ஃ | அ 87 |
ஆ 48 |
இ 47 |
ஈ 6 |
உ 15 |
ஊ 6 |
எ 18 |
ஏ 11 |
ஐ 4 |
ஒ 8 |
ஓ 4 |
ஔ | க் | க 99 |
கா 32 |
கி 3 |
கீ 1 |
கு 61 |
கூ 10 |
கெ 1 |
கே 3 |
கை 3 |
கொ 24 |
கோ 39 |
கௌ | ங் | ங | ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ | ச் | ச 10 |
சா 9 |
சி 21 |
சீ | சு 2 |
சூ | செ 17 |
சே 8 |
சை | சொ | சோ 9 |
சௌ | ஞ் | ஞ | ஞா | ஞி | ஞீ | ஞு | ஞூ | ஞெ | ஞே | ஞை | ஞொ | ஞோ | ஞௌ | ட் | ட | டா | டி | டீ | டு | டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ | ண் | ண | ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ | த் | த 23 |
தா 1 |
தி 22 |
தீ | து 11 |
தூ 4 |
தெ 7 |
தே 4 |
தை | தொ 5 |
தோ | தௌ | ந் | ந 31 |
நா 24 |
நி 6 |
நீ 11 |
நு | நூ | நெ 22 |
நே 5 |
நை | நொ 1 |
நோ | நௌ | ப் | ப 43 |
பா 33 |
பி 7 |
பீ | பு 39 |
பூ 10 |
பெ 11 |
பே 7 |
பை 2 |
பொ 7 |
போ 6 |
பௌ | ம் | ம 40 |
மா 25 |
மி 3 |
மீ 2 |
மு 28 |
மூ 4 |
மெ 1 |
மே 1 |
மை 5 |
மொ | மோ 6 |
மௌ | ய் | ய 2 |
யா | யி | யீ | யு | யூ | யெ | யே | யை | யொ | யோ | யௌ | ர் | ர | ரா | ரி | ரீ | ரு | ரூ | ரெ | ரே | ரை | ரொ | ரோ | ரௌ | ல் | ல | லா | லி | லீ | லு | லூ | லெ | லே | லை | லொ | லோ | லௌ | வ் | வ 40 |
வா 20 |
வி 25 |
வீ 6 |
வு | வூ | வெ 27 |
வே 24 |
வை 7 |
வொ | வோ | வௌ | ழ் | ழ | ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ | ள் | ள | ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ | ற் | ற | றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ | ன் | ன | னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
---|
தலைசொல் | பொருள் |
---|---|
வக்கரை | தேவாரத் திருத்தலங்கள் |
வச்சிரகாடு | சே௱ணைக் கரையிலுள்ள ஒரு நாடு. (சிலப்.5;99 உரை) பாண்டி மண்டபத்திலுள்ள ஒரு கடற்கரை நாடு என்று களவியற் காரிகை (47) கூறும். வச்சிரம் என்பது சதுரக்கள்ளி என்ற ஒருவகைத் தாவரத்தை குறிப்பதால் தாவரத்தால் வச்சிர நாடு எனப் பெயர் பெற்றதோ என எண்ணவும் இடம் அளிக்கிறது. அல்லது ஒருவகை இரத்தினம் என்றும் பொருள் உள்ளதால் அவ்வகை இரத்தினம் கிடைத்த பகுதி வச்சிர நாடு எனப் பெயர் பெற்றதோ எனவும் எண்ண இடமளிக்கிறது. |
வஞ்சி | வஞ்சி என்ற ஊர்ப்பெயர் தரவரத்தால் பெற்ற பெயர். வஞ்ச மாநகர் சேர நாட்டிலுள்ள திருவஞ்சைக்களமே வஞ்சி மாநகர் எனப்படும். திருச்சிராப்பள்ளி மரவட்டத்திலுள்ளதும் கொங்கு நாட்டதுமான கரூரே வஞ்சிமாநகர் என்பாரும், மலை நாட்டு மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பேரியாற்றங் கரையிலுள்ள திருக்கரூரே வஞ்சி மாநகர் என்பாரும் எனப் பல வகை ஆராய்ச்சியாளருளர். சேரன் வஞ்சி என்னும் நூல் திரு வஞ்சைக்களத்தை வஞ்சி என்றும், சேரன் செங்குட்டுவன், வஞ்சி மாநகர் என்னும் நூல்கள் கரூரை வஞ்சி என்றும் கூறியுள்ளன. வீரப்பத்தினி கண்ணகிக்குக் கோயில் அமைத்து வழிபட்ட சிறப்பினையுடையது சேரர் வஞ்சி. சேரரது குட புலத்துள் கொங்கு மண்டலம் ஒரு பிரிவு, என்பதும், அம்மண்டலத்துக் கரூவூர் வஞ்சியே சேரரது ஆதித் தலைநகர் என்பதும், பாண்டிய சோழர்களின் ஆதிக்கம் பெருகிய பிறகே ஒரு மரபினராயிருந்த பண்டைச் சேரரின் ஒரு கிளையினர் தம் கடற்கரைப் பட்டினமான முசிறியைத் தலைநகராகக் கொண்டு குடமலை நாட்டை ஆண்டு வந்தனர் என்பதும், மற்றொரு கிளையினர் கொங்கு நாட்டிலிருந்தே ஆட்சி புரியலாயினர் என்பதும் பிறவும் சாஸன வழியால் மலையிலக்காதலும், கொடுங்கோளூராகிய முசிறியைக் கரூவூர் வஞ்சி என்ற பெயர்களால் குறிப்பிட்டுள்ள சாஸனம் ஒன்றுமே யாண்டுங் காணக் கிடையார்மையாலும் தெளிய அறியலாம் என்பர். பெருமை வாய்ந்த வஞ்சி எது என்று அறிய முடியாமல் இருப்பது ஒரு குறையே. |
வஞ்சி | சங்க கால ஊர்கள் |
வஞ்சைக்களம் | சங்க இலக்கியத்தில் இவ்வூர்ப் பெயர் இல்லை. மலை நாட்டில் உள்ள தலங்களுள் திருமுறைப் பாடல் பெற்ற ஊராகிய இது, திருச்சூருக்கு 32 கி.மீ. தொலைவில் உள்ள தலம். இத்தலம் பரசு பாயர் தாயைக் கொன்ற பாவம் நீங்கும் பொருட்டு வழிபட்ட தலம் எனப்படுகிறது. அணியார் பொழில் சூழ்ந்த அஞ்சைக் களத்தப்பனைச் சுந்தரர், திருநாவுக்கரசர் பாடல்கள் சிறப்பிக்கின்றன. இன்று திருவஞ்சைக் களம் என்றே சுட்டப்படும் இவ்வூர் தாவரப் பெயரால் அமைந்தது எனச் சுட்டுவதற்கு வாய்ப்பு உளது. வஞ்சிக் கொடியால் பெயர் பெற்ற ஊர் குறித்து தமிழ் லெக்ஸிகன் சுட்டுகிறது. இவை அனைத்தும் மலை நாட்டுப்பகுதி யாக இருத்தல் இவண் சுட்டத்தக்கது. மேலும் இவண் வஞ்ஞைக் களத்திற்குக் கருவூர் கொடுங்கோளூர் இரண்டையும் சுட்டுகின்ற நிலை அமைகிறது. வஞ்சிக் களமும் காணப்படுகிறது. வஞ்சைக்களம் என்ற பெயர் பண்டு தொட்டே அமையா விடினும் வஞ்சி என்ற பெயரைச் சங்க இலக்கியத்திலேயே காண இயலுகிறது. சேரமன்னன் தலைநகராகயிருந்த இவ்வூர் வாடாவஞ்சி என புறநானூற்றில் சுட்டப்படுகிறது. வஞ்சி நாடு’ என்ற பெயர் சேர நாட்டையே குறிக்கப் பயன்படுமாற்றை மனோன் மணீயம் சுட்டுகிறது (2.3,75). எனவே வஞ்சிக் கொடி கள் நிறைந்த நாடாகிய வஞ்சி நாட்டில் வஞ்சிக்கொடியால் பெயர் பெற்ற பல் ஊர்களுள் ஒன்றாக, சிவன் கோயில் சிறப்புடன் திகழ்ந்த ஊராக இதனைக் கொள்ளலாம். மேலும் கடற்கரை சார்ந்த தலமாக இது இருந்திருக்குமோ என்ற எண்ணம், சுந்தரர் பாடல்கள் வழி எழும் ஒன்றாக அமைகிறது. |
வடகரை | தேவாரத் திருத்தலங்கள் |
வடபுலம் | சங்க கால ஊர்கள் |
வடுகர் தேஎம் | சங்க கால ஊர்கள் |
வடுகர் தேயம் | சங்க கால ஊர்கள் |
வடுகூர் | இன்று ஆண்டார் கோயில் எனச் சுட்டப்படும் ஊர். தென் ஆர்க்காடு மாவட்டத்தில் உள்ளது. சம்பந்தர் பாடல் அமை யினும் இவ்வூர்ப் பெயர்க் காரணம் புரிந்து கொள்ள இயலாத தாக அமைகிறது. |
வடுகூர் | தேவாரத் திருத்தலங்கள் |
வண் வண்டூர் | வல்லவாழின் அருகேயுள்ள மலை நாட்டுத் தலம் இது. இது திருவமுண்டூர்’ என்ற வழக்கால் அழைக்கப்படுகிறது. நம்மாழ்வார், |
வண்டை | பல்லவர் கோன் வண்டை வேந்தன் என, கலிங்கத்துப் பரணியில் (366) வண்டை’ என்பது ஊர்ப்பெயராக அமைகிறது. |
வண்பரிசாரம் | கன்னியாகுமரி மாவட்டத்தில், நாகர் கோயில் அருகேயுள்ள ஊர் இது. திருமால் கோயில் உள்ள ஊர். நம்மாழ்வாரின் தாயார் பிறந்த ஊர் இது. இன்று திருப்பதிசாரம் என்று வழங்கப்படுகிறது. |
வத்தவநாடு | வத்தவ நாட்டின் (வத்ஸதேசம்) தலைநகர் கெளசாம்பி. இதற்குத் தலைவன் உதயணன். வச்சம் எனவும், வத்தம் எனவும் வழங்கும். |
வனம் | திந்திரி = புளியமரம், வனம் = காடு. புளியமரங்கள் நிறைந்த ஊராகையால் திந்திரிவனம், திண்டிவனம் எனப் பெயர் வந்தது. |
வன்னியூர் | இன்று அன்னூர் என வழங்கப்படும் ஊர், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. அப்பர் இத்தலத்து இறைவனைப் பரவுகின்றார். மாடமதில்சூழ் வன்னியூரைக் காட்டும் நிலையிலும் (140-1) அயலெலாம் அன்னமேயுமந்தாமரை வயலெலாம் கயல் பாய் வன்னியூர் (140-3) எனக் காட்டும் நிலையிலும், ஊர்ச்செழிப்பு தெரிகிறது. பெயர்க் காரணம் தெரியவில்லை. எனினும், வன்னி என்றதொரு மரம் பற்றிச் சிலப்பதிகாரம் (வன்னிமரமுமடைப் பளியும் சான்றாக-சிலம்பு 21- 5) சுட்டுவதால், இந்த ஊர் வன்னி மரம் காரணமாகப் பெயர் பெற்றிருக்கலாம் எனத்தோன்றுகிறது. |
வன்னியூர் | தேவாரத் திருத்தலங்கள் |
வயலூர் | விளைநிலங்களையொட்டி யெழுந்த ஊர்கள் அப்பெயர் களையே ஊர்ப்பெயர்களாகக் கொண்டு விளங்கியிருக்கின்றன. விளைநிலத்தைக் குறிக்கும் வயல் என்ற செரல் ஊர் என்ற பின் ஒட்டுடன் வயலூர் என வழங்கியிருக்கிறது. வாயில் என்ற சொல்லடியாகத் தோன்றிய வாயிலார் என்ற ஊர்ப்பெயரே நாளடைவில் குறுகச் சிதைந்து வயலூரர் எனவும் வழங்கி இருக்க வேண்டும் என்றும் கருதுகின்றனர். செங்கற்பட்டைக் சேர்ந்த திருவள்ளூர் வட்டத்தில் அவ்வூர் உள்ளது. சிலப்பதிகாரத்தில் குறிக்கப் பெற்ற வயலூர் பாண்டி நாட்டுள்ள தோரூர் என்றும், வார்த்திகனுக்கு ஒரு பாண்டியனார் பிரமதாயமாகக் கொடுக்கப் பெற்றது என்றும் தெரிகிறது. திருச்சி மாவட்டத்திலும் ஒரு வயலூர் உள்ளது. மடங்கா விளையுள் ஒரு வயலூர் நல்இ (சிலப். 23:119.) |
வரகுணமங்கை | புளிங்குடி கிடந்து வரகுணமங்கை |
வரிஞ்சையூர் | வளவர் காவிரி நாட்டு வரிஞ்சையூர்’ (52-1) என. பெரிய புராணம் சுட்டும் ஊர்ப்பெயர் இது. சத்தி நாயனார் வரலாறுச் சொல்லப் புகும்போது அவர் பிறந்த ஊராக இதனைக் காட்டுகின்றார். இது நாகப்பட்டினத்திற்கு அருகில் உள்ள ஊர் என்ற எண்ணத்தைச் சேக்கிழார் அடிச்சுவட்டில் ஆசிரியர் தருகின்றார் (பக்-399). வரிஞ்சை என்ற பெயரையே நம்பியாண்டார் நம்பியும் சுட்டும் தன்மையைக் காண, இது மரூஉப் பெயரா என்ற கேள்வி எழுகிறது. |
வலசு | குடியிருப்பிடத்தைக் குறித்து வரும் சொல் “வலசு” ஆகும். இவ்வடிவம் அண்மைக் காலத்தில் ஏற்பட்டிருக்கிறது. |
வலஞ்சுழி | திருவலஞ்சுழி என்றழைக்கப்படும் மாவட்டத்தில் உள்ளது. இவ்வூர் தஞ்சாவூர் பிலத்திற் சென்ற காவிரி வெளிப்படுவதற்காகத் தம்மை ஏரண்ட முனிவர் பலிதர, அது மேலே வந்து வலமாகச் சுழித்துக் கொண்டு சென்றதால் ஊருக்குத் திருவலஞ்சுழி என்று பெயர் வந்ததாகச் சொல்லப்படுகிறது என்பது இத்தலப் பெயர் பற்றிய விளக்கமாக அமைகிறது. எனினும் பக்கத்தில் ஓடும் அரிசிலாறு கொண்டு நோக்க. இதனுள் நீர் வலத்தில் சுழித்துக் கொண்டு ஓடிய காரணத்தால் இவ்விடம் முதலில் வலஞ்சுழி எனச் சுட்டப்பட்டு, பின்னர் ஊர்ப்பெயராகவும் அமைந்ததோ எனத் தோன்றுகிறது. சம்பந்தர், அப்பர், இவ்வூரில் உள்ள இறைவனைப் புகழ்ந்து பாடியுள்ளனர். |
வலஞ்சுழி- திருவலஞ்சுழி | தேவாரத் திருத்தலங்கள் |
வலம்புரம் | இன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் பெரும்பள்ளம் என்னும் பெயரால் சுட்டப்படும் ஊர் இது. மகாவிஷ்ணு இறைவனைப் பூசித்து வலம்புரிச் சங்கு பெற்ற இடம் இது. இது கடற்கரைத் தலமாக இருந்தது என்பதனை, சுந்தரர். |
வலம்புரம் | தேவாரத் திருத்தலங்கள் |
வலிதாயம் | இன்று சென்னை மாவட்டத்தில் பாடி என்று வழங்கப்படும் ஊர் இது. ஊர்ப்பெயர்க் காரணம் தெரியவில்லை. சம்பந்தர் இத் தலத்து இறைவனைப் பாடியுள்ளார். |
வலிதாயம் | தேவாரத் திருத்தலங்கள் |
வலிவலம் | தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. இவ்வூர் கரிக்குருவி (வலி யன்) பூசித்த தலம் எனவே இப்பெயர் பெற்றது. என்ற எண்ண இப்பெயர்த் தொடர்பானது.- மாவியல் பொழில் வலிவலம் (123-1) மட்டமர் பொழில் வலிவலம் (123-2) என, சம்பந்தர் இதன் செழிப்பை யியம்புகின்றார். |
வலிவலம் | தேவாரத் திருத்தலங்கள் |
வல்லத்துப் புறமிளை | சங்க கால ஊர்கள் |
வல்லம் | ஆற்றல் அல்லது வலிமை என்னும் பொருளுடைய வல்லம் என்னும் சொல் வலிமையுடைய கோட்டையைக் குறித்துப் பின்னர் கோட்டை அமைந்த ஊருக்கே பெயராயிற்று போலும். தஞ்சாவூருக்கருகில் வல்லம் என்ற பெயருடன் ஓர் ஊர் உள்ளது. அங்கே அழிந்த அகழிகள் உள்ளன. வல்லத்தில் கோட்டை இருந்தது. அது கள்ளரில் ஒரு வகுப்பாருடைய தலைநகராக விளங்கியிருக்கிறது. வல்லத்தில் அரசு புரிந்த குடியினர் வல்லத் தரசு என்ற பட்டம் பெற்றிருந்தனர். வடஆர்க்காட்டிலுள்ள திருவல்லம் என்னும் ஊர் பாண மன்னர்களுக்குரிய ஒரு கோட்டையாக விளங்கியது. |
வல்லம் | திருவலம் என, வடஆர்க்காடு மாவட்டத்தில் உள்ள ஊர் சம்பந்தர் பாடல் பெற்ற சிவன் கோயிலையுடையது. ஞானசம்பந்தர், இறைவன் உறைவிடமாக இது அமைகிறது என்ற நிலையில் இவ்விடத்தைக் குறிப்பிடுகிறாரே தவிர, வல்லம்’ என்ற ஊர் பற்றிய விளக்கங்கள் விளக்கப்படவில்லை. |
வல்லம் | சங்க கால ஊர்கள் |
வல்லம் | தேவாரத் திருத்தலங்கள் |
வல்லவாழ் | மலைநாட்டுத் திருப்பதியாகிய இது இன்று திருவல்லா எனச் சுட்டப்படுகிறது. கோட்டயத்தின் அருகில் உள்ளது. திருமங்கை யாழ்வாரும், நம்மாழ்வாரும் இவ்விடத்தின் சிறப்பினை நன்கு எடுத்துரைக்கின்றனர். திருமால் கோயில் கொண்ட இவ்விடத் தின் செழிப்பையும், சிறந்ததொரு ஊராக இது திகழ்ந்ததனையும் |
வல்லார் | சங்க கால ஊர்கள் |
வல்லார் கிழான் பண்ணன் | சங்க கால ஊர்கள் |
வளைகுளம் | க்ஷேத்திரக் கோவை வெண்பா, |
வழுவூர் | மூவர் தேவாரமும் குறிப்பிடும் ஊர். |
வாகை | சங்க கால ஊர்கள் |
வாகை | மரப்பெயர்கள் போன்ற தாவரங்களின் பெயரால் ஊர்கள் பெயர்பெறும் மழையையொட்டி வாகை என்ற ஒருவகை மரத்தின் பெயர் ஓர் ஊருக்குப் பெயராய் அமைந்தது போலும். தனிமரங்களின் பெயர்களையே தம் பெயர்களாகக் கொண்ட ஊர்ப்பெயர்களில் வாகை என்ற ஊர்ப்பெயர் ஒன்று. வாகையென்னும் ஊரில் போர்க்களத்தில் கரிகாலனுடன் போர் புரிந்த பகைவர்கள் தோற்று ஓடினர் என்று சங்க இலக்கியச் செய்தி ஒன்று கூறுகிறது. வடஆர்க்காட்டில் வாகை என்ற பெயருடன் ஓர் ஊர் உள்ளது. பன |
வாகைப் பறந்தலை | சங்க கால ஊர்கள் |
வாஞ்சியம் | திருவாஞ்சியம் என, தஞ்சாவூரில் உள்ள ஊர் இது. இங்குள்ள சிவன் கோயில் சிறந்த செல்வாக்குடன் அன்று திகழ்ந்திருக்கிறது என்பதனைச். சைவர் பலராலும் போற்றப்பட்ட தன்மை தெரிவிக்கிறது. விரும்பத்தக்க ஊர் என்ற அடிப்படையில் இப் பெயர் பெற்றதா என்பது எண்ணமாக அமைகிறது. புத்தாறு என்னும் ஆற்றின் கரையில் உள்ள தலம் |
வாஞ்சியம் | தேவாரத் திருத்தலங்கள் |
வாடி | “வாடி” என்பது குடியிருப்பிடத்தைக் குறிக்கும் தெலுங்கு வடிவமாகும். அம்மொழியில் உள்ள “வாடா” எனப்திலிருந்து திரிந்த வடிவம் இதுவாகும். தெலுங்குச் சொற்களுடன் “வாடி” இணைந்து வருகின்ரது. “வாடி” என்ற முடியும் ஊர்களில் பெரும்பான்மையாக தெலுங்கு, கன்னட மக்கள் வாழ்ந்திருப்பர் அல்லது வாழ்ந்து கொண்டிருப்பர். |
வாட்டாறு | சங்க கால ஊர்கள் |
வாட்டாற்று எழினியாதன் | சங்க கால ஊர்கள் |
வாட்போக்கி | தற்போது திருச்சி மாவட்டத்தில் உள்ள இவ்விடம் ஐயர் மலை என்று சுட்டப்படுகிறது. இரத்தினகிரி, மாணிக்க மலை சிவாய மலை என்பன வேறு பெயர்கள். மலைமேல் கோயில் உள்ளது என்ற எண்ணமும், அப்பர் பாடல் பெற்ற தலம் குறித்த எண்ணமும், (பதி-200) வாட்போக்கி என்பது இறையுடன் தொடர்பு கொண்ட நிலையில் அமைந்த பெயராக இருக்கலாம் என்ற எண்ணத்தைத் தருகிறது. |
வாட்போக்கி | தேவாரத் திருத்தலங்கள் |
வாதவூர் | மாணிக்கவாசகர் பிறப்பால் பெருமை பெற்ற ஊர். மாணிக்கவாசகர், இதனை |
வான்மியூர் | திருவான் மியூர் என்று இன்று வழங்கப்படும் இத்தலம் இன்று சென்னை மாவட்டத்தில் உள்ளது. வான்மீக முனிவர் வழிப்பட்டதால் இப்பெயர் என்ற எண்ணம் அமைகிறது கடற்கரைத் தலம் என்பதைச் சம்பந்தரும் தம் பாடலில் குறிக்கின்றார். |
வான்மியூர்- திருவான்மியூர் | தேவாரத் திருத்தலங்கள் |
வாயில் | சங்க கால ஊர்கள் |
வாய்மூர் | இன்று திருவாய்மூர் என, தஞ்சாவூர் மாவட்டத்தில் காணப்படும் இடம் இது. காவிரியின் தென்கரைத் தலம் என்ற குறிப் பினைத் தவிர, பிற எண்ணங்கள் தெளிவு றவில்லை. அப்பர். சம்பந்தர் இத்தலத்து இறைவனைக் கண்டுப் பாடியுள்ளனர். பத்துப் பாடல்களில் வாய்மூர் இறைவன் சிறப்பினைக் கூறும் சம்பந்தர், இறுதிப்பாடலில், |
வாய்மூர் | தேவாரத் திருத்தலங்கள் |
வாரணம் | மாவிலிங்கம் என்னும் ஒருவகை மரத்தை வாரணம் என்னும் சொல் குறிப்பதால் தாவரத்தால் வாரணம் என்ற ஊர் பெயா் பெற்றதோ என எண்ண இடமளிக்கிறது. (வாரணம் கோழி என்ற உறையூரைக் குறிக்கும் என்பதை “தென்றிசை மருங்ற் செலவு விருப்புற்று, வைகறையாமத்து வாரணங்கழிந்து” (சிலப்.11:10 11) முன்னரே கண்டோம்) வாரணாசி என்றும் வாரணவாசி என்றும் இலக்கியத்தில் கூறப் பெறும் வாரணம் என்னும் இவ்வூர் மத்திம நன்னாட்டைச் சார்ந்தது. |
வாறன் விளை | மலை நாட்டுத் தலம். திருமால் கோயில் சிறப்பு பெற்றது. எர்ணா குளம், கொல்லம் தென்னிந்திய இருப்புப்பாதையில் உள்ள செங்கன்னூர் நிலையத்தில் இறங்கி, ஏழுமைய பேருந்தில் சென்று இவ்வூரை அடைதல் வேண்டும் என்கின் எண்ணம், இவ்வூர் இருக்குமிடத்தைத் தருகிறது. மக்கள் வழக்கில் ஆரன் முளை (முளா) என்று அமைகிறது. நம்மாழ்வார் பாடல்கள், இத்தலத்து இறைவனையும், இவ்விடத்தின் செழிப்பு பற்றிய எண் ணங்களையும் அளிக்கின்றன. |
வாழ்கொளிபுத்தூர் | இன்று வாளொளிப் புத்தூர் என, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது இவ்வூர். விஜயனுடைய கைவாளை, சுவாமி புற்றில் ஒளித்து வைத்தார். அதனால் வாள் ஒளி புற்றூர் என்றும் பெயர் வந்தது என்ற எண்ணம் அமைகிறது. புத்தூர் இதன் முதற்பெயராக அமைய, பின்னர், இறைத் தொடர்பாக வாழ்கொளி என்ற அடை இணைந்திருக்கலாம். அல்லது, கோயில் செல்வாக்கால் உருவாகிய புதிய ஊர் என்ற நிலையில் முழுப்பெயரும் தோற்றம் பெற்றிருக்கலாம் எனத் தோன்றுகிறது. சம்பந்தர், சுந்தரர் பாடல்கள், இத்தலம் குறித்து அமைகின்றன. மலைத்த செந்நெல் வயல் வாழ்கொளி புத்தூர் என்கின்றார் சுந்தரர் (57). |
வாழ்கொளிபுத்தூர் | தேவாரத் திருத்தலங்கள் |
விசயமங்கை | திருவிசயமங்கை என இன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஊர் இது. அருச்சுனன் வழிபட்ட தலம் என்ற காரணமே இதற்குக் கூறப்படினும், வெற்றியைக் குறித்து ஏற்பட்ட ஊர்ப் பெயராக இது இருத்தலே பொருத்தமானது. சம்பந்தர், அப்பர் இக்கோயில் இறையைப் பாடுகின்றனர். |
விசயமங்கை | தேவாரத் திருத்தலங்கள் |
விச்சி | விச்சி என்பது ஒரு மலைப்பகுதி ஊர் என எண்ண இடம் அளிக்கிறது. ‘விச்சிறல்’ என்றால் ஒருவகைக் கோரைப்புல் எனப்பொருள் படுவதால் அவ்வகைக் கோரை அடர்ந்து வளர்ந்த பகுதியைச் சார்ந்த குடியிருப்புகள் அடங்கிய ஊர் என்னும் கருத்தில் “விச்சி” என்ற ஊர்ப் பெயர் அமைந்ததாகவும் இருக்கலாம். விச்சியை ஆண்ட தலைவன் விச்சிக் கோன் எனப்பெற்றான். கபிலர் பாரி மகளிரை அவனிடம் கொண்டு சென்று பாடியுள்ளார். |
விஞ்சை | விஞ்சை என இலக்கியத்தில் கூறப் பெறும் இது விஞ்சை மாநகரமாகும், அதாவது வித்தியாதரநகரமாகிய காஞ்சனபுரம், |
விடை வாய்க்குடி | குடி’ என்று முடியும் கோயில் தலமாக விளங்கும் ஊர்ப் பெயர் வரிசையில் விடைவாய்க் குடியும் அமைகிறது. நாவுக்கரசர், விற்குடி வேள்விக் குடி நல்வேட்டக் குடி வேதிகுடி மாணிகுடி விடைவாய்க் குடி (285-3) என இதனைக் குறிப்பிட்டுச் செல்கின்றார் இப்பாடல் அடிகளினின்றும், பெயர். அது சிவன் கோயில் பெற்ற நிலை இரண்டை மட்டுமே நம்மால் புரிந்து கொள்ள இயலுகிறது. எனினும் பெயர் பற்றிய ஆய்வு மேலும் சில எண்ணங்களைத் தருகின்றது. விடைவாய் என்பதற்குப் பொருள் பொருத்தமாக இல்லை. விடையாயம் என்பதற்கு ஏற்றையுடைய ஆ என, தமிழ் லெக்ஸிகன் பொருள் அமைக்கிறது (தமிழ் லெக்ஸிகன் vol pa. I பக் -3663). தவிர, திருவிடைவாய் தஞ்சாவூர் ஜில்லாவில் உள்ள ஓர் ஊர் ; அவ்வூருள் உள்ளதொரு சிவன் கோயில், அங்குள்ள கற்சுவர்களில் பதிகப் பாடல்க போன்றவற்றைத் தம் கட்டுரை ஒன்றில் விளக்கி எழுதுகின்றார் திரு. மா.வே. நெல்லையப்ப பிள்ளை இடைவாய் என்ற ஊர் பற்றி பிறர் பதிகங்கள் கிடைக்கவில்லை. எனினும் நாவுக்கரசரால் குறிக்கப்பட்டுள்ள நிலையில், இத்தலம் அன்று சிறப்பு பெற்று விளங்கியிருக்க வேண்டும் என்பதை ஊகிக்க இயலுகின்றது. எனவே இன்று இடைவாய் அழைக்கப்படுகின்ற ஊர் அன்று. விடைவாய்க் குடி என்ற பெயரில் இருந்ததா ? என்ற எண்ணம் எழுகின்றது. மேலும் தஞ்சை மாவட்ட ஊர்ப்பெயர்களில் ஆசிரியர் திருவிடை வாயில் என்ற ஊர்ப்பெயர் பற்றி எழுதும் போது, விடையவன் என்னும் சூரிய குலத்து மன்னன் உண் பண்ணிய ஊராதலின் பெற்ற பெயர் என்ப என்று கூறி, திரு விடைவாய் எனவும் வழங்கப்படும் என்கின்றார் (பக்.211). எனவே இவண் முன்னைய பெயரின் சார்பினைக் காண்கின்றோம். என்று இதனன நோக்க, இடைவாய்க்குடி என்ற பெயர், ஆநிரைகளின் நிறைவு காரணமாக, ஆயர்கள் நிறைந்த ஊராக இருந்து திரு சேர்ந்து, திருவிடைவாய்க் குடி என்றாகி, பின்னர் இடைவாய் என்ற பெயர் அடைந்து,இன்று திருவிடைவாயில் என்று வழங்கப்படுகின்றதோ என்பதே இப்பெயர் வரலாறு நமக்குத் தரும் எண்ணமாகும். |
விடைவாசல் | தேவாரத் திருத்தலங்கள் |
விடைவாய் | தேவாரத் திருத்தலங்கள் |
விதையம் | விமானத்திற் சென்ற வாசவதத்தையால் பார்க்கப்பட்ட நாடுகளுள் ஒன்று. விதேக தேசம் என்று கூறப்பெறுவது. |
வித்துவக்கோடு | திருமிற்றக் கோடு என்று வழங்கப்படும் தலம், மலை நாட்டுத் தலமாகும். குலசேகர ஆழ்வார் இங்குள்ள திருமாலை வேண்டிப் பாடியுள்ளார். |
வியலூர் | சங்க கால ஊர்கள் |
வியலூர் | வியலூர் என்பது செங்குட்டுவனால் வெல்லப்பட்ட தோரூர். வியலூர் எனவும் வழங்கப்பட்டதாகத் தெரிகறது. நன்னன் வேண்மான் என்பவனுக்கு இவ்வூர் உரியது என்று சங்க இலக்கியம் கூறுகிறது. பெருமை பொருந்திய ஊர் என ஊரின் புகழ் கருதி வியலூர் எனப் பெயர் பெற்றதா அல்லது காட்டுப் பகுதியில் அமைந்த ஊர் என்பதால் வியலூர் எனப் பெயா் பெற்றதா என்பது தெரியவில்லை. |
வியலூர் | திருவியலூர் என்ற பெயரில் இன்று தஞ்சாவூர் மாவட்டத் தில் உள்ள ஊர் இது. திருவிசநல்லூர், விசலூர் என்பன பிற வழக்குகள்.. சம்பந்தர் இங்குள்ள சிவனைப் பரவியுள்ளார். |
வியலூர் | தேவாரத் திருத்தலங்கள் |
விரவுமொழிக்கட்டூர் | சங்க கால ஊர்கள் |
விரிச்சியூர் | நன்னாகனார் என்ற சங்ககாலப் புலவர் விரிச்சியூரைச் சேர்ந்தவர். இந்த விரிச்சியூர் நன்னாகனார் பாடிய புறப்பாடல் (புறம் 292) ஒன்று உள்ளது. ஒரு குறிப்பிட்ட வகுப்பினர் வசிக்கும் இடத்திற்குச் சென்று, அவர்கள் தற்செயலாகப் பேசிக் கொள்ளும் பேச்சை நன்னிமித்தமாகக் கொள்ளும் விரிச்சி கேட்டல் என்னும் மரபையொட்டி, விரிச்ச சொல்வதற்குரியோர் வசித்த குடியிருப்பு அமைந்த ஊர் விரிச்சியூர் எனப் பெயர் பெற்றிருக்கலாம். |
விரியூர் | விரி என்றால் காட்டுப்புன்னை என்ற ஒருவகை மரத்தைக் குறிக்கும். அவ்வகை மரங்கள் வளர்ந்த பகுதியில் அமைந்த ஊர் விரியூர் எனப் பெயர் பெற்றது போலும்.. புறப்பாடல் (332) பாடிய நக்கனார் என்ற சங்ககாலப் புலவர் இவ்வூரினர், விரியூர் நக்கனார் எனப் பெயர் பெற்றார். |
விற்குடி | விற்குடி என, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஊர் இது. சம்பந்தர் விற்குடியில் உள்ள வீரட்டத்து இறைவனைப் பரவுகின்றார். |
விற்கோலம் | தேவாரத் திருத்தலங்கள் |
விற்கோலம் | கூவமென வழங்கும் நிலையில், செங்கற்பட்டு மாவட்டத்தில் உள்ள இடம் இது. திரிபுரம் எரித்த மூர்த்தி, கையில் வில்லேந்தி தங்கிய இடம் என்ற குறிப்பு இத்தலத்துப் பெயராய்வுக்குச் சிறிது வழி வகுக்கிறது. இந்நிலையில் விற்கோலத்தினனாக இறைவன் காட்சி தரும் நிலையில், இப்பெயர் அமைந்தது எனக் கூறலாம். இன்று இறைவன் திருமேனியின் நிலையில் இதன் உண்மை தெளிவாகலாம். சம்பந்தர் இத்தலத்து இறைவனைப் பாடியுள்ளனர். இவரது பாடல் ஒன்று, |
விலங்குகளை ஒட்டியன | விலங்குகள் அவ்வவ்விடங்களில் இருந்தமையாலும், பிற காரணங்களாலும் அவற்றின் பெயர்களும் ஊர்ப்பெயர்களின் பொதுக்கூறாகப் பயன்படுகின்றன. கறையான், புலி , மான் என்னும் விலங்குப் பெயர்களும் ஊர்ப்பெயர்களின் பொதுக்கூறாக அமைந்துள்ளன. |
வில்லிபுத்தூர் | ஸ்ரீவில்லிபுத்தூர் என அழைக்கப்படும் இவ்வூர் இன்று இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளது. திருமால் கோயில் பெருமை பெற்றது. இறைவனது சாபத்தால் வேடனாகப் பிறந்த முனிவர் வில்லி. சகோ தரன் கண்டன் இறக்க, பரந்தாமன் வில்லி யினது கனவில் தோன்றி, இந்தக் காட்டை அழித்து நகரம் ஆக்கு. பாண்டி, சோழநாட்டு அந்தணர்களைக் கொண்டு வந்து குடி யேற்று எனச் சொல்ல, வில்லி காடு திருத்தி நாடாக்கிய நகரம் தான் வில்லிபுத்தூர் என்ற எண்ணம் இப்பெயர்த் தொடர் பானது. பெரியாழ்வாராலும், ஆண்டாளாலும் பாடல் பெற் றது இத்தலம். |
விளங்கில் | சங்க கால ஊர்கள் |
விளங்கில் | விளங்கு என்பது சிற்றரத்தை எனப் பொருள் படுகின்றது, தாவரத்தால் விளங்கில் எனப் பெயர் பெற்றிருக்கலாம். அல்லது. மருத்துவ தொடர்புடைய சிற்றரத்தையைக் கொண்டு, மருத்துவ தொடர்பில் பெயர் பெற்றதாகவும் இருக்கலாம். விளங்கிலுக்கு நேர்ந்த விழுமத்தைச் சேரன் மாந்தரஞ் சேரலிரும் பொறை நீக்கினான். |
விளநகர் | இன்றும் விளநகர் என்றே சுட்டப்படும் ஊர், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. |
விளமர் | திருவிளமர் எனத் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இவ்வூர் திருவாரூக்கு அண்மையில் உள்ளது என்பதும், ஓடம் போக்கி ஆற்றுக்குத் தென் கரையில் உள்ள சிறிய கோயில் என்பதும் தெரிகிறது. |
வீரை | சங்க கால ஊர்கள் |
வீரை | கடல் எனப் பொருள்படும் னைக என்னும், கடலையடுத்த பகுதியில் அமைந்த ஊருக்குப் பெயராயிற்று போலும். வீரை முன் துறையில் உப்பின் நிரம்பாக் குப்பை பெரும் பெயற்கு உரியதாகக் கூறப்பட்ட செய்தி இவ்வூர், கடலையடுத்ததே என்பதை வலியுறுத்துகன்றது. புறநானூறில் 320ஆம் பாடலைப் பாடிய வீரை வெளியனார் என்ற சங்க காலப் புலவர் வீரைவெளி என்ற பெயருடைய ஊரைச் சேர்ந்தவராகக் கருதப்படுவதால் வீரைவெளி என்பது தான். ஊரின்… பெயராக இருக்கலாமோ என எண்ணத் தோன்றுகிறது. |
வீரை முன்றுறை | சங்க கால ஊர்கள் |
வீரை வேண்மான் | சங்க கால ஊர்கள் |
வீழிமிழலை | தேவாரத் திருத்தலங்கள் |
வீழிமிழிலை | திரு வீழிமிழலை என்ற தலம். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது திருமால் இறைவனுக்குத் தம் கண்ணையே இடந்து மத்திய தலம் தான் வீழிமழலை என்பது புராணக் கருத்து.. எனினும் வீழிச் செடிகளின் நிறைவு காரணமாக இப்பெயர் வந்தது என்பர் மிழலை என்ற ஊர்ப்பெயர்க் கூறினைச் சங்க இலக்கியத்திலேயே காண்கின்றோம். எனவே மிழலை என்ற பொதுக் கூறுடன் வீழிகள் சிறப்பாக இணைய, வீழி மிழலை பெயர் அமைந்தது என்று தெரிகிறது. சைவர்களால் பெரிதும் போற்றப்பட்ட நிலையை மேற்குறித்தப் புராணக் கதை இயம்புகிறது. மேலும், பலராலும் பாடல் பெற்ற சிறப்பும் இங்குள்ள கோவிற் பெருமையை நிலை நாட்டும். |
வெஞ்சமாக்கூடல் | வெஞ்சமாக் கூடல் என்ற பெயரிலேயே இன்றும் திருச்சி மாவட்டத்தில் உள்ளது இவ்விடம். பொதுவாகக் கூடும் இடத் தைக் கூடல் என்று அழைக்கும் வழக்கினைத் தமிழர் கொண்டு இருந்தனர் என்பதைப் பிற ஊர்ப்பெயர்களும் புலப்படுத்துகின் றன. இவ்வூர்ப் பெயரும். இக்கருத்தடிப்படையில் பிறந்ததே. தாம்பிரபரணியின் உபநதியான சிற்றாறு குற்றாலத்தில் மலையின் மடுவில் விழுந்து உண்டாக்குவது பொங்குமாங்கடல். அமராவதியின் கிளைந்தி சிற்றாறு. அது அமராவதியுடன் கூடும் துறையில் உண்டான ஊரின் பெயர் வெஞ்சமாக் கூடல். இச் சிற்றாற்றைக் குடவன் ஆறு என்றும் குழகன் ஆறு என்றும் கூறுவர் என்ற எண்ணம் இவ்விடம் பற்றி இயம்பும். வெஞ்ச மன் என்ற அரசன் ஆண்டமை காரணமாக இப்பெயர் அமைந் தது என்ற எண்ணமும் உண்டு. பெரிய ஊராய்த் திகழ்ந்த வெஞ்சமாக் கூடல் இன்று சிற்றூராய்க் காட்சியளிக் கின்றது. இதன் அன்றையச் செழிப்பைச் சுந்தரர், அன்று |
வெண்காடு | தேவாரத் திருத்தலங்கள் |
வெண்காடு | திருவெண்காடு என தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஊர் இது. சீகாழிக்குத் தென் கிழக்கு ஏழு எட்டு மைல் தூரத்தில் இருக்கும் இடம் இது. முக்குளம், ஆல்,வில்வம், கொன்றை என்ற மூன்று தலவிருட்சங்கள் இக்கோயிலின் சிறப்பு. திருவெண்காடு என்பதும், சிவன் கோயிற் சிறப்பும். இவ்விடம் காடு சார்ந்த பகுதியாக இருந்து, பின்னர், இறைச் சிறப்பால், குடியிருப்புப் பகுதியாக மாறியிருக்கக் கூடும் என்ற எண்ணத்தைத் தருகிறது. சைவர்களால் பெரிதும் போற்றப்பட்ட கோயில் இது என்பதைப் பலரின் பக்திப் பாடல்கள் சுட்டுகின்றன. |
வெண்குன்று | வெண்குன்று” என்ற சிலப்பதிகாரத் தொடருக்கு, சுவாமி மலை என்று சிலப்பதிகார அரும்பதவுரையாசிரியர் குறித்துள்ளார். கொங்கு நாட்டில் பவானி நதியும் சிந்தாமணியாறும் கலக்குமிடத்தில் ”தவளகிரி என்னும் மலையொன்றுண்டு. அங்கு முருகன், கோயில் கொண்டு விளங்கினார் என்பது சாசனத்தால். (108 of 1910) அறியப்படும். வெண்குன்று என்ற தமிழ்ச் சொல்லுக்கு நேரான வடமொழிப் பதம் தவளகரியாதலால் இளங்கோவடிகள் குறித்த வெண்குன்று அதுவாக இருக்கலாம் என்பர். |
வெண்டுறை | தேவாரத் திருத்தலங்கள் |
வெண்டுறை | திருவண்டுதுறை என இன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஊர் இது. பிருங்கி முனிவர் வண்டு வடிவில் உமையொருபாகன் வடிவத்தைத் துளைத்து இறைவனை மட்டும் வழிபட்ட தலம் இது என்பர். சேக்கிழார் இதனைத் திருமலி வெண்டுறை’ என்பார் (34-574). சம்பந்தர் பதிகம் இறைவன் விரும்புமிடம் வெண்டுறை என்பதை எல்லாப் பாடல்களிலும் குறிக்கிறது (319). துறை என்பது ஆற்றுத் துறையாக இருக்கலாம். வெண் ணிலம் என்பதற்கு வெறுந்தரை, மணற்பாங்கான தரை என்று தமிழ் லெக்ஸிகன் பொருள் உரைப்பதை நோக்க, மணற்பாங்கான துறை என்ற நிலையில் வெண்டுறை என்ற பெயர் அமைந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது. |
வெண்ணி | சங்க கால ஊர்கள் |
வெண்ணி | வெறுந்தரை அல்லது மணற்பாங்கான தரை என்று பொருள் படும். வெண்ணி என்னும் அவ்வகையான நில அமைப்புப் பகுதியில் அமைந்த ஊருக்குப் பெயராயிற்று போலும். சேரனும் பாண்டியனும் கரிகாலன் இளையன் என எண்ணி, அவன் மீது போர் தொடுக்க, அவர்களுடன் போர் புரிந்து கரிகாலன் வென்ற இடமே வெண்ணி என்பது. போரில் புறப்புண் அடைந்த சேரன் வடக்கிருந்து இறந்தான் இது கோயில் வெண்ணி என்றும் கூறப்படும், இவ்வூர் ஆரூரின் அருகேயுள்ளது. கரிகாலனைப் பாடிய குயத்தியார் (புறம். 66) என்னும் புலவர் இவ்வூரினர். ஆகவே வெண்ணிக்குயத்தியார் எனப் பெயர் பெற்றார். |
வெண்ணி | வெண்ணி என்ற பெயரிலேயே இன்றும் தஞ்சாவூர் மாவட் டத்தில் உள்ளது. பொருநர் ஆற்றுப்படை வெண்ணிப் பறந்தலை என்ற ஊரில் கரிகாலன் வென்ற செய்தியைக் குறிப்பிடும். இங்குக் குறிப்பிடப்படும் வெண்ணியும் சோழ நாட்டு ஊர் என்ற நிலையில் இரண்டும் ஒரே ஊராக இருக்க வாய்ப்பு அமைகிறது. முன்னயை, வெண்டுறை என்ற ஊர்ப் பெயர் அமைந்தது போன்று இதுவும். வெறுந்தரையைக் குறித்து அமைந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது. இங்குள்ள ரயில் நிலையம் கோயில் வெண்ணி எனச் சுட்டப்படுவது கோயிலின் சிறப்புக்கும். செல்வாக்குக்கும் பின்னைய நிலை எனத் தோன்றுகிறது. எனவே முதலில் மண்தரையாகக் குடியேற்றம் இன்றி இருந்த வெண்ணி, போருக்கு பின்னர். குடியிருப்புப் பகுதியாகத் தோற்றம் கொண்டது எனலாம். திருஞானசம்பந்தர், தம்பாடலில், |
வெண்ணிப் பறந்தலை | சங்க கால ஊர்கள் |
வெண்ணியூர் | தேவாரத் திருத்தலங்கள் |
வெண்ணிவாயில் | சங்க கால ஊர்கள் |
வெண்ணெய் நல்லூர் | திருவெண்ணெய் நல்லூர் என்ற தலம், தென் ஆர்க்காடு மாவட்டத்தில் இருக்கிறது. இதனை ஆட்கொண்ட நிலைமையை வெண்ணெய் நல்லூரில் வைத்தெனை ஆட்கொண்ட எனப்பாடு கின்றார் சுந்தரர் (17-11). இங்குள்ள கோயில் பெயர் திரு அருள் துறை. இதற்கு அருகாமையில் உள்ள கிராமம் மணம் தவிர்ந்த புத்தூர். இவற்றை நோக்க நல்லூர். புத்தூர் என்பன சிறப்பு அடைகள் என்பதும் புலனாகின்றன. உமாதேவி பசு வெண்ணெ யினால் கோட்டைக் கட்டி கொண்டு, அதனிடையே பஞ்ச அக் கினியை வளர்த்துத் தவம் புரிகின்றாள். அப்படித் தவம் புரிந்து பேறுபெற்ற தலம் ஆனதினாலே தான் இத்தலத்துக்கு வெண்ணெய் நல்லூர் என்று பெயர் என்ற புராணக் கதை இப்பெயர் குறித்து அமைகின்றது. |
வெண்பாக்கம் | தேவாரத் திருத்தலங்கள் |
வெண்பாக்கம் | சென்னை மாவட்டத்துள் இருந்த தலம். சென்னைக்கருகில் உள்ள பூண்டி நீர்த் தேக்கத்துள் மூழ்கியது. நீர்த் தேக்கக் கரை யில் புதிய கோவிலொன்று கட்டப்பட்டுள்ளது என்ற எண்ணம் இதனைக் குறித்து அமைகிறது. ? சுந்தரர் பதிகம் இதனைக் குறித்தமைகிறது. ஏராரும் பொழினிலவு வெண்பாக்கம் இடம் கொண்ட காராரு மிடற்றான் எனப் பாடுகின்றார் இவர் (99-41)’. 1. வண்ணமாலைக் கை பரப்பி உலகை வளைத்த இருள் எல்லாம் உண்ண எண்ணி தன் மதியத்து உதயத்து எழுந்த நிலாக்கற்றை விண்ணும் மண்ணும் திசை அனைத்தும் விழுங்கிக் கொண்ட விரிநல் நீர்ப் பண்ணை வெண்ணெய்ச் சடையன் தன் புகழ் போல் எங்கும் பரந்துளதால் (கம்ப -552) தண்ணெனும் கானம் நீங்கி, தாங்க அருந்தவத்தின் மிக்கோன் மண்ணவர் வறுமை நோய்க்கு மருந்து ஆன சடையன் வெண்ணெய் அண்ணல் தன் சொல்லே அன்ன படைக்கலம் அருளி னானே (கம்ப -394) விஞ்சையில் தாங்கினான் -சடையன் வெண்ணெயில் தஞ்சம் என்றோர்களைத் தாங்கும் தன்மை போல் (கம்ப -6682) 2. சேக்கிழார் வழியில் சிவத்தலங்கள் -பக். 29 |
வெண்மணி வாயில் | சங்க கால ஊர்கள் |
வெண்மணி வாயில் | முத்து என்ற பொருளுடையது வெண்மணி என்னும் சொல். மத்தி என்பவன் எழினி என்பவனை வென்று அவனுடைய பல்லைப் பறித்துக் கொணர்ந்து கோட்டைக் கதவில் பதித்தான். மேலும் வெற்றிக்கு அடையாளமாக கடற்கரையில் ஒரு கல்லையும் நட்டான். இச்செய்தி வெண்மணி வாயில் என்னும் ஊர் முத்துக் கிடைக்கும் கடற்கரை நகரமாய் இருந்திருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது. பகைவரை அட்டு அவர் பல்லைக் கொணர்ந்து தமது கோட்டை வாயிற் கதவில் பதித்தல் பண்டைய மரபு என்பதையும் உணர முடிகிறது. |
வெற்றியூர் | திருநாவுக்கரசர் சுட்டும் ஊர் இது. பற்றற்றர் சேர்பழம் பதியைப் பாசூர் நிலாய பவளத்தைச் சிற்றம்பலத்தெந் திகழ் கனியைத் தீண்டற்குரிய திருவுருவை வெற்றியூரில் விரிசுடரை விமலர் கோனைத் திரை சூழ்ந்த ஒற்றியூரெ முத்தமனை யுள்ளத்துள்ளே வைத்தேனே (15-1) எனப் பாடும் தன்மை வெற்றியூரில் உள்ள சிவன் பெருமையைச் சுட்டுகிறது. |
வெளியனூர் | சங்க கால ஊர்கள் |
வெளியம் | சங்க கால ஊர்கள் |
வெள்ளறை | திருமால் பெருமை கொண்ட ஊர், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ளது. திருவெள்ளறை என்று சுட்டப்படும் தலம். வெண்மையான பாறைகளாகிய ஒரு சிறு குன்றின் மேல் பெருமாள் எழுந்தருளியிருக்கின்றார் என்ற கருத்தை நோக்க ! இவ்வூர்ப்பெயரின் காரணமும் விளக்கம் பெறுகின்றது. வெண்மையான பாறை வெள்ளறை என்று சுட்டப்பட்டது. திரு மால் கோயில் சிறப்பு திரு வைத் தந்தது. இந்நிலையில் திரு வெள்ளறையாயிற்று. |
வெள்ளியங்குடி | திருவிடை மருதூருக்கு வடக்கே ஆறு மைலில் திருவெள்ளி யங்குடி என்ற விஷ்ணு ஸ்தலம் இருக்கிறது என்ற கருத்து ?, இது தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஊர் என்பதை உணர்த்துகிறது. இறைவனைப் பூசித்து இழந்த கண்ணைப் பெற்றதனால் திரு வெள்ளியங்குடி என்று தலம் பெயர் பெற்றது என்ற கருத்து. எவ்வாறு பொருந்துகிறது என்பது புரியவில்லை. குடி குடியிருப்பையுணர்த்துகிறது. வெள்ளி சுக்கிரனைக் குறித்து அமையினும் வெள்ளி அம்குடி சால் நிலையில் பொருத்தமுறுகிறதே தவிர. இது அடிப்படையாக இருக்குமா ? என்பது கேள்விக்குரியது. என்பது இவ்விடம் மிகவும் செழிப்பு மிக்கது என்பதை, |
வெள்ளியம்பலம் | சங்க கால ஊர்கள் |
வெள்ளியம்பலம் | பாண்டியன் பெருவழுதி இங்குத் துஞ்சிய காரணத்தால் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி எனப் பெயர் பெற்றான் (புறப். 58) ஆகவே வெள்ளியம்பலம் ஓர் ஊரின் பெயராகவும் இருக்குமோ என்று எண்ண இடமளிக்கிறது. மதுரையில் கோயிலில் வெள்ளியம்பலம் என்று ஓர் அம்பலம் உண்டு. இறைவனுக்குப் பொன்னம்பலத்தோடு இந்த வெள்ளி யம்பலமும் உரியது. |
வெள்ளில் மன்றம் | சங்க கால ஊர்கள் |
வெள்ளூர் | வெண்பூதியார் என்ற சங்கசாலப் புலவர் இவ்வூரினரான வெள்ளூர் கிழார் மகனார் எனத் தெரிகிறது, (குறுந். 219) பராந்தக நெடுஞ்செழியன் (கி.பி. 768 815) வெள்ளூரில் போர் புரிந்து பகைவர்களை அழித்ததாகச் சீவரமங்கலச் செப்பேடு கூறுகிறது. திருநெல்வேலிக்கும் தூத்துக்குடிக்கும் இடையில் வல்ல நாட்டிற்கு அருகில் வெள்ளூர் இருப்பதாகக் கூறுகின்றனர் |
வெள்ளைக்குடி | வேங்கை மரம் எனப் பொருளுடைய சொல் வெள்ளை யென்பது. வேங்கைமரங்களடர்ந்த குடியிருப்புகன் அமைந்து ஊர் வெள்ளைக்குடி எனப் பெயர் பெற்றிருக்கலாம். நற்றிணையில் 158, 196 ஆகிய பாடல்களையும், புறநானூற்றில் 35ஆம் பாடலையும் பாடிய நாகனார் என்ற புலவர் வெள்ளைக்குடியைச் சேர்ந்தவர் இவர் சோழனைப் பாடி பழஞ்செய்க் கடன் வீடு கொண்டார். (புறம் 35) |
வேங்கட நாடு | சங்க கால ஊர்கள் |
வேங்கட வைப்பு | சங்க கால ஊர்கள் |
வேங்கடம் | சங்க கால ஊர்கள் |
வேங்கடம் | இப்பொழுது திருப்பதி என வழங்கும் ஊர். மலைநாட்டு ஊர். வைணவத்தலம். வேங்கடம் தமிழ்நாட்டின் வடஎல்லையாக அமைந்திருந்தது. தொண்டை நாட்டை ஆண்ட சங்ககாலப் புல்லி என்ற தலைவனின் மலையாக வேங்கடத்தைச் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. திரையன் என்பவனின் ஆட்சியிலும் இருந்திருக்கிறது |
வேங்கடம் | இன்று திருப்பதி என்ற வைணவத்தலச் சிறப்பால் பெருமையுடையது. தமிழ் நாட்டின் எல்லையாக அமைந்திருந்தது வேங்கட மலை. வடவேங்கடம் தென் குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுல சும் (தொல் எழுத்து சிறப்பு -3). சங்க இலக்கியத்தில் மிகச் சிறந்த மலையாக இருந்ததையும், புல்லி என்ற அரசனின் ஆட்சி இங்கு நடைபெற்றதையும் (அகம் 61, 85) காண்கின்றோம். சிலப்பதி காரத்தில் திருமாலின் சிறப்பு பாடப்படும் நிலையில் இம்மலை யுடன், இங்குள்ள திருமால் கோயிலும் பழம் சிறப்புடையவை என்பது விளங்குகிறது. இங்கு மக்கள் குடியிருப்பும் இருந்ததை என்பதை |
வேட்களம் | தேவாரத் திருத்தலங்கள் |
வேட்களம் | திருவேட்களம் என்ற பெயரில், தென் ஆர்க்காடு மாவட்டத் தில் உள்ள ஊர். சிதம்பரத்திற்குப் பக்கத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை ஒட்டியுள்ளது என்ற எண்ணம் அமைகிறது. வேட்களம் என்ற நிலையில் பார்க்கும் போது, வேட்டையாடும் நிலை வாய்ந்த களம் என்ற பொருள் அமைகிறது. வேடர்கள் வாழ்ந்த பகுதியாக இருந்திருக்கலாம். சம்பந்தர், அப்பர் இத்தலத்து இறைவனைப் பாடிப் பரவியுள்ளனர். எனவே |
வேட்டக்குடி | தேவாரத் திருத்தலங்கள் |
வேட்டக்குடி | வேட்டக்குடி என, காரைக்காலுக்கு அருகில் அமைந்துள்ளது இவ்வூர். அர்ச்சுனன் தவம் செய்யுங்கால் இறைவன் வேடவடிவத்தில் வெளிப்பட்ட தலம் என்பது இவ்விடம் பற்றிய எண்ணம். வேட்களம் போன்றே இதற்கும் அர்ச்சுனனைத் தொடர்பு படுத்துகின்ற நிலை விளங்குகிறது எனினும் வேட்டம் குடி வேட்டையாடும் மக்கள் வாழ்ந்த குடியிருப்புப் பகுதி (வேட்டை வேட்டையாடுதல்) என்பதே பொருத்தமாக அமைகிறது. சம்பந்தர் இங்குள்ள சிவனைப் புகழ்கின்றார். |
வேதிகுடி | தேவாரத் திருத்தலங்கள் |
வேதிகுடி | திருவேதிகுடி எனத் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஊர் இது. குடமுருட்டியாறு அருகில் உள்ள ஊர் இது. வேதங்கள் வழிபட்ட தலம் என்ற கருத்தைவிட, வேதியர்களின் குடியிருப்புப் பகுதி என்பது ஏற்புடையது. சிறந்த சீர்த் திருவேதி குடி’ என இதனைச் சுட்டுவார் சேக்கிழார் (34-356). |
வேம்பற்றூர் | வேம்பு மரத்தின் பெயரால் பெற்ற ஊர்ப்பெயராக இருக்கலாம். வேம்பற்றூர் என்ற பழம்பெயர் இப்பொழுது வேம்பத்தரா் என வழங்குகிறது. மதுரைக்கு வடகிழக்கில் இரண்டு காதத் தொலைவில் வையையாற்றுக்கு வடக்கே இருக்கறது. குறுந்தொகையில் 362ஆம் பாடலைப் பாடிய கண்ணன் கூத்தன் என்ற சங்ககாலப் புலவரும், அகநானூற்றில் 157ஆம் பாடலையும், புறநானூற்றில் 317 ஆம் பாடலையும் பாடிய குமரனார் என்ற சங்ககாலப் புலவரும் இவ்வூரினர். |
வேம்பி | சங்க கால ஊர்கள் |
வேற்காடு | திருவேற்காடு என. செங்கற்பட்டு மாவட்டத்தில் இருக்கும் ஊர் இது. அன்று சிவன் கோயில் சிறப்பு பெற்றதாக அமைய. இன்று கருமாரியம்மன் கோயில் காரணமாகப் பெரும் புகழுடன் திகழும் ஊர். தலமரம் வேலமரம் என அறிகின்ற போது வேல மரங்களின் மிகுதி காரணமாக இப்பெயர் அமைந்துள்ளது என்பது விளக்கமாகத் தெரிகிறது. காடுவெட்டியாறு என்ற பழைய பாலாற்றங்கரையில் உள்ளது இத்தலம். |
வேற்காடு – திருவேற்காடு ஊர், திருவேற்காடு | தேவாரத் திருத்தலங்கள் |
வேலம்புத்தூர் | மாணிக்க வாசகர் சுட்டும் ஊர் இது. |
வேலூர் | சங்க கால ஊர்கள் |
வேலூர் | சிறுபாணாற்றுப் படையில் குறிக்கப் பெறும் வேலூர் என்ற இவ்வூர் தென்ஆர்க்காடு மாவட்டத்தில் திண்டிவனம் வட்டத்தில் கிளியனூருக்கு அருகில் உள்ளது ஓய்மா நாட்டு வேலூர் என்று குறிக்கப் பெற்ற இவ்வூர் இப்பொழுது உப்பு வேலூர் என வழங்கப் பெறுகிறது. (வடஆர்க்காடு மாவட்டத்திலுள்ள வேலுர் வேறு) வேல் என்ற ஒருவகை மரத்தின் பெயரால் வேலூர் என்ற பெயர் வைக்கப் பெற்றிருக்கலாம். அல்லது நல்லியக்கோடன் தன் பகையை வென்ற இடமாதலின் வேலூர் என்றும் பெயா் பெற்றிருக்கலாம். (வேல் என்றால் பகை என்றும் வெல்லுகை என்றும் பொருள் உண்டு) “நல்லியக்கோடன் தன் பகை மிகுதிக்கு அஞ்சி முருகனை வழிபட்ட வழி அவன் இக்கேணியிற் பூவை வாங்கிப் பகைவரை எறியென்று கனவிற் கூறி, அதிற் பூவைத் தன் வேலாக நிருமித்த தொரு கதைகூறிற்று. இதனானே வேலூர் என்று பெயராயிற்று” என்பர் நச்சினார்க்கினியர், |
வேலூர் | வட ஆற்காடு மாவட்டம் வேலூர், அரக்கோணம், செங்கம், வாலாஜா |
வேளூர் | தேவாரத் திருத்தலங்கள் |
வேளூர் | மண் எனப் பொருள்படும் வேள் என்ற சொல், நில அமைப்பால் பெற்ற பெயரோ என எண்ண இடமளிக்கிறது. நாகப்பட்டினத்துக்கு அருகே ஒரு வேளூர் உண்டு, அது கீழ் வேளுர் என அழைக்கப் பெற்று இப்பொழுது கீவளுர் என சிதைந்துள்ளது. |
வேளூர் வாயில் | சங்க கால ஊர்கள் |
வேள்விக்குடி | தேவாரத் திருத்தலங்கள் |
வேள்விக்குடி | வேள்விக்குடி என்ற பயரில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஊர் இது. இது திருவேள்விக் குடி என்றும் அன்று அழைக்கப்பட்டு இருந்தது என்பது பெரிய புராணம் சுட்டும் நிலை (35-121-3). அரசகுமாரன் ஒருவனுக்கு மணம் புரிய நிச்சயித்திருந்த பெண்ணை மணம் நிறைவேறு முன் அவன் தாய் தந்தையர் இறக்கவே. அவள் சுற்றத்தார் கொடாது மறுத்தனர். அரசகுமாரன் சிவனை நோக்கி, தவம் செய்து வேண்டினான். இறைவன் அப்பெண்ணை ஒரு பூதத்தால் எடுத்துக் கொண்டு வந்து அவனுக்குத் திருமண வேள்வி செய்தருளினார். ஆதலின் திருவேள்விக் குடி என்று பெயர் பெற்றது என்பர். திருநாவு கரசர். |
வைகல் | தஞ்சாவூரில் வைகல் என்ற பெயரில் இன்றும் அமைந்துள்ள இடம். இங்குள்ள மாடக்கோயில் சிறப்பு பெற்றது. சம்பந்தர் இங்குள்ள சிவனைப் பாடியுள்ளார். கோச்செங்கட் சோழனால் கட்டப்பட்ட மாடக்கோயில் இது. கொம்பியல் சோதை முன்னஞ்சக் குஞ்சரத் தும்பியதுரி செய்த துங்கர் தங்கிடம் வம்பியர் சோலை சூழ் வைகன் மேற்றிசைச் செம்பியன் கோச்செங்கணான் செய்கோயிலே (276-4) என்று சம்பந்தர் இதனைக் காட்டுகின்றார். மேலும், |
வைகல் மாடக்கோயில் | தேவாரத் திருத்தலங்கள் |
வைகாவூர் | தேவாரத் திருத்தலங்கள் |
வைகாவூர் | திருவைகாவூர் என்று. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஊர் இது. கொள்ளிடநதிக் கரைத் தலம் இது.. |
வைகுந்தம் | புளிங்குடி கிடந்து வரகுண மங்கை |
வைகை | தேவாரத் திருத்தலங்கள் |
வைப்பூர் | வளம் பொழில் சூழ் வைப்பூர் (பெரிய -34-480) என்ற நிலையில் வைப்பூர் என்ற ஊர்பற்றி அறிய இயலுகிறது. பிறஎண்ணங் கள் தெளிவில்லை. |