சங்க இலக்கிய அருஞ்சொற்களஞ்சியம்

முனைவர் ப.பாண்டியராஜா
(www.tamilconcordance.in)


105

52

77

24

121

13

36

20

5

32

20

1
க்
124
கா
24
கி
12
கீ
2
கு
58
கூ
17
கெ
9
கே
7
கை
23
கொ
48
கோ
28
கௌ
1
ங் ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
15
சா
42
சி
51
சீ
7
சு
29
சூ
13
செ
66
சே
17
சை
1
சொ
6
சோ
4
சௌ
ஞ்
3
ஞா
15
ஞி
4
ஞீ ஞு ஞூ ஞெ
17
ஞே ஞை ஞொ
1
ஞோ ஞௌ
ட் டா டி டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ
ண் ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
113
தா
23
தி
54
தீ
13
து
76
தூ
25
தெ
44
தே
25
தை
6
தொ
44
தோ
16
தௌ
1
ந்
82
நா
44
நி
40
நீ
21
நு
30
நூ
11
நெ
39
நே
12
நை
3
நொ
24
நோ
13
நௌ
1
ப்
245
பா
80
பி
63
பீ
7
பு
173
பூ
19
பெ
48
பே
25
பை
22
பொ
76
போ
37
பௌ
1
ம்
240
மா
85
மி
35
மீ
13
மு
163
மூ
24
மெ
14
மே
30
மை
9
மொ
6
மோ
11
மௌ
1
ய்
2
யா
30
யி யீ யு யூ
2
யெ யே யை யொ யோ யௌ
ர் ரா ரி ரீ ரு ரூ ரெ ரே ரை ரொ ரோ ரௌ
ல் லா லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
வ்
236
வா
71
வி
120
வீ
15
வு வூ வெ
81
வே
67
வை
18
வொ வோ வௌ
2
ழ் ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன் னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்
மை

மை – (பெ) 1. அஞ்சனம், பெண்கள் கண்களுக்குத் தீட்டிக்கொள்ளும் கருப்புநிற அலங்காரப் பொருள்,
a black pigment applied on the edges of eyelashes by women
2. எழுதுபொருளாகப்பயன்படும் திரவம், ink
3. கருமை நிறம், black colour
4. குற்றம், களங்கம், fault,defect, stain, blot
5. ஆடு, goat, sheep
6. எருமை, buffalo
7. கருமேகம், dark clouds
8. இருள், darkness
1.
ஐது ஏய்ந்து அகன்ற அல்குல் மை கூர்ந்து
மலர் பிணைத்து அன்ன மா இதழ் மழை கண் – நற் 252/8,9
மென்மை பொருந்தி அகன்ற அல்குலையும், மையிட்டு
மலர்களைக் கட்டிவைத்தது போன்ற கரிய இமைகளைக் கொண்ட குளிர்ச்சியான கண்களையும்,
2.
மை உக்கு அன்ன மொய் இரும் கூந்தல் – மது 417
மை ஒழுகினாற் போன்ற செறிந்த கரிய கூந்தலினையுமுடைய
3.
மை இரும் குட்டத்து மகவொடு வழங்கி – பெரும் 271
கரிய பெரிய ஆழமான குளங்களில் பிள்ளைகளோடு நீந்தி,
4.
மை இல் பளிங்கின் அன்ன தோற்ற
பல் கோள் நெல்லி பைங்காய் அருந்தி – அகம் 399/13,14
குற்றமற்ற பளிங்கினைப் போன்ற தோற்றத்தையுடைய
பலவாகக் காய்த்த நெல்லியின் பசிய காய்களை உண்டு

மை அறு சிறப்பின் தெய்வம் சேர்த்திய
மலர் அணி வாயில் பலர் தொழு கொடியும் – பட் 159,160
களங்கம் அற்ற சிறப்பினைடைய தெய்வங்களைக் கொண்ட
மலர் அணிந்த (கோயில்)வாசலில் (கட்டின) பலரும் வணங்கும் கொடிகளும்
5.
களம்தோறும் கள் அரிப்ப
மரம்-தோறும் மை வீழ்ப்ப – மது 753,754
களங்கள்தோறும் கள்ளை அரிப்பவும்,
மரத்தடிகள்தோறும் செம்மறிக்கிடாயை வெட்டவும்

மை ஊன் தெரிந்த நெய் வெண் புழுக்கல் – நற் 83/5
ஆட்டிறைச்சி கலந்த நெய்யிட்டுச் சமைத்த வெண்சோற்றை
6.
வைகு புலர் விடியல் மை புலம் பரப்ப – அகம் 41/1
பின்னிருட்டு புலர்ந்த விடியல் வேளையில் எருமைகளை மேய்நிலத்திற்கு ஓட்டிவிட
7.
மை சூழ் வெற்பின் மலை பல இறந்து – நற் 214/7
முகில்கள் சூழ்ந்த சிகரங்களையுடைய மலைகள் பலவற்றைக் கடந்து
8.
கரும் கல் கான்யாற்று அரும் சுழி வழங்கும்
கராஅம் பேணாய் இரவரின்
வாழேன் ஐய மை கூர் பனியே – நற் 292/7-9
கருங்கற்களுக்கிடையே ஓடும் காட்டாற்றில் நீந்தமுடியாத சுழல்களில் திரியும்
முதலைகளையும் கருத்தில்கொள்ளாமல் இரவுக்காலத்தில் வந்தால்,
நான் உயிரோடு இருக்கமாட்டேன் ஐயனே! அதுவும் இந்த இருள் நிறைந்த பனிக்காலத்தில்

மைந்தன்

மைந்தன் – (பெ) 1. வலிமையுடையவன், strong man
2. விலங்கு, ஊர்வனவற்றின் குட்டி, Young of an animal or reptile
3. இளைஞன், young man
4. ஆண்மகன், man
5. கணவன், husband
6. வீரன், warrior
1.
மாறா மைந்தர் மாறுநிலை தேய
முரைசு உடை பெரும் சமம் ததைய ஆர்ப்பு எழ
அரைசு பட கடக்கும் ஆற்றல்
புரை சால் மைந்த நீ ஓம்பல் மாறே – பதி 34/9-12
அறத்துறை மாறாத வீரரது வலியானது கெடுமாறு
முரசு முழக்கிச் செய்யும் பெரிய போர்க்களத்தே நெருங்கியவழி ஆரவாரம் உண்டாக
பகை மன்னர் தம்வலி முற்றவும் அழியப்பொருது வென்றி பெறும் ஆற்றலால்
உயர்வமைந்த வலியினை உடையோனே நீ நின் தானையைப் பாதுகாப்பதினால்
2.
நனி நுனி நயவரு சாய்ப்பின் நாறு இணர்
சினை போழ் பல்லவம் தீம் சுனை உதிர்ப்ப
உதிர்த்த சுனையின் எடுத்த தலைய
அலர் முகிழ் உற அவை கிடப்ப
தெரி மலர் நனை உறுவ
ஐம் தலை அவிர் பொறி அரவம் மூத்த
மைந்தன் அருகு ஒன்று மற்று இளம் பார்ப்பு என
ஆங்கு இள மகளிர் மருள – பரி 19/66-74
ஒரு மரக்கொம்பின் கடைசி நுனி விரும்பத்தக்கவகையில் சுனைநீரின்மேல் சாய்ந்திருக்க,மணமிக்க
பூங்கொத்துக்களைக் கொண்ட
அந்தக் மரக் கொம்பினைப் பிளந்துகொண்டுவரும் இளந்தளிர்களை மரத்தின் மீதேறிய மங்கையர் பறித்து
நீரில் உதிர்த்துவிட
அவ்வாறு உதிர்க்கப்பட்ட சுனையில் நிமிர்ந்து நிற்கும் தலையினையுடைய
மலரும் மொட்டுக்களின் மேல் படியுமாறு அத் தளிர்கள் கிடக்க,
இவ்வாறு விரிந்த பூக்கள்மீதும் அரும்புகள்மீதும் பொருந்திக்கிடக்க,
ஐந்து தலைகளையும், ஒளிரும் பொறிகளையும் உடைய பாம்பின் மூத்த
பிள்ளை அருகில் இருக்கும் ஒன்று, மற்றொன்று அதன் இளம்பிள்ளை என்று
அங்கு நீராடும் இளம் மகளிர் மருண்டுநோக்க
3.
வெருவரு குருதியொடு மயங்கி உருவு கரந்து
ஒறுவாய்ப்பட்ட தெரியல் ஊன் செத்து
பருந்து கொண்டு உகப்ப யாம் கண்டனம்
மறம் புகல் மைந்தன் மலைந்த மாறே – புறம் 271/5-8
அச்சம் தருகிற குருதியில் கலந்து, உருமாறி
துணிபட்டுக் கிடந்த நொச்சிமாலையை ஊனென்று கருதி
பருந்து கவர்ந்து உயரத்தில்கொண்டுபோகவும் ஆம் கண்டேம்,
மறத்தை விரும்பும் இளையோன் அணிந்திருந்ததினால்
4.
மகளிர் கோதை மைந்தர் புனையவும்
மைந்தர் தண் தார் மகளிர் பெய்யவும் – பரி 20/20,21
மகளிர் சூடிக்கொள்ளும் மரபினவாகிய மாலையை ஆராயாமல் ஆடவர் அணிந்துகொள்ளவும்,
ஆடவரின் குளிர்ச்சியான மாலைகளை மகளிர் சூடிக்கொள்ளவும்
– பொ.வே.சோ.உரை
5.
மைந்தர் கண்ணி மகளிர் சூடவும்
மகளிர் கோதை மைந்தர் மலையவும் – பட் 109,110
கணவர் சூடிய கண்ணியைத் தமது கோதையாக நினைத்து மகளிர் சூடிக்கொள்ளும்படியாகவும்
மகளிர் சூடிய கோதையைத் தமது கண்ணியாக நினைத்து மைந்தர் சூடிக்கொள்ளும்படியாகவும்
– நச்.உரை
6..
மாறா மைந்தர் மாறுநிலை தேய
முரைசு உடை பெரும் சமம் ததைய ஆர்ப்பு எழ
அரைசு பட கடக்கும் ஆற்றல்
புரை சால் மைந்த நீ ஓம்பல் மாறே – பதி 34/9-12
அறத்துறை மாறாத வீரரது வலியானது கெடுமாறு
முரசு முழக்கிச் செய்யும் பெரிய போர்க்களத்தே நெருங்கியவழி ஆரவாரம் உண்டாக
பகை மன்னர் தம்வலி முற்றவும் அழியப்பொருது வென்றி பெறும் ஆற்றலால்
உயர்வமைந்த வலியினை உடையோனே நீ நின் தானையைப் பாதுகாப்பதினால்

மைந்தர்

மைந்தர் – (பெ) மைந்தன் என்பதன் பன்மை, the plural of the word mainthan.
பார்க்க : மைந்தன்

மைந்து

மைந்து – (பெ) 1. வலிமை, might, strength
2. விருப்பம், desire
3. காம மயக்கம், Infatuation of love, lust
4. யானையின் மதம், Must of an elephant
5. அறியாமை, பேதைமை, Ignorance, stupidity
1.
மறம் மிகு வேழம் தன் மாறுகொள் மைந்தினான்
புகர் நுதல் புண் செய்த புய் கோடு போல – கலி 53/3,4
வீர உணர்வை மிகுதியாகப் பெற்ற ஒரு வேழம் பகையுணர்வு கொண்ட வலிமையினால்
மற்ற யானைகளைக் குத்தி உருவிய இரத்தக்கரை படிந்த கொம்பினைப் போல
2.
ஏர் அணி அணியின் இளையரும் இனியரும்
ஈரணி அணியின் இகல் மிக நவின்று
தணி புனல் ஆடும் தகை மிகு போர்_கண்
துணி புனல் ஆக துறை வேண்டும் மைந்தின்
அணி அணி ஆகிய தாரர் கருவியர்
அடு புனலது செல அவற்றை இழிவர் – பரி 6/27-32
அழகாக அணிந்த அணியினரான இளையவர்களும், அவருக்கு இனியரான அவரின் காதலியரும்,
நீராடத்தகுந்த ஈரமான அணிகளுடன், விளையாட்டாகச் சண்டையிடுவதை மிகவும் விரும்பி,
குளிர்ந்த புதுப்புனலில் ஆடுகின்ற பொருத்தம் மிகுந்த போரிடும் இடமாக
அந்தத் தெளிந்த ஆற்று நீர் அமைய, ஏற்ற துறையைத் தேர்ந்துகொள்ளும் விருப்பத்துடனே
அணியணியாகிய போரின் முன்னணிப்படையினரைப் போல, தேவையான கருவிகளுடன்,
கரையை இடிக்கும் வெள்ளத்தினூடே செல்ல, தம் அணிகலன்களைக் களைவர்;
3.
மகளிரை மைந்து உற்று அமர்பு_உற்ற மைந்தர் – பரி 20/91
மகளிர்மேல் காமமயக்கம் கொண்டு அவரை விரும்பிச் சென்ற ஆடவர்
4.
களிறே
————————- ——————————-
மரீஇயோர் அறியாது மைந்து பட்டன்றே – புறம் 13/5-8
களிறுதான்
————————– ——————————
தன்னை மருவிய பாகரை அறியாது மதம்பட்டது.
5.
மைந்து உற்றாய் வெம் சொல் மட மயில் சாயலை
வந்திக்க வார் என – பரி 20/69,70
பேதைமைகொண்டாய் கொடிய சொல்கூறி, இந்த இளம் மயில்போன்ற சாயல் உடையவளை
வணங்க வருவாயாக என்று சொல்ல

மைப்பு

மைப்பு – (பெ) குற்றம், fault
மைப்பு அற புழுக்கின் நெய் கனி வெண் சோறு – அகம் 136/1
குற்றம் நீங்க, இறைச்சியுடன் கூட்டி ஆக்கிய நெய் மிக்க வெள்ளிய சோற்றை

மைம்மீன்

மைம்மீன் – (பெ) சனிக்கோள், the planet saturn
மைம்மீன் புகையினும் தூமம் தோன்றினும் – புறம் 117/1
சனி மீன் புகைகளோடு கூடிப் புகையினும், எல்லாத் திசைகளிலும் புகை தோன்றினாலும்

மையல்

மையல் – (பெ) 1. காதல்மயக்கம், Infatuation of love
2. அறிவு மயக்கம், confusion
3. யானையின் மதம், Must of an elephant
4. ஒரு சங்க காலத்து ஊர், a place in sangam period
1.
நெஞ்சு ஆற்றுப்படுத்த நிறை தபு புலம்பொடு
நீடு நினைந்து தேற்றியும் ஓடு வளை திருத்தியும்
மையல் கொண்டும் ஒய்யென உயிர்த்தும் – முல் 81-83
நெஞ்சம் (ஆற்றியிரு என்று தலைவன் கூறியபடி)பொறுத்திருக்க, (தன்)உறுதியைக் கெடுத்த தனிமையோடு,
நீண்ட பிரிவினை நினைந்து தேற்றியும், கழலுகின்ற வளையை(க் கழலாமற்)செறித்தும்,
காதல் மயக்கம் கொண்டும், நெடிய பெருமூச்சுவிட்டும்,
2.
முதிர் கறி யாப்பின் துஞ்சும் நாடன்
மெல்ல வந்து நல் அகம் பெற்றமை
மையல் உறுகுவள் அன்னை – நற் 297/8-10
முதிர்ந்த மிளகுக்கொடிகளின் பின்னலில் உறங்கிக் கிடக்கும் மலைநாட்டைச் சேர்ந்தவன்
மெல்ல வந்து உன் மார்பின் அடையப்பெற்றதனால் உண்டாயதன் காரணம் யாதென்று
மயக்கத்தைக் கொண்டிருக்கிறாள் அன்னை,
3.
மையல் வேழம் மடங்கலின் எதிர்தர – குறி 165
மதக்களிப்புடைய களிறு எமனைப்போல் (எமக்கு)எதிரே வருகையினால்
4.
பொய்யா யாணர் மையல் கோமான்
மாவனும் மன் எயில் ஆந்தையும் – புறம் 71/11,12
பொய்யாத புதுவருவாயையுடைய மையல் என்னும் ஊர்க்குத் தலைவனான
மாவனும், நிலைபெற்ற எயில் என்னும் ஊரையுடைய ஆந்தையும்

மையாடல்

மையாடல் – (பெ) மை தடவிய ஓலைச்சுவடியைப் பிடித்தல், holding the palm leaf smeared with ink
மையாடல் ஆடல் மழ புலவர் மாறு எழுந்து – பரி 11/88
மையோலையைக் கையில் பிடித்து சுவடி தூக்கி ஆடும் இளம் சிறுவரின் ஆட்டத்திற்கு மாறாக எழுந்து
– மையாடல் – மையோலை பிடித்தல். அஃதாவது, மை தடவப்பெற்ற நெடுங்கணக்கு முதலிய சுவடிகளைக்
கையில் ஏந்திப் பயிலுதல். இங்ஙனம் முதன் முதலாகச் சுவடி பிடித்தலை மையாடல் என்று பண்டையோர்
வழங்கினர் என்றுணர்க. மை:ஆகுபெயர்; மையோலை ஓலையின்கண்ணுள்ள எழுத்துக்கள் விளங்கித்
தோன்றும்படி சுவடியில் மை பூசுதலைச் செய்தலின் மையாடல் எனப்பட்டது எனினுமாம்.
-பொ.வே.சோ.உரை விளக்கம்.

மையாப்பது

மையாப்பது – (பெ) மேகம் பரவுவது, the act of clouds spreading over (the moon)
நீயே செய்_வினை மருங்கில் செலவு அயர்ந்து யாழ நின்
கை புனை வல் வில் ஞாண் உளர்தீயே
இவட்கே செய்வு_உறு மண்டிலம் மையாப்பது போல்
மை இல் வாள் முகம் பசப்பு ஊரும்மே – கலி 7/5-8
நீயோ, இங்கு பொருளீட்டும் காரியத்திற்காகப் பயணம் மேற்கொள்வதை விரும்பி, உன்னுடைய
கையால் செய்த வலிமையான வில்லின் நாணை நீவிவிட்டுப் பார்க்கிறாய்;
ஆனால் இவளுக்கோ, செம்மையாகச் செய்யப்பட்டது போன்ற முழுநிலவில் மேகம் படர்வது போல்
மறு இல்லாத ஒளியையுடைய முகத்தில் பசப்பு பரவத் தொடங்கிற்று;