ஊர் பெயரகராதி

தமிழகம் ஊரும் பேரும் – சேதுப்பிள்ளை.ரா.பி, இலக்கியத்தில் ஊர்ப்பெயர்கள் I – ஆளவந்தார்.ஆர், II – பகவதி.கே. தமிழகம் இலங்கை ஊர்ப்பெயர்கள் ஓர் ஒப்பாய்வு – கு.பகவதி. பெரியபுராணச் சிறப்புப் பெயரகராதி – தா.வே.வீராசாமி. தஞ்சை மாவட்ட ஊர்ப்பெயர்கள் – மெய்.சந்திரசேகரன். கெடிலக்கரை நாகரிகம் ஊர்கள் – பேரா.சுந்தரசண்முகனார். செங்கை மாவட்ட ஊர்ப்பெயர்கள் – நாகராசன்.கரு


87

48

47

6

15

6

18

11

4

8

4
க்
99
கா
32
கி
3
கீ
1
கு
61
கூ
10
கெ
1
கே
3
கை
3
கொ
24
கோ
39
கௌ
ங் ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
10
சா
9
சி
21
சீ சு
2
சூ செ
17
சே
8
சை சொ சோ
9
சௌ
ஞ் ஞா ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ
ண் ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
23
தா
1
தி
22
தீ து
11
தூ
4
தெ
7
தே
4
தை தொ
5
தோ தௌ
ந்
31
நா
24
நி
6
நீ
11
நு நூ நெ
22
நே
5
நை நொ
1
நோ நௌ
ப்
43
பா
33
பி
7
பீ பு
39
பூ
10
பெ
11
பே
7
பை
2
பொ
7
போ
6
பௌ
ம்
40
மா
25
மி
3
மீ
2
மு
28
மூ
4
மெ
1
மே
1
மை
5
மொ மோ
6
மௌ
ய்
2
யா யி யீ யு யூ யெ யே யை யொ யோ யௌ
ர் ரா ரி ரீ ரு ரூ ரெ ரே ரை ரொ ரோ ரௌ
ல் லா லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
வ்
40
வா
20
வி
25
வீ
6
வு வூ வெ
27
வே
24
வை
7
வொ வோ வௌ
ழ் ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன் னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்
வெஞ்சமாக்கூடல்

வெஞ்சமாக் கூடல் என்ற பெயரிலேயே இன்றும் திருச்சி மாவட்டத்தில் உள்ளது இவ்விடம். பொதுவாகக் கூடும் இடத் தைக் கூடல் என்று அழைக்கும் வழக்கினைத் தமிழர் கொண்டு இருந்தனர் என்பதைப் பிற ஊர்ப்பெயர்களும் புலப்படுத்துகின் றன. இவ்வூர்ப் பெயரும். இக்கருத்தடிப்படையில் பிறந்ததே. தாம்பிரபரணியின் உபநதியான சிற்றாறு குற்றாலத்தில் மலையின் மடுவில் விழுந்து உண்டாக்குவது பொங்குமாங்கடல். அமராவதியின் கிளைந்தி சிற்றாறு. அது அமராவதியுடன் கூடும் துறையில் உண்டான ஊரின் பெயர் வெஞ்சமாக் கூடல். இச் சிற்றாற்றைக் குடவன் ஆறு என்றும் குழகன் ஆறு என்றும் கூறுவர் என்ற எண்ணம் இவ்விடம் பற்றி இயம்பும். வெஞ்ச மன் என்ற அரசன் ஆண்டமை காரணமாக இப்பெயர் அமைந் தது என்ற எண்ணமும் உண்டு. பெரிய ஊராய்த் திகழ்ந்த வெஞ்சமாக் கூடல் இன்று சிற்றூராய்க் காட்சியளிக் கின்றது. இதன் அன்றையச் செழிப்பைச் சுந்தரர், அன்று
எறிக்கும் கதிர் வேயுதிர் முத்தமொ
டேலமிலவங்கம் தக்கோலம் இஞ்சி
செறிக்கும் புனலுட்பெய்து கொண்டு மண்டித்
திளைத் செற்று சிற்றாறதன் கீழ்க்கரைமேல்
முறிக்கும் தழை மாமுடப் புன்னை ஞாழல்
குருக்கத்தி கண்மேற்குயில் கூவலறா
வெறிக்கும் கலைமா வெஞ்சமாக் கூடல்
விகிர்தா வடியேனையும் வேண்டுதியே
என்கின்றார். எனவே இவ்விடம் இவர் பாடல் மூலமும் சிற்றாற்றங்கரையில் அமைந்திருந்தமை தெளிவாகிறது. எனினும் கூடல் என்ற பெயருக்குரிய பொருள் விளக்கமாகிறதே அன்றி வெஞ்சமா என்ற பெயர்க்கூறுக்குரிய பொருள் விளக்கமாகவில்லை.

வெண்காடு

திருவெண்காடு என தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஊர் இது. சீகாழிக்குத் தென் கிழக்கு ஏழு எட்டு மைல் தூரத்தில் இருக்கும் இடம் இது. முக்குளம், ஆல்,வில்வம், கொன்றை என்ற மூன்று தலவிருட்சங்கள் இக்கோயிலின் சிறப்பு. திருவெண்காடு என்பதும், சிவன் கோயிற் சிறப்பும். இவ்விடம் காடு சார்ந்த பகுதியாக இருந்து, பின்னர், இறைச் சிறப்பால், குடியிருப்புப் பகுதியாக மாறியிருக்கக் கூடும் என்ற எண்ணத்தைத் தருகிறது. சைவர்களால் பெரிதும் போற்றப்பட்ட கோயில் இது என்பதைப் பலரின் பக்திப் பாடல்கள் சுட்டுகின்றன.
விருந்தினன் ஆகி வெண்காடு அதனில்
குருந்தின் கீழ் அன்று இருந்த கொள்கையும் (திரு. கீர்த்தி- 60-61)
என மாணிக்கவாசகர் இக்கோயில் இறைவனைப் புகழ்கின்றார். திருநாவுக்கரசர்,
பாகிடுவான் சென்றேனைப் பற்றி நோக்கிப்
பரிசளித் தென் வளைகவர்ந்தார் பாவியேனை
மேக முகிலுரிஞ்சும் சோலை சூழ்ந்த
வெண்காடு மேவிய விகிர்தனாரே (249-4) எனப்பாடுகின்றார்.

வெண்காடு

தேவாரத் திருத்தலங்கள்

வெண்குன்று

வெண்குன்று” என்ற சிலப்பதிகாரத்‌ தொடருக்கு, சுவாமி மலை என்று சிலப்பதிகார அரும்பதவுரையாசிரியர்‌ குறித்துள்‌ளார்‌. கொங்கு நாட்டில்‌ பவானி நதியும்‌ சிந்தாமணியாறும்‌ கலக்குமிடத்தில்‌ ”தவளகிரி என்னும்‌ மலையொன்றுண்டு. அங்கு முருகன்‌, கோயில்‌ கொண்டு விளங்கினார்‌ என்பது சாசனத்தால்‌. (108 of 1910) அறியப்படும்‌. வெண்குன்று என்ற தமிழ்ச்‌ சொல்லுக்கு நேரான வடமொழிப்‌ பதம்‌ தவளகரியாதலால்‌ இளங்கோவடிகள்‌ குறித்த வெண்குன்று அதுவாக இருக்கலாம்‌ என்பர்‌.
“சீர்‌ கெழு செந்திலும்‌ செங்கோடும்‌ வெண்குன்றும்‌
ஏரகமும்‌ நீங்கா இறைவன்‌ கை வேலன்தே” (சிலப்‌. 24:8 1).

வெண்டுறை

திருவண்டுதுறை என இன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஊர் இது. பிருங்கி முனிவர் வண்டு வடிவில் உமையொருபாகன் வடிவத்தைத் துளைத்து இறைவனை மட்டும் வழிபட்ட தலம் இது என்பர். சேக்கிழார் இதனைத் திருமலி வெண்டுறை’ என்பார் (34-574). சம்பந்தர் பதிகம் இறைவன் விரும்புமிடம் வெண்டுறை என்பதை எல்லாப் பாடல்களிலும் குறிக்கிறது (319). துறை என்பது ஆற்றுத் துறையாக இருக்கலாம். வெண் ணிலம் என்பதற்கு வெறுந்தரை, மணற்பாங்கான தரை என்று தமிழ் லெக்ஸிகன் பொருள் உரைப்பதை நோக்க, மணற்பாங்கான துறை என்ற நிலையில் வெண்டுறை என்ற பெயர் அமைந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது.

வெண்டுறை

தேவாரத் திருத்தலங்கள்

வெண்ணி

சங்க கால ஊர்கள்

வெண்ணி

வெண்ணி என்ற பெயரிலேயே இன்றும் தஞ்சாவூர் மாவட் டத்தில் உள்ளது. பொருநர் ஆற்றுப்படை வெண்ணிப் பறந்தலை என்ற ஊரில் கரிகாலன் வென்ற செய்தியைக் குறிப்பிடும். இங்குக் குறிப்பிடப்படும் வெண்ணியும் சோழ நாட்டு ஊர் என்ற நிலையில் இரண்டும் ஒரே ஊராக இருக்க வாய்ப்பு அமைகிறது. முன்னயை, வெண்டுறை என்ற ஊர்ப் பெயர் அமைந்தது போன்று இதுவும். வெறுந்தரையைக் குறித்து அமைந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது. இங்குள்ள ரயில் நிலையம் கோயில் வெண்ணி எனச் சுட்டப்படுவது கோயிலின் சிறப்புக்கும். செல்வாக்குக்கும் பின்னைய நிலை எனத் தோன்றுகிறது. எனவே முதலில் மண்தரையாகக் குடியேற்றம் இன்றி இருந்த வெண்ணி, போருக்கு பின்னர். குடியிருப்புப் பகுதியாகத் தோற்றம் கொண்டது எனலாம். திருஞானசம்பந்தர், தம்பாடலில்,
சடையானைச் சந்திரனொடு செங்கண்ணரா
உடையானை யுடைதலை யிற்பலி கொண்டூரும்
விடையானை விண்ணவர் தாம் தொழும் வெண்ணியை
உடையானை அல்லதுள் காதென துள்ளமே (150-1) என்கின்றார். சேக்கிழார். சோலை சூழ் பழுதில் சீர்த்திரு வெண்ணி (பதி -34, 358) என இதனைக் குறிப்பிடுகின்றார். திருநாவுக்கரசர், வெண்ணித் தொன்னகர் (131-2) என இதனைச் சுட்டும் நிலையும் இதன் பழமையை யுணர்த்தவல்லது.

வெண்ணி

வெறுந்தரை அல்லது மணற்பாங்கான தரை என்று பொருள்‌ படும்‌. வெண்ணி என்னும்‌ அவ்வகையான நில அமைப்புப் பகுதியில்‌ அமைந்த ஊருக்குப்‌ பெயராயிற்று போலும்‌. சேரனும்‌ பாண்டியனும்‌ கரிகாலன்‌ இளையன்‌ என எண்ணி, அவன்‌ மீது போர்‌ தொடுக்க, அவர்களுடன்‌ போர்‌ புரிந்து கரிகாலன்‌ வென்ற இடமே வெண்ணி என்பது. போரில்‌ புறப்புண்‌ அடைந்த சேரன்‌ வடக்கிருந்து இறந்தான்‌ இது கோயில்‌ வெண்ணி என்றும்‌ கூறப்படும்‌, இவ்வூர்‌ ஆரூரின்‌ அருகேயுள்ளது. கரிகாலனைப்‌ பாடிய குயத்தியார்‌ (புறம்‌. 66) என்னும்‌ புலவர்‌ இவ்வூரினர்‌. ஆகவே வெண்ணிக்குயத்தியார்‌ எனப்‌ பெயர்‌ பெற்றார்‌.
“இரும்பனம்‌ போந்தைத்‌ தோடும்‌, கருஞ்சினை
அரவாய்‌ வேம்பின்‌ அம்குழைத்‌ தெரியலும்‌,
ஓங்‌கருஞ்‌ சென்னி மேம்பட மிலைந்த
இருபெரு வேந்தரும்‌ ஒருகளத்து அவிய,
வெண்ணித்‌ தாக்கிய வெருவரு நோன்தாள்‌,
கண்ணார்‌ கண்ணி, கரிகரல்‌ வளவன்‌” (பத்துப்‌. பொருந. 143 148)
“வாளை வாளின்‌ பிறழ நாளும்‌
பொய்கை நீர்‌ நாய்‌ வைகுதுயில்‌ ஏற்கும்‌
கைவண்‌ கிள்ளி வெண்ணி சூழ்ந்த
வயல்‌ வெள்‌ ஆம்பல்‌ உருவ நெறித்தழை
ஐதகலல்குல்‌ அணி பெறத்‌ தைஇ.
விழபின்‌ செலீஇயர்‌ வேண்டும்‌ மன்னோ”. (நற்‌. 390:1 6)
“கரிகால்‌ வளவனொடு வெண்ணிப்‌ பறந்தலைப்‌
பொருது புண்‌ நாணிய சேரலாதன்‌
அழிகள மருங்கின்‌ வாள்‌ லடக்கிருந்தென,
இன்னா இன்‌ உரை கேட்ட சான்றோர்‌
அரும்‌ பெறல்‌ உலகத்து அவனொடு செலீ இயர்‌,
பெரும்‌ பிறிது ஆகியாங்கு,” (அகம்‌, 55;10 15)
“காய்சின மொய்ம்பின்‌ பெரும்‌ பெயர்க்‌ கரிகால்‌
ஆர்கலி நறவின்‌ வெண்ணி வாயில்‌
சீர்‌ கெழு மன்னர்‌ மறலிய ஞாட்பின்‌
இமிழ்‌ இசை முரசம்‌ பொருகளத்து ஒழிய,
பதினொரு வேளிரோடு வேந்தர்‌ சாய,
மொய்வலி அறுத்த ஞான்றை,
தொய்யா அழுந்தூர்‌ ஆர்ப்பினும்‌ பெரிதே.” (ஷே. 2468 14)
“களிஇயல்‌ யானைக்‌ கரிகால்‌ வளவ
சென்று, அமர்க்கடந்த நின்‌ஆற்றல்‌ தோன்ற
வென்ஹோய்‌! நின்னினும்‌ நல்லன்‌ அன்றே
கலிகொள்‌ யாணர்‌ வெண்ணிப்‌ பறந்தலை
மிகப்‌ புகழ்‌ உலகம்‌ எய்தி
புறப்புண்‌ நாணி, வடக்கிருந்‌ தோனே” (புறம்‌, 66;3 8)

வெண்ணிப் பறந்தலை

சங்க கால ஊர்கள்

வெண்ணியூர்

தேவாரத் திருத்தலங்கள்

வெண்ணிவாயில்

சங்க கால ஊர்கள்

வெண்ணெய் நல்லூர்

திருவெண்ணெய் நல்லூர் என்ற தலம், தென் ஆர்க்காடு மாவட்டத்தில் இருக்கிறது. இதனை ஆட்கொண்ட நிலைமையை வெண்ணெய் நல்லூரில் வைத்தெனை ஆட்கொண்ட எனப்பாடு கின்றார் சுந்தரர் (17-11). இங்குள்ள கோயில் பெயர் திரு அருள் துறை. இதற்கு அருகாமையில் உள்ள கிராமம் மணம் தவிர்ந்த புத்தூர். இவற்றை நோக்க நல்லூர். புத்தூர் என்பன சிறப்பு அடைகள் என்பதும் புலனாகின்றன. உமாதேவி பசு வெண்ணெ யினால் கோட்டைக் கட்டி கொண்டு, அதனிடையே பஞ்ச அக் கினியை வளர்த்துத் தவம் புரிகின்றாள். அப்படித் தவம் புரிந்து பேறுபெற்ற தலம் ஆனதினாலே தான் இத்தலத்துக்கு வெண்ணெய் நல்லூர் என்று பெயர் என்ற புராணக் கதை இப்பெயர் குறித்து அமைகின்றது.
பித்தா பிறை சூடி பெருமானே அருளாளா
எத்தால் மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை
வைத்தாய் பெண்ணைத் தென்பால்
வெண்ணெய் நல்லூர் அருள் துறையுள்
அத்தா உனக்கு ஆளாய்
இனி அல்லேன் எனலாமே’
பெண்ணையாறு இவ்வூரை வளம் பெறச் செய்தது என்பது தெரிகிறது. வெண்ணெய் நல்லூர் கம்பனாலும் தன் புகழை மேலோங்கச் செய்தது என்பதனைக் கம்பராமாயணம் காட்டும். அண்மையில் பெண்ணையாறு இருக்கிறது என்பதை அறியும் போது பெண்ணையாற்றங்கரையில் இருக்கும் நல்லூர் ஆகை யால் பெண்ணை நல்லூர் என வழங்கப்பட்டு, பின்னர் மக்கள் வழக்கில் வெண்ணெய் நல்லூர் என்று திரிந்ததோ என்ற எண்ணம் தோன்றுகிறது.

வெண்பாக்கம்

சென்னை மாவட்டத்துள் இருந்த தலம். சென்னைக்கருகில் உள்ள பூண்டி நீர்த் தேக்கத்துள் மூழ்கியது. நீர்த் தேக்கக் கரை யில் புதிய கோவிலொன்று கட்டப்பட்டுள்ளது என்ற எண்ணம் இதனைக் குறித்து அமைகிறது. ? சுந்தரர் பதிகம் இதனைக் குறித்தமைகிறது. ஏராரும் பொழினிலவு வெண்பாக்கம் இடம் கொண்ட காராரு மிடற்றான் எனப் பாடுகின்றார் இவர் (99-41)’. 1. வண்ணமாலைக் கை பரப்பி உலகை வளைத்த இருள் எல்லாம் உண்ண எண்ணி தன் மதியத்து உதயத்து எழுந்த நிலாக்கற்றை விண்ணும் மண்ணும் திசை அனைத்தும் விழுங்கிக் கொண்ட விரிநல் நீர்ப் பண்ணை வெண்ணெய்ச் சடையன் தன் புகழ் போல் எங்கும் பரந்துளதால் (கம்ப -552) தண்ணெனும் கானம் நீங்கி, தாங்க அருந்தவத்தின் மிக்கோன் மண்ணவர் வறுமை நோய்க்கு மருந்து ஆன சடையன் வெண்ணெய் அண்ணல் தன் சொல்லே அன்ன படைக்கலம் அருளி னானே (கம்ப -394) விஞ்சையில் தாங்கினான் -சடையன் வெண்ணெயில் தஞ்சம் என்றோர்களைத் தாங்கும் தன்மை போல் (கம்ப -6682) 2. சேக்கிழார் வழியில் சிவத்தலங்கள் -பக். 29

வெண்பாக்கம்

தேவாரத் திருத்தலங்கள்

வெண்மணி வாயில்

சங்க கால ஊர்கள்

வெண்மணி வாயில்‌

முத்து என்ற பொருளுடையது வெண்மணி என்னும்‌ சொல்‌. மத்தி என்பவன்‌ எழினி என்பவனை வென்று அவனுடைய பல்லைப்‌ பறித்துக்‌ கொணர்ந்து கோட்டைக்‌ கதவில்‌ பதித்தான்‌. மேலும்‌ வெற்றிக்கு அடையாளமாக கடற்கரையில்‌ ஒரு கல்லையும்‌ நட்டான்‌. இச்செய்தி வெண்மணி வாயில்‌ என்னும்‌ ஊர்‌ முத்துக்‌ கிடைக்கும்‌ கடற்கரை நகரமாய்‌ இருந்திருக்கலாம்‌ என எண்ணத்‌ தோன்றுகிறது. பகைவரை அட்டு அவர்‌ பல்லைக்‌ கொணர்ந்து தமது கோட்டை வாயிற்‌ கதவில்‌ பதித்தல்‌ பண்டைய மரபு என்பதையும்‌ உணர முடிகிறது.
“குழி யிடைக்கொண்ட கன்றுடைப்‌ பெருநிரை
பிடிபடு பூசலின்‌ எய்தாது ஒழிய,
கடுஞ்சின வேந்தன்‌ ஏவலின்‌ எய்தி
நெடுஞ்சேண்‌ நாட்டில்‌ தலைத்‌ தார்ப்பட்ட
கல்லா எழினி பல்‌ எறிந்து அழுத்திய
வன்கண்‌ கதவின்‌ வெண்மணி வாயில்‌
மத்திநாட்டிய கல்கெழு பனித்துறை
நீர்‌ ஒலித்தன்ன……… “‌ (அகம்‌. 211;9 16)

வெற்றியூர்

திருநாவுக்கரசர் சுட்டும் ஊர் இது. பற்றற்றர் சேர்பழம் பதியைப் பாசூர் நிலாய பவளத்தைச் சிற்றம்பலத்தெந் திகழ் கனியைத் தீண்டற்குரிய திருவுருவை வெற்றியூரில் விரிசுடரை விமலர் கோனைத் திரை சூழ்ந்த ஒற்றியூரெ முத்தமனை யுள்ளத்துள்ளே வைத்தேனே (15-1) எனப் பாடும் தன்மை வெற்றியூரில் உள்ள சிவன் பெருமையைச் சுட்டுகிறது.

வெளியனூர்

சங்க கால ஊர்கள்

வெளியம்

சங்க கால ஊர்கள்

வெள்ளறை

திருமால் பெருமை கொண்ட ஊர், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ளது. திருவெள்ளறை என்று சுட்டப்படும் தலம். வெண்மையான பாறைகளாகிய ஒரு சிறு குன்றின் மேல் பெருமாள் எழுந்தருளியிருக்கின்றார் என்ற கருத்தை நோக்க ! இவ்வூர்ப்பெயரின் காரணமும் விளக்கம் பெறுகின்றது. வெண்மையான பாறை வெள்ளறை என்று சுட்டப்பட்டது. திரு மால் கோயில் சிறப்பு திரு வைத் தந்தது. இந்நிலையில் திரு வெள்ளறையாயிற்று.
மன்றில் மாம்பொழில் நுழை தந்து மல்லிகை மௌவலின் போதலர்த்தி
தென்றல் மாமணம் கமழ் தர வருதிரு வெள்ளறை (நாலா -1368)
உயர் கொள் மாதவிப் போதொடு லாவிய
மாருதம் வீதியின் வாய்
திசையெல்லாம் கமழும் பொழில் சூழ் திரு வெள்ளறை (1369)
என, திருமங்கையாழ்வார் இதன் செழிப்பை யுணர்த்துகிறார்.

வெள்ளியங்குடி

திருவிடை மருதூருக்கு வடக்கே ஆறு மைலில் திருவெள்ளி யங்குடி என்ற விஷ்ணு ஸ்தலம் இருக்கிறது என்ற கருத்து ?, இது தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஊர் என்பதை உணர்த்துகிறது. இறைவனைப் பூசித்து இழந்த கண்ணைப் பெற்றதனால் திரு வெள்ளியங்குடி என்று தலம் பெயர் பெற்றது என்ற கருத்து. எவ்வாறு பொருந்துகிறது என்பது புரியவில்லை. குடி குடியிருப்பையுணர்த்துகிறது. வெள்ளி சுக்கிரனைக் குறித்து அமையினும் வெள்ளி அம்குடி சால் நிலையில் பொருத்தமுறுகிறதே தவிர. இது அடிப்படையாக இருக்குமா ? என்பது கேள்விக்குரியது. என்பது இவ்விடம் மிகவும் செழிப்பு மிக்கது என்பதை,
காய்த்த நீள் கமுகும் கதலியும் தெங்கும்
எங்கும் ஆம் பொழில் களினடுவே
வாய்த்த நீர்பாயும் மண்ணியின் தென்பால்
திருவெள்ளியங் குடியதுவே (நாலா 1338)
துறை துறைதோறும் பொன் மணிசிதறும்
தொகுதிரை மண்ணியின் தென்பால்
செறிமணி மாடக் கொதிக்கதிரணவும்
திருவெள்ளி யங்குடி அதுவே (நாலா 1341)
போன்ற திருமங்கை ஆழ்வாரின் பாடல்கள் தெளிவாக்குகின்றன. மண்ணியாற்றின் கரையில் உள்ள இடம் இது என்பதும் தெரியவருகிறது. மேலும் இவரது பாடல் ஒன்று.
படமிறப் பாய்ந்து பன்மணி சிந்தப்
பல் நடம் பயின்றவன் கோயில்,
படவர வல்குல் பாவை நல்லார்கள்
பயிற்றிய நாடகத் தொலிபோய்,
அடைபுடை தழுவி அண்டம் நின்ற திரும்
திருவெள்ளியங்குடியதுவே (நாலா -1340) என உரைக்கிறது. எனவே இங்குக் கலைகள் சிறப்புற்றிருந்தன என்பதை உணர இயலுகிறது. இதனைக் கொண்டு நோக்க, வெள் + இயம் + குடி இப்பெயர் அமைந்திருக்குமா எனத் தோன்றுகிறது. மணற்பாங்கான தரையையுடையதும், இயங்கள் ஒலிக்கக்கூடியதுமான குடியிருப்புப் பகுதி, திருமால் கோயில் கொண்டமையால் திருவெள்ளியங்குடி என அழைக்கப் பட்டதோ என எண்ணத் தோன்றுகிறது.

வெள்ளியம்பலம்

சங்க கால ஊர்கள்

வெள்ளியம்பலம்

பாண்டியன்‌ பெருவழுதி இங்குத்‌ துஞ்சிய காரணத்தால்‌ வெள்ளியம்பலத்துத்‌ துஞ்சிய பெருவழுதி எனப்‌ பெயர்‌ பெற்‌றான்‌ (புறப்‌. 58) ஆகவே வெள்ளியம்பலம்‌ ஓர்‌ ஊரின்‌ பெயராகவும்‌ இருக்குமோ என்று எண்ண இடமளிக்கிறது. மதுரையில்‌ கோயிலில்‌ வெள்ளியம்பலம்‌ என்று ஓர்‌ அம்பலம்‌ உண்டு. இறைவனுக்குப்‌ பொன்னம்பலத்தோடு இந்த வெள்ளி யம்பலமும்‌ உரியது.
“அதிராச்‌ சிறப்பின்‌ மதுரை மூதூர்க்‌
கொன்றையஞ்‌ சடைமுடி மன்றப்பொதியிலில்‌
வெள்ளியம்பலத்து நள்ளிருட்‌ கிடந்தேன்‌”. (சிலப்‌. பதிகம்‌. 39 41)

வெள்ளில் மன்றம்

சங்க கால ஊர்கள்

வெள்ளூர்

வெண்பூதியார்‌ என்ற சங்கசாலப்‌ புலவர்‌ இவ்வூரினரான வெள்ளூர்‌ கிழார்‌ மகனார்‌ எனத்‌ தெரிகிறது, (குறுந்‌. 219) பராந்தக நெடுஞ்செழியன்‌ (கி.பி. 768 815) வெள்ளூரில்‌ போர் புரிந்து பகைவர்களை அழித்ததாகச்‌ சீவரமங்கலச்‌ செப்பேடு கூறுகிறது. திருநெல்வேலிக்கும்‌ தூத்துக்குடிக்கும்‌ இடையில்‌ வல்ல நாட்டிற்கு அருகில்‌ வெள்ளூர்‌ இருப்பதாகக்‌ கூறுகின்றனர்‌

வெள்ளைக்குடி

வேங்கை மரம்‌ எனப்‌ பொருளுடைய சொல்‌ வெள்ளை யென்பது. வேங்கைமரங்களடர்ந்த குடியிருப்புகன்‌ அமைந்து ஊர்‌ வெள்ளைக்குடி எனப்‌ பெயர்‌ பெற்றிருக்கலாம்‌. நற்றிணையில்‌ 158, 196 ஆகிய பாடல்களையும்‌, புறநானூற்றில்‌ 35ஆம்‌ பாடலையும்‌ பாடிய நாகனார்‌ என்ற புலவர்‌ வெள்ளைக்குடியைச்‌ சேர்ந்தவர்‌ இவர்‌ சோழனைப்‌ பாடி பழஞ்செய்க்‌ கடன்‌ வீடு கொண்டார்‌. (புறம்‌ 35)