சங்க இலக்கிய அருஞ்சொற்களஞ்சியம்

முனைவர் ப.பாண்டியராஜா
(www.tamilconcordance.in)


105

52

77

24

121

13

36

20

5

32

20

1
க்
124
கா
24
கி
12
கீ
2
கு
58
கூ
17
கெ
9
கே
7
கை
23
கொ
48
கோ
28
கௌ
1
ங் ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
15
சா
42
சி
51
சீ
7
சு
29
சூ
13
செ
66
சே
17
சை
1
சொ
6
சோ
4
சௌ
ஞ்
3
ஞா
15
ஞி
4
ஞீ ஞு ஞூ ஞெ
17
ஞே ஞை ஞொ
1
ஞோ ஞௌ
ட் டா டி டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ
ண் ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
113
தா
23
தி
54
தீ
13
து
76
தூ
25
தெ
44
தே
25
தை
6
தொ
44
தோ
16
தௌ
1
ந்
82
நா
44
நி
40
நீ
21
நு
30
நூ
11
நெ
39
நே
12
நை
3
நொ
24
நோ
13
நௌ
1
ப்
245
பா
80
பி
63
பீ
7
பு
173
பூ
19
பெ
48
பே
25
பை
22
பொ
76
போ
37
பௌ
1
ம்
240
மா
85
மி
35
மீ
13
மு
163
மூ
24
மெ
14
மே
30
மை
9
மொ
6
மோ
11
மௌ
1
ய்
2
யா
30
யி யீ யு யூ
2
யெ யே யை யொ யோ யௌ
ர் ரா ரி ரீ ரு ரூ ரெ ரே ரை ரொ ரோ ரௌ
ல் லா லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
வ்
236
வா
71
வி
120
வீ
15
வு வூ வெ
81
வே
67
வை
18
வொ வோ வௌ
2
ழ் ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன் னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்
அஃகு

அஃகு – (வி) நுண்ணியதாகு, சுருங்கு, குறை, become minute, shrink, be reduced in size, quantity etc.,

அகன்ற தாயத்து அஃகிய நுட்பத்து
இலம் என மலர்ந்த கையர் ஆகி – மலை 551,552

பரந்த அரச உரிமையையும், குறுகிய அறிவினையும்,
‘இல்லை’ என்று விரித்த கையினையும் உடையோராய் –

நல்லகம் நயந்து, தான் உயங்கிச்
சொல்லவும் ஆகாது அஃகியோனே – குறு 346/8

நமது நல்ல நெஞ்சத்தை விரும்பி வருந்தி
அதை நமக்குக் கூறவும் இயலாது மனம் குன்றினான்

அஃதை

அஃதை – 1. (பெ) கோசர் குடித் தலைவன் – ஒரு சிறந்த வள்ளல்

இன் கடும் கள்ளின் அஃதை களிற்றொடு
நன்கலன் ஈயும் நாள்மகிழ் இருக்கை – அகம் 76/3,4

இனிய கடுங்கள்ளினையுடைய அஃதை என்பவனின், யானைகளோடு
நல்ல அணிகலன்களையும் ஈயும் அத்தாணிமண்டப அமர்வு (நாளோலக்கம்) –

மா வீசு வண் மகிழ் அஃதை போற்றி – அகம் 113/4

அஃதை – 2. (பெ) சோழமன்னனின் மகள்

அம் கலுழ் மாமை அஃதை தந்தை
அண்ணல் யானை அடுபோர்ச் சோழர் – அகம் 96/12,13

அழகு ஒழுகும் மாமை நிறத்தினையுடைய அஃதை என்பவளின் தந்தையாகிய
பெருமை தங்கிய யானையைக்கொண்ட, போரில் அழிக்கும் சோழர் –

அகடு

அகடு – (பெ) நடு, உள், வயிறு, middle, interior, belly

அகடு சேர்பு பொருந்தி அளவினில் திரியாது – மலை 33
(பொல்லம் பொத்துதல்) நடுவே சேரப்பட்டுக் கண்ணுக்கினியதாய் அளவிலே மாறுபடாமல்

அகடு நனை வேங்கை வீ கண்டு அன்ன – புறம் 390/21
உள்ளிடம் நனைந்த வேங்கைப் பூவைக் கண்டாலொத்த

குருகு உடைத்து உண்ட வெள் அகட்டு யாமை – ஐங் 81/1
நாரை உடைத்து உண்ட வெண்மையான வயிற்றை உடைய ஆமை

அகலுள்

அகலுள் – (பெ) அகன்ற உள்புறமுள்ள வீடு, ஊர்

கிராமப்புறத்து வீடுகளில் சில, அகன்ற வெளியில் நான்குபக்கங்களிலும் சுவர் எழுப்பி அறைகளோ
வேறு மாட்டுக்கொட்டில், தீவனம் வைக்குமிடம் போன்ற அமைப்புகளைக் கட்டி, நடுவில்
திறந்த வெளி உள்ளவைகளாக இருக்கும். இப்படிப்பட்ட வீடுகள் அகலுள் எனப்படும். அதாவது
அகன்ற உட்புறத்தைக் கொண்டது என்ற பொருள்தரும்.
சில கிராமங்களில் நடுவே அகன்ற வெளியைவிட்டு, அதனைச் சுற்றிலும் தெருக்களும், வீடுகளும்
அமைப்பார்கள். அப்படிப்பட்ட ஊர் அகலுள் எனப்படும்.

அகலுள் ஆங்கண் கழி மிடைந்து இயற்றிய
புல்வேய்க் குரம்பைக் குடிதொறும் பெறுகுவிர் – மலை 438, 439
அகன்ற உள்ளிடத்தையுடைய ஊர்களில் கழிகளால் செறிந்து பண்ணின
புல்லால் வேய்ந்த குடில்களில் இருக்கும் குடிகளிடந்தோறும் பெறுவீர்

அகளம்

அகளம் – (பெ) யாழின் பத்தர் (குடுக்கை), body of the lute, நீர்ச்சால், large bucket

வயிறு சேர்பு ஒழுகிய வகை அமை அகளத்து – சிறு 224
வயிறு சேர்ந்து ஒழுங்குபட்ட நன்கு அமைந்த பத்தரின்

அகளத்து அன்ன நிறை சுனை புறவின் – மலை 104
நீர்ச்சாலை ஒத்த நிறைந்த சுனைகளைகளைக் கொண்ட காட்டில்

அகவர்

அகவர் – (பெ) – 1. ஒரு நாட்டு/ஊர் மக்கள், people of a country/city
2. பாடல் பாடுவோர், bards
1.
கானவர் மருதம் பாட அகவர்
நீல் நிற முல்லை பல் திணை நுவல – பொரு 220,221
முல்லைநிலத்துக் கானவர் மருதப்பண்னைப் பாடவும், மருத நிலத்து உழவர்
நீல நிறமுடைய முல்லைக்கொடி படர்ந்த பலவாலிய காட்டுநிலத்தைக் கொண்டாடவும்
2.
நாள் ஈண்டிய நல் அகவர்க்கு
தேரொடு மா சிதறி – மது 223,224
விடியற்காலத்தே வந்த நல்ல பாடகர்களுக்குத்
தேருடனே, குதிரைகளையும் கொடுத்து

இந்தப் பாடகர்கள் பொருநர் என்றும் சூதர் என்றும் அழைக்கப்படுவர். இவர்கள் பொதுவாக
அரசர் முன்னிலையில் பாடிப் பரிசில் பெறுவோர். இவரில் போர்க்களப் பொருநர்,
ஏர்க்களப் பொருநர் என இருவகையுண்டு.
இவரில், பாடல்பாடும் மகளிர், அகவன்மகளிர் எனப்படுவர்.

அகவு

அகவு – (வி) மயில்போல் ஒலிஎழுப்பு, அழை, பாடு, sound like a peacock, call, sing

கலி மயில் அகவும் வயிர் மருள் இன் இசை – நெடு 99
மகிழ்ந்த மயில்கள் ஒலியெழுப்பும் கொம்பு ஊதுதலைப் போன்ற இனிய இசை

வள்ளை அகவுவம் வா – கலி 42/9
வள்ளைப்பாட்டு பாடுவோம் வா

அகில்

அகில் – (பெ) ஒரு வகை வாசனை மரம், Eagle-wood, Aquilaria agallocha

அகில் ஆர் நறும் புகை ஐது சென்று அடங்கிய – புறம் 337/10
அகிலின் நிறைந்த மணமுள்ள புகை மெல்லிதாகச் சென்று அடங்கிய

அகுதை

அகுதை – (பெ) ஒரு வேளிர் குல அரசன், மதுரையிலிருந்த ஓர் உபகாரி என்பார் உ.வே.சா.
இந்த வேளிர் குல அரசன் வேள் மகளிரின் துன்பம் போக்கினான்.

பெருவிதுப்புற்ற பல்வேள் மகளிர்
குரூஉப் பூம் பைந்தார் அருக்கிய பூசல்
வசைவிடக்கடக்கும் வயங்கு பெருந்தானை
அகுதை களைதந்து ஆங்கு – அகம் 208/15 – 18

மிக்க விரைவுகொண்டு வந்த பல வேளிர் மகளிர்
நிறமுள்ள பூக்களாலான அழகிய மாலைகளை அழித்துவிட்டுச் செய்த அழுகை ஆரவாரத்தினை
பழிநீங்க மாற்றார் படையினை வெல்லும் விளங்கும் பெரிய சேனையையுடைய
அகுதை என்பவன் நீக்கினாற் போல –

இன் கடும் கள்ளின் அகுதை தந்தை – குறு 298/5
இந்த அகுதை தந்தை என்பான் மேற்கூறப்பட்ட வேளிர்குலத் தலைவன். எனவே இதனை
அகுதையாகிய தந்தை எனக்கொள்லலாம்.

சீர் கெழு நோன் தாள் அகுதைக்கண் தோன்றிய
பொன்படு திகிரியின் பொய்யாயிகியர் – புறம் 233/3,4

சீர்மை பொருந்திய வலிய முயற்சியையுடைய அகுதையிடத்து உள்ளதாகிய
பொன்னாற்செய்யப்பட்ட சக்கரத்தைப் போல் பொய்யாகுக –

மணம் நாறு மார்பின் மறப் போர் அகுதை
குண்டு நீர் வரைப்பின் கூடல் அன்ன – புறம் 347/5,6

மணங்கமழும் மார்பினையுடைய மறம் பொருந்திய போரைச் செய்யும்
ஆழ்ந்த நீர்நிலைகளையுடைய இடமாகிய கூடல் நகரைப் போன்று –

இங்கு குறிப்பிடப்படும் கூடல் என்பது காவிரி ஆற்ரங்கரையில் உள்ள முக்கூடல் என்ற ஊரைக் குறிக்கும் என்பர்.

பார்க்க – அஃதை

அகை

அகை – (வி) 1.எரி, burn, 2.கொஞ்சம் கொஞ்சமாகக் குறை, diminish slowly, 3.செழி, flourish, 4.தளிர், sprout

1.எரி அகைந்து அன்ன தாமரை பழனத்து – அகம் 106/1
தீ கிளைத்து எரிந்தாற்போன்ற தாமரைப் பூக்களையுடைய வயலில்

2.உம்பல் அகைத்த ஒண் முறி யாவும் – மலை 429
யானை முறித்த ஒள்ளிய தளிர்களையுடைய யாமரம்

3.கொய் அகை முல்லை காலொடு மயங்கி – அகம் 43/9
கொய்யப்படும் தழைத்த முல்லை காற்றால் மயங்குதலின்

4.கரி மரம்
கண் அகை இளம் குழை கால் முதல் கவினி – அகம் 283/9,10
கரிந்த மரங்கள்
தம்மிடம் தளிர்க்கும் இளைய குழைகள் அடிமுதல் கிளைத்து அழகுபெற

அக்குரன்

அக்குரன் – (பெ) 1. பாரதப்போரில் நூற்றுவருக்குத் துணைநின்றவன், 2. ஓர் இடையெழு வள்ளலுமாம்.

போர்தலை மிகுத்த ஈரைம்பதின்மரொடு
துப்புத் துறைபோகிய துணிவுடை ஆண்மை
அக்குரன் அனைய கைவண்மையையே – பதி 14/5-7

போரிடுவதில் மிகுந்த மேன்மையுற்ற நூற்றுவருடன்
வலிமையில் சிறந்த அஞ்சாமையுள்ள ஆண்மையினையுடைய
அக்குரன் என்பவனைப் போல வள்ளல்தன்மையுடையவனே!

அக்குளு

அக்குளு – (வி) கூச்சம் உண்டாக்கு, tickle, titillate

புக்கு அகலம் புல்லின் நெஞ்சு ஊன்றும்; புறம் புல்லின்
அக்குளுத்து; புல்லலும் ஆற்றேன்; – கலி 94/20

நின்னை மார்பில் தழுவினால் என்னுடைய நெஞ்சிலே அக் கூன் ஊன்றும்; முதுகிலே தழுவினால்
கூன் கூசச்செய்யும்; தழுவமாட்டேன்;

அங்காடி

அங்காடி – (பெ) கடை, கடைத்தெரு, market, market place

இந்த அங்காடி இருவகைப்படும்.
பகலில் திறந்திருக்கும் கடைத்தெரு நாளங்காடி என்றும்
இரவில் திறக்கும் கடைத்தெரு அல்லங்காடி என்றும் அழைக்கப்பட்டன.

நாளங்காடி நனம் தலை கம்பலை – மது 430
நாளங்காடியையுடைய அகன்ற இடத்தே எழுந்த பெரிய ஆரவாரம்

அல்லங்காடி அழிதரு கம்பலை – மது 544
அந்திக்காலத்துக் கடைத்தெருவில் மிகுதியைத் தரும் ஆரவாரம்

அங்கி

அங்கி – (பெ) யாகம் செய்ய எழுப்பும் தீ, sacrificial fire

அவிர் சடை முனிவர் அங்கி வேட்கும் – பட் 54
ஒளிரும் சடையினையுடைய துறவிகள் தீயை எழுப்பி யாகம்செய்யும்

அங்கை

அங்கை – (பெ) உள்ளங்கை (அகம் + கை = அங்கை)

கோடல் குவி முகை அங்கை அவிழ – முல் 95
வெண்காந்தளின் குவிந்த மொட்டுகள் உள்ளங்கை போல மலர

அசா

அசா – (பெ) 1.தளர்ச்சி, exhaustion, 2. வருத்தம், sorrow

1.இரை தேர்ந்து உண்டு அசா விடூஉம் புள் இனம் இறைகொள – கலி 132/3
இரையைத் தேடியுண்டு களைப்பை ஆற்றிக்கொள்ளும் பறவைக் கூட்டம் தங்கிக்கொள்ள

2. வேய் புரை பணைத்தோள் பாயும்
நோய் அசா வீட முயங்குகம் பலவே – அகம் 47/19
மூங்கிலைப் போன்ற பெரிய தோள்களில் பரவும்
நோயின் வருத்தம் தீரப் பலமுறை முயங்குவோம்

அசுணம்

அசுணம் – (பெ) இசை அறியும் ஒரு விலங்கு

இரும் சிறைத் தொழுதி ஆர்ப்ப யாழ் செத்து
இரும் கல் விடர் அளை அசுணம் ஓர்க்கும் – அகம் 88/11,12
கரிய சிறகினையுடைய வண்டின் கூட்டம் ஒலிக்க, அதனை யாழிசை என்று என்ணிப்
பெரிய குன்றின் பிளவுகள் உள்ள குகைகளில் அசுணம் உற்றுக்கேட்கும்

அசும்பு

அசும்பு – 1. (வி) ஒழுகு, பரவு , flow, spread
– 2. (பெ) சேறு, வழுக்குநிலம்
1. அசும்பும் அருவி அரு விடர் பரந்த – பரி 21/52
ஒழுகும் அருவி அரிய பிளவுகளில் பரவி

2. வாழை ஓங்கிய தாழ் கண் அசும்பில்
படு கடும் களிற்றின் வருத்தம் சொலிய – அகம் 8/9,10
வாழை ஓங்கி வளர்ந்த தாழ்ந்த இடத்தையுடைய சேற்றுநிலத்தில்
அகப்பட்ட கடிய களிற்றின் வருத்தம் நீங்க

அசைவு

அசைவு – (பெ) தளர்வு, Weariness, faintness, exhaustion

குவளை அம் பைம் சுனை அசைவு விட பருகி – மலை 251
குவளைமலர்கள் பூத்த அழகிய பசிய சுனையில் தளர்வு நீங்கப் பருகி

அச்சிரம்

அற்சிரம் – (பெ) முன்பனிக்காலம், early dew season,
மார்கழி, தை ஆகிய இருமாதங்களும் முன்பனிக்காலமாகும்
சிலவேளைகளில் இது பின்பனிக்காலத்தையும் குறிக்கும்.

கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என்ற
ஆறு பருவங்களையுடையது தமிழர் ஆண்டுக்கணக்கு. இது ஆவணியில் தொடங்கி
இரண்டிரண்டு மாதங்களாகச் செல்லும்.

வாடை தூக்கும் வரு பனி அற்சிரம் – அகம் 78/10
வாடைக் காற்று வீசும் வருகின்ற பனியைக் கொண்ட முன்பனிக்காலம்

அற்சிரம் நீங்கிய அரும் பத வேனில் – அகம் 97/17
பின்பனிக்காலம் நீங்கிய அரிய பதமான இளவேனில்

அஞர்

அஞர் – (பெ) துன்பம், grief. சோம்பல், laziness

கடும் பனி அற்சிரம் நடுங்கு அஞர் உறவே – குறு 76/6
கடும் குளிரைக்கொண்ட முன்பனிக்காலத்தில் நடுங்குகின்ற துன்பமடைய

வல் அஞர் பொத்திய மனம் மகிழ் சிறப்ப – பொரு 99
வலிய சோம்பலினால் உண்டான வருத்தம் பொதிந்த மனம் மகிழ்ந்து சிறக்க

அஞ்சனம்

அஞ்சனம் (பெ) கண்ணுக்கு இடும் மை, black pigment for the eyelashes
கருமை, blackness

செறி இலைக் காயா அஞ்சனம் மலர – முல் 93
செறிந்த இலைகளையுடைய காயா மைபோன்று மலர

அஞ்ஞை

அஞ்ஞை – (பெ) அன்னை

அமர்க் கண் அஞ்ஞையை அலைத்த கையே – அகம் 145/22
அமர்த்த கண்களுடைய என் அன்னையை (மகளை) அடித்த கையே

மென் தோள் அஞ்ஞை சென்ற ஆறே – அகம் 15/19

அடல்

அடல் – (பெ) 1.கொல்லுதல், killing
2.வலிமை, strength
3.போரிடுதல் being engaged in war
4.வெற்றி, victory
5.சோறு சமைத்தல், cooking
1.
கடல் படை அடல் கொண்டி – புறம் 382/1
கடற்படைகொண்டு பகைவரைக் கொல்லுதலால் கொண்ட பெரும்பொருள்
2.
போருள், அடல் மா மேல் ஆற்றுவேன் – கலி 141/9
போரில் வலிமையுள்ள குதிரையில் மேலிருந்து போரிடுவேன்
3.
வானவரம்பன் அடல் முனை கலங்கிய – அகம் 45/17
வானவரம்பனது போர் முனையில் கலங்கிய
4.
அடல் அரும் துப்பின் – புறம் 335/1
வெல்லுதற்கரிய வலிமையுடைய
5.
அடல் நசை மறந்த எம் குழிசி மலர்க்கும் – புறம் 393/4
சோறு சமைப்பதில் உள்ள விருப்பத்தை மறந்த எம்முடைய பானையை நிமிர்த்திவைக்கும்

அடிசில்

அடிசில் – (பெ) சோறு, boiled rice, உணவு, food

பைம் நிணம் ஒழுகிய நெய்ம் மலி அடிசில் – குறி 204
பசிய கொழுப்பு ஒழுகும் நெய் நிறைந்த சோறு

சுவைக்கு இனிது ஆகிய குய் உடை அடிசில் – புறம் 127/7
சுவைத்தற்கு இனிதாகிய தாளிப்பையுடைய உணவு

அடுக்கம்

அடுக்கம் (பெ) – மலைச்சரிவு, mountain slope, பக்கமலை, smaller mountain adjacent to a larger one.

அடுக்கம் என்பது பக்கமலை எனப்படுகிறது.

அடுக்கம் என்ற பக்கமலை என்பது, ஒரு பெரிய மலைக்கு அருகில் அமைந்த சிறிய மலை என
பால்ஸ் தமிழ் அகராதி கூறுகிறது. தமிழ்ப் பேரகராதியும் அவ்வாறே கூறுகிறது. அடுக்கம் என்ற சொல்
சங்க இலக்கியங்களில் வரும் பெரும்பாலான இடங்களில், அங்கு மரங்கள் அடர்ந்து வளர்ந்திருக்கும் என்ற
குறிப்பு கிடைக்கிறது.

பலா அமல் அடுக்கம் புலாவ ஈர்க்கும் – அகம் 8/7
கழை வளர் அடுக்கத்து இயலி ஆடு மயில் – அகம் 82/9
தேக்கு அமல் அடுக்கத்து ஆங்கண் மேக்கு எழுபு – அகம் 143/5
வேய் பயில் அடுக்கம் புதைய கால்வீழ்த்து – அகம் 312/9
வழை அமல் அடுக்கத்து வலன் ஏர்பு வயிரியர் – அகம் 328/1

என்ற அடிகளால் இதனை அறியலாம். மரங்கள் அடர்ந்து வளரும் மலைப்பகுதி, ஓரளவுக்குச்
சமதளப் பகுதியாக இருக்கவேண்டும்.
மேலும்,

இரும் கல் அடுக்கத்து என் ஐயர் உழுத
கரும்பு எனக் கவினிய பெருங்குரல் ஏனல் – அகம் 302 9,10

என்ற அடிகள் அடுக்கத்தில் தினைப்புனங்கள் இருந்தன என்று கூறுகின்றன. எனவே அடுக்கம்
என்பது, உயரமான மலைகளுக்கு இடையே இருக்கும் அகன்ற வெளி என்பது பெறப்படுகிறது. இத்தகைய
பகுதிகளில் மனிதக் குடியிருப்புகள் இருக்கும். கொடைக்கானல் மலையில், உச்சியில் இருக்கும்
கொடைக்கானல் ஊருக்கும், அடிவாரப் பகுதியில் இருக்கும் கும்பக்கரை என்ற ஊருக்கும் இடையே அடுக்கம்
என்ற ஊர் இருக்கிறது. கொடைக்கானல் மலையின் உயரம் சுமார் 7000 அடி. இந்த அடுக்கம் கிராமம்
4000 அடியில் அமைந்துள்ளது. இது இரண்டு பக்கங்களிலும் அமைந்த மலைச்சரிவுகளுக்கு இடையில் உள்ள
சமதளப்பகுதியாக உள்ளது. (கீழே உள்ள பெரிய படம் அடுக்கம் மலைச் சரிவையும், அதன் உள்
இடப்பட்டிருக்கும் சிறிய படம் அடுக்கம் என்ற ஊரையும் காட்டும்)
இதைப்போன்றே, நாமக்கல் மாவட்டப்பகுதியில் கொல்லிமலையில் அடுக்கம் என்ற ஊர்
அமைந்துள்ளது. எனவே, அடுக்கம் என்பது பெரிய மலைத்தொடர்ப் பகுதியில், மலைகளுக்கு
இடையே அமைந்துள்ள மனிதர் வசிக்கக்கூடிய சமதளப் பகுதி என்பது தெளிவாகிறது.

அடுக்கல்

அடுக்கல் – (பெ) அடுக்கம்

மலைச்சரிவில் இருக்கும் சமவெளியை அடுக்கம் என்று கண்டோம்.
இந்த அடுக்கத்திலிருந்து நேர்க் குத்தாக மலைச்சரிவில் மேலே உயரச் செல்லும் பாதையைப்
பற்றிச் சொல்கிறது மலைபடுகடாம்.

அடுக்கல் மீமிசை அருப்பம் பேணாது
இடிச்சுர நிவப்பின் இயவுக்கொண்டு ஒழுகி – மலை 19,20
அடுக்கலின் உயரத்தில் கடினம் என்று கொள்ளாது
கல்லை இடித்த வழியின் உயர்ச்சியில் வழியைக்கொண்டு நடந்து

மேலும் அடுக்கலில் உள்ள ஊருக்கு வெளியில் தினைப்புனங்கள் இருந்ததாக அறிகிறோம்.

கொடிச்சி காக்கும் அடுக்கல் பைம் தினை – நற் 22/1
அடுக்கல் நல் ஊர் அசை நடை கொடிச்சி – ஐங் 298/2
அடுக்கல் ஏனல் இரும் புனம் மறந்து_உழி – அகம் 348/10

அடும்பு

அடும்பு – (பெ) ஒருவகைக் கொடி அடப்பங்கொடி, Hareleaf, Ipomaea biloba

மான் அடி அன்ன கவட்டு இலை அடும்பின்
தார் மணி அன்ன ஒண் பூ கொழுதி – குறு 243/1,2
மானின் அடியைப் போன்ற கவர்த்த இலைகளைக் கொண்ட
(குதிரை)மாலையில் உள்ள மணியைப் போன்ற ஒள்ளிய பூவைக் கோதி

ஒண் பன் மலர கவட்டு இலை அடும்பின்
செம் கேழ் மென் கொடி ஆழி அறுப்ப – அகம் 80/8,9

இது நீர்நிலைகளை ஒட்டி வளர்வது

கொடும் கழி மருங்கின் அடும்பு மலர் கொய்தும் – நற் 349/2
அடும்பு இவர் மணல் கோடு ஊர – குறு 248/5
அடும்பு அமல் அடைகரை அலவன் ஆடிய – பதி 51/7
அடும்பு இவர் அணி எக்கர் ஆடி நீ மணந்த_கால் – கலி 132/16
அடும்பு அமர் எக்கர் அம் சிறை உளரும் – அகம் 320/9

அடைகரை

அடைகரை – (பெ) நீரினை அடைத்துநிற்கும் கரை.

நறு நீர் பொய்கை அடைகரை – சிறு 68
கான் பொழில் தழீஇய அடைகரைதோறும்
தாது சூழ் கோங்கின் பூ மலர் தாஅய் – மது 337,338

பொங்கு திரை பொருத வார் மணல் அடைகரை – நற் 35/1
குன்றத்து அன்ன குவவு மணல் அடைகரை – குறு 236/3

அணங்கு

அணங்கு – 1. (வி) வருந்து, suffer, வருத்து, afflict
– 2. (பெ) வருத்தம், வருந்துதல், வருத்தும் தெய்வம், இல்லுறை தெய்வம்

கிராமப்புறங்களில் சில வீடுகளில் ‘சாமி’ இருப்பதாகச் சொல்வர். அது வீட்டின் ஏதாவது ஓரிடத்தில் இருப்பதாகவும்
சொல்வர். இதுவே இல்லுறை தெய்வம் எனப்படும். இது பொதுவாக வருத்தும் தெய்வமாக இருக்கும். தீய கனா,
காரணமின்றி நோய் வருதல், விபத்து நேரிடல் போன்று இந்தத் தெய்வம் வீட்டிலுள்ளோரை வருத்தும். இதற்கான
வழிபாடுகளைச் செய்து இந்த வருத்தத்தினின்றும் தம்மைக் காத்துக்கொள்வர்.
எனவே ஒருவன் பித்துப்பிடித்ததைப் போலிருந்தால் அவனை அணங்கு தாக்கியதாகச் சொல்வர். ஒருவருக்குத்
துன்பம் நேரிட்டால் அவர் அணங்கியதாகவும் சொல்வர்.

ஆர் உயிர் அணங்கும் தெள் இசை – அகம் 214/14
அரிய உயிர்களை வருத்தும் தெள்ளிய ஓசை

அனையேன் ஆயின் அணங்குக என் என – அகம் 166/9
நான் அப்படிப்பட்டவனாயின் வருத்துவதாக என்னை என

என்ற அடிகள் அணங்கு என்பது வினையாக வருவதைக் குறிக்கும்.

அணங்கு என்பது இல்லுறை தெய்வம் என்பதைக் கீழ்க்கண்ட அடிகள் உணர்த்தும்.

அணங்கு வழங்கும் அகல் ஆங்கண் – மது 164
இல்லுறை தெய்வங்கள் உலாவும் அகன்ற உள்ளிடங்களில்

மணம் புணர்ந்து ஓங்கிய அணங்கு உடை நல் இல் – மது 578
புதிய திருமணத்தால் உயர்ந்து நின்ற அணங்கு உடைய நல்ல இல்லங்கள்

இந்த அணங்கு மகளிர்மேல் ஏறி அவரைத் துன்புறுத்தும்.

அணங்கு உறு மகளிர் ஆடுகளம் கடுப்ப – குறி 175
அணங்கு ஏறிய மகளிர் வெறியாடும் களத்தைப் போன்று

திறந்த வெளிகளில் இந்த அணங்குகள் இருக்கும்.

அலமரல் ஆயமொடு யாங்கணும் படாஅல்
மூப்பு உடை முது பதி தாக்கு அணங்கு உடைய – அகம் 7/4
சுற்றித்திரியும் தோழியருடன் எங்கேயும் போகவேண்டாம்
தொன்மைவாய்ந்த இந்த இடங்கள் தாக்கி வருத்தும் தெய்வங்களை உடையன

இந்த இல்லுறை தெய்வங்கள் மிக அழகுள்ளதாக இருக்கும்.

தெள்ளரிப் பொற்சிலம்பு ஒலிப்ப ஒள்ளழல்
தா அற விளங்கிய ஆய்பொன் அவிரிழை
அணங்கு வீழ்வு அன்ன பூந் தொடி மகளிர் – மது 444-446
தெள்ளிய உள்பரல்களையுடைய பொற் சிலம்புகள் ஒலிக்க, ஒள்ளிய நெருப்பில் இட்டு
குற்றம் இன்றி விளங்கிய அழகிய பொன் அணிகலன்களையுடைய
தெய்வ மகளிர் இறங்கி வந்ததைப் போன்ற அழகிய வளையல் அணிந்த மகளிர் –

இந்த அணங்குகள் நள்ளிரவில் சுற்றித்திரியும்.

அணங்கு கால்கிளரும் மயங்கு இருள் நடுநாள் – நற் 319/6
அணங்கு வெளிக்கிளம்பும் மயங்கிய இருளையுடைய நள்ளிரவு

இருப்பினும் இந்த அணங்கு பேய்களினின்றும் வேறுபட்டது.

பேயும் அணங்கும் உருவு கொண்டு ஆய் கோல்
கூற்றக் கொல் தேர் கழுதொடு கொட்ப – மது 632,633
பேய்களும் அணங்குகளும் உருவங்களைக் கொண்டு, ஆராயும் செங்கோன்மையுள்ள
கூற்றம் கொல்லுகின்ற தேராகிய கழுதுடன் சுற்ற

வருத்துகின்ற தெய்வத்துக்கான அணங்கு என்ற சொல், பின்னர் எவ்வித வருத்தத்தையும்
குறிக்கும் சொல் ஆயிற்று.

அணங்கு என நினையும் என் அணங்கு உறு நெஞ்சே – ஐங் 363/4
வருத்தும் தெய்வம் என்று எண்ணும் என் வருந்துகின்ற என் மனம்

அணல்

அணல் – (பெ) கழுத்து, neck, தாடி, beard

கறை அணல் குறும்பூழ் கட்சி சேக்கும் – பெரும் 205
கறைபடிந்த கழுத்தினையுடைய காடை தன் புகலிடத்தில் தங்கும்

புலி போத்து அன்ன புல் அணல் காளை – பெரும் 138
ஆண்புலியைப் போன்ற புல்லென்ற தாடியையுடைய தலைவன்

அண்டர்

அண்டர் – (பெ) இடையர், cowherds, shepherds

திண் தேர் நள்ளி கானத்து அண்டர்
பல் ஆ பயந்த நெய்யின் – குறு 210/1,2
திண்ணிய தேரையுடைய நள்ளி என்பானின் காட்டினில் இடையர்களின்
பல பசுக்கள் கொடுத்த நெய்யோடு

அண்டிரன்

அண்டிரன் – (பெ) கடையெழு வள்ளல்களில் ஒருவன்.

ஆய் அண்டிரன் எனப்படும் இவன் கடையெழு வள்ளல்களுள் ஒருவன். பொதியமலைச் சாரலில் உள்ள
ஆய்க்குடியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த ஆயர் குல மன்னன் ஆவான் . இவனை
வேள் ஆய் என்றும் அழைப்பர்.
இவன் காலத்தில், மேற்குக் கடற்கரைப் பட்டினமாயிருந்த நெற்குன்றம் என்ற பட்டினத்தை ஆய் என்ற
மன்னன் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாகத் தாலமி (Ptolemy) என்ற யவன ஆசிரியர் தன்
Geographia என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். இவரது காலம் கி.பி.90 முதல் கி.பி.168 வரை.
எனவே இந்த அண்டிரனும் அந்தக் காலத்தைச் சேர்ந்தவனாதல் வேண்டும்.
இவனைப் பற்றிய குறிப்புகள் புறநானூறு 127, 128, 129, 130, 131, 132, 133, 134, 135, 136, 240, 241, 374, 375 ஆகிய
பாடல்களில் கிடைக்கின்றன.
இவன் வீரன் என்பதையும், வள்ளல் என்பதையும் இந்தப் பாடல்கள் மூலம் அறியலாம்.

இரவலர் வரூஉம் அளவை அண்டிரன்/புரவு எதிர்ந்து தொகுத்த யானை போல – நற் 237/7,8
ஆஅய் அண்டிரன் அடு போர் அண்ணல் – புறம் 129/5
வழை பூ கண்ணி வாய் வாள் அண்டிரன்/குன்றம் பாடின-கொல்லோ – புறம் 131/2,3
பாடுநர்க்கு அருகா ஆஅய் அண்டிரன்/கோடு ஏந்து அல்குல் குறும் தொடி மகளிரொடு – புறம் 240/3,4
அண்டிரன் வரூஉம் என்ன ஒண் தொடி – புறம் 241/2
கழல் தொடி ஆஅய் அண்டிரன் போல – புறம் 374/16

அதரி

அதரி – (பெ) அதரி கொள்ளுதல் – கதிரடித்துக் கடாவிடுதல்

நெல்லை அறுவடை செய்து, தலையடி முடிந்தபின், நெற்கதிர்களை வட்டமாகத் தரையில்
பரப்பி, அவற்றின் மீது பூட்டப்பட்ட எருதுகளை வட்டமாக வரச்செய்வர். எருதுகள் மிதிப்பதால்
நெல்மணிகள் உதிரும்.
இதனைக் கடாவிடுதல் என்பர். இதுவே அதரி கொள்ளுதல்.

அதரி கொள்பவர் பகடு பூண் தெண் மணி – மது 94
கடாவிடுகின்றவர் எருதுகள் பூண்ட தெளிந்த மணியோசை

அதர்

அதர் – (பெ) 1. வழி, path, 2. ஆடுகளின் கழுத்துக்குக் கீழ் தொங்கும் தசை

கற்களும், முட்களும் செறிந்த கரடுமுரடான காட்டுநிலத்தில், மனிதர்கள் அல்லது விலங்கினங்கள் அடிக்கடி
பயன்படுத்தியதால் ஏற்படும் இயற்கையான பாதை அதர் எனப்படுகிறது. பெரும்பாலும் விலங்கினங்களின்
நடைபாதையே அதர் எனலாம்.

மான் அடி பொறித்த மயங்கு அதர் மருங்கின் – பெரும் 106
ஆன்_இனம் கலித்த அதர் பல கடந்து – புறம் 138/1
களிறு வழங்கு அதர கானத்து அல்கி – பொரு 49
புலி வழங்கு அதர கானத்தானே – ஐங் 316/5
மான் அதர் சிறு நெறி வருதல் நீயே – அகம் 168/14

என்ற அடிகளால் இதனை அறியலாம்.

அதலை

அதலை – (பெ) ஒரு குன்றின் பெயர்

அதலை குன்றத்து அகல் வாய் குண்டு சுனை – குறு 59/2

இது அரலை என்றும் அழைக்கப்படும். இது சேலம் மாவட்டத்தில் ஓசூர்ப் பகுதியில் உள்ள அரலிகுண்டா
என்னும் மலை என்பர்.

அதள்

அதள் – (பெ) தோல், skin, மரப்பட்டை, bark

புலி உரி வரி அதள் கடுப்ப கலி சிறந்து
நாள்பூ வேங்கை நறுமலர் உதிர – அகம் 205/19
புலியின் உரியாகிய வரிகளையுடைய தோலைப் போன்று
அன்றைய பூக்களைக் கொண்ட வேங்கைமரத்தின் நறிய மலர்கள் உதிர

அதவம்

அதவம் – (பெ) அத்தி, country fig

இது அதவு என்றும் அழைக்கப்படும்

அதவ தீம் கனி அன்ன செம் முக – நற் 95/3
ஆற்று அயல் எழுந்த வெண் கோட்டு அதவத்து/எழு குளிறு மிதித்த ஒரு பழம் போல – குறு 24/3,4

அதிகன்

அதிகன் – (பெ) சங்ககாலக் குறுநில மன்னர் வகை.

இந்த மன்னர் வழியில் வந்தவன் அஞ்சி எனப்படுபவன்.
இவன் அதியன், அதியமான், அதியமான் நெடுமான் அஞ்சி என்று அழைக்கப்படுவான்.
சங்கப்புலவரான ஔவையாருக்கு மிகவும் நெருங்கிய நண்பன்.
சேலம் மாவட்டம், தகடூரைத் தலைநகராகக் கொண்டவன்.

அரவக் கடல் தானை அதிகனும் – சிறு 103
அதியமான் பரிசில் பெறூஉம் காலம் – புறம் 101/5
மதி ஏர் வெண்குடை அதியர் கோமான் – புறம் 392/1
அள்ளனைப் பணித்த அதியன் – அகம் 325/8

அதிரல்

அதிரல் – (பெ) காட்டுமல்லிகை, wild jasmine, Jasminum angustifolium

அதிரல் பூத்த ஆடு கொடி படாஅர் – முல் 51
குயில் வாய் அன்ன கூர் முகை அதிரல் – புறம் 269/1

அத்தம்

அத்தம் – (பெ) கடினமான பாதை, rough and dangerous path

சங்க அக இலக்கியங்கள், பொருளீட்டுவதற்காகத் தலைவியை விட்டுப் பிரிந்த தலைவன், கடப்பதற்கு
அரிய, ஆபத்துகள் நிறைந்த வழியில் பயணம் மேற்கொள்வதாகக் கூறுகின்றன. அத்தகைய வழிகள்
அத்தம் எனப்பட்டன.

அத்தம் செல்வோர் அலறத் தாக்கிக்
கைப்பொருள் வௌவும் களவேர் வாழ்க்கை – பெரும் 39,40
வழிச்செல்வார் அலறும்படி அவரைத் தாக்கி
அவரின் கையிலுள்ள பொருளைக் கைக்கொள்ளும் களவுள்ள வாழ்க்கை

புல் இலை ஓமைய புலி வழங்கு அத்தம்
சென்ற காதலர் – நற் 107/6,7
புல்லிய இலைகளைக் கொண்ட ஓமை மரத்தையுடையதும், புலிகள் நடமாடும் அத்தத்தில்
சென்ற காதலர்

மழை பெயல் மாறிய கழை திரங்கு அத்தம்
ஒன்று இரண்டு அல பல கழிந்து – பதி 41/14,15
மேகங்கள் பெய்வது மாறிப்போன மூங்கில்கள் காய்ந்துபோன அத்தம்
ஒன்று, இரண்டு அல்ல, பலவற்றைக் கடந்து

அத்திரி

அத்திரி – (பெ) கோவேறு கழுதை, mule

அகவரும் பாண்டியும் அத்திரியும் ஆய் மாச்
சகடமும் – பரி 10/16
அழைத்தற்கரிய மாட்டுவண்டியும், கேவேறு கழுதையும், தெரிந்தெடுத்த குதிரை பூட்டிய
வண்டியும்

மேலும்,

கழி சேறு ஆடிய கணை கால் அத்திரி/குளம்பினும் சே_இறா ஒடுங்கின – நற் 278/7,8
கழி சுறா எறிந்த புண் தாள் அத்திரி/நெடு நீர் இரும் கழி பரி மெலிந்து அசைஇ – அகம் 120/10,11
கொடு நுகம் நுழைந்த கணை கால் அத்திரி/வடி மணி நெடும் தேர் பூண ஏவாது – அகம் 350/6,7

அந்தில்

அந்தில் (6)
வருமே சே_இழை அந்தில்/கொழுநன் காணிய அளியேன் யானே – குறு 293/7,8
அஞ்சல் என்மரும் இல்லை அந்தில்/அளிதோ தானே நாணே – குறு 395/6,7
வந்து இறைகொண்டன்று தானை அந்தில்/களைநர் யார் இனி பிறர் என பேணி – பதி 40/6,7
கழறுப என்ப அவன் பெண்டிர் அந்தில்/கச்சினன் கழலினன் தேம் தார் மார்பினன் – அகம் 76/6,7
அருள் கண்மாறலோ மாறுக அந்தில்/அறன் அஞ்சலரே ஆய்_இழை நமர் என – அகம் 144/6,7
எந்தையும் செல்லும்-மார் இரவே அந்தில்/அணங்கு உடை பனி துறை கைதொழுது ஏத்தி – அகம் 240/7,8

அந்துவன்

அந்துவன் – (பெ) ஒரு சங்ககாலச் சான்றோர் ஒருவரின் பெயர்

நல்லந்துவனார் என்ற சங்க காலப் புலவர் திருப்பரங்குன்றத்தைப் பாடியுள்ளார் (பரிபாடல்-8)
அதனை மதுரை மருதனிளநாகன் என்ற சங்கப் புலவர் ஓர் அகப்பாட்டில் குறிப்பிடுகிறார்/

அந்துவன் பாடிய சந்து கெழு நெடு வரை – அகம் 59/12

அந்துவன் சாத்தன் என்ற சங்கச் சான்றோர் ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் என்ற
பாண்டிய மன்னனுக்கு நண்பராக இருந்துள்ளார் என புறநானூறு (பாடல் 71) கூறுகிறது.

அன்றில்

அன்றில் – (பெ) ஒரு பறவை, a bird

சங்க இலக்கியங்களில் 17 முறை இப்பறவை குறிப்பிடப்பட்டுள்ளது.
பத்துப்பாட்டு நூல்களுள், குறிஞ்சிப்பாட்டில் (அடி 219) இது குறிப்பிடப்பட்டுள்ளது
எட்டுத்தொகை நூல்களுள்,
நற்றிணையில் 5 முறையும் (பாடல்கள்:124,152,218,303,335)
குறுந்தொகையில் 3 முறையும் (பாடல்கள் 160,177,301)
கலித்தொகையில் 3 முறையும் (பாடல்கள் 129,131,137)
அகநானூற்றில் 5 முறையும் (பாடல்கள் 50,120,260,305,360)
இப் பறவை குறிப்பிடப்பட்டுள்ளது.

இக் குறிப்புகளின்படி,

1.இப்பறவை மிகப்பெரும்பாலும் ஆண்-பெண் என்று இணையாகவே வாழும்
ஒரு தனி அன்றில் உயவு குரல் கடைஇய – அகம் 305/13

2. இப்பறவைகள் மிகப்பெரும்பாலும் பெண்ணை என்ற பனைமரத்தில் தங்கும்.
மனை சேர் பெண்ணை மடி வாய் அன்றில் – அகம் 50/11

3. இவை வளைந்த வாயை (அலகுகளை)க் கொண்டிருக்கும்.
எனவே இவை மடிவாய் அன்றில் , கொடுவாய் அன்றில் என அழைக்கப்படுகின்றன

4. கொம்பு ஊதுவதைப் போன்ற ஒலியை எழுப்பும். இதனை நரலுதல் என்போம்.
ஏங்கு வயிர் இசைய கொடு வாய் அன்றில்/ஓங்கு இரும் பெண்ணை அக மடல் அகவ – குறி 219,220
அன்றிலும் பையென நரலும் – குறு 177/4

5. இவை இரவில் கூவமாட்டா
இன் துணை அன்றில் இரவின் அகவாவே – கலி 131/28

6. இவற்றின் கால்கள் கருமையாக இருக்கும்
எனவே இவை கருங்கால் அன்றில் (குறு 301/3) எனப்படுகின்றன.

7. மாலையில் இவை துணையுடன் புணரும்
செக்கர் தோன்ற துணை புணர் அன்றில்/எக்கர் பெண்ணை அக மடல் சேர – அகம் 260/6,7

8.இப்பறவையில் இருவகை உண்டு என்பர்.
ஒருவகைக்குத் தலை சிவப்புநிறமாக இருக்கும்.
நெருப்பின் அன்ன செம் தலை அன்றில்/இறவின் அன்ன கொடு வாய் பெடையொடு – குறு 160/1,2
இது Red-naped ibis அல்லது Pseudibis papillosa எனப்படும். முழுதும் கருப்பான அடுத்தவகை
Plegadis falcinellus எனப்படும்.

அமலை

அமலை – (பெ) 1.திரள் (சோற்றுத் திரள்), huge quantity (of boiled rice)
2. தோற்ற மன்னனைச் சுற்றி வெற்றி வீரர்கள் ஆடும் ஆட்டம்,
dance of victorius soldiers around the defeated king
1.
அவைப்பு மாண் அரிசி அமலை வெண் சோறு – சிறு 194
குற்றுதலில் சிறந்த அரிசியால் ஆக்கின திரளான வெள்ளைச் சோற்றை

அத்த வேம்பின் அமலை வான் பூ – குறு 281/3
பாலை நிலத்து வேம்பின் நிறைந்த வெள்ளிய பூக்கள்
2.
ஒள்வாள் அமலை ஆடிய ஞாட்பின் – அகம் 142/14
ஒள்வாள் அமலை என்னும் வெற்றிக் கூத்தை ஆடிய போர்க்களத்தின்

அமல்

அமல் – (வி) நெருங்கு, நெருங்கி வளர், to be close, thickly grown

கரும்பு அமல் கழனிய நாடு வளம் பொழிய – பதி 50/3
கரும்பு நெருங்கி வளரும் வயல்வெளிகளையுடைய நாடு வளம் பொழிய

அமளி

அமளி – (பெ) படுக்கை, bed, mattress
புதல்வர்,
செவிலி அம் பெண்டிர்த் தழீஇப் பால் ஆர்ந்து
அமளித் துஞ்சும் அழகு உடை நல் இல் – பெரும் 251,252
பிள்ளைகள்,
செவிலித் தாயாகிய அழகினையுடைய மகளிரிஅத் தழுவிக்கொண்டு, பாலை நிரம்ப உண்டு
படுக்கையில் துயில்கொள்ளும் அழகையுடைய நல்ல இல்லம்

அம்பணம்

அம்பணம் – (பெ) 1.மரக்கால், a measure for grains, 2.நீர்செல்லும்குழாய், water pipe
1.
அம்பண அளவை உறை குவித்து ஆங்கு – பதி 71/5
மரக்கால்களை நெற்குவையில் செருகி வைத்தது போல
மேலும்,
அம்பணத்து அன்ன யாமை ஏறி – ஐங் 43/1
மரக்காலை ஒத்த ஆமையின் முதுகின்மேல் ஏறி
2.
கிம்புரி பகு வாய் அம்பணம் நிறைய – நெடு 96
மீனின் வாய்போன்று பகுக்கப்பட்ட நீர்விழும் குழாய் நிறைய

அம்பர்

அம்பர் – 1. (விஅ) அங்கே, yonder, 2. (பெ)ஒரு நகரம், a city

அரும் சுரம் இறந்த அம்பர் – பெரும் 117
அரிய பாலை நிலத்தைக கடந்தபின்னர், அங்கே

நெல் விளை கழனி அம்பர் கிழவோன் – புறம் 385/9
நெல் விளையும் வயல்வெளிகளையுடை அம்பர் நகரத்துக் கிழவோன்

அம்பல்

அம்பல் – (பெ) தலைவன், தலைவி களவு ஒழுக்கத்தைப் பற்றி ஊரில் சிலர் கூடிப்பேசும் பழிச்சொற்கள்

அலர் வாய் பெண்டிர் அம்பல் தூற்ற – அகம் 70/6
அலர் கூறும் வாயினையுடைய பெண்டிர் அம்பலாக்கித் தூற்ற

அம்பி

அம்பி – (பெ) தோணி , a small boat

இடிக்குரல் புணரிப் பௌவத்திடுமார்
நிறையப் பெய்த அம்பி காழோர்
சிறையருங் களிற்றின் பரதவர் ஒய்யும் – நற் 74/2-4
இடிமுழக்கத்தைக் கொண்ட அலைகளையுடைய பெருங்கடலில் இடும்பொருட்டு
நிறைய ஏற்றப்பட்ட தோணியை அங்குசத்தையுடையோரால்
அடக்குதற்கரிய களிற்றினைப் போல பரதவர் செலுத்த

அயத்து

தண் அயத்து அமன்ற கூதளம் குழைய – அகம் 68/2

அயம்

அயம் – (பெ) பள்ளத்து நீர், water in a ditch

அயத்து வளர் பைஞ்சாய் முருந்தின் அன்ன – அகம் 62/1
பள்ள நீரில் வளர்ந்த பைஞ்சாய்க் கோரையின் குருத்தினைப் போன்ற

இயங்குநர் மடிந்த அயம் திகழ் சிறு நெறி – நற் 257/8
வழிச்செல்வோர் இல்லாத நீருள்ள பள்ளங்களுள்ள சிறிய வழி

அயர்

அயர் (வி) – 1. கொண்டாடு, அனுசரி, celebrate, observe
2. மற , forget
3. செலுத்து, drive
1.அ.
கிராமத்துப் பூசாரி, முருகன்போல் வேடமணிந்து, ஒரு திறந்த வெளியில் களம்
அமைத்து, பலியுணவு செலுத்தி, தெய்வம் தன்மீது வந்து ஏற, ஆட்டமிட்டுக்
குறிசொல்லுவது வெறி அயர்தல், முருகு அயர்தல் அல்லது அணங்கு அயர்தல் எனப்படும்

வேலன் தைஇய வெறி அயர் களனும் – திரு 222
முருகு அயர்ந்து வந்த முது வாய் வேல – குறு 362/1
அணங்கு அயர் வியன் களம் பொலிய பைய – அகம் 382/6
ஆ.
ஊர்முழுக்கத் திருவிழா எடுத்து, பொங்கல் வைத்து, தெய்வ வழிபாடு செய்வர்.
அது சாறு அயர்தல் அல்லது விழவு அயர்தல் எனப்படும்.

நீறு அடங்கு தெருவின் அவன் சாறு அயர் மூதூர் – சிறு 201
விழவு அயர் துணங்கை தழூஉகம் செல்ல – நற் 50/3
இ.
மகளிர் தோழியரோடு நீரில் விளையாடுவர். இது விளையாட்டயர்தல் அல்லது
ஓரை அயர்தல் எனப்படும்

மடக்குறு மாக்களோடு ஓரை அயரும் – கலித். 82.
ஈ.
ஒரு வீட்டுக்கு விருந்தினர் வருவதாக இருந்தால், அந்த இல்லத்தலைவியும்,
ஏனையோரும் பரபரப்புடன் இயங்கி விருந்துணவு சமைப்பதில் ஈடுபடுவர். இது
விருந்து அயர்தல் எனப்படும்.

விருந்து அயர் விருப்பினள் திருந்து இழையோளே – நற் 361/9
உ.
ஒரு வீட்டிலுள்ளோர் முற்றத்தில் அமர்ந்து இரவில் நிலாவெளிச்சத்தில்
சில மகிச்சியான பொழுதுபோக்குகளில் ஈடுபடுவர். அதுவும் அயர்தலே

பல் கிளைக் குறவர் அல்கு அயர் முன்றில் – நற் 44/8
ஊ.
மாலைவேளியில் இளம்பெண்கள் நகருக்கு வேளியில் வந்து நெல்லும் மலரும்
தூவி மேற்குத்திசைநோக்கிக் கைதொழுது இறைவனைத் தொழுவர். இது
மாலை அயர்தல் எனப்படும்.

மடவரல் மகளிர் பிடகைப் பெய்த
செவ்வி அரும்பின் பைங்கால் பித்திகத்து
அவ்விதழ் அவிழ்பதம் கமழப் பொழுதறிந்து
இரும்புசெய் விளக்கின் ஈர்ந்திரிக் கொளீஇ
நெல்லும் மலரும் தூஉய்க் கைதொழுது
மல்லல் ஆவணம் மாலை அயர – நெடு. 39-44

மேலும் குறவர்கள் ஆடுவது – குரவை அயர்தல்
மணம் நிகழ்த்துவது – மணம் அயர்தல், வதுவை அயர்தல்
பயணம் மேற்கொள்ளல் – செலவு அயர்தல்

2.
கார் என்று அயர்ந்த உள்ளமொடு தேர்வு இல
பிடவும் கொன்றையும் கோடலும்
மடவ ஆகலின் மலர்ந்தன பலவே – நற் 99/8
கார்காலம் என்று மறந்துபோன உள்ளத்துடனே அறியாதனவாய்
பிடவும், கொன்றையும் காந்தளும்
அறிவில்லாப்பொருளவாதலின் பலவாய் மலர்ந்துவிட்டன.

3.
அணி கிளர் நெடும் திண் தேர் அயர்மதி – கலி 30/19
அழகு பொலிந்த நெடிய திண்ணிய தேரைச் செலுத்துவாயாக

அயறு

அயறு – (பெ) புண் வழலை, புண்கசிவு, Excrescence resulting from a sore

அயறு சோரும் இரும் சென்னிய – புறம் 22/7
புண் வழலை வடியும் பெரிய தலையையுடையன

அயா

அயா – (பெ) தளர்ச்சி, Languor, faintness

விண் தோய் வரை பந்து எறிந்த அயா வீட – கலி 40/22
விண்ணைத் தொடும் மலைகளில் பந்தடித்து விளையாடிய இளைப்பு போக

பகடு அயா கொள்ளும் வெம் முனை – அகம் 329/7
வண்டியிழுக்கும் எருதுகள் தளர்ச்சி கொள்ளும் கடுமையான இடம்

அயாவுயிர்

அயாவுயிர் – (வி) பெருமூச்சுவிடு, sigh

கந்து பிணி யானை அயாவுயிர்த்து அன்ன – நற் 62/2
கழியில் கட்டப்பட்ட யானை பெருமூச்சுவிட்டதைப் போல

அயினி

அயினி – (பெ) உணவு

உமணர் தந்த உப்பு நொடை நெல்லின்
அயினி மா இன்று அருந்த – நற் 254/7
உப்புவணிகர்கள் உப்பினை விற்று அதற்கு விலையாகப் பெற்ற நெல்லைக் குற்றிச் செய்த
உணவை உன் குதிரை இன்று உண்ண

பால்விட்டு, அயினியும் இன்று அயின்றனனே – புறம் 77/8
பால்குடியை மறந்து, உணவும் இன்று உண்டான்

அயிர்

அயிர் – 1. (வி) ஐயுறு, suspect
– 2 (பெ) அயிர்ப்பு – ஐயம்
– 3. (பெ) குறுமணல், நுண்ணிதான பொருள்
– 4 (பெ) புகைக்கும் நறுமணப்பொருள்
1.
அரும் கடி வாயில் அயிராது புகுமின் – மலை 491
அரிய பாதுகாப்புள்ள வாயிலில் ஐயுறாமல் நுழையுங்கள்

நெருநையும், அயிர்த்தன்றுமன்னே நெஞ்சம் – அகம் 315/5
நேற்றும் ஐயுற்றது நெஞ்சம் நிச்சயமாக

2.
பாணர், அயிர்ப்பு கொண்டு அன்ன கொன்றை அம் தீம் கனி
பறை அறை கடிப்பின் அறை அறையாத் துயல்வர – நற் 46/6,7
பாணர் ஐயம் கொள்கின்றவாறு, கொன்றையின் அழகிய இனிய கனிகள்
பறையை அடிக்கின்ற குறுந்தடிபோல் பாறையில் விழுமாறு ஆட

3.
அறு துறை அயிர் மணல் படு_கரை போகி – அகம் 113/20
மக்கள் நடமாட்டம் அற்ற துறையாகிய நுண்மணல் பொருந்திய கரையினைத் தாண்டி

அயிர் உருப்பு_உற்ற ஆடு அமை விசயம் – மது 625
கற்கண்டுத்தூளை வெப்பமேற்றி சமைத்த பூரணம்

4.
இரும் காழ் அகிலொடு வெள் அயிர் புகைப்ப – நெடு 56
கரிய வயிரம்பாய்ந்த அகிலோடு வெள்ளிய சாம்பிராணித்தூளையும் கூட்டிப் புகைப்ப

அயிலை

அயிலை – (பெ) ஒரு வகை மீன், அயிரை என்பர்

அயிலை துழந்த அம் புளி சொரிந்து – அகம் 60/5
அயிலை மீனை இட்டு ஆக்கிய அழகிய புளிக்குழம்பை ஊற்றி

கொழும் கண் அயிலை பகுக்கும் துறைவன் – அகம் 70/4
கொழுவிய கண்களையுடைய அயிலையை யாவர்க்கும் பகுத்துக் கொடுக்கும் துறைவன்

அயில்

அயில் – 1. (வி) உண், பருகு
– 2. (பெ) இரும்பு, இரும்பினாலான கருவி
– 3. (பெ) கூர்மை
1.
வைகிற்,பழம் சோறு அயிலும் முழங்கு நீர் படப்பை – புறம் 399/11
விடியலில், பழஞ்சோற்றை உண்ணும் முழங்குகின்ற நீரையுடைய தோட்டங்கள்

கரும்பின்,கால் எறி கடிகை கண் அயின்று அன்ன – குறு 267/3
கரும்பின், அடிமரத்தைத் துண்டித்து அதன் துண்டத்தை உண்டது போல

2.
அயில் உருப்பு அனைய ஆகி – சிறு 7
இரும்பு வெப்பமேற்ற தன்மையது ஆகி,

அயில்வாய்க்
கூர்முகச் சிதலை வேய்ந்த – அகம் 167/18,அ9
வேலின் முனை போன்ற
கூரிய முகத்தினையுடைய கறையான் மூடிக்கொள்தலின்

3.
அறை வாய் குறும் துணி அயில் உளி பொருத – சிறு 52
வெட்டின வாயையுடைய குறிய மரக்கட்டையைக் கூர்மையான உளி குடைந்த

அயில் நுனை மருப்பின் தம் கை இடை கொண்டு என – முல் 34
கூரிய முனைகளையுடைய கொம்பினில் தம் துதிக்கையை தூக்கிப்போட்டதைப் போல்

அரக்கு

அரக்கு – (பெ) சாதிலிங்கம், vermilion, sealing wax
இது சிவப்பு நிறமுடையது.

அரக்கு உருக்கு அன்ன செம் நிலன் ஒதுங்கலின் – பொரு 43
சாதிலிங்கத்தை உருக்கிவிட்டாற்போன்ற சிவப்பு நிலத்தில் ஒதுங்குவதால்

மரத்தால் செய்யப்பட்ட பொருள்களில் இருக்கும் சிறிய சந்துபொந்துகளை அடைக்க
அரக்கை உருக்கிவிட்டு வழித்துவிடுவர்.

உள் அரக்கு எறிந்த உருக்குறு போர்வை – சிறு 256
உள்ளே சாதிலிங்கன் வழித்த உருக்கமைந்த பலகை

அரணம்

அரணம் – (பெ) 1. அரண், fort, protective structures 2. செருப்பு, காலணி, sandal
1.
நீள் மதில் அரணம் பாய்ந்து என தொடி பிளந்து – ஐங் 444/2
பகைவரின் நீண்ட மதிலாகிய அரண்களைக் குத்திப் பெயர்த்தமையால், பூண்கள் பிளந்து
2.
அடி புதை அரணம் எய்தி படம் புக்கு – பெரும் 69
அடியை மறைக்கின்ற செருப்பைக் கோத்து, மேலங்கி உடுத்தி

அரந்தை

அரந்தை – (பெ) துன்பம், affliction, trouble

அரந்தைப் பெண்டிர் இனைந்தனர் அகவ – மது 166
மனக்கவலையையுடைய பெண்டிர் வருந்திக் கூப்பிட

நனம் தலை உலகம் அரந்தை தூங்க – புறம் 221/11
அகன்ற இடத்தையுடைய உலகம் துன்பமாக

அரமகள்

அரமகள் – (பெ) தேவர் உலகத்துப் பெண், Celestial damsel
இவர், சூர் அரமகளிர், வான் அரமகளிர், வரை அரமகளிர் எனப் பலவகைப்படுவர்.

தண் தாழ் அருவி அரமகளிர் ஆடுபவே – கலி 40/23
குளிர்ச்சியா இறங்கும் அருவியில் அரமகளிர் நீராடுவர்

சூர் அரமகளிர் ஆடும் சோலை – திரு 41
வருத்தும் தெய்வமகளிர் விளையாடும் சோலை

வான் அரமகளிர்க்கு வதுவை சூட்ட – திரு 117
வானத்தில் உறையும் தெய்வ மகளிர்க்கு மணமாலை சூட்ட

வரை அரமகளிர் புரையும் சாயலள் – ஐங் 255/2
மலையில் இருக்கும் அரமகளிர் போன்ற சாயலுடையவள்

அரமியம்

அரமியம் – (பெ) நிலா முற்றம், open terrace of a house

நிரை நிலை மாடத்து அரமியம்தோறும்
மழை மாய் மதியின் தோன்றுபு மறைய – மது 451,452
வரிசையாக நிற்கின்ற மாடங்களின் நிலாமுற்றங்கள்தோறும்
மேகங்கள் மறைக்கும் திங்களைப் போல் தோன்றித்தோன்றி மறைய

அரம்பு

அரம்பு – (பெ) குறும்பு, Mischief, wicked deed

அரம்பு கொள் பூசல் களையுநர் காணா – அகம் 179/9
குறும்பர்கள் செய்யும் பூசலை நீக்குவாரைக் காணாத

அரம்பு வந்து அலைக்கும் மாலை – அகம் 287/13
குறும்பாக வந்து வருத்தும் மாலையில்

அரற்று

அரற்று (வி) – புலம்பி அழு, அதைப்போன்ற ஒலி எழுப்பு, bewail, sound like wailing

காதல் பெறாமையின் கனவினும் அரற்றும்- புறம் 198/7

களி சுரும்பு அரற்றும் காமர் புதலின் – ஐங் 416/3
மகிழ்ச்சியுடைய வண்டுகள் ஒலிக்கும் அழகிய பூம்புதர்களினிடையே

அரலை

அரலை – (பெ) 1. குற்றம், fault, நரம்புகளிலுள்ள கொடுமுறுக்கு, knot in a string
2. விதை, seed
3. அரளி, அலரி, Oleander, l.sh., Nerium odorum;
1.
குரல் ஓர்த்துத் தொடுத்த சுகிர்புரி நரம்பின்
அரலை தீர உரீஇ – மலை 23,24
ஓசையை கூர்ந்து கேட்டுக் கட்டின வடித்து முறுக்கின நரம்பில்
குற்றம் தீரத் தீற்றி
2.
புண்ணரிந்து, அரலை உக்கன நெடும் தாள் ஆசினி – மலை 139
புண்ணாகி வெடித்து, விதைகள் சிந்தப் பெற்றன நெடிய அடியை உடைய ஆசினிப்பலாமரங்கள்
3.
அரலை மாலை சூட்டி – குறு 214/6
அரளிப்பூ மாலை சூட்டி –

அரவு

அரவு – (பெ) 1. பாம்பு, snake 2. அராவுகின்ற அரம், filing rod

1.
அரவு இரை தேரும் ஆர் இருள் நடுநாள் – நற் 285/1
பாம்புகள் இரை தேடும் நிறைந்த இருளைக் கொண்ட நள்ளிரவு
2.
அரவு வாள் வாய முள் இலை தாழை – நற் 235/2
அராவுகின்ற வாளரம் போன்ர வாயையுடைய முட்கள் பொருந்திய இலை மிக்க தாழை

அரிகால்

அரிகால் – (பெ) அரிதாள், கதிர் அறித்த அடிக்கட்டை Stubble

அரிகால் மாறிய அம் கண் அகல் வயல் – நற் 210/1
நெல்லறுத்து நீங்கப்பெற்ற அழகிய இடம் அகன்ற வயல்

அரிகால் போழ்ந்த தெரி பகட்டு உழவர் – அகம் 41/6
அரிதாளையுடைய நிலத்தைப் பிளந்து உழுத ஆய்ந்த எருதுகளைக் கொண்ட உழவர்

அரிப்பறை

அரிப்பறை – (பெ) அரித்தெழும் ஓசையையுடைய ஒரு பறை, தட்டைப்பறை

விளைந்த கழனி, வன் கை வினைஞர் அரிப்பறை – மது 262
நெல் விளைந்த கழனியில், வலிய கையைக் கொண்ட வினைஞரின் அரிப்பறை

அரிப்பறையால் புள் ஓப்பி – புறம் 395/7
அரிப்பறையால் பறவைகளை ஓட்டி

பெருமுதுச் செல்வர் பொன்னுடைப் புதல்வர்
சிறு தோள் கோத்த செவ் அரிப்பறையின்
கண் அகத்து எழுதிய குரீஇப் போல – நற் 58/1-3
முதிர்ந்த செல்வர்களின் பொன் அணிகலன்களையுடைய புதல்வர்
தம் சிறிய தோளில் மாட்டிய செம்மையாக ஒலிக்கும் அரிப்பறையின்
மேல்பக்கம் வரைந்த குருவியைப் போல

அரிமா

அரிமா – (பெ) சிங்கம், lion

அரிமா அன்ன அணங்கு உடைத் துப்பின் – பட் 298
சிங்கத்தைப் போன்ற பகைவரை வருத்துதலையுடைய வலிமையினையும்

அரில்

அரில் – (பெ) 1. பின்னல், interlacing, பிணக்கம்
2. புதர்க்காடு, Low jungle
3. சிறுதூறு, thicket
1.
நூலின் வலவா நுணங்கு அரில் மாலை – பொரு 161
நூலால் கட்டாத நுண்மையினையும் பின்னலையும் உடைய பொன்னரிமாலை
2.
பின்னி அன்ன பிணங்கு அரில் நுழை-தொறும் – மலை 379
பின்னிவிட்டதைப் போன்ற பிணக்கமுள்ள புதர்களில் நுழையும்போதெல்லாம்
3.
அரில் இவர் புற்றத்து அல்குஇரை நசைஇ – அகம் 257/19
சிறுதூறுகள் படர்ந்த புற்றின்கண் இரவில் உண்ணும் இரையை விரும்பி

அரிவை

அரிவை – (பெ) பெண், woman, lady

அரி ஏர் உண்கண் அரிவையர் ஏத்த – சிறு 215
செவ்வரி படர்ந்த அழகிய மையுண்ட கண்களையுடைய மகளிர் வாழ்த்த

அருப்பம்

அருப்பம் – (பெ) 1. அரண், fort
2. கடினம், சிரமம், difficulty
1.
வேட்டுப் புழை அருப்பம் மாட்டி – முல் 26
வேடவரின் சிறுவாயில் வைத்த அரண்களை அழித்து
2.
அடுக்கல் மீமிசை அருப்பம் பேணாது – மலை 19
மலையிடத்து மிக்க உயரத்தில் செல்லும் சிரமத்தைப் பாராது

அரைநாள்

அரைநாள் – (பெ)1.நள்ளிரவு midnight, 2. நண்பகல், midnoon
1.
அரைநாள் யாமத்து விழு மழை கரந்து – அகம் 198/4
நள்ளிரவின் யாமத்தில் மிக்க மழையில் மறைந்து
2.
மாதிரம்
விரிகதிர் பரப்பிய வியல்வாய் மண்டிலம்
இருகோல் குறிநிலை வழுக்காது குடக்கேர்பு
ஒரு திறம் சாரா அரைநாள் அமயத்து – நெடு 75
திசைகளில்
விரிந்த கதிர்களைப் பரப்பின அகன்ற இடத்தையுடைய ஞாயிற்றின் மண்டிலம்
இருகோல்கள் குறிக்கும் நிலைகள் மாறாமல், மேற்கில் செல்வதற்காக
ஒரு பக்கமும் சாராமல் நிற்கும் உச்சிப்பொழுதான நண்பகல் வேளையில்

தென்வடலாக நிற்கும் இரு கோல்களின் நிழல்கள் உச்சிப்பொழுதில் ஒன்றோடொன்று
சேர்ந்து விழுந்து, ஒரே நேர்கோடாகத் தெரிவதுவே ஒரு திறம் சாரா, இருகோல்
குறிநிலை எனப்படுகிறது. ஏனைய நேரங்களில் அவை இரு கோடுகளாகத் தெரியும்

அறுவை

அறுவை (பெ) – ஆடை, வேட்டி , cloth, garment

அரவு உரி அன்ன அறுவை நல்கி – பொரு 83
பாம்புச் சட்டைபோன்ற ஆடைகளைத் தந்து

புலைத்தி கழீஇய தூ வெள் அறுவை
தாது எரு மறுகின் மாசுண இருந்து – புறம் 311/2,3
சலவைப்பெண் துவைத்த தூய வெள்ளையான வேட்டி
சாணம் மெழுகிய தெருவில் தூசுபட அமர்ந்து

அற்சிரம்

அற்சிரம் – (பெ) முன்பனிக்காலம், early dew season,
மார்கழி, தை ஆகிய இருமாதங்களும் முன்பனிக்காலமாகும்
சிலவேளைகளில் இது பின்பனிக்காலத்தையும் குறிக்கும்.

கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என்ற
ஆறு பருவங்களையுடையது தமிழர் ஆண்டுக்கணக்கு. இது ஆவணியில் தொடங்கி
இரண்டிரண்டு மாதங்களாகச் செல்லும்.

வாடை தூக்கும் வரு பனி அற்சிரம் – அகம் 78/10
வாடைக் காற்று வீசும் வருகின்ற பனியைக் கொண்ட முன்பனிக்காலம்

அற்சிரம் நீங்கிய அரும் பத வேனில் – அகம் 97/17
பின்பனிக்காலம் நீங்கிய அரிய பதமான இளவேனில்

அலகை

அலகை – (பெ) 1.சோழி, பலகறை, cowry 2. அளவு, standard measure

அலகை அன்ன வெள் வேர் பீலி – மலை 234
சோழியை ஒத்த வெள்ளிய வேரினையுடைய தோகை

அலகை தவிர்த்த எண் அரும் திறத்த – மலை 347
அளவிடுதல் முடியாத, எண்ணிப்பார்க்கமுடியாத

அலங்கல்

அலங்கல் – (பெ) மேலும் கீழும் அசைதல், அவ்வாறு அசையும் ஒரு பொருள் – மாலை, தானியக்கதிர்
movement up and down – an object that moves like that – garland, ear of corn

வெண் போழ் தைஇய அலங்கல் அம் தொடலை – நற் 169/8
வெள்ளிய பனங்குருத்தின் துண்டோடு சேர்த்துச் செய்த அசைகின்ற மாலையின் தொங்கலோடு

கழனி நெல் ஈன் கவை முதல் அலங்கல் – அகம் 13/19
வயற்பரப்பின் நெற்பயிர் ஈன்ற கவைத்த அடியைக்கொண்ட ஆடும் நெற்கதிர்

அம் தளிர் மாஅத்து அலங்கல் மீமிசை – அகம் 229/18
அழகிய தளிர்களைக் கொண்ட மாமரத்தின் அசைகின்ற கிளைகளின் மேல்

அலங்கு

அலங்கு – (வி) அசை, ஆடு, swing

நீண்ட மெல்லிய கிளையில் அமர்ந்திருக்கும் ஒரு பறவை, தன் கால்களால் கிளையைக் கீழே அழுத்தி,
இறக்கையை விரித்து மேலே எழுந்த பின்னர், அந்தக் கிளை மேலும் கீழும் சிறிது நேரம்
ஆடும் அல்லவா, அதுவேதான் அலங்குதல்.
கழுத்தில் முத்துமாலை அணிந்திருக்கும் ஒருவர் சற்றே குனிந்து அசையும்போது அந்த முத்துமாலை
இடமும் வலமும் ஆடும் அல்லவா அதுவும் அலங்குதல்தான்.

நீள் அரை இலவத்து அலங்கு சினை – பெரும் 83
நீண்ட அடிமரத்தியுடைய இலவமரத்தின் ஆடுகின்ற கிளை

அலங்கு சினை இருந்த அம் சிறை நாரை – குறு 296/2
ஆடுகின்ற கிளையில் இருந்த அழகிய சிறகுகளைக் கொண்ட நாரை

அலங்கும் அருவி ஆர்த்து இமிழ்பு இழிய – பரி 15/21
அசைந்து வீழும் அருவி மிக்க ஒலியோடு இறங்கும்

அலமரல்

அலமரல் – (பெ) 1. சுழற்சி, whirling, spinning around, 2. மனச்சுழற்சி, மனக்கலக்கம், pertubation
1.
அலமரல் ஆயமொடு யாங்கணும் படாஅல் – அகம் 7/3
சுழன்று திரியும் உன் தோழியருடன் எங்கேயும் போகவேண்டாம்
2.
அலமரல் வருத்தம் தீர – நற் 9/3
மனக்கலக்கத்தோடுகூடிய வருத்தம் தீர

அலமரல் மழை கண் மல்கு பனி வார – அகம் 233/1
கலக்கமுள்ள குளிர்ந்த கண்ணிலிருந்து நிறைந்த நீர் ஒழுக

அலமரு

அலமரு – (வி) 1. சுழலு, to whirl 2. மனம்சுழலு, வருந்து, agitated

திரு முகத்து அலமரும் பெரு மதர் மழை கண் – பதி 21/35
அழகிய முகத்தில் சுழலும் பெரிய மதர்த்த குளிர்ந்த கண்கள்

அலமரு நோக்கின் நலம் வரு சுடர் நுதல் – ஐங் 375/4
மருண்ட பார்வையும் பெண்மை நலம் வரும் சுடர்விடும் நெற்றியும்

யாமத்தும் துயில் அலள் அலமரும் என் தோழி – கலி 45/18
நள்ளிரவிலும் தூக்கம்கொள்ளாள், மனம்கலங்கி வருந்தினாள் என் தோழி

அலரி

அலரி – (பெ) 1. அப்பொழுது பூத்த பூ, fresh flower
2. சூரியன், சூரியனின் கதிர்கள்
1.
அரும்பு அவிழ் அலரி தூஉய் கைதொழுது – முல் 10
அரும்புகள் அவிழ்ந்த பூக்களைத் தூவிக் கைதொழுது
2.
நள்ளிருள், அலரி விரிந்த விடியல் வைகினிர் கழி-மின் – மலை 196
செறிந்த இருள், ஞாயிற்றின் கதிர் விரிதலால் உண்டாகும் விடியற்காலம் வரை தங்கிப் போவீ

அலர்

அலர் 1. (வி) மலர், blossom, பெரிதாகு, become large
2. (வி) பழிச்சொல்கூறு, indulge in gossip
3. (பெ) மலர், fully blossomed flower
4. (பெ) ஊரார் பழிச்சொல், gossip of the village-folk regarding somebody’s secret love
1.
விண்பொரு நெடுவரைப் பரிதியின் தொடுத்த
தண் கமழ் அலர் இறால் சிதைய – திரு 300
விண்ணைத் தீண்டுகின்ற நெடிய மலையில் ஞாயிற்றின் மண்டிலத்தைப் போலச் சேர்த்துவைத்த
குளிர்ந்த மணக்கின்ற விரிந்த தேன்கூடு சிதைய

அரும்பு அலர் செருந்தி நெடும் கான் மலர் கமழ் – புறம் 390/3
அரும்பு மலர்ந்த செருந்தி மரங்கள் உள்ள நெடிய காட்டின் மலர்கள் கமழும்

ஆரம் தாங்கிய அலர் முலை ஆகத்து – நெடு 136
முத்து மாலையைத் தாங்கிய பருத்த முலைகளைக் கொண்ட மார்பினில்
2.
ஆடுமகள் போலப் பெயர்தல்
ஆற்றேன் தெய்ய அலர்க இ ஊரே – அகம் 370/16
கூத்தாடும் பெண் போல, ஊரைவிட்டுச் செல்லுதல்
இயலாதவளாகின்றேன், அலர்கூறட்டும் இவ்வூர்.
3.
மாரிப் பீரத்து அலர் சில கொண்டே – குறு 98/5
மழைக்காலத்து பீர்க்கின் மலர்கள் சிலவற்றை எடுத்துச் சென்று
4.
ஊரும் சேரியும் ஓராங்கு அலர் எழ – அகம் 383/2
ஊரிலும், தெருவிலும் ஒன்றுசேரப் பழிச்சொல் எழ

அலவன்

அலவன் – (பெ) நண்டு, crab

கவை தாள் அலவன் அளற்று அளை சிதைய – பெரும் 208
பிளவுபட்ட காலையுடைய நண்டின் சேற்றில் இருக்கும் வளை கெடும்படி

அல்கலும்

அல்கலும் – (வி.அ) நாள்முழுதும், நாள்தோறும், throughout the day, every day

அறு குளம் நிறைக்குந போல அல்கலும்/அழுதல் மேவல ஆகி – அகம் 11/13,14
நீரற்ற குளத்தை நிறைப்பவள் போல நாள்முழுதும்/ அழுதலைப் பொருந்தாவாகி

அசையினிர் சேப்பின் அல்கலும் பெறுகுவிர் – மலை 443
இளைப்பாறிச் சிலநாள் தங்கினால் நாள்தோறும் பெறுவீர்கள்

அல்கல்

அல்கல் – (பெ) 1. இரவு, night
2. தங்குதல், staying
1.
அளிதோ தானே தோழி அல்கல்/வந்தோன் மன்ற குன்ற நாடன் – நற் 114/5,6
இரங்கத்தக்கவன் தோழி! இரவில்/வந்தோன் அந்தக் குன்றினைச் சேர்ந்தவன்

2.
இரவில் புணர்ந்தோர் இடை முலை அல்கல், புரைவது – பரி 6/54
இரவில் சந்தித்தோர் மார்பிடையே தங்குதல், உயர்வானது

அல்கிரை

அல்கிரை – (பெ) அல்கு இரை, அடுத்தவேளைக்கு என வைத்து உண்ணும் உணவு, இரவு உணவு

பிள்ளை வெருகிற்கு அல்கிரை ஆகி – குறு 107/4
குட்டிப்பூனைக்கு இட்டு வைத்துண்ணும் இரையாக அகப்பட்டு

அரில் இவர் புற்றத்து அல்கிரை நசைஇ – அகம் 257/19
சிறுதூறுகள் படர்ந்த புற்றில் இராப்பொழுதில் உண்ணும் இரையினை விரும்பி

அல்கு

அல்கு – 1.(வி) தங்கு
-2 (வி) சுருங்கு, குறைவாகு
-3 (பெ.அ) மிகுந்த
-4. (பெ) இரவு
1
அரும் சுரம் செல்வோர்க்கு அல்கு நிழல் ஆகும் – நற் 137/8
அரிய பாலைநிலத்தில் செல்வோருக்குத் தங்குவதற்கான நிழலாகும்

ஆடிய தொழிலும் அல்கிய பொழிலும் – நற் 131/1
விளையாடிய விளையாட்டுக்களையும், தங்கிய சோலைகளையும்
2.
அல்குறு வரி நிழல் அசைஇ – அகம் 121/9
சுருங்கிய வரிவரியாக உள்ள நிழலில் இளைப்பாறி
3
அல்கு படர் உழந்த அரி மதர் மழை கண் – நற் 8/1
மிக்க துன்பம் உழந்த செவ்வரி பரந்த மதர்த்த குளிர்ந்த கண்கள்
4
அல்குறு பொழுதில் தாது முகை தயங்க – குறு 273/1
இரவாகும் வேளையில் தாதையுடைய முகைகள் மலர்ந்து திகழும்படி

அல்குல்

அல்குல் – (பெ) பெண்களின் இடைக்குக் கீழே, தொடைக்கு மேலே உடலைச் சுற்றிலும் இருக்கும்
பகுதி. பெரும்பாலும் பிட்டப்பகுதி.

ஒரு உயரமான நெற்குதிருக்கும், இத்தகைய பகுதியை இது குறிக்கும்.

பகட்டு ஆ ஈன்ற கொடுநடைக் குழவி
கவைத் தாம்பு தொடுத்த காழ் ஊன்று அல்குல்
ஏணி எய்தா நீள் நெடு மார்பின் ——————–
குமரி மூத்த கூடு ஓங்கு நல் இல்- பெரும் 243-247
எருதுகளோடு கூடிய பசு ஈன்ற வளைந்த காலால் நடக்கும் நடையைக் கொண்ட கன்றின்
கவைத்த தாம்புக்கயிறு கட்டிய சிறு கழி ஊன்றிய இடைப்பகுதியையும்
ஏணிவைத்தாலும் எட்டாத நீண்ட நெடிய மார்பினையும், ——— கொண்ட
குமரித்தன்மை முதிர்ந்த கூடுகள் உயர்ந்து நிற்கும் நல்ல இல்லங்கள்.

இது தானியங்கள் சேர்த்துவைக்கும் குதிர். அதற்கு அடிப்பக்கத்தில் ஒரு சிறு தறியில் ஒரு
இளங்கன்று கட்டப்பட்டிருக்கிறது. இக் குதிருக்குக் கால்கள் கிடையா அல்லவா! எனவே
இதன் தரையை ஒட்டிய பகுதியையே இதன் அல்குல் என்கிறார் புலவர்.

பெரும்பாலும் இது பெண்களின் இடைக்குச் சற்றுக் கீழே உள்ள பகுதியையே குறிக்கும்.

பல் பூ பகை தழை நுடங்கும் அல்குல் – நற் 8/2
பல பூக்களை மாறுபடத் தொடுத்த தழையுடை அசையும்படி உடுத்த அல்குல்.

பல் காசு நிரைத்த சில் காழ் அல்குல் – திரு 16
பலமணிகள் கோத்த வடமாகிய மேகலையை அணிந்த அல்குல்

மென்தோள், துகில் அணி அல்குல் துளங்கு இயல் மகளிர் – சிறு 262
மென்மையான தோளினையும், துகில் சூழ்ந்த அல்குலினையும், அசைந்த சாயலினையும் கொண்ட மகளிர்

அல்குலைச் சுற்றி அணியப்படுவன:

பருமம் தாங்கிய பணிந்து ஏந்து அல்குல் – திரு 146
திருந்து காழ் அல்குல் திளைப்ப உடீஇ – திரு 204
வண்டு இருப்பு அன்ன பல் காழ் அல்குல் – பொரு 39
பை விரி அல்குல் கொய் தழை தைஇ – குறி 102
பொலம் பசும் பாண்டில் காசு நிரை அல்குல் – ஐங் 310/1
பூந் துகில் இமைக்கும் பொலன் காழ் அல்குல் – அகம் 387/7

அல்குல் பார்ப்பதற்கு எப்படி இருக்கும்?

கோடு ஏந்து அல்குல் – நற் 198/6
ஐது அகல் அல்குல் – நற் 200/10
ஐது ஏய்ந்து அகன்ற அல்குல் மை கூர்ந்து – நற் 252/8
துத்தி பாந்தள் பைத்து அகல் அல்குல் – குறு 294/5
பின்னொடு கெழீஇய தட அரவு அல்குல் – கலி 125/17

இதில் பாம்பின் படம்போன்று அகன்ற அல்குல் என்ற வருணனையே, பிற்காலத்தார் அல்குல்
என்பது பெண்ணுறுப்பைக் குறிப்பதாகக் கொள்ள இடம் கொடுத்தது.

அல்லங்காடி

அல்லங்காடி பார்க்க அங்காடி
அங்காடி – (பெ) கடை, கடைத்தெரு, market, market place
இந்த அங்காடி இருவகைப்படும்.
பகலில் திறந்திருக்கும் கடைத்தெரு நாளங்காடி என்றும்
இரவில் திறக்கும் கடைத்தெரு அல்லங்காடி என்றும் அழைக்கப்பட்டன.

நாளங்காடி நனம் தலை கம்பலை – மது 430
நாளங்காடியையுடைய அகன்ற இடத்தே எழுந்த பெரிய ஆரவாரம்

அல்லங்காடி அழிதரு கம்பலை – மது 544
அந்திக்காலத்துக் கடைத்தெருவில் மிகுதியைத் தரும் ஆரவாரம்

அளகம்

அளகம் – (பெ) பெண்ணின் கூந்தல், woman’s hair

அளகம் சேர்ந்த திருநுதல் – நற் 377/8
கூந்தல் சேர்ந்த சிறிய நெற்றி

அளகு

அளகு – (பெ) கோழி, பருந்து ஆகியவற்றின் பெண், hen of fowl

அளகு உடை சேவல் கிளை புகா ஆர – பதி 35/5
பெடையையுடைய சேவல்பருந்தினம் இரையை உண்ண

மனை வாழ் அளகின் வாட்டொடும் பெறுகுவிர் – பெரும் 256
வீட்டில் வாழும் கோழியின் வாட்டியதைப் பெறுவீர்

அளக்கர்

அளக்கர் – (பெ) கடல், sea

அளக்கர்த் திணை விளக்கு ஆக – புறம் 229/10
கடலால் சூழப்பட்ட பூமிக்கு விளக்காக

அளை

அளை – 1. (வி) அ. துளாவு, stir, ஆ. கல, mix
2. (பெ) அ.. விலங்குகளின் இருப்பிடம், குகை, cave, den
ஆ.. நண்டுகளின் வளை, holes of crabs
இ.. புற்று, anthill
ஈ. மோர், buttermilk

1.அ
தேம் கலந்து அளைஇய தீம் பால் ஏந்தி – அகம் 207/14
தேன் கலந்து துளாவிய இனிய பாலை ஏந்தி

1.ஆ
மொய்ம்பு இறந்து திரிதரும் ஒருபெருந் தெரியல்,
மணிதொடர்ந்தன்ன ஒண்பூங்கோதை
அணி கிளர் மார்பின் ஆரமொடு அளைஇ – மது 439
வலியைக் கடந்து திரியும் ஒன்றாகிய பெரிய வேப்பமாலையினையும்,
மாணிக்கம் ஒழுகினாற்போன்று ஒள்ளிய செங்கழுநீர் மாலையினையும்
அழகுவிளங்கும் மார்பில் முத்துமாலையோடே கலந்து அணிந்து
2.அ
குரூஉ மயிர் யாக்கைக் குடாவடி உளியம்
பெரும் கல் விடர் அளை செறிய – திரு 314
கரிய நிறமுள்ள மயிரினையுடைய உடம்பினையும், வளைந்த அடியினையும் உடைய கரடி
பெரிய கல்வெடித்த குகையிலே சேர,
2.ஆ
அளை வாழ் அலவன் கண் கண்டு அன்ன – பொரு 9
வளையிலே வாழ்கின்ற நண்டின் கண்ணைப் பார்த்தாற்போன்ற
2.இ
பாம்பு அளை செறிய முழங்கி வலன் ஏர்பு
வான் தளி பொழிந்த காண்பு இன் காலை – நற் 264/1
பாம்பு புற்றுக்குள் செறிந்திருக்குமாறு முழங்கி, வலப்பக்கமாக எழுந்து
மேகம் மழை பொழிந்த காண்பதற்கினிய காலை
2.ஈ
அளை விலை உணவின் கிளை உடன் அருத்தி – பெரும் 163
மோரை விற்ற நெல்லுணவால் சுற்றத்தார் எல்லாரையும் உண்ணப்பண்ணி

அழுங்கல்

அழுங்கல் – (பெ) 1. துன்பம், affliction
2. இரக்கம், compassion
3. ஆரவாரம். uproar

அழுங்கல் நெஞ்சமொடு முழங்கும் – குறு 307/8
துன்பமுள்ள நெஞ்சத்தோடே முழங்கும்

கதம் பெரிது உடையள் யாய் அழுங்கலோ இலளே – நற் 150/11
சினம் பெரிது உடையவள் தாய், இரக்கமோ இல்லாதவள்.

ஒலி அவிந்தன்று இ அழுங்கல் ஊரே – அகம் 70/17
ஒலி அடங்கப்பெற்றது இந்த ஆரவாரம் மிக்க ஊர்.

அழுவம்

அழுவம் – (பெ) 1.பரப்பு, a vast expanse
அ.பாலைநிலப் பரப்பு, ஆ. கடற்பரப்பு இ. போர்க்களப்பரப்பு
அ.
வாகை வெண் நெற்று ஒலிக்கும்
வேய் பயில் அழுவம் முன்னியோரே – குறு 7/6
வாகைமரத்தில் வெள்ளிய நெற்றுக்கள் ஒலிக்கும்
மூங்கில்கள் நிறைந்திருக்கும் பாலைநிலப்பரப்பில் செல்ல நினைத்தவர்
ஆ.
பசும்பிதிர்த், திரை பயில் அழுவம் உழக்கி உரன் அழிந்து – அகம் 210/5
பசிய திவலைகளையுடைய அலைகள் நிறைந்த கடற்பரப்பைக் கலக்கி, வலி குன்றி
இ.
கறுத்தோர்,
ஒளிறு வேல் அழுவம் களிறு படக் கடக்கும் – அகம் 81/12
வெகுண்டெழுந்த பகைவரின்,
ஒளிர்கின்ற வேற்படையையுடைய போர்க்களத்தை, யானைகள் மடிய வெல்லும்

அவல்

அவல் – (பெ) 1. நெல்லை இடித்துச் செய்த உணவுப்பண்டம், riceflakes
– 2. பள்ளம், shappow depression
– 3. விளைநிலம், cultivated land

அவல் எறி உலக்கை பாடு விறந்து, அயல
கொடுவாய்க் கிள்ளை படுபகை வெரூஉம் – பெரும் 226, 227
அவலை இடிக்கும் உலக்கையின் ஓசி மிகுவதனால், அருகிலுள்ள
வளைந்த வாயையுடைய கிளிகள் தமக்குப் பகையாகக் கருதி அஞ்சும்

ஏறு உடை பெரு மழை பொழிந்து என அவல்தோறு
ஆடுகள பறையின் வரி நுணல் கறங்க – அகம் 364/2,3
இடியையுடைய பெரிய மழை பெய்ததாகப் பள்ளங்கள்தோறும்
ஆடுகளத்தில் ஒலிக்கும் பரைபோன்று வரியையுடைய தேரைகள் ஒலிக்க

புல் அரைக் காஞ்சிப் புனல்பொரு புதவின்
மெல் அவல் இருந்த ஊர்தொறும் – மலை 450
புல்லிய அடிமரத்தையுடைய காஞ்சிமரங்களும், நீர்வந்து மோதும் மதகுகளும்,
மென்மையான விளைநிலங்களும் இருந்த ஊர்கள்தோறும்

அவவு

அவவு (பெ) – மிக்க ஆர்வம், அவா, extreme interest , avidity

அவவுக் கொள் மனத்தேம் ஆகிய நமக்கே – நற் 212/10
ஆசைகொள்ளுகிற மனத்தையுடையேமாகிய நமக்கு

அவவு உறு நெஞ்சம் கவவு நனி விரும்பி – ஐங் 360/3
மிகுந்த வேட்கை கொண்ட எம் நெஞ்சம் உனது முயக்கத்தைப் பெரிதும் விரும்பி

அவினி
அவிர்

அவிர் – (வி) ஒளிர், glowing
– (பெ) ஒளிர்வு, glow

மணிகளோ, உயர்ந்த கற்களோ பதிக்காத தூய தங்கத்தால் ஆன புத்தம் புதிய
தங்க நகையின் பளபளப்பை அவிர்தல் எனலாம்.

எரி அகைந்து அன்ன அவிர்ந்து விளங்கு புரி சடை – அகம் 0/10
நெருப்பு எரிவது போன்ற ஒளிர்ந்து பிரகாசிக்கும் புரியையுடைய சடை

ஒண் பொன் அவிர் இழை தெழிப்ப இயலி – மது 666
ஒள்ளிய பொன்னாலான ஒளிரும் அணிகலன்கள் ஒலிக்க நடந்து

அவுணர்

அவுணர் – (பெ) அசுரர், demons at war with gods

செம் களம் பட கொன்று அவுணர் தேய்த்த – குறு 1/1
போர்க்களம் சிவப்பாகும்படி கொன்று அசுரர்களை அழித்த