ஃ | அ 87 |
ஆ 48 |
இ 47 |
ஈ 6 |
உ 15 |
ஊ 6 |
எ 18 |
ஏ 11 |
ஐ 4 |
ஒ 8 |
ஓ 4 |
ஔ | க் | க 99 |
கா 32 |
கி 3 |
கீ 1 |
கு 61 |
கூ 10 |
கெ 1 |
கே 3 |
கை 3 |
கொ 24 |
கோ 39 |
கௌ | ங் | ங | ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ | ச் | ச 10 |
சா 9 |
சி 21 |
சீ | சு 2 |
சூ | செ 17 |
சே 8 |
சை | சொ | சோ 9 |
சௌ | ஞ் | ஞ | ஞா | ஞி | ஞீ | ஞு | ஞூ | ஞெ | ஞே | ஞை | ஞொ | ஞோ | ஞௌ | ட் | ட | டா | டி | டீ | டு | டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ | ண் | ண | ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ | த் | த 23 |
தா 1 |
தி 22 |
தீ | து 11 |
தூ 4 |
தெ 7 |
தே 4 |
தை | தொ 5 |
தோ | தௌ | ந் | ந 31 |
நா 24 |
நி 6 |
நீ 11 |
நு | நூ | நெ 22 |
நே 5 |
நை | நொ 1 |
நோ | நௌ | ப் | ப 43 |
பா 33 |
பி 7 |
பீ | பு 39 |
பூ 10 |
பெ 11 |
பே 7 |
பை 2 |
பொ 7 |
போ 6 |
பௌ | ம் | ம 40 |
மா 25 |
மி 3 |
மீ 2 |
மு 28 |
மூ 4 |
மெ 1 |
மே 1 |
மை 5 |
மொ | மோ 6 |
மௌ | ய் | ய 2 |
யா | யி | யீ | யு | யூ | யெ | யே | யை | யொ | யோ | யௌ | ர் | ர | ரா | ரி | ரீ | ரு | ரூ | ரெ | ரே | ரை | ரொ | ரோ | ரௌ | ல் | ல | லா | லி | லீ | லு | லூ | லெ | லே | லை | லொ | லோ | லௌ | வ் | வ 40 |
வா 20 |
வி 25 |
வீ 6 |
வு | வூ | வெ 27 |
வே 24 |
வை 7 |
வொ | வோ | வௌ | ழ் | ழ | ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ | ள் | ள | ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ | ற் | ற | றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ | ன் | ன | னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
---|
தலைசொல் | பொருள் |
---|---|
நீடூர் | நீடுதல் என்றால் பரத்தல் அல்லது செழித்தல் என்னும் பொருளையுடைய சொல்லாகும். செழிப்பு மிகுத்த ஊர் நீடூர் எனப் பெயர் பெற்றிருக்கலாம். மாயூரத்தின் அருகில் நீடூர் என்னும் பெயருள்ள ஓரி ஊர் உள்ளது. அக்காலத்தில் பெரியதோர் ஊராக இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. செழிப்பான வளம்ழித்க ஊராகவும் இருந்திருக்க வேண்டும். |
நீடூர் | நீடூர் என்று இன்றும் சுட்டப்படும் இவ்வூர் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைகிறது அப்பர். சுந்தரர் பாடல் பெற்ற தலம். இக்கோயில் தலமரமாக கிழமரம் அமைகிறது. எனவே இதன் காரணமாக மகிழாரண்யம், மகிழ வனம் என்ற பிற பெயர் களும் இதற்கு அமைகின்றன. பழிக்காலத்தும் அழியாது நீடித் திருக்கும் தலமாதலின் இது நீடூர் என்று பெயர் பெற்றது என்பர். சுந்தரர், |
நீடூர் | சங்க கால ஊர்கள் |
நீடூர் | தேவாரத் திருத்தலங்கள் |
நீரிடங்களை ஒட்டியன | “நீரின்றி அமையாது உலகு” என்பதால் ஊர்கள் நீர்வளம் மிக்க பகுதிகளையொட்டியே ஏற்பட்டன. பண்டைய நாகரீகங்கள் எல்லாம் ஆற்றங்கரைகளில் தோன்றியுள்ளன என்பது வரலாற்று உண்மை. உணவிற்கும், உடல் தூய்மைக்கும், வேளாண்மைக்கும், ஆடு, மாடு முதலிய வீட்டு விலங்குகளுக்கும் நீர் தேவைப்படுகிறது. எனவே இயற்கையாக நீர்வளம் உள்ளதா என்று பார்த்து மக்கள் குடியேறியிருக்கின்றனர் அல்லது நீர் வசதியை ஏற்படுத்த குளம் , கிணறு போன்ற நீரிடங்களை வெட்டிக் குடியேறியிருக்கின்றனர். நீரிடங்களைச் சுட்டிய வடிவங்கள் தழுவு பெயராக ஊரையும் காலப்போக்கில் சுட்டத் தொடங்கின. அடைப்பு, அணை, ஊருணி (ஊரணி), ஊற்று (ஊத்து), ஏந்தல், ஏரி, ஓடை, கரை, கால், கிணறு, குண்டம், குளம், கேணி, சமுத்திரம், சிறை, சுனை, டேம், தாங்கல், துறை, நதி, ரேவு, படுகை, மடை, வாவி என்ற நீரிடப் பெயர்களும், நீரிடச் சார்புப் பெயர்களும் ஊர்ப்பெயர்களின் பொதுக்கூற்று வடிவங்களாக அமைந்துள்ளன. |
நீர்கூர் | சங்க கால ஊர்கள் |
நீர்ப்பெயற்று | பெரும் பாணாற்றுப் படையில் நீர்ப்பெயற்று என்னும் ஓர் ஊர்ப்பெயர் குறிப்பிடப் பெற்றுள்ளது. நீர்ப்பெயற்று என்பது கடல்நீர் உட்பெய்தலைக் கொண்டதாகிய நிலம் எனப் பொருள்படும். அதாவது உப்பங்கழியையுடைய நிலப்பகுதியாகும். மாமல்லபுரத்திற்கு இரண்டுகல் தெற்கே கடல்நீர் நிலத்துள் நுழைந்து, மாமல்லபுரத்திற்குக் தென்மேற்கில் அரைக்கல் தொலைவுவரை பரவியுள்ளது. மாமல்லபுரத்திற்கு மேற்கில் தொடங்க வடக்கே மூன்றுகல் தொலைவில் உள்ள சாளுவன் குப்பம் வரைவில் மணல் வெளி பரவியுள்ளது. இங்ஙனம் மாமல்லபுரத்திற்கு வடக்கிலும் தெற்கிலும் உள்ள மணல் வெளியை ‘ஊடுருவிக் கொண்டே இன்றைய பக்கிங் ஹாம் கால்வாய் செல்கிறது. இம்மணல் வெளிகள் பண்டைக் காலத்தில் கடல்நீரைப் பெற்றிருந்தமையால் தான் இன்று மணல் வெளி களாய் உள்ளன. எனவே சங்க காலத்தில் கடல்நீரைப் பெய்தலையுடைய நிலப்பரப்பாக இப்பகுதி இருந்திருத்தல் வேண்டும் என்பது தெளிவு. ஊரார் இப்பகுதியை இன்று கழிவெளி என்கின்றனர். இத்தகைய பகுதியின் எல்லையில் துறைமுகமும் பட்டினமும் இருந்தன என்று பெரும்பாணன் கூறியுள்ளான். ஆகவே அவன் குறித்தவை பிற்கால மாமல்லபுரம் இருந்த பகுதியேயாகும் என்பர், மதுராந்தகம் வட்டத்தின் தென்பகுதியில் “நீர்ப்போ்” என்று உள்ள சிற்றூரே நீர்ப் பெயற்றாகலாம் என்றும் கூறுவர். மாமல்லபுரத்தையடுத்த கழிவெளிப் பகுதியே நீர்ப்பெயற்று என்னும் பெயரையுடைய ஊராக இருக்கவேண்டும் என்ற கருத்தே பொருத்தமானதாகத் தோன்றுகிறது. நீர்ப்பெயற்று என்னும் ஊரின் எல்லையில் துறைமுகமும் அமைந்திருந்தது என்று பெரும்பரணாற்றுப் படை கூறுவதால் இத்துறைமுகப் பட்டினமாகவும் ௧ருத இடமளிக்கும் பிற்கால மாமல்லபுரப்பகுதியில் அமைந்த கழிவெளியே நீர்ப்பெயற்று என்னும் ஊர் இருந்த இடம் என்று கொள்ளுவதே பொருந்தும். நீர்ப்பெயற்று என்பதை நீர்ப் பெயர்த்து எனத்தவறாகக் கொண்டு நீர்ப்பெயரையுடைய நகரம் என்று கூறுவது பொருந் துவதாகத் தெரியவில்லை. |
நீர்ப்பெயற்று | சங்க கால ஊர்கள் |
நீர்மலை | திருநீர்மலை என்று, செங்கல்பட்டு மாவட்டத்தில் அமையும் வைணவத் தலம் இது. ஆழ்வார்களால் சுட்டப்படும் இத்தலம் மலையில் கோயிலைக் கொண்டது. நீர் சூழ்ந்த மலை என்ற காரணத்தினால், இப்பெயர் அமைந்தது என்ற எண்ணத்தைக் காண்கின்றோம். இத்தலத்திற்குத் திருமங்கையாழ்வார் எழுந்தருளின போது ஏரியின் நீர்ப்பிடிப்பால் அவரால் எம்பெருமானைச் சென்று சேவிக்க முடியவில்லை என்றும் பல நாட்கள் காத்திருந்து நீர் வடிந்த பிறகே சென்று சேவித்தார் என்றும் செவி வழிச்செய்தியினால் அறிகின்றோம். இங்ஙனம் அரண்போல் நீர் சூழ்ந்த இடத்தில் அமைந்து இருப்பதால் தான் நீர்மலை என்ற காரணப் பெயர் பெற்று திரு என்ற அடைமொழியுடன் திருநீர்மலை என்ற இம் மலை வழங்கி வருகின்றது போலும் என்ற எண்ணம் ந.சுப்பு ரெட்டியாரால் தரப்படுகிறது. திருமங்கையாழ்வாரின் பாடல் கள் திருநீர்மலையின் செழிப்பை மிகவும் அழகாகத் தருகின்றன. |
நீலக்குடி | தேவாரத் திருத்தலங்கள் |
நீலக்குடி | தென்னலக்குடி என்ற பெயரால் இன்று தஞ்சாவூர் மாவட் டத்தில் அமைகிறது இவ்வூர். அப்பர் நீலக்குடி இறையைப் பற்றிப் பாடும் நிலையில் இவ்வூர் பற்றி அறிய இயலுகிறது. |