகம்

 அமைப்பகம் amaippagam, பெ. (n.)

   பலர் அல்லது பல வகுப்பார் அல்லது பல நாட்டார் கூடி ஏற்படுத்தும் ஒரு பொதுநல அல்லது கூட்டுறவுப் பணிநிலையம் அல்லது அலுவலகம்; an organization, incorporation or public institution.

     ‘ஒன்றிய நாட்டினங்கள்’ ஒர் உலகப் பொது அமைப்பகம்.

     [அமை → அமைப்பு + அகம்.]

அமைப்பாளன்

 அமைப்பாளன் amaippāḷaṉ, எதாவது ஒரு நோக்கத்தின் பொருட்டு செயற்படவுள்ள மக்கள் குழுவை ஏற்படுத்துபவர்.

 organizer.

     [அமைப்பு+ஆளன்.]

அமைப்பு

அமைப்பு amaippu, பெ. (n.)

   1. கூட்டரவு, புணர்ப்பு, சேர்ப்பு; uniting.joining.

     “அனாதி யாதி யமைக்க வேண்டு மமைப்பி னோடு மனாதியே” (சி. சி. பர. உலகா. மறு. 18);.

   2. சொல் அல்லது சொற்றொடர்க் கட்டு; structure or construction of a word or sentence.

சொல்லமைப்பு, சொற்றொடரமைப்பு.

   3. வீடு அல்லது நகர் கட்டுகை; building a house or township.

வீடமைப்புத் துறை, நகரமைப்புத் திட்டம்.

   4. கட்டுக்கோப்பு; build, constitution, style of construction.

கட்டுக்கோப்புச் சரியாயில்லாமையாற் கடுங்காற்றிற்குக் கட்டடம் விழுந்துவிட்டது.

   5. கட்டட வடிவுவகை; plan.

அவ் வீட்டின் அமைப்பு ஒரு புதுவகையானது.

   6. அமர்த்துகை, ஏற்படுத்துகை; appointment, constitution, formation, setting up.

வரவேற்புக் குழுவமைப்பு ஒழுங்காய் நடைபெறவில்லை.

   7. இயற்கைக்கு மாறான உறுப்பு அல்லது இயல்பு; abnormal feature. கைகால்களில் அவ்வாறு விரலிருப்பது ஒர் அமைப்பு.

   8. ஊழ்; destiny, fate.

எல்லாருக்கும் அவரவர் அமைப்பின்படியே நடக்கும்.

   9. இலக்கண வழுவமைப்பு;
 அமைப்பு amaippu, பெ. (n.)

   ஏதாவது ஒரு நோக்கத்தின் பொருட்டு ஏற்படுத்திக் கொள்ளும் மக்கள் குழு; organization.

     [அமை-அமைப்பு]

அமைப்போன்

அமைப்போன் amaippōṉ, பெ. (n.)

   1. செய்பவன், வினைமுதல்; actor, agent.

     “அமைப்போ னாத லெனக் கெங்கே” (ஞானவா. திருவா. 20);.

   2. ஏற்படுத்துவோன்; organizer.

அமைமோனி

 அமைமோனி amaimōṉi, பெ. (n.)

   செங்கொடி வேலி; rosy-flowered leadwort, Plumbago rosea (சா.அக.);.

அமைய

அமைய amaiya, வி.எ. (adv.)

   1. பொருந்த; fittingly, suitably, appropriately.

   2. போதியவளவு; sufficiently.

   3. பொந்திகை பெற (திருப்தி வர);; to the degree or extent of satisfaction.

     “சிறுவனை யமைய நோக்கி” (கூர்மபு. கண்ணனவ. 27);.

அமையப்படை

அமையப்படை amaiyappaḍai, பெ. (n.)

   குறுங் காலத்தில் திரட்டப்படும் சேனை (சுக்கிரநீதி, 303);; forces raised within a short period.

     [அமையம் + படை.]

அமையம்

அமையம் amaiyam, பெ. (n.)

   இலாமிச்சை (மலை.);; cuscuss grass (

   செ. அக.);-விலாமிச்சு; a fragrant grass (சா.அக.);.

 அமையம் amaiyam, பெ. (n.)

   சமையம் (சந்தர்ப்பம்);; occasion, context, opportunity.

     “ஆனதோ ரமையந் தன்னில்” (கந்தபு. உற்பத். திருக்கல். 72);.

     [அமைதல் = பொருந்துதல், நேர்தல். அமை → அமையம்.]

அமையவன்

 அமையவன் amaiyavaṉ, பெ. (n.)

   அருகன் (திவா.);; Arhat.

     [அமைதல் = அடங்குதல், புலனடங்குதல். அமை + அவன் (ஆ.பா. ஈறு); – அமையவன் = ஐம்புலனு மடங்கிய அருகன்.]

அமையாமை

அமையாமை amaiyāmai, பெ. (n.)

   1. கிடைத்தற் கருமை; difficulty of attainment.

     “அமையா வின்பவிண் ணாட்டில்” (ஞானவா. சுக்கிர. 9);.

   2. கீழ்ப்படியாமை; disobedience.

   3. பொந்திகை யடையாமை (திருப்திப்படாமை);; dissatisfaction.

     “பெரும்பாழ் செய்து மமையான்” (பட்டினப். 270);.

அமைலம்

 அமைலம் amailam, பெ. (n.)

   மாப்பசை; a vegetable substance universally diffused in plants and generally extracted from wheat flour, rice, etc., starch (சா.அக.);.

அமைவடக்கம்

அமைவடக்கம் amaivaḍakkam, பெ. (n.)

   1. அடங்கிய வொழுக்கம் (வின்.);; modesty, respectful behaviour.

   2. மனம் ஒருவழிப் பட்டடங்கிநிற்றல் (சங்.அக.);; restraint of the senses and concentration of mind.

   3. மறைவு (சங்.அக.); ; disappearance.

   4. சாவு; demise.

     [அமைவு + அடக்கம். அமை → அமைவு. அடங்கு → அடக்கு → அடக்கம்.]

அமைவன்

அமைவன் amaivaṉ, பெ. (n.)

   1. அடக்கமுள்ளோன்; one who has self-control.

   2. முனிவன்; sage, as a serene person.

     “பிருகு வென்னு மமைவன்” (விநாயகபு. பதி, 2);.

   3. அருகன் (நாநார்த்த.);; Arhat.

   4. கடவுள்; the Supreme Being.

     “அமைவன தடி பணிந்து” (இலக். வி. 159);.

அமைவர

அமைவர amaivara, வி.எ. (adv.)

   மனத்துட்பதிய; to be clearly understood and grasped.

     “ஆசாற் சார்ந்தவை யமைவரக் கேட்டல்” (நன். 41);.

     [அமை + வர. அமை → அமைவு = பதிவு.]

அமைவு

அமைவு amaivu, பெ. (n.)

   1. சேர்வு, கூட்டு; joining, uniting.

   2. ஒப்புமை; similarity.

   3. பொருந்துகை, ஏற்றதாதல்; fitting, being suitable or acceptable, conformity.

     ‘அமைவின்மை அம்மரபிற் கேலாமை’ (குறள், 956, பரிமே. உரை);.

   4. நட்புப் பொருத்தம்; friendly relation.

     “அஞ்சு மறியானமைவிலன்” (குறள், 863);.

   5. இடங்கொண்டிருப்ப-வன்-வள்-து; resident, presiding deity.

     “திருக்கா ளமைவே” (தேவா. 7. 26 ; 2);.

   6. அடக்கம் (சிந்தா. நி.);; modesty, respectable conduct.

   7. புலனடக்கம் (சங்.அக.); ; control of the senses.

     “அமைவு பிறக்கு மமரர்கள்” (விருத்தா. திருத்த. 14);.

   8. பொறுமை; patience.

     “ஞாலத் தார்கொலோ வமைவின் மிக்கோர்” (பாரத. நிரை, 132);.

   9. மனவமைதி; peace of mind.

     “நிகராகியு மமைவுற்றோ னிமல முத்தனாம்” (ஞானவா. வேதாள 3);.

   10. ஆறுதல், ஆற்றியிருத்தல்; consolation, bearing the pangs of separation.

     “அவர்க் காணா தமைவில கண்” (குறள், 1178);.

   11. நிறைவு; fulness, completeness, perfection.

     “ஆங்கமை வெய்தியக் கண்ணும்” (குறள், 740);.

   12. பொந்திகை (திருப்தி);; satistaction.

     [அமை + வு (தொ.பெ. ஈறு);. அவு → வு.]

அமோகன்

அமோகன் amōkaṉ, பெ. (n.)

   மயக்கமில்லாதவன் (மச்சபு. சுக்கிர. 35);; one in whom there is no ignorance.

     [Skt. a-mogha → த. அமோகன்.]

அமோகபாணம்

அமோகபாணம் amōkapāṇam, பெ. (n.)

   இலக்குத் தவறாத அம்பு (பாரத. நிவாத. 84);; unerring arrow.

     [Skt. a-mogha + bana → த. அமோகபணம்.]

அமோகம்

அமோகம் amōkam, பெ. (n.)

   1. மிகுதி; plenty, abundance.

   2. இலக்குத் தவறாமை (சீவக. 1646);; unfailingness in hitting.

த.வ. மிகுதி, பெருக்கம்.

     [Skt. a-mogha → த. அமோகம்.]

அமோகை

அமோகை amōkai, பெ. (n.)

   கடுக்காய் (தைலவ. தைல. 34);; chebulic myrobalan.

     [Skt. amogha → த. அமோகை.]

அம்

அம் am, பெ. (n.)

   நீர்; water.

     “அந்தாழ் சடையார்” (வெங்கைக்கோ. 35);.

     [உம்முதல் = கூடுதல். உம் → அம். அம்முதல் = கலத்தல்.]

ஐம்பூதங்களுள், தன்னொடு தானும் பிறிதொடு தானும் மிகவொன்றிக் கலக்கக் கூடியது நீர் ஒன்றே.

     “நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும்” (குறள், 452);,

     “செம்புலப் பெயனீர் போல

அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே” (குறுந் 40); என்பன கவனிக்கத்தக்கன.

 அம் am, பெ. (n.)

   அழகு; beauty, prettiness.

     “கிஞ்சுகவா யஞ்சுகமே” (திருவாச. 19;5);.

     [இயற்கை யழகெல்லாம். நீர்வளத்தாலுண்டாவதால், அம் என்னும் நீர்ப்பெயர் அழகு பொருள் பெற்றிருக்கலாம்.]

 அம் am, இடை. (part.)

   1. பெயரீறு; n. suff.

   1. ஒரு வினைமுதற்பொருளீறு; Sufi denoting the agent or subject of the action expressed by a verb.

எ-டு: எச்சம் = எஞ்சுவது, எஞ்சி நிற்பது.

   2. ஒரு கருவிப்பொருளீறு; suf. denoting the instrument.

எ.டு ; அரம் = அராவுங் கருவி, அரம்பம் = அரம்பும் (அராவியறுக்கும்); கருவி.

   3. ஒரு செயப்படுபொருளீறு; suff, denoting the object of the action expressed by a verb.

எ-டு : நீத்தம் = நீந்தப்படும் வெள்ளம், பாடம் = படிக்கப்படும் செய்தி அல்லது பொருள்.

   4. ஒரு தொழிற்பெயரீறு; vbl.n. suff.

எ-டு : ஒட்டம், ஆட்டம்.

   5. ஒரு பண்புப்பெயரீறு; an abs, n. suff.

எ-டு : நீலம், நிறம்.

   6. ஒரு நாட்டுப்பெயரீறு; suf of a m. denoting a country.

எ.டு ; கலிங்கம், நிடதம்.

   7. ஒரு மொழிப்பெயரீறு; suff. Of an. denoting a language.

எ-டு : ஆங்கிலம், திரவிடம்.

   8. ஓரினத்தாரின் நாகரிக அல்லது பண்பாட்டுப் பெயரீறு; suff. of a n. denoting the civilization or culture of a nation or race.

எ.டு ; தமிழம்.

   9. ஒரு பெருமைப் பொருட் பின்னொட்டு; an aug. suff.

எ.டு ; நிலை → நிலையம், மதி → மதியம் (முழு நிலா);, விளக்கு → விளக்கம்.

   10. ஒரு சொற்றிரிவீறு; a derivational suff.

எ.டு: மதி → மாதம். வட்டு → வட்டம்.

 II. வினையீறு;

 vbl. ending.

   தன்மைப் பன்மையீறு; ending denoting the 1st pers, pl.

எ-டு: செய்தம், செய்தனம்; பெரியம், பெரியனம்.

 III. சாரியை;

 euphonic augment.

எ-டு : புளி + காய் – புளியங்காய், புளி + மரம் – புளியமரம்.

 IV. அசைநிலை;

 expletive.

எ-டு : போமின் → போமினம் (சீவக. 1411);.

 அம்1 am, பெ. (n.)

   கொடுமை (சம். அக. Ms.);; cruelty.

     [Skt. am → த. அம்.]

 அம்2 am, பெ. (n.)

   1. மணியின் ஒளி; lustre of gems.

   2. நகைப்பு; laughter.

   3. இன்பம்; happiness.

   4. தசைச்சுரிப்புடன் கூடிய மயிர்க் கூச்செரிப்பு (புளகம்);; horrification.

   5. கடவுள்; god.

   6. அன்னம்; swan.

   7. அழைப்பு; invitation.

   8. செருக்கு; pride.

   9. போர்; battle.

   10. அம்பு; arrow.

     [Skt. ham → த. அம்.]

 அம்3 am, பெ. (n.)

   1. ஆணை; command.

   2. கும்பிடு; obeisance with joined hands.

   3. நீட்சி; length.

   4. ஏழிசையாதி யளவு; measure of the musical notes.

   5. நேர்மையற்ற தொடரியம் (வக்கிர வாக்கியம்);; crooked sentence.

     [Skt. am → த. அம்.]

அம்சசக்கரம்

அம்சசக்கரம் amsasakkaram, பெ. (n.)

   ஒன்பது கோண (நவாம்ச);ச் சக்கரம்;     [அம்சம் + சக்கரம்.]

     [Skt. amsa → த. அம்சம்.]

சருக்கு → சருக்கரம் (வட்டம்); → சக்கரம் = வட்டம் உருளி (வே.க.239);.

அம்சசந்தி

 அம்சசந்தி amsasandi, பெ. (n.)

   தோட் பொருத்து; shoulder joint.

     [அம்ச + சந்தி.]

     [Skt. amsa → த. அம்ச(ம்);.]

உம் → உந்து → அந்து → சந்து → சந்தி.

அம்சசுவரம்

 அம்சசுவரம் amsasuvaram, பெ. (n.)

   ஒரு பண் பாடுவதில் அடிக்கடி பயன்படுத்தும் குரலோசை;     [Skt. amsa+svara → த. அம்சசுவரம்.]

அம்சன்

 அம்சன் amcaṉ, பெ. (n.)

   தன்னொறுப்பாளன்; kind of ascetic.

     [Skt. hamsa → த. அம்சன்.]

அம்சபத்திரம்

 அம்சபத்திரம் amcabattiram, பெ. (n.)

   பாகப்பிரிவினை (கூறு); உறுதி ஆவணம் (பத்திரம்);;த.வ. பகுத்தி ஆவணம்.

     [Skt. amsa + patra → த. அம்சபத்திரம்.]

அம்சபப்பளி

 அம்சபப்பளி amcababbaḷi, பெ. (n.)

   சேலைவகை (இ.வ.);; a kind of saree.

     [Skt. hamsa → த. அம்சம்.]

அம்சபாதம்

 அம்சபாதம் amcapātam, பெ. (n.)

   புள்ளடிக் குறி; caret mark, interlineation indicated by a caret.

     [அம்சம் + பாதம்.]

     [Skt. hamsa → த. அம்சம்.]

பள் → படு → படி → படிதல் = பதிதல். பதி → பதம் → பாதம் = நிலத்திற்பதியும் காலடி.

அம்சபாதயிலை

 அம்சபாதயிலை amcapātayilai, பெ. (n.)

   சிறு புள்ளடி; a plant.

     [அம்சம் + பாதம் + இலை.]

     [Skt. hamsa → த. அம்சம்.]

பதி → பதம் → பாதம்.

அம்சபூதன்

அம்சபூதன் amcapūtaṉ, பெ. (n.)

   இறைவனின் கூறாயிருப்பவன்; one who forms part, as of a deity.

     “நம்முடைய அம்சபூத ரொருவரை” (குருபரம். 166);.

     [அம்சம் + பூதன்.]

     [Skt. amsa → த. அம்சம்.]

பூ → பூது → பூதம் → பூதன்.

அம்சமந்திரம்

 அம்சமந்திரம் amcamandiram, பெ. (n.)

அசபை பார்க்க;see asabai.

     [அம்ச(ம்); + மந்திரம்.]

     [Skt. armša → த. அம்சம்.]

மன் + திரம் → மந்திரம்.

அம்சம்

அம்சம்1 amcam, பெ. (n.)

   அன்னப்பறவை; swan.

த.வ. எதின்.

     [Skt. hamsa → த. அம்சம்.]

 அம்சம்2 amcam, பெ. (n.)

   தேர்விற் பெற்ற மதிப்பெண் (புதுமை);; mark.

     [Skt. amsa → த. அம்சம்.]

 அம்சம்3 amcam, பெ. (n.)

   1. கூறு; part, portion.

   2. உரிமைப்பங்கு (இ.வ.);; share of property for expenses.

   3. கீழ்வாயிலக்கத்தின் கீழெண்; denominator of a fraction.

     [Skt. amsa → த. அம்சம்.]

 அம்சம்4 amcam, பெ. (n.)

   நூற்றெட்டுபநிடதங்களு ளொன்று; name of an upanisad.

     [Skt. hamsa → த. அம்சம்.]

 அம்சம்5 amcam, பெ. (n.)

   1. பல பகுதிகளாக அல்லது பன்முகமாக உள்ள திட்டம், கலந்தாய்வு முதலியவற்றில் குறிப்பிட்ட ஒரு பகுதி; aspect (of an affair, idea, plan etc.);, point.

     ‘இருபது அம்சம் திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது’.

   2. எடுத்துக் கூறும்படியாக இருக்கும் கூறு அல்லது தன்மை;   3. (ஒருவரின் அல்லது ஒன்றின் அமைப்புக்கு வேண்டிய அளவான); அழகு; compactness.

     “அம்சமான வீடு”.

     [Skt. amsa → த. அம்சம்.]

அம்சாசனம்

 அம்சாசனம் amcācaṉam, பெ. (n.)

   ஒகவிருக்கை வகையுளொன்று;     [Skt. hamsa + a-sana → த. அம்சாசனம்.]

அம்சி

 அம்சி amci, பெ. (n.)

   விளவங்கோடு வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Vilavancode Taluk.

ஒருகா

     [அம்புத்தி-அம்சி]

அம்பகன்

 அம்பகன் ambagaṉ, பெ. (n.)

   ஒரு கனிய நஞ்சு (சீர்பந்த பாடாணம்); (மூ.அ.);; a mineral poison.

அம்பகம்

 அம்பகம் ambagam, பெ. (n.)

   எழுச்சி (சது.);; elevation.

     [எம்புதல் = எழுதல். எம்பு → எம்பகம் → அம்பகம்.]

எழும்பு → எம்பு என்று கொள்ளவும் இடமுண்டு. ஆயின் எஃகு, எக்கு, எங்கு, எஞ்சு, எட்டு, எவ்வு, எழு, ஏண், ஏத்து, ஏந்து, ஏப்பம், ஏர், ஏல், ஏறு என ஏறத்தாழ எல்லா மெய்களையும் பிற்கொண்டு எழுச்சி குறித்த எகர ஏகார முதற்சொற்கள் தொன்று தொட்டு வழங்கிவருவதால், எம்பு என்பது ஒரு தனிச்சொல் என்றே கொள்ளப்படும்.

 அம்பகம் ambagam, பெ. (n.)

   இசைவுமொழி, உத்தரவு; permission, leave.

தெ. அம்பகமு

     [ஒம்புதல் = இசைதல், மனங்கொள்ளுதல். ஒம்பு → ஒம்பகம் → அம்பகம்.]

மனத்திற்கு ஒம்பவில்லை என்பது உலக வழக்கு.

 அம்பகம் ambagam, பெ. (n.)

   சேம்பு (பச்.மு.); ; Indian kales, Colocasia antiquorum (செ.அக.); — a garden plant, Caladium esculentum (சா.அக.);.

 அம்பகம் ambagam, பெ.

   நடிகர் கூலி (யாழ்ப்.);; pay of an actor in a play (J.);.

 அம்பகம் ambagam, பெ. (n.)

   செம்பு (மு.அ.);; copper.

அம்பங்கி

 அம்பங்கி ambaṅgi, பெ. (n.)

   விழாவரிசி; a kind of medicinal drug. (சா.அக.);.

அம்பசாதிதம்

 அம்பசாதிதம் ambacādidam, பெ. (n.)

   செல் கொத்தான் கொடி; the red thread creeper, Cassytha filiformis (சா.அக.);.

அம்பசாரம்

 அம்பசாரம் ambacāram, பெ. (n.)

   முத்து; pearl (சா.அக.);.

அம்பசி

 அம்பசி ambasi, பெ. (n.)

   ஆடு தின்னாப் பாளை; worm killer; a bitter plant eaten not even by sheep, Aristolachiabracteata (சா.அக.);.

அம்படம்

 அம்படம் ambaḍam, பெ. (n.)

   ஆடுதின்னாப் பாளை (மலை.);; a worm-killer (செ.அக.);

   – ஆடுதின்னாப்பாலை; a worm-killer, Aristalachia bracteata (சா.அக.);.

சங்க அகராதியில் இச் சொற்குப் புழுக் கொல்லி என்று வேறொரு பொருள் குறிக்கப்பட்டுள்ளது. அது ஆங்கிலப் பெயரின் மொழி பெயர்ப்பாகவோ ஆடுதின்னாப்பாளையின் மறுபெயராகவோ இருப்பினும் இருக்கலாம்.

அம்படலம்

அம்படலம் ambaḍalam, பெ. (n.)

   அம்மி; grinding stone (அக.நி.);.

 அம்படலம் ambaḍalam, பெ. (n.)

   1. இதள் (பாதரசம்);; mercury (அ.க.நி.);.

   2. ஈயம்; lead.

   3. வெள்ளி; silver.

   4. வெளி; open space.

 அம்படலம் ambaḍalam, பெ. (n.)

   1. மரக்கால்; a grain measure varying in different places, from 4 to 8 padis (அக.நி.);.

   2. ஓடம். மரக்கலம்; boat, ship (அக.நி.);.

   3. தேர்; car, chariot (சங்.அக.);.

 அம்படலம் ambaḍalam, பெ. (n.)

   வாழை; plantain tree, Musa paradisiaca (சா.அக.);.

அம்பட்டகி

 அம்பட்டகி ambaṭṭagi, பெ. (n.)

   வட்டத்திருப்பி; India pareira, Cissampelos pareira (சா.அக.);.

     [Skt. ambastha → த. அம்பட்டகி.]

அம்பட்டச்சி

 அம்பட்டச்சி ambaṭṭacci, பெ. (n.)

   முடிதிருத்துபவனின் மனைவி; fem. of ambattan.

     [அம்பட்ட(ன்); + அச்சி.]

     [Skt. ambastha → த. அம்பட்டன்.]

அச்சன்(ஆ.பா.); → அச்சி (பெ.பா.);.

அம்பட்டத்தி

 அம்பட்டத்தி ambaṭṭatti, பெ. (n.)

அம்பட்டச்சி பார்க்க;see ambattacci.

     [Skt. ambastha → த. அம்பட்டத்தி.]

அத்தன்(ஆ.பா.);-அத்தி (பெ.பா.);.

அம்பட்டன்

அம்பட்டன்1 ambaṭṭaṉ, பெ. (n.)

   1. முடி திருத்துபவன்; barbar.

   2. மருத்துவன்; literally means the person who stands near to cure, but generally the name refers to a barber many of the barbers are doctors and surgeons as well and their women are employed as midwives. (சா.அக.);.

த.வ. பண்டுவன், மருத்துவன், பரியாரி, மழிப்பன், மழிஞன், மஞ்சிகன்.

     [Skt. ambastha → த. அம்பட்டன் (நீக்கத் தக்க இழிவுச் சொல்);.]

வடமொழியில் ambastha எனும் சொல் அருகில் நின்று நோயைக் குணப்படுத்துபவன் எனப் பொருள்படுகிறது. வடமொழி நூல்கள் புண் ஆற்றும் மருத்துவப்பணி தூய்மையற்றதால் உயர் குலத்தார் செய்யத் தகாதது எனக் கூறுகின்றன. இச்சொல் தமிழில் மருத்துவர் என்றும் பண்டுவர் எனவும் வழங்கியது. மதிப்புக்குரிய தமிழ்ச் சொற்கள் வடமொழி புதுச் சொல் புகுந்ததால் மறைந்தன. தமிழ்ச் சொற்களை ஆள்வதே தகவானது.

அம்பட்டன்கத்தி

அம்பட்டன்கத்தி ambaṭṭaṉkatti, பெ. (n.)

   கடல் மீன் வகை (மூ.அ.);; a marine fish, deep blue on the back, becoming silvery white on the sides, attaining 8 1/2 in., Mene maculata.

த.வ. பண்டுவன்கத்தி.

     [அம்பட்டன் + கத்தி.]

     [Skt. ambastha → த. அம்பட்டன்.]

கள் → கட்டு → கத்து → கத்தி.

அம்பட்டன்பாரை

 அம்பட்டன்பாரை ambaṭṭaṉpārai, பெ. (n.)

அம்பட்டன் கத்தி பார்க்க;see ambattan-katti.

த.வ. பண்டுவன் பாரை.

     [Skt. ambastha → த. அம்பட்டன்.]

அம்பட்டன்வாளை

அம்பட்டன்வாளை ambaṭṭaṉvāḷai, பெ. (n.)

   சொட்டவாளை; barber’s knife, a freshwater fish, silvery, attaining more than 2 ft., Notopterus kapirat.

த.வ. பண்டுவன்வாளை, மழிஞன் வாளைமீன்.

     [அம்பட்டன் + வாளை.]

     [Skt. ambastha → த. அம்பட்டன்.]

அம்பட்டம்

 அம்பட்டம் ambaṭṭam, பெ. (n.)

அம்பட்டகி பார்க்க;see ambattagi.

     [Skt. ambastha → த. அம்பட்டம்.]

அம்பட்டை

அம்பட்டை1 ambaṭṭai, பெ. (n.)

   கொடிவகை (தைலவ.);; Indian pareira.

     [Skt ambastha → த. அம்பட்டை.]

 அம்பட்டை2 ambaṭṭai, பெ. (n.)

   1. முல்லை; Arabian jasmine.

   2. பங்கம்பாளை; wosm-killer.

   3. புளியாரை; yellow wood-sorrel.

     [Skt. ambastha → த. அம்பட்டை.]

 அம்பட்டை3 ambaṭṭai, பெ. (n.)

அம்பட்டகி பார்க்க;see ambattagi.

     [Skt. ambastha → த. அம்பட்டை.]

அம்பணத்தி

அம்பணத்தி ambaṇatti, பெ. (n.)

   காளி, துர்க்கை (பிங்.);; Kāli, Durga.

     [அம்பணம் = மரக்கால். அம்பணத்தின்மேல் நின்றாடியவள் அம்பணத்தி. அம்பணம் + அத்து (சாரியை); + இ (பெ.பா. ஈறு);.]

     “அம்பண வளவைய ரெங்கணுந் திரிதர” (சிலப். 14;209);. பதினோராடல்களுள் ஒன்றான மரக்கால், காளியாடியது. ‘கடைய மயி ராணிமரக் கால்விந்தை’, ‘மாயவ ளாடன் மரக்கால்’ (சிலப். 3;14. அடியார்க். உரை);. காளி அவுணரென்னும் அசுரரை வென்று மரக்கால்மேல் நின்றாடிய வெற்றிக் கூத்து மரக்கால் எனப்பட்டது.

     “ஆய்பொன் னரிச்சிலம்புஞ் சூடகமு

மேகலையு மார்ப்ப வார்ப்ப

மாயஞ்செய் வாளவுணர் வீழநங்கை மரக்

கான்மேல் வாளமலை யாடும்போலும்” (சிலப். 12. கூத்துள்படுதல்);.

அம்பணப்பராரைக்கட்பறை

 அம்பணப்பராரைக்கட்பறை ampaṉapparāraikkaṭpaṟai, பெ. (n.)

   அம்பணமரக்கால் வடிவில் செய்யப்பட்ட பறை; a shape of measure ment type of musical drum.

     [அம்பணம்+பராரை+கண்+பறை]

அம்பணம்

அம்பணம் ambaṇam, பெ. (n.)

   1. நீர் (சது.);; water.

   2. நீர்விழுங் குழாய்; water -pipe.

     “கிம்புரிப் பகுவா யம்பண நிறைய” (நெடு. நல். 96);.

   3. வாழை (பிங்.); ; plantain tree, Musa paradisiaca.

   4. வாழைத்தண்டு (நாநார்த்த); ; stem of the plantain tree.

   5. ஊறுகாய்; pickles (சா.அக.);.

   6. வாய் (அக.நி.);; mouth.

     [அம் = நீர். அம் → அம்பு → அம்பணம் = நீர், நீருள்ள பொருள். அணத்தல் = பொருந்துதல். அண → அணம்.]

 அம்பணம் ambaṇam, பெ. (n.)

   1. மரக்கால்; a grain measure.

     “அம்பண வளவைய ரெங் கணுந் திரிதர” (சிலப். 14;209.);. பாலி. அம்பண.

   2. மரக்கலம் (அ.க.நி.);; ship boat.

   3. துலாக்கோல் (அக.நி.);; beam of scales, balance.

   4. ஆமை (அக.நி.); ; tortoise.

   5. ஒரு வகை யாழ்; a kind of lute.

     “அம்பண சுரதலி” (திருப்பு. 129);.

ம. அம்பணம்

     [அம்பு = வட்டம், வளையல். அம்பு + அணம் (ஈறு); – அம்பணம் = வட்டமான பொருள்.]

பரிசல்போல் வட்டமான படகும் கப்பலும் இருந்திருத்தல் வேண்டும். வங்கம் என்னும் கப்பற் பெயர் வட்டமானது என்னும் பொருளதே.

துலாக்கோலின் தட்டு வட்டமானது. குழிந்த தட்டு ஆமையோட்டு வடிவினது.

ஒற்றை நரம்புச் சுரையாழின் பத்தர் சுரைக்குடுக்கையாற் செய்யப்படுவது. அது வடிவில் ஒரளவு ஆமை யொத்தது. சித்தார் என்னும் நரப்புக்கருவியின் பத்தர் சுரைக் குடுக்கையாற் செய்யப்படுவதே. பண்ணிசைத்தற் கேற்ற பெருஞ்சித்தாரின் பத்தர், அகன்று சப்பையான சுரைக்குடுக்கையாற் செய்யப்படும். அதனால் அத்தகையதற்குக் கச்சுவா என்று பெயர். கச்சபம் (வ. கச்சப); = ஆமை. கச்சப வடிவான பத்தர்கொண்ட சித்தார் கச்சுவா.

பண்டை யாழ்வகைகளுள் ஒன்று ஆமை யாழ். அதுவே அம்பணம் என்று பெயர் பெற்றிருத்தல் வேண்டும். கச்சுவா என்பது அதன் மொழிபெயர்ப்பே.

 அம்பணம் ambaṇam, பெ. (n.)

   பவளம் (அக.நி.);; coral.

     [அம்பகம் = செம்பு (copper);, சிவப்பான மாழை (உலோகம்);. ஒருகா. அம்பு → அம்பணம்.]

அம்பணவர்

அம்பணவர் ambaṇavar, பெ. (n.)

   ஆமையாழ்ப் பாணர், பாணர்; an ancient caste of musicians who played on a kind of lute called amaiyúl.

     [அம்பணம் = ஆமை, ஆமையாழ். அம்பணம் → அம்பணவன் → அம்பணவர்.]

 அம்பணவர் ambaṇavar, பெ. (n.)

   கி.பி. 2ஆம் நூற்றாண்டில், வேதம் ஒதாது இசைத் தொழிலை மேற்கொண்டு வேறுபிரிந்து தனிக் குடியிருப்பில் வதிந்த தமிழ்நாட்டுப் பிராமணக் கூட்டத்தார்; a sect of Brāhmins of Tamil Nadu, who gave up reciting the Vedas, took to practising music and so – moved into separate residential colonies in second century A.D.

     “வரிநவில் கொள்கை மறைநூல் வழுக்கத்துப் புரிநூன் மார்பர்” (சிலப். 13 ; 38-9);.

     [பண் → பண்ணவன் = பாணன். பண்ணவன் → பணவன். அம் (அழகிய); + பணவன் – அம்பணவன் → அம்பணவர்.]

 அம்பணவர் ambaṇavar, பெ. (n.)

   பாணர், சிறப்பாக யாழ்ப்பாணர்; an ancient caste of musicians, especially lute players.

     “——————— —— ஆங்கு

ஆடியல் கொள்கை யந்தரி கோலம்

பாடும் பாணரிற் பாங்குறச் சேர்ந்து”

என்னும் சிலப்பதிகார அடிகட்கு (13;103105);, அடியார்க்குநல்லார், ‘அவ்விடத்துத் துர்க்கையது வெற்றிபொருந்திய அசுரரோடு பொருத போர்க்கோலத்தைப் பாடும் பாட்டாண்மையை யுடைய அம்பணவரில் தானும்மொருவனாக கலந்து’ என்று உரை வரைந்திருத்தல் காண்க.

     [அம்பணம் = ஆமை, மரக்கால், ஆமை அல்லது மரக்கால் போன்ற குடத்தையுடைய யாழ். அம்பணம் → அம்பணவர் = ஆமை வடிவ யாழைக்கொண்ட பாணர்.]

அம்பதை

__,

பெ. (n.);

   கள் (திவா.);; toddy.

அம்பத்தை

 அம்பத்தை ambattai, பெ. (n.)

   கொடிவகை (இ.வ.);; glacous backed triangular bucklerleaved moonseed.

அம்பனத்திப்பழம்

 அம்பனத்திப்பழம் ambaṉattippaḻm, பெ. (n.)

   பொன்னாங்காய் அல்லது பூவந்திக்கொட்டை; soap-nut tree, Sapiandus emarginatus (சா.அக.);.

அம்பனம்

 அம்பனம் ambaṉam, பெ. (n.)

   வாழை; common plantain tree, Musa paradisiaca (சா.அக.);.

     [அம்பு = நீர். அம்பு → அம்பனம் = நீருள்ளது.]

அம்பயஞானநூல்

 அம்பயஞானநூல் ambayañāṉanūl, பெ. (n.)

   தாமரை நூல்; filaments of lotus plant.

அம்பரத்தவர்

அம்பரத்தவர் ambarattavar, பெ. (n.)

   தேவர்; celestials.

     “அம்பரத்தவருடன்று சீறினுமொ ரம்பிலே யழிவர்” (பாரத. கிருட். 135);.

     [அம்பரம் = தேவருலகம். அம்பரம் + அத்து (சாரியை); + அவர் (ப.பா. ஈறு);.]

அம்பரமணி

 அம்பரமணி ambaramaṇi, பெ. (n.)

   கதிரவன்; the sun, lit., the jewel of the sky.

 Skt. ambaramayi

     [அம்பரம் = வானம். மணி = ஒளிர்கல், மணியோல் ஒளிவிசுவது.]

அம்பரம்

அம்பரம் ambaram, பெ. (n.)

   1. தேவருலகம்; celestial world.

   2. உயர்ந்த வானவெளி காயம் (ஆகாயம்);; sky, atmosphere, ether.

     “அம்பர மனல்கால்” (திவ். பெரியதி. 1.8 ; 8);.

   3. திசை; point of the compass.

     “விஞ்ச வம்பர மேவிய போதினும்” (ஞானவா. தாம வியான. 21);.

ம. அம்பரம் ; க., .து. அம்பர ; தெ. அம்பரமு; பட. அம்பார் (மேலே);; பாலி. அம்பர ; Skt. ambara.

     [உ → உம்பு → உம்பர் = மேல், மேலுலகம், தேவர், தேவருலகம். உம்பர் → உம்பரம் = தேவருலகம், உம்பரம் → அம்பரம்.]

 அம்பரம் ambaram, பெ. (n.)

   கடல் வாரி; sea, ocean.

     “எரிகணை யேவ வம்பர முற்றது” (பாரத. பதினான். 93);.

     [அம் = நீர். அம் → அம்பு = நீர், கடல். அம்பு → அம்பரம்.]

 அம்பரம் ambaram, பெ. (n.)

   1. அம்பர் (நாநார்த்த.);; ambergris, a fragrant substance.

தெ. அம்பரமு.

   2. (அம்பர் நிற முள்ள); மஞ்சள்; turmeric.

     “அம்பரமும் பொன்னு மணிக்கோடும் பொருந்தி” (மான்விடு. 70);.

   3. (அம்பர் மணம் போன்ற); நறுமணம்; perfume (சா.அக.);.

ம. அம்பரி ; க. அம்பர.

     [அம்பரம் (மஞ்சள்); → Skt. ambara, அம்பர் → அம்பரம்.]

அம்பர் பார்க்க;see amhar”.

 அம்பரம் ambaram, பெ. (n.)

   1. ஆடை; clothes, apparel, garment.

     “அம்பரமே தண்ணீரே சோறே” (திவ். திருப்பா. 17);.

   2. ஆடைக்கு உதவும் பருத்தி (சங்.அக.);; cotton.

   3. சித்திரை நாண்மீன் (சங்.அக.);; the 14th lunar constellation.

ம. அம்பரம் ; க., து. அம்பா ; தெ. அம்பரமு ; Skt. ambara.

     [அம்பு = வளையல். ஒருகா. ஆடை உடம்பைச் சுற்றிக் கட்டப்படுவதால் அம்பு எனப் பெயர் பெற்றிருக்கலாம். சித்திரை நாண் மீனுக்கு அறுவை என்பது ஒரு பெயர். அறுவை என்பது ஆடையையுங் குறிக்கும். அம்பரம் என்பதும் அப்பொருள் குறித்தலால் சித்திரைக்குப் பெயராயிற்றுப் போலும்.]

 அம்பரம் ambaram, பெ. (n.)

   அம்பலம், மன்றம் (நாநார்த்த.);; hall, public place.

     [அம்பலம் → அம்பரம்.]

அம்பலம் பார்க்க;see ambalam”.

 அம்பரம் ambaram, பெ. (n.)

   1. காக்கைப் பொன் (அப்பிரகம்);; mica or talc (சா.அக.);.

   2. துயிலிடம்; sleeping place, bedroom (பிங்.);.

   3. கரிசு, தீவினை (நாநார்த்த.);; sin.

அம்பரர்

அம்பரர் ambarar, பெ. (n.)

   அசுரர் (சங்.அக.);; the Asuras, a class of super human beings said to have been at war with the gods.

     “அம்பரருயிர்” (சுந்தரந். காப்பு, 2);.

     [அம்பரம் = கடல். அம்பரம் → அம்பரர் = கடலிடத் தொரு நகரில் வாழ்ந்தவர் (சங்.அக.);.]

அம்பரவாணம்

 அம்பரவாணம் ambaravāṇam, பெ. (n.)

   எண்காற் புள் (பிங்.); ; fabulous eight-legged bird.

மறுவ. அம்பாவனம்

அம்பராந்தம்

 அம்பராந்தம் ambarāndam, பெ. (n.)

   அடிவானம்(பாண்டி);; horizon.

     [Skt. ambaranta → த. அம்பராந்தம்.]

அம்பரான்

அம்பரான் ambarāṉ, பெ. (n.)

   அம்பரென்னும் திருநகரிலிருக்குஞ் சிவன்;Śiva, who has taken =bode at Ambar.

     “இன்னல் களைவன இன்னம்ப ரான்றன் இணையடியே” (தேவா. 4-100; 1);.

அம்பராம்புயம்

 அம்பராம்புயம் ambarāmbuyam, பெ. (n.)

 that which is non existent, as sky-lotus.

     [Skt. ambara + ambuja → த. அம்பராம்புயம்.]

அம்பரிடம்

அம்பரிடம்1 ambariḍam, பெ. (n.)

   மாநிரய மெட்டனு ளொன்று (சி.போ.பா.2, 3, பக். 203);; a hell, one of eight ma-nirayam.

     [Skt. ambarsa → த. அம்பரிடம்.]

 அம்பரிடம்2 ambariḍam, பெ. (n.)

   சூரியன்; the sun.

     [Skt. ambarsa → த. அம்பரிடம்.]

அம்பரியம்

 அம்பரியம் ambariyam, பெ. (n.)

   பேறுகால (பிரசவ); நோய்; pangs of child birth; the pains of the contraction of the uterus during labour (சா.அக.);.

அம்பரீசம்

 அம்பரீசம் ambarīcam, பெ. (n.)

   எண்ணெய்ச் சட்டி; a pot in which oil is kept or boiled (சா.அக.);.

     [Skt. ambarša → த. அம்பரீசம்.]

அம்பரீடன்

அம்பரீடன்1 ambarīṭaṉ, பெ. (n.)

   கதிரவன்); குல அரசருளொருவன் (கம்பரா. மிதிலை. 120);; name of a king of the solar race celebrated for his devotion to Visnu.

     [Skt. ambarsa → த. அம்பரீடன்.]

 அம்பரீடன்2 ambarīṭaṉ, பெ. (n.)

   சிவபெருமான்; Sivan.

     [Skt. ambarša → த. அம்பரீடன்.]

அம்பரீடம்

அம்பரீடம் ambarīṭam, பெ. (n.)

   1. போர்; battle.

   2. புளிமா; a species of mango.

   3. வறையோடு; pan used for parching, frying pan.

   4. குதிரைக்குட்டி; colt.

     [Skt. ambarisa → த. அம்பரீடம்.]

அம்பரை

அம்பரை ambarai, பெ. (n.)

   1. நிமிளை (மு.அ.);

 bismuth (செ.அக.);—a hard mineral of a brassyellow colour used in the production of sulphur and sulphuric acid, iron pyrites (சா.அக.);.

   2. பொன்னிமிளை; iron pyrites occurring in dark yellow modules with a golden lustre.

   3. வெண்கல நிமிளை. இஃது உடம்பிற்கு வலுவையுண்டாக்கும்; bismuth. It is medicinally a tonic.

அம்பர்

அம்பர் ambar, கு.வி.எ. (adv.)

   அங்கே, அவ்விடம்; yonder, there.

     “அம்பர்ப் பருந்துபட” (பெரும்பாண்.117);.

     [ஆ → அ → அம் → அம்பு → அம்பர்.]

 அம்பர் ambar, பெ. (n.)

   தஞ்சை மாவட்டத்தில் வரலாற்றுச் சிறப்புப் பெற்ற ஓர் ஊர்; name of a village of historical importance in Thanjāvūr district.

     “அம்பரான் சோமாசி மாறனுக்கும் அடியேன்” (தேவா. 7. 39;5);.

 அம்பர் ambar, பெ. (n.)

   ஒருவகைப் பிசின்; amber, a fossil resin, succinite (செ.அக.);.

ம. அம்பர் ; தெ. அம்பரமு, அம்பரு.

 U., Ar. ambar; L. ambra; OF. ambre; ME., E. amber.

அம்பர், பொன்னம்பர் அல்லது கற்பூரமண். இது தேவமரம் (தேவதாரு); முதலிய மரங்களின் பிசின்; தானாகவே உறைந்து நிலத்திற்குள் அமைந்தது. இது சுண்ணாம்பு நிலத்தில் விளைந்த மரத்தின் பிசினாகையால், இதற்குத் தமிழில் ‘கற்பூ’ என்றும், துலுக்கு மொழியில் ‘கற்பா’ என்றும் பெயர். சப்பான் நாட்டில் இதை

     “நம்பு’ என்று சொல்வதுண்டு. இக் கற்பூவை மணியாகச் செய்வதால், இதற்குக் கற்பூரமணி யென்றும் பெயர் வழங்கும். இது தக்கண தேசத்தில் நேர்த்தியானதாய் அகப்படும். ஆனால், மிக அரிது. சில சமையம் திருவாங்கூர், ஆசாம் முதலிய இடங்களிலுங் கிடைக்கும். இது மிகுதியாய்ச் சீனம், சப்பான் நாடுகளினின்றும் இறக்குமதியாகிறது. இது மஞ்சளாயும் கெட்டியானதாயும் ஒடியுந் தன்மை வாய்ந்ததாயுமிருக்கும். இதைத் தேய்ப்பதனால் மின்னாற்றல் உண்டாகும். இதையொத்த ஒரு பிசின் அண்மையில் சிசிலியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதில் பலவகைகளிருப்பினும், கசகசா அம்பர், வெள்ளம்பர், கருப்பம்பர் முதலியவைதாம் முதன்மையானவை ; amber, a yellowish

 fossil resin. It is the gum of several species of coniferous trees chiefly pine (deodar);, which grew during the Cretaceous Period of the geologists. It is known as ‘stone flower’ in Tamil, as the tree that yields this resin usually grows in limestone soils. It is termed

     “karbah” in Hindustani and

     “nambu” in Japan. As this resin is made into beads, it is also known as Camphor beads — Succinum or electrum.

 Amber of a fine quality is found in the Deccan, but it is very rare. It is occasionally met with in Travancore and Assam. It is generally imported from Japan and China. It is a yellow hard but brittle substance almost transparent with an aromatic odour. When rubbed with silk it produces electricity. A similar resin has been recently found in Sicily.

 There are different varieties of amber;

   1) Poppy amber which is a little dark in colour.

   2) White amber of a lighter shade.

   3) Black amber of a black colour.

 amber, n. yellow translucent fossil resin, found chiefly on S. shore of Baltic.

 அம்பர் ambar, பெ. (n.)

   ஒர்க்கோலை; ambergris a morbid secretion of the liver or intestines of the spermaceti whale (செ.அக.);

   — திமிங்கிலத்தின் ஈரலில் அல்லது மணிக்குடலில் உண்டாகும் சத்து. இதற்கு மீனம்பர் என்று பெயர்; substance excreted from the liver or the small intestines of the sperm whale, ambergris. (சா.அக.);.

     “ஒர்க்கோலை சங்க மொளிர்பவளம் வெண்முத்தம்

நீர்ப்படு முப்பினோ டைந்து” (சிலப். 10;107, அடியார்க். உரை);.

இது ஒக்கோலை யெனவும் படும்.

     “பவள முத்துச் சங்கொக் கோலை

யுப்புக் கடல்படு திரவிய மைந்தே” (பிங். 3 ; 86);.

 ambergris, n. wax-like substance found floating in tropical seas, and in intestines of sperm whale, odoriferous and used in perfumery, formerly in cookery.

     [கடலில் மிதப்பதாகச் சொல்லப்படுவதனால், ஒருகா. அம்பு (கடல்); → அம்பர்.]

 அம்பர் ambar, பெ. (n.)

   1. இரும்புத்துரு, மணற்சத்து முதலிய பொருள்கள் சேர்ந்த இயற்கை மண். இது சாயத்திற்குதவும்; a natural earth containing chiefly manganese, iron oxide, and silica. It is used as a pigment, umber.

   2. கரும்பு அம்பர்; fossilized resin of the black poplar (சா.அக.);.

அம்பர் அருவந்தை

 அம்பர் அருவந்தை ampararuvantai, பெ. (n.)

அம்பர்அருவந்தை மயிலாடுதுறை வட்டத்தில் அமைந்துள்ள ஓர் ஊர்.

 name of a village in Mayiladutura, Taluk

     [அம்பர்+அருவந்தை]

அம்பர்கிழானருவந்தை

 அம்பர்கிழானருவந்தை ambarkiḻāṉaruvandai, பெ. (n.)

   திவாகர நிகண்டு தொகுப்பித்தோன் (திவா. இறுதிக்கட்டுரை); ; Aruvandal. chief of Ambar, under whose auspices the Tivagaram was compiled.

     [அம்பர் = ஒருர், கிழவன் → கிழான் = தலைவன். அருவன் + தந்தை – அருவந்தை.]

அம்பர்சர்க்கா

 அம்பர்சர்க்கா ambarcarkkā, பெ. (n.)

   பஞ்சை இழைக்கப் பயன்படுத்துதற்காகக், கையால் இயக்கப்படும் கருவி; hand spinning wheel.

     [U. ambar + carkha → த. அம்பர்சர்க்கா.]

அம்பர்சா

 அம்பர்சா ambarcā, பெ. (n.)

சீலைவகை,

 kind of woman’s printed cloth.

     [U. ambersa → த. அம்பர்சா.]

அம்பர்திருமாகாளம்

 அம்பர்திருமாகாளம் ampartirumākāḷam, பெ. (n.)

மயிலாடுதுறை வட்டத்தில் அமைந்துள்ள ஓர் ஊர்.

 name of the village in Mayiladuturai taluk.

     [அம்பர்+திரு+மா+காளம்]

அம்பர்புறத்துார்

அம்பர்புறத்துார் amparpuṟatr, பெ. (n.)

பேரரளத்திலிருந்து 8 ஆயிரமாத்திரி (கி.மீ); தொலைவில் அமைந்துள்ள ஓர் ஊர்.

 Name of the village 8 k.m away from peralam.

     [அம்பர்+புறம்+அத்து+ஊர்]

அம்பர்மாகாளம்

 அம்பர்மாகாளம் ambarmākāḷam, பெ. (n.)

   ஒரு திருநகர்; a shrine.

அம்பறாத்தூணி

 அம்பறாத்தூணி ambaṟāttūṇi, பெ. (n.)

   அம்புக்கூடு (பிங்.);; uiver, case for arrows.

     [அம்பு + அறு + ஆ (எ.ம. இ.நி.); + தூணி (கூடு);. அறா = நீங்காத.]

மறுவ. அம்புக்கூடு, அம்புப்புட்டில், அம்புறை தூணி.

     [P]

அம்பறு-த்தல்

அம்பறு-த்தல் ambaṟuttal,    4 செ.கு.வி. (v.i.)

   அம்பைத் தூணியினின்று உருவுதல்; to draw an arrow out of the quiver.

     ‘அம்பறுத் தெய்ய வேண்டும்படி’ (ஈடு. 1.2;7);.

     [அம்பு + அறு.]

அம்பலகாரன்

அம்பலகாரன் ambalakāraṉ, பெ. (n.)

   1. ஊரவைத் தலைவன் (R.T.);; chairman of a village assembly.

   2. ஊர்த்தலைவன்; headman of a village.

   3. கள்ளர், வலையர் பட்டப் பெயர் ; a caste title of Kallars and Valaiyars.

ம. அம்பலக்காரன்

     [அம்பலம் + காரன் (உடைமை அல்லது உரிமை குறித்த ஆ.பா. ஈறு);.]

அம்பலக் கூத்தர் பட்டர்

அம்பலக் கூத்தர் பட்டர் ampalakāttarpaṭṭar, பெ. (n.)

   விக்கிரம சோழன் காலத்தில் திருவோத்தூர் திருவுண்ணாழிகை அவை (சபை);யில் இருந்தவர். (காலம் 1124);; a member tiruvunna/Iga assembly of Vikkirama Cholan (1124);.

     [அம்பம்+கூத்தர்+பட்டர்.]

அம்பலக்கனி

 அம்பலக்கனி ambalakkaṉi, பெ. (n.)

   செங் கொய்யா; red guava, Psidium guava (pomi-. ferum); (சா.அக.);.

அம்பலக்கல்

 அம்பலக்கல் ambalakkal, பெ. (n.)

   ஊரவையார் இருந்து ஊராட்சிச் செய்திகளைப் பேசும் ஊர்ப் பொதுமேடைக் கல் (இ.வ.);; broadstone slab set up as a platform in a village, on which the members of the village committee sit and discuss village matters (Loc.);.

     [அம்பலம் + கல்.]

அம்பலக்கூத்தன்

அம்பலக்கூத்தன் ambalakāttaṉ, பெ. (n.)

   தில்லைப் பொன்னம்பலத்தில் முத்தொழிற் கூத்தாடுஞ் சிவபெருமான்; Siva, as dancing the dance of triple functions of Godhead, in an open space of Tillai (Chidambaram);.

     “அனைத்தும் வேடமா மம்பலக் கூத்தனை” (தேவா. 5.2 ; 1);.

     [அம்பலம் + கூத்தன்.]

அம்பலக்கோடகம்

 அம்பலக்கோடகம் ambalagāṭagam, பெ. (n.)

   கோடகசாலை; a kind of plant, Justicia procumbens.

அம்பலச்சாவடி

 அம்பலச்சாவடி ambalaccāvaḍi, பெ. (n.)

   ஊரவை மண்டபம்; public building in a village where village affairs are discussed and settled.

     [அம்பலம் + சாவடி.]

அம்பலத்தாடி

அம்பலத்தாடி ambalattāṭi, பெ. (n.)

   ஐவகையம்பலத்தில், சிறப்பாகப் பொன்னம்பலத்தில், முத்தொழில் நடஞ்செய்யுஞ் சிவபெருமான்;Śiva, as dancing the dance of triple functions of Godhead in an open space at five places, especially at Tillai (Chidambaram);.

     “புனையு மம்பலத் தாடிபொற் பாதமும் போற்றி” (சூத. எக்கிய, பூ. 43 ; 44);.

ம. அம்பலத்தாடி

     [அம்பலம் + அத்து (சாரியை); + ஆடி. ஆடி = கூத்தாடுபவன்.]

அம்பலத்தார்

அம்பலத்தார் ambalattār, பெ. (n.)

   ஊரவையார்; members of a village assembly.

     “நிலத்தை வலுக்கொண் டம்பலத்தா ரெடுத்துழுது கொண்டார்க ளென்று” (சரவண. பணவிடு. 185);.

     [அம்பலம் + அத்து (சாரியை); + ஆர் (ப.பா. ஈறு);.]

அம்பலத்தி

அம்பலத்தி ambalatti, பெ. (n.)

   1. தான்றிமரம்; belleric myrobalan, Terminalia belerica.

   2. தில்லை மரம்; blinding tree, spurgewoft, Excoecaria agallocha (சா.அக.);.

அம்பலத்திற் கட்டுச்சோறவிழ்-த்தல்

அம்பலத்திற் கட்டுச்சோறவிழ்-த்தல் ambalattiṟkaṭṭuccōṟaviḻttal,    4 செ.குன்றாவி. (v.t.)

   ஒரு மறைவுச் செய்தியை ஒரு கூட்டத்திற் சொல்லுதல்; to divulge a secret at a public meeting.

     ‘அம்பலத்தில் பொதி அவிழ்க்க லாகாது’ (பழ.);.

     [அம்பலத்தில் + கட்டுச்சோறு + அவிழ்.]

அம்பலத்திற்கு வா(வரு)-தல்

அம்பலத்திற்கு வா(வரு)-தல் ambaladdiṟkuvāvarudal,    18 செ.கு.வி. (v.i.)

   மறைவு வெளிப்படுதல்; to become public, as a secret.

அம்பலத்தோதிகம்

 அம்பலத்தோதிகம் ambalattōtigam, பெ. (n.)

   செஞ்சதுரக்கள்ளி; a red variety of square milk hedge, square spurge, Euphorbium antiquorum (சா.அக.);.

அம்பலநாட்டான்

அம்பலநாட்டான் ambalanāṭṭāṉ, பெ. (n.)

   1. ஊர்த்தலைவன்; headman of a village.

   2. அம்பலகாரன், ஊரவைத் தலைவன்; chairman of a village assembly.

     “கிராம முன்சீ பம்பல நாட்டா ரெவர்க்கும்” (பஞ்ச. திருமுக. 380);.

அம்பலமானியம்

 அம்பலமானியம் ambalamāṉiyam, பெ. (n.)

   ஊர்த்தலைவன் பயனுகரும் (அனுபவிக்கும்); (இறையிலி நிலம் (W.G.);; land held free of tax by the headman of a village, as a perquisite of his office.

அம்பலமேறு-தல்

அம்பலமேறு-தல் ambalamēṟudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. வழக்குத் தொடுக்க அறங்கூறவையத்திற்கு அல்லது வழக்குமன்றத்திற்குச் செல்லுதல்; to go to court or village assembly.

   2. அவையாரால் ஏற்றுக்கொள்ளப்படுதல்; to be acceptable to the assembly.

     ‘அகதிசொல் அம்பல மேறாது’. ‘அம்பலத்தி லேறும் பேச்சை அடக்கம்பண்ணப் பார்க்கிறான்’ (பழ.);.

     [அம்பலம் + ஏறு.]

அம்பலம்

அம்பலம் ambalam, பெ. (n.)

   1. பலர் கூடும் வெளியிடம்; open space for the use of the public.

     ‘அம்பலக் கழுதை அம்பலத்திற் கிடந்தா லென்ன? அடுத்த திருமாளிகையிற் கிடந்தா லென்ன?’ (பழ.);.

   2. ஊரவை; village assembly for transacting village affairs.

     ‘அகதி சொல் அம்பல மேறாது’ (பழ.);.

   3. கற்றோரவை; assembly of scholars.

     ‘அரைச்சொல் கொண்டு அம்பல மேறலாமா?’ (பழ.);.

   4. கூத்துக் காண்போர் இருக்கை; pit of a theatre.

     “அம்பலமு மரங்கமுஞ் சாலையும்” (சீவக. 21.12);.

   5. தில்லையம்பலம்; Sivashrine at Tillai (Chidambaram);.

     “பாம்பலங் காரப் பரன்றில்லை யம்பலம்” (திருக்கோ. 11);.

   6. சித்திரகூடம் (சங்.அக.); ; Visnu shrine in Chidambaram.

   7. சிற்றூர் அலுவல் (கிராம உத்தியோக); வகை; village revenue office.

   8. அம்பலகாரன்; headman of a village.

   9. கள்ளர், வலையர் பட்டப்பெயர்; a caste title of Kallars and Valaiyars.

ம. அம்பலம் ; க. அம்பல ; து., குட. அம்பில ; Skt. ambara.

     [அம்புதல் = குவிதல், கூடுதல். அம்பு → அம்பல் → அம்பலம் = கூடும் அவை. அவைக் களம்.]

 அம்பலம் ambalam, பெ. (n.)

   1. ஆமை; tortoise.

   2. புளிமா; sour mango, Spondias mangifera.

அம்பலவன்

அம்பலவன் ambalavaṉ, பெ. (n.)

   தில்லைச் சிவபிரான்; Siva at Tillai (Chidambaram);.

     “குவளைக் களத்தம் பலவன்” (திருக்கோ. 33);.

     [அம்பலம் + அவன் (ஆ.பா. ஈறு);.]

அம்பலவரி

 அம்பலவரி ambalavari, பெ. (n.)

   இராமநாதபுரம் வேளகத்தில் (சமீந்தாரியில்); சிற்றூரலுவலர் தம் சம்பளவுரிமைக்காகச் செலுத்திய வரி; tax paid by village officers in the Ramnad Zamindary to keep up their claim to official emoluments or mirasis.

அம்பலவாசி

அம்பலவாசி ambalavāci, பெ. (n.)

   1. மலையாள நாட்டிற் கோயில்வேலை செய்யும் ஒரு குலம் (அபி.சிந்.);; a caste in Malayalam country rendering service in temples.

   2. அக்குலத்தான்; a member of that caste.

     [அம்பலம் + வாசி. வதிதல் = தங்குதல், வாழ்தல், இருத்தல். வதி → வசி → வாசம் → வாசி. அம்பலவாசி = கோயிலில் தங்கி வேலை செய்பவன்.]

அம்பலவாண கவிராயர்

 அம்பலவாண கவிராயர் ambalavāṇagavirāyar, பெ. (n.)

   அறப்பளீசுர சதகம் என்னும் அற நூலின் ஆசிரியர்; name of the author of Arappališura Sadagam, an ethical poem of hundred stanzas.

     [அம்பலம் + வாணன். வாழ் → வாழ்நன் → வாணன். Skt, kavi + அரசன் → அரைசன் → அரையன் → ராயன் → ராயர். கவிராயர் = பாவரசர், பாவியற்றுவதில் அல்லது செய்யுள் செய்வதில் வல்லவர்.]

அம்பலவாண தேசிகர்

 அம்பலவாண தேசிகர் ambalavāṇatēcigar, பெ. (n.)

   பண்டார சாத்திரம் என்னும் சிவக் கொண்முடிபு (சைவ சித்தாந்த); நூல்களுள் பத்தை இயற்றிய திருவாவடுதுறை மடத்துச் சிவத்துறவியார்; name of a Saiva ascetic of the Tiruvavaduturai mutt, author of ten of the fourteen Saiva philosophical works called Pandara Sattiram.

     [அம்பலவாணன் + Skt. desika → த. தேசிகன் = குரு.]

அம்பலவாணன்

அம்பலவாணன் ambalavāṇaṉ, பெ. (n.)

   தில்லையம்பலத்திற் கோயில் கொண்டுள்ள சிவபெருமான்;Śiva, as the presiding deity at the shrine of Tillai (Chidambaram);.

     “ஆயும் புகழ்த்தில்லை யம்பல வாணன்” (பட்டினத். திருத்தில், 9);.

     [அம்பலம் + வாணன். வாழ் → வாழ்நன். → வாணன்.]

அம்பலவேகி

 அம்பலவேகி ambalavēki, பெ. (n.)

செஞ்சூரன் பார்க்க;see šeñjūran.

அம்பலி

அம்பலி ambali, பெ. (n.)

   ஒரு பழைய தோலிசைக்கருவி; an ancient drum.

     “அம்பலி கணுவை யூமை” (கம்பரா. யுத்த பிரமாத் திர. 5);.

 அம்பலி ambali, பெ. (n.)

   1. களி, சிறப்பாகக் கேழ்வரகுகூழ்; porridge, esp. of ragi.

   2. பசை; a gummy substance (சா.அக.);.

   3. முட்டை வெள்ளை (ஜாலத். பக். 21); ; the white of an egg.

க., தெ. அம்பலி ; து. அம்பெலி ; கொலா.

அம்ப ; நா. அம்பால் ; பட. அம்பிலி.

அம்பல்

அம்பல் ambal, பெ. (n.)

   1. பூ அலர்தற்குச் சிறிது முன்னுள்ள நிலை (இறை. 22, உரை);; condition of a flower about to blossom.

   2. சிலர் கூறும் புறங்கூற்று, அலருக்கு எதிர்; slander uttered by a few.

     “அம்பலே சிலரறிந் திட்டது புறங்கூற லாகும்” (சூடா. 10 ; 8);.

   3. சிலரறிந்து தம்முட் கூறும் களவுக் காதற் செய்தி; private talk between people concerning love intrigues of others, dist. fr. alar.

     “அம்பலு மலருங் களவுவெளிப் படுத்தலின்” (தொல். பொருள். கள. 49);.

   4. பழிச்சொல் (பிங்.); ; calumny.

     [உம் → அம் → அம்பு. அம்புதல் = குவிதல். அம்பு → அம்பல் = குவிந்துள்ள அரும்பு அல்லது முகை, அலராத அரும்புபோற் பரவாத பழிச் சொல் அல்லது மறைவுச் செய்தி.]

 அம்பல் ampal, பெ. (n.)

   நன்னிலம் வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Nannilam Taluk.

     [அம்பு+அம்பல்]

அம்பளங்காய்

அம்பளங்காய் ambaḷaṅgāy, பெ. (n.)

   1. வெடியுப்பைக் கட்டுஞ் சீனதேசத்துக் காய்; a fruit grown in China, said to consolidate nitre.

   2. பேரிக்காய்; Indian apple (சா.அக.);.

அம்பளாசை

 அம்பளாசை ambaḷācai, பெ. (n.)

   அகத்தி; Indian pea-tree, Sesbania grandiflora (சா.அக.);.

அம்பா

அம்பா ambā, பெ. (n.)

   1. தாய் (பரிபா. 11, 81);; mother.

   2. மலைமகள்; Parvadi, as mother of the universe.

     [Skt. ambå → த. அம்பா.]

அம்மை → Skt. ambå.

அம்பாணி

 அம்பாணி ambāṇi, பெ. (n.)

   அம்பு நுனி; sharp head of an arrow.

அம்பாணி தைத்து போலப் பேசுகிறான் (உ.வ.);.

     [அம்பு + ஆணி. ஆழ் → ஆணு → ஆணி = ஆழ்ந்து பதியும் ஊசி.]

அண் → (அண்ணி); → ஆணி என்பர் கால்டுவெல். ஒன்றோடு இறுகப் பொருந்துவதினும் ஒன்றில் ஆழமா யிறங்குவதே ஆணியாதலால், ‘ஆழ்’ என்னும் மூலமே மிகப்பொருத்தமாம். ஆணிவேர், ஆணிக்குருத்து, ஆணிக் கொள்ளுதல் (ஊன்றிக்கொள்ளுதல்); என்னும் வழக்குகளை நோக்குக.

ஆணி → Skt. äyi.

அம்பாயனக்குங்கிலியம்

 அம்பாயனக்குங்கிலியம் ambāyaṉakkuṅgiliyam, பெ. (n.)

   ஒருவகைத் தூய்மையான குங்கிலியம்; dammer proper from amboyna (resin of); Canarium, Strictum.

அம்பாயப்படு-தல்

அம்பாயப்படு-தல் ambāyappaḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   பிள்ளைப்பேற்று நோவுறுதல்; to travail at child-birth.

அம்பாயம்

அம்பாயம் ambāyam, பெ. (n.)

   1. பிள்ளைப் பேற்று நோவு; travail, pangs of child-birth.

   2. வலி, நோவு (வின்.);; pain.

அம்பாரக்கடை

அம்பாரக்கடை ambārakkaḍai, பெ. (n.)

   களஞ்சியம் (W.G.);; store, granary, place where anything is stored.

     [அம்பாரம் + கடை.]

     [U. ambar → த. அம்பார(ம்);.]

கட → கடை (தமி. வ.138);.

அம்பாரம்

அம்பாரம்1 ambāram, பெ. (n.)

   அடுக்கு; pile.

     ‘புகையிலை யம்பாரம்’ (நெல்லை);.

     [U. ambär → த. அம்பாரம்.]

 அம்பாரம்2 ambāram, பெ. (n.)

   யானை மேற்றவிசு (இ.வ.);; howdah with a canopy.

     [Skt. ambåri → த. அம்பாரம்.]

 அம்பாரம்3 ambāram, பெ. (n.)

   1. நெற்குவியல் (திவ். திருவிருத். 58, வ்யா. அரும்.);; heap of paddy or other grain on the threshing floor.

   2. களஞ்சியம் (இ.வ.);; granary.

     ‘ஆண்டிக்கு ஏன் அம்பாரக் கணக்கு’ (பழ.);.

     [Skt. armbår → த. அம்பாரம்.]

அம்பாரராசி

 அம்பாரராசி ambārarāci, பெ. (n.)

   விளைசலான நெல்லில் அரசுக்குரிய பகுதி (R.T.);; the government’s share of the gross produce of paddy.

     [U. ambar+rasi → த. அம்பாரராசி.]

அம்பாரவாசி

 அம்பாரவாசி ambāravāci, பெ. (n.)

   காய்ச்சற்பாடு முதலியவற்றால் நட்டமேற்படாதபடி, அதிகப்படியாய்க் கொடுக்கும் நெல்; extra quantity of grain measured by the tenant to the landlord to compensate for the loss due to shrinkage etc.

     “அம்பாரவாசி அரைவாயிலே கழித்து”.

     [அம்பார(ம்); + வாசி.]

     [U. ambár → த. அம்பார(ம்);.]

அம்பார்

 அம்பார் ambār, பெ. (n.)

   தவசக்குவியல் (P.T.L.);; heap of paddy or other grain.

     [U. ambar → த. அம்பார்.]

அம்பாலம்

 அம்பாலம் ambālam, பெ. (n.)

   மருமாங்காய்; hogplum, Spondias mangifera (சா.அக.);.

ம. அம்பாழம்

அம்பாலிகை

 அம்பாலிகை ambāligai, பெ. (n.)

   அறத்தேவி (பிங்..);; Goddess of virtue.

அம்பால்

 அம்பால் ambāl, பெ. (n.)

   தோட்டம் வின்); garden.

     [ஒருகா. அம் + பால். அம் = அழகிய. பால் = இடம்.]

 அம்பால் ambāl, இடை. (ind.)

   பிள்ளைகள் கூட்டு விளையாட்டில், ஆடைநெகிழின் அதைத் திருத்துதற்கு விளையாட்டைச் சில நொடிகள் நிறுத்திவைக்குமாறு பயன்படுத்துஞ்சொல்; a word used in children’s games, meaning ‘wait a minute!” or ‘stop for a few seconds!” in order to tighten the garment when it becomes loose or slips off.

ம. அம்பாலெ ; தெ. அம்பால் ; பட. அம்பேல்.

     [ஒருகா. அப்பால் என்பது அம்பால் என மெலிந்திருக்கலாம்.]

அம்பாள்

 அம்பாள் ambāḷ, பெ. (n.)

   மலைமகள்; a general term for goddess parvati in temples.

அர்ச்சனை அம்பாளுக்கா, சுவாமிக்கா?

     [Skt. amba → த. அம்பாள்.]

அம்பாவனம்

 அம்பாவனம் ambāvaṉam, பெ. (n.)

   எண்காற்புள் (சரபபட்சி (வின்.);; fabulous eight-legged bird.

     [அம்பாவாணம் → அம்பாவனம் (கொச்சைத் திரிபு.]

அம்பரவாணம் பார்க்க;see ambaravanam.

அம்பாவாடல்

அம்பாவாடல் ambāvāṭal, பெ. (n.)

   தைநீராடல்; ceremonial ablutions of young girls in the month of (January); Taisam under the guidance of their mothers.

     “அம்பா வாடலி னாய்தொடிக் கன்னியர்” (பரிபா. 11, 81);.

     [அம்பா + ஆடல்.]

     [Skt. armbå → த. அம்பா.]

ஆடு → ஆடல் = நீராடல்.

அம்பி

அம்பி ambi, பெ. (n.)

   1. மிடா; large water jar.

   2. இறைகூடை; baling-basket.

   3. நீர்ப்பொறி; water-lift, wind-mill.

   4. தாம்பு, நீரிறைக்குங் கயிறு; rope used for drawing water.

   5. தெப்பம்; raft, float.

     “துறையம்பி யூர்வான்” (கலித். 103;38);.

   6. தோணி; small boat.

     “பரிமுக வம்பியுங் கரிமுக வம்பியும்” (சிலப். 13 ; 176);.

   7. ஓடம்; flat – bottomed ferry-boat.

     “ஆயிர மம்பிக்கு நாயகன்” (கம்பரா. அயோத். குகப். 1);.

     [P]

   8. மரக்கலம் (திவா.);; ship.

   9. காராம்பி (பிங்.);; suspended water shovel.

   10. கள் (திவா.); ; toddy.

க. அம்பி

     [அம் → அம்பு = நீர். அம்பு → அம்பி = நீர் வடிவானது, நீர்த் தொடர்புள்ளது.]

 அம்பி ambi, பெ. (n.)

   விசயநகரத் தரசர் தலை நகரான அம்பி (ஹம்பி); யென்ற ஊர்; Hampi, the capital of the Vijayanagar kings.

     “அம்பி நகருங் கெடுக்கவந்த குலாமா” (தமிழ்நா. 224);.

 அம்பி ampi, பெ. (n.)

   செங்கற்பட்டு மாவட்டத்தில் உள்ள ஓர் ஊர்; name of the village in Chengalpattu district.

     [அம்பு-அம்பி]

அம்பிகா

 அம்பிகா ambikā, பெ. (n.)

அம்பளங்காய் பார்க்க;see ambalanigay (சா.அக.);.

அம்பிகாபதி

அம்பிகாபதி ambikāpadi, பெ. (n.)

   1. சிவபெருமான் (சூத. சிவமான்.7, 8);; Sivan as the husband of Parvadi

   2. ஒரு புலவர்; name of a poet, son of Kambar, author of the Amblgäpadi-kõvai.

     [அம்பிகா + பதி.]

     [Skt. ambika + pati → த. அம்பிகாபதி.]

பதி = தலைவன் இறைவன்.

அம்பிகாபதிகோவை

 அம்பிகாபதிகோவை ambikāpadiāvai, பெ. (n.)

   ஒரு நூல்; a kõvai poem attributed to Ambigāpadi.

     [அம்பிகாபதி + கோவை.]

     [Skt. ambikä + pati → த. அம்பிகாபதி.]

அம்பிகாவல்லவர்

அம்பிகாவல்லவர் ambikāvallavar, பெ. (n.)

சிவபெருமான் (பெரியபு. ஏயர். 325);: Sivan,

 as the husband of Parvadi.

     [அம்பிகா + வல்லவர்.]

     [Skt. ambika → த. அம்பிகா.]

அம்பிகேயன்

அம்பிகேயன் ambiāyaṉ, பெ. (n.)

   1. திருதராட்டிரன் (பாரத. திரெளபதி. 107);; Dhrtarastra.

   2. பிள்ளையார் (கணேசன்); (சங்.அக.);; Ganesan.

   3. முருகக்கடவுள் (சங்.அக.);; Kandan.

     [Skt. ambikeya → த. அம்பிகேயன்.]

அம்பிகை

அம்பிகை ambigai, பெ. (n.)

   வெட்பாலை; a plant, Wrightia antidysenterica (சா.அக.);.

 அம்பிகை1 ambigai, பெ. (n.)

   மலைமகள் (பார்வதி); (கந்தபு. தெய்வ. 32);; Parvadi, as mother.

     [Skt ambika → த. அம்பிகை.]

 அம்பிகை2 ambigai, பெ. (n.)

   1. தாய்; mother.

   2. அத்தை; aunt.

     [Skt. ambika → த. அம்பிகை.]

 அம்பிகை3 ambigai, பெ. (n.)

   வெட்பாலை; a plant, Wrightia antidysenterica.

அம்பிகைக்குழலாள்

 அம்பிகைக்குழலாள் ambigaigguḻlāḷ, பெ. (n.)

   பெருச்சாளி; bandicoot (சா. அக.);.

அம்பிகைதனயன்

 அம்பிகைதனயன் ambigaidaṉayaṉ, பெ. (n.)

   பிள்ளையார் (விநாயகன்); (சூடா);; Ganesan as Son of Parvadi.

     [அம்பிகை + தனயன்.]

     [Skt. ambika → த. அம்பிகை.]

தன் + ஐயன் → தனயன்.

அம்பிகைபாகன்

அம்பிகைபாகன் ambigaipāgaṉ, பெ. (n.)

   சிவபெருமான் (காஞ்சிப்பு. அந்தர்வே. 32);; Sivan, as half-Parvadi.

     [அம்பிகை + பாகன்.]

     [Skt. ambika → த. அம்பிகை.]

பகு → பாகம் → பாகன்.

அம்பிகைமாலை

 அம்பிகைமாலை ambigaimālai, பெ. (n.)

   ஒரு நூல்; name of a poem in praise of goddess Minaksi of madura, by Kulasegara-pandiyan.

     [அம்பிகை + மாலை.]

     [Skt. ambika → த. அம்பிகை.]

அம்பிசா

 அம்பிசா ambicā, பெ. (n.)

அம்பளங்காய் பார்க்க;see ambalangay (சா.அக.);.

அம்பிசைக்குழலாள்

 அம்பிசைக்குழலாள் ambisaikkuḻlāḷ, பெ. (n.)

   பெருச்சாளி; bandicoot.

அம்பிடி

 அம்பிடி ambiḍi, பெ. (n.)

   சருக்கரை (பச்.மூ.);; white sugar.

அம்பினடி

அம்பினடி ambiṉaḍi, பெ. (n.)

   திப்பிலி மூலம்; root of long pepper.

     “திரிகடுகு வசம்போமமம்பினடி” (தைலவ. தைல. 39);.

அம்பியம்

 அம்பியம் ambiyam, பெ. (n.)

   கள்; toddy.

     [அம்பி = கள். அம்பி → அம்பியம்.]

அம்பிலி

அம்பிலி ambili, பெ. (n.)

   கேழ்வரகின் கூழ்; porridge, esp. of ragi.

 U. ambil

     [அம்பலி → அம்பிலி.]

அம்பிலி பார்க்க;see ambali?.

 அம்பிலி ampili, பெ. (n.)

   மல்லாக்கப்படுத்து கால்களை மடக்கிய நிலையில், பாத மடங்கில் குழந்தையை உட்கார வைத்து பாதத்தோடு குழந்தையை தூக்கித் தூக்கிப் போட்டுச் சிரிப்புக் காட்டும் விளையாட்டு; a childish play.

     [அம்பல்+அம்பிலி]

 அம்பிலி ambili, பெ. (n.)

   முட்டைக் கரு (பைஷஜ. பக். 127);; yolk or white of egg.

     [U. ambil → த. அம்பிலி.]

அம்பிலித்தொட்டி பெ. (n.)

 அம்பிலித்தொட்டி பெ. (n.)   நாய்க்கு உணவு இடும் சிறு சட்டி; a small earthen vessel meant for dog.      [அம்புளி+அம்பிலி+தொ(ச)ட்டி]

அம்பிளி

 அம்பிளி ambiḷi, பெ. (n.)

   அம்பலி என்பதன் கொச்சை; corrupt of ambali.

அம்பிளிக்கை

 அம்பிளிக்கை ampiḷikkai, பெ. (n.)

   பழனி வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Palani Taluk.

     [அம்புளிச்சை-அம்புளிக்கை]

அம்பு

அம்பு ambu, பெ. (n.)

   1. நீர்; water.

     “வழிச் செல்வோர்க்கு மோதுகானலி னம்புமுறைமை போல்” (ஞானவா. வைராக் 61);.

   2. கடல்; sea.

     “அம்பேழும்” (திருப்பு. 99);.

   3. முகில் (மேகம்); (அக.நி); ; cloud.

   4. குடிநீர்; tincture.

     “இருசத் தம்பில்வரும் பேசு” (தைலவ. பாயி. 30);.

   5. ஊண்செரிபால் (அன்னசாரம்); ; chyle of digested food.

   6. நீர்சூழ்ந்த வுலகம்; world, surrounded by water.

     “அம்புகைக் கொண்டால்” (சீவக. 2332);.

     [அம் = நீர். அம் → அம்பு = நீர், நீர்நிலை, நீருள்ளது, நீர்த்தொடர்பு கொண்டது.]

 அம்பு ambu, பெ. (n.)

   1. ஆடுதின்னாப் பாலை; a worm-killer, Aristolachia bracteata.

   2. எலுமிச்சை; lime, Citrus medica.

   3. பாதிரி மரம்; trumpet flower tree, Stereospermum chelonoides.

   4. தண்ணீர்விட்டான்கிழங்கு; water-root, Aspharagus racemosus.

   5. திப்பிலி; long pepper, Piper longum.

     “அம்பேல மிங் கொலி” (தைலவ. தைல. 119);.

   6. யானைத் திப்பிலி; elephant pepper, climbing arum, Scindapsus officinalis.

     “அட்டவர்க்க மம்பணி வேர்” (தைலவ. தைல. 86);.

   7. வெட்டிவேர் (நாநார்த்த.);; cuscus grass.

 அம்பு ambu, பெ. (n.)

   1. தளிர்; tender leaf, sprout.

   2. மூங்கில்; bamboo, Bambusa arundimacca.

   3. வாளி (பாணம்);; arrow.

     “எம்மம்பு கடிவிடுதும்” (புறநா. 9 ; 5);.

   4. ஒருவகைக் கனிய நஞ்சு (சரகாண்ட பாடாணம்);; a mineral poison.

ம., க., தெ., து., பட., கோத. அம்பு ; துட. ஒப் ; பர். அம்.

 அம்பு ambu, பெ. (n.)

   வளையல்; bracelet.

     “அம்புகைக் காணாம்” (சீவக. 2332);.

 அம்பு ambu, பெ. (n.)

   விண் (பொதி.நி.); ; sky, firmament.

     [உம்பரம் = மேலுலகம், விண்ணுலகம். உம் பரம் → அம்பரம் → அம்பு.]

அம்பு நடனம்

 அம்பு நடனம் ampunaṭaṉam, பெ. (n.)

   இலங்கையில் வேடர்கள் ஆடுகின்ற ஒருவகை நடனம்; a dance performed by hunting tribe in celon.

     [அம்பு+நடனம்]

அம்புகணை

அம்புகணை ambugaṇai, பெ. (n.)

   32 வகைக் கனிய நஞ்சுகளுள் ஒன்று (சரகாண்ட பாடாணம்);; one of the 32 kinds of arsenic (சா.அக.);.

அம்புகிராதம்

 அம்புகிராதம் ambugirātam, பெ. (n.)

   முதலை; crocodile.

அம்புக்கட்டு

 அம்புக்கட்டு ambukkaṭṭu, பெ. (n.)

   அம்புக் கற்றை (பிங்.); ; sheaf of arrows.

     [அம்பு + கட்டு.]

அம்புக்குதை

 அம்புக்குதை ambukkudai, பெ. (n.)

   அம்பின் நுனி (திவா.); ; pointed end of an arrow.

     [அம்பு + குதை.]

அம்புக்குப்பி

 அம்புக்குப்பி ambukkuppi, பெ. (n.)

   அம்பின் கொண்டை (பிங்.);; arrow-head.

     [அம்பு + குப்பி.]

அம்புக்குழைச்சு

 அம்புக்குழைச்சு ambukkuḻaiccu, பெ. (n.)

அம்புக்குப்பி பார்க்க;see ambu-k-kuppi.

     [அம்பு + குழைச்சு.]

அம்புக்கூடு

 அம்புக்கூடு ambukāṭu, பெ. (n.)

   அம்பறாத் தூணி (திவா.);; quiver.

     [அம்பு + கூடு.]

அம்புசன்மம்

 அம்புசன்மம் ambusaṉmam, பெ. (n.)

   தாமரை (பச்.மூ.);; lotus.

     [Skt. ambu-janman → த. அம்புசன்மம்.]

அம்புசம்

 அம்புசம் ambusam, பெ. (n.)

   தாமரை (கொடி வகை);; lotus, as water-born.

த.வ. அம்புசனி.

     [Skt. ambu-ja → த. அம்புசம்.]

அம்புசாகிதம்

 அம்புசாகிதம் ambucākidam, பெ. (n.)

   தம்பட்டை யவரை; sword beanl;

 fowl’s bean, Canaraja ensiformis (சா.அக.);.

அம்புசாதகம்

 அம்புசாதகம் ambucātagam, பெ. (n.)

   கட்டுக்கொடி; a plant that freezes water, coagulating creeper, Cocculus villosus. (சா.அக.);.

அம்புசாதன்

அம்புசாதன் ambucātaṉ, பெ. (n.)

   நான்முகன்; Brahma, as lotus-born.

     “அம்புசாதன் முகத்தினில்” (பாரத. சிறப். 2);.

     [Skt. ambu+jata → த. அம்புசாதன்.]

அம்புசாதம்

அம்புசாதம் ambucātam, பெ. (n.)

   1. தாமரை (மலை.);; lotus.

   2. கடம்பு; Cadamba.

     [Skt. ambu+jata → த. அம்புசாதம்.]

அம்புசினி

 அம்புசினி ambusiṉi, பெ. (n.)

   தாமரைச் செடி; lotus plant, Nelumbium speciosum (சா.அக.);.

அம்புசூகரம்

 அம்புசூகரம் ambucūkaram, பெ. (n.)

   பன்றியைப் போன்ற ஒரு முதலை; a kind of porcine crocodile (சா.அக.);.

அம்புசேதிகம்

 அம்புசேதிகம் ambucētigam, பெ. (n.)

   செங்கொழுஞ்சி; a plant (சா.அக.);.

அம்புச்சிறகு

 அம்புச்சிறகு ambucciṟagu, பெ. (n.)

   அம்பின் அடிப்பாகம் (நாமதீப.); ; feather end of an arrow.

     [அம்பு + சிறகு.]

அம்புடம்

 அம்புடம் ambuḍam, பெ. (n.)

அம்படம் பார்க்க;see ambadam.

     [P]

அம்புதம்

 அம்புதம் ambudam, பெ. (n.)

   கோரைக்கிழங்கு; koray root, sedge, Cyperus rotundus (சா.அக.);.

     [Skt. ambu-da → த. அம்புதம்.]

அம்புதரம்

 அம்புதரம் ambudaram, பெ. (n.)

   கோரைக் கிழங்கு; koray root, Cyperus rotundus.

அம்புதிவல்லபம்

 அம்புதிவல்லபம் ambudivallabam, பெ. (n.)

   பவளம்; coral (சா.அக.);.

அம்புத்தலை

 அம்புத்தலை ambuttalai, பெ. (n.)

   அம்பின் அடி (திவா.);; butt end of an arrow.

     [அம்பு + தலை.]

அம்புநீர்

 அம்புநீர் ambunīr, பெ. (n.)

   விந்து (சித்.அக.);; semen.

அம்புநேசம்

 அம்புநேசம் ambunēcam, பெ. (n.)

   தாமரை (பரி.அக.);; lotus, Nelumbium speciosum.

அம்புபூரணரோகம்

 அம்புபூரணரோகம் ambupūraṇarōkam, பெ. (n.)

   கருவுற்றிருக்கும் போது முலைப் பால் கொடுத்தலால் அக்குழந்தைக்கு ஏற்படும் நோய்; a disease in children arising from allowing the child to suckle during the time of the mother’s pregnancy.

த.வ. யாக்கட்டு நோய்.

     [Skt. ambu + purna + roga → த. அம்புபூரண ரோகம்.]

அம்புப்பறை

 அம்புப்பறை ambuppaṟai, பெ. (n.)

   பறையருள் ஒரு பிரிவு; name of a class of Paraiahs.

அம்புப்பிரசாதனம்

 அம்புப்பிரசாதனம் ambuppiracātaṉam, பெ. (n.)

   தேற்றாங்கொட்டை (சித்.அக.);; water clearing nut (சா.அக.);.

     [Skt. ambu-prasadana → த. பிரசாதனம்.]

அம்புப்பிரசிதம்

 அம்புப்பிரசிதம் ambuppirasidam, பெ. (n.)

   செங்கொள்ளு; red horse gram, Dolichos biflorus (சா.அக.);.

அம்புப்புட்டில்

 அம்புப்புட்டில் ambuppuṭṭil, பெ. (n.)

   அம்பறாத்தூணி; quiver.

     [அம்பு + புட்டில். புட்டி → புட்டில் = சிறு புட்டி, கூடு.

     “இல்” சிறு. பொ. பின். (dim, suff.);]

அம்புமாகிகம்

 அம்புமாகிகம் ambumāgigam, பெ. (n.)

   காசரைக் கீரை; a vegetable green.

அம்புமுது

அம்புமுது ambumudu, பெ. (n.)

   முத்துவகை (S.I.I. ii, 431);; a kind of pearl.

அம்புமுதுபாடன்

அம்புமுதுபாடன் ambumudupāṭaṉ, பெ. (n.)

   முத்து வகை (S.I.I. ii, 78);; a kind of pearl.

அம்புமுதுவரை

அம்புமுதுவரை ambumuduvarai, பெ. (n.)

   முத்துவகை (S.I.I. ii, 78);; a kind of pearl.

அம்புயநூல்நாணான்

 அம்புயநூல்நாணான் ambuyanūlnāṇāṉ, பெ. (n.)

   மன்மதன் (நாமதீப.);; Kaman, as having a bowstring of lotus-fibres. (தாமரை);

     [அம்புய(ம்); + நூல்நாணான்.]

     [Skt. ambuya → த. அம்புயம்.]

நாண்ன் → நாணான்.

அம்புயன்

அம்புயன்1 ambuyaṉ, பெ. (n.)

   நான்முகன் (கந்தபு. தெய்வயா. 223);; Brsahman, as lotus-born.

     [Skt. ambuja → த. அம்புயன்.]

 அம்புயன்2 ambuyaṉ, பெ. (n.)

   நஞ்சு; a kind of arsenic poison (சா.அக.);.

அம்புயம்

அம்புயம் ambuyam, பெ. (n.)

   1. பொதி; pack, bundle.

   2. அம்புப்புட்டில்; quiver (அ.க.நி.);.

அம்புயை

அம்புயை ambuyai, பெ. (n.)

   திருமகள் (திருவரங்கத்தந். 56);; Laksml, as ocean-born.

     [Skt. ambu-ja → த. அம்புயை.]

அம்புருகம்

அம்புருகம் amburugam, பெ. (n.)

   1. செம்பரத்தம் பூ; the day lotus, Hibiscus mutabilis.

   2. நாரை; Indian crane.

     [Skt. amburuka → த. அம்புருகம்.]

அம்புரேசம்

 அம்புரேசம் amburēcam, பெ. (n.)

   தாமரை; lotus (சா.அக.);.

அம்புரோகினி

அம்புரோகினி amburōkiṉi, பெ. (n.)

   தாமரை (சிந்தா. நி. 213);; lotus.

     [Skt. ambu-rohini → த. அம்புரோகினி.]

அம்புறை தூணி

 அம்புறை தூணி ambuṟaitūṇi, பெ. (n.)

   அம்பறாத்தூணி (சங்.அக.);; quiver.

     [அம்பு + உறை + தூணி. உறைதல் = தங்குதல், இருத்தல். தூணி = கூடு.]

அம்புலி

அம்புலி ambuli, பெ. (n.)

   1. நிலா; moon.

     “அம்புலி காட்ட லினிது” (கலித். 80 ;19);.

   2. நிலவொளி; moon-light (சா.அக.);.

   3. அம்புலிப்பருவம் (இலக். வி. 806);; a certain stage of childhood when moon is shown to the child for its enjoyment.

   4. நிலாத்திருப்பி (சந்திரகாந்தி); ; a flower which turns towards the moon, moon flower (சா.அக.);.

ம. அம்புளி

     [ஒருகா. அம் + புல்லி – அம்புல்லி → அம்புலி → நீரின் தன்மை, அதாவது குளிர்ச்சி பொருந்தியது.]

 அம்புலி ambuli, பெ. (n.)

   சோளக்கூழ்; maize porridge.

     ‘பட்டிநாய்களுக்கு அம்புலி காய்ச்சு மிடமும்’ (எங். ஊர், 40);.

அம்பலி பார்க்க;see ambali”.

அம்புலிகா

 அம்புலிகா ambulikā, பெ. (n.)

   புளியாரை; a vegetable green, sorrel, Oxalis corniculata (சா. அக.);.

அம்புலிப்பருவம்

 அம்புலிப்பருவம் ambulipparuvam, பெ. (n.)

   இது சிறுபிள்ளைச் செய்திகளைப் பாட்டுடைத் தலைவன்மேலேற்றி வரணித்துக் கூறும் பிள்ளைத்தமிழ் என்னும் சிறுவனப்பு (காவிய); வகையில் பத்துப் பருவங்களுள் ஏழாவது; தாய் தன் குழந்தைக்கு நிலாவைக் காட்டி அதனை அக் குழந்தையுடன் விளையாட வருமாறு அழைப்பதைப் பொருளாகக் கொண்டது; the seventh out of the ten stages of childhood described in Pillaittamil, a species of minor poem, during which the mother points out the moon to the child and makes gestures to the moon to come and play with the child.

     [அம்புலி + பருவம். அம்புலி = நிலா.]

அம்புலிமணி

அம்புலிமணி ambulimaṇi, பெ. (n.)

   நிலவொளியில் ஈரங் கொள்வதாகச் சொல்லப்படும் நிலாக்காந்தக்கல் (சந்திரகாந்தக்கல்); (இரகு. சீதைவ. 23);; moonstone said to emit moisture when placed in the moon-light, adularia.

ம. அம்பிளிமணி

அம்புலிமான்

 அம்புலிமான் ambulimāṉ, பெ. (n.)

அம்புலியம்மான் பார்க்க;see ambuli-y-amman.

அம்புலியம்மாள்

அம்புலியம்மாள் ambuliyammāḷ, பெ. (n.)

   நிலா; moon.

     ‘அம்புலியம்மானைப் பிடித்துத் தரவேணு மென்றழுத ப்ரஜைக்கு’ (ஈடு, 4; 3. பிர.); (Nurs.);.

ம. அம்பிளியம்மாவன்

     [ஒருகா. நிலாவின் களங்கத்தை ஒரு மான் வடிவினதாகக் கருதி அம்புலிமான் அல்லது அம்புலியம்மான் என்றனர் போலும்.]

அம்புவல்லி

 அம்புவல்லி ambuvalli, பெ. (n.)

   ஒரு பூண்டு; a plant, Momordica charantia (சா.அக.);.

அம்புவி

அம்புவி ambuvi, பெ. (n.)

   ஞாலம் (பூமி); ; earth.

     “அம்புவி யெயினர் போற்றும் வள்ளியை” (கந்தபு. தக்க. வள்ளி. 1);.

     [அம் = அழகிய. Skt bhuvi = ஞாலம்.]

அம்பேல்

 அம்பேல் ambēl, பெ. (n.)

அம்பால் பார்க்க;see ambal”.

அம்பை

அம்பை ambai, பெ. (n.)

   1. வெட்டிவேர் (புதுவை);; cuscus grass, Andropogon aromaticus (Pond.);.

   2. கொக்குமந்தாரை (நாமதீப.);; taper-pointed mountain ebony.

   3. வெள்ளைச் சாரணை; a plant (நாமதீப.);.

   4. மூத்திரக் கிறிச்சனம்; a urinary disease, difficulty in voiding urine (சா.அக.);.

     [அம்பு → அம்பை.]

அம்பு பார்க்க;see ambu”.

 அம்பை1 ambai, பெ. (n.)

   1. மலைமகள் (திருக்காளத். பு. 24, 12);; Parvadi.

   2. காசிராசன் மகள் (பாரத. குருகுல. 127);; name of a sister of Pandu’s mother, daughter of a king of Kasi.

     [Skt. amba → த. அம்பை.]

அம்பொருந்தகரை

 அம்பொருந்தகரை amborundagarai, பெ. (n.)

   செந்தகரை; a plant (சா.அக.);.

அம்போ

அம்போ ambō, பெ. (n.)

   1. நீரிற் பிறப்பன; the water-born.

   2. தாமரை; day-lotus.

   3. ஒரு செடி; a plant, Calcumus rotang.

   4. நாரை; Indian crane (சா.அக.);.

அம்போசம்

அம்போசம்1 ambōcam, பெ. (n.)

   தாமரை; lotus, as water-born (சா.அக.);.

     [Skt. ambho-ja → த. அம்போசம்.]

 அம்போசம்2 ambōcam, பெ. (n.)

   நாரை; a water-bird stork (சா.அக.);.

அம்போதரங்கம்

 அம்போதரங்கம் ambōtaraṅgam, பெ. (n.)

   அம்போதரங்க வொத்தாழிசைக் கலிப்பாவின் ஐந்துறுப்புகளுள் ஒன்றும், வண்ணக வொத்தாழிசைக் கலிப்பாவின் ஆறுறுப்புகளுள் ஒன்றுமாக அமைவதும், ஈரளவடியும் ஓரள வடியும் சிந்தடியும் குறளடியுமாக உயர்ந்தெழுந்து வரவரச் சுருங்கும் கடற்கரையலை போல் வரவரக் குறைவதுமான செய்யுளுறுப்பு; one of the five members of ambódarañgavottališaikkalippa and one of the six members of the vannaga vottališaikkalippa, in which the lines diminish in length gradually like waves on the shore.

அம்போதரங்கம், அம்போதரங்க வொத்தாழிசைக் கலிப்பாவில் தாழிசைக்குப் பின்னும், வண்ணக வொத்தாழிசைக் கலிப்பாவில் அராகத்திற்குப் பின்னும், இணையளவடியிரண்டும், தனியளவடி நான்கும், சிந்தடி எட்டும், குறளடி பதினாறுமாக வந்து, முறையே பேரெண், அளவெண், இடையெண், சிற்றெண் எனப் பெயர்பெறும்.

இவ் வெண்ணுறுப்புகள், முறையே இணையளவடி யொன்றும், தனி யளவடி யிரண்டும், சிந்தடி நான்கும், குறளடி யெட்டுமாகப் பப்பாதி குறைந்தும் வரும். அது சிறப்பிலதாகக் கருதப்படும்.

     “……………………………………..

——— மன்னியவீ ரடியிரண்டு மோரடியா னான்கும்

உளமலிசிந் தடியெட்டுங் குறளடியீ ரெட்டும்

ஒருங்கியல்பே ரெண்சிற்றெண் ணிடை யெண்ணோ டளவெண் தளமலியம் போதரங்க மெனும்பெயரா னிலவும்”

     [அம் → அம்பு = நீர், கடல். தரங்கு = குத்துப் படைக்கலம். தரங்கு → தரங்கம் = கரையைக் குத்தும் அலை. அம்பு + ஓ (சாரியை); + தரங்கம் = அம்போதரங்கம்.]

அம்போதரங்கவொத்தாழிசை

 அம்போதரங்கவொத்தாழிசை ambōtaraṅgavottāḻisai, பெ. (n.)

அம்போதரங்க வொத்தாழிசைக் கலிப்பா பார்க்க;see ambādarañgavottališai-k-kali-p-pa.

     [அம்போதரங்கம் + ஒத்தாழிசை.]

அம்போதரங்கவொத்தாழிசைக் கலிப்பா

அம்போதரங்கவொத்தாழிசைக் கலிப்பா ambōtaraṅgavottāḻisaikkalippā, பெ. (n.)

   ஒரு தரவு, மூன்று தாழிசை, அம்போதரங்கம், தனிச்சொல், சுரிதகம் என்னும் ஐந்துறுப்பும் பெற்றுவரும் ஒத்தாழிசைக் கலிப்பா வகை; a variety of ottališaikkali verse having ambódaranigam as one of its members in the middle.

     “தரவொன்று தாழிசை மூன்று தனிச்சொற் சுரிதகமாய்

நிரலொன்றி னேரிசை யொத்தா ழிசைக் கலி நீர்த்திரைபோன் மரபொன்று நேரடி முச்சீர் குறணடு வேமடுப்பின்

அரவொன்று மல்குல தம்போ தரங்க வொத் தாழிசையே” (யா. கா. 38);.

     [அம்போதரங்கம் + ஒ + தாழ் + இசை + கலி + பா. ஒ = ஒத்த தாழ் = தாழ்ந்த, தாழம் பட்ட. இசை = ஒலி, ஒசை. தாழிசை = தாழம் பட்ட ஒசையுள்ள கலிப்பாவுறுப்பு. கலித்தல் = துள்ளல். கலி = துள்ளலோசையுள்ள பாவகை. பண் → பாண் → பா = இசைப்பாட்டு, செய்யுள் வகை.]

அம்போதரங்கம் பார்க்க;see ambõdarańgami.

அம்போதரங்கவொருபோகு

அம்போதரங்கவொருபோகு ambōtaraṅgavorupōku, பெ. (n.)

   கொச்சகக் கலிப்பா வகைகளுள் ஒன்று; a variety of koccagakkali verse.

இது தரவு, கொச்சகம், அராகம், சிற்றெண், அடக்கியல்வாரம் என்னும் ஐந்துறுப்புப் பெற்று, தலையளவில் 60 அடியும், இடையளவில் 30 அடியும், கடையளவில் 15 அடியும் கொண்டு வரும்.

     “அம்போ தரங்க மறுபதிற் றடித்தே

செம்பால் வாரஞ் சிறுமைக் கெல்லை” (தொல், பொருள். செய். 145);.

     “எருத்தே கொச்சக மராகஞ் சிற்றெண்

அடக்கியல் வாரமொ டந்நிலைக் குரித்தே” (தொல். பொருள். செய். 146);.

அம்போதரங்கத்தின் நால்வகையெண்ணுள் ஒன்றாகிய சிற்றெண்ணே பெற்றதனால்,

     “கண்ணக னிருவிசும்பிற்கதழ்பெயல்” என்று தொடங்கும் கலித்தொகை 102ஆம் செய்யுள் அம்போதரங்க வொத்தாழிசைக் கலியாகாது, அம்போதரங்க வொருபோகாயிற்று.

     “தரவின் றாகித் தாழிசை பெற்றும்

தாழிசை யின்றித் தரவுடைத் தாகியும்

எண்ணிடை யிட்டுச் சின்னங் குன்றியும்

அடக்கிய லின்றி யடிநிமிர்ந் தொழுகியும்

யாப்பினும் பொருளினும் வேற்றுமை யுடையது

கொச்சக வொருபோ காகு மென்ப” (தொல். பொருள். செய். 143); என்னும் நூற்பாப்படி இஃது எண்ணிடை யிட்டுச் சின்னங் குன்றும் கொச்சக வொரு போகாகும்.

     [ஒருபோக்கு = மாறான நடை. ஒருபோக்கு → ஒருபோகு = ஒழுங்கான இயல்பினின்றும் வேறுபட்ட செய்யுள்வகை. கொச்சகவுறுப்புடைய வொருபோகு கொச்சக வொருபோகு. கொய்சகம் → கொசகம் → கொச்சகம். பெண்டிர் கொய்துடுக்கும் சேலை மடிப்புப்போன்று, தாழிசை யொத்த பலவுறுப்புகள் அடுக்கி வருவது கொச்சகம்.]

அம்போதி

 அம்போதி ambōti, பெ. (n.)

   பாட்டின் உட் பொருள் (சங்.அக.); ; the inner meaning of a Stanza.

     [அகம் = உள். பொதி = பொதிந்திருப்பது, அடங்கியிருப்பது. அகம் + பொதி – அகம் பொதி → அம்போதி.]

அம்போநிதி

 அம்போநிதி ambōnidi, பெ. (n.)

   பெருங்கடல்; ocean.

அம்போயோனி

 அம்போயோனி ambōyōṉi, பெ. (n.)

   தாமரை; lotus plant, Nelumbilum speciosum (சா.அக.);.

அம்ம

அம்ம amma, பெ. (n.)

   அம்மை என்னும் தாய் முறைப் பெயரின் விளி; voc. of ammai (mother);.

—, இடை.. (int.);

   1. கேட்பாயாக எனப் பொருள்படும் ஓர் இடைச்சொல்; an exclamation inviting attention.

     “அம்மகேட்பிக்கும்” (தொல். சொல். இடை. 28);.

   2. ஒரு வியப்புக்குறிப்பு; an exclamation of surprise or wonder.

     “விதியினார்க் கியானம்ம செய்கின்றதோ ரளவுண்டோ” (கந்தபு. அசுர. அசுரர் தோற். 14);.

–, இடை. (part.);

   ஓர் உரையசைச் சொல்; expletive adding grace to composition.

     “அதுமற் றம்ம” (நன். 438, விருத்தி உரை);.

ம., க., தெ. அம்ம ; குட. அம்மெ ; பட. அமெ.

     [அம்மை → அம்ம (விளி);.]

அம்மகோ

அம்மகோ ammaā, இடை (int.)

   ஓர் இரக்கக் குறிப்பு; an exclamation of pity.

     “அம்மகோவெனும் விழுமழும்” (மதுரைக்கலம், 15);.

     [அம்மை → அம்ம → அம்மவோ → அம்மகோ.]

அம்மங்கார்

 அம்மங்கார் ammaṅgār, பெ. (n.)

   திருமாலிய (வைணவ);க் குரவன் மனைவி (திருமா.);; wife of a Vaisnava Acarya or priest (Vaisn.);.

தெ. அம்மகாரு

     [அம்மையவர் → தெ. அம்மவாரு → அம்மகாரு → த. அம்மங்கார்.]

 அம்மங்கார் ammaṅgār, பெ. (n.)

   அம்மான் மகள் (பிராம.); ; daughter of a maternal uncle (Brāhm.);.

     [அம்மான் + மங்கையார் (மகள்); – அம்மான் மங்கையார் → அம்மங்கார்.]

அம்மங்காள்

 அம்மங்காள் ammaṅgāḷ, பெ. (n.)

அம்மங்கார் பார்க்க;see ammarigar.

     [மங்கை → மங்கா → மங்காள். ஒ.நோ ; தங்கை → தங்கா → தங்காள். அம்மான் + மங்காள் – அம்மங்காள் (கொ.வ.);.]

அம்மச்சி

 அம்மச்சி ammacci, பெ. (n.)

   செந்தணக்கு; false tragacanth, Sterculia urens (சா.அக.);.

அம்மடிங்கம்

 அம்மடிங்கம் ammaḍiṅgam, பெ. (n.)

   பட்டாணி; pea, Pisum sativum (சா.அக.);.

அம்மடியம்

 அம்மடியம் ammaḍiyam, பெ. (n.)

   பட்டாணி; pea, Pisum-sativam (சா.அக.);.

அம்மட்டம்

 அம்மட்டம் ammaṭṭam, பெ. (n.)

   வட்டத்திருப்பி (சங்.அக.);; velvet leaf.

அம்மட்டி

 அம்மட்டி ammaṭṭi, பெ. (n.)

   கொட்டி (பச்.மூ.);; an aquatic plant (செ.அக.); — (சா.அக.);

   கொட்டிக்கிழங்கு; an edible root of a waterplant, Aponogeton.

அம்மணக்கட்டை

 அம்மணக்கட்டை ammaṇakkaṭṭai, பெ. (n.)

   உடுப்பற்றவன்; a naked person without the customary covering (சா.அக.);.

     [அம்மணம் + கட்டை.]

     [Skt. sramana → த. அம்மணம்.]

அம்மணக்குண்டி

 அம்மணக்குண்டி ammaṇakkuṇṭi, பெ. (n.)

அம்மணக்கட்டை (இ.வ.); பார்க்க;see ammana-k-kattai (சா.அக.);.

     [அம்மணம் + குண்டி.]

     [Skt. srammanga → த. அம்மணம்.]

குள் → குண்டு → குண்டி.

அம்மணத்தர்

அம்மணத்தர் ammaṇattar, பெ. (n.)

   அமணர் (சினேந். 139);; Jains.

     [Skt. sramana → த. அம்மணத்தார்.]

அம்மணத்தோண்டி

 அம்மணத்தோண்டி ammaṇattōṇṭi, பெ. (n.)

அம்மணக்கட்டை (இ.வ.); பார்க்க;see ammana-k-kattai (சா.அக.);.

     [அம்மணம் + தோண்டி.]

     [Skt. sramana → த. அம்மணம்.]

அம்மணம்

அம்மணம்1 ammaṇam, பெ. (n.)

   1. ஆடை இல்லாத நிலை; nakedness, nudity.

   2. வண்டப் பேச்சு (யாழ்ப்.);; obscene language, abscenity.

     [Skt. sramana → த. அம்மணம்.]

 அம்மணம்2 ammaṇam, பெ. (n.)

   1. இடை (திவ். பெரியாழ். 1, 6, 3, வ்யா);; waist.

   2. கள்ளத் தொடர்பு; lewdness.

     [Skt. sramana → த. அம்மணம்.]

அம்மணம்பேசு

 அம்மணம்பேசு ammaṇambēcu, வி.எ. (adv.)

   அருவருப்பாகவும், நாணக்கேடாகவும் பேசுதல்; talk in obscenities.

     [அம்மணம் + பேசு.]

     [Skt. sramana → த. அம்மணம்.]

அம்மணி

அம்மணி ammaṇi, பெ. (n.)

   பெண்ணைக் குறிக்கும் மதிப்புரவுச் சொல் (குருபரம். 285);; a term of respect used in referring to or calling a woman.

ம. அம்மிணி ; க., தெ. அம்மண்ணி.

     [அம்மனை → அம்மணி. இனி, அம்மை + மணி என்றுமாம்.]

 அம்மணி ammaṇi, பெ. (n.)

   1. மடி (சம்.அ.க. கை.);; lap.

   2. இடை, இடுப்பு; waist of a woman.

     “நின் னம்மைதன் அம்மணிமேற் கொட்டாய் சப்பாணி” (தில். பெரியாழ். 1.7;3);.

ம. அம்மணி

     [அம் (அழகிய); + மடி _ அம்மடி → அம்மணி. ஒ.நோ.; பிடி → பிணி.]

அம்மண்டார்

 அம்மண்டார் ammaṇṭār, பெ. (n.)

   தாய்மாமன் (நாஞ்.);; maternal uncle (Niñ.);.

     [அம்மான் + ஆண்டார் – அம்மாண்டார் → அம்மண்டார்.]

அம்மந்தி

 அம்மந்தி ammandi, பெ. (n.)

   அம்மான் மனைவி, அத்தை (இ.வ.);; maternal uncle’s wife (Loc.);.

     [அம்மான் + தேவி – அம்மாந்தேவி → (அம் மாந்தே); → அம்மாந்தி → அம்மந்தி. தேவி = பெண்தெய்வம், பெண், மனைவி.]

அம்மனே

அம்மனே ammaṉē, இடை. (int.)

   ஒரு வியப்புக் குறிப்பு; an exclamation of wonder or surprise.

     “உடைந்ததுவு மாய்ச்சிபான் மத்துக்கே யம்மனே” (திவ். இயற். 3;28);.

     [அம்மை (தாய்); → அம்மன் → அம்மனே (விளி);.]

அம்மனை

அம்மனை ammaṉai, பெ. (n.)

   1. தாய்; mother.

     “தன்கைக்கோல் அம்மனைக்கோ லாகிய ஞான்று” (நாலடி. 14);.

   2. தலைவி; lady, mistress.

     “நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்” (தில். திருப்பா. 10);.

     [அம்மை + அன்னை – அம்மையன்னை → அம்மன்னை → அம்மனை (அருமைபற்றி வந்த மீமிசைச்சொல்);. ஒ.நோ. ; தாய் + அம்மை – தாயம்மை.]

 அம்மனை ammaṉai, பெ. (n.)

   1. அம்மானை யென்னும் மகளிர் பந்து விளையாட்டு (பிங்.);; a girls’ game with balls.

   2. அம்மானை விளையாடும் பந்து; balls used in the game.

     “அம்மனை தங்கையிற்கொண்டு” (சிலப். 29, அம்மானை வரி, 4);.

ம. அம்மன ; க. அம்மாலெ ; தெ. அம்மனலு.

     [அம்ம + அனை (அன்னை); – அம்மனை.]

அம்மானை பார்க்க;see ammanai.

 அம்மனை ammaṉai, பெ. (n.)

   நெருப்பு; fire.

     “நம்மனைக் கம்மனை விழங்கும்” (பாரத. வாரணா. 124);.

     [அம் = நீர். அனை (அன்னை); = தாய். அம் + அன்னை – அம்மன்னை → அம்மனை.]

நெருப்பினின்று நீர் தோன்றிற்று என்னும் கொள்கைபற்றி,

நெருப்பு அம்மனையெனப்பட்டது. இதற்கு நேர் வடசொல் ‘க்ருபீட யோனி’ க்ருபிட = நீர். யோனி = பிறப்பிடம்.

இங்ஙனம் பொருளும் பொருட் காரணமும் ஒத்திருத்தலால், தென் சொல்லை வட சொல்லின் மொழிபெயர்ப்பென்பர்.

   நெருப்பினின்று நீர் தோன்றிற்றென்னுங் கொள்கை பண்டைத் தமிழர்க்கு மிருந்ததனால், வட சொல்லே தென்சொல்லின் மொழிபெயர்ப்பாகவுமிருக்கலாம்.ஒ.நோ.;     “கருவளர் வானத் திசையிற் றோன்றி

யுருவறி வாரா வொன்ற னூழியும்

உந்துவளி கிளர்ந்த வூழு மூழியும்

செந்தீச் சுடரிய வூழியும் பனியொடு

தண்பெயல் தலைஇய வூழியும்” (பரிபா. 2; 5-9);.

அம்மனைக்காய்

 அம்மனைக்காய் ammaṉaikkāy, பெ. (n.)

   அம்மானை விளையாட்டில் பயன்படும் காய்; balls used in the ammama (girls” game of keeping a number of balls in the air, some rising while others are following.);

     [அம்மனை+காய்]

அம்மனைப்பாட்டு

 அம்மனைப்பாட்டு ammaṉaippāṭṭu, பெ. (n.)

   அம்மானை விளையாட்டிற் பாடும் பாட்டு; song sung by girls when playing the game of balls.

அம்மனைமடக்கு

அம்மனைமடக்கு ammaṉaimaḍakku, பெ. (n.)

   மகளிர் இருவர் வினாவிடையாய் இருபொருள்படக் கூறுவதாகக் கலித்தாழிசையால் இயற்றப்படும் அம்மானைப் பாட்டு; poetic composition in kalittališai metre, in which, two girls engaged in conversation try to outwit each other through questions and responses couched in ambiguous words.

     “அம்மனை கைக்கொண்டாடுநர் தம்மையும்

அம்மனை யாய்மதித் தாங்கொர்கர்த் தாவினை

நிந்தாத் துதிதுதி பெறநிகழ்த் துதலும்

அந்தா தித்திடை யடிமடக் காகவும்

ஈற்றடி யிரட்டுற விசைத்ததைத் தாபித்

தாற்றலி னமைக்குமம் மனைமடக் கொன்றுள” (மாற. 267);.

     [அம்மானை → அம்மனை. மடங்கு → மடக்கு = மடக்கி (திரும்ப, திரும்பத் திரும்ப); வரும் அசை, சொல், சீர், தொடர், அடி முதலியன.]

அம்மனோ

அம்மனோ ammaṉō, இடை. (int.)

   ஒரு துயரக் குறிப்பு; an exclamation of grief

     “வழா நெடுந் துன்பத்த ளென்றிரங்கார் அம்மனோ” (தில். இயற். திருவிருத். 37);.

     [அன்னை + ஓ (விளியுருபு); – அன்னையோ → அன்னோ. அம்மை + அன்னோ – அம்மன்னோ → அம்மனோ.]

அம்மன்

அம்மன் ammaṉ, பெ. (n.)

   1. தாய் (சங்.அக.);; mother.

   2. மறப் பெண்தெய்வம்; manly goddess.

   3. காளி; kali.

அம்மன் கொண்டாடி.

   4. அம்மை நோய்வகை; smallpox, chickenpox, measles.

ம., க. அம்மன் ; தெ. அம்மவாரு.

அம்மன் கோயில்பட்டி

 அம்மன் கோயில்பட்டி ammaṉāyilpaṭṭi, பெ. (n.)

   சேலம் மாவட்டத்தில் காரையூர்க்குத் தென்கிழக்கில் உள்ள ஓர் ஊர்; name of a village in salem south east to kārayūr.

     [அம்மன்+கோயில்+பட்டி]

அம்மன்எடுப்பு

 அம்மன்எடுப்பு ammaṉeṭuppu, பெ. (n.)

   ஊருக்கு வெளியேயுள்ள அம்மனை வழிபட்டு கொண்டாடுவது; celebration of rural deity.

     [அம்மன்+எடுப்பு]

அம்மன்கட்டு

அம்மன்கட்டு ammaṉkaṭṭu, பெ. (n.)

   அம்மைக் கட்டு, கூகைக்கட்டு; mumps, Idiopathic parotiditis, an infectious disease of children between the ages of 5 and 15 characterised by swelling of the parotid and other salivary glands of the neck and the cheek, running a definite course and generally terminating in recovery.

மறுவ.. பொன்னுக்குவீங்கி, புட்டாலம்மை.

     [அம்மன் = காளியம்மை. கட்டு = வீக்கம். அம்மன்கட்டு = காளியம்மையால் நேர்வதாகக் கருதப்பட்ட கன்னங்கழுத்து வீக்கம்.]

அம்மன்காசு

அம்மன்காசு ammaṉkācu, பெ. (n.)

   பழைய புதுக்கோட்டை நாட்டில், காவல் தெய்வமாகிய பெருவுடையாட்டியின் (பிருகதம்பாவின்); உருவம் பொறிக்கப்பட்டு, பெயரளவில் 1/16 அணா மதிப்பும் நடை முறையில் 1/20 அணா மதிப்பும் பெற்று வழங்கிய சிறு செப்புக் காசு; copper coin of the old Pudukkottai State, nominally 1/16 anna, practically 1/20 anna, as bearing the image of the tutelary deity Brahadămbă.

     [P]

     [சிவனுடைய ஆற்றலும் அருளும் ஆணும் பெண்ணுமாக உருவகிக்கப்பட்டு, பொது மக்கட்கு எளிதாக விளங்குமாறும் தெய்வப் பற்றுண்டாக்குமாறும் உலகத் தந்தை தாயாகக் காட்டப்பட்டபின், சிவன் தேவியாகவும் அனைத்துயிர்க்கும் அன்னையாகவும் கருதப்பட்ட பெண் தெய்வம் அம்மன். ஒருகா. அம்மம் (முலைப் பால்); → அம்ம → அம்மன். இனி, அம்மா (ஆவின் கன்று தாயை விளிக்குங் குரல்); → அம்ம → அம்மன் என்றுமாம்.]

அம்மன்கொடை

அம்மன்கொடை ammaṉkoḍai, பெ. (n.)

   1. ஒரு சிற்றூர்ப் பெண்தெய்வத்தைக் கொண்டாடும் திருவிழா (G.Tn. D. i, 111);; festival of a village goddess.

   2. காளிக்கு ஆடுமாடுகளைக் காவு கொடுக்கும் சிற்றூர்ப் பெருவிழா; sacrifice of goats and cattle to Kali in a village festival.

ம. அம்மன்கொட

     [அம்மை → அம்மன். கொடு → கொடை..]

அம்மன்கொண்டாடி

 அம்மன்கொண்டாடி ammaṉkoṇṭāṭi, பெ. (n.)

   தெய்வமேறியாடும் காளிகோயிற் பூசாரி; priest of Kaliyamman temple, who goes about dancing under inspiration.

     [அம்மை → அம்மன். கொண்டு + ஆடு – கொண்டாடு. ஆடு + இ (ஒருமை வினை முதலீறு); – ஆடி.]

அம்மன்கொண்டாடி ammankordadl

 அம்மன்கொண்டாடி ammankordadl ammaṉkoṇṭāṭi, பெ. (n.)

   தெய்வமேறி ஆடலில் அம்மன் அருள் ஏற்று ஆடுபவன்; a possessed priest in a temple.

     [அம்மன்+கொண்டாடி)

அம்மமுண்ணு-தல்

அம்மமுண்ணு-தல் ammamuṇṇudal,    12 செ.கு.வி. (v.i.)

   முலைப்பால் குடித்தல்; sucking milk from woman’s breast.

     [அம்மம் + உண்ணு.]

அம்மம்

அம்மம் ammam, பெ. (n.)

   1. பெண்முலை; woman’s breast.

     “கொம்மை யம்ம மசைவுற” (இரகு. நாட்டு. 80);.

   2. முலைப்பால்; woman’s breast milk.

     “அம்ம முண்ணத் துயிலெழாயே” (திவ். பெரியாழ். 2. 2;1);.

     “அன்னே யுன்னை யறிந்துகொண் டேனுனக் கஞ்சுவ னம்மந் தரவே” (திவ். பெரியாழ். 3.1 ; 1);.

   3. குழந்தை யுணவு; babies’ food (சா.அக.);.

ம. அம்மிஞ்ஞி ; க. அம்மி ; து. அமணி.

ஒ.நோ ; L. mamma.

     [மருமம் = மார்பு, முலை. மருமம் → மம்மம் → அம்மம். ஒ.நோ. ; கருமம் → கம்மம் → கம்.]

அம்மம்ம

அம்மம்ம ammamma, இடை (int.)

   அம்ம என்பதன் மிகு வியப்புக் குறிப்பு; an exclamation of astonishment or bewilderment.

     “அம்மம்ம வெல்ல லெளிதோ” (தாயு. சச்சி. 4);.

ம. அம்மம்ம, அம்பம்பட ; க. அம்மம்ம.

     [அம்மை (தாய்); → அம்ம (விளி); → அம்ம அம்ம (இரட்டல்); → அம்மவம்ம → அம்மம்ம.]

அம்மவம்ம பார்க்க;see amma-y-amma.

அம்மலர்மூலி

 அம்மலர்மூலி ammalarmūli, பெ. (n.)

   செங்குன்றி ; red bead vine, Abrus precatorius (சா. அக.);.

அம்மல்

அம்மல் ammal, பெ. (n.)

   1. செரியாமை; indigestion.

   2. மந்தாரம்; cloudiness, murkimess.

   3. மூடம்; stupidity.

   4. விறைப்பு; stiffness, numbness.

     [கம்முதல் = மந்தாரமாதல், மந்தமாதல். கம் → கம்மல் → அம்மல்.]

அம்மவம்ம

அம்மவம்ம ammavamma, இடை (int.)

   மிகு வியப்புக் குறிப்பு; an exclamation of intense surprise or wonder.

     “அம்மவம்ம கடவுண் மகனான நின்னா லறிவுற்றேன்” (ஞானவா. சிகித்து. 130);.

     [அம்மை (தாய்); → அம்ம (விளி);. அம்ம அம்ம (இரட்டல் (→ அம்மவம்ம.]

அம்மவை

 அம்மவை ammavai, பெ. (n.)

   அவ்வீடு; that house.

இம்மனையினும் அம்மனை பெரிது (உ.வ.);.

க. ஆமனெ

     [‘அ’ சேய்மைச்சுட்டு. மனை = வீடு, மாளிகை. அ + மனை – அம்மனை.]

அம்மவோ

அம்மவோ ammavō, இடை. (int.)

   ஓர் இரக்கக் குறிப்பு; an exclamation of pity.

     “அம்மவோ விதியே யென்னும்” (கந்தபு. யுத்த. அக்கினி, 194);.

தெ. அம்மரோ

     [அம்மை (தாய்); → அம்ம (விளி); → அம்மவோ. அம்ம + ஒ (வி.இ.); – அம்மவோ.]

அம்மா

அம்மா ammā, பெ. (n.)

   1. தாய் (விளி. வே.);; mother (voc.);.

   2. தலைவி, பெருமாட்டி; matron, lady.

   3. தாய் (உ.வ.); ; mother (com.u.);.

 அம்மா ammā, இடை. (int.)

   1. ஒரு வியப்புக் குறிப்பு; an exclamation of wonder.

     “பொன்னக ரிதனை யொக்கு மென்பது புல்லி தம்மா” (கம்பரா. சுந்தர. கடல்தாவு. 92);.

   2. ஓர் இரக்கக் குறிப்பு; an exclamation of pity.

     “பிறந்தவர்க…… வெறும்பொருள தம்மா விடுத்திடுமி னென்றாள்” (சீவக. 2622);,

   3. ஓர் உவப்புக் குறிப்பு; an exclamation of joy.

     “அம்மாவென் றுகந்தழைக்குமார்வச் சொல்” (திவ். பெருமாள்தி. 9;6);.

   4. ஓர் அசைச்சொல்; an expletive,

     “கடவுளர்க் கமைத்த யாக தலமெனக் கவினிற் றம்மா” (பாரத. இராசசூய. 91);.

   5. மதிக்கப்படும் பெண்; respectable woman.

ஓர் அம்மா வந்திருக்கிறது (உ.வ.);.

ம., க., தெ. எரு., நா., கை., குற., கொர., து. அம்ம; குட. அம்மெ; பட., கோத. அவ்வே ; இரு. அவ்வெ ; துட. அவ்வ ; கோண். அவ்வாள் ; குரு. ஆவ்வெ ; மா. அய ; கொலா., பிரா., கூ., மரா., பா., பிராகி., சிங்., இந். அம்மா ; சிந். அமா ; வங். மா ; மணிபு. இமா.

 G. amme; OHG. amma; OS. amma; E. mamma; Fin, ema; Skt. amba; Ost. ane; Hung. eme; Heb. ëm, Mord, anai; Turk. anna; Mal. amä; Tib. md, mö; Ar. amun; Russ. mat; It., Sp. madre; Swa, mama; Port. mđe; Rum, mamã; F. mēre; Pol. matka; Yid. muter; Jap. aba, haha; Kor., Icel. amma; Chin. ክንከd.

 அம்மா ammā, பெ. (n.)

   மாவிலங்க மரம்; lingam tree, Crataeva religiosa.

அம்மாச்சன்

 அம்மாச்சன் ammāccaṉ, பெ. (n.)

   தாய்மாமன் (நாஞ்.);; maternal uncle (Nafi.);

அம்மண்டார் பார்க்க;see ammandar.

     [அம்மான் + அச்சன் – அம்மாச்சன் (அம்மானாகிய அச்சன்);. அம்மான் = தாய் மாமன். அச்சன் = தந்தை தந்தை போல்வான்.]

அம்மாச்சி

அம்மாச்சி ammācci, பெ. (n.)

   1. தாயைப் பெற்ற பாட்டி (தஞ்சை); ; maternal grandmother (Tj.);.

   2. தாய்; mother (சங்.அக.);.

     [அம்மா = தாய். அச்சி = தாய். அம்மா + அச்சி – அம்மாச்சி (தாயின் தாய்);.]

பாட்டியென்பதே இச்சொற்கு உரிய பொருள். தாயை அம்மாச்சி யென்பது ஒருசிலர் வழக்கே.

அம்மாஞ்சி

அம்மாஞ்சி ammāñji, பெ. (n.)

   1. அம்மான் மகன் (பிராம.); ; son of a maternal uncle (Brahm.);.

   2. மூடன்; fool cf. mätula-tamaya, a name for ümattai which by its derivation unmatta suggests foolishness, eccentricity akin to madness (செ.அக.);.

ம. அம்மாஞ்சி

     [அம்மான் + சேய் – அம்மான்சேய் → அம்மாஞ்சேய் → அம்மாஞ்சி (கொச்சை);.]

அம்மாஞ்சிமதினி

 அம்மாஞ்சிமதினி ammāñjimadiṉi, பெ. (n.)

   அம்மான் மகன் மனைவி (பிராம.);; wife of the son of a maternal uncle (Brāhm.);.

     [அம்மான் + சேய் + மதினி – அம்மாஞ்சி மதினி. Skt. maithuni → த.மதினி.]

அம்மாடி

அம்மாடி ammāṭi, இடை. (int.)

   1. வியப்புக் குறிப்பு; an exclamation of wonder.

அம்மாடி ! எவ்வளவு பெரிய ஆமை!

   2. அச்சக் குறிப்பு; an exclamation of dread.

அம்மாடி ! எவ்வளவு பெரிய தேள்!

   3. இரக்கக் குறிப்பு; an exclamation of pity.

அம்மாடி ! இவ்வழகான பிள்ளைக்கு இருகண்ணுமில்லையே!

   4. நோவுக் குறிப்பு; an exclamation of pain.

அம்மாடி! வயிற்றுவலி தாங்க முடியவில்லையே!

   5. இளைப்பாறற் குறிப்பு; an exclamation of relief.

கனத்த சுமையை இறக்கிவிட்டு ‘அம்மாடி’ என்று மரத்தடியில் உட்கார்ந்தான் (உ.வ.);.

     [அம்மை (தாய்); → அம்மா (விளி); + அடி (பெ.பா. விளி); – அம்மாடி. அட (ஆ.பா.); – அடி (பெ.பா.);.]

பொதுவாக ஆடவர் அப்பனையும் பெண்டிர் அம்மையையும் விளித்து, ஒன்றைச் சொல்வது அல்லது ஒரு குறிப்பைத் தெரிவிப்பது இயல்பு. அப்பாடா (ஆ.பா.); – அம்மாடீ → அம்மாடி (பெ.பா.);.

அம்மாட்டி

 அம்மாட்டி ammāṭṭi, பெ. (n.)

   கொட்டிக்கிழங்கு (மலை.);; the root of a waterplant, species of aponogeton, Aponogeton monastachyan (சா அக.);.

     [அம்மட்டி → அம்மாட்டி.]

அம்மட்டி பார்க்க;see ammatti.

அம்மாதிகம்

 அம்மாதிகம் ammātigam, பெ. (n.)

   செந்திராய்; a red variety of Indian chickweed, Mollugo parviflora (சா.அக.);.

அம்மாத்தாள்

 அம்மாத்தாள் ammāttāḷ, பெ. (n.)

   தாயைப் பெற்ற பாட்டி (இ.வ.);; mother’s mother (Loc.);.

     [அம்மை → அம்மா + ஆத்தாள் – அம்மாத்தாள். ஆத்தை (தாய்); → ஆத்தா → ஆத்தாள் (கொ.வ.);.]

பாட்டன் பாட்டி, தாய் தந்தை, அண்ணன் அக்கை ஆகிய மூத்தோரின் முறைப்பெயர்களின் விளிவடிவம் பாலீறு பெற்று வழங்குவது வழுவாயினும், பெரும்பால் உலக வழக்காயுள்ளது.

அம்மாத்திரம்

 அம்மாத்திரம் ammāttiram, பெ. (n.)

   அவ்வளவு; that much, so much.

ம. அம்மாத்திரம்

     [அ (அந்த); + மாத்திரம் (அளவு);.]

அம்மாத்தம் என்பது கொச்சை.

அம்மானார்

அம்மானார் ammāṉār, பெ. (n.)

   1. மகளிரின் அம்மானைப் பந்தாட்டம்; a game of balls played by girls.

அம்மானை பார்க்க;see ammalai.

   2. அம்மானைப் பனுவல்; a species of poem, which has the word ammānai as its refrain.

     “சீராமர் அம்மானார் முகிந்தது முற்றும்” (தஞ். சரசு. i. 467);.

அம்மானியாக

 அம்மானியாக ammāṉiyāka, வி.எ. (adv.)

   பெரும்பட்டினியாக(க் கிடத்தல்);; hunger stricken.

     [அம்மாணி+ஆக]

அம்மானை

அம்மானை ammāṉai, பெ. (n.)

   1. மகளிர் மூவர் கூடிப் பல பந்துகளை மேலெறிந்து அம்மானைப் பாட்டுப் பாடிக்கொண்டு அவை நிலத்தில் விழாவாறு மேன்மேலும் ஒவ்வொன்றாக விரைந்து கையால் தட்டி மேலெழுப்பி, விரும்பிய நேரம் விளையாடும் விளையாட்டு; a game played by girls singing the ammānai song, at the same time, throwing up and keeping a number of balls in the air (இலக் வி. 807);.

   2. அம்மானையாடும் பந்துகள்; balls used in the game.

   3. அம்மானையாடும் போது பாடும் கலித்தாழிசைப் பாட்டு; a particular type of song sung by the players during the game.

எ-டு:

     “கருமிடற்றா ருலகமெலாங் காணியெனக் கொண்டதனால்

கருதரிய பெருஞ்செல்வர் காலமெலாம் அம்மானை

கருதரிய பெருஞ்செல்வர் காலமெலாம் ஆவாரேல்

கருவையிலேன் பலரறியக் களவாண்டார் அம்மானை

களவாண்ட பின்மறைவாய்க் கடந்துமுளா ரம்மானை.”

   4. அம்மானைப்பருவம் பார்க்க;see ammalaip-paruvam.

   5. பதினெண் கலம்பக வுறுப்புகளுள் ஒன்றான பாட்டு, அம்மானைப் பாட்டுப் போல் இயற்றப்படுவது (இலக். வி. 812);; a section of kalambagam, a species of poem.

   6. உறுப்பிசை (stanza); தோறும் ஈற்றில் அம்மானை அல்லது அம்மானாய் என்று முடியும் தொகைப் பா; a minor species of poetic composition, each” verse or stanza of which has ammānai or ammandy as its refrain.

எ-டு:

     “செங்க ணெடுமாலுஞ் சென்றிடந்துங் காண்பரிய

பொங்கு மலர்ப்பாதம் பூதலத்தே போந்தருளி

யெங்கள் பிறப்பறுத்திட் டெந்தரமு மாட்கொண்டு

தெங்கு திரள்சோலைத் தென்னன் பெருந்துறையான்

அங்கண னந்தணனா யுறைகூவி வீடருளும்

அங்கருணை வார்கழலே பாடுதுங்காண் அம்மானாய்” (திருவாச. 175);.

   7. அடிதோறும் அல்லது அரையடிதோறும் அம்மானையென்று முடியும் தனிப்பாட்டு; stray piece of poetry ending with the refrain ammānai at the end of each line or even half a line.

எ-டு:

     “திருநெடுமா லவதாரஞ் சிறுபுலியோ வம்மானை

சிவன்முடியி லேறுவதுஞ் செங்கதிரோ வம்மானை

ஒருமுனிவ னேரியிலோ வுரைதெளிந்த தம்மானை

ஒப்பரிய திருவிளையாட் டுறந்தையிலோ வம்மானை” (தனிப்பா. தி. 1, பக். 170);.

ம. அம்மான ; க. அம்மாலெ ; தெ. அம்மனலு.

     [அம்மை + அனை (அன்னை); – அம்மனை → அம்மானை.]

வி-ம்; அம்மானைப் பந்து விளையாட்டு மும்மகளிர் கூடியாடுவது. ஒவ்வொருவரும் குறைந்தபக்கம் முப்பந்து கொண்டு விளையாடுவர். இதனால் மேலிருந்து விழும் நற்பொருள்களை நிலத்தில் விழுமுன் விரைந்து பிடிக்குந் திறமும், தன்மேல் விழுந்து தாக்கும் தீய பொருள்களை விரைந்து தடுக்குந் திறமும் மிகும்.

   ஆடும்போது பாடும் ஒவ்வொரு பாட்டும் ஒரு சிறந்த கூற்றும், அதுபற்றிய வினாவும், அதற்குரிய விடையுமாக அமையும். ஒரு பெண் முதற்கண் ஒரு கூற்றை நிகழ்த்துவாள்; இன்னொரு பெண் அதுபற்றி ஒரு வினா வெழுப்புவாள்; மூன்றாம் பெண் அதற்கு விடையிறுப்பாள். வினாவும் விடையும் பெரும்பாலும் இரட்டுறலாயிருந்து இன்பந் தரும். மேற்காட்டிய முதல் அம்மானைப் பாட்டிலுள்ள இரட்டுறல்கள் வருமாறு;களவாண்டார் = களவு செய்தவர், களா மரத்தடியிற் படிமை வடிவா யிருப்பவர்.

மறைவாய் = ஒளிந்து, திருமறையில் நூற் பொருளாய்.

கடந்து = ஒடிப்போய், முக்கரணத்திற் கெட்டாது.

இரட்டுற லில்லாவிடத்தும், அம்மானைப் பாட்டு நகைச்சுவையாயிருப்பதுண்டு.

எ-டு:

     “விரிந்தபுகழ் புள்ளிருக்கு வேளுர்வ யித்தியனார்

பரிந்துவினை தீர்க்கவல்ல பண்டிதர்கா ணம்மானை

பரிந்துவினை தீர்க்கவல்ல பண்டிதரே யாமாயின்

மருந்துவிலை கைக்கூலி வாங்காரோ வம்மானை

வாயிலே மண்போட்டு வாங்குவார்கா ணம்மானை”

வினைதீர்த்தான் (வைத்தீசுவரன்); கோயிலுக்குத் தெய்வக்காண்பு (சுவாமி தரிசனம்); காணச் செல்பவர், தம் நோய் நீங்கும் பொருட்டு அத் தலத்து மண்ணைச் சிறிது உட்கொள்வது வழக்கம்.

ஒரே சமையத்திற் பந்துகளையும் நிலத்தில் விழாவாறு தட்டிக்கொண்டு, பாட்டையும் தாளமுங் கூற்றுந் தப்பாது இன்னிசையாய்ப் பாடிக்கொண்டு, இடைவிடாது இவ்வாட்டையாடுவது, ஒரு பல்கவனப் பயிற்சியாகவுமிருக்கும்.

அம்மானைப்பாட்டின் யாப்பும் பொருளும் அணியும் நோக்கின், பண்டைத் தமிழ மகளிரின் கல்வித்திறமும் விளங்கும்.

காண்பார் களிக்கத்தக்க வட்டக்காட்சி (circus); நிகழ்ச்சியொத்த இவ்வரிய இளமகளிர் விளையாட்டு, பெண்டிர் வெளியே தலைகாட்ட முடியாத வேற்றரசு கொடுங்கோற் காலத்தில் அறவே வழக்கொழிந்தது.

அம்மானை ஆட்டம்

 அம்மானை ஆட்டம் ammāṉaiāṭṭam, பெ. (n.)

   தட்டாங்கல் விளையாட்டினைக் குறிக்கும் சொல்; a children game.

     [அம்மானை+ஆட்டம்]

அம்மானைப்பருவம்

 அம்மானைப்பருவம் ammāṉaipparuvam, பெ. (n.)

   பெண்பாற் பிள்ளைத்தமிழ்ப் பனுவற் பருவங்கள் பத்தனுள் ஒன்று; a section of peoparpillaittamil, which describes the stage of childhood, in which the child plays the ammanai game. There are ten stages of childhood, of which this stage is one.

     [அம்மானை + பருவம்.]

அம்மானையோ

அம்மானையோ ammāṉaiyō, இடை. (int.)

   ஒரு துயரக் குறிப்பு; an exclamation of grief.

     “அம்மனை யோவெனாத் துண்ணெ னெஞ்சின ளாய்த்துடித்து” (சீவக. 760);.

     [அம்மை (தாய்); + அணை (அன்னை); + ஒ (விளியுருபு); – அம்மனையோ.]

அம்மானைவரி

அம்மானைவரி ammāṉaivari, பெ. (n.)

   ஒருவரைப் புகழ்ந்து பாடும் அம்மானைப் பாட்டு; song sung in praise of a person by girls or women while playing the ammanai game.

ம. அம்மானப்பாட்டு

எ-டு :

     “வீங்குநீர் வேலி யுலகாண்டு விண்ணவர்கோன்

ஒங்கரணங் காத்த வுரவோன்யார் அம்மானை

ஒங்கரணங் காத்த வுரவோன் உயர்விசும்பில்

தூங்கெயில் மூன்றெறிந்த சோழன்காண் அம்மானை

சோழன் புகார்நகரம் பாடேலோ ரம்மானை” (சிலப். 29, அம்மானை வரி);.

இது, வினாவும் விடையும் அதனாலெடுக்கும் முடிபுமாக அமைந்துள்ளது.

     [வள் → வர் → வரி. வரித்தல் = வரணித்தல், புகழ்தல். வரி = ஒன்றை வண்ணித்து அல்லது புகழ்ந்து பாடும் பாட்டு, அம்மானை விளையாட்டிற் பாடும் வரிப்பாட்டு.]

அம்மான்

அம்மான் ammāṉ, பெ. (n.)

   1. தாயுடன் பிறந்தவன் (பிங்.); ; mother’s brother, maternal uncle.

   2. பெண்கொடுத்த மாமன் (இ.வ.);; wife’s father (Loc.);.

     “உரியவம்மான் மாதுலன்றான்” (கூர்மபு. வியாதர் கரும 10);.

   3. அத்தை கணவன்; husband of father’s sister.

   4. தந்தை; father.

     “மலரோணம்மான்” (கம்பரா. ஆரணிய. மாரீசன். 50);.

   5. அழகிய பெரியோன்; the beautiful great one.

     “திகழத் திகழு மடிமுடியுங் காண்பான் கீழ்மே லயனு மாலும் அகழப் பறந்துங் காணமாட்டா வம்மான்” (திருவாச. 442);.

   6. கடவுள்; God, as father.

     “அன்னவர் செய்யுஞ் சிருட்டியு மம்மா னருளினாற் மன்வயத் தாக்கி” (சூத. சிவமான். 10;17);.

     “ஆழி யங்கைக் கருமேனி யம்மான்” (திவ். திருவாய். 5, 1 ; 6);.

ம, அம்மாவன்

     [அம்மை → அம்மான் = அம்மையொடு பிறந்தவன்.]

அம்மான்கால்

 அம்மான்கால் ammāṉkāl, பெ. (n.)

   தாய் மாமன் உறவு; அம்மாவழி உற(இ.வ.);; matemal relationship.

     [அம்மான்+கால்]

அம்மான்கோலம்

 அம்மான்கோலம் ammāṉālam, பெ. (n.)

   தாய் மாமன் மூன்றாம் நாள் பெண்ணிற்கு ஆணுடையணிவித்துச்செய்துவைக்கும் திருமணவூர்வலம் (பிராம.);; a ceremony conducted under the auspices of the maternal uncle usually on the third day of marriage, when the bride dressed as a boy is taken in procession (Brahm.);.

அம்மான்சம்பாவனை

 அம்மான்சம்பாவனை ammāṉcambāvaṉai, பெ. (n.)

   திருமணத்தில் அம்மான் கொடுப்பதாக விளம்பியிடும் முதற் கொடைப்பணம் (பிராம.);; first money gift made at the wedding by the maternal uncle to the bride or bridegroom (Brāhm.);.

     [அம்மான் + Skt. sambhāvanã → த. சம்பாவனை = சிறப்பு, நன்கொடை.]

அம்மான்சீர்

 அம்மான்சீர் ammāṉcīr, பெ. (n.)

   பையனுக்குப் பூணூற் சடங்கிலாவது பெண்ணிற்குத் திருமணத்திலாவது தாய்மாமன் வைக்கும் வரிசை; gifts made by a maternal uncle to his nephew during his investiture with the sacred thread, or to his niece at her wedding.

அம்மான்பச்சரிசி

அம்மான்பச்சரிசி ammāṉpassarisi, பெ. (n.)

   1. நிலத்தையொட்டிப் படரும் ஒரு செடிவகை; an annual with procumbent branches, Euphorbia hirta (செ.அக.);

 raw-rice plant, Euphorbia indica alias E. thymifolia (சா.அக..);.

மறுவ. சித்திரப் பாலாவி, சித்திரவல்லாதி, சிற்றிலைப் பாலாவி, சீதேவியார் செங்கழுநீர்.

சென்னை அகராதியின் (Lexicon); பின்னிணைப்பில்

 red Indian water-lily;

செங்கழுநீர் என்று குறித்திருப்பது ஐயுறவிற்கிடமானது.

   அம்மான்பச்சரிசியின் மூவகைகள் ;   1. சின்னம்மான் பச்சரிசி; thyme – leaved spurge, Euphorbia thymifolia alias E. macrophylla.

இதுவே மூன்றிலும் பெருவழக்கானது.

   2.. பெரியம்மான்பச்சரிசி; pill-bearihospurge, a common weed, Euphorbia pilulifera alias E. hirta.

   3. சிவப்பம்மான்பச்சரிசி; a red variety, Euphorbia rosea.

     [P]

அம்மான்பொடி

அம்மான்பொடி ammāṉpoḍi, பெ. (n.)

   அம்மான் அம்மான் என்று கத்திக்கொண்டு தன் பின்னால் வருமாறு பிள்ளைக்கடத்தி பிள்ளைகளின்மேல் தூவும் சொக்குப்பொடி (திவ். நாய்ச். 2;4, வியா.);; magic powder thrown by a kidnapper on a child causing the child to follow him crying ammān amnán (செ.அக.); —

 a medicinal or magic powder having the quality of inducing sleep—Soporific, Hypnotic.

 Note; It was generally used in olden days by Koravas and other criminals to decoy children for purposes of theft, and by magicians to decoy children as well as adults for purposes of their own (சா.அக.);.

அம்மான்வரிசை

 அம்மான்வரிசை ammāṉvaricai, பெ. (n.)

   குடும்பத்தில் இறப்போ, பிறப்போ மற்றுள்ள நிகழ்வுகளோ அனைத்திலும் சடங்கு செய்யும் உறவினர்க்குத் தாய்மாமனால் கொடுக்கப் படும் துணிமணி, பொன்நகை முதலிய சீர்வரிசை; gifts offered by maternal uncle.

     [அம்மான்+வரிசை]

அம்மாபத்தினி

 அம்மாபத்தினி ammāpattiṉi, பெ. (n.)

   வேம்பு; margosa, Azadirachta indica (சா.அக.);.

அம்மாப்பாளையம்

 அம்மாப்பாளையம் ammāppāḷaiyam, பெ. (n.)

   விழுப்புரம்மாவட்டத்தில் உள்ள ஓர் ஊர்; name of the village in Viluppuram.

     [அம்மன்+பாளையம்]

அம்மாமி

அம்மாமி ammāmi, பெ. (n.)

   1. அம்மான் மனைவி; maternal uncle’s wife.

   2. கணவன் தாய்; husband’s mother.

     “அம்மாமி தன் வீவுங் கேட்டாயோ தோழி” (சிலப். 29. தேவந்தி யரற்று);.

ம. அம்மாவி

     [1. அம்மான் + மாமி – அம்மான்மாமி = அம்மான் மனைவியாகிய மாமி. ஒ.நோ.; மகன் பிள்ளை பேரன் = மகன் பிள்ளையாகிய பேரன். கணவன் தாயாகிய மாமியினின்றும் வேறுபடுத்த அம்மான் என்னும் அடை வந்தது. அவ் வடை அம்மான் தொடர்பு குறிப்பதனால், அம்மான் மாமி என்பது அத்தையைக் குறிக்கும். அத்தை மணவுறவு முறையில் மாமியை ஒத்திருப்பதால், அவளும் மாமியெனப்பட்டாள்.

அம்மான்மாமி → அம்மாமி. 2. அம் (அழகிய, நல்ல); + மாமி – அம்மாமி. நல்லம்மான், நற்றாய் என்பவற்றிலுள்ள ‘நல்’ என்னும் அடைபோல், அம்மாமி என்பதில் ‘அம்’ என்னும் அடை அருமையும் நெருக்கமுங் குறித்து வந்தது.]

அம்மாம்பொட்டு

 அம்மாம்பொட்டு ammāmpoṭṭu, பெ. (n.)

   ஒருவகை மேளக் கொட்டுப் போலப் பொட்டுப் பொட்டாக விழும் சற்றே பெரிய மழைத் தூறல்கள்; light rain falling in big drops.

மானம் இப்பதான் கார்த்திய மாசம் மாதிரி அம்மாம் பொட்டு போட்டுக்கிட்டு நிக்குது” (இ.வ);.

     [அம்+அம்+பொட்டு]

அம்மாய்

 அம்மாய் ammāy, பெ. (n.)

   தாயைப் பெற்ற பாட்டி (வின்.); ; maternal grandmother.

ம. அம்மாம்ம

     [அம்மை → அம்மா + ஆய் – அம்மாய். ஆய் = அன்னை.]

அம்மாயி என்பது கொச்சை வடிவம்.

அம்மாரம்

 அம்மாரம் ammāram, பெ. (n.)

   அலரிச்செடி (பச்.மு.);; sweet scented oleander, Nerium odorum.

அம்மார்

 அம்மார் ammār, பெ. (n.)

   கப்பற்கயிறு; ships cable.

     [Port. Amarva → த. அம்மார்.]

அம்மாலிகை

 அம்மாலிகை ammāligai, பெ. (n.)

   புளி; tamarind, Tamarindus indica (சா.அக.);.

அம்மாலைத்தேவர்

அம்மாலைத்தேவர் ammālaittēvar, பெ. (n.)

   கள்ளர்குலப் பட்டப் பெயர்களுள் ஒன்று (கள்ளர் சரித். பக். 145);; a caste title of Kallars.

     [அம் + மாலை + தேவர்.]

அம்மாள்

அம்மாள் ammāḷ, பெ. (n.)

   1. தாய்; mother.

   2. தாய்போல் மதிக்கப்படுபவள்; any matron respected as a mother.

அந்த அம்மாள் நல்ல அம்மாள்.

   3. ஒரு திருமாலிய (வைணவ); ஆசிரியர் பெயர்; name of a Vaisoava Äcärya.

     ‘நடாதூரம்மாள்’ (ஈடு, 7. 6 10);.

ம. அம்மாள்

     [மருமம் = மார்பு, முலை. மருமம் → மம்மம் → அம்மம் = தாயின் அல்லது பெண்ணின் முலை, முலைப்பால், குழந்தையுணவு. ஒ.நோ.; கருமம் → கம்மம் → கம். அம்மம் → அம் → அம்மு = தாய்ப்பால், குழந்தையுணவு, குழந்தைக்கு ஊட்டுஞ்சோறு. அம் → அம்ம = பாலூட்டுந் தாய். அம்ம → அம்மை = தாய். ‘அம்ம’ என்பதே முந்து வடிவம் ; அதன் இலக்கிய வடிவமே ‘அம்மை’. ம., தெ., க. அம்ம. அம்ம → அம்மா = 1. விளி வடிவம். 2. எழுவாய் வடிவம். அம்மா → அம்மாள் = தாய் (உ.வ.);. ஒ.நோ.; அக்க → அக்கா → அக்காள். அம்மா, அம்மாள் என்னும் வடிவங்கள் கொச்சையாகக் கொள்ளப்படாவிடினும், வழுவான வடிவங்களாகும். முன்னது வேற்றுமை வழு; பின்னது அதன்மேலும் பெண்பாலீறு சேர்ந்த ஈற்று வழு. அம்ம அல்லது அம்மை என்பதே பெண்பாற் பெயர். அதன்மேலும் பெண் பாலீறு சேர்ப்பது மிகைப்படக்கூறல். அம்மை → அம்மன் = காளி போன்ற ஆண் அதன் மிக்க பெண்தெய்வம். அன்னீறு ஆண்மையை யுணர்த்தும்.]

அம்மி

அம்மி ammi, பெ. (n.)

   1. கறிச்சரக்கு அரைக்கும் சின்னம்மி; horizontal flat stone on which spices for curry are crushed or ground with a stone roller.

     “உரலி லம்மியி லோங்கு முலக் கையில்” (காசிகாண். கற்பிலக். 26);.

   2. சாந்தரைக்கும் பெரியம்மி; big horizontal level or concave stone used for grinding fine mortar.

   3. மாமி; mother-in-law (சங்.அக.);.

ம. அம்மி

     [அம்முதல் = அமுக்குதல், அமுக்கியரைத்தல்.

அம் + இ – அம்மி.]

அம்மிக்கல்

அம்மிக்கல் ammikkal, பெ. (n.)

   1. அரைகல், அம்மி; grindingstone.

     “பெருத்த வம்மிக்கன் முதலிய தாங்கிப் பேணிவிற் றுண்ப னோ வுணர்வீர்” (சூத. ஞான. 11;27);.

   2. அம்மிக்குழவி (பிங்.);; stone roller for grinding.

ம. அம்மிக்குட்டி, அம்மிக்குழவி.

     [P]

     [அம்மி + கல்.]

அம்மிக்குழவி

 அம்மிக்குழவி ammikkuḻvi, பெ. (n.)

   அம்மியில் அரைக்கும் நீண்ட கல்லுருளை; cylindical stone roller used for grinding curry ingredients.

ம. அம்மிக்குழவி

     [அம்மி + குழவி.]

அம்மிச்சி

 அம்மிச்சி ammicci, பெ. (n.)

   அம்மாவின் அம்மா; maternal grandmother.

     [அம்மை+(அத்தி); இத்தி]

அம்மினியுளுவை

 அம்மினியுளுவை ammiṉiyuḷuvai, பெ. (n.)

   ஒரு வகை மீன்; a kind of fish, Narcine timlei.

அம்மிப்பாலுண்ணவரை-த்தல்

அம்மிப்பாலுண்ணவரை-த்தல் ammippāluṇṇavaraittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   கலுவத்தில் ஈரமில்லாதபடி குழவியைக்கொண்டரைத்தல்; to grind without leaving moisture (சா.அக.);.

     [அம்மி + பால் + உண்ண + அரை.]

அம்மிமிதி-த்தல்

அம்மிமிதி-த்தல் ammimididdal,    4 செ.கு.வி. (v.i.)

   திருமணக் கரணத்தில் மணமகன் மணமகள் வலக்காலைத் தூக்கிவைக்க உதவ, அவள் அதை அம்மிமேல் வைத்தல்; to perform the ceremonial procedure in which the bride places her right foot on the grinding-stone, the bridegroom helping her to do so.

     “அம்மி மிதிக்கக் கனாக்கண்டேன் தோழீநான்” (திவ். நாய்ச். 6 ; 8);.

ம. அம்மிசவிட்டுக

அம்மியம்

அம்மியம் ammiyam, பெ. (n.)

   1. கள் (பிங்.); ; toddy.

   2. காளம் (வின்.); ; trumpet.

   3. சிறு சின்னம் (சங்.அக); ; a kind of clarionet.

 அம்மியம் ammiyam, பெ. (n.)

   செந்தாடு பாவை; one of the 21 kinds of rare plants (unidentified);. The correct spelling of this term is probably (சா.அக.);.

அம்மிரம்

 அம்மிரம் ammiram, பெ. (n.)

   மாமரம் (சங்.அக.);; mango (சா.அக.);.

     [Skt. amra → த. அம்மிரம்.]

அம்மிரா

 அம்மிரா ammirā, பெ. (n.)

   செந்தாழை; false tragacanth, Sterculia urens (சா.அக.);.

அம்மிலசாரம்

அம்மிலசாரம் ammilacāram, பெ. (n.)

   1. புளித்த காடி; sour vinegar.

   2. புளிப்பு; sourness (சா.அக.);.

     [Skt. amla → த. அம்மிலம்.]

சாறு → சாறம் → சாரம்.

அம்மிலம்

அம்மிலம் ammilam, பெ. (n.)

   1. புளிப்பு; sourness.

   2. புளி; tamarind.

   3. புளிவஞ்சி; puli-vanji, creeper bearing sour fruits.

     [Skt. amla → த. அம்மிலம்.]

அம்மிலவிருக்கம்

 அம்மிலவிருக்கம் ammilavirukkam, பெ. (n.)

   புளிய மரம்; tamarind tree, Tamarindus Indica (சா.அக.);.

     [Skt. amla + vrksa → த. அம்மிலவிருக்கம்.]

அம்மிலவிருட்சம்

 அம்மிலவிருட்சம் ammilaviruṭcam, பெ. (n.)

   புளியமரம் (மலை.);; tamarind.

     [Skt. amla + vrksa → த. அம்மிலவிருட்சம்.]

அம்மிலிகா

அம்மிலிகா ammilikā, பெ. (n.)

   1. புளிப்பு; sourness.

   2. புளி நறளைக் கிழங்கு; the root of the plant, Cissue acida (சா.அக.);.

     [Skt. amla → ammiliga.]

அம்மிலிகை

அம்மிலிகை ammiligai, பெ. (n.)

   புளி (சிந்தா.நி. 206);; tamarind.

     [Skt. amilka → த. அம்மிலிகை.]

அம்மு

 அம்மு ammu, பெ. (n.)

   சோறு; boiled rice.

     [அம்முதல் = உண்ணுதல். அம்மு (மு.தொ. ஆ.பெ.);.]

அம்மு-தல்

அம்மு-தல் ammudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. முகில் படிந்து வானம் மந்தாரமாதல் (யாழ்ப்.);; to spread thickly, as a mass of motionless clouds that overspread the heavens, obscuring the rays of the sun (J.);.

   2. மாயம் பண்ணுதல் (வின்.); ; to dissemble, on hearing a thing spoken of, by seeming to know nothing about it, to act with reserve and duplicity.

அம்முக்கள்ளன்

 அம்முக்கள்ளன் ammukkaḷḷaṉ, பெ. (n.)

   அடக்கத் திருடன், மாய்மாலக் கயவன்; thievish person, dissembling rogue (W.);.

ம. அம்மக்கள்ளன்

     [அம்மு + கள்ளன்.]

அம்முண்டி

 அம்முண்டி ammuṇṭi, பெ. (n.)

   அரக்கோணம் வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Aarkkonam Taluk.

     [ஒருகா, அமர்+அன்]

அம்முண்டு

 அம்முண்டு_, பெ. (n.)

   முட்டாள், மதியிலி (இ.வ.);; dolt, idiot (Loc.);.

     [அம் = அமுக்கம், அடக்கம். உண்டு = உள்ளது. அம் + உண்டு – அம்முண்டு (மதி யமுங்கி அல்லது மதிகுன்றி யிருப்ப-வன்-வள்);. அம்முண்டு → அப்புண்டு (நெல்லை);.]

அம்முதல்

அம்முதல் ammudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. அமுக்குதல்; to press down.

     “வல்லிய மாமனெகிழ்த்து” (மருதுரந். 91);;

   2. விரைந்து மிகுதியா யுண்ணுதல்; to eat voraciously.

   சோற்றை நன்றாய் அமுக்குகிறான் (உ.வ.);;   3. அடைத்தல்; to plug (சா.அக.);;

   4. மூடுதல்; to cover (சா.அக.);;

   5. ஏமாற்றுதல்; to deceive.

ம. அம்முக

     [அம் → அம்மு. அம்முதல் = அமுங்குதல், அமுக்குதல்.]

அம்மூவனார்

 அம்மூவனார் ammūvaṉār, பெ. (n.)

   எட்டுத் தொகையுள் ஒன்றான ஐங்குறுநூற்றில் இரண்டாம் நூறான நெய்தலை யியற்றியவர்; name of the author of the second section of Aingurunuru, one of the Eight Anthologies of the Šangam period.

அம்மெனல்

அம்மெனல் ammeṉal, பெ. (n.)

   1. நீர் ததும்பற் குறிப்பு; onom. expr. of filling or overflowing, as of water.

     “அம்மெனக் கண்ணீ ரரும்பி” (பதினொ. திருவிடை. மும். 10;16);.

   2. ஓர் ஒலிக்குறிப்பு (பிங்.);; onom expr of humming.

   3. ஓர் அசை; a syllable.

     “அம் மென்றா லாயிரம்பாட்டாகாதோ?” (தனிப்பா. தி, 1, பக். 10);.

     [அம் + எனல்.]

அம்மே

அம்மே ammē, பெ. (n.)

   குறத்திப்பாட்டில் பாட்டு தொறும் அல்லது அடிதொறும் ஈற்றில் வரும் மகடுஉ முன்னிலை; a vocative addressing a lady, and occurring at the end of each stanza or line of a song sung by a Kurava woman in the traditional pattern, or of one composed in imitation of that.

எ-டு :

     “மோரியாவின் மலைதனிலே யாபிரகா மம்மே

முக்கியமா யீசாக்கைப் பலிகொடுத்தா னம்மே” (பெத்லகேம் குறவஞ்சி, மலைவளம், 3);.

அம்மை

அம்மை ammai, பெ. (n.)

   1. தாய்; mother.

     “அத்தனொடும் அம்மையெனக் கானார்” (தேவா. 6.53 ;9);.

   2. மலைமகள் (பிங்.);; Pārvati.

   3. காளி; Káli. 4. பாட்டி (பரவர்);;

 grandmother (Paravas);.

   5. சமணத் துறவினி (பெண்துறவி); (சூடா.); ; female Jaina recluse.

   6. அறத்தேவி (தருமதேவதை); (சூடா.);; Goddess of virtue.

   7. அம்மை நோய் வகைகள்; kinds of pox.

 Sum. eme; Akkad. ama, amu; Sum., Oce. um, ama; Ar. um; Indon. ma, uma, amai, umai, yama; Mon-Khm. ama, ma; Mu. umā, mấc, mắy, mđ-in; Skt. umã, ambã.

   அம்மைநோய் வகைகள் ;   1. சின்னம்மை; small-pox, Variola.

   2. பெரியம்மை; small-pox with an eruption of large blebs, Variola pemphigosa.

   3. விளையாட்டம்மை; a mild form of small-pox, Varioloid.

   4. தட்டம்மை; pseudo small-pox, almost the same as the preceding.

   5. பாலம்மை; a mitigated form of small pox, milk-pox.

   6. தவளையம்மமை; another form of smallpox affecting the joints.

   7. கல்லம்மை; wart-pox with hard pustules, Variola verrucosa.

   8. மிளகம்மை; a small-pox with pepper like distinct vesicles, Discrete variola.

   9. கடுகம்மை; one with an eruption of small vesicles like mustard seeds, Variola miliaris.

   10. பாசிப்பயற்றம்மை, பயற்றம்மை; simple and unmodified small-pox, Variola vera.

   11. வெந்தயவம்மமை; small-pox with pustules like the dill-seeds.

   12. கொள்ளம்மை; another variety with pustules of the size of horse gram.

   13. பனையேறி, ஒரு குரு அம்மை; a kind of measles, the eruptions of which appear to ascend from the lower limbs, and thence spread over the body.

   14. பனைமுகரி, ஒரு கருப்புக் குரு அம்மை; a severe form of black measles.

   15. கரும்பனசை; a small-pox with black vesicles, Black or Hemorrhagic variola.

   16. பயறி; another variety of measles.

   17. இராமக்கம்; a form of small-pox in which the pustules strike in and the contents become absorbed, leaving the walls empty, Variola siliquosa.

   18. விச்சிலுப்பை அல்லது விச்சிலிர்ப்பான்; ohicken-pox, Varicella.

இது சிச்சிலுப்பான் அல்லது சிச்சிலிர்ப்பான் எனவும்படும்.

   19. நீர்க்கொள்வான்; a mild form of chicken-pox, varioloid, Pustular varicella.

   20. கொப்புளிப்பான்; another variety of chicken-pox. (சா.அக.);

   விலங்கின அம்மைநோய் ;   1. மாட்டம்மை; cow-pox, vaccinia.

   2. ஆட்டம்மை; sheep-pox, ovinia.

   3. பன்றியம்மை; swine-pox.

   4. குதிரையம்மை; horse-pox.

   5. ஒட்டக அம்மை; camel-pox. (சா. அக.);

     [அம்மம் = முலைப்பால். அம்மம் → அம்ம → அம்மை = முலைப்பாலூட்டுந் தாய். இனி , அம்மு → அம்ம → அம்மை என்றுமாம். அம்மு = சோறு, சோறுாட்டுந் தாய், தாயின் தாய், தாய் போன்ற தெய்வம், தாய்போன்ற பெண். அம்மை என்னும் நோய்ப்பெயர் அம்மை யென்னும் காளியின் பெயரினின்று ஏற்பட்டது.]

திணைமயக்க மில்லாத ஐந்திணை மக்கட் பாகுபாடு, கடல்கோள்கட்கு முந்திய குமரி நாட்டில் தோன்றிற்று. முதுவேனிற்கால முதிர்வெப்பத்தாற் கொப்புளநோய் பாலை வாணரைத் தாக்கியபோது, அது அவர் தெய்வமாகிய காளியம்மையால் உண்டானதென்று கருதி, அதற்கு அம்மைநோய் என்று பெயரிட்டனர்.

திணைமயக்கம் ஏற்பட்டுப் பாலைவாணர் வெட்சி கரந்தை மறவரும் காட்டுப் படைஞருமாக மருதநில மன்னராலும் வேந்தராலும் அமர்த்தப்பட்ட பின், காளி ஐந்திணை நிலத்திற்கும் பொதுவான கொற்றவை என்னும் போர் வெற்றித் தெய்வமும், கொப்புளநோய் வாராமல் தடுத்தற்கு வழிபடும் மறத்தெய்வமும் ஆனாள். அம்மை என்னும் பாலை நிலத்துக் கொப்புள நோய்ப்பெயர், ஏனை நால்நிலங்கட்கும் பரவிற்று.

 அம்மை ammai, பெ. (n.)

   1. மேலுலகம்; heaven.

     “அம்மை பயக்கு மமிர்து” (தேவா. 6. 23;8);.

   2. முதற்பிறப்பு; former birth.

     “அம்மையாற் றவங்க டாங்கி” (சூளா. மந்தி. 118);.

   3. வருபிறப்பு (பிங்.);; future birth,

     “அம்மையில் வாழ்விடை யற்ற முறாமே” (கந்தபு. தேவ், தெய்வ. 41);.

   4. மறுமை; the next world, state after death.

     [‘உ’ முன்மைச் சுட்டு, உயர்வுச் சுட்டு. உ → உம்மை = முன்னிலைமை, உயர்நிலைமை, பின்னிலைமை (வருநிலைமை, எதிர்நிலைமை);. காலமுன் இடமுன் என முன்மை இரண்டு. உம்மை → அம்மை.]

 அம்மை ammai, பெ. (n.)

   1. அமைதி; calmness, quietude, gentleness.

     “அம்மை யஞ் சொலார்” (சீவக. 3131);.

   2. அழகு (பிங்.);; beauty.

   3. சிலவாகிய சொற்களால் சிறந்த பொருளைக் கூறி நாலடியின் மிகாது வரும் செய்யுள்களைக்கொண்ட பனுவல், எண்வகை வனப்புகளுள் ஒன்று; an epic poem presenting an excellent subject consisting of verses of not more than four lines composed of short sweet words, one of eight vanappus.

     “வனப்பியல் தானே வகுக்குங் காலைச் சின்மென் மொழியாற் சீரிது நுவலின் அம்மை தானே அடிநிமிர் பின்றே”(தொல். பொருள். செய்.227);.

இந் நூற்பாவின் 2ஆம் அடியை உரையாசிரியர் சிலர்

     “சின்மென் மொழியாற்றாய பனுவலோடு” என்று பாடம் மாற்றி,

     ‘இடையிட்டு வந்த பனுவ லிலக்கணத்தோடும்’ என்றும்,

     ‘அறம் பொரு ளின்ப மென்னும் மூன்றற்கும் இலக்கணஞ் சொல்லுப வேறிடையிடை அவையின்றியுந் தாய்ச் செல்வ தென்றவாறு; அஃதாவது, பதினெண் கீழ்க்கணக்கென வுணர்க’ என்றும்,

     “பொருள்கருவி காலம் வினையிடனொ டைந்து

மிருடீர வெண்ணிச் செயல்” (குறள். 675);

என்பது, இலக்கணங் கூறிய தாகலிற் பனுவலோ டென்றான்.

     “மலர்காணின் மையாத்தி நெஞ்சே யிவள் கண்

பலர்காணும் பூவொக்கு மென்று” (குறள், 1112);

என இஃது இலக்கிய மாகலாற் றாயபனுவ லெனப்பட்டது. இவை தனித்து வரினும் அவ்வனப்பெனப்படும் ; தாவுதல் என்பது இடையிடுதல் என்றும், பிறவாறும் உரைப்பர்.

     “பாட்டுரை நூலே வாய்மொழி பிசியே

அங்கதம் முதுசொலோ டவ்வேழ் நிலத்தும்

………………………………….

யாப்பின் வழிய தென்மனார் புலவர்” (தொல். பொருள். செய். 75);

என்று மேற்கூறிய எழுநிலை யாப்புள் பாட்டொன்றையே பின்னர் எண்வகை வனப்பாக ஆசிரியர் வகுத்துக் கூறுதலானும், பாட்டு நூலன்மையானும், பதினெண் மேற்கணக்கும் பதினெண் கீழ்க்கணக்கும், ஒரு சில புறநானூற்றுச் செய்யுள்கள் தவிர ஏனையவெல்லாம் திருக்குறட்குப் பிற்பட்டவையாதலானும், எண்வகை வனப்பிலக்கணமும் அகலப் பாவிற்கும் தொடர்நிலைச் செய்யுட்குமேயுரியவை யாதலானும், அவ்வுரைகள் பொருந்தாவெனவறிக. மேலும்,

     “சீரிது நுவலின்” என்னும் பாடமே மோனையா யமைதலையும் பொருள் சிறத்தலையும் நோக்குக.

இனி, தொல்காப்பியத்திற்கு இலக்கியமாயிருந்த பண்டைத் தமிழ்நூல்களும் பனுவல்களுமெல்லாம் இறந்துபட்டனவென்றும், அம்மை வனப்பிற்குச் சில தனிப்பாக்களை மட்டும் இற்றையிலக்கியத்தினின்று எடுத்துக் காட்ட வொண்ணுமென்றும் அறிந்து கொள்க.

     [அம் → அம்மை. அம் = அழகு.]

 அம்மை ammai, பெ. (n.)

   கடுக்காய்; Indian or country gall-nut, Chebulic myrobalan.

அம்மை நாயக்கனூர்

 அம்மை நாயக்கனூர் ammaināyakkaṉūr, பெ. (n.)

   கொடைக்கானல் வழியில் உள்ள ஓர் ஊர்; name of the village on the way to kodakkana.

     [அம்மன்+நாயக்கனூர்]

அம்மைகுண்டலி

அம்மைகுண்டலி ammaiguṇṭali, பெ. (n.)

     “காலைப் பிடித்தனலை யம்மை குண்டலியடிக் கலைமதியி னூடு தாக்கி” (தாயு. தேசோ. 1);.

 Note; In Tantric science, it is described as a coiled serpent lying dormant in the human body. It is by rousing this Cosmic power that a Yogi is said to obtain whatever he desires and gains all psychic powers (சா.அக.);.

அம்மைகுத்து-தல்

அம்மைகுத்து-தல் ammaiguddudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. ஆவின் அம்மைக் கொப்புளத்தினின்று எடுத்த பாலை அம்மைநோய் தாக்காவாறு மக்களுடம்பில் ஊசிவாயிலாகச் செலுத்துதல்; to inoculate with vaccine (virus of cow-pox); to procure immunity from small-pox or atleast mitigate its virility or severity, vaccinate.

   2. அம்மைகுத்தல்; vaccination.

அம்மைக் கொப்புளம்

 அம்மைக் கொப்புளம் ammaikkoppuḷam, பெ. (n.)

   அம்மைநோயில் தோன்றும் சலக்கட்டி; pustule of small-pox.

     [அம்மை + கொப்புளம்.]

அம்மைக்கட்டு

 அம்மைக்கட்டு ammaikkaṭṭu, பெ. (n.)

   கூகைக் கட்டு; inflammation of the salivary glands with swelling along the neck, mumps, Parotitis (சா.அக.);.

அம்மன்கட்டு பார்க்க;see amman-kattu.

அம்மைக்குரு

 அம்மைக்குரு ammaikkuru, பெ. (n.)

   அம்மைக் கொப்புளம்; pustule of small-pox.

     [அம்மை + குரு.]

அம்மைக்கொண்டை

 அம்மைக்கொண்டை ammaikkoṇṭai, பெ. (n.)

   பெண்டிர் கொண்டைவகை; a mode of coiffure.

     [அம்மை + கொண்டை..]

அம்மைச்சுரம்

 அம்மைச்சுரம் ammaiccuram, பெ. (n.)

   அம்மைக் கொப்புளத்தோடு கூடி வரும் காய்ச்சல்; fever accompanied by eruption on the skin, as in small-pox, eruptive fever.

     [அம்மை + சுரம். சுள் → சுல் → சுர் → சுரம் = உடம்புசுடும் காய்ச்சல். சுள்ளெனல் = சுடுதல்.]

சுரம் → Skt. jvara.

அம்மைத்தழும்பு

 அம்மைத்தழும்பு ammaittaḻumbu, பெ. (n.)

   அம்மைக் கொப்புளம் அடங்கித் தீர்ந்தபின் ஏற்படும் வடு; small-pox pit.

     [அம்மை + தழும்பு.]

அம்மைபோடு-தல்

அம்மைபோடு-தல் ammaipōṭudal,    20 செ.கு.வி. (v.i.)

   அம்மை வார்த்தல்; to have an attack of small-pox, chicken-pox or any other allied disease.

வீட்டில் குழந்தைக்கு அம்மை போட்டிருக்கிறது (உ.வ.);.

     [அம்மை + போடு. போடுதல் = கொப்புளம் உண்டாதல்.]

அம்மை போட்டுதல் என்பது சொல்வழு. புகவிடு → புகடு → புகட்டு → போட்டு. போட்டுதல் = குழந்தைக்கும் நோயாளிக்கும் பால், மருந்து, நீர் முதலியவற்றைச் சங்கில் அல்லது கறண்டியிலிட்டு வாய்வழி உட் செலுத்துதல்.

அம்மைப்பால்

அம்மைப்பால் ammaippāl, பெ. (n.)

   1. அம்மை குத்துதற்குரிய பால்; virus of cow-pox as used in vaccination.

   2. அம்மையின் பால்; smallpox vaccine (சா.அக.);.

   அம்மைகுத்தற் பாலின் இருவகை;   1. ஆவம்மைப் பால்; bovine vaccine got direct from cow.

   2. மாந்தன்வாய்ப் பால்; humanized vaccine, got from human subject (C.O.D.);.

     [அம்மை + பால்.]

அம்மைமுத்து

 அம்மைமுத்து ammaimuttu, பெ. (n.)

   அம்மை நோய்க் கொப்புளம்; pustule of small-pox.

     [முத்துப்போல் உருண்டையாயும் சற்றுப் பளபளப்பாயும் இருத்தலால், கொப்புளம் முத்தெனப்பட்டது (உ.ஆ.பெ.);.);

அம்மையப்பன்

 அம்மையப்பன் ammaiyappaṉ, பெ. (n.)

அம்மையப்பர் பார்க்க;see ammai-y-appar.

     [அம்மை + அப்பன்.]

அம்மையப்பர்

அம்மையப்பர் ammaiyappar, பெ. (n.)

   உயிரினங்களெல்லாவற்றிற்கும் தாயுந் தந்தையும் போன்ற இறைவன், சிவன்; God, as father and mother of all living beings, Šiva.

     “அம்மை யப்பரே யுலகுக் கம்மை யப்பரென் றறிக” (திருக்களிற்றுப். 1);.

     [அம்மை + அப்பன் – அம்மையப்பன் → அம்மையப்பர்.

     ‘அர்’ உயர்வுப் பன்மையீறு.]

கடவுள், தாய் கூறும் தந்தை கூறும் ஒருங்கே கொண்டவர் என்பதைப் பொதுமக்கட்கு எளிதாய் விளக்குதற்பொருட்டு, முந்துகால மெய்ப்பொருளியலார் கடவுளின் ஆற்றலைத் தனியாகப் பிரித்து அம்மையென்றும், எஞ்சிய கூற்றை அப்பனென்றும் உருவகித்துக் கூறினர். ஆயின், உருவ வழிபாட்டை நிலை நாட்ட விரும்பிய பிற்காலத்தார், அவ்வணி வகையிருகூறுகளையும் உண்மையான ஆண் பெண் வடிவுகளாகவே காட்டி உருவங்களையுஞ் செய்துவிட்டனர்.

உண்மையில், கடவுள் உருவமும் பாலியல்புமின்றி, ஒரு வகையிலும் பகுக்கப்பட முடியாதவராய், ஆவி வடிவில் எங்கும் நிறைந்து மன மொழி மெய்களைக் கடந்திருப்பவர்.

சிவமதம் முதன்முதல் தமிழ்நாட்டில் தோன்றியமையாலும், இன்றும் பெருவழக்காயுள்ளமையாலும்,

     ‘சிவன்’ என்னும் பெயர் கடவுளைச் சிறப்பாகக் குறித்தது.

அம்மையார்கூந்தல்

 அம்மையார்கூந்தல் ammaiyārāndal, பெ. (n.)

   கொடியார்கூந்தலென்னும் பூண்டு (சங்.அக.);; a kind of plant called kodiyarkündal – பூண்டு வகை (மு.அ.); – Seeta’s thread, m. cl., Cuscuta reflexa (செ.அக.);.

ம. அம்மையார்கூந்தல்

   சவரிக்கொடி; இதுவே கொடியார்கூந்தல் அல்லது மெலியார் கூந்தல்; Sita’s thread. It is so called because of its inter-twining nature. Virginian silk, Periploca asclepidae alias Cuscuta reflexa. It is medicinally a diuretic.

அம்மையார்சீட்டு

 அம்மையார்சீட்டு ammaiyārcīṭṭu, பெ. (n.)

   அரசன் (ராஜா); மந்திரி என்னுஞ் சீட்டாட்டம்; a kind of card-play.

அம்மையோ

அம்மையோ ammaiyō, இடை. (int.)

   ஒரு வியப்புக் குறிப்பு ; an exclamation of astonishment.

     ‘அன்னையோ வென்றது அம்மையோ வென ஒரு வியப்பு’ (கலித். 85;29, நச். உரை);.

     [அம்மை + ஓ.]

அம்மைவடு

 அம்மைவடு ammaivaḍu, பெ. (n.)

   அம்மைத் தழும்பு; small-pox pits, pock-mark.

அம்மைவனப்பு

 அம்மைவனப்பு ammaivaṉappu, பெ. (n.)

அம்மை பார்க்க;see ammai=.

அம்மைவார்-த்தல்

அம்மைவார்-த்தல் ammaivārttal,    4 செ.கு.வி. (v.i.)

   அம்மை போடுதல்; to have small-pox, chicken-pox, etc.

அம்மைவார்த்தசொள்ளை

 அம்மைவார்த்தசொள்ளை ammaivārttasoḷḷai, பெ. (n.)

   அம்மைநோயாலேற்பட்ட தழும்புக் குழி; the pit-mark left by the small-pox pustule, pock-mark or pock-pit (சா.அக.);.

அம்மைவார்த்தமுகம்

 அம்மைவார்த்தமுகம் ammaivārttamugam, பெ. (n.)

   அம்மைத் தழும்புள்ள முகம்; face with small-pox pits, pock-marked face.

அம்மைவார்த்தமூஞ்சி

 அம்மைவார்த்தமூஞ்சி ammaivārttamūñji, பெ. (n.)

அம்மைவார்த்தமுகம் பார்க்க;see ammai-yartta-mugam.

     [மூஞ்சி = முகம். மக்கள் முகத்தை

     ‘மூஞ்சி’ யென்பது இழிவழக்கு (slang);.]

அம்மைவிளையாடு-தல்

அம்மைவிளையாடு-தல் ammaiviḷaiyāṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   அம்மைநோய் காணுதல்; to have an attack of small-pox, chicken-pox, etc.

அம்மைவிளையாட்டு

 அம்மைவிளையாட்டு ammaiviḷaiyāṭṭu, பெ. (n.)

   அம்மைநோய்ப்பட்டிருத்தல்; attack of or suffering from small-pox.

ம. அம்மவிளையாட்டு

     [அம்மைநோய் காளியால் வருவதாகக் கருதப்பட்டதனாலும், பெரியம்மை பெரும்பாலும் சாவிற்கேதுவாயிருந்ததனாலும், அந் நோய் தாக்குவதைக் காளியம்மையின் விளையாட்டென்று மங்கல வழக்காகக் கூறினர். அவ் வழக்கு இன்றும் கல்லா மக்களிடைத் தொடர்கின்றது.]

அம்மைவேணி

 அம்மைவேணி ammaivēṇi, பெ. (n.)

   வெண் தகரை; sulphur flowered senna, Cassia glauca (சா.அக.);.

அம்மோ

 அம்மோ ammō, இடை (int.)

   இரக்கக் குறிப்புச் சொல் (நாமதீப.); ; an exclamation of pity.

ம. அம்மோ

அம்வந்தி

அம்வந்தி amvandi, பெ. (n.)

   நீரிழிவு (ம. தி. 32, உரை); ; diabetes.

     [ஒருகா. அம் + வந்தி. அம் = நீர் வா → வந்தி.]

அயகத்தினை

 அயகத்தினை ayagattiṉai, பெ. (n.)

   செந்தினை; red millet (சா.அக.);.

அயகம்

அயகம் ayagam, பெ. (n.)

   1. சிறுகுறிஞ்சா; species of Gymnema (செ.அக.);

— the small Indian ipecacuanha, Gymnemia silvestre alias G. parviflorum (சா.அக.);.

   2. வசம்பு (மலை.); ; sweet-flag, Acorus calamus (சா.அக.);.

அயகரம்

 அயகரம் ayagaram, பெ. (n.)

   மலைப்பாம்பு; boa-constrictor, as goat-swallower.

     [Skt. aja-gara → த. அயகரம்.]

அயக்கம்

 அயக்கம் ayakkam, பெ. (n.)

   நோயின்மை; free from disease, healthiness (சா.அக.);.

     [ஒருகா. அயங்கு → அயக்கு → அயக்கம். அயங்குதல் = விளங்குதல்.]

அயக்களங்கு

 அயக்களங்கு ayakkaḷaṅgu, பெ. (n.)

   இரும்புத் துரு (வின்.);; oxide of iron, used as medicine.

     [அயம் + களங்கு.]

     [Skt. ayas → த. அயம்.]

களம் → களங்கு = கருமை.

அயக்கிரீவன்

 அயக்கிரீவன் ayakkirīvaṉ, பெ. (n.)

   திருமாலின் தோற்றரவுகளுள் ஒன்று; name of a form of Tirumal as horse-necked.

     [Skt. Hayagriva → த. அயக்கிரீவன்.]

அயக்கிரீவம்

 அயக்கிரீவம் ayakkirīvam, பெ. (n.)

   நூற்றெட்டுச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று; name of an upanisad.

     [Skt. hayagriva → த. அயக்கிரீவம்.]

அயக்கு-தல்

அயக்கு-தல் ayakkudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   அசைத்தல்; to shake, cause to tremble.

     “குன்றுக ளயக்கலின்” (கம்பரா. யுத்த. சேதுப. 10);.

     [அலை → அசை → அசக்கு → அயக்கு.]

அயங்கு-தல்

அயங்கு-தல் ayaṅgudal,    5 செ.கு.வி. (v.i.)

   விளங்குதல்; to shine, appear bright.

     “பல்ல யங்குதலை யேந்தினார்” (தேவா. 2.211 ; 4);.

     [வயங்குதல் = விளங்குதல். வயங்கு → அயங்கு.]

அயசு

அயசு ayasu, பெ. (n.)

   இரும்பு (சி.சி.4, 8, சிவாக்);; iron.

     [Skt. ayas → த. அயசு.]

அயணம்

அயணம் ayaṇam, பெ. (n.)

   செலவு; moving, going.

     “வெய்யோன் வடதிசை யயண முன்னி” (சீவக. 85);.

த.வ. செல்லுகை.

     [Skt. ayana → த. அயணம்.]

அயதார்த்தம்

அயதார்த்தம் ayatārttam, பெ. (n.)

   மெய்யில்லாதது; untruth.

     “அயதார்த்த ஸ்மரணம்” (தர்க்கபா. 68);.

த.வ. மெய்யின்மை.

     [Skt a-yathartha → த. அயதார்த்தம்.]

அயதி

 அயதி ayadi, பெ. (n.)

   திருநாமப்பாலைக்கொடி (மூ.அ..);; oval-leaved China root.

அயத்தொட்டி

 அயத்தொட்டி ayattoṭṭi, பெ. (n.)

   வைப்பு நஞ்சு வகை; a prepared arsenic, said to be pieces of iron cauldron used in the preparation of cinnabar.

     [அயம் + தொட்டி.]

     [Skt. ayas → த. அயம்.]

அயனப்பிறப்பு

 அயனப்பிறப்பு ayaṉappiṟappu, பெ. (n.)

   கதிரவனின் வடதிசை, தென்திசைச் செலவுகளின் தொடக்கம்; commencement of the sun’s northward of southward course, time of the sun’s entry in kadagam or magaram.

     [அயனம் + பிறப்பு.]

     [Skt. ayana → த. அயனம்.]

பிற → பிறப்பு.

அயனமண்டலம்

 அயனமண்டலம் ayaṉamaṇṭalam, பெ. (n.)

   நிலநடுக் கோட்டிற்கு வடக்கும் தெற்குமுள்ள கதிரவன் செல்லும் பாதை; the ecliptic.

     [அயன(ம்); + மண்டலம்.]

     [Skt. ayana → த. அயன(ம்);.]

மண்டு → மண்டலம்.

அயனம்

அயனம் ayaṉam, பெ. (n.)

   1. வழி (பிங்.);; road, path, course.

   2. நிலநடுக்கோட்டிற்கு வடக்கிலாவது தெற்கிலாவது ஞாயிறு செல்லும் காலம்; time of the sun’s northward or southward course.

   3. அரையாண்டு (சூடா.);; half year.

   4. வடவழி, தென்வழிச் செல்லும்

   கதிரவன் காலம் (உத்தராயண தட்சிணாயன பிரவேச காலம்); (வேதாரணி. தோற்றச். 82);; solstitial point, the first in either kadagam or magaram.

த.வ. செலவு.

     [Skt. ayana → த. அயனம்.]

அயனாள்

அயனாள் ayaṉāḷ, பெ. (n.)

   1. நான்முகனின் நாள்; a day of Brahman,

   2. நான்முகனின் வாணாள்; age of Brahman.

     [அயன் + நாள்.]

     [Skt. aja → த. அயன்.]

அயன்

அயன் ayaṉ, பெ. (n.)

தரமுயர்ந்த சரக்கு

 a fine product.

     “இது நல்ல அயனான சரக்கு”

     [ஜ+ன்-அய்ன், ஐ-அழகு, உயர்வு]

 அயன்1 ayaṉ, பெ. (n.)

   1. பிறப்பில்லாதவ னெனக் கருதப்படும் நான்முகன்; Brahman, as not born.

   2. தயரதனின் தந்தை; name of the father of Dayarathan.

     “அயன் புதல்வன் தசரதனை” (கம்பரா. குலமுறை. 13);.

     [Skt. Aja → த. அயன்.]

 அயன்2 ayaṉ, பெ. (n.)

   அரசு நிலம்; government lands.

     [U. ain → த. அயன்.]

அயன்கணக்கு

 அயன்கணக்கு ayaṉkaṇakku, பெ. (n.)

   நான்முகன் வகுத்த நெறி; destiny ordained by Brahman.

     ‘அயன் கணக்கு ஆருக்குந் தப்பாது’.

     [அயன்+கணக்கு.]

     [Skt. aja → த. அயன்.]

கள் → கண் → கணக்கு.

அயன்சமா

 அயன்சமா ayaṉcamā, பெ. (n.)

   அரசால் குறிக்கப்பட்ட மொத்தவரி; amount of government demand on land.

     [U. ain + jama → த. அயன்சமா.]

அயன்சமாபந்தி

 அயன்சமாபந்தி ayaṉcamāpandi, பெ. (n.)

   ஆண்டு நிலவரித் தீர்மானம்; annual settlement of land revenue.

     [U. ain + jamabandi → த. அயன்சமாபந்தி.]

அயன்தரம்

 அயன்தரம் ayaṉtaram, பெ. (n.)

   நிலத்தின் முதன் மதிப்பு; original classification of lands in the Madras provinces at the time of survey according to their kinds of qualities.

     [அயன் + தரம்.]

     [U. ain → த. அயன்.]

அயன்தீர்வை

 அயன்தீர்வை ayaṉtīrvai, பெ. (n.)

   நிலவரி; tax on land.

     [அயன் + தீர்வை.]

     [U. ain → த. அயன்.]

அயன்மனைவி

 அயன்மனைவி ayaṉmaṉaivi, பெ. (n.)

   நான்முகன் மனைவியாகிய கலைமகள்; Kalaimagal wife of Brahman.

     [அயன் + மனைவி.]

     [Skt. aja → த. அயன்.]

அயன்முப்பு

 அயன்முப்பு ayaṉmuppu, பெ. (n.)

   தலைப் பிண்டம் (குழூஉக்குறி); ; the first-born foetus (சா.அக.);.

அயன்மை

அயன்மை ayaṉmai, பெ. (n.)

   உறவன்மை; absence of kinship, non-relationship.

     “எமக்கிவன் யாரென்று அயன்மை கூறுதலாம்” (தொல். பொருள். சுற். 6, நச். உரை);.

     [அயல் + மை (ப.பெ. ஈறு);.]

அயன்மொழி

 அயன்மொழி ayaṉmoḻi, பெ. (n.)

   ஒரு மொழி பேசும் இடத்திற்கு அப்பால் பேசப்படும் வேற்றுமொழி; foreign language.

     [(அயல்+மொழி]

அயபானி

 அயபானி ayapāṉi, பெ. (n.)

   ஒரு மருந்துச் செடி (மூ.அ.);; a medicinal herb.

     [Braz. ayapana → த. அயபானி.]

அயப்பனை

 அயப்பனை ayappaṉai, பெ. (n.)

அயபானி பார்க்க;see aya-pani.

அயமகம்

அயமகம் ayamagam, பெ. (n.)

   குதிரை வேள்வி; horse – sacrifice.

     “அயமக மாயிரத்துக் கேனும்” (நல். பாரத. தீர்த்தம. 18);.

     [Skt. haya-medha → த. அயமகம்.]

அயமரம்

 அயமரம் ayamaram, பெ. (n.)

   அலரி (பிங்.);; oleander, as death to horse.

     [Skt. haya-måra → த. அயமரம்.]

அயமவாதி

 அயமவாதி ayamavāti, பெ. (n.)

அயவாசி பார்க்க;see ayaváši.

அயமி

 அயமி ayami, பெ. (n.)

   வெண்கடுகு (மலை.);; white mustard.

அயமுகம்

அயமுகம் ayamugam, பெ. (n.)

   ஒன்பது இருக்கை வகைகளுள் ஒன்றான திரிதரவில்லா விருக்கை (சிலப். 8:26, உரை);; a posture, one of nine posture.

     [அயம் + முகம்.]

     [Skt. haya → த. அயம்.]

அயமேதம்

அயமேதம் ayamētam, பெ. (n.)

   குதிரை வேள்வி (உத்தரரா. அசுவமே. 7);; horse – sacrifice.

     [Skt. haya-méda → த. அயமேதம்.]

அயம்

அயம் ayam, பெ. (n.)

   1. பள்ளம்; depression, ditch, valley.

     “அயமிழி யருவி” (கலித். 46;9);.

   2. குளம் (பிங்.);; tank, pond.

     “அயத்துவளர் பைஞ்சாய்” (அகநா. 62;1);.

   3. சுனை (அகநா. 38, உரை);; spring on a mountain.

   4. நீர் (பிங்.);; water.

   5. மழைநீர் (பச்.மூ.); ; rain water.

   6. சேறு (உரி.நி.);; mud, mire.

     [பள் → பய் → பயம் → பயம்பு = பள்ளம். பயம் → அயம். இனி, பள்ளம் → பய்யம் → பயம் என்றுமாம்.]

 அயம் ayam, பெ. (n.)

   சிறுபூலா; a shrub.

 அயம் ayam, பெ. (n.)

   ஐயம் (சந்தேகம்);; doubt.

     “மன்னவன்…அயம தெய்தி” (திருவாலவா. 33;15);.

     [ஐயம் → அயம்.]

 அயம்1 ayam, பெ. (n.)

   விழா (அக.நி.);; festival.

     [Skt. aya → த. அயம்.]

 அயம்2 ayam, பெ. (n.)

   1. இரும்பு (பிங்.);; iron.

   2. அரப்பொடி (தைலவ. தைல. 6);; iron flings.

     [Skt. ayas → த. அயம்.]

 அயம்3 ayam, பெ. (n.)

   குதிரை (பிங்.);; horse.

     [Skt. haya → த. அயம்.]

 அயம்4 ayam, பெ. (n.)

   அலரி (மூ.அ.);; oleander.

     [Skt. haya-måra → த. அயம்.]

அயம்பற்றி

 அயம்பற்றி ayambaṟṟi, பெ. (n.)

   காந்தம்; magnet, as an iron-attracter.

     [அயம் + பற்றி.]

     [Skt. ayas → த. அயம்.]

பற்று → பற்றி.

அயரப்போடு-தல்

அயரப்போடு-தல் ayarappōṭudal,    19 செ. குன்றாவி. (v.t.)

அசரப்போடு-தல் பார்க்க;see asara-p-pôdu-.

     [அயர + போடு.]

அயரவிடு-தல்

அயரவிடு-தல் ayaraviḍudal,    18 செ.குன்றாவி. (v.t.)

அயரப்போடு-தல் பார்க்க;see ayara-ppõdu-.

அயர்-தல்

அயர்-தல் ayartal,    2 செ.கு.வி. (v.i.)

   1. விளையாடுதல்; to play, sport.

     “மடக்குறு மாக்களோ டோரை யயரும்” (கலித். 82 ;9);.

   2. சோர்தல், தளர்தல், இளைத்தல்; to become weary, to be fatigued, to be exhausted.

     “அடியேனு மயலார் போல வயர்வேனோ” (திரு வாச. 32 ;9);.

   3. உணர்வழிதல்; to lose consciousness, as in fainting, sleep, or drunkenness.

     “கள்ளுண் டயர்தல்” (கூர்மபு. திரிபுர. 28);. -, 2 செ.குன்றாவி. (v.t);

   1. மெய்வருந்திச் செய்தல்; to labour hard, to do dili-gently.

   2. செய்தல் (திவா.); ; to do, perform.

   3. தேர் செலுத்துதல்; to drive, as a chariot.

     “திண்டே ரயர்மதி” (கலித். 30;19);.

   4. வழிபடுதல்; to worship.

     “பலிசெய் தயரா நிற்கும்” (திருக்கோ. 348);.

   5. வேலன் வெறியாடுதல்; to dance under possession by Muruga.

     “வெறியயர் வியன்களம் பொற்ப” (அகநா. 98;19);.

   6. விழாக் கொண்டாடுதல்; to celebrate a festival.

   7. விருந்தோம்பல்; to entertain guests.

   8. விரும்புதல்; to desire.

     “செல வயர்தும்” (பு.வெ. ஒழிபு, 1);.

   9. மறத்தல்; to forget.

     “ஆயா தறிவயர்ந்து” (பு.வெ. 10, காஞ்சி, 2);.

ம. அயர்க்குக ; க., தெ. அசுரு.

     [ஐ = மென்மை, நுண்மை. ஐ → அய் → அயர். அய் → ஆய். ஆய்தல் = நுணுகுதல், வருந்துதல், அசைதல், இளைத்தல்.]

அயர்-த்தல்

அயர்-த்தல் ayarttal,    4 செ.குன்றாவி. (v.t.)

   மறத்தல்; to forget.

     “அங்கவ டன்றிற மயர்ப்பா யென்றே” (மணிமே. 19 ; 9);.

அயர்க்கு-தல்

அயர்க்கு-தல் ayarkkudal,    4 செ.குன்றாவி. (v.t.)

   மறத்தல்; to forget.

     “தன்னை யயர்க்குதல்” (உபதேசகா. சிவபுண்ணி. 28);.

அயர்ச்சி

அயர்ச்சி ayarcci, பெ. (n.)

   1. செய்கை; deed, action, performance.

     “சாறயர்ச்சி விளைப்பன” (சீகாழித். பூந்தரா. 4);.

   2. களைப்பு, சோர்வு; fatigue, weariness.

   3. மறதி; forgetfulness.

     “அயர்ச்சி மனத்திலறுத்து” (சைவச. பொது. 372);.

   4. மனக் கவற்சி; anxiety.

     “அயர்விலர்” (புறநா. 182;6);.

   5. வருத்தம்; distress.

     “மறைந்து போயினா ரெனச்சிறி தயர்ச்சியு மனத்தினிறைந்த தோர் பெருங்கவற்சியை” (திருவிளை. இரசவா.27);.

   6. வலுக்குறைவு; weakness.

   7. உணர்வழிவு; unconsciousness.

   8. சோம்பு (சங்.அக.); ; slackness, lethargy.

   9. வெறுப்பு (சங்.அக.); ; dislike, disgust, aversion.

ம. அயர்ச்ச

     [அயர் → அயர்ச்சி.]

 அயர்ச்சி ayarcci, பெ. (n.)

   அழலை; heat (சா.அக.);.

ம. அயல்

     [ஒருகா. அழற்சி → அயர்ச்சி.]

அயர்தி

அயர்தி ayarti, பெ. (n.)

   1. இளைப்பு; feebleness, languor.

   2. களைப்பு, சோர்வு, தளர்வு; weariness, fatigue.

   3. உணர்வழிவு; fainting, loss of consciousness.

   4. மறதி; forgetfulness.

   5. சோம்பு (சங்.அக.); ; slack-ness.

ம. அயர்தி ; க. அயலு ; தெ. அசுரு.

     [அயர் + தி (தொ. பெ. ஈறு);.]

அயர்திமறதி

 அயர்திமறதி ayardimaṟadi, பெ. (n.)

   மறப்புத் தன்மை; forgetfulness.

அயர்திமறதியாயிராதே (உ.வ.);.

மரபிணைமொழி

அயர்திமறதி என்பது, எதுகை நோக்கித் தவறாக அரதிமறதியென்று உலக வழக்கில் வழங்கிவருகின்றது.

அயர்த்ததுமறந்தது

 அயர்த்ததுமறந்தது ayarddadumaṟandadu, பெ. (n.)

   மறந்துபோன பொருள் அல்லது செய்தி; forgotten thing or matter.

அயர்த்தது மறந்தது ஏதேனுமிருந்தால் இப்பொழுதே பார்த்துக்கொள்ளுங்கள் (உ.வ.);.

     [மரபிணை மொழி (idiomatic words-in pairs);.]

அயர்ந்ததூக்கம்

 அயர்ந்ததூக்கம் ayarndatūkkam, பெ. (n.)

   உழைப்பினாலுங் களைப்பினாலும் ஏற்பட்ட மெய்ம்மறந்த தூக்கம்; deep sleep caused by hard labour and exhaustion.

அயர்ப்பு

அயர்ப்பு ayarppu, பெ. (n.)

   மறப்பு; forgetfulness.

     “அயர்ப்பிலா தானே யோலம்” (பெரியபு. இயற். 29);.

ம. அயர்ப்பு

     [அயர் + பு (தொ.பெ. ஈறு);.]

அயர்வு

அயர்வு ayarvu, பெ. (n.)

   1. சோர்வு (நாநார்த்த.);, தளர்வு; fatigue, weariness.

     “களைந்து களைந்தயர் வுறுவார்” (சேதுபு. நாட்டு. 62);.

   2. சோம்பு; slackness, lethargy.

     “அயர்வில் காலன்” (ஞானவா. ஞானவிண். 20);.

   3. மனக்கவற்சி; anxiety.

     “உலகுடன் பெறினுங் கொள்ளல ரயர்விலர்” (புறநா. 182;6);.

   4. வருத்தம் (நாமதீப.);; suffering.

     “அயர் வன்றியில்” (ஞானவா. புசுண். 84);.

   5. அவலம்; distress.

   6. மயக்கம் (நாநார்த்த.);; dizziness, fainting, swooning.

   7. மத்தம்; suspension of sensibility.

   8. வெறுப்பு; disgust, aversion.

ம. அயவு

     [அயர் + வு (தொ. பெ. ஈறு, ப. பெ. ஈறு].

     [அவு → வு.]

அயர்வுயிர்-த்தல்

அயர்வுயிர்-த்தல் ayarvuyirttal,    4 செ.கு.வி. (v.i.)

   1. இளைப்பாறுதல்; to rest.

     “திருவயர் வுயிர்க்கு மார்பன்” (சூளா. துற. 23);.

   2. சிந்துதல்; to be spilled.

     “கள்ளயர் வுயிர்க்குஞ் செழுங்கமல மென்பொகுட்டு வள்ளல்” (கூர்மபு. அட்ட. 8);.

   3. சோர்வு நீங்குதல்; to be relieved of fatigue, to recoup one’s energy.

     “குருகயர் வுயிர்க்குஞ் சோலை” (சூளா. துற. 23);.

   4. மயக்கந் தீர்தல்; to recover from stupor.

   5. வருத்தந் தீர்தல்; to be relieved of suffering.

     [அயர்வு + உயிர். உயிர்த்தல் = வெளிப்படுத்துதல், தளர்வு அல்லது மயக்கந் தீர்தல்.]

அயறு

அயறு ayaṟu, பெ. (n.)

   புண்வழலை, புண்ணின் பொருக்கு; scab of a wound, excrescence resulting from a sore.

     “அயறுசோரு மிருஞ்சென்னிய” (புறநா. 22;7);.

ம. அயறு

     [ஒருகா. அளறு → அயறு. இனி, அசறு → அயறு என்றுமாம்.]

அசறு பார்க்க;see asaru.

அயற்காரண அணி

அயற்காரண அணி ayaṟkāraṇaaṇi, பெ.(n.)

   ஒருவன் முயலும் தொழிலின் பயன் அத் தொழிலாற் கைகூடாது வேறொன்றாற் கை கூடுவதாகக் கூறும் அணி (தண்டி 71); (சமாகிதம்);; figure of speech in which an effect is described as proceeding from something other than its natural cause.

     [அயல்+காரணம்+அணி]

அயற்படு-தல்

அயற்படு-தல் ayaṟpaḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   நீங்கிப்போதல்; to leave, depart, disappear.

     “இயற்படு மானமு மிகலு நாணமு மயற்பட” (கந்தபு. மகேந், சயந்தன்பு. 5);.

     [அயல் (பக்கம், அப்பால்); + படுதல் (சேர்தல், செல்லுதல்);.]

அயலகத்தான்

அயலகத்தான் ayalagattāṉ, பெ. (n.)

   1. அடுத்தவீட்டுக்காரன்; next door neighbour.

   2. பக்கத்திலுள்ளவன்; neighbour.

   3. வெளியூரான்; Stranger.

ம. அயலூதி, அயல்காரன்.

     [அயல் + அகம் (விடு, இடம்); + அத்து (சாரியை); + ஆன் (ஆ.பா. ஈறு);.]

அயலகம்

__,

பெ. (n.);

   1. அடுத்த வீடு; next house.

   2. பக்கம்; neighbourhood

     [அயல் + அகம்.]

அயலத்தான்

 அயலத்தான் ayalattāṉ, பெ. (n.)

அயலகத்தான் பார்க்க;see ayal-agattan.

அயலன்

 அயலன் ayalaṉ, பெ. (n.)

அயலவன் பார்க்க;see ayalavan.

அயலவன்

அயலவன் ayalavaṉ, பெ. (n.)

   1. பக்கத்தான்; neighbour.

   2. வேற்றூரான், உறவல்லாதவன்; stranger.

   3. நொதுமலான் (சூடா.); ; a neutral.

ம. அயலான்

     [அயல் + அவன் (ஆ.பா. ஈறு);.]

அயலான்

அயலான் ayalāṉ, பெ. (n.)

   1. பக்கத்தான்; neighbour.

   2. உறவல்லாத வெளியூரான்; stranger.

   3. பகைவன்; enemy.

     “அயலா ருரி லஞ்சிலே யொன்றை வைத்தான்” (கம்பரா. பால. மிகைப். 10);.

ம. அயலான், அயவன்.

     [அயல் + ஆன் (ஆ.பா. ஈறு);.]

அயலார்

அயலார் ayalār, பெ. (n.)

   1. பக்கத்தார்; neighbours.

     “அன்புடையன் கொல்லென் றயலா ரெடுத்துரைப்ப” (கந்தபு. யுத்த. இரணியன்பு. 8);.

   2. ஏவலாளர்; servants.

     “தன் பன்னியொடு மயலார் சுற்றந் தமரோடும்” (திருவிளை. உலவர்க்கோ. 18);.

   3. உறவல்லாத பிறர், வேற்றிடத்தார்; strangers.

     [அயல் + ஆர் (ப.பா. ஈறு);.]

அயலார்காட்சி

அயலார்காட்சி ayalārkāṭci, பெ. (n.)

   கண்டோர் சான்று (Cola. II. ii, 258);; testimony of eye witnesses.

     ”அயலார் தங்கள் காட்சியில்” (பெரியபு. தடுத்தாட். 56);.

அயலாள்

 அயலாள் ayalāḷ, பெ. (n.)

   உறவல்லாத வெளியூரா-ன்-ள்; stranger.

     [அயல் + ஆள்.]

அயலி

அயலி ayali, பெ. (n.)

   1. வெண்கடுகு (மலை.);; white mustard, Brassica alba.

   2. சிற்றரத்தை; lesser galangal, Alpinia galanga (mimor); (சா.அக.);.

அயலிலாட்டி

அயலிலாட்டி ayalilāṭṭi, பெ. (n.)

   அடுத்த வீட்டுப் பெண்; woman of the next house.

     “அமுத முண்கநம் மயலி லாட்டி” (நற். 65);.

     [அயல் + இல் (வீடு); + ஆட்டி (பெண்டு);. ஆள் (பொ.பா.); – ஆளன் (ஆ.பா.); – ஆட்டி (பெ.பா.);. ஆளன் = ஆடவன். ஆட்டி = பெண்டு. ஆள் + தி (பெ.பா.ஈறு); – ஆட்டி. அத்தி (தாய்); → தி (பெ.பா. ஈறு); – ஒ.நோ ; மறத்தி, குறத்தி, வண்ணாத்தி.]

அயலுரை

அயலுரை ayalurai, பெ. (n.)

   1. அயலாரொருப்பட்ட வுரை; resolute talk of neighbours.

   2. இயைபில்லாத பேச்சு; irrelevant talk.

     “கயல்புரை கண்ணியை

அயலுரை யுரைத்தது” (திருக்கோ. 137, கொளு);.

     “அயலுரை – தலைமகட்கியாதும் இயைபில்லாத வுரை ;

அயலா ரொருப்பட்ட வுரை யென்றுமாம்” (க்ஷெ உரை);.

     [அயல் (அயலார்); + உரை (பெண்கோடற் பேச்சு);.]

அயலை

 அயலை ayalai, பெ. (n.)

அயிலை பார்க்க;see ayilai.

அயலோர்

அயலோர் ayalōr, பெ. (n.)

   1. பக்கத்தவர்; neighbours.

   2. மற்றையோர்; others.

     “ஆரியர் பேணுவ தாகி யயலோர்க் கெல்லா மரிதான” (ஞானவா. முமூட்சு 17);.

     [அயலார் → அயலோர்.]

அயல்

அயல் ayal, பெ. (n.)

   1. அருகிடம்; neighbourhood, adjacent place.

     “தனக்கயலின் வந்த பரிசனத்தை” (கந்தபு. உற்பத். காம தக. 65);.

   2. இடம் (பிங்.);; place.

   3. வெளியிடம், புறம்பு; outside.

     “பொய்வார்த்தை சொல்லிலோ திருவருட் கயலுமாய்” (தாயு. சுக. 3);.

   4. வேற்றினமானது, வெளிநாட்டது; that which is foreign or alien.

     “ஆருற வெனக்கிங் காரய லுள்ளார்” (திருவாச. 22;8);.

   5. வேறு; that which is different.

     “விரியுருவா யயல்போலாய்” (ஞானவா. விரதசூ. 3);.

-, இடை. (part.);

   இடப்பொருளுருபு; a locative ending.

     “தலைக்குவட்டயன்மதி தவழு மாளிகை” (கம்பரா.அயோத் நகர்நீங். 193);.

ம. அயல்

     [அள்ளுதல் = நெருங்குதல், செறிதல். அள் → அய் → அயல்.]

 அயல் ayal, பெ. (n.)

   காரம், உறைப்பு; pungency.

அயல் கொளுத்துகிறது.

     [அழல் (நெருப்பு); → அயல், உறைப்புப் பொருள், நாவில் அல்லது உடம்பிற் படும்போது நெருப்பைப்போற் காந்துதலால், அழல் எனப்பட்டது.

அயல்-தல்

அயல்-தல் ayaltal,    11 செ.கு.வி. (v.i.)

   காரம் மிகுதல், உறைத்தல்; to be acrid, pungent.

குழம்பு அயலுகிறது (உ.வ.);.

     [அழல் → அயல்.]

அயவகண்டம்

 அயவகண்டம் ayavagaṇṭam, பெ. (n.)

   முசுமுசுக்கை; bristly bryonia, Bryonia scabra (சா.அக.);.

அயவணம்

 அயவணம் ayavaṇam, பெ. (n.)

   ஒட்டகம் (பிங்.);; camel.

     [Skt. ravana →. த. அயவணம்.]

அயவந்தி

அயவந்தி ayavandi, பெ. (n.)

   ஒரு சிவநகர்; a Saiva shrine.

     “அயவந்தி யமர்ந்தருளு மங்கணர்தம் கோயில் மருங்கணைந்து” (பெரியபு. திருஞான. 461);.

அயவம்

 அயவம் ayavam, பெ. (n.)

   ஒருவகைக் குடற்புழு; one of the seven species of worms in the intestines (சா.அக.);.

அயவல்லி

 அயவல்லி ayavalli, பெ. (n.)

   கோவை; Indian caper, Bryonia grandis (சா.அக.);.

அயவாகனன்

 அயவாகனன் ayavākaṉaṉ, பெ. (n.)

   ஆட்டை யூர்தியாகக் கொண்ட கடவுளெனக் கருதப்படும் தீக்கடவுள் (சூடா.);; Agni as riding on a goat,

     [Skt. aja+vahana → த. அயவாகனன்.]

அயவாசி

 அயவாசி ayavāci, பெ. (n.)

   வசம்பு (பச்.மூ.);; sweet flag.

மறுவ. அயவாரி, அயவாரிதி.

அயவாரி

அயவாரி ayavāri, பெ. (n.)

   1. அயவாசி பார்க்க;see ayavaşi.

   2. செந்நாகதாளி; crimsonflowered prickly pear, Opuntia monocantha (சா.அக.);.

 அயவாரி ayavāri, பெ. (n.)

   வசம்பு; sweet-flag.

     [Skt. aja+ari → த. அயவாரி.]

அயவாரிதி

 அயவாரிதி ayavāridi, பெ. (n.)

அயவாசி பார்க்க;see ayavaši.

அயவாருகம்

 அயவாருகம் ayavārugam, பெ.. (n.)

   செந்நாயுருவி; a red species of the plant, Achyranthes aspera (சா.அக.);.

அயவி

 அயவி ayavi, பெ. (n.)

   சிற்றரத்தை (மலை.);; lesser galangal, Alpinia galangal (minor); (சா. அக.);.

மறுவ. அயலி, அயவிகம்.

அயவிகம்

 அயவிகம் ayavigam, பெ. (n.)

அயவி பார்க்க;see ayavi.

அயவு

 அயவு ayavu, பெ. (n.)

   அகலம் (சிந்தா.நி.);; breadth, width.

அயவெள்ளை

 அயவெள்ளை ayaveḷḷai, பெ. (n.)

   மருந்துக்காகப் பொடியாக்கப்பட்ட இரும்பு; iron reduced to medicinal powder.

     [அயம் + வெள்ளை.]

     [Skt. ayas → த. அயம்.]

அயா

அயா ayā, பெ. (n.)

   1. தளர்ச்சி (திவா.);; languor, faintness.

   2. வருத்தம்; distress.

     “மானயா நோக்கியர் மருங்குல்” (சீவக. 1822);.

     [அயர் → அயா. அயர்தல் = தளர்தல், வருந்துதல்.]

அயாகம்

 அயாகம் ayākam, பெ. (n.)

   மத்தை (ஊமத்தை);; datura, Datura fastuosa.

மறுவ. அயிகம், அயிகா, அயிரகம்.

அயாசகம்

அயாசகம் ayācagam, பெ. (n.)

   கேளாது கிடைக்கும் இரவல்; unsolicited alms.

     “ஆய்ந்தார்க் கயாசகமுமாம்” (சைவச. பொது. 257);.

     [Skt. a-yacaka → த. அயாசகம்.]

அயாசிதபிச்சை

அயாசிதபிச்சை ayācidabiccai, பெ. (n.)

   இருந்தவிடத்திலேயே வரும் உணவை வாங்கியுண்ணும் இரவல் (சைவச. பொது. 405);; food obtained unsought by saintly men, who neither leave their place nor make any effort to obtain it.

     [Skt. a-yacita + bhiksa → த. அயாசித பிச்சை.]

அயாஞ்சி

 அயாஞ்சி ayāñji, பெ. (n.)

   நிலப்பனை, ஒரு மருந்துச்செடி; a medicinal herb, Curculigo orchioides (சா.அக.);.

மறுவ. அயிஞ்சி

அயாந்திரமாகம்

அயாந்திரமாகம் ayāndiramākam, பெ. (n.)

   1. கருங்காணம் (பச்.மூ); ; a species of horsegram (செ. அக.);.

   2. கருங்காக்கணம்; crow creeper, Clitoria ternatea (சா.அக.);.

ஒ.நோ ; அயித்திரம்

அயாரியம்

 அயாரியம் ayāriyam, பெ. (n.)

   நெட்டிச்செடி; cork-plant (சா.அக.);.

அயாலி

 அயாலி ayāli, பெ. (n.)

   கோரை (பச்.மூ.);; sedge (செ.அக.); – a species of grass, Cyperus (சா. அக.);.

அயாவு-தல்

அயாவு-தல் ayāvudal,    5 செ.கு.வி. (v.i.)

   வருந்துதல்; to be distressed.

     “மானயா நோக்கியர்” (சீவக. 1822);.

ம. அயவு

     [அயர் (தளர்); → அயா (வருத்தம்); → அயாவு.]

அயாவுயிர்-த்தல்

அயாவுயிர்-த்தல் ayāvuyirttal,    4 செ.கு.வி. (v.i.)

   1. நெட்டுயிர்த்தல், பெருமூச்செறிதல்; to take a deep breath, to sigh.

     “அழுதன ளேங்கி யயாவுயிர்த் தெழுதலும்” (மணிமே. 21;26);.

   2. இளைப்பாறுதல்; to take rest.

   3. மயக்கந் தெளிதல்; to recover from swoon.

   4. வருத்தந் தீர்தல்; to be relieved of distress or pain.

   5. கொப்புளித்தல்; to bubble up, burst forth.

     “நறவயா வுயிர்க்கு மாலை” (சீவக. 1125);.

-, 4 செ.குன்றாவி. (v.t.);

   இளைப்பாற்றுதல்; to give rest to, to refresh.

     “எம்மைச் சுமந்தயா வுயிர்த்த வாண்மை” (சீவக. 2947);.

     [அயர் → அயா (தளர்ச்சி, வருத்தம்); + உயிர். உயிர்த்தல் = மூச்சுவிட்டுத் தீர்தல்.]

அயிகம்

அயிகம் ayigam, பெ. (n.)

   1. அயாகம் பார்க்க;see ayagam.

   2. இலவு; silk-cotton tree (சா.அக.);.

அயிகா

 அயிகா ayikā, பெ. (n.)

அயிகம் பார்க்க;see; ayigam.

அயிக்கவாதசைவம்

அயிக்கவாதசைவம் ayikkavātasaivam, பெ. (n.)

   சிவனிய மதப் பிரிவுகளுலொன்று (சி. போ. பா அவை. பக். 22);; a Šaiva sect.

அயிக்கா மங்கலம்

 அயிக்கா மங்கலம் ayikkāmaṅkalam, பெ. (n.)

   நாகப்பட்டினம் வட்டத்திலுள்ள சிற்றுார்; name of the village in Nagapattinam taluk.

     [ஐ+அக்கா+மங்கலம்]

அயிங்கவலை

 அயிங்கவலை ayiṅgavalai, பெ. (n.)

   சூடைமீன்; bluish-green sardine fish, Clupea fimbria;(சா. அக.);.

அயிங்கிசை

அயிங்கிசை ayiṅgisai, பெ. (n.)

   துன்புறுத்தாமை; abstention from doing injury, esp. from killing.

     “ஆயிங்கிசை பொறையே மெய்ம்மை” (சிவதரு. சிவதரும. 3);.

     [Skt. a-himsa → த. அயிங்கிசை.]

அயிச்சுரியம்

 அயிச்சுரியம் ayiccuriyam, பெ. (n.)

   செல்வம்; wealth.

     [Skt. aisvarya → த. அயிச்சுரியம்.]

அயிஞ்சி

 அயிஞ்சி ayiñji, பெ. (n.)

அயாஞ்சி பார்க்க;see aydfji.

அயிஞ்சை

அயிஞ்சை ayiñjai, பெ. (n.)

   துன்புறுத்தாமை; abstention from doing injury, esp. from killing.

     “அயிஞ்சையே பரமதன்மம்” (பிரபோத. 18, 4);.

     [Skt. a-himsa → த. அயிஞ்சை.]

அயிதம்

அயிதம் ayidam, பெ. (n.)

   தீங்கு; harm.

     “இந்த மானியத்துக்கு அயிதம் பண்ணினவன்” (தெ.க.தொ.1 பக். 138);.

     [Skt. a-hita → த. அயிதம்.]

அயித்திரம்

அயித்திரம் ayittiram, பெ. (n.)

   1. கருங்காணம்; black horse-gram (செ.அக.);.

   2. கருங்காக்கணம்; crow creeper, Clitoria ternated (சா. அக.);.

அயிநார்

 அயிநார் ayinār, பெ. (n.)

ஐநார் பார்க்க;see; ainar.

அயிந்தா

 அயிந்தா ayindā, பெ.எ. (adj.)

   அடுத்து வருகிற; next, ensuring.

     “அயிந்தா பசலி” (உ.வ.);.

     [U. a-inda → த. அயிந்தர்.]

அயிந்திரதிசை

அயிந்திரதிசை ayindiradisai, பெ. (n.)

   கிழக்கு; the east quarter, as under the guardianship of Indira.

     “அயிந்திர திசையின்” (சீகாளத். பு. தென்கை. 64);.

த.வ. கீழ்திசை.

     [அயிந்திரம் + திசை.]

     [Skt. ayindra → த. அயிந்திர(ம்);.]

அயினாலிகம்

 அயினாலிகம் ayiṉāligam, பெ. (n.)

   செம்பசலை; red pursalane (சா.அக.);.

அயினி

அயினி ayiṉi, பெ. (n.)

   1. குழந்தை முதலில் உண்ணுஞ்சோறு; the first rice meal of a child.

     “பால்விட் டயினியு மின்றயின் றனனே” (புறநா. 77 ; 8);.

   2. உணவு; food.

     “நன்னற்கு மயினி சான்மென” (மலைபடு. 467);. ம. அயனி.

   3. பழஞ்சோற்று நீர் (இராசவைத்.);; water in which boiled rice had been kept soaked for some time.

தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் சிற்றிளமையைக் குழந்தைப் பருவம் போன்று உயர்வு நவிற்சியாகக் கூற விரும்பிய இடைக்குன்றுார்கிழார்,

     “கிண்கிணி களைந்தகா லொண்கழல் தொட்டுக்

குடுமி களைந்தநுதல் வேம்பி னொண்டளிர் நெடுங்கொடியுழிஞைப்பவரொடுமிலைந்து

குறுந்தொடி கழித்தகைச் சாபம் பற்றி

நெடுந்தேர்க் கொடுஞ்சி பொலிய நின்றோன்

யார்கொல் வாழ்கவவன் கண்ணிதார்பூண்டு

தாலி களைந்தன்று மிலனே பால்விட்

டயினியு மின்றயின் றனனே……’

என்று (புறநா. 77); பாடியிருத்தலால், குழந்தை பால்குடி மறந்து முதன்முதலாக வுண்ணுஞ் சோறு அயினி யெனப்பட்ட தென்று கொள்ள இடமுண்டு.

     [ஐ → அய் → அயில். அயில்தல் = குழந்தை ஐதாகவுண்ணுதல். ஐது = நுண்ணிது, சிறிது, மெல்லிது. அயில் → அயிலி → அயினி = மெல்லுணவு, உணவு, சோறு, சோற்றுநீர். இனி, அள்ளுதல் = நுகர்தல். அளைதல் = நுகர்தல். அள் → அய் → அயில் → அயிலி → அயினி என்றுமாம்.]

அயினிக்கீரை

 அயினிக்கீரை ayiṉikārai, பெ. (n.)

   மணலிக் கீரை; a bitter kitchen herb, Gisekia pharmacioides (சா.அக.);.

     [அயிலி + கீரை → அயினிக்கீரை.]

அயினிநீர்

 அயினிநீர் ayiṉinīr, பெ. (n.)

   மணமக்கள் முன் அல்லது ஒரு வெற்றியாளன் முன், கண்ணெச்சில் கழிக்குமாறு மங்கலப் பெண்டிர் சுற்றியெடுக்கும் சோறும் மஞ்சளும் சுண்ணாம்புங் கலந்த ஆலத்தி நீர்; water mixed with boiled rice, saffron and lime, waved before the bridal couple or a victor in any contest, in order to dispel the supposed effects of the evil eye.

அயினிநீர்சுழற்று-தல்

அயினிநீர்சுழற்று-தல் ayiṉinīrcuḻṟṟudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   மேற்கூறியவாறு ஆலத்தி சுற்றியெடுத்தல்; to perform the ceremony of waving saffron water, as said above.

     “போதுடயினிநீர் சுழற்றி” (கம்பரா. பால, மிதிலை. 51);.

அயின்றாள்

 அயின்றாள் ayiṉṟāḷ, பெ. (n.)

   அன்னை (அக.நி.);; mother.

     [ஒருகா. புளிக்குடித்தவள் என்னும் பொருளுள்ளதாயிருக்கலாம்; அன்றேல், என்றாள் என்பதன் கொச்சைத் திரியாயிருக்கலாம்.]

அயிப்பை

 அயிப்பை ayippai, பெ. (n.)

   ஒரு செடி; a shrub.

அயிமாசு

 அயிமாசு ayimācu, பெ. (n.)

   தேர்வு, ஆய்வு; examination, inspection.

     [U. azmaish → த. அயிமாசு.]

அயிம்சை

 அயிம்சை ayimcai, பெ. (n.)

அகிம்சை பார்க்க;see ahirnsai.

     [Skt. a-himsa → த. அயிம்சை.]

அயிரகம்

அயிரகம் ayiragam, பெ. (n.)

   1. மத்தங்காய்; அயிகம் பார்க்க;see ayigam.

   2. கருமத்தை (காரூமத்தை);; black variety of datura, Stramonium fastuosa (சா.அக.);, (சித்.அக.);—purple stramony (செ.அக.);.

அயிரம்

 அயிரம் ayiram, பெ. (n.)

   கண்டசருக்கரை (மூ.அ.);; candied sugar.

     [அயிர் = நுண்மை, நுண்மணல். அயிர் → அயிரம்.]

அயிராணி

அயிராணி ayirāṇi, பெ. (n.)

   1. அயிராவணனின் துணைவி அயிராவணி; consort of Airavanan.

   2. இந்திரனின் துணைவி (நாலடி. 381);; Indirani, Indran’s consort.

   3. மலைமகள் (திவா.);; Parvadi.

     [Skt. aja+rani → த. அயிராணி.]

அயிராவணம்

 அயிராவணம் ayirāvaṇam, பெ. (n.)

அயிராவதம் பார்க்க;see ayiravadam.

     [Skt. ayiravada → த. அயிராவணம்.]

அயிராவதன்

 அயிராவதன் ayirāvadaṉ, பெ. (n.)

   அயிராவதம் என்னும் யானையை ஊர்தியாகக் கொண்டவன், இந்திரன்; Indiran.

த.வ. தேவர்கோன்.

     [Skt. ayiravada → த. அயிராவதன்.]

அயிராவதம்

 அயிராவதம் ayirāvadam, பெ. (n.)

   இந்திரனின் ஊர்தி என்று சொல்லப்படும் ஐராவதம் என்னும் யானை; Indiran’s elephant.

த.வ. தேவர்கோன்யானை.

     [Skt. ayiravada → த. அயிராவதம்.]

அயிரி

 அயிரி ayiri, பெ. (n.)

   மீன்முள்ளை எடுக்க உதவுங் கத்தி; a knife, for picking out the bones of fish (W.);.

ம. அயிரி

     [அயில் = கூர்மை, அயில் → அயிர் → அயிரி.]

 அயிரி ayiri, பெ. (n.)

   நெட்டிப்புல்; long grass (செ.அக.);—pith-grass, Typha angustifolia (சா.அக.);.

அயிரியம்

 அயிரியம் ayiriyam, பெ. (n.)

   நெட்டி (மு.அ.);; sola pith, Aeschynomene aspera.

அயிரை

அயிரை ayirai, பெ. (n.)

   1. நுண்மணல்; fine sand.

     “அயிரை வார்கரைக் குடகடல்” (சூளா. கல்யா. 53);.

   2. ஒரு சிறு ஆற்றுமீன் அல்லது குளத்துமீன்; a small river-fish or tank-fish.

     “குமரியம் பெருந்துறை யயிரை மாந்தி” (புறநா. 67 ; 6);

   நொய்ம்மீன்; small edible freshwater fish, loach, sandy coloured Cobitio thermalis.

     “சிறுவெண் காக்கை…… அயிரை யாரும்” (ஐங்குறு. 164); (செ. அக.);. ம. அயிர.

   3. சேரநாட்டிலுள்ள ஓர் ஆறு; name of a river in the Céra country.

     “உருகெழு மரபி னயிரை மண்ணி” (சிலப். 28; 145);.

   4. சேரநாட்டிலுள்ள ஒரு மலை; name of a hill in the Céra country.

   9 miles west of Palani.

     “நேருயர் நெடுவரை யயிரைப் பொருந” (பதிற்றுப். 21;29);.

     [ஐ → அய் → அயிர் = நுண்மை. அயிர் → அயிரை = நுண்மணற் சிறுமீன், நுண்மணலாறு.]

அயிர்

அயிர் ayir, பெ. (n.)

   ஐயவுணர்வு; doubt, suspicion.

     “அயிரிற் றீர்ந்தபே ரறிஞரும்” (திருவிளை. திருநகர. 65);.

     [ஐ (ஐயம்); → அய் → அயிர்.]

 அயிர் ayir, பெ. (n.)

   1. நுண்மை (திவா.);; fineness, subtlety.

   2. நுண்மணல்; fine sand.

     “அயிர செறியிலைக் காயா அஞ்சனம் மலர” (முல்லைப். 92-3);. ம. அயிர்.

   3. சருக்கரை; Sugar.

     “அயிருந் தேனும்” (கம்பரா. பால. நாட்டு. 55);.

   4. கண்டசருக்கரை (திவா.);; candied sugar.

   5. புகைக்கும் ஒரு வெள்ளை நறுமணப்பொருள்; name of an imported white fragrant substance for burning.

     “குடதிசை மருங்கின் வெள்ளயிர் தன்னொடு” (சிலப். 4;35);.

   6. சிறுநீர் (இராசவைத்.);; urine.

   7. வெள்வேலம்பட்டை; the bark of white acacia, Acacia leucophloea (சா.அக.);.

   8. யானைக்காஞ்சொறி; a species of nettle, Tragia involucrata (சா.அக.);.

     [ஐ → அய் → அயிர். ஐ = மென்மை, நுண்மை.]

அயிர்-த்தல்

அயிர்-த்தல் ayirttal,    4 செ.கு.வி. (v.i)

   ஐயுறுதல் (சந்தேகித்தல்);; to suspect.

     “அருங்கடி வாயி லயிராது புகுமின்” (மலைபடு. 491);.

-, 4 செ.குன்றாவி, (v.t.);

   மறைத்தல்; to hide, conceal.

     “உயிரனை யாயயி ராம லுரை யெனக்கே” (தஞ்சைவா. 303); – (சங்.அக.);.

     [ஐ (ஐயம்); → அய் → அயிர். ஐயுறுதல் = சொல்லத் தகாதென்று மறைத்தல் (சொக்கப்ப நாவலர் உரை);.);

அயிர்க்கடு

அயிர்க்கடு ayirkkaḍu, பெ. (n.)

   யானைத் துறட்டி (சிந்தா. நி.220); ; goad for elephants.

     [அயில் = கூர்மை. கோடு = வளைவு, கொம்பு. அயில் + கோடு – அயிற்கோடு → அயிர்க்கடு.]

அயிற்கடு பார்க்க;see ayir-kadu.

அயிர்த்துரைத்தல்

அயிர்த்துரைத்தல் ayirtturaittal, பெ. (n.)

     (அகப்.); தலைமகளின் கண்சிவப்பு முதலியவற்றைத் தோழி கண்டு ஐயங்கொள்வதைக் கூறும் அகப்பொருட்டுறை;

 theme describing the maid’s doubts on seeing the reddened eyes, etc., of the heroine (களவியற்.);. 50);.

     [அயிர்த்து + உரைத்தல்.]

அயிர்ப்பு

அயிர்ப்பு ayirppu, பெ. (n.)

   1 ஐயுறவு; doubt, suspicion.

     “அண்ணலங் குமர ராமென் றயிர்ப்புறு மரசர் யாரும்” (பாரத. திரெள. 63);.

   2. (இசை); குறிஞ்சி யாழ்த்திறவகை (பிங்.);;     [அயிர் → அயிர்ப்பு.]

 அயிர்ப்பு ayirppu, பெ. (n.)

   திறப்பண்களின் ஒரு வகை. (113:119.);.; a musical note.

     [அயிர்+அயிர்ப்பு]

அயிற்கடு

 அயிற்கடு ayiṟkaḍu, பெ. (n.)

   யானைத்துறட்டி; goad for elephant.

     [அயில் = கூர்மை. கோடு = வளைவு, கொம்பு. அயிற்கோடு → அயிற்கடு.]

அயிற்பட்டை

 அயிற்பட்டை ayiṟpaṭṭai, பெ. (n.)

   வேலம் பட்டை; the bark of acacia tree, Acacia leucophloea (சா.அக.);.

     [அயில் + பட்டை.]

அயிற்பூகம்

 அயிற்பூகம் ayiṟpūkam, பெ. (n.)

   செந்நெல்லி; red gooseberry, Phyllanthus emblica.

அயிற்பெண்டு

அயிற்பெண்டு ayiṟpeṇṭu, பெ. (n.)

   வரிக் கூத்துவகை; a masquerade dance.

     “திரு விளக்குப் பிச்சி திருக்குன் றயிற்பெண்டு” (சிலப். 3 ;13, அடியார்க். உரை);.

     [அயில் + பெண்டு – அயிற்பெண்டு = ஒரு பெண் வேலேந்தியாடும் கூத்துபோலும்!]

அயிலம்

 அயிலம் ayilam, பெ. (n.)

   இலுப்பைவேர்ப் பட்டை (இராசவைத்.);; bark of the mahwa root (செ.அக.); — the root bark of the flower dropping tree, Bassia longifolia (சா.அக.);.

அயிலவன்

அயிலவன் ayilavaṉ, பெ. (n.)

   முருகன்; Lord Muruga, as bearing a javelin.

     “தினைகாவன் மயிலை மணந்த வயிலவ” (திருப்பு. 341);.

     [அயில் + அவன் (ஆ.பா. ஈறு);. அயிலவன் = வேற்படையுடையவன்.]

அயிலான்

 அயிலான் ayilāṉ, பெ. (n.)

அயிலவன் பார்க்க;see ayil-avan (உரி.நி.);.

     [அயில் + ஆன் (ஆ.பா. ஈறு);.]

அயிலாலி

 அயிலாலி ayilāli, பெ. (n.)

   செந்நாரை; a red crane, Tantalus gangeticus (சா.அக.);.

அயிலி

அயிலி ayili, பெ. (n.)

   சதுரக்கள்ளி (பிங்.);; square spurge.

   2. அயிலக்கீரை; a kind of edible greens.

     [அயில் → அயிலி.]

அயிலிடம்

 அயிலிடம் ayiliḍam, பெ. (n.)

   சிற்றரத்தை (மலை.);; lesser galangal.

அயிலுழவன்

 அயிலுழவன் ayiluḻvaṉ, பெ. (n.)

   போர் மறவன், வீரன் (உரி.நி.); ; warrior, as ploughman with javelin.

     [அயில் (வேல்); + உழவன் – அயிலுழவன் = வேலால் உழுபவன், பொருநன், மறவன்.]

அயிலேயம்

 அயிலேயம் ayilēyam, பெ. (n.)

   முசுமுசுக்கை (நாமதீப.);; bristly bryony, Bryonia scabra.

     [அயில் → அயிலை → அயிலையம் → அயிலேயம்.]

அயிலை

அயிலை ayilai, பெ. (n.)

   1. ஒரு கடல்மீன் வகை; a kind of sea-fish.

     “அயிலை துழந்த வம்புளி” (அகநா. 60;5);.

அயிலைக்கீரை

 அயிலைக்கீரை ayilaikārai, பெ. (n.)

   ஒரு வகைக் கீரை; a kind of edible greens.

அயில்

அயில் ayil, பெ. (n.)

   1. கூர்மை; sharpness.

     “ஆண்மகன் கையி லயில்வாள்” (நாலடி. 386);.

   2. வேல்; javelin, lance.

     “அயில்புரை நெடுங்கண்” (ஞானா. 33);. ம. அயில்.

   3. அறுவைசெய்யும் கத்தி; surgical knife, lancet.

     “அயிலரி யிரலை விழுப்புண்” (ஞானா. 30);.

   4. கலப்பை (சங்.அக.);; plough.

தெ. அயர.

   5. இரும்பு; iron.

     “அயிலாலே போழ்ப வயில்” (பழ. 8);. ம. அயில்.

   6. கோரை; sedge (W.);.

   7. முசுமுசுக்கை (பச்.மூ.);; rough bristly bryony, Bryonia scabra (சா.அக.);.

   8. வேலம்பட்டை (இராசவைத்);; babul bark.

     [அள் = கூர்மை, அள் → அய் → அயில் = கூர்மை, கூரிய பொருள்.]

 அயில் ayil, பெ. (n.)

   அழகு; beauty.

க. அய், அய்ன் ; தெ. அயன.

     [ஐ = அழகு. ஐ → அய் → அயில்.]

 அயில் ayil, பெ. (n.)

   விரை (அக.நி.); ; perfume.

     [அகில் = நறுமணக்கட்டை, நறுமணம்.

அகில் → அயில்.]

அயில்-தல்

அயில்-தல் ayiltal,    7 செ.குன்றாவி. (v.t.)

   1. உண்ணுதல்; to eat

     “அடிசி லயில்வோர் தம்மை” (திருவிளை. உக். வேல்வளை. 60);.

   2. பருகுதல், குடித்தல்; to drink.

     “பாலயி லுற்றிடு பொழுதத் தினில்” (கந்தபு. உற்பத். சரவண. 33);.

     [ஐ = நுண்மை, மென்மை. ஐ → அய் → அயில். அயிலுதல் = குழந்தை சிறிது சிறிதாக மெல்லுணவுண்ணுதல். அயில் → அயிலி → அயினி = குழந்தை முதன்முதலாக உண்ணுஞ் சோறு. இனி, அள்ளுதல் = நுகர்தல். அளைதல் = நுகர்தல், அள் → அய் → அயில் என்றுமாம்.]

அயில்வார்

அயில்வார் ayilvār, பெ. (n.)

   முதல் வரித் திட்டத்திற்குப் பின் வரியிடப்பட்ட நிலங்கள் (G. Sm. D. I. ii. 28);; lands assessed subsequent to the first settlement by the British.

     [U. ain-war → த. அயில்வார்.]

அயிவாவி

 அயிவாவி ayivāvi, பெ. (n.)

   செந்நாவி; red aconite, Aconitum ferox (சா.அக.);.

அயுதம்

அயுதம் ayudam, பெ. (n.)

   பத்தாயிரம் (இரகு. திருவவ. 1);; ten thousand.

     [Skt. ayuta → த. அயுதம்.]

அயுத்தம்

அயுத்தம் ayuttam, பெ. (n.)

   தகுதியின்மை; unfitness, incongruity.

     “அயுத்தமெனுஞ் சுரிகை யொருபால் வீக்கி” (பிரபோத. 3:11);.

த.வ. பொருந்தாமை.

     [Skt. a-yukta → த. அயுத்தம்.]

அயோகவன்

அயோகவன் ayōkavaṉ, பெ. (n.)

   நான்காம் வருணத்தா (சூத்திர);னுக்கும் வணிக (வைசிய);ப் பெண்ணுக்கும் பிறந்தவன் (சைவச. பொது. 467, உரை);; son of a sudra man and vaisya woman.

     [Skt. a-yogava → த. அயோகவன்.]

அயோக்கியதை

 அயோக்கியதை ayōkkiyadai, பெ. (n.)

   தீயொழுக்கம்; bad conduct, dishonesty.

     [Skt. a-yogya-ta → த. அயோக்கியதை.]

அயோக்கியன்

அயோக்கியன் ayōkkiyaṉ, பெ. (n.)

   1. நம்புதற்கேலா நடத்தையன்; unreliable person.

   2. ஒழுக்கமற்றவன்; dishonest.

     [Skt. a-yogya → த. அயோக்கியன்.]

அயோக்கியம்

 அயோக்கியம் ayōkkiyam, பெ. (n.)

   தகாதது; that which is unsuitable, improper.

த.வ. ஒழுக்கமின்மை.

     [Skt. a-yogya → த. அயோக்கியம்.]

அயோத்தி

அயோத்தி ayōtti, பெ. (n.)

   கோசலர்களின் தலைநகர் (கம்பரா. கையடை.7);; name of the capital of the kingdom of Kosala.

     [Skt. ayodhya → த. அயோத்தி.]

அயோனிசன்

 அயோனிசன் ayōṉisaṉ, பெ. (n.)

   பிறப்புறுப்பு வழியாய் பிறவாதவன்; one not born from the womb.

     [Skt. a-yoni-ja → த. அயோனிசன்.]

அய்

 அய் ay, பெ. (n.)

   விலங்கினங்கள் குட்டிகளை ஈன்ற குட்டிகளின் மேல் இருக்கும் வழுவழுப்பான ஈரப்பசை; moisture on the skin of the new born animal.

     “ஈன்று, அய் உலரவில்லை அதற்குள் என்ன தலைப்பிறட்டு பண்ணுகிறது பார் அந்தக் கன்னுக்குட்டி”;

     [அள்+அய்]

அய்யனார்

 அய்யனார் ayyaṉār, பெ. (n.)

   நாட்டுப்புற மரபில் மழைக்கடவுளாகக்கருதப்பெறும் தெய்வம்; folk deity of rain.

     [ஐயன்+ஆர்]

அய்யனேரி

 அய்யனேரி ayyaṉēri, பெ. (n.)

   திருத்தணி வட்டத்திலுள்ள சிற்றுர்; a village in Tiruthani Taluk.

     [ஜயன்+ஏரி]

அய்யன்கொம்பு

 அய்யன்கொம்பு ayyaṉkompu, பெ. (n.)

   தாயின் கால்கட்டை விரலில் குழந்தைகள் கை வைத்து விளையாடுதல்; child”s play.

     [ஐய்யன்-அய்யன்+கொம்பு]

அய்யும் பொய்யும்

 அய்யும் பொய்யும் ayyumpoyyum, பெ. (n.)

   உண்மையும் புனைவும்; truth and false.

     [ஜயும்+பொய்யும்]

அர

அர ara, பெ. (n.)

   பாம்பு; snake.

     “பையர விழுங்கப்பட்ட பசுங்கதிர் மதியம்” (சீவக. 1540);.

ம. அரவு

     [அர் → அர → அரவு. அரவுதல் = வருத்துதல். அர் → அரா → அர.]

அரகசா

 அரகசா aragacā, பெ. (n.)

   நறுமணக் குழம்பு வகை (இ.வ.);; a spiced unguent.

     [H. argaja → த. அரகசா.]

அரகண்டநல்லூர்

 அரகண்டநல்லூர் arakaṇṭanallūr, பெ. (n.)

   அரையணி நல்லூர் பார்க்க; see arayani mullur

     [அரையணி நல்லூர்→அரகண்ட நல்லூர்]

அரகண்டரி

 அரகண்டரி aragaṇṭari, பெ. (n.)

   பாசிப்பயறு; green gram (சா.அக.);.

அரகதி

 அரகதி aragadi, பெ. (n.)

   செவ்வல்லி; red lily, Nymphae rubra (சா.அக.);.

அரகத்

அரகத் aragat, பெ. (n.)

   மனவருத்தம் விளைக்கும் பேச்சு (தாசீல்தார்நா.15);; painful talk.

     [Ar. Harkat → த. அரகத்.]

அரகம்

அரகம் aragam, பெ. (n.)

   1. ஒரு பூண்டு; a plant, Blyxa ottandra.

   2. கம்பிழ்; a plant, Gardenia enneandra (சா.அக.);.

அரகர

அரகர aragara, பெ. (n.)

   வழிபாட்டில் அல்லது வழுத்திற் சிவனை விளிக்கும் விளிப்பெயர்; address to Siva in invocation or praise.

     “அரசுர முழக்கஞ் செய்வோர்” (திருவிளை. இந்திரன் முடி. 17);.

     [அரன் = சிவன். அரன் → அர (விளி);. அர + அ – அரவர (விளியடுக்கு); → அரகர. வ → க, போலி.]

அழிப்பவன் என்று பொருள்படும்

     ‘ஹர’ என்னும் சமற்கிருதச்சொல் வேறு ; செவ்வண்ணன் என்று பொருள்படும்

     ‘அரன்’ என்னும் தமிழ்ச்சொல் வேறு.

அரன் பார்க்க;see aran.

அரக்ககத்தி

 அரக்ககத்தி araggagatti, பெ. (n.)

   சிற்றகத்தி; a small variety of agatti tree, Cassia cuspidata alias C. aegyptiaca (சா.அக.);.

அரக்கக்குரியான்

 அரக்கக்குரியான் arakkakkuriyāṉ, பெ. (n.)

   மருள்; bewilderment of the mind (சா.அக.);.

அரக்கன்

அரக்கன் arakkaṉ, பெ. (n.)

   1. ஆறடிக்குமேல் வளர்ந்து பருத்தவுடம்பும், பெரும்பாலும் கருத்த மேனியும், பெருவலிமையும் கொண்டு, பிறரை வருத்தும் நாகரிகப் பண்பாடற்ற மாந்தன்; inhumanly wicked person of gigantic stature.

   2. பண்டைக்காலத்தில் இலங்கையிலும் பிறவிடங்களிலும் இருந்ததாகத் தவறாகக் கருதப்படும் ஒருவகைப் பூதமாந்தரினத்தான்; one of an anthropomorphous race of demons erroneously considered to have inhabited Ceylon and other places in pre-historic times.

     “அரக்கரோரழிவு செய்து கழிவரேல்” (கம்பரா. கிட்கிந்தா. வாலிவதை. 87);.

   3. பலரைத் துன்புறுத்துங் கொடியவன்; one who harasses and ruins many.

ம. அரக்கன்; பிராகி. ரக்க.

     [அரக்குதல் = வருத்துதல், அழித்தல். அரக்கு → அரக்கன்.]

 அரக்கன் arakkaṉ, பெ. (n.)

   அசுரன் (சுரர் என்னும் தேவர்க்குப் பகைவராகவும், வானத்தில் இயங்கும் பதினெண் கணத்தாருள் ஒரு கணத்தாராகவும் சொல்லப்படும் அசுரர் வகுப்பினன்);; one of the class of demons called Asuras warring with the gods and forming one of the 18 classes of celestial hosts.

     “ஆம்பன்முக வரக்கன்” (கல்லா. கண. 19);.

பதினெண்கணம் என்பது ஆரியத் தொன்மப் பகுப்பு. தொன்மம் (த.); என்பது புராணம் (வ.);.

பதினெண்கணத்துள் அரக்கரும் அசுரரும் வெவ்வேறு கணத்தாராகவே கூறப்படுகின்றனர்.

     ‘நிசாசரர்’ என்னும் பெயர் அவ்விரு கணத்தார்க்கும் பொதுவாயிருப்பது, அவ்வேற்றுமையை விலக்கவில்லை.

     “அமரர் சித்தர் அசுரர் தைத்தியர்

கருடர் கின்னரர் நிருதர்கிம் புருடர்

காந்தருவர் இயக்கர் விஞ்சையர் பூதர்

பசாசர் அந்தரர் முனிவர் உரகர்

ஆகாய வாசியர் போகபூ மியர்எனப்

பாகு பட்டன பதினெண் கணமே” (பிங், 1 ; 92);.

இதில் அசுரர், பூதர், முனிவர், உரகர் என்பன தமிழ்ச்சொற்கள். கருடர் என்பது கலுழர் என்பதன் திரிபு.

நிருதர் என்பவர் தமிழில் அரக்கர் அல்லது இராக்கதர் என்றே குறிக்கப்படுவர். அசுரரும் அரக்கரும் இருவேறு கணத்தாரென்றே திவாகரத்திலும் பிங்கலத்திலும் குறிக்கப்பட்டுள்ளனர். பிங்கலம் நிருதரையும் அரக்கரையும் வெவ்வேறாகப் பிரித்துக் கூறியிருப்பினும், அசுரரை அவரொடு மயக்கவில்லை. அதனால், அரக்கன் என்னுஞ் சொல்லை அசுரன் என்னும் பொருளில் ஆள்வது தவறேயாம்.

அரக்கன் என்னுஞ் சொல்லும் பொருளும் தமிழாதலால், அச் சொல் இங்குக் கொள்ளப்பட்டது.

ராக்ஷத என்னும் வடசொல்லின் திரிபான இராக்கதன் என்பதன் சிதைவே அரக்கன் என்பது தவறாகும்.

இராக்கதன் பார்க்க;see irakkadan.

 அரக்கன் arakkaṉ, பெ. (n.)

   சூடுபோடுதற்குரிய மாடு (யாழ்ப்.);; cattle for branding (J.);

அரக்கப்பரக்க

 அரக்கப்பரக்க arakkapparakka, வி.எ. (adv.)

படப்படப்பான வேகத்துடன்,

 hasty.

அவன் எந்த வேலைகளையும் கடைசி நேரத்தில் அரக்கப் பரக்கத்தான் செய்வான்”(வ.சொ.அக);.

     [அரக்க+பரக்க]

அரக்கம்

அரக்கம் arakkam, பெ. (n.)

   1. அரத்தம்; blood.

   2. அவலரக்கு; shellac.

     “அரக்கத்தன்ன நுண்மணற் கோடு கொண்டு” (பதிற்றுப்.30;27);.

   3. கொம்பரக்கு (சங்.அக.);, அரக்குவகை; stick-lac.

   4. அரக்கரிசி;seed-lac (சா.அக.);.

   5. அகில் (பரி.அக.);; eaglewood.

ம. அரத்தம்

     [உல் → உர் → உரு. உருத்தல் = எரிதல், அழலுதல். உல் → எல் = ஒளி, நெருப்பு, கதிரவன். எல் → எரி. எரி = நெருப்பு, சிவப்பு. உல் → அல் → அலத்தம் → அலத்தகம் = செம் பஞ்சுக் குழம்பு. அல் → அர் → அரகு → அரக்கு = சிவந்தது. அரக்கு → அரக்கம்.]

 அரக்கம் arakkam, பெ. (n.)

   1. நன்னாரி (மலை.);; Indian sarasaparilla.

   2. திருநாமப்பாலை (வை.மூ); ;   1oval-leaved China root, Smilax macrophylla (செ.அக.); – wild sarasaparilla (சா.அக.);.

அரக்கம்பி

 அரக்கம்பி arakkampi, பெ. (n.)

   பலகணியில் குறுக்குச் சட்டத்தில் பொறுத்தப்பட்ட கம்பி; iron rod fixed in window.

     [அரம்+கம்பி]

     [P]

அரக்கரிசி

 அரக்கரிசி arakkarisi, பெ. (n.)

அரக்குவகை;seed-lac.

     [அரக்கு + அரிசி.]

அரக்கு பார்க்க;see arakku.

அரக்கல்

அரக்கல் arakkal, பெ. (n.)

   அரசிறைத் தவணை (T.A.S. iii, 62);; an instalment of land tax.

ம. அரக்கல்

 அரக்கல் arakkal, தொ.பெ. (vbl.n.)

அரக்குதல் பார்க்க;see arakku-.

அரக்காணி

 அரக்காணி arakkāṇi, பெ. (n.)

   செம்புளிச்சை; a kind of fragrant wood tree like cedar (சா. அக.);.

     [அரக்கம் + ஆணி.]

அரக்காந்தம்

 அரக்காந்தம் arakkāndam, பெ. (n.)

அரக்குக் காந்தம் பார்க்க;see arakku-k-kandam.

     [அரக்கு + காந்தம் – அரக்குக்காந்தம் → அரக்காந்தம்.]

அரக்காம்பல்

அரக்காம்பல் arakkāmbal, பெ. (n.)

   செவ்வாம்பல் (பிங்.); ; red water-lily, Nymphae rubra.

     “அள்ளற் பழனத் தரக்காம்பல் வாயவிழ” (முத்தொள். 110);.

ம. அரக்காம்பல்

     [அரக்கு (சிவப்பு); + ஆம்பல்.]

அரக்கி

அரக்கி arakki, பெ. (n.)

   1. கொடிய பெண்; wicked and fierce woman.

   2. (தொன்.); அரக்க இனப் பெண்;     “மைவண்ணத் தரக்கி” (கம்பரா. பால. அகலி. 24);.

     [அரக்கு → அரக்கி. அரக்குதல் = வருத்துதல்.]

 அரக்கி arakki, பெ. (n.)

   1. கடுக்காய்; Indian gall-nut, Terminalia chebula.

   2. சேங்கொட்டை; marking nut, Semcarpus anacardium.

   3. கல்லுப்பு; a kind of salt, dug out from the beds of salt deposited at the bottom of the sea.

   4. மனோசிலை; red arsenic, Arsenicum rubrum (சா.அக.);.

   5. ஒரு நஞ்சு (பாடாணம்);, (வை.மூ.);; poison.

     [அரக்குதல் = உராய்தல், தேய்த்தல், சிதைத்தல், தறித்தல், ஒடுக்குதல், குறைத்தல், வருத்துதல், வெட்டுதல். அரக்கு + இ (வி.மு.த. ஈறு); – அரக்கி.]

அரக்கிக்கொடு-த்தல்,

 அரக்கிக்கொடு-த்தல், arakkikkoṭuttal, செ.கு.வி. (v.i.)

சிக்கல்களைப் பெரிது படுத்தாமல் மனம் பொறுத்துப் போதல், சாக்குபோக்கு சொல்லி நாளைக் கடத்துதல்;(இ.வ.);.

 to adjust to the situation.

     [அரக்கி+கொடு]

அரக்கிநட-த்தல்

அரக்கிநட-த்தல் arakkinaḍattal,    3 செ.கு.வி. (v.i.)

   1. நெளிந்து நடத்தல் (வின்.);; to wriggle as a snake, to waddle.

   2. தொடைகள் ஒன்றோடொன்று உராய நடத்தல்; to walk with difficulty, as a man whose thighs rub against each other while walking.

அவன் அரக்கி நடக்கிறான் (உ.வ.);.

அரக்கு

அரக்கு arakku, பெ. (n.)

   1. சிவப்பு; redness.

     “அரக்குண் பஞ்சிக டிரட்டி” (சீவக. 1564);. ம., க. அரக்கு.

   2. செம்மெழுகு; sealing wax.

     “தீ யூட்டரக்கே யென்ன வுருகி” (கந்தபு.அசுர. மார்க்கண். 95);.

   3. சாதிலிங்கம்; vermilion.

     “அங்கை யரக்குத் தோய்ந்தன்ன சேயிதழ்” (சிறுபாண். 74);.

   4. அரக்கு மஞ்சள்; saffron root (சா.அக.);.

   5. தேன் (சங். அக.);; honey.

   6. எள்ளுக்காயிற் காணும் ஒருவகை நோய்; a disease peculiar to sesame pods.

     ‘மகுளி பாயாது = அரக்குப் பாயாமல்’ (மலைபடு. 103, நச். உரை);.

   7. சாயம், மசி, முத்திரை முதலியவற்றிற்குதவும் பிசின் போன்ற ஒரு சரக்கு; lac.

ம. அரக்கு; க., து. அரகு; தெ. லாகா ; குரு. அரகு.

     [உல் → உல. உலத்தல் = காய்தல். உல → உலர். உல் → உர் → உரு. உருத்தல் = எரிதல், அழலுதல். உல் → அல் → அள் → அழல். அல் → அல → அலத்தம் = செம்பருத்தி. அலத்தம் → அலத்தகம் = செம்பஞ்சுக் குழம்பு அல் → அர் → அரம் = சிவப்பு. அரம் → அரன் = சிவன். அர் → அர → அரகு → அரக்கு = சிவப்பு, சிவந்த பொருள். நெருப்பின் நிறம் சிவப்பாதலால் நெருப்புக் கருத்தினின்று சிவப்புக் கருத்துத் தோன்றிற்று.]

   அரக்குண்டாகும் வகை (How lac is formed);;ஒருவகைப் பூச்சியினத்தின் பெண், மரத்தில் துளையிட்டு அதில் முட்டையிட்டு வதியும் போது, அதன் உடம்பினின்று கழியும் பிசின் போன்ற பொருளே அரக்கு. அது சாயங் காய்ச்சவும், மசி கூட்டவும், பல்வேறு மருந்து செய்யவும் பயன்படுத்தப்படுகிறது.

 The female of the species of insect called Coccus lacca hemiptera makes holes in the bark of certain trees in order to lay its eggs in. The incrustation there is called

     ‘lac’, and it is in fact formed by the exudation from the bodies of the insects. It is universally employed for dyeing red and also used in preparation of native ink and in various medical treatments (சா.அக.);.

   அரக்கின் வகைகள் (The different varieties of lac);;   1. பச்சையரக்கு – gum lac.

   2. சிவப்பரக்கு, செம்பரக்கு – red lac, sold in the bazaar in the form of square cakes.

   3. கட்டியரக்கு – lump wax, seed-lac melted into masses.

   4. முத்திரையரக்கு அல்லது செய்மெழுகு – sealing wax or gum lac incorporated with resin.

   5. அரிசியரக்கு – seed-lac appearing in a granulated form, deprived of its resinous quality.

   6. அவலரக்கு – shellac, the most common form in which the lac is known.

   7. கொம்பரக்கு – stick-lac, a substance in its natural state, sticking to the twigs of the tree.

 Note; The insect Caccus lacca (Indian origin); should not be confounded with that of the Mexican, cochineal insect called Coccus cacti introduced into India from Mexico by the East India Company about the year 1799 (சா.அக.);.

 அரக்கு arakku, பெ. (n.)

   கஞ்சி (நாமதீப);; gruel.

அரக்கு-தல்

அரக்கு-தல் arakkudal,    4 செ.கு.வி. (v.i.)

   நெளிந்து நடத்தல்; to waddle.

—, 5 செ.குன்றாவி. (v.t.);

   1. அழுத்துதல்; to press down.

     “விரலாற் றலைய ரக்கினான்” (தேவா. 5. 20 ; 1.0);.

   2. தேய்த்தல்; to rub with the palm of the hand or the sole of foot.

கண்ணரக்கல் (சினேந், 456);.

     “அரக்க னீரைந்து வாயு மலறவே யரக்கினா னடியாலும்” (தேவா. 5. 27 10);.

   3. கனத்த வுடம்பை இருப்புவிட்டுப் பெயர்த்தல் (யாழ்ப்);; to push, drag or otherwise move, as a heavy body (J.);.

   4. குழந்தை புட்டத்தை நிலத்தில் தேய்த்துப் பெயர்தல்; to move by rubbing the buttocks against the ground, as a child.

பிள்ளை யரக்கி யரக்கி வந்தது (உ.வ.);.

   5. துடைத்தல்; to wipe, as tears.

     “பெருமதர் மழைக்கண் வருபனி யரக்கி” (பெருங், உஞ்சைக். 33 ; 1.36);.

   6. அரைத்தல்; to grind.

   7. வருத்துதல்; to cause trouble to, afflict.

     “எல்லரக்கு மயினுதிவே லிராவணனும்” (கம்பரா. சுந்தர. ஊர்தேடு. 230);.

   8. சிதைத்தல் (சூடா.); ; to waste, ruin.

   9. கிளைதறித்தல்; to clip off, prune.

   10. வெட்டுதல்; to cut, sever.

     “தாளுந் தோளு மரக்கி” (விநாயகபு. 42 ; 4);.

   11. குறைத்தல்; to cause to diminish.

     “காரரக்குங் கடல்” (தேவா. 1.65 ; 8);.

   12. வாய் நிறைய உண்ணுதல்; to eat incessantly in large mouthfuls.

ஆடு குழையரக்குகிறது (இ.வ.);.

   13. முழுது முண்ணுதல் (இ.வ.);; to eat up.

   14. கரத்தல்; to hide, conceal.

   15. அழித்தல் (சங்.அக.); ; to destroy.

ம. அரக்குக ; க. அரகு ; தெ. அரகு, அருகு.

     [அரங்குதல் = அழுந்துதல், வருந்துதல், அழிதல். அரங்கு (த.வி.); → அரக்கு (பி.வி.);.]

அரக்குக்கச்சி

அரக்குக்கச்சி arakkukkacci, பெ. (n.)

   1. செம்முள்ளங்கி; a red variety of country radish Raphanus sativus alias R. radicula.

   2. கெம்-முள்ளங்கி அல்லது சிவப்பு முள்ளங்கி; red country radish, Daucus carota (சா.அக.);.

அரக்குக்காந்தம்

 அரக்குக்காந்தம் arakkukkāndam, பெ. (n.)

   ஒருவகைக் காந்தக்கல் (வின்.);; magnetic irostone used medicinally.

     [அரக்கு + காந்தம்.]

அரக்குக்குகை

அரக்குக்குகை aragguggugai, பெ. (n.)

   1. மாழையுருக்கும் ஒருவகைக் குகை; a kind of crucible for melting metals.

   2. சிவப்புக் குகை; a red crucible (சா.அக.);.

     [அரக்கு + குகை.]

அரக்குக்குப்பி

 அரக்குக்குப்பி arakkukkuppi, பெ. (n.)

   சிவப்புப்புட்டி; a red bottle.

     [அரக்கு + குப்பி.]

அரக்குக்கூண்டு

 அரக்குக்கூண்டு arakkukāṇṭu, பெ. (n.)

அரக்கு போன்ற பொருளினால் கட்டப்பெற்ற குளவிக்கூடு,

 wasp-hive.

     [அரக்கு+கூண்டு]

அரக்குச் சாராயம்

 அரக்குச் சாராயம் arakkuccārāyam, பெ. (n.)

   வேலம்பட்டை சேர்த்துக் காய்ச்சிய தென்னங் கள் அல்லது பனங் கள் (இராட்.);; arrack, spirituous liquors distilled by boiling the bark of vēl with toddy or palm wine.

     [அரக்கு + சாராயம். சாறாயம் → சாராயம்.]

அரக்குச்சந்தனாதி

 அரக்குச்சந்தனாதி arakkuccandaṉāti, பெ. (n.)

   கொம்பரக்குடன் சில கடைச்சரக்குகளை நல்லெண்ணெயிற் சேர்த்துக் காய்ச்சி வடிக்கும் ஒருவகை யெண்ணெய்; a medicinal oil prepared by boiling and filtering, a mixture of gingelly oil with a few other ingredients.

   இதை உடம்பில் தேய்ப்பதனால் தீராத காய்ச்சல் தீரும்; Rubbing the body with this oil is said to be an infallible cure in cases of persistent and chronic fevers.

     [அரக்கு + சந்தனம் + ஆதி (வடநாட்டுச் சொல்);. இதை முழுத் தமிழில் அரக்குச் சந்தன முதலி எனலாம்.]

அரக்குச்சாயம்

அரக்குச்சாயம் arakkuccāyam, பெ. (n.)

   1. சீலைகளுக்கூட்டும் கருஞ்சிவப்புச் சாயம்; lac dye, colouring matter extracted from sticklac.

   2. மெருகெண்ணெய் (M.M.);; varnish with lac as its chief ingredient.

     [அரக்கு + சாயம்.]

அரக்குச்சொக்கட்டான்

 அரக்குச்சொக்கட்டான் arakkuccokkaṭṭāṉ, பெ. (n.)

   சேலைவகை; a kind of saree.

அரக்குநாயகி

 அரக்குநாயகி araggunāyagi, பெ. (n.)

   செங்குருந்து; red canary, Gluta travancoria (சா.அக.);.

அரக்குநீர்

அரக்குநீர் arakkunīr, பெ. (n.)

   1. சாதிலிங்கங் கலந்த நீர்; vermilion water, used for sprinkling on festive occasions.

     “அரக்குநீர்ச் சிவிறி யேந்தி” (சீவக. 2657);.

   2. ஆலத்தி நீர்; solution of saffron and lime ceremoniously waved in front of a bridal couple to ward off the evil eye.

     “அரக்குநீர் சுழற்றி” (விநாயகபு. 80 ; 277);.

   3. அரத்தம்; blood.

     “புண்ணிடை யரக்குநீர் பொழிய” (சூத. முத்தி. 7;25);, (செ.அக.);.

   4. அரத்தநீர்; the serum of the blood (சா.அக.);.

   5. ஒரு நறுமண நீர்; a perlumed water (சா.அக.);.

அரக்குப்புளிப்பு

 அரக்குப்புளிப்பு arakkuppuḷippu, பெ. (n.)

   அரக்கினின்று உண்டாக்கும் ஒருவகைப் புளிப்பு; a peculiar acid prepared from lac, laccic acid (சா.அக.);.

     [அரக்கு + புளிப்பு.]

அரக்குப்பூக்சி

 அரக்குப்பூக்சி arakkuppūkci, பெ. (n.)

   அரக்கை உண்டாக்கும் ஒரு பூச்சிவகை; lac insect.

     [அரக்கு + பூச்சி.]

அரக்குப்பேய்ப்பீர்க்கு

 அரக்குப்பேய்ப்பீர்க்கு arakkuppēyppīrkku, பெ. (n.)

   மெழுகுப் பேய்ப்பீர்க்கு; a kind of bitter luffa, Luffa amara (சா.அக.);.

     [அரக்கு + பேய் + பீர்க்கு.]

அரக்குமஞ்சள்

அரக்குமஞ்சள் arakkumañjaḷ, பெ. (n.)

   1. கருஞ் சிவப்பு மஞ்சள்; saffron root of a deep yellow colour (செ.அக.);

   மஞ்சள்வேர்க் கொம்பு; dark-red saffron, Curcuma longa.

   2. சிவப்பு மஞ்சள்; red saffron (சா.அக.);.

அரக்குமாளிகை

அரக்குமாளிகை araggumāḷigai, பெ. (n.)

   பாண்டவரை வஞ்சனையாற் கொல்லத் துரியோதனன் அரக்கினாற் செய்வித்த பெருமனை; wax palace built by Duryodhana to carry out his scheme for the destruction of the Pāndavās.

     “அரக்கு மாளிகைஇப் படியினால்

இயற்றிய தொழில்” (பாரத. வாரணா. 122);.

அரக்குமுத்திரை

 அரக்குமுத்திரை arakkumuttirai, பெ. (n.)

   அரக்கில் இடப்பட்ட முத்திரை; stamp impressed with sealing wax.

அரக்குமெழுகு

அரக்குமெழுகு araggumeḻugu, பெ. (n.)

   பச்சையரக்கு; lac in its raw state.

     “எரியணை அரக்கு மெழுகும் ஒக்கும்” (திவ். திருவாய். 2.4 ; 3);.

அரக்குரோசா

 அரக்குரோசா arakkurōcā, பெ. (n.)

   சிவப்பு உரோசாப்பூ; dark red rose.

     [அரக்கு = சிவப்பு. E. rose → த. உரோசா.]

உரோசா மலரைத் தமிழில் முளரிகை யெனலாம்.

அரக்குவட்டச்சாரணை

 அரக்குவட்டச்சாரணை arakkuvaṭṭaccāraṇai, பெ. (n.)

   சிவப்புவட்டச்சாரணை; the red variety of vattaccdranai (round-leaved trianthema);.

அரக்குவளையல்

 அரக்குவளையல் arakkuvaḷaiyal, பெ. (n.)

   அரக்கினாற் செய்த கையணி; wax bracelet covered with thin brass leaf tinsel.

அரக்குவிசிறி

 அரக்குவிசிறி arakkuvisiṟi, பெ. (n.)

   சேலை வகை; a kind of saree.

அரக்குவை-த்தல்

அரக்குவை-த்தல் arakkuvaittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   அரக்குமுத்திரையிடுதல்; to seal with Wax.

அரக்கெண்ணெய்

 அரக்கெண்ணெய் arakkeṇīey, பெ. (n.)

   கொம்பரக்குடன் அமுக்கிறாவேர், ஆவின்பால், பழங்காடி, நல்லெண்ணெய், சில கடைச் சரக்குகள் முதலியவற்றைச் சேர்த்துக் காய்ச்சி வடித்த தலைமுழுக்கெண்ணெய்; a medicated oil obtained by boiling stick-lac, Indian winter cherry and other ingredients in a mixture of cow’s milk, seasoned vinegar and gingelly oil, anointed preparatory to bath, shellac oil (சா.அக.);.

     [அரக்கு + எண்ணெய்.]

அரங்கக்கூத்தி

அரங்கக்கூத்தி araṅgakātti, பெ. (n.)

   நாடக மேடையில் நடிக்கும் அல்லது நடஞ்செய்யும் பெண்; female actor or dancer on the stage.

     “அரங்கக் கூத்திசென் றையங் கொண்டதும்” (மணிமே. 24;22);.

     [அரங்கம் + கூத்தி.]

அரங்கம் பார்க்க;see aranigam.

அரங்கணி

 அரங்கணி araṅgaṇi, பெ. (n.)

   அறுவு, (இ.வ.);; dried up source of a tank or well (Loc.);.

     [அரங்குதல் = அழுந்துதல், அழிதல், வற்றுதல். அரங்கல் + நீர் – அரங்கனீர் → அரங்கணி (கொச்சைத் திரிபு);. ஒ.நோ. தண்ணீர் → தண்ணி (கொச்சை);.]

அரங்கநாதன்

 அரங்கநாதன் araṅganātaṉ, பெ. (n.)

   திருவரங்கத்தில் வழிபடப்படும் திருமால்; Visnu, as worshipped in Tiruvarangam (Srirañgam);.

     [அரங்கம் + Skt natha → த. நாதன் = தலைவன், கடவுள்.]

அரங்கநாதர் சேவைப்பாடல்

 அரங்கநாதர் சேவைப்பாடல்பெ. (n.)  araṅkanātarcēvaippāṭal,

   அரங்கநாதர் எனும் இறைபற்றிய சேவைப் பாடல்; Prayer song of Arunganather.

     [அரங்கம்+நாதன்+சேவை+பாடல்]

அரங்கன்

அரங்கன் araṅgaṉ, பெ. (n.)

   திருவரங்கப் பெருமாள்; Visnu, as worshipped at Tiruvarangam (Šrirańgam);.

     “அண்டர்கோ னணியரங்கன்” (திவ். அமலனாதி. 10);.

ம. அரங்ஙன் ; க. ரங்கனு; தெ. ரங்கடு.

     [அரங்கம் → அரங்கன்.]

     [P]

அரங்கபூசை

அரங்கபூசை araṅgapūcai, பெ. (n.)

   1. போர்த் தொடக்கத்தில் கொற்றவை யென்னும் வெற்றித் தெய்வமாகிய காளிக்குச் செய்யும் வழிபாடு; worship of Korravai (Kali);, the goddess of victory, preliminary to a battle.

     “மறங்கடைக் கூட்டிய துடிநிலை சிறந்த

கொற்றவை நிலையும் அத்திணைப் புறனே”

   2. பந்தய விளையாட்டின் தொடக்கத்திற் செய்யும் வழிபாடு; worship at the commencement of an athletic contest.

     “சினந்தணிந் தரங்கபூசை செய்வன்” (பாரத. வாரணா. 64);.

   3. நாடகத் தொடக்கத்திற் செய்யும் வழிபாடு; worship preliminary to a dramatic performance.

     [அரங்கம் + பூசை.]

அரங்கம் பார்க்க;see ararigam.

அரங்கமேடை

 அரங்கமேடை araṅgamēṭai, பெ. (n.)

   நாடகம் நடிக்கும் அல்லது நடஞ்செய்யும் இடம்; stage.

     [அரங்கம் + மேடை.]

அரங்கம்

அரங்கம் araṅgam, பெ. (n.)

   1. ஆற்றிடைக் குறை; island formed by a river or rivers, ait.

     ”ஆற்றுவீ யரங்கத்து” (சிலப். 10;156);.

   2. திருவரங்கம்; Sriraigam.

     “அண்டமுந் தானம் நின்ற எம்பெருமான் அரங்கமா நகரமான தானே” (திவ். பெரியதி. 5. 7 ;1);.

   3. நாடக மேடை; stage. ம. அரங்ஙு.

   4. நாடகசாலை; theatre, dancing hall.

     “ஆடம் பலமு மரங்க முஞ் சாலையும்” (சீவக. 2112);.

   5. அவைக்களம்; hall for assembly of learned mez.

   6. அவை (திவா.); ; assembly of learned mez.

   7. சூதாடுமிடம் (பிங்.); ; gambling house.

   8. படைக்கலம் பயிலுமிடம் (சூடா.);; school for practice of arms.

   9. சிலம்பக்கூடம்; fencing school.

   10. மற்போர்க்களம்; wrestling arena.

   11. போர்க்களம்; battle-field.

   12. கமுக்கம் (இ.வ.);; secrecy (Loc.);.

திருமணம் முடியும் வரை எல்லாச் செய்திகளையும் அரங்கமாக வைத்துக்கொண்டார்கள் (உ.வ.);.

ம. அரங்ஙு

     [அரங்கு = அறை, அறைவகுத்த இடம். அரங்கு → அரங்கம் = ஆற்று நீரால் அறுக்கப்பட்ட திட்டை, மேடை, விளையாட்டிற்குப் போர்க்கும் வகுக்கப்பட்ட இடம்.]

அரங்கு பார்க்க;see arañgu.

 அரங்கம் araṅkam, பெ. (n.)

குண்டினை வைக்கும் இடம் சதுர அரங்கு (த.நா.வி.);.

 a square place or stage.

     [அரங்கு-அரங்கம்]

 அரங்கம் araṅkam, பெ. (n.)

   சேலம் வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Salem Taluk.

     [அரங்கு+ அம்]

அரங்கல்களிம்பு

 அரங்கல்களிம்பு araṅgalkaḷimbu, பெ. (n.)

   கட்டிகளைக் கரைக்கவும், அவற்றைப் பழுக்க அல்லது அழுந்திப்போகும்படி செய்யவும், வீக்கங்களை மெதுவாக்கவும் தடவும் ஒரு வகைக் களிம்பு; an ointment or paste used in medical practice for reducing, ripening, suppressing or suppurating an abscess (சா.அக.);.

     [அரங்கு → அரங்கல்.]

அரங்கு-தல் பார்க்க;see araigu.

அரங்கவாசல்

 அரங்கவாசல் araṅgavācal, பெ. (n.)

   நகர்முற்ற வெளி (புதுவை); ; esplanade (Pond.);.

     [அரங்கம் + வாசல். வாயில் → வாயல் → வாசல்.]

அரங்கி

அரங்கி araṅgi, பெ. (n.)

   1. நடனக்காரி; dancing girl.

     “மடவா ராயிரம்பேருண்டென் றரங்கி யறியாளோ” (கூளப்ப. காதல், 359);.

   2. செய்திகளை மறைத்துவைக்கும் வஞ்சகக்காரி; taciturn and deceitful woman.

     ‘ஆரை நம்பினாலும் அரங்கியை நம்பக்கூடாது’ (பழ.);.

     [அரங்கு → அரங்கி = 1. அரங்கில் ஆடுபவள். 2. அறைக்குள்ளிருப்பவள் அல்லது அடக்கி வைப்பவள்.]

அரங்கு

அரங்கு araṅgu, இ பெ. (n.)

   1. அறை; room.

வீடு அரங்கரங்காயிருக்கிறது (உ.வ.);.

   2. உள்ளறை (நாநார்த்த.);; inner room.

   3. பாண்டி (சில்லாக்கு); விளையாட்டிற்கு நிலத்திற் கீறியமைக்கப்படும் பலவறைக் கட்டம்; chequered lines traced on the ground for playing pandi, a children’s game.

     “கட்டளை யன்ன வட்டரங் கிழைத்துக்

கல்லாச் சிறாஅர் நெல்லிவட் டாடும்” (நற். 3);.

   4. சூதாட்டத்திற்கு வகுக்கப்பட்ட பலவறைக் கட்டம்; place or board chequered with squares for gambling.

     “அரங்கின்றி வட்டாடி யற்றே” (குறள், 401);.

   5. சூதாடுமிடம்; gambling house.

     “அறிவிலாளர் சூதாடு மரங்கினும்” (பிரமோத். 22;13);.

   6. ஆற்றிடைக்குறை (சங்.அக.); ; island formed within a river.

   7. நாடகமேடை; stage.

     “அவை புக ழரங்கின்மே லாடுவாள்” (கலித். 79);.

   8. நடனக் கூடம்; dancing hall.

   9. போர்க்களம் (சங்.அக.);; battle-field.

   10. மற்போர். குத்துச்சண்டை முதலியன நிகழும். இடம்; arena.

   11. அவைக்களம்; hall of learned assembly.

   12. கருவகம், சூல்; womb, pregnancy.

     “அரங்கி லவனென்னை யெய்தாமற் காப்பான்” (திவ். இயற். நான். 30);.

   13. திரைப்பட மனை, திரையரங்கு (இக்.வ.);; cinema theatre (Mod.);.

ம. அரங்ஙு ; ரங்க; தெ. ரங்கமு.

     [அர் → அறு. அர் → அர → அரவு → அரகு → அரங்கு = அறை, அறைக்கட்டம், அறுத்தமேடை, வரையறுத்த இடம்.]

வரிப்பந்து (tennis);, பூப்பந்து (badminton); முதலிய மேலை விளையாட்டுகட்கு அமைக்குங் கட்டத்தையும் (court); அரங்கு எனலாம்.

அரங்கு-தல்

அரங்கு-தல் araṅgudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. தேய்தல்; to wear away by friction.

   2. அழுந்துதல் (உரி.நி.); ; to be pressed down.

   3. அம்பு முதலியன தைத்தல்; to pierce, penetrate, as an arrow.

     “வேலம்பு…… துணை முலையினுள் ளரங்கி மூழ்க” (சீவக. 293);.

   4. சிதைதல்; to be injured.

   5. குறைதல்; to diminish.

   6. வருந்துதல்; to suffer.

     “கடகரிக் கோடரங் கிடவெழுங் குவிதடங் கொங்கையார்” (கம்பரா. பால. எதிர்கொள். 33);.

   7. உருகுதல் (இ.வ.);; to melt, as ghee (Loc.);.

நெய்யை அரங்கவை.

   8. கெடுதல், அழிதல், நீங்குதல்; to be destroyed, to be removed.

     “பிணியரங்க” (கம்பரா. பால. குலமுறை. 2);.

ம. அரங்ஙுக

     [அர் → அர → அரவு → அராவு. அர் → அரம். அரவு → அரகு → அரங்கு.]

அரங்குவீடு

 அரங்குவீடு araṅguvīṭu, பெ. (n.)

   பாதுகாப்பான உள்ளறை (நெல்லை);; inner room, regarded as secure (Tn.);.

அரங்கேறு-தல்

அரங்கேறு-தல் araṅāṟudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. புதுநூலாசிரியன் அல்லது இளங்கணிகை அறிஞரின் ஒப்பம் பெறுதல்; to get the approval of competent authorities, as an author or a dancing girl.

     ‘அவருட் கவியரங்கேறினார் எழுவர் பாண்டிய ரென்ப’ (இறை. 1, உரை);.

மாதவி கரிகாலன் முன்னிலையில் ஆடல்பாடலரங்கேறினாள்.

   2. புதுநூல் அல்லது கணிகை திறம் அறிஞரின் ஒப்பம் பெறுதல்; to be approved by the authorities, as a new treatise or a dancing girl’s ability.

     [அரங்கு (மேடை); + ஏறு.]

அரங்கு பார்க்க;see aranigu.

அரங்கேற்றம்

 அரங்கேற்றம் araṅāṟṟam, பெ. (n.)

   ஒரு புலவரின் புதுநூல் அல்லது பனுவல், ஒரு கணிகையின் நடனத்திறமை முதலியவற்றை அறிஞரவையிற் காட்டி, அவரது ஒப்பம் பெறுகை; presentation of a new literary work by its author or the first public performance of a dancing girl, before a learned assembly for approval.

ம. அரங்ஙேற்றம்

     [அரங்கு = மேடை. ஏறு → ஏற்று → ஏற்றம் = ஏறிப் புலமை அல்லது திறமை காட்டுகை.]

அரங்கேற்று

 அரங்கேற்று araṅāṟṟu, பெ. (n.)

அரங்கேற்றம் பார்க்க;see arang(u);-érram.

     [அரங்கு + ஏற்று – அரங்கேற்று (முத.தொ. பெ.);.]

அரங்கேற்று-தல்

அரங்கேற்று-தல் araṅāṟṟudal,    5.செ.குன்றாவி. (v.t)

   1. ஒரு நல்லிசைப் புலவர் தம் புதுநூலை அல்லது பனுவலைத் தலையாய புலவரவையிற் படித்துக்காட்டி, அவர் நிகழ்த்தும் தடைகட்கெல்லாம் தக்க விடைகள் கூறி, அவர்தம் ஒப்பம் பெறுதல்; to present, as an author, a new literary work, before an eminent body of learned men and get its approval, after countering all objections raised.

     “எண்ணிய சகாத்த மெண்ணூற்

றேழின்மேற் சடையன் வாழ்வு

நண்ணிய வெண்ணெய் நல்லூர்

தன்னிலே கம்ப நாடன்

பண்ணிய விராம காதை

பங்குனியத்த நாளிற்

கண்ணிய வரங்கர் முன்னே

கவியரங் கேற்றி னானே”

   2. ஓர் இளங்கணிகை, பயிற்சி முற்றியபின், தன் ஆடல் பாடலை இசையாசிரியர் முன்னும் நாடகவாசிரியர் முன்னும் ஆடிப்பாடிக் காட்டி, அவர்தம் ஒப்பமும் அரசனிடமிருந்து தலைக்கோற் பட்டமும் ஆயிரத்தெண் கழஞ்சு பொன் மதிப்பும் பெறுதல்; to give the first public performance, as a dancing girl, before competent authorities on the arts of singing and dancing and get their approval for proficiency, thus entitling her to receive the Talaikköl title and eligibility to a prize of 1008 kalañjus of pure gold from the king (சிலப். அரங்கேற்று காதை);.

ம. அரங்ஙேறுக

     [அரங்கு = மேடை. ஏறு → ஏற்று. ஏற்றுதல் = மேடையேறிப் புது நூலைப் படித்து விளக்கி அல்லது ஆடல்பாடலை நிகழ்த்திக் காட்டி, அறிஞரின் ஒப்பம் பெறுதல்.]

அரங்கேற்றுப்படி

 அரங்கேற்றுப்படி araṅāṟṟuppaḍi, பெ. (n.)

அரங்கேற்றம் பார்க்க;see arañg(u);-érram.

அரங்கொழிசெய்யுள்

அரங்கொழிசெய்யுள் araṅgoḻiseyyuḷ, பெ. (n.)

   புறநாடக வுருக்களுள் இறுதியானது; the last item in the list of the species of musical compositions relating to themes other than love and intended for the atrical performance.

     ‘புற நாடகங்களுக்குரிய உருவாவன; தேவபாணி முதலாக அரங்கொழிசெய்யுளீறாகவுள்ள செந்துறை விகற்பங்களெல்லா மென்க’ (சிலப். 3;14, அடியார்க். உரை);.

அரச இரண்டகம்

 அரச இரண்டகம் arasairaṇṭagam, பெ.(n.)

   அரச இரண்டகம் (வின்.);; high treason.

     [அரச+இரண்டகம்]

அரச மரத்திருமணம்

 அரச மரத்திருமணம் aracamarattirumaṇam, பெ. (n.)

   குழந்தைஇல்லாதவன் பிள்ளைப் பேறடையும் பொருட்டு அரசமரத்தை நட்டு மகனாக் கருதி வளர்த்துப் பின் அவ்வரச மரத்திற்கு வேப்ப மரத்தை மனைவியாக்கிச் செய்யும் திருமணச் சடங்கு (உ.வ.);; rites of marriage performed with a pipal tree as bridegroom and margosa as bride the pipal having beenplanted by a sonless person with a view to a begetting a son and havingbeen reared by him as his first son.

     [அரசமரம்+திருமணம்]

அரசகம்

அரசகம் arasagam, பெ. (n.)

   1. அரசினர் வீடு; government house.

   2. அரசன் வாழ் மனை; royal residence.

   3. அரசிருக்கை; seat of government.

   4. செம்மணத்தி; a kind of fragrant wood tree (சா.அக.);.

     [அரசு + அகம்.]

அரசன் பார்க்க;see arasan.

அரசகேசரி

அரசகேசரி arasaāsari, பெ. (n.)

   பிற்காலச் சோழர் ஒருவர்விட்டு ஒருவராகத் தாங்கி வந்