ஃ | அ 105 |
ஆ 52 |
இ 77 |
ஈ 24 |
உ 121 |
ஊ 13 |
எ 36 |
ஏ 20 |
ஐ 5 |
ஒ 32 |
ஓ 20 |
ஔ 1 |
க் | க 124 |
கா 24 |
கி 12 |
கீ 2 |
கு 58 |
கூ 17 |
கெ 9 |
கே 7 |
கை 23 |
கொ 48 |
கோ 28 |
கௌ 1 |
ங் | ங | ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ | ச் | ச 15 |
சா 42 |
சி 51 |
சீ 7 |
சு 29 |
சூ 13 |
செ 66 |
சே 17 |
சை 1 |
சொ 6 |
சோ 4 |
சௌ | ஞ் | ஞ 3 |
ஞா 15 |
ஞி 4 |
ஞீ | ஞு | ஞூ | ஞெ 17 |
ஞே | ஞை | ஞொ 1 |
ஞோ | ஞௌ | ட் | ட | டா | டி | டீ | டு | டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ | ண் | ண | ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ | த் | த 113 |
தா 23 |
தி 54 |
தீ 13 |
து 76 |
தூ 25 |
தெ 44 |
தே 25 |
தை 6 |
தொ 44 |
தோ 16 |
தௌ 1 |
ந் | ந 82 |
நா 44 |
நி 40 |
நீ 21 |
நு 30 |
நூ 11 |
நெ 39 |
நே 12 |
நை 3 |
நொ 24 |
நோ 13 |
நௌ 1 |
ப் | ப 245 |
பா 80 |
பி 63 |
பீ 7 |
பு 173 |
பூ 19 |
பெ 48 |
பே 25 |
பை 22 |
பொ 76 |
போ 37 |
பௌ 1 |
ம் | ம 240 |
மா 85 |
மி 35 |
மீ 13 |
மு 163 |
மூ 24 |
மெ 14 |
மே 30 |
மை 9 |
மொ 6 |
மோ 11 |
மௌ 1 |
ய் | ய 2 |
யா 30 |
யி | யீ | யு | யூ 2 |
யெ | யே | யை | யொ | யோ | யௌ | ர் | ர | ரா | ரி | ரீ | ரு | ரூ | ரெ | ரே | ரை | ரொ | ரோ | ரௌ | ல் | ல | லா | லி | லீ | லு | லூ | லெ | லே | லை | லொ | லோ | லௌ | வ் | வ 236 |
வா 71 |
வி 120 |
வீ 15 |
வு | வூ | வெ 81 |
வே 67 |
வை 18 |
வொ | வோ | வௌ 2 |
ழ் | ழ | ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ | ள் | ள | ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ | ற் | ற | றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ | ன் | ன | னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
---|
தலைசொல் | பொருள் |
---|---|
மே | மே – 1. (வி) விரும்பு, desire |
மேஎம் | மேஎம் – 1. (வி.எ) பொருந்திய, மேவும் என்பதன் திரிபு, be fitted |
மேஎய் | மேஎய் – (வி.எ) மேவி என்பதன் திரிபு, நிலைகொண்டு, abiding, settled, பொருந்தி, having been fitted |
மேகலை | மேகலை – (பெ) பெண்கள் இடையில் அணியும் அணிவகை, A jewelled girdle of women |
மேக்கு | மேக்கு – 1. (பெ) உயரமான இடம், elevatted place பாடு இமிழ் பனி கடல் துழைஇ பெடையோடு மேக்கு எழு பெரும் சினை இருந்த தோகை – குறு 26/2 மேக்கு எழு பெரும் சினை ஏறி கண கலை மாரி ஆன்று மழை மேக்கு உயர்க என – புறம் 143/2 |
மேதி | மேதி – (பெ) எருமை, buffalo |
மேதை | மேதை – (பெ) பேரறிவு, supreme intelligence |
மேந்தோன்று | மேந்தோன்று – (வி) மேம்பட்டு விளங்கு, சிறந்து விளங்கு, become eminent, be great |
மேன | மேன – (வி.மு) விரும்பி உறையும் இடம் ஆயின, are desirable living places |
மேனி | மேனி – (பெ) 1. உடம்பு, body |
மேம் | மேம் – (பெ.அ) 1. மேலுள்ள, covering |
மேம்படு | மேம்படு – (வி) மேலாகு, சிறந்து விளங்கு, rise high as in status, be great தழை அணி அல்குல் மகளிருள்ளும் |
மேம்பாடு | மேம்பாடு – (பெ) மேன்மை, சிறப்பு, grandeur, pre eminence |
மேய | மேய – (வி.எ) 1. மேவிய என்பதன் திரிபு – பொருந்திய, attached மாயோன் மேய ஓண நன்_நாள் – மது 591 |
மேயல் | மேயல் – (பெ) 1. மேய்தல், grazing |
மேய் | மேய் – (வி) 1. பசு, மான் போன்றவை, புல், இலை, தழை ஆகியவற்றை உண்ணு, graze இறுகு புனம் மேய்ந்த அறு கோட்டு முற்றல் மென் தினை மேய்ந்த தறுகண் பன்றி – ஐங் 261/1 முருங்கை மேய்ந்த பெரும் கை யானை – அகம் 167/11 நரந்தை நறும் புல் மேய்ந்த கவரி – புறம் 132/4 வளை நீர் மேய்ந்து கிளை முதல் செலீஇ எரி மேய்ந்த கரி வறல் வாய் புகவு காணாவாய் |
மேரு | மேரு – (பெ) ஏழு தீவுகளின் மத்தியிலுள்ளதும் கிரகங்கள் சுற்றிவருவதாகக் கருதப்படுவதுமான பொன்மலை., |
மேற்கொள் | மேற்கொள் – (வி) 1. மேலேறு, mount, climb up மரல் மேற்கொண்டு மான் கணம் தகை-மார் |
மேற்செல் | மேற்செல் – (வி) முன்னேறிச்செல், go on, proceed |
மேற்படு | மேற்படு – (வி) அதிகமாகு, மிகுந்திரு, increase, be excessive |
மேலோர் | மேலோர் – (பெ) 1. மேலிடத்தில் இருப்பவர்கள், Those who are seated high, as on horses and elephants |
மேல்வரு(தல்) | மேல்வரு(தல்) – (வி) எதிர்த்து வருதல், advance against |
மேழகம் | மேழகம் – (பெ) செம்மறி ஆடு, sheep |
மேழி | மேழி – (பெ) கலப்பை, plough |
மேவன | மேவன – (பெ) விரும்புவன, likings |
மேவரு(தல்) | மேவரு(தல்) -(வி) 1. விரும்பு, like, desire |
மேவல் | மேவல் – 1. (வி.மு) மேவ வேண்டாம், பொருந்தியிருக்க வேண்டாம், கொள்ளவேண்டாம், do not be in |
மேவார் | மேவார் – (பெ) இயைந்து செல்லாதவர், பகைவர், foes, enemies |
மேவாள் | மேவாள் – (வி.மு) விரும்பமாட்டாள், have no desire in |
மேவு | மேவு – 1. (வி) 1. விரும்பு, desire |