தலைசொல் | பொருள் |
---|---|
ஃ | ஃ k, ஆய்தவெழுத்து; 13 – ஆவது எழுத்து; 13th letter of the Tamil alphabet occurring only after a short initial letter and before a hard consonant as அஃகம் and pronounced sometimes as a vowel and sometimes as a consonant (செ.அக.). மறுவ. ஆய்தம், அஃகேனம் முப்பாற்புள்ளி, தனிநிலை. [புணர்மொழியில் ய,வ,ல,ள மெய்யீற்றுத்திரிபு.] ஓரெழுத்தின் ஒலிப்பு, முதலெழுத்துகள் முப்பதிலும் இல்லாத பிறிதொரு வேறுபாட்டு ஒலிப்புத் திரிபாவது சார்பெழுத்து குற்றியலுகரம் குற்றியலிகரம் ஆய்தம் எனும் மூன்றும் இத்திறத்தின. ய்,வ்,ல்,ள் ஈற்றுச்சொற்கள் வல்லின வருமொழியொடு புண ரும்போது பெறும் வேறுபாட்டு ஒலிப்புத்திரிபே ஆய்தமாகும். கல் + தீது – கஃறீது, முள் + தீது – முஃடீது. அவ் + கடிய – அஃகடிய, வெய் + கு – வெஃது. ஆய்தம் இடையின எழுத்துக்களில் ஒலிப்புத்திரிபாயினும் இடையின எழுத்துகள் போன்று மொழியீறாகவில்லை. குற்றியலுகரம் ஒன்றே மொழி யீறாகிறது. ஆய்தவெழுத்து மொழிமுதலும் மொழியிறுதியும் ஆகாமை யின் முதலெழுத்துகளுள் ஒன்றாகச்சேரவில்லை. மொழியிடை உயிரொலித்திரியான குற்றியலிகரம் குற்றியலுகரம் போன் றவை மெய்யொடு புணர்ந்து உயிர்மெய்யாகின்றன. ஆயின் ஆய்தம் மெய்யோடு புணராமல் புணர்மொழியிடை மெய்யின் திரிபாகிய பிறிதொரு மெய்யாகவே நிற்றலின் புள்ளியின் (மெய்யின்); தன்மையுடையதாயிற்று. மொழியிடைத் தோன்றும் புதிய ஒலிப்பே சார்பெழுத்தாகக் கொள்ளப்படுதலின் இது சார்பெழுத்தாயிற்று. குற்றுகரம் உகரத் தின் மெல்லோசையாதல்போல் இது ககரத்தின் நலிபோசை யாதலின், தன்மையால் மெய்யெழுத்தை ஒத்திருந்தாலும் உயிரேறி உயிர்மெய்யாக இடந்தராமையிலும் உயிரளபெடை போன்று அளபெடுத்தலின் செய்கையால் உயிரெழுத்தை ஒத்தி ருக்கிறது. எனவே முழுமையாக உயிரெழுத்தும் ஆகாமல் மெய்யெழுத்தும் ஆகாமல் இடைநிற்றலின் தன்மையும் செய் கையும் நோக்கித் தமிழ் வண்ணமாலையில் உயிரெழுத்து வரிசையின் பின்னும் மெய்யெழுத்து வரிசையின் முன்னும் வைக்கப்பட்டது. உயிரெழுத்தையும் மெய்யெழுத்தையும் அடுத்துவரும் வல்லி னமெய், நகம், நங்கை என்றாற்போன்று நலிபோசை யுடைய தாகும். அதுபோன்று ஆய்தமும் அடுத்துவரும் வல்லின மெய்யை நலிபோசையுடையதாக்கும். வல்லெழுத்து மெல்லெ ழுத்து உயிரெழுத்து ஆகிய முத்திறப்பாங்கும் உட்கொண்டிருத் தலின் முப்பாற்புள்ளி எனப்பட்டது. முதலெழுத்தின் வகைமை யுள் எந்த இனத்திலும் சேராததால் தனிநிலை எனப்பட்டது. சார்பெழுத்துகளில் குற்றியலுகரம் குற்றியலிகரங்களுக்குத் தனிவரிவடிவம் இல்லை. ஏனெனில் அவற்றின் பிறப்பிடமும் மாறவில்லை. ஒலிப்பண்பு மட்டும் மாறியுள்ளது. ஆயின், ஆய்தம் ‘ல ள வ ய’ மெய்களின் திரிபொலியெனினும், ககரம் பிறக்குமிடத்தையொட்டித் தன் பிறப்பிடத்தை மாற்றிக் கொள்கிறது. முதலெழுத்துகளில்லாத புதிய ஒலிப்பையும் பெற்றுக் கொள்கிறது. பிறப்பிடத்தையும் ஒலிப்பையும் ஒருசேர மாற்றிக்கொள்வதால் ஆய்தத்திற்கும் புதிய வரிவடிவம் படைத்திட்டுக்கொள்ள நேர்ந்தது. சார்ந்து வரினல்லது தமக்கியல் பிலவெனத் தேர்ந்து வெளிப்படுத்த ஏனை மூன்றும் தத்தம் சார்பிற் பிறப்பொடு சிவணி ஒத்த காட்சியில் தம்மியல் பியலும்(தொல்.எழுத்.101); தொல்காப்பியரும் பிறப்பிடமும் ஒலிப்பு முயற்சியும் வேறுபடு வது கருதியே சார்பெழுத்துகளை வகைப்படுத்தியிருப்பதைமேற் கண்ட நூற்பா வலியுறுத்துகிறது. ஒத்த காட்சி என்பதற்கு, ஒழிந்த ஆய்தம் தமக்குப் பொருந்தின நெஞ்கவளியாற் பிறக்கும் என்றும் ‘காட்சி என்றது நெஞ்சினை’ யென்றும் நச்சினார்க்கினியர் கூறியிருப்பது அத்துணைப் பொருத் தமுடையதாகத் தோன்றவில்லை. ஒத்த காட்சி என்பதற்குத் “தத்தம் முதலெழுத்துகளின் பிறப்பிடம் ஒலிப்பு ஆகியவற்றைச் சார்ந்து,” எனப்பொருள் கொள்வதே நேரிது. சொல்லுக்கு உறுப்பர்கிப் பொருள் புலப்படுத்தும் எழுத்தோசை கள் அனைத்துக்கும் எழுத்தாம் தன்மை தரவேண்டுதலின் சார்பெ ழுத்து என வகைப்படுத்த வேண்டுவதாயிற்று. நகம், நங்கை என்னும் சொற்களில் ககரம் நலிந்து ஒலிக்கிறது. எனவே வல்லெழுத்துகளின் நலிபை ஏன் சார்பெழுத்துகளாக்கி வேறு பிரித்து ஒதவில்லை என வினவுவாருளர். தமிழில் முதலெழுத்துகள், பிறக்கும் இடத்தாலும் ஒலிக்கும் கால அளவா லும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. சார்பெழுத்துகள் பிறக்கும் இடத்தாலும் ஒலிக்கும் முறையாலும் ஒன்றுபோல் தோன்றிலும் மொழியிடைத் தோன்றிய மாற்றொலியன்களாதலின் (allophone); சார்பெழுத்துகளாயின. சார்பெழுத்துகளின் மாற்றொலிப்பு களால் சொல்லின் பொருள் வேறுபடுவதில்லை. மேலையாரிய மொழிகளில் வல்லெழுத்துகளின் நலிபெழுத்துகள் pit, bit என்றாற்போன்று பொருள்வேறுபாட்டுக்கு அடிப்படை யான முதலெழுத்துகளாக உள்ளன. தமிழில் வல்லின நலிபோசை கள் முதலெழுத்துகள் வரிசையில் சேர்வதில்லை. சார்பெழுத்துகள் எல்லாம் புணர்மொழித்திரிபுகளாகும். நகம், நங்கை போன்றவற் றிலுள்ள வல்லின ககரத்தின் நலிபு புணர்மொழித்திரிபால் விளைந்த மாற்றொலியன்களல்ல. உயிரெழுத்தையும் மென்க ணத்தையும் அடுத்து வரும் இடப்பாங்கால் பெற்ற மெலியோசை யாதலின் சார்பெழுத்தாக வகைப்படுத்தப்படவில்லை. |