சங்க இலக்கிய அருஞ்சொற்களஞ்சியம்

முனைவர் ப.பாண்டியராஜா
(www.tamilconcordance.in)


105

52

77

24

121

13

36

20

5

32

20

1
க்
124
கா
24
கி
12
கீ
2
கு
58
கூ
17
கெ
9
கே
7
கை
23
கொ
48
கோ
28
கௌ
1
ங் ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
15
சா
42
சி
51
சீ
7
சு
29
சூ
13
செ
66
சே
17
சை
1
சொ
6
சோ
4
சௌ
ஞ்
3
ஞா
15
ஞி
4
ஞீ ஞு ஞூ ஞெ
17
ஞே ஞை ஞொ
1
ஞோ ஞௌ
ட் டா டி டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ
ண் ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
113
தா
23
தி
54
தீ
13
து
76
தூ
25
தெ
44
தே
25
தை
6
தொ
44
தோ
16
தௌ
1
ந்
82
நா
44
நி
40
நீ
21
நு
30
நூ
11
நெ
39
நே
12
நை
3
நொ
24
நோ
13
நௌ
1
ப்
245
பா
80
பி
63
பீ
7
பு
173
பூ
19
பெ
48
பே
25
பை
22
பொ
76
போ
37
பௌ
1
ம்
240
மா
85
மி
35
மீ
13
மு
163
மூ
24
மெ
14
மே
30
மை
9
மொ
6
மோ
11
மௌ
1
ய்
2
யா
30
யி யீ யு யூ
2
யெ யே யை யொ யோ யௌ
ர் ரா ரி ரீ ரு ரூ ரெ ரே ரை ரொ ரோ ரௌ
ல் லா லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
வ்
236
வா
71
வி
120
வீ
15
வு வூ வெ
81
வே
67
வை
18
வொ வோ வௌ
2
ழ் ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன் னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்
ஆகம்

ஆகம் – (பெ) மார்பு, breast
edde
அணி முலை ஆகம் முயங்கினம் செலினே – குறு 274/8
அழகிய முலைகலைக் கொண்ட மார்பைத் தழுவிச் சென்றால்

ஆகுலம்

ஆகுலம் – (பெ)1. பேரொலி, clamour, din 2. துன்பம், grief

கடுவெயில் கொதித்த கல்விளை உப்பு
நெடுநெறி ஒழுகை நிரைசெலப் பார்ப்போர்
அளம் போகு ஆகுலம் கடுப்ப – நற் 354/8-10
கடுமையான வெயிலில் கொதிக்கின்ற கல்லாக விளைந்த உப்பை ஏற்றிக்கொண்டு
நீண்ட வழிகளிலே செல்லும் வரிசையான உப்பு வண்டிகளைச் செலுத்தும் உமணர்
உப்பளத்து வெளிகளில் போகும் பேரொலியைப் போல

நம் ஊர்க்கு எலாஅம்,
ஆகுலம் ஆகி விளைந்ததை – கலி 65/27
நமக்கு எல்லாம்
துன்பம்தரும் நிகழ்ச்சியாக முடிந்தது.

ஆகுளி

ஆகுளி – (பெ) இசையெழுப்பும் ஒரு தோற்கருவி. உடுக்கை போன்றது – a kind of small drum

இதை நுண்ணிதாக இயக்கவேண்டும் என்றும் இதன் ஓசை டும்,டும்; டும்டும் என்று
இரட்டையாக ஒலிக்கும் என்றும் மதுரைக்காஞ்சி கூறுகிறது

நுண் நீர் ஆகுளி இரட்ட – மது 606
நுண்ணிய இயல்புள்ள ஆகுளி இரண்டிரண்டாக ஒலி எழுப்ப

இதன் முகத்தில் விரலால் தட்டி ஒலி எழுப்பவர் என்று மலைபடுகடாம் கூறுகிறது

விரல் ஊன்று படு கண் ஆகுளி கடுப்பக்
குடிஞை இரட்டும் நெடுமலை அடுக்கத்து – மலை 140
விரல் ஊன்றிப் படிகின்ற ஒலியெழுப்பும் கண்ணையுடைய ஆகுளியைப் போன்று
பேராந்தைகள் இரட்டையாக ஒலிக்கும் நீண்டமலையின் சரிவுகளில்

ஆசினி

ஆசினி – (பெ) ஒரு வகைப் பலா, Bread-fruit tree, Artocarpus incisa

இது ஈரப்பலா என்றும் அழைக்கப்படும்.
இதன் மரம் நீண்டு உயர்ந்தது என்று கூறுகின்றன மலைபடுகடாமும், அகநானூறும்.

அரலை உக்கன நெடும் தாள் ஆசினி – மலை 139
நெடும் கால் ஆசினி ஒடுங்காட்டு உம்பர் – அகம் 91/12

இதனுடைய காய் குடம்போன்று இருக்கும் என்கிறது நற்றிணை.

குடக் காய் ஆசினி படப்பை – நற் 44/9
குடம்போன்ற காயையுடைய ஆசினிப்பலாவையுடைய தோட்டத்தில்

இதனுடைய பழம் மென்மையாக இருக்கும் என்று கலித்தொகை குறிப்பிடுகிறது

ஆசினி மென் பழம் அளிந்தவை உதிரா – கலி 41/12
ஆசினிப்பலாவின் மெல்லிய பழங்களில் நெகிழ்ந்தவற்றை உதிர்த்து

ஆசு

ஆசு – (பெ) 1.குற்றம், blemish 2. பற்றுக்கோடு, support, hold

ஆசு இல் அங்கை அரக்கு தோய்ந்து அன்ன – சிறு 74
குற்றமில்லாத உள்ளங்கையில் சாதிலிங்கத்தைத் தோய்த்ததைப் போல

ஆசு ஆகு எந்தை யாண்டு உளன்-கொல்லோ – புறம் 307/1
எமக்குப் பற்றுக்கோடாக இருக்கும் எம் தலைவன் எவ்விடத்தே உள்ளானோ?

ஆட்டன்அத்தி

ஆட்டன்அத்தி – (பெ) சங்ககால நீச்சல் நடனக்காரன், an ancient synchronized swimmer

இவனது மனைவியின் பெயர் ஆதிமந்தி. இவர் பெயரில் ஒரு சங்ககாலப் புலவர் உண்டு.
(குறுந்தொகை – 31).
கழார் என்ற காவிரி ஆற்றுத்துறையில் இந்த ஆட்டனத்தி மன்னன் கரிகாலன் முன்னிலையில்
நீரில் பல சாகசங்கள் செய்துகாண்பித்துக்கொண்டிருந்தபோது, திடீரென்று வந்த வெள்ளத்தால்
அடித்துக்கொண்டுபோகப்படுகிறான். இவனது மனைவியான ஆதிமந்தி காவிரிக் கரையோரமாகவே
இவனைத் தேடிக்கொண்டு செல்கிறாள். ஆற்றில் அடித்துக்கொண்டுவரப்பட்ட ஆட்டன் அத்தியை
மருதி என்ற மீனவப்பெண் காப்பாற்றி அவனுடன் வாழ்கிறாள். இறுதியில் ஆதிமந்தி அவர்கள்
இருப்பிடத்தைக் கண்டுபிடித்தபின், ஆட்டனத்தியை ஆதிமந்தியிடம் ஒப்படைத்துவிட்டு மருதி
கடலுள் மாய்ந்துகொள்கிறாள்.
இவர்களைப் பற்றிய விரிவான செய்திகள் பரணர் என்ற புலவரால் அகநானூறு 45, 76, 135, 222, 236, 376
ஆகிய பாடல்களில் கூறப்பட்டுள்ளன.
இவனின் மனைவியான ஆதிமந்தி கரிகாற்சோழனின் மகள் என்று கூறுவாரும் உண்டு.

ஏற்றியல் எழில்நடைப் பொலிந்த மொய்ம்பின்
தோட்டு இரும் சுரியல் மணந்த பித்தை
ஆட்டன்அத்தியை காணீரோ என
நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின்
கடல்கொண்டன்று எனப் புனல் ஒளித்தன்று எனப்
கலுழ்ந்த கண்ணள் காதலன் கெடுத்த
ஆதிமந்தி போல – அகம் 236/14-20

ஆணம்

ஆணம் – (பெ) அன்பு, நேயம், love, affection

ஆணம் இல் பொருள் எமக்கு அமர்ந்தனை ஆடி – கலி 1/17
அன்பற்ற பொருளாகிய எம்மிடத்து வந்து பொருந்தி நின்றாய்

ஆண்டலை

ஆண்டலை – (பெ) ஓர் ஆந்தை வகை, brown hawk-owl (Ninox scutulata), brown boobook

பாழடைந்த இடங்களில் வசிக்கும் ஆந்தையினப் பறவை.
ஓர் ஆணின் தலையைப் போன்ற தலையைக் கொண்டிருப்பதால் ஆண்டலை என்ற
பெயர் பெற்றதென்பர். (ஆண் + தலை = ஆண்டலை)

இது ஒரு விலங்கு என்பாரும் உளர். எனினும் கலித்தொகையில் ஆண்டலைப்புள் என்று குறிப்பாகச்
சொல்லப்பட்டிருப்பதால் (ஆண்டலைப்புள் அருகணைந்து பார்க்கு மாலோ – கலிங்கத்.4:16)
இது ஒரு பறவையே என்பது பெறப்படும்.

ஒரு வகைக் காட்டுக்கோழி என்பாரும் உளர்.

சாவோர்ப் பயிரும் கூகையின் குரலும்
புலவூண் பொருந்திய குராலின் குரலும்
ஊண்டலை துற்றிய ஆண்டலைக் குரலும் – மணி.6 : 75-77
என்கிறது மணிமேகலை. இங்கு கூகையும், குராலும் ஆந்தையின் வகைகள். எனவே ஆண்டலையும்
ஆந்தையின் இன்னொரு வகையாக என்பது பெறப்படும்.

கூகையோடு ஆண்டலை பாட ஆந்தை
கோடதன் மேற்குதித்து ஓட – (திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம்-3)
என்ற பாடல்மூலம் இது உறுதியாகிறது.

பறவைநூலாராகிய க.ரத்னம் ஆண்டலையை ‘HAWK – OWL BROWN’ என ஆந்தை இனத்தைச் சேர்ந்த
ஓர் உயிரியாகவே அடையாளப்படுத்துகின்றார். (ரத்னம் க., 1998, தமிழில் பறவைப் பெயர்கள்,
உலகம் வெளியீடு, சூலூர், கோவை)

பெருவிழாக் கழிந்த பேஎம் முதிர் மன்றத்துச்
சிறுபூ நெருஞ்சியோடு அறுகை பம்பி
அழல்வாய் ஓரி அஞ்சுவரக் கதிர்ப்பவும்
அழு குரல் கூகையோடு ஆண்டலை விளிப்பவும் – பட் 255-258
திருநாள் இல்லையான அச்சம் முதிர்ந்த மன்றத்தில்
சிறிய பூக்களையுடைய நெருஞ்சியோடே அறுகம்புல் பரவி
நெருப்புப்போன்ற வாயையுடைய நரிகள் அச்சம்வரும்படி ஊளையிடவும்
அழுகுரல் கூகையோடு ஆண்டலைகள் கூப்பிடவும்

ஆண்டலை, ஊமன், குடிஞை, குரால், கூகை என்பன தமிழ்நாட்டு ஆந்தை வகைகள்.

பார்க்க : ஊமன் குடிஞை
குரால் கூகை

ஆதன்

ஆதன் – (பெ) சங்க காலத்து ஆண்கள் வைத்துக்கொள்ளும் பொதுப்பெயர்,
A proper name in general use in ancient times.

வாழி ஆதன் வாழி அவினி – ஐங் 1/1
அடு போர் ஆனா ஆதன் ஓரி – புறம் 153/4
நெடுவேள் ஆதன் போந்தை அன்ன – புறம் 338/4
அந்துவன்சாத்தனும் ஆதன்அழிசியும் – புறம் 71/13
ஆதனுங்கன் போல நீயும் – புறம் 389/13
ஆதன்எழினி அரு நிறத்து அழுத்திய – அகம் 216/14

ஆதிமந்தி

ஆதிமந்தி – (பெ) – பார்க்க – ஆட்டன்அத்தி

காதலன் கெடுத்த சிறுமையொடு நோய்கூர்ந்து
ஆதிமந்தி போல பேது உற்று – அகம் 45/13, 14
காதலனைக் காணாமற்போக்கிய சிறுமையோடு, மிக்க வருத்தமுற்று
ஆதிமந்தியைப் போல கலக்கமுற்று

ஆதிமந்தி பேது உற்று இனைய – அகம் 76/10
ஆதிமந்தியின் அறிவு பிறிது ஆகி – அகம் 135/5
ஆதிமந்தி காதலன் காட்டி – அகம் 222/10

ஆதிரை

ஆதிரை – (பெ) திருவாதிரை – ஒரு நட்சத்திரம், The 6th nakṣatra, part of Orion
இந்திய வானியலில் பேசப்படும் 27 விண்மீன்களுள் ஆறாவது விண்மீன் ஆதிரையாகும். மேற்கத்திய
வழக்கில் இது Betelgeuse எனப்படும். ஓரியன் குழும விண்மீன்களில் தலைப்பக்கத்தில் வலப்பக்கம்
இருக்கும் பெரிய விண்மீன் இது.

மா இரும் திங்கள் மறு நிறை ஆதிரை
விரி நூல் அந்தணர் விழவு தொடங்க – பரி 11/77,78
பெரிய களங்கமாகிய மறுவோடு விளங்கும் திங்களின், திருவாதிரைநாளில்
விரிந்த நூலோரான அந்தணர் விழாச் செய்தலைத் தொடங்க

ஆதிரையான்

ஆதிரையான் – (பெ) திருவாதிரை மீனுக்குரிய சிவன்

அரும் பெறல் ஆதிரையான் அணிபெற மலர்ந்த – கலி 150/20

ஆத்தி

ஆத்தி – (பெ) கருங்காலி மரம், common mountain ebony, Bauhinia racemosa

அடும்பு அமர் ஆத்தி நெடும் கொடி அவரை – குறி 87

ஆநியம்

ஆநியம் – (பெ) மழை பெய்வதற்குரிய நல்லநாள்

நிலம் பயம் பொழியச் சுடர் சினம் தணியப்
பயம் கெழு வெள்ளி ஆநியம் நிற்ப
விசும்பு மெய்யகலப் பெயல்புரவு எதிர் – பதி 69/13 – 15
நிலம் தன் பயனைக் கொடுக்க, ஞாயிறு வெப்பம் தணிய
நல்ல பயனைச் செய்யும் வெள்ளி எனும் கோள் மழைக்குக்காரணமாகிய ஏனைக் கோள்களுடன் நிற்க,
வானம் மேகங்களால் நிரம்ப, மழை தன் புரக்கும் செயலைச் செய்ய

ஆனா

ஆனா – (பெ.அ) 1. எல்லைகடந்த, அடங்காத, boundless 2. நீங்காத, unceasing
3. அழிக்கமுடியாத, imperishable 4. எண்ணிலடங்காத, innumerable
1.
ஆனா விருப்பின் தான் நின்று ஊட்டி – சிறு 245
எல்லையற்ற விருப்பத்தைனால் தானே முன்னின்று உண்ணச்செய்து
2.
அழித்து ஆனா கொழும் திற்றி – மது 211
செலவழித்தும் நீங்காத கொழுத்த தசைகள்
3.
ஆனா நோயோடு அழி படர் கலங்கி – நற் 185/1
அழிக்கமுடியாத நோயுடன் துன்பம் மிகுதியால் கலக்கமெய்தி
4.
ஈதல் ஆனா இலங்கு தொடி தட கை – புறம் 337/5
கொடுப்பதில் எண்ணிலடங்காத ஒளிறும் தொடி அணிந்த கைகள்

ஆன்

ஆன் – (பெ) 1. பசு, cow, 2. எருமை போன்ற மாடுவகை இனங்களில் பெண், female buffalo
சில நேரங்களில் காளை, எருது போன்ற ஆண் இனத்தையும் குறிக்கும்.

ஆன் கணம், கன்று பயிர் குரல – குறி 217
பசுக்கூட்டம் தம் கன்றுகளை அழைத்து ஒலிக்க

திரி மருப்பு எருமை இருள் நிற மை ஆன் – குறு 279/1
முறுக்கிய கொம்புகளையுடைய எருமையின் இருண்ட நிறமுள்ள காரெருமை

வேனில் ஆன் ஏறு போல – குறு 74/4
வேனில்காலத்துக் காளை போல

ஆன்பொருநை

ஆன்பொருநை – (பெ) கரூர் அருகிலுள்ள ஓர் ஆறு, A river near Karur

திருமா வியல்நகர்க் கருவூர் முன்றுறைத்
தெள் நீர் உயர்கரைக் கவைஇய
தண் ஆன்பொருநை மணலினும் பலவே – அகம் 93/23

ஆன்ற

ஆன்ற – 1. (வி) இல்லாமற்போன, ceased to exist
2. (பெ.அ) 2.1. சிறந்த, மாட்சிமைப்பட்ட, excellent, 2.2 அடங்கிய, subside, abate
1.
அருவி ஆன்ற பெரு வரை மருங்கில் – அகம் 91/3
அருவி இல்லாமற்போன பெரிய மலையின் பக்கத்தில்
2.1
ஆன்ற கற்பின் சான்ற பெரியள் – அகம் 198/12
சிறந்த கற்பினால் உயர்ந்த பெருமையுற்றவள்
2.2
அணிச்சிறை இனக்குருகு ஒலிக்குங்கால் நின் திண் தேர்
மணிக்குரல் என இவள் மதிக்கும் மன்; மதித்தாங்கே
உள் ஆன்ற ஒலியவாய் இருப்ப கண்டு அவை கானல்
புள் என உணர்ந்து – கலி 126/6-9
அழகிய சிறகுகளைக் கொண்ட கூட்டமான நாரைகள் ஒலிக்கும்பொழுது, உன் திண்ணிய தேரின்
மணி ஓசை என இவள் துணிந்தனள்; துணிந்தவுடனே
உள்ளே அடங்கிய ஒலியை உடையவாய் இருக்கக் கண்டு, அவை காட்டினில்
பறவைகள ஒலி என உணர்ந்து

ஆன்றிகம்

ஆன்றிகம் – (த.ப.வி.மு) பொறுத்திருப்போம், மேற்கொள்ளுவோம், Let us bear, Let us observe

படர் மிகப் பிரிந்தோர் உள்ளுபு நினைதல்
சிறு நனி ஆன்றிகம் என்றி தோழி – அகம் 301/3
துன்பம் மிக பிரிந்த தலைவரைப் பலகாலும் நினைந்து வருந்துதலை
சிறிது அதிகமாகவே பொறுத்திருப்போம் என்று கூறுகின்றாய்

ஆன்றிசின்

ஆன்றிசின் – (ஒ.வி.மு) மேற்கொள்ளுதலைக் குறிக்கும் சொல், assume, adopt, embrace

எமியேம் துணிந்த ஏமஞ்சால் அருவினை
நிகழ்ந்த வண்ணம் நீ நனி உணரச்
செப்பல் ஆன்றிசின் சினவாதீமோ – குறி 34
நாங்களாக துணிந்து செய்த பாதுகாப்பான இந்த அரிய செயலை
அது நிகழ்ந்த வண்னம் நீ நன்கு உணரும்படி
கூறுவதை மேற்கொண்டேன், கோபப்படாதே

கான்கெழு நாடன் மகளே
அழுதல் ஆன்றிசின் அழுங்குவல் செலவே – ஐங் 430/4
காடு பொருந்திய நாட்டையுடையோனின் மகளே
அழுகையை மேற்கொண்டாய் (ஆதலால்) தவிர்த்தேன் பயணத்தை

ஆன்று

ஆன்று – (வி.அ) 1. நிறைந்து, having been full 2. விரிந்து, having stretched our
3. நீங்கி, having ceased
அகன்று என்ற சொல் மருவி ஆன்று என்று ஆனது என்பர்.
1.
ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர் யான் வாழும் ஊரே – புறம் 191/6,6
நற்குணங்களால் நிறைந்த, புலன் அடக்கம் உள்ள, பணிவும் உள்ள கோட்பாட்டினையுடைய
சான்றோர் பலர் நான் இருக்கின்ற ஊரில் இருக்கின்றனர்.
2.
அட்டு ஆன்று ஆனா கொழும் துவை ஊன்சோறும் – புறம் 113/2
சமைத்து அதனை நீடித்தும் அழிக்கமுடியாத கொழுத்த துவையையும் ஊனுடைய சோறையும்
3.
நிழல் ஆன்று அவிந்த நீர் இல் ஆரிடை – குறு 356/1
நிழல் நீங்கி அற்றுப்போன நீர் அற்ற அரிய வழி

ஆப்பி

ஆப்பி – (பெ) பசுவின் சாணம், cow’s dung

அழுதல் ஆனாக் கண்ணள்
மெழுகும் ஆப்பி கண் கலுழ் நீரானே – புறம் 249/14
அழுதல் நிற்காத கண்ணையுடையவளாய்
மெழுகுகிறாள் சாணத்தைத் தன் கண் சிந்தும் கண்ணீரால்

ஆமா

ஆமா – (பெ) காட்டுப்பசு, wild cow, காட்டில் மேயும் பசு, cows grazing in forest
1.
தினைவிளை சாரல் கிளிகடி பூசல்
மணிப்பூ அவரைக் குரூஉத் தளிர் மேயும்
ஆமா கடியும் கானவர் பூசல் – மது 291-293
தினை விளையும் மலைச்சாரலில் வந்து வீழும் கிளிகளை ஓட்டும் ஓசையும்,
மணி போன்ற பூவினையுடைய அவரையின் நிறம் மிக்க தளிரைத் தின்னும்
காட்டுப்பசுக்களை ஓட்டுகின்ற கானவர் ஓசையும்
2.
மனைத்தலை மகவை ஈன்ற அமர்க்கண்
ஆமா நெடு வரை நன் புல் ஆர – புறம் 117/5
மனையிடத்துக் கன்றினை ஈன்ற அமர்த்த கண்களையுடைய
ஆமா நெடிய மலையில் நல்ல புல்லை மேய

ஆமான்

ஆமான் – (பெ) காட்டுப்பசு – பார்க்க – ஆமா

பனைமருள் எருத்தின் பல்வரி இரும்போத்து
மடக் கண் ஆமான் மாதிரத்து அலறத்
தடக்கோட்டு ஆமான் அண்ணல் ஏஎறு
நனந்தலைக் கானத்து வலம்படத் தொலைச்சி – அகம் 238/5 – 8
பனம் துண்டினைப் போன்ற பிடரியினையுடைய பலவரிகளையுடைய பெரிய ஆண்புலி
மடப்பம் பொருந்திய கண்களையுடைய காட்டுப்பசு அலற
வளைந்த கொம்பினையுடைய, காட்டுப்பசுவின் தலமைப்பண்புள்ள காளையை
அகன்ற இடமுள்ள காட்டினில் வலப்பக்கம் வீழக் கொன்று

ஆமூர்

ஆமூர் – (பெ) திண்டிவனத்துக்கு அருகிலுள்ள ஓர் ஊர், a city near Thindivanam
இதே பெயரில் வேறு சில ஊர்களும் இருந்திருக்கின்றன

அம் தண் கிடங்கின் அவன் ஆமூர் எய்தின் – சிறு 188
வெல் போர் சோழர் ஆமூர் அன்ன இவள் – ஐங் 56/2
சேண் விளங்கு சிறப்பின் ஆமூர் எய்தினும் – அகம் 159/19
இன் கடும் கள்ளின் ஆமூர் ஆங்கண் – புறம் 80/1

ஆம்பல்

ஆம்பல் – (பெ) அல்லி, Water-lily, nymphaea lotus

நீர் வளர் ஆம்பல் தூம்பு உடை திரள் கால் – நற் 6/1
நீரில் வளரும் ஆம்பலின் உள்துளையுள்ள திரண்ட தண்டு

ஆம்பி

ஆம்பி – (பெ) 1. காளான், common mushroom, 2. நீர் இறைக்கும் சால், பன்றிப்பத்தர், irrigation bucket
1.
ஆம்பி வான் முகை அன்ன கூம்பு முகிழ் – பெரும் 157
குடைக்காளானின் வெண்மையான முகைகளைப் போன்று குவிந்த மொட்டுகளையுடைய
2.
நீர்த்தெவ்வும் நிரைத் தொழுவர்
பாடு சிலம்பும் இசை ஏற்றத்
தோடுவழங்கும் அகல் ஆம்பியின்
கயன் அகைய வயல் நிறைக்கும் – மது 91,92
நீரினை முகக்கின்ற வரிசையான தொழிலாளிகள்
பாடுதலால் ஒலிக்கும் இசையும், ஏற்றத்தோடு
இயங்கும் அகன்ற பன்றிப்பத்தரின் ஓசையும்
குளம் குறைந்துபோகுமாறு வயலை நிறைக்கும்

ஆயம்

ஆயம் – (பெ) ஒருவரைச் சேர்ந்த கூட்டத்தார், fraternity, தோழியர் கூட்டம், female companions
(விலங்கினங்களின்)தொகுதி

செல்வ, சேறும் எம் தொல்பதிப் பெயர்ந்து என
மெல்லெனக் கிளந்தனமாக, வல்லே
அகறிரோ எம் ஆயம் விட்டு என
சிரறியவன்போல் செயிர்த்த நோக்கமொடு – பொரு 121 – 124
மன்னனே! யாங்கள் எம் பழைய ஊருக்குச் செல்வோம் என்று
மெல்லச் சொன்னபோது, விரைந்து
போகின்றீரோ எம் கூட்டத்தாரைவிட்டு என்று
வெகுண்டவனைப் போன்று எம்மை வருத்தும் பார்வையுடனே

மலர்ந்த பொய்கைப் பூக்குற்று அழுங்க
அயர்ந்த ஆயம் கண் இனிது படீஇயர் – நற் 115/1,2
விரிந்த பொய்கையிலுள்ள பூக்களைக் கொய்துவந்த சோர்வினால்
வருந்திய தோழியர் கூட்டம் இனிதாகக் கண்ணுறங்க

படு மணி மிடற்ற பய நிரை ஆயம் – அகம் 54/9
ஒலிக்கின்ற மணிகள் கட்டிய கழுத்தையுடைய பால்தரும் பசுக்களாகிய கூட்டம்

ஆயர்

ஆயர் – (பெ) இடையர், cowherds

மடவரே நல் ஆயர் மக்கள் நெருநை
அடல் ஏற்று எருத்து இறுத்தார்க் கண்டும் – கலி 102/30,31
அறியாமை உடையோரே இந்த நல்ல இடையர் பெருமக்கள், நேற்று
கொல்லுகின்ற காளையை அடக்கி அதன் கழுத்தில் ஏறினவர்களைக் கண்டும்

ஆரம்

ஆரம் – (பெ) 1. கழுத்தில் அணியும் அணிகலன் – மணிவடம், பூமாலை, வளையம், necklace, garland, neckring
2. ஆரக்கால், spoke of a wheel
3. சந்தனம் – மரம், குழம்பு sandalwood tree, paste
1.
ஒண் நுதல் விறலியர்க்கு ஆரம் பூட்டி – பதி 48/2
ஒள்ளிய நெற்றியையுடைய விறலியர்க்கு பொன்னரிமாலைகள் அணிவித்து
2.
ஆரம் சூழ்ந்த அயில் வாய் நேமியொடு – சிறு 253
ஆரக்கால்களைச் சூழ்ந்த கூரிய வாயையுடைய சூட்டினையுடைய சக்கரத்தோடே
3.
குட மலைப் பிறந்த ஆரமும் அகிலும் – பட் 188
மேற்குமலையில் வளர்ந்த சந்தனமரமும், அகில் மரமும்

ஆரம் நீவிய அணி கிளர் ஆகம் – நற் 344/6
சந்தனக்குழம்பு பூசிய அழகு விளங்கும் மார்பு

ஆரல்

ஆரல் – (பெ) 1. ஆரால் மீன், Brownish or greenish sand-eel, Rhynchobdella aculeata
2. கார்த்திகை, The third nakṣatra பார்க்க ஆல்-2
1.
ஒழுகு நீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டு – குறு 25/4,5
ஓடுகின்ற நீரில் இருக்கும் ஆரல்மீனைப் பார்க்கும்
நாரையும் உண்டு
2.
மணி மிடற்று அண்ணற்கு மதி ஆரல் பிறந்தோய் நீ – பரி 9/7
நீலமணிபோலும் கழுத்தை உடைய தலைவனுக்கு மதிப்புள்ள கார்த்திகைப் பெண்களிடத்தில் பிறந்தவனே

ஆரி

ஆரி – (பெ) கடினமானது, கடினம், difficulty

அலங்கு கழை நரலும் ஆரி படுகர் – மலை 161
ஆடுகின்ற மூங்கில்கள் ஒலிக்கும் கடினமான இறங்குவழிகள்

ஆரிடை

ஆரிடை – (பெ) கடினமாதை பாதை, அரிய வழி, Difficult or rugged path

(ஆர் + இடை = ஆரிடை, கடினமான இடைவெளி)

நிழல் ஆன்று அவிந்த நீர் இல் ஆரிடை
கழலோன் காப்ப கடுகுபு போகி – குறு 356/1,2
நிழல் முற்றும் இல்லாமற்போன நீர் இல்லாத அரிய வழியில்
கழலையணிந்தவன் காக்க, விரைந்து சென்று

ஆரை

ஆரை – (பெ) 1. புல்லால் செய்யப்பட்ட பாய், Mat made of rushes, 2. அச்சு, axle wood

ஆரை வேய்ந்த அறை வாய் சகடம் – பெரும் 50
பாயால் வேயப்பட்ட தரையை அறைத்துக்கொண்டுசெல்லும் வாயினையுடைய வண்டி

ஆரை சாகாட்டு ஆழ்ச்சி போக்கும் – புறம் 60/8
அச்சினையுடைய வண்டியின் அழுந்துதலைப் போக்கும்

ஆர்

ஆர் – 1. (வி) 1.1 நிறை, become full 1.2. நிறைவாக உண், eat gratifyingly
1.3. கொண்டிரு, be characterized by, 1.4. பொருந்து, to combine with , belong to
1.5. நுகர், அனுபவி, experience, enjoy 1.6. மிக்கு ஒலி shout, roar 1.7. பரவு, spread over
– 2. (பெ.அ) 2.1. அரிய, difficult 2.2. மிகுந்த, great
– 3. (வி.பெ) 3.1. யார், who
– 4. (பெ) 4.1. மலரின் புல்லிவட்டம், Calyx, 4.2. அழகு, beauty 4.3. ஆரம், spoke of a wheel
4.4. ஆத்திமரம், common mountain ebony

1.1
கண் ஆர் கண்ணி கடும் தேர் செழியன் – சிறு 65
கண்ணுக்கு நிறைந்த தலைமாலையையுடைய கடிய தேரை உடைய செழியன்
1.2.
ஒன்று அமர் உடுக்கை கூழ் ஆர் இடையன் – பெரும் 175
ஒன்றாய்ப் பொருந்தின உடையினையுடைய, கூழை விரும்பி உண்ணும் இடையன்
1.3
யானே தோடு ஆர் எல் வளை ஞெகிழ – குறு 216/3
நானே, தொகுதியைக் கொண்டிருக்கும் ஒளியையுடைய வளையல்கள் நெகிழ
1.4
சூது ஆர் குறும் தொடி சூர் அமை நுடக்கத்து – ஐங் 71/1
வஞ்சகம் பொருந்திய குறிய வளையலையுடைய, அஞ்சுவதற்குக் காரணமான நடையையுடைய
1.5
ஆரா காமம் ஆர் பொழில் பாயல் – பரி 8/40
தெவிட்டாத காம இன்பத்தை நுகர்ந்து இன்புறும் சோலையாகிய படுக்கை
1.6
வாகை ஒண்பூப் புரையும் உச்சிய
தோகை ஆர் குரல் – பரி 14/8
வாகையின் ஒள்ளிய பூப்போன்ற உச்சிக்கொண்டையைக் கொண்ட
மயில்களின் ஆர்ப்பரிக்கும் ஒலி
1.7
வடுப் படு மான்மதச் சாந்து ஆர் அகலத்தான் – பரி 16/44
வடுப்பட்டாற்போல கத்தூரிச் சாந்து பரவிக்கிடந்த மார்பினன்
2.1
வேறு பல் பெயர ஆர் எயில் கொள_கொள – மது 367
வேறுபட்ட பல பெயர்களையுடைய அழித்தற்கு அரிய அரண்களைக் கைக்கொள்ளக்கொள்ள
2.2
ஆர் கலி வானம் தலைஇ – நற் 53/5
மிக்க முழக்கத்துடன் மழைபெய்யத் தொடங்கி
3.1
ஆர் தர வந்தனன் ஆயினும் – நற் 119/4
யாராலே தரப்பட்டு வந்தவனாயினும்
4.1
புதுமலர், ஆர் கழல்பு உகுவ போல – குறு 282/7
புதிய மலர்கள், தம் காம்பினின்றும் கழன்று உதிர்வதைப் போல
4.2
ஆர் ததும்பும் அயில் அம்பு நிறை நாழி – பரி 18/30
அழகு ததும்பும் கூர்மையான அம்புகள் நிறைந்த அம்புக்கூடு
4.3
கல் பொருது இரங்கும் பல் ஆர் நேமி – அகம் 14/19
கற்களில் மோதி ஒலிக்கும் பல ஆர்க்கால்களையுடைய சக்கரம்
4.4
அம்பு கொண்டு அறுத்த ஆர் நார் உரிவையின் – அகம் 269/10
அம்பினால் அறுத்தெடுத்த ஆத்திமரத்தின் பட்டையாகிய நாரினால்

ஆர்கலி

ஆர்கலி – (பெ) 1. வெள்ளம், floods 2. கடல், sea 3. மிகுந்த ஆரவாரம் (ஆர்+கலி) loud noise
1.
பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென
ஆர்கலி முனைஇய கொடும் கோல் கோவலர் – நெடு 2,3
பொய்க்காத மேகங்கள் புதிய மழையைப் பெய்ததாக
வெள்ளத்தை வெறுத்த வளைந்த கோலையுடைய இடையர்கள்
2.
இரும் கழி இழிதரும் ஆர்கலி வங்கம் – புறம் 400/19
கருமையான கழியின் வழியாக வந்திறங்கும் கடல் ஓடங்கள்
3.
தீம்பெயல், காரும் ஆர்கலி தலையின்று – அகம் 54/3
இனிய மழையை, மேகமும் மிக்க ஒலியுடன் பெய்தது

ஆர்க்காடு

ஆர்க்காடு – (பெ) பண்டைத் தமிழகத்தில் இருந்த வளப்பமான ஓர் ஊர், a fertile ancient city

வண்டு மூசு நெய்தல் நெல்லிடை மலரும்
அரியல் அம் கழனி ஆர்க்காடு – நற் 190/6
வண்டுகள் மொய்க்க மலரும் நெய்தல் பூக்கள் நெற்பயிர்களுக்கிடையே மலர, அவற்றினின்றும்
தேன்வடியும் அழகிய வயல்களுள்ள ஆர்க்காடு எனும் ஊர்

ஏந்துகோட்டு யானைச் சேந்தன் தந்தை
அரியல் அம் புகவின் அம் தோட்டு வேட்டை
நிரைய ஒள்வாள் இளையர் பெருமகன்
அழிசி ஆர்க்காடு அன்ன – குறு 258/4-7
ஏந்திய மருப்பினையுடைய யானைகளுடைய சேந்தன் என்பானின் தந்தையான,
தேறலாகிய இனிய உணவினைக் கொண்ட, அழகிய கூட்டங்களான விலங்குகளை வேட்டையாடுகின்ற
வரிசையான வாள்களை உடைய வீரர்களுக்குத் தலைவனான,
அழிசியின் ஆர்க்காடு என்னும் நகரத்தைப் போன்ற

ஆர்பதம்

ஆர்பதம் – (பெ) உணவு
ஆர்தல் = உண்ணுதல்; பதம் = பக்குவமான உணவு

அரும் பெறல் அமிழ்தம் ஆர்பதம் ஆக – குறு 83/1
அரிதின் பெறக்கூடிய அமிழ்தம் .உண்ணும் உணவு ஆகுக

நெல்லின், ஆர்பதம் நல்கும் என்ப – பதி 66/9
நெல்லாகிய உணவை, நிறையக் கொடுப்பன் என்பர்

ஆரம் – (பெ) 1. கழுத்தில் அணியும் அணிகலன் – மணிவடம், பூமாலை, வளையம், necklace, garland, neckring
2. ஆரக்கால், spoke of a wheel
3. சந்தனம் – மரம், குழம்பு sandalwood tree, paste
1.
ஒண் நுதல் விறலியர்க்கு ஆரம் பூட்டி – பதி 48/2
ஒள்ளிய நெற்றியையுடைய விறலியர்க்கு பொன்னரிமாலைகள் அணிவித்து
2.
ஆரம் சூழ்ந்த அயில் வாய் நேமியொடு – சிறு 253
ஆரக்கால்களைச் சூழ்ந்த கூரிய வாயையுடைய சூட்டினையுடைய சக்கரத்தோடே
3.
குட மலைப் பிறந்த ஆரமும் அகிலும் – பட் 188
மேற்குமலையில் வளர்ந்த சந்தனமரமும், அகில் மரமும்

ஆரம் நீவிய அணி கிளர் ஆகம் – நற் 344/6
சந்தனக்குழம்பு பூசிய அழகு விளங்கும் மார்பு

ஆறு

ஆறு – 1 (வி) சூடுதணி, get cold
– 2 (பெ) 2.1. வழி, பாதை, way, path, 2.2 எண் ஆறு, number six 2.3 நதி, river
2.4 வழி, உபாயம், means, device 2.5 விதம், manner, mode
1.
வெந்து ஆறு பொன்னின் அந்தி பூப்ப – அகம் 71/6
உலையில் காய்ந்து சூடுதணியும் பொன்னின் நிறம்போல செக்கர் வானம் பூத்து நிற்க
2.1
ஊறு நிரம்பிய ஆறு அவர் முந்துற – மலை 284
இடையூறு நிரம்பிய வழியில் அவர் முந்திச்செல்ல
2.2
ஆறு என ஏழு என எட்டு என தொண்டு என – பரி 3/79
ஆறு என்று, ஏழு என்று, எட்டு என்று, ஒன்பது என்று
2.3
ஆறு கிடந்து அன்ன அகல் நெடும் தெருவில் – நெடு 30
ஆறு கிடந்ததைப் போல அகன்ற நெடிய தெருவில்
2.4
அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும் – புறம் 183/7
அறிவுள்ளவர் சொல்லும் வழியில் அரசும் செல்லும்
2.5
தணியும் ஆறு இது என உரைத்தல் ஒன்றோ – நற் 244/7
தணியும் விதம் இது எனச் சொல்லுதல் ஒன்றோ?

ஆலங்கானம்

ஆலங்கானம் – (பெ) தமிழ்நாட்டிலுள்ள ஓர் ஊர். An ancient city in Tamilnadu

இவ்வூர் தலையாலங்கானம் என்றும் அழைக்கப்படும். நெடுஞ்செழியன் என்ற பாண்டிய மன்னன்
சேர, சோழ மன்னர்களையும், அவருடன் வந்த மற்ற ஐந்து சிற்றரசர்களையும் சேர்த்து எழுவரை
இந்த இடத்தில் நடந்த போரில் வென்றான். அதனால அவன் தலையாலங்கானத்துச் செருவென்ற
நெடுஞ்செழியன் என்று அழைக்கப்படுகிறான்.
இன்றைய திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது இவ்வூர்.

எழு உறழ் திணிதோள் இயல்தேர்ச் செழியன்
நேர எழுவர் அடைப்படக் கடந்த
ஆலங்கானத்து ஆர்ப்பினும் பெரிது என – அகம் 209/4-6
கணையமரத்தை ஒக்கும் திண்ணிய தோளினையும், நன்கு இயன்ற தேரினையுமுடைய செழியன்
பகைத்த எழுவரையும் முற்ற வென்ற
தலையாலங்கானத்து எழுந்த வெற்றியாரவாரத்திலும் பெரிது என்று கூறி

ஆலம்

ஆலம் – (பெ) ஆலமரம், Banyan Tree

புது கலத்து அன்ன கனிய ஆலம் – ஐங் 303/1
புதிய மண்கலத்தைப் போன்ற பழங்களையுடைய ஆலமரம்

ஆலி

ஆலி – (பெ) ஆலங்கட்டி, hailstone

யானைப், புகர் முகம் பொருத புது நீர் ஆலி
பளிங்கு சொரிவது போல் பாறை வரிப்ப – அகம் 108/4,5
யானையின் புள்ளியையுடைய முகத்தில் மோதி வீழ்ந்த புதிய ஆலங்கட்டி
பளிங்கினைச் சொரிவதுபோல் பாறையில் விழுந்து கோலமிட

ஆலு

ஆலு – (வி) 1. ஒலி, make sound 2. களிகூர், rejoice 3. ஆடு, dance
1.
மா நனை கொழுதி மகிழ் குயில் ஆலும் – நற் 9/10,11
மாமரத்தின் அரும்பைக் கோதி மகிழ்கின்ற குயில்கள் கூவிவிளையாடும்
2.
வெண் நுதல் கம்புள் அரிக்குரல் பேடை
தண் நறும் பழனத்து கிளையோடு ஆலும் – ஐங் 85/2
வெள்ளை நெற்றியையுடைய சம்பங்கோழியின் அரித்தெழும் ஓசையையுடைய பெட்டைக்கோழி
குளிர்ந்த நறிய பொய்கையில் தனது இனத்தோடு மகிழ்ந்து ஆரவாரிக்கும்
3.
மஞ்ஞை ஆலும் மரம் பயில் இறும்பின் – பெரும் 495
மயில்கள் ஆடும் மரங்கள் நிறைந்த குறுங்காட்டில்

ஆல்

ஆல் – (பெ)1.மிகுதி, plenty, 2.கார்த்திகை நட்சத்திரம், The sixth of the 27 stars – பார்க்க ஆரல்-2
3. ஆலமரம், banyan tree
1.
அகல் வாய் வானம் ஆல் இருள் பரப்ப – அகம் 365/1
அகலம் வாய்ந்த வானத்தில் மிக்க இருள் பரக்க
2.
வடவயின் விளங்கு ஆல் உறை எழுமகளிருள் – பரி 5/43
வடதிசையில் விளங்கும் கார்த்திகை மகளிர் எழுவருள்ளும்
3.
ஆல் கெழு கடவுள் புதல்வ – திரு 256
ஆல மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும்கடவுளின் புதல்வனே!

ஆளி

ஆளி – (பெ) யாளி, A fabulous animal
அரிமா என்ற சிங்கம் என்று சொல்வோரும் உண்டு.
அனைத்து விலங்குகளிலும் வலிமையுள்ளது என்று கருதப்படும் விலங்கு.

ஆளி நன் மான் வேட்டு எழு கோள் உகிர்
பூம்பொறி உழுவை தொலைச்சிய வைந்நுதி
ஏந்து வெண்கோட்டு வயக்களிறு இழுக்கும் – நற் 205/2-4
ஆளியென்னும் விலங்கு வேட்டைக்காக எழுந்த கொல்லவல்ல நகங்களையும்
அழகிய வரியையுமுடைய புலியை அடித்துக்கொன்ற கூரிய நகத்தையுடைய
ஏந்திய வெள்ளைக் கொம்புகளையுடைய வலிமையுள்ள யானையை இழுத்துச்செல்லும்

ஆழி

ஆழி – (பெ) 1. சக்கரம், wheel 2. கடல், sea 3. மோதிரம், ring
1.
அடைகரை, ஆழி மருங்கின் அலவன் ஓம்பி – நற் 11/7
கடற்கரையில், தேரின் சக்கரத்தில் படாதவாறு நண்டுகளை விலக்கி
2.
ஆழி தலை வீசிய அயிர் சேற்று அருவி – குறு 372/4
கடல் மேலே எறிந்த கருமணலாகிய சேறு ஒழுகியோடிவதால் ஏற்பட்ட அருவி
3.
கை வளை ஆழி தொய்யகம் புனை துகில் – பரி 7/46
கைவளைகள், மோதிரங்கள், தலை அணிகள், அணிந்துள்ள துகில்கள்

ஆவணம்

ஆவணம் – (பெ) 1. பத்திரம், document, record 2. கடைத்தெரு, Market

கயிறு பிணிக் குழிசி ஓலை கொண்மார்
பொறி கண்டு அழிக்கும் ஆவண மாக்களின் – அகம் 77/8
கயிற்றால் பிணிக்கப்பட்ட குடத்திலுள்ள ஓலையை எடுத்துக்கொள்வதற்கு
அக் குடத்தின் மேலிட்ட இலச்சினையை ஆய்ந்து நீக்கும் ஓலை ஆயும் மக்களைப் போன்று

மல்லல் ஆவணம் மாலை அயர – நெடு 44
வளப்பத்தையுடைய அங்காடித்தெருவெல்லாம் மாலைக்காலத்தைக் கொண்டாட

ஆவி

ஆவி – 1. (வி) கொட்டாவி விடு, yawn
2. (பெ) 2.1. புகை, smoke 2.2. கானல்நீர், mirage
2.3. வேளிர்தலைவருள் ஒருவன், An ancient chief of the Vēḷ.tribe;
1.
சிறுவெண் காக்கை ஆவித்து அன்ன – நற் 345/4
சிறிய வெள்ளைக் கடற்காக்கை கொட்டாவி விட்டதைப் போல
2.1.
கனல் பொருத அகிலின் ஆவி கா எழ – பரி 10/72
தீயில் எரிந்த அகில்மரக்கட்டைகளின் புகை சோலையில் பரவ
2.2.
கனைகதிர், ஆவி அம் வரி நீர் என நசைஇ – அகம் 327/9
ஞாயிற்றின் மிக்க வெப்பத்தால் தோன்றும் பேய்த்தேரின் அலைகளை நீர் என்று விரும்பி
2.3.
முழவு உறழ் திணி தோள் நெடுவேள் ஆவி – அகம் 61/15
முழவைப் போன்ற திண்ணென்ற தோள்களையுடைய நெடுவேள் ஆவி என்பான்

ஆவினன்குடி

ஆவினன்குடி – (பெ) முருகனின் அறுபடைவீடுகளுள் ஒன்று, பழனி, The city of Pazhani

இது பொதினி என்றும் அழைக்கப்படும். ஆவி என்பானின் தலைநகரம் பொதினி. ஆவி நன் குடி
என்பதுவே ஆவிநன்குடி என்றாகிப் பின்னட் ஆவினன்குடி என்றானது என்பர்.
பார்க்க – ஆவி 2.3

ஆவினன்குடி அசைதலும் உரியன் – திரு 176

ஆவிரம்

ஆவிரம் – (பெ) ஒருவகைச் செடி, அதன் பூ – பார்க்க ஆவிரை

அடர் பொன் அவிர் ஏய்க்கும் ஆவிரம் கண்ணி – கலி 140/7

ஆவிரை

ஆவிரை – (பெ) செடிவகை, Tanner’s senna, l.sh., Cassia auriculata;

பொன் நேர் ஆவிரை புது மலர் மிடைந்த – குறு 173/1
பொன் போன்ற ஆவிரையின் புது மலர் சேர்ந்த

ஆவுதி

ஆவுதி – (பெ) யாகத்தீயில் இடப்படும் பொருள், Oblation offered in the consecrated fire.
இது ஆகுதி என்றும் அழைக்கப்படும்.

அமரர்ப் பேணியும் ஆவுதி அருத்தியும் – பட் 200
நீத்தாரை நினைந்தும், அவருக்குப் பலியுணவு செலுத்தியும்