ஊர் பெயரகராதி

தமிழகம் ஊரும் பேரும் – சேதுப்பிள்ளை.ரா.பி, இலக்கியத்தில் ஊர்ப்பெயர்கள் I – ஆளவந்தார்.ஆர், II – பகவதி.கே. தமிழகம் இலங்கை ஊர்ப்பெயர்கள் ஓர் ஒப்பாய்வு – கு.பகவதி. பெரியபுராணச் சிறப்புப் பெயரகராதி – தா.வே.வீராசாமி. தஞ்சை மாவட்ட ஊர்ப்பெயர்கள் – மெய்.சந்திரசேகரன். கெடிலக்கரை நாகரிகம் ஊர்கள் – பேரா.சுந்தரசண்முகனார். செங்கை மாவட்ட ஊர்ப்பெயர்கள் – நாகராசன்.கரு


87

48

47

6

15

6

18

11

4

8

4
க்
99
கா
32
கி
3
கீ
1
கு
61
கூ
10
கெ
1
கே
3
கை
3
கொ
24
கோ
39
கௌ
ங் ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
10
சா
9
சி
21
சீ சு
2
சூ செ
17
சே
8
சை சொ சோ
9
சௌ
ஞ் ஞா ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ
ண் ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
23
தா
1
தி
22
தீ து
11
தூ
4
தெ
7
தே
4
தை தொ
5
தோ தௌ
ந்
31
நா
24
நி
6
நீ
11
நு நூ நெ
22
நே
5
நை நொ
1
நோ நௌ
ப்
43
பா
33
பி
7
பீ பு
39
பூ
10
பெ
11
பே
7
பை
2
பொ
7
போ
6
பௌ
ம்
40
மா
25
மி
3
மீ
2
மு
28
மூ
4
மெ
1
மே
1
மை
5
மொ மோ
6
மௌ
ய்
2
யா யி யீ யு யூ யெ யே யை யொ யோ யௌ
ர் ரா ரி ரீ ரு ரூ ரெ ரே ரை ரொ ரோ ரௌ
ல் லா லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
வ்
40
வா
20
வி
25
வீ
6
வு வூ வெ
27
வே
24
வை
7
வொ வோ வௌ
ழ் ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன் னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்
நெடுங்களம்

திருநாட்டாங்குளம், திருநாட்டான்குளம் என இன்று திருச்சி மாவட்டத்தில் அமைகிறது இவ்வூர் ஐயடிகள் காடவர்கோன், தம் ஷேத்திரக் கோவை வெண்பாவில்,
தொட்டுத் தடவித் துடிப்பொன்றும் காணாது
பெட்டப்பிணமென்று பேரிட்டுக் -கட்டி
எடுங்கள் அத்தா என்னா முன் ஏழைமட நெஞ்சே
நெடுங்களத்தார் பாதம் நினை’
என இவ்வூரினைக் குறிப்பிடுகின்றார். சம்பந்தர் பதிகமும் (52) இவ்வூருக்கு உள்ளது. எனினும் இவர்களின் பாடல்கள் இந்த ஊரைப் பற்றிய விளக்கம் எதையும் தரவில்லை. அப்பர் தனிப் பதிகம் அமைத்துப் பாட வில்லை எனினும், தம்முடைய பதினைந்தாவது பதிக்கத்தில், (பொது) நிழலார் சோலை நெடுங்களத்து நிலாய நித்த மணாளன் (7) எனச் சுட்டும் நிலையில், சோலைகள் செழிப்புற்ற நெடுங்களம் என்ற எண்ணம் தெரிகிறது எனவே களம் என்பது செழிப்பு மிக்கப் பகுதியைக் குறிக்க, நெடுங்களம் பரந்த பரப்பினைக் குறித்து அமைந்ததோ எனத் தோன்றுகிறது.

நெடுங்களம்

தேவாரத் திருத்தலங்கள்

நெடும்பார தாயனார்

சங்க கால ஊர்கள்

நெடுவாயில்

நெடுவாயில் என்ற இத்தலம், அப்பர், சம்பந்தர் இருவராலும் பாடலினுள் குறிக்கப் பெறுகின்றது. நெடுவாயில் (திருநா – 285-7)’ நிறைநீர் மருகன் நெடுவாயில் (திருஞா – 175-9) எனவே இது சிவன் கோயில் சிறப்பு பெற்ற இடம் என்பது தெளிவு. பெரிய வாயிலையுடைய குடியிருப்பு பகுதியாக இது அமைந்து இருக்கக் கூடும்.

நெய்தலங்கானல்‌

சோழன்‌ நெய்தலங்‌ கானல்‌ இளஞ்‌ சட்‌ சென்னியை ஊன்‌ பொதி பசுங்குடையார்‌ பாடியது (புறம்‌. 70) என்ற தொடர்‌ நெய்தலங்கானல்‌ என்ற ஊர்ப்பெயர்ப்‌ பற்றிய எண்ணத்தைத்‌ தோற்றுவிக்கிறது. இது இளஞ்சேட்‌ சென்னியின்‌ நகரம்‌.

நெய்தலங்கானல்

சங்க கால ஊர்கள்

நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னி

சங்க கால ஊர்கள்

நெய்தல் வாயில்

நிறை வயல் சூழ் நெய்தல் வாயில் (285.7) என திரு நாவுக் கரசரால் குறிக்கப்படும் இத்தலமும் சிவன் கோயில் பெருமை உடையது. நிறைவயல் சூழ் நெய்தல் என்ற பாடலடிகள் இவ்வூர்ச் சிறப்மைக் காட்டுகிறது எனவே நெய்தல் பகுதியில் அமைந்த குடியிருப்புப் பகுதியோயெனத்தோன்றுகிறது.

நெய்த்தானம்

தில்லைத்தானம் என வழங்கப்படும் இவ்வூர் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைகிறது. கோயில் பெயராக முதலில் அமைந்து பின்னர் ஊர்ப்பெயராயிற்றோ என்ற எண்ணம் பாடல்களை நோக்க எழுகின்றது. சம்பந்தராலும் அப்பராலும் பாடல் பெற்றது இத்தலம்.
நிலா வெண்மதி யுரிஞ்ச நீண்டமாட நிறைவயல் சூழ் நெய்த்தானம் (திருநா – 215-8)
தேனிடை மலர் பாயு நெய்த்தானனை (148-3)
போன்ற பாடல்கள் செழிப்பு சுட்டுகின்றன. என்ற கூற்று இங்குள்ள சிவன் கோயில் பற்றிய தெளிவைப் பெற
அறையும் புனல் வரு காவிரி யலை சேர் வடகரைமேல்
நிறையும் புனை மடவார் பயில் நெய்த்தானமெனீரே
என்ற சம்பந்தர் பாடல் காவிரியின் வடகரையில் இருக்கும் இதனைக் கூறுகிறது. மேலும்,
காலனை வீழச் செற்ற கழலடி யிரண்டும் வந்தென்
மேலவாயிருக்கப் பெற்றேன் மேதகத் தோன்றுகின்ற
கோலநெய்த் தானமென்னும் குளிர் பொழிற் கோயின்மேய
நீலம் வைத்தனைய கண்ட நினைக்குமா நினைக்கின்றேனே (திருஞா – 37-1)
என்ற பாடல் கோல நெய்த்தானம் என்றும் குளிர் பொழிற் கோயில் என்று சுட்டும் நிலையில் இது கோயிற் பெயர் என்பதனைத் தெளிவாகக் காண்கின்றோம். நெய்’ சிறப்புடைய அபிஷேகப் பொருளாக, அங்குச் சுட்டப்பட்டதன் காரணமாக இப்பெயர் அமைந்து, பின்னர் ஊர்ப்பெயராகவும் செல்வாக்குப் பெற்றது என்பதை நாம் உணரவியலுகிறது.

நெய்த்தானம்

தேவாரத் திருத்தலங்கள்

நெற்குன்றம்

குன்றம் என்று முடியும் ஊர்ப்பெயர் வரிசையுள் தனைக் குறிப்பிடுகின்றார் ஞானசம்பந்தர். நெற்குன்றம் (பதி 175-9). ரா.பி. சேதுப்பிள்ளை நெற்குன்றம் என்ற ஊர் இன்று நெற் குணம் சுட்டப்படுவதையும் ஆர்க்காடு நாட்டைச் சார்த்தது என்பதையும் சுட்டுகின் றார். (பக்-4) நெல்லின் செழிப்பா? அல்லது நற்குன்றம்’ நெற்குன்றமாயிற்றா என்பது தெளிவுறவில்லை.

நெல்லிக்கா

திருநெல்லிக்கா எனத் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமையும் ஊர் இது. ஞானசம்பந்தர் பாடல் பெற்ற ஊர் இது (150). சேக்கிழார் ஞானசம்பந்தர் செல்லும் வழியில் உள்ள கோயில்களைப் பணிந்து செல்லும் நிலையில், நெல்லிக்கா பணிந்து சென்றதையும் குறிப்பிடுகின்றார் (34.674-2) மேலும் பரமர் திருநெல்லிக்கா என்ற கூற்று இங்குள்ள சிவன் கோயில் பற்றிய தெளிவைப் பெற உதவுகிறது. நெல்லி மரங்கள் அடர்ந்த சோலை காரணமாக இப்பெயர் தோன்றியது எனல் பொருத்தமாக அமையும். தல மரம் நெல்லி என்பதும் இங்கு சுட்டத்தக்கது.

நெல்லிக்கா

தேவாரத் திருத்தலங்கள்

நெல்லின் ஊர்

சங்க கால ஊர்கள்

நெல்வாயில்

சிவபுரி எனச் சுட்டப்படும் ஊாாகிய இது. இன்று தென் ஆர்க்காடு மாவட்ட தில் அமைகிறது. சம்பந்தர் இத்தலத்து இறைவனைப் பாடுகின்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு அருகேயுள்ளது. நெல்லின் மிகுதி காரணமாக இப்பெயர் அமைந்திருக்கலாம்.

நெல்வாயில்

தேவாரத் திருத்தலங்கள்

நெல்வாயில்

தேவாரத் திருத்தலங்கள்

நெல்வாயில் அரத்துறை

திருவரத்துறை எனச் சுட்டப்படும் இடம் தென்னார்க்காடு மாவட்டத்தில் உள்ளது. தேவார மூவரும் இத்தலத்து இறை யைப் புகழ்கின்றனர். உவர்ப்பெயர் நெல்வாயில். கோயில் அரத்துறை. பிற நெல்வாயில் தலத்தினின்றும் வேறுபடுத்திக் காட்ட அரத்துறையை இணைத்திருக்கலாம். நெல்வாயில் நெல்லின் செழிப்பு காட்ட எழுந்ததே என்பது ஈண்டும் விளக்கமாகிறது. நிவாநதியின் வடகரையில் உள்ள தலம் ஆகையால் அதன் கரையில் கோயில் அமைய, துறை என்பது பொருத்தமாக அமைகிறது.
நல்வாய் அகிலும் கதிர் மாமணியும்
கலந்துந்தி வரும் நிவவின் கரைமேல்
நெல்வாயிலரத்துறை நீடுறையும்
நிலவெண் மதிசூடிய நின்மலனே
என்ற பாடல் அரத்துறையினைப்பற்றிய எண்ணம் தரவல்லது.
நிவா என்பது வடவெள்ளாற்றைக் குறிக்கும்.

நெல்வெண்ணெய்

நெய்வெணை இன்று சுட்டப்படும் தலம். தென் ஆர்க்காடு மாவட்டத்தில் அமைகிறது. சம்பந்தர் தேவாரம் இவ்வூருக்கு அமைகிறது. இவரது பாடல்கள் இவ்வூரின் வளத்தைக் காட்டுமாறு அமைகின் றன.
நிச்சலும் மடியவர் தொழுதெழு நெல்வெணெய் (354-2)
நிரைவிரி தொல்புகழ் நெல்வெணெய் மேவிய
கரைவிரி கோவணத்தீரே (354-3)
நீர்மல்கு தொல்புகழ் நெல்வெணெய் (354-4)
நீடிளம் பொழிலணி நெல்வெணெய் (354-5)
என்ற பாடலடிகளைக் காணும்போது, நெல், வெண்ணெய் என்ற சொற்கள், ஊரின் மிக்க வளத்தைக் காட்டும் நிலையில் அமைவதை எண்ணத் தோன்றுகிறது. எனவே அந்த அடிப் படையில் இப்பெயர் பொருத்தமுறுமா எனக் காணலாம்.

நெல்வெண்ணெய் – திருமுக்கால்நடுநாடு – நெய்வணை இக்காலப் பெயர்.

தேவாரத் திருத்தலங்கள்

நெல்வேலி

திருநெல்வேலி என்று அழைக்கப்படும் இவ்வூர், திருநெல்வேலி மாவட்டத்தின் தலைநகராகவும் அமைகிறது. பாண்டிய நாட்டைச் சார்ந்த இவ்வூர், ஞானசம்பந்தரால் பாடல் பெற்று அமைகிறது.
பொருந்து தண்புறவினிற் கொன்றைபொன் சொரிதரத் துன்று பைபைம்பூம்
செருந்தி செம்பொன் மலர் திருநெல்வேலி (350-1)
துன்று தண் பொழிலினுழைந் தெழுவிய கேதகைப் போதளைந்து
தென்றல் வந்துலவிய திருநெல்வேலி (350-2)
ஈண்டு மாமாடங்கள் மாளிகை மீதெழு கொடி மதியம்
தீண்டி வந்துலவிய திருநெல்வேலி (350-4)
என்ற இவரது பாடலடிகளில் திருநெல்வேலி. இவரது காலத்திற்கு முன்னரேயே செழிப்பும், பெருமையும் பெற்று விளங்கிய நிலை தெளிவாகத் தெரிகிறது. எனவே இவர்க்கும் முன்னைய வரலாற்றுச் சான்றுகள் எதுவும் இதனை நோக்கத் தெரிகிறதா ? எனக் காணின் சாலியூர் பற்றிய எண்ணம் அமைகிறது.
மதுரைக் காஞ்சியில்,
சீர் சான்ற உயர் நெல்லின்
ஊர் கொண்ட உயர் கொற்றவ (87.88)
என்னும் பாடலடிகள். தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்’ புகழைப்பாட எழுந்தவை. இதற்குத் தம் பத்துப்பாட்டு உரையில், டாக்டர் உ.வே.சா. சாலியூர் எனப் பொருள் எழுதுகின்றார். மேலும் இதனை நெல்லையோடுச் சார்த்திப் பொருள் சொல்வோரையும் காண்கின்றோம் இவற்றைக் கொண்டு எஸ்.கணபதிராமன் தம் பொருநை நாடு என்ற நூலில், இங்கு நெல்லின் ஊர் என்பது திருநெல்வேலியே எனக் குறிக்கின்றார். ஆயின் தொகுதி ஒன்றில், ஆசிரியர் இதனை ஆந்திர நாட்டு நெல்லூர் எனச் சுட்டுகின்றார் எனினும், சங்க இலக்கியச் சான்றுகளையும் இவண் ஆராய்ந்து, முடிவுக்கு வரமுடியுமா எனக் காணலாம். சாலி என்பது சங்க காலத்தில் சிறப்பு மிக்க நெல்வகை யாகக் கருதப்பட்டது என்பது தெளிவு.
கருந்தெற்று மூடையின் இடம் கெடக் கிடக்கும்
சாலி நெல்லின், சிறை கொள் வேலி
ஆயிரம் விலை ளையுட்டு ஆக,
காவிரி புரக்கும் நாடுகிழவோனே
என்பது பொருநர் ஆற்றுப்படை (242-48).
அடுத்து மதுரைக் காஞ்சி குறிப்பிடும்,
சீர் சான்ற உயர் நெல்லின்
எனவே ஊர் கொண்ட உயர் கொற்றவ என்ற அடிகளில் அமையும் நெல்லின் ஊருக்கு, உ. வே. சா உரை சாலியூர் என்று குறிப்பிடுகிறது. எனினும், நெல்லுக்கே சீர் சான்ற உயர் என்ற அடை பொருத்தமானதே. சாதரணமாகப் பார்த்தாலும், நெல்லின் ஊர் என்ற எண்ணம் பொருத்தமாக அமைகிறது. இந்நிலையில் இதனை நெல்லின் ஊர் என்று இணைத்துத்தான் சுட்டவேண்டும் என்பது இல்லை. நெல்லை கொண்ட ஊர்’ நெல்வளமிக்க ஊர் என்ற நிலையிலும் பொருத்தலாம். எனவே பாண்டிய நாட்டினுள் உள்ள நெல்வேலியை உடைய கொற்ற வனே என்று விளித்திருக்கலாம். பாண்டிய நாட்டில் நெல்வேலி சிறப்புடன் திகழ்ந்ததன் காரணமாக இவ்வாறு சிறப்பாகச் சுட்டி அமைத்திருக்கலாம் எனத் தோன்றுகிறது. மேலும், நெடுஞ்சடையன் பராந்தகனது வேள்விக்குடிச் செப்பேடு,
வில்வேலி கடற்றானைன மயை நெல்வேலி செருவென்ற
பெருவீரன் எனச் சிறப்பிக்கின்றது’ என்ற எண்ணத்தையும் காண்கின்றோம். மேலும் சுந்தரர்
நிறை கொண்ட சிந்தையான் நெல்வேலி வென்ற
நிறை சீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன் (39-8)
எனச் சுட்டுகின்றார். எனவே நெல்வேலியை வெல்வது சிறப்பாகக் கருதப்பட்டது எனத் தெரிகிறது. இந்நிலையிலேயே சங்க இலக்கியத்தும் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியன் புகழைச் சுட்டுமிடத்து. நெல்வேலியைக் கொண்ட மன்னவன் எனச் சுட்டி இருக்கலாம். என்பது இதன் செழிப்பினைச் சேக்கிழாரும் சுட்டுகின்றார். செல்வத் திருநெல்வேலி இவர் காட்டும் நிலை. எனவே பெருநை பாய்ந்ததன் காரணமாக நெல்வயல்கள் சூழப்பட்ட ஊராக இது அமைந்த காரணமே இப்பெயர்க் காரணம் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. எனினும், புராணக் கதையும் இப்பெயர்க் குறித்து அமைகிறது.

நெல்வேலி- திருநெல்வேலி

தேவாரத் திருத்தலங்கள்