ஊர் பெயரகராதி

தமிழகம் ஊரும் பேரும் – சேதுப்பிள்ளை.ரா.பி, இலக்கியத்தில் ஊர்ப்பெயர்கள் I – ஆளவந்தார்.ஆர், II – பகவதி.கே. தமிழகம் இலங்கை ஊர்ப்பெயர்கள் ஓர் ஒப்பாய்வு – கு.பகவதி. பெரியபுராணச் சிறப்புப் பெயரகராதி – தா.வே.வீராசாமி. தஞ்சை மாவட்ட ஊர்ப்பெயர்கள் – மெய்.சந்திரசேகரன். கெடிலக்கரை நாகரிகம் ஊர்கள் – பேரா.சுந்தரசண்முகனார். செங்கை மாவட்ட ஊர்ப்பெயர்கள் – நாகராசன்.கரு


87

48

47

6

15

6

18

11

4

8

4
க்
99
கா
32
கி
3
கீ
1
கு
61
கூ
10
கெ
1
கே
3
கை
3
கொ
24
கோ
39
கௌ
ங் ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
10
சா
9
சி
21
சீ சு
2
சூ செ
17
சே
8
சை சொ சோ
9
சௌ
ஞ் ஞா ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ
ண் ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
23
தா
1
தி
22
தீ து
11
தூ
4
தெ
7
தே
4
தை தொ
5
தோ தௌ
ந்
31
நா
24
நி
6
நீ
11
நு நூ நெ
22
நே
5
நை நொ
1
நோ நௌ
ப்
43
பா
33
பி
7
பீ பு
39
பூ
10
பெ
11
பே
7
பை
2
பொ
7
போ
6
பௌ
ம்
40
மா
25
மி
3
மீ
2
மு
28
மூ
4
மெ
1
மே
1
மை
5
மொ மோ
6
மௌ
ய்
2
யா யி யீ யு யூ யெ யே யை யொ யோ யௌ
ர் ரா ரி ரீ ரு ரூ ரெ ரே ரை ரொ ரோ ரௌ
ல் லா லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
வ்
40
வா
20
வி
25
வீ
6
வு வூ வெ
27
வே
24
வை
7
வொ வோ வௌ
ழ் ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன் னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்
மகதநாடு

மகதநாடு தருக்கனுடைய நாடு. இதன்‌ தலைதகர்‌ இராச கிரியம்‌, இந்நாட்டிற்‌ பிறந்தவர்களான இரத்தின வேலைக்‌காரர்கள்‌ திறமை வாய்ந்தவர்கள்‌. வச்சிரம்‌, அவந்தி, மகதம்‌ என்ற இந்நாடு மூன்றும்‌ உடையோர்‌ திறையிட்ட பந்தர்‌, தோரணவாயில்‌, பட்டிமண்டபம்‌ இவை கூடிய மண்டபம்‌ ஒன்றைச்‌ சிலப்பதிகாரம்‌ குறிக்கின்றது. மகத நாட்டின்‌ முக்கிய நகரமாகக்‌ கபிலையைக்‌ குறிக்‌கின்றது மணிமேகலை.
“மாநீர்‌ வேலி வச்சிர நன்னாட்டுக்‌
கோனிறை கொடுத்த கொற்றப்‌ பந்தரும்‌
மகத நன்னாட்டு வாள்வாய்‌ வேந்தன்‌
பகைபுறத்துக்‌ கொடுத்த பட்டிமண்டபமும்‌
அவந்தி வேந்த னுவந்தனன்‌ கொடுத்த
நிவந்தோங்கு மரபின்‌ தோரணவாயிலும்‌”* (சிலப்‌. 1:5:99 104)
”தும்பை வெம்போர்ச்‌ சூழ்கழல்‌ வேந்தே
செம்பியன்‌ மூதுரர்ச்‌ சென்று புக்காங்கு
வச்சிர மவந்தி மகதமொடு குழீஇய
சித்திர மண்டபத்திருக்க வேந்தன்‌
அமரகத்‌ துடைந்த வாரிய மன்னரொடு
தமரிற்‌ சென்று தசையடி வணங்க” (௸. 3:28: 84 89)
“மகத வினைஞரு மராட்டக்‌ கம்மரு
மவந்திக்‌ கொல்லரும்‌ யவனத்தச்சரும்‌
தண்டமிழ்‌ வினை ஞர்‌ தம்மொடு கூடிக்‌
கொண்டினி தியற்றிய கண்கவர்‌ செய்வினைப்‌
பவளத்‌ திரள்காற்‌ பன்மணிப்‌ போதிகைத்‌
தவள நித்திலத்‌ தாமந்‌ தாழ்ந்த
கோணச்‌ சந்தி மாண்வினை விதானத்துத்‌
தமனியம்‌ வேய்ந்த வகைபெறு வனப்பிற்
பைஞ்சேறு மெழுகாப்‌ பசும்‌ பொன்‌ மண்டபத்‌
தந்திர திருவன்‌ சென்றினி தேநலும்‌” (மணிமே. 19 : 107 116)
”கச்சி முற்றத்து நின்னுயிர்‌ கடைகொள
உத்தர மகதத்‌ துறு பிறப்பெல்லா
மாண்பிறப்பாகி யருளற மொழியாய்‌” (௸. 21: 174 179)
“மறந்து மழைமாறா மகத நன்னாட்டுக்‌
கொரு பெருந்‌ திலகமென்‌ றுரவோருரைக்குங்‌
கரவரும்‌ பெருமைக்‌ கபிலையம்பதியின்‌ (௸. 2 ; 42 44)
“மகதத்துப்‌ பிறந்துமணிவினைக்காரரும்‌ (பெருங்‌1: 58 : 41)
”மன்பெருஞ்சிறப்பின்‌ மகத நன்னாடு
சென்று சார்ந்தனராற்‌ செம்மலொடொருங்கென்‌”‌ (௸.3;2:54 55)
”அளவி லாற்றலச்சுவப்‌ பெருமகன்‌
மகதம்‌ புகுந்து மன்னிய செங்கோற்‌
றகைவெந்துப்‌ பிற்‌ றருசகற்‌ கிசைப்ப” (௸.3;16; 10 12)

மங்கலக்குடி

திருமங்கலக்குடி என்ற இவ்வூர் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. காவிரியின் கரையில் உள்ள இத்தலத்தை, சம்பந்தர். அப்பர் இருவர் பாடலாலும் தெரிகிறோம்.
காவிரியின் வடகரைக் காண்டகு
மாவிரியும் பொழில் மங்கலக் குடித்
தேவரியும் பிரமனும் தேடொணாத்
தூவெரிச் சுடர் சோதியுட் சோதியே (187-2)
என்கின்றார் அப்பர். மேலும்
செல்வம் மல்கிய மங்கலக் குடி (187-5)
மாதரார் மருவும் மங்கலக் குடி (187-7)
வண்டு சேர் பொழில் சூழ் பங்கலக் குடி (187-8)
என்றும் இதன் சிறப்பு உரைக்கின்றார். காவிரிக்கரையில் இது அமைந்திருந்ததனைச் சம்பந்தர்,
சீரினார் மணியும் அகில் சந்தும் செறிவரை
வாரி நீர்வரு பொன்னி வடமங்கலக்குடி
என்ற பாடலடிகள் காட்டுகின்றன. சிறப்பு, பெருமை குடிகள் வாழ்ந்த இடம் என்ற நிலையில் மங்கலம் என்ற பெயர் அடை அமையப் பெற்று இருக்கலாம் எனத் தோன்றுகிறது. பெரிய புராணம் செஞ்சடை வேதியர்’ மன்னும் திருமங்கலக் குடி என இதனைச் சுட்டுகிறது. (34-293-4)

மங்கலக்குடி

தேவாரத் திருத்தலங்கள்

மங்கலம்

பெரிய புராணம் சுட்டும் ஊர், இன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் திருமங்கலம் என்ற பெயரால் வழங்கப்படுகிறது. மழநாட்டில் உள்ள ஒரு ஊராக இது இருந்தது என்பதனைச் சேக்கிழார்.
மாடு விரைப்பொலி சோலையின் வான்மதி வந்தேறச்
சூடுபரப்பிய பண்ணை வரம்பு சுரும்பேற
ஈடு பெருக்கிய போர்களின் மேகம் இணைத் தேற
நீடு வளத்தது மேன் மழநா டென்னும் நீர் நாடு (20-1)
பொங்கரில் வண்டு புறம்பலை சோலைகள் மேலோடும்
வெங்கதிர் தங்க விளங்கிய மேன் மழ நன்னாடாம்
அங்கது மண்ணின் அருங்கலமாக அதற் கேயோர்
மங்கலமானது மங்கலமாகிய வாழ் மூதூர் (30-7)
என இவ்வூர் மழநாட்டுள் மிக்க சிறந்திருந்த நிலையைக் காட்டுகின்றார். இங்குள்ள கோயில் பற்றிய வரலாறு எதுவும் தெரியவில்லையாயினும், இன்று திருமங்கலம் எனச் சுட்டப்படும் தன்மையில் கோயில் இருந்திருக்கலாம் என்ற எண்ணம் எழுகிறது. சிறப்பான செல்வமிக்க ஊர் என்ற அடிப்படையில் இப்பெயரை இவ்வூருக்குச் சூட்டியிருக்கலாம்.

மங்கலம்

“மங்கலம்” என்பது தூய்மை, நிறைவு போன்ற பொருள்களில் வழங்கி, மக்களின் குடியிருப்பினையும் குறிக்கத் தொடங்கியது. “மங்கலம் என்ப மனைமாட்சி” என்பது குறள். இச்சொல் சங்க காலத்திலேயே ஊர்ப்பெயர்களுடன் இணைந்து வந்துள்ளது. கிள்ளிமங்கலம், கொடிமங்கலம் என்னும் ஊர்கள் சங்ககாலத்தில் இருந்திருக்கின்றன.
மக்கள் குடியிருப்பினைக் குறித்தாலும், இடைக்காலத்தில் சிறப்பாகப் பார்ப்பனர்களின் குடியிருப்புக்களே “மங்கலம்” என்று குறிக்கப்பட்டன. அக்கால அரசர்கள் பார்ப்பனர்களுக்கு நிலங்களைக் கொடையாகத் தரும்பொழுது தம் பெயர் விளங்கத் தம் பெயருடன் “சதுர்வேதி மங்கலம்” என்பதனை இணைத்துப் பெயர் சூட்டி ஊரமைத்துத் தந்திருக்கின்றனர்.[28] இவ்வடிவத்தின் முற்பகுதியாகிய சதுர்வேதி காலப்போக்கில் மறைந்தது. இருக்கு முதலான நான்கு வேதங்களைக் கற்ற பார்ப்பனர் சதுர்வேதி எனப்பட்டார்.

மணஞ்சேரி

மணஞ்சேரி என்று இன்று வழங்கப்படுகின்ற இத்தலம், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. மணஞ்சேரி என்ற ஒரே ஊர் இன்று கீழைத் திருமணஞ்சேரி, மேலைத் திருமணஞ்சேரி என்ற இரண்டு பெயரில் அமைந்திருக்கின்றன. இவற்றின் அருகாமை, இவ்வுண்மையை உணர்த்தும். இரண்டு பகுதியிலும் சிவன் கோயில் இருந்தமையினை, இரண்டு தலங்களும் பாடல் பெற்ற நிலை காட்டுகிறது. எனவே ஒரே ஊராக இருந்த மணஞ்சேரி, பின்னர் சிவன் கோயில் சிறப்பு காரணமாக மேலை, கீழை எனக் குறிக்கப்பட்டு இருக்கலாம். இன்று மேலை மணஞ்சேரி எதிர் கொள்பாடியென அழைக்கப்படுகிறது
மயிலாரு மல்கிய சோலை மணஞ்சேரி, (152-1)
வண்பொழில் சூழ்ந்த மணஞ்சேரி (152-2)
வைப்பான மாடங்கள் சூழ்ந்த மணஞ் சேரி (152-3)
மாவயல் சூழ்ந்த மணஞ்சேரி (182-7)
என சம்பந்தரும்,
அள்ளலார் வயல் சூழ் மணஞ்சேரி (201-5)
சீர் பரந்த திரு மணஞ்சேரி (201-6)
என அப்பரும் இத்தலம் பற்றி இயம்புகின்றனர். இவற்றை நோக்க, இப்பெயர் ஊர்ச்செழிப்பு காரண மாக, ஏற்பட்ட மணம் காரணமாக மணமுடைய சேரி என்ற பொருளில் முதலில் பெயர் பெற்று, கோயில் சிறப்பு காரணமாக திரு அடை இணைந்து, பின்னர் கீழை, மேலை எனத் தனித்துச் சுட்டப்படத் தொடங்கிற்று எனக் கருதலாம். காவிரியின் வட கரைத்தலம் இது என்பதும், இவ்விடத்தின் செழிப்பினைச் சுட்டத் தக்கதாக அமைகிறது.

மணஞ்சேரி

தேவாரத் திருத்தலங்கள்

மணமேற்குடி

சேக்கிழார் குலச் சிறையாரின் ஊர் பற்றிப் பேசும் போது,
பன்னு தொல் புகழ்ப்பாண்டி நன்னாட்டிடைச்
செந்நெலார் வயல் தீங்கரும்பின் னயல்
துன்னு பூகப் புறம்பணை சூழ்ந்தது
மன்னு வண்மையினார் மணமேற்குடி (1)
என இவ்வூரினைச் சுட்டுகின்றார். எனவே மணமேற்குடி என்பது அன்று பாண்டி நாட்டில் இருந்ததொரு ஊர் என்பது தெளிவு. மேலும், சம்பந்தர் இங்குச் சென்ற தன்மையையும் நாம் சேக்கிழார் வாயிலாகத் தெரிய வருகிறோம்.
திருத்தொண்டர் பலரும் சூழ
மதிநிலவு குலவேந்தன் போற்றிச் செல்வ மந்திரியார்
பதி மணமேற் குடியில் வந்தார் (892)
இவரது பாதையை எண்ணுமபோது. பாண்டிய நாட்டில் தலங்கள் சிலவற்றைத் தரிசித்து விட்டு, பின்னர் சோழ நாட்டுக்குச் செல்லும் வழியில் இங்குச் செல்கின்றமையைச் காண்கின்றோம். எனவே பாண்டிய நாட்டுக்கும், சோழ நாட்டிற்கும் இடைப் பகுதியில் பாண்டிய நாட்டுப் பகுதியில் அமைந்தது இத்தலம் என்பது புரிகிறது. சிறந்த வளமுடையது என்பது சேக்கிழாரின் பாடல் (குலச் -1) வழி புலனாகும் போது மணமே இதற்கும் காரணமோ என்ற எண்ணம் எழுகின்றது. ஆயின் மணல் மேடு அமைந்த பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதி யென்ற நிலை யிலும் பெயர் பெற்றிருக்கலாம் எனத் தோன்றுகிறது. இக் கருத்திற்கு, குருந்தவிழ் சாரல் மணமேற்குடி மன் சிறையே என்ற நம்பியாண்டார் கருத்து (திருத்தொண்டர் -26) அரணாகிறது. சாரல் மலைப் பகுதியைக் குறிக்கும் நிலையில் நில மேட்டு நிலையே பெரும்பான்மை ஆதரவு பெறுகிறது. குலச்

மணலி

சேக்கிழார் நமி நந்தியடிகள் புராணத்தில் சுட்டும் ஊர் இது. இன்று திருவொற்றியூரின் அருகே மணலி என்றொரு ஊர் காணப்படுகிறது. ஆயின், இங்குச் சுட்டப்பட்ட மணலி, திருவாரூருக்குத் தென் மேற்குப் பகுதியில் உள்ளது என அறிகின்றோம். எனவே இந்த மணலி திருவாரூர்க்குப் பக்கத்தில் உள்ளதால், தஞ்சாவூர் மாவட்டத்தில் இவ்வூர் இன்று இருக்கலாம் எனத் தோன்றுகிறது. சென்னையைச் சார்ந்த மணலி, கடற்கரைப் பகுதியாக இருக்கும் நிலையில், மணலே திருவாரூர் அருகே உள்ள மணலிக்கும் அடிப்படையாக அமைந்திருக்குமோ எனத் தோன்றுகிறது.

மணலூர்

கிடைக்கப் பொருது மணலூரில்
கீழ்நாள் சுட்ட பரணிக் கூழ்
படைத்துப் பயின்ற மடைப்பேய்கள்
பந்தி தோறும் வாரீரே
என கலிங்கத்துப் பரணி மணலூர் பற்றுய எண்ணம் தருகிறது. போர் நடைபெற்ற இடம் என்பது மட்டும் தெரிகிறது.

மணிபல்லவம்‌

மணிகள்‌ கிடைத்த தீவையே மணிமேகலை மணிபல்லவம்‌ என்று அழைத்துள்ளது. ஈழநாட்டில்‌ தான்‌ சிறந்த மணிகள்‌ நிறையக்‌ கிடைத்தன. ஈழநாடு அல்லது ஈழநாட்டின்‌ பகுதியே மணிபல்லவம்‌ எனக்கருத இடமளிக்கிறது. மணிபல்லவம்‌ என்பது ஒரு சிறு தீவு. சோழநாட்டின்‌ தலை நகராக முன்னரிருந்த காவிரிம்பூம்பட்டினத்திற்குத்‌ தெற்கே முப்பது யோசனை தொலைவில்‌ உள்ளது. தன்னை வணங்கிய வர்கட்குப்‌ பழம்‌ பிறப்பின்‌, செய்தியைத்‌ தெரிவிக்கும்‌ புத்த பீடிகை யொன்றும்‌, கோமுகி என்னும்‌ பொய்கையும்‌ இத்தீவி விருந்தன.
“அந்தரமாறா ஆறைந்தி யோசனைத்‌
தென்றிசை மருங்கிற்‌ சென்று திரையுடுத்த
மணிபல்லவத்திடை மணிமேகலா தெய்வம்‌
அணியிழைதன்னன வைத்தகன்றது” (மணிமே. 6;211 214)
“மணிமேகலை தனை மணிபல்லவத்திடை
மணிமேகலா தெய்வம்‌ வைத்து நீங்கி” (௸. 7:1 2)

மதுரை

பார்க்க கூடல்‌

மதுரை

மதுரை மாவட்டத்தின் தலை நகரம் மதுரை. நான்மாடக் கூடல் சிவராஜதானி, பூலோக கயிலாயம், துவாத சாந்தபுரம், சீவன் முத்திபுரம் ஆலவாய், கடம்பவனம் போன்ற பல பெயர்கள் இதற்கு உண்டு. பாண்டிய மன்னர்களின் தலைநகரமாகப் பண்டு தொட்டு இருந்துவரும் மதுரைச்சிறப்பு இலக்கியங்களில் மிக்க மணம் கமழ்கின்றது. பல கதைகள் மதுரை நகர்க்குரிய பெயர்கள் தொடர்பாக அமைகின்றன. அப்பர் சம்பந்தர் பாடல்கள் பல அமையினும், இதன் சிறப்பைச் சங்க காலத்திலிருந்தே அறிய இயலுகிறது. இதன் நகரமைப்புச் சிறப்பு, கோயில் சிறப்பு முதலியன, அங்குத் தெளிவாக இயம்பப்படுகின்றன. மதுரைக்குரிய பெயர்கள் ஒவ்வொன்றும் காரணப் பெயராக அமைந்திருக்கக் காண்கின்றோம். இவற்றுள் பல பெயர்கள் புராணக் கதைகளை அடிப்படையாகக் கொண்டவை. மதுரை நான்மாடக்கூடல், கடம்பவனம், ஆலவாய் போன்ற பிற காரணங்களைக் கொண்டு திகழ்வன போல தோன்றுகின்றன. சங்க இலக்கியத்தில் கூடல் என்ற பெயரே பல இடங்களில் குறிப்பிடப்படுவதாகவும். மதுரை சில இடங்களில் அமைந்தாகவும் தமிழ் இலக்கியத்தில் ஊர்ப்பெயர்கள் (முதல் தொகுதி) ஆசிரியர் இயம்புகின்றார். 1. சிவபெருமான் தன் சடையில் சூடிய பிறையில் உள்ள அமுதத்தைத் தெளித்து இந்நகரை நிர்மாணித்தால் இந்நகரமானது மதுரமாக இருந்திருக்கிறது. கன்னி கரியமால் காளி ஆலவாய் என்னும் நால்வரும் பிரபலமாக இருக்கும் இடம் ஆனதால் நான் மாடக்கூடல் என்றும் பெயர் பெற்றிருக்கிறது. கன்னியான மீனாக்ஷி இருந்து அரசு புரிந்ததால் கன்னிபுரீசம் என்றும், சிவ பெருமான் சுந்தர பாண்டியனாக இருந்து அரசாண்ட காரணத்தால் சிவராஜதானி என்றும் பெயர் பெற்றிருக்கிறது. என சங்க காலத்தில் கூடி இருந்து தமிழாய்ந்தமை காரணம் இதற்குக் கூறுவர் (பக் -118), இது ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்தே. அக்காலத்தில் இத்தகைய நிலை அதிகமிருந்தமை காரணமாக, கூடல் என்ற வழக்கு மிகுதியாக இருந்தது எனலாம். எனினும் கூடலை ஒத்த பழமையுடையது மதுரை என்பது இப்பெயர் காட்டும் உண்மை. ஒரு ஊருக்குப் பல பெயர் அமைவது அதன் பல சிறப்புகளையும் காட்டும் தன்மையாக உள்ளது. மதுரை இவ்வாறே தம் பல சிறப்பு காரணமாகப் பல பெயரைப் பெறுகிறது. கடம்பமரங்கள் மிகுதியாக இருந்தமையால் கடம்பவனம் என்ற பெயரையும், கோயில் செல்வாக்கு காரணமாக ஆலவாய் என்ற பெயரையும் அளித்தது போன்று மருத மரம் காரணமாகப் பெயர் பெற்றது மதுரை எனத்துபணியலாம். க.ப. அறவாணன் இந்தியாவில் இருந்து வந்தோரால், சூட்டப்பட்ட பெயர் என்பது பொருத்தமாகத் தெரியவில்லை. நம் தமிழகத்தின் பழம் ஊர்ப் பெயரில் தாவரப் பெயர்களால், தனித்த ஒரே சொல்லாக அமைவனவற்றை நோக்கவும் இது உறுதிப்படுகிறது. மேலும் தமிழ் இலக்கியத்தில் இடப்பெயர்கள் என்ற கட்டுரையில் ச.வே.சும்பிரமணியம் அவர்கள் மருதமரமே மதுரைக்கு அடிப்படை என்பதைச் சிறப்பாக விளக்குகின்றார்.

மதுரை

சங்க கால ஊர்கள்

மத்திமநாடு

மத்‌திமநாட்டில்‌ வாரணம்‌ (ஸ்ரீ வாரணாசி) என்னும்‌ ஊர் இருப்பதாக இளங்கோ கூறுகிறார்‌. மிக்கோனால்‌ கொடுக்கப்பட்ட குரங்கு இறந்து, பின்‌ மத்திமதேசத்து வாரணவாசி என்னும்‌ நகரில்‌ உத்தர கெளத்தன்‌ என்‌னும்‌ அரசனுக்கு மகனாய்ப்‌ பிறந்தது.
“காதற்‌ குரங்கு கடை நாளெய்தவும்‌
தானஞ்‌ செய்வுழி யதற்கொரு கூறு
தீதறு கென்றே செய்தன ளாதலின்‌
மத்திமநன்னாட்டு வாரணந்தன்னுள்‌
உத்தர கெளத்தற்‌ கொருமகனாகி” (சிலப்‌, 15:175 178)

மன்னார்குடி (பாமனி நாகநாதர் சுவாமி திருக்கோயில்

தேவாரத் திருத்தலங்கள்

மயிலாடுதுறை

மாயூரம் என்றும் மாயவரம் என்றும் பிற்காலத்தில் வழங்கப்பட்டு வந்த மயிலாடுதுறை இன்று திரும்பவும் தன் பழம் பெயரைப் பெற்று இலங்குகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. இவ்வூர் காவிரிக் கரைத்தலம். துறை என்ற இவ்வூர்ப் பெயரின் பொதுக்கூறு. காவிரிக் கரையில் இதன் இருப்பிடத்திற்குப் பொருத்தமாக அமைகிறது. மயில்கள் மிகுதியாக இருந்தமையே இப்பெயருக்குரிய காரணமாகலாம். எனினும் பக்தியுணர்வு, இறையோடு இப்பெயரை இணைக்கச் செய்து, கதைகளையும் இவ்வூருக்கு என்று உருவாக்கி விட்டிருக்கக் காண்கின்றோம். அவற்றுள் அம்மை மயிலாய் ஆடிய துறை தான் மயிலாடுதுறை என்ற எண்ணமும் ஒன்று.
குரவஞ் சுரபுன்னையும் வன்னி
மருவும் மயிலாடுதுறை (38-2)
எனவும்,
கந்தமலி சந்தினொடு காரகிலும், வாரிவரு காவிரியுளால்
வந்ததிரை யுந்தியெதிர் மந்திமலர் சிந்து மயிலாடுதுறை (328-2)
எனவும் சம்பந்தர் இதனைப் பாடுகின்றார். இப்பெயரின் பொருளைத் திருநாவுக்கரசரின்
கோலும் புல்லும் ஒரு கையிற் கூர்ச்சமும்
தோலும் பூண்டு துயர முற்றென் பயன்
நீல மாமயிலாடு துறையனே
நூலும் வேண்டுமோ நுண்ணுணர்ந்தோர்கட்கே (153-8) என
நீலமா மயில் ஆடுதுறை’ எனச் சுட்டும் தன்மையில் காண்கின்றோம். பெரிய புராணமும் இவ்வூரினை,
வாவி சூழ் திருமயிலாடு துறை (34-437)
மல்கு தண்டலை மயிலாடு துறை -438)
எனக் காட்டுகிறது.

மயிலாடுதுறை

தேவாரத் திருத்தலங்கள்

மயிலாப்பூர்

தேவாரத் திருத்தலங்கள்

மயிலை

சென்னையின் ஒரு பகுதியாக உள்ளது. மயிலாப்பூர் என்ற பெயரிலும், மயிலை என்றும் வழங்குகிறது. கபாலீச்சுரம் கோயிற் பெயராக அமைகிறது. மயில்கள் மிகுதி காரணமாகப் பெற்ற பெயராகத் தோன்றுகிறது. இப்போதுள்ள கோயில் முன்பு கடற்கரைக்கு அருகில் இருந்த தாகவும். பின்னர் கடல் உட்புக நேர்ந்ததால் தற்போதுள்ள இடத்தில் புதிதாகக் கட்டினர் என்றும் கருதுகின்றனர். இதற் சான்று, கடற்கரைக்கு அருகில் இருந்ததாக அமையும் இலக் கியக் காட்டுகளே ஆம். ஊர் திரை வேலையுலாவும் உயர் மயிலை என்பது சம்பந்தர் தேவாரப் பாடல். இறைவி மயில் வடிவில் இருந்து வழிபட்டமையால் மயிலை, மயிலாப்பூர் என்று பெயர் பெற்றது என்பர். எனினும் மயில் மிகுதியாக ஆர்க்கும் நிலையே இதற்குக் காரணம் என்பது, மயிலாப்பு என்ற இதன் அன்றைய வழக்கும் தெளிவாக்கும்
வடிவுடை மங்கையும் தாமுமெல்லாம்
வருவாரை எய்திக் கண்டோம் மயிலாப்புள்ளே
மங்குல் மதி தவழும் மாடவீதி
மயிலாப்பிலுள்ளார்
போன்ற தேவாரப் பாடல்களிலும் மயிலாப்பு என்ற வழக்கு அமையக் காணலாம்.

மயேந்திரப்பள்ளி

இன்று கோயிலடிப்பாளையம் என்று வழங்கப்பட்டுவரும் இவ்வூர் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. மயேந்திரன் என்ற இந்திரன் வழிபட்டதால் இப்பெயர் பெற்றது என்பர்,
திரை தரு பவளமும் சீர்திகழ் வயிரமும்
கரை தரு அகிலொடு கனவளை புகுதரும்
வரை விலா வெயிலெய்த மயேந்திரப் பள்ளியுள்
அரவரை யழகனை யடியிணை பணிமினே -289.1
கொண்டல் சேர் கோபுரம் கோலமார் மாளிகை
கண்டலும் கைதையும் கமலமார் வாவியும்
வண்டுலாம் பொழிலணி மயேந்திரப் பள்ளியிற்
செண்டு சேர் விடையினான் திருந்தடிபணிமினே-289-2
என இத்தலம் பற்றிப் பாடுகிறார் ஞானசம்பந்தர்.

மயேந்திரப்பள்ளி

தேவாரத் திருத்தலங்கள்

மரந்தை

சங்க கால ஊர்கள்

மராட்டம்

மகாராட்டிரம்‌ என்பதன்‌ மரூஉதான் மராட்டம்‌ என்பதாகும்‌ பொற்கம்மியருக்குச்‌ சிறந்த இடம்‌ அது, இதுவே மராட்டம்‌ என்றும்‌ இலக்கிய ஆட்சி பெற்றுள்ளது.
“மகதவினைஞரும்‌ மராட்டக்‌ கம்மரும்‌” (மணிமே. 19:107)
“தன்மை யடக்கிய நுண்ணிறைத்‌ தெண்ணீர்‌
வரிவளைப்‌ பணைத்தோள்‌ வண்ண மகளிர்‌
சொரிவன ராட்டித்‌ தூசுவிரித்‌ துடீஇக்‌
கோங்கின்‌ றட்டமுங்‌ குரவின்‌ பாவையும்‌
வாங்கிக்‌ கொண்டு வாருபு முடித்து
மணி மராட்டத்‌ தணிபெற வழுத்‌திக்‌
காவலன்‌ மகளைக்‌ கைதொழுதேத்தி” (பெருங்‌ 1:57: 95 101)

மருகல்

திருமருகல் என்று வழங்கப்படும் இவ்வூர் இன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. மருகல் என்பது ஒரு வகை வாழை இது கல்வாழை எனவும் வழங்குகிறது. கோச்செங்கட்சோழள் கட்டிய மாடக் கோயில்களுள் இதுவும் ஒன்று. யானை ஏறாப் பெருங்கோயில் என்ற எண்ணம் இவ்வூர்த் தொடர்பாக அமைகிறது.
நம்பியாண்டார் தம் திருத்தொண்டர் திருவந்தாதியில்,
செழுநீர் மருகல் நன் நாட்டமர் தஞ்சைச் செருத்துணையே (66)
என்று இயம்புகின்றார். பெரிய புராணமும் இக்கருத்தை,
தெள்ளும் திரைகள் மதகு தொறும் சேலும் கயலும் செழு மணியும்
தள்ளும் பொன்னி நீர் நாட்டு மருக நாட்டுத் தஞ்சாவூர் (61-1)
என்றியம்புகிறது. இதனின்றும் மருகல் நாடு சோழநாட்டைச் சார்ந்தது என்பதும், பல ஊர்களைத் தன்னகத்தே கொண்ட மருகல் ஒரு சிறந்த நாடாக விளங்கியது என்பதும், அவற்றுள் ஒன்று தஞ்சை என்ற ஊர் என்பதும் தெளிவுபடுகிறது. ஞானசம்பந்தரும் அப்பரும் மருகல்பற்றிப் பாடி உள்ளனர். எனினும் இவர்கள் பாடல், மருகல்பற்றிய ஊர்ப்பெயர் விளக்கத்திற்குரிய எந்த கருத்தையும் நல்கவில்லை. மாடம்சூழ் மருகல் என்றும் (202-2) மாடநீண் மருகல் (202-8) என்றும் நாவுக்கரசர் சுட்ட,
மைதவழ் மாட மலிந்த வீதி மருகல் (6-1)
மடையார் குவளை மலரும் மருகல் (154-1)
கொந்தார் குவளை மலரும் மருகல் (154-2)
வலங்கொண்ட மதிள் சூழ் மருகல் (154-8)
என்று சம்பந்தர் பாடுகின்றார். தலவிருட்சம் வாழை என்பதும் மருகல் வாழை காரணமாகப் பெயர் பெற்ற ஊர் என்பதும் யரவலான கருத்தாக அமைகிறது. நம்பியாண்டாரும் மருகல் பற்றி பல இடங்களில் குறிப்பிடுகின்றார்.

மருகல்

தேவாரத் திருத்தலங்கள்

மருங்கூர்ப் பட்டினம்

சங்க கால ஊர்கள்

மருங்கை

சங்க கால ஊர்கள்

மருந்தில் கூற்றம்

சங்க கால ஊர்கள்

மருவூர்‌

பட்டினப்பாக்கம்‌ என்ற தலைப்பில்‌ குறிக்கப்‌ பெற்றதற்‌ கேற்ப, பூம்புகார்‌ நகரத்தின்‌ ஒருபகுதியே மருவூர்ப்பாக்கம்‌ ஆகும்‌. “மருவூர்‌ மருங்கின்‌ மறங்கொள்‌ வீரரும்‌” (சிலப்‌. 5:76).

மறைக்காடு

இன்று மொழி பெயர்க்கப்பட்ட காரணத்தால், வேதாரண்யம் என்று பெயர்க்கப்பட்ட இவ்வூரின் பின்னைய பெயரே செல்வாக்குடன் திகழ்கிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது இவ்வூர். மறைக்காடு என்பது நான்கு வேதங்களாலும் பூசித்து பேறு பெற்ற இடம் ஆனதால் வேதாரண்யம் மறைக்காடு என்று பெயர் பெற்றிருக்கிறது என்ற எண்ணம் மறைக்காடு என்பதற்குரிய அடிப்படையை விளக்குகிறது. எனினும் காடு காட்டுப்பகுதியில் உள்ள தலம் என்பதற்கு விளக்கம் தருகிறது. இன்றைய இதன் இருப்பிடமும், கோடிக்கரை போன்ற பிற ஊர்ப்பெயர் எண்ணங்களும், இதன் கடற்கரை அருகாமை யையும் காடு சூழ்ந்த பகுதியாக திகழ்ந்தமையினையும் உணரச் செய்கிறது. மரை என்பதற்கு மான் என்றும் மறை என்பதற்கு சிவப்பு புள்ளிகளையுடைய மாடு முதலியன என்றும் பொருள் தமிழ் லெக்ஸிகன் தரும் நிலையில் முதலில் இயற்கையாக மான் அல்லது மாடுகளின் மிகுதி காரணமாக மரைக்காடு அல்லது மறைக்காடு என்று பெயர் பெற்ற இவ்விடம், பின்னர் கோயில் காரணமாகப் பெயர் பெற்று, புராணத்துடன் வேதத்துடன் இணைக்கப்பட்டு இருக்கக் கூடுமோ எனத் தோன்றுகிறது. இதற்கு வேதவனம், சத்தியகிரி, ஆதிசேது என்ற பெயர்களும் உண்டு. மறைவனம் என்னும் இத்தலத்தின் பெயரை மறைசை என்றும் இலக்கிய வழக்கு கொள்கின்றனர். சம்பந்தர், அப்பா, சுந்தரர் மூவராலும் பாடல் பெற்ற தல மாக மட்டும் அன்றி, பொதுவாகச் சைவர் அனைவரும் வழிபடும் இடமாக இது திகழ்ந்திருக்க வேண்டும் என்பதை நாம் இலக்கியச் சான்றுகள் மூலமாகத் தெரியவருகிறோம்..
இறையாய் மறைக் காட்டாய் மாதவனே-சிவபெரு – திருவந்-40
மாதெய்வம் ஏத்தும் மறைக்காடா -46
மயரும் மறைக்காட்டிறையினுக்கு ஆட்பட்ட வாணுதலே பொன்வண் -37
சீருலாம், மாந்துறைவாய் ஈசன் மணிநீர் மறைக்காட்டுப் – திருமும் – கோ -26
இசையா அணிமறைக் காட்டுக் குரைசேர் குடுமிக்
கொழுமணிக்கதவே – நம்பி – திருமும்-4
முத்தம் கொழிக்கும் மறைக்காடு – பெரிய – திருநா-264
மருத்திகழ் பொழில்கள் சூழ்ந்த மாமறைக்காடு – திருஞான – 385-5
மதுரம் பொழில் சூழ் மறைக்காடு -173-1
வங்கக் கடல் சூழ் மறைக்காடு -2
பூக்கும் தாழை புறணி பருகெலாம்
ஆககும் தண்பொழில் சூழ் மறைக்காடரோ – திரு.நா – 124-6
பாரூர் மலிசூழ் மறைக்காடதன் தென் பால் -சுந் – 32-10
அங்கக் கடல் அருமாமணியுந்திக் கரைக்கேற்ற
வங்கத்தொடு சுறவம் கொணர்ந்து எற்றும் மறைக்காடே -71-5.

மறைக்காடு

தேவாரத் திருத்தலங்கள்

மல்லி

மல்லி கிழான்‌ காரியாதியை ஆவூர்‌ மூலங்கிழார்‌ படியது” என்ற தொடரால்‌ நமக்குக்‌ கிடைக்கும்‌ ஊர்ப்பெயர்‌ மல்லி என்பது. காரியாதி குடநாட்டுத்‌ தலைவன்‌ என்பதை பெரும்‌ பெயர்‌ ஆதி, பிணங்கு அரில்‌ குடநாட்டு என்ற சங்க இலக்கியத்‌ தொடர்‌ நமக்கு அறிவிக்கின்றது. காரியாதி மல்லிகிழான்‌ என்று கூறப்பெற்றிருப்பதால்‌ மல்லி என்ற ஊர்‌ குடநாட்டைச்‌ சார்ந்த ஊராக இருக்கலாம்‌ என்று எண்ணத்‌ தோன்றுகிறது. மல்லி என்ற சொல்‌ மல்லிகை எனவும்‌ பொருள்‌ படும்‌ சொல்‌லாகையால்‌ மல்லிகை மலர்ச்‌ செடிகள்‌ நிறைந்த பகுதியாய்‌ மல்லி என்ற ஊர்‌ அமைந்து, அம்‌ மலர்ச்‌ செடியால்‌ ஊர்ப்பெயர்‌ பெற்றதாக இருக்கலாம்‌.

மல்லி

சங்க கால ஊர்கள்

மல்லி கிழான்

சங்க கால ஊர்கள்

மல்லை

மகாபலிபுரம் என்று இன்று சுட்டப்படும் ஊர். மாமல்லன் விருது பெற்ற நரசிம்ம பல்லவன், செய்த கலைப்பணிகளின் சிறப்பே. இக்கடற்கரைத் தலத்துக்குப் புகழ் அளிக்க, இவன் பெயராலேயே மாமல்லபுரம் என்று சுட்டப்பட்டது என்பது பொருத்தமாக அமைய, மகாபலியோடு தொடர்பு படுத்திப் புராண கதையை அடிப்படையாக்கல் பொருந்தாத ஒன்றாகும். திருமங்கையாழ்வார் இதனைக் கடல் மல்லை என்கின்றார். மரூஉப் பெயராக வழங்குதல் ஊர்ப்பெயர்களின் ஒரு தன்மை என்பதை இப்பெயரும் நிலைநாட்டுகிறது. தலத்தில் சயனித்திருப்பதால் இங்குள்ள இறைவன் தலசயனன் என்றும் இடம் தலசயனம் என்றும் வழங்கி வருகிறது. திருமங்கையாழ்வார். பூதத்தாழ்வார் பாடல்கள் இத்தலத்துக்கு அமைகின்றன.

மழபாடி

திருமழபாடி எனச் சுட்டப்படும் ஊர், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. சேரரில் ஒரு கிளையினரான மழவரின்பாடி மழ பாடி ஆயிற்று என்பர். இறைவன் மழுஏந்தி நர்த்தனம் செய் திருக்கிறார். அதனால் மழுஆடி என்று பெயர் பெற்று மழபாடி ஆயிற்றென்பது புராண எண்ணம்.
மழபாடி ஆண்டானை ஆரமுதை
அன்றயன் மால் காணாமை
நீண்டானை நெஞ்சே நினை (18)
என்பது க்ஷேத்திரக் கோவை வெண்பா.
பாடெலாம் பெண்ணையின் பழம் விழப்பைம் பொழில்
மாடெலா மல் குசீர் மழபாடியே’
என்று ஞானசம்பந்தர் சுட்டும் தன்மை, பனைகளின் மிகுதியைத் தருகின்றது. இந்நிலையில் இன்று தலவிருட்சமாகப் பனை அமைவது பொருத்தமாக அமைகிறது. இதன் தாலவனம் என்ற பெயரும் பனைகளின் அடிப்படையில் எழுந்ததே. கொள்ளிடத்தின் கரையில் அமைந்துள்ள கோயிலை உடையது இவ்வூர். இவ்வூர் பற்றி ஆராயும் போது, மழவர் வசித்த அல்லது ஆண்ட பகுதி என்ற நிலையில் பெயர் பெற்ற ஊர் இது என்பது தெரிகிறது. மேலும், இன்று இது இரு பிரிவாகக் காணப்படுகிறது. ஒன்று மேன்மழபாடி இன்னொன்று கீழ்மழபாடி. கீழ்மழபாடி பகுதியில் கோயில் இருந்தமை காரணமாக இது திருமழபாடி என இன்று வழங்கப்பட்டு வர, மேன் மழபாடி லால்குடி என்ற பெயரால் சுட்டப்படுகிறது. மழபாடி யினை மழநாடு என்றும் சுட்டினார் என்பதை. சேக்கிழார் வாயிலாக அறிகின்றோம். (பெரிய – 20-1. 7) மேலும் புடைவளர் மென் கரும்பினொடு, பூகமிடை மழபாடி எனவும் இவர் இயம்பு கின்றமை, மழபாடியின் செழிப்பினைக் காட்ட வல்லது.

மழபாடி

தேவாரத் திருத்தலங்கள்

மழபுலம்

சங்க கால ஊர்கள்

மழவர்

சங்க கால ஊர்கள்

மாகறல்

செங்கற்பட்டு மாவட்டத்தில் உள்ளது இவ்வூர். சேயாற்றின் கரையில் உள்ள ஊர். சம்பந்தர் இவ்வூரினைப் பாடியுள் ளார்.
இங்கு கதிர் முத்தினொடு பொன் மணிகள் உந்தி யெழில் மெய்யுளுடனே
மங்கையரு மைந்தர்களு மன்னு புன லாடி மகிழ் மாகறல் உள்ளான் (330-4)
துஞ்சு நறுநீல மிருணீங்கவொளி தோன்று மதுவார் கழனி வாய்
மஞ்சுமலி பூம் பொழிலின் மயில் கண்ட மாடமலிமா கறலுளான் (330-5)
என திருஞானசம்பந்தர் இவ்வூரின் சிறப்பு பற்றிக் குறிப்பிடுகிறார். இப்பாடல்களை நோக்க, செழிப்பான ஊர் என்பது தெரிகிறது. இன்று சேயாற்றின் கரையில் உள்ளது எனக் காண, அறல் இருந்திருக்க வேண்டும் என்பதை யுணரவியலுகிறது. எனவே சிறந்த மணற் பகுதியையுடையது என்ற பொருளில் மா அறல் என்ற பெயர் மாகறல் ஆகியிருக்குமோ எனத் தோன்றுகிறது.

மாகறல்

தேவாரத் திருத்தலங்கள்

மாகுடி

திருநாவுக்கரசர் தம் திருத்தாண்டகப் சுட்டும் சிவன் கோயில் ஊர் பதிகத்தில் (285) புற்குடி மாகுடி தேவன்குடி நீலக்குடி’ (3). நெருங்கிய குடியிருப்புப் பகுதியாக அல்லது பெரிய குடியிருப்புப் பகுதியாக இருந்ததால் இப்பெயர் தோற்றம் பெற்றிருக்கக் கூடும்.

மாங்காடு

சங்க கால ஊர்கள்

மாங்காடு

மாங்காடு என்பது குடகுமலைப்‌ பக்கத்து ஓர்‌ ஊர்‌, சூரர மகளிர்‌ உறைகின்ற ஒரு காடு மாங்காடு என்னும்‌ பெயருடன்‌ இருந்ததாகவும்‌ தெரிகிறது. மாங்காடு என்னும்‌ பெயருடன்‌ சென்னைக்‌ கருகில்‌ ஓர்‌ அம்மன்‌ தலம்‌ உள்ளது.
“நனி நோய்‌ எய்க்கும்‌ பனிகூ ரடுக்கத்து
மகளிர்‌ மாங்காட்‌ டற்றே” (அகம்‌. 288:14 15)
“வந்தேன்‌ குடமலை மாங்காட்‌ டுள்ளேன்”‌ (சிலப்‌. 11:53)

மாங்குடி

மாங்குடி கிழார்‌, மாங்குடி மருதனார்‌ என்‌ இரண்டு சங்க காலப்‌ புலவர்கள்‌ இவ்வூரினர்‌. மாங்குடி என்னும்‌ பெயருடன்‌ ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அருகில்‌ ஓர்‌ ஊர்‌ உள்ளது.

மாங்குடி

சங்க கால ஊர்கள்

மாடலூர்‌

குறுந்தொகையில்‌ 150 ஆம்‌ பாடலைப்‌ பாடிய கிழார்‌ என்னும்‌ புலவர்‌ இவ்வூரினராதலின்‌ மாடலூர்‌ கிழார்‌ எனப்‌ பெயர்‌ பெற்றார்‌.

மாட்டூர்

திருஞானசம்பந்தர் தம் திருவூர்க் கோவையுள் குறிப்பிடும் ஊர் இது.
மாட்டூர் மடப்பாச்சிலாச்சிராம் மயிண்டீச்சரம் வாதவூர் வாரணாசி (175-7)
தேனூர் எனச் சங்க இலக்கியம் சுட்டும் ஊர் போன்று மட்டூர் மாட்டூராகி வழங்கிற்றா என்ற எண்ணங்கள் எழினும் தெளிவில்லை.

மாணிகுடி

நாவுக்கரசர் தம் திருத்தாண்டகப் பதிகத்தில் சுட்டிய ஊர் இது (285). வேதிகுடி மாணிகுடி விடைவாய்க்குடி’. குடியிருப்பினைக் குறிக்க, மாணி என்பது என்ன பொருளில் அமைந்தது என்பது தெரியவில்லை. மாண். மாட்சிமை, அழகு, பெருமை குறிக்க, மாணி பிரம்மசாரி. குறள் வடிவம் ஆகியவற் றைக் குறிக்க, சிறந்த குடியிருப்பு என்ற நிலையில் அல்லது சிறிய குடியிருப்பு என்ற நிலையில் இப்பெயர் அமைந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. மாணிகுழி என்பதும் இதுதானோ என்பதும் தெளிவில்லை.

மாணிகுழி

திருமாணிகுழி எனச் சுட்டப்படுகிற இவ்வூர் தென் ஆர்க்காடு மாவட்டத்தில் இன்று உள்ளது. கெடில நதியின் கரையில் உள்ள இவ்வூர், சம்பந்தர் பாடல் பெற்ற சிறப்புடையது. திருமா லோடு தொடர்புகாட்டி. அமையும் சம்பந்தர். சேக்கிழார் கூற்றுகள் முதலில் திருமால் கோயில் இங்கு இருந்து பின்னர். இவ்வாறு புராணக் கதையாகத் திரிந்ததோ என்ற எண்ணத் திற்கு இடமளிக்கிறது.
நித்த நியமத் தொழிலனாகி நெடுமால் குறளனாகி மிகவும்
சித்த மதொருக்கி வழிபாடு செய நின்ற சிவலோகனிடமாம்
கொத்தலர் மலர்ப்பொழில் நீடு குல மஞ்ஞை நடமாடுவது கண்
டொத்த வரி வண்டுகளுலாவியிசை பாடுதவி மாணி குழியே
என்பது சம்பந்தர் கூற்று (335-4).
போர் வலித்தோள் மாவலி தன்
மங்கல வேள்வியில் பண்டு வாமனனாய் மண் இரந்த
செங்கணவன் வழிபட்ட திருமாணிக் குழியணைந்தார் (6-90-2-4)
எனச் சேக்கிழார் சுட்டுகின்றார். கெடில நதிக்கரையில் உள்ளது என்பது சேக்கிழார் பாடலில் புலனாகிறது.

மாணிகுழிநடுநாடு

தேவாரத் திருத்தலங்கள்

மாத்தூர்

வைத்தேன் எந்தன் மனத்துள்ளே
மாத்தூர் மேய மருந்தையே’, எனப் பாடும் அப்பர் (15-20) பாடல் மாத்தூரில் சிவன் கோயில் சிறப்பு என்பதைச் சுட்டிவிடக் காண்கின்றோம்.

மாந்தரன்

சங்க கால ஊர்கள்

மாந்துறை

திருமாந்துறை என்று சுட்டப்படும் ஊர், இன்று திருச்சி மாவட்டத்தில் அமைகிறது. இது காவிரியின் வடகரையில் உள்ளது என்பது ஞானசம்பந்தர் பாடலாலேயே தெளிவாகத் தெரிகிறது. தலமரம் மாமரம் எனத் தெரிகிறது. மாமரங்கள் நிறைந்த பகுதியாக, காவிரியின் துறையாக அமைந்தமை இப் பெயர்க்குரிய காரணம் ஆகும். வடகரை மாந்துறையைச் சம்பந்தர் பாட அறிகின்ற நிலையில், தென்கரையும் மாந்துறை என்றே அழைக்கப்பட்டதைக் கேள்விப்படுகிறோம். எனவே ஆற்றுக்கு வருகரைகளிலும் மாந்தோப்பு காணப்பட்டது என்பதும், எனவே இரண்டும் தனித்தனியாகக் குறிக்கப் பெறவேண்டிய நிலையில் வடகரை. தென்கரை எனக் குறிக்கப்பட்டிருக்கிறது என்பதையும் உணர இயலுகின்றது. வடமொழியில் ஆம்ர வனம் என்று மொழி பெயர்க்கப்பட்டு, இவ்வூர் அழைக்கப் பெறுகிறது.
இலவஞாழலும் ஈஞ்சொடு சுரபுன்னையிள மருதிலவங்கம்
கலவி நீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறைகண்டன் (246-4)
இதனைப் போன்று பலவாறு ஞானசம்பந்தர். இத்துறையின் வளம் பற்றி உரைக்கின்றார். முத்தொள்ளாயிரம் மாந்தை’ எனச் சுட்டும் ஊர் இதுவாக இருக்கலாம் (118, 122, 128). மரூஉப்பெயர் நிலையில் இதனைக் கொள்ளலாம்.

மாந்துறை

தேவாரத் திருத்தலங்கள்

மாந்தை

சங்க கால ஊர்கள்

மாந்தை

மாந்தை என்னும்‌ ஊர்ப்பெயர்‌ மரந்தை யெனவும்‌ வழங்கப்‌ பெற்றுள்ளது. இரண்டும்‌ ஒரே ஊரின்‌ பெயரே. இலக்கியங்‌களில்‌ பாட வேறுபாடாக இடம்‌ பெற்றிருப்பதாகவும்‌ தெரிகிறது. இது கடற்கரை நகரம்‌, மேலைக்கடற்கரையில்‌ சேர மன்னார்‌களுக்கு உரியதாய்‌ இருந்திருக்கிறது. சேரன்‌ செங்குட்டுவனின்‌ தாயத்தாரான சேரமன்னர்‌ கூட்டுத்‌ தலைநகராக இருந்திருக்‌கலாம்‌.
“இரைதேர்‌ நாரையெய்திய விடுக்குந்‌,
துறைகெழு மாந்தையன்ன இவணலம்‌” (நற்‌. 35:6 7)
“கடல்‌ கெழு மாந்தையன்ன வெம்‌
பூவேட்டனை யல்லையானலந்தந்து சென்மே”, (ஷே.395:9 10)
“குட்டுவன்‌ மாந்தை அன்ன எம்‌
குழை விளங்கு ஆய்நுதற்‌ கிழவனும்‌ அவனே”. (குறுந்‌. 3476 7)
“நாரை நிரை பெயர்ந்து அயிரை ஆரும்‌,
ஊரோ நன்று மன்‌, மரந்தை”. (௸. 166:2 3)
“இரங்கு நீர்ப்பரப்பின்‌ மரந்தையோர்‌ பொருந!” (பதிற்‌. 90 28)
“வலம்படு முரசிற்‌ சேரலாதன்‌
முள்நீர்‌ ஒட்டிக்‌ கடம்பு அறுத்து, இமயத்து
முன்னோர்‌ மருள வணங்குவில்‌ பொறித்து,
நல்நகர்‌ மாந்தை முற்றத்து ஒன்னார்‌
பணிதிறை தந்த பாகுசால்‌ நன்கலம்‌
பொன்‌ செய்பாவை வயிரமொடு ஆம்பல்‌
ஒன்று வாய்‌ நிறையக்குவைஇ, அன்று அவண்‌
நிலம்தினத்துறந்த நிதியத்து அன்ன” (அகம்‌, 127;3 10)
“குரங்கு உளைப்‌ புரவிக்‌ குட்டுவன்‌
மாந்தை அன்ன, என்‌ புலம்தந்து சென்மே”. (௸. 376;17 18).

மாறன்பாடி

சேக்கிழார் திருஞானசம்பந்தர் வரலாற்றில் இவ்வூர்ப் பெயரினைக் குறிப்பிடுகின்றார். பெண்ணாகடத்திலிருந்து அரத்துறைக்குச் செல்லும் போது இடையில் தங்கியத் தலமாக மாறன்பாடிச் சுட்டப்படுகிறது. இன்று பெண்ணாகடம், நெல்வாயில் என்பன தென் ஆர்க்காடு மாவட்டம் சார்ந்து அமைகின்றன என்பதைக் காணும்போது இவற்றிற்கிடையே அமைந்த மாறன் பாடியும் இன்று தென்ஆர்க்காடு மாவட்டத்தில் தான் இருக்க வேண்டும் என் பதில் ஐயமில்லை. மாறன்பாடி என்ற பெயரில் மாறன் – பாண்டியன் என்ற பொருளில் அல்லது சடசோபன் என்ற பொருளில் அமைந்திருக்கலாம். இதனைப் பற்றி பிற விளக்கம் பெரிய புராணத்தில் இன்மையால், இது சிவன் கோயில் இல்லாத ஊராகவோ அல்லது, திருமால் கோயில் தலமாகவோ இருக்க வாய்ப்பு அமைகிறது. மா நன் என்று சுட்டும் தன்மையும், இதன் இருப்பிடமும் திருமாலுக்கே முதலிடம் கொடுக்கலாம் என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கிறது.

மாறோக்கம்

மாறோகம்‌ என்பது ஒரு சிறு நாடு. இது மாறோக்கம்‌ என வழங்கும்‌ திருநெல்வேலி மாவட்டத்தில்‌ கொற்கையைச்‌ சூழ்ந்த நாடு. அகநானூற்றில்‌ 377 ஆம்‌ பாடலை இயற்றிய காமக்கணி நப்பாலத்தனாரும்‌, புறநானூற்றில்‌ 37, 39, 126, 174, 226, 280, 383 ஆகிய பாடல்களை இயற்றிய நப்பசலையாரும்‌ இவ்வூரின‌ர்.

மாற்பேறு

தேவாரத் திருத்தலங்கள்

மாற்பேறு

திருமால்பூர் என்று, இன்று வட ஆர்க்காடு மாவட்டத்தில் அமைந்துள்ளது இவ்வூர். பாலியாற்றின் கரையில் உள்ள இதன் அமைப்பை,
திரையார் பாலியின் றென் கரை மாற்பேற்
றரையானே யருணல்கிடே (55-6)
என ஞானசம்பந்தரும்.
செப்பரிய புகழ்பாலித் திருந்தியின் தென்கரை போய்
மைப்பொலியும் கண்டர் திருமாற்பேறு மகிழ்ந்து இறைஞ்சி (34-1002)
என சேக்கிழாரும் தருகின்றனர், இப்பெயரைக் காண, திருமாலுடன் தொடர்புடையதாக அமைகிறது. ஆயின், சிவன் கோயில் சிறப்புடன் திசழ்கிறது. இதனை நோக்க, சில எண்ணங்கள் தென்படுகின்றன. இத்தலத்துக்கு அருகில் கோவிந்தவாடி அகரம் என்னும் ஊர் உள்ளது. என்பதும், திருமால் சிவபெருமானை நோக்கித் தவம் இருந்து நாடோறும் ஆயிரம் தாமரை மலர்களைக் கொண்டு அர்ச்சித்துப் பேறு பெற்ற தலம் இது என்பதும் அறிஞரின் கருத்தாகக் காண்கின்றோம். இதனை நோக்க, கோவிந்த வாடி என்ற இடத்தில் முலில் விஷ்ணு கோயில் அமைந்திருக்கலாம். பின்னர் சைவம் ஓங்க, அங்கு ஒரு பகுதியில் அமைந்த சிவன் கோயில் செல்வாக்குடன், திருமாலைவிட பெரியவன் என்ற எண்ணமும் மக்களிடம் வலுப்பெற. திருமால் வணங்கி பேறு பெற்றதாகக் கதை கூறி, இடத்திற்கும் திருமாற்பேறு எனப் பெயரைச் சுட்டத் தொடங்கி இருக்கலாமோ எனத் தோன்றுகிறது. வடமொழியாகவும் இப்பெயர் ஹரிச்சக்கரபுரம் எனப்படுகிறது மருவுகங்கை வாழ் சடையவர் மகிழ்ந்த மாற்பேறு, என்கின்றார் சேக்கிழார் (25-31-3-4). மால்பேறு இன்று மால் ஊர்’ என்று கருதப்பட்டு, மக்கள் வழக்கில் மால்பூர் ஆயிற்று எனத் தோன்றுகிறது.

மாற்றூர்‌

மாற்றூர்‌ கிழார்‌ மகனார்‌ கொற்றனார்‌“ என்ற தொடர்‌ மாற்றூர்‌ என்ற ஓர்‌ ஊர்ப்பெயரை அளிக்கிறது. கொற்றங்‌ கொற்றனார்‌ என்ற புலவரின்‌ தந்தையாகிய கிழார்‌ என்பவர்‌ இவ்வூரினர்‌ எனத் தெரிகிறது.

மாலிருங்‌ குன்றம்‌

பார்க்க திருமால்‌ குன்றம்‌

மாவிலங்கை

இலங்கை என்றும்‌ சொல்‌ ஆற்றிடைக்‌ குறை என்றும்‌ பொருள்‌ உடையது. “கடற்கரை ஓரமாக நீரும்‌ நிலமும்‌ ஆக அமைந்த இடம்‌ இலங்கை என்று பெயர்‌ பெறும்‌. ஆறுகள்‌ கடலில்‌ கலக்கற இடத்‌தில்‌ கிளைகளாகப்‌ பிரிந்து இடையிடையே நீறும்‌ திடலுமாக அமைவதுண்டு. இவ்வாறு நீரும்‌ திடலுமாசு அமைந்த இடத்தை லங்கா (இலங்கை) என்று ஆந்திர நாட்டவர்‌ இன்றும்‌ வழங்குவர்‌. நீரும்‌ திடலுமாக அமைந்திருந்த பட்டினநாடு. மாவிலங்கை என்றும்‌ பெயர்‌ பெற்றிருத்தது.(லங்கா அல்லது இலங்கை என்பது பழைய திராவிடமொழிச்‌ சொல்‌ எனத்‌ தோன்றுகிறது) இப்‌போதும்‌ ஓய்மர்‌ நாட்டு மாவிலங்கைப்‌ பகுதியில்‌ ஏரிகளும்‌, ஓடை களும்‌ உப்பளங்களும்‌ காணப் படுகின்‌. றன. ஏரிகளும்‌ ஓடைகளும்‌ ஆகிய நீர்‌ நிலைகளை உடைய இடத்‌தில்‌ அமைந்த ஊர்ப்பகுதி என்ற கருத்தில்‌ இலங்கை எனப்பெயர்‌ பெற்று “மா” என்ற முன்‌ ஒட்டுடன்‌ மாவிலங்கை என ஆகியிருக்க வேண்டும்‌. “இது பழம்‌ பெருமையினையுடைய இலங்கையினது பெயரைப்‌ பெற்றது. மிக்க பெருமையுடையது. நறிய பூக்களை உடைய சுரபுன்னையையும்‌ அகிலையும்‌ சந்தனத்தையும்‌ குளிக்கும்‌ துறையிலே பெற்ற பெரிய நீர்‌ நிலையையுடையது. ஆவியர்‌ பெருமக்கள்‌ மன்னராயிருந்து ஆண்டு வந்தனர்‌. அவருட்‌ கொடையிற்‌ ஏறந்தவன நல்லியக்‌ கோடன்‌ என்று இலக்கியம்‌ கூறுகிறது. திண்டிவனத்துக்கு வடக்கில்‌ ஏறத்தாழ ஒரு கல்‌ தொலைவில்‌ தெள்ளாறு செல்லும்‌ வழியில்‌ மேல்மாவிலங்கை என்னும்‌ சிற்றூர்‌ உள்ளது. இதற்குக்‌ கிழக்கில்‌ மூன்று பார்லாங்கு தொலைவில்‌ கீழ்‌ மாவிலங்கை என்னும்‌ சிற்றூர்‌ உள்ளது. மேல்‌ மாவிலங்கை என்பது ஓரே தெருவையுடைய சிற்றூர்‌. கீழ்‌ மாவிலங்கை என்பது ஐந்து அல்லது ஆறு தெருக்களையுடைய சிற்றூர்‌. இந்த இரு சிற்றூர்களும்‌ சேர்ந்ததே மாவிலங்கை என்னும்‌ ஊர்‌. இது ஓய்மானாட்டு உள்‌ நாட்டு ஊர்‌. கிடங்கிலைக்‌ கோட்டையாகக்‌ கொண்டு இந்த மாவிலங்கை. நல்லியக்‌ கோடனின்‌ தலைநகராக அமைந்திருந்தது போலும்‌,
“நறுவீநாகமும்‌ அகிலும்‌ ஆரமும்‌
ஈதுறை ஆடு மகளிர்க்குத்‌ தோட்புனை ஆகிய
பொருபுனல்‌ தரூஉம்‌ போக்கு அருமரபின்‌.
தொன்மாவிலங்கை……..”.. (பத்துப்‌. சிறுபாண்‌, 117 120)
“ஓரை ஆயத்து ஒண்‌ தொடி மகளிர்‌
கேழல்‌ உழுத இருஞ்சேறு கிளைப்பின்‌
யாமை ஈன்ற புலவுநாறு முட்டையைத்‌
தேன்நாறு ஆம்பல்‌ இழங்கொடு பெறூஉம்‌
(இருமென ஒலிக்கும்‌ புனல்‌அம்புதவின்‌
பெருமாவிலங்கைத்‌ தலைவன்‌, சீறியாழ்‌.
இல்லோர்‌ சொல்மலை. நல்லியக்கோடன்‌…” (புறம்‌. 176;1 3) (இன்றும்‌ கிடங்கில்‌ அடுத்துள்ள கிடங்கல்‌ ஏரியில்‌ நீர்‌ இறைந்து மதகின்‌ வழியே வெளியில்‌ செல்லும்‌ பொது இழும்‌ என்ற. ஓசை முழங்கும்‌ ஒலியைக்‌ கேட்கலாம்‌)
“நெல்‌அரி தொழுவர்‌ கூர்வாள்‌ மழுங்கின்‌
பின்னை மரத்தொடு அரிய, கல்செத்து,
அள்ளல்‌ யாமைக்கூன்‌ புறத்து உறிஞ்சும்‌
நெல்‌ அமல்‌ புரவின்‌ இலங்கைக்‌ கிழவோன்‌
வில்லியாதன்‌ கிணையேம்‌/ பெரும! (௸.379;3 7)
(ஓய்மான்‌ நல்லியக்கோடனைப்‌ போலவே, ஓய்மான்‌ நல்லி யஈதன்‌ (புறம்‌, 376) என்பவனும்‌ ஓய்மான்‌ வில்லியாதன்‌ (புறம்‌. 379) என்பவனும்‌ மாவிலங்கை நகரைக்‌ கொண்ட ஓய்மா நாட்டை அரசாண்டிருக்க வேண்டும்‌)

மிதியல் செருப்பு

சங்க கால ஊர்கள்

மிழலை

சங்க கால ஊர்கள்

மிழலை

மிழலை என்னும்‌ ஊரைத்‌ தன்னகத்தடக்கியது மிழலைக்‌ கூற்றம்‌ போலும்‌., மிழலைக்‌ கூற்றம்‌ என்பது சோழநாட்டின்‌ ஒரு பகுதி, இதன்‌ தலைவன்‌ எவ்வி. இவனை வென்று இக்‌கூற்றத்தைத்‌ தலையாலங்கானத்துச்‌ செருவென்ற நெடுஞ்செழியன்‌ கைப்பற்‌றினான்‌. மிழலை நாடென்பது மாயவரத்திற்கு அண்மையில்‌ அமைந்த தாகும்‌ அப்‌பகுதியில்‌ மாயவரத்திற்கு மேற்கே 12 மைல்‌ தூரத்தில்‌ பாழடைந்த ஊராக இம்மிழலை காணப்படுகிறது.
“ஓம்பா வீகை மாவேள்‌ எவ்வி
புனலம்புதவின்‌ மிழலை யொடு” (புறம்‌.24:18 19)

மீயச்சூர்

மீயச்சூர் என வழங்கப்படும் ஊர், தஞ்சாவூர் மாவட்டத்தில் காணப்படுகிறது. அப்பராலும், சம்பந்தராலும் இங்குள்ள இறைவர் புகழ்பெற்றுள்ளனர். திருமீயச்சூரில் உள்ள கோயிலில் அம்பிகை வீற்றிருக்கும் கோலத்துடனும், இக்கோயிலுள் உள்ள வடக்கு சந்நிதியில் இறைவனும் (மீயச்சூர் இளங்கோயில்) உள்ளனர். அப்பர். இவ்விறைவனைப் பாடும் போது.
தோற்றும் கோயிலும் தோன்றிய கோயிலும்
வேற்றுக் கோயில் பலவுள மீயச்சூர்க்
கூற்றம் பாய்ந்த குளிர்புன் சடையரற்
கேற்றக் கோயில் கண்டீர் இளங்கோயிலே’
என இக்கோயிலைச் சிறப்பிக்கின்றார். மீயச்சூர் என்ற ஊர்ப் பெயரின் பொருள் விளங்கவில்லை எனினும்,
காயச் செவ்விக் காமற் காய்ந்து கங்கையைப்
பாயப் புடர் புன் சடையிற் பதித்த பரமேட்டி
மாயச் சூரன் றறுத்த மைந்தன் றாதை தன்
மீயச்சூரே தொழுது வினையை வீட்டுமே (198-1)
என்ற ஞானசம்பந்தர் பாடலடிகள், முருகன் கதைத் தொடர்பு காட்டும் நிலையில் புராண அடிப்படையில் இப்பெயர் தோற்று விக்கப்பட்டு இருக்குமோ என்ற எண்ணம் தோன்றுகிறது.

மீயச்சூர்

தேவாரத் திருத்தலங்கள்

முகையலூர்

புறநானுரற்றில்‌ 181, 265 ஆகிய பாடல்களைப்‌ பாடிய று கருந்தும்பியார்‌ என்ற சங்ககாலப்‌ புலவர்‌ முகையலூரைச்‌ சார்ந்தவர்‌. இவ்வூர்‌ சோணாட்டின்‌ கண்ணது எனத்‌ தெரிகிறது,
முசிறி. முசிறி என்பது மேலைக்கடற்கரையில்‌ அமைந்த கடற்கரை நகரம்‌. சேரர்களுக்குரியது. உளர்‌ என்றும்‌ பட்டினம்‌ என்றும்‌ அமையும்‌ கடற்கரை நகரங்களின்‌ அமைப்பு மரபையொட்டி அமைந்த கொடுங்‌ கோளூரும்‌, மகோதைப்‌ பட்டினமுமாகிய பகுதியாகிய கடற்‌கரை நகரமே முசிறியாகும்‌ எனத்‌ தெரிகிறது. குட்டுவனுக்குரிய இந்த முசிறி என்னும்‌ துறைமுகப்‌ பட்டின த்திலிருந்துதான்‌ பண்டைக்காலத்தில்‌ மிளகு முதலியன வெளிநாட்டிற்கு ஏற்றுமதியாயின. வெளிநாட்டு யாத்திரிகர்கள்‌ தாம்‌ எழுதிய குறிப்புகளில்‌ இதனைக்‌ குறிப்பிட்டுள்ளனர்‌. வால்மீகி இராமாயணத்திலும்‌ இவ்வூர்‌ உள்ளது, (இங்குத்தான்‌ மகோதை என்னும்‌ கொடுங்கோளூர்‌ உள்ள தென்பர்‌) முசுறுப்புல்‌ என்பது ஒருவகைப்புல்‌, பட்டினத்தை அடுத்து இந்த வகைப்புல்‌ மிக்கு விளையும்‌ இயல்‌ பிருந்து, அதனையொட்டி முசிறி எனப்பெயர்‌ பெற்றதோ என எண்ண இடமளிக்கிறது. இந்த ஊர்ப்பெயர்‌ ‘முசுறி’ (புறம்‌: 343) என்றும்‌ வழங்கப்பட்டுள்ளமை ஒப்பு நோக்கத்தக்கது
“சுள்ளியம்‌ பேரியாற்று வெண்ணுரை கலங்க
யவனர்தந்த வினைமாணன்‌ கலம்‌
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்‌
வளங்கெழு முசிறி”… (அகம்‌. 149:8 11)
“மீனொடுத்து நெற்குவைஇ
மிசையம்பியின்‌ மனைமறுக்குந்து
மனைக்குவைஇய கறி மூடையால்‌
கலிச்சும்மைய கரை கலக்குறுந்து;
கலம்தந்த பொற்பரிசம்‌
கழித்தோணியிற்‌ கரைசேர்க்குந்து
மலைத்தாரமுங்‌ கடற்றாரமும்‌
தலைப்பெய்து, வருநர்க்கீயும்‌
பூனலம்‌ கள்ளின்‌ பொலந்தார்க்குட்டுவன்‌
மூழங்குகடல்‌ முழவின்‌ முசிறியன்ன“ (புறம்‌. 343: 1 10)

முக்காவனாடு

மலையரண்‌, காட்டரண்‌, நீரரண்‌ ஆகிய மூன்றையும்‌ காவலாகக்‌ கொண்ட நாடு இப்பெயர்‌ பெற்றது போலும்‌. முக்காவனாடு என்பது ஆமூர்‌ மல்லனுக்குரியது போலும்‌. அந்த மல்லனைச்‌ சோழன்‌ போர்வைக்‌ கோப்பெருநற்கிள்ளி பொருது அட்டு நின்றதாக சாத்தந்தகையார்‌ என்ற சங்கப்‌ புலவர்‌ கூறியுள்ளார்‌.

முக்காவல் நாடு

சங்க கால ஊர்கள்

முக்காவல் நாட்டு ஆமூர் மல்லன்

சங்க கால ஊர்கள்

முக்குளம்

முப்புரம் செற்றார் பாதம் சேரு முக்குளமும் பாடி’ என, சிவன் கோயில் கொண்ட ஊராகச் சேக்கிழார் சுட்டுகின்றார் (34-126)

முக்கூடல்

வடிவார் வேல்
முக்கூடல் அம்மா முருக மருங் கொன்றையத்தார்
முக்கூடமாட்டா முலை
என்பது சிவபெருமான் திருவந்தாதி (50)’.

முக்கூடல்

தேவாரத் திருத்தலங்கள்

முசிறி

சங்க கால ஊர்கள்

முசிறி

முத்தொள்ளாயிரம் (110) சுட்டும் தலம் இது. சங்க தொட்டேபெயர் பெற்ற ஊர் இது. துறைமுகமாக விளங்கிய நிலையையும் அறிகின்றோம். கேரளப் பல்கலைக்கழகத்தின் முதுகலை ஏடான தூர்ந்து போன துறைமுகங்களில் முசிறியின் விளக்கம் சிறப்பாக அமைகிறது.

முண்டீச்சரம்

தேவாரத் திருத்தலங்கள்

முண்டீச்சுரம்

தென் ஆர்க்காடு மாவட்டத்தில் உள்ளது இவ்வூர். திருக் கண்டீச்சுரம் என இன்று சுட்டப்படுகிறது. ஈச்சுரம் என்ற கூறு சிவன் கோயில் காரணமாகப் பெயர் பெற்றது என்பதைக் காட்டும். அப்பர் பாடல் இங்குள்ள இறை பற்றி இருப்பினும் (299) இவ்வூர் பற்றிய எண்ணங்கள் எதுவும் இல்லை.

முதிரம்

முதிரம்‌ என்பது மலையின்‌ பெயர்‌ அம்‌மலையும்‌ அதைச்‌ சேர்ந்த நாடும்‌ குமணனுக்குரியனவாய்‌ இருந்தன. குமணன்‌ வாழ்ந்த ஊர்‌ குமணம்‌ என்று பெயர் பெற்றுப்‌ பிற்‌காலத்தில்‌ கொழுமம்‌ எனத்‌ திரிந்தது என்று அறிந்தோர்‌ கூறுவர்‌. கோவை மாவட்டத்தைச்‌ சேர்ந்த உடுமலைப்பேட்டை வட்‌டத்தில்‌ கொழுமம்‌ ஒரு சிற்றூராக இன்று காணப்பெறுகிறது. கொழுமத்திற்குத் தெற்கே காதவழி தூரத்‌திற் காணப்படும்‌ குதிரை மலையே பழைய முதிரமலை என்பர்‌. முதுகிற்‌ சேண மிட்டு நிற்கும்‌ குதிரை போன்று இம்‌மலை காட்சி அளித்தலால்‌ பிற்காலத்தார்‌ அதனைக்‌ குதிரை மலை என அழைத்தார்‌ போலும்‌ என்பர்‌.
“முட்புற முது கனி பெற்ற கடுவன்‌
துய்த்தலை மந்தியைக்‌ கையிடூஉப்‌ பயிரும்‌,
அதிராயாணர்‌, முதிரத்துக்‌ கிழவ/
இவண்‌ விளங்கு சிறப்பின்‌, இயல்‌ தேர்க்குமண!” (புறம்‌. 158:23 26)
“குய்‌ கொள்‌ கொழுந்துவை நெய்யுடை. அடிசில்‌,
மதி சேர்‌ நாள்‌ மீன்‌ போல, நவின்ற
சிறுபொன்‌ நன்கலம்‌ சுற்றஇரீஇ,
“கேடு இன்றாக, பாடுநர்‌ கடும்பு” என,
அரிதுபெறு பொலங்‌ கலம்‌ எளிதினின்‌ வீசி,
நட்டோர்‌ நட்ட நல்‌இசைக்குமணன்‌
மட்டார்‌ மறுகின்‌ முதிரத்தோனே” (௸. 160:7 13)
“இன்னோர்க்கு என்னாது. என்னொடும்‌ சூழாது,
வல்லாங்கு வாழ்தும்‌ என்னாது; நீயும்‌
எல்லோர்க்கும்‌ கொடுமதி மனைகிழ வோயே,
பழம்‌ தூங்கு முதிரத்துக்‌ கிழவன்‌
திருந்து வேல்‌ குமணன்‌ நல்கிய வளனே”. (௸. 163:5 9)

முதுகாடு

சிவபெருமான் திருவந்தாதியில் முதுகாடு பற்றித் தெரிகின்றது.
முதுகாட்டுப் பொருந (13)
கொற்றத்துப்பில் ஒன்றை ஈன்ற
துணங்கையஞ் செல்வத் தணங்கு தரு முதுகாட்டுப்
பேய்முதிர் ஆயத்துப்பிணவின் (19)
ழிதரல் மடிந்து கழுது கண் படுக்கும்
இடருறு முதுகாட்டுச் சீரியல் பொருஞ் – 25
என்று இது குறிக்கப்படுகிறது.

முதுகுன்றம்

தேவாரத் திருத்தலங்கள்

முதுகுன்றம்

தென் ஆர்க்காடு மாவட்டத்தில் விருத்தாசலம் என்ற பெயரில் இது இன்று வழங்கப்படுகிறது. மூவர் பாடலும் பெற்றது இவ்வூர். முதுகுன்றம் முத்தாறு வலம் செய்யும் முதுகுன்று றும் (சுந்- 43-11) முத்தாறு வெதிருதிர நித்திலம் வாரிக் கொழிக்கும் முதுகுன்றமே என்றும் (திருஞான-131-1) மொய் கொள் மாமணி கொழித்து முத்தாறு சூழ் முதுகுன்றை (சேக் – 34-181) என்றும் மணி முத்தாறு பாயும் இப்பகுதி சிறப்பிக்கப்படுகிறது. மேலும் முல்லை கமழும் முதுகுன்று ((சிவபெரு – திருவிரட் -5) செழுநீர் வயல் முதுகுன்று (நம்பி -திருத்-77) போன்ற பாடலடிகள். முதுகுன்றின் செழுமையை இயம்புவன. என் முதுகுன்று என்று இவ்வூர் பாடப்படினும், இதன் பழம் பெயர் பழமலையாக இருக்கக் கூடும் எனத் தோன்றுகிறது. இன்றைய பெயர் விருத்தாசலம், பழமலையின் வடமொழி மாற் றமே என்றும், விருத்தாசலமே முதுகுன்றம் என மாற்றப்பட்டது என்றும் அறிஞர் கருதுகின்றனர். இப்பதியில் கோயில் கொண் டுள்ள இறைவன் பெயர் பழமலை நாதர் எனவும் தெரிகிறது. ” பழமலை, பழங்கள் நிறைந்த மலைப்பகுதி என்ற நிலையில் முதலில் பெயர் பெற்றதாகவும், பின்னர் அது விருத்தாசலம் என, பழமை 1. ஊரும் பேரும் – பக். 288 ஊர்ப்பெயர்கள் 239 முதுமை என்ற பொருளில் முதுகுன்றம் என்று வழங்கத் தொடங் கியதாகவும் கூறப்படுகிறது. பிரமன் படைப்புக்கு முன் சிவ பெருமான் தாமே மலை வடிவாகி நிற்கப் பிரமன் அதனையறி யாது, பல மலைகளையும் படைத்து. அவற்றை நிலை பெறுத்த இடமின்றி மயங்கச் சிவபெருமான் தோன்றியருளித் தானே பழ மலையா தலைத் தெளிவித்தார் ஆதலின் முதுகுன்றம் எனவும் பழமலை எனவும் வழங்குவதாயிற்று என்ற எண்ணமும் இவ்வூர் குறித்து உண்டு.

முதுவெள்ளிலை

சங்க கால ஊர்கள்

முதுவெள்ளிலை

முதுவெள்ளிலை என்னும்‌ ஊர்‌ ஆரவாரம்‌ மிக்கது என்றும்‌, புதுவருவாயினையுடையது என்றும்‌ சங்க இலக்கியம்‌ கூறுகிறது. வெள்ளிலை என்னும்‌ சொல்‌ வெற்றிலையைக்‌ குறிப்பதோடு, வெள்ளி மடந்தை என்ற நீண்ட செடிவகை ஒன்றினையும்‌ குறிக்கும்‌ சொல்லாக உள்ளது. அவ்வகைச்‌ செடிகள்‌ அடர்ந்த பகுதியில்‌ அமைந்த குடியிருப்புகளைக்‌ கொண்ட ஊர்‌ அப்பெயர்‌ பெற்றிருக்கலாம்‌. முது என்பது முன்‌ ஒட்டாக இணைந்து முது வெள்ளிலை என ஊர்ப்பெயர்‌ அமைந்தது போலும்‌. இது குறுநில மன்னரின்‌ குடியிருப்பு.
“நிரைதிமிர்‌ வேட்டுவர்‌ சுரை சேர்‌ கம்பலை,
இருங்கழிச்‌ செறுவின்‌ வெள்‌ உப்புப்‌ பகர்நரொடு,
ஒலி ஓவாக்‌ கலியாணர்‌
முது வெள்ளிலை மீக்கூறும்‌” (பத்துப்‌. மதுரைக்‌: 116 119)

முத்தூறு

சங்க கால ஊர்கள்

முனைப்பாடி

முனைப்பாடி நாடு என்பதே, முனைப்பாடி என்பது, பல ஊர்களைத் தன்னகத்தே கொண்டு திகழ்ந்ததொரு நி லையை இயம்ப வல்லது. அப்பர் பிறந்த திருவாமூர் இந்நாட்டில் உள்ள தொரு ஊரே. திரு ஆமூர் இன்று தென் ஆர்க்காடு மாவட்டம் சார்ந்து அமையும் நிலையில், முனைப்பாடி நாடும் தென்னார்க்காடு மாவட்டப் பகுதியாக இருந்திருக்க வேண்டும் எனத் தெரிகிறது. மேலும் சுந்தரர் பிறந்த திருநாவலூரும் இந்நாட்டைச் சேர்ந்தது என்பது தெரிகிறது. இதனைப் பற்றி இயம்பும் சேக்கிழார்,
தொன்மை முறைவரு மண்ணின் துகளன்றித் துகளில்லா
நன்மை நிலை நடுக்கத்து நலஞ்சிறந்த குடிமல்கிச்
சென்னி மதிபுனைய வளர் மணிமாடச் செழும்பதிகள்
மன்னி நிறைந்துளது திருமுனைப்பாடி வளநாடு (27-2-1-4)
எனவும்,
கங்கையும் மதியும் பாம்பும் கடுக்கையும்
அங்கணர் ஓலை காட்டி ஆண்டவர் முடிமேல் வைத்த தமக்கு நாடு
மங்கையர் வதன சீதமதியிரு மருங்கும் ஓடிச்
செங்கயல் குழைகள் நாடும் திருமுனைப்பாடி நாடு
என்றும் பாடுகின்றார். இதனைப் பற்றிய பிற பாடல்களினின் றும் கூட, இதன் செழிப்புதான் தெரிகிறதே தவிர, பெயர்க் காரணம் அறியக் கூடவில்லை. எனினும் முனை, பாடி என்ற சொற்கள் போர்க்களத்தை நினைவூட்டுகின்றன.

முனையூர்‌

முனையூர்‌ என்பது இடவகனுக்கு உதயணன்‌ கொடுத்த ஒரு நாட்டின்‌ தலைநகர்‌. அடவிநாடு ஐம்பதிலும்‌ முன்னிடமாக அமைந்திருந்தமையால்‌ முனையிடம்‌ என்னும்‌ பொருளில்‌ முனையூர்‌ எனப்பெயர்‌ பெற்றிருக்கலாம்‌. அல்லது முன்னதாகிய அதாவது தலையாய தாகிய தலைநகர்‌ என்னும்‌ பொருளில்‌ முனையூர்‌ என்றும்‌ பெயர்‌ பெற்றிருக்கலாம்‌.
“இடவகற்‌இருந்த முனையூருள்ளிட்‌
டடவி நன்னா டைம்பது கொடுத்து” (பெருங்‌. 4 9:28 29)

முரஞ்சியூர்

‌சேரமான்‌ பெருஞ்‌ சோற்று உதியன்‌ சேரலாதனைப்‌ பாடிய முடிநாகராயர்‌ என்னும்‌ சங்க காலப்‌ புலவர்‌ முரஞ்சியூரைச்‌ சேர்ந்தவர்‌. (புறம்‌. 2). பாறை என்னும்‌ பொருளுடைய முரஞ்சு என்னும்‌ சொல்‌ அடியாகப்‌ பிறந்த ஊர்ப்பெயர்‌ முரஞ்சியூர்‌ என்பது. பாறைப்‌ பாங்கான நில அமைப்பைக்‌ கொண்ட பகுதியில்‌ அமைந்த ஊராக இருந்து முரஞ்சியூர்‌ என்று பெயர்‌ பெற்று இருக்கலாம்‌.

முருகன் பூண்டி

திருமுருகன் பூண்டி என. கோயம்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஊர் இது. சுந்தரர் பாடல் பெற்ற தலம் இது. முருகப் பெருமான் வழிபட்ட தலம் எனவும், மாதவி வனம் என மற் றொரு பெயர் உண்டெனவும் அறிகின்றோம். மாதவிக் கொடிகள் நிறைந்தமையால் இப்பெயர் பெற்றிருக்கலாம். சிவபெருமான் கோயில் கொண்ட தலம் என்ற நிலையில் மேற்குறித்த புராணக் கருத்தின் அடிப்படையில் முருகன் பூண்டி எனச் சுட்டப்பட்டு இருக்கலாம் எனினும் பூண்டி என்பது என்ன என்பதை நோக்க, ஊருடன், தோட்டம் என்ற பொருளையும் தமிழ் லெக்ஸிகன் தருகிறது. எனவே தோட்டங்கள் மிகுந்த நிலையில் இப்பெயர் அமைந்திருக்கலாம். முடுகு நாறிய வடுகர் வாழ், முருகன் பூண்டி மாநகர் சுந்தரர் இதனைச் சுட்டும் நிலையில், (49) இது ஒரு பெரிய நகரமாகத் திகழ்ந்தது என்பதையுணர இயலுகிறது. சேக்கிழா ரும் இதனை உறுதிப்படுத்தும் நிலையில், ஓரூரும் திருமுருகன் பூண்டி எனச் சுட்டுகின்றார் (கழற்-164).

முல்லைவாயில்

வடதிருமுல்லைவாயில்

முல்லைவாயில்

தேவாரத் திருத்தலங்கள்

முள்ளூர்

சங்க கால ஊர்கள்

முள்ளூர்

தேவாரத் திருத்தலங்கள்

முள்ளூர்

‌முள் நிறைந்த மலையையுடைய ஊராதலின்‌ இது. முள்ளூர்‌ என்ப்‌ பெயர்‌ பெற்றது போலும்‌, ‌முள்ளூர்‌, மலையமான்‌ திருமுடிக்காரிக்கு உடையதாய்‌ இருந்திருக்கிறது. இவ்வூரில்‌ ஆரியருக்கும்‌ மலையனுக்கும்‌ போர்‌ நடந்து, அப்போரில்‌ ஆரியர்‌ படை தோற்று ஓடியது.
“ஆரியர்‌ துவன்றிய பேர்‌ இசை முள்ளூர்‌
பலருடன்‌ கழித்த ஒள்வாள்மலை யனது
ஒரு வேற்கு ஓடியாங்கு நம்‌
பன்மையது எவனோ, இவள்‌ வன்மை தலைப்படினே” (நற். 170:6 9)
“மாயிரு முள்ளூர்‌ மன்னன்‌ மாஊர்ந்து
எல்லித்‌ தரீ இய இனநிரைப்‌
பல்‌ஆன்‌ கிழவரின்‌ அழிந்த இவள்‌ நலனே” (௸. 2917 9)
“இரண்டு அறி கள்வி நம்‌ சாதலோளே
முரண்‌ கொள்‌ துப்பின்‌ செவ்வேல்‌ மலையன்‌
முள்ளூர்க்‌ கானம்‌ நாற வந்து
நள்ளென்‌ கங்குல்‌ நம்மோரன்னன்‌” (குறுந்‌, 3121 4)
“முள்ளூர்‌ மன்னன்‌ கழல்‌ தொடிக்‌ காரி
செல்லா நல்லிசை நிறுத்த வல்வில்‌
ஓரிக்கொன்று சேரலர்க்கு ஈத்த
செவ்வேர்ப்‌ பலவின்‌ பயம்‌ கெழுகொல்லி” (அகம்‌.206. 12 15)
“தொலையா நல்லிசை விளங்கு மலையன்‌
மகிழாது ஈத்த இழையணி நெடுந்தேர்‌
பயன்கெழு முள்ளூர்‌ மீமிசைப்‌
பட்டமாரி உறையினும்‌ பலவே” (புறம்‌. 123:3 69)
“துயில்‌ மடிந்தன்ன தூங்கிருள்‌ இறும்பின்‌
பறையிசை அருவி முள்ளூர்‌ பொருந” (ஷே. 126;17 8)
“அரசு இழந்திருந்த அல்லற்‌ காலை
முரசு எழுந்து இரங்கும்‌ முற்றமொடு, கரைபொருது
இரங்குபுனல்‌ நெறிதரு மிகுபெருங்‌ காவிரி
மல்லல்‌ நல்நஈட்டு அல்லல்‌ தீர
பொய்யா நாவின்‌ சுபிலன்‌ பாடிய
மையணி நெடுவரை ஆங்கண்‌, ஒய்யெனச்‌
செருப்புகல்‌ மறவர்‌ செல்புறம்‌ கண்ட
எள்ளறு சிறப்பின்‌ முள்ளூர்‌ மீமிசை
அருவழி இருந்த பெருவிறல்‌ வளவன்‌
மதிமருள்‌ வெண்குடை காட்டி, அக்குடை
புதுமையின்நிறுத்த புகழ்மேம்படுந” (௸. 174;6 16)

முழையூர்

சங்க கால ஊர்கள்

மூக்கீச்சுரம் (உறந்தை) – உறையூர்

தேவாரத் திருத்தலங்கள்

மூழிக்களம்

சோறு மலைநாட்டுத் தலமாகிய இது, ஆலப்புழையினின்றும் பத்து மைல் தொலைவில் உள்ளது. திருமங்கையாழ்வாரும், நம்மாழ்வாரும் இங்குள்ள திருமாலைப் பரவியுள்ளனர். களம் என்பது இடம் என்ற பொருளில் அமையினும், மூழி என்பதன் பொருள் விளங்கவில்லை. தமிழ் லெக்ஸிகள், மூழி’ என்பதற்கு, அகப்பை, கமண்டலு, விசேடம், நீர் நிலை, போன்ற பல பொருட்களைச் சுட்டினாலும், அவை இவண் எவ்வாறு பொருத்தமுறும் என்பது புலனாகவில்லை. தவிர. மூழட்டி என்பது மிளகு குறித்தமை தலையும். மூழை என்பது குழிந்த இடம் என்ற பொருளில் அமைவதையும் மலை நாட்டு ஊர் என்ற நிலையில் நோக்க. மிளகு அல்லது குழிந்த இடம் காரணமாக மூழட்டிக்களமாகக் அல்லது மூழைக் களமாக இருந்து, பின் னர் மூழிக்களமாகத் திரிந்ததோ என்ற எண்ணம் தோன்றுகிறது.

மூவலூர்

ஞானசம்பந்தர் சென்ற தலமாக இது காட்டப்படுகிறது, துருத்தி என்னும் குற்றாலத்திற்குச் சென்று (தஞ்சைமாவட்டம்), பின்னர் அங்கிருந்து மயிலாடுதுறைக்குச் செல்கின்றார். இடையில் வழிப்பட்டதலமாக மூவலூர் சுட்டப்படுவதால், இது இன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஓர் பகுதியாகத் தான் இருக்க வேண்டுமென்பது தெளிவாகத் தெரிகிறது. எனினும் பெயர்க் காரணம் தெரியவில்லை.
திரைத்தடம் புனல் பொன்னி சூழ் திருத் துருத்தியினில்
வரைத் தலைப் பசும்பொன் எனும் வண் தமிழ்ப்பதிகம்
உரைத்து மெய்யுறப்பணிந்து போந்துலவு மந்நதியின்
கரைக்கண் மூவலூர்க் கண்ணுதலார் கழல் பணிந்தார் (பெரிய – 34-439)
மூவலூர் உறை முதல்வரைப் பரவிய மொழியால்
மேவு காவலில் எத்தியே விருப்பொடும் போந்து
பூவலம் தண் புனற்பணைப் புகலியர் தலைவர்
வாவி சூழ் திருமயிலாடு துறையினில் வந்தார் (-437)

மூவெயில்

சங்க கால ஊர்கள்

மெய்யம்

இன்று திருமயம் எனச் சுட்டப்படும் ஊர் இது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது. திருமங்கையாழ்வார் பாடிய திருமால் கோயிலுடன் சிவன் கோயிலும் இங்குள்ளது. மெய்யம் அமர்ந்த பிரான் (நாலா – 1524),’ போன்று பல குறிப்புகள் அமையினும் பெயர்க்காரணம் புலனாகவில்லை. எனினும், ” வேயிருஞ் சோலை விலங்கல் சூழ்ந்த மெய்ய மணாளர் (நாலா 1760) என இறைவனாகிய மெய்யன் இருப்பதினால் திருமெய்யம் என்று அழைக்கப்பட்டதோ எனத் தோன்றுகிறது.

மேடு

மேட்டுப் பாங்கான இடத்திற்கு மேடு எனப் பெயர் வந்துள்ளது. எடுத்துக்காட்டு; அணைமேடு, ஈச்சேரி மேடு, கூனிமேடு,

மையற் கோமான்

சங்க கால ஊர்கள்

மையல்

சங்க கால ஊர்கள்

மையல்

வையை யாற்றுக்கருகில்‌ பொய்யாத புது வருவாயினை யுடையதாக அமைந்திருந்தது மையல்‌ என்றும்‌ ஊர்‌ என்று சங்க இலக்கியம்‌ கூறுகிறது. செல்வம்‌ முதலியவற்றால்‌ வரும்‌ செருக்கு என்று பொருள்‌படும்‌ மையல்‌ என்னும்‌ சொல்‌ வையையாறு பாய்ந்து வளம்‌ கொழித்த ஓர்‌ ஊருக்குப்பெயராய்‌ அமைந்தது போலும்‌. பாண்டியன்‌ வஞ்சினம்‌ கூறும் பொழுது இந்த ஊர்ப்‌ பெயரும்‌, இவ்வூர்‌த்‌ தலைவன்‌ மாவனின்‌ பெயரும்‌ இடம்‌ பெற்‌றிருப்பதையறியலாம்‌. பாண்டி நாட்டகத்து ஊராக இருந்திருக்கலாம்‌.
“வையை சூழ்ந்த வளங்கெழு வைப்பிற்‌
பொய்யா யாணர்‌ மையல்‌ கோமான்‌” (புறம்‌, 71:10 12)

மையூர்

சங்க கால ஊர்கள்

மையூர் கிழான்

சங்க கால ஊர்கள்

மோகூர்

சங்க கால ஊர்கள்

மோகூர்

பழையனின் ஊராக, சங்ககாலம் தொட்டே தெரியவரும் ஊர் மோகூர். திருமால் கோயில் கொண்டமையின் பாடல் பெற்றது. திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் பாடிய இத்தலம், இன்று மதுரை மாவட்டத்தில் உள்ளது. இதனைப்பற்றி, திருமோகூர் தென் பறம்பு நாட்டின் பகுதியாக விளங்கிற்று என்று கல்வெட்டு ஒன்று கூறுகிறது. பறம்பு நாடு பாரியின் நாடு. மோகூரில் பழை யன் என்பவனுடைய பலத்த கோட்டை இருந்தது. இது காவல் அரணாக விளங்கிற்று எனப் பாடல்கள் கூறுகின்றன என்ற எண்ணங்கள் அமைகின்றன. திருமால் மோகன வடிவுடைய மோகினியாக இங்குத் தோன்றிய காரணமே இப்பெயர்க்காரணம் எண்ணமும் உண்டு. மோகம்’ என்பதற்குத் தமிழ் லெச்ஸிகன், பல பொருட்களைக் கொடுப்பினும் பாதிரி அல்லது மோகமுடையவர் ஆகிய பொருட்களின் அடிப்படையில் இப் பெயர்த் தோன்றியிருக்கக் கூடும் என்பதே பொருத்தமாக அமைகிறது.

மோகூர்

பழையன்‌ என்பவனுக்குரியதாய்‌ இருந்திருக்கிறது மோகூர்‌ என்னும்‌ ஊர்‌. மோரியர்‌ படை மோகூரைத்‌ தாக்கியபோது, உற்றுழி உதவுவதாக வஞ்சினங்கூறி இருந்த கோசர்‌, மோகூர்‌ அவையத்து ஆலமரத்தடியில்‌ தோன்றி மோரியரைப்‌ புறங்கண்டனர்‌ என்ற வரலாறு உள்ளது.
“மழை ஒழுக்கு அறாஅப்‌ பிழையா விளையுள்‌,
பழையன்‌ மோகூர்‌ அவையகம்‌ விளங்க,
நான்‌ மொழிக்‌ கோசர்‌ தோன்றி யன்ன,
தாம்‌ மேஎந்தோன்றிய நாற்பெருங்குழுவும்‌” (பத்துப்‌. மதுரைக்‌. 507 510)
“நுண்‌ கொடி உழிஞை வெல்‌ போர்‌ அறுகை
சேணன்‌ ஆயினும்‌, கேள்‌ என மொழிந்து,
புலம்‌ பெயர்ந்து, ஒளித்த கனையரப்‌ பூசற்கு,
அரண்கள்‌ தாவுறீஇ, அணங்கு திகழ்ந்தன்ன
மோகூர்‌ மன்னன்‌ முரசங்‌ கொண்டு
நெடுமொழி பணித்து, அவன்‌ வேம்பு முதல்‌ தடிந்து
முரசு செய முரச்சி, களிறு பல பூட்டி
ஒழுகை உய்த்தோய்‌: (பதிற்‌. 44.10. 17)
“களிறு பரந்து இயல, கடுமா தாங்க,
ஒளிறு கொடி நுடங்கத்‌ தேர்‌ திரிந்து கொட்ப;
எஃகு துரந்து எழுதரும்‌ கை கவர்‌ கடுந்தார்‌,
வெல்‌ போர்‌ வேந்தரும்‌ வேளிரும்‌ ஒன்று மொழிந்து,
மொய்வளம்‌ செருக்கி, குழூ நிலை அதிரமண்டி” (௸. 49; 4.9)
“துனை கால்‌ அன்ன புனைதேர்க்‌ கோசர்‌
தொல்‌ மூதாலத்து அரும்பணைப்‌ பொதியில்‌,
இன்னிசை முரசங்‌ கடிப்பு இகுத்து இரங்க,
தெம்மூலை சிதைத்த ஞான்றை, மோகூர்‌
பணியாமையின்‌, பகை தலைவந்த
மாகெழுதானை வம்ப மோரியர்‌
புனை தேர்‌ நேமி உருளிய குரைத்த” (அகம்‌. 21. 7 13)

மோகூர் மன்னன்

சங்க கால ஊர்கள்

மோசி

சங்க கால ஊர்கள்

மோசி கீரன்

சங்க கால ஊர்கள்