சங்க இலக்கிய அருஞ்சொற்களஞ்சியம்

முனைவர் ப.பாண்டியராஜா
(www.tamilconcordance.in)


105

52

77

24

121

13

36

20

5

32

20

1
க்
124
கா
24
கி
12
கீ
2
கு
58
கூ
17
கெ
9
கே
7
கை
23
கொ
48
கோ
28
கௌ
1
ங் ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
15
சா
42
சி
51
சீ
7
சு
29
சூ
13
செ
66
சே
17
சை
1
சொ
6
சோ
4
சௌ
ஞ்
3
ஞா
15
ஞி
4
ஞீ ஞு ஞூ ஞெ
17
ஞே ஞை ஞொ
1
ஞோ ஞௌ
ட் டா டி டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ
ண் ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
113
தா
23
தி
54
தீ
13
து
76
தூ
25
தெ
44
தே
25
தை
6
தொ
44
தோ
16
தௌ
1
ந்
82
நா
44
நி
40
நீ
21
நு
30
நூ
11
நெ
39
நே
12
நை
3
நொ
24
நோ
13
நௌ
1
ப்
245
பா
80
பி
63
பீ
7
பு
173
பூ
19
பெ
48
பே
25
பை
22
பொ
76
போ
37
பௌ
1
ம்
240
மா
85
மி
35
மீ
13
மு
163
மூ
24
மெ
14
மே
30
மை
9
மொ
6
மோ
11
மௌ
1
ய்
2
யா
30
யி யீ யு யூ
2
யெ யே யை யொ யோ யௌ
ர் ரா ரி ரீ ரு ரூ ரெ ரே ரை ரொ ரோ ரௌ
ல் லா லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
வ்
236
வா
71
வி
120
வீ
15
வு வூ வெ
81
வே
67
வை
18
வொ வோ வௌ
2
ழ் ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன் னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்

ஏ – (பெ) 1. அம்பு, arrow
2. பெருக்கம், abundance
3. செருக்கு,இறுமாப்பு, pride, arrogance
1.
ஏ உறு மஞ்ஞையின் நடுங்கி இழை நெகிழ்ந்து – முல் 84
அம்பு தைத்த மயில் போல நடுங்கி, அணிகலன்கள் நெகிழ்ந்து,
2.
கதிர் கதம் கற்ற ஏ கல் நெறி இடை – அகம் 177/8
ஞாயிற்றின் கதிர் சினத்தைப் பயின்ற பெருக்கமான கற்கள் பொருந்திய சுரநெறியில்
3.
இம்மென் பேர் அலர் இவ்வூர் நம்வயின்
செய்வோர் ஏ சொல் வாட – அகம் 323/1,2
இம்ம்ர்ன்று எழும் பெரிய பழிச்சொற்களை இவ்வூரில் நம்மேல்
செய்வோரின் செருக்குற்ற சொல் அழிய

ஏக்கறு

ஏக்கறு – (வி) 1. ஏங்கி விரும்பு, desire with a longing
2. நலிவடை, suffer from weariness, languish;
1.
மதி ஏக்கறூஉம் மாசு அறு திரு முகத்து – சிறு 157
திங்கள் ஏக்கமுற்று விரும்புகின்ற களங்கமற்ற அமைதியினையுடைய முகத்தினையும்
2.
கோடு ஏந்து புருவமொடு குவவு நுதல் நீவி
நறும் கதுப்பு உளரிய நன்னர் அமையத்து
வறும் கை காட்டிய வாய் அல் கனவின்
ஏற்று ஏக்கற்ற உலமரல் – அகம் 39/21-24
பக்கம் உயர்ந்த புருவங்களுடன் திரண்டு குறுகிய நெற்றியை நீவிவிட்டு,
மணமுள்ள பக்கக் கூந்தலைக் கோதிவிட்ட நல்ல நேரத்தில்
வெறுங்கையாய் ஆக்கிய அந்தப் பொய்க் கனவினின்றும்
கண்விழித்து உள்ளம் நலிவடைந்த துயரத்தை

ஏதப்பாடு

ஏதப்பாடு – (பெ) ஏதம் : பார்க்க ஏதம்
ஏதப்பாடு எண்ணி புரிசை வியல் உள்ளோர் – கலி 81/25
(கள்வரால் வரும்)கேடுகளை எண்ணி, மதில் அகத்தே உள்ள ஊரின் காவலர்

ஏதம்

ஏதம் – (பெ) 1. குற்றம், பிழை, fault, blemish
2. துன்பம், suffering, affliction
1.
நின்னொடு சொல்லின் ஏதமோ இல்லை-மன்
ஏதம் அன்று எல்லை வருவான் விடு – கலி 113/12,13
உன்னோடு பேசிக்கொண்டிருப்பதில் பிழையேதும் இல்லை அன்றோ?
பிழையொன்றும் இல்லை, நாளை வருகிறேன் விடு!
2.
ஆதிமந்தி போல
ஏதம் சொல்லி பேது பெரிது உறலே – அகம் 236/20,21
ஆதிமந்தியைப் போல
துன்பத்தைச் சொல்லிப் பெரிதும் மயங்குதல்

ஏதிலன்

ஏதிலன் – (பெ) 1. அந்நியர், அயலார், stranger
2. சற்றும் தொடர்பற்றவர், one who is not involved in the matter
3. பகைவன், enemy
1.
ஏதிலார் கூறும் சொல் பொருள் ஆக மதித்தாயோ – கலி 14/13
ஊரிலுள்ள அயலார் கூறும் சொற்களை ஒரு பொருட்டாக மதித்தாயோ?
2.
ஏதிலார் தந்த பூ கொள்வாய் – கலி 111/14
யாரோ ஒருவர் கொடுத்த பூவைக் கையில் கொண்டிருக்கிறாய்,
3.
ஏதிலான் படை போல இறுத்தந்தது இளவேனில் – கலி 27/8
வேற்றுநாட்டவன் படைகள் கொஞ்சங்கொஞ்சமாய் ஆக்கிரமிப்பது போல் வந்து தங்கியது இளவேனில்

ஏதில்

ஏதில் – (பெ.அ) 1. அந்நியமான, strange
2. சற்றும் தொடர்பற்ற, not connected with
3. பகையுள்ள, inimical
1.
ஏதில் மாக்கள் நுவறலும் நுவல்ப – குறு 89/2
அயலோரான அறிவிலிகள் குறைகூறுதலையும் செய்வர்
2.
ஏதில் வேலன் கோதை துயல்வரத்
தூங்குமாயின் அதூஉம் நாணுவல் – அகம் 292/5,6
இதனுடன் சற்றும் தொடர்பற்ற வேலன் தன் மார்பில் மாலை அசைந்திட
வெறி ஆடுவானாயின் அதனையும் நாணி நிற்பேன்.
3.
ஏதில் மன்னர் ஊர் கொள – அகம் 346/24
பகை மன்னரது ஊரினைப் பற்றிக்கொள்ள

ஏத்து

ஏத்து – (வி) புகழ்,துதி, வாழ்த்து, praise, extol, bless
யாண்டோரும் தொழுது ஏத்தும் இரங்கு இசை முரசினாய் – கலி 100/6
எந்நாட்டவரும் தொழுது போற்றும் முழங்கும் ஒலியையுடைய முரசையுடையவனே!

ஏந்தல்

ஏந்தல் – (பெ) 1. தலைவன், leader
2. சான்றோன், noble person
3. ஏந்திப்பிடித்தல், stretching out
1.
இரும் களிற்று இன நிரை ஏந்தல் வரின் – குறு 180/2
பெரிய களிற்றுயானைகளின் கூட்டத்துக்குத் தலைவனாகிய களிறு வந்துபுகுந்ததால்
2.
எழு கையாள எண் கை ஏந்தல் – பரி 3/38
ஏழு கைகளைக் கொண்டவனே! எட்டுக் கைகளைக் கொண்ட சான்றோனே!
3.
ஏந்தல் வெண் கோடு வாங்கி குருகு அருந்தும் – அகம் 381/3
ஏந்தலாக இருக்கும் வெண்மையான கொம்பினைக் குடைந்து பறவைகள் தின்னும்

ஏனம்

ஏனம் – (பெ) பன்றி, pig, wild hog, boar
வளை மருப்பு ஏனம் வரவு பார்த்திருக்கும் – பெரும் 110
வளைந்த கொம்பினையுடைய பன்றியின் வரவைப் பார்த்து நிற்கும்

ஏனல்

ஏனல் – (பெ) தினை, a millet
கொய் பதம் உற்றன குலவு குரல் ஏனல் – மலை 108
கொய்யப்படும் பக்குவம் பெற்றன பிணைந்துகிடக்கும் கதிர்களையுடைய தினை

ஏமம்

ஏமம் – (பெ) 1. பாதுகாவல், பாதுகாப்பு, protection, guard, safety
2. ஆறுதல், ஆற்றுவது, consolation, solace
3. இன்பம், களிப்பு, pleasure, delight
1.
எல்_இடை கழியுநர்க்கு ஏமம் ஆக – பெரும் 66
பகற்பொழுதில் வழிப்போவார்க்குப் பாதுகாவலாக இருக்க,
2.
நோய் மலி நெஞ்சிற்கு ஏமம் ஆம் சிறிதே – நற் 133/11
நோய்மிக்க என் நெஞ்சினை ஆற்றுவதாய் இருக்கிறது ஓரளவுக்கு
3.
எவ்வ நெஞ்சிற்கு ஏமம் ஆக
வந்தனளோ நின் மட_மகள் – ஐங் 393/3,4
உன் இன்னலுற்ற நெஞ்சத்திற்கு இன்பம் உண்டாகும்படி
வருகிறாளோ உன் இளைய மகள்? –

ஏமா

ஏமா – (வி) 1. மகிழ், இன்பமடை, rejoice
2. ஆசைப்படு, desire
3. ஏமாந்துபோ, get disppointed
4. கலக்கமுறு, be perplexed
1.
நின் பயம் பாடி விடிவு உற்று ஏமாக்க – பரி 7/85
உன்னால் கிடைக்கும் இன்பமான பயனைப் பாடி, துன்பம் நீங்கப்பெற்று மகிழ்வோமாக
2.
அருந்த ஏமாந்த நெஞ்சம் – புறம் 101/9
உண்ண ஆசைப்பட்ட நெஞ்சே!
3.
பெரும் தேன் கண்படு வரையில் முது மால்பு
அறியாது ஏறிய மடவோன் போல
ஏமாந்தன்று இ உலகம் – குறு 273/5-7
பெரிய தேனிறால் தங்கியிருக்கும் மலைப்பக்கத்தில், பழைய கண்ணேணியின்மேல்
அறியாமல் ஏறிய அறிவிலியைப் போல
ஏமாந்தது இந்த உலகம்
4.
நெஞ்சு ஏமாப்ப இன் துயில் துறந்து – மது 575
நெஞ்சு கலக்கமுறும்படி இனிய கூட்டத்தைக் கைவிட்டு,

ஏமார்

ஏமார் – (வி) 1. தடுமாறு, மனங்கலங்கு, be confused, be perplexed
2. பாதுகாவலடை, be protected
3. இன்பமடை, rejoice

1.
கோட்டு_மீன் எறிந்த உவகையர் வேட்டம் மடிந்து
எமரும் அல்கினர் ஏமார்ந்தனம் – நற் 49/5,6
சுறாமீன்களைப் பிடித்த மகிழ்ச்சியையுடையவராய், தம் வேட்டையை விடுத்து
எமது இல்லத்தோரும் மனையில் தங்கினர்; யாம் மனம் கலங்கினோம்
2.
ஆடு தலை துருவின் தோடு ஏமார்ப்ப
கடை_கோல் சிறு தீ அடைய மாட்டி – அகம் 274/4,5
அசையும் தலையினையுடைய செம்மறியாட்டின் தொகுதி பாதுகாவல் அடைய
கடையும்கோலிலிருந்துஎழுந்த சிறி தீயை வளர்ந்திட விறகினால் சேர்த்து
3.
கயம் தலை மட பிடி இனன் ஏமார்ப்ப
புலி பகை வென்ற புண் கூர் யானை – அகம் 202/2,3
மெல்லிய தலையினையுடைய இளைய பெண்யானை தன் இனத்துடன் இன்பமடைய
புலியாகிய பகையை வென்ற புண் மிக்க ஆண்யானை

ஏமுறு

ஏமுறு – (வி) 1. இன்பமடை, மகிழ்ச்சியடை, be glad, delighted
2. மயக்கமுறு, be perplexed
3. காக்கப்படு, be potected
4. வெறிபிடி, பித்துப்பிடி, be mad
5. வருத்தப்படு, be in sorrow
6. அலைக்கழிக்கப்படு, be harassed
1.
ஏமுறு புணர்ச்சி இன் துயில் மறந்தே – அகம் 393/26
(உன்) இன்பம்வாய்ந்த கூட்டமாகிய இனிய துயிலினை மறந்து
2.
எவ்வம் கூர்ந்த ஏமுறு துயரம் – நற் 273/2
துன்பம் மிக்க மயக்கம்தருகின்ற துயரத்தை
3.
ஏமுறு நாவாய் வரவு எதிர்கொள்வார் போல் – பரி 10/39
காவல்பொருந்திய நாவாயின் வரவை எதிர்கொள்ளும் வணிகர் போல,
4
எறி உளி பொருத ஏமுறு பெரு மீன் – அகம் 210/2
எறியப்பட்ட உளி தாக்கியதால் வெறிபிடித்த பெரிய மீன்
5.
கவல் ஏமுற்ற வெய்து வீழ் அரி பனி – நற் 30/6
கவலையினால் வருத்தப்பட்டதால் வெப்பமாக விழும் அரித்தோடும் கண்ணீருடன்,
6.
கால் ஏமுற்ற பைதரு காலை – நற் 30/7
காற்றால் அலைக்கழிக்கப்பட்டுத் துன்புற்ற பொழுதில்

ஏய்

ஏய் – (வி) 1. ஒப்பாகு, be similar to
2. பொருந்து, be constituted, comprise
3. பரவிக்கிட, spread out
4. ஏவிவிடு, send forth
1.
குன்றி ஏய்க்கும் உடுக்கை – குறு 0/3
குன்றிமணியைப் போன்றிருக்கும் சிவந்த ஆடை
2.
ஐது ஏய்ந்து அகன்ற அல்குல் – நற் 252/8
மென்மை பொருந்தி அகன்ற அல்குலையும்
3.
கள்ளி ஏய்ந்த முள்ளி அம் புறங்காட்டு – புறம் 363/10
கள்ளிகள் பரந்து மூடிய முட்செடிகள் நிறைந்த முதுகாட்டின்
4.
தூது ஏய வண்டின் தொழுதி முரல்வு – பரி 8/36
தலைவியரால் தூதாக ஏவிவிடப்பட்ட வண்டுக் கூட்டத்தின் இனிய இசை

ஏர்

ஏர் – 1 (வி) ஒத்திரு, resemble
2 (பெ) 1. அழகு, beauty
2. கலப்பை, plough
1.
மதி ஏர் வெண்குடை அதியர் கோமான் – புறம் 392/1
முழுமதியைப் போன்றிருக்கும் வெண்கொற்றக்குடையைக் கொண்ட அதியர் வேந்தன்
2.1.
அரி ஏர் உண்கண் அரிவையர் ஏத்த – சிறு 215
செவ்வரி பொருந்தின அழகிய மையுண்ட கண்ணினையுடைய மகளிர் புகழ,
2.2.
நல் ஏர் நடந்த நசை சால் விளை வயல் – மது 173
நல்ல கலப்பை உழுத விரும்புதல் அமைந்த விளைகின்ற வயல்களில்

ஏழகம் – (பெ) ஆடு, sheep, ram
ஏழக தகரோடு எகினம் கொட்கும் – பெரும் 326
ஆட்டுக்கிடாயுடன் எகினம் சுழன்று திரியும்

ஏறு

ஏறு – 1. (வி) 1. மேலேசெல், climb
2. (பெ) 1. காளை, bull
2. இடி, thunderbolt
3. எருமை,பன்றிபோன்ற விலங்குகளின் ஆண், male of animals suchas pig, buffalo etc.,
1.
வேனில் ஓதி நிறம் பெயர் முது போத்து 5
பாண் யாழ் கடைய வாங்கி பாங்கர்
நெடு நிலை யாஅம் ஏறும் தொழில – நற் 186/5-7
வேனில்காலத்து பச்சோந்தியின், தன் நிறத்தை மாற்றிக்கொள்ளும் முதிய ஆணானது
பாணர்கள் யாழினை இசைக்க, அதனைக் கேட்டு, அருகிலிருக்கும்
நெடியதாய் நிற்கும் யா மரத்தில் ஏறும் தொழிலையுடையது
2.1
ஏறு உடை இன நிரை வேறு புலம் பரப்பி – நெடு 4
காளைகளையுடைய (பல்வேறு)இனம் சேர்ந்த மந்தையை(மேடான)முல்லை நிலத்தில் மேயவிட்டு
2.2
நீல் நிற விசும்பின் வல் ஏறு சிலைப்பினும் – பெரும் 135
நீல நிற மேகத்தில் வலிய உருமேறு இடித்தாலும்,
2.3
திரி மருப்பு இரலை அண்ணல் நல் ஏறு
அரி மட பிணையோடு அல்கு நிழல் அசைஇ – குறு 338/1,2
முறுக்கேறிய கொம்புகளையுடைய இரலையாகிய தலைமைப்பண்புள்ள நல்ல ஆண்மான்
மென்மையையும் மடப்பத்தையும் கொண்ட பெண்மானோடு தங்குதற்குரிய நிழலில் ஓய்வெடுத்து

ஏற்றை

ஏற்றை – (பெ) ஆற்றலோடுகூடிய ஆண்பால் விலங்கு, Male of any animal remarkable for physical strength;
கூர் உகிர் ஞமலி கொடும் தாள் ஏற்றை
ஏழக தகரோடு உகளும் முன்றில் – பட் 140,141
கூரிய நகங்களையுடைய நாயின் வளைந்த பாதங்களையுடைய ஆணானது 140
ஆட்டுக் கிடாயுடன் குதிக்கும் (பண்டசாலையின்)முற்றத்தையும்

ஏழகம்
ஏழில்

ஏழில் – (பெ) நன்னன் என்னும் மன்னது மலை,
Name of a hill which belonged to Nannan, an ancient chief of the Tamil country
இன மழை தவழும் ஏழில் குன்றத்து – அகம் 345/7
கூட்டமான மேகங்கள் தவழும் ஏழில்குன்றத்தில்