சங்க இலக்கிய அருஞ்சொற்களஞ்சியம்

முனைவர் ப.பாண்டியராஜா
(www.tamilconcordance.in)


105

52

77

24

121

13

36

20

5

32

20

1
க்
124
கா
24
கி
12
கீ
2
கு
58
கூ
17
கெ
9
கே
7
கை
23
கொ
48
கோ
28
கௌ
1
ங் ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
15
சா
42
சி
51
சீ
7
சு
29
சூ
13
செ
66
சே
17
சை
1
சொ
6
சோ
4
சௌ
ஞ்
3
ஞா
15
ஞி
4
ஞீ ஞு ஞூ ஞெ
17
ஞே ஞை ஞொ
1
ஞோ ஞௌ
ட் டா டி டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ
ண் ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
113
தா
23
தி
54
தீ
13
து
76
தூ
25
தெ
44
தே
25
தை
6
தொ
44
தோ
16
தௌ
1
ந்
82
நா
44
நி
40
நீ
21
நு
30
நூ
11
நெ
39
நே
12
நை
3
நொ
24
நோ
13
நௌ
1
ப்
245
பா
80
பி
63
பீ
7
பு
173
பூ
19
பெ
48
பே
25
பை
22
பொ
76
போ
37
பௌ
1
ம்
240
மா
85
மி
35
மீ
13
மு
163
மூ
24
மெ
14
மே
30
மை
9
மொ
6
மோ
11
மௌ
1
ய்
2
யா
30
யி யீ யு யூ
2
யெ யே யை யொ யோ யௌ
ர் ரா ரி ரீ ரு ரூ ரெ ரே ரை ரொ ரோ ரௌ
ல் லா லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
வ்
236
வா
71
வி
120
வீ
15
வு வூ வெ
81
வே
67
வை
18
வொ வோ வௌ
2
ழ் ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன் னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்
கங்குல்

கங்குல் – (பெ) 1. இரவு, 2. இருள், night, darkness
1.
அரும் கடி காவலர் சோர்_பதன் ஒற்றி
கங்குல் வருதலும் உரியை – அகம் 2/14,15
கடும் காவலையுடைய காவலர்கள் சோர்ந்திருக்கும் தக்க சமயத்தை உளவறிந்து கண்டு
இரவில் வருவதுவும் (நினக்கு)உரியதே,
2.
பல்லோர் துஞ்சும் பானாள் கங்குல்
யாங்கு வந்தனையோ ஓங்கல் வெற்ப – குறு 355/4,5
பலரும் துயிலும் நள்ளிரவின் இருளில்
எப்படித்தான் வந்தாயோ? உயர்ந்த மலைநாட்டைச் சேர்ந்தவனே!

கசடு

கசடு – (பெ) 1. அழுக்கு, dirtiness
2. குற்றம், blmish, fault
1.
கை கசடு இருந்த என் கண் அகன் தடாரி – பொரு 70
கை அழுக்கு இருந்த என் முகப்பு அகன்ற உடுக்கையில்
2.
களைக என அறியா கசடு இல் நெஞ்சத்து – பதி 44/6
என் துயரத்தைக் களைக என்று யாரிடமும் சொல்வதை அறியாத குற்றமில்லாத நெஞ்சத்தினையும்,

கச்சம்

கச்சம் – (பெ) ஆடைச்சொருக்கு,
the end piece of waist garment tucked up in folds,
such fold brought up from the front and tucked up behind;
கச்சம் தின்ற கழல் தயங்கு திருந்து அடி – மது 436
கச்சம் தேய்த்துத் தழும்பேறிப்போயிருந்த கழல் அசையும் திருத்தமான கால்களையும்

கச்சு

கச்சு – (பெ) அரைப்பட்டி, இடுப்பில் இறுக்கிக் கட்டும் துணிப்பட்டை, girdle, cloth belt
இது கச்சை என்றும் அழைக்கப்படும்

இரவு பகல் செய்யும் திண் பிடி ஒள் வாள்
விரவு வரி கச்சின் பூண்ட மங்கையர் – முல் 46,47
இரவைப் பகலாக்கும், திண்ணிய கைப்பிடியையுடைய ஒளிவிடும் வாளை
விரவின நிறங்களையுடைய கச்சினால் பூண்ட மங்கையர்,

கச்சை

கச்சை – (பெ) அரைப்பட்டி, இடுப்பில் இறுக்கிக் கட்டும் துணிப்பட்டை, girdle, cloth belt
இது கச்சு என்றும் அழைக்கப்படும்

விரை பரி வருந்திய வீங்கு செலல் இளையர்
அரை செறி கச்சை யாப்பு அழித்து அசைஇ – நற் 21/1,2
விரைந்த ஓட்டத்தினால் வருந்திய நெடுந்தொலைவு பயணம்செய்த படைமறவர்
இடுப்பில் கட்டிய கச்சையை அவிழ்த்துவிட்டுத் தங்கியவாறு

கஞல்

கஞல் – (வி) 1. நெருக்கமாக இரு, be densely packed
2. மிகுந்திரு, be in excess
1.
பன் மலர் காயாம் குறும் சினை கஞல
கார் தொடங்கின்றே காலை – நற் 242/4,5
பல மலர்களையுடைய காயா சிறிய கிளைகளில் நெருக்கமாய்ப் பூக்க,
கார்காலம் தொடங்கிவிட்டது இன்று காலையில்
2.
இறும்பூது கஞலிய இன் குரல் விறலியர் – மலை 358
வியப்பு மிகுந்து விளங்கிய இனிய குரலையுடைய விறலியர்

கஞ்சகம்

கஞ்சகம் – (பெ) கறிவேப்பிலை மரம், Curry-leaf tree, Murraya koenegii
கஞ்சக நறு முறி அளைஇ – பெரும் 308
கறிவேப்பிலை மரத்தின் நறிய இலை(யைக் கிள்ளிக்)கலக்கிவிட்டு

கடகம்

கடகம் – (பெ) கங்கணம், bracelet
மடை செறி முன்கை கடகமொடு ஈத்தனன் – புறம் 150/21
மூட்டுவாய் செறிந்த முனகையில் உள்ள கடகத்துடன் கொடுத்தான்

கடமா

கடமா – (பெ) காட்டுமாடு, bison
கல்லென் கானத்து கடமா ஆட்டி
எல்லும் எல்லின்று ஞமலியும் இளைத்தன – குறு 179/1,2
கல்லென்ற ஓசையிடும் காட்டினில் காட்டுமாடுகளை விரட்டி
பகற்பொழுதும் இருளாகிவிட்டது; வேட்டைநாய்களும் இளைத்துவிட்டன

கடம்

கடம் – (பெ) 1. பாலைநிலவழி, difficult path in a barren tract
2. தெய்வக்கடன், religious obligation
3. கடமை, duty
1.
வெம் துகள் ஆகிய வெயில் கடம் நீந்தி – ஐங் 330/1
பொசுக்குகின்ற புழுதிக்காடாகிய வெயில் காயும் இந்தப் பாலைவழியைக் கடந்து
2.
நிலை உயர் கடவுட்கு கடம் பூண்டு – கலி 46/16
உயர்நிலைத் தெய்வங்களுக்கு நேர்ந்துகொண்டு
3.
இன்னும் கடம் பூண்டு ஒரு_கால் நீ வந்தை உடம்பட்டாள் – கலி 63/12
இன்னமும் உன் விருப்பப்படி நடப்பதை தன் கடமையாகக் கொண்டு உனக்கு உடன்பட்டாள்

கடம்பன்

கடம்பன் – (பெ) ஒரு பழமையான குடி, An ancient tribe
துடியன் பாணன் பறையன் கடம்பன் என்று
இந்நான்கு அல்லது குடியும் இல்லை – புறம் 335/7

கடம்பு

கடம்பு – (பெ) கடம்பம், Common cadamba, Anthocephalus cadamba;
1.
முருகப்பெருமானுக்குரிய மரம்
கடம்பு அமர் நெடுவேள் அன்ன மீளி – பெரும் 75
கடம்பிடத்தே இருக்கும் நெடிய முருகனை ஒத்த தலைமைச்சிறப்பையும்
2.
பல அரசர்களுக்குக் காவல்மரமாக இருந்துள்ளது
வயவர் வீழ வாள் அரில் மயக்கி
இடம் கவர் கடும்பின் அரசு தலை பனிப்ப
கடம்பு முதல் தடிந்த கடும் சின வேந்தே – பதி 12/1-3
வீரர்கள் தோற்றுவிழும்படியாக, வாளால் செய்யும் போரினால் அவரை நிலைகுலையச் செய்து
பகைவரின் நாட்டைக் கவர்ந்துகொள்ளும் சுற்றத்தாரையுடைய அரசர்கள் தலைநடுங்கி வணங்க,
அவரின் காவல்மரமான கடம்பரமரத்தை அடியோடு வெட்டிச் சாய்த்த கடும் சினத்தையுடைய வேந்தனே!
3.
மலர்கள் வண்ணமயமானவை. நறுமணம் மிக்கவை
வண்ண கடம்பின் நறு மலர் அன்ன – பெரும் 203
4.
அடிமரம் உறுதியானது, திரண்டு பருத்தது.
திணி நிலை கடம்பின் திரள் அரை வளைஇய – குறி 176
உறுதியாக நிற்கும் கடப்பமரத்தின் திரண்ட அடிப்பகுதியைச் சுற்றிவளைத்து
5.
மலர்கள் உருண்டையானவை, குலைகுலையாய்ப் பூப்பவை
உருள் இணர் கடம்பின் நெடுவேட்கு எடுத்த – பரி 21/50
தேருருள் போன்ற பூங்கொத்துக்களையுடைய கடம்பின் பூவுடன் சேர்ந்து கமழ்கின்ற மாலை

கடறு

கடறு – (பெ) 1. காடு, jungle
2. பாலை நிலம், desert tract
3. மலைச்சாரல், mountain slop
1.
கடுங்கண் கானவர் கடறு கூட்டுண்ணும் – பெரும் 116
கடுமையான கானவர் காட்டில் (கூட்டாஞ்சோற்றைக்)கூடியுண்ணும்
2.
வெம் கடற்று அடை முதல் படு முடை தழீஇ – நற் 164/8
வெம்மையான பாலைவழியின் உலர்ந்த சருகுகளின் மேல் மிக்க முடைநாற்றம் சூழ்ந்திருக்க,
3.
கோடு காய் கடற்ற காடு இறந்தோரே – அகம் 395/15
உச்சி வெம்பிப்போன மலைச்சரிவிலுள்ள காடுகளைக் கடந்து சென்றவர்.

கடவு

கடவு – (வி) 1. செலுத்து, drive, ride on
2. தூண்டு, urge, egg on
1.
திண் தேர் வலவ கடவு என கடைஇ – அகம் 74/11
திண்ணிய தேரினை, பாகனே, விரைந்து செலுத்துவாயாக எனக்கூறிச் செலுத்திக்கொண்டு
2.
கேள்வி அந்தணர் கடவும்
வேள்வி ஆவியின் உயிர்க்கும் என் நெஞ்சே – கலி 36/25,26
கேள்விஞானமுள்ள அந்தணர் தூண்டிவிடும்
வேள்விப் புகையைப் போல் பெருமூச்செறிகிறது என் நெஞ்சம்.

கடாம்

கடாம் – (பெ) யானையின் மதநீர், secretion of a must elephant
ஓங்கு உயர் எழில் யானை கனை கடாம் கமழ் நாற்றம் – கலி 66/3
ஓங்கி உயர்ந்த அழகிய யானையின் மிகுதியான மதநீரிலிருந்து கமழும் மணத்துடன்

கடி

கடி – 1. (வி) 1. துரத்து, ஓட்டு, scare away, drive away
– 2. (பெ) 1. காவல், guarding, protection
2. பேய், evil spirit
3. சிறப்பு, beauty, excellence
4. அச்சம், fear
5. வாசனை, நறுமணம், fragrance, scent
6. அடிக்குரல் ஓசை, sonorousness
7. மிகுதி, abundant, plenty
8. பூசை, தொழுதல், prayer, worship
9. திருமணம், wedding
10. புதுமை, newness, freshness
11. குறுந்தடி, short stick to beat drums
12. விரைவு, speed, swiftness
1.1
தினை விளை சாரல் கிளி கடி பூசல் – மது 291
தினை விளையும் மலைப்பக்கத்தில் கிளியை ஓட்டும் ஆரவாரமும்,
2.1.
அந்தணர் அருகா அரும் கடி வியல் நகர் – சிறு 187
சான்றோர்(எண்ணிக்கை) குறைவுபடாததும், அரிய காவலினையுடையதும், அகன்ற மனையை உடையதும்
2.2.
ஆடுற்ற ஊன் சோறு
நெறி அறிந்த கடி வாலுவன் – மது 35,36
துழாவிச் சமைத்த ஊனாலாகிய சோற்றை, 35
இடும்முறை அறிந்த பேய் மடையன் (சமையல் செய்வோன்)
2.3
அரும் கடி மா மலை தழீஇ – மது 301
பெறுதற்கரிய சிறப்பினையுடைய பெரிய மலைகள் தழுவி(நிற்கும் குறிஞ்சி நிலம்)
2.4
அரும் கடி வேலன் முருகொடு வளைஇ – மது 611
அரிய அச்சத்தைச் செய்யும் வேலன் வெறியாட்டமாடி வளைத்துக்கொண்டு,
2.5
கரந்தை குளவி கடி கமழ் கலி மா – குறி 76
நாறுகரந்தை, காட்டுமல்லிகைப்பூ, நறுமணம் கமழும் தழைத்த மாம்பூ,
2.6
கடி கவர்பு ஒலிக்கும் வல் வாய் எல்லரி – மலை 10
அடிக்குரல் ஓசையில் (தாளத்துடன்)ஒத்து ஒலிக்கும் வலிமையான விளிம்புப் பகுதியையுடைய சல்லியும்,
2.7
மாரி கடி கொள காவலர் கடுக – ஐங் 29/1
மழையும் மிகுதியாகப் பெய்ய, காவலர்கள் தம் தொழிலில் விரைந்து செயல்பட
2.8
பெய்ம் மணல் முற்றம் கடி கொண்டு
மெய்ம் மலி கழங்கின் வேலன் தந்தே – நற் 268/8,9
பரப்பி விட்ட புதுமணலைக் கொண்ட முற்றத்தில் பூசைக்குரிய ஏற்பாடுகளைச் செய்து
மெய்யை உரைக்கும் கழங்கினையுடைய வேலனை வருவித்து
2.9
சுடு பொன் அன்ன கொன்றை சூடி
கடி புகுவனர் போல் மள்ளரும் உடைத்தே – ஐங் 432/2,3
நெருப்பில் சுட்ட பொன்னைப் போன்று ஒளிவிடும் கொன்றை மலர்களை அணிந்துகொண்டு
திருமண வீட்டில் நுழைபவரைப் போன்ற மள்ளரையும் கொண்டுள்ளது.
2.10
கடி ஏர் பூட்டுநர் கடுக்கை மலைய – பதி 43/16
புதிய ஏரைப் பூட்டி உழும் உழவர் கொன்றைப்பூவைச் சூடிக்கொள்ளவும்,
2.11
எடுத்தேறு ஏய கடி புடை அதிரும்
போர்ப்பு_உறு முரசம் கண் அதிர்ந்து ஆங்கு – பதி 84/1,2
போர்க்களத்தில் வீரரை முன்னேறிச் செல்ல ஏவுகின்ற வகையில் குறுந்தடியால் புடைக்கப்பட்டு அதிர்கின்ற
தோலால் போர்த்தப்பட்ட முரசின் முகப்பு அதிர்வதைப் போன்ற
2.12
எம் அம்பு கடி விடுதும் நும் அரண் சேர்-மின் என – புறம் 9/5
எம்முடைய அம்பை விரைவாகச் செலுத்துவோம், உமக்குப் பாதுகாப்பான இடத்தைச் சேர்ந்துகொள்ளுங்கள்

கடிகை

கடிகை – (பெ) 1. காப்பு, a string, one ties round one’s wrist as token of the fulfilment of a vow
2. சிறு துண்டம், piece cut off
3. கழுத்தணி, necklace
4. கைப்பிடி, காம்பு, handle; hilt, as of a spear
1.
வலம்புரி வளையொடு கடிகை நூல் யாத்து – நெடு 142
வலம்புரிச் சங்கு வளையல்களோடு காப்புக்கயிறைக் கட்டி,
2.
கரும்பின்
கால் எறி கடிகை கண் அயின்று அன்ன – குறு 267/2,3
கரும்பின்
அடிப்பகுதியில் வெட்டிய துண்டினை உண்டது போன்ற
3.
நீல மணி கடிகை வல்லிகை யாப்பின் – கலி 96/10
நீல மணிகள் கோத்த கழுத்தணியே வல்லிகையென்னும் கட்டப்பட்ட கழுத்துக்கயிறாகவும்
4.
தனி மணி இரட்டும் தாள் உடை கடிகை
நுழை நுதி நெடு வேல் குறும் படை மழவர் – அகம் 35/3,4
ஒப்பற்ற மணி மாறி மாறி ஒலிக்கும் கடையாணி இட்ட காம்பினையும்
கூரிய முனையையும் உடைய நெடிய வேலையுடைய கோட்டை மறவர்

கடிப்பகை

கடிப்பகை – (பெ வெண்கடுகு, white mustard
கடிப்பகை அனைத்தும் கேள்வி போகா – மலை 22
வெண்சிறுகடுகளவும்(=சிறிதளவும்) இசைச் சுருதியில் தவறு இல்லாது

கடி என்பதற்குப் பேய் என்ற ஒரு பொருளுண்டு. பேயை ஓட்ட வெண்கடுகைப்பயன்படுத்துவர்.
எனவே இந்த வெண்கடுகு பேய்க்குப்பகை, அதாவது, கடிப்பகை எனப்பட்டது.

கடு

கடு – 1. (வி) 1. விரைந்து ஓடு, run fast
2. ஒத்திரு, resemble
3. ஐயப்படு, doubt
2. (பெ.அ) கடுமையான, விரைவான, intense, fast
3. (பெ) 1. கடுக்காய், Chebulic myrobalan
2. நஞ்சு, poison, venom
1.1
காலெனக் கடுக்கும் கவின் பெரு தேரும் – மது 388
காற்றுப்போல் விரையும் அழகிய தேரும்,
1.2
சிறுபுறம் கடுக்கும் பெரும் கை வேழம் – நற் 228/6
முதுகை ஒத்திருக்கும் பெரும் துதிக்கையைக் கொண்ட வேழம்
1.3
நெஞ்சு நடுக்குற கேட்டும் கடுத்தும் தாம்
அஞ்சியது ஆங்கே அணங்கு ஆகும் என்னும் சொல் – கலி 24/1,2
மனம் நடுங்குமாறு ஒரு செய்தியைக் கேட்டும், அதைப் பற்றி ஐயப்பட்டும், தாம்
அஞ்சிக்கொண்டிருந்த ஒரு நிகழ்ச்சி உண்மையாகி நம்மைக் கொடுமைப்படுத்தும் என்று கூறும் பழமொழி,
2.
கல் காயும் கடு வேனிலொடு – மது 106
பாறைகள் சூடேறும் கடுமையான வேனிலால்
கடு வரல் கலுழி கட்கு இன் சேயாற்று – மலை 555
வேகமாகப் பாயும் வெள்ளத்தையுடைய கண்ணுக்கு இனிய சேயாற்றின்
3.1
கடு கலித்து எழுந்த கண் அகன் சிலம்பில் – மலை 14
கடுக்காய் மரம் நெருங்கி வளர்ந்த இடம் பெரிதான மலைச்சரிவில்
3.2
கடுவொடு ஒடுங்கிய தூம்பு உடை வால் எயிற்று – திரு 148
நஞ்சுடன் மறைந்திருக்கும் உள்துளையுடைய வெண்மையான பல்லினையும்,

கடுக்கை

கடுக்கை – (பெ) கொன்றை, indian laburnum
கடி ஏர் பூட்டுநர் கடுக்கை மலைய – பதி 43/16
புதிய ஏரைப் பூட்டி உழும் உழவர் கொன்றைப்பூவைச் சூடிக்கொள்ளவும்

கடுங்கண்

கடுங்கண் – (பெ) கடுமை, இரக்கமின்மை, cruelty, ferocity, savageness
இரும் கவின் இல்லா பெரும் புல் தாடி
கடுங்கண் மறவர் பகழி மாய்த்து என – அகம் 297/5,6
மிக்க அழகு இல்லாது பெரிய பொலிவற்ற தாடியினையும்,
இரக்கமின்மையையும் உடைய மறவரது அம்பு கொன்றதாக,

கடுப்பு

கடுப்பு – (பெ) 1. தேள்,குளவி ஆகியவை கொட்டும்போது ஏற்படும் கடும் வலி,
Throbbing pain, burning sensation, as that caused by the sting of a wasp
2. வேகம், விரைவு, speed
3. சினம், violent anger
1.
தேள் கடுப்பு அன்ன நாட்படு தேறல் – புறம் 392/16
தேள் கொட்டும்போது ஏற்படும் வலியைப்போன்ற உணர்வைத் தருகின்ற நாள்பட்ட கள்
2.
கால் கடுப்பு அன்ன கடும் செலல் இவுளி – அகம் 224/5
காற்றின் வேகத்தைப் போன்ற விரைந்த ஓட்டத்தையுடைய குதிரை
3.
கடு நவை அணங்கும் கடுப்பும் நல்கலும் – பரி 4/49
மிகவும் துன்பம் உண்டாகும்படி வருத்தும் சினமும், அருள்புரிதலும்

கடும்பு

கடும்பு – (பெ) 1. சுற்றம், relations
2. கூட்டம், gathering multitude
1.
கொடும் பறை கோடியர் கடும்பு உடன் வாழ்த்தும் – மது 523
வளைந்த பறையினையுடைய கூத்தரின் சுற்றம் சேர வாழ்த்தும்
2.
கடும்பு ஆட்டு வருடையொடு தாவுவன உகளும் – நற் 119/7
கூட்டமான வரையாடுகளுடன் சேர்ந்து தாவிக்குதித்து விளையாடும்

மேல்

கடுவன் – (பெ) பூனை, குரங்கு இவற்றின் ஆண், male of a cat or monkey
நெடும் கழை கொம்பர் கடுவன் உகளினும் – மலை 237
நீண்ட மூங்கிலின் உச்சிக்கொம்பில் குரங்குகள் (நழுவியும் ஏறியும்) ஆடிக்கொண்டிருப்பினும்,

கடுவன்

கடுவன் – (பெ) பூனை, குரங்கு இவற்றின் ஆண், male of a cat or monkey
நெடும் கழை கொம்பர் கடுவன் உகளினும் – மலை 237
நீண்ட மூங்கிலின் உச்சிக்கொம்பில் குரங்குகள் (நழுவியும் ஏறியும்) ஆடிக்கொண்டிருப்பினும்,

கட்குதல்

கட்குதல் – (வி) களையெடுத்தல், weeding out
பரு இலை குளவியொடு பசு மரல் கட்கும்
காந்தள் அம் சிலம்பில் சிறுகுடி பசித்து என – குறு 100/2,3
பெரிய இலைகளைக் கொண்ட மலைமல்லிகையொடு பசிய மரல் கொடியைக் களையெடுக்கும்
காந்தள் செடிகளைக் கொண்ட அழகிய மலைச் சரிவில் உள்ள சிறுகுடியிலுள்ளோர் பசித்ததாக

கட்சி

கட்சி – (பெ) 1. காடு, forest
2. புகலிடம், refuge
3. தங்குமிடம், dwelling place
1.
உச்சி நின்ற உவவு மதி கண்டு
கட்சி மஞ்ஞையின் சுர முதல் சேர்ந்த
சில்வளை விறலியும் நானும் – புறம் 60/3-5
உச்சியில் நின்ற முழு மதியத்தைக் கண்டு
காட்டு மயிலைப் போல சுரத்திடைப் பொருந்திய
சில வளையலையுடைய விறலியும் நானும்
2.
வளர் இளம் பிள்ளை தழீஇ குறும் கால்
கறை அணல் குறும்பூழ் கட்சி சேக்கும் – பெரும் 204,205
வளரும் இளமையான (தம்)குஞ்சுப்பறவைகளைத் அணைத்தவாறு, குறிய காலினையும்,
கரிய கழுத்தினையும் உடைய காடைப்பறவை புகலிடத்தில் சென்றடையும்,
3.
கலவ மஞ்ஞை கட்சியில் தளரினும் – மலை 235
தோகையையுடைய மயில்கள் தம்மிடங்களில் சோர்வுறும்வரை ஆடிக்கொண்டிருப்பினும்,

கட்டளை

கட்டளை – (பெ) 1. உரைகல், touchstone
2. முறைமை, way, method, manner
1.
பொன் காண் கட்டளை கடுப்ப – பெரும் 220
பொன்னை(உரைத்து)க் காணும் கட்டளைக்கல்லை ஒப்ப
2.
வேனில் பள்ளி தென் வளி தரூஉம்
நேர் வாய் கட்டளை திரியாது – நெடு 61,62
இளவேனில் காலத்தில் (துயிலும்)படுக்கை அறைக்குத் தென்றல் காற்றைத் தரும்
நேருக்கு நேராக அமைந்த சாளரங்கள் திறக்கப்படாமல்

கட்டூர்

கட்டூர் – (பெ) பாசறை, military camp
வேறு புலத்து இறுத்த கட்டூர் நாப்பண் – பதி 68/2
பகைவர் நாட்டினில் எழுப்பித் தங்கியிருக்கும் பாசறையின் நடுவே

கட்பு

கட்பு – (பெ) களைபறித்தல், weeding
கரும்பின் எந்திரம் கட்பின் ஓதை – மது 258
கரும்பு ஆட்டும் ஆலைகளின் ஓசையும், களை பறிக்கும் ஓசையும்,

கணவிரம்

கணவிரம் – (பெ) செவ்வலரி, செவ்வரளி, Red Oleander,
கணவிர மாலை இடூஉ கழிந்து அன்ன – அகம் 31/9
செவ்வலரி மாலை இடப்பட்டு இறந்து கிடந்ததைப் போல

இது கணவிரி என்றும் கணவீரம் என்றும் அழைக்கப்படும்.
சினை வளர் வேங்கை கணவிரி காந்தள் – பரி 11/20
பெரும் தண் கணவீர நறும் தண் மாலை – திரு 236

கணிச்சி

கணிச்சி – (பெ) 1. குந்தாலி, a kind of pick-axe
2. மழு, battle axe
1.
பொன் செய் கணிச்சி திண் பிணி உடைத்து
சிரறு சில ஊறிய நீர் வாய் பத்தல் – பதி 22/12,13
இரும்பால் செய்யப்பட்ட குந்தாலியால், திண்மையான பிணிப்புக்கொண்ட கட்டாந்தரையைப் பிளந்து
அங்கொன்றும் இங்கொன்றுமாய்ச் சிறிதளவு ஊறிய நீரைக் கொண்ட பள்ளத்தில்
2.
மாற்று அரும் கணிச்சி மணி மிடற்றோனும் – புறம் 56/2
விலக்குதற்கரிய மழுவாகிய படைக்கலத்தை உடைய நீல மணி போலும் மிடற்றையுடையோனும்

கண்ணி

கண்ணி – (பெ) 1. தலைமாலை – பெரும்பாலும் ஆடவர் அணிவது, wreath worn on the head; chaplet
2. பூமாலை, garland
1.
மைந்தர் கண்ணி மகளிர் சூடவும் – பட் 109
கணவர் (சூடும்)கண்ணியை மகளிர் (தலையில்)சூடிக்கொள்ளவும்,
2.
குண்டு சுனை பூத்த வண்டு படு கண்ணி
இணைத்த கோதை அணைத்த கூந்தல் – திரு 199,200
ஆழ்ந்த சுனையில் பூத்த மலர்(புனையப்பட்ட) வண்டு வீழ்கின்ற மாலையினையும்,
பிணைக்கப்பட்ட மாலையினையும், சேர்த்தின கூந்தலையும் உடையராய்,

கண்ணுள்வினைஞர்

கண்ணுள்வினைஞர் – (பெ) ஓவியர்,
எ வகை செய்தியும் உவமம் காட்டி
நுண்ணிதின் உணர்ந்த நுழைந்த நோக்கின்
கண்ணுள்வினைஞரும் பிறரும் கூடி – மது 516-518
பல வகைப்பட்ட தொழில்களையும் ஒப்புக்காட்டிக்
கூரிதாக உணர்ந்த கூரிய அறிவினையுடைய
ஓவியரும், பிறரும் கூடி,

கதம்

கதம் – (பெ) சினம், anger
கதம் பெரிது உடையள் யாய் அழுங்கலோ இலளே – நற் 150/11
சினம் பெரிது உடையவளாய் என் தாய் வருந்துவாள் இல்லை.

கதழ்

கதழ் – (வி) 1. விரைந்து செல், be swift and forceful
2. சீறியெழு, rage, be furious
1.
கால் இயக்கு அன்ன கதழ் பரி கடைஇ – மது 440
காற்றின் இயக்கம் போன்ற விரைந்த குதிரைகளைச் செலுத்தி,
2.
மலை தலைவந்த மரையான் கதழ் விடை – மலை 331
மலையிலிரு

கதுப்பு

கதுப்பு – (பெ) தலைமயிர், human hair
மெல் இயல் அரிவை நின் பல் இரும் கதுப்பின்
குவளையொடு தொடுத்த நறு வீ முல்லை – நற் 367/7,8
மென்மையான இயல்பையுடைய அரிவையே! உனது பலவாகிய கரிய கூந்தலில் இருப்பதைப் போன்று
குவளையோடு கலந்து தொடுத்த நறிய பூவான முல்லை

கதுவாய்

கதுவாய் – (பெ) கொறுவாய், மூளியாதல், அடிபட்டு சிதைந்துபோதல், being scarred, distortion, ruin
எறிந்து இலை முறிந்த கதுவாய் வேலின் – புறம் 347/4
பகைவரை எறிந்து இலை முறிந்து வடுப்பட்ட வாயையுடைய வேலினையும்

கதுவு

கதுவு – (வி) பற்று, sieze, grasp
பெரும் கை ஏற்றை
தூங்கு தோல் துதிய வள் உகிர் கதுவலின்
பாம்பு மதன் அழியும் பானாள் கங்குலும் – அகம் 8/2-4
பெரிய கையை உடைய ஆண்கரடியின்
தொங்கும் தோலின் நுனியில் உள்ள பெரிய நகம் கவ்விப் பிடிப்பதால்
பாம்பு தன் வலிமையை இழக்கும் பாதிநாளாகிய இரவும்

கதூஉ

கதூஉ – (வி.அ) கதுவி என்பதன் விகாரம். பார்க்க கதுவு
கவை கதிர் இரும் புறம் கதூஉ உண்ட – அகம் 194/10
கவைத்த கதிர்களின் கரிய புறத்தினைப்பற்றி உண்ட

கதூஉம்

கதூஉம் – (வி.எ) கதுவும் என்பதன் விகாரம். பார்க்க கதுவு
கழனி மாஅத்து விளைந்து உகு தீம் பழம்
பழன வாளை கதூஉம் ஊரன் – குறு 8/1,2
வயல்வெளியிலுள்ள மா மரத்தில் விளைந்து உதிர்ந்த இனிய பழத்தை
பொய்கையின் வாளைமீன் கவ்வும் ஊரையுடைய தலைவன்,

கந்தம்

கந்தம் – (பெ) கடவுள் உறையும் தூண், pillar in which a deity resides
கலி கெழு கடவுள் கந்தம் கைவிட – புறம் 52/12
(முழவு முதலாகிய) ஒலி பொருந்திய தெய்வங்கள் தூணைக் கைவிட

கந்து

கந்து – (பெ) 1. யானை கட்டும் தறி, post to tie an elephant to
2. தெய்வம் உறையும் தறி, post representing a deity which is worshipped
3. பற்றுக்கோடு, ஆதரவு, support
1.
கந்து நீத்து உழிதரும் கடாஅ யானையும் – மது 383
கம்பத்தை விட்டுச் சுழலும் கடாத்தையுடைய யானையும்;
2.
மன்றமும் பொதியிலும் கந்து உடை நிலையினும் – திரு 226
ஊர்ப்பொது மரத்தடியிலும், அம்பலத்திலும், திருவருள்குறியாக நடப்பட்ட தறியிடத்திலும்
3.
புலம் கந்து ஆக இரவலர் செலினே
வரை புரை களிற்றொடு நன்கலன் ஈயும் – அகம் 303/8,9
தம் அறிவையே நம்பி அதனை ஆதரவாகக் கொண்டு இரப்போர் சென்றால்
மலை போன்ற களிறுகளுடன் நல்ல அணிகலன்களைக் கொடுக்கும்

கனம்

கனம் – (பெ) பொன், gold
கயல் ஏர் உண்கண் கனம் குழை மகளிர் – குறு 398/3
கயல்மீனை ஒத்த மையுண்ட கண்களையுடைய பொன் குழைகளையுடைய மகளிர்

கனலி

கனலி – (பெ) சூரியன், sun
நெருப்பு அவிர் கனலி உருப்பு சினம் தணிய – ஐங் 388/1
நெருப்பு தழலாய்த் தகிக்கும் சூரியனின் கொடுமையான சினம் தணியும்வரை

கனல்

கனல் – 1. (வி) கொதி, எரி, boil, be hot, தகி, burn with intense heat
– 2. (பெ) நெருப்பு, fire
1.
குவளை
மா இதழ் புரையும் மலிர் கொள் ஈர் இமை
உள்ளகம் கனல உள்ளு-தொறு உலறி – அகம் 19/10-12
குவளையின்
கரிய இதழைப் போன்ற நீர் மிகுதல் கொண்ட குளிர்ந்த கண்ணிமைகள்
உள்ளம் கொதித்தலால் நினைக்குந்தோறும் வற்றி
2.
கனல் பொருத அகிலின் ஆவி கா எழ – பரி 10/72
தீயில் வெந்த அகிலின் புகை அந்தச் சோலைமுழுக்கப் பரவ

கனை

கனை – (வி) 1. நெருக்கமாயிரு, be crowded
2. மிகு, be abundant
3. ஒலி எழுப்பு, sound
4. நிறைந்திரு, be full
5. திரட்சியாய் இரு, be stout
1
கல் மிசை உருப்பு அற கனை துளி சிதறு என – கலி 16/7
பாறைகளின் மேலுள்ள வெம்மை அற்றுப்போகும்படி செறிவாகத் துளிகளைப் பொழிவாயாக என்று
2
காமம் கனைந்து எழ கண்ணின் களி எழ – பரி 10/63
காம உணர்வு மிகுந்து எழ, அதனால் கண்ணில் வெறி தோன்ற,
3
ஆடுதொறு கனையும் அம் வாய் கடும் துடி – அகம் 79/13
ஆடும்பொழுதெல்லாம் ஒலிக்கும் அழகிய வாயினையுடைய கடிய துடியினையும்
4
மண் கனை முழவின் தலைக்கோல் கொண்டு – மலை 370
(தோலில் பூசப்பட்ட கரிய)சாந்து நிறைந்த முரசின் (அதை எடுத்துச்செல்லக் கட்டிய)காவுமரத்தைக்
கையில் பிடித்து
5
சினை பசும்பாம்பின் சூல் முதிர்ப்பு அன்ன
கனைத்த கரும்பின் கூம்பு பொதி அவிழ – குறு 35/2,3
கருவுற்ற பச்சைப்பாம்பின் சூல் முதிர்ச்சி போன்ற
பருத்திருந்த கரும்பின் குவிந்த அரும்பு மலரும்படி

கன்னல்

கன்னல் – (பெ) 1. நாழிகை வட்டில், hourglass
2. நீர் வைக்கும் குறுகிய வாய் உள்ள பாத்திரம்
1.
பொழுது அளந்து அறியும் பொய்யா மாக்கள்
தொழுது காண் கையர் தோன்ற வாழ்த்தி
எறி நீர் வையகம் வெலீஇய செல்வோய் நின்
குறு நீர் கன்னல் இனைத்து என்று இசைப்ப – முல் 55-58
பொழுதை அளந்து அறியும், உண்மையே பேசுகின்ற மக்கள்
(அரசனை)வணங்கியபடி காணும் கையையுடையவராய், விளங்க வாழ்த்தி,
‘(திரை)எறிகின்ற கடல்(சூழ்ந்த) உலகத்தே (பகைவரை)வெல்வதற்குச் செல்கின்றவனே, உனது
சிறிதளவு நீரைக்கொண்ட கடிகைப் பாத்திரம் (காட்டும் நேரம்)இத்துணை’ என்று சொல்ல –
2.
கல்லென் துவலை தூவலின் யாவரும்
தொகு வாய் கன்னல் தண்ணீர் உண்ணார் – நெடு 64,65
‘கல்’லென்கிற ஓசையுடன் தூறல் (நீர்த்திவலைகளைத்)தூவுவதால், ஒருவருமே
குவிந்த வாயையுடைய செம்புகளில் தண்ணீரைக் குடியாராய்

கமம்

கமம் – (பெ) நிறைவு, fullness, entirety
1.
கார்கோள் முகந்த கமம் சூல் மா மழை – திரு 7
கடலில் முகந்த நிறைத்த சூல் கொண்டமேகங்கள்,
2.
விளம்பழம் கமழும் கமம் சூல் குழிசி – நற் 12/1
விளாம்பழம் கமழும், நிறைசூலியைப் போன்ற தயிர்ப்பானையில்
3.
கணை கோட்டு வாளை கமம் சூல் மட நாகு – குறு 164/1
கணைபோன்று திரண்ட கொம்பினையுடைய முதிர்ந்த கருக்கொண்ட பெண் வாளைமீன்
4.
கான மஞ்ஞை கமம் சூல் மா பெடை – அகம் 177/10
காட்டிலுள்ள மயிலின் நிறைந்த கருவினைக் கொண்ட கரிய பெடை

கமுகு

கமுகு – (பெ) பாக்கு மரம், Areca-palm, Areca catechu
திரள் கால்
சோலை கமுகின் சூல் வயிற்று அன்ன – பெரும் 380,381
திரண்ட தண்டினையுடைய
சோலையிடத்து நிற்கும் கமுகின் சூல்கொண்ட வயிற்றை ஒத்த

கம்பலை

கம்பலை – (பெ) ஆரவாரம், din, clamour, roar
நிரை திமில் வேட்டுவர் கரை சேர் கம்பலை – மது 116
வரிசையாக வருகின்ற படகின் மீன்பிடிப்போர் கரையில் இறங்கும் ஆராவார ஓசையும்,

கம்புள்

கம்புள் – (பெ) ஒரு நீர்ப்பறவை, சம்பங்கோழி, a water bird, Gallirallus striatus
பழன கம்புள் பயிர் பெடை அகவும் – ஐங் 60/1
நீர்நிலைகளில் வாழும் சம்பங்கோழி, விருப்பத்தோடு தன்னை அழைக்கும் தன் பெடையை நோக்கிக் கூவுகின்ற

இதனுடைய பேடைக்கு நெற்றி வெள்ளையாக இருக்கும். இதன் குரல் கரகரத்த ஓசையை உடையது.
வெண் நுதல் கம்புள் அரி குரல் பேடை – ஐங் 85/1

கம்மியன்

கம்மியன் – (பெ) கம்மாளன், smith, artisan
1. செம்பினாலான பானையை வனைவர் கம்மியர் எனப்பட்டனர்.
மண் திணி ஞாலம் விளங்க கம்மியர்
செம்பு சொரி பானையின் மின்னி – நற் 153/2,3
மண் திணிந்த இந்த உலகம் ஒளிர்ந்துவிளங்க, கொல்லர் கடையும்போது
செம்புப்பொறிகளைச் சொரியும் பானையைப் போல மின்னலிட்டு,
2. நெசவுத்தொழில் செய்வோரும் கம்மியர் எனப்பட்டனர்.
குறியவும் நெடியவும் மடி தரூஉ விரித்து
சிறியரும் பெரியரும் கம்மியர் குழீஇ – மது 520,521
சிறியனவும் பெரியனவுமாகிய மடிப்புடைவைகளைக் கொண்டுவந்து விரித்து,
சிறியோரும் பெரியோருமாகிய நெசவாளர்கள் திரண்டு,
3. வேலைப்பாடு மிக்க விசிறிகளைச் செய்பவர்களும் கம்மியர் எனப்பட்டனர்
கைவல் கம்மியன் கவின் பெற புனைந்த
செம் கேழ் வட்டம் சுருக்கி – நெடு 57,58
கை(வேலைப்பாட்டில்) சிறந்த கைவினைக்கலைஞன் அழகுபெறச் செய்த
சிவந்த நிறத்தையுடைய விசிறி (மூடிச்)சுருக்கிடப்பட்டு
4. மரவேலை செய்யும் தச்சர்களும் கம்மியர் எனப்பட்டனர்
கைவல் கம்மியன் முடுக்கலின் புரை தீர்ந்து
ஐயவி அப்பிய நெய் அணி நெடு நிலை – நெடு 85,86
கைத்தொழில் வல்ல தச்சன் (ஆணிகளை நன்றாக)முடுக்கியதனால் இடைவெளியற்று,
வெண்சிறுகடுகு அப்பிவைத்த நெய்யணிந்த நெடிய நிலையினையுடைய,
5. முத்துக்களைக் கொண்டு அணி செய்வோரும் கம்மியர் எனப்பட்டனர்
கைவல் கம்மியன் கவின் பெற கழாஅ
மண்ணா பசு முத்து ஏய்ப்ப – நற் 94/4,5
கைத்தொழிலில் வல்ல கம்மியன் அழகுபெறக் கழுவாத
தூய்மைசெய்யாத பசுமுத்தைப் போல
6. பொற்கொல்லர்களும் கம்மியர் எனப்பட்டனர்
பொன் செய் கம்மியன் கைவினை கடுப்ப – நற் 313/2

கய

கய – (பெ.அ) 1. பெரிய, great, big
2. மென்மையான, tender, delicate
1.
கழுநீர் மேய்ந்த கய வாய் எருமை – சிறு 42
செங்கழுநீர்ப்பூவைத் தின்ற பெரிய வாயையுடைய எருமை

கயந்தலை

கயந்தலை – (பெ) யானைக்கன்று, young elephant, having a tender head;
துடி அடி கயந்தலை கலக்கிய சில் நீரை – கலி 11/8
உடுக்கை போன்ற கால்களையுடைய கன்று கலக்கிய சிறிது நீரை

கயமுனி

கயமுனி – (பெ) யானைக்கன்று, young elephant,
பொய் பொரு கயமுனி முயங்கு கை கடுப்ப – மலை 107
பொய்ச் சண்டைபோடும் யானைக்கன்றுகளின் (ஒன்றோடொன்று)பின்னிப்பிணைந்த துதிக்கைகள் போல,

கயம்

கயந்தலை – (பெ) யானைக்கன்று, young elephant, having a tender head;
துடி அடி கயந்தலை கலக்கிய சில் நீரை – கலி 11/8
உடுக்கை போன்ற கால்களையுடைய கன்று கலக்கிய சிறிது நீரை

கயல்

கயல் – (பெ) கெண்டை மீன், Cyprinus fimbriatus
கயல் என கருதிய உண்கண் – ஐங் 36/4
கயல் என்று கருதிய மைதீட்டிய கண்கள்

கயவாய்

கயவாய் – (பெ) கழிமுகம், estuary
குட மலை பிறந்த தண் பெரும் காவிரி
கடல் மண்டு அழுவத்து கயவாய் கடுப்ப – மலை 527,528
குடகு மலையில் பிறந்த குளுமையான பெரிய காவிரியாற்றைக்
கடல் (தாகத்துடன்)குடிக்கும் ஆழமான கழிமுகத்தைப் போன்று,

கயில்

கயில் – (பெ) மூட்டுவாய், கொக்கி, clasp of a necklace
கட்டிய கயில் அணி காழ் கொள்வோரும் – பரி 12/18
கட்டப்பட்ட கொக்கிகளையுடைய அணிகலன்களை வடங்களாகப் பூண்டுகொள்வோரும்

கர

கர – (வி) 1. கவர், steal, pilfer
2. மறை, conceal, hide
1.
உரவு களிறு கரக்கும் இடங்கர் ஒடுங்கி – மலை 211
வலிமையுள்ள யானைகளை(யும்) வஞ்சகமாகக் கவரும் முதலைகள் சோம்பிக்கிடக்கும்
2.
கண் நிறை நீர் கொடு கரக்கும்
ஒண் நுதல் அரிவை யான் என் செய்கோ எனவே – அகம் 50/13,14
கண்ணில் நிறைந்து இருக்கும் கண்ணீரைக்கொண்டு தன் துயரை மறைப்பாள்
ஒளிபொருந்திய நெற்றியையுடைய தலைவி, இதற்கு யான் என்ன செய்வேன்?” என்று.

கரகம்

கரகம் – (பெ) கமண்டலம், vessel for holding water, used by ascetics;
நீர் அறவு அறியா கரகத்து
தாழ் சடை பொலிந்த அரும் தவத்தோற்கே – புறம் 1/12,13
நீர் குறைந்து போகாத கமண்டலத்தாலும்
தாழ்ந்த திருச்சடையாலும் சிறந்த செய்தற்கரிய தவத்தை உடையவனுக்கு

கரண்டை

கரண்டை – (பெ) கமண்டலம், கரகம், vessel for holding water, used by ascetics;

பார்க்க : கரகம்

கல் பொளிந்து அன்ன இட்டு வாய் கரண்டை
பல் புரி சிமிலி நாற்றி – மது 482,483
கல்லைப் பொளிந்தாற் போன்று ஒடுங்கிய வாயை உடைய கமண்டலத்தைப்
பல வடங்களையுடைய நூலுறியில் தூக்கி,

கரந்தை

கரந்தை – (பெ) 1. ஒரு மரம், Iron-weed, Vernonia arborea
2. ஒரு செடி, திருநீற்றுப்பச்சை. Fragrant Basil, Ocinum basilicum.
3. வயல் புறத்தில் விளையும் ஒரு கொடி.
1.
கொடிவகையைச் சேர்ந்த கரந்தை வயல்வெளியில் படரும்.
காய்த்த கரந்தை மா கொடி விளை வயல் – பதி 40/5
‘காய் காய்த்த கரந்தையின் கரிய கொடி விளைகின்ற வயலில்
2.
கரந்தை சிவப்பு நிறத்தில் பூக்கும்.
செம் பூ கரந்தை புனைந்த கண்ணி – அகம் 269/11
சிவந்த கரந்தைப் பூவைத் தொடுத்து இயற்றிய கண்ணி.
3.
கரந்தையின் பூ பசுவின் முலைக்காம்பு போல் இருக்கும். மணம் மிக்கது.
நாகு முலை அன்ன நறும் பூ கரந்தை – புறம் 261/13
இளைய பசுவின் மடிக்காம்பினைப் போன்ற நறிய பூவைக்கொண்ட கரந்தை

கரம்பை

கரம்பை – (பெ) வறண்ட களி மண் நிலம், hard clayey soil
வெள் வரகு உழுத கொள் உடை கரம்பை
செந்நெல் வல்சி அறியார் தத்தம் – பதி 75/11,12
உழுது விதைத்துப் பெற்ற வெள்ளை வரகும், கொள்ளும் உடைய களர்நிலம் ஆகி,
அங்குள்ளோர் செந்நெல் உணவினை அறியமாட்டார்

கராம்

கராம் – (பெ) இந்தியாவில் உள்ள மூன்று வகை முதலைகளில் ஒன்று.
The type 3 cococodile called gharial (Gavialis gangeticus)
கொடும் தாள் முதலையும் இடங்கரும் கராமும் – குறி 257
வளைந்த கால் முதலைகளும், இடங்கர் இன முதலைகளும், கராம் இன முதலைகளும்,

முதலை, இடங்கர், கராம் என்ற மூன்றும் முதலை வகைகள்.
கராம் இன முதலைகள் ஆறுகளிலும், குளங்களிலும் இருக்கும்.
கராஅம் கலித்த கண் அகன் பொய்கை – பட் 242
கராஅம் துஞ்சும் கல் உயர் மறி சுழி – அகம் 18/3

கருக்கு

கருக்கு – (பெ) பனை மட்டையின் பல்போன்ற கூரிய முனை, jagged edge of the palmyra leaf stalk
பனை தலை கருக்கு உடை நெடு மடல் குருத்தொடு மாய – குறு 372/1
பனைமரத்தின் உச்சியிலுள்ள கருக்கினையுடைய நெடிய மடல்கள் குருத்தோடு மறைந்துபோக

கருனை

கருனை – (பெ) பொரித்த பண்டம், any fried dish
கரும் கண் கருனை செந்நெல் வெண் சோறு – நற் 367/3
கரிய கண்போன்ற பொறிக்கறியுடன், செந்நெல்லின் வெண்மையான சோற்றை

கருப்பை

கருப்பை – (பெ) எலி, rat
வரி புற அணிலொடு கருப்பை ஆடாது – பெரும் 85
வரியை முதுகிலே உடைய அணிலோடு, எலியும் திரியாதபடி,

கருவி

கருவி – (பெ) 1. ஒரு பணிசெய்ய உதவும் பொருள், instrument, tool
2. கூட்டம்,தொகுதி, மேகம், collection, group
1.
மயிர் குறை கருவி மாண் கடை அன்ன – பொரு 29
மயிரைக் குறைக்கின்ற கருவியான கத்தரிக்கோலின் சிறப்பாயமைந்த கைப்பிடியைப் போன்ற
2.
கருவி வானம் கடல் கோள் மறப்பவும் – பொரு 236
கூட்டமான மேகங்கள் கடலிடத்தே நீர் முகத்தலை மறக்கவும்,

கருவிளை

கருவிளை – (பெ) காக்கணம், காக்கட்டான், உயவை, Mussel-shell creeper
1.
இது கொடியாக புதர் போல் இருக்கும். இதன் பூ நீலநிற மணி போல் இருக்கும்.
மணி கண்டு அன்ன மா நிற கருவிளை
ஒண் பூ தோன்றியொடு தண் புதல் அணிய – நற் 221/1,2
நீலமணியைக் கண்டாற்போன்ற கரிய நிறமுள்ள கருவிளை மலர்,
ஒள்ளிய பூவாகிய செங்காந்தளோடு குளிர்ச்சியுள்ள புதர்களை அழகுசெய்ய,
2.
இதன் பூ கண் போல் இருக்கும்
தண் புன கருவிளை கண் போல் மா மலர் – நற் 262/1
குளிர்ச்சியான கொல்லையில் வளர்ந்த கருவிளம்பூவின், கண் போல மலர்ந்த, பெரிய பூவானது
3.
இதன் பூ மயில் தோகையிலுள்ள கண் போல் இருக்கும்.
பீலி ஒண் பொறி கருவிளை ஆட்டி – குறு 110/4
மயில்தோகையின் ஒளிரும் கண்ணினையுடைய கருவிளம்பூவை ஆட்டி

கறங்கு

கறங்கு – (வி) ஒலி, sound
1.
பலவிதமான வாத்தியங்களைக் கொண்ட பல்லியம் எழுப்பும் ஒலி.
அந்தர பல் இயம் கறங்க – திரு 119
2.
பெரிய முகப்பைக் கொண்ட முரசம் இடைவிடாமல் ’டம டம டம’ என எழுப்பும் ஒலி
மா கண் முரசம் ஓவு இல கறங்க – மது 733 (ஓவு = இடையறவு)
3.
பசு மாடுகளின் கழுத்தில்கட்டப்பட்டிருக்கும் மணிகள் ‘கண கண கண’என எழுப்பும் ஒலி
கறங்கு மணி துவைக்கும் ஏறு உடை பெரு நிரை – மலை 573 (ஏறு = காளை, நிரை = பசுக்கூட்டம்)
4.
அருவி நீர் விழும்போது ’டம டம டம’ என எழுப்பும் ஒலி
கறங்கு இசை அருவி வீழும் – ஐங் 395/5
5.
மேகங்கள் ‘கட கட கட’ என உறுமும்போது எழும்பும் ஓசை
கறங்கு குரல் எழிலி கார் செய்தன்றே – ஐங் 452/2 (எழிலி = மேகம்)
6.
சிள்வண்டுகள் ‘கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்’ என எழுப்பும் ஓசை
கறங்கு இசை சிதடி பொரி அரை பொருந்திய – பதி 58/13 (சிதடி = சிள்வண்டு)
7.
ஊதுகொம்புகள் பூம்,பூம்,பூம் என்று எழுப்பும் ஓசை
கறங்கு இசை வயிரொடு வலம் புரி ஆர்ப்ப – பதி 92/10 (வயிர் = ஊதுகொம்பு, Large trumpet, horn, bugle)
8.
கிராமங்களில் விழாக்கொண்டாடும்போது எழும்பும் பல்வித ஓசை
கறங்கு இசை விழவின் உறந்தை குணாது – அகம் 4/14 (விழவு= விழா)
9.
இந்த ஓசையைக்கேட்டுப் பறவைகள் வெருண்டு ஓடும்
கறங்கு இசை வெரீஇ பறந்த தோகை – அகம் 266/18 (வெரீஇ=வெருண்டு)
10.
மழை பெய்து நின்றவுடன் தவளைகள் கூட்டமாய் எழுப்பும் ஒலி
வரி நுணல் கறங்க தேரை தெவிட்ட – ஐங் 468/1 (நுணல்= தவளை)

கறவை

கறவை – (பெ) பால் தரும் பசு, Milch cow
பறவை படிவன வீழ, கறவை
கன்று கோள் ஒழிய கடிய வீசி – நெடு 10,11
(மரங்களில் தங்கும்)பறவைகள் (உறைந்துபோய் காலின் பிடியை விட்டுக் கீழே)வீழ, கறவை மாடுகள் 10
(தம்)கன்றை ஏற்றுக்கொள்ளுதலைத் தவிர்க்கக் கடுமையாய் உதைக்க,

கறி

கறி – 1. (வி) கொறி, கடித்துத்தின்னு, eat by biting or nibbling
2. (பெ) மிளகு, pepper
1.
திரி மருப்பு இரலை அண்ணல் நல் ஏறு
செழும் பயறு கறிக்கும் புன்கண் மாலை – குறு 338/1-4
முறுக்கேறிய கொம்புகளையுடைய இரலையாகிய தலைமைப்பண்புள்ள நல்ல ஆண்மான்
செழுமையான பயற்றுப் பயிரைக் கறித்துத்தின்னும் துன்பமுடைய மாலைப்பொழுதினையும்
2.
கறி வளர் அடுக்கத்து இரவில் முழங்கிய – குறு 90/2
மிளகுக் கொடி வளரும் மலைப்பக்கத்தில் இரவில் முழங்கிய

கறுழ்

கறுழ் – (பெ) கடிவாளம், bridle, வாய்க்கவசம், mouth cover
கறுழ் பொருத செம் வாயான் – புறம் 4/8
கடிவாளம் பொருத்தப்பட்ட சிவந்த வாயால்

கறுவு

கறுவு – (வி) சினம்கொள், show anger,
மனத்தில் வஞ்சம் அல்லது பழியுணர்ச்சி கொள்ளுதல், nurse revenge feeling
கறுவு கொண்டு அதன் முதல் குத்திய மத யானை – கலி 38/7
சினங்கொண்டு அந்த மரத்தின் அடிப்பகுதியைக் குத்திய மதயானை

கறைத்தோல்

கறைத்தோல் – (பெ) கரிய தோலால் ஆன கேடயம், black leather shield
கழி பிணி கறைத்தோல் நிரை கண்டு அன்ன – அகம் 67/13

கலப்பை

கலப்பை – (பெ) 1. உழுவதற்குப்பயன்படும் மரத்தாலான கருவி, plough
2. இசைக்கருவிகள் போன்றவை வைக்கும் பை, hold-all for keeping musical instruments
1.
குறும் சாட்டு உருளையொடு கலப்பை சார்த்தி – பெரும் 188
குறிய சகடத்தின் உருளையோடு கலப்பையையும் சார்த்தி வைக்கப்பட்டமையால்
2.
தலை புணர்த்து அசைத்த பல் தொகை கலப்பையர்
இரும் பேர் ஒக்கல் கோடியர் – அகம் 301/22,23
தலையினைச் சேர்த்துக்க் கட்டிய பல தொகையாகிய இசைக்கருவிகளின் பையினராகிய
மிகப் பெரிய சுற்றத்தினையுடைய கூத்தர்

கலவம்

கலவம் – (பெ) கலாபம், மயில்தோகை, peacock’s tail
கலவம் விரித்த மட மஞ்ஞை – பொரு 212
தோகையை விரித்த மடப்பத்தையுடைய மயில்

கலவு

கலவு – (பெ) உடல் எலும்பின் மூட்டு, bone joints in the body
புலவு புலி துறந்த கலவு கழி கடு முடை – அகம் 3/9
புலால் நாறும் புலி கைவிட்டுப்போன மூட்டுக்கள் கழன்றுபோன மிக்க முடை வீசும் புலாலை

கலாபம்

கலாபம் – (பெ) கலவம், மயில்தோகை, peacock’s tail
மணி மயில் கலாபம் மஞ்சு இடை பரப்பி – சிறு 264
(நீல)மணி (நிறமுடைய)மயிலின் தோகையை வெண்மஞ்சின் இடையே (அணையாக)விரித்து

கலாவம்

கலாவம் – (பெ) பார்க்க : கலாபம்
கலி மயில் கலாவம் கால் குவித்து அன்ன – புறம் 146/8

கலாவு

கலாவு – (வி) 1. கல, mix, unite, join together
2. கலக்கமெய்து, get perplexed
3. மேலும் கீழும் அசை, move up and down
1.
கொழு மடல் அகல் இலை தளி தலை கலாவும்
பெரு மலை நாடன் கேண்மை நமக்கே – நற் 309/5,6
கொழுத்த மடலில் உள்ள அகன்ற இலையில் மழைத்துளிகள் சேர்ந்து ஒன்றாயிருக்கும்
பெரிய மலையைச் சேர்ந்தவனுடைய நட்பு நமக்கு
2.
கோடல்
நீடு இதழ் கண்ணி நீர் அலை கலாவ – நெடு 5,6
காந்தளின் நீண்ட இதழ்களால் கட்டிய கண்ணி நீர் அலத்தலால் கலக்கமெய்த
3.
இயல் அணி பொலிந்த ஈகை வான் கழல்
துயல்வரும்-தோறும் திருந்து அடி கலாவ – குறி 126,127
இயற்கையான அழகால் பொலிவு பெற்ற பொன்னாலாகிய உயர்ந்த (வீரக்)கழல்
(அடி எடுத்துவைத்து)இயங்கும்போதெல்லாம் திருத்தமான கணுக்காலில் உயர்ந்தும் தாழ்ந்தும் அசைய

கலி

கலி – 1 (வி) 1. பெருமையுணர்வு கொள், be lofty, elated
2. செழி, தழை, grow luxuriantly
3. வேகமாகு, be swift, quick
4. மகிழ், rejoice
5. செருக்கித்திரி, be arrogant
2. (பெ) 1. பெருக்கம், increasing, swelling
2. ஆரவார ஒலி, roaring sound
3. செருக்கு, pride, haughtiness
1.1
கலி மயில் அகவும் வயிர் மருள் இன் இசை – நெடு 99
செருக்கின மயில் ஆரவாரிக்கும், ஊது கொம்பின் ஓசையோ என்று எண்ணத்தோன்றும் இனிய ஓசை
1.2
அம் கண் அகல் வயல் ஆர் பெயல் கலித்த
வண் தோட்டு நெல்லின் வரு கதிர் வணங்க – நெடு 21,22
அழகிய வெளியையுடைய அகன்ற வயலில் நிறைந்த நீரால் செழித்து வளர்ந்த
வளப்பமான தாள்களையுடைய நெல்லிலிருந்து மேலெழுந்த கதிர் (முற்றி)வளைய;
1.3
புள் இயல் கலி மா பூண்ட தேரே – ஐங் 481/4
பறவைகளின் தன்மை கொண்டு விரைந்துசெல்லும் குதிரைகள் பூட்டிய தேரை.
1.4
கலித்த இயவர் இயம் தொட்டு அன்ன – மது 304
மகிழ்ந்த இசைஞர்கள் (தம்)இசைக்கருவிகளை முழக்கினாற் போன்று
1.5
நெடு நீர் இரும் கழி கடு மீன் கலிப்பினும் – அகம் 50/2
நெடியவாய் நிறைந்த நீரைக்கொண்ட பெரிய கழியில் சுறாமீன்கள் செருக்கித் திரிந்தாலும்
2.1
ஒலி ஓவா கலி யாணர் – மது 118
ஆரவாரம் ஒழியாத பெருக்கினையுடைய புதுவருவாய்
2.2
பணிலம் கலி அவிந்து அடங்க – மது 621
சங்குகள் தம் ஆரவார ஒலி குறைந்து அடங்கிப்போக,
2.3
புலி என்று ஓர்க்கும் இ கலி கேழ் ஊரே – கலி 52/18
புலி என்று உன்னை எண்ணிக்கொள்வர் இந்த செருக்கு பொருந்திய ஊர்மக்கள்

கலிங்கம்

கலிங்கம் – (பெ) ஆடை, cloth, garment
ஆவி அன்ன அவிர் நூல் கலிங்கம்
இரும் பேர் ஒக்கலொடு ஒருங்கு உடன் உடீஇ – பெரும் 469,470
(பால்)ஆவியை ஒத்த ஒளிரும் நூலால் செய்த துகில்களை
(உன்)கரிய பெரிய சுற்றத்தோடு சேர உடல் முழுதும் உடுக்கச் செய்து,

கலிழி

கலிழி – (பெ) கலங்கல்நீர், muddy water, puddle
மான் உண்டு எஞ்சிய கலிழி நீரே – ஐங் 203/4
விலங்குகள் உண்டு எஞ்சிய கலங்கல் தண்ணீர்.

கலிழ்

கலிழ் – 1. (வி) 1. கண்ணீர் வடி,அழு, weep, shed tears
2. ஒழுகு shine forth (as beauty)
3. இடம்பெயர், change position
2. (பெ) கலிழி, கலங்கல் நீர், muddy water, puddle
1.1.
கண் கலிழ் உகு பனி அரக்குவோரே – குறு 398/8
கண்கள் கண்ணீர் வடிப்பதால் வீழ்கின்ற துளியைத் துடைப்போரை –
1.2.
தண் கடல் வளையினும் இலங்கும் இவள்
அம் கலிழ் ஆகம் கண்டிசின் நினைந்தே – ஐங் 106/3-4
குளிர்ந்த கடலின் சங்கினைக் காட்டிலும் வெளுத்துப்போய்த் தோன்றுகிறது இவளின்
அழகொழுகும் மேனி, இதோ பார், அவனை நினைத்து
1.3
காலொடு மயங்கிய கலிழ் கடல் என – பரி 8/31
காற்றினால் மோதி அடிக்கப்பட்டு, கரைக்கு இடம்பெயர்ந்து வரும் கடலின் முழக்கத்தைப் போலவும்,
2
கூதிர் ஆயின் தண் கலிழ் தந்து
வேனில் ஆயின் மணி நிறம் கொள்ளும்
யாறு அணிந்தன்று நின் ஊரே – ஐங் 45/1-3
குளிர் காலத்தில் குளிர்ந்த கலங்கல் நீரைத் தந்து
வேனில் காலத்தில் நீலமணி போன்ற நிறத்தைக் கொள்ளும்
ஆற்றினைக் கொண்டுள்ளது உனது ஊர்;

கலுழி

கலுழி – (பெ) கலங்கல் நீர், muddy water, puddle
கடு வரல் கலுழி கட்கு இன் சேயாற்று – மலை 555
வேகமாகப் பாயும் கலங்கலையுடைய கண்ணுக்கு இனிய சேயாற்றின்

கலுழ்

கலுழ் – 1. (வி) 1. ஒழுகு, shine forth, as beauty
2. கண்ணீர் சொரி, weep, shed tears
2. (பெ) 1. அழுகை, weeping
2. கலக்கம், pertubation
3. கலங்கல் நீர், muddy water, puddle
4. ஒழுகுதல், shining as beauty
1.1
அம் கலுழ் மேனி பாஅய பசப்பே – குறு 143/7
அழகு ஒழுகும் மேனியில் பரவிய பசலைநோய்.
1.2
கையாறு செய்தானை காணின் கலுழ் கண்ணால்
பையென நோக்குவேன் தாழ் தானை பற்றுவேன் – கலி 147/48,49
என்னை இவ்வாறு செயலிழக்கச் செய்தவனைப் பார்த்தால், கண்ணீர் சொரியும் கண்களால்
மெதுவாக நோக்குவேன், தாழ்ந்து வரும் அவன் மேலாடையைப் பிடித்துக்கொள்வேன்,
2.1
பருவரல் எவ்வம் களை மாயோய் என
காட்டவும்காட்டவும் காணாள் கலுழ் சிறந்து
பூ போல் உண்கண் புலம்பு முத்து உறைப்ப – முல் 21-23
துன்பம் தீராமையைப் போக்கு, மாமை நிறத்தையுடையோளே’, என்று
காட்டியும் காட்டியும் உணராளாய், அழுகை மிக்கு,
பூப்போலும் மையுண்ட கண்கள் (தாரையாகச் சொரியாது)தனித்த கண்ணீர் முத்து துளிப்ப
2.2
கவலை கொள் நெஞ்சினேன் கலுழ் தர கடல் நோக்கி – கலி 134/13
கவலைகொண்ட நெஞ்சத்தினளாய் நான் மனம் கலக்கம்கொள்ள, கடலைப் பார்த்து
2.3
பெய்த குன்றத்து பூ நாறு தண் கலுழ் – குறு 200/1
மழைபெய்த குன்றத்தில் மலர் மணக்கின்ற குளிர்ந்த கலங்கல்நீரின்
2.4
அம் கலுழ் கொண்ட செம் கடை மழை கண் – அகம் 295/20
அழகு ஒழுகுதலைக் கொண்ட சிவந்த கடையினையுடைய குளிர்ந்த கண்

கலை

கலை – 1. (வி) குலை, disperse, derange
2. (பெ) 1. முசு என்ற குரங்கின் ஆண், male black monkey
2 மானின் ஆண், stag, buck
3. மேகலை, Woman’s girdle
1
குண்டு நீர் பைம் சுனை பூத்த குவளை
வண்டு பயில் பல் இதழ் கலைஇ
தண் துளிக்கு ஏற்ற மலர் போன்றவ்வே – குறு 291/6-8
ஆழமான நீரையுடைய பசிய சுனையில் பூத்த குவளையின்
வண்டுகள் அடிக்கடி மொய்க்கும் பல இதழ்கள் கலைந்து
குளிர்ந்த மழைத்துளியை ஏற்றுக்கொண்ட மலர்களைப் போலிருப்பன
2.1.
கலை பாய்ந்து உதிர்த்த மலர் வீழ் புறவின் – பெரும் 496
முசுக்கலைகள் பாய்ந்து உதிர்த்த மலர்கள் சிந்தின காட்டினையும் உடைய
2.2.
புலி உற வெறுத்த தன் வீழ் பிணை உள்ளி
கலை நின்று விளிக்கும் கானம் ஊழ் இறந்து – மலை 404,405
புலி வந்ததால், (தன்னைக்)கைவிட்டு ஓடிப்போன தான் (இன்னும்)விரும்புகின்ற துணையை எண்ணி,
ஆண்மான் நின்று கூப்பிடும் (அக்)காட்டை வழக்கமான பாதையில் சென்று கடந்து,
2.3.
பல் கலை சில் பூ கலிங்கத்தள் – கலி 56/11
பல இழைகள் கொண்ட மேகலையும், சிறிய பூத்தொழில் நிரம்பிய ஆடையும் உடைய இவள்

களமர்

களமர் – (பெ) 1. மருதநில மக்கள், Inhabitants of an agricultural tract
2. தொழில்செய்வோர், labourers
1.
வேங்கை கண்ணியர் எருது எறி களமர்
நிலம் கண்டு அன்ன அகன் கண் பாசறை – நற் 125/9,10
வேங்கை மலர் மாலையைத் தலையில் சூடியவராய், எருதுகளை ஓட்டும் உழவர்
போரடிக்கும் களத்தைப் பார்த்தாற்போன்ற அகன்ற இடத்தையுடைய பாறையில்
2.
மென்புல வன்புல
களமர் உழவர் கடி மறுகு பிறசார் – பரி 23/26,27
மருதம் நெய்தலாகிய மென்புலத்திலும், குறிஞ்சி முல்லை ஆகிய வன்புலத்திலும்
தொழில்செய்வோர், உழவர்கள் வழ்கின்ற சிறந்த தெருக்கள் பிறிதொரு பக்கத்தில்.

களரி

களரி – (பெ) களர், உவர் நிலம், saline soil
1.
வெண்மையான புழுதி படிந்தது இந்த நிலம்
வெண் புற களரி விடு நீறு ஆடி – நற் 41/2
வெண்மையான நிறத்தையுடைய களர் நிலத்தில் எழுந்த நுண்ணிய துகள் படிந்து
2.
உவர்ப்பான இந்த நிலத்தில் ஓமை மரங்கள் நன்கு வளரும்
உவர் எழு களரி ஓமை அம் காட்டு – நற் 84/8
உப்புப்பூத்துக் கிடக்கும் களர் நிலத்து ஓமைக்காட்டு,
3.
ஈச்சை மரங்கள் இங்கு நன்கு வளரும்
கரும் களி ஈந்தின் வெண் புற களரி
இடு நீறு ஆடிய கடு நடை ஒருத்தல் – நற் 126/2,3
கரிய களிபோன்ற கனியாகும் ஈத்த மரங்கள் மிகுந்த வெண்மையான புறத்தினையுடைய களர்நிலத்தில்
படிந்திருக்கும் புழுதியைத் தன்மேல் தூவிக்கொண்ட கடிய நடையையுடைய ஒற்றை ஆண்யானை
4.
உப்பு வணிகரான உமணர்கள் இங்கு வாழ்வர்.
ஓங்கி தோன்றும் உமண் பொலி சிறுகுடி
களரி புளியின் காய் பசி பெயர்ப்ப – நற் 374/2,3
உயர்ந்து தோன்றும் உமணர்கள் நிறைந்திருக்கும் சிறிய ஊரினரின்
களர்நிலத்துப் புளிச்சுவைகொண்டு, அவரின் வருத்தும் பசியைப் போக்க,
5.
இங்கு பிளந்த முள்களைக்கொண்ட கள்ளிகள் வளரும்
களரி ஓங்கிய கவை முட் கள்ளி – நற் 384/2
களர் நிலத்தில் உயரமாய் வளர்ந்த கவைத்த முள்ளுள்ள கள்ளியில்
6.
இங்கு ஆவாரம் என்னும் ஆவிரைச் செடிகள் வளரும்.
களரி ஆவிரை கிளர் பூ கோதை – அகம் 301/14
களரி நிலத்து ஆவிரைச் செடியின் விளங்கும் பூக்களாலான மாலை

களர்

களர் – (பெ) 1. உவர் நிலம், Saline soil
2. சேற்று நிலம், bog
1.
களர் வளர் ஈந்தின் காழ் கண்டு அன்ன – பெரும் 130
களர் நிலத்தே வளர்ந்த ஈந்தின் விதையைக் கண்டாற் போன்று
2.
கழி பெயர் களரில் போகிய மட மான் – நற் 242/7
கழிநீர் பெருகிப் பரவுகின்ற களர்நிலத்தில் கால்வைத்த இளைய மான்

களவன்

களவன் – (பெ) நண்டு, crab
அள்ளல் ஆடிய புள்ளி களவன்
முள்ளி வேர் அளை செல்லும் – ஐங் 22/1,2
சேற்றில் துளாவித் திரிந்த புள்ளிகளையுடைய நண்டு
முள்ளிச் செடியின் வேர்ப்பகுதியில் உள்ள வளையில் சென்று தங்கும்

களா

களா – (பெ) ஒரு சிறுமரம் low-spreading spiny evergreen shrub, carissa spinarum
தீம் புளி களாவொடு துடரி முனையின் – புறம் 177/9
இனிய புளிப்பையுடைய களாப்பழத்துடனே துடரிப் பழத்தைத் தின்று வெறுத்தால்

கள்ளி

கள்ளி – (பெ) ஒரு பாலைநிலச் செடி. Spurge, Euphorbia;
கள்ளியில் பலவகை உண்டு.
திருகுகள்ளி, (Milk-hedge), இலைக்கள்ளி (Five tubercled spurge), சதுரக்கள்ளி (Square spurge)
மண்டங்கள்ளி (Cement plant), சப்பாத்துக்கள்ளி (Common prickly pear) என்பவை அவை.
1.
பரல் தலைபோகிய சிரல் தலை கள்ளி – நற் 169/4
பரல்கற்கள் நீண்டு கிடக்கின்ற பாலை நிலத்தில், மீன்கொத்திப்பறவையின் தலையைப் போன்ற கள்ளிச் செடி
2.
நொடிவிடுவு அன்ன காய் விடு கள்ளி – நற் 314/9
விரல்களை நொடித்துவிட்டாற்போன்று காய்கள் வெடிக்கும் கள்ளி
3.
களரி ஓங்கிய கவை முள் கள்ளி – நற் 384/2
களர் நிலத்தில் உயரமாய் வளர்ந்த கவைத்த முள்ளைக் கொண்ட கள்ளி
4.
அம் கால் கள்ளி – குறு 16/5
அழகிய அடியைக் கொண்ட கள்ளி
5.
பொலம் கல ஒரு காசு ஏய்க்கும்
நிலம் கரி கள்ளி – குறு 67/4,5
பொன் அணிகலத்தின் ஒரு காசினைப் போன்றிருக்கும்
நிலம் கரிந்துள்ள கள்ளி
6.
பொரி கால் கள்ளி விரி காய் அம் கவட்டு – குறு 154/5
பொரிந்த அடிமரத்தையுடைய கள்ளியின் வெடித்த காயையுடைய அழகிய கிளை
7.
கவை முள் கள்ளி பொரி அரை – புறம் 322/2
இரண்டாய்ப் பிளந்த முட்களையுடைய கள்ளி மரத்தின் பொரிந்த அடிப்பகுதி

கழகம்

கழகம் – (பெ) சூதாடு களம், gambling place
தவல் இல் தண் கழகத்து தவிராது வட்டிப்ப – கலி 136/3
தடையின்றி விளையாடும் ஈரமான சூதாடு களத்தில் ஆர்வம் குறையாமல் சூதாட்டக்காயை உருட்ட,

கழங்கு

கழங்கு – (பெ) 1. கழற்சிக்காய், Molucca-bean
2. கழங்கினை வைத்து மகளிர் ஆடும் விளையாட்டு,Play among girls with Molucca-beans
3. வேலன் வெறியாட்டின்போது குறிபார்க்க உருட்டுவது
Divination with help of Molucca-beans by a soothsayer when possessed
1.
கழங்கு உறழ் முத்தமொடு நன் கலம் பெறூஉம் – அகம் 126/12
கழற்சிக்காயின் விதையினைப் போன்ற பெரிய முத்துக்களுடன் சிறந்த அணிகளையும் பெறும்.
2.
இளம் துணை ஆயமொடு கழங்கு உடன் ஆடினும் – அகம் 17/2
தன்னை ஒத்த இளைய தோழிகளுடன் கழங்கு விளையாட்டைச் சேர்ந்து ஆடினாலும்
செல்வரின் வீட்டில் பொன்னால் ஆன கழங்கினைக் கொண்டு மகளிர் ஆடுவர்.
வான் தோய் மாடத்து வரி பந்து அசைஇ
கை புனை குறும் தொடி தத்த பைபய
முத்த வார் மணல் பொன் கழங்கு ஆடும் – பெரும் 333-335
வானத்தைத் தீண்டுகின்ற மாடத்திகண், நூலால் வரிதலையுடைய பந்தையடித்து இளைத்து,
கையில் புனைந்த குறுந்தொடி அசையும்படி, மெல்ல மெல்ல
முத்தை ஒத்த வார்ந்த மணலில் பொன்னாற் செய்த கழங்கைக் கொண்டு விளையாடும்,
3.
பெய்ம் மணல் வரைப்பின் கழங்கு படுத்து அன்னைக்கு
முருகு என மொழியும் வேலன் – ஐங் 249/1,2
புதிதாய் மணல் பரப்பிய வீட்டோரத்தில், கழங்குகளைப் போட்டுப்பார்த்து, அன்னையிடம்
இது முருகனால் உண்டானது என்று சொல்கிறான் வேலன்

கழஞ்சு

கழஞ்சு – (பெ) தங்கத்தை நிறுக்கும் ஓர் அளவு, A weight used for weighing gold (1.77 grams)
ஏர் உடைய விழு கழஞ்சின்
சீர் உடைய இழை பெற்றிசினே – புறம் 11/12,13
தோற்றப்பொலிவையுடைய சிறந்த பலகழஞ்சுகளால் செய்யப்பட்ட
நன்மையுடைய அணிகலத்தைப் பெற்றாள்.

கழனி

கழனி – (பெ) வயல்வெளி, an area containing fields
வள வயல்
அழல் நுதி அன்ன தோகை ஈன்ற
கழனி நெல் ஈன் கவை முதல் அலங்கல்
நிரம்பு அகன் செறுவில் வரம்பு அணையா துயல்வர – அகம் 13/17-20

என்ற அகநானூற்று அடிகளில் வயல், கழனி, செறு ஆகிய மூன்று சொற்களும் கையாளப்பட்டுள்ளன, இதற்கு

வளம் மிக்க வயலில்
தீயின் கொழுந்தினை ஒத்த தோடுகளை ஈன்ற
வயல் நெல்லின் பலவாகக் கிளைத்த முதலிலிருந்து தோன்றிய நெற்கதிர்
நிரம்பிய அகன்ற வயலினிடத்து வரப்புகளை அணையாகக் கொண்டு கிடந்து அசைய

என்பது வே.நாட்டார் உரை. இங்கே வயல், கழனி, செறு ஆகிய மூன்று சொற்களுக்கும் வயல் என்றே பொருள்
கொள்ளப்பட்டிருக்கிறது. இவற்றுக்குள்ள நுட்பமான வேறுபாடு ஆய்விற்குரியது.

பொதுவாக, கழனி என்பதும் வயல் என்பதும் ஒன்றாகவே கருதப்படுகின்றன.
வயல் என்பது நான்கு வரப்புகளுக்கு உட்பட்ட விளைநிலம். இவ்வாறான பல
வயல்களைக் கொண்ட ஒரு பரந்த வெளியே கழனி எனப்படும்.

வயல் அமர் கழனி வாயில் பொய்கை – புறம் 354/4
வயல்கள் பொருந்திய கழனியின் வாயிலாகிய பொய்கைக்கண்

என்பதன் மூலம் இது பெறப்படும்.

விளைவு அறா வியன் கழனி
கார் கரும்பின் கமழ் ஆலை – பட் 8,9

என்ற அடிகளில் கழனி என்பது ஒரு வயலைமட்டுமா குறிக்கும்?

பல் ஊர் சுற்றிய கழனி
எல்லாம் விளையும் நெல்லினும் பலவே – புறம் 387/35,36
என்பதற்கு
பல ஊர்களைச் சுற்றியுள்ள வயல்கள்
எல்லாவற்றிலும் விளையும் நெல்லினும் பலவாகிய
என்பது ஔவை.சு.து.உரை.
எனவே, கழனி என்பது பல வயல்களைக் கொண்ட ஒரு வெளி என்று இதனின்றும் பெறப்படும்.

கழனி காவலர் சுரி நந்து உடைக்கும் – நற் 280/7
வயல்வெளியைக் காப்பவர்கள் சுருக்கம் விழுந்த நத்தையை உடைக்கும்

ஒரு தனித்த வயலுக்குக் காவலர் இரார். காவலர்கள் ஒரு பரந்த வயல்வெளிக்குக் காவல் இருப்பர்.

நெல் விளை கழனி நேர் கண் செறுவின் – நற் 400/2,3
அரிவனர் இட்ட சூட்டு அயல் பெரிய

என்ற அடிகளால், செறு என்பது கழனி என்பதின் ஒரு பகுதி என்று பெறப்படும். அதாவது பல செறுக்களைக்
கொண்டது கழனி.
எனவே, கழனி என்பதை வயல்பரப்பு அல்லது வயல்வெளி என்று கொள்வதே பொருத்தமுடையது
என்று தோன்றுகிறது.

செறு, வயல் ஆகியவை அந்தச் சொற்களுக்குரிய இடங்களில் விளக்கப்படும்.

அவற்றைப் பார்க்க இங்கே சொடுக்கவும். செறு-2.(பெ) வயல்

கழறு

கழறு – (வி) 1. இடி, thunder
2. இடித்துரை, rebuke
3. இகழ், dishonour, discrdit
4. கூறு. சொல், say, tell
1.
கடு விசை உருமின் கழறு குரல் அளைஇ – குறு 158/2
மிகுந்த வேகத்தையுடைய பேரிடியின் இடிக்கும் முழக்கத்தோடு கலந்து
2.
நின்னை யான் கழறுதல் வேண்டுமோ – கலி 100/22
உன்னை நான் கடிந்துரைக்கவும் வேண்டுமோ?
3.
அவை புகு பொருநர் பறையின் ஆனாது
கழறுப என்ப அவன் பெண்டிர் – அகம் 76/5,6
அவையில் புகும் பொருநரின் பறையைப்போல ஒழியாமல்
என்னை இகழ்வர் என்று கூறுவர் அவன் பெண்டிர்
4.
எ வாய் சென்றனை அவண் என கூறி
அன்னை ஆனாள் கழற – நற் 147/4,5
எவ்விடத்துக்குச் சென்றாய் அங்கே? என்று கூறி
அன்னை மனம் அமையாதவளாய் நம்மிடம் கூற

கழல்

கழல் – 1. (வி) 1. பிதுங்கு, bulge out, protrude
2. நெகிழ்ந்து நீங்கு, become loose
– 2. (பெ) 1. வீரக்கழல், Anklet given as a token of honour to a warrior
2. கழற்சிக்காய், molucca bean
3. கால் மோதிரம், toe ring
4. காற்சிலம்பு, anklet
1.1.
கழல் கண் கூகையொடு கடும் பாம்பு தூங்க – திரு 49
பிதுங்கிய கண்ணையுடைய கூகையோடு, கொடிய பாம்பும் தூங்கும் அளவிற்குப் பெரிதான
1.2
கலம் பெய கவிழ்ந்த கழல் தொடி தட கையின் – மலை 577
அணிகலன்களை அள்ளித்தரக் கவிழ்ந்த இறுக்கமாக இல்லாத தோளணியுடைய பெரிய கைகளில்
2.1
தீம் புழல் வல்சி கழல் கால் மழவர் – மது 395
இனிய குழல்போன்ற தின்பண்டங்களை உணவாகக்கொண்ட வீரக்கழல் அணிந்த காலினையுடைய மழவரின்
2.2
கழல் கனி வகுத்த துணை சில் ஓதி – புறம் 97/23
கழற்சிக்காயின் விதையால் வகுக்கப்பட்ட இனமாகிய சிலவாகிய கூந்தல்
2.3
இடு புணர் வளையொடு தொடு தோள் வளையர்
கட்டுவட கழலினர் மட்டு மாலையர் – பரி 12/23,24
ஆணியிட்டுச் சேர்க்கப்படும் வளையல்களோடு, செறிக்கப்பட்ட தோள்வளையினை உடையவரும்,
கட்டுவடத்தோடு, கால்விரலில் மோதிரம் அணிந்துகொண்டோரும், தேன் துளிக்கும் மாலையினரும்,
2.4
ஒண் நுதல் மகளிர் கழலொடு மறுகும் – பதி 30/28
ஒளிவிடும் நெற்றியையுடைய மகளிர் காலில் தண்டையோடு திரியும்,

கழி

கழி – 1 (வி) 1. கடந்துபோ, முடிந்துபோ, pass,as time, elapse
2. உருவு, unsheath
3. நீங்கு, விலகு, be removed
4. விலக்கு, இல்லாமல் செய்
5. கட, pass through
6. கடன் போன்றவற்றைத் தீர், ஒழி, remove
7. நிகழ்ந்து முடி, proceed further
– 2. (பெ) 1. கடலையடுத்த உப்புநீர்ப் பரப்பு, backwater
2. கம்பு, சிறியகுச்சி, stick, staff
– 3. (பெ.அ) மிகுந்த, excessive, extreme

1.1
சாறு கழி வழி நாள் சோறு நசை_உறாது – பொரு 2
விழா முடிந்துபோன அடுத்தநாளில், (அங்குப்பெறுகின்ற)சோற்றை விரும்புதல் செய்யாது
1.2
உறை கழி வாளின் மின்னி – நற் 387/9
உறையிலிருந்து உருவிய வாளைப்போல மின்னி
1.3
கடு வளி எடுத்த கால் கழி தேக்கு இலை – அகம் 299/5
கடிய காற்றினால் பறிக்கப்பெற்ற காம்பினை விட்டு நீங்கிய தேக்கின் இலைகள்
1.4
புலிப்பால் பட்ட வாமான் குழவிக்குச்
சினம் கழி மூதா கன்று மடுத்து ஊட்டும் – புறம் 323/1,2
புலியிடம் அகப்பட்ட தாவும் மானின் கன்றுக்கு
சினம் இல்லாத முதிய கறவைப்பசு தன் கன்று எனச் சேர்த்து தன் பாலை ஊட்டிவிடும்
1.5
திகை முழுது கமழ முகில் அகடு கழி மதியின் – பரி 10/74
திசைகள் முழுதும் கமழும்படியாக மேகத்தின் அடிவயிற்றைக் கடந்துபோகும் திங்களின்
1.6
கவ்வை நாற்றின் கார் இருள் ஓர் இலை
நவ்வி நாள் மறி கவ்வி கடன் கழிக்கும் – குறு 282/2,3
ஒலிக்கின்ற நாற்றின் மிக்க கருநிறமுடைய ஒற்றை இலையை
நவ்வி மானின் குட்டி கவ்வி அன்றைய காலையுணவை முடி- க்கும்
1.7
நும் மனை சிலம்பு கழீஇ அயரினும்
எம் மனை வதுவை நன் மணம் கழிக என – ஐங் 399/1,2
உமது வீட்டில் காலின் சிலம்பைக் கழற்றும் சடங்கினைச் செய்தாலும்,
எமது வீட்டில் திருமணமாகிய நல்ல மணவிழா நடந்து முடியட்டும் என்று
2.1
இரும் கழி செறுவின் வெள் உப்பு பகர்நரொடு – மது 117
பெரிய உப்பங்கழியின் பாத்திகளில் விளைந்த வெள்ளை உப்பை விற்போரின் ஒலியோடு,
2.2
செற்றை வாயில் செறி கழி கதவின் – பெரும் 149
இலை தழைக் குப்பைகளையுடைய வாயிலையும், செறிக்கப்பட்ட சிறிய குச்சியினையுடைய கதவினையும்,
3.
கண் தொட்டு உண்ட கழி முடை கரும் தலை – திரு 53
கண்களைத் தோண்டி உண்ணப்பட்ட மிக்க முடை நாற்றத்தையுடைய கரிய தலையை

கழீஇ

கழீஇ – (வி.எ) 1. கழுவி என்பதன் விகாரம்
2. கழித்து (நீக்கி) என்பதன் விகாரம்
1.
மண்ணா கூந்தல் மாசு அற கழீஇ
சில் போது கொண்டு பல் குரல் அழுத்திய – நற் 42/8,9
நீர்விட்டுக் கழுவாத கூந்தலை மாசு நீங்கும்படியாகக் கழுவி
ஒருசில பூக்களைக் கொண்டு பலவாகிய தன் கூந்தலில் செருகிக்கொண்ட
2.
நும் மனை சிலம்பு கழீஇ அயரினும் – ஐங் 399/1
எம் மனை வதுவை நன் மணம் கழிக என – ஐங் 399/1,2
உமது வீட்டில் காலின் சிலம்பைக் கழற்றும் சடங்கினைச் செய்தாலும்,
எமது வீட்டில் திருமணமாகிய நல்ல மணவிழா நடந்து முடியட்டும் என்று

கழு

கழு – (பெ) குற்றவாளிகளைக் கொல்லும் சாதனம், கழுமரம், Stake for impaling criminals
நெடு நுதி வய கழு நிரைத்த வாயில் – பெரும் 128
நெடிய முனையினையுடைய வலிமையான கழுமரங்கள் வரிசையாக நிற்கும் ஊர்வாயிலையும் உடைய

கழுது

கழுது – (பெ) 1. பேய், demon, spirit
2. காவற்பரண், watch tower
1.
கழுது கால்கொள்ளும் பொழுது கொள் பானாள் – நற் 171/9
பேய்கள் நிலைகொண்டு நடமாடும் பொழுதைக் கொண்ட நள்ளிரவில்
2.
கடும் கை கானவன் கழுது மிசை கொளீஇய
நெடும் சுடர் விளக்கம் – அகம் 88/5,6
வலிய கையினையுடைய தினைப்புனம் காப்போன் பரண் மீது கொளுத்தி வைத்த
நீண்ட சுடரின் ஒளியினை

கழுநீர்

கழுநீர் – (பெ) 1. செங்குவளை, Purple Indian water-lily, Numphaeu odorata
2. தீவினையைக் கழுவும் தீர்த்த நீர், holy water that dispels evil
1.
கழுநீர் பொலிந்த கண் அகன் பொய்கை – மது 171
செங்கழுநீர் மிக்க இடம் அகன்ற பொய்கைகளில்
2.
கழுநீர் கொண்ட எழு நாள் அந்தி – மது 427
தீர்த்த நீரில் (திருவிழாவிற்குக் கால்)கொண்ட ஏழாம்நாள் அந்தியில்

கழுந்து

கழுந்து – (பெ) உலக்கை, வில் ஆகியவற்றில் தேய்ந்து மழுங்கிய தழும்பு, bruise in a pestle or a bow
உழுந்து உடை கழுந்தின் கரும்பு உடை பணை தோள் – குறு 384/1
உழுந்தின் நெற்றினை உடைக்கும் தழும்பேறிய தடி போன்ற கரும்பெழுதிய பருத்த தோள்கள்

கழுமு

கழுமு – (வி) 1. நிறை, be full
2. கல, mix together
1.
குவளை உண்கண் குய் புகை கழும
தான் துழந்து அட்ட தீம் புளி பாகர் – குறு 167/3,4
குவளை போன்ற மையுண்ட கண்களில் தாளிதப்புகை நிறைய,
தானே முயன்று துழாவிச் சமைத்த சுவையான புளித்த மோர்க்குழம்பினை
2.
கழுமிய வென் வேல் வேளே – புறம் 396/12
பிற படையுடன் கலந்த வெல்லும் வேற்படையையுடைய வேளிர் தலைவன்

கழுவாய்

கழுவாய் – (பெ) பரிகாரம், பிராயச்சித்தம், expiation from sin
வழுவாய் மருங்கில் கழுவாயும் உள என – புறம் 34/4
அவர் செய்த பாதகத்தினை ஆராயுமிடத்து அவற்றைப் போக்கும் வழியும் உள எனவும்

கழூஉ

கழூஉ – 1. (வி) கழுவு என்பதன் விகாரம்
– 2. (பெ) கழுவுதல் என்பதன் விகாரம்
1.
செம் மறு கொண்ட வெண் கோட்டு யானை
கல் மிசை அருவியின் கழூஉம் சாரல் – நற் 151/3,4
சிவந்த கறையினைக் கொண்ட வெண்மையான கொம்பினையுடைய யானை
அந்தக் கறையை மலைமேலிருந்து விழும் அருவிநீரில் கழுவும் மலைச்சாரல் நெறியில்
2.
மழை கழூஉ மறந்த மா இரும் துறுகல் – குறு 279/5
மழை கழுவுதலை மறந்த கரிய பெரிய குத்துப்பாறை

கவடு

கவடு – (பெ) பிரிந்து செல்லும் மரக்கிளைகள், forked brances of a tree
இலை இல ஓங்கிய நிலை உயர் யாஅத்து
மேல் கவட்டு இருந்த பார்ப்பு_இனங்கட்கு – அகம் 31/5,6
இலைகள் இல்லாதுபோய், நிமிர்ந்த நிலையில் உயர்ந்து நிற்கும் யா மரத்தின்
உச்சிக் கவட்டில் இருந்த தன் குஞ்சுகளுக்கு

கவணை

கவணை – (பெ) கவட்டை, கல்லை வீசி எறியும் பொறி, catapult
1.
இது ஒரு கல் வீசும் பொறியாகக் கோட்டையைத் தகர்க்கப் பயன்பட்டது
ஆர் எயில் அலைத்த கல் கால் கவணை
நார் அரி நறவின் கொங்கர் கோவே – பதி 88/18,19
பகைவரின் அரிய மதிலைச் சீர்குலைத்த கற்களை வீசியெறியும் கவணைப் பொறியையும்,
நார்க்கூடையால் வடிக்கப்பட்ட கள்ளையும் உடைய கொங்குநாட்டவர் அரசனே!
2.
இது சிறுவர் பயன்படுத்தும் விளையாட்டுக்கருவி. விலங்குகளையும், பறவைகளையும் விரட்டப் பயன்படும்
ஒளி திகழ் ஞெகிழியர் கவணையர் வில்லர்
களிறு என ஆர்ப்பவர் ஏனல் காவலரே – கலி 52/13,14
தீயை உண்டாக்கும் தீக்கடைகோலையுடைய, கவணையும் வில்லையும் கையில் வைத்திருக்கிற
தினைப்புனக் காவலர் உன்னை யானை என்று எண்ணிக்கொண்டு கூச்சலிடுவர்;
3.
இது கவண் என்றும் கருதப்படும். பார்க்க கவண்

கவண்

கவண் – (பெ) கல்லை வீசி எறியும், கயிற்றினால் ஆன கருவி, sling
கல் எறியும் கவண் வெரீஇ
புள் இரியும் புகர் போந்தை – பட் 73,74
கல்லை எறியும் கவணை அஞ்சி
பறவைகள் பறந்தோடும் கபிலநிறப் பனைமரங்கள் (கொண்ட பட்டினம்)

கவரி

கவரி – (பெ) 1. கவரி மான், Yak, Bos grunniens
2. சாமரை, Yak-tailfan, used for fanning idols and great personages
1.
கவிர் ததை சிலம்பில் துஞ்சும் கவரி – பதி 11/21
முருக்க மரங்கள் செறிவாக வளர்ந்த மலைச்சரிவில் துயில்கொள்ளும் கவரிமான்கள்,
2.
புனையா பூ நீர் ஊட்டி புனை கவரி சார்த்தா – பரி 19/86
உதிரிப்பூக்களையும் நீரையும் கலந்து தூவி, அழகுபடுத்தப்பெற்ற சாமரையை வீசி

கவர்

கவர் – 1. (வி) 1. நுகர், அனுபவி, enjoy, experience
2. கிளைபடு, பிரிந்துசெல், bifurcate
3. தெறி, மீட்டு, fillip the strings of lute
4. பற்றிக்கொள், அகப்படுத்து, seize, grasp, catch
5. அழை, call, invite
6. பெற்றுக்கொள், take, receive
7. வசப்படுத்து, ஈர், attract, fascinate
8. விரும்பு, desire
9. கொள்ளையிடு, plunder, pillage
10. தழுவு, embrace
– 2. (பெ) 1. கவர்தல், seizing
1.1
முள் அரை தாமரை முகிழ் விரி நாள் போது
கொங்கு கவர் நீல செம் கண் சேவல் – சிறு 184
முள்(இருக்கும்) தண்டினை(க்கொண்ட) தாமரையின் அரும்பு விரிந்த அன்றைய பூவின்
தேனை நுகர்கின்ற நீல நிறத்தினையும் சிவந்த கண்ணையும் உடைய வண்டுகள்
1.2
கா எரி_ஊட்டிய கவர் கணை தூணி – சிறு 238
(காண்ட)வனத்தை நெருப்புண்ணச்செய்த கிளைபட்ட கணையைக் கொண்ட அம்பறாத்தூணியையுடைய
1.3
நைவளம் பழுநிய பாலை வல்லோன்
கை கவர் நரம்பின் இம்மென இமிரும் – குறி 146,147
நட்டராகம் முற்றுப்பெற்ற பாலை யாழை வாசிப்பதில் வல்லவன்
(தன்)கையால் தெறித்த நரம்பு போல, இம்மென்னும் ஓசைபட ஒலிக்கும்
1.4
மீமிசை கொண்ட கவர் பரி கொடும் தாள்
வரை வாழ் வருடை – மலை 502,503
மலையுச்சியில் பிடித்த (நிலத்தைப்)பற்றிக்கொண்டு ஓடும் வளைந்த கால்களையுடைய
மலையில் வாழும் மலையாடும்,
1.5
கான கோழி கவர் குரல் சேவல் – மலை 510
காட்டுக்கோழியை அழைக்கும் கூவலொலியுடைய சேவலும்,
1.6
புகர்வை அரிசி பொம்மல் பெரும் சோறு
கவர் படு கையை கழும மாந்தி – நற் 60/5,6
உண்ணுதற்குரிய அரிசியை வேகவைத்த மிக்க சோற்றுடன்
பெற்றுக்கொண்ட கையையுடையவராய் வாய் கொள்ள உண்டு,
1.7
காழ் கொள் வேலத்து ஆழ் சினை பயந்த
கண் கவர் வரி நிழல் வதியும் – நற் 256/9,10
வயிரம் பாய்ந்த வேலமரத்தின் தாழ்ந்த கிளைகள் கொடுத்த
கண்ணை ஈர்க்கும் வரிகள்கொண்ட நிழலில் தங்கியிருக்கும்
1.8
கவர் பரி நெடும் தேர் மணியும் இசைக்கும் – நற் 307/1
செல்லுதலை விரும்பும் குதிரை பூட்டிய நெடிய தேரின் மணியும் ஒலிக்கும்;
1.9
முனை கவர் முதுபாழ் உகு நெல் பெறூஉம் – நற் 384/5
போர் முனையில் கொள்ளையிட்டதால் முதிரப் பாழ்பட்டுப்போன நிலத்தில் சிந்திக்கிடக்கும்
நெல்மணியைக் கொத்திக்கொணரும்
1.10
மெய் உற விரும்பிய கை கவர் முயக்கினும் – ஐங் 337/2
மெய்யோடு மெய் சேரும்படி விரும்பிக் கைகளினால் தழுவிக்கொண்ட அணைப்பைக் காட்டிலும்
2.
இரும்பு கவர் கொண்ட ஏனல் – நற் 194/9
இரும்பாலாகிய அரிவாளால் கவர்ந்துகொள்ளப்போகும் தினையின்

கவறு

கவறு – (பெ) சூதாட்டம், சூதாடு கருவி, gambling, dice
கவறு பெயர்த்து அன்ன நில்லா வாழ்க்கை இட்டு – நற் 243/5
சூதாடுகருவியை உருட்டிவிட்டாற்போன்ற நிலையில்லாத வாழ்க்கையை முன்னிட்டுப

கவறு உற்ற வடு ஏய்க்கும் காமரு பூ கடல் சேர்ப்ப – கலி 136/4

கவற்று

கவற்று – (வி) கவலை உண்டாக்கு, cause anxiety or sorrow
பேதை நெஞ்சம் கவலை கவற்ற – நற் 144/4,5
பேதையின் நெஞ்சத்தை கவலை சஞ்சலப்படுத்த

கவலை

கவலை – (பெ) 1. பல தெருக்கள் கூடுமிடம் /பிரியும் இடம், Place where several ways meet or diverge
2. ஒரு கிழங்கு, கிழங்குள்ள ஒரு கொடி, a rooted creeper
3. மனச் சஞ்சலம், distress, affliction
1.1
உல்கு உடை பெரு வழி கவலை காக்கும் – பெரும் 81
சுங்கம் கொள்ளுதலையுடைய பெரிய வழிகளில் பிரியும் வழியைப் பாதுகாக்கின்ற
1.2.
கவலை முற்றம் காவல் நின்ற – முல் 30
நாற்சந்தியான முற்றத்தில் காவலாக நின்ற
2.
கவலை அம் குழும்பின் அருவி ஒலிப்ப – மது 241
கவலைக்கிழங்கு எடுத்த குழிகளில் அருவிநீர் (விழுந்து)ஒலிக்க,
3.
பேதை நெஞ்சம் கவலை கவற்ற – நற் 144/4
பேதை நெஞ்சம் மனச்சஞ்சலத்தால் வருந்த

கவவு

கவவு – 1. (வி) தழுவு, embrace
2. (பெ) 1. தழுவுதல், முயக்கம், embracing
2. உள்ளீடு, the contents of something
1.
காதலர் புணர்ந்தவர் கவவு கை நெகிழாது – கலி 33/7
காதலர்கள் கூடிக்களித்தவராய், தழுவிய கைகளை நெகிழவிடாமல் இருக்க,
2.1
நயந்த காதலர் கவவு பிணி துஞ்சி – மது 663
(தாங்கள்)விரும்பின (தம்)கணவருடைய முயக்கத்தின் பிணிப்பால் துயில்கொண்டு
2.2
கவவொடு பிடித்த வகை அமை மோதகம் – மது 626
பூரணமாகிய உள்ளீட்டோடெ பிடித்த விதம்விதமான கொழுக்கட்டைகளையும்,

கவான்

கவான் – (பெ) மலைச்சரிவு, mountain slope
கவான் என்பது மலைச்சரிவு என்றாலும், மலையின் உச்சியை ஒட்டிய சரிவான பகுதியையே
இது குறிக்கும்.
வான் தோய் சிமைய விறல் வரை கவாஅன் – அகம் 3/6
விண்ணைத் தொடும் முகடுகளைக் கொண்ட பெருமை மிக்க மலைச் சரிவில்

எனவே இந்த மலைச்சரிவு மலையின் உச்சியை அடுத்தது என்பது விளங்கும்.
இதன் உச்சியில் மேகங்கள் தவழுகின்றனவாம்.
மழை ஆடு சிமைய மால் வரை கவாஅன் – பட் 138
மழை என்பது மேகம், சிமையம் என்பது உச்சி.
வான் உற நிவந்த பெரு மலை கவாஅன் – நற் 53/4
நிவத்தல் என்பது உயர்ந்து நிற்றல்.
விண் தொட நிவந்த விலங்கு மலை கவாஅன் – குறு 262/6
விண் பொரு நெடு வரை கவாஅன் – அகம் 173/17
விண் தோய் சிமைய விறல் வரை கவாஅன் – அகம் 179/1
விண்ணைத்தொட்டு நிற்கிறதாம் இந்தச் சரிவின் உச்சி.

கவிர்

கவிர் – (பெ) முள்முருங்கை மரம், Indian coral tree, Erythrina variegata
பருத்திப் பெண்டின் சிறு தீ விளக்கத்துக்
கவிர் பூ நெற்றி சேவலின் தணியும் – புறம் 326/5,6
பருத்தி நூற்கும் பெண்டினுடைய சிறிய விளக்கொளியில்
முருக்கம்பூவைப் போன்ற கொண்டையை உடைய சேவலைக் கண்டு அச்சம் தணியும்

கவுள்

கவுள் – (பெ) கன்னம், cheek
மெய் கொள் பெரும் பனி நலிய பலர் உடன்
கை கொள் கொள்ளியர் கவுள் புடையூஉ நடுங்க – நெடு 7,8
(தம்)உடம்பில் கொண்ட மிகுந்த குளிர்ச்சி வருத்துகையினால், பலரும் கூடிக்
கையி

கவை

கவை – (வி) 1. கிளைத்துப்பிரி, fork
2. சேர், join with
3. அணை, embrace
4. அகத்திடு, கொண்டிரு, contain within oneself
1.
புலி கோள் பிழைத்த கவை கோட்டு முது கலை – ஐங் 373/2
புலியின் பிடியிலிருந்து தப்பித்த கிளைப்பட்ட கொம்புகளையுடைய முதிய கலைமான்
2.
பகட்டு ஆ ஈன்ற கொடு நடை குழவி
கவை தாம்பு தொடுத்த காழ் ஊன்று அல்குல் – பெரும் 243,244
எருதுகளோடு கூடிய பசுக்கள் ஈன்ற வளைந்த அடிகளையுடைய கன்றுகளைச்
சேர்த்துக்கட்டின நெடிய தாம்புகள் கட்டிக்கிடக்கின்ற தறிகள் நட்ட பக்கத்தினையும்,
3.
தான் அவள் சிறுபுறம் கவையினன் – ஐங் 404/2
தான் அவளின் முதுகினைத் தழுவுவான்
4.
புதல்வன் கவைஇய தாய் புறம் முயங்கி – ஐங் 402/1
புதல்வனை அகத்திட்டுக்கொண்டிருக்கும் தாயின் முதுகைத் தழுவிக்கொண்டு

கவ்வை

கவ்வை – (பெ) 1. எள்ளின் இளங்காய், Green sesamum seed
2. பழிச்சொல், slander, scandal
3. ஒலி, sound, noise, din
1.
ஒருசார் சிறுதினை கொய்ய கவ்வை கறுப்ப – மது 271
சிறிய தினைக்கதிர்கள் கொய்யப்பட, எள்ளின் இளங்காய்கள் முற்றிக்கறுக்க,
2.
வெம் வாய் பெண்டிர் கவ்வை தூற்ற – நற் 133/6
கொடியனவற்றைப் பேசும் பெண்டிர் பழிச்சொற்களைத் தூற்ற,
3
செவ்வி கொள் வரகின் செம் சுவல் கலித்த
கவ்வை நாற்றின் கார் இருள் ஓர் இலை – குறு 282/1,2
பருவத்தே வளர்ந்த வரகின் சிவந்த மேட்டுநிலத்தில் தழைத்த
ஒலி எழுப்பும் நாற்றின் மிக்க கருநிறமுடைய ஒற்றை இலையை

காசு

காசு – (பெ) மேகலை, கொலுசு போன்ற அணிகலன்களில் கோக்கும் உலோகத்தாலான
உருண்டைகள் அல்லது வட்டங்கள்.
globules or coin shaped metal parts strung with the girdle.
சங்க இலக்கியத்தில் காசு என்ற சொல்லைப்பற்றிய குறிப்புகள் 14 இடங்களில் கிடைக்கின்றன.
இந்தக் குறிப்புகளினின்றும் கிடைக்கும் செய்திகள்.
I.
காசு என்பது பெண்கள் தம் இடுப்பில் அணியும் மேகலையில் கோக்கப்பட்டிருக்கும்.
1. பொலம் செய் பல் காசு அணிந்த அல்குல் – புறம் 353/2
2. பல் காசு நிரைத்த சில் காழ் அல்குல் – திரு 16
3. காழ் பெயல் அல்குல் காசு முறை திரியினும் – நற் 66/9
4. பொலம் பசும் பாண்டில் காசு நிரை அல்குல் – ஐங் 310/1
5. உடுத்தவை கைவினை பொலிந்த காசு அமை பொலம் காழ் மேல் – கலி 85/3
6. பல் காசு நிரைத்த கோடு ஏந்து அல்குல் – அகம் 75/19
7. பொலம் காசு நிரைத்த கோடு ஏந்து அல்குல் – அகம் 269/15

அல்குல் என்பது இடுப்பைச் சுற்றி, இடுப்புக்கும் சற்றுக் கீழான பகுதி.

பார்க்க : மேகலை
இந்த மேகலையில் காசுக்கள் கோக்கப்பட்டிருந்தன.

II.
இந்தக் காசுகள் முட்டை வடிவில் அல்லது உருண்டை வடிவில் இருந்தன.
1. இழை_மகள்
பொன் செய் காசின் ஒண் பழம் தாஅம்
குமிழ் தலைமயங்கிய குறும் பல் அத்தம் – நற் 274/3-5
அணிகலன் அணிந்த ஒரு பெண்ணின்
பொன்னால் செய்யப்பட்ட காசு போன்று ஒள்ளிய பழங்கள் உதிரும்
குமிழமரங்கள் செறிந்துவளர்ந்த, சிறிதானவும் பலவானதுமான வழிகளில்
எனவே, இந்தக் காசுகள் குமிழம்பழம் உருவில் இருந்தன.
குமிழ் என்றாலே உருண்டை என்று பொருள்.

பார்க்க – காசு – குமிழம்பழம் –

2அ. கணை அரை
புல் இலை நெல்லி புகர் இல் பசும் காய்
கல் அதர் மருங்கில் கடு வளி உதிர்ப்ப
பொலம் செய் காசின் பொற்ப தாஅம் – அகம் 363/5-8
திரண்ட அடிமரத்தையும்
சிறிய இலையினையும் உடைய நெல்லியின் வடு அற்ற பசிய காய்கள்
கற்களையுடைய நெறிகளில் கடிய காற்று உதிர்த்தலால்
பொன்னால் செய்த காசுப் போல அழகுறப் பரவிக்கிடக்கும்.

இந்தக் காசுகள் பொன்னால் செய்யப்பட்டவை.

2ஆ. அகநானூற்றில் இன்னோர் இடத்திலும் இதே போன்ற உவமையைக் காணலாம்.
புறவு குயின்று உண்ட புன் காய் நெல்லி
கோடை உதிர்த்த குவி கண் பசும் காய்
அறு நூல் பளிங்கின் துளை காசு கடுப்ப – அகம் 315/10-12
புறா துளைத்து உண்ட புல்லிய காய்களையுடைய நெல்லியின்
மேல்காற்று உதிர்த்திட்ட குவிந்த கண்ணினையுடைய பசிய காய்கள்
அறுந்து போன நூலிலிருந்த உருண்ட பளிங்கின் துளையிட்ட காசுகளை ஒப்ப

இந்தக் காசுகள் பளிங்கினால் செய்யப்பட்டவை.

பார்க்க – காசு – நெல்லி –

நெல்லிக்காய்கள் துளையிட்ட காசுகளைப் போன்று இருந்தன என்ற ஒப்புமை எவ்வளவு
சரியாக இருக்கிறது என்று பாருங்கள்.

3. இந்தக் காசுகள் வேப்பம்பழம் போல் உருண்டு இருந்தன என்கிறது குறுந்தொகை.
கிள்ளை
வளை வாய் கொண்ட வேப்ப ஒண் பழம்
புது நாண் நுழைப்பான் நுதி மாண் வள் உகிர்
பொலம் கல ஒரு காசு ஏய்க்கும் – குறு 67/2-4
கிளியானது
தன் வளைந்த அலகில் கொண்டிருக்கும் வேம்பின் ஒளிவிடும் பழம்
புதிய நூலைக் கோக்கும்பொருட்டு முனை சிறந்த நன்றாக வளர்ந்த நகங்களில் கொண்ட
பொன் அணிகலத்தின் ஒரு காசினைப் போன்றிருக்கும்

பார்க்க – வேப்பம்பழம் –

4. இந்தக் காசுகள் கொன்றையின் மொட்டுக்கள் போல் இருந்தன என்கிறது இன்னொரு குறுந்தொகைப் பாடல்
காசின் அன்ன போது ஈன் கொன்றை – குறு 148/3
காசைப் போன்ற மொட்டுக்களை ஈன்ற கொன்றை

பார்க்க – காசு – கொன்றை மொட்டு –

III.
சில காசுகள் மணிகளால் செய்யப்பட்டிருக்கும்.
குயில் கண் அன்ன குரூஉ காய் முற்றி
மணி காசு அன்ன மால் நிற இரும் கனி
உகாஅ மென் சினை உதிர்வன கழியும் – அகம் 293/6-8
குயிலின் கண்ணைப் போன்ற நிறமுள்ள காய்கள் முற்றி
மணியினால் செய்யப்பட்ட காசுகளைப் போன்ற கரிய நிறத்திலான பெரிய கனிகள்
உகாவின் மெல்லிய கிளைகளினின்றும் உதிர்ந்து ஒழியும்.

பார்க்க – காசு – உகா கனி –

IV.
சில காசுகள் வட்டமாகத் தட்டை வடிவிலும் இருந்திருக்கின்றன.
பொலம் பசும் பாண்டில் காசு நிரை அல்குல் – ஐங் 310/1
பொன்னாற் செய்த புதிய வட்டவடிவக் காசுகளை வரிசையாகக் கோத்த வடம் தவழும் அல்குலையும்

பாண்டில் என்பது வட்டம் என்ற பொருள் தரும். இது இன்றைய காசுமாலையை ஒக்கும்.

பார்க்க – காசு – பாண்டில் –

பாண்டில் என்பது பெண்கள் அணியும் ஓர் அணிகலன் என்பார் பெருமழைப்புலவர் சோமசுந்தரனார்.
அப்படியெனில் பாண்டில் காசுவும் ஏனைய காசுகளைப் போல் உருண்டை வடிவினதாகவே இருந்திருக்கலாம்.

V. இதுவரை காசு என்பது பெண்கள் இடுப்பில் அணியும் மேகலையில் கோப்பது என்று அறிந்தோம்.
ஆனால் சிறுவர்கள் காலில் அணியும் கொலுசு என்ற கிண்கிணியிலும் காசுகள் கோக்கப்படும் என்று
குறுந்தொகை கூறுகிறது.
செல்வ சிறாஅர் சீறடி பொலிந்த
தவளை வாஅய பொலம் செய் கிண்கிணி
காசின் அன்ன போது ஈன் கொன்றை – குறு 148/1-3
செல்வர்களின் சிறுவர்களின் சிறிய கால்களில் அழகுற விளங்கிய
தவளையின் வாயைப் போன்ற பொன்னால் செய்த சதங்கையின்
காசைப் போன்ற அரும்புகளை ஈன்ற கொன்றை

பார்க்க – காசு – கிண்கிணி –

காஞ்சி

காஞ்சி – (பெ) 1. ஒரு மரம், ஆற்றுப்பூவரசு, River portia
2. நிலையாமை, Instability, transiency
3. மகளிர் இடையில் அணியும் ஏழுகோவையுள்ள அணி,
Woman’s waist-girdle consisting of seven strings of beads or bells
4.செவ்வழிப் பண் வகை, An ancient secondary melody-type of the cevvaḻi class
5. புறத்திணை வகைகளில் ஒன்று, one of the themes in puRam.
1.
குறும் கால் காஞ்சி கோதை மெல் இணர் – அகம் 341/9
குட்டையான அடிமரத்தையுடைய காஞ்சி மரத்தின் மாலை போன்ற மெல்லிய பூஞ்கொத்துக்கள்
2.
காஞ்சி சான்ற செரு பல செய்து – பதி 84/19
நிலையாமை உணர்வே நிறைந்த போர்கள் பலவற்றைச் செய்து
3.
மேகலை காஞ்சி வாகுவலயம் – பரி 7/47
மேகலைகள், இடையணிகள் ஆகியவற்றையும், ஆண்களின் தோள்வளையங்கள் ஆகிய
4.
இசை மணி எறிந்து காஞ்சி பாடி – புறம் 281/5
ஓசையைச் செய்யும் மணியை இயக்கி, காஞ்சிப்பண்ணைப் பாடி
5.
மலைத்த தெவ்வர் மறம் தப கடந்த
காஞ்சி சான்ற வயவர் பெரும – பதி 65/3,4
எதிர்த்துப் போரிட்ட பகைவரின் வீரம் அழியும்படி வென்ற,
காஞ்சித்திணைக்கு அமைந்த வீரர்களுக்குத் தலைவனே!

காடி

காடி – (பெ) 1. துணிகளுக்குப் போடும் சோற்றுக்கஞ்சி, gruel for stiffening the cloths
2. ஊறுகாய், pickles
3. புளித்த நீர், fermented rice water
4. தொண்டை, throat
1.
காடி கொண்ட கழுவு_உறு கலிங்கத்து – நெடு 134
கஞ்சி போட்டு வெளுக்கப்பட்ட துகிலின்
2.
விசி வீங்கு இன் இயம் கடுப்ப கயிறு பிணித்து
காடி வைத்த கலன் – பெரும் 56,57
வார்ப்பிணிப்பு இறுகின இனிய இசைக்கருவி(யான முழவை) ஒப்பக் கயிற்றால் (சுற்றிக்)கட்டி,
ஊறுகாய் வைத்த பாத்திரம்
3.
தொடி மாண் உலக்கை பரூஉ குற்று அரிசி
காடி வெள் உலை கொளீஇ – புறம் 399/2,3
பூணை சிறப்புற அணிந்த உலக்கையால் குற்றப்பட்ட அரிசியை
புளித்த நீரை உலைநீராகக் கொண்ட அடுப்பில் ஏற்றி
4.
விரல் என நிமிர்ந்த நிரல் அமை புழுக்கல்
பரல் வறை கருனை காடியின் மிதப்ப
அயின்ற காலை – பொரு 114-116
விரல் என்னும்படி நெடுகின, ஒரே அளவு அமைந்த, (பருக்கை பருக்கையான)சோற்றையும்,
பருக்கைக் கற்கள் போன்று (நன்கு)பொரித்த பொரிக்கறிகளையும், தொண்டையில் மிதக்கும்படி 115
உண்டபொழுதின்

காந்தள்

காந்தள் – (பெ) ஒரு செடி, பூ, கார்த்திகைப்பூ, glory lily, Gloriosa superba
கை போல் பூத்த கமழ் குலை காந்தள் – பரி 19/76
கைவிரல்கள் போல் பூத்த கமழ்கின்ற குலைகளையுடைய காந்தளும்

காமரம்

காமரம் – (பெ) சீகாமரம் என்னும் பண், a musical mode
ஏம இன் துணை தழீஇ இறகு உளர்ந்து
காமரு தும்பி காமரம் செப்பும் – சிறு 76,77
(தன் உயிர்க்குக்)காவலாகிய இனிய பெடையைத் தழுவி, சிறகுகளை அசைத்துக்கொண்டு,
விருப்பம் மருவின தும்பி சீகாமரம் (என்னும் பண்ணை)இசைக்கும்

காரான்

காரான் – (பெ) கரிய எருமை அல்லது பசு, black buffallo or cow
சேற்று நிலை முனைஇய செம் கண் காரான்
நள்ளென் யாமத்து ஐயென கரையும் – குறு 261/3,4
சேற்றில் நிற்பதை வெறுத்த சிவந்த கண்களையுடைய எருமை
நள்ளென்கிற நடுச் சாமத்தில் ‘ஐ’யென்று கத்தும்

காரி

காரி – (பெ) 1. கடைவள்ளல்களுள் ஒருவன், A chief famed for liberality, one of seven kaṭaivaḷḷalkaḷ
2. காரி என்ற வள்ளலின் குதிரை
3. நஞ்சு, poison
4. வாசுதேவன், vAsudEva,
5. கரிய காளை, black bull
1.
கழல் தொடி தட கை காரியும் – சிறு 95
இறுக்குகின்ற தொடி(யினை அணிந்த), பெருமை மிக்க கையினையும் உடைய காரியும்
2.
காரி குதிரை காரியொடு மலைந்த – சிறு 110
காரியென்னும் குதிரையையுடைய காரியோடு போர்செய்தவனும்
3.
காரி உண்டி கடவுளது இயற்கையும் – மலை 83
நஞ்சை உணவாகக் கொண்ட இறைவனது இயல்பையும்
4.
செம் கண் காரி கரும் கண் வெள்ளை – பரி 3/81
சிவந்த கண்ணும் கரிய மேனியும் உடைய வாசுதேவனே! கரிய கண்ணும் வெள்ளை உடம்பும் உடைய பலதேவனே
5.
சுடர் விரிந்து அன்ன சுரி நெற்றி காரி – கலி 101/21
சூரியனின் கதிர்கள் விரிவதைப் போன்ற சுழியினை நெற்றியில் கொண்ட கரிய காளை

காரோடன்

காரோடன் – (பெ) சாணை பிடிப்பவர், person who sharpens the weapons
சிறு காரோடன் பயினொடு சேர்த்திய
கல் போல் பிரியலம் என்ற சொல் – அகம் 1/5,6
சாணைபிடிக்கும் சிறுவன் அரக்குடன் இணைத்துச் செய்த
சாணைக்கல் போல் (உன்னைப்) ‘பிரியமாட்டேன்’ என்ற சொல்லை

கால்கிளர்

கால்கிளர் – (வி) ஓடு, எழுச்சியுடன் செல், நடமாடித்திரி, run, set out on a mission with zeal, roam about
1.
கடல் கால்கிளர்ந்த வென்றி நல் வேல் – அகம் 45/16
கடலில் வந்த பகைவர்கள் தோற்று ஓடும்படியான வெற்றியையுடைய நல்ல வேல்
2.
கல்லென் சுற்றமொடு கால்கிளர்ந்து திரிதரும் – பெரும் 21
‘கல்’என்ற ஒலியை எழுப்பும் சுற்றத்தாருடன் எழுச்சியுடன் சுற்றித்திரியும்
3.
கழுது கால்கிளர ஊர் மடிந்தன்றே – நற் 255/1
பேய்கள் நடமாடித்திரிய ஊர் உறங்கிற்று.

கால்கொள்

கால்கொள் – (வி) ஒரு நிகழ்ச்சி அல்லது செயலைத் தொடங்கு, commence an event or act
பனி கால்கொண்ட பையுள் யாமத்து – நற் 241/10
பனி பெய்யத்தொடங்கிய வருத்தம் நிறைந்த நள்ளிரவில்

கால்சீ

கால்சீ – (வி) முழுவதுமாக நீக்கு, root out
மதி மாலை மால் இருள் கால்சீப்ப – பரி 10/112
திங்களானது, மாலைக்காலத்து மயக்கந்தரும் இருளைக் முழுதுமாய்க் கூட்டித்தள்ள,

கால்மயங்கு

கால்மயங்கு – (வி) இடம் தெரியாமல் தடுமாறு, baffled, not able to see around
பெயல் கால்மயங்கிய பொழுது கழி பானாள் – நற் 255/9
மழை இடம் தெரியாமல் தடுமாறச்செய்யும் பொழுது கழிந்த நள்ளிரவில்

கால்யா

கால்யா – (வி) 1. மறை, hide
2. நெருங்கு, be close, dense
1.
படை தொலைபு அறியா மைந்து மலி பெரும் புகழ்
கடை கால்யாத்த பல் குடி கெழீஇ – பெரும் 399
(பகைவரின்)படையின்கண் தோல்வியடையாத வலிமை மிகுகின்ற பெரிய புகழின்
எல்லையை மறைத்த, பலவாகிய மறவர் குடியிருப்புகளைச் சேர்ந்து,
2.
காடு கால்யாத்த நீடு மர சோலை – அகம் 109/5
காடாக நெருங்கி வளர்ந்த நீண்ட மரங்களையுடைய சோலை

கால்வீழ்

கால்வீழ் – (வி) மழை மேகம் திரண்டு கீழே இறங்குதல், clouds coming down for a heavy downpour
ஆலி அழி துளி தலைஇ
கால்வீழ்த்தன்று நின் கதுப்பு உறழ் புயலே – அகம் 323/12,13
ஆலங்கட்டிகளுடன் கூடிய மிக்க துளிகளைப் பெய்து
கீழிறங்கிவந்தது உன் கூந்தலைப்போன்ற கார்மேகம்.

காளாம்பி

காளாம்பி – (பெ) காளான், mushroom
பூழி பூத்த புழல் காளாம்பி
மண்துகள்களில் பூத்தன – உட்துளை(கொண்ட) காளான்

காழகம்

காழகம் – (பெ) 1. கடாரம், Burma, Myanmar
2. ஆடை, cloth, probably imported from Myanmar
1.
ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும் – பட் 191
2.
புலரா காழகம் புலர உடீஇ – திரு 184
ஈரம் காயாத துகில் புலர உடுத்தி

காழியர்

காழியர் – (பெ) துணிவெளுப்போர், washermen
காழியர்
கவ்வை பரப்பின் வெ உவர்ப்பு ஒழிய – அகம் 89/7,8
துணிவெளுப்போர்
ஆரவாரம் பொருந்திய பரப்பினையுடைய வெவ்விய உவர் மண் ஒழிய

காழோர்

காழோர் – (பெ) யானைப்பாகர், mahouts
காழோர்
கடும் களிறு கவளம் கைப்ப – மது 658,659
யானைப்பாகர்
கடிய களிறுக்குக் கவளம் ஊட்ட

காழ்

காழ் – (பெ) 1. வடம், கயிறு, string, thread
2. மரவைரம், hard core of timber
3. கருமை, blackness
4. கழி, pole, rafter
5. விதை, seed
6. கட்டுத்தறி, post to which a cow is tied
7. மரத்தூண், wooden pillar
8. கைப்பிடி, காம்பு, handle, stem
9. இரும்பு முள், sharp iron
10. கட்டு, பிணிப்பு, tie, fastening
11. குறுந்தடி, short stick
12. அங்குசம், elephant goad
13. பூச்சரம், garland of flowers
14. முத்து,மணி,வடம், garland of pearls, gems
15. துடுப்பு, oar
16. உள்ளீடு, inner solidity, kernel
17. அரிசி, rice
18. இரும்புக்கம்பி, iron rod
19. சந்தன, அகில் கட்டை, sandalwood or akil piece
1
பல் காசு நிரைத்த சில் காழ் அல்குல் – திரு 16
பல பொற்காசுகளை வரிசையாக அமைத்த சில வடங்களை அணிந்த அல்குலினையும்
2
நுண் பூண் ஆகம் திளைப்ப திண் காழ்
நறும் குறடு உரிஞ்சிய பூ கேழ் தேய்வை – திரு 32,33
நுண்ணிய பூணையுடைய மார்பில் அசைய, திண்ணிய வயிரத்தையுடைய
நறிய சந்தனக்கட்டையை உரைத்த பொலிவுள்ள நிறத்தையுடைய குழம்பை,
3
கதுப்பு விரித்து அன்ன காழ் அக நுணங்கு அறல் – சிறு 6
மயிர் விரித்ததை ஒத்த கருநிறத்தைக் கொண்ட நுண்ணிய கருமணல்,
4
காழ் சோர் முது சுவர் கண சிதல் அரித்த – சிறு 133
(ஊடு)கழிகள் (ஆக்கையற்று)விழுகின்ற பழைய சுவரிடத்தெழுந்த திரளான கரையான் அரித்துக் குவித்த
5
களர் வளர் ஈந்தின் காழ் கண்டு அன்ன – பெரும் 130
களர் நிலத்தே வளர்ந்த ஈந்தின் விதையைக் கண்டாற் போன்று,
6
கவை தாம்பு தொடுத்த காழ் ஊன்று அல்குல் – பெரும் 244
கட்டின நெடிய தாம்புகள் கட்டிக்கிடக்கின்ற தறிகள் நட்ட பக்கத்தினையும்,
7
திண் காழ் ஏற்ற வியல் இரு விலோதம் – மது 449
திண்ணிய கொடிக்கம்பங்களில் ஏற்ற அகலத்தினையுடைய பெருங் கொடிகளை
8
காழ் மண்டு எஃகமொடு கணை அலை கலங்கி – மது 739
காம்பினுள் செருகின வேல்களுடன் அம்புகளும் சென்று நிலைகுலைத்தலின் நிலைகலங்கி,
9
நெடும் தூண்டிலில் காழ் சேர்த்திய – பட் 80
நீண்ட தூண்டிலில் இரும்பு முள் சேர்த்துவைக்கப்பட்ட
10
சிறை குவிந்து இருந்த பைதல் வெண்_குருகு
பார்வை வேட்டுவன் காழ் களைந்து அருள – நற் 312/4
சிறகுகளைக் குவித்துவைத்திருக்கும் துன்பத்தையுடைய வெள்ளைக் குருகாகிய
பார்வைப் பறவையை வேட்டுவன் கால்கட்டை நீக்கி அருள்செய்ய நின்ற
11
மாலை வெண் காழ் காவலர் வீச
நறும் பூ புறவின் ஒடுங்கு முயல் இரியும் – ஐங் 421/1,2
மாலை நேரத்தில் வெண்மையான வயிரம்பாய்ந்த குறுந்தடியைப் புனங்காவலர் ஓங்கி எறிய,
நறுமணமுள்ள பூக்களைக் கொண்ட முல்லைக்காட்டினில் பதுங்கியிருக்கும் முயல்கள் வெருண்டோடும்
12
தேம் பாய் கடாத்தொடு காழ் கைநீவி
வேங்கை வென்ற பொறி கிளர் புகர் நுதல்
——— ———– – உன் களிறு – பதி 53/17-21
தேனீக்கள் மொய்க்கும் மதநீரோடு, பாகரின் குத்துக்கோலுக்கும் கைமீறிக்கொண்டு,
வேங்கை மரத்தைப் புலி என்று நினைத்து அழித்த வடுக்கள் அமைந்த புள்ளிகளையுடைய நெற்றியையுடைய,
——— ———– – உன் களிறு
13.
நலம்பெற சுற்றிய குரல் அமை ஒரு காழ்
விரல் முறை சுற்றி மோக்கலும் மோந்தனன் – கலி 54/7,8
அழகுபெறச் சுற்றிய பூங்கொத்துக்கள் அமைந்த ஒரு பூச்சரத்தை
விரலில் ஒழுங்காகச் சுற்றி மோந்துபார்க்கவும் செய்தான்
14.
கதவவால் தக்கதோ காழ் கொண்ட இள முலை – கலி 57/19
முனைப்பான கோபம் கொண்டனவாய் இருப்பது தகுமோ அந்த முத்துவடம் கொண்ட இள முலைகளுக்கு?
15
வணங்கு காழ் வங்கம் புகும் – கலி 92/47
வளைந்த துடுப்புகளை உடைய படகுக்குள் நுழைவாள்
16
அம் தூம்பு அகல் அமை கமம் செல பெய்த
துறு காழ் வல்சியர் தொழு அறை வௌவி – அகம் 253/15,16
அழகிய உள்துளையினையுடைய அகன்ற மூங்கில் குழாயில் நிறையுமாறு இட்டுத்
திணித்த உள்ளீடாகிய உணவை உட்கொள்பவரின் தொழுவாகிய அறையினைக் கவர்ந்து
17
சுழல் மரம் சொலித்த சுளகு அலை வெண் காழ்
தொடி மாண் உலக்கை ஊழின் போக்கி – அகம் 393/10,11
திரிகையில் திரித்து, சுளகினால் கொழிக்கப்பட்ட வெண்மையான அரிசியை
பூண் சிறந்த உலக்கையினால் மாறிமாறிக் குத்தி
18
கயத்து வாழ் யாமை காழ் கோத்து அன்ன – புறம் 70/2
குளத்தில் வாழும் ஆமைகளை இரும்புக் கம்பியால் குத்திக் கோத்ததைப் போல
19
தேய்வை வெண் காழ் புரையும் – புறம் 369/19
கல்லில் தேய்த்து அரைக்கப்படும் வெண்மையான சந்தனக் கட்டையைப் போன்ற

காழ் என்பதற்குப் பொதுவாக, உறுதியானது, கெட்டியானது என்பதே பொருள். இதனை ஒட்டியே
பல பொருள்கள் ஆகுபெயராக வந்திருப்பதைக் காணலாம்.

காழ்க்கொள்

காழ்க்கொள் – (வி) முதிர்ச்சியடை, mature
இன்று யாண்டையனோ தோழி ——
அறிவு காழ்க்கொள்ளும் அளவை செறி_தொடி
எம் இல் வருகுவை நீ என
பொம்மல் ஓதி நீவியோனே – குறு 379/1-6
இன்று எங்கிருக்கின்றானோ? தோழி! —-
உன் அறிவு முதிர்ச்சியடையும் காலத்தில், செறிந்த வளையல்களையுடையாய்!
எமது இல்லத்துக்கு வருவாய் நீ என்று
பொங்கிவரும் கூந்தலைத் தடவிக்கொடுத்தவன்

காழ்வை

காழ்வை – (பெ) அகில், eagle wood
ஆரம் காழ்வை கடி இரும் புன்னை – குறி 93
சந்தனப்பூ, அகிற்பூ, மணத்தையுடைய பெரிய புன்னைப்பூ,

காவி

காவி – (பெ) கருங்குவளை, Blue nelumbo
சிறு குரல் நெய்தலொடு காவி கூம்ப – அகம் 350/1
சிறிய பூங்கொத்துக்களையுடைய நெய்தல்பூவும், கருங்குவளைப் பூவும் குவிய

காவிதி

காவிதி – (பெ) சான்றோருக்குப் பாண்டியர் கொடுத்துவந்த ஒரு பட்டம், title bestowed on nobles by Pāṇdya kings;
நன்றும் தீதும் கண்டு ஆய்ந்து அடக்கி
அன்பும் அறனும் ஒழியாது காத்து
பழி ஒரீஇ உயர்ந்து பாய் புகழ் நிறைந்த
செம்மை சான்ற காவிதி மாக்களும் – மது 496-499
நன்மை தீமைகளை(த் தம் அறிவால்) கண்டு ஆராய்ந்து, மனத்தை அடக்கி,
அன்புநெறியையும் அறச்செயலையும் (கடைப்பிடித்தல்)தவறாதபடி பாதுகாத்து,
பழியை வெறுத்தொதுக்கி உயர்ந்து, பரவுகின்ற புகழால் நிறைவுற்ற
தலைமை அமைந்த காவிதிப்பட்டம் பெற்றாரும்

காவு

காவு – 1. (வி) 1. தோளில் காவடித்தண்டால் சும, carry on the shoulder, a pole with a weight at each end
2. தோளில் சும, carry on shoulder
– 2.(பெ) சோலை, grove
1.1.
காவினெம் கலனே சுருக்கினெம் கல பை – புறம் 206/10
எம் கலன்களைத் தோள்தண்டில் தூக்கிவைத்தோம், அந்தப் பைகளின் வாயைச் சுருக்குக் கயிறால் மூடினோம்
1.2
ஆடு அரை ஒழித்த நீடு இரும் பெண்ணை
வீழ் காவு ஓலை சூழ் சிறை யாத்த – நற் 354/3
ஆடி அசையும் அடிமரத்தை வெட்டியதால், நெடிய கரிய பனைமரத்திலிருந்து
விழுந்ததால் தோளில் சுமந்துகொண்டு சென்ற ஓலையால் சுற்றிலும் வேலியைக் கட்டின
2.
மாவும் களிறும் மணி அணி வேசரி
காவு நிறைய கரை நெரிபு ஈண்டி – பரி 22/25
குதிரைகளும், களிறுகளும், மணிகள் அணிந்த கோவேறு கழுதைகளும்
ஆற்றங்கரைச் சோலை நிறையவும், கரையையும் நெருக்கமாக வந்து கூடி

கிடக்கை

கிடக்கை – (பெ) 1. நிலப்பரப்பு, long stretch of land
2. ஒரு பொருள் அமைந்திருக்கும் நிலை, being in a certain state
3. படுத்திருக்கும் நிலை, recumbent posture
1.
திரை பிறழிய இரும் பௌவத்து
கரை சூழ்ந்த அகன் கிடக்கை – பொரு 178,179
திரை முரிந்த கரிய கடலின்
கரைகள் சூழ்ந்த அகன்ற நிலப்பரப்பில்,
2.
முருகு அமர் பூ முரண் கிடக்கை – பட் 37
மணம்பொருந்திய பூக்கள் நிறத்தால் தம்முள் மாறுபட்டுக் கிடக்கும் நிலை
3.
மறி இடைப்படுத்த மான் பிணை போல
புதல்வன் நடுவணன் ஆக நன்றும்
இனிது மன்ற அவர் கிடக்கை – ஐங் 401/1-3
குட்டியினை நடுவில்போட்டுப் படுத்த ஆண்மானும், பெண்மானும் போல
தம் மகன் நடுவில் இருக்க, மிகவும்
இனிமையானது, உண்மையாகவே, அவர்கள் படுத்திருப்பது

கிடுகு

கிடுகு – (பெ) கேடயம், shield
கிடுகு நிரைத்து எஃகு ஊன்றி – பட் 78
கேடயங்களை வரிசையாக அடுக்கி, வேலை ஊன்றி

கிடை

கிடை – (பெ) இறகு போல் இலையைக் கொண்ட நீர்த்தாவரம், நெட்டி, pith plant
அறு கய மருங்கின் சிறு கோல் வெண் கிடை – புறம் 75/8
வற்றிய குளத்தில் சிறிய தண்டாகிய வெண்மையான நெட்டியின்

கிடை என்று சொல்லப்படும் நெட்டி என்ற இந்தத் தாவரம் சடை , சடைச்சி , கிடைச்சி , கிடேச்சு,
கோத்திரம் என்றெல்லாம் அறியப்படும் ;
வயலுக்கு உரமாக அமைவது ; கால் நடைகளுக்கு உகந்ததல்ல; இது களையாகக் கருதப்படுகிறது ;
இதன் கரி, வெடிமருந்து தயாரிக்கப் பயன்படுகிறது; இதன் தட்டை மீன்பிடி வலைகளுக்கு
மிதவைகளாகப் பயன்படுத்தப்படுகிறது ;

கிணை

கிணை – (பெ) ஒரு வகைப் பறை, தடாரி எனப்படும், a drum
1.
பாணர்குடியில் பெண்களும் இதனை வாசிப்பர். அவர் கிணைமகள் எனப்படுவார்.
வளை கை கிணை_மகள் – சிறு 136
2.
போர் மறவர்கள் இதனை இசைத்து மகிழ்வர்.
வெம் போர் மள்ளர் தெண் கிணை கறங்க – பதி 90/44
3.
முருகனை வணங்குவோர் இதனை இசைத்து வணங்குவர்.
கேட்டுதும் பாணி எழுதும் கிணை முருகன்
தாள் தொழு தண் பரங்குன்று – பரி 8/81,82
4.
உறுதியான தோல் வாரினால் இது இறுகக் கட்டப்பட்டிருக்கும். கோலினால் முழக்கப்படும்.
வள் வார்
விசி பிணித்து யாத்த அரி கோல் தெண் கிணை – அகம் 249/2,3
5.
பாணர் ஊர்விட்டு ஊர் போகும்போது நடை வருத்தம் தீர மரத்தடியில் இதனை இசைத்து மகிழ்வர்
சுரம் முதல் வருத்தம் மரம் முதல் வீட்டி
பாடு இன் தெண் கிணை கறங்க – அகம் 301/9,10
6.
மன்னர் படையெடுத்துச் செல்லும்போது இதனை இசைத்துச் செல்வது வழக்கம்.
தந்தை தம்மூர் ஆங்கண்
தெண் கிணை கறங்க சென்று ஆண்டு அட்டனனே – புறம் 78/11,12

கிண்கிணி

கிண்கிணி – (பெ) கால் கொலுசு, tinkling ornament for the ankle
இந்தக் கிண்கிணியில் தவளை வாயைப் போன்ற அமைப்பினையுடைய உருண்டைகள்
கோக்கப்பட்டிருக்கும். இவை காசு எனப்படும். இந்தக் காசுகளுக்குள் முத்து, மணி போன்ற
பரல்கள் போடப்பட்டிருப்பதால் நடக்கும்போது இவை ஒலி எழுப்பும்.
1.
கிண்கிணி காலில் அணிவது.
கிண்கிணி கவைஇய ஒண் செம் சீறடி – திரு 13
2.
கிண்கிணியின் குமிழ்களுக்குள் பரல்களிருக்கும், அவை நடக்கும்போது இனிமையான ஒலி எழுப்பும்
அரி பெய் கிண்கிணி ஆர்ப்ப – நற் 250/2
அரி என்பது சலங்கைகளுக்குள் இடப்படும் முத்து, மணி போன்ற பரல்கள்.
3.
கிண்கிணி சிறுவர்கள் அணிவது.
குரும்பை மணி பூண் பெரும் செம் கிண்கிணி
பால் ஆர் துவர் வாய் பைம் பூண் புதல்வன் – நற் 269/1,2
4. கிண்கிணிச் சலங்கைகள் சற்றே திறந்த வாயை உடையன. அது தவளையின் வாய் போல் இருக்கும்.
தவளை வாஅய பொலம் செய் கிண்கிணி
காசின் அன்ன போது ஈன் கொன்றை – குறு 148/2,3
5.
கிண்கிணியைப் பெண்களும் அணிவதுண்டு.
கிண்கிணி மணி தாரோடு ஒலித்து ஆர்ப்ப ஒண் தொடி
பேர் அமர் கண்ணார்க்கும் – கலி 74/13,14
6.
கிண்கிணியைப் பொன்னாலும் செய்வார்கள்.
பொலன் செய் கிண்கிணி நலம் பெறு சேவடி – அகம் 254/3
7.
கிண்கிணியின் சலங்கைகளைப் பொடிவைத்து ஊதி ஒட்டுவார்கள்.
பொடி அழல் புறந்தந்த செய்வுறு கிண்கிணி – கலி 85/2
8.
சிறுவர்கள் பெரியவர்களானதும் கிண்கிணியைக் களைந்து கழல் பூணுவார்கள்
கிண்கிணி களைந்த கால் ஒண் கழல் தொட்டு – புறம் 77/1

கின்னரம்

கின்னரம் – (பெ) இசையெழுப்பும் பறவை, A sweet-voiced bird credited with musical powers
இன் சீர்
கின்னரம் முரலும் அணங்கு உடை சாரல் – பெரும் 493,494
இனிய தாளத்தில்,
கின்னரம் என்னும் பறவைகள் பாடும் தெய்வங்கள் உறையும் சாரலிடத்தே

கிம்புரி

கிம்புரி – (பெ) நீர் விழுதற்கு மகரவாய் வடிவில் அமைக்கப்பெற்ற தூம்பு, Spout shaped like the mouth of a shark
கிம்புரி பகு வாய் அம்பணம் நிறைய – நெடு 96
மீனின் வாய்போன்று பகுக்கப்பட்ட நீர்விழும் குழாய் நிறைய

கிலுகிலி

கிலுகிலி – (பெ) கிலுகிலுப்பை, children’s rattle
உமணர் வண்டிகளோடு செல்லும் குரங்கு, உமணர் தம்முடன் கொண்டுசெல்லும்
முத்து உள்ள கிளிஞ்சல்களைக் கிலுகிலுப்பையாக ஆட்டி, உமணர் குழந்தைகளோடு
விளையாடுமாம்.
நோன் பகட்டு உமணர் ஒழுகையொடு வந்த
மகாஅர் அன்ன மந்தி மடவோர்
நகாஅர் அன்ன நளி நீர் முத்தம்
வாள் வாய் எருந்தின் வயிற்று அகத்து அடக்கி
தோள் புறம் மறைக்கும் நல்கூர் நுசுப்பின்
உளர் இயல் ஐம்பால் உமட்டியர் ஈன்ற
கிளர் பூண் புதல்வரொடு கிலுகிலி ஆடும் – சிறு 55-61
வலிமையுள்ள எருதுகளையுடைய உப்பு வாணிகரின் வண்டி ஒழுங்கோடு வந்ததும், 55
(அவர்களின்)பிள்ளைகளைப் போன்றதும் ஆன மந்தி, மடப்பத்தையுடைய மகளிர்
சிரிப்பு(ப் பல்) போன்ற செறிந்த நீர்மையுடைய முத்தினை,
வாளின் வாய் போலும் வாயையுடைய கிளிஞ்சிலின் வயிற்றுக்குள் இட்டுப்பொதிந்து,
தளர்ந்த இடையினையுடைய, தோளையும் முதுகையும் மறைக்கின்ற
அசைகின்ற இயல்புடைய ஐந்து பகுதியாகிய கூந்தலினையுடைய உப்பு வாணிகத்தியர் பெற்ற, 60
விளங்குகின்ற அணிகலன்களையுடைய, பிள்ளைகளுடன் கிலுகிலுப்பையாக்கி விளையாடும்

கிள

கிள – (வி) தெளிவாகக் கூறு, குறிப்பாகக் கூறு, state clearly, state specifically
கொன் ஒன்று கிளக்குவல் அடு போர் அண்ணல்
கேட்டிசின் வாழி கெடுக நின் அவலம்
கெடாது நிலைஇயர் நின் சேண் விளங்கு நல் இசை – மது 207-209
மேலான ஒன்றைக் கூறுவேன், கொல்லும் போர்த்தொழில் வல்ல தலைவனே,
கேட்பாயாக, நெடிது வாழ்க, கெடுக நின் மயக்கம்,
கெடாமல் நிலைபெறுக உனது தொலைதூரத்தும் சிறந்து விளங்கும் நல்ல புகழ் –

கிளர்

கிளர் – (வி) 1. ஒளிவிடு, shine, to be conspicuous, resplendent
2. பொங்கியெழு, swell upwards
3. மிகு, be intense, abundant, increase
4. உயர், மேலெழு, spring up
5. வளர், shoot up
1.
கிளர் பூண் புதல்வரொடு கிலுகிலி ஆடும் – சிறு 61
ஒளிவிடுகின்ற அணிகலன்களையுடைய, பிள்ளைகளுடன் கிலுகிலுப்பையாக்கி விளையாடும்
2.
கடல் கிளர்ந்து அன்ன கட்டூர் நாப்பண் – புறம் 295/1
கடல் பொங்கி எழுந்ததைப் போன்ற பாசறையின் நடுவில்
3
புலம்பொடு வதியும் நலம் கிளர் அரிவைக்கு – நெடு 166
தனிமையொடு கிடக்கும் அன்பு மிகுகின்ற இளம்பெண்ணுக்கு
4.
அரவு கிளர்ந்து அன்ன விரவு_உறு பல் காழ்
வீடு உறு நுண் துகில் ஊடு வந்து இமைக்கும்
திருந்து_இழை அல்குல் – நற் 366/1-3
பாம்பு படமெடுத்து உயர்ந்ததைப் போன்ற, வேறுபட்ட பலவான மணிகளைக் கோத்து
நெகிழ உடுக்கப்பட்ட நுண்ணிய ஆடை இடையிடையே வந்து பளிச்சிடும்
திருத்தமான அணிகலன் அணிந்த அல்குலையும்
5.
கேழல் உழுது என கிளர்ந்த எருவை – ஐங் 269/1
கிழங்குகளை எடுக்கக் காட்டுப்பன்றி மண்ணைத் தோண்டிவிட அதில் செழித்து வளர்ந்த கோரைப்புல்

கிளவி

கிளவி – (பெ) 1. சொல், word
2. பேச்சு, கூற்று, speech,
1.
நாம் உறு துயரம் செய்யலர் என்னும்
காமுறு தோழி காதலம் கிளவி
இரும்பு செய் கொல்லன் வெம் உலை தெளித்த
தோய் மடல் சில் நீர் போல
நோய் மலி நெஞ்சிற்கு ஏமம் ஆம் சிறிதே – நற் 133/7-11
நாம் படும் துன்பத்தை நம் தலைவர் செய்யமாட்டார் என்னும்
என்பால் விருப்பமிக்க தோழியே! உன் அன்புமிக்க இச் சொல்லானது
இரும்புவேலை செய்கின்ற கொல்லனின் வெப்பமான உலையில் தெளித்த
பனைமடலில் தோய்த்த சிறிதளவு நீரைப் போல
நோய்மிக்க என் நெஞ்சினை ஆற்றுவதாய் இருக்கிறது ஓரளவுக்கு.
2.
அம் தீம் கிளவி தான் தர எம் வயின்
வந்தன்று மாதோ காரே – ஐங் 490/1,2
அழகும் இனிமையுமுள்ள பேச்சினையுடயவளை எம்மிடத்தில் தருவதற்கு
வந்துவிட்டது கார்காலம்

கிள்ளை

கிள்ளை – (பெ) கிளி, parrot
கிள்ளை
வளை வாய் கொண்ட வேப்ப ஒண் பழம் – குறு 67/1,2
கிளியானது
தன் வளைந்த அலகில் கொண்டிருக்கும் வேம்பின் ஒளிவிடும் பழம்

கீண்டு

கீண்டு – (வி.எ) பிளந்து, கிழித்து, tearing, spliting
வேரல்
பூ உடை அலங்கு சினை புலம்ப வேர் கீண்டு – திரு 297,298
சிறுமூங்கிலின்
பூவையுடைய அசைகின்ற கொம்பு தனிப்ப, வேரைப் பிளந்து

கீள்

கீள் – (வி) உடைபடு, burst, breach
கொடும் கரை
தெண் நீர் சிறு குளம் கீள்வது மாதோ – புறம் 118/2,3
வளைந்த கரையை உடைய
தெளிந்த நீரையுடைய சிறிய குளம் உடைவது போலும்

குஞ்சரம்

குஞ்சரம் – (பெ) யானை, elephant
குஞ்சரம் நடுங்க தாக்கி கொடு வரி
செம் கண் இரும் புலி குழுமும் சாரல் – அகம் 92/3,4
யானையை நடுங்கும்படி தாக்கி, வளைந்த கோடுகளையும்
சிவந்த கண்ணினையுமுடைய பெரிய புலி முழங்கும் மலைச்சாரலில்

குஞ்சி

குஞ்சி – (பெ) குடுமி, tuft of men’s hair
எண்ணெய் நீவிய சுரி வளர் நறும் காழ்
தண் நறும் தகரம் கமழ மண்ணி
ஈரம் புலர விரல் உளர்ப்பு அவிழா
காழ் அகில் அம் புகை கொளீஇ யாழ் இசை
அணி மிகு வரி மிஞிறு ஆர்ப்ப தேம் கலந்து
மணி நிறம் கொண்ட மா இரும் குஞ்சியின் – குறி 107-112
எண்ணெய் தேய்த்து நீவிவிட்ட, சுருள்மயிர் வளர்ந்த — நல்ல கருநிறம் அமைந்த,
குளிர்ந்த மணமுள்ள மயிர்ச்சாந்தை(நறுமணத்தைலம்) மணக்குமாறு பூசிமெழுகி,
அந்த ஈரம் உலருமாறு விரலால் கோதிவிட்டு சிக்கு எடுத்து,
வயிரம்பாய்ந்த அகிலின் அழகிய புகையை ஊட்டுதலால், யாழ் ஓசையைப் போன்று
அழகு மிகுகின்ற இசைப்பாட்டினையுடைய வண்டுகள் ஆரவாரிக்கும்படி, அகிலின் நெய்ப்புக் கலக்கப்பெற்று
(நீல)மணியின் நிறத்தைக் கொண்டுள்ள — கரிய பெரிய குடுமியின்கண்,

குடந்தம்

குடந்தம் – (பெ) கைகூப்பி உடலைவளைத்துச்செய்யும் வழி பாடு,
Joining the hands together and bending the body, in worship
குடந்தம்பட்டு கொழு மலர் சிதறி – திரு 229
மெய் வளைத்துக் கைகூப்பி, அழகிய மலர்களைச் சிதறி

குடம்பை

குடம்பை – (பெ) 1. பறவைகளின் கூடு, birds’ nest
2. சிறிய குடில், small shed
1.
மேக்கு உயர் சினையின் மீமிசை குடம்பை
தாய் பயிர் பிள்ளை வாய் பட சொரியும் – நற் 91/6,7
மேலே ஓங்கி உயர்ந்த கிளையின் மீதிருக்கும் கூட்டிலிருந்து
தாயை அழைக்கும் குஞ்சுகளின் வாய்க்குள் கொடுக்கும்
2.
கற்று உரி குடம்பை கத நாய் வடுகர் – அகம் 381/7
கன்றின் தோலினால் ஆன குடிலையுடைய, சினம் பொருந்திய நாயையுடைய வடுகர்

குடா

குடா – (பெ) வளைவு, bend
குரூஉ மயிர் யாக்கை குடா அடி உளியம் – திரு 313
கரிய நிறத்தையுடைய மயிரினையுடைய உடம்பினையும் வளைந்த அடியினையுமுடைய கரடி

குடாரி

குடாரி – (பெ) கோடாலி, axe
எரி கனன்று ஆனா குடாரி கொண்டு – பரி 5/34
நெருப்பு கனன்று தணியாமல் கொழுந்துவிட்டு எரியும் தன் மழுப்படையைக் கொண்டு

குடிஞை

குடிஞை – (பெ) ஒரு வகை ஆந்தை, Rock horned owl, Bubo bengalensis
1.
குடிஞைகள் ஒலியெழுப்பும்போது இரட்டை இரட்டையாக ஒலி எழுப்பும்.
குடிஞை இரட்டு நெடு மலை அடுக்கத்து – மலை 141
பேராந்தைகள் இரண்டிரண்டாக ஒலி எழுப்பும் நெடிய மலைச் சாரலில்

இரட்டுதல் என்றால் யானை மணி போல இரண்டாகச் சேர்ந்து ஒலித்தல்.
(யானை மணி ‘டிங் டாங், டிங் டாங்’ என்று ஒலிப்பதை அறிவோம்)
2.
கோட்டான்கள் உடுக்கு அடிப்பதுபோல ஒலி எழுப்பும்.

அத்த குடிஞை துடி மருள் தீம் குரல் – புறம் 370/6
பாலை வழியில் இருக்கும் கோட்டானின் உடுக்கடிப்பது போன்ற இனிய குரல்
(உடுக்குகள் டும்டும், டும்டும் என்று இரட்டிப்பாக ஒலிப்பதை அறிவோம்.

இதனையே பறவை இயலார் கூற்றும் உறுதிப்படுத்துகிறது.
“Male has a deep, resonant, double hoot bu-whooh, repeated at intervals of several seconds”
3.
இதன் குரல் இனிமையானது.
அத்த குடிஞை துடி மருள் தீம் குரல் – புறம் 370/6
அலம் தலை ஞெமையத்து இருந்த குடிஞை
பொன் செய் கொல்லனின் இனிய தெளிர்ப்ப – நற் 394/2,3
என்ற அடிகள் இதனை உணர்த்தும்.
4.
குடிஞைகள் பெரும்பாலும் ஊரைவிட்டு அகன்றிருக்கும் மலைகளில் வாழும்.
குடிஞை இரட்டு நெடு மலை அடுக்கத்து – மலை 141
திரி வயின் தெவுட்டும் சேண் புல குடிஞை – – அகம் 283/6
கடும் குரல் குடிஞைய நெடும் பெரும் குன்றம் – அகம் 19/5
நெடுமால் வரைய குடிஞையோடு இரட்டும் – அகம் 9/13
புலி துஞ்சு நெடு வரை குடிஞையோடு இரட்டும் – புறம் 170/7
என்ற அடிகள் இதனை உணர்த்தும்.

ஆண்டலை, ஊமன், குடிஞை, குரால், கூகை என்பன தமிழ்நாட்டு ஆந்தை வகைகள்.

பார்க்க : ஆண்டலை ஊமன்
குரால் கூகை

குடுமி

குடுமி – (பெ) 1. உச்சிக்கொண்டை, bird’s crest
2. கிரீடம், crown
3. மரத்தின் உச்சி, top of a tree
4. உச்சி மயிர், tuft of hair
5. முதுகுடுமிப் பெருவழுதி என்ற பாண்டியன்.,
Name of a Pāṇdya king, Mutu-kuTumi-p-peru-vazhuti
1.
குடுமி கோழி நெடு நகர் இயம்பும் – குறு 234/4
கொண்டையையுடைய சேவல் நெடிய நகரில் கூவிஅறிவிக்கும்
2.
கடி மதில் எறிந்து குடுமி கொள்ளும் – பெரும் 451
காவலமைந்த மதில்களை அழித்து (அவ்வரசரின்)கிரீடம்(முதலியவற்றை) கொள்ளும்
3.
கொம்மை போந்தை குடுமி வெண் தோட்டு – குறு 281/2
திரண்ட பனையின் உச்சியில் உள்ள வெள்ளிய குருத்தோலையோடு சேர்த்து வைத்த
4.
புல் உளை குடுமி புதல்வன் பயந்து – அகம் 176/19
புன்மையான, குதிரையின் தலையாட்டத்தைப் போன்ற உச்சி மயிரையுடைய புதல்வனைப் பெற்று
5.
தண்டா ஈகை தகை மாண் குடுமி – புறம் 6/26
தணியாத வள்ளல்தன்மை உள்ள தகுதி மாட்சிமைப்பட்ட குடுமிப்பெருவழுதியே!

குடைச்சூல்

குடைச்சூல் – (பெ) 1. உள்ளே குடையப்பட்டது. The state of being hollow
2. சிலம்பு, anklet
1.
வில் வகுப்புற்ற நல் வாங்கு குடைச்சூல்
அம் சிலம்பு ஒடுக்கி அஞ்சினள் வந்து – அகம் 198/9,10
வில்லைப்போல் வகையமைந்தநன்மை பொருந்திய வளைந்த உள்ளே குடைந்து வெற்றிடமாயுள்ள
அழகிய சிலம்பினை ஒலியாது ஒடுக்கி அச்சத்துடன் வந்து
2.
செ விரல் சிவந்த அம் வரி குடைச்சூல்
அணங்கு எழில் அரிவையர் பிணிக்கும் – பதி 68/18,19
சிவந்த விரல்கள் மேலும் சிவந்து போன அழகிய வரிகளையும், சிலம்பையும்
காண்பாரை வருத்தும் அழகையும் உடைய மகளிரின் மனத்தைத் தன்வயப்படுத்தும்

குட்டம்

குட்டம் – (பெ) 1. குளம், tank, pond
2. ஆழம், depth
3. ஒரு நட்சத்திரத்தின் நான்கு பாகங்களில் ஒரு ஒரு பாகம், பாதம், one fourth part of a star
1.
செ வரி கயலொடு பச்சிறா பிறழும்
மை இரும் குட்டத்து மகவொடு வழங்கி – பெரும் 270,271
சிவந்த வரியினையுடைய கயல்களோடே பசிய இறாப் பிறழ்ந்துநின்ற, 270
கரிய பெரிய ஆழமான குளங்களில் பிள்ளைகளோடு நீந்தி,
2.
பெரும் கடல் குட்டத்து புலவு திரை ஓதம் – மது 540
பெரிய கடலின் ஆழ்பகுதியினின்(று வரும்) புலால் நாறும் அலைகளின் எழுச்சி
3.
ஆடு இயல் அழல் குட்டத்து
ஆர் இருள் அரை இரவில் – புறம் 229/1,2
மேச இராசியில் பொருந்திய கார்த்திகை நட்சத்திரத்தின் முதல் பாதத்தில்
நிறைந்த இருளையுடைய பாதி இரவில்

12 இராசிகளில் முதல் இராசி மேசம்.
27 நட்சத்திரங்களில் முதல் நட்சத்திரம் அசுவினி.
எனவே ஒவ்வொரு இராசிக்கும் இரண்டேகால் நட்சத்திரங்கள் பொருந்தும்.
முதல் இரண்டு நட்சத்திரங்கள் அசுவினி, பரணி.
இவை முழுதும் மேச இராசியில் பொருந்தும். அடுத்து வரும் கார்த்திகையில்
கால் பங்கு மேச இராசியில் பொருந்தும்.
ஆடு என்பது மேசம். அழல் என்பது கார்த்திகை. குட்டம் என்பது கார்த்திகையின் முதல் பாதம்.

குணில்

குணில் – (பெ) குறுந்தடி, short stick, drum stick
குணில் பாய் முரசின் இரங்கும் அருவி – புறம் 143/9
குறுந்தடியால் அறையப்பட்ட முரசு போல ஒலிக்கும் அருவி

குண்டு

குண்டு – (பெ) 1. ஆழம், depth
2. தாழ்ச்சி, state of being low
1.
குண்டு சுனை பூத்த வண்டு படு கண்ணி – திரு 199
ஆழமான சுனையில் பூத்த மலர்(புனையப்பட்ட) வண்டு வீழ்கின்ற மாலையினையும்
2.
திண் தேர் குழித்த குண்டு நெடும் தெருவில் – பெரும் 397
திண்ணிய தேர்கள் பலமுறை ஓடிக் குழித்த தாழ்ச்சியையுடைய நீண்ட தெருவில்

குண்டை

குண்டை – (பெ) குறுமை, shortness
குண்டை கோட்ட குறு முள் கள்ளி – அகம் 184/8
குறிய கிளைகளையும், சிறிய முட்களையும் உடைய கள்ளியின்

குதிர்

குதிர் – (பெ) 1. நெல் முதலிய தானியங்களைச் சேமிக்கும் பெரிய கூடு, Large earthen receptacle for storing grain
2. ஒரு வகை குறுமரம், A low shrub with sharp axillary spines, Canthium parviflorum
1.
பிடி கணத்து அன்ன குதிர் உடை முன்றில் – பெரும் 186
பிடித்திரள் நின்றாற்போன்று (தானியங்கள் சேமிக்கும்)குதிர்களையுடைய முன்றிலையும்,
2-
கரி குதிர் மரத்த கான வாழ்க்கை – அகம் 75/5
கரிந்துபோன குதிர் மரத்தினையுடைய காட்டில் வாழும் வாழ்க்கை

குந்தம்

குந்தம் – (பெ) குத்து வேல், short spear
பூ தலை குந்தம் குத்தி கிடுகு நிரைத்து – முல் 41
பூத்தொழிலைத் தலையிலேயுடைய எறியீட்டிகளை ஊன்றி, கேடயங்களை வரிசையாக வைத்து

குப்பை

குப்பை – (பெ) 1. குவியல், heap
2. தானியக் குவியல், heapof grains
3. கழிவுப்பொருள்கள், garbage
4. தூசு, செத்தை, dust, dried leaves

1.
நெடு வெள் உப்பின் நிரம்பா குப்பை – அகம் 206/14
நீண்டு கிடக்கும் வெள்ளை உப்பின் அளவிலடங்காத குவியல்
2.
குன்று என குவைஇய குன்றா குப்பை – பொரு 244
மலை என்னும்படி குவித்த குறையாத நெற்குவியல்
3
குப்பை வேளை உப்பு இலி வெந்ததை – சிறு 137
குப்பையில் விளைந்த கீரையை உப்பு இல்லாமல் வேகவைத்து
4.
ஈத்து இலை குப்பை ஏறி – புறம் 116/7
ஈச்ச மரத்தின் இலைகளையுடைய குப்பையின் மேல் ஏறி

குமரிமூத்த

குமரிமூத்த – (பெ.அ) பயன்படாமல் காலம் கழிதல், remain unutilised for long
குமரிமூத்த கூடு ஓங்கு நல் இல் – பெரும் 247
கன்னிமையோடே முதிர்ந்த கூடுகள் உயர்ந்து நின்ற நல்ல இல்லங்களையும்

குமரிமூத்தல் என்பது உபயோகப்படுத்தாமல் காலம்கழிதல். ஒரு கன்னி மணப்பருவம் அடைந்தும்
கணவனைப் பெறாமல் வீணே முதியவள் ஆகிவிடுவதைக் குமரி மூத்தல் என்கிறோம்.

அமரர் கோன் ஆனையின் அருந்துவோர் பெறாமல்
குமரிமூத்த என் பாத்திரம்
என்று மணிமேகலையில் வருவதுவும் இதனை மெய்ப்பிக்கும்.

ஓர் அறுவடையின் போது, அப்போதைக்குத் தேவையானதை வைத்துக்கொண்டு அதிகமாய் இருப்பதை
குதிர் என்னும் சேமிப்புக் கிடங்கில் போட்டு வைப்பார்கள். பின்னர் தேவைப்படும்போது குதிரிலிருந்து
எடுத்துப் பயன்படுத்துவார்கள். அப்படித் தேவைப்படாத அளவுக்குப் புதிய தானியங்கள் வந்துகொண்டே
இருந்தால், குதிருக்குள் இருப்பது அப்படியே நெடுங்காலம் இருக்குமல்லவா! இதனையே
குமரிமூத்த கூடு ஓங்கு நல் இல் என்கிறார் பெரும்பாணாற்றுப்படைப் புலவர்.

குமிழ்

குமிழ் – (பெ) ஒரு மரம், gmelina arborea
குமிழ் தலைமயங்கிய குறும் பல் அத்தம் – நற் 274/5
குமிழ மரங்கள் செறிந்துவளர்ந்த, சிறிதானவும் பலவானதுமான வழிகளில்

குயம்

குயம் – (பெ) 1. அரிவாள், sickle
2. இளமை, juvenility, youth
3. குயவர், potter
1.
கூனி குயத்தின் வாய் நெல் அரிந்து – பொரு 242
குனிந்துநின்று, அரிவாளின் வாயால் நெல்லை அறுத்துச்,
2.
குயம் மண்டு ஆகம் செம் சாந்து நீவி – அகம் 48/11
இளமை தங்கும் மார்பினில் சிவந்த சந்தனத்தைப் பூசி,
3
கண் மடல் கொண்ட தீம் தேன் இரிய
கள் அரிக்கும் குயம் – புறம் 348/2,3
கணுவில் தோன்றும் மடலில் கட்டப்பட்டிருந்த இனிய தேன் கூட்டினின்றும் தேனீக்கள் பறந்தோட
தேனடையிலுள்ள தேனை வடித்துக்கொள்ளும் குயவர்.

குயவரி

குயவரி – (பெ) அரிவாளைப்போன்ற வரிகளையுடைய புலி, Tiger, as having sickle-shaped stripes
குயவரி இரும் போத்து பொருத புண் கூர்ந்து – அகம் 398/22
புலியின் பெரிய ஆணானது தாக்கியதால் ஏற்பட்ட புண் மிகுந்து

குயில்

குயில் – 1. (வி) 1. குடை, துளையிடு, hollow out, tunnel, make a hole
2. கல்லில் எழுத்துக்களைப் பொறி, inscribe on a stone
2. (பெ) இனிமையான ஓசை எழுப்பும் கரிய நிறப்பறவை, cuckoo
1.1.
குன்று குயின்று அன்ன ஓங்கு நிலை வாயில் – நெடு 88
பாறைக்குன்றைக் குடைந்து செதுக்கியதைப் போன்ற கோபுரத்தை (மேலே)உடைய வாயில்களையும்
1.2.
பெயர் பயம் படர தோன்று குயில் எழுத்து – அகம் 297/8
பெயரும் பீடும் விரியத் தோன்றுமாறு பொறித்த எழுத்துக்களையுடைய
2.
வெயில் நுழைபு அறியா குயில் நுழை பொதும்பர் – பெரும் 374
வெயில் நுழைந்து அறியாத, குயில் நுழையும் சோலையில்

குய்

குய் – (பெ) 1. தாளிப்பு, seasoning with spices
2. தாளித்த புகை, smoke which comes while seasoning
1.
குவளை உண்கண் குய் புகை கழும – குறு 167/3
குவளை போன்ற மையுண்ட கண்களில் தாளிதப்புகை நிறைய
2.
நெய்யும் குய்யும் ஆடி மெய்யொடு
மாசு பட்டன்றே கலிங்கமும் தோளும் – நற் 380/1
நெய்யும், தாளிப்புப் புகையும் படிந்து, என் உடம்புடன்
அழுக்கடைந்துள்ளது என் ஆடையும்; தோள்களும்

குரம்பை

குரம்பை – (பெ) குடிசை, சிறுகுடில், small hut
நான்கு கழிகளை நட்டு, நாற்புறம் சுவர் அல்லது தடுப்பு எழுப்பி, மேற்கூரையைக் கொண்ட ஓர் அமைப்பு.
1.
பெரிய வெயிலை இது தாங்காது.
உறு வெயிற்கு உலைஇய உருப்பு அவிர் குரம்பை – சிறு 174,175
மிகுகின்ற வெயிலுக்கு (உள் உறைவோர்)வருந்திய வெப்பம் விளங்குகின்ற குடில்
2.
ஈச்ச மரத்தின் இலை, வேறு இலைதழைகள், அரிந்த தட்டைகள், நாணற்புல், முள்
ஆகியவை கூரையாக வேயப்பெற்றிருக்கும்.
ஈத்து இலை வேய்ந்த எய் புற குரம்பை – பெரும் 88
இலை வேய் குரம்பை உழை அதள் பள்ளி – மது 310
அகல் இலை கவித்த புதல் போல் குரம்பை – அகம் 315/16
இருவி வேய்ந்த குறும் கால் குரம்பை – குறி 153
புல் வேய் குரம்பை நல்லோள் ஊரே – குறு 235/5
முண்டகம் வேய்ந்த குறி இறை குரம்பை – நற் 207/2
3.
மிகவும் குறுகலாக இறங்கும் கூரையினை உடையது.
குறி இறை குரம்பை பறி உடை முன்றில் – பெரும் 265
இறை என்பது கூரையின் இறக்கம்.

குரல்

குரல் – (பெ) 1. ஒலி, ஓசை, sound, voice
2. பூங்கொத்து, cluster of flowers
3. கதிர், er of corn
4. செழுமை, Plenteousness, abundance
5. பெண்களின் கூந்தல், women’s hair
1.
புலி குரல் மத்தம் ஒலிப்ப வாங்கி – பெரும் 156
புலி(யின் முழக்கம் போன்ற) ஓசையையுடைய மத்தினை ஆரவாரிக்கும்படி கயிற்றை வலித்து
2.
நெடும் குரல் பூளை பூவின் அன்ன – பெரும் 192
நெடிய கொத்தினையுடைய சிறு பூளையின் பூவை ஒத்த
3.
கொய் பதம் உற்றன குலவு குரல் ஏனல் – மலை 108
கொய்யப்படும் பக்குவம் பெற்றன பிணைந்துகிடக்கும் கதிர்களையுடைய தினை
4.
குரல் கூந்தால் என் உற்ற எவ்வம் நினக்கு யான்
உரைப்பனை தங்கிற்று என் இன் உயிர் – கலி 144/12,13
‘செழுமையான கூந்தலையுடையவளே! உன்னைப் பார்த்ததால் எனக்கு நேர்ந்த துன்பத்தை உனக்கு நான்
உரைக்கும் வரையிலாவது என் இனிய உயிர் என்னிடம் இருக்கிறதே’
5.
சிறுபுறம் புதைய வாரி குரல் பிழியூஉ – அகம் 8/16
பின்புறம் மறையப் பின்னே கோதிவிட்டு. கூந்தலைக் கொத்தாகப் பிழிந்து,

குரவம்

குரவம் – (பெ) ஒரு பூ, மரம், குரவு, குரா, Bottle-flower, Tarenna asiatica, Webera corymbosa
1.
இது காட்டில் வளரக்கூடியது.
குரவம் மலர மரவம் பூப்பச்
சுரன் அணி கொண்ட கானம் – ஐங் 357/1,2
கானம் என்பது காடு.
2.
மிகுந்த நறுமணம் உடையது. பாவை என்றும் அழைக்கப்படும்.
நறும் பூ குரவம் பயந்த
செய்யா பாவை கொய்யும் பொழுதே – ஐங் 344/1,2
நறுமணமிக்க பூக்களைக் கொண்ட குரவமரம் உண்டாக்கிய
கையினால் செய்யப்படாத பாவையைப் போன்ற மலர்களைக் கொய்யும் காலம்
3.
கொத்துக்கொத்தாகப் பூக்கக்கூடியது.
பயினி வானி பல் இணர் குரவம் – குறி 69
இணர் என்பது பூங்கொத்து. இவ்வாறு பலபூங்கொத்துகளை ஒன்றாகச் சேர்த்தது போல் பூக்கும்.
4.
இதன் அரும்புகள் பச்சை நிறத்தில் இருக்கும்.
பல் வீ படரிய பசு நனை குரவம் – குறு 341/1
பல பூக்கள் தோன்றிய பசிய அரும்புகளையுடைய குராமரம்
5.
வண்டுகள் மொய்க்கும்போது இதன் பூக்கள் வெள்ளிக்கம்பி போல் உதிரும்.
வெள்ளி
நுண்கோல் அறைகுறைந்து உதிர்வன போல
அரவ வண்டினம் ஊதுதொறும் குரவத்து
ஓங்கு சினை நறுவீ கோங்கு அலர் உறைப்ப – அகம் 317/8-11
வெள்ளியின் மெல்லிய கம்பி துண்டுகளாக வெட்டப்பட்டு உதிர்வன போல
ஒலிக்கின்ற வண்டுக்கூட்டம் மொய்க்கும்போதெல்லாம், குரவமரத்தின்
உயர்ந்த கிளைகளிலுள்ள நறிய பூக்கள், கோங்கின் பூக்களுக்குள் உதிர
6.
பாம்பின் பல் போன்று சிறியதாகவும் கூர்மையாகவும் இதன் அரும்புகள் இருக்கும்.
அரவு எயிற்று அன்ன அரும்பு முதிர் குரவின்- அகம் 237/3
எயிறு என்பது பல்.குரவு என்பது குரவம்.
7.
முன்பனிக்காலத்தில் தளிர்விட்டு அரும்புகள் தோன்ற ஆரம்பிக்கும்.
பின்பனி அமையம் வரும் என முன்பனி
கொழுந்து முந்துறீஇ குரவு அரும்பினவே – நற் 224/2,3
பின்பனிக் காலம் வரப்போகிறது என்று முன்பனிக்காலத்தில்
தளிர்களை முதலில் விட்டு, குராமரங்கள் அரும்புவிடுகின்றனவே!
8.
இளவேனில் காலத்துத் தொடக்கத்தில் பூக்க ஆரம்பிக்கும்.
குரவு மலர்ந்து
அற்சிரம் நீங்கிய அரும்பத வேனில் – அகம் 97/16,17
குரவம் மலர்ந்து
முன்பனிக்காலம் நீங்கப்பெற்ற அரிய பக்குவத்தையுடைய இளவேனில் காலம்
9.
இந்த மரம் குட்டையாக இருக்கும்.
குறு நிலை குரவின் சிறு நனை நறு வீ – நற் 56/1
குட்டையாக நிற்கும் குரா மரத்தின் சிறிய அரும்புகளைக் கொண்ட நறிய மலர்களில்
உயரமான மரங்கள் ‘ஓங்கு நிலை’ என்று கூறப்படும்.
10.
குட்டையான இந்த மரத்தின் குவிந்த கொத்துக்களாக இருக்கும் பூக்கள் வெண்மை நிறத்தவை
குறும் கால் குரவின் குவி இணர் வான் பூ – நற் 266/2
குட்டையான காலினையுடைய குராமரத்தின் குவிந்த கொத்திலுள்ள வெள்ளையான பூ

குரவை

குரவை – (பெ) சங்க கால மகளிர் தம்முள் கைகோத்தாடும் கூத்துவகை
Dance in a circle prevalent among the women of sangam era
1.
குரவைக் கூத்தின்போது பறைகள் முழக்கப்படும்.
குன்றக சிறு குடி கிளையுடன் மகிழ்ந்து
தொண்டக_சிறுபறை குரவை அயர – திரு 196,197
2.
குறிஞ்சி நில மக்கள் குரவைக் கூத்தாடுவர்.
குன்றக சிறு குடி கிளையுடன் மகிழ்ந்து
தொண்டக_சிறுபறை குரவை அயர – திரு 196,197
3.
குறிஞ்சி மக்கள் முருகனை வழிபடும்போது, வேலன் வெறியாட்டின்போது
இன்னிசை முழங்க, ஒருவரை ஒருவர் கைகளால் தழுவிக்கொண்டு ஆடுவர்.
அரும் கடி வேலன் முருகொடு வளைஇ
அரி கூடு இன் இயம் கறங்க நேர்நிறுத்து
கார் மலர் குறிஞ்சி சூடி கடம்பின்
சீர் மிகு நெடுவேள் பேணி தழூஉ பிணையூஉ
மன்றுதொறும் நின்ற குரவை – மது 611 -615
அரிய அச்சத்தைச் செய்யும் வேலன் வெறியாட்டமாடி வளைத்துக்கொண்டு,
அரித்தெழும் ஓசையையுடைய இனிய இசைக்கருவிகள் முழங்க, (முருகனை)முன்னிலையாக்கி,
கார் (காலத்தில் மலரும்)குறிஞ்சிப் பூவைச் சூடி, கடப்பமரத்தின்கண்
புகழ் மிக்க முருகனை வழிபடுதலால், தழுவிக் கைகோத்து,
மன்றுகள்தோறும் நின்ற குரவைக்கூத்தும்
4.
குரவையின்போது ஆணும் பெண்ணும் சேர்ந்து ஆடுவர்.
திருந்து வேல் அண்ணற்கு விருந்து இறை சான்ம் என
நறவு நாள்செய்த குறவர் தம் பெண்டிரொடு
மான் தோல் சிறு பறை கறங்க கல்லென
வான் தோய் மீமிசை அயரும் குரவை – மலை 318-322
திருத்தமாகச்செய்யப்பட்ட வேலையுடைய தலைவனுக்கு(நன்னனுக்கு) புதிய குடியிறையாக அமையும் என்று
கள்ளை (அரசனுக்கு) நாள்செய்வதற்காகச் செய்த குறவர்கள் தம் பெண்களோடு 320
மான் தோலால் செய்யப்பட்ட சிறுபறையைச் சுழற்ற கல கல என்னும் ஓசையுடன்,
விண்ணைத் தொடும் மலையுச்சியில் வழிபாடுசெய்ய எழுப்பும் குலவை ஒலியும்
5.
நெய்தல் நில மக்களும் குரவை ஆடுவர்.
நெய்தல் உண்கண் ஏர் இறை பணை தோள்
பொய்தல் ஆடிய பொய்யா மகளிர்
குப்பை வெண் மணல் குரவை நிறூஉம் – ஐங் 181/1-3
நெய்தல் மலர் போன்ற மையுண்ட கண்களையும், அழகாக இறங்கும் பருத்த தோள்களையும் உடையவரான
மணல்வீடு கட்டி விளையாடிய, பொய்யுரையை அறியாத மகளிர்
குவிந்திருக்கும் வெண்மையான மணலில் குரவைக் கூத்துக்காக நின்றுகொண்டிருக்கும்
6.
மருதநில மக்களும் குரவை ஆடுவர்.
மருதம் சான்ற மலர் தலை விளை வயல்
செய்யுள் நாரை ஒய்யும் மகளிர்
இரவும் பகலும் பாசிழை களையார்
குறும் பல் யாணர் குரவை அயரும் – பதி 73/7-10
மருத வளம் அமைந்த விரிந்த இடத்தையுடைய விளைநிலங்களாகிய
வயல்களுக்குள் நாரைகளை விரட்டும் மகளிர்
இரவும் பகலும் தம் புத்தம்புதிய அணிகலன்களைக் கழற்றாதவராய்
அருகருகே அமைந்துள்ள பல புதுப்புது இடங்களில் குரவைக் கூத்தினை ஆடி மகிழும்,
7.
தலைவியின் காதல் நிறைவேறுவதற்காக அவளுடைய தோழிகள் குரவை ஆடுவர்.
அப்போது, தான் தலைவனுடன் சேர்வதற்காகக் கொண்டுநிலை என்ற பாடலைத் தலைவி பாடுவாள்.
தெரி_இழாய் நீயும் நின் கேளும் புணர
வரை உறை தெய்வம் உவப்ப உவந்து
குரவை தழீஇ யாம் ஆட குரவையுள்
கொண்டுநிலை பாடி காண் – கலி 39/27-30
தெரிந்தெடுத்த அணிகலன்களை அணிந்தவளே! நீயும் உன் காதலனும் ஒன்றுசேர்வதற்காக,
மலையில் வாழும் தெய்வமான முருகன் மனம் மகிழ, மனமகிழ்ச்சியுடன்
குரவைக் கூத்தைத் தழுவியவாறு நாங்கள் ஆட, அந்தக் குரவையில்
கொண்டுநிலை என்ற தலைவன், தலைவி சேர்க்கைக்கான பாடலைப் பாடுவாயாக,
8.
குரவைக் கூத்தாடுவோர் வட்டமாக நின்றுகொண்டு ஆடுவர்.
வட்டத்தின் நடுவில் இறுகிய ஈரமணலால் செய்த உருவத்தை வைத்திருப்பர்.
பாடு ஊர்பு எழுதரும் பகு வாய் மண்டிலத்து
வயிர் இடைப்பட்ட தெள் விளி இயம்ப
வண்டல் பாவை உண்துறை தரீஇ
திரு நுதல் மகளிர் குரவை அயரும் – அகம் 269/17-20
ஓசை பரந்து எழும் பெரிய இடத்து வட்டத்தையுடைய,
ஊது கொம்பிலிருந்து எழும் தெளிந்த இசை ஒலிக்க
வண்டல் விளையாட்டுக்குரிய பாவையை நீர் உண்ணும் துறையிலிருந்து கொண்டு வந்து வைத்து
அழகிய நெற்றியையுடைய பெண்கள் குரவைக் கூத்தாடும்.
9.
குரவை ஆடும் மகளிர் சிறிதளவு கள் அருந்தியிருப்பர். மரத்து நிழலிலும் குரவை ஆடுவர்
தெண் கள் தேறல் மாந்தி மகளிர்
நுண் செயல் அம் குடம் இரீஇ பண்பின்
மகிழ்நன் பரத்தைமை பாடி அவிழ் இணர்
காஞ்சி நீழல் குரவை அயரும் – அகம் 336/6-9
தெளிந்த கள்ளினைக் குடித்து, மகளிர்
நுண்ணிய தொழில்நலம் வாய்ந்த அழகிய குடத்தை வைத்துவிட்டு, நற்பண்பில்லாத
தலைவனின் பரத்தமையைப் பாடி, விரிந்த பூங்கொத்துக்களையுடைய
காஞ்சிமரத்தின் நிழலில் குரவை ஆடுவார்கள்.
10.
போர்வீரர்கள் சினம் மிகுந்து பாசறையில் குரவை ஆடுவர்.
பொலம் தோட்டு பைம் தும்பை 20
மிசை அலங்கு உளைய பனை போழ் செரீஇ
சின மாந்தர் வெறி குரவை
ஓத நீரின் பெயர்பு பொங்க – புறம் 22/20-23
பொன்னால் செய்யப்பட்ட இதழையுடைய பசிய தும்பையுடனே
மேலே அசையும் தலையாட்டம் போன்ற பனையின் தோட்டைச் செருகி
சினத்தியுடைய வீரர் வெறியாடும் குரவைக் கூத்தின் ஒலி
பொங்கி வரும் கடலின் ஒலியைப் போல கிளர்ந்து பொங்க

குரால்

குரால் – (பெ) 1. கபிலை நிறம், dim tawny colour
2. கூகைப் பெடை, female of a kind of owl, female of barn owl (tyto alba)
1.
குரால் ஆன் படு துயர் இராவில் கண்ட – குறு 224/4
கபிலைநிறப் பசு படுகின்ற துயரத்தை இரவில் கண்ட
2.
கொழு இல் பைம் துணி
வைத்தலை மறந்த துய் தலை கூகை
கவலை கவற்றும் குரால் அம் பறந்தலை – பதி 44/17-19
திரட்சி இல்லாத பசிய இறைச்சித் துண்டத்தை
வைத்த இடத்தை மறந்த பஞ்சுபோன்ற கொண்டையையுடைய ஆண்கூகையைக்
கவலைப்படச்செய்து வருத்தும் பெண்கூகையையுடைய பாழ்நிலத்தில்

மணல் மலி மூதூர் அகல் நெடும் தெருவில்
கூகை சேவல் குராலோடு ஏறி
ஆர் இரும் சதுக்கத்து அஞ்சுவர குழறும் – நற் 319/3-5
மணல் மிகுந்த பழமையான ஊரின் அகன்ற நெடிய தெருவில்
ஆண்கூகையானது தன் பெடையுடன் செறு
நடமாட்டமில்லாத பெரிய நாற்சந்தியில் அச்சம்தோன்றக் குழறுகின்ற ஒலியை எழுப்பும்;

எனவே, குரால் ஆந்தையானது கூகை ஆந்தையின் பெண் என்பது தெளிவு.
ஆண்கூகையைக் காட்டிலும் பெண் குரால் உருவத்தில் சற்றுப் பெரியது என்பர் பறவையியலார்.

மேற்கூறிய பதிற்றுப்பத்துக் கூற்றில் துய் தலை கூகை என்று வருவதால், கூகையும், குராலும்
பஞ்சுப்பிசிர் போன்ற மென்மையான தலையை உடையன என்பது பெறப்படும்.

இருப்பினும்,
குடுமி கூகை குராலொடு முரல – மது 170
ஒராஅ உருட்டும் குடுமி குராலொடு – அகம் 265/19
என்ற அடிகளால், கூகையும், குராலும் குடுமியை உடையன என்று அறியப்படுகிறது.

ஆண்டலை, ஊமன், குடிஞை, குரால், கூகை என்பன தமிழ்நாட்டு ஆந்தை வகைகள்.

பார்க்க : ஆண்டலை ஊமன்
குடிஞை கூகை

குரீஇ

குரீஇ – (பெ) குருவி என்பதன் விகாரம்.
உள்ளூர் குரீஇ துள்ளு நடை சேவல் – குறு 85/2
உள்ளூர்ச் சிட்டுக்குருவியின் குதித்துக்குதித்து நடக்கும் ஆண்குருவி

குரீஇப்பூளை

குரீஇப்பூளை – (பெ) சிறு பூளை, woolly caper, Aerua lanata
குரீஇப்பூளை குறுநறுங்கண்ணி – குறி 72

குரு

குரு – (பெ) பளபளப்பான நிறம், glisten with colour
குரங்கின் தலைவன் குரு மயிர் கடுவன் – ஐங் 275/1
குரங்குகளின் தலைவனான, நிறம் மிக்க மயிரினைக் கொண்ட ஆண்குரங்கு

குருகிலை

குருகிலை – (பெ) ஒரு வகை அத்தி, white fig, Ficus virens Ait
குருகிலை மருதம் விரி பூ கோங்கம் – குறி 73

குருகு

குருகு – (பெ) 1. குருக்கத்தி : பார்க்க : குருக்கத்தி
2. நாரை, heron
3. துருத்தி வைத்து ஊதும் கொல்லனின் உலைமூக்கு,
Hole in the centre of the smith’s forge for the nozzle of the bellows;
1.
குறும் கால் காஞ்சி சுற்றிய நெடும் கொடி
பாசிலை குருகின் புன் புற வரி பூ – பெரும் 375,376
குறிய காலினையுடைய காஞ்சிமரத்தைச் சூழ்ந்த நெடிய கொடியினையும், 375
பசிய இலையினையும் உடைய குருக்கத்தியின் புற்கென்ற புறத்தினையும் வரிகளையும் உடைய பூக்கள்
2.
போது அவிழ்
புது மணல் கானல் புன்னை நுண் தாது
கொண்டல் அசை வளி தூக்கு-தொறும் குருகின்
வெண் புறம் மொசிய வார்க்கும் தெண் கடல் – நற் 74/6-9
மொட்டுகள் மலர்கின்ற,
புதுமணற்பரப்பைக் கொண்ட கானலில் உள்ள புன்னை மரத்தின் நுண்ணிய தாதுக்கள்
கிழக்கிலிருந்து வீசும் காற்று வந்து மோதும்போதெல்லாம், நாரையின்
வெள்ளையான முதுகில் மொய்ப்பதுபோல் உதிர்க்கும் தெளிந்த கடற்கரையிலுள்ள
3.
புலி பகை வென்ற புண் கூர் யானை
கல்_அக சிலம்பில் கை எடுத்து உயிர்ப்பின்
நல் இணர் வேங்கை நறு வீ கொல்லன்
குருகு ஊது மிதி உலை பிதிர்வின் பொங்கி – அகம் 202/3-6
புலியாக பகையை வென்ற புண் மிகுந்த யானை
கற்களைஇடத்தே கொண்ட மலைச் சரிவில் தன் துதிக்கையைத் தூக்கிப் பெருமூச்சுவிடுவதால்
நல்ல கொத்துக்களையுடைய நறுமணமுள்ள பூக்கள், கொல்லனின்
மிதித்து ஊதும் உலையின் மூக்கருகே தெறித்து எழும் தீப்பொறி போலப் பொங்கி

குருக்கத்தி

குருக்கத்தி – (பெ) மாதவிக்கொடி, Common delight of the woods, Hiptage madablota
துய் தலை இதழ பைம் குருக்கத்தியொடு – நற் 97/6
பஞ்சுப்பிசிரினை உச்சியில் கொண்ட இதழ்களைக் கொண்ட பைங்குருக்கத்தி மலருடன்

குருந்தம்

குருந்தம் – (பெ) காட்டு எலுமிச்சை வகை, A speicies of wild lime, Atalantia racemosa
குருந்தம் பூ கண்ணி பொதுவன் – கலி 111/7
குருந்தம்பூச் சரத்தைத் தலையில் சூடிக்கொண்டிருந்த இடையன்

குருந்து

குருந்து – (பெ) குருந்தம், பார்க்க : குருந்தம்
மஞ்ஞை
நனை பசும் குருந்தின் நாறு சினை இருந்து
துணை பயிர்ந்து அகவும் – அகம் 85/11-13
மயில்
தேனையுடைய குருந்த மரத்தின் நறுமணம் வீசும்கிளையிலிருந்து
தன் துணையை அழைத்துக் கூப்பிடும்

குரும்பி

குரும்பி – (பெ) புற்றாஞ்சோறு, comb of white ants’ nest
சங்க இலக்கியத்தில் குரும்பியைப்பற்றி நான்கு குறிப்புகள் உள்ளன. இவை நான்கிலும் குரும்பி என்பது
புற்றுகளில் கிடைக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது. இவற்றில் இரண்டு குறிப்புகள் இந்தப் புற்றில் பாம்பு
இருக்கும் என்றும் குறிப்பிடுகின்றன. இவற்றின் ஒன்று இது ஈசல் புற்று என்று தெளிவாகக் கூறுகிறது.
மேலும், மூன்று குறிப்புகள், இந்தக் குரும்பியைக் கரடிகள் விரும்பி உண்ணும் என்றும் கூறுகின்றன.
கரடிகளின் உணவான இந்தக் குரும்பியைப் பற்றி நாம் அறியும் செய்திகள் இவை:

Black Bears dig up ant colonies, .. to consume their pupae and larvae (collectively known as brood).
In Summer, ant pupae and larvae become abundant. Ant brood is a major food from late spring until
mid to late summer. Ants undergo complete metamorphosis, much like that of butterflies,
where they pass from egg to larva to pupa before maturing into an adult ant.
Bears consider this as a top favorite food source and is a huge part of their diet at this time of year.

தேன்கூட்டைப் போன்ற ஓர் அமைப்பில் இராணிக் கறையான்கள் ஆயிரக்கணக்கில் முட்டையிடுகின்றன.
இந்த முட்டைகள் புழுவாக மாறி (larva), பின்னர் கூட்டுப்புழுவாக (pupa) மாறி, பின்னர் ஈசல்களாக மாறுகின்றன.
இந்த முட்டைகளும், முட்டைப்புழுக்களும், கூட்டுப்புழுக்களும் சேர்ந்த கலவையே குரும்பி எனப்படுகிறது.
இதுவே நம் மக்களால் புற்றாஞ்சோறு என்றும் அழைக்கப்படுகிறது.

பாம்பு உறை புற்றின் குரும்பி ஏய்க்கும்
பூம் புற நல் அடை அளைஇ – பெரும் 277-278
பாம்பு வாழும் புற்றிலிருக்கும் புற்றாம்பழஞ் சோற்றை ஒக்கும்,
பொலிவுள்ள புறத்தினையுடைய நல்ல (நெல்)முளையை (அதில்)கலந்து….

முளை கட்டின அரிசியைப் போல் இருக்கும் இந்தக் குரும்பி என்கிறது இது. அடை என்பது முளை.

ஈயல் புற்றத்து ஈர்ம் புறத்து இறுத்த
குரும்பி வல்சி பெரும் கை ஏற்றை
தூங்கு தோல்துதிய வள் உகிர் கதுவலின்
பாம்பு மதன் அழியும் – அகம் 8/1-4
ஈசல்களையுடைய புற்றின் குளிர்ந்த மேல்பாகத்தில் தங்கிய
புற்றாஞ்சோற்றை உணவாகக் கொண்ட பெரிய கையை உடைய ஆண்கரடியின்
தொங்கும் தோல் உலுறைக்குள் பொருந்தியிருக்கும் கூர்மையான நகம் பற்றிக்கொள்வதால்
பாம்பு தன் வலிமையை இழக்கும்

குரும்பி கெண்டும் பெரும் கை ஏற்றை – அகம் 72/5
கெண்டுதல் என்பது தோண்டியெடுத்தல்.
பெரும் கை எண்கு இனம் குரும்பி தேரும் – அகம் 307/10
எண்கு என்பது கரடி.

குரும்பை

குரும்பை – (பெ)தென்னை,பனை,கமுகு இவற்றின் இளம்காய், Young coconuts, kamuku or palmyra nuts
முதிர் கோங்கின் முகை என முகம் செய்த குரும்பை என – கலி 56/23
முற்றிய கோங்கின் மொட்டு எனவும், முளைத்து வெளிவரும் தென்னங்குரும்பை எனவும் கூறும்படியாக

குருளை

குருளை – (பெ) நாய், பன்றி, புலி,முயல்,நரி, பாம்பு போன்றவற்றின் குட்டி, Young of certain animals
ஊமை எண்கின் குடா அடி குருளை – மலை 501 – எண்கு என்பது கரடி
குருளை நீர்நாய் கொழு மீன் மாந்தி – நற் 195/2
வெயில் ஆடு முசுவின் குருளை உருட்டும் – குறு 38/2 – முசு என்பது ஒரு வகைக் குரங்கு
சிறு வெள் அரவின் அம் வரி குருளை – குறு 119/1 – அரவு என்பது பாம்பு
மற புலி குருளை கோள் இடம் கரக்கும் – குறு 209/2
குருளை பன்றி கொள்ளாது கழியும் – ஐங் 397/2

குரூஉ

குரூஉ – (பெ) குரு என்பதன் விகாரம். பளிச்சிடும் நிறம் – பார்க்க : குரு
குளிர் கொள் சினைய குரூஉ துளி தூங்க – நெடு 28
குளிர்ச்சியைக் கொண்ட கிளைகளையுடையவாய் (அவற்றினின்றும்)நிறத்தையுடைய மழைத்துளி தொங்கி நிற்க –

குறங்கு

குறங்கு – (பெ) தொடை, thigh
குறங்கு இடை பதித்த கூர் நுனை குறும்பிடி – மது 637
தொடையில் (தெரியாமற்கிடக்கும்படி)அழுத்தின கூரிய முனையையுடைய குறுகிய பிடியமைந்த உடைவாளையும்,

குறடு

குறடு – (பெ) 1. சந்தனக்கட்டை, sandal wood piece
2. வண்டி முதலியவற்றின் அச்சுக்கோக்கும் இடம், Axle-box of a cart
3. கொல்லரின் பற்றுக்குறடு, Pincers, forceps
1.
திண் காழ்
நறும் குறடு உரிஞ்சிய பூ கேழ் தேய்வை – திரு 32,33
திண்ணிய வயிரத்தையுடைய
நறிய சந்தனக்கட்டையை உரைத்த பொலிவுள்ள நிறத்தையுடைய குழம்பை
2
கூர் உளி பொருத வடு ஆழ் நோன் குறட்டு
ஆரம் சூழ்ந்த அயில் வாய் நேமியொடு – சிறு 252,253
கூரிய சிற்றுளிகள் சென்று செத்திய உருவங்கள் அழுந்தின, வலிமையான, அச்சுக்குடத்தில்
(பொருத்திய)ஆரக்கால்களைச் சூழ்ந்த இரும்புப்பட்டையை மேற்புறம் கொண்ட சக்கரத்துடன்,
3.
கரி குறட்டு இறைஞ்சிய செறி கோள் பைம் குரல் – குறு 198/4
கொல்லர் உலைக் கரியை எடுக்கும் குறடு போல வளைந்த செறிந்த குலைகளையுடைய பசிய கதிர்கள்

குறள்

குறள் – (பெ) 1. சிறியது, சிறுமை, smallness
2. குள்ளன், dwarf
1.
குறும் தாள் வரகின் குறள் அவிழ் சொன்றி – பெரும் 193
குறிய தாளினையுடைய வரகின் சிறிய பருக்கைகளாகிய சோற்றை
2.
அன்னையோ காண் தகை இல்லா குறள் நாழி போழ்தினான் – கலி 94/5
அம்மாடியோ? காணச் சகிக்காத குள்ளனாய்ப் பிறப்பதற்குரிய நாழிகையான நல்லநேரத்தில்

குறுநறுங்கண்ணி

குறுநறுங்கண்ணி – (பெ) குன்றிப்பூ, Crab’s eye, Abrus precatorius
குரீஇப்பூளை குறுநறுங்கண்ணி – குறி 72

குறும்பு

குறும்பு – (பெ) 1. வலிமை, strength
2. அரண், stronghold, fort
3. பகைவர், enemy
1.
அரவு குறும்பு எறிந்த சிறு கண் தீர்வை – மலை 504
பாம்பின் வலிமையை அழித்த சிறிய கண்களையுடைய கீரியும்,
2.
பிற புலம் புக்கு அவர்
அரும் குறும்பு எருக்கி அயா உயிர்த்து ஆஅங்கு
உய்த்தன்று-மன்னே நெஞ்சே – நற் 77/2-4
வேற்று மன்னர் நாட்டில் புகுந்து அவரின்
கடத்தற்கரிய காட்டரணை அழித்து நிம்மதிப்பெருமூச்சு விட்டாற்போன்று
துன்பம் தீர்ந்தது என் நெஞ்சு
3
குறும்பு அடைந்த அரண் கடந்து – புறம் 97/4
பகைவர் சேர்ந்த அரண்களைக் கடந்து

குறும்பூழ்

குறும்பூழ் – (பெ) ஒரு பறவை, காடை, quail
குறுங்கால்
கறை அணல் குறும்பூழ் கட்சி சேக்கும் – பெரும் 204,205
குறிய காலினையும்,
கறைபடிந்த கழுத்தினையும் உடைய காடைப்பறவை காட்டில் தங்கும்

குறும்பொறி

குறும்பொறி – (பெ) உதரபந்தம், அரைப்பட்டிகை, Girdle or belt made of gold or silver and worn over the dress
குறும்பொறி கொண்ட நறும் தண் சாயல்
மருங்கில் கட்டிய நிலன் நேர்பு துகிலினன் – திரு 213,214
உதரபந்தத்தை(யும்) கொண்டதும், நறிய, குளிர்ந்த, மென்மையுடைய
இடையில் கட்டப்பட்ட, நிலத்தளவும் தொங்குகின்ற துகிலினையுடையன்

குலவு

குலவு – (வி) 1. வளை, bend
2. குவிந்திரு, lie heaped
1.
குலவு குரல் ஏனல் மாந்தி – நற் 386/3
வளைந்த கதிரையுடைய தினையை நிரம்ப உண்டு
2.
நாரை
உளர ஒழிந்த தூவி குலவு மணல்
போர்வின் பெறூஉம் – ஐங் 153/2-4
நாரை
தன் சிறகைக் கோதியதால் உதிர்ந்த இறகுகள் குவிந்திருந்த மணல்
குவியலில் எடுத்துக்கொள்ளப்படும்

குல்லை

குல்லை – (பெ) 1. நாய்த்துளசி, White-Basil, Ocimum album
2. கஞ்சங்குல்லை, கஞ்சாங்கோரை, கஞ்சாச்செடி, marijuana
1.
குல்லை குளவி கூதளம் குவளை – நற் 376/5
துளசி, காட்டு மல்லிகை, கூதாளி, குவளை
2.
குல்லை கரியவும் கோடு எரி நைப்பவும் – பொரு 234
கஞ்சங் குல்லை தீயவும், மரங்களின் கொம்புகளை நெருப்புத் தின்னவும்,

குளகு

குளகு – (பெ) இலைதழை, foliage
வீழ் பிடி கெடுத்த வெண்கோட்டு யானை
உண் குளகு மறுத்த உயக்கத்து அன்ன – அகம் 392/2,3
விரும்புகின்ற பெண்யானையை இழந்த வெண்மையான கொம்புகளையுடையயானை
உண்ணும் தழையினை உண்ணாது நீக்கிய வாட்டத்தைப் போன்ற

குளம்பு

குளம்பு – (பெ) குதிரை, மாடு, மான் போன்ற சில விலங்குகளின் பாதம், hoof of an animal
குடகடல்
வெண் தலை புணரி நின் மான் குளம்பு அலைப்ப – புறம் 31/13,14
மேல் கடலின்
வெண்மையான தலையைஉடைய அலைகள் உனது குதிரையின் குளம்புகளை அலைக்க

குளவி

குளவி – (பெ) மலை மல்லிகை, mountain jasmine, Millingtonia hortensis
பெரும் தண் கொல்லி சிறு பசும் குளவி
கடி பதம் கமழும் கூந்தல் – நற் 346/9,10
மிகவும் குளிர்ச்சியுடைய கொல்லிமலையிலுள்ள சிறிய பசிய மலைமல்லிகையின்
மிகுதியான மணம் கமழும் கூந்தலையுடைய

குளிறு

குளிறு – (பெ) நண்டு, crab
ஆற்று அயல் எழுந்த வெண் கோட்டு அதவத்து
எழு குளிறு மிதித்த ஒரு பழம் போல – குறு 24/3,4
ஆற்றுப் பக்கத்தில் உயர்ந்து நிற்கும் வெள்ளைக் கிளைகளையுடைய அத்திமரத்தின்
ஏழு நண்டுகள் பற்றிக் குழைத்த ஒரு பழம் போல,

குழல்

குழல் – (பெ) 1. புல்லாங்குழல், flute
2. ஒரு வகை மீன், glossy blue milk-fish, Chanos salmoneus
3. உள்ளீடற்ற சற்று நீண்ட ஒரு பொருள், tube shaped object
4. கூந்தல், woman’s hair
1.
ஆம்பல் அம் தீம் குழல் தெள் விளி பயிற்ற – குறி 222
ஆம்பல் எனும் பண்ணினையுடைய இனிய குழலில் தெளிந்த இசையைப் பலமுறை எழுப்ப,
2.
வறல் குழல் சூட்டின் வயின்_வயின் பெறுகுவிர் – சிறு 163
உலர்ந்த குழல்மீனைச் சுட்டதனோடு இடங்கள்தோறும் பெறுவீர்:
3.
துணர் காய் கொன்றை குழல் பழம் ஊழ்த்தன – ஐங் 458/1
கொத்துக்கொத்தான காய்களைக் கொண்ட கொன்றையின் குழல் போன்ற பழங்கள் பழுத்து முதிர்ந்தன
4.
வெண் துகில் சூழ்ப்ப குழல் முறுக்குநர் – பரி 10/80
வெண்துகிலைச் சுற்றித் தம் கூந்தலை முறுக்கிப்பிழிந்தனர் சிலர்

குழிசி

குழிசி – (பெ) பானை, pot, cooking vessel
மான் தடி புழுக்கிய புலவு நாறு குழிசி – புறம் 168/9
மானின் இறைச்சித்துண்டுகள் வேகவைக்கப்பட்ட புலால் நாறும் பானையின்

குழுமு

குழுமு – (வி) 1. ஒன்றாகச் சேர், கூடு, collector be in large numbers
2. உறுமு, முழங்கு, roar
1.
குழுமு நிலை போரின் முழு_முதல் தொலைச்சி – பெரும் 237
ஒன்றாகச் சேர்த்து வைக்கப்பட்ட தன்மையையுடைய (நெற்)போர்களின் பெரிய அடியைப் பிரித்து விரித்து,
2.
செம் கண் இரும் புலி குழுமும் சாரல் – அகம் 92/4
சிவந்த கண்ணையுடைய பெரிய புலி முழங்கும் மலைச்சரிவில்

குவளை

குவளை – (பெ) 1. கருங்குவளை, Blue nelumbo
2. செங்கழுநீர், Purple Indian water lily
1.
குவளை அன்ன ஏந்து எழில் மழை கண் – நற் 6/3
கருங்குவளை மலரைப் போன்ற ஏந்திய அழகுள்ள குளிர்ந்த கண்களையுடைவளும்
2.
அரக்கு இதழ் குவளையொடு நீலம் நீடி – பெரும் 293
சாதிலிங்கம் (போன்ற)இதழையுடைய குவளைப் பூவோடே நீலப்பூவும் வளர்ந்து

குவவு

குவவு – (பெ) 1. குவியல், heap
2. திரட்சி, roundness, fullness
3. கூட்டம், திரள், group, assemblage
1.
குன்றத்து அன்ன குவவு மணல் நீந்தி – நற் 207/5
மலை போன்ற குவியலான மணல் மேடுகளைக் கடந்து
2.
அம் தளிர் குவவு மொய்ம்பு அலைப்ப சாந்து அருந்தி – குறி 120
அழகிய தளிர்கள் உருண்டு திரண்ட தோளில் (வீழ்ந்து)அலைக்க, சந்தனத்தை உள்ளடக்கி
3
குவவு குரை இருக்கை இனிது கண்டிகுமே – பதி 84/20
திரண்ட ஆரவாரத்தையுடைய உன் படைகளின் இருப்பை இனிதே கண்டுமகிழ்ந்தோம்

குவை

குவை – 1. (வி) குவி, make a heap
2 (பெ) 1. தொகுதி, திரள், collection, accumulation
2. குவியல், heap
3. திரட்சி, roundness
1.
வேனில் பாதிரி விரி மலர் குவைஇ
தொடலை தைஇய மடவரல் மகளே – ஐங் 361/2,3
வேனில் காலத்துப் பாதிரியின் விரிந்த மலர்களைக் கூட்டிக் குவித்து,
மாலையாகத் தைக்கும் கபடமற்ற பெண்ணே!
2.1.
குவளை நாறும் குவை இரும் கூந்தல் – குறு 300/1
குவளை மலரின் மணம் கமழும் கொத்தான இருண்ட கூந்தல்;
2.2.
தன் மலை பிறந்த தா இல் நன் பொன்
பல் மணி குவையொடும் விரைஇ கொண்ம் என – புறம் 152/28,29
தன்னுடைய மலையில் பிறந்த குற்றம் அற்ற நல்ல பொன்னைப்
பல மணிக் குவியலுடனே கலந்து கொணருங்கள் என்று
2.3.
குவை இமில் விடைய வேற்று ஆ ஒய்யும் – அகம் 113/14
திரட்சியையுடைய இமிலை உடைய காளைகளுடன் கூடிய பகைப்புலத்துப் பசுக்களைக் கவர்ந்துசெல்லும்

கூகை

கூகை – (பெ) ஆந்தையில் ஒரு வகை, male of barn owl (tyto alba)
1.
இது குடுமியை உடையது
குடுமி கூகை குராலொடு முரல – மது 170
2.
வளைந்த வாயை உடையது. பகலிலும் ஒலியெழுப்பும்.
வளை வாய் கூகை நன் பகல் குழறவும் – பட் 268
3.
ஊரின் வெளிப்புறத்தில் உள்ள மரப்பொந்துகளில் வசிக்கும். ஓயாமல் ஒலியெழுப்பிக்கொண்டிருக்கும்.
எம் ஊர் வாயில் உண்துறை தடைஇய
கடவுள் முது மரத்து உடன் உறை பழகிய
தேயா வளை வாய் தெண் கண் கூர் உகிர்
வாய் பறை அசாஅம் வலி முந்து கூகை – நற் 83/4,5
எமது ஊரின் நுழைவாயிலில் உள்ள ஊருணியின் துறையில், பருத்த
தெய்வம் வீற்றிருக்கும் முதிய மரத்தில் இருப்பதனால் இவ்வூரில் என்னுடன் வசித்துப் பழகிய
தேயாத வளைந்த அலகினையும், தெளிந்த கண்பார்வையையும், கூர்மையான நகங்களையும் கொண்ட,
ஓயாது ஒலிக்கும் வாயினால் பிறரை வருத்தும், வலிமை மிகுந்த கூகையே!
4.
இரவு நேரத்தில் ஊருக்குள் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு வரும்.
மணல் மலி மூதூர் அகல் நெடும் தெருவில்
கூகை சேவல் குராலோடு ஏறி
ஆர் இரும் சதுக்கத்து அஞ்சுவர குழறும்
அணங்கு கால்கிளரும் மயங்கு இருள் நடுநாள் – நற் 319/3-6
மணல் மிகுந்த பழமையான ஊரின் அகன்ற நெடிய தெருவில்
ஆண்கூகையானது தன் பெடையுடன் சென்று
நடமாட்டமில்லாத பெரிய நாற்சந்தியில் அச்சம்தோன்றக் குழறுகின்ற ஒலியை எழுப்பும்
பேய்களும் நடமாடித்திரியும் தடுமாறவைக்கும் இருளைக்கொண்ட நள்ளிரவில்
5.
ஊரை ஒட்டியுள்ள குன்றுகளில் வாழும்.
குன்ற கூகை குழறினும் முன்றில்
பலவின் இரும் சினை கலை பாய்ந்து உகளினும்
அஞ்சும்-மன் அளித்து என் நெஞ்சம் – குறு 153/1-3
குன்றிலுள்ள பேராந்தை குழறுவதுபோல் ஒலித்தாலும், முற்றத்திலுள்ள
பலாவின் பெரிய கிளையில் ஆண்குரங்கு தாவித் துள்ளினாலும்,
முன்பு அஞ்சும், இரங்கற்குரியது என் நெஞ்சு
6.
பாழிடங்களில் குடியிருக்கும்.
கூகை கோழி வாகை பறந்தலை – குறு 393/3
கூகைகளாகிய கோழிகளையுடைய வாகை என்னும் பாழ்வெளியில்
7.
கழன்றுவிழுவது போன்ற கண்களை உடையது.
கழல் கண் கூகை குழறு குரல் பாணி – பதி 22/36
பிதுங்கியது போன்ற கண்களையுடைய கூகைகள் குழறுகின்ற குரலின் தாளத்துக்கேற்ப
8.
பஞ்சுப்பிசிர் போன்ற மென்மையான தலையை உடையது.
துய் தலை கூகை – பதி 44/18
பஞ்சுபோன்ற கொண்டையையுடைய ஆண்கூகை
9.
இரவில் வீட்டு முற்றத்தில் திரியும் எலிகளைப் பிடித்துத் தின்னும்.
இது ஒலி எழுப்பினால் அழிவு உண்டாகும் என்ற நம்பிக்கை உண்டு.
இல் எலி வல்சி வல் வாய் கூகை
கழுது வழங்கு யாமத்து அழிதக குழறும் – அகம் 122/13,14
வீட்டிலுள்ள எலிகளை இரையாகக் கொண்ட வலிய வாயையினை உடைய கூகை
பேய்கள் திரியும் நள்ளிரவில் அழிவு உண்டாகக் குழறும்
10.
வயதான மரங்களிலுள்ள பொந்துகளுக்குள்ளிருந்து கூவும்.
முதுமரப் பொத்தில் கதுமென இயம்பும்
கூகை கோழி – புறம் 364/11,12
முதிய மரப்பொந்துகளிலிருந்து கதுமெனக் கூவும்
கூகைக் கோழி
11.
இதன் குரல் அழுவதுபோல் இருக்கும்.
அழு குரல் கூகையோடு ஆண்டலை விளிப்பவும் – பட் 258
12.
கூகை என்பது ஆணுக்குப் பெயர். இதனுடைய பேடை குரால் எனப்டும்.
கூகை சேவல் குராலோடு ஏறி
ஆர் இரும் சதுக்கத்து அஞ்சுவர குழறும் – நற் 319/4,5

ஆண்டலை, ஊமன், குடிஞை, குரால், கூகை என்பன தமிழ்நாட்டு ஆந்தை வகைகள்.

பார்க்க : ஆண்டலை ஊமன்
குடிஞை குரால்

கூட்டுணவு

கூட்டுணவு – (பெ) கூட்டாஞ்சோறு, ஊரில் பலர் கூடி ஒன்றாகச் சமைத்து உண்பது
வலி கூட்டுணவின் வாள் குடி பிறந்த
புலி போத்து அன்ன புல் அணல் காளை – பெரும் 137,138
(தமது)வலிமையால் கொண்ட கூட்டாஞ்சோற்றை உடைய, வாள்(தொழிலே செய்யும்) குடியில் பிறந்த,
புலியின் போத்தை ஒத்

நெடும் செவி குறு முயல் போக்கு அற வளைஇ
கடுங்கண் கானவர் கடறு கூட்டுண்ணும்
அரும் சுரம் – பெரும் 115-117
நீண்ட காதுகளைக்கொண்ட சிறிய முயல்களைப் (வேறு)போக்கிடம் இல்லாதவாறு வளைத்து(ப் பிடித்து), 115
கடுமையான கானவர் (அக்)காட்டில் (கூட்டாஞ்சோற்றைக்)கூடியுண்ணும்
அரிய வழி

கூதளம்

கூதளம் – (பெ) ஒரு வகைக் கொடி, கூதாளி, Convolvulus, Ipomea
1.
இது கொடி வகையைச் சேர்ந்தது
கூதள மூது இலை கொடி நிரை தூங்க – அகம் 255/14
கூதாளியின் முதிய இலைகளையுடைய கொடிகளின் கூட்டத்தில் கிடந்து
2.
குளிர்காலத்தில் மலரும்.
கூதிர் கூதளத்து அலரி நாறும் – நற் 244/2
கூதிர்காலத்துக் கூதளத்தின் பூக்களுடைய மணத்தைக் கொண்ட,
3.
ஆண்கள் மாலையாகக் கட்டித் தலையில் சூடிக்கொள்வர்.
குளவியொடு
கூதளம் ததைந்த கண்ணியன் – நற் 119/8,9
காட்டு மல்லிகையுடனே
கூதளத்து மலரையும் நெருக்கமாய்ச் சேர்த்துக்கட்டிய தலைமாலையை உடையவன்
4.
மலையகத்து மக்கள் காட்டு மல்லிகையோடு இதனையும் வீட்டில் வளர்ப்பர்
அருவி ஆர்க்கும் கழை பயில் நனம் தலை
————-
கூதளம் கவினிய குளவி முன்றில் – புறம் 168/1-12
அருவி ஒலிக்கும் மூங்கில் நிறைந்த அகன்ற இடத்தில்
————-
கூதாளி கவின் பெற்ற மலை மல்லிகை நாறும் முற்றத்தில்
5.
இதில் வெண்கூதாளம் என்று ஒரு வகையும் உண்டு.
பைம் புதல் நளி சினை குருகு இருந்தன்ன
வண் பிணி அவிழ்ந்த வெண் கூதாளத்து
அலங்கு குலை அலரி தீண்டி தாது உக – அகம் 178/8-10
பசிய புதரிலுள்ள செறிந்த கிளைகளில் வெள்ளையான நாரை இருந்ததைப் போல
வளம் பொருந்திய முகை விரிந்த வெள்ளைக் கூதாளத்தின்

கூனல்

கூனல் – (பெ) வளைவாக இருத்தல், the state of being bent
கூனல் எண்கின் குறு நடை தொழுதி – அகம் 112/1
வளைவான முதுகினையும் குறுகக்குறுக நடக்கும் நடையினையும் உடைய கரடிக்கூட்டம்

கூனி

கூனி – (பெ) வளைவாக இருப்பது, that which is bent
குலை முதிர் வாழை கூனி வெண் பழம் – பெரும் 359
குலையில் முதிர்ந்த வாழையின் வளைந்த வெளுத்த பழத்தையும்,

கூன்

கூன் – (பெ) வளைவு, bend, curve
வேனில் பாதிரி கூன் மலர் அன்ன – குறு 147/1
வேனில்காலத்துப் பாதிரியின் வளைந்த மலரைப் போன்று

கூரல்

கூரல் – (பெ) கூம்பிய நிலை, folded state (as petals of a flower)
மாரி கொக்கின் கூரல் அன்ன
குண்டு நீர் ஆம்பல் தண் துறை ஊரன் – நற் 100/2,3
கார்காலத்துக் கொக்கின் கூம்பின நிலையைப் போன்று
ஆழமான நீரில் முளைத்த ஆம்பல் பூவையுடைய குளிர்ந்த துறையையுடைய ஊரன்

கூற்றம்

கூற்றம் – (பெ) உயிரை உடலினின்றும் எடுப்பவர், யமன், one who separates soul from body. Yama
கூற்றத்து அன்ன கொலை வேல் மறவர் – குறு 283/5
கூற்றுவனைப் போன்ற கொலைத்தொழிலையுடைய வேலைக் கொண்ட மறவர்

கூற்று

கூற்று – (பெ) கூற்றம், பார்க்க : கூற்றம்
கூற்று அடூஉ நின்ற யாக்கை போல – பதி 13/11
கூற்றுவனால் கொள்ளப்பட்டு நிற்கும் உடம்பினைப் போல

கூலம்

கூலம் – (பெ) நெல், புல், வரகு தினை, சாமை, இறுங்கு, துவரை, இராகி, எள்ளு கொள்ளு,
பயறு, உழுந்து, அவரை, கடலை, துவரை, மொச்சை; நெல் முதலிய
பதினெட்டு வகைப் பண்டம், grains of 18 kinds
பிரசம் தூங்க பெரும் பழம் துணர
வரை வெள் அருவி மாலையின் இழிதர
கூலம் எல்லாம் புலம் புக – நற் 93/1-3
தேனடைகள் தொங்க, பெரிய பழங்கள் குலைகுலையாய்ப் பழுக்க,
மலையிலுள்ள வெண்மையான அருவி மாலை போல இறங்கிவர,
பயிர்மணிகள் எல்லாம் நிலங்களில் விதைக்கப்பெற

கூளி

கூளி – (பெ) பேய், demon
கூளி சுற்றம் குழீஇ இருந்து ஆங்கு – அகம் 233/10
பேய்ச் சுற்றங்கள் கூடியிருந்தாற் போல

கூளியர்

கூளியர் – (பெ) 1. ஏவல்செய்வோர், attendants
2. வேட்டுவர், hunters
3. வழிப்பறி செய்வோர், highway robbers
1.
வேறு பல் உருவின் குறும் பல் கூளியர்
சாறு அயர் களத்து வீறு பெற தோன்றி – திரு 282,283
வேறு வேறாகிய பல வடிவினையுடைய குறிய பலராகிய பணியாளர்,
விழாவெடுத்த களத்தின் பொலிவுபெறத் தோன்றி,
2.
காய் சின முன்பின் கடுங்கண் கூளியர்
ஊர் சுடு விளக்கின் தந்த ஆயமும் – மது 691,692
எரிகின்ற சினத்தையுடைத்தாகிய வலியினையும் தறுகண்மையையும் உடைய வேட்டுவர்
(பகைவரின்)ஊரைச் சுடுகின்ற விளக்கில் கொண்டுவந்த பசுத்திரளும்,
3.
நின்னது தா என நிலை தளர
மரம் பிறங்கிய நளிச் சிலம்பில்
குரங்கு அன்ன புன் குறும் கூளியர்
பரந்து அலைக்கும் பகை ஒன்று என்கோ – புறம் 136/11-14
உன் கைப்பொருளைத் தா என்று சொல்லி எம் நிலைகள் தளரும்படி
மரங்கள் செறிந்த குளிர்ந்த மலையில்
குரங்கு போல் பறித்துக்கொள்ளும் இயல்பையுடைய புல்லிய குறிய வழிப்பறிக் கள்வர்கள்
பரந்து வந்து அலைக்கும் பகையை ஒருபகை என்பேனோ

கூழை

கூழை – (பெ) 1. மகளிர் கூந்தல், Woman’s hair;
2. குட்டையானது, that which is short
3. படையின் பின் வரிசை, rear of an army
1.
வடி கொள் கூழை ஆயமோடு ஆடலின் – நற் 23/2
வாரி முடித்த கூந்தலையுடையவள் தோழியரோடு ஆடியதால்
2.
உச்சி கட்டிய கூழை ஆவின் – நற் 109/8
உச்சிப்பக்கமாகக் கயிற்றால் கட்டப்பட்ட குள்ளப்பசுவின்
3.
யாவிர் ஆயினும் கூழை தார் கொண்டு
யாம் பொருதும் என்றல் ஓம்புமின் – புறம் 88/1,2
யாராயிருந்தாலும், பின்படையையும், முன்படையையும் கொண்டு
யாம் அவனோடு போரிடுவோம் என்று சொல்லவேண்டாம்.

கூவல்

கூவல் – (பெ) கிணறு, குழி, well, pit
வெயில் வெய்துற்ற பரல் அவல் ஒதுக்கில்
கணிச்சியில் குழித்த கூவல் நண்ணி – நற் 240/6,7
வெயிலால் வெப்பமுற்ற பரல் மிக்க பள்ளத்தின் ஒருபக்கத்தில்
குந்தாலியால் குழிவு ஏற்படுத்திய கிணற்றை அடைந்து

கூவியர்

கூவியர் – (பெ) அப்ப வாணிகர், pancake selles
பாசிலை குருகின் புன் புற வரி பூ
கார் அகல் கூவியர் பாகொடு பிடித்த
இழை சூழ் வட்டம் பால் கலந்தவை போல் – பெரும் 376-378
பசிய இலையினையும் உடைய குருக்கத்தியின் புற்கென்ற புறத்தினையும் வரிகளையும் உடைய பூக்கள்,
கரிய வட்டிலில் அப்ப வாணிகர் பாகுடன் பிடித்த
நூல் போலச் சூழ்ந்துகிடக்கின்ற அப்பம் பாலிலே கிடந்தவை போல்,

கூவிரம்

கூவிரம் – (பெ) ஒரு மலை மரம், பூ, Crataeva religiosa
எரி புரை எறுழம் சுள்ளி கூவிரம் – குறி 66

கூவிளம்

கூவிளம் – (பெ) வில்வம், bael, Aegle marmelos
கூவிளம் கண்ணி கொடும் பூண் எழினியும் – புறம் 158/9

கெடிறு

கெடிறு – (பெ) ஒரு மீன், கெளிறு, Silurus vittles
பெரும் கடற்கரையது சிறு_வெண்_காக்கை
இரும் கழி இன கெடிறு ஆரும் துறைவன் – ஐங் 167/1,2
பெரிய கடற்கரையில் உள்ள சிறிய வெண்ணிற நீர்க் காகம்
கரிய கழியில் கூட்டமான கெடிற்றுமீன்களை நிறைய உண்ணும் துறையைச் சேர்ந்தவன்

கெண்டு

கெண்டு – (வி) 1. கிளறு, தோண்டு, dig
2. அறுத்துத் தின்னு, cut and eat
1.
வாழை அம் சிலம்பில் கேழல் கெண்டிய
நில வரை நிவந்த பல உறு திரு மணி – நற் 399/4,5
வாழை மரங்களைக் கொண்ட மலைச் சரிவில், பன்றிகள் கிளறிய
நிலத்தில் மேலே கிடக்கும் பலவாகிய அழகிய மணிகளின்
2.
இல் அடு கள் இன் தோப்பி பருகி
மல்லல் மன்றத்து மத விடை கெண்டி
மடி வாய் தண்ணுமை நடுவண் சிலைப்ப – பெரும் 142-144
(தமது)இல்லில் சமைத்த கள்ளுக்களில் இனிதாகிய நெல்லால் செய்த கள்ளை உண்டு,
வளப்பத்தினையுடைய மன்றில் வலியையுடைய ஏற்றை அறுத்துத் தின்று,
(தோலை)மடித்துப் போர்த்த வாயையுடைய மத்தளம் (தங்களுக்கு)நடுவில் முழங்க

கெண்டை

கெண்டை – (பெ) ஒரு மீன், Barbus
அரில் பவர் பிரம்பின் வரி புற விளை கனி
குண்டு நீர் இலஞ்சி கெண்டை கதூஉம் – குறு 91/1,2
ஒன்றோடொன்று பின்னிக்கொண்டிருக்கிற கொடியாகிய பிரம்பின், புறத்தில் வரிகொண்ட விளைந்த கனியை,
ஆழமான நீரையுடைய குளத்தில் வாழும் கெண்டை கௌவும்

கெளிறு

கெளிறு – (பெ) ஒரு மீன், கெளுத்தி, கெடிறு, பார்க்க: கெடிறு
சினை கெளிற்று ஆர்கையை அவர் ஊர் பெயர்தி – நற் 70/5
சினைப்பட்ட கெளிற்றுமீனைத் தின்றுவிட்டு அவர் ஊருக்குச் செல்கின்றாய்!

கெழீஇ

கெழீஇ – (வி.எ) கெழுவி என்பதன் மரூஉ. distorted form of கெழுவி
– கெழுவு – 1. நிறை, மிகு, be abundant, full
2. நட்புக்கொள், get friendly
3. சேர், பொருந்து, தழுவு, unite, join, embrace
1.
பதி எழல் அறியா பழம் குடி கெழீஇ
வியல் இடம் பெறாஅ விழு பெரு நியமத்து – மலை 479,480
ஊரினின்றும் குடிபெயர்தலை அறியாத பழமையான குடிமக்கள் நிறைந்துவாழும்,
அகன்றதாயினும் இடம்போதாத சிறந்த பெரிய கடைத்தெருவினையுடைய,
2.
நும் இல் போல நில்லாது புக்கு
கிழவிர் போல கேளாது கெழீஇ
சேண் புலம்பு அகல இனிய கூறி – மலை 165-167
உம்முடைய (சொந்த)வீடு போல (வாசலில்)நிற்காமல் உள்ளே சென்று, 165
உரிமையுடையவர் போலக் கேட்காமலேயே (அவருடன்)நட்புரிமை கொள்ள,
தொலைவிலிருந்து வந்த உம் வருத்தம் நீங்க இனிய மொழிகள் கூறி,
3.
ஞாழலொடு கெழீஇய புன்னை அம் கொழு நிழல் – நற் 315/7
ஞாழலோடு சேர்ந்த புன்னையின் அழகிய கொழுவிய நிழலில்

பயிலியது கெழீஇய நட்பின் மயில் இயல்
செறி எயிற்று அரிவை கூந்தலின் – குறு 2/3,4
என்னோடு பயிலுதல் பொருந்திய நட்பையும், மயில் போன்ற மென்மையையும்
நெருங்கிய பற்களையும் உடைய அரிவையின் கூந்தலைப் போல

சேவலொடு கெழீஇய செம் கண் இரும் குயில் – நற் 118/3
சேவலுடன் இணைந்த சிவந்த கண்ணையுடைய கரிய குயில்

கெழு

கெழு – சாரியை, An euphonic increment, இடைச்சொல், A connective expletive in poetry

உரு கெழு செலவின் அஞ்சுவரு பேய்_மகள் – திரு 51
வளம் கெழு குடைச்சூல் அடங்கிய கொள்கை – பதி 90/48
ஆ கெழு கொங்கர் நாடு அகப்படுத்த – பதி 22/15
மணி கெழு நெடு வரை அணி பெற நிவந்த – நற் 244/9
வேல் கெழு தட கை சால் பெரும் செல்வ – திரு 265
சீர் கெழு வெண் முத்தம் அணிபவர்க்கு அல்லதை – கலி 9/15
பீடு கெழு திருவின் பெரும் பெயர் நோன் தாள் – பொரு 53
குன்று கெழு நாடன் எம் விழைதரு பெரு விறல் – குறி 199
பயம் கெழு வைப்பின் பல் வேல் எவ்வி – அகம் 126/13
கலி கெழு பாக்கம் துயில் மடிந்தன்றே – நற் 303/2
துறை கெழு மாந்தை அன்ன இவள் நலம் – நற் 35/7
பூ கெழு குன்றம் நோக்கி நின்று – ஐங் 210/3
மறம் கெழு சோழர் உறந்தை அவையத்து – நற் 400/7
நாடு கெழு தாயத்து நனம் தலை அருப்பத்து – பதி 45/9
தமிழ் கெழு மூவர் காக்கும் – அகம் 31/14

கெழுதகைமை

கெழுதகைமை – (பெ) நட்புரிமை, intimacy due to friendship
யாம் எம் காமம் தாங்கவும் தாம் தம்
கெழுதகைமையின் அழுதன தோழி – குறு 241/1,2
நாம் நமக்குற்ற காமநோயைத் தாங்கிக்கொண்டிருக்கவும், தாம் தமது
நட்புரிமையினால் அழுதன தோழி

கெழுமு

கெழுமு – (வி) நிறைந்திரு, be full, plenteous, abundant
பெரும் பல் யாணர் கூலம் கெழும
நன் பல் ஊழி நடுவு நின்று ஒழுக – பதி 89/7,8
பெரிய அளவில் பலவகையான புதுப்புது தானியங்கள் நிறைந்திருக்க,
நல்ல பலவான ஊழிக்காலமாய் வளங்கள் நிறைவும், குறைவும் இன்றி நிலைபெற்றிருக்க

கெழுவு

கெழுவு – 1. (வி) நிறைந்திரு, be full
2. (பெ) பற்றுக்கொள்ளுதல், அன்புடைமை, state of being attached
1.
மலி நீர் அதர் பல கெழுவு தாழ் வரை – பரி 6/6
மிகுந்த நீர் ஓடுவதற்குரிய வழிகள் பற்பல நிறைந்த மலைச் சாரலில்,
2.
கேளிர் மணலின் கெழுவும் இதுவோ – பரி 8/63
எம் உறவினைப் போல் விளங்கும் வையை மணலிடத்தில் உன் அன்புடைமை இதுதானோ?

கேணி

கேணி – (பெ) 1. கிணறு, well
2. சிறிய குளம், small tank
1.
வேட்ட சீறூர் அகன் கண் கேணி
பய நிரைக்கு எடுத்த மணி நீர் பத்தர் – நற் 92/5,6
வேட்டுவர்களின் சிறிய ஊரில் உள்ள அகன்ற வாயையுடைய கிணற்றிலிருந்து
பயன்தரும் ஆநிரைகளுக்காக எடுத்து வைத்த தெளிந்த நீருள்ள தொட்டியில்
2.
ஊர் உண் கேணி உண்துறை தொக்க
பாசி அற்றே பசலை – குறு 399/1,2
ஊரினர் உண்ணும் சிறிய குளத்தில் உண்ணும் துறையில் கூடிய
பாசியைப் போன்றது பசலைநோய்

கேண்மை

கேண்மை – (பெ) நட்பு, உறவு, friendship, relationship
சாந்தில் தொடுத்த தீம் தேன் போல
புரைய மன்ற புரையோர் கேண்மை – நற் 1/4,5
சந்தனமரத்தில் சேர்த்துக்கட்டிய இனிய தேன்கூடு போல
மேன்மையானது சிறந்தவர்களின் நட்பு;

தண் துறை ஊரன் கேண்மை
அம்பல் ஆகற்க என வேட்டேமே – ஐங் 9/5,6
குளிர்ந்த துறையையுடைய ஊரினைச் சேர்ந்த தலைவனின் உறவு
பிறர் அறிவதால் பழிச்சொல் எழுப்பாதிருக்கட்டும் என்று வேண்டினோம்

கேளிர்

கேளிர் – (பெ) சுற்றத்தார், relatives
யாதும் ஊரே யாவரும் கேளிர் – புறம் 192/1
எல்லா ஊரும் நமது ஊரே, எல்லாரும் நமது உறவினரே.

கேள்வன்

கேள்வன் – (பெ) 1. காதலன், தோழன், lover, comrade
2. கணவன், husband
1.
ஈரம் இல் கேள்வன் உறீஇய காம தீ
நீருள் புகினும் சுடும் – கலி 144/61,62
இரக்கமற்ற காதலன் மூட்டிய காமத்தீ
நான் நீருக்குள் புகுந்துகொண்டாலும் நெருப்பாய்ச் சுடும்;
2.
நுனை இலங்கு எஃகு என சிவந்த நோக்கமொடு
துணை அணை கேள்வனை துனிப்பவள் நிலையும் – பரி 21/21,22
நுனி ஒளிரும் வேலினைப்போன்ற சிவந்த பார்வையோடே,
தனக்குத் துணையாக அணைத்துக்கொண்டிருக்கும் தன் கணவனிடம் ஊடல்கொண்டவளின் நிலையும்

கேள்வி

கேள்வி – (பெ) 1. கேட்டறிந்து பெற்ற கல்வி, learning through listening
2. வேதம், scriptures
3. இசைச்சுருதி, pitch of a tune
4. யாழ், a string instrument
5. கேட்டல், hearing
1.
செறுத்த செய்யுள் செய் செந்நாவின்
வெறுத்த கேள்வி விளங்கு புகழ் கபிலன் – புறம் 53/11,12
பல பொருளையும் அடக்கிய செய்யுளைச் செய்யும் செவ்விய நாவினையும்
மிக்க கேள்வி அறிவினையும் விளங்கிய புகழையுமுடைய கபிலன்
2.
ஆறெழுத்து அடக்கிய அரு மறை கேள்வி
நா இயல் மருங்கில் நவில பாடி – திரு 186,187
ஆறெழுத்தினைத் தன்னிடத்தே அடக்கி நிற்கின்ற கேட்டற்கரிய மந்திரத்தை
நா புடை பெயரும் அளவுக்கு பயில ஓதி,
3.
வேய்வை போகிய விரல் உளர் நரம்பின்
கேள்வி போகிய நீள் விசி தொடையல் – பொரு 17,18
(யாழ் நரம்பின் குற்றமாகிய)வேய்வை போக விரலால் அசைக்கும் நரம்பின்
இசை முற்றுப்பெறுமாறு இழுத்துக்கட்டிய விசித்தலையுடைய, தொடர்ச்சியையும்,
4.
தொடை அமை கேள்வி இட_வயின் தழீஇ – பெரும் 16
கட்டமைந்த யாழை இடத்தோளின் பக்கத்தே அணைத்து
5.
கேள்விக்கு இனியை கட்கு இன்னாயே – புறம் 167/4
கேட்பதற்கு இனியவன், கண்ணுக்கு இனிமை இல்லாதவன்.

கேழல்

கேழல் – (பெ) பன்றி, hog, boar
புலி கொல் பெண்_பால் பூ வரி குருளை
வளை வெண் மருப்பின் கேழல் புரக்கும் – ஐங் 265/1,2
புலியால் கொல்லப்பட்ட பெண் பன்றியின் அழகிய வரிகள் கொண்ட குட்டியை,
வளைந்த வெண்மையான கொம்பினையுடைய ஆண்பன்றி காத்துவளர்க்கும்

கேழ்

கேழ் – 1. கெழு, சாரியை, An euphonic increment, இடைச்சொல், A connective expletive in poetry
2. (வி) ஒப்பாக இரு, be similar to
3. (பெ) ஒளிர்கின்ற நிறம், bright colour
1.
துறை கேழ் ஊரன் கொடுமை நாணி – ஐங் 11/2
துறையைப் பொருந்திய ஊரினைச் சேர்ந்த தலைவன் செய்த கொடுமைக்கு நாணி
2
ஏழ் புழை ஐம் புழை யாழ் இசை கேழ்த்த அன்ன இனம்
வீழ் தும்பி – பரி 8/22,23
ஏழு துளை, ஐந்து துளை கொண்ட குழல்கள், யாழ் ஆகியவற்றின் இசைக்கு ஒப்பானதைப் போன்று, தம் இனத்தை
விரும்புகின்ற தும்பியும்
3
நறும் குறடு உரிஞ்சிய பூ கேழ் தேய்வை – திரு 33
நறிய சந்தனக்கட்டையை உரைத்த பொலிவுள்ள நிறத்தையுடைய குழம்பை

கை

கை – (வி) ஊட்டு, feed with the hand
கவை முள் கருவியின் வடமொழி பயிற்றி
கல்லா இளைஞர் கவளம் கைப்ப – முல் 35,36
வைத்த முள்ளையுடைய பரிக்கோலால் குத்தி, (யானைப் பேச்சான)வடசொற்களைப் பலகாலும் சொல்லி, 35
(வேறொரு தொழிலைக்)கல்லாத இளைஞர் கவளத்தை ஊட்டிவிட

கைக்கிளை

கைக்கிளை – (பெ) ஒருதலைக் காதல், one-sided love
இன்ன பண்பின் நின் தை_நீராடல்
மின் இழை நறு நுதல் மகள் மேம்பட்ட
கன்னிமை கனியா கைக்கிளை காம
இன் இயல் மாண் தேர்ச்சி இசை பரிபாடல் – பரி 11/134-137
இத்தகைய சிறப்புமிக்க உனது தைநீராடலானது,
மின்னுகின்ற அணிகலன்களையும் நறுமணம் கமழும் நெற்றியையும் உடைய பெண் ஒருத்தி, தன் பெண்தன்மை மேம்பட்ட
கன்னித்தன்மை முதிராத ஒருதலைக்காதலின் காமத்தின்
இனிய தன்மையினையும், சிறந்த தேர்ச்சியினையும் கொண்ட இசையோடு கூடிய பரிபாடலே!

கைதூவு

கைதூவு – 1. (வி) செயலிலிருந்து விடுபட்டு ஓய்ந்திரு, stop from work and take rest
2. (பெ) செயலிலிருந்து விடுபட்டு ஓய்ந்திருத்தல், stopping from work and take rest
1.
பரிசில் பரிசிலர்க்கு ஈய
உரவு வேல் காளையும் கைதூவானே – புறம் 334/11
பரிசில் பொருளைப்பரிசிலர்க்கு வழங்குதலில்
வலி பொருந்திய வேலையுடைய காளையாகிய அவனும் ஓய்ந்திருக்கமாட்டான்.
2.
நன் மனை நனி விருந்து அயரும்
கைதூவு இன்மையின் எய்தா மாறே – நற் 280/10
நல்ல வீட்டில் மிகுந்துவரும் விருந்தினரை உபசரிக்கும்
வேலையில் ஓய்வு இல்லாததினால் என் கண்ணில் அவன் படவில்லை.

கைதை

கைதை – (பெ) தாழை, fragrant screw pine, Pandanus odoratissimus
தோடு அமை தூவி தடம் தாள் நாரை
நலன் உணப்பட்ட நல்கூர் பேடை
கழி பெயர் மருங்கில் சிறு மீன் உண்ணாது
கைதை அம் படு சினை புலம்பொடு வதியும் – நற் 178/2-5
தாள்தாளாக அமைந்த சிறகுகளையும், நீண்ட கால்களையும் உடைய நாரையால்
இன்பம் நுகரப்பெற்றுக் கைவிடப்பட்ட துயரத்தையுடைய பேடை
கழியின் கரையில் தான் திரியும் பக்கங்களில் சிறிய மீனைப் பிடித்து உண்ணாமல்
தாழையின் அழகிய வளைந்த கிளையில் தனிமைத்துயருடன் தங்கியிருக்கும்

கைநிமிர்

கைநிமிர் – (வி) அடங்காமல் செல், defy, disregard
எழில் மருப்பு எழில் வேழம் இகுதரு கடாத்தால்
தொழில் மாறி தலை வைத்த தோட்டி கைநிமிர்ந்து ஆங்கு – கலி 138/1,2
அழகிய கொம்பினைக்கொண்ட அழகிய யானை, வடிகின்ற மதத்தால்
தான் செய்யவேண்டிய தொழில்களைத் தவிர்த்து, தன்னை அடக்குகின்ற அங்குசத்திற்கு அடங்காமற் போவது போல

கைநீவு

கைநீவு – (வி) கைந்நீவு, பார்க்க : கைந்நீவு
தேம் பாய் கடாத்தொடு காழ் கைநீவி
வேங்கை வென்ற பொறி கிளர் புகர் நுதல் – பதி 53/17,18
தேனீக்கள் மொய்க்கும் மதநீரோடு, பாகரின் குத்துக்கோலுக்கும் அடங்காமல்,
வேங்கை மரத்தைப் புலி என்று நினைத்து அழித்த வடுக்கள் அமைந்த புள்ளிகளையுடைய நெற்றியையுடையவாய்,

கைந்நிறுத்து

கைந்நிறுத்து – (வி) 1. நிலைநிறுத்து, establish
2. அடக்கிவை, conquer
1.
அஃதை போற்றி
காப்பு கைந்நிறுத்த பல் வேல் கோசர் – அகம் 113/4,5
அஃதை என்பானைப் பாதுகாத்து,
அவனைக் காவல்மிக்க இடத்தில் நிலைநிறுத்திய பல வேற்படையினைக் கொண்ட கோசர்
2.
கூறுவம்கொல்லோ, கூறலம்கொல் என
கரந்த காமம் கைந்நிறுக்க அல்லாது – அகம் 198/1,2
(இவளிடத்தில்) கூறுவோமோ,அல்லது கூறாமல்விடுவோமோ என்று
என்னுள் மறைத்துவைத்திருக்கும் காமத்தினை அடக்கிவைக்க முடியாமல்

கைந்நீவு

கைந்நீவு – (வி) அடங்காமல் செல், defy, disregard
கூம் கை மத_மா கொடும் தோட்டி கைந்நீவி
நீங்கும் பதத்தால் உருமு பெயர்த்தந்து – பரி 10/49,50
பிளிறுகின்ற கையுடன், மதக்களிப்பையுடைய அந்த களிறு, வளைவான அங்குசத்திற்கும் அடங்காமல்
அவ்விடத்தைவிட்டு நீங்குகின்ற பொழுதில் அதன் இடிபோன்ற முழக்கத்தை ஒழித்து,

கைப்படுத்து

கைப்படுத்து – (வி) கையும் மெய்யுமாகப் பிடி, catch hold of with solid proof
மை வளம் பூத்த மலர் ஏர் மழை கண்ணார்
கை வளம் பூத்த வடுவொடு காணாய் நீ
மொய் வளம் பூத்த முயக்கம் யாம் கைப்படுத்தேம் – பரி 18/16-18
நிரம்ப மை தீட்டப்பெற்ற, மலரின் அழகு பொருந்திய, குளிர்ச்சியையுடைய கண்களையுடைய மகளிரின்
கைநகங்கள் ஏற்படுத்திய வடுக்களைப் பார்க்கவில்லையா நீ?
அந்தப் பரத்தையரின் இறுகல் மிகுந்த முயக்கத்தை நாம் கையும்மெய்யுமாகப்பிடித்தோம்

கைமிகு

கைமிகு – (வி) பார்க்க : கைம்மிகு
நுந்தை வாய் மாய சூள் தேறி மயங்கு நோய் கைமிக
பூ எழில் உண்கண் பனி பரப்ப கண்படா – கலி 85/26,27
உன் தந்தையின் வாயிலிருந்து வரும் பொய்யான சூளுரைகளை நம்பி, காமநோய் மிகவே
பூப் போன்ற அழகிய மைதீட்டிய கண்கள் கண்ணீர் சொரிய, தூக்கம் இல்லாமல் இருக்கும்

கைம்மா

கைம்மா – (பெ) யானை, elephant
இலங்கு ஒளி மருப்பின் கைம்மா உளம்புநர் – கலி 23/1
பளிச்சென்று ஒளிவீசும் கொம்புகளையுடைய யானையை ஓசையெழுப்பி விரட்டுபவர்கள்

கைம்மிகு

கைம்மிகு – (வி) கட்டுமீறு, வரம்பு கட, exceed the limit
மெல்லம்புலம்பன் கண்டு நிலைசெல்லா
கரப்பவும்_கரப்பவும் கைம்மிக்கு
உரைத்த தோழி உண்கண் நீரே – நற் 263/8-10
மென்புலமான நெய்தல்நிலத்தலைவனைக் கண்டவுடன் நிலைகொள்ளாமல்,
மறைக்க மறைக்கக் கட்டுமீறிச்
சொல்லிவிட்டன தோழி! மையுண்டகண்களிலிருந்து வடிந்த கண்ணீர்.

கைம்முற்று

கைம்முற்று – (வி) முடிவுபெறு, தீர்ந்துபோ, இல்லாமலாகு, be exhausted
கைம்முற்றல நின் புகழே என்றும் – புறம் 53/8
முடிவுபெறாது உனது புகழ் எந்நாளும்

கைம்மை

கைம்மை – (பெ) கணவனை இழந்து வாழும் நிலை, widowhood
ஒண் நுதல் மகளிர் கைம்மை கூர – புறம் 25/12
ஒளிவிடும் நெற்றியை உடைய மகளிர் கணவனை இழந்து செய்யும் நோன்பிலே மிக

கையறவு

கையறவு – (பெ) வருந்திச் செயலற்று இருக்கும் நிலை, anguished helplessness
பையென
வடந்தை துவலை தூவ குடம்பை
பெடை புணர் அன்றில் உயங்கு குரல் அளைஇ
கங்குலும் கையறவு தந்தன்று – நற் 152/5-8
மெல்லென
வாடைக்காற்று மழைத்துளிகளைத் தூவ, கூட்டினில்
பெடையோடு உறவுகொள்ளும் அன்றில் பறவையின் மெலிவான குரலும் கலந்து
இரவுப்பொழுதும் செயலற்ற நிலையைத் தந்தது

கையறு

கையறு – (வி) செயலற்றுப்போ, remain helpless
பாரி மாய்ந்து என கலங்கி கையற்று
நீர் வார் கண்ணேம் தொழுது நின் பழிச்சி – புறம் 113/5,6
பாரி மன்னம் இறந்தானாக, கலங்கிச் செயலற்று
நீர் ஒழுகும் கண்ணையுடையவராய்த் தொழுது உன்னை வாழ்த்தி

கையாறு

கையாறு – (பெ) செயலற்ற நிலை, feeing helpless
மெய் கூர்ந்த பனியொடு மேல் நின்ற வாடையால்
கையாறு கடைக்கூட்ட கலக்கு_உறூஉம் பொழுது-மன் – கலி 31/6,7
மெய்யை நடுக்கும் பின்பனிக்காலப் பனியுடன், முன்பனிக்கால வாடையும் சேர்ந்து
நம்மைச் செயலிழக்கும் நிலைக்குத் தள்ள, நெஞ்சத்தைக் கலக்கும் இளவேனில் இது,

கையிக

கையிக – (வி) கட்டுப்பாட்டை மீறு, beyond control
எஃகு உடை எழில் நலத்து ஒருத்தியொடு நெருநை
வைகு புனல் அயர்ந்தனை என்ப அதுவே
பொய் புறம் பொதிந்து யாம் கரப்பவும் கையிகந்து
அலர் ஆகின்றால் – அகம் 116/9-12
நுண்ணிய நலத்தினையுடைய ஒரு பரத்தையோடு நேற்று
இடைவிடாமல் ஒழுகும் புனலில் விளையாட்டு அயர்ந்தாய் எனப் பலரும் கூறுவர், அதுதான்
பொய் என்று புறத்தே மூடி நாம் மறைக்கவும் எம் செயலினைக் கடந்து
அலராகிநின்றது.

கையுறை

கையுறை – (பெ) 1. காணிக்கைப் பொருள், offering
2. அன்பளிப்பு, நன்கொடை, present
1.
கள்ளும் கண்ணியும் கையுறை ஆக
நிலைக்கோட்டு வெள்ளை நால் செவி கிடாஅய்
நிலைத்துறை கடவுட்கு உளப்பட ஓச்சி – அகம் 156/13-15
கள்ளினையும் மாலையையும் காணிக்கைப் பொருளாகவும்,
நிமிர்ந்த கொம்பையுடைய வெள்ளாட்டின் தொங்குகின்ற செவியையுடைய கிடாயையும்
துறையில் நிலைபெற்ற கடவுளுக்கு சேர்த்துச் செலுத்தி,
2.
அடக்கம் இல் போழ்தின்_கண் தந்தை காமுற்ற
தொடக்கத்து தாய் உழை புக்காற்கு அவளும்
மருப்பு பூண் கையுறை ஆக அணிந்து
பெருமான் நகை முகம் காட்டு என்பாள் – கலி 82/10-13
ஓரிடத்தில் நில்லாது ஓடித்திரிந்த நேரத்தில், இவனது தந்தை விரும்பி ஆசைகொண்ட
தொடக்க காலத்துத் தாய் ஒருத்தியின் வீட்டிற்குச் சென்றான், அவளும்
கொம்புள்ள இடபம் பொறித்த மோதிரத்தை அன்பளிப்பாக அணிந்து
‘பெருமானே! சிறிது சிரித்துக் காட்டு’ என்றாள்.

கைவண்

கைவண் – (பெ.அ) வள்ளல்தன்மையுடைய, having munificence
இழை அணி நெடும் தேர் கைவண் செழியன் – அகம் 47/15
அணிகலன்கள் பூண்ட நீண்ட தேரினையும் வள்ளல்தன்மையும் கொண்ட செழியன்

கைவண்மை

கைவண்மை – (பெ) வள்ளல்தன்மை, வள்ளண்மை, munificence
வளனும் ஆண்மையும் கைவண்மையும்
மாந்தர் அளவு இறந்தன – பதி 73/15,16
செல்வமும், வீரமும், வள்ளல்தன்மையும்
மக்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகமாயின

கைவல்

கைவல் – (பெ.அ) தொழில்திறம் மிக்க, efficient in handiworks
கைவல் கம்மியன் கவின் பெற புனைந்த
செம் கேழ் வட்டம் – நெடு 57,58
கைவேலைப்பாட்டில் சிறந்த கைவினைக்கலைஞன் அழகுபெறச் செய்த
சிவந்த நிறத்தையுடைய விசிறி

கைவள்

கைவள் – (பெ.அ) வள்ளல்தன்மையுடைய, பார்க்க : கைவண்
கைவள் ஈகை பண்ணன் சிறுகுடி – புறம் 70/13
வள்ளண்மையுடன் கொடுத்தலையுடைய பண்ணன் என்பானின் சிறுகுடி என்னும் ஊர்

கொகுடி

கொகுடி – (பெ) ஒரு வகை மல்லிகை, a variety of jasmine creeper
1. அடுக்கு மல்லிகை, Jasmine Sambac
2. நட்சத்திர மல்லிகை, star jasmine, Jasminum Pubescens
3. மல்லிகை அல்லாத வேறு ஒரு வகை
ஞாழல் மௌவல் நறும் தண் கொகுடி – குறி 81

கொக்கு

கொக்கு – (பெ) 1. ஒரு பறவை, crane
2. மாமரம், mango tree
கொக்கின் உக்கு ஒழிந்த தீம் பழம் கொக்கின்
கூம்பு நிலை அன்ன முகைய ஆம்பல் – நற் 280/1,2
மாமரத்திலிருந்து உதிர்ந்து கீழே விழுந்த இனிய மாம்பழம், பறவையாகிய கொக்கின்
கூம்பிய நிலை போன்ற மொட்டுக்களையுடைய ஆம்பல் உள்ள

கொங்கர்

கொங்கர் – (பெ) கொங்குநாட்டைச் சேர்ந்தவர். A ruling tribe belonging to a place called kongu
கொங்கு நாடு என்பது சேரநாட்டை ஒட்டிய பகுதி. இந்தக் கொங்கர்கள் யாருக்கும் அடங்காமல்
தனித்து ஆளும் பண்புள்ளவர்கள். எனவே முடியுடை மூவேந்தரும் கொங்கரை அடக்கியாளப்
படைகளை அனுப்பி இவர்களைப் பணியவைத்திருக்கின்றனர்.
பழையன் என்பவனை அனுப்பிச்சோழர்கள் இவர்களைப் பணியவைத்திருக்கின்றனர்.
கொற்ற சோழர் கொங்கர் பணீஇயர்
வெண் கோட்டு யானை போஒர் கிழவோன்
பழையன் வேல் வாய்த்து அன்ன – நற் 10/6-8
என்ற அடிகள் சோழர் இவர்களை வெற்றிகொண்டதை விளக்கும்.

நார் அரி நறவின் கொங்கர் கோவே – பதி 88/19
என்று சேரமன்னர்கள் பாராட்டப்படுவதால், இவர்களைச் சேரர்கள் வென்ற செய்தி தெரியவரும்.

வாடா பூவின் கொங்கர் ஓட்டி
நாடு பல தந்த பசும் பூண் பாண்டியன் – அகம் 253/4,5
என்று பாண்டியர்கள் பாராட்டப்படுவதால், பாண்டியர்கள் இவர்களை வென்ற செய்தி தெரியவரும்.

வாகை என்ற இடத்தில் இவர்கள் பாண்டியன் தளபதியான அதிகன் என்பவனின் படையினை முறியடித்து
வெற்றிபெற்றிருக்கிறார்கள் என்ற செய்தியும் கிடைக்கிறது.
கூகை கோழி வாகை பறந்தலை
பசும் பூண் பாண்டியன் வினை வல் அதிகன்
களிறொடு பட்ட ஞான்றை
ஒளிறு வாள் கொங்கர் ஆர்ப்பினும் பெரிதே.

கொங்கரை மூவேந்தர்கள் மட்டுமன்றி ஆய் அண்டிரன் என்ற வேளிர்குல சிற்றரசனும்
வென்றிருக்கிறான்.
அண்ணல் யானை எண்ணின் கொங்கர்
குட கடல் ஓட்டிய ஞான்றை
தலைப்பெயர்ந்திட்ட வேலினும் பலவே – புறம் 130/5-7

இந்தக் கொங்குநாடு மேலைக் கடல்வரை விரிந்திருந்தது என்பதுவும் மேற்கண்ட அடிகளால்
பெறப்படும்.

ஆ கெழு கொங்கர் நாடு அகப்படுத்த – பதி 22/15
சேண் பரல் முரம்பின் ஈர்ம் படை கொங்கர்
ஆ பரந்து அன்ன செலவின் பல் – பதி 77/10,11
வன்_புலம் துமிய போகி கொங்கர்
படு மணி ஆயம் நீர்க்கு நிமிர்ந்து செல்லும்
சேதா எடுத்த செந்நிலக் குரூஉ துகள் – அகம் 79/5-7
என்ற அடிகளால் இவர்களின் நாடு பசுக்கள் நிறைந்தது என்பது பெறப்படும். (ஆ = பசு)

சர்க்கரைக்கட்டி கலந்து பயறுகளை வேகவைத்த உணவினை இவர்கள் உட்கொண்டனர்.
கட்டி புழுக்கின் கொங்கர் கோவே – பதி 90/25 (கட்டி= சர்க்கரைக்கட்டி, புழுக்கு = பயறுகளை வேகவைத்தது)

இவர்கள் மணியினை இடையில் கட்டிக்கொண்டு தெருக்களில் ஆடிக்கொண்டு உள்ளி என்ற
விழாவினைக் கொண்டாடுவர்.
கொங்கர்
மணி அரை யாத்து மறுகின் ஆடும்
உள்ளி விழவின் அன்ன – அகம் 368/16-18

கொங்கு

கொங்கு – (பெ) 1. பூந்தாது, pollen of flowers
2. தேன், honey
3. கொங்கு நாடு, A region called kongu
1.
கோவத்து அன்ன கொங்கு சேர்பு உறைத்தலின் – சிறு 71
இந்திர கோபத்தை ஒத்த தாதுக்கள் சேர்ந்து உதிர்தலால்
2.
கொங்கு கவர் நீல செம் கண் சேவல் – சிறு 184
தேனை நுகர்கின்ற நீல நிறத்தினையும் சிவந்த கண்ணையும் உடைய வண்டொழுங்கு
3.
கொங்கு புறம்பெற்ற கொற்ற வேந்தே – புறம் 373/8
கொங்குநாட்டை வென்ற வெற்றியையுடைய வேந்தனே.

கொடிச்சி

கொடிச்சி – (பெ) குறிஞ்சிநிலப்பெண், Woman of the hilly tract
சுடு புன மருங்கில் கலித்த ஏனல்
படு கிளி கடியும் கொடிச்சி கை குளிரே – குறு 291/1,2
மரங்களை வெட்டிச் சுட்டெரித்துச் சீர்ப்படுத்திய புனத்தில் தழைத்த தினையில்
வந்து வீழும் கிளிகளை ஓட்டும் தலைவியின் கையிலுள்ள குளிர் என்னும் கருவி

கொடிஞ்சி

கொடிஞ்சி – (பெ) தேரில் அமர்வோருக்குக் கைப்பிடியாகப் பயன்படும் தாமரைப்பூ வடிவுள்ள
தேரின் அலங்கார உறுப்பு
Ornamental staff in the form of a lotus, fixed in front of the seat
in a chariot and held by the hand as support
யான் பெயர்க என்ன நோக்கி தான் தன்
நெடும் தேர் கொடிஞ்சி பற்றி
நின்றோன் போலும் இன்றும் என் கட்கே – அகம் 110/23-25
நான் செல்க என்று சொல்லவும், (போகாமல்) என்னை நோக்கியவனாய், அவன் தனது
நீண்ட தேரின் கொடிஞ்சியினைப் பிடித்துக்கொண்டு
நின்றான், இன்றும் என் கண் முன்னே நிற்பது போல் இருக்கிறது.

கொடிறு

கொடிறு – (பெ) 1. கன்னம், cheek, jaw
2. குறடு, Pincers
1.
தளிர் புரை கொடிற்றின் செறி மயிர் எருத்தின்
கதிர்த்த சென்னி கவிர் பூ அன்ன
நெற்றிச் சேவல் – அகம் 367/10-12
தளிரைப் போன்ற கன்னத்தினையும், அடர்த்தியான மயிரினையுடைய கழுத்தினையும்
நிமிர்ந்த தலையின் மேல் முருக்கம் பூவினைப் போன்ற
கொண்டையினையும் உடைய சேவல்
2.
மென் தோல்
மிதி உலை கொல்லன் முறி கொடிற்று அன்ன
கவை தாள் அலவன் – பெரும் 206-208
மெத்தென்ற தோலாலான
மிதி(த்து ஊதுகின்ற) உலை(யைக் கொண்ட)கொல்லனுடைய முறிந்த கொறடை ஒத்த
கவர்த்த காலையுடைய நண்டின்

கொடுஞ்சி

கொடுஞ்சி – (பெ) கொடிஞ்சி , பார்க்க: கொடிஞ்சி
கோட்டின் செய்த கொடுஞ்சி நெடும் தேர் – பொரு 163
(யானைக்)கொம்பாற் செய்த தாமரை முகையினையுடைய நெடிய தேரில்

கொடுமணம்

கொடுமணம் – (பெ) அணிகலங்களுக்குப் பேர்பெற்ற பழையதோர் ஊர்
An ancient town noted for the manufacture of jewellery
கொடுமணம் பட்ட வினை மாண் அரும் கலம் – பதி 74/5
கொடுமணம் என்ற ஊரில் இருக்கும் வேலைப்பாட்டினில் சிறந்த அரிய அணிகலன்களையும்,

கொடுமரம்

கொடுமரம் – (பெ) வில், Bow
கொடுமரம் தேய்த்தார் பதுக்கை நிரைத்த – கலி 12/2
தம்முடைய வில்லால் கொல்லப்பட்டவர்களின் உடலை இலைகளால் மூடிய குவியல்கள் வரிசையாகக் கிடக்கும்

கொட்கு

கொட்கு – (வி) 1. சுழல், whirl round
2. சுற்று, revolve
3. சுற்றித்திரி, roam about
1.
அமிழ்து திகழ் கருவிய கண மழை தலைஇ
கடும் கால் கொட்கும் நன் பெரும் பரப்பின் – பதி 17/11,12
நீர் நிரம்பக்கொண்டு திரண்டு எழும் முகில்கணம் பரவுமாறு
கடுமையான காற்று சுழன்றடிக்கும் நல்ல பெரிய பரப்பினையுடைய
2.
அறாஅல் இன்று அரி முன்கை கொட்கும்
பறாஅ பருந்தின் கண் பற்றி புணர்ந்தான் – கலி 147/36,37
எப்பொழுதும் நீங்காமல், மென்மையான என் முன்கையில் சுற்றிக்கொண்டிருக்கும்
பறக்காத பருந்தாகிய குருகு என்னும் கைவளை இருக்குமிடத்தைப் பிடித்து என்னோடு சேர்ந்திருந்தவன்
3.
இறாஅ வன் சிலையர் மா தேர்பு கொட்கும்
குறவரும் மருளும் குன்றத்து படினே – மலை 274,275
முறிந்துபோகாத கெட்டியான வில்லையுடையவர்களாய் விலங்குகளைத் தேடிச் சுற்றியலையும்
குறவர்களும் (வழி தவறி)மனம்தடுமாறும் குன்றுகளில் சென்றால்,

கொட்டம்

கொட்டம் – (பெ) கொட்டான், சிறிய ஓலைப்பெட்டி, small basket made of palm leaf
கொழும் கொடி முசுண்டை கொட்டம் கொள்ளவும் – சிறு 166
கொழுவிய கொடியினையுடைய முசுட்டை கொட்டம்(போலும் பூவைத் தன்னிடத்தே) கொள்ளவும்,

கொட்டில்

கொட்டில் – (பெ) சிறு குடில், small hut
குறும் சாட்டு உருளையொடு கலப்பை சார்த்தி
நெடும் சுவர் பறைந்த புகை சூழ் கொட்டில் – பெரும் 188,189
குறிய சகடத்தின் உருளையோடு கலப்பையையும் சார்த்தி வைக்கப்பட்டமையால்
நெடிய சுவரிடத்தே தேய்ந்த புகை சூழ்ந்த குடிலினையும் உடைய

கொட்டை

கொட்டை – (பெ) 1. தாமரைப் பொகுட்டு, Pericarp of the lotus or common caung flower
2. சேலை முந்தானையில் போடப்படும் முடிச்சு,
Knots made of warp threads at the end of a cloth, as ornament, etc
1.
சே இதழ் பொதிந்த செம்பொன் கொட்டை
ஏம இன் துணை தழீஇ இறகு உளர்ந்து – சிறு 75,76
சிவந்த இதழ் சூழ்ந்த செம்பொன்(னால் செய்ததைப்போன்ற) பொகுட்டின்மிசை,
(தன் உயிர்க்குக்)காவலாகிய இனிய பெடையைத் தழுவி, சிறகுகளை அசைத்துக்கொண்டு,
2.
கொட்டை கரைய பட்டு உடை நல்கி – பொரு 155
(பட்டுக்)குஞ்சம் (உள்ள)கரையையுடைய பட்டு உடைகளைத் தந்து

கொட்பு

கொட்பு – 1. (வி) சுழல், சுற்று, சுற்றித்திரி, கொட்கு, பார்க்க : கொட்கு
2. (பெ) 1. சுழலுதல் , சுழற்சி, whirling
2. சுற்றுதல், சுற்று, revolving
3. சுற்றித்திரிதல், roaming
1.
வல மாதிரத்தான் வளி கொட்ப – மது 5
வலமாக விசும்பிடத்தே காற்றுச் சுழல

மடங்கலும் கணிச்சியும் காலனும் கூற்றும்
தொடர்ந்து செல் அமையத்து துவன்று உயிர் உணீஇய
உடங்கு கொட்பன போல் – கலி 105/20-22
ஊழித்தீயும், சிவனும், காலதேவனும், கூற்றுவனும்,
உயிர்களை விடாமல் துரத்திச் செல்கின்ற சமயத்தில், நிறைந்திருக்கும் உயிர்களை உண்பதற்காக,
ஒன்று சேர்ந்து சுற்றிவருவது போல்

பேயும் அணங்கும் உருவு கொண்டு ஆய் கோல்
கூற்ற கொல் தேர் கழுதொடு கொட்ப – மது 632,633
பேய்களும், வருத்தும் தெய்வங்களும் (காணத்தக்க)உருவங்களைக் கொண்டு, ஆராய்ந்த நெறி பிறழாத
கூற்றுவனின் கொலைத் தேராகிய கழுதுடன் சுற்றித்திரிய
2.1
விளரி கொட்பின் வெள் நரி கடிகுவென் – புறம் 291/4
விளரிப் பண்ணைச் சுழற்சியுறப் பாடித் தின்னவரும் குறுநரிகளை ஓட்டுவேன்
2.2
நிரை பறை குரீஇ இனம் காலை போகி
முடங்கு புற செந்நெல் தரீஇயர் ஓராங்கு
இரை தேர் கொட்பின ஆகி – அகம் 303/11-13
வரிசையாகப் பறத்தலையுடைய குருவியின் கூட்டம், காலையில் போய்
வளைந்த புறத்தினையுடைய சிவந்த நெற்கதிர்களைக் கொணர்ந்து தருமாறு, ஒருங்கே
இரையை தெரிந்தெடுக்க சுற்றிச்சுற்றிவருதலையுடையனவாகி,
2.3
உறு குறை மருங்கில் தம் பெறு முறை கொண்மார்
அந்தர கொட்பினர் வந்து உடன் காண – திரு 173,174
தமக்குற்ற குறைவேண்டும் பகுதியில் (தம்)தொழில்களைப் பெறுமுறையினை முடித்துக்கொள்வதற்கு,
வானத்தே சுற்றித்திரிதலையுடையராய், வந்து ஒருசேரக் காண –

கொண்கன்

கொண்கன் – (பெ) 1. நெய்தல் நிலத் தலைவன், Chief of the maritime tract
2. நெய்தல் நிலக் காதலன், lover of the maritime tract
1.
வளை படு முத்தம் பரதவர் பகரும்
கடல் கெழு கொண்கன் காதல் மடமகள் – ஐங் 195/1,2
சங்கு ஈன்ற முத்துக்களைப் பரதவர் விலைக்கு விற்கும்
கடலைச் சேர்ந்த தலைவனின் அன்பிற்குரிய இளமையான மகள்
2.
மின் இவர் கொடும் பூண் கொண்கனொடு
இன் நகை மேவி நாம் ஆடிய பொழிலே – நற் 187/9,10
ஒளி தவழும் வளைந்த அணிகலன்கள் அணிந்த தலைவனோடு
இனிதாக நகை செய்தபடி நாம் விளையாடிய சோலை –

கொண்கானம்

கொண்கானம் – (பெ) ஒரு மலை, the name of a mountain
பொன் படு கொண்கான நன்னன் நன் நாட்டு
ஏழிற்குன்றம் பெறினும் – நற் 391/6,7
பொன் விளையும் கொண்கானத்து நன்னனின் நல்ல நாட்டிலுள்ள
ஏழிற்குன்றத்தையே பெற்றாலும்.

இக்காலத்து மங்களூர் மலைக்குன்றுதான் இந்தக் கொண்கானம் என்ற ஒரு கருத்து உண்டு.

கொண்கானம் என்பது நன்னன் ஆண்ட நிலப்பகுதி என்பார் ஔவை.துரைசாமி அவர்கள். மலையாள
மாவட்டத்தின் வடபகுதியும், தென் கன்னட மாவட்டமும் சேர்ந்த பகுதிதான் கொண்கானம் என்பது
அவர் கருத்து. இதுவே கொங்கணம் என்றும் அழைக்கப்படுகிறது என்பார் அவர்.

கொண்டல்

கொண்டல் – (பெ) 1. மழை, rain
2. கிழக்குக் காற்று, East wind
3. மேகம், cloud
1.
கொண்டல் வளர்ப்ப கொடி விடுபு கவினி
மென் பிணி அவிழ்ந்த குறு முறி அடகும் – மது 530,531
மழை வளர்க்கக் கொடிவிட்டு அழகுபெற்று,
மெல்லிய சுருள் விரிந்த சிறிய கொழுந்துகளையுடைய கீரைகளையும்,
2
புது மணல் கானல் புன்னை நுண் தாது
கொண்டல் அசை வளி தூக்கு-தொறும் குருகின்
வெண் புறம் மொசிய வார்க்கும் தெண் கடல் – நற் 74/7-9
புதுமணற்பரப்பைக் கொண்ட கானலில் உள்ள புன்னை மரத்தின் நுண்ணிய தாதுக்கள்
கிழக்கிலிருந்து வீசும் காற்று வந்து மோதும்போதெல்லாம், குருகின்
வெள்ளையான முதுகில் மொய்ப்பதுபோல் உதிர்க்கும் தெளிந்த கடற்கரையிலுள்ள
3.
தாக்குபு தம்முள் பெயர்த்து ஒற்றி எ வாயும்
வை வாய் மருப்பினான் மாறாது குத்தலின்
மெய் வார் குருதிய ஏறு எல்லாம் பெய்_காலை
கொண்டல் நிரை ஒத்தன – கலி 106/11-14
தமக்குள் ஒன்றையொன்று தாக்கிக்கொண்டு, காலினால் மண்ணைப் பறித்துத் தள்ளி, எல்லா இடங்களிலும்
கூர்மையான நுனியைக் கொண்ட தம் கொம்புகளால் விடாமல் குத்துவதால்,
உடம்பிலிருந்தும் ஒழுகுகின்ற செங்குருதியைக் கொண்ட காளைகள் எல்லாம், காலைப் பொழுதில் பெய்கின்ற
செம்மேகக் கூட்டத்தைப் போன்றிருந்தன;

கொண்டி

கொண்டி – (பெ) 1. கொள்ளைப்பொருள், plunder, pillage
2. ஈட்டிய பொருள், earned possession
3. உணவு, food
4. பரத்தை, prostitute
5. சிறைப்பிடிக்கப்பட்ட மகளிர், captive women
6. கொள்ளையிடுதல், Plundering (a town) after capture
7. திறைப்பொருள், கப்பம், tribute
1.
கொண்டி உண்டி தொண்டையோர் மருக – பெரும் 454
பகைப்புலத்துக் கொள்ளையாகிய உணவினையும் உடைய தொண்டையோருடைய குடியில் வந்தவனே!
2.
தொல் கொண்டி துவன்று இருக்கை – பட் 212
தொன்றுதொட்டு ஈட்டிய பொருளினையுடைய நிறைந்த குடியிருப்பினையும்
3.
கள் கொண்டி குடி பாக்கத்து – மது 137
கள்ளாகிய உணவினையுடைய குடிகளையுடைய சீறூர்களையுமுடைய
4.
நெஞ்சு நடுக்கு_உறூஉ கொண்டி மகளிர் – மது 583
தம்மைக் கண்டோருடைய நெஞ்சை வருத்தி அவரின் பொருளைக் கொள்ளையிடும் பொதுமகளிர்
5.
கொண்டி மகளிர் உண்துறை மூழ்கி
அந்தி மாட்டிய நந்தா விளக்கின் – பட் 246,247
பிறர் நாட்டிலிருந்து கொள்ளையிட்டுக் கொணர்ந்த மகளிர் பலரும் நீர் உண்ணும்துறையில் மூழ்கி
அந்திக் காலத்தில் ஏற்றிய அவியாத விளக்கினையுடைய
6
கொண்டி மள்ளர் கொல் களிறு பெறுக – பதி 43/25
பகைப்புலத்தைக் கொள்ளையாடும் மள்ளர்கள், கொல்லுகின்ற களிறுகளைப் பெற்றுக்கொள்க
7.
போர் எதிர்ந்து
கொண்டி வேண்டுவன் ஆயின் கொள்க என
கொடுத்த மன்னர் நடுக்கற்றனரே – புறம் 51/5-7
போரினை ஏற்று
திறையை வேண்டுவனாயின் கொள்க எனக்
கொடுத்த மன்னர் நடுக்கம் தீர்ந்தார்

கொண்டுநிலை

கொண்டுநிலை – (பெ) குரவைக்கூத்தில் தலைவன் விரைவில் மணம் முடிக்க வேண்டிப் பாடும் பாட்டு,
Kuravai song praying for the hero’s union in wedlock with the heroin
குரவை தழீஇ யாம் ஆட குரவையுள்
கொண்டுநிலை பாடி காண் – கலி 39/29,30
குரவைக் கூத்தைத் தழுவியவாறு நாங்கள் ஆட, அந்தக் குரவையில்
கொண்டுநிலை என்ற தலைவன், தலைவி சேர்க்கைக்கான பாடலைப் பாடுவாயாக;

கொண்பெரும்கானம்

கொண்பெரும்கானம் – (பெ) கொண்கானம் – பார்க்க : கொண்கானம்
தன் பல இழிதரும் அருவி நின்
கொண்பெரும்கானம் பாடல் எனக்கு எளிதே – புறம் 154/12,13

கொண்மூ

கொண்மூ – (பெ) மேகம், cloud
அந்தரத்து
இமிழ் பெயல் தலைஇய இன பல கொண்மூ
தவிர்வு இல் வெள்ளம் தலைத்தலை சிறப்ப – அகம் 68/14-16
வானில்
இடித்ததுடன் பெய்தலைச் செய்த கூட்டமான பல மேகங்கள்
நீங்குதல் இல்லாமல் பெய்தலால் எழுந்த வெள்ளம் இடம்தோறும் மிகுதலால்

கொன்

கொன் – (பெ) 1. உயர்ந்தது, that which is great
2. அச்சம் ,fear
3. பெரியது, that which is vast
4. வீண், futility
5. விடியற்காலம், dawn
1.
கொன் ஒன்று கிளக்குவல் அடு போர் அண்ணல் – மது 207
மேலான ஒன்றைக் கூறுவேன், கொல்லும் போர்த்தொழில் வல்ல தலைவனே
2.
கடும் பகட்டு யானை நெடும் தேர் அஞ்சி
கொன் முனை இரவு ஊர் போல
சில ஆகுக நீ துஞ்சும் நாளே – குறு 91/6-8
கடுமையும் மிடுக்கும் உள்ள யானைகளையும், நீண்ட தேரினையும் உடைய அதிகமானின்
அச்சமுண்டாக்கும் போர்க்களத்தின்கண் இரவைக்கழிக்கும் ஊரினர் போன்று
சிலவே ஆகுக நீ துயிலும் நாட்கள்.
3
கொன் ஊர் துஞ்சினும் யாம் துஞ்சலமே – குறு 138/1
பெரிய ஊரிலுள்ளார் தூங்கினாலும் நாம் தூங்கமாட்டோம்;
4.
புன்னை அம் சேரி இ ஊர்
கொன் அலர் தூற்றும் தன் கொடுமையானே – குறு 320/7,8
புன்னை மரங்கள் சூழ்ந்த அழகிய சேரிகளையுடைய இந்த ஊரில் உள்ளோர்
வீணே பழி தூற்றுவர், தம் கொடுமையான தன்மையினால்.
5.
கொன் வரல் வாழ்க்கை நின் கிணைவன் கூற – புறம் 379/11
விடியற்காலத்தே வந்து பாடும் வழக்கத்தையுடைய உன் கிணைப்பொருநன் வந்து எனக்குச் சொல்ல

கொன்னாளன்

கொன்னாளன் – (பெ) பயனற்ற வாழ்க்கையை வாழ்பவன், the person who leads an useless life
தண் நறும் கோங்கம் மலர்ந்த வரை எல்லாம்
பொன் அணி யானை போல் தோன்றுமே நம் அருளா
கொன்னாளன் நாட்டு மலை – கலி 42/16-18
குளிர்ச்சியான நறிய கோங்கம் மலர்ந்த மலை எல்லாம்
பொன்னாலான அணிகலன்கள் அணிந்த யானையைப் போல் தோன்றுகிறது, நம் மீது அருள்கொள்ளாத
பயனற்ற வாழ்க்கையை வாழ்கின்றவன் நாட்டு மலை!

கொன்றை

கொன்றை – (பெ) ஒரு மரம், பூ, சரக்கொன்றை, Indian laburnum;
பொன்னிறத்தில் பூக்கக்கூடியது.
பொன் என கொன்றை மலர – நற் 242/3

பூக்கள் கொத்துக்கொத்தாகத் தொங்கிக்கொண்டிருக்கும்.
ஈங்கை இலவம் தூங்கு இணர் கொன்றை – குறி 86 (தூங்கு = தொங்கு, இணர் = பூங்கொத்து)

இதன் காய் நீளமாக உள்ளே துளையுள்ளது.
புழல் காய் கொன்றை கோடு அணி கொடி இணர் – நற் 296/4

காயில் துளையிட்டுப் புல்லாங்குழலாய் இசைப்பர்.
கொன்றை அம் தீம் குழல் மன்று-தோறு இயம்ப – நற் 364/10

இதன் மொட்டுக்கள் அந்தக் காலத்துப் பொற்காசுகளைப் போன்றிருக்கும்
காசின் அன்ன போது ஈன் கொன்றை – குறு 148/3

கொப்பூழ்

கொப்பூழ் – (பெ) தொப்புள், Naval, umbilicus
நீர் பெயர் சுழியின் நிறைந்த கொப்பூழ் – பொரு 37
நீரிடத்துப் பெயர்தலையுடைய சுழி போலச் சிறந்த இலக்கணம் அமைந்த கொப்பூழினையும்

கொம்பர்

கொம்பர் – (பெ) கொம்பு, மரக்கிளை, branch of a tree
மாவும் வண் தளிர் ஈன்றன, குயிலும்
இன் தீம் பல் குரல் கொம்பர் நுவலும் – அகம் 355/1,2
மாமரங்களும் அழகிய தளிர்களைத் துளிர்த்தன, குயிலும்
மிக இனிய குரலால் பலகாலும் அந்தக் கொம்புகளிலிருந்து கூவும்

கொம்பு

கொம்பு – (பெ) 1. கொம்பர், மரக்கிளை, பார்க்க : கொம்பர்
2. விலங்குகளின் தலையில் நீட்டிக்கொண்டிருப்பது, horn
1.
மடவ மன்ற தடவு நிலை கொன்றை
—————
கொம்பு சேர் கொடி இணர் ஊழ்த்த – குறு 66/1-4
அறியாமையுடையன, நிச்சயமாக! இந்த அகலமாய் நிற்கும் கொன்றை மரங்கள்!
கிளைகளில் சேர்ந்த கொடிபோல் கொத்தாகப் பூத்தன
2.
மணி வார்ந்து அன்ன மா கொடி அறுகை
பிணங்கு அரில் மென் கொம்பு பிணையொடு மாந்தி – குறு 256/1,2
நீல மணியின் கதிர்களை வரிசையாய் வைத்தாற்போன்ற கரிய கொடிகள் படர்ந்த அறுகம்புல்
செறிவாகப் பின்னிக்கிடந்ததை, மெல்லிய கொம்புகள் உள்ள தன் பெண்மானோடு உண்டு

கொம்மை

கொம்மை – (பெ) திரட்சி Conicalness, roundness, rotundity;
கொம்மை அம் பசும் காய் குடுமி விளைந்த
பாகல் ஆர்கை பறை கண் பீலி
தோகை – அகம் 15/3-5
திரண்ட பசிய காய்களின் குடுமிப்பக்கம் பழுத்த
பாகல்பழங்களை விரும்பி உண்ணும், பறை போன்ற கண்ணையுடைய பீலிகளையுடைய
மயில்கள்

கொற்கை

கொற்கை – (பெ) பாண்டிநாட்டில் தாமிரபர்ணியின் சங்கமுகத்தில் அமைந்த பழைய துறைமுகப் பட்டினம்
An ancient port formerly at the mouth of the Tāmiraparṇi in the Pāṇdya kingdom;
கொற்கையில் விளைந்த முத்துக்கள் பாண்டியநாட்டுக்குப் பெருஞ்செல்வத்தை ஈட்டித்தந்தன.

கொற்கை அம் பெரும் துறை முத்தின் அன்ன
நகை பொலிந்து இலங்கும் எயிறு கெழு துவர் வாய் – அகம் 27/9,10
கொற்கை என்ற அழகிய பெரிய துறைநகரில் விளையும் முத்தைப் போன்ற,
முறுவலால் பொலிவுடன் விளங்கும் பற்கள் உள்ள சிவந்த உன் வாய்

கொற்றன்

கொற்றன் – (பெ) பிட்டங்கொற்றன் என்னும் என்னும் படைத்தலைவன்.
அரும் தொழில் முடியரோ திருந்து வேல் கொற்றன் – புறம் 171/7

இவன் சேரமான் கோதைக்குப் படைத்துணைவன். பேராண்மையும் வள்ளண்மையும் உடையவன்.
இவன் குதிரைமலையைச் சார்ந்த நாட்டினை ஆண்டுவந்தான். சங்கப் புலவரான
கருவூர் கதப்பிள்ளை சாத்தனார், காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்,
உறையூர் மருத்துவன் தாமோதரனார், வடமவண்ணக்கன் தாமோதரனார்,
ஆகியோர் பாடியுள்ளனர். (புறம் 168-172)

கொற்றம்

கொற்றம் – (பெ) 1. அரசாட்சி, Sovereignty, kingship, government
2. வெற்றி, victory
1.
வழிவழி சிறக்க நின் வலம் படு கொற்றம் – மது 194
வழிமுறை வழிமுறையாகச் சிறக்க நின் ஆளுமையுள்ள அரசாட்சி
2.
கடும் சினத்த கொல் களிறும்
கதழ் பரிய கலி_மாவும்
நெடும் கொடிய நிமிர் தேரும்
நெஞ்சு உடைய புகல் மறவரும் என
நான்கு உடன் மாண்டது ஆயினும் மாண்ட
அற நெறி முதற்றே அரசின் கொற்றம் – புறம் 55/7-12
கடிய சினத்தையுடைய கொல்லும் களிறும்,
விரைந்த ஓட்டத்தையுடைய மனம் செருக்கிய குதிரையும்
நெடிய கொடியைக் கொண்ட உயர்ந்த தேரும்,
நெஞ்சு வலிமையுடைய போரை விரும்பும் மறவரும் என
நான்கு படையும் கூட மாட்சிமைப்பட்டதாயினும், மாட்சிமைப்பட்ட
அறநெறியை முதலாகக் கொண்டது வேந்தரது வெற்றி.

கொற்றவன்

கொற்றவன் – (பெ) அரசன், வெற்றியாளன், king, monarch, victor
வெற்றமொடு வெறுத்து ஒழுகிய
கொற்றவர்தம் கோன் ஆகுவை – மது 73,74
வெற்றியோடே செறிந்து நடந்த
மன்னர்க்கும் மன்னர் ஆவாய்,

சீர் சான்ற உயர் நெல்லின்
ஊர் கொண்ட உயர் கொற்றவ – மது 87,88
சிறப்புக்கள் அமைந்த உயர்ந்த நெல்லின் (பெயரைப்பெற்ற)
(நெற்குன்றம் என்ற)ஊரைக் கைப்பற்றிய உயர்ந்த வெற்றியை உடையவனே

கொற்றவை

கொற்றவை – (பெ) வெற்றிக்கு உரியவள், துர்க்கை, Durga, as the Goddess of Victory
வெற்றி வெல் போர் கொற்றவை சிறுவ – திரு 258
வெற்றியையுடைய வெல்லும் போர்த்தெய்வமான கொற்றவையின் மகனே

கொற்றி

கொற்றி – (பெ) கொற்றவை, பார்க்க : கொற்றவை
பெரும் காட்டு கொற்றிக்கு பேய் நொடித்து ஆங்கு – கலி 89/8
பெரிய காட்டிலிருக்கும் கொற்றவைக்குப் பேய் வந்து குறி சொன்னாற்போல

கொல்லி

கொல்லி – (பெ) நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய மலைத்தொடர்,
Range of hills in Namakkal district

கடையெழு மன்னர்களின் ஒருவனான ஓரி என்பவன் ஆண்டபகுதி இது.
இவன் வில்லாற்றல் மிகுந்தவனாய் இருந்ததினால் வல்வில் ஓரி என்னப்பட்டான்.
இது பலாமரங்கள் மிகுந்த பகுதி.
இங்கே கொல்லிப்பாவை என்ற ஒரு தெய்வத்திற்குக் கோயில் இருக்கிறது

செ வேர் பலவின் பயம் கெழு கொல்லி
தெய்வம் காக்கும் தீது தீர் நெடும் கோட்டு – நற் 201/5,6
சிவந்த வேர்ப்பலாவின் பழங்கள் நிறைந்த கொல்லிமலையின்
தெய்வம் காக்கும் குற்றமற்ற உயர்ந்த உச்சிமலையில்

கொல்லை

கொல்லை – (பெ) 1. முல்லைநிலம், Sylvan tract
2. தோட்டம், land for cultivation
1.
கொல்லை நெடு வழி கோபம் ஊரவும் – சிறு 168
முல்லை நிலத்து நெடிய வழியில் இந்திரகோபம் என்னும் பூச்சி ஊர்ந்து செல்லவும்
2.
கொல்லை கோவலர் எல்லி மாட்டிய
பெரு மர ஒடியல் போல – நற் 289/7,8
புன்செய்க்காட்டில் கோவலர் இரவில் கொளுத்திய
பெரிய மரத்துண்டைப் போன்று

கொளுவு

கொளுவு – (வி) 1. ஏவிவிடு, urge on
2. விளக்கின் திரியைப் பற்றவை,light the wick of a lamp
3. செலுத்து, ஓட்டு, cause to go
1.
திங்களுள் தோன்றி இருந்த குறு முயால்
எம் கேள் இதன் அகத்து உள்_வழி காட்டீமோ
காட்டீயாய் ஆயின் கத நாய் கொளுவுவேன் – கலி 144/18-20
திங்களுக்குள் தோன்றியிருக்கும் சின்ன முயலே!
என் காதலன் இந்த உலகத்தில் இருக்கும் இடத்தைக் காட்டுவாயா?
காட்டாவிட்டால் வேட்டை நாயை உன்மீது ஏவிவிடுவேன்,
2.
வள மனை
பூ தொடி மகளிர் சுடர் தலை கொளுவி
அந்தி அந்தணர் அயர கானவர் – குறி 223-225
செல்வம் நிறைந்த இல்லங்களில்
பொலிவுள்ள வளையல் அணிந்த மகளிர் விளக்கின் திரியை ஏற்றி
அந்திக்கடனை அந்தணர்(போல்) ஆற்ற
3.
ஆதி அந்தணன் அறிந்து பரி கொளுவ
வேத மா பூண் வைய தேர் ஊர்ந்து – பரி 5/22,23
பிரம்மதேவன் செலுத்தும் முறையை அறிந்தவனாக, குதிரையைச் செலுத்த,
வேதங்களாகிய குதிரைகள் பூட்டப்பட்ட வையகமாகிய தேரில் ஏறி,

கொளை

கொளை – (பெ) 1. இசை, melody
2. தாளம், beating time (as of hands or a drum)
3. பாட்டு, song
4. கொள்கை, கோட்பாடு, will, determination
5. பயன், விளைவு, effect, result
1.
யாழ் வண்டின் கொளைக்கு ஏற்ப
கலவம் விரித்த மட மஞ்ஞை – பொரு 211,212
யாழ்(ஓசை போன்ற) வண்டின் இசைக்கு ஏற்ப,
தோகையை விரித்த மடப்பத்தையுடைய மயில்
2.
பெரும் சமம் ததைந்த செரு புகல் மறவர்
உருமு நிலன் அதிர்க்கும் குரலொடு கொளை புணர்ந்து
பெரும் சோறு உகுத்தற்கு எறியும்
கடும் சின வேந்தே நின் தழங்கு குரல் முரசே – பதி 30/41-44
பகைவரின் பெரிய போரினைச் சிதைத்துக் கெடுத்த போரை விரும்பும் மறவர்களால்,
இடி போன்ற நிலத்தை அதிரச் செய்யும் குரலோடு, தாள ஒலி சேர்ந்தொலிக்க,
போர்வீரருக்குப் பெரிய விருந்துணவு படைப்பதற்கு அறையப்பெறுகின்றது –
கடும் சினமுள்ள வேந்தனே! உன்னுடைய முழங்குகின்ற ஒலியையுடைய முரசம்.
3.
படு கண் இமிழ் கொளை பயின்றனர் ஆடும் – பரி 16/12
ஓங்கியடிக்கும் கண்களைக் கொண்ட இசைக்கருவிகளின் ஒலியினையும், பாட்டினையும் பயின்ற
கூத்துமகளிர் ஆடுகின்ற
4.
கொளை தளராதவர் தீமை மறைப்பென்-மன் – கலி 34/17
பொருளீட்டம் என்ற கொள்கையில் தளராதவர் இழைத்த தீமையை மறைத்துக்கொண்டேன்
5
கொடும் குழாய் தெளி என கொண்டதன் கொளை அன்றோ – கலி 132/17
‘வளைந்த குழைகளை அணிந்தவளே! என்னை நம்புவாயாக’ என்றதை ஏற்றுக்கொண்டதன் விளைவு அன்றோ

கொள்

கொள் – (பெ) காணம், Horsegram, Dolichos uniflorus;
கொள்ளொடு பயறு பால் விரைஇ வெள்ளி
கோல் வரைந்து அன்ன வால் அவிழ் மிதவை – அகம் 37/12,13
கொள்ளும் பயறும் பாலுடன் கலந்து, வெள்ளியால்
கோலம் வரைந்ததைப் போன்ற வெண்மைநிறமுள்ள நன்கு வெந்த கஞ்சியை

கொள்ளி

கொள்ளி – (பெ) 1.நெருப்பு, fire
2. நெருப்புப் பற்றவைக்கப்பட்ட கோல், கொள்ளிக்கட்டை, firebrand
1.
இளம்பிறை அன்ன விளங்கு சுடர் நேமி
விசும்பு வீழ் கொள்ளியின் பைம் பயிர் துமிப்ப – குறு 189/3,4
இளைய பிறையைப் போன்ற ஒளிரும் சுடரையுடைய சக்கரங்கள்
வானிலிருந்து விழுகின்ற நெருப்பு அழிப்பதுபோல பசிய பயிர்களை அழிக்க
2
கை கொள் கொள்ளியர் கவுள் புடையூஉ நடுங்க – நெடு 8
கையில் பிடித்த கொள்ளிக்கட்டையை உடையவராய், கன்னங்கள் அடித்துக்கொண்டு நடுங்க

கொள்ளை

கொள்ளை – (பெ) 1. சூறையாடல், plunder
2. விலை, Price
3. மிகுதி, abundance
1.
தொடுதோல் அடியர் துடி பட குழீஇ
கொடு வில் எயினர் கொள்ளை உண்ட
உணவு இல் வறும் கூட்டு உள்ளகத்து இருந்து
வளை வாய் கூகை நன் பகல் குழறவும் – பட் 265-268
செருப்பு (அணிந்த) காலினையுடையராய் உடுக்கை ஒலிக்கத் திரண்டு,
கொடிய வில்லையுடைய வேடர் சூறையாடிக் கொள்ளையாக(க் கொண்டு) உண்ட
நெல் இல்லாமற்போன வெறுமையான நெற்கூட்டின் உட்புறத்தில் தங்கி,
வளைந்த அலகையுடைய கூகை உச்சிக்காலத்து(ம்) கூவவும்;
2.
வெள்ளை உப்பின் கொள்ளை சாற்றி
நெல்லொடு வந்த வல் வாய் பஃறி – பட் 29,30
வெள்ளை(வெளேர் என்ற) உப்பின் விலையைச் சொல்லி(விற்று, அதற்கு மாற்றாக வாங்கிய)
நெல்லைக் கொண்டுவந்த, கெட்டியான விளிம்புகளையுடைய படகுகளை
3.
வெருக்கு அடி அன்ன குவி முகிழ் இருப்பை
மருப்பு கடைந்து அன்ன கொள்ளை வான் பூ – அகம் 267/6,7
பூனையின் பாதத்தைப் போன்ற குவிந்த அரும்பினை உடைய இலுப்பையின்
தந்தத்தினைக் கடைந்தது போன்ற மிகுதியாகவுள்ள வெள்ளிய பூக்களை

கொழி

கொழி – (வி) 1. பொழி, pour down as showers
2. (செழிப்பு)பெருகு, be in abundance
3. ஒதுக்கு, waft ashore as fine sand by waves
4. சுளகு அல்லது முறத்தில் பொருள்களை இட்டு, அதைப் பக்கவாட்டில் அசைத்து அசைத்து
பொருளில் உள்ள தூசி,கல் ஆகியவற்றை ஒதுக்குதல், sift, winnow
1.
செம் வரை கொழி நீர் கடுப்ப அரவின்
அம் வரி உரிவை அணவரும் மருங்கின் – அகம் 327/12,13
செங்குத்தான மலையிலிருந்து செழுமையாக விழும் அருவிநீரைப் போன்று
பாம்பின் அழகிய வரிகளையுடைய உரிக்கப்பெற்ற தோல்கள் பொருந்தும் பாறையிடங்களும்
2.
புனல் பரந்து பொன் கொழிக்கும்
விளைவு அறா வியன் கழனி – பட் 7,8
நீர் பரந்து பொன்(போல் விளைச்சல்) செழித்துப்பெருகும்
விளைதல் தொழில் அற்றுப்போகாத அகன்ற வயல்களில்
3.
இயங்கு புனல் கொழித்த வெண் தலை குவவு மணல் – மது 336
ஓடுகின்ற நீர் ஒதுக்கித்தள்ளிய வெள்ளிய மேற்பரப்பையுடைய திரண்ட மணலையுடைய
4.
விசையம் கொழித்த பூழி அன்ன
உண்ணுநர் தடுத்த நுண் இடி நுவணை – மலை 444,445
சர்க்கரையை(ச் சுளகில்) கொழித்து (குருமணல் போன்ற பகுதியை நீக்கி ஒதுக்கிய)பொடியைப் போல,
(திகட்டலால்)உண்பாரைத் தடுக்கும் நுண்ணிதாக இடிக்கப்பட்ட தினைமாவையும்

கொழீஇய

கொழீஇய – (வி.எ) கொழித்த – பார்க்க: கொழி-4
முழங்கு திரை கொழீஇய மூரி எக்கர் – நற் 15/1
முழங்குகின்ற கடலலைகள் கொழித்துச் சேர்த்த பெரிதான மணல்மேடு

கொழு

கொழு – 1. (வி) மிகு, செழித்திரு, be abundant, flourish
2. (பெ) கலப்பையில் மண்னைக் கிளரும் கூரான இரும்புப்பகுதி. ploughshare
1.
புன்னை அம் கொழு நிழல் முன் உய்த்து பரப்பும் – நற் 101/4
புன்னைமரத்தின் அழகிய மிகுதியான நிழலுக்கு முன்பாகப் போட்டுப் பரப்பிவிட்டிருக்கும்

கொழு மடல் அவிழ்ந்த குழூஉ கொள் பெரும் குலை – நெடு 24
செழுமையான மடல்களில் (பாளை)விரிந்த திரட்சியைக் கொண்ட கொத்துக்களில்
2.
நாஞ்சில்
உடுப்பு முக முழு கொழு மூழ்க ஊன்றி – பெரும் 199,200
கலப்பையின்
உடும்பின் முகத்தை ஒத்த பெரும் கொழு மறைய அமுக்கி,

கொழுது

கொழுது – (வி) 1. கோது, மூக்கால்குடை, peck, hollow out with beak
2. கொய், பறி, pluck
3. கிழி, rend, tear
1.
மா நனை கொழுதி மகிழ் குயில் ஆலும் – நற் 9/10
மா மரத்தின் அரும்பைக் கோதி மகிழ்கின்ற குயில் கூவிவிளையாடும்
2.
ஞாழல் அம் சினை தாழ் இணர் கொழுதி
முறி திமிர்ந்து உதிர்த்த கையள் – நற் 106/7,8
ஞாழலின் அழகிய கிளையின் தாழ்ந்திருக்கும் பூங்கொத்தினைக் கொய்து,
இளந்தளிரை அதனுடன் சேரப்பிசைந்து உதிர்த்துவிட்ட கையினளாய்
3.
உள்ளூர் குரீஇ துள்ளு நடை சேவல்
சூல் முதிர் பேடைக்கு ஈனில் இழையியர்
தேம் பொதி கொண்ட தீம் கழை கரும்பின்
நாறா வெண் பூ கொழுதும் – குறு 85/2-5
உள்ளூர்ச் சிட்டுக்குருவியின் குதித்துக்குதித்து நடக்கும் ஆண்குருவி
சூல் நிறைந்த தன் பெட்டைக்குருவிக்கு அடைகாத்துக் குஞ்சுபொரிக்கும் கூடு கட்ட
இன்சுவையைத் தன்னுள் பொதிந்துவைத்துள்ள இனிய கழையான கரும்பின்
மணமில்லாத வெள்ளைநிறப் பூக்களைக் அலகால் கிழித்து எடுத்துவரும்

கொழுநன்

கொழுநன் – (பெ) கணவன், husband
எழு-மினோ எழு-மின் எம் கொழுநன் காக்கம் – நற் 170/5
கவனமாயிருங்கள், கவனமாயிருங்கள், எம் கணவனைக் காத்துக்கொள்ளுங்கள்!

கொழுந்து

கொழுந்து – (பெ) 1. தாவரங்களின் தளிர், tender leaf
2. சங்கில் வளையல்களைஅறுத்தது போக எஞ்சியிருக்கும் நுனிப்பகுதி,
the tip of a shell which remains after cutting it for bangles
1.
கொழுந்து முந்துறீஇ குரவு அரும்பினவே – நற் 224/3
தளிர்களை முதலில் விட்டு, குராமரங்கள் அரும்புவிடுகின்றனவே!
2.
வேளாப் பார்ப்பான் வாள் அரம் துமித்த
வளை களைந்து ஒழிந்த கொழுந்தின் அன்ன
தளை பிணி அவிழா சுரி முக பகன்றை – அகம் 24/1-3
யாகம் பண்ணாத பார்ப்பான் கூரிய அரத்தால் அறுத்து எடுத்த
வளையல்கள் (அறுத்தது)போக எஞ்சிய சங்கின் தலைப்பகுதியைப் போன்ற
கட்டுண்ட பிணிப்பு அவிழாத சுரிந்த முகத்தையுடைய பகன்றையின் மொட்டுகள்

கோ

கோ – 1. (வி) 1. மணி முதலியவற்றில் ஊடு நூலைப்புகுத்தி இணை, to string as beads, flowers
2. தரி, put on
2. (பெ) 1. அரசன், king
2. பசு, cow
1.1
புலி பல் கோத்த புலம்பு மணி தாலி – அகம் 7/18
பொன் சரட்டில் புலிப்பல் கோத்த ஒற்றைத் தாலியையும்
1.2
வாள் தோள் கோத்த வன்கண் காளை – நெடு 182
வாளைத் தோளில் கோத்த தறுகண்மையையுடைய காளைபோன்றவன்
2.1.
புன் கால் உன்னத்து பகைவன் எம் கோ
புலர்ந்த சாத்தின் புலரா ஈகை
மலர்ந்த மார்பின் மா வண் பாரி – பதி 61/6-8
ன்மையான அடிமரத்தையுடைய உன்ன மரத்துக்குப் பகைவனும், எமக்கு அரசனும்,
பூசப்பட்டுப் புலர்ந்துபோன சந்தனத்தையும், அப்படிப் புலர்ந்து போகாத ஈகைத்திறத்தையும்
கொண்ட அகன்ற மார்பினையுடைய பெரிய வள்ளல்தன்மையுடைய பாரி
2.2.
இகுளை இஃது ஒன்று கண்டை இஃது ஒத்தன்
கோ இனத்து ஆயர்_மகன் அன்றே ஓவான் – கலி 103/36,37
சின்னவளே! இது ஒன்றைப் பார்! இவன் ஒருத்தன்!
பசுக் கூட்டத்தின் ஆயர்மகன் அல்லவா! இதை முடிக்காமல் போகமாட்டான்

கோகுலம்

கோகுலம் – (பெ) குயில், cuckoo
சிகை மயிலாய் தோகை விரித்து ஆடுநரும்
கோகுலமாய் கூவுநரும் – பரி 9/64,65
தம் கூந்தலையே மயிலின் தோகைபோல் விரித்து ஆடுபவர்களும்,
குயில்களாகக் கூவுபவரும்,

கோங்கம்

கோங்கம் – (பெ) ஒரு வகை இலவ மரம், பூ, Cochlospermum gossypium;
காட்டில் மரம் நிறையப் பூத்திருக்கும்
பல் பூ கோங்கம் அணிந்த காடே – நற் 202/11

எல்லாப் பருவத்திலும் பூக்கும்.
பருவம் இல் கோங்கம் பகை மலர் இலவம் – பரி 19/79

பூக்கள் அகல விரிந்திருக்கும்.
குருகிலை மருதம் விரி பூ கோங்கம் – குறி 73

இதன் பூந்தாது பொன் நிறத்தில் இருக்கும்.
புது மலர் கோங்கம் பொன் என தாது ஊழ்ப்ப – கலி 33/12

இது மணம் மிக்கது. மலையிலும் வளரக்கூடியது.
தண் நறும் கோங்கம் மலர்ந்த வரை எல்லாம் – கலி 42/16

கோங்கு

கோங்கு – (பெ) ஒரு வகை இலவ மரம், silk cotton tree, bombax gossipium

கோங்கு, கோங்கம் ஆகிய இரண்டும் ஒன்றே என்பர்.
புது மலர் கோங்கம் பொன் என தாது ஊழ்ப்ப – கலி 33/12
பொரி அரை கோங்கின் பொன் மருள் பசு வீ – ஐங் 367/1
என்பதால், கோங்கம், கோங்கு ஆகியவற்றின் பூக்கள் பொன் நிறத்தது எனத் தெரிகிறது.

கோங்கு என்பது silk cotton tree எனப்படுவதாலும்,
கோங்கம் எனப்படும் Cochlospermum gossypium என்ற மரம், yellow silk cotton tree
எனப்படுவதாலும், இரண்டும் ஒன்றே எனக் கொள்ளல் ஏற்புடையது எனத் தெரிகிறது.

கோங்கின் முகை இளம்பெண்களின் குவிந்த மார்பகத்துக்கு ஒப்பாகப் பலமுறை சொல்லப்படுகிறது.

தேம் கமழ் மருது இணர் கடுப்ப கோங்கின்
குவி முகிழ் இள முலை கொட்டி – திரு 34,35

யாணர் கோங்கின் அவிர் முகை எள்ளி
பூண் அகத்து ஒடுங்கிய வெம் முலை – சிறு 25,26

முலை ஏர் மென் முகை அவிழ்ந்த கோங்கின் – குறு 254/2

முதிர் கோங்கின் முகை என முகம் செய்த குரும்பை என
பெயல் துளி முகிழ் என பெருத்த நின் இள முலை – கலி 56/23,24

கோங்கின்
முதிரா இள முகை ஒப்ப எதிரிய
தொய்யில் பொறித்த வன முலையாய் – கலி 117/2-4

கோங்கு முகைத்து அன்ன குவி முலை ஆகத்து – அகம் 240/11

வேங்கை வெற்பின் விரிந்த கோங்கின்
முகை வனப்பு ஏந்திய முற்றா இள முலை – புறம் 336/9,10

இது கோங்கம் பூவின் மொட்டினை ஒத்து வருகிறது.
ஆனால், கோங்கம் பூவின் மொட்டு ஒருமுறைகூட பெண்களின் மார்புக்கு ஒப்பாகக் கூறப்படவில்லை
என்பதுவும் கவனிக்கத்தக்கது.

கோங்கம் என்ற மரம் உறுதியான அடிமரத்தைக் கொண்டது.(திணி நிலை கோங்கம் – ஐங் 343/2)
ஆனால் கோங்கு என்ற மரம் பொரிந்துபோன அடிமரத்தைக் கொண்டது.
பொரி அரை கோங்கின் பொன் மருள் பசு வீ – ஐங் 367/1

கோங்கம் பூவைப்போலவே கோங்கின் பூவும் நறுமணமுள்ளது.
தண் நறும் கோங்கம் மலர்ந்த வரை எல்லாம் – கலி 42/16
ஓங்கு சினை நறு வீ கோங்கு அலர் உறைப்ப – அகம் 317/11

கோங்கின் பொகுட்டு எலியின் காதைப்போன்றது என்கிறது புறம்.
வேனில் கோங்கின் பூம் பொகுட்டு அன்ன
குடந்தை அம் செவிய கோட்டு எலி ஆட்ட – புறம் 321/4,5

எனவே, இது மேலும் ஆய்வுக்குரியது.

கோசர்

கோசர் – (பெ) பழைய வீரக்குடியினருள் ஒரு சாரார், An ancient caste of warriors;
கடைச்சங்க காலத்தில், கோசர் என்றொரு வகுப்பார் மூவேந்தர்க்கும் படைத்தலைவராகவும்,
தமிழகத்தில் ஆங்காங்கு வெவ்வேறு சிற்றரசராகவும் இருந்தமை, பழந்தமிழ் நூல்களாலும் செய்யுட்களாலும்
அறியக்கிடக்கின்றது. இவ் வகுப்பாரைப்பற்றி அறிஞரிடை பல்வேறு கருத்துகள் எழுந்துள்ளன.
காலஞ்சென்ற ரா. இராகவையங்கார், தம் ‘கோசர்’ என்னும் ஆராய்ச்சி நூலில் கோசராவார்
காசுமீர நாட்டினின்று வேளிரையடுத்துக் கோசாம் பியைத் தலைநகராகக்கொண்ட வத்த (வத்ஸ) நாட்டு
வழியாய்த் தமிழ்நாடு போந்தவர் என்று கூறுகிறார்.
கோசர் என்பவர் பண்டைக்காலத் தென்னிந்தியாவின் குறுநில மன்னர்களாக இருந்தவர்கள் என்றும்
இவர்கள் தொன்மையான குடியைச் சேர்ந்தவர்கள் என்றும் இவர்கள் துளு நாட்டிலும், கொங்கணத்திலும்,
கொங்கு நாட்டிலும் அதிகாரம் பெற்றிருந்ததோடு தமிழ் நாட்டின் வேறு பல பகுதிகளிலும் சிற்றரசர்களாக
இருந்திருக்கின்றனர் என்றும் அறிஞர் கருதுகின்றனர்.
இவர்கள் கருநாடகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கருதப்படுகிறார்கள்.
இவர்களைப்பற்றிச் சங்க இலக்கியங்களில் பல குறிப்புகள் கிடைக்கின்றன.
1. பழையன் என்ற மோகூர் மன்னனின் அரசவையில் இவர்கள் முக்கிய பங்கு வகித்தனர்.
பழையன் மோகூர் அவையகம் விளங்க
நான் மொழி கோசர் தோன்றி அன்ன – மது 508,509
பழையன் (என்னும் மன்னனின்)மோகூரிடத்து அரசவை திகழுமாறு
நான்மொழிக்கோசர் வீற்றிருந்தாற் போன்று,
2.
இவர்கள் பாண்டியன் நெடுஞ்செழியனின் அரண்மனையில் மன்னனின் ஏவலாளராக இருந்திருக்கின்றனர்.
கடந்து அடு வாய் வாள் இளம் பல் கோசர்
இயல் நெறி மரபின் நின் வாய்மொழி கேட்ப – மது 773,774
(பகைவரை)வென்று கொல்லும் தப்பாத வாளினையுடைய இளைய பலராகிய கோசர்கள்
நடக்கின்ற நெறிமுறைமையால் உன்னுடைய மெய்ம்மொழியைக் கேட்டு நடக்க,
3.
நாலூர்க் கோசர் என்பார் பறை முழக்கி, சங்கு ஊதி, வரி வாங்கினர்
பறை பட பணிலம் ஆர்ப்ப இறைகொள்பு
தொன் மூதாலத்து பொதியில் தோன்றிய
நால் ஊர் கோசர் நன் மொழி போல – குறு 15/1-3
முரசு முழங்க, சங்கு ஒலிக்க, அமர்ந்து
மிகப் பழமையான ஆலமரத்துப் பொதுவிடத்தில் தோன்றும்
நான்கு ஊரிலுள்ள கோசர்களின் நன்மொழியைப் போல
4.
இவர்கள் வஞ்சினம் கூறி நன்னன் என்பானுடன் போரிட்டு அவனை வென்றதால் சொன்னதைச் செய்யும்
கோசர் எனப்பட்டனர்.
நன்னன்
நறு மா கொன்று ஞாட்பில் போக்கிய
ஒன்றுமொழி கோசர் போல – குறு 73/2-4
நன்னன் என்பவனின்
மணமுள்ள மா மரத்தை அழித்து நாட்டுக்குள் போக்கிய
சொல்தவறாக் கோசர் போல
5.
கோசர்களின் மூதாதையர். துளுநாட்டில் வாழ்ந்துவந்தனர். வந்தவர்களையெல்லாம் முன்பே அறிந்தவர் போன்று
வரவேற்றுப் பாதுகாக்கும் பண்பினை உடையவர்கள். எனவே இவர்கள் செம்மல் கோசர் எனப்பட்டனர்.
மெய்ம் மலி பெரும் பூண் செம்மல் கோசர்
கொம்மை அம் பசும் காய் குடுமி விளைந்த
பாகல் ஆர்கை பறை கண் பீலி
தோகை காவின் துளுநாட்டு அன்ன 5
வறும் கை வம்பலர் தாங்கும் பண்பின் – அகம் 15/2-6
மெய்மையையே நிறைந்த பெரிய கொள்கையாய்ப் பூண்ட தலைமை சான்ற கோசர்களின் –
திரண்ட பசிய காய்களின் குடுமிப்பக்கம் பழுத்த
பாகல்பழங்களை விரும்பி உண்ணும், பறை போன்ற கண்ணையுடைய பீலிகளையுடைய
மயில்கள் வாழும் சோலைகளையுடைய – துளுநாட்டைப் போன்று,
வெறுங்கையுடன் வரும் அயலவர்களை நன்கு உபசரிக்கும் பண்புடைய
6.
இவர்கள் சிறந்த போர் வீரர்கள். அதனால் இவர்கள் முகத்தில் தழும்பு இருக்கும். இதனால் இவர்கள்
கருங்கண் கோசர் எனப்பட்டனர். நியமம் என்பது அவர்களின் ஊர். அது மிகவும் செல்வம் படைத்ததாக இருந்தது.
யாணர்
இரும்பு இடம்படுத்த வடு உடை முகத்தர்
கருங்கண் கோசர் நியமம் – அகம் 90/10-12
எப்போதும் புதுவருவாயையுடைய,
வாளினால் ஏற்பட்ட வடுக்களையுடைய முகத்தினரான
அஞ்சாமையை உடைய கோசர்கள்வாழும் நியமம் என்ற ஊர்
7.
இவர்களின் ஒருசாரார் நெய்தலம்கானல்(செறு) என்ற ஒரு வளமான பகுதியில் இருந்திருக்கிறார்கள். அவர்களுக்கு
அஃதை என்பான் தலைவனாக இருந்திருக்கிறான். இவன் வள்ளலாக இருந்திருக்கிறான். இவர்கள் மிகப்பெரிய
வேற்படையை வைத்திருந்ததினால் பல்வேல் கோசர் எனப்பட்டனர். கெட்டுப்போன நிலையிலும், நண்பனாயின் இவர்கள்
கைவிடமாட்டார்கள்
நன்று அல் காலையும் நட்பின் கோடார்
சென்று வழிப்படூஉம் திரிபு இல் சூழ்ச்சியின்
புன் தலை மட பிடி அகவுநர் பெருமகன்
மா வீசு வண் மகிழ் அஃதை போற்றி
காப்பு கைந்நிறுத்த பல் வேல் கோசர்
இளம் கள் கமழும் நெய்தல் அம் செறுவின்
வளம் கெழு நன் நாடு – அகம் 113/1-7
கேடுற்ற நிலையிலும் நட்பில் மாறமாடார்,
அவரிடம் சென்று அவர் குறிப்பில் படும் மாறுபாடு இல்லாத அறிவு உள்ளவர்களாதலால்
புல்லிய தலையினையுடைய இளம் பெண்யானைகளையும் இந்தக் கூத்தரை ஆதரிக்கும் பெருமகனான
குதிரைகளையும் அள்ளிக்கொடுக்கும் வள்ளண்மையில் சிறந்த அஃதை என்பானைப் பாதுகாத்து
அவனைக் காவல் மிக்க இடத்தில் நிலைநிறுத்திய பல வேற்படையினையுடைய கோசர் என்பவரின்
புதிய கள் கமழும் நெய்தலஞ்செறு என்னும்
வளம் பொருந்திய நல்ல நாடு.
8.
ஒன்றுமொழிக்கோசர் என்பார் அன்னி ஞிமிலி என்ற பெண்ணின் தந்தையின் கண்களைக் குருடாக்கினர். அதனால்
அன்னி ஞிமிலி அழுந்தூர் மன்னனான திதியன் என்பவனிடம் முறையிட்டு அவன் மூலமாக இந்தக் கோசரைப்
பழிதீர்த்துக்கொண்டாள்.
தந்தை
கண்கவின் அழித்ததன் தப்பல் தெறுவர
ஒன்றுமொழி கோசர் கொன்று முரண் போகிய
கடுந்தெர்த் திதியன் அழுந்தைக் கொடுஞ்குழை
அன்னி ஞிமிலி – அகம் 196/8-12
தன் தந்தையின்
கண்ணின் பார்வையைக் கெடுத்த தவற்றுக்காக, அச்சம் உண்டாக,
ஒன்றுமொழிக் கோசர்களைக் கொன்று பழி தீர்த்துக்கொண்ட
விரைந்த தேரினையுடைய திதியனின் அழுந்தூர் என்னுமிடத்தைச் சேர்ந்த, வளைந்த காதணியையுடைய
அன்னி ஞிமிலி என்பாளைப் போல,
9.
இந்தக் கோசர்கள் வாய்மொழி தவறாதவர்களாக விளங்கினர். இவர்களின் புகழ் நெடுந்தொலைவு பரவிக் கிடந்தது.
வளம் மிக்க இந்தக் கோசர்கள் சோழ மன்னனைப்பகைத்துக்கொண்டதால், சோழன் இவர்களை அழித்து
வெற்றிகொண்டான்.
வாய்மொழி நிலைஇய சேண் விளங்கு நல் இசை
வளம் கெழு கோசர் விளங்கு படை நூறி
நிலம் கொள வெஃகிய பொலம் பூண் கிள்ளி – அகம் 205/8-10
உண்மை நிலைபெற்ற நெடுந்தூரத்து விளங்கும் நல்ல புகழினையுடைய
செல்வம் மிக்க கோசர்களின் பெரும்படையை அழித்து
அவர்களின் நிலத்தைக் கைக்கொள்ள விரும்பிய பொன்னினால் ஆன பூணை உடைய சோழன்
10.
இந்தக் கோசர்களில் பல்இளம் கோசர் எனப்படுபவர் செல்லூர் என்ற ஊரைச் சார்ந்து வழ்ழ்ந்தனர். அவர்களின்
தலைவன் செல்லிக்கோமான் எனப்படும் ஆதன் எழினி. இவன் வேலெறிவதில் வல்லவன்.
பல் இளம் கோசர் கண்ணி அயரும்
மல்லல் யாணர் செல்லி கோமான்
எறிவிடத்து உலையா செறி சுரை வெள் வேல்
ஆதன் எழினி – அகம் 216/11-14
பல் இளம்கோசர் என்பார் தலையில் மாலைகட்டி விளையாடும்
மிக்க வளம் பொருந்திய செல்லூர்மன்னனாகிய
ஆதன் எழினி
11.
இந்தக் கோசர் காற்றினும் கடிது செல்லும் தேர்ப்படையைக் கொண்டிருந்தனர். அதனால் மோகூர் மன்னனுடன்
போரிட்டு அழிவை ஏற்படுத்தினர். எனினும் அந்த மன்னன் பணியாததினால், வடக்கிலிருந்த மோரியரைத்
துணைக்கு அழைத்தனர். அந்த மோரியரின் தேர்ப்படை மலைவழியே வருவதற்குப் பாதை அமைத்துக்கொடுத்தனர்.
வெல் கொடி
துனை கால் அன்ன புனை தேர் கோசர்
தொன் மூதாலத்து அரும் பணை பொதியில்
இன் இசை முரசம் கடிப்பு இகுத்து இரங்க
தெம் முனை சிதைத்த ஞான்றை மோகூர்
பணியாமையின் பகை தலைவந்த
மா கெழு தானை வம்ப மோரியர்
புனை தேர் நேமி உருளிய குறைத்த
இலங்கு வெள் அருவிய அறை வாய் – அகம் 251/6-14
வெல்லும் கொடியினையுடைய
விரையும் காற்றைப் போன்ற அழகு செய்யப்பட்ட தேரினையுடைய கோசர் என்பார்
மிக்க தொன்மை வாய்ந்த ஆலமரத்தின் அரிய கிளைகளையுடைய மன்றத்தில்
இனிய ஓசையையுடைய முரசம் குறுந்தடியாலடிக்கப்பெற்று ஒலிக்க,
பகைவரின் போர்முனையை அழித்தகாலத்தில், மோகூர் மன்னன்
பணிந்துவராததினால், அவன்பால் பகைகொண்டவராகிய
குதிரைகள்பொருந்திய சேனையினையுடைய புதிய மோரியர் என்பாரின்
அழகிய தேர்ச் சக்கரங்கள் உருண்டு செல்வதற்காக, உடைத்து வழியாக்கிய
விளங்கும் வெள்ளிய அருவிகளைக் கொண்ட மலைப்பாதை
12.
இளம் பல் கோசர் என்பவர் முருங்க மரக் கம்பத்தின் மீது அம்புகளைப் பாய்ச்சிப் பயிற்சி பெற்றனர்.
இளம் பல் கோசர் விளங்கு படை கன்மார்
இகலினர் எறிந்த அகல் இலை முருக்கின்
பெருமரக் கம்பம் போல – புறம் 169/9-11
இளைய பல கோசர் விளங்கிய படைக்கலம் கற்கும்வகையில்
மாறுபட்டவராய் எறிந்த அகன்ற இலையைக் கொண்ட முருக்க்காகிய
பெரிய மரத்தால்செய்யப்பட்ட தூணாகிய இலக்கைப் போல

கோடல்

கோடல் – (பெ) வெண்காந்தள், White species of Malabar glory-lily, gloriosa superba
ஊழ்_உறு கோடல் போல் எல் வளை உகுபவால் – கலி 48/11
உதிர்ந்துவிழும் காந்தள் போல் ஒளிவிடும் வளைகள் கழன்று விழுகின்றனவே!

கோடியர்

கோடியர் – (பெ) கூத்தர், Professional dancers;
விழவு வீற்றிருந்த வியலுள் ஆங்கண்
கோடியர் முழவின் முன்னர் ஆடல்
வல்லான் அல்லன் – பதி 56/1-3
விழா நடைபெறுகின்ற அகன்ற உள்ளிடத்தைக் கொண்ட ஊரில்
கூத்தரின் முழவுக்கு முன்னால் ஆடுவதில்
வல்லவன் அல்லன்

கோட்டம்

கோட்டம் – (பெ) 1. சரியான நிலையிலிருந்தும் மாறுபடுதல்
2. வளைவான இடம், bend
3. கோவில், temple
1.
வேறு உணர்ந்து
அணங்கு அறி கழங்கின் கோட்டம் காட்டி – நற் 47/7,8
என் நிலையை வேறுவிதமாக உணர்ந்து
தெய்வம் வருத்தியதோ என அறியத்தக்க கழங்குகளின் மாறுபாடான நிலையைக் காட்டியதால்
2.
மர கோட்டம் சேர்ந்து எழுந்த பூ கொடி போல – கலி 94/23
மரத்தின் வளைவான இடத்தைப் பற்றி எழுந்த பூங்கொடியைப் போல
3.
புத்தேளிர் கோட்டம் வலம் செய்து இவனொடு
புக்க_வழி எல்லாம் கூறு – கலி 82/4,5
தேவர்களின் கோவிலை வலம்வந்து பின்னர் என் மகனாகிய இவனோடு
நீ சென்ற இடங்களையெல்லாம் சொல்வாயாக;

கோட்டுமா

கோட்டுமா – (பெ) கொம்புகளையுடைய விலங்கு (காட்டுப்பன்றி, யானை. எருமை) boar, elephant. buffallo
கொடு வில் கானவன் கோட்டுமா தொலைச்சி
பச்சூன் பெய்த பகழி போல – நற் 75/6,7
வளைந்த வில்லையுடைய வேட்டுவன் கொம்புகளையுடைய பன்றியைக் கொன்று
அதன் பசிய ஊனில் பாய்ந்த அம்பினைப் போல

கோட்டுமா வழங்கும் காட்டக நெறியே – ஐங் 282/5
கொம்புகளையுடைய யானைகள் நடமாடும் காட்டுக்குள்ளான வழியில்

கோட்டுமீன்

கோட்டுமீன் – (பெ) சுறாமீன், shark
கொடும் திமில் பரதவர் கோட்டுமீன் எறிய – குறு 304/4
வளைந்த திமிலையுடைய பரதவர் கொம்புடைய சுறாமீனைப் பிடிக்க,

கோணம்

கோணம் – (பெ) தோட்டி, elephant hook
கோணம் தின்ற வடு ஆழ் முகத்த – மது 592
தோட்டி வெட்டின வடு அழுந்தின முகத்தை உடையனவும்,

கோது

கோது – (பெ) சக்கை, refuse, residuum
களிறு சுவைத்திட்ட கோது உடை ததரல் – அகம் 257/16
களிறுகள் சுவைத்துவிட்டுப்போட்டுவிட்ட சக்கையாகிய சுள்ளிகள்

கோதை

கோதை – (பெ) 1. பூச்சரம், மாலை, garland of flowers
2. சேர மன்னர்களின் பட்டப்பெயர், A title of the Chera kings
1.
கூந்தல் மகளிர் கோதை புனையார் – நெடு 53
(தம்)தலைமயிரில் மகளிர் (குளிர்ச்சி மிகுதியால்)மாலை அணியாதவராய்,
2.
தண் கடல் நாடன் ஒண் பூ கோதை
பெருநாள் இருக்கை விழுமியோர் குழீஇ – மது 524,525
குளிர்ந்த கடல் சேர்ந்த நாட்டையுடையனாகிய, ஒளிரும் பனந்தாரையுடைய சேரனுடைய
பெரிய நாளோலக்க இருப்பில் சீரியோர் திரண்டு

கோன்

கோன் – (பெ) அரசன், king
கொற்றவர்_தம் கோன் ஆகுவை – மது 74
மன்னர்க்கும் மன்னர் ஆவாய்

கோபம்

கோபம் – (பெ) இந்திரகோபம் என்னும் செந்நிறப்பூச்சி, வெல்வெட் பூச்சி, Trombidium grandissimum
ஓவத்து அன்ன கோப செம் நிலம் – அகம் 54/4
ஓவியம் போன்ற, இந்திரகோபம் போன்று சிவந்த, செம்மண் நிலத்தில்

கோப்பு

கோப்பு – (பெ) கோக்கப்பட்டது, string
மனவு கோப்பு அன்ன நன் நெடும் கூந்தல் – குறு 23/2
சங்குமணியைக் கோத்தது போன்ற நல்ல நெடிய கூந்தலையுடைய

கோய்

கோய் – (பெ) கள் முகக்கும் பாத்திரம், Vessel for taking out toddy
நன் மரம் குழீஇய நனை முதிர் சாடி
பல் நாள் அரித்த கோஒய் உடைப்பின்
மயங்கு மழை துவலையின் மறுகு உடன் பனிக்கும் – அகம் 166/1-3
நல்ல மரங்கள் சூழ்ந்த, கள் நிறைந்த சாடியின்
பலநாட்கள் வடிக்கப்பெற்றது – அந்த முகக்கும் பாத்திரம் உடைந்துபோனால்
விரவிய மழைத்துளி போல தெருவெல்லாம் துளிக்கும்.

கோளாளர்

கோளாளர் – (பெ) கொள்பவர், one who seizes
கோளாளர் என் ஒப்பார் இல் – கலி 101/43
காளையை அடக்குபவரில் என்னைப் போன்றவர் யாரும் இல்லை

கோளி

கோளி – (பெ) பூக்காமல் காய்க்கும் மரம், Tree bearing fruit without outwardly blossoming
கொழு மென் சினைய கோளியுள்ளும்
பழம் மீக்கூறும் பலாஅ போல – பெரும் 407,408
கொழுவிய மெல்லிய கொம்புகளையுடைனவாகிய, (பூவாமல் காய்க்கும்)கோளியாகிய மரங்களினுள்ளும்,
பழத்தால் மேலாகச் சொல்லும் பலாமரத்தைப் போன்று,

கோள்

கோள் – (பெ) 1. பிடித்துக்கொள்ளுதல், holding
2. முகந்து கொள்ளுதல், taking
3. பெற்றுக்கொள்ளுதல், receiving
4. செய்துகொள்ளுதல், making
5. உயிரைக் கொள்ளுதல், seizing
6, கொத்து, குலை, bunch, cluster
7. பாம்பு, serpent
8. விண்மீன், star
9. கிரகம், planet
10. இடையூறு, impediment, danger
11. இயல்பு, தன்மை, nature
1.
முலை கோள் விடாஅ மாத்திரை ஞெரேரென
தலை கோள் வேட்டம் களிறு அட்டு ஆங்கு – பொரு 141,142
முலையைப் பிடித்து உண்டலைக் கைவிடாத அளவிலே(யே) கடுகப் பாய்ந்து,
(தன்)கன்னிவேட்டையிலேயே களிற்றியானையைக் கொன்றாற் போன்று,
2
கருவி வானம் கடல் கோள் மறப்பவும் – பொரு 236
கூட்டமான மேகங்கள் கடலிடத்தே நீர் முகத்தலை மறக்கவும்,
3.
கார் கோள் பலவின் காய் துணர் கடுப்ப – மலை 12
கார்காலத்தே கொள்ளப்படும் பலாவின் காய்களைக்கொண்ட கொத்தைப் போல,
4.
வல்லோன்
வாள் அரம் பொருத கோள் நேர் எல் வளை – நற் 77/8,9
வளைசெய்வதில் வல்லவன்
தன் வாள் போன்ற அரத்தால் அராவிச் செய்துகொள்ளுதல் நன்றாக அமைந்த ஒளிமிகுந்த வளையலையும்,
5
உறல் முறை மரபின் கூற்றத்து
அறன் இல் கோள் நன்கு அறிந்திசினோரே – குறு 267/7,8
நிகழ்த்தும் முறைமைகொண்ட வழக்கத்தையுடைய கூற்றுவனின்
அறமற்ற உயிர்வாங்கும் தொழிலை நன்கு அறிந்தவர்கள்.
6.
கோள் தெங்கின் குலை வாழை – பொரு 208
கொத்துக்கொத்தான (காய்களைக் காய்க்கும்)தெங்கினையும், குலையினையுடைய வாழையினையும்,
7
குழவி திங்கள் கோள் நேர்ந்து ஆங்கு – பெரும் 384
இளைய திங்களைச் பாம்பு தீண்டினாற் போன்று
8.
நாளொடு பெயரிய கோள் அமை விழு மரத்து – நெடு 82
நாளின் பெயர் கொண்ட கோள்(உத்தரம்) நன்றாக வடிவமைக்கப்பட்ட சிறந்த (குறுக்குக்)கட்டையைக்கொண்டு
9.
நாள் கோள் திங்கள் ஞாயிறு கனை அழல் – பதி 14/3
நாள்மீன்களும், கோள்மீன்களும், திங்களும், ஞாயிறும், மிகுந்த நெருப்பும்
10.
குறும் பொறை மருங்கின் கோள் சுரம் நீந்தி – அகம் 271/5
குன்றுகளின் பக்கத்திலுள்ள ஊறு பொருந்திய சுரத்தினைக் கடந்து
11.
வெண் கோள் தோன்றா குழிசியொடு – புறம் 257/12
வெண்மை நிறத் தன்மை தோன்றாத பானையுடன்

கோள்மா

கோள்மா – (பெ) சிங்கம், புலி, lion, tiger
குன்ற இறு வரை கோள்மா இவர்ந்து ஆங்கு – கலி 86/32
குன்றின் செங்குத்தான பகுதி மீது சிங்கம் ஊர்ந்து ஏறுவது போல்

கொடுவரி
கோள்மா குயின்ற சேண் விளங்கு தொடு பொறி – புறம் 58/29,30
வளைந்த வரிகளையுடைய
புலிவடிவாகச் செய்யப்பட்ட தொலைவுக்கும் விளங்குகின்ற தோண்டிய இலாஞ்சனை

கோள்மீன்

கோள்மீன் – (பெ) கிரகம், planet
வாள் நிற விசும்பின் கோள்மீன் சூழ்ந்த
இளம் கதிர் ஞாயிறு – சிறு 242,243
ஒளியையுடைய (நீல நிற)வானத்தின்கண் கோளாகிய மீன்கள் சூழ்ந்த
இள வெயில் (தரும்)ஞாயிற்றை

கோழ்

கோழ் – (பெ) 1. கொழுமை, கொழுப்புள்ளது, fat, oily
2. செழுமை, luxurious, rich
1.
காழின் சுட்ட கோழ் ஊன் கொழும் குறை – பொரு 105
இரும்புக் கம்பியில் (கோத்துச்)சுடப்பட்ட கொழுத்த இறைச்சிகளாகிய பெரிய தசைத் துண்டுகளை
2
கோழ் இலை வாழை கோள் முதிர் பெரும் குலை – அகம் 2/1
செழுமையான இலைகளைக் கொண்ட வாழையின், அடுக்குகள் முற்றிய பெரிய குலையின்

கோவம்

கோவம் – (பெ) இந்திரகோபம், பார்க்க : கோபம்
கோவத்து அன்ன கொங்கு சேர்பு உறைத்தலின் – சிறு 71
இந்திர கோபத்தை ஒத்த தாதுக்கள் சேர்ந்து உதிர்தலால்

கோவலர்

கோவலர் – (பெ) முல்லைநிலமக்கள், இடையர்கள், Men of the sylvan tract, herdsmen;
ஆர்கலி முனைஇய கொடும் கோல் கோவலர்
ஏறு உடை இன நிரை வேறு புலம் பரப்பி – நெடு 3,4
வெள்ளத்தை வெறுத்த வளைந்த கோலினையுடைய இடையர்,
காளைகளையுடைய (பல்வேறு)இனம் சேர்ந்த மந்தையை(மேடான)முல்லை நிலத்தில் மேயவிட்டு,

கோவலூர்

கோவலூர் – (பெ) திருக்கோவலூர், a city called thirukOvalUr
முரண் மிகு கோவலூர் நூறி – புறம் 99/13
மாறுபாடு மிக்க கோவலூரை அழித்து வென்று

கோவல்

கோவல் – (பெ) திருக்கோவலூர், a city called thirukOvalUr
துஞ்சா முழவின் கோவல் கோமான்
நெடும் தேர் காரி – அகம் 35/14,15
ஓயாது ஒலிக்கும் முரசை உடைய, திருக்கோவலூருக்குத் தலைவனான,
நெடிய தேரைக் கொண்ட காரி

கோவை

கோவை – (பெ) கோத்த வடம், String of ornamental beads for neck or waist;
உடுத்தவை கைவினை பொலிந்த காசு அமை பொலம் காழ் மேல்
மை இல் செம் துகிர் கோவை அவற்றின் மேல்
தைஇய பூ துகில் – கலி 85/2-4
உடுத்தியிருப்பவை, கைவேலைப்பாடு மிகுந்த பொற்காசுகளைக் கோத்த பொன்னாலாகிய வடத்தின் மேல்
களங்கமில்லாத சிவந்த பவளச் சரம் ஆகிய இவை இரண்டிற்கும் மேலே
உடுத்தின மென்மையான துகில்

கௌவை

கௌவை – (பெ) 1. பிஞ்சுத்தன்மை, unripedness
2. ஊரார் பழிச்சொல், slander
3. துன்பம், affliction, distress
4. பேரொலி, din, noise
1.
கௌவை போகிய கரும் காய் பிடி ஏழ் – மலை 105
பிஞ்சுத்தன்மை போன(=முற்றிய) கரிய காய்கள் ஒரு கைப்பிடிக்குள் ஏழு காய்களே கொள்ளத்தக்கனவாய்
2.
கௌவை ஆகின்றது ஐய நின் நட்பே – நற் 354/11
ஊரெல்லாம் உரக்கப்பேசும் பழிச்சொல்லாய் ஆகின்றது உன்னுடனான நட்பு –
3.
ஒறுப்ப ஓவலர் மறுப்ப தேறலர்
தமியர் உறங்கும் கௌவை இன்றாய்
இனியது கேட்டு இன்புறுக இ ஊரே – குறு 34/1-3
தாயர் முதலானோர் இடித்துரைக்கவும், தந்தை முதலானோர் மறுத்துரைக்கவும்
தனியராக உறங்கும் துன்பம் இல்லாததாகி
இனியது கேட்டு இன்புறுக இந்த ஊரே!
4.
முளை நிரை முறுவல் ஒருத்தியொடு நெருநல்
குறி நீ செய்தனை என்ப அலரே
குரவ நீள் சினை உறையும்
பருவ மா குயில் கௌவையில் பெரிதே – ஐங் 369/2-5
மூங்கிலின் முளை போன்ற வரிசையான பற்களுடன் முறுவல் செய்யும் ஒருத்தியை நேற்று
நீ குறிப்புக்காட்டி அழைத்தாய் என்று ஊரே பேசும் பேச்சு
குரவ மரத்தின் நீண்ட கிளையில் தங்கியிருக்கும்
வேனிற்பருவத்துக் கரிய குயில் கூவும் பேரொலியிலும் பெரிதாக இருக்கின்றது.