ஃ | அ 87 |
ஆ 48 |
இ 47 |
ஈ 6 |
உ 15 |
ஊ 6 |
எ 18 |
ஏ 11 |
ஐ 4 |
ஒ 8 |
ஓ 4 |
ஔ | க் | க 99 |
கா 32 |
கி 3 |
கீ 1 |
கு 61 |
கூ 10 |
கெ 1 |
கே 3 |
கை 3 |
கொ 24 |
கோ 39 |
கௌ | ங் | ங | ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ | ச் | ச 10 |
சா 9 |
சி 21 |
சீ | சு 2 |
சூ | செ 17 |
சே 8 |
சை | சொ | சோ 9 |
சௌ | ஞ் | ஞ | ஞா | ஞி | ஞீ | ஞு | ஞூ | ஞெ | ஞே | ஞை | ஞொ | ஞோ | ஞௌ | ட் | ட | டா | டி | டீ | டு | டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ | ண் | ண | ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ | த் | த 23 |
தா 1 |
தி 22 |
தீ | து 11 |
தூ 4 |
தெ 7 |
தே 4 |
தை | தொ 5 |
தோ | தௌ | ந் | ந 31 |
நா 24 |
நி 6 |
நீ 11 |
நு | நூ | நெ 22 |
நே 5 |
நை | நொ 1 |
நோ | நௌ | ப் | ப 43 |
பா 33 |
பி 7 |
பீ | பு 39 |
பூ 10 |
பெ 11 |
பே 7 |
பை 2 |
பொ 7 |
போ 6 |
பௌ | ம் | ம 40 |
மா 25 |
மி 3 |
மீ 2 |
மு 28 |
மூ 4 |
மெ 1 |
மே 1 |
மை 5 |
மொ | மோ 6 |
மௌ | ய் | ய 2 |
யா | யி | யீ | யு | யூ | யெ | யே | யை | யொ | யோ | யௌ | ர் | ர | ரா | ரி | ரீ | ரு | ரூ | ரெ | ரே | ரை | ரொ | ரோ | ரௌ | ல் | ல | லா | லி | லீ | லு | லூ | லெ | லே | லை | லொ | லோ | லௌ | வ் | வ 40 |
வா 20 |
வி 25 |
வீ 6 |
வு | வூ | வெ 27 |
வே 24 |
வை 7 |
வொ | வோ | வௌ | ழ் | ழ | ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ | ள் | ள | ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ | ற் | ற | றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ | ன் | ன | னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
---|
தலைசொல் | பொருள் |
---|---|
மாகறல் | செங்கற்பட்டு மாவட்டத்தில் உள்ளது இவ்வூர். சேயாற்றின் கரையில் உள்ள ஊர். சம்பந்தர் இவ்வூரினைப் பாடியுள் ளார். |
மாகறல் | தேவாரத் திருத்தலங்கள் |
மாகுடி | திருநாவுக்கரசர் தம் திருத்தாண்டகப் சுட்டும் சிவன் கோயில் ஊர் பதிகத்தில் (285) புற்குடி மாகுடி தேவன்குடி நீலக்குடி’ (3). நெருங்கிய குடியிருப்புப் பகுதியாக அல்லது பெரிய குடியிருப்புப் பகுதியாக இருந்ததால் இப்பெயர் தோற்றம் பெற்றிருக்கக் கூடும். |
மாங்காடு | மாங்காடு என்பது குடகுமலைப் பக்கத்து ஓர் ஊர், சூரர மகளிர் உறைகின்ற ஒரு காடு மாங்காடு என்னும் பெயருடன் இருந்ததாகவும் தெரிகிறது. மாங்காடு என்னும் பெயருடன் சென்னைக் கருகில் ஓர் அம்மன் தலம் உள்ளது. |
மாங்காடு | சங்க கால ஊர்கள் |
மாங்குடி | மாங்குடி கிழார், மாங்குடி மருதனார் என் இரண்டு சங்க காலப் புலவர்கள் இவ்வூரினர். மாங்குடி என்னும் பெயருடன் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அருகில் ஓர் ஊர் உள்ளது. |
மாங்குடி | சங்க கால ஊர்கள் |
மாடலூர் | குறுந்தொகையில் 150 ஆம் பாடலைப் பாடிய கிழார் என்னும் புலவர் இவ்வூரினராதலின் மாடலூர் கிழார் எனப் பெயர் பெற்றார். |
மாட்டூர் | திருஞானசம்பந்தர் தம் திருவூர்க் கோவையுள் குறிப்பிடும் ஊர் இது. |
மாணிகுடி | நாவுக்கரசர் தம் திருத்தாண்டகப் பதிகத்தில் சுட்டிய ஊர் இது (285). வேதிகுடி மாணிகுடி விடைவாய்க்குடி’. குடியிருப்பினைக் குறிக்க, மாணி என்பது என்ன பொருளில் அமைந்தது என்பது தெரியவில்லை. மாண். மாட்சிமை, அழகு, பெருமை குறிக்க, மாணி பிரம்மசாரி. குறள் வடிவம் ஆகியவற் றைக் குறிக்க, சிறந்த குடியிருப்பு என்ற நிலையில் அல்லது சிறிய குடியிருப்பு என்ற நிலையில் இப்பெயர் அமைந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. மாணிகுழி என்பதும் இதுதானோ என்பதும் தெளிவில்லை. |
மாணிகுழி | திருமாணிகுழி எனச் சுட்டப்படுகிற இவ்வூர் தென் ஆர்க்காடு மாவட்டத்தில் இன்று உள்ளது. கெடில நதியின் கரையில் உள்ள இவ்வூர், சம்பந்தர் பாடல் பெற்ற சிறப்புடையது. திருமா லோடு தொடர்புகாட்டி. அமையும் சம்பந்தர். சேக்கிழார் கூற்றுகள் முதலில் திருமால் கோயில் இங்கு இருந்து பின்னர். இவ்வாறு புராணக் கதையாகத் திரிந்ததோ என்ற எண்ணத் திற்கு இடமளிக்கிறது. |
மாணிகுழிநடுநாடு | தேவாரத் திருத்தலங்கள் |
மாத்தூர் | வைத்தேன் எந்தன் மனத்துள்ளே |
மாந்தரன் | சங்க கால ஊர்கள் |
மாந்துறை | தேவாரத் திருத்தலங்கள் |
மாந்துறை | திருமாந்துறை என்று சுட்டப்படும் ஊர், இன்று திருச்சி மாவட்டத்தில் அமைகிறது. இது காவிரியின் வடகரையில் உள்ளது என்பது ஞானசம்பந்தர் பாடலாலேயே தெளிவாகத் தெரிகிறது. தலமரம் மாமரம் எனத் தெரிகிறது. மாமரங்கள் நிறைந்த பகுதியாக, காவிரியின் துறையாக அமைந்தமை இப் பெயர்க்குரிய காரணம் ஆகும். வடகரை மாந்துறையைச் சம்பந்தர் பாட அறிகின்ற நிலையில், தென்கரையும் மாந்துறை என்றே அழைக்கப்பட்டதைக் கேள்விப்படுகிறோம். எனவே ஆற்றுக்கு வருகரைகளிலும் மாந்தோப்பு காணப்பட்டது என்பதும், எனவே இரண்டும் தனித்தனியாகக் குறிக்கப் பெறவேண்டிய நிலையில் வடகரை. தென்கரை எனக் குறிக்கப்பட்டிருக்கிறது என்பதையும் உணர இயலுகின்றது. வடமொழியில் ஆம்ர வனம் என்று மொழி பெயர்க்கப்பட்டு, இவ்வூர் அழைக்கப் பெறுகிறது. |
மாந்தை | சங்க கால ஊர்கள் |
மாந்தை | மாந்தை என்னும் ஊர்ப்பெயர் மரந்தை யெனவும் வழங்கப் பெற்றுள்ளது. இரண்டும் ஒரே ஊரின் பெயரே. இலக்கியங்களில் பாட வேறுபாடாக இடம் பெற்றிருப்பதாகவும் தெரிகிறது. இது கடற்கரை நகரம், மேலைக்கடற்கரையில் சேர மன்னார்களுக்கு உரியதாய் இருந்திருக்கிறது. சேரன் செங்குட்டுவனின் தாயத்தாரான சேரமன்னர் கூட்டுத் தலைநகராக இருந்திருக்கலாம். |
மாறன்பாடி | சேக்கிழார் திருஞானசம்பந்தர் வரலாற்றில் இவ்வூர்ப் பெயரினைக் குறிப்பிடுகின்றார். பெண்ணாகடத்திலிருந்து அரத்துறைக்குச் செல்லும் போது இடையில் தங்கியத் தலமாக மாறன்பாடிச் சுட்டப்படுகிறது. இன்று பெண்ணாகடம், நெல்வாயில் என்பன தென் ஆர்க்காடு மாவட்டம் சார்ந்து அமைகின்றன என்பதைக் காணும்போது இவற்றிற்கிடையே அமைந்த மாறன் பாடியும் இன்று தென்ஆர்க்காடு மாவட்டத்தில் தான் இருக்க வேண்டும் என் பதில் ஐயமில்லை. மாறன்பாடி என்ற பெயரில் மாறன் – பாண்டியன் என்ற பொருளில் அல்லது சடசோபன் என்ற பொருளில் அமைந்திருக்கலாம். இதனைப் பற்றி பிற விளக்கம் பெரிய புராணத்தில் இன்மையால், இது சிவன் கோயில் இல்லாத ஊராகவோ அல்லது, திருமால் கோயில் தலமாகவோ இருக்க வாய்ப்பு அமைகிறது. மா நன் என்று சுட்டும் தன்மையும், இதன் இருப்பிடமும் திருமாலுக்கே முதலிடம் கொடுக்கலாம் என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கிறது. |
மாறோக்கம் | மாறோகம் என்பது ஒரு சிறு நாடு. இது மாறோக்கம் என வழங்கும் திருநெல்வேலி மாவட்டத்தில் கொற்கையைச் சூழ்ந்த நாடு. அகநானூற்றில் 377 ஆம் பாடலை இயற்றிய காமக்கணி நப்பாலத்தனாரும், புறநானூற்றில் 37, 39, 126, 174, 226, 280, 383 ஆகிய பாடல்களை இயற்றிய நப்பசலையாரும் இவ்வூரினர். |
மாற்பேறு | தேவாரத் திருத்தலங்கள் |
மாற்பேறு | திருமால்பூர் என்று, இன்று வட ஆர்க்காடு மாவட்டத்தில் அமைந்துள்ளது இவ்வூர். பாலியாற்றின் கரையில் உள்ள இதன் அமைப்பை, |
மாற்றூர் | மாற்றூர் கிழார் மகனார் கொற்றனார்“ என்ற தொடர் மாற்றூர் என்ற ஓர் ஊர்ப்பெயரை அளிக்கிறது. கொற்றங் கொற்றனார் என்ற புலவரின் தந்தையாகிய கிழார் என்பவர் இவ்வூரினர் எனத் தெரிகிறது. |
மாலிருங் குன்றம் | பார்க்க திருமால் குன்றம் |
மாவிலங்கை | இலங்கை என்றும் சொல் ஆற்றிடைக் குறை என்றும் பொருள் உடையது. “கடற்கரை ஓரமாக நீரும் நிலமும் ஆக அமைந்த இடம் இலங்கை என்று பெயர் பெறும். ஆறுகள் கடலில் கலக்கற இடத்தில் கிளைகளாகப் பிரிந்து இடையிடையே நீறும் திடலுமாக அமைவதுண்டு. இவ்வாறு நீரும் திடலுமாசு அமைந்த இடத்தை லங்கா (இலங்கை) என்று ஆந்திர நாட்டவர் இன்றும் வழங்குவர். நீரும் திடலுமாக அமைந்திருந்த பட்டினநாடு. மாவிலங்கை என்றும் பெயர் பெற்றிருத்தது.(லங்கா அல்லது இலங்கை என்பது பழைய திராவிடமொழிச் சொல் எனத் தோன்றுகிறது) இப்போதும் ஓய்மர் நாட்டு மாவிலங்கைப் பகுதியில் ஏரிகளும், ஓடை களும் உப்பளங்களும் காணப் படுகின். றன. ஏரிகளும் ஓடைகளும் ஆகிய நீர் நிலைகளை உடைய இடத்தில் அமைந்த ஊர்ப்பகுதி என்ற கருத்தில் இலங்கை எனப்பெயர் பெற்று “மா” என்ற முன் ஒட்டுடன் மாவிலங்கை என ஆகியிருக்க வேண்டும். “இது பழம் பெருமையினையுடைய இலங்கையினது பெயரைப் பெற்றது. மிக்க பெருமையுடையது. நறிய பூக்களை உடைய சுரபுன்னையையும் அகிலையும் சந்தனத்தையும் குளிக்கும் துறையிலே பெற்ற பெரிய நீர் நிலையையுடையது. ஆவியர் பெருமக்கள் மன்னராயிருந்து ஆண்டு வந்தனர். அவருட் கொடையிற் ஏறந்தவன நல்லியக் கோடன் என்று இலக்கியம் கூறுகிறது. திண்டிவனத்துக்கு வடக்கில் ஏறத்தாழ ஒரு கல் தொலைவில் தெள்ளாறு செல்லும் வழியில் மேல்மாவிலங்கை என்னும் சிற்றூர் உள்ளது. இதற்குக் கிழக்கில் மூன்று பார்லாங்கு தொலைவில் கீழ் மாவிலங்கை என்னும் சிற்றூர் உள்ளது. மேல் மாவிலங்கை என்பது ஓரே தெருவையுடைய சிற்றூர். கீழ் மாவிலங்கை என்பது ஐந்து அல்லது ஆறு தெருக்களையுடைய சிற்றூர். இந்த இரு சிற்றூர்களும் சேர்ந்ததே மாவிலங்கை என்னும் ஊர். இது ஓய்மானாட்டு உள் நாட்டு ஊர். கிடங்கிலைக் கோட்டையாகக் கொண்டு இந்த மாவிலங்கை. நல்லியக் கோடனின் தலைநகராக அமைந்திருந்தது போலும், |