ஃ | அ 87 |
ஆ 48 |
இ 47 |
ஈ 6 |
உ 15 |
ஊ 6 |
எ 18 |
ஏ 11 |
ஐ 4 |
ஒ 8 |
ஓ 4 |
ஔ | க் | க 99 |
கா 32 |
கி 3 |
கீ 1 |
கு 61 |
கூ 10 |
கெ 1 |
கே 3 |
கை 3 |
கொ 24 |
கோ 39 |
கௌ | ங் | ங | ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ | ச் | ச 10 |
சா 9 |
சி 21 |
சீ | சு 2 |
சூ | செ 17 |
சே 8 |
சை | சொ | சோ 9 |
சௌ | ஞ் | ஞ | ஞா | ஞி | ஞீ | ஞு | ஞூ | ஞெ | ஞே | ஞை | ஞொ | ஞோ | ஞௌ | ட் | ட | டா | டி | டீ | டு | டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ | ண் | ண | ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ | த் | த 23 |
தா 1 |
தி 22 |
தீ | து 11 |
தூ 4 |
தெ 7 |
தே 4 |
தை | தொ 5 |
தோ | தௌ | ந் | ந 31 |
நா 24 |
நி 6 |
நீ 11 |
நு | நூ | நெ 22 |
நே 5 |
நை | நொ 1 |
நோ | நௌ | ப் | ப 43 |
பா 33 |
பி 7 |
பீ | பு 39 |
பூ 10 |
பெ 11 |
பே 7 |
பை 2 |
பொ 7 |
போ 6 |
பௌ | ம் | ம 40 |
மா 25 |
மி 3 |
மீ 2 |
மு 28 |
மூ 4 |
மெ 1 |
மே 1 |
மை 5 |
மொ | மோ 6 |
மௌ | ய் | ய 2 |
யா | யி | யீ | யு | யூ | யெ | யே | யை | யொ | யோ | யௌ | ர் | ர | ரா | ரி | ரீ | ரு | ரூ | ரெ | ரே | ரை | ரொ | ரோ | ரௌ | ல் | ல | லா | லி | லீ | லு | லூ | லெ | லே | லை | லொ | லோ | லௌ | வ் | வ 40 |
வா 20 |
வி 25 |
வீ 6 |
வு | வூ | வெ 27 |
வே 24 |
வை 7 |
வொ | வோ | வௌ | ழ் | ழ | ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ | ள் | ள | ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ | ற் | ற | றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ | ன் | ன | னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
---|
தலைசொல் | பொருள் |
---|---|
திங்களூர் | சிவத்தொண்டினால் பெருமை பெற்ற அப்பூதி அடிகளின் பிறந்த ஊர் திங்களூர். இதனை, நம்பியாண்டார் தம் திருத்தொண்டர் திருவந்தாதியில் (29) குறிப்பிடுகின்றார். இவ்வூரினைச், சேக்கிழார்,சீத நீர் வயல் சூழ் திங்கள் ஊரில் அப்பூதி யார் (காரைச் -66) எனச் சுட்டுகின்றனர். சந்திரனோடு இவ்வூர்ப் பெயர் தொடர்புடையது என்பது ரா.பி. சேதுப்பிள்ளை அவர்கள் கருத்து.. |
திங்களூர் | தேவாரத் திருத்தலங்கள் |
திட்டை – திருத்தென்குடித்திட்டை | தேவாரத் திருத்தலங்கள் |
தினைநகர் | தேவாரத் திருத்தலங்கள் |
திருஇட எந்தை | தொண்டை நாட்டுத் தலமாகிய இப்பதி, மாமல்லபுரம் சென்னை வழியில் உள்ள ஒரு சிறிய ஊர். திருமால் கோயில் கொண்ட ஊர். இறை மேலுள்ள புராணக் கதை ஒன்றின் அடிப் படையில் திரு இடவெந்தை என்ற பெயரைத் தாங்கி நிற்கிறது அறிகின்றோம். இப்பெயர் தவிர, இவ்வூருக்கு, நித்திய கல்யாணபுரி, ஸ்ரீபுரி, வராகபுரி என்ற பெயர்களும் அன்று வழங் கின. எனினும் செல்வாக்கு காரணமாகத் திருஇடவெந்தையே இன்று வரை நிலைபெற்ற பெயராக அமைகிறது. இக்கோயில் சிறப்புப்பெற்று, இப்பெயர் செல்வாக்குப் பெறுமுன்பு வேறு பெய ரைக்கொண்டு இவ்வூர் திகழ்ந்ததோ என்ற எண்ணந்தைக் கல் வெட்டுகளில் இவ்வூரின் பெயர் அசுர குல கால நல்லூர் என்ப தைக்காணும் போது ஏற்படுகிறது. மேலும் இப்பெயர் செல்வாக்கில் அசுரகுல கால நல்லூர் என்ற பெயர் மறைவும் தெரியவருகிறது திருமங்கையாழ்வார் பாடல் பெற்றது இவ்வூர் (பெரிய திருமொழி – 2). |
திருச்சீரலைவாய் | சங்க கால ஊர்கள் |
திருச்செந்தில் | பார்க்க. அலைவாய் |
திருத்தினைநகர் | தென் ஆர்க்காடு மாவட்டத்தைச் சார்ந்து அமையும் இவ்வூர் இன்று தீர்த்தனகிரி எனச் சுட்டப்படுகிறது. பெரியான் என்னும் பள்ளன் தன் நிலத்தை உழுது கொண்டு இருக்கும் போது இறைவன் அடியாராக வந்து அன்னம் வேண்டினார். அவன் தன் பணியை நிறுத்தி, அடியவரை அங்கேயே இருக்கச்செய்து உணவு கொண்டு வாத் தன் இருப்பிடம் சென் றான். அவன் திரும்பி வருவதற்குள் பருமான் அந்நிலத்தில் தினைவிளைந்திருக்குமாறு செய்து மறைந்தார். வந்த பெரியான் திகைப்புற, அவனுக்குக் காட்சி தந்தார். அதிசயமாகத் தினை விளைந்ததால் சினைநகர் என்னும் பெயர் பெற்றது என்ற புராணக்கதை இந்நகருக்குரியது. படை. சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம் எவ்வாறு இப்பெயர் பெற் றது எனக் காணின் தினை வளமிக்க காரணமே என்பது வெளிப் தினைநகர்’பற்றிய சுந்தரர் பாடல்கள் (54) இதன் செழிப்பினை. சேறு தங்கிய திருத்தினை நகர் (1) வார் பொழில் திருத்தினை நகர் (2) செடிகொள் கான்மலி திருத் தினைநகர் (3) செந்நெலார் வயற் திருத்திஎனை நகர் (7) செருந்தி பொன் மலர் திருத்தினை நகர் (8) என்றெல்லாம் சுட்டுகின்றன. எனினும் ஒரே ஒரு பாடல், சிமய மார் பொழிற் றிருத்தினை நகர் (9) எனக் காட்டும் தன்மை, தினை வளரும் மலைப்பகுதியை எண்ணச் செய்கிறது மேலும் தீர்த்தனகிரி என, பிறமொழி மாற்றத்தால் பெற்ற பெயரும் மலையையே எண்ணச் செய் எனினும் இன்று இப்பகுதியில் மலைகள் ல்லாமை, சிறிது தாலைவில் மலைகள் உள்ளமை இவற்றை நோக்க, இப்பகுதி முழுமையும் இப்பெயரால் வழங்கப்பட்டு இருக்கலாம் எனத் தோன்றுகிறது. ஏனெனில் நகர் என்ற பொதுக்கூறு அதிக பரப்பைச் சுட்டும் நிலையில் இதனையே எண்ணச் செய்கிறது. மேலும் இவ்வூர் பற்றிய பிற எண்ணங்கள் விளக்கம் தரலாம்.. சுந்தரர் பாடல் பெற்றாலும், திருநாவுக்கரசரும் இத்தலம் சென்று வணங்கிப் பாடினார் என்றக் குறிப்பினை, சேக்கிழாரின் பெரிய புராணம் தருகிறது. |
திருநகரி | திருநகரி, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தலம். திருமால் கோயில் சிறப்பு. ஆழ்வார்கள் பாடல் பெற்ற தலம். |
திருநகர் | அழகு பொருந்திய நகர் அல்லது செல்வம் பொருந்திய நகர் என்ற பொருளில் திருநகர் எனப் பெயர் பெற்றிருக்கலாம். திருநகர் என்பது வேசாலி என்னும் அரசனுடைய நகர். |
திருந்து தேவன் குடி | திருந்து தேவன் குடி என்று இன்றும் வழங்கப்படும் இவ்வூர் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்து அமைகிறது. ஞானசம்பந் தர் பாடல் பெற்றது இத்தலக் கோயில். ஊர் இல்லை; ஞான சம்பந்தர் பாடல் பெற்ற இக்கோயில் மட்டும் வயலுக்கு மத்தியில் உள்ளது என்ற குறிப்பு ஊர் இருந்து, மக்கள் பிற இடங் கட்குச் சென்ற நிலையைக் காட்டுகிறது. ஞானசம்பந்தர் பாடல் இவ்வூர் பற்றிய இறைச் சிறப்பையே காட்டுகின்றது. இருப் பினும் பெரிய புராணம் இவ்வூர் குறித்துச்சுட்டும் எண்ணங்கள், திருந்து தேவன் குடியில் இருந்த சிவன் பற்றிக் கூறும் நிவை யினை இங்குக் காட்டலாம். |
திருந்துவேதன்குடி | தேவாரத் திருத்தலங்கள் |
திருப்பரங்குன்றம் | பார்க்க குன்று குன்றம் |
திருப்போர்ப்புரம் | சங்க கால ஊர்கள் |
திருமருத நீர்ப்பூந்துறை | சங்க கால ஊர்கள் |
திருமருத முன்றுறை | சங்க கால ஊர்கள் |
திருமால்குன்றம் | திருமால்குன்றம் என்பது மதுரையை அடுத்துள்ள அழகர் மலையேயாகும். திருமாலிருஞ் சோலை என்றும் பிற்காலத்தில் வழங்கப் பெற்றிருக்கிறது. அங்கே ஒரு பிலம் உள்ளது என்றும், அப்பிலத்து நெறியில் புண்ணிய சரவணம், பவகாரணி, இட்டசித்தி என்னும் பெயர் கொண்ட மூன்று பொய்கைகள் உள்ளன என்றும் இலக்கியம் கூறுகிறது. |
திருவெஃகா | பாம்பணையாகிய பள்ளியில் துயில் கொண்ட திருமாலின் திருவெஃகா” என்பது சங்க இலக்கியச் செய்தி. வெஃகல் என்றால் விருப்பம் என்றும் வெஃகுதல் என்றால் விரும்புதல் என்றும் பொருள் இருப்பதால் “பெருமகிழ் இருக்கை யாகிய அவ்விடம் விருப்பம் தருவது, விரும்பி உறைவதற்கேற்ற இடம் என்ற கருத்தில் வெஃகா எனப் பெயா் பெற்று, திரு என்ற முன் ஒட்டுடன் இணைந்து திருவெஃகா என நாளடைவில் வழங்க இருக்கலாம் என எண்ணச் தோன்றுகிறது. காஞ்சிபுரத்திற்குத் தென்கிழக்கே சுமார் இரண்டு மைல் தொலைவில் உள்ளது திருவெஃகா. பிரமன் செய்த வேள்வியை அழிக்க வந்த வேகவதி என்னும் ஆற்றைத் தடுக்கத் திருமால் அந்த ஆற்றின் குறுக்கே அணையாகப் பள்ளிகொண்டார் என்பது புராணச்செய்தி. வேகவேது என்ற வடசொல் வேகவணை எனத் தமிழாகி வேகணை, வெஃகனை, வெஃகா என மருவி இவ்வூரைக் குறித்த தென்பர். |
திருவேரகம் | சங்க கால ஊர்கள் |
திலதைப்பதி | தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்த இவ்வூர் இன்று வழக்கில் திலதர்ப்பணபுரி எனவும், மதிமுத்தம் எனவும் வழங்கப்படுகிறது. அரிசிலாற்றின் தென் கரையில் உள்ள இத்தலம் ஞானசம்பந்தர் பாடல் பெற்ற கோயிலைக் கொண்டது. |
திலதைப்பதி | தேவாரத் திருத்தலங்கள் |
தில்லை | சிதம்பரம் என்ற பெயரில் தென் ஆர்க்காடு மாவட்டத்தில் உள்ள தலம் இது. தில்லை என்னும் மரங்கள் அடர்ந்திருந்த காரணத்தால் இத் தலத்திற்குத் தில்லை என்னும் பெயர் உண்டாயிற்று என்பது எளி தாகத் தெரியும் நிலை. புலிப்பாதர் என்னும் முனிவர் பூசித்தமையால் புலியூர் என்ற பெயர் உண்டு. சித் + அம்பரம் – சிதம்பரம். சித் – அறிவு அம்பரம் – வெட்டவெளி. பொன் வேயப் பெற்று ஒரு மலைபோல் ஓங்கிப் பொன் னொளி வீசி நாற்றிசையும் பரவியிருத்தலால் இத்தலத்திற்குத் தட்சிணமேரு என்னும் பெயரும் தோன்றி விளங்குகின்றது. இத்தலத்திற்குப் பூலோகக் கைலாசம் புண்டரீக புரம் முதலிய வேறு பெயர்களும் உண்டு. சிற்றம்பலம் என்ற பெயரின் மரூஉ சிதம்பரம் என்பர் ஊர் தில்லை எனவும் சிதம் பரம் கோயிலையும் குறித்து நிற்கிறது. எனினும், இன்று ஊரை யும் சிதம்பரம் என்று சுட்டும் வழக்கே அமைகிறது. கோயில் என்றாலே சிதம்பரம் கோயில் என்று சுட்டும் தன்மை இக்கோயி லின் மிகுந்த செல்வாக்சைத் தெரிவிக்கும் வண்ணம் அமைகின் றது. வைணவ நூல்கள் இவ்வூரைத் தெற்றி அம்பலம் என்றும், திருச்சித்திரகூடம் என்றும் குறிப்பிடுகின்றன. அனைத்துலகும் தொழும் தில்லை’ மாணிக்கவாசகர் இவ்வூரைச் சிறப்பித்துள்ளது இக்கோயில் பெருமையைச் சிறப்பாகப் பறைசாற்ற வல்லது. |