ஊர் பெயரகராதி

தமிழகம் ஊரும் பேரும் – சேதுப்பிள்ளை.ரா.பி, இலக்கியத்தில் ஊர்ப்பெயர்கள் I – ஆளவந்தார்.ஆர், II – பகவதி.கே. தமிழகம் இலங்கை ஊர்ப்பெயர்கள் ஓர் ஒப்பாய்வு – கு.பகவதி. பெரியபுராணச் சிறப்புப் பெயரகராதி – தா.வே.வீராசாமி. தஞ்சை மாவட்ட ஊர்ப்பெயர்கள் – மெய்.சந்திரசேகரன். கெடிலக்கரை நாகரிகம் ஊர்கள் – பேரா.சுந்தரசண்முகனார். செங்கை மாவட்ட ஊர்ப்பெயர்கள் – நாகராசன்.கரு


87

48

47

6

15

6

18

11

4

8

4
க்
99
கா
32
கி
3
கீ
1
கு
61
கூ
10
கெ
1
கே
3
கை
3
கொ
24
கோ
39
கௌ
ங் ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
10
சா
9
சி
21
சீ சு
2
சூ செ
17
சே
8
சை சொ சோ
9
சௌ
ஞ் ஞா ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ
ண் ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
23
தா
1
தி
22
தீ து
11
தூ
4
தெ
7
தே
4
தை தொ
5
தோ தௌ
ந்
31
நா
24
நி
6
நீ
11
நு நூ நெ
22
நே
5
நை நொ
1
நோ நௌ
ப்
43
பா
33
பி
7
பீ பு
39
பூ
10
பெ
11
பே
7
பை
2
பொ
7
போ
6
பௌ
ம்
40
மா
25
மி
3
மீ
2
மு
28
மூ
4
மெ
1
மே
1
மை
5
மொ மோ
6
மௌ
ய்
2
யா யி யீ யு யூ யெ யே யை யொ யோ யௌ
ர் ரா ரி ரீ ரு ரூ ரெ ரே ரை ரொ ரோ ரௌ
ல் லா லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
வ்
40
வா
20
வி
25
வீ
6
வு வூ வெ
27
வே
24
வை
7
வொ வோ வௌ
ழ் ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன் னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்
தகடூர்‌

அதியமான்‌ நெடுமான்‌ அஞ்சி என்ற வள்ளலின்‌ தலை நகரரய்‌ இருந்த ஊர்‌ தகடூர்‌. சேலம்‌ மாவட்டத்திலுள்ள இன்றைய தருமபுரியே தகடூர்‌ என்று கருதுகின்றனர்‌. தருமபுரி சேலம்‌ மாவட்டத்தில்‌ ஓமலூர்‌, ஓசூர்‌ வட்டங்களுக்கு இடையிலுள்ள ஒரு வட்டம்‌. இங்கு 9 10 ஆம்‌ நூற்றாண்டு முதல்‌ கல்வெட்டுகள்‌ இடைக்கின்றன, அக்‌காலத்து இதனை நுளம்பபல்லவர்கள்‌ ஆண்டனர்‌ “என்று தெரிகிறது. 1178 ஆம்‌ ஆண்டிலும்‌, அதற்கு அடுத்த ஆண்டிலும்‌ மூன்றாம்‌ குலோத்துங்கன்‌ கல்வெட்டுகள்‌ கிடைக்கின்றன. பிறகு விஜய நகரக்‌ கல்வெட்டுகள்‌ கிடைக்கின்றன.
“பல்‌ பயன்‌ நிலைஇய கடறுடைய வைப்பின்‌
வெல்‌ போர்‌ ஆடவர்‌ மறம்புரிந்து காக்கும்‌
வில்‌ பயில்‌ இறும்பின்‌, தகடூர்‌ நாறி” (பதிற்‌ 78:7 9)
“தகடூர்‌ எறிந்து, நொச்சி தந்து எய்திய
அருந்திறல்‌ ஒள்‌ இசைப்‌ பெருஞ்‌ சேரல்‌ இரும்பொறையை” (ஷே. 8. ஆம்பத்து பதிகம்‌. 9 10)

தகடூர்

சங்க கால ஊர்கள்

தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை

சங்க கால ஊர்கள்

தக்களூர்

திருநாவுக்கரசர்பாடலில் சுட்டப்பட்ட தலம் இது. கோயில் பதிகத்தில் (216-1) தருமபுரத்துள்ளார் தக்களூரார் என்று குறிப்பிடும் நிலையிலும் திருவீழிமிழலை பற்றி பாடும் போதும் (265-8) இத்தலம் பற்றி குறிப்பிடுகின்றார். தக்களூர் என்று குறிப்பிடும் நிலையில் இது ஊர்ப் பெயர் என்பது தெளிவு பெறுகிறது. எனினும் பிற எண்ணங்கள் துபற்றி தெளிவு பெற. இல்லை.

தங்கால்‌,

தங்கால்‌ என்பது பாண்டி நாட்டிலுள்ள ஓரூர்‌. திருத்தங்காலூர்‌ என இன்று வழங்குகிறது. இவ்வூர்‌ பாண்டியனால்‌ வார்த்திகனுக்குப்‌ பிரமதேயமாக வழங்கப்பெற்றது. பூட்கோவலனார்‌ என்ற சங்ககாலப்‌ புலவர்‌ இவ்வூரைச்‌ சேர்ந்தவர்‌,
“செங்கால்‌ தென்னன்‌ திருந்து தொழில்‌ மறையவர்‌
தங்கால்‌ என்பதூரே அவ்வூர்ப்‌
பாசிலை பொதுளிய பேரதிமன்றத்துத்‌
தண்டே குண்டிகை வெண்குடை காட்டம்‌
பண்டச்‌ சிறுபொதி பாதக்‌ காப்பொடு
களைந்தனன்‌ இருப்போன்‌ காவல்‌ வெண்குடை,
விளைந்துமுதிர்‌ கொற்றத்து விறலோன்‌ வாழி:’ (சிலப்‌, 23:74.80)
“அறியா மாக்களின்‌ முறைதிலை திரித்தவென்‌
இறைமுறை பிழைத்தது பொறுத்தல்‌ நுங்‌ கடனெனத்‌
தடம்புனற்‌ கமனித்‌ தங்கால்‌ தன்னுடன்‌
மடங்கா விளையுள்‌ வயலூர்‌ நல்‌கி”” (௸. ௸. 116 119)

தஞ்சாவூர்

சங்க காலத்தில் சோழர்களின் தலைநகராக உறையூர் இருந்தது. பின்னர் சங்க கால சோழர்கள், சிற்றரசர்களாக பழையாறையையும் தலைநகராக்கிக் கொண்டு இருந்தனர். இடைக்காலத்தில் (கி.பி. 850-871) விசயாலயன் சோழ அரசை தஞ்சையில் நிலை நாட்டிய நிலையில் தஞ்சை சிறப்புறத் தொடங்கியது. தஞ்சை பற்றிய பிற முன்னைய செய்திகள் தெரியவில்லை. எனினும் முதலில் இது சிறப்புப் பெறாத. சிறியதொரு ஊராக இருந்திருக்கலாம். சோழ மன்னன் தலைநகராகக் கொண்டு ஆட்சி தொடங்கிய பின்னர் பெரும் சிறப்பு பெற்றிருக்கலாம் என்பதையுணர இவ்வூர் பற்றிய எண்ணங்கள் துணைபுரிகின்றன. தஞ்சாவூரில் உள்ள திருமருகல் என்ற தலம் சோழன் கோச்செங்கட் சோழன் கட்டிய மாடக் கோயிலைக் கொண்டது என்பதும், ஞானசம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற தலம் எனவும் அறிகின்றோம். எனவே மருகல் ஒரு பழமையான தலம். பக்தி யால் பெருமை பெற்ற தலம் என்பது தெரிவது மட்டுமல்லாது இது ஒரு பெரும் குடியேற்றப் பகுதியாக, நாட்டுப் பகுதியாக இருந்திருக்கின்றது என்பதும், எனவே தான் சோழனால் இங்கு மாடக் கோயில் எழுப்பப்பட்டது என்றதொரு எண்ணமும் நாம் உணர்வதற்கு வழி வகுப்பது. சேழக்கிழார் பாடிய,
கொள்ளுமியல்பிற் குடி முதலோர் மலிந்த செல்வக் குல பதியாம்
தெள்ளும் திரைகள் மதகு தோறும் சேறும் கயலும் செழு மணியும்
தள்ளும் பொன்னி நீர் நாட்டு மருத நாட்டுத் தஞ்சாவூர் (பெரிய செருத் – 1)
என்ற பாடலடிகளாகும். எனவே மருகல் நாட்டின் ஒரு பகுதியாக அமைந்திருந்தது தஞ்சாவூர் என்பது தெளிவாகிறது. மேலும் பொன்னி நாட்டைச் சார்ந்தது என்பதும் புரிகின்றது. இந்நிலையில் மக்கள் வாழ்ந்த பகுதியாக இது முன்பு இருந்தாலும், இடைக் காலத்தில் சோழர்களின் தலைநகராக அமைந்த பின்னரே சீர் பெறத் தொடங்கியது என்பது தெளிவு. சுந்தரர் பாடலில் நின்றும், தஞ்சையைப் பற்றிய இன்னொரு எண்ணமும் தெளிவாகிறது. அதாவது, அவர், பிற அடியார்க்கு எல்லாம் தான் அடியேன் என்று பாடும் நிலையில்,
கடல் சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான்
காடவர் கோன் கழற்சிங்கன் அடியார்க்கு மடியேன்
மடல் சூழ்ந்த தார் நம்பியிடம் கழிக்கும் தஞ்சை
மன்னவனாம் செருத்துணை தன்னடியார்க்கு மடியேன் (39-9)
என்கின்றார். எனவே தஞ்சையை ஆண்ட மன்னவனாக செருத்துணை நாயனார் காட்டப்படுகின்றார். ஆயின் இவர் கதையைக் கூறும் சேக்கிழார், தஞ்சாவூரில்.
சீரின் விளங்கும் அப்பதியில் திருந்து வேளாண்குடி முதல்வர்
நீரின் மலிந்த செய்ய சடை நீற்றர் கூற்றின் நெஞ்சிடித்த
வேரி மலர்ந்த பூங்கழல் சூழ் மெய்யன் புடைய சைவரெனப்
பாரில் நிகழ்ந்த செருத்துணையார் பரவுத் தொண்டின்
நெறி நிற்றார் (பெரிய – 61-2)
எனப் பாடுகின்றார். இங்கு வேளாண் குடி முதல்வர் எனக் காட்டப்படுகின்றாரே தவிர, தஞ்சை மன்னர் எனச் சுட்டப் படவில்லை. இந்நிலையில் வேளாண்குடியைச் சார்ந்த இவர் தஞ்சையை ஆண்ட குறு நில மன்னராக இருந்திருக்க வாய்ப்பு அமைகிறது. எனவே இவ்வூரின் பழமை புலனாகிறது. மேலும் இவர் கதையிலேயே சேக்கிழார், உலகு நிகழ்ந்த பல்லவர் கோச் சிங்கர் உரிமைப் பெருந் தேவி – (பெரிய – 61-4) எனப்பாடும் நிலையில், அப்பொழுது ஆண்ட மன்னன் பல்லவன் என்ற உண்மை புலப்படுகிறது. எனவே பல்லவர் ஆட்சி காலத்திலேயே இவ்வூர்ப் பெயர் பற்றிய எண்ணம் தெளிவுபடுகிறது. முன்னர் இராஜராஜன் கட்டிய தஞ்சைப் பெரிய கோயிலுக்கு. அங்கு இருந்த தஞ்சைத் தளிகுலத்தார் பற்றிய எண்ணம் திருநாவுக்கரசர் பாடலில் அமைகிறது (265-8), எனினும் பெரிய கோயில் அளவிற்கு இக்கோயில் பெருமையுடன் இருந்திருக்கவில்லை என்பதை, நாயன்மார் பாடல் நிலை காட்டுகிறது. திருவீழி மிழலை பதிகத்தில், பல கோயில் பெற்ற ஊர்களையும் சொல்லிச் செல்லும் நிலையில் தஞ்சைத் தளிக் குளத்தார் என இவர் பாடும் நிலையிலேயே இவ்வூர் பற்றி தெரிய வருகின்றோம். பெறாத தஞ்சை என்று மரூஉப் பெயராக அமையும் நிலையும் தஞ்சாவூர் என்றே வழங்கப்படும் நிலையும் நாம் காணும் நிலை இப்பாடல்களினின்றும் அமைகிறது. இவற்றுள் இவ்வூர்ப் பெயர் தோற்றம் குறித்த எண்ணங்கள் தெளிவு பெறவில்லை. எனினும் தஞ்சை என்பது மரூஉப் பெயர் என்பதைப் பலரின் கருத்து உறுதிப்படுத்துகிறது. தஞ்சாவூர் என்பதன் மரூஉவா ? அல்லது தஞ்சாக்கூர் என்பதன் மரூஉவா? என்பது மேலும் ஆய்விற் குரியது. திரு. நாச்சிமுத்து தஞ்சாக்கூர் என்பதன் மரூஉவே தஞ்சை என்கின்றார். வடமொழி நூலான தஞ்சாக்கூர் புராணம், தஞ்சாக்கூரின் முன்னைய பெயர் அளகாபுரி எனவும் : தஞ்சாசுரன் என்னும் அசுரன் காரணமாக இப்பெயர் எழுந்ததாகவும், தஞ்சை வெள்ளைப் பிள்ளையார் குறவஞ்சி என்ற நூல் இவ்வூரைக்கருடங்கோட்டை எனவும், தஞ்சாறை தஞ்சாவூர் என்பதாகவும், புகலிடம் காரணமாக இப்பெயர் அமைந்ததாகவும் போன்ற பல கருத்துகளில் இறுதி கருத்தே ஒப்புக்கொள்ளக் கூடியது என்பது தஞ்சை மாவட்ட ஊர்ப்பெயர்கள் ஆசிரியர் கருத்து (பக்- 34-35). தஞ்சன் என்ற அசுரன் ஊர் தஞ்சாவூர் என்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதன்று என்ற எண்ணமும் அமைகிறது புகலிடம் என்ற கருத்து பொருத்தமுடையதாயினும், தஞ்சாக்கூர் என்ற இதன் முதற்பெயர் மேலும் இவ்வூர் பற்றி ஆராயத் தூண்டுகிறது. ஆக்கூர் என்றதொரு பாடல் பெற்ற தலம் தஞ்சாவூர் மாவட் டத்தில் அமைகிறது. கோச் செங்கட் சோழனால் கட்டப்பட்ட மாடக்கோயில் பெற்ற தலம் இது. இங்கு வேளாளர் வாழ்ந்து சிறப்புற்ற நிலையை ஞானசம்பந்தர் பாடல் சுட்டுகின்றது. பிறருக்காக உணவு ஆக்குபவர் வாழும் ஊர் என்ற நிலையில் ஆக்கூர் என்ற பெயர் வந்தது என்பது ஆக்கூர் பற்றிய ஆய்வு தந்த கருத்து. தஞ்சை பற்றிய சேக்கிழார் எண்ணமும் வேளாளர் வாழ்ந்து சிறப்புற்றமையை நமக்கு உணர்த்துகிறது. நிலையில் தஞ்சாக்கூர் என்பதன் பழம் பெயர் ஆக்கூராக இருந்திருக்க வாய்ப்பு அமைகிறது. ஆக்கூரில் வாழ்ந்த வேளாளர் இங்கு வந்து குடியேறிய பின்னர் இதனைத் தனிப்படுத்த தம் ஆக்கூர் எனச் சுட்டியிருக்கலாம். பின்னர் இவ்வூர் தஞ்சாக்கூர் எனத் திரிந்திருக்கலாம் எனக் கொள்ளலாம். மேலும் ஆக்கூரில் உள்ள கோயிலும் மாடக்கோயில், கோச் செங்கட்சோழனால் கட்டப்பட்டது என அறிகின்றோம். தஞ்சாவூர் இருந்த மருக நாட்டுப் கோயிலும் கோச்செங்கட் சோழனால் கட்டப்பட்டது அறிகின்ற பொழுது, இரண்டும் சைவப்பற்றுடையார் வாழ்ந்த நிலையிலும் ஒப்புமை காட்டுகிறது.

தண்டலை நீணெறி

தேவாரத் திருத்தலங்கள்

தண்டாரணியம்

சங்க கால ஊர்கள்

தண்டு ஆரணியம், இந்தியாவின் முதுகந்தண்டு போல அமைந்துள்ள தக்கணப் பீடபூமிக்காடுகள்

சங்க கால ஊர்கள்

தனுஷ்கோடி

சங்க கால ஊர்கள்

தமிழகம்

சங்க கால ஊர்கள்

தமிழ்

சங்க கால ஊர்கள்

தருமபுரம்

காரைக்காலின் அருகில் உள்ள சிவத்தலம் அறக் கடவுள் வழிபட்ட தலம் காரணமாக இப்பெயர் அமைந்தது என்பர்.. கொடி மதில் சூழ் தருமபுரம் என இதனைச் சேக்கிழார் குறிப்பர். ஞானசம்பந்தர் தேவாரம் (பதி 136) சிவனின் பெருமைகளைச் சுட்டியே அமைவதால் இவ்வூர் குறித்த எண்ணங்கள் தெளிவு பெறவில்லை. எனினும் செழிப்பு மிக்க இடம் என்பது இவரது பாடலடிகள் வழி தெரிய வருகின்றன.
தாதவிழ் புன்னை தயங்கு மலர்ச்சிறை வண்டறை
யெழில் பொழில் குயில் பயிறரும புரம்பதியே (136-1)
திருநாவுக்கரசரும் தம் பதிகத்தில் (216) தருமபுரத்துள்ளார் என இறைவனைக் குறிப்பிடுகின்றார். இன்று வரை இப்பெயரிலேயே திகழும் நிலையில் இவ்விடம் அமைகிறது.

தருமபுரம்

தேவாரத் திருத்தலங்கள்

தருமபுரி

சங்க கால ஊர்கள்

தலைச்சங்காடு

இன்றும் இப்பெயரிலேயே வழங்கப்படும் இவ்வூர் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்தது. திருஞானசம்பந்தர் பாடல் பெற்றது இத்தலம்.
கேடஞ்சூழ் கொள்கையீர் வேண்டி நீண்ட வெண்டிங்கள்
இடஞ்சூழ் கங்கையு முச்சி வைத்தீர் தலைச்சங்கை
கூடஞ்சூழ் மண்டபமும் குலாய வாசற் கொடித் தோன்றும்
மாடஞ்சூழ் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே (391-4)
என்ற சம்பந்தர் தேவாரப்பாடல், இத்தலம் பற்றிய பல எண்ணங்களைத் தருகின்றது. தலைச்சங்கையில் உள்ள கோயில் இறைவன் இங்குப் பாடப்படுகின்ற நிலையில் தலைச் சங்கை ஊர்ப்பெயர் என்பது விளக்கமாகின்றது. மேலும் கோயில் பெரிய கோயிலாகத் திகழ்ந்தது என்பது மண்டபம், கொடி போன்ற எண்ணங்கள் உணர்த்தும் எண்ணம். மட்டுமல்லாது தலைச் சங்காடு என்ற பெயரைத் தலைச்சங்கை என்று, மருவு நிலையில் குறிப்பிடும் தன்மையும் இவண் தெரியவருகின்றது. கல்வெட் டில் இப்பெயர் தலைச்சங்காடு குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. எனவே செங்காடு என. செங்குன்றம் போன்று இப்பெயர் அமைந்திருக்கலாம். எனினும் எண்ணங்கள் இங்குச் சிந்திக்கத் தக்கன. சிலப்பதிகாரம் அடைக்கலக் காதையில் மாடலன் பற்றி பேசுமிடத்தில் இளங்கோவடிகள்,
தாழ்நீர் வேலித் தலைச் செங்கானத்து
நான் மறை முற்றிய நலம்புரிக் கொள்கை
மாமறை முதல்வன் மாடலன் என் போன்
எனக் காட்டுகின்றார். அடியார்க்கு நல்லார் தாழ்ந்த நீரை வேலியாக உடைய, தலைச் செங்காடென்னும் ஊரிடத்து எனக் கூறிச் செல்கின்றார். இதற்குக் குறிப்புரை எழுதும் நிலையில் உ..வே.சா, தலைச் செங்காடென்பது காவிரிபூம்பட்டினத்திற்குத் தென் மேற்கே நான்கு நாழிகை வழித் தூரத்தில்உள்ள தேவாரம் பெற்ற சிவஸ்தலம் என்கின்றார். இந்நிலையில் இவ்வூரின் பழமையுடன் செங்குன்றம் போன்று இவ்வூர் பெயர் பெற்றமையும் தெளிவு பெறுகிறது. கல்வெட்டிலும் தலைச் செங்காடு என்ற வழக்கு அமைகிறது. பின்னர் மக்கள் வழக்கில் இவ்வூர் தலைச்சங்காடு என்று வழங்கப்பட்டு இன்று வரை அந்நிலையே நீடிக்கிறது இப்பெயரின் மரூஉவாகச் சங்கை என்பதனைத் தேவாரப் பாடல் உரைக்க, தலைசை என்ற மரூஉவும் இதற்கு உண்டு என்ற எண்ணத்தையும் காண்கின்றோம்

தலைச்சங்காடு- தலைச்சங்காடு சங்காரண்யேசுவரர் கோயில்

தேவாரத் திருத்தலங்கள்

தலையாலங்காடு

தலையாலங்காடு என்ற பெயர் கொண்ட ஊர் இன்றும் இப்பெயரிலேயே – சுட்டப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டம் சார்ந்தது இது. திருவாலங்காடு என்று சென்னைக்கருகில் உள்ள, காரைக்கால் அம்மையார், தேவார மூவர் போன்ற பலராலும் பாடப்பட்ட தலத்தினின்றும் வேறுபட்ட தலம் இது. இவ்வூர் சிவன் கோயில் சிறப்பு பெற்றது. இதனைக் கபிலதேவ நாயனார், அப்பர் பாடிய பாடல்கள் வழி யுணரலாம்..
தலையாலங் காட்டிற் பலிதிரிவர் என்றும்
தலையாலங்காடர் தாம் என்றும் (93)
என்ற என்ற பாடலடி, சிவபெருமான் திருவந்தாதியில் இடம் பெறுகிறது. திருநாவுக்கரசர் இவ்வூர் இறைவனைப் பற்றிப் பாடும் பதிகத்தில் (293) இவ்வூர் பற்றி எதுவும் விளங்கவில்லை. ஞானசம்பந்தரும் பாடொலிநீர்த் தலையாலங்காடு (373) வணங்கிச் சென்ற நிலை யைச் சேக்கிழார் பாடுதலில் அறிகிறோம். எனவே காரைக்கால் அம்மையார் திருவாலங்காட்டைப் பற்றிப் பாடிய போதிலும் தலையாலங்காடு என்ற இப்பெயரில் உள்ள தலை, சொல் பழமையைக் குறிக்கிறது. இந்நிலையில் பண்டைத் தமிழ் மன்னரான தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ் செழியன் போர் செய்து வென்ற தலையாலங் கானமாக இருக்க லாமா ? என்பது எண்ணற்குரியது. உ.வே.சா தன் புறநானூற்று அரும்பத் அகராதியில், ஆலங்கானம் தலையாலங்கானம் என்னும் பெயரையுடைய தோரூர். இப்பொழுது கலையாலங்கா டென்று வழங்கப்படுகிறது. இதில் நெடுஞ்செழியன் இருபெரு வேந்தரையும் ஐப்பெரு வேளிரையும் பொருது வென்றனன் எனக்குறிப்பிடும் நிலை இவ்வெண்ணத்தை உறுதிப்படுத்துகிறது.

தலையாலங்காடு- சங்ககாலத் தலையாலங்கானம் = ஆலங்கானம்

தேவாரத் திருத்தலங்கள்

தலையாலங்கானம்

பார்க்க ஆலங்கானம்‌

தலையாலங்கானம்

சங்க கால ஊர்கள்

தலையூர்

நம்பியாண்டார் நம்பியால் சுட்டப்படும் இவ்வூர். சோழ நாட்டு ஊர் என்பது தெரிய வருகிறது. உருத்திர பசுபதி நாயனார் புராணத்தில், நாயனாரின் தோற்றம் பற்றிக் குறிப்பிடும் நிலையில் அவர் பிறந்த ஊரினை,
நிலத்தின் ஓங்கிய நிவந்தெழும் பெரும் புனல் நீத்தம்
மலர்த் தடம்பணை வயல்புகு பொன்னி நன்னாட்டுக்
குலத்தின் ஓங்கிய குறைவிலா நிறைகுடி குழுமித்
தலத்தின் மேம்படு நலத்தது பெருத்திருத்தலையூர் (1)
எனப் பாடுகின்றார். இப்பாடலில் இறுதி வரி, ஊரின் தலை சிறந்த நிலைப்பற்றி அதன் காரணமாகப் பெயரும் அமைந்திருக்குமோ என்ற உணர்வினைத் தருகிறது. பிற எண்ணங்கள் தெளிவில்லை.

தவத்துறை

இதனை, ஞானசம்பந்தர் வணங்கிச் சென்ற தலமாகச் சேக் கிழார் குறிப்பிடுகின்றார்.
கைதொழு தேத்திப் புறத்தணைந்து காமர்பதியதன் கட்சில தோள்
வைகி என்ற வணங்கி மகிழ்ந்தணைவார் மற்றும் தவத்துறை வானவர் தாள்
எய்தி இறைஞ்சி எழுந்து நின்றே இன் தமிழ் மாலைக் கொண்டேத்திப்போந்து
வைதிக மாமணி அம்மருங்கு மற்றுள்ள தானம் வழுத்திச் செல்வார் (34 – 347)
ஆனைக்காவில் வணங்கிய பின்னர் இங்கு வரும் தன்மை (34-346) ஆனைக்காவிற்குப் பக்கத்தில் இத்தலம் இருக்கலாம் எண்ணத்தைத் தருகிறது. மட்டுமல்லாது. திருநாவுக்கரசரும் இ. கோயிலைக் குறிப்பிடுகின்றார்.
பண்டெழுவர் தவத்துறை வெண்டுறை (க்ஷேத்திரக்-11)
இத்தவத்துறை, பண்டெழுவர் தவத்துறை
என்று சுட்டப்படுவதால் எழுவர் சிவபிரானை நோக்கி, தவஞ் செய்து, பேறு பெற்ற தலமாதல் பற்றித் தவத்துறை என்ற பெயர் வழங் கலாயிற்று என்ற கருத்து அமைகிறது. இது இன்று லால் குடி என அழைக்கப்படுகிறது. திருவானைக்காவிற்கு 12 மைல் தொலைவில் உள்ளது என்ற எண்ணமும் அமைகிறது. எனவே மாவட்டமாக அமையலாம். இவ்வூரில் புராதனச் சிற்பத் திறம் வாய்ந்த சிவாலயமொன்று உண்டு. இக்கோயிலின் செந்நிறமான கோபுரத் தோற்றத்தைக் கொண்டு சிவப்பு ஸ்தானம் என்ற பொருளுடைய லால்குடி என்ற பெயரை இதற்கு இஸ்லாமியர் வழங்கினர் என்ற எண்ணம் லால்குடி என்ற பெயர்க் காரணம் சுட்டுகிறது. தவத்துறை என்ற ஊர் பற்றிய எண்ணம் திருநாவுக்கரசர் காலத் திலேயே அமைய, கோயில் அடிப்படையில் இப்பெயர் அமைந்திருக்கலாம் என்ற எண்ணம் தோன்றுகிறது. இக்கோயில் கல்வெட்டுகள் அரசியல் நிலையிலும் இக்கோயிலும் ஊரும் மிகவும் போற்றப்பட்டதைத் தெரிவிக்கின்றறன. மேலும் துறை என்று நோக்க, ஆற்றங்கரைப் பகுதியாக இருக்கலாம் என்ற எண்ணம் அமைகிறது. அருணகிரிநாதர் திருப்புகழில்,
சீரணியுந் திரை தத்தி முத்தேறி
காவிரியின் கரையொத்து மொத்திய
சீர்புனைகின்ற திருத்தவத்துறை வாழும் வாழ்வே
என்று சுட்டுவது, மேற்கண்ட கருத்தினையுறுதிப்படுத்த வல்லது

தாவரங்களை ஒட்டியன

தாவரங்களின் மிகுதி அல்லது அருமை என்னும் காரணங்களால் தாவரப் பெயர்கள் ஊர்ப் பெயர்களின் பொதுக்கூறுகளாக அமைந்திருக்கின்றன. சிறு அளவில் இவை வழங்கின்றன. தாவரமிருக்குமிடத்தைச் சுட்டிய வடிவம், அருகில் தோன்றிய ஊரையும் தழுவு பெயராகக் காலப்போக்கில் குறித்தமையே இவை இவ்வாறு வழங்குவதற்கு அடிப்படை எனலாம். இலுப்பை, கானல், புளி எனும் தாவரப் பெயர்களும், “தளிர்” எனும் தாவர சினைப் பெயரும், “மரம்” எனும் முதற்பெயரும் பொதுக்கூறுகளாக அமைந்துள்ளன.

திங்களூர்

சிவத்தொண்டினால் பெருமை பெற்ற அப்பூதி அடிகளின் பிறந்த ஊர் திங்களூர். இதனை, நம்பியாண்டார் தம் திருத்தொண்டர் திருவந்தாதியில் (29) குறிப்பிடுகின்றார். இவ்வூரினைச், சேக்கிழார்,சீத நீர் வயல் சூழ் திங்கள் ஊரில் அப்பூதி யார் (காரைச் -66) எனச் சுட்டுகின்றனர். சந்திரனோடு இவ்வூர்ப் பெயர் தொடர்புடையது என்பது ரா.பி. சேதுப்பிள்ளை அவர்கள் கருத்து..

திங்களூர்

தேவாரத் திருத்தலங்கள்

திட்டை – திருத்தென்குடித்திட்டை

தேவாரத் திருத்தலங்கள்

தினைநகர்

தேவாரத் திருத்தலங்கள்

திருஇட எந்தை

தொண்டை நாட்டுத் தலமாகிய இப்பதி, மாமல்லபுரம் சென்னை வழியில் உள்ள ஒரு சிறிய ஊர். திருமால் கோயில் கொண்ட ஊர். இறை மேலுள்ள புராணக் கதை ஒன்றின் அடிப் படையில் திரு இடவெந்தை என்ற பெயரைத் தாங்கி நிற்கிறது அறிகின்றோம். இப்பெயர் தவிர, இவ்வூருக்கு, நித்திய கல்யாணபுரி, ஸ்ரீபுரி, வராகபுரி என்ற பெயர்களும் அன்று வழங் கின. எனினும் செல்வாக்கு காரணமாகத் திருஇடவெந்தையே இன்று வரை நிலைபெற்ற பெயராக அமைகிறது. இக்கோயில் சிறப்புப்பெற்று, இப்பெயர் செல்வாக்குப் பெறுமுன்பு வேறு பெய ரைக்கொண்டு இவ்வூர் திகழ்ந்ததோ என்ற எண்ணந்தைக் கல் வெட்டுகளில் இவ்வூரின் பெயர் அசுர குல கால நல்லூர் என்ப தைக்காணும் போது ஏற்படுகிறது. மேலும் இப்பெயர் செல்வாக்கில் அசுரகுல கால நல்லூர் என்ற பெயர் மறைவும் தெரியவருகிறது திருமங்கையாழ்வார் பாடல் பெற்றது இவ்வூர் (பெரிய திருமொழி – 2).

திருச்சீரலைவாய்

சங்க கால ஊர்கள்

திருச்செந்தில்

பார்க்க. அலைவாய்‌

திருத்தினைநகர்

தென் ஆர்க்காடு மாவட்டத்தைச் சார்ந்து அமையும் இவ்வூர் இன்று தீர்த்தனகிரி எனச் சுட்டப்படுகிறது. பெரியான் என்னும் பள்ளன் தன் நிலத்தை உழுது கொண்டு இருக்கும் போது இறைவன் அடியாராக வந்து அன்னம் வேண்டினார். அவன் தன் பணியை நிறுத்தி, அடியவரை அங்கேயே இருக்கச்செய்து உணவு கொண்டு வாத் தன் இருப்பிடம் சென் றான். அவன் திரும்பி வருவதற்குள் பருமான் அந்நிலத்தில் தினைவிளைந்திருக்குமாறு செய்து மறைந்தார். வந்த பெரியான் திகைப்புற, அவனுக்குக் காட்சி தந்தார். அதிசயமாகத் தினை விளைந்ததால் சினைநகர் என்னும் பெயர் பெற்றது என்ற புராணக்கதை இந்நகருக்குரியது. படை. சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம் எவ்வாறு இப்பெயர் பெற் றது எனக் காணின் தினை வளமிக்க காரணமே என்பது வெளிப் தினைநகர்’பற்றிய சுந்தரர் பாடல்கள் (54) இதன் செழிப்பினை. சேறு தங்கிய திருத்தினை நகர் (1) வார் பொழில் திருத்தினை நகர் (2) செடிகொள் கான்மலி திருத் தினைநகர் (3) செந்நெலார் வயற் திருத்திஎனை நகர் (7) செருந்தி பொன் மலர் திருத்தினை நகர் (8) என்றெல்லாம் சுட்டுகின்றன. எனினும் ஒரே ஒரு பாடல், சிமய மார் பொழிற் றிருத்தினை நகர் (9) எனக் காட்டும் தன்மை, தினை வளரும் மலைப்பகுதியை எண்ணச் செய்கிறது மேலும் தீர்த்தனகிரி என, பிறமொழி மாற்றத்தால் பெற்ற பெயரும் மலையையே எண்ணச் செய் எனினும் இன்று இப்பகுதியில் மலைகள் ல்லாமை, சிறிது தாலைவில் மலைகள் உள்ளமை இவற்றை நோக்க, இப்பகுதி முழுமையும் இப்பெயரால் வழங்கப்பட்டு இருக்கலாம் எனத் தோன்றுகிறது. ஏனெனில் நகர் என்ற பொதுக்கூறு அதிக பரப்பைச் சுட்டும் நிலையில் இதனையே எண்ணச் செய்கிறது. மேலும் இவ்வூர் பற்றிய பிற எண்ணங்கள் விளக்கம் தரலாம்.. சுந்தரர் பாடல் பெற்றாலும், திருநாவுக்கரசரும் இத்தலம் சென்று வணங்கிப் பாடினார் என்றக் குறிப்பினை, சேக்கிழாரின் பெரிய புராணம் தருகிறது.
செல்வம் மல்கிய தில்லை மூதூரினில் திருநடம் பணிந்து ஏத்திப்
பரமர் தம் திருத்தினை நகர்பாடி – பெரிய திருநா – 962

திருநகரி

திருநகரி, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தலம். திருமால் கோயில் சிறப்பு. ஆழ்வார்கள் பாடல் பெற்ற தலம்.

திருநகர்

அழகு பொருந்திய நகர்‌ அல்லது செல்வம்‌ பொருந்திய நகர்‌ என்ற பொருளில்‌ திருநகர்‌ எனப்‌ பெயர்‌ பெற்றிருக்கலாம்‌. திருநகர்‌ என்பது வேசாலி என்னும்‌ அரசனுடைய நகர்‌.
“திருவமர்‌ மூதூர்த்‌ தெருவுங்‌ கோணமும்‌
ஒருவழி யொழியா துயிர்நடுக்கு றீஇத்‌
திரிதர்வர்‌ மாதோ திருநகரகத்தென்‌”.(பெருங்‌. 1:45:95 97)
“திருநகரகவயின்‌ திறன்‌ மீக்கூரி
ஒருதுணை வயவருள்‌ வழித்‌ திரிதர” (௸. 1:46; 1 2)
“வள்ளிதழ்க்‌ கோதை வாசவதத்தையை
உள்ளுபு திருநகர்‌ புக்கன னுலந்தென்‌” (௸. 3:3; 122 123)
“ஐங்கணைக் கிழவனமர்ந்து நிலைபெற்ற
எழுதுவினைத்‌ திருக ரெழிலுற வெய்தி” (௸. 3:4) 36 3)
“விண்மிசை யுலகன்‌ விழவமைந்தாங்கு
மண்‌ மிசையுலகன்‌ மன்னிய சீர்த்தி
முழவுமலி திருநகர்‌ விழவுவினை தொடங்க” (௸. 325; 45 47)
“பொலந்‌ தொடி மகளிர்‌ பொலிவொடு சூழ
வந்த பொழுதிற்‌ கதுமென நோக்கிய
அந்த ணாளற்‌ கணிநல னொழியப்‌
பெருநகர்‌ புகழத்‌ திருஈகர்‌ புக்கபின்‌” (ஷெ. 36; 131 134)

திருந்து தேவன் குடி

திருந்து தேவன் குடி என்று இன்றும் வழங்கப்படும் இவ்வூர் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்து அமைகிறது. ஞானசம்பந் தர் பாடல் பெற்றது இத்தலக் கோயில். ஊர் இல்லை; ஞான சம்பந்தர் பாடல் பெற்ற இக்கோயில் மட்டும் வயலுக்கு மத்தியில் உள்ளது என்ற குறிப்பு ஊர் இருந்து, மக்கள் பிற இடங் கட்குச் சென்ற நிலையைக் காட்டுகிறது. ஞானசம்பந்தர் பாடல் இவ்வூர் பற்றிய இறைச் சிறப்பையே காட்டுகின்றது. இருப் பினும் பெரிய புராணம் இவ்வூர் குறித்துச்சுட்டும் எண்ணங்கள், திருந்து தேவன் குடியில் இருந்த சிவன் பற்றிக் கூறும் நிவை யினை இங்குக் காட்டலாம்.
செங்கண் மாலுக்கரியார் தம் திருந்து தேவன் குடிசார்ந்தார் (திருநா-294)
எனச் சேக்கிழார் சுட்டி, மேலும்
திருந்து தேவன் குடிமன்னும் சிவபெருமான் கோயில் எய்தி (திருஞான -295)
என்றும், மொய்திகழ் சோலை அம்மூதூர் முன்னகன்று (296) என்றும் கூறும் நிலையில் இது ஒரு ஊராக இருந்தது என்பது தெளிவாக விளங்குகிறது. குடி என்ற பொதுக் கூறு தடியிருப்புப் பகுதியைச் சுட்டும் தன்மையும் இங்கு இணைத்து நோக்கத்தக்கது, இறைவன் கோயில் கொண்ட நிலையில் தேவர் குடியாகி யிருக்க வாய்ப்பு அமைகிறது.

திருந்துவேதன்குடி

தேவாரத் திருத்தலங்கள்

திருப்பரங்குன்றம்

பார்க்க குன்று குன்றம்‌

திருப்போர்ப்புரம்

சங்க கால ஊர்கள்

திருமருத நீர்ப்பூந்துறை

சங்க கால ஊர்கள்

திருமருத முன்றுறை

சங்க கால ஊர்கள்

திருமால்குன்றம்‌

திருமால்குன்றம்‌ என்பது மதுரையை அடுத்துள்ள அழகர்‌ மலையேயாகும்‌. திருமாலிருஞ்‌ சோலை என்றும்‌ பிற்காலத்தில்‌ வழங்கப்‌ பெற்றிருக்கிறது. அங்கே ஒரு பிலம்‌ உள்ளது என்றும்‌, அப்பிலத்து நெறியில்‌ புண்ணிய சரவணம்‌, பவகாரணி, இட்டசித்தி என்னும்‌ பெயர்‌ கொண்ட மூன்று பொய்கைகள்‌ உள்ளன என்றும்‌ இலக்கியம்‌ கூறுகிறது.
“அரிதின்‌ பெறு துழக்கம்‌ மாலிருங்குன்றம்‌
எளிதின்‌ பெறல்‌ உரிமை ஏத்துகம்‌, சிலம்ப” (பரி. 15: 17 18)
“கடம்பல இடந்த காடுடன்‌ கழிந்து
திருமால்குன்றத்துச்‌ செல்குவி ராயிற்‌
பெருமால்‌ கெடுக்கும்‌ பிலமுண்டாங்கு
விண்ணோ ரேத்தும்‌ வியத்தகு மரபிற்‌
புண்ணிய சரவணம்‌ பவகரணியோ
டிட்ட சித்தி யெனும்‌ பெயர்‌ போகி
விட்டு நீங்கா விளங்கிய பொய்கை
முட்டாச்‌ சிறப்பின்‌ மூன்றுள….. ”. (சிலப்‌. 1] : 96 97)

திருவெஃகா

‌பாம்பணையாகிய பள்ளியில்‌ துயில்‌ கொண்ட திருமாலின்‌ திருவெஃகா” என்பது சங்க இலக்கியச்‌ செய்தி. வெஃகல்‌ என்றால்‌ விருப்பம்‌ என்றும்‌ வெஃகுதல்‌ என்றால்‌ விரும்புதல்‌ என்றும்‌ பொருள்‌ இருப்பதால்‌ “பெருமகிழ்‌ இருக்கை யாகிய அவ்விடம்‌ விருப்பம்‌ தருவது, விரும்பி உறைவதற்கேற்ற இடம்‌ என்ற கருத்தில்‌ வெஃகா எனப்‌ பெயா்‌ பெற்று, திரு என்‌ற முன்‌ ஒட்டுடன்‌ இணைந்து திருவெஃகா என நாளடைவில்‌ வழங்க இருக்கலாம்‌ என எண்ணச்‌ தோன்றுகிறது. காஞ்சிபுரத்திற்குத்‌ தென்கிழக்கே சுமார்‌ இரண்டு மைல்‌ தொலைவில்‌ உள்ளது திருவெஃகா. பிரமன்‌ செய்த வேள்வியை அழிக்க வந்த வேகவதி என்னும்‌ ஆற்றைத்‌ தடுக்கத்‌ திருமால்‌ அந்த ஆற்றின்‌ குறுக்கே அணையாகப்‌ பள்ளிகொண்டார்‌ என்பது புராணச்செய்தி. வேகவேது என்ற வடசொல்‌ வேகவணை எனத் தமிழாகி வேகணை, வெஃகனை, வெஃகா என மருவி இவ்வூரைக்‌ குறித்த தென்பர்.
நீடுகுலைக்‌
காந்தள்‌ அம்‌ சிலம்பில்‌ களிறு படிந்தாங்கு,
பாம்பணைப்‌ பள்ளி அமர்ந்தோன்‌ ஆங்கண்‌
வெயில்‌ நுழைபு அறியா, குயில்‌ நுழை பொதும்பர்‌
குறுங்காற்‌ காஞ்சி சுற்றிய நெடுங்கொடிப்‌
பாசிலைக்‌ குறுகன்‌ புன்புற வரிப்பூ,
கார்‌ அகல்‌ கூவியர்‌ பாகொடு பிடித்த
இழைசூழ்‌ வட்டம்‌ பால்‌ கலந்தவைபோல்‌,
நிழல்‌ தாழ்‌ வார்‌ மணல்‌ தீர்‌ முகத்து உறைப்ப,
புனல்கால்‌ கழீஇய பொழில்தொறும்‌, திரள்கால்‌
சோலைக்‌ கழுகின்‌ சூல்‌ வயிற்றன்ன
நீலப்பைங்குடம்‌ தொலைச்‌சி, நாளும்‌
பெருமகிழ்‌ இருக்கை மரீஇ………” (பத்துப்‌, பெரும்பாண்‌ 371 383)

திருவேரகம்

சங்க கால ஊர்கள்

திலதைப்பதி

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்த இவ்வூர் இன்று வழக்கில் திலதர்ப்பணபுரி எனவும், மதிமுத்தம் எனவும் வழங்கப்படுகிறது. அரிசிலாற்றின் தென் கரையில் உள்ள இத்தலம் ஞானசம்பந்தர் பாடல் பெற்ற கோயிலைக் கொண்டது.
பொடிகள் பூசிப்பல தொண்டர் கூடிப்புலர் காலையே
அடிகளாரத் தொழுதத்த நின்றவ் வழகன் னிடம்
கொடிகளோங்கிக் குலவும் விழவார்திலதைப்பதி
வடிகொள் சோலைம் பலர் மணங்கமழும் மதிமுத்தமே (254-1)
என்று இவர் பாடும் நிலையில் திலதைப்பதி ஊர்ப்பெயர் என்பதும், மலர் மணங்கமழும் மதிமுத்தம் கோயிற்பெயர் என்பதும் தெளிவுறுகின்றன. இக்கோயிற் பெயர் பின்னர் செல்வாக்குப் பெற்று, திலதைப்பதியைச் செல்வாக்கிழக்கச் செய்துவிட்டதை ன்று. மதிமுத்தம் எனச் சுட்டும் வழக்கு தருகின்றது. அரிசிலாற்றங்கரையில் அமைந்த இவ்வூரினை. தெண்டிரைப்பூம் புனல் அரிசில் சூழ்ந்த திலதைப்பதி (254-2) என்ற சம்பந்தர் பாடலடிகள் உணர்த்துகின்றன. மேலும் இவ்வூரின் செழிப்பும் இவர் பாடல்களில் புலனாகின்றது. திலதைப்பதி என்ற ஊர்ப்பெயரின் பொருளை நோக்க, சில எண்ணங்கள் புலனாகின்றன. இயற்கைச் செழிப்புள்ள இடமிது. இந்நிலையில் திலதை என்பது மரவகையாக இருக்குமோ எனக் காணின், திலகம், திலதம் என்ற இரண்டு சொற்களாலும் குறிக் கப்பட்ட மஞ்சாடி மரத்தைப்பற்றிய செய்தி தெரியவருகின்றது.
தெரிமுத்தம் சேர்ந்த திலதம் என கலித்தொகையும் (92)
மரவமும் நாகமும் திலகழும் மருதமும் எனச் சிலம்பும் (13-152)
இதனைச் சுட்டுகின்றன. இந்நிலையில் மஞ்சாடி மரங்கள் நிறைந்த இடம் என்ற நிலையில் திலதப்பதி என்ற இடம் திலதைப்பதி ஆகியிருக்கக் கூடும் எனத் தோன்றுகிறது. ஆயின் இங்குள்ள கோயில் சிறப்பு பெற்று, பக்தியின் செல்வாக்கு மிக்க காலத்தில், திலதைப்பதி என்று பாடல் பெற்ற இத்தலம் திலதர்ப் பணபுரி என பிற மொழியாளர்களால் பெயர் மாற்றம் செய்யப் பட்டு, அதற்கேற்ற புராணக் கதையையும் பெற்றுவிட்டது ! கருத வாய்ப்பு அமைகிறது. சேக்கிழார் காலத்திலும் திலதைப்பதி என்றே கருதப்பட்ட நிலை (34-549) இதன் பழம் பெயரை யுணர்த்தும், இக்கதையின் உண்மையின்மையையும் காட்டும்.

திலதைப்பதி

தேவாரத் திருத்தலங்கள்

தில்லை

சிதம்பரம் என்ற பெயரில் தென் ஆர்க்காடு மாவட்டத்தில் உள்ள தலம் இது. தில்லை என்னும் மரங்கள் அடர்ந்திருந்த காரணத்தால் இத் தலத்திற்குத் தில்லை என்னும் பெயர் உண்டாயிற்று என்பது எளி தாகத் தெரியும் நிலை. புலிப்பாதர் என்னும் முனிவர் பூசித்தமையால் புலியூர் என்ற பெயர் உண்டு. சித் + அம்பரம் – சிதம்பரம். சித் – அறிவு அம்பரம் – வெட்டவெளி. பொன் வேயப் பெற்று ஒரு மலைபோல் ஓங்கிப் பொன் னொளி வீசி நாற்றிசையும் பரவியிருத்தலால் இத்தலத்திற்குத் தட்சிணமேரு என்னும் பெயரும் தோன்றி விளங்குகின்றது. இத்தலத்திற்குப் பூலோகக் கைலாசம் புண்டரீக புரம் முதலிய வேறு பெயர்களும் உண்டு. சிற்றம்பலம் என்ற பெயரின் மரூஉ சிதம்பரம் என்பர் ஊர் தில்லை எனவும் சிதம் பரம் கோயிலையும் குறித்து நிற்கிறது. எனினும், இன்று ஊரை யும் சிதம்பரம் என்று சுட்டும் வழக்கே அமைகிறது. கோயில் என்றாலே சிதம்பரம் கோயில் என்று சுட்டும் தன்மை இக்கோயி லின் மிகுந்த செல்வாக்சைத் தெரிவிக்கும் வண்ணம் அமைகின் றது. வைணவ நூல்கள் இவ்வூரைத் தெற்றி அம்பலம் என்றும், திருச்சித்திரகூடம் என்றும் குறிப்பிடுகின்றன. அனைத்துலகும் தொழும் தில்லை’ மாணிக்கவாசகர் இவ்வூரைச் சிறப்பித்துள்ளது இக்கோயில் பெருமையைச் சிறப்பாகப் பறைசாற்ற வல்லது.

துடையூர்

திருநாவுக்கரசரின் அடைவுத் திருத்தாண்டகப் பதிகத்தில் சுட்டப்படும் ஊர் இது.
துறையூரும் துவையூரும் தோழூர் தானும்
துடையூரும் தொழவிடர் கடடொடரா வன்றே 285-4

துருத்தி

இன்று குத்தாலம் என வழங்கப்படும் இவ்வூர் தஞ்சாவூர் மாவட்டம் சார்ந்து அமைகிறது. சம்பந்தர், அப்பர், சுந்தரர். மாணிக்கவாசகர் போன்ற பலரால் பாடல் பெற்ற சிறப்புடையது. கும்பகோணம் மாயூரம் இருப்புப்பாதையில் உள்ள புகை வண்டி நிலையம் எனக் காண்கின்றோம். மேலும் காவிரிக்குத் தென் கரையில் உள்ள இடம் என அறியும்போது அன்று குறிப்பிட்ட பகுதியைச் சுட்டிய இவ்வூர்ப் பெயர் இன்று பரந்ததொரு பகுதியைச் சுட்டுவதையும் நாம் காண்கின்றோம். மேலும், அன்று காவிரியின் நடுவில் இருந்த தலம் இன்று கரையில் இருக்கிறது என்பதை அறிய நீரின் போக்கு மாற்றமும் உணர இயலுகின்றது.
பொன்னியின் நடுவு தன்னுள் பூம்புனல் பொலிந்து போற்றும்
துன்னிய துருத்தியான் -திருநா – 42-5
திடைத்தடம் பொன்னிசூழ்திருத் துருத்தியினில் – பெரிய – 34-486
காவிரிக்கரையில் இதன் இருப்பிடத்தை. காவிரிக்கரைத் தலைத் துருத்தி என ஞானசம்பந்தர் இயம்புகின்றார் (234-1). இங்குள்ள இறைவன் சிறப்பை, ஷேத்திரக் கோவை வெண்பா, திருத்துருத்தி யான் பாதம் சேர் (5) எனவும், திருவாசகம் துருத்தி தன்னில் அருத்தியோடு இருந்தும் (கீர்த்தி 86) எனவும் பேசுகின்றன. நீரின் போக்கு மாறி, காவிரியின் தென்கரையில் அமர்ந்த தன் காரணமாகத் தான் துருத்தி என்ற இதன் பெயர் செல்வாக்கு இழக்க, குற்றாலம் என்ற பெயர் சிறப்புற்றதோ எனவும் எண்ணத் தோன்றுகிறது. ஒரு வகை ஆத்தி மரம் தலவிருட்சமாக அமைந்த காரணத்தால் குத்தாலம் எனப் பெயர் பெற்றதாக இப்பெயர்க் காரணம் சுட்டுகின்றனர் ஆல் நிறைய இருந்ததால் என்றும், கோயில் தல விருட்சமாகிய உத்தாலம் என்னும் மரத்தின் காரணமாகவே இவ்வூருக்கு இப்பெயர் வந்தது என்றும் சுட்டப்படுவதும் அமைகிறது.

துருத்தி = குத்தாலம் என்னும் ஊர்

தேவாரத் திருத்தலங்கள்

துறையூர்

சங்க கால ஊர்கள்

துறையூர்‌

துறையூர்‌ ஓடைகிழார்‌ என்ற புலவர்‌ ஒருவர்‌ பாடிய சங்க இலக்கியப்‌ பாடல்‌ ஒன்றில்‌ “தண்புனல்‌ வாயில்‌ துறையூர்‌” இடம்‌ பெற்றுள்ளது. ஊரால்‌ பெயர்‌ பெற்றார்‌ போலும்‌ இப்புலவர்‌. நீர்த்துறையின்கண்‌ அமைந்த ஊர்‌ துறையூர்‌ எனப்‌ பெயர்‌ பெற்றிருக்க வேண்டும்‌. “நாள்தோறும்‌: குளிர்ந்த நீர்‌ ஓடும்‌ வாய்த்தலைகளையுடைய துறையூர்” என்று சங்க இலக்கியம்‌ கூறுகிறது. துறையூர்‌ என்ற பெயருடன்‌ தென்‌ ஆர்க்காடு மாவட்டத்தில்‌ விழுப்புரம்‌ வட்டத்தில்‌ ஓர்‌ ஊரும்‌, திருச்சிராப்பள்ளி மாவட்டத்‌தில்‌ லால்குடி. வட்டத்தில்‌ ஓர்‌ ஊரும்‌, முசிரி வட்டத்தில்‌ ஓர்‌ ஊரும்‌ உள்ளன.
“நினக்‌ கொத்தது நீ நாடி
நல்கனைவிடுமதி பரிசில்‌ அல்கலும்‌
தண்புனல்‌ வாயிற்‌ றுறையூர்‌ முன்றுறை
நுண்பல மணலினு மேத்தி
உண்குவம்‌ பெரும நீ நல்கிய வளனே” (புறம்‌, (8623 27)

துறையூர்

சுந்தரர் பாடல் பெற்ற இவ்வூர் இன்று திருத்தளூர் என வழங்கப்படுகிறது. திருத்தலூர் எனவும் வழங்குவர். தென் ஆர்க்காடு மாவட்டத்தைச் சார்ந்து அமைகிறது. இன்றும் பெண்ணையாற்றின் கரையில் காணப்படும் இதனைச் சுந்தரர்,
மலையார் அருவித் திரண் மாமணியுந்திக்
குலையாரக் கொணர்ந் தெற்றி யோர் பெண்ணைவடபால்
கலையாரல்குற் கன்னியராடும் துறையூர்த்
தலைவா வுனை வேண்டிக் கொள்வேன் தவநெறியே (1-13)
எனப் பலவாறு பாடும் தன்மை, பெண்ணையாற்றினால் செழிப்புற்ற நிலையைக் காட்டும். பெண்ணையாற்றின் துறையில் அமைந்த காரணத்தில் துறையூர் எனப்பெயர் பெற்றிருக்கிறது என்பதும் இவண் தெளிவாகின்றது. திருநாவுக்கரசரும் துறையூரைச் சுட்டும் தன்மை, இதன் பழமையைக் காட்டும்.
துறையூரும் துவையூரும் தோமூர் தானும்
துடையூரும் தொழவிடர் கட்டொடரா வன்றே (285-4)
இவ்வூர்க் கோயிலில் சோழமன்னர், நாயக்கர், சம்புவராயர் காலத்திய கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. இக்கல்வெட்டுகளில் அனைத்தும் திருத்துறையூர் என்ற பெயராலேயே இவ்வூர்ச் சுட்டப்படுவது. இக்கோயில் சிறப்புற்ற நிலை சுந்தரர்க்குப் பின் அவர் பாடல் பெற்றமைக்குப் பின் என்பதைக் காட்டுகிறது. மேலும் இன்றைய திருத்தளூர் என்ற பெயர் வழக்கு 15 – ஆம் நூற்றாண்டிற்குப் பின்னைய வடிவமே என்பதும் தெரிகிறது.
1.மத்தம் மதயானையின் வெண் மருப்புந்தி
முத்தம் காணர்ந் தெற்றி யொர் பெண்ணை வடபால்
பத்தர் பயின்றேத்திப் பரவுந் துறையூர்
அத்தா வுனை வேண்டிக் கொள்வேன் தவநெறியே சுந். 13-2
2. சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச் செய்த தேவாரத் திருப்பதிகங்கள் ஏழாம் திருமுறை- பக். 18

துறையூர்

தேவாரத் திருத்தலங்கள்

துளுநாடு

சங்க கால ஊர்கள்

துளுநாடு

துளுவம்‌ என்பது இந்தியாவிலிருந்த பழைய ஐம்பத்தாறு நாடுகளுள்‌ ஒன்று. கன்னட நாட்டிற்குத்‌ தெற்கிலிருத்த நாடு. மைசூர்‌ இராச்சியத்தில்‌ தென்கன்னடம்‌ என்னும்‌ மாவட்டத்‌ இல்‌ துளுநாடு என்னும்‌ பகுதியுள்ளது, துளுநாடு மிக நீண்ட காலமாக கன்னட அரசருடைய ஆட்சியில்‌ இருந்து வந்தது. மயில்கள்‌ மிக்க பொழில்களையுடைய துளுநாடு என்று சங்க இலக்கியம்‌ கூறுகிறது.
“மெய்ம்மலி பெரும்பூண்‌, செம்மற்கோசர்‌
கொம்மை அம்‌ பசுங்காய்க்‌ குடுமி விளைந்த
பாகல்‌ ஆர்கைப்‌ பறைக்‌ கட்‌ பீலித்‌
தோகைக்காவின்‌ துளுநாட்டன்ன” (அகம்‌ 15:2 5)
நாகபுரம்‌.
சாவக நாட்டிலுள்ள ஒரு நகரம்‌ புண்ணிய ராஜனின்‌ தலைநகர்‌.
”மன்னவன்‌ யாரென மாதவன்‌ கூறு
நாகபுரமிது நன்னகராள்வோன்‌
பூமிசந்திரன்‌ மகன்‌ புண்ணியராசன்‌” (மணிமே 24:168 170)

துவரை = துவாரகை

சங்க கால ஊர்கள்

துவையூர்

திருநாவுக்கரசரின் அடைவுத் திருத்தாண்டகத்தில் சுட்டப் படும் ஊர் இது (285 4).

தூங்கானைமாடம்

தேவாரத் திருத்தலங்கள்

தூங்கெயில்

சங்க கால ஊர்கள்

தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன்

சங்க கால ஊர்கள்

தூங்கெயில் கதவம்

சங்க கால ஊர்கள்

தெங்கூர்

இன்றும் இப்பெயரிலேயே வழங்கப்படும் தலம், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்து அமைகிறது. நாவுக்கரசர் திருத்தெங்கூராய் என இவ்வூர் பற்றி குறிப் பிட, (239-1) ஞானசம்பந்தர் தெங்கூரில் கோயில் கொண்ட சிவனைக் குறித்து தனிப்பதிகமே அமைக்கின்றார்.
சித்தந் தன்னடி நினைவார் செடிபடு கொடுவினை தீர்க்கும்
கொத்தின் றாழ்சடை முடிமேற் கோளெயிற் றரவொடு பிறையன்
பத்தர் தாம் பணிந்தேந்தும் பரம்பரன் பைம்புனல் பதித்த
வித்தன் றாழ்பொழில் றெங்கூர் வெள்ளியம் குன்றமர்ந் தாரே (229-2)
என இவர் பதிகம் தோறும், தெங்கூர் வெள்ளியங்குன்று எனச் சுட்டும் நிலையைக் காண, தெங்கூர் ஊர்ப்பெயர், வெள்ளியங்குன்று இறை இருந்த இடம் என்பது புலனாகிறது. பெரிய புராணத்தில் சேக்கிழாரும் தெங்கூர் பற்றி இயம்புகின்றார். திருஞானசம்பந்தர்,
பைம்புனல் மென் பணைத்தேவூர் அணைந்து போற்றிப்
பரமர் திரு நெல்லிக் காப்பணிந்து பாடி
உம்பர் பிரான் கைச்சினமும் பரவி, தெங்கூர் ஓங்கு புகழ்த்
திருக் கொள்ளிக்காடும் போற்றிச் (34-574)
செல்லும் நிலையிலும் இவ்வூர் குறித்த சில எண்ணங்கள் விளக்கம் பெறுகின்றன. திருநெல்லிக்காவுக்குப் பக்கத்தில் உள்ளது என்ற எண்ணம் பெரிய புராணமும் காட்டும் நிலையில் தெங்கூர் இரண்டும் ஒன்று என்பது தெரிகிறது. அடுத்து தெங்கூர் ஓங்கு புகழ் திருக்கொள்ளிக்காடும் போற்றி என இயம்பும் நிலையில் வெள்ளியங்குன்று என சம்பந்தர் சுட்டிய கோயில் பெயர், பின்னர் கொள்ளிக்காடு எனவும் சுட்டப்பட்டிருக்கிறது என்பது விளக்கமாகின்றது. அடுத்து சுந்தரர் தம் ஊர்த் தொகையில்,
நாங்கூர் உறைவாய் தேங்கூர் நகராய் நல்லூர் நடப்பானே’ (47-6)
என தெங்கூரைத் தேங்கூர் எனக் குறிப்பிடுகின்றார். இதனைக் கொண்டு தேங்கூர் என்பதே சரியெனக் கொள்வர். எனினும் முதலில் நாம் காணும் பெயர் தெங்கூர் என்ற நிலையில் மட்டுமல்லாது கல்வெட்டுகளும் தெங்கூர் என்றே குறிப்பிடும் நிலை, தெங்கூர் என்பதே சரியான வடிவம் என்பதற்குத் துணையாகின்றது. ரா.பி. சேதுப்பிள்ளை, தெங்கூரை மரம் அடிப்படையான பெயராகச் சுட்டுகின்றார்.

தெங்கூர்

தேவாரத் திருத்தலங்கள்

தென் திருமுல்லைவாயில்

முல்லையால் பெயர் பெற்ற இரண்டு முல்லை வாயில்கள் தமிழகத்தில் உள்ளன. ஒன்று தென்திருமுல்லை வாயில். இன்னொன்று வடதிருமுல்லை வாயில், திரு எனச் சுட்டும் நிலையில் இரண்டும் கடவுள் குடி கொண்ட ஊர்கள் என்பதையும், தெற்கு. அமைவன வடக்கு முறையே இருக்கும் திசைகளை அறிவிக்கும் நிலையில் என்பதும் தெளிவாகத் தெரிகிறது. வடதிருமுல்லை வாயிலைச் சுந்தரரும், தென் திருமுல்லை வாயிலைச் சம்பந்தரும் பாடியுள்ளனர். இரண்டு ஊர்க் கோயில்களிலும் தலமரம் முல்லைக் கொடியாயிருத்தலும் சுட்டத்தக்கது. உள்ளது. வடதிருமுல்லைவாயில் இன்று திருமுல்லை வாயில் என்று வழங் கப்படுகிறது. செங்கற்பட்டு மாவட்டத்தில் சுந்தரர் பாலி நதி பாய்ந்து செழிக்கச் செய்யும் இதன் மாண்பை,
சந்தன வேரும் காரகிற் குறடும்
தண்மயிற் பீலியும் கரியின்
தந்தமும் தரளக் குவைகளும் பவளக்
கொடிகளும் சுமந்து கொண்டுந்தி
வந்திழி பாலி வடகரை முல்லை வாயிலாய் (69-3)
என்றுரைக்கின்றார். தென் திருமுல்லை வாயில் இன்றும் இப்பெயரிலேயே வழங்கப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் அமையும் சின, ஞான சம்பந்தர்.
மஞ்சாரு மாடமனை தோறுமைய
முளதென்று வைகி வரினும்
செஞ்சாலி நெல்லின் வளர் சோறளிக்கொ
டிரு முல்லை வாயிலிதுவே (224-7)
எனப் பாடுகின்றார். மேலும் பொன்னியாற்றால் வளம் பெறும் நிலையையும்,
வரை வந்த சந்தொடகிலுந்தி வந்து
மிளிர்கின்ற பொன்னி வடபாற் றிரை
வந்து வந்து செறிதேறலொடு
திருமுல்லை வாயிலிதுவே (224-8)
என்னும் பாடலடிகளில் காட்டுகின்றார்.

தென்குடித்திட்டை

தற்போது திட்டை என்று வழங்கப்படும் தலம், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்து அமைகிறது. சம்பந்தர் பாடல் பெற் றது இத்தலம். சம்பந்தர் பாடலடிகள்
மன்னுமா காவிரி வந்தடி வருடநல்
செந்நெலார் வளவயல் தென் குடித்திட்டையே (293-1)
செருந்தி பூமாதவிப் பந்தர் வண் செண்பகம்
திருந்து நீள் வளர் பொழிற் றென் குடித்திட்டையே (293-5)
வண்டிரைக்கும் பொழிற் றண்டலைக் கொண்டலார்
தெண்டிரைத் தண்புனற் றென்குடித் திட்டையே (293-10)
என இவ்வூரின் சிறப்பை எடுத்தியம்புகின்றன. திட்டை என்பதற்கு வெள்ளெருக்கு, மணற்றிட்டு என இரண்டு பொருட்களைத் தமிழ் லெக்ஸிகன் தரினும் திட்டை மணற் திட்டுகளையுடைய ஊர்ப்பகுதியாக இருக்கலாம் எனத் தோன்றுகிறது. சம்பந்தர் பாடல்களினின்றும் காவிரிக்கரைத்தலம் இது என்பது புரிகிறது. எனவே தெற்குப் பகுதி இவ்வூரின் திசையைச் சுட்டி, குடிமக்கள் வாழும் திட்டுப்பகுதி என்ற பொருளில் இப்பெயர் அமைந்திருக்க வாய்ப்பு அமைகிறது. இதனை ஒத்த பிறபெயராக, தஞ்சாவூர் சார்ந்த கருந்திட்டைக் குடி அமைகிறது. இவ்வூர் திருநாவுக்கரசர் தேவாரத்தில் குறிக்கப் பெறுகிறது.

தெளிச்சேரி

தற்போது கோயில் பத்து என வழங்கப்படும் இத்தலம் காரைக்காலை அடுத்து அமைகிறது. சம்பந்தர் பாடல் பெற்றது இத்தலம் (139). இவர் பாடல்களின் நிலையில் நின்று நோக்க, இவ்வூர்ப் பெயராகத் தெளிச்சேரி அமைந்திருந்தது என்பதும் செழிப்பான, மக்கள் சிறந்து வாழ்ந்ததொரு ஊர் என்பதும் புலனாகிறது.
பூவலர்ந்தன கொண்டு முப்போதுமும் பொற்கழல்
தேவர் வந்து வணங்கு மிகு தெளிச் சேரியீர் (139-1)
வம்படுத்த மலர்ப்பொழில் சூழ மதிதவழ்
செம்படுத்த செழும் புரிசைத் தெளிச் சேரியீர் (139-3)
தவள வெண்பிறை தோய் தரு தாழ்பொழில் சூழநல்
திவள மாமணி மாடந்திகழ் தெளிச் சேரியீர் (139-6)
திக்குலாம் பொழில் சூழ் தெளிச் சேரி (139-11)
பற்று என்பது நன்செய் நிலமாகும். அது தென்னாட்டில் பத்து எனவும், வடநாட்டில் பட்டு எனவும் திரிந்து வழங்கும். திருக்கோவிலுக்கு நிவந்தமாக விடப்பட்ட நிலங்களையுடைய ஊர் கோவில் பத்து என்று பெயர் பெறும் என ரா.பி. சேதுப் பிள்ளை கூறும் கருத்துடன் (ஊரும் பேரும் பக். 27) இவ்வூர்ப் பெயரான கோவில் பத்து இணைத்து எண்ணத் தக்கது. இதற் குரிய காரைக் கோயிற்பத்து என்ற பெயரையும் குறிப்பிடுகின் றார் சோ. சிவபாத சுந்தரம் இருப்பினும் தெளிச்சேரியில் சேரி குடியிருப்புப் பகுதியைக் குறித்து அமைய தெளி’ க்குரிய காரணம் புலப்படவில்லை.

தெளிச்சேரி

தேவாரத் திருத்தலங்கள்

தெள்ளாறு

ஆற்றுப் பெயரால் பெயர் பெற்ற ஊர்ப்பெயர் கோயிற் சிறப்புமுடையது என்பது திருநாவுக்கரசரின் அடைவுத் திருத் தாண்டகப் பதிகம் மூலம் தெரிகிறது. தெள்ளாறும் வளைகுளமும் தளிக் குளமும், நல் இடைக்குளமும் (285-10) என இதனைச் சுட்டுகின்றார் இவர்.

தேனூர்

சங்க கால ஊர்கள்

தேனூர்‌

சங்க இலக்கிய அகத்துறைப்‌ பாடல்களில்‌, தலைவியின்‌ நலம்‌ பாராட்டும்‌ பொழுது ‘தேனூரன்ன’ என்னும்‌ தொடர்‌ பல இடங்‌களில்‌ ஆட்சி பெற்றுள்ளது. இதன்‌ மூலம்‌ தேனூர்‌ என்னும்‌ ஊர்ப்‌ பெயர்‌ நமக்குக்‌ கிடைக்கிறது. இனிமை என்றும்‌, மணம்‌ என்றும்‌ பொருள்படும்‌ தேன்‌ என்ற சொல்லின்‌ அடியாக இவ்வூர்ப்‌ பெயர்‌ அமைந்திருக்கிறது. வேனிலிலும்‌ தண்புனல்‌ ஓடும்‌ தேனூர்‌ ஆகையால்‌ சோலைகள்‌ நிறைந்து மணம்‌ பரப்பிக்‌ கொண்டே இருந்தது. அதனால்தான்‌ தேனூர்‌ எனப்‌ பெயர்‌ பெற்றதோ எனத்‌ தோன்றுகிறது. இத்‌ தேனூர்‌ தென்னவன்‌ நல்நாட்டு உள்ளது எனக்‌ கூறப்‌ பெற்றிருப்பதால்‌ பாண்டி நாட்டின்‌ அமைந்த ஊர்‌ எனத்‌ தெரிகிறது. மதுரையையடுத்து வைகையில்‌ வடகரையில்‌ தேனூர்‌ என்று ஓர்‌ ஊர்‌ உள்ளது. பராந்தக வீரநாராயணனின்‌ (கி.பி 859 907) தளவாய்புரச்‌ செப்பேட்டில்‌ இவ்வூர்ப்‌ பெயர்‌ இடம்‌ பெற்றுள்ளது.
“திண்‌ தேர்த்‌ தென்னவன்‌ நல்நாட்டு உள்ளதை
வேனில்‌ ஆயினும்‌ தண்‌ புனல்‌ ஒழுகும்‌
தேனூர்‌ அன்ன இவள்‌……”” (ஐங்‌. 54: 1.3)
“தேர்வண்‌ கோமான்‌ தேனூரன்ன” (ஷே. 55:22)
“ஆம்பலஞ்செறுவில்‌ தேனூரன்ன” (ஷே. 57:2)

தேவூர்

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்து அமையும் இவ் ஊர்ப் பெயரும் மாற்றம் எதுவும் பெறவில்லை. ஞானசம்பந்தர் இரண்டு பதிகங்களை இத்தலம் (218, 333) குறித்துப் பாடியுள்ளார். தண்ணிலாமதி தவழ் தரு மாளிகைத் தேவூரினை (திருஞான. 218-1). திங்கள் சூடிய தீ நிறக் கடவுள் றென் தேவூர் என்றும் பாடுகின்றார். எனவே தெய்வம் இருக்கும் ஊர் தேவூர் எனச் சுட்டப்பட்டதோ எனத் தோன்றுகிறது. தேவர்கள் பூசித்துப் பேறுபெற்ற தலம் என்ற கருத்தும் அமைகிறது தேவூர் நாட்டுத் தேவூர்’ என்ற கல்வெட்டுத் தொடர், தேவூர் நாடு, தனலநகராய்த் திகழ்ந்தமையைக் காட்டும் நிலையில் இவ்வூரின் சிறப்பு தெளிவுறுகிறது. சேக்கிழார்.
பைம் புனல் மென் பணைத்தேவூர் அணைந்து (574)
என ஞானசம்பந்தர் வரலாற்றில் தேவூரைக் குறிப்பிடுகின்றார்.

தேவூர்(சேலம் மாவட்டத் தேவூர் வேறு)

தேவாரத் திருத்தலங்கள்

தொண்டி

தொண்டி என்னும்‌ பெயருடைய ஓர்‌ ஊர்‌ துறைமுகப்‌ பட்டினமாக இருந்திருக்கிறது. கடற்கழி என்னும்‌ பொருஞுடைய தொண்டி என்னும்‌ சொல்‌ படகுகள்‌ போன்றவை வந்து செல்லுவதற்கு ஏற்ற ஆழமான பள்ளமான கடற்கரை ஓரத்தில்‌ அமைந்த இடத்தைக்‌ குறிக்க முதலில்‌ பயன்‌படுத்தப்‌ பெற்று, நாளடைவில்‌ கடற்கரை நகரத்‌திற்குப்‌ பெயராய்‌ அமைந்திருக்க வேண்டும்‌. தொண்டி என்ற பெயருடன்‌ தமிழ்‌ நாட்டில்‌ இரண்டு துறைமுக நகரங்கள்‌ இருந்தன என்று இலக்கியங்களால்‌ தெரிகிறது. அவற்றுள்‌ ஒன்று சங்ககாலத்தில்‌ மேற்குக்‌ கடற்கரையில்‌ அமைந்திருந்த தொண்டி என்னும்‌ துறைமுக நகரம்‌. இது சேரர்‌ களுக்குரியது. மற்றொன்று கீழைக்‌ கடற்கரையில்‌ பிற்காலத்தில்‌ அதே பெயருடன்‌ அமைந்த நகரம்‌. இது சோழர்களுக்குரியது. ஒரு கடற்கரை நகரம்‌ அழிந்த பிறகு அதே பெயருடன்‌, வேறொரு நகரம்‌ அமைந்திருக்க வேண்டும்‌. மேலைக்‌ கடற்கரையில்‌ அமைந்திருந்த தொண்டி மார்கழி மலர்ந்த நெய்தல்‌ மலராலும்‌, நீராடுவோருடைய கோதையாலும்‌ மணம்‌ கமழும்‌. கானலையுடையது. சேரமான்‌ கோக்‌ கோதை மார்பனுடையது, இத்துறைமுக நகரம் தொண்டிப்பத்து” என்னும்‌ பத்துப்‌ பாக்களால்‌ ஐங்குறுநூற்றில்‌ அம்மூவனார்‌ என்னும்‌ புலவரால்‌ பாடப்‌ பெற்றுள்ளது. இத்‌ தொண்டி சேர மன்னரின்‌ தாயத்தாருக்குத்‌ தலை நகரமாக இருந்திருக்க வேண்டும்‌, இத்‌தொண்டி முற்காலத்தில்‌ பல நாட்டு மரக்கலங்களும்‌ வந்து தங்கும்‌. பெருந்துறைமுகமாக விளங்கியது என்பது பழைய நூல்களாலும்‌ தாலமி என்னும்‌ கிரேக்க ஆசிரியரது குறிப்புகளாலும்‌ அறியப்படுகின்றது. அ.கலப்‌ புழையை (ஆலப்புழை) அடுத்துள்ள தொண்டிப்‌ பாயில்‌, என்னும்‌ சிற்றூரே பழைய தொண்டி எனக்‌ கருதுகின்றனர்‌
“ஓங்‌இரும்‌ பரப்பின்‌ வங்க வீட்டத்துத்‌ தொண்டியோர்‌ (சிலப்‌. 14: 106 107) என்ற தொடருக்கு, “குணதிசைக்கண்‌ தொண்டி யென்னும்‌ பதியிலுள்ள அரசரால்‌” என்று பொருள்‌ கூறி “தொண்டியோர்‌ சோழகுலத்தோர்‌” என்று கூறிய அடியார்க்கு நல்லாரின்‌ விளக்கம்‌ மற்றொரு தொண்டி சோழர்‌களுக்கு உரியது என்பதைக்‌ காட்டுகிறது. பகைவரை அட்டு, அவர்‌ பல்லைக்‌ கொணர்ந்து தமது கோட்டை வாயிற்‌ கதவில்‌ வைத்துத்‌ தைக்கும்‌ பண்டை வழக்கையொட்டி, தொண்டை நகரின்‌ வாயிற்‌ கதவில்‌, போரில்‌ வெல்லப்பட்ட மூவன்‌ என்பவனின்‌ வலிய முட்‌ போன்ற பற்களை பிடுங்கிக்‌ கொணர்ந்து வைத்து இழைத்திருந்தனர்‌. இத்தொண்டி, நகரின்‌ தலைவன்‌ சேரமான்‌ கணைக்காலிரும்பொறை,
“திண்தேர்ப்‌ பொறையன்‌ தொண்டி
தன்திறம்‌ பெறுக, இவள்‌ ஈன்றதாயே” (நற்‌. 8 : 9 10)
“…………………….. மூவன்‌
முழுவலி முள்ளெயி றழுத்திய கதவிற்‌
கானலந்‌ தொண்டிப்‌ பொருநன்‌” (௸. 18 : 2 4)
“கல்லென்‌ புள்ளின்‌ கானல்‌ அம்‌ தொண்டி,
நெல்‌ அரி தொழுவர்‌ கூர்வாள்‌ உற்றென,
பல்‌ இதழ்‌ தயங்கிய கூம்பா நெய்தல்‌
நீர்‌ அலைத்‌ தோற்றம்‌ போல
ஈரிய கலுழும்‌ நீநயந்தோள்‌ கண்ணே”? (௸. 95: 5 9)
“குணகடல்‌ இரையது பறைபுத நாரை
திண்தேர்ப்‌ பொறையன்‌ தொண்டி முன்துறை
அயிரை ஆர்‌ இரைக்கு அணவந்தரஅங்கு” (குறுந்‌. 128 ; 1 3)
“திண்‌ தேர்‌ நள்ளி கானத்து அண்டர்‌
பல்‌ ஆ பயந்த நெய்யின்‌, தொண்டி
முழுதுடன்‌ விளைந்த வெண்ணெல்‌ வெஞ்சோறு,
எழுகலத்து ஏந்தினும்‌ சிறிது என்தோழி.
பெருந்தோள்‌ நெகிழ்ந்த செல்லற்கு
விருந்து வரக்‌ கரைந்த காக்கையது பலியே” (௸. 210 : 1 6)
“தொண்டி அன்ன என்‌ நலம்‌ தந்து
கொண்டனை சென்மோ மகிழ்ந நின்‌ (௸. 238 4 5)
“குடக்கோ நெடுஞ்‌ சேரலாதற்கு வேஎன்‌
ஆவிக்கோமான்‌ தேவி ஈன்ற மகன்‌
தண்டா ரணியத்துக்‌ கோட்பட்ட வருடையைத்‌
தொண்டியுள்‌ தந்து கொடுப்பித்துப்‌ பார்ப்பார்க்குக்‌
கபிலையொடு குடநாட்டு ஓர்‌ ஊர்‌ ஈத்து
வானவரம்பன்‌ எனப்பேர்‌ இனிது விளக்கி” (பதிற்‌. 6ஆம்‌ பத்து பதிகம்‌ 1 6)
“வளை கடல்‌ முழவின்‌ தொண்‌ டியோர்‌ பொருந” (௸. 88.21)
“பழந்திமில்‌ கொன்ற புதுவலைப்‌ பரதவர்‌
மோட்டுமணல்‌ அடைகரைக்‌ கோட்டு மீன்‌ கெண்டி
மணம்‌ கமழ்‌ பாக்கத்துப்‌ பகுக்கும்‌
வளம்‌ கெழு தொண்டி அன்ன இவள்‌ நலனே” (அகம்‌. 10:10 13)
நெடுந்திமில் தொழிலொடு வைகிய தந்தைக்கு
உப்பு நொடை நெல்லின்‌ மூரல்‌ வெண்‌ சோறு
அயிலை துழந்த அம்புளிச்‌ சொரிந்து
கொழுமீன்‌ தடியொடு குறுமகள்‌ கொடுக்கும்‌
திண்தேர்ப்‌ பொறையன்‌ தொண்டி அன்ன”’ (ஷே. 60;3 7)
“வெண்கோட்டு யானை வீறற்‌ போர்க்குட்டுவன்‌
தென்திரைப்‌ பரப்பின்‌ தொண்டி முன்துறை” (௸. 290:12 13)
“குலை இறைஞ்சிய கோள்தாழை
அகல்வயல்‌, மலைவேலி
நிலவுமணல்‌ வியன்‌ கானல்‌
தெண்கழிமிசைத்‌ தீப்பூவின்‌
தண்‌ தொண்டியோர்‌ அடுபொருந” (புறம்‌: 17;9 13)
“கோதை மார்பின்‌ கோதையானும்‌
கோதையைப்‌ புணர்ந்தோர்‌ கோதையானும்‌
மாக்கழி மலர்ந்த நெய்தலானும்‌,
கள்‌ நாறும்மே, கானல்‌ அம்‌ தொண்டி” (௸. 48:1 4)
“…………….ஓங்கிரும்‌ பரப்பின்‌
வங்க வீட்டத்துத்‌ தொண்டியோரிட்ட (சிலப்‌. 14;106 107)

தொண்டி

சங்க கால ஊர்கள்

தொண்டை நாடு

சங்க கால ஊர்கள்

தொழு

கால்நடைகளை அடைத்து வைத்திருந்த இடங்களைக் குறிப்பிடும் “தொழு” , “பட்டி” என்பனவும்ம் ஊர்ப்பெயர்களின் பொதுக்கூறுகளாக அமைந்துள்ளன.

தொழுநை

சங்க கால ஊர்கள்