ஊர் பெயரகராதி

தமிழகம் ஊரும் பேரும் – சேதுப்பிள்ளை.ரா.பி, இலக்கியத்தில் ஊர்ப்பெயர்கள் I – ஆளவந்தார்.ஆர், II – பகவதி.கே. தமிழகம் இலங்கை ஊர்ப்பெயர்கள் ஓர் ஒப்பாய்வு – கு.பகவதி. பெரியபுராணச் சிறப்புப் பெயரகராதி – தா.வே.வீராசாமி. தஞ்சை மாவட்ட ஊர்ப்பெயர்கள் – மெய்.சந்திரசேகரன். கெடிலக்கரை நாகரிகம் ஊர்கள் – பேரா.சுந்தரசண்முகனார். செங்கை மாவட்ட ஊர்ப்பெயர்கள் – நாகராசன்.கரு


87

48

47

6

15

6

18

11

4

8

4
க்
99
கா
32
கி
3
கீ
1
கு
61
கூ
10
கெ
1
கே
3
கை
3
கொ
24
கோ
39
கௌ
ங் ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
10
சா
9
சி
21
சீ சு
2
சூ செ
17
சே
8
சை சொ சோ
9
சௌ
ஞ் ஞா ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ
ண் ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
23
தா
1
தி
22
தீ து
11
தூ
4
தெ
7
தே
4
தை தொ
5
தோ தௌ
ந்
31
நா
24
நி
6
நீ
11
நு நூ நெ
22
நே
5
நை நொ
1
நோ நௌ
ப்
43
பா
33
பி
7
பீ பு
39
பூ
10
பெ
11
பே
7
பை
2
பொ
7
போ
6
பௌ
ம்
40
மா
25
மி
3
மீ
2
மு
28
மூ
4
மெ
1
மே
1
மை
5
மொ மோ
6
மௌ
ய்
2
யா யி யீ யு யூ யெ யே யை யொ யோ யௌ
ர் ரா ரி ரீ ரு ரூ ரெ ரே ரை ரொ ரோ ரௌ
ல் லா லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
வ்
40
வா
20
வி
25
வீ
6
வு வூ வெ
27
வே
24
வை
7
வொ வோ வௌ
ழ் ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன் னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்
நாகேச்சரம்

தேவாரத் திருத்தலங்கள்

நாகேச்சுரம்

நாகேஸ்வரம் என்று தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைகிறது இவ்வூர். பாதாள லோகத்திலிருந்து வந்து சிவபெருமானை நாகராஜன் வழிப்பட இத்தலம் அவன் பெயர் கொண்டு நாகேசுவரம் என வழங்குகிறது என்ற எண்ணம் இப்பெயருக்கு அமைகிறது. எனினும் நாகர் கோயில் இருந்தமையால் இப்பெயர் அமைந்திருக்கலாம் எனத்தோன்றுகிறது. காவிரிக்கரையில் அமைந்த சிறப்புடைய இத்தலம், ஞானசம்பந்தரால் சிறப்புடன் புகழப்பெறுகிறது.
குறையணி குல்லை முல்வை யளைந்து குளிர் மாதவிமேல்
சிறையணி வண்டுகள் சேர் திரு நாகேச்சுரத்து அரனே
என்கின்றார் சம்பந்தர். இறைத் தலங்களைத் தொகுத்துரைக்கும் நிலையில் அப்பர் இதனைக் குறிப்பிடுகின்றார். சம்பகாரணியம் என்ற பெயரையும் கொண்டதாக இவ்வூர் அமைந்தது தெரிகிறது சண்பக மரங்களின் மிகுதியே இப்பெயருக்குக் காரணமாகும்.. சிவன் கோயிலுடன், உப்பிலியப்பன் கோயில் என்று சுட்டப் படும் விண்ணகரும் இங்கு உள்ளது. திருமால் தலம் எனவே இப்பெயர் பெற்றது என்பது தெளிவு. திருமங்கையாழ்வார் பேயாழ்வார் பாடல் இத்தலக் கோயிலுக்கு அமைகிறது. துளசிவனம், மார்க்கண்டேய க்ஷேத்திரம் பிற பெயர்கள்.
பூமரு பொழிலணி விண்ணகர் நாலா -1457
தேனார் பூம்புறவில் திருவிண்ணகர் – 1467

நாகை

நாகப்பட்டணம் என்ற கடற்கரைத் தலம். அன்று முதல் இன்று வரை நாகை என வழங்கப்படுகிறது. நாகர்கோயில் கொண்ட நாகர் கோயில் ஊர்ப்பெயர் போன்று. இதுவும் நாகர் வழிபாடு காரணமாகப் பெற்ற ஊர்ப்பெயராகக் கருதப்படுகிறது. ஆதி சேடன் பூசித்த தலமாதலின் இப்பெயர் பெற்றது. அவன் பூசித்த திருக்கோயில் மேற்கே ஒரு மைல் தூரத்தில் நாகநாதர் கோயில் என வழங்குகிறது என்ற கருத்து காணப்படுகிறது. கடற்கரைத் தலமாகிய இது துறைமுகமாகவும் வணிபத் தலமாகவும் பெருமை பெற்றது. தேவார மூவர் பாடல் பெற்ற சிறப்புடைய கோயில் மட்டுமல்லாது வைணவராலும் புகழப் படும் பெருமை கொண்டது. கோயில் காரோணம் என்ற பெயருடன் காணப்பட்டது என்பதை அனைத்துச் சான்றுகளும் தெரிவிக்கின்றன.
தேரார் விழவோவாச் செல்வன் றிரை சூழ்ந்த
காரார் கடனாகைக் காரோணத்தானே (திருஞான -84-3)
வரையார் வனபோல வளரும் வங்கங்கள்
கரையார் கடனாகைக் காரேணத்தானே(.7)
கலங்கற் கடற்புடை சூழ்ந்த ணாகைக்
காரோணத் தெஞ்ஞான்றும் காணலாமே (திருநா -236-5)
கத்தாரி கமழ் சாந்தும் பணித்தருள வேண்டும்
கடனாகைக் காரோண மேவியிருந்தீரே (சுந் -46-1)
திருமங்கையாழ்வார், இங்குக் கோயில் கொண்டுள்ள சௌந்தர்யராஜனைப் பாடுகின்றார். (1758-67) நாகர் என்ற தமிழ் மக்கள் அப்பகுதியில் ஆட்சி புரிந்து வந்தனர் என்ற கருத்தும் அமைகிறது.

நாகைக்காரோணம்

தேவாரத் திருத்தலங்கள்

நாங்கூர்

சீர்காழி இரயில் நிலையத்திலிருந்து எட்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஊர் நாங்கூர். எனவே தஞ்சாவூர் மாவட்டம் என்பது தெரிகிறது. வைணவத் தலங்கள் பலவற்றைக் கொண் வெள்ளக்குளம், திருவண்புருடோத்தமம். வைகுந்த விண்ணகரம், மணியாடக் கோயில், திருத்தெற்றயம் பலம், செம் பொன் செய்கோயில், அரிமேய விண்ணகரம். காவளம்பாடி, தேவனார் தொகை போன்றன அவை ; நாங்கூர் நாலாயிரம் என்ற வழக்கு, நாலாயிரம் வைணவக் குடிகள் வாழ்ந்த இடத் தைக் குறிக்கும் என்ற எண்ணம் அமைகிறது. ஆழ்வார்கள் பாடல், நாங்கூரின் இயற்கை அழகை மிகவும் சிறப்பிக்கின்றன. பல திருமால் கோயில்களைக் கொண்டு அமையும் இதன் தன்மை யை நோக்க, நான்கு ஊரில் வைணவர்கள் வாழ்ந்து பின்னர் அதுவே ஒரே ஊராக நாங்கூர் என்று சுட்டப்பட்டிருக்கலாமோ எனத் தோன்றுகிறது.

நாஞ்சில்

சங்க கால ஊர்கள்

நாஞ்சில்‌

நாஞ்சில்‌ என்பது ஒரு மலையின்‌ பெயர்‌. அம்மலையை உள்ளடக்கிய நாடும்‌ அப்பெயர்‌ பெற்றது. மதிலுறுப்பு என்னும்‌ பொருளுடைய நாஞ்சில்‌ என்னும்‌ சொல்‌ மதிலோடு கூடிய கோட்டை அமைந்த மலைக்குப்‌ பெயராய்‌ அமைந்தது போலும்‌. கோட்டாறு என்னும்‌ முக்கிய நகரத்தைக் கொண்டது நாஞ்சி நாடு. இது சேர, சோழ பாண்டிய மன்னர்கள்‌ ஆட்சியில்‌ மாறி. மாறி இருந்திருக்கிறது. நெடுமாறன்‌ என்னும்‌ பாண்டியன்‌ சேரனோடு நாஞ்சில்‌ நாட்டில்‌ போர்‌ செய்து வென்றான்‌ (பாண்டிக்‌ கோவை) என்ற செய்தி பாண்டியர்‌ ஆட்சியில்‌ நாஞ்சில்‌ இருந்ததையும்‌ நாஞ்சில்‌ நாட்டுக்‌ கோட்டாறு, மும்முடிச்‌ சோழபுரம்‌ என்றும்‌, சோழ கேரளபுரம்‌ என்றும்‌ கல்வெட்டுகளில்‌ குறிக்கப்‌ பெற்றிருப்பதால்‌ சோழர்‌ ஆட்சியில்‌ இந்நாடு இருந்ததையும்‌ அறிவிக்கின்றன. நாஞ்சில்‌ நாடு முன்னர்த்‌ திருவிதாங்கூர்‌ இராச்சியத்தின்‌ ஒரு பகுதியாய்‌ இருந்து, 1956 முதல்‌ தமிழ்நாட்டைச்‌ சேர்ந்திருக்‌கிறது. இன்றைய கன்னியாகுமரி மாவட்டமே அப்பகுதியாகும்‌. தமிழ்நாட்டின்‌ தென்‌ எல்லையாகுரிய குமரி இந்நாட்டில்‌ உள்ளது. “உழாநாஞ்சில்‌’ என்னும்‌ சங்க இலக்கியத்தொடர்‌ உழுபடையைக்‌ குறிக்காமல்‌ மலையைக்‌ குறித்து நாட்டிற்குப்‌ பெயரா யிற்று: ‘உயர்சமைய’ என்னும்‌ தொடரும்‌ சிகரங்களையுடைய மலையைக்‌ குறிப்பதைக்‌ காணலாம்‌. நாஞ்சில்‌ நாட்டுத்‌ தலைவன்‌ நாஞ்சில்‌ வள்ளுவன்‌ எனப்‌ பெயர்‌ பெற்றான்‌
“செவ்வரைப்‌ படப்பை நாஞ்சில்‌ பெரருந
சிறுவெள்ளருவிப்‌ பெருங்கல்‌ நாடனை” (புறம்‌ 137:12 13)
“உயர்சிமைய உழாஅ நாஞ்சில்‌ பொருந (௸ 139;7)

நாஞ்சில் பொருநன்

சங்க கால ஊர்கள்

நாஞ்சில் வள்ளுவன்

சங்க கால ஊர்கள்

நாட்டியத்தான் குடி

திருநாவுக்கரசர் தம் அடைவுத் திருத்தாண்டகம் பதிகத்தில் குறிப்பிடும் ஊராக அமைகிறது இது. நல்லக் குடி நனி நாட்டியத்தான் குடி (285-3) தனை நோக்க சிவன் கோயில் உளது என்பது உறுதி என்ற நிலையில் நாட்டியத்தான் சிவனைக் குறித்து அமைய, சிவன் குடி கொண்ட ஊர் என்ற நிலையில் இவ்வூர்ப்பெயர் அமைந்திருக்க வாய்ப்பு அமைகிறது.

நாட்டியத்தான்குடி

தேவாரத் திருத்தலங்கள்

நான்மாடக்கூடல்

சங்க கால ஊர்கள்

நான்மாடக்கூடல்

சங்க கால ஊர்கள்

நான்மாடக்கூடல்

சங்க கால ஊர்கள்

நாரையூர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஊர் இது. சம்பந்தர் அப்பர் பாடல் பெற்ற ஊர். நாரை வழிபட்ட தலமாதலின் நாரையூர் எனப் பெயர் பெற்றது என்ற கருத்து இப்பெயர்த் தொடர்பாக அமைகிறது. ” பொன்னி வடகரைசேர் நாரையூரில் என நம்பியாண்டார் நம்பி தம் திருத்தொண்டர் திருவந்தாதியில் குறிப்பிடுகின் றார் (1).
தேம்புனல் சூழ் திகழ் மாமடு விற்றிரு நாரையூர்மேய
பூம்புனல் சேர் புரிபுன் சடையான்’
என ஞானசம்பந்தர் இவ்வூர் பற்றிய எண்ணம் தருகின்றார். எனவே நீர் வளமுடைய ஊர் என்பது வெளிப்பட, நாரைகளின் மிகுதி காரணமாக இவ்வூர்ப்பெயர் அமைந்திருக்கலாம்.

நாலூர்

சங்க கால ஊர்கள்

நாலூர்‌

சங்க இலக்கியங்களில்‌ “*நாலூர்க்கோசர்‌ நன்மொழி” (குறுந்‌ 15) என்பதுபோல்‌ கோசரைக்‌ குறிக்கும்‌ இடங்களிளெல்லரம்‌ நாலுரர்‌ என்ற அடையுடனே குறிக்கப்பட்டுள்ளது. நான்கு ஊரிலுள்ள. கோசர்‌ என்றோ, நாலூர்‌ என்ற ஊரிலுள்ள கோசர்‌ என்றோ எண்ண இடமளிக்கிறது. நாலை என்று சங்க இலக்கியத்தில்‌ இடம்‌ பெறும்‌ இடம்‌ நாலூர்‌ என்ற ஊரே, மருவி நாலை என வழங்குகிறது என்றும்‌ கூறுகின்றனர்‌. இவ்வூர்‌ பாண்டிய நாட்டில்‌ அருப்புக்‌ கோட்‌டைக்கு. அருகில்‌. உள்ளது. நாலைக்கிழவன்‌ நாகன்‌ பாண்டியன்‌ ஒருவனுடைய படைத்‌ தலைவன்‌. இவனை வடநெடுந்தத்தனார்‌ பாடியுள்ளார்‌. (புறம்‌ 19)

நாலூர்

நாலூர் என்று சுட்டப்படும் ஊர். தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைகிறது. நாலூர் என்பது ஊர்ப்பெயராகவும், மயானம் கோயிற் பெயராகவும் அமைந்து விளங்கியதை அறிகிறோம். சம்பந்தர் பாடல் பெற்ற தலம் இது. நறையார் பொழில் புடைசூழ் நாலூர் மயானம் என்று சுட்டும் தன்மையில் இதுவும் ஒரு செழிப்பு மிக்க ஊராக இருந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது. நான்கு சிறு குடியிருப்புப் பகுதிகள் இருந்தமை காரணமாக இப்பெயர் பெற்றதோ என்ற எண்ணம் நாலூர் என்பதை நோக்க எழுகின்றது.

நாலூர் மயானம்

தேவாரத் திருத்தலங்கள்

நாலை கிழவன் நாகன்

சங்க கால ஊர்கள்

நாவலந் தண்பொழில்

சங்க கால ஊர்கள்

நாவலூர்

இன்று தென் ஆர்க்காடு மாவட்டத்தில் திருநாம நல்லூர் என்ற பெயரால் சுட்டப்படுகிறது. சுந்தரர் பிறந்த ஊர். அவரால் பதிகம் பெற்ற சிறப்புமுடையது. சேக்கிழார்.
பெருகிய நலத்தால் மிக்க பெருந்திரு நாடு தன்னில்
அருமறைச் சைவம் ஒங்க அருளினால் அவதரித்த
மருவிய தவத்தால் மிக்க வளம்பதி வாய்மை குன்றா
திருமறையவர்கள் நீடும் திருநாவலூராம் அன்றே (6;2-1-4)
என இவ்வூரினைக் குறிப்பிடுகின்றார். சுந்தரர் பாடல் நாவலூர் பற்றிக் குறிப்பிடுகின்றதே தவிர இதனுள் ஊர் பற்றிய விளக்கம் எதுவும் பெற இயலவில்லை. ஆயின் சேக்கிழார் இதனைக் குறிப் பிடும் நிலையில் இதன் சிறப்புகள் தெரியவருகின்றன. கொங்கலர் சோலை மூதூர் (பெரிய 6 : 10-3-4) பூவலம் தடம் பொய்கைத் திருநாவலூர் (பெரிய 6 : 78-3) வயற்சாலி கரும்பாற் கழனித் திரு நாவலூர் (பெரிய 75-12). மட்டுமன்றி, பின்பு கும்பிடும் விருப்பில் நிறைந்து பெருகு நாவல் நகரார் பெருமானும் என்று நாவல் நகர் எனக் குறிப்பிடு வது இவ்வூர்ப்பெயர் பற்றிய விளக்கம் பெற ஏது அமைக்கின்றது. நாவல் மரம் காரணமாக அமைந்த பெயராக இது அமைய வாய்ப்பு அமைகிறது. கெடில நதி அருகில் பாய்வதன் காரணமாக ஊரின் செழிப்பு, மிக்கு காணப்பட்டது எனவும் காண்கின்றோம் நாவல் மரம் இவ்வூரின் தலமரம் என அறியும்போது தலமரம் காரணமாக இப்பெயர் அமைந்ததா? அல்லது ஊரில் நிறைந்து காணப்பட்ட மரம் தலமரமாக அமைக்கப்பட்டதா என எண்ணத் தோன்றுகிறது. எனினும் பெயர்க்காரணம் உறுதிப்படுகிறது.

நாவலூர்]

தேவாரத் திருத்தலங்கள்

நாவாய்

ஊர் மலைநாட்டுத் திருப்பதியாக, ஷோரனூர் மங்களூர் வழியில் ஷோரனூரில் இருந்து சுமார் 25 கல் தொலைவில் உள்ள நாவாய் பாரதப் புழா என்ற ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் கோயிலையுடையதாக இவ்வூர் அமைகிறது. திருமால் கோயில் கொண்ட தலம் இது. கடப்பதற்கு உறுப்பாக இருப்பது கப்பல்;நாவாய். அங்ஙனமே துன்பக் கடலைக் கடப்பதற்கு இத் தலத்து எம்பெருமானும் நாவாய் போன்று இருப்பதால் அவன் எழுந்தருளியுள்ள தலமும் நாவாய் என்ற பெயரால் வழங்க லாயிற்று என்ற கருத்து இவ்வூர்த் தொடர்பாக அமைகிறது. திரு என்ற அடைமொழியுடன் அத்தலம் திருநாவாய் என்று வழக்கிலிருந்து வருகிறது. ஆழ்வார்கள் பாடல்கள் அனைத்திலும் மலை வளத்தின் பசுமையான காட்சிகள் தோற்றம் தருகின்றன. நாவாய் என்ற பெயரையும், கோயில் ஆற்றின் கரை யில் அமர்ந்து இருப்பதையும் நோக்க, ஆற்றின் கரையில் நாவாய் போன்று காணப்பட்டதன்மையால் இப்பெயர் பெற்றிருக்குமோ என எண்ணத் தோன்றுகிறது.