ஃ | அ 87 |
ஆ 48 |
இ 47 |
ஈ 6 |
உ 15 |
ஊ 6 |
எ 18 |
ஏ 11 |
ஐ 4 |
ஒ 8 |
ஓ 4 |
ஔ | க் | க 99 |
கா 32 |
கி 3 |
கீ 1 |
கு 61 |
கூ 10 |
கெ 1 |
கே 3 |
கை 3 |
கொ 24 |
கோ 39 |
கௌ | ங் | ங | ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ | ச் | ச 10 |
சா 9 |
சி 21 |
சீ | சு 2 |
சூ | செ 17 |
சே 8 |
சை | சொ | சோ 9 |
சௌ | ஞ் | ஞ | ஞா | ஞி | ஞீ | ஞு | ஞூ | ஞெ | ஞே | ஞை | ஞொ | ஞோ | ஞௌ | ட் | ட | டா | டி | டீ | டு | டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ | ண் | ண | ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ | த் | த 23 |
தா 1 |
தி 22 |
தீ | து 11 |
தூ 4 |
தெ 7 |
தே 4 |
தை | தொ 5 |
தோ | தௌ | ந் | ந 31 |
நா 24 |
நி 6 |
நீ 11 |
நு | நூ | நெ 22 |
நே 5 |
நை | நொ 1 |
நோ | நௌ | ப் | ப 43 |
பா 33 |
பி 7 |
பீ | பு 39 |
பூ 10 |
பெ 11 |
பே 7 |
பை 2 |
பொ 7 |
போ 6 |
பௌ | ம் | ம 40 |
மா 25 |
மி 3 |
மீ 2 |
மு 28 |
மூ 4 |
மெ 1 |
மே 1 |
மை 5 |
மொ | மோ 6 |
மௌ | ய் | ய 2 |
யா | யி | யீ | யு | யூ | யெ | யே | யை | யொ | யோ | யௌ | ர் | ர | ரா | ரி | ரீ | ரு | ரூ | ரெ | ரே | ரை | ரொ | ரோ | ரௌ | ல் | ல | லா | லி | லீ | லு | லூ | லெ | லே | லை | லொ | லோ | லௌ | வ் | வ 40 |
வா 20 |
வி 25 |
வீ 6 |
வு | வூ | வெ 27 |
வே 24 |
வை 7 |
வொ | வோ | வௌ | ழ் | ழ | ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ | ள் | ள | ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ | ற் | ற | றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ | ன் | ன | னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
---|
தலைசொல் | பொருள் |
---|---|
பட்டணம் | பேரூர் என்ற பொருள் இருந்தாலும், உண்மையில் இன்று சிற்றூர்களே “பட்டணம்” எனப் பெயர் பெற்றுள்ளன. நெய்தல் நிலத்து ஊர்கள் “பட்டினம்” எனப்படுமென்று தொல்காப்பிய உரையாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். [16] ஆனால் இவ்வரையறை சங்கவிலக்கியத்தில் பெரும்பாலும் தெளிவாக உருப்பெறவில்லை என்கிறார் கி.நாச்சிமுத்து.[17] இவ்வடிவமே காலப்போக்கில் பட்டணம் என்று சொல் நிலையிலும், பொருள் நிலையிலும் மாறியிருக்கிறது. ஊர்களைக் குறிப்பிடும் பொதுக்கூறாகப் பிற்காலப் பாண்டியர் காலத்தில், “பட்டணம்” பயன்பட்டிருக்கிறது. |
பட்டினப்பாக்கம் | பட்டினப்பாக்கம் என்பதில் உள்ள பட்டினம், பாக்கம் என்ற இருசொற்களும் நெய்தல் நிலத்து ஊரைக்குறிக்கும் பொதுச் சொற்கள். பூம்புகார் நகரத்தின் ஒரு பிரிவு பட்டினப்பாக்கம் என்ற பெயரையுடையதாய் இருந்தது. அக்காலத்தில் சிறந்திருந்த கடற்கரை நகரங்களின் அமைப்பைப் பண்டை இலக்கியங்கள் ஒருவாறு காட்டுன்றன. ஒவ்வொரு பெரிய கடற்கரை நகரமும் இரு பாகங்களையுடையதாய் இருந்தது. அவற்றுள் ஒருபாகம் ஊர் என்றும், மற்றொருபாகம் பட்டினம் என்றும் அழைக்கப்பட்டன. பூம்புகார் நகரத்தின் ஒரு பாகம் மருவூர்ப் பாக்கம் என்றும், மற்றொரு பாகம் பட்டினப் பாக்கம் என்றும் பெயர் பெற்றன.** 47. மி100ார 08 காமி 1, ர. $ரர்பரரகக ஜகா ற. 389. 48. ஊரும் பேரும் ரா. பி, சேதுப்பிள்ளை பக், 34, 152 இலக்கியத்தில் ஊர்ப்பெயர்கள் “ |
பட்டீச்சரம்- பழையாறைப் பட்டீச்சரம் | தேவாரத் திருத்தலங்கள் |
பதி | மக்கள் வாழ்விடம், உறைவிடம் “பதி” எனப்பட்டது. “பதியெழுவறியாப் பழங்குடிகள்” என்று சிலப்பதிகாரத்தில் இவ்வடிவம் வந்துள்ளது.[18] இவ்வடிவம் அருகியே வந்துள்ளது. |
பந்தணை நல்லூர் | பந்தணை நல்லூர் என்று இன்றும் சுட்டப்படும் இவ்வூர், தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைகிறது. அம்பிகை ஆடிய பந்து வந்து அணைந்ததால் பந்தணை நல்லூர் எனப்பெயர் பெற்றது என்பர். சம்பந்தர், அப்பர் இத்தலத்தைப் பாடியுள்ளனர். சம்பந்தர் அப்பர் இருவருமே பந்தணை நல்லூர் என்று மட்டுமே தம் பதிகத்தில் சுட்டுகின்றனர் (224). எனவே இவ்வூர் பற்றிய விளக்கம் எதுவும் தெளிவுறவில்லை. பேசக்கிழார் தம் பாடல் களில், |
பந்தர் | சங்க கால ஊர்கள் |
பனங்காட்டூர் | வன்பார்த்தான் பனங்காட்டூர் |
பனங்காட்டூர் | தேவாரத் திருத்தலங்கள் |
பனந்தாள் | பனையின் தாளில் இறைவன் எழுந்தருளியிருத்தலால் கோயில் பெயர் பனந்தாள் என்றாகி, பின்னர் ஊர்ப்பெயரும் பனந்தாளாக அமைந்தது எனத் தெரிகிறது. இன்று திருப்பனந்தாள் என்று வழங்கப்படும் தலம், தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. |
பனந்தாள் | தேவாரத் திருத்தலங்கள் |
பனம்பாரனார் | சங்க கால ஊர்கள் |
பனையூர் | திருப்பனையூர் என்ற இத்தலம் இன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. பனை காரணமாக எழுந்த இன்னொரு ஊர்ப் பெயர். தலமரமும் பனையாக அமைகிறது. திருப்பனையூரில் விருப்பன் ஆகியும் என மாணிக்கவாசகர் வாசகம் இவ்வூரைச் சுட்டுகிறது (கீர்த் -87). சம்பந்தர், சுந்தரர் இருவரும் இத்தலத்தைப் பாடுகின்றனர் |
பனையூர் | தேவாரத் திருத்தலங்கள் |
பயற்றூர் – இக்காலத்தில் திருப்பயத்தங்குடி என வழங்கப்படுகிறது | தேவாரத் திருத்தலங்கள் |
பயிர் விளைவிடங்களை ஒட்டியன | உழுது உண்ணும் வாழ்க்கை முறையினைத் தமிழர்கள் சங்க காலத்திலிருந்தே அறிந்திருக்கின்றனர். இவ்வாறு வேளாண்மை மேற்கொள்வார், நன்செய் ஆயினும், புன்செய் ஆயினும் வயல்களின் நடுவே வீடு கட்டிக் கொண்டு வேளாண்மை செய்யும் வழக்கத்தினால் பயிர் விளைவிடங்களைக் குறிப்பிடும் சொற்கள் தழுவு பெயராக ஊர்ப்பெயர்களின் பொதுக்கூறுகளாக மாறிவிட்டன. எஸ்டேட், காணி, கொம்பு, சோலை, தோட்டம், தொப்பு, பண்ணை, பற்று, வயல் என்றும் பயிர்விளைவிடப் பெயர்கள் ஊர்ப்பெயர்களின் பொதுக்கூறுகளாக அமைந்துள்ளன. |
பயிற்றூர் | திருப்பயற்றங்குடி இன்று சுட்டப்படும் இவ்வூர் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைகிறது. அப்பர் பாடல் பெற்ற தலம் இது (32) எனினும் இவர் பாடல்கள் இறையைப் புகழுகின்றனவே தவிர, : ஊர் பற்றிய தெளிவைத் தரவில்லை இருப்பினும் பயற்றூர் பயற்றங்குடி தானியத்தோடு தொடர்புடையதாக இருக்கலாம் எனத் தோன்றுகிறது. |
பரங்குன்றம்சு – திருப்பரங்குன்றம் | தேவாரத் திருத்தலங்கள் |
பரங்குன்று | பார்க்க குன்று குன்றம் |
பரங்குன்று | திருப்பரங்குன்றம் என்ற பெயரால் அழைக்கப்படும் ஊர். மதுரை மாவட்டத்தில் அமைகிறது. பண்டு தொட்டே புகழ் மிக்கது. முருகனின் அறுவடை வீடுகளுள் ஒன்று. இதனைத் திரு முருகாற்றுப்படை, |
பரங்குன்று | சங்க கால ஊர்கள் |
பராய்த்துறை | திருப்பராய்த்துறை என இன்று அழைக்கப்படும் இவ்வூர் திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது. சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற தலம். இது மாணிக்கவாசகரும் இத்துறை இறைப் பற்றி பாடுகிறார். (பராய்த்துறை மேவிய பரனே போற்றி -திருவா -போற்றித்-153) நாவுக்கரசர். இத்தலம் பற்றி பாடும் போது. |
பராய்த்துறை | தேவாரத் திருத்தலங்கள் |
பரிதி நியமம் | இன்று பருத்தியப்பர் கோயில் எனச் சுட்டப்படும் இந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைகிறது. பருதி நியமம் என்ற பெயர் சூரியன் கோயில் என்ற பொருள் கொண்டது எனவே சிவனுக்கு கோயில் எழுமுன்னே அங்கு மக்கள் சூரியனை வழிபட்டு இருக்கலாம். எனவே அப்பெயரால் அவ்வூரைக் குறிப்பிட்டு இருக்கலாம். நாளடைவில் சிவன் கோயில் செல்வாக்கு பெற அங்குள்ள கோயில் இறைவன் பரிதியப்பர் என்று சுட்டப்படுகின்றார். இன்றும் இறைவன் பெயர் பரிதியப்பர் என்ற எண்ணம் காண்கின்றோம். இப்பருதியப்பர் கோயிலே இன்று பருத்தியப்பர் கோயிலாக மருவி அமைந்து விட்டது என்பது தெளிவான உண் மையாக அமைகிறது. இக்கோயிலை, சம்பந்தரின் பாடல் புகழ்கிறது. பிற சூரியனார் கோயில் பற்றிய எண்ணமும் இது சூரியனுக்குரிய கோயிலாக இருந்திருக்கலாம் என்பதைத் தெளிவு படுத்துகிறது. |
பருப்பதம் | தேவாரத் திருத்தலங்கள் |
பருவூர்ப் பறந்தலை | சங்க கால ஊர்கள் |
பறம்பு | பறம்பு என்பது ஒரு மலையின் பெயர். அம்மலையையுடைய நாட்டிற்கும் பெயராயிற்று, பறம்பு நாடு 300 ஊர்களை உடையது. இது பாரி என்ற மன்னனின் ஆட்சியில் இருந்த நாடு. பறம்பு மலை திருப்பத்தூர் வட்டத்திலுள்ளது. மதுரைக்கு வடகிழக்கில் சுமார் பத்து மைல் தொலைவில் உள்ள திருமோகூர் என்னும் ஊரிலுள்ள ஒரு கல்வெட்டு, அவ்வூரை தென்பறம்பு நாட்டில் இருமோகூர் என்று குறிக்கிறது. எனவே திருமோகூரைச் சுற்றியுள்ள பகுதி, பாரியின் ஆட்சிக்குட்பட்ட பறம்பு நாட்டின் தென்பகுதியாய் இருக்கவேண்டும். இராமநாதபுர மாவட்டத்தின் பரமக்குடி என்னும் ஊர்ப் பெயர் பறம்புக்குடி என்னும் பெயரின் மருவிய வழக்கே என்பது உண்மையானால் பறம்பு நாட்டின் தென் எல்லையாகப் பரமக்குடியைக் கொள்ளலாம். பறம்புமலை உள்ள திருப்பத்தூர் வட்டத்திற்குத் தெற்கே சிவகெங்கை வட்டமும், அதற்கும் தெற்கே பரமக்குடி வட்டமும் உள்ளன. எனவே சங்ககாலப் பறம்புநாடு என்பது ஏறத்தாழ மதுரை மாவட்டத்து மேலூர் வட்டத்தின் கிழக்குப் பகுதியும், இராமநாதபுர மாவட்டத்துத் திருப்பத்தூர், சிவகெங்கை, பரமக்குடி வட்டங்களும் அடங்கிய நிலப்பரப்பாய் இருந்திருக்கலாம் என்று கூறுதல் பொருத்தமாகும். “நன்னன் பறம்பு” என்ற ஒரு தொடர் சங்க இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளது. நன்னனின் முக்கிய நகரமாகிய பாரம் என்ற ஊரையடுத்துள்ள பறம்பு நிலமே பறம்பு எனக் கூறப்பெற்றுள்ளது. என்ற கருத்தை நாம் ஏற்றுக் கொண்டால் பறம்பு மலையும் நாடும் பாரியின் தொடர்புடையனவேயன்றி கொண் கான நன்னனுக்கும் இந்நாட்டிற்கு ஒரு தொடர்பும் என்று துணியலாம். இன்று பிரான்மலை என்று அழைக்கப்படுகிறது. நன்னன்: “தொன்னசை சாலாமை, நன்னன் பறம்பில் |
பறம்பு | சங்க கால ஊர்கள் |
பறியலூர் | இன்று பரசலூர் என்னும் பெயரில் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைகிறது. பறியலூர் என்ற இடத்தில் உள்ள வீரட்டம் சம்பந்தர் பாடல் பெற்ற கோயில். கருப்பறியலூர் என்றதொரு தலமும் முன்பு தெரியவந்தது. பறியலூர் என்பதற்குப் பொருள் என்ன என்பது தெரியவில்லை. |
பறியலூர் வீரட்டம் | தேவாரத் திருத்தலங்கள் |
பல்குன்றக்கோட்டம் | சங்க கால ஊர்கள் |
பள்ளியின் முக்கூடல் | இன்று அரியான் பள்ளி எனச்சுட்டப்படும் இவ்வூர் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைகிறது. அம்பர் பாடல் பெற்ற இவ்வூர் பிற முக்கூடல் போன்று இனணவு காரணமாக அமைந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது எனினும் அவரது பாடல்கள் இவ்வூர் பற்றிய எந்த விளக்கத்தையும் தரவில்லை. இன்று திருவாரூர் பக்கத்தில் இவ்வூர் உள்ளது என்று மட்டுமே தெரிகிறது. |
பழனம் | திருப்பழனம் என, தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது இவ்வூர் திருவையாற்றுக்குக் கிழக்கே இரண்டு மைலில் உள்ளது. சைவ அடியார் மிகவும் விரும்பிய தலம் என்பதைப் பலரின் பாடல்களும் உணர்த்துகின்றன. சிவபெருமான் திருவிரட்டை மணிமாலையில் அதன் ஆசிரியர், |
பழனம் | தேவாரத் திருத்தலங்கள் |
பழமண்ணிப்படிக்கரை | இன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் இலுப்பைப்பட்டு என்ற பெயரில் வழங்கி வருமிடம். சுந்தரர் இத்தலம் பாடுகின்றார். எனினும் இறைப் புகழ் சுட்டப்படுகிறதே தவிர ஊர்ப்பெயர் விளக்கம் எதுவுமில்லை. |
பழமண்ணிப்படிக்கரை | தேவாரத் திருத்தலங்கள் |
பழுவூர் | திருப்பழுவூர் என்ற பெயருடன், திருச்சி மாவட்டத்தில் உள்ள ஊர் இது. கீழைப்பழுவூர் என்பதும் உண்டு |
பழுவூர் | தேவாரத் திருத்தலங்கள் |
பழையாறை | பழையாறை என்று இன்றும் சுட்டப்படும் தலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைகிறது. திருநாவுக்கரசர் பாடல் பெற்ற கோயில்களையுடையது. பழையாறையில் உள்ளதே வடதளி தவிர சத்தி முற்றம், பட்டீச்சரம் ஆகிய கோயில்களும் இங்கு உள்ளன. எனவே சத்திமுற்றம், பழையாறை வடதளி, பட்டீச் சரம் என்பன இன்று ஊர்ப்பெயர் போன்று தோன்றினும், பழையாறையின் பகுதிகள் கோயில் காரணமாகப் பெயர் பெற்ற நிலையையே இவண் காண்கின்றோம். பழையாறை என்ற ஊர் பற்றிய ஆய்வு சில எண்ணங்களைத் தருகிறது. பழைய ஆறை பழையாறை என்று ஆயிற்றா? அல்லது இப்பெயருக்கு வேறு காரணங்கள் உண்டா ? எனக் காண, சில எண்ணங்கள் தோன்றுகின்றன. சோழ மன்னர்கள் முடிசூட்டிக் கொள்ளும் நகரங்களில் இது ஒன்று எனச் சுட்டப்படுகிறது. எனினும் சங்க இலக்கியக் குறிப்புகள் ஒன்றும் இவ்வூர் பற்றிச் சுட்டவில்லை : எனவே இடைக்கால சோழர்கள் காலத்தில் தோன்றிய அல்லது முக்கியத்துவம் பெற்ற ஊராக இது இருக்க வாய்ப்பு அமைகிறது. இந்நிலையில் பழைய ஆறை என்பது பொருந்துமா ? என்பது எண்ணத்தக்கது. 1. The Cholas. it seems ruled as petty princes from Palaiyarai which is near Tanjavur. – History of Tamil Nadu – pa- 175 அடுத்து ஆறை என்பது மரூஉ என்பதும் ஆற்றூர் அதன் விரி என்பதும் அறிஞர் ஒருவர் கருத்தாக அமைகிறது. மேலும், இந்த அறிஞரே, பழையாறு என்ற ஆற்றுப் பெயர் பழைமை காரணமாக அதாவது ஆற்றின் காலப் பழமை காரணமாக ஏற்பட்ட பெயர் என்று கருதுகின்றார். எனவே பழையாறை என்பதை நோக்க, பழையாற்றூர் என்பதன் மரூஉவாக இருக்குமா எனப் பார்க்கலாம். இதற்கும் பண்டைச் சான்றுகள் இல்லை. பழையாறையில் பழையாறு ஓடியதாகத் தெரியவில்லை. இன்றும் இல்லை. திருநாவுக்கரசர் தம் தேவாரத்தில், |
பழையாறை வடதளி | தேவாரத் திருத்தலங்கள் |
பவத்திரி | பவத்திரி என்ற ஊர்ப்பெயர், சங்க இலக்கியத்தில் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே கூறப்பட்டுள்ள து. அகப்பொருட்பற்றிய பாடல்களில் ஊர்ப்பெயர் இடம்பெறும் மரபையொட்டி, தலைவியின் நலம் பாராட்டும் காலை பவகத்திரி போன்ற நலமுடையாள் எனக் கூறப்படும் நிலையில் பவத்திரி என்ற ஊர்ப்பெயர் இடம் பெற்றுள்ளது. பவ்வம் கடல்; தரம் நிலம். (தரம்சிட்டா நிலங்களின் விலை அல்லது உத்தேசமதிப்பு; தரம் தீர்வை நிலவகைக் கேற்ப விதிக்கப்பட்ட தீர்வை) தரி நன் செய் நிலம். திரம் நிலம் மேற்காணும் சொற்களின் பொருளை ஆராயும்பொழுது கடலையொட்டி, அமைந்த பவத்திரி என்னும் ஊர், கடலை யொட்டிய நிலப் பகுதியூர் அல்லது கடலையொரட்டி. நன்செய் நிலங்கள் அமைந்த ஊர் என்ற பொருளில் பவ்வத்தரம் அல்லது பவ்வத்தரி என்று பெயர் தோன்றி நாளடைவில் பவ்வத்திறி என்று ஆகி பவத்திரி எனவோ, அல்லது பவ்வத்திரம் என முதலில் பெயர் பெற்று நாளடைவில் பவ்வத்திரி என்று ஆக பவத்திரி என நிலைத்ததோ என்ற எண்ணம் தோன்றுகிறது. நெல்லூர் மாவட்டத்துக் கூடர் வட்டத்து : ரெட்டிப்பாளையமே சங்க காலப் பவத்திரியாகும். திரையர். எனப் பெற்ற தொண்டையர்கள் ஆண்ட நாட்டில் பவத்திரி என்பது சிறந்த நகரமாகத் திகழ்ந்தது என்பது இலக்கியம் தரும் செய்தி, பவத்திரி என்ற ஊர்ப்பெயர் அவ்வூரை உள்ளட.க்கியிருந்த ஒரு கோட்டத்தின் பெயராகவும் இருந்திருக்கிறது. சிறந்த நகரமாகத் திகழ்ந்த பவத்திரி இன்று தன் நலம் இழந்து, பெயர் இழந்து வேற்றுப் பெயரில் ஒரு சிற்றூராய் உள்ளது. |
பவத்திரி | சங்க கால ஊர்கள் |
பவாநி | தேவாரத் திருத்தலங்கள் |
பவானி | தேவாரத் திருத்தலங்கள் |
பாக்கம் | பாக்கம் என்னும் ஊர்ப்பெயர்ச்சொல் பட்டினப்பாக்கத்தையே குறிக்கிறது. பொதுவாகக் கடற்கரை ஊர் என்ற பொருளிலும் பாக்கம் என்ற சொல் வழங்கப் பெற்றிருக்கிறது. கடற்கரை ஊர் என்ற பொருளில், |
பாக்கம் | கடற்கரைக்குப் பக்கத்திலுள்ள ஊர்களைப் பாக்கம் என அழைத்தனர். ஆனால் ஊர் என்பது போலவே பாக்கம் என்றும் வழங்குகின்றனர். |
பாசூர் | திருப்பாச்சூர் எனச் செங்கற்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள ஊர் இது. சம்பந்தராலும், அப்பராலும் பாடல் பெற்ற இவ்வூர், சிவபெருமான் மூங்கில் அடியில் தோன்றியமையின் இப்பெயர் பெற்றது என்கின்றனர். (பாசு – முங்கில்) ஆயின் சம்பந்தர், |
பாசூர் | தேவாரத் திருத்தலங்கள் |
பாச்சிலாச்சிரமம் | தேவாரத் திருத்தலங்கள் |
பாச்சிலாச்சிராமம் | திருவாசி எனச் சுட்டப்படும் ஊர் இது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. பாச்சில் கூற்றத்து ஆச்சிராமமாதலின் பாச்சில் ஆச்சிராமம் என்று வழங்கப்படுகிறது என்ற கருத்து அமைகிறது. ஆச்சிராமம் முனிவர்களின் இருப்பிடத்தைக் குறிப்பிடும் நிலையில், இப்பெயர் அமைந்ததோ எனத் தோன்றுகிறது. சம்பந்தர், சுந்தரர் பாடிய கோயில் இங்கு உள்ளது. |
பாடலி | சங்க கால ஊர்கள் |
பாடலி | பாடலி என்னும் சொல் ஒருவகை நெல்லையும், ஒருவகைக் கொடியையும் குறிக்கும். ஆகவே நெல்வளம் மிக்க நகரம் என்ற பொருளிலோ, பாடலி என்ற கொடிவகை நிறைந்த பகுதியில் அமைந்த ஊர் என்ற பொருளிலோ ஊர்ப்பெயர் உண்டாகி இருக்கலாம். மகத தேசத்தின் தலைநகர் பாடலிபுரம். கங்கை சோணை நதிகளின் சங்கமத்தில் அமைந்தது. சோணையின் வடகரையில் அமைந்தது. பாடலி எனவும் வழங்கப்பட்டது. பாடலி, நந்தர் என்னும் சிறப்புமிக்க அரச மரபினருக்குரியது. இந்நகரில் நிதியம் ஓரிடத்தில் குழுமிக் கிடந்து பின்னர் கங்கை நீராலே முழுதும் மறைந்து போயிற்று. பாடலிப் பொன் வினைஞர் பெயர் பெற்று விளங்கினர். |
பாடி | ஊர்களைக் குறிப்பிட வழங்கிவரும் தொன்மையான வடிவங்களுள் ஒன்று “பாடி” என்பதாகும். இது சங்க இலக்கியத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. தொல்காப்பிய உரையாசிரியர்கள், முல்லை நிலத்து ஊர்கள் “பாடி” எனப்பட்டன.[19] என்கின்றனர். இவ்வரன்முறை பெரும்பாலும் தொடர்ந்து இருந்திருக்கிறது. “பாடி” என்ற பொதுக் கூறு பெற்று முடியும் ஊர்கள் இன்றும் காடு சார்ந்த பகுதிகளிலேயே உள்ளன. எடுத்துக்காட்டாக சில பாடிகள்; விளங்கம்பாடி. சிறுவாடி |
பாண்டிக்கொடுமுடி | இன்று பெரியார் மாவட்டத்தில் கொடுமுடி என்று அழைக்கப்படும் ஊர் இது. தேவார மூவர்களும் இத்தலத்து இறைச் சிறப்பைப் புகழகின்றனர். காவிரியாற்றின் கரையில் உள்ள தலம். இதன் பழம் பெயர் கறைசை, கறையூர். கொடுமுடி என்பது சங்ககாலத்தில் வாழ்ந்த மன்னன் பெயர் எனவும். அவன் ஆண்ட இடமே கொடுமுடி என்பதும், திருப்பாண்டிக் கொடுமுடி நூல்கூறும் செய்திகளாகும் (பக். 4, 6). அப்பர். சுந்தரர், சம்பந்தர் மூவரும் இத்தலத்து இறையைப் புகழ்சின்றனர். இதனைச் சம்பந்தர், |
பாதாளீச்சரம் – பாம்பணி, பாமணி ச | தேவாரத் திருத்தலங்கள் |
பாதிரி நியமம் | தேவாரத் திருத்தலங்கள் |
பாதிரிப்புலியூர் | திருப்பாதிரிப் புலியூர் என்ற தலம் இன்று திருப்பாப் புலியூர் எனச் சுட்டப்படுகிறது. தென் ஆர்க்காடு மாவட்டத்தில் உள்ளது. கடலூர் என்றும் வழங்கப்படுகிறது. சம்பந்தர் அப்பர் பாடல் பெற்ற தலம். கெடில நதிக் கரையிலே அமைந்துள்ள தலம் பாதிரிவனம் இது என்பதும், இறைவன் பாதிரி மரத்தினடி யில் தோன்றி. தவம் புரிந்த உமாதேவிக்கு வரம் கொடுத்தார் என்பதும், புலிக்கால் முனிவர் இங்கு இறைவனைப் பூசித்ததால் புலியூர் என்பதும் தோன்றி இரண்டன் சேர்க்கையால் பாதிரிப் புலியூர் என்னும் திருப்பெயர் இத்தலத்துக்கு அமைந்து விளங்கு என்பர் ஆயின் பாதிரி காரணம் என்பது தெளிவு – இன்றும் இத்தலத்திற்குரிய தலமரமாக பாதிரியே விளங்குகிறது. |
பாமுளூர் | சேரமான் பாமுளூர் எறிந்த நெய்தலங் கானலிளஞ்சேட் சென்னியை ஊன் பொதி பசுங்குடை யார் பாடியது (புறம். 203) என்ற தொடர் பாமுளூர் என்ற ஓர் ஊர்ப் பெயரை அளிக்கிறது. நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி இதை எறிந்தான் எனத் தெரிகிறது. இவ்வூர் சேரமானுடன் தொடர்புடையதாகத் தெரிவதால் இவ்வூர் சேரநாட்டைச் சேர்ந்ததாகக் கருத இடமளிக்கிறது. |
பாமுள்ளூர் | சங்க கால ஊர்கள் |
பாம்பணி மாநகர் | பாமணி, என்றும் பாம்பணி என்றும் வழங்கப்படும் இத்தலம், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. பதஞ்சலி போலப் பாம்புரு உள்ள தனஞ்செய முனிவர் வழிபட்ட தலம் என்பர்.சம்பந்தர் இக்கோயிலைப் பாடுகின்றார். கோயில் பாதாளீச்சரம் எனச் சுட்டப்படுகிறது. |
பாம்புரம் | திருப்பாம்புரம் எனச் சுட்டப்படும் இவ்வூர். தஞ்சாவூர் மாவட்டத்தில் காணப்படுகிறது. நாகராஜன் வழிபட்ட தலம். ஆகையால் இப்பெயர் பெற்றிருக்கலாம். பாம்பு புரம் பாம்புரம் ஆயிற்று எனல் பொருத்தமாக அமையும். |
பாம்புரம் | தேவாரத் திருத்தலங்கள் |
பாரத்துத் தலைவன் ஆர நன்னன் | சங்க கால ஊர்கள் |
பாரம் | சங்க கால ஊர்கள் |
பாரம் | பாரம் என்னும் ஊர் கொண் கானத்து நன்னனுக்கு உரிய தாய் இருந்திருக்கிறது; அவன் தலைநகர் என்றும் கருதப்படுகிறது. கொண்கானம், ஏழிற்குன்றம், பூழிநாடு ஆகியவற்றை உள்ளடக்கியதாய் இருந்திருக்கிறது நன்னனின் நாடு. இன்றைய. கண்ணனூருக்கு வடக்கே சுமார் 15மைல் தொலைவில் இன்றும் அதே பாரம் என்ற பெயருடன் இருப்பதாகக் கூறப்படுகிறது. “மிஞிலி” என்ற மன்னனால் காக்கப்பட்ட ஊர் என்று சங்க இலக்கியம் கூறுகிறது” |
பாற்றுறை | திருச்சி மாவட்டத்தைச் சார்ந்த ஊர் திருப்பாற்றுறை என்று வழங்கப்படுகிறது. சுாவிரி கொள்ளிடம் ஆகிய ஆறுகளுக்கு இடையில் இக்கோயில் உள்ளது என்ற குறிப்பு, இவ்விடத்திற்குரிய துறை, பெயருக்கு விளக்கம் தருகிறது. இருப்பினும் பால் என்பதற்கு மார்க்கண்டேயர் இறைவனுக்கு அபி ஷேகம் செய்வதற்குப் பால் பெருகுமாறு இறைவன் அருள் புரிந்த தலம் என்ற கதையைச் சொல்கின்றனர் மக்கள் ஞானசம்பந்தர் இதனை. பாரார் நாளும் பரவிய பாற்றுறை என்று சொல்லும்போது இது மக்கள் விரும்பி வழிபட்ட தலம் எனத் தெரிகிறது. எனவே இதுவும் பாலைத்துறை போன்று, பரவியத்துறை பரத்துறை ஆகி பாற்றுறை ஆயிற்றா ? இல்லை. பரன் துறை (சிவன் கோயில் கொண்ட இடம்) பரத்துறை ஆகி பாற்றுறை ஆயிற்றா ? என்ற எண்ணங்கள் இங்கு அமைகின்றன. சம்பந்தர், |
பாற்றுறை | தேவாரத் திருத்தலங்கள் |
பாலை | சங்க கால ஊர்கள் |
பாலைக்கௌதமனார் | சங்க கால ஊர்கள் |
பாலைத்துறை | திருப்பாலைத் துறை என்று சுட்டப்படும் ஊர், தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. முன்னர் பாலைவனமாக இருந்த காரணத்தால் பாலைத் துறை என்று பெயர் பெற்றது என்பர் பாலை என்பதற்குப் பாலைவனம் எனக் கொண்டால் துறை என்பது மக்கள் இறங்கி நீராடுதற்கேற்ற இடங்களைக் குறிக்கும் நிலையில் அமைந்து இவண் முரண்பாடாக அமைகிறது. எனவே பாலைத் துறைக்கு வேறு அடிப்படை உண்டா எனப் பார்க்க லாம். ஞானசம்பந்தர். இக்கோயிலைப் பாடும்போது ஒரே ஒரு பாடலில், |
பாலைத்துறை | தேவாரத் திருத்தலங்கள் |
பாழி | சங்க கால ஊர்கள் |
பாழி | நன்னனின் ஏழில்மலையைச் சார்ந்த கொற்றிக் கடவு என்ற அடர்ந்த காட்டின் இடையே அம்மரக்கல் “Ammarakkal“ என்ற ஒரு பெரும் பாறை உள்ளது. அங்குள்ள மக்களால் அப்பாறைப் பன்னிரண்டாண்டிற்கு ஒரு முறை வழிபடப் பெறுகிறது. இப்பாறையைச் சுற்றியுள்ள பகுதியே பாழியாக இருக்க வேண்டும் என்றும், அது நன்னனுக்குரியதாய் இருந்தது என்றும் கூறப்படுகிறது. பாழி நகரம் ஏழிற்குன்றத்தைச் சார்ந்ததாகவே இருந்திருக்க வேண்டும். பாழி நாட்டு மக்கள் சிறுகுளத்தைப் பாழி என்பார், இவ்வூரிலுள்ள குளம் மன்னனின் பொன் சேமித்து வைக்கப் பெற்றிருந்த சிறப்பினையுடையதாய் இருந்திருக்கிறது. அச்சிறப் பாலேயே நீர் நிலையின் பெயரால் இவ்வூர் “பாழி” எனப் பெயர் பெற்று இருக்கவேண்டும். வேளிர்களால் அளிக்கப்பெற்ற பொற்காசுகளை இவ்வூர்ப் பாழியில் (குளத்தில்) இட்டு வைத்து, காவற்படையை நிலையாக நிறுத்திக் காத்தான் நன்னன் எனத் தெரிகிறது. பாழி நகரமே நிலையான காவற்படையினை உடையதாக இருந்திருக்கறது. பாழிகாவல் மிக்கிருந்தது என்னும் கூற்று நன்னன் மிகுதியாகப் பொன் படைத்திருந்தான் என்பதை உணர்த்துவதாகக் கொள்ளலாம். இளம் பெருஞ்சென்னி என்ற சோழன் நன்னனின் பாழியை அழித்ததாகவும் தெரிகிறது, |
பாழி | தேவாரத் திருத்தலங்கள் |
பாழிச்சிலம்பு | சங்க கால ஊர்கள் |
பாழிப் பறந்தலை | சங்க கால ஊர்கள் |
பாவநாசம் | தேவாரத் திருத்தலங்கள் |
பிசிராந்தையார் | சங்க கால ஊர்கள் |
பிசிரோன் | சங்க கால ஊர்கள் |
பிசிர் | சங்க கால ஊர்கள் |
பிசிர் | கோப்பெருஞ் சோழனின் ஆருயிர் நண்பராகிய ஆந்தையார் என்ற சங்ககாலப் புலவர் இவ்வூரினர். “தென்னம் பொருப்பன் நன்னாட்டுள்ளும் பிசிரோன்” என்ற கோப்பெருஞ் சோழனின் கூற்று ‘பிசர்’ என்னும் ஊர் பாண்டி நாட்டது என்பதைக் காட்டுகிறது. இப்பொழுது இவ்வூர் இராமநாதபுரம் மாவட்டதில்க் பிசிர்க் குடி என்று வழங்கப்பெறுவதாகத் தெரிகிறது.” பிசிர் என்ற சொல்லுக்கு நீர்த்துளி அல்லது ஊற்றுநீர் என்று பொருள் இருப்பதால் நல்ல ஊற்றுநீர் கடைக்கும் ஊராய் இருந்து, நீர்நிலையான் இவ்வூர் “பிசிர்” எனப் பெயர் பெற்றதா என்ற கருத்து மேலும் ஆய்வினாலும் உறுதியாக வேண்டும். நற்றிணையில் 61 ஆம் பாடலும், அகநானூற்றில் 308 ஆம் பாடலும், புறநானூற்றில் 67, 184, 191, 212 ஆகிய பாடல்களும். இவ்வூரைச் சார்ந்த புலவர் பிசிராந்தையார் பாடியவை. “பெருங்கோக் கள்ளி கேட்க, ‘இரும்பிசிர் |
பிடவூர் | சங்க கால ஊர்கள் |
பிடவூர் | பிடவு என்பது ஒருவகை மரம். அம் மரத்தால் பிடவூர் என்ற பெயர் ஊர்ப்பெயராக அமைந்திருக்கலாம். ‘சோழநாட்டுப் பிடவூர் கிழான் மகன் பெருஞ்சாத்தனை மதுரை நக்கீரர் பாடியபாடல்’ என்ற தொடர் இவ்வூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன் என்ற வள்ளல் என்று தெரிகிறது. பிடவூர் சோழ நாட்டு ஊர்களுள் ஒன்று எனத் தெரிகிறது. |
பிரம்மபுரம் சீர்காழி | தேவாரத் திருத்தலங்கள் |
புகலூர் | திருப்புகலூர் எனச் சுட்டப்படும் ஊர், தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று காணப்படுகிறது. அக்கினி பூசித்த காரணத்தால் இத்தலம் அக்கினீசம் என்றும், ஸ்ரீவாகீசமூர்த்திகள் சரணம் அடைந்த காரணத்தால் சரண்யபுரம் என்றும் பெயர் கொண்டு விளங்குகிறது. ஸ்தல விருட்சம புன்னை மரம் ஆனமையின் புன்னைவனம் எனவும் அழைக்கப்படுகிறது என்ற எண்ணம் இது தொடர்பானது. புகல் என்பதற்கு விருப்பம், இருப்பிடம், சரண் போன்ற பல பெயர்கள் தமிழ் லெக்ஸிகனில் அமைகின்றன. எனவே இறைவன் விரும்பி அமர்ந்த ஊர் அல்லது மக்கள் விரும்பிய இடம், அல்லது இறைவனிடம் மக்கள் புகல் அடையும் அல்லது அடைந்த ஊர் என்ற நிலையில் பெயர் அமைந்ததா என நோக்கலாம். எனினும், திருஞானசம்பந்தர் அருளிய பதிசுமாகிய திருவூர்க் கோவையில் துலைபுகலூர் அகலாதிவை காதலித்தவன் அவன் சேர் பதியே (175-5) என்று அருளியிருப்பதால். ஏதோ வரலாற்றை உட் கொண்டு அவ்வாறு கூறியிருக்க வேண்டும். துலைபுகல் என்பது துலாபாரம் புகுதல் என்று பொருள் படும் ? என்ற எண்ணம் நோக்க இவ்வூர்ப் பெயருக்குப் பிற ஏதோ காரணம் இருந்திருக்கிறது என்பது புலனாகிறது. தேவார மூவராலும் போற்றப்பட்ட சிறப்புடையது இவ்வூர் கோயில், நாவுக்கரசர் திருப்புகலூர் என்று சுட்டுவது டன் பூம்புகலூர் என்றும் இதனை இயம்புகின்றார். ” புள் ளெலாம் சென்று சென்று சேரும் பூம்புகலூர் என்கின்றார் சுந்தரர் (34-8). பூம்பொய்கை சூழ்ந்த புகலூர் என்பது சம்பந்தர் கூற்று (251-8). சேக்கிழார். புண்டரிகத் தடஞ்சூழ் பழனப்பூம் புகலூர் தொழ (487) என ஞானசம்பந்தர் செல்லும் தன்மை இயம்புகின்றார். பக்தி காரணமாக இது பெரும் சிறப்பு, பின்னர் பெற்றது என்பதையே இதனைப்பற்றிய பெரியபுராண எண்ணங் கள் உணர்த்துகின்றன. கோயில் மட்டுமல்லாது புகலூர் இங்குள்ள வர்த்தமானீச்சுரம் என்ற கோயிலும் சம்பந்தர் பாடல் பெற்ற சிறப்புடையது (228). வர்த்தமானீச்சுரம் என்ற பெயரை கொண்டே இது சமணக் கோயில் என்பதை அறியலாம் என்பர். |
புகலூர் | தேவாரத் திருத்தலங்கள் |
புகலூர் வர்த்தமானீச்சரம் | தேவாரத் திருத்தலங்கள் |
புகார் | பார்க்க காவிரிப்பூம்பட்டினம் |
புகார் | சங்க கால ஊர்கள் |
புக்கொளியூர், திருப்புக்கொளியூர்(அவிநாசி) | தேவாரத் திருத்தலங்கள் |
புஞ்சை | புன்செய் நிலங்கள் நிறைந்த இடம். எடுத்துக்காட்டு காட்டுப் புஞ்சை |
புட்குழி | புலங்கெழு பொருநீர்ப் புட்குழிபாடும் (நாலா-11 15) |
புட்பகம் | மூக்கிரட்டை என்ற ஒருவகைக் கொடி புட்பகம் என்று பெயருடையது. இந்தத் தாவரத்தால் பெற்றது புட்பக நகரம். போலும். புட்பகம் என்பது உதயணனுக்குரிய பெரிய நகரங்களுள் ஓன்று. சேனைகளுடனிருந்து இதனைப் பாதுகாத்து வந்த இடவகனுக்கு உதயணனால் விருத்தியாகக் கொடுக்கப்பெற்றது. |
புத்தூர் | திருப்பத்தூர் என்று வழங்கப்படும் ஊர் இராமநாதபு மாவட்டத்தில் உள்ளது. கோயில் திருத்தளி என்று சுட்டப்படுகிறது. புதியக் குடியிருப்புப் பகுதி என்ற அடிப்படையில் பெயர் பெற்ற நிலையை இவ்வூர்ப் பெயர் தெளிவாகக் காட்டுகிறது. |
புத்தூர்- புத்தூர் | தேவாரத் திருத்தலங்கள் |
புனல் நாடு | சங்க கால ஊர்கள் |
புனவாயல் | புனவாசல் என இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளது இவ்வூர். சம்பந்தரும், சுந்தரரும் இத்தலத்தைப் பாடியுள்ளனர். |
புனவாயில் | தேவாரத் திருத்தலங்கள் |
புன்கூர் | திருப்புன்கூர் என்ற ஊர். இன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. புங்க மரம் மிகுதி காரணமாகப் பெயர் பெற்ற ஊர் புங்கூர், புன்கூராக வழங்குகிறது. தலமரமும் புங்கமரமாக அமைகிறது. தேவார மூவர் பாடல் பெற்றமை இதன் சிறப்பு தரும். திருநாளைப் போவார் வணங்குவதற்காக, நந்தியை இறைவன் விலகச் செய்த தலம் இது. செழும் பொழில் திருப் புன்கூர், பூம்பொழில் திருப்புன்கூர் என்று சுந்தரர் தம்பாக்களில் தனைச் சுட்டுகின்றார் (55). சம்பந்தர். |
புன்கூர் | தேவாரத் திருத்தலங்கள் |
புன்றாளக நாடு | புன்றாளகம் என்பது இலாவாண நகரத்திற்கும் மகதத்திற்கும் இடையேயுள்ள நாடு. |
புரம் | குடியிருப்பினைக் குறித்து வரும் சொல் சம்ஸ்கிருதச் சொல் “புரம்” ஆகும். நாட்டின் தலைநகர் “புரம்” எனப்பட்டதாகச் சூடாமணி நிகண்டு கூறுகின்றது.[20] |
புரி | “புரம்” என்ற பொதுக்கூற்றின் பொருளையே இவ்வடிவமும் கொண்டிருக்கின்றது. இவ்வடிவம் பெரிய ஊர்களையும் இராசதானிகளையும் குறித்து வருமென்று அகராதியும் [23] சூடாமணி நிகண்டும் [24] குறிப்பிட்டாலும், இது சாதாரண ஊர்களின் பெயரில்தான் வந்துள்ளது. இதன் வருகை “புரம்” என்ற வடிவத்துடன் ஒப்பிடும் பொழுது மிகவும் குறைவாகும். |
புறந்தை | சங்க கால ஊர்கள் |
புறம்பயம் | இப்பெயரிலேயே இன்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. பிரளயத்திற்குப் புறம் பாய் இருந்தமையால் இப்பெயர் பெற்றது என்பர். மூவர் பாடலும் பெற்ற நிலை இங்குள்ள சிவன் கோயில் சிறப்பைத் தெரிவிக்கும். இதனையே சம்பந்தரும், அடியார் வழிபாடு ஒழியாத்தென் புறம்பயம் எனச் சுட்டு கின்றார் (375-8). இதன் செழிப்பைச் சுந்தரர், |
புறம்பயம் | தேவாரத் திருத்தலங்கள் |
புறவார் பனங்காட்டூர் | திருப்பனங்காடு என்று இன்று சுட்டப்படும் தலம் வடஆர்க்காடு மாவட்டத்தில் அமைந்துள்ளது. பனைமரக்காடு காரணமாகம் பெயர் பெற்றது என்பது தெளிவு. தலமரமும்பனை இங்கு யாக அமைகிறது, சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம். |
புறவார்பனங்காட்டூர்நடுநாடு | தேவாரத் திருத்தலங்கள் |
புற்குடி | புற்குடி என்ற பெயர், திருநாவுக்கரசரால், தமது திருத் தாண்டகப் பகுதியுள் சுட்டப்படுகிறது. புற்குடி பாகுடி (285-3) எனச் சுட்டிச் செல்கின்றார் இவர். பிற எண்ணங்கள் தெளிவாகவில்லை. சிவன் கோயில் தலம் என்பது தெளிவு. குடியிருப்புப் பகுதி என்பது குடி என்ற பெயர் கொண்டு சுட்டலாம். புல் மிகுதியான காரணத்தால் புல்குடி புற்குடி ஆகியிருக்கலாமோ எனவும் நோக்கலாம். |
புலிமேடு | வேலூருக்குத் தென்மேற்கான உசினிபாது பேட்டைக்கு மேற்கு |
புலியூர் | குட்ட நாட்டு ஊரான இது, திருமால் கோயில் கொண்ட ஊர். நம்மாழ்வார் பாடல்கள் கொண்டது. |
புலியூர் ( திருஎருக்கத்தம் புலியூர்)நடு | தேவாரத் திருத்தலங்கள் |
புலியூர் (ஓமாம்புலியூர்) | தேவாரத் திருத்தலங்கள் |
புலியூர் (பெரும்புலியூர்) | தேவாரத் திருத்தலங்கள் |
புலியூர்- திருப்பாதிரிப்புலியூர் | தேவாரத் திருத்தலங்கள் |
புல்லாணி | திருப்புல்லாணி என்று சுட்டப்படும் ஊர், இராமநாதபுர மாவட்டத்தில் உள்ளது. ராமன் புல்லணைமேற் கிடந்து வருணனை வேண்டிய தலம்’ தான் திருப்புல்லணை. அதனையே திருப்புல்லாணி என்கிறார்கள் என்ற எண்ணம் இடப்பெயர்க் காரணமாக அமைகிறது. இன்றும் தர்ப்பையில் சயனக் கோல மாக இருக்கிறார். புல்லாணி போன்றே இதை அடுத்துக் காணப் படும் தேவி பட்டணம். நவபாஷாணம் போன்றவையும் இராமர் வரலாற்றொடு இணைந்ததாகக் கருதப்படுகிறது. திருமங்கை யாழ்வார் புல்லாணி இராமனை மிகச் சிறப்பாகப் பாடும் நிலை யில் அமையும், |
புல்லாற்றூர் | எயிற்றியனார் என்ற சங்ககாலப்புலவர் இவ்வூரைச் சார்ந்தவர். ஆகவே புல்லாற்றூர் எயிற்றியனார் எனப் பெயர் பெற்றார்: இவர் பாடிய புறப்பாடல் மூலம் கோப்பெருஞ்சோழன் தன் மக்கள் மீது போருக்குச் சென்றதாகத் தெரிகிறது. புல்லாற்றூர் எயிற்றியனார் அவ்வாறு, போர் மேல் சென்றானைச் சந்து செய்ததாகத் தெரிகிறது. இவ்வூரின் வழிகளில் புலிகளின் நடமாட்டம் அதிகமாக இருந்தது, அதைக் குறிக்கும் புல்லாறு எனத் தொடரால் பெயர், பெற்ற ஊராக இருந்து புல்லாற்றூர் எனப்பெற்றதோ என எண்ணவும் இடமளிக்கிறது. (புல் புலி) ஆற்றங்கரையின் ஊராக இருந்து ஆற்றூர் எனப் பெயா் பெற்றிருக்கலாம். |
புளிங்குடி | இன்று புளியங்குடி என்று வழங்கப்படும் ஊர், திருநெல்வேலி மாவட்டத்தில் அமைகிறது. திருமால் கிடந்த நிலையில் கோலம் கொண்ட கோயில் இங்கு அமைகிறது. புளி’ தாவரம் குறித்து அமைந்த சிறப்பு விகுதியாக அமைகிறது. எனவே புளியமரங்கள் நிறைந்த அழகிய குடியிருப்புப் பகுதி என்று இப்பெயர்க் காரணம் அமைகிறது. நம்மாழ்வார் இத் தலத்து இறைவனைப் பாடுகின்றார்.இவரது கிடந்த கோலத்தை |
புள்ளமங்கை | இன்று பசுபதிக் கோயில் எனச் சுட்டப்படும் இவ்விடம் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. |
புள்ளமங்கை | தேவாரத் திருத்தலங்கள் |
புள்ளம் பூதங்குடி | திருமங்கை ஆழ்வார் பாடிய பத்துப் பாசுரங்கள் இங்குள்ள திருமால் குறித்து அமைகின்றன. இப்பாடல்கள் மிகச் சிறப்பாக இங்குள்ள இயற்கைச் செழிப்பைச் சித்திரிக்கின்றன. |
புள்ளிருக்கு வேரூர் | இன்று வைத்தீஸ்வரன் கோயில் எனச் சுட்டப்படும் தலம். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. சம்பந்தராலும் அப்பராலும் பாடல் பெற்ற தலம் இது. சிவன் பெயரான வைத்தீஸ்வரன் என்ற பெயர் கோயிலுக்கு அமைந்து, பின்னர் ஊர்ப்பெயராகக் செல்வாக்குப் பெற்றுள்ளது. புள் – சம்பாதி, ஜடாயு, இருக்கு. வேதம், வேள், முருகன் ஆகியோர் வழிபட்ட தலமாதலின் இப் பெயர் பெற்றது என்பர் எனினும் புள்களின் மிகுதி காரணமாக இப்பெயர் அமைந்திருக்க வேண்டும் என்பதே பொருத்தமாக அமைகிறது. மேலும் சடாயு வழிபட்டதால் சடாயுபுரி’ என்ற பெயரும், கந்த பெருமான் வழிபட்டதால் கந்தபுரி என்ற பெய ரும், சூரியன் வழிபட்டதால் பரிதிபுரி என்ற பெயரும், அங் காரகன் வழிபட்டதால் அங்காரக்கபுரம் என்ற பெயரும் வழங் கப்பட்டுள்ளன எனவும் தெரிகிறது. |
புள்ளிருக்குவேளூர் | தேவாரத் திருத்தலங்கள் |
பூச்சாற்றூர் | சங்க கால ஊர்கள் |
பூஞ்சாற்றூர் | பூஞ்சாற்றூர் என்னும் பெயருடைய இவ்வூர் சோழநாட்டில் முடி கொண்டான் ஆற்றங்கரையில் உளதென்பர். சாறு என்றால் விழா என்று பொருள் உள்ளது. ஒருவேளை விழாக்கள் நிறைந்த ஊர் என்னும் பொருளில் விழாக்கள் கொண்டாடப் பெறும் ஊர் என்னும் பொருளில் சாற்றூர் எனப் பெயர் பெற்று பூம் என்ற முன் ஒட்டுடன் இணைந்து பூஞ் சாற்றூர் எனப் பெயர் பெற்றிருக்கலாம். கெளணியன் விண்ணந்தாயன் என்னும் அந்தணன் பூஞ்சாற்றூரைச் சார்ந்தவன். இவனை ஆவூர் மூலங்கிழார் பாடியுள்ளார். |
பூண்டி | குடியிருப்பிடம் “பூண்டி” எனப்படுகிறது. “சூழ்ந்து கொள்ளுதல்” என்னும் வினையடிப்படையில் இச்சொல் தோன்றியிருக்கிறது.[25] கி.பி. 9 ஆம் நூற்றாண்டில் “பூண்டி” என்ற வழக்கு இருந்திருப்பதை, “முடுகு நாறிய வடுகர் வாழ் முருகன் பூண்டி” என்னும் சுந்தரரின் பாடலடிகள் உணர்த்துகின்றன.[26] சிற்றூர்களைக் குறிப்பிடும் பல சொற்களில் பூண்டி என்பதுவும் ஒன்றெனச் சூடாமணி நிகண்டும் சேந்தன் திவாகரமும் குறிப்பிடுகின்றன. [27] |
பூண்டி, முருகன்பூண்டி(திருமுருகன்பூண்டி) | தேவாரத் திருத்தலங்கள் |
பூழிநாடு | சங்க கால ஊர்கள் |
பூழியூர் | தம் தேவாரப் பாடல்களில், சம்பந்தர் பூழியூர் பற்றிச் சுட்டுகின்றார் (175-8). பிற எண்ணங்கள் தெளிவில்லை. |
பூவணம் | திருப்பூவணம் என்று மதுரை மாவட்டத்தில் காணப்படும் தேவார மூவராலும் போற்றப்படுகிறது. மாணிக்கவாசகரும் இதனை, |
பூவணம் | தேவாரத் திருத்தலங்கள் |
பூவனூர் | பூவனூர் என்ற தலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. பாமணி ஆற்றின் கரையில் உள்ள தலம் சுக முனிவர் மலர் வனம் வைத்து வழிபட்டு அருள் பெற்ற தலம். அப்பர், இங்குள்ள சிவனைப் போற்றும்போது. |
பூவனூர் | தேவாரத் திருத்தலங்கள் |
பெண்ணாடம் | தேவாரத் திருத்தலங்கள் |
பெருங்குன்றார் கிழார் | சங்க கால ஊர்கள் |
பெருங்குன்றூர் | சங்க கால ஊர்கள் |
பெருங்குன்றூர் | நில அமைப்பால் பெயர் பெற்ற ஊராக இருக்கலாம். பெருங் குன்றில் அமைந்த ஊர் பெருங்குன்றூர் ஆயிற்று போலும், கிழார் என்னும் சங்ககாலப் புலவர் இவ்வூரினர். ஆகவே பெருங்குன்றூர் கிழார் எனப் பெயர் பெற்றிருத்தார். பதிற்றுப் பத்தில் ஒன்பதாம் பத்தையும், குறுந்தொகையில் 338. ஆம் பாடலையும், புறநானூற்றில் 147, 210, 211, 26,318 ஆகிய பாடல்களும் பாடிய கிழார் என்னும் புலவர் இவ்வூரினராகிய பெருங்குன்றூர் கிழாரே. |
பெருந்துறை – திருப்பந்துறை பேணுபெருந்துறைகாவிரியின் தென்கரை | தேவாரத் திருத்தலங்கள் |
பெருமங்கலம் | சேக்கிழார் ஏயர்கோன் நாயனார் வரலாற்றில், |
பெருமாவிலங்கை | சங்க கால ஊர்கள் |
பெருமிழலை | மிழலை நாட்டு மிழலை வெண்ணி நாட்டு மிழலை எனத் திருநாட்டுத் தொகையுள், சுந்தரர் குறிப்பிடுகின்றார். பெரிய புராணத்தில், |
பெரும்புலியூர் | திருப்பெரும்புலியூர் என்று தஞ்சாவூர் மாவட்டத்தில் அமையும் ஊர் இது. வியாக்கிர பாதர் (புலிக்கால் முனிலர்) வழிபட்ட தலமாகும் சம்பந்தர் பாடல் அமைந்த இவ்வூர் பற்றிய செய்திகள் தெளிவாகவில்லை. எனினும், திருவையாற்றிற்குப் பக்கத்தில் காவிரியின் வடகரையில் உள்ளது என்பது மட்டும் தெரிகிறது. |
பெருவாயில் | சங்க கால ஊர்கள் |
பெருவேளூர் | காட்டூர் ஐயன்பேட்டை என்று இவ்வூர் இன்று அழைக்கப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. |
பேணு பெருந்துறை | இன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் அமையும் ஊர். திருப்பந்துறை என்று வழங்கப்படுகிறது. சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் துறை காரணமாகப் பெருந்துறை பெயர் பெற்றது. கோயில் காரணமாகப் பெருந்துறை எனச்சுட்டப்பட்டிருக்கலாம். மேலும் பிற பெருந்துறை,யினின்றும் தனித்துச் சுட்ட, சம்பந்தர் பாடலடியான பேணு பெருந்துறை என்பதில் உள்ள பேணு’ என்ற அடையை இணைத்திருக்கலாம். |
பேராவூர் | திருநாவுக்கரசர் சிவன் கோயில் தலமாகச் சுட்டும் ஊர் இது (285-4). |
பேரூர் | மேலைச் சிதம்பரம் என வழங்கப்படும் தலம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ளது. நொய்யலாறு இதன் அருகில் உள்ளது. திருநாவுக்கரசர் தம் தேவாரத்தில் (265-8) இதனைக் குறிப்பிடுகின்றார். பெரிய குடியிருப்புப் பகுதி என்ற நிலையில் இப்பெயர் அமைந்திருக்கலாம். |
பேரெயில் | சங்க கால ஊர்கள் |
பேரெயில் | இன்று ஓகைப் பேரையூர் என்றும், வங்காரப் பேரையூர் என்றும், தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஊர் பெரிய எயில் என்ற பொருள் பொருத்தமாகலாம். அப்பர் இங்குள்ள இறையை, |
பேரெயில் | தேவாரத் திருத்தலங்கள் |
பேர்நகர் | இன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் சோவிலடி எனச் சுட்டப்படும் ஊர் இது. சங்ககாலம் தொட்டே பெரும்புகழ் பெற்று விளங்கும் இவ்வூரின் அன்றைய பெயரைப் பேர்ப்புறம் என சங்க இலக்கியங்களும் திருப்பேர்த் திருப்புறம் என சாசனங்களும் சுட்டுகின்றன. சோழன் செங்கணானுக்கும், சேரமான் கணைக்கால் இரும்பொறைக்கும் போர்மூண்ட களம் திருப்பேர்ப் புறம் எனத் தெரிகிறது. இவ்விடம் திருமால் கோயிலாலும், சிவன் கோயிலாலும் சிறப்பு பெற்றமையும் தெரிகிறது. |
பைஞ்ஜீலி | திருப்பைஞ்ஜீலி எனச் சுட்டப்படும் தலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. மூவர் தேவாரமும் இத்தலத்திற்கு அமைகிறது. நீலி என் பதை வாழையென ரா.பி சேதுப்பிள்ளை பொருள் கொள்ள, கி. நாச்சிமுத்து அதனை மறுக்கிறார். |
பைஞ்ஞீலி | தேவாரத் திருத்தலங்கள் |
பொதினி | சங்க கால ஊர்கள் |
பொதினி | பார்க்க ஆவினன்குடி. |
பொதியில் | சங்க கால ஊர்கள் |
பொருந்தில் | பொருந்திய (நெருங்கிய) இல்நிறைந்த ஊர் பொருந்தில் எனப் பெயர் பெற்றது போலும். அல்லது அக்கம்பக்கது ஊரினரின் வழக்குகளைத் தீர்த்து வைப்போரின் பொருந்தவைப்போரின் இல் அமைந்திருந்த ஊர் என்னும் பொருளில் பொருந்தில் எனப் பெயர் பெற்றதோ என்றும் எண்ணலாம். இளங்கீரனார் என்ற சங்ககாலப் புலவர் இவ்வூரினர். ஆகவே பொருந்தில் இளங்கீரனார் எனப்பெயர் பெற்றிருந்தார். புறநானூற்றில் 53 ஆம் பாடலைப் பாடியவர் இவ்வூர்ப் புலவர் பொருந்தில் இளங்கீரனாரே. |
பொறையாறு | சங்க கால ஊர்கள் |
பொறையாறு | தஞ்சைமாவட்டத்தில் கீழைக்கடற்கரையில் தரங்கம்பாடிக் கருகில் பொறையாறு என்னும் ஊர் உள்ளது. கல்லாடனார் என்ற சங்ககாலப் புலவரால் பாடப்பெற்ற பொறையாற்றுக் கிழான் என்பவன் பொறையாற்றின் தலைவன் போலும். அவன் ‘பெரியன்’ என்றே குறிக்கப் பெறுகிறான். வலிமை என்னும் பொருளுடைய பொறை என்னும் சொல்லடியாக இவ்வூர்ப்பெயர் பொறையாறு எனப்பட்டதோ என்றும் எண்ண இடமளிக்கிறது. ஊர்த்தலைவன் வலிமையுள்ள ஒரு பெருந்தலைவனாக இருந்து அவன் வலிமை காரணமாகவே அவனது ஊரும் பெயர் பெற்றதோ எனவும் கருதத் தோன்றுகிறது. |
பொறையாற்றுக்கிழான் | சங்க கால ஊர்கள் |
போஒர் | சங்க கால ஊர்கள் |
போஒர் கிழவோன் | சங்க கால ஊர்கள் |
போதனபுரம் | போதனபுரம் என்னும் நகரம் மிலைச்சன் என்னும் அரசனுக்குரியது. |
போந்தை | சங்க கால ஊர்கள் |
போர்ப்புறம் | சங்க கால ஊர்கள் |
போர்வை | சங்க கால ஊர்கள் |