ஃ | அ 87 |
ஆ 48 |
இ 47 |
ஈ 6 |
உ 15 |
ஊ 6 |
எ 18 |
ஏ 11 |
ஐ 4 |
ஒ 8 |
ஓ 4 |
ஔ | க் | க 99 |
கா 32 |
கி 3 |
கீ 1 |
கு 61 |
கூ 10 |
கெ 1 |
கே 3 |
கை 3 |
கொ 24 |
கோ 39 |
கௌ | ங் | ங | ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ | ச் | ச 10 |
சா 9 |
சி 21 |
சீ | சு 2 |
சூ | செ 17 |
சே 8 |
சை | சொ | சோ 9 |
சௌ | ஞ் | ஞ | ஞா | ஞி | ஞீ | ஞு | ஞூ | ஞெ | ஞே | ஞை | ஞொ | ஞோ | ஞௌ | ட் | ட | டா | டி | டீ | டு | டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ | ண் | ண | ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ | த் | த 23 |
தா 1 |
தி 22 |
தீ | து 11 |
தூ 4 |
தெ 7 |
தே 4 |
தை | தொ 5 |
தோ | தௌ | ந் | ந 31 |
நா 24 |
நி 6 |
நீ 11 |
நு | நூ | நெ 22 |
நே 5 |
நை | நொ 1 |
நோ | நௌ | ப் | ப 43 |
பா 33 |
பி 7 |
பீ | பு 39 |
பூ 10 |
பெ 11 |
பே 7 |
பை 2 |
பொ 7 |
போ 6 |
பௌ | ம் | ம 40 |
மா 25 |
மி 3 |
மீ 2 |
மு 28 |
மூ 4 |
மெ 1 |
மே 1 |
மை 5 |
மொ | மோ 6 |
மௌ | ய் | ய 2 |
யா | யி | யீ | யு | யூ | யெ | யே | யை | யொ | யோ | யௌ | ர் | ர | ரா | ரி | ரீ | ரு | ரூ | ரெ | ரே | ரை | ரொ | ரோ | ரௌ | ல் | ல | லா | லி | லீ | லு | லூ | லெ | லே | லை | லொ | லோ | லௌ | வ் | வ 40 |
வா 20 |
வி 25 |
வீ 6 |
வு | வூ | வெ 27 |
வே 24 |
வை 7 |
வொ | வோ | வௌ | ழ் | ழ | ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ | ள் | ள | ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ | ற் | ற | றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ | ன் | ன | னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
---|
தலைசொல் | பொருள் |
---|---|
பாக்கம் | பாக்கம் என்னும் ஊர்ப்பெயர்ச்சொல் பட்டினப்பாக்கத்தையே குறிக்கிறது. பொதுவாகக் கடற்கரை ஊர் என்ற பொருளிலும் பாக்கம் என்ற சொல் வழங்கப் பெற்றிருக்கிறது. கடற்கரை ஊர் என்ற பொருளில், |
பாக்கம் | கடற்கரைக்குப் பக்கத்திலுள்ள ஊர்களைப் பாக்கம் என அழைத்தனர். ஆனால் ஊர் என்பது போலவே பாக்கம் என்றும் வழங்குகின்றனர். |
பாசூர் | திருப்பாச்சூர் எனச் செங்கற்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள ஊர் இது. சம்பந்தராலும், அப்பராலும் பாடல் பெற்ற இவ்வூர், சிவபெருமான் மூங்கில் அடியில் தோன்றியமையின் இப்பெயர் பெற்றது என்கின்றனர். (பாசு – முங்கில்) ஆயின் சம்பந்தர், |
பாசூர் | தேவாரத் திருத்தலங்கள் |
பாச்சிலாச்சிரமம் | தேவாரத் திருத்தலங்கள் |
பாச்சிலாச்சிராமம் | திருவாசி எனச் சுட்டப்படும் ஊர் இது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. பாச்சில் கூற்றத்து ஆச்சிராமமாதலின் பாச்சில் ஆச்சிராமம் என்று வழங்கப்படுகிறது என்ற கருத்து அமைகிறது. ஆச்சிராமம் முனிவர்களின் இருப்பிடத்தைக் குறிப்பிடும் நிலையில், இப்பெயர் அமைந்ததோ எனத் தோன்றுகிறது. சம்பந்தர், சுந்தரர் பாடிய கோயில் இங்கு உள்ளது. |
பாடலி | சங்க கால ஊர்கள் |
பாடலி | பாடலி என்னும் சொல் ஒருவகை நெல்லையும், ஒருவகைக் கொடியையும் குறிக்கும். ஆகவே நெல்வளம் மிக்க நகரம் என்ற பொருளிலோ, பாடலி என்ற கொடிவகை நிறைந்த பகுதியில் அமைந்த ஊர் என்ற பொருளிலோ ஊர்ப்பெயர் உண்டாகி இருக்கலாம். மகத தேசத்தின் தலைநகர் பாடலிபுரம். கங்கை சோணை நதிகளின் சங்கமத்தில் அமைந்தது. சோணையின் வடகரையில் அமைந்தது. பாடலி எனவும் வழங்கப்பட்டது. பாடலி, நந்தர் என்னும் சிறப்புமிக்க அரச மரபினருக்குரியது. இந்நகரில் நிதியம் ஓரிடத்தில் குழுமிக் கிடந்து பின்னர் கங்கை நீராலே முழுதும் மறைந்து போயிற்று. பாடலிப் பொன் வினைஞர் பெயர் பெற்று விளங்கினர். |
பாடி | ஊர்களைக் குறிப்பிட வழங்கிவரும் தொன்மையான வடிவங்களுள் ஒன்று “பாடி” என்பதாகும். இது சங்க இலக்கியத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. தொல்காப்பிய உரையாசிரியர்கள், முல்லை நிலத்து ஊர்கள் “பாடி” எனப்பட்டன.[19] என்கின்றனர். இவ்வரன்முறை பெரும்பாலும் தொடர்ந்து இருந்திருக்கிறது. “பாடி” என்ற பொதுக் கூறு பெற்று முடியும் ஊர்கள் இன்றும் காடு சார்ந்த பகுதிகளிலேயே உள்ளன. எடுத்துக்காட்டாக சில பாடிகள்; விளங்கம்பாடி. சிறுவாடி |
பாண்டிக்கொடுமுடி | இன்று பெரியார் மாவட்டத்தில் கொடுமுடி என்று அழைக்கப்படும் ஊர் இது. தேவார மூவர்களும் இத்தலத்து இறைச் சிறப்பைப் புகழகின்றனர். காவிரியாற்றின் கரையில் உள்ள தலம். இதன் பழம் பெயர் கறைசை, கறையூர். கொடுமுடி என்பது சங்ககாலத்தில் வாழ்ந்த மன்னன் பெயர் எனவும். அவன் ஆண்ட இடமே கொடுமுடி என்பதும், திருப்பாண்டிக் கொடுமுடி நூல்கூறும் செய்திகளாகும் (பக். 4, 6). அப்பர். சுந்தரர், சம்பந்தர் மூவரும் இத்தலத்து இறையைப் புகழ்சின்றனர். இதனைச் சம்பந்தர், |
பாதாளீச்சரம் – பாம்பணி, பாமணி ச | தேவாரத் திருத்தலங்கள் |
பாதிரி நியமம் | தேவாரத் திருத்தலங்கள் |
பாதிரிப்புலியூர் | திருப்பாதிரிப் புலியூர் என்ற தலம் இன்று திருப்பாப் புலியூர் எனச் சுட்டப்படுகிறது. தென் ஆர்க்காடு மாவட்டத்தில் உள்ளது. கடலூர் என்றும் வழங்கப்படுகிறது. சம்பந்தர் அப்பர் பாடல் பெற்ற தலம். கெடில நதிக் கரையிலே அமைந்துள்ள தலம் பாதிரிவனம் இது என்பதும், இறைவன் பாதிரி மரத்தினடி யில் தோன்றி. தவம் புரிந்த உமாதேவிக்கு வரம் கொடுத்தார் என்பதும், புலிக்கால் முனிவர் இங்கு இறைவனைப் பூசித்ததால் புலியூர் என்பதும் தோன்றி இரண்டன் சேர்க்கையால் பாதிரிப் புலியூர் என்னும் திருப்பெயர் இத்தலத்துக்கு அமைந்து விளங்கு என்பர் ஆயின் பாதிரி காரணம் என்பது தெளிவு – இன்றும் இத்தலத்திற்குரிய தலமரமாக பாதிரியே விளங்குகிறது. |
பாமுளூர் | சேரமான் பாமுளூர் எறிந்த நெய்தலங் கானலிளஞ்சேட் சென்னியை ஊன் பொதி பசுங்குடை யார் பாடியது (புறம். 203) என்ற தொடர் பாமுளூர் என்ற ஓர் ஊர்ப் பெயரை அளிக்கிறது. நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி இதை எறிந்தான் எனத் தெரிகிறது. இவ்வூர் சேரமானுடன் தொடர்புடையதாகத் தெரிவதால் இவ்வூர் சேரநாட்டைச் சேர்ந்ததாகக் கருத இடமளிக்கிறது. |
பாமுள்ளூர் | சங்க கால ஊர்கள் |
பாம்பணி மாநகர் | பாமணி, என்றும் பாம்பணி என்றும் வழங்கப்படும் இத்தலம், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. பதஞ்சலி போலப் பாம்புரு உள்ள தனஞ்செய முனிவர் வழிபட்ட தலம் என்பர்.சம்பந்தர் இக்கோயிலைப் பாடுகின்றார். கோயில் பாதாளீச்சரம் எனச் சுட்டப்படுகிறது. |
பாம்புரம் | திருப்பாம்புரம் எனச் சுட்டப்படும் இவ்வூர். தஞ்சாவூர் மாவட்டத்தில் காணப்படுகிறது. நாகராஜன் வழிபட்ட தலம். ஆகையால் இப்பெயர் பெற்றிருக்கலாம். பாம்பு புரம் பாம்புரம் ஆயிற்று எனல் பொருத்தமாக அமையும். |
பாம்புரம் | தேவாரத் திருத்தலங்கள் |
பாரத்துத் தலைவன் ஆர நன்னன் | சங்க கால ஊர்கள் |
பாரம் | சங்க கால ஊர்கள் |
பாரம் | பாரம் என்னும் ஊர் கொண் கானத்து நன்னனுக்கு உரிய தாய் இருந்திருக்கிறது; அவன் தலைநகர் என்றும் கருதப்படுகிறது. கொண்கானம், ஏழிற்குன்றம், பூழிநாடு ஆகியவற்றை உள்ளடக்கியதாய் இருந்திருக்கிறது நன்னனின் நாடு. இன்றைய. கண்ணனூருக்கு வடக்கே சுமார் 15மைல் தொலைவில் இன்றும் அதே பாரம் என்ற பெயருடன் இருப்பதாகக் கூறப்படுகிறது. “மிஞிலி” என்ற மன்னனால் காக்கப்பட்ட ஊர் என்று சங்க இலக்கியம் கூறுகிறது” |
பாற்றுறை | தேவாரத் திருத்தலங்கள் |
பாற்றுறை | திருச்சி மாவட்டத்தைச் சார்ந்த ஊர் திருப்பாற்றுறை என்று வழங்கப்படுகிறது. சுாவிரி கொள்ளிடம் ஆகிய ஆறுகளுக்கு இடையில் இக்கோயில் உள்ளது என்ற குறிப்பு, இவ்விடத்திற்குரிய துறை, பெயருக்கு விளக்கம் தருகிறது. இருப்பினும் பால் என்பதற்கு மார்க்கண்டேயர் இறைவனுக்கு அபி ஷேகம் செய்வதற்குப் பால் பெருகுமாறு இறைவன் அருள் புரிந்த தலம் என்ற கதையைச் சொல்கின்றனர் மக்கள் ஞானசம்பந்தர் இதனை. பாரார் நாளும் பரவிய பாற்றுறை என்று சொல்லும்போது இது மக்கள் விரும்பி வழிபட்ட தலம் எனத் தெரிகிறது. எனவே இதுவும் பாலைத்துறை போன்று, பரவியத்துறை பரத்துறை ஆகி பாற்றுறை ஆயிற்றா ? இல்லை. பரன் துறை (சிவன் கோயில் கொண்ட இடம்) பரத்துறை ஆகி பாற்றுறை ஆயிற்றா ? என்ற எண்ணங்கள் இங்கு அமைகின்றன. சம்பந்தர், |
பாலை | சங்க கால ஊர்கள் |
பாலைக்கௌதமனார் | சங்க கால ஊர்கள் |
பாலைத்துறை | தேவாரத் திருத்தலங்கள் |
பாலைத்துறை | திருப்பாலைத் துறை என்று சுட்டப்படும் ஊர், தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. முன்னர் பாலைவனமாக இருந்த காரணத்தால் பாலைத் துறை என்று பெயர் பெற்றது என்பர் பாலை என்பதற்குப் பாலைவனம் எனக் கொண்டால் துறை என்பது மக்கள் இறங்கி நீராடுதற்கேற்ற இடங்களைக் குறிக்கும் நிலையில் அமைந்து இவண் முரண்பாடாக அமைகிறது. எனவே பாலைத் துறைக்கு வேறு அடிப்படை உண்டா எனப் பார்க்க லாம். ஞானசம்பந்தர். இக்கோயிலைப் பாடும்போது ஒரே ஒரு பாடலில், |
பாழி | சங்க கால ஊர்கள் |
பாழி | தேவாரத் திருத்தலங்கள் |
பாழி | நன்னனின் ஏழில்மலையைச் சார்ந்த கொற்றிக் கடவு என்ற அடர்ந்த காட்டின் இடையே அம்மரக்கல் “Ammarakkal“ என்ற ஒரு பெரும் பாறை உள்ளது. அங்குள்ள மக்களால் அப்பாறைப் பன்னிரண்டாண்டிற்கு ஒரு முறை வழிபடப் பெறுகிறது. இப்பாறையைச் சுற்றியுள்ள பகுதியே பாழியாக இருக்க வேண்டும் என்றும், அது நன்னனுக்குரியதாய் இருந்தது என்றும் கூறப்படுகிறது. பாழி நகரம் ஏழிற்குன்றத்தைச் சார்ந்ததாகவே இருந்திருக்க வேண்டும். பாழி நாட்டு மக்கள் சிறுகுளத்தைப் பாழி என்பார், இவ்வூரிலுள்ள குளம் மன்னனின் பொன் சேமித்து வைக்கப் பெற்றிருந்த சிறப்பினையுடையதாய் இருந்திருக்கிறது. அச்சிறப் பாலேயே நீர் நிலையின் பெயரால் இவ்வூர் “பாழி” எனப் பெயர் பெற்று இருக்கவேண்டும். வேளிர்களால் அளிக்கப்பெற்ற பொற்காசுகளை இவ்வூர்ப் பாழியில் (குளத்தில்) இட்டு வைத்து, காவற்படையை நிலையாக நிறுத்திக் காத்தான் நன்னன் எனத் தெரிகிறது. பாழி நகரமே நிலையான காவற்படையினை உடையதாக இருந்திருக்கறது. பாழிகாவல் மிக்கிருந்தது என்னும் கூற்று நன்னன் மிகுதியாகப் பொன் படைத்திருந்தான் என்பதை உணர்த்துவதாகக் கொள்ளலாம். இளம் பெருஞ்சென்னி என்ற சோழன் நன்னனின் பாழியை அழித்ததாகவும் தெரிகிறது, |
பாழிச்சிலம்பு | சங்க கால ஊர்கள் |
பாழிப் பறந்தலை | சங்க கால ஊர்கள் |
பாவநாசம் | தேவாரத் திருத்தலங்கள் |